கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தற்காலச் சரித்திரம்

Page 1
可乐 交付の
量度一,二,道。
以下是

'ui-Strup
了印容 为可
事业

Page 2

***" உ \\
தற்காலச் சரித்திரம்
எட்டாந்தரம்
(புதிய பாடத்திட்டத்துக்கமைய எட்டாந்தர சரித்திர
வழிகாட்டியைத் தழுவி எழுதப்பட்டது:)
>
ஆக்கியோன் த. தியாகராசா B. A.
விற்பனையாளர் இலங்கா மத்திய புத்தகசாலை 84, கொழும்பு வீதி,
கண்டி.

Page 3
மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 1971,
சாத
All rights reserved
விலை ரூபா 3-00
இப்பிரசுரம் கண்டி, பேராதனை வீதி 388 - ம் இலக்கத்தி லிருக்கும் த: நடராசா அவர்களால் யாழ்ப்பாணம், 400, K. K. S. வீதியிலுள்ள ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

முன்னுரை
'தற்காலச் சரித்திரம்' என்னும் நூற்றொடரில் இது எமது மூன்றாவது நூலாகும். எட்டாந்தரத்துக்கென அரசினரால் விடுக்கப்பட்ட புதிய சரித்திர பாடத்திட்டத்தின்படி வழிகாட் டியைத் தழுவி இந் நூல் எழுதப்பட்டுள் ளது. சும்மால் ஏற் கெனவே வெளியிடப்பட்ட தற்கால வரலாறு (G. C. E.) என் னும் நூலின் குழந்தை இது எனலாம். அந்நூலின் மரபில் வரலாற்றின் பிரதான அமிசங்களை எட்டாந்தர மாணவர் களுக்கு ஏற்றவகையில் பரீட்சைத் தேவைகளையும் மனதிற் கொண்டு விளக்கமாகவும் தெளிவாகவும் எழுதமுயன்றுள்ளேன். அதேசமயம் இது சரித்திரம் என்பதனால் வேறு சிலர் செய்வது போல் பாரதம் பாரதமாக எழுதி மாணவர்களின் நினைவுச் சக்திக்குப் பழுவாக்கி, அவர்கள் சரித்திரம் ஒரு தரித்திரம் என எண்ணும்படி செய்ய இந்நூலாசிரியர் விரும்பவில்லை. தற் காலத் தேவை சுருக்கமும், தெளிவும் உடையனவாகவும், விளக் கமும், விளக்கப்படங்களுமடங்கி விலையும் குறைவாயிருக்கும் நூல்களே! இத்தேவைகளை மனதிற் கொண்டு இந்நூலாசிரியர் பல நூல்களை எழுதி வெளியிட்டு வருவதை ஆசிரிய மாணவ உலகு நன்கு அன்றியும், எனவே மேற்கூறிய தேவைகளைப் பூர்த்தி செய்யவும் அதேசமயம், வழிகாட்டியிலுள்ள பொழிப்புகளைத் தொகுத்துப் பாடத் திட்டத்தில் அடங்கிய சரி த் தி ர த் தைச் சிறுவர் சிறுமியர்க்கு ஏற்றவகையில் சுவைகுன்றா து கூறுவதற் குமே இந்நூல் வெளியிடப்படுகிறது. இந்நூல் சுருக்கமும் தெளிவுமுடையதாயிருப்பதோடு மாணவர்கள் தாம் படித்த பாடங்களைத் திரும்ப மீட்கவும் பின்னர் தவணை முடிவில் எல்லா வற்றையும் சேர்த்துத் தொகுத்துப் பயில வும் ஏற்றவகையில் பயிற்சிகளும் மாதிரி வினாப்பத்திரங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
அவை மாணவர்க்கு மிகத் துணை செய்யுமென நம்புகிறேன் .
எமது 'தற்காலப் புவியியல்' நூல் களுக்கும், தற்கால வரலாறு' நூலுக்கும் ஆசிரிய, மாணவ உலகு அளித்து வரும் ஆதரவு தான் இத் தொடரையும் எழுதத் தூண்டியது. அந்த வகையில் எமது முந்தியநூல்களைப் பயன்படுத்தும் ஆசிரியர் களுக்கும், மாணவர்களுக்கும் என து உளங்கனிந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். அதேசமயம் இந்நூலையும் ஆசிரிய, மாணவ உலகு உவந்து ஏற்பதோடு இதில் காணும் குறைபாடுகள் வழுக்களைத் திருத்து வதற்கும் உதவி செய்யும் என உளமார நம்புகிறேன்.
வணக்கம். யாழ்ப்பாணம்
த. தியாகராசா 28-12-69.

Page 4
பொருளடக்கம்.
- A s te
~ 0 9 8 & 9 ம ம்
29
59
முதலாந் தவணை உலகு
பாடம்
விடயம்
பக்கம் 1. 2
இலங்கையின் அரசியல் நிலை 3, 4
கண்டி அரசாங்கமும் ஆங்கிலேயரும் 5, 5
18 18, கலவரங்கள்
16 7, 9
கோல்புறூக் சீர்திருத்தங்கள்
2 2 10, 11
1848 ஆம் ஆண் டுக்கலவரங்கள் 12, 15
கைத்தொழிற்புரட்சி
35 15. 17
பிரான் சியப்புரட்சி
43 18, 19
நெப்போலியன்
51 20
இந்தியா
இரண்டாம் தவணை. கோப்பிச் செய்கையின் விருத்தி
69 தேயிலைச் செய்கை
73 இறப்பரும் தென்னையும்
77 பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை யினால் ஏற்பட்ட பலன்கள்
80 போக்குவரத்து
8 5 புகையிரதப்பாதைகள், தந்தி
90 கல்வி
9 5 இந்து, பௌத்தசமய மறுமலர்ச்சி
100 இத்தாலியின் ஒற்றுமை
104 ஜேர்மனியின் ஒற்றுமை
110 73
ஆபிரிக்காவில் ஐரோப்பிய ஆதிக்கம்
115 12
கீழைத்தேசத்தில் ஐரோப்பிய ஆதி,
120 11
13
சீனா 14
யப்பான்
130 12
15, 16
ஐக்கிய அமெரிக்கா
13 4 மூன்றாந்தவணை 13
மத்திய வகுப்பினரின் எழுச்சி
143 மக்கலம் சீர்திருத்தங்கள்
147 மானிங் சீர்திருத்தங்கள்
10 டொனமூர் சீர்திருத்தங்கள்
155 சோல்பரி அரசியற்திட்டம்
1 59 14
முதலாம் உலகப்போர் காரணங்கள்
7 68 முதலாம் உலகப்போர்
1 67 15
முதலாம் உலகப்போரின் பின் ஐரோப்பா 172
ஐக்கிய சோவியத் குடியரசு
178 ! 8
இரண் டாம் உலகப் போரின் காரண .
185 11
இரண்டாம் உலகப் போர்
190 12
ஐக்கிய நாடுகள் தாபனம் 13
பிரித்தானிய பொது நலவாயம்
197 14
இந்தியா சுதந்திரமடைதல்
201
- ல எ 4 - ம ம > * > > ~
|
1 24
S) ற அ 8
F N க சி 4 e > 2) 0 0
193
17

த ற் கா ல ச் சரி த் தி ர ம்.
எ ட் ட ர ந் த ர ம்
----
அலகு 1.
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கை.
பாடம் 1, 2.
இலங்கையின் அரசியல் நிலை.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற் பகுதியில் இலங்கையின் கரையோர மாகாணங்கள் பிரித்தானி யரின் ஆட்சியின் கீழிருந்தன. அச் ச ம ய ம் கண்டி இராச்சியத்தின் அரசியல் நிலை ஒரு புதிய கட்டத்தை அடைந்திருந்தது. அங்கு 1782 முதல் ஆட்சி செய்து வந்த இரா சா தி இராசசிங்கன் 1798 இல் இறந்த வுடன் பிலிமத்தலாவை என்னும் முதல் அதிகாரி அரசனால் நியமிக்கப்பட்ட முத்துச்சாமி என்பவனுக்கு முடிசூட்டாமல் கண்ணுச்சாமி என்னும் வேறொருவனை ஸ்ரீ விக்கிரமராசசிங்கன் என்னும் பெயருடன் ஆட்சி பீடமேற்றினான். பிலிமத்தலாவை பதவி ஆசை பிடித் த்வன். அவன் கண்ணுச்சாமியைத் தனது கைப் பொம்மையாக வைத்திருந்து வாய்ப்புக் கிடைக்கும் போது தானே அரசனாகிவிட ஆசைப்பட்டான். அத் துடன் கண்டியில் அன்னியர்களான நாயக்கவமிசத் தினர் ஆட்சி செய்வதை அவனும் வேறு பல உயர் குடிப்பிரதானிகளும் விரும்பவில்லை. இதற்கு நாயக்க வமிசத்தினர் ஆட்சிக்கு வந்தபின்னர் அரண்மனையில் ஏற்பட்ட அரசியல், பொருளாதார சமூகமாற்றங் களே காரணங்களாகும்.

Page 5
2
தற்காலச் சரித்திரம்
முதலாவதாக, நாயக்கர் வமிச அரசர்கள் தாம் அன்னியர் என் ற காரணத்தினால் அர சி ய ல் விட யங்களில் சிங்களப்பிரதானிகளில் அதிகம் நம்பிக்கை வைக்காது என்றும் எப்பொழுதும் த ம து உறவினர் களின் புத்திமதிகளின்படியே நடந்து வ ந் த னர். மேலும் ஒரு அரசன் தனக்கு வாரிசு இல் ல ா ம ல் இறந்தால் ஆட்சி அவனது மைத்துனனுக்குச் சேர வேண்டும் என ஒரு வழக்கம் நாயக்கர்காலத்தில் ஏற் படுத்தப்பட்டது. இது கண்டிய வழக்கத்துக்கு முரணாக இருந்தது. ஏனெனில் கண்டிய வழக்கப்படி ஒரு அரசன் இறந்தால் அவனது மகன் அல்லது ச  ேக ா த ர னே | அரசனாக வேண்டுமென இருந்தது. மூன்றாவதாக, நாயக்க அரசர்கள் பதவிக்கு வந்தபின்னர் அரசசபை யில் உயர் பதவிகளெல்லாம் அரசனது உறவினர் களுக்கே வழங்கப்பட்டது. அதேசமயம் உயர்குடிச் சிங்களவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். நாலாவதாக அ ர ச னு  ைட ய கிராமங்களின் வருவாய்களெல்லாம் அ வ ன து உறவினருக்கே உரித்தானது. இறுதியாக, அரசன் தனது உறவினர்களையெல்லாம் இன்று மலபார் வீதி எனப்படும் பகுதியில் பல விசேட வசதிகளுடன் குடியிருக்க வசதி செய்து கொடுத்திருந்தான். மேற் குறிப்பிட்ட பலகாரணங்களின் விளைவாகக் கண்டிய உயர் குடிப் பிரதானிகளுக்கும் அரசனுக்குமிடையில் பகைமை ஏற்பட்டது. இதனால் பிரதானிகள் அரசனு
டன் கொண்டிருந்த தொடர்புகள் படிப்படியாகக் குறைந்து போனது. அத்துடன் அரசனைப் ப த வி யி லிருந்து நீக்கி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் பல சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன . இவ்விதம் அரசனும் பிரதானிகளும் பிணங்கியதைத் தொடர்ந்து பிக்குகள், பொதுமக்கள் ஆகியோருக்கும் அரசனுக்கு மிடையில் நிலவிய தொடர்புகளும் தளர்ச்சியடைந் தன . இத்தகைய அரசியல் நிலைமை ஆங்கிலேயருக்குச் சாதகமாயிருந்தது. அவை ஒரு புறமிருக்க, கண்டிய அரசனுடன் பகைமைபூண்ட முதல் அதிகாரியாகிய

எட்டாந்தரம்
பிலிமத்தலாவை ஆங்கிலேயரின் உதவியுடனாவது ஆட் சியைக் கவிழ்த்து விட்டுத் தான் பதவிக்கு வரத்திட்ட மிட்டு அவர்களுடன் இரகசியமாகத் தொடர்புகள் கொள்ளத் தொடங்கினான். - கண்டியின் நிலைமைகள் இவ்வாறாக, இனிக் கரை யோரப்பகுதியின் நிலைமைகளைக் கவனிப்போம். முன் னர் குறிப்பிட்டபடி 1796 முதல் கரையோரப்பகுதி கள் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழிருந்தன. ஆயினும் அவர் கள் இங்கிலாந்திலிருந்து நேரடியாக இலங்கையை
• ஆளாமல் முதலில் கிழக்கிந்திய வர்த்தக சங்கத்தி னிடமே ஆட்சிப் பொறுப்பை விட்டிருந்தனர். எனவே சென்னையிலிருந்த பிரித்தானிய ஆள்பதியே இலங்கை யின் ஆள்பதியாகவுமிருந்தான். இவ் வாறு 1796 முதல் 1798 வரை வர்த்தக சங்கம் க ரை யோர மாகாணங்களை ஆட்சி செய்தது. அக்காலத்தில் அது அதிகமான வரிகளையும் அநியாயமான வரிகளையும் விதித்ததினால் பொதுமக்கள் அதிகமாகப் பாதிக்கப் பட்டனர். அதேசமயம் இராசகாரியத்துக்குப் பதி லாக ரொக்கப் பணமாக வரிகளை அறவிட்ட முறையும் அக்கிரமமானதாயிருந்தது. அந்நிலைமையில் 1797 இல் தென்னை வரி என ஒரு புது வரி விதிக்கப்பட்டபோது அதை எதிர்த்து மக்கள் பலவிடங்களில் கலகம் செய்த னர். அதன் விளைவாக அரசாங்கம் டிமியூறன் என்பவன் தலைமையில் ஒரு விசாரணைக்குழுவை நியமித்தது. அக் குழு புதிய வரிகளை நீக்கவும், பழைய வரி வசூலிப்பு முறையை ஏற்படுத்தவும் ஒல்லாந்தர் கால 'லாண்ட் றாட்ஸ் ' நீதிமன்றங்கள் இயங்கவும் வேண்டுமெனச் சிபார்சு செய்தனர்.
இவ்வாறு டிமியூறன் விசாரணைக்குழு கடமையாற் றியகாலத்தில் பிரித்தானிய அரசு இல ங் கை யி ன் ஆட்சிப் பொறுப்பை வர்த்தக சங்கத்திலிருந்து விடு வித்துத் தானே நேரடியாக ஏற்க முடிவுசெய்தது. ஆயி னும் வர்த்தக சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க

Page 6
தற்காலச் சரித்திரம்
இறைவரி, வர்த்தகம் பற்றிய விடயங்கள் அதனி டமே விடப்பட்டன. அதேசமயம் குடியியல், நீதி, பொது நிர்வாகம் ஆகியவற்றைத் தாம் நியமிக்கும் ஒரு ஆள்பதியின் பொறுப்பில்விடப் பிரித்தானிய அரசாங் கம் இணங்கியது. இதன்மேல் பிறடறிக் நோத் இலங்கை யின் முதலாவது ஆள்பதியாக அனுப்பப்பட்டார். அவர் இறைவரி வர்த்தகம் பற்றிய வி ட ய ங் க ளி ல் வர்த்தக சங்கத்தின் இயக்குநர் குழு சென் னை ஆள்பதி ஆகியோருக்கும், பொது நிருவாகம், நீதி பாலனம் முதலியவற்றில் குடியேற்ற நாட்டுச் செயலா
ளருக்கும் பொறுப்புள்ளவராக இருக்க வேண்டுமென - விதிக்கப்பட்டது. ( இவ்வாறு 1798-1802 காலத்தில் பிரித்தானிய அரசும் கிழக்கிந்திய வர்த்தக சங்கமும் கூட்டாக நடத்திய ஆட்சி இரட்டை ஆட்சி எனப்படுகிறது,
இது இவ்வாறாக ஐரோப்பாவில் பிரான்சியருக் கும் பிரித்தானியருக்குமிடையில் நிகழ்ந்த போர்கள் நிறு த் த ப் பட் டு அவர்களுக்கிடையில் 1802 இல் 'ஏமியன்சு' உடன்படிக்கை செய்யப்பட்டது. அதன் பிரகாரம் முன்னர் ஒல்லாந்தர் வசமிருந்த இலங்கை யின் கரையோர மாகாணங்கள் ஆங்கிலேயரின் சொந்த மாகின. இதைத்தொடர்ந்து அவ்வாண்டே இலங்கை பிரித்தானியாவின் நேரடியான கண் காணிப் பில் முடிக்குரிய குடியேற்ற நாடாக்கப்பட்டது. எனவே அத்துடன் இரட்டை ஆட்சியும் முடிவுற்றது. இதன்பின்னர் நோத் ஐவரைக்கொண்ட ஒரு ஆலோசனைச் சபையின் உதவியுடன் தாமே ஆட்சியை நடத்தினார்.
நோத் தமது ஆட்சிக்காலத்தில் நிர்வாகம், நீதி பாலனம் சம்பந்தமாகப்பல சீர்திருத்தங்களை மேற் கொண்டார், அவர் இராசகாரியம் என்னும் பழைய சேவை முறையை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக மக்கள் தமது விளைச்சலில் ஒருபகுதியை அரசாங்கத் துக்குக் கொடுத்தால் போதுமானது என விதித்தார்.

எட்டாந்தரம் இரண்டாவதாக நோத் அரசாங்க நிர்வாகத்தைத் திருத்தினார். அவர் இறைவரி விடயங்களைக் கவனிப்ப தற்கு முதலில் கொழும்பு, காலி, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திருகோண மலை ஆகிய இடங்களில் ஐந்து கலெக்டர்களை நியமித்தார். பின்னர் அப்பதவி களை நீக்கிவிட்டுப் 12 இறைவரி வர்த்தக முகவர்களை நியமித்தார். இப்பதவிகளை வகித்தவர்களே இலங்கை யில் 'சிவில்' சேவையைத் தொடக்கிவைத்தனர். இச் சேவைக்கென நோத் சென்னையிலிருந்து சில அதிகாரி களைத் தருவித்தார். மேலும் நோத் அளவைத் திணைக்
• களம், கணக்காய்வாளர் திணைக்களம், நிலப்பதிவுத் திணைக்களம், சுகாதாரத்திணைக்களம் முதலிய பல நிர் வாகப் பிரிவுகளை ஏற்படுத்தினார். (மூன்றாவதாக நோத் நீதிபாலன முறையிலும் பல சீர்திருத்தங்களை ஏற்படுத் தினார், அவர் கல்விச்சட்டவாதியாகிய எட்மன் கறிங்ரன் என்பவரின் ஆலோசனையின்படி இலங்கை முழுவதுக் கும் பொதுவான ஒரு உயர் நீதிமன்றத்தையும் ஒரு மேன் முறையீட்டு மன்றத்தையும் (Appeal Court' நிறுவினார், அதேசமயம் மாகாணங்களில் சிறுகுற்றங் களைச் சமாதான நீதிபதிகள் விசாரிக்கவும் ஏனைய வற்றை 'லான்றாட்ஸ்' எனும் ஒல்லாந்த நீதிமன்றங் கள் விசாரிக்கவும் ஒழுங்கு செய்யப்பட்டது. நோத் காலத்திலேயே முதன் முதலாக அரசாங்க வர்த்த மானி (Gazette) வெளியிடப்பட்டது. இவற்றைத் தவிர நோத் கல்விசம்பந்தமாகவும் சில சீர்திருத்தங் களை மேற்கொண்டார். அவர்காலத்தில் 'அக்கடமி' என்னும் மத்தியகல்விக்கூடம் கொழும்பில் நிறுவப் பட்டது. நோத் மாகாணங்களிலிருந்த பள்ளிக்கூடங் களைப் பரிபாலிப்பதற்குப் பணம் ஒதுக்கியதோடு கல்வி போதித்தவர்களுக்கும் வேதனம் வழங்கினார். இவ் வாறு நோத் மேற் கொண்ட பல சீர் திருத்தங்களில் இராசகா ரிய ஒழிப்பு அவர் எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை. நோத் 1802 இல் கண்டிமீது படை யெடுத்துச் சென்றும் தோல்வி கண்டார். அதைத்

Page 7
தற்காலச் சரித்திரம்
தொடர்ந்து அவர் திருப்பியழைக்கப்பட அவரிடத் தில் தோமஸ் மெயிற்லந்து என்பவர் ஆள்பதியாக நியமிக் கப்பட்டார்.
தோமஸ் மெயிற்லந்து நோத் பின்பற்றிய வழி களைத் தானும் பின் பற்றாது புதியவழிகளைக் தை ' கொண்டார். அவர் ஒரு சிறந்த நிர்வாகியாகத ம திகழ்ந்தார். அவர் நோ தினால் ஒழிக்கப்பட்ட இராச காரிய முறையை மீண்டும் அமுல் செய்தார், அத் துடன் பயிர்ச்செய்கையை விருத்தி செய்யவும் பல முய ற் சி க ளை மேற்கொண்டார். இரண்டாவதாக அவர் நீதிபாலன முறையிலும் பல மாற்றங்களைப் புகுத்தினார். அதில் அலெக்சாந்தர் ஜோன்ஸ்ரன் என்பவர் அவருக்கு ஆலோசனை கூறினார்.  ெம யிற் ல ந்து கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருமலை ஆகிய இடங்களில் ஐந்து மாகாண நீதி மன்றங்களை நிறுவினார். பின் 1811 இல் அவற்றை நீக்கிவிட்டு யாழ் ப் பா ண ம், கொழும்பு, காலி, மாத்தறை ஆகிய இடங்களில் லாண்ட்றாஸ் நீதிமன் றங்களை நிறுவினார். இம்மன்றங்களில் யூரிமார்முறை புகுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும். (மேலும் கொழும்புத் துறைமுகத்துக்கென ஒரு விசேட நீதிமன்றமும், யாழ்ப்பாணத்தில் ஒரு சிறு மேன் முறையீட்டுமன்றமும் நிறுவப்பட்டன.
மூன்றாவதாக தோமஸ் மெயிற்லந்து குடியியற் சேவையையும் புனரமைத்தார். அவர் திறமையற்ற வர்களையும் ஊழல் மிக்கவர்களை யும் சேவையிலிருந்து நீக்கினார். குடியியற் சேவையாளரின்  ேச ைவ க் காலத்தை 12 இலிருந்து. 15 ஆண்டுகளாகக் கூட்டி னார். அத்துடன் குடியியற் சேவையை 3 படிமுறை யான வகுப்புக்களைக்கொண்டதாகப் பிரித்துச் சேவை யாளர்கள் பதவிஉயர்வு பெற வழிவகுத்தார். மேலும் குடியியற் சேவையாளர் சுதேச மொழிகளைப் படிக்க

எட்டாந்தரம் ஊக்குவித்ததோடு அவர்கள் தனிப்பட்ட வியாபாரம் செய்வதையும் தடுத்தார். இவ்விதமாக மெயிற்லந்து மேற்கொண்ட பல சீர்திருத்தங்களின் விளைவாக அர சாங்க நிர்வாகம் செம்மையாகவும் திறமையாகவும் நடைபெற்றது.
தோமஸ் மெயிற்ல ந்து 1811 யூனில் தமது உடல் நலக்குறைவினால் பதவியைவிட்டு விலகித் தாய் நாட் டுக்குத் திரும்பினார். அதன்மேல் றொபேட் பிறவுன்றிக் ஆள்பதியாகினார்.
பயிற்சி. 1: இராசாதி இராசசிங்கன் எக்காலத்தில் ஆட்சி செய்
தான் ?
பிலிமத்தலாவை யார் ? 3; நாயக்கர் வமிசம் ஆட்சிக்கு வந்த பின்னர் ஏற்பட்ட
மாற்றங்கள் எவை ? 4. இரட்டை ஆட்சி என்றால் என்ன ? 5. 1797 இல் ஏன் கலகம் ஏற்பட்டது ? 6. நோத் மேற்கொண்ட சீர் திருத்தங்கள் யாவை ?
மெயிற்லந்து செய்த சீர்திருத்தங்கள் யாவை ? பின்வரும் ஆண்டுகளில் நடந்த பிரதான சம்பவங்கள் யாவை? 1802, 1796.

Page 8
பாடம் 3, 4. கண்டி அரசாங்கமும் ஆங்கிலேயரும். பிரித்தானியர் கரையோர மாகாணங்களைக் கைப் பற்றுவதற்கு முன்னர் “பைபஸ்', 'பொயிட்' ஆகியோ ரைக் கண்டியரசனிடம் தூது அனுப்பி அவருடன் ஒரு உடன்படிக்கை செய்ய முயற்சி செய்தனர். ஆயினும் அவற்றினால் உருப்படியான நன்மை எதுவும் ஏற்பட வில்லை. பின்னர் கரையோர மாகாணங்களைக் கைப் பற்றியதன்மேல் பிறடெறிக் நோத், பிலிமத்தலாவை . யின் தூண்டுதலினால் 1800 இல் மக்டோவல் என்பவனைக் கண்டிக்குத் தூதனுப்பினார். மக்டோவல் கண்டிக்குச் சென்று மன்னனைச் சந்தித்துத் தாம் அரசனைப் பகை வர்களிடமிருந்து பாதுகாப்பதாகவும் அதற்கு வேண் டிய படைகளைக் கண்டியில் வைத்திருக்க அனுமதிக்கும் படியும் கேட்டான். ஆனால் அக்கோரிக்கைகளுக்கு அரசன் சம்மதிக்கவில்லை. இவ்வாறு மக்டோவலின் தூது வீண் முயற்சியாய்ப் போன பொழுதிலும் கண்டி அரசனுடன் ஒரு உடன்படிக்கை செய்தல் அல்லது கண்டியைக் கைப்பற்றுதல் பிரித்தானியருக்கு அவசிய மானதாயிருந்தது. அதற்குப் பல காரணங்களைக் கூற லாம்.
முதலாவதாக இலங்கையில் ஆங்கிலேயர் தமது ஆட்சியை நிலை நாட்டுவதானால் 'அரசுக்குள் அரசாக” இருந்த கண்டியைக் கைப்பற்றுதல் இன்றியமையாதது. இரண்டாவதாக கண்டியர்கள் தமது நாட்டிலிருந்து வெளியே கொண்டு செல்லப்படும் பொருட்களுக்கு வரி விதித்ததினால் ஆங்கிலேயரின் கட்டுப்பாடற்ற வர்த்த கம் பாதிக்கப்பட்டது. மூன்றாவதாக, கண்டியர்கள் கரையோர மாகாணங்களில் ஆங்கிலேயருக்கெதிராகக் குழப்பங்களைத் தூண்டியதோடு தாமும் அவற்றில் பங்கு பற்றினர். நான்காவதாக, கண்டியைக் கைப்பற்றாத வரை பிரித்தானியர் அதன் எல்லைகளில் காவல்படை,

எட்டாந்தரம் யொன்றை வைத்திருக்க வேண்டிய அவசியமிருந்தது.) ஐந்தாவதாக கொழும்பையும் திருகோணமலையையும் இணைத்து ஒரு வீதியை அமைத்து நாட்டின் பாதுகாப் பைப் பலப்படுத்துவதாயின் கண்டியைக் கைப்பற்ற வேண்டும். ஆறாவதாக ஐரோப்பாவில் நெப்போலியன் பெற்ற வெற்றிகளினால் திகிலடைந்திருந்த ஆங்கிலே யர் கண்டிய அரசனுடன் தாம் பகைத்தால் அவன் சிலசமயம் பிரான்சியருடன் நட்புக் கொள்ளக் கூடும் என வும் பயந்தனர். இறுதியாக அக்காலத்தில் இந்திய ஆள்பதியாயிருந்த வெல்லஸ்லி இந்திய அரசுகளின் பாது காப்பைத் தமது பொறுப்பில் ஏற்று அதற்கான செலவு களை அவ்வரசுகளிடமே பெற்றுக்கொண்ட படைத்துணை உடன்படிக்கை (Subsidiary Alliance) என்ற முறையைப் பின்பற்றிக் கண்டியின் பாதுகாப்புப் பொறுப்பையா வது தாம் ஏற்க வேண்டும் என எண்ணினர்.
இவ்விதமாகப் பிரித்தானியர் கண்டியைக் கைப் பற்றுவதற்குப் பல காரணங்கள் இருந்த போதிலும் அதன்மேற் படையெடுக்கப் போதிய காரணமிருக்காத படியால் படையெடுப்புக்கு ஒரு 'சாட்டுக்' க்கிடைக்கும் வரை பொறுத்திருந்தனர்.
இது இவ்வாறாக, கண்டியரசனாகிய விக்கிரமராச சிங்கனுடன் பகைமை கொண்ட பிலிமத்தலாவை அவனைப் பதவியிலிருந்து நீக்குவதற்குப் பல சூழ்ச்சி களைக் கையாண்டான். அவன் பிரித்தானியருடன் பலமுறை தொடர்பு கொண்டு அவர்களைக் கண்டிமீது படையெடுக்குமாறு கோரினான். ஆயினும் தகுந்த காரணமில்லாமையால் நோத் அதற்குச் சம்மதிக்க வில்லை. இதனால் ஏமாற்றமடைந்த பிலிமத்தலாவை ஒரு சூழ்ச்சி செய்தான். அவன் புத்தளத்திலிருந்து கண்டிக்கு வியாபார நோக்கமாக வந்த சில சோன கரைத் தனது கையாட்கள் மூலம் தாக்கி அவர்கள்

Page 9
10
தற்காலச் சரித்திரம்
வைத்திருந்த பொருட்களைப் பறித்தான். புத்தளம் கரையோரமாகாணங்களைச் சேர்ந்தது. எனவே இச் செய்தியைக் கேள்விப்பட்ட நோத் தமது பிர ைச களுக்குச் செய்யப்பட்ட தீங்குக்குப் பழிவாங்க எண்ணி னார். அவர் உடன் பறிக்கப்பட்ட பாக்கை ஒரு மாத காலத்தில் திருப்பிக் கொடுக்கா விட்டால் தான் கண்டிமீது படையெடுக்கப் போவதாகப் பய முறுத்தினார். ஆயினும் அரசன் அதற்கு எ து வி த பதிலும் கொடுக்காதபடியால் நோத் கண்டிமீது படை யெடுக்கத் துணிந்தார்.
D% {} -
ஸ்ரீ விக்கிரம இராசசிங்கன் (நோத் 1803 சனவரி 31 இல் கண்டிமீது படை யெடுத்தார். அப்போது ஒருபடை கொழும்பிலிருந் தும் மற்றது திருகோணமலையிலிருந்தும் கண்டியை நோக்கிச் சென்றது. அவை கண்டிக்கு அருகில் கட்டு

எட்டாந்தரம்
11
காஸ்தோட்டையில் ஒன்றுகூடிக் கண்டி நகரைத் தாக் கின. அந்நிலையில் அரசன் அங்குராங்கட்டைக்கு ஓடி ஒழிக்கப் பிரித்தானியர் கண்டியைக் கைப்பற்றி முத் துச்சாமி என்பவனுக்கு முடிசூட்டினர். அச்செயல் தானே கண்டி அரசனாக வரவேண்டுமென ஆசைப் பட்ட பிலிமத்தலாவைக்குப் பெரும் ஏமாற்றத்தையும் வெறுப்பையும் கொடுத்தது. * அதற்கிடையில் மழைக் காலமும் தொடங்கியது. அதன்விளைவாகப் பிரித் தானிய படைகள் கொழும்பிலிருந்து உணவைப் பெற முடியாதுபோயிற்று. ( அதேசமயம் மலேரியாச்சுரமும் பல படைவீரரின் உயிரை மாய்த்தது. இத்தகைய நிலையில் பல சுதேசப் போர்வீரர்களும் பிரித்தானி யரை விட்டு நீங்கினர். இவ்வாறு பிரித்தானியர் இக்கட்டான ஒரு நிலையில் இருக்கும்போது அதுவரை ஒழித்திருந்த அரசனின் படைகள் அவர்களைத் தாக் கியபோது ஆங்கிலேயர் சரணடைந்தனர்.
இவ்வாறு நோத் மேற்கொண்ட முதலாவது கண் டிப் போர் தோல்வியில் முடிந்தது. இதன் விளை வாக அவர் இங்கிலாந்துக்குத் திருப்பியழைக்கப்பட்டார். நோதுக்குப் பின்வந்த மெயிற்லந்து கண்டிய விவ காரங்களில் ஈடுபடாது கரையோர மாகாணங்களில் பிரித்தானியரின் ஆட் சி யை ப் பலப்படுத்துவதிலே கண் ணுங் கருத்துமாயிருந்தார். அவரது காலத்தில் கண்டியில் இடம்பெற்ற சம்பவங்களை இனிக் கவனிப் போம்,
1803 இல் இடம்பெற்ற முதற் கண்டிப்போரின் பின்னர் ஸ்ரீ விக்கிரமராசசிங்கனுக்கும் பிலிமத்தலா வைக்குமிடையில் மேலும் பகைமை அ தி க ரி த் த து. அதற்குப்பல காரணங்களைக் கூறலாம். அவை:-
ராண (
வெ
1. பிலிமத்தலாவை ஆங்கிலேயருடன் இர க சி ய
மாகத் தொடர்பு கொண்டதை அரசன் அறிந் தமை.

Page 10
12
தற்காலச் சரித்திரம்
2. பிலிமத்தலாவையை ஒரு முறை மன்னன் அரச
சபையில் கடிந்து பேசியமை. 3. பிலிமத்தலாவையின் மகளை மணம் செ ய் ய
மறுத்த அரசன் அவனது பகைவனது புத்திரியை மணஞ்செய்தமை என்பனவாம்.
இந் நிலையில் பிலிமத்தலாவை மன்னனைக் கொல்லு வதற்கும் அவனுக்கு எதிராக ஒரு கிளர்ச்சியை உண் டாக்கவும் சூழ்ச்சி செய்தான். ஆனால் துரதிட்டவச மாக அவனது சதி அரசனுக்குத் தெரியவந்தபோது அவன் பிலிமத்தலாவையையும் அவனுக்கு உடந்தை, யாக இருந்தவர்களையும் 1808 இல் சிரச்சேதம் செய் வித்தான். இதன் மேல் பிலிமத்தலாவையின் பதவிக்கு அவனது மருமகனான எகெலப்பொலை நியமிக்கப்பட்டான். (இது இவ்வாறாக, பிலிமத்தலாவையின் சதி அம்பல மாகிய நாள் முதல் அரசன் குடிமக்களையும் பிரதானி களையும் பிக்குகளையும் வருத்தி வந்தான். அவன் தான் சந்தேகித்தோரைக் கொலை செய்வித்தான்'. பலரது சொத்தைப் பறிமுதல் செய்தான். பிரதானிகளைப் பல சாட்டுக்களின் கீழ் தண்டித்தான். பொதுமக்களுக்கு அதிக வேலைகளைக்கொடுத்தான். கிராமங்களையே இடம் மாற்றினான். அன்றியும் அவன் தனது சொந்தப்பாது காப்புக்காகப் படுக்கையறைகளை யும் ஒவ்வொருநாளும் மாற்றிக்கொண்டான். இவ்விதமாக அரசன் மேற் கொண்ட பல நடவடிக்கைகளினால் எல்லோரும் அவன் மீது வெறுப்புற்றிருந்தனர். அதேசமயம் புதிகாகப் பதவியேற்ற எகெலப்பொலை யும் தனது மாமன் சென்ற வழியைப் பின்பற்றித் தனக்கு எதிராகச் சூழ்ச்சி செய் வதை அறிந்த மன்னன் அவன் மீது ஆத்திரம் கொண் டிருந்தான். இவ்வாறு மன்னன் தன்னை வெறுப்பதை அறிந்துகொண்ட எகெலப்பொலை சப்பிரகமுவாவிலும் ஏழு கோறளைகளிலும் அரசனுக்கு எதிராகக் கலகங் களைத் தூண்டி விட்டபோது அரசன் அவனைப்பிடித்து

எட்டாந்தரம்
13
வருமாறு கட்டளையிட்டான். ஆனால் அதற்குள் எகெல பொலை ஆங்கிலேயருடன் சேர்ந்துவிட்டதனால் ஆத் திரம் மேலிட்ட அரசன் எகெலப்பொலையின் சொத் துக்களைப் பறிமுதல் செய்ததோடு அவனது பிள்ளை களைச் சிரச்சேதம் செய்வித்தும் அவனது > மனைவியை நீரில் அமுக்கிக் கொன்றும் தனது வஞ்சத்தைத் தீர்த் துக்கொண்டான். இவ்வாறு சிரச்சேதம் செய்யப் பட்ட எகெலப்பொலையின் புத்திரர்களில் மத்துமபண்டா இரண்டாமவன். அவன் கொலைகாரனைக் க ண் டு அஞ்சிய தனது த  ைம ய னை விலக்கிவிட்டுத்தானே வீரத்துடன் முன் சென்று தனது தலையைக் கொய்யு மாறு துணிச்சலுடன் கூறினான் என்பர்.
மேற்கூறப்பட்டவாறு எகெலப்பொலையின் குடும் பத்தின்மேல் வஞ்சம் தீர்த்ததுடன் நில்லாது நாட் டில் அரசன் நிட்டூர ஆட்சி செய்து வந்ததினால் மக்கள் அவன் ஆட்சியிலிருந்து விலகுவதைப் பெரிதும் விரும் பினர். இந்நிலைமைகளை எகெலப்பொலை வாயிலாக ஆங்கிலேயர் அறிந்தனர். உடன் றொபேட்பிறவுன்றிக் என்னும் ஆள்பதி கண்டிப்படையெடுப்புக்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்து கொண்டு அ த ற் கு ஏற்ற சந்தர்ப்பத்தையும் 'சாட்டையும்' எதிர் பார்த்திருந் தார்.
(அச்சமயம் மகரை என்னுமிடத்திலிருந்து கண்டிக் குச் சென்ற சில வியாபாரிகளைப் பிரித்தானியரின் உளவாளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைகளையும் செவிகளையும் வெட்டி அனுப்பிவிட்டார்கள், அது எகெலப்பொலையின் சூழ்ச்சி என்பதைப் பிரித்தானி யர் அறியவில்லை. எனவே அதைக் கேள்விப்பட்ட பிறவுன்றிக் ஆத்திரமடைந்தார். அதேசமயம் கண்டி யர்கள் சிலர் ஒரு நாள் கரையோரப்பகுதியில் உள்ள சில குடிசைகளுக்குத் தீ மூட்டியது அவரது ஆத்தி ரத்தை மேலும் கூட்டியது. எனவே அவற்றைச் சாட் டாகக்கொண்டு பிறவுன்றிக் 1815 இல் கண்டிமீது

Page 11
14
தற்காலச் சரித்திரம்
படையெடுத்தார். அவரது
அ படைகள் விரைவில் கண்டியை அடைந்து அதைக் கைப்பற்றின. அவ்வேளை பிரதானிகளோ பொதுமக்களோ யாரும் அவர்களுக்கு எதிர்ப்புக்காட்டவில்லை. அந்நிலையில் அரசன் தெல் தேனியா வுக்கு ஓடி ஒளித்திருந்தான் ஆயினும் அவன் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு அவனது உறவினருடன் தென்னிந்தியாவிலுள்ள வேலூருக்கு அனுப்பப்பட் டான். அத்துடன் கண்டியில் நாயக்கவமிச ஆட்சி யும் முடிவடைய இலங்கை முழுவதும் பிரித்தானியரின் வசமாகியது.
இவ் வாறு கண்டியைக் கைப்பற்றிய பிரித்தானியர் 1815 மார்ச் 2 இல் பிரதானிகள் பிர மு கர் க ளை க் கொண்ட ஒரு மாநாட்டை (சமவாயம்)க் கூட்டினர். அதில் பிரித்தானியர் கண்டியைக் கைப்பற்றிய கார ணங்கள் விளக்கப்பட்டன. பின்னர் கண்டியப் பிரதா னியருக்கும் பிரித்தானியருக்குமிடையே ஒரு உடன் படிக்கை செய்யப்பட்டது. அது 1813 ஆம் ஆண்டுக் கண்டி உடன் படிக்கை எனப்படும். அதன் பிரதான அமிசங்கள் மேல்வருமாறு.க -
விக்கிரமராசசிங்கன் அரசுரிமையை இழந்துள் ளான். எ ன  ேவ கண்டி அரசு இப்பொழுது
பிரித்தானியர் வசம் சேர்ந்துள்ள து. 2. கண்டி நாட்டின் பழைய வழக்கங்களுக்கேற்ற
படி பிரதானிகள், திசாவைகள் மற்றும் தலை மைக்காரர்கள் மூலமாக ஆட்சி நடைபெறும். பெளத்த சமயம், குருமார், கோவில்கள் ஆகி
யன பேணப்படும். 4. சித்திரவதை போன்ற தண்டனைகள் ஒழிக்கப்
படும். இறைவரியும் ஏனைய வருமானமும் பிரித்தானி யாவைச் சேரும். கண்டியின் வெளிநாட்டு வர்த்தகம் சம்பந்த மான விடயங்களை ஆள்பதியே கவனிப்பார்.
கம்

எட்டாந்தரம்
15
இவ்வாறு கண்டியப் பிரதானிகளுடன் ஒரு உடன் படிக்கை செய்த பின்னர் பிரித் தானியர் தமது ஆட் சியை அங்கு நிறுவினர். அவர்கள் முதல் முறை கண்டியைப் பிடிப்பதில் தோல்வியுற்றபோதும் இரண் டாம்முறை அதை எளிதாகக் கைப்பற்றி விட்டனர், அதற்குப் பல காரணங்களைக் கூறலாம். அவை:-
1. ஸ்ரீ விக்கிரமராசசிங்கனின் கொடுங்கோலாட்சி
யினால் மக்கள் அவன்மீது வெறுப்புற்றிருந்தமை. 2. பிலிமத்தலாவை, எகெலப்பொலை முதலிய
பிரதானிகள் அரசனுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தமை. படைவீரர்கள் அரசனுக்கு விசுவாசமாக நடக் காமை. பிக்குகளையும் அரசன் பகைத்தமையினால் அவர் கள் அவனை எதிர்த்தமை. பிறவுன்றிக் காலமும் நேரமும் அறிந்து போதிய ஆயத்தங்களுடன் கவனமாகக் கண்டிப் படை யெடுப்பை நடத்தியமை என்பனவாகும்.
3.
4.
பயிற்சி
1. மக்டோவலின் தூது ஏன் தோல்வியடைந்தது ? 2; பிரித்தானியர் கண்டியைக் கைப்பற்ற விரும்பியதற்குக்
காரணங்கள் யாவை ? 3: பிலிமத்தலாவை செய்த சூழ்ச்சி யாது ? 4. நோத்தின் படையெடுப்புத் தோல்வியடைந்ததேன் ? 53
விக்கிரமராச சிங்கனுக்கும் பிலிமத்தலாவைக்குமிடையில் பகை வலுத்ததேன் ? 5. கண்டிமக்கள் அரசனை வெறுத்ததேன் ? 7, 1815 ஆம் ஆண்டு உடன்படிக்கையின் பிரதான அமிசங்
கள் யாவை ? இரண்டாவது கண்டிப்போரில் ஆங்கிலேயர் வெற்றி பெற்ற மைக்குக் காரணங்கள் யாவை ?
83

Page 12
அலகு 2.
1818 - ஆம் ஆண்டுக் கண்டிக் கலகங்கள்.
பாடம் 5, 6.
கண்டியரசை எளிதாகக் கைப்பற்றிய பிறவுன்றிக் 1815 ஆம் ஆண்டு உடன் ப டி க் கை யி ல் ஒப்புக் கொள்ளப்பட்டபடி அதை ஆளுவதற்கு வேண்டிய ஒழுங்குகளை மேற்கொண்டார். அவர் க ண் டி யி ல் நிலவிய பழைய ஆட்சி முறைகளையே பெருமள வுக்குப் பின்பற்றினார். ஆயினும் கண்டி அரசின் நிர்வாகப் பொறுப்பு ஐவரைக் கொண்ட ஒரு குழுவிடம் விடப் பட்டது. அதேசமயம் நீதிபாலனத்துக்கு முன்குறிப் பிட்ட குழுவினரையும் அதிகாரிகள் பிரதானிகளையும் கொண்ட ஒரு மன்றம் பொறுப்பேற்றது. மேலும் சப்பிரகமுவ, ஏழுகோறளை, நான்குகோறளை , ஊ01 வா ஆகியனவற்றிற்குத் தனித்தனியான இறைவரி அதி காரிகள் நியமிக்கப் பட்டனர். இவற்றைத் தவிர்த்து ஏனைய குடியியல் நிர்வாகப் பொறு ப் பு முன் போல முதல் அதிகாரி, இரண்டாம் அதிகாரி மற்றும் மாகாண அதிகாரிகளிடமே விடப்பட்டது.
- இவ்வாறு பிரித்தானிய அரசாங்கம் கண்டி இராச் சியத்துக்கும் கரையோர மாகாணங்களுக்கும் சற்று வேறுபட்ட ஆட்சி ஒழுங்குகளைச் செய்த போதிலும் அவற்றினால் பிரித்தானியர் களோ கண்டியமக்களோ அதிக பயனடையவில்லை. உண்மையில் கரையோர மாகாணங்களும் கண்டியும் பிரித்தானியரின் ஆட்சி யின் கீழ் ஒன்றுபடுத்தப்பட்டு ஒரே ஆ ள் ப தி யி ன் கீழ் வந்ததினாலும் கண்டிக்கும் கரையோரப்பகுதி களுக்கு மிடையில் காணப்பட்ட வர்த்தகக் கட்டுப் பாடுகளும், வரிவிதிப்புமுறைகளும் கைவிடப்பட்ட தனாலும் கண்டி அரசு தன து தனித்துவத்தை முன் போலக் கட்டிக்காப்பது கடினமாகியது. அந்நிலையில்

எட்டாந்தரம்
17
பிரித்தானியரின் ஆட்சி நிறுவப்பட்டு மூன்று ஆண்டு கள் முடிவதற்கு முன்னமேயே கண்டியமக்கள் அவர் 'களுக்கு எதிராக ஒரு பெரும் கலகத்தை விளைவித் தனர். அதற்குப் பல கார ணங்களைக் கூ ற ல ா ம். அவை மேல் வருமாறு:-
2.
பிரித்தானியர் இனத்தாலும், மதத்தாலும், மொழியினாலும் வேறுபட்டவர்களாயிருந்த படியால் சிங்கள மக்களும் பிரதானிகளும் அவர்களுடன் இணங்கி வாழுதல் கடினமா யிருந்தது. பிரித்தானியரின் ஆட்சி ஒழு ங் கு க ள ா ல் பொதுமக்களோ பிரதானிகளோ எவ்வித பயனையும் அடையவில்லை. பிரித்தானியரின் நீதி நிர்வாகம் சாதிப்பிரிவு களுக்கு இடமளிக்காமல் எல்லோரையும் சம மாகக்கருதிக் குற்றத்துக்கு ஏற்ற தண்டனை யைக் கொடுத்ததனால் மக்கள் அவர்கள் மேல் வெறுப்புற்றனர்.
3.
5.
மக்கள் விக்கிரமராசசிங்கனைப் பதவியிலிருந்து நீக்குவதற்குப் பிரித்தானியரின் து ணை யை விரும்பினார்களேயன்றி அ வ ர் க ள் தம்மை ஆளுவதை விரும்பவில்லை. பிரித்தானியரின் ஆட்சியில் பிரதானிகள் செல் வாக்கிழந்தனர். அ வர் க ள் பிரித்தானிய இறைவரி அதிகாரிகளுக்குக் கீழேயே இப் போது கடமையாற்றினர். எனவே புதிய ஒழுங்கினால் அவர்களின் அதிகாரம் குறைந்த போது அவர்களின் அந்தஸ்தும் பழைய செல் வாக்கும் அற்றுப்போயின . அத்துடன் எல்லை களில் வரிவிதிக்கும் வழக்கம் நீக்கப்பட்ட

Page 13
18
தற்காலச் சரித்திரம் தினால் திசாவைமாரின் வருமானமும் குறைந் தது. இவற்றினால் பிரதானிகள் பிரித்தானி
யர்மேல் வெறுப்புற்றனர். 6.
புத்த குருமாரும் பிரித்தானியரின் ஆட்சிமீது அதிருப்தியுற்றனர். பிரித்தானியர் பிக்குக ளுக்கு உரிய மதிப்பை அளிக்காததினாலும், புத்தசமய விடயங்களில் அரசர்களைப்போல அவர்கள் பங்கு கொள்ளாமலும் கரிசனை காட் டாமலும் இருந்ததாலும், பல பிரதானிகள் பிக்குகளின் உறவினர்களாயிருந்த படியாலும் தான் புத்த குருமார் ஆங்கிலேயரின் ஆட் சியை வெறுத்தனர். அவர்கள் மீண்டும் ஒரு பெளத்த அரசனைப் பதவிக்குக் கொண்டுவர விரும்பினர்.: முன்னர் அரசன் என்பவன் கண்ணாற்காணக் கூடிய ஒரு 'பொரு ளாக' இருந்தான். அவனை மக்கள் கூடித்தரிசிக்கவும், தமது குறைகளை எடுத்துச் சொல்லவும் முடிந்தது. ஆனால் இப் பொழுது பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இங்கிலாந்திலிருக்கும்' ஒரு அரசனே ஆளுகி றான் என்பது மக்களுக்கு விளங்காத ஒரு விட யமாகியது. எனவே மக்கள் முன்புபோல
அரசனுக்கு விசுவாசமாயிருக்க முடியவில்லை. மேற்குறிப்பிட்ட காரணங்களினால் பொதுமக்கள், பிரதானிகள், பிக்குகள் ஆகியோர் பிரித்தானியரின் ஆட்சியின்மீது அதிருப்தி கொண்டிருந்தசமயம் வெல்லச என்னுமிடத்தில் நிகழ்ந்த சில சம்பவங்கள் ஆங்கி லேயருக்கு எதிரான கலகங்களை உருவாக்கிவிட்டன.
ஊவாமாகாணத்திலுள்ள ' 'வெல்லச' ' என்னும் பிரிவில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமக்கு ஒரு முஸ்லிம் முகாந்திரம் (அதிகாரி) வேண்டுமெனப் பிரித்தானி யரைக் கேட்டபோது பிரித்தானியர் அதற்குச் சம்ம

எட்டாந்தரம்
19
தித்துக் ஹஜ்ஜி மரைக்கார் என்பவனை அங்கு முகாந்திர மாக நியமித்தனர். ஆனால் அச்செயல் வெல்லசவில் ஏற்கனவே முகாந்திரமாயிருந்த சிங்கள அதிகாரிக் குப் பிடிக்க வில்லை. அவன் முஸ்லிம் முகாந்திரம் வந் தால் தனது அதிகாரமும் அந்தஸ்தும் குறைந்துவிடு மென அஞ்சிப் பிரித்தானியர் மீது பகை கொண்டு அவர்களைப் பழி வாங்கத் தருணம் பார்த்திருந்தான். அச்சமயம் இராசாதி இராசசிங்கனின் மைத்துனனும் விக்கிரமராச சிங்கனின் உறவினனுமாகிய துரைச்சாமி என் பவன் வெல்லசப் பகுதிக்கு வ ந் தி ரு க் கி றா ன் என
• யாரோ ஒரு வதந்தியைக் கிளப்பி விட்டனர். இதைக் கேள்விப்பட்ட சிங்கள அதிகாரி அ து த ா ன் நல்ல தருணமென எண்ணிப் பிரித்தானியருக்கெதிராகக் கலகஞ் செய்யுமாறு மக்களைத் தூண்டிவிட்டான். இவ் வாறு கலகங்கள் தொடங்கியதை அறிந்த வதுளையி லிருந்த பிரித்தானிய அ தி கா ரி துரைச்சாமியைப் பிடித்து வருமாறு ஹஜ்ஜி மரைக்காரை அனுப்பினான். ஆனால் மரைக்காரைக் கண்ட கலகக்காரர்கள் அவனைப் பிடித்துக் கட்டிவைத்தனர். இதைக்கேள்விப்பட்ட வதுளை அதிகாரி அவனை மீட்கச்சென்றபோது காட் டில் ஒழித்திருந்த சிலர் அம்பினால் அவனைக் கொன்று விட்டனர். அந்நிலையில் எகெலப் பொலையின் ஆலோ சனையின் படி ஊவாவின் திசாவையாகிய கெப்பிற்றிப் பொலை கலகங்களை அடக்குமாறு பணிக்கப்பட்டான். ஆனால் அவன் கலகத்தின் தன்மையையும் கலகக்கார ரின் மன நிலையையுங் கண்டு மனம் மாறித்தானும் கலகக்காரருடன் சேர்ந்து அவர்களின் தலைவனாகினான்.
இவ் வாறு கெப்பிற்றிப்பொலை கலகக்காரரின் தலைவனாகியவுடன் கலகம் கண்டி இராச்சியம் முழு வதும் காட்டுத் தீ போலப்பரவியது. அப்பொழுது பிரித்தானியரிடம் போதிய படைகள் இருக்காமை யினால் அதை அடக்குவது கடினமாயிருந்தது. ஆயினும் இந்தியாவிலிருந்து படைகள் வந்தவுடன் நி லை  ைம

Page 14
20
தற்காலச் சரித்திரம் சீரடைந்தது. அதன் மேல் படைகள் கண்டி நாட்டின் பல பகுதியிலும் பல அட்டூழியங்களைச் செ ய் து ம் அழிவை விளைவித்தும் சொத்துக்களைச் சூறையாடியும் வீடுகளுக்கு நெருப்புவைத்தும் அடக்கு முறையால் கலகக்காரரை அடிபணியச் செய்தனர். அதேசமயம் கெப்பிற்றிப் பொலைக்கும் மடுல்கல்லை என்னும் இன் னொரு தலைவனுக்குமிடையில் கருத்து வேறுபாடு ஏற் பட்டதனால் அவர்கள் பிரிந்துபோகக் கலகத்தின் மூச்சுக் குறைந்தது. பின்னர் 1818 ஒக்ரோபர் 28 இல் கெப் பிற்றிப் பொலையையும் நவம்பர் முதலாம் திகதி மடுல் கல்லையையும் பிரித்தானியர் கைப்பற்றினர். அடுத்த நாள் புத்தரின் புனித தந்ததாதுவைப் பிரித்தானியர்
கைப்பற்றியதன் மேல் கலகம் நின்றுவிட்டது.
இவ்வாறு கலகம் நின்ற பின்னர் பிரித்தானியர் தாம்கைப்பற்றிய கலகக்காரர்களையும் அவர்களின் தலைவர்களையும் பலவாறு தண்டித்தனர். அவர்களில் எகெலப்பொலையும் ஒருவன். பிரித்தானியர் அவனை மொரிஷஸ் தீவுக்கு நாடுகடத்தினர். அவன் அங்கு வாழும் காலத்தில் உயிர் துறந்தான். அவன் கல்ல றையை அங்கு இன்றும் காணலாம். இதன் பின்னர் மடுல்கல்லையும் கெப்பிற்றிப்பொலையும் சிரச்சேதம் செய்யப்பட்டனர். கெப்பிற்றிப்பொலை கொலைஞனின் வாளுக்குத் தனது தலையைக் கொ டு க் கு மு ன் ன ர் சிங்களவரின் முறைப்படி சமய அனுட்டானங்களைச் செய்து தனது தலையைச் சீவிக் கொண்டையாக முடித் துக் கட்டி மிக அமைதியாகக் கொலைக்களத்துக்குச் சென்றான் என்பர். அவன் கலகக் காலத்தில் ஒரு கட்டத்தில் 1000 வீரருடன் தனித்து நின்று பறனகம் என்னுமிடத்தில் 10000 ஆங்கில வீரரைப் புறமுதுகிடச் செய்தான். அவனது தீரத்தையும் மதிநுட்பத்தையும் கண்டு ஆங்கிலேயரே மெச்சினர். பின் இறக்கும் பொழுதும் அவன் வீரனாகவே இறந்தான். இவ்வாறு வீரனாக' வாழ்ந்து வீரனாக இறந்த அவ்வீரபுருடனின்

3.
5.
எட்டாந்தரம்
21 நினைவு கண்டியர் மன தில் இன்றும் நின்று நிழலாடிக் கொண்டிருக்கிறது.
* இவ்வாறு கண்டிக்கலகங்கள் தோல்வியில் முடிந்த மைக்குப் பல காரணங்கள் உள்ளன. அவை:-
1. கலகத்தை ந ட த் தி ய தலை வர்களிடையே
ஒற்றுமை இருக்காமை. துரைசாமி எனப் போலிவேடம் போட்டவன் ஒரு பிக்கு எனத் தெரியவந்தமை. மொலிகொடை என்னும் ஏழுகோறளைத்திசாவை பிரித்தானியர் கொழும்பிலிருந்து உதவி பெறு
வதற்கு உதவியமை. 4.
புனித தந்ததாது கைப்பற்றப்பட்டமை.
பிரித்தானிய படைகளின் அட்டூழியங்கள். 6. கண்டியரிடம் புதிய போர்க்கருவிகள் இல்லா
திருந்தமை என்பனவாகும். கண்டிக்கலகங்கள் முடிவடைந்த பின்னர் பிரித்தா னியர் 1818 இல் ஒரு பிரகடனத்தை விடுத்தனர். அதன்படி பிரதானிகள் முன்னர் அனுபவித்த பல சலுகைகளும் அதிகாரங்களும் அவர்களிடமிருந்து நீக்கப்பட்டன. அதேசமயம் கு டி யி ய ல் நிர்வாகப் பொறுப்பு பிரித்தானிய அதிகாரிகளிடம் விடப்பட்ட தோடு கண்டியின் ஆட்சிப் பொறுப்பு ஒரு ஆணை யாளர் குழுவிடம் விடப்பட்டது. மேலும் பிரதானி களுக்கு வேதனம் வழங்கவும் அவர்களைத் தண்டிக் கவும் ஒழுங்குகள் மேற் கொள்ளப்பட்டன. இவ்வாறு 1818 ஆம் ஆண்டுப் பிரகடனம், 1815 ஆம் ஆண்டு உடன்படிக்கையில் சில மாற்றங்களைப் புகுத்தியதன் மூலம் பிரித்தானியரின் பிடியைப் பலப்படுத்திப் பிர தானிகளின் பலத்தையும் செல்வாக்கையும் பெருமள வுக்குக் குறைத்துவிட்டது. சுருங்கக் கூறின் 1818 ஆம் ஆண்டுப் பிரகடனம் கண்டிய மக்களைத் தற்காலப் பாதையில் திசை திருப்பியது எனலாம்.

Page 15
தற்காலச் சரித்திரம்
பயிற்சி
1.
- 2 ப A
பிறவுன்றிக் கண்டியைப் பரிபாலிக்க மேற் கொண்ட) ஒழுங்குகள் யாவை ? கண்டியரசு தனது தனித்துவத்தைப் பேண முடியாமல்
போ னதேன் ? 1818 ஆம் ஆண்டுக் கண்டிக்க ல கங்களின் அடிப்படைக்
காரணங்கள் யாவை ? 18 ! 8 ஆம் ஆண்டுக்கலகங்களின் உடன் காரணம் யாது? 5. “ செப்பிற்றிப்பொலை யார் ? அவன் ஏன் ப க் க ம்
மா றினான்? கண்டிக்கலகம் ஓய்ந்ததுக்குக்காரணங்கள் யாவை ? , 7. கெப்பிற்றிப்பொலையின் வீரத்தைக்காட்டும் ஒரு சம் ப
வத்தைக் கூறு க. கண்டிக்கலகம் தோல்வியில் மு டி ந் த த ற் கு ஐந்து காரணங்களைக் கூறுக, கண் டிப்பிரகடனத்தின் பிரதான அமிசங்கள் யாவை ?
93
அலகு 3.
கோல்புறூக் சீர்திருத்தங்கள்
பாடம் 7, 8, 9.
1818 ஆம் ஆண்டுக்காலத்தின் பின்னர் ஆள்பதி பிறவுன்றிக் நாட்டின் நிர்வாக ஒழுங்குகளை மேலும் சீர்ப்படுத்தியதோடு பிரதானிகளின் 4 செ ல் வ ா க் கையும் பல வழிகளிலும் குறைத்தார். அவர் 1820 இல் பதவியிலிருந்து விலகிச் செல்ல அவரிடத்தில் எட்வேட் பாண்ஸ் என்பவர் நியமனம் பெற் றார். அவர் 1820-22 கா லத்திலும் பின்னர் 18 24 முதல் 1831 வரையிலும் ஆள்பதியாகக் கடமையாற்றினார்,

எட்டாந்தரம்
23
அவரது ஆட்சிக்காலத்தில் நாடு பொருளாதாரத் துறையிலும் போக்குவரத்துத்துறையிலும் முன்னே றியது. ப ா ண் ஸ் காலத்தில்தான் முதன் முதல் கோப்பி பெருந்தோட்ட முறையில் செய்கை பண்ணப் பட்டது. அவர் கோப்பிச் செய்கையைப்பல வழிகளி லும் ஊக்குவித்தார். அடுத்து அவர் இலங்கையின் போக்குவரத்து வசதிகளைச் சீர்ப்படுத்துவதில் கவனம் செலுத்தினார். அவர் 1825 இல் கெ ா ழு ம்  ைப க் கடுகணாவை, குரு ந Iா க ல் என்னுமிடங்களுக்கூடாக இணைக்கும் இரு வீதிகளைக்கட்டி முடித்தார். அத் துடன் கண்டியிலிருந்தும் குருநாகலிலிருந்தும் தம்புல் லைக்குச் செல்லும் வீதிகளை அமைக்கத் தொடங்கினார். பாண்ஸ் அஞ்சல் சேவையையும் திருத்தியமைத்தார். அத்துடன் சமூகத்தில் நிலவிய அடிமை முறையை ஒழிப்பதற்கும் அவர் நட வடிக்கை எடுத்தார்.
பாண்சின் ஆட் சி செவ்வையாக நடைபெற்ற போதிலும் இலங்கையின் நிதிநிலைமை என்றும் போல் மோசமாகவே காணப்பட்டது. " நாட்டின் நிர்வாகச் செலவுகள் வருமானத்தை விட அ தி க ம ா க  ேவ காணப்பட்டன. அதே சமயம் இலங்கையில் ஆட்சி முறை சரியில்லையென்றும் அங்கு அரசாங்கத்தின் ஏக போக வர்த்தக உரிமைகளினால் வர்த்தகம் பாதிக்கப் படுவதாகவும் பிரித்தானிய பாராளுமன்றத்தில் பலர் குரலெழுப்பினர். இதன் விளைவாகப் பிரித்தானிய அரசாங்கம் இலங்கை நிலைமைகளை ஆராய்ந்து ஓர் அறிக்கை சமர்ப்பிக்குமாறு W. M. G கோல்புறூக் என் பவர் தலைமையில் ஒரு விசாரணைக்குழுவை இலங்கைக்கு அனுப்பிவைத்தது.
கோல்புறூக்கும் அவரது சகபாடியான கமிறனும் இலங்கையின் பலபகுதிகளையும் நேரிற் சென்று பார் வையிட்டதோடு பிரதானிகள் பொதுமக்கள் ஆகியோ ரின் அபிப்பிராயங்களை யும் அறிந்து கொண்டனர்.

Page 16
24
தற்காலச் சரித்திரம்
அதன்மேல் அவர்கள் தாம் நேரில் கண்ட, கேட்டு அறிந்த விடயங்களை அலசி ஆராய்ந்தனர். பின்னர் கோல்புறூக் பொது, நிர்வாக விடயங்களைப் பற்றி யும், கமிறன் நீதிபாலன விடயங்களைப் ப ற் றி யு ம் தமது சிபார்சுகளைத் தெரிவித்தனர். கோல்புறூக் நாட்டின் அரசியலமைப்பிலும் பொரு ளாதாரத்துறை யிலும் புகுத்த வேண்டிய பல சீர் திருத்தங்களைத் தமது அறிக்கையில் தெரிவித்தார்.
அரசியல், நிர்வாக, சீர்திருத்தங்கள். ' கோல்புறூக் அதுவரை இலங்கையில் காணப்பட்ட கண்டிப் பகுதி, கரையோர மாகாணங்கள், அவற்றின் சிங்களப்பகுதி, தமிழ்ப்பகுதிகள் முதலிய பல பிரதேசப் பிரிவுகளை நீக்கிவிட்டு இலங்கை முழுவதிலும் ஒரே விதமான ஆட்சிமுறையை ஏற்படுத்துமாறு சிபார்சு செய்தார். இரண்டாவதாக இலங்கையில் அதுவரை காணப்பட்ட 16 நிர்வாகப்பிரிவுகளுக்குப் ப தி ல ா க மேல்மாகாணம், மத்தியமாகாணம், கீழ்மாகாணம், வடமாகாணம், தென்மாகாணம் என்னும் ஐந்து பிரிவுகளைச் சிபார்சு செய்தார்.
அடுத்து கோல்புறூக் இலங்கையின் ஆள்பதியின் அதிகாரங்களைக் குறைக்கும் விதத்தில் சில சிபார்சுகளைச் செய்தார். அக்காலத்தில் ஆள்பதி ஒரு சர்வாதிகாரி யைப் போல நடந்துகொண்டார், அவர், நாட்டின் அமைதிக்குப் பங்கம் விளைவிப்பவர் எனத் தாம் கருதும் ஒருவரை விசாரணை எதுவுமில்லாமல் சிறையில் வைக் கவும், விரும்பினால் நாடுகடத்தவும் அதிகாரமுடைய வராயிருந்தார். அத்துடன் அவர் செய்யும் ஒரு முடிவை எந்த நீதிமன்றமும் மாற்றமுடியாத நிலை அப்பொழுது காணப்பட்டது. சுருங்கக்கூறின் ஆள்பதி சட்டத்துக் குக் கட்டுப்படாதவராக விளங்கினார். அந்நிலைமையை மாற்ற விரும்பிய விசாரணைக் குழுவினர் ஆள்பதியின்

எட்டாந்தரம்
25
முடிவை ஆட்சேபித்து வழக்குத்தாக்கல் செய்யக்கூடிய உயர் நீதிமன்றம் நிறுவும்படியும், ஆள்பதி நிர்வாக 'விடயங்களில் தாம் நினைத்தபடி நடக்காதபடி அவருக்கு ஆலோசனை கூறுவதற்கு ஐவரைக் கொண்ட ஒரு சட்ட நிர்வாக (நிறைவேற்று) சபையைத் தாபிக்குமாறும் சிபார்சு செய் தனர். மேலும் இலங்கையரும் ஆட்சி விடயங்களில் பயிற்சியும் அனுபவமும் பெறத்தக்க தாகச் சட்டநிரூபணசபை ஒன்றை நிறுவுமாறும் அதில் உத்தியோகப் பற்றுள்ளவர்கள் 9 பேரும் உத்தியோகப் பற்று அற்றவர்கள் 5 பேரும் அங்கத்தினராயிருக்க
• வேண்டுமென வும் சிபார்சு செய்தனர், இவ்வாறு. நிறுவப்பட்ட சட்ட நிரூபண சபை பிற்காலத்தில் பிரதி நிதிகளின் ஆட்சிக்கான ஒரு வழிகாட்டி அல்லது
முன்னோடியாக விளங்கியது எனலாம்.
கோல்புறூக் குழுவினர் செய்த மூன்றாவது முக்கிய மான சிபார்சு பொருளாதார சம்பந்தமான து. அவர்கள் அக்காலத்தில் நிலவிய, இராசகாரியம் என்னும் 'அரச சேவை' முறை ( ஒருவகையான அடிமைமுறையென வர்ணித்தனர். அம்முறை ஒருவன் தனது தொழிலை மாற்றவும் தான் விரும்பியதைச் செய்யவும் இட மளிப்பதில்லையென்றும் அதனால் மக்கள் எத்தொழி லிலும் முன்னேற முடியவில்லையென்றும் அதன் விளை வாகவே நாட்டின் வருமானம்குறைந்துபோகிறதென வும் விசாரணைக் குழுவினர் குறிப்பிட்டனர். அன்றியும் இராசகாரியம் சாதிப்பிரிவினை நீடித்து நிலைப்பதற்கும் வழிசெய்யும் என அவர்கள் வாதித்தனர். எனவே மேற் கூறப்பட்ட காரணங்களினால் இராசகாரியம் உடன் ஒழிக்கப்படவேண்டும் என அவர்கள் சிபார்சு செய்தனர். பொருளாதாரத்துறையில் அவர்கள் செய்த இன்னொரு சிபார்சு அரசாங்கத்தின் ஏகபோக வர்த்தக உரிமை பற்றியது. அ க்க ா ல த் தில் நாட்டின் வ ர் த் த க ம் (குறிப்பாகக் கறுவா வர்த்தகம்) அரசாங்கத்தின் தனி

Page 17
26
தற்காலச் சரித்திரம் உரிமையாய் இருந்தது. இதனால் தனிப்பட்டவர்கள் வர்த்தகப் பயிர்களை விளைவிக்கவோ, வ ர் த் த க ம் செய்யவோ முடியவில்லை. இத னால் அரசாங்கத்துக்குக் கிடைக்கும் வருமானமும் குறைந்தது .எனவே வெளி நாட்டு வர்த்தகத்தில் அரசாங்கம் மட்டும் ஈடுபடாமல் அதை விரும்பிய எவரும் செய்வதற்கு அனுமதிக்கும் படியும் விசாரணைக் குழுவினர் சிபார்சு செய்தனர்.
கோல்புறூக் குழுவினர் செய்த அடுத்த முக்கிய மான சிபார்சு கல்விபற்றியது. அவர்கள் ஆங்கிலக் கல்வியின் அவசியத்தை வற்புறுத்தினர். ஆங்கிலக் கல்வி மூலம் மக்கள் அரசியல் நிர்வாக விடயங்களைப் பற்றி அறியவும், அரசாங்க ஊழியராக வர வும் முடியு மென்பதனால் சுதேச மொழிக் கல்வியிலும் பார்க்க ஆங்கிலக்கல்விப் போதனைக்கே அதிக வசதியும் ஊக்க மும் கொடுக்கவேண்டுமெனக் கூறி அதற்கு முதற் படியாக சுய மொழிப்பாடசாலைகளைக் குறைக்கவும் ஆங்கிலப் பாடசாலைகளைக் கூட்டவும் வேண்டுமெனச் சிபார்சு செய்தனர்.
கோல்புறூக் - கமிறன் விசாரணைக் குழுவினரில் கமிறன் என்பவர் இலங்கையின் நீதிபாலன முறையில் செய்ய வேண்டிய மாற்றங்களைப் ப ற் றி த் தமது அறிக்கையில் சிபார்சு செய்தார். அவர் செய்த சிபார்சு களாவன:- சில், 1. இலங்கை முழுவதும் ஒரே மாதிரியான நீதி
பாலன முறை பின்பற்றப்படவேண்டும். ஐரோப் பியர் சுதேசிகளிடையே நீதிபாலன முறையில்
எதுவித வேறுபாடும் இருக்கக்கூடாது. 2. ஆள்பதியின் அதிகாரத்துக்கு மேம்பட்ட ஒரு
உயர் நீதிமன்றம் நிறுவப்படவேண்டும்' மாகா ணங்கள் தோறும் மாவட்ட நீதிமன்றங் கள் நிறுவப்படவேண்டும், அவற்றின் தீர்ப்

எட்டாந்தரம்
27
புக்கு எதிரான மேன்முறையீடுகளை உயர் நீதி மன்றம் விசாரணை செய்யவேண்டும், கிராமக்கோடுகளிடமிருந்த நீதிபாலன அதி காரம் மாவட்ட நீதிமன்றங்களைச் சேரவேண் டும் - என்பனவாகும். மேல் குறிப்பிடப்பட்டவற்றைத் தவிரக் கோல்புறூக் இலங்கையின் குடியியற் சேவைபற்றியும் சில சிபார்சு களைச் செய் தார். அவர் குடியியற் சேவை (சிவில் சேவை) யாளர்களின் வேதனம் குறைக்கப்படவேண்டும், 'மெனவும் அவர்களுக்கு இளைப்பாற்று வேதனம் வழங்கப்படவேண்டியதில்லை எனவும் கு டி யி ய ற் சேவைக்குச் சுதேசிகளும் அனுமதிக்கப்பட வேண்டு மெனவும் சிபார்சு செய் தார்.கோல்புறூக் - கமிறன் குழுவினரின் சிபார்சுகளில் குடியியற் சேவை பற்றியவை நாட்டுக்கு நன்மைவிளைவிக்கவில்லை. குடி யியற் சேவையாளரின் வேதனம் குறைக்கப்பட்டதன் விளைவாக நாட்டு நிர்வாகம் சிறப்பாக நடக்காதமை யினால் மக்கள் ஆட்சியாளர் மீது வெறுப்புக்கொண் ட னர். அது ஆங்கிலே யருக்கு எதிரான இன்னொரு கலகம் ஏற்பட மறைமுகமாக உதவியது.
அதேசமயம் இராசகாரிய ஒழிப்பினால் சில தீமைகள் ஏற்பட்டன. மக்கள் இராசகாரியம் இல்லாமற் போன தினால் பயிர்ச்செய்கையில் அதிக அக்கறை காட்டம்
வில்லை. மேலும் மக்களுக்கு ஓய்வு நேரம் அதிகரித்த படியால் குற்றச் செயல்களும் அதிகரித்தன. ஆயி னும் கோல்புறூக்-கமிறன் சிபார்சுகளினால் இலங்கை பல நன்மைகளைப் பெற்றது. அவை:-
1. நாடுமுழுவதும் ஒரே மாதிரியான நீதிபாலன
நிர்வாக அமைப்பின் கீழ் ஒன்றுபடுத்தப்பட்டது . 2,
இராசகாரிய ஒழிப்பினால் சமூகஏற்றத்தாழ்வு கள் தீர்ந்ததோடு மக்கள் தொழிற் சுதந்திரமும் பெற்றனர்.

Page 18
28
தற்காலச் சரித்திரம்
3. ஆங்கிலக் கல்வியின் விருத்தியினால் பல சமூகத்
தவரிடையேயும் ஒற்றுமை ஏற்பட்டது. சட்டசபைகளின் மூலம் இலங்கையர் பிரதி நிதித்துவ முறையான ஆட்சியில் அனுபவம்
பெற்றனர்.
அரசாங்கத்தின் ஏகபோக வர்த்தக உரிமை நீக்கப்பட்டபடியால் த னி ப் பட் ட வர் க ளி ன் முயற்சி அதிகரிக்கப் பெருந் தோட்டப்பயிர்ச் செய்கை விருத்தியடைந்தது. பத்திரிகைகள் பல வெளிவரவும் மக்கள் தமது கருத்துக்களைச் சுதந்திரமாக  ெவ ளி யிட வும் கோல்புறூக்-கமிறன் சிபார்சுகள் உதவின, இக் காரணங்களினால் கோல்புறூக்-கமிறன் சிபார்சு கள் தற்கால இலங்கையின் அபிவிருத்திக்கு அடிகோலின எனின் அது மிகையாகாது.)
பயிற்சிகள்
1. கோல்புறூக் - கமிறன் விசாரணைக்குழுவினர் இலங்கைக்கு
வந்ததேன் ? கோல்புறூக் குழுவினர் சிபார்சு செய்த அரசியல் சீர் திருத்தங்கள் யாவை ? ஆள்பதி விடயமாகக் கோல்புறூக் குழுவினர் செய்த சிபார்சுகள் எவை ? இராசகாரிய முறையை ஒழிப்பதற்குக் குழுவினர் சிபார்சு செய்ததேன் ? கோல்புறூக் குழுவினர் கல்வி வி ட ய மா கச் செய்த சிபார்சுகள் யாவை ? கோல்புறூக் சிபார்சுகளினால் ஏற்பட்ட நன்மை தீமைகள் யாவை ?
6.

பாடம் 10, 11.
•1848 - ஆம் ஆண்டுக் கலகங்கள்.
கோல்புறூக் - கமிறன் சிபார்சுகள் •1833 - 47 காலத்தில் நாட்டில் அமுல் செய்யப்பட்டன . அக்கால எல்லையில் ஹோட்டன், மக்கென்சி, கம்பெல் ஆகி யோர் இலங்கையில் நிர்வாகத்துக்குப் பொறுப்பாக இருந்தனர். அவர்களின் காலத்தில் நாட்டின் அரசி யல், பொரு ளாதார சமூக அமைப்பில் பல மாற்றங் கள் ஏற்பட்டன. அவையெல்லாம் கோல்புறூக்-கமிறன் சிபார்சுகளின் விளைவாக உண்டாகின எனலாம்.
கோல்புறூக் கமிறன் சிபார்சுகளின் விளைவாகக் கண்டியும் கரையோரமாகாணங்களும் ஒரே ஆட்சி யின் கீழ்வந்ததினால் 'கண்டியர்' தமது கலாச்சாரத் தைப் பேண முடியவில்லை. கரையோரப் பகுதிகளை யும் கண்டியையும் இணைத்து 1825-50 காலத்தில் அமைக்கப்பட்ட வீதிகள் கரையோரமக்கள், ஐரோப் பியர், இந்தியர், முஸ்லிம்கள் ஆகியோர் மலை நாட்டுக் குச் சென்று குடியேற வழிவகுத்தன. இவ்வாறு பல இனத்தவர்களும் கலந்தமையினால் தான் கண்டியர் தமது பழைமையான பண்பாட்டின் தூய்மையைப் பேண முடியவில்லை. இரண்டாவதாக, இராசகாரிய ஒழிப்பினால் மக்களின் ஓய்வு அதிகரித்தபோது அவர் கள் குற்றச் செயல்களில் ஈடுபடத் தொடங்கினர். மூன்றாவதாக, நீதிமன்றங்கள் நிறுவப்பட்ட பின்னர் - கம்சபாக்களின் செல்வாக்குக் குறைந்தமையால் அவை முன்போலக் கிராமங்களில் அமைதியை நிலை நாட்ட முடியவில்லை. அதேசமயம் சிறு குற்றங்களைச் செய் பவர்களும் பட்டினங்களிலுள்ள நீதிமன்றங்களுக்குச் செல்லவேண்டியிருந்ததால் பொதுமக்களின் அசெள கரியம் அதிகரித்தது. நாலாவதாக, கோ ல் பு றூ க் சிபார்சுகளின் விளைவாக மாகாணங்களின் பரப்பு அதி

Page 19
30
தற்ாலச் சரித்திரம் கரித்த அதே வேளை குடியியற் சேவையாளரின் வேத னம் குறைக்கப்பட்டதனால் அவர் கள் தமது கடமை களை ஒழுங்காகச் செய்யவில்லை. இதனால் பொது மக்களின் தேவைகள் பல புறக்கணிக்கப்பட்டபோது அவர்கள் அரசாங்கத்தில் வெறுப்புக் கொண்டனர்.
இது இவ்வாறாக, பெருந்தோட்டங்கள் திறக்கப் பட்டதினாலும் பல தீமைகள் விளைந்தன . மலை நாட் டில் பெருந்தோட்டங்கள் திறக் கப்பட்டதன் விளை வா கக் கண்டிய மக்கள் பல தேவைகளுக்கும் பயன்படுத் திய நிலம் அவர்களிடமிருந்து பறிபோயிற்று. அவர் , கள் மந்தைகளை மேய்ப்பதற்குப் பயன்படுத்திய நில மும் சேனை செய்வதற்குப் பயன்படுத்திய நி ல மு ம் பறிபோயின. மேலும் பிரித் தானியரின் புதிய சட்டங் களினால் மக்கள் தமது நிலத்தைப் பங்குபோட்டு விற்க முடிந்தது. இதனால் பலர் தமது பங்குகளை விற்பதி லும் எல்லைகளுக்காக வழக்காடுவதிலும் காலத்தையும் பணத்தையும் விரயம் செய் தனர். அன்றியும் பெருந் தோட்டங்கள் திறக்கப்பட்ட பின்னர் சாராயம் மலை நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டபடியால் பலர் அதற்கு அடிமையாகினர். அப்படிப்பட்டவர்கள் பல குற்றங் களைச் செய்வதில் ஈடுபட்டனர். இதனால் மலை நாட்டில் அதுவரை நிலவிய அமைதியான வாழ்க்கை சீர்குலைந்து குடியும், கூத்தும், கொலையும், கள வும் மலிந்தன. இவற்றைத் தவிரக் கண்டிய மக்கள் வெளியிலிருந்து வந்த மக்களினால் ஏமாற்றப்பட்டும் சுரண்டப்பட்டும் பல தொல்லைகளுக்குள்ளாயினர். மேற் குறிப்பிடப் பட்டவற்றினால் மலை நாட்டு மக்களின் பொருளாதார நிலையும் கலாச்சாரமும் வீழ்ச்சியடைந்தன , இ த ன் விளைவாக மக்கள் பிரி த் த ா னி யர் மீ து பகைமை பூண்டனர்.
" இவ்வாறு பொதுமக்கள் அரசாங்கத்தின் மீது வெறுப்புற்றிருந்த வேளை பிரதானிகள் பிக்குகள் ஆகி யோரும் ஆங்கிலேயரின் ஆட்சிமீது அதிருப்தியுற்றனர்.

எட்டாந்தரம்
31
தமது அந்தஸ்துக் குறைந்தமையால் பிரதானிகளும் பிரித்தானியர் பௌத்தமத விடயங்களில் அக்கறை காட்டாமையினால் பிக்குகளும் புதிய ஆட்சியை வெறுத் தனர். இவ்விதமாகப் பிக்குகள் பிரதானிகள் கண்டிய மக்கள் என்னும் மூன்று பிரிவினரும் பிரித்தானியரது ஆட்சியை வெறுத்திருந்த காலத்தில் 1847 இல் பல புதிய வரிகள் விதிக்கப்பட்டன. கடை, படகு, வண்டி என்பவற்றுக்கே புதிதாக வ ரி க ள் போடப்பட்டன. அதேசமயம் முத்திரை வரியும் அதிகரிக்கப்பட்டது. இதன் பின்னர் 1848 இல் பிரகடனப்படுத்தப்பட்ட
• வீதிச்சட்டத்தின்படி 18 வயதுக்கும் 55 வயதுக்கும் இடைப்பட்ட வயதையுடைய ஆண் கள் 6 நாட்களுக்கு வீதிகளில் வேலை செய்யவேண்டும் அல்லது 3 சிலிங் வரியாகக் கொடுக்கவேண்டும் எனப்பட்டது. இதனால் ஏழைச்சுதேசிகளே பாதிக்கப்பட்டனர். ஆயினும் இது. வும் போதாது என்பதுபோல் அரசாங்கம் நாய்வரி, துவக்குவரி என இரு புதியவரிகளை விதித்தது. இவற் றில் துவக்கு வரி மிக அநியாயமானதாயிருந்தது. அவ் வரி துவக்கின் பெறுமதியில் 1 பங்கு அளவினதாயிருந் தது. ஆனால் கண்டியர் வைத்திருந்தவை பழந்துவக்கு களே.
இவ்வாறு புதிய வரிகள் விதிக்கப்பட்டதை (குறிப் பாகத் துவக்குவரியை) ஆட்சேபித்த மக்கள் கொழும் பில் 1848 யூலை 8 இல் கூடித் தமது எதிர்ப்பைத் தெரிவித்தபோது ஆள்பதி ரெனன்ற் இராணுவத்தின் உதவியுடன் மக்களைக் கலைத்தார். பின்னர் யூலை 26 இலும் மக்கள் மீண்டும் கூடி ஆள்பதியைக்கண்டு பேச முயன்றபோதும் அது கைகூடவில்லை. அன்றியும் அன் றும் மக்கள் இராணுவத்தினாலேயே துரத்தப்பட்டனர்.
இவ்வாறு கொழும்பில் எதிர்ப்புப் பிசுபிசுத்தபோதி லும் மலை நாட்டில் அது வெகுவேகமாகப்பரவியது. மலை நாட்டில் மாத்தளைப்பகுதியில் கொங்கல கொடபண்டா, புறாங் அப்பு முதலியவர்கள் கண்டிய அரசுக்கு உரிமை கோரிய

Page 20
32
தற்காலச் சரித்திரம்
போது பிக்குகளும் பொதுமக்களும் அவர்களை ஆதரித் தனர். இவ்விதமாக கொங்கலகொடாபண்டா கண்டி யரசனாக 20-7-1848 இல் சம்பிரதாய முறைப்படி' பிக்குகளினால் முடிசூட்டப்பட்டான். இதன் பின்னர் புதிய அரசன் பிரதானிகளும் படை வீரரும் புடை சூழக் கண்டிமேல் ப டை  ெய டு த் து ச் சென்றான். ஆயினும் குழப்பக்காரர்களின் திட்டங்களை அறிந்த அரசாங்கம் இராணுவச்சட்டத்தைப் பிறப் பி த் து அதன் கீழ் கலகக்காரர்களை ஈவிரக்கமின்றிச் சுட்டுக் கொன்றது, அக்காலத்தில் இராணுவத்தினர் பொது மக்களுக்குப் பல தொல்லைகளைக் கொடுத்தனர். அவர் ' களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன ; பயிர் கள் அழிக்கப்பட்டன; வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட ன . அதே சமயம் கொங்கலகொட பண்டா, புறாங் அப்பு ஆகியோ ரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் மேல் கலகம் ஓய்வடைந்தது.
ஆயினும் அப்போதைய ஆள்பதியாகிய ரொறிங் டன் கலகத்தை அடக்க மேற் கொண்ட நடவடிக்கை களும் இராணுவச்சட்டத்தின் கீழ் படைவீரர் செய்த அட்டூழியங்களும் பொது மக்களினதும் பல பிரித்தா னியரினதும் எதிர்ப்புக்கு இலக்காகின. அதன் விளைவாக அக்கலகச் சம்பவங்களை விசாரணை செய்யப் பிரித்தா னிய அரசாங்கம் ஒரு குழுவை நியமித்தது. அக்குழு கலகத்துக்கு முழுப்பொறுப்பையும் ரொ றிங்டன் மேல் சுமத்தி அவரைத் திருப்பியழைக்குமாறு சிபார்சு செய் தது. அதற்கிணங்க ரொறிங்டன் திருப்பியழைக்கப் பட்டு அண்டர்சன் என்பவர் ஆள்பதியாக அனுப்பப் பட்டார்.
ஆள்பதி அண்டர்சன் முதல் ஆள்பதி பிளேக்வரை யுள்ள அரை நூற்றாண்டு காலத்தில் (1850-1907) நாட்டில் அமைதியும் பல துறைகளில் முன்னேற்றமும் ஏற்பட்டன. அக்காலத் தில் அரசாங்கம் தோட்டத்

எட்டாந்தரம்
33
துரைமார்களின் நன்மையைமட்டும் பேணாது சாதா ரண குடியானவர்களின் குறைகளைத் தீர்ப்பதிலும் கூடிய கவனம் செலுத்தியது. 1848 ஆம் ஆண்டுக் கலகத்தின் ஒரு அடிப்படைக்காரணம் பயிர்ச்செய்கை. புறக்கணிக்கப்பட்டமையே என்பதை சேர் கென்றி வாட் (1855-60) ஹேர்கியூலிஸ் றொபின்சன் (1865-73) முதலிய ஆள்பதிகள் உணர்ந்தனர். எனவே அவர்கள் கிரா மியப் பொருளாதாரத்துக்கு உயிர்நாடியாக இருந்த நீர்ப்பாய்ச்சல் வசதிகளைப்புதுக்கி அ ைம ப் ப தி லும் பெருக்குவதிலும் முழுமூச்சாக ஈடுபட்டனர். இந் நோக்கத்துடன் ஆள்பதி வாட் 1856 இல் “கம்சபா' என்னும் கிராமசபைகளைப் புனரமைத்து அவற்றின் உதவியுடன் பண்டைய நீர்ப்பாசன வேலைகளைத் திருத் தினார். கம்சபாக்களின் புனரமைப்பின் இரண்டாவது கட்டத்தில் ஆள்பதி கிறகரி அவற்றுக்கு அதிக அதி காரங்களை வழங்கினார். கிராமத்தில் ஏற்படும் தகராறு களைத் தீர்த்தல், பாதைகள், பாலங்கள், மடங்கள், கிணறுகள், சந்தைகள், சுடலைகள் ஆகியவற்றை நிறு வுதல், பாடசாலைகளை நிறுவி நிர்வகித்தல் முதலிய பல வேலைகள் அவற்றின் பொறுப்பில் விடப்பட்டன. இவ்வாறு கம்சபாக்கள் புனரமைக்கப் பட்டதோடு ஆள்பதி கிறகரி காலத்தில் கிராமக்கோடுகளும் மீண் டும் செயல்படத்தொடங்கின. இவற்றின் ப ல னா க. நாட்டில் குற்றச் செயல்கள் குறைந்து கிராமிய வாழ்க் கையும் பயிர்ச்செய்கையும் புத்துயிர் பெற்றன. அவர் நீர்ப்பாய்ச்சல் வேலைகளைக் கவனிப்பதற்கென '- ஒரு விசேட குழுவையும் வைத்திருந்தார். வாட் காலத் தில் கீழ்மாகாணத்தில் அம்பாறை, இறக்காமப் பகுதி களிலும் தென்மாகாணத்தில் ஊறுபொக்க, கிராமப் பகுதிகளிலும் உள்ள நீர்ப்பாய்ச்சல் வேலைகள் திருத்தி யமைக்கப்பட்டன.
ஆள்பதி வாட்டுக்குப் பின்னர் றொபின்சன் காலத் திலும் தென் மாகாணத்திலும், வதுளைப்பகுதியிலும் .

Page 21
34
தற்காலச் சரித்திரம்
உள் ள நீர்ப்பாய்ச்சல் வசதிகள் புனரமைக்கப்பட்டன. அவரைத் தொடர்ந்து ஆள்பதி கிறகரியும் நீர்ப்பாய்ச் சல் வேலைகளில் அதிக கவனம் செலுத்தினார். அவர் வடமத்திய மாகாணப்பகுதியிலுள் ள க ர ல வீ வ T முதலிய குளங்களைத் திருத்துவதிலும் கால்வாய்களைப் புதுப்பிப்பதிலும் கூடிய கவனம் செலுத்தினார். இவ் விதமாக 1848 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரசாங்கம் குடிமக்களின் நலன் கருதி மேற்கொண்ட பல நடவடிக் கைகளினால் நாட்டில் மீண்டும் அமைதியும் பொரு ளாதார முன்னேற்றமும் ஏற்பட்டன.
பயிற்சிகள்.
கண்டியர் தமது பண்பாட்டுத் தூய்மையைப் பேண
முடியாமற்போனதேன் ? 2. இராசகாரிய ஒழிப்பினால் நேர்ந்த தீமைகள் யாவை? 3. பெருந்தோட்டங்கள் திறக்கப்பட்டதனால் ஏற் பட்ட
தீமைகள் யாவை ? பிரதானிகளும் பிக்குகளும் ஆங்கிலேயர் மீது அதிருப்தி
யுற்றதேன் ? 5, 1848 ஆம் ஆண்டுக்கலகத்திற்கு முன்னோடியான சம்
பவங்கள் எவை ? 6. 1848 கலகம் எவ்வாறு அடக்கப் பட்டது ?
பின் வருவோரைப்பற்றி 3 வாக்கியங்கள் கூறுக. கொங்கலகொட்பண்டா, ரொறிங்ரன், 8. 1848 ஆம் ஆண்டுக் கலகத்தின் பின்னர் அரசாங்கம் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொண்ட நடவடிக்
கைகள் யாவை ? வாட், கிறகரி ஆகியோர் ஆற்றிய சேவைகள் எவை?
7..

அலகு 4.
பாடம் 12, 13, 14, 15.
கைத்தொழிற் புரட்சி.
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் (1760) கைத்தொழிற் பொருட்களின் உ ற் ப த் தி, போக்குவரத்து, தொடர்பு சேவைகள் முதலியவற் றில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றங்களையும் முன் னேற்றத்தையும் கைத்தொழிற் புரட்சி எனக் குறிப் பிடுவது வழக்கம். இப்புரட்சி முதல் முதல் இங்கி லாந்திலேயே தொடங்கியது. அங்கு 18 ஆம் நூற் றாண்டின் நடுப்பகுதி வரை பொருட்கள் வீடுகளில் சிறிய அளவிலேயே உற்பத்தி செய்யப்பட்டன. எனவே அக்காலத்தில் நெசவு நெய்தல், இரும்பு ஆயுதங்கள் உபகரணங்களைச் செய்தல் முதலியன குடிசைக் கைத் தொழில்களைப் போலவே நடைபெற்றன. இந்நிலைமை 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து படிப்படி யாக மாறியது. அதன் மேல் பொருட்களை உற்பத்தி செய்வதற்குப் பெரிய தொழிற்சாலைகள் கட்டப்பட் டன். அங்கு அவை பெருவாரியாகவும் கு றை ந் த விலையிலும் உற்பத்தி செய்யப்பட்டன.
இவ்வாறு குடிசைக் கைத்தொழில் ஆலைக்கைத் தொழிலாக மாறிய அதேசமயம் பழைய போக் கு வரத்துமுறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. கட்டை வண்டி, குதிரைவண்டி என்பவற்றுக்குப் ப தி ல ர க மக்கள் மோட்டார் கார், புகையிரதம் ஆகியவற் றைப் பயன்படுத்தினர். அச்சமயம் வீதிகளும் செப்ப மான முறையில் அமைக்கப்பட்டன. இப்படியாகக் கைத்தொழிற் புரட்சியினால் ஏற்பட்ட முக்கிய மாற்றங் களைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்.

Page 22
36
தற்காலச் சரித்திரம்
1,
பலவகையான எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை! நிலக்கரி, இரும்பு முதலிய கனிப்பொருட்கள் பெருமள
வில் பயன்படுத்தப்பட்டமை. பெரிய தொழிற்சாலைகள் நிறுவப்பட்டமை, கைத்தொழிற் பிரதேசங்களும், நகரங்களும் தோன் றியா மை. இருப்புப்பாதைகள் கற்பாதைகள் ஆகியன அமைக்கப் டாட்ட டிமை தபால் தந்தி போக்கு வரத்து முறை வளர்ச் சியடைந்
தி பிலிம்) ம்.
நெசவுத் தொழிலில் ஏற்பட்ட மாற்றங்கள். (கைத்தொழிற் புரட்சியினால் முதன் முதல் நன்மை - யடைந்தது நெசவுத் தொழிலாகும். நெசவுத் தொழில் அதுவரை வீடுகளில் கைராட்டை, கள் மூலமே நெசவு செய்யப்பட்டு வந்தது. அம்முறையில் மிக மெதுவா கவும் குறைவாகவுமே துணிகளை உற்பத்தி செய் ய
முடிந்தது. அந்நிலைமையை மாற்ற மு ய ற் சி த் த ஜோன்கே என்பவர் 1733 இல் ' பறக்கும் நூல் நாழி” (Fiying Shuttle) என்பதைக் கண்டு பிடித்தார். அது தறியை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து நெசவு செய்ய உதவியது. அவருக்குப் பின்னர் 1764 இல் ஜேம் ஸ் ஹார்கிறீலவ்ஸ் என்பவர் ஒரே முறையில் பல நூலி ழைகளை இழைக்கக்கூடிய எந்திரத்தைக் கண்டு பிடித் 'தார். அது 'ஜென்னி' எனப்பட்டது. ஹார்கி றிவ்சைத் தொடர்ந்து 17 69-இல் றிச்சாட் ஆகறைற் என்பவர் நீர் வலுவைப் பயன்படுத்தி நூல் நூற்கும் தறிகளை இயக் கும் முறையைக் கண்டுபிடித்தார். அவருக்குப் பின்னர் சாமுவேல் குறொம்ரன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட
* மியூல் ' என்னும் கருவி மென்மையானதும் கடினமா னதுமான நூலை நூற்க உதவியது. இதன் பின்னர் காட்றைற் என்பவர் நீர்வலுவின் மூலம் இ ய ங் கு ம் விசைத் தறியை (Power 100m)க் கண்டு பிடித்தார். மேற்கூறப்பட்ட புதிய கருவிகள் அதுவரை குடிசைத் தொழிலாக இருந்த நெசவுத்  ெத ா ழி லை ஆலைத் தொழிலாக மாற்றின.

எட்டாந்தரம்
அட்3ய.
உப்கே
காணிக5ை4
றிச்சாட் ஆக்றைற் நெசவுத் தொழிலை மேலும் விருத்தியடையச் செய்தது நீராவியின் உபயோகமாகும், யேம்ஸ் வாட் என் பவரே முதன் முதல் நீராவி எந்திரத்தைக் கண்டு பிடித்தார். நீராவி எந்திரம் 1785 இல் நொட்டிங்கா மிலுள்ள ஒரு தொழிற்சாலையில் முதன் முதல் பயன் படுத்தப்பட்டது. ஆயினும் நீராவிச்சக்தி போக்கு வரத்துத் துறையிலேயே பல மாற்றங்களை ஏற்படுத் தியது. இவ்வாறு கைத்தொழில்கள் எந்திரமயமாகிய போது இரும்பு உருக்கின் உற்பத்தியிலும் மாற்றங் கள் ஏற்பட்டன. இரும்பை உருக்கு ஆக மாற்றுவ தில் சீமென்ஸ் என்னும் ஜேர்மனியரும், பெசமர் என்னும் ஆங்கிலேயரும் புதிய முறைகளைக் கண்டு பிடித்தனர், அதேசமயம் இரும்பை உருக்குவதற்குச் சுட்டகரியை (Coke) உற்பத்தியைச் செய்யும் முறையை ஏபிரகாம் டார் பி என்பவர் 1709 இல் அறிமுகப்படுத்தி யிருந்தார். அவரைத் தொடர்ந்து 1784 இல் கென்றிகோட்

Page 23
38
தற்காலச் சரித்திரம்
என்பவர் இரும்பை உருக்குவதில் இன்னொரு முறை யைக் கண்டுபிடித்தார். இவ்விதமாக இரும்பு உருக்கு : உற்பத்தியில் ஏற்பட்ட மாற்றங்கள் எந்திரங்களைப் புதிய முறையிலும் செம்மையாகவும் எளிதாகவும்) அமைக்க உதவின.
போக்குவரத்துத் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள்.
கைத்தொழிற்புரட்சியின் போது போக்குவரத்துத் துறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இத்துறை) யில் போக்குவரத்துப் பாதைகளே முதலில் சீரமைக், கப்பட்டன. இவ்விதமாக, பழைய மக்கிப் பாதை களுக்குப் பதிலாகக் கற்களினால் உறுதியான வீதிகள் அமைக்கப்பட்டன. மெற்காவ், ரெல்போட், மக்கடம் ஆகி யோரே இத்துறையில் புதிய முறைகளைப் புகுத்தினர்.
மக்கL.!
இவ்வாறு வீதிகள் செம்மையாக்கப்பட்ட அதே காலத்தில் இருப்புப் பாதைகளும் அமைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதன் மேல் ஜோர்ஜ் ஸ்ரீவன்சன் என் பவரால் கண்டு பிடிக்கப்பட்ட நீராவிப் புகையிரதம் 1828 இல் ஸ்ரொக்ரன்-டார்லிங் பாதையில் ஓடியது. அதைத் தொடர்ந்து 1868 அளவில் இங்கிலாந்து முழு வதும் இருப்புப் பாதைகள் அமைக்கப்பட்டுவிட்டன. இதன் பின்னர் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலு ம் இருப்புப்பாதைகள் அமைக்கப்பட்டன . இலங்கையி லும் 1867 இல் கொழும்பு-கண்டி இருப்புப்பாதை அமைக்கப்பட்டது ஈண்டு குறிப்பிடத்தக்கது. இவ் வாறு வீதிகளும் இருப்புப்பாதைகளும் பெருமள வில் அமைக்கப்பட்டதனால் போக்கு வரத்து எளிதாக்கப் பட்டது.
போக்குவரத்துப் பாதைகள் சீர்ப்படுத்தப்பட்ட கா லத் தில் அவற்றைப் பயன்படுத்துதற்கு ஏற்ற பல புதிய சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில்

எட்டாந்தரம்
39 > மோட்டார் எந்திரத்தின் கண்டுபிடிப்பு முதலில் ஏற் 'பட்டது, அதை 1885 இல் டெயிம்லர் என்னும் ஜேர் மனியர் கண்டுபிடித்தார். அதைத்தொடர்ந்து மோட் டார்கார்கள், லொறிகள், பஸ்கள் ஆ கி ய ன அதிக அளவில் வீதிகளைப் பயன்படுத்தின. இவ்வாறு தரைப் போக்குவரத்து முன்னேறி வந்தவேளை 1903 இல் ரைட் (Wright) சகோதரர்கள் ஆகாய விமானத்தைக்கண்டு பிடித்தனர். அதேசமயம் புல்ரன் என்பவர் நீராவியின் - மூலம் கடலில் செல்லும் கப்பல்களை இயக்கும் முறை யைக் கண்டுபிடித்தார். மேற்குறிப்பிடப்பட்ட கண்டு பிடிப்புகள் இடம்பெற்ற காலத்தில் நிலத்தின் கீழி ருந்து பெற்றோலை வெளியெடுக்கும் முறைகளும் அறியப் பட்டிருந்தன. அவ்வாறு பெறப்பட்ட பெற்றோல் , டீசல் நெய் முதலியன மோட்டார் வாகனங்களுக்கும் ஆகாய விமானங்களுக்கும் பயன்பட்டன.
போக்குவரத்துடன் தொடர்புள்ள இன்னொன்று தபால், தந்தி தொடர்பு சேவையாகும். அத்துறையில் வீட்லி, பெல், மார்க்கோனி ஆகியோரின் கண்டுபிடிப்புகள் பிரதானமானவை. வீட்லி கம்பிகள் மூலம் கடல்வழி யாகவும் தரை வழியாகவும் செய்திகளை அனுப்பும் முறையைக் கண்டுபிடித்தார். * பெல் ' எ ன் ப வ ர் தொலைபேசி ('Telephone) முறையைக் கண்டுபிடித் தார். அதேசமயம் மார்க்கோனி - கம்பியில்லாமலே செய்திகளை அனுப்பும் முறையைக் கண்டுபிடித்துச் செய்திப் போக்குவரத்தில் ஒரு புரட்சியை உண்டாக் கினார்.
மேற்கூறப்பட்ட புதிய கண்டுபிடிப்புகளைத் தவிர 1.மின்சாரம், தொலைக்காட்சி, பேசும்படம், கதிரியக்கம்
ஆகியனவும் இக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பயிர்ச்செய்கையில் ஏற்பட்ட மாற்றங்கள்.
கைத்தொழிற்புரட்சிதொழில்கள், போக்குவரத்து என்பவற்றைத் தவிரப் பயிர்ச்செய்கையிலும் புகுந்து

Page 24
40
தற்காலச் சரித்திரம்
கொண்டது. குறிப்பாகப் பயிர்ச்செய்கை முறைக ளி லும் விலங்கு வேளாண்மையிலும் பல மாற்றங்கள் ஏற் பட்டன. பயிர்களை வரிசையாக நாற்று நடுதல் மாற் றுப்பயிர்ச் செய்கைமுறை, செயற்கைப்பசளையிடுதல், விதைத்தல், அறுவடை முதலியவற்றுக்கு எந்திரங் களைப் பயன்படுத்துதல் முதலியன பயிர்ச்செய்கையில் புகுந்த மாற்றங்களாகும். அதேசமயம் ஆடு மாடு களை வளர்ப்பதிலும் பேணுவதிலும் அவற்றிலிருந்து ஆகக்கூடிய பயனைப் பெறுவதிலும் புதுமுறைகள் பின் பற்றப்பட்டன . றொபேட்பேக்வால். கொலிங் ஆகி யோர் அத்துறையில் வழிகாட்டிகளாயிருந்தனர்.
இவ்வாறு கைத்தொழிற்புரட்சி பலதுறைகளிலும் பரவிய காலத்தில் பெளதிகம், இரசாயனம், மருத்து வம் முதலிய துறைகளிலும் பல புதிய கண்டுபிடிப்பு களும் முன்னேற்றமும் ஏற்பட்டன.
கைத்தொழிற்புரட்சியினால் ஏற்பட்டபலாபலன்கள். க கைத்தொழிற்புரட்சியின் விளைவாக முற்றிலும் நன்மைகளே ஏற்பட்ட ன எனக் கூறமுடியாது. அத னால் சில தீயவிளைவுகளும் உண்டாகியிருக்கின் றன. அவற்றை இனி நோக்குவோம்.
முதலாவதாகப் பயிர்ச் செய்கையை எ டுத் து க் கொள்வோம். அதில் ஏற்பட்ட முன்னேற்றம் காரண மாக நிலச்சொந்தக்காரர்கள் நீண்டகாலமாக ந.ை பெற்றுவந்த திறந்தவயல் வேளாண்மை முறையைக் க்ைவிட்டுச் சிறு வயல்களை எல்லாம் ஒன்றாக்கிப் பெரிய நிலத்துண்டுகளாக்கி அவற்றுக்கு வேலிகள் போடத் துவங்கினர், இதன்பயனாகத் தமது நிலத்துக்கு உரி மையை நிரூபிக்க முடியாத பலர் பயிர்த்தொழிலைக் கைவிட்டுப் பட்டினங்களுக்குச் சென்று தொழிலாளர் களின் பட்டியலில் சேர்ந்தனர். இதனால் ஒருபுறம் வேலையில்லாத்திண்டாட்டமும் மறுபுறம் வேதனத்தில்
வீழ்ச்சியும் ஏற்பட்டது,

எட்டாந்தரம்
41
இரண்டாவதாக, கைத்தொழிற் புரட்சியின் விளை வாகப் பெரிய ஆலைகளில் பொருட்களைப் பெருவாரி யாக உற்பத்தி செய்யும் முறை தொடங்கியது. இத னால் பொருட்களின் விலை குறைந்தது.) மூன்றாவதாக பெரிய ஆலைகள் தோன்றியவுடன் அவற்றை நிர்வகிக் கும் பணம்படைத்த முதலாளி அவற்றில் வேலை செய் யும் ஏழைத் தொழிலாளர் என இரண்டு புதிய வர்க் கங்கள் உருவாகின. இவ்வர்க்க வேறுபாடு பிற்காலத் தில் வேலை நிறுத்தங்கள் - கதவடைப்பு என்பவற்றைத் தோற்று வித்தன. நான்காவதாக, கைத்தொழில்
• ஆலைகள் நெருக்கமாக உள்ள இடங்கள் நாளடைவில் கைத்தொழிற் பிரதேசங்களாக உருமாறின. அங்கு கிராமப்புற மக்கள் பெருந்தொகையில் நெருக்கமாகக் குடியேறியமையால் அவை பிற் கா ல த் தி ல் கைத்  ெத ா ழி ற் பட்டினங்களாக வளர்ச்சியடைந்தன. அப்பட்டினங்களில் குடியிருப்பு வசதியின்மை இட நெருக்கடி என்பவற்றினால் சேரிகள் உண்டாதல், சுகாதார வசதியின்மையினால் தொற்று நோய்கள் பரவுதல் முதலிய பல தீய விளைவுகள் ஏற்பட்டன.
ஆயினும் கைத்தொழிற் புரட்சியினால் பல நன்மை களும் ஏற்பட்டுள்ளன. முதலாவதாக, பயிர்ச்செய் கையிலும் தொழில்களிலும் ஏற்பட்ட முன்னேற்றத் தின் பயனாக உலகில் அதிகரித்துவரும் மக் க ளு க் கு வேண்டிய உணவு, உடை மற்றும் அத்தியாவசியமான பாவனைப் பொருட்கள் ஆகியன அதிக அளவில் உற் பத்தி செய்யப்பட்டன. அத்துடன் கைத்தொழிலுக்கு வேண்டிய மூலப் பொருட்களும் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டன. இரண்டாவதாக, போக்குவரத்து வசதிகள், தபால் தந்தி தொடர்பு சேவைகள் என் பவற் றில் ஏற் பட்ட முன்னேற்றத்தினால் உலகம் சுருங்கிவிட்டது எனலாம். ஏனெனில் இன்று உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்களும் ஒருவரோடு ஒரு

Page 25
42
தற்காலச் சரித்திரம் வர் எளிதாகத் தொடர்பு கொள்ளவும் ஒரு வ ரை மற்றொருவர் நன்கு விளங்கிக் கொள் ளவும் அ  ைவ உதவியுள்ளன. மூன்றாவதாக, கைத்தொழிற்புரட்சி யின் விளைவாக நகர்ப்புற வாழ்க்கை விருத்தியடைந்த மையினால் மக்களின் நாகரிகம் வளர்ச்சியடைந்தது. அதேசமயம் நாடுகளிடையே வர்த்தகமும் சமூக கலாச் சாரத் தொடர்புகளும் அதிகரித்தன. அன்றியும் கைத் தொழிற் புரட்சியுடன் இணைந்து ஏற்பட்ட விஞ்ஞான வளர்ச்சி, ஆராய்ச்சி என்பவற்றின் விளைவாக இன்று மனிதன் * *விண்ணுலகம்” நோக்கிப் போகவும் விண் வெளியில் பல விந்தைகள் செய்யவும் முடிகிறது.
மேற்குறிப்பிட்டவற்றைத் தவிரக் கைத் தொழிற் புரட்சி வேறு சிலவற்றையும் தோற்றுவித்துள்ளது. இவ்வாறு முதலாளி - தொழிலாளி வர்க்க வேறுபாடு களும், ஆலை முறையான உற்பத்தியும் 'சமஉடைமை' (Socialism) பொது உ ைட  ைம, முதலாளித்துவம் முதலிய தத்துவங்களையும் தொழிற் சங்கங்களையும் தோற்றுவித்தன. றொபேட் ஓவன் என்பவரே தொழிற் சங்க இயக்கத்தின் முன் னோடியாவர். இறு தி ய ா க கைத்தொழிற் புரட் சி பட்டினங்களின் விருத்திக்கு உதவியதன் மூலம் வாக்குரிமை, பிரதிநிதித்துவமுறை, அடிமை முறை முதலியவற்றில் சீர் திருத்தங்கள் உண் டாகவும் உதவியது.
பயிற்சிகள்
கைத்தொழிற் புரட்சியின் பிரதான அமிசங்கள் யாவை ?
நெசவுத் தொழிலில் ஏற்பட்ட மாற்றங்கள் யாவை ? 3, போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டமாற்றங்கள் எவை ?
கைத்தொழிற் புரட்சி பயிர் ச் ெச ய்  ைக  ைய எப்படிப் பாதித்தது ?
கைத்தொழிற் புரட்சியினால் ஏற்பட்ட விளைவுகள் யாவை?

அலகு 5. பிரான்சியப் புரட்சியும் - 12ஐரோப்பியப் போர்களும்.
பாடம் 16, 17,
பிரான்சின் அரசியற் புரட்சி அண்மைக்கால உலக சரித்திரத்தில் ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும். அப் புரட்சி 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட் டது. ஆயினும் அப்புரட்சிக்கான வித்துக்கள் பிரான் சின் பழைய அரசியல் பொருளாதார சமுதாய நிலை மைகளுக்குள் அமைந்திருந்தன. பிரான்சியப்புரட்சிக்கு அடிப்படைக்காரணங்களை 3 ஆக வகுக்கலாம். அவை:-
1. பிரான்சின் சமுதாய அமைப்பு. 2, புதிய கருத்துக்களின் தாக்கம்.. 3. பொருளாதாரச் சீர்குலைவும் சமூக அமைதியின்மையும்
என்பன வாகும்.
பிரான்சின் சமுதாய அமைப்பு. பிரான்சிய சமுதாயத்தில் குடியான வர், பிரபுக் கள், குருவாயம் (குருமார்) என மூன்று பிரிவினர் காணப்பட்டனர். இ வர் க ள் முறையே மூ ன் ற ம > | இரண்டாம், முதலாம் 'எஸ்ரேற்' எ ன் னு ம் பிரிவில் வைத்துக் கணிக்கப்பட்டனர். இப்பிரிவினரில் குடியா னவர்களே தொகையிற் கூடியவர்கள். ஆயினும் குரு மாரும், பிரபுக்களும் பிரான்சின் நி ல த் தி ல் பெரும் பகுதிக்குச் சொந்தக்காரராயிருந்தனர். அ ன் றி யு ம் அவர்கள் குடியானவர்களைவிட அதிக உரிமைகளையும் சலுகைகளை யும் சலாக்கியங்களையும் பெற்று வாழ்ந் தனர். - மே லும் குடியானவர்களே அரசாங்கத்துக்கு அதிகமான வரிகளை யும் அதிக வரியையும் கட்டினர். அதேசமயம் பிரபுக்களும் குருமாரும் வரிச்சலுகைகளைப்

Page 26
44
தற்காலச் சரித்திரம்
பெற்றனர். அன்றியும் குடியானவர்கள் அன் றா ட உணவுக்கே கஷ்டப்படப் பிரபுக்கள் ந க ர ங்,க ளி ல் ஆடம்பரமான சுகபோக வாழ்க்கையை மேற்கொண் டனர். இவ்வாறே குருமாரும் த ம க் கு ரி ய ஒழுக்க நெறியைக் கைவிட்டு உலகவிடயங்களிலும் உல்லாச வாழ்க்கையிலும் ஈடுபட்டனர். இவ்விதமாகப் பிரான் சிய சமுதாயத்தில் ஒப்பின்மை காணப்பட்டது. இது புரட்சிக்கு ஒரு அடிப்படைக் காரணமாகும்.
புதிய கருத்துக்களின் தாக்கம். பிரான்சில் நீண்டகாலம் நிலவிய எதேச்சாதிகார ஆட்சியின் விளைவாகக் குடியானவர்கள் பேச்சுச் சுதந் திரம், எழுத்துச் சுதந்திரம் முதலிய அடிப்படை மனித உரிமைகள் எதுவுமில்லாமலும் தமது சமூகத்தில் நில விய கொடுமைகளை வெளிப்படுத்த வழியறியாமலும் வாயில்லாப்பிள்ளைகள் போல் வாழ்ந்து வந்தனர். அத் தகைய அவல நிலையில் மக்கள் வாழ்வதைக் கண்ட பல அறிவாளிகள் தமது எழுத்துக்களினாலும் பேச்சுக் களினாலும் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத் தினர். அ வர் க ளி ல் வால்டயர், ரூசோ, மொன் ரெஸ்கிய என்பவர்கள் முக்கியமானவர்கள். வால்டயர் தமது வஞ்சப் புகழ்ச்சியான (அங்கத) கவிதைகள், கட்டுரை கள், நாவல்கள் என்பவற்றின் மூலம் குருட்டு மத நம் பிக்கைகளையும் மதகுருமாரின் பிற்போக்கான மனப் பான்மையையும் கண்டித்தார். ரூசோ 'சமூக ஒப்பந்தம்' என்ற நூலில் புரட்சிக்குரிய மந்திரத்தைப் போதித் தார். ''மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான், ஆனால் எங்கும் அவன் சங்கிலியாற் கட்டப்பட்டிருக்கிறான்,'' என்பது அவரதுமணிமொழி, அதேசமயம் மொன்ரெஸ்கியூ எதேச்சாதிகார ஆட்சியின் தீமைகளை எடுத்துக் காட் டினார். இவ்விதமாகப் பிரான்சில் தோன்றிய பல. சிந்தனையாளர்களதும், எழுத்தாளர்களதும் கருத்துக்

எட்டாந்தரம்
45
களினால் பொதுமக்களிடை ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட் டது. அது பின்னர் ஆட்சி முறையையும் சமூக அமைப்பையும் எதிர்க்கும் இயக்கத்தை உருவாக்கியது. அதேசமயம் அமெரிக்க சுதந்திரப் போரின் வெற்றியி னாலும் மக்கள் மனதில் தாமும் ஓர் புரட்சியை ஏற் படுத்தினால் என்ன என்ற துணிவு ஏற்பட்டது.
பொருளாதாரச் சீர்குலைவு. 18 ஆம் நூற்றாண்டில் பிரான்சிய அரசனான 14 அம் யிலூ பல வெளிநாட்டுப் போர்களில் ஈடுபட்டத னாலும் ஆடம்பரமான வாழ்க்கை நடத்தியபடியாலும் அரசாங்கத்தின் வரு வாய் முழுவதும் வீணாக விரய மாகியது. இதனால் மக்கள்மேல் மீண்டும் மீண்டும் வரியைப்போட்டு வருத்தியபோது அவர்கள் அரசாங் கத்தின் மீது வெறுப்புற்றனர். அந்நிலையில் 14 ஆம் லூயிக்குப்பின் பதவிக்கு வந்த 15 ஆம் லூயியின் காலத் தில் ரேர்கோ (Turgot) என்னும் நிதிமந்திரி குடியான வர்களைப் பாதிக்காத பல நிதிச் சீர்திருத்தங்களைக் கொண்டுவர முயன்றபோதும் பிரபுக்களினதும் குரு மாரினதும் எதிர்ப்பினால் அவன் அவற்றைக் கைவிட் டான். அவனுக்குப்பின்னர் நெக்கர், கலோன் ஆகியோர் மேற்கொண்ட சீர்திருத்தங்களும் அவ்விதமே கைவிடப் பட்டன. அந்நிலையில் பணத்தைப்பெற வழியறியாது 16-ம்லூயிமன்னன் தவித்த வேளை அவனது நிதி மந்திரியாயிருந்த நெக்கர் 175 வருடங்களாகக் கூடப் படாதிருந்த ஸ்ரேற்ஸ் ஜெனறல் என்னும் பிரான் சி ய பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு அரச னுக்கு ஆலோசனை கூறினான். ஸ்ரேற்ஸ் ஜெனரல் கூட்டப்பட்டது பிரான்சியப் புரட்சிக்கு அறிகுறியா கியது.

Page 27
46
தற்காலச் சரித்திரம் புரட்சியின் ஆரம்பமும் அதன் போக்கு ம்.
1789 ஆம் ஆண்டு ஸ்ரேற்ஸ் ஜென ரல் கூ டி ய போது சபையின் உறுப்பினர்களாகிய பிரபுக்கள், குரு மார், கு டியானவர் ஆகியோர் தனித்தனி கூடுவ தா அல்லது ஒன் றகக் கூடுவ தா என்ற பிரச்சினை எழுந் தது . எல்லோரும் ஒன்றாகக் கூடுவன தக் குடியான வர் விரும்பியபோதும் ஏனையோர் எதிர்த்தனர். இதனால் 6 வாரகாலம் இப்பிரச்சினை தீர்க்கப்படாமலிருந்தது. இதன் மேல் குடியானவர்கள் 'தேசிய சபை' எனத் தமக் , குப் பெயர் சூட்டிக்கொண்டு தம்மைக் கலந்தாலோசி யாமல் நாட்டில் வரி விதிக்கக்கூடாது எனத் தெரியப் படுத்தினர். இதனால் ஆத்திரம் கொண்ட மன்னன் அவர்கள் அடுத்தமுறை கூடவிருந்ததினத்தில் கூட்ட மண்டபக் கதவுகளைப் பூட்டி விட்டான். உடன் குடி யானவர்கள் அருகிலிருந்த ரென் னிஸ் மைதானத்துக் குச் சென்று நாட்டுக்கு ஒரு புதிய அரசியல் திட் டத்தை வகுக்காமல் தாம் பிரிவதில்லை எனச் சத்தியம் செய்தனர். இது ரென்னிஸ் மைதாச்ை சத்தியம் எனப்படும். இதற்குப் பின்னர் அரசனுக்கும் 'தேசிய சபை' என் னும் பொதுமக்கள் சபைக்குமிடையில் நெருக்கடி. ஏற் பட்டது. இதனால் அரசன் வேர்செயில்ஸ் மாளிகைப் பகுதியில் இராணுவத்தை நிறுத்தினான். அடுத்து அவன் பொதுமக்களின் ஆதரவைப் பெற்றிருந்த நெக்கர் என்ற மந்திரியையும் பதவியிலிருந்து நீக்கினான். இச் செயல் கள் பாரிஸ் நகரப் பாமரசனங்களின் ஆத்திரத்தைக் கிளறி விட்டன. அந்நிலையில் அவர்கள் ஒரு பத்திரி கையாளரின் தூண்டுதலினால் படைக்கலங்களைச் சேகரித்துச் சென்று பஸ் தீல் என்னும் பழைய சிறைச் சாலையைத் தாக்கினர். அதுவே புரட்சியின் தொடக்க மாகும்.
பஸ் தில் சிறைச்சாலை தகர்க்கப்பட்ட பின் னர் ஆவேசமுற்ற மக்கள் பிரபுக்களின் மாட மாளிகைகளை

எட்டாந்தரம்
47
எரித்தும் சொத்துக்களைச் சூறையாடியும் நாசவேலை களில் ஈடுபட்டனர். (இவ்வாறு புரட்சியினால் நாடு முழுவ தும் அல்லோல கல்லோலப்பட்டபோது புரட்சிக் காரர்களின் தேசியசபை கூடிப் பழைய இராசகாரிய முறையையும் ஏனைய மானிய கால ஒழுங்குகளையும் நீக்கிவிட்டு 1789 ஆகஸ்ட் 4 இல் மனித உரிமைப் பிரகடனம் ஒன்றை விடுத்தது. அப்பிரகடனம் மக்கள் சுதந் திரம், பாதுகாப்பு ஆகியவற்றைப்பெற உரிமையுடையவர் - ளென்றும் அதிகாரம் மக்களிடமிருந்தே பிறப்பதாக வும் தெரிவித்தது. இதன்மேல் தேசிய சபை ஒரு புதிய அரசியற்றிட்டத்தைப் பிரகடனம் செய்ததோடு ம த பீடத்தின் சொத்துக்களை அரசாங்கத்தின் உடமையாக் கியது. இதன் மேல் அரசன் பிரான்சை விட்டுத் தப்பி யோட முயற்சித்தபோது வ ழி யி ல் பிடிக்கப்பட்டுப் புதிய அரசியல் திட்டத்தை ஏற்கும்படி பலாத்காரப் படுத்தப்பட்டான்.
இது இவ்வாறாக, புதிய அரசியல் திட்டத்தின் படி அமைக்கப்பட்ட சட்டசபை 1791 இல் கூடியது. அவ்வேளை அதன் அங்கத்தினர்கள் மூன்று விதமான கருத்துக்களை யுடையவராகக் காணப்பட்டனர். அவர் களில் ஒரு பிரிவினர் அரசியற்றிட்டத்தை ஆதரித் தனர். அ  ேத ச ம ய ம் குடியரசு முறையை இன் னொரு பிரிவினர் விரும்பினர். அவர்கள் ஸ்ரோன்டின்ஸ் (ஆவர் மேற்கூறப்பட்ட இரு பிரிவினருக்குமிடையில் மிதவாதிகள் காணப்பட்டனர். இவர்களில் “ஸ்ரோண் டின்ஸ்' தீவிரவாதிகளாயிருந்தனர். அவ்வேளை பிரான் சியப் புரட்சியினால் பாதிக்கப்பட்ட அரசன் மீது அனுதாபம் கொண்ட ஆள் திரிய பிறசிய அரசர்கள் பிரான்சின் மீது படையெடுக்கத் துணிந்தனர். ஆனால் அதற்குள் பிரான்சியப்புரட்சிக்காரரே ஆஸ் திரியா மீது போர் தொடுத்து விட்டனர். இவ்வாறு தொடங்கிய போரில் முற்பகுதியில் பிரான்ஸ் தோல்வியடைந்தது . அப்போது அரசன் ஆஸ்திரியருக்கு இர க சி ய மா க

Page 28
48
தற்காலச் சரித்திரம்
உதவி செய்வதாகச் சந்தேகிக்கப்பட்டுச் சிறையிலிடப் பட்டான். அத்துடன் அரசாங்கம் தான் சந்தேகித் தோர் எல்லோரையும் குறுகிய விசாரணையின் பின் னர் படுகொலை செய்வித்தது. இது செப்ரம்பர் படுகொலை எனப்படும். இதன் பின்னர் யாக்கோபின்ஸ் என்னும் குழுவினரின் தூண்டுதலால் பிரான்ஸ் ஒரு குடியர சாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. பின்னர் அரசன் மீது சந்தேகம் கொண்ட ய ா க்  ெகா பி ன் குழுவினர் அவனை 'கிலொற்றின்' என்னும் கருவியால் கொல் வித்தனர்.
இவ்வாறு அரசன் சிரச்சேதம் செய்யப்பட்ட பின்னர் யாக்கோபின் குழுவினரின் கை ஓங்கியது. அவர்கள் பாதுகாப்புக் குழு என ஒன்றை நிறுவி அதன் மூலம் சந்தேகத்துக்குரியவர்களை யெல்லாம் கொல் வித்து பயங்கர ஆட்சி செய்தனர். இக்காலத்தில் றோப்ஸ்பியர், டான்ரன், மாரத் ஆகியோர் பயங்கர ஆட்சிக் குப் பொறுப்பாயிருந்தனர்.
றோப்ஸ்பியர்

எட்டாந்தரம்
4 9
இ 5 5 2
இ 8 ஓ அ 3
ந . 5
9 இ பி பி 5 5 3 t 2 2 2 2 இ ?
இம் & தேசி -
அ, ஆ இ 8 9 ஐகல் டி (தெ)
க.துப்பு -கல்" 14
- 2 கமோமமல்ல
ரூசோவும்,
வால்ரயரும்.
ஆயினும் அவர்களிடையே பகைமை ஏற்பட்ட தனால் றோப்ஸ்பியர், முதலில் டான்ரன் , ஹேர்பட் ஆகியோரைக் கொல்வித் தான் ஆயினும் அவனது பயங்கர ஆட்சி நீடிக்கவில்லை. அவனும் அவனது ஆதரவாளர்களும் எதிரிகளினால் 1794 இல் சிரச்சேதம் செய்யப்பட்டார்கள். இதன் மேல் பயங்கர ஆட்சி முடி வடைந்தது. இவ்வாறாகப் பயங்கர ஆட்சி தொடங் குவதற்கு முன்னரேயே பிரான்ஸ் இங்கிலாந்துடன் போர்தொடுத்திருந்தது. பின்னர் ஒல்லாந்து, பிறசியா, ஸ்பெயின் ஆகியனவும் பிரான் சுக்கு எதிராகப் போரிட் டன . ஆயினும் கார் னொட், பிச்சேறு, ஹோச் முதலிய திறமையும் தீரமும் மிக்க படைத்தலைவர்களின் கீழ் பிரான்சியப்படைகள் 'லா மார்சேல்' என்னும் போர்க் கீதத்தைப் பாடிக்கொண்டு அணிவகுத்துச் சென்று வீராவேசத்துடன் போரிட்டன. அக்காலத்தில் பிரான் சியப்படைகள் ஒல்லாந்துக்குள்புகுந்து பற்றே வியக் குடியரசு

Page 29
50
தற்காலச் சரித்திரம்
என்னும் பெயரில் புதிய அரசாங்கத்தை நிறுவின. அச் சமயம் ஒல்லாந்த அரசனாயிருந்த ஸ்ராற் ஹோல்டர் இங் கிலாந்துக்குத் தப்பியோடினான். இவ்விதமாகப் பிரான் சியப் படைகள் தமது நாட்டு எல்லைகளுக்கு வெளியில் ஈட்டிய வெற்றிகளைத் தொடர்ந்து பிறசியா , ஒல்லாந்து, ஸ்பெயின் ஆகியன பிரான்சுடன் போரிடுவதை நிறுத் திவிட்டன.
இதற்குப்பின்னர் டிரெக்ரறி என்னும் இயக்குநர் குழு ஒன்று பிரான்சின் ஆட்சிக்குப் பொறுப்பேற்றது. ஆயினும் அதன் போக்கில் வெறுப்புற்றவர்கள் ஒரு கலகத்தை உண்டாக்கியபோது நெப்போலியன் என்னும் பீரங்கிப் படைத்தலைவன் அதை நசுக்கிப் புகழ் பெற் றான். இதன் பின்னர் அவன் படிப்படியாக முன்னேறி இறுதியில் பிரான்சின் சக்கரவர்த்தியாகினான். அவனது எழுச்சியையும் வீழ்ச்சியையும் பற்றி அடுத்த பாடத் தில் படிப்போம்.
2.
பயிற்சி. பிரான்சியப் புரட்சிக்கு அடிப்படைக்காரணங்கள் எவை?
பிரான்சின் சமுதாய அமைப்பு எப்படியிருந்தது ? 3; வால்டயர், ரூசோ, மொன் ரெஸ்கியூ என்பவர்களைப்
பற்றி யாது அறிவீர் ?
ஸ்ரேற்ஸ் ஜெனரல் கூட்டப்பட்டதேன் ? 5. "செப்ரம்பர் படுகொலை பயங்கர ஆட்சி என்பவற்றைப்
பற்றிச் சிறு குறிப்பு எழுது க. 63 றோப்ஸ் பியரைப்பற்றி யாது அறிவீர் ?
4.

எட்டாந்தரம் நெப்போலியன் பாடம் 18, 19.
நெப்போலியன் 1769 இல் கோ சிக்காத் தீவில் ஒரு சட்ட வாதியின் மகனாகப் பிறந்தான். அவன் பிரான் சிலுள்ள இராணுவ கல்விக்கூடத்தில் கல்வி கற்றுப் பீரங்கிப் படையில் சேர்ந்தான். பின்னர் 'டி றெக்ரரி' யின் ஆட்சிக்காலத்தில் ஒரு கலகத்தை அட க் கி ய தனால் ஜெனரல்' பதவிக்கு உயர்த்தப்பட்டான். இதற் குப் பின்னர் 1796 இல் இத்தாலியில் நிகழ்ந்த ஆஸ் திரியப் போரில் அவன் பிரான்சிய படைத்தளபதியாக நியமிக்கப்பட்டான்.
நெப்போலியன் இத்தாலியப் போர்களில் பெரும் வெற்றியீட்டினான். அவன் அல்ப்ஸ் மலைகளுக்கூடாகப் படைகளைக் கொண்டுசென்று சாட்னியாவைத் தோற் கடித்துச் சவோய் நீஸ் என்னும் மாகாணங்களைப் பிரான் சின் உடைமையாக்கினான். பின்னர் 'லோடிறி லொலிப்" போர்களில் ஆஸ்திரியரைத் தோற்கடித்து லொம்பாடி முழுவதையும் கைப்பற்றினான். அடுத்துப் பாப்பரசைப் பணியச் செய்து அவிக்னான் பகுதியைப் பிரான்சுடன் சேர்த்துக்கொண்டான். இவ்வாறு அவன் பெற் ற வெற்றிகளைக் கண்டு பாமா, மொடேனா என்னும் அரசுகளின் தலைவர்கள் அ வ னுடன் சமாதானம் செய்து கொண்டனர். நெப்போலியன் ஆஸ் திரியரை அல்ப்ஸ் மலைக்கு அப்பால் துரத்திவிட்டு அவர்களுடன் காம்போ போமியோ உடன்படிக்கை செய்து கொண்டான். அதன் பயனாகப் பிரான் ஸ் றைன்நதியைக் கிழக்கு எல்லையாகப் பெற்று விரிவடைந்தது.
இவ் வாறு இத்தாலியப் போர்களில் வெ ற் றி பெற்றபின்னர் நெப்போலியன் ஆங்கிலேயரின் வலி யைத் தொலைக்க எண்ணி அவர்களின் ஆட் சி யின் கீழிருந்த! எ கி ப் தி ன் மீ து படையெடுத்துப் 'பிரமிட்'

Page 30
52
தற்காலச் சரித்திரம்
நெப்போலியன்.
போரில் அவர்களைத் தோற்கடித்தான். ஆ யி னு ம் அவன் அங்கு நின்றகாலத்தில் நெல்சன் என்னும் ஆங்கி லேயப் கடற்படைத் தலைவன் அபுக்கீர் குடா என்னும் பகு தியில் தங்கியிருந்த நெப்போலியனது கடற்படையை அழித்துவிட்டான். அந்நிலையில் நெப்போலியன் சிரியா மீது படையெடுத்தான். ஆயினும் சிட்னி சிமித் என் னும் ஆங்கிலேய தளபதியின் பாதுகாப்பினால் அவன் 'ஏக்கர்' நகரைக் கைப்பற்ற முடியாமல் போயிற்று. எனவே அவ்வேளை இரசியா, ஆஸ்திரியா மு த லி ய நாடுகளினால் பிரான்சுக்கு ஆபத்து வந்து ள் ள  ைத அவன் அ றி ந் து கிழக்குப் போர்களைக் கைவிட்டுப் பிரான்சுக்குத் திரும்பினான்.
நெப்போலியன் பிரான்சுக்குத் திரும்பியபோது மக்களால் ஒரு தேசிய வீரனாக வரவேற்கப்பட்டான்.

53
எட்டாந்தரம் அவன் பெற்ற வெற்றிகள் அவர்களைக் குதூகலிக்கச் செய்தன. இதன் பின்னர் அவன் : பிரான்சில் ஆட்சி செய்த டிறெக்ர றியை நீக்குவதில் வெற்றி பெற்று மூ வரைக் கொண்ட கொன்சூலேற் என்னும் குழுவை ஆட்சிக்குப் பொறுப்பாக்கித்தானே அதில் முதலாவது கொன்சல் (அதிகாரி) ஆகினான். முதலாவது கொன் சல் ஆகிய பின்னர் நெப்போலியன் தானே முன் னின்று பிரான்சின் ஆட்சியை நடத்தினான். அவன் அடுத்து ஆஸ் திரியரை மீண்டும் இத்தாலியில் தோற் கடித்து விட்டு ஆங்கிலேயருக்கு எதிராகத் திரும்பி
• னான். ஆயினும் ஆங்கிலேயரும் பிரான்சியரும் அப் பொழுது அமைதியை விரும்பியபடியால் 1802 இல் அவ்விரு நாடுகளும் ஏமியன்சு உடன்படிக்கை செய்து கொண்டன. அதன் பிரகாரம் இங்கிலாந்துதான் ஒல்லாந்தரிடமிருந்து கைப்பற்றிய இலங்கையின் கரை யோர மாகாணங்களைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டது. அதேசமயம் நெப்போலியன் தனது படைகளை எகிப்து, நேப்பிள்ஸ், போத்துக்கல் என்னும் நாடுகளிலிருந்து வெளியேற்றச் சம்மதித்தான். இவ் விதம் ஏமியன்சு உடன்படிக்கையினால் அமைதி ஏற் பட்ட காலத்தில் நெப்போலியன் உள்நாட்டு விடயங் களில் கவனம் செலுத்தினான். அவன் பிரெஞ்சுப் புரட்சியினாலும் பல போர்களினாலும் சீர்குலைந்திருந்த பிரான்சின் பொரு ளாதார சமூகக் கட்டுக்கோப்பைப் பலப்படுத்த முயன்றான்.
நெப்போலியனின் உள்நாட்டுச் சீர்திருத்தங்கள்.
நெப்போலியன் முதலில் மதப்பிரச்சனையில் கவ னம் செலுத்திப் புரட்சிக் காலத்தில் பிரான்சுடன் பகைகொண்ட பாப்பரசருடன் சமாதானம் செய்து கொண்டு றோமன் கத்தோலிக்க சமயத்தைப் பிரான்சு நாட்டின் சமயமாக்கினான். அத்துடன் தன்னால் நிய மிக்கப்படும் பிஷப்புக்களைப் பாப்பரசர் அங்கீகரித்து

Page 31
54
தற்காலச் சரித்திரம்
அவர்களுக்குப் பட்டம் சூட்டுவது எனவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. அடுத்து நீதிவிடயத்தில் கவனம் செ லுத்திய நெப்போலியன் பிரான்சில் நிலவிய” பழை யதும் புதியதுமான சட்டங்களை யெல்லாம் தொகுத்து ஒரு நீதிக்கோவையை (Code) உருவாக்கி அதை நாடு முழுவதும் அமுல் செய்தான். மூன்றாவதாக நெப் போலியன் உள்ளூராட்சியைச் சீர் திருத்தினான். அவன் உள்ளூர் நிர்வாகப் பிரிவுகளின் தலைவர்களின் நிய மனத்தை மத்திய அரசாங்கத்தின் கீழ்க்கொண்டுவந் தான். இதனால் அவர்கள் மத்திய அரசாங்கத்துக்குப் பொறுப்புள்ளவர்களாயினர். அடுத்து நிதிவிடயத்தில் கவனம் செலுத்திய நெப்போலியன் வரிவசூலிக்கும் முறையைத் திருத்தியமைத்தான், அவன் பிரான்சிய வங்கியையும் நிறுவினான். இதன்மேல் நெப்போலியன் கல்வியிலும் கவனம் செலுத்தினான். அவன் நாட்டின் தேவைக்கேற்ப உயர்கல்விக் கூடங்களையும், தொழிற் கல்விக்கூடங்களையும் கட்டினான். பாரிஸ் பல்கலைக் கழகமும் அவனாலேயே நிறுவப்பட்டது .
மேற் கூறப்பட்டவற்றைத்தவிரக் கைத்தொழில், பயிர்ச்செய்கை, வர்த்தகம் முதலியன வளர்ச்சியடை வதற்கு வேண்டிய நடவடிக்கைகளையும் அவன் மேற் கொண்டான். கைத்தொழில் உற் ப த் தி யி ல் பாது காப்புக் கொள்கையைப் பின்பற்றினான். பீ ற் று ச் சீனித்தொழில் முதலியவற்றைத்  ெத ா ட ங் கி னா ன். அதேசமயம் உள்நாட்டு வர்த்தகக் கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டான். மேலும் அவன் பாரிசு நகரில் பல வீதிகளை யும் பாலங்களை யும் கட்டி அதை அலங்கரித் தான். இவ்விதமாக நெப்போலியன் மேற்கொண்ட சீர் திருத்தங்களினால் பிரான்சு நாடு மீண்டும் புத்துயி ரும் பலமும் பெற்றது. இதன்மேல் நெப்போலிய னுக்கு நாட்டில் ஆதரவு அதிகரித்தவேளை சந்தர்ப்பத் தைப் பயன்படுத்தி அவன் 1804 இல் தன்னையே பிரான் சின் சக்கரவர்த்தியாக்கிக்கொண்டான். இதன் பின்னர்

எட்டாந்தரம்
55
அவன் மீண்டும் வெளிநாட்டுப் போர்களில் ஈடுபட வேண்டியிருந்தது. இவ்விதமாகப் பிரித்தானியாவுட னேயே அவன் முதலிற் போர் செய்தான். மோல்ரா தீவைப் பிரித்தானியா பிரான்சுக்குக் கொடுக்கமறுத்த தினால் போர் தொடங்கியது. அப்போரின் போது நெப்போலியன் இங்கிலாந்து மீது படையெடுக்கவும் திட்டமிட்டான். ஆயினும் அது சாத்தியப்படவில்லை. ஏனெனில் அவனது கடற்படையை நெல்சன் என்னும் பிரித்தானிய கடற்படை வீரன் திறபல்கார் என்னுமிடத் தில் தோற்கடித்தான். இதன் மேல் ஆஸ்திரியா, பிற "சியா, இரசியா ஆகியனவும் பிரான்சுக்கு எதிராகத் திரண்டன. அப்போது நெப்போலியன் மின்னல் வேகத் தில் ஒரு படையை அனுப்பி ஆஸ்ரலிற்ஸ் போரில் ஆஸ் திரியப் படைகளைத் தோர்க்கடித்து அந்நாட்டின்பகுதி களை ஒன்றாக்கி றைன் இணைப்பு என்னும் பிரதேசத்தை உருவாக்கித் தனது ஆணையின் கீழ்க்கொண்டுவந்தான். அடுத்து பிறசியாமீது கவனம் செலுத்திய நெப்போலி யன் அந்நாட்டுப்படைகளை லீனா கஸ்ராட் என்னுமிடங் களில் முறியடித்து விட்டுப் பேளின் நகரில் இருந்து
57வார்தோ ஹைண்டச்சி |
இரசியா என்ன கூட்GSஆஸ்திரியா
--- • •
'ஸ்பெயின்
மன்பேரரசு
1810-இல் ஐரோப்பா.

Page 32
56
தற்காலச் சரித்திரம்
பிரசித்தி பெற்ற பேளின் கட்டளைகளை விடுத்தான். அக்கட் டளைகள் ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்துடன் வர்த் தகம் செய்வதைத் தடுத்தன. அதன் மூலம் இங்சிலாந்' தின் வர்த்தகத்தைச் சீரழியச் செய்ய அவன் திட்ட மிட்டான். இவ்வாறு ஐரோப்பிய கண்டத்து நாடுகள் இங்கிலாந்துடன் வர்த்தகம் செய்வதைத் தடுத்தமை யினால் நெப்போலியனது திட்டம் கண்டத்திட்டம் எனவும்
குறிப்பிடப்படும்.
 ேம ற் குறிப்பிட்ட வாறு பிறசியாவை வெ ற் றி கொண்ட பின்னர் நெப்போலியன் இரசியாவுக்குஎதிர் • ராகத்திரும்பி, அதன் படைகளைத் தோற்கடித்துச் சார் மன்னனுடன் ரில்சிற் என்னுமிடத்தில் உடன்படிக்கை செய்து கொண்டான். இதற்குப்பின்னர் நெப்போலியன் ஸ் பெயினில் அரசனுக்கும் அவனது மகனுக்குமிடையில் ஏற்பட்ட அரசுரிமைத் தகராறில் தலையிட்டு அங்கு ஒரு படையை அனுப்பி அந்நாட்டைக் கைப்பற்ற முனைந் தான். ஆயினும் ஸ்பானியரின் தேசிய உணர்ச்சியி னாலும் வெலிங்டன் என்னும் ஆங்கிலேயத் தரைப் படை வீரனின் தீரத்தினாலும் ஸ்பானிய குடாநாட் டுப்போரில் நெப்போலியன் வெற்றி பெறமுடியவில்லை. இது இவ்வாறாக, இரசியா முன்னர் த ன் னு ட ன் செய்து கொண்ட உட ன் படி க் ைக யை மீறுவதை அறிந்த நெப்போலியன் 1812 இல் 400,000 போர் வீரருடன் இரசியா மீது படையெடுத்தான். அவனது படைகளின் வரவை அறிந்த இரசியப்படைகள் பின் வாங்கிச் செல்ல நெப்போலியனது ப டை க ள் முன் னேறி மாஸ்கோ நகரம்வரை சென்றனர். அப்போது குளிர்காலம் ஆரம்பமானபடியால் நெப்போலியனது படைகள் குளிரினாலும் உணவின்மையாலும் பெரி தும் கஷ்டப்பட்டன. அந்நிலையில் அவன் நாடு திரும் புவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. அவ்வாறு அவன் திரும்பி வந்த போது ஏறத்தாழ 21 இலட்சம் போர் வீரரைப் பலிகொடுத்துத் திரும்பினான். அவன்

எட்டாந்தரம்
57
பிரான்சுக்குத் திரும்பிய பின்னரும் நிம்மதியாக இருக்க வில்லை அச்சமயம் பிறசிய, ஆஸ் தி ரி ய, சுவீடிஷ் படைகள் ஒன்று சேர்ந்து லீப்சிக் என்னுமிடத்தில் நடந்த நாடுகளின் போரில் நெப்போலியனைத் தோற் கடித்தன. இதன்பின்னர் அவன் எல்பாத் தீவுக்கு நாடுகடத்தப்பட்டான். ஆயினும் அவன் சிறிது காலத் தின் பின்னர் 1000 போர்வீரருடன் அங்கிருந்து தப் பிப் பிரான்சுக்குத் திரும்பினான். அப்போது மக்கள் அவனை ஆரவாரத்துடன் வரவேற்றனர். பின்னர் .அவன் பிரான்சின் ஆட்சியைக் கைப்பற்றினான். ஆயினும் அவனது ஆட்சி நீடிக்கவில்லை. விரைவில் ஆங்கிலேய பிறசியப் படைகள் பிரான்சின் மேல் படை யெடுத்தன. அப்போது பிறசியப் படைகளை நெப் போலியன் தோற்கடித்தபோதிலும் ஆங்கிலேயப்படை களும் பிறசியப் படைகளும் ஒன்று பட்டு எதிர்த்த போது 1815 இல் வாட்டர்லூ என்னுமிடத்தில் வெலிங்டனால் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டான். இதன்மேல் அவன் சென்ஹெலனாத் தீவுக்கு அனுப்பப்பட்டான். கிருக்கும் காலத்தில் அவன் இறந்தான்.
நெப்போலியன் உலகில் தோன்றிய மாபெரும் போர்வீரர்களில் ஒருவனாவான். அவன் போர்த்திறனும் இராணுவ மேதாவிலாசமும் மிக்கவன். அதே சமயம் அவன் சிறந்த ஒரு ஆட்சியாளனாகவும் தேசப்பற்று மிக்கவனாகவும் திகழ்ந்தான் என்பதில் சந்தேகமில்லை.
நெப்போலியன் நாடு கடத்தப்பட்ட பின் ன ர் ஐரோப்பிய நாடுகள் 1815 இல் வி ய ன் னா" என்னு மிடத்தில் ஒரு மா நாட்டைக் கூட்டின. அதில் ஆஸ் திரிய சான்சலரான மற்றேணிச் என்னும் பிற்போக்கு வாதி முதன்மை வ கி த் த ா ன், வியன்னா மா நாடு பிரான்சியப் போர்களுக்கு முன்னர் ஐரோப்பாவில் நில

Page 33
58
தற்காலச் சரித்திரம் விய நிலைமைகளை நிலை நாட்ட முயன்றது. அ த ன் ) முடிவுகளின்படி பிரான்ஸ் புரட்சிக்கு முன்பிருந்த எல்லைகளைப் பெற்றது. ஜேர்மனியில் இணைப்பாட்சியும் இத்தாலியில் பழைய நிலைமையும் ஏற்பட்டது. அதே சமயம் பெல்ஜியம் ஒல்லாந்துடனும், நோர்வே சுவீட னுடனும் இணைக்கப்பட்டது. அத்துடன் போலந்து மூ ன் றா க ப் பிரிக்கப்பட்டு இரசியாவின் பொறுப்பில் விடப்பட்டது.
இவ்விதமாக வியன்னா மாநாடு தேசிய உணர்ச் சிக்கு மதிப்பளியாமல் மனம்போன போக்கில் கரும் மாற்றியதனால் 1830 இலும் 1848 இலும் பல ஐரோப் பிய நாடுகளில் மீண்டும் புரட்சிகள் ஏற்பட்டன.
பயிற்சிகள்.
1. நெப்போலியன் 'கொன்சல்' ஆகியவரை அ வ ன து
வரலாற்றைக் கூறுக, 2. 'ஏமியன்சு' உடன்படிக்கையில் ஒப்புக்கொள்ளப்பட்
டவை எவை ? நெப்போலியனது உ ள் நாட் டுச் சீர்திருத்தங்களைப்
பற்றிச் சுருக்கமாக எழுதுக 4. சிறுகுறிப்பு எழுதுக:- கண்டத்திட்டம், நாடுகளின் - 1
போர், குடா நாட்டுப்போர்.

பாடம் 20. இந்தியா.
பதினேழாம் நூற்றாண்டில் பிரித்தானியாவும் பிரான்சும் இந்தியாவில் குடியேற்றங்களைத் தாபிப் பதில் ஈடுபட்டதைப்பற்றியும் பதினெட்டாம் நூற்றாண் டில் மொகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் அவை ஏழாண்டுப் போரில் ஈடுபட்டதைப் பற்றியும் அவற்றின் விளைவாக இறுதியில் - பிரித்தானியாவின் ஆதிக்க மே இந்தியாவில் வலுப்பெற்றது என்பதை யும் ஏழாந்தரத்திற் படித்துள்ளீர்களல்லவா ?
ஏழாண்டுப் போரின் பின்னர் 1765 இல் வங்காள நவாப்பான மூர்சித் அலிகான் தனது இராச்சியத்தின் அதிகாரங்களைப் பிரித்தானியரிடம் கையளித்தான். அவனைத் தொடர்ந்து மொகலாய அரசன் வங்காளம், பீகார், ஒறிசா, ஆகிய பிரதேசங்களின் திவானியை (இறை வரி உரிமைப் பிரித்தானியருக்குக் கொடுத்து அதற்குப்பதிலாக உபகாரப்பணம் பெற்றுக் கொண் டான். இவ்வாறு 1766 அளவில் பிரித்தானியரின் ஆதிக்கம் வங்காளத்திலும் கர் நாடகப் பகுதியிலும் நன் கு வேரூன்றியிருந்தது. இதன் பின்னர் 17861848 காலத்தில் பிரித்தானியரின் ஆட்சி மேலும் பல பகுதிகளில் விரிவடைந்தது. 1786 இல் இந்தியாவின் ஆள்பதியாகிய கோண்வாலிஸ் மைசூர் மன்னனாகிய திப்பு சுல்தானுடன் போரிட்டு அவனது இராச்சியத்தில் அரைப் புங்கைத் தன தாக்கினார்.
கோண்வாலிசுக்குப் பின்னர் ஆதர் வெல்லஸ்லி என் பவர் ஆள்பதியாயிருந்த காலத்தில் பிரித்தானியரின் ஆதிக்கம் மேலும் வலுப்பெற்றது. அவர் காலத்தில் தான் நெப்போலியன் எகிப்துமீது படையெடுத்தான். எனவே அவன் அடுத்து இந்தியா மீதும் படையெடுக் கக் கூடும் என அக்காலத்தில் ஒரு பீதி நிலவியது, ஆயினும் நெப்போலியன் எகிப்தியப் போருக்குப்

Page 34
60
தற்காலச் சரித்திரம்
பின்னர் பிரான்சுக்குத் திரும்பியதனால் அப்பீ தி அற் றுப் போனது. இதன் பின்னர் வெல்லஸ்லி படைத்து ணை உடன்படிக்கை என்னும் ஒரு உத்தியைக் கையாண்டு பல இந்திய அரசுகளின் பாலனப் பொறுப்பைப் பிரித்தா னியாவின் கீழ்க் கொண்டு வந்தார். அதன்படி ஒரு அரசின் பாதுகாப்பும் வெளிநாட்டுத் தொடர்புகளும் பிரித்தானியரிடம் விடப்பட்டன. அதே வேளை பாது காப்புக்கான செலவு அரசுகளினால் பிரித்தானியருக்குக் கொடுக்கப்பட்டது. இப்படிப்பட்ட உடன்படிக்கை கள் தஞ்சாவூர், கர் நாடம், பரூகபாத், சூரத் முதலிய அரசுகளுடன் செய்யப்பட்டது. இதன் மேல் வெல் லஸ் லி மைசூர் ம ன் ன னா கி ய திப்புசுல்தானுடன் போரிட்டார். அவ்வேளை பிரான்சியர் அவனுக்கு உதவி செய்தனர். ஆயினும் வெல்லஸ்லி அவனை வென்று அவனுடனும் ஒரு உடன்படிக்கை செய்து கொண் டார். அடுத்து அவர் பலம்மிக்க மராட்டியருடன் போர்செய்து அவர்களின் செல்வாக்கைக் குறைத்தார் பின்னர் ஹைதராபாத், அயோத்தி அரசுகளில் ஆங்கி லேயரின் கட்டுப்பாட்டை அதிகரித்தார். இவ்விதமாக வெல்லஸ்லியின் ஆட்சியின் இறுதியில் பஞ் சாப், காஷ்மீர், சிந்து, அசாம் என்னும் இடங்களைத் தவிர இந்தியாவின் ஏனைய பகுதிகளில் ஆங்கிலேயரின் ஆட்சி பரவியிருந்தது.
வெல்லஸ்லிக்குப் பின்னர் ஆள் ப தி யா கி ய ஹேஸ்ரிங்ஸ் கூர்க்கருடன் போரிட்டு இமயமலையடிவாரப் பகுதியையும், மராத்தியருடன் போரிட்டு அவர்களை முறியடித்து அவர்களின் இராச்சியத்தில் ஒரு பகுதியை யும் கைப்பற்றினார், அவருக்குப் பின்னர் ஆள்பதி அம்ஹேர்ஸ் ஒரு போரின் மூலம் பர்மாவின் வடபகு தியை இந்தியாவுடன் சேர்த்துக் கொண்டார். பின் னர் ஆள்பதி எலன்பறோவின் காலத்தில் சிந்து மாகா ணம் பிரித்தானியரின் ஆட்சியின் கீழ்க் கொண்டு வரப்பட்டது."

எட்டாந்தரம்
61
இவ்வாறு வெல்லஸ்லி கா லமுதல் படிப்படியாக விரிவடைந்து வந்த பிரித்தானிய இந்தியா டல்ஹவுசி (1848-57) காலத்தில் மேலும் விரிவடைந்தது. அவர் 2 ஆம் சீக்கியப் போரின் மூலம் பஞ்சாப் இராச்சி யத்தை இந்தியா வுடன் இணைத்தார். அதேசமயம் பர்மாவுடன் ஒரு போரில் ஈடுபட்டு அதன் மேற்குக் கரைப் பிரதேசம் முழுவதையும் த ம த ா க் கி னார். மேலும் வெல்லஸ்லி காலத்தில் பிரித்தானியரின் படைத்துணையைப் பெற்ற அரசுகளில் 'வாரிசு' இல்லாத போது அவற்றைப் பிரித்தானியரின் ஆட்சியின் கீழ்க் கொண்டு வருவதற்காக '' அரசுகளை இணைத்தல்''
4+.
பிரித்தானியபேரரசின்
படர்ச்சி க 1856
31765
++++ +++ பஞ்சாப் ++ + + 7) 1+ +++ ல + ++/
+ + +
+++.
அயோத்தி
(சிந்து)
-சபீகார்மராந்திய / அரசுகன் + +
-வங்காளம் . + + + + U.'
தில்கத்தா,
* *
* *
பம்பாய் !
ஐதராபாத் +
(மை) ++!
சூர்++ +சென்னை
++ +
திருவாங்க :)
பிரித்தானிய பேரரசின் படர்ச்சி

Page 35
62
தற்காலச் சரித்திரம் (Doctrine of Lapse) என்னும் ஒரு கொள்கையை டல்ஹவுசி வகுத்தார் அக்கொள்கையின் கீழ் 1848 இல் சதாரமும் 1853 ஜான்சியும் பிரித்தானியரின் ஆட்சி யின் கீழ் வந்தன. இதற்குப்பின்னர் அவர் அயோத்தி யில் நிலவிய சீர்கேடான அரசியல் நிலையைச் சாதக மாகக் கொண்டு பலத்த எதிர்ப்புக்கிடையில் அதையும் பிரித்தானியரின் பாலனத்தின் கீழ்க் கொண்டுவந்தார்.
இப்படியாக, 1857 அளவில் வடக்கே இமயம் முதல் தெற்கே குமரிவரையும் கிழக்கே றங்கூன் முதல் மேற்கே கராச்சி வரையும் விரிந்து பரந்த பிரதேசம் பிரித்தானியரின் ஆட்சியின்கீழ் அடங்கியிருந்தது. அப் பிரதேசத்தில் கற்பாதைகள் இருப்புப்பாதைகள் என்ப வற்றை அமைத்தும், தபால் தந்திப் போக்குவரத்து முறையை ஏற்படுத்தியும் ஆங்கிலேயர் தமது ஆதிக் கத்தைப் பலப்படுத்திக் கொண்டிருந்தனர். அவ்வேளை சற்றும் எதிர்பாராதபடி 1857 இல் ஆங்கிலேயருக் கெதிராக ஒரு கலகம் ஏற்பட்டது. அதுவே சிப்பாய்க் கலகமாகும். அதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றைப் பின் வருமாறு தொகுத்துக் கூறலாம் -'
Y, டல்ஹவுசி பின்பற்றிய அர சுகளை இணைக்கும் கொள்கை
யினால் நாட்டில் அதிருப்தி ஏற்பட்டிருந்தமை. 2. அரசாங்கத்துக்கும் பொது மக்களுக்குமிடையில் நேசமனப்
பான்மை நிலவாமை. படைவீரர் கடல்கடந்து வெளி நாடுகளுக்குச் சென் று போர் புரியவேண்டும் என ஆள்பதி 'கானிங்'' விடுத்த கட்டளையினால் வங்காளத்தைச் சேர்ந்த உயர்சா திப் படை வீரர் ஆத்திரமடைந்தமை.
அயோத்தி அரசை டல்ஹவுசி ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ்க்கொண்டு வந்ததினால் அந்நாட்டுப் படைவீரரிடையே
அமைதியின்மையும் ஒழுங்கீனமும் காணப்பட்டமை. 5. பிரித்தானியரின் கல்விக் கொள்கையும், விதவைகளின்
மறுமண அங்கீகாரம், உடன்கட்டை ஏறல் ஒழிப்பு, சாதி வேற்றுமை பாராட்டாமை முதலியனவும் இந்துக்களி

எட்டாந்தரம்
63
டையே ஆட்சிக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்தியிருந்
தமை. 6. நிலவரியின் அதிகரிப்பும், பழைய கைத் தொழில் களின்
வீழ்ச்சியும் மக்களிடையே அரசாங்க எதிர்ப்புணர்ச்சியை
ஏற்படுத்தியமை. 7, 1757 பிரான்சியப் போரின் பின்னர் 100 ஆண்டுகளில்
(1857) பிரித் தானியரின் ஆட்சி முடிவடையும் என மக்க ளிடையே ஒரு குருட்டு நம்பிக்கை நிலவியமை என்பன வாகும்.
மேற் கூறப்பட்ட காரணங்களினால் ஆங்கிலேய > ருக்கும் இந்தியப் பொதுமக்கள், படைவீரர் ஆகியோ ருக்குமிடையில்  ெவ று ப் பு ம் பகைமையும் ஏற்பட் டிருந்த காலத்தில் 1857 இல் படை வீரருக்கு வழங்கப் பட்ட என்பீல்ட் துப்பாக்கிகளின் தோட்டாக்களில் பன்றி, பசு ஆகியவற்றின் கொழுப்பு பூசப்பட்டிருப் பதாக ஒரு வதந்தி பரவியது. உடன் இந்து, முஸ் லிம் படைவீரரிடையே அமைதியின்மை ஏற்பட்டது. பசுவின் கொழுப்பு பூசப்பட்டிருக்கிறது என்ற செய்தி இந்துப் படைவீரரின் மனத்தைப் புண்படுத்தியது. அதேசமயம் பன்றிக்கொழுப்புப் பூசப்பட்ட செய்தி முஸ்லிம் படைவீரரின் ஆத்திரத்தைக் கி ள றி ய து. அந்நிலையில் மீ ர த் என்னுமிடத்தில் தங்கியிருந்த படைவீரர் புதிய தோட்டாக்களைப் பயன்படுத்த மறுத் துக் குளப்பம் செய்ததிலிருந்து 1857 ஆம் ஆண்டு கலகம் தொடங்கியது.
1857 கலவரம் பிரித்தானியருக்கெதிராக மேற் கொள்ளப்பட்ட ஒரு முக்கியமான கலகமாகும். பிரித் தானியரின் ஆட்சியை ஒழிப்பதே அதன் நோக்கமா கும். ஆயினும் அது வட இந்தியாவுடன் நின்றுவிட் டது. அங்கு ஜான்சி நாட்டு இராணி, அயோத்தி அரசனின் உரிமையையிழந்த நானாசாகிப் ஆகியோர் தலைமையில் பிரித்தானியருக்கெதிராக மக்கள் வன் செயல்களில் ஈடுபட்டனர். ஆயினும்
பொதுமக்கள் பெருமளவில் பங்கு பற்றாததினாலும் திட்டமெதுவு

Page 36
64
தற்காலச் சரித்திரம் மின்றிக் கி ள ர்ச் சி மேற் கொள்ளப்பட்டதினாலும் ) பம்பாய், சென்னை, சிந்து, பஞ்சாப் முதலிய ப63 பகுதி கள் கலவரத்தில் பங்கு பற்றாததினா லும் 1858 சிப் பாய்க் கலகம் தோல்வியாக முடிந்தது.
1857 கலவரங்கள் 185 வரை நீடித்தன. அவற்றை அடக்கிய பின்னர் பிரித்தானியா இந்தியாவின் ஆட்சி விடயத்தில் சிலமாற்றங்களைப் புகுத்தியது. இவ்வாறு 1858 இல் நிறைவேற்றப்பட்ட 'இந்தியச் சட்டம்' அதுவரை நிலவிய " இரட்டை ஆட்சியை'' முடிவுக் குக் கொண்டுவந்தது. அதன் விளைவாக இந்தியா கிழக்கிந்திய வர்த்தக சங்கத்தின் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு இங்கிலாந்து அரசாங்கத்தின் நேரடியான கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதன் பின்னர் ஆள்பதிக்குப் பதிலாக அ ர ச ப் பிர தி நி தி (Viceroy) என்பவர் இந்தியாவின் ஆட்சியை நடத் தினார். அதே சமயம் இங்கிலாந்தில் இந்திய நாட் டுச் செயலாளர் (Secretary of State for India) என்ப வர் இந்திய விடயங்களுக்குப் பொறுப்புள்ளவராக நியமிக்கப்பட்டார். இவ்வாறு இங்கிலாந்தின் நேரடி யான ஆட்சியின் கீழ் வந்ததிலிருந்து இந்தியா பல துறைகளிலும் படிப்படியாக முன்னேற்றமடை ந்தது .
பற்சிகள்.
1. படைத்துணை உடன்படிக்கை என்பது யாது ?'
மராத்தியர்களை முறியடித்தவர் யார் ? 3, இந்திய அரசுகளைப் பிரித்தானியரின் ஆட்சியின் கீழ்க்
கொண்டுவர டல்ஹவுசி கையாண்ட வழியாது ! 4. 1857 இல் சிப்பாய்கள் ஆங்கிலேயருக் கெதிராகக்
கலகம் செய்ததேன் ? 5. அக்கலகம் தோல்வியடையக்காரணங்கள் யாவை ?
8. - அக்கலகத்தின் விளைவுகள் எவை ?

முதலாந் தவணை. மாதிரி வினாப்பத்திரம்.
5.
4. பின்வரும் வாக்கியங்களை அடைப்புக்குறிக்குள்ளிருப்பவற்றில்
பொருத்தமானவற்றைத் தெரிந்து பொருத்தி அமைக்குக, 1. ஸ்ரீ விக்கிரமராசசிங்கன் (நாயக்க, கலிங்க, பாண்டிய)
வமிசத்தவன் நாயக்க அரசர்கள் சிங்களப்பிரதானிகளை (மதித்தனர்,
புறக்கணித்தனர்.) 3, ஏமியன்சு உடன்படிக்கை (1802 இல், 1798இல் 1902-இல்)
செய்யப்பட்டது. இரட்டை ஆட்சி (நோத், டிமியூறன், மெயிற்லந்து) காலத் தில் நடந்தது. நோத் இராசகாரியமுறையைபுனரமைத்தார் , ஒளித்தார்) முதற்கண்டிப்போர் (1803 இல், 1802 இல், 1805 இல் இடம்பெற்றது. பிலிமத்தலாவை விக்கிரமராசசிங்கனின் முதல் (அதிகாரி,
மந்திரி.) 8. இரண்டாம் கண்டிப்போர் (1815 இல், 1814 இல்) நடந்தது. 9. கெப்பிற்றிப்பொலை (ஊவா, வெல்ல) பகுதியின் திசாவை
யாயிருந்தான். 10.
கோல்புறூக் - கமிறன் குழுவினர் ஆங்கிலக் கல்வியை
(எதிர்த்தனர், ஆதரித்தனர் ) 11.
கோல்புறூக் - கமிறன் குழுவினரின் சிபார்சுகளின் பின்
மாகாணங்களின் தொகை (குறைந்தது, கூடியது . ) 12. 1848 கல கம் (ரொறிங்ரன், டேவி) காலத்தில் ஏற்பட்டது 13. புகையிரத எந்திரத்தைக் கண்டுபிடித்தவர் (ஜேம்ஸ்வாட்,
ஜோர்ஜ்ஸ்ரீவன்சன் ) 14. டெயிம்லர் (நீராவி எந்திரத்தை, மோட்டார் எந்திரத்
தைக்) கண்டுபிடித்தார். 2 5, ஸ்ரேற்ஸ் ஜெனறல் என்பது ஒரு (சபை, பாராளுமன்
றம், நீதிமன்றம் ) 46. வால்ரயர் ஒரு (பிரான் சிய, பிரித் தானிய) தத்துவஞானி.

Page 37
66
தற்காலச் சரித்திரம்
17.
நெப்போலியன் பிறந்தது (சாடீனியா, கோசிக்கா) தீவி
லாகும். 18
வாட்டர்லூப் போரில் நெப்போலியன் (தோல்வி, வெற்றி)
பெற்றான். 19.
சிப்பாய்க்கலகம் (1857 இல், 1781 இல், 1787 இல்)
தொடங்கியது. 20. மற்றேனிச் என்பவர் - (பிறசியாவின், ஆஸ்திரியாவின்)
சான்சலராவர் )
II. பின்வரும் வாக்கியங்களில் 'அ' பிரி விலுள்ளவற்றை 'ஆ'
பிரிவிலுள்ளவற்றில் பொருத்தமானவற்றுடன் இ ணை த் து எழுதுக :-
'அ'
2.
1: லான் றாட்ஸ் என்பன.
ஆங்கிலேயருக் கெதிரான முதற் கலகம். 3. மெயிற்லாந்து காலத்தில். 4. சிவில் சேவை;
படைத்துணை உடன்படிக்கையைச் செய்தவர். 6. மத்துமபண்டா என்பவன், "") 7. கோல்புறூக் குழுவினர். 3. 1488 கலகங்களுக்கு உடன்காரணம்.!
ஆள்பதிவாட் காலத்தில். 10. மார்க்கோனி என்னும் இத்தாலியர் )
'ஆ'
1. நோத் காலத்தில் தொடங்கப்பட்டது: 2. வெல்லஸ்லி என்னும் ஆள்பதியாகும். 3. எகலப்பொலையின் மகனாவான்.
கம்பியில்லாத் தந்தியைக் கண்டுபிடித்தார். 5. இராசகாரியம் மீண்டும் தொடங்கப்பட்டது. 6. 'கம் சபாக்கள்' புனரமைக்கப்பட்டன. 7. துவக்கு வரியாகும்; 8. ஆள்பதியின் அதிகாரங்களைக் குறைத்தனர்; 9. ஒல்லாந்தர் கால நீதிமன்றங்களாகும். 10. 1797 இல் ஏற்பட்டது.

மாதிரி வினாப்பத்திரம் |
67
III. பின் வருவனவற்றில் சரியான வற்றைச் சரி எனவும் பிழையா
னவற்றைப் பிழை எனவும் எழுதுக.
'அ'
2.
1. பெல்.
மக்கடம், ரெல்போட் ஆகியோர். 3. 14 ஆம் லூயி. 4. ரூசோ என்பவர். 5. 'நெக்கர்' 6. டல்ஹவுசியின் காலத்தில். 7. கைத் தொழிற்புரட்சியின் விளை வால். 8. 'பஸ்ரீல்' என்பது. 9. மராட்டியரின் பலத்தை வேரோடு களைந்த வர். 10. 1815 இல் நெப்போலியன் -
• ஆ'
தொலைபேசியைக் கண்டு பிடித்தார் : பயிர்ச்செய்கையில் புதுமுறைகளைப் பின்பற்றினர். "%, 3. அதிகமான போர் களில் ஈடுபட்டான். ) 4. பயங்கர ஆட்சியை உண்டாக்கினான். 5. 16 ஆம் லூயிகாலத்தில் பதவியிலிருந்து நீக்கப்பட்டான். 6. பிரித்தானியரின் செல்வாக்கு இந்தியாவில் கூடியது;
பட்டினங்கள் விருத்தியடைந்தன. 8. பிரான்சிய சிறைக்கூடமாகும். 9. 'ஹேஸ்டிங்ஸ்' ஆகும். 80. எல்பாத்தீவுக்கு அனுப்பப்பட்டான்.
49. பின்வருவனவற்றில் இரண்டு சரித்திரத் தொடர்புடையவை;
தொடர்பில்லாதவற்றைத் தனியாக எழுதுக. 1. காங்கல கொட பண்டா; 1848; துரைச்சாமி, 2. ஹெட்ஜி மரைக்கார், வெல்லச; ஊ வா. 3. பிலிமத்தலாவை, மொலிகொடை, எகெலப்பொலை. 4. கம்சபா; பிறவுன் றிக், வாட். 5,
ஹார்கிறிவ்ஸ் ; ஜென்னி; மியூல்.

Page 38
68
தற்காலச் சரித்திரம்
6. பெல், தொலைபேசி, மாக்கோனி. 7. முடிக்குரிய குடியேற்ற நாடு; 1802; 1796. 8. ரொறிங்டன், அண்டர்சன், பிளேக். 9. கிறகரி, காலவீ வா, றொபின் சன். 10. மைசூர்: நானாசாகிப், திப்புசுல்தான்.
V. சுருக்கமான விடை தருக:
4.
1, நோத் கண்டிமீது படையெடுத்ததற்குக் காரணங்கள்
யாவை ? 2. அவரது படையெடுப்பு ஏன் தோல்வியில் முடிந்தது ?
இராசகாரியத்தை ஒழிக்குமாறு கோல்புறாக் குழுவினர் சிபார்சு செய்ததேன் ? நாயக்க வமிச அரசர் காலத்தில் அரண் மனையில் ஏற்பட்ட
மாற்றங்கள் யாவை ? 5. 1815 ஆம் ஆண்டுக் கண்டிய உடன்படிக்கையின் 44 அமிசங்
களைக் கூறுக. 6. 1848 கலகத்துக்கு 5 காரணங்கள் கூறுக. 7. தோமஸ் மெயிற்லந்தின் சீர் திருத்தங்களைப்பற்றி யாது
அறிவீர் ? 8, கைத்தொழிற் புரட்சியினால் ஏற்பட்ட 3 நன்மைகளையும்
3 தீமைகளையும் கூறுக• 9: 1818 கலகங்கள் தோல்வியடைந்தமைக்கு 4 காரணங்கள்
தருக. 10, 1857 சிப்பாய்க் கலகங்களுக்கு 3 காரணங்கள் கூறுக.

இரண்டாந் தவணை.
அலகு 6. எம்நாட்டின் பொருளாதார அபிவிருத்தி
பாடம் 1. கோப்பிச் செய்கையின் விருத்தி. பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து கறுவா இலங் 'கையின் வெளிநாட்டு வர்த்தகத்தில் பிரதான இடம் வகித்து வந்தது . அது ஐரோப்பியரால் அதிக விலை கொடுத்து விரும்பி வாங்கப்பட்டதனால் போத்துக்கீச ரும் அவர்களைத் தொடர்ந்து ஒல்லாந்தரும் கறுவாச் செய்கையிலும் வர்த்தகத்திலும் அதிக கவனம் செலுத் தினர்.குறிப்பாக ஒல்லாந்தரின் காலத்தில் சிலாபம் முதல் மாத்தறை வரையுள்ள கரையோரப்பகுதியிற் காணப்படும் மணற்பாங்கான நிலத்தில் க று வ ா த் தோட்டங்கள் விருத்தி செய்யப்பட்டன. அக்காலத் தில் கறுவா வர்த்தகம் ஒல்லாந்தரின் ஏ க போக உரிமையாயிருந்தது. பின்னர் பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் 1830 வரை கறுவா வர்த்தகம் அரசாங்கத் தின் ஏகபோக உரிமையாகவே காணப்பட்டது. ஆயி னும் கோல்புறூக் கமிறன் குழுவினர் அவ்வித வர்த்தக உரிமையைக் கைவிடுமாறு சிபார்சு செய்தனர். அதே சமயம் யாவா முதலிய நாடுகளிலும் ஒல்லாந்தர் கறு வாச் செய்கையை விருத்தி செய்ததனால் 1835 அளவில் இலங்கையின் கறுவா வர்த்தகம் வீழ்ச்சியடைந்தது.
இதற்குப் பின்னர் கோப்பிச் செய்கையில் இலங்கை அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியது. கோப்பிச் செய்கையில் ஒல்லாந்தரும் ஈடுபட்டபோதிலும் அவர் களின் ஆட்சியின் கீழிருந்த கரையோர மாகாணங் களின் தரைத்தோற்றம், காலநிலை, மண் முதலியன

Page 39
70
தற்காலச் சரித்திரம் அதற்கு ஏற்றதாயிருக்காததினால் அது அதிகம் விருத்தி யடையவில்லை. அதேசமயம் பிரித்தானியர் கண்டி யைக் கைப்பற்றியபின்னர் அப்பிரதேசத்தின் புவி யியல் தன்மைகள் கோப்பிக்கு ஏற்றதாயிருப்பதைக் கண்டு அச்செய்கையில் அ தி க ஆர்வம்காட்டினர். அக்காலத்தில் கண்டிய மக்கள் சிறிய அளவிலேயே கோப்பியைப் பயிரிட்டனர்.
கோப்பிச் செய்கையின் விருத்திக்கு அடிகோலியவர் ஆள்பதி பாண்ஸ் ஆகும். அவர் காலத்தில் இராணுவ குடியியல் நீதிபாலன சேவையிலிருந்தோரே கோப்பிச். செய்கையில் முழுமூச்சாக ஈடுபட்டனர். இவ்வாறு ஜோஜ் பேட் என்பவர் புசல்லாவையில் முதலாவது கோப் பித் தோட்டத்தைத் திறந்தார் அதேசமயம் ஆள்பதி பாண்ஸ் தாமே கன்னொறாவாவில் 1825 இல் ஒரு கோப் பித் தோட்டத்தை நிறுவினார். ஆயினும் தொடக்கத் தில் அது அதிக இலாபமளிக்கவில்லை/ பயிர்ச் செய்கை முறைகள், பயிர்பாதுகாப்பு முறைகள் ஆகியவற்றில் முன் னேற்ற மில்லாமையாலும் கோப்பியின் உற்பத்தி | விலை அதிகமாயிருந்தபடியாலும் வெளிநாடுகள் - குறிப் பாக யாவா, பிறேசில் ஆகியவற்றின் கோப்பிதரம்கூடிய தாகவும் விலை குறைவாகவுமிருந்ததினால் தான் இலங் கையின் கோப்பிச் செ ய்  ைக இலாபமளிக்கவில்லை. ஆயினும் பாண்ஸ் கோப்பிச் செய்கையை முன்னேற்று விப்பதற்காகிப் பல நடவடிக்கைகளை மேற்கொண் டார், அவர் 18 20 இல் கோப்பி மீது விதிக்கப்பட்ட ஏற்றுமதி வரியை நீக்கினார். வி ளை ச்ச லி ல் ஃ ஐக் கொடுக்கவேண்டும் என்னும் சட்டத்திலிருந்து கோப் பித் தோட்டக்காரருக்கு விலக்கு அளித்தார். அத் துடன் கோப்பிச் செய்கையிலீடுபடுவோர் இராசகாரியம் செய்யத் தேவையில்லை எனவும் அறிவித்தார். பாண் சின் நடவடிக்கைகளினால் கோப்பிச் செய்கையில் பலர் ஊக்கம்காட்டினர். அதேவேளை 1837க்குப்பின் கோப்பி வர்த்தகம் இலாபத்தைக் கொடுக்கத் தொடங்கியது.

71
எட்டாந்தரம் மேற்கிந்திய தீவுகளில் அடிமை முறை ஒழிக்கப்பட்ட தனால் தொழிலாளர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது கோப்பியின் உற்பத்தி விலை அதிகரித்த அதே வேளை ஏற்றுமதியின் அளவு குறைந்த படியாலும்) ஐரோப் பிய நாடுகளில் கோப்பியின் பாவனை அதிகரித்ததா லு மே இலங்கையின் கோப்பிச் செய்கை முன்னேற்ற மடைந்தது. இவ்விதமாக 1835 க்குப் பின்னர் புசல் லாவை, கொத்மலி, அம்பகுமுவப் பகுதிகளிலும் தும் ப றப் பள்ளத்தாக்கிலும் கோப்பிச்செய்கை பரவியது. அது 1845 இல் 38,000 ஏக்கரில் செய்கை பண்ணப் 'பட்டது அவ்வாண்டு கோப்பி வர் த் த க த் தி ல் 10 இலட்சம் ரூபாவரை வருமானமும் கிடைத்தது குறிப் பிடத் தக்கது ,
கோப்பிச் செய்கையில் முதலில் பிரித்தானிய ரே அதிக ஆர்வம் காட் டி ய போ து ம், பிற்பகுதியில் கண்டியமக்களும் அதிககரிசனை காட்டினர். அது அதிக வருவாயைக் கொடுத்தபடியால் கண்டியர் தமது வீட் டுத் தோட்டங்களிலும் கோப்பியைச் செய்கை பண் ணினர். அக்காலத்தில் இங்கிலாந்திலும், இந்தியா விலுமிருந்து வந்த பல 'தோட்டத்துரைமார்களும்' கோப்பிச் செய்கையிலீடுபட்டனர். இவ்வாறு கோப்பி உற்பத்தி அதிகரித்ததோடு வெளிநாட்டு ஏற்றுமதி யும் அதிகரித்தது. ஆயினும் 1847-49 காலத்தில் கோப்பி உற்பத்தி மிக அதிகரித்தபடியாலும் இங்கி லாந்தில் பண முடை ஏற்பட்டதனாலும் அங்கு வெளி நாடுகளின் கோப்பிக்கான இறக்குமதி குறைக்கப்பட்ட தனாலும், இங்கு தொழிலாளர் த ட்டு ப் பா டு ஏற் பட்டதனாலும், போக்குவரத்து வசதிகள் போதாமை யாலும், பொருத்தமற்ற நிலத்திலும் கோப்பி செய்கை பண்ணப்பட்டதனால் விளை ச் ச ல் குறைந்த தினா லும் 1847-51 காலத்தில் இலங்கையின் கோப்பி வர்த் தகம் பாதிக்கப்பட்டது. அக்காலத்தில் பலர் தமது தோட்டங்களை அரைவிலை, கால் விலைக்கும் விற்றனர்.

Page 40
72
தற்காலச் சரித்திரம் ஆயினும் 1851 க்கு மேல் மீண்டும் கோப்பிச்செய்கை புத்துயிர்ப்படைந்தது. அதன் பின்னர் கோப்பி, புதிய முறைகளில் நவீன வசதிகளுடன் செய்கை பண்ணப் பட்ட து. அன்றியும் தொழிலாளர் தட்டுப்பாடு நீங் கியதும் கற்பாதைகள், இருப்புப்பாதைகள் போடப் பட்டுப் போக்கு வரத்து வசதிகள் அதிகரிக்கப்பட்ட தும் கப்பல் கட்டணம் குறைந்ததும், தோட்டங்கள் மலிவாகக் கிடைத்ததும் இங்கிலாந்தில் கோ ப் பி நுகர்ச்சி அதிகரித்ததும் இங் கு கோப்பிச் செய்கை புத்துயிர்ப்படைய உ த வி ன. இக்காரணங்களினால் கோப்பி படிப்படியாக அற்றன், பதுளை, அப்புத்தளை , உடப்புசல்லாவைப் பகுதிகளிலும் பரவியது. இவ்வாறு 1850 இல் 50,000 ஏக்கரில் காணப்பட்ட கோப்பி 1865 இல் 1,60,000 ஏக்கரில் செய்கைபண்ணப்பட் டது. அதே சமயம் 1850 இல் 40,000 அந்தராக விருந்த கோப்பி ஏற்றுமதி 1870 இல் 10,13,004
அந்தராகக் கூடியது.
இப்படியாக 1857-70 காலத்தில் எழுச்சி பெற்ற கோப்பி அதன் பின்னர் மீண்டும் வீழ்ச்சியடைந்தது. ஒரு வகை இலை நோய் கோப்பிச்செடிகளை அ ழி த் தமையே அதற்குப் பிரதான காரணமாகும். அந் நோய் எல்லாக் கோப்பித் தோட்டங்களையும் பாதித் தது. அவ்வேளை சர்வதேசச் சந்தையில் கோப்பியின் விலை வீழ்ச்சியடைந்ததும், புதிய 'லைபிரிய' இனக் கோப்பி இங்கு பயனளிக்காததும் கோப்பியின் வீழ்ச் சிக்குத் துணைக்கார ணங்களாகின எனவே இதன் பின் னர் கோப்பி ஒரு பெருந்தோட்டப்பயிர் என்ற நிலையி லிருந்து நீங்கி மீண்டும் வீட்டுத்தோட்டப்பயிராகி விட்டது.இன் று கண்டிப்பகுதியில் நாட்டுப்புறங் களில் சிறிய அளவிலேயே கோப்பி செய்கை பண்
ணப்படுகிறது.

73
எட்டாந்தரம் பயிற்சிகள்
1.
1835 அளவில் கறுவா வர்த்தகம் வீழ்ச்சியடைந்ததேன்? கோப்பிச்செய்கையின் விருத்திக்காகப் பாண்ஸ் ஆற்றிய
சேவை யாது ? 3. தொடக்கத்தில் கோப்பிச் செய்கை இலாபமளிக்காததேன்? 4: 1849-51 இல் கோப்பி வர்த்தகம் வீழ்ச்சியடைந்ததேன்? 5. 18 51க்குப் பின்னர் கோப்பி எழுச்சிபெற்றதற்குக்காரணங்
கள் யாவை ? . கோப்பிச் செய்கையின் வீழ்ச்சிக்குச் காரணங்கள் யாவை?
பாடம் 2.
தேயிலைச் செய்கை.
தேயிலைச் செடி 1839 இல் முதன் முதல் இலங் கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆயினும் 1867 வரை அதன் செய்கையில் முன்னேற்றம் ஏற்பட வில்லை . கோப்பிச் செய்கை அதிக இலாபமளித்ததினால் எல்லோரும் அ தி லே யே ஈடுபட்டனர். பின் அது வீழ்ச்சியடைந்தபோது புதிய தோட்டங்களைத் திறப் பதற்குப் பணத் தட்டுப்பாடு காணப்பட்டது. அதே சமயம் பல தோட்டக்காரர் விரைவில் பலன் தரும் சிங்கோனாச் செய்கையிலும் ஈடுபட ஒருசிலர் கொக் கோச் செய்கையிலும் கவனம் செலுத்தினர். ஆயினும் சிங்கோனாச் செய்கையில் வீழ்ச்சி ஏற்பட்டபோது பலர் தேயிலைச் செய்கையில் கவனத்தைத் திருப்பினர். மேலும்மலை நாட்டின் தரைத்தோற்றம், கால நிலை ,மண் முதலியன தேயிலைச் செய்கைக்கு ஏற்றவையாயிருந்த
10 )

Page 41
74
தற்காலச் சரித்திரம் மையாலும் ைகவிடப்பட்ட கோப்பித் தோட்ட நிலங் களைக் குறைந்த விலைக்கு வாங்கித் தேயிலைத்தோட் டங்களாக மாற்றக்கூடியதாயிருந்ததினாலும், தேயிலை கால நிலை மாற்றங்களினால் பாதிக்கப்படாது ஆண்டு முழுவதும் பயன் தரக்கூடிய ஒரு பயிராயிருப்பதனா லும் பலர் அதைச் செய்கை பண்ணுவதில் ஆர்வம் காட்டினர்.
மேற் குறிப்பிடப்பட்டவற்றின் கார ண ம ா க 1883 க்குப் பின்னர் தேயிலைச் செய்கையில் து ரி த முன்னேற்றம் காணப்பட்டது. மேலும் 1850-1890 காலத்தில் கொழும்பையும் மலை நாட்டின் பல பகுதி களை யும் இணைத்து இருப்புப்பாதைகளும், கற்பாதை களும் போடப்பட்டிருந்ததனால் புதிய இடங்களில் தேயிலைத் தோட்டங்களைத் திறப்பதும் உற்பத்தி செய் யப்பட்ட தேயிலையை கொழும்புக்குக் கொண்டு செல் வதும் எளிதாயின. அன்றியும் தேயிலைத் தோட்டங் களில் வேலை செய்வதற்கு வேண்டிய மலிவான தொழி லாளர் தென்னிந்தியாவிலிருந்து கிடைத்தமையும் தேயிலைச் செய்கை மிகக் குறுகிய காலத்தில் விரை வாகப் பரவுதற்குப் பெரிதும் உதவின. இவ்வாறு இலங்கைக்கு வந்த தொழிலாளர்கள் குடியுரிமைப் பிரச்சினை இன்றும் முற்றாகத் தீர்த்துவைக்கப்படாம லிருக்கின்றது.
அது எவ்வாறாயினும்  ேம ற் கு றிப் பிட்ட பல சாதகமான நிலைமைகளின் விளைவாகத் தேயிலை 1890 அளவில் பெரும் இலாபம் அளிக்கும் ஒரு தோட்டப் பயிராக மாறியது. அது பயிரிடப்பட்ட நிலம் 1876 இல் 10 ஏக்கரிலிருந்து 1896 இல் 3,30,000 ஏக்கராக அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று மலை நாட்டில் ஏறத்தாழ 6 இலட்சம் ஏக் கரில் தேயிலை செய்யப்பட்டுள்ள து. நாவலப்பிட்டியா,

எட்டாந்தரம்
75
அற்றன், நுவரேலியா, வதுளை முதலிய பகுதிகளில் தேயிலை செறிவாகவும் சிறப்பாகவும் பயிரிடப்பட்டுள்
ள து.
தென் ன் தேமில இறப்பர் E/கொக்கோ முல்லைத்தீவு
2 திருகோணமலை
அபுத்தனம்
இனம்
லாபம் 5 சு
: மாத்தளை
51/1
-'தம்
பலுதல
கா ட கா ..
அ இஅவிசாவலை "
oற்ற்றன்
மெ * னறுக
குளு க்ருதை '
நேக்கு வானை ,
எம்;
அம்பாந நே ட . கங்காலை
இலங்கையின் பெருந்தோட்டப் பயிர்கள்,

Page 42
76
தற்காலச் சரித்திரம் - தேயிலைச் செய்கை இடைக்கிடை சிறு வீழ்ச்சி களைக்கண்டபோதும் (1896-1904; 1917-29) மொத் தத்தில் இலாபகரமான தொழிலாக நிலைத்து வந்துள் ளது. அண்மைக்காலத்தில் தேயிலைச் செய்கையின் விருத்திக்காகப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள் ளன. தேயிலையின் தரத்தை உயர்த்தல் உற்பத்திச் செலவைக்குறைத்தல்,  ேத யி லை ச் செடிக்கு வ ரு ம் நோய்களைத் தடுத்தல் முதலியவற்றில் ஆராய்ச்சிகளை மேற் கொள்ளுவதற்காக 1925 இல் தலவாக்கொல் லையில் ஒரு ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது. அது பயனுள்ள பல ஆராய்ச்சிகள் மூலம் பலவழி களில் பெருந்தோட்டக்காரருக்கு உதவி செய்து வரு கிறது.
எமது நா டு தேயிலை ஏ ற் று ம தி யி ல் இன்று உலகில் முதலாமிடத்திலுள்ளது. எமது தேயிலையை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகள் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு, ஈராக் என்பனவாகும்.
பயிற்சி.
1. மலை நாட்டில் தேயிலைச் செய்கைக்குச் சாதகமான புவி
யியற் காரணங்கள் யாவை ? தேயிலைப்பயிர்ச் செய்கையின் எழுச்சிக்குத் துணை செய்த காரணிகள் எவை ?
தேயிலை எங்கெங்கு பயிரிடப்பட்டுள்ளது ? 4 தேயிலை ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது ? அது எவ்வழி
களில் தோட்டக்காரர்களுக்கு உதவுகின்றது ?

பாடம் 3. இறப்பரும் தென்னையும்.
எமது நாட்டின் வர்த்தகப் பயிர்களில் தேயிலைக்கு அடுத்ததானத்தை வகிப்பது இறப்பராகும். இறப்பர் 1867 இல் முதன் முதல் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது. பிறேசில் நாட்டைச் சேர்ந்த 'பாரா' இறப்பர்க் கன்றுகளே இங்கு கொண்டு வரப்பட்டுப் பயிரிடப்பட்டன. இறப்பர்ச் செய்கையில் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை அதிக கவனம் செலுத் தப்படவில்லை. ஏனெனில் 1880-90 காலத்தில் சிங் கோனாச் செய்கையிலும் 1890-1900 காலத்தில் தேயி லைச் செய்கையிலுமே பெருந்தோட்டக்காரர் அக்கறை காட்டினர். பின்னர் 1900-1904 காலத்தில் தேயிலை யின் விலை வீழ்ச்சி ஏற்பட்டு அதன் வர்த்தகம் பாதிக் கப்பட்டிருந்த காலத்தில் தான் இறப்பர்ச் செய்கை யில் நாட்டம் ஏற்பட்டது. இவ் வாறாக 1900 இல் 1750 ஏக்கரில் பயிரிடப்பட்ட இறப்பர் 1905 இல் 40,000 ஏக்கரில் செய்கை பண்ணப்பட்டது, அத் தொகை 1910 இல் 2 இலட்சம் ஏக்கராகவும் 1915 இல் 24 இலட்சம் ஏக்கராகவும், 1920 இல் 4 இலட்சம் ஏக்கராகவும், அதிகரித்தது.
இறப்பர்ப்பயிர்ச் செய்கை 20 ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலம் முதல் வி ரு த் தி யடை ந் த மைக் கு (ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அக்காலமுதல் மோட்டார் வாகனப் போக்குவரத்து அதிகரித்தமை) யும் ஒரு முக்கியமான காரண மாகும். இறப்பர் மோட்டார் வாகன உற்பத்திக்கு மட்டுமன்றி மின்சார உபகரண உற்பத்திக்கும் தேவைப்படுவதினால் அண் மைக்காலத்தில் அதன் தேவை முன் என்றுமில்லாத அளவு அதிகரித்துள்ளது.

Page 43
78
தற்காலச் சரித்திரம் இறப்பர்ச் செய்கை இலங்கையில் நல்ல பலனளிப் பதற்கு இங்கு காணப்படும் வாய்ப்பான புவியியல் நிலைமைகள் பெருமளவு உதவியுள்ளன. வெப்பமும் ஈரலிப்புமான காலை நிலையைக் கொண்ட தென் மேல் பிரதேசத்தில் நல்ல வடிகாலமைப்பைக் கொண்ட 500 முதல் 1500 அடிவரை உயரமுள்ள பகுதிகளில் இறப்பர் நன்கு பயிராகிறது. இன்று மேல்மாகாணத் தின் கிழக்கு, தென்கிழக்குப் பகுதிகளிலும்சப்பிரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை, எட்டியாந் தோட்டைப்பகுதிகளிலும், தென்மாகாணத்தில் காலி, - மத்துகமப் பகுதிகளிலும் இறப்பர் அதிகமாகப் பயிரி > டப்பட்டுள்ளது.
தேயிலையைப் போலவே இறப்பர்ப் பயிர்ச் செய் கைக்கும் தொழிலாளர்கள் தேவை. ஆயினும் சாதார ணமாக 3 ஏக்கர் இறப்பர்த் தோட்டத்திற்கு ஒரு ஆள் போதுமானது. (தேயிலைக்கு 1 ஏக்கருக்கு 2 பேர்) இறப் பர் தோட்டங்களில் வேலை செய்பவர்களிலும் பெரும் பாலானோர் இந்தியத் தொழிலாளராகவேயுள்ளனர்.
1900 த்துக்குப் பின்னர் வெளி நாடுகளில் இறப் பரின் தேவை அதிகரித்தமையால் பல வெளிநாட்டு நிறுவனங்களும் இங்கு முதலீடு செய்தன. அதேசமயம் முதலாம் உலகப் போரின் முடிவுகாலம் வரை இறப்பர் உலகச் சந்தையில் அதிக விலை பெற்றமையால் பல இலங்கையரும் அதைப் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி னர். இவ்விதமாக இன்று 100 ஏக்கருக்குக் குறை வான பரப்புள்ள சிறு தோட்டங்களில் பெரும்பாலா னவை இலங்கையருக்குச் சொந்தமாயுள்ளன. எமது இறப்பரைச் சீனா, இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா முதலிய நாடுகள் வாங்குகின்றன.
அண்மைக்காலத்தில் அரசாங்கமும் இறப்பர் செய் கையில் அக்கறை காட்டி வருகிறது. அன்றியும் இறப் பர்ச் செய்கை பற்றியும் அதன் விளைச்சல், நோய்த்

எட்டாந்தரம்
79
தடுப்பு பற்றியும் ஆராய்ச்சிகளை மேற் கொள்ளும் நிறு வனம் ஒன்று அகலவத்தையில் உள்ளது.
னெ
தென்னை இறப்பருக்கு அடுத்த முக்கியமான வர்த் தகப் பயிராகும். அது தொல்காலம் முதலாகப் பயி ரிடப்பட்டு வருகிறது. ஆயினும் பத்தொன்பதாம் நூற்றாண்டு முத லாகவே அது பெருந்தோட்ட முறை யில் பயிரிடப்பட்டு வருகிறது: தேயிலை, இறப்பர் என் பவற்றைப்போலில்லாது தென்னைப்பயிர்ச் செய்கை பெரும்பாலும் இலங்கையரின் கையிலேயே உள்ளது.
தென்னை 1870 இல் ஏறத்தாழ 2 இலட்சம் ஏக்க ரில் பயிரிடப்பட்டிருந்தது. அத்தொகை 1890 இல் 4 இலட்சமாகவும், 1900 இல் 6 இலட்சம் ஏக்கராகவும் அதிகரித்தது. இன்று 11 இலட்சம் ஏக்கரில் தென்னை காணப்படுகிறது. தென்னை கடல்சார்ந்த பகுதிகளி லுள்ள மணற்பாங்கான நிலத்தில் நன் கு பயிராகிறது. இலங்கையில் சிலாபம் முதல் தங்காலை வரையுள்ள கரையோர வலயத்திலும் சிலாபம், கு ரு நா க ல், கொழும்பு என்னுமிடங்களுக்கு இடைப்பட்ட தென்னை முக்கோணப்பகுதியிலும், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணப் (பளை) பகுதிகளிலும் தென்னை பரவலாகக் காணப்படுகிறது.
தென்னை ஒரு வர்த்தகப்பயிராக மட் டு ம ன் றி உணவுப்பயிராகவுமிருப்பதனால் உள்நாட்டுத் தேவை களுக்கு அதிகமாகப் பயன்படுகிறது. அதன் உற்பத் திப் பொருட்களான தேங்காய் நெய், கொப்பரா முதலியவற்றின் ஏற்றுமதி மூலம் எமது (ஏற்றுமதி) வருமானத்தில் ஏறத்தாழ 15%மே கிடைக்கிறது. எமது தெங்குப் பொருட்களை இங்கிலாந்து, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, எகிப்து முதலிய நாடுகள் வாங்கு கின்றன. தென்னையின் விளைச்சலைப் பற்றியும் அதன்
Tசனங்களை யும் பற்றி ஆராய்ச்சி நடத்துவதற் கென லுணுவிலை என்னுமிடத்தில் ஒரு நிறுவனம் அமைக்

Page 44
80
தற்காலச் சரித்திரம் கப்பட்டுள்ளது. அது தெங்குத் தொழிலின் விருத் திக்குப் பல வழிகளிலும் உதவிவருகிறது.
பயிற்சிகள்.
13 இறப்பர்ச் செய்கை எக்காலத்தில் எழுச்சி பெற்றது? 2: இறப்பருக்கு ஏற்ற புவியியல் நிலைமைகள் யாவை ?
இறப்பர்ச் செய்கையில் வெளி நாட்டு நிறுவனங்கள்
அக்கறை காட்டியதேன் ? 4: இலங்கையில் இறப்பர் அதிகமாக விளைவிக்கப்படுமிடங்
கள் யாவை ? இலங்கையிலிருந்து இறப்பரை இறக்குமதி செய் யு ம்
நாடுகள் எவை ? 6. எமது தெங்குப் பொருட்களை வாங்கும் நாடுகள் எவை?
3.
பாடம் 4.
பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையினால்
ஏற்பட்ட பலன்கள்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலி ருந்து இலங்கையின் பொருளாதார அமைப்பில் பெருந் தோட்டப்பயிர்கள் முக்கியத்துவம் வகித்து வந்திருக் கின்றன. அதற்கு முன்னர் மக்கள் தமது சுயதேவை களுக்காகச் சிறிய அளவிலேயே பயிர்ச் செய்கையில் ஈடுபட்டனர். அன்றியும் அக்காலத்தில் வர்த்தகப் பயிர்களை விட உண வுப்பயிர்களே அதிகமாகப் பயிரி டப்பட்டன. பின்னர் அன்னியராட்சிக் காலத்தில் படிப்படியாக உண வுப்பயிர்ச் செய்கையை விட வர்த் தகப் பயிர்களின் முக்கியத்துவம் அதிகரித்தது. இவ்

எட்டாந்தரம்
81
வாறு பெரும்பாலும் வர்த்தகம், ஏற்றுமதி என்னும் நோக்கங்களுக்காகப் பயிர்கள் பரந்த அளவில் பயிரி டப்பட்டதன் விளைவாக நாட்டுக்குப் பல நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன. அதேசமயம் அதனால் சில தீமை களும் உண்டாகியிருப்பதை மறுக்க முடியாது. இப் பொழுது நன்மைகளை முதலில் நோக்குவோம்.
பெருந்தோட்டப்பயிர்ச் செய்கையின் விருத்தியி னால் நிலத்தின் பயன் அதிகரித்துள்ள து. ஏனெனில் 1 ஏக்கர் நிலத்தில் நெல் லை ப் பயிரிடுவதன் மூலம் கிடைக்கும் வருவாயைவிட 7 பங்கு அதிகமான வரு வாய் 1 ஏக்கர் தேயிலைத் தோட்டத்திலிருந்து கிடைப் பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவதாக, பெருந்தோட்டப்பயிர்ச் செய்கையின் விளைவாக உள் நாட்டு வர்த்தகமும் வெளிநாட்டு வர்த்தகமும் அதிக ரித்துள்ளன. முன்னர் தன்னிறைவு பெற்று வாழ்ந்த மக்கள் தற்பொழுது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் அதிகமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட இன்னொரு நன்மை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்கள் ஒருவரோடொருவர் தொடர்பு கொண்டமையாகும். இது பொருளாதார ரீதியில் நாடு ஒன்று பட உதவியுள்ளது. மேலும் பெருந்தோட்டப் பயிர்கள் பெரும்பாலும் வெளி நாட் டினரின் தேவைக்காகவே பயிரிடப்படுவதனால் அப் பயிர்ச் செய்கை வெளிநாட்டு வர்த்தகத்தையும் அதி கரித்துள்ளது. இதன் பயனாக எமது ஏற்றுமதி வரு மானம் அதிகரித்தது.- இவ்வாறு 1825 இல் 1 கோடி ரூபாயாக விருந்த ஏற்றுமதி வருமானம் 1877 இல் 10 கோடி ரூபாயாக அதிகரித்தது.
மூன்றாவதாக, வெளிநாட்டு வர்த்தகத்தினால் மட்டு மன்றி ஏற்றுமதிவரி, தோட்டவரி, வருமான வரி, இலாப வரி முதலியவற்றினாலும் அரசாங்கத்தின் வருமானம்
11

Page 45
82
தற்காலச் சரித்திரம் அதிகரித்துள்ளது. நான்காவதாக, பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையின் பக்கவிளைவுகளில் ஒன்றாக இலங் கையில் வங்கி முறை விருத்தியடைந்தது. வங்கிகள் பணத்தைச் சேமிக்கவும், கடன் பெறவும் தொழில் களில் முதலீடு செய்யவும் உதவுகின்றன. இலங்கையின் முதலாவது வங்கியாகிய ஒறியென்ரல் வங்கி 7 841 இல் நிறுவப்பட்டது. இன்று நூற்றுக்கணக்கான வங் கிகள் நாட்டில் உள்ளன .
ஐந்தாவதாக, பெருந்தோட்டப்பயிர்ச் செய்கையின் விருத்தி நாட்டின் போக்குவரவு, தபால் தந்திச்சேவை , ஆகியவற்றின் விருத்திக்கும் உதவியுள்ளது. பெருந் தோட்டங்களின் மூலம் போதிய வருவாய் கிடைத்த படியால் தான் அரசாங்கம் அதிக செலவில் அவற்றை விருத்தி செய்யக்கூடியதாயிருந்தது. இவ்வாறு போக்கு வரத்தும் தபால் தந்தி சேவைகளும் விருத்தியடைந் தமையினால் நாடு முழுவதும் இணைக்கப்பட்ட போது அது சமூகத் தொடர்புகளுக்கும் உள்நாட்டு வர்த்தகத் திற்கும் மேலும் உதவி செய்தது. ஆறாவதாக, பெருந் தோட்டப் பயிர்ச்செய்கையின் விரு த் தி யைத் தொடர்ந்து மலை நாட்டுப்பகுதியில் கரையோரப் பிர தேசமக்கள்,முஸ் லிம்கள், தென்னிந்தியத் தொழிலாளர் ஆகியோர் குடியேறினமையாலும், வர்த்தகம் அதிக எரித்துக் கடைகளும் வீதிகளும் திறக்கப்பட்டமையா லும் நாட்டின் பலபகுதிகளிலும் நகரங்கள் உருவாகி யுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பெருந்தோட் டப்பகுதிகளிலும் கொழும்பின் அயற்புறங்களிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நகரங் கள் துரித வளர்ச்சியடைந்ததனால் அவற்றை நிர்வகிக்க நகராட்சி மன்றுகள் முதலிய உள்ளூராட்சி நிறுவனங் கள் தாபிக்கப்பட்டுள்ளன. ஏழாவதாக, பெருந்தோட் டப் பயிர்ச்செய்கையின் விருத்தியைத் தொடர்ந்து வெளிநாட்டு வர்த்தகம் அதிகரித்ததின் விளைவாகக் கொழும்புத் துறைமுகமும் வி ரு த் தி ய டைந் த து.

எட்டாந்தரம்
83
கொழும்புத்துறை முன்னர் பாதுகாப்பற்ற ஒன்றாக விளங்கியது. பின்னர் 1878 இல் தான் அதன் தென் மேற்கு அலை தாங்கி கட்டப்பட்டது. பின்னர், 1893 இல் துறைக்கு வடக்கிலும் வடமேற்கிலும் இரண்டு அலை தாங்கிகள் கட்டப்பட்டதனால் துறை அதிக பாது காப்பைப் பெற்றது. அதேசமயம் கப்பல்கள் தங்கு வதற்கு வேண்டிய மேடை வசதிகளும் அவற்றுக்கு வேண்டிய எரிபொருள், எண்ணெய் வசதிகளும் ஏற் படுத்தப்பட்டதோடு கொழும்பு நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இருப்புப்பாதைகளினாலும் வீதிகளினா லும் இணைக்கப்பட்டதினாலும் கொழும்பு ஒரு சர்வ தேசத் துறை என்ற சிறப்பைப் பெற்றுள்ள து.
எட்டாவதாக, பெருந்தோட்டங்களின் விருத்தியைத் தொடர்ந்து நாட்டில் பல வி த ம ா ன புதிய புதிய தொழில்கள் தோன்றியுள்ளன. இறுதியாக, பெருந் தோட்ட விருத்தியைத் தொடர்ந்து நாட்டில் தொழில் வசதி வர்த்தகவசதி ஆகியன அதிகரித்தமையாலும், இராசகாரிய முறை நீக்கப்பட்டமையாலும் ஆங்கிலக் கல்வி பரவியமையாலும் நாட்டில் மத்திய வகுப்பினர் எனப் புதிய ஒரு வகுப்பினர் தோன்றியுள்ள னர்.
இனி, பெருந்தோட்டங்களின் விருத்தியினால் ஏற் பட்ட தீமைகளை நோக்குவோமேயாயின் மலை நாட் டுக் காணியில் பெரும்பகுதி வெளிநாட்டாரின் உடை மையாகியதே முதலாவது முக்கியமான தீமையாகும். இவ்வாறு கண்டிய மக்கள் காடுகளாகவும், மேய்ச்சல் நிலங்களாகவும், சேனைகளாகவும் பயன்படுத்திய நிலம் பெருந்தோட்டங்களாக மாறி வெளியாரின் கைக்குள் சென்று விட்டதனால் கண்டிப் பகுதியில் நிலமின்மை ஒரு பிரச்சினையாயுள்ளது. குறிப்பாக குடியடர்த்தி அதிகரிப்பினால் அது பெரும் பிரச்சினையாகிவிட்டது. இதன் விளை வாகக் கண்டியர் பொருளாதாரத்தில் கீழ் நிலையடைந்து விட்ட னர். இரண்டாவதாக, பெருந் தோட்டங்களுக்காக உ ய ர மான பகுதிகளிலுள்ள
பம்

Page 46
84
தற்காலச் சரித்திரம் காடுகள் அழிக்கப்பட்டமையால் மண்ணரிப்பும் அருவி களின் வரட்சியும் ஏற்பட்டுள்ளது. மூன்றாவதாக, பெருந் தோட்டப் பயிர்ச்செய்கையும், வர்த்தகமும் வளர்ச்சி யடைந்த அதேவேளை வேளாண்மையில் போதிய கவ னம் செலுத்தப்படாதபடியால் நாம் எமக்குத் தேவை யான உணவை உள் நாட்டில் பெற முடியாத நிலையி லுள்ளோம். இதனால் நாம் எமது உண வுப்பொருட் களுக்கு வெளிநாடுகளை எதிர்பார்த்திருப்பதோடு அவற்றை இறக்குமதி செய்வதற்காக எமது நாட்டு வருமானத்தில் பெரும் பகுதியையும் செலவிடுகிறோம்.
நான்காவதாக, பெருந்தோட்டங்களில் பல இன் னும் வெளிநாட்டவருக்குச் சொந்தமாயிருப்பதனால் அவற்றின் வருமானத்தில் கணிசமான பகுதி இங்கு தங்காமல் வெளி நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படு கிறது. ஐந்தாவதாக, பெருந்தோட்டங்கள் வி ரு த் தி செய்யப்பட்ட காலத்தில் அவற்றில் வேலை செய்வ தற் காகத் தென்னிந்தியர் கொண்டுவரப்பட்டதனால் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. அவற்றில் குடியுரிமைப் பிரச்சினை முக்கியமானது. அது இன்னும் முற்றாகத் தீர்க்கப்படவில்லை. அதேசமயம் தென்னிந்தியர் மலை நாட்டில் இருப்பது இங்கு 'இன நெருக்கடி 'க்கும் ஓர
ளவு உதவியுள்ளது.
இறுதியாக, பெருந்தோட்டங்கள் திறக்கப்பட்ட தனால் கரை யோரப்பகுதி மக்களும் பிறரும் மலை நாட் டில் குடியேறிக் கண்டிய மக்களைச் சுரண்டி வயிறு வளர்க்கவும் வழியேற்பட்டது. இவ்வாறு பல இனத் தவரும் கல ந்ததனால் கண்டியர் தமது பண்பாட்டுத் தூய்மையை இழந்ததோடு பலர் குடியில் ஈடுபடவும் குற்றச் செயல்களைச் செய்யவும் இடமேற்பட்டது. இவ்விதமாகப் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையின் விருத்தியினால் நாட்டுக்குப் பல தீமைகள் ஏற்பட்டுள் ளன.

எட்டாந்தரம்
85
பயிற்சிகள்.
பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையின் விருத்தியினால் இலங்கை அடைந்த நன்மைகள் யாவை ? பெருந்தோட்டங்கள் திறக்கப்பட்டமையினால் கண்டிய மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர்? பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையினால் ஏற்பட்ட ஏனைய தீமைகள் யாவை ?
அலகு 7. போக்குவரத்தும், தபால் தந் திமுறைகளும்.
பாடம் 5.
வீதிகள்.
பிரித்தானியரின் வருகைக்கு முன்னர் இலங்கை யின் கரையோரப்பகுதிகளில், ஒற்றையடிப்பாதை களும் மக்கிப்பாதைகளுமே காணப்பட்டன. மலை நாட்டில் நிலைமை மேலும் ஒருபடி மோசமாயிருந்தது. அங்கு காடுகளுக்கூடாகச் செல்லும் கல்லும் முள்ளும் நிறைந்த பாதைகளே காணப்பட்டன. அத்தகைய நிலைமையில் தான் பி ரி த் த ா னி யர் கண்டியின் மீது படையெடுத்து அதைக் கைப்பற்றினர். இவ்வாறு கண்டிப்பிரதேசத்தைத் தமது ஆட் சி யி ன் கீழ்க் கொண்டு வந்த பிரித்தானியர் நிர்வாக வசதிக்காக வும் கண்டியின் பாதுகாப்புக்கு அபாயம் ஏற்படும் போது அல்லது அங்கு ஏதாவது குழப்பம் ஏற்படும் போது படைகளை உடன் கொண்டு செல்வதற்கு உதவு

Page 47
86
தற்காலச் சரித்திரம் வதற்காகவும், போக்குவரவுப் பாதைகளை அமைக்கத் துணிந்தனர். இவ்வாறு கரையோரத்தையும் கண்டி யையும் வீதிகளால் இணைப்பதற்கு ஆள்பதி பிறவுன்றிக்
யாழ்ப்பாணம்
s
முல்லைத்தீவு
மாங்குளம்
> /ாங்குளம்
உட2
வவுனியா
திருகோணமலை
மதவாச்சி
அநுரதபுரி
கெக்கிராவ
'ஹபறணை
தம்புள்ள
க்களப்பு
சிலாபம்
குருநாகல்
கண்டி
( கொழும்பு)
வசூறை நாவலப்பிட்டி
நுவரெலியடி
(நக்கல்
கொழும்பு
பொத்துவில்)
T)
அம்பாந்தோட்டை !
மாத்தறை
இலங்கையின் பிரதான வீதிகள்,

எட்டாந்தரம்
87
காலத்தில் ஆரம்ப முயற்சி செய்யப்பட்டது. ஆயி னும் ஆள்பதி பாண்ஸ் காலத்தில்தான் முதல் முதல் வீதிகள் அமைக்கப்பட்டன. அவர் வீதிகளை அமைப் பதற்குப் பொதுமக்களின் உதவியைப் பெறுவதற்காக 1818-இல் ஒரு பிரகடனத்தை விடுத்து அதன் கீழ் 15 நாட்களுக்கு ஒவ்வொரு ஆணும் வீதிகளை அமைக்கும் வேலையில் ஈடுபடச் செய்தார்.
இவ்வாறு 1825 அளவில் கொழும்பிலிருந்து கள னியா, அம்பேபுச, கடுகண்ணாவை வழியாகவும், அம் * பேபுசவிலிருந்து குருநாகல் கலகெதரை வழியாகவும் இரண்டு தெருக்கள் கொழும்பையும் கண்டியையும் இணைத்தன, கொழும்பிலிருந்து கடுகணாவைக் கண வாய்க்கூடாகச் செல்லும் பாதையை பிறேசர் என்ப வரால் வகுக்கப்பட்டு மேஜர் ஸ்கின்னர் என்பவரால் மேற் பார்வை செய்யப்பட்டது. இவ்வாறு தொடக்கத்தில் இராசகாரிய முறைப்படி தெருக்கள் அமைக்கப் பட்ட போதிலும் பிற்காலத்தில் சிவில் பொறியியற்றிணைக் களமே அவற்றுக்கும் பொறுப்பேற்றது . இதன் பின்னர் ஆள்பதி ஹோட்டன் காலத்தில் கண்டி - மாத்தளை, கண்டி - வதுளை வீதி, கொழும்பு - யாழ்ப்பாணம் வீதி, கொழும்பு-திருகோணமலை வீதி, ஆகியனவும் முற்றுப் பெற்றன. இதன் பயனாகக் கொழும்பு மாகாணங்க ) ளின் பிரதானபட்டினங்களுடன் இணைக்கப்பட்டதோடு கண்டியைச் சென்றடைவதற்கு மூன்று வ ழி க ளு ம் திறக்கப்பட்டன. மே லும் மலை நாட்டினூடாகச் சென்ற பாதைகள் பெருந்தோட்டங்களுக்கும் மிகப் பயன்பட்டன.
ஆள்பதி ஹோட்டனுக்குப் பின்னர் கெ ா லின் கம்பெலின் காலத்தில் இரத்தினபுரி - இறக்குவானை -வீதி, அவிசாவலை - எட்டியாந்தோட்டை வீதி, களுத் துறை - அகலவத்தை வீதி, காலி - பத்தேகம வீதி, வியாங்கொடை - நீர்கொழும்பு வீதி, குருநாகல் - புத்

Page 48
88
தற்காலச் சரித்திரம் தளம் வீதி ஆகியன அமைக்கப்பட்டன. பி ன் ன ர் ஜோர்ஜ் அண்டர்சன் காலத்தில் கம்பளை - எட்டியாந் தோட்டை வீதி அமைக்கப்பட்டது. அவருக்குப் பின் னர் ஆள்பதிகள் வாட், றொ பி ன் ச ன், கிறகரி, றிட்ஜ்வே ஆகியோர் காலத்திலும் பல புதிய வீதிகள் அமைக்கப்பட்டன. றொபின்சனின் கா ல த் தி ல் கொழும்பு - வதுளை வீதி, வதுளை - மட்டக்களப்பு வீதி ஆகியனவும், கிறகரியின் காலத்தில் மாங்குளம் - முல் லைத்தீவு வீதி, மதவாச்சி-மன்னார் வீதி, அநுராதபுரம் - புத்தளம் வீதி, கொஸ் லாந்தை - அம்பாந்தோட்டை வீதி ஆகியனவும், றிட்ஜ்வேயின் காலத்தில் அத்தன . கல்ல-பஸ்யாலா வீதி, மட்டக்களப்பு - கி ளி வெட்டி வீதி, கொறனை - அலுத்கம் வீதி ஆகியனவும் அமைக் கப்பட்டன. இவ்விதமாக 1912 இல் மொத்தம் 3883 மைல் நீளமான வீதிகள் இலங்கையில் அமைக்கப்பட் டிருந்தன. அவற்றில் 277 2 மைல் நீளமானவை மக்கடம் என்பவரின் மு ைற ப் ப டி கல்பதிக்கப்பட்ட வையாகக் காணப்பட்டன. மேலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமைக்கப்பட்ட வீதிகள் மோட்டார் கார், லொறி முதலியவற்றின் பாவனைக்கு ஏற்றதாக உறுதியாகவும், அகலமானவையாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு புதிய வீதிகள் அமைக்கப்பட்டகாலத் தில் வீதிகளைத் திருத்தும் வேலையும், வீதிகள் இல்லாத இடங்களை நோக்கி வீதிகளை நீட்டிச் செல்லும் வேலை யும் நடைபெற்றது. அவ்வேலைகள் இந்த நூற்றாண் டின் முற்பகுதியிலும் தொடர்ந்து செய்யப்பட்டன. அதன் பயனாக 1929 ஆம் ஆண்டளவில் மொத்தம் 16400 மைல் நீளமான வீதிகள் இலங்கையில் அமைத் திருந்தன. அவற்றில் 5 260 மைல் நீளமானவை கல் பதிக்கப்பட்டவை. இப்படியாக நாட்டின் பிரதான பட்டினங்களை யும் தலை நகரையும் இணைத்து வீதிகள் போடப்பட்டதனால் மோட்டார் வாகனப் போக்கு

எட்டாந்தரம்
89
வரத்து விருத்தியடைந்தது. அதேசமயம் நாடு முழு வதையும் பரிபாலிப்பதற்கும் பெருந்தோட்டங்களை விருத்திசெய்வதற்கும் உள்நாட்டு வர் த் த க த்  ைத வளர்ப்பதற்கும் வீதிகள் பெருந்துணை செய்தன. அன்றி யும் அவை இலகுவான, விரைவான போக்குவரத்துக்கு உதவுவதன் மூலம் பெருந்தோட்டப் பிரயோசனங் களைக் கொழும்புக்குக் கொண்டு செல்லும் செலவைக் குறைத்ததனால் தோட்டக்காரர்கள் அதிக இலாபமடை யவும் வழிபிறந்தது.
பயிற்சிகள்.
1. பிரித்தானியர் கரையோரப்பகுதியையும் கண்டியை
யும் இணைத்து வீதிகளை அமைக்க எண்ணியதேன் ? 2. பாண்ஸ் காலத்தில் அமைக்கப்பட்ட வீதிகள் எவை ?
அவற்றை அமைப்பதற்கு அவர் எவ்வழியைக் கையாண்
டார் ? 3. ஆள்பதி ஹோட்டன் எந்த வீதிகளை அமைத்தார் ? 4. வீதிகள் அமைப்பதில் சிரத்தை காட்டிய ஏனைய
ஆள்பதிகள் யாவர்? 5. வீதிப்போக்குவரத்து விருத்தியினால் ஏற்பட்ட நன்மை
கள் யாவை?
12

Page 49
பாடம் 6.
புகையிரதப் பாதைகளும் தந்தி தொலை பேசியும்.
இலங்கையில் புகையிரதப் பாதைகள் அமைக்கப் படுதற்குத் தூண்டு கோலாயிருந்தவர்கள் கோப்பிப் பெருந்தோட்டக்காரர்களாகும். கோப்பி 1835 முதல் மலை நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாகப் பயிரிடப் படத்தொடங்கியதைத் தொடர்ந்து மலை நாட்டுக்கும் > கொழும்புக்குமிடையில் விரைவான போக்குவரவு வச திகள் தேவைப்பட்டன். ஏனெனில் அப்படிப்பட்ட வசதி இல்லாதபோது உற்பத்தி செய்யப்பட்ட கோப் பியை வண்டிகளில் கொழும்புக்குக் கொண்டு செல்ல அதிக செலவு ஏற்பட்டது. அதனால் வெளிநாட்டுச் சந்தையில் கோப்பியைக் குறைந்த விலைக்கு விற்க முடியாது போயிற்று. அதேசமயம் பிறேசில், யாவா முதலியன கோப்பியைக் குறைந்த விலைக்கு உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்தபோது இலங்கைக் கோப்பியின் விற்பனை பாதிக்கப்பட்டது. இத னால் பெருந் தோட்டக்காரர் மலை நாட்டுக்குப் புகையிரத வீதிகளை அமைத்துத் தருமாறு அரசாங் கத்தைக் கேட்டனர். அவ்வேளை அரசாங்கம் அவர் களின் கோரிக்கைகளைத் தட்டிக்கழிக்க முடியவில்லை. ஏனெனில் கோப்பி வர்த்தகத்தினால் அரசாங்கத்துக் * கும் அதிக வருமானம் கிடைத்தது. எனவே பெருந் தோட்டக்காரரின் கோரிக்கைக்கு இணங்கிய அரசாங் கம் கொழும்பிலிருந்து கண்டிக்குப் புகையிரத வீதியை அமைக்க முடிவு செய்து பாதையை அ ைம க் கு ம் வேலையை ஒரு கம்பனியிடம் ஒப்படைக்க அதுவும் வேலையைத் தொடங்கியது. ஆயினும் அது புகையிர தப்பாதையைப் போட்டு முடிக்க மு ன் ன ர் தான் செய்து கொண்ட ஓப்பந்தத்துக்கு மேலாக அதிக

எட்டாந்தரம்
91
பணத்தைக் கோரியதனால் அ ர ச ா ங் க ம் புகையிரதப் பாதையை அமைக்கும் வேலையைத் தானே பொறுப் பேற்றுக் கொ ண் ட து. இதன் மேல் 1865 இல் கொழும்பிலிருந்து அம்பேபுசவரையிலும் புகையிரதப் பாதை அமைக்கப்பட்டது. பின்னர் அது 1867 இல் கண்டிவரை நீட்டப்பட்டது.
இவ்வாறு கொழும்பு-கண்டிப்பாதை அமைக்கப் பட்டதன் விளைவாகக் கோப்பி ஏற்றுமதிச் செலவு கணிசமாகக் குறைந்தது. இதனால் தோட்டக்காரர் புகையிரதப் பாதைகளை மலை நாட்டின் ஏனைய பகுதி களிலும் அமைக்குமாறு கேட்டனர். அதற்கிணங்கக் கண்டிப்பாதை 1873 இல் கம்பளைவரையிலும் 1884 இல் அற்றன் வரையிலும், 1924 இல் வதுளை வரை யிலு ம் நீட்டப்பட்டது. அதேசமயம் நானுஓயாவிலி ருந்து ஒரு ஒடுக்கமான பாதை றாகலை வரை அமைக் கப்பட்டது.
இவ்வாறு மலை நாட்டுப் பாதைகள் அமைக்கப்பட்ட அதே காலத்தில் கரையோரப் பகுதிகளிலும் புகை யிரதப் பாதையமைக்கும் வேலை தொடக்கப்பட்டது. குறிப்பாக தென்மேல் பிர தே சத் தில் இறப்பர் தேயிலை ஆகியன விளையும் களனிப்பள்ளத்தாக்குப் பகுதியையும் தென்னை பயிரா கு ம் சிலாபம், நீர் கொழும்புப் பகுதியையும் கொழும்புடன் இணைப்பதற் காக மூன்று பாதைகள் அமைக்கப்பட்டன. அவற்றில் களனிப்பாதை முதலில் 1902 இல் அவிசாவலை வரை யிலும் 1912 இல் இரத்தினபுரிக்கூடாக ஒப்பனாயக்க வரையிலும் நீட்டப்பட்டது. அதே சமயம் கரை யோரப்பாதை 1922 இல் வடக்கே புத்தளம் வரையி லும் 1895 ல் தெற்கே மாத்தறை வரையிலும் நீட்டப் பட்டது. இப்படியாக இலங்கையின் கரையோரப் பகுதியும் மலை நாடும் புகையிரத சேவையைப் பெற்றுப் ப ய ன டை யு ம் போது ஆள்பதி றிட்ஜ்வே அவர்கள்

Page 50
இலங்கை புகையிரத வீதிகள்
ராளம்.
នាក់
1ான்னார்
வவுனியா
மதவாச்சி
கான்மை
அநுராதபுரி
கல்லோயா
பொவன்னழகம்
மாகோ
ஒமாத்தகா
பொல்காவதே
இபரான
கண்டி
முகம்
கனா >
'பண்டாரவளை
இரத்தினபுரி "Aஓப்பனாக்கை
..
ஐதராது
இலங்கையின் புகையிரத வீதிகள்

எட்டாந்தரம்
93
வடபகுதிப் பாதையை அமைக்க முடிவு செய்தார். வடபகுதிப்பாதை யாழ்ப்பாணக் குடாநாட்டைத் தென்னிலங்கையுடன் இணைப்பதற்கும் அதன் வர்த்த கத்தை விருத்தி செய்வதற்கும் இ ந் தி ய ா வு ட ன் இலங்கையைத் தொடர்புபடுத்தித் தென்னிந்தியத் தொழிலா ளர் இங்கு வருவதற்கு வசதி செய்வதற்கும் அவசியமானதொன்றாயிருந்தபடியால் அப்பாதையை அமைக்கும் வேலை 1902 இல் தொடங்கப்பட்டது. அது 1905 இல் காங்கேசன் துறைவரை நீட்டப்பட்டது. அதேசமயம் 1914 இல் மதவாச்சி மன்னார் பாதையும் 1928 இல் மகோ-- மட்டக்களப்புப் பாதையும் அமைக் கப்பட்டன. இவ்வாறு 1930 அளவில் மொத்தம் 950 மைல் நீளமான புகையிரதப் பாதைகள் அமைக் கப்பட்டன.
இவ்வாறு போக்குவரவுப் பாதைகள் நாடு முழு வதையும் இணைத்ததைத் தொடர்ந்து தபால் தந்திச் சேவைகளும் விருத்தியடைந்தன. 1832 இல் தான் தபால் கோச்சு ஒன்று முதல் முதல் கண்டிக்குப் போனது. பின்னர் அச்சேவை எல்லாமாகாண நகரங் களுக்கும் விஸ்தரிக்கப்பட்டது. அதேசமயம் 1858இல் கொழும்புக்கும், காலி, மன்னார் ஆகியவற்றுக்குமிடை யில் தந்திச்சேவை தொடக்கப்பட்டது. மே லு ம் 1880 க்குப் பின்னர் தொலைபேசியும் கடல் கடந்த தந்திச் சேவையும், அதிகமாக விருத்தியடைந்தன.
தந்திச் சேவையுடன் தொடர்புள்ள இன்னொரு சேவை ஒலிபரப்புச் சேவையாகும். இ ல ங் கை யில் 1924 இல் ஒலிபரப்புச்சேவை முதன்முதல் தொடங்கப் பட்டது. இன்று அது பல கிளைகளுடன் பல மொழி யிலும் அச்சேவையைச் செய்துவருகிறது. மேற்குறிப் பிடப்பட்டவற்றில் ஏற்பட்ட விருத்தியைத் தவிர விமானப்போக்கு வரத்தும் அண்மைக்காலத்தில் அதிக முக்கியத்துவமடைந்துள்ளது. தற்பொழுது இரத்ம

Page 51
94
தற்காலச் சரித்திரம்
காங்கேசன்து 5ாற
திருகோணமலை
2% அநுராதபுரம் -
மட்டக்களப்பு
அம்பாறை *"
ரத்மலானை
இலங்கையின் விமானப்பாதைகள்)
லானையில் ஒரு சிவில் விமான நிலையமும் கட்டுநாயக் காவில் ஒரு இராணுவ விமான நிலையமும் பிரதான மையங்களாயுள்ளன. அதேசமயம் இரத்மலானையுடன் யாழ்ப்பாணம், திருக்கோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, ஆகியனவும் விமான சேவையால் பயன் பெறுகின்றன. இன்று கட்டுநாயக்கா விமான நிலை யம் பண்டார நாயக சர்வதேச விமானத்தளமாக விளங்குகின்றது.

95
எட்டாந்தரம் பயிற்சிகள்:
இலங்கையில் புகையிரத வீதிகளை அமைக்கும்படி தோட்
டத் துரைமார் வற்புறுத்தியதேன் ? 2. முதலாவது புகையிரத வீதி எங்கு, எக்காலத்தில் அமைக்
கப்பட்டது ? -3. களனிப் பள்ளத் தாக்குப் பாதைகளை அமைப்பதற்குத்
தூண்டு கோலாக இருந்த காரணிகள் யாவை ? வடக்குப்பாதைகளை அமைப்பதற்கு ஆள்பதி றிட்ஜ்வே எண்ணியதேன் ? இலங்கையில் ஒலிபரப்புச் சேவை எந்த ஆண்டு தொடங் கப்பட்டது ? இலங்கையில் எவ்விடங்களுக்கிடையில் விமான சேவை நடைபெறுகின்றது?
அலகு 8. பாடம் 7. கல்வி
இலங்கையில், அன்னியர் வருகைக்கு மு ன் ன ர் சுதேச மொழிக் கல்வியே காணப்பட்டது. சிங்கள மக்களைப் பொறுத்தவரை பிரிவேனாக்கள் மூலமே கல்வி போதனை நடந்துவந்தது. அதே சமயம் தமிழர்கள் 'குரு-சிஷ்ய' முறையிலேயே கல்விபெற்று வந்தனர். அந்நிலையில் அன்னியரின் படையெடுப்புக்களின் விளை வாகச் சிங்களப் பிரிவேனாக் கல்விமுறை சீரழிந்தது. அதே சமயம் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் ஆங் கிலம் அதிக முக்கியத்துவம் பெற்றது. அக்காலத்தில் -பப்ரிஸ்ற், வெஸ்லியன், அமெரிக்கமிஷன் முதலியவற்றைச்

Page 52
96
தற்காலச் சரித்திரம்
சேர்ந்தவர்களே பாடசாலைகளை நிறுவிக் கல்விபோத . னையிலீடுபட்டனர். ஆயினும் அவர் கள் கல்விபோத னையைக் கருவியாகப் பயன்படுத்தி மக்களைக் கிறித்தவ சமயத்துக்கு மதம் மாற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டனர்.
மேற் குறிப்பிட்ட நிலைமைகள் காணப்பட்ட காலத் தில் (1832 இல்) கோல்புறூக்குழுவினர் ஆங்கிலக் கல்வியை வற்புறுத்தியதோடு அதைப் பிள்ளைகள் பயில் வதற்கு வேண்டிய வசதிகளைச் செய்யும் படியும் சிபார்சு செய்தனர், அதற்கிணங்க 1841 இல் மத்திய " கல்விக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. அது அக்காலத் தில் ஆங்கிலக்கல்வி போதனையைச் செய்த அங்கிளிக் கன்மிஷன் பாடசாலைகளுக்கும் கத்தோலிக்கபாடசாலை களுக்கும் மட்டும் உதவி நன்கொடை வழங்கியது. ஆனால் அவ்வாறு செய்தல் தவறானது எனக் கலாநிதி பொன்ஜன் என்னும் கத்தோலிக்க மதகுருவும் வேறு சிலரும் கண்டித்தனர். அதேசமயம் கல்விக்குழுவிலும் பலர் குறைகண்டமையால் அரசாங்கம் கல்வி நிலைமை களை ஆராய்வதற்கென 1865 இல் ஒரு விசாரணைச் சபையை நிறுவியது. அச்சபை 5சிபார்சுகளைச் செய்தது. அவை:-
1. ஒரு கல்வித்திணைக்களம் நிறுவப்பட வேண்டும்;
ஆரம்ப பாடசாலைகளில் தாய்மொழியே போதனா மொழி யாயிருக்க வேண்டும். 3. உயர் கல்விக்காக ஒரு கல்லூரி நிறுவப்படவேண்டும்;
தமிழ், சிங்கள பாடசாலைகளின் தொகை அதிகரிக்கப்படுவ தோடு ஆசிரியர்களின் பயிற்சிக்கென ஒரு க ழ க மும் அமைக்கப்பட வேண்டும். அரசாங்க உதவியைப் பெறுவதற்குக் கிறிஸ்தவ மத போதனை ஒரு நிபந்தனையாக இருக்கக் கூடாது,
1865 ஆம் ஆண்டு விசாரணைக் குழுவினரால் செய்யப்பட்ட சிபார்சுகளை அரசாங்கம் ஏற்றுக் கொண் டது. அவற்றுக்கிணங்க 1869 இல் கல்வித்திணைக்களம்

எட்டாந்தரம்
97
நிறுவப்பட்டது. அதற்குப்பின்னர் அரசாங்கப் பாட சாலைகளுக்கும் சுயமொழிப்பாடசாலைகளுக்கும் உதவி நன்கொடைப்பணம் வழங்கப்பட்டது. அக்காலத்தில் பல சமயப் பெரியார்களின் பணிகளினால் பெளத்த, இந்துசமயங்களில் மறு ம ல ர் ச் சி ஏற்பட்டிருந்தமை சுயமொழிக்கல்விக்கு மேலும் ஊக்கத்தைக் கொடுத் தது . எ ன வே மேற்குறிப்பிட்ட காரணங்களினால் பெளத்த இந்து முஸ்லிம் பாடசாலைகளின் தொகை 1872 இல் 402 இலிருந்து 1890 இல் 894 ஆக அதி கரித்தது. அத்தொகை 1912 அளவில் 2000 ஆக 'மேலும் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு சுயமொழிக்கல்வி விருத்தியடைந்து வந்த சமயம் 1889 இல் அரசாங்கம் சுய மொழியில் போதிக்கும் ஆசிரியர்களுக்கென ஒரு பயிற்சிக் கழ கத்தை நிறுவியது. இதன்பின்னர் 1893 இல் தொழில் நுட்பக் கல்லூரியும், 1903 இல் ஆங்கில ஆசிரியர் களுக்கான பயிற்சிக் கல்லூரியும் நிறுவப்பட்டன. அதேசமயம் 1880 முதல் கேம்பிறிஜ் பல் க லை க் கழகச் சிரேட்ட தராதரப்பத்திரத் தேர்வின் அடிப் படையில், திறமையுள்ள மாண வர்கள் சிலர் உயர் க ல் விக்காக இங்கிலாந்துக்கும் அனுப்பப்பட்டனர். இவ்வாறு கல்வித்துறையில் சிறிது முன்னேற்றம் ஏற் பட்டபோதிலும் அது திருப்திகரமாயிருக்காததினால் இலங்கையின் கல்விநிலைபற்றி ஆராய்வதற்கு 1911 இல் இன்னொரு கல்வி விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது. அக்குழு நான்கு முக்கியமான சிபார்சுகளைச் செய்தது. அவை :-
1. நாலாம் வகுப்புவரை தாய்மொழி கட்டாய பாடமா
யிருக்க வேண்டும்.
ஆங்கிலப்பாடசாலைகளை 3 பிரிவுகளில் அமைக்கவேண்டும் . 3. நாட்டின் தேவைக்கு ஏற்ற பாடத்திட்டத்தின் அடிப்படை
யில் இலங்கையில் ஒரு தேர்வு நடத்தப்பட வேண்டும்
2.
13

Page 53
9 8
தற்காலச் சரித்திரம்
4 .
இலண்டன் பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கு மாண வர்களை ஆயத்தம் செய்யும் ஒரு பல்கலைக்கழகக் கல் லூரி அமைக் கப்படவேண்டும்.
இவ்வாறு 1911 ஆம் ஆண்டு விசாரணைக் குழுவின் சிபார்சுகளின்படி E. S. L.. C. எ ன் னு ம் தேர்வு இலங்கையில் நடத்தப்பட்டதோடு 1921 இல் பல்கலைக் கழகக் கல் லூரி ஒன்றும் கொழும்பில் நிறுவப்பட்டது. ஆயினும் இம்மாற்றங்களால் அதிகம் நன்மை ஏற்பட வில்லை. அதேசமயம் 19 29 இல் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடி இலங்கையையும் பா தித்த போது இங்கு படித்த இளைஞர்களிடையே வேலையில் லாத் திண்டாட்டம் ஏற்பட்டது. அந்நிலையில் நாட் டின் கல்விமுறையும் அதற்கு ஒரு க ா ர ண ம் என உணர்ந்த அரசாங்கம் நடைமுறையிலிருந்த கல்வித் திட்டத்தில் புகுத்தவேண்டிய மாற்றங்களை ஆராய் வதற்கு 1940 இல் ஒரு விசாரணைக்குழுவை நியமித்தது. அக்குழு 1943 இல் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதில் தெரிவிக்கப்பட்ட
ரன்
1.
பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை இல வசக்
கல்வி வழங்கப்படவேண்டும். 2. ஆரம்பக்கல்வி தாய்மொழியில் புகட்டப்படவேண்டும். 3. ஆங்கிலம் இரண்டாவது கட்டாய பாடமாகப் போதிக்
கப்படவேண்டும். 4. பாடசாலைகளை ஆரம்ப பாடசாலை, பயிற்சிப் பாட சாலை,
உயர்தர பாடசாலை என மூன்றாகப் பிரிக்கவேண் டும்.'
1943 ஆம் ஆண்டுக் கல்விக்குழுவின் சிபார்சுகள் இலவசக்கல்வி முறையைப் புகுத்தி இலங்கையின் கல்வித்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தின. அதன் பயனாக ஏழை மாணவர்களில் விவேகம் கூடியவர் களும் உயர் கல்வியைப் பெற வாய்ப்பு ஏற்பட்டிருக் கிறது. அதேசமயம் தாய்மொழி மூலம் கல்வி போதிக் கப்படுவதனால் மாணவர்கள் தமது கருத்துக்களைச்

எட்டாந்தரம்
99
சுதந்திரமாக வெளியிட மு டி கி ற து. மேலும் சுயமொழிக்கல்வி சுயமுயற்சிகளுக்கும் ஊக்கம் அளிக் கின்றது .
இவ்வாறு இலங்கையின் கல்வித்துறையில் ஆரம் பக்கல்வியிலும், இடைநிலைக் கல்வியிலும் மாற்றங்கள் ஏற்பட்ட காலத்தில் உயர்கல்வியிலும் ம ா ற் ற ங் க ள் வேண்டுமென சேர் பொன் அருணாசலம், சேர் ஜேம்ஸ் பீரிஸ் முதலிய தலை வர்களும் பிற கல்விமான்களும் மேற் கொண்ட முயற்சிகளின் பயனாக 1941 இல் பேராதனை யில் முதலாவது ப ல் க லைக் கழகம் நிறுவப்பட்டது. இதன் பின்னர் வித்தியோதய, வித்தியாலங்கார பிரிவேனாக்களுக்கும் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப் பட்டதோடு 1967 முதல் கொழும்பிலும் ஒரு புதிய பல்கலைக்கழகம் நிறுவப்பட்டிருக்கிறது. இவ்வாறு
அண்மைக்காலத்தில் உயர்கல்விக்கான வசதிகள் அதிக ரித்திருப்பதனால் நாட்டின் கல்வித்தரம் அதிகரித்திருப் பினும் படித்தவர்களுக்கு வேலையில்லாமை ஒரு பெரும் பிரச்சனையாயுள்ளது. அதைத் தீர்ப்பதில் தான் இலங்
கையின் முன்னேற்றம் தங்கியுள்ளது எனலாம்.
பயிற்சிகள்.
1: பண்டைக்காலத்தில் இலங்கையில் நிலவிய கல்வி முறை
யாது ?
அது ஏன் வீழ்ச்சியடைந்தது ? 3; 1865 ஆம் ஆண்டுக் கல்வி விசாரணைச்சபை செய்த
சிபார்சுகள் யாவை ? 4: '1911 ஆம் ஆண்டுக் கல்வி விசாரணைச்சபை செய்த
சிபார்சுகள் எவை? 5: 1943 ஆம் ஆண்டுக் கல்வி விசாரணைக்குழுவினர் செய்த
சிபார்சுகள் எவை ?

Page 54
பாடம் 8.
பெளத்த, இந்துசமய மறுமலர்ச்சி
இலங்கையிலுள்ள பிரதான சமயங்களாகிய பெளத்தமும் இந்துசமயமும் போத்துக்கீசரின் கால முதல் தாழ்நிலையிலிருந்து வந்தன. குறிப்பாக, கரை யோரப்பகுதியிலேயே அவை அதிகமாகப் பாதிக்கப் பட்டன, போத்துக்கீசர் இந்து, பௌத்த கோவில் களை இடித்து அழித்ததோடு அவற்றின் சொத்துக் களையும் சூறையாடினர். அதேசமயம் ஒல்லாந்தரும், பகிரங்க மத வழிபாடுகளுக்குத் தடை விதித்தனர். பின் னர் பிரித்தானியர் எல்லோருக்கும் வழிபாட்டுச் சுதந் திரத்தை வழங்கியபோதும் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதிலும் மக்களை மதமாற்றுவதிலும் அதிக கரி சனை காட்டினர். அவர்கள் கண்டியைக் கைப்பற்றிய பின்னர் 18 15 ஆம் ஆண்டு செய்த உடன்படிக்கை யில் பெளத்த ச ம ய த்  ைத ப் பாதுகாப்பதாகவும், அதற்கு உரிய இடத்தை அளிப்பதாகவும் ஒப்புக்கொண் டனர். ஆயினும் அவர்கள் தமது உறுதிமொழியைக் கெளரவிக்காமல் கிறீத்தவசமயத்துக்கே உ ன் ன த இடம் கொடுத்தனர். இவ்விதமாக அன்னியரின் ஆட்சியின் கீழ் சு தே ச ம த ங் க ள் நலிவுற்று வந்த காலத்தில் அவ்வப்போது சில அறிஞர்கள் தோன்றிச் சமய மறுமலர்ச்சிக்கு உத வி னர். அப்படிப்பட்ட பெரியார்களில் வெலிவித்த சரணங்கர பிக்கு அவர்கள் ஒரு வர். அவர் 18 ஆம் நூற்றாண்டில் கண்டிப்பகுதியில் பெளத்த சிங்கள மறுமலர்ச்சி இயக்கம் ஒன்றைத் தொடங்கினார். அவ்வியக்கம் பின்னர் ஏனைய பகுதி களுக்கும் பரவியது. அதைப்பற்றி ஏழாந்தரத்தில் படித்துள்ளீர்களல்லவா ?
இவ்வாறு ஒல்லாந்தர் காலத்தில் வெலிவித்த சர ண ங்கர அவர்களால் தொடங்கப்பட்ட சமயமறு

எட்டாந்தரம்
101
மலர்ச்சி இயக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மீண்டும் புத்துயிர்ப்படைந்தது. அப் போது பல பௌத்த குருமார் புத்தசமய நெறியையும் பண்பாட்டையும் பேணுவதில் அதிக அக்கறைகாட்டி னர் .. அதேசமயம் பழைய கல்வி முறைகளைப் புனர மைப்பதிலும் கவனம் செலுத்தினர். இவற்றின் பய
னாக 1839 இல் இரத்மலானையில் பரமசேதிய பிரிவேனா) நிறுவப்பட்டது. பின்னர் 1373 இல் ஹிக்கடுவை ஸ்ரீ சுமங்கல பிக்கு அவர்கள் மாளிகாகந்தையில் வித்தி யோதய பிரிவேனாவையும், 1876 இல் இரத்மலானை . தர்மலோக பிக்கு அவர்கள் களனியாவில் வித்தியா
லங்கார பிரிவேனாவையும் நிறுவினர்.
இக்காலத்தில் கிறித்தவ சமயிகளுக்கும் பெளத்த பிக்குகளுக்குமிடையில் சமய வாதங்களும் நடைபெற் றன. மொகோத்திவத்த குணானந்த தேரோ என்னும் பிக்கு 1873 இல் பாணந்துறையில் நடைபெற்ற ஒரு சமய வாதத்தில் பங்குபற்றினார். அவ்வாதம் பற்றிய செய்தி அமெரிக்காவிலிருந்த கேணல் ஒல்காட் என்பவருக்கும் எட்டியது. அவர் அச்சம்பவத்தினால் கவரப்பட்டார். அவரும் பிளவற்ஸ்கி என்னும் ஒரு இரசியப் பெண் மணி யும் 1875 இல் நியூயோர்க்கில் பெளத்த பிரம ஞான சங்கத்தை நிறுவியிருந்தனர். பின் னர் அவர்கள் 1878 இல் இந்தியா வுக்கு வந்து சென்னையிலுள்ள அடையாறு என்னுமிடத்தில் பெளத்த பிரமஞான சங் கத்தின் தலைமை நிலையத்தை நிறுவிவிட்டு அங்கிருந்து இலங்கைக்குவந்து இங்கு புத்தசமயத்தைத் தழுவி 1 880 இல் இங்கும் ஒரு பெளத்த பிரமஞான சங் கத்தை நிறுவினர். பின்னர் சரசவி சந்தாரச என்னும் பத்திரிகை மூலமும் போயாதினப் பாடசாலைகள் மூல மும் அவர் சமயப்பணி செய்தார். அன்றியும் பௌத்த பிரமஞானசங்கம் நூற்றுக்கணக்கான பாடசாலைகளை யும் நிறுவியது. அவற்றில் கொழும்பு ஆனந்தாக்கல் லூரி காலி மகிந்தாக்கல்லூரி, கண்டி தர்மராஜாக்கல் லூரி

Page 55
10 2
தற்காலச் சரித்திரம் ஆகியன முக்கியமானவை. இவையும், இவைபோன்ற பிறபாடசாலைகளும் சிங்கள இனத்துக்கும் பௌத்த சமயக்கல்விக்கும் பெருந் தொண்டு செய்தன. இவ் வாறு பௌத்த சமயத்துக்கும், அதன் பண்பாட்டுக்கும் சேவை செய்த இன்னொரு பெரியார் 'அநகாரிகதர்மபால' என்பவராவர். அவர் பெளத்த பாடசாலைகளை நிறுவு வதில் கேணல் ஒல்காட்டுக்கு உதவி செய்தார்: அத்து டன் 1882 இல் கல்கத்தாவில் மகாபோதி சங்கத்தைத் தாபித்தும் மகாபோதி சஞ்சிகை என்னும் நூலை வெளியிட்டும் புத்தசமய மறுமலர்ச்சிக்குப் பெருந் தொண்டாற்றினார்.
இவ் வாறு பு த் த ச ம ய ம் மறுமலர்ச்சியடைந்த காலத்தில் இந்து சமயமும் புத்துயிர்ப்புப்பெற்றது. அன்றியும் இக்காலத்தில் ஆரியசமாசம், பிரமசமாசம் மு த லி ய இந்துசமய இயக்கங்கள் இந்தியாவிலும் சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. அவ்வேளை யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர் அவர்கள் சைவ சமயத்தின் எழுச்சிக்கு உதவினர். அவர் கிறித்தவ சமயத்தைக் கண்டித்துப் பேசியும் எழுதியும் வந்ததோடு பல சைவசமய நூல்களையும் எழுதி வெளியிட்டார். அவர் பல சைவப்பாடசாலை களை யும் நிறுவினார். * ஆறுமுக நாவலர் அமரராகிய பின்னர் 1888 முதல் சைவபரிபாலன சபை அவரது பணியைத் தொடர்ந்து செய்தது. அச்சபை 1890 இல் ஒரு உயர்கல்விப் பாடசாலையை நிறுவியது. அது பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியாகியது . அதைத்தொடர்ந்து சைவ வித்தியாவிருத்திச் சங்கம் என ஒரு சபை பல சைவப்பாடசாலைகளை நிறுவிச் சமயத்துக்கும், மொழிக்கும் - தொண்டு செய்தது . அத்தகைய முயற்சிகளில் இன்னொன்று சேர். பொன் இராம நா தனால் மேற் கொள்ளப்பட்டது. அவரது முயற்சியின் பயனாக 1913 இல் இர ா ம நா த ன் பெண்கள் கல்லூரியும், 1919 இல் பரமேஸ்வரக் கல்
லூரியும் கட்டப்பட்டன.
முயற்சியில் மேற் கொள்று சேர். பொன்

(.
எட்டாந்தரம்
1 03
மேற்குறிப்பிட்ட இயக்கங்களைத்தவிர இர ா ம கிருஷ்ண சபையினரும் பல பாடசாலைகளை நிறு வி இந்து சமயக் கல்விக்குப் பெருந் தொண்டாற்றினர். இவ்வாறு பெளத்த, இந்து சமயங்களில் மறுமலர்ச்சி ஏற்பட்ட காலத்தில் சித்திலெவ் வை யும் வேறு சில பெரி யார்களும் முஸ்லிம்களுக்கான கல்வி நிலையங்களை நிறுவி இஸ் லாம் சமயத்துக்குச் சேவை செய்தனர்.
பெ
பயிற்சிகள்
1. 18 ஆம் நூற்றாண்டில் பௌத்தமத - மறுமலர்ச்சிக்கு
உதவியவர் யார் ?
2. 19 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட பிரிவினாக்கள் யாவை . 3. கிறித்தவர்களுடன் சமயவாதம் நடத்திய பிக்கு யார் ? 4. கேணல் ஒ ல் காட் யார் ? - அவர் புத்தசமயத்துக்கு
ஆற்றிய சேவை யாது ? அ நாகாரிக தர்மபாலாவைப்பற்றி யாது அறிவீர் ?
5.
6. ஆறுமுக நாவலர் சைவசமய மறுமலர்ச்சிக்கு எவ் வழியில்
உதவினார்?

Page 56
அலகு 9.
நவீன ஐரோப்பா.
பாடம் 9. இத்தாலியின் ஒற்றுமை 1815 ஆம் ஆண்டு வியன்னா மாநாடு ஐரோப்பா வில் பிரான்சியப் புரட்சிக்கு முன்பிருந்த நிலைமைகளை மீண்டும் நிலை நாட்ட முயன்றது என்பதை முன்னொரு , பாடத்தில் படித்திருக்கிறீர்களலல்லவா ? இவ்வாறு ஐரோப்பாவில் புரட்சி இயக்கங்களை நசுக்கி மீண்டும் அரசர்களின் எதேச்சாதிகார ஆட்சியைத் தாபிப்பதில் வியன்னா மாநாடு ஓரளவு வெற்றி பெற்ற போதிலும், விரைவில் மக்கள் வல்லாட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். அத்தகைய கிளர்ச்சிகள் 1830 இ லு ம் 1848 இலும் இடம் பெற்றன. 1830 இல் பிரான்சு, இத்தாலி, பெல்சியம் ஆகிய நாடுகளிலும் 1848 இல் பிரான்சு, ஜேர்மனி, இத்தாலி, ஆஸ்திரியா ஆகிய நாடு களிலும் கிளர்ச்சிகள் ஏற்பட்டன . அப்போது அவற் றைத் தற்காலிகமாக அடக்குவதில் ஆட்சியாளர்கள் வெற்றி பெற்றனர். ஆயினும் ஜேர்மனி, இத்தாலி ஆகியவற்றில் ஏற்பட்டகிளர்ச்சிகள் இறுதியில் அந்நா டுகள் ஒற்றுமையும் சுதந்திரமும் பெற உதவின.
இத்தாலி பண்டைக்காலத்தில் பெரும் புகழ்பெற் றிருந்தது. அது பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில பலசிறு அரசுகளாகப் பிள வுப்ட்டி ருந்தது. அப்போது இத்தாலியின் வடக்கிலுள்ள லொம்பாடியும், வெனிசும் ஆஸ்திரியாவின் ஆட்சி யின் கீழிருந்தன. அதேசமயம் ஆஸ் திரிய அரசனின் உறவினர் பாமா, மொடேனா தஸ்கனி என்பவற்றை ஆண்டனர். அவ்வேளை பீட்மந்து சாடீனிய மன்ன னின் கீழும் உரோமாபுரிப் பிரதேசம் பாப்பரசரின்

எட்டாந்தரம்
105 கீழும் இருந்தது. இவ்வாறு இத்தாலி பலரது ஆட் சியின் கீழ் இருந்தமையால் ஒன்றுபடுதல் கடின மாயி ருந்தது . அந்நிலையில் அரசர்களின் வல்லாட்சிக்கு எதி ராகக் கரியெரிப்போர் சங்கமும் வேறு இரகசிய இயக்கங் களும் 1820 இலும் 1830இலும் கிளர்ச்சி செய்தபோது அவை அடக்கப்பட்டன. ஆயினும் மக்களின் சுதந் திர வேட்கை தணியவில்லை. அப்போது மசினி என்னும் இளஞ்சட்டவாதி இளைய இத்தாலி என்னும் இயக்கத்தைத் தொடங்கினான். "அது நாளிலும் பொ ழு தி லும் வளர்ந்து பலம் பெற்றது.
இது இவ்வாறாக, 1848 இல் பிரான்சில் ஏற்பட்ட புரட்சி இத்தாலியின் பல்வேறு பகுதிகளிலும் பரவிய வேளை சாடீனியா மன்னனாகிய சாள்ஸ் அல்பேட் தனது நாட்டில் சுதந்திர ஆட்சிமுறையை ஏற்படுத்தினான். அவனைப் பின்பற்றிச் சிசிலி மன்னனும் தனது நாட் டில் ஒரு புதிய அரசியல் திட்டத்தைச் செயல்படுத் தினான். இதன் பின்னர் சாடீனிய ம ன் ன னா கி ய அல்பேட் லொம்பாடியிலும், வெனிசிலும் ஏற்பட்ட கிளர்ச்சிகளுக்கு ஆதரவளித்து ஆஸ்திரியரை எதிர்த் தான். ஆயினும் கஸ்ரோசா, நொவாறினோ என்னும் போர் களில் அவனது படைகள் ஆஸ்திரியரால் தோற்கடிக் கப்பட்டன. இதன் விளைவாக அல்பேட் தனது மக னாகிய விக்ரர் இமானுவேலை அரசனாக்கிவிட்டுத் தான் பதவியிலிருந்து விலகினான். இதன் பின்னர், இத்தா லியின் சுதந்திரப் போருக்குத் தலைமை வ கி க் கு ம் பொறுப்பு விக்ரர் இமானுவேலைச் சார்ந்தது.
இது இவ்வாறாக, 1848 இல் பாப்பர்சரின் ஆட் சிக்குட்பட்ட பகுதிகளிலும் கிளர்ச்சி ஏற்பட்டபோது அவர் நேப்பிள்சுக்குத் தப்பியோடினார். உடன் மசினி யும், கரிபோல்டி என்னும் வீரனும் றோமாபுரியில் ஒரு குடியரசை நிறுவியபோது அதனை அறிந்த பிரான்சிய
14
பெ

Page 57
106
தற்காலச் சரித்திரம்
மன்னனாகிய லூயி நெப்போலியன் ஒரு ப டை யை அங்கு அனுப்பினான். கரிபோல்டியும் மசினியும் அப்ப - டையை எதிர்த்து வீரத்துடன் போராடினர். ஆயி னும் வெற்றிபெற முடியாத நிலையில் அ வர் க ள் றோமை விட்டுத் தப்பியோடினர். அவ்வேளை கரி போல்டி நாட்டு மக்களுக்கு விடுத்த ஒரு வேண்டு கோளில் ''நான் உங்களுக்கு வேதனமோ, ஒதுக் கிடமோ, உணவோ கொடுப்பதற்காகக் கூறவில்லை; பசி, தாகம், மரணம் ஆகியவற்றையே தருவேன். எனவே தனது நாட்டை முழுமன தாக நேசிப்பவன் மட்டும் என் பின்னே வரட்டும்'' எனத் தெரிவித்தான். இவ்வாறு கரிபால்டி விடுத்த வேண்டுகோளும் அவ னது துணிச்சலும், மசினியின் முயற்சிகளும் மக்கள் ம ன தி ல் சுதந்திரத்தீயைக் கொழுந்துவிட்டெரியச் செய்தன. இதன் பின்னர் சாடீனிய அ ர ச னி ன் மந்திரியாகிய கவூர் சுதந்திரப்போரை வழிநடத்தினான்.
கவூர்
கரிபோல்டி

எட்டாந்தரம்
107 கவூர் ஒரு சிறந்த மதியூகியும் திறமைசாலியுமா வான், அவன் சாடீனியாவின் தலைமையில் இத்தாலி முழுவதையும் ஒன்றுபடுத்துவதை இட் சி ய ம ா க க் கொண்டு முதலில் தனது நாட்டைப் பலப்படுத்துவ தில் முனைந்தான். அ வ ன் சாடீனியாவில் கைத் தொழிலை யும் வர்த்தகத்தையும் விருத்தி செய்தான்; ஆட்சிமுறையைச் சீர்திருத்தினான், படைகளைப் புனர மைத்தான், மதபீடத்தின் அதிகாரத்தைக் கட்டுப் படுத்தினான். இவ்வாறு பல வழிகளிலும்சாடீனியா வைப் பலப்படுத்திய பின்னர் அவன் 1854 இல் பிரான் 'சும், பிரித்தானியாவும், இரசியாவுக்கு எதிராகப் போரிட்டபோது (கிறைமியன் போர்) பிரான்சையும், பிரித்தானியாவையும், ஆதரித்து ஒரு சாடீனியப் படையை அவற்றுக்கு உதவியாக அனுப்பி அவற்றின் நல்லெண்ணத்தைப் பெற்றான். அத்துடன் ஆஸ்திரியா வுக்கெதிராகத் தான் போரிடும் போது பிரான்சு உதவி செய்தால் அதற்குப் பதிலாக சவோய், நீஸ் என்னும் மாகாணங்களைக் கொடுப்பதாகவும் பிரான்சு டன் ஓர் இரகசிய உடன்படிக்கை செய்து கொண் டான்.
இதன் மேல் சாடீனிய மன்னன் பாராளுமன்றத் தில் நிகழ்த்திய பேச்சினால் ஆத்திரமூட்டப்பட்ட ஆஸ் திரியா, சாடீனியா தனது படைகளைக் குறைக்கவேண் டும் எனக் கோர அதற்கு அது சம்மதிக்கவில்லை, உடன் ஆஸ்திரியா, சாடீனியாவைத் தாக்கியது. அவ் வேளை பிரான்சு ஒரு படையை அ னு ப் ப அதன் உதவியுடன் சாடீனியா, மஜென்ராப் போரில் ஆஸ்திரி யாவைத் தோற்கடித்தது. ஆயினும் அதன் பின்னர் பிரான்சு போரை நிறுத்தி ஆஸ்திரியாவுடன் சமாதா னம் செய்ததினால் கவூர் பெரும் ஏமாற்றமடைந்தான். அதே சமயம் பிரான்ஸ் தான் அதுவரை செய்த உத விக்காகச் சவோய், நீஸ் என்னும் மாகாணங்களையும் பெற்றுக் கொண்டமை இத்தாலியருக்கு மனவேதனை யைக் கொடுத்தது. இதன் பின்னர் கவூர் ஆஸ்திரி

Page 58
108
தற்காலச் சரித்திரம் யாவுடன் சாடீனியா தனித்துப் போரிடுவதை விரும் பினான். ஆயினும் அரசன் அதற்குச் சம்மதிக்காத படியால் அவன் தனது பதவியிலிருந்து விலகினான். பின்னர் 1860 இல் அவன் மீண்டும் பிரதம மந்திரி பதவியை ஏற்றான். அவ்வாண்டு பாமா, மொடேனா தஸ்கனி மு த லி ய அரசுகளும் சாடீனியாவின் தலை மையை ஏற்றன; லொம்பாடியும் கைப்பற்றப்பட்டி ருந்தது. ஆகவே வடக்கில் வெனிசியாவும் தெற்கில் நேப்பிள்சும் மட்டுமே சாடீனிய அரசுக்கு உட்படா மலிருந்தன.
சவோய்
1859 இல் இயோனாகது 12:83) 0 15
2012 866 1 1!
மின்
லொழ்த்!
தஸ்க
1 சாடீனீயாது
றோம் -
தானியா |
இத்தாலி ஒன்றுபடுதல். இது இவ்வாறாக 1860 இல் நேப்பிள்சு மன்னனுக்கு எதி ராகச் சிசிலியில் ஒரு புரட்சி ஏற்பட்டது. உடன் புரட்

எட்டாந்தரம்
109
, சிக்காரரின் வேண்டுகோட்படி கரிபோல்டி 1000 செஞ் சட்டை வீரருடன் அங்கு சென்று சிசிலிப்படைகளைத் தோற்கடித்தபின் நேப்பிள்சையும் கைப்பற்றினான். பின்னர் அப்பிரதேசங்களை அவன் விக்ரர் இமானு வேலுக்குக் கையளிக்க அவை ஒரு வாக்கெடுப்பின் மூலம் அவனது ஆட்சியை ஏற்றுக் கொண்டன. இதன் மேல் 1861 ஆம் ஆண்டு பெப்ருவரியில் இத்தாலியின் முத லாவது சுதந்திர பாராளுமன்றம் நியூறின் நகரில் கூடியது. அப்போது ஐக்கியப்பட்ட இத்தாலியின் அரசனாக விக்ரர் இமானுவேல் முடிசூட்டப்பட்டான். ஆனால் வெனிசும், பாப்பரசரின் பிர தே ச ம ா கிய றோமும் இன்னும் வெளியிலேயே இருந்தன. எனவே இத்தாலி வெனிசைப் பெறும் நோக்கத்துடன் பிறசி யாவுடன் நட்புக் கொண்டது. பிறசியா, 1866 இல் ஆஸ்திரியாவைத் தோற்கடித்து வெனிசியாவை இத் தாலிக்குப் பெற்றுக் கொடுத்தது. பின்னர் 1 871 இல் பிறசியா பிரான்சைத் தோற்கடித்ததனால் றோமும் இத்தாலியர் வசமாகியது. இதன் மேல் இத்தாலியின் ஐக்கியம் பூரணமடைந்தது. ஆயினும் பாப்பரசர் மட்டும் இத்தாலிய அரசுடன் பகை கொண்டார். அவரது பிரச்சினை 1922 இல் தான் தீர்க்கப்பட்டது. அதன்படி வத்திக்கான் என்னும் பிரதேசம் அவரின் பிரத்தியேக ஆட்சிப்பிரதேசமாக்கப்பட்டது. அது இன்றும் அவ்வாறே உள்ளது.
பயிற்சிகள்.'
1. வியன்னா மா நாட்டு முடிவு யாது ? 2. 1830 இலும் 1848 இலும் எங்கெங்கு புரட்சிகள் ஏற்
பட்டன ? 3. 1848 ஆம் ஆண்டுப் புரட்சியின் போது இத்தாலியில்
ஏற்பட்ட சம்பவங்களைக் கூறுக. 1848 இல் கரிபோல்டி இத்தாலியருக்கு விடுத்த வேண்டு கோள் யாது ?

Page 59
110
தற்காலச் சரித்திரம் 5. கவூர் சாடீனியாவை எவ்வழிகளில் பலப்படுத்தினான் ?" 6, அவன் பிரான்சியரது நட்பை எவ்வாறு பெற்றான்? 7. 1866 இல் ஆஸ்திரிய இத்தாலியப் போர் எப்படித்
தொடங்கியது ? 8. கரிபோல்டி சிசிலியையும் நேப்பிள்சையும் கைப்பற்
றிய வரலாற்றைக் கூறுக; இத்தாலிய ஐக்கியம் எப்பொழுது , எவ்வாறு, பூர்த்தி
யாகியது? 10. சிறுகுறிப்பெழுதுக, மசினி, கரிபோல்டி, விக்ரர் இமா
னுவேல்.
பாடம் 10.
ஜேர்மனியின் ஒற்றுமை.
ஜேர்மனி, இத்தாலியைப்போல நீண்டகாலம் ஒற்றுமையின்றி நூற்றுக்கணக்கான சிறு இராச்சியங் களாகப் பிரிந்திருந்தது. பின்னர் நெப்போலியன் அவற்றை ஒன்றுபடுத்தி ஒரே ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தான். ஆயினும் வியன்னா மா நாட்டின் பின்னர் அவை மீண்டும் கூறு போடப்பட்டு 39 இராச்சியங் களாக்கப்பட்டன. இவ்வாறு பிளவுபட்ட இராச்சி யங்கள் 1815 முதல் பிறசியாவுடன் நெருங்கிய உறவை வளர்த்தன. பிறசியா முற்றிலும் ஜேர்மன் இனத்த வரைக் கொண்டிருந்தமை அதற்கு முக்கியமான கார
ணமாகும். இதன் பின்னர் 1833 இல் பிறசியாவும் | ஏனைய நாடுகளும் ('சொல்வறைன்' என்னும் சுங்கவரி ஐக்கிய இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டன. இதன் படி ஜேர்மன் நாடுகளிடையே உள் நாட்டுச் சுங்கவரி விதிக்கும் முறை நிறுத்தப்பட்டது. இது அவற்றி டையே பொருளாதார ஒற்றுமையை ஏற்படுத்தியது.)

எட்டாந்தரம்
111 இதன் பின்னர் 1848 இல் பிரான்சில் தொடங் கிய புரட்சி ஜேர்மன் நாடுகளிலும் பரவியது. அப் போது கிளர்ச்சிக்காரர்களின் கோரிக்கைகளிற் பல வற்றை அரசர்கள் வழங்கினர். அதைத் தொடர்ந்து ஆஸ்திரியா நீங்கலாக எல்லா நாடுகளை யும் ஒரே ஆட் சியின்கீழ்க் கொண்டுவருவதற்காக பிராங்போட் நகரில் பல நாடுகளின் பிரதிநிதிகளும் ஒன்றுகூடினர். ஆயி னும் ஒன்றுபட்ட ஜேர்மன் அரசின் சக்கரவர்த்தியாக இருத்தற்குப் பிறசிய மன்ன னாகிய பிறடெறிக் மறுத் ததன் விளைவாக ஜேர்மனியின் ஒற்றுமை முயற்சி , தோல்வியடைந்தது. இதன்மேல் 1861 இல் வில்லியம் பிறசிய மன்ன னாக முடிசூடியபோது பிஸ்மாக் என்பவன் அவனது முதன் மந்திரியாகினான். பிஸ்மாக் ஒரு சிறந்த இராசதந்திரியாவான்) அவன் தாராண்மைக் கொள் கைகளிலும் சன நாயகத்திலும் நம்பிக்கையற்றவன். ' 'இரும்பினாலும் இரத்தத்தினாலுமே'' ஜேர்மனியை ஒன்றுபடுத்தலாம் என அவன் நம்பினான். எனவே பிறசியாவின் தலைமையில் ஜேர்மனியை ஒன்றுபடுத்த எண்ணிய பிஸ் மாக் பெருந்தொகைப்பணச் செலவில் அதன் படைகளைப் புனரமைத்தான். பிறசியாவின் கைத்தொழில்களையும் வர்த்தகத்தையும் விருத்தி செய் தான்; கட்டாய இராணுவசேவையை ஏற்படுத்தினான்.. இவ்வாறு பிறசியாவைப் பலவழிகளிலும் பலப்படுத் திய பின்னர் ஆஸ்திரியாவின் உதவியுடன் டெ ன் மார்க்கை எதிர்த்துப் போர்புரிந்து ஜேர்மனியர் அதிக மாக வாழ்ந்த செல்ஸ்விக் கொல்ஸ்ரீன் என்னும் இரு மாகாணங்களையும் கைப்பற்றிச் செல்ஸ்விக்கைப் பிறசி யாவுடன் சேர்த்துக் கொண்டான்.
பிஸ்மாக்கின் அடுத்த திட்டம் ஆஸ்திரியாவை முறியடிப்பதாகும். அந்நோக்கத்துடன் அவன் இத்தாலி, பிரான்சு ஆகியவற்றின் நட்பைப் பெற்றான், ஆஸ்தி ரிய-பிறசியப் போரில் பிரான்சு நடுவுநிலை வகித் தால் சில பிரதேசங்களை அதற்குக் கொடுப்பதாக

Page 60
112
தற்காலச் சரித்திரம்
பிஸ்மாக்
லூயி நெப்போலியனுக்கு வாக்களித்தான். அதேசம் யம் இத்தாலி தனக்கு உதவி செய்தால் ஆஸ்திரியரைத். தோற்கடித்தபின்னர் வெனிசைப் பெற்றுத் தருவதாக உறுதிமொழி கூறினான். இதன் பின்னர் செல்ஸ்விக், கொல்ஸ்ரீன் மாகாணங்களின்பங்கீடு, ஜேர்மன் கூட்ட ர சின் புனரமைப்பு ஆகியவை சம்பந்தமாக 1866 இல் ஆஸ்திரியாவுக்கும் பிறசியாவுக்குமிடையில் போர் ஏற் பட்டது. ஏழுவாரங்களில் சடோவாப் போரில் பிறசியா ஆஸ்திரியாவைத் தோற்கடித்தது. இதன்மேல் பிஸ் மாக் தனது சாதுரியத்தினால் தெற்கு, ஜேர்மன் நாடு களான பவேரியா, பேடன், ஆட்டம்பேர்க் முதலியன பிரான்சின்மேல் பகைமை கொள்ளச்செய்து அ வ ற் றைத் தன் பக்கமாகச் சேர் த் து க் கொண் டா ன்.

எட்டாந்தரம்
113
அடுத்து பிரான்சைப் போருக்கு இழுப்பது தான் பாக் கியாயிருந்தது. அவ்வேளை ஸ்பானியாவில் ஏற்பட்ட சம்பவங்கள் அதற்கான வாய்ப்பை அளித்தன.
ஸ்பானியாவின் அரசி இசபெல்லா ஒரு இராணு வப் புரட்சியின் விளை வாகப் பதவியிலிருந்து நீக்கப் பட்டபோது பிறசிய மன்னனின் தூர உறவினனாகிய லெப்போல்ட் என்பவனை அரசனாக்க முடிவு செய்யப்பட் டது. ஆனால் பிரான்ஸ் அம்முடிவை எதிர்த்ததோடு ஸ்பானிய அரசுக்கு எக்காலத்திலும் உரிமை கோரு வதில்லை என ஒரு வாக்குறுதியைக் கொடுக்கும்படி
: A TACHER: *
செல்ஸ்விக்
றோல்ஸ்ரன்
கனேவ
ஃ7ே77ல.
பவோயர்
வட சேர்மன் இணைப்பு) ன ஜேர்மன் பேரரசு படி 1366க்குமுன் பிறசியா அ1866ல்கிணைந்தவை
ஜேர்மனி ஒன்றுபடுதல். பிறசிய அரசனைக் கேட்டது. அதற்கு அவன் மறுத்த வுடன் பிரான்சு பிறசியாமீது படையெடுத்தது. இவ் வாறு தொடங்கிய பிரான்சிய-பிறசியப் போர் விரை
15

Page 61
114
தற்காலச் சரித்திரம் வாக முடிவடைந்தது. பிரசித்திபெற்ற செடான் போரில் வலிமை மிக்க பிறசியப்படைகள் பிரான்சின் படைகளைத் தோற்கடித்தன.
இதன் பின்னர் பிரான்சிலுள்ள வேர்செயில் பளிங்கு மாளிகையில் வைத்து கெய்சர் வில்லியம் ஜேர்மனியப் பேரரசின் சக்கரவர்த்தியாக முடி சூட்டப்பட்டான் . இவ்வாறு பிரான்சை வென்ற பிறசியா அதனிட மிருந்து அல்சேஸ், லொறேன் என்னும் இரண்டுமாகா ணங்களை யும் கைப்பற்றியதோடு பெருந் தொகைப் பணத்தையும் நட்ட ஈடாகப் பெற்றது. இச்செயல் கள் பிரான்சுக்கும், ஜேர் மனிக்குமிடையில் பகை மையை நீடித்தது. முதலாம் உலகப் போருக்கும் ஒருகாரண மாயின. அதைப்பற்றி அடுத்த தவணையிற் படிப்போம்..
சை
பயிற்சிகள்.
*) * - 4
1. 1815 க்குப் பின் னர் ஜேர்மனியின் நிலை எப்படியிருந்தது? 2. சொல்வறைன் உடன்படிக்கை யாது ? அதன் பயன்
என்ன ? 3. பிஸ்மாக் பிறசியாவை எவ்வழிகளிற் பலப்படுத்தினான்? 4 பிறசிய ஆஸ்திரியப் போர் எவ்வாறு ஏற்பட்டது ?
ஸ்பானிய முடியுரிமைப் பிரச்சனை ஏன் தோன்றியது?
அதில் பிரான்ஸ் தலையிட்டதேன் ? 6, பிறசிய பிரான் சியப் போர் எவ்வாறு ஏற்பட்டது ? 7. அப்போரின் விளைவுகள் யாவை ?
சிறு குறிப்பெழு து க, பிஸ்மாக், வில்லியம், செல்ஸ் விக்,
கொல் ஸ்ரின்,

அலகு 10. ஐரோப்பாவின் விரிவு.
பாடம் 11. ஆபிரிக்காவில் ஐரோப்பியரின் ஆதிக்கம். பதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற் பட்ட மறுமலர்ச்சி மேற்கு ஐரோப்பிய நாடுகளிடையே ஒரு விழிப்பை ஏற்படுத்தியது என்பதையும், அதன் பயனாக மக்களின் அறிவும் ஆர்வமும் அதிகரித்தன எ ன் ப ைத யு ம் ஏழாந்தரத்திற் படித்துள்ளீர்களல் லவா ? (இவ்வாறு ஐரோப்பாவில் ஏற்பட்ட மறு மலர்ச்சி பல புதிய கண்டுபிடிப்புகளுக்கும் உதவியது. திசையறிகருவி அவற்றில் ஒன்று. அது கண்டு பிடிக் கப்பட்டதன் பின்னர் ஐரோப்பிய மாலுமிகள் நீண்ட தூரம் கடலிற் செ ல் ல த் துணிவு கொண்டனர். அதேசமயம் கீழைத்தேசங்களின் வாசனைத் திரவியங் களையும், பட்டு, மஸ்லின் முதலியவற்றையும் பெறு வதற்குப் புதிய வழிகளைக் காணவும் அவர்கள் முயன்ற னர். மேலும் பரிசுத்த உரோம இராச்சியத்தின் வீழ்ச்சி பல தேசிய அரசுகள் உருவாதற்கு உதவிய அதே சமயம் மறுமலர்ச்சி தேசிய உணர்வு பலப்படுவதற்கு ஓரளவு உதவியது. அதன் பயனாக ஐரோப்பிய அரசு கள் புதியநாடுகளைக் கண்டுபிடித்து அவற்றுடன் உறவு வைக்கவும் குடியேற்றங்களை நிறுவவும் ஆர்வம் கொண் டன. ஆயினும் இவையெல்லாவற்றையும் விடக் கைத்தொழிற் புரட்சிதான் குடியேற்ற நாடுகள் உரு வாதற்கும் ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கு உல கெங்கும் பரவவும் அதிகமாக உதவியது எனலாம்.
கைத்தொழிற் புரட்சியின் பயனாக ஐரோப்பிய நாடுகள் தமது தொழிற்சாலைக்கு வேண்டிய (மூலப் பொருட்களைப் பெறுவதற்கும் தாம் உற்பத்தி செய்த

Page 62
116
தற்காலச் சரித்திரம் வற்றை விற்பனை செய்வதற்கும், விற்பனை நிலையங் களை நிறுவுவதற்கும் வெளிநாடுகளைப் பிடிக்க வேண்டி "யிருந்தது.) அன்றியும் தேசிய உணர்ச்சியின் துண்டு தலால் ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் ஒரு பேரர சாக வரவிரும்பியது.) எனவே குடியேற்றங்களை யும் குடியேற்ற நாடுகளையும் நிறுவுவது அதற்கு அவசிய மாயிருந்தது. அன்றியும் தமது நாட்டில் அதிகரிக் கும் குடிசனத்தில் ஒரு பகுதி சென்று குடியேறுதற் கும் படைகளை நிறுத்தி வைத்துத் தமது நலன்களைப் பாதுகாக்கவும், கப்பல்கள் தங்கும் துறைமுக வசதி களை ஏற்படுத்துவதற்கும் குடியேற்ற நாடுகள் தேவைப் பட்டன. இவ்வாறு அதிக குடியேற்ற நாடுகளை ஆளும் அரசு அதிக மதிப்பைப் பெற்றதனால் எல்லா நாடுகளும் குடியேற்றங்களை நிறுவும் போட்டியில் குதித்தன. இதன் விளைவாக வலிமையுள்ள நாடுகள் வலிமையும் முன்னேற்றமுமற்ற நாடுகளை ஆளும் நிலைமையும் ஏற்பட்டது.
இவ்விதமாக ஐரோப்பிய நாடுகள் மேற் கொண்ட குடியேற்றப் போட்டி ஆபிரிக்கா, ஆசியா, அமெரிக்கா) என்னும் கண்டங்களில் ஏற்பட்டது. இவற்றில் இப் பொழுது ஆபிரிக்காவைப்பற்றிப் படிப்போம்.
எதில் 19)
ஆபிரிக்கா ஐரோப்பாவுக்கு அருகில் இருந்த போதி லும் 16 ஆம் நூற்றாண்டுவரை அது ஒரு " 'இருட் கண்டமாகவே'' இருந்தது. அதன் வடகரை , மேற் குக்கரையின் வடபகுதி என்பவற்றைத் தவிர ஏனைய பகுதிகளைப்பற்றி எவருக்கும் ஒன்றும் தெரியாதிருந் தது. பின்னர் 16 ஆம் நூற்றாண்டில் போத்துக்கீசர்
5 தேசங்களுக்கு வழிகாணும் முயற்சியில் ஆபிரிக் காவின் தெற்கு, கிழக்குக் கரைகளையும் கண்டறிந் தனர். 1505 இல் வாஸ்கோடகாமாவின் பிரசித்தி பெற்ற யாத்திரைக்குப்பின்னர்  ேபா த் து க் கீசர் மொசாம்பிக்கிலும் அங்கோலாவிலும் குடியேற்றங்

எட்டாந்தரம்
117
களை நிறுவினர். அவர்களைத் தொடர்ந்து ஒல்லாந்தர் நன் நம்பிக்கைமுனைப்பகுதியில் ஒரு குடியேற்றத்தை நிறு வினர். இவ்வாறு 16 ஆம் 17 நூற்றாண்டுகளில் ஆபிரிக் காவின் கரையோரங்களில் நிறுவப்பட்ட குடியேற்றங் கள் நீக்ரோக்களைப் பிடித்து வட அமெரிக்காவுக்கு அனுப்பும் ' 'அடிமை வியாபாரத்துக்கும்'' உதவின. மேலும் அவை தூரகிழக்கு வர்த்தகப் ப ா ன த யி ல் தரிப்பு நிலையங்களாகவும் பயன்பட்டன. மேற்குறிப் பிட்ட நிலைமை 19 ஆம் நூற்றாண்டுவரை நிலவியது. அதன் பின் னர் ஆபிரிக்காவின் உள்நாட்டுப்பகுதி
-----~னலைசா
பொடி வகைகளங்கபப்பக மாவட்ட
+ + ம் * * *
++ + + + +-+-+ + !, ** * * * --- + - தி, * * * * * * *
N1ாடும்
கே - 4
!
t+ + + + அபி 2 -3
அட போங்கம்
டிசனியா
ஒ
பட்டவைகள்
சக மாதம் உடன்படிக4
+ பிரித்தானியா XN பிரான்ஸ்
• : ஜேர்மனி o இத்தாலி > ஸ்பெயின்
போத்துக்கல் - பெல்யம்
சோகப்பேசி
பாக்.பி : 153
போர்ச்2: A கே த் து பாடச2.2 %: 3 *கண் கோடி கவி பகப் பஃபேக் சிட்
|
சா கடதால், வியாபி4கப்பலியாக கட்சி சுகாசை-பக்கம்
நம் ) 2 5 2
2:4ால்
M & 7 , காதலும்
மத ஆசுதி
ஆபிரிக்காவின் பங்கீடு

Page 63
118
தற்காலச் சரித்திரம்
களைக் கண்டறிவதிலும் அங்கு குடியேறுவதிலும் பல ஐரோப்பிய நாடுகள் கவனம் செலுத்தின.
இவ்வாறு ஆபிரிக்கா நிலப்பரப்பில் ஒரு பகுதியைத் தனதாக்கிய முதலாவது நாடு பிரான்சாகும். அது 1820-27 இல் வட ஆபிரிக்காவிலுள்ள அல்ஜீரியாவின் உள் நாட்டு விடயத்தில் தலையிட்டு அ த னு ட ன் போரிட்டு 1858 இல் அ  ைத த் தனது குடியேற்ற நாடாக்கியது. பின்னர் அந்நாட்டிலிருந்துகொண்டு ஆபிரிக்காவின் உட்பகுதிகளில் தேட்டம் மேற்கொண்டு மொராக்கோ, தியூனிஸ் உட்படச் சகாராவின் பெரும் பகுதியையும் மேற்கு ஆபிரிக்காவில் ஒரு பகுதியையும் கைப்பற்றியது. பிரான்சியர் ஆபிரிக்காவின் வட, மேற் குப் பகுதிகளில் தேட்டம் செய்த காலத்தில் பிரித்தானி யர் தெற்கு, மத்திய பகுதிகளில் தேட்டத்தில் ஈடுபட்ட னர். இவ்வாறு தேட்டம் செய்தவர்களில் ஸ்ரான்லி, லிவிங்ஸ்ரன், சிசில் றோட்ஸ் என்போர் பிரபலமானவர்கள். அவர்கள் நைல் நதியின் உற்பத்திப்பிரதேசம், கொங் கோப்பிரதேசம், மத்திய ஆபிரிக்காவிலுள்ள ஏரிப்பிர தேசம் ஆகியவற்றில் நீண்டகாலமாகப் பிரயாணம் செய்து, பல ஆபத்துக்களுக்கிடையில், பல புதிய இடங் களையும் ஏரிகளையும் ஆற்றுப்பாதைகளையும்கண்டறிந்த னர். இவ்வாறு தேச ஆராய்ச்சி செய்தவர்கள் கண்ட றிந்தவற்றைக் கேள்விப்பட்ட ஏனைய ஐரோப்பியரின் ஆவல் அதிகரிக்க அவர்களும் ஆபிரிக்காவில் தேட் டங்கள் செய்யவும் குடியேற்றங்களை நிறுவவும் துணிந் தனர். இவ்விதமாகப் பிரித்தானியா, பிரான்சு, பெல்சியம். போத்துக்கல், ஸ்பெயின், ஜேர்மனி, இத் தாலி ஆகியன 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆபி ரிக்காவின் பெரும்பகுதியைக் கூறுபோட்டுத் தமது குடி யேற்றங்களாக்கிக் கொண்டன. இவற்றில் பிரித்தா னியா தற்போதைய றொடீசியா, தென்னாபிரிக்காப் பகுதிகளையும், கிழக்காபிரிக்காவில் ஒரு பகுதியையும் எகிப்து, சூடான் பகுதியையும்  ேம ற் கி ல் கானா,

எட்டாந்தரம்
119
நைஜீரியாப் பகுதியையும் தன தாக்கிக் கொ ள் ள , ஜேர்மனி, தென்மேற்கு ஆ பி ரி க் க ா, கமறூன், ரோகோ, தென்கிழக்கு ஆபிரிக்கா என்பவற்றைத் தன தாக்கியது. இது போலவே இத்தாலி, ஸ்பெயின், போத்துக்கல் ஆகியனவும் சிற்சில பகுதிகளைத் தமது குடியேற்றங்களாக்கிக் கொண் ட ன. இவ்விதமாக ஐரோப்பியர் ஆபிரிக்காவைப் பங்கிடும் பொ ழு து தமது குடியேற்றங்களின் எல்லைகளில் அதிக கவனம் செலுத்தினரே யன்றி அங்கு வாழ்ந்த ஆபிரிக்க சுதேசி களில் எள்ளளவும் அக்கறை காட்டவில்லை. அன்றி யும் ஆபிரிக்காவுட் புகுந்த ஐரோப்பியர் அதன் இயற் கைச் செல்வங்களையெல்லாம் கவர்ந்து சென்றனர். இவ்வாறு ஐரோப்பியர் செய்த தீமைகளின் பலன்களை இன்று சுதந்திர நாடுகளாக இருக்கின்ற ஆபிரிக்க நாடுகள் அநுபவிப்பதை நாம் கண்கூடாகக் காணக் கூடியதாயிருக்கிறது. மேலும் ஆபிரிக்காவில் குடி யேற்றங்களைத் தாபிப்பதில் ஐரோப்பிய நாடுகளுக் கிடையே ஏற்பட்ட போட்டியும், பொறாமையும் அவற் றிடையே பகைமையை உண்டாக்கி முதலாம் உலகப் போருக்கும் ஒரு காரணமாயின.
பயிற்சிகள்.
1. பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பியர் கீழைத்தேசங்களை
நோக்கிச் செல்லமுயன்றதற்குக் காரணங்கள் யாவை? ஐரோப்பிய அரசுகள் குடியேற்ற நாடுகள் நிறுவுவதற் குத் தூண்டுகோலாக இருந்தவை யாவை ? கைத்தொழிற் புரட்சி எவ்வழியில் குடியேற்றப் போட்
டிக்கு உதவியது ? 4. ஆபிரிக்கா * இருண்டகண்டம்' எனப்பட்டதேன் ? 5. ஆபிரிக்காவில் முதன்முதல் குடியேற்ற நாட்டை நிறுவிய
அரசு யாது ? அது எங்கு நிறுவியது ? ஆபிரிக்காவில் தேட்டம் செய்தவர்கள் இருவரின் பெயரைக் கூறுக,

Page 64
120
- தற்காலச் சரித்திரம்
ஆபிரிக்காவில் ஜேர்மனி, இத்தாலி ஆகியவற்றால் கைப் பற்றப்பட்ட நாடுகள் யாவை ? ஆபிரிக்கா பங்கிடப்பட்டதனால் ஏற்பட்ட விளைவுகள் யாவை ?
8.
பாடம் 12.
கீழைத்தேசங்களில் ஐரோப்பியரின்
ஆதிக்கம் பரவுதல்.
கி. பி. பத்தாம் நூற்றாண்டில் ஏற்பட்ட சிலு வைப் போர்களின்போதுதான் ஐரோப்பியர் கீழைத் தேச மக்களைப்பற்றியும், அங்கு காணப்படும் பொருட் களைப்பற்றியும் நன்கு அறிந்து கொண்டனர். அப் போது கீழைத்தேசப் பொருட்களில் பட்டு, மஸ்லின் ஆகியனவும் வாசனைத்திரவியங்களும் ஐரோப்பியரை அதிகமாகக் கவர்ந்தன. இதன் பின்னர் கி. பி. 145.? இல் துருக்கியர் கொன்ஸ்தாந்தினோபிளைக் கைப் பற்றிய பின்னர் மத்திய தரைக்கடல் வழியாக இந்து சமுத்திரத்துக்குச் செல்லும் கடற்பாதைகளை ஐரோப் பியர் பாவிக்கவிடாது தடுத்தபடியால் ஆபிரிக்கா வைச் சுற்றிக் கீழைத் தேசங்களுக்குச் செல்வதற்கு வழிகாணப் பல அரசுகள் முயன் றன. அவற்றில் போத்துக்கல் தான் முதன் முதல் ஆ பி ரி க் க ா வின் தென்முனையைச் சுற்றிச்சென்று இந்தியாவை அடை வதில் வெற்றி பெற்றது. இவ்வாறு முதன் முதல் இந்தியாவைச் சென்றடைந்தவன் வாஸ்கொடகாமாவாகும். அவன் 1505 இல் இந்தியாவின் மேற்குக் க ரை யி - லுள்ள கள்ளிக்கோட்டையைச் சென்றடைந்தான்,

எட்டாந்தரம்
127
வாஸ்கொடகாமா இந்தியாவைக் கண்டறிந்த பின்னர் போத்துக்கீசர் இந்தியாவுக்கு வந்து கோவை யில் ஒரு குடியேற்றத்தைத் தாபித்துக் கொண்டனர். இதன் பின்னர் அவர்கள் இலங்கையின் கரையோரப் பகுதியைக் கைப்பற்றினர். அவர்களைத் தொடர்ந்து ஆங்கிலேயர், ஒல்லாந்தர், பிரான்சியர் ஆகியோ ரும் கீழைத்தேசங்களை நாடிவந்து ஆங்காங்கு தமது குடியேற்றங்களை நிறுவினர். இவ்விதமாக ஒல்லாந்தர் யாவா, சுமத்திரா, செலிபீஸ் , போணியோ என்னும் கிழக்கிந்திய தீவுகளைக் கொண்டதும் தற்போது இந் தோனேசியா எனப்படுவதுமான பகுதியில் தமது ஆதிக் கத்தை நிலை நாட்டினர். ஒல்லாந்தர் பற்றேவியா என் னுமிடத்தைத் தமது வர்த்தக மையமாகவைத்து அயல் நாடுகளுடன் வர்த்தகம் செய்வதிலும் அவற்றில் தமது ஆதிக்கத்தைப் பரப்புவதிலும் ஈடுபட்டனர். அக்கா லத்தில்தான் அவர்கள் போத்துக்கீசரிடமிருந்து இலங் கையின் கரையோர மாகாணங்களைக் கைப்பற்றினர்.
இவ்வாறு போத்துக்கீசரும், ஒல்லாந்தரும் இந்து சமுத்திரப் பகுதியில் தமது செல்வாக்கை வளர்த் திருந்த கால த் தி ல் ஆங்கிலேயரும், பிரான்சியரும் இந்தியாவை வந்தடைந்து அங்கு தமது குடியேற்றங் களை நிறுவுவதில் ஈடுபட்டனர். அவர்களில் பிரான்சியர் சந்திரநாகூர் பாண்டிச்சேரி, முதலிய இடங்களிலும் ஆங்கி லேயர் சூரத், பம்பாய், கல்கத்தா, சென்னை ஆகிய இடங்களிலும் வர்த்தக நிலையங்களை யும் குடியேற்றங் களை யும் தாபிப்பதில் வெற்றி பெற்றனர். ஆயினும் பிரான்சியரும் பிரித்தானியரும் குடியேற்றப் போட்டி யினால் ஏழாண்டுப் போரில் ஈடுபட்டபோது அதில் பிரித்தானியா வெற்றி பெற்றதனால் பிரான்சியர் இந்தியாவில் பாண்டிச்சேரி, காரைக்கால் என்னுமிடங் களைத் தவிர ஏனைய பகுதிகளைப் பிரித்தானியரிடம் விட்டுவிட்டுக் கிழக்கு நோக்கிச் சென்று இந்துசீனக்
16

Page 65
122
தற்காலச் சரித்திரம்
குடா நாட்டில் தமது ஆதிக்கத்தை நிறுவுவதில் வெற்றி பெற்றனர். அதேசமயம் ஆ ங் கி லே யர் இலங்கை, மலாயா, சிங்கப்பூர், கொங்கொங் முதலியவற்றைக் கைப்பற்றி அங்கு தமது ஆதிக்கத்தை நிலை நாட்டி னர். மேலும் 17-ஆம் நூற்றாண்டில் 'குக்' என்னும் பிரித்தானிய கடலோடி அவுஸ்திரேலியா, நியூசீலந்து ஆகியவற்றைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து அந் நாடுகளை யும் ஆங்கிலேயர் தமது குடியேற்ற நாடுகளா கக் கொண்டனர்.
மேற்கூறப்பட்டவாறு ஐரோப்பிய அ ர சு கள் கீழைத்தேசங்களில் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டிய காலத்தில் ஸ்பானியருக்குச் சொந்தமாயிருந்த பிலிப் பைன் தீவுகளை ஐக்கிய அமெரிக்கா அவர்களிடமிருந்து கைப்பற்றித் தமதாக்கிக் கொண்டனர். இதற்குப் பிற்பட்ட காலத்தில் ஜேர்மனி நியூகினியின் ஒரு பகுதியையும் கரோலின், மார்சல் என்னும் தீவுகளை யும் தனது குடியேற்றங்களாக்கிக் கொண்டது. இவ் வாறு கீழைத்தேசங்களுக்கு ஐரோப்பியரும் அமெரிக்க ரும் வந்ததின் விளை வாகத் தென்கிழக்காசிய நாடுகள் குடியேற்ற நாடுகளாக்கப்பட்டதனால் அங்கு புதிய முறையான பெருந்தோட்டப்பயிர்ச்செய்கை அறிமுகப் படுத்தப்பட்டது. அதேசமயம் ஐரோப்பிய அரசியல் கருத்துக்களும் பண்பாடும் அந்நாடுகளில் பரவின. மேலும் கீழைத்தேசம் நோக்கி ஐரோப்பியர் வந்த மையால் தான் கிழக்காசிய நாடுகளான சீனா, யப்பான் என்பவற்றைப்பற்றியும் உலகமக்கள் தெரிந்துகொண்ட னர். அன்றியும் ஐரோப்பியர் கீழைத்தேசங்களில் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டியதன் இன்னொரு விளை வாகத், தென்கிழக்காசிய நாடுகள் பொருளாதார ரீதி யில் சுரண்டப்பட்டன. இதனால் அவை சுதேசக் கைத்தொழில்களை விருத்தி செய்யவும், சுதந்திரமான வர்த்தகத்தில் ஈடுபடவும் தடங்கல் ஏற்பட்டது.

எட்டாந்தரம்
123
மேற்குறிப்பிட்டவாறு மேற்கு ஐரோப்பிய நாடு கள் கடல் கடந்து சென்று குடியேற்றங்களையும் வர்த் தக நிலையங்களையும் நிறுவியகாலத்தில் இன்னொரு ஐரோப்பிய அரசாகிய இரசியா உள்நாட்டுப்பகுதியில் ஆசியாவின் கிழக்கு, தெற்குத் திசைகளில் விரிவ டைந்து ஒரு பேரரசாகியது. அது கிழக்கே சீனாவுக் கும் தெற்கில் இந்தியாவுக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒரு செயலாயிருந்தது.
பயிற்சிகள். 1. கீழைத்தேசங்களுக்குச் செல்வதற்கு ஐரோப்பியர் விரும்
பியதேன் ? 2. கீழைத்தேசங்களுக்கு முதன் முதல் வழி கண்டவர்
யார் ? 3. இந்தியாவில் போத்துக்கீசர், பிரான்சியர், பிரித்தானி
யர் ஆகியோரால் நிறுவப்பட்ட குடியேற்றங்கள் யாவை?
ஒல்லாந்தர் எங்கெங்கு தமது ஆதிக்கத்தை நிறுவினர்? 5. 'குக்' எவற்றைக் கண்டுபிடித்தான் ? 4 6, தென்கிழக்காசியாவில் எங்கெங்கு ஆங்கிலேயர் குடி
யேற்றங்களை நிறுவினர் ? 7. தென்கிழக்காசியாவில் ஐரோப்பியரின் ஆதிக்கம் ஏற்
பட்டதனால் ஏற்பட்ட விளைவுகள் யாவை ?

Page 66
அலகு 11.
சீனாவும் யப்பானும் எழுச்சியடைதல்
பாடம் 13.
சீனா.
உலகின் பழம் பெரும் நாகரிகங்களில் ஒன்றான கோயாங்கோ நதிக்கரை நாகரிகம் தோன்றிய நாடு சீனாவாகும். சீனாவில் ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டு களுக்கு முன்னரேயே முடியாட்சி முறை ஏற்பட்டது.) அன்றியும் ம த் தி ய ஆசியாவிலிருந்து காலத்துக்குக் காலம் படையெடுத்த தாத்தாரியரின் தாக்குதல்களை யெல்லாம் தடுத்து அது நிலைபெற்றிருக்கிறது, இவ் வாறு நிலைபெற்ற சீனாவில் தான் கொன்பூசியஸ், லாவோசே முதலிய புகழ் மிக்க பெரியார்கள் தோன்றினர். அத் தகைய சீனாவை 14 ஆம் நூற்றாண்டு முதல் "'மிங்' என்னும் வமிசத்தவர் ஆண்டு வந்தனர். பின்னர் மஞ்சூரிய இனத்தைச் சேர்ந்த சக்கரவர்த்திகள் அதன் ஆட்சியைக் கைப்பற்றி இருபதாம் நூற்றாண்டின் முற் பகுதிவரை ஆண்டுவந்தனர். அவர்களது ஆட்சியில் நாட்டில் அமைதி நிலவியது,
இவ்வாறு சீரும் சிறப்பும் பெற்ற சீனாவைப்பற்றிக் கேள்வியுற்ற ஐரோப்பியர் அதனுடன் வர்த்தகம் செய் யப் பெரிதும் விரும்பினர். எனவே கிழக்கு ஆசி யாவை நாடிவந்த எல்லா அரசுகளும் சீனாவுடன் தொடர்புகொள்ள எத்தனித்தன, ஆயினும் சீனர் தமது மண்ணில் பிறநாட்டினர் கால்வைப்பதை விரும் பாததோடு ஐரோப்பியரை ' 'மிலேச்சர்'' எ ன வும் இகழ்ச்சியாகக் கருதி வந்தனர். இந்நிலைமையில் 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் போத்துக்கீசரும் பிரித்தானியரும் சீனாவில் முறையே மக்காவோ, கான் ரன், என்னும் வர்த்தக நிலையங்களைத் தமது பால

எட்டாந்தரம்
125
னத்தின் கீழ் ப்பெற்றன. இவ்வாறு வர்த்தக நிலையங் களை நிறுவியபோதும் சீனாவுடன் ஒழுங்கான வர்த்த கம் நடைபெறவில்லை. ஏனெனில் சீனர் தொடர்ந்து ஐரோப்பியரை மிலேச்சர் எனக் கணித்து அவமதித்து வந்தனர். அவ்வேளை பிரித்தானியர் அவமதிப்பையும் பொருட்படுத்தாமல் சில சீன அதிகாரிகளின் இரகசிய உதவியுடன் அபின் வர்த்தகம் செய்து வ ந் த னர். அதையறிந்த அ ர ச ா ங் க ம் தீவிரகட்டுப்பாடுகளை விதித்த போது கள்ள அபின் வர்த்தகம் தொடங்கியது.
இவ்வாறு கள்ள அபின் வர்த்தகம் நடைபெறும் காலத்தில் ஒரு முறை அபின் முழுவதும் கைப்பற்றப் பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பிரித்தானியா 1839 இல் சீனா மீது போர் தொடுத்தது. 'அபினிப்' போர் என்னும் இப்போர் - 1 844 வரை நீடித்தது. அதில் பிரித்தானியரே வெற்றி பெற்றனர். ஏனெ னில் சீனர்களிடம் போர் செய்யும் திறமையோ, நவீன போர்க் கருவிகளோ எதுவும் இருக்கவில்லை. எனவே போரில் தோல்வியடைந்த சீனா 5 துறைமுகங்களைப் பிரித்தானியரின் வர்த்தகத்துக்குத் திறந்துவிடச் சம்ம தித்தது. அவை உடன்படிக்கைத் துறைகள் எனப்ப டும். அவற்றில் கொங்கொங்கும் ஒன்று. அது இன் னும் பிரித்தானியரின் பாலனத்தில் உள்ளது. அத் துடன் அபின் வர்த்தகத்துக்கும் சீனா அநுமதியளித் தது. அபினிப் போரின் பின்னர் 1856 இல் சீனர் சிலர் பிரித்தானியாவின் தேசியக் கொடியை அவ மதித்ததைச் சாட்டாகக் கொண்டு பிரித்தானியர் மீண்டும் சீனாவுடன் போரிட்டனர். அவ்வேளை தமது நாட்டு மத போதகர் ஒருவரைச் சீனர்கள் கொன்ற தனால் பிரான்சியரும் அவர்களுடன் போரிட்டனர். இப்போர்களின் விளைவாகச் சீனா மேலும் சில துறைகளை வெளி நாடுகளின் பாவனைக்குத் திறந்துவிட்ட தோடு மத போதகர்களும் வெளி நாட்டுத் தூதர்

Page 67
126
தற்காலச் சரித்திரம்
களும் சீனாவில் தங்கியிருக்கவும், உள்நாட்டில் சுற்றுப் பயணம் செய்யவும் அநுமதித்தது.
இதற்குப் பின்னர் 'கொரியா வில் 1894 இல் ஒரு குழப்பம் ஏற்பட்டபோது அதை அடக்க உதவி செய் யும்படி அந்நாட்டு அரசன் சீனாவைக் கேட்டபோது சீனா ஒரு படையை அங்கு அனுப்பியது. அவ்வேளை யப்பானும் கொரியா மீது உரிமைபாராட்டித் தனது படையை அனுப்ப அவ்விருபடைகளும்  ேம ா தி க் கொண்டன, அப்போரில் யப்பானே வெற்றி வாகை சூடியது. அதன் பயனாக அது லியோதுங் குடா நாடு, போர்மோசா ஆகியவற்றையும் பல வர்த்தகச்சலுகை களையும் பெற்றுக் கொண்டது. இவ்வாறு யப்பானு டன் சீனா போரிட்ட சமயம் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திய இரசியா, பிரித்தானியா, ஜேர்மனி ஆகியன முறையே போட்ஆதர், வேஹாவே, கியான்சோ ஆகிய இடங்களில் தமது கடற்படைத்தளங்களை அமைத்துக் கொண்டன. அச்சமயம் சீனாவின் கண்காணிப்பிலி ருந்து வந்த இந்து சீனக் குடாநாட்டைப் பிரான்ஸ் தனது செல்வாக்குப் பிரதேசமாக்கிக் கொண்டது. இவ்விதமாகச் சீனா பல வல்லரசுகளாலும் பங்கு போடப்படக் கூடிய ஒரு நிலையில் ஐக்கிய அமெரிக்கா தலையிட்டுச் சீனா சுதந்திரமாக இருக்கவும் அதனுடன் எல்லா நாடுகளும் சுதந்திரமாக வர்த்தகம் செய்யவும் அனுமதிக்குமாறு கேட்க அதை இங்கிலாந்து ஏற்றது. இக்கொள்கை திறந்த கதவுக் கொள்கை எனப்படும்.)
ம '
இது இவ்வாறாக, மேல் நாட்டினர் தமது நாட்டில் ஊடுருவியதை வெறுத்த சீன மக்களில் ஒரு பிரிவினர் அவர்களை வெளியேற்றும் நோக்கத்துடன் கலவரங்களை உண்டாக்கினர். அது பொக்சர் இயக்கம் எனப்படும். அதன் விளைவாக வெளிநாட்டு மத போதகர்களிற் பலரும் 250 ஐரோப்பியரும் பெருந்தொகையான கத் தோலிக்கரும் உயிரிழந்தனர். ஆயினும் மேற்கு நாடு

எட்டாந்தரம்
127
களின் கூட்டுப்படையொன்று பொக்சர்களை முறிய டித்தது. இதன் பின்னர் சீனர்கள் தமது பலவீனத்தை உணர்ந்து மேற்கு நாட்டுப் பாணியில் தமது படை களைப் பலப்படுத்தவும், பொருளாதாரத்தை விருத்தி செய்யவும் முயன்றனர். அதேசமயம் ஏராளமான சீனமாணவர்கள் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் சென்று உயர் கல்வி கற்றுவந்தனர். இவற்றின் பயனா கச் சீனா ''தற்கால'' மயமாகியது. ஆனால் அதற்கி டையில் 1908 இல் சீனச்சக்கரவர்த்தினி இறந்ததைத் தொடர்ந்து நாட்டில் குழப்பங்கள் உண்டாயின. அப் போது சீனாவின் தென்பகுதியில் கலகஞ் செய்தவர் களின் தலைவராக டாக்டர் சன்யாற்சென் என்பவர் இருந் தார் அவரது கட்சி குவோமிந்தாங் எனப்படும்.) சன் யாற்சென் சீனாவை ஒரு குடியரசாக்கவும், அங்கி ருந்து வெளி நாட்டாரைத் துரத்தவும் திட்டமிட் டார். அவரது கட்சிக்காரர்கள் 1911 இல் ஒரு புரட்சி செய்து புதிய சக்கரவர்த்தியைப் பதவியிலிருந்து நீக்கி விட்டுச் சன்யாற் சென்னைச் சீனாவின் ஜனாதிபதியாக் கினர். ஆயினும் 1912 இல் அவர் யுவான் சிகே என்ப வனுக்கு அப்பதவியைக் கொடுத்துவிட்டுத் தாம் வில கினார். அதன் பின்னர் 1914 இல் முதலாம் உலகப் போர் தொடங்கியது. அதேசமயம் 1916 இல் யுவான்சி கேயும் இறந்தான். இவற்றின் விளை வாகச் சீனாவில் மீண்டும் குழப்பங்கள் மலிந்தன. இக்காலத்தில் சீனா ஜேர்மனிக்கு எதிராகச் செயலாற்றியது.) அன்றியும் குழப்பம்மலிந்த இக்காலத்தில் யப்பானும் சீனாவில் உள் நாட்டு விடயங்களில் அடிக்கடி தலையிட்டு வந்தது. அவ்வேளை சன்யாற்சென் தென் சீனாவிலுள்ள கான் ரனில் ஒரு அரசாங்கத்தை அமைப்பதில் வெற்றி பெற் றார். ஆயினும் அதேகாலத்தில் வட சீனாவில் பீக்கிங் கிலும் ஒரு இராணுவ அரசாங்கம் போட்டியாகநிறுவப் பட்டது. இதன் விளைவாக உள் நாட்டுப் பூசல்கள் அதிகரித்தன. அந்நிலையில் சன் யாற்சென் முதலாம் உலகப்போர் முடிந்தவுடன் இரசியாவின் உதவியைப்

Page 68
128
தற்காலச் சரித்திரம் பெற்று நவசீனாவைக்கட்டியெழுப்ப முனை ந்தார்.. ஆயினும் அவர் தமது திட்டங்களை முற்றாக திறை வேற்ற முன்னர் 1925 இல் இறந்தபோது சியாங்கைசேக் என்பவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
சன்யாட்சென்
சியாங்கைசேக்
சியாங்கைசேக் சீனா முழுவதையும் தமது ஆட்சி யின்கீழ்க் கொண்டுவரத் திட்டமிட்டு ஒரு பெரிய படையுடன் வடக்கு நோக்கிச் சென்று காங்கெள், நான்கிங், பீக்கிங் என்னும் நகரங்களைக் கைப்பற்றிய பின்னர் நான்கிங்கைத் தமது தலைநகராக்கி நாட்டை ஆளத் தொடங்கினார். ஆயினும் அவர் சீனாவின் வறு மைப் பிரச்சினையைத் தீர்ப்பதில் வெற்றிபெறவில்லை. அந்நிலையில் இரசியாவுக்குச் சென்றுவந்த படைவீரர் மூலமாக நாட்டில் பொதுஉடைமைக் கருத்துக்கள் பரவி ஒரு இயக்கமாக உருவெடுத்தன, பொதுஉடை மைவாதிகள் தமக்கென ஒரு படையைத் திரட்டிய தோடு 1934 அளவில் சீனாவில் * பங்கைத் தமது ஆணை யின்கீழ்க் கொண்டுவந்தனர். அதற்கு முன்னர் 1931 இல் யப்பான் மஞ்சூரியாமீது படையெடுத்து

எட்டாந்தரம்
129
அதைக் கைப்பற்றியது. அடுத்து 1937 இல் அது சீனா வுடன் பெரிய போரில் இறங்கி அதன் கிழக்குப்பாகம் முழுவதையும் கைப்பற்றிவிட்டது. அச்சமயம் பொது உடைமைவாதிகளும் சன்யாற்சென்னின் கட்சியினரும் யப்பானியருக்கு எதிராகப் போரிட்டனர். ஆயினும் அப்போர் நடந்து கொண்டிருந்தபோது 1939 இல் இரண்டாம் உலகப் போரும் தொடங்கியது. அப் போர்க்காலத்தில் பொது உடைமைவாதிகள் சீனாவின் வடபகுதியில் தமது செல்வாக்கை வளர்த்துக்கொண் டனர். அதேசமயம் சியாங்கை சேக்கின் நிலை படிப் படியாகப் பலவீனமடைந்தது. பின்னர் 1945. இல் போர் முடிந்தவுடன் இருபகுதியினரும் யப்பானியர் விட்டுச் சென்ற பகுதிகளைக் கைப்பற்றுவதில் போட்டி யிட்டுப் போரிட்டனர். இப்போரில் பொது உடைமை வாதிகளே வெற்றி பெற்றனர். . அவர்களின் பிடியிலி ருந்து மஞ்சூரியாவை மீட்பதற்குச் சியாங்கைசேக் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை .என வே தோல் வியுற்ற சியாங்கைசேக் பக்கத்திலுள்ள போர்மோசாத் தீவுக்குச் சென்று போட்டி அரசை நிறுவி அதற்குத் தேசிய சீனா எனப்பெயரிட்டு அங்கு இன்றும் இருக் கிறார். அதேசமயம் பொதுவுடைமைவாதிகள் மாசேதுங் தலைமையில் 1949 முதல் சீனாவை ஒரு குடியரசாக்கி நாட்டை ஆண்டு வருகின் றனர். இன்று சீனக்குடியரசு உலக நாடுகளில் பலம் மிக்க ஒன்றாக விளங்குகிறது.
பயிற்சிகள்
1. சீனாவுடன் முதல் முதல் தொடர்புகொண்ட ஐரோப்பிய.
அரசுகள் எவை ? 2, 'அபினிப்போர்' எவ்வாறு, எப்போது ஏற்பட்டது ? 3. அப்போரின் விளைவு யாது ? 4. 1856 இல் பிரான்சியரும் பிரித்தானியரும் சீனாவுடன்
போரிட்டதேன் ? 17

Page 69
130
தற்காலச் சரித்திரம்
5, 1894 இல் சீனாவும் யப்பானும் போரிடக்காரணமென்ன? 6. 'திறந்த கத வுக் கொள்கை' என்பது யாது ? 7. 'பொக்சர்' இயக்கம் ஏன்தோன்றியது? அது எவ்வாறு
முடிவுற்றது ? 8. சன் யாற்சென் எவ்வாறு ஜனாதிபதியானான் ? 9. சீனாவில் பொது உடைமைக் கருத்துக்கள் எவ்வாறு
புகுந்தன ? 10. சியாங்கைசேக் என்பவர் யார்? அவர் ஏன் சீனாவை
விட்டு வெளியேறினார் ? 11. சிறுகுறிப்பெழுது க: 1. குவோமிந்தாங் 2. யு வான்
சிகே 3. தேசிய சீனா
பாடம் 14.
யப்பான்.
யப்பான் ஒரு தீவு நாடாகும். அது கொக்கைடோ, கொன்சு, சிக்கொக்கு, கைசு எ ன் னு ம் நான்கு பெரிய தீவுகளையும் பல சிறிய தீவுகளையுமுடையது. அதுவும் சீனாவைப்போல் நீண்ட காலம் ஒரு தனியர சாகத் திகழ்ந்தது. அங்கு 'மிக்காடோ' எனப்படும் அரசர்களின் கீழ் முடியாட்சி நடந்துவந்தது. பின்னர் 16 ம் நூ ற் றா ண் டி ல் முதன் மு த ல் ஐரோப்பிய வர்த்தகர்கள் சிலரும் சில பாதிரிமார்களும் அங்கு கால்வைத்தனர். ஆயினும் பாதிரிமாரின் பிரசாரத் தினால் நாட்டில் மதப் பூசல்களும், குழப்பங்களும் ஏற் பட்டதனால் 1638 இல் யப்பான் வெளியாரெவரும் வருவதற்குத் தடைவிதித்தது. இவ்வாறு யப்பான் மேற்கொண்ட செயலினால் ஐரோப்பியரின் வர்த்தகம் பாதிக்கப்பட்டிருந்தது. அந் நி லை யி ல் 1853 இல்

எட்டாந்தரம்
131
கொம்மடோர் பெரி என்னும் ஓர் அமெரிக்க கடற்படை வீரன், தனது போர்க்கப்பல்களுடன் டோக்கியோவில் இறங்கித் தனது படைப்பலத்தினால் யப்பானிய பிரதம மந்திரியைப் பயமுறுத்தி அமெரிக்காவும், ஏனைய வெளி நாடுகளும் யப்பானுடன் வர்த்தகம் செய் வ த ற் கு உரிமைபெற்றான். இதன் பின்னர் யப்பானின் வெளி நாட்டு வர்த்தகம் அதிகரித்தது.
இவ்வாறு யப்பான் மீண்டும் வெளி நாடுகளுடன் தொடர்பு கொள்ளத் தொடங்கியதன் மேல் ஐரோப் பியரைப் பின்பற்றித் தன்னைப் பலப்படுத்தவும் முன் னேற்றவும் துணிந்தது. அம்முயற்சியில் யப்பானிய பிரபுக்கள் (தைமியோ) முன் நின்றனர். அவர்கள் 1868 இல் பிரதம மந்திரியைப் பதவியிலிருந்து நீக்கி விட்டு மன்னனுக்கு அவனது அதிகாரத்தை வழங்கினர். பின்னர் அவ்வாண்டே மிற்சுகிற்றோ என்பவன் மன்ன னாகினான். அவனது ஆட்சிக் காலத்தில் யப்பான் நவீன மயமாகியது. அவன் காலத்தில் மானிய முறை ஒழிக் கப்பட்டது. ஐரோப்பிய சட்டங்களைத் தழுவி ஒரு புதிய நீதிக்கோவை உருவாக்கப்பட்டது. ஐரோப் பிய மொழிகளைக் கற்பதிலும் விஞ் ஞ ா ன த் ைத விருத்தி செய்வதிலும், கைத் தொழில்களைக் கட்டி யெழுப்புவதிலும், கல்வியை வளர்ப்பதிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. அதேசமயம் வெளிநாடு களில் கல்வி கற்ற யப்பானியரும் பல வெளிநாட்டு நிபுணர்களும் தொழில் நுட்பம், விஞ்ஞான ம், இரா ணுவப் புனரமைப்பு முதலிய துறைகளில் யப்பானியர் எழுச்சிபெற உதவினர்.
மேற் கூறப்பட்ட முறையில் மேற்கு நாடுகளைப் பின்பற்றி முன்னேறிய யப்பான் 1894 இல் கொரிய விடயமாகச் சீனாவுடன் போரிட்டு அதில் பெரும் வெற்றி பெற்றது. அவ் வெற்றி யப்பானிடமும் குடி யேற்ற நாடுகளைத் தாபிக்கும் ஆவலைத் தூண்டிவிட்டது.

Page 70
132
தற்காலச் சரித்திரம் எனவே அடுத்து யப்பான், சீனா, கொரியா, மஞ்சூ ரியா முதலிய நாடுகளில் தனது செல்வாக்கை வளர்க்க * முற்பட்டது. அப்போது அது சைபீரியாப்பகுதியிலி ருந்து கிழக்கு நோக்கி விரிவடைந்து வந்த இரசியா வுடன் மோதிக்கொண்டது. இ ர சி யா 1848 இல் ஆமூர் மாகாணத்தைப் பிடித்தபின்னர் 1898 இல் சீனா விடமிருந்து போட் ஆதரைப் பெற்றது. பின்னர் பொக்சர் கலவரங்கள் நடந்த காலத்தில் ம ஞ் சூ ரி யாவையும் கைப்பற்றியிருந்தது. அச்செயல் புதிதாக எழுச்சி பெற்ற யப்பானுக்குப் பிடிக்கவில்லை. எனவே மஞ்சூரியாவிலிருந்து படைகளை அகற்றும்படி யப்பான்' விடுத்த கோரிக்கைக்கு மறுப்புத் தெரிவித்ததினால் இரு நாடுகளுக்குமிடையில் 1904 இல் போர் ஏற்பட்டது. அப்போரிலும் யப்பானே வெற்றி பெற்றது. அதன் பயனாக போட் ஆதர் துறையும், சாகலீன் தீவின் தென்பாகமும் யப்பானின் உடைமையாகின. இரசி யப்போர் யப்பானின் செல்வாக்கை மேலும் ஒருபடி உயர்த்தியது. அதன்பின்னர் அது முதலாம் உலகப் போர்க்காலத்தில் நேச நாடுகள் பக்கம் நின்று கீழைத் தேசங்களில் தனது வர்த்தக நலன்களை விருத்தி செய்தது.
முதலாம் உலகப்போருக்குப் பின்னர் 19 29 இல் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடியின் விளைவக யாப்பான் கனிப்பொருள்வளம் மிக்க மஞ் சூரியாவைக் கைப்பற்றியது. பின்னர் சீனாவின் உள் நாட்டு விடயங்களில் அடிக்கடி தலையிட்டு அங்கு குழப் பம் நிலவியகாலத்தில் அதன் கிழக்குப் பகுதிமுழுவதை யும் கைப்பற்றியது. இவ்வாறு சீ னா வுட ன் அது பூசலிட்டுவந்த காலத்தில் இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது யப்பான் ஜேர்மனியை ஆதரித் தது . அப்போரின் தொடக்கத்தில் யப்பான் பல வெற்றிகளைப் பெற்றுத் தென்கிழக்காசியா முழுவதை யும் தனது ஆணையின் கீழ்க் கொண்டுவந்தது. ஆயி

எட்டாந்தரம்
133
னும் 1941 இல் யப்பான் பேள் ஹாபர் துறையில் தங்கிநின்ற அமெரிக்கக்கப்பற்படைமீது குண்டு வீசிய தனால் அமெரிக்காவும் யப்பானுக்கு எதிராகப் போரில் இறங்கியது. எனவே அதற்குப் பின்னர் யப்பானின் போர் வலி படிப்படியாகக் குறைந்து போக இறுதி யில் அமெரிக்காவின் அணுக்குண்டு வீச்சுடன் அது சரணடைந்தது.
இவ்வாறு இரண்டாம் உலகப் போரில், தோல் வியுற்ற யப்பான் ஐக்கிய அமெரிக்காவின் கண்காணிப்
• பின் கீழிருந்து வந்தது. பின்னர் அமெரிக்கர் யப்பா னுக்குச் சுதந்திரம் கொடுத்துவிட்டு அந்நாட்டை விட்டு வெளியேறினர். அதன்மேல் யப்பான் போர்க்காலத் தில் அழிந்த தனது கைத்தொழில்களை யெல்லாம் புனர மைத்துப் பல வழிகளிலும் தனது பொருளாதாரத் தைப்பலப்படுத்தி இன்று கைத்தொழிற் துறையில் ஆசியாவில் முன்னணியிலுள்ளது. யப்பானின் துரித முன்னேற்றம் அபிவிருத்தியடைந்து வரும் ஏ னை ய ஆசிய நாடுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
பயிற்சிகள்.
1. யப்பானியத்துறைகளை வெளி நாட்டு வர்த்தகத்துக்குத்
திறந்து விட்டவன் யார் ? 2. மிற்சுகிற்றோ மன்னன் ஆட்சியில் ஏற்பட்ட மாற்றங்
கள் யாவை ? 3. 1904 இல் இரசியப் போரினால் யப்பான் பெற்ற பயன்
யாது ? யப்பான் 1931 இல் மஞ்சூரியாவைக் கைப்பற்றியதேன்? இரண்டாம் உலகப் போரில் யப்பான் தோல்வியுற்ற
தேன் ? 6.
அண்மைக்காலத்தில் யப்பான் எத்துறைகளில் முன் னேற்றமடைந்துள்ளது ?

Page 71
அலகு 12.
பாடம் 15, 16, ஐக்கிய அமெரிக்காவின் உன்னத நிலையும் ஆதிக்கமும்.
வட அமெரிக்காவின் கிழக்குக் கரை யோரமாக நிறுவப்பட்டிருந்த 13 ஆங்கிலக் குடியேற்றங்களும் பதி னெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தாய்நாட்டு டன் போராடிச் சுதந்திரம் பெற்ற சரித்திரத்தை ஏழாந்தரத்தில் படித்திருக்கிறீர்களல்லவா? இவ்வாறு சுதந்திரம் பெற்ற பின்னர் ஐக்கிய அமெரிக்கா என் னும் பெயருடன் அவை அதிகவேகமாக விரிவும் வளர்ச் சியும் அடைந்தன. ஐக்கிய அமெரிக்கா பத்தொன் பதாம் நூற்றாண்டில் மேற்கு நோக்கி விரிவடைந்தது. 1803 இல் லூசியானா என்ற பிரதேசமும், (1846 இல் ஒறிகனும், 1845 இல் ரெக்சாசும், 1848 இல் மெச் சிக்கோவின் கீழிருந்த பிரதேசமும் ஐக்கிய அமெரிக் காவின் பகுதிகளாக இணைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து மக்களும் மேற்கு நோக்கிச் சென்று புதிய
பிரதேசங்களில் குடியேறுவராயினர்.
இவ்வாறு அமெரிக்கா விரிவடைந்து வந்த காலத் தில் அதன் வடபகுதியிலும் தென்பகுதியிலும் வாழ்ந்து வந்த காலத்தில் மக்களிடையே நீக்கிரோக்களை அடி' மைகளாக வைத்திருத்தல் - சம்பந்தமாக அபிப்பிராய பேதம் ஏற்பட்டது. அதன் விளைவாக அவ்விருபகுதி யினரும் ஓர் உள் நாட்டுப்போரில் ஈடுபட்டனர். அது உருவாகிய சரித்திரத்தை அடுத்துக் காண்போம்.
ஐக்கிய அமெரிக்காவில் நிறுவப்பட்ட 13 ஆங்கி லக் குடியேற்றங்களில் வடக்கிலுள்ள நியூ இங்கிலாந்து, நியூஜேர்சி முதலியவற்றுக்கும், தெற்கிலுள்ள கரோலினா,

எட்டாந்தரம்
135
அலபாமா, வேர்ஜினியா முதலியவற்றுக்கு மிடையில் தொடக்கத்திலிருந்தே வேறுபாடுகள் காணப்பட்டு வந்தன. வடக்குக் குடியேற்றங்கள் கைத்தொழிலில் அதிகமாக ஈடுபட்ட ன. அதேசமயம் தெற்கு நாடுகள் பருத்தி, கரும்பு, புகையிலை முதலிய பயிர்களைச் செய் வதில் அதிகமாக ஈடுபட்டன.) மேலும் பருத்தித் தோட்டங்களில் பஞ்சு எடுப்பதற்கும் பெருந்தொகை யாக தொழிலாளர் தேவைப்பட்டபடியால் தெற்கு நாட்டுத்தோட்டக்காரர் ஆபிரிக்காவிலிருந்து நீக்ரோக் களைக் கொண்டுசென்று அடிமைகளாக வைத்து வேலை செய்வித்தனர். பின்னர் பஞ்சிலிருந்து விதையை நீக் கும் எந்திரம் கண்டு பிடிக்கப்பட்டதாலும், பெரிய தொழிற்சாலைகளில் உ ற் ப த் தி அதிகரித்ததினாலும் பருத்திப்பஞ்சு முன்னரிலும் அதிகமாகத் தேவைப் பட்டது. எனவே பருத்தியை அதிகமாக உற்பத்தி செய்வதற்காக அதிகமான அடிமைகள் அமெரிக்கா வுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்; ஏ  ென னி ல் பருத்தி விளைவு செய்யப்பட்ட பிரதேசத்தின் காலநிலை வெள்ளை யர்களுக்கு ஏற்றதாக இருக்கவில்லை. ஆனால் இப்படியான அடிமைமுறையை வடக்குக் குடியேற்ற நாடுகள் விரும்பவில்லை. அன்றியும் அவற்றுக்கு அடிமை கள் தேவைப்படவுமில்லை. எனவே அடிமை முறையை ஒழிக்க வே ண் டு  ெம ன வடக்கு நாடுகள் கோரத் தொடங்கின. ஆனால் தெற்குநாடுகள் அதற்கு இணங்க வில்லை.
2 (மேற்குறிப்பிடப்பட்ட அடிமை முறையைத் தவிர வெளிநாட்டு வர்த்தகக் கட்டுப்பாடுகளும் வ ட க் கு தெற்கு நாடுகளிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியது. வடக்கு நாடுகள் கைத்தொழிலில் ஈடுபட்டமையால் தமது உற்பத்திப் பொருட்களைப் பாதுகாப்பதற்காக வெளிநாட்டுப் பொருட்கள் வராதபடி தடுப்பதை அல்லது அதிக வரி விதிப்பதை விரும்பின. ஆனால் தெற்கு நாடுகள் அதை விரும்பவில்லை. அல்லாமலும்

Page 72
136
தற்காலச் சரித்திரம் 1 மேற்கில் உருவாகும் புதிய மாகாணங்களை அடிமை நாடாகவோ அடிமை முறையற்ற நாடாகவோ சேர்ப் பது என்பதிலும் இருபகுதியினரும் சச்சரவிட்டுக் கொண்டனர். இது இவ்வாறாக 1856 இல் குடியர சுக்கட்சி என ஒன்று உருவாகியது. அது அடிமை முறைக்கு எதிராகவிருந்தது. அக்கட்சி 1860 இல் நடக்கவிருந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு ஆயிரகாம்லிங்கன் என்பவரை நியமித்தது. லிங்கன் ஒரு சடடவாதியாவார். அவர் அடிமை முறையை எதிர்த் தார். ஆயினும் அவ்விடயமாக நாடு பிளவுபடுவதை அவர் விரும்பவில்லை. எனவே தேர்தலுக்கு முன்னர், நிகழ்த்திய பேச்சுக்களில் அவர் தமது கருத்துக்களைத் தெளிவுபடுத்தினார். அதைக் கேட்ட தெற்கு நாடுகள் ஐக்கிய அமெரிக்க சமட்டியிலிருந்து விலகித் தனியான அரசாங்கமொன்றை நிறுவத் திட்டமிட்டன.
ஆனால் லிங்கன் அதை எதிர்த்ததோடு அப்படிப் பட்ட முடிவைச் செயல் படுத்துவதைத் தடுக்கவும் துணிந்தார். எனவே 1860 ஜனாதிபதி தேர்தலில் அவர் தெரிவு செய்யப்பட்டதனால் தெற்குக் குடியேற்ற நாடுகள் பீதியுற்றன. உடன் கரோலினா என்னும் மாகாண மும் அதைத் தொடர்ந்து ஏனைய தெற்கு மாகாணங்களும் ஐக்கிய அமெரிக்க இணைப்பிலிருந்து விலகின, அத்துடன் அவை வடக்கு மாகாணங்களு டன் போரிடவும் தம்மைத் தயார் செய்து கொண் டன, அதன் பின்னர் கரோலினா மாகாணத்தில் மத்திய அரசாங்கத்துக்குச் சொந்தமான ஒரு கோட்டையின் மீது சிலர் துப்பாக்கிப் பிரயோகம் செ ய் த  ைத த் தொடர்ந்து உள் நாட்டுப்போர் தொடங்கியது. அது 1861 முதல் 1865 வரை நடைபெற்றது. அப்போரில் "தெற்கு மாகாணங்கள் தோல்வியுற்றன. எனவே 1836 இல் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தின்படி நீக்ரோ அடிமைகளெல்லோருக்கும் விடுதலையளிக்கப்பட்டது. இதனால் லிங்கன் இலட்சக்கணக்கான அடிமைகளின்
4 141 |

எட்டாந்தரம்
137
அன்பைப் பெற்றார். எனினும் தெற்கு நாடுகளின் > ப  ைக மை கூடியதேயொழியக் குறையவில்லை. அப் பகைமையை மாற்று முன்னரேயே லிங்கன் இறந்து விட்டார் அவர் உள் நாட்டுப் போர் முடிந்து 5 ஆம் நாள் ஒரு நாடகமன்றில் இருந்த சமயம் பூத் (Booth) என்பவனால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார். இவ் வாறு லிங்கன் இறந்தபோதிலும் அடிமைமுறையை ஒழித்தும், ஐக்கிய அமெரிக்காவின் ஒற்றுமையைக் கட் டிக்காத்தும் அங்கு உண்மையான நாயகம் மலரச் செய்தும் அவர் ஆற்றிய சேவை அவருக்குச் சரித்திரத் .தில் ஓர் அழியாத இடத்தைப் பெற்றுக் கொடுத்
துள்ளது.
,171 [T...
ஆபிரகாம் லிங்கன்: - அமெரிக்காவின் உள் நாட்டுப்போர் இவ்விதமாக முடிவுற்ற பின்னர் அங்கு பல துறைகளிலும் முன் னேற்றம் ஏற்பட்டது. | போக்குவரத்துப் பாதைகள்
18

Page 73
138
தற்காலச் சரித்திரம் நாலாபக்கங்களிலும் நிறுவப்பட்டன. பயிர்ச்செய்கை யும் வர்த்தகமும் விருத்தியடைந்தன. அதே சமயம் கைத்தொழில்களும் பெருமளவு வளர்ச்சியடைந்தன. இப்படியாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பொது அபிவிருத்தியினால் ஐக்கிய அமெரிக்கா அதிக பலமும், செல்வச் செழிப்பும் மிக்க ஒரு உலக வல்லர சாகியது. அது கைத்தொழில் உற்பத்தியில் உலகில் முதலாவது இடத்தை வகிக்கின்றது. அதன் பாரிய கைத்தொழில்கள் பல கூட்டு நிறுவனங்களின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. அதேசமயம் மத்திய மேற் குப் பகுதிகளிலும், தென்மேற்கிலும் பரந்த முறை யில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைத்தொழிற் புரட்சியின் விளை வாகக் கண்டு பிடிக் கப்பட்ட புதிய செய்கை முறைகளும், புதிய எந்திர சாதனங்களும் பயன்படுத்தப்படுவதனால் அங்கு உற் பத்தி அதிகமாகவும், உற்பத்திச் செலவு குறைவாகவும் உள்ளது. இவ்வாறு பயிர்ச்செய்கையும் கைத்தொழி லும் விருத்தியடைந்தமையால் வர்த்தகமும் வளர்ந் தது. இவற்றின் விளை வாக அமெரிக்கா பொருளாதார ரீதியில் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு நாடாக உரு வ ா கி ய து. அதே சமயம் அது தென் அமெரிக்க நாடுகளில் பணத்தை முதலீடு செய்தும் அவற்றுடன் அதிக அளவில் வர்த்தகத்தில் ஈடுபட்டும் தனது செல்வாக்கை அங்கு வளர்த்துள்ளது. மேலும் அது அண்மைக்காலத்தில் விஞ்ஞானத் துறையில் மகத்தான சாதனைகளைப் புரிந்து சந்திரனில் மனி தனை இறக்கி அகில உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள் ளதை அனை வரும் அறிந்ததே.

எட்டாந்தரம்
139
பயிற்சிகள்.
ஐக்கிய அமெரிக்காவின் வடக்குக் குடியேற்றங்களுக்கும் தெற்குக் குடியேற்றங்களுக்குமிடையில் காணப் பட்ட வேறுபாடுகள் எவை ? வடக்கு நாடுகள் மீது தெற்கு நாடுகள் பகைகொண்ட தேன் ? தெற்கு நாடுகள் ஐக்கிய அமெரிக்க இணைப்பை விட்டு விலக எண்ணியதேன் ? அண்மைக்காலத்தில் ஐக்கிய அமெரிக்காவில் ஏற்பட்ட
அபிவிருத்தியைப் பற்றி விபரி; 5. சிறு குறிப்பெழுது க.
1. ஆபிரகாம் லிங்கன்: 2. அடிமை வியாபாரம்

Page 74
இரண்டாம் தவணை மாதிரி வினாப்பத்திரம்
I; பின்வருவனவற்றில் 'அ' பகுதியிலுள்ளவற்றுடன் பொருந்து
வனவற்றை 'ஆ' பகுதியில் தெரிந்தெடுத்து வாக்கியங்களைப் பூர்த்தி செய்க:
(அ) - 1. கோப்பிச் செய்கையில் ஆர்வங்காட்டியவர் அ.. 12. ஜோஜ்பேட் என்பவர் ,
3.
மோட்டார் தொழிலுக்கும் மின்சாரத் தொழிலுக்கும் 4 தென்னைமுக்கோணம் என்பது | 25. எமது தேயிலையை அதிகமாக வாங்குவது
6. கொழும்பு கண்டி வீதிகள் தங்கம் 4
இறப்பர் ஆராய்ச்சி நிலையம் செல் * 8. கொழும்பு-- யாழ்ப்பாணம் புகையிரத வீதி * 9. 1867 ஆம் ஆண்டில் " 10. 1924 இல் (1) 11. 1869 இல் முதன்முதல் க 12. வெலிவித்த சரணங்கர அவர்கள் "). 13. இலங்கைப் பல்கலைக்கழகம் - 8 ஆ 1 4. இலவசக்கல்வி முறை :
* 15. கேணல் ஒல்காட்
* ஆ
சிலாபம், குருநாகல், கொழும்பு என்பவற்றுக்கு இடையி
லுள்ளது?
அகலவத்தையில் உள்ளது? 3. 1825 இல் பூர்த்தியாக்கப்பட்டன ! 4. ஆள்பதி பாண்ஸ் ஆகும். 5. கொழும்பு கண்டிப் புகையிரதவீதி பூர்த்தி செய்யப்பட்டது. 6. இலங்கையில் ஒலிபரப்புச் சேவை தொடங்கப்பட்டது) 7. இலங்கையில் கல்வித்திணைக்களம் நிறுவப்பட்டது;

மாதிரி வினாப்பத்திரம்
141
8• இறப்பர் அதிகமாகத் தேவைப்படுகிறது: டிதம் 9. பெரியபிரித்தானியா வாகும். 10. முதலாவது கோப்பிப் பெருந்தோட்டக்காரர் 11. 18 ஆம் நூற்றாண்டில் புத்தசமயத்தில் மறுமலர்ச்சியை
உண்டுபண்ணினார். " 12, 1945 இல் ஏற்படுத்தப்பட்டது , 13. பெளத்த ஞானசங்கத்தை நிறுவினார்: 14. 19 42 இல் தாபிக்கப்பட்டது. 15. ஆள்பதி றிட்ஜ்வே காலத்தில் அமைக்கப்பட்டது:
II,
மேல்வரும் வாக்கியங்களை அடைப்புக்குறிக்குள் இருக்கும் சொற்களில் பொருத்தமானவற்றைத் தெரிந்து பூர்த்திசெய்க. அநகாரிக தர்மபாலா (19 ஆம், 18 ஆம், 20 ஆம்) நூற் றாண்டில் வாழ்ந்தார். ஸ்ரீ சுமங்கலபிக்கு (வித்தியாலங்கார, வித்தியோதய) பிரிவேனாவை நிறுவினார். விக்ரர் இமானுவேல் (நேப்பிள்ஸ், சாடீனிய, வெனிசிய)
அரசனாவார். 4. நேபிள்சைக் கைப்பற்றியவன் (கவூர், மசினி, கரிபோல்டி) 5. பிறசியா ஆஸ்திரியாவைத் தோற்கடித்தது (சடோவா,
செடன்) போரிலாகும். வாஸ்கொடகாமா (1505 இல், 1405 இல், 1498 இல்) கள்ளிக்கோட்டைக்கு வந்தான், லிவிங்ஸ்ரன், ஸ்ரான்லி 8 ஆகி யோர் (ஆபிரிக்காவில், அவுஸ்திரேலியாவில்) தேட்டம் செய்தனர். கிழக்கிந்திய தீவுகள் (போத்துக்கீசரின், ஒல்லாந்தரின்)
ஆதிக்கத்தின்கீழ் இருந்தன. 9. , அபினிப்போர் (1839 இல், 1849 இல், 1859 இல்) ஏற்பட்டது 10. மிற்சுகிற்றோ என்பவன் (யப்பானிய, சீன )ச் சக்கரவர்த்தி
யாகும்.
7.
> 8.
111. பின்வருவன சரியாயின் சரி எனவும், பிழையாயின் பிழை
எனவும் கூறுக. 17 1894 இல் கொரியப்போரில் இரசியாவும் சீனாவும் ஈடு
பட்டன. »

Page 75
14 2
தற்காலச் சரித்திரம்
1904 இல் இரசிய யப்பானியப் போரில் இரசியா வெற்றி பெற்றது :* 1931 இல் யப்பான் மஞ்சூரியாவைக் கைப்பற்றியது ; 4. குவோமிந்தாங்கட்சி வடசீனாவில் உருவாகியது. 5. தேசிய சீனா என்பது போர்மோசாவாகும், 6. ஆபிரகாம் லிங்கன் 1860 இல் ஜனாதிபதியாகினார். 7.
அமெரிக்க உள் நாட்டுப் போரில் தெற்கு நாடுகள் வெற்றி
பெற்றன.கட்டா 8. பெருந்தோட்டங்களின் விருத்தியினால் கண்டியர்கள் கஷ்
டப்பட்டார்கள் எனத் 'மக்காவோ' என்பது போத்துக்கீசர் சீனாவில் நிறுவிய
வர்த்தக நிலையமாகும் ! 10. பிலிப்பைன் தீவுகளை ஸ்பானியரிடமிருந்து அமெரிக்கா
கைப்பற்றிய து ,
IV. சுருக்கமான" விடைகள் தருக.
1. பாண்ஸ் காலத்தில் கோப்பிச் செய்கை எழுச்சி பெற்ற
வரலாற்றைக் கூறுக. தேயிலைப் பயிர்ச்செய்கை இலங்கையில் சித்தியடைந்த
மைக்குக் காரணங்கள் யாவை ? பெருந்தோட்டப்பயிர்ச்செய்கையின் விருத்தியினால் ஏற் பட்ட நன்மைகள் எவை ? இலங்கையில் புகையிரதப் பாதைகள் அமைக்கப்பட்ட
வரலாற்றைச் சுருக்கமாகக் கூறுக? 5. 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையின் கல்வி
நிலைபற்றிக் கூறுக. 6. இத்தாலியை ஒன்றுபடுத்துவதற்குக் கவூர் ஆ ற் றி ய>
சேவை யாது ? ஜேர்மனியை ஒன்றுபடுத்து வதற்கு பிஸ்மாக்மேற்கொண்ட
நடவடிக்கைகள் யாவை ? 8. சீனாவில் பொதுவுடைமைக் கொள்கைகள் பரவிய வர
லாற்றைக் கூறுக, 9. ஆபிரகாம் லிங்கன் ஐக்கிய அமெரிக்காவுக்கு ஆற் றி ய
சேவை யாது ? 10.
இருபதாம் நூற்றாண்டில் யப்பான் எழுச்சி பெற்ற வர லாற்றை விபரி,
1

மூன்றாந் தவணை.
அலகு 13. இலங்கையின் அரசியல் வளர்ச்சி.
பாடம் 1. மத்தியவகுப்பாரின் செல்வாக்கும்
சீர்திருத்தக் கிளர்ச்சியும். பத்தொன்பதாம் நூற்றாண்டில்-சிறப்பாக அதன் நடுப்பகுதியிலிருந்து இலங்கையில் பொருளாதாரம், கல்வி, போக்குவரத்து, வர்த்தகம் முதலிய பல துறை களில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றங்களின் விளை வாக மத்திய வகுப்பினர் என்னும் புதிய பிரிவினர் தோன்றினர் என்பதை முந்திய தவணையில் படித்திருக் கிறீர்களல்லவா ? மத்திய வகுப்பினர் என்ற பிரிவு மருத்துவர், சட்டவல்லு நர், ஆசிரியர், அரசாங்க ஊழியர் முதலியவர்களைக் குறிக்கும் என்பது உங்களுக் குத் தெரியுமல்லவா? இவ்வகுப்பைச் சேர்ந்தவர்கள் எழுச்சி பெறவும், அரசியற் கிளர்ச்சி செய்யவும் உதவியவற்றில் ஆங்கிலக்கல்வியே மிக முக்கியமான காரணியாகும். கோல்புறூக் கமிஷனின் சிபார்சுகளின் விளைவாக இலங்கையில் ஆங்கிலக்கல்வி விரைவாக வளர்ச்சியடைந்தது. அதேசமயம் வசதியும் வாய்ப்பும் பெற்ற மத்திய வகுப்பினரில் சிலர் இ ங் கி லஈ த் து முதலிய மேற்கு நாடுகளுக்குச் சென்று உயர் கல்வி கற்கத் தொடங்கினர். அவர்கள் அக்காலத்தில் அந் நாடுகளில் நிலவிய சுதந்திரக் கருத்துக்களினால் கவரப் பட்டனர். குறிப்பாக இங்கிலாந்தில் 19 ஆம் நூற் றாண்டின் நடுப்பகுதியில் விக்ரோறியா மகாராணி யார் காலத்தில் கிளாட்ஸ்ரன், டிஸ்றலி முதலிய தலைவர்கள் - பாராளுமன்ற ஆட்சி மு  ைற  ைய ப் பலப்படுத்துவதற்கு மேற்கொண்ட சீர் திருத்தங் களும், 'வாக்குரிமை' சம்பந்தமாக மக்கள் செய்த கிளர்ச்சிகளும் இலங்கையின் மத்திய வகுப்பினரிடை யேயும் சீர் திருத்த மனப்பான்மையை ஏற்படுத்தின.

Page 76
144
தற்காலச் சரித்திரம்
அன்றியும் இங்கிலாந்தில் கல்விகற்றோர் பிரதிநிதித்துவ ஆட்சி முறையின் சிறப்பையும் தெரிந்து கொண்ட னர்.
இவ்வாறு வெளி நாடுகளில் உயர்கல்வி கற்றோர் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட சுதந்திரப் போராட் டங்களையும், ஒற்றுமை இயக்கங்களையும் பற்றி நன்கு அறிந்து வந்ததினால் இலங்கையிலும் அத்தகைய உரி மைப் போராட்டங்களையும் கிளர்ச்சிகளையும் மேற் கொள்ள அவர்களிடம் ஒருவித ஆர்வமும் துடிப்பும் காணப்பட்டன.
இலங்கையில் அப்போது பிரதிநிதித்துவ ஆட்சி பெயரளவிலும் நடைபெறவில்லை. இ ங் கு சட்ட நிரூபணசபை, சட்ட நிர்வாகசபை என்பவற்றைக் கைப்பொம்மைகளாக வைத்து ஆள்பதியே ஆட்சி செய்து வந்தார். மேலும் சட்டநிரூபண சபையில் அங்கத்துவம் பெற் ற வர் க ள் நியமிக்கப்பட்டனரே யன்றித் தெரிவு செய்யப்படவில்லை. அன்றியும் நியமனப் பிரதிநிதிகளிடம் எவ்வித அதிகாரங்களும் இருக்கவு மில்லை. எனவே ஆள்பதி தாம் நினைத்த வற்றைச் செயல்படுத்தக்கூடிய ஒரு சர்வாதிகாரிபோல ஆட்சி செய்தார். அந்நிலையை மாற்ற விரும்பிய தலைவர்கள் 'இலங்கைக் கூட்டவை' (Ceylon League) என்னும் ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்கிக் கிளர்ச்சி செய் வாராயினர்.
இது இவ்வாறாக, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி யில் இங்கு ஏற்பட்ட சமய மறுமலர்ச்சியும் மத்திய வகுப்பினரிடையே விழிப்புணர்ச்சியையும் தேசிய மனப் பான்மையையும் தோற்றுவித்தது. அ க் க ா ல த் தில் மொகோத்திவத்த குணானந்த தேரோ முதலிய பிக்கு களும், கேணல் ஒல்காட், பிளவற்ஸ்கி முதலிய பிரம்மஞான சங்கத்தினரும், அநகாரிகதர்மபால என்பவரும் பெளத்த சமயம், பெளத்தகல்வி ஆகியன எழுச்சிபெற உதவி

எட்டாந்தரம்
145
னர். ஒல்காட் என்பவர் ஓர் அமெரிக்கராவர். அவர் பிளவற்ஸ்கி என்னும் இரசியப் பெண்மணியுடன் இங்கு வந்து 1880 இல் பெளத்த பிரம்மஞான சங்கத்தை நிறுவி அதன்மூலம் கல்வித்தொண்டும் சமயத் தொண் டும் செய்தார். அவரைப்போல் அநகாரிகதர்மபால என் பவர் புத்தசமய முறையான வாழ்க்கை நடத்து மாறும் புத்தசமயப் பாடசாலைகளை ஆதரிக்குமாறும் கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடையே பிரசாரம் செய்தார்.
இவ்வாறு புத்தசமய மறுமலர்ச்சி ஏற்பட்ட காலத் தில் ஆதர்கோடன் என்னும் ஆள்பதி தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தை நிறுவிச் சமயப் புனருத் தாரணத்துக்கு உதவினார். ; அன்றியும் மகாவம்சம் உபாம் (Upham) என்பவரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு இங்கிலாந்தில் பிரசுரிக்கப்பட்டதும் புத்தசமய மறுமலர்ச்சியின் பிரதிபலிப்பாகும். இப்படி யாகப் புத்தசமயம் மலர்ச்சி அடைந்த இக்காலத்தில், ஆறுமுகநாவலரின் போதனையினாலும் சாதனையினா லும் சைவ சமயமும் மலர்ச்சி யடைந்தது. இவை யெல்லாம் மக்களிடையே தேசிய உணர்ச்சியைத் தூண்டிவிட்டன. மேலும் இக் கா ல த் தி ல் கண்டி ஹெரால்ட், சிலோன் ஒப்சேவர் முதலிய பத்திரிகைகளும் நாட்டில் தேசீய உணர்ச்சியைத் தூண்டும் விதத்தில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
இவ்விதம் உள்நாட்டில் ஏற்பட்ட சம்பவங்களினால் தேசீய உணர்ச்சி தூண்டப்பட்டிருந்த அக்காலத்தில் இந்தியாவில் உருவாகிய தேசிய இயக்கங்களும் விடு தலை இயக்கங்களும் இலங்கையரின் மனதிலும் விடுதலை வேட்கையைத் தூண்டிவிட்டன. இந்தியாவில் 1885 இல் நிறுவப்பட்ட தேசிய காங்கிரசும், ஆரியசமாசம், பிரம்மசமாசம் முதலிய சமய இயக்கங்களும் இந்திய
19

Page 77
146
தற்காலச் சரித்திரம் மக்களிடையே, தேசீயஉணர்ச்சியைத் தூண்டி அரசியல் சீர் திருத்தக் கிளர்ச்சிகளை உருவாக்கின. எனவே இந்தியரின் உதாரணத்தைப் பின்பற்றி இலங்கையின் மத்திய வகுப்பினரும் இங்குள்ள ஆட்சிமுறையில் மாற்றங்களைக் கோரினர். அவர்கள் சட்டநிரூபண சபைக்கு உத்தியோகப் பற்றற்றோரையும் நியமிக்கும் படியும், நியமன முறைக்குப் பதிலாகப் பிரதிநிதி களைத் தெரிவு செய்யும் முறை பின்பற்றப்பட வேண்டு மெனவும், பிரதேச வாரியாகத் தேர் தல் நடைபெற வேண்டுமெனவும் கிளர்ச்சி செய்தனர்.
பயிற்சிகள்.
சீர்திருத்தக் கோரிக்கைகளை விடுப்பதில் மத்திய வகுப்
பினர் முன்ன ணியில் நின்றதேன் ? 2. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பௌத்த,
இந்து சமயங்களின் மறுமலர்ச்சிக்கு உதவியவர் கள் யாவர்? 3. இலங்கையில் தேசீய உணர்ச்சியைக் கிளறுவதில் வேறு
எவை பங்குகொண்டன ? 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையின் ஆட்சி
எவ்வாறு நடந்தது?
5,
மத்திய வகுப்பினர் விடுத்த சீர்திருத்தக் கோரிக்கைகள் யாவை ?

பாடம் 2.
மக்கலம் சீர்திருத்தங்கள்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங் கையில் அரசியற் சீர் திருத்தம் வேண்டி மத்திய வகுப் பினர் மேற்கொண்ட கிளர்ச்சிகளை ஐரோப்பியரும், ஆள்பதிகளும் விரும்பவில்லை. ஏனெனில் இலங்கைய ருக்கு உரிமைகள் வழங்கினால் அது தமது நலன்களுக் குப் பாதகமாக முடியும் என அவர்கள் பயந்தனர். 'ஆயினும் நாளுக்குநாள் சீர்திருத்தக் கோரிக்கைகள் பலமடைந்து வந்ததினால் குடியேற்ற நாட்டுச் செய லாளர், இலங்கையரின் கோரிக்கைகளைத் தட்டிக் கழித்தல் கடினமாயிற்று. எனவே அவர் இலங்கை யின் அரசியற்றிட்டத்தில் சில மாற்றங்களைச் செய் வதற்குச் சம்மதித்து 1910 இல் ஒரு பிரகடனத்தை விடுத்தார். அப்பிரகடனம் இலங்கையில் மக்கலம் என்பவர் ஆள்பதியாக இருந்த காலத்தில் விடுக்கப் பட்டு அவர் மூலம் செயல் படுத்தப்பட்டது. இதனால் 1910 இல் அரசியற் திட்டத்தில் செய்யப்பட்ட மாற் றங்களை 'மக்கலம் சீர் திருத்தங்கள்' எனக் குறிப்பிடுவர்.
மக்கலம் சீர் திருத்தங்களின் பிரகாரம் (சட்ட நிரூபண சபையின் அங்கத்தவர் தொகை 17 இலிருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்டது.) (அதில் 10 பேர் உத்தி யோகப் பற்றற்றவர்களாகவும்)11 பேர் உத்தியோகப் பற்றுள் ளவர்களாகவும் பணியாற்றினர்) "உத்தியோ கப்பற்றற்ற 10 பேரும் இனவாரியாகத் தேர்ந்தெடுக் கப்பட்டனர். இதன்படி கரையோரச் சிங்களவர், தமிழர், ஐரோப்பியர் ஆகியோருக்குத் தனித்த னி 2 பிரதி நிதிகளும், பறங்கியர், படித்த இலங்கையர், மலை நாட்டுச் சிங்களவர், முஸ்லிம்கள் ஆகியோருக்குத் தனித்தனி ஒவ்வொரு பிரதி நிதியும் தேர்ந்தெடுக்கப் பட ஒழுங்கு செய்யப்பட்டது.

Page 78
148
தற்காலச் சரித்திரம் மக்கலம் சீர்திருத்தங்கள் சட்ட நிர்வாகசபை அங் கத்தவர்களின் தொகையில் எவ்வித மாற்றமும் செய்ய வில்லை. மக்கலம் சீர்திருத்தங்கள் கோல்புறூக் குழு வினரின் சீர்திருத்தங்களிலும் சற்றுச் சிறந்தவையா யிருந்தன. ஏனெனில் அவை சட்ட நிரூபண சபையின் அங்கத்தினர் தொகையைக் கூட்டியதன் மூலம் முன் பிருந்ததைவிட அதிகமான இலங்கையர் பிரதிநிதி களாக வாய்ப்பளித்தன. அதேசமயம் படித்த இலங் கையருக்கென ஒரு தனிப் பிரதிநிதியைத் தெரிவு செய்யும் சலுகையையும் அவை முதல் முறையாக வழங்கின. இவ்வாறு படித்த இலங்கையரின் பிரதி, நிதியாக முதல் முறையில் தெரிவு செய்யப்பட்டவர் சேர் பொன். இராம நாதன் என்பவராகும்.
இவ்வாறு மக்கலம் சீர் திருத்தங்களைத் தொடர்ந்து புதிய சட்டக்கழகம் 12-1-1912 இல் கூடியது. ஆயினும் புதிய ஒழுங்குகள் மத்திய வகுப்பினரின் கோரிக்கை களைப் பூர்த்தி செய்யவில்லை. அவர்கள் ஆட்சிவிடயத் தில் இலங்கைப் பிரதிநிதிகளுக்கும் ஏனையோருக்கு மிடையே சமத்துவம் வேண்டுமென ஆசைப்பட்டனர். ஆனால் மக்கலம் சீர்திருத்தங்கள் உத்தியோகப் பற்றுள் ளோரை (அரசாங்க உத்தியோகத்தரை) இன்னும் பெரும்பான்மையினராக வைத்திருந்தன, அன்றியும் (பல் இனமக்கள் வாழும் நாட்டில் பிரதேசவாரியான பிரதிநிதித்துவ முறையை ஏற்படுத்தாமல் இனங்களி டையே வேற்றுமையை வளர்க்கக்கூடிய இனவாரி யான பிரதிநிதித்துவ முறையே தொடர்ந்தும் பின் பற்றப் பட்டமை) அச்சீர் திருத்தங்களின் இன்னொரு விரும்பத்தகாத அம்சமாயிருந்தது.
இக்காரணங்களினால் மத்திய வகுப்பினர் மக்கலம் சீர்திருத்தங்களினால் திருப்திப்படாமல் மேலும் சீர் திருத்தங்கள் கோரிக் கிளர்ச்சி செய்தனர். ஆயினும் 1914 இல் முதலாம் உலகப்போர் ஆரம்பித்ததினால்

எட்டாந்தரம்
149
அரசாங்கம் அரசியல் சீர்திருத்த முயற்சிகளைப் பின்
போட்டது.
சட்ட நிரூபண சபை
21 பேர்
உத்தியோகப்பற்றுள்ளோர்
உத்தியோகப்பற்றற்றோர்
10
தமிழர் ஐரோப் கரையோ கண்டிச் பறங்கி படித்த முஸ்லிம்
பியர் ரச்சிங்கள சிங்கள யர் இலங்கையர் கள்
வர்
வர்
அ
பயிற்சிகள்.
1.
1910 ஆம் ஆண்டு மக்கலம் சீர்திருத்தங்களின் பிரதான
அமிசங்கள் யாவை ? 2. அவற்றின் குறைபாடுகள் எவை ? 3, மக்கலம் சீர்திருத்தங்கள் கோல்புறூக் சிபார்சுகளை விட எவ்
விதத்தில் சிறந்து விளங்கின ?

Page 79
150
தற்காலச் சரித்திரம்
பாடம் 3. மானிங் சீர்திருத்தம்
T)
1910 இல் அரசியற்றிட்டத்தில் செய்யப்பட்ட சிறு மாற்றங்கள் இலங்கையரைத் திருப்தி செய்யவில்லை. இதனால் அவர்கள் மேலும் சீர்திருத்தம் வேண்டிக் கிளர்ச்சி செய்தனர். அக்காலத்தில் முதலாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. அவ்வேளை 1915 இல் இலங்கையில் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கு மிடையே ஒரு கலகம் ஏற்பட்டது. அது கம்பளையி லுள்ள பௌத்த கோவிலின் பெரகரா சம்பந்தமாக ஏற்பட்டது. அக்கோவிலில் ஆண்டுதோறும் பெரகரா நடப்பது வழக்கம். 1914 இல் கம்பளையில் முஸ்லிம்கள் ஒரு மசூதியைக்கட்டியிருந்தனர். அவர்கள் தமது பள்ளிவாசலுக்கு 100 யார் தூரத்திற்குள் பெர ஹ ராக் காரர் வாத்தியங்கள் இசைக்க அனுமதிக்காதபடி அரசாங்க அதிபரைக் கேட்டுக்கொண்டனர். அதற்கு இசைந்த அதிபர் புத்தகோவில் முகாமையாளருக்கு அவ்விதமே கட்டுப்பாடு விதித்தார். ஆனால் அது ஒரு புதிய கட்டுப்பாடு எனக் கூறிய அவர் மாவட்ட நீதி மன்றத்தில் அரசாங்கத்துக் கெதிராக வ ழ க் கு த் தொடர்ந்தார். அந்நீதிமன்றம் அரசாங்கத்தின் புதிய க ட் டு ப்பா டு பிழையானது எனத் தீர்ப்பளித்தது. உடன் அரசாங்கம் உயர் நீதிமன்றத்துக்கு 'அப்பீல்' செய்ய, அது அரசாங்கத்துக்குச் சார்பாகத் தீர்ப்பு' வழங்கியது.
இது இவ்வாறாக 28-5-1915 அன்று விசாகத் திரு நாளில் கண்டித்தலதா மாளிகையின் கறோல் ஊர்வலத் தின்போது காசில் வீதியிலுள்ள மசூதிக்கு அருகில் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கு மிடையில் சிறு சச்சரவுகள் ஏற்பட்டன. பின்னர் அடுத்த நாள் ஒரு முஸ்லிம் உண்டிச்சாலையிலிருந்த சிலர் வெளியில் நின்ற

எட்டாந்தரம்
15I
சிங்களவர்மேல் சுட்டதைத் தொடர்ந்து கண்டியின் பல பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கு மிடையே கைகலப்புகள் ஏற்பட்டன. அதையடுத்து விஷமிகள் பலரின் பொய்யான செய்திகளால் கேகாலை, கொழும்பு, குருநாகல் பகுதிகளில் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையே கலவரங்கள் ஏற்பட்டன.
இவ்வாறு தொடங்கிய கலவரங்கள் அரசாங்கத் துக்கு எதிரானவை எனப் பிழையாக எண்ணிய ஆள் பதி றொபேட் சார்மஸ் இராணுவச் சட்டத்தைப் பிர கடனம் செய்து அதன்கீழ் ஏராளமான மக்களைச்சுட்டுக் கொன்றதோடு ஒன்றுமறியாத சிங்களத் தலைவர்கள் சிலரையும் சிறையிலிடுவித்தார். 1915 கலவர காலத் தில் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு ஓரளவு சாதகமாக வும் சிங்களவருக்கு விரோதமாகவும் நடந்து கொண்ட தனால் சிங்கள மக்களிடையே அரசாங்க எ திர்ப்பு உணர்ச்சி உச்ச நிலையையடைந்திருந்தது. அவ்வேளை E. W. பெரேரா, D. B ஜயதிலக என்னும் இரு தலைவர்களும் பெளத்தர்களின் குறைபாடுகளை எடுத்துக் கூறுவதற்காக இங்கிலாந்துக்குப் பயணமாயினர், அவர் களைத் தொடர்ந்து சேர். பொன். இராமநாதனும் அங்கு சென்று 1915 கலவர காலத்தில் அரசாங்கத் தின் செயல்களை எடுத்துக்கூறி ஒரு விசாரணைச்சபையை நிறுவுமாறு வேண்டிக் கேட்டார். ( இ த ன்  ேம ல் அரசாங்கம் ஆள்பதி சாமேர்சைத் திருப்பியழைத்த தோடு, கேகாலை விசாரணைச்சபைமூலம் கலவரங்களைப் பற்றி அறிந்த பின்னர் சிங்களத் தலைவர்களைச் சிறை யிலிருந்து விடுவித்தது.
ன
இவ்விதமாக 1915 கலவர காலத்தில் அரசாங்கம் நடந்து கொண்ட விதத்திலிருந்து நாட்டின் அரசியற் பொறுப்பைத் தாமே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசி யத்தை இலங்கையர் உணரத் தொடங்கினர். இதன் பயனாக 1917 இல் 'இலங்கைச் சீர்திருத்தக்குழு' என்னும்

Page 80
152 , 4 , 152
தற்காலச் சரித்திரம்
அரசியல் தாபனம் ஒன்று தொடங்கப்பட்டது. அது சீர்திருத்தங்களுக்காகக் கி ள ர் ச் சி செய்து D, B. ஜயதிலக என்பவரை இங்கிலாந்துக்கும் அனுப்பியது. இதன்பின்னர் 1919 இல் இலங்கைச் சீர்திருத்தக் குழுவும். இலங்கைத் தேசீய சங்கமும் ஒன்றாயிணைந்து இலங்கைத்தேசிய காங்கிரஸ் என் னும் புதிய இயக்கமாக உருவெடுத்தன , அதன் தலைவர்களாகச் சேர். பொன் அருணாசலம், சேர். ஜேம்ஸ் பீரிஸ் ஆகியோர் பணியாற் றினர். அவர்களின் தலைமையில் தேசீய காங்கிரஸ் சீர் திருத்தங்களுக்காகக் கிளர்ச்சி செய்தது.
இலங்கைத் தேசீய காங்கிரஸ் பல கோரிக்கை களை விடுத்தது. அவை (1) 50 பேரைக் கொண்ட சட்டக்கழகம் நிறுவப்படவேண்டும். (2) அதில் 40 பேர் பிரதேசவாரியாகத் தெரிவு செய்யப்பட்டவர் களாயிருக்கவேண்டும். (3) சட்ட நிர்வாக சபையில் அரைப்பங் கினர் இலங்கையராயிருக்க வே ண் டு ம். (4) வரவு செலவுத் திட்ட விடயத்தில் தெரிவு செய் யப் பட்ட அங்கத்தவர்களுக்குப் பூரண அதிகாரம் இருக்கவேண்டும். (5) ஆ ண் க ள் எல்லோருக்கும் கட்டுப்பாடில்லாமலும், பெண்களுக்குச் சில கட்டுப் பாடுகளுடனும் வாக்குரிமை அளிக்க வேண்டும் என் பனவாம். இவ்வாறு தேசிய காங்கிரஸ் வி டு த் த கோரிக்கைகளையும் ஆள்பதி மானிங்கின் கருத்துக்களை யும் ஆராய்ந்த அரசாங்கம் (1920 இல் அரசியற்றிட் டத்தில் சில மாற்றங்களைப் புகுத்தியது.) அதன்படி
சட்ட நிரூபண சபையின் அங்கத்தவர் தொகை : 21 - 6 c' இலிருந்து 37 ஆக அதிகரிக்கப்பட்டது.) (அதில் 23
பேர் உத்தியோகப் பற்றற்றவர்களாகவும், 14 பேர் உத்தியோகப் பற்றுள்ளவர்களாகவுமிருக்க ஒழுங்கு செய்யப்பட்டது.) உத்தியோகப் பற்றற்றவர்களில் 7 பேர் ஆள்பதியால் நியமிக்கப்பட, எஞ்சிய 16 பேரில் 11 பேர் பிரதேசவாரியாகவும், 5 பேர் இன வாரியாக வும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.) இவற்றைத்தவிர

153
எட்டாந்தரம் (19 20 ஆம் ஆண்டுச் சீர்திருத்தங்கள் 21 வயதுக்கு
மேற்பட்டவர்களில் ஆங்கிலம், சிங்களம் அ ல் ல து தமிழை எழுதவும் வாசிக்கக்கூடிய ஆண்களுக்கு வாக் குரிமையும் அளித்தது. ஆயினும் இலங்கைத் தேசீய காங்கிரஸ் சி பார் சு க ளை எதிர்த்தபோது ஆள்பதி மானிங் மே லும் சீர்திருத்தங்களைச் செய்வதாக வாக்கு றுதியளித்து அதைத் தேர்தல்களில் பங்கு பெறச் செய்தார்.
LIா - தி3பதி,
இதன் பின்னர் நடைபெற்ற சட்டநிரூபண சபைக் கூட்டங்களில் அரசியற் சீர்திருத்தங்கள் பற்றிப் பல பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன. அவ்வேளை பிரதி நிதித்துவ விடயமாகச் சி ங் க ள த் தலைவர்களும், தமிழ்த் தலைவர்களும் முரண்பட்டமையால் தமிழர், தேசீய மகாசபையை விட்டு விலகித் தமிழ்மகா சபையை. நிறுவி அரசியற் சீர்திருத்தம் கோரி நின்றனர். இவ் விதம் சீர் திருத்தக் கோரிக்கை வலுப்பெற்று வருவதை உணர்ந்த அரசாங்கம் (1924 இல் புதிய ஒரு சட்ட நிரூபண சபை நிறுவுமாறும், அச்சபையில்' 49 பேர் அங்கத்தவராயிருக்க வேண்டுமென வும்) அதில் (37 பேர் உத்தியோகப்பற்றற்றவர்களாகவும் 12 பேர் உத்தி யோகப்பற்றுள்ளவர்களாகவும்) இருக்கவேண்டுமென வும் சிபார்சு செய்ததும், இவ்வாறு தெரிவுசெய்யப் பட்ட 37 உத்தியோகப்பற்றற்றோரில் 23 பேர் பிரதேச (தொகுதி) வாரியாகவும், 11 பேர் இனவாரியாகவும் தெரிவுசெய்யப்பட, 3 பேர் நியமனம் பெற்றனர்)
1924 ஆம் ஆண்டு (மானிங்) சீர் திருத்தங்களின் விளைவாகப் பிரதிநிதிகளின் தொகையும் வாக்குரிமை பெறுபவர்களின் தொகையும் கூடின, அதேவேளை 4 உத்தியோகப் பற்றற்றோர் அரசாங்க நிர்வாக விட யங்களில் பயிற்சி பெற்றனர். ஆயினும் (ஆள்ப்திக்கு விசேட அதிகாரம் வழங்கப்பட்டதும்) இனவாரியான
20

Page 81
1 54
தற்காலச் சரித்திரம் பிரதிநிதித்துவமுறை ஒழிக்கப்படாததும் அதன் பெருங் குறைகளாயிருந்தன. இதன் விளைவாக. மீண்டும் ) அரசியற் சீர்திருத்தம் வேண்டி மக்கள் கிளர்ச்சி செய் தனர். அதைத் தொடர்ந்து 19 27 இல் டொன மூர் என்பவரின் தலைமையில் ஒரு விசாரணைக்குழு இலங் கைக்கு அனுப்பப்பட்டது.
பயிற்சிகள்
1, 1915 இல் சிங்களவர்களுக்கும் முஸ்லிம் களுக்கு மிடையில்
கலகங்கள் ஏற்பட்டதேன் ?
2,
அக்கலகங்களின் போது : அரசாங்கம் நடந்து கொண்ட
விதத்தி லிருந்து மக்கள் எதை உணரத்தொடங்கினர் ? 3. இலங்கைத் தேசிய காங்கிரஸ் எப்போது, எவ்வாறு உரு
வாகியது ? 4, அக்காங்கிரஸ் விடுத்த கோரிக்கைகள் யாவை ? 5. 19 20 இல் செய்யப்பட்ட சீர்திருத்தங்களின் பிரதான அமி
சங்கள் யாவை ? அவை 1910 மக்கலம் சீர்திருத்தத்திலும்
எவ்விதம் வேறுபட்ட ன ? 6. 1924 ஆம் ஆண்டுச் சீர்திருத்தங்கள் 19 20 ஆம் ஆண்டுச்
சீர் திருத்தங்களிலிருந்து எவ்வகையில் வேறுபட்டன ? 7. 1924 ஆம் ஆண்டுச் சீர்திருத்தங்களிலுள்ள குறைபாடுகள்
எவை ?

பாடம் 4.
டொனமூர் அரசியல் சீர்திருத்தங்கள்
1924 ஆம் ஆண்டு மானிங் சீர் திருத்தங்களைத் தொடர்ந்து புதுவதாக அமைக்கப்பட்ட சட்ட நிரூ பண சபை தொடக்கத்திலிருந்தே சிறந்த முறையில் இயங்கவில்லை. எனவே ஆள்பதி மானிங்குக்குப் பின் னர் ஆள்பதியாகிய 'சேர் ஹியூ கிளிபோப் அச்சட்ட நிரூ பண சபையின் குறைபாடுகளையிட்டுக் குடியேற்ற 'நாட்டுச் செயலாளருக்கு அறிவித்தார். அவரது முறையீட்டைக் கண்ணுற்ற குடியேற்ற நாட்டுச் செயலாளர் நடைமுறையிலிருக்கும் அரசியற்திட்டத் திலுள்ள குறைநிறைகளை யும் அதனைத் திருத்துவதற் குத் தெரிவிக்கப்படும் ஆலோசனைகளையும் ஆராய்ந்து அறிக்கை - சமர்ப்பிக்கும்படி டொனமூர் என்பவர் தலைமையில் ஒரு விசாரணைச் சபையை அனுப்பினார். அச்சபையினர் 19.2.7 இல் இங்கு வந்து இங்குள்ள நிலைமையை நேரிற் கண்டனர்.
டொன மூர் குழுவினர் மானிங் அரசியல் திட்டத் தின் குறைபாடுகளைக் கண்டு அதை மாற்ற விரும் பினர். அதற்கு மாற்றாக இலங்கையருக்கு எல்லாத் துறைகளிலும் பூ ர ண ம ா ன பொறுப்பாட்சியைக் கொடுப்பது பொருத்தம் எனக் கண்டனர். ஆயினும் இலங்கையர் அரசாங்க நிர்வாக விடயத்தில் போதிய அநுபவம் பெற்றிருக்காததினாலும், அவர்கள் சாதி, மத பேதங்களை மறந்து ஒன்றுபட்டிருக்காததினா லும், 2 இலங்கையில் அரசியற் கட்சிகள் உருவாகியிருக்கா? ததினாலும் பூரண பொறுப்பாட்சியை உடன் வழங்கு | வது புத்திசாலித்தனமன்று எனக் குழுவினர் கருதி னர்.
அடுத்து வாக்குரிமை விடயத்தை ஆராய்ந்த விசா ரணைக் குழுவினர் வாக்குரிமை பெறுவதற்குப் பல நிபந்தனைகளை விதிப்பது சரியல்ல எனக் கண்டனர்.

Page 82
156
தற்காலச் சரித்திரம் அன்றியும் இலங்கையர் பொறுப்பாட்சி முறையில் பங்கு கொள்வதற்கு முதல்வழி வாக்குரிமையை விரிவு படுத்துவதே எனக் கண்டனர். மேலும் இலங்கை யில் அதுவரை பின்பற்றப்பட்டுவந்த இனவாரியான பிரதிநிதித்துவ முறை நாட்டில் ஒற்றுமையும் தேசீய மனப்பான்மையும் ஏற்படுதற்குத் தடையாயிருப்ப தைக் கண்டனர். இவ்வாறு அரசியற்திட்டம், வாக் குரிமை பிரதிநிதித்துவமுறை என்பவற்றில் மாற்றங் கள் செய்ய வேண்டிய அவசியத்தை உணர்ந்த விசா ரணைக் குழுவினர் பின்வரும் சிபார்சுகளைச் செய்த
னர்.
அரசியற்றிட்டம் :- பழைய சட்டநிரூபண சபைக்குப் பதில் அரசாங்கசபை நிறுவப்படவேண்டும். அது தெரிவு செய்யப்பட்ட 50 பிரதிநிதிகளையும் 8 நியமன அங்கத்தவர்களையும், பிரதம செயலா ளர், சட்டச்செய லாளர், நிதிச் செயலாளர் என்னும் மூன்று அதிகாரி களை யும் கொண்டிருக்கவேண்டும். அரசாங்க சபை அங்கத்தவர்களில் 3 செயலாளர்களைத் தவிர ஏனைய 58 பேரும் 7 நிர்வாக சபைகளாகப் பிரிந்து கொள்ள வேண்டும். அவை ஒவ்வொன்றுக்கும் தலை வராகத் தெரிவு செய்யப்படுபவர் மந்திரி எனப்படுவார். இவ் விதமாக ஏழு மந்திரிகள் கீழும் ஏழு திணைக்களங்கள் இயங்கும். அவை: (1) உள்நாட்டு விவகாரம், (2) விவசாயம், (3) உள்ளூராட்சி, (4) சுகாதாரம், (5) கல்வி, (6) கைத்தொழில், வர்த்தகம், (7) போக்கு வரத்து என்பனவாகும். இவற்றைத் தவிர நிதி, நீதி என்பனவற்றுக்குப் பொறுப்பாக நிதிச் செயலாளர், நீதிச் செயலாளர் என்பவர்கள் நியமிக்கப்பட்டனர். அதேசமயம் பிரதம செயலாளர் அரசாங்க சபையின் தலைவராக அமர்த்தப்பட்டார். - வாக்குரிமை:- பழைய முறை கைவிடப்பட்டு, 21 வயதுக்கு மேற்பட்ட எல்லாருக்கும் வேறு எவ்வித. நிபந்தனையுமின்றி வாக்குரிமை வழங்கப்படவேண்டும்.

எட்டாந்தரம்
157
இவ்வாறு டொனமூர் குழுவினரே இலங்கையில் சர்வான வாக்குரிமையை வழங்கினர்.*. - 4 மடிய, (
மாலைமலர் / அ - 4 ) - 199 -ல் | பிரதிநிதித்துவ: முறை:- இலங்கையில் இதுவரை கால மும் பின்பற்றப்பட்ட இன வாரியான பிரதிநிதித்து வ முறை ஒழிக்கப்பட்டுப் பிரதேச வாரியாகப் (தொகுதி) பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட வேண்டும். இவ் வாறு தெரிவுசெய்யப்படுவோர் 4 ஆண்டுகள் பதவி வகிப்பர். அதன்பின் புதிய தேர்தல் நடை பெ ற வேண்டும்.
ஆள்பதியின் அதிகாரங்கள் :- டொன மூர் குழுவினரின் , ஏனைய சிபார்சுகளினால் ஆள்பதியின் அதிகாரங்கள்! குறைக்கப்பட்டபோதும் அவர்கள் அவருக்குச் சில விசேட அதிகாரங்களை வழங்கினர். அவை : (1) அரசாங்க சபையால் நிறைவேற்றப்படும் மசோதாக்/ களை அங்கீகரித்தல், (2) அவசியமானால் சில மசோ த தாக்களைப் புனராலோசனை செய்யும்படி திருப்பி : யனுப்புதல், (3) சில மசோதாக்களை அரசரின் அங்ர் கீகாரத்துக்குச் சமர்ப்பித்தல், (4) தமது உசிதப்படி' சில மசோதாக்களை 6 மாதகாலம் செயற்படாது, { தடுத்து வைத்தல், (5) சில மசோதாக்களுக்கு அர! சாங்க சபையில் 2/3 பங்கினரின் ஆதரவைக்கோரு) தல், (6) நாண யம், சமயம், விவாகரத்து முதலிய விடயங்கள் பற்றிய மசோதாக்களுக்கு அங்கீகார மளிக்கமறுத்தல் என்பனவாகும்.
இவ்வாறு டொன மூர் குழுவினரின் சிபார்சுகளுக் கமைய அமைக்கப்பட்ட அரசாங்கசபை 1931 இல் கூடியது. அதன் முதலாவது தலைவராக சேர் D. B ஜயதிலக தெரிவு செய்யப்பட்டார்) அரசாங்கசபை மக் களுக்குப் பொறுப்புவாய்ந்ததாயிருந்ததினால் அதற்கு முன்பிருந்த சட்டநிரூபண சபைகளை விடச் சிறந்த முறையில் நாட்டின் நன்மைக்காகக் கடமையாற்றியது, அதேசமயம் இலங்கையர் பொறுப்பாட்சியின் தன்

Page 83
158
தற்காலச் சரித்திரம் மையை உணரவும் அதில் பயிற்சி பெறவும் நிர்வாக விடயங்களில் அனுபவம் பெறவும் அது உதவியது.") ஆயினும் ஆள்பதிக்கும் 3 அரசாங்கச் செயலாளர் களுக்கும் விசேட அதிகாரங்கள் வழங்கப்பட்டதும், (மந்திரி சபையினர் கூட்டுப் பொறுப்பின்றிப் போட்டி யாகக் கடமையாற்றியதும், தனிப்பட்ட அங்கத்தவர் கள் அதிக முக்கியத்துவம் பெற்றதும்) அதன் குறை பாடுகளாயிருந்தன. இதனால் மக்கள் பூரண பொறுப் பாட்சி வேண்டுமென மீண்டும் கோரினர்.
பயிற்சிகள்.
1, பூரண பொறுப்பாட்சியை இலங்கைக்கு வழங்க டொன
மூர்க் குழுவினர் தயங்கியதேன் ? டொன மூர்க் குழுவினர் அரசியற்திட்டம் சம்பந்தமாகத்
தெரிவித்த சிபார்சுகள் எவை ? 3. டொனமூர்க் குழுவினர் சர்வசன வாக்குரிமையை வழங்கிய
தற்குக் காரணங்கள் எவை ? அவர்கள் இன வாரிப் பிரதிநிதுத்துவத்தை வ ழ ங் க எண்ணியதேன் ? டொன மூர்க் குழுவினர் ஆள்பதிக்கு வழங்கிய விசேட அதிகாரங்கள் யாவை ?, டொன மூர்த் திட்டத்திலுள்ள குறைநிறைகளைக் கூறுக.
6.

பாடம் 5. சோல்பரி அரசியற்றிட்டமும் இலங்கையின் சுதந்திரமும்.
டொன மூர் திட்டத்தின்படி நிறுவப்பட்ட முத லாவது அரசாங்கசபையின் ஆட்சி 1935 இல் முடிய இரண்டாவது அரசாங்கசபை 1936 முதல் செயலாற் றியது. இக்காலத்தில் சி ங் க ள த் தலைவர்களும்,
களும்  ேம லு ம் சீர்திருத்தங்களைக் கோரினர். அவ்வேளை தமிழ்த் தலைவர்கள் தமக்கு அதிக பிர திநிதித்துவம் கொடுக்கப்படவேண்டும் என வும் கோரினர். அந்நிலையில் குடியேற்ற ந ா ட் டு ச் செயலாளர் இலங்கையில் நடைமுறையிலிருந்த அரசி யற்றிட்டத்தின் குறைபாடுகளையும் சிறுபான்மையோ ரின் கோரிக்கைகள், ஆ ள் ப தி யி ன் அதிகாரங்கள் முதலியவற்றையும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக் கும்படி அப்போதைய ஆள்பதியாகிய கோல்டிகொற் என்பவரைக் கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க கோல்டிகொற் ஒரு அறிக்கையை அனுப்பினார். அதில் அவர் கபினெற் முறையான ஆட்சியை இலங்கைக்கு வழங்கலாமென்றும் சிறுபான்மையோரின் பிரதிநிதித் துவப் பிரச்சினையைத் தொகுதிகளைப் பொருத்தமா கப் பிரிப்பதன் மூலம் தீர்க்கலாமென்றும், எவ்விதத் திலும் ஆள்பதியின் அதிகாரங்களைக் குறைக்கக் கூடா தெனவும் குறிப்பிட்டிருந்தார்.
இது இவ்வாறாக 1939 இல் இரண்டாம் உலகப் போர் தொடங்கியதனால் அரசாங்கம் இலங்கைவிட
களில் அக்கறை காட்டவில்லை. ஆயினும் போரின் இறுதிக் கட்டத்தில் 1944 இல் சோல்பரிப் பிரபுவின் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவினர் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். சோல்பரி விசாரணைக்குழு வினர் இலங்கைக்கு வந்தபின்னர் பொது மக்களதும்

Page 84
160
தற்காலச் சரித்திரம் தலைவர்களதும் கருத்துக்களை அறிந்தனர்; பல தூதுக் குழுக்களைப் பேட்டி கண்டனர். அவ்வேளை திரு. ஜி. ஜி. பொன்னம்பலம் சிறுபான்மையோரின் குறைபாடுகளை எடுத்துக் கூறிப் புதிய திட்டத்தில் அதற்குப் பரிகாரம் காணுமாறு கேட்டார். சோல்பரிக் குழுவினர் தாம் கண்டு கேட்டு அறிந்தவற்றை நன்கு ஆ ர ா ய் ந் த பின்னர் பின்வரும் சிபார்சுகளைச் செய்தனர்.
அரசியற் திட்டம்:- அரசாங்க சபைக்குப் பதிலாகப் பாராளுமன்றம் என்னும் மன்று நிறுவப்படும். அது அர சன் (முடி), பிரதிநிதிகள் சபை, செனற் சபை என் > னும் மூன்று உறுப்புக்களை யுடையதாயிருக்கும். அவற் றில் பிரதிநிதிகள் சபை 101 அங்கத்தவர்களைக்கொண் டிருக்கும். அவர்களில் 95 பேர் பொதுத் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களாகவும் மிகுதி 6 பேரும் பிரதிநிதித்துவம் பெறாதோரின் நலன் களைப் பேணுவ தற்காக ஆள்பதியால் நியமனம் செய்யப்பட்ட
வர்களாகவு மிருப்பர்.)
செனற்சபை என்னும் மேல் சபையில் 30 அங்கத் தினர் இருப்பர். அவர்களில் 15 பேர் பிரதிநிதிகள் சபை அங்கத்தவர்களால் தெரி வு செய்யப்படுவர், ஏனைய 15 பேரும் ஆள்பதியால் நியமிக்கப்படுவர்.
பிரதிநிதிகள் தொகுதிவாரியாகத் தெரிவு செய் யப்படுவர். ஒவ்வொரு தொகுதியும் 75000 மக்கள் அல்லது 1000 சதுர மைல் பரப்பைக் கொண்டதாயி ருக்கும். அதே சமயம் பொருத்தமான இடங்களில் பல அங்கத்தவர் தொ குதிசளும் அமைக்கப்படும். இவ்வாறு தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் சாதார ணமாக 5 ஆண்டுகள் பதவியிலிருப்பர்.  ேம லு ம் தேர்தல் முடிவில் அதிக தொகுதிகளைப் பெற்றகட்சி யின் தலைவர் அரசாங்கத்தை ஏற்பார்: அவர் பிரதம மந்திரி எனப்படுவார். அ வ ரி ன் சிபார்சின்பேரில் ஏனைய மந்திரிகளை ஆள்பதி நியமிப்பார். இவ்வாறு

எட்டாந்தரம்
167
நியமனம் பெறும் மந்திரிகளும், பிரதம மந்திரியும்
• சேர்ந்து ''கபினெற்”' எ ன் னு ம் மந்திரிசபையாக இயங்குவர். அது கூட்டுப்பொறுப்புள்ள தாயிருக்கும். அதில் உள்ள வர்களில் இருவர் செனற் சபையிலும் அங்கத்தி னராயிருப்பர்.
மேற்குறிப்பிட்டவற்றைத் தவிரச் சோ ல் பரிக் குழுவினர் ஆள்பதிக்கும் சில விசேட அதிகாரங்களை வழங்கினர். அதன்படி நாட்டின் பாதுகாப்பு, நாண யம், வாக்குரிமை முதலியன பற்றிய மசோதாக்களை மன்னரின் அங்கீகாரத்துக்கென அவர் ஒதுக்கிவைக்க லாம். அன்றியும் பாராளுமன்றத்தைக் கூட்டுதல், கலைத்தல் முதலிய சம்பிரதாயமான கடமைகளையும் அவர் செய்வார்.)
இவ்வாறு சோல்பரிக் குழுவினரால் சிபார்சு செய் யப்பட்ட புதிய அரசியற் திட்டத்தை D. S. சேன நா யக்கா முதலிய பல தலைவர்கள் எதிர்த்தனர். அவர் கள் அரசனுக்கும் ஆள்பதிக்கும் கட்டுப்படாத பூரண சுயாட்சியை வழங்குமாறு கோரிக்கைகள் விடுத்தனர். அந்நிலையில் 1945 இல் பிரித்தானிய அர சாங் க ம் தனது நோக்கங்களை வெளிப்படுத்தும் ஒரு வெள்ளையறிக் கையை வெளியிட்டு இலங்கை டொமினியன் அந்தஸ்தை அடையத் தான் ஆதரவு கொடுப்பதாகத் தெரிவித் தது. பின்னர் 15-5-46 முதல் ஒரு இடைக்கால அரசியல் திட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. பின்னர் 18-6-1947 இல் அரசாங்கசபை கூடியபோது பிரித்தானியா இலங்கைக்குப் பூரண சுயாட்சி (டொமி னியன் அந்தஸ்து) வழங்கும் தனது திட்டத்தைத் தெரி வித்தது. அதற்கிணங்க அவ்வாண்டு ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 20 வரை தேர்தல்கள் நடைபெற்று 1947 அக்டோபரில் முதலா வது சுதந்திரப் பாராளு. மன்றம் கூடியது. அவ் வே ளை U. N. P. கட்சி
21

Page 85
162
தற்காலச் சரித்திரம்
சுயேச்சைப் பிரதிநிதிகள் சிலரின் உதவியுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. அதன் த லை வ ர ா ன 1. S. சேனநாயக்கா இலங்கையின் முதலாவது பிரதமராகப் பதவியேற்றார்.
இவ்வாறு புதிய பாராளுமன்றம் இயங்கிக்கொண் டிருந்த காலத்தில் இங்கிலாந்துப் பாராளுமன்றம் இலங்கைச் சுதந்திரச் சட்டத்தை நிறைவேற்றி மன் னரின் அங்கீகாரத்தையும் பெற்றது. இ த ன் மேல் இலங்கைப் பாராளுமன்றமும் ஒரு சுதந்திரப் பிரேர ணையை நிறைவேற்றியதன் பின்னர் 10-3-1948 முதல் இலங்கைக்கு 'டொமினியன்' அந்தஸ்து எனப் படும் ஆணிலப்பத அந்தஸ்து வ ழ ங் க ப் பட்ட து. இதன் விளைவாக இலங்கை தனது உள்நாட்டு, வெளி நாட்டு விடயங்களில் யாருக்கும் கட்டுப்படாத பூரண பொறுப்பாட்சியைப் பெற்றுள்ளது. அது இன் று ம் பிரித்தானிய பொது நலவாயத்தில் ஒரு அங்கத்தின ராயுள்ளது. இவ்வாறு சுதந்திரமடைந்த பின்னர் இலங்கை பல துறைகளிலும் வியத்தகு முன்னேற்ற மடைந்துள்ள து.
பயிற்சிகள். 1. "கோல்டிகொற்' தமது அறிக்கையில் தெரிவித்த கருத்துக்
கள் யாவை ? அரசியற்றிட்டம் சம்பந்தமாகச் சோல்பரிக் குழுவினர் தெரிவித்த கருத்துக்கள் யாவை ? சோல்பரித் திட்டத்துக்கும் டொனமூர்த் திட்டத்துக்கு
மிடையிலுள்ள வேறுபாடுகளைச் சுருக்கிக் கூறுக; 4: இலங்கை சுதந்திரமடைந்த வரலாற்றைச் சுருக்கிக் கூறுக;

அலகு 14.
இலங்கையும் உலகமும்.
பாடம் 6.
முதலாம் உலகப்போரின் காரணங்கள்.
உலக சரித்திரத்தில் முதலாவது சர்வதேசப்போர் 1914 இல் தொடங்கியது. அப்போர் நீண்டகாலம் பெரியளவில் நடந்ததனால் பேரழிவை உண்டுபண்ணி யது. அன்றியும் அப்போரில்தான் முதன் முதலாக நீர்மூழ்கிகள், போர் விமானங்கள், தாங்கிகள் முதலி யன பயன்படுத்தப்பட்டன .
முதலாம் உலகப் போருக்கான காரணங்களை அறிவதற்கு அதற்கு முன்னுள்ள 50 ஆண்டு கால ஐரோப்பிய வரலாற்றைத் தெரிந்து கொள்ளுதல் பயனுடையது. அவ்வரலாற்றைக் கற்குமொருவர் உலகப் போருக்கான வி த் து க் க ள் 19 ஆம் நூற் றாண்டின் பிற்பகுதியிலேயே தூவப்பட்டிருந்ததை அறி வார். ஆயின் எளிமைக்காக நாம் உலகப்போரின் காரணங்களைப் பின் வருமாறு பகுத்து ஆராயலாம்.
உலகப்போரின் காரணங்கள்:- முதலாம் உலகப்போரின், அடிப்படைக் காரணங்களில் முக்கியமானது ஐரோப் பாவில் ஏற்பட்ட அடக்கமுடியாத தேசீய உணர்ச்சி ! யாகும்.) பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி யில் - ஜேர்மனி, இத்தாலி முதலிய நாடுகள் ஒன்று பட்டமையினால் அந்நாடுகளில் வாழ்ந்த மக்களிடையே தேசீய உணர்ச்சி விஞ்சியது. அது அளவுக்கு மிஞ்சிய போது அயல் நாடுகளை ஆக்கிரமிக்கும் மனப்பான் மையை உண்டுபண்ணியது. பிஸ்மாக்கிற்குப் பின்னர் ஜேர்மனியிடம் அம்மனப்பான்மை காணப்பட்டது.

Page 86
164
தற்காலச் சரித்திரம் 1888 இல் ப த விக் கு வந்த கெய்சர் வில்லியம் ஜேர் மனியின் படைகளைப் பலப்படுத்தி மக்களிடத்தில் போர் வெறியைத் தூண்டினான். அத்துடன் ஜேர் மானியர் உலகை ஆளப்பிறந்த வர்கள் என்றும் அவர் கள்' ஐரோப்பாவில் தலைமை வகிக்கவேண்டுமெனவும் போதிக்கப்பட்டது. இவற்றின் விளைவாக மக்களிட 4
மும் ஆக்கிரமிப்பு மனப்பான்மை ஏற்பட்டிருந்தது. இத்தகைய தேசீய உணர்ச்சி பிரான் ஸ் , சேர்பியா ஆகிய நாடுகளிலும் மிகுந்திருந்தது, இரண்டாவ தாக, ஐரோப்பிய நாடுகள் பத்தொன்பதாம் நூற். றாண்டில் குடியேற்ற நாடுகளைப் பிடிப்பதில் போட்டி "யிட்டுக் கொண்டன.) அவ்வேளை '' நான் முந்தி நீ முந்தி என'' விழுந்தடித்துச் சென்று அவை வெளி நாடுகளைக் கைப்பற்றின . இவ்வித மான போட்டி யினால் ஐரோப்பிய நாடுகளிடையே பொறாமையும், ஏமாற்றமும் மனக்கசப்பும் ஏற்பட்டன. குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ் ஆகியன அதிக குடியேற்ற நாடுகளைப் பிடித்திருந்ததையிட்டு ஜேர்மனி, இத்தாலி முதலிய நாடுகள் மனம் புழுங்கின. , அ ன் றி யு ம் ஜேர்மனி, பேர்ளின் நகரிலிருந்து பக்தாத்வரை ஒரு புகையிரத வீதியை அமைப்பதற்குத் திட்டமிட்ட போது அது இந்தியாவைத் தாக்குவதற்கான திட்டம் எனப் பிரித்தானியா சந்தேகித்தது.
மூன்றாவதாக, 1871 ஆம் ஆண்டு பிறசிய பிரான் சியப்போரில் பெறுமதி வாய்ந்த அல்சேஸ்-லொறேன் பிரதேசம் பிரான்சிடமிருந்து பிடுங்கி எடுக்கப்பட்டது. அச்செயல் பிரான்சியரிடம் பழிக்குப்பழி வாங்கும் மனப்பான்மையை ஏற்படுத்தியது. எனவே அல்சேஸ் லொறேன் மாகாணங்களை எப்போது மீட்கலாம், எப்போது ஜேர்மனியைப் பழிவாங்கலாம் எனப் பிரான்சியர் துடியாய்த் துடித்துக்கொண்டிருந்தனர்.)

எட்டாந்தரம்
165
நான்காவதாக, ஐரோப்பிய நா டு க ளி டையே ஏற்பட்ட உறவுகளும் உடன்படிக்கைகளும் அவற்றை ஒன்றுக்கொன்று எதிரான இரு அணிகளாக்கி விட் டன. இவ்வாறு ஜேர்மனி, ஆஸ்திரியா, கங்கேரி, இத்தாலி என்பவற்றுட ன் செய்துகொண்ட"மூ வ ர் 'உடன்படிக்கை' பிரான்சுக்கும் இரசியாவுக்கும்பீதியை உண்டாக்கின. இதனால் அவை இரண்டும் இருவர் நட்புறவு' என்னும் இணக்கத்தை ஏற்படுத்திக்கொண் - ன. அதே ச ம ய ம் ஜேர்மனியின் வெளிநாட்டுக் கொள்கையினால் பீ தி யு ற் ற பிரித்தானியா தனது பழைய எதிரியாகிய பிரான்சுட ன் ம ன மு வ ந் த நட்பை' ஏற்படுத்திக்கொண்டது. இதற்குப் பின்னர்
இரசியா, பிரான்ஸ், பிரித்தானியா என்னும் மூன்றும் . சேர்ந்து மூவர் நட்புறவு என்னும் இணக்கத்தை ஏற்படுத் திக்கொண்டன. இவ்வாறு ஐரோப்பா இர ண் டு எதிர்ப்பு அணிகளாகப் பிளவுபட்டமை போருக்கு அடி கோலியது.
ஐந்தாவதாக, (பால்கன் பிரதேசத்தில் காணப் பட்ட சிக்கலான அரசியல் நிலை அமைதியைக் குலைத்து நாடுகளிடையே நெருக்கடியை ஏற்படுத்தியது.) பால்க் கன் பிரதேசத்தில் துருக்கியின் கீழிருந்த சிலாவியரின் பிரதேசங்சுளை ஆஸ்திரியா 1908 இல் கைப்பற்றியத னால் சிலாவிய நாடான சேர்பியா ஆஸ்திரியாமீது அழுக்காறு கொண்டிருந்தது. அதன் பின்னர் 1912 இல் சேர்பியா, கிரீஸ், பல்கேரியா முதலியன முதலாம் பால்க்கன் போரில் துருக்கியைத் தோற்கடித்த பின்னர் தாம் புதிதாகக் கைப்பற்றிய பிரதேசங்களைப் பங்கிடு வதில் சச்சரவிட்டுக் கொண்டன. இதன் விளைவாகப் பல்கேரியா வுக்கெதிராகச் சேர்பியா, கிரீஸ், ரூமேனியா ஆகியன போரிட்டன. அது இரண்டாம் பால்க்கன் போராகும். அப்போரில் சேர்பியா வெற்றி பெற்ற தனால் ஆஸ்திரியா அச்சம் கொண்டது. இவ் வி த மாகச் சேர்பியாவுக்கும் ஆஸ்திரியாவுக்குமிடையில்

Page 87
166
தற்காலச் சரித்திரம் ஏற்பட்ட நெருக்கடி அவற்றைப் போர்ப்பாதையில் இட்டுச் சென்றன. )
போரின் உடன் காரணங்கள்:- மேற் குறிப்பிட்டவாறு பால்க்கன் பிரதேசத்தில் நெருக்கடி நிலவியவேளை 1914 யூன் மாதம் 28 ஆம் திகதி ஆஸ் திரிய அரசின்
வாரிசாகிய ஆச்டியூக் பிரான்சிஸ் பேடினந்து என்பவன், பொஸ்னியாவில் சுற்றுப்பிரயாணம் செய் தத் போ து சராஜிவோ என்னுமிடத்தில் ஒரு கேர்பியனால் சுட்டுக் கொல்லப்பட்டான். இதையறிந்த ஆஸ்திரியா அக் கொலைக்குச் சேர்பியாவும் உடந்தை எனக் கூறி அதனிடம் சில கோரிக்கைகளை விடுத்து அவற்றுக்கு 48 மணித்தியாலங்களுக்குள் பதில் - தருமாறு கோரி யது . அதற்கிணங்கச் சேர்பியா பதிலளித்தபோதும் அது திருப்தியில்லை எனக் கூறிய ஆஸ்திரியா சேர்பியா மீது போர் தொடுத்தது. உடன் சேர்பியா இரசியா வின் உதவியைக் கோர அது தனது ப  ைட க ளை த் திரட்டியது. அதைக் கண்ட ஜேர்மனி படைகளைத் திரட்டவேண்டாமென இரசியாவுக்குக் கூறியபோதும் அது கேட்காமையினால் ஜேர்மனி இரசியாமீது போர் தொடுத்தது. இதன்பின் இரசியாவின் நட்புநாடா கிய பிரான்சும் ஜேர்மனிக்கு எதிராகப் போர்ப்பிர கடனம் செய்தபோது ஜேர்மனி நடுவு நிலை நாடாகிய பெல்சியத்துக்கூடாகப் படைகளைக் கொண்டு சென்று பிரான்சைத் தாக்கியது. உடன் பிரித்தானியாவும் ஜேர்மனிக்கு எதிராகப் போரில் குதித்தது. இவ்வாறு தொடங்கிய முதலாம் உலகப்போரின்போது இடம் பெற்றவற்றை அடுத்த பாடத்தில் படிப்போம்..
பயிற்சிகள்.
18 முதலாம் உலகப்போரின் அடிப்படைக் காரணங்கள்
யாவை ? 2: முதலாம் உலகப்போரின் உடன் காரணம் யாது ?
பால்க்கன் போர்கள் ஏன் ஏற்பட்டன ? 4, சிறு குறிப்பெழுதுக, சேர் பியா, பிரான்சிஸ் பேடினந்து,
அல்சேஸ் - லொறேன், கெய்சர் வில்லியம்,

பாடம் 7. முதலாம் உலகப் போர். 1 t\'... \\\8
1914 இல் ஆஸ்திரியாவுக்கும் சேர்பியாவுக்கு மிடை யில் தொடங்கிய போரில் வேறு பல நாடுகளும் பங்கு பற்றியதிலிருந்து, அது உலகப் போராக மாறியது. அப்போரின் தொடக்கத்தில் ஜேர்மனி, 2 ஆஸ்திரியா பக்கம் சேர்ந்தபோது இரசியா, பிரித்தானியா ஆகியன சேர்பியாவின் பக்கமாகப் ', போரிட்டன, பின்னர் துருக்கி, பல்கேரியா ஆ கி ய ன வும் ஜேர்மனியுடன் இணைந்து ஆஸ்திரியாவுக்குச் சார்பாகப் போரிட்டன. அதேசமயம் இத்தாலி, யப்பான், சீனா, அமெரிக் ஐக்கிய நாடு, பிரான்ஸ் ஆகியன பிரித்தானியருடன் இணைந்து சேர்பியாவுக்குச் சார்பாகப் போரிட்டன. இவ்வாறு உலகிலுள்ள பல நாடுகள் பங்குபற்றிய. இப்போர் தரையிலும் கடலிலும் வானிலும் நடை பெற்றது.
1914-இல் உலகப்போர் தொடங்கியவுடன் முத லில் மேற்கு முனையிலேயே தாக்குதல்கள் இடம் பெற்றன. அங்கு பிரான்சைக் கைப்பற்றுவதற்குத் திட்டமிட்ட ஜேர்மனி பெல்சியத்துக்கூடாகத் தனது படைகளைக் கொண்டு சென்றது. ஆயினும் மாண், ஈப்பர், என்னுமிடங்களில் பிரித்தானியபடைகளும் அ த ன் நேச நாட்டுப் படைகளும் ஜேர்மனியர் முன்னேறாத படி தடுத்தன. இதன்மேல் இருதரப்பினரும் பெல் சியக் கரையிலிருந்து சுவிற்சர்லாந்தின் அல்ப்ஸ்மலை வரை நீண்ட அகழிகளில் நிலை கெ ா ண் டி ரு ந் து ஒருவரையொருவர் தாக்கினர். இவ்விதமாக 1916 வரை நடைபெற்ற அகழிப்போரில் பல்லாயிரக்கணக் கான படைவீரர் மாண்டனர்.
மேற்கு முனையின் நிலைமை இவ்வாறிருக்கும்போது கிழக்கு முனையில் ஜேர்மனி ரனன்பேர்க் என்னுமிடத் தில் இரசியாவைத் தோற்கடித்தது, பின்னர் ஜேர்மனி

Page 88
168
தற்காலச் சரித்திரம் போலந்தையும் கலீசியாவையும் கைப்பற்றியது.) இவ் வர்று இரசியப்படைகள் கிழக்குமுனைப் போ ரி ல் தோல்வி பெற்று வரும்போது 191.7.. இல் இரசியா வில் ஒரு புரட்சி ஏற்பட்டது. அதன் பின்னர் அது போரிலிருந்து விலகிக்கொண்டது .
1மான
1917 முதல் கடற்போர் தீவிரமாக நடைபெற் றது. அவ்வேளை நேச நாடுகளுக்குச் செல்லும் நடுநிலை நாடுகளின் கப்பல்களும் தாக்கப்படுமென ஜேர்மனி எச்சரிக்கைவிட்டதோடு பல நடுநிலை நாட்டு உணவுக் கப்பல்களைத் தன து நீர் மூழ்கிகளின் மூலம் கடலுள் : ஆழ்த்தியது. இச்செயல் ஐக்கிய அமெரிக்காவுக்கு ஒரு சவால்போல அமைந்தது. எனவே அது அவ்வாண்டு நேச நாடுகள் சார்பில் போரில் குதித்தது. அதன் விளைவாக நேச நாடுகளின் படைப்பலம் அதிகரித்தது. ஆயினும் அவை அவ்வாண்டு குறிப்பிடத்தக்க வெற்றி யெதையும் பெறவில்லை எனினும் 19 ! 8-இல் மேற்கு முனையில் நடந்த உக்கிரமான தரைப்போரின்போது நேசநாடுகளின் படைகள் மார்சல் “பொச்' (Foch) என்னும் பிரெஞ்சுப் படைத்தளபதியின் தலைமையில் ஜேர்மானியருடன் போரிட்டு அவர்களைத் தோற் கடித்தனர். இதன் விளைவாக 1918 கோடை கால முதல் ஜேர்மானியப்படைகள் பின்வாங்கத் தொடங் கின. அதேவேளை ஜேர்மனியின் கூட்டாளிகளான துருக்கி, பல்கேரியா, ஆஸ்திரியா ஆகியனவும் அவ் வாண்டு செப்ரெம்பர் - நவம்பர் காலத்தில் நேச நாட்டுப் படைகளினால் தோற்கடிக்கப்பட்டிருந்தன. அந்நிலையில் ஜேர்மனியில் ஒரு உள் நாட்டுக் கிளர்ச்சி ஏற்பட்டபோது கெயிசர் வில்லியம் ஒல்லாந்துக்குத் தப்பியோடினான். அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் 1918 நவம்பர் 11 ஆம் திகதி இரவு 11 மணிக்குப் போரை நிறுத்தி நேச நாடுகளுடன் சமா தானம் செய்து கொண்டது.

எட்டாந்தரம்
163
இவ்வாறு 1914 இல் தொடங்கி நான்கு ஆண்டு கள் நீடித்த உலகப்போர் முடிவுற்றபின்னர் நேச நாடு களின் தலைவர்களான வூட்றோ வில்சன் (அமெரிக்கா), இள மன்சோ (பிரான்ஸ்), லொயிட் ஜோர்ஜ் (இங்கிலாந்து) ஒர்லாண்டோ (இத்தாலி) ஆகியோர் ஒன்றுகூடிச் சமா தான உடன்படிக்கைபற்றி விவாதித்தனர். பின்னர் வில்சனின் 14 அம்சத் திட்டத்தின் அடிப்படையில் தோல் வியுற்ற நாடுகளுடன் உடன்படிக்கை செய்வதென முடிவு செய்யப்பட்டது. வில்சனின் 14 அம்சங்களும் 'பின்வருமாறு:- (1) நாடுகளுக்கிடையில் இரகசிய மான திட்டங்கள் இருக்கக் கூடாது. (2) எல்லா நாடு களுக்கும் கடலில் சுதந்திர மிருக்க வேண்டும்: (3) நாடு களுக்கிடையிலுள்ள பொருளாதாரத் தடைகள் நீக்கப் படவேண்டும். (4) படைகள் குறைக்கப்படவேண்டும் (5) குடியேற்ற நாடுகளின் கோரிக்கைகள் நியாய மான முறையில் தீர்க்கப்படவேண்டும், (6) இரசியா விலிருந்து அந்நிய படைகள் அகற்றப்படவேண்டும் (7) பெல்சியத்தின் நடுவுநிலை பேணப்பட வேண் டும், (8) அல்சேஸ்-லொறேன் மாகாணங்கள் பிரான் சுக்குக் கொடுபட வேண்டும் , (9) இ த் த ா லி யி ன் ஐக்கியம் பூர்த்தி செய்யப்படவேண்டும். (10, 11, 12) ஆஸ்திரிய கங்கேரி, பால்க்கன் பிரதேசம் ஆகியவற் றில் உள்ள மக்களுக்குச் சுயநிர்ணய உரிமை வழங்கப் படவேண்டும். (13) போலந்தின் சுதந்திரம் பேணப் படவேண்டும்.(14) சர்வதேசசங்கம் ஒன்று தாபிக் கப்படவேண்டும். வில்சனின் 14 அம்சத்திட்டத்தின் அடிப்படையில் ஜேர்மனியுடன் வேர் சொபில் உடன் படிக்கை செய்யப்பட்டது.
வேர்செயில் உடன்படிக்கையின்படி அல்சேஸ் - லொறேன் பிரதேசம் பிரான்சுக்குக் கொடுக்கப்பட் டது ; சார்கரிவயலின் ஆட்சியுரிமை 15 ஆண்டுகளுக் குச் சர்வதேச சங்கத்திடம் விடப்பட்டது; சைலீசி யாவின் ஒரு பகுதி போலந்துடன் சேர்க்கப்பட்டது."
22

Page 89
170
தற்காலச் சரித்திரம்
*"டான்சீக் துறைமுகம் சர்வதேசத் துறைமுகமாக்கப் "பட்ட து. [மேலும் ஜேர்மனியின் பழைய குடியேற்ற நாடுகள் எல்லாம் அதனிடமிருந்து பறிக்கப்பட்டு
TKiWATrtistகிட்5ே0, 1)
வெப்பம் பாகம்
ன்ச் -அரசியல்
"கருங் கடல்
உப்போமே
Y& 2.y' எ»
+ பா 89ா) • • 0
* * * * * *
A. A கோ..!
(37"
2013-1';
(பின் ல
சுவீடன்
படம், கன்மம்மா 2'
1920 இல் ஐரோப்பா
இதில் 114
உகா..
-கலப்டி)
பி.
டிம்
பரிதும்;
ய?
RENயு
- -"!
கோட்டே மேலே
அக்கா
உணரப்ப:-சா: 2*அ*தப்3கே38 கிர்ல்
காம்
நேசநாடுகளின் கீழ் பொறுப்பாட்சிப் பிரதேசங்களாக் கப்பட்டன (Mandated territories). இவ்வாறு ஜேர் மனியுடன் வேர்செயில் உடன்படிக்கை செய்யப்பட் டதுபோல ஆஸ் திரியாவுடனும் அதன் சார்பு நாடுக

எட்டாந்தரம்
171
ளுடனும் வெவ்வேறு உடன்படிக்கைகள் செய்யப் பட்டன.
மேற் குறிப்பிட்டவாறு உடன்படிக்கைகள் செய் யப்பட்டதன் மேல் உலக்சமா தானத்தைக் காப்பதற் கும், நாடுகளிடையே எழும் பிணக்குகளைத் தீர்ப்ப தற்குமாகச் சர்வதேச சங்கம் என ஒரு நி று வ ன ம்
அமைக்கப்பட்டது, அது ஒரு பொதுச் சபையையும் ஒரு கழகத்தையும் உறுப்புக்களாகக் கொண்டிருந்தது. அதில் பிரித்தானியா, பிரான்சு, இத்தாலி, யப்பான் என்னும் நான்கு நாடுகளும் நிரந்தர உறுப்பினராக இருந்தன, அதேசமயம் சர்வதேச ச ங் க த் து ட ன் இணைந்ததாக ஒல்லாந்திலுள்ள ஹேக் நகரில் ஒரு சர்வதேச நீதிமன்றமும் நிறுவப்பெற்றது. அத்துடன் சர்வதேச தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப் பதற்காக ஒரு தொழிலாளர் சங்கமும் (I. L. 0.) அமைக்கப்பட்டது. ஆயினும் பிற்காலச் சம்பவங்கள் சர்வதேச சங்கத்தைப் பயனற்றதாக்கிவிட்டன. அதன் வி ளை வா க ச் சர்வதேச சங்கம் தோல்வியடைதல் தவிர்க்கமுடியாததாயிற்று.
பயிற்சிகள்.
முதலாம் உலகப்போரில் ஜேர்மனியின் பக்கம் நின்ற அரசு
கள் எவை ? 2. ரனன்பேர்க் போரில் எது வென்றது ? 3. ஐக்கிய அமெரிக்கா உலகப்போரில் குதித்ததேன் ? 4. ஜேர்மனி போரை நிறுத்த எண்ணியதேன் ? 5. வில்சன் யார் ? அவரது 14 அம்சங்களும் யாவை ? 6. வேர்செயில் உடன்படிக்கையின் அம்சங்கள் யாவை ? 7. சர்வதேச சங்கத்தின் அமைப்பை விபரி

Page 90
அலகு 15.
முதலாம் உலகப்போரின் பின்னர்
ஐரோப்பா.
பாடம் 8.
ஜேர்மனியிலும் இத்தாலியிலும் சர்வாதிகார
ஆட்சியின் எழுச்சி.
முதலாம் உலகப்போரின் பின்னர் ஐரோப்பிய நாடுகளில் அமைதியின்மை நிலவியது, அதே சமயம். பல நாடுகள் பொருளாதாரத் துறையில் பலவீன மடைந்து காணப்பட்டன. குறிப்பாக இத்தாலி, ஜேர்மனி ஆகியவற்றில் உலகப் போரின் பின்னர் நிலவிய சமூக அமைதியின்மையும் பொருளாதாரச் சீர்குலைவும் அங்கு சர்வாதிகார ஆட்சி தலை தூக்க வழி வகுத்தன.
இத்தாலி உலகப்போரினால் கடுமையாகப் பாதிக்கப் பட்டது. அக்காலத்தில் அபரிமிதமான பொருட்செலவு ஏற்பட்டதோடு பயிர்ச் செய்கையும் பாதிக்கப்பட்டது. இதனால் போருக்குப் பின்னுள்ள காலத் தில் மக்கள் போதிய உணவைப்பெறுவது கடின மாயிருந்தது. அந் நிலையில் சில குடியானவர்கள் பெருந்தோட்டங்களைக் கைப்பற்றிக்கொண்டனர்; தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டனர்; அதே சமயம் வேலையற் றவர்கள் குழப்பங்களை விளைவித்தனர். இவ்வாறு நாட் டில் அமைதி குலைந்த போதிலும் அரசன் அந்நிலை மையை மாற்றுவதற்கு எதுவும் செய்யவில்லை. எனவே அத்தகைய நிலைமையைச் சாதகமாகக் கெ ா ண்ட சமூக உடைமைவாதியினர் (Socialists) கைத்தொழில் ஆலைகளைக் கைப்பற்றி ஒரு புரட்சி செய்தனர், ஆயி னும் அத்தொழிற்சாலைகளை நிர்வகிக்க முடியாமை யால் அவர்களது புரட்சி பிசுபிசுத்துவிட்டது.

எட்டாந்தரம்
இe, 113
வ தாகுரு!-டிெவு
இவ்வாறு இத்தாலியில் பொரு ளாதார முடையும் உண வுப் பஞ்சமும் அரசியல் நெருக்கடியும் ஏற்பட்ட காலத்தில் தான் முசோலினி என்பவன் எழுச்சி பெற் றான்.) "முசோலினி ஒரு கொல்லனின் மகனாவான். அவன் தனது இளமைக்காலத் தில் சிலகாலம் ஆசிரிய ராகத் தொழில் செய்த பின்னர் அதைக் கைவிட்டு நாட்டிலிருந்து வெளியேறிச் சுவிற்சர்லாந்துக்குச் சென் றான். அங்கு அவன் இரசிய புரட்சி வ ா தி யா கி ய லெனினைச் சந்தித்தான். அதன் விளை வாக முசோ லினியின் மனதிலும் புரட்சிக் கருத்துக்கள் முளைவிட் டன. எனவே இத்தாலிக்குத் திரும்பிய பின்னர் முசோலினி தேசீயம், பேரரசுவாதம், எதேச்சாதி காரம் முதலியவற்றைக் கண்டித்துப் பேசியும் எழுதி யும் வந்தான். பின் உலகப் போர்க்காலத்தில் அவன் ஒரு போர்வீரனாகப் பணி பு ரிந் து விட்டுப் போர் முடிந்த பின்னர் 1919 இல் பாசிஸ்ப் (Fascist) என்னும் கட்சியை நிறுவிப் பொது உடைமைவாதிகளுக்கும் சமூக உடைமைவாதிகளுக்கும் எதிராகப் பிரசாரம் செய் தான், முசோலினியின் கவர்ச்சிமிக்க பிரசாரத் தினால் ஏராளமானோர் கவரப்பட்டனர். இவ்வாறு 1922 அளவில் 3,00,000 பேர் அவனது கட்சியில் அங்கத்தவர்களாகியிருந்தனர். அவர்கள் எல்லோரும் கறுப்புச்சட்டைகளை அணி ந் த ப டி ய ா ல் - ' கருஞ் சட்டைக்காரர்”' என அழைக்கப்பட்டனர். இவ்வித மாகத் தனது பாசிஸ்ட் கட்சியைப் பலப்படுத்திய பின்னர் முசோலினி ஆட்சியைக் கைப்பற்ற எண்ணி 119 22 ஒக்ரோபரில் தனது கருஞ்சட்டையினருடன் றோமாபுரி நோக்கி அணிவகுத்துச் சென்றபோது பீதி யுற்ற அரசன் முசோலினியைப் பிர தமமந்திரி யாக் கினான்.
முசோலினி பிரதம மந்திரியாகிய பின்னர் அர சாங்கத்தில் தனது விரோதிகளை ஒழித்துக் கட்டுவ திலும் தனது கட்சியின் ஆதரவாளர்களைப் பதவியில்

Page 91
174
தற்காலச் சரித்திரம்
இருத்துவதிலும் பல வழிகளில் ஈடுபட்டான். பின்னர் 1928 இல் நடந்த தேர்தலில் அவனது கட்சிக்காரர் களே பெரும்பான்மையினராக வந்ததினால் முசோலினி யின் அதிகாரமும் செல்வாக்கும் அதிகரித்தன. இதன் மேல் அவன் ஒரு சர்வாதிகாரிபோல ந ட க் க த் தொடங்கினான். அவன் மக்களின் சுதந்திரங்களை ஒழித்தான்,) பாசிஸ்டம், கட்சியைத் தவிர ஏனையகட்சி களுக்குத் தடைவிதித்தான் அக்கட்சியின் செல், வாக்கை வளர்ப்பதில் தீ வி ர ம ா க ஈடுபட்டான், ''நம்பு, கீழ்ப்படி, போர்புரி'' என்பன பாசிஸ்ட் கட்சி யின் மூலாதாரக் கொள்கையாகும், அக்கட்சியில் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கென 'பலிலா' என் னும் கிளை ஒன்று இயங்கியது . அதே சமயம் ''அவங் காடியர்" என்னும் கிளையில் 14 முதல் 18 வயதுக்கு உட்பட்டோர் அங்கத்தவர்களாயினர். இவற்றைத் தவிர பெண்களுக்கெனவும் புறம்பான இயக்கம் ஒன்று காணப்பட்டது.
சம்
மேற்கூறப்பட்டவாறு இத்தாலியின் ஆட்சியைக் கைப்பற்றிச் சர்வாதிகாரியாகிய முசோலினி (நாட்\ டைப் பலப்படுத்துவதிலும் கைத்தொழில், பயிர்ச் செய்கை, போக்குவரத்து ஆகியவற்றை விருத்தி செய்வதிலும் க வ ன ம் செலுத்தினான், அத்துடன் .அவன் பாப்பரசருடன் சமாதானம் செய்துகொண்டு றோமன் கத்தோலிக்க சமயத்தை இத்தாலியின் சமய மாக்கினான்) இவ்வாறு உள் நாட்டு நிலைமைகளைச் சீர்ப்படுத்துவதில் முசோலினி ஓரளவு வெற்றி பெற்ற போதிலும் அவனது வெளிநாட்டுக் கொள்கை உலக அமைதிக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியதாயிருந்தது. அவன் இத்தாலியின் பண்டைக்காலப் பெருமையை மீண்டும் நிலை நாட்ட விரும்பி வெளிநாடுகளை அடி மைப்படுத்தத் திட்டமிட்டான். இவ்வாறு முசோலினி மேற்கொண்ட ஆக்கிரமிப்புக் கொள்கை அடுத்த உலகப் போருக்கு அடிகோலியது.

எட்டாந்தரம்
175
ஜேர்மனி: முதலாம் உலகப்போரின் பின்னர் செய் > 4பப்பட்ட வேர்செயில் உடன்படிக்கை ஜேர்மனியின் குடியேற்ற நாடுகளைப் பறித்ததோடு அது நேச நாடு களுக்குப் பெருந்தொகை நட்ட ஈட்டைக் கொடுக் கும்படியும் விதித்தது. எனவே (போரில் தோல்வி யடைந்தமையினாலும் குடியேற்ற நாடுகளை இழந்த மையினாலும், பெருந்தொகையான நட்ட ஈட்டைச் செலுத்தவேண்டியிருந்ததினாலும் ஜேர்மனியின் புகழ் நிதி, வலிமை ஆகியன குன்றின.
> 19 19 இல் வேர்செயில் உடன்படிக்கையின் பின் னர் ஜேர்மனியில் 'எபேட்' என்பவர் தலைமையில் குடி யரசு ஆட்சிமுறை நிறுவப்பட்டது. அது வேமார்! குடியரசு எனப்படும். வேமார் குடியரசின் காலத்தில் 1921 இல் ஜேர்மனி தான் நேச நாடுகளுக்குக் கொடுக்க - வேண்டிய போர் நட்ட ஈட்டைக் கொடுக்காது நிறுத் தியபோது பிரான்ஸ் தனது படைகளை அனுப்பி ரூர் கைத்தொழிற் பிரதேசத்தைக் கைப்பற்றியது. உடன் அங்கு ஜேர்மானியர் வேலை நிறுத்தம் செய்தபோது நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஆயினும் கஸ்ராவ் ஸ்றெஸ்மான் என்னும் மண்டல நாய கரின் முயற்சியினால் நாட்டின் நாணயப் பிரச்சினை யும், பிரான்சுடன் ஏற்பட்ட தகராறும் சுமூகமாகத் தீர்த்து வைக்கப்பட்டன. இதன் பின்னர் ஜேர்மனி மீண்டும் கைத்தொழில்களை விருத்தி செய்வதிலும் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதிலும் முழுமூச் சாக ஈடுபட்டு 5 ஆண்டுகளுக்குள் அபரிமித முன்னேற்ற மடைந்தது.
ஆயினும் 1929 இல் ஏற்பட்ட சர்வதேச பொரு ளாதார நெருக்கடி ஜேர்மனியின் பொருளாதாரத் தையும் பாதித்தது. அதனால் முதலீடு செய்வதற்குப் பணமில்லாமையால் தொழில்களின் வளர்ச்சி தடைப் பட்டபோது பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன;

Page 92
176
தற்காலச் சரித்திரம்
அதன் விளை வாக நாட்டில் வேலையின்மை அதிகரித் தது, மக்கள் வரிகளைச் செலுத்தமுடியாது அவ திப் பட்டனர். இவ்வாறு நாடு அல்லோல கல்லோலப் படும்போது மக்கள் சனநாயகக் கட்சி மு றை யி ல் அதிருப்தியுற்றனர், அவ்வேளை சிலர் பொது வுடைமை அரசாங்கத்தை நிறுவ முயன்றனர். அதேசமயம் வேறுசிலர் சர்வாதிகார ஆட்சியை நிலை நாட்ட ஆசைப்பட்டனர். இத்தகைய நெருக்கடி நிலைமையின் போதுதான் கிட்லர் முன்னணிக்கு வந்தான்.
கிட்லர் ஒரு சுங்க அதிகாரியின் மகனாக 1887 இல் ஆஸ்திரியாவில் பிறந்தான், இளமைக் காலத்திலேயே அவன் இனப்பற்று மிக்கவனாயிருந்தான், ஜேர்மானியம் இனத்தவர்கள் எல்லோரையும் உள்ளடக்கிய ஒரு பரந்த ஜேர்மன் இராச்சியத்தை நிறுவ அவன் ஆசைப் பட்டான், பின்னர் முதலாம் உலகப்போரின்போது படைவீரனாகப் பணியாற்றிவிட்டுப் போரின் முடிவில் இராணுவத்திலிருந்து விலகி 1919 இல் தேசீய தொழி. லாளர் கட்சியை நிறுவினான். அது ந 7 சி க் கடிப்பா சிவ எனச் சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டது. அக் கட்சியின் உதவி யுடன் அவன் 1923 இல் ஜேர்மனியின் ஆட்சியைக் கைப்பற்ற முயன்று அதில் தோல்வியுற்றதனால் சிறையி லிடப்பட்டான். அவன் சிறையிலிருக்கும் காலத்தில் "'எனது போராட்டம்" (Mein Kamp) எ ன் னு ம் நூலை எ ழுதினான். அதில் அவன் தனது கருத்துக்களையும் திட்டங்களை யும் வெளியிட்டான். கிட்லர் சிறையி லிருந்து மீண்ட பின்னர் 1933 இல் ஒரு கூட்டரசாங் கத்தில் சேர்ந்து மந்திரிசபையின் தலைவனுமாகினான். பின்னர் 1933 இல் நடைபெற்ற தேர்தலில் அவனு டைய கட்சியே அதிக பலமுடைய கட்சியாகத் தெரிவு செய்யப்பட்டபடியால் அவன் சான்சலராகியதோடு சட்டமியற்றக்கூடிய அதிகாரத்தையும் பெற்றான். இதன் பின்னர் 1934 இல் மேர்மன் குடியரசுத் தலைவர் இறந்தபோது கிட்லர் தன்னையே குடியரசின் தலைவ னாகவும் ஆக்கிக்கொண்டு சர்வாதிகாரம் செலுத்தத் தொடங்கினான்.
நீ% 4.14 "டிவு
பெ
| தகவல்

எட்டாந்தரம்
177
கிட்லர் பின்பற்றிய 'நாசிசம்' முசோலினியின் பாசிசத்துக்கு ஒப்பானது. ஜேர்மானியர் ஆரியவமி சத்தவர் என்றும் அவர்கள் உலகை ஆளப் பிறந்த வர்களென்றும் ஜேர்மனி தனது அயல் நாடுகளை அகப் படுத்தி விரிவடைந்து தனது மக்களுக்கு வேண்டிய
கிட்லர்
முசோலினி 'வாழ்விடத்தை' (Lebens raum)ப் பெறவேண்டுமென வும், சன நாயகம் ஒரு கேலிக்கூத்து எனவும், போர் புனிதமானது எனவும் அவனது போதனைகள் கூறின. கிட்லரின் போதனைகள் மக்களின் இன உணர்ச்சியைக் கிளறின. அதேசமயம் அவன் மேற்கொண்ட பொரு ளாதார நடவடிக்கைகளினால் நாடும் பலம் பெற்றது. இவ்விதமாகச் செயல்திறன் மிக்க ஒரு சர்வாதிகார ஆட்சியை நிறுவி மக்களின் அபிமானத்தைப் பெற்ற கிட்லர் ஆக்கிரமிப்புக் கொள்கையைக் கடைப்பிடித்த படியால் அயல் நாடுகளைப் பிடிப்பதற்கு ஏற்றவகையில் போர்க்கருவிகளைப் பெருமளவில் உற்பத்திசெய்தான். அத்தோடு தனது தரைப்படை கடற்படை விமானப் படை ஆகியவற்றைப் பலப்படுத்தி நாட்டின் மூல வளங்களை நன்கு விருத்திசெய்வதிலும் அதிக கவனம் செலுத்தினான். அவன் அடுத்து மேற் கொண்ட வற்றை அடுத்த பாடத்திற் படிப்போம்.
23

Page 93
178
தற்காலச் சரித்திரம்
பயிற்சிகள்.
1. முசோலினி எழுச்சி பெற்ற காலத்தில் இத்தாலியின்
நிலைமை எவ்வாறிருந்தது ? முசோலினியைப்பற்றி யா து அறிவீர் ?
முசோலினி எவ்வாறு பிரதம மந்திரியாகினான் ? 4. பாசிசத்தின் பிரதான அமிசங்கள் யாவை ? 5. முசோலினி பின்பற்றிய வெளிநாட்டுக்கொள்கை எப்படிப்
பட்டது ? 19 29 இல் பொருளாதார நெருக்கடி ஜேர்மனியை எவ்
வாறு பாதித்தது ? 7. கிட்லரின் இளமைக் காலத்தைப்பற்றி யாது அறிவீர்? கிட்லர் பின்பற்றிய நாசிசத்தின் பிரதான இயல்புகள்
யாவை ? 9. கிட்லர் எவ்வாறு பிரதம மந்திரியாகினான் ?
இம்: LKI )
பாடம் 9. ஐக்கிய சோவியத் சமஉடைமைக் குடியரசு. இன்று ஐக்கிய சோவியத் சமவுடைமைக் குடியரசு எனப்படும் இரசியா பத்தொன்பதாம் நூற்றாண்டில் பரப்பில் பெரிய நாடாக இருந்தபோதிலும் அரசியல், பொருளாதாரத் துறைகளில் மிகவும் பின் தங்கிய நிலையிலிருந்தது.
இரசியாவை ஆண்டுவந்த ''சார்' அரசர்களிற் பெரும்பாலானோர் சர்வாதிகாரிகளைப்போல் கொடுங் கோலாட்சி செய்தனர். அவர்களின் போர்களினாலும், வரிகளினாலும் பொதுமக்கள் பெருந் துன்பமடைந்த

எட்டாந்தரம்
179
னர். மேலும் இரசிய சமுதாயமும் பிளவுபட்டதாகவே * காணப்பட்டது. அதில் சாதாரண குடியானவர்கள், சலாக்கியம் பெற்றவர்கள் என இரு பிரிவினர் காணப் பட்டனர். அவர்களில் சா த ா ர ண மக்கள் அரச னுக்கு ஊழியம் செய்யவேண்டியிருந்தது. இப்படிப் பட்ட நிலைமைகள் காணப்பட்ட கா ல த் தி ல் பல அறிஞர்கள் தோன்றிச் சமுதாய அரசியல் ஊழல் களைக் கண்டித்ததோடு பல சிற ந் த இலக்கிய நூல் களையும் எழுதி வெளியிட்டனர். அவர்களில் நிகோ லோல்கோல், லியோடால்ஸ்டாய், செக்கோவ்மார்க்
• சிம்கோர்க்கி ஆகியோர் முக்கியமானவர்கள். இவர் கள் சமூக உடைமைவாதக் கருத்துக்களையே கைக் கொண்டனர்.
இவ்விதமாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இரசியாவில் இலக்கிய வளர்ச்சி ஏற்பட்டபோதிலும் நாட்டின் அரசியல் நிலைமை நாளுக்கு நாள் மோச மாகிக்கொண்டு வந்தது. இரசியா 1854-56 கிறை மியன் போரில் தோல்வியடைந்த நாள் முதல் நாட்டில் அமைதியின்மை அதிகரித்தது. பின்னர் சார் II ம் அலெக்சாந்தர் ஊழிய முறையை நீக்கியும், சாதாரண குடிமக்களுக்கு நிலத்தில் ஒரு பங்கைக் கொடுத்தும், உள்ளூராட்சியிலும், சட்டத்துறையிலும் பல சீர்திருத் தங்களைப் புகுத்தியும் ஆட்சியைச் சீர்திருத்த முயன் றான். ஆயினும் அவற்றினால் திரு ப் தி ய  ைட ய ா த ஆட்சியற்வாதிகள் 1881 இல் அ வ னை க் கொன்றனர். பின்னர் அடுத்த அரசனாகிய சார் IIIம் அலெக்சாந்தர் அடக்குமுறைகளை மேற்கொண்டதனால் மீ ண் டு ம் அரசனுக்கு எதிர்ப்பு உண்டாகியது.
இது இவ்வாறாக 19 நூற்றாண்டின் பிற்பகுதியில் இரசியாவிலும் கைத்தொழில்கள் ஓரளவு விருத்தி யடைந்தன. அதன் விளைவாக தொழிலாளர் என்ற புதிய வகுப்பினர் உருவாகியிருந்தனர். அவர்கள்

Page 94
180
தற்காலச் சரித்திரம் தொழிற்சாலைகளில் அதிக நேரம் வேலை செய்தபோதி லும் குறைவான வேதனத்தையே பெ ற் ற னர். அன்றியும் தொழிற் சங்கங்கள் அமைக்கவும் அவர் கள் அநுமதிக்கப்படவில்லை. அந்நிலையில் காள்மாக்ஸ் என்னும் ச மூ க உடைமைவாதியின் கருத்துக்கள் அவர்களைக் கவர்ந்தன.
காள்மார்க்ஸ் ஒரு ஜேர்மன் யூதனாவான். அவன் டாஸ்கப்பிற்றல்” என்னும் ஒரு நூலை எழுதினான். அந்நூலில் அவன் முதலாளி - தொழிலாளி முறை யான சமூக அமைப்பைப் பலாத்கார வழியிலாயினும் , நீக்க வேண்டுமெனவும், த னி ப் பட்ட வர் க ளி ன் தொழில்களையும், சொத்துக்களை யும் அரசாங்கம் தனது உடைமையாக்க வேண்டுமெனவும் கூறியிருந் தான், ஆயினும் அவனது கொள்கைகளை ஆதரித் தவர்களில் ஒரு பகுதியினர் பலாத்கார வழிகளில் அரசியல், சமுதாய அமைப்புக்களை மாற்ற வேண்டு மென்ற போது வேறொரு பிரிவினர் அமைதியான வழிகளிலேயே அதைச் சாதிக்க வேண்டுமென் றனர். இவர்களில் முன்னவர்கள் போல்செவிக்கர்' எனவும் பின்ன வர்கள் மென்சி விக்கர் எனவும் அழைக்கப்பட்டனர். இவ் வாறு இரசிய மக்களிடையே விழிப்பு ஏற்பட்டுவந்த காலத்தில் 1904-05 இல் இரசியா யப்பானுடன் ஒரு போரில் ஈடுபட்டுத் தோல்வியடைந்தது. அதன் மூலம் மக்கள் அரசாங்கத் தின் பலவீனத்தை அறிந்து கொண் டனர். அதற்குப்பின்னர் 1905 இல் சென்பீற்றர்ஸ் பேர்க் நகரில் மக்கள் அதிக உணவு கோரிக் கூடியபோது அரசாங்கம் அதை' ஒரு புரட்சியென எண்ணி இராணு வத்தை ஏவியது. இதனால் ஆயிரம் பேர் வ ரை கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து நாட்டில் வேலை நிறுத்தங்கள் ஏற்பட்டன. உடன் அ ர ச ன் *டூமா' என்னும் இ ர சி ய ப் பாராளுமன்றத்தைக் கூட்டினான். ஆயி னு ம் அது பல அதிகாரங்களைக் கோரியபோது மன்னன் அதைக் கலைத்துவிட்டான்.

எட்டாந்தரம்
181
அச்செயல் நாட்டில் நெருக்கடியை ஏற்படுத்தியது. -இது இவ்வாறாக முதலாம் உலகப்போர் 1914 இல் தொடங்கியவுடன் இரசியாவும் அதில் பங்குபற்றி யது. அப்போது மக்கள் மன்னனுக்குப் பூரண ஆதரவு நல்கினர். ஆயினும் தொடக்கத்தில் சில வெற்றி களைப் பெற்றபின்னர் இரசியா தொடர்ந்து பலதோல்வி களைப் பெற்றதனால் மக்கள் அரசன் மீது வெறுப்புக் கொண்டனர். அதேசமயம் ருஸ்புடின் என்னும் துறவி யும் இராணியும் ஆட்சியைச் சீர் கெடச் செய்தமை யால் நிலைமை மோசமாகியது. அந்நிலையில் ருஸ்புடீன் 'சுட்டுக் கொல்லப்பட்ட போதிலும் நாட்டில் கொந்
தளிப்புக் குறையவில்லை.
இத்தகைய நெருக்கடியான நிலைமை காணப் பட்டவேளை 1917 மார்ச்சில் சென் பீற்றர்ஸ் பேர்க் நகரில் 90,000 தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து விட்டு 'அடக்கு முறை ஒழிக' எனக் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு மூன்றாம் நாள் 24 ,000 தொழிலாளர்கள் வீதிகளில் அணிவகுத்துச் சென்றனர். அப்போது அவர்களைக் கலைப்பதற்கு இராணுவம் அனுப்பப்பட்டது. ஆயினும் இராணுவத் தினரும் குழப்பக்காரருடன் சேர்ந்ததினால் அரசன் செய்வது இன்னது எனத் தெரியாது திகைத்துத் தானே நேரில் சென் பீற்றர்ஸ் பேர்க்கிற்கு வந்தான். ஆனால் அவன் பிரயாணம் செய்த புகையிரதம் பாதை மாறிச் சென்றதனால் நகரத்துக்கு வெளியில் நின்று விட்டது. இதனால் ஏமாற்றமடைந்த அரசன் 1917 மார்ச் 15 இல் பதவியைத் துறக்க 'கரன்சிக்கி' என் பவன் தலைமையில் புதிய அரசாங்கம் அமைக் கப் பட்டது.
இவ்வாறு கரென் சிக்கி ஆட்சி பீடத்திலிருக்கும் போது இரசியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு அது வரை சுவிற்சர்லாந்திலிருந்த லெனின் என்னும் புரட்சி வாதியை ஜேர்மானியர் இரசியாவுக்கு அனுப்பினர்,

Page 95
45 4 3 VS : 14{}}
182
தற்காலச் சரித்திரம் லெனின் இரசியாவுக்கு வந்தபோது மக்கள் அவனை வரவேற்றனர். அவன் போல் செவிக்கர் என்னும் > பிரிவினரின் பலாத்காரக் கொள்கையை ஆதரித்து அவர்களின் 'கட்சித் தலைவனாகினான். பின்னர் அவன் கரன்சிக்கியின் ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டமிட்டுப் புதிய புரட்சியொன்றை ஏற்படுத்தித் தொழிலாளர் அரசாங்கத்தை நிறுவுமாறு மக்களைத் தூண்டினான். அவன் தனது பிரசாரத்தினால் தொழிலாளரின் ஆதர வைப் பெற்றபின்னர் 1917 நவம்பரில் றெட்காட்' என் னும் தனது படையின் உதவியுடன் கரென்சிக்கியின் ஆட்சியை நீக்கிவிட்டு இரசியாவை ஒரு சோவியத் குடியரசாகப் பிரகடனம் செய்தான். இதன் பின்னர் அவன் சோவியத்துக் களின் (மாகாணசபைகள்) மாநாடு ஒன்றைக் கூட்டினான். அதுஜேர்மனியுடன் சமாதானம் செய்யவும் பிரபுக்களின் நிலத்தைப் பறிமுதல் செய்து குடிமக்களிடையே பங்கிடவும் சோவியத்துக்களிடம் எல்லா அதிகாரங்களையும் ஒப்படைக்கவும் சம்மதித் தது. இதன் விளைவாக இரசியா போரிலிருந்து விலகிய தோடு அதன் நிலத்தில் சில பகுதிகளை ஜேர்மனிக்கு விட்டுக் கொடுத்தது.
இவ்வாறு லெனின் காள்மாக்சின் பொது உடை மைக் கொள்கைப்படி ஒரு புதிய ஆட்சிமுறையை ஏற்படுத்தி அதைப் பலப்படுத்தி வந்தபோது அத னால் பாதிக்கப்பட்ட பிரபுக்களும், நிலச்சுவாந்தார்களும் கிளர்ச்சி செய்தனர். ஆயினும் ட்ரொட்ஸ்கி என்பவன் செம்படையின் துணையுடன் அக்கிளர்ச்சிகளை அடக்கி விட்டான். இதன்மேல் லெனின் வர்த்தகம், உற்பத்தி ஆகியவற்றைத் தேசியமயமாக்கியும் தனிப்பட்டவர் களின் சொத்தைப் பறிமுதல் செய்தும் ஆலைகளின் நிர்வாகத்தை தொழிலாளரின் கைக்குமாற்றியும் பல வாறு பொது உடைமைக் கொள்கைகளைப் புகுத்திய தனால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்தது. அதைக் கண்ட லெனின் ஒரு புதிய பொருளாதாரக் கொள் கையை வகுத்துத் தனிப்பட்டவர்களின் முயற்சிக்கும்

எட்டாந்தரம்
X 83
சிறிது இடமளித்தான். பின்னர் 19 23 இல் ஒரு புதிய அரசியற் றிட்டத்தை வகுத்து இரசியாவை 'ஐக்கிய சமஉடைமைச் சோவியத் குடியரசு' ஆகமாற்றினான், இதன்கீழ் ' தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட சோவியத்துக்கள் என்னும் சபை க ள், கிராமம், பட்டினம், மாவட்டம் முதலியவற்றின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றன. இவற்றுக்கு மேல் உயர் சோவியத்து (Supreme Soviet) என்னும் அதி காரபீடம் உள்ளது. இவ்வாறு லெனின் ஒரு புதிய திட்டத்தை வகுத்த போதிலும் அது பூரணமாகச்
ஸ்ராலின்
செயல்படுவதை அவன் பார்க்க முடிய வில் லை. ஏனெனில் அவன் 19 24 இல் இறந்துவிட்டான். அதன் பின்னர் ஸ்ராலின் பதவிக்கு வந்தான். அவன் ட்ரொஸ்கியை நாட்டைவிட்டுத் துரத்திவிட்டு 3, ஐந்து ஆண்டுத் திட்டங்களை வகுத்து அவற்றின் மூலம் இரசியாவை நவீன மயமாக்கினான். தேசீயமயமாக்குதல், உற்பத்

Page 96
184
தற்காலச் சரித்திரம் தியை அதிகரித்தல், கைத்தொழில் மயமாக்குதல், என்பன அத்திட்டங்களின் நோக்கங்களாகும். அவற் றினால் நாடு பல துறைகளிலும் பிரமிக்கத்தக்க முன் னேற்றம் பெற்றது. இன்று இரசியா செல்வாக்கும், வலிமையும், புகழும் மிக்க உலக வல்லரசுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
பயிற்சிகள்
1: பத்தொன்பதாம் நூற்றாண்டில் இரசியாவின் நிலைமையை
யைப் பற்றி யாது அறிவீர் ? 2,
சார் அலெக்சாந்தர் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் யாவை ?
3.
காள்மாக்சைப்பற்றி யாது அறிவீர் ? 4 , இரசியப் புரட்சி எவ்வாறு தொடங்கியது ?
லெனினைப்பற்றி யாது அறிவீர் ? 6. 'பொது உடைமை' என்பது என்ன ? 7. 'சோவியத்து' அரசியலமைப்பைப்பற்றி யாது அறிவீர் ? 8: ஸ்ராலின் எவ்வழியில் நாட்டை முன்னேற்றினான் ?
5: -

அலகு 16. இரண்டாம் உலகப்போர். 1434- 1949
பாடம் 10.
இரண்டாம் உலகப்போரின் காரணங்கள்.
முதலாவது உலகப்போர் முடிவடைந்து 20 ஆண்டு களுக்குள் இரண்டாவது உலகப்போர் தொடங்கியது. அதிலிருந்து முதலாம் உலகப்போரின் பின்னர் உலக சமாதானத்தை நிலை நாட்டுவதற்காக மேற்கொள்ளப் பட்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை என்பதை ஒருவர் ஊகிக்கலாம். அவை பயனளிக்காமற் போனமைக்கு 19 29 இல் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக் கடியும், சர்வதேச வ சங்கத்தின் பலவீனமும் வேர் : செயில் உடன்படிக்கையிலுள்ள கு  ைற பா டு க ளு ம்) காரணமாயின. எனவே மேற் குறிப்பிட்ட மூன்றும் இரண்டாம் உலகப் போருக்கு அடிப்படைக் காரண மாயிருந்த அதே சமயம் கிட்லரின் ஆக்கிரமிப்புச் செயல்கள் போ ரி ன் உடன்காரண மாயின. இனி இவற்றை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.
1929 சர்வ தேசப் பொருளாதார நெருக்கடி, 1929 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி முதலில் ஐக்கிய அமெரிக்காவில் ஆரம்பமாகியது. 1921-28 காலத் தில் ஐக்கிய அமெரிக்காவில் கைத்தொழில்கள் அபரி மிதமாக வளர்ச்சியடைந்து பங்குதாரர்களுக்கு அதிக இலாபத்தைக் கொடுத்தன. இதனால் பங்குகளின் விலை மிக அதிகரித்தது. அப்போதும் பலர் போட்டி யிட்டு அவற்றை வாங்கினர். பின்னர் 1923. இல் சடுதியாகப் பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்தது. உடன் பங்குகளை ஏற்கெனவே வாங்கிய பலர் மிகக் குறைந்த விலைக்கும் அவற்றை விற்க முயன்றனர்.
24

Page 97
186
தற்காலச் சரித்திரம் இதனால் பலர் நட்டமடைந்தனர். இதன் விளைவாக அமெரிக்கப் பணம் (டாலர்) வெளி நாடுகளுக்குச் செல்வது தடைப்பட்டபோது ஐரோப்பாவில் பல கைத் தொழில்கள் 'முதல்' இல்லாமல் தம்பித்துவிட்டன. இதனால் பல ஐரோப்பிய நாடுகள் வர்த்தகக் கட்டுப் பாடுகளை விதித்து வெளிநாட்டுப் பொருட்கள் இறக்கு மதியாவதைத் தடுத்தன. அதேசமயம் பல நாடு களில் வேலையில்லாத் திண்டாட்டமும் பண நெருக் கடியும் ஏற்பட்டன. இவ்வித நெருக்கடிக்காலத்தில் ஜேர்மனி தனது ஆயுத உற்பத்தியையும் இராணுவத் தையும் அதிகரிப்பதன் மூலம் பெருந்தொகையான்ே ருக்கு வேலை கொடுத்தது. அதேசமயம் இந்நெருக்கடி யினால் பாதிக்கப்பட்ட யப்பான் தனது கைத்தொழில் களுக்கு வேண்டிய கனிப்பொருட்களைப் பெறுவதற் காக மஞ்சூரியாவைக் கைப்பற்றியது . இவ்வாறு ஜேர்மனியும் யப்பானும் மேற்கொண்ட செயல்கள் போருக்கு முன்னறிவிப்பாயின. அன்றியும் 1928 இல் பொருளாதார நெருக்கடி நாடுகளிடையே போட்டி மனப்பான்மையையும் தேசீய உணர்ச்சியையும் மீண் டும் தூண்டிவிட்டது.
வேர்செயில் உடன்படிக்கையிலுள்ள குறைபாடுகள் : 1919 இல் நேச நாடுகள் ஜேர்மனியுடன் செய்து கொண்ட வேர் செயில் உடன்படிக்கை பழிக்குப் பழிவாங்கும் உடன் படிக்கைபோலிருந்தது. அதன்படி 600 கோடி பவுண் வரை ஜேர்மனி போர் நட்ட ஈடாகக் கொ டுக் க வேண்டியிருந்தது. அதேசமயம் அல்சேஸ்-லொறேன் .. மாகாணங்கள் பிரான்சுக்குக் கொடுக்கப்பட்டதும், ஜேர்மனியின் வேறுசில பகுதிகள் போலந்து, பிரான்ஸ், செக்கோசிலோவாக்கியா ஆ கி ய வ ற் றி டை பங்கு போடப்பட்டதும் ஜேர்மனிக்கு ஆத்திரமூட்டின. மேலும் சமாதான மா நாட்டில் ஜேர்மனி பங்குபற்றாத படியால் அந்த மாநாட்டு முடிவுகள் ஒருதலைப்பட்ச மானவை என அது கருதியது. இக்காரணங்களினால்

எட்டாந்தரம்
187
ஜேர்மனியிடமும் பழிக்குப்பழி வாங்கும் எண்ணம் வேரூன்றியது. அதுபோருக்கு அடிகோலியது.
சர்வதேச சங்கத்தின் தோல்வி: முதலாம் உலகப்போரின் பின்னர் நிறுவப்பட்ட சர்வதேச சங்கம் சிறிய நாடு களிடையே ஏற்பட்ட சிறு பிணக்குகளைத் தீர்த்த போதிலும், பெரிய வல்லரசுகள் தவறு செய்தபோது அதைத் தடுக்க முடியாத நிலையிலிருந்தது. அதனி டம் 'படை' ஒன்று இருக்காத்து அதன் ப ல வீ ன மாயிற்று. எனவே யப்பான் 1931இல் மஞ்சூரியாவைக் கைப்பற்றியபோது சர்வதேச சங்கம் அதை வன்மை யாகக் கண்டித்ததோடு நின்றுவிட்டது. இதன்பின் னர் யப்பான் அச்சங்கத்தை விட்டு வெளியேறியது. அடுத்து 1935-இல் இத்தாலிய சர்வாதிகாரியாகிய முசோலினி அபிசீனியாவைக் கைப்பற்றித்) தனது நாட்டுடன் சேர்த்துக்கொண்டபோது அபிசீனியா சர்வதேச சங்கத்துக்கு முறையிட அது பொரு ளா தார த் த  ைட க ள் விதிப்பதுடன் நின்றுவிட்டது. அதற்கு மேல் அது ஒன்றையும் செய்ய முடியவில்லை. இதன் பின்னர் இத்தாலியும் சர்வதேச சங்கத்தை விட்டு விலகியது. இவ் வாறு வல்லரசுகள் தவறு செய்தபோது சர்வதேச்சங்கம் அதைத் தடுக்க வழி யறியாது தவித்தமை அதன் தோல்வியைக் காட்டியது .
போரின் உடன் காரணங்கள் :- ஜேர்மனியின் சர்வாதிகாரியாகிய கிட்லரின் ஆக்கிரமிப்புச் செயல் 'கள் போருக்கு உடன் காரணமாயின. கிட்லர் ஜேர் மனியின் படைகளைப் பலப்படுத்தி அவற்றிடம் ஆக்கிர மிப்பு மனப்பான்மையை உண்டுபண்ணினான். முதலாம் உலகப் போரினால் ஜேர்மனி இழந்த பிரதேசங்களை மீட்பதும் ஜேர்மானிய இ ன த் த வர் எல்லாரையும் கொண்ட பரந்த ஜேர்மானியப் பேரரசை உருவாக்கு வதும் அவனது திட்டங்களாயிருந்தன. எனவே அவன் 1932-இல் படைக் குறைப்பு மகா நாட்டிலிருந்தும்

Page 98
188
தற்காலச் சரித்திரம் 1933-இல் சர்வதேச சங்கத்திலிருந்தும் விலகிய பின் னர் 1935 இல் கட்டாய இராணுவ சேவையை ஏற் படுத்திப் படைகளைப் பலப்படுத்தினான். பி ன் ன ர் 1936-இல் ஸ்பெயினில் ஒரு இராணுவப் பு ர ட் சி ஏற்பட்டபோது கிட்லர் முசோலினியுடன் சேர்ந்து பிராங்கோ என்னும் புரட்சித் தலைவனை ஆதரித்தான் . அடுத்து ஜேர்மனியும் இத்தாலியும் 1936 இல் றேம்பேளின் அச்சு என்னும் நட்புறவை ஏ ற் ப டு த் திக் கொண்டன.
இதன்மேல் கிட்லர் பகிரங்க ஆக்கிரமிப்புக் கொள் கையைப் பின்பற்றினான். அவன் ஆஸ்திரியாவில் வாழும் பெருந்தொகையான  ேஜர் மா னி யர் பல தொல்லைகளுக்குள்ளாவதாகக் கூறி 1938 மார்ச்சில் அதை அகப்படுத்தினான். அடுத்து செக்கோசிலோ வாக்கியாவின் மேற்குப் பிரதேசமாகிய சுடேற்றன் லந்தின் எல்லைகளில் தனது படைகளை நிறுத்தி அப் பகுதியைத் தனக்குக் கொடுக்குமாறு கோரினான். அச் சமயம் பிரித்தானிய பிரதம மந்திரியாகிய நெவில் சம்பர்லேன் கிட்லரைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் சுடேற்றன்லந்தை கிட்லருக்குக் கொடுக்கும்படி செக்கோசிலோவாக்கியாவைக் கேட்டுக் கொண்டார். அதற்கு அது இணங்கியபோதிலும் கிட்லர் தனது படைகளின் உதவியுடன் அதைக்
கைப்பற்றத் திட்டமிட்டபோது சம்பர்லேன் பிரித் தானியாவுக்குத் தி ரு ம் பி த் தமது நாட்டுப் படை களைத் திரட்டுவதற்கு உத்தரவிட்டார். உடன் பிரான் சும் அப்படியே செய்தது. அதைக்கண்ட கி ட் லர் மியூனிச் நகரில் வல்லரசுகளின் மாநாட்டைக் கூட்டச் சம்மதித்தான். அம்மாநாட்டில் கிட்லர், சுடேற்றன் லாந்தைக் கைப்பற்றியவுடன் தனது ஆக்கிரமிப்பை நிறுத்துவதாக வாக்களித்தான். ஆயினும் 1939
மார்ச் அளவில் அவன் செக்கோசிலோவாக்கியா முழு வதையுமே கைப்பற்றிவிட்டான். அவனைப் பின்பற்றி

எட்டாந்தரம்
189
இத்தாலி அவ்வாண்டில் (1939) அல்பேனியாவைக் கைப்பற்றியது.
இதன் பின்னர் கிட்லர், பால்டிக் கடலுக்குச் செல்லும் போலந்தின் நுழை வழிக்கு ஊடாக ஒரு புகையிரதப் பாதை அமைப்பதற்கு அதனிடம் அநுமதி கேட்டான். பின்னர் டான் சீக் துறைமுகத்தைத் திருப் பித் தருமாறு கேட்டான். இவ்வாறு அவன் விடுத்த கோரிக்கைகள் பற்றி ஆராயப் போலந்து ஒரு மாநாட் டைக் கூட்டியது. ஆயினும் கிட்லர் அதில் அரை 'மனத்துடன் பங்கு பற்றிவிட்டு 1939 செப்ரம்பர் முதலாம் நாள் போலந்துமீது படையெடுத்தான். உடன் பிரித்தானியாவும் பிரான்சும் போரை நிறுத் தும்படி கிட்லரை எச்சரித்த போதும் அதனால் ஒரு பயனும் ஏற்படவில்லை. எனவே செப்ரம்பர் 3 இல் அவை ஜேர்மனிக்கு எதிராகப் போரில் குதித்தன. அத்துடன் இரண்டாம் உலகப்போரும் ஆ ர ம் ப மாகியது.
பயிற்சிகள்.
1. இரண்டாம் உலகப்போரின் அடிப்படைக் காரணங்கள்
எவை ? 1929 சர்வதேச பொருளாதார நெருக்கடி எவ்வாறு உரு
வாகியது ? 3. வேர்செயில் உடன்படிக்கையிலுள்ள குறைபாடுகள் யாவை? 4. இரண்டாம் உலகப்போருக்கு அடிகோலிய சம்பவங்களைக்
கூறுக. 5. 'மியூனிச் மாநாடு ஏன் கூட்டப்பட்டது ? அதன் பலன்
என்ன ? சிறு குறிப்பெழு து க : (1) பால்ரிக் நுழைவழி (2) நெவில் சம்பர்லேன் (3) சுடேற்றன்லாந்து;
6.

Page 99
பாடம் 11.
இரண்டாம் உலகப் போர். 1939 ஆம் ஆண்டு செப்ரம்பர் முதலாம் திகதி கிட்லர் போலந்தின் மீது படையெடுத்தும், செப்ரம் பர் 3 ம் திகதி பிரித் தானி யா, பிரான்சு ஆகியன ஜேர்மனிக்கு எதிராகப் போரில் குதித்ததும், முந்திய பாடத்தில் குறிப்பிடப்பட்டனவல்லவா ? இவ்வாறு போர் ஆரம்பமாகியவுடன் தொடக்கத்தில் ஜேர்மனி விரைவாகப் படைகளைக் கொண்டு சென்று போலந் தைக் கைப்பற்றியது. அச்சமயம் ஜேர்மனியின் நட்பு நாடாயிருந்த இரசியா போலந்தின் கிழக்குப் பகுதி
யைத் தனதாக்கிக் கொண்டது. இதன் பின் னர் நோர்வே, டென்மார்க் ஆகியனவும் ஜேர்மனியின் கைக்குள் வீழ்ந்தன. அடுத்து 1940 ஆம் ஆண்டு முற் பகுதியில் ஒல்லாந்து. பெல்சியம் ஆகியனவும் அதனால் கைப்பற்றப்பட்டன. பின்னர் பிரான்ஸ் யூன் 22 இல் ஜேர்மனியுடன் போர் நிறுத்த உடன்படிக்கை செய்து கொண்டது. இதன் வி ளை வ ா க ப் பிரித்தானியா தனித்து நின்று ஜேர்மனியை எதிர்க்கவேண்டியதா யிற்று. அந்நிலையில் பிரித்தானிய பிரதமரான நெவில் சம்பர்லேன் பதவியிலிருந்து விலகப் புதிதாக அமைக் கப்பட்ட போர்க்கால மந்திரிசபை வின்ஸ்ரன் சேர்ச்சிலின் தலைமையில் இயங்கியது. வின்ஸ்ரன் சேச்சில் பிரித் தானிய மக்களை ஒன்றுதிரட்டி அவர்கள் மன தில் தேசப்பற்றை மூட்டித் தமது தாய் நாட்டைக் காப் பதற்கு எவ்வித தியாகத்துக்கும் தயாராகச் செய் தார்.
இதற்கிடையில் பிரான்சின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஜேர்மனி இங்கிலாந்து மீது படையெடுக்கத் திட்ட மிட்டு போர்விமானங்களை அலை அலையாக அனுப்பிக் குண்டுமாரி பொழிந்தது. ஆயினும் றோயல் விமானப் படையின் தீரத்தினால் ஜேர்மனியின் திட்டம் தவிடு பொடியாக்கப்பட்டது. இது இப்படியிருக்க, 1940இல்

எட்டாந்தரம்
191
இத்தாலியும் ஜேர்மனியின் சார்பில் போரில் குதித்து ஆபிரிக்காவிலிருந்த பிரித்தானிய குடியேற்றங்களைத் தாக்கியது அதே சமயம் குறெம் மெல் என்பவன் தலை மையில் ஒரு ஜேர்மானியப் படையும் பிரித்தானி யரை எதிர்த்தது. ஆயினும் மொன்ற்கொமறி என்னும் பிரித்தானிய தளபதி அவற்றை முறியடித்தார். இதற் கிடையில் 1941 இல் ஜேர்மனி திடீரென இரசியா வுக்கு எதிராகத் திரும்பி அதன் மீது படையெடுத்து மாஸ்கோவையும் கைப்பற்றிவிட்டு ஸ்ராலின்கிராட் நகரை நோக்கி முன்னேறியது. ஆயினும் அங்கு நடந்தபோரில் ஜேர்மானியர் தோற்கடிக்கப்பட்டனர்.
ஐரோப்பிய நிலைமை இவ்வாறிருக்க கிழக்கே யப்பான் ஹவாய் தீவிலுள்ள பேள்காபரில் தங்கி நின்ற ஐக்கிய அமெரிக்காவின் கப்பற்படைகள்மீது குண்டு வீசியதனால் ஐக்கிய அமெரிக்கா யப்பானுக்கு எதிராகப் போரில் இறங்கியது. ஆயினும் யப்பான் மின்னல் வேகத்தில் கிழக்கிந்திய தீவுகள், மலாயா, பர்மா என்பனவற்றைக் கைப்பற்றிய பின்னர் இந்தியா வைப் பிடிக்கும் நோக்கத்துடன் அதை அணுகியது. அதைத் தொடர்ந்து 1943 ஆம் ஆண்டு ஏப்ரில் 5 ஆம் திகதி கொழும்பிலும், திருக்கோண மயிலை லும் யப் பானியர் குண்டு வீசினர். அவ்வேளை பிரித்தானியா இலங்கையில் இராணுவத்தள மொன்றை அமைத்து யப்பானியருக்கெதிராகப் போரிட்டது. - இவ்வாறு யப்பான் இந்தியாவுக்குக்கிட்ட வந்த போதிலும் ஐக்கிய அமெரிக்கா போரில் இறங்கிய பின் னர் நேசநாடுகளின் பலம் அதிகரித்ததைத் தொடர்ந்து ஜேர்மனி, யப்பான், இத்தாலி ஆகியவற்றின் போர்த் திறன் படிப்படியாகக் குறைந்து வந்தது, இவ்வாறு 1943 யூனில் ஆங்கிலேய - அமெரிக்கப் படைகள் இத் தாலி மீது படையெடுத்து அதை அடிபணியவைத்தன. அந்நிலையில் முசோலினி பதவியிலிருந்து விலக்கப்பட் டான். அடுத்து 1944 யூனில் தளபதி ஐசன்ஹோவர்

Page 100
192
தற்காலச் சரித்திரம்
தலைமையில் நேச நாட்டுப் படைகள் பிரான்சில் இறங்கி அதை ஜேர்மன் படைகளின் பிடியிலிருந்து மீட்டன. அவை அவ்வாண்டு ஆகஸ்டில் பாரிஸ் நகரைக் கைப்பற் றிய பின்னர் கிழக்கு நோக்கி முன்னேறிச் சென்று றைன் நதியைக் கடந்து ஜேர்மனிக்குட் பிரவேசித்தன, டபின்னர் பேளின் நகரம் முற்றுகையிட்டபோது கிட்லர் தற்கொலை செய்து இறந்ததாக நம்பப்படுகிறது. இவ் வாறு 1945 மேமாதம் நேச நாட்டுப் படைகள் ஜேர் மனியைத் தோற்கடித்திருந்தசமயம் முசோலினியும் இத்தாலியில் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத் தக்கது.
இதன்மேல் யப்பான் மட்டும் தனித்து நின்று போரை நடத்தியது. அவ்வேளை நேச நாட்டுப் படைகள் அதற்கு எதிராக உக்கிரமான கடற்போரிலும் விமானப்போரி லும் ஈடுபட்டன. அதற்கிடையில் ஜெனரல் மக் அதர் பிலிப்பைன் தீவுகளை யப்பானிடமிருந்து திரும்பக் கைப்பற்றியிருந்தார். அதேசமயம் பர்மியப்போரில் பிரித் தானியாயப்பானைத் தோற்கடித்திருந்தது. ஆயின் அந்நிலையிலும் யப்பான் அடிபணியாததினால் புதிதா கக் கண்டுபிடிக்கப்பட்ட அணுக்குண்டை யப்பான் மீது வீசுவதற்கு அமெரிக்கா தீர்மானித்தது. அதற்கிணங்க 1945 ஆகஸ்ட் ஆறிலும், ஏழிலும் ஹிரோசிமா, நாகசாகி, என்னும் இரு நகர்கள்மீதும் இரண்டு அணுக்குண்டுகள் . போடப்பட்டன. அக்குண்டுகள் ஏற்படுத்திய அழிவு யப்பானைப் பீதியுறச்செய்தது, எனவே யப்பான் தனது • தோல்வியை ஒப்புக்கொண்டு நேச நாடுகளிடம் சரண டைந்தது. அத்துடன் இரண்டாம் உலகப்போரும் முடிவுற்றது.
இரண்டாம் உலகப்போரினால் உலகில் ஏற்பட்ட உயிர்ச்சேதத்தையும் பொருட்சேதத்தையும் இது வரை யாரும் மதிப்பிட்டும் கூறவில்லை ; அவ்வளவு அதிகமாக அப் போர் அழிவை உண்டுபண்ணியது.

எட்டாந்தரம்
193
எனவே அத்தகைய ஒரு போர் திரும்பவும் ஏற்படு மjதைத் தவிர்ப்பதற்காக ஒரு சர்வதேச தாபனத்தை நிறுவுவதில் எல்லா நாடுகளும் ஈடுபட்டன.
மே - N =
பயிற்சிகள். 1. 1939-40 இல் ஜேர் மனி எந்நாடுகளைக் கைப்பற்றியது ?
ஆபிரிக்காவில் ஜேர்மனியின் படைகளை முறியடித்தவர் யார் ?
இத்தாலி எப்போது தோற்கடிக்கப்பட்டது ? 4, பிலிப்பைன் தீவுகளை யப்பானிடமிருந்து மீ ட் ட வ ர்
யார் ? அமெரிக்கா யப்பான் மீது அணுக்குண்டுகளைப்போட்டதேன் ஜேர்மனியின் பிரித்தானிய படையெடுப்புத் தி ட் ட ம் எவ்வாறு முறியடிக்கப்பட்டது?
டடி க க " -
பாடம் 12. ஐக்கியநாடுகள் தாபனம்.2, *15 -7 1945 ஆம் ஆண்டில் யப்பான் சரணாகதியடைந்த தைத் தொடர்ந்து இரண்டாம் உலகப்போர் முடிவ டைந்தது. அது முடிவடையும் நிலையிலிருந்தகாலத் தில் பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ், இரசியா ஆகியவற்றின் தலை வர்கள் பொட்ஸ்டாம், யால்ரா, கெய்றோ முதலிய பல இடங்களில் சந்தித்துப் போரின் பின்னர் செய்து கொள்ளவிருக்கும் சமாதான உடன் படிக்கைகள்பற்றிப் பேச்சுவார்த்தைகள் நடத்தி யிருந்தனர். ஆயினும் ஜேர்மனியின் எதிர்காலத் தைப்பற்றி முடிவு செய்வதில் தலைவர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதனால் போரின் பின்னர் ஜேர்மனியுடன் எவ்வித உடன்படிக்கையும்
25

Page 101
194
தற்காலச் சரித்திரம்
செய்யப்படவில்லை. எனவே அதைத் தவிர் த் து யப்பான், ஆஸ்திரியா, கங்கேரி, இத்தாலி முதலியா --> வற்றுடனேயே உடன்படிக்கைகள் செய்யப்பட்டன.
இது இவ்வாறாக உலகப்போர் நடந்துகொண்டி ருந்த காலத்தில் 1941 இல் அமெரிக்க சனாதிபதி யாகிய றூஸ்வெல்ரும், பிரித்தானிய பிரதமரான வின்ஸ்ரன் சேர்ச்சிலும் அத்திலாந்திக் சமுத்திரத்தில் ஒரு கப்பலில் சந்தித்தனர். அவ்வேளை அவர்கள் தமது நாடுகளின் நோக்கங்களை வெளிப்படுத்தும் பட்டயம் (சாசனம்) ஒன்றை வெளியிட்டனர். அது. அத்திலாந்திப் பட்டயம் என அழைக்கப்படும். அது தனி மனிதனதும் நாடுகளினதும் சுதந்திரத்தைப் பேணு வதற்கும், பிற நாட்டின் ஆக்கிரமிப்பிலிருந்தும் ஆதிக் கத்திலிருந்தும் எல்லா மக்களும் விடுதலை பெறுவதற் கும் உதவியளிப்பதாக உறுதியளித்தது. இப்பட்டயம்
பாக்கில் கூடிய 26 நேசநாடுகளின் பிரதிநிதிக ளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் 1943 இல் மாஸ்கோவில் கூடிய நேசநாட்டுத் தலை வர் க ள் சமாதான காலத்தில் உலகில் அமைக்கப்படவேண்டிய ஒரு தாபனத்தைப்பற்றிக் கலந்துரையாடினர்.
4 பின்னர் 1944 இல் டம்பேட்டன் ஒக்ஸ் என்னு மிடத்தில் நடந்த மாநாட்டில் உத்தேச தாபனத்தின் அமைப்புமுறை ஆராயப்பட்டது, அ டு த் து 1945 ஏப்ரில் மாதத்தில் 51 நாடுகளின் பிரதிநிதிகள் சான் பிரான்சிஸ்கோவில் கூடி அத்திலாந்திக் பட்டயத்தை அங்கீகரித்தன. அதைத் தொடர்ந்து 1945 ஒக்ரோபர் 24 ஆம் திகதிமுதல் அப்பட்டயம் - அமுலுக்கு வந்த துடன் ஐக்கியநாடுகள் தாபனம் இயங்கத் தொடங்கி யது. ஐக்கிய நாடுகள் தாபனத்தின் பிரதான நோக் கங்கள் மேல்வருமாறு :
உலகில் சமாதானத்தையும் பாதுகாப்பையும் நிலை நாட்டுதல்.
- 4 (2.

( எட்டாந்தரம்
195
(2) நாடுகளுக்கிடையே நட்புறவை ஏற்படுத்துதல். (3) நாடுகளின் பொருளாதார, சமூக, கலாச்சாரப்
பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல். (4) மனித உரிமைகளையும் சுதந்திரங்களையும் வளர்ப்
பதில் அதிக கவனம் செலுத்துதல். ஐக்கிய நாடுகள் தாபனம் பொதுச்சபை, பாது 2 காப்புச்சபை என்னும் இரண்டையும் பிரதான உறுப் புக்களாகக் கொண்டுள்ளது. அவற்றில் பொதுச் 3ெ சபையில் தகுதியுள்ள எல்லா நாடுகளும் உறுப்பின ராகலாம். அ ச் ச பை உலக விடயங்களைப் பற்றி விவாதிக்கும் ஒரு மன்றாயுள்ளது. பாதுகாப்புச்சபை யில் பிரித்தானியா, பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, மம் இரசியா, சீனா ஆகியன நி ர ந் த ர உறுப்பினராக யுள்ளன. அதில் 10 நிரந்தரமற்ற உறுப்பினரும் 4 உள்ளனர். பாதுகாப்புச்சபையின் நிரந்தர உறுப் - பினர்களுக்கு அதன் எத் தீர்மானத்தையும் ர த் து (வீற்றோ) செய்யும் அதிகாரமும் உண்டு. மேற் கூறப் பட்ட இரு சபைகளை யும் தவிர ஐக்கிய நாடுகள் தாப னத்தில் வேறு உறுப்புக்களும் உள்ளன. அவை (1) பொருளாதார சமூகநலக்கழகம், (2) நம்பிக்கைப் பொறுப்புக் கழகம், (3) சர்வதேச நீதிமன் றம், (4) செயலகம் என்பனவாகும். ஐக்கிய நாடுகள் தாபனத் தின் செயலகம் நியூயோர்க்கில் உள்ளது. சர்வதேச நீதிமன்றம் ஹேக் நகரில் உள்ளது. நம்பிக்கைப் பொறுப்புக் கழகம் என்பது போரில் தோல்வியுற்ற நாடுகளின் குடியேற்ற நாடுகளை அவை சுதந்திரமடை யும் வரை பாலனம் செய்யும் பொறுப்புடையது.
தாம்"!'
14 கார் -
-AேY:-
ஐக்கிய நாடுகள் தாபனத்தின் இன்னொரு உறுப் பான பொருளாதார சமூக நலக் கழகத்தின் கீழ் பல தாபனங்கள் இயங்குகின்றன. அவை உலகசுகாதார தாபனம், உண வு வி வ ச ா ய த் தாபனம், கல்வி 'விஞ்ஞான கலாச்சாரத் தாபனம், சர்வதேச தொழி

Page 102
196
தற்காலச் சரித்திரம் . லாளர் தாபனம் முதலியன. இத் தாபனங்கள் பல வழிகளில் உலக மக் க ளு க் கு அருஞ்சேவையாற்ற வருகின்றன.
ஐக்கிய நாடுகள் தாபனம் நாடுகளுக்கிடையே ஏற்படும் எல்லாப் பிர ச் ச னை க ளை யும் - தீர்க்க முடியவில்லை யெனினும் பலவற்றைச் சுமுகமாகத் தீர்த்து வைத்துள்ளது என்பதை மறக்க முடியாது. 1950-ல் தொடங்கிய கொரியாப் போரில் போர் நிறுத்தம் ஏற்படச் செய்தமை, 1956 இல் எழுந்த சுயஸ் கால்வாய்ப் பிரச்சினையைத் தீர்த்தமை, இந்தோ' னேசியாவுக்கும் ஒல்லாந்துக்குமிடையில் உண்டாகிய பிணக்கைத் தீர்ப்பதில் உதவியமை, காஷ்மீர் போரை நிறுத்தியமை ஆகியன ஐக்கிய நாடுகள் தாபனம் இது வரை ச ர தி த் த வ ற் றி ல் முக்கியமானவையாம். ஆயினும் உலக வல்லரசுகளிடையே காணப்படும், பகைமையும், பொது உடைமை, சன நாயகம் என்னும் தத்துவங்களின் மோத லும், பல நாடுகளின் ஆக்கிர மிப்பு மனப்பான்மையும் அணுவாயுதப் பெருக்கமும் உலகில் நிலையான சமாதானம் ஏற்படுவதற்குத் தடை யாயுள்ளன.
பயிற்சிகள்.
1. அத்திலாந்திக் சாசனத்தை யார், எப்போது வெளி
யிட்டனர் ? 2. ஐ நா. தாபனத்தின் நோக்கங்கள் யாவை? 3. ஐ. நா. தாபனத்தின் உறுப்புக்கள் எவை ? 4. ஐ. நா. இதுவரை சாதித்ததென்ன ?

அலகு 17.
--> பிரித்தானிய பொதுநல அரசு
பாடம் 13 சுதந்திர நாடுகளின் தோற்றம்.
மேல்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெரியபிரித்தானியாவில் ஒழுங்குமுறையான ஆட்சி நிலவியபோதிலும் அது உண்மையான ச ன நா ய க . 'ஆட்சியாக அமையவில்லை. ஏனெனில் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை குறிக்கப்பட்ட ஒரு வகுப்பின ருக்கே வழங்கப்பட்டிருந்ததினால் பெரும்பான்மை யான சாதாரண மக்களும் தொழிலாளர்களும் தமக் கெனப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யவும் ஆட்சி மன்றத்தில் தமது குறைபாடுகளைத் தெ ரி வி த் து அவற்றை நிவிர்த்தி செய்யவும் வழியறியாதிருந்த னர். உதாரணமாக 1 832 இல் நிறைவேற்றப்பட்ட முதலாவது சீர்திருத்தச் சட்டம் தொழில் துறைகளில் ஈடு
நடுத்தர வகுப்பினருக்கு மட்டும் வாக்குரி மையை வழங்கியதுடன் நின்றுவிட்டது. இவ்வாறு வாக்குரிமை மட்டுப்படுத்தப்பட்டதனால் தொழிலா ளர்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். எனவே பாராளுமன்ற ஆட்சியில் தமக்கும் உரிமை வேண்டு மென அவர்கள் கிளர்ச்சி செய் த னர்.பின்னர் 1 838 இல் வில்லியம் லோவற் 6 கோரிக்கைகள் அடங் கிய ' மக்கள் பட்டயத்தை '' விக்ரோறியா மகாராணி காலத்தில் வெளியிட்டார். அது 21 வயதுக்கு மேற் பட்டோருக்கு வாக்குரிமை, இரகசிய வாக்களிப்பு என் னும் கோரிக்கைகளையும் விடுத்தது. ஆயினும் அவை வழங்கப்படவில்லை. பின்னர் 1867 இல் டிஸ்றலியினால் நிறைவேற்றப்பட்ட இரண்டாவது சீர் தி ரு த் த ச் சட்டம் ஏறத்தாழ 10 இலட்சம் பேருக்கு வாக்குரி மையை அளித்தது. அடுத்து 1884 இல் நிறைவேற்

Page 103
198
தற்காலச் சரித்திரம்
மோடி படி சதா -
றப்பட்ட மூன்றாவது சீர்திருத்தச் சட்டத்தின் மூலம் எல்லா ஆண்களும், வாக்குரிமையைப் பெற்றனர் . அதற்கு மு ன் ன ர் 187 2 இல் நிறைவேற்றப்பட்ட வாக்குச் சீட்டுச் சட்டம் இரகசிய வாக்களிப்பு முறையை அமுலாக்கியது. இவ்வாறு படிப்படியாக வாக்குரிமை விஸ்தரிக்கப்பட்டு வந்து 19 20 இற்றான் சர்வ சன,,, வாக்குரிமை வழங்கப்பட்டது.
மேற் குறிப்பிட்டவாறு பிரித்தானியாவில் மக்கள் ஆட்சி பலப்பட்டு வந்த அதேசமயம் பிரித்தானிய பாராளுமன்றத்தின் ஒரு அங்கமாகிய பிரபுக்கள்சபை யின் அதிகாரங்கள் 1911 ஆம் ஆண்டுப் பாராளு மன்றச் சட்டத்தினாலும் பின்னர் 1949-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பெற்ற இன்னொரு சட்டத்தினாலும் பெரு மளவு குறைக்கப்பட்டன. இவற்றின் விளைவாகப் பொதுமக்கள் சபை அதிகமான அரசியல் அதிகாரங் களைப் பெற்றது. மே லும் பிரித்தானியாவில் அரசனா கவோ அரசியாகவோ இருப்பவர் பெயரளவில் அரச பதவியை வகிக்கிறாரே யொழிய நேரடியாக ஆட்சி செய்வதில்லை. அங்கு எல்லா அதிகாரங்களும் பாராளு மன்றத்தையும் ஆளும் கட்சியின் அமைச்சர் குழுவை யும் சார்ந்ததாகும். இக்காரணத்தினால் பிரித்தானிய அரசி இன்று '' வரம்படை முடியாட்சி'' - நடத்துவதாகக் குறிப்பிடுவது வழக்கம்.
இது இப்படியிருக்க இனி பிரித்தானிய பொது நல் வாயம் உருவாகிய வரலாற்றையும் பிரித்தானியா வின் குடியேற்ற நாடுகள் சுதந்திரம் பெற்ற வரலாற் றையும் நோக்குவோம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரித்தானியா உலகெங்கும் பரந்த ஒரு பேரரசை யுடையதாயிருந் தது. அப்பேரரசில் கனடா, அவுஸ்திரேலியா, இந்தியா முதலிய பல பெரிய நாடுகளும் ஏராளமான சிறு நாடுகளும் அடங்கியிருந்தன. அவற்றில் சில பதினெட் டாம் நூற்றாண்டில் அமெரிக்கக் குடியேற்றங்கள் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றதை வழி காட்டியாகக் கொண்டு தமக்கும் சுதந்திரம் வேண்டு

எட்டாந்தரம்
199
மெனக் கோரிக்கை விடுத்தன. இவ்வாறு கனடாவே முதல் முதல் கிளர்ச்சி செய்தது . அங்கு 1837-38 காலத்தில் பிரான்சியரும் பிரித்தானியரும் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தபோது பிரித்தானியா அதை அடக்கிவிட்டது. ஆயினும் அது கனடாவின் உள் நாட்டு நிலைமையை ஆராய்வதற்கு டேர்ஹாம் என்பவர் தலைமையில் ஒரு விசாரணைக்குழுவை நியமித்தது. அக்குழுவினர் கனடாவுக்குப் பொறுப்பாட்சி வழங்கப் பட வேண்டும் எனவும் பிரித்தானிய பே ர ர சின் கீழுள்ள தகுதியுடைய ஏனைய நாடுகளுக்கும் சுதந்திர மான் ஆட்சியுரிமை வழங்கப்படவேண்டும் எனவும் சிபார்சு செய்தனர், அ த ற் கி ண ங் க 1840-இல் கனடாவுக்கு உள் நாட்டு விவகாரங்களில் சுதந்திரம் வழங்கப்பட்டு இறுதியில் 1867-இல் பிரித்தானிய வடஅமெரிக்கச் சட்டத்தின் மூலம் 2 டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட்டது. இவ்வாறு கனடா சுதந் திரம் பெற்றதைத் தொடர்ந்து பிரித்தானியாவின் ஏனைய குடியேற்றங்களுக்கும் பொறுப்பாட்சியும் சுதந் திரமும் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டன. இவ்விதமாக அவுஸ்திரேலியாவின் மாகா ணங் கள் 187 2 இல் பொறுப்பாட்சி யுரிமையைப் பெற்றுப் பின் 1900 இல் ஒன்றாயிணைந்து அவுஸ்த்திரேலியா என்னும் டொமினியன் நாடாகின. அதேபோல் தென்னா பிரிக்காவின் பகுதிகளாயிருந்த ஓறேஞ் சுதந்திர நாடு, திறான்.ஸ்வால் என்னும் இரண்டும் 1907-இல் பொறுப் பாட்சியைப் பெற்ற பின்னர் 1909 இல் நன் நம்பிக்கை முனை, நேற்றால் என்பவற்றோடு இணைந்து தென்னா பிரிக்காவாக உருவாகின. நியூசீலந்தும் அதே விதமாக 1856 இல் பொறுப்பாட்சியைப் பெற்று 1907 இல் டொமினியன் அந்தஸ்து நிலையை அடைந்தது.
மேற்குறிப்பிட்ட நாடுகளெல்லாம் தொடக்கத்தில் உள்நாட்டு விடயங்களிலும், படிப்படியாக வெளி நாட்டு விடயங்களிலும் பூரண சுதந்திரம் பெற்றுப் பிரித்தானியாவுக்கு ஒப்பான நிலையை அடைந்த பின் னரும் " பிரித்தானிய பொதுநலவாயம்' எனப்படும் கூட்டின் கீழேயே இருந்து வருகின்றன. (தென்னாபிரிக்காவும்

Page 104
200
தற்காலச் சரித்திரம் பர்மாவும் மட்டும் விலகிவிட்டன). பொது நலவாயம் என்ற அமைப்பு பிரித்தானியாவின் குடியேற்ற நாடு? களையும் அதன் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற நாடுகளையும் அங்கத்தவர்களாகக் கொண்டுள்ளது. அதில் அங்கத்தவர்களாயுள்ள சுதந்திர நாடுகள் பிரித் தானியாவுடன் சமயங்காளிகளாயுள்ளன. 19 26 இல் 4.சால்பர் என்பவர் தலைமையிலான ஒருகுழு டொமினியன் என்னும் ஆள் நிலப்பத அந்தஸ்தை விளக்கும் ஒரு அறிக்கையில் டொமினியன்கள் உ ள் ந ா ட் டு வெளி நாட்டு விடயங்களில் பூரண சுதந்திரமுள்ளவையென் றும் அவை பிரித்தானிய பொது நலவாயத்தில் தம்மிட் டமாகச் சேர்ந்துள்ளனவென்றும் தெரிவித்தது. இதற் குப் பின்னர் 11931 இல் நிறைவேற்றப்பட்ட வெஸ்ற் மினிஸ்ரர் சட்டம் டொமினியன் அந்தஸ்தைப் பெற்ற நாடுகள் எல்லா உள் நாட்டு வெளிநாட்டு விடயங்களி ., லும் பூரண சுதந்திரமுடையவை எனப் பிரித்தானிய பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டிலிருந்து அவற்றுக்கு விடுதலையளித்தது. எனவே இதற்குப் பின்னர் பிரித் தானிய  ேப ர ர சு மறைந்துபோக அதனிடத்தில் * முடிக்கு'' மதிப்பளிக்கும் புதிய பொது நலவாயம் உருவாகியது.
1931 ஆம் ஆண்டின் பின்னர் பல நாடுகள் பிரித் தானியரின் ஆட்சியிலிருந்து விடுதலை பெ ற் ற ன. இந்தியா, இலங்கை, பர்மா ஆகியனவும் அவற்றுள் அடங்கும். இந்தியா நீண்டகாலக் கிளர்ச்சியின் பின் னர் 1947 இல் சுதந்திரமடைந்தது. அப்போது இந்தி யாவின் ஒரு பகுதியை உள்ளடக்கியதாகப் பாகிஸ்த் தான் என்னும் ஒருபுதிய சுதந்திர நாடும் உருவாகியது. அதைத் தொடர்ந்து 1948 இல் பர்மாவும், இலங் கையும் சுதந்திரம் பெற்றன. அண்மைக் காலத்தில் பல ஆபிரிக்க நாடுகளும் சுதந்திரம் பெற்றுள்ளன. கானா, 1957 ஆம் ஆண்டிலும், நைசீரியா 1960 இலும், கென்யா தன்சானியா என்பன 1963 இலும், சாம் பியா 1964 இலும் சுதந்திரம் பெற்றன, இவ்வாறு அண்மைக் காலத்தில் சுதந்திரம் பெற்ற நாடுகளில் பர்மாமட்டும் பிரித்தானிய பொதுநலவாயத்தை விட்டு

எட்டாந்தரம்
201
விலகிவிட்டது. இலங்கையுட்பட ஏனைய நா டு க ள் பொதுநலவாயத்தில் தொடர்ந் து அங்கத்தினரா யிருந்து வருகின் றன .
பொது நலவாயம் பலம்மிக்க ஒரு சர்வதேச அமைப் பாயுள்ளது. அது பொரு ளாதாரம், கல்வி, வர்த்த கம் முதலிய விடயங்களில் சர்வதேச கூட்டுறவுக்கும் ஒத்துழைப்புக்கும் உதவுகிறது. அ த் து ட ன் உலக சமாதானத்துக்கும் அது அரண்போல உள்ளது.
ܟ݂ ܚܲܕ݂ ܗ ܬ ܗ
பயிற்சிகள் மக்கள் பட்டயத்தை யார் எப்போது வெளியிட்டனர் ? 2 டேர்ஹாம் அறிக்கையில் கூறப்பட்டவை யாவை ?
டொமினியன் அந்தஸ்து என்றால் என்ன ? பொது நலவாயத்தின் பயன் என்ன ? 5. குறிப்பெழுதுக:- வெஸ்ற் மினிஸ்ரர் சட்டம், பால் பர்
அறிக்கை.
பாடம் 14. இந்தியா சுதந்திரமடைதல் 1857-59 காலத்தில் ஏற்பட்ட சிப்பாய்க் கல கத்தின் பின்னர் இந்தியா வர்த்தக சங்கத்தின் ஆட் சியிலிருந்து நீக்கப்பட்டுப் பிரித்தானியாவின் நேரடி யான ஆட்சியின் கீழ் க் கொண்டுவரப்பட்டதைப் பற்றி முன்னொரு பாடத்தில் படித்திருக்கிறீர்களல் லவா ? இவ்வாறு இந்தியா பிரித்தானியாவின் நேர டியான பாலனத்தின் கீழ் வந்ததன்மேல் பிரித்தா னிய அரசியாகிய விக்ரோறியா மகாராணி இந்தி யாவின் மகாராணியாகப் பி ர க ட ன ம் செய்யப்பட் டார். அதே சமயம் இந்தியாவில் கல்வி, போக்கு வரத்து, தபால் தந்திச் சேவை முதலியனவும் ஒர ளவு வேகமாக விருத்தியடைந்தன. அக்காலத்தில்
26

Page 105
20 2
தற்காலச் சரித்திரம்
ஆங்கிலக் க ல் வி யு ம் விருத்தியடைந்திருந்தபடியால் மத்திய வகுப்பினர் உருவாகவும் அரசியல் கிளர்ச்சி செய்யவும் வாய்ப்பு ஏற்பட்டது. மத்திய வகுப்பி னர் மேற்கு நாட்டுச் சுதந்திரப் போராட்டங்களை வழி நடத்திய கவூர், மசினி முதலியவர்களை வழிகாட் டிகளாகக் கொண்டு தாமும் சுதந்திரம் பெற விரும் பினர். அத்தகைய உணர்ச்சிக்கு அக்காலப் பத்திரி கைகளும், ஆரியசமாசம், பிரமசமா சம் முதலிய சமய இயக் கங்களும் தூண்டுகோலாயிருந்தன. அவை இந்துக் கலை, கலாச்சார மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதில் முனைகின்றன. இப்படியாகப் பல்வேறு வழிகளில்' விழிப்புற்ற இந்தியர், பிரித்தானியரின் ஆட்சியினால் தான் தமது கலை, பண்பாடு எ ன் ப ன தாழ்த்தப் பட்டன என உணர்ந்தனர். இதனால் பிரித்தானிய எதிர்ப்பு உணர்ச்சி படிப்படியாக அதிகரித்தது. அதன் பிரதிபலிப்பாக 1885 இல் இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப்பட்டது. அது அரசியல் சீர்திருத்தங்களுக்காக வும், சமூக பொருளாதார அபிவிருத்திக்காகவும் பாடுபட்டது .
இவ்வாறு இந்திய தேசிய காங்கிரஸ் விடுதலைப் போராட்டத்துக்குத் தன்னைத் தயார்செய்து கொண் டிருந்த காலத்தில், தி ல க ர், லாலாலஜபதிராய், கோகலே முதலிய தலைவர்கள் தமது பேச்சினாலும், எ ழு த் தி னாலும் மக்கள் மனதைச் சுதந்திரப் பாதையில் திருப் பினர். இதன் பின்னர் 1905 இல் ஆள்பதி கேர்சான். வங்காளத்தைப் பிரித்து இரு மாகாணங்களாக்கிய தனால் பிரித்தானிய எதிர்ப்பும் பிரித்தானிய பொருட் களைப் பகிஷ்கரிக்கும் சுதேசி இயக்கமும் உருவாகின. இவ்விதம் இந்தியாவில் 1பிரித்தானிய எதிர்ப்பு பலமடைந்திருந்த காலத்தில் மின்ரோ எ ன் ப வ ர் இ ந் தி ய ா வின் ஆள்பதியாயிருந்த சமயம் மோடி லி என்னும் இந்திய நாட்டுச் செய லா ளர் இந்தியரின் அதிருப்தியைப் போக்க எண்ணி 1909 இல் அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். அதன் விளை வாகத் தேர்தல் முறை ஏற்றுக்கொள்ளப்பட்ட தோடு சட்ட சபை அங்கத்தினரின் தொகையும் அதி

எட்டாந்தரம்
203 கரிக்கப்பட்டது. ஆயினும் அவற்றினால் தலைவர்கள் , சிருப்தியடையவில்லை. எனவே சீர் திருத் தக் கிளர்ச்
சிகள் மேலும் தொடரப்பட்டன.
இதன் பின்னர் இந்திய தேசிய காங்கிரசும், மு 10 லிம் லீக் என்னும் தாபனமும் கூட்டாகச் சுயாட்சிக் கோரிக்கையை விடுத்தன. ஆயினும் அதற்கு முன்னர் முதலாம் உலகப்போர் தொடங்கியமையால் பிரித்தா னியா எதுவும் செய்யவில்லை, பின்னர் உலகப்போர் முடிந்தவுடன்' 1919 இல் புதிய சீர் திருத்தங்கள் அமு லாக்கப்பட்டன. அவை மொன்ரேக் செம்ஸ் போட் சீர்திருத் தங்கள் எனப்படும். அவற்றின்படி மாகாண அரசாங் கங்கள் கல்வி, சுகாதாரம், பொதுவேலை முதலிய விடயங்களில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றன. அத் துடன் இந்திய சட்டசபை ஒன்றும் நிறுவப்பட்டது. அதில் இந்தியர் பெரும்பான்மையினராயிருந்தனர். ஆயினும் இச்சீர்திருத்தங்களும் மக்களுக்குத் திருப்தி யளிக்கவில்லை. இதன் பின்னர் அமிர்தசரஸ்' என்னு மிடத்தில் ஒரு புதிய சட்டத்தை ஆட்சேபிப்பதற்காக மக்கள் கூடியிருந்தபோது இராணுவம் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததினால் 400 பேர் வரை இறந்தனர். 'அமிர்தசரஸ் படுகொலை' என்றும் இச் செ ய ல் மகாத்மா காந்தியையும் விடுதலைப் போராட்டத்தில் குதிக்கச் செய்தது. ஆனால் அவர் பலாத்கார வழி களைப் பின்பற்றாமல் அகிம்சை வழியைப் பின்பற்றி னார். " சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை முதலியன அவரது ஆயுதங்களாயிருந்தன .
மகாத்மாகாந்தி 19 2 2 இல் சட்ட மறுப்பு இயக் கத்தை ஆரம்பித்து உப்புச் சத்தியாக்கிரகம் செய்த தினால் சிறையிலிடப்பட்டார். ஆயினும் 1924-இல் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் 1927 இல் சைமன் என்பார் இந்தியப் பிரச்சினையைப் பற்றி ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்ததன்  ேம ல் 19 30, 1931, 1932 என்னும் ஆண்டுகளில் மூன்று

Page 106
2 04
தற்காலச் சரித்திரம்
காந்திஜி
நேருஜி வட்டமேசை மாநாடுகள் நடந்தன. அவை இந்தி யரின் பிரச்சினையைத் தீர்க்கவில்லை; எனினும் அம் மா நாட்டு முடிவுகளின் அடிப்படையில் 1935-இல் இந்தியச் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அது மாகாணங்களையும் சுதேச இராச்சியங்களையும் உண் டாக்கிய இணைப்பு அரசு முறையைப் பிரகடனப்படுத் தியது. அதன்படி பாதுகாப்பு வெளிநாட்டு விவகாரம் என்பவற்றைத் தவிர ஏனைய விடயங்கள் மத்திய அரசாங்கத்திடம் விடப்பட்டன. அதேசமயம் மாகா ணங்களும் சுதந்திரம் பெற்றன. ஆயினும் 1935 ஆம் ஆண்டுச் சீர்திருத்தங்களை மக்கள் வரவேற்கவில்லை. அதே சமயம் சுதேச இராச்சியங்களும் அதை எதிர்த் தன. இவ்வாறான நிலைமையில் இரண்டாம் உலகப் போரும் ஆரம்பமாகியதனால் இந்தியப் பிரச்சினை ஒத்திப் போடப்பட்டது. பின்னர் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் மொகமட் அலி ஜின்னா வைத் தலைவராகக் கொண்ட முஸ்லிம் லீக் முஸ்லிம் களுக்குத் தனியரசு வேண்டுமென ஒரு கோரிக்கை

எட்டாந்தரம்
205 விட்டது. இதனால் விடுதலைப் போராட்டத்தில் சிறிது த.- ங்கல் ஏற்பட்டது.
இது இவ்வாறாக உலகப் போர்க்காலத்தில் வங்கா ளத்துச் சிங்கமான நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ! யப்பானியருடன் தொடர்பு கொண்டு அவர்களுடன் இணைந்து பிரித்தானியருக் கெதிராகப் போரிட்டார். ஆயினும் பர்மாவை வென்ற பின்னர் யப்பானின் முன்னேற்றம் தடைப்பட்டதனால் அவரது திட்டம் நிறைவேறவில்லை. இவ்வாறு உலகப்போர் நடந்து கொண்டிருந்தகாலத்தில் 1942-இல் இந்திய தேசிய காங்கிரஸ் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கி யது , அதன் விளைவாக நாடுமுழுவதும் குழப்பங்கள் ஏற்பட்டதனால் அரசாங்கம் காந்தி, நேரு முதலிய தலைவர்களைச் சிறையிலிட்டது.
பின் உலகப்போர் முடிவில் பிரித்தானியாவில் அட்லிபிரபு தலைமையில் தொழிற்கட்சி பதவிக்கு வந்திருந்தது. அட்லி பிரபு இந்திய நிலைமைகளை ஆராய ஸ்ரா போட் கிறிப்ஸ் என்ப வர் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை நியமித் தது. அக்குழு தேசிய காங்கிரசுக்கும் முஸ் லிம் லீக்கிற்கும் இடை யி ல் இணக்கத்தை ஏற்படுத்த முயன்று தோல்வியடைந்தது. அந்நிலையில் அட்லி என்ன நேரினும் 1947 இல் இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கப்படும் என அறிவித்தார். அதன் பின்னர் இந்திய அரசுப் பிரதிநிதியாக வந்த மவுண்பேட்டன் பிரபுவின் முயற்சியினாலும் இராசகோபாலாச்சாரி யாரின் ஆதரவினாலும் முஸ்லிம்களுக்குத் தனி இராச்சி சியம் அமைக்கும் திட்டம் ஏ ற் று க் கொ ள் ள ப் பட்டது. அதற்கிணங்க 1947 - இல் இந்தியா பாகிஸ் தான் என இரு சுதந்திர நாடுகள் உருவாக்கப்பட்டன. அவற்றில் இந்தியாவின் முதலாவது பி ர த ம ர ர க ஜவகர்லால் நேரு பதவியேற்றார். அதே சமயம் பாகிஸ் தானின் தந்தையாகிய ஜின் னா அதன் முதலாவது ஆள்பதி நாயகமாகப் பதவியேற்றார், அவர்கள் இரு

Page 107
206
தற்காலச் சரித்திரம்
*பாப்கார்
பிட்ய்யசபா கட்டப்பம்
ஜின்னா
ராஜாஜி வரும் அஹிம்சா மூர்த்தியாம் அண்ணல் காந்தியும் இன்று இல்லை. ஆயினும் அவர்களின் பரிசுத்தமான நினைவு - ஆத்ம சக்தி - உலகை நன்னெறிக்கு இட்டுச் செல்லும். அப்புனிதர்களின் நினைவு உலக மக்களின் 4மனதை விட்டு என்றும் அகலாது.
பயிற்சிகள்
சிப்பாய்க் கலகத்தின் பின்னர் இந்தியாவில் நிலவிய ஆட்சி
முறை யாது ? 2. 1908-9 கால சீர்திருத்தங்களின் அம்சங்கள் யாவை ? 3. 1935 இல் இந்திய அரசியலமைப்பில் செய்யப்பட்ட மாற் -
றங்கள் எவை ? 4: மகாத்மா எவ் வழியில் போராடினார்? ஏன் ? 5. சிறு குறிப் பெழுது க:- (1) அமிர்தசரஸ் படுகொலை,
(2) நேதாஜி, (3) ஜின்னா.

மூன்றாந் தவணை.
மாதிரி வினாப்பத்திரம். (1) பின்வருவனவற்றில் 'அ' பிரிவிலுள்ளவற்றுக்குப் பொருத்த
மான வற்றை 'ஆ' பிரிவில் தெரிந்து வாக்கியங்களைப் பூர்த் தி செய்க.
'அ'
4,
1.
மகாவமிசத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்
மக்கலம் சீர்திருத்தத்தின் பின்னர் ) 3. முதலாம் உலகப்போர்
1915 சிங்கள - முஸ்லிம் கலகத்தின் போது 5
இலங்கைத் தேசீய காங்கிரஸ் 6.
19 24 இல் சட்டசபை அங்கத்தினர் தொகை
சர்வசன வாக்குரிமை 8. ஏழு நிர்வாகசபை ஆட்சியில் 9,
சோல்பரி விசாரணைக் குழுவினர் 10.
வேர்செயில்ஸ் உடன்படிக்கை 11. உலக அமைதியை ஏற்படுத்துவதில் 12, 1917 இல் 13. 'லெனினுக்குப் பின்னர் 14.
சர்வதேச பொருளாதார நெருக்கடி 15. சுடேற்றன்லாந்து
» 27 S .
8.
1, 1914-18 இல் நடந்தது : 2. 1919 இல் நிறுவப்பட்டது ,
1944 இல் இங்கு வந்தனர்; 'உபாம்' என்பவராகும். டொனமூர்க் குழுவினரால் சிபார்சு செய்யப்பட்டது,
சட்டசபையில் 21 பேர் அங்கத்தவராயிருந்தனர். 7. கூட்டுப்பொறுப்பு இருக்கவில்லை,
1919 இல் ஜேர்மனியுடன் செய்யப்பட்டது. 9.
49 ஆக அதிகரித்தது.
சார்மேஸ் இலங்கையின் தேசாதிபதியாயிருந்தார், 11. ஸ்ராலின் பதவிக்கு வந்தார். 1 2. 19 29 இல் ஏற்பட்டது. 13. செக்கோசிலோவாக்கியாவின் பகுதியாயிருந்தது. 14. சர்வதேச சங்கம் தோல்வியடைந்தது. . 15 இரசியப் புரட்சி ஏற்பட்டது. (2)
மேல்வரும் வாக்கியங்களை அடைப்புக்குறிக்குள் இருப்பவற்றில்
பொருத்தமானவற்றைத் தெரிந்து பூர்த்தி செய்க. 1. படித்த இலங்கையருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது
(1911, 1921) இல் ஆகும்: 1915 கலவரங்களின் பின்னர் (சேர் பொன் இராமநாதன், அருணாசலம்) இங்கிலாந்து சென்றார்.

Page 108
208
தற்காலச் சரித்திரம்
6.
3.
மானிங்" காலத்தில் (ஒருமுறை, இருமுறை) சட்டசபை திருத்தி அமைக்கப்பட்டது. டொனமூர் திட்டத்தின் கீழ் நியமன அங்கத்தவர் (3, 5, 8) பேர் இருந்தனர். முதலாவது அரசாங்கசபைத் தலைவர் (D. B. ஜயதிலக, E. W. பெரேரா) ஆகும். சோல்பரித் திட்டத்தின்படி பிரதிநிதிகள் சபையில் (95, 105, 98) பேர் இருந்தனர்.. பிரான் சிஸ் பேடினந்து ஒரு (ஆஸ்திரியனால், சேபியனால்
சுட்டுக்கொல்லப்பட்டான். 8.
அகழிப்போர் (முதலாம், இரண்டாம் ) உலகப் போரில்
நடந்தது. 9. வூட்றோ வில்சன் (பிரான் சிய, அமெரிக்க, பிரித்தானிய)
தலைவராகும். 10. ஹேக் என்னுமிடம் (ஒல்லாந்தில், பெல்சியத்தில்) உள்ளது (3) பின்வருவன சரியாயின் • சரி' எனவும், பிழையாயின் • பிழை'
எனவும் எழுதுக. 1. 1948 இல் பர்மா சுதந்திரம் அடைந்தது. 4' 2. கனடா 1867 இல் சுதந்திரம் அடைந்தது. 3. வெஸ்ற் மினிஸ்ரர் சட்டம் 1931 இல் நிறைவேற்றப்
பட்டது: * சர்வதேச நீதிமன்றம் ஹேக் நகரில் உள்ளது..
ஹிரோசிமா நாகசாகி என்னுமிடங்கள் சீனாவிலுள்ளன." 6. பேள் ஹாபரில் அமெரிக்கா அணுக்குண்டை வீசியது."
மொன் ற் கொமரி ஆபிரிக்காவில் ஜேர்மனியரைத் தோற்
கடித்தார். 8.
ஸ்ராலின் ட்றொஸ்கியை நாடுகடத்தினான். 9. நாசிசம் இத்தாலியில் உருவாகியது. 10, முதலாம் உலகப்போரில் யப்பான் ஜேர்மனியைஎதிர்த்தது.
பின்வருவனவற்றில் இரண்டு சரித்திரத் தொடர்புடையவை.
யொருத்தமில்லாததைக் கீறுக: 1. சேர் D. B. ஜயதிலக, அரசாங்கசபை மக்கலம்.
ஜேர்மனி, வேர்செயில்ஸ் இங்கிலாந்து . 3, போல் செவிக்கர், கரென்சிக், லெனின், 4. ரூஸ்வெல்ட், ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ்
அத்திலாந்திக் பட்டயம், சர்வதேசசங்கம், ஐ நா தாபனம் டேர்ஹாம் அறிக்கை, அவுஸ்திரேலியா, கனடா 14 அம்சத்திட்டம் சம்பர்லேன், வில்சன். 8, பிரான்ஸ் பேடி னந்து, ஆஸ்திரியா, பிறசியா.
இரசியா, மிக்காடோ, சார் 10, யப்பான், திறந்தகதவுக்கொள்கை, சீனா,
- ல் 3' * 5 6 -


Page 109
யாழ்ப்பாணப்பகுதி
ரீசுப்பிர மலரி 235, கே, கே. காழ்ப்ப

விற்பனை யாவர் யபுத்தகசாலை எஸ், வீதி ஒண ம்