கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொலைக்கல்வி

Page 1
கலா
1ਘ
தொலை
ਰੂਹ ਤੇ ?

க் கல்வி
நிதி. ஆ.கந்தையா !

Page 2
கான்கள்


Page 3


Page 4

தொலைக் கல்வி
கலாநிதி ஆ. கந்தையா (எம். ஏ. (சென்னை), பிஎச். டி. (இலண்டன்)
கல்விச் சேவைக் குழு உறுப்பினர்
கல்வி அமைச்சு
சிரேட்ட விரிவுரையாளர் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் நா வலை, நுகேகொடை
இலங்கை
1988

Page 5
முதற் பதிப்பு : சனவரி 1988 உரிமை ஆசிரியருக்கு விலை ரூபா 40/-
ஆசிரியரின் மற்றைய நூல்கள் : திருக்கேதீச்சரம் மலரும் மணமும் இலக்கிய வளம் கற்பனை வளம் சிந்தனை வளம் உள்ளத்தனையது உயர்வு தந்தையின் பரிசு செவ்வேள்
ஞானச் சுடர் Cult and worship of Murukan
Muruka Worship and the concept of Bhakti Mystic Love
Copy right reserved
DISTANCE EDUCATION
by Dr. A. Kandiah
First Edition, January 1988
Price Rs. 40/- Printed at : New Leela Press,
Colombo - 12

முன்னுரை
வசதிபடைத்தவர்களுக்கு மட்டும் உயர் கல்வி உரியதன்று; மக்கள் யாவருக்கும் உரியது. எனவே மக்களின் பூரணமான விருத்திக்கும் தேவைக்கும் ஏற்ப உயர் கல்வி வாய்ப்பை வழங்கு வது ஓர் அரசின் கடமையும் பொறுப்புமாகும். அத்துடன், கல்வியானது குழந்தைப் பருவம் தொடக்கம் வாழ்வு முடியும் வரையும் தொடர்பான செயற்பாடாக உள்ளது என்பதும் அண்மைக் காலத்தில் வளர்ந்து வரும் நம்பிக்கையாகும்.
பல நாடுகளிலே அண்மைக் காலத்தில், உயர் கல்வியிலே ஏற்பட்டுள்ள பெருக்கமும் விரிவாக்கமும் மரபுவழிப் பல்கலைக்கழ கங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் மேலாகத் தொலைக் கல்வி நிறுவனங்களைத் தோற்றுவிக்க வழி செய்தன. வேலையில் அமர்ந்துள்ளோருக்கும் உயர் கல்வியைப் பெறுதற்கான வாய்ப்பை இழந்தோருக்கும், 'கல்வி கல்விக்காகவே' என்ற கொள்கையினை உடையோருக்கும் தொலைக் கல்வி ஒரு வரப்பிர சாதம் ஆகும். எனவே தொலைக் கல்வி முறை உலக்ளாவிய முறையில் விரிவாக்கத்தைப் பெற்றுக் கல்வியாளர்களின் கவ னத்தை ஈர்த்து வருகின்றது.
1980 ஆம் ஆண்டில் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் தாபிக்கப்பட்டது. அது ஒரு தொலைக் கல்வி நிறுவனமாகும். இலங்கையிற் சிறப்பாகத் தாபிக்கப்பட்ட, கல்வித் துறையிலே சுயாதீனமான தேசிய பல்கலைக்கழகமாக இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் திகழ்கின்றது.
தொலைக் கல்வி இலங்கைக்குப் புதியது. அதன் கருப் படிவத்தைப் பலர் இன்னும் அறியாதுள்ளனர். தொலைக் கல்வி நிறுவனத்தின் கட்டமைப்பு, அனுமதிக் கொள்கை, பயிற்சிநெறி கள், கற்பித்தல் முறைகள், கற்கும் முறைகள் என்பன மரபு வழிப் பல்கலைக்கழகங்களிலுள்ளவற்றிலும் வேறு பட் ட  ைவ . எனவே, இப்புதிய கல்வி முறைபற்றி இரண்டு நூல்களை எழுதி வெளியிடத் துணிந்தேன். முதலிலே * தொ லை க் க ல் வி ?' ( Distance Enducation) என்ற நூலையும், அதைத் தொடர்ந்து ' தொலைக் கற்பித்தல் ' ( Distance Teaching) என்ற இன்னொரு நூலையும் வெளியிட முடிவு செய்தேன். அதற்கு அமையத்  ெத ா லை க் க ல் வி என்ற நூல் மு த லி ல் வெளிவருகின்றது.  ெத ா லை க் க ற் பி த் த ல் என்ற மற்றைய நூல் விரைவில் வெளிவரும்.

Page 6
* தொலைக் கல்வி ' பற்றி ஆங்கிலத்திற் பல நூல்கள் வெளி வந்துள்ளன ; இன்னும் வெளிவந்து கொன்டிருக்கின்றன. தொலைக் கல்வி பற்றிய செய்தி முடங்கல்களும், செய்திச் சுருள்களும், அறிக்கைகளும் ஆங்கிலத்திலேயே வெளிவரக் காண்கின்றோம். ஆனால் தொலைக் கல்வி பற்றிய நூல் எதுவும் இதுவரை தமிழ் மொழியில் வெளிவரவில்லை, இலங்கையில் மட்டுமன்று. தமிழ் நாட்டிலும் வெளிவரவில்லை என்றே எண்ணுகிறேன். எனவே தொலைக் கல்வி என்ற இந்நூல் முதன்முதல் தமிழ் மொழியில் வெளிவருவது பலருக்குப் பயனுள்ளதாக இருக்குமென நம்புகிறேன்.
சிங்கள மொழியிலும் இதுவரை தொலைக் கல்விபற்றிய நூல் எதுவும் தெளிவரவில்லை.
1984 - 1985 ஆம் ஆண்டுகளிற் பொது நல நாடுகளின் பல்கலைக்கழகங்கள் ஆணைக்குழு, பிரித்தானியா திறந்த பல்கலைக் கழகத்திலே ஆய்வு மேற்கொள்வதற்குப் பு ல  ைம ப் ப ரி சி ல் ஒன்றை வழங்கியது . மேலும் பாகிஸ் தான், இந்தியா, தாய் லாந்து ஆகிய நாடுகளிலுள்ள திறந்த பல்கலைக்கழகங்களைப் பார்வையிடுவதற்கு யுனெஸ்கோ நிறுவனம் புலமைப் பரிசில் ஒன்றை வழங்கியது. பிரித்தானியா திறந்த பல்கலைக்கழகத்திலே பத்து மாதங்களும் ஏனைய மூன்று பல்கலைக்கழகங்களிலே பல வாரங்களும் தொலைக் கல்வி பற்றிப் படிப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. அவ்வாய்ப்புக்கள் இந்நூல்களை எழுதுவதற்கு வழி செய்தன.
இந்நூலின் பிரதிகளை ஒப்புநோக்கி உதவிய றோயல் கல்லூரி ஆசிரியர் திரு. மா. கணபதிப்பிள்ளை அவர்களுக்கு எனது நன்றி.
குறுகிய காலத்திற் சிறந்த முறையிலே இந்நூலை அச்சேற்றி உதவிய நியூ லீலா அச்சகத்தின் முகாமையாளர் எனது மாணவன் திரு. சி. தேசபந்து அவர்களுக்கு எனது நெஞ்சு நிறைந்த வாழ்த்துக்கள்.
ஆ. கந்தையா இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம், நாவலை, நுகேகொடை,
இலங்கை, 1, 2. 1988,

நற்றுணையாவது நமச்சிவாயவே

Page 7
உலகளாவிய முறையிலே தொலைக் கற்றல் நிறுவனங்கள் பரவியுள்ளதை இப்படம் காண்பிக்கின்றது.
- //
இ 4
த20
இ13
ஓ 25
9- 10
C)

தொலைக் கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தும் 26 நாடுகளிலுள்ள முக்கியமான நிறுவனங்கள்.
அவை எதிர்ப்பக்கத்திலுள்ள உலகப் படத்திலே இலக்கமிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளன.
1 ஞாபகார்த்தப் பல்கலைக்கழகம், நியூபவுண்லாந்து 15 பிரித்தானியா திறந்த பல்கலைக்கழகம், 2 ரெலி பல்கலைக்கழகம், கியூபெக்
16 மத்திய தேசிய தொலைக் கற்பித்தற் பல்கலைக்கழகம்,
3 பேரரசுக் கல்லூரி, நியூயோர்க்
பிரான்சு.
4 அதபாஸ்கா பல்கலைக்கழகம், அல்பேர்ட்டா
17 பேர்ண் பல்கலைக்கழகம், ஜேர்மன் சமஷ்டிக்
5 கடற்கரையோரச் சமூகக் கல்லூரி, கலிபோணியா
குடியரசு
6 மத்திய அமெரிக்கா பல்கலைக்கழகம்
18 தொலைக்காட்சி விவசாய உயர் பாடசாலை, வார்சோ
7 தொலைக் கல்விக்கான அரசுப் பல்கலைக்கழகம்,
19 எல்லா மாநிலங்களுக்குமான அஞ்சல்வழிப்
கொஸ்ரா றிக்கா.
பல்தொழினுட்ப நிறுவகம் , மொஸ்கோ
8 தேசிய திறந்த பல்கலைக்கழகம், வெனிசூலா
20 ககூன் அஞ்சல்வழி உயர் பாடசாலை,
9 தொலைக்காட்சிக் கல்வி நிகழ்ச்சித்திட்டம்,
ரோக்கியோ
ஐவரிக் கோஸ்ற் 10 அஞ்சல்வழி, தொலைக் கற்கைகள் அலகு,
21 நியூ இங்கிலாந்து பல்கலைக்கழகம், ஆமிடேல்
லாகோஸ் பல்கலைக்கழகம், நைஜீரியா
22 மக்குவறி பல்கலைக்கழகம், சிட்னி
11 ஒவ்வொரு மனிதனதும் பல்கலைக்கழகம்,
23 இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம், இலங்கை
ஸ்ரெயில்
24 சுகொத்தாய் தமத்திர திறந்த பல்கலைக்கழகம்,
இலவசப் பல்கலைக்கழகம், ஈரான்
தாய்லாந்து
13 அல்லமா இக்பால் திறந்த பல்கலைக்கழகம்,
25 இந்திரா காந்தி தேசிய பல்கலைக்கழகம்,
பாகிஸ்தான் 14 தொலைக் கல்வித் தேசிய பல்கலைக்கழகம்,
நியூ டெல்கி
ஸ்பெயின்
26 ஆந்திரப் பிரதேசத் திறந்த பல்கலைக்கழகம்
12

Page 8

உள்ளடக்கம்
பக்கம்
1 அறிமுகம்
01
2 தொலைக் கல்வி நிறுவனங்கள்
09
3 திறந்த பல்கலைக்கழகத்தின் 'திறந்த பான்மை'
27
4 தொலைக் கல்வி மாணவர்
35
5 பிரதேச நிலையங்களும் கற்கை நிலையங்களும்
39
6 நூலக வசதிகள்
45
51
பயிற்சிநெறி அணிகள்
(Course Teams)
8 தொலைவிலிருந்து கற்றல்
9 விளக்கக் குறிப்புக்கள்
71
10 முடிவுரை
77
11 குறிப்புக்கள்
83
12 கலைச் சொற்கள்
89
13 நூற்பெயர்க் கோவை
95
14 அட்டவணைகள்
99

Page 9

அறிமுகம்
1970 ஆம் 1980 ஆம் ஆண்டுகளிலே மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஆசியா ஆகிய நாடுகளிலே தொலைக் கற்பித்தற்கான ஏற்பாடு பெருமளவிலே விரி வடைந்தது. சில நாடுகளில், எடுத்துக்காட்டாக, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிற் பல்கலைக்கழக மட்டத்திலான தொலைக் கற்பித்தல் முறை ஏலவே நீண்ட மரபாக நில வி வ ந் த து. எனினும், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலே இத் தகைய ஏற்பாடு மிகவும் புதியதொன்றாகும்.
உலகிலுள்ள தொலைக் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியும் பல்வேறு காரணங்களாலே பல்வேறு வகையில் வேறுபடுவதா யிற்று. அரசியல் ஆதரவு, தொடர்புச் சாதனங்களின் விரிவாக்க மும் தரமும், மனித வளமும் நிதி நிலையும், தொலைக் கல்வி முறையை எளிதாக்குதலிலே ஏற்பட்ட பிரச்சினை கள் போன்றவை தொலைக் கல்வி நிறுவனங்களின் ஏற்றத்துக்கும் இறக்கத்துக்கும் காரணமாயின. தாய்லாந்து. பாகிஸ்தான், இஸ் ரெயில் ஆகிய நாடுகளிலே தேசிய பல்கலைக்கழகங்கள் தாபிக்கப்பட்டன. அதே நேரத்தில் வேறு நாடுகள் பலவற்றில் வேறுபட்ட முறையிலே இக்கல்வி நிறுவனங்கள் அமைந்தன.
தொலைக் கல்வியின் லரலாறு நீண்டது. இன்று அத்தகைய கல்விக்கான நிறுவனங்கள் உலகம் முழுவதிலும் உள்ளன. அவை பல்வேறு பெயர்களாலே அழைக்கப்படுகின்றன. பிரித்தானியா, இலங்கை, தாய்லாந்து, பாகிஸ் தான், நெதர்லாந்து, ஜேர்மனி,

Page 10
இந்தியா ஆகிய நாடுகளிலுள்ளவை 'திறந்த பல்கலைக்கழகம்' (Open University) என்று பெயரிடப்பட்டுள்ளன. ஈரானிலுள்ள தொலைக் கல்வி நிறுவனம் 'இலவசப் பல்கலைக்கழகம்' (Free University) என்று அழைக்கப்படுகின்றது. இஸ்ரெயிலிலுள்ளது. 'ஒவ்வொரு மனிதனதும் பல்கலைக்கழகம்' ( Everyman's University ) என்ற பெயருடன் உள்ளது. சீனாவில் 'மத்திய ஒலிபரப்பு, ஒளிபரப்புப் பல்கலைக்கழகம்' ( Central Broadcas ting and Television University) என்றும், யப்பானில், 'வான்வழிப் பல்கலைக்கழகம்' (University of the Air) என்றும் அழைக்கப்படுகின்றன. இந்நிறுவனங்க ளுள்ளே பெரிய பிரித்தானியா திறந்த பல்கலைக்கழகம் நல்ல முறையிலே அமைந்து, தொலைக் கல்வி நிறுவனங்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது.!
உலகிலுள்ள தொலைக் கல்வி நிறுவனங்களின் விவரங்களைத் தொகுத்து அளிப்பது கடினமான முயற்சியாகும். ஏனெனில் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலே 30 நிறுவனங்கள் வரை உயர் கல்வியைத் தொலைக் கல்வி முறையிலே வழங்குகின்றன. ஐக்கிய அமெரிக்காவிற் பல நிறுவனங்கள் தொலைக் கற்பித்தற் சாதனங்களை அல்லது தொலைக் கற்பித்தல் முறைகளைப் பயன் படுத்துகின்றன. மேலும் அங்கு அறுபது பல்கலைக்கழகங்கள் வரை தொலைக் கற்பித்தல் துறைகளைக்  ெக ா ண் டு ள் ள ன. இத்துறைகள் அஞ்சல்வழிக் கற்பித்தல் முறையைக் கடைப்பிடிக் கின்றன. இதே போன்ற நிலை இந்தியாவிலும் உளது. இந்தியா விலே இருபத்தைந்துக்கும் அதிகமான பல்கலைக்கழகங்களிலே அஞ்சல்வழிப் பயிற்சிநெறித் துறைகள் அமைந்துள்ளன. 2
கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் கிழக்கு ஜேர்மனியிலும் நன்கு தாபிக்கப்பட்ட முறைமையிற் பரந்தளவிலான தொலைக் கல்வி முறைகள் உண்டு. சோவியத் யூனியனிலுள்ள ஆயிரத் துக்கும் அதிகமான உயர் கல்வி நிறுவனங்கள், தமது பயிற்சி நிகழ்ச் சித்திட்டங்களிலே ஒரு பகுதியையாவது தொலைக் கல்வி வாயி லாகப் போதிக்கின்றன. தெற்கு, மத்திய அமெரிக்காவிலே உயர் கல்வி மட்டத்திலும் பார்க்கக் குறைந்த மட்டத்திலான கல் விக்கே தொலைக் கற்பித்தல் முறைகள் ப ய ன் ப டு த் த ப் ப டு கி ன் ற ன. எனினும், கொஸ்தாரிக்காவிலும் வெனிசூலாவிலும் தேசிய திறந்த பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆர்சென் ரீனா, பொலிவியா, சில்லி, கொலம்பியா, பேரு ஆகிய நாடுகளி லும் பல்கலைக்கழகங்களிலே தொலைக் கற்பித்தல் - துறைகள் இருக்கின்றன.

இதுவரை குறிப்பிடப்படாத சில நாடுகளிற் பின்வரும் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையிலே தனித் தன்மை வாய்ந்தனவாகத் திகழ்கின்றன: ஆசியாவிலே இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் மிக விரிவான முறையிலே தொழினுட் பவியற் பயிற்சிநெறிகளைத் தொலைக் கல்வி முறையிற் கற்பிக் கின்றது. 3 கொரிய வான்வழி அஞ்சல் தொடர்புப் பல்கலைக் கழகம் (The Korea Air Correspondence University) 100,000 இற்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட மிகப் பெரிய தொலைக் கல்விப் பல்கலைகழகமாக விளங்குகின்றது.மலேசியா செயின்ஸ் பல்கலைக்கழகம் ( University Sains Malasiya ) ஒரு விஞ்ஞானப் பல்கலைக்கழகமாக அமைந்து, பல்கலைக்கழகத்துக்கு வெளியான நிகழ்ச்சித்திட்டங்களைத் தயாரித்து வழங்குகின்றது. தனியார் நிறுவனமான கிழக்காசியத் திறந்த கல்லூரிப் பல்கலைக் கழகம் (University of East Asia Open College ) ஏனைய தொலைக் கற்பித்தல் நிறுவனங்களினாலே தயாரிக்கப்பட்ட பயிற்சிநெறி சளைப் பயன்படுத்துகின்றது.
ஆபிரிக்காவில் மிகப் பழமையான தொலைக் கற்பித்தற் பல்கலைக்கழகமான, தென் ஆபிரிக்கப் பல் க லை க் க ழ க ம் (The University of South Africa ) முக்கியமாக அச்சிட்ட சாத னங்களைக் கொண்டு, தொலைக் கற்பித்தலை மேற்கொள்கின் றது. புறம்பான மேற்கு ஆபிரிக்க உயர் கல்விக் கழகம் ஒன்று பெருந் தொகையான கறுப்பு நிற மாணவர்களின் கற்பித்தலுக்கு அச்சிட்ட சாதனங்களை வழங்குகின்றது. சிம்பாப்வேயிலுள்ள விஞ் ஞானம் கற்பித்தல் நிலையம் தயாரித்துள்ள விஞ்ஞானப் பயிற்சி நெறிகள் அந்நாடு முழுவதிலுமுள்ள 650 பாடசாலைகளிலே பயன்படுத்தப்படுகின்றன.
மேலே கூறியவை யாவும், எந்தளவிற்குத் தொலைக் கல்வி முறை, உயர் கல்விக் கற்பித்தலுக்குப் பரந்தளவிலே உலகத்தின் பல்வேறு நாடுகளில் நடைமுறையிலுள்ளன என்பதை இனிது புலப்படுத்துகின்றன.
பெரிய பிரித்தானியாவிலே, திறந்த பல்கலைக்கழகம் மட் டும் உயர் கல்வியைத் தொலைக் கற்பித்தல் மு றை யி லே போதிக்கவில்லை. பர்மிங்காம், சறேய் பல்கலைக்கழகங்களும் டண் டியிலுள்ள கல்விக் கல்லூரியும் தொலைக் கல்வி நிகழ்ச்சித்திட்டங் களை உள்ளடக்கியனவாக இயங்குகின்றன.

Page 11
எ திர்காலத்திலே உலகின் பல்வேறு பகுதிகளிலும் தொலைக் கற்பித்தல் முறை பெருமளவிலே விரிவடையுமென எதிர்பார்க் கப்படுகின்றது. வங்காளம், கொலம்பியா, டென்மார்க்கு. பின் லாந்து, கொங்கொங், இந்தோனேசியா, இத்தாலி, நைஜீரியா, போத்துக்கல், தாய்வான், துருக்கி ஆகிய நாடுகளிலே திறந்த பல்கலைக்கழகங்களைத் தாபித்தல் குறித்து அண்மையில் ஆலோசனை கள் முன்வைக்கப்பட்டு ஆராயப்பட்டுள்ளன.
இதுவரை மேலே குறிப்பிட்ட தொலைக் கல்வி அபிவிருத்தி களிற் பல, அந்தந்த நாட்டின் அரசாங்கத்தாலே உருவாக்கப் பட்டவை அல்லது அரசாங்க ஆதரவைப் பெற்றவை ஆ கு ம். ஒன்று, கல்வியிற் சமவாய்ப்பை எல்லோருக்கும் வழங்குவது அர சாங்கங்களின் கொள்கையாகும். இன்னொன்று, ந ா ட் டி ன் தேவைக்கான மனித வலுவைப் பெற்றுக் கொள்வதும் அரசாங் கங்களின் நோக்கமாகும். ஆகவே, கல்வி வளர்ச்சியிலே அரசாங் கங்கள் அக்கறை காட்டுகின்றன என்பதையே இவை தெளிவு படுத்துகின்றன. இக்கொள்கைகளையும் நோக்கங்களையும் அந்தந்த நிறுவனங்களின் கைந்நூல்கள் அல்லது நிகழ்ச்சித்திட்டங்கள் பற் றிய வெளியீடுகளிலே இனிது கண்டுகொள்ளலாம். எடுத்துக் காட்டாக, இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் கைந்நூலில்,
" " "மாணவர்கள் பாடசாலையை விட்டு விலகிய பின்னர் அவர் களுக்கு இல்லாதிருந்த அல்லது அவர்கள் பெறாதிருந்த வாய்ப்பினை வழங்குவதினால், திறந்த பல்கலைக்கழகம் தான் கவர்ந்து கொண்ட மாணவர்களின் நோக்கில் ஒரு வீட்டுக் கற்கைப் பல்கலைக்கழகமா கவும் பிற்பட்டகால வாய்ப்பினை வழங்கும் ஒரு பல்கலைக்கழக மாகவும் விளங்குகின்றது.”4
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத் திறந்த பல்கலைக்கழக மாணவர் கைந்நூலில்,
“இந்நாட்டிலுள்ள இத்தகைய தனித்தன்மைத்தான கல்வி நிறுவனம் உயர் கல்வியின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக நிறுவப்பட்டதாகும். பொருளாதாரம், சமூக அமைப்பு ஆகிய வற்றிலே பின்தங்கி, நாட்டின் கிராமங்களிலே வாழ்ந்து பல்கலைக் கழகக் கல்வியைப் பெறவேண்டுமென விழைகின்ற மக்களுக்கு, உயர் கல்வியை எளிதாக வழங்கித் தேசிய மட்டத்திலே நிலவு கின்ற கல்வி அறிவுக் குறைவைப் போக்குதலே இந்நிறுவனத்தின் நோக்கமாகும்' • 5 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியப் பணியை மேற்கொண்டுள்ளவர்களும் அரசாங்க உத் தியோகத்தர்களும் மனித வலுப் பயிற்சியையும், தர உயர்ச்சியை யும் பெறுதற்கு உரியவர்களாகப் பல நாடுகளிற் காணப்படுகின்ற னர். பாடசாலையிலே ஆசிரியராக இருந்துகொண்டே கல்விப் பட் டங்களைப் பெறுவதற்கு அல்லது உயர் தொழிலுக்கான தகைமை களை ஈட்டுவதற்குத் தொலைக் கல்வி நிறுவனங்கள் வாய்ப்பை அளிக் கின்றன. பல தொலைக் கல்வி நிறுவனங்களிலே பதிவுசெய்துள்ள, தொழிலில் அமர்ந்துள்ள மாணவர்களில் அதிகமானோர் ஆசிரியர் களாவர். குவிபெக்கிலுள்ள ரெலிப் பல்கலைக்கழகத்திற் பதிவு செய்தவர்களில் 43 % மாணவர் ஆசிரியப் பணி  ெச ய் வோர் ஆவர். சீன மத்திய ஒலிபரப்பு, ஒளிபரப்புப் பல்கலைக்கழகத்திற் பதிவு செய்துள்ளவர்களில் 30% ஆசிரியர்களாவர். டே க் கி ன் பல்கலைக்கழத்தில் 28% ஆசிரியர்கள் உளர். பட்டதாரி உத்தி யோகத்திற்குக் கற்பித்தல் நிறுவனம் தாபிக்கப்பட்டதன் காரண மாகப் பிரித்தானியத் திறந்த பல்கலைக்கழகத்திற் பதிவு செய்தி ருந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 1983 ஆம் ஆண்டில் 38 % இலிருந்து 11% ஆகக் குறைவதாயிற்று.
' இரண்டாம் வாய்ப்பினை (Second Chance) த் தொலைக் கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன.'' என்று பொதுவாக வரு ணிக்கப்படும் இந்நிறுவனங்களின் நோக்கத்தால் மிகக் கூ டி ய பயனைப் பெறுவோர் எழுதுவினைஞர்கள் (White - Collar Workers ) ஆவர். மேலே குறிப்பிட்ட தொலைக் கல்வி நிறுவனமேதும் மிகத் தொகையான தொழிலாள வர்க்க மாணவர்களைக் கொண்டிருக்க வில்லை, இவ்விடத்திற் சீனாவிலே நிலவும் முறையை நோக்குதல் ஏற்புடையதாகும். அங்கே கற்போர் குழுக்கள், அதிகமாகத் தொழிற்சாலைகள் மட்டத்திலேயே இயங்குகின்றன. எனினும், இக்குழுக்களிலும் முகாமைத்துவத்திலுள்ளோரும் நிருவாகத்திலுள் ளோருமே எண்ணிக்கையில் அதிகமாவர். ஆகவே, சமூகவமைப் பிற் பின் தங்கியோர் என்பது எவர்களைக் குறிக்கின்றது ? இதற்கு எவ்வகையான ஒரு விளக்கத்தையும் கொடுக்க முடியாமலுள்ளது.
இன்னோர் உண்மையினையும் இங்கு நோக்க வேண்டியுள் ளது. அஃதாவது பாரம்பரிய பல்கலைக்கழகங்களிலே அனுமதி பெறுவதற்கான தகைமைகளையே பல தொலைக் கல்வி நிறுவனங் கள் கொள்கையளவில் வலியுறுத்துகின்றன. 'தொலைக் கல்வி நிறு வனங்களின் தகைமைகள் இரண்டாந்தரத்தின' என்ற குறை
5

Page 12
கூறல்களைத் தவிர்த்துக் கொள்வதற்கு இக்கொள்கை அந்நிறு வனங்களுக்கு உதவியாகின்றது. வட அமெரிக்கா, பெரிய பிரித் தானியா, இஸ்ரெயில், சுவீடன் ஆகிய நாடுகளிலுள்ள தொலைக் கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் அனுமதிக்கு எவ்வகையான கல்வித் தகைமைகளையும் வலியுறுத்துவதில்லையெனக் கூறப்படு கிறது. எழுதுவினைஞர்களைப் பெருந்தொகையினராக அனுமதிக் கும் இந்நிறுவனங்கள், கல்வித் தகைமைகளை வலியுறுத்தவில்லை என்று கூறுவது எந்தளவிற்குப் பொருத்தமாகும் ?
எந்த கல்லு"-ருந்.
வேறோர் உண்மையும் இங்கு தெ ளி வ ா கி ன் ற து. அஃதாவது ஏனைய வகுப்பினர்களிலும் பார்க்க, மத்திய வகுப் பினர், தொலைக் கல்வி நிறுவனங்கள் வழங்குகின்ற இப்புதிய வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதாகும்.
குறிப்பிட்ட இலக்குக் குழுக்களை அடையாளங்காணல், ஆதரவாளர்களோடு கருத்துக்களைப் பரிமாறல், உயர் தொழில் திப்புளோமாக்களுக்கு இட்டுச்செல்லும் பயிற்சி நெ றி க ளை த் தயாரித்தல், தொழிலால் வரும் தேவைகளுக்குச் சேவையாற்றல் போன்றவற்றைப் பிரபல்யப்படுத்தி ஆதாயம் தேடுதலை இலக் காகக் கொண்டு தொலைக் கல்வி நிறுவனங்கள் தொழிற்படுதலையும் காண முடிகின்றது. அரசாங்கங்களும் குறிப்பிட்ட அபிவிருத்தி களுக்குக் கூடியளவிலே நிதிகளை வழங்குவதுடன், அவற்றுக்கே முன்னுரிமை அளிக்குமாறும் வற்புறுத்துகின்றன. இவ்வாறு, ஒவ் வொரு நிறுவனத்தினதும் கல்விசார் உள்ளடக்கம் எப்போதும் தொடர்ந்து ஒவ்வொரு நிறுவனத்தினதும் பொறுப்பாக அமைய நிகழ்ச்சித்திட்டங்கள் தொழிலாலே தொடர்புள்ள பயிற்சிநெறி களை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது போலத் தோன்றுகின்றது.
பெரும்பான்மையான தொலைக் கல்வி நிறுவனங்கள், அஞ் சல்வழி அச்சிட்ட சாதனங்களையே முக்கியமான கற்பித்தற் சாதனமாகப் பயன்படுத்துகின்றன. எனினும், மேலதிகமான துணைக் கற்பித்தற் சாதனங்களான தொலைக்காட்சி, கட்புல நாடாக்கள், வானொலி, செவிப்புல நாடாக்கள், கம்பியூட்டர், இலத்திரனியல் அஞ்சல்முறை போன்றவற்றைப் பயன்படுத் துவதிலே அவை ஆர்வங் காட்டுகின்றன.
பல தொலைக் கல்வி நிறுவனங்கள் கம்பியூட்டரைப் பெரு மளவிற் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. கல்வி நடைமுறை மட்டும் கம்யூட்டர் தொழினுட்பத்தினால் மேற்கொள்ளப்பட வில்லை. பல்கலைக்கழக நிருவாகம், மாணவர் பதிவேடு, மதிப்பீடு

என்பனவற்றுக்கும் கம்பியூட்டர் பயன்படுத்தப்படுகின்றது. மதிப்பீடு, மாணவர் பதிவேடு, மாணவர் முகவரி போன்றவற் றைச் செப்பமாகவும் விரைவாகவும் மேற்கொள்ளக் கம்பியூட்டர் உதவுகின்றது.
மேலே குறிப்பிட்டவை தொடர்பாகவும், ஏனையவை சம் பந்தமாகவும் தொலைக் கல்வி முறையிற் பரந்தளவிலான கூட்டு ஒப்பீட்டு முறையிலான ஆராய்ச்சிகளுக்கு இடமுண்டு. எடுத்துக் காட்டாக, 'தொழிற்றொடர்பான பயிற்சிநெறிகள் அரசாங்கங் களின் செல்வாக்குக் காரணமானவை' என்பது மேலே சுட்டிக் காட்டப்பட்டது. இஃது ஆராய்ச்சிக்கு உரியது. இவ் வ க்ை ஆராய்ச்சிகள், இப்பயிற்சிநெறிகள் பற்றிய நிலைகளை அறிந்து கொள்ளவும், அரசாங்கங்களின் செல்வாக்குப் பயன்படுத்தப் பட்டவாற்றைவும் பயிற்சிநெறிகள் நடை முறைப்படுத்தப்பட்ட முறையையும் கண்டு கொள்ளவும் உதவும்.
1980 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில், உலகளாவிய முறை யிலும் பிரதேச அடிப்படையிலுமான தொலைக் கல்வி நிறுவனங் களின் கூட்டவைகளுக்கும் குழுக்களுக்கும் சருவதேச ஆ த ர வு பெருமளவிலே கிடைத்துள்ளது. இந்த அமைப்புகள் ஆராய்ச்சி களுக்கும் கூட்டு முறைகளுக்கும் ஊக்கம் அளிப்பதற்கு ஆர்வங் காட்டியுள்ளன. தொலைக் கல்விக்கான சருவதேசப் பேரவை (International Council for Distance Education ) அதன் பன்னி ரண்டாவது உலக மா நாட்டில், ''தொலைக் கல்வி பற்றி ஆய்வு களை மேற்கொள்வதற்கும் புலமைப் பரிசில்களை வழங்கும்''' என்ற திருத்தத்தைப் பேரவையின் யாப்பிலே அங்கீகரித்தது.
அவுஸ்திரேலியா, தென் பசிபிக் வெளிவாரிக் கற்கைச் சங்கம் (The Australian and South Pacific External Studies Association - ASPESA), சருவதேசத் தொலைக் கல்விப் பேரவையைப் போலப் பல ஆண்டுகளாகத் தொலைக் கல்வி முறைக்குப் பணியாற்றி வரு கின்றது. இச்சங்கம் ஆராய்ச்சிகளுக்கும் அவுஸ்ரேலியப் பிராந்தி யங்களிலே ஆய்வுகளை மேற்கொள்ளுவதற்கும், கற்கைகள் தொடர் பான பிரயாணங்களுக்கும் புலமைப்பரிசில்களை வழங்குகின்றது. அமெரிக்காவின் தெற்குப் பகுதியிலும் மத்தியிலும் உள்ள பல்கலைக் கழகங்கள் தொலைக் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துகின்றன; தொலைக் கல்வி முறையில் ஆர்வமுங்காட்டி வருகின்றன. இன் னும், தொலைக் கல்வி முறையிலே உயர் கல்வி போதிக்கும் உறுப் பினர்கள் 'ஆசியத் தொலைக் கல்விப் பேரவை' ஒன்றை அண்

Page 13
மையில் நிறுவியுள்ளனர். அத்துடன் அஞ்சல்வழிக் கல்விச் சங்கம் ஒன்று ஆபிரிக்காவிலே தாபிக்கப்பட்டுள்ளது.6
உயர் கல்வியைத் தொலைக் கல்வி வாயிலாகக் கற்பித்த லாலே ஏற்பட்டுள்ள விருத்தி, அக்கல்வி முறையைப் பற்றிய வெளியீடுகளைப் பெருமளவிலே வளர்ச்சியடையச் செய்துள்ளது. அஃதாவது கல்வியிற் புதிய துறையைப் பறைசாற்றப் பல்வகை வெளியீடுகள் பெருகுதற்கு இடமளித்தது. இவ்வெளியீடுகளிற் பெரும்பான்மையானவை, நிறுவன் ஆய்வுகளாக, அஃதாவது நிறுவனம் பற்றிய ஆய்வுகளாக அமைந்துள்ளன. இவ்வாய்வுகள் அறிக்கைகளாகச் சமர்ப்பிக்கப்படுவதால் அருமையாகவே வெளி யிடப்படுகின்றன. சஞ்சிகைகளாக வெளிவந்தவை பலரின் கவ னத்தை ஈர்ப்பவையாக உள்ளன. அவுஸ்ரேலியா, பசிபிக் வெளி வாரிக் கற்றைகள் சங்கம், தொலைக் கல்வி என்ற ஒரு சஞ்சிகையை வெளியிடுகின்றது. அது தொலைக் கல்விபற்றிய பல சிறந்த விடயங்களைக் கொண்டு விளங்குகின்றது. இச்சங்கம் இச்சஞ்சி கையுடன் ஒரு செய்திச் சுருளையும் வெளியிடுகின்றது. தொலைக் கல்விச் சருவதேசப் பேரவை, செய்தித் திரட்டு ஒன்றை 1983ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்டது. இதிலே இடம்பெற்ற கட்டு ரைகள் தொலைக் கல்விபற்றிய பல அம்சங்களையும் செய்திகளை யும் உள்ளடக்கியனவாக இருத்தன். இன்னும் பல தொலைக் கல்வி நிறுவனங்கள் சஞ்சிகைகளையும், செய்தித் திரட்டுக்களையும் வெளியிடுகின்றன. இவற்றுள், சில வெளியீடுகள் அந்தந்த நிறு வனங்களின் உள்ளகத் தேவைகளைப் பூர்த்தி செய்வன ; வேறு சில, அந்நிறுவனங்களின் உள்ளேயும் வெளியேயும் பயனளிக்க வல்லன. பிரித்தானியா திறந்த பல்கலைக்கழகம் 'தொலைவி லிருந்து கற்பித்தல்' என்ற பெயரிலே ஒரு சஞ்சிகையை வெளி யிட்டது.
நிதி நிலைமைகளிலே ஏற்பட்ட வலுக்கட்டுப்பாடுகள், இவ் வகையான வெளியீடுகளைப் பெருமளவிலே பாதித்தன; சில வெளி யீடுகள் வெளிவராமலே தடைப்பட்டன; சில காலந்தாழ்த்தி வெளிவரத் தொடங்கின: வேறு சில உருவத்திற் குன்றிக் குறை வான விடயங்களைக் கொண்டு வெளிவந்தன. எனினும், தொலைக் கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்காக நடத்துகின்ற செய்திச் சுருள்கள் தடையின்றி வெளிவந்து, மாணவர்களுக்குப் பெருமள விலே பயன் விளைவிப்பன வாக உள்ளன. எடுத்துக்காட்டாகப் பிரித்தானியா திறந்த பல்கலைக்கழகம் மாணவர்களுக்காக வெளி யிடும் திறந்த வீடு ( Open House ) என்ற செய்தித்தாளையும், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் வெளியிடும் செய்தி முடங் கலையும் (Newsletter ) குறிப்பிடலாம்."

தொலைக் கல்வி நிறுவனங்கள்
ஒப்பிட்டு நோக்கி அறிந்து கொள்வதற்காக ஐந்து தொலைக் கல்வி நிறுவனங்கள் பற்றிய வி ப ர ங் க ள் இங்குத் தனித் தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளன. தோற்றம், மாணவர், பயிற்சிநெறிகள், கற்பித்தற் சாதனங்களும் முறைகளும், மதிப் பீடுகள், ஆராய்ச்சிகள் என்ற தலைப்புக்களின் கீழ் ஒவ்வொரு நிறு வனத்தைப் பற்றிய விவரங்களும் இடம்பெறுகின்றன. இந்நிறு வனங்கள் எவ்வெவ்வாறு வேறுபட்டிருக்கின்றன என்பதை இவ் விவரங்கள் இனிது எடுத்துக்காட்டுகின்றன.
எடுத்துக்காட்டாக, இந்நிறுவனங்களின் தோற்றத்துக்கான கார ணங்களை ஒப்பிட்டு நோக்கும்போது, அவற்றிடையே முக்கிய வேறுபாடுகள் உண்டு என்பதைக் கண்டு கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. ஒவ்வொரு நிறுவனத்தின் தோற்றத்துக்கான காரணம் பின்வருமாறு எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது :
உயர் கல்வியைப் பெற்றுக் கொள்ளாத முதியவர்களுக் குப் பிரித்தானியா திறந்த பல்கலைக்கழகம் இரண்டாம் வாய்ப்பினை ( Second Chance ) வழங்குகின்றது .7
பாகிஸ்தான் அல்லமா இக்பால் திறந்த பல்கலைக்கழகம் வீட்டை அல்லது செய்கின்ற தொழிலை விட்டு விலகிக் கல்வியை மேற்கொள்ள முடியாதவர்களுக்கு வாய்ப்பினை வழங்குகின்றது. 8

Page 14
* தாய்லாந்து மக்கள் வீட்டிலிருந்தவாறு கல்வியை மேற்
கொள்ளச் சுக்கொத்தை தமத்திரத் திறந்த பல்கலைக் கழகம் வாய்ப்பினை அளிக்கின்றது. 9
பாடசாலையைவிட்டு விலகிய பின்னர், மாணவர்களுக்கு இல்லாதிருந்த அல்லது அவர்கள் பெறாதிருந்த வாய்ப்பினை இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் வழங்குகின்றது. 10 தொழிலாளர்கள், குடும்பப் பெண்கள், இரண்டாந்தரக் கல்வியை முடித்துக் கொண்டவர்கள் ஆகியோருக்குப் பல் கலைக்கழகக் கல்வியை யப்பான் வான்வழிப் பல்கலைக் கழகம் வழங்குகின்றது 11
ஐந்து நிறுவனங்களும் வெவ்வேறு நோக்கத்தோடு தோன்றி யுள்ளன என்பதை மேலே காட்டியவை இனிது தெளிவாக்கு கின்றன. எடுத்துச் சொல்லிய முறையிலே ஒற்றுமையுள்ளன போலத் தோன்றினாலும், ஒற்றுமையிலும் வேற்றுமையைக் கண்டு கொள்ள முடிகின்றது. இதேபோலவே அனுமதி, பயிற்சிநெறிகள், கற்பித்தல் முறைகள், நிருவாகம் என்பனவற்றிலும் வேறுபாடுகள் உள்ளதை அவதானிக்கலாம்.
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்திற் கல்வியாளனாகப் பணிபுரிகின்றேன். பிரித்தானியா திறந்த பல்கலைக்கழகத்திலே ஓராண்டு ஆராய்ச்சியாளனாக இருந்துள்ளேன். அல்லாமா இக் பால் திறந்த பல்கலைக்கழகம், சுக்கொத்தை தமத்திரத் திறந்த பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களையும் நேரிற் சென்று பார்வையிட்டுள்ளேன். யப்பானிய வான்வழிப் பல்கலைக் கழகம் ஒரு வகையிற் புதுமையானது. இக்காரணங்களைக் கொண்டு இவ்வைந்து தொலைக் கல்வி நிறு வனங்களைத் தெரிந்து அவை பற்றிய விவரங்களைத் தொகுத்து இங்கு குறிப்பிட எண்ணினேன். இவ்விவரங்கள் தொலைக் கல்வி நிறுவனங்களின் அமைப்பு முறை யையும், அவை வழங்கும் பயிற்சிநெறிக ளயும், மாணவர்களை அனுமதிக்கும் முறையையும், கற்பித்த சாதனங்களையும் ஒப் பிட்டு நோக்க உதவியாக அமையும்.
(அ) பிரித்தானியா திறந்த பல்கலைக்கழகம் தோற்றம்
சொந்தப் பட்டங்களை வழங்குகின்ற சுதந்திரமும் தன்னாட் சியும் உள்ள ஒரு நிறுவனமாகப் பிரித்தானியா திறந்த பல்கலைக் கழகம் 1969 ஆம் ஆண்டிலே தாபிக்கப்பட்டது. உயர் கல்வியைப்
10

பெற்றுக்கொள்ளாத முதியவர்களுக்கு இப்பல்கலைக்கழகம் 'இரண் டாம் வாய்ப்பினை வழங்குகின்றது. அத்துடன் பரந்தளவிலான தொடர் கல்வி நிகழ்ச்சித்திட்டம் ஒன்றினையும் நடத்துகின்றது. 1971 ஆம் ஆண்டில் முதன்முதல் மாணவர்கள் இப்பல்கலைக்கழ கத்திற் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
மானாவர்
1984 ஆம் ஆண்டுத் தொடக்கத்திலே 108,000 மாணவர் இப்பல்கலைக்கழகத்திற் படித்தனர், இவர்களில் 67,000 பேர் பட்டதாரி மாணவர்கள்; 600 பேர் பட்டமேற் படிப்பு மாண வர்கள் ; தொடர் கல்வி நிலையம் வழங்கிய பயிற்சி நெறிகளுக்குப் பதிவுசெய்து கொண்ட மாணவர் கிட்டத்தட்ட 40,000 பேர். 1982 ஆம் ஆண்டிற் பதிவு செய்து கொண்ட புதிய மாணவர்களில் 44% பெண்கள், இவர்களில் முறைசார் கல்வித் தகைமைகள் இல் லாதவர்கள் 8% ஆவர். 2 தொழில் செய்பவர்களில் கூடிய தொகையினர் குடும்பப் பெண்கள் 13 % ஆவர்; ஆசிரியர்கள் 12. 2 %; தொழினுட்ப ஆளணியினர் 11. %; எழுதுவினைஞர்க ளும் அலுவலகப் பணியாட்டொகுதியினரும் 10.7 % ஆவர்.
62,000 பேருக்கும் கூடுதலானோர் பி. ஏ. பட்டம் பெற்றுள் ளனர். இவர்களிற் கிட்டத்தட்ட 9,000 பேர் பி. ஏ. (சிறப்பு) பட்டம் பெற்றவர்களாவர்.
பட்டப் படிப்புப் பயிற்சிநெறிகளுக்கு அனுமதி பெறுவதற்கு முறையான தகைமைகள் எவையும் தேவையில்லை. ஆனால் 21 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
பயிற்சி நெறிகள்
பல்கலைக்கழகத்தின் மூன்று நிகழ்ச்சித்திட்டங்கள் பின்வருமாறு ;
பி. ஏ பட்ட நிகழ்ச்சித்திட்டம்
சி.
1984 ஆம் ஆண்டிற் பல்துறைகளுக்கான கீழ்மட்டப் பயிற்சி நெறிகள் உட்பட, 130 க்கும் அதிகமான பயிற்சிநெறிகளைப் பல்கலைக்கழகம் வழங்கியது. பட்டமேற் படிப்பு நிகழ்ச்சித்திட்டம் பி. பில், எம். பில், பிஎச். டி. ஆகிய பட்டங்கள் ஆராய்ச்சி அடிப்படையிலான வை. ஆனால் எம். ஏ.பட்டப்
11

Page 15
பயிற்சிநெறிகள் சில, பரீட்சையை அ டி ப் ப டை ய ா க க் கொண்டவை,
111.
இயைபுள்ள மாணவர்களுக்கான நிகழ்ச்சித்திட்டம் 150க்கும் அதிகமான பயிற்சிநெறிகளை (இவற்றுட் பல முழு மையானவை; சில குறுகியவை)ப் பல்கலைக்கழகம் வழங்கு கின்றது. அவை பின்வரும் பாடப் பகுதிகளை உள்ளடக்கி யவை: சமூகக் கல்வி, உள்ளகச் சேவை ஆசிரியப் பயிற்சி, உடனலனும் சமூகப் பொது நலனும், தொழினுட்பவியலின் நவீன நிலை, முகாமைக் கல்வி.
பி.ஏ. பட்டம் பெறுவதற்கு 6 திறமைகளும், பி ஏ. (சிறப்பு) பட்டம் பெறுவதற்கு 8 திறமைகளும் வேண்டும். 32 அலகுகளைக்கொண்ட ஓராண்டுப் பயிற்சிநெறியை வெற் றிகரமாகப் பூர்த்திசெய்தால், ஒரு முழுத் திறமை வழங் கப்படும். ஒவ்வோர் அலகையும் படிப்பதற்கு 12 - 15 மணி நேரம் தேவை. 16 அலகுகளைக் கொண்ட அரைத் திற மைப் பயிற்சிநெறிகளை முடிப்பதற்கு ஓராண்டிற்கும் அதிக மான காலம் செல்லும், ஓராண்டிலே ஆகக் கூடுதலாக இரண்டு திறமைகளை மாணவர் பெற்றுக்கொள்ளலாம்.
கற்பித்தற் சாதனங்களும் முறைகளும்
அச்சிட்ட அஞ்சல்வழிப் பாடநூல்கள் முக்கியமான கற் பித்தற் சாதனமாகும் இதற்குத் துணையாக ஏனைய சாதனங்க ளான தொலைக்காட்சி, வானொலி, ஒலிபரப்புக் கசெற், ஒளிபரப்புக் கசெற், நழுவற் படங்கள், வீட்டுப் பரிசோதனைப் பொட்டளி ( home experiment kit ) என்பனவும் பயன்படுத்தப்படும். ஒலிபரப்புக் கசெற், ஒளிபரப்புக் கசெற் என்பனவற்றை மாண வர்களுக்குக் கடனாக வழங்குவதற்கான சேவைகள் உண்டு. பிரித்தானியாவிலுள்ள 13 பிரதேச நிலையங்களின் கீழுள்ள 260 கற்கை நிலையங்களிற் கட்டுரை வகுப்புக்களுக்கு உதவு தல்களும் இடம்பெறுகின்றன. சில பயிற்சிநெறிகளுக்கு ஒரு வாரக் கோடைக்கால வதிவிடப் பாடசாலை கட்டாயமாகும்.
மதிப்பீடுகள்
அஞ்சல்வழிப் பாடங்கள் யாவும் சுய மதிப்பீட்டு வினாக் களைக் கொண்டிருக்கும், பல பயிற்சிநெறிகளுக்குப் போதனாசிரியர்
12

திருத்தும் ஒப்படைகளும், கம்பியூட்டர் திருத்தும் ஒப்படைகளும் தொடர் மதிப்பீட்டுச் சாதனங்களாக உள்ளன. தொடர் மதிப் பீட்டைக்கொண்டும், பயிற்சிநெறி இறுதியிலே இடம்பெறும் 3 மணி நேரப் பரீட்சையின் பெறுபேற்றைக் கொண்டும் 'ஒரு திறமை' வழங்கப்படும். இவை இரண்டும் 50 : 50 என்ற வீ த த் தி ல் அமையும்.
கட்டுப்பாடுகளும் நிறுவன ஆராய்ச்சிகளும்
பல்கலைக்கழகத்தின் கல்வித் திட்டங்கள் சார்பான ஆலோ சனைகளைப் பயிற்சிநெறிகளின் அணிகள் கருத்திற்கு எடுத்துக் கொள்ளும். அவற்றின் முறையான அனுமதிப்பு, கல்விப் பேரவை யையும் மூதவையையும் சார்ந்ததாகும். பல்கலைக்கழகத்தினுள் நடைபெறும் மதிப்பீடுகள் பின்வரும் குழுக்களினால் மேற்கொள் ளப்படும் :
(1). நிரந்தரமான சிறப்பு வல்லு நர் மதிப்பீட்டுக் குழுக்கள்,
(2).
பயிற்சிநெறி அணி,
(3). பல்கலைக்கழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பணியாட்
டொகுதியினரைக் கொண்டமைந்த நிரந்தரமான குழுக் களும் சபைகளும்,
(4). சிறப்பான செயற் குழுக்கள்,
(5).
தனிப்பட்டவர்கள் மேற்கொள்ளும் முன்னெறியங்கள் என்பன.
நிதி
கல்வி, விஞ்ஞானம் ஆகியவற்றுக்கான திணைக்களத்தினால் திறந்த பல்கலைக்கழகத்திற்கு நேரடியாக நிதி வழங்கப்படுகின் றது மொத்த வருமா னத்திற் கிட்டத்தட்ட 80% மீண்டுவரும் மானியத்தைக் கொண்டதாகும். மாணவர்கள் வழங்குகின்ற தொகையை அதிகரிக்க வேண்டும் என்பது தற்போதைய அரசாங் கத்தின் கொள்கையாகும். 1984 ஆம் ஆண்டில் மானியமாகப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்ட ெதா ைக 58,679,000 பவுண் ஆகும்.
13

Page 16
(ஆ) பாகிஸ்தான் திறந்த பல்கலைக்கழகம்
தோற்றம்
வெகுசனத் தொடர்புச் சாதனங்கள் வாயிலாகவும் நவீன அறிவுறுத்தல் தொழினுட்பச் சாதனங்கள் வாயிலாகவும் பகுதி நேரக் கல்வியை வழங்குவதற்காக அல்லமா இக்பால் திறந்த பல்கலைக்கழகம் 1974 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்டது. இப்பல்கலைக் கழகத்தின் சிறப்பான தொழிற்பாடுகள் பின்வருமாறு :
- வீட்டை அல்லது செய்கின்ற தொழிலை விட்டு விலகிக் கல்வியை மேற்கொள்ள முடியாதவர்களுக்குக் கல்வி வச திகளை அளித்தல் ;
ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்க வசதிகளை வழங்குதல் ; அத்தகைய ஆசிரியர்களுக்காகக் கல்வித் தொழினுட்பவியல் அல்லது தொழில்கள் ஆகியவற்றுக்கான அறிவுறுத்தல் களை ஏற்பாடு செய்தல்.
1975 ஆம் ஆண்டில் முதன்முதற் பயிற்சிநெறி தொடங் கப்பட்டது.
மாணவர்
1981 - 82 ஆம் ஆண்டுகளில் 50,000 மாணவர்கள் பதிவு செய்து கொண்டனர். இந்த எண்ணிக்கை 1982 - 83 ஆம் ஆண்டு களில் 65,000 ஆக அதிகரித்தது.
பயிற்சிநெறிகள்
முக்கிய நிகழ்ச்சித்திட்டங்கள் வருமாறு :
1. எம். ஏ மட்டத்தில் ஆசிரியர்களுக்கான கல்வி ; அத்
துடன் 155,000 ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களுக்குக் கட்
டாய உள்ளகச் சேவை ஆற்றுப்படுத்தும் பயிற்சி.
2. பொதுக் கல்வி (இடைநிலை, பட்ட மட்டம்),
14

3. தொழிற்பாட்டுக் கல்வி (தொழிலோடு அல்லது கிராம்,
நகர சமூகத் தேவைகள் தொடர்பான திறமைக்கு ஆற்றுப் படுத்தும் பயிற்சிநெறிகள்).
ஆராய்ச்சியும் அபிவிருத்தியும். பாடபோதனை உருது மொழியிலே இடம்பெறுகின் றது.
கற்பித்தற் சாதனங்களும் கற்பித்தல் முறைகளும்
முக்கியமான அறிவுறுத்தற் சாதனம் அஞ்சல்வழிப் பாடங் களாகும். அத்துடன், தொலைக்காட்சி, வானொலி, செவிப்புல நாடாக்கள், விஞ்ஞான செய்ம்முறை வேலைகள், கட்டுரை வகுப் புக்கள், அறிவுறுத்தல் வகுப்புகள் (நேர்முகக் கற்பித்தல் / அஞ்சல் வழி) என்பன.
14) திப்பீடு
(1) போதனாசிரியர் திருத்தம் ஒப்படைகள், (2) தொடர் மதிப்பீடுகளின் தரங்கள், (3) பயிற்சிநெறி முடிவிற் பரீட்சையிற் பெற்ற தரங்கள் ஆகியன கொண்டு பயிற்சிநெறி முடிவுகள் கணிக்கப்படும்.
ஆட்சியும் நிருவாகமும்
பல்கலைக்கழகத்தின் சொத்துகளின் அலுவல்களையும் முகா மைத்துவத்தையும் நிறைவேற்றப் பேரவை பொது மேற்பார்வை செய்யும். கல்வி விடயங்களை மேற்பார்வையிடும் உயர்ந்த அதிகார சபையாகக் கல்விப் பேரவை அமைந்துள்ளது. கல்விப் பணியாட் டொகுதியினர் இரண்டு பீடங்களுக்கு உரியவர்களாவர்.
கைத்தொழிற் கல்வி, வியாபார முகாமைத்துவம், விவ சா பட விஞ்ஞானங்கள், அடிப்படை விஞ்ஞானங்கள், மனையியற் பொருளியல், மகளிர் கற்கைகள் என்னும் துறைகளை உள்ளடக் கியதாக அடிப்படை, பிரயோக விஞ்ஞானங்களின் பீடம் உள் ளது. சமூக விஞ்ஞானங்கள், மனிதப் பண்பியல்புகள், கல்வி
15

Page 17
நிறுவனம், அரபு, இஸ்லாமியக் கற்கைகள் நிறுவனம், உருது, இக்பால் கற்கைகள், ஆங்கிலம், சமூக விஞ்ஞானங்கள் ஆகியன போதனைமுறை, சமூக விஞ்ஞானங்கள், மனிதவியல் ஆகியவற்றுக் கான பீடத்தின்கீழ் உள்ளன.
கட்டுப்பாடுகளும் நிறு வன ஆராய்ச்சிகளும்
கல்வி சார்ந்த கட்டுப்பாடுகளைக் கல்விப் பேரவை மேற் பார்வை செய்கின்றது. கற்பித்தலின் தரங்கள், ஆராய்ச்சி என் பனவற்றுக்கு இப்பேரவை பொறுப்புடையதாகும் ; தற்போது கல்வி நிறுவகத்திலுள்ள நிறுவன ஆராய்ச்சிக் குழு, தரக் கட்டுப் பாட்டைப் பேணுகின்றது.
வலு
நிதி
நிதியின் பெரும் பகுதியைச் சமஷ்டி அரசாங்கம் வழங்கு கின்றது. பதிவு, போதனை, பரீட்சை ஆகியவற்றுக்கான கட்டண
வருவாய்களும் உண்டு.
(இ) தாய்லாந்து திறந்த பல்கலைக்கழகம்
தோற்றம்
வீட்டிலிருந்தவாறே கல்வியை மேற்கொள்ளத் தாய்லாந்து மக்களுக்காக 1978 ஆம் ஆண்டு சுக்கொத்தை தமத்திரத் திறந்த பல்கலைக்கழகம் தாபிக்கப்பட்டது, பாரம்பரிய பல்கலைக்கழகங் களிலே வகுப்பறையிற் கற்பது போலன்றி, மாணவர் வகுப் பறைக்குச் செல்லாமலே தாமாகத் தமது சொந்தத்திற் கற்கக் கூடிய தொலைக் கற்பித்தல் தொழினுட்பங்களை இப்பல்கலைக் கழகம் பயன்படுத்துகின்றது. 1980 ஆம் ஆண்டில் முதன்முதல் இப்பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட் டனர்.
மான்னவர்
1983 ஆம் ஆண்டு யூலை மாதத்தில், இப்பல்கலைக்கழக மாண வர்களின் தொகை 110,000 ஆகும். கல்விக் கற்கைகள், முகாமை விஞ்ஞானம், சட்டம் ஆகியவற்றுக்கான பாடசாலையிற்
16

கிட்டத்தட்ட 75% மாணவர்கள் பதிவு செய்து கொண்டனர். மாணவர்களின் சராசரி வயது 30 ஆகும். 55% மாணவர்கள் ஆன் கள் ஆவர். கிட்டத்தட்ட 86% மாணவர்கள் பாங்கொக் பகு திக்கு வெளியே இருப்பவர்கள். 70% மாண வர்கள் அரசாங்க அலுவலர்களாவர். பட்டப் படிப்பை மேற்கொள்வதற்கான நிகழ்ச்சித்திட்டத்திற் பின்வருவோர் பரீட்சை இல்லாமலே சேர்ந்து கொள்ளலாம் :
(அ) 12 ஆண்டுகள் பாடசாலையிற் படித்து முடித்தவர்கள்
அல்லது அதற்குச் சமமான கல்வியைக் கற்றவர்கள்.
(ஆ)
10 ஆண்டுகள் பாடசாலையிற் படித்துச் சான்றிதழ் பெற்றபின் ஐந்து ஆண்டுகள் வேலை அனுபவம் பெற்ற வர்களாகவும், பதிவு செய்து கொள்ளும் ஆ ண் டி ன் திசெம்பர் மாதம் முதலாம் தேதி 20 வயதுக்கு மேற் பட்டவர்களாகவும் உள்ளோர்.
(இ) சுக்கொத்தை தமத்திரத் திறந்த பல்கலைக்கழகக் கல்வி
சார் மூதவையினாலே அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களிலிருந்து திப்புளோமா அல்லது ஏதாவது ஒரு மட்டத்திற் பட்டம் பெற்றவர்கள்.
பயிற்சிநெறிகள்
தாய்லாந்திலுள்ள திறந்த பல்கலைக்கழகம் இரண்டு வகைத் தான நிகழ்ச்சித்திட்டங்களை வழங்கு கின்றது. ஒன்று பட்டம் பெறுவதை நோக்கமாகக் கொண்டது : மற்றையது பட்டமில் லாததை நோக்கமாகக் கொண்டது.
பின்வருவனவற்றிற் கலை மாணிக்கு இட்டுச் செல் லும் பயிற்சிநெறிகளைப் பல்கலைக்கழகம் வழங்குகின்றது: கல்விக் கற் கைகள், முகாமை விஞ்ஞானம், பொருளியல், வீட்டுப் பொருளி யல், விவசாய விரிவாக்கமும் கூட்டு முறைகளும், உடனல விஞ் ஞானம், கலைக் கல்வி என்பன.
பல்வேறு முகவர் நிலையங்களோடு இணைந்து ஆளணி அபி விருத்தி நிகழ்ச்சித் திட்டங்களையும் பல்கலைக்கழகம் நடத்துகின்றது.
தாய்லாந்து மொழியிலே போதனைகள் நடைபெறுகின்றன.
17

Page 18
தாய்லாந்து திறந்த பல்கலைக்கழகம் இரு பருவங்கள் முறைமையைப் பின்பற்றி ஒரு மாணவன் 4 - 12 ஆண்டுகளிலே ஒரு பட்டத்தைப் பெற்றுக்கொள்ள வழி செய்கின்றது. இடையுற வுள்ள பாடங்களின் முழுமையான ஒரு கற்கையினை வழங்கக் கூடிய துண்டங்களைக் கொண்ட ஒழுங்கமைந்த பயிற்சிநெறிகளை உடையது. ஒவ்வொரு துண்டமும் 6 திறமைகள் பெறுமதி யானவை.
கற்பித்தற் சாதனங்களும் முறைகளும்
அஞ்சல்வழிப் பாடநூல்கள் அறிவுறுத்தலுக்கு முக்கியமான சாதனமாகும். தொலைக்காட்சி, வானொலி, பதிவு நாடாக்கள் என்பனவும் பல பயிற்சிநெறிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. நேர்முகக் கற்பித்தல் வகுப்புக்கள், 77 உள்ளூர் நிலையங்களிலும் பிரதேச நிலையங்களிலும் நடைபெறுகின்றன.
மதீப்பீடு
பயிற்சிநெறி முடிவில் மாணவர் பரீட்சைக்குத் தோற்றுவர்.
ஆட்சியும் நிருவாகமும்
0 பல்கலைக்கழகத்தின் கொள்கைகளைத் தீர்மானிப்பதற்கும் சட்டங்களையும் ஒழுங்கு விதிகளையும் ஆக்குவதற்கும் பல் கலைக்கழகப் பேரவை அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
0 பல்கலைக்கழகத்தின் கல்வி சம்பந்தமான வேலைகள், பாட விதானத்தை விதித்துரைத்தல், கற்பித்தலும் மதிப்பீடும் என்பனவற்றைக் கல்விசார் மூதவை மேற்பார்வை செய் கின்றது.
0 பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம், அபிவிருத்தி என் பனவற்றுக்குப் பல்கலைக்கழக நிருவாகிகளின் கு ழு ப் பொறுப்புடையதாகும்.
கட்டுப்பாடுகளும் நிறு வன ஆராய்ச்சிகளும்
முன்னெறியங்களின் கட்டுப்பாடு பல்கலைக்கழகத் துணை முதல்வரின் பொறுப்பில் நடைமுறைப்படுத்தப்படும். நிறுவன ஆய்வு அலகு, திட்டமிடற் பிரிவு, பல்கலைக்கழக முதல்வரின்
18

அலுவலகம் என்டான நிறுவன ஆய்வுகளை மேற்கொள்ளுகின்றன. சுய அறிவுறுத்தற் சாதனங்களின் திருத்தத்திற்கான சாதன ஆய்வு களை, முகாமை முறைமைகள், கல்விச் சாதன ஆய்வுப் பிரிவு, கல்வித் தொழினுட்ப அலுவலகம் என்பன மேற்கொள்கின்றன.
நி தி
இரண்டு மூலங்களால் நிதி பெறப்படுகின்றது. அரசாங்க வரவுசெலவுத்திட்டத்தில் 15 % நிதியும், மாணவர் போதனைக் கட்டணத்திலிருந்து பல்கலைக்கழகத்தின் வருமானமாக 85 % நிதியும் பெறப்படுகின்றன.
ஈ. இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
தோற்றம்
இலங்கையிலே ஒரு திறந்த பல்கலைக்கழகத்தை நிறுவு வதற்கு 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கப் பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் ஓர் உறுதியான அடிப்படை இடப்பட்டது. பின் னர், 1980 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் தாபிக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் கல்வித் துறையிற் சிறப்பாகத் தாபிக்கப்பட்ட சுயாதீனமான தேசியப் பல்கலைக்கழகம் ஆகும்.
பாடசாலையை விட்டு விலகிய பின்னர், மாணவர்களுக்கு இல்லாதிருந்த அல்லது அவர்கள் பெறாதிருந்த வாய்ப்பினை இத் திறந்த பல்கலைக்கழகம் வழங்குகின்றது. ஏனையோர் ஏ ல  ேவ பெற்றுக்கொண்ட கல்வியைப் பெருக்கிக்கொள்ளவும், கூட்டிக் கொள்ளவும் இப்பல்கலைக்கழகம் உதவுகின்றது . 18 வயதினையும் அதற்கு மேற்பட்ட வயதினையும் உடையோர், தமது நேரத்தில், தமது சொந்த வீடுகளிலேயே இருந்து கொண்டு, முதற் பட்டம் அல்லது பட்டமேற் பட்டம் அல்லது திப்புளோமா அல்லது சான்றிதழுக்கு இட்டுச்செல்லும் பயிற்சி நெறிகளைப் பயிலக்கூடிய தாக இப்பல்கலைக்கழகம் தாபிக்கப்பட்டதாகும்.
பீடங்கள்
தொடக்கத்திலே திறந்த பல்கலைக்கழகம் மனிதப்பண்பிய லுக்கும் சமூக விஞ்ஞானங்களுக்குமான கற்கைச் சபை; முகாமை, விஞ்ஞானம், தொழினுட்பவியல் ஆகியவற்றுக்கான கற்கைச் சபை ஆகிய இரண்டு கற்கைச் சபைகளைக் கொண்டதாக இருந்
19

Page 19
தது. 1987 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 2 ஆம் தேதி வலு வுக்கு வந்த கட்டளைச் சட்டத்தின்படி, மூன்று பீடங்களைக் கொண்டதாக மாற்றி அமைக்கப்பட்டது.
மூன்று பீடங்களும் பின்வருமாறு :
1. மனிதப்பண்பியல், சமூக விஞ்ஞானங்கள் பீடம்
2. இயற்கை விஞ்ஞானங்கள் பீடம் 3. எந்திரவியல் தொழினுட்பவியற் பீடம்
மாணவர்
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்திற் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகள் வாயிலாகப் பயிற்சிநெறிகள் போதிக்கப்படுகின்றன. 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட கணிப்பின்படி பல்வேறு பயிற்சிநெறிகளுக் கான மாணவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு :
0 பாடசாலை முன்னிலைக் கல்விச் சான்றிதழ் நிகழ்ச்சித் திட்ட மாணவர் தொகை 606 : (சிங்களமொழி மூல மாண வர் 429; தமிழ்மொழி மூல மாணவர் 177.) ஆள்வினைமைச் சான்றிதழ் நிகழ்ச்சித்திட்ட மாணவர் தொகை 87. (சிங்கள மொழி மூல மாணவர் 42 ; ஆங் கில மொழி மூல மாணவர் 33 ; தமிழ் மொழி மூல மாணவர் 12.)
உயர் தொழில் ஆங்கில நிகழ்ச்சித்திட்ட ம ா ண வ ர் தொகை 2681. 0 பட்டமேற் கல்வித் திப்புளோமா நிகழ்ச்சித்திட்ட மாண இவர் தொகை 299 4. (சிங்கள மொழி மூல மாணவர்
2830 ; தமிழ் மொழி மூல மாணவர் 164.) 0 சட்ட மாணி நிகழ்ச்சித்திட்ட மாணவர் தொகை 892. (சிங்கள மொழி மூல மாணவர் 573 ; ஆங்கில மொழி
மூல மாணவர் 287 ; தமிழ் மொழி மூல மாணவர் 32.) 0 விஞ்ஞான மாணி நிகழ்ச்சித்திட்ட மாணவர் தொகை 1570. (சிங்கள மொழி மூல மாணவர் 1047 ; ஆங்கில மொழி மூல மாணவர் 456 ; திமிழ் மொழி மூல மாண வர் 67 )
20

0 தொழிலுட்பவியல் திப்புளோமா நிகழ்ச்சித்திட்ட மாண
வர் தொகை 3469. (சிங்கள மொழி மூல மா ண வ ர் 2 124 ; ஆங்கில மொழி மூல மாணவர் 1229 ; த மி ழ் மொழி மூல மாணவர் 116.) மாணவர்களின் மொத்தத் தொகை 12, 229. (சி ங் க் ள  ெம ா ழி மூல மாணவர் 7045, ஆங்கில மொழி மூல மாணவர் 4793 ; தமிழ் மொழி மூல மாணவர் 391.)
விதித்துரைக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களைத் தவிர்த்து ஏனைய நிகழ்ச்சித்திட்டங்களுக்குத் தகைமைகள் எவையும் வேண் டியதில்லை. ஆனால், கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தரப் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு அனுமதி பெறுவதற்குக் கூடிய வாய்ப்பு உண்டு. அனு மதிக்கப்பட்ட தகைமைகளுக்கு ஓரளவிற்கு விதிவிலக்கு அளிக்கப்படும்.
கற்கை நிகழ்ச்சித்திட்டங்கள்
1981 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கைந்நூலிலுள்ள படி பின்வரும் பயிற்சிநெறிகளைப் பல்கலைக்கழகம் வழங்கியது :
சமூகக் கல்வி :
ஓர் அத்திவாரப் பயிற்சிநெறி, கணிதம் ஒர் அத்திவாரப் பயிற்சிநெறி.
விஞ்ஞானம் :
ஓர் அத்திவாரப் பயிற்சிநெறி, கணிதம், அளத்தலும் மட் டம் பார்த்தலும், கிடைப்படம் வரைதலும் பதிவெடுத்தலும், ஆள்வினைமை, உயர்தொழில் ஆங்கிலம், பாடசாலை முன்னிலைக் கல்வி, பட்டமேற் கல்வித் திப்புளோமா.
தற்போது இலங்கைத் திறத்த பல்கலைக்கழகம் பின்வரும் கற்கை நிகழ்ச்சித்திட்டங்களை வழங்குகின்றது :
0 பாடசாலை முன்னிலைக் கல்விச் சான்றிதழ்
0 ஆள்வினை மைச் சான்றிதழ்
0 உயர் தொழில் ஆங்கிலச் சான்றிதழ்
21

Page 20
0 தொழினுட்பவியல் திப்புளோமா
( சிவில், தொலைத் தொடர்பு, மின்னியல், இலத்திரனியல்,
எந்திரவியல், புடவைக் கைத்தொழில். ) 0 விஞ்ஞான மாணி (B, Sc.) 0 சட்ட மா ணி (L, B) 0 பட்டமேற் கல்வித் திப்புளோமா 0 பட்டமேல் ஆராய்ச்சிப் பட்டங்கள் (எம். பில்; பிஎச், டி.)
0 தொடர் கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள்
கற்பித்தற் சாதனங்களும் முறைகளும்
சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அச்சிட்ட பாடநூல்கள் முக்கிய கற்பித்தற் சாதனமாகும். கட்புல நாடாக்கள், செவிப் புல நாடாக்கள் என்பனவும் கற்பித்தலுக்குப் பயன்படுத்தப்படு கின்றன. இன்னும், நேர்முகக் கற்பித்தல், கருத்தரங்குகள், வேலைக் களங்கள், ஆய்வுகூட வேலைகள் என்பனவும் இடம்பெறும். நிகழ்ச்சித்திட்டத்துக்குத்தக வெளிக்கள வேலைகளும் உண்டு.
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் ஏனைய தொலைக் கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ளாத அளவிற்கு விஞ்ஞானம், தொழினுட் பவியல் போன்ற பயிற்சிநெறிகளைப் போதிப்பது குறிப்பிடத்தக்கது. விஞ்ஞானம், தொழினுட்பம் ஆகிய பயிற்சிநெறிகளைத் தொலைக் கல்வி முறையிலே போதிப்பதற்கு நவீன தொழினுட்பங்களைப் பயன்படுத்தப் பல வகை முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொலைக் கல்வி முறையை வலுவுள்ளதாக்கப் பிரதேச நிலையங் களும் கற்கை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன, தற்போது 4 பிரதேச நிலையங்களும் 10 கற்கை நிலையங்களும் உள.
மதிப்பீடுகள்
அஞ்சல்வழிப் பாடங்கள் யாவும் சுய மதிப்பீட்டு வினாக் களைக் கொண்டிருக்கும். ஒப்படைகளுக்கான தொடர் மதிப் பீடுகள் ஒழுங்காக மேற்கொள்ளப்படும். பயிற்சிநெறி முடிவிற் பரீட்சைகள் நடாத்தப்படும். தொடர் மதிப்பீடுகள், பரீட்சைகள் ஆகியவை வாயிலாக இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
22

ஆட்சியும் நிருவாக மூம்
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் நிருவாக அல மப்பு மரபுவழிப் பல்கலைக்கழகங்களின் நிருவாக அமைப்பை ஒத்த தாகும். வேந்தர் பதவி ஒரு கெளரவப் பதவியாகும். துணை வேந்தர் திறந்த பல்கலைக்கழகத்தின் பிரதம நிறைவேற்று அலு வலராகவும் இருப்பார். பதிவாளர், பல்கலைக்கழத்தின் பதிவேடு களினதும், ஆதனங்களினதும் கட்டுக்காவலுக்கும் அதன் பொது நிருவாகத்துக்கும் பொறுப்புடையராவர்.
திறந்த பல்கலைக்கழகத்துக்கென ஒரு பேரவை உண்டு. துணை வேந்தரின் தலைமையின்கீழ் அப்பேரவை நிறைவேற்றுக் குழுவாகவும், கல்விக் குழுவாகவும், பல்கலைக்கழகத்தின் ஆளும் அதிகார சபையாகவும் இருக்கும். மூன்று பீடங்களுக்கும் தனித் தனியாகப் பீடாதிபதிகள் இருப்பர். கல்வி தொடர்பான விட யங்களுக்கு மூதவை பொறுப்புடையதாகும்.
நி தி
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்திற்கு மொத்த வருமா னம் மூன்று வகையாகக் கிடைக்கின்றது. அவையாவன: (1) அர சாங்க மானியங்கள். (2) மாணவர்களிடமிருந்து பெறப்படும் கட்ட
ணங்கள். (3) வேறு வருவாய்களாற் கிடைக்கும் வருமானம்.
(உ) யப்பான் வான்வழிப் பல்கலைக்கழகம்
1981 ஆம் ஆண்டு யூலை மாதம் நிறுவப்பட்ட
வான்வழி அத்திவாரப் பல்கலைக்கழகத்தாலே, 1983 ஆம் ஆண்டு சனவரி மாதம் இப்பல்கலைக்கழகம் தாபிக்கப்பட்டது.
பல்கலைக்கழக மட்டக் கல்விக்கு வானொலியையும் தொலைக் காட்சியையும் வலுவுடன் பயன்படுத்தி, வாழ்க்கை முழுவதற்கு மான கல்வி முறைமை மையக் கரு ஒன்றுக்கு, ஒரு புதிய கல்வி அறிவுறுத்தலை வழங்குவதே இப்பல்கலைக்கழகத்தின் நோக்கமாகும். அவையாவன :
0 தொழிலாளர்களுக்கும் குடும்பப் பெண்களுக்கும் பல்கலைக்
கழக மட்டத்திலான கல்வியை வழங்குதல். இரண்டாந்தரக் கல்வியை முடித்துக் கொண்டவர்களுக் குப் பல்கலைக்கழகக் கல்வியைப் பெறுவதற்கு நெகிழ்ச்சி யான வாய்ப்பை வழங்க உறுதியளித்தல்.
23

Page 21
0 நவீன ஆய்வுகளினதும் தொழினுட்பங்களினதும் நற்பயன் களைப் பகிர்ந்து கல்வியிலே புதியவொரு யுகத்தினை உரு வாக்கு தல்; கல்விப் பணியாட்டொகுதியினரிடையே பரி மாற்றங்களுக்கான வாய்ப்பினை ஏற்படுத்தல்; வான்வழிப் பல்கலைக்கழகத்துக்காக அபிவிருத்தி செய்யப்பட்ட சாத னங்களைத் தற்போதுள்ள பல்கலைக்கழகங்களிடையே வழங் குவதாற் பரிமாற்றத்தை வளர்த்துப் பல்கலைக்கழகக் கல் விக்கு உதவுதல்.
1985 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் இப்பல்கலைக்கழகத்தில்
முதன் முதல் மாணவர் பதிவுசெய்யப்பட்டனர்.
மாணவர்
1985 ஆம் ஆண்டின் முற்பகுதியில் 4,000 மாணவர்கள் வரை பட்டப் படிப்புக்கும், 6,000 மாணவர்கள் வரை ஏனைய பயிற்சிநெறிகளுக்கும் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின் னர், நாலு ஆண்டுகளில் மாணவர் தொகை, பட்டப் படிப்புக்கு 7,000 ஆகவும், ஏனைய பயிற்சிநெறிகளுக்கு 10,000 ஆகவும் அதிகரிக்கு மெனக் கணிக்கப்பட்டது. அதன்பின்னர், மொத்த மாணவர்க ளின் தொகை பட்டப் படிப்புக்கு 20,000 மாணவர்களும் ஏனைய பயிற்சிநெறிகளுக்கு 10,000 மாணவர்களும் இப்பல்கலைக்கழகத் திலே இருப்பரென எதிர்பார்க்கப்பட்டது.
' முதல் வந்தவருக்கு முதல் ' ( First come first served ) அல்லது திருவுளச்சீட்டுக் ( Lottery ) கொள்கைக்கு அமைய 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பல்கலைக்கழகத்திலே அனுமதி பெறக் கூடியவர்களாக இருப்பர்.
பயிற்சிநெறிகள்
ஒவ்வொன்றும் இரண்டு பிரதான பாடங்களைக் கொண்ட தாக மூன்று பயிற்சிநெறிகள் திட்டமிடப்பட்டுள்ளன :
0 வாழ்விற்கான விஞ்ஞானம் ( வாழ்வும் பொது நலனும்,
அபிவிருத்தியும் கல்வியும்)
0 கைத்தொழிலும் சமூகமும் (சமூகமும் பொருளியலும்,
கைத்தொழிலும் தொழினுட்பவியலும்.)
24

0 மானிடவியலும் இயற்கை விஞ்ஞானமும் ( மனிதவினத்
தின் கலாசாரம், இயற்கையைப் புரிந்துகொள்ளல்.)
பயிற்சிநெறிகளைக் கற்கும் மாணவர்கள் நான்கு ஆண்டுக களுக்கு மேலாகப் படிப்பை மேற்கொண்டு, 124 திறமைகளை அல்லது அதற்குக் கூடுதலான திறமைகளை ஈட்டிப் பட்டதாரி களாக பி. ஏ. பட்டம் பெறுவர்.
கற்பித்தற் சாதனங் களும் கற்பித்தல் முறைகளும்
வானொலி, தொலைக்காட்சி, பாடநூல்கள் ஆகியவை முக் கிய கற்பித்தற் சாதனங்களாகும். நேர்முகக் கட்டுரை வகுப் புக்கள், ஆலோசனை வழங்கல், விரிவுரைகள் என்பன முதற் படி முறையாக ஆறு கற்கை நிலையங்களில் நடத்தப்படும். வான்வழிப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் கட்டுப்பாட்டின் கீழ், வானொ லிக் கல்வியின் அபிவிருத்திக்கான தேசிய நிலையத்தால், வானொலிப் பாடங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தயாரிக்கப்படுகின் றன. வானொலிப் பல்கலைக்கழக அத்திவார வானொலி நிலையத் தாலே இந்நிகழ்ச்சிகள் ஒலி / ஒளி பரப்பப்படும்.
ஒவ்வொரு வாரமும், ஒவ்வொன்றும் 45 நிமிடத்தைக் கொண்ட நாலு அல்லது ஐந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் வானொலிப் பாடங்களையும் பார்க்கவும் கேட்கவும் வேண்டுமென மாணவர் கேட்கப்படுகின்றனர். மேலும், பாடப் புத்தகங்களையும் ஏனைய சாதனங்களையும் பயன்படுத்தி, நாலு அல்லது ஐந்து மணித்தியாலங்கள் மாணவர் தாமாகவே படிக்கவேண்டுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றனர். அத்துடன் கற்கை நிலையத்திற்குச் சென்று மூன்று மணி நேரம் வரை படிக்க வேண்டுமெனவும் கேட் கப்படுகின்றனர்.
மதிப்பீடு
ஒவ்வொரு பருவ முடிவிலும் எழுத்துப் பரீட்சைக்கு அல் லது கம்பியூட்டர் திருத்தும் பரீட்சைக்கு மாணவர் தோற்ற வேண்டும்.
ஆட்சியும் நிருவாகமும்
நிதிக் கணக்கீட்டிற்கும் பல்கலைக்கழகத்தின் வசதிகளைப் பேணுவதற்கும் வான்வழிப் பல்கலைக்கழக அத்திவார மன்றம் பொறுப்புடையதாகும். கல்வி, விஞ்ஞானம், கலாசாரம் ஆகிய
25

Page 22
வற்றுக்கான அமைச்சினாலே நியமிக்கப்பட்ட ஒரு கூட் டு த் த ா ப ன ம ா க இப்பல்கலைக்கழகம் விளங்குகின்றது. பேராசிரி யர்களை நியமித்தல், கல்வியின் உள்ளடக்கம் என்பனவற்றுக் குப் பல்கலைக்கழகம் பொறுப்புடையதாக இருக்கும்.
பாடநூற் சாதனங்களின் கல்வித் தரத்துக்குப் பேரா சிரியர்களே பொறுப்புடையராவர்.
நிதி
கல்வி, விஞ்ஞானம், கலாசாரம் ஆகியவற்றுக்கான அமைச் சினாற் பல்கலைக்கழகத்துக்கு வேண்டிய நிதி வழங்கப்படுகின்றது.
28

திறந்த பல்கலைக்கழகத்தின் * திறந்த பான்மை'
தொலைக் கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்திக் கல்வி போதிப்பதற்காகத் தாபிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு முன் னடையாகவுள்ள 'திறந்த' என்ற சொல்லின் பயன்பாடு பற்றிப் பலர் பலவாறு எதிரான கருத்துக்களை முன்வைத்துள்ளனர். ' ' சில பல்கலைக்கழகங்கள் திறந்தும், வேறு சில அவ்வாறன்றியும் எவ் வாறு இருக்க முடியும்?'' என்று சிலர் வினாவுகின்றனர். ''ஒன்று திறந்த பல்கலைக்கழகம் என்றால், மற்றொன்று மூடப்பட்ட உடல் கலைக்கழகமா?'' என்று வாதாடுகின்றனர் வேறு சிலர். ' 'திறந்த பல்கலைக்கழகம் என்ற பெயரைச் சூட்டிச் சில பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கான வயதை வரையறை செய்கின்றன. மாணவர்களைத் தெரிவதற்கு அனுமதிப் பரீட்சைகளை அல்லது தகுதிகாண் பரீட் சைகளை நடத்துகின்றன. இப்பல்கலைக்கழகங்களை எவ்வாறு திற ந்த பல்கலைக்கழங்கள் என்று கூறுவது?'' என வினா எழுப்புகின் றனர் இன்னும் சிலர். எனவே, இவ்வினாக்களைக் கவனமாக -அல சியாராய வேண்டி யது அவசியமாகின்றது .
இன்பங்கள். இ..
சில மரபுவழிப் பல்கலைக்கழகங்கள் அறிஞர்களின் பெய ரைத் தாங்கித் திகழ்கின்றன. வேறு சில, தாபிக்கப்பட்டுள்ள இடத்தின் பெயராலே அழைக்கப்படுகின்றன. இன்னும் சில சமூகங்களின் பெயரைக் கொண்டுள்ளன. இவை மரபுவழிப்
27

Page 23
பல்கலைக்கழகங்களுக்குரிய இயல்பாகும். ஆனால் தொலைக் கற்பித் தல் முறைகளைப் பயன்படுத்திக் கல்வி போதிக்கின்ற பல்கலைக் கழகங்களின் பெயர்கள், அந்நிறுவனங்கள் மேற்கொள்கின்ற கற் பித்தல் முறைகளைப் பிரதிபலிப்பனவாக உள்ளன.
1969 ஆம் ஆண்டிற் பிரித்தானியாவிலே தொலைக் கல்விப் பல்கலைக்கழகம் ஒன்று தாபிக்கப்பட்டது. அப்பல்கலைக்கழகத் திற்குத் 'திறந்த பல்கலைக்கழகம்' என்ற பெயர் சூட்டப்பட்டது. அப்போது, பல்கலைக்கழகத்திற்கு முன்னடையாகப் பயன்படுத்தப் பட்ட 'திறந்த' என்ற சொல் குறித்துக் காரசாரமான விவாதம் நடைபெற்றது. 'வானொலிப் பல்கலைக்கழகம்' (University of the Air ) என்று அழைப்பதே பொருத்தமாகுமெனச் சி ல ர் வாதிட்டனர்; 'சுவரற்ற பல்கலைக்கழகம் ( University without walls ) என்று கூறுவதே ஏற்புடையதென வேறு சிலர் கூறினர். '' தொலைக்காட்சிப் பல்கலைக்கழகம் ' ( Television University ) என அப்பல்கலைக்கழகத்துக்குப் பெயரிட வேண்டுமெனக் குர லெழுப்பினர் இன்னும் சிலர். ஆனால் அப்பல்கலைக்கழகம் 'திறந்த' என்ற முன்னடையைப் பெற்றிருப்பதே அந்நிறுவனத்தின் பூட் கைக்குப் பொருத்தமாகுமென ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பிரித்தானியா திறந்த பல்கலைக்கழகம் தாபிக்கப்பட்ட பின்னர், வேறு பல தொலைக் கல்வி நிறுவனங்கள் உலகின் பல பாகங்களிலே தோன்றின. பாகிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து, நைஜீரியா, தாய்லாந்து, இந்தியா ஆகிய நாடுகளிலே தாபிக் கப்பட்ட பல்கலைக்கழகங்கள் 'திறந்த பல்கலைக்கழகம் ' எ ன் ற பெயரைப் பெற்றன. ஆனால் வேறு சில நாடுகள், 'திறந்த' என்ற சொல்லைப் பயன்படுத்தாது வேறு சொற்களை எடுத்தாண்டுள்ளன. ஈரானிலே தாபிக்கப்பட்ட தொலைக் கல்வி நிறுவனத்திற்கு 'இல வசப் பல்கலைக்கழகம்' ( Free University ) என்ற பெயர் சூட் டப்பட்டது. இஸ் ரெயில் நாட்டிலே நிறுவப்பட்ட பல்கலைக்கழ கம் 'ஒவ்வொரு மனிதனதும் பல்கலைக்கழகம்' ( Everyman's University ) என்ற பெயரைப் பெறுவதாயிற்று. ''மத்திய ஒலிபரப்பு, ஒளிபரப்புப் பல்கலைக்கழகம்' (Central Radio and Television University) என்ற பெயரைச் சீன நாட்டினர் தம் பல்கலைக்கழகத்துக்குச் சூட்டிக்கொண்டனர். 'வான்வழிப் பல்கலைக்கழகம்' (University of the Air ) என்று யப்பானிலே நிறுவப்பட்ட தொலைக் க ல் வி நிறுவனத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது. 12
28

தொலைக் கல்விப் பல்கலைக்கழகத்தின் முன்னடையாகவுள்ள சொல் எதுவாக இருப்பினும், அச்சொல் அப்பல்கலைக்கழகம் மேற் கொள்கின்ற கற்பித்தல் முறையின் சிறப்பியல்பினை எடுத்துரைப் பதாகவே இருக்குமெனக் கூறவேண்டும். 1980 ஆம் ஆண்டிலே இலங்கையிலே தாபிக்கப்பட்ட தொலைக் கல்விப் பல்கலைக்கழகத் தின் முன்னடையாகவுள்ள 'திறந்த' என்ற சொல், அப்பல்கலைக் கழகத்தின் சிறப்பியல்புகளையே சுட்டிக்காட்டுகின்றது. எனவே, தொலைக் கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்திக் கல்வி போதிக் கின்ற பல்கலைக்கழகங்களின் முன்னுள்ள 'திறந்த' என்ற சொல் எவ்வெவ் விடயங்களிலே திறந்த பான்மைப் பண்பினைக் கொண் டுள்ளது என்பதை ஆராய்வது அவசியமாகின்றது.
அனுமதியிலே திறந்த பான்மை
திறமையுள்ள யாவரும் திறந்த பல்கலைக்கழகத்திலே படிப் பதற்கு அனுமதிபெற முடியும். இக்கூற்றை மேற்போக்காகப் பார்க்கும் போது, மரபுவழிப் பல்கலைக்கழகங்கள் கடைப்பிடிக் கின்ற அனுமதி முறைக்கு அஃது ஒப்பானதாகத் தோன்றலாம். ஆனால், திறந்த பல்கலைக்கழகத்தின் அனுமதி முறைக்கு மாறாகப் மரபுவழிப் பல்கலைக்கழகங்கள் வயதெல்லையை வலியுறுத்துகின் றன; கல்வித் தகைமைகளைக் கட்டாயப்படுத்துகின்றன. ஆனால் திறந்த பல்கலைக்கழகங்கள் அத்தகைய நிபந்தனைகளை வ லி ந் து கட்டாயப்படுத்துவதில்லை.
பிரித்தானியா திறந்த பல்கலைக்கழகம் போன்ற சில பல் கலைக்கழகங்கள், பட்டதாரிப் பயிற்சிநெறிகளைக் கற்க விண்ணப் பிப்போர் யாவருக்கும், நிபந்தனைகள் எவையுமின்றி அ னு ம தி வழங்குகின்றன. இக்காரணத்தினாலேயே 'திறந்த பான்மை' அப் பல்கலைக்கழகங்களின் குறிக்கோள்களில் ஒன்றாக உள்ளதெனப் பலராலும் எடுத்துரைக்கப்படுகின்றது. இலங்கைத் திறந்த பல் கலைக்கழகத்தின் அனுமதிக் கொள்கையை நோக்கும்போது, அது தி ற ந் த பான்மையைக் கொண்டிருப்பதாகத் தோன்றவில்லை. ஆகவே, இலங்கைக் கல்வி நிலையின் தொடர்பையொட்டியே 'திறந்த பான்மை' என்பதற்குப் பொருள்கொள்ள வேண்டும். இலங்கையின் கல்வி நிலை பிரித்தானியாவிலுள்ள கல்வி நிலையைப் போன்றதன்று.
பல்கலைக்கழகத்திலே அனுமதியைப் பெற்றுக் கொள்வதால் மட்டும் உயர் கல்வியைப் பெற்றுக்கொண்டதாக அ ைம ய ா து; இறுதியான பயனுள்ள முடிவினைக் கொண்டிருக்கவும் வேண்டும்.
29

Page 24
அஃதாவது பல்கலைக்கழகத்திலே அனுமதியைப் பெறுவோர் பல் கலைக்கழகக் கல்வியை முடித்து வெற்றியுடன் வெளியேற வேண் டும். ஆகவே, சிறப்பாகத் திறந்த பல்கலைக்கழகத்திலே அனு மதி பெறுவதற்கு முன்பாகப் பல்கலைக்கழகத்திலே க ல் வி  ைய மேற்கொள்வதற்கான ஓரளவு அனுபவம் இருத்தல் அவசியமா கின்றது: அத்துடன் திறமையும் வேண்டும். அத்தகைய நிபந் தனைகளுக்கு அமையவே இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் 'திறந்த பான்மை' என்பதற்கான கருக்கோளுக்குப் பொரு ள் கோடல் பொருத்தமாகும்.
இலங்கையிற் கல்விப் பொதுத் தராதர (உயர்தர) ப் பரீட்சையிற் சித்தியடைந்தவர்களில் ஆயிரக்கணக்கானோர் பல் கலைக்கழகங்களிலே அனுமதி பெற இயலாதவர்களாக இருக்கின் றனர். இவர்களைத் தவிர, உயர் கல்வியை மேற்கொள்ள வேண்டு மென்ற ஆர்வமுடையோரும் ஆயிரக் கணக்கிலே உளர். பல்கலைக் கழகக் கல்வி, உத்தியோகங்களைப் பெறுவதற்கும், பதவி உயர்வு களில் வெற்றியீட்டுதற்கும் உதவியாகுமென்ற உறுதிப்பாடும் உண்டு. எனவே இவை காரணமாகத் திறந்த பல்கலைக்கழகப் பயிற்சிநெறிகளுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரிக்கின்றது. அதனால் திறமை அடிப்படையிலே அனுமதியை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது .
பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களே அனுமதித் தகை மையுடையரென இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம், மாணவர் களின் வயது எல்லையை வரையறை செய்துள்ளது.13 உயர் கல்வி யைத் தொலைக் கல்வி முறையிலே கற்பதற்கு ஓரளவாவது முதுமை வேண்டும்; அனுபவமும் அவசியம். எனவே, ஆகக் கு  ைற ந் த வயது எல்லையைப் பதினெட்டாக வரையறை செய்ய வேண்டிய தாயிற்று. இது போலவே அனுமதி பெறுபவர்களின் க ல் வி த் தகைமைக்கும் நிபந்தனையிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதா யிற்று. சில பயிற்சிநெறிகளுக்குக் கல்வித் தகைமையுள்ள பலர் விண்ணப்பிக்கின்றனர். அவர்களின் எண்ணிக்கை, பல்கலைக்கழ கத்திலே அனுமதிக்க வேண்டியவர்களின் எண்ணிக்கையிலும் அதிக மாகும். எனவே, பல்கலைக்கழகத்துக்கு வேண்டிய மாணவர்களைத் தெரிந்து கொள்வதற்கு அனுமதிப் பரீட்சை அ ல் ல து தகுதி காண் பரீட்சை ஒன்றை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படு கின்றது . அவ்வாறு பரீட்சைகளை நடாத்தி ம ா ண வ ர் க ளை த் தெரிவுசெய்வது திறந்த பான்மைக் கருக்கோளுக்கு ஏற்புடையதா காது. 'முதல் வந்தவருக்கு முதலிடம் அளித்தல்? ( First come
30

first S2 frved ) என்ற பிரித்தானியா திறந்த பல்கலைக்கழகத்தின் அனுமதி முறையும் எமது நாட்டிற்குப் பொருந்தாது. எனவே, திறமை அடிப்படையிலே தேர்ந்து எடுப்பதே எமது நாட்டிற்கு ஏற்றதாகும். எனவே, திறந்த பான்மைக்கு முரணாகத் தவிர்க்க முடியாத சூழ்நிலையில், தவிர்க்க முடியாத பரீட்சை என்ற நிபந் தனையை வலியுறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.
எந்தக் கல்வி முறையாக இருப்பினும் மாணவர்களின் அனு மதி, சில நிபந்தனைகளுக்கு அமையவே இருக்கும். எ ன  ேவ , அச்சூழ்நிலையிலே அந்த நிபந்தனைகள் திறந்த பான்மைக் கருக் கோளுக்கு முரண்பட்டனவாக அமைய மாட்டா. மேலும், ' திற ந்த ' என்ற சொல்லின் பொருளை, அது புலப்படுத்தி நிற்கின்ற உ ற வ ா ன தொடர்பைக் கொண்டே விளங்கிக் கொள்ள வேண்டும்.
மரபுவழிப் பல்கலைக்கழகங்களின் அனுமதி முறைக்கும் திறந்த பல்கலைக்கழகத்தின் அனுமதி முறைக்கும் அடிப்படையிலே வேறுபாடு உண்டு. முன்னையது கல்வித் தகைமைகளை வலி யுறுத்துவது ; பின்னையது அ வ் வ ா று வலியுறுத்துவதன்று. அஃதாவது பள்ளிக்கூடத்திலே அல்லது கல்லூரியிலே குறிப்பிட்ட எண்ணிக்கையான ஆண்டுகள் கற்றிருக்க வேண்டும் என்ற நியதி
யைத் திறந்த பல்கலைக்கழகங்கள் வலியுறுத்துவதில்லை.
திறந்த அனுமதி முறையையே திறந்த பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ள வேண்டும். அம்முறையே 'திறந்த' என்ற சொல் லின் பொருளுக்குப் பொருத்தமாகும். அதுவே, 'திறந்த பான்
மை' என்ற கருக்கோளுக்கு ஏற்புடையதாக அமையும்.
கற்பித்தல் முறையிலே திறந்த பான்மை
தொலைக் கல்வியின் இன்னொரு தெளிவான சிறப்பியல்பு அதன் கற்பித்தல் முறையிலுள்ள 'திறந்த பான்மை ' ஆகும். மரபுவழிப் பல்கலைக்கழகத்திலே பெரும்பான்மையாகக் கற்பித் தல், விரிவுரை முறையிலேயே அமையும். அவ்விரிவுரைகள் வகுப் பறைகளுக்குள்ளேயே நடைபெறும். வகுப்பறையிலே இடம் பெறுவனவற்றை விரிவுரையாளரும் மாணவர்களும் மட்டுமே அறிவர். ஏனையோர் அறியார். ஆனால் திறந்த பல்கலைக்கழகத் தின் கற்பித்தல் முறை முற்றிலும் வேறுபட்டது. மரபுவழிப் பல்கலைக்கழகங்களிலே உள்ளதுபோல, மாணவர்களை வகுப்பறை பிலே அடிக்கடி ஆசிரியர் சந்திப்பதுமில்லை : வி ரி வு  ைர க ளை நிகழ்த்துவதுமில்லை.
31

Page 25
அச்சிட்ட சாதனங்கள், வானொலி, தொலைக்காட்சி, கட் புல நாடாக்கள், செவிப்புல நாடாக்கள் போன்றவை வகுப் பறைக்கும் அப்பால் கல்வியை எடுத்துச் செல்ல வல்லன. இவற் றையே கற்பித்தற் சாதனங்களாகத் திறந்த பல்கலைக்கழகங்கள் பயன்படுத்துகின்றன. இம்முறைகளாற் போதிக்கப்படும் கல்வியை மாணவர்களும் கற்கின்றனர்; மற்றையோரும் கற்கின்றனர். ஊர் நடுவேயுள்ள பழமரம் போன்றது தொலைக் கல்வி. நாட் டின் நடுவே காய்த்து நிற்கும் மரத்திலுள்ள பழங்களை மனித னும் உண்கின்றான்; பறவைகளும் உண்கின்றன. அம்மரத்திலுள்ள பழங்கள் எல்லோருக்கும் பயன்படுகின்றன. அங்கே கட்டுப்பாடு மில்லை; கா வலுமில்லை. அதேபோலவே தொலைக் கல்விக் கற்பித் தல் முறையால் மக்கள் எல்லோருமே பயன் பெறுகின்றனர். எவ்விடத்திலிருந்தும் கற்கலாம்; எவரும் கற்கலாம், எ ன வே தொலைக் கற்பித்தல் முறையிலே ' திறந்த பான்மை ' உண்டு என்பதை இனிது கண்டு கொள்ள முடிகின்றது.
பயிற்சிநெறிகளைத் தெரிந்து கொள்வதிலே 'திறந்த பான்மை'
திறந்த பல்கலைக்கழகங்கள் வழங்கும் பயிற்சிநெறிகளிலே விரும்பிய எதையும் மாணவர் தெரிந்துகொள்ளலாம்; சில திறந்த பல்கலைக்கழகங்கள் விஞ்ஞானம், மானிடவியல், சமூ க வி ய ல் ஆகிய துறைகளிலே பாடங்களைத் தெரிவு செய்து கொள்வதற்கு இடமளிக்கின்றன. எடுத்துக்காட்டாக விஞ்ஞானப் பாடங்களு டன் மானிடவியல் அல்லது சமூகவியற் பாடங்களைத்  ெத ரி வு செய்து கொள்வதற்கு ஆந்திரப் பிரதேசத் திறந்த பல்கலைக்கழ கம் அனுமதி வழங்குகின்றது. 14 பிரித்தானியா திறந்த பல்கலைக் கழகமும் இவ்வாய்ப்பினை வழங்குகின்றது. இவ்வாறு பாடங்களைத் தெரிந்து கொள்வதற்குப் மரபுவழிப் பல்கலைக்கழகங்கள் இட மளிக்க மாட்டா. அவ்வப் பீடங்களிலேயுள்ள பாடங்களையே தெரிவுசெய்து கொள்ள மரபுவழிப் பல்கலைக்கழகங்கள் இடம் ளிக்கின்றன. மேனாடுகளிலே இஃது ஒரு பொதுவான இயல்பாக இருப்பினும், திறந்த பல்கலைக்கழகத்திலே இம்முறை வலியுறுத்தப் படுவதில்லை. பிரித்தானியா திறந்த பல்கலைக்கழகம் கலைப் பட் டங்களை மட்டுமே வழங்குகின்றது. இப்பட்டங்களைப் பெறுவோர் தெரிவு செய்த பாடங்களிலே விஞ்ஞானப் பாடங்களும் இருக்கக் கூடும்.
பயிற்சிநெறிகளின் காலவெல்லையிலே 'திறந்த பான்மை'
மரபுவழிப் பல்கலைக்கழகங்கள் வழங்குகின்ற பயிற்சிநெறி களைக் கற்பதற்கான காலவெல்லையை அப்பல்கலைக்கழகங்கள் விதித்துரைக்கின்றன. எ டு த் து க் காட்டாக, கலை மாணி,
32

விஞ்ஞான மாணி, வர்த்த மாணி ஆகிய பட்டப் படிப்புகளுக்கு மூன்று ஆண்டுகளெனவும், முது வர்த்த மாணி, முது விஞ்ஞான மாணி போன்ற பாடங்களுக்கான படிப்பை மேற்கொள்வோர் இரண்டு ஆ ண் டு க ள் மேலதிகமாகப் படிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்படுகின்றது. விதித்துரைக்கப்பட்ட காலவெல்லைக் குள் மாணவர்கள் ப டி ப் பை முடித்து இறுதிப் பரீட்சைக்குத் தோற்ற வேண்டும். ஆனால் திறந்த பல்கலைக்கழகங்கள் அவ்வாறு பயிற்சிநெறிகளுக்குக் காலவெல்லையை வலியுறுத்தினாலும், அக் காலவெல்லைக்குள் படிப்பை மு டி த் து விட வேண்டுமெனக் கட்டாயப்படுத்துவ தில்லை. கால எல்லைக்குப் பின்னரும் மாண வர்கள் கல்வியைத் தொடர்ந்து கற்று இறுதியிலே பரீட்சைக்குத் தோற்றலாம். முதல் முறையிலே தோற்றுபவர்களுக்கு மட்டும் 'வகுப்பு' உண்டு என்ற கட்டுப்பாடும் தொலைக் கல்வி முறைக்கு இல்லை. எனவே, திறந்த பல்கலைக்கழக மாணவர் தமது கல்வி யை விரும்பிய காலம்வரை கற்கலாம். அதற்கு எல்லையிட்டுத் தடைவிதிப்பது பொருந்தாது. மேலும் பரீட்சைக்கு எத்தனை முறைகளும் தோற்றலாம்; எந்த வ ய தி லு ம் தோற்றலாம். இவ்வாறு கற்பதற்கான காலத்திலும் பரீட்சைக்குத் தோற்றும் முறையிலும் 'திறந்த பான்மை' உள்ளதாகத் திறந்த பல்கலைக் கழகம் திகழ்கின்றது.
கருத்துக்களிலே “ திறந்த பான்மை '
மரபுவழிப் பல்கலைக்கழகங்கள் ஒரு குறிப்பிட்ட கால எல்லை யுள் பல்கலைக்கழக அமைப்பிலும் கற்பித்தலிலும் சில தெளிவான மாதிரிகளை விருத்தி செய்துவிடுகின்றன அவ்வாறு வி ரு த் தி செய்த முறைகளை மாற்றுவதற்குப் பல தடைகள் தலைகாட்டும். பல்கலைக்கழகத்திற்கு உள்ளேயும் வெளியேயுமுள்ள சுய நலச் சக்தி களே மாற்றங்களைக் கொண்டு வருவதற்குத் தடையாக அமைவன. ஆனால் திறந்த பல்கலைக்கழகங்கள் புதிய முறைகளை வரவேற்பவை. புதியனவற்றைப் பொருத்தமான இடங்களிலே அமைத்துப் பய னுள்ளனவாக ஆக்கிக் கொள்ளத் திறந்த பல்கலைக்கழகத்தின் வாயில் என்றும் திறந்திருக்கும். எனவே, திறந்த பல் கலைக்கழகங் கள் திறந்த பான்மையுடன் புதிய கருத்துக்களை வரவேற்று, நாட் டின் நடுவேயுள்ள நன்னீர்க் கிணறுகள் போலப் பலருக்கும் பயன் நல்கும் கல்வி நிறுவனங்களாக விளங்குகின்றன.
மந்திருrள்ளடங்கல்களை எம்.
33

Page 26

தொலைக் கல்வி மாணவர்
தொலைக் கல்வி நிறுவனம் ஒன்றிலே அனுமதிபெற விண் ணப்பிப்பதற்கு முறையான கல்வித் தகைமைகள் எ ன வ யு ம் தேவையில்லை ; அதேபோல வயதுக் கட்டுப்பாடும் இல்லை , அதா வது இளைஞர்களும் விண்ணப்பிக்கலாம்; வயது முதிர்ந்தோரும் விண்ணப்பிக்கலாம். சுருக்கமாகக் கூறின், கல்வி கற்க விரும்பு கின்ற எவரும் ஒரு தொலைக் கல்வி நிறுவனத்திலே அனு ம தி
பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
பிரித்தானியா, வட அமரிக்கா, இஸ்ரெயில், சுவீடன் ஆகிய நாடுகளிலுள்ள தொலைக் கல்வி நிறுவனங்கள் அனுமதிக்குக் கல்வித் தகைமைகளை வலியுறுத்துவதில்லை. அந்நிறுவனங்களிலே திறந்த அனுமதிக் கொள்கை நடைமுறையிலே உ ள் ள து. 15 எனினும் இம்முறையிலும் சில கட்டுப்பாடு நிலவுதலைக் காண லாம். ஆ யி ர ம் மாணவர்களை ஒரு கற்கை நிகழ்ச்சித்திட்டத் துக்கு அனுமதிப்பதாயின், விண்ணப்பித்தோர் தொகை ஆயிரத் திற்கும் கூடுதலாக இருப்பின், விண்ணப்பித்தவர்களில் மு த ல் ஆயிரவர் அனுமதிக்கு ஏற்றுக் கொள்ளப்படுவர். அஃதாவது 'முதல் விண்ணப்பித்தவர் முதற்கண் அனுமதி பெறுவர் ( first come first served) என்ற அடிப்படையிலே அனுமதி வழங்கப் படும். இவ்வனுமதி முறையே 'திறந்த பல்கலைக்கழகம்' என்ற பெயருக்கு ஏற்புடையதாகும். இல்லாதிருந்த அ ல் ல து பெறா திருந்த வாய்ப்பினை ஒருவர் பெற்றுக் கொள்வதற்கு இவ்வனுமதி முறை உதவியாக உள்ளது.
35

Page 27
சில தொலைக் கல்வி நிறுவனங்கள் அனுமதிக்குத் கல்வித் தகைமைகளை வலியுறுத்துகின்றன. குறைந்த கல்வித் தகைமை இவ்வளவாக இருக்க வேண்டுமெனக் கட்டுப்பாடுகளை விதிப் பதைக் காணமுடிகின்றது. இவ்வாறு அனுமதிக்கு விண்ணப்பங் களைக் கோரும்போது, விண்ணப்பிப்போர் எண்ணிக்கை, அனு மதிக்க வுள்ள மாணவர் தொகையிலும் பார்க்க அதிகமாகி விடுத லுண்டு. இக்கட்டத்தில் மாணவர்களைத் தெரிவதற்குப் பரீட்சை களை நடத்த வேண்டிய திறந்த கொள்கைக்கு முரணான சூழ்நிலை ஏற்பட்டுவிடுகின்றது.
மா ணவர்கள் பாடசாலையை விட்டு விலகிய பி ன் ன ர். இல்லாதிருந்த அல்லது அவர்கள் பெறாதிருந்த வாய்ப்பினை வழங்கு வதனால், ஒரு தொலைக் கல்வி நிறுவனம் தான் க வ ர் ந் து. கொண்ட மாணவர்களின் நோக்கிலே ஒரு வீட்டுக் க ற்  ைற ப் பல்கலைக்கழகமாகவும், பிற்பட்ட கால வாய்ப்பினை வழங்கும் ஒரு பல்கலைக்கழகமாகவும் விளங்குகின்றது. ஏனையோரைப் பொறுத்த வரையிலே அவர்கள் ஏற்கனவே பெற்றுக்கொண்ட கல்வியைப் பெருக்கிக் கொள்ளவும், கூட்டிக் கொள்ளவும் ஒரு தொலைக் கல்வி நிறுவனம் வாய்ப்புக்களை வழங்குகின்றது. 16
எனினும், தொலைக் கல்வி நிறுவனம் ஒன்றின் இ ந் தத் திறந்த மனப்பான்மை பயிற்சிநெறிகளின் நிலை, தேவை ஆகிய வற்றின் அடிப்படையிலே தீர்மானிக்கப்படுகின்ற கல்வித் தரத்தை பாதிப்பதற்கு இடமளித்தலாகாது. ஏனைய மரபுவழிப் பல்கலைக் கழகங்களின் கல்வித் தரத்துக்கு எந்த வகையிலும் குறைந்த தாகத் தொலைக் கல்வி நிறுவனங்களின் கல்வித் தரம் அமைதலா காது. இந்த நோக்கத்தை நிறைவு செய்வதற்கு எல்லாத் தொலைக் கல்வி நிறுவனங்களும் முயல் கின்றன.
ஒரு தொலைக் கல்வி நிறுவனத்திலே அனுமதி பெறுகின்ற மாணவர்களைப் பின்வருமாறு பகுத்துக் கூறலாம்: 17
ஒரு தொலைக் கல்வி நிறுவனத்தைத் துரித பொருளாதார, சமூக உயர்ச்சிக்கான வழியாகக் கொண்டு, அத்தொலைக் கல்வி நிறுவனத்திலே அனுமதி பெற்றுக் கல்வியை மேற் கொண்டு, தகைமைபெற்று அந்தப் பலத்தினாலே தொழிலை நாட விழைவோர்.
தற்போது தொழில் ஒன்றிலே அமர்ந்துள்ளோர், அதா வது ஏதோ ஒரு தொழிலைச் செய் கின்ற அந்தத் தொழி லோடு தொடர்பான ஒரு கற்கை நிகழ்ச்சித்திட்டத்திற்கு
36

அனுமதி பெற்றுக் கூடுதலான அறிவையும் தகைமையை யும் ஈட்டித் தாம் செய்கின்ற அந்தத் தொழிலிலே மேன் மேலும் சிறப்பாகத் தொழிற்பட வழிதேடுவோர்.
3.
தற்போதுள்ள தமது  ெத ா ழில் அமைப்பினுள்ளேயே இருந்து கொண்டு, அந்தத் தொழில் வி  ைம ப் பி னு ள் தொலைக் கல்வி நிறுவனம் ஒன்றிலே பெற்ற தகைமை களின் அடிப்படையிற் பதவி உயர்வினை எதிர்பார்ப்போர்.
தற்போது ஒரு தொழிலிலே அமர்துள்ளவர், தொலைக் கல்வி நிறுவனம் ஒன்றிலே சேர்ந்து, அங்கே பெறுகின்ற கல்வித் தகைமையைக் கொண்டு, அதன் உதவியுடன் சிறந்த இன் னொரு தொழிலைப் பெறுவதிலே நம்பிக்கை உடையராக இருப்பவர். இவர்களோடு
5.
தொலைக் கல்வி நிறுவனம் ஒன்றிலே பெற்ற தகைமை களின் அடிப்படையிலே தொழிலை நாடுவதிலே அக்கறை அற்றவராய், தொலைக் கல்வி நிறுவனம் அளிக்கும் பயிற்சி நெறிகளைப் பயில்வதையே முதன்மையான பயனுள்ள ஓய்வு நேர முயற்சியாகக் கொள்வோர்.
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்திலே கற்கின்ற மாண வர்களை இன்னொரு வகையாகப் பகுத்துக் கூறலாம். பட்டமேற் பட்டம், மா ணி, திப்புளோமா, சான்றிதழ் ஆ கி ய பயிற்சி நெறிகளை இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் நடத்துகின்றது. இவற்றைப் பயில்கின்ற மாண வர்கள் :
அ. பட்டதாரி - மேற் படிப்பு மாணவன்,
ஆ. பட்டதாரி மாணவன்,
இ. திப்புளோமா மாணவன்,
ஈ. சாற்றிதழ் மாணவன் என்று அழைக்கப்படுவர். 18
திறந்த பல்கலைக்கழகத்திற் சேரவிரும்புவோருக்கு வயதுக் கட்டுப்பாடு எதுவுமில்லை. ஆனால் ஆகக் குறைந்த வயது எல்லை யைப் பல்கலைக்கழகம் வரையறை செய்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதியில் முன்னுரிமை வழங்கப்படும். இந்த ஆகக் குறைந்த வயது எல்லையைக் கூட்டுவதற்கு அல்லது குறைப்பதற்குப் பல்கலைக்கழகத்துக்கு உரிமை உண்டு.
37

Page 28

பிரதேச நிலை யங்களும் கற்கை நிலையங்களும்
தொலைக் கல்வி முறையில் மாணவர்கள் நாடு முழுவதிலும் பரந்து வாழ்வதால், கல்வி முறையைச் செவ்வனே செயற்படுத்தப் பிரதேச நிலையங்களும், கற்கை நிலையங்களும் பெருமளவிலே உத வியாக அமைகின்றன. பிரதேச மட்டத்திலுள்ள நிறுவனங்களுக் குப் 'பிரதேச நிலையங்கள்' என்று இலங்கைத் திறந்த பல்கலைக்கழ கம் பெயரிட்டுள்ளது. பிரித்தானியா திறந்த பல்கலைக்கழகமும் பாகிஸ்தான் திறந்த பல்கலைக்கழகமும் ' பிரதேச அலுவலகங்கள் ' என்று இந்நிலையங்களுக்குப் பெயரிட்டுள்ளன. கற்கை நிலையங்கள் ( Study Centres ) என்ற பெயரோடு உள்ளவை பிரித்தானியாவி
லும் உண்டு பாகிஸ்தானிலும் உண்டு.
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்திற்கு நான்கு பிரதேச நிலையங்களும் பத்துக் கற்கை நிலையங்களும் உண்டு. பிரதேச நிலை யங்கள் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், மாத்தறை ஆகிய இடங் களிலே அமைந்துள்ளன. கற்கை நிலையங்கள் அம்பலாங்கொடை, அம்பாறை, அனுராதபுரம், பதுளை, காலி, களுத்துறை, சிலாபம், கேகாலை, குருநாகல், இரத்தினபுரி ஆகிய இடங்களிலே இருக் கின்றன. 19
39

Page 29
பிரித்தானியா திறந்த பல்கலைக்கழகம் 13 பிரதேச அலுவ லகங்களையும், ஒவ்வொரு பிரதேச அலுவலகத்தின் கீழும் பல கற்கை நிலையங்களையும் கொண்டு இயங்குகின்றது. 20 பாகிஸ்தானிலுள்ள அல்லமா இக்பால் திறந்த பல்கலைகழகம் 11 பிரதேச அலுவல கங்ளையும், 200 கற்கை நிலையங்களையும் கொசுக் டு இயங்கு கின்றது 21
பிரதேச நிலையங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பிர தேசப் பணிப்பாளர் பொறுப்பாக இருப்பார். அவரின்கீழ் நிரு வாக அலுவலர்கள் இரு ப் பர் . பிரித்தானியாத் தி ற ந்த பல்கலைக்கழத்தின் பிரதேச அலுவலகங்களிற் கல்வியாளர்களும் உளர். சி ரே ஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், போதனையாளர்கள், சிரேஷ்ட உசாவுநர்கள் ஆகியோர் பிரதேச நிலைய அலுலவகங்களிலே வேலை செய்கின்றனர். அவர்கள் இட மாற்றத்துக்கு உரியவர்கள், வேண்டும் போது மில்றன் கீன்ஸ்சி லுள்ள பல்கலைக்கழத்துக்கு அல்லது வேறொரு பிரதேச அலுவல கத்துக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லவேண்டியவர்களாவர்.
(கர் 9,"ல்.. இ பி.
இவ்விடத்திலே பிரதேச நிலையத்துக்கும் கற்கை நிலையத் து க் குமிடையிலான வேறுபாடுகளைத் தெரிந்து கொ ள் வ து நன்று. இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் அமைத்துள்ள பிரதேச நிலையங் கள், பல வசதிகளை மாணவர்களுக்கு வழங்கக் கூடியன வாக உள் ளன. வானொலிப் பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி, செவிப்புல நிகழ்ச்சிகளைக் கேட்கக் கூடிய ஒலிப்பதிவு நாடா இயக்கி, தொலைக் காட்சி கசெற்றுக்கள், நூலகம், கட்டுரை வகுப்புக்களும் விரி வுரைகளும் நடாத்துவதற்கான வகுப்பறைகள், தகவல் நிலையம் போன்றவற்றைப் பிரதேச நிலையங்கள் கொண்டுள்ளன. ஆனால் பிரித்தானியா திறந்த பல்கலைக்கழகப் பிரதேச அலுவலகங்களில் நிரந்தரமான விரிவுரையாளர்களும் போதனாசிரியர்களும் வேலை செய்கின்றனர். அவர்கள் அப்பிரதேச நிலையத்தின் மாணவர் களுக்குக் கல்வி விடயங்களில் உதவியாக இருக்கின்றனர். விரி வுரையாளர்களை நேரில் கண்டு, மாணவர்கள் தமது கல்வி சம் பந்தமான பிரச்சினைகளைப் பிர தேச மட்டத்திலே தீர்த்துக்  ெக ா ள் ள க் கூ டி ய வ ா ய் ப் பு க் க ளை இவ்வலுவலகங்கள் வழங்குகின்றன.
பிரதேச நிலையங்களிலுள்ள வாய்ப்புக்களும் வசதிகளும் கற்கை நிலையங்களிற் குறைவாகவே இருக்கும். கற்கை நிலையங்கள் திறந்த பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமில்லாத பாடசாலைகள், கல்லூரிகள், தொழினுட்பக் கல் லூரிகள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றிலே அமையலாம். அங்கே வார இறுதியில் விரிவுரை
40

கள், கருத்தரங்குகள், கலந்துரை யாடல்கள் இடம்பெறும். மாண வர்கள் குறிப்பிட்ட நே ர ங் க ளி ற் போதனாசிரியர்களைக் கண்டு கொள்ளக் கூடியதாகவும் இருக்கும். மாணவர்கள் ஒன்று சேர்வற் கும் கல்வி சம்பந்தமான பிரச்சினைகளைத் தமக்குள்ளே கலந்துரை யாடித் தீர்த்துக் கொள்வதற்கும் கற்கை நிலையங்கள் உதவியாக உள்ளன.
கல்வியைக் கிராம மட்டத்திலே பர வ ல ா க் கு த லே தொலைக் கல்வி முறையின் முக்கிய கொள்கை ஆகும். வீட்டி லிருந்து கொண்டே கல்வியை மேற்கொள்வதற்குத் தொ லைக் கல்வி முறை வாய்ப்பளிக்கின்றது. இவ்வாறு மாணவர்களுக்கு வாய்ப்பை அளிப்பதற்காகவே பிரதேச நிலையங்களும் க ற்  ைக நிலையங்களும் நிறுவப்படுகின்றன. ஒரு நாட்டின் பரப்பளவு, சனத்தொகை, மாணவர் எண்ணிக்கை என்பவற்றைப் பொறுத் துப் பிரதேச நிலையங்கள், கற்கை நிலையங்கள் ஆகியவை அமை யும். மேலும் இவ்வகை நிலையங்களைத் தொலைக் கல்வி நிறு வனம் தொடங்கியவுடனேயே எல்லாப் பி ர தே ச ங் க ளி லு ம் அமைக்கவியலாது. நிதி நிலைமை, கல்வியாளர்ளின் தேவை, மாணவர் எண்ணிக்கை என்பனவற்றைப் பொறுத்தே பிரதேச நிலையங்களை நிறுவிக்கொள்ள முடியும். தொடக்கத்திற் பிரதேச நிலையங்களினதும், கற்கை நிலையங்களினதும் எண்ணிக்கை குறை வாக இருக்கலாம். ஆனால், காலப் போக்கிலே தொலைக் கல்வி நிறுவனத்தின் வளர்ச்சியைப் பொறுத்து அவற்றின் எண்ணிக்கை அதிரித்துக் கொண்டே போகும்.
பிரதேச நிலையப் பணிப்பாளர் தமது நிலையத்தின் கல்வி, நிருவாகம் ஆகிய இரண்டிக்கும் பொறுப்பாளராக இருப்பார். போதனை வகுப்புகளை ஒழுங்கு செய்தல், வேலைக் களங்களை நடாத் துதல், பரீட்சைகளை மேற்பார்வை செய்தல், ஏனைய கல்விச் செயற் பாடுகளைச் செவ்வனே செய்தல் என்பன அவரின் முக்கிய பணிக ளாகும். 22 ஓரு பிரதேச நிலையம் சிறப்பாகத் தொழிற்படுவதற்குப் பணிப்பாளரின் உழைப்பு மிக வேண்டற்பாலாது இன்றொரு வகையாகக் கூறின், ஒரு பிரதேச நிலையத்தின் வெற்றியும் தோல்வியும் பணிப்பாளர் கையிலேயே தங்கியுள்ளது என்று
கூறின் அது மிகையாகாது.
எல்லாப் பிரதேச நிலையங்களையும் பிணைத்துத் தலைமை அலு வ லகத்தோடு இணைத்துத் தொழிற்பட வைப்பது அவசியமாகும். கு தாலைக் கல்வி முறைமையின் கீழ் இப்பிணைப்புக்களும் இணைப்புக்
41

Page 30
களும் இடம் பெறுவது அவசியமாகும்.
இவற்றுக்கு அடிப்படை பான படிமுறைகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம் :
1. பகுதி நேரப் போதனையாளர்களுக்கான ஏற்பாடு. 2. பிரதேச மட்டத்திலே ஆலோசனைக் குழுக்களை நியமித்தல்.
துறைத் தலைவர்களின் கூட்டங்களிலே பிரதேசப் பணிப்
பாளர் கலந்து கொள்ளல். 4. பிரதேசப் பணிப்பாளர்கள் ஒழுங்காகக் கூடிப் பிரச்சினை
களை ஆராய்தல்.
பிரதேச நிலையங்களிலுள்ள குறைபாடுகளைப் போக்குவ தற்குத் தலைமை அலுவலகத்தோடான தொடர் பு க ளை வலுப்படுத்தல்.
இவ்வொழுங்குகள் நாட்டிற்கு நாடு, நிறுவனத்துக்கு நிறு வனம் வேறுபடலாம். தொலைக் கல்வி நிறுவனங்கள் அவற்றின் தேவைக்கும் வசதிக்கும் ஏற்ப இவற்றை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.
பாகிஸ்தானிலுள்ள திறந்த பல்கலைக்கழகம், ம ா தி ரி க் கற்கை நிலையங்களை அமைத்துள்ளது. கற்கை நி லை ய ங் க ளை அபிவிருத்தி செய்யும் அதேநேரத்திற் குறிப்பாக நாட்டின் கிரா மப் பகுதிகளில் மாதிரிக் கற்கை நிலையங்கள் அமைக்கப்படுகின் றன. இந்நிலையங்களிலே செவிப்புல /கட்புல நாடாக்களை முறையே கேட்கவும் பார்க்கவும் கூடியதான சா த ன ங் க ள் உண்டு. அத்தகைய நிலையங்கள் முதன் முதலில் 1984 ஆம் ஆண்டு நிறு வப்பட்டன. 23
வண்ணத் தொலைக்காட்சி பார்க்கும் எந்திரம் (colour TV monitor), கட்புலக் கசெற் ப தி வு க் க ரு வி ( vide0 - Casset te recorder ), வானொலி/கசெற் கேட்கும் கருவிகள் ( radio/ca.sse tta players ) நழுவல் படம் காண்பிக்கும் கருவி ( slide projector) தலைக்கு மேலான ஒளியுருப் படிவுக் கருவி (overhead projector), தன்னியக்கப் பார்வை எந்திரங்கள் ( autoyi2wers ) என்பன இந் நிலையங்களில் மாண வர்களதும் கல்வியாளர்களதும் பயன்பாட் டிற்கு இருக்கும். சுருக்கமாகக் கூறின், பிரதேச நிலையத்திலுள்ள வசதிகளைக் கொண்டதாக இம்மாதிரிக் க ற்  ைக நிலையங்களும் அமைந்திருக்கும்.

பிரதேச நிலையங்கள் ஒவ்வொன்றிலும் நூலகம் ஒன்று இருக் கும். பயிற்சிநெறிப் பாடநூல்கள், துணை நூல்கள், சார்பு நூல்கள், நழுவற் படங்கள், கட்புல / செவிப்புல நாடாக்கள் என்பவற்றை இந்நூல் நிலையம் கொண்டிருக்கும். நிலையத்துக்கு வ ரு கி ன் ற மாணவர்களும், நிலையத்திலே வேலை செய்கின்ற கல்வியாளர்களும் இவற்றைப் பயன்படுத்துவர். வானொலிப் பேச்சுக்கள், தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் பிரதிகளையும் இந்நூல் நிலை யத்திலே மாணவர்கள் பெற்றுக் கொள்ள வாய்ப்புண்டு. நூல் களை இரவலாகப் பெற்று வீட்டிற்கு எ டு த் து ச் செல்லக்கூடிய வாய்ப்பையும் வழங்குமாயின், இந்நூலகங்கள் மாணவர்களுக்குப் பெரும் பயன் நல்கக் கூடியனவாக இருக்கும்.
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் ஒரு தொலைக் கல்வி நிறுவனமாகும். எனினும், இப்பல்கலைக்கழகம், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான வலுவுள்ள தொடர்பை வலி யுறுத்துகின்றது. இத்தொடர்பைச் சீரிய முறையில் நிலவச் செய் வதற்குப் பிரதேச நிலையங்களினதும் கற்கை நிலையங்களினதும் ஒழுங்கான தொழிற்பாட்டைப் பல்கலைக்கழகம் நடைமுறைப் படுத்துகின்றது. இந்நிலையங்களிலே மாணவர்கள் பி ன் வ ரு ம் வசதிகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்புண்டு :
- பாடப் புத்தகங்கள், உசாத்துணை நூல்கள் மு த லி ய ன உட்படப் பாடத்தோடு தொடர்பான அச்சிட்ட பாட நூல்களைக் கொண்ட நூலகம் ஒன்று.
- ஒளிப்பதிவு செய்யப்பட்ட பட நிகழ்ச்சிகளும் ஒளிப்பதிவு செய்யப்பட்ட பாடங்களும்; அவற்றுடன் பாடநூல்களிலே இல் லாத விடயங்களைக் கொண்ட பதிவு நாடாக்கள்.
- கட்டுரை வகுப்புக்கள், வேலைக்களம், கருத்தரங்குகள், கலந் துரையாடல்கள் ஆகியவற்றுக்கா ன வ கு ப் ப  ைற க ள், செய்முறை வகுப்பு, செய்து காட்டல் ஆகியவற்றுக்கான ஆய்வுகூடங்கள். 24

Page 31
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் விஞ்ஞானம், எந்திர வியல், இலத்திரனியல் போன்ற பயிற்சிநெறிகளைத் தொலைக் கல்வி முறைமையிற் கற்பிக்கின்றது. எனவே, பிரதேச மட்டத் திலே ஆய்வுகூடங்களை அமைத்துச் செய்முறை வகுப்புக்களையும், ஆய்வுகூட வேலைகளையும் மாணவர்கள் மேற்கொள்வதற்கு வாய்ப் பளிக்க வேண்டியுள்ளது. ஆ க வே , பல்கலைக்கழகம் நாவலையி லுள்ள தலைமை நிலையத்திலும், பிரதேச நிலையங்களிலும் ஆய்வு கூடங்களை அமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 25
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமிடையிலான தொடர் பையும், மாணவர்கள் மத்தியிலே நிலவ வேண்டிய நெருக்கத்தை யும் வழங்குகின்ற இடங்களாகப் பிரதேச நிலையங்களும் கற்கை நிலையங்களும் அமைந்துள்ளன. தொலைக் கல்வி மு றை யி லே நிலவுகின்ற குறைபாட்டை (ஆசிரிய - மாணவ தொடர் புக் குறைவு, மாணவர் மத்தியிலே நெருக்கமின்மை ஆகியவற்றை) ப் போக்கும் நிலையங்களாக அவை திகழ்கின்றன.
44

நூலக வசதிகள்
தொலைக் கல்வி நிறுவனத்திலே மாணவர்களாக இருப்ப வர்கள் அந்நிறுவனமுள்ள நாட்டின் எல்லாப் பாகங்களிலும் வாழ் கின்றனர். அஃதாவது அவர்கள் தொலைக் கல்வி நிறுவனத் திலிருந்து தூரத்திலேயுள்ள தமது வீடுகளிலிருந்து படிப்பவர் கள். அவர்கள் தொலைக் கல்வி நிறுவனத்திற்கு அல்லது அதன் நிலையங்களுக்கு வேண்டப்படும்போது மட்டும் வருபவர்கள். இதன் காரணமாக அம்மாணவர்கள் தமது போதனாசிரியர்களை அடிக்கடி சந்திப்பதில்லை; போதனாசிரியர்களும் மாணவர்களைச் சந்திப்பது குறைவு. இவற்றுக்கும் மேலாக, தொலைக் கல்வி மாணவர்கள், ஒருவரையொருவர் சந்திப்பதும் அருமை. நாட் பாடசாலை, கருத்தரங்கு, ஆய்வுகூட வேலை போன்றனவற்றுக்கு வருகின்றபோது மட்டும் மாணவர்கள் ஒருவரையொருவர் சந் திக்கின்றனர்.
இவ்வாறு பரந்து வாழ்கின்ற மாணவர்களை ஒன்று சேர்ப் பதற்குப் பிரதேச நிலையங்களும் கற்கை நிலையங்களும் ஓரள விற்கு உதவியாக உள்ளன. எனினும், வீட்டிலே இருந்து படிப்பை மேற்கொள்கின்ற மாணவர்கள், தமது நூலக வசதி களைப்பற்றி அக்கறையுள்ளவர்களாக இருப்பர் என்பது திண்ணம். எனவே, தொலைக் கல்வி நிறுவனங்கள் நூலக வசதிகளைப் பன் முகப்படுத்தி மாணவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக் கின்றன. பிரதேச நிலையங்கள், கற்கை நிலையங்கள் ஆகியவற்
45

Page 32
றிலே நூலகங்களை நிறுவி உசவி வழங்குவதோடு, பொது நூல கங்களோடு தொடர்புகொண்டு அங்கேயும் மாணவர்கள் சிறப் பான வசதிகளைப் பெற்றுக்கொள்ள உதவுகின்றன.
மாணவர்கள் தாம் கற்கின்ற பயிற்சிநெறிக்கான அச் சிட்ட சாதனங்களைத் தொலைக் கல்வி நிறுவனத்திலிருந்து பெற் றுக் கொள்கின்றனர். அவற்றுடன் மரபு வழிப் பாடநூல்கள், துணை நூல்கள், சார்பு நூல்கள், பரிசோதனைக் கைநூல்கள், அறி முகச் சிறு நூல்கள், கோட்டுப்பட அட்டவணைகள், ஏனைய கற் பித்தற் சாதன ங்களுக்கான துணைக் குறிப்புக்கள் போன்றவற்றை யும் தொலைக் கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு வழங்குகின் றன. ஆனால் இவ்வகை நூல்களை எல்லாத் தொலைக் கல்வி நிறு வனங்களும் வழங்குவதில்லை. பிரித்தானியா திறந்த பல்கலைக்கழ கம் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளிலுள்ள தொலைக் கல்வி நிறுவனங்களாலேயே அவற்றை வழங்க முடிகின்றது.
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் பயிற்சிநெறிகள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளன. அதனாலே அச்சிட்ட பயிற்சிநெறி அலகுகளும் பெருகியுள்ளன. மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காகக் குவித்து வைத்திருக்கும் அந்த அச்சிட்ட அலகுகளைப் பல்கலைக்கழகத்தின் களஞ்சியச் சாலையிலே காணக் கூடியதாக இருக்கும், 1984 ஆம் ஆண்டிலே 180 தலைப்புக்களில் 480,000 பயிற்சிநெறி அலகுப் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. 26
அந்த அச்சிட்ட சாதனங்களை இலங்கைத் திறந்த பல் கலைக்கழகம் பிரதேச நிலையங்கள் வாயிலாகவும் கற்கை நிலையங் கள் வாயிலாகவும் விநியோகிக்கின்றது. இலங்கை ஒரு சிறிய தீவு ஆகவே அச்சிட்ட சாதனங்களை அவ்வாறு விநியோகிக்க முடிகின்றது . ஆனால் பிரித்தானியா, தாய்லாந்து, இந்தியா போன்ற பெரிய நாடுகளிலே தபால் மூலமே விநியோகிக்கப் படுகின்றன. இதனால் விரைவாக அவை மாணவரைச் சென்ற டைகின்றன. அச்சிட்ட பயிற்சிநெறிச் சாதனங்களைத் தவிர்த்து. ஏனைய நூல்களை மாணவர்கள் எல்லோருக்கும் விநியோகிக்கக் கூடிய நிலையிலே எல்லாத் தொலைக் கல்வி நிறுவனங்களும் இல்லை. ஆகவே, அவற்றை நூலகங்கள் வாயிலாக மா ணவர் பெறக்கூடிய ஒழுங்குகளைச் செய்கின்றன.
46

மூன்று பிரிவான நூல்களை நூலகங்கள் வாயிலாக மாண வர்களுக்கு வழங்கலாம். அவையாவன:
(அ) பயிற்சிநெறிகளுக்கெனச் சிறப்பாக அச்சிட்ட பாட
நூல்கள். (இவை மாணவர்களுக்கு விநியோகிக்கப் பட்டாலும், மாணவர் தேவைப்படும்போது பெற்று வாசிக்கக் கூடியதாக நூலகங்களிலும் அவை இடம் பெற வேண்டும்.)
(ஆ) '
ஏனை ய மரபு வழிப் பாடநூல்கள், துணை நூல்கள், சார்பு நூல்கள், பரிசோதனைக் கைந்நூல்கள். அறி முகச் சிறு நூல்கள், கோட்டுப்பட அட்டவணைகள் போன்றவை. (எல்லாத் தொலைக் கல்வி நிறுவனங் களும் இவற்றை மாண வர்களுக்கு விநியோகிப்ப தில் லை. ஆகவே, இவற்றை நூலகங்கள் வாயி லாகவாவது மாணவர்கள் பெற்றுப் பயன்படுத்த வாய்ப்பளிக்கலாம்.)
(இ)
அறிவுப் பசியைத் தீர்த்துக்கொள்ள வாசிக்கும் ஆர்வமுள்ளவர்களாக மாணவர்கள் இருக்கின்றனர். ஆகவே, நூலகம் ஒன்றிலே இடம்பெறவேண்டிய நூல்கள் யாவற்றையும் மாணவர் பெறக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தலாம். (நிதி நிலைமையைப் பொறுத்து!. இந்த ஒழுங்கு கூடியளவிலே அல்லது குறைந்த அளவிலே அமையலாம்.)
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம், மாணவர்களுக்கு நூலக வசதிகளைப் பல்வேறு முறைகளிற் செய்து கொடுக்கின்றது. நாவலையிலுள்ள பல்கலைக்கழகத்தின் மத்திய வளாகத்திற் பிர தான நூலகம் அமைந்துள்ளது. அச்சிட்ட பாடநூல்கள், ஏனைய தொலைக் கல்வி பற்றிய நூல்கள், துணை நூல்கள், சார்பு நூல்கள் போன்றவை இந்நூலகத்தில் உள்ளன. நூல்களைப் பெறுதல் அல்லது வாங்குதல், அவற்றைப் பாகுபாடு செய்தல், அவைகளை நூலகத்திலே வைத்துப் பேணுதல் என்பன இந்நூல் கத்தின் பணிகளாகும். மேலும் பயிற்சிநெறிகளைத் தாயாரிக் கின்ற கல்வியாளர்களுக்கு ஆதரவாகவுள்ள நூல்களை வழங்குதல், கல்வியாளர்கள் மேற்கொள்கின்ற ஆராய்ச்சிகளுக்குத் தேவை யான நூல்களைக் கொடுத்து உதவுதல் என்பனவும் இந்நூலகத் தின் கடமையாகும். மாண வர்களும் இந்நூலகத்திலே நூல்களை வாய் கி வாசிக்கக் கூடியதாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
27

Page 33
மேலும், பிரதேச நிலையங்களிலும், கற்கை நிலையங்களிலும் சிறிய நூலகங்கள் உள்ளன. பயிற்சிநெறிகளுக்கான அச்சிட்ட சாதனங்கள், துணை நூல்கள், சார்பு நூல்கள், வேறு பாடநூல் கள் என்பன இச்சிறிய நூலகங்களிலே இருக்கின்றன. அவற்றை மாணவர் கடனாகப் பெற்றுப் பயன்படுத்த முடியும்.
இவற்றுக்கும் மேலாகப் பொது நூலகங்களிலே திறந்த பல்கலைக்கழக மாணவர்களுக்குச் சிறப்பான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அனுராதபுரம், பதுளை, மட்டக்களப்பு. காலி, கம்பளை, கொறணை, கல்முனை, கண்டி, கேகாலை, குளி யாப்பிட்டியா, மன்னார், மாத்தளை, மாத்தறை, மொனறாகலை, முல்லைத்தீவு, நீர்கொழும்பு, நுவரெலியா, பொலனறுவை, புத் தளம், இரத்மலானை, திசைமாரகம், திருகோணமலை, வவுனியா ஆகிய இடங்களிலே உள்ள பொது நூலகங்களிலே திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் நூல்களைப் பெற்று வாசிக்கக் கூடிய சிறப்பான ஒ ழு ங் கு க ளை ப் பல்கலைக்கழகம் செய்துள்ளது. கொழும்பு மாவட்டத்திலே திறந்த பல்கலைக்கழக மாணவர் தொகையிலே அரைப் பங்குக்கும் கூடுதலானோர் உளர். ஆகவே, கொழும்பு, தெகிவளை, அவிசாவலை, கொலனாவை, மொறட் டுவை, நுகேகொடை ஆகிய ஆறு பொது நூலகங்களிலே திறந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. 27
பிரித்தானியா திறந்த பல்கலைக்கழகம் மில்றன் கீன்ஸ் நகரி லுள்ள பல்கலைக்கழக வளாகத்திலும் ஏனைய 13 பிரதேச அலுவல கங்களிலும் மாணவர்களுக்கு நூலக வசதிகளைச் செய்துள்ளது. மி ல் ற ன் கீ ன் ஸ் நகரிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தி லுள்ள நூலகம் மிகவும் பெரியது. நவீன வசதிகளோடு கூடிய சிறந்த நூலகமாக அமைந்துள்ளது. கல்வியாளர்களுக்கு வேண் டிய எல்லா நூல்களும் அங்குண்டு. பயிற்சிநெறி அ ணி க் கு த் தேவையான நூல்களையும் அந்நூலகம் கொடுத்து உதவுகின்றது. பயிற்சிநெறி அணிகளிலே நூலகர் உறுப்பினராகப் பணியாற்று கின்றார். செவிப்புல நாடாக்கள், கட்புல நாடாக்கள், நழுவற் படங்கள் போன்றவையும் இந்நூலகத்திலே உண்டு. அவற்றைப் பார்க்கத் தக்கதான அல்லது கேட்கத் தக்கதான வசதிகளும் நூலகத்திலே உண்டு, உலகிலேயுள்ள தொலைக் கல்வி நிறுவனங் களின் வெளியீடுகள், சஞ்சிகைகள், செய்தித் திரட்டுக்கள் போன்ற வற்றையும் இந்நூலகம் வரவழைக்கின்றது.
48

பாகிஸ்தான் அல்லாமா இக்பால் திறந்த பல்கலைக்கழகத் தின் நூலக வசதி சிறிறு வேறுபட்ட முறையிலே உள்ளது.28 பல்கலைக்கழக மத்திய வளாகத்திலுள்ள நூலகம் பல வசதிகளைக் கொண்ட முக்கிய நூலகமாக உள்ளது. இதன் தொழிற்பாடு களாவன :
(அ) அச்சிட்ட நூல்களையும் ஏனைய சாதனங்களையும் சேர்த்
தல்; அற்றைப் பாகுபாடு செய்து நூலகத்திலே வைத் தல்; அவற்றை வாசிப்பதற்கு அல்லது க ட னு க் கு ப்
பல்கலைக்கழகக் கல்வியாளர்களுக்கு வழங்குதல். (ஆ) வளங்கள், சேவைகள் வாயிலாகப் பயிற்சிநெறிகளைத்
தயாரிப்பதற்கும் ஆராய்ச்சிகளுக்கும் பொதுவான ஆத
ரவை நல்குதல், (இ) கட்புல, செவிப்புல உதவிச் சாதனங்களைக் க ட னா சு
வழங்குதல்.
இந்நூலகம் ஏழு பிரிவுகளைக் கொண்டதாக அமைந்துள்
அவை பின்வருமாறு :
ளது.
1. தொழினுட்பத் தொழிற்பாடுகள் 2. வாசிப்போர்க்கான சேவைகள் 3. கடன் சேர்த்தல் 4. இக்பால் சிறப்பு நூல்கள் 5. கற்பித்தற் சாதனங்களின் நிலையம் 6. கட்புல செவிப்புலச் சாதனங்கள் நிலையம் 7. நூலக நிருவாகம்
மரபுவழிப் பல்கலைக்கழகங்களிலுள்ள நூலகங்களிலும் பார்க்கத் தொலைக் கல்வி நிறுவனங்களிலுள்ள நூலகங்கள் வேறுபட்ட முறையிலே இயங்கு தலைக் காணக்கூடியதாக இருக் கின்றது. சிறப்பாக மத்திய வளாகத்திலுள்ள நூலகத்தில் மாண வர்களைக் காணமுடியாது . கல்வியாளர்களை மட்டும் காணலாம். கல்வியாளர்களையும் எப்போதும் காணமுடியாது. பிரதேச நிலைய நூலகங்களை மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். அதுவும் நாட் பாடசாலை, கருத்தரங்கு, ஆய்வுகூட வேலை போன்றவற்றுக்கு மாணவர் அ ங் கு வரும்போது நூலகத்தைப் பயன்படுத்து கின்றனர். ஆனால் நூலகங்களிலே அவர்கள் நீண்ட நேரத்தைச்
செலவிடுவதில்லை.
49

Page 34

ப யிற் சிநெறி அ ணிகள் ( COURSE TEA NIS )
தொலைக் கற்பித்தற் சாதனங்களுள் முக்கிய அங்கமாக அச்சிட்ட பாடநூல்கள் உ ள் ள ன. அவற்றைத் தயாரித்து வழங்குவோர் பயிற்சிநெறி அணியினர் என அழைக்கப்படுகின்ற னர். அஃதாவது, தொலைக் கல்வி நிறுவனங்களிற் பாடநூல் களைப் பயிற்சிநெறி அணிகளே தயாரித்து வழங்குகின்றன. பயிற்சிநெறி அணிகளின் அமைப்பு, அணிகளின் உறுப்பினர்கள், அவர்களின் கடமைகள், பங்களிப்புகள் என்பன பற்றி விளக்க மாகப் பலர் எடுத்துரைத்துள்ளனர்; ஆய்வுகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளன. 29
பயிற்சிநெறி அணிகள் யாவும் ஒரே அமைப்புடையன வாக இருக்கவேண்டுமென்ற நியதியில்லை; அவ்வாறு இருக்கவும் முடியாது. ஒரு தொலைக் கல்வி நிறுவனத்திலுள்ள பயிற்சி நெறி அணிகளின் அமைப்பு, இன்னொரு தொலைக் கல்வி நிறு வனத்திலுள்ள அணிகளின் அமைப்பைப் போலன்றி வேறுபட்டு இருக்கலாம். 30 எனினும், பல அமிசங்களிற் பயிற்சி நெறி அணி கள் யாவும் ஒரே வகைத்தன என்பதை யாவரும் ஏற்றுக்கொள் வர். பயிற்சிநெறியின் தன்மை, விடயப் பரப்பு, உள்ளடக்கம் என்பனவற்றைப் பொறுத்துப் பயிற்சிநெறி அணியிலே பல்வேறு உறுப்பினர்கள் இடம்பெறுவர்.31
5!

Page 35
பிரித்தானியா திறந்த பல்கலைக்கழகம், முன்மாதிரியான ஒரு தொலைக் கல்வி நிறுவனமாக அமைந்து விளங்குகின்றது. அப்பல்கலைக்கழகத்திலே ஆறு பீடங்கள் உண்டு. ஒவ்வொரு பீடத்தின் கீழும் பல பயிற்சிநெறி அணிகள் இருக்கின்றன. அப்பயிற்சிநெறி அணிகளின் அமைப்பும் தொழிற்பாடும், ஏனைய தொலைக் கல்வி நிறுவனங்களிலுள்ள பயிற்சிநெறி அணிகளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக அமைந்துள்ளன. கீழே கொடுக் கப்பட்டுள்ளவை பிரித்தானியா தி ற ந் த பல்கலைக்கழகத்தின் பயிற்சிநெறி அணிகளைப் பற்றியன.
(அ) பயிற்சிநெறி அணித் தலைவர்
தொலைக் கல்வி நிறுவனத்திலுள்ள அனுபவம் நிறைந்த கல்வியாளர் ஒருவரே பயிற்சிநெறி அணியின் தலைமைப் பத விக்கு உரியவர். அவர் ஒரு சிரேட்ட கல்வியாளராக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பயிற்சிநெறியின் கல்வித் தரத்தைப் பேணத்தக்க திறமையும், குறிப்பிட்ட காலத்துக் குள்ளே பாடநூல்களைத் தயாரித்து முடிக்கக் கூடிய ஆற்றலும், வரையறை செய்யப்பட்ட பணத் தொகைக்குள் பாடநூல்களை ஆக்கி அளிக்கத்தக்க வல்லமையும் உள்ளவராக இ ரு த் த ல் வேண்டும்.
சில தொலைக் கல்வி நிறுவனங்களிலே அந்தந்தத் துறை களின் பேராசிரியர்களே அந்தந்தத் துறைகளின் கீழுள்ள பயிற்சி நெறி அணிகளின் தலைவர்களாகத் தொழிற்படுகின்றனர். எடுத் துக்காட்டாக, கல்வித் துறைப் பேராசிரியர், கல்வித் துறையின் கீழுள்ள பயிற்சிநெறி அணிகளுக்குத் தலைமை த ா ங் கு வ ா ர். சட்டத் துறைப் பேராசிரியர், அத்துறையின் கீழுள்ள பயிற்சி நெறி அணிகளுக்குப் பொறுப்புடையராவர், பேராசிரியர்கள் நியமிக்கப்படாத துறைகளிலே அந்தந்தத் து  ைற க ளி லு ள் ள சிரேட்ட விரிவுரையாளர்கள் அந்தந்தத் துறைகளுக்கான பயிற்சி நெறி அணிகளுக்குத் தலை மை தாங்குவர். 32
பயிற்சிநெறி அணியின் தலைவர், அவ்வணியிலுள்ள ஏனை ய உறுப்பினர்களுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்வார். அதி காரத்தைக் காண்பிப்பவராகத் தொழிற்படாமல், அன்பினாலே உறுப்பினர்களை வழிநடத்துபவராக இருப்பார். உறுப்பினர்களுக்கு உபத்திரவத்தைக் கொடுக்காமல், ஊக்கம் அளித்து அவர்களை ஆக்கபூர்வமான முறையில் வழிநடத்துவது அன்னாரின் பொறுப்
52

பாகும். பயிற்சிநெறி அணி ஒன்றின் வெற்றியும் தோல்வியும்
அதன் தலைவரின் கையிலேயே உள்ளது.
பயிற்சிநெறி அணி ஒன்றின் தலைவர், அலகு எழுத்தாள ராகவும் பங்களிக்கலாம். அவ்வகைப் பங்களிப்பு ஏனைய உறுப் பினர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் உண்டாக்கும். அவர் எழுதுகின்ற அலகுகள் முன்மாதிரியானவையாக அமைந்து, ஏனைய உறுப்பினர்களுக்கு வழிகாட்டிகளாக அமையலாம். நிரு வாகப் பொறுப்பும், கடமைகளும் அவரின் வேலைச் சுமைகளாக அமைவதால், அலகுகள் எழுதுவதிற் குறைந்தளவு ப ங் க ளி ப் பினையே அணித் தலைவர் வழங்கக் கூடியவராக இருப்பார்.
(ஆ) பயிற்சிநெறி அலகு இயற்றுநர்
பயிற்சிநெறி அணிகளிலே உள்ள அலகு இயற்றுநர் சிறந்த கல்வியாளர்கள். பயிற்சிநெறியின் விவரமான பகுதிகள் அவர் களிடம் ஒப்படைக்கப்படும். அலகு இயற்றுநர் ஒருவர், ஒன்று அல்லது ஒன்றுக்குக் கூடுதலான பயிற்சிநெறி அலகுகளுக்குப் பொறுப்புடையராக இருப்பார். பொதுவாக ஓர் அலகு, ஒரு மாணவனின் ஒரு வாரத்துக்கான வேலையாகும். வீட்டில் அல் லது வேலைசெய்யும் இடத்திலிருந்தவாறே படிக்கக் கூடிய பாட நூல் அலகுகளை எழுதுவதனால் அவர்கள் 'இயற்றுநர்' (Author) என அழைக்கப்படுகின்றனர்.33
அலகுகளை எழுதுவது மட்டும் அவர்களின் ப ணி ய ன் று. எந்தெந்த நூல்களை மேலதிகமாக மாணவர் வாசிக்க வேண்டும் என்பதையும் அவர்களே தீர்மானிப்பர், மேலும், பரீட்சைகளை யும் பயிற்சிகளையும் வ டி வ  ைம த் த ல், பொருத்தமான இடங் களில் வீட்டுப் பரிசோதனைகளுக்கான செய்முறை வே லை க ளை உருவமைத்தல், ஒலிபரப்புக்கான விடயங்களைத் திட்டமிடுதல் , துணை நூல்களை எழுது தல் என்பனவும் அவர்கள் மேற்கொள்ள வேண்டியன வாகும். இன்னும் தமது சக இயற்றுநர்கள் எழு திய அலகுகளைப் படித்து, ஆக்கபூர்வமான கருத்துக்களை எடுத் துரைக்கும் திறமையும் அவர்களுக்கு வேண்டும்.
பாடநூல் அலகுகளை எழுதுவோர் தொலைக் கற் பி த் தலிலே அனுபவம் உள்ளவர்கள், தொலைக் கற்பித்தலுக்கு உகந்த பாடநூல் அலகுகளை ஆக்கும் ஆற்றலும் திறமையும் அவர்க ளுக்கே உண்டு. தொலைக் கற்பித்தற் பாடநூல்கள் மரபுவழிப் பாடநூல்களிலும் வேறுபட்டவை. எனவே அவற்றை எழுது கின்ற அலகு இயற்றுநர்கள் தனித்துவமான ஆற்றல் படைத்த
53

Page 36
வர்கள், அவர்கள் ஆக்கிக் கொடுக்கும் பாட அலகுகள், மாண வர் தாமாகவே படித்து விளங்கிக்கொள்ளத் தக்கவை.
(இ) கல்வித் தொழினுட்பவியலர்
பிரித்தானியா திறந்த பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாகக் கல்வித் தொழினுட்பவியல் நிறுவகம் அமைந்துள் ளது. அந்நிறு வகம் ஒரு பீடத்துக்கு ஒப்பானதாகும் அந்நிறுவகத்திலே உள் ளோர் யாவரும் சிறந்த கல்வியாளர்கள். அத்துடன் தொலைக் கற்பித்தலிலே அனுபவமும் உள்ளவர்கள். ஏதாவது ஒரு துறை யிற் சிறப்புப் பட்டம் பெற்று, பட்டமேற் கல்வியை மேற்கொண் டவர்களாக இருக்கின்றனர். அவர்கள் தம் முழு நேரத்தையும் ஆய்வுகளுக்கே செலவிடுகின்றனர். அஃதாவது பல்கலைக்கழகம் நடைமுறைப்படுத்துகின்ற கற்பித்தல் முறைகளின் பயன்பாடு கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு, பயிற்சிநெறி அணிகளுக்கு அறிவுரை வழங்குகின்றனர். 34
பயிற்சிநெறி அ ணி யி ற் கல்வித் தொழினுட்பவியலர், ஒரு முக்கிய உறுப்பினர் ஆவார். அவர் பயிற்சிநெறியிலுள்ள கற்பித்தற்கான குறிப்பிட்ட விடயங்களிலே அக்கறை காட்ட மாட்டார், பாடங்களின் நோக்கம், கல்வி நுணுக்கங்கள், கற் பித்தற்கான உபாயங்கள் என்பன குறித்தே மிக்க அ க் க  ைற உடையராக இருப்பார்.
பிரித்தானியாவிலுள்ள மரபுவழிப் பல்கலைக்கழகங்களின் கல்வியாளர்களிற் பலர், கல்வித் தொழினுட்பவியல் அணுகுமுறை களோடு பழக்கமற்றவர்கள். எனவே, திறந்த பல்கலைக்கழகம், அதன் ஆரம்ப காலத்திலிருந்தே ஒவ்வொரு பயிற்சிநெறி !ணி யிலும் ஒவ்வொரு கல்வித் தொழினுட்பவியலர் இடம் பெற வேண்டுமென்ற கொள்கையினைக் கடைப்பிடித்து வருகின்றது .
சில கல்வித் தொழினுட்பவியலர்கள் ஒன் று க் கு மேற் பட்ட பயிற்சிநெறி அணிகளிலே உறுப்பினராக இருக்கின்றனர். பிரித்தானியா திறந்த பல்கலைக்கழகத்திற் பல பயிற்சிநெறி அணி கள் உண்டு. ஒவ்வொரு பயிற்சிநெறி அணியிலும் ஒவ்வொரு கல்வித் தொழினுட்பவியலர் உறுப்பினராக இருப்பார். ஆனால் கல்வித் தொழினுட்பவியல் நிறுவகத்திலுள்ள உறுப்பினர்களின் எண் ணிக்கையிலும் பார்க்கப் பயிற்சிநெறி அணிகளின் எண்ணிக்கை அதிகமாகும். எனவே, நிறுவகத்திலுள்ள தொழினுட்பவியலர் ஒவ்வொருவரும் ஒன்றுக்குக் கூடுதலான பயிற்சிநெறி அணிக ளிலே பணியாற்ற வேண்டியவர்களாக இருக்கின்றனர். இத்
54

தகைய ஒழுங்கு திருத்திகரமானது என்று கூறமுடியாது. எனி னும் பல்கலைக்கழகத்திலேயுள்ள ஏனைய கல்வியாளர்கள், தம் கடின உழைப்பாலும் நீண்ட அனுபவத்தாலும் கல்வித் தொழி னுட்பவியலிலே தனித்துவமான ஆற்றலைப் பெற்று வருவதோடு, தொலைக் கற்பித்தல் அணுகுமுறைகளை அறிந்து தொழிற்படுமள விற்கு முன்னேறியுமுள்ளனர்.
உலகிலுள்ள ப ல தொலைக் கல்வி நிறுவனங்களிலேயுள்ள பயிற்சிநெறி அணிகளிற் கல்வித் தொழினுட்பவியலர் என்ற சிறப்புப் பெ ய  ேர ா டு எவரும் உறுப்பினராக இடம்பெறுவ தில்லை. அத்தகைய சிறப்பியல்புடையவர்களைத் தனித்துவமான முறையிலே உருவாக்கவும் அந்நிறுவனங்கள் முன்வரவில்லை. கல் வித் தொழினுட்பவியற் பிரிவிலுள்ளவர்கள் கல்வியாளர்களாக் இல்லாதவிடத்து, கல்வித் தொழினுட்பங்களை அவர்களாற் கண்டு கொள்ளவும் முடியாது; பயிற்சிநெறித் தயாரிப்புக்குப் பயனுள்ள பங்களிப்பை அவர்களாற் செய்யவும் இயலாது. கற்பித்தல் தொழினுட்பங்களைக் கண்டு கொள்வதற்காகவே தகைமையுள்ள கல்வியாளர்கள் நியமிக்கப்படுதல் வேண்டும்; அக்கல்வியாளர்கள் கல்வித் தொழினுட்பங்களைக் கண்டு, பயனுள்ள பங்களிப்பினைப் பயிற்சிநெறி அணிகளுக்கு வழங்குவதற்கு அல்லும் பகலும் அய ராது உழைப்பவர்களாகத் தொழிற்படுதல் அவசியமாகும்.
சில தொலைக் கல்வி நிறுவனங்களிற் கல்வித் தொழினுட்ப வியற் பிரிவு உண்டு. ஆனால் அவை மேற்கொள்ளும் பணிகள் வேறுபட்டன. அப்பிரிவிற் பிரித்தானியா திறந்த பல்கலைக்கழகத் தின் நிறுவகத்திலுள்ள கல்வித் தொழினுட்பவியலர்கள் போன் றோர் இல்லை. பாகிஸ் தான் அல்லமா இக்பால் திறந்த பல்கலைக் கழகத்திலுள்ள கல்வித் தொழினுட்பவியல் நிறுவகத்தை இதற்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம். 35
அப்பிரிவிற அ, தொழினு, திறந்த !
(ஈ) பணியணிப் போதனாசிரியர்
பணியணிப் போதனாசிரியர் தி ற ந் த பல்கலைக்கழகத்தின் பீடம் ஒன்றைச் சேர்ந்தவர் மட்டும் அல்லர். ஒரு பிரதேச அலுவலகத்திற் பணியாற்றுபவரும் ஆவார். அவர் அப்பிரதேசத் திலே வாழ்ந்து, பெரும் பகுதி நேரத்தை அப்பிரதேசதிலுள்ள திறந்த பல் கலைக்கழகத்தின் அலுவலகத்திற் செலவிடுவார். பிர தேச, அலுவலகத்திலும், உள்ளூர்க் கற்கை நிலையங்களிலும் மாணவர்களோடு நெருங்கிப் பழகுவதனால், மாணவர்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் அவர் நன்கு தெரிந்தவராக இருப்பார். அதனால் பயிற்சிநெறி அணியிலுள்ள ஏனைய உறுப்

Page 37
பினர்களிலும் பார்க்கக் கூடுதலான பங்களிப்பை அவரால் வழங்க முடிகின்றது. இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்திலே உள்ள போதனாசிரியர்கள் பகுதி நேரப் பணியாளர்கள் ஆவர். 35
ஒவ்வொரு பயிற்சிநெறி அணியிலும் கு  ைற ந் த து ஒரு போ தனாசிரியராவது இடம்பெற வேண்டுமெனப் பல்கலைக்கழகம் விதித்துரைத்துள்ளது. எ ன வே ஒரு பயிற்சிநெறி அணியிலே ஒன்றுக்கும் அதிகமான போதனாசிரியர்கள் உறுப்பினர்களாக இருக்கலாம். (உ) பயிற்சிநெறி உதவியாளர்
பயிற்சிநெறி உதவியாளர் பல்கலைக்கழகக் கல்வியாளர் ஆவார்; அத்துடன் நிருவாகத் திறனும் உடையவர். அவரின் பதவி சிறியது; ஆனால் முக்கியமானது. கல்விசார் விடயங்களைக் கண்காணித்து நிருவாகப் பொறுப்புடையராக, அவர் பணியாற் றுவார். பிரித்தானியாவின் மரபுவழி உயர் கல்வியோடு உண் மையான சமத்துவத்தைப் பெறக்கூடிய அளவிலே பங்களிக்க வல்ல ஒருவரைத் திறந்த பல்கலைக்கழகம் இப்பதவிக்குக் கண்டு கொள்ள வேண்டிய பொறுப்பினை உடையதாக உள்ளது. அதிஷ் டவசமாக நிருவாக அனுபவத்தோடுகூடிய பல கல்வியாளர்களை அவர்களின் விருப்பத்தோடு இப்பதவிகளுக்குப் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்புச் செய்துள்ளது.
இதுவரை மே லே குறிப்பிட்ட யாவரும், திறந்த பல் கலைக்கழகத்தின் கல்விப் பணியணியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களைத் தவிர்த்துப் பல்கலைக்கழகத்தின் பங்காளராகவுள்ள பிபிசி தயாரிப்பு நிலையத்தின் உறுப்பினர் ஒருவர் பயிற்சிநெறி அணிக்கு மிக முக்கிய பங்களிப்பினைச் செய்கின்றார். அவ்வுறுப் பினரின் பங்களிப்பினை இனி விவரமாக நோக்குவோம்.
(ஊ) பிபிசி தயாரிப்பாளர்
திறந்த பல்கலைக்கழகத்தின் பிபிசி தயாரிப்பு நிலையத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஒ ரு வ ர் , பயிற்சிநெறி அணிகளிலே உறுப்பினராக இருப்பார். அவர் முக்கிய உறுப்பினராகத் தொழிற்படுவார், பயிற்சிநெறிக்கு வேண்டிய வானொலிப் பாடங் களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்குபவர் என்ற முறையில் இவருடைய பங்களிப்பு மிகமிக முக்கியமான தாகக் கருதப்படுகிறது.
56

பிபிசி தயாரிப்பு நிலையத்திலுள்ள தயாரிப்பாளர்கள் யாவ ரும் சிறந்த கல்வியாளர்கள். அவர்கள் யாவரும் பல்கலைக்கழகம் ஒன்றிலே படித்துப் பட்டம் பெற்றவர்கள், பல்கலைக்கழகங்களிற் கற்பித்த அனுபவமும் ஆராய்ச் சித் திறமையும் உடையவர்கள். சிறந்த கல்வியாளர்களாக இருப்பதால், தத்தம் துறைகளுக்கான பயிற்சிநெறி அணிகளிலே உறுப்பினராக இருந்து, சிறந்த பங் களிப்பினை அவர்களாலே செய்ய முடிகின்றது.
பிபிசி தயாரிப்பு நிலையத்திலுள்ள தயாரிப்பாளர்கள் எல் லோரும் ஒலிபரப்பு, ஒளிபரப்பு ஆகியவற்றின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்கள். அந் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வதற் குப் பயிற்சியைப் பெற்றவர்கள். அவர்களிற் பலர் கல்வி ஒலி பரப்பு, கல்வி ஒளிபரப்பு என்பவற்றில் மட்டுமன்று. வேறு வகைத் தயாரிப்பு முறைகளிலும் திறமை உடையவர்கள். எடுத் துக்காட்டாக விவரணச் சித்திரம், விஞ்ஞான நுட்பங்கள், உரைச் சித்திரம், கலை அமிசங்கள் போன்றவற்றைத் தயாரித்து வழங்கும் திறமை படைத்தவர்கள்.
பயிற்சிநெறி விடயங்களிற் பொருத்தமான இட ங் க ளை அடையாளங்கண்டு அவற்றை ஒலி பரப்புப் பாடங்களாகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகவும் தயாரித்து வழங்குவது அவர் களின் பொறுப்பாகும். பயிற்சிநெறிப் பாடங்களை எழுதுகின்ற போதே ஏனைய உறுப்பினர்களோடு கலந்துரையாடிப் பொருத்த பமான ஒலி/ஒளி பரப்புக்கான இடங்களைத் தயாரிப்பாளர் அடை யாளங்கண்டு கொள்வார். அதன்பின்னர் அவை பற்றிய உறுதி யான முடிவுகளைச் செய்வார். நிகழ்ச்சிகளைத் தயாரித்த பின்னர், வேண்டிய நிகழ்ச்சிகளுக்கு ஒலிபரப்பு / ஒளிபரப்புக் குறிப்புகளை எழுதுவார். நிகழ்ச்சிகளோடு தொடர்பான பாடங்களிலுள்ள உசாத்துணைக்கான இடங்களைத் தெரிந்து, அவற்றைத் தொகுத்து அச்சிட்டு மாணவர்களுக்கு வழங்குவார்.
தொலைக் கற்பித்தற் சாதனங்களுள் வானொலிப் பாடங் கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியன முக்கியமானவை. சிறப்பாக விஞ்ஞானம், தொழினுட்பவியல் போன்ற துறைக ளுக்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மிகவும் இன்றியமையாதன. எனவே ஈராண்டுகளுக்கு முன்பாகவே ஒலிபரப்புக்கும் ஒளிபரப் புக்குமான உபாயங்களைத் தயாரிப்பாளர் அறிந்து தொழிற்படத் தொடங்கிவிடுவார்.
57

Page 38
ஒலிபரப்பு, ஒளிபரப்பு ஆகியவற்றுக்கான கால அட்ட வணை ஒன்றைத் தயாரிப்பதும் தயாரிப்பாளரின் பொறுப்பாகும், ஏனைய கற்பித்தல் அங்கங்களோடு பொருந்தக் கூடியதாகக் கால அட்டவணை தயாரிக்கப்படும். மேலும் ஓராண்டுக்கு முன்பாகவே ஒலி / ஒளி பரப்புக்களுக்கான நிகழ்ச்சிகள் குறித்து ஆராய்ச்சி செய்வதிலும், அந்நிகழ்ச்சிகளை ஒன்றிணைத்துத் திட்டமிடுவதிலும் தாயாரிப்பாளர் முழு மூச்சாக ஈடுபடுவார். பின்னர், ஒலி/ஒளி பரப்பு நிகழும் போது அந்நிகழ்ச்சிகளை நன்கு பார்வையிடுவார். பின்னர் நிகழ்ச்சிகள் பற்றிய மாணவர்களின் அபிப்பிராயங்களை அறிந்து கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பார். 37
(எ) பதிப்பாசிரியர்
பயிற்சிநெறி அணித் தலைவரின் பொறுப்புக்களும் கடமை களும் பதிப்பாசிரியருக்கும் உரியன. பயிற்சிநெறி அணி தொழிற் படத் தொடங்கும் காலந்தொட்டு, அணியின் தலைவரோடு ஒத் துழைத்துப் பாட அலகுகளின் தயாரிப்புக்குப் பதிப்பாசிரியர் உதவியாக இருப்பார். எழுதப்பட்ட மூலப் பிரதிகள் உ ரி ய காலத்திலே அச்சேறுவதற்கு ஏற்புடையனவா என்பதைத் தம் கவனத்திற் கொள்வார். பா ட நூ ல் க ளை அச்சிடுவதற்கான செலவுகள் ஒப்புக் கொள் ளப்பட்ட எல்லைக்குள்ளேயே உள்ளனவா என்பதையும் உறுதிப்படுத்துவார்.
எழுதி முடிக்கப்பட்ட இறுதிப் பிரதிகள் நல்ல முறையிலே ஒழுங்குபடுத்தப் பட்டுள்ளனவா என்பதையும், அவை படங்கள், அட்டவணைகள், வரை படங்கள் என்பன கொண்டு விளக்கமாகத் தயாரிக்கப்பட்டுள்ளனவா என்பதையும், பிழைகள் எவையுமின்றி அமைந்துள்ளனவா என்பதையும் உறுதிப்படுத்தும் திறமை பதிப் பாசிரியருக்கு மி க வும் வேண்டற்பாலது. பல்கலைக்கழகத்தின் உயர்ந்த தரத்தைப் பிரதிபலிக்கத்தக்க பாடநூல்களாக உருப் பெறுவதற்குப் பதிப்பாசிரியர் பொறுப்புடையராவர். பயிற்சி நெறி அல கு க ள் முழுவதையும் நோக்கிப் பயிற்சிநெறிக்கான ஏனைய அச்சிட்ட பல்வேறு அங்கங்களோடு ஒப் பிட்டு அவை களுக்கிடையேயுள்ள இணைப்புக்கள் தொடர்பான பயனுள்ள கருத்துரைகளையும் ஆலோசனைகளையும் பதிப்பாசிரியரால் வழங்கக் கூடிய தாக இருக்கும். அத்தோடு மாணவர்களுக்குக் கவலையைக் கொடுக்கும் பாட அலகுகளிலுள்ள இசைவின்மைகளைப் பதிப்பா சிரியரே முதன் முதலிற் சுட்டிக்காட்டுபவராகவும் இருப்பார்.
58

(ஏ) ஏனைய உறுப்பினர்கள்
மேலே எடுத்துச் சொல்லிய உறுப்பினர்களைத் த வி ர, நூலகர், தகவல் தொடர்பு வடிவமைப்பாளர், நிதியாளர் ஆகி யோரும் பயிற்சிநெறி அணிகளின் கூட்டங்களிற் கலந்து கொள் வர். இவர்கள் பயிற்சிநெறி அணியின் முழுநேர அங்கத்தவர் கள் அல்லர். அவர்களின் அபிப்பிராயங்கள் வேண்டப்படும் காலங்களில் மட்டும் கூட்டங்களிற் கலந்து கொள்வர்.
நடைமுறையிலுள்ள பாடப் புத்தகங்கள், பி ன் ன ணி வாசிப்பு நூல்கள் ஆகியவற்றைப் பயிற்சிநெறி அணியினர் பயன் படுத்த வேண்டிய காலங்களில் நூலகருடைய அபிப்பிராயங் களும் ஆலோசனைகளும் கேட்டறியப்படும். அ ந்  ேநர த் தி ல் மட்டும் நூலகர் அல்லது அவரின் பிரதிநிதி பயிற்சிநெறி அணிக் கூட்டத்திற்குச் சமூகமளிப்பார். முக்கியமான தகவல் தொடர்பான கலந்துரையாடல்களில் மட்டும் தகவல் தொடர்பு வடிவமைப்பாளர் ஒருவர் பயிற்சிநெறிக் கூட்டத்திற் க ல ந் து கொள்வார். நிதி சம்பந்தமான பிரச்சினைகள் எழுகின்ற போது நிதியாளர் அல்லது அவரின் பிரதிநிதி ஒருவர் ப யிற் சி  ெந றி அணிக் கூட்டத்திற் கலந்து ஆலோசனை வழங்குவார். இவர் களைத் தவிர்த்து, அட்டவணைகளைத் திட்டமிடும் போது அல்லது அட்டவணைகளிலே தவறுகள் ஏற்படும்போது பல்கலைக்கழகத்தின் முன்னெறியக் கட்டுப்பாட்டாளர் பயிற்சிநெறி அணிக் கூட்டத் திற் கலந்து அறிவுரை வழங்குவார்.
(ஐ) வெளிவாரி உறுப்பினர்
திறந்த பல்கலைக்கழகத்தையும் பிபிசி தயாரிப்பு நிலையத் தையும் சேராத சில கல்வி வல்லுநர்களின் சேவைகளைப் பயிற்சி நெறி அணி பெற்றுக்கொள்கின்றது. அவ்வல்லுநர்கள் சிறப் பான ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களாவர். ஆலோ சனைகள் தேவைப்படும் போது மட்டும், அவர்கள் பயிற்சிநெறி அணிக் கூட்டத்திலே கலந்து கொள் வர் இவ்வல்லுநர்களை அல்லது கல்வியாளர்களை இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் உசாவுநர் ( Consultant ) அல்லது தேசிய உ ச மாவு நர் என்று அழைக்கின்றது. 38
59

Page 39
இதுவரை கூறியவை யாவும் பிரித்தானியா திறந்த பல் கலைக்கழகத்தில் நடைமுறையிலுள்ள பயிற்சிநெறி அணிகளையும் அப்பயிற்சி அணிகளிள் உறுப்பினர்களையும் பற்றியவை ஆகும். இத்தகைய முறையில் ஏனைய தொலைக் கல்வி நிறுவனங்களிற் பயிற்சிநெறி அணிகள் அமைவதுமில்லை; தொழிற்படுவதுமில்லை. எனினும் தாய்லாந்திலுள்ள திறந்த பல்கலைக்கழகத்திலே பயிற்சி நெறி அணிகள் நல்ல முறையிலே தொழிற்படுகின்றன.
சிறந்த தொலைக் கற்பித்தற் பாடநூல்களை எழுதுவதற் குப் பிரித்தானியா திறந்த பல்கலைக்கழகத்திலே நடைமுறையி லுள்ளது போன்ற பயிற்சி நெறி அ ணி க ள் உருவாக்கப்படுதல் வேண்டும். பாடநூல்கள் ஒரு தொலைக் கல்வி நிறுவனத்தின் தரத்தைக் கணிப்பிட உதவும். அஃதாவது ஒரு தொலைக் கல்வி நிறுவனத்தின் உயர்ந்த தரத்தை, அந்த நிறுவனம் உருவாக்கும் சிறந்த பாடநூல்களே வெள்ளிடை மலைபோல வெளிப்படுத்தும்.
60

தொலைவிலிருந்து கற்றல்
தொலைக் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் தத்தம் வீடுக ளிலிருந்தவாறு அல்லது வேலை செய்கின்ற இடங்களிலிருந்தவாறு கல்வியை மேற்கொள்கின்றனர். மரபுவழிப் பல்கலைக்கழக மாண வர்களைப் போல அவர்கள் விரிவுரை மண்டபங்களுக்குத் தின மும் செல்வதுமில்லை; வி ரி வு ரை ய ா ள ர் க ளை த் தினமும் சந்திப்பதுமில்லை. மரபுவழிப் ப ல் க லை க் க ழ க மாணவர்கள் முழுநேரப் பட்டதாரிகள் ; பல்கலைக்கழகத்திலேயே தம் முழு நேரத்தையும் செலவிடுபவர்கள். ஆனால் தொலைக் கல்வி நிறு வனத்தின் மாணவர்கள் முழு நேர வேலை செய்பவர்கள்; அல்லது ஏதோ ஒரு தொழிலைச் செய்பவர்கள். அஃதாவது முழுநேர மும் வேலை செய்து கொண்டு பகுதி நேர மாண வர் க ள ா க ப் படிப்பவர்கள்.
மரபுவழிப் பல்கலைக்கழக மாணவர்கள் க ற் கு ம் முறை வேறு; தொலைக் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் ப டி க் கு ம் முறை வேறு. மரபுவழிப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆசிரிய னிலே தங்கியிருப்பவர்கள்; தொலைக் கல்வி நி று வ ன த் தி ன் மாணவர்கள் ஆசிரியனின் உதவியில்லாமல் தாமே படிப்பவர்கள். மரபுவழிப் பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கற்பிக்கும் முறை ஒன்று; தொலைக் கல்வி நிறுவனத்தின் மாணவர்களுக்குக் கற்பிக் கும் முறை வேறொன்று.
வேலை செய்து கொண்டு அல்லது தொழில் செய்து கொண்டு படிப்பை மேற்கொள்கின்ற மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். ஒரு முழுப் பயிற்சிநெறி
61

Page 40
யைப் படித்து முடிப்பதற்கு, ஒரு வாரத்துக்கு, ஆகக் குறைந் தது 10-14 மணித்தியாலங்களாக, ஓராண்டில் 30 வாரங்களுக் குக் குறையாமற் கற்கவேண்டியவர்களாக உள்ளனர். ஓர் ஆண் டிலே ஒன்றுக்குக் கூடுதலான பயிற்சிநெறியைக் கற்போர் இன் னுங் கூடுதலான நேரத்தைச் செ ல் விட வேண்டியவர்களாக இருக்கின்றனர்.39
தொலைக் கல்வி நிறுவனம் ஒரு வீட்டுக் கற்கைப் பல்கலைக் கழகமாகும். பிற்பட்ட காலத்திலே ஒருவருக்கு உயர் கல்வியை மேற்கொள்ள வாய்ப்பை வழங்குவது. ''மாணவர்கள் பாட சாலையை விட்டு விலகிய பின்னர், இல்லாதிருந்த அல்லது அவர் கள் பெறாதிருந்த வாய்ப்பினை வழங்குவதனால், திறந்த பல்கலைக் கழகம் தான் கவர்ந்து கொண்ட மாணவர்களின் நோக்கில் ஒரு வீட்டுக் கற்கைப் பல்கலைக்கழகமாகவும் பிற்பட்ட கால வாய்ப் பினை வழங்குகின்ற பல்கலைக்கழகமாகவும் விளங்குகின்றது. ஏனை யோரைப் பொறுத்தவரை, அ வ ர் க ள் ஏற்கனவே பெற்றுக் கொண்ட கல்வியைப் பெருக்கிக் கொள்ளவும் கூட்டிக் கொள்ள வும் வாய்ப்பினை வழங்குகின்றது." 40
வேலை செய்து கொண்டு அல்லது தொழில் செய்து கொண்டு வீட்டிலிருந்து படிக்கின்ற மாணவர்கள் பிரதேச நிலை யத்துக்கு அல்லது கற்கை நிலையத்துக்கு நேர்முகக் கற்பித்தலுக்கு அடிக்கடி போக முடியாதவர்களாக இருப்பர். அவர்களுக்கு, ஒருபுறம் வேலைச் சுமை; மறுபக்கம் வீட்டுச் சுமை. இப்படியான வாழ்க் கையை நடாத்துகின்ற தொலைக் கல்வி நிறுவன மாணவர்கள் வார இறுதி வகுப்புக்களுக்கு ஒழுங்காகச் சமூகங் கொடுப்பது எவ்வாறு ? பயிற்சிநெறியை வெற்றிகரமாக முடிக்க வார நாட் களிலும் வார இறுதியிலும் வகுப்புக்களுக்கு ஒழுங்காக வருமாறு பணிப்பது முறையாகுமா? அவ்வாறு ஒழுங்காக நேர்முக வகுப் புக்களை நடத்துகின்ற முறை, தொலைக் கற்பித்தல் முறைக்கு ஏற்புடையதாகுமா? ஏற்புடையதாகாது, இக்காரணத்தாலேயே தொலைக் கல்வி நிறுவனங்கள் நேர்முகக் கற்பித்தலுக்கு மி க க் குறைந்த நேரத்தை ஒதுக்க வேண்டுமெனத் தொலைக் க ல் வி நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
போதனாசிரியர்கள், ஆலோசனை வழங்குநர்கள் ஆகியவர்க ளுடன் தொடர்பு கொள்ளல்; நாட் பாடசாலைகள், விரிவுரைகள் ஆகியவற்றுக்குச் சமூகமளித்தல் ; கருத்தரங்குகள், கலந்துரை யாடல்கள் ஆகியவற்றிற் கலந்து கொள்ளுதல் என்பனவற்றுக்கு 5% - 15% நேரம் ஒதுக்க வேண்டுமெனத் தொலைக் கல்வி நிறு வனங்கள் வரையறை செய்துள்ளன. 41
62

தொலைக் கல்வி நிறுவனத்திலிருந்து தொலைவிலேயுள்ள வீட் டிற் கல்வியை மேற்கொள்பவர்களுக்குப் பாடநூல்களே முக்கிய கற்கைச் சாதனங்களாகும். மாணவர்கள் தாமே படி த் து ப் புரிந்து கொள்ளக் கூடியதாக அப்பாடநூல்கள் தயாரிக்கப்பட் டவை. மரபுவழிப் பாடநூல்கள் ஆசிரியரின் உதவியோடு படித் கக் கூடியதாக எழுதப்பட்டவை; தொலைக் கற்பித்தற் பாட நூல்கள், ஆசிரியரின் உதவியில்லாமல் மாணவர்கள் தாமே படித்துப் புரிந்து கொள்ளக் கூடியதாகத் தயாரிக்கப்பட்டவை. தொலைக் கற்பித்தல் நூல்களைத் தொலைக் கற்பித்தலிலே அனு பவமுள்ள உறுப்பினர்களைக்  ெக ா ண் ட 'பயிற்சிநெறி அணி " தயாரிக்கின்றது. 42
அச்சிட்ட பாடநூல்கள் துண்டங்களாக மாணவர்களுக்கு வழங்கப்படும். குறிப்பிட்ட நேரத்திலே படித்து முடிக்கக் கூடி யதாக ஒவ்வொரு பாடமும் எழுதப்பட்டிருக்கும். அடிப்படை முன் தேவைகளைப் பெற்றுக் கொண்ட ஒரு மாணவன், 2-3 மணி நேரத்திலே ஒவ்வொரு பாடத்தையும் படித்து முடிக்கக் கூடிய வனாக இருப்பான். ஒரு பாடம் ஏறக்குறைய 2,400 சொற்களைக் கொண்டதாக இருக்கும்.
30 வாரங்களிலே முடிவடைகின்ற ஒரு ப யி ற் சி  ெந றி ஏறக்குறைய 60 பாடங்களைக் கொண்டதாக இருக்கும். அவை ஆண்டு முழுவதிலும் குறித்த கால இடைவெளிகளிலே மாண வர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். 43(சில தொலைக் கல் வி நிறுவனங்கள் பிரதேச நிலையங்கள் வாயிலாகவும் கற்கை நிலை யங்கள் வாயிலாகவும் பாடநூல்களை மாண வர் க ளு க் கு வழங்குகின்றன.)
வீட்டுக்குத் தபால் மூலம் வந்து சேரும் பாடநூல்களை மாணவன் எவ்வாறு படிக்கின்றான்? பாடங்களை ஒய் வு நேரங் களில் ஆசிரியனின் உதவி இல்லாமற் படிக்கின்றான். அவ்வாறு படிக்கின்ற அவன், கடினமான இடங்களையும் புரியாத பகுதி களையும் அடையாளமிட்டு வைத்திருக்கின்றான்; பின்னர் போதனா சிரியரைச் சந்திக்கின்றபோது அவ்விடங்களையும் பகுதிகளையும் அவரிடம் உசாவி இடர்ப்பாடுகளைப் போக்கிக் கொள்கின்றான். இன்னும் தானே ப டி க் கி ன் ற போது சுயமதிப்பீட்டு வினாக் களுக்கு விடை எழுதி தன் தேர்ச்சியைத் தெரிந்து கொள் கின்றான்.44 ஒழுங்காக ஒப்படைகளை எ ழு தி த் அவற்றுக்கான மதிப்பீடுகளை அறிந்து, தன் நிலையை மட்டிட்டுக் கொள்கின்றான்.
63

Page 41
அச்சிட்ட பாடநூல்கள், துணை நூல்கள், சார்பு நூல்கள் போன்றவற்றை ஒரு மாணவன் படிப்பதற்கு 55% - 70% நேரத் தைச் செலவிட வேண்டியவனாக இருக்கின்றான். 45 பாடநூல் களைப் படிப்பதற்கான நேரம், ஏனைய சாதனங்கள் வாயிலாகப் படிப்பதற்கான ஒருமித்த நேரத்திலும் மிகக் கூடியளவிலுள் ளதைக் காணலாம்.
கட்புல செவிப்புலச் சாதனங்கள் வலு மிக்க தொலைக் கற்பித் தற் சாதனங்கள் ஆகும். வானொலி, தொலைக்காட்சி, செவிப்புல நாடாக்கள், கட்புல நாடாக்கள், அசையும் படம், நழுவற் படம் போன்றவை கட்புல - செவிப்புலச் சாதனங்களாகும். 46 வளம் நிறைந்த நாடுகளிலுள்ள தொலைக் கல்வி நிறுவனங்களிலே இச் சாதனங்கள் பெருமளவிற் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக் காட்டாகப் பிரித்தானியா திறந்த பல்கலைக்கழகம் இச்சாதனங் கள் எல்லாவற்றையுமே பெருமளவிற் பயன்படுத்துகின்றது. யப் பானிலுள்ள வான்வழிப் பல்கலைக்கழகம் தொலைக்காட்சிக்கும் வானொலிக்கும் முக்கிய இடத்தைக் கொடுக்கின்றது. 47 இலங்கை திறந்த பல்கலைக்கழகம் கட்புலம் நாடாக்களையும் செவிப்புல நாடாக்களையும் எல்லாப் பயிற்சிநெறிகளுக்கும் பயன்படுத்து கின்றது.
கட்புல-செவிப்புலச் சாதனங்களுட் சில இரண்டு புலன்க ளுக்கு உரியவை ; வேறு சில ஒரு புல னுக்கு மட்டும் உரியவை. தொலைக்காட்சி, கட்புல நாடாக்கள், ஒலியோடு கூடிய அசையும் தட்டுகள், பின்னணி விளக்கவுரையோடு சேர்ந்த நழுவற் படங் கள் என்பன கட்புலனுக்கும் செவிப்புலனுக்கும் உரியவை. வானொலி, செவிப்புல நாடாக்கள், ஒலிப்பதிவு செய்த கிராமபோன் தட்டுகள் என்பன செவிப்புலனுக்கு மட்டும் உரியவை. இச்சாத னங்கள் வாயிலாகக் கற்பிக்கும் பாடங்களுக்கென எழுதப்பட்ட குறிப்புக்கள், விளக்கவுரைகள் என்பன அப்பாடங்களை மாணவர் செவ்வனே விளங்கிக்கொள்ள உறுதுணையாகும், எடுத்துக்காட் டாக வானொலிப் பாடங்களுக்கான குறிப்புக்களை கூறலாம். இக்குறிப்புக்களைப் பயிற்சிநெறி அணியிலுள்ள அலகு இயற்று நர்கள் எழுதுவர். 43
கட்புல-செவிப்புல நாடாக்களுள், செவிப்புல நாடாக்கள் பெரு மளவிலே தொலைக் கற்பித்தலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. அச்சிட்ட பாடநூல்களோடு அவை மாணவர்களுக்கு அனுப் பப்படுகின்றன. சில வேளைகளிலே தனியாகவே அவை தபால் மூலம் அனுப்பப்படும்; அல்லது பிரதேச நிலையங்கள் வாயிலாக வழங்கப்படும். அவ்வாறு அனுப்பப்படும் செவிப்புல நாடாக்களு டன், ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ள நாடாக்களைக் கேட்டுப்
64

புரிந்து கொள்வதற்கு உதவியான குறிப்புக்கள் அல்லது விளக் கப் படங்கள் சேர்ந்திருக்கும். செவிப்புல நாடாக்களிலுள்ள பாடங்களை மாணவர்கள் படிக்கும்போது, குறிப்புக்களோடு கூடிய விளக்கப் படங்ளைப் பார்த்துக் கொண்டு செவிப்புல நாடாக்களுக்குச் செவி மடுப்பர்.49
விஞ்ஞானம், தொழினுட்பவியல் ஆகிய பயிற்சிநெறிகளுக் குத் தொலைக்காட்சியும், கட்புல நாடாக்களும் சிறந்த கற்பித் தற் சாதனங்களாகும். ஆய்வுகூட வேலைகள், செய்துகாட்டல்கள் என்பனவற்றை இச்சாதனங்கள் வாயிலாக நன்கு கற்பிக்க லாம். பிரித்தானியா திறந்த பல்கலைக்கழகம் தொலைக் காட்சியை விஞ்ஞானப் பாடங்களுக்குப் பரந்தளவிலே பயன் படுத்துகின்றது. அத்தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மாணவர் களுக்கு மட்டுமன்றி ஏனையவர்களுக்கும் அறிவைப் பெருக்கிக் கொள்ள உதவியாக உள்ளன.
கட்புல வடிவங்களாக வழங்கப்படும் பாடங்களோடு ஒப்பிட் டுப் பார்க்கும்போது, கவர்ச்சியை ஏற்படுத்தக் கூடியனவாகவும் விருப்பத்தினை உண்டாக்கக் கூடியனவாகவும் உள்ள வடிவங்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சளைக்காமல் ஆர்வத்தோடு படிக்கத்தக்க உள்ள நிலையினை மாண வர்களுக்கு உண்டாக்கக் கூடியனவாக இருக்கின்றன. பாட விடயங்களைக் கண்களாற் கண்டு காதினாற் கேட்கின்ற போது விளக்கமும் தெளிவும் உண்டாகும். எனவே ஆசிரியனின் உதவி இல்லாமற் கற்கின்றவர்களுக்கு இக்கற்பித்தல் முறை மி க வு ம் சிறந்ததாகும். 50
கட்புல - செவிப்புலச் சாதனங்கள் வாயிலாக கற்பிக்கும் முறைக்குத் தொலைக் கல்வி நிறுவனங்கள் 05% - 10% கற்றல் நேரத்தை ஒதுக்குகின்றன.51 எனினும் ப யி ற் சி நெ றி  ைய ப் பொறுத்து இந்நேரத்தின் அளவு கூடியும் குறைந்தும் இருக்கும். விஞ்ஞானம், தொழினுட்பவியல் போன்ற பயிற்சிநெறிகளுக்குக் கட்புலச் சாதனங்களைக் கூடியளவிலே பயன்படுத்தலாம். கலைத் துறைப் பயிற்சிநெறிகளுக்குச் செவிப்புல நர்டாக்களைப் பெருமள விலே உபயே கிக்கலாம்.
தொலைக் கல்வி நிறுவன மாணவர்கள் செய்துகாட்டல், செய் முறை வேலை கள் என்பனவற்றில் நேர்முகமாகவே கலந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றனர். தொலைவிலிருந்து கற்றல் என்ற கோட்பாட்டிலிருந்து, இந்த நேர்முகமாகக் கற்பித்தல் முறை சிறிது விலகிச் செல்கின்றது. பிரதேச நிலையங்களிலே ஆய்வு
65

Page 42
கூடங்கள், ஆய்களன்கள் ஆகிய வசதிகள் செய்து கொடுக்கப்படும். அந்நிலையங்களுக்கு மாணவர்கள் குறிப்பிட்ட காலங்களிற் சென்று, செய்து காட்டல்களை அவதானிக்கலாம்; செய்முறை வேலைகளிலே ஈடுபடலாம். விஞ்ஞானம், தொழினுட்பவியல் ஆகிய பயிற்சிநெறி களைக் கற்கின்ற மாணவர்கள் பயிற்சிநெறிக் காலத்திலே ஒவ் வொரு மாதத்திலும் ஒரு தடவையாவது அவதான வகுப்புக்கள், அடிப்படைப் பரிசோதனை வேலைகள் என்பனவற்றிற் கலந்து கொள்ளல் அவசியமாகும்.
தொலைக்காட்சி வாயிலாகவும், கட்புல நாடாக்கள் வாயி லாகவும் செய்து காட்டல்களையும், செய்முறை வேலைகளையும் கற் பிக்கலாம். மாணவர் தத்தம் வீட்டிலிருந்தவாறே செய்துகாட் டல், செய்முறைவேலை என்பனவற்றைக் கற்றுக் கொள்வதற்கு இக்கற்பித்தல் முறை உதவியாக இருக்கும். கண்களாற் பார்த் துக் கற்றவைகளை நேர்முகமாகச் செய்முறையில் மேற்கொள்ளு தல் எளிதாக இருக்கும்.
செய்துகாட்டல், செய்முறைவேலை என்பவற்றுக்கு 05%- 15% கற்றல் நேரத்தைத் தொலைக் கல்வி நிறுவனங்கள் ஒதுக் குகின்றன. 52 பயிற்சிநெறியைப் பொறுத்து இந்த நேரத்தின் அளவு கூடியும் குறைந்தும் அமையலாம். விஞ்ஞானம், தொழி னுட்பவியல் ஆகிய ப யி ற் சி நெ றி க ளு க் கு க் கூடியளவு கற்றல் நேரம் ஒதுக்கப்படுதல் வேண்டும்.
தொலைவிலிருந்து கற்றல் என்ற கோட்பாட்டிற்கு முரண் பட்ட முறையில் மேற்கொள்ளப்படும் இன்னொரு கற்பித்தல் முறை, போதனையும் ஆலோசனை வழங்கலும் ஆகும். மாணவர் சுதந்திரமாகக் கற்பதற்கு உதவும் வகையிலே அச்சிட்ட நூல் களும் கட்புல - செவிப்புலச் சாதனங்களும் தொலைக் கல்வி நிறு வனத்தின் பிரதேச நிலையங்களிலே இருப்பினும், அந்நிறுவனங் களிலே தனிப் போ தனை , ஆலோசனை வழங்கல் ஆகியவற்றையும் பெறக் கூடியதாக இருக்கும். போதனை இரண்டு வகைப்படும்; ஒன்று தனிப் போதனை; மற்றையது தொகுதிப் போ த னை. மாணவர் தனித் தனியாகப் போதனாசிரியர்களைக் கண்டு, இடர்ப் பாடான இடங்களையும் புரியாத பகுதிகளையும் போதனை வாயி லாகக் கற்றுக்கொள்ளல் தனிப் போதனை ஆகும். மாணவர் களுக்கு வகுப்பறையிற் போதனாசிரியர்கள் விரிவுரைகளை நடாத் துதல் தொகுதிப் போ தனையாகும், நாட் பாடசாலைகள், கருத் தரங்குகள், கலந்துரையாடல் கள் என்பனவும் தெ ா கு தி ப் போதனைகள் ஆகும்.
'* -து, "தலை'கலை
66

ஏனைய பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் ஆகி யவற்றின் கற்பித்தற் பணியணியினரிலிருந்து ஆட்சேர்ப்புச் செய் யப்பட்ட பகுதி நேரப் போதனாசிரியர்கள் ஒவ்வொருவரும் தொலைக் கல்வி நிறுவனம் ஒன்றின் இருபது மாணவர்களுக்குப் பொறுப்பாக இருப்பர். இப்போதனாசிரியர்கள், மாணவர்கள் எழுதும் ஒப்படைகளைத் திருத்தித் தரப்படுத்தித் தம் கருத்துக் களைத் தெரிவிப்பர். உள்ளூர்க் கல்வி நிலையங்களில் மாணவர் குழுக்களுக்கு நேர்முகப் போதனையை மேற்கொள்வர்; தனிப் பட்டவர்களின் கல்வி தொடர்பான பிரச்சினைகளையும் தீர்த்து
வைப்பர்.
தொலைக் கல்வி நிறுவனம் ஒன்றிற் பதிவுசெய்து கொள்ளும் போதே ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு போதனாசிரியர் பொறுப் பாக இருப்பார். அவர் அந்த மாணவருக்குப் பயிற்சிநெறியின் உள்ளடக்கம் தொடர்பாகவும், கல்வியைத் தொடர்கின்ற போது ஏற்படுகின்ற பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பது தொடர் பாகவும் உதவுவார்.
மாணவர்கள் தத்தம் வீட்டிற்கு இயன்றளவு அண்மையி லுள்ள கற்கை நிலையத்திற் போதனாசிரியரைச் சந்திக்க வசதி யுண்டு. இக்கற்கை நிலையங்கள் அநேகமாக உள்ளூர் வளாகங்க ளிலும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களிலும் அமைந்திருக்கும்.
ஆலோசனை வழங்கலும் இரண்டு வகைப்படும் : ஒன் று ஒருவருக்கு மட்டும் ஆலோசனை வழங்கல் ; மற்றையது மாண வர்கள் எல்லோருக்கும் ஆலோசனை வழங்கல். ஆலோசனை பெறுவதற்கு, ஆலோசனை வழங்குநரைக் குறிப்பிட்ட நேரத்திற் சந்திக்கலாம். வதிவிடப் பாடசாலைக்கு வருகின்ற மாணவர்களை யும் சந்திக்கலாம். முன்னையது தனி ஆலோசனையையும் பின்னை யது தொகுதி ஆலோசனையையும் சாரும்.
போதனைக்கும் ஆலோசனை வழங்கலுக்கும் 10 % - 15% கற்றல் நேரத்தைத் தொலைக் கல்வி நிறுவனங்கள் ஒதுக்குகின் றன. 53. தேவையைப் பொறுத்துச் சில பயிற்சிநெறிகளுக்குக் கூடிய நேரமும், வேறு சில பயிற்சிநெறிகளுக்குக் குறைந்த நேர மும் ஒதுக்கப்படும்.
67

Page 43
தொலைக் கற்பித்தற் சாதனங்களுள் ஒப்படைகள் முக்கிய மானவை. ஒப்படைகள் மூன்று வகைப்படும். 54
1. போதனாசிரியர் திருத்திய ஒப்படைகள் (போ. தி. ஒ )
2.
கம்பியூட்டர் திருத்திய ஒப்படைகள் ( க. தி. ஒ ) 3. ஆய்வுகூட வேலைகள் (ஆ. வே )
என்பன. இவற்றுள் முதல் இரண்டு ஒப்படைகளை மட்டும் பல தொலைக் கல்வி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. மூன்றாவது ஒப்படையை விஞ்ஞானம், தொழினுட்பவியல் போன்ற பயிற்சி நெறிகளை நடத்தும் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் போன்ற தொலைக் கல்வி நிறுவனங்கள் நடைமுறைப்படுத்துகின்றன,
கட்டுரை வரைதல் விவரணம் எழுதல், திறனாய்வு. வரலாற்று நிகழ்ச்சிகள், ஆய்வுகளின் முடிவுகள் போன்றவற்றை எழு தல் என்பன போதனாசிரியர் திருத்தும் ஓப்படைகளாகும். பல்தெரி வினாக்கள், கம்பியூட்டர் திருத்தும் ஒப்படைகளின் பெரும் பகுதியை உள்ளடக்கும். இவ்வொப்படைகள் கம்பியூட் டர் வாயிலாகத் திருத்தப்பட்டு, முடிவுகளை மாணவர்களுக்கு விரைவில் அனுப்பி வைக்கக்கூடியதாக இருக்கும்.. ஆய்வுகூட வேலைகள் என்றால், நாட் பாடசாலைகள், வெளிக்கள வகுப்புக் கள், செய்முறை வேலைகள் போன்றவற்றைக் குறிக்கும்.
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் போதனாசிரியர் திருத் தும் ஒப்படைகளையும் ஆய்வுகூட வேலைகளையும் மட்டும் நடை முறைப்படுத்துகின்றது. ஆனால் பல் தெரி வினாப் பத்திரங்களுக் கான விடைகளைப் போதனாசிரியர்களே திருத்துகின்றனர்.
மாணவர்களின் தேர்ச்சி பற்றி மதிப்பிட உதவுவதனால், ஓப்படைகள் கற்றல் முறையிலே ஒரு முக்கிய பகுதியாக உள் ளன. போதனாசிரியராலே திருத்தப்படுகின்ற ஒப்படைகள் பிர தானமாக எழுத்து வேலையாகவே இருக்கும். அத்துடன் பரி சோ தனை அல்லது ஆராய்ச்சித் தரவுகளைச் சேகரித்தல், அவற்றை நுண்ணாய்வு செய்தல் ஆகியவற்றைக் கொண்ட திட்ட (I/ றையிலான ஒப்படைகளும் உள.
வழமையாக இரண்டு அல்லது மூன்று வாரங்களுள் ஒப் படைகளின் முழுமையான தரங்கள் பற்றி மாணவர்களுக்கு அறி விக்கப்படும். ஒப்படைகளிலே வேண்டிய திருத்தங்களைச் செய்து,
68

தமது கருத்துக்களையும் குறிப்புக்களையும் விளக்கமாகப் போத னாசிரியர் எழுதுவார். மாணவனுடன் மேற்கொள்கின்ற இவ் வகையான தொடர்பு போதனையின் பெறுமதி மிக்க ஒரு பகுதி யாகும்,
தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் இவ்வகையான மதிப்பீட்டுத் தரங்கள், பரீட்சைக் கிளையிலே பதிந்து வைக்கப் படும். பயிற்சிநெறியின் முடிவிலே இறுதிப் பரீட்சை ந  ைட பெறும். இப்பரீட்சை மாணவர் வாழ்கின்ற இடங்களுக்கு அண்மையிலுள்ள பிரதேச நிலையங்களில் அல்லது வேறு நிறு வனங்களில் நடைபெறும். இப்பரீட்சையிற் பெற்ற புள்ளிகளு டன் ஒப்படைகளிற் பெற்ற தரங்களும் ஒன்றிணைந்து ஒரு மாணவர் பயிற்சிநெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்
ளாரா அல்லரா என்ட தனை முடிவு செய்ய உதவும்.
69

Page 44

விளக்கக் குறிப்புக்கள்
தொலைக் கல்வி நிறுவனங்களோடு தொடர்புள்ள முக்கிய மான அங்கங்களும் அவற்றுக்கான விளக்கங்களும் கீழே கொடுக் கப்பட்டுள்ளன. அந்த அங்கங்கள் பற்றி மேல் நோக்காக அறிந்து கொள்வதற்கு இவ்விளக்கங்கள் உதவியாக அமையும். அவற்றுட் பல பிரித்தானியா திறந்த பல்கலைக்கழகத்துக்கே உரியன வாயினும் அவை ஏனைய தொலைக் கல்வி நிறுவனங்களுக்கும் ஏற்புடையன வாகும். அஞ்சல்வழிப் போதனை (Correspondence Tuition )
திறந்த பல்கலைக்கழகத்தின் தொடர்பிலே நோக்கும் போது கற்றல் முறைமையின் இரண்டு முக்கிய அங்கங்களை 'அஞ்சல் வழிப் போதனை' என்ற தொடர் குறிப்பிடுகின்றது: (1) வால்றன் ஹோலிலுள்ள மத்திய கல்வியாளரால் எழுதப்பட்ட அஞ்சல்வழிப் பாடநூல்கள். சில வேளைகளிற் பல்கலைக்கழகத்துக்கு வெளியே யிருந்து அழைக்கப்படும் உசாவுநர்களுடன் சேர்ந்து இப்பாட நூல்கள் தயாரிக்கப்படும். (2) மாணவர்களுக்கான பிரதேச போதனாசிரியர்களின் உதவுதல்: மாணவர்களால் எழுதப்பட்ட ஒப்படைகளைப் பயிற்சிநெறிப் போதனாசிரியர் பார்வையிட்டு அவைபற்றிக் கு றி ப் பு க் க ளை எழுதல் தொடர் பான செயற்பாடுகள்.
அத்திவாரப் பயிற்சிநெறிகள் ( Foundation Courses )
அத்திவாரப் பயிற்சிநெறிகள் ஏனைய கல்விசார் பயிற்சி நெறிகளுக்கு நுழைவாயிலாக அமையும். அப்பயிற்சிநெறிகள்
71

Page 45
அடிப்படைத் துறைகளில் முதல் மட்டம் (F1 ), இரண்டாம் மட்டம் (F 2) என இரண்டு மட்டங்களில் வழங்கப்படும்.
அரைத் திறமை ( Half Credit )
ஒரு பயிற்சிநெறியின் அரைப் பங் கிற் கு வழங்கப்படும் திறமை.
அலகு (Unit )
முழுமையான பயிற்சிநெறி ஒன்றிலே முப்பத்திரண்டில் ஒரு பகுதியைக் கொண்டதும் ஒரு வார காலத்தில் 10-15 மணித் தியாலங்களுக்குரியதுமான ஒரு முழுமையான பாட அலகு. பயிற்சிநெறி அணியிலுள்ள இயற்றுநர்கள் இதனை எழுதுவர்.
கம்பியூட்டர் திருத்திய ஒப்படைகள் (க. தி. ஒ) (Computer - marked Assignments)
கம்பியூட்டர் திருத்துதற்கான ஒப்படைப் படிவம் ஒன்றில் மாணவர்களின் விடைகள் பதிவு செய்யப்பட்டுத் தன்னியக்க மாகவே கம்பியூட்டர் நாடாவுக்கு இடமாற்றம் பெற்று, முன் - குறியீடிட்ட கம்பியூட்டர் நிகழ்ச்சித்திட்டத்தினூடாகத் தரப் படுத்தப்படுவதும் பாகுபாடு செய்யப்படுவதுமான ஓர் ஒப்படை.
கலந்திணைதல் ( Conflation)
பயிற்சிநெறி ஒவ்வொன்றிலுமுள்ள ஒவ் வொரு மாண வரினதும் இறுதிப் பெறுபேற்றைக் காண்பதற்குப் பரீட்சை முடிவு களையும் தொடர் மதிப்பீட்டுத் தரங்களையும் இணைப்பதற் கான ஒரு முறை.
கல்வித் தொழினுட்பவியல் நிறுவகம் ( Institute of Educational Technology)
பிரித்தானியா திறந்த பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள ஒரு நிறுவகம். இஃது ஒரு பீடத்திற்கு ஒப்பாகும். இந்த நிறுவகம் பல்கலைக்கழகம் மேற்கொள்ளும் கற்பித்தல் முறை களின் பயன்பாடுகளைக் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு, பயிற்சிநெறி அணிகளுக்கு அறிவுரைகளை வழங்குகின்றது.
72

கல்வித் தொழினுட்பவியலர் ( Educational Technologist )
பிரித்தானியா திறந்த பல்கலைக்கழகத்தின் கல்வித் தொழி னுட்பவியல் நிறுவகத்தின் ஓர் உறுப்பினர். பொதுவாக நோக்கு மிடத்துக் கற்பித்தல், சற்றல் ஆகியவற்றின் கோட்பாடுகள், செய் முறைகள் என்பனபற்றி மிகுந்த அக்கறை காட்டுபவரும், பயிற்சி நெறி அணியிலே உறுப்பினராக இருந்து, பயிற்சிநெறியின் வடி வமைத்தல், மதிப்பீடு, கணிப்பீடு என்பனவற்றுக்குப் பொறுப் புடையவரும் ஆவர். பாடங்களின் நோக்கம், கல்வி நுணுக் கங்கள், கற்பித்தற்கான உபாயங்கள் என்பன குறித்து மிக்க
அக்கறை உடையராக இருப்பார்.
கற்கை நிகழ்ச்சித்திட்டம் ( Programm 2 of Study)
சட்ட மாணி (LL. . ) பட்டமேற் கல்வித் திப்புளோமா, விஞ்ஞான மாணி ( B. Sc. ), உயர் தொழி ல் ஆங்கிலம் போன்றவை கற்கை நிகழ்ச்சித்திட்டங்கள் ஆகும். அத்திட் டங்கள் ஒவ்வொன்றின் கீழும் பல பயிற்சிநெறிசள் இடம்பெறும். அப்பயிற்சிநெறிகளை வெற்றிகரமாக முடிக்கும் போது, கற்கை நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததாக அமை யும். 99 ஆம் பக்கத்திலுள்ள 1 ஆம் அட்டவணையைப் பார்க்க.
கற்கை நிலையங்கள் ( Study Centres )
மாணவர்களின் ஒன்று கூடல், கட்டுரை வகுப்புக்கள், முழுத் தொழிற்பாடுகள் போன்ற மாணவர்களின் செயற்பாடு களுக்காகத் திறந்த பல்கலைக்கழகத்தால் வாடகைக்கு அமர்த் தப்பட்ட நிலையங்கள். (பாடசாலைகள், கல் லூரிகள், நிறுவனங்கள், நிறுவகங்கள் போன்றவை). பிரித்தானியா திறந்த பல்கலைக்கழ கத்துக்கு 270 கற்கை நிலையங்களும், இலங்கைத் திறந்த பல் கலைக்கழகத்துக்கு 10 கற்கை நிலையங்களும் உண்டு.
கேட்டல் காண்டல் வளங்களின் நிலையம் ( Audio - Visual Resource Centre)
முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட செவிப்புல நாடாக்கள், கட்புல நாடாக்கள் என்பவற்றுடன் நழுவற் படங்கள், திரைப் படங்கள் போன்றவற்றைக் கல்விப் பணியணியினருக்காகக் களஞ் சியப்படுத்தி வைக்கும் நிலையம், தொலைக்காட்சி, வானொலி, செவிப்புல, கட்புல நாடாக்கள் போன்றவை இந்நிலையத்திற் கல்வியாளர்களின் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருக்கும்.
73

Page 46
சுய மதிப்பீட்டு வினா ( Self - Assessment question )
அஞ்சல்வழிப் பாட நூலின் முக்கியமான விடயம் பற்றிய ஒரு வினா. மாணவன் தன் கல்வி முன்னேற்றத்தைத் தானாகவே மதிப்பிடுவதற்கு இத்தகைய வினாக்கள் உதவியாகும். திறமை ( Credit )
ஒரு பயிற்சிநெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யும் போது ஒரு திறமை வழங்கப்படும். இதற்காக ஒரு மாணவன் 350-450 மணித்தியாலங்கள் வரை உழைக்க வேண்டியவனாக இருக்கின்றான். சாதாரண பட்டம் பெறுவதற்கு ஆறு திறமை களும் சிறப்புப் பட்டம் பெறுவதற்கு எட்டுத் தி ற  ைம க ளு ம் வேண்டும்.
திறமை விலக்கு ( Credit exemption )
உயர் கல்வி மட்டத்திற் கல்வியை வெற்றிகரமாக முன் கூட்டியே பூர்த்தி செய்த மாணவர்களுக்குச் சில பயிற்சிநெறித் தேவைகளிலிருந்து விலக்கு அளித்தல்
தொடர் மதிப்பீடு ( Continuous assessmment )
மாணவர்களின் கல்வித் தேர்ச்சியைத் தெரிந்து கொள் வதற்காகப் பயிற்சிநெறிக் காலத்திலே தொடர்ச்சியாக மேற் கொள்ளப்படும் மதிப்பீடு. இம்மதிப்பீடு மூன்று வகையாக மேற் கொள்ளப்படும் : ஒன்று போதனாசிரியர் திருத்திய ஒப்படைகள் வாயிலாக மதிப்பிடுதல்; மற்றொன்று கம்பியூட்டர் திருத்திய ஒப் படைகள் வாயிலாக மதிப்பிடுதல்; இன்னொன்று ஆய்வுகூட வேலை கள் வாயிலாக மதிப்பிடுதல். விஞ்ஞானம், தொழினுட்பவியல் ஆகிய பயிற்சிநெறிகளுக்கு ஆய்வுகூட  ேவ லை கள் மிக முக்கிய மாகும்.
பயிற்சிநெறி (Course)
கற்கை நிகழ்ச்சித்திட்டம் ஒன்றின் கீழுள்ள பாடப் பிரி வுகள் பயிற்சிநெறிகள் எனப்படும். எடுத்துக்காட்டாகப் பட்ட மேற் கல்வித் திப்புளோமா க ற்  ைக நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்க் கல்விக் கோட்பாடுகளும் பிரச்சினைகளும், கல்வி உளவி யல், ஒப்புமைக் கல்வி, பாடவிதான அபிவிருத்தியும் பொது முறைகளும், அளவீடும் மதிப்பீடும், கல்வி நிருவாகம், கல்வி வழிகாட்டல், விசேட கற்பித்தல் முறைகள் என எட்டுப் பயிற்சி நெறிகள் உள். 100 ஆம் பக்கத்திலுள்ள 2 ஆம் அட்டவணையைப் பார்க்க.
74

பயிற்சிநெறி அணி ( Course Team )
கல்விப் பணியணியினர், வானொலி / தொலைக்காட்சித் தயாரிப்பாளர், கல்வித் தொழினுட்பவியலர், பதிப்பாசிரியர், வடிவமைப்பாளர் முதலியோரை உறுப்பினர்களாகக் கொண்ட பயிற்சிநெறிக்கு இறுதியான பொறுப்பினை உடைய ஓர் அணி. பயிற்சிநெறிக்கான பாடநூல்களை இவ்வணியிலுள்ளோர் தயா ரிப்பர்.
பணியணிப் போதனாசிரியர் (Staff Tutor)
ஒப்படைகளைத் (போ. தி. ஓ) திருத்துபவரும், பிரதேச நிலையங்களில் அல்லது கற்கை நிலையங்களிற் கட்டுரை வகுப்புக் களை நடாத்துபவருமான திறந்த பல்கலைக்கழகப் பணியணியின ரைச் சேர்ந்த பகுதிநேர உறுப்பினர்.
பிரதேச நிலையம் ( Regional Centre)
தொலைக் கற்பித்தலைத் திறமையுடன் செவ்வனே மேற் கொள்ள, நாட்டின் பல்வேறு பாகங்களிலும் நிறுவப்படும் நிலை யங்கள், பிரித்தானியாவிலும் பாகிஸ்தானிலும் இவை பிரதேச அலுவலகங்கள் ( Regional offices ) என்றும், இலங்கையிற் பிர தேச நிலையங்கள் ( Regional Centres ) என்றும் அழைக்கப்படுகின் றன. அத்தகைய அலுவலகங்கள் பிரித்தானியாவில் 13 உண்டு. இலங்கையில் 4 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
போதனாசிரியர் குறிப்புக்கள் ( Tutor Notes )
ஒப்புக்கொள்ளப்பட்ட சீரான த ர த் து க் கு அமைய ஒப்படைகளைத் ( போ. தி. ஒ ) திருத்தி மதிப்பிடக் கூடிய தாகப் போதனாசிரியர்களுக்கு வழங்கப்படும் குறிப்புக்கள்.
போதனாசிரியர் திருத்திய ஓப்படைகள் - ( போ. தி, ஓ ) ( Tutor - marked assignments )
அஞ்சல்வழிப் போதனாசிரியர் ஒருவராலே திருத்தப்படும் கட்டுரை அல்லது குறுவிடை வினாக்களை உடையதான ஒப் படைகள்.
75

Page 47
வீட்டுப் பரிசோதனைப் பொட்டளி ( Home experiment kit )
மாணவர் தத்தம் வீடுகளிலேயே இருந்தவாறு, உறுப்புக் கள், உபகரணங்கள், சாதனங்கள் முதலானவற்றை ஒன்று சேர்த்து உருவமைத்துப் பரிசோதனைகளை மேற்கொள்ளத் தக்க தாகச் சிறப்பான முறையிலே உருவமைக்கப்பட்ட ஒரு பொட் டளி. விஞ்ஞானம், தொழினுட்பவியல் ஆகிய பயிற்சிநெறிக ளுக்குப் பெருமளவிலும் ஏனைய பயிற்சிநெறிகளுக்குச் சிறியள விலும் அவை பயன்படுத்தப்படலாம்.
கோடைக்காலப் பாடசாலை ( Summer school )
திறந்த பல்கலைக்கழகத்துக்கு வெளியே ஏனைய பல்கலைக் கழகங்களிலே கோடைக்காலத்தில் மிகவும் செறிந்தளவிலே ஒரு வார காலத்துக்கு விரிவாக பட்ட படிப்புக்கள் மேற்கொள்ளப்படும் பாடசாலை. பிரித்தானியா திறந்த பல்கலைக்கழகத்தின் பயிற்சி நெறிகள் பலவற்றுக்கு இக்கோடைக்காலப் பாடசாலை இன்றி யமையாத ஒரு பகுதியாக உள்ளது.
76

10
மு டி வு ரை
1970 ஆம் - 1980 ஆம் ஆண்டுகளிலே உலகின் பல பாகங் களில் தொலைக் கல்வி பெருமளவிலே விரிவடைந்தது. சில நாடுகளிற் நீண்ட காலமாக நிலவி வந்த தொலைக் கல்வி முறை நவீன தொழினுணுக்கக் கற்பித்தல் முறைகளால் வளர்ச்சி யடைந்தது. வேறு சில நாடுகளிலே இக்கற்பித்தல் முறை முதன் முதலாகத் தொடங்கப்பட்டு விரைவான முன்னேற்றத்தைக் கண்டது. இன்னும் சில நாடுகளிற் தொலைக் கல்வி முறை யைத் தொடங்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன,
பல்வேறு நாடுகளில் வெவ்வேறு பெயர்களுடன் தொலைக் கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. பெயர்கள் வேறுபட் டாலும் அவை ஒரே கருத்துப்படிவத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும்.55 உயர் கல்வியைப் பெற்றுக்கொள்ள விழை வோருக்கு அவ்வாய்ப்பை வழங்குவதே தொலைக் கல்வி நிறு வனங்களின் நோக்கமாகும். பாடசாலையை விட்டு விலகிய பின் னர், பெற்றுக்கொள்ள முடியாதுபோன ஒன்றை இளையோர், முதியோர், ஆண்கள், பெண்கள் ஆகிய எல்லோரும் பெற்றுக் கொள்ளத் தொலைக் கல்வி வழி செய்கின்றது.
பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலைத்தானும் க ா ணா து வீட்டிலிருந்தவாறு பல்கலைக்கழகக் கல்வியைப் பெற்றுக்கொள் ளத் தொலைக் கல்வி நிறுவனம் உதவுகின்றது. வேலை செய்
77

Page 48
2. அலுவலகத்திலே இருந்தவாறு பல்கலைக்கழகப் பட்டத்
ட பெற்றுக்கொள்ள இக்கல்வி முறை வாய்ப்பளிக்கின்றது. பெலிலே அமர்ந்துள்ளோர் புதிய கல்வித் தகைமைகளைப்
மன்னேறவும், ஏனையோர் உயர் கல்வித் தகைமைகளைக் கொண்டு உயர் பதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் தொலைக் கல்வி வழி செய்கிறது. இலங்கையைப் போன்ற ந ா டு க ளி ற்
கழகத் திலே அனுமதி பெறத் தவறியவர்கள். பல்கலைக் எம் கல்வியைப் பெற்றுக்கொள்ள இக்கல்வி முறை உதவு இசு-... இவற்றுக்கும் மேலாகக் 'கல்வி கல்விக்காகவே' என்ற - கோளுடன் வாழ்வோருக்கு அவர்களின் வயது முதிர்ந்த வலும் அறிவுப் பசியைப் போக்குகின்ற பல்கலைக்கழகங்கள் ளாகம் தொலைக் கல்வி நிறுவனங்கள் திகழ்கின்றன,
தொலைக் கல்வியினாற் கூடிய பயனைப் பெறுவோர் நடுத்
குப்பினரும் எழுதுவினைஞர்களும் ஆவர். இந்நிலைமை சொனியா விலும் உண்டு ; சீனாவிலும் உண்டு. ஆசிரியப்
- மேற்கொண்டுள்ள வர்களுக்குத் தொலைக் கல்வி நிறு வாக்கள் வழங்கும் பயிற்சிநெறிகள் பெரும் பயனை நல்குவன.
2. தொலைக் கல்வி நிறுவனங்களிலுள்ள மாணவர்களுள் டி.களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகமா கும். 56
ரிெத் தானியா திறந்த பல்கலைக்கழகம் முன்மாதிரியான க தொலைக் கல்வி நிறுவனமாகும். அப்பல்கலைக்கழகத்தைப் .றித் தொலைக் கல்வி முறையைத் தத்தம் நாடுகளுக்கு கயதாகப் பல நாடுகள் நடைமுறைப் படுத்துகின்றன .
.. நாட்டின் சமூக - பொருளாதார நிலைக்கு ஏற்ப மாற் -- உப் பெற்றுத் தனித்துவமான முறையிலே தொலைக் கல்வி முறைப் படுத்தப்பட வேண்டும் என்பது கல்வி வல்லுநர்க - அபிப்பிராயமாகும். பிரித்தானியா திறந்த பல்கலைக்கழகத் - கண் மூடித்தனமாகப் பின்பற்றக் கூடாதெனவும், தம்
எ சமூக - பொருளா தார அமைப்புக்கு அமையத் தனித் - மறையிலே தொலைக் கல்வியை நடைமுறைப்படுத்த
ம் எனவும் கூறுவோர், பிரித்தானியா திறந்த பல்கலைக் ---- த அப்படியே அப்பட்டமாகப் பின்பற்றுகின்றனர்
மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
பி
திறந்த பல்கலைக்கழகம்' என்ற பெயரின் முன்னடையா
'திறந்த' என்ற சொல் குறிப்பிடும் 'திறந்த பான்மை' - -நாட்டிற்கு நாடு வேறுபடுகின்றது . மாணவர்களை
78

அனுமதித்தல், கற்பித்தல் முறைகள், பயிற்சிநெறிகளைத் தெரி தல், கற்றலின் கால எல்லை போன்றவற்றிலே தொலைக் கல்வி நிறுவனங்கள் வெவ்வேறு கொள்கைகளைக் கடைப்பிடிகின்றன. எனவே நாட்டின் சமூக, பொருளாதார நிலைக்கேற்பவே ' திறந்த பான்மை ' எ ன் ப தற் கான பொருளைக் காண வேண்டும். 57
தொலைக் க ல் வி நிறுவனங்கள் சிறந்த முறையிலே இயங்கவும் செவ்வனே செயற்படவும் பிரதேச மட்டத்தில் அல் லது மாகாண மட்டத்திற் கிளைகளை நிறுவி நிருவாகத்தையும் கல்வியையும் பரவலாக்குதல் அவசியமாகும். அக்கிளைகள் வெவ் வேறு பெயரைக் கொண்டனவாய் இருத்தலைக் காணலாம். பிரித்தானியாவிலும் பாகிஸ் தானிலும் பிரதேச அலுவலகங்கள் ( Regional offices ) என்று அக்கிளைகளுக்குப் பெயரிடப்பட்டுள் ளன. இலங்கையிலும் தாய்லாந்திலும் பிரதேச நிலையங்கள் ( Regional Centres ) என்ற பெயரோடு இயங்குகின்றன. இந் தியாவில் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள திறந்த பல்கலைக்கழகம் கற்கை நிலையங்களை ( Study Centres ) மட்டும் நிறுவியுள்ளது. பிரித்தானியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிற் பிரதேச நிலையங்கயோடு/ அலுவலகங்களோடு கற்கை நிலையங் களும் அமைக்கப்பட்டுள்ளன. பரந்து வாழ்கின்ற தொலைக் கல்வி மாணவர்களுக்குச் சிறந்த சேவையை இவ்வமைப்பு முறை வழங்குகின்றது. 58
தொலைக் கல்விப் பாடநூல்களைப் பயிற்சிநெறி அணிகளே தயாரிக்கின்றன. 59 பயிற்சிநெறிகளின் அமைப்பு, நிறுவனத் துக்கு நிறுவனம் வேறுபட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. பிரித்தானியா திறந்த பல்கலைக்கழகத்திலுள்ள அ ணி க ளி ன் அமைப்பு ஒன்று : பாகிஸ் தானிலுள்ள திறந்த பல்கலைக்கழகத்தி லுள்ள அணிகளின் அமைப்பு இன்னொன்று. பிரித்தானியா திறந்த பல்கலைக்கழகத்தின் பயிற்சிநெறி அணிகளின் அமைப்புத் தனித்துவமானது ; ஏனைய தொலைக் கல்வி நிறுவனங்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைவது. தாய்லாந்திலுள்ள திறந்த பல்கலைகழகத்தின் பயிற்சிநெறி அணிகள் செவ்வனே செயற்படு வது குறிப்பிடத்தக்கது. சில தொலைக் கல்வி நிறுவனங்களிலே தொலைக் கல்வி பற்றிய அறிவும் அனுபவமுமில்லாத மரபுவழிப் பல்கலைக்கழகக் கல்வியாளர்களே பாடநூல்களை எழுதுகின்றனர். பிரித்தானியா திறந்த பல்கலைக்கழகத்திலுள்ளவை போன்ற பயிற்சிநெறி அணிகள் அந்நிறுவனங்களிலே இல்லை.
79

Page 49
தொலைக் கல்வி சீராகச் செவ்வனே நடைபெறுதற்குப் பல் வகை ஆய்வுகள் மேற்கொள்ளப்படுதல் அவசியமாகும். இவ்வுண் மையினை உணர்ந்த சில தொலைக் கல்வி நிறுவனங்கள் ஆய்வு களை மேற்கொள்வதற்கென வேறான அலகு அல்லது நிறுவனம் ஒன்றை நிறுவி உள்ளன. ஆய்வுகள் பல் துறைகளைச் சார்ந்தன வாக இருக்கலாம். (தொலைக் கல்விப் பாடநூல்கள், பயிற்சி நெறி கள், ஒப்படைகள், மாணவர்கள், பரீட்சை முடிவுகள் போர் ன ற வற்றை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளாக அமையலாம். இவ்வகையான ஆய்வுகள் நிறுவனங்களின் உயர்ச்சிக்கும், பயிற்சி நெறிகளின் செம்மைக்கும், கற்பித்தல் முறைகளின் சீராக்கத் துக்கும் பெருமளவிலே உதவியாக அமையும். சில தொலைக் கல்வி நிறுவனங்கள் ஆய்வுகளைப் பரந்தளவிலே மேற்கொள்வதில்லை.
தொலைக் கற்பித்தலுக்குப் பல நவீன முறைகள் பயன்படுத் தப்படுகின்றன. தொழினுட்பத் தகவல் தொடர்புச் சாதனங்கள் பலவற்றைப் பல தொலைக் கல்வி நிறுவனங்கள் பயன்படுத்து வதைக் காணலாம். பிரித்தானியா திறந்த பல்கலைக்கழகம் பல தகவல் தொடர்புச் சாதனங்களை வலுவுள்ள கற்பித்தற் சா தனங் களாகப் பயன்படுத்தி முன்னணியில் நிற்கின்றன. சில தொலைக் கல்வி நிறுவனங்கள் பாடநூல்களை மட்டும் பயன்படுத்துகின்றன. வேறு சில, பாடநூல்களோடு வானொலியையும் பயன்படுத்து கின்றன. செவிப்புல நாடாக்கள், தொலைக் கற்பித்தலுக்கு மிகவும் பயனுள்ளவை. பயிற்சிநெறிகளின் தன்மையைப் பொறுத்துக் கற் பித்தற் சாதனங்களின் பயன்பாடும் வேறுபடும். விஞ்ஞானம், தொழினுட்பவியல் போன்ற பயிற்சிநெறிகளுக்குத் தொலைக் காட்சி, கட்புல நாடாக்கள் போன்றவற்றை வலுவுள்ள கற்பித் தற் சாதனங்களாகப் பயன்படுத்த முடியும். 60
தொலைக் கல்வியின் முக்கியத்தை உணர்ந்து பொதுநல நாடுகளின் அமைப்பு அதன் நாடுகளுக்கென, ஒரு திறந்த பல் கலைக்கழகத்தை அமைக்க முன்வந்துள்ளது. நாட்டு மட்டத்தில் நிலவிய தொலைக் கல்வி, உலகளாவிய முறையில் நிலவவுள்ளது என்பதையே இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டுகின்றது.
இன்று பல நாடுகளில் மரபுவழிப் பல்கலைக்கழகங்களில் நிலவுகின்ற அமைதியின்மை, ஆர்ப்பாட்டங்கள், அழிவுகள் ஆகிய வற்றை நோக்கும் போது, தொலைக் கல்வி நிறுவனங்களே ஒரு நாட்டிற்குச் சாலச் சிறந்தவையெனக் கூற வேண்டும் போலத் தோன்றுகின்றது.
80

''உலகிலுள்ள பல்வேறு பிரதேசங்களில் மேற்கொண்ட கல்விச் சுற்றுலா, அவதானிப்புப் பயணம் என்பனவற்றின் பயனாக, எந்த ஒரு நிறுவனத்தையும் அப்பட்டமாக அப்படியே ஏற்றுக் கொள்ளாமலும் பின்பற்றாமலும், ஒரு நாட்டின் சமூக, பொருளாதாரச் சூழ லு க் கு ஏ ற் பு டை ய த ா க ஒவ் வொரு நிறுவனத்தையும் அதற்கதற்கான தனித்துவமான முறைமை யிலே உருவாக்குதற்கான உபாயத்தைக் கண்டுகொள்ள வேண் டும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்'' 61 என்ற தாய்லாந்து திறந்த பல்கலைக்கழக முதல்வரின் அறிவுரையை இறுதியான
முடிவாகக் கொள்வது சாலப் பொருத்தமாகும்.
81

Page 50

குறிப்புக்கள்
Newsletter, The Open University of Sri Lanka,
April 1986, Editorial: p. 1. 2 Trends in Distance Higher Education, Part 1, Distance
education research group, The Open University ( UK ).
1984, Pp i - ii.
3.
See the Programmes of Study, The Open University of Sri Lanka ( No date ); QUŠI MB$ mš5 u 6 levt &Q5LD, MEKST 6, 1981.
un A
9ho 05 Sp55 U605 200%56LD5 ip, 605 I5 IELTG 1981, u. 3. University At Your Doorstep, Student Hand book, Andhra Pradesh, Open University, 1983 - 84, p. 1.
Trends in Distance Higher Education, Part 1, Distance Education research Group, The Open University (UK), 1984 p. V.
7.
Trends in Distance Higher Education, Part I. Distance Education Research Group, The Open University (UK), 1984, p. 24.
83

Page 51
8. Dr. G. A. Allana, Distance Education System
and the Role of Allama lqbal Open University, 1985, p. 2.
Focus on STOu, 1984, p. 2; Trends in Distance Higher Education, Part 1, Distance Education Research Group, The Open University (UK), 1984, P, 20.
10. இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம், கைந்நூல், 1981, ப 3.
11.
Trends in Distance Higher Education, Part, 1, Distance Education Research Group, Thic pen University ( ப ), 1984, p. 14.
12.
முன்னே 23 ஆம் பக்கம் பார்க்க.
13.
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்துக்கு, ஓர் அறிமுகம், உயர் கல்வி அமைச்சின் ஒரு வெளியீடு, 1980, ப. 9.
14.
Univcrsity At Your Doorstep, student Hand book Andhra Pradesh Open University, {983 - 84, pp. 2 & 3.
15. Trends in Distance traigher Education, Part 1,
Distance Education Research Group, The Open University { UK), 1984, 11. 11.
16. இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம், கைந்நூல் 1981, ப. 3.
17.
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்துக்கு, ஓர் அறிமுகம், உயர் கல்வி அமைச்சின் ஒரு வெளியீடு, 1980, பக். 17-18.
3.
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம், கைந்நூல், 1981, ப. 16.
19.
Newsletter, The Open University of Sri Lanka, July 1931, Editorial p. 1.
84

20.
The Open University of the United Kingdom; A Short Course, The Open University Press, 1977, PP. 42-43.
21.
Dr. G. A. Allana, Distance Education System and the Role of Allama Iqbal Open University, 1985, p. 33.
22. Ibid., p. 33.
23. Ibid., p. 35.
24.
Newsletter, The Open University of Sri Lanka, July 1986, Editorial, p. 2.
25
Newsletter, The Open University of Sri Lanka, July 1986, Editorial, p. i.
26. Report of the Joint Evaluation Mission on the
Open University of Sri Lanka, 1985, p. 21.
27. Newsletter, The Open University of Sri Lanka,
May 1987, p. 8.
28.
Dr. Allana, Distance Education System and the Role of Allama Iqbal Open University, 1985, p. 37.
29.
The Open University of the United Kingdom, A Short Course, The Open University Press, 1977, PP. 92 - 95. பயிற்சிநெறி அணி பற்றிய ஆய்வுக்குப் பிரித்தானியா திறந்த பல்கலைக்கழகம் கலாநிதிப் பட் ட ம் வழங்கி
ysin GTT S.
30.
Hand book, The Open University of Sri Lanka, 1981, P. 14.
31.
Newsletter, The Open University of Sri Lanka, March 1987, Editorial, p. 1.
85

Page 52
32. இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தில், பேராசிரியர்களே
தத்தம் துறைகளிலுள்ள பயிற்சிநெறி அணிகளுக்குத் தலைவர்களாக இருக்கின்றனர்.
33. The Open University of the United Kingdom:
A Short Course, The Open University Press, 1977, p. 59.
34, Ibid., P. 180.
35.
Dr, G. Allana, Distance Education System and the Role of Allama lqbal Open University, 1985, pp. 30-31.
36. An Introduction to the Open University of Sri Lanka,
A Publication of the Ministry of Higher Education, 1980, p. 14.
பிரித்தானியா திறந்த பல்கலைக்கழக
பிபிசி தயாரிப்பு நிலையம் போன்ற பங்காளர் முறைமை ஏனைய தொலைக் கல்வி நிறுவனங்களில் இல்லை.
38. An Introduction to the Open University of Sri Lanka .
A publication of the Ministry of Higher Education, 1980, pp. 21-23.
39.
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம், கைந்நூல், 1981. பக். 3 - 4.
40. The Open University of Sri Lanka, Hand book,
1981, p. 3.
41.
100 ஆம் பக்கத்திலுள்ள 2 ஆம் அட்டவணையைப் பார்க்க.
42.
பயிற்சிநெறி அணியைப் பற்றிய விபரங்களுக்கு 51 ஆம் பக்கம் பார்க்க ,
43.
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம், கைந்நூல், 1981, பக், 5 - 6.
44.
The Open University of the United Kingdom: A Short Course, The Open University press, 1977, P. 18).
86

45. 100 ஆம் பக்கத்திலுள்ள 2 ஆம் அட்டவணை யைப் பார்க்க.
46. |
The Use of Advances in Communication Technolo. gies for Higher Education Purposes, Unesco Regional office for Education in Asia and the Pacific, Bangkok, 1986, Pp.5- 6.
47.
Trends in Distance Higher Education, Part. i, Distance Education Research Group, The Open University, (U. K) 1987, p. 15.
48.
The Open University of the United Kingdom: A short course, The Open University Press, 1977, pp. 92-93.
49.
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம், கைந்நூல், 1981, பக். 6- 7.
50. The uae of Advances in Communication Technolo.
gies for Higher Education purposes, Unesco Regional office for Education in Asia and the Pacific, Bangkok, 1986, p. 5.
51.
100 ஆம் பக்கத்திலுள்ள 2 ஆம் அட்டவணையைப் பார்க்க.
52.
100 ஆம் பக்கத்திலுள்ள 2 ஆம் அட்டவணையைப் பார்க்க. 100 ஆம் பக்கத்திலுள்ள 2 ஆம் அட்டவணையைப் பார்க்க.
53.)
54.
Newsletter, The Open University of Sri Lanka, December 1986, Editorial, p. 1.
55.
முன்னே 28ஆம், 29 ஆம் பக்கங்களைப் பார்க்க.
56,
முன்னே 5 ஆம் பக்கம் பார்க்க.
57. |
27 ஆம் பக்கத்திலுள்ள திறந்த பல்கலைக்கழகத்தின் 'திறந்த பான்மை' என்ற கட்டுரையைப் பார்க்க.
87

Page 53
58. 39 ஆம் பக்கத்திலுள்ள பிரதேச நிலையங்களும் கற்கை நிலை
யே ங்களும் என்ற கட்டுரையைப் பார்க்க.
59.
51 ஆம் பக்கத்திலுள்ள பயிற்சிநெறி அணி என்ற கட்டு ரையைப் பார்க்க.
60.
61 ஆம் பக்கத்திலுள்ள தொலைவிலிருந்து கற்றல் என்ற கட்டுரையைப் பார்க்க.
61.
NEVER TOO FAR, A Newsletter for Distance Education. Vol. 1, October, 1983. p. 6.
88

கலைச்சொற்கள்
தொலைக் கல்வி நிறுவனங்களின் வெளியீடுகளிலே அடிக்கடி பயன்படுத்தப்படும் கலைச் சொற்கள் தொகுக்கப்பட்டு அகர வரிசை முறையிற் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அச்சொற்களை மேற்போக்காக அறிந்து கொள்வதற்கு இச்சிறிய சொற்றொகுதி பெரும் உதவியாகுமென நம்புகிறேன். இந்தக் கலைச் சொற்களிற் பெரும்பான்மையானவை தொலைக் கல்வியோடு தொடர் பானவை.
1980 ஆம் ஆண்டில் திறந்த பல்கலைக்கழகம் இலங்கை யிலே தாபிக்கப்பட்டபோது, மரபுவழிப் பல்கலைக்கழகத்தி லிருந்து முதற் கல்வியாளனாக இடமாற்றம் பெற்று அங்கு சென்றேன். அக்காலத்திலே திறந்த பல்கலைக்கழகத்தோடு தொடர்பான வெளியீடுகளைத் தமிழிலே மொழிபெயர்க்கும் பொறுப்பு என்னைச் சார்ந்ததாயிற்று.
தொலைக் கல்வி இலங்கைக்குப் புதியது. புதிய கல்வி முறை பற்றிய வெளியீடுகளிலே இடம்பெற்ற பல ஆங்கிலச் சொற்களுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொற்களை ஆக்க வேண் டியிருந்தது. நான் மேற்கொண்ட அந்த முயற்சிக்கு உதவ இரு வர் முன்வந்தனர் : ஒருவர் கொழும்புப் பல்கலைக்கழக உதவி விரிவுரையாளரான திரு. கோ. கோணேசபிள்ளை அவர்கள் ; மற்றையவர் கல்வி வெளியீட்டுத் திணைக்கள உதவி ஆணையாள ராக இருந்த திரு. வி. பேரம்பலம் அவர்கள்.
89

Page 54
தொலைக் கல்வியோடு தொடர்பான ஆங்கிலச் சொற்கள் ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான ஒவ்வொரு தமிழ்ச் சொல்லைக் காணுதல் எளிதன்று. எனினும் ஓரளவிற்குப் பொருத்தமான
தமிழ் சொற்கள் ஆக்கப்பட்டுள்ளன.
வாசகர்களின் நலன் கருதித் தமிழ்ச் சொற்களை முன்னே நிரைப்படுத்தி, இவை ஒவ்வொன்றுக்கும் எதிரே அவ்வவற்றுக் கான ஆங்கிலச் சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Component
அங்கம், ஆக்கக்கூறு அச்சிட்ட அஞ்சல்வழிச் சாதனங்கள்
Printed Correspondence
materials
அச்சிட்ட பாடநூல்கள் அஞ்சல்வழி
Correspondence texts Correspondence Correspondence College
அஞ்சல்வழிக் கல்லூரி
அஞ்சல்வழிப் பல்கலைக்கழகம்
Correspondence University
அத்திவாரப் பயிற்சிநெறி
Foundation course
அலகு இயற்றுநர்
Unit author
அறிவுறுத்துநர்
Instructor
ஆலோசனை வழங்கல்
Counselling
ஆய்வுகூடம் ஆள்வினைமை
இயைபு மாணவர்
Laboratory Entrepreneurship Associate student Second chance
Consultant Professional
இரண்டாம் வாய்ப்பு உசாத்துணைவர் உயர்தொழில் உள்ளகச் சேவை உள்ளூர்க் கற்கை நிலையம்
In-service Local Study Centre Allocation
ஒதுக்கீடு
90

ஒப்படைகள் ஒலிபரப்புக் குறிப்புக்கள் கட்டமைப்பு கட்டுரை வகுப்பு கட்புல நாடாக்கள் கம்பியூட்டர் திருத்திய ஒப்படைகள்
Assignments Broadcast notes Structure Tutorial class
Video cassettes
கல்வி உதவியாளர்
Computer-Marked Assignments Education Assistant
Educational Qualifications
கல்வித் தகைமைகள் கல்வித் தொழினுட்பவியலர்
Educational Technologist
கல்விப் பேரவை
Academic council
கல்வி ஆண்டு
Academic Year
கற்கைச் சபை
Board of Study
கற்கை நிகழ்ச்சித்திட்டம்
Programme of Study
கற்கை நிலையம்
Study Centre
கற்பித்தல் தகவல் தொடர்புகள்
Teaching media
கற்பித்தல் சாதனங்கள்
Teaching materials
கைந்நூல்
Hand book
கோடைக்காலப் பாடசாலை
Summer School
சார்புப் பாடநூல்கள்
Ancillary Texts
சிறு திறத்த பயிற்சிநெறி
Minor Course
சுய அறிவுறுத்தல் சாதனங்கள்
Self-Instructional materials
Self-aasessment questions
சுய மதிப்பீட்டு வினாக்கள் செய்தி முடங்கல்
Newsletter

Page 55
Demonstration
Practical Audio- Video components Audio cassettes In - service Training Test
செய்துகாட்டல் செய்முறை செவிப்புல/கட்புல அங்கங்கள் செவிப்புல நாடாக்கள் சேவையிடைப் பயிற்சி சோதனை தகவல் தொடர்பு | வடிவமைப்பாளர் தற்றுணைக் குழுக்கள் திப்புளோமா திறந்த பல்கலைக்கழகம் திறந்த பாடசாலை திறந்த பான்மை திறமை, கணிப்பு துண்டம், தொகுதி துணைப் பாடநூல்கள் தேசிய திறந்த பல்கலைக்கழகம் தொடர் கல்வி தொடர் மதிப்பீடு தொலைக் கல்வி தொலைக் கல்வி நிறுவகம்
Media designer Self help groups Diploma Open University Open School Openness Credit Block Supplementary Texts National Open University Continuing education Continuing assessment Distance Education Institute of Distance Education Distance Teaching Distance Teaching Methods Learning at a distance
Slides Day School Statutory bodies Institutional research Entrance Examination Face - to - Face teaching
தொலைக் கற்பித்தல் தொலைக் கற்பித்தல் முறைகள் தொலைவிலிருந்து கற்றல் நழுவற் படங்கள் நாட் பாடசாலை நிலையியற் குழுக்கள் நிறுவன ஆய்வு நுழைவுப் பரீட்சை நேர்முகக் கற்பித்தல்
92

பகுதி நேரம்
Part - time பட்டமேற் கல்வி
Postgraduate education கற்பதற்கான வழிகாட்டிகள்
Study guides பணியணிப் போதனாசிரியர்
Staff Tutor பணியணி
Staff பதிவேடுகள்
Records பயிற்சிநெறி
Course பயிற்சிநெறி அணிகள்
Course Teams பயிற்சிநெறிக் குறியீடுகள்
Course Codes பயிற்சிநெறி அலகு
Course unit பயிற்சிநெறி உள்ளடக்கம்
Course content பயிற்சிநெறி வழங்கல்
Course presentation பயிற்சிநெறி வழிகாட்டிகள்
Course guides பரிசோதனை
experiment பல் தகவல் தொடர்பு முறைமை
multi media system பல் விடைத் தேர்வு
Multiple choice பாடசாலை முன்னிலைக் கல்வி
Pre-school education பாடநூல்கள்
Texts books பாடவிதானம்
Curriculum பிரதேசக் கல்வியாளர்
Regional academics பிரதேச சேவைகள்
Regional Services பிரதேச நிலையம்
Regional Centre பின்னூட்டல்
Feedback பெருந் திறத்த பயிற்சிநெறி
Major Course போதனாசிரியர்
Tutor
போதனாசிரியர் திருத்திய
Tutor-marked assignments ஒப்படைகள் மதிப்பீடு
Assessment மரபுவழிக் கற்பித்தல்
Conventional Teaching தொழினுணுக்கம்
Techniques
93

Page 56
மரபுவழிப் பல்கலைக்கழகம்
Conventional University Conventional Text Books
Home Economics
மரபுவழிப் பாடநூல்கள் மனைப் பொருளாதாரம் முன்னெறியம் முகாமிப்பு
project
Management
ஈd KANI 12:ANETTERS *
-*- *பா!'CTI, i-சிங் 4
மூதவை
Senate
மூலவளங்கள்
Resources
வகைக் கற்கைகள்
Case study
Residential Courses
வதிவிடப் பயிற்சிநெறிகள் வதிவிடப் பாடசாலை
Residential School
வயதுவந்த மாணவர்
Adult Student
வழிகாட்டலும் ஆலோசனை வழங்கலும்
Guidance and counselling
வான்வழிப் பல்கலைக்கழகம்
University of the Air
விதந்துரைக்கப்பட்ட நூல் கள்
Prescribed books
வீட்டிலிருந்து கற்போர்
Home based students
வீட்டுப் பரிசோதனைப் பொட்டளிகள்
Home experimental kits
வெகுசனத் தொடர்பு
Mass Communication
வெளிக்கள வேலை
Field work
வேலைக்களம்
Workshop
94

13
நூற்பெயர்க் கோவை
An Introduction to The Open University of Sri Lanka
A publication of the Ministry of Higher Education, 18, Ward Place, Colombo-7, June 19 1989.
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்துக்கு ஓர் அறிமுகம்,
உயர் கல்வி அமைச்சின் ஒரு வெளியீடு, 18, 2ır. QLD, Ost (Liby - 7, 19, y sÒT 1980.
Distance Education: Exemplar Training Materials, UNESCO
Regional office for Education in Asia and the Pacific,
Bangkok, 1984.
Distance Learning for Teacher Education, Report of a
Technical working Group Meeting, Islamabad, Pakistan, 4-16 November 1981. Volume II : Guide lines on develope ment of Materials, UNESCO Regional Office for Education in Asia and the Pacific, Bangkok, 1982.
Distance Learning for Teacher Education, Report of a
Technical working Group Meeting. Islamabad, Pakistan,
95

Page 57
4-16 November 1981. Volume III: Exemplar Materials, UNESCQ Regional office for Education in Asia and the Pacific, Bangkok, 1982.
Distance Learning Systems and Structures Training Manual
Sub-Regional Training Workshop on Distance Learning System and Structures Volume II, UNESCO Regional Office for Education in Asia and the Pacific, Bangkok, Thailand, 1984.
Distance Learning Systems and Structures - Training of
Distance Educators, Report of a Sub-Regional workshop (Vol. 1) Colombo-5, 18 July 1984.
Distance Learning for Teacher Education. Report of a
Technical working Group Meeting, Islamabad, Pakistan, 4-16 November 1981.
Distance Education in Higher Education, Inter - Country
study visit-cum-mobile workshop Sukhothai Thammethirat Open University, Thailand and Darling Downs Institute of Advanced Education, Australia, 6 - 16 September 1983. UNESCO Regional office for Education in Asia and the Pacific, Bangkok 1983.
Distance Education System and the Role of Allama
Iqbal Open University, Dr. G. A. ALLANA, Vice. Chancellor Allama Iqbal Open University, 1985.
Distance Teaching Universities, Edited by Greville Rumble
and Keith Harry, St. Martin's Press, New York, 1982.
Empire State College | State University of New York,
Centre for Distance Learning - A Case study by Vincent Worth, The Open University Distance Education Research Group, 1982.
96

National Workshop on Distance Education, Sponsored
by National Institute of Educational Media and Technology, Ministry of Education and UNESCO Regional office for Education in Asia and the Pacific, Bangkok, 1984.
NEVER TOO FAR, A Newsletter for Distance Education.
Vol. 1, October 1983. Vol. 1, February, 1984. Vol. 3, July 1984. Vol. 4, February 1985. Vol. 6, February 1986.
Newsletter. The Open University of Sri Lanka, Vol. I,
Nos. 1- 12, 1986/87. and Vol. ii, Nos. 1- 12, 1987/88.
Older students in the Open University by the older
students Research Group, Regional Academic Services,
Open University, U. K., 1984.
OPVARSITY NEWS, Publisher, The Registrar, Andhra,
Pradesh Open University. Hyderabad, India, Vol. No. 1, 1985.
Programme of study, The Open University of Sri Lanka.
STOU Administrative and Academic Structure, Planning
Division, September 1983.
Strategies for Strengthening student - Teacher Contact In
Distance Education in Swedish Universities by Birgitta willen, The Open University Distance Education Research Group, 1984.
Focus on STOU. Sukhothai Thammathirat Open
University, 1984.
97

Page 58
The Open University of Sri Lanka, Hand book,
The Open University of Sri Lanka, Nawala, Nugegoda, | July 1981. இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம், கைந்நூால், 1981, இலங்கைத்
BPB5 udaljes LD5L), GT al law, GIGGST SML ya 1981. The Open University of the United Kingdom, A Short
Course, The Open University Press, Walton Hall, Milton Keynes, First published 1977.
The Open University of Sri Lanka, The Hand book, 1988.
The University Grants Commission and The Universities
of Sri Lanka, 1985. The Uses of Advances in Communication Technologies for
Higher Education Purposes, Report of a Technical work -ing Group Meeting at Sukhothai Thamrnathirat Open
University, Bangkok, UNESCO Regional office for Education
in Asia and the Pacific, Bangkok, 1986. Training of personnel for Distance Education, Report of 3
Regionai Seminar UNESCO Regional office for Education in Asia and the Pacific, Bangkok, 1984.
Trends in Distance Higher Education, Part 1, Edited by
Peter Raggatt and Keith Harry. The Open University
Distance Education Research Group, March 1984:
University at your Doorstep, Student Hand book, 1983-84,
Andhra Pradesh Open University, Hyderabad, 1984.
Tamil Lexicon, 6 Vols, and supplement,
University of Madras, 1926 - 39. Visvanatha Pillai, v., Tamil - English Dictionary, 7th ed,
Madras, 1963. Glossary of official Terms and Phrases in Tamil, Depart.ment of Official language, (Publication section), 1958.
English Tamil Dictionary, University of Madras, 1985.
98

14 அட்டவணைகள்
அட்டவணை 1 இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் 1981 ஆம் ஆண்டின் பயிற்சிநெறிகள்
கற்கை நிகழ்ச்சித்
திட்டம்
மட் பயிற்சி நெறிக் பயிற்சிநெறித்
டம்
குறியீடு
தலைப்பு
கணிப்பு வீதம்
2/3
... 2/3
விஞ்ஞான தொழி F-1 MAF 141 ., கணிதம்
னுட்பவியலுக்கான F-1 PSF 141 ... விஞ்ஞானம் அத்திவாரப் பயிற்சிநெறி ... F-1 HUF 141 ... சமூகக் கல்வி தொழினுட்பவியற் C-1 TCC 143 ... கணிதம்
சான்றிதழ்
C-1 TCC 141 ... அளத்தலும் மட்டப் (குடிசார்)
படுத்தலும் C-! TCC 142 ... திட்டம் வரைதல் ஆள்வினைமைச் சான்றிதழ்
F-2 MCF 261. ஆள்வினைமை
2/3 2/3 2/3
2/3
உயர்தொழில் | ஆங்சிலச் சான்றிதழ் 1
(-! LSC 161 ... உயர்தொழில் ஆங்கிலம்
பாடசாலை முன்னிலைக் கல்விச் சான்றிதழ் C-4 ESC 161 ... பாடசாலை முன்னிலைக் கல்வி | பட்டமேற் கல்வித் P-I ESP 131 ... கல்விக் கோட்பாடுகளும்
திப்ளோமா
பிரச்சினைகளும் ... 1/2
P-1
ESP 132
கல்வி உளவியல்
1/2 P-I ESP 133 ... ஒப்புமைக் கல்வி
1/2 p-1 ESP 134
பாடவிதான அபிவிருத்தியும்
பொது முறைகளும் ... 1/2 P-2 ESP 241 ... அளவீடும் மதிப்பீடும்... 2/3 P-2 ESP 242
கல்வி நிருவாகம்
2/3 P--2 ESP 243 ... கல்வி வழிகாட்டல் ... 2/3 ஓ-2 ESP 244 ...
விசேட கற்பித்தல் முறைகள் 2/3
99

Page 59
அட்டவணை 2
கற்கை முறைமையின் அங்கங்கள்
எ----------
அண்ணளவான கற்றல் நேரம்
அங்கங்கள்
மாணவர் துலங்கல்
கட்டாயம்
முறைமையான வாசிப்பு 55%-70%
அச்சிட்டவை
(அ) அச்சிட்ட பாடப் புத்தகங்கள் (ஆ) விதித்துரைக்கப்பட்ட
புத்தகங்கள் (இ) விதந்துரைக்கப்பட்ட வாசிப்பு கட்புல-செவிப்புலச் சாதனங்கள்
5% - 10 % ஒலிபரப்புக் குறிப்புகளுடன் இணைந்து பார்த்தலும் கேட்டலும்
(அ) வானொலியில் பயிற்சிநெறி
ஒலிபரப்பு (ஆ) தொலைக்காட்சியிற் பயிற்சி
நெறி ஒளிபரப்பு (இ) சலனப் படங்கள், பதிவு
நாடாக்கள், நழுவல் படங்கள் (ஈ) ஒலிபரப்புக் குறிப்புகள் செய்து காட்டலும் செய்முறை வேலையும் போதனையும் ஆலோசனை வழங்கலும்
(அ) தனிப் போதனையும் தொகு
திப் போதனையும் (ஆ) தனி ஆலோசனையும்
தொகுதி ஆலோசனையும் (இ) வதிவிடப் பாடசாலைகள்
அவதானித்தலும் செய் 5 %-15% முறை வேலைகளைச் செய் தலும்
10 %-15% போதனாசிரியர்கள், ஆலோசகர்கள் தொடர்பு; கல்வி நிலையங்களுக்குச் சமூகமளித்தல்; வதி. விடப் பாடசாலைக்குச் சமுகமளிக்கின்ற ஏனைய மாணவர்களைச் சந்தித்தல்
ஒப்படைகளும் மதிப்பீடுகளும் (அ) செய்முறைப் பரிசோதனை
களும் சுய மதிப்பீடுகளும் (ஆ) போதனாசிரியர் திருத்திய
ஒப்படைகள் (இ) பரீட்சைகள்
செய்முறை வேலை - 5 %-15% அல்லது செயல் திட்டங்களைச் செய்தல்! எழுத்து வேலைகளைச் செய்தல் பரீட்சைகளுக்குத் தோற்றுதல்
100


Page 60
இந்நூலாசிரியர் கலா
*பச்சையப்பன் கல்லு பேசும்' எனப் புகழ்ந்து தில் டாக்டர் மு. வ.
இலண்டன் பல்கலைக் மார் அவர்களின் வ ழி பற்றி ஆய்வு மேற்கொ வர். அத்துடன் இல துறையிலே ஆராய்ச்சி வாய்ப்பைப் பெற்றவர்
இவர் ஆக்கிய 'மலரும் டேஸ்வரப் பல்கலைக்கழ பாடநூலாகப் புகழ் பெ வளம், கற்பனை வள் செவ்வேள், Cult and கேதீஸ்வரம், இந்து சம என்னும் நூல்களின் ஆ
0
0 1978 - 1980 ஆம் 4 கழகத்திலே தமிழ்த் 3 துள்ளார். 1984 --- 1985 ஆம் - நல நாடுகளின் பல்கல் பிரித்தானியா திறந்த ! கொள்வதற்குப் புலடை மேலும் பாகிஸ் தான், நாடுகளிலுள்ள திறந்த யிடுதற்கு யுனெஸ்கோ ஒன்றை வழங்கியது. கல்விச் சேவைக் குழு கைத் திறந்த பல்கலைக் யாளராகவும் பணிபுரிய கற்பித்தல்' பற்றிய நூ டுள்ளார்.
நியூ லீலா அச்

நிதி ஆ. கந்தையா
7ரிப் படிக்கட்டும் பைந்தமிழ் பாராட்டப்படும் கல்விக் கழகத்
அவர்களிடம் படித்தவர்.
கழகத்தில் பேராசிரியர் யோன் " காட்ட லிற் பத்தி இலக்கியம்
ண்டு கலாநிதிப் பட்டம் பெற்ற நண்டன் பல்கலைக்கழகத் தமிழ்த் உதவியாளனாகவும் பணிபுரியும்
மணமும்' என்ற நூல், வெங்க ழகத்தில் முதனிலை வகுப்புக்குப் பற்றது . இலக்கிய வளம், சிந்தனை ம், உள்ளத்தனையது உயர்வு, 1 Worship of Purukan, திருக் யம், ஞானச் சுடர் 'Mystic Love' சிரியரும் ஆவார்.
ஆண்டுகளிற் களனிப் பல்கலைக் துறைத் தலைவராகப் பணிபுரிந்
ஆண்டுகளில் இவருக்குப் பொ து
லக்கழகங்களின் ஆ ணை க் கு , பல்கலைக்கழகத்திலே ஆய்வு மேற் மப்பரிசில் ஒன்றை வழங்கியது. இந்தியா, தாய்லாந்து ஆகிய 5 பல்கலைக்கழகங்களைப் பார்வை நிறுவனம் பு ல  ைம ப் டப் ரி சி ல்
விலே உறுப்பினராகவும் இலங் கேழகத்திற் சிரேட்ட விரிவுரை பும் இவர், இப்போது 'தொலைக். கல் ஒன்றை ஆக்குவதில் ஈடுபட்
சகம், கொழும்பு - 12