கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்

Page 1
க, குணராசா, ஆ. இராஜகோபால்
ஐக்கிய அெ
விர

i லங்கா வெளியீடு
மரிச் [4, வின்
இயல்

Page 2

དོ ད པ ་ ༡,༡, བ ང ་ པ ་ ལ ་ ལུ་
༡) |30
ཏེ ཡེ ཁ3- ༈ །དུ་

Page 3
|-

ஐக்கிய அமெரிக்காவின்
புவியியல்

Page 4
ஆசிரியரின் உயர் வகுப்புக்குரிய
புவியியல் நூல்கள்
* இலங்கையின் புவிச்சரிதவியல் * சமவுயரக்கோட்டு விளக்கம் * விமானப் படங்கள் * புவிவெ ளியுருவவியல் (தொகுப்பு) * படவேலை (புதிய பதிப்பு) * இந்தியத்துணைக்கண்டப்புவியியல் * பிரித்தானியாவின் புவியியல்
வட கீழ் ஐக்கிய அமெரிக்கா படவரை கலையில் வரைப்படங்கள்
படவரை கலையில் எறியங்கள் » இலங்கைப் புவியியல்
படம் வரைதலை பெளதிகச் சூழல் - 1. நிலவுருவங்கள் பெளதிகச் சூழல் - II. கால நிலையியல்
(புதிய (G. C, D A/L) * ஐக்கிய அமெரிக்கா

ஐக்கிய அமெரிக்காவின்
புவியியல்
})
க. குணராசா, B. A. Hons (Cey.), C. A. S.
(முன்னாள்: புவியியல் உதவி விரிவுரையாளர், இலங்கைப் பல்கலைக் கழகம், பேராதனை - கொழும்பு. புவியியல் ஆசிரியர், கொக்குவில் இந்துக்கல்லூரி; பகுதிநேர விரிவுரையாளர், தொழில் நுட்பக் கல்லூரி, யாழ்ப்பாணம். அதிதிப் போதனாசிரியர், ஆசிரிய கலா சாலை, கொழும்புத்துறை. ஆலோசக ஆசிரியர் (புவியியல்), காரி யாதிகாரி, கிண்ணியா உதவி அரசாங்க அதிபர், துணுக்காய்)
உதவி : ஆ. இராஜகோபால், B, A,(Geog. Sp1). (Cey.,)
- Dip.in.Ed., (Cey..) ( ஆசிரியர், இந்துக்கல்லூரி, யாழ்ப்பாணம்)
*
ஸ்ரீ லங்கா வெளியீடு, காங்கேசன் துறை வீதி,
யாழ்ப்பாணம்.

Page 5
* முதலாம் பதிப்பு = மே. 1979
4 (C.) V, Mahalingan, 3, 11:51 1,4116,
B1OW11 Road, Jaffna. * சித்திரா அச்சகம், 310. மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணம்,
லங்கா வெளியீடு, யாழ்ப்பாசனம்.
இ 5) 7.50
விற்பனையாளர் : ஸ்ரீ லங்கா புத்தகசாலை காங்கேசன் துறை வீதி,
யாழ்ப்பாணம்.

தனது முதல் புவியியற் சிறப்பு மாணவன் என்ற பெருமையை எனக்கு வழங்கிய புவியியற் பேராசிரியர்
சோ. செல்வநாயகம் அவர்களுக்கு இந்நூல் என் அன்பின் காணிக்கை.
- க.
குணராசா

Page 6
முன்னுரை
> 1
புவியியற் புதிய பாடத்திட்டத்தில் அபிவிருத்தி யடைந்த நாடுகளின் புவியியல் குறித்த, பிரதேச அறிவு வேண்டப்படுகின்றது; அவ்வகையில் ஐக்கிய அமெரிக்காவின் புவியியல் என்ற இந்நூல் அமை கின்றது.
* ஐக்கிய அமெரிக்காவின் புவியியலை, பௌதிகப் பின்னணி, பொருளாதாரப் பின்னணி, பிரதேசப் புவியியல் என்ற தலைப்புகளின்ன டியாக தெளிவாகவும் விளக்கமாகவும் விபரிக்க இந் நூலில் முயன்றிருக்கிறேன்.
தி இந்நூலை என் ஆசிரியப் பெருந் த னக பேராசிரியர் சோ செல்வநாயகம் அவர்களும் குச் சமர்ப்பிக்கின்றேன், புவியியலுலகிற்கு அவரின் மறைவால் ஏற்பட்ட பேரிழப்பை ஈடு செய்ய இனியொருவர் இல்லை,
தவறுகள் குற்றங்களாகா , ஆதலால், அறிஞர்கள் இந்நூலில் ஏதாவது குறையிருப்பின் சுட்டிக்காட்டில், அடுத்த பகுதியில் நன்றியுடன் திருத்திக்கொள்வேன்.
க.குணராசா
*கமலம்' 82. பிறவுண் வீதி, நீராவியடி. யாழ்ப்பாணம். 28-5-79,

பொருளடக்கம்
பக்கம்
1. வட அமெரிக்கா - அறிமுகம்
தரைத்தோற்றம் - நதிகளும் ஏரிகளும் கால நிலை - இயறகைத்தாவரம்.
1 - 7
----
8 - 25
ஐக்கிய அமெரிக்கா - பெளதிகப் பின்னணி தரைத்தோற்றமும் அமைப்பும் - மண் வகைகள் - கால நிலை - இயற்கைத்தாவரம் - கனிப்பொருள் வளம்.
26- 6)
ஐக்கிய அமெரிக்கா - பொருளாதாரப் பின்னணி, குடிப்பரம்பல் -1.91!ர் செய்கை -கலப்பு வேளான்மை வலயம் - சோளவலயம் - பருத்திவலயம் - அயன அயல் பயிர்வளம் - கோதுமைவலயம் - தானிய பழவலயம் - கைத் தொழில்கள் - கைத்தொழில்) வலயம் - கைத்தொழில் மையங்கள் - இரும்பு உருக்குத் தொழில் - யந்திர உற்பத்திக் கைத் தொழில் - கட்டால் கட்டுந் தொழில் - நெசவுக் கைத்தொழில் - ஆடை உற்பத்தித் தொழில் - தானியம் அரைத்தல் - மீன்பிடித் தொழில் - இறைச்சி யடித்தல் தொழில்.
4.
67 - 129
ஐக்கிய அமெரிக்கா - பிரதேசப்பு வியியல் வடகீழ்ப் பிரதேசம் - நியூ இங்கிலாந்துப் பிரதேசம் பேரேரிப் பிரதேசம் - வட அப்பலாச்சியன் மத்திய அத்திலாந்திப் பிரதேசம் - மத்திய சமவெளிப் பிரதேசம் தென்கீழ்ப் பிரதேசம் - தென் உண்ணாட்டுத் தாழ் நிலப்பிரதேசம் - விரி குடாக் கரையோரப்பிரதேசம் - புளோரிடாக் குடாநாட்டுப் பிரதேசம் - பெரும் சமவெளிகள் - மேற்குமலைப் பகுதி றொக்கிமலைப்பிரதேசம் - மலையிடை மேட்டு நிலப்பிரதேசம் - கரையோரப் பள்ளத்தாக்குகள் கலிபோர்ணியாப் பிரதேசம் - அலாஸ்காப்பிரதேசம்.
5, பரீட்சை வினாக்கள்
130)

Page 7
விளக்கப்பட விபரம்
பக்கம்
2
: : : : : :
13 18 18. அ.
28
1. வட அமெரிக்க நாடுகள்
வட அமெரிக்காவின் தரைத் தோற்றம் காலநிலை - மழை வீழ்ச்சி, வெப்பநிலை
ஐக்கிய அமெரிக்க அரசுகள் 3. ஐ. அ. பௌதிகவுறுப்புக்கள் 6. ஐ. அ. மண் வகைகள் 7. ஐ. அ. இயற்கைத் தாவரம் 8. ஐ. அ. கனிப் பொருள்வளம்
9.]
ஐ. அ. பயிர்ச் செய்கை வலயங்கள் 10.] 11. பருத்தி வலயம் 12. ஐ. அ. கைத்தொழில் மையங்கள் 13. கைத்தொழில் வலயம் 14. ஐ. அ. இயற்கைப் பிரதேசங்கள் 15. வ.கீ ஐ. அ. தரைத்தோற்றம் 10. வ.கீ . ஐக்கிய அமெரிக்கா 17. நியூஇங்கிலாந்துப் பிரதேசம்
ஹட்சன் - மோஹோக் இடைவெளி 19, பேரேரிப் பிரதேசம் 20. வட அப்பலாச்சியன் - மத்திய அத்திலாந்திக்
- பிரதேசம் 21. நியூயோர்க் நகரம் 22. மத்திய சமவெளிப் பிரதேசம் 23. தென் உண்ணாட்டுத் தாழ் நிலப் பிரதேசம் 24. விரிகுடாக் கரையோரம் 25. புளோரிடாக் குடாநாடு 26. மேற்கு மலைப்பகுதி
27.] 28. கலி போர்ணியா 29. கலிபோர்ணிய - மக்கட் தொழி 30. சாண்பிரான்சிஸ்கோ 31.
சாண்பிரான்சிஸ்கோ நகரம் 32. அலாஸ்கா
37 43 45 68 69 70) 74 81 83
18.
89 93 96
98
102 103 109
120
121 123 124 127

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
வட அமெரிக்கா: அறிமுகம்
உலகின் மூன்றாவது பெரிய கண்டம், வட அமெரிக்காவாகும். பசுபிக் சமுத்திரத்தையும் அத்திலாந்திக் சமுத்திரத்தையும் பிரிக்கும் நிலப்பரப்பாக வட அமெரிக்காவும் தென்னமெரிக்காவும் அமைந்துள் ளன. வட-தென் அமெரிக்காக்களைப் புதிய உலகம் என்பர். ஏனெனில் ஏனைய கண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னரே இக்கண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அமெரிக்கா. 1492-ஆம் ஆண்டு கிறிஸ்தோபர் கொலம்பஸ் என்ற கடலோடியால் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் அமெரிக்க வெஸ்புசி என்பவர் இக்கண்டத்தில் பிரதேசவாராய்ச்சி செய்தார். அவரின் பெயரால் இக்கண்டங்கள் அழைக்கப்படுகின்றன.
வட அமெரிக்காக் கண்டம், ஆக்டிக் சமுத்திரத்திலிருந்து, பனா மாத் தொடுகடல் வரை பரந்தமைந்துள்ளது. இக்கண்டம் ஏறத்தாழ 92 இலட்சம் சதுரமைல் பரப்பினையுடையது. இதில் ஐக்கிய அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ ஆகிய மூன்று நாடுகளும் பெரும் பரப்பினை அடக் குகின்றன. வடஅமெரிக்காவிற்கு வடக்கே கிறீன்லாந்து, பபின்தீவு, விக்டோரியாதீவு முதலான தீவுகள் அமைந்துள்ளன. தென்கிழக்கே கியூபா, கிஸ்பானியோலா, போட்டோறிக்கா, யமேக்கா முதலான மேற்கிந் தியத் தீவுகள் அமைந்துள்ளன. கரீபியன் கடலில் இத்தீவுகள் அமைந் துள்ளன.
வட அமெரிக்காவின் அகலக் கோட்டுப் பரப்பு பரந்தது. 20® வட அகலக் கோட்டிலிருந்து 80° வட அகலக்கோடு வரை இக் கண்டம்

Page 8
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
../கிதீன்லாந்து ஐஸ்லாந்தும்!
அலாஸ்தாம்.
க /நெத்திக்** *
-.-.
டவர்
பசுபிக்
பத்து இரு.
"க்கு
சான்பிரான்சிஸ்கோ-டே. சமுத்திரம்
சிககாதல்
பட் யூகமாக்
2 அத்திலாந்திக் அ மெரிக்கா சமுத்திரம்
சாவு கடல்
நியூ ஒலியன்ஸ்
7.க - ] ::பகாமா
ர்
பரிமா
3,உறவாப்
பிக்கோ
'மெக்சிக்கே,
">அதவாஜகியாவடி
மெக),
கோயம்
மெக்சிக்கோ •
: கடல்
பணத)
குவாடோடி நிகராகுவா
- எல்சலி
பி
கோஸ்ராரிக்க -
பனாமா
படம் : 1 வட அமெரிக்க நாடுகள்

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
இப் பர 30° மேற்கு ரெ
பரந் துள்ளது. ஆக்டிக் வட்டம் (663) வ) அலாஸ்கா, கனடா, கிறீன் லாந்து என்பனவூடாகச் செல்கின்றது. கடகக்கோடு (23;' வ) மெக்சிக் கோவினூடாச் செல்கின்றது. அதனால், வட அமெரிக்காவின் பெரும் பகுதி இடை வெப்பக் கால நிலையினுள் அடங்குகின்றது.
நெடுங்கோட்டுப் - பரப்பினை நோக்கில், வட அமெரிக்கா 170° மேற்கு நெடுங்கோட்டிற்கும் 30° மேற்கு நெடுங் கோட்டிற்கும் இடை யில் பரந்தமைந்துள்ளது. 100° மேற்கு நெடுங்கோடு வட அமெரிக் காலைச் சரியாக இரண்டு கிழக்கு - மேற்குப் பாகங்களாகப் பிரிக்கின்றது.
அமெரிக்காவில் முதன் முதல் குடியேறியவர்கள் ஆங்கிலேயராவர். இவர்கள் வட அமெரிக்காவின் கிழக்குக் கரையோரத்தில் குடியேறி னர். அதன்பின் பிரான்சியர் செல்லோறன்ஸ் நதிப் பகுதியில் குடி யேறினர். அமெரிக்காக்களில் ஐரோப்பியர் குடியேறுவதற்கு முன் செவ்விந்தியரே வாழ்ந்தனர்.
தரைத்தோற்றம் வட அமெரிக்காவின் தரைத்தோற்றத்தினை நான்கு பெரும் பிரிவுக ளாகப் பிரிக்கலாம்.
அவையாவன: 1. மேற்குமலைத் தொகுதி
2. மத்திய சமவெளிகளும் கரையோரச் சமவெளிகளும் 3. கனடாவின் பரிசை நிலம் 4. கிழக்கு உயர் நிலங்கள்
1. மேற்கு மலைத்தொகுதி வட அமெரிக்காவின். மேற்குப் பகுதி உயர்ந்த மலைப்பிரதேசமா கும். இம்மலைத்தொகுதி அலாஸ்காவிலிருந்து மத்திய அமெரிக்காவரை பரந்திருக்கின்றது. ஏறக்குறைய 4300 மைல்கள் நீளமான றொக்கி மலைத் தொடர் இப்பகுதியில் அமைந்துள்ளது. இதனைவிட அலாஸ்கா மலைத் தொடர், சியரா நெவாடா, சியராமட்ரே முதலிய மலைத்தொடர்களும் இப் பகுதியில் காணப்படுகின்றன. இம்மலைத் தொடர்ளுக்கு இடையே யூக்கொன், கொலம்பியா, கொலராடோ, மெச்சிக்கோ எனும் மேட்டு நிலங்கள் அமைந்துள்ளன.
மேற்கு மலைத்தொகுதியை, மேற்குக் கோடிலேரா என்றும் வழங் குவர். இம்மலைத் தொகுதி 45° அகலக்கோட்டை அடுத்து ஏறத்தாழ 1000 மைல்கள் அகலமான து. இம்மலைத் தொகுதி அல்பைன் காலத் தில் உருவான இளம் மடிப்பு மலையாகும்.

Page 9
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
SS
89
வலம்
பிற டோர
சகா.
4 2 2வது தெரி
43 பு*
சியரா
டிபி 7
:388 அத்திலாந்திக்
சமுத்திரம்
தரி நதி
22
பசுபிக்
"மெக்சிக்கேர்.)
விரிகுடா
சமுத்திரம் !
>ு.. ''.
படம் 2 வட அமெரிக்காவின் தரைத்தோற்றம் (1 யூக்கொன் மேட்டுநிலம். 2. கொலம்பியா-சினேக் மேட்டுநிலம். 3. கொலராடோ
மேட்டுநிலம்) 2. மத்திய சமவெளிகளும் கரையோரச் சமவெளிகளும்
வட அமெரிக்காவில் : பாகத்தை மத்திய சமவெளிகளும் கரை யாரச் சமவெளிகளும் கொண்டி ருக்கின்றன. இவை சராசரி 1000 அடி களுக்கு உட்பட்டனவாக உள் ளன. மத்திய சமவெளி மிகப் பரந்தது; கட்சன் விரிகுடாவையும் அத்திலாந்திக் சமுத்திரத்தை அடுத்தும் கரை யோரச் சமவெளிகள் இருக்கின்றன,

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
பொதுவாக இம்மத்திய சமவெளிகள் ஆக்டிக் சமுத்திரத்திலிருந்து மெச்சிக்கோக்குடா வரை பரந்தமைந்துள்ளன. இவை இளம் அடையற் படிவுகளைக் கொண்டிருக்கின்றன, மத்திய சமவெளியில் மிசூரிமிசிசிப்பி > நதி அமைந்துள்ளது. மிசூரிமிசிசிப்பிக்கு மேற்குப்பக்கமாக இம்மத்திய சமவெளி, றொக்கிமலைத் தொடரை நோக்கி உயர்ந்து செல்கின்றது.
- 3. கனடாவின் பரிசைநிலம் ', வட அமெரிக்காவின் வடபகுதி பனிக்கட்டியாற்றால் அரிக்கப்பட்டு, பரிசையாக விளங்குகின்றது. இதனைக் கனேடிய பரிசை, லெர்றேயின் சன் பரிசை, கனடாவின் இரும்புக் கவசம் எனப் பல பெயரால் அழைப்பர். இப்பரிசை நிலத்தின் உயர்பகுதிகள் றொச் கிமலைகளை அடுத் துள்ளன; கிழக்குப்புறமும் உயர்வான து.
வட அமெரிக்காவின் மிகமிகப் பழமையான நிலப்பகுதி, கனேடி யப்பரிசை ஆகும். உலகின் பண்டைய கருக்களில், இப்பரிசை முக்கிய மானது. பளிங்குருப்பாறைகளினால் இப்பரிகை ஆகியுள்ளது. பனிக் கட்டி காலத்தில், இப்பரிசை நிலம் அரித்தலிற்குள்ளாகியது.
4. கிழக்கு உயர்நிலங்கள் வட அமெரிக்காவின் கிழக்கு உயர் நிலங்களாக அப்பலாச்சியன் மலைத் தொடரும், லபிறடோர் உயர் நிலமுமுள்ளன. இவை 3000 அடிக்கு மேற்பட்ட உயரத்தினையுடையன..
- அப்பலாச்சியன் மலைத்தொகுதி, பலியோசோயிக் காலத்தில், கேசீனியன் மடிப்பாதலிற்குட்பட்டது. அப்பலாச்சியன் அதிகளவில் உரிவிற்குள்ளாகியுள்ளது, இதன் அதி உயரம் 7000 அடியாகும்.
- நதிகளும் ஏரிகளும்
மிசூரிமிசிசிப்பி நதி (2,500 மைல்) வட அமெரிக்காவில் மிக நீளமான நதியாகும். இது மத்திய சமவெளியில் பாய்ந்து மெச்சிக்கோக் குடாவில் கலக்கின்றது. யூக்கொன்நதி கொலம்பியாநதி, கொலராடோ நதி, சினேக்நதி என்பன மேற்குமலைத்தொகுதியில் உற்பத்தியாகிப்பசுபிக் கில் விழுகின்றன. கொலராடோ நதி மிக ஆழமான பள்ளத்தாக்கினூ டாகப் பாய்ந்து கலிபோணிய விரிகுடவில் கலக்கின்றது. மக்கன்சிநதி ஆக்டிக் கடலிலும், சென்லோறன்ஸ் நதி அத்திலாந்திக்கிலும் விழுகின்றன.
வட அமெரிக்க நதிகளில் மக்கன்சி நதி, மிசிசிப்பி நதி, சென்லோறன்ஸ் நதி ஆகியன மிகமுக்கியமானவையும் குறிப்பிடத்தக்கவையுமாகும். மிசிசிப்பி நதி தென்புறமாகப் பாய்ந்து, மெச்சிக்கோக் குடாவைச் சென் றடைகின்றது ; மேற்கேயிருந்து பாயும் மிசூரி, - மிசிசிப்பியுடன்

Page 10
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
இணைகின்றது. அப்பலாச்சியன் - மலையிலிருந்து உற்பத்தியாகிவரும் ரெனசி நதியும், மிசிசிப்பியுடன் இணைகின்றது. கனடாவில் பாய் கின்ற மக்கன்சிநதி, 2300 மைல்கள் நீளமானது; பேரேரிகளில் தோற் றம் பெறும் செல்லோறன்ஸ் நதி கிழக்குப் பக்கமாகப் பாய்ந்து அத்தி லாந்திக்கை அடைகின்றது.
வட அமெரிக்காவில் பல ஏரிகள் காணப்படுகின்றன. சுப்பீரியர்', மிக்சிக்கன், கூறன், ஈரி, ஒன்ராறியோ எனும் ஐம்பெரும் ஏரிகள் முக்கியமானவை. இவற்றைப் பேரேரிகள் என்பர். கனடாவிலுள்ள வின்னிப்பெக், கிறேற்சிலேவ், கிறேற்பியர் எனும் ஏரிகளும் குறிப்பிடத் தக்கன. மேற்கு மலைத்தொகுதியில் கிறேற்சோல்ற் ஏரி (பெரிய உப்பேரி) உளது.
காலநிலை வட அமெரிக்கா வடக்குத் தெற்காகப் பரந்ததொரு கண்டமாகும். கடகக்கோட்டிலிருந்து ஆக்டிக் கடல் வரை இது பரந்திருப்பதால் வட பகுதிக்கும் தென்பகுதிக்கும் இடையில் வெப்பநிலை வேறுபடுகின்றது. வடஅமெரிக்கா மேற்குப் பகுதியில் றொக்கி மலைகளையும் கிழக்குப் பகுதி யில் அப்பலாச்சியன் மலைகளையும் கொண்டிருப்பதால், மழைவீழ்ச்சிப் பரம்பலிலும் வேறுபாடுகளுள்ளன.
வெப்பநிலை வடஅமெரிக்காவின் வெப்பநிலை பொதுவாகத் தெற்கிலிந்ருது வடக்கே போகப்போகக் குறைவடைகின்றது. மாரிகாலத்தில் 32° ப. சமவெப்பக்கோடு வடஅமெரிக்காவை மேற்குக் கிழக்காக இரு சமகூறு களாக்குகிறது. மாரிகாலத்தில் அதிதெற்குவரை குளிர்காணப்படக் காரணம், குளிரான ஆக்டிக் காற்றுக்கள் தென்புறம் நோக்கி உள் நுழைவதேயாகும்.
கோடைகாலத்தில் வடஅமெரிக்காவில் வெப்பநிலை உயர்வாகவுள் ளது. அதிவடக்கே 50°ப. சமவெப்பக்கோடு அமைகின்றது. அரிசோனாப் பகுதியில் 90°ப. வரை வெப்பநிலை நிலவுகின்றது. இக்காலத்தில் அதி வடக்குவரை வெப்பநிலை உயர்வாக இருக்கக் காரணம் வெப்பமான தென்புறக்காற்றுகள் வடக்குநோக்கி உள் நுழைவதேயாகும்.
மழைவீழ்ச்சி
மேலைக்காற்று வலயத்துள் வடஅமெரிக்கா அமைகின்றது. மாரி காலத்தில் மேலைக்காற்றுக்களை றொக்கி மலைத்தொடர் தடுப்பதால்

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
மேற்குக் கரையோரம் அதிக மழையைப் பெறுகின்றது. மத்தியசம் வெளி வரண்டதாக விளங்குகின்றது. மாரிகாலத்தில் கிழக்குக்கரை யோரத்திலும் கணிசமானவளவு மழை கிடைக்கின்றது. கோடை காலத்தில் கிழக்குப் பகுதிகள் அதிக மழையைப் பெறுகின்றன. இக் காலத்தில் மழைவீழ்ச்சி மேற்குநோக்கிக் குறைந்து செல்கிறது.
இன்று
ய
32
பளவரி
32ப
>80"SA
8dப்பு
>80ப
700
902
ச.
40-80 | 120"-40" < 20"
100
படம் 3 கால நிலை மழைவீழ்ச்சி, வெப்பநிலை
இயற்கைத்தாவரம் மத்திய அமெரிக்காவிலும் மேற்கு இந்தியத் தீவுகளிலும் வெப்ப மான காலநிலை நிலவுவதால், இப் பகுதிகளில் வெப்பவலயக் காடு கள் காணப்படுகின்றன. மெச்சிக்கோ, அரிசோனாப் பகுதியில் வறட்சி நிலவுவதால், பாலை நிலத் தாவரங்கள் அமைந்துள்ளன. கிழக்கு ஐக்கிய அமெரிக்காவில் இடைவெப்பக் காலநிலை நிலவுவதால் இலையுதிர் காடுகள் - காணப்படுகின்றன. வடஅமெரிக்காவின் மத்திய பகுதியில் கண்டக்கால நிலை நிலவுவதால், இங்கு புல்வெளிகளேயுள்ளன. இப் புல்வெளிகளைப் பிறேயறிஸ் என்பர். கலிபோணியாப் பகுதியில் மத்தியதரைக் கடற் காலநிலை நிலவுவதால், இங்கு மத்தியதரைக் கடற் காடுகள் உள்ளன. வடஅமெரிக்காவின் வடபகுதி மிகக் குளிரா னது. அதனால் இங்கு தண்டராத் தாவாரம் காணப்படுகின்றது.

Page 11
ஐக்கிய அமெரிக்கா?' பௌதிகப் பின்னனி
அறிமுகம் அரசியல் பலம், பொருளாதாரப் பலம் என்பனவற்றில் உலகி லேயே முதல் நாடாகக் கருதப்படும் ஐக்கிய அமெரிக்கா, வட அமெரிக்காவிலேயே முதன்மை வாய்ந்த ஒரு நாடாகும். வட அமெரிக் காவின், மத்திய பாகத்தைக் கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்கா, வடக்கே கனடாவையும், தெற்கே மெக்சிக்கோவையும், கிழக்கு மேற்குப் பகுதிகளில் முறையே அத்திலாந்திக், பசுபிக் சமுத்திரங்களையும் எல்லைப் புறங்களாகக் கொண்டுள்ள து . ஐக்கிய அமெரிக்கா, இன்று 50 அரசு
ക്
மொள்ராஜா
ட கொங்கு
ஒதிகால்
பின் 1ெ)
தெமா
விஸ்கெங்)
ள்சி தேசி
கன்
- கோற்று
: இபயோக
& 2
இஸ்2வாக்பெபொதுசொத்
கடு: ருட்தீவு (உசில் கொத்திகம்
இயேசி இப்ஒகாயர் 3
பென் பெயூயேசி
இயோவா
நெப்ராஸ்கா
இடலாயம்
- திலாதே!"
மேற்க
உந்ரு
மேரிலாண்ட் 1 கொலம்பியா
கோவா ...
தொலகாடா கன் சாம்
தெரி
*லிபோர்னியா
கென்டகி )
2 ரோலினா
ஐக்கிரகே
ரென்சி
ரெ.
Mள்திடா,
படம் 4 ஐக்கிய அமெரிக்க அரசுகள்

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
களின் இணைப்பால் உருவாகி இருக்கின்றது. ஆரம்பத்தில் ஐக்கிய அமெரிக்காவில் 13 அரசுகளே இருந்தன. 1959 ஆம் ஆண்டு அலாஸ்கா, ஹவாய் எனும் புதிய இரு அரசுகளும் ஐக்கிய அமெரிக்காவினோடு இணைந்துள்ளன
ஐக்கிய அமெரிக்கா ஏறத்தாழ 32, 26 786 சதுர மைல் பரப்பினை யுடையது; வடக்குத் தெற்காக 1600 மைல் அகலத்தையும், கிழக்கு மேற்காக 2800 மைல் நீளத்தையும் இந்நாடு கொண்டுள்ளது. 1790 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவில் 39, 29,214 மக்களே வாழ்ந் தனர். குடித்தொகை 1960 ஆம் ஆண்டு மதிப்பின்படி 17,93,23,125 ஆக உயர்ந்துள்ளது. ஏறக்குறைய 20 கோடி மக்கள் இன்று ஐக்கிய அமெரிக்காவில் வாழ்கின்றனர்.
பௌதிகப் பின்னணி பின்வருவனவாம். 1. தரைத் தோற்றமும் அமைப்பும். 2. மண்வகை.
காலநிலை. 4. தாவரம். 5. கனிப் பொருள் வளம்
1. தரைத் தோற்றமும் அமைப்பும் ஐக்கிய அமெரிக்காவின் தரைத்தோற்றத்தையும் அமைப்பினை யும் அவதானிக்கும்போது, அதனை நான்கு தெளிவான பெளதிக றுப்புக்களாக வகுத்துக் கொள்ள முடியும். அவையாவன.
(அ) மேற்கு மலைத்தொகுதி. (ஆ) உண்ணாட்டுச் சமவெளிகள். இ) கடற்கரைச் சமவெளிகள். (ஈ) அப்பலாச்சியன் உயர் நிலம்.
கனேடியப் புரிசை
* உண்ணா •38
சீ ம வெளி.516
வார்ம்லட் க.மல்லிகள்
ராசசிபன.
"4 மேட்டு நிலங்க"
J ர சீமவெளி,
.கொம்
தாக்கல்
மாசு
கோரச் சம்
இசை,,
படம் 5 ஐக்கிய அமெரிக்காவின் பௌதிகவுறுப்புக்கள் (ஆதாரம் டட்லிஸ்ராம்ப்)

Page 12
10
ஜக்கிய அமெரிக்காவின் புவியியல் (அ) மேற்குமலைத் தொகுதி
மேற்குமலைத் தொகுதியை மேற்குக் கோடிலேரா எனவும் கூறு வர். இம் மேற்குக் கோடிலேரா, ஐக்கிய அமெரிக்காவில் : பாகத் தைக் கொண்டிருக்கின்றது. மேற்கு மலைத்தொகுதி, ஐக்கிய அமெரிக் காவில் தான் அதிகளவு அகலமானதாகக் காணப்படுகின்றது. 40° வட அகலக்கோட்டை அடுத்து, இம்மலைத் தொகுதி 1000 மைல்கள் வரையிலான அகலத்தைக் கொண்டிருக்கின்றது. இம் மேற்கு மலைத் தொகுதி மூன்றாம் பகுதி யுகத்தில், அல்பைன் காலத்தில் தோன்றிய. இளம் மடிப்பு மலைகளாகக் காணப்படுகின்றது. இவை குறைகளால் பெரும் துண்டங்களாக உடைந்த, மடிப்புக்களைக் கொண்டிருக்கின் றன. இம் மேற்கு மலைத்தொகுதி சராசரி 3000 அடிகளுக்கு மேற் பட்டது. இதன் அதி உயரம் எல்பேட் மலைச் சிகரத்தில் (14,43 அடி) பிரதிபலிக்கப்படுகின்றது, இச் சிகரம் கொலராடோ மாநிலத்தில் அமைந்துள்ளது.
மேற்குக் கோடிலேராவில் மூன்று தெளிவான பௌதிகப் பிரிவு களைக் காணமுடியும். அவையாவன:
(1) றொக்கிமலைத்தொடர் - இம் மலைத்தொடர், ஐக்கிய அமெரிக் கா வின் உண்ணாட்டுச் சமவெளியிலிருந்து படிப்படியாக மேலுயர் கின்றது. ஐக்கிய அமெரிக்க மாநிலங்களாக மொன்ரானா, வயோமிங், கொலராடோ, நியூமெக்சிக்கோ என்பன இம் மலைப் பகுதியிலேயே அமைந் திருக்கின்றன. கொலராடோ மாநிலத்தில், றொக்கிமலைத் தொடரின் உயர்பகுதிகள் அமைந்துள்ளன. (9000 அடிகளுக்கு அல்லது 3000 மீற்றர்களுக்கு மேல்). கொலராடோ மா நிலத்திலமையும் றொக்கி மலைத் தொடரில் 14,000 அடிகளுக்கு மேலான உயரமுடைய சிகரங் கள் பல காணப்படுசின்றன. மிசூரி நதி, மொன்ரானா மாநில றொக்கி மலைப் பாகத்தில் உற்பத்தியாகின்றது. மிசூரி - மிசிசிப்பி நதியின் பல கிளைகள் ருொக்கிமலைத் தொடரிலேயே ஊற்றெடுக்கின்றன. கொல றாடோ மாநிலத்தில் காணப்படும் உயர் றொக்கிமலைப் பாகத்திலேயே கொலராடோநதி உற்பத்தியாகி, கலிபோர்ணியா விரிகுடாவைச் சென்றடைகின்றது.
(ii) பசுபிக் கரையோர மலைத்தொடர்கள் - பசுபிக் கரையோரமலைத் தொடர்கள் என்று கூறும்போது, கரையோரமலைத் தொடர்கள், கஸ்கேட் மலைத்தொடர், சியாராநெவாடா மலைத்தொடர் என்பனவற்றை முக்கிய மாகக் கருதும். வடக்கே வன்கூவர் வரை, ஐக்கிய அமெரிக்காவில் கரையோர மலைத்தொடர்கள் அமைந்துள்ளன. இம்மலைத்தொடர்கள் சான்யுவான் - சக்கிரமன்ரோ நதியினால் துண்டாடப்படுகின்றன. சியாரா நெவாடா மலைத்தொடருக்கும், கரையோர மலைத்தொடர்களுக்கும்
பெத்திய தரி நதி, 2ான உயர்

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
11
இடையில் சான்யுவான் - சக்கிரமன்ரோப் பள்ளத்தாக்கு, வடக்குத் தெற்காக அமைந்துள்ளது. இதனையே கலிபோர்ணியப் பெரும் பள்ளத் தாக்கு என்பர்.
(iii) மலையிடை மேட்டுநிலங்கள் - றொக்கிமலைத் தொடருக்கும், பசு பிக் கரையோரமலைத் தொடருக்கும் இடையில், மலையிடைமேட்டு நிலங்கள் சில அமைந்துள்ளன. இவை மலைத்தொடர்களால் பிரிக்கப் பட்ட, உயர்மட்ட வடிநிலங்களாகக் காணப்படுகின்றன. முக்கியமாக வடமேற்கு ஐக்கிய அமெரிக்காவைக் கொண்டுள்ள சினேக் - கொலம்பியா மேட்டுநிலம், தென்மேற்கு ஐக்கிய அமெரிக்காவைக் கொண்டுள்ள கொலராடோ மேட்டுநிலம் என்பன குறிப்பிடத்தக்கன. அலாஸ்கா மாநிலத்தில் யுக்கொன் மேட்டுநிலம் அமைந்துள்ளது. ஒறிகொன், இடாகோ மாநிலங்களின் பகுதிகளையும், நெவாடா, உற்றா, அரிசோனா மாநிலங் களையும் இம்மலையிடை மேட்டு நிலங்கள் உள்ளடக்கியுள்ளன. அரிசோன மாநிலத்தில், கொலராடோ நதியில் பெரிய ஆற்றுக்குடைவு (Grari) Canyon) அமைந்துள்ளது.
(ஆ) உண்ணாட்டுச் சமவெளிகள் ஐக்கிய அமெரிக்காவின் மத்திய பாகம், பெரும் சமவெளியாகப் பரந்துள்ளது. 100° மேற்கு நெடுங்கோட்டிற்கு, மேற்கே இம் மத்திய சமவெளி, 3000 அடிகள் வரை உயர்ந்து செல்கின்றது. கிழக்கே அப்ப லாச்சியன் மலைத்தொகுதியை நோக்கிப் படிப்படியாக உயர்ந்து செல் கின்றது. ஐக்கிய அமெரிக்காவின் பெரும் சமவெளிகள் என, 100' மேற்கு நெடுங்கோட்டிற்கு மேற்கேயுள்ள உயர சமவெளிகளைக் குறிப் பிடலாம். இச் சமவெளிகள் மொன்ரானா, தென்டகோற்றா, நெப்ராஸ்கா, கன்சாஸ், ரெக்சாஸ் ஆகிய மாநிலங்களின் பாகங்களைக் கொண்டிருக் கின்றன. மிசிசிப்பி நதியினதும் அதன் கிளை நதிகளான மிசூரி ஒகாயோ நதிகளினதும் வடிநிலப் பிரதேசமாக உண்ணாட்டுச் சமவெளிகள் இளம் அடையற்பாறைகளையும், உண்ணாட்டுச் சமவெளிகள் முதிய அடையற்பாறைகளையும் கொண்டனவாக விளங்கி வருகின்றன.
லாது. ஐங்கோ ளிகள்
(இ) கடற்கரைச் சமவெளிகள் ஐக்கிய அமெரிக்காவின் கடற்கரைச் சமவெளிகள் என வளைகு டாச் சமவெளிகளையும், அத்திலாந்திக் சமவெளிகளையும் குறிப்பிடலாம். இச் சமவெளிகள் கடலுக்குரிய படிவுகளாலும், ஆற்று வண்டல்களாலும் ஆகியனவாகக் காணப்படுகின்றன. வளைக்குடாக் கரைச் சமவெளி மிசிசிப்பி நதியின் கழிமுகத்தினைக் கொண்டிருக்கின்றது. அத்திலாந்திக் கரையோரச் சமவெளி புளோரிடக் குடாவிலிருந்து. பொஸ்தன்வரை வடபுறமாகப் பரந்துள்ளது. இக்கரையோரச் சமவெளி அப்பலாச்சி

Page 13
12
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
))
யன் பிரதேச அரித்தலால் ஏற்பட்ட படிவுப் பொருட்களைக் கொண் டுள்ளது : சோக்குக்குரிய இளமையான பாறைகளையும் கொண்டிருக் கின்றது; இக் கடற்கரைச் சமவெளி டெலாவயர், செசாபிக் போன்ற குடாக்களையும், கடனீரேரிகளையும், சேற்று நிலங்களையும் கொண்டுள் ளது. கட்சன் நதி, டெலாவயர் நதி, சஸ்க்வேகனா நதி என்பன இக் கடற்கரைச் சமவெளியினூடாகப் பாய்கின்றன.
(ஈ) அப்பலாச்சியன் உயர்நிலம் ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குப்பாகத்தில் அப்பலாச்சியன் மலைத் தொகுதி - அமைந்துள்ளது. கார்போனிபரஸ்காலத்தில் நிகழ்ந்த கேசீனியன் மலையாக்கத்தின் போது உருவாகிய மடிப்புக்களை அப்பலாச் சியன் கொண்டிருக்கின்றது. இம்மடிப்பு மலைகள் பெரும்பாலும் தென் மேற்கு - வடகிழக்குப் போக்கில் அமைந்துள்ளன.
அப்பலாச்சியன் உயர் நிலத்தில் சில பௌதிகப் பிரிவுகளை அவதா னிக்கலாம். அப்பலாச்சியனின் அதிமேற்கு வடக்குப் பகுதி அலகனி மேட்டு நிலங்களைக் கொண்டிருக்கின்றது. அலகனி மேட்டு நிலம் எரி மலைக் குழம்புத் தலையீட்டுப் பாறைகளால் உருவான பழைய உருமா றிய பாறைகளைக் கொண்டுள்ளது. இம்மேட்டு நிலம் மேற்குப் புறமா கப் படிப்படியாகச் சாய்கிறது. இதனுச்சவுயரங்கள் 2000 அடியிலி ருந்து 4000 அடிவரை வேறுபடுகின்றது. அலகனி மேட்டு நிலத்தை அடுத்து, பள்ளத்தாக்குகளையும் பீடங்களையும் உடைய புதிய அப்பலாச் சியன் காணப்படுகின்றது; இது சமாந்தரமான பல பாறைத் தொடர் களைக் கொண்டிருக்கின்றது. இப்பாறைத் தொடர்களை அருவிகள் துண்டித்துப்பல விரைவோட்டப் பகுதிகளை ஏற்படுத்தியுள்ளன; இள மையான பாறைகள் இங்கேயுள்ளன. புதிய அப்பலாச்சியன் பகு திக்கு மேற்கே பீட்மொண்ட் மேட்டு நிலம் உள்ளது; இம்மேட்டு நிலம் மிகப் பழமையான பாறைகளைக் கொண்டுள்ளது; இம் மேட்டு நிலம் அதிக உரிதலுக்குட்பட்டிருக்கின்றது. -
பீட்மொண்ட் மேட்டு நிலமும். கடற்கரைச் சமவெளியும் சந்திக் கின்ற பகுதியில் தொடர்ச்சியான பல நீர்வீழ்ச்சிகள் காணப்படுகின் றன; நீர் வீழ்ச்சிகளைத் தொடர்ச்சியாகவுடைய இப்பகுதியை, நீர் வீழ்ச்சி வலயம் அல்லது நீர்வீழ்ச்சிக்கோடு என்பர். இந்நீர்வீழ்ச்சிக் கோட்டையடுத்தே வாஷிங்டன், போல்ரிமோர், பிலடெல்பியா, நியூ யோக் முதலிய 'நீர்வீழ்ச்சிப் பட்டினங்கள்' அமைந்துள்ளன.
ஐக்கிய அமெரிக்காவின் தரைத் தோற்றத்தையும் அமைப்பையும் மேற்கு மலைத் தொகுதி. உண்ணாட்டுச் சமவெளிகள், கடற்கரைச் சம வெளிகள், அப்பலாச்சியன் உயர் நிலம் என நான்கு பெரும் பிரிவுகளாக வகுத்தபோதிலும், ஐக்கிய அமெரிக்காவின் பேரேரிப் பிரதேசத்தில்

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
13
கனடாவின்பரிசை நிலத்தின் ஒரு எச்சப்பகுதியையும் அவதானிக்க முடி யும். சுப்பீரியர் ஏரியைச் சுற்றியுள்ள மேனிலங்களும், நியூயோக்மாநிலத் தின் அடிறொண்டாக் மலைப்பிரதேசமும் கனடாவின் பரிசை நிலத்தின் பாகங்களாக விளங்கிவருகின்றன. இப்பிரதேசங்கன் பிளைத்தோசீன் பனிக்கட்டிக் காலத்தில், பனிக்கட்டியாற்று அரிப்பிற்குட்டிருந்தன.
2. மண் வகைகள் பரந்ததொரு கண்டத்தின் பாகமாகவும், பிரதேச வேறுபாடான காலநிலை நிலைமைகளையும் கொண்டதாக ஐக்கிய அமெரிக்கா விளங்கு கின்றது. அதனால் ஐக்கிய அமெரிக்கா, பல்வேறு வகைப்பட்ட மண் வகைகளையும் கொண்டதாக இருக்கின்றது. பிரதேசத்திற்குப் பிரதே சம் ஐக்கிய அமெரிக்காவின் மண்வகைகள் வேறுபடுகின்றன.
- பாகம்
கடி க - - - - - - - -
சாம்பல் நிறமன்
கூsமெ7 - 2
! 22
)
am
பாலைவு.
(2907ஆம் .''
, இது 75 % %'லமண
FA 11:3ாவாகணம்
படம் 6: ஐக்கிய அமெரிக்காவின் மண் வகைகள்
ஐக்கிய அமெரிக்காவின் மண்வகைகளைப் பெருநோக்காக ஆரா யும் போது, இரு பிரதான இயல்புள்ளனவாக விளங்கி வருவதைக் காணலாம். அவையாவன : 1. வறள்மண். (Pedocol)) 2. ஈரலிப்பு மண் (Pedalfer)
வறள் மண் பகுதிகள் ஐக்கிய அமெரிக்காவின் மேற்கு அரைப் பாகம் வறள்மண் வகை களைக் கொண்டிருக்கின்றது. வறள் மண்வகைகளை நான்காகப் பாகு படுத்தலாம் அவையாவன :

Page 14
14
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
1. கருமண் பிரதேசம் - ஐக்கிய அமெரிக்காவின் மத்திய பாகத் தில், வடக்குத் தெற்கான ஒரு வலயத்தில் கருமண் பரந்துள்ளது. சோணாசம் (Chornozedms) போன்ற வளமான கருமண் பிரதேசமாகும். பிறேயறிஸின் மத்திய பாகத்தை இப் பிரதேசமடக்கியுள்ளது.
2. கபிலநிற மண்பிரதேசம் - கருமண் பிரதேசத்திற்கும் றொக்கிமலைத் தொகுதிக்கும் இடையில் வடக்குத் தெற்காகக் கபில நிறமண் பிரதேசம் காணப்படுகின்றது. இம்மண் அழுகிய பொருள் (Humus) செறிவினைக் கொண்டதன்று. கலிபோர்ணியப் பள்ளத்தாக்கிலும் இம்மண் பரந் துள்ளது.
3. பாலைநில நரைமண் பிரதேசம் - மேற்கு மலைத் தொகுதியின் தென் மலையிடை மேட்டு நிலங்களில் பாலை நில நரைமண் பிரதேசம் பரந்திருக் கின்றது.
4. மலைப்பிரதேச மண்- மேற்கு மலைத் தொகுதியின் றொக்கிமலைத் தொடர், கரையோரமலைத் தொடர், சியாராநெவாடா என்பன மலைப்பிரதேச மண்பகுதிகளாகக் காணப்படுகின்றன. 'கலப்புமண் வகைகளை இம்மலைப்பிரதேச மண் கொண்டிருக்கின்றது.
ஈரலிப்புமண் பகுதிகள் ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு அரைப்பாகம் ஈரலிப்பு மண்வகை களை கொண்டிருக்கின்றது. * இவை "அழுகிய பொருள்களால் மிக்க வளமானவையாக விளங்குகின்றன. இந்த ஈரலிப்பு மண்வகைகளை ஐந்துவகைளாகப் பாகுபடுத்தலாம். அவையாவன:
1, பிறேயறீஸ் மண்பிரதேசம் - கருமண் பிரதேசத்திற்குக் கிழக்கே ஒரு வலயமாக பிறேயறீஸ் புல்வெளி மண்பிரதேசம் காணப்படுகின் றது. இது மிகவும் வளமான து .
2. காட்டுநில மண் பிரதேசம் - ஐக்கிய அமெரிக்காவின் வட கிழக்குப் பாகம் முழுவதும் இலையுதிர் காட்டு நில மண் பிரதேசமாக விளங்குகிறது. அதனால், ஆண்டுதோறும் விழும் இலைகளிலிருந்து உண்டான அழுகிய பொருளால் வளமானதாகவுள்ளது.
சாம்பல்நிற மண் பிரதேசம். (Podso1) ஐக்கிய 'அமெரிக்காவில் கனடாவின் பரிசை நிலம் அமைந்திருக்கும் சுப்பீரியர் ஏரிப்பிரதேசத் தைச் சூழ்ந்தும், நியூயோக் மாநிலத்திலும் சாம்பல் நிற மண் பிர தேசம் அமைந்துள்ளது. இப்பகுதிகள் நீர்முறை அரித்தலிற்கு உட்பட் டுள்ளன; அமிலத்தன்மை வாய்ந்தனவாகவுமுள்ளன. இம் மண் நரைகபில நிறமானது.
4. செந்நிற மண்பிரதேசம் - ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்கு வலயத்தில், செந்நிற மண்பிரதேசம் பரந்துள்ளது. அதிக மழை இம்

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
15
மண் பிரதேசத்தில் அதிகளவில் நீரரிப்பை உண்டாக்கியுள்ளது. சேதன
வுறுப்புக்குரிய பொருட்கள் மிகக்குறைவு.
5. வண்டல் மண் பிரதேசம். மிசிசிப்பி நதியின் கழிமுகப்பாகத் திலும், வெள்ளச் சமவெளிப் பாகத்திலும் வண்டல் மண் பிரதேசப் பர்ந்துள்ளது. மிசிசிப்பி, லூசியானா மாநிலங்களின் பாகங்களை வண் டல் மண் பிரதேசம் அடக்கியுள் ளது.
- 3 காலநிலை ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு - மேற்கான பரந்த பரப்பும்' தரைத்தோற்ற வேறுபாடுகளும் கால நிலை நிலைமைகளில் ஆதிக்கம் வகிக்கின்றன. எனினும் ஐக்கிய அமெரிக்காவின் கால நிலையை நிர்ண யிக்கின்ற பெரும் ஏதுக்கள் பின்வருவன:
(அ) அகலக்கோட்டு நிலை (ஆ) மலைத்தடுப்பு (இ) நீரோட்டங்கள்.
(ஈ) காற்றுக்கள். ஐக்கிய அமெரிக்க 1 , கடகக் கோட்டிலிருந்து (23; வ) 49° வட அகலக்கோடு வரை அமைந்திருக்கின்றது. அதனால், காலநிலை நிலை மைகளில் வடபாகத்திற்கும் தென் பாகத்திற்கும் இடையில். வேறு பாடுகள் நிலவுகின்றன. பொதுவாக வடபாகம், தென்பாகத்திலும் பார்க்கக் குளிர்ந்தது. மலைத்தடுப்பு, மழைவீழ்ச்சிப் பரம்பலை நிர்ண யிக்கின்ற முக்கிய காரணியாகும். ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குக் கரையோரமாக வெப்பமான குடாநீரோட்டம் பாய்கின்றது; மேற்குக் கரையோரமாகக் குளிரான கலிபோணிய நீரோட்டம் பாய்கின்றது; சமுத்திரக் காற்றுக்களும் கண்டக் காற்றுக்களும் ஐக்கிய அமெரிக்கக் காலநிலையில் செல்வாக்குச் செலுத்துகின்றன.
வெப்ப நிலை
ஐக்கிய அமெரிக்காவில், மாரிகாலத்தில், 320 ப. சமவெப்பக்கோடு பேரேரிகளுக்குத் தென்புறமாக, கிழக்கு மேற்காக அமைந்துவிடுகின் றது. அதனால் மாரிகாலத்தில் ஐக்கிய அமெரிக்காவில் ஐனவரி மாதம் மிக்க குளிருடைய மாதமாகும். 32° ப. சமவெப்பக்கோடு, ஐக்கிய அமெரிக்காவை இருசம் கூறுகளாக்கும் 100° மே. நெடுங்கோட்டை அடைந்ததும், வடமேற்காகத் திரும்பி ஐக்கிய அமெரிக்க கனடா எல்லையைக் கடக்கின்றது. இதற்குக் காரணம் வெப்பமான வடபசு பிக் நீரோட்டத்தின் செல்வாக்காகும். கோடை காலத்தில் (ஜூலை), சூரியன் "கடகக் கோட்டில் உச்சம் கொடுப்பதால், ஐக்கிய அமெரிக் காவின் வெப்பநிலை 60° ப. மேல் பொதுவாக எங்கும் காணப்படு

Page 15
\6
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
கின்றது. கோடையில் கலிபோர்னியாப் பிரதேசத்தில் வெப்பநிலை உயர் வாகக் காணப்படும். எனினும், கலிபோனியாக் கரையோரமாகப்பாயும் குளிர்ந்த நீரோட்டத்திலிருந்து வீசும் குளிர் காற்றுக்கள், மேற்குக் கரையோர வெப்ப நிலையை மட்டுப்படுத்துகின்றன. கோடையில் ஐக்கிய அமெரிக்காவின் மத்திய தாழ் நிலப் பாகங்கள் அதிக வெப்பு நிலையைக் கொண்டிருக்கின்றன.
மழை வீழ்ச்சி ஐக்கிய அமெரிக்காவின் மழைவீழ்ச்சிப்பரம்பலை நோக்கும்போது, 1000 மே. நெடுங்கோட்டிற்குக் கிழக்கே மழைவீழ்ச்சி 20 அங்குலங் களுக்கு மேற்பட்டதாகவும், மேற்கே மழைவீழ்ச்சி 20 அங்குலங்களுக்கு உட்பட்டதாகவும் காணப்படுகின்றது. 100° மே. நெடுக்கோட்டிலி ருந்து கிழக்குப்புறமாகச் செல்லச் செல்ல மழைவீழ்ச்சி படிப்படியாக அதிகரித்து செல்கின்றது. அந்நெடுங் கோட்டிலிருந்து மேற்குப் புற மாகச் செல்லச் செல்ல மழைவீழ்ச்சி படிப்படியாகக் குறைவடைந்து, பின்னர் பசுபிக்கரையோர மலைத்தொடர்களை அடுத்து படிப்படியாகக் கரையோரத்தை நோக்கி அதிகரித்துச் செல்கின்றது.
ஐக்கிய அமெரிக்காவின் மேற்குக் கரையோரத்திற்கு அதிகமழை கிடைப்பதற்கு இரு காரணங்களுள்ளன. - அவை: (1) ஈரலிப்பான தென் மேலைக்காற்று. (2) மலைத்தடைத்தாக்கம். ஈரலிப்பான தென் மேலைக்காற்று பரந்த பசுபிக் சமுத்திரத்திலிருந்து, ஐக்கிய அமெரிக் காவின் மேற்குக் கரையோரத்தை நோக்கி வீசுகின்றது, அந்த ஈரக் காற்றை. பசுபிக்கரையோர மலைத்தொடர்கள் தடுத்து ஒடுங்கச் செய்வதனால், ஐக்கிய அமெரிக்காவின் மேற்குக் கரையோரம் அதிக மழையைப் பெற்றுக் கொள்கின்றது. இத்தென்மேலைக் காற்று, றொக்கிமலைத் தொடரைக் கடந்து ஐக்கிய அமெரிக்காவின் மத்திய தாழ்நிலங்களில் பிரவேசிக்கும்போது, வறண்ட காற்றாகக் கீழிறங்கு கின்றது. இக்காற்றினையே சினூக் காற்று என்பர்.
ஐக்கிய அமெரிக்காவின் தென்மேற்குப் பிரதேசம், அயன அயல். உயரமுக்க வலயத்தினுள் அமைகின்றது. அதனால், இப்பிரதேசம் மிக வறட்சியானதாகக் காணப்படுகின்றது. அரிசோனாப் பாலை நிலப்பிர தேசம், ஐக்கிய அமெரிக்காவின் தென்மேல் பிரதேசத்திலேயே அமைந் துள்ளது. இப்பிரதேசம் ஆண்டிற்கு 5 அங்குலங்களுக்கும் குறை வாகவே மழையைப் பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அமெரிக்காவின் மத்திய பெரும்பகுதி 20 அங்குலங்களுக்குக் குறைவாகவே மழையைப் பெறுகின்றது. அதற்குச் சில காரணங்க ளுள்ளன. றொக்கிமலைத் தொடரின் காற்றொதுக்கில், இப்பெரும் பகுதி

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
17
அமைந்திருப்பதால்.. ஈரலிப்பான தென்மேலைக்காற்று, இப்பிரதேசத் தில் வரண்ட சினூக் காற்றாக வீசுவது ஒரு காரணம். அக்காற்றுக்கள் கீழ் இறங்கும் போது வெப்பமூட்டப்பட்டு, ஈரத்தை இழந்த காற்றாகிவிடு கின்றன. ஐக்கிய அமெரிக்காவின் மத்திய. பெரும்பகுதிக்குக் குறை வான மழை வீழ்ச்சியையாவது தருகின்ற பெருமை, மெச்சிக்கோ வளைகுடாவிலிருந்து வீசுகின்ற, அயனமண்டலச் சமுத்திரக் காற்றுக் களக்கேயுரியது. இக்காற்றுக்கள் கோடைகாலத்தில் தான், இம்மத் திய பாகத்திற்கு மழையைத் தருகின்றன. இந்த அயனமண்டல வெப்ப ஈரக்காற்று. ஐக்கிய அமெரிக்காவின் மத்திய பாகத்தில், வட கனடா விலிருந்து வீசுகின்ற குளிர்ந்த காற்றுத் திணிவுகளைச் சந்திக்கின்றது. தன்மையில் வேறுபட்ட இந்த இரு காற்றுத் திணிவுகளும் ஒன்றினை யொன்று சந்திப்பதால், பிரிதளம் அல்லது முகப்பு உருவாகின்றது. அதனால், இடிமின்னலோடு கூடிய மழைப் பொழிவை ஐக்கிய அமெரிக் காவின் மத்திய பெரும் பாகம் பெற்றுக் கொள்கின்றது.
ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குப் பிரதேசம் அதிக மழையைப் பெற்றுக் கொள்வதற்குரிய வளிமண்டலவியற் காரணங்கள் பலவாகும், (அ) ஐக்கிய அமெரிக்காவின் தென் கீழ்ப்பாகம், உள்ளுருக்குரிய கோடை காலப் பருவக்காற்றுக்களால் அதிக மழையைப் பெற்றுக் கொள்கின் றது. மேலும், இப்பாகத்தில் ஏற்படும் மேற்காவுகைப் புயல்களும் மழைப் பொழிவை ஏற்படுத்துகின்றன. கரீபியன் கடலிலிருந்து தோற்றம் பெறுகின்ற அயனமண்டலச் சூறாவளிகள் (ஹரிக்கேன் கள்) ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடாக்குடா நாடு உட்பட்ட கிழக்கு தென் கிழக்குப் பாகத்திற்கு மழைப் பொழிவைத் தரு கின்றன. வடகீழ் வியாபாரக் காற்றுக்களின் (தடக்காற்றுக்கள்) செல்வாக்கும் இத் தென்கீழ்ப் பாகத்திற் காணபடுகின்றது. (ஆ) ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குப்பாகம் அதிக மழையை, பிரி தளத்துக்குரிய அல்லது சூறாவளி வகையான மழைப்பொழிவாகப் பெற்றுக் கொள்கின்றது. முனைவு முகப்பினால் ஏற்படும் தாழமுக்கம், மாரிகாலத்தில் மேற்கிலிருந்து கிழக்காக இப்பிரதேசத்தைக் கடக் கின்றது. அதனால், ஐக்கிய அமெரிக்காவின் வட கிழக்குப்பாகம் மழை வீழ்ச்சியைப் பெற்றுக் கொள்கின்றது, மேலும், மெச்சிக்கோ விரிகுடா விலிருந்து விரிகின்ற இளஞ் சூடான சமுத்திரக் காற்றுக்கள் வட திசையில் வீசி, ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குப்பாகத்திற்கு மழைப் பொழிவைத் தருகின்றன. அத்துடன் இடைவெப்பச் சூறாவளிகளும், ஐக்கிய அமெரிக்காவின் மேற்குப் பாகத்திற்கு மழைப் பொழிவை அளிக்கின்றன.
ஐக்கிய அமெரிக்காவின் மேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ள, மத்தியதரைக் காலநிலைப் பிரதேசமான மத்திய கலிபோர்னியா பற்றி

Page 16
18
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
யும் குறிப்பிடவேண்டும், இப்பிரதேசம் மாரி மழையையும் கோடை வறட்சியையும் அனுபவிக்கின்றது. மாரிகாலத்தில், பசுபிக் சமுத் திரத்தில் உருவாகும் தாழமுக்க இறக்கங்கள், கலிபோர்னியப் பிரதே சத்துக்கு மழைப் பொழிவைத் தருகின்றன. கோடை காலத்தில், இப்பிரதேசத்தில் உயரமுக்க நிலைமைகள் உருவாகுவதால், இப்பிர தேசத்திலிருந்து காற்றுக்கள் விரிவடைந்து, வடகாற்றுக்களாகவும் வீசுகின்றன. அதனால், கோடை வறட்சியானதாக இருக்கின்றது. எனினும், குளிரான கலிபோர்னிய நீரோட்டம் இவ்வறட்சியான நிலைமையை ஓரளவு சமன்படுத்துகின்றது.
4. இயற்கைத் தாவரம் ஒரு பிரதேச இயற்கைத் தாவரம், அப்பிரதேசத்தின் கால நிலை யைப் பொறுத்தமைவதாகும். அதனால் தான் இயற்கைத் தாவரத்தைக் காலநிலையின் குறிகாட்டி என்பர். முக்கியமாக மழைவீழ்ச்சி, வெப்ப நிலை ஆகிய இரு முக்கிய மூலக் கூறுகளிலேயே தாவர வளர்ச்சி தங்கியுள்ளது. ஐக்கிய அமெரிக்காவிலும் இயற்கைத் தாவரம், கால நிலை நிலைமைகளுக்கு இணங்கவே அமைந்துள்ளது; தொடக்கத்து இயற்கைத் தாவரத்தை இன்று முழுமையாகக் காணமுடியாது.
ஐக்கிய அமெரிக்காவின் மேற்கு அரைப்பாகத்தில் புல் நிலங்களும் புதர் நிலங்களும் முதன்மையான இயற்கைத் தாவரங்களாக விளங்க, கிழக்கு அரைப்பாகத்தில் காடுகள் முக்கியமான இயற்கைத் தாவரங் ளாக விளங்குகின்றன, ஐக்கிய அமெரிக்காவில் பின்வரும் இயற்கைத் தாவரங்களை நாம் அவதானிக்கலாம்.
தேசிய
பகட்டு கால்கடைகாடி..கடிங்.
ஊசி ட்ர் 373
ஊளசி
காம்
பரட்டைக
காடு
பிய காடு
கம்
படம் 7 ஐக்கிய அமெரிக்காவின் இயற்கைத் தாவரம்

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
1, இலையுதிர் காடுகள்
• ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குப் பாகத்தில் இலையுதிர் காடுகள் காணப்படுகின்றன, ' இப்பிரதேசத்தில் மக்கள் மிகவும்
செறி வாகக் குடியேறியதனால், தொடக்கத்துக் காடுகள் மிக அரிதாகவே காணப்படுகின்றன, இப்பிரதேச இலையுதிர் காடுகள், பலவகைப்பட்ட மரங்களையுடையதாயுள்ளன; மிக்க செழிப்பானவையாயும் இருக்கின் றன. இக் காட்டுமரங்கள், இலையுதிர் காடுகளுக்கேயுரிய பண்பில். ஒரு, பருவத்தில் 6 லைகளை எல்லாம் உதிர்த்து உறங்குவன. ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு அரைப்பாகத்தில் மூவகையான இலை யுதிர் காட்டு வகை மரங்களை அவதானிக்கலாம். அவை:
(அ) வடகீழ் பிரதேச வன்மரக் காடுகள்: - இவ்வகையான மரங்கள் ஐக்கிய அமெரிக்காவின் வடகீழ் பாகத்தில் காணப்படுகின்றன, நியூ இங்கிலாந்து சென்லோறன்ஸ் நதி வடி நிலம், பேரேரிகளின் தென்பாகம் என்பனவற்றில் குடியேற்றங்கள் நிகழ்வதற்கு முன்னர் இவ்வகை மரங் கள் நிறைந்திருந்தன. பீச், பேர்ச், மாபிள், ஓக் முதலான மரங்கள் இந்த வன்மரக்காட்டிலுள்ளன. ஊசியிலைக்காட்டு மரங்களும் இம் மரங்களுடன் கலந்துள்ளன.
(ஆ) தென்பிரதேச வன்மரக்காடுகள் :- வடகீழ்ப்பிரதேசத்திற்குத் தெற்கே மேற்குக் கிழக்காக இப்பிரதேசம் அமைந்துள்ளது. அத்துடன் மிசிசிப்பி நதியின் வலதுபக்கக் கரையோரப் பிரதேசத்தையும் அடக்கி யுள்ளது. வடகீழ்ப் பிரதேச வன்மரங்களைப்போல, தென்பிரதேச வன் மரக்காடுகள் கலப்பு மரங்களைக் கொண்டிருக்கவில்லை. இங்கு ஓக்மரங் களே மிக முக்கியமானவையாக அமைந்துள்ளன: எனினும், தென் கிழக்குப் பிரதேசங்களில் பைன் மரங்களும், அப்பலாச்சியன் பிரதே சத்தில் செஸ் நட்ஸ் மரங்களும் காணப்படுகின்றன.
(இ) தென்கிழ்ப் பிரதேச பைன் மரங்கள்: வெப்பமான கோடை யையும், உவப்பான மாரியையும் கொண்ட, ஐக்கிய அமெரிக்காவின் தென்கீழ்ப் பிரதேசத்தில் பைன் மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இப்பிரதேச நதித் தாழ் நிலங்களிலும் கரையோரச் சமவெளிகளிலும் சைப்ரஸ், ஓக், கொற்றன் வூட், ரெட்கம்ஸ் முதலான மரங்கள் காணப் படுகின்றன. இப்பிரதேசத்தில் சில பகுதிகளில் அடர் சேற்றுக் காடு களும் அமைந்துள்ளன.
ஊசியிலைக்காடுகள் (அ) பசுபிக் கரையோர ஊசியிலைக்காடு: ஐக்கிய அமெரிக்காவின் மேற்குக்கரையோரத்தில், வடக்குத் தெற்காக ஒடுங்கிய ஒரு வலயத் தில் ஊசியிலைக்காடுகள் சுாணப்படுகின்றன. வாஷிங்டன், ஒறிக்கன்

Page 17
20
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
நிலங்களின் கரையோரப் பகுதிகளையும், கலிபோர்னியா மாநிலத்தின் சீராநெவாடா மலைத்தொடர்ப் பகுதியையும் ஊசியிலைக் காடுகள் உள் ளடக்கியுள்ளன. தைக்கா ஊசியிலைக்காட்டிலும் பார்க்க, இம்மேற்குக் கரையோரக்காடு அடர்த்தியானது. டக்ளஸ்பேர், றெட்சீடர்,கெம்லொக் முதலான மதிப்புவாய்ந்த மரங்கள் இக்காட்டில் காணப்படுகின்றன'
(ஆ) மலைக்காடுகள் :- மேற்குக் கோடிலேரா மலைத்தொடர்களிலும் ஊசியிலைக்காடுகள் காணப்படுகின்றன. ஏற்றம் காரணமாகக்கிடைக் கின்ற குளிர்ச்சி, இம்மலைப்பாகங்களில் ஊசியிலைக்காட்டு மரங்களை அதிகளவில் வளரவைத்துள்ளது. மிக உயர்பகுதிகளில் தண்டார வகை யான புதர்களும் மழைப் பனிக்கவிப்பும் காணப்படுகின்றன.
3. மத்தியதரைத்தாவரம் மத்திய கலிபோர்ணியா, தென் கலிபோர்ணியா என்பனவற்றின் தாழ்ந்த மலைத்தொடர்களில் பல்வகை மரங்களையும் புதர்களையும் கொண்ட தாவரம் காணப்படுகின்றன. நன்கு செழித்து வளர்ந்த ஓக் மரங்களிலிருந்து, பரட்டைக்காடுகள் வரை இப்பிரதேசத் தாவரங்க ளாகவுள்ளன.
4. புதர்த்தாவரங்களும், வறள்நிலவளரிகளும் (அ) ஐக்கிய அமெரிக்காவின் மேற்கு உயர் நிலங்களின் மலையிடை மேட்டு நிலங்களில் சல்வியாப் புதர்கள் வளர்கின்றன.
(ஆ) ஐக்கிய அமெரிக்காவின் தென்மேற்குப் பாகத்தில் முக்கிய மாக கொலராடோ நதியின் தாழ்பாகங்களில் வறள் நிலவளரிகள் காணப் படுகின்றன. அதிவரட்சி, மழைகுறைவு என்பன இப்பிதேசங்களில் இப் பாலை நிலத்தாவரங்களை வளரவைத்துள்ளன.
5. புல்வெளிகள்
ஐக்கிய அமெரிக்காவின் மத்திய பாகத்தில், புல் நிலங்கள் பெரும் பரப்பை அடக்கியுள்ளன. இப்புல் நிலங்களைப் பிரேரிக்சுள் எ ன் பர். கண்டக்கால நிலை நிலவும் இம்மத்திய பாகத்தில், காணப்படும் பிரேரிப் புற்கள் இரு தெளிவான வேறுபாடுகளையுடையன.
(அ) உயர்புற்களைக் கொண்ட பிரேரி:- இப்புல்வெளி, கி ழக் கு ப் பாகத்தில் அமைந்துள்ளது. இப்புற்களுடன் இலையுதிர்க் காட்டு மரங் களும் கலந்து காணப்படுகின்றன.
(ஆ) குறுகிய புற்களைக்கொண்ட பிரேரி :- இப்புல்வெளி, மேற்குப் பாகத்தில் அமைந்துள்ளது. இவை உயரங்குறைந்த புற்களைக் கொண்டு விளங்குகின்றன. 20 அங்குல சமமழை வீழ்க்சிக்கோடு, இவ்விரு வகை யான புல்னிலங்களையும் பிரிக்கின்ற எல்லையாக விளங்குகின்றது.

21
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
5 கனிப்பெருள் வளம் வட அமெரிக்காக் கண்டத்தில் மாத்திரமின்றி உலகிலேயே ஐக்கிய அமெரிக்கா பொருளாதாரத்தில் முதன்மையான நாடாக விளங்கிவரு வதற்குக் காரணம், அது கொண்டிருக்கும் அதிக அளவான கனிப்பொருள் வளமாகும்; அத்துடன் மிசூறி மிசிசிப்பி நதி, கொலராடோ நதி போன்ற அதிக நீர்வளம் மிக்க நதிகளையும் கொண்டு விளங்கி வருகின்றது. ஐக் கிய அமெரிக்கா, நிலக்கரி, பெற்றோலியம், இரும்புத்தாது, இயற்கை வாயு, நீர்வலு, யுரோனியம் முதலான பல்வேறு வளங்களைக் கொண்டு விளங்கி வருகின்றது. உலகப் பெற்றோலிய உற்பத்தியில் 1 பங்கினையும் நிலக்கரி உற்பத்தியில் நீ பங்கினையும், நீர்மின்வலுவில் 4 பங்கினையும், யுரேனிய உற்பத்தியில் 4 பங்கினையும் ஐக்கிய அமெரிக்கா உற்பத்தி செய்து கொள்கின்றது.
நிலக்கரி உலகின் மொத்த நிலக்கரிப் படிவுகளில், ஏறத்தாழ மூன்றிலொரு பங்கு ஐக்கிய அமெரிக்காவில் காணப்படுவதாகக் கணிக்கப்பட்டிருக்கின் றது. உலகின் மொத்த நிலக்கரி உற்பத்தி ஏறக்குறைய 200 கோடி தொன்களாகும். இதில் ஐக்கிய அமெரிக்கா ஏறத்தாழ 54 கோடி தொன்களை உற்பத்தி செய்து வருகின்றது.
ஐக்கிய அமெரிக்காவில் நிலக்கரிவயல்கள் பரந்து காணப்படுகின் றன. நிலக்கரி பொதுவாக மூன்று வகைப்படும். அவை, அனல்மிகுநிலக் கரி (அந்திரசைற்று), புகைமிகு நிலக்கரி, பழுப்பு நிலக்கரி என்பனவா கும். 90% காபனை (கரி)க் கொண்டவை அந்திரசைட்டு நிலக்கரியாகவும், 70-90% காபனைக் கொண்டவை புகைமிகு நிலக்கரியாகவும் 45-65% காப னைக்கொண்டவை பழுப்புநிலக்கரியாகவும் விளங்கி வருகின்றன. இரும்பு ருக்குத் தொழிலிற்கு நிலக்கரி மூலாதார எரிபொருளாகும். அத்துடன் அமோனியா, நிறமூட்டிகள், நறுமணம் பொருட்கள், தொற்று நீக்கி கள், பிளாஸ்ரிக், நைலோன் முதலான பல்வேறு உற்பத்திகளுக்கும் நிலக்கரி உதவுகின்றது. ஐக்கிய அமெரிக்காவின் சில தெற்கு மாநிலங் களிலும், சில மேற்கு மாநிலங்களிலும் புகைமிகு நிலக்கரி அதிகளவி லுண்டு. ஐக்கிய அமெரிக்காவின் நிலக்கரி உற்பத்தியில் 80% ஐக்கிய அமெரிக்காவின் ஐந்து மாநிலங்கள் உற்பத்தி செய்து வருகின்றன.
ஐக் கிய அமெரிக்காவின் நிலக்கரிவயல்களில் முதன்மையானது மேற்கே அமைந்திருக்கும், அப்பலாச்சியன் வயல்களாகும். இது ஐக்கிய அமெரிக்காவின் நிலக்கரியில் ஏறத்தாழ 70% உற்பத்தி செய்து வருகின் றது. அப்பலாச்சியன் நிலக்கரிவயல்களின் சிறப்பியல்புகள் வருமாறு:

Page 18
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
(அ) ஏராளமான நிலக்கரிவளங்கள் இப்பிரதேசத்திலுள்ளன : தரத்தில் சிறந்த நிலக்கரியை உலகில் இப்பிரதேசமே கொண்டுள்ளது.
(ஆ) இப்பிரதேசத்தில் நிலக்கரிப்படுக்கை மிக ஆழத்தில் அமைந் திருக்கவில்லை. அதனால், மேற்படை மண்ணை அகற்றியவுடனேயோ, அல் லது ஆழம் குறைந்த சுரங்கங்களை அமைத்தவுடனேயோ நி ல க் க ரி வெட்டி எடுக்கக் கூடியதாகவுள்ளது.
(இ) இப்பிரதேசத்தில் காணப்படும் நிலக்கரிப்படுக்கை தொடர்ச் சியாகவும், கிடையாகவும் பல மைல்கள் தூரத்திற்கு அமைந்துள்ளமை உற்பத்திச் சிக்கனமானது.
- அப்பலாச்சியன் நிலக்கரி வயல், பென்சில்வேனியாவிலிருந்து அல பாமா வரை பரந்துள்ளது. இது பென்சில்வேனியா, ஒகாயோ. மேற்கு வேஜீனியா, கெண்டகி, ரெனசி, அலபாமா ஆகிய மாநிலங்களை அடக்கியுள்ளது.
ஐக்கிய அமெரிக்காவின் ஏனைய நிலக்கரி வயல்கள் பின்வருவன; (அ) இலினோய், இண்டியானா மாநிலங்களிலும், கெண்டகி மாநி லத்தின் வடபாகத்திலும் அமைந்திருக்கும் நிலக்கரிவயல். இது கீழை யுட்பாக வயல் எனப்படும். இது ஐக்கிய அமெரிக்காவின் புகைமிகு நிலக் கரியில் ஏறத்தாழ 18% உற்பத்தி செய்கின்றது. தரமான நிலக்கரிய
ன்று.
(ஆ) இயோவா, மிசூரி, கன்சாஸ், ஒக்கிளகோமா மாநிலங்களில் அமைந்துள்ள நிலக்கரி வயல். இது மேலையுட்பாக வயல் எனப்படும்.
(இ) றொக்கிமலை வயல்கள். இவை மொன்ரானா, வாயோமிங், கொலராடோ, உற்றா, நியூமெக்சிக்கோ ஆகிய மாநிலங்களில் பரந்து, சிதறிக் காணப்படுகின்றன.
ஐக்கிய அமெரிக்காவில் நிலக்கரி அகழ்விற்கு யந்திரங்களே பயன் | படுத்தப்படுகின்றன. அகழ்தல், ஏற்றல், சுத்தி செய்தல் மு த லி ய தொழிற்பாடுகள் யாவற்றிற்கும் யந்திரங்களே உபயோகிக்கப்படுகின் றன.
பெற்றோலியம் உலகப் பெற்றோலிய உற்பத்தியில் (250 கோடி தொன்) ஐ க் கி வ அமெரிக்கா முதலிடத்தை இன்று வகித்து வருகின்றது. உலக உற்பத் தியில் ஆறிலொரு பங்கினை ஐக்கிய அமெரிக்கா உற்பத்தி செய்து வருகின்றது. பெற்றோலியம் உற்பத்தி செய்யும் மத்திய கிழக்கு நாடு கள் யாவற்றையும் கூட்டுமொத்தமாக நோக்கும்போது, ஐக்கிய அமெ

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
23
---து. இது வேறு ஆகும். தேசத்தி
ரிக்கா, பெற்றோலிய உற்பத்தியில் இரண்டாமிடத்தை வகிக்கின்றது. ஐக்கிய அமெரிக்காவில் முக்கியமாக ஏழு பெற்றோலிய மையங்க்ள் காணப்படுகின்றன. அவை;
(அ) அப்பலாச்சியன் கிணறுகள் (ஆ) ஒகாயோ - இண்டியானாக் கிணறுகள் (இ)
இலினோய் - இண்டியானாக் கிணறுகள் ஈ)
கன்சாஸ் - ஒக்கிளகோமா - ரெக்சாஸ் கிணறுகள் (உ) வளைகுடாக் கிணறுகள் (ஊ) றொக்கிமலைக் கிணறுகள் (எ) தென் கலிபோர்ணியா கிணறுகள்
ஐக்கிய அமெரிக்காவில் மாத்திரமன்றி, உலகிலேயே முதன்முதல் தோண்டப்பட்ட பெற்றோலியக் கிணறு அப்பலாச்சியன் பிரதேசத்தி லுள்ள பென்சில்வேனியப் பெற்றோலியக் கிணறு ஆகும். 1857 - ஆம் ஆண்டு இது தோண்டப்பட்டது. இது இன்றும் சிறிய அளவில் உற் பத்தி செய்து வருகின்றது. அப்பலாச்சியன் பெற்றோலியக் கிணறுகள் பொதுவாகத் தரமானவை. வளைகுடாக்கரையோரக் கிணறுகள் முக்கிய மானவை. ரெக்சாஸ், லூசியானா மாநிலங்களில் வளைகுடாக் கரைக் கிணறுகள் அமைந்துள்ளன. ஆயிரக்கணக்கான கிணறுகள் இங்கு பெற் றோலியத்தை உற்பத்தி செய்து வருகின்றன. ஒக்கிளகோமா, நியூ மெக் சிக்கோ, கன்சாஸ் மாநிலங்களிலுள்ள கிணறுகளும் குறிப்பிடத்தக்க முக்கியமானவை. ஐக்கிய அமெரிக்காவின் பெற்றோலிய உற்பத்தியில் எட்டிலொரு பங்கினை உற்பத்தி செய்து வருவது, தென் கலிபோர்ணியப் பெற்றோலியக் கிணறுகளாகும்.
ஐக்கிய அமெரிக்கா இவ்வாறு அதிக அளவில் பெற்றோலியத்தை உற்பத்தி செய்தும் அதன் நுகர்க்சிக்குப் போதுமானதாகவில்லை. அதனால், வெனெசுவெலாவிலிருந்து அதிகளவில் இறக்குமதி செய்து கொள் கின்றது.
ஐக்கிய அமெரிக்காவில் ஆரம்பத்தில் பெற்றோலியம் பீப்பாக்களில் ஏற்றி அனுப்பப்பட்டது. பின்னர் புகையிரதங்களில் அமைக்கப்பட்ட தாங்கிகளில் அனுப்பப்பட்டது. இன்று குழாய்வழிகள் மூலம் அனுப் பப்பட்டு வருவது இலகுவானதும் மலிவானதுமாக விளங்கிவருகின்றது. -குழாய்வழிகள் மூலம் துறைமுகங்களுக்கு அனுப்பப்பட்டு, எண்ணெய்த் தாங்கிக் கப்பல்கள் மூலம், பெற்றோலியப் பொருட்கள் ஏற்றுமதியா கின்றன.
பெற்றோலியம் சுத்திகரிக்கப்பட்டே உபயோகிக்கப்படக்கூடியது; பண்படுத்தாப் பெற்றோலியத்தைச் சுத்திகரிக்கும் தொழிற்பாடுகள், ஐக் கிய அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் பிரதான தொ ழி லாக

Page 19
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
விளங்கி வருகின்றன. மத்திய அத்திலாந்திக் கரையோர நகரங்களி லுள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் முக்கியமானவை. பண்படுதாப் பெற்றோ லியத்திலிருந்து பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய், உராய்வு நீக்கி கள், பென்சீன், பரவின் மெழுகு, வசிலின், பல மருந்துவகை, தார் முதலானவை பெறப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்காவின் பெ ரு ங் கைத்தொழில்களில் ஒன்றாகப் பெற்றோலிய உற்பத்தி இருப்பதுடன், ஏற்றுமதிப் பொருட்களுள் பெற்றோலியப் பொருட்களும் கணிசமான அளவு பங்கினை வகிக்கின்றன.
இரும்புத்தாது ஐக்கிய அமெரிக்கா, வருடா வருடம் ஏறத்தாழ 6 கோடி தொன் இரும்புத்தாதை உற்பத்தி செய்து வருகின்றது. மிக்க வளமானதும் தரமானதுமான இரும்புத்தாதுப் படிவுகள், சுப்பீரியர் ஏரியின் மேற் குக் கரையோரங்களிலும் தென் கரையோரங்களிலும் அமைந்திருக்கின் றன. வேமிலியன், மெசாபி, கியூனா, கோசீபிக். மாக்கெற்றா, மெனோ மினி, எஸ்கனாபா என்பன சுப்பீரியர் ஏரிக்கரையோர இரும்புத்தாது வயல்களாகும். அலபாமா மாநிலத்திலுள்ள பேமிங்காம் பிரதேசத்தி லும் இரும்புத்தாதுப்படிவுகளுள்ன. மேற்குறித்த இரும்புத்தாது வயல் கள், ஐக்கிய அமெரிக்காவின் உற்பத்தியில் ஐந்தில் நான்கு பங்கினை
வழங்கிவருகின்றன.'
பேரேரிக்கரையில் (சுப்பீரியர்) அதி முக்கியமான வயல் மெசாமி ஆகும். அதிக அளவிலும் தரத்திலும் இவ்வயல் உற்பத்தி செய்து வருகின்றது. இப்பிரதேசத்தில் இரும்புத்தாது, நிலத்திற்கு மிக அண் மையான பரவலாகக் காணப்படுகின்றது. இங்கு உயர்தரமான ஏமற் றைற்று (70% இரும்பு) தாது கிடைக்கின்றது. பேரேரியின் சுப்பீரியர் ஏரிக்கரையோர இரும்புத்தாது வயல்களிலிருந்து அகழப்படும் இரும்புத் தாது பேரேரிகளின் மூலம், கப்பல்கள் வழி. இரும்புருக்கு மையங்க
ளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றது. பேரேரிகள் சிறந்த நீர்ப்போக்கு ம் வரத்தை அளிப்பது குறிப்பிடத்தக்க, பொருளாதார வாய்ப்பாகும்.
சுப்பீரியர் ஏரிக்கரையோரத்தையும், அலபாமா பேமிங்காம்பிரதே சத்தையும் வட ஐக்கிய அமெரிக்காவின் வேறுசில பகுதிகளிலும், அமெ ரிக்காவின் வேறுசில பகுதிகளிலும் இரும்புத்தாது வயல்களுள்ளன. நியூயோக், பென்சில்வேனியா, நியூயேசி, ஜோர்ஜியா, மீமிசூரி, ரெக் சாஸ், வயோமிங், உற்றா, கலிபோர்ணியா ஆகிய மாநிலங்களிலும் இரும்புத்தாது வயல்கள் அமைந்துள்ளன. நியூயோக் மாநிலத்தில் அடி றொண்டாக் மலைகளில் இரும்புத்தாது அதிகளவில் கிடைக்கின்றது. பென் சில்வேனியா, நியூயேசி மாநிலங்களில் மிகப்பழமையான இரும்புத்தாது
வயல்களுள்ளன.

பு: 11 , 3 »l 244 - பக் ! எது
FA 27}ல் 33:31
' 183 ;
கல்?
... a " -
22 734 சிங்கம் 2 ??
3/4 * * * *
சகட 7:27-7
> 237 (
- -I கோரி A:24h 520">

Page 20

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல் ஏனைய கனிப்பொருள்கள்
• ஐக்கிய அமெரிக்காவில் 'என்ன இருக்கிறது என்று ஆராய்வதிலும் 'என்ள இல்லை' என்று ஆராய்வது இலகுவானதாகும். ஏனெனில், ஐக்கிய அமெரிக்கா செழிப்பான கனிப்பொருள் வளத்தைக் கொண்டி ருக்கும் ஒரு நாடாகும்.
'செம்பு: ஐக்கிய அமெரிக்கா இன்றும் உலகில் செம்பு உற்பத்தி யில் தொன்மையான நாடாக விளங்கி வருகின்றது. உலக மொத்தச் செம்பு உற்பத்தியில் ஐக்கிய அமெரிக்கா 25% வழங்குகின்றது. அறிசோனா உற்றா, மொன்ரானா மாநிலங்களில் செம்புப் படிவுகள் அதிகளவில் அமைந்திருக்கின்றன. மிக்சிக்கன் மாநிலம், ஆரம்பத்தில் செம்பு உற் பத்தியில் ஐக்கிய அமெரிக்காவில் முதன்மையான பிரதேசமாக விளங் கியது.
உற்றா மாநிலத்தில் சோல்ற் லேக் நகரத்தை அடுத்த பிரதேசங் களில் செம்பு படிவுகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. அரசோனா மாநி லத்தில், பிஸ்பி, செரோம், மொரொஞ்சல், குளோப் -மையாமி முதலான பிரதேசங்கள் பரவலாகச் செம்புப் படிவுகளைக் கொண்டிருக்கின்றன . மொன்ரானா மாநிலத்தில் பியூற் முக்கியமான செம்புச் சுரங்கமாகும்.
ஈயம்: ஐக்கிய அமெரிக்காவில் மிசூறி, ஒக்கிளகோமா, இடாகோ உற்றா, அரிசோனா மாநிலங்களில் ஈயச் சுரங்களுள்ளன.
தங்கம்: ஐக்கிய அமெரிக்கா நீண்டகாலமாகத் தங்கத்தைக் குறிப்பு, பிடத்தக்க அளவில் உற்பத்தி செய்து வந்திருக்கின்றது, இந்நாட்டின் குடியேற்றங்கள் தங்கத்தினை மனதில் கொண்டே நிகழ்ந்துள்ளன. ஐக் கிய அமெரிக்காவில் அகழப்படும் பொன்னின் அரைப்பங்கினை கலி போர்ணியாவும் டகோற்றாவும் உற்பத்தி செய்து வருகின்றன. உற்றா, நெவாடா, அரிசோனா ஆகிய மாநிலங்களும் தங்கச் சுரங்கங்களைக் கொண டுள்ளன.
வெள்ளி: ஐக்கிய அமெரிக்காவில் இடாகோ, உற்றா, அரிசோனா, நெவாடா, கொலராடோ ஆகிய மாநிலங்களில் சிறியளவில் வெள்ளிப் படிவுகள் கிடைக்கின்றன,

Page 21
ஐக்கிய அமெரிக்கா: பொருளாதாரப் பின்னணி
(1) குடிப் பரம்பல்
1புதிய கண்டங்களான அமெரிக்காக்களுக்கு ஐரோப்பியர்கள் வந்து | குடியேறுவதற்கு முன்னர் அக் கண்டங்களுக்கேயுரிய தேசியமக்கள் வாழ்ந் தனர் அவர்கள் செவ்விந்திய மக்களாவர். வேட்டையாடல், மந்தை மேய்த்தல், காய்கனி தேடல் முதலான பண்டை முறை தழுவிய பொருளாதார வாழ்வினை அவர்கள் கொண்டிருந்தனர். ஐரோப்பிய ரின் குடியேற்றங்கள் இச் சுதேச மக்களை இடம்பெயர வைத்ததுடன் யுத்தங்கள், பசி, பட்டினி, நோய்கள் என்பனவும் அவர்களின் எண் 5ணிக்கையைக் குறைத்தன,
1800-ம் ஆண்டு அளவில் ஐக்கிய அமெரிக்காவின் மாகாணங்களில் 55 இலட்சம் மக்கள் வாழ்ந்தனர். 200 ஆண்டுகளாக "ஐரோப்பிய நாடுகளிலிருந்து வட அமெரிக்காவில் மக்கள் குடியேறினர். மெதுமெ துவாகக் குடியேற்றங்கள் உருவாகின. 1914-ம் ஆண்டளவில் 3 கோடி மக்கள் ஐக்கிய அமெரிக்காவில் வாழ்ந்தனர்.
1970 - இல் ஐக்கிய அமெரிக்காவில் 2 கோடியே 26 - இலட்சம் கறுப்பர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் எண்ணிக்கை மொத் தக் குடித்தொகையில் 11% ஆகும். 1600-ஆம் ஆண்டிற்குப் பின்னர் அடிமைகளாக ஐக்கிய அமெரிக்காவிற்குக் கொண்டுவரப்பட்டவர்களே இக் கறுப்பர்களாவர் ஐக்கிய அமெரிக்காவில் நிலவிய தொழிலாளர் தட்டுப்பாட்டினை நீக்கவே கறுப்பர்கள் இங்கு அடிமைகளாகக் கொண்டு வரப்பட்டனர்.

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
27
- 1960-ம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவின் குடித்தொகை 18 கோடியாகும் 1970-ஆம் ஆண்டில் இச்குடித்தொகை 20 கோடியே 49 இலட்சமாக உயர்ந்தது. இறப்பு வீதம் குறைந்து பிறப்பு வீதம் படிப் படியாக அதிகரித்ததும், வந்தேறு குடிகள் அதிகரித்தது காரணமா கவே ஐக்கிய அமெரிக்காவின் குடித்தொகை 10 ஆண்டுகளுக்குள் 2) கோடி அதிகரித்தமைக்குக் காரணங்களாகும். இந்த 10 ஆண்டுகளில் குடித்தொகையின் தேசிய அதிகரிப்பு 13• 2 சதவீதமாகும். ஐக்கிய அமெ ரிக்காவின் மேற்கு மாநிலங்களிலும் இந்த அதிகரிப்பு வீதம் 20 சத வீதத்திற்கும் அதிகமாகும். பெரிய சமவெளி பிரதேச மாநிலங்களில் இந்த 'அதிகரிப்பு வீதம் மிகவும் குறைவாகும்.
ஐக்கிய அமெரிக்காவின் சதுரமைலிற்குரிய சராசரி அடர்த்தி 57 பேராகும். எனினும், சில மாநிலங்களில் இந்த அடர்த்தி மிகக் குறை வாகவும் சிலமாநிலங்களில் இந்த அடர்த்தி மிக அதிகமாகவும் காணப் படுகின்றது. உதாரணமாக அலாஸ்கா மாநிலத் தில் சதுரமைலிற்குரிய சராசரி அடர்த்தி 0•5 ஆகவும், நியூயேசி மாநிலத்தில் 953 ஆகவும் இருக்கின்றது. ஐக்கிய அமெரிக்காவின் வடகீழ்பிரதேசத்தில் அதிக சன அடர்த்தி காணப்படுகின்றது. இதற்குக் கரரணம் இந்த வடகீழ் பிர தேசம், சிறந்த கைத்தொழில் வலயமாக விளங்கி வருவதாகும். கைத் தொழில் பிரதேசத்திற்கு வெளியே தென்கிழக்கு மாநிலங்களே அதிக சனச்செறிவைக் கொண்டிருக்கின்றன. மிசூரி - மிசிசிப்பி நதிக்கரைக்கு மேற்கே சனச் செறிவு குறைவு. ஏனெனில், நிலவும் வறட்சியும் ஏற்ற மும் ஆகும், பெரும் சமவெளி மாநிலங்களில் ஒரு சதுரமைலிற்கு 4-8 பேர்வரையில் வாழ்கின்றனர், நேவாடா, கலிபோர்னியா மாநிலங்களி லுள்ள பாலை நிலங்களில் சனச் செறிவு இதிலும் மிகமிகக் குறைவா கும்; சிலவிடத்தில் முற்றாகவே இல்லை.
மேலும் ஐக்கிய அமெரிக்கக் குடித்தொகையில் 73 சதவீதமான மக்கள் நகரமக்களாவார்கள். கிராமமக்களின் எண்ணிக்கை ஆண்டிற்கு ஆண்டு குறைந்து வருகின்றது. ஐக்கிய அமெரிக்காவிலுள்ள ஏறத்தாழ 245 பெரும் நகரங்களில் குடித்தொகையில் 2 பகுதியினர் வாழ்ந்து வருகின்றனர். நியூயோக் நகரப்புறத்தில் 1 கோடியே 15 இலட்சம் மக்கள் வாழ்ந்துவருகின்றனர். லெ ரஸ் அஞ்சலீஸ், சிக்காக்கோ நகரங் களில் 70 இலட்சம் மக்கள் வீ தம் வாழ்ந்துவருகின்றனர். 23 நகரங் களில் 10 இலட்சம் மக்களுக்கு மேலுள்ளனர்.
(2) பயிர்ச்செய்கை
ஐக்கிய அமெரிக்காவின் பயிர்ச்செய்கையைப் புவியியல் அடிப் படையில் பல பயிர்ச்செய்கை வலயங்களாக அல்லது பயிர்ச்செய்கைப்

Page 22
28
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
பிரதேசங்களாக வகுத்து ஆராய்வர்; இத்தகைய ஒவ்வொரு வலயத் திலும் ஒருவகையான பயிர்ச்செய்கை நடைபெறும் அல்லது பிரதான ஒரு பயிர் செய்கைபண்ணப்படும். வரலாற்றுக் காரணிகள், பெளதி கச் சூழல் காரணிகள், பொருளாதாரக் காரணிகள் என்பன இத் தகைய பயிர்ச் செய்கை அமைப்பை ஐக்கிய அமெரிக்காவில் தோற்று வித்திருக்கின்றன.
3.
ஐக்கிய அமெரிக்காவைப் பின்வரும் பயிர்ச்செய்கை வலயங்களாக. வகுத்துக்கொள்ளலாம்:
1. கலப்பு வேளாண்மை வலயம்
சோள வலயம் பருத்தி வலயம்
அயன அயல் பயிர் வலயம் 5. கோதுமை வலயம் (1) வசந்தகாலக்கோதுமை வலயம்
(11) மாரிக்கோதுமை வலயம் 6. பரந்தளவு விலங்கு வேளாண்மை வலயம் 7. கலப்பு வேளாண்மை வலயம் 8. தானிய -- பழ வலயம்
4.
சந்தகாலக கோதுமை
3.
கலப்பு! வோஎமை
ஸ ) 8
பரந்தளவு கா*
விலங்குக
வோராண். தானிய 5 தானிய23 - மை நோக்கி கிப்பு ஏது? 19 லயம்)
லைலும் -
- ரைம்)
பழ
ஆக, அயன அ தி பயிர் வலயம் |
படம்: 5 ஐக்கிய அமெரிக்காவின் பயிர்ச்செய்கை வலயங்கள் கால நிலை, த்ரைத்தோற்றம், மண் ஆகிய சூழல் காரணிகளே அதிக அளவில் ஐக்கிய அமெரிக்காவின் பயிர்ப்பரம்பலை நிர்ணயித் துள்ளன. பொதுவாக பயிர்ச்செய்கை வலயங்களின் எல்லைகள் கிழக்கு - மேற்காக அமைந்துள்ளன; அவ்வாறு அமைந்த வலயங்களை

၇ (10 7© ၂၀၀ B mer • © d iqe BUTu000 G Tစdefing
စ ၈ pL ၏u ထဲ က BITC ၏ (၁ လျှb, 8 $ IT TT လ ၂ ၆07 JL Tလ လ
Ei Tub ဝ တံ ၈၊ 5 က်5 တံ 3 JJ T 37 G T - LL SITLA 4 လျှb At u15LG m 0 0. ရွာ) Di5IT 85 T / 10
လb D D႕ (စံ) Art 80T uj5 5LL GT T . 20” LD ထား၂)
65 15” အ၀ ၁အu L @ ၏ စာ ၅ က် LIT Ch 5if စံ
LflLUTIT (D.
6 , ) (5 G T ) ာ 5 m 5 5 , ၅ ၈ L = ဗ သံ ႔ ၂ လ - i (G5D ) ၂ 5 ) J jj m T D L3T ujuLG50T က 907 .
5IT Lif T 5 6) ST 9) sf u Nu 5(BI ဗf 5b 2 Li3LIT © 55G (5 )T ကလT .
(@) (6) iful (၆LD 60IID ) : တေ ဩ5 = ဤUT IT)မ်ား 5 Li L၂urf ႕ တ ဗလဗြဲဩiflu N (6LDIT m b bဗာဟံ ဩလေ
Aလ ဗီလ 5 ၊ (58JIT ) ၅၆LDT၈၂ 1. လံ, ဂြ၂ Df 5 57 ၈ JT bဗm/ 3GTT Louါစံ ဗလ (5ifu (BLDT T b ဗ၊ )
T T . Luf Os အေ5 PL လေub, / ၁1pm 55.1 ) ထံ65 9 Lဟံ ၊
( ၅ ထံ ၊ ၆) လ.. ၁/ 75 ( ၂ လ LDT T ၀ကံ7. လ

Page 23
30
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
மேலதிக உற்பத்திக்குத் துணை நிற்கின்றன. அதனால் சில குறித்த காலங் களில் ஏராளமான விளை நிலங்கள், செய்கைக்கு உட்படுத்தப்படாது வீணே விடப்பட்டு வருகின்றன. மேலதிக உற்பத்தியைக் கட்டுப்படுத் தவும், சர்வதேச சந்தையில் விலை வீழ்ச்சியுறாது இருக்கவும் ஐக்கிய அமெரிக்கா இதனைச் செய்கின்றது.
(ஈ) விளை நிலங்களின் மதிப்பும், அளவும்:- கீளைத்தேச செறிவான வாழ்க்கைப் பயிர்ச்செய்கையில் விளை நிலங்களின் பெறுமதி அதிகமாயும்,, ஐக்கிய அமெரிக்காவில் விளை நிலங்களின் பெறுமதி மலிவாகவும் அதிகள விலும் கிடைப்பதாகவும் இருக்கின்றது. ஐக்கிய அமெரிக்காவில் ''குடும் பக் கமம்'' (Family Farm) என்று கருதப்படும், ஒரு குடும்பத்தவரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தோட்டங்களின் பரப்பே, மிக அதிகமாகும். 1935-ஆம் ஆண்டில் ''குடும்ப கமத்'' தின் சராசரி பரப்பு 160 ஏக்க ராக இருந்தது. 1972-ல் அந்த அளவு 394 ஏக்கராக மாறிவிட்டது. இயந்திரமயமான செய்கையால், ஐக்கிய அமெரிக்காவில் 394 ஏக்கர் குடும்பக்கமம், ஒரு சிறு தோட்டமாகவே கருதப்படுகின்றது.
பெ
(உ) ஏக்கருக்குரிய விளைச்சல்:- ஐக்கிய அமெரிக்காவில் ஏக்கருக் குரிய விளைச்சல் 1935-ஆம் ஆண்டிற்கு முன்னர் மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால், இன்று ஏக்கருக்குரிய விளைச்சல் அதிகரித்திருப்பது மறுக்கமுடியாதது. இதற்கு மூ ன் று காரணங்கள் கூறப்படுகின்றன. அவை:- (1) தரமான விதைகளைப் பயள்படுத்துகின்றமை - வறட்சியை யும் உறைபனியையும் தாங்கக்கூடிய விதைகள் இன்று பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்படுகின்றன. பயிர்ச்செய்கைத் துறையில் நிகழ்ந்த ஆராய் வுகள் இதற்கு வழிகோலியுள்ளன. 1937- ஆம் ஆண்டு ஒரு ஏக்கர் விளை நிலத்தில் 25 பு ச ல் சோளம் கிடைத்தது. இன்று அந்த அ ள வு. 80 புசல்களாக உயர்ந்துள்ளது. (1) வளமாக்கிகளை அதிக அளவில், உபயோகிப்பமை - 1950-ஆம் ஆண்டிற்குப்பின்னர் ஐக்கிய அமெரிக்க விவ சாயி அதிக அளவில் உரம், வளமாக்கிகளை உபயோகித்து வருகின்றான். (113) அதிக தரமான களை கொல்லிகளையும் கிருமி நாசினிகளையும் பயன்ப டுத்துகின்றமை.
- இவையாவும் ஏக்கருக்குரிய விளைச்சலை அதிகரிக்க வைத்துள்ளன, எனினும், கீழைத்தேசச் செறிவான பயிர்ச்செய்கையிலிருந்து கிடைக் கின்ற, ஏக்கருக்குரிய விளைச்சல் அளவோடு ஒப்பிடும்போது குறைவா கும். கீழைத்தேச செறிவான பயிரச் செய்கையில் கிடைக்கின்ற ஏக்க ருக்குரிய நெல் விளைச்சல் 40-140 புசல்களாக இருக்க, ஐக்கிய அமெ? ரிக்காவின் ஏக்கருக்குரிய கோதுமை விளைச்சல் 15 - 20 புசல்களாக இருக்கின்றது.

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
31
(ஊ) சிறப்பான செய்கை முறைகள்: - ஐக்கிய அமெரிக்காவின் பயிர்ச்செய்கையில், சுழல்முறைப் பயிர்ச் செய்கை, கலப்பு வேளாண்மை, பலபோக வேளாண்மை, நாற்று நடுதல் முதலான சிறப்பான செய்கை முறைகள் கைக் கொள்ளப்படுவதில்லை. எனினும், ஐக்கிய அமெரிக்கா வின் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் நவீன யந்திரமயமானது: தொழில் நுட்பச் செய்கை வாய்ந்தது. வர்த்தக நோக்கமே இந்நாட்டின் பயிர்ச் செய்கையின் அடிப்படை நோக்கமாகும்.
(எ) கமக்காரருக்குரிய மானிய உதவிகள் : - ஐக்கிய அமெரிக்கா, கமக்காரருக்குச் சில வகையான மானிய உதவிகளை வழங்கி வருகின் றது. சில ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்காவின் தானிய உற்பத்தி, அதிகரித்துத் தேங்கிவிடுகின்றது. அவ்வேளைகளில், விளை நிலங்களைப் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தாது விடுவதற்காகக் கமக்காரர்களுக்கு மானிய உதவி அளிக்கப்பட்டு வருகின்றது.
இனி, ஐக்கிய அமெரிக்காவின் பயிர்ச்செய்கை வலயங்கள் வெவ் வொன்றினையும் தனித்தனியே ஆராய்வோம்.
1. கலப்பு வேளாண்மை வலயம்
ஐக்கிய அமெரிக்காவின் வடகீழ் பகுதியிலும், அத்திலாந்திக் கரை யோரப் பகுதியிலும், சோள வலயத்திற்குத் தெற்கேயுள்ள பகுதியி லும் நடைபெறும் வேளாண்மையைக் கலப்பு வேளாண்மை வலயம் எனலாம். பல்வகைப் பயிர்ச் செய்கைகளுடன் பாற்பண்ணைத் தொழில் இப்பகுதிகளில் முக்கியத் துவம் பெற்றுள் ளது. தானியவகை," கிழங்குப் பயிர்கள், உலர் புல் , இறைச்சி விலங்கு , ப ா ற் ப ண் ணை த் தொழில், காய்கறிச் செய்கை என்பன இந்தக் கலப்பு வேளாண் மைப் பிரதேசப் பயிர்ச்செய்கைப் பொருளாதார அமைப்பாகும். இப் பிரதேசத்தில் கோதுமை, சோளம், ஒட்ஸ், காய் கறி. பழவகை, புகையிலை, உருளைக்கிழங்கு, உலர்புல் முதலான பல்வகைப் பயிர்களும் செய்கைபண்ணப்பட்டு வருகின்றன. இப் பி ர தே ச த் தி ல் கலப்பு வேளாண்மை நடைபெறுவதற்குச் சில காரணிகளுள்ளன. அவை:-
1)
இடத்திற்கிடம் மண்வகையும், சிறிதளவில் கால நிலையும் வேறு படுதல். இப்பிரதேசத்தில் ஒரு பயிருக்கான பரந்த வேளாண்மைக்கு
நிலமில்லை, 3) கைத்தொழிற் பிரதேச மக்களின் பல்வகை உணவுத்தேவை.
2)

Page 24
32
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
இப்பிரதேசத்தில் பயிராகும் கோதுமை வெண்கோதுமையாகும்; சிக் காக்கோ - தெலாடோ - கூறன் ஏரியின் தென் அந்தம் என்பனவற்றை இணைக்கும் முக்கோணப் பகுதியிலும், ஒன்ராறியோ ஏரியின் தென் பகுதியிலும் கோதுமைச் செய்கை செறிவாக நடைபெற்று வருகின்றது.
ஐக்கிய அமெரிக்காவின் சோள வலயத்தின் வடகிழக்கு எல்லைப் பகுதி வடகீழ்ப் பிரதேசத்தில் அமைந்திருக்கின்றது. சிக்காக்சோவை யும் தெலாடோவையும் இணைக்கும் ஒரு நேர்கோட்டிற்குத் 'தெற்கேயே சோளச் செய்கைசெறிவாக நடைபெறுகின்றது; இக்கோட்டிற்கு எடக்கே மிக்சிக்கன் மாகாணத்தில் சோளச் செய்கை பரவலாக நடைபெற்று வருகின்றது.
இப்பிரதேசத்தில் சுழல்முறைப் பயிர்ச்செய்கை மூலம் ஓட்ஸ் பயி ரிடப்படுகின்றது, சோளத்தை அறுவடை செய்ததன்பின், அவ்விளை நிலங்களில் ஒட்சை விளைவிப்பர். தென் மிக்சிக்கன், வட இந்தியானா. வடஒகாயோ, பென்சில்வேனியா, மேற்கு நியூயோக் எனும் பகுதிகளில் ஒட்ஸ் செய்கை பண்ணப்படுகிறது.
இப்பிரதேசத்தில் காய்கறிச் செய்கை பரவலாக நடைபெற்று வருகின்றது. எனினும் சிறப்பாக மிக்சிக்கன் ஏரியின் மேற்குக் கரை யோரத்திலும், ஒன்ராறியோ ஏரியின் தென்கரையோரப் பகுதியிலும் காய்கறிச் செய்கை செறிவாக நடைபெறுகின்றது.
திராட்சை, பியர்ஸ், ஒலீவ், தோடை முதலான பழவகைச் செய் கையும் வடகீழ் ஐக்கிய அமெரிக்காவில் முதன்மை பெற்றிருக்கின் றது. மிக்சிக்கன், நியூயோக், வடஓகாயோ எனும் மாகாணங்கள் பழச்செய்கையில் குறிப்பிடத்தக்கன.
பேரேரிப் பிரதேசத்தில் உலர்புல் வகைகளும் கலப்பு வேளாண்மை யில் முக்கியம் பெறுகின்றன. விஸ்கொன்சின், மிக்சிக்கன் மாகாணங். கள் பாற்பண்ணைத் தொழிலில் ஈடுபட்டிருப்பதால், விலங்குகளுக்குத் தேவையான உலர்புல் வகைகள் இப்பகுதிகளில் பயிடப்பட்டு வரு கின்றன.
பாற்பண்ணை
பாற்பண்ணைத் தொழிலில் முதன்மை பெற்ற நாடுகளில் ஐக்கிய அமெரிக்காவும் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவில், கலப்புவேளாண் மைப் பிரதேசத்திலேயே பாற்பண்ணைத் தொழில் முக்கியம் பெற் றுள்ளது. அதனாலேயே இப்பகுதியை பாற்பண்ணை வலயம் எனவும்

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
83
கூ று வ ர். இப்பாற்பண்ணை வலயம் பேரேரிகளைச் சூழ் ந் த பகுதிசுளை உள்ளடக்கியுள்ளது. வடமின்னசொற்றா, வடவிஸ்கொன் சின், மிக்சிக்கன் எனும் மாகாணங்கள் இப்பாற்பண்ணை வலயத்துள் அமைகின்றன. பென்சில்வேனியா, மேற்கு லேஜீனியா, தென்கீழ் ஒகாயோ, நியூயோக், நியூகம்சயர் மாகாணங்களிலும் பாற்பண்ணைத் தொழில் நடைபெறுகின்றது.
.' இப்பாற்பண்ணை வலயத்தில் இத்தொழில் சிறப்புற்றமைக்குப் பல சாதகக் காரணிகளுள் ளன. அவை:
அ) பாற்பண்ணை வலயத்தின் காலநிலை இத்தொழிலிற்கு மிகப் பொருத்தமானதாகவுள்ளது; நீண்ட கோடைகாலம் செழிப்பான புல் லும் விலங்குத்தீனும் வளர்வதற்கு மிகவும் சிறந்ததாகவுள்ளது.
ஆ) பாற்பண்ணை வலயத்தின் மண் பயிர்ச்செய்கை நடவடிக் கைகளுக்கு உவப்பற்றது; வடமின்னசொற்றாவின் சதுப்பு நிலங்க ளும், விஸ்கொன்சின், மிக்சிக்கன், நியூஇங்கிலாந்து என்பனவற்றின் பள்ளந்திட்டியான மணல் நிலங்களும், உலர்புல்லும் பசும்புல்லும் வளரவே ஏற்றனவாகவுள்ளன.
இ) பாற்பண்ணை வலயத்தில் 400 இலட்சம் மக்கள் வரை வாழ்கின்ற்னர். அதனால் பாற்பண்ணை வலயத்தின் பாற்பொருட் களுக்கு விரிவான உண்ணாட்டுச் சந்தையும், தொழிலா ளர் வசதியும் காணப்படுகின்றன.
| ஈ) வடகீழ்ப் பிரதேசம், கைத்தொழிற் பிரதேசமாக இருப்பதால், சிறந்த இருப்புப்பாதை, வீதி வசதிகளுள்ளன. அதனால், பாற்பொருட்
களை உடனுக்குடன் சந்தை நகர்களுக்கு அனுப்ப முடிகின்றது. - இவை காரணமாக பாற்பண்ணைத் தொழில் இப்பிரதேசத்தில் , மிகவும் சிறப்புற்றுள்ளது.
பாற்பண்ணை வலயத்தில் கறவைப் பசுக்களே பெரிதும் வளர்க்கப் படுகின்றன . ஐக்கிய அமெரிக்காவிலுள்ள மொத்தக் கறவைப் பசுக்களில் பங்கு பாற்பண்ணை வலயத்தில் உள்ளது. பாற்பண்ணைக் கமங்களில் விலங்குணவுக்காக உலர்புல், ஓட்ஸ், சோளம் என்பன பயிரிடப்பட்டு வருகின்றன. எனினும், கணிசமானவளவு விலங்குணவு ஐக்கிய அமெரிக்கா வின் தென்பகுதிகளிலிருத்து இங்கு கொண்டு வரப்படுகின்றது
பால்மா , பாலாடை, வெண்ணெய், பாற்கட்டி முதலான பொருட்கள் இப்பாற்பண்ணை வலயத்தில் உற்பத்தியாகின்றன, ஐக்கிய அமெரிக்கா

Page 25
4
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
வின் நீரகற்றிய பால் மாவில் வடகீழ்ப் பிரதேசம் 2/5பங்கையும், கொழுப்பு நீக்கி பால்மாவில் 9/10 பங்கையும் உற்பத்தி செய்துவருகின்றது. பாற்கட்டி உற்பத்தியில் | பங்கை விஸ்கொன்சின் மாகாணம் உற் பத்தி செய்கின்றது.
2. சோள வலயம்
உலகின் சோள உற்பத்தியில் 2/3 பங்கை ஐக்கிய அமெரிக்காவின் சோ ளவலயம் உற் பத் தி செய் கி ற து. ஐ க் கி ய அ மெ ரிக் 'காவின் சோளவலயம் பேரேரிகளுக்குத் தெற்காகவும், தென்மேற் காகவும் அமைந்துள்ளதோடு, மேற்கு ஒகாயோ, இண்டியானா, இலி நோய், இயோவா, வடமேல் கன்சாஸ், தென் மிசூரி முதலிய பகுதி களையுமடக்கியுள்ளது. சோளவலயத்தை விட ஐக்கிய அமெரிக்காவின் நெப்ராஸ்கா, தென் டகோற்றா, மின்ன சொற்றா, மிசூரி ஆகிய மாநிலங் களிலும் சோளம் பிரதான பயிராக விளங்கி வருகின்றது . ஐக்கிய அமெரிக்காவின் மொத்த நிலப்பரப்பில் 8 சதவீதத்தை இச் சோ ளவல யம் அடக்கியுள்ளது.
சேT 1லயத்தின் எல்லைகள் டெ!ௗதிக நிலைமைகளினால் வரையறுக் கப்பட்டிருக்கின்றன ; முக்கியமாகக் கா ல நி லை யே சோளவலயத்தின் எல்லைகளை நிர்ணயித்துள்ளது. வடஎல்லை கோடைக்குரிய 70° ப. சமவெப்பக் கோட்டினாலும், மேற்கு எல்லை 20 அங்குல சம மழை வீழ்ச்சிக் கோட்டினாலும் நிர்ணயிக்கப் பட்டிருக்கின்றன. தென் எல் லையை மண் நிர்ணயித்திருக்கின்றது. பிளைத்தோசீன் பனிக்கட்டியாற் றினால் ஆக்கப்பட்ட வளமான மண்களையும், நீரினால் அரிக்கப்பட்ட வளமற்ற !மண்களையும் பிரிக்கின்ற தெளிவான எல்லையாக சோள வலயத்தின் தென் எல்லை அமைந்துள்ளது. கிழக்கு எல்லை வளமான சுண்ணாம்புக்கல் நிலத்தால் நிர்ணயிக்கப்படுகின்றது.
சோள வலய மண் வகைகள் வளமானவை; கண்டப் பனிக்கட்டி. யாற்றுப் படிவுகளையும் அதிகமான அழுகற் பொருட்களையும் கொண் டுள்ளன. தொடரலைப் பாங்கான தரையும் 20 அங்குலம் முதல் 40 அங்குலம் வரையிலான மழைவீழ்ச்சியும் இப்பிரதேசத்தின் பயிர்ச் செய்கைக்குப் பெருவாய்ப்பாக இருக்கின்றது. உறைபனியற்ற நிலைமை கள் சோளச் செய்கைக்கு வாய்ப்பாக விளங்குகின்றன,
ஐக்கிய அமெரிக்காவில் உற்பத்தியாகின்ற சோளத்தில் அரைப் பங்கு சோள வலயத்தில் உற்பத்தியாகின்றது. சோள வலயத்தில்

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
35
சோளம் பிரதான பயிராயினும், ஓட்ஸ், சோயா, கோதுமை, காய் கறி முதலான பயிர்களும் செய்கை பண்ணப்பட்டு வருகின்றன. சோள வலயத்தில் ஏராளமான கால் நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
, சோள வலயக் கமக்காரர் நிலத்திலிருந்து உச்ச விளைவைப் பெறு வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள், யந்திர மய மான பயிர்ச் செய்கை, மண்ணின் வளத்தைப் பேணுவதில் கூடிய கவனம், குடும்ப அங்கத்தவரே தங்கள் கமங்களில் வேலை செய்தல் என்பன, கோ ள வலயத்தின் உச்ச விளைவிற்குக் காரணங்களாகும். ஒரு சதுர மைலிற்கு ஏறத்தாழ 5000 புசல் சோளம் விளைவாகுய்.
இயோவா, இண்டியானா, இலினோய் மாநிலங்களிலுள்ள விளை நிலங்களில் 40% சோள விளை நிலமாகும். ஓகாயோ, மிசூரி மாநிலங்க ளில் 30% சோள விளை நிலமாகும். உறைபனிக்கால முடிவில், ஏப்பிரல் அல்லது மே மாதத்தில் சோளம் விதைக்கப்படுகின்றது. 20'' முதல் 40 வரை மழைவீழ்ச்சியும், 70°ப. கோடை வெப்பநிலையும், 120 முதல் 170 நாட்கள் வரை உறைபனியற்ற தன்மையும் சோளச் செய்கைக்கு மிகவும் சாதகமாகவுள்ளன. சோளம் வளர்கின்ற காலத் தில் இந்த வலயத்தில் நிலவுகின்ற உயர் வெப்ப நிலை பெருமுதவியாக இருக்கின்றது.
சோள வலயத்தில் உற்பத்தியாகின்ற சோளத்தில் 1 சதவீதமே ஏற்றுமதியாகின்றது; இன்னொரு 15 சதவீதம் மனித உணவுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது, உற்பத்தியாகும் சோளத்தில் பெரும் பகுதி (84%) மிருக உணவாகப் பயன்படுகின்றது.
இங்கு பயிராகின்ற சோளத்தை ஆடு, மாடு, பன்றி முதலிய விலங்கு களுக்கு உணவாகக் கொடுத்து, பின் அவற்றின் இறைச்சியைப் பயன் படுத்துகின்றனர். இதற்குச் சில காரணங்களுள்ளன,
(அ) சோளம் பலகாலம் நெல்லைப்போன்று பழுதாகாது இருக் கக்கூடிய தானியமன்று; ஈரப்பிடிப்பானது : அதனால், உடனுக்குடன் ஏற்றுமதி செய்வது அவசியம், ஆனால், சோளத்தைப் பிரதான உண வாகக் கொள்ளும் நாடுகள் இதனை ஏராளமாக இறக்குமதி செய்யும் நிலையிலில்லை. அதனால், மிருக உணவாகக் கொடுக்கின்றனர்.
(ஆ) மிருக உணவாகக் கொடுத்து, இறைச்சியாக ஏற்றுமதி செய்வது இலகுவானதும், லாபகரமானதுமாகும். ஏனெனில் மிருக உணவாகக் கொடுப்பதனால், சோளத்தை அறுவடை செய்யத் தேவை

Page 26
36
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
யில்லை. சோளப்பயிரைப் பட்டி பட்டியாக அடைத்து, ஒவ்வொரு பட்டியாக மிருகங்களுக்குத் திறந்துவிட்டால் அவை தாமாகவே அவற்றைத் தின்று கொழுக்கின்றன. மிருக உணவாகக் கொடுத்து. இறைச்சியாக ஏற்றுமதி செய்வதால், ஏற்றுமதிச் செலவும் குறைவு . எவ்வாறெனில் 10 இறாத்தல் சோளத்தின் மதிப்பு 1 இறாத்தல் மாட் டிறைச்சியின் மதிப்பிற்குச் சரியாகவுள்ளது. 6 இறா. சோளத்தின் மதிப்பிற்கு 1 இறா. பன்றியிறைச்சி சரியாகவுள்ளது.
| > >
* சோள வலயத்தில் சுழல்முறைப் பயிர்ச்செய்கை கைக்கொள்ளப் படுகின்றது. முச்கியமாக சோளம் விளைவித்து முடிந்ததும், சோயா அவரை, ஓட்ஸ், கோதுமை முதலியன பயிரிடப்படுகின்றன - அத் துடன் சோள வலயக் கமக்காரர்கள் உருளைக்கிழங்கு > ஏனைய காய்கறி கள், பழவகைகள் என்பனவற்றையும் பயிரிட்டு வருகின்றனர்.
3. பருத்தி வலயம்
ஐக்கிய அமெரிக்காவே உலகப் பருத்தி உற்பத்தியில் ஏறத்தாழ 42% உற்பத்தி செய்கின்றது. வட கரோலினா, தென் கரோலீனா, ஜோர் ஜியா, அலபாமா, ரெனசி, ஆக்கன்சாஸ், ரெக்சாஸ் ஆகிய பாகங் களை உள்ளடக்கியது "பருத்தி வலயம்' எனப்படும். பருத்தி வல யம் பருத்தி உற்பத்தியில் முதலிடத்தைப் பெறச் சில சாதகமான ஏதுக்கள் காரணமாகவுள்ளன. (அ) பருத்தி வலயம் ஓரளவு சமநில மாகவும், 20க்கு மேற்பட்ட மழைவீழ்ச்சியையும், 75°ப. வெப்ப நிலையையும் அனுபவிக்கும் பிரதேசமாகவும் இருக்கின்றது. (ஆ) இயற் கையாகவே வளமான மண் பருத்தி வலயத்தின் விருத்திக்குச் சாதக மாக அமைந்துள்ளது. (இ) நல்ல போக்குவரத்து வசதிகள் பருத்தி ஏற்றுமதிக்கு உதவியாக இருக்கின் றன. (ஈ) டரந்த விளை நிலப்பரப்பு யந்திர உபயோகங்களுக்குச் சாதகமாக உள்ளது.
பருத்தி வலயத்தின் எல்லைகள் பெளதிகக் காரணிகளினால் நிர்ண யிக்கப்பட்டுள் ளன. முக்கியமாகக் காலநிலை இவ்வலயத்தினை நிர்ண யித்திருக்கின்றது. பருத்திச் செய்கைக்கு உறைபனி நிலைமை இருக்கக் கூடாது. அதனால், பருத்தி வலயத்தின் வட எல்லை 210 நாட்களுக்கு உறைபனி நிலவாத பிரதேச ஓரமாக அமைந்துள்ளது. பருத்தி வல யத்தின் மேற்கு எல்லை 20" மழைவீழ்ச்சிக் கோடாகும். தென் எல்லை யும் கிழக்கு எல்லையும் 10" இலையுதிர்கால மழைவீழ்ச்சிக் கோடாக அமைந்துள்ளன.

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
87
பருத்தி வலயத்தினுள் ஏழு பகுதிகள் பிரதான பருத்தி உற்பத்திப் பிரதேசங்களாக விளங்குகின்றன. அவை: (1) உண்ணாட்டுக் கரை யோர்ச் சமவெளிகள், (2) மலையடிச் சமவெளிகள், (3) ரெனசிப் பள்ளத்தாக்கு , (4) மிசிசிப்பி ஆற்று வண்டற் சமவெளி, (5) மத்திய ரெக்சர்ஸ், (6) மேற்கு ரெக்சாஸ் - ஒக்கிளகோமா (7) தென் ரெக் சாஸ் கரையோரச் சமவெளி.
சாயாககைடிவமைடியவைசாகபானாக.மகாலகட்டதுகைகாயைகனை
ஒக்கிளகோமா
>>
2கா
பாலிகா
ரெகாசி!
1 5:13 ஐன்தி
இம் ,
தென் கரோலினா
| அல.
பாமா
7ஐஜார்ஜியா
'ரு
தா புளோரிடா
-அ'
இல்லூசியானா இது பருத்தி
ஜி., (நிலக்கடலை நெ. நெல்
க - கரும்பு கா - காய்கஜி
அலாவல
படம் 11 பருத்தி வலயம் (தடித்த கோடு பருத்தி வலய எல்லை)
பருத்தி வலயப் பருத்திச் செய்கையின் சிறப்பியல்புகள் வருமாறு:
1, பருத்தி மண்ணின் வளத்தை அதிக அளவில் நுகரக்கூடிய பணப்பயிராகும். அத்துடன் ஆரம்ப நாட்களில் பருத்தி வலயத்தில் ஏற்பட்ட மண்ணரிப்பும் மண்ணின் வளத்தைக் குறைத்துள்ளது. இவை காரணமாக, இன்று பருத்தி வலய மண் வளத்தைத் தக்க விதமாகப் பேணுவதற்குக் கூடிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. செயற்கை வளமாக்கிகள் இன்று அதிக அளவில் உபயோகிக்கப்பட்டு வருகின்றன.
2. பொதுவாகப் பருத்திச் செய்கைக்கு அதிக தொழிலாளர் தேவை. ஆரப ப காலத்தில் மேற்கு இந்தியத் தீவுகளிலிருந்தும் மேற்கு ஆபிரிக்காவிலிருந்தும் அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட நீக்ரோக் கள் பருத்தி வலயத்தில் வேலை செய்து வருகின்றனர். பருத்தி வலய சனத்தொகையில் 30 வீதம் நீக்ரோக்கள். இன்று வெள்ளையர்களும் சேர்ந்து வேலை செய்கின்றனர். பருத்தி கொய்வதற்கும் தொழிலாளர்

Page 27
38
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
கள் அதிகம் தேவை, பருத்திப் பொத்திகள் ஒரே காலத்தில் பழுப்ப தில்லை. அதனால் பன்முறை பருத்திப் பஞ்சு கொய்ய வேண்டியிருக் கின்றது. பருத்தி வலயத்தின் கிழக்குப் பாகத்தில் இப்போதும் பருத்தி கைகளினாலேயே கொய்யப்பட்டு வருகின்றது. மேற்குப் பகுதிகளில் பருத்திப் பஞ்சைக் கொய்வதற்கு யந்திரங்கள் உபயோகிக்கப்பட்டு வருகின்றன.
3. பருத்திச் செய்கை எதிர்நோக்குகின்ற ஒரு பெரும் பிரச்சினை நீண்மூஞ்சி வண்டு (Boll Weevi1) களினால் பருத்திச் செடிக்கு ஏற்படும் அழிவாகும். இலையுதிர்காலத்தில் பழைய பருத்தித் தண்டுகள் வெட்டி எரிக்கப்படுவதற்குக் காரணம், மாரியில் இத்தண்டுகளில் தங்கியிருக்கும் நீண்மூஞ்சி வண்டுகளைக் கொல்வதற்காகும்.
4. பொதுவாக ஐக்கிய அமெரிக்காவில் உற்பத்தியாகும் பருத்திப் பஞ்சு நடுத்தர நீளமான நாரினையுடையதாகும். எனினும், மிசிசிப்பி . ரெக்சாஸ் மாநிலங்களில் நீண்ட நார் பஞ்சுடைய பருத்தி உற்பத்தி யாகின்றது.
இன்று பருத்தி வலயத்தில் உற்பத்தியாகின்ற பருத்தியில் 50 வீதம் ரெக்சாஸ் மாநிலத்தில் மாத்திரம் கிடைக்கின்றது. மிசிசிப்பி, ஆக்கன்சாஸ் மாநிலங்கள் ஏனைய இரு பிரதான பருத்தி உற்பத்தி மாநிலங்களாகும். பருத்தி வலயத்தைவிட, ஐக்கிய அமெரிக்காவின் மேற்கு மாநிலங்களும் பருத்திச் செய்கையில் விருத்தியுற்றிருக்கின்றன. முக்கியமாக ஒக்கிளகோமா, நியூமெச்சிக்கோ, அரிசோனா, கலிபோர் ணியா ஆகிய மாநிலங்களைக் குறிப்பிடலாம். அரிசோனாவில் சோல்ற் நதிப் பள்ளத்தாக்கும், கலிபோர்ணியாவில் சான்யுவான் பள்ளத்தாக் கும் முக்கியமான பருத்தி வளர் பிரதேசங்களாகும்.
பருத்தி வலயம், படிப்படியாக மேற்குப் பக்கமாக விரிவடைந்து செல்வதைக் காண முடிகின்றது. காரணங்கள் சிலவுள்ளன. (அ) பருத்தி வலயத்தின் மண் வளமற்றுப் போவதால் மேற்குப் பக்க வளமான விளைநிலங்கள் பருத்திச் செய்கைக்கு உட்படுத்தப்படுகின்றன. (ஆ) பொல்வீவில் என்ற நீண்மூஞ்சி வண்டின் தாக்குதல். பருத்தி வலயத்தில் இருப்பது போல, மேற்குப் பிரதேசங்களில் இல்லாமை. (இ) பருத்திக்கு அண்மையாண்டுகளில் கிடைக்கும் அதிக விலை, ஐக் கிய அமெரிக்காவின் மேற்குப் பாகங்களிலும் பருத்திச் செய்கையைத் தூண்டியுள்ளன.
பருத்தி வலயத்தில் உற்பத்தியாகும் பருத்திப் பஞ்சு பருத்தி நெச வுக்கும், பருத்தி விதைகள் எண்ணெய் உற்பத்திக்கும் பயன்படுத்தப்

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
பட்டு வருகின்றன. பருத்தி விதை எண்ணெய் மார்ஜரின், சவர்க்காரம், மெழுகுதிரி முதலியன செய்வதற்கு உதவுகின்றது. பருத்தி வலயப் பஞ்சில் பெரும்பகுதி நியூ இங்கிலாந்தில் இருக்கும் பருத்தி ஆலைகளுக் கும், பிலடெல்பியா ஆலைகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன. சிறு பகுதி யப்பானுக்கும், மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்று மதியாகின்றது.
பருத்தி வலயத்தின் ஏனைய பயிர்கள்- பருத்தி வலயத்தின் விளை நிலத் தில் மூன்றிலொரு பங்கே பருத்திச் செய்கைக்குட்பட்டிருக்கின்றது. பருத்தியை விட சோளம், இறுங்கு, நிலக்கடலை, சோயா அவரை, நெல், புகையிலை, காய்கறி, பழவகை என்பன பருத்தி வலயத்தில் பயிரிடப்படும் ஏனைய பயிர்களாகும். அத்துடன் பருத்தி வலயத்தில் கால் நடை வளர்ப்பும் நடைபெற்று வருகின்றது.
4. அயன அயல் பயிர்வலயம்
ஐக்கிய அமெரிக்காவின் விரிகுடாக் கரையோரத்தில் அயன அயல் பயிர்வலயம் அமைந்துள்ளது. இவ்வலயத் தில் ரெக்சாஸ், லூசியானா. மிசிசிப்பி, அலபாமா மா நிலங்களின் தென்பாகங்கள் அடங்கியுள்ளன. இப் பிரதேசத்தில் இளஞ் சூடான மாரியும், வெப்பமான கோடையும் நிலவுகின்றது. மழைவீழ்ச்சி 20" - (0'' வரை வேறுபடுகின்றது; இவை காரணமாக நிலப் பயன்பாடும் வேறுபடுகின்றது.
அயன அயல் பயிர் வலயத்தில் பழவகைகள், நெல், கரும்பு, ஆகிய மூன்று பயிர்களும் முதன்மை பெற்றுள்ளன. சோளமும் சிறிய அள வீல் பயிரிடப்பட்டு வருகின்றது. ரெக்சாஸ் மாநிலத்தில் றையோ கிராண்ட் நதிப் பள்ளத்தாக்கிலும், மிசிசிப்பி அலபாமா மாநிலத்தின் தென்கரையோரத்திலும் பழ வகைகள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகின்றன. லூசியானா மாநிலத்தில் மிசிசிப்பி கழிமுகப் பாகத்தில் நெற்செய்கை முதன்மை பெற்றிருக்கின்றது. ரெக்சாஸ் மாநிலத்தின் தென் கரையோரமும் நெற்செய்கையில் குறிப்பிடத்தக்கது. இவ்வலயத் தில் நடைபெறும் நெற்செய்கை யந்திரமயமானது. லூசியானா மாநி லத்தில் மிசிசிப்பி கழிமுகத்தில் முதன்மை பெற்றிருக்கும் இன்னொரு பயிர் கரும்பாகும். லூசியானாவிலிருந்து சிறிய அளவு அரிசி, தூர கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Page 28
40
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
5. கோதுமை வலயம்
ஐக்கிய அமெரிக்காவின் கோதுமைச் செய்கை வலயத்தில் இரண்டு தெளிவான வலயங்களை அவதானிக்கலாம். அவை; (அ) வசந்தகாலக் கோதுமை வலயம் (ஆ) மாரிகாலக் கோதுமை வலயம். வசந்தகாலக் /A கோதுமை வலயம் பிறேயறீஸ் புல்வெளிப் பாகத்திலும், மாரிகாலக் கோதுமை வலயம் ஐக்சிய அமெரி3 காவின் மத்திய பாகத்திலும் அமைந்துள்ளன.
(அ) வசந்தகாலக் கோதுமை வலயம்
வசந்தகாலக் கோதுமை வலயம், வட்டகோற்றா. தென் டகோற்றா. மொன்ரானா, மின்னசொற்றா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியிருக் கின்றது. இதுவே உலகின் மிக முக்கியமான வர்த்தகத்தானியப் பிர தேசமாகும்; யந்திரமயமான தானியச் செய்சுை இங்கு நடைபெற்று வருகின்றது. ஐக்கிய அமெரிக்காவின் வடபெருஞ் சமவெளி, கோது |
மைச் செய்கைக்கு ஏற்றதாக விளங்கி வருகின்றது.
வசந்தகாலக் கோதுமை வலயத்தில் பயிர்வளர் காலம் 120-140 நாட்களாகும்; ஏனைய காலத்தில் உறைபனி பெய்யும். மழைவீழ்ச்சி இப்பிரதேசத்தில் குறைவாக இருந்தாலும் (12"-20"), ஆவியாகுத லளவும் குறைவு. அதனால், கோதுமைப் பயிருக்குப் போதுமான அளவு மழைவீழ்க்சியாக இருக்கின்றது.
ஐக்கிய அமெரிக்காவின் கோதுமை உற்பத்தியில், 25 சதவீதத்தை வசந்தகாலக் கோதுமை வலயம் உற்பத்தி செய்து வருகின்றது , வட. டகோற்றா மாநிலம் மிக முக்கியமான உற்பத்திப் பாகமாகும், வசந்த காலக் கோதுமை, டுலுத், சிக்காக்கோ, பபுலோ நகர ஆலைகளில் ஈ.. அரைக்கப்படுகின்றன. பேரேரிகள் ஊடாக அத்திலாந்திக் துறைமுகங் களுக்கும் கொண்டு செல்லப்பட்டு கோதுமை ஏற்றுமதியாகின்றது. வசந்த காலக் கோதுமை வலயத்தின் ஏக்கருக்குரிய விளைச்சல் 20 புசல்களாகும்.
வட டகோற்றாவிலும் தென் டகோற்றாவிலும் கோதுமைக் கமக் காரர் எதிர்நோக்குகின்ற பெரும் பிரச்சினை வறட்சியாகும். அத் துடன் தத்துக்கிளி, சிஞ்சு வண்டு, சிமத்து நோய் என்பனவும் வசந்த காலக் கோதுமைச் செய்கை எதிர்நோக்கும் பிரச்சினைகளாகுய்,

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
41
வசந்த காலக் கோதுமை வலயத்தில் கோதுமையே பிரதான தானியப் பயிராயினும், ஓட்ஸ், றை, சோளம் ஆகியனவும் செய்கை பண்ணப்பட்டு வருகின்றன. பட்டுச் சணலும் கணிசமானவளவு பயி ரிடப்பட்டு வருகின்றது .
(ஆ) மாரிகாலக் கோதுமை வலயம்
ஐக்கிய அமெரிக்காவின் மாரிகாலக் கோதுமை வலயம் கன்சாஸ் மாநிலத்தை முற்றாக உள்ளடக்கியதாயும், ஒக்கிளகோமா, ரெக்சாஸ் மாநிலங்களின் பகுதிகளை உள்ளடக்கிய தாயும் அமைந்திருக்கின்றது. இவ்வலயத்தின் ஊடாக 20" சம மழைவீழ்ச்சிக் கோடு செல்கின் றது. இக்கோட்டிற்குக் கிழக்கே ஏறத்தாழ 30" மழையும், மேற்கே 20"க்குக் குறைவான மழையும் சிடைக்கின்றது.
கன்சாஸ் மாநிலத்தின் விளை நிலத்தில் 60% மேற்பட்ட பகுதி, கோதுமைச் செய்சுைக்கு உட்பட்டிருக்கின்றது. கன்சாஸ் மாநிலம் ஜக்கிய அமெரிக்காவின் கோதுமை உற்பத்தியில் ஆறிலொரு பங்கினை உற்பத்தி செய்து வருகின்றது. கன்சாஸ் கோதுமை யூலை மாதத்தில் பெரும்பாலும் அறுவடை செய்யப்படுகின்றது. விரிகுடாக் கரைத் துறைமுகங்களின் ஊடாக இந்த வலயக் கோதுமை ஏற்றுமதியாகி வருகின்றது.
6. பரந்தளவு விலங்கு வேளாண்மை வலயம்
ஐக்கிய அமெரிக்காவின் ரொக்கி மலைகளுக்கும் பசுபிக் கரையோர மலைகளுக்கும் இடையில், அமைந்துள்ள மலையிடை மேட்டு நிலங்கள், பரந்த விலங்கு வேளாண்மை வலயங்களாக விளங்கி வருகின்றன. இடாகோ, நெவாடா, உற்றா, கொலராடோ, அரிசோனா, நியூமெக் சிக்கோ முதலான மாநிலங்கள் இவ் வலயத்தினுள் அடங்குகின்றன. இவ் வலயம் மேய்ச்சலுக்கேற்ற பலவகைப் புற்களைக் கொண்டு விளங்கு கின்றது. வறட்சியான காலநிலை நிலவுவதால், புற்றரைகளே அதிக மாக இவ்வலயத்தின் இயற்கைத் தாவரமாக விளங்கி வருகின்றது. சினேக் - கொலம்பியா மேட்டு நிலம், கொலராடோ மேட்டு நிலம் என் பன இவ்வலயத்துள் அடங்குகின்றன.
இவ்வலயத்துள் வாழ்கின்ற இந்தியச் சுதேசிகளும் (செவ்விந்தியர் ), வெள்ளையர்களும் விலங்கு வேளாண்மையில் ஈடுபட்டிருக்கின்றனர். இவ்வலயம் முழுவதும் இறைச்சி மாடுகளும், செம்மறியாடுகளும் முக் கியமான வளர்ப்பு விலங்குகளாகும். ரெக்சாசில் அங்கோரா வெள்

Page 29
42
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
ளாடுகள் ஏராளமாக வளர்க்கப்படுகின்றன. பருவத்திற்குப் பருவம், மேய்ச்சல் நிலங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. மேலும், ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்புடைய பல்லாயிரக்கணக்கான விலங்குப் பண்ணைகளுள்ளன.
இவ் விலங்கு வேளாண்மை வலயத்திலுள்ள இறைச்சி விலங்குகள், கொழுக்கச் செய்வதற்காகச் சோள வலயத்திற்குக் கொண்டு செல்லப் படுகின்றன. சோள வலயத்தில் விலங்குகளைக் கொழுக்கச் செய்வதற் கேற்ற சோளமும் ஏனைய தீன்பயிர்களும் மலிவாகக் கிடைக்கின்றன. சோளவலயத்தில் கொழுக்கச் செய்யப்பட்ட விலங்குகள். இறைச்சி அடிக்கப்படுவதற்காக மத்திய மேற்கிலுள்ள ஆலைகளுக்கு அனுப்பப் படுகின்றன.
பரந்தளவு விலங்கு வேளாண்மை வலயத்தில் ஏறத்தாழ 3 சதவீத நிலமே பயிர்ச் செய்கைக்குட்பட்டிருக்கின்றது; அதுவும் நீர்ப்பாசன வசதியுடன் நடைபெற்று வருகின்றது. பீற்கிழங்கு, உருளைக்கிழங்கு, அல்பல்பாபுல் என்பன இந்த வலயத்தின் பிரதான பயிர்களாகும். சோல்ற் ஏரிப் பசுஞ்சோலை (உற்றா) சோல்ற்நதிப் பள்ளத்தாக்கு (அரி சோனா), நெவாடாவில் றெனோ பசுஞ்சோலை என்பன குறிப்பிடத்தக்க நீர்ப்பாசனப் பயிர்ச்செய்கை நடைபெறும் பிரதேசங்களாகும்.
7. கலப்பு வேளாண்மை வலயம்
ஐக்கிய அமெரிக்காவின் வடமேற்குக் கரையோரப் பாகத்தில் கலப்பு வேளாண்மை வலயம் ஒன்று அமைந்திருக்கின்றது. பசுபிக் கரை யோரமாக வாஷிங்டன், ஒறிகொன் மாநிலங்களின் மேற்குப் பாகங் களை இந்த வலயம் உள்ளடக்கியிருக்கின்றது. வருடம் முழுவதும் பரவ லான மழை கிடைக்கின்றது: மாரியில் அதிக மழை . இந்த வலயத்தில் பழவகைகள், பாற்பண்ணைத் தொழில், காய்கறிச் செய்கை என்பன நடைபெறுகின்றன. பாற்பண்ணைத் தொழில், இவ்வலயத்தில் முக்கிய பச் மானது. அத்துடன் ஓட்ஸ், பார்லி என்பனவும் செய்கை பண்ணப்பட்டு வருகின்றன.
8. தானிய - பழ வலயம்
ஐக்கிய அமெரிக்காவின் தானிய-பழவலயம் என கலிபோர்ணிய மாநிலத்தைக் குறிப்பிடலாம். மத்தியதரைக் கடற் காலநிலையை இந்த வலயம் அனுபவிக்கின்றது; கோடை வறட்சியும் மாரி மழையும் இந்த
வா

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
43
வலயத்தின் பயிர்ச்செய்கைக்கு உதவுகின்றன. அத்துடன் இந்த வலயத் தின் பயிர்ச் செய்கைக்கு நீர்ப்பாசன வசதிகள், ஐக்கிய அமெரிக்காவி லேயே சிறப்பாக அமைந்துள்ளன. கலிபோர்ணிய மத்திய பள்ளத் தாக்கின் வண்டல் மண் படிவுகளும் பயிர்ச்செய்கைக்கு வாய்ப்பாக விளங்குகின்றன.
பழவகைகள், தானியச் செய்கை, விலங்கு வேளாண்மை, பருத்தி* செய்கை என்பன இந்த வலயத்தில் நடைபெற்று வருகின்றன. தென் கலிபோர்ணியாவில் செம்மறிகள், மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின் றன. கோதுமை, பார்லி, நெல், பருத்தி என்பன சான்யுவான் பள் ளத்தாக்கில் செய்கை பண்ணப்பட்டு வருகின்றன. திராட்சை, பீச், அப்பிள் முதலான பழவகைகள் கலிபோர்ணியாவில் சிறப்பாகப் பயிரா கின்றன.
3. கைத்தொழில்கள் உலகிலேயே கைத்தொழிலாக்கங்களில் முதன்மை பெற்றிருக்கும் ஒரு நாடு, ஐக்கிய அமெரிக்காவாகும். பரந்தளவிலான பயிர்ச்செய்கை நிலங்கள், காடுகள், அதிக கனிப் பொருள் வளங்கள் என்பன ஐக்கிய அமெரிக்காவின் கைத்தொழிலாக்கங்களுக்குத் துணை நிற்கின்றன. ஏரா ளமாகக் கிடைக்கின்ற நிலக்கரி, பெற்றோலியம், இயற்கை வாயு, நீர் மின்வலு என்பனவும், அதிக தொகையில் கிடைக்கும் தரமான இரும் புத் தாது வளமும், பெருந்தொகையான விளைபொருள் உற்பத்திகளும் பரந்த சந்தை வாய்ப்புக்களும், சிறப்பான போக்குவரத்து வசதிகளும் இந்நாட்டினைக் கைத்தொழிலில் முதன்மை பெற வைத்துள்ளன.
பலசார் AMAயா.eu:* Muாம். மொLSAபடியாகாபws Iாயம்: படிய,மேயர470terாடி புகமாடிடிக
கவங்கி
$4X4 4 4"டிபாடி 1;
8.4% {ய'!':48.4"ஜிமல் * . (பேச: 63ாமுயட்
திeெ 2
ஒஃ?சரட்
2 ஃ- ரர் கல்' ஓ
« :
தேது எப்
தம்: 1.கார் ஆகன்? தி -- படி*ே பகி3சாக்
-இயலாம் யே, சாலை
--. க33:39 டாலயே?? > 154 பேழ 35க்கலாஷிப்டன்
' 'இன்சிய சீக்கம் >>
«, 4 சர் ஆர்.74 ல் தீ :
தேராஜா
* பேங்கரம்' கார் ஆடினோ?க..
4% ? (18,7 3
3 4:12:32ாரி.1:
கேட்-E:
را به کار کرد و این نشان داده اند و به تنگ ہی)
« 8" 45 றி' .Awயோ
Tாள்4 5253.புட்டிபட்டி
03கத்தொழில்
(5 4, ர ந க ?
ஐ.sால் \ /-தகள்
-$ சம்
(பாண்ணINNEHSANMURNAACKSOZFYANAKSHMikeKIN!
SWIATCH AAE%EXITANCETra" KRINSW INTEXASALISHAtாணn:
- 2 TNTாளாFF5)
படம் 12 ஐக்கிய அமெரிக்காவின் கைத்தொழில் மையங்கள்
(புள் ளிக் கோடு சைத்தொழில் கூ' ல ய அல்லை)

Page 30
44
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
ஐக்கிய அமெரிக்காவின் கைத்தொழிலாக்கங்களை இரண்டு பெரும் பிரதேசப் பிரிவுகளுள் அடக்கி ஆராய முடியும். அவை:
1. கைத்தொழில் வலயத்தினுள் அமையும் கைத்தொழிலாக்
கங்கள்.
2.
கைத்தொழில் வலயத்திற்கு வெளியே நிகழும் கைத் தொழிலாக்கங்கள்.
1. கைத்தொழில் வலயம்
ஐக்கிய அமெரிக்காவின் கைத்தொழில் வலயம் (Industrial belt ) என வடகீழ்ப் பிரதேசத்தை வரையறுக்கலாம். ஐக்கிய அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பரும்படியாக்கப் பொருட்களின் பெறுமானத்தில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு பெறுமானமுள்ள பொருட்கள் இப் பிரதேசத்திலேயே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன, ஐக்கிய அமெ ரிக்காவின் முதன்மை வாய்ந்த கைத்தொழில் பகுதிகள் பல இப்பிர தேசத்தினுள் அமைந்திருக்கின்றன. நியூயோர்க், சிக்காக்கோ . பிலடெல் 4 பியா, டெற்றொயிற், கிளீவ்லாண்ட், போல் றிமோர், பிற்ஸ்பேக், பபுலோ, பொஸ் தன் முதலியன வடகீழ்ப் பிரதேசத்தின் பிரதான கைத்தொழில் நகரங்களாக விளங்குகின்றன.
வடகீழ் ஐக்கிய அமெரிக்கா, ஐ கிய அமெரிக்காவின் கைத்தொழில் வலயமாக அமைந்திருப்பதற்கு கைத்தொழில்களை ஓரிடப்படுத்தும் ஏதுக் களின் சாதக தன்மைகளே காரணங்களாகும். அவை:
1) தரத்திலுயர்ந்த நிலக்கரி இந்த வடகீழ்ப் பிரதேசத்தில் ஏராள மாகக் காணப்படுகின்றது, அப்பலோச்சியன் நிலக்கரி வயல் உலகி லேயே தரம்கூடிய நிலக்கரியை அதிக அளவில் உற்பத்தி செய்து வருகின்றது. இந்நிலக்கரி வயல், வடகீழ்ப் பிரதேசத்தின் கைத்தொழி 4 லாக்கத்திற்குத் தூண்டுதலாக விளங்குகின்றது.
2) உயர்தர இரும்புத்தாதுப் படிவுகள் சுப்பீரியர் ஏரியின் மேற்குப் பகுதியிலும் தெற்குப் பகுதியிலும் அதிகளவிற் பரந்துள்ளன. மெசாபி, வேமிலியன், கியூனா, மெனோமினி முதலான இரும்புத்தாது வயல்கள் இப்பிரதேசத்தின் பாரக் கைத்தொழில்கள் நன்கு விருத்தி யுறுவதற்குத் துணை நிற்கின்றன.
3) கைத்தொழில்களின் விருத்திக்குத் தேவையான ஏனைய பல வகை மூலப்பொருட்களும் வடகீழ் ஐக்கிய அமெரிக்காவில் ஒருங்கே

சொல்
க ன டா
வேம்பியது
::TA அகத
می خم مر
' உரகயொர்
TCH* 4'IB 1:1NMITLETT, KIWATCNYEA.0ா, எடோர் கடும் காதலுக்காக
பொது
ப யோகபி.,
மனோமிகா
ப
பொஸ்தன்.
வரி -14 1/14 - 14 :.JA: " AT 13144%TEEE.
(33148) !
-->ப புலோ
A%) 140 )/(4
(, .''!
டெ3ருயிர் ஈஈ ரி-...
17:11
சகா .
/.' : பிறஸ் பேக
-7597337.
. (படி' * ...-
- பிட்-y: ..
-- • 5 ?-ரி' மார
- * 2 3 4 A
: நிலக்கரி இரும்புத்தாது, பெற்றோலியம் 23 செம்பு
கத்னபண்ரியா சரியாகாரி
FIRSSEMINITINTாயாசWை: .
இகிபேட்டி
பாம்
படம் 13 கைத்தொழில் வலயக் கனிப்பொருட்களும், கைத்தொழில் மையங் க ளும்

Page 31
46
ஐக்கிய அமெரிக்காவின் புவியி ல்
காணப்படுகின்றன. பென்சில்வேனியாப் பகுதியில் பெற்றோலியமும், சுண்ணக்கல், செம்பு, நாகம் முதலான கனிப்பொருட்கள் வடகீழ்ப் பிரதேசத்தில் பரவலாகவும் காணப்படுகின்றன. நியூயோர்க் மாகாணத் தில் நீர்மின்வலுவும் அதிகளவிலுளது.
4) இம்மூலப் பொருட்களைக் கைத்தொழில் மையங்களுக்கு ஒருங்கே கொண்டுவந்து சேர்ப்பதற்கு, நில நீர் வான் போக்குவரத்து கள் வடகீழ் ஐக்கிய அமெரிக்காவில் சிறப்பாக அமைந்துள்ளன. கப்பலோட்டத்திற்கு உகந்த நீர்பாதைகள் (பேரேரிகள், கால்வாய் கள், நதிகள்) வடகீழ்ப் பிரதேசத்தின் கைத்தொழில் விருத்திக்குத் தூண்டுகோலாக விளங்குகின்றன. இவை காரணமாகவே, "ஐக்கிய அமெரிக்காவின் பாரக் கைத்தொழில் மூன்று வளங்களில் முக்கியமாகத் தங்கியுள்ளது; அவை சுப்பீரியர் ஏரிப்பிரதேச இரும்புத்தாது, அப்பலாச் சியன் நிலக்கரி, பேரேரிகளின் போக்குவரத்து என்பனவாம்'' என்பர்.
5) தேர்ச்சியும் திறமையும் தொழில் நுட்பமும் வாய்ந்த தொழிலாளர்கள் வடகீழ் ஐக்கிய அமெரிக்கா வில் உள்ளனர். நிர்வாகத் திறன் வாய்ந்த நிர்வாகிகளும் இப்பிரதேசத்திலுள்ளனர். கைத்தொழி லாக்கங்களுக்குத் தேவையான மூலதனமும் ஏராளமாகப் பெறக் கூடியதாக இருக்கின்றது. அத்துடன், உற்பத்திப் பொருட்களுக்குப் பரந்த உள் நாட்டுச் சந்தையும் வெளி நாட்டுச் சந்தையும் ஐக்கிய அமெரிக்காவிலுளது. எல்லாவற்றிற்கும் மேலாக ஐக்கிய அமெரிக்கா வின் நிலையான அரசாங்கம் கைத்தொழில் விருத்திக்குத் தூண்டு கோலாகவுள்ளது.
கைத்தொழில் மையங்கள்
ஐக்கிய அமெரிக்காவின் கைத்தொழில் வலயத்தினுள் அமைந் திருக்கும் கைத்தொழில் மையங்கள் பின்வருவனவாகும்.
(அ) நியூ இங்கிலாந்து:- மேயின், நியூகம்சயர், வேமவுன்ற், மசே சூசெற், கொனற்றிகட் முதலான மாநிலங்களை உள்ளடக்கியதாக நியூ இங்கிலாந்துக் கைத்தொழில் வலயம் அமைந்துள்ளது. இப் பிர தேசம் நெசவுத் தொழில், தோல் தொழில், பாரமில் எந்திரவியற் றொழில் என்பனவற்றிற்குப் புகழ்பெற்றது. நீர் மின்வலுவும், காட்டு வளமும் இப்பிரதேசத்திலுள்ளன.
(ஆ) கட்சன் - மோஹோக் பள்ளத்தாக்கு :- நியூயோர்க் மாநிலத்தை இப்பிரதேசம் அடக்கியுள்ளது. பாரமில் கைத்தொழில்கள் இப் பிர

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
475
_டை
தேசத்தில் சிறப்புற்றுள்ளன, நியூயோர்க்கில் பல்வகைக் கைத்தொழில் கள் நடைபெற்று வருகின்றன. நவீன உடைகள், மின்சாரப் பொருட் கள், புகைப்படப் பொருட்கள், விஞ்ஞானக் கருவிகள், பேப்பர், இர சாயனப் பொருட்கள் என்பன இப்பிரதேசத்தில் உற்பத்தியாகின்றன,
• (இது மத்திய அத்திலாந்திக் கரையோரம் :- பிலடெல்பியா, போல்ரி மோர் . நகர மையங்களைச் சூழ்ந்து இப்பிரதேசம் அமைந்துள்ளது. இரும்புருக்குத் தொழில், கப்பல் கட்டுதல், விமானம் கட்டுதல், இர சாயனத் தொழில், மின்சாரப் பொருட் தொழில் என்பன இப்பிர தோத்தில் நடைபெறுகின்றன.
(ஈ) பிற்ஸ்பேக் - கிளீவ்லாண்ட் பிரதேசம்;- இரும்புருக்குத் தொழி லில் ஐக்கிய அமெரிக்காவிலேயே முதன்மை பெற்றிருக்கும் கைத் தொழிற் பிரதேசம் இதுவாகும்.
(உ) ஒகாயோ - இண்டியானாப் பிரதேசம்:- உலோகத் தொழிலிற்கு இப்பிரதேசம் புகழ்பெற்றது. இண்டியானோபொலிஸ், கொலம்பஸ், டேரொன், சின்சினாட்டி என்பன முக்கியமான கைத்தொழில் நகரங்க ளாகும். மோட்டார் வண்டி உதிரிப்பாகங்கள், இரசாயனப் பொருட் கள், தோற் பொருட்கள் என்டனவும் இப்பிரதேசத்தில் உற்பத்தியா கின்றன.
(ஊ) மிச்சிக்கன் ஏரிப் பிரதேசம்:- இக்கைத்தொழில் மையம் சிக் காக்கோ நகரைச் சூழ்ந்து அமைந்துள்ளது. மில்வாக்கி, றொக்போட் என்பனவும் இப்பிரதேசத்தினுள் அடங்குகின்றன. இரும்புருக்குத் தொழில். கப்பல் கட்டுதல், இறைச்சி பதனிடல் என்பன இப் பிர தேசப் பிரதான கைத்தொழில்களாகும்.
(எ) டெற்றொயிற் பிரதேசம்: - மோட்டார் வண்டிக் கைத்தொழி லில் இப்பிரதேசம் முதன்மை வாய்ந்தது, உலகப் புகழ்பெற்ற போர்ட் (Ford) கார் கம்பனி இங்கேயே உள்ளது.
(ஏ) சுப்பீரியர் ஏரிப் பிரதேசம் :- சுப்பீரியர் ஏரியின் மேற்குப் பாகத்தில் இரும்புத்தாது வயல்களுக்கு நடுவில் அமைந்திருக்கும் டுலுத் இரும்புருக்கு மையம் இப்பிரதேசத்தில் முதன்மையானது.
2. கலிபோர்ணியாப் பிரதேசம்
ஐக்கிய அமெரிக்காவின் கைத்தொழில் வலயத்திற்கு வெளியே, அமைந்திருக்கும் கைத்தொழில் மையங்களில் கலிபோர்ணியாப் பிர .

Page 32
48
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
தேசம் முதன்மையானது. உ ல கி லே யே கைத்தொழிலாக்கங்களில் விரைந்து முன்னேறி வரும் ஒரு பிரதேசம் இதுவாகும், கம்பல் கட்ட்டு தல், விமானங்கள் கட்டுதல் என்பன இப்பிரதேசத்தில் முதன்மை பெற்றுள்ளது. மீன்களைத் தகரத்தில் அடைத்தல் தொழில், மோட் டார் வண்டித் தொழில், ஆடை தயாரித்தல், எலெக்ரோனிக் தொழில் என்பன இப்பிரதேசத்தில் வளர்ச்சியுற்றுள்ளன.
கைத்தொழில் வகைகள்
இரும்புருக்குக் கைத்தொழில்
ஐக்கிய அமெரிக்காவின் இரும்புருக்குக் கைத்தொழில், முதன்முதல் வடகீழ்ப் பிரதேச அத்திலாந்திக் கரையோரத்திலேயே ஆரம்பிக்கப்பட் டது. ஆரம்பத்தில் இரும்புத்தாதை உருக்குவதற்குக் கட்டைக்கரியே தேவைப்பட்டதால், காடுகளை அடுத்தே இரும்புருக்கு உலைக்களங்கள் அமைந்திருந்தன. 1840ஆம் ஆண்டிற்குப் பின், நிலக்கரியின் உபயோ கம் ஏற்பட்டதும், இரும்புருக்கு உலைக்களங்கள் நிலக்கரி வயல்களை அடுத்து அமைந்தன. ஐக்கிய அமெரிக்காவின் இரும்புருக்கு மையங் களில் பெரும்பாலானவை வடகீழ்ப் பிரதேசத்திலேயே அமைந்துள்ளன.
ஐக்கிய அமெரிக்காவில் ஆறு பிரதேசங்கள் இரும்புருக்குத் தொழி லில் குறிப்பிடத்தக்க முதன்மை பெற்றனவாக விளங்கி வருகின்றன . அவை:
(அ) அலடாாமாப் பிரதேசம் (ஆ) பிற்ஸ்பேக் பிரதேசம் (இ) சிக்காகோப் பிரதேசம் (ஈ) டூலுத் பிரதேசம் (உ) ஈரி ஏரிப் பிரதேசம் (ஊ) ஓன்ராறியோ ஏரிப் பிரதேசம்
(அ) அலபாமா பிரதேசம்
ஐக்கிய அமெரிக்காவின் இரும்புருக்குப் பிரதேசங்களில் அலபாமா இரும்புருக்குப் பிரதேசம் முக்கியமானது. வட அலபாமாவில் பேமிங்

ஐக்கிய அமெரிக்காவின் புவியில்
49
காம் பிரதேசத்தில் இம்மையம் அமைந்துள்ளது. அலபாமாப் பிர தேசத்தில் மிகச் சிறந்த இரும்புத்தாது, நிலக்கரி, தொலமைற் ஆகி யன யாவும் இருபத்தைந்து மைல் சுற்றாடலுள் கிடைக்கின்றன. இம் மூலப் பொருட்களை இரும்புருக்கு ஆலைகளில் ஒன்று சேர்ப்பதும் மிக வும் மலிவாக நடைபெறுகின்றது. இப்பிரதேசத்தில் இருபது இரும் புருக்கு ஆலைகள் சிறப்பாக இயங்கி வருகின்றன,
பேபிங்காம் பிரதேசத்திற்குத் தென்கிழக்கே தரமான இரும்புத் தாதைக் கொண்டிருக்கும் செம்மலைப் பிரதேசம் அமைந்துள்ளது. இந்த இரும்புத்தாது தானே இளகுந் தன்மையது . மேலும், நிலக்கரி பேமிங்காம் பிரதேசத்திற்கு மேற்கே வாரியர் நிலக்கரிப் படுக்கையி லிருந்து, கிடைக்கின்றது. அத்துடன் பேமிங்காமிற்கு வடகிழக்கிலும், தென்மேற்கிலுமுள்ள பள்ளத்தாக்குகளில் தொலமைற் காணப்படுகின் றது. இம்மூலப் பொருட்கள் மூன்றும் ஒருங்கே கிடைப்பது, இப்பிர தேசத்தின் கைத்தொழில் விருத்திக்குத் தூண்டுதலாகவுள்ளது; சிறப் பான இருப்புப் பாதைப் போக்குவரத்து மூலம் பொருட்களை இரும் புருக்கு ஆலை xளில் சேர்க்கவும், உற்பத்திப் பொருட்களை சந்தைப் படுத்தவும் பேருதவியாக இப்பிரதேசத்தில் இருக்கின்றன.
தன்மேற்கிலும் பொருட்கள் மூடத் தூண்டுதலாக இளை இரும்
இப்பிரதேசத்தில் கறுப்பர்களும் வெள்ளையர்களுமாக ஏராளமான தொழிலாளர் கிடைக்கின்றனர்; கூலியும் குறைவு. இப்பகுதிகட்கு வடமேற்கில் சமீபமாகவுள்ள நீர்த்தேக்கத்திலிருந்து போதியளவு நீர் கிடைக்கின்றது. இத்தகைய வாய்ப்பான நிலைமைகளை அலபாமா பெற் றுள்ளது இதன் விருத்திக்குக் காரணமாகும்.
ஐக்கிய அமெரிக்காவின் பன்றியிரும்பில் ஏறத்தாழ 5 சதவீதத்தை யும், உருக்கில் 5 சதவீதததையும் இப்பிரதேசம் உற் பத்தி செய்து வருகின்றது; உற்பத்தியில் அரைப்பங்கினை இப்பிரதேசமே உபயோ கிக்கின்றது .
(ஆ) பிற்ஸ்பேக் பிரதேசம்
ஐக்கிய அமெரிக்காவின் இரும்புருக்கில் பிற்ஸ்பேக் பிரதேசம் ஐந்தி லொரு பங்கை உற்பத்தி செய்து வருகின்றது. மூலப்பொருட்கள் சாதக மாக அமைந்திருக்கின்ற பகுதிகளில் கைத்தொழில்கள் அமைவது இயற்கை மூலப்பொருட்களைப் பொறுத்தளவில் பிற்ஸ்பேக் பிரதேசம் மிகச் சாதக மான பகுதியில் அமைந்திருக்கின்றது. இரும்புருக்குத் தொழிலிற்குத் தேவையான நிலக்கரி, இரும்புத்தாது, சுண்ணக்கல் முதலியன போதி யளவு பெறக்கூடியதாகவுள்ளது.

Page 33
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
நிலக்கரி வயலின் மையப்பகுதியில் பிற்ஸ்பேக் அமைந்திருக்கின்றது. பிற்ஸ்பேக்கிற்குத் தேவையான கற்கரியைத் தரும் நிலக்கரியை அப்ப லாச்சியன் நிலக்கரி வயல்கள் அளிக்கின்றன. உலகிலேயே அதிக அள வில் உற்பத்தி செய்யும் வயலாகவும் உலகிலேயே தரம் கூடிய நிலக் கரியை உற்பத்தி செய்யும் வயலாகவும் விளங்கும் அப்பலாச்சியன் நிலக்கரி வயலில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அமெரிக் காவில் வருடாவருடம் ஏறக்குறைய 54 கோடி தொன் புகைமிகு நிலக்கரியும், அனல்மிகு நிலக்கரியும் உற்பத்தியாகின்றன. இதில் 3 பங்கினை அப்பாலாச்சியன் நிலக்கரி வயல்கள் உற்பத்தி செய்கின்றன.
வட. அப்பலாச்சியன் வயலின் நிலக்கரிச் சுரங்கத் தொழிலின் விருத் திக்குப் பல காரணிகளுள்ளன. இங்கு காணப்படும் நிலக்கரிப் படுக்கை கள்புவியின் மேற்பரப்பிற்கு மிகுஅண்மையில் காணப்படுவதோடு பரந்தும் காணப்படுகின்றன. குறைகளினாலோ பிளவுகளினாலோ இந்நிலக்கரிப்படுக் கைகள் முறிவுற்று அமையவில்லை. கற்கரி வெப்பத்தையும் நீராவியையும் பெறக்கூடிய தர மான நிலக்கரி வட அப்பலாச்சியனில் மட்டுமே இருக் கிள்றது. மேலும் அருவிகளின் ஆழ வெட்டுண்ட பள்ளத்தாக்குகளில் நிலக்கரிப் படுக்கைகள் வெளித்தோன்றித் தெரிகின்றன. நிலக்கரிப் படுக் கைகள் தொடர்ச்சியாயும், கிடையாகவும் காணப்படுவதால் நிலக்கரியை மலிவாக உற்பத்தி செய்ய முடிகின்றது. இங்குள்ள நிலக்கரிச் சுரங்கங்களின் மேற்கூரைகள் வன்மையான பாறைப் படைகளாக இருப்பதால், முட்டு மரங்களுக்காகச் செலவிடப்பட வேண்டியதில்லை. இந்நிலக்கரி வயல்க ளுக்கு அண்மையில் பல கைத்தொழில் நகரங்களுள்ளன. அவைஇவற்றின் விருத்திக்குத் தூண்டுகோலாகவுள்ளன. மேலும், இருப்புப் பாதைகளும் நீர்ப்பாதைகளும் இங்கு நன்கு அமைந்திருப்பது, கொண்டு செல்லற் செலவைக் குறைத்துள்ளது. இவை காரணமாக, வட அப்பலாச்சியன் பிரதேசம் நிலக்கரியை அதிகளவில் மலிவாக உற்பத்தி செய்து வருகின் றது. மேலும், மொனங்கொல் எனும் நதி பிற்ஸ்பேக்கினூடாகப் ப பாய்வதால், நிலக்கரியைக் கொண்டுவர இலகுவாகவுள்ளது.
இரும்புத்தாதுப் படிவுகள் உள்ள வயல்கள் பிற்ஸ்பேக்கிலிருந்து அதிக தூரத்தில் இருந்தாலும் - அதாவது சுப்பீரியர் ஏரியின் மேற்குப் பாகத்தில் இருந்தாலும், அவற்றைப் பேரேரிகளுக்கு ஊடாக விரைவாகக் கொண்டு வரக்கூடியதாக இருக்கின்றது. பிற்ஸ்பேக் பிரதேசத்திலிருந்து 1000 மைல்களுக்கு அப்பால் இரும்புத்தாதுப் படிவுகள் இருந்தும், பேரேரி கள் சிறந்த நீர்ப்பாதைகளாக இருப்பதனால், பிற்ஸ்பேக் தனக்குத் தேவையான இரும்புத்தாதைப் பெறக்கூடியதாக உள்ளது.

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
51
பிற்ஸ்பேக் பிரதேசத்தின் இரும்புருக்குத் தொழிற்குத் தேவையான சுண்ணக்கல், பிற்ஸ்பேக்கிலிருந்து 100 மைல்களில் அமைந்துள்ள கன்ரிங். ரன் எனும் பிரதேசத்தில் போதியளவுள்ளது. இவ்வாறு இரும்புருக்குத் தொழிற்குத் தேவையான மூலப்பொருட்களும் வலுவும் கிடைக்கக் கூடியதாக இருப்பதால் பிற்ஸ்பேக் பிரதேசத்தில் இரும்புருக்குத் தொழில் விருத்தியடைந்துள்ளது.
பிற்ஸ்பேக் பிரதேசத்தில் ஏறத்தாழ 25 இலட்சம் மக்கள் வாழ்கின் றனர். அதனால், இரும்புருக்குத் தொழிலிற்குத் தேவையான போதிய தொழிலாளர் வசதியும், உற்பத்திப் பொருட்களுக்குச் சந்தை வசதியும் காணப்படுகின்றன. ஐரோப்பாவின் பல பகுதி மக்களும் இங்கு விரும்பிக் குடியேறுவதால், திறமை வாய்ந்த தொழிலாளர் இங்கு கிடைக்கின் றனர்.
2 பிற்ஸ்பேக் இரும்புக்கும் உருக்கிற்கும் உள்நாட்டிலும் வெளிநாட்டி லும் போதிய சந்தைகளுள்ளன. பிற்ஸ்பேக்கில் இரும்புருக்குக் கைத் தொழிலை ஒட்டிப் பல துணைக் கைத்தொழில்கள் தோன்றியுள்ளன. இத் துணைக் கைத்தொழில்களுக்குப் பிரதம கைத்தொழிலின் உற்பத்திப் பொருட்கள் இன்றியமையாதனவாகவுள்ளன.
மூலப்பொருட்களைப் பிற்ஸ்பேக்கிற்குக் கொண்டு வந்து சேர்க்க உத வும் போக்குவரத்து வசதிகள், உற்பத்திப் பொருட்களைச் சந்தைகளுக்கு எடுத்துச் செல்ல உதவுகின்றன. ஒகாயோ, மிசிசிப்பி நதிகள் நியூ ஓலி யன்ஸ் போன்ற குடாக்கரைத் துறைமுகங்களுக்கு உற்பத்திப் பொருட் களை எடுத்துச் செல்ல உதவுகின்றன. இவற்றைவிடச் சிறந்த இருப்புப் பாதைகளும் பிற்ஸ்பேக்கின் கைத்தொழிலிற்குத் தூண்டுதலாகவுள்ளன.
மூலப்பொருட்கள், வலு, முதல், தொழிலாளர் வசதி, சந்தை, போக்கு வரத்து வசதிகள் என்பனவற்றைப் பெறக்கூடிய சாதகமான இடவமைப் பைப் பிற்ஸ்பேக் கொண்டிருப்பதால் இரும்புருக்குக் கைத்தொழில் இங்கு விருத்தியடைந்துள்ளது. இன்று ஐக்கிய அமெரிக்காவின் ஏனைய பல பகுதிகளிலும் இரும்புருக்குத் தொழில் விருத்தியடைந்திருக்கின்றது, சிக் காக்கோ, டூலுத் போன்ற பகுதிகளில் இரும்புருக்குத் தொழில் விருத்தி யடைந்தமைக்குப் பிற்ஸ்பேக் இரும்புருக்குத் தொழில் எதிர்நோக்கிய ஒருசில பிரச்சனைகளும் காரணங்களாகும். இரும்புத்தாதைப் பிற்ஸ்பேக் கிற்குக் கொண்டுவர பேரேரிகள் பெரும் துணையாக இருந்த போதிலும், கிளீவ்லாண்ட் வரை மட்டுமே இரும்புத்தாதை நீர்வழி மூலம் கொண்டு வர முடியும், கிளீவ்லாண்டிலிருந்து பிற்ஸ்பேக் வரை இரும்புப்பாதை

Page 34
52
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
மூலமே தாதைக் »ொண்டு வரவேண்டி இருக்கிறது. மேலும், பிற்ஸ் பேக்கில் இடவசதியின்மை ஒரு பெரும் பிரச்சனையாகும்.
சிக்காக்கோப் பிரதேசம்
சிக்காக்கோப் பிரதேசம் இரும்புருக்கு உற்பத்தியில் பிற்ஸ்பேக் பிரதேசத்திற்கு அடுத்து, முக்கியத்துவம் வகிக்கின்றது. சிக்காக்கோக் | பிரதேசத்தில் இரும்புருக்குக் கைத்தொழில் விருத்தியுற்றிருப்பதற்குப் பல ஏதுக்கள் துணை நின்றுள்ளன. மூலப் பொருட்களுக்கு மிக அண்மையில் சிக்காக்கோ அமைந்திருக்கின்றது. சுப்பீரியர் ஏரிக்கரை வயல்களிலிருந்தே சிக்காக்கோவும் தனக்குத் தேவையான இரும்புத்தாதை பெறுகின்றது. பிற்ஸ்பேக்கிலும் பார்க்ச, இரும்புத்தாது சிக்காக்கோவிற்கு மிக அண்மை யில் அமைந்திருப்பது இத்தொழிலின் விருத்திக்கு மிக வாய்ப்பாக அமைந் துள்ளது. சிக்காக்கோப் பிரதேசத்திற்குத் தேவையான நிலக்கரி, தென் இலினோய், கெண்டகி, அப்பலாச்சியன் முதலிய பகுதிகளிலிருந்து இருப்புப் பாதைகளின் வழியாகவும் ஏரிகளின் வழியாகவும் கொண்டு வரப்படுகின்றது. இரும்புருக்குத் தொழிலிற்குத் தேவையான சுண்ணக்க்ல் கூறன் ஏரியின் மேற்குக் கரையிலிருந்தும், மிக்சிக்கன் ஏரியின் கிழக்குக் கரையிலிருந்தும் இலகுவாகக் கிடைக் கின்றது. இத்தகைய சாதக நிலை" மைகள் சிக்காக்கோவின் இரும்புருக்குத் தொழிலை விருத்தியுற வைத் துள்ளன.
சிக்காக்கோ, மிக்சிக்கன் ஏரியின் தென் அந்தத்தில் அமைந்திருக் கின்றது. அதனால், இரும்புத்தாதையும் சுண்ணக்கல்லையும் பேரேரிகளு டாக உலைக்களங்களில் நேரடியாகவே சேர்த்துவிட முடிவதால், போக்கு வரத்துச் செலவு குறைவாகவுள்ளது. இப்பிரதேசத்தின் மேற்குப் பகுதி கள் பயிர்ச்செய்கைப் பிரதேசங்களாக விளங்குவதால், அப்பகுதிகளில் சிக்காக்கோவின் உற்பத்திப் பொருட்களுக்கு விரிவான சந்தை வசதி காணப்படுகின்றது. சிக்காக்கோவில் ஐக்கிய அமெரிக்காவின் இருப்புப் பாதைகள் குவிமையமாக வந்து ஒருங்குவது இத்தொழிலிற்குத் தூண்டு தலாக விளங்குகின்றது. |
சிக்காக்கோப் பிரதேசத்தில் போதியளவு நிலம் மலிவாகப் பெறக் கூடியதாக இருக்கின்றது; இப்பிரதேசத்தின் நிலம் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு ஏற்றதாக இல்லாமையே இதற்குக் காரணமாகும். மேலும், கைத்தொழிலுக்குத் தேவையான நன்னீரை மிக்சிக்கன் ஏரியி லிருந்து பெறமுடிகின்றது; திறமையும் தேர்ச்சியும் மிக்க தொழிலாளர்கள் இப்பிரதேசத்தில் உள்ளனர். அத்துடன் பிற்ஸ்பேக் கைத்தொழிலில் ஏற்பட்ட அனுபவம், சிக்காக்கோவில் பயன்பட்டதால் உற்பத்திச் செலவு

ஐக்கிய அமெரிக்கவின் புவியியல்
53
குறைவாக இருக்கின்றது. இந்த ஏதுக்கள் சிக்காக்கோவில் இரும்புருக்குத் தொழில் அமையக் காரணங்களாக உள்ளன.
(ஈ) நீலுத் பிரதேசம்
சுப்பீரியர் ஏரியின் மேற்குக் கரையோரத்தில் டூலுத் பிரதேசம்காணப் படுகின்றது. நிலக்கரி வயல்களின் மத்தியில் பிற்ஸ்பேக் அமைந்திருப்பது > போல, இரும்புத்தாது வயல்களின் மத்தியில் டூலுத் அமைந்திருக்கின்றது. மெசாபி. கியூனா, வேமிலியன் மெனோமினி முதலான இரும்புத்தாது வயல்கள் டூலுத் பிரதேசத்தைச் சூழ்ந்து காணப்படுவதாலேயே, இங்கு இரும்புருக்குக் கைத்தொழில் ஆரம்பிக்கப்பட்டது. 20-ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் மெசாபி, ஐக்கிய அமெரிக்காவின் இரும்புத்தாதில் 50-சதவீதத்தை உற்பத்தி செய்தது. மெசாபிப்படுக்கைகள் மிகப்பரந்தன. தாதுப்படுக்கை 200 அடிகளுக்குக்குறைவாக, புவிமேற்பரப்பிற்கு அண்மை யாகக் காணப்படுகின்றது. மேலும், இங்கு அகழ்ந்தெடுக்கப்படும் தாது அதிக கழிவைக் கொண்டதன்று, சிறந்த தரமானதாகவுள்ளது.
டூலுத் பிரதேசத்திற்குத் தேவையான நிலக்கரி அப்பலாச்சியன் வயல்களிலிருந்து பெறப்படுகின்றது. நிலக்கரி வெகு தூரத்தில் இருந்து பெறப்பட்ட போதிலும் கொண்டுவருதற் செலவு மிகவும் குறைவாகவே உள்ளது. சுப்பீரியர் ஏரிக் கரையிலிருந்து பிற்ஸ்பேக் பகுதிக்கு இரும்புத் தாதை ஏற்றிச் செல்லும் பேரேரிக் கப்பல்கள் தாதை இறக்கிவிட்டுத் திரும்பி வரும்போது, நிலக்கரியை ஏற்றி வருகின்றன. டூலுத் பிரதே சத்தின் மேற்குப் பாகத்தில் பயிர்ச்செய்கை விருத்தியடைந்தால், மக் கள் இப்பகுதிகளில் செறிவாகக் குடியேறியுள்ளனர். அதனால், தொழி லாளர் வசதியும் சந்தை வசதியும் டூலித் பிரதேசத்திற்குக் கிடைத் துள்ளன.
(உ) ஈரி ஏரிப் பிரதேசம்
டெற்றோயிற்றிலிருந்து பபுலோவரையுள்ள ஈரி ஏரியின் தென்கரைப் பிரதேசம் இரும்புருக்குத் தொழிலில் இன்று விருத்தியடைந்து வருகிறது. டெற்றோயிற், தெலாடோ, கிளீவ்லாண்ட், ஈரி, பபுலோ என்பன இரும் புருக்கு ஆலைகளைக் கொண்டுள்ள நகரங்களாகும். இந்நகர்கள் மூலப் பொருட்கள் வந்து சேரும் பிரதேசமாக அமைந்திருக்கின்றன. சுப்பீரியர் ஏரிக் கரையிலிருந்து இரும்புத்தாது, கப்பல் கள் மூலம் இம்மையங்களில் கொண்டுவந்து சேர்க்கப்படுகின்றது. அப்பலாச்சியன் பகுதியிலிருந்து - தேவையான நிலக்கரியை இப்பகுதிகள் பெறுகின்றன. அத்துடன் நயாகார நீர்வீழ்ச்சியிலிருந்து பெறப்படும் நீர் மின்வலுவும் ஈரி ஏரிப்பிரதேசக் கைத் தொழிலுக்குப் பெரும் துணைபுரிகின்றது. கூறன் ஏரியின் மேற்குக் கரையி
(ழிலுக்குப் பெறப்படும் நீர் பெறுகின்றன.

Page 35
54
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
லிருந்து பொதியளவு சுண்ணக்கல் இம்மையங்களுக்கு ஏரிகளூடாக வந்து சேர்கின்றது. நன்னீர், திறன் மிக்க தொழிலாளர் வசதி, சிறப்பான போக்குவரத்து வசதிகள் என்பனவும் ஈரி ஏரிப் பிரதேச இரும்புருக்குத் தொழிலிற்குத் தூண்டுதலாகவுள்ளன. மேலும், பபுலோவிலிருந்து கட்சன் நதியை இணைத்து அமைந்திருக்கும் ஈரிக் கால்வாய், நியூயோக் துறை. முகத்துடன் நேரடியாகக் கப்பல்கள் செல்ல வாய்ப்பளித்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவினதும், கனடாவினதும் கைத்தொழில் மையங்களுக்கு ஈரி ஏரிப் பிரதேச இரும்பும், உருக்கும் ஏராளமாக விற்பனையாகின்றன.
(ஊ) ஒன்ராறியோ ஏரிப் பிரதேசம்
ஒன்ராறியோ ஏரியின் தென்கரைப் பிரதேசமும், வடகீழ் ஐக்கிய அமெரிக்காவின் இன்னுமோர் சிறிய இரும்புருக்குப் பிரதேசமாகும். றொக்செஸ்ரர், இரும்புருக்குத் தொழில் நன்கு நடைபெறும் சிறியதொரு பகுதியாகும். இப்பகுதியும் சுப்பீரியர் ஏரிக்கரை இரும்புத்தாதையும், அப்பலாச்சியன் நிலக்கரி, நயாகார நீர்மின்வலு, கூறன் ஏரிச் சுண்ணக்கல் என்பனவற்றையும் ஆதாரமாகக் கொண்டு இரும்புருக்குத் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றது.
யந்திர உற்பத்திக் கைத்தொழில்
ஐக்கிய அமெரிக்கா பல் வ  ைக ய ா ன யந்திர உற்பத்தியிலும், குறிப்பிடத்தக்களவு முதன்மை பெற்று விளங்குகின்றது. நெசவு யந் திரங்கள், மின்னியல் யந்திரங்கள், அச்சு யந்திரங்கள், பாற்பண்ணை யந்திரங்கள், உலோகவேலை யந்திரங்கள், உணவுக் கைத்தொழில் யந் திரங்கள் முதலான பல்வேறு யந்திரங்களும் உற்பத்தியாகின்றன. யந் திர உற்பத்திக் கைத்தொழிலிற்கு இரும்பும் உருக்குமே முக்கிய மூலப் பொருளாகும். இம்மூலப் பொருள் ஐக்கிய அமெரிக்காவில் அதிகள வில் கிடைப்பதாற்றான், இப்பகுதியில் யந்திர உற்பத்தித் தொழிலும் விருத்தியுற்றுள்ளது.
நியூ இங்கிலாந்தின் தென்பாகமான மசெசூசெற், கொனற்றிகட் எனும் பகுதிகள் ஆரம்பகாலத்தில் இருந்தே நெசவு யந்திரங்களை உற்பத்தி செய்து வருகின்றன. மின்னியல் யந்திரங்கள் இலினோயிலிருந்து வட நியூயோக் வரையுள்ள பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. தென் நியூஇங்கிலாந்துப் பகுதியிலும் மின்னியல் யந்திரங்கள் உற்பத்தி செய்யப் படுகின்றன. மசெசூசெற், கொனற்றிகட், நியூயேசி ஆகிய பகுதிகளில் உலோக வேலை யந்திரங்கள் செய்யப்படுகின்றன. மேற்குப் பென்சில்

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
55
வேனியாவில் அச்சு யந்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
கொனற்றிகட் மாகாணத்தில் கடிகாரம், தட்டச்சுப்பொறி. தையல் யந்திரம் என்பன உற்பத்தி செய்யப்படுகின்றன. ரொக்செஸ்ரரில் புகைப் படக் கருவிகள் செய்யப்படுகின்றன.
' ' -
கப்பல் கட்டுந் தொழில்
தற்காலக் கப்பல்களைக் கட்டுவதற்கு இரும்பும் உருக்குமே அத்தியா வசியமான மூலப்பொருளாகத் தேவைப்படுகின்றது. அதனால், ஐக்கிய அமெரிக்காவில் கப்பல் கட்டுந்தொழில் விருத்தியுற்றமை வியப்பான தன்று. ஐக்கிய அமெரிக்காவில் நியூ இங்கிலாந்துக் கரையோரம், மத் திய அத்திலாந்திக் கரையோரம், பேரேரிகள், பசுபிக் கடற்கரை, தென் அத்திலாந்திக் வளைகுடாக்கரை ஆகிய ஐந்து பெரும் பிரதேசங்களில் கப்பல் கட்டுந்தொழில் நடைபெற்று வருகின்றது. மத்திய அத்திலாந் திக் கரையோரத்திலேயே அதிக அளவில் கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன,
நியூ இங்கிலாந்தில் மேயின், போட்ஸ்மத், நியூகம்சயர், றோட் தீவு, கொனற்றிகட் ஆகிய பகுதிகளில் பெரிதும் சிறு கப்பல்கள், வள் ளங்கள் என்பனவே கட்டப்படுகின்றன, மசெசூசெற்றிலுள்ள குவின்ஸ் எனும் பகுதி தற்காலப் பெரிய கப்பல்களைக் கட்டி வருகின்றது, நியூ இங்கிலாந்துப் பிரதேசம் ஆரம்பத்தில் வகித்த முக்கியத்துவத்தை இன்று கப்பல் கட்டுந் தொழிலில் இழந்துவிட்டது. நவீன கப்பல் களுக்கு உருக்கு அதிகளவில் தேவை. அதனால், மத்திய அத்திலாந்திக் பிரதேசத்தின் கப்பல் கட்டுந் தளங்கள் கட்சன் நதி, டெலாவயர் விரிகுடா, செசாபீக் விரிகுடா என்பனவற்றில் அமைந்துள்ளன. நியூ யோர்க், பிலடெல்பியா, கமிடன், பரோஸ்பொயின்ற், நியூபோட் ஆகிய நகர்களில் கப்பல் கட்டுந் தளங்களுள்ளன, பேரேரியில் பபுலோ, ஈரி, கிளீவ்லாண்ட், தெலாடோ, டெற்றோயிற் . சிக்காக்கோ, மில்வாக்கி என்பன கப்பல் கட்டுந் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றன. இரும்புருக்கு அண்மையில் கிடைப்பது இத்தொழிலிற்குப் பெருவாய்ப்பாகும்.
மெக்சிக்கோ வளைகுடாவிலும் முக்கியமான கப்பல் கட்டுந் தளங்க ளுள்ளன. தம்பா, மோபீல் , நியூஓலியன்ஸ், போமொண்ட் என்பன குறிப்பிடத்தக்க கப்பல் கட்டுந் தளங்களாகும். விரிகுடாத் தளங்களில் ஐக்கிய அமெரிக்காவில் கட்டப்படும் கப்பல்களின் பெறுமதியில் ஐந்தி லொரு பங்கு கட்டப்படுகின்றது. பசுபிக் கரையோரத்தில் சன்பிரான்

Page 36
56
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
சிஸ்கோ. லொஸ்அஞ்சலீஸ், சியாற்றில், போர்ட்லாண்ட் என்பன முக்
கிய கப்பல் கட்டும் தளங்களாகும்.
மோட்டார் வண்டிக் கைத்தொழில்
மோட்டார் வண்டிக் கைத்தொழிலில் ஐக்கிய அமெரிக்காவின் வட , கீழ்ப் பிரதேசம் மிக முக்கியம் வாய்ந்ததாக விளங்குகின்றது. சிறப்பாக மிக்சிக்கன் ஏரியையும் ஈரி ஏரியையும் சூழ்ந்துள்ள நகரங்கள் மோட்டார் வண்டிக் கைத்தொழிலில் பெருவிருத்தியுற்றனவாக உள்ளன. ஐக்கிய அமெரிக்காவில் உற்பத்தியாகும் மோட்டார் வண்டிகளில் 86 சதவீதம் இந்நகரங்களிலேயே உற்பத்தியாவது குறிப்பிடத்தக்கது.
மோட்டார் வண்டிக் கைத்தொழிலிற்குத் தேவையான முக்கிய மூலப் பொருளான இரும்பும் உருக்கும் ஐக்கிய அமெரிக்காவில் அதிகளவில் இலகுவாகக் கிடைப்பதும், ஐக்கிய அமெரிக்காவில் தனிமனித வருவாய் உயர்வாயும், வாழ்க்கைத்தரம் உயர்வாயும் இருப்பதும் இந்நாட்டில் மோட்டார் வண்டிக் கைத்தொழில் பெருவிருத்தியுறக் காரணங்க ளாகும்.
டெற்றோயிற் மோட்டார் வண்டிக் கைத்தொழிலில் மிக முக்கியமான மையமாகும்; டெற்றோயிற்றே இத்தொழிலில் முதன்மை வாய்ந்த மைய மாக விளங்கி வருகின்றது. மில்வாக்கி, பிலடெல்பியா, சிக்காக்கோ, கிளீவ்லாண்ட், பபுலோ எனும் பகுதிகளும் மோட்டார்வண்டி உற்பத்தியில் ஈடுபட்டிருக்கின்றன. வடகீழ்ப்பிரதேசத் தொழிலாளர்களில் பங்கினர் மொட்டார் வண்டிக் கைத்தொழிலிலீடுபட்டிருக்கின்றனர். ஏறக்குறைய 63 கம்பனிகள் மோட்டார்வண்டி உற்பத்தியில் ஈடுபட்டிருக்கின்றன, இதில் போர்ட் கம்பனி மிக முக்கியமானதாகும்,
நெசவுக் கைத்தொழில்
10t
பருத்தி நெசவுத் தொழில்
- ஐக்கிய அமெரிக்காவில் கிழக்குப் பகுதியே பருத்தி நெசவுக் கைத் தொழிலில் முதன்மை வாய்ந்த பகுதியாகும்; கிழக்குப் பகுதியில் ஆயிரத் துக்கு மேற்பட்ட நெசவு ஆலைகள் உள்ளன. ஐந்து இலட்சத்திற்கு மேற் பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். வடகீழ் ஐக்கிய அமெரிக்காவில் பருத்தி நெசவுத் தொழிலில் நியூ இங்கிலாந்துப் பிரதேசம் முக்கியம் பெறுகின்றது. நியூ இங்கிலாந்துப் பிரதேசம் பருத்தி நெசவுத்

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
தொழிலில் பெருவிருத்தியுற்றிருப்பதற்குப் பல காரணிகள் தூண்டுதலாக இருந்துள்ளன. அவை:
(அ) நியூ இங்கிலாந்துப் பிரதேசத்தின் நிலம் பயிர்ச்செய்கை நட வடிக்கைகளுக்கு ஏற்றதாக இல்லை; பிளைத்தோசீன் பனிக்கட்டியாற்றுக் காலத்தில் இப்பிரதேசம் அரிப்பிற்கு உட்பட்டதால், மேற்பரப்பு மட் போர்வை நீக்கப்பட்டு விட்டது: பெருமணிகளையுடைய மண்ணும் சிறு கற்களும் நிறைந்ததாகவே இப்பிரதேச மண் இருப்பதால், பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் நன்கு நடைபெற உகந்ததாக இல்லை. அதனால், இங் குள்ள மக்கள் கைத்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். வள மற்ற மண் கைத்தொழில்களில் ஈடுபடத் தூண்டியுள்ளது.
(ஆ) நியூ இங்கிலாந்துப் பிரதேசத்தில் குடியேறிய மக்களுக்கு நெசவுத் தொழிலே தெரிந்த ஒரு தொழிலாக இருந்தது . ஐரிஸ், இங்கிலாந்து, பிரான்ஸ் நாட்டு மக்கள் இங்கு குடியேறினர். இவர்கள் தம் தாய் நாட்டில் நன்கு பழகிய நெசவுத் தொழிலையே, தாம் குடி யேறிய இப்பிரதேசத்திலும் ஆரம்பித்தனர். அவர்கள் வினைத்திறன் மிக்கவர்களாக இருந்தனர். மேலும், போதியளவு தொழிலாளர் வசதி நியூ இங்கிலாந்துப் பிரதேசத்தில் இருக்கின்றது.
(இ) பருத்தி நெசவுத் தொழிலிற்குத் தேவையான மூல தனம் நியூ இங்கிலாந்துப் பிரதேசத்தில் இலகுவிற் பெற முடிந்தது. ஆரம் பத்தில் குடியேறிய மக்களது பணமும், இப்பிரதேசத்தில் மீன்பிடி விருத்தியால் பெறப்பட்ட பணமும் நெசவுத் தொழிலில் முதலிடு செய்யப்பட்டன.
(ஈ) மூலப்பொருளான பருத்தியைக் கிழக்கிந்திய தீவுகளிவிருந்து. ஆரம்பத்தில் மலிவாகப் பெறமுடிந்தது; பின் ஐக்கிய அமெரிக்காவின் பருத்தி வலயத்திலிருந்து பெறமுடிகின்றது : வலையமைப்பிற்றிறமை யுடன் அமைந்து இயங்கும் போக்குவரத்துப் பாதைகள் பருத்தியை நியூ இங்கிலாந்தில் கொண்டு வந்து குவிக்கின்றன. அதேபோல உற்பத்திப் பொருட்களைச் சந்தைகளுக்குக் கொண்டு செல்லப் பொஸ்தன், நியூ யோர்க் போன்ற துறைமுகங்கள் பெருந் துணை புரிகின்றன.
(உ) நீண்ட மாரியும் குறுகிய கோடையுமுடைய நியூ இங்கிலாந்தின் கால நிலை பயிர்ச்செய்கை நடவடிக்கைக்கு உவப்பற்றது. ஆனால் ஈரம் செறிந்த பகற்பொழுதுகள், நூல் நூற்றலிற்கு ஏற்றன.
(ஊ) நியூ இங்கிலாந்தின் பருத்தி நெசவு ஆலைகள் பெரிதும் அருவி களை அடுத்து அமைந்திருக்கின்றன, அதனால், நேசவிற்குத் தேவை

Page 37
58
ஐக்கிய அமெரிக்கவின் புவியியல்
யான நன்னீர் பெறக்கூடியதாக உள்ளது. அத்துடன். இப்பிரதேசத் தில் நன்கு விருத்தியுற்றுள்ள நீர்மின்வலு, நெசவு யந்திரங்களை இயக் கும் மலிவான வலுவாக இருக்கின்றது.
(எ) நியூ இங்கிலாந்துப் பிரதேசத்தின் அயற் பிரதேசங்களி லிருந்து, இப்பிரதேசத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களை ஏராளமாக இறக்குமதி செய்ய முடிவதால், இங்குள்ள மக்கள் நெசவுத் தொழிலில் முழுக்கவனத்தையும் செலுத்தியுள்ளனர்.
இக்காரணிகள் யாவும், நியூ இங்கிலாந்துப் பிரதேசத்தின் பருத்தி நெசவுத் தொழிலை முன்னேற வைத்துள்ளன. இப்பிரதேசத்தில் நூல் நூற்கும் ஆலைகள், நெசவு செய்யும் ஆலைகள், உற்பத்தியை நிறைவு யடுத் தும் ஆலைகள் என மூவகையாக ஆலைகள் இயங்கிவருகின்றன. ஏறத் தாழ 300 நெசவு ஆலைகள் வரையில் இப்பிரதேசத்திலுள்ளன . ஐக்கிய அமெரிக்காவின் பண்படுத்தாப் பருத்தியில் 6 சத வீதத்தை நியூ இங்கி லாந்துப் பிரதேசம் பயன்படுத்தி வருகின்றது.
ஐக்கிய அமெரிக்காவில் தென் அப்பலாச்சியன் பிரதேசமும் பருத்தி நெசவுத் தொழிலில் முதன்மை பெற்று விளங்கி வருகின்றது. இப் பிரதேசத்தில் வடகரோலினா, தென்கரோலினா, ஜோர்ஜியா, அல் பாமா, ரெனசி ஆகிய மாநிலங்களில் பருத்தி நெசவு முக்கியம் பெற்று விளங்குகின்றது. தென்கரோலினாவும், ஜோர்ஜியாவும் பருத்தி நெச வில் மிக முக்கியமான மா நிலங்களாகும், இப்பிரதேசம் பருத்தி நெச வில் விருத்தியுற்றமைக்குக் காரணம், (அ) பருத்திப் பஞ்சு அயலில் கிடைக்கின்றமையாகும். பருத்தி வலயத்தினுள்ளேயே இப்பிரதேசம் அமைந்துள்ளது.
(ஆ) இப்பிரதேசத்தில் இயங்கும் ஆலைகளுக்குத் தேவையான நிலக்கரி அண்மையில் கிடைக்கின்றது. நியூ இங்கிலாந்திலும் பார்க்க கிட்டிய தூரத்தில் நிலக்கரி கிடைக்கின்றது. அத்துடன் இப்பிரதேசத் தில் நீர் மின்வலுவும் விருத்தியுற்றிருக்கின்றது.
(இ) பருத்தி ஆலைகள் நிறுவப்படுவதற்கு முன்னரே தென் அப்ப லாச்சியன் பிரதேச மக்கள் நூல் நூற்றலிலும், நெசவு செய்வதிலும் அனுபவம் பெற்றவர்களாக விளங்கினர்; இப்பிரதேச மக்களது கூலி நியூ இங்கிலாந்துப் பிரதேச நெசவு மக்களது கூலியிலும் பார்க் கக் குறைவாக இருந்தது.
(ஈ) இப்பிரதேசத்திலுள்ள ஆலைகளையும் சந்தை நகர்களையும் இணைத்து வலைபோன்று இருப்புப் பாதைகளும் வீதிகளும் சிறப்பாக

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
69
அமைந்துள்ளன. மூலதனமும் ஏராளமாகக் கிடைக்கக் கூடியதாக இருந்தது.
- இவை யாவும் தென் அப்பலாச்சியன் பிரதேசத்தில் பருத்தி நெச வுத் தொழிலை விருத்தியுற வைத்துள்ளன.
கம்பளி நெசவுத் தொழில்
ஐக்கிய அமெரிக்காவின் பல மாகாணங்களும் கம்பளி நெசவில் ஈடு பட்டிருக்கின்ற போதிலும், வடகீழ் ஐக்கிய அமெரிக்க மாகாணங்களே இன்று கம்பளி நெசவுத் தொழிலில் முதன்மை பெற்று விளங்குகின்றன. நியூ இங்கிலாந்துப் பிரதேச உயர் நிலங்கள் செம்மறியாடுகளை வளர்க்க ஏற்றனவாக உள்ளன. அதனால், இப்பிரதேசத்தில் கம்மளிநெசவு விருத்தி யுற்றுள்ளது. ஈரக்காலநிலை, நீர்வலு, நிலக்கரி, வினைத்திறன் மிக்க தொழி லாளர் வசதி, உண்ணாட்டுச் சந்தை என்பன இப்பிரதேசத்தில் கம்பளி நெசவுத் தொழிலை ஊக்குவித்துள்ளள.
ஐக்கிய அமெரிக்காவில் இரு பகுதிகள் கம்பளி நெசவுத் தொழி லில் குறிப்பிடத் தக்கனவாக விளங்கி வருகின்றன. அவை: (அ) தென் பென்சில்வேனியாவிலிருந்து நியூயோக் வரையுள்ள பகுதி; (ஆ) தென் நியூ இங்கிலாந்திலிருந்து மேயின் வரையுள்ள பகுதி. ஐக்கிய அமெரிக்கா வின் கம்பளி ஆலைகளில் 60 சத வீதமானவை இப்பகுதிகளிலேயே காணப்படுகின்றன. இந்த ஆலைகளுக்குத் தேவையான கம்பளி மயிரில், அரைப்பங்கு அவுஸ்திரேலியா, ஆசெந்தீனா, உருகுவே, நியூசிலாந்து, தென் னாபிரிக்கா முதலிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. பொஸ்தன், நியூயோர்க், பிலடெல்பியா எனும் துறைமுகங்கள் கம்பளி மயிரை இறக்குமதி செய்து வருகின்றன; பொஸ் தனே கம்பளி மயிர் இறக்குமதியில் முதலிடத்தைப் பெறுகின்றது.
ஏனைய நெசவுத் தொழில்கள்
ஐக்கிய அமெரிக்காவில் பருத்தி, கம்பளி, நெசவுத் தொழில்களை விட, லினன். பட்டு, ரேயன், நைலோன் முதலான நெசவுத் தொழில் களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. லினன் நெசவுத் தொழில் நியூயோர்க், நியூயேசி, நியூ இங்கிலாந்து முதலிய மாகாணங்களில் நடை பெற்று வருகின்றது. கிழக்குப் பென்சில்வேனியா, வட நியூயேசி, தென் கிழக்கு நியூயோர்க் முதலான பகுதிகளில் பட்டுநெசவு நடைபெற்று வருகின்றது. றேயன் நெசவுத்தொழில் கிழக்குப் பென்சில்வேனியாவிலும்

Page 38
60
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
நியூ இங்கிலாந்துப் பிரதேசத்திலும்,நைலோன் நெசவு நியூயோர்க் மாகா
ணத்திலும் நடைபெற்று வருகின்றன.
ஆடை உற்பத்தித் தொழில்
ஆடை உற்பத்தித் தொழில் ஐக்கிய அமெரிக்காவில் இன்று விருத்தி யுற்ற ஒரு தொழிலாக உள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் பிரதான நகர்களில் ஆடை உற்பத்தித் தொழில் முக்கியம் பெற்றிருக்கின்றது. பல்வகை ஆடைகள், பின்னற் பொருட்கள், விரிப்புகள் என்பன பல்வேறு அளவுகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. வடகீழ் ஐக்கிய அமெரிக்கா வின் பல பகுதிகளில் பல்வகை நெசவுப் பொருட்களை உற்பத்தி செய் 2 தாலும், இங்குள்ள துறைமுகங்கள் தேவையான நெசவுப் பொருட்களை இலகுவில் இறக்குமதி செய்வதாலும் ஆடை உற்பத்தி வடகீழ்ப் பிரதேச நகரங்களில் சிறப்புற்றுள்ளது.
நியூயோர்க், பிலடெல்பியா, சிக்காக்கோ, பொஸ் தன், போல்ரிமோர் கிளீவ்லாண்ட் எனும் ஆறு நகரங்கள் வடகீழ் ஐக்கிய அமெரிக்காவில் ஆடை உற்பத்தியில் பெரிதும் ஈடுபட்டிருக்கின்றன . ஐக்கிய அமெரிக்கா வின் ஆடை உற்பத்தியில் ஏறக்குறைய 41 சத வீதத்தை நியூயோர்க் நகரம் உற்பத்தி செய்து வருகின்றது. இந்நகரங்களில் ஆடை உற்பத்தி சிறப்புற்று விளங்குவதற்குச் சில காரணிகளுள்ளன; அதிக குடிசனம் இந்நகரங்களில் வாழ்வதால் பரந்த சந்தையும் தொழிலாளர் வசதியும் இந்நகரங்களில் காணப்படுகின்றன. வடகீழ்ப் பிரதேசத்தில் இயங்கு கின்ற நெசவு ஆலைகள், ஆடை உற்பத்திக்குத் தேவையான துணி களை வழங்குகின்றன.
வடகீழ் ஐக்கிய அமெரிக்காவை விட, சென் லூயி, சின்சினாட்டி சான் பிரான்சிஸ்கோ, லொஞ் அஞ்சலீஸ் ஆகிய நான்கு நகர மையங்க ளும் ஆடை உற்பத்தித் தொழிலில் முதன்மை பெற்று விளங்கு கின்றன,
தானியம் அரைத்தல்
ஐக்கிய அமெரிக்கா தனது குடியேற்ற ஆரம்பகாலத்திலிருந்தே தானி யம் அரைத்தல் தொழிலைச் செய்துவருகின்றது; ஆரம்பத்தில் தானியம் அரைக்கும் ஆலைகள் நீரினாலும் காற்றினாலும் இயங்கின, வடகீழ் ஐக்கிய அமெரிக்காவில் பேரேரிகளை அடுத்துள்ள நகரங்கள், ஆரம்ப காலத்தி லிருந்தே தானியம் அரைத்தலைத் தமது தொழில்களில் ஒன்றாகச்

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
61
செய்து வருகின்றன. வடகீழ்ப் பிரதேசத்தில் மாவரைத்தல் தொழில் விருத்தியடைந்தமைக்குச் சில காரணிகளுள்ளன. அமெரிக்க மக்களின் பிரதான உணவு கோதுமையாகும்; அதனால், கோதுமை மாவிற்குப் பரந்த சந்தை இருந்தது. மேலும் ஐக்கிய அமெரிக்காவில் கோதுமை பரந்த அளவில் பயிரிடப்பட்டு வருவதால், தானியம் அரைத்தல் முக் கிய தொழிலாகவுளது. வடகீழ் ஐக்கிய அமெரிக்காவின் சிறிய, பெரிய நகரங்களில் எல்லாம் தானியம் அரைக்கும் ஆலைகளுள்ளன.
வடகீழ் ஐக்கிய அமெரிக்காவில் மட்டுமன்றி, ஐக்கிய அமெரிக்காவிலே தானியம் அரைத்தலில் முதலிடத்தைப் பெறுவது நியூயோர்க்மாகாணத் திலுள்ள பபுலோ நகரமாகும். ஐக்கிய அமெரிக்காவில் அரைக்கப்படும் தானியத்தில் இந்நகரம் 15 சத வீதத்தை அரைக்கின்றது. பபுலோ நகரம் ஈரி ஏரியின் கரையில் அமைந்திருப்பது இதன் விருந்திக்கு வாய்ப்பாக இருக்கின்றது. பேரேரிகள் ஊடாக ஐக்கிய அமெரிக்காவின் கோதுமையும் கனடாவின் கோதுமையும் பபுலோவில் வந்து சேர்கின்றன: கரையிலேயே தானியமரைக்கும் ஆலைகளும் அமைந்திருப்பதால், ஏற்றி இறக்கல் மிக இலகுவாகவுள்ளது; மேலும் நயாகரா நீர் மின்வலு பபுலோ தானிய ஆலை களுக்குத் தேவையான நீர்மின்வலுவை மலிவாக அளிக்கின்றது; பபுலோ வில் அரைக்கப்படும் கோதுமை ஐக்கிய அமெரிக்காவின் பலபகுதிகளுக்கும் கனடாவிற்கும் அனுப்பப்படுகின்றது. ஈரிக்கால்வாயினூடாக நியூயோர்க் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி யும் செய்யப்படுகின்றது; நியூயோர்க் மாகாணத்தைவிட, மிக்சிக்கன் மாகாணத்திலும் தானியம் அரைத்தல் ஆலைகளுள்ளன.
வடகீழ் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களைவிட ரெக்சாஸ், லூசியானா, ரெனசி, கன்சாஸ், கொலராடோ, கலிபோர்ணியா ஆகிய மாநிலங் களிலும் தானியம் அரைக்குந் தொழில் சிறப்பாக நடைபெற்று வரு கின்றது,
மீன்பிடித் தொழில்
உலகின் நான்கு சிறந்த மீன் பண்ணைகளில் இரண்டு ஐக்கிய அமெரிக்காவினை அடுத்து அமைந்துள்ளன. அவை:
1. வடகீழ் பசுபிக் மீன் பண்ணைகள் 2. வடமேல் அத்திலாந்திக் மீன் பண்ணைகள்
இவ்விரு பகுதிகளிலும் மீன் பிடித்தல் சிறப்பாக நடைபெறுவதற் குச் சில சாதகமான காரணிகள் உதவியுள்ளன. அவை:

Page 39
82
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
(அ) 600 அடி ஆழம் வரையுள்ள ஆழமற்ற சமுத்திரப் பகுதிகள் மீன் பிடித்தலிற்கு மிகவும் சாதகமானவையாகவுள்ளன. ஆழமற்ற இக்கடல் களில் மீன்களின் சிறந்தவுணவாகிய பிளாங்ரன்' எனும் மிதக் குமுயிர்த் துணுக்குகள் காணப்படுகின்றன. மேலும் மீன்களின் இனப் பெருக்கத்திற்கும் ஆழமற்ற பரந்த கடல்கள் ஏற்றனவாகும்,
(ஆ) கிரான்ட்பாங், சென்பியரிபாங், ஜோர்ஜ்பாங் முதலிய சிறி தும் பெரிதுமான கடலடித்தள மேடைகள் இம்மீன் பண்ணைகளில் அமைந்திருக்கின்றன.
(இ) தன்மையில் வேறுபட்ட இரு நீரோட்டங்கள் ஒன்றினை யொன்று சந்திக்கின்ற பிரதேசங்களும் சிறந்த மீன்பிடியிடங்களாக உள்ளன. வெப்பமான குடா நீரோட்ட மும் குளிரான லபிறடோர் நீரோட்டமும் வடமேல் அத்திலாந்திக் மீன் பண்ணையில் சந்திக் கின்றன.
(ஈ) இவ்விரு பகுதிகளிலும் மீன்பிடித் தொழில் சிறப்பாக நடை பெறுவதற்கு, இப்பகுதிகள் கொண்டுள்ள பல்லுருவக் கடற்கரையோ ரங்கள் உதவியுள்ளன. குடாக்கள், நுழைகழிகள் முதலியனவற்றைக் கொண்டுள்ள பல்லுருவக் கடற்கரைகள் மீன்பிடிக் கப்பல்கள் பாது காப்பாகத் தங்குவதற்கு மிகவும் ஏற்றனவாக விளங்குகின்றன. அத
னால் சிறந்த மீன்பிடித் துறைமுகங்களும் உருவாகியுள்ளன.
(உ) பரந்த உண்ணாட்டு வெளிநாட்டுச் சந்தை வாய்ப்புகள், நவீன மீன்பிடி தொழில் நுட்ப விருத்திகள் என்பன யாவும் மீன் பிடித் தொழில் விருத்திக்குத் தூண்டுதலாகவுள்ளன.
வடகீழ் பசுபிக் மீன் பண்ணைகள்: வட அமெரிக்காவின் மேற்குக் கரையோரத்தில் அலாஸ்காவின் பெரிங் தொடுகடலிலிருந்து கலி போர்ணியாக் குடாவரை வடகீழ்ப் பசுபிக் மீன் பண்ணைகள் அமைந் துள்ளன. இப்பகுதிகளில் சமன் என்னும் மீன் வகையே அதிகமாகப் பிடிக்கப்படுகின்றது. அத்தோடு கலிபட், ரியூனா, கொட், சாடின் எனும் மீன் வகைகளும் பிடிக்கப்படுகின்றன.
சமன் மீன்வகை நதிகளிலும், நதிகள் கடலோடு கலக்கும் பகுதி களிலும் அதிகமாகப் பிடிக்கப்படுகின்றன. அலாஸ்காவின் பிரேசர், சீனா நதிகளிலும், கலிபோர்ணியாவின் சக்கிரமன்ரோ நதியிலும், கொலம்பியா நதியிலும் சமன் மீன் தொகையாகப் பிடிக்கப்படுகின் றது. அதாவது கலிபோர்ணியா வின் வட கரையோரத்திலிருந்து

ஐக்கிய அமெரிக்காவின் புவியில்
63
அலாஸ்காவின் பெரிங் தொடுகடல் வரையுள்ள நீர்த் தொகுதிகளில் சமன் பிடிக்கப்படுகின்றது. சமன் நன்னீர்ப் பகுதிகளிலேயே முட்டை யிடுவதனால், நதிகளை நாடி வருகின்றது. அதனால் இதனை இலகுவில் பெருந்தொகையாகப் பிடிக்கக் கூடியதாக இருக்கின்றது. இம் மீன் கள் கணக்கற்றளவில் பிடிக்கப்பட்டதால், ஒரு காலத்திலிவை இல் லாது போய்விடலாம் என்பதனால், இவை முட்டையிட வரும்போது பிடிக்கக் கூடாது என்றும், முட்டையிட்டுவிட்டுத் திரும்பும்போது பிடிக்கலாம் என்றும், ஐக்கிய அமெரிக்கா சட்டமியற்றியுள்ளது.
சயன் மீனுக்கு அடுத்த பிரதான மீனாக கலிபட் மீன் விளங்கு கின்றது. ரியூனா மீன்வகை கலிபோர்ணியக் கரையோரங்களில் அதிக மாகப் பிடிக்கப்படுகின்றது. திமிங்கிலம் பிடித்தலும் வடகீழ் பசுபிக் மீன் பண்ணைகளில் நடைபெற்று வருகின்றது.
நவீன யந்திர வசதிகளோடும், குளிர் சாதனப் பாதுகாப்புக்க ளோடும் கூடிய கப்பல்கள் இப்பகுதிகளில் மீன்பிடித் தொழிலில் ஈடு பட்டுள்ளன. வர்த்தக நோக்கான வடகீழ் பசுபிக் மீன் பண்ணைகள், வருடாவருடம் பெருந் தொகையான மீன்களை ஏற்றுமதி செய் கின்றன.
வடமேல் அத்திலாந்திக் மீன் பண்ணைகள்: வடமேல் அத்திலாந்திக் மீன் பண்ணைகள் ஏறத்தாழ 1, 10,000 சதுர மைல்கள் பரப்புடையது. இது ஆதியிலிருந்தே வர்த்தக ரீதியாக இயங்கி வருகின்றது, நியூ இங்கி லாந்து, கிழக்குக் கனடா, நியூபவுண்லாந்து என்பனவற்றை உள் ளடக்கி, ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குக் கரையோரப் பிரதேசங்களை இம்மீன் பண்ணை கள் உள்ளடக்கியுள்ளன.
கிரான்ட்பாங், சென்பியரிபாங், பிறவுண் பாங், ஜோர்ஜ்பாங் முதலிய சிறிதும் பெரிதுமான கடலடித்தள மேடைகள் இங்குள்ளன . இக்கடலடித்தள மேடைகள் சிறந்த மீன்பிடித் தி ளங்களாக இருக் கின்றன. இவையே வடமேல் அத்திலாந்திக் மீன் பண்ணைகளின் விருத்திக்குப் பெரிதும் தூண்டுதலாக இருக்கின்றன.
வட அமெரிக்காவின் கடற்கரையோரம் பலவகையான உருவங் களைக் கொண்டுள்ளது. இப்பல்லுருவத் தன்மைகள் எண்ணிறைந்த பொஸ்தன், பிலடெல்பியா போன்ற மீன்பிடித் துறைமுகங்களை உரு வாக்கியுள்ளன. புயற் காலங்களில் ஒதுங்கிக் கப்பல்கள் பாதுகாப்பாக நிற்பதற்கு ஏற்றவாறு இத்துறைமுகங்கள் அலமந்திருப்பது வடமேல் அத்திலாந்திக் மீன்பிடித் தொழிலிற்குத் துணையாகவுள்ளது.

Page 40
64
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
ஐக்கிய அமெரிக்காவின் நியூ இங்கிலாந்துப் பகுதிகளில் வாழும் மக் கள் பரம்பரையாகவே மீன் பிடிப்பவர்கள். இப்பிரதேசங்களின் நிலம் பனிக்கட்டியாற்று அரிப்புக்கு உட்பட்டு விட்டதால், நிலம் பயிர்ச் செய்கைக்கு ஏற்றதாகவில்லை. நிலம் கரடுமுரடானதாகவும், மண் தடிப்பானதாகவுமுள்ளது. இதனால் இப்பகுதிகளில் வாழும் மக்களில் 80% மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
லபிறடோர் குளிர் நீரோட்டமும் சூடான குடா நீரோட்டமும் சந்திக்கின்ற பிரதேசமாக வடமேல் அத்திலாந்திக் உள்ளது. இந் நீரோட்டங்கள் கொண்டு வந்து சேர்க்கும் மீன்களின் உணவை - பிளாங்ரன் - நாடி வரும் மீன்களும், நீரோட்டங்களோடு சேர்ந்து வரும் மீன்களும் இப்பிரதேசங்களில் கூடுவதால் பெருந் தொகை யான மீன்களை இலகுவில் பிடிக்க முடிகிறது.
இறைச்சியடித்தல் தொழில்
இறைச்சி பதனிடுந் தொழில் ஐக்கிய அமெரிக்காவின் குறிப்பிடத் தக்க தொழில்களில் ஒன்றாகும். ஆரம்ப குடியேற்ற காலங்களில் சிறிய அளவில் நடைபெற்று வந்த இறைச்சி பதனிடுந் தொழில், 19-ம் நூற் (ஒண்டின் பின்னர்தான் வர்த்தக நோக்கில் விருத்தியுறத் தொடங்கி யது; ஆரம்பத்தில் சின்சினாட்டி பிர தான இறைச்சியடிக்கும் மையமாக விளங்கியது. 1850-ல் இருப்புப் பாதைகளின் விருத்தியால், சிக்காக்கோ இறைச்சி பதனிடுந் தொழிலில் முதன்மை பெற்றது. 1875-இல் குளி ரூட்டல் முறைகள் முதன்மை பெற்றதால், இறைச்சி பதனிடுந் தொழிலில் மேலதிக விருத்தி ஏற்பட்டது.
ஐக்கிய அமெரிக்காவில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கால் நடைகளில் பெரும்பகுதி, மிசிசிப்பி நதிக்கு மேற்கேயுள்ள பகுதிகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன; இப்பகுதிகளில் ஐக்கிய அமெரிக்காவி லுள்ள மாடுகளில் 35 சதவீதமும், செம்மறிகளில் 60 சதவீதமும், 2 பன்றிகளில் 50 சதவீதமும் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஆனால், இறைச்சி நுகரும் மிகப்பெரிய பகுதி, ஐக்கிய அமெரிக்காவின் வட கீழ்ப் பிரதேசமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பதனிடப்படும் இறைச்சியில் 90 சதவீதம் மாட்டிறைச்சியும் பன்றியிறைச்சியுமாகும்.
இறைச்சி பதனிடுந் தொழிலில் சிக்காக்கோ, ஓமகோ, கன்சாஸ் சிற்றி, சென்லூயி, சென்போல், சூசிற்றி, சென்யோசேப், டென்வர், போர்ட்வேர்த் ஆகிய நகர மையங்கள் இன்று முதன்மையானவை. இம் மையங்களில் சுவிற, ஆர்மர், வில்சன், குடாகி ஆகிய நான்கு குறிப்

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
85 2 கல் கத்தார் பிடத்தக்க கம்பனிகள் இறைச்சியடித்துப் பதனிடுந் தொழிலில் ஈடு பட்டிருக்கின்றன. இம்மையங்கள் இறைச்சி பதனிடுந் தொழிலில் முதன்மை பெற்றமைக்குரிய காரணிகள் பலவாகும். அவையாவன:
1. மேலைப்புற மாநிலங்களிலுள்ள கால்நடை மேய்ச்சல் நிலங்கள்:- பரந்தளவு விலங்கு வேளாண்மை வலயம் என்ற தலைப்பின் கீழ் இது குறித்து ஏற்கனவே விரிவாக விளக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக் காவின் இறைச்சியடித்தல் தொழிலிற்குச் சாதகமாக விளங்கும் முதற் காரணி, பரந்தளவிலான கால் நடை மேய்ச்சல் நிலங்களாகும்.
2. சோளவலயம் '- மேலைப்புற மாநிலங்களில் வளர்க்கப்பட்ட கால் நடைகள், இறைச்சியடிப்பதற்கு முன், கொழுக்க வைப்பதற்கா கச் சோள வலயத்திற்குக் கொண்டு வரப்படுகின்றன. சோள வலயத் தில் உற்பத்தியாகின்ற சோளத்தில் 84 சதவீதம் மிருக உணவிற்கே பயன்படுத்தப்படுகின்றது என்பது இதன் முக்கியத்துவத்தை உணர்த் தப் போதுமானது.
3. வலையமைப்பு முறையிலுள்ள இருப்புப் பாதைகள் :- மேய்ச்சல் தரைகளிலிருந்து, கொழுக்க வைப்பதற்குச் சோள வலயத்திற்குக் கொண்டு வருவதற்கும், சோள வலயத்திலிருந்து இறைச்சியடிக்கும் நிலையங்களுக்குக் கொண்டு செல்வதற்கும் இருப்புப் பாதைகள் பெரி தும் உதவியாகவுள்ளன. விலங்குகளை வளர்க்கின்ற இடங்களும் இறைச்சி யடிக்குமிடங்களும் வெவ்வேறிடங்களில் இருந்தும் சிறந்த இருப்புப் பாதைகள் மையப்படுத்துகின்றன. சிக்காக்கோ ஓரு முக்கியமான இருப்புப் பாதை மையமாய் இருக்கின்றமைதான், அதனது இறைச்சி யடித்தல் தொழில் முதன்மைக்கும் விருத்திக்கும் காரணமாகும் என் பது குறிப்பிடத்தக்கது.
4. தொழில்நுட்ப விருத்தி:- எளிதில் பழுதடையக்கூடிய இறைச்சி 'பேரளவில் பதப்படுத்தப்பட்டு, வெகுதூரச் சந்தைகளுக்கு விற்பனைக் காக அனுப்பப்படுகின்றமைக்குக் காரணம் சிறந்த தொழில்நுட்ப விருத்தியாகும். குளிரேற்றி வண்டிகள் விருத்தியுற்றதால், உயிருடன் விலங்குகளை இறைச்சியடிக்கும் நிலையங்களுக்கு அனுப்புவதிலிருந்த கஷ் டம் நீங்கியது. குளிரேற்றிகளும் சீர்திருத்தமடைந்த போக்குவரத்து வசதிகளும் இறைச்சி பதனிடுந் தொழிலிற்குப் பேருதவியாக இருக் கின்றன. விலங்குகளை உரித்து, பாகம்பண்ணி, பதப்படுத்துகின்ற தொழிலை யந்திரங்களே செய்து வருகின்றன.

Page 41
66
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
5. சந்தை வசதி: - ஐக்கிய அமெரிக்காவின் நாளாந்த உணவில் இறைச்சி முக்கியவிடத்தை வகிக்கின்றது. அதனால், பரந்த உண்ணாட் டுச் சந்தை இறைச்சிக்குண்டு. முக்கியமாக ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குப் பாகத்தில் அதிக குடியடர்த்தியிருப்பது, உண்ணாட்டுச் சந்தை வாய்ப்பை வழங்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கும் ஐக்கிய அமெ ரிக்காவின் இறைச்சி கணிசமானவளவு ஏற்றுமதியாகின்றது.
! * - .' : :!: : ', ' ' ; !! '' * 4. ', ' ', ', ' த

ஐக்கிய அமெரிக்கா:
பிரதேசப் புவியியல்
அமைப்பு, காலநிலை, பொருள்வளம் என்பனவற்றை ஆதாரமா அக் கொண்டு ஐக்கிய அமெரிக்காவை ஆறு பெரும் இயற்கைப் பிர தேசங்களாக வகுக்கலாம். அவையாவன:
1. வடகீழ் பிரதேசம்
2. மத்திய சமவெளி
3. தென்கீழ் பிரதேசம் 4. பெரும் சமவெளிகள் 5. மேற்கு மலைப்பகுதி
கரையோரப் பள்ளத்தாக்குகள்
இந்த ஆறு இயற்கைப் பிரதேசங்களும் திடமான எல்லைகளால் வரையறுக்கப்பட்டுள்ளன. காலநிலை, தரைத்தோற்றம், மண்வகை, நீர் வழிகள் என்பன இப்பிரதேசங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனி சிறப் பியல்புகள் கொண்ட பிரதேசங்களாகப் பிரிக்கத் துணை நின்றுள்ளன.
பTெ

Page 42
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
5 ~ |
மேம்கு
மலைப் பகுதி
ஃ!"-::ப713Y
ச டம் வெளி
கெ.
ரி?
தென் கீழ் பிர தேசம்
படம்: 14 ஐக்கிய அமெரிக்காவின் இயற்கைப் பிரதேசங்கள் )
1. வடகீழ்ப் பிரதேசம்
வடகீழ் பிரதேசம், சுப்பீரியர் ஏரி, ஊறன் ஏரி, ஈரி ஏரி, ஒன்ராறியோ ஏரி, சென்லோறன்ஸ் நதி, அத்திலாந்திக் சமுத்திரம் என்பனவற்றினாலும் அப்பலாச்சியன் மலைத்தொடர், உள் நாட்டுத் தாழ்நிலம் என்பனவற்றினா லும் ஏறத்தாழ வரையறுக்கப்பட்டிருக்கின்றது. வடகீழ் பிரதேசத்தின் தரைத்தோற்றத் தன்மைகள் பல்லிடவிளக்கவியல் தன்மைகளைக் கொண்டுள்ளன. வடகீழ் பிரதேசத்தின் வடகிழக்குப் பகுதி லபிறடோர் மேட்டு நிலத்தையும், கிழக்குப் பகுதி அப்பலாச்சியன் மலைத்தொட ரையும், ஏனைய பகுதிகள் தொடர் அலைச்சமவெளிகளாகவும் காணப் படுகின்றன.
வடகீழ் பிரதேசத்தின் மண்வகை அவ்வளவு சிறப்பானதன்று. பனிக் கட்டி ஆற்றின் தாக்கம், பிளைத்தோசீன் காலத்தில் இங்கு நிகழ்ந்தபடியி னால் வடகீழ் பிரதேசத்தின் மேற்படை மண் முற்றாக நீக்கப்பட்டு விட்டது. இதனால் இங்குள்ள மண் சிறு கற்களையும் பெரு மணிகளை . யும் கொண்டதாக விளங்குகின்றது.

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
14:4ா 'பாதரச 2. கொ
451 1ாபாலH4:12 ISFETNATALALIF:17ட்டா'(Iாட் எRS}RITH' 'டே3AMCA'ம்.3.378: Aே .... 14:14:32. வட்டி, ''
க wட ர்
பழா ?"-- ( 1- 2 : 'சு
கா?
* }{{ {":7;
சுவாY
S உயர் நிலம்
23MME%9- பாதடி TWARET:: WA9% 1-2-ti 73 $17மை'ty's•4X7 HTTTKKANN: 11)
படம்: 15 தரைத்தோற்றம்
காலநிலையைப் பொறுத்தளவில் வடகீழ்ப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதி 40 அங்குலங்களுக்கு மேல் மழைவீழ்ச்சியையும், ஏனைய பகுதிகள் 20 அங்குலந் தொட்டு 40 அங்குலம் வரையிலான மழைவீழ்ச்சியையும் பெறுகின்றன. இப்பிரதேசத்தின் வெப்ப நிலை வடபுறமாகப் படிப்படி யாய்க் குறைவடைந்து செல்கின்றது. யனவரி மாதத்தில் இப்பிரதே சத்தின் தென் விளிம்போடு 413 "ப. சமவெப்பக்கோடு செல்கின்றது. யூலை மாதத்தில் இப்பிரதேசத்தின் வெப்பநிலை சற்று உயர்வாகக் காணப்படுகின்றது. இம்மாதத்தில் இப்பிரதேசத்தின் தென் விளிம்
போடு 75°ப, சமவெப்பக்கோடு செல்கின்றது,
வடகீழ் பிரதேசத்தில் மெயின், நியூகம்சயர், வேமவுன்ற், மசெசூசெற் கொனற்றிகட், நியூயோர்க், நியூயேசி, றோட்தீவு, பென்சில்வேனியா மிக்சிக்கன் என்னும் அரசுகள் முழுமையாக அடங்கியுள்ளன. டெலாவயர் மேரிலாண்ட், மேற்கு வேஜீனியா, ஓகாயோ, இண்டியானா, இலினோய், விஸ்கொன்சின், மின்னசொற்றா எனும் அரசுகளின் வடபகுதிகளையும் வடகீழ் ஐக்கிய அமெரிக்கா அடக்கியுள்ளது.
ஐக்கிய அமெரிக்காவின் இந்த வடகீழ்ப் பிரதேசம் முதன்மைவாய்ந்த பிரதேசமாகக் கருதப்படுவதற்குச் சில காரணங்கள் உள்ளன, வடகீழ்ப்

Page 43
கொண்சேக்கா சிக்காக'44:39
டி!
க ன டா
':ாத 'மே யின்
ஜே ஆ ~
பேச்சிடி
பாகம் 1, அ 21 IE 15
காரடி"4" சர்சகாxைtாசாகர்
: 4 f74
ஃதா - சராசwநட்ை
அல்பரி
?.
- 1' பில்
:::ா.கோ)
4,*?: '.
124.10THEx}பவ€)$ரத்தEFIEIRAM.REVIE TIPTASMry:%EW3 'STA.சச:AEாவணா.
மிஸ் எர் 5)சாஜ9)
: விஸ்கொன்சின் மிகசிக்கன் y
மில்வாக்கி--
ப யோம் -
7.புலோ?
காரி...'' டெறறொபிழ்
கிப்சண்ட் சதிக்காக்கோ |
-------
தெலோடோ : ('' ; 67
7ெ கிவளிய/7 த
'f 3.8/. '. 4)55-47---
4 டு க 3 4 4 4 4 4 4 45 4
கொ லோ
3 பிறபேக் பு! ல்ரிமோர் > -------- - ரிேர்
இersாட்ட A./ா?
இலினோய்
மேக வேஜீனியா
பாலாஜாலாஜ93
04
படம்: 16 வட கீழ் ஐக்கிய அமெரிக்கா

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
71
பிரதேசம் ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரத்தின் மையப்பகுதி யாகக் கருதப்படுகின்றது. ஐக்கிய அமெரிக்காவின் கைத்தொழில்களை ஆராயும் அறிஞர்கள், வடகீழ் பிரதேசத்தை ஐக்கிய அமெரிக்காவின் கைத்தொழில் வலயமென வரையறுப்பர். ஐக்கிய அமெரிக்காவின் இரும்புருக்குக் கைத்தொழில், நெசவுக் கைத்தொழில், இரசாயனக் கைத்தொழில் என்பன யாவும் இப்பிரதேசத்தில் ஒருமுகப் படுத்தப்பட் டிருக்கின்றன. இரும்புருக்குக் கைத்தொழிலை எடுத்துக் கொண்ட./7ல். பிற்ஸ்பேக், கிளிவ்லாண்ட், டெற்றோயிற் என்பன உலகிலேயே முதன்மை யான மையங்களாக விளங்குவதைக் காணலாம். நியூ இங்கிலாந்து நெசவுக் கைத்தொழிலில் முக்கியத்துவம் வகிப்பதையும் காணலாம். மேலும், ஐக்கிய அமெரிக்காவின் ஏனைய பிரதேசங்களின் விருத்திக்கு, வடகீழ்ப் பிரதேசத்தின் மூலதனமே துணைபுரிந்தது என்பதும் குறிப் பிடத்தக்கது.
வடகீழ் ஐக்கிய அமெரிக்கா பொருளாதாரத்தில் முதன்மை பெற்ற மைக்கு, இப்பிரதேசத்தில் நிறைந்துகிடக்கும் மூலவளங்களும் காரணங்க ளாகும். அப்பலாச்சியன் பிரதேசத்தில் காணப்படும் தரமான நிலக்கரிப் படுக்கைகளும், சுப்பீரியர் ஏரியின் மேற்குக் கரையோரத்தில் காணப்பட்ட அதிக இரும்புத்தாதுப் படிவுகளும், பேரேரிப் பகுதிகளில் காணப்பட்ட நீர்மின்வலுவும், ஏனையபல்வேறு சுனிப்பொருள் வளங்களும் இப்பிரதேசத் தின் விருத்திக்குத் தூண்டுதலாகவும், ஆதாரமாகவும் அமைந்தன, அத் துடன் இப்பிரதேசத்தின் சுற்றாடலில் காணப்பட்ட நிலைமைகளும் இதன் பேரளவு விருத்திக்கு உதவின. வடகீழ் பிரதேசத்திற்குத் தெற்கே அமைந் துள்ள நிலப்பரப்புகள் பயிர்ச் செய்கைக்கு சிறந்தனவாக விளங்குகின்றன. சோளவலயம், பருத்திவலயம் என்பன தென்பகுதியிலேயே காணப்படு கின்றன. வடகீழ்ப் பிரதேசத்திற்கு மேற்கே பரந்துள்ள நிலப்பரப்யுகள் தானியச் செய்கைக்கு (கோதுமை) உகந்தனவாகவுள்ளன. இவை காரணமாக, வடகீழ் கைத்தொழிற் பிரதேசத்திற்குத் தேவையான உணவுப் பொருட்கள் இலகுவாகவும் மலிவாகவும் கிடைக்கக்கூடியதாக வுள்ளது.
வடகீழ் பிரதேசத்தின் உற்பத்திப் பொருட்களுக்கு ஐக்கிய அமெரிக்கா வில் பரந்த உள் நாட்டுச் சந்தை காணப்படுகின்றது . வலையமைப்பில் வேகமும் வசதியும் நிறைந்த போக்குவரத்துப் பாதைகளும் சாதனங்களும் வடகீழ் பிரதேசத்தில் நன்குள்ள ன. இருப்புப் பாதைகள் வீதிகள், நீர்ப் பாதைகள், ஆகாயப் பாதைகள் என்பன உலகிலே இங்கேயே மிகச் சிறப்பாகக் காணப்படுகின்றன. மேலும், வடகீழ் பிரதேசத்தில் நியூயோக் பிலடெல்பியா, பொஸ்தன் எனும் தக்க துறைமுகங்களும் அமைந்துள் ளன. ஐரோப்பிய நாடுகளோடு வர்த்தகத் தொடர்பு கொள்வதற் @

Page 44
78
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல் இவை சாதகமாக இருப்பதால், வடகீழ் பிரதேசம் விரைந்து முன் னேறியது.
ஐரோப்பிய நாடுகளுக்கு வட அமெரிக்கா என்ற புதிய ஒரு நாடு இருப் பது தெரிந்ததும், குடியேற்றங்கள் நிகழ்ந்தன. அமெரிக்காவில் முதன் முதல் குடியேறியவர்கள் வடகீழ் பிரதேசத்திலேயே குடியேறினர், நியூ இங்கிலாந்துப் பகுதியிலேயே முதன் முதல் குடியேற்றம் நிகழ்ந்தது. 1790ஆம் ஆண்டு இப்பகுதியில் 39 இலட்சம் மக்கள் குடியேறி வாழ்ந் தனர். அதன் பின்பே மேற்குப்புறமாக குடிப்பெயர்வு நிகழ்ந்தது.
ஐக்கிய அமெரிக்காவில் 10 பெரிய நகரங்கள் காணப்படுகின்றன. அதில் 6 நகரங்கள் வடகீழ் பிரதேசத்தில் உள்ளன; நியூயோக், சிக் காக்கோ, பிலடெல்பியா, டெற்றோயிற், பிற்ஸ்பேக், பொஸ்ரன் முத லான பெருநகர்கள் இங்குள்ளன. இவை யாவும் 20 இலட்சம் மக்க ளுக்கு மேல் குடிசனமுடையவை; 10 இலட்சம் மக்களையுடைய நகர் கள் பத்துக்கு மேலுள. இவற்றைவிட 1 இலட்சம் மக்களுக்கு மேல் வாழும் 35 நகரங்கள் வடகீழ் பிரதேசத்திலுள்ளன. இவை யாவும் வடகீழ் பிரதேசத்தை ஐக்கிய அமெரிக்காவில் மட்டுமன்றி, உலகி லேயே முதன்மை வாய்ந்த பிரதேசமாக உருவாக்கிவிட்டன.
ஐக்கிய அமெரிக்காவின் வடகீழ்ப் பிரதேசத்தைத் தெளிவான சில புவியியற் பிரதேசங்களாக வகுத்துக் கொள்ளலாம். அவை:
(அ) நியூ இங்கிலாந்துப் பிரதேசம்
(ஆ) பேரேரிப் பிரதேசம்
(இ) வட அப்பலாச்சியம் - மத்திய அத்திலாந்திக் பிரதேசம்.
(அ) நியூ இங்கிலாந்துப் பிரதேசம்
வடகீழ் ஐக்கிய அமெரிக்காவின், வடகீழ் மூலையில் நியூ இங்கிலாந்து தனித்ததொரு பிரதேசமாக அமைந்திருக்கின்றது. மேயின், நியூகம்சயர், வேமவுன்ற். மசெசூசெற், றோட்தீவு, கொனற்றிகட் எனும் ஐக்கிய அமெ ரிக்காவின் ஆறு மாகாணங்கள் சேர்ந்த பிரதேசமே நியூஇங்கிலாந்து எனப் படுகின்றது. இங்கிலாந்திலிருந்து முதன்முதல் இப்பிரதேசத்திற்கு மக்கள் குடியேறியதால், இப்பிரதேசம் நியூ இங்கிலாந்து என வழங்கப்படுகின் றது, நியூ இங்கிலாந்து மாகாணங்களின் பரப்பளவும் குடித்தொகை : பும் வருமாறு:

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
73
பாறை சவாசகணா மகாகாசோ
மாகாணம்
குடித்தொகை
பரப்பளவு (சதுரமைல்)
மேயின் நியூகம்சயர் வேமவுன்ற் 'மசெசூசெற் றோட்தீவு கொனற்றிக்கட்
33, 215
9,304 9,816 8,257 1,214 5, 009
9,69,000 60,700
52,00 51,49,000
8,59,500 25,32,000
காலைக்கதுTMVINKA / CAME:12:43
%ENAAr:FM/CIE57)CKA NENTATATT:25:59=33 N7K (ME8337719) த:TFa7)553:38 1/7/v,
பிரித்தானிய இங்கிலாந்திலிருந்து 1620-ஆம் ஆண்டில், மக்கள் இப் பிரதேசத்தில் குடியேறினர். பொஸ்தன், பிளைமத் முதலிய மையங்களில் முதற் குடியிருப்புகள் அமைந்தன; அதன்பிறகு, உண்ணாடு நோக்கிக் குடியேற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
தரைத்தோற்றமும் காலநிலையும்
நியூ இங்கிலாந்துப் பிரதேசத்தின் மேற்குப்பகுதி உயர்ந்த பகுதி யாகும்; இப்பகுதி அப்பலாச்சியன் உயர் நிலத்தின் ஒரு பகுதியாக விருக்கின்றது. அரிப்பினால் அதிகம் உருமாறிய மடிப்பு மலைகளாக இவை காணப்படுகின்றன, கட்சன் நதிக்கும் கொனற்றிகட் நதிக்கு மிடையே கிறீன் மலைகள் அமைந்துள்ளன; கொனற்றிகட் நதிப் பள் ளத்தாக்கிற்குக் கிழக்கே வைற் மலைகளுள்ளன. நியூ இங்கிலாந்தின் தெற்குக் கரையோரமும், கிழக்குக் கரையோரமும் தாழ் நிலங்களைக் கொண்டிருக்கின்றன. கட்சன் நதியையும் கொனற்றிக்கட் நதியையும் அடுத்து ஒடுங்கிய சமவெளிகளுள்ளன. பொதுவாக நியூ இங்கிலாந் துப் பிரதேசத்தின் கடற்கரையோரம் பாறைகள் நிறைந்த பல்லு வக் கரையாகும்.
கடுங்குளிரான மாரியும், வெப்பமான கோடையும் நியூ இங்கிலாந்துப் பிரதேசத்தில் நிலவுகின்றன. இங்கு நன்கு பரம்பிய மழைவீழ்ச்சியுளது. 60 அங்குல வருடமழை இங்குளது. வெப்ப நிலை கோடை காலத்தில் 60°-72°ப. வரையிலும், மாரிகாலத்தில் 20-30°ப. வரையிலும் காணப் படுகின்றது.
10

Page 45
74
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
19:2ISWAR -எல்., "13'1, 4, 'ஓ': 4 #:37:21(':44' 17: 83%)!} :*{5%# KiNASA wp:TSல் : 4 .25%ம' (கால்* <14; 11.1% 14:41 w: 11:12 Ast: 168 LAt t2:3**}SWATTT:ாதம்
-- -- -
- > உ ••
- சன -II
( மன
RESசிட்டா
சானா சா
-ன
சன --A -7
177,
மா=-=ர்: க
: வேமவுன
* (07) 19
ம செதசெ, -"
--கெகி பொன
{} க** 1/2 க *
972:58.55 TEART 5255. ' தே:- பாகல்
பிசம் த --- காட்.
-----" | பு
(3)
.உ4 * *'
" 21-இEHEEV4 - *:
4++ Fr-EHit/#!'FINFTF
*ராமரியாகா
சொகற்கட்: த.
இr 1 - )
-- மர்யம்
Rா கானா, 2ாரா#சி TTVRஓTT7" %374:07a5ாகாணணணRYRYC தரணத
PAIRTE -
படம்: 17 நியூ இங்கிலாந்துப் பிரதேசம்

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
75
பொருளாதார நடவடிக்கைகள்
பயிர்ச்செய்கை
நியூஇங்கிலாந்தின் பொருளாதார நடவடிக்கைகளில் பெளதிக இயல் புகள் பெரும் ஆதிக்கம் செலுத்தியுள்ளன; அதனாலேயே இப்பிரதேசத்தின் பொருளாதார நடவடிக்கைகளில் பயிர்ச்செய்கை முக்கியத்துவம் வகிக்க வில்லை. நியூ இங்கிலாந்துப் பிரதேசம் பிளைத்தோசீன் பனிக்கட்டியாற்றுக் காலத்தில் பனிக்கட்டியாற்றரிப்பிற்கு உட்பட்ட து. அதனால், இப்பிர தேசத்திள் வளமான மட்போர்வை நீக்கப்பட்டு, பெருமணிகளும் கற் களும் நிறைந்த கல்மண்ணே (Stony Soil) எங்குமுள்ளது; பயிர்செய் வதாயின் கற்களை நீக்குதல் அவசியம்; இது இயலக்கூடிய செயலாக வில்லை. நியூ இங்கிலாந்துப் பிரதேசத்தின் கற்பரந்த பூமி, கடினமான மண்வகை என்பன, நன்கு பரம்பிய மழைவீழ்ச்சி இருந்தும் பயிர்ச் செய்கைக்குத் தடை விதிக்கின்றன. எனினும், ஆரம்பத்தில் குடியேறிய மக்கள், இங்கிருந்த காடுகளை வெட்டி நீக்கி விளை நிலங்களை ஆக்கினர்: ஆனால், எதிர்பார்த்தளவு பயன் கிடையாது போனதால், விளை நிலங் களின் பரப்பளவு வருடாவருடம் குறைவடைந்து போனது.
எனினும், இன்று நியூ இங்கிலாந்துப் பிரதேசத்தில் புகையிலை, கோதுமை, சோளம், காய்கறி, உருளைக்கிழங்கு முதலிய பயிர்கள் விளை விக்கப்படுகின்றன. கொனற்றிகட் மாகாணத்தில் புகையிலைச் செய்கை முக்கியத்துவம் பெறுகின்றது; மிகுந்த கவனத்தோடு இங்கு புகையிலை வளர்க்கப்படுகின்றது. கோதுமையும் சோளமும் நியூ இங்கிலாந்துப் பிரதேசத்தில் அவ்வளவு முக்கியம் பெறவில்லை. எனினும், கொனற்றிக் கட் நதிப் பள்ளத்தாக்கிலும், நியூகம்சயர் பகுதியிலும் சிறிதளவு பயி ரிடப்படுகின்றது. நியூ இங்கிலாந்துப் பிரதேசத்திற்குத் தேவையான தானியங்களை ஐக்கிய அமெரிக்காவின் ஏனைய பகுதிகளில் இருந்து மலிவாக இறக்குமதி செய்ய முடிவதால், தானியச் செய்கை முக்கியம் பெறவில்லை. கரையோரப் பகுதிகளில் காய்கறிச் செய்கை நடைபெற்று வருகின்றது. மேயின் மாகாணத்தில் உருளைக்கிழங்குச் செய்கை முத லிடத்தை வகிக்கின்றது; நியூ இங்கிலாந்துப் பிரதேசத்தில் அதிகள வில் உருளைக்கிழங்கு உற்பத்தியாகும் ஒரே ஒரு பகுதி மேயினாகும்: தென் மேயினில் அப்பிளும் காய்கறிகளும் பயிராகின்றன.
நியூஇங்கிலாந்துப் பிரதேசத்தின் கற்பூமி, பாற்பண்ணைத் தொழிலிற் குப் பெருந்துணைபுரிகின்றது. கிறீன்மலைச் சாய்வுகளில் பாற்பண்ணைத் தொழில் விருத்தியுற்றுள்ளது. கொனற்றிக்கட், வேமவுன்ற் மாகாணங்க ளில் பாற்பண்ணைத் தொழில் நடைபெற்று வருகின்றது; நியூ இங்கி

Page 46
76
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
லாந்துப் பிரதேசத்தில் கோழிப் பண்ணைகளும் பேரளவிலுள்ளன. கொனற்றிக்கட், றோட் தீவு மாகாணங்களில் கோழிப் பணைணைகள் உள்ளன , இலங்கையில் இன்று அதிகளவில் வளர்க்கப்படும் R. I. R, எனும் இனக் கோழிகள் றோட்தீவு மாகாணத்தைச் சேர்ந்தவையே.
கைத்தொழில்கள்
நியூ இங்கிலாந்துப் பிரதேசத்தின் வளமற்ற மண், இங்குள்ள மக்க ளைக் கைத்தொழில் நடவடிக்கைகளில் முன்னேற வைத்துள்ளது. தொடக்கத்தில் குடியேறியவர்கள் மீன் பிடித்தலில் கூடுதலாக ஈடுபட் டனர். ஒரு பகுதியினர், நியூ இங்கிலாந்துப் பிரதேச உயர் நிலங்களில் செம்மறிகளை வளர்த்துக் கம்பளி நெசவுத் தொழிலிலீடுபட்டனர். இன்று ஐக்கிய அமெரிக்காவிலேயே பருத்தி நெசவுத் தொழிலில் முதலிடம் வகிப்பது நியூ இங்கிலாந்துப் பிரதேசமாகும். வளமற்ற மண், தேர்ச்சி யும் திறனும் மிக்க நெசவுத் தொழிலாளர், அதிக மூலதனம், ஈரம் செறிந்த கால நிலை என்பன யாவும் இப்பிரதேசத்தில் பருத்தி நெசவுத் தொழிலை விருத்தியடைய வைத்துள்ளன, ஏற்கனவே இது விரிவாக ஆராயப்பட்டிருப்பதால், இவ்விடத்து மீண்டுரைக்கப்படாது விடப்படு கின்றது .
நியூ இங்கிலாந்துப் பிரதேசத்தில் நீர்மின்வலு அதிகமுளது; அதனால் இங்கு இயங்கும் பாரமில் தொழில்களுக்கு மலிவாகப் போதிய வலு கிடைக்கின்றது. இப்பிரதேசத்தின் மேற்கு மாகாணங்களில் யந்திரங் களும், மத்திய மாகாணங்களில் மின்சாரப் பொருட்களும் உற்பத்தி பாகின்றன. மசெசூசெற், கொனற்றிக்கட் மாகாணங்களில் கடிகாரங் கள் உற்பத்தியாகின்றன; கொனற்றிக்கட் மாகாணத்தில் தட்டச்சு யந்திரம், தையல் யந்திரம் என்பன உற்பத்தியாகின்றன. மேயின் மாகாணத்தில் மரம் வெட்டுந் தொழில் முக்கியவிடத்தை வகிக்கின் றது, அதனால் காகிதக்கூழ் உற்பத்தி நடைபெறுகின்றது.
நியூஇங்கிலாந்துப் பிரதேசத்தின் உற்பத்திப் பொருட்கள் பொஸ்தன் துறைமுகத்தின் ஊடாக ஏற்றுமதியாகின்றன; பொஸ் தன் குடாவில், சார்ள்ஸ் நதி முகத்தில் அமைந்திருக்கும் பொஸ்தன் ஐக்கிய அமெரிக்கா விலேயே பெரிய மீன்பிடித் துறைமுகமாகும், பொஸ்தன் மசெசூசெற் மாகாணத்தின் தலை நகராகும்; 25,89,000 மக்கள் இங்கு வாழ்கின்றனர். இங்கு நெசவு, தோற்பொருட்கள், யந்திரங்கள், கம்பளி எனுமுற்பத்தித் தொழில்கள் நடைபெறுகின்றன. நியூயோக்கைப் பார்க்கிலும், ஐரோப் பாவிற்கு மிக அருகில் பொஸ் தன் துறைமுகமுளது; இது இதன் விருத்திக்
குத் துணையாகவுளது.

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
7?
மீன்பிடித்தல்
உலகின் சிறந்த நான்கு மீன்பண்ணைகளில் ஒன்றான வடமேல் அத்தி லாந்திக் மீன்பண்ணைகள், நியூ இங்கிலாந்துப் பிரதேசத்தை அடுத்தே காணப்படுகின்றன; இம்மீன்பண்ணைகள் 1,00,000 சதுரமைல் பரப் புடையன. இது ஆரம்ப காலத்திலிருந்தே வர்த்தக ரீதியாக இயங்கி வருகின்றது.
கிரான்ட்பாங், சென்பியரிபாங், பிறவுண்பாங், ஜோர்ஜ்டாங் முதலிய சிறிதும் பெரிதுமான கடலடித்தள மேடைகள் இங்குள்ளன. இக்கடலடித் தள மேடைகள் சிறந்த மீன்பிடித் தளங்களாக இருக்கின்றன, இவையே வடமேல் அத்திலாந்திக் மீன்பண்ணைகளின் விருத்திக்குப் பெரிதும் தூண்டுதலாக இருக்கின்றன.
நியூ இங்கிலாந்தின் கடற்கரையோரம் பலவகையான உருவங்களைக் கொண்டுள்ளது. இப்பல்லுருவத் தன்மைகள் இக்கரையோரத்தில் எண் ணிறைந்த துறைமுகங்களை உருவாக்கியுள்ளன. புயற் காலங்களில் ஒதுங்கிக் கப்பல்கள் பாதுகாப்பாக நிற்பதற்கு ஏற்றவாறு இத்துறை முகங்கள் அமைந்திருப்பது வடமேல் அத்திலாந்திக் மீன்பிடித் தொழி விற்குத் துணையாகவுள்ளது.
லபிறடோர் குளிர் நீரோட்டமும் சூடான குடா நீரோட்டமும் சந் திக்கின்ற பிரதேசமாக நியூ இங்கிலாந்தின் கரையோரமுளது. இந் நீரோட்டங்கள் கொண்டு வந்து சேர்க்கும் மீன்களின் உணவை - பிளாங்ரனை - நாடி வரும் மீன்களும் நீரோட்டங்களோடு சேர்ந்து வரும் மீன்களும் இப்பிரதேசங்களில் கூடுவதால், பெருந்தொகையான மீன்களை இலகுவில் பிடிக்க முடிகிறது.
இப்பிரதேசத்தில் கெறிங், காட்டொக், றோஸ்பிஸ், கலியட், கொட் முதலிய மீன்வகைகள் பிடிக்கப்படுகின்றன.
(ஆ) பேரேரிப் பிரதேசம்
(கைத்தொழில் வலயம்)
பிளைத்தோசீன் பனிக்கட்டியாற்றுக் காலத்தில், வட அமெரிக்காவின் வட அரைப்பகுதி பனிக்கட்டியால் கவிக்கப்பட்டிருந்தது. வட அமெரிக்கா வின் மொத்த நிலப்பரப்பில் 35 சதவீதப் பரப்பு பிளைத்தோசீன் பனிக் கட்டியாற்றரிப்பிற்கு உட்பட்டிருந்தது. இப்பகுதியில் நிலவிய மிகக் குறைந்த வெப்பநிலை, மழைப்பனி உருவாகக் காரணமாக இருந்தது.

Page 47
78
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
இப்பகுதியின் பரந்த மட்டமான நிலப்பரப்பு அம்மழைப்பனி தேங்கி நிற்கக் காரணமாயது. பிளைத்தோசீன் பனிக்கட்டியாறு, பசுபிக் கரை யிலிருந்து அத்திலாந்திக் கரைவரை கவிந்து இருந்தது. பேரேரிகளுக்குப் பல மைல்களுக்குத் தெற்கேயிருந்து ஆக்டிக்வரை இப்பனிக்கட்டியாறு காணப்பட்டது , இப்பனிக்கட்டியாறு காலநிலை மாற்றம் காரணமாக வடபுறம் நகர்ந்தது ; (அல்லது பின்வாங்கியது) பின்வாங்கும்போது கவிந்திருந்த நிலப்பரப்டை அரித்தபடி சென்றது. இவ்வாறு நிலம் அரித்துத் தோண்டப்பட்டதால் இப்பகுதியில் பல பனிக்கட்டியாற் றரிப்பு ஏரிகள் உருவாகின. கனடாவின் பரிசை நிலத்தில் காணப்படும் கிறேற் சிலேவ் ஏரி, கிறேற்பியர் ஏரி, வின்னிபெக் ஏரி. பேரேரிகள் என்பன பனிக்கட்டியாற்றரிப்பால் உருவாகிய ஏரிகளே.
பேரேரிகளையும் அவற்றைச் சூழ்ந்துள்ள பகுதிகளையுமே பேரேரிப் பிரதேசம் என்பர். சுப்பீரியர் ஏரி, மிக்சிக்கன் ஏரி, கூறன் ஏரி, ஈரி ஏரி ஒன்ராறியோ ஏரி என்னும் ஐந்து பெரும் ஏரிகளைப் பேரேரிகள் கொண் டுள்ளன. உலகிலேயே தொடர்ச்சியான பெரும் நன்னீர் ஏரிகள் இவை யாகும். ஏறக்குறைய 95000 சதுரமைல் பரப்பினைப் பேரேரிகள் கொண்டுள்ளன; இந்த ஐம்பெரும் ஏரிகளுள் மிகப்பெரியது சுப்பீரிய ராகும்; சுப்பீரியர் ஏரி 31800 சதுரமைல் பரப்பினையும், 1300 அடி. ஆழத்தையும் கொண்டுள்ளது; இந்த ஏரி கடல் மட்டத்திலிருந்து 602 அடி உயர்வானது. 23000 சதுர மைல் பரப்பினையும், 750 அடி ஆழத் தையும், கடல் மட்டத்திலிருந்து 580 அடி உயரத்தையும் கொண் டுள்ள கூறன் ஏரி, இலங்கையின் பரப்பளவினது. மிக்சிக்கன் ஏரி 22400 சதுரமைல் பரப்பையுடையது; ஏறத்தாழ 300 மைல் நீளத் தையும் 900 அடி ஆழத்தையுமுடையது; இந்த ஏரி கடல் மட்டத் திவிருந்து 572 அடி உயரத்தையு முடையது. பேரேரிகளில் மிகச் சிறியது ஒன்ராறியோ ஏரியாகும்; இது 7500 சதுர மைல் பரப்பினையும், 800 அடி ஆழத்தையும், கடல் மட்டத்திலிருந்து 246 அடி உயரத்தையும் கொண்டுள்ளது.
ஐக்கிய அமெரிக்காவையும், கனடாவையும் பிரிக்கின்ற எல்லை, சுப் பீரியர், கூறன், ஈரி, ஒன்ராறியோ ஏரிகளூடாக அமைந்திருக்கின்றது. பேரேரிகளின் வடகரையோரம் தரைத்தோற்றத்தைப் பொறுத்தளவில் சராசரி 1500 அடி உயரமானது ; சுப்பீரியர் ஏரிக்கும் மிக்சிக்கன் ஏரிக்கும் இடைப்பட்ட பகுதியும் இத்தகைய உயரத்தையே கொண்டிருக்கின்றது. மிக்சிக்கன் மாகாணம் தென்கிழக்கு வடமேற்குப் போக்கினையுடைய பாறைத் தொடர்களை, மிக்சிக்கன் ஏரிக்கும் கூறன் ஏரிக்கும் இடைப்யட்ட பகுதியில் கொண்டிருக்கின்றது. ஏரிப்பிரதேச மண் வளமானதன்று. பனிக்கட்டி யாற்றரிப்பின் பயனாக, பனிக்கட்டியாற்றுப் படிவுகளைக்

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
79
கொண்டிருக்கின்றது. பெருமணி மணலும் கற்களும் பொதுவாகக் காணப்படுகின்றன . விஸ்கொன்சின், மிக்சிக்கன் மாகாணங்கள் பள்ளந் திட்டியான மணல் நிலங்களாகும்; வட மின்னசொற்றா சதுப்புநிலங்களை யுடையது .
பொருளாதார முக்கியத்துவம்
ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியில், பேரேரிகள் மிக முக்கியமானவிடத்தை வகிக்கின்றன, என்பது மறுக்கமுடியாத பேருண்மை. வடகீழ் ஐக்கிய அமெரிக்காவின் கைத்தொழிற் பொருளா தாரத்தின் ஒவ்வொரு இயக்கத்திலும், பேரேரிகளின் முக்கியத்துவம் உணரப்படுகின்றது. பேரேரிகளின் பொருளாதார முக்கியத்துவத்தை
மேல்வருமாறு தொகுத்து ஆராயலாம்.
1) பேரேரிப் பிரதேசம் சிறந்த போக்குவரத்து வசதிகளையுடையது.
2) பேரேரிப் பிரதேசம் தக்க கனிப்பொருள் வளங்களைக் கொண்டி
ருக்கின்றது.
3) பேரேரிப் பிரதேச நகரமையங்கள் யாவும் கைத்தொழில் நட.
வடிக்கைகனில் பெருவிருத்தியுற்றிருக்கின்றன.
4) பேரேரிப் பிரதேசத்தில் கலப்பு வேளாண்மையும், பாற்பண்ணைத்
தொழிலும் சிறப்புற்றிருக்கின்றன.
5) பேரேரிகள் சிறந்த உண்ணாட்டு மீன் பிடித் தள மாக விளங்கு
கின்றன.
--- இவை ஒவ்வொன்றையும் விரிவாக இனி ஆராய்வோம்.
பேரேரிப் போக்குவரத்து
பேரேரிகள் தொடர்ச்சியான ஏரிகளாக அமைந்திருப்பது, நீர்வழிப் போக்குவரத்திற்குப் பெருவாய்ப்பாக இருக்கின்றது. 18-ஆம் நூற்றாண் டின் மத்திய பகுதியில் ஐக்கிய அமெரிக்காவின் அத்திலாந்திக் கரையோ ரப் பகுதியில் குடியேற்றங்கள் நிகழ்ந்தன; இக்குடியேற்றங்கள் காட்டர்ந்த தக்க நிலப்பாதைகள் அற்ற, ஐக்கிய அமெரிக்காவின் மேற்கு உட்புறங்க ளில் நிலைப்பதற்குப் பேரேரிகளே துணை நின்றன. பேரேரிகள் கப்பலோட்

Page 48
80)
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
டத்திற்கு உகந்தனவாக இருந்ததால், ஒன்ராறியோ ஏரியின் வடமுனையி லிருந்து சுப்பீரியர் ஏரியின் மேற்கு முனைவரை பிரயாணம் செய்ய முடிந் தது; ஆயிரம் மைல்கள் வரை நீர்ப்பிரயாணம் செய்யப் பேரேரிகள் உத வின. அதனாலேயே பேரேரிகளை அடுத்த பகுதிகளில் குடியேற்றங்கள் ஏற்பட்டு விருத்தியுற முடிந்தது.
பேரேரிகளின் போக்குவரத்து விருத்தி நான்கு வளர்ச்சிக் கட்டங் களை உடையது. அவை:
1. பேரேரிகளின் இணைப்பு பேரேரிகள் யாவும் ஒன்றினோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. சுப்பீரியர், கூறன், மிக்சிக்கன எனும் மூன்று ஏரிகளும் இயற்கையா கவே ஒன்றினோடு ஒன்று இணைந்திருக்கின்றன. எனினும், சுப்பீரியர் ஏரிக்கும் கூறன் ஏரிக்கும் இடையே கப்பலோட்டத்திற்குத் தடையாக இருந்த விரைவோட்டவாற்றுப் பகுதிகள் நீக்கப்பட்டு விட்டன. கூறன் ஏரியும் ஈரிஏரியும், ஈரிஏரியும், ஒன்ராரியோ ஏரியும் கால்வாய்கள் மூலம் ஒன்றினோடு ஒன்று இணைக்கப்பட்டன, ஐந்து ஏரிகளும் ஒன்றி னோடொன்று இணைக்கப்பட்டமை, பேரேரிகளின் போக்குவரத்துத் தூரத்தை விரிவாக்க உதவியது,
2. சென்லோறன்ஸ் கடல் வழி விருத்தி
சென்லோறன்ஸ் நதி ஒன்ராரியோ ஏரியுடன் இணைக்கப்பட்டிருக் கின்றது. சென்லோறன்ஸ் நதியிலுள்ள விரைவோட்டவாற்றுப் பகுதி கள் கால்வாய்கள் பல மூலம் நீக்கப்பட்டதால், இந்நதியில் கப்ப லோட்டம் நிகழமுடிகின்றது. அதனால், சுப்பீரியர் ஏரி முனையிலுள்ள டூலுத்தில் இருந்தோ, மிக்சிக்கன் ஏரி முனையிலுள்ள சிக்காக்கோவில் இருந்தோ, அவற்றையொத்த பிற நகரங்களில் இருந்தோ கனடாவின் - குவிபெக் துறைமுகம் வரை கப்பலோட்டம் நிகழமுடியும். அதனால், பேரேரிகள் அத்திலாந்திக் சமுத்திரத்துடன் இணைக்கப்பட்டன; இது பேரேரிப் போக்குவரத்தின் இரண்டாம் கட்ட வளர்ச்சியாகும்.
3. கட்சன் - மோஹோக் இடைவெளி
கட்சன் - மோஹோக் இடைவெளியினூடாக ஈரி ஏரியின் வடபகுதியில் அமைந்திருக்கும் பபுலோ நகரம், நியூயோர்க் துறைமுகத்தினுள் கலக் கின்ற கட்சன் நதியுடன் ஒரு கால்வாய் மூலம் இணைக்கப்பட்டமை, பேரேரிகளின் போக்குவரத்து முக்கியத்துவத்தை அதிகரிக்க வைத்தது.

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
81
வடகீழ் ஐக்கிய அமெரிக்காவில் ஹட்சன் நதி, மோஹேக் நதி எனும் இரண்டு நதிகளின் பள்ளத்தாக்கு இடைவெளியையே ஹட்சன் - மொ ஹேக் இடைவெளி என்பர். ஹட்சன் நதி வடக்குத் தெற்காகப் பாய்கி றது. ஹட்சன் நதியின் முகத்தில் தான் நியூயோர்க் துறைமுகம் அமைந்தி ருக்கின்றது. உண்மையில் ஹட்சன் நதியின் கிழக்கு மேற்கான கிளை நதியே மொஹோக் நதி ஆகும். அமெரிக்காவில் ஆரம்பக் குடியேற்றங் கள் நிகழ்ந்தபோது அப்பலாச்சியன் மலைத்தொடர் கிழக்குக் கரையி லிருந்து உண்ணாட்டிற்கு மக்கள் குடியேறுவதற்கு பெளதிகத் தடையாக விளங்கியது. அவ்வேளை மக்கள் உண்ணாடு நோக்கி நகர்வதற்கு உத வியது ஹட்சன் - மொஹோக் இடைவெளியாகும். தொடர்ச்சியான அப்பலாச்சியன் மலைத்தொடரில், பனிக்கட்டியரிப்பின் விளைவாக ஒரு மைல் அகலத்தில் இந்த இடைவெளிப் பள்ளதாக்கு உருவாகியிருக்கின் றது. இந்த இடைவெளியின் ஊடாகக் குடியேற்றங்கள் உண்ணாடுக ளில் நிகழ்ந்தன. நியூயோர்க்கின் விருத்திக்கும் இந்த இடைவெளியே காரணமாகும். ஈரி ஏரியின் கிழக்கு அந்தத்திலிருந்து ஹட்சன் நதி வரை காணப்படும் மொஹோக் நதி இடைவெளி ஒரு ஒடுங்கிய சம
46* Eஈ- எAK.2% யோகா:ச, TEாHைEARL7 Rாகா47-க:**4' 1 2-சநT: ** + சாப-14 H 23T-னா TS:-ஈண ir T-';
: 2 5 2
கனடா
6 கோக-கா.
0 A அ .டி
-- ( கேண ஒன்ராறியோ .( ஃ, 11)
47-க. ஈ-1,
நே'
5-ம்லி
வா:
7ாரி
பாசி, 3ப4வோ ஒல்கா ஜ க -
""19ா.
* பள்! காதே
ம்ல''
விடப்
எனககக
பெப லாசரிடர்ன்
'02) |
\ நியூயோரம்
197;
படம் : 18 ஹட்சன் மொஹேக் இடைவெளி
17

Page 49
82
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
வெளியாகும். இச்சமவெளியினூடாக ஈரி ஏரிக்கரையிலுள்ள பபுலோ என்ற நகரத்தையும் ஹட்சன் நதியிலுள்ள அல்பேனியாவையும் இணைத்து ஒரு கால்வாய் 1825இல் வெட்டப்பட்டது. கட்சன் நதியும் விரைவோட்டமற்ற, ஆழமான நதியாகும். இக்கால்வாயை ஈரிக் கால் வாய் (பார்ஜ் கால்வாய்) என்பர். இந்த ஈரிக்கால்வாய் இந்த இடை வெளியில் அமைக்கப்பட்டதும் நியூயோர்க் துறைமுகத்துடன் உட் புறப்பகுதிகள் கப்பல் வழி நேரடியாகத் தொடர்பு கொள்ள முடிந் தது. இக்கால்வாய் அமைக்கப்பட்டதும் ஈரி ஏரியிலிருந்து நியூயோர்க் வரையிலான கொண்டு செல்லற் செலவு பத்திலொன்றாகக் குறைந் தது. இந்த இடைவெளியின் ஊடாகக் கப்பல் வழிநேரடியாகத் தொட ர்பு கொள்ள முடிந்தது. இந்த இடைவெளியின் ஊடாகக் கப்பல் போக்குவரத்து நடப்பதற்கு முன்னர், பிலடெல்பியா, பொஸ்தன் எனும் துறைமுகப் பட்டினங்களிலும் பார்க்கச் சிறியதாகவே நியூ போர்க் இருந்தது. ஈரிக்கால்வாய் அமைக்கப்பட்டதும் இத்துறைமுகம் விரைந்து வளர்ச்சியுற்றது. அத்தோடு உண்ணாட்டுப் பகுதிகள் யாவும் இருப்புப்பாதைகளினால் இந்த இடைவெளியூடாக இணைக்கப்பட்டன.
4. இலினோய் கால்வாய்
மெக்சிக்கோ குடாவிலுள்ள நியூ ஒலியன்ஸ் துறைமுகத்துடனும் பேரேரிகள் நீர் வழி இணைக்கப்பட்டிருக்கின்றன; எவ்வாறெனில், சிக் காக்கோவிலிருந்து மிசிசிப்பி நதி இலினோய் கால்வாயால் இணைக்கப் பட்டிருக்கின்றது. அதனால் நியூ ஒலியன்ஸ் துறைமுகம் வரை கப்ப லோட்ட முடிகின்றது. இவை காரணமாகவே பேரேரிகளின் போக்கு வரத்துப் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகின்றது.
பேரேரிகளூடாக அதிகம் நடைபெறும் கொண்டு செல்லல், பண் படுத் தாப் பொருட்களாகும். பேரேரிகளின் அந்தங்களில் காணப்படும் மூலப்பொருட்களை கைத்தொழில் மையங்களில் ஒருங்கே சேர்க்கும் பனியைப் பேரேரிகள் புரிகின்றன. இரும்புத்தாது, நிலக்கரி, சுண் ணக்கல், கோதுமை, சோளம், பாற்பொருட்கள், இறைச்சி முதலான பொருட்கள் பேரேரிகளுடாக உரிய இடங்களுக்கு எடுத்துச் செல்லப் படுகின்றன,

ஒகது4பத இது
இINTEMYRT R இ 219 ன்பில் 842872 இKைSTRANTEX SKYFTEASTERRESS ME2:23:IE STORIESSTR30% CINWFRITR97
1 ஜி நிலக்கரி ஐ இரும்புத்தாது எ கைத்தொழில்
நகரமையங்கள் காரைன்று இரும்புத் தாது
வரும் பாதை
2. ~ ~
ஐக்க
இட
ர! ய ர
வேமிலியன் ஓ - ( மெசாபி இசு/ வேத் >ழராக்வெற்
காஜTM இ.
தொனை
கியூனா யோசிபிக..
அறன்
ராயோ"
*-ல - -
கியூனா ° மெனோமினி,
& அலட .
/5 ---
ஐ.
-29
பித்தன்
4போராகாஸ்கதை 6
மில்வாக்கி 4 5
- பேபுலோ டெர்ஜெயசிங்கம் - 4ாரி......
SEL
2 0
?: '.
"45:ாஜன் ""
உன் கூலுரண்
4 4 4 4 * * *
ஓ சி பி ஓ ம் ) 4) 61
":/ar
யே !ாரம்; - ப்ா மீட!!,'' - த. ;
-யா போ
{}
5 5 து .
22: 3KERS ETRACESSINSEAKINாள்: 235%ETWi2:24:48:51
படம்: 19 பேரேரிப் பிரதேசம்

Page 50
84
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
கனிப்பொருட்கள்
நவீன கைத்தொழில் யுகத்திற்கு மூலாதாரமான இரு கனிப் பொருள் மூலவளங்களின் மத்திய நிலையத்தில் பேரேரிகள் அமைந்தி ருக்கின்றன. பேரேரிகளின் மேற்குப் பகுதியில் இரும்புத்தாதும், கிழக் குப் பகுதியில் நிலக்கரியும் காணப்படுகின்றன. சுப்பீரியர் ஏரியின் மேற்குக் கரையோரத்தில் வேமிலியன், மெசாபி, கியூனா எனும் இரும்புத்தாது வயல்களும் காணப்படுகின்றன; இவ்வயல்கள் தரத்தி லுயர்ந்த தாதுப்படிவுகளைக் கொண்டிருக்கின்றன. பேரேரிகளின் கிழக் குப் பகுதியில் அப்பலாச்சியன் நிலக்கரி வயலுளது. சுப்பீரியர் ஏரிக் கரையிலுள்ள இரும்புத்தாது, கப்பல்கள் மூலம் சிக்காக்கோ, டெற் றோயிற். பிற்ஸ்பேக் முதலான இரும்புருக்குத் தொழில் மையங்களுக் குக் கொண்டு வரப்படுகின்றது. முன்பு 10 ஆயிரம் தொன் இரும்புத் தாதைக் கப்பலில் ஏற்ற 3 மணி நேரம் தேவைப்பட்டது; இன்று நவீன சாதனங்களின் துணையுடன் 17 நிமிடங்களில் ஏற்ற முடிகின் றது; இரும்புத்தூதை ஏற்றிவரும் கப்பல்கள் திரும்பிச் செல்லும் போது, நிலக்கரியை எடுத்துச் செல்கின்றன.
சுப்பீரியர் ஏரியின் தென்கரையில் செம்புப் படிவுகளுள்ளன; கூறன், ஈரி ஏரிக் கரைகளில் பெற்றோலியப் படிவுகளும் காணப்படு கின்றன. கூறன் ஏரிக்ரையில் சுண்ணக்கல் படிவுகளும் உள்ளன.
கைத்தொழில் மையங்கள்
பேரேரிப் பிரதேசத்தில் பல் வகைக் கைத்தொழில்களும் இயங்கி வருகின்றன. இரும்புருக்கு, மோட்டார் வண்டி, கப்பல் கட்டுதல், மாவரைத்தல், நெசவு, பாற்பொருட்கள் எனப் பல்வகைத் தொழில்க ளும் பேரேரிப் பிரதேசத்தில் காணப்படுகின்றன. டூலுத். மில்வாக்கி, சிக்காக்கோ , டெற்றொயிற், தெலாடோ, கிளீவ்லாண்ட், பபுலோ எனப் பல கைத்தொழில் மையங்கள் இப்பிரதேசத்தில் உள்ளன.
டூலூத்
டூலூத் பிரதேசம் இரும்புருக்குத் தொழிலிற்குப் புகழ் பெற்றதா | கும். இது சுப்பீரியர் ஏரியின் மேற்குக்கரையோரத்தில் இரும்புத்தாது வயல்களின் மத்தியில் அமைந்திருக்கின்றது. இரும்புத்தாது வயல்கள் டூலூத்தைச் சூழ்ந்து காணப்படுவதனாலேயே இங்கு இரும்புருக்குத் தொழில் விருத்தியடைந்தது. இப்பிரதேசத்திற்குத் தேவையான நிலக் கரி அப்பாலாச்சியன் வயல்களிவிருந்து பேரேரிகளூடாகக் கொண்டு

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
85
வரப்படுகின்றது. டூலுத் பிரதேசத்தில், பயிர்ச்செய்கை யந்திரங்கள், தோற்பொருட்கள், இரசாயனப் பொருட்கள் என்பனவும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
மில்வாக்கி
மில்வாக்கி மிக்சிக்கன் ஏரியின் மேற்குக் கரையோரத்தில் அமைந் திருக்கின்றது; இங்கு 12 இலட்சம் மக்களுக்கு மேல் வாழ்கின்றனர். மில்வாக்கி இரும்புருக்குக் கைத்தொழில் மையங்களுக்கு மத்தியில் அமைந்திருப்பதால், இரும்புருக்கைக் கொண்டு, யந்திரங்கள் செய்வ தில் விருத்தியுற்றுள்ளது; இங்கும் பயிர்ச்செய்கைக்குரிய இழுபொறி கள், பியர் குடிவகை, தோற்பொருட்கள் என்பன உற்பத்தியாகின் றன.
சிக்காக்கோ
மிக்சிக்கன் ஏரியின் தென் அந்தத்தில் அமைந்துள்ள சிக்காக்கோ, இரும்புருக்குக் கைத்தொழிலிற்கும் இறைச்சி பதனிடுதல் தொழிலிற் கும் பேர்பெற்றதாகவுள்ளது. சிக்காக்கோப் பிரதேசத்தின் இரும்புரு க்கு கைத்தொழில் குறித்து, ஏற்கனவே விரிவாக ஆராய்ந்துள்ளோம். அதனால் இவ்விடத்து ஆராயாது விடுவோம்.
ஐக்கிய அமெரிக்காவின் முக்கிய தொழில்களில் இறைச்சி பதனி டல் ஒன்றாகும். உணவு வகைகளில் கோதுமைக்கு அடுத்ததாக இறைச்சி முக்கியம் பெறுவதால், சிக்காக்கோ , கன்சாஸ், சென்லூயி, சென் போல், சென் யோசேப், போட்வேட் முதலான ஐக்கிய அமெ ரிக்க நகர்களில் இறைச்சி பதனிடல் ஆலைகள் இயங்கி வருகின்றன. இறைச்சி பதனிடலில் ஐக்கிய அமெரிக்க நகர்களில் முதலிடத்தைப் பெறுவது வடகீழ்ப் பிரதேசத்திலுள்ள சிக்காக்கோவாகும்.
சிக்காக்கோவில் வருடாவருடம் 400 கோடி டொலர் பெறுமதி யான இறைச்சிப் பொருட்கள் உற்பத்தியாகின்றன. மாடு, செம்மறி யாட்டுக் குட்டி, பன்றி எனும் விலங்குகளின் இறைச்சி இங்கு பதனி டப்பட்டு, வடகீழ்ப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் உடனுக் குடன் குளிரேற்றல் வண்டிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றது. (அ) சிக்காக்கோவின் மேற்குப் பகுதியில் கால் நடை மேய்ச்சல் நிலம் காணப்படுகின்றது; (ஆ) தெற்கே சோள வலயம் பரந்து அமைந்தி ருக்கின்றது; (இ) வலையமைப்பிலமைந்த இருப்புப் பாதைகள் சிக்காக் கோவில் வந்து ஒருங்கே சேர்கின்றன ; (ஈ) ஐக்கிய அமெரிக்காவி

Page 51
86
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
லேயே அதிக இறைச்சியை நுகரும் பிரதேசம் வடகீழ்ப் பிரதேசமா கும் - இத்தகைய சாதகமான தன்மைகள் யாவும் சிக்காக்கோவில் இறைச்சி பதனிடும் தொழிலை விருத்தியடைய வைத்துள்ளன. வடகீழ்ப் பிரதேசத்தில் நியூ இங்கிலாந்துப் பகுதியிலும் இறைச்சி பதனிடுதல் நடைபெற்று வருகின்றது.
சிக்காக்கோவில் ஏறக்குறைய 68 இலட்சம் மக்கள் வரை வாழ் கின்றனர். ஐக்கிய அமெரிக் காவின் நான்காவது பெரிய நகர், இது வாகும். சிக்காக்கோ, இருப்புப் பாதைகளின் குவிமையமாகக் காணப் படுகின்றது.
டெற்றொயிற்
மிக்சிக்கன் மாகாணத்தின் பெருநகர் டெற்றொயிற்றாகும். இங்கு ஏறத்தாழ 37, 67,000 மக்கள் வாழ்கின்றனர். ஈரி ஏரியின் கரையோ ரத்தில் அமைந்து ள் ள டெற்றொயிற் மோட்டார் வண்டிக் கைத்தொ ழிலில் மிக முக்கிய மானவையாகும். ஐக்கிய அமெரிக்காவிலேயே கார் உற்பத்தியில் முதலிடத்தைப் பெறு வது டெற்றொயிற்றே. உலகப் புகழ்பெற்ற போர்ட்கார் கம்பனியும் இங்கேயே இருக்கின்றது. கார் உற்பத்தியை விட இரசாயனப் பொருட்கள், விமான உறுப்புக்கள், மின்சாரப் பொருட்கள் என்பனவும் டெற்றொயிற்றில் உற்பத்தி செய் யப் படுகின்றன.
தெலாடோ
தெலாடோ நகரமும் ஈரி ஏரிக் கரையோரத்திலேயே அமைந்திருக் கின்றது; ஏறக்குறைய 5,57,000 மக்களை இந்ந கர் கொண்டிருக்கின் றது. பல்லினக் கைத்தொழில்கள் தெலாடோவில் விருத்தியுற்றுள் ளன. கப்பல் கட்டுந் தொழில் நன்கு நடை பெற்று வருகின்றது. இரும்புருக்கு, தோற் பொருட்கள், றப்பர்ப் பொருட்கள், சிகரெட், மின்சாரப் பொருட்கள் என்பன உற்பத்தி செய்யப்படுகின்றன.
கிளீவ்லான்ட்
ஒகாயோவின் பெருநகரான கிளீவ்லாண்டில் 14,97,000 மக்கள் வாழ்கின்றனர். கிளீவ்லாண்டில் இரும்புருக்குக் கைத்தொழில் நன்கு விருத்தியுற்றுள்ளது. சுப்பீரியர் ஏரிப்பிரதேச இரும்புத்தாது கிளீவ் லாண்டில் இறக்கப்படுவதாலும், அப்பலாச்சியன் பிரதேச நிலக்கரி

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
ஏற்றுமதிக்காக இங்கு சேர்க்கப்படுவதாலும் இங்கு இரும்புருக்குத் தொழில் முன்னேறியுள்ளது. மேலும், இறைச்சி பதனிடல், சீமேந்து. மோட்டார் வண்டிகள், தீந்தைகள், இயந்திரங்கள், நெசவுப் பொருட் கள் என்பனவும் இங்கு உற்பத்தியாகின்றன.
பபுலோ >
ஈரி ஏரியின் வடகரையில் அமைந்துள்ள Lபுலோ தானியம் அரைத் தல் தொழிலில் ஐக்கிய அமெரிக்காவிலேயே முதலிடத்தை வகிக் கின்றது . ஐக்கிய அமெரிக்காவில் அரைக்கப்படும் தானியத்தில் 15 சத வீதத்தை பபுலோ அரைக்கின்றது. பேரேரிகளினூடாக ஐக்கிய அமெரிக்காவின் கோதுமையும் கனடாவின் கோதுமையும் பபுலோத் துறைமுகத்தில் வந்து சேர்கின்றன. நயாகரா நீர் .பின்வலு, மாவரைக் கும் ஆலைகள் மலிவாக இயங்க உதவுகின்றது . பபுலோவில் உருக்கு , றப்பர்ப் பொருட்கள், பிளாஸ்ரிக், யந்திரம் நெசவு, மின்சாரக் கரு விகள் முதலானவையும் உற்பத்தியாகின்றன. பபுலோவில் ஏறத்தாழ 13,07,000 மக்களுள்ளனர்.
கலப்பு வேளாண்மை
ஐக்கிய அமெரிக்காவினைப் பயிர்ச்செய்கை வலயங்களாக வகுக்கும் போது வடகீழ் ஐக்கிய அமெரிக்காவை கலப்பு வேளான்மையும் பாற் பண்ணையும் நடைபெறும் வலயம் எனப்புவிய றிஞர்கள் பலரும் வகுத் துள்ளனர். பேரேரிப்பிரதோசத்தில் கைத்தொழில்கள் வகித்து வருகின்ற
முக்கியத்துவத்தைப் பயிர்ச் செய்கை வகிக்கவில்லை.
இப்பிரதேசக் கலப்பு வேளான்மை குறித்தும் பாற்பண்ணை குறித் தும் பயிர்ச்செய்கை என்ற தலைப்பில் ஏலவே விரிவாக ஆராயப்பட் டுள்ளது. இவ்விடத்து அப்பகுதிகளை மீளவும் சேர்த்துப் படித்தல் நன்று.
மீன்பிடித்தல்
பேரேரிகள் சிறந்த நன்னீர் மீன்பிடித்தளங்களாகவும் விளங்குகின் றன ; பேரேரிக் கரையோரங்களில் நகரங்கள் உருவான தன்பின், பேரேரி களின் மீன்பிடி வர்த்தக மீன்பிடியாக விருத்தியுற்றது. பேரேரிகளில் பொதுவாக மீன்வளம் அதிகமுள்ளது: பேரேரிகளைக் சுற்றி அதிக குடி. யடர்த்தி காணப்படுவதால், இங்கு பிடிக்கப்படும் மீனுக்குச் சிறப்பான சந்தை வசதியுள்ளது. அண்மையாண்டுகளில் பேரேரிகளின் மீன் வளம் குறைவுற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதற்கு மிதமிஞ்சி மீன் பிடித்

Page 52
88
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
தலும், கரையோரக் கைத்தொழில் நகரங்களின் ஆலைகளால் நீர் அழுக்காதலும், காரணங்களாகும். பேரேரிகளில் பிடிக்கப்படும் மீன் கள் உடனுக்குடன் ஜஸ்சிலிடப்பட்டு நகரங்களுக்கு விற்பனைக்காக அனுப்பிவைக்கப்படுகின்றன.
(இ) வட' அப்பலாச்சியன், மத்திய அத்திலாந்திக் பிரதேசம் வடகீழ் ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் பென்சில் வேனியா, நியூயோர்க், நியூயேசி. டெலாவயர், மேற்கு வேஜீனியா, ஒகாயோ எனும் மாகாணங்களின் பகுதிகளையுள்ளடக்கிய பிரதேசத்தை வட அப்பலாச்சியன் - மத்திய அத்திலாந்திக் பிரதேசம் வரை என வரையறுக்கலாம். வடகிழக்கே கட்சன் ஆறுவரை பரந்துள்ள இப்பிரதே சம் வட அப்பலாச்சியன் உயர் நிலங்களையும், கரையோரச் சமவெளியை யும் கொண்டுள்ளது.
தரைத்தோற்றமும் அமைப்பும்
வட அப்பலாச்சியன் - மத்திய அத்திலாந்திக் பிரதேசத்தின் தரைத் தோற்றத்திலும் அமைப்பிலும் இரு வேறுபட்ட தன்மைகளை அவ தானிக்கலாம். அவை:
அ) வட அப்பலார்ச்சியன் உயர் நிலம்.
ஆ) அப்பலார்ச்சியனிக்கும் அத்திலாந்திச் சமுத்திரத்திற்கும்
இடையிலுள்ள கடற்கரைச் சமவெளி.
இப்பிரதேசத்திலமைந்துள்ள அப்பலார்ச்சியன் உயர் நிலத்தில் சில பௌதிகப் பிரிவுகளை அவதானிக்கலாம். அப்பலார்ச்சியனின் அதி " மேற்கு வடக்குப் பகுதி அலகனி மேட்டுநிலங்களைக் கொண்டிருக்கின் றது. அலகனி மேட்டு நிலம் எரிமலைக் குழம்புத் தலையீட்டுப் பாறை களால் உருவான பழைய உருமாறிய பாறைகளைக் கொண்டுள்ளது. இம்மேட்டு நிலம் மேற்குப் புறமாகப் படிப்படியாகச் சாய்கிறது. இத னுச்சவுயரங்சள் 2000 அடியிலிருந்து 4000 அடிவரை வேறுபடுகின்றது. அலகனி மேட்டுநிலத்தை அடுத்து, பள்ளத்தாக்குகளையும் பீடங்களை யும் உடைய புதிய அப்பலார்ச்சியன் காணப்படுகின்றது; இது சமாந் தரமான பல பாறைத் தொடர்களைக் கொண்டிருக்கின்றது. இப் பாறைத் தொடர்களை அருவிகள் துண்டித்துப் பல விரைவோட்டப்

89
T£சிய ஒருஏ ப (08 ( 7577 - !99ாரு சி ப97/776 7re 07 777 கை, ,--*-442 -: * *கக்.4:
-2: *',: +44,': {1,I* புக் பட்டப் !
*- *, *"டப்பட்ட At = : 4 ''அ.*க காத்து :கல் - கேப்டன்
+ + + + £ 1. )
* கெலாட் Tா4 92
இகாணகம்
": ஃ€: 48
"1': தி : 13)
25: 15. "; 7 !
:ா?
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
'. "utx, ர?
காமகTைTEயானாகாணல் KEER" - 5
1 + 3 ) +
+ 2 + 37
ஆக, துலா த
- ( .
84/1 (9 பே®
எம9 08-32 * -
- ° ,'7, 4 + +"
' * + காக்கைவிகிதத்தை கா. + - 4
# 9 363565--ல்
கணக்க
4 / ( 1. - *.
> - ப் ) * ------------------------
97ா!
*ராடியாவைப் பி9/
: த கேகலிய பெண்

Page 53
90
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
பகுதிகளை ஏற்படுத்தியுள்ளன; இளமையான பாறைகள் இங்கேயுள் ளன. புதிய அப்பலார்ச்சியன் பகுதிக்கு மேற்கே பீட்மொண்ட் மேட்டு நிலம் உள்ளது : இம்மேட்டு நிலம் மிகப் பழமையான பாறைகளைக் கொண்டுள்ளது; இம்மேட்டு நிலம் அதிக உரிதலுக்குட்பட்டிருக்கின்றது.
இம்மேட்டுநிலம் மிகப் பழக பட்மொண்ட ";
பீட்மெ!ாண்ட் மேட்டு நிலத்திற்கும் அத்திலாந்திக் சமுத்திரத்திற் குமிடையில் கடற்கரைச் சமவெளி பரந்துள்ளது. இக்கரையோரச் சமவெளி அப்பலாச்சியன் பிரதேச அரித்தலால் ஏற்பட்ட படிவுப் பொருட்களைக் கொண்டுள்ளது ; சோக்குக்குரிய இளமையான பாறை கள் இங்கேயுள்ளன. புதிய அப்பலாச்சியன் பகுதிக்கு மேற்கே பீட் மொண்ட் மேட்டு நிலம் உள்ளது; இம்மேட்டு நிலம் மிகப் பழமையான பாறைகளைக் கொண்டுள்ளது: சோக்குக்குரிய இளமையான பாறை) களையும் கொண்டிருக்கின்றது; இக்கடற்கரைச் சமவெளி டொலாவயர், சொசா பிக் போன்ற குடாக்களையும், கடனீரேரிகளையும், சேற்று
நீ லங் களை யும் கொண்டுள்ளது. கட்சன் நதி, தெலாவயர் நதி, சஸ்க் கேன நதி என்பன இக்கடற்கரைச் சமவெளியினூடாகப் பாய்கின் றன.
பீட்மொண்ட் மேட்டுநிலமும், கடற்கரைச் சமவெளியும் சந்திக் கின்ற பகுதியில் தொடர்ச்சியான டல் நீர் வீழ்ச்சிகள் காணப்படுகின் றன ; நீர் வீழ்ச்சிகளைத் தொடர்ச்சியாகவுடைய இப்பகுதியை, நீர் வீழ்ச்சி வலயம் அல்லது நீர் வீழ்ச்சிக்கோடு என்பர். இந்நீர்வீழ்ச்சிக் கோட்டையடுத்தே வாஷிங்டன், போலரிமோர், பிலடெல்பிபா, நியூ யோர்க் முதலிய நீர் வீழ்ச்சிப் பட்டினங்கள் அமைந்துள்ளன.
காலநிலை
வட அட்'பலாச் கியன் - மத்திய அத்திலாந்திக் பிரதேசத்தில் ஆண்டுக்குரிய மழை வீழ்ச்சி (1) அங்குலம் வரையிலுளது; இம்மழை விழ்ச்சி நன்கு பரம்பியுள்ளது . சூறாவளிகள் அதிக மாரிமழையைத் தருகின்றன. சமுத்திரச் செல்வாக்கு அதிகமிருப்பதால், மட்டான காலநிலை நிலவுகின்றது; ஜனவரி மாத வெப்பநிலை 310 - 36° ப. வரையுளது; ஜூலை மாத வெப்பநிலை 72° -- 78° ப. வரையுளது: இப் பிரதேசத்தில் பயிர் வளரும் பருவம் 150 நாட்கள் வரையுளது.
பொருளாதார நடவடிக்கைகள்
வட அப்பலாச்சியன் பிரதேசம் கனிப்பொருள் வளம் நிறைந்த தாசவும், மத்திய அத்திலாந்திக் பிரதேசம் பயிர்ச் செய்கை நடவடிக்

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
97
கைகளுக்கு உகந்ததாகவும் காணப்படுகின்றன. இப்பிரதேசத்தின் பொருளாதாரத்தில் பயிர்ச்செய்கை முக்கியவிடத்தைப் பெறுகின்றது. மத்திய அத்திலாந்திக் கரையோரப் பிரதேசத்தில் புகையிலைச் செய்கை மிக முக்கிய நடவடிக்கையாகும். வேர்ஜீனியா புகையிலை உலகப் புகழ் பெற்றதாகும். கரையோரச் சமவெளியில் செசாபிக்குடாவினைச் சூழ்ந்தமைந்துள்ள பிரதேசம் புகையிலைச் செய்கையில் முதலிடத்தைப் யெறுகின்றது. நியூயேசி மாகாணத்திலும் புகையிலை உற்பத்தி நடை பெற்று வருகின்றது. கோதுமை, சோளம், கிழங்குவகை என்பனவும் இப்பிரதேசத்தில் பயிரிடப்பட்டு வருகின்றன. நல்ல வளமாக்கிகளை உபயோகித்து, திருப்திகரமான விளைச்சலைப் பெறுகின்றனர். சுழல் முறைப் பயிர்ச்செய்கை கைக்கொள்ளப்பட்டு வருகின்றது. கரையோரப் பகுதிகளில் காய்கறிச் செய்கை வருமானம் தருகின்ற பிறிதொரு தொழிலாக இருக்கின்றது. டெலாவயர், செசாபிக் குடாக்களை அடுத்த பகுதிகளின் பாரமற்ற மணல்மண், காய்கறிச் செய்கைக்கு உகந்ததாக வுள்ளது. (படம் 22 பார்க்க)
வட அப்பலாச்சியன் பிரதேசம் நிலக்கரி வளம்மிக்கதாகும். உல கிலேயே சிறந்ததரமான நிலக்கரியை இங்குள்ள வயல்கள் கொண் டிருக்கின்றன. கணிசமானவளவு பெற்றோலிய உற்பத்தியும் வட அப் பலாச்சியன் பிரதேசத்தில் நடைபெறுகின்றது. ஐக்கிய அமெரிக்கா வில் உற்பத்தியாகும் நிலக்கரியில் 3 பங்கினை அப்பலாச்சியன் வயல் களே அளிக்கின்றன. ஏலவே இது விரிவாக ஆராயப்பட்டிருக்கிறது.
வட அப்பலாச்சியன் பிரதேசக் கைத்தொழிலில் இரும்புருக்கு முக்கியமானது ; பிற்ஸ்பேக் வட அப்பலாச் சியன் பிரதேசத்திலேயே அமைந்திருக்கின்றது. வடகீழ்ப் பிரதேசத்திலேயே இரும் பு ருக் கு த் தொழிலில் பிற்ஸ்பேக் முதலிடத்தை வகித்து வருகின்றது. இக்கைத் தொழில் மையம் குறித்து விரிவாக ஆராயப்பட்டதால் இவ்விடத்து மீண்டும் ஆராயாது விடப்படுகின்றது.
மத்திய அத்திலாந்திக் பிரதேசத்தில் நெசவுக் கைத்தொழில், பில் டெல்பியா நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நன்கு நடைபெறு கின்றது. இரசாயனக் கைத்தொழில், யந்திரத்தொழில், எண்ணெய் தூய்மையாக்கல் என்பனவும் கரையோர நகரங்களில் விருத்தியுற்றுள் ளன. திறந்லன் எனும் நகரத்தில் பீங்கான் உற்பத்தி நடைபெறு கின்றது. பிலடெல்பியாவில் கார் உற்பத்தி, கப்பல் கட்டுதல் என் பனவும் முன்னேறியுள்ளன. போல்ரிமோரில் ஆடை உற்பத்தி, இறைச்சி பதனிடல் எனும் தொழில்களும் நியூயோர்க்கில் பல்லினக் கைத்தொழில் களும் நடைபெற்றுவருகின்றன.

Page 54
92
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல் கரையோரத் துறைமுகப் பட்டினங்கள்
வடகீழ் ஐக்கிய அமெரிக்காவின் அத்திலாந்திக் கரையோரத்தில், நீர்வீழ்ச்சிக் கோட்டையடுத்துப் பல நகரங்கள் காணப்படுகின்றன; பொஸ்தன், நியூயோர்க், பிலடெல்பியா, போல் ரிமோர் எனும் நான்கு துறைமுகப் பட்டினங்கள் இக்கரையோரத்தில் மிக முக்கியமானவை; இவற்றில் கடைசி மூன்றும் மத்திய அத்திலாந்திக் பிரதேசத்தில் அமைந்துள்ளன. வட கீழ்ப் பிரதேசத்திலுள்ள குடியடர்த்திமிக்க எட் டுப் பகுதிகளில் மூன்று, இத்துறைமுகப்பட்டினங்கனைச் சூழ்ந்தே காணப்படுகின்றன. இத்துறைமுகப்பட்டினங்களினூடாகவே ஐக்கிய அமெரிக்க உற்பத்திப்பொருட்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகின் றன. இத்துறைமுகப்பட்டினங்களில் பல்வகைக் கைத்தொழில்கள் விருத்தியுற்றுள்ளன.
அத்திலாந்திக் கரையோரம் துறைமுகங்கள் உருவாகக்கூடிய பல் லுருவக் கடற்கரையாகும். கலங்கள் கடற்கரையோரத்தோடு நெருங்கி நிற்கக்கூடிய நீர் ஆழமும், அலைகள், காற்றுக்கள் என்பனவற்றின் தாக்கத்திலிருந்து கலங்கள் பாதுகாப்பாக நிற்கக்கூடிய வசதியும் இக் கடற்கரையோரத்தில் காணப்படுகின்றன. அதனாலேயே, குடியேற்ற ஆரம்பகாலத்தில் இக்கரையோரத்தில் சிறிதும் பெரிதுமான மீன் பிடித் துறைமுகங்கள் உருவாகியிருந்தன.
நியூயோர்க்
நியூயோர்க் துறைமுகப்பட்டினம் உலகின் புகழ்பெற்ற வர்த்தக மையமாகும்; இத்துறைமுகப் பட்டினத்தில் 77,82,000 மக்கள் வாழ்கின் றளர். நியூயோர்க் ஓர் இயற்கைத் துறைமுகமாகும். கட்சன் நதியின் முகத்தில் இத்துறைமுகம் அமைந்திருக்கின்றது. லோங்க்தீவு, மன்கற் றன் தீவு, சிரெத்தன்திவு என்பவற்றால் உருவாக்கப்பட்ட ஆழமான நீருடைய நுழைகுடாவொன்றில் நியூயோர்க் அமைந்திருக்கின்றது. இத் துறைமுகம் தெற்கே காணப்படுவதால் பனிக்கட்டித் தாக்கத்திற்குட் படுவது கிடையாது. நியூயோர்க் துறைமுகத்தின் விருத்தி, ஈரிக்கால் வாய் அமைக்கப்பட்டதன்பின் அதிகரித்தது.
ஈரி ஏரியில் கிழக்கு அந்தத்திலிருந்து, கட்சன் நதிவரை நீளமான ஓடுங்கிய இடைவெளி ஒன்று காணப்படுகின்றது : இதனை ஹட்சன் மோஹோக் இடைவெளி என்பர். இவ்விடைவெளியினூடாக பபுலோ வையும், கட்சன் நதியிலுள்ள அல்பேனியாவையும் இணைத்து ஒரு கால்வாய் 18 25 இல் வெட்டப்பட்டது; கட்சன் நதியும் விரைவோட்ட,

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
93
மற்ற. ஆழமான நதியாகும். அதனால், நியூயோர்க் துறைமுகத்தோடு உட்புறப்பகுதிகள் கப்பல்வழி நேரடியாகத் தொடர்புகொள்ள முடிந் தது. இக்கால்வாய் அமைக்கப்பட்டதன் பின், ஈரி ஏரியிலிருந்து நியூ யோர்க் வரையிலான கொண்டு செல்லற் செலவு : ஆகக் குறைந் தது. இக்கால்வாய் அமைக்கப்படுவதற்கு முன் பிலடெல்பியா, பொஸ் தன் எனும் துறைமுகப்பட்டினங்களிலும் பார்க்கச் சிறியதாகவே நியூ யோர்க் இருந்தது. ஈரிக்கால்வாய் அமைக்கப்பட்டதன் பின் இத்துறை முகம் விரைந்து வளர்ச்கியுற்றது. அத்தோடு, உண்ணாட்டுப் பகுதிகள் யாவும் இருப்புப்பாதைகள் மூலமும் நியூயோர்க்குடன் இணைக்கப்பட் டன. (படம்: 18 - ஐயும் நோக்குக)
( 6: * 14.8க?; 4 4 4 48VTuTipsN'கேக47 tir'st: 24WAR* பாமக '>
உள் ஈவுப் பா.தீ4 ++44: எடிச2:45: நடி", ஈ...
: *F ::T
உப்புல் (2)
மகரம்
~சகல
கட்க நதி
4. நீரும் -
--.
பாக, பா.
21:{Y
* தோ ய ?
1.ஸ்கிர.? AARAA இST)
உட்சுடீ கடிபெயமோ ம
அட்டப்பட்டமடயர ப.பXGA'
ப' * '') * * * * * * v **14 I, RA CH: *எக்4',': எடிய r At *4:11% 47val.EALEMIம்புட்பாண்டப்படம்
படம்: 21 நியூயோர்க் நகரம்
நியூயோர்க் துறைமுகத்தினூடாக ஏற்றிமதியாகும் பொருட்கள், இறக்குமதியாகும் பொருட்களிலும் அதிகமாகும். இரும்புருக்கு, பல் வகை யந்திரங்கள், இறைச்சி, கோதுமை, மின்னியற் பொருட்கள் சான்பன நியூயோர்க்கினூடாக ஏற்றுமதியாகின்றன.
பிலடெல்பியா
டெலாவயர் மாகாணத்திலுள்ள பெரிய துறைமுகப்பட்டினம் பில டெல்பியாவாகும். இத்துறைமுகப் பட்டினம் 43, 43, 000 மக்களைக் கொண்டிருக்கின்றது. பிலடெல்பியா, டொலாவயர் விரிகுடாவின் வட அந்தத்தில், டொலாவயர் நதியின் முகத்தில் அமைந்திருக்கின்றது.

Page 55
94
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
அத்திலாந்திக் சமுத்திரத்திலிருந்து 100 மைல்கள் உள் விலகி அமைந் திருந்த போதிலும், ஆழமான நீரும், பாதுகாப்பான குடாவும் பில டெல்பியாவைத் தக்கதோர் துறைமுகமாக உருவாக்கியுள்ளன.
ஈரிக்கால்வாய் அமைக்கப்பட்டு, நியூயோர்க் முக்கியத் துறைமுக மாக மாறியதும், பிலடெல்பியா தனது தொடக்கத்து முக்கியத்து வத்தைச் சற்று இழந்தது; மேற்குப்புறப் பகுதிகளோடு நீர்வழித் தொடர்பு கொள்ள அப்பலாச்சியன் மலைத்தொகுதி தடைவிதித்தது; அதனால், பேரேரிகளுடனோ, மிசிசிப்பி நதியுடனோ கால்வாய் மூலம் பிலடெல்பியாவை இணைக்க முடியவில்லை. எனினும், பிலடெல்பியாத் துறைமுகத்திலிருந்து மேற்குப்புறமாக ஒரு கால்வாய் அமைத்துள்ள னர். அக்கால்வாயின் நடுப்பகுதி அப்பலாச்சியன் மலையால் பிரிக்கப் படுகின்றது. எனினும், பிரிபடும் ஒரு அந்தத்திலிருந்து மறு அந்தத் / திற்குப் போகத்தக்க இருப்புப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தெலாவயர் நதியின் மேற்பாகங்களில் நிலக்கரி வயல்கள் உள்ளன. அதனால், அண்மையாண்டுகளில் தெலாவயர் நதி கப்பலோட்டத்திற்கு உகந்ததாக ஆழமாக்கப்பட்டிருப்பதோடு, கால்வாய்கள் பலவும் சுரங்கங் களை இணைத்து அமைக்கப்பட்டிருக்கின்றன.
பிலடெல்பியாவில் எண்ணெய் சுத்திகரித்தல், கப்பல் கட்டுதல், இரசாயனப் பொருளுற்பத்தி, நெசவுப் பொருளுற்பத்தி, யந்திரங்கள் என்பன பிரதான தொழில்களாகும். இவையே இத்துறைமுகத்தினூடாக ஏற்றுமதியாகின்றன; எண்ணெய், இரும்பு, சீனி, சல்பர் என்பன இத் துறைமுகத்தினூடாக இறக்குமதியாகின்றன,
போல்ரிமோர்
மேரிலாண்டின் பெரிய துறைமுகப் பட்டினமான போல்ரிமோர், 17,00,000 மக்களைக் கொண்டுள்ளது. இத்துறைமுகப் பட்டினம் செசாபிக் குடாவில், பற்றாப்ஸ்கோ நதியின் முகத்தில் அமைந்துள்ளது. இத்துறை முகம் நீர்வீழ்ச்சிக் கோட்டை அடுத்திருப்பதால், நீர்மின்வலு போதி யளவுளது, அதனால் கைத்தொழில்கள் இப்பகுதியில் விருத்தியுற்றுள் ளது. மேற்குப்புற உண்ணட்டோடு போல்ரிமோர் இருப்புப் பாதை களினால் இணைக்கப்பட்டிருக்கின்றது. வருடாவருடம் 600() கலங்கள் வரை போல்ரிமோர் துறைமுகத்திற்கு வருகின்றன. பாதுகாப்பான இந்த இயற்கைத் துறைமுகத்தில், இரும்புத்தாதை வெனெசுவெலா, கனடா, லைபீரியா எனும் நாடுகளிலிருந்தும், சீனி, றப்பர், கோப்பி, தேயிலை என்பனவற்றை அயன மண்டல நாடுகளிலிருந்தும் இறக்குமதி

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
95
செய்யப்படுகின்றன; கோதுமை, யந்திரங்கள், உருக்கு, சீமேந்து , நிலக் கரி என்பன இதனூடாக ஏற்றுமதியாகின்றன.
2. மத்தியச் சமவெளிப் பிரதேசம்
(உண்ணட்டுத் தாழ்நிலப் பிரதேசம்)
கிழக்கே அப்பலாச்சியன் மேட்டு நிலத்திற்கும், மேற்கே பெருஞ் சமவெளிகளுக்கும் இடையில் மத்திய சமவெளிப் பிரதேசம் அமைந் திருக்கின்றது. இதன் மேற்கு எல்லை 20 அங்குல சம் மழைவீழ்ச்சிக் கோட்டினால் நிர்ணயிக்கப்படுகின்றது, வட எல்லை பேரேரிகளாகவும், தென் எல்லை பருத்தி வலயமாகவும் விளங்குகின்றன, இப்பிரதேசத்தை உண்ணாட்டுத் தாழ் நிலங்கள் என்றும், பெ ட உண்ணட்டுப் பயிர்ச் செய்கைப் பிரதேசம் என்றும் வழங்குவர். இப்பிரதேசம் முழுவதும் மிசிசிப்பி நதி யின் கிளை நதிகளினால் வடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்பிர தேசம் முழுவதும் பரந்ததொரு சமவெளியாகும்,
உண்ணாட்டுத் தாழ் நிலங்களின் கால நிலை கண்டக் காலநிலை வகையினதாகும். சூடான கோடையும் (58° ---- 80°ட.), குளிரான மாரியும் இப்பிரதேசத்தில் நிலவும். மாரியில் உறைபனி கா வெணப்படும். மழைவீழ்ச்சி கிழக்கே 40" வரையிலும், மேற்குப் பக்கமாகச் செல்லச் செல்லப் படிப்படியாகக் குறைந்து 1000 நெடுங்கோட்டில் 20" ஆகக் குறைகின்றது. இப்பிரதேசத்தில் பயிர்வளர் காலம் 3 220 நாட்களி லிருந்து 200 நாட்கள் வரையில் வேறுபடுகின்றது.
இப்பிரதேசத்தின் வடபாகத்திலும் கிழக்குப் பாகத்திலும் ஊசி யிலைக் காடுகளும் இலையுதிர் காடுகளும் காணப்படுகின்றன. தென் பாகத்திலும் மேற்குப் பாகத்திலும் பிறேயறீஸ் புல்வெளிகள் அமைந் துள்ளன.
பயிர்ச் செய்கை
உண்ணாட்டுத் தாழ்நிலப் பிரதேசம் கால நிலை, மண் என்பனவற் றில் காணப்படும் வேறுபாடுகள் காரணமாக பயிர்ச் செய்கையிலும் வேறுபாடுகளைக் கொண்டதாகக் காணப்படுகின்ற ஈ'. இப்பிரதேசச் தில் வடபுறமாகச் செல்லச் செல்ல கோடை வெப்பநிலை குறை

Page 56
sே
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
னடா
கியூபெக்
ஈ.
- ஒற்றாவி 2
கோx.ப
+ + + +--- + + + +
பபுரை :
சாமான
"* 4- %
சிமிண்ட்சு
-- தி 7LN ஒளமை)
கடின.
--> <லராசவலயம் சிக்காகோ சேர 7வல ப் ம்
காதல்
ஒழி ஃ)
கனடிய மழை
* K.
அவுட்பு ?
** **சின் சாபு 4. கண்தாஸ்கி -* *- 4 -
சென் - மாரிக் கோதுமை
வேளாண்ழை வ இயம்!ாது
புகையில புகையிலை வலயம்
சமையல்
பருத்தி வலயம் ..
இலதி
பாரா?
கை
கலை
திழத ஒளியன்ன் அ« னா அயல்பஃபிர்
படம்: 22 மத்திய சமவெளிப் பிரதேசம் உட்பட, ஐக்கிய அமெரிக்காவின்
வளமான கிழக்கு வலயம்

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
97
வடைந்து, பயிர்வளர் பருவமும் குறுகுகிறது. பின்வரும் பயிர்ச் செய்கை வலயங்களை இப்பிரதேசத்தில் நாம் அவதானிக்கலாம்.
(அ) சோள வலயம் (ஆ) வசந்தகாலக் கோதுமை வலயம் (இ) மாரிகாலக் கோதுமை வலயம் (ஈ) கலப்பு வேளாண்மை வலயம் (பாற்பண்ணை)
இப்பயிர் வலயங்கள் ஒவ்வொன்றினையும் குறித்து ஏற்கனவே விரி வாக ஆராய்ந்துள்ளோம்.
சோள வலயம் ஒகாயோ. இண்டியானா, இலினோய்ஸ், இயோவா வடமிசூரி ஆகிய மாநிலங்களில் பரந்திருக்கின்றது. சூடான பகல் களும் இளஞ்சூடான இரவுகளும் சோளம் பொத்திகள் முற்றுவதற்கு அவசியம். சோளம் இவ்வலயத்தில் மனித உணவாகவும், கூடுதலாக மிருக உணவாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வட டகோற்ற தென் டகோற்றா, வயோமிங், மொன்ரானா ஆகிய மாநிலங்களில் வளர்க்கப்படுகின்ற கால் நடைகள் (மாடுகள், பன்றிகள்) சோள வல யத்திற்குக் கொண்டு வரப்பட்டு கொழுக்க வைக்கப்படுகின்றன. பின் னர் சிக்காக்கோ, ஒமாகா , கன்சாஸ் சிற்றி, சின்சினாட்டி ஆகிய இறைச்சியடிக்கும் நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறைச்சி யடிக்கப் படுகின்றன.
3 தென்கீழ்ப் பிரதேசம்
ஐக்கிய அமெரிக்காவின் தென்கீழ்ப் பிரதேசம், வட கரோலினா, தென் கரோலினா, ஜோர்ஜியா, புளோரிடா, அலபாமா, ரெனசி, அறகன்சா, லூசியானா, ஒக்கிளகோமா, ரெக்சாஸ் ஆகிய மாநிலங் களை உள்ளடக்கியுள்ளது. இந்த இயற்கைப் பிரதேசம் மூன்று தெளி வான புவியியற் பிரதேசங்களைக் கொண்டிருக்கின்றது. அவை:
(அ) தென் உண்ணாட்டுத் தாழ்நிலப் பிரதேசம் (ஆ) விரிகுடாக் கரையோரப் பிரதேசம் (இ) புளோரிடா குடாநாட்டுப் பிரதேசம்.
12

Page 57
38
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
(அ) தென் உண்ணாட்டுத்
தாழ்நிலப் பிரதேசம்
தரைத் தோற்றம்
தென் உண்ணாட்டுத் தாழ்நிலப் பிரதேசம் என்பது, பருத்தி வலயம் முழுவதையும் அடக்கிய பிரதேசத்தைக் குறிக்கிறது. தரைத் தோற் றத்தைப் பொறுத்த அளவில், இப் பிரதேசம் முழுவதும் தாழ்நில இட விளக்க வியலுக்குரியதாகும். எனினும், இப்பிர தேசத்தின் வட பாகத் தில் ஓசாக்ஸ் உயர் நிலத்தையும், வட கிழக்கே தென் அப்பலாச்சியன் உயர் நிலத்தையும் காணலாம். இப்பிரதேசத்தின் மத்திய பகுதியினூ டாக மிசிசிப்பி நதி பாய்ந்து நியூ ஒலியன்ஸ் பகுதியில் கழிமுகத் தன்மை யுடன் கடலை அடைகின்றது. மிசிசிப்பியின் கிளை நதிகளான ஒகியோ நதி, ரெனசி நதி என்பன இப் பிரதேசத்தில் கய்ரோ என்ற இடத்தில் மிசிசிப்பியுடன் இணைகின்றன. இவை ஏறத்தாழ 2500 மைல் நீளமான மிசிசிப்பிக்கு அதிக நீரை வழங்குவதனால், மிசிசிப்பி வெள்ளப் பெருக் கிற்கு உள்ளாகின்றது. அதனால் வெள்ளச் சமவெளி மிசிசிப்பி நதியை அடுத்துக் காணப்படுகிறது. ஏனைய பகுதிகள் வண்டற் சமவெளிகளாகக் காணப்படுகின்றன.
சானா"சார "கோ"257437:374 'TSETTAILE:13ாகரனோக!'2:43
கண் IEWTTERME0ாயனம் MTT:ாண ராராரோ
.ரேலி),
ஒக்கினர் (கோ.A)ா
ரெகாசி
வா
த{7-5
" தன
கெரோலினா
இs): இjy:மரீ
மே
1.- -- -- ~ன 223
# ரத
' ஜோர்ஜியா
என இ) 22 டி.
7.7நசீரஸ்)
HFFE
இ க க
கா புளோரிடா
து?
9%, ஆசியானா இ. பருத்தி நி, நிலக்கடலை நெ- நெல்
உ - கருப்பு கா - காய் கறி
தனeviAைTணMATIANI19:38:WEAKIRAMERAWa0:2ாகவேணாமாளம்
படம் : 23 தென் உண்ணாட்டுத் தரழ்நிலப் பிரதேசம் (பருத்தி வலயம்)
"49"

ஐக்கிய அமெரிக்கா வின் புவியியல்
99
காலநிலை, இயற்கைத் தாவரம்
தென் உண்ணாட்டுத் தாழ்நிலப் பிரதேசம், இடைவெப்பக் கால நிலையை அனுவிக்கின்றது. மாரியிலும், கோடையிலும் வெப்ப நிலை உயர்வாயும், பயிர்வளர் பருவம் 200 நாட்களாகவும் காணப்படுகின்றது. அதனால் தான் பருத்தி வலயத்தின் வட எல்லை 200 நாட்கள் உறைபனி யற்ற பிரதேச எல்லையாகவுள்ளது. கோடை வெப்பநிலை 70• - 80° ப. ஆகவும் மாரிவெப்பநிலை 40° - 50. ப. ஆகவும் விளங்குகின்றன. இப் பிரதேசத்தின் மழை வீழ்ச்சி 40" ஆகும். பெரும்பகுதி மழை கோடை யில் பிரிதள நிலைமைகளினால் கிடைக்கின்றது.
இப்பிரதேசத்தின் இயற்கைத் தாவரம் கிழக்கு அரைப்பாகத்தில் காடுகளாகவும், மேற்கு அரைப்பாகத்தில் புல் வெளிசுளாகவும் இருக் கின்றது. மிசிசிப்பிக்கு வடக்கே ஓக் - செஸ் நட் காடுகளைக் காணலாம். ரெக்சாஸில் * பிறேயறீஸ் ' புற்களைக் காணலாம்.
பயிர்ச்செய்கை
பருத்தியே இப்பிரதேசத்தின் பிரதான பயிராதலால், இப்பிரதே சம் பருத்திவலயம் என வரையறுக்கப் படுகின்றது. பருத்திவலயம் குறித்து ஏற்கனவே மிகவிரிவாக ஆராய்ந்துள்ளோம். இவ்விடத்தில் அவற்றைச் சேர்த்துப்படித்தல் நன்று. சுருக்கமாக நோக்குவோம்.
இப்பிரதேசத்தில் பருத்தி பிரதான பயிராக முக்கியத்துவம் பெற் றமைக்குக் காரணங்கள் பலவாகும். அவை:
(அ) வளமான மண் - பொதுவாகப் பருத்தி மண்ணின் வளத்தை உறிஞ்சக்கூடிய பயிராகும். மிசிசிப்பி வண்டல் சமவெளியும், ரெக்சாஸின் கருமண் பிறேயறீசும் பருத்திச் செய்கைக்கு உகந்த மண்வளத்தைக் கொண்டிருக்கின்றன.
(ஆ) போதியளவு நீர் வசதி- மிசிசிப்பியும் அதன் கிளை நதிகளும் காவிவரும் நீரும் மழை தரும் நீரும் போதியளவு பருத்திச் செய்கைக்குக் கிடைக்கின்றது.
(இ) உவப்பான இள ஞ் சூ டா ன வ சந் த காலம் - இக்காலத்தில் கிடைக்கும் சிறுமழைப் பொழிவு பருத்திச் செய்கைக்கு உவப்பாகவுள்ளது. வசந்த காலம் குளிரானதாக அமையில், வளர் பரூவம் குறைந்து, பயிர்

Page 58
100
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
பாதிப்புறும், வசந்த காலம் மிக ஈரலிப்பான தாயினும் பயிர் பாதிப் புறும்.
(ஈ) சூடான ஈரலிப்புக் கோடை- பருத்தி செழித்து வளர்ந்து பூக்க உதவுகின்றது.
(உ) நீண்ட இலை துளிர் காலம் - உறைபனியற்ற நீண்ட இலை துளிர் காலம் பருத்திச் செய்கைக்குப் பெரு வாய்ப்பாக விளங்கிவருகின் றது. குறுகிய இலை துளிர் காலம், பருத்திப்பஞ்சு உற்பத்தியைப் பாதிக் கச் செய்துவிடும்.
(ஊ) பருத்தி வலயத்தில் உற்பத்தியாகும் பருத்தியை உடனுக் குடன் வாங்குவதற்குச் சந்தைகளுள்ளன.- முக்கியமாக (1) நியூ இங்கி லாந்துப் பிரதேசமும் (2) தென் மாலநிங்களான கரோலினா, ரென்சி. ஜோர்ஜியா, அலபாமா என்பனவும் பருத்தி நெசவு உற்பத்தியிலீடுபட் டிருக்கின்றன. இவை பருத்தி வலயப் பஞ்சினை உடனுக்குடன் வாங்கிக் கொள்கின்றன -
(எ) வெளிநாட்டிற்கும் இப் பிரதேசத்திலிருந்து பருத்திப்பஞ்சு ஏற்றுமதியாகின்றது. கல்வெஸ்ரன், நியூ ஒலியன்ஸ், போர்ட் ஆர்தர், பென்சாகோலா, சவன்னா, சாள்ஸ்ரன். வில்மிங்ரன் முதலான துறை முகங்கள் பண்படுத்தாப் பருத்தியை ஏற்றுமதி செய்வதிலீடுபட்டிருக்கின் றன. அத்துடன் பருத்தி விதையும், பருத்திப் பிண்ணாக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
இவையாவும் பருத்தி வலயத்தில் பருத்திச் செய்கைக்குத் தூண்டு தலாக விளங்குகின்றன.
கனிப்பொருள் வளங்களும் கைத்தொழில்களும்
தென் உண்ணாட்டுத் தாழ்நிலப் பிரதேசம், கனிப்பொருள் வளம் நிறைந்ததன்று. தென் மிசூரி மாநிலத்திலும், ஒக்கிளகோமாவிலும் நிலக்கரி வயல்களுள்ளன. இவை ஆண்டிற்கு ஏறத்தாழ 60 இலட்சம் தொன் நிலக்கரியை உற்பத்திசெய்து வருகின்றன. இந்நிலக்கரி தரத்தில் குறைந்த வகையினதாகும். ஓக்கிளகோமாவிலும், வட ரெக்சாசிலும் பெற்றோலியம் கிடைக்கின்றது. வட லூசியானா, மிசிசிப்பி மாநிலங்க ளிலும் பெற்றோலியக் கிணறுகள் அமைந்துள்ளன. தென் கிழக்கு மிசூரி மாநிலம் ஐக்கிய அமெரிக்காவிலேயே ஈயத்தை அதிகளவில்

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
101
கொண்டிருக்கின்றது. மிசூறி - கன்சாஸ் -- ஒக்கிளகோமா ஆகிய மூன்று மாநிலங்களும் துத்த நாகத்திற்குப் புகழ்பெற்றன.
இப்பிரதேசத்தில் கை த் தொழி ல் க ள் விருத்தியடையவில்லை. பருத்தியிலிருந்து விதைகளைப் பிரித்தெடுக்கும் தொழில், உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் தொழில், உலோகவேலைகள் என்பன விருத்தியுற்றிருக்கின்றன. அறக்கன்சாசில்' காகித உற்பத்தித் தொழிற் சாலைகளும் கெலனா, யாசூநகர் என்பனவற்றில் பசளைத் தொழிற் சாலைகளும் அமைந்துள்ளன.
இப்பிரதேசத்தின் பிரதான நகர்கள் மிசிசிப்பி நதியோரத்தில் அமைந்திருக்கின்றன ' மெம்கிஸ் குறிப்பிடத்தக்கதோர் நகர்; இந்நக ரத்தில் 6 இலட்சம் மக்களுக்கு மேல் வாழ்கின்றனர். இந்நகரத்தி லிருந்து பருத்தி கப்பல் வழி நியூஏலியன்ஸ் துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. டல்லாஸ், சன் அன்ரோனியோ, போர்ட் உவோர்த், ஒக்கிளகோமா சிற்றி என்பன குறிப்பிடத்தக்க ஏனைய நகரங்களாகும் ஐக்கிய அமெரிக்காவின் இருபதாவது பெரிய நகரம் டல்லாஸ் ஆகும்; இந்நகரத்தில் 15 இலட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
(ஆ) விரிகுடாக் கரையோரப்
பிரதேசம்
தரைத்தோற்றம் ஐக்கிய அமெரிக்காவின் தென்கரையோரமாக மெக்சிக்கோ விரி குடாவை அடுத்து விரிகுடாக் கரையோரப் பிரதேசம் அமைந்திருக் கின்றது. இப்பிரதேசம் பரந்ததொரு கரையோரச் சமவெளியாகும்; செந்நிற மண்ணையும், வண்டல் மண்ணையும் கொண்டமைந்த, ஈர லிப்பான அயன அயல் கரையோரமாக விளங்குகின்றது. மிசிசிப்பி யின் கழிமுகத்தையும் கொண்டிருக்கின்றது. கடற்கரையோரம் மணற் றொடர்களையும். சேற்று நிலங்களையும், கடனீரேரிகளையும் கொண்டு விளங்குகின்றது.
காலநிலை இப்பிரதேசம் கடலின் செல்வாக்கினை எப்போதும் அனுபவிக் கின்றது. இளஞ்சூடான மாரியையும், சூடான கோடையையும் இப்

Page 59
டாக்சயபா4வயது
ரெக்சாஸ்
------ ஆசியானா
>/ மிசிசிப்பி : ஓ வ ல யம்
ரை- 5 தீவு
ரு த் தி த
ர்
பட் 3 பு: ப
z/'3\ 9:47f+ இk.f34 + 2 +1+17:54:4'N. 'AF%/s
தி
தேவைஸ்ரா :)
1 தவிபாஸ்
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
தலைவாசிலால் haitiixENEMINASE:SENTSNAKERENTATHNASKARTrsாலH4:5THIRKERS KAMASWARE:TINASANKARNIANKERESTRAKASE::வணைபையில்
தலை வாசல்ரசன் யோற்சீஃவாஷ் ல் ரீபே 7:*
லோ 88 ஆ
ரூ 2
அதே " மிசிசி).
முகம்
அ லாமை 22
2. 4" *t:ா, ',23:Fr" f'3 N/" "5, 2,94430:11 Ft: சசி 13:':MT
டோ.7) இது கிரி --
மெ க சி க் கோ வி ரிகு --ா
=Yா
"2:Fழி
('TN ஈட்டாரா; காட்சிகர சக4 = 1 : 1 3
2 பெண் ணோம் S) / 3
25 (கம் - *-4ுவாக
கட்டி**, **!*** '*'* : 14 Hi -4:* 3: ATS:: T.

Page 60
10தி
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல் (இ) புளோரிடாக் குடாநாட்டுப்
பிரதேசம்
பௌதிகவியல்புகள்
ஐக்கிய அமெரிக்காவின் தென்கீழ்ப் பிரதேசத்தில், அத்திலாந்திக் கரையோரச் சமவெளியின் ஒரு பகுதியாக புளோரிடாக் குடாநாடு அமைந்துள்ளது. இது தெற்காக 400 மைல்கள் பரந்துள்ள குடாநாடு ஆகும். இக்குடாநாட்டுப் பிரதேசம் ஒரு சமவெளியாகும். இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 300 அடிகளுக்கு மேலில்லை. புளோ ரிடாக்குடாநாட்டின் அதி தென்பாகம் 50 அடி உயரத்திற்கு உட் பட்டதாக விளங்குகின்றது. இக்குடாநாட்டின் கடற்கரையோரம், மணற்றொடர்களையும், கடனீரேரிகளையும் கொண்டதாக விளங்குகின் றது. அத்துடன் அடர்சேற்று நிலங்களும் அமைந்து காணப்படுகின் றன. தென் அந்தத்தில் 'புளோரிடா கீ ' என்ற வழங்கப்படுகின்ற முருகைக் கற்பார்த்தீவு நிரல் ஒன்று அமைந்துள்ளது.
இக்குடாநாட்டின் வடபாகம் சுண்ணாம்புக் கற் பிரதேசமாக விளங்குகின்றது. அதனால் தரைகீழ் வடிகால் இக்குடா நாட்டிலுள் ளது. இக்குடாநாட்டின் தென்பாகத்தில் ஓக்கிசோபி ஏரி அமைந்துள் ளது. இந்த ஏரிக்குத் தென்மேற்கே மக்கள் வாழா பெரிய சைபிறஸ் அடர்சேற்றுப் பிரதேசம் அமைந்திருக்கின்றது.
காலநிலை
புளோரிடாக் குடாநாட்டின் காலநிலையை நோக்கில், இக்குடா நாட்டின் கிழக்குக் கரையோரமாகப் பாய்கின்ற வெப்பமான குடா நீரோட்டம், ''வஹரிக்கேன்'' சூறாவளி என்பன முக்கியம் பெறுவதைக் காணலாம். வடக்கிலிருந்து வரும் குளிர்காற்றுத் திணிவுகள் உண் டாக்கும் குளிரைக் குடாநீரோட்டம் மட்டுப்படுத்துகின்றது. மாநில வெப்பநிலை 55°-60°ப. ஆகவும், கோடை 70°--80°ப. ஆகவும் விளங்கு கின்றது. கடகக்கோடு இக்குடாநாட்டின் தென் விளிம்பாகச் செல் கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அயனமண்டலக் கடல்சார் காற்று (தென்மேல்) இக்குடாநாட்டில் வீசுவதாலும் கரிபியன் கட லில் உற்பத்தியாகும் ஹரிக்கேன்களாலும் இக்குடாநாடு 40ா மேலான வழைவீழ்ச்சியைப் பெறுகின்றது.
* {

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
105
பொருளாதார நடவடிக்கைகள்
புளோரிடாக்குடாநாட்டில் பழவகைகளும் காய்கறிகளும் பிரதான பயிர்களாக விளங்குகின்றன. பயிர்ச்செய்கைக்கு உகந்த மண்வளம் சில பிரதேசங்கனிலேயே காணப்படுகின்றது. அப்பிரதேசங்களில் பழ வகைகளும் காய்கறிவகைகளும் செய்கை பண்ணப்பட்டு வருகின்றன.
கன்' : ::ப.. ' -...கண்டார்ட்டி, எம்.க: K.24!!".FRRAFTERMER L4:31 Fr gr:" EYE கதி2. ERENT Nu.2:38:19206ANAவல்லடம் 1:36.4(டிப்பகமானாலைகNGIகள்:மாடி!
'* :காம் -
பட்.
இ-சேகா கடி 5 கி) உ.கரை)
- கொள்7ை4டி (பூனே | " ஆப்கா? *** 37% தத 77 !
* பாடி[?, 1
சாமத்))
கனா -
பிறை2:1) 2
-தாரா கா
சிகை
த -
க
| 5,
''
AT:t: .'
&ப.சசாசு
யாம்பீக
[ தி!
«ான: நிதாலி.7 , 2 * கபத்ர்
டாப்சி "சைதை :
"> 3.8ாதியாக்கி 31 பொச71 பேர்; ++ கூகம் -
.ELAIMாட்# டி.ப னபபாக சபா.நாச£--.TA!TF"
> * * > > -
: சசTy : ' ; 8* * * Q5 - 7 நா -'
PVச:சாYTrpxvா?
படம்: 25 புளோரிடாக் குடாநாடு
13

Page 61
106
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
தோடை வகைகள், திராட்சை, பம்பளிமாஸ் பழங்கள் முதலான கிச் சிலிப் பழவகைகள் இப்பிரதேசத்தில் பயிரிடப்படுகின்றன. இப்பழங் களில் 90% சாறாக்கப்பட்டு பழரசங்கள் செய்யப்படுகின்றன. சிறிதளவு தகரத்தில் அடைக்கப்பட்டு விற்பனையாகின்றது. பழவகைகளும், காய் கறிகளும் புளோரிடாக் குடாநாட்டின் வடபாகத்தில் தம்பா, ஒர்லாண் டோ, சான்போர்ட் பாகங்களைக் சூழ்ந்து அதிகளவில் செய்கைபண்ணப் பட்டு வருகின்றது. கிழக்குக்கரையோரத்தில் மியாமி தொட்டு டேரோனா பீச் வரையில் ஒரு ஒடுங்கிய பாகத்திலும் இவை பயிரிடப்பட்டிருக் சின்றன. ஓக்கிசோபீ ஏரிக்குத் தெற்கேயுள்ள பாகத்தில் கரும்புச் - செய்கை நடைபெறுகின்றது.
ஐக்கிய அமெரிக்காவிலேயே 80 சதவித பொஸ்பேற் (Phosphate) பசளையைப் புளோரிடாக்குடா நாடே வழங்கிவருகின்றது; தம்பா பிர தேசத்தில் பொஸ்பேற் சுரங்கங்களுள்ளன.
உல்லாசப் பிரயாணத் தொழில்
புளோரிடாக் குடா நாடு இன்று சிறந்ததொரு உல்லாசப் பிரயாண மையமாக விருத்தியுற்றிருக்கின்றது. மாரியிலும் 60° ப. பவரையிலான வெப்பநிலை, மணல்பரந்த கரையோரம்; ஆழமற்ற கடல், சிறப்பான போக்குவரத்து வசதிகள், ஹோட்டல் வசதிகள் என்பன இப்பிர தேசத்தைச் சிறப்பான ஊர்காண் பிரதேசமாக்கியுள்ளன. கிழக்குக் கரையோரத்தில் மக்களைக் கவரத்தக்கவிதமாக மியாமிபீச், பாம்பீச், டேரொனா பீச், சென்பீற்றஸ்பேக் முதலிய கடற்கரைபோரங்கள் அமைந் துள்ளன. மியாமி பிரதான ஒரு நகர் ; இங்கு 32 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். உலகின் மிகச்சிறந்த உல்லாச நகர்களில் இது வொன் றாகும். ஐக்கிய அமெரிக்காவின் 'றொக்கற்' தளமான கென்னடிமுனை புளோரிடாக்குடாநாட்டின் கிழக்குக் கரையிலமைந் துள்ளது.
4. பெரும் சமவெளிகள்
பௌதிகவியல்புகள்
ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கேயுள்ள உண்ணாட்டுச் சமவெளிக் கும், மேற்கே றொக்கி மலைத் தொடரின் அடிவாரத்திற்கும் இடை யில் பெரும் சமவெளிகள் அமைந்திருக்கின்றன. இச்சமவெளி ஏறத் தாழ 400 மைல்கள் அகலமானது. பொதுவாக இதனைச் சமவெளி என்று சொல்வதிலும் மேட்டு நிலம் எனல் பொருந்தும்.

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
107
இப்பிரதேசம் கிழக்குப் பாகத்தில் ஏறத்தாழ 2000 அடி உயர மான தாயும், மேற்குப்பாகம் 6000 அடி உயரத்தை நோக்கி உயர்ந்து செல்வதாயும் அமைந்துள்ளது. " இப்பிரதேசத்தினூடாக மிசூரி, பிளாற்றே. ஆக்கன்சா, கனேடியன், றெட்நதி முதலான நதிகள் பாய்கின்றன. றொக்கி மலையில் உற்பத்தியாகும் இந்நதிகளில் சில ஆழமான மியாந்தர் பள்ளத்தாக்கினூடாகப் பாய்கின்றன. ஒடுங் கிய பள்ளத்தாக்குச் சமவெளிகளில் வண்டல் படிவுகளுள்ளன. ஆனால் பொதுவாக இப்பிரதேசம் கபிலநிறமும் கருங்கபில நிறமுமுள்ள மண் களைக் கொண்டிருக்கிறது.
இப்பிரதேசம் பொதுவாக வறண்டதாகும் ; பருவ வெப்பநிலை வீழ்ச்சி மிக அதிகமாகும். மாரியில் ( யனவரி ) வெப்பநிலை உறை நிலைக்குக் கீழும், கோடையில் (யூலை) 70° ப. வரையிலும் நிலவுகின்றது. மழைவீழ்ச்சியைப் பொறுத்தளவில் இப்பிரதேசம் 10 அங்குலத்திற்கும் 20 அங்குலத்திற்குமிடையில் பெற்றுக்கொள்கின்றது. கோடையிலேயே மழைவீழ்ச்சியில் பெரும்பகுதி பெய்கின்றது. ஈரலிப்பான விரிகுடாக் காற்றுகள் கோடையில் மழையைத் தருகின்றன. இப்பிரதேசத்தின் வடபாகத்தில் வறண்ட சினூக் காற்று வீசுகின்றது.
மேற்குச் சமவெளிகளின் இயற்கைத் தாவரமாக குறுகிய புற் களைக் கொண்ட பிரேரி அமைந்துள்ளது. (படம்: 7) நெபிறாஸ்கன் மணல் குன்றுப்பாகத்தில் உயர்புற் பிரேரியும், பிளாக்குன்றுப் பாகத் தில் 46 ாடுகளும் காணப்படுகின்றன.
- பொருளாதார நடவடிக்கைகள்
இப்பிரதேசத்தில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் முக்கியம் பெற வில்லை. குறும்புற் பிரேரியைக் கொண்ட பரந்த மேய்ச்சல் நிலங்கள் இப்பிரதேசத்தில் காணப்படுவதனால், விலங்கு வேளாண்மை - முக்கியம் பெற்றிருக்கின்றது. இறைச்சிக்கான மாடுகள் வளர்ப்பது இப்பிரதே சத்தில் முக்கியமான தொழிலாகவுள்ளது. ரெக்சாஸ் மாநிலத்தில் மந்தைகள் அதிகளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன ; நெபிறாஸ்கா, கன்சாஸ் மாநிலங்களும் குறிப்பிடத்தக்கன. இங்கு வளர்க்கப்படும் மாடுகள் சோளவலயத்திற்குக் கொழுக்க வைப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டுப் பின்னர் இறைச்சியடிக்கப்படுகின்றன, கன்சாஸ், நெப்ராஸ்கா பகுதிகளில் செம்மறி ஆடுகளும், ரெக்சாஸில் அங்
(கா றா ஆடு : வ ம், குதிரை எ ம் வளர்ச்சட்டட்டுவருகின்றன.

Page 62
108
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
இப்பிரதேசத்தின் கிழக்குச் சமவெளிகளில் சிறிய அளவில் பயிர்ச் செய்கையும் நடைபெற்றுவருகின்றது. கோதுமையும், பருத்தியும் கிழக்குப் பாகங்களில் செய்கை பண்ணப்பட்டு வருகின்றன; பயிர்ச் செய்கைக்கு வரட்சியே பெரும் பிரச்சினையாகும். நீர்ப்பாசன வசதி கள் ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் அமைக்கப்பட்டிருக்கின்றன. நீர்ப் * பாசன வசதியுள்ள பகுதிகளில் கோதுமை, இறுங்கு, அல் பல் பாபுல், பருத்தி என்பன பயிரிடப்பட்டு வருகின்றன.
இப்பிரதேசத்தில் வயோமிங், கொலராடோ, வட மொன்ரானா, நெபிறாஸ்கா எனும் பகுதிகளில் பெற்றோலிய வயல்கள் அமைந்துள் ளன; இயற்கை வாயுவும் கிடைக்கின்றது. கிப்சம், பொற்றாஸ், தங் கம், வெள்ளி முதலிய க் கனிப்பொருட்களும் இப்பிரதேசத்தில் கிடைக் கின்றன.
இப்பிரதேசத்தில் ஒரு சதுர மைலிற்குரிய சராசரி குடியடர்த்தி 5 பேராகும். சில நகரமையங்களும் அமைந்துள்ளன. இவை முக்கிய 4 மாக றொக்கிமலையின் அடிவாரத்தில் வரிசையாக அமைந்துள்ளன. டென்வர், புயேபிளோ, கொலராடோ ஸ்பிறிங்ஸ்), செயேன் என்பன குறிப் பிடத்தக்க நகர்களாகும். இவற்றைவிட பார்கோ, ஒமாகா, கன்சாஸ் சிற்றி, விச்சிற்றா, ஒஸ்ரீன் முதலிய நகர்களும் அமைந்திருக்கின்றன.
5. மேற்கு மலைப் பகுதி ஐக்கிய அமெரிக்கா வின் மேற்கு மலைப்பகுதி நெவாடா, ஒறிகொன், 4 வாஷிங்டன், இடாகோ, மொன்ரானா, உற்றா, அரிசோனா, நியூ மெக்சிக்கோ, கொலராடோ, வயோமிங் ஆகிய மாநிலங்களின் பகு திகளை உள்ளடக்கியிருக்கின்றது. இந்த இயற்கைப் பிரதேசம், இரண்டு தெளிவான புவியியற் பிரதேசங்களைக் கொண்டிருக்கின்றது. அவை யாவன:-
(அ) றொக்கிமலைப் பிரதேசம் (ஆ) மலையிடை மேட்டுநிலப் பிரதேசங்கள்.

ஐக்கிய அமெரிக்காவின் புவியுயல்
109
ண டா
க.
- - - - - -
தெ..
கெலேதி 5பந்றே
உலே?
சினேக கொலம்பியா மேட்டு நிலம்
ஒ ேக ட மலே
*~--
- * டு •சி *
வேர்!
21-~-4-1, - ...
வடி கலம்
வயோதி
மே 2y r6பம் எவருமி * தேகிட- 1) , பி 4) "- ஃஃ--- _ * ரேட்டுங்கம்
- - - - - -
|கீதபட்சீத் )
2 த வ டி நிலம்
) 13 கார்சன் பெஃக்ருபோ
-ரொனோபா?
சி 5 • ஒன்வர் |
--~--° 4பேபிளோ
- பி ' அரக்கன் - நக்கர் வக்ஃ | « பேட்டாவா, ர - -- ----
விடjரா நெவாடாமல்
( ' , கொட்டாள்.பினும்
(விசனம்
3. 1) } -----
சர்தாலால் காஸ் 2 மறுசேல17 |
இkKNT
ல்
ரசி': தாம
மாட்டாங்க'-ல்: மா.
ஃரவு
க!
கதனை
பு!
- * -- ~..
755
5 S
எயா?:)
****>*
டயx)
மெக்சிக்கோ,
ப: 3
பாபாஜக
25%EY: க . 7
எTRY5.25CE,
படம்: 26 மேற்கு மலைப்பகுதி

Page 63
110
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
(அ) றொக்கிமலைப் பிரதேசம்
தரைத்தோற்றம்
ஐக்கிய அமெரிக்காவின் மேற்குப்பாக உயர் நிலம் முழுவதையும் றெக்கிமலைப் பிரதேசம் என்ற பெயர் பொதுவாகக் குறிப்பிட்ட போதிலும், மேற்கேயுள்ள மலையிடை மேட்டு நிலங்களுக்கும் கிழக்கே யுள்ள பெருஞ் சமவெளிகளுக்கும் இடைப்பட்ட பிரதான மலைத் தொடர்ப்பாகத்தையே 'றொக்கி' மலைப்பிரதேசம் என்ற பெயர் சிறப் பாகக் குறிப்பிடுகின்றது. இம்மலைப்பிரதேசம் ஏறத்தாழ 200 மைல் கள் அகலமானதாயும், 14000 அடிகள்வரை உயரமானதாயும் அமைந் திருக்கின்றது.
இப்பிரதேசம் இளம் மடிப்பு மலைப்பிரதேசமாகும்; அல்பைன் மலை யாக்கக் காலத்தில் உருவாகிய இளம் மடிப்பு மலைகளில் ஒன்றாகும், பனிக்கட்டியாற்றரிப்பு, நீரரிப்பு, எரிமலையாக்கத் தலையீடுகள் என்பன வற்றின் தாக்க விளைவுகளை ருெக்கி மலைப்பிரதேசத்தில் அவதானிக்க
முடிகின்றது.
றொக்கி மலைப்பிரதேசத்தின் வடபாகமும், மத்திய பாகமும், மொன்ரானா, இடாகோ , வயோமிங் ஆகிய மாநிலங்களை அடக்கியுள் ளன. தென்றொக்கி மலைப்பிரதேசம் கொலராடோ மா நிலத்தை உள ளடக்கியுள்ளது. வட றொக்கிமலைப் பிரதேசத்தில் பனிக்கட்டியாற்றரிப் பினால் உருவான ' U வடிவப் பள்ளத்தாக்குகள், தொங்கு பள்ளத் தாக்குகள், வட்டக்குகைகள் என்பனவற்றைக் காணலாம். மத்திய றொக்கிப் பிரதேசத்தில் பிக்ஹோன் வடிநிலம், வயோமிங் வடிநிலம், லறமி மேட்டுநிலம் என்பன அமைந்துள்ளன. றொக்கி மலைப் பிரதேசம் எல்பேட் மலை, லோங்சிகரம் எனும் உயர் சிகரங்களையும், சான்லூயிஸ் பள்ளத்தாக்கையும் கொண்டிருக்கின்றது.
காலநிலை றொக்கிமலைப்பிரதேசம் 5" தொட்டு 10" வரையிலான மழைவீழ்ச்சி யைப்பெறுகின்றது; றொக்கி மலையின் உயர் பகுதிகளில் காடுகள் வளர்ந் துள்ளன; இப்பகுதிகள் சிலவேளைகளில் 30" மழையைப் பெறுவதுண்டு; பள்ளத்தாக்குகளில் மழை குறைவு. அதனால் புற்களும் புதர்களும் காணப்படுகின்றன. உயரத்தின் காரணமாக இப்பிரதேசத்தில் வெப்பம்
நிலை குறைவு; உயர் மலைச் சிகரங்களில் உறைடனி கவிந்திருக்கும்.

ஐக்கிய அமெரிக்காவின் புவியல்
11!
பயிர்ச்செய்கை
காலநிலை, தரையுயரம் என்பன பயிர்ச்செய்கையைப் பெரிதும் கட்டுப்படுத்தியிருக்கின்றன, நீர்ப்பாசன வசதி கொண்ட பள்ளத்தாக் குகளில் சிறிய அளவில் பயிர்ச்செய்கை நடைபெற்று வருகின்றது. பீற்சீனிக்கிழங்கு, தானியங்கள், உா ளைக்கிழங்கு, பழ வகை என்பன செய்கைபண்ணப்பட்டு வருகின்றன. பாற்பண்ணை மாடு சளுக்கான அல்பல்பா புல்லும் செய்கை பண்ணப்படுகின்றது. றியோகிராண்ட் நதியில் அமைக்கப்பட்டுள்ள எலிபன்பற்றேஅணை, பிளாற்ஹெட் நதியில் அமைந் துள்ள ஹங்ரிஹோஸ் அகன என்பன நீர்ப்பாசன வசதிகளை அளிக்கின் றன. மந்தை வளர்த்தல் றொக்கிமலைப் பிரதேசம் எங்கினும் பரவ லாகக் காணப்படுகின்றது.
கைத்தொழில்கள்
றொக்கிமலைப்பிரதேசம் மூவகைக் கைத்தொழில்களில் குறிப்பிடத் தக்கது. அவையாவன : -
1. கனிப்பொருள் அகழ்தல் தொழில் : தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம் முதலான கனிப்பொருட்கள் இம்மலைப்பிராதசத்தில் கிடைக் கின்றன. பிக்கோன், வயோமிங் வடிநிலம் ஆகியனவற்றில் பெற்றோலி யம் அதிக அள வில் கிடைக்கின்றது.
2, மரம் வெட்டும் தொழில்:- ஹொக்கி மலைப்பிரதேசத்தில் காடுகள் செழிப்பாக வளர்ந்துள்ளன. முக்கியமாக மொன்ரானா மாநிலத்தில் பைன், லார்ச் மரங்களும் வயோமிங்கிலும், கொலராடோவிலும் சுகர் பன், லோபைன், சீடர், பேர், ஸ்புராக் மரங்களும் செழிப்பாகக் காணப்படுகின்றன. திட்டமிடப்பட்ட விதமாக மரம் வெட்டுந் தொழில் நடைபெற்று வருகின்றது. மொன்ரானா, இடாகோ மாநிலங் களே பிரதான மரம் வெட்டுந் தொழில் மையங்களாகும்.
3. உல்லாசப்பிரயாசாக் கைத்தொழில்!: உல்ல Tசப் பயணிகளைச் கவரக்கூடிய இயற்கைக் காட்கிகளைக் கொண்ட பிரதேசமாக ஹொக்கி மலைப் பிரதேசம் விளங்குகின்றது. கிளாஸ்சியதேசியப் பூங்கா, (Park), யலோஸ்ரோன் தேசியப் பூங்கா, றொக்கிமலை ந்தேசியப் பூங் கா - என்பன மிகச்சிறந்த உல்லாசப் பிரயாண மையங்களாகும். கொதி நீரூற்றுக் களையும், அழகிய ஏரிகளையும், ஆற்றுக்குடைவுகளையும் இப்பிரதேசங் கள் கொண்டிருக்கின்றன.

Page 64
112
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
குடியேற்றம்
றொக்கிமலைப் பிரதேசத்தில் மக்கள் பெருந்தொகையினராகக் குடி யேறுவதற்கு, போக்குவரத்துப் பிரச்சினைகளே காரணங்களாக இருந் தன. எனினும், இன்று போக்கு வரத் துப் பிரச் சினைகள் இருப்புப் பாதைசளும், வீதிகளும் அமைக்கப் பட்டுத் தீரக்கப்பட்டுள்ளன. இன்று ஏழு பிரதான இருப்புப்பாதைகள் இப்பிரதேசத்தினூடாக அமைக் கப்பட்டிருக்கின்றன, ஐக்கிய அமெரிக்க ாவின் பிரதான நகர்கள் யாவும், றொக்கிமலைப் பிரதேச நகர்களான பற்றே, கெலேனா, லாஸ் வேகாஸ், டென்வர் என்பனவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன. இப்பிர தேசத்தின் புவியியல் நிலைமைகள் காரணமாக பெரிய நகர்கள் இங்கு விருத்தியுற வில்லை.
(ஆ) மலையிடை மேட்டுநிலப்
பிரதேசங்கள்
தரைத்தோற்றமும் அமைப்பும்
ரெக்கி மலைக ளுக்கும் பசுபிக் கரையோரமலைகளுக்கும் இடையில் அமைந்துள்ள மலையினை... மேட்டு நிலங்கள் தனித்ததோர் புவியியற் பிரதேச ப) 7க விளங்கிவருகின்ற) ன, இவை மலைத்தொடர் களாற் பிரிக் கப்பட்ட உயர்மட்ட வடி நிலங்களாகக் க 7 கனப்படுகின்றன. தரைத் தோற்றத்தையும் அமைப்பையும் பொறுத்தளவில் மூன்று தெளிவான பிரிவுகளை அவதானிக்கலாம். அவையாவன: -
1. சினேக் -- கொலம்பியா மேட்டுநிலம் :- வடரொக்கி மலைத்தொட ருக்கும் கஸ்கேட் மலைத்தொடருக்கும் இடையில் இம்மேட்டு நிலம் அமைந்துள்ளது. ஏறிக்கொன், இடாகோ மாநிலங்களை இம்மேட்டு நிலம் கொண்டுள்ளது. கனடாவிலிருந்து பாய்கின்ற கொலம்பியா நதியும், றொக்கிமலைத் தொடரில் தோற்றம் பெற்றுப் பாய்கின்ற சிநேக் நதியும் ஒன்றாக இந்த மேட்டுநிலத்தில் பாய்ந்து, இணைந்து கொலம்பியா நதியாக மேற்குப்புறமாகப் !!ாய்ந்து, பசுபிக்கை அடை கின்றன. இம் மேட்டு நிலம் சராசரி 1000 அடிகளுக்கு மேற்பட்ட உய ரத்தைக் கொண்டிருக்கின்றது. எரிமலைத் தாக்கத்திற்கு உட்பட்டதனால் கக்குகைக் குழம்பினால் பரந்த பிரதேசம் மூடப்பட்டிருக்கின்றது. சினேக் ஆறு, 125 மைல் நீளமான ஆற்றுக்குடைவு ஒன்றினூடாகப் பாய்கின்றது.

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
113
2. மத்திய பெரும் வடிநிலம்:- மலையிடை மேட்டுநிலப் பிரதேசங் களின் மத்திய பாகத்தை மத்திய, பெரும் வடிநிலம் அடக்கியுள்ளது. இதனை ' வடிநிலமும் மலைத்தொடரும் கொண்ட மாநிலம்'' என்பர். இம்மத்திய பெரும் வடிநிலம் பெருங்குறையாதலிற்கு உட்பட்டதா யும், உரிவிற்கு உட்பட்டதாயும் விளங்குகின்றது. நெவாடா, உற்றா மாநிலங்களை இவ்வடிநிலம் அடக்கியுள்ளது. பனிக்கட்டியாற்றரிப்பின் விளைவாக உருவாகிய ஏரிகளை இப்பிரதேசத்தில் காணலாம். இவை நீரின்றி வறண்டு உவர் ஏரிகளாகவுள்ளன. கிறேற்சோல்ற் ஏரி ( பெரிய உப்பேரி ), கார்சன் ஏரி, பிரமிட் ஏரி, ஹம்போல்ட் ஏரி என்பன இத் தகைய உப்பேரிகளாகும்,
3. கொலராடோ மேட்டுநிலம் :- மலையிடை மேட்டுநிலப் பிரதேசங் களில் தென்மேட்டு நிலமாக விளங்குவது கொலராடோவாகும். இம் மேட்டு நிலத்தின் வடபாகம் 5000-10000 அடி வரையிலான உயரத் தைக் கொண்டிருக்கின்றது. இம்மேட்டு நிலத்தின் பழையபாறைகள் கிடையான அடையற்படைகளினால் மூடப்பட்டிருக்கின்றன. மேலும், இம்மேட்டு நிலத்தில் ஆற்றுக்கு டைவுகள் காணப்படுகின்றன; கிரான்ட் கன்யோன் எனப்படும்; பெரிய ஆற்றுக்குடைவு அரிசோனா மாநிலத் தில் கொலராடோ நதியில் அமைந்துள்ளது. இது 125 மைல் நீள மானது : 6000 அடி ஆழமானது: உச்சியில் இதன் அகலம் 6 மைலா கும், கொலராடோ நதியில் 65 மைல்கள் நீளமான மாபிள் ஆற்றுக் குடைவும் அமைந்துள்ளது.
காலநிலை
மலையிடை மேட்டு நிலப்பிரதேசங்கள் பொதுவாக வரண்டன வாகும்; பசுபிக்கரையோர ஈரலிப்பான காற்றுக்களை, பசுபிக்கரையோர மலைத்தொடர்கள் தடுத்துவிடுகின்றன. இப்பிரதேங்களின் ஆண்டு மழைவீழ்ச்சி 10 " ஆகும்; தென்மேற்குப் பிரதேசத்தில் மழைவீழ்ச்சி 3" ஆகும். தென்மேற்குப் பிரதேசத்தின் யூலை மாத வெப்பநிலை 90° ப. ஆகும்; ஆங்கிலோ -- அமெரிக்காவிலேயே அதிக வெப்பமான வறள் பகுதி இதுவாகும். இப்பகுதியே அரிசோனாப் பாலைநிலமாகும். வட புறமாகக் செல்லச் செல்ல வெப்பநிலை வீழ்ச்சியடைகின்றது :
பொருளாதார நடவடிக்கைகள்
மலையிடை மேட்டு நிலப் பிரதேசங்களின் பொருளாதார நடவடிக் கைகள் பின்வருவனவாகும்.
14 ,

Page 65
114
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
1. பயிர்ச்செய்7ை 5:- மலையிடை மேட்டு நிலப் பிரதேசங்களில் பயிர்ச்செய்கை முக்கியமான பொருளாதார நடவடிக்கையாக இல்லை; காரணம் வரட்சியும் நீர்ப்பற்றாக்குறையுமாகும். மொத்த நிலப்பரப் பில் 3 சதவீதமே பயிர்ச்செய்கைக்குட்பட்டிருக்கின்றது. அதுவும் நீர்ப் பாசன வசதிகள் காணப்படுகின்ற பகுதிகளில் பீற்சீனிக்கிழங்கு, உருளைக்கிழங்கு, அல்பல்பா புல், பருத்தி என்பனவும், பழவகை, காய்கறி என்பனவும் செய்கைபண்ணப்பட்டு வருகின்றன. சோல்ற் ஏரிப்பசுஞ்சோலை அல்லது "உற்றாத்தோட்டம்' அரிசோனாவின் சோல்ற் நதிப்பள்ளத்தாக்கு , நெவாடாவின றெனோ பசுஞ்சோலை என்பன குறிப்பிடத்தக்க பயிர்ச்செய்கைப் பாகங்களாகும்.
2, விலங்கு வேளான்மை: - பரந்தளவிலான விலங்கு வேளாண்மை இம்மேட்டு நிலங்களில் நடைபெற்று வருகின்றது. மேய்ச்சல் நிலங் கள் பரந்து காணப்படுகின்றன, தேசிய இந்தியர்களும், வெள்ளையர் களும் விலங்கு வேளாண்மையில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி விவர
மாக ஏற்கனவே விபரிக்கப்பட்டுள் ளது.
3. களிப்பொருட்கள் அகழ்தல்: கனிப்பொருள் அகழ்தல் தொழில் சிறிய அளவில் இப்பிரதேசங்களில் நடைபெற்று வருகின்றது. தங்கம், வெள்ளி, செம்பு, ஈ 14 ம் என்பன இப்பிரதேசங்களில் கிடைக்கின்றன. நெவாடா மாநிலத்தில் கார்லின், ரோபோ என்பன தங்கச் சுரங்கங் சுள் காணப்படும் நகர்களாகும். புறோவோ பிரதேசத்தில் இரும்புத்தாது சிறிய அளவில் கிடைக்கின்றது. அரிசோனாவில் செம்பு அதிக அளவில் பெறப்படுகின்றது, இம்மா நிலத்தில் பிஸ்பி, அயோ, குளோப் - மியாமி என் பன முக்கிய செப்புச் சுரங்க மையங்களாகும்.
4. கைத்தொழில்கள்: - சிறிய அளவிலான 63}கத்தொழில்களே இம்மலையிடை மேட்டு நிலப் பிரதேசங்களில் விருத்தியுற்றிருக்கின்றன. புறோவோப் பகு தியில் இரும்புருக்கு ஆலை ஒன்று அமைந்துள்ளது. பழவகைகளையும் காய்கறிகளையும் தகரத்திலடைத்தல் உலர்த்தல் முத லிய தொழில்களும் சீனி உற்பத்தித் தொழில்களும் நடைபெற்று வரு கின்றன,
H4 71
•5
22)
5. உல்லாசப் பிரயாணக் கைத்தொழில்கள்:- மலையிடை மேட்டு நிலங்கள் உல்லாசப் பிரயா கானிகளைக் கவரத்தக்க இயற்கைக் காட்சி களைக் கொண்டிருக்கின்றன. இ. ரான்ட் கன்யோன், அரிசோனாப்பாலை, ஏரிகள், மலைகள் என் பன ஊர்காண் மக்களை இப்பிரதேசங்களுக்குக் கவர்ந்திழுக்கின்றன.

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
115
மலையிடை மேட்டு நிலப் பிரதேசங்களில் அமைந்திருக்கும் குறிப் பிடத்தக்க நகரம் சோல்ற் லேக் சிற்றி (Salt lake city) ஆகும்; இந்நகர்
பிரதான வர்த்தக மையமாக விளங்கிவருகின்றது; இந்நகரம் உற்றா மாநிலத்தில் அமைந்துள்ளது. அரிசோனாவில் அமைந்திருக்கும் நகரம் போனிக்ஸ் ஆகும். நெவாடா மாநிலத்தின் பிரதான நகரமாக விளங் குவது றெனோ ஆகும்.
6. கரையோரப் பள்ளத்தாக்குகள்
ஐக்கிய அமெரிக்காவின் பசுபிக் கரையோரப் பள்ளத்தா குகள், கலிபோர்ணியா, ஒறி கொன், வாஷிங்டன் ஆகிய மாநிலங்களை உள் ளடக்கி அமைந்திருக்கின்றது. இந்த இயற்கைப் பிரதேசம் தெளிவான இரண்டு புவியியற் பிரதேசங்களைக் கொண்டிரு க்கின்றது. அவையாவன;
(அ) கலிபோர்ணியாப் பிரதேசம்
(ஆ) பசுபிக் வடமேற்குப் பிரதேசம்
ஐக்கிய அமெரிக்காவின் கரையோரப் பள்ளத்தாக்குகளை ஆராயும் போது இன்னொரு புவியியற் பிரதேசத்தையும் அனுடன் சேர்த்_2
ஆராய்தல் நன்று அப்பிரதேசம் வருமாறு;-
(இ) அலா ஸ்காப் பிரதேசம்
(அ) கலிபோர்ணியப் பிரதேசம்
40
(சி
கலிபோர்ணியா பிரதேசம், ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்ணியா மாநிலத்தை முற்றாக அடக்கியுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் ஏனை | பகுதிகளிலிருந்து தெளிவாக மலைத்தொடர்களால் பிரிக்கப்பட்டு இருத் தல், தனித்துவமான மத்தியதரைக்கடல் கால நிலையை அனுபவித்தல், காட்டுவளம், கனிப்பொருள் வளம் , கடல்வளம், பயிர்ச் செய்கை வளம் என்பனவற்றில் இப்பிரதேசத்தின் சிறப்பபான விருத்தி என்பன யாவும் கலிபோர்ணியாவை ஒரு தனித்த புவியி ற் பி தேசம் க் கருத வைத்துள்ளன.

Page 66
116
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
பௌதிக நிலைமைகள்
(1) தரைத்தோற்றம்
கலிபோர்ணியாப் பிரதேசத்தின் அமைப்பையும் தரைத்தோற் றத்தையும் ஆராயும்போது மூன்று தெளிவான பிரிவுகளைக் காண 44 லாம். அவை:
(1) கரையோர மலைத்தொடர்கள்: கலிபோர்ணியாவின் கரையோர மலைத்தொடர்கள் வடக்கே களாமற் மலைகளிலிருந்து தெற்கே தாழ் கலிபோர்ணியா வரை அமைந்துள்ளன. பசுபிக்கரையோர மலைத் தொடர்கள், கரையோரத்திற்குச் சமாந்தரமாக அமைந்துள்ளன. இக்கரையோர மலைத்தொடர்களுக்கு இடையில் பள்ளத்தாக்குகள் அமைந்துள்ளன. இக்கரையோர மலைத்தொடர்களுக்கு இடையில் பள் ளத்தாக்குகள் அமைந்திருக்கின்றன ; சாந்தா கிளரா, சலினாஸ் என்ற இரண்டும் இத்தகைய கரையோர நெடுக்குப் பள்ளத்தாக்குகளாகும். மேலும் கரையோர மலைத்தொடர்கள் சான்பிரான்சிஸ்கோ துறை முகத்தை அடுத்து நடுப்பாகத்தில் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. சன் யுவகின், சக்கிரமன்றோ நதிகள், இந்த மலையிடைவெளியூடாக பசு பிக்கை அடைகின்றன. கலிபோர்ணியாவின் மத்திய பகுதிகளுக்கு நுழையவிடுகின்ற இந்த மலையிடை வெளியை 'கோல்டன் கேற்' (Golden Gate) என்பர். தென் கலிபோர்ணியாவின் கரையோரத்தையடுத்துப் பாறைத் தீவுகள் காணப்படுகின்றன, தென்கலிபோர்ணியாவிற் காணப் படுப் சன்கபிரியேல் மலை, சன் பேர்னாடினோமலை என்பன வெட்டுண்ட உயர் நிலமாக அமைந்துள்ளன.
(ஆ) மத்திய பள்ளந்தாக்கு :- சன்யுவகின் - சக்கிரமன்றோ நதிக சுள் பாய்கின்ற பெரும் பள்ளத்தாக்காக மத்திய பள்ளத்தாக்கு அமைந்திருக்கின்றது. இம் மத்திய பள்ளத்தாக்கு ஏறத்தாழ 460 மைல் கள் நீளமானதாயும், 50 மைல்கள் அகலமானதாயும் காணப்படுகின் றது. சாஸ்ராமலையில் ஊற்றெடுக்கின்ற சக்சிரமென்றோ நதி தென்புற மாகப் பாய்ந்து, சியரா நெவாடா மலையில் ஊற்றெடுத்து வடபுறமாகப் பாய்கின்ற சன்வகின் நதியுடன் இணைந்து, கோல்டன் கேற்றூடாகப் பசுபிக் சமுத்திரத்தை அடைகின்றது. இம் மத்திய பள்ளத்தாக்கு தடிப் பான அடையல்களால் நிரப்பப்பட்டுள்ளது.
(இ) சியராநெவடா மலைத்தொடர்:- கலிபோர்ணியாவின் கிழக் குப் பாகத்தை சியராநெவாடா மலைத்தொடர் அடக்கியிருக்கின்றது.

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
117
இம்மலைத்தொடரின் கிழ்க்குச் சாய்வு குத்தான தாயும், மேற்குச்சாய்வு மென்மையானதாயும் விளங்குகின்றன. உருமாறிய பாறைகளையும், எரிமலைப்பாறைகளையும், இம்மலைத் தொடர் கொண்டிருக்கின்றது.
பரமமாவாைதகை டயட்டி க2வேRைs 3 மைடயிலாவகமாவாைகைகைலககவமாககபப்யேக கைது
-- -- --1)
க்ளாமற்" ! மலை )
'காஸ்தா
இல.
இங்Qs .
1.ரானோ
சூெசன் ககர
*கல - - - - - - - - - - - - -6
க கம்
கேணல
ஆகமம் சண்ணபிரான்.
விசஸ் கோ ,
அ ன ப ப >
5 6 -ஓ' பூ 9
சாந்தாகினராக
சைவிஜ\
உங்குது
14 சன் * *ஆ, மத
டெ த
சலினால்
நாம் தமி
சூ ~ ~ ~
மோகாவ ப ா ல
லொஸ் அசிஸ்
3 0 8 |
இசாகல.
, அம் பீதியவ . பள்ளத்தாகாத,
8 ) '>
சந்தியாகோ |
அக்KAகையாகRWVராவய Eாதுகாகாலமானார்
படம் : 27 கலிபோர்ணியா பிளைத்தோசின் பனிக்கட்டியாற்றின் அரிப்பினால் உருவான தொங்கு பள்ளத்தாக்குகளையும், வட்டக்குகைகளையும் இம்மலைத் தொடரில் அவதானிக்கலாம். விற் னி சிகரம் (14495 ஆடி) இம்மலைத் தொடரின்

Page 67
118
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
உயர் சிகரமாகும். இம்மலைத் தொடரில் காணப்படும் லாஸ்சென்மலை ஒரு உயிர்ப்பு எரிமலையாகும்,
(ii) காலநிலை கலிபோர்ணியாப் பிரதேசத்தின் காலநிலை, மத்தியதரைக்கடற் கால நிலை வகையை ஒத்ததாகும். மாரிமழை, கோடை வறட்சி இப்பிர தேசத்தின் இயல்புகளாகும். கரையோரமாக கோடையில் நிலவும் வெப்ப நிலை, மத்திய பள்ளத்தாக்கு+ளில் நிலவும் வெப்ப நிலை யிலும் குறைவானதாகும். மாரிகாலத்தில் தென்மேல் காற்றுகள் மழையை இப்பிரதேசத்திற்குத் தருகின்றன. மலைத்தடையே இப்பிர தேசத்தின் மழைவீழ் * சிப் பரம்பலைப் பெரிதும் நிர்ணயிக்கின்றது. ஈரலிப்பா ன தென்மேலைக்காற்றை கரையோர மலைத்தொடர்கள் தடுத்து ஒடுங்க வைப்பதனால் மேற்குக்கரையோரமும், சியராநெ வாடா மலைத்தொடரும் தடுத்து ஒடுங்க வைப்பதனால் அம்மலைத் தொடரின் மேற்குக்கரையோரமும் அதிக மழையைப் பெற்றுக கொள் கின்றன. கலிபோர்ணியாப் பிரதேசத்தின் மழைவீழ்ச்சி 20" குறைவாகும். கோல்டின் கேற்றை அடுத்து! மழைவீழ்ச்சி 40" மேல் கிடைக்கின்றது. வெப்பநிலை வடக்கே 35°ட-இலிருந்து தெற்கே 70 ப. வரை வேறுபடுகின்றது. பொதுவாக தென்பிரதேசம் மிகவும் வறட்கி யானதாகும், இப்பாகத்தில் அமைத் துள் ள மோகாவ் பாலேநிலம், 5" குறைவாகவே மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது
(iii) இயற்கைத் தாவரம் மழைவீழ்ச்சி அளவும் வெப்ப நிலையும் இடத்திற்கு இடம் வேறு படுவதால், கலிபோர்ணியாவில் இயற்கைத் தாவரமும் பல்வகைப்படு சிறது. கலிபோர்ணியாவின் கரையோர மலைத்தொடரின் வடபாகத் தில் காடுகள் காணப்படுகின்றன; றெட்வூட், மஞ்சள் பைன் மரங்கள் இங்கு காணப்படுகின்றன. கரையோர மலைத்தொடரின் தென்பாகத் தில் புதர்க்காடுகள் காணப்படுகின்றன, மத்திய பள்ளத்தாக்கில் பிறே பறிப்புற்களும் ஓக் மரக்காடுகளும் காணப்படுகின்றன. தென் வறள் பாகங்களில் வறள் நிலவளரிகள் க ணப்படுகின்றன.
பொருளாதார நிலைமைகள்
(i) பயிர்ச்செய்கை
(அ) நீர்ப்பாசனம் கலிபோர்ணியாப் பிரதேசம் மத்தியதரைக்கால நிலையை அனு பவித்தபோதிலும், பயிர்ச் செய்கை நடவடிக்கைகளுக்கு மழைநீர்

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
119
போதுமானதாக இல்லை. கலிபோர்ணியாவின் மத்திய பெரும் பள்ளத்தாக்கு மிக்க வறட்சியானது. அவ்வாறிருந்தும் கலிபோர்ணி யாப் பிரதேசம் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் முன்னேறியிருப்பு பதற்குக் காரணம், நீர்ப்பாசனவசதிகள் நன்கு அமைந்திருப்பதாகும். முக்கியமாக மூன்று பாகங்களில் நீர்ப்பாசன வசதிகள் சிறப்பாக அமைந்துள்ளன. அவை:-
(1) மத் திய பள்ளத்தாக்கு:- சக்கிர மன்றோ-சன்யுலகின் நதிக ளில் அணை களும் நீர்த்தேக்கங்களும் கால்வாய்களும் அமைக்கப்பட். டிருக்கின்றன. இந்நதிகள் பாய்கின்ற பள்ளத்தாக்கு வறட்சியான தாயினும், இந்நதிகள் உற்பத்தியாகின்ற பிரதேசங்கள் ஈரலிப் பானவை; மழைப்ப னியும் மழைவீழ்ச்சியும் கணிசமான வளவு பெறு கின்ற பகுதிகளாகவுள்ளன. அதனால். இந்நதிகளில் நீர்ப்பாசன வசதிகளை அமைத்தல் இலகுவாயிற்று. சாக்கிரமன்றோ நதியில் சான்ஸ் அணை, கெஸ்விக், அன' போருப்சொம் அ5ை3 என் ட!ன குறிப்பிடத்தக் கன. சன்யுவகின் நதியில் பிறியன்ற் அணையும் டெல்ராமோடோங்ரா கால்வாயும் முக்கியமானவை.
(2) 3ெ1 ல் அஞ்சலி13) த டர் நிலம் : - கலிபோர்ணியா 5வின் லொஸ் அஞ்சலிஸ் பாகமும் நீர்ப்பாசன வசதிகளைக் கொண்டமைந்துள்ளது .
(3) இம் பீரியல் பள்ளத்தாக் கும், கோச்செல்லா பள்ளத்தாக்கும் :- கலி போர் ணியாப் பிரதேசத்தின் தென் வறண்ட பாகத்தில் இம்பீரியல் பள்ளத்தாக்கும், கோச்செல்லாப் பள்ளத்தாக்கும் அமைந்திருக்கின் றன. கொலராடோ நதியின் கிளைகள் இப்பாகத்திற்கு நீரப்பாசனத்தை வழங்குகின்றன. இம்பீரியல் அகா, லகுனா அவா என்பன வும், இம்பீரி யல் கால்வாய், கோச்செல்லா கால்வாய், ஆல்) - 19: மெரிக்கன் கால்வாய் என்பனவும் குறிப்பிடத்தக்கன. இப்பாகத்தில் அமைந்துள்ள சோல் ரன் கடல் என்றழைக்கப்படும் இறக்கத்தினைச் சூழ்ந்த பகுதிகள் நீர்ப் பாசன வசதிகளைப் பெறுகின்றன.
| சலிபோர்ணியாப் பிரதேசத்தின் பயிர் விளைநிலத்தில் (90இலட்சம் ஏ க்கர்) மூன்றிலிரு பா கம் நீரப்பாசனத்தைப் பெறுகின்றது; வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த பயிர்கள் பல இப்பிரதேசத்தில் பயிரிடப் படுகின்றன. சிறப்பாக மத்திய பள்ளத்தாக்கின் வண்டல்மண் படி வுகள் பயிர்ச் செய்கைக்குப் பெரும் தூண்டுதலாக விளங்குகின்றன. சன்பிரான்சிஸ்கோ, சன் பெட்றோ முதலிய துறைமுகங்கள் ஏற்றுமதி நட வடிக்கைகளிக்கு உதவுகின்றன; பருவத்திற்குப் பருவம் தொழிலாளர்

Page 68
120
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
தேவைப்படும்போது மெக்சிக்கோவிலிருந்து இலகுவில் பெறமுடிகின் றது. இவை யாவும் கலிபோர்ணியாவைப் பயிர்ச்செய்கை நடவடிக்
கைகளில் முதன்மை பெற வைத்துள்ளன.
(ஆ) தானியப் பயிர்கள் மத்திய பள்ளத்தாக்கில் கோதுமையும் பார்லியும் பிரதான தானி யப் பயிர்களாகும். இங்கு கோதுமை, மாரிப் பயிராகப் பயிரிடப்படு கின்றது; மாரிகாலம் குளிரானதாகவோ, உறைபனி கொண்டதாகவோ இருப்பதில்லை. ஆதலால், கோதுமை செய்கைபண்ண வாய்ப்பாகவுள் ளது; மாரிமழையுடன் கோதுமை விதைக்கப்பட்டு, வசந்த காலத்தில் அறுவடை செய்யப்படுகின்றது. ஐக்கிய அமெரிக்காவிலேயே பார்லி உற்பத்தியில் கலிபோர்ணியா முதன்மையான மாநிலமாகும்; நெல் லும் மிகச் சிறிய அளவில் செய்கை பண்ணப்படுகின்றது.
(இ) பழச்செய்கை கலிபோர்ணியாப் பிரதேசம், பழச்செய்கையில் முதன்மை கொண்ட மாநிலமாகும். மத்தியதரைக் கால நிலையும், பழவகைகளை உலர்த்து வதற்கு ஏற்ற பிரகாசமான சூரிய ஒளியும் இப்பிரதேசத்தில் பழச் செய்கையைச் சிறப்புற வைத்துள்ளன. கிச்சிலிப்பழவகைகள் (Citrus Fruits) யாவும் இப்பிரதேசத்தில் பயிராகின்றன. திராட்சை கலிபோர் ணியாவில் நீர்ப்பாசன வசதியுடன் சிறப்பாகப் பயிரிடப்படுகின் றது. மத்திய பள்ளத்தாக்கில் பிரஸ்னோப் பாகத்தில் திராட்சை நன்கு செய்கை பண்ணப்படுகின்றது; திராட்சை ரசமாகப் போத்தல்களில் அடைக்கப்படுவதுடன் கூடுதலாக வற்றலாக்கப்படுகின்றது. முந் திரிகை வற்றல் ஐக்கிய அமெரிக்காவின் வடகீழ்ப்பகுதிகளுக்கும், வட மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றது. கூட்டுறவு அடிப்படையில் உருவாக்கப்பட்ட உற்பத்தியாளர் சங்கமே முந்திரிகை வற்றல் வர்த்தகத்தை நடாத்தி வருகின்றது.
தோடை, பம்பளிமாஸ், எலுமிச்சை, ஏப்பிரிகொற், அப்பிள், பீச்சம்பழம், பிளம். செரி, பேயர்ப்பழம் என்பனவும் கலிபோர்ணியாப் பிரதேசத்தில் செய்கை பண்ணப்பட்டு வருகின்றன.
(ii) கைத்தொழில்கள்
(21) கனிப்பொருட்கள் ஐக்கிய அமெரிக்காவிலேயே தங்கம் உற்பத்தியில் முதலிடத்தைப் பெறும் மாநிலம், கலிபோர்ணியாவாகும். 1849 ஆம் ஆண்டிலிருந்து

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
இப்பிரதேசம் தங்கம் உற்பத்தியில் முக்கிய இடத்தை வகித்து வருகின்றது. தங்கச்சுரங்கங்கள் கலிபோர்ணியாவில் கலமத் மலைப் பிரதேசத்திலும், சியரா நெவாடா மலையின் வடபாகத்திலும் காணப்படுகின்றன. கரையோர மலைத்தொடரின் தென் மத்திய பாகத்தில் பாதரசமும், டெத் பள்ளத் தாக்கில் (Death Valley) பொட்டாசும், பிகஸ்னோவில் தங்ஸ்ரனும், ஈகிள்மலையில் இரும்புத்தாதும் கிடைக்கின்றன.
' கலிபோர்னியாவில் பெற்றோலியமும் இயற்கை வாயும் அதிக அள
ஈWIS.A .SAKAபோபயமilNAAIAlt;s: 836:17+1ம் வடி கட்டி AEKAKASIIMாலை மிகக்கடிச்சுக.டடம்: ரஃபகட...
£4ாடி,
சக எம்
* {}
3. ?
* * * * * * டி க க »ே
யுருே நா.
| கீளச் 2_8
> பெந்ஹேலிய 4 வயல்கள் 2. கால்வாய் உ - பழவகை கோ - கோதுமை பா - பார்லி நெ - நெல் .4) - எலாரு
 ைசார்ப்பு
* சா7ை அனாதர
கஎல்லில் 27 2 ) , கோ கோ
: 4..!?
1 கஈஆer இதே37
நதி ஓடி ரொக, ஓமா?
சன்பிரான்சிஸ்கோ நடனம்
1. பன்
(3 - 44 |
தேவேள்வி என்ன
மொனாரேநே --*
பி
இன்றை, கனக.தன்
திய ஓ,ய.. !
ikal,
இ 8:17STX7
F
இ ரன்க.7 u.oாகாணகம்
"ஓராயம்: 11- 1.37.27
FIAFSகாக.. * LT-3 'Fr,
*".89% 'ர,
சங்கா - ..? * சொஸ்.அக்கவிதை
இ -தின மல
*** 6 2
EPEானார்
- * >
.' * 3, ப (சு
< | ரேசர் -
சி ன
ஓடி
சதிகாகோ
.. படம் பார்
பககக கிைட் ஃப்RேitAt:' கொல்வைக்க:
hy கீர்!!
"பாPகசகா
thy.w Tஈஈஈ:r:7#**y+ாேகா-ரா'>ாராஈ p:/11ாரா.
"-சசிT AF:
:14-4
2ாணையரா:ாம்
படம்: 29 மக்கட்டொழில்கள்
15

Page 69
122
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
வில் கிடைக்கின்ற வலுப் பொருட்களாகும். சன் யுவகின் வயல்கள், சலினாஸ் வயல்கள், சாந்தாமரியா வயல்கள், குயாமா வயல்கள், சன்தா பாபரா வயல்கள், லொஸ் அஞ்சலீஸ்' வயல்கள் என்பன முக்கியமான பெற்றோலியக் கிணறுகளை கொண்டிருப்பனவாகும். கலிபோனியாவில் ஏறத்தாழ 38 கோடி பீப்பா பெற்றோலியம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.
(ஆ) பரும்படியாக்கங்கள்
கலிபோர்னியாவில் லொஸ் அஞ்சலீஸ் மையமும், சன்பிரான்சிஸ்கோ மையமும் பிரதான கைத்தொழிற் பிரதேசங்களாக விளங்குகின்றன. மீன், பழம், காய்கறி, இறைச்சி என்பனவற்றைத் தகரங்களடைக்குந் தொழில், மரம் அரியும் தொழில், இரசாயனக் கைத்தெ ழில்கள், பீற் சீனி உற்பத்தி, திராட்சை ரச உற்பத்தி என்பன இப்பிரதேசங்க ளில் முதன்மை பெற்றுள்ளன. லொஸ் அஞ்சலீசிலிருந்து 50 மைல் கள் கிழக்கேயுள்ள பொன்ரானா என்ற இடத்தில் இரும்புருக்கு ஆலை யொன்றுள்ளது. ஈகிள் மலையில் கிடைக்கின்ற இரும்புத்தாதைக் கொண்டு இது இயங்குகின்றது.
லொஸ் அஞ்சலீஸ்சிலும் சான்டியாகோவிலும் விமானங்கட்டுந்தொழில் நடைபெறுகின்றது. லொஸ் அஞ்சலீஸ்சிலும் ஓக்லாண்டிலும் மோட் டார் கார் உற்பத்தி நடைபெறுகின்றது. சன்பீட்றோ, சன்டியாகோ குடாக்களில் கப்பல் கட்டுந் தொழில் நடைபெறுகின்றது.
கலிபோர்ணியாப் பிரதேசம் சினிமாத் திரைப்படத் தொழிலில் உலகிலேயே முதன்மைவாய்ந்த பகுதியாக விளங்குகின்றது. லொஸ் அஞ்சலீசிலுள்ள 'ஹொலிவூட், சினிமா உலகின் தலை நகராக விளங்கி வருகின்றது. படப்பிடிப்பிற்குகந்த வரண்ட கால நிலை. பல் வகை இயற்கைக் காட்சிகள் என்பன தென் கலிபோர்ணியாவில் சினிமாத் தொழிலை விருத்தியுற வைத்துள்ளன.
நகரங்கள்
(1) சன்பிரான்சிஸ்கோ
சன்பிரான்சிஸ்கோ கலிபோர்ணியாவிலுள்ள முக்கியமான நகர மாகும்; இந்நகரம் ஒரு குடா நாட்டு நகரமாகும் ; மேற்கே பசுபிக் சமுத்திரமும், கிழக்கே சன்பிரான்சிஸ்கோ குடாவும், வடக்கே கோல் டின் நேற்றும் இந்நகரை குடாநாட்டு நகரமாக்கியுள்ளன. சன்பிரான்

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
123
కీ??తొట్లక
верасноартросалары
யப்பான்
சிஸ்கோ ந க ர த் தி ற் குக் கிழக்கே ஓக் ல ண் ட், றிச் மொண்ட், பேர்க்கேலி, அலா மெடா எனும் நகரங்கள் அமைந்துள்ளன : சன்பிரான்
சிஸ்கோவும் ஒக்லாண்டும் சான்பிரான்
பெரியதொரு பாலத்தினால் இணை க் கப் பட் டுள்ளன. இவ்விரு ந க ர ங் க ளி ன் இணைப்பால் உருவாகும் பட்டின ெவா ருக் கத் தில் ஏறத்தாழ 30 இலட்சம் மக்
கள் வாழ்கின்றனர். இந் படம்: 30 சன்பிரான்சிஸ்கோ |
நகரத்தை கிழக்கிலிருந்து இருப்புப் பாதைகள், விமானங்கள் மூலமும், மேற்கிலிருந்து கப்பல் கள் மூலமும் வந்தடையலாம்.
ஃதே !?
சேவாடி-பார், சி.'
ஈக.-க*
சன் பிரான்சிஸ்கோ நகரத்தின் கைத்தொழில் நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே விபரிக்கப்பட்டிருக்கின்றது.
சன்பிரான்சிஸ்கோ பிரதான துறைமுக நகரமாகும்; ஐக்கிய அமெரிக்காவின் பிரதான மேற்குக் கரையோரத் துறைமுகமாக சன் பிரான்சிஸ்கோ விளங்கிவருகின்றது. கலிபோர்ணியாப் பள்ளத்தக் கின் வெளிவாயிலாக இத்துறைமுகம் விளங்குகின்றது. யப்பான், கொங்கொங், அவுஸ்திரேலிய முதலிய நாடுகளிலிருந்து பசுபிக்கினுள் பிரவேசிக்கும் கப்பல்கள் தங்குவதற்கும், ஏற்றியிறக்குவதற்கும் ஏற்ற விதமாக இத்துறைமுகம் அமைந்துள்ளது. கலிபோர்ணியாவிலிருந்து கிழக்குப்புறமான பிரயாணம் மலைத்தொடர்களின் தடையினால் இடர் நிறைந்ததாக இருப்பதனால், கடற்போக்குவரத்து இங்கு முதன்மை பெற்றுள்ளது. இத்துறைமுகத்தினூடாக பழவகை, மரம், மீன், பெற்றோலியம், பருத்தி, நெல், பார்லி என்பன ஏற்றுமதியாகின்றன. தேயிலை, பட்டு, சீனி, அன்னாசி, கொப்பறா, வாழை.2 கோப்பி, றப் பர் என்பன இறக்குமதியாகின்றன.
(ii) லொஸ்அஞ்சலீஸ் பரப்பளவிளைப் பொறுத்தளவில் உலகிலேயே மிகப்பெரியதொரு நகரமாக லொஸ்அஞ்சல்ஸ் விளங்குகின்றது. இந்நகரம் ஏறத்தாழ 50

Page 70
124
ஐக்கிய அமெரிக்காவின் புவிபியல்
மைல்கள் குறுக்களவுடையது. ஏறத்தாழ 30 இலட்சம் மக்கள் வாழ் கின்றனர்; உலகிலேயே மூன்றாவது பெரும் நகர் இதுவாகும். கரை
யோர தாழ்நிலத்தில் இந்நகரம் அமைந்துள்ளது.
thா பாருட்பட,புதிய,கலக்கல் படிதபமகப:» டம ட 3 மேகா 6 இந்திக்க சிங் பல்-411'
* மெwyerாட
- ரை )
-சs!
58 yea:
-- யேர்கல்!
ரொடு க்லாஸ்ட் பிரசாதங்கள் ----------1,
*** {{} டெ
ஐ - -
» மாயாமாக 7ட், ஒய :
உ.டி. [WS
அகமண />'
ஈயாபாபா.சமகா"
hாடி" 1AHA மெயம்,நாயகர்
, '4.4வ.யாரடி
தேசச்
*ராடிகாமா ta3
பு4காவை அசடியாக்கி ',)
*~--~--~-- ...
உ3 2வது தெ! -'
நாசா2ப4யா பாக5ா.
உாம் பாடிகாலுபகர ரக்டர்
( ரெட் ஆப்
- சிந்து -
Pாராக
VETTAKER மெ= 0
படம்: 31 சன்பிரான்சிஸ்கோ நகரம்
''ளில் 4
இங்குள்ள மக்களில் பெரும்பாலோர் கைத்தொழிலாக்கங்களில் ஈடுபட்டவர்களாவர். ஐந்திலொரு பங்கினர் விமானங்கட்டுதல் தொழிலாளர்களாக உள்ளனர். மோட்டார்வண்டிகள் கைத்தொழில், சினிமா, ரெலிவிசன், ஸ்ரூடியோத் தொழில்களிலும் ஏராளமானவர் கள் ஈடுபட்டிருக்கின்றனர்.
சன்பிரான் கிஸ்கோ போன்று. லொஸ் அஞ்சலீஸ் இயற்கையான துறைமுகத்தைக் கொண்டிருக்கவில்லை. எனினும் றப்பர், கோப்பி, பேப்பர், கொப்பறா, உலோகங்கள் என்ன இதனூடாக இறக்குமதி

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
125
யாகின்றன. பெற்றோலியம், பழவகை. பருத்தி, சினிமா, றயர்கள், மீன் என்பன எற்றுமதியாகின்றன.
லொஸ்அஞ்சல்சில் நீர்ப்பற்றாக்குறை ஒரு பிரச்சனையாகும். எனி னும் சியரா நெவாடா மலையில் உற்பத்தியாகின்ற ஓவென்ஸ் நதியும் கொலராடோ நதியும் இந்நகரத்திற்கு நீர்வழங்குகின்றன. கொலராடோ வில் அமைக்கப்பட்டிருக்கும் ஹவர் அணையினால் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கம் லொஸ் அஞ்சலீஸ் நகரின் தென்பாகங்களுக்கு நீர் வழங்கு கின்றது. இன்று இந்நகரம் கடல் நீரை நன்னீராக்கி 1100 மைல்க ளுக்கு அப்பாலுள்ள கொலம்பியா நதி லிருந்து குழாய் வழி மூலம் நீரைப்பெற்று வருகின்றது.
(ஆ) பசுபிக் வடமேற்குப் பிரதேசம்
பசுபிக் வடமேற்குப் பிரதேசத்தில், வாஷிங்டன், ஒறிகொன் ஆகிய மாநிலங்கள் அடங்கியுள்ளன; பசுபிக் வடமேற்கு என்பதும் இவ்விரு மாநிலங்களையுமே பொதுவாகக் குறிக்கின்றது. இப்பிரதேசத் தின் கரையோரத்திற்குச் சமாந்தரமாக (i) கரையோர மலைத்தொட ரும்; அதற்கிணையாக (ii) கஸ்கேட் மலைத்தொடரும் அமைந்திருக் கின்றன. இவ்விரு மலைத்தொடர்களுக்கும் இடையில் நெடுக்குப் பள் ளத்தாக்குகள் அமைந்துள்ளன. கரையோர மலைத்தொடரில் ஒலிம்ஸ் மலை 8150 அடி உயரமான சிகரத்தைக்கொண்டு விளங்குகின்றது. கஸ்கேட் மலையில் றெயினியர் சிகரம் (14408 அடி) அமைந்துள்ளது.
கொவம்பியா நதி இப்பிரதேசத்தில் பாய்கிறது,
இப்பிரதேசத்தின் வடமேற்கே வன்கூவர்த் தீவு அமைந்துள்ளது. இத்தீவினைப் பிரதான நிலப்பரப்பிலிருந்து யு வான் டி பியூகா என்ற தொடுகடல் பிரிக்கின்றது.
இப்பிரதேசத்தின் காலநிலை. வடமேற்கு ஐரோப்பிய காலநிலையை ஒத்துள்ளது. உவப்பான மாரி, குளிர்ச்சியான கோடை இங்கு நிலவு கின்றது. மாரியில் மழைவீழ்ச்சி நிகழ்கின்றது; மாரிமழைப்பனியும் கரையோரத் தொடர்களில் நிகழ்கிறது : ஆண்டுக்குரிய மொத்த மழைவீழ்ச்சி 35" ஆகும். எனினும், கஸ்கேட்மலையின் கிழக்குப்பகுதி. காற்றொதுக்கில் அமைந்திருப்பதால் மிகக்குறைவாக மழையைப் பெறு கின்றது.
பசுபிக் வடமேற்குப் பிரதேசத்தின் பொருளாதார நடவடிக்கை களில் மரம் வெட்டும் தொழில் குறிப்பிடத்தக்கது; மரமரியும் ஆலை

Page 71
126
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
கள் போட்லாண்ட், சியாற்றில், டக்கோமா ஆகிய நகரங்களில் அமைந் துள்ளன. கோதுமை, ஓட்ஸ், பார்லி முதலிய தானியங்களும், பழ வகைகளும் இப்பிரதேசத்தில் பரவலாகச் செய்கை பண்ணப்படுகின் றன் . விலங்கு வேளாண்மையும் நடைபெறுகின்றது. வடகிழக்கு ஒறி கொன் மாநிலத்தில் கோதுமை செய்கை பண்ணப்படுகின்றது; கொலம் பியா மேட்டு நிலத்தில் நீர்ப்பாசன உதவியுடன் அப்பிள் பழச்செய்கை முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.
வன்கூவர் (நகர்), லோங்வியூ, சியாற்றில் நகர்களில் அலுமினியத் தொழில் நடைபெற்று வருகின்றது. சியாற்றிலில் விமானங்கட்டுதல் நடைபெறுகின்றது. கப்பல் கட்டுந் தொழில் பிறிமேற்றின் துறைமுகத் தில் நடைபெறுகின்றது. போட்லாந்தும், சியாற்றிலும் கம்பளி நெச வுத் தொழிலில் குறிப்பிடத்தக்கன.
சியாற்றிலும், போட்லாந்தும் இப்பிரதேசத்தின் பிரதான இரு நகர்களாகும். சியாற்றிலில் ஏறத்தாழ 15 இலட்சம் மக்களும், போட் லாந்தில் ஏறத்தாழ 10 இலட்சம் மக்களும் வாழ்கின்றனர்.
(இ) அலாஸ்கா
பௌதிகப் பின்னணி
ஐக்கிய அமெரிக்க மாநிலங்களிலே ஒன்றாகிய அலாஸ்கா, வட மேற்கே தனித்து அமைந்துள்ள ஒரு குடா நாடு ஆகும். 5, 84,000 சதுர மைல் பரப்புள்ள அலாஸ்கா, 1867 இல் ஐக்கிய அமெரிக்கா வின் ஒரு மாநிலமாகச் சேர்க்கப்பட்டது. வடக்கே ஆக்டிக் சமுத்திரத் தையும், மேற்கே பெரிங் கடலையும், தெற்கே அலாஸ்கா விரிகுடாவை யும் எல்லைகளாகக் கொண்டமைந்துள்ளது.
அலாஸ்காவின் தென்பாகம் மிகவுயர்ந்தது; தென்பாகத்தில் அலாஸ்கா மலைத்தொடர் கரையோரமாக அமைந்துள்ளது; இது ஏறத்தாழ 18000 , அடிகள் உயரமானது. அலாஸ்காவின் வடபாகத் தில் ஆக்டிக் வட்டத்திற்கு வடக்கே, ஏறத்தாழ 8000 அடிகளுக்கு மேற்பட்ட புறூக்ஸ் மலைத்தொடர் காணப்படுகின்றது. கனடாவைச் சேர்ந்த யூக்கான் மலைப்பிரதேசத்தில் ஊற்றெடுக்கின்ற யூக்கன் நதியும் குஸ்கொக்வின் நதியும் மேற்காகப் பாய்ந்து பெரிங் கடலைச் சென் றடைகின்றன.

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
127
பனிக்கட்டியாற்றுக் காலத்தில் இப்பிரதேசம் முழுவதும் பனிக்கட்டி யால் மூடப்பட்டிருந்ததுடன், பனிக்கட்டியாற்று அரிப்பிற்கும் உட்பட்ட தென்பதை ' U ' வடிவப் பள்ளத்தாக்குகளில் இருந்தும், தெற்கே காணப்படும் ஆயிரக்கணக்கான நுழைகளிலுமிருந்து அறிந்துகொள்ள லாம். தெற்கே காணப்படும் ஆயிரக்கணக்கான தீவுகளும் அரிப்பிற் குட்பட்ட கரடுமுரடான தன்மைகளைக் கொண்டிருக்கின்றன. தென் பாக நுழைகழிகள். சிறந்த துறைமுக வசதிகளைக் கொண்டிருப்பதனால்,
மீன் பிடித்தொழில் இப்பிரதேசத்தில் சிறப்புற்றிருக்கின்றது.
F ......டIA,யூடிய 1780.
டிச.-.-.-.-.-..: _ 3. 4----
/'> 3, 4 பு 2. முச தர 42
7 , 2 கி)
ச' * 1:F+ ''Fஓரி-*-*-K+1ட்சி.சாகச AIR ## சசிrபாள -#M=", 4 Tா 4 சக்ரி -சமாசி*******
-யூேக்கி,7 .3
37 பேர் !
2, {ெ.' : 73;? }
> 5.42. ல !
கனடா
(37) %,
{ த.-வன 17 3ெ | 473/7 (27
27 .,
Pெ3 கடல்
{}.க *) *
சிகா, காரோ
ரீ"
* \// கோர்டோவா
வோர்
-, ' -
TECஇப்பாரி4, டிடர்பெட்* "*:
*'? அலாஸ் &ா \யூனய்
விரிகுடா சிங்கா
நிகழ்சிக்கன்
பி. 247: 15.2.2-
2*, கை, 2லா ~
படம்: 32 அலாஸ்காரி அலாஸ்காவின் காலநிலை, நனிகுளிர்க்கால நிலையாகும். மழைப் பனியே இப்பிரதேசம் முழுவதும் பொழிகின்ற படிவு வீழ்ச்சியாகும். வருடத்தில் பெரும்பகுதி பனியால் மூடப்பட்டிருக்கும். அலாஸ்கா வின் வடபாக வெப்பநிலை 20° ப.க்கு குறைவாகவும் செல்வதுண்டு : தென்பாக வெப்பநிலை 40-50° ப. வரையில் கோடையில் காணப்படும்.

Page 72
128
ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
பொருளாதாரப் பின்னணி
(அ) காட்டுவளம் - அலஸ்காவின் வடபாகத்தில் வளர்பருவம் மிகக் குறுகியதாகக் காணப்படுவதால் தண்டாரத்தாவரம் காணப்படுவகின் றது. ஆனால், அலாஸ்காவின் மத்திய பாகத்திலும் தென்பாகங்களிலும் ஊசியிலைக்காடுகள் காணப்படுகின்றன. கெம்லொக், ஸ்புறூச், ரெட் சீடர் போன்ற தரமான மரங்கள் இக்காடுகளிலுள்ளன. இம்மரங் களை அடிப்படையாகக் கொண்ட அரிமர ஆலைகளும், படகுகட்டும் நிலையங்களும் இயங்கிவருகின்றன. அலாஸ்காவில் நீர்மின்வலு விருத்தியுற்றிருப்பதனால், அரிமரத்தொழிற்சாலைகளுக்கும், காகித உற் பத்தித் தொழிற்சாலைகளுக்கும் தேவையான நீர் மின்வலு பெறக்கூடிய தாக இருக்கின்றது. கெற்சிக்கன், யூனாய், மற்றனுஸ்கா ஆகிய பகுதி களில் நீர் மின்வலு நிலையங்கள் அமைந்துள்ளன. அங்கறேச் நகரில் சிறியளவிலான பல் வேறு கைத்தொழில்கள் இயங்கிவருகின்றன.
(ஆ) மீன்பிடித்தல் - வடகீழ் பசுபிக் மீன்பண்ணைப் பிரதேசத் தினுள் அலாஸ்காவின் கரையோரங்கள் அமைந்துள்ளன. அலாஸ் கா வின் குறிப்பிடத்தக்க பொருளாதார நடவடிக்கையாக மீன்பிடித் தல் விளங்குகின்றது. சமன் மீன் அதிக அள வில் பிடிக்கப்படுகின்றது. நெறிங், ஹலிபட், கொட் முதலான மீன்வகைகளும் அலாஸ்காவின் சமுத்திரப்பாகங்களில் ஏராளமாகக் கிடைக்கின்றன. (அ) அதிக மீன்வளம், (ஆ) பல்லுருவக்கடற்கரையமைப்பால் கிடைத்த துறைமுக வசதிகள், (இ) மீன்பிடிப்படகுகள் கட்டுவதற்கேற்ற மரங்கள், (ஈ) பயிர்ச்செய்கைக்கு உவப்பற்ற நிலைமைகள் என்பன யாவும் அலாஸ் காவில் மீன்பிடியை ஊக்குவித்துள்ளன.
யூனாய், சிற்கா, கோர்டோவா, அங்கறேச், கெற் சிக்கன் ஆகிய நகர் களில் மீன்களைத் தகரங்களிலடைத்துப் பதனிடும் தொழில் சிறப்பாக இயங்கிவருகின்றது.
(இ) கனிப்பொருள்வளம் - தங்கம், பிளாற்றினம், நிலக்கரி என் பன அலாஸ்காவிலுள்ள பிரதான கனிப்பொருள் வளங்களா கும். தங்கம் யூ,னாய், நோம் பகுதிகளில் கிடைக்கின்றது. கொஸ்கோவின் குடாக் கரையோரத்தில் பிளாற்றினம் அகழப்படுகின்றது. நிலக்கரி அலாஸ்கா மாநிலத்தில் பரவலாகக் கிடைக்கின்றது. கற்றல்லா, மற்ற னுஸ்கா, அங்கறேச் முதலான பகுதிகளில் நிலக்கரிச் சுரங்கங்களுள்ளன. செம்பு கெற் சிக்கன் பகுதியில் கிடைக்கின்றது!.
சாந -: >ள;' *) -47' ', *'''
- சா*37
** 77: --------

ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
120
(ஈ) பயிர்ச்செய்கை- அலாஸ்காவில் பயிர்ச்செய்கை நடவடிக்கை கள் குறிப்பிடத்தக்களவு விருத்தியுறவில்லை. காரணம், குறுகிய வளர் பருவமாகும். மற்றனூஸ்காப் பள்ளத்தாக்கில் காய்கறிகளும் (உருளைக் கிழங்கு), றை, ஓட்ஸ், பார்லி என்பனவும் பயிரிடப்படுகின்றன' தேவையான உணவுப்பொருட்கள் இறக்குமதிசெய்யப்பட்டு வருகின் றன.
(உ) ஏனைய தொழில்கள்: வேட்டையாடுதல், துருவ மான்களை வளர்த்தல் என்பனவும் அலாஸ்காவில் வாழும் மக்களால் நடத்தப் படுகின்றன.
குடிசனம்
அலா ஸ்காப் பிரதேசத்தில் பல்லின மக்கள் வாழ்கின்றனர்; 1880) இல் அலாஸ்காவில் 33,000 மக்கள் வாழ்ந்தனர்; 1970 இல் இக் குடித்தொகை 3, 12,000 உயர்ந்துள்ளது; இவர்களில் 80% வெள்ளையர் களாவர்; 6எஞ்சியோர் எஸ் கிமோவர்களும், அமெரிக்க இந்தியருமாவர். அலாஸ்காவின் தென் பாகத்தில் பசுபிக்கரையோரமாகப் பெருந் தொகை மக்கள் வாழ்கின் றனர்; வட. பாகத்தில் எஸ்கிமோவர்கள் வாழ்ந்துவருகின்றனர். அலாஸ்காவின் தலை நகரம் பூனாய் ஆகும்.
-ர உட்கta ----
16

Page 73
பரீட்சை வினாக்கள்
(i) ஐக்கிய அமெரிக்காவின் தரைத்தோற்றப் பிரிவுகளை ஒரு
புறவுருவத்தில் குறித்து பெயரிடுக. (ii) அப்பலாச்சியன் உயர் நிலத்தின் தரைத்தோற்றத்தையும்
அமைப்பையும் குறிப்பிடுக.
2. பின்வருவனவற்றைச் சுருக்கமாக விபரிக்க.
(i) ஐக்கிய அமெரிக்காவின் மழைவீழ்ச்சிப்பரம்பல் கிழக்கு -
மேற்காக வேறுபடுவதற்கான காரணங்கள். ஐக்கிய அமெரிக்காவின் வெப்ப நிலைப்பரம்பல் தெற்கு -
வடக்காக வேறுபடுவதற்கான காரணங்கள் (பக். 15) (111) ஐக்கிய
ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குப் பிரதேசம் அதிக மழை
யைப் பெற்றுக்கொள்வதற்கான காரணங்கள். (பக். 17) (iv) ஐக்கிய அமெரிக்காவின் மத்திய பாகம் குறைவாக மழை
4ை.ப் பெறுவதற்கான காரணங்கள். (பக். 16-17)
3. ஐக்கிய அமெரிக்காவின் நிலக்கரி வளம் குறித்து ஒரு விளக்கக்
கட்டுரை எழுதுக, (பக். 21 -22) 4. (i) ஐக்கிய அமெரிக்கா வின் பிரதான பெற்றோலியக் கிணறு
களை ஒரு புறவுருவப்படத்தில் குறித்துப் பெயரிடுக, (1) ஜக்கிய அமெரிக்காவின் பெற்றோலியக் கைத்தொழில்
குறித்து ஒரு விளக்கம் தருக. (பக். 22 - 23). 5. 4 ஐக்கிய அமெரிக்ககவின் கனிப்பொருட் செல்வம் ' ' என்பது
குறித்து சுருக்கமாக ஒரு விளக்கம் தருக. (பக். 21 - * 5)
6.
5,
- ஐக்கிய அமெரிக்காவின் குடிப்பரம்பல் ' ' என்பது குறித்து ஒரு சிறு கட்டுரை வரைக. (பக். 28 - 27)
(11)
7 (1 ) ஐக்கிய அமெரிக்காவின் பயிர்ச்செய்கை வலயங்களை ஒரு
புறவுருவப்படத்தில் குறித்துப் பெயரிடுக. ( பக். 28.) ஐக்கிய அமெரிக்காவின் பயிர் செய்கையில் காணப்படும் சிறப்பியல்புகளைச் சுருக்கமாக விபரிக்க. (பக். 29 - 31) ஐக்கிய அமெரிக்காவின் கோதுமைப் பயிர்ச்செய்கையின் பரம்பல் குறித்து விளக்குக. (பக். 40 - 41)

13!
8. (i) ஐக்கிய அமெரிக்காவின் வடகீழ்ப் பிரதேசத்தினைக் கலப்பு
வேளாண்மை வலயம் எனக்கூறுவது எவ் வ ள வு தூரம் பொருத்தமானது ? (பக். 31 - 32) இக்குறித்த பிரதேசத்தில் பாற் பண்ணைத் தொழில் முதன்மை பெற்றமைக்குரிய காரணங்களைச் சுருக்கமாகத் தருக . (பக். 33).
)
4. ஐக்கிய அமெரிக்காவின் சோள வலயம் குறித்துப் பின்வரும்
தலைப்புக்களின் கீழ்ச்சுருக்கமாக விபரிக்க; (பக். 34 - 36)
(1) சோள வலயத்தின் எல்லைகள். (ii) சோள வலய ஏனைய பயிர்கள், (iii) சோளவலயத்தில் விலங்கு வளர்ப்பு
10. ஐக்கிய அமெரிக்காவின் பருத்தி வலயம் குறித்து ஒரு புவியியற்
விபரணம் தருக . (பக். 36 - 38)
11. பின்வரும் பயிர்ச்செய்கை நடவடிக் கைகள் குறித்த விளக்கக்
கக் குறிப்புரைகள் தருக.
(i) ஐக்கிய அமெரிக்காவின் பழச்செய்கை. (பக். 42 - 4) (11) வசந்தகாலக் கோதுமை. (பக். 40) (111) அயன அயல் பயிர்வலயம். (பக். 39)
12. புளோரிடாப் பிரதேசத்தினதும் கலிபோர்ணியாப் பிரதேசத்தின்
தும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை ஒப்புநோக்கியும் வேறு படுத்தியும் விபரிக்க. (பக்.104.)
13. ஐக்கிய அமெரிக்காவின் வடகீழ்ப்பிரதேசம் கைத்தொழிலாக்கங்
களில் முதன்மை பெற்றமைக்கான காரணிகளைத் தருக . (பக். 44 - 45)
14. ஐக்கிய அமெரிக்காவின் கைத்தொழில் மையங்கள்குறித்து விப
ரிக்க . (46-48).
15. ஐக்கிய அமெரிக்காவின் முக்கிய இரும்புருக்குக் கைத்தொழிற்சாலை
ககளுள்ள இடங்களின் அமைவைப் பற்றி ஆராய்க (பக்: 48 - 54)
16. (1)
ஐக்கிய அமெரிக்காவில் பருத்தி நெசவுக் கைத்தொழில் முதன்மை பெற்றிருக்கும் இரண்டு பிரதேசங்களைக் குறிப் பிடுக, (பக். 48 - 54)

Page 74
132
(ii).
அவற்றில் ஏதாவது ஒன்றன் விருத்திக்குச் சாதகமாக
அமைந்த ஏதுக்களை விபரிக்க. (பக்: 57 - 58) 17. (1) தானியம் அரைத்தல் தொழிலின் நிலையினை விபரிக்க.
(பக். 60) - (1)
ஐக்கிய அமெரிக்கா வின் ஏதாவது ஒரு மீன் பண்ணையின் பொருளாதார முக்கியத்துவத்தை விளக்குக. (பக். 61 - 63
18, (1) ஐக்கிய அமெரிக்காவில் இறைச்சியடித்தல் தொழில் நடை
பெறும் மையங்களைக் குறிப்பிடுக. சிக்காக்கோவில் இறைச்சி பதனிடுந் தொழில் முதன்மை
பெற்றமைக்கான கார்ணிகளைத் தருக . (பக். 54 - 66) 19. (1)
நியூயோர்க், சிக்காக்கோ, லொஸ் அஞ்சலிஸ் ஆகிய நகரங் களை உதாரணமாகக் கொண்டு ஐக்கிய அமெரிக்காவின் பெரு நகர்களின் பொதுவான பிரச்சினைகளை விரிக்க.
(ii) இப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் கூறுக,
20. புளோரிடாவினதும் கலிபோர்ணியாவினதும் பயிர்ச்செய்கையில்
காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளை விபரிக்க. (பக்-104?)
21. பேரேரிகளின் கரையோரத்தில் அமைந்திருக்கும் ஐக்கிய அமெரிக்க
நகர்களின் கைத்தொழில் - வர்த்தக முக்கியத்துவத்தினை விபரிக் க. (பக். 84, 88)
22. (i) ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரப் புவியியலில் கிழக்கு
அரைப் பாகத்திற்கும் மேற்கு அரைப்பாகத்திற்கும் இடை யில் பெரும் ஏற்றத்தாழ்வுண்டு. எந்த எந்தத்துறைகளில் இத்தகைய வேறுபாடுகள் காணப்படுகின்றன என்பதனைச் சுருக்கமாக விபரிக்க.
(ii) இப்பொ ருளாதார வேறுபாடுகளுக்கான புவியியற் காரணி
களைத் தருக.
23. 100 ° மே. நெடுங்கோட்டிற்கும் ப சு பி க் கரையோரத்திற்கும்
இடையில், ஐக்கிய அமெரிக்காவில் ஒரு சில பெரும் நகர்களே உள்ளன. இதற்கான காரணங்களை விபரிக்குக.
24. ஐக்கிய அமெரிக்காவிலேயே கலிபோர்ணியாப் பிரதேசம் மிக
முக்கியமான மாநிலமாக விளங்குவதற்குரிய காரணிகளைத் தருக,

133
25. பின்வரும் நகரங்களின் (1) அமைவிடம், (ii) பொருளாதர முக்கி
யத்துவம் என்பனவற்றைக் கூறுக.
(1) சியாற்றல்
(1) சன் பிரான்சிஸ்கோ (iii) லொஸ் அஞ்சலி
(vi) பிற்ஸ் பேக் (v) டெற்றொபிற்
(vi) நியூஒலியன்ஸ்
26. ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குக்கரையோரத் துறைமுகம் ஒன்
றினையும், மேற்குக் கரையோரத் துறைமுகம் ஒன்றினையும் தெரிவு செய்து (1) அமைவு நிலை (ii) வர்தத க ம் என்பனவற்றைப் பொறுத்தளவில் காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளை விபாக்க.
27. ஐக்கிய அமெரிக்காவில் பழச் செய்கை என்பது குறித்து ஒரு கட்
டுரை எழுதுக. 28. நியூ இங்கிலாந்துப் பிரதேசத்தினைப் பின்வரும் தலைப்புகளின் கீழ்
விபரிக்க.
(1) தரைத்தோற்றம்
(ii) காலநிலை நிலைமைகள் (iii) பொருளாதார நடவடிக்கைகள் (iv) குடிப்பரம்பல்
29. புளோரிடாவுக்கும் அலாஸ்காவுக்கும் இடையிலான புவியியல் வேறு
பாடுகளை விபரிக்க. (பக். 104, 127
30. பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.
(1) கலிபோர்ணியா கனிப் பொருள் வளம் நிறைந்த பிரதேசம்
(11)
இரும்புருக்குத் தொழிலில் பிற்ஸ் டேக் மாத்திரம் முதன் மை யானதல்ல
}
31. (1)
ஐக்கிய அமெரிக்காவின் பருத்திவலயத்தையும் பருத்தி ஏற்றுமதி செய்யும் மூன்று துறைமுகங்களையும் ஒரு புறவுரு வப் படத்தில் குறித்துக் பெயரிடுக. (பக். 13) பருத்தி வலயத்தில் பருத்திச் செய்கைக்குச் சாதக!!11: க இருக்கும் புவியியற் காரணிகளில் நான்கினைத் தருக. (பக். 99, 36
(ii)

Page 75
134
(iii) ஐக்கிய அமெரிக்காவின் இரு பிரதான பருத்தி நெசவுப்
பிரதேசங்களைக் கூறுக. (பக். 56-58 ) (vi) அப்பிரதேசங்களில் ஏதாவதொன்றில் பருத்தி நெசவுத்
தொழிலிற்குச் சாதகமான அல்லது பாதகமான மூன்று காரணிகளைத் தருக . (பக்: 57 )
32. (1)
பின்வரும் பிரதேசங்களில் ஏதாவது இரண்டினைத் தெரிவு செய்க.
(i) நியூஇங்கிலாந்து
(1) கலிபோர்ணியா
(ii) புளோரிடா
(iv) அலாஸ்கா
(1) தெரிவு செய்த இரு பிரதேசங்களில் கால நிலை, மக்களின்
தொழில்கள் என்பனவற்றில் காணப்படும் வேறுபாடுகளை
விபரிக்க.
33. வடகீழ் அமெரிக்க ஐக்கிய அரசு உலகின் பிரதான கைத்தொழிற்
பிரதேசங்களில் ஒன்றாக வளர்ச்சியடைந்ததற்கான காரணங்களைக் சுகூர்ந்தாராய்க. (பக். 68, 72
34. பின்வருவனவற்றுள் இரண்டிற்குக் குறிப்புக்கள் தருக.
(1) பேரேரிக்கரைகள் வழியே நகர வளர்ச்சி (ii) ஹட்சன் மோஹோக் இடைவெளி (iii) ஈரி - ஒன்ராறியோ ஏரிப்பிரதேசத்துக் கைத்தொழில்கள்
(பக். 77, 64
35. பேரேரிகளுடன் சம்பந்தப்பட்ட போக்குவரத்து முக்கியத்துவத்தை
ஆராய்க . . (பக். 79, 84
16. வடகீழ் அமெரிக்க ஐக்கிய அரசின் கைத்தொழில் அபிவிருத்தியிற்
ரேரிகளின் பங்கினைக் கூர்ந்தாராய்க.
(பக் 79, 88.)
இமாம் ரிசாடங்கி


Page 76
in th 1


Page 77
1. படம் வ
(புதி பெளதிகச் (G, C, E.
2.
படவரை
படவரை 5. இலங்கை
இந்தியத் . 7. பிரித்தானி
8. ஞாயிற்று,
(( பெளதிகச் (அச்சில்
S KPய கர்

C. E. AL வகுப்புப் புவியியல் நூல்கள்
ரெகலை
ய படவேலை நூல் ) = சூழல் - I. நிலவுருவங்கள் A/L ஏப்பிரல், ஆகஸ்ட் - மாணவர்களுக்கு) கலையில் எறியங்கள்
கலையில் வரைப்படங்கள் 1 புவியியல் துணைக் கண்டப் புவியியல் யாவின் புவியியல்
த் தொகுதி (அச்சில் ) 3. C. E. A/L ஆகஸ்ட் மாணவர்களுக்கு) = சூழல் - II. காலநிலையியல்
விபரங்களுக்கு ரீ லங்கா புத்தகசாலை காங்கேசன் துறை வீதி,
யாழ்ப்பாணம்.