கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பௌதிகப் புவியியல்: க.பொ.த உயர்தரம்

Page 1
க. பொ. த. உயர்த
பெளதிகம்
- வி)
கல்விப் பொதுத் த பரீட்சைக்குரிய பெ
குறித்த வி
க: குணராசா, B. A,
ரே கர 6
பாழ்ப்

ரப் பரீட்சைக்குரிய
புவியியல்
விIை D(
ராதர (' உயர்தர)ம் 1ௗதிகப் புவியியல்
இ விடைகள்.
H 25. (Ceylon) C. A, S.
|வளியீடு
பா ணம்,

Page 2

7 - 1 :-)
பொ. தி. 9.
க. பொ. த உயர்தரப் பரீட்சைக்குரிய பௌதிகப் புவியியல்
- வித விடை -
ஷாஃ) - 4' அம் மாணவர் பிரதிநித கள்
பழ
க.குணராசா, B A. Hons. (Cey.) C. A. S.
(முன்னாள் - புவியியல் உதவி விரிவுரையாளர், புவியியற் பகுதி,
பல்கலைக்கழகம், பேராதனை /கொழும்பு) 3. புவியியல் ஆசிரியர், கொக்குவில் இந்துக்கல்லூரி பகுதிநேர விரிவுரையாளர், தொழில் நுட்பக் கல்லூரி
யாழ்ப்பரணம் உதவி அரசாங்க அதிபர், துணுக்காய்
3, விற்பனையாளர் | ஸ்ரீ லங்கா புத்தகசாலை
யாழ்ப்பாணம்

Page 3
* ஐந்தாம் திருத்திய பதிப்பு - 1983
* பதிப்புரிமையுடையது
விலை : ரூபா 8-00
- விற்பனையாளர் - ஸ்ரீ லங்கா புத்தகசாலை, காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம்.

- முன்னுரை -
கல்விப் பொதுத்தராதர (உயர்தர) வகுப்பு மாண வர்கள், பௌதிகப் புவியியலை தெளிவாகப்புரிந்து கொண்டு, கேள்விக்கு ஏற்ப விடையிறுக்கும் முறையை விளக்குவதற்காகவே இந்நூல் ஆக்கப் பட்டது.
புவியியல் மாணவர்களுக்கு இந்நூல் பேருதவியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. க. பொ. த. (உ/த) பரீட்சைக்கு, படவேலை தவிர்ந்த ஏனைய பகுதிகளில். (1) பௌதிகப் புவியியல், (2) மனிதத் துலக்கங்கள். (3) அபிவிருத்திப் புவியியல் எனும் மூன்று பிரிவுகளுள. அ ல ற் றி ல் ஒன்றின் தேவையை இந்நூல் பூர்த்திசெய்யும். ஏனைய பகுதிகளும் காலக்கிரமத்தில் வெளிவரும். புவியியல் நூல்களை வெளியிடுவதில் முன்னணி வகிக்கும் ஸ்ரீ லங்கா வெளியீட்டினருக்கு என் நன் றிகள். எனது நூல்களை உவகையுடன் உபயோ கிக்கும் அன்பர்களுக்கு நன்றிகள்,
தமிழுலகம் நல்லனவற்றை ஆ த ரிக் க ஒரு போதும் பின் நின்றதில்லை.
10.-5-83
ஆக்கியோன்

Page 4
கல்விப் பொதுத் தராதர உயர்தர
வகுப்புக்குரிய புவியியல் நூல்கள்
1. பெளதிகச் சூழல் - நிலவுருவங்கள்
2. பெளதிகச் சூழல் - கால நிலையியல்
3. அபிவிருத்திப் புவியியல்
4. மனிதத் துலக்கங்கள்
5. படம் வரைகலை
6. படம்வரைகலையில் எறியங்கள்
7. படம் வரை கலையில் வரைப் படங்கள்
2. புதிய புவியியல் - புள்ளிவிபரவியல்
9. புவியியல் தேசப்படத் தொகுதி

க. பொ. த உயர்தரப் பரீட்சைக்குரிய
பௌதிகப் புவியியல்
- விற விடை -
க.குணராசா, B A. Hons. (Cey.) C. A. 3.
(முன்னாள் - புவியியல் உதவி விரிவுரையாளர், புவியியற் பகுதி,
பல்கலைக்கழகம், பேராதனை/கொழும்பு) புவியியல் ஆசிரியர், கொக்குவில் இந்துக்கல்லூரி பகுதிநேர விரிவுரையாளர், தொழில் நுட்பக் கல்லூரி
யாழ்ப்பாணம் உதவி அ0 சாங்க அதிபர், துணுக்காய்
விற்பனையாளர் 1!
ஸ்ரீ லங்கா புத்தகசாலை
யாழ்ப்பாணம்"

Page 5
* ஐந்தாம் திருத்திய பதிப்பு - 1983
* பதிப்புரிமையுடையது
விலை : ரூபா 8-00
- விற்பனையாளர் - ஸ்ரீ லங்கா புத்தகசாலை, காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம்.

- முன்னுரை -
கல்விப் பொதுத்தராதர (உயர்தர) வகுப்பு மாண வர்கள், பௌதிகப் புவியியலை தெளிவாகப்புரிந்து கொண்டு, கேள்விக்கு ஏற்ப விடையிறுக்கும் முறையை விளக்குவதற்காகவே இந்நூல் ஆக்கப் பட்டது.
புவியியல் மாணவர்களுக்கு இந்நூல் பேருதவியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. க. பொ. த. (உ/த) பரீட்சைக்கு, படவேலை தவிர்ந்த ஏனைய பகுதிகளில். (1) பௌதிகப் புவியியல், (2) மனிதத் துலக்கங்கள், (3) அபிவிருத்திப் புவியியல் எனும் மூன்று பிரிவுகளுள. அ வ ற் றி ல் ஒன்றின் தேவையை இந்நூல் பூர்த்திசெய்யும். ஏனைய
பகுதிகளும் காலக்கிரமத்தில் வெளிவரும்.
* புவியியல் நூல்களை வெளியிடுவதில் முன்னணி
வகிக்கும் ஸ்ரீ லங்கா வெளியீட்டினருக்கு என் நன் றிகள். எனது நூல்களை உவகையுடன் உபயோ கிக்கும் அன்பர்களுக்கு நன்றிகள்.
* தமிழுலகம் நல்லனவற்றை ஆ த ரிக் க ஒரு
போதும் பின் நின்றதில்லை.
10-5-83
- ஆக்கியோன்

Page 6
கல்விப் பொதுத் தராதர உயர்தர
வகுப்புக்குரிய புவியியல் நூல்கள்
1. பெளதிகச் சூழல் - நிலவுருவங்கள்
2. பெளதிகச் சூழல் - கால நிலையியல்
3. அபிவிருத்திப் புவியியல்
4. மனிதத் துலக்கங்கள்
5. படம் வரைகலை
6. படம் வரை கலையில் எறியங்கள்
7. படம் வரை கலையில் வரைப் படங்கள்
2. புதிய புவியியல் - புள்ளிவிபரவியல்
9. புவியியல் தேசப்படத் தொகுதி

1 • (அ) போதிய காரணங்கள் தந்து பாறைகளை வகைப்
படுத்திக் காட்டுக. (ஆ) அவற்றின் பிரதான இயல்புகளை ஆராய்க.
புவின் இயல்புக2" றைகள் காய பாறைப் படுகின்.
11 பூமியின் மேற்பரப்பில் காணப்படும் திண்ணிய பொருட் கள் யாவும் பாறைகள் என்று வரையறுக்கப் படுகின்றன. பல கனிப்பொருட்களின் சேர்க்கை யே பாறைகளாகும். புவியோட்டில் பல வகையான பாறைகள் காணப்படுகின்றன . அவற்றைப் பஸ் வேறு இயல்புகளை ஆதாரமாகக் கொண்டு வகைப்படுத்துவர். புவிச்சரித காலம், கனிப்பொருட் சேர்க்கை, வன்மை மென்மை, தோற்றம் முதலிய இயல்புகளை ஆதாரமாகக் கொண்டு பாறை கள் இனங்களாகப் பிரிக்கப்படுகின்றன. உதரா ண மாக : கேம்பிரி யன் காலப்பாறை, மயோசீன் காலப்பாறை என்பது புவிச்சரித கால அடிப்படையிலும், நிலக்கரிப் பாறை, சோக்குப் பாறை என்பது கனிப்பொருட் சேர்க்கை அடிப்படையிலும் பிரிக்கப் பட்ட பிரிவுகளாம். எனினும் பாறைகளின் தோற்றத்தினை அதா வது பிறப்பு மரபினை அடிப்படையாகக் கொண்டு இனங்களாகப் பிரித்து ஆராய்வது சிறப்பானதாகும்.
பாறைகளின் தோற்ற அடிப்படையில் அவற்றை மூன்று. பெரும் வகைகளாகப் பாகுபடுத்தலாம். அவையாவன :
Su (0,
( அ ) தீப்பாறைகள் (ஆ) அடையற் பாறைகள் (இ) உருமாறிய பாறைகள்
(ஆ) தீப்பாறைகள் - தீப்பாறைகளை எரிமலைப்பாதைகள் என்றும் கூறுவர். கோளவகத்தினுள் காணப்படும் பாறைக்குழம் பானது அமுக்கம் காரணமாகப் புவியின் மேற்பரப்பிற்கு வர முயல்கின்றது. புவியோட்டில் காணப்படும் நொய்தலான பகுதிகள் ஊடாக இப்பாறைக் குழம்பானது வெளி வருகின்றது. வெளி வந்து இறுகிப் பாறைகளாகின்றது. புவியின் கீழ்ப்பகுதிகளில் இருந்து மேற்படைகளை நோக்கி வந்த உருகிய பாறைக் குழம் பினால் அமைந்தவையே இத்தீப் பாறைகளாகும், இத்தீப்பாறை கள் உருவாகும் செய்முறைகளை அடிப்படையாகக் கொண் டு அவற்றை இரு பிரிவுகளாகப். வகுக்கலாம். அவையாவன : (1) தள்ளற் பாறைகள், (2) தலையீட்டுப் பாறைகள்,
"ம் இரு பிரிறைகளை அடிப்ப9ை. இத்தீப்பாறை
பெள. 2

Page 7
பௌதிகப் புவியியல்
புவியின் கீழ்ப்பகுதியிலிருந்து உருகிய பாறைக் குழம்பானது வெடிப்புக்கள், பிளவுகள் என்பனவூடாக புவியின் மேற்பரப்பில் வந்து படிந்து இறுதி உருவானவை தள்ளற்பாறைகளாகும்; அதா வது பாறைக்குழம்பு புவியின் மேற்பரப்பில் தள்ளப்பட்டு இறு கிக் கடின மா வ தா கும். கீழ்ப்பகுதி யிலிருந்து மேற்படைகளை நோக்கிவரும் பாறைக்குழம்பானது புவியின் மேற்பரப்பில் வந்து படியாமல் பாறைப்படைத் தளங் களுக்கு இடையில் தலையிட்டு. இறுகிக் கடினமாவதால் தோன்றும் பாறைகளை த் தலையீட்டுப் பாறைகள் என்பர். இத்தலையீட்டுப் பாறைகள் அவை அமைந் துள்ள நிலைகுறித்து பலவாறு அழைக்கப்படுகின்றன; பாறைப் படைகளுக்கு மிக ஆழத்தில் அமைந்துள்ளவை பாதாளப் பாறை கள் என்றும், பா றைப்
தள்ளற்பாறை) படைகளுக்குச் செங்குத் தாக அமைந்துள்ளவை கு த் து த் தீ ப் பாறைகள் என்றும் ப ல வ ா று அழைக்கப்படுகின்றன. கருங்கல் பாறை, கப்பு
சாம்! ரோப் பா றை என்பன தீப்பாறைகளாகும்.
தலமீட்ப்பாயம்
அடையற்பாறைகள்: புவியின் மேற்பரப்பில் காணப்படும் நிலத்தோற்றவுறுப்புக்கள் வெப்பம் காற்று, மழை, , ஓடும் நீர், உறைபனி, பனிக்கட்டி, கடல் முதலிய அரிப்புக் கருவிகளால் அரிக்கப்பட்டு, பனிக்கட்டியாறு, நதி, காற்று என்பனவற்றி னால் காவிச் செல்லப்பட்டு ஓரிடத்தில் படியவிடப் படுகின்றன. இவ்வாறு படியவிடப்படும் அடையல்கள் இறுகிப் பாறைகளா கின்றன. இவையே அடையற் பாறைகளாகும். இவ்வடை யற் பாறைகளை அவற்றின் அடையற் பொருட்களைப் பொறுத்து இரு பிரிவுகளாக வகுக்கலாம், அவையாவன: (1) சேதனவுறுப் புப் பாறைகள் (2) அசேதன வுறுப்புப் பாறைகள்
தாவரம், கடலுயிர்ச்சுவடுகள் (சிப்பி, முருகைக்கல், எலும்பு) என்னும் சேதனவுறுப்புக்கள் படிந்து இறுகுவதால் உருவாகுவ ன சேதன வுறுப்புப் பாறைகளாகும். கடல் தாவர அல்லது விலங்கின உயிர், சுவட்டுப் படிவுகளால் உருவானவையே சுண்ணாம்புக்கல், சோக்கு எனும் பாறைகளாகும். தாவரங்கள் சிதைவுற்று மண் ணினுள் புதைவுற்று இறுகுவதால் ஏற்படுவனவே. நிலக்கரிப் பாறைகளாகும். சுண்ணாம்புக்கல், சோக்குப்பாறை, நிலக்கரிப் பாறை என்பன சேதனவுறுப்பு அடையற் பாறைகளாகும்,

பௌதிகப் புவியியல்
எதிர்தம்
சிறைப்படைத்தார்.
மணல், மணற்கல், மாக் கல், பரல், களி எனும் அசேத னவுறுப்புகள் படிந்து இறுகுவ தால் உருவாகுவன அசேதனவு றுப்புப் பாறைகளாகும். அரித் துக் கொண்டு வரப் பட்ட சிறிய மணற்கற்கள் ஒன் சேர்ந்து இறுகுவதால் மணற்கற்பாறை களும், களியும் சிறுபரல்களும் சேர்ந்து இறுகுவதால் மாக்க ற பாறைகளும் உருவாகின்றன
உருமாறிய பாறைகள் : தீப்பாறைகளும் அடையற் பாறை களும் வெப்பம், அமுக்கம் முதலிய காரணங்களினால், பழைய தன் மைகளை இழந்து உருமாறுவதை உருமாற்றம் என்பர். தொடக கத்துப் பண்பினை இழந்த பாறைகளை உருமாறிய பாறைகள் என் பர். மாக்கல் எனும் அடையற்பாறை வெப்பம், அமுக்கம் என் பனவற்றின் தாக்கத்தால் சிலேற் பாறையாக உருமாறி விடுகின் றது. சுண்ணாம்புக்கல் அமுக்கம் காரண மாகச் சலவைக் கல்லா க மாறிவிடுகின்றது, நிலக்கரிப் பாறை வைரக்கல்லாக மாறுவ தும் ஒருவகை உருமாற்றமே. சிலேற், சலவைக்கல் முதலியன வே உரு மாறிய பாறைகளாம்.
2. (அ
( அ) கண்ட நகர்வை விளக்குக. (ஆ) கண்ட நகர்விற்குச் சாதகமான மூன்று
காரணங்களைக் காட்டுக .
(9) அல்பிரேட் உவெக்னர் என்ற அறிஞர் 19 21ல் கண்டங் களினதும், சமுத்திரங்களினதும் தோற்றத்தினை விளக்க முன் வைத்த ஒரு கருதுகோள் கண்ட நகர்வுக் கருதுகோள் ஆகும் : அவரின்படி இன்று பூமியில் கண்டங்கள் பரம்பியுள்ள படி ஆதி யில் கண்டங் கள் அமைந் திருக்கவில்லை. இன்றைய - கண்டங்கள் யாவும் கார்போனிபரஸ் என்ற காலத்தில் ஒரே கண்டத்திணி வாக இருந்தன. அக்கண்டத்திணிவை உவெக்னர் பஞ்சியா என்று பெயரிட்டார், இக்கண்டத்தின் வடபாகம் அங்காராலாந்து என் றும் தென் பாகம் கொண்டுவானா லாந்து என் றும் அழைக்கப்பட் டது. இப்பஞ்சியாக் கண்டம் இயோசீன் காலத்தில் தம்மிடம் விட்டு நகர்ந்தது. அமெரிக்காக் கண்டங்கள் மேற்காக நகர்ந்தன.

Page 8
பௌதிகப் புவியியல்
அத்திலாந்திக்கில் ஏற்பட்ட இடைவெளியைச் சீமாபாய்ந்து நிரப்பியது. அந்தாட்டிக்கா தெற்கே நகர்ந்தது. அவுஸ்ரேலியா பசுபிக் பக்கமாக நகர்ந்தது. இவ்வாறு பஞ்சியாக் கண்டம் தன்னிடம் விட்டு நகர்ந்து இன்றுள்ள இடங்களில் நிலைத்தன் என உவெக் னர் கருத்துத் தெரிவித்தார். அவ்வாறு நகர்வதற்கு புவியின் உட்கோளவகத்தில் நிகழ்ந்த பெருக்கு விசை காரண மாயிற்று என்றார்.
பஞ்சியாக் கண்டம்
(ஆ) (1) அடர்த்தி கூடிய சீமாப்படையில் (2 • 9-3 • 1 அடர்த்தி), அடர்த்தி குறைந்த சீயல் படை (2.5) மிதக்கிறது என சுயெஸ் என்பவர் கருத்துத் தெரிவித்தார். கடல் நீரில் பனிக்கட்டி மிதப் 4:29 துபோல புவியோடு ஒரு சமநிலையைப் பேணிக்கொண்டு மிதக் கிறது. எனவே கண்டங்கள் நகரக்கூடிய ன வாகும்.
(2) இன்றைய கண்டங்களின் இடவிளக்கவியல் நிலைமை களை அவதானிக்கில் அக்கண்டங்களை ஒன்றாக இணைத்துவிட முடி. யும். இன் றைய க ண் டங் க ளின் விளிம்புகள் ஒன்றோடொன்று இணையக்கூடிய வடிவத்தில் இருக்கின்றன. உதாரணமாக அமெ ரிக்காக்களை ஐரோ-ஆசியாவுடன் இணை க்கும்போது, மெச்சிக்கோ குடாவினுள் ஆபிரிக்கா பொருந்த தென்னமெரிக்கா கினி வளை குடாவினுள் பொருந்துகிறது கண்டங்கள் முன்பு ஒன்றாக இருந்த படியினால் தான் இவ்வாறு பொருந்தமுடியும் என லாம்.
(3) பஞ்சியாக் கண்டத்திலிருந்த வட, தென் அமெரிக்காக்கள் மேற்குப் பக்கமாக நகர்ந்தன. அதனால் பசுபிக் சமுத்திரத்தி லிருந்த அடையல்கள் மடிக்கப்பட்டு றொக்கி மலைத்தொடரும்) அந்தீஸ் மலைத்தொடரும் உருவாகின . கண்டம் நகராவிடில் இம் மடிப்பு மலைத்தொடர் கள் உருவாகியிருக்க முடியாது.
*

(அ) மலையாக்க விசைகள் எவையெனச் சுருக்க
மாக விபரிக்க. (ஆ) பல்வேறு வகைப்பட்ட மடிப்புக்களை உதாரணங்
களோடு விபரிக்க.
(அ) புவியோடு, புவியின் கீழே ஏற்படுகின்ற சில அசைவுகளி னால் தொடர்பாகத் தாக்கப்பட்டு வருகின்றது, இந்த அசைவுகளை ஏற்படுத்துகின்ற விசைகள் எத்தகையன என்று இன்னும் சரியான முடிவுகள் செய்யப்படவில்லை. இந்த அசைவுகளைக் கண்டவாக்க விசைகள் என்றும், மலையாக்கவிசைகள் என்றும் இரு பெரும் பிரிவுகளாக வகுக்கலாம். புவியோட்டில் குத்தாக இயங்கிப் பெரிய நிலத்தோற்றத்தை உருவாக்கும் அசைவுகளே கண்டவாக்க விசை களாகும். புவியோட்டில் கிடையாக இயங்கும் அசைவுகளை யே மலை யாக்க விசைகள் என்பர். இம் மலையாக்க விசைகள் இருவகை களிற் செயற்படுகின்றன. அவையாவன :
(1) இழுவிசை (2) அமுக்கவிசை
இழுவிசை காரணமாகப் புவியின் மேற்பரப்பில் குறைகள், பிள வு கள் என்பன உருவாகின்றன. அமுக்க விசை காரண மா கப் புவியின் மேற்பரப்பில் மடிப்பு மலைகள் தோன்றுகின்றன. (படம்) கிடையாக அமைந்துள்ள பாறைப் படையின் இரு புறங்களிலும் அமுக்க விசை தொழிற்பட்டு அமுக்கும் போது அக்கிடையான பாறைப் படை மடிப்புக்குள்ளாகின்றது .மேல்வரும் படத்திலிருந்து அதனை' உணரலாம்.
இதிகா பைசா.
டோடா

Page 9
10
பௌதிகப் புவியியல்
புவியோட்டில் இயங்கும் அமுக்க விசைகள் பல்வேறு வகைப் பட்ட மடிப்புக்களைத் தோற்றுவிக்கின்றன. இம்மடிப்புக்கள் ஒவ் வொன்றும் அமைந்துள்ள வடிவத்தைப் பொறுத்து அவை பல் வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இம் மடிப்புக்கள் அமுக்க விசைகளின் தன்மைக்கும், அவை வருகின்ற திசைக்கும் பாறைப் படைகளின் வன்மைக்கும் இணங்க வே வெவ்வேறு வடிவத்திலமைகின்றன
(ஆ)
மடிப்புக்களை மேல் வருமாறு வகுக்கலாம். அவையாவன:
(அ) சமச்சீர் மடிப்பு. (ஆ) சமச்சீரில்லா மடிப்பு. (இ) தலைகீழ் மடிப்பு' (ஈ) குனிந்த மடிப்பு.
(உ) மேலுதைப்பு மடிப்பு. (ஊ) விசிறி மடிப்பு. (எ)
மேன் மடிப்புள் மடிப்பும் கீழ் மடிப்புள் மடிப்பும்.
ஒரு மடிப்பின் இரு பக்கங்களும் ஒத்த சரிவுடையனவாக இருந் தால் அதனைச் சமச்சீர் மடிப்பு என்பர் ஒன்றில் மடிப்பின் இரு பக்கங்களும் குத்துச் சரிவுகளாக இருக்கலாம்; அல்லது இரு பக் கங்களும் மென்சாய் வுடையனவாக இருக்கலாம்; அதுவே சமச் சீர் மடிப்பாகும். இதில் மடிப்பின் அச்சு ஒரு புறம் சாய்ந்து அமைந்திருக்கும் ஒரு மடிப்பின் ஒரு பக்கம் மற்றப் பக்கத்திலும் சரிவு கூடியதாக அல்லது குறைந்ததாக * இருக்கில் அதனைச்சமச் சீரில்லா மடிப்பு என்பர், சமச்சீரில்லா மடிப்பு மேலும் அமுக்கப் படும்போது அதன் மேற்புறம் மேலும் சாய்வு றுகின்றது. அவ்வாறு ஒருபுறம் அதிகம் சாய்வுற்று அமையும் மடிப்பைத் தலைகீழ் மடிப்பு என்பர். இதில் அச்சு ஒருபுறம் கூடுதலாகக் சாய்ந்து அமைந் திருக்கும் தலைகீழ் மடிப்பு மேலும் அமுக்கித் தள்ளப்படும்போது, பாறைப் படைகள் அதிகம் நெளிவுற்று மடிப்புறுகின்றன. இவற்றைக் குனிந்த மடிப்பு என்பர்.
குனிந்த மடிப்புகள் மீது அமுக்கவிசை மிக வேகத்தோடு தொழிற்படும்போது தோன்றுவன வே மேலு தைப்பு மடிப்புக்க ளாகும்; குனிந்த மடிப்பில் அமுக்கவிசை வேகமாகத் தள்ளும் போது, மடிப்பு ற்ற பாறைப்படை முறிவுற்று அல்லது பிளவுற்து

பௌதிகப் புவியியல்
41இetwoறுகதை:ாலை இடுகைகள்
இ தி
இறு
நான்காண்டராசா
சாகாவனமுமா காதல்
* உமா கோர்டிங் -
1பிடி சுக்கடி, பாசனப
உ -
" என் + -
ஃலாந்திட்டம்
1. சமச்சீர் மடிப்பு 2. சமச்சீரில்லா மடிப்பு 3. தலைகீழ் மடிப்பு 4. குனிந்த மடிப்பு 5. மேலுதைப்பு மடிப்பு 6. மேன் மடிப்புள் மடிப்பும்
கீழ்மடிப்புள் மடிப்பும் (மொங்கவுசைத் தழுவிய - படங்கள்)

Page 10
12
பௌதிகப் புவியியல்
பல மைல்களுக்கு முன்னோக்கி உதைப்புத் தளத்தினூடே தள்ளப் படுகின்றது. அவ்வாறு தள்ளப்பட்டு உருவாகும் நிலவுருவ மே மேலுதைப்பு மடிப்பு எனப்படும், கிடையான பாறைப் படை யா னது அமுக்கப்படும் போது விசிறி ஒன்றன் வடிவத்தில் மடிப் புற்றால், அதனை விசிறி மடிப்பு என்பர். சிக்க லான பல மடிப்புக் களைக் கொண்ட பெரிய மடிப்பு முள்ளது. ; இம்மடிப்பின் மேன் மடிப்புகளிலும் கீழ்மடிப்புகளிலும் பல சிறு மடிப்புக்கள் காண லாம். அவற்றை மேன் மடிப்புள் மடிப்பு என்றும், கீழ்மடிப்புள் மடிப்பு என்றும் வழங்குவர், இவ்வாறு பல்வேறு வகைப்பட்ட மடிப்புக்கள் அமுக்க விசைகள் காரண மாக புவியேட்டில் அமைந் துள்ளன.
உலகின் பல்வேறு பகுதிகளில் மடிப்பு மலைகளைக் க ண லாம்; ஆசியாவின் இமய மலைத் தொகுதி, ஐரோப்பிய அல்ப்ஸ் மலைத் தொகுதி, ஆபிரிக்க அற்லஸ் மலைத் தொகுதி, வட அமெரிக் க றொக்கீஸ் மலைத்தொகுதி, தென்ன மெரிக்க அந்தீஸ் மலைத் தொகுதி என்பன மடிப்பு மலைகளாகும்.
பல்வேறுபட்ட குறைகள் ஏற்படுதலைப் பற்றி குறிப்
புரை ஒன்று தருக.
புவியோடு, புவியின் கீழே ஏற்படுகின்ற அசைகளி னால் தொடர்பாகத் தாக்கப்பட்டு வருகின்றது. இந்த அசைவுகளை ஏற் படுத்துகின்ற விசைகள் எத்தகையன என்று இன்னும் சரியான முடிவுகள் செய்யப்படவில்லை.இந்த அசைவுகளைக் கண்டவாக்க விசைகள் என்றும், மலையாக்க விசைகள் என்றும் இரு பெரும் பிரி வுகளாக வகுக்கலாம் புவியோட்டில் குத்தாக இயங்கி பெரிய நிலத்தோற்றத்தை உருவாக்கும் அசைவுகளே - கண்டவாக்க விசைகளாகும் புவியோட்டில் கிடையாக இயங்கும் அசைவுகளை யே மலையாக்க விசைகள் என்பர் இம்மலையாக்க விசைகள் இருவகை களிற் செயற்படுகின்றன. அவையாவன: (1) அமுக்க விசை, (2) இழுவிசை.
அமுக்கவிசை காரணமாகப் புவியின் மேற்பரப்பில் மடிப்பு மலைகள் தோன்றுகின்றன. இழுவிசை காரணமாகப் புவியின் மேற்பரப்பில் குறைகள், பிளவு என்பன உருவாகின்றன. கி டை யாக அமைந்துள்ள பாறைப் படையின் மீது இழுவிசைகள்

பௌதிகப் புவியியல்
13
தொழிற்பட்டு இழுக்கும்போது அப்பா றைப் படை
பிளவுற்று குறையாதலுக்குட்படுகின்றது.
பாறைப் படையில் இழுவிசை காரணமாக உடைவு ஏற் பட்டு அவ்வுடைவின் இரு புறத்துமுள்ள பாறைப் பகுதிகள் தமது நிலைகளிலிருந்து விலகியமைவதையே கு றை என்பர். . புவியோட் டில் " காணப்படும் பல்வேறுபட்ட குறைகளை மேல்வருமாறு தொகுக்கலாம், அவையாவன:
(அ) நிலைக்குத்துக் குறை (ஆ) சாய்வுக் குறை (இ) நேர்மாறான குறை (ஈ) வடிநிலத் தொடர்க் குறை (உ) பாறைப் பிதிர்வு (ஊ) படிக்குறை பிளவுப் பள்ளத்தாக்கு (எ) உதைப்புக் குறை
(ஏ) அமுக்கப் பிளவுப் பள்ளத்தாக்கு.
குறைத் தளங்களின் சாய்வினைப் பொறுத்து. ஏற்பட்ட நிலத் தோற்றத்தையே பல்வேறுபட்ட பெயர் களால் வழங்குகின்றனர். பாறைப்படையில் நிலைக்குத்தாக ஏற்பட்ட உடைவின் காரண பாக ஒருபுறம், தனது பழைய நிலையிலிருந்து கீழிறங்கி விடுத லுண்டு. அவ்வாறு ஏற்பட்ட நிலத்தோற்றமே நிலைக்குத்துக் குறையாகும் (படம் 1) பாறைப் படையில் ஏற்பட்ட குறை சாய் வானதாக அமைந்து இருபுறங்களும் தத்தமது நிலைகளிலிருந்து பிறழ்ந்திருந்தால் அதனைப் பொதுவான சாய்வுக்குறை என்பர். (படம் 2) பொதுவான சாய்வுக் கு றை யி ன் , நேர்மாறான
பெள. 3

Page 11
பௌதிகப் புவியியல்
இTS
பகத் சான்
காயMASAMAMAGAN: 929ஆமோடம்
19 கயா 2வது
*IPTாப்ப:கனுமாமா சா.துவை
யேகமா காராமண அகராதரம்பா
சாரு
- 2 ;
1821 ப மா
Tங்கலாகமை
கனடா
கனடா
5 ஈF
நF- கேரா
பாட பா.
ட்ரகக 24-1- 2 -பக்கம்:12-க்கக்கே
அண்ணா EREாலை.
1 22 ETF
-?
இ> IST )
RேESST
அ 29 -
BTRENAAM:29amakeலவகைளைவலையளவைப்னாலைவரை
(F என்பது குறையைக் குறிக்கும்) 1. நிலைக்குத்துக் குறை 2. சாய்வுக் குறை
நேர்மாறான குறை 4. வடி. நிலத் தொடர்க் கு றை பாறைப் பிதிர்வு
- படிக்குறைப் பிளவுப்பள்ளத்தாக்கு 7. உதைப்புக் குறை.
8. அமுக்கப்பிளவுப் பள்ளத்தாக்கு (மொங்கவுஸின் படங்களைத் தழுவியவை)

பௌதிகப் புவியியல்
15
தன்மையே நேர்மாறான குறையாகும். (படம் 3) ஒரு பாறைப் படையில் பல உடைவுகள் ஏற்பட்டு அவ்வுடைவுகளின் புறங்கள் மேலாயும், கீழாயும் தத்தமது நிலைவிட்டு அமைந்திருக்கில் அதனை வடிநி லத் தொடர்க்குறை என்பர். (படம் 4) ஒரு பாறைப் படை யில் இரு குறைகள் ஏற்பட்டு; அதனிரு புறங்களும் கீழிறங்க மத்தியபகுதி புடைத்து நிற்கில் அந்நிலவுருவத்தைப் பாறைப் பிதிர்வு என்பர். (படம் 5) பாறைப்படையில் குறைகள் உருவாக நடுப்பகுதி படி படியாகக் கீழிறங்குவதால் ஏற்படுவதே படிக் குறைப் பிளவு பள்ளத்தாக்கா கும். (படம் 8)
அமுக்கவிசை காரண மாகவும் சிலவகைக் குறைகள் உருவா கின்றன. குனிந்த மடிப்புக்கள் மீது அமுக்கவிசை வேகமாகத் தொழிற்படும் போது அச்சு உடைவுற்று உதைப்புத் தளம் உரு வாகின்றது; இவ்வாறு உருவாகு வதே உதைப்புக் கு றையாகும். (படம் 7 ) பாறைப்படை ஒன்றில் அமுக்கவிசை தொழிற்படும் போது அப்பாறைப் படைமடிப்புறுகின்றது. மடிப்புறுதல் கூடுத லாக நிகழும் போது, மத்தியில் குறைகள் ஏற்படுகின்றன. கு றைகள் தோன்றியதும், மத்திய பகுதி அமுக்கத்தால் கீழ் இறங்கிவிடும் இவ்வாறு தோன்றுவதே உதைப்புக் குறைப் பிளவுப் பள்ளத்தாக் காகும் (படம் 8)
இவ்வாறு பல்வேறுபட்ட குறைகள் புவியோட்டில் இழுவிசை அமுக்கவிசை என்பன காரணமாக உருவாகின்றன.
(அ) சாதாரண தின்னலை விளக்குக. (ஆ) சாதாரண தின்னலுடன் தொடர்புள் ள
நிலவுருவங்களை விளக்குக.
(அ) ஓடும் நீரினால் புவியோட்டில் ஏற்படும் அரிப்பினையே சாதாரண நீரரிப்பு என்பர். காற்றினால் நிகழும் அரிப்போ; பனிக்கட்டியாற்றினால் நிகழும் அரிப்போ உலகின் எல்லாப் பகுதிகளிலும் நிகழமுடியாது. ஆனால், நீரினால் ஏற்படும் அரிப்பு உலகெங்ஙனும் நிகழக்கூடியது. அதனால், இதனைச் சாதாரண அரிப்பு என வழங்குவர். அய ன மண்டலப் பகுதிகள், இடை வெப்பப் பகுதிகள் என்பன எங்கினும் நதி நீர் அ ரி ப்  ைபப் பொது வா கக் காண லாம்.

Page 12
16
பௌதிகப் புவியியல்
நதி நீரினது அரிப்பு மூன்று நிலைமைகளைப் பொறுத்து அமை கின்றது. அவையாவன:
( அ ) நதி நீரின் கனவளவு ( ஆ ) நதியினது வேகம் (இ) அது பாய்ந்து வரும் பிரதேசத்தின் வன்மை,
மென்மை
நதியானது நீரினை அதிகவளவிற் கொண்டு, மிக வேகமான தாகப் பாய்ந்தால், பாய்பிரதேசம் அதிக தூரம் அரிப்பிற்குள்ளா கும்) அதுபாயும் பிரதேசம் மென்மையான பாறைகளைக் கொண்ட தாக இருந்தால் அரித்தல் மிகவேகமாக நிகழும், வன்மையான பாறைகளும் மென்மையான பாறைகளும் மாறிமாறி அமைந் திருக்கில் வன்மையான பாறைகளில் நீரின் அரிப்பு மெதுவாகவும் மென்மையான பாறைகளில் நீரின் அரிப்பு  ேவ க ம ா க வு ம் காணப்படும்.
நீரி. நீ .
நிலைக்குத்துச் சுரண்டல் பக்கச் சுரண்டல், கரைசல், நீர்த் தாக்கம், அரைந்து தேய்த்தல் என்பன மூலம் சாதாரண தின் னல் நிகழ்கிறது. நதி தொடக்கத்தில் நிலைக்குத்தாகப் பள்ளத் தாக்கினைத் தோற்றுவிக்கின்றது. பின்னர் நீரின் கனவளவு அதி கரிக்கப் பக்கச் சுரண்டலைச் செய்கிறது. நீர் ஓடும் போது பாறைகளிலுள்ள இராசாயனப்பொருட்கள் கரைசலிற்குள்ளா கின் றன. உதாரணம் சுண்ணக்கல்லிலுள்ள கல்சியம். அரிக்கப் பட்ட பருப்பொருட்கள் காவிச் செல்லப்படும் போது அவை ஒன்று டன் ஒன்று அரைந்து தேய்ந்து போகின்றன.
(ஆ) சாதாரண அரிப்பால் தோன்றும் நில உருவங்களை நோக்குவோம்.
நெடுக்குப் பக்கப் பார்வையில் நதிப்பள்ளத்தாக்கினை நோக் கும் போது, மென்சாய்வாகத் தொடக்கத்திலுள்ள பள்ளதாக்கு படிப்படியாகக் குழிவுறத் தொடங்குகின்ற தன்மையைக் காண லாம். நதி முதலில் பாயும் போது அது பாயும் பள்ளத்தாக்கு மென்சாய்வானதாகக் காணப்படும். (படம்: 1 அ) நதி ஊ ற்றெ டுக்கும் பகுதியிலும், அது கடலோடு கலக்கும் பகு தியிலும் அதாவது பள்ளத்தாக்கின் தொடக்கத்திலும் முடிவிலும் அரிப்பு அதிகம் நிகழாது. பள்ளத்தாக்கின் மத்திய பகுதியிலேயே அரித் தல் கூடுதலாக காணப்படும். அதனால், பள்ளத்தாக்கு மத்தியில் படிப்படியாகக் குழிவுறும். (படம்: 1 ஆ) ஆற்றின் போக்கில்

பௌதிகப் புவியியல்
17
வன்மையான பாறைகள் குறுக்கிட்டால், அவை அரிப்புறாது பள்ளத்தாக்கின் மத்தியில் உயர்ந்து நிற்கின்றன. அவ்விடங்களில் விரைவோட்டவாற்றுப் பகுதிகள் உருவாகின்றன. (படம் : 1 இ ஈ) பள்ளத்தாக்கில் பல வன்பாறைகள் தலையிட்டால் பல விரை வோட்டவாற்றுப் பகுதிகள் அமைந்து காணப்படும். வன்பா றைகள் சற்றுப் பெரியனவாயும் உயரமானவையாயும் அமையும் போது நீர் வீழ்ச்சிகள் உருவாகின்றன. (படம்: 4).
குறுக்குப் பக்கப் பார்வையில் நதி பள்ளத்தாக்கினை நோக்கும் போது நீரின் கனவளவு. வேகம், பாறைப்படையின் வன்மை மென்மை என்பனவற்றைப் பொறுத்து நிலவுருவம் அமைவதைக் காணலாம். நதி முதலில் பாயும்போது தளத்தை நிலைக்குத்தா கச் சுரண்டுவதால், சிறிய V-வடிவமான பள்ளத்தாக்கு உருவாகின்றது. படம்: 2 அ: படிப்படியாக அரிப்புக் கூடும்போது V- வடிவம் பெரிதாக மாறுகின்றது. (படம்: 2ஆ) காலகதியில் நிலைக்குத்துச் சுரண்டலோடு பக்கச் சுரண்டலும் அதாவது பள்ளத்தாக்கின் இரு பக்கமும். அரிக்கப்படல். நிகழும் போது V- வடிவப் பள்ளத் தாக்கு. U வடிவைப் பள்ளத்தாக்காக மாறிவிடுகின்றது" (படம்: 2 இ, ஈ).
பாறைப்படைகள் அமைந்துள்ள திசையினைப் பொறுத்தும் பள்ளத்தாக்கின் வடிவம் அமையும். படம் 3ல் காட்டியவாறு பாறைப்படைகள் அமையும்போது, பா றைப்படைகளின் போக்குப் பக்கம் அரிப்புக் கூடுதலாக நிகழ்வதால் மென்சாய்வினையும், எதிர்ப்பக்கம் அரிப்புக் குறைவாக நிகழ்வதால் குத்துச் சாய்வினை யும் கொண்ட சமச் சீரற்ற பள்ளத்தாக்கு அமைந்துவிடும்.
முதலில் நேராக ஓடுகின்ற நதி. கா லகதியில் பக்கங்களை அரித்து நீக்கிவிடுவதால், வளைந்து செல்லத் தலைப்படுகின்றது. (படம் 6 அ. ஆ. இ. ஈ.) மியாந்தர் வளைவுகள் நதியின் போக்கில் ஏற்பட்டுவிடும். மியாந்தர் வளைவுகள் பெரிதும் அரிப்பிற்குள்ளான சமவெளியிலே யே காணப்படும். மியாந்தர் வளை வாகப் பாயும் அந்நதி புதிய பள்ளத்தாக்கினை அமைத்து நேராகப் பாயும் போது, பழைய வளைவுப் பள்ளத்தாக்கில் நீர் தேங்கி ஏரி ஒன்று உருவாகிறது. (படம் 6 உ) இதனைப் பணியெருத்தேரி என்பர்.
இவ்வாறு பல்வேறு வகைப்பட்ட நில வுருவங்களை உருவாக்கு கின்ற நீரானது ஓர் உயர் பிரதேசத்தினை அரிக்கும்போது எத் தனையோ கோடி ஆண்டுகளுக்குப்பின், அப்பிரதேசமானது ஆங்

Page 13
18
பௌதிகப் புவியியல்
தவிர்ப்பதும் போலிக் அவேஸ்கடுவி
ட நைட்
புடம்: 2
9
மூப்பகம்
படம்!
படம் &
படம்:5 -
|
இகா னையா
மியாரதர்
அப்பாவகம்
படம்-6
பணியெரூத்தேரி
காரைகனையாகத0ாஜா
சாதாரண நீரரிப்பினால் தோன்றும் நிலவுருவங்கள்: (படம் : 1 அ. ஆ. இ. ஈ நெடுக்குப்பக்கப் பார்வையில் பள்ளத்தாக் கானது படிப்படியாக அரிப்பிற்குள்ளாதல், வண்மையான பாறை கள் குறுக்கிடும்போ து விரைவோட்ட வா ற்றுப்பகு திகள் உரு வாதல், படம் 2 அ. ஆ. இ. ஈ. v வடிவப் பள்ளத்தாக்கு படிப்படி யா க ப வடிவப் பள்ளத்தாக்காக மாறல். படம் 3: பாறைப்படை யின் அமைப்பைச் பொறுத்து பள்ளத்தாக்கு அமைதல். படம்: 4 நீர்வீழ்ச்சி, படம் 5: ஆறரித்த சமவெளி படம் 6; அ, ஆ. இ. ஈ. உ. படிப்படியாக நதி மியாந்தர் வளைவுகளைப் பெறுதல்: பணி யெருத்தேரி தோன்றல்.)

பௌதிகப் புவியியல்
19
காங்கு சிறு சிறு மொ னாட் நொச்சுகளைக் கொண்ட சமவெளியாக மாறுவிடும். இச்சமவெளியை ஆறரித்த சமவெளி (படம் 5) என வழங்குவர்.
சாதாரண நீரரிப்பினால் இவ்வாறு பலவகை நிலவுருவங்கள் புவியோட்டில் ஏற்படுகின்றன. நீரானது அரித்த பருப்பொருட்களை காவிச்சென்று, பலவிடங்களில் படியவிடுகின்றது. படிய விடுவ தால் வண்டல் வெளிகள், கழிமுகங்களில் மணல்மேடுகள் முதலி யன தோன்றுகின்றன.
D• (அ) வெப்பப்பாலை நிலங்களில் காற்றின் செயற்
பாட்டை விபரிக்க. (ஆ) காற்றின் செயற்பாட்டுடன் தொடர்புபட்ட நிலவுரு
வங்களை வரிப்படங்களின் உதவியுடன் ஆராய்க.
(அ) பாலைநிலங்கள் போன்ற வறள் பிரதேசங்களில் காற்றின் செல்வாக்கே அதிகமாக இருக்கின்றது. காற்றின் அரித்தல் செயலைப் பாலை நிலங்களில் காணலாம். வேகமான காற்றுக்கள் அரித்தலைச் செய்யக்கூடியனவாகும். பாலை நிலக் காற்றுக்கள் வரண்டன வாக வும் உராய்வற்றன வாகவும் இருப்பதால் வேகமானவை. அதனால் வரண்ட பாலை நிலங்களில் அரித்தலைச் செய்கின்றன. காற்றின் அரித் தல் செயலுக்கு முக்கியமாக மூன்று காரணிகள் துணை நிற்கின்றன. அவை :
1. சடுதியான வெப்பமாற்றம் 2. காற்றரி பரல்கள் 3. மழை வீழ்ச்சி
பாலை நிலங்களில் முகிற் கூட்டங்கள் இன்மையினால் பகற் பொழுதுகளில் அதிக வெப்பம் நிலவுகின்றது. இந் த அதிக வெப் பத்தினால் அங்குள்ள பாறைகள் விரிவடைகின்றன. இரவு வேளை களிலும் முகிற் கூட்டங்கள் இன்மையினால் நிலயம் விரைவில் வெப் பத்தை இழந்து விடுகின்றது. அதனால், அதிக குளிர் இப்பிரதேசங் களில் நிலவுவதால் பகலில் விரிவடைந்த பாறைகள் திடீரெனச் சுருங்குகின்றன. இச்சடுதியான வெப்ப மாற்றத்தால் விரிவடைத லும் சுருங்குதலும் தொடர்ந்து நிகழும் போது பாறைகளில் மூட்டுக் அள், வெடிப்புக்கள் தோன்றி உருக்குலைகின்றன. எப்போதாவது

Page 14
20
பௌதிகப் புவியியல்
பெய்யும் மழை நீர் அவ்வெடிப்புகளில் தேங்குவதால், இந்த உருக் குலைதல் மேலும் உருக்குலைகின்றது. அவ்வேளை களில் , பாலை நிலங் க ளில் வேக மாக வீ சுங் காற்றுக்கள் இப்பாறை களைத் தகர்த்து விடு கின் றன.
ம மக்க LA
படம் 1
அடியறுத்தல்
படம் 2
படம் 3
படம்
படம் 6
::::::
... ம். 5
காற்றரிப்பால் தோன்றும் நிலவுருவங்கள்.
(படம் 1: அ, ஆ. இ. பீடக்கிடைத்திணிவு உருவாகுதல். படம் 2 : யார்டாங்கு, படம் 3 காளான் வடிவப்பாறை. படம் 4: மணற்குன்றின் தோற்றம். படம் 5 : பிறையுருமணற் குன்றுகள். படம் 6: நெடுமணற் குன்றுகள்.)

பௌதிகப் புவியியல்
21
வீசுங் காற்றில் படிகம், மண் , தூசு போன்ற காற்றரி பரல்கள் கலந்திருப்பதனால், காற்று பாறைகளில் தொடர்ந்து மோதும்போது பாறை அரிப்பிற்குள்ளாகின்றது. வன்மை குன்றிய பகுதிகள் எளிதில் அரிப்பிற்குள்ளாகிவிடுகின்றன. வன்மையான பகுதிகள் எ ஞ் சி ப் புடைத்து நிற்கின்றன. எப்போதாவது பெய்யும் மழை நீரும் அரித் தலுக்கு உதவுகிறது.
காற்று பாறைகளை அரிக்கும் போது தேய்த்தல்,அரைந்து தேய் தல், வாரியிறக்கல் என்பன மூலம் அரித்தல் செயல்புரிகின்றது.
காற்று எடுத்துச் செல்லும் பொருட்கள் எதிர்ப்படும் பாறை களைத் தேய்த்து அழுத்தமாக்குகின்றன பரல், மண், தூசு முதலிய பொருட்களைக் காற்று எடுத்துச் செல்லும் போது அதிக உயரத்தில் காவிச் செல்லாது. மேலும், பருமனில் கூடிய பருப்பொருட்கள் காற்றின் கீழ் பகுதியிலேயே காணப்படுகின்றன. பருமனில் கூடிய பொருட்கள் கீழ் புறத்தில் காணப்படுவதால், எதிர்ப்படும் பாறை களின் அடிப்புறமே அரிப்பிற்குள்ளாகின்றது: இந்த அடியறுத்தல் செய்முறையினால், காளான் வடிவப் பாறைகள் வறண்ட பிரதேசங் களில் உருவாகின்றன (படம் : 3) காளான் வடிவப் பாறை அடிப் புறம் ஒடுங்கியும் மேற்புறம் புடைத்தும் காணப்படும்
காற்றரிப்பால் வெப்பப் பாலை நிலங்களில் உருவாகும் பிறி தொரு நிலவுருவம் பீடக்கிடைத்திணிவு என்ப தாகும். மென்பாறைப் படைகளுக்கு மேல் வன் பாறைகள் அமைந்திருக்கில், மேலமைந்த வன்பாறைப் படையில் ஏற்கனவே விபரித்தவாறு. விரிதல் சுருங்கு தல் மூலம் உருக் குலைதல் நிகழும் போது ஏற்பட்ட மூட்டுக்க ளுடே காற்றானது வேகமாக அரிக்கின்றது. இச்செய்முறை மிக ஆழமா க திணிவு களை எஞ்சவிட்டு நிகழும். இதனால் எஞ்சும் நிலவுருவமே பீடக் கிடைத்திணிவு என்பதாகும். அற்றகரமாப் பாலை நிலத்தில் பீடக் கிடைத்திணிவுகளை ஏராளமாகக் காணலாம். (படம்: 1 அ. ஆ. )
பாறைப்படைகள் தரைக்குச் சமாந்தரமாக அமையாமல் குத் தாக அமையும்போது - அவை வன் பாறைப் படையாகவும் மென் பாறைப் படையாகவும் மாறிமாறி அமையும்போது - யார்டாங் என்ற நிலவுருவம் தோன்றுகிறது. மென்பாறைப்படைகள் இலகுவில் அழிந்து நீக்கப்பட்டுவிட வன் பாறைகள் கரடுமுரடான சுவர்களா கப் புடைத்து நிற்கின்றன. அவற்றிடையே நெடுக்குப் பள்ளத்தாக்
கு கள் அமைந்து காணப்படும்.
காற்றானது ஓரிடத்திலுள்ள மணலை வாரி எடுத்துச் சென்று பிறிதொருவிடத்தில் இறக்கிப் படிய வைக்கின்றது. அதனால் மணற்
பெள. 4

Page 15
22
பௌதிகப் புவியியல்
தொடர்மன்ற்தன்று :
புச்சமணர்
கேழ்ளார்
குன்று
தெ/ன சி ஐ சன்று 9)
முன்தேதி யாயும்மனம்
"}) } பாறை4தமனற் , றோ பக்த மனத்தன்று - அணு
- குநன்று குன்றுகள் உருவாகின்றன. இருவகையான மணற் குன்றுகள் முக்கி யமானவை. நெடுமணற் குன்றுகள் பார்க்கன் அல்லது பிறையுருவ மணற்குன்றுகள் என்பன அவையாகும். காற்று வீசுந் திசைக்கு இணங்க நீண்டமையும் மணற்குன்றுகளை நெடுமணற் குன்றுகள் என்பர்: இவற்றில் பெரியது தொடர் மணற்குன்று எனப்படும். இத்தொடர் மணற்குன்றின் காற்றுப்பக்கத்தில் அமைவது முன்னோக் கியமையும் மணற்குன்றாகும். காற்றொதுக்கில் அமைவது புச்ச மணற் குன்றாகும், தொடர் மணற்குன்றின் பக்கத்தில் அமைவன ப க் க மணற் குன்றுகளாகும். காற்று வீசும் திசைக்குக் குறுக்காக அமை வன பார்க்கள் மணற் குன்றுகளாகும். இவை பிறை வ டி வி ன. கூட்டம் கூட்டமாகக் கா ணப்படுவன. இவற்றின் காற்றுப்பக்கம் மெள் சாய்வாகவும் காற் றொது க்குப் பக்கம் குத்துச் சாய்வாகவும் காணப்படும். காற்றானது மென் சாய்வுப்பக்கத்தில் மணலை வாரி யெடுத்துக் குத்துச் சாய்வுப்பக்கத்தில் படியவிடும். அதனால் இக் குன்றுகள் முன்னோக்கி நகர்வன போன்று காணப்படும்.
இவ்வாறு பல்வகை நிலவுருவங்கள் வெப்பப் பாலை நிலங்களில் காற்றரிப்பால் ஏற்படுகின்றன.
சுண்ணாம்புக்கற் பிரதேசத்திலுருவாகும் நிலவுரு களை உதாரணங்களோடு விளக்குக.
சுண்ணாம்புக்கற் பிரதேசங்கள், சோக்குப் பிரதேசங்கள் என்பன நில நீர்ப் பொசிவிற்கு இடமளிக்கத்தக்கன வாய் பல மூட்டுக்களை யும் நுண் துளைகளையும் உடையனவாக விளங்குகின்றன. சுண்ணாம்புக் கற் பிரதேசங்கள் யூகோசிலாவியா, யமேக்கா, பிரான்ஸ், பெல்ஜியம் இலங்கை ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. இங்கெல் லாம் தரை கீழ் நீரானது நிலத்தினை அரித்துப் பல்வேறு வகைப்பட்ட நிலவுரு

பௌதிகப் புவியியல்
23
வங்களைத் தோற்றுவித்துள்ளது. இந்த நிலவுருவங்களும் நிலத்தின் மேற்பரப்பில் அதிகமாக அமையாது. நிலத்தினுள்ளேயே அமைந்து விடுகின்றன.
சுண்ணாம்புக்கற் பிரதேசத்தில் கரைசல் எனும் செய் முறையி னாலேயே நிலவுருவங்கள் அமைகின்றன. சுண்ணாம்புக்கற் பிரதேசப் பாறைகள் கரைசலுக்கு உட்படக்கூடிய கனிப்பொருட்களைக் கொண் டுள்ளன. காபன் டி ஓக்சைட்டைக் கொண்டுள்ள மழை நீரானது சுண்ணாம்புக் கல்லிலுள்ள சில கனிப்பொருட்களைக் கரைத்து நீக்கி விடுகின்றது. இக்கரைசல் செய்முறை தொடர்ந்து நிகழும்போது சுண்ணாம்புக்கற் பாறையானது தொடக்கத்துப் பண்பினை இழந்து புதிய நிலவுருவங்களைப் பெற்றுக்கொள்கின்றன. இக்கரைசல் செய் முறையை இரசாயன வானிலை அழிவு என்பர்.
மூட்டுக்கள், நுண் துளைகள் என்பன வூடாக நீரானது சுண்ணாம்புக் கற்பிரதேசத்தில் நிலத்தினுள் இறங்கும் போது, இறங்கும் பாதையின் பக்கங்களை கரைத்து விடுவதால் கரடு முரடான நீண்ட பள்ளங் கள் உருவாகின்றன. இப் பள்ளங்களைப் புனற் பள்ளங்கள் எ ன் பர். (படம் : அ) இப்புனற் பள்ளங்கள் படிப்படியாக அகன்று பெருத்து விடும்போது அவற்றை விழுங்கு துளைகள் என்பர். இந்த வி ழுங்கு துளை கள் மழை நீரினை வேகமாக நிலத்தினுட் செலுத்தக் கூடியன.
உவாலாஸ் என்பது சுண்ணாம்புக்கற் பிரதேசங்களில் காணக் கூடிய இன் னொரு வகை நிலவுறுப்பா கும். இது விழுங்கு துளையை விடப் பெரிய து; இரண்டு அல்லது மூ லறு விழுங்கு துளை கள் ஒன்று சேர்ந்து இணை வதால் உவாலாஸ் உருவாகும், (படம் : ஆ) உவாலா ஸிலும் பார்க்க இன்னும் சற்றுப் பெரிய பள்ளத்தைப் போல் யே என்பர். இவை பல உவாலர்ஸ் கள் ஒன்றுசேர்ந்து இ ணை வ த ா ல் தோன்றியவை. (படம் : இ) பல மைல் கள் நீளமான . பல நூற்றுக் கணக்கான சதுர மைல்கள் பரப்புடைய போல் யேக் களுமுள்ளன .
இலகுவிற் கரைக்க முடியாத வன் மையான ப ா ன ற க ளு வீ சுண்ணாம்புக்கற் பிரதேசத்திலுள்ள அந்த வன்மையான பாறைகள் அயற்புற மென்மையான பாறைகள் அரிப்புண்டு போ க, சுண்ணாம் புக்கற் பிரதேசத்தில் எஞ்சி, தூண் களாக நிற்கின்றன . (படம் : ஈ) ஆழமும் ஒடுக்கமுமான தாழிகளாக விளங்கும் இந் நிலவுருவத்தை லாப்பீஸ் என்று வழங்கப்படுகின்றது
சுண்ணாம்புக்கற் பிரதேசத்தில் பொதுவாகக் காணக்கூடிய சிறப் பான நிலவுருவம் தரைகீழ் குகையா கும். (படம் : உ) கரைசலால்

Page 16
பௌதிகப் புவியியல்
புனற்பள்ளம்
H
பு
ப்TTTTTட்ட
படம்: அ
படம்: ஆ
அ சிலாப்
போல்ஜே
தி
க
பி
படம்: சி.
படம்:Fஈ
பொனார் T"47 க தூண்ட
- கசிந்துளிவீழ்வு - கசிந்துளிப்படிவு
ட்T
படம்:உ
ஜனாகலு£4:37ணட$ககானைனா
சுண்ணாம்புக்கற் பிரதேச நிலவுருவங்கள் (அ) புனற்பள்ளம் (ஆ) உவாலாஸ் (இ) போ ல்ஜே (ஈ) லாப்பீஸ் (உ) தரைக்கீழ் குகை - பொனார், கசிந்துளி வீழ்வு , கசிந்து ளிப் படிவு
தூண்
உரு வான இக்குகை கள் பல மைல் கள் நீளமானவையாக விளங்கு கின்றன. யூகோசிலாவியா, இங்கிலாந்து முதலிய நாடுகளில் இத்த கைய தரை கீழ் குகைகளைக் காணலாம். யாழ்ப்பாணக்குடா நாட்டில் மயிலியதனை என்ற இடத்தில் இத் தகைய தரை கீழ் குகையின் மிகச் சிறிய வடிவினைக் காணலாம். தரைகீழ் குகையின் கூரை பலமற்ற தாக இருக்கும்போது இடிவுற்று விழுந்து போகின்றது, பின் அத் தரைகீழ் குகையில் நீர் தேங்கி ஏரியாக மாறிவிடுகின்றது.
தரைகீழ் கு கைகளையும் விழுங்கு துளை களையும் இணைக்கும் வாயி லைப் பொனார் என் பர். தரைகீழ் கு கையிலிருந்து ஒழுகும் நீரில் காபனேட் சுண்ணம் இருப்பதால், அது தரைகீழ் குகையின் நிலத் தில் விழுந்து இறுகி, கூரையை நோக்கி படிப்படியாக வள ரும் இயல்பினது. இதனால் தோன்றும் நிலவுருவத்தைக் கசிந்துளிப் படிவு என் பர். அதுபோல, தரைகீழ் குகையின் கூரையிலேயே தங்கிவிடும்

பெளதிகப் புவியியல்
25
நீரின் காபனேட் சுண்ணமும் நிலத்தை நோக்கித் தூண் போல வளரும் தன்மையது, இதனால் உருவாகும் நிலவுருவத்தைக் கசிந் துளி வீழ்வு என்பர். கசிந்து ளிப்படிவும் கசிந்துளி வீழ்வும் ஒன்றாக இணைந்துவிடும் போது தூண் உருவாகின்றது. (படம் : உ, பெரிய தோர் தரைகீழ் கு கையின் கூரை தகர்ந்துவிடும் போது, இத்தூண் கள் லாப்பீஸ் போன்ற அமைப்பினைத் தருவனவாக அமைந்து காணப்படும். மேலும் இத்தூண் கள், கசிந்துளிப் படிவு என்பனவே தரைகீழ் குகையின் கூரையைத் தகர்ந்து விழாது தாங்கி நிற்கின்றன
இவ்வாறு சுண்ணாம்புக்கற் பிரதேசத்தில் கரைசல் செய் முறை யினால் பல நிலவுருவங்கள் உருவாகின்றன.
(அ) கண்ட இமங்கொள்ளலுக்கும் (கண்டப் பனிக்
கட்டியாறு) மலை இமங்கொள்ளலுக்கும் (மலைப் பனிக்கட்டியாறு) உள் ள வேறுபாடுகளை
விளக்குக. (ஆ) வரிப்படங்களின் உதவியுடன் மலை இமங்கொள்
ளலினால் ஏற்பட்ட நிலவுருவங்களை விபரிக்க.
(அ) பரந்தவொரு பிரதேசத்தில் காணப்படும் பனிக்கட்டிக் கவிப்பானது தன்னிடம்விட்டு நகரும்போது அதனைப் பனிக்கட்டி யாறு என்பர். இதனை யே இமங்கொள்ளல் அல்லது இமவாக்கம் எனவும் அழைப்பர். பனிக்கட்டிக் கவிப்புகள் இன்று இரு பிரதே சங்களில் காணப்படுகின்றன. ஒன்று உயர் மலைப்பிர தேசங்கள் மற்றையது முனை வுப் பகுதிகள். உயர்ந்த மலைப்பிரதேசங்களில் மழைப் பனி க் கோட்டிற்கு மேல் காணப்படும் பனிக்கட்டிக் கவிப்பு தன்னிடம் விட்டு நகரும் போது அதனை மலை இமங்கொள்ளல் என் பர். பனிக்கட்டிக் கவிப்பில் பனிப்பிளவுகள் அல்லது அமுக்கவுரு கல் என்பன ஏற்பட்டதன் விளைவாக இது சா ய்வின் வழியே கீழ் நோக்கி நகரும். பரந்த சப வெளிப் பிரதேசங்களில் காணப்படும் பனிக்கட்டிக் கவிப்பானது தன்னிடம்விட்டு நகர்ந்தால் அதனைக் கண்ட இமங்கொள் ளல் என் பர். மலை இமங்கொள்ளல் வேகமாக நகரும். கண்ட இமங்கொள்ளல் மெதுவாகவே நகரும்
(1) உயர் மலைப்பகு திகளில் மழைப்பனிக் கோட்டிற்கு மேல் இவை காணப்படுகின்றன. இமயமலையில் 16,000 அ டி க ளு க் கு

Page 17
26
பௌதிகப் புவியியல்
மேலும், அல்ப்ஸ் மலையில் 9,000 அடிகளுக்கு மேலும் பனிக்கட்டி யாறுகளுள்ளன. மத்திய கோட்டிலிருந்து முனைவுகளை நோக்கிச் செல்லச் செல்ல மலைப்பகுதிகளில் பனிக்கட்டிப் படலங்கள் காணப் படுகின்ற உயரம் குறைந்து காணப்படும். இப்பனிக்கட்டிப் படலம் தன்னிடம்விட்டு நகர்ந்தால் மலைப் பனிக்கட்டியாறு எனப்படும்
(2) முனை வுப் பகுதிகளில் பனிக்கட்டிப் படலங்களும், பனிக் கட்டியாறுகளும் கடல் மட்டத்திலேயே காணப்படுகின்றன. ஏறத் தாழ 10,000 அடிகளுக்கு மேற்பட்ட ஆழத்தினை யுடைய பனிப் படலங்களை ஆக்டிக், அந்தாட்டிக் பகு திகளில் நாம் காணலாம். இவை தம்மிடம் விட்டு நகர்ந்தால் கண்டப் பனிக்கட்டியாறு என்பர். இவ்வாறு நகரும் போது, இப்பனிக்கட்டியாறுகள் நிலத் தின் மேற்பரப்பில் பறித்தல், தேய்த்தல் என்பன மூலம் அரித்தலைச் செய்கின்றன. அதனால் பலவிதமான நிலவுருவங்கள் உருவாகின் றன.
(ஆ) மலை இமங்கொள்ளலினால் ஏ ற் ப டு ம் நில வுருவங்களை நோக்குவோம்.
பனிக்கட்டியாற்று அரிப்பினால் உருவாகும் நிலவுருவங்களுள் வட்டக்கு கை எனு முறுப்பு மிக முக்கியமானது . (படம் 1) மலை யுச்சிகளில் வீழ்கின்ற மழைப்பனியானது அவ்வுச்சிகளின் பக்கச் சாய்வுகளில் அமைந்த சிறுகுழிகளில் தேங்குகின்றது. இக்குழி களில் இம்மழைப்பனி உருருவ தா லும் உறைவதா லும் அக்குழிகள் உருக்குலையத் தொடங்குகின்றன . பொறிமுறையா லழிதலால் அக் குழி பெரும்பள்ளமாக மாறிவிடுகின்றது. அதிக அளவில் பனி தேங்க, இவை வட்டமான பள்ளங்களாகி விடுகின்றன, இவை யே வட்டக்கு கைகளாம். இந்த வட்டக்குகைகள் ஒரு மலையுச்சியின் நான்கு பக்கங்களிலும் உருவாகி, ஒன்றையொன்றை  ேந ா க் கி வளர்தலுமுண்டு. அவ்வாறு ஒன்றையொன்று நோக்கி வ ள ரு ம் போது, இரண்டிற்குமிடையே தோன்றும் எல்லை வரம்பைக் கூர் நுனி உச்சியென்பர்; நான்கு புறமும் வட்டக் கு கைகளைக் கொண்ட மலைச்சிகரத்தைக் கூம்பகச் சிகரம் என்பர். மழைப்பனியில்லாத வட்டக் குகைகளில் நீர்தேங்கி ஏரிக ளாகவுள்ளன. அவை வட்டக் குகை ஏரிகள் எனப்படுகின்றன.
மலை இமங்கொள்ளலால் உருவாகும் இன்னொரு நிலவுருவம் செம்மறியுருப்பாறை ஆகும் அதனை றோச் முற்றோனி எனவும் வழங் குவர். உயரம் கூடிய அகலம் குறைந்த ஒரு பாறைத்திணிவு பனிக் கட்டியாற்றின் போக்கில் குறுக்கிட்டால் அதனை பனிக்கட்டியாறு

பௌதிகப் புவியியல்
பட விளக்கம் (1) வட்டக்குகை (2) வான் பார்வையில் வட்டக்குகை : கூர் நுனி உச்சி கூம்பகச் சிகரம் (3) இரு வட்டக்குகைகள் இணை தல் (4) வட்டக்குகை ஏரி
இலகுவாகப் பறித்துச் செல்லும். ஆனால் அகலம் கூடிய உயரம் குறைந்து பாறைத் திணிவொன்று குறுக்கிடில் பனிக்கட்டியாற்றி னால் அதனை இலகுவில் பறித்துச் செல்ல முடிவதில்லை. அ த னை மேவிச் செல்கின்றது. அதனால் மேவும் பக்கம் தேய்த்தலும் இறங் கும் பக்கம் பறித்தலும் நிகழ்கிறது, அதனால் ஒரு பக்கம் தேய் தலையும் மென்சாய்வையும் கொண்டதாயும் மறுபுறம் கரடுமுரடா யும் குத்துச்சாய்வைக் கொண்டதாயும் ஒரு நிலவுருவம் ஏற்படு கிறது. அதனைச் செம்மறியுருப்பாறை , என்பர். (படம்: 7)

Page 18
பௌதிகப் புவியியல்
படவிளக்கம் : (5) பீடங்கள்
(6) பனிக்கட்டி யாற்று நகர்வு (7) செம்மறியுருப் பாறை (8) குத்துப்பாறை வாற் குன்று (9) 'V' வடிவப்பள் ளத் தாக்கு 'U' வடிவப் பள்ளத்தாக்கு (10) தொங்கு பள்ளத்தாக்கு
ட
குத்துப்பகின்றா
மென் பாறைப் ப டை க ள ா ல் மூடப்பட்டிருக்கும் - வன்பாறைத் திணிவு ஒன்றின் மீது பனிக்கட்டி யாறு நகர நேரில், அப்பாறைத் தி ணி வி ன் முற்பக்கத்திலிருக்கும் மென் பாறைப் படைகள் இலகுவில் பனிக்கட்டியாற்றினால் ப றி த் து ச் செல்லப்படுகின்றது. அந்த வன் பாறை அதன் ஒதுக்கில் இருக்கும் மென்பா றைப் படைகளை அரித்துச் செல்ல விடாது தடையாக விளங் குகிறது. பனிக்கட்டியாறு அப்பா றைத் திணிவை மேவியும் சுற்றியும் அரித்தபடி நகர்கின்றது. அதனால் அக்குத் துப் பாறைக்கு முற்பகுதி அரிக்கப்பட்டும் பிற்பகுதி அரிக்கப் படாதும் வால் போன்று காட்சி தருகின்றது. அதனைக் குத்துப்பாறை வாற்குன்று என்கின்றனர்.
கப்ரா.
6
கீழ் நோக்கி நகரும் பனிக்கட்டி யாறுகள்- நதிப்பள்ளத்தாக்குகளு டா க அசையும் போ து V வடிவமான பள்ளத்தாக்குகள், குத்தான பக்கங் களையும் மட்டமான அடித்தளத்தை
'யும் கொண்ட U வடிவப் பள்ளத் தாக்குகளாக மாறிவிடுகின்றன. (படம் 9) பனிக்கட்டியாறு கீழ்ப் புறத்தே எடுத்துச் செல்லும் பாறைப்பரல் கள் பள்ளத்தாக்கினை த் தேய்த்து அரித்து அகல்விக்கின்றன. பள்ளத்தாக்கினுள் பிதிதொரு பள்ளத்தாக்கும் பனிக்கட்டியாற்றரிப்பால் ஏற்படும். (படம் 5) அப் போது பழைய பள்ளத்தாக்கின் பக்கங்கள் பீடங்களாகக் காட்சி தரும்

பௌதிகப் புவியியல்
29
பனிக்கட்டியாறு நிலத்தை அரித்துப் பல நிலவுருவங்களைத் தோற்றுவிப்பதோடு, அரித்தவற்றைப் படியவிடுவதாலும் நில வுருவங்களைத் தோற்றுவிக்கின்றது. பனிக்கட்டியாற்றின் பக்கங் களில் படிந்தவற்றைப் பக்கப்படிவுகள் என்றும், பள்ளத்தாக்கின் மத்தியில் படிந்தவற்றை இடைப் பனிக்கட்டியாற்றுப் படிவு என் றும், அதன் முடிவில் படிந்தவற்றை முனைப்படிவு என்றும் வழங்கு வர். இப்படிவுகள் பொதுவாக அறைபாறைக் களிமண், பரல், மணல், சிறு கற்கள் என்பவற்றைக் கொண்டிருக்கும்.
இப்படிவுகள் பலவடிவங்களில் படி யவைக்கப்படுகின்றன. நீள் குன்று. நீள் மணற்குன்று முதலியன இத்தகைய நிலவுருவங்களாகும். நீள் குன்றுகள் அறைபாறைக் களிமண்ணாலும், " நீள் மணற் குன்றுகள் பரல். மணல், சிறு கற்கள் என்பனவற்றினாலும் உருவான வையாகும்.
நNET!
மான் படி
இவ்வாறு பல் வேறு நிலவுருவங்கள் பனிக்கட்டியாற்றரிப்பால் புவியோட்
டில் தோன்றுகின் றன .
HAA
இம்: இடையனிந்து
வெளிவடையற்பதிப்பு
(அ) கடலலையின் செயற்பாட்டினை விளக்குக. (ஆ) கடலரிப்பின் விளைவாக உருவாகும் நிலவுரு
வங்களை வரிப்படங்களின் உதவியுடன் விபரிக்க: (அ) கடலரிப்பின் முக்கிய தின்னல் கருவி கடலலையாகும், அலை யானது காற்றினால் இயக்கப்பட்டு கரையை நோக்கி மேவும். ஆழம் குறைந்த பகுதிகளை அடையும்போது அலையின் முடி உடை யும். அதன் ஒருபகுதி நீரானது கரையை நோக்கி மோதலையாகச் சென்று, மீள்கழுவு நீராகத் திரும்பும். அலையின் தாக்கம் வலிமை யானது. ஐந்தரை அடி உயரமான ஒரு அலை ஒரு சதுர அடியில் 600 இறாத்தல் அமுக்கத்தை ஏற்படுத்தும். கரையோரங்களில் மணலைப் படியவைக்கும் அலைகள், ஆக்கும் அலைகள் எனப்படும். கரையோரத்தை அரிக்கும் அலைகள், அழிக்கும் அலைகள் எ ன ப் படும்.
பெள 5

Page 19
30
பௌதிகப் புவியியல்
கடலலையானது நீரியற்றாக்கம், தின்னல் செயல், அரைந்து தேய்த் தல், கரைசல் என்பன மூலம் தின்னற் செயலைச் செய்கின்றது. கரையோரப்பாறைகளில் அலை வேகமாக மோதும் போது, அப் பாறை வெடிப்புகளுள் அகப்பட்ட காற்றானது அமுக்கப்பட்டு வெடிக்கின்றது. அதனால் பாறைகள் பிளக்கின்றன. அதனை நீரியற் ராக்கம் என்பர். வற்றுமட்டத்திற்கும் பெருக்கு மட்டத்திற்கும் இடையில் கடலலை அரிப்பதை தின்னல் செயல் என்பர். கரை யோரப்பாறைகளிலுள்ள கரையக்கூடிய கனிப்பொருட்கள் நீரினால் கரைசலிற்குள்ளாகின்றன. அலையால் அரிக்கப்பட்ட பருப்பொருட் கள் அலையால் முன்பின்னாக அலைக்கழிக்கப்படுவதால் ஒன்றுட னொன்று அரை ந்து தேய்கின்றன.
கராப்கார்
-கிரி
(ஆ) கடலரிப்பின் விளைவாக உருவாகும் மிக முக்கிய நிலவுரு வம் ஓங்கலாகும். அலையினால் தாக்கப்படும். கரையோரப் பாறை களே ஒங்கல்களாக மாறுகின்றன. ஒங்கலானது வெடிப்புக்களை யுடையதாகவும், உட்கு டைவாக வெட்டப்பட்டதாகவும், கரடு முரடானதாகவும் காணப்படும் பாறைத்திணிவாகும். நீரியற்றாக் கத்தால் வெடிப்புகள் உருவாகின்றன. கரைசலினால் மென்பாறைப் பகுதிகள் அரித்து நீக்கப்பட்டுவிட, வன்பாறைப் பகுதிகள் கரடு முரடாக எஞ்சி நிற்கின்றன, ஒங்கல்கள் இருவகைப்படும். அவை: (1) உ ட் கு  ைட வு ஒங்கல் (2) சாய்வு ; ஒங்கல்: பாறைப் படைகள் கடல்புறம் மாக சாய்ந்திருக்! கும்போது அ தி ல்[-2d:-00:-: உட்கு டைவு ஓங்க அடிக்கட்டை வில்வளவு குகை ”து குகை லும் பாறைப்படை
சிறுபாதைத்தீவு கள் தரைப்புறமா கச் சாய்ந் ருக்கும் போது அதில் சாய்வு) ஓங்கலும் உருவா கின்றன.
ஓங்கல்,
இட
1. குகை : ஊ றுதுளை, வில்வளைவு, சிறுபாறைத்தீவு, அடிக்கட்டை
2. உட்குடைவு ஓங்கல் "3. சால்வு ஓங்கல்

பௌதிகப் புவியியல்
31
ஓங்கல் பாறைகளில் கடலலை தொடர்ந்து தாக்கி அரித்தலைச் செய்வதால் குகை, ஊதுதுளை, வில்வளைவு. சிறுபாறைத்தீவு, அடிக் கட்டை முதலிய நிலவுருவங்கள் உருவாகின்றன. வற்று ம ட் ட த் திற்கும், பெருக்கு மட்டத்திற்கும் இடையில் கடலலை ஓயாது உட் குடைவதால், குகை உருவாகின்றது, இக்குகையினூடே அலையா னது மோதி மோதி ஊ து துளை எனப்படும் நிலைக்குத்தான தூவா ரத்தை மேனோக்கி அமைகின்றது. கரையிலிருந்து விலகிக் கடலி னுள் அமைந்திருக்கும் ஒங்கலொன்றின் இருபுறங்களிலும் அரிப்பு நிகழில் இரு புறங்களிலும் உருவாகும் குகைகள் ஒன்றோடொன்று இணை ந்து வில்வளைவைத் தோற்றுவிக்கின்றன. அரிப்பிற்குள்ளாகி கடலால் சூழப்பட்டு நிற்கும் பாறை சிறுபாறைத்தீவு ஆகும். சிறு பாறைத்தீவுகள் அரிப்புற்று அடிப்பாகங்கள் நீரினுள் அ மி ழ் ந் து கிடக்கில் அவற்றை அடிக்கட்டைகள் என்பர்.
கடலலையால் அரிக்கப்பட்ட மணல், கூழாங்கற்கள், சிப்பி, சோகி என்ற பருப்பொருட்கள் படிய வைக்கப்படுகின்றன. தரை யைச் சார்ந்து படிந்துவரில், கடல்சார் நிலங்கள் உருவாகின்றன, மணற்றடைகளும் உருவாகின்றன. பெருக்கு மட்டத்திற்குக்கீழ் கூழாங்கன்னாக்குகளும் உ ரு வ ா கி ன் ற ன. மணற்றடைகளினால் குடாக்கள், கடனீரேரிகள், சேற்று நிலங்கள் என்பனவும் உரு வா கின்றன.
(அ) பெற்றவெயில் என்றால் என்ன என்பதனை
விளக்குக. பெற்றவெயிலின் புவிப்பரம்பலை விபரிக்க.
(அ) சூரியனிடமிருந்து பூமி பெறும் வெப்பத்தின் அளவினைப் பெற்றவெயில் என்பர். சூரியனிலிருந்து பூமியை நோக்கி வரும் சூரிய கதிர்வீச்சில், ஒரு சிறு பகுதியே பூமியின் மேற்பரப்பை அடைகின்றது. பூமியை நோக்கி வரும் சூரிய கதிர்களை 100% எனக் கொண்டால், அதில் 43% மே புவியின் மேற்பரப்பை வந்தடை கின்றது. 27% சூரிய கதிர்கள் வளிமண்டலத்தினால் தடுக்கப்படாது பூமியின் மேற்பரப்பை வந்தடைந்து விடுகின்றன: 33% சூரிய கதிர்கள் முகில்களினால் தெறிக்கப்பட்டு, பூமியின் மேற்பரப்பை வந்து அடையாது வானவெளிக்குத் திருப்பியனுப்பப்பட்டு விடு கின்றன. வளிமண்டலத்தில் 25% கதிர்கள் சிதறலுக்குள்ளாகின் றன. அதில் 9% வானவெளிக்குச் செல்ல 16% பூமியின்  ேம ற்

Page 20
32
பௌதிகப் புவியியல்
பரப்பை வந்தடைகின்றது. சூரியகதிர்களில் 15% வளிமண்டலத் தினால் உறிஞ்சப்படுகின்றது. எனவே பூமியின் மேற்பரப்பை வந் தடையும் 27 + 16 = 43 சதவீதக் கதிர்களையே பெற்ற வெயில் என்பர்.
(ஆ) எனவே, பூமியின் மேற்பரப்பை வந்தடையும் 43 சத வீதம் பெற்ற வெயிலே, பூமியின் மேற்பரப்பை வெப்பமாக்கு கின்றது. பெற்ற வெயிலின் புவிப்பரம்பல் எங்கும் சமனாகப்பரந் தில்லை. பின் வருமாறு காணப்படுகின்றது..
1. மத்தியகோட்டுப் பகுதிகளில் வெப்பநிலை உயர்வாகவும்
முனைவுகளை நோக்கிச் செல்லச் செல்லப் படிப்படியாகக் குறைவடைந்தும் காணப்படுகின்றது. இதற்குக் காரணம் அகலக் கோட்டு நிலையாகும்.
நிலப் பரப்புக்கும் நீர்த்தொகுதிக்குமிடையே வெப்பநிலைப் பரம்பலில் வேறுபாடுள்ளது; காரணம் நிலமும் நீ ரு ம் வெப்பத்தைப் பெறுவதிலும் இழப்பதிலும் வித்தியாச மானவை;
5.
கடல் மட்டத்தில் வெப்பநிலை உயர்வாயும், உயரே செல்லச் செல்லப் படிப்படியாகக் குறைவடைந்தும் காணப்படுகின் றது. காரணம் நழுவு வீதமாகும்.
5,
ஒரே அகலக்கோட்டிலுள்ள இரு இடங்களில் ஒன்று வெப்ப மா ன தாயும் மற்றையது குளிரானதாயும் உள்ளன. கார ணம் நீரோட்டங்களும் காற்றுக்களுமாகும்.
1. சூரிய கதிர்களை நேராகப் பெறுகின்ற மத்திய கோட்டை அடுத்த பகுதிகள் அதிக வெப்பத்தைப் பெறுகின்றன; ஏனெனில் (அ) அப்பகுதிகளில் விழும் கதிர் வெப்பமாக்க வேண்டிய பரப்புக் குறைவா கவும், (ஆ) அக்கதிர் ஊடறுத்து வருகின்ற வளி மண்ட லத்தின் தடிப்புக் குறைவாகவும் இருப்பதனா லாம், ஆனால் உயர கலக் கோட்டுப் பகு திகள் குறைந்த வெப்பத்தை அனுபவிக்கின் றன. ஏனெனில், (அ) அப்பகுதிகளில் விழும் கதிர் வெப்பமாக்க வேண்டிய பரப்புக் கூடுதலாகவும், (ஆ) அக்கதிர் ஊடறுத்து வரும் வளி மண்டலத்தின் தடிப்புக் கூடுதலாகவும் இருப்பதனா லாம்: தடித்த வளி மண்டலத்தை ஊடறுக்கும்போது சூரிய கதிர் வீச்சின் சக்தி குறைகின்றது. மேலும் அதிக பரப்பை சூரிய கதிர் வெப்பமாக்க முயலும்போது, அங்கு வெப்பநிலை குறைவடைகின்

பௌதிகப் புவியியல்
33
ளிமண்ட்மெர்
7ாாாாாா,T377) இரானது சூரியபகதிர்கள்// /////////பட்டம்
பூமியில் சூரிய கதிர்கள் விழும் கோணம்
றது. படத்தை அவதானிக்கும் போது இவ்வுண்மைகளைத் தெளி வாக உணர்ந்து கொள்ளலாம்.
(2) நிலப்பரப்பும், நீர்த் தொகுதியும் வெப்பத்தைப் பெறுவ திலும் அவற்றை இழப்பதிலும் வித்தியாசமானவை. நிலப் பரப்பு நீர்ப் பரப்பிலும் மிக விரைவாக வெப்பத்தைப் பெறுகின்றது அதே போல வெப்பத்தை விரைவிலும் இழந்து விடுகின்றது. ஆனால் நீர்த்தொகுதிகள் வெப்பத்தை மெதுவாகப் பெற்று மெதுவாகவே இழக்கின்றன. நிலப்பரப்பு விரைவில் வெப்பம் அடைவதற்குக் காரணம் உண்டு. யாதெனில் நிலத்தை ஊடுருவிச் சூரிய கதிர்கள் செல்ல முடியாது இருப்பதனால், நிலப்பரப்பின் மெல் லிய ஓர் படையே முழுக் கதிர்வீச்சையும் பெறுவதால் விரை வில் நிலப் பரப்பு வெப்பமடைந்து விடுகின்றது. ஆனால் நீர்த்தொகுதிகள் அவ்வாறானவையல்ல. சமுத்திரங்களை எடுத்துக்கொண்டால், சூரிய கதிர்கள் வெகு தூரம் நீரை ஊடுருவிச் செல்கின்றன. அதனால் வெப்பமாக்க வேண்டிய பரப்பு அதிகமானதாக இருக்கின்றது. அதனால் நீர்த் தொகுதிகள் மெதுவாகவே வெப்பமடைகின்றன.

Page 21
34
பௌதிகப் புவியியல்
(3) குத்துயரத்திற்கேற்ப ஒவ்வொரு 300 அடிக்கும் 1° பரன் கைற் வெப்பநிலை குறைவடைகின்றது. 1000 அடி உயரமுடைய ஒரு பிரதேசத்தின் வெப்ப நிலை, கடல்மட்டத்து வெப்ப நிலையிலும் பார்க்க 3 '3' பரன்கைற் குறைவானதாக இருக்கும். 300 அடிக்கு 1° பரன் கைற் வீதம் குறைவடையும் வெப்ப நிலை வீதத்தை 'நழுவு வீதம்' என்பர். 2200 அடி உயரத்திலுள்ள வதுளையில் சராசரி வெப்பநிலை கொழும்பிலுள்ள சராசரி வெப்பநிலையிலும் பார்க்க 7° பரன்கைற் குறைவானதாக உள்ளது. அதுபோன்றே 6150 அடி' உயரத்திலுள்ள நுவரெலியாவின் வெப்பநிலை ஏறக்குறைய 20 பரன் கைற் குறைவாக இருக்கின்றது. எனவே, மத்திய கோட்டி லிருந்து முனைவுகளை நோக்கிச் செல்லச் செல்ல வெப்ப நிலை கு றை வடைவது போல, கடல்மட்டத்தில் இருந்து குத்துயரமா கச் செல்லச் செல்லவும் வெப்பநிலை குறைவடைகின்றது.
(4) வெப்பப் பகுதிகளிலிருந்து குளிரான பகுதிகளை நோக்கி வீசும் காற்றுக்கள் வெப்பத்தைக் குளிரான பகுதிகளுக்குக் கொண்டு செல்கின்றன. அது போல குளிரான பகுதிகளிலிருந்து வெப்பப் பகுதிகளை நோக்கி வீசும் காற்றுக்கள் குளிரை வெப்பமான பகுதி களுக்குக் கொண்டு செல்கின்றன.
நீரோட்டங்களும் காற்றுக்களைப் போன்றே ஓரிடத்திலிருந்து வெப்பத்தையோ குளிரையோ அவை ஓடும் ப கு தி க ளு க் கு க் கொண்டு செல்கின்றன. குளிர் நீரோட்டங்கள் குளிர்ச்சியையும், வெப்ப நீரோட்டங்கள் வெப்பத்தையும் ஓடும் பகுதிகளுக்குக் கொ ண்டு செல்கின்றன. உதாரணமாக, வட அத்திலாந்தி நகர்வு வடமேற்கு ஐரோப்பாவிற்கு வெப்பத்தை அளிக்கின்றது. குளிரான கலிபோர்ணியா நீரோட்டம், கலிபோர்ணியாப் பள்ளத்தாக்கின் வெப்பநிலையை மட்டுப்படுத்துகின்றது.
எனவே, வெப்பநிலையானது அகலக்கோடு, நிலப்பரப்பினதும் நீர்த்தொகுதியினதும் பரம்பல் தரையுயர்ச்சி வேற்றுமை, காற்றுக் கள், நீரோட்டங்கள் என்பனவற்றினால் நிர்ணயிக்கப்பட்டு புவி யிற் பரம்பியுள்ளது !

பௌதிகப் புவியியல்
35
மழைவீழ்ச்சி வட்டத்தின் பல்வேறுப&ட நிலைகளைச் சுருக்கமாக விபரிக்க.
படிவு வீழ்ச்சி வடிவங்கள் பலவற்றுள் மழை வீழ்ச்சியும் ஒன் றாகும். நீர் நிலைகளின் ஈரலிப்பானது புறத்தேயுள்ள வெப்பச் செயல் முறையால் ஆவியாக மாறி மேற்சென்று ஒடுங்கி மழையா கப் பொழிகின்றது. அம்மழை வீழ்ச்சியின் நிலைகளை நான்கு பகுதிகளாக வகுக்கலாம். அவையாவன;
(அ) ஆவியாதல் (ஆ) பனிபடுநிலை (இ) ஒடுங்கல் (ஈ) மழைவீழ்ச்சி
)- 78ங்கம்
வரிபப்'நி.
திரண மழை முகில்
1 படி பார்
ஐ ஆகியு பிர்ப்புடன்
தாவரத்திலிருந்து ஆலியா தல்
வீழும் மழையிலிருந்து 1
சத்ய ஈசா )
நதி குளம் கீர்த்தேக்கம் என்பனவற்றிலிருந்து ஆவியாதல்
ஆவியாதல்
இ6ெ929 2007
Hnாசா
- -வியாதல்
ஆவியாதல்
கடலிலிருந்து
ஆவியாதல்
நிலம்
ர நி ஆ க எ
நீரியல் வட்டம் -

Page 22
36
பௌதிகப் புவியியல்
(அ) நதி, கடல், குளம், ஏரி போன்ற நீர் நிலைகளிலிருந்தும் மண், தாவரம், விழும் மழைவீழ்ச்சி என்பனவற்றிலிருந்தும் ஆவி யாதல் நிகழ்கின்றது. சூரிய வெப்பத்தினால் இவற்றின் நீர்த்தன்மை நீராவியாக மாற்றப்படுகின்றது; தாவரங்களிலிருந்து வெளிவரும் ஆவியை ஆவியுயிர்ப்பு என்பர். கடலிலிருந்து நீரானது ஆவியாதல் வீதமே அதிகமாகும்: நதி, குளம், நீர்த்தேக்கம் என்பவற்றிலி ருந்து ஆவியாதல் வீதம், தாவரத்திலிருந்தும் மண்ணிலிருந்தும் ஆவியாதல் வீதத்திலும் அதிகமாகும்.
வளி மண்டலத்தில் மிகச்சிறு வீதமாக, ஏறத்தாழ 2 வீதமாக விளங்கும் நீராவி வானிலை. கால நிலை என்பனவற்றில் வகிக்கும் முக்கியத்துவம் அதிக மாகும். நைதரசன், ஒக்சிசன், காபன் - டைஒக்சைட் எனும் மாறா விகிதங்களையுடைய வளி மண்டலக் கூறு களானவை வளிமண்டலத்தில் வகிக்கும் முக்கியத்துவம், நீராவி எனும் மாறும் கூறு வகிக்கும் முக்கியத்துவத்திலும் குறைவாம். ஏனைய வாயுக்கள் போன்று நீராவியும் கட்புலனாகாதது.
நீராவி இடத்திற்கும் காலத்திற்கும் இணங்கத் தனது அளவில் 6% இல் இருந்து 5% வரை வேறுபடுகின்றது. அயன மண்டலப் பகுதியில் 3% ஆகவும், அயன வயற் பகுதிகளில் மாரியில் 0.5% ஆகவும், கோடையில் 15% ஆகவும், முனைவுப் பகுதிகளிற் கு றை வாகவுங் காணப்படுகின்றது. வளி மண்டலத்திற் குத்துயரத் தோடும் நீராவியினளவு குறைவுறுகின்றது. கடல் மட் ட த் தி ல் நீராவியினளவு 1•3% மாகவும் 8 கி. மீ உயரத்தில் 0 •05% மாகவும் காணப்படுகின்றது. குத்துயரத்திற்கு இ ண ங் க நீராவியினளவு குறைவுற, புவியின் மேற்பரப்பிலிருந்து நீராவி கிடைப்பதும், வெப்ப நிலையிலே ற்படும் வீழ்ச்சிக்கு இணங்க நீராவி குறைவதும் காரணங்களாம்.
(ஆ) ஆவியாதலிற்குட்பட்ட நீரானது ஆவி வடிவிற் பாரமற்ற தாகி மேலெழுகின்றது. பல்வேறுபட்ட அளவின தாய், கட்புல னா காததாய் வளி மண்டலத்திலுள்ள நீராவியின் செறிலை ஈரப்பதன் என்பர். குறிப்பிட்டளவு வெப்ப நிலையையும் அமுக்கத்தையுங் கொண்டுள்ள குறிப்பிட்டளவு காற்று, குறிப்பிட்டளவு நீராவியைக் கொள்ளக்கூடியது. அக்குறிப்பிட்டளவு நீராவியை அக் காற்றுக் கொண்டிருக்கும் போது அது நிரம்பிய வளி எனப்படும்; அக்காற்று அக்குறிப்பிட்டளவு நீராவியைக் கொண்டிருக்காத போது அது நிரம்பாத வளி எனப்படும். உலர் காற்றுக்கள் குளிர் காற்றுக்களி லும் பார்க்க அதிக வளவு நீராவியைக் கொள்ளக்கூடியன. காற்று க் கள் எவ்வளவு தூரம் வெப்பமடைகின்றனவோ, அவ்வளவு தூரம்

பௌதிகப் புவியியல்
37
அக்காற்றுக்கள் விரிவடைய, அதிகளவு நீராவியைக் கொள்ளக்கூடி யன. எனவே, ஒரு குறிப்பிட்ட கனவளவு காற்றில் இருக்க வேண்டிய நீராவியினளவு அவ்வேளை, காற்றிலுள்ள வெப்ப நிலையைப் பொறு த்துள்ளது.
காற்றானது நிரம்பிய நிலையை எய்தும் வேளையே பனிபடுநிலை எனப்படுகிறது: ஆவியாதல் காரணமாக நீராவியாக மேலெழும் திரவமானது, காற்றினுள் ஈரப்பதனாக அமைந்து, சாரீரப்பதனை முழுமையாகப் பெறுகின்ற நிலையை யே பனிபடு நிலை .எனலாம் நீராவி பிறிதொரு வடிவத்தைப் பெறத் தயாராகிவிட்ட நிலையா கும்.
(இ) நிரம்பிய வளி பனிபடு நிலைக்கும் அப்பால் குளிர்ந்து நிராவி நீர்த் துளிகளாக மாறுகின்ற நிலையே ஓடுங்கல் எனப்படும் என வே நீராவி நீர்த் துளிகளாக மாறுவதற்குக் கு ளிர்ச்சியடைத வேண்டும். காற்று குளிர்ச்சியடைதல் பல வழிகளில் நடைபெறும்
1. காற்று மேலெழல். 2. வெப்ப அகலக் கோடுகளிலிருந்து குளிர் அகலக் கோடு
களை நோக்கி காற்று வீசுதல், 3. வெப்ப வித்தியாசமான இரு காற்றுக்கள் கலத்தல். 4. கு ளிர் ந்த ஒகு மேற்பரப்பின் மேல் வீசுதல்,
நீராவி நீர்த் துளிகளாக மாறுவதற்கு ஒடுங்கல் எவ்வளவு அவசியமோ, அதைப்போல வளி மண்டலத்திலுள்ள தூசு, புகை உப்பு முதலிய துகௗணுக்களும் அவசியமானவை. இத் துகௗணுக்க ளைச் சுற்றியே நீர்த் துளிகள் உருவாகின்றன.
(ஈ) இந்நீர்த் துளிகள் மிக மிக நுண்ணியவையாதலால், முகில்களாகக் காற்றிலே மிதக்கின்றன. பெரிய நீர்த் துளிகள் பனி யையும் , உறை நிலையிலும் வெப்ப நிலை குறைந்தவை வெண் பனி பையும் தோற்றுவிக்கின்றன. நீராவி தொடர்ந்து நீர்த் துளிகளாக மாறும் போது, சிறு சிறு துளிகள் ஒன்றோடொன்று சேர்ந்து பெருந் துளிகளாக மாறுகின்றன. அவை மழை வீழ்ச்சியாகப் பூமியின் மேல் வீழ்கின்றன,
பௌ 6

Page 23
38
பௌதிகப் புவியியல்
12.
மேல் பெ ருவனவற்றிற்குச் சிறு குறிப்புகள் தருக.
(4)
(1) நான்முகிக் கொள்கை (2) பொறிமுறையாலழிதல் (3) இரசாயன முறையாலழிதல்
நழுவு வீதம் (5) பணியெருத்தேரி
கழிமுகம் (7) ஆற்றுப்படிவரிசை (8) ஆறுதி ன்ற சமவெளி (9) சாரீரப்பதன் (10)' வெப்பநிலை நேர்மாறல் (11) போன் காற்று (12) தன்னீரப்பதன் (13)
தனியீரப்பதன் (14)
வெள்ளச்சமவெளி (15) எசுக்கர் (16) நுழைகழி 1 (17) தொங்கு பள்ளத்தாக்கு (18) மலையியன் மழை (19) வியாபாரக் காற்றுக்கள் (20) மத்திய கோட்டமைதி வலய கம் (21) அயனமண்டலச் சூறாவளி (22) சமுத்திர நீரோட்டங்கள் (23) மேற்காவுகை மழைவீழ்ச்சி (24) வளியமுக்கம் (25) முனைவு முகப்பு
(1) நான்முகிக் கொள்கை
லோதியன் கிறீன் என்ற அறிஞர் 1875 ஆம் ஆண்டில் கண்டங்களினதும் சமுத்திரங்களினதும் தோற்றத்தை விளக்க நான் முகிக் கருதுகோள் ஒன்றினை வெளியிட்டார். புவியானது கோள உரு விலிருந்து நான்முகி உருவிற்கு மாறியது 'புவி கு ளிரடையும் போது

பௌதிகப் புவியியல்
39
தான் என்பது கிறீனின் கருத்து. திரவ நிலையில் அதிக வெப்பநிலையில் காண ப்படும் கோளவகம் தொடர்ந்து குளிர்ச்சியடைந்து கொ ண்டே போகின்றது, என்றும் அதனால் வெ ளிப்பாகம் சுருங்கி நான் முகி வடிவத்தினைப் பெற்றது எனவும் அவர் கருத்துத் தெரிவித்தார் அவர் விபரித்த கோளம் நான்கு முக்கோணங்களின் இணைப்பால் அமைந்தது. நான்கு தட்டையா ன பக்கங்களிலும் சமுத்திரங்கள் அமைத்துள்ளன என்றும், ஆக்டிக் சமுத்திரம் மேற்பா கத்தில் அமை ந்தது எனவும் கூறினார். அத்துடன் இந்த நான்முகியின் விளிம்பான பக்கங்களில் இன்றைய கண்டங்கள் அமைந்துள்ளன எனவும் கருத் துத் தெரிவித்தார். அவரது கருத்து இன் றைய கண்டங்களினதும், சமுத்திரங்களினதும் அமைவு இயல்புகளை ஆதாரமாகக் கொண்டு அமைந்துள்ளது. இவரது கருத்து வடவரைக்கோளத்தில் நி ல ப் பரப்பு அதிகமா யும் தென் னரைக்கோளத் தில் நீர்ப்பரப்பு அ தி க மாயும் இருப்பதற்குரிய காரண ங்களை விபரிப்பதாகவுள்ளது. தென் னரைக்கோளத்தில் க ண் ட ங் க ள் முக்கோண வடிவில் - அ மை வ தையும் விபரிப்பதாகவுள் ளது. சுழல்கின்ற ஒரு கோள் நான் முகி யாக இருக்க முடியாது என்பதாலும், நான் முகியில் புவி ஈர்ப்ப மையம் தோன்ற இடமில்லை என்பதா லும் அறிஞர்களால் கண்டிக் கப்பட்டது.
நான்முகி
( 2 ) பொறிமுறையாலழிதல் வானிலையாலழிதலில் ஒரு வகை பொறிமுறையாலழிதல் ஆகும் பாறைப்படையான து திணிவு திணிவாகச் சிதைந்து அழிவுறு. தலைப் பொறிமுறையாலழிதல் என்பர். சடுதியான வெப்ப மாற்றத் தால் பொறிமுறையாலழிதல் எனப்படுகின்றது. பாலை நிலங்களில் வானில் முகில்கள் காணப்படுவ தில்லை. அதனால் பகல் வேளைகளில் அதிகளவில் வெப்ப நிலை நிலவுகின்றது, அதே போல இரவு வேளை களில் முகில்கள் தடையின்மையினால் புவிபெற்ற வெயில் முழுவ தும் விரைவில் வெளியேறிவிடுகின்றது. அதனால் இரவு வேளை களில் பாலை நிலப்பிரதேசங்களில் அதிக குளிர் காணப்படுகின்றது. பகல் வேளைகளில் நில வு ம் உயர் வெப்பத்தால் பாலை நிலப்பாறைக ளி

Page 24
40
பௌதிகப் புவியியல்
ள் ள கனிப்பொருட்கள் வெப்பமடைந்து விரிவடைகின்றன இரவு வேளைகளில் திடீரென ஏற்படும் குளிரினால்' அப்பாறைகள் சுருங்குகின்றன. விரிதலும் சுருங்குதலும் தொடர்ந்து நிகழும் போது அப்பாறைகள் உடைவுகளையும் பிளவுகளையும் பெற்றுக் கொள்கின்றன . பாலை நிலப்பிரதேசங்களில் நிலவும் இவ்வாறான சடுதியான வெப்பமாற்றம் பாறைகளைத் துண்டு துண்டாகவும் படை படையாகவும் சிதைய வைக்கின்றன.
இரசாயனமுறையாலழிதல்
பாறைகள் கனிப்பொருட்களின் கூட்டாகும். கனிப்பொ ருட்கள் பல்வேறு இரசாயனப்பொருட்களின் சேர்க்கையாகும்' பாறைகளிலுள்ள இந்த இரசாயன பொருட்களை அழிதலிற்குட் படுத்துகின்ற முக்கிய ஏ து மழை நீரா கும், மழை ஒரு வகை அமிலக்கரைசலாகும். ஒக்கிசன், காபனீரொக்சைட், நீராவி ஆகிய மூன்றும் மழைநீரிலு ள்ளன. உலர்ந்த ஒக்சிசனும் காபனீரொக் சைட்டும் ஈரலிப் புடன் சேரும் போது சச் திமிக்க இ ர சா ய ன அழிவுக்கருவியாகின்றது. இவற்றைக்கொண்ட மழை நீர் புவி யோட்டிலுள்ள பாறைகளைக் கரைசல் மூலம் அழிவுறச் செய் கின்றது, சுண்ணாம்புக்கல்லிலுள்ள கல்சியம் இலகுவில் கரைசலிற் குள்ளாகின்றது, அதனால் சுண்ணாம்புக்கற்பிரதேசம் இலகுவில் அரிப்பிற்குள்ளாகி விடுகின்றது . தீப்பாறைகளா கருங்கல் கூட கரைசலிற்கு தப்ப முடியாது . கருங்கல்லிலுள்ள பெ ல் ஸ் பா காபனீர் அமிலத்தால் கரைசலிற்குட்பட்டு நீக்கப்படும்போ து, கருங்கல்லின் படி க மணி கள் பிடிப்புக்கழன்று சிதைவுறுகின்றன.
(4) நழுவுவீதம்
மத்திய கோட்டிலிருந்து முனை வுகளை நோக்கிச் செல்லச் செல்ல வெப்பநிலை வீழ்ச்சியடைவதைப் போன்று, கடல் மட்டத் திலிருந்து உயரே செல்லச் செல்லவும் வெப்ப நிலை வீழ்ச்சியடை கின்றது. குத்துயரத்திற்கு இண ங் க வெப்பநிலை குறைவடைவ தையே நழுவுவீதம் என் பர், நழுவுவீத அளவு இத்தனை ஆயிரம் அடி உயரத்திற்கு இத்தனை பாகை பரன்கை ற் " எ ன் றோ, இத்தனை நூறு மீற்றர் உயரத்திற்கு இத்தனை பாகை சென்ரி கிரேற் என்றோ அளவிடப்படும். ஒவ்வொரு 300 அடி உயரத் திற்கும் 1° பரன்கை ற் வீதம் வெப்பநிலை நழுவுகின்றது; அல்லது ஒவ்வெரு 100 மீற்றர்களுக்கும் 0 • 6° சென்ரிகிரேட் வீதம் வெப் பநிலை நழுவுகின்றது . உதாரணமாக, கொ ழும்பில் வெப்பநிலை சராசரி 80° ப. ஆயின் 2200 அடி உயரத்திலுள்ள வ துளையில்

பௌதிகப் புவியியல்
41
சராசரி 73° ப. ஆகவும், 5000 அடி உயரத்திலுள்ள அப்புத்த தளை யில் 63° ப, ஆகவும், ஏறத்தாழ 7000 அடி உயரமுடைய சிவனொளிபாதத்தில் 57° ப. ஆகவும் இருக்கின்றது.
(5 ) பணியெருத்தேரி
தொடக்கத்தி ல் நேராக ஓடும் நதி, காலகதியில் வளைந்து வளைந்து ஓடத் தலைப்படுகின்றது. சமநி வோட்டத்தில் பாயும் நதி ஆழமான பள்ளத்தாக்கினை கொண்டிருக்காமையினால் அது தன் போக்கில் வளை வுற தொடங்குகிறது. ஆற்றுவளைவுகள், ஒரு வட்டத்தின் பெரும் பகுதியை உள்ளடக்கிய வளைவாக மாறும் போது அதனை மியாந்தர் என்பர். நதியின் போக்கில் மியா ந்தர் ஏற்பட்டதும் அதன் வெளிவளை வுப்பக்கத்தில் நதி மோதுவதால் அரித்தலும், உள்வளைவுப்பக்கத்தில் படிதலும் தொழிற்படுகின்றது. வெ ளி வ ளை வு ப் ப க் க த் தி ல் அ ரி த் த ல் தொடர்ந்து நடந்து. இரு வெளிவளைவுகள் ஒன்றினை நோக்கி ஒன்று வளர்ந்து இணையும் போது, மியாந்தர் வளைவினுள் பாய்ந்த நதி, நேராகத் தன் போக்கை மாற்றியமைத்துக் கொள்கின்றது. அவ்வேளையில் கைவிடப்பட்ட வளைவுப்பக் கத்தில் நீர் தேங்கி காணப்படும். அது ஏரியாக மாறிவிடு கின்றது. அதனையே பனி யெருத்தேரி என் பர்.
தாழிற்பான் அரித்து அதன் 1
பொலிச-: க்கா 3: "து
மமக சபாTRA4
மியாருதர
சஅபட.
வெங்காயம் 14:44
Lணயெருத்த
( 6 ) கழிமுகம்
வெள்ளச் சமவெளி களில் காணக்கூடிய இன்னொரு நிலவுருவம் கழிமுகமாகும். நதிகள் கடலுடன் சங்கமமாகும் பகு திகளில் படிதல் கூடுதலாக நடக்கும். அதுவும் சமவெளி

Page 25
42
பௌதிகப் புவியியல்
பல் ,சிறில் முகம் ம் அ
ஒன்றின் ஊடாகப் பாய்த்து கடலை அடையும், நதியாயின் படிதல் அதிகம் காணப்படும். 'நதி அரித்துக் காவிவரும் பருப் பொருட்கள் இப்பகுதிகளில் படிவதால், நீரோட்டம் இயல்பா கவே தடைப்பட நதி பல கிளைகளாகப்பிரிந்து கடலையடைய நேரிடுகின்றது. நதியானது விசிறி வடிவில் பல கிளைகளாகப் புரிந்து கடலைய டையும் பிரதேசமே கழி முகம் எனப்படுகின்றது. முக்கோண வடிவில் உலகின் கழிமுகங்கள் யாவும் அமைந்திருக் கின் றன. நைல் நதி கங்கை நதி, மிசிசிப்பி நதி என்பன கழிமுகங் களை கொண்டிருக்கின்றன ,
C 4----
:5ாட்.கம்பம்
எகய்ரோ
(7) ஆற்றுப்படிவரிசை
பழைய வெள்ளம் சமவெளியில் பள்ளத்தாக்கின் இரு பக்கங் களிலும் படிபடியா 25 அமைந்திருக்கும் மேடயே ஆற்றுப்படி வரிசை யாகும். சமவெளிகளில் பாய்கின்ற நதிப்பள்ளத்தாக்குகளில் ஆற் றுப்படி பொது வான ஒரு நிலவுருவமாகும். பழைய வெள்ளச் சம வெளி யொன் றில் நதியானது புத்துயிர் பெறும்போது இத்தகைய நிலைக்குத்தான் தின் ன லைச் செய்கின்றது. அதனால் படிபடியாக அமைந்த மேடை கள் பள்ளத்தாக்கின் இரு மருங்கும் உருவாகின் றன. ப ல ஆற்றுப்படிகள் பல உயர மட்டங்களில் அமைந்து விடு கின்றன. றைன் நதியில் ஆற்றுப்படி கள் நன்கு அமைந்திருக்கின் றன, தேம்ஸ் நதிப் பள்ளத்தாக்கில் மூன்று ஆற்றுப்படிகளைக்காண லாம், ஒரு ஆற்றுப் படியிலிருந்து மற்றைய ஆற்றுப்படியின் உயரம் சில அடியிலிருந்து 50 அடிகள் வரையில் காணப்படும்,

பௌதிகப் புவியியல்
43
(8) ஆறு தின்ற சமவெளி
சாதாரண தின் ன லின் இறுதி நில வுருவம் ஆறு தின்ற சமவெளி யாகும். அதனை அரிப்புச் சம வெளி, அ எண் சம வெளி எனப்பல பெயர்களால் அழைப்பர். தொடக்கத்து நிலம் அலைவடிவமானது. இதில் ஓடும் நீர் முதலில் நிலை க்கு த் துச் சுரண்டலையும் பின்னர் பக்கச் சுரண்டலையும் செய்கின் றது. தொடக்கத்து நில ம் படிப்படியாக அரி பிற்குள்ளாகிற் தாழ்த்தி தொடங்குகிறது. தன் தொடக் கத்துப்பண்பினை இழந்து சமவெளியாகின் றது , அ தனை ஆறு தின்ற சமவெளி என்பர் இறுதின் ற ச ம வெளி க ளி ல் அரிப்புக்குட்படாது சில வன் பாறைக் குன்றுகள் கா ஏணப்படும் அவற்றினை மொ னாட் நொக்சுகள் என்பர். இலங்கையிலும் மொஹாட்நொட்சு களைக் கொண்ட அரிப்புச் சமமெளி கள் உள் ள ன, மத்திய மலை நாட்டைச் சூழ்ந் திருக்கும் சமவெளிகள் ஆறரித்த சமவெ ளி க ளாகும். சிகிரியா, இங்கினியக்க லை என்பன மொனாட் (நே ர க் க களாகும்.
(9) சாரீரப்பதன் காற்றிலுள்ள ஈரப்பதனை அளப்பதற்குரிய மூன்று முறைகளில் ஒன்று சாரீரப்பதாகும். குறித்த அமுக்கத்திலும் வெப்ப நிலையிலும் காணப்படும் காற்றின் நீராவியின் அள ைவ அதே வெப்ப நிலையிலும் அமுக்க த் திலும் இருக்கக்கூடிய நிர ம் பிவ ளியுடன் ஒப்பிட்டு வீத மாகவோ விகிதமாகவோ பின்ன மாகவோ கணித்துரைப்பதே சாரீர ரப்ப தனா கு ம். உலர் காற்றின் சாரீரப்ப தன் 0% ஆகும். நிரம்பிய வளியின் சாரீரப்பதன் 100% ஆகும். நீராவியை அதிகரிப்பதாலோ குறைப்பதாலோ சாரீரப்பதனை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்யமுடியும், 70° ப. வெப்ப நிலையை உடைய ஒரு கன அடி நிரம் பிய "வளியில் 8 கிறேயின் நீராவி கொள்ளும் . எனக்கொண்டால் அதே வெப்ப நிலையில் ஒரு கன அடி காற்றில் 6 கிறேயீன் நீராவி இருக்கும்போது அதைச் சார்ப்பதன் அளவில் 75% எனலாம். மேற் குறித்த சாரீரப்ப தன் அளவை விகிதத்தில் கூறும்போது 4: 3 என்றும் பின்ன த்தில் 4 எனவும் கூறலாம். நீராவியின் அளவு அல்லது வெப்ப நிலை மாறும்போது சாரீரப்பதனின் அளவும் மாறுபடும்.
(10) வெப்பநிலை நேர்மாறல்
கடல்மட்டத்திவிருந்து உயரே செல்லச் செல்ல வெப்பநிலை படிப்படியாகக் குறைவடைவது இயல்பு. ஒவ்வொரு 300 அடிக்கும் 1 ப. வீதம் வெப்ப நிலை நழுவு வீதத்திற்குள்ளாகும். இந்த இயல் பான நிலைமை பெரிய பள்ளத்தாக்குகளில் நேர்மாறு தலாக நிகழ்

Page 26
44
பௌதிகப் புவியியல்
கிறது. பள்ளத்தாக்குகளில் மலைச்சாய்வு களின் உயர்பகுதிகளி லிருக்கும் குளிரான காற்றுகள் இறங்குகினறன. அவை பாரமான
வயாதலால் குளிரான காற்றுக்கள் கீழிறங்குகின்றன. அக்காற் றுக்கள் பள்ளத்தாக்கின் அடிமட்டத்திலிருக்கும் வெப்பமான காற் றுக்களை மேலெழ உந்தியும் விடுகின்றன. அதனால் வெப்பக்காற் றுக்கள் மேலெழுகின்றன. குளிர் காற்றுக்கள் பள்ளத்தாக்கின் அடித் தளத்திலும் வெப்பக்காற்றுக்கள் மேல் மட்டத்திலும் காணப்படு வதால் வெப்ப நிலை உயர்மட்டத்தில் உயர்வாகவிருக்கிறது. இதனை வெப்பநிலை நேர்மாறல் என்பர்,
(11) போன் காற்று போன் காற்று ஓர் ஓரிடக் காற்றாகும். அல்ப்ஸ் மலை களைக் கடந்து வடக்கே வறன்ட முதலிய பள்ளத்தாக்குதல் வீசும் வறண்ட காற்றிற்கே போன் காற்று என்று பெயர்; இது மத்திய தரைக் கடலிருந்து தோற்றம் பெறும் போது ஈரலிப்பான காற்றாக விளங்குகின்றது.• அல்ப்ஸ் மலையைத் தாண்டி வீசும்போது, காற் றுப் பக்கத்தில் ஈரலிப்பை இழந்து விட்டு, காற்றொதுக்கில் வறள் காற்றாக வீசுகின்றது. அல்ப்ஸ் மலைகளுக்குத் தெற்கே மத்தியத ரைக்கடல் உயரமுக்கத்திலிருந்து, வடமேல் ஐரோப்பிய தாழமுக் கத்தை நோக்கி வீசும் போன் காற்று, அல்ப்ஸின் தென்புறத்தில் மேலுயர்த்தப்படுவதால் ஒவ்வொரு 300 அடிக்கும் 1°ப. வீதம் குளிர்ந்து ஈரலிப்பை இழக்கின்றது; இழந்து விட்டு அல்ப்ஸின் வடபுறத்தில் இறங்கும்போது ஒவ்வொரு 1000 அடிகளுக்கும் 5• 5°ப. வீதம் வெப்பமூட்டப்படுகின்றது.
'T'T11/
வாண்ட காற்று
.ரபான ஆகா \y
காளாறதுக்குப்ப்
11,7/11)
காற்றாப்பத்ர்

பௌதிகப் புவியியல்
45
வெப்பமும் வறட்சியுமே போன் காற்றின் பண்புகளாம் ? போன் காற்றினை ஒத்த பல் காற்றுக்களுமுள. றொக்கிமலைத் தொடரை கடந்து கிழக்கு அமெரிக்கச் சமவெளியில் விசும் வறள் காற்றான சினூக், அந்தீ ைச தி கட ந்து கிழக்கே வீசும் நோவாடா, சகாராவிலிருந்து சூடானை நோக்கி வீசும் கமற்றன் , இலங்கையில் வீசும் கச்சான் என் பன போன்ற காற்றின் இயல்பின ;
( 12 ) தன்னீரப்பதன்
ஈரப்பதனை அளவிடும் முறைகளுள் து ன்னீரப்ப தனும் ஒன்றாகும், நீராவியின் கார ண மா க வளிமண்டலத்தில் ஏற்பட்ட ஆவியமுக் கத்தை அங்குலத்தில் அல் 10 து மிஸ்லிபாரில் அளவிட்டுக் கூறலாம், தன்னீரப்ப தன் எ ன் ப து ஓர் அ ல கு நிறையுள்ள கா ற் றி ல் இவ்வளவு நிறையுள்ள நீரா லியுண்டு என்று அளவிட்டுக் கூறு வதாகும். இவ்வளவு கில்லோகிறாம் நிறையுள்ள காற்றில், இவ்வெ ளவு கிராம் நிறையுள்ள நீராவியுண்டு என்று தன்னீரப்பதன் விபரிக்கும் எடுத்துக்காட்டா 48 , 2 கிலோகிறாம் காற்றில் 12 கிராம் நிறையுள்ள நீராவியுண்டு என்று கூறும் போது, அது தன்னீரப்ப தனைச் சுட்டும் ,
தன் வீரப்ப தன் திட்டமான ஈரப்பதனாகும்: காற்று விரிவடை வதனாலோ, சுருங்குவதனாலோ நீராவியின் நிறையில் எதுவித மாற் றமும் நிச ழா து. காற்றின் கன வளவு மாறினும் அதிலுள்ள நீராவி யின் நிறையளவு மாறாது. இது ஈரப்பதனை அளக்க இலகுவான முறையாயினும் குறைபாடுக ளுள; தன்னீரப்பதனின் துணை கொண்டு குறித்த அக்காற்று நிரம்பிய நிலையிலுளதா, நிரம்பாத நிலையுள் ளதா என்று கூற முடியாது.
(13) தனியீரப்பதன்' ஈரப்ப தனை அளவிடும் முறைகளுள் தனியீரப்பதனும் ஒன்றாகும்' ஓர் அலகு கண வளவுடைய காற்றில் உள்ள நீராவியின் நிறையைக் கூறுவதே தனியீரப்பதனாகும், ஒரு கன அடி காற்றில் இத்தனை கிறே யின் ல் நிறையுள்ள நீராவியுண்டு எனத் தனியீரப்பதன் கூறும் . காற்றின் க ன வளவு இங்கு கருதப்படுவதால் வெப்ப நிலைக்கு இணங்க நீராவியின் நிறையும் வேறுபடும்.உதாரணமாக, 40° : வெப்பநிலை யுடைய ஒரு கன அடி காற்றில் 2.9 கிறேயின்ஸ் நீராவியுண்டு. 60°ப, வெப்ப நிலைபுடைய ஒரு கன அடி காற்றில் 5 6 7 கிறேயின்ஸ் நீராவி யுண்டு; 100° ப: வெப்ப நிலையுடைய ஒரு கன அடி காற்றில் 19, 7 கிறேயின்ஸ் நீராவியுண்டு. இவ்வாறு ஈரப்பதனை அளவிட்டு விபரிப் பதே தனியீரப்ப தனாகும்.
பௌ 6

Page 27
46
பௌதிகப் புவியியல்
காற்று விரிவடையும் போதும் சுருங்கும் போதும் தனியீரப்பதன் அளவு வேறுபடுவதால் இது ஈரப்பதனை அளக்க அதிகம் பயன்படு வது கிடையாது.
(14) வெள்ளச் சமவெளி
வெள்ளச் சமவெளிகள் சமநிலவோட்டப் பி ர தே ச ங் க ளி ல் அமைந்து காணப்படுகின்றன, நதிகளின் சம நில வோட்டப்பிரதே சங்களில் நதிகள் பாய்கின்ற பள்ளத்தாக்குகள் உயர்ந்த வரம்புகளைக் கொண் டிருப்பதில்லை. அதனால் வெள்ளம் அதிகரிக்கும் போது வரம்பு மீறி அயற்புறங்களை வெள்ளத்தினுள் ஆழ்த்திவிடுகின்றன. அதிகள வில் உருகுகின்ற பனிக்கட்டிக்கவிப்பு, அதிக மழை என்பன பொது வாக இந்நதிகளை வெள்ளப்பெருக்கிற்கு உள்ளாக்குகின்றன. சீனாவில் குவாங்கோ நதியும், இந்தியாவில் கங்கை நதியும் அடிக் கடி வெள்ள பெருக்குக்கு உள்ளாகின்றன. அதனால், (அ) நிலச்சாய்வில் அரித்தல் அதிகமாகின்றது. (ஆ) நதிகள் அகல்கின்றன, அத்துடன் ஆழமா கின் றன. (இ) நீதிகள் புதுப்போக்குகளை அமைத்துக்கொள்கின் றன. (ஈ) வெள்ளப்பெருக்கிற்கு உட்பட்ட பிரதேசங்களில் காவி வரப்பட்ட அடையல்கள் படிகின்றன. மண் டி , சேறு, மணல் என் பன படிகின்றன. வெள்ளப்பெருக்குக் காலத்தில், மெல்லிய வண் டல்படை சமவெளி எங்கும் பரவிவிடக் கூடும். அதனால் வெள்ளச் சமவெளி படிப்படியாக உயரும், இவ்வெள்ளச்சமவெளியில் பாய் கின்ற நதிகள் மியாந்த வளைவுகளைக் கொண்டனவாகக் காணப் படும்.
(15) எசுக்கா
எசுக்கர் என்பது பனிக்கட்டியாற்றுப்படிவுகளினால் உருவாகும். நீண்ட மணற் குன்றுகளைக் குறிக்கும். இந்த ஏசுக்கர் என்ற நீ ண்ட

பௌதிகப் புவியியல்
4?
சூன்று பொது வாக பரல் கள், ம ண ல், சளி என்பனவற்றினால் ஆக்கப்பட்டிருக்கின்றன, எ - க் க ர் குன் று கள் நீண் டு, பல வளைவுகளு டன் நெடுந்தூரம் வரை யில் செல்லும், இவை பொதுவாகக் கூட் டாக அமைவதுண்டு, இவற்றின் பக்கங்கள் குத்துச்சரிவுடையன வாக இருக்கின்றன. பனிக் கட்டி யாற்றின் கீழ்ப்புறத்தில் உருகிய நீர் அருவி யாகஓடும்போது எடுத்துச் செல்கின்ற பொருட்கள் படுக்கையில் படி யவைக்கப்படுகின்றன. பனிப்படலங்கள் முற்றா க மறைந்ததன் பின் னர் இப்பொருட்கள் பள்ளத்தாக்கில் நீண்ட மணற்கு எ ேறுகளாகக் காட்சி தருகின் றன . சுவீடன், பின்லாந்து, ஸ்கொட்லாந்து ஆகியபிர தேசங் களில் எசுக்கர் குன்று களைக் காண லாம், பின் லாந்தில் இந் த எசுக்கர் நீள் மணற்குன்றுகளுக்குமேல் வீதிகளும் இருப்புப்பாதை களும் அமைக் கப்பட்டிருக்கின்றன. பனிக்கட்டியாற்றுப்படிதல் நில வருவங்களில் எசுக்கர் தனித்துவமான ஒரு படி தல் நில வுறுப்பா கும்.
(16) நுழை கழி
கடற்கரையோரத்தில் நிலப்புறமாக ஒடுங்கி, நீண்டு அமைந் திருக்கும் நீள்குடாவே நுழை கழியா கும்: நுழைகழி கள் குத்தான பக்கங்களையுடையன. கரையோர மலைப்பிரதேசங்களில் ஏற்பட்ட பனிக்கட்டியா ற்றரிப்பின் காரணமாகவே பொது வா க நுழை கழிகள் ஏற்பட்டிருக்கின்றன. பனிக் கட்டியாற்றரிப்பு நிகழ்ந்த நோர்வே, கிறிஸ் லாந்து - நியூசிலாந்துப் பிரதேசங் களில் நுழை கழிகளைக் காண லாம், நீண்ட கடற்கரைகள் நுழைகழிக் கடற்
கரைகளா கக் காணப்படுகின் றன. பணிக் கட்டியாறு கள் கடலையடைவதற்காக, முன்னர் நதிகள் பாய்ந்த பள்ளத்தாக்குகளுடாக ஆழவெட்டித்தாழிகளாக்கிய டிப்பாய்ந்தன. அத்தாழிக ள் கடலால் மூடப்பட்ட. தும் அவை நுழை கழிகளாகக் காணப்படுகின் ற ன . நீ எள் குடாக்களுக்கும் நுழைகழிகளுக்கும் இடையே ஒரு வேறுபாடுள் ளது. நீள் குடாக் கள் கட. லை நோக்கிச் செல்லச் செல்ல ஆழத்தில் அதிகரிக்கி எங் றன, நுழை சுழி கள் உட்புறத்தில் ஆழங் கூடியனவ ! கவு ம் கடலை நோக்கிச் செல்லச் செல்ல ஆழங் கு றை வ ன வாயும் காணப்படுகின் றன. நுழைகழிகளி கா உட்பா கம் ம் ஆழங்கூடியும் முகத்து வாரம் ஆழங்கு (3) றந்தும் காணப் படுவதற்குக் காரணம் பனிக்கட்டியாற் றின் படிவுகள் முகத்துவாரத்தி ல் படிவுற்றமையா கு ம் .
இSS -
9 சேர்

Page 28
4 இ
பௌதிகப் புவியியல்
(17) தொங்கு பள்ளத்தாக்கு !
மலைப்பனிக்கட்டியாறு தொழிற்பட்ட பிரதேசங்களில் காணப் படக்கூடிய இன்னொரு நிலவுரு வம் தொங்கு பள்ளத்தாக்கு ஆகும் பிரதான நதியின் பள்ளத்தாக்கில் கலக்கவரும் கிளை யாறு, பிர தான நதியின் பள்ளத்தாக்கிலிருந்து கணிசமான உயரத்தில் பள்ளத் தாக்கினைக்கொண்டிருக்கும்போது, அக்கிளையாற்றின் பள்ளத்தாக் கைத் தொங்கு பள்ளத்தாக்கு என்பர். இந் நிலையில் பிர தான பள் ளத்தாக்கில் இறங்கும் கிளையாறு நீர்வீழ்ச்சியொன்றின் மூலம் கீழி றங்கிக் கலக்கும். மலைப்பனிக்கட்டியாற்றின் நகர்வினால் பறித்தல் தேய்த்தல் நிகழ்கின்றது. அதனால் பிரதான பள்ளத்தாக்கு அகன்று ஆழமாகி U வடிவப் பள்ளத்தாக்காக மாறிவிடுகின்றது, அவ் வேளை கிளையாற்றுப்பள்ளத்தாக்கு ஆழமாக வெட்டப்படாது பழைய நிலையில் காணப்படும். இங்கிருந்து . நீர்வீழ்ச்சியாக இறங்கிக் கலக்கும் போது : பிர தான பள்ளத்தாக்கில் கிளைப்பள்ளத்தாக்கு த் தொங்கிக்கொண்டிருப்பது போலக் காணப்படும், பிரதான நதி தாழ் வான பள்ளத்தாக்கையும் கிளை நதி உயர்வான பள்ளத்தாக்கையும் கொண்டு அமையும்.
{ } {;
(18) மலையியல் மழை ||
புவியில் நிகழ்கின்ற மழைவீழ்ச்சியிற் பெரும்பகுதி, ஒரு வகைக்கு மேற்பட்ட காற்றின் மேலெழுச்சியால் ஏற்படுகிறதுர மலைத்தொடர்கள், குன்றுகள், மேட்டு நிலங்கள், குத்துச்சரிவுகள் என்பன ஈரலிப்பான காற்றுக்களுக்குக் குறுக்கே தடை களாகக் அமையும்போது, ஈரலிப்பான காற்றுக்கள் மேலெழுகின்றன . மே லெழும்படியாக இந்த ஏற்றம் மிகு தடைகள் தடையாக நின்று தள்ளுகின்றன - மேலெழுங்காற்றுக்கள், அதனால் உசனிபடுநிலையை அடைந்து, ஒடுங்கி மழைவீழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. இதனையே மலையியல் மழை என்பர்: தரையுயர்ச்அவேற்றுமை மழை எனவும் வழங்குவர்.

பௌதிகப் புவியியல்
பாகம்-4
கார
1, ப. பா.
-- காயோட்டம் : கள்.
'! ! !!
11 , 14.
வரலாறு காY?'
$7.2) (2ாக ''\'
SERா அகடத்தியலை
தரக 858 பதக்
மலையியல் மழையினால் காற்றுப்பக்கமே அதிக மழையைப்பெறு கின்றது. நிரம்பிய வளி மலையினால் மேலுந் தப்படும் போது உயரும் காற்று தனது ஈரலிப்பு முழுவதையும் காற்றுப்பக்கத்திலேயே இழந்து விடுகின்றது . காற்றுப்பக்கத்தில் ஈரலிப்பை இழந்த காற்று காற்றொதுக்குப் பக் கத் தில் வறண்ட காற்றாக வீசுகின்றது மலை யியல் மழையால் காற்றுப்பக்கமே மழையைப் பெறுகின்றது. இலங் கையில் மலையியல் மழையை நன்கு அவதானிக்கலாம். ஈரலிப் பான தென்மேல் பருவக்காற்றை மத்திய மலை நாடு தடுத்து ஒடுங்கச் செய்கின்றது. அதனால் இலங்கையின் மலை நாட்டின் மேற்குப்பாகம் அதிக மழையைப் பெற்றுக்கொள்கின்றது. காற்றொதுக்கில் அமைந் திருக்கும் மலை நாட்டின் கிழக்குப்பாகம் அதனால் மழையைப் பெறுவ
தில்லை,
(19) வியாபாரக்காற்றுக்கள்
புவியின் மேற்பரப்பில் காணப்படுகின்ற மூன்று கோட்காற் றுத்தொகுதிகளில் ஒன்று அயன மண்டலக் கீழைக் காற்றுக்களாகும். அயன வயல் உயர முக்க வலயங்களிலிருந்து மத்தியகோட்டுத் தாழ முக்க வலயத்தை நோக்கி வீசுகின் றனவே அயன மண் டலக் கீழைக் காற்றுக்களாகும். இவை யே வியாபாரக் காற்றுக்களாகும். இக் காற்றுக்களைத் தட. க்காற்றுக்கள் எனவும் வழங்குவர். இவை எக்காலத்திலும் தி ட ம் மாறாமல் (திசைமாறாமல்) வீசுவதால் தடக்காற்றுக்கள் எனப்படுகின்றன. பாய்க்கப்பல்கள் மூலம் வியா பாரிகள் நாடு களுக்கு நாடு' வர் நிதகம் செய்தபோது இக் காற்றுக்கள்

Page 29
50
பௌதிகப் புவியியல்
அவர்களுக்குப் பேருதவியாக விளங்கினா அதனால் வியாபாரக் காற்றுக்கள் என்று அழைக்கப்பட்டன. வட அயனவயல் உயரமுக்க வலயத்திலிருந்து மத்திய கோட்டுத் தாழமுக்கத்தை நோக்கி வீசுகின்ற காற்றை வடகீழ் வியாபாரக்காற்று என்பர், தென் அயனவயல் உயரமுக்க வலயத்திலிருந்து மத்தியகோட்டுத் தாழ முக்கவலயத்தை நோக்கி வீசுகின்ற காற்றைத் தென்கீழ் வியா பாரக்காற்று என் பர்.
வடகீழ் வியாபாரக்காற்றுக்களும் தென் கீழ் வியாபாரக்காற்றுக் களும் மத்திய கோட்டில் ஒன்றினை யொன்று சந்திப்பன வல்ல. இவ் விரு காற்றுக்களையும் பல நூறு மைல் கள் அகல மானநிலைமாறு வலயம் ஒன்று பிரிக்கின்றது. இதனை அமைதி வலயம் என்பர். வியா பாரக்காற்றுக்கள் மேலைக்காற்றுக்களிலும் பார்க்க நிரந்தரமானவை எனினும் நிலப்பரப்புக்களின் மேலும், கண்ட ஒரங்களிலும் மாறு படுவதுண்டு. இவ்வாறு மாறுபட உராய்வு. அமுக்கப்பரம்பல் என்பன காரண மாகின்றன. சமுத்திரங்களில் இக்காற்று அவ்வளவு தூரம் மாறுபடுவது கிடையாது. இந்நிரந்தரமான காற்றைப் பரு வக்காற்றுக்களும் சூறாவளிகளும் பாதிக்கின்றன.
(21) அயனமண்டலச் சூறாவளி சுழற்சியும் அசைவும் கொண்ட காற்றினைச் சூறாவளி என்பர். வெப்ப வலயத்தில் நிகழும் சூறாவளிகளை அயன மண்டலச் சூறா வளி கள் எ ன் பர். இவை அதிக  ேச த த்  ைத யு பி குழப்பங் களையும் விளைவிப்பன வென்று பொதுவாக நம்பப்படுகின்றது, இச் சூறாளிைகள் வியாபாரக் காற்று வலயங்களில் காணப்படுகின்றன . தாழமுக்க மையம், அதிக வலிமை, அதி க விசையுடன் இயங்கும் காற்றோட்டம் என்பன அயன மண்டலச்சூறாவளி களின் தன்மைகளா கும், இவை கரீபியன் கடல் பகுதிகளில் கரிக்கேன் எனவும், தென் சீனக் கடலில் தைபூன் ஸ் எனவும், அவுஸ்திரேலியாவில் வில்லி வில்லிஸ் எனவும் அழைக் கப்படுகின்றன.. அயன மண்டலப்பகுதி களில் இச் சூறாவளியின் தோற்றம் வெப்ப மேற் காவுகைக்குரியதாக இருக்கின் றது • அயன மண்டலத்தில் நிலவும் உயர் வெப்ப நிலை காரணமாக அப்பிரதேச வளி வெப்பமடைந்து விரிவடைந்து பாரமற்றதாகி மேலெழுகின்றது. அதனால் தாழமுக் கமையம் உருவாகின் றது. அத் தா ழமுக்க மையதில் வியாபாரக் காற்றுக்கள் மிக்க வேகத்துடன் ஒரு ங் கிச் சுழற்சியும் அசைவையும் பெற்றுக்கொள் கின் றன. இச்சூறாவளி 10 மைல் விட்டத்திலிருந்து 500  ைம ல் க ள் வி ட் ட ம் வ ரை யி ல் விரிவடையக்கூடியன. இச் சூறாவளிகள் மணிக்கு 60  ைம ல் க ளி லிருந்து 150 மைல்கள் வரையில் வீசும்,

பௌதிகப் புவியியல்
51
இலங்கையின் அயனமண்டலச் சூறாவளிகள் ஒக்டோபர், நவம்பர் மா தங்களில் சிலவேளை களில் உரு வா வதுண்டு. இவை வங்காளவிரிகு டாவில் தோற்றம் பெறுகின் றன. இவை இலங்கையைக் கடக்கும் போது வெள்ளப்பெருக் கு , கடுங் காற்று என் பன உருவாகி அழிவு ஏற்படுகின்றது .
30 3 அசாவா) ரக
27 3து .4 மி.யூர்')
பRைatதிலி'
(22) சமுத்திர நீரோட்டங்கள் சமுத்திர நீரின் ஒரு பகுதியானது வரையறுக்கப்பட்ட ஒரு திசை யில், சுற்றுப்புற நீரிலும் வேகமா கவோ, ஓரளவு வேகமாகவோ அசைந்து செல்வதைச் சமுத்திர நீரோட்டம் என்பர். நீரோட் டங் கள் உருவாகுவதற்குச் சில காரனிகள் தூண்டுதலாக உள்ளன. காற்றுக்கள் சமுத்திர நீரை வேகமாக உதைத்து உந்துதல் முக்கிய காரணமாகும். சமுத்திர நீரின் அடர்த்தி? வெப்ப நிலை, உவர் தி தன்மை காரண மாக வேறுபடும்போதும் நீரோட்டம் தோன்றும். நீரோட்டங்களின் திசைகள் பெரிதும் வீசும் காற்றுக்களினால் நிர்ண யிக்கப்படுகின்றன. சமுத்திர நீரோட்டங்களின் திசைகள் பெரிதும் கோட்காற்றுத் தொகுதிகளின் திசைகளுடன் ஒத்திருப்பதைக் காண லாம். நிலத் திணிவுகளும் நீரோட்டங்களின் திசையை நிர்ணயிக்கின் றன, நீரோட்டங்களை அவற்றின் தன்மையைப் பொறுத்து வெப்ப நீரோட்டங்கள், குளிர் நீரோட்டங்கள் என இரண்டு வகை களா கப் பாகுபடுத்துவர், மத்திய கோட்டுப் பகுதிகளில் இருந்து முனை வுப் பகுதிகளை நோக்கி ஓடுவன வெப்ப நீரோட்டங்கள் ஆகும். குடா நீரோட்டம் என்ற வடஅத்திலாந்திக் நகர்வு, குறோசீவோ, அகுகாஸ் என்பன வெப்ப நீரோட்டங்களாகும், கலிபோர்னியா, கம்போல்ட் பேரு, கனே ரிஸ். லபிறடோர் என்பன குளிர் நீரோட்டங்களாகும்.
நீரோட்டங்கள் கால நிலையில் அதிக செல்வாக்கினைச் செலுத்து கின்றன. இவை தாம் செல்லுகின்ற பகுதி களுக்கு வெப்பத்தையோ குளிரையோ இடம் மாற்றுகின்றன . குடாநீரோட்டத்தின் செல்

Page 30
|16
பௌதிகப் புவியியல்
மாயையா:சரசT-20 சானளாஷinvகாரோ
சாய, காரில்
வாக்கினால் தான் பிரித் தானிய தீவுகள் மக்கள் வாழ உவப்பா ன கால நிலையைக் கொண் டிருக்கின்றன, அதே அகலக்கோட்டில் இருக் கிதம் ற சைபிரியா குளிரான தாக விளங்குகி ன் றது , வெப்பநீரோட் டமும் குளிர் நீரோட்டமும் சந்திக்கின்ற பகுதிகள் உலகின் சிறந் தது மீன் பிடியிடங் களாகவும் விளங்குகின்றன,
(23) மேற்காவுகை மழைவீழ்ச்சி புவியில் நிகழ்கின்ற மழைவீழ்ச்சியிற் பெரும்பகுதி ஒரு வகைக்கு மேற்பட்ட சாற்றின் மேலெழுச்சியால் ஏற்படுகின்றது. மேற்கா வு ைக :மழை வீழ்ச்சி - இவ்வகைகளில் ஒன்றாகும். வெப்பத்தினால் சூடாகி விரிவடைந்த வளி அடர்த்தி குறைந்து பாரமற்றதாகி மேலெ ழுகின்றது. அவ்வளியைச் சுற்றியுள்ள கு ளிர்த் த பாரமான வளி இதனை மேலெழ உந் தியம் விடுகின்றது. சாதாரணமாக
நழுவு வீதத்தினால் ஏற் படும் வெப்ப நிலைக்குறைவு வீதத் ைத க் க ா ட் டி லு ம் மே லெ ழு ம் கா ற் றி ல் வெப்பஞ் செல்லா நி லை மாற்றத்தினால் ஏற்படும் வெ ப் ப நி லை க் கு றை வு வீ த ம் அ தி க மா கு ம் ,
மே லெ ழுங் கா ற் று யோயூேம் காற்றுகள்
இ த னா ல் வி ரை வி ல் கு ளி ர் நீ து வி டு இ ன் றது. கு ரி ய வெப்பத் தி னா ல் நீர் நி லை க ளி லி ரு ந் து கரு வி யா த லி ற் கு ட் டு, நீராவியாக வளியில் கலந் திருக்கும் ஈரப்பதனானது நி ர ம் பா த வ ளி யா க
மே  ெல மு கி ன் ற து . தாய்பய்பிடி
மே லெ ழு ஞ் செ ய ல் வெப்ப நிலையில் விழ்ச்சியை ஏற்படுத்துவதால் அக்காற்று தன் பரும னில் குறைந்து நிரம்பிய வளியாக மாறுகின்றது . பன்படு நிலையை அடை ந்து ஒடுங்கி தி இரண் மலைமுகிலைத் தோற்றுவிக்கின்றது. இவை மழைபொ ழிவை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு நிகழும் மழை வீழ்ச்சியையே மேற்காவுகை இழை என்பர். மேற்காவுகை மழை யை இலகுவில் அடையாளம் காண முடியும் . பகல் வேளைகளில் ஆவியாதல் திகழும், நண்பர் காலிற்குப் பின்னர் வானில் திரண்மழை முகில் கூடியிருக்கும். பின்னே ரங் களில் இடிமின்னலுடன் மழை பொழியும், மத்தியகோட்டிற்கு அண் மையில் வருடம் முழுவதும் இம்மழையுண் டு, இலங்கையின் தென் மேல் தாழ் நிலத்தில் மேற்கா வுகை மழைவீழ்ச்சியை நன்கு அவதானிக்கலாம்.
வேடம் கதைசிநாம்

அ 24 247 823, /* - *. சா (3) 82,

Page 31
கல்விப் பொதுத்
வகுப்பு புவியியல்
1. பெளதிகச் சூழல் --
2. பெளதிகச் சூழல் -
3. அபிவிருத்திப் புவியீர்!
4. மனிதத் துலக்கங்கள்
5. படம் வ னாகமே
6, 2டம் # நைலயில் 5
7, படம் வரை கலையில்
புதிய புவியியல் - 4
புவியியல் (3தசப்பட
விற்பலை 1ரீ லங்கா
காங்சே ச ன்
யாழ்ப்

அனல் ன
-ஜாசியம் பார் -
- தராதர உயர்தர -க்குரிய D- நூல்கள்
நில வருவ சங்கர்
கால நிலையியல்
பல்
எறி யங்கள்
வரைப் படங்கள்
புள்ளிவிபரவியல்
த் தொகு தி.
7 யாளர்!
புத்தகசாலை, துறை வீதி, 18ாணம்.