கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வெளிச்சம் 2004.11-12

Page 1
கார்த்தி5ை - மார்ச்
G)
விடுதலைப்புலிகள் கலை, ப

=ழி, 2004
- விலை ருடா EO/=
இச்சம்
பண்பாட்டுக் கழகம்

Page 2
வெலெச்சம்
வாழ்வின் வரைகோடுகள்
வர்ணம் தாங்கி
எழ எழ வருகிறது ஒரு வடிவம்.
கலையெனச் சொல்லி
கயிற்றில் நடக்கிறான் கலைஞனெனும் கழைக்கூத்தாடி.
மாயம் என்பதாய்
வாழ்வு என்பதாய்
நிஜத்தையும் நிழலையும் கலந்து குயவன் செய்கிறான் பாண்டம்.
படைப்பின் சூத்திரம் அறியா
மயக்கத்தில் நாமும்
உலகெனப்படுவதும் சுழல்கிறது.
தமிழs ஓவியம்

1-1ா மாப்'
'டீரெஸ்3 மடுவில் கலை வண்ணங்கள்.

Page 3
வண்ன் மண்ணில்
நிலா பதிப்பகத்த உங்கள் மண்ணில் உங்கள்
கொள்ள விரைவில்
குணா )
கலர் பிரித் (Colour கலர் பிர (Digita
பதிப்புத்துறை சார்ந்த நாங்கள் அறிமுகம்
பெருமையம்
Guna Digital F
Digital F Digital I
புகையிரத நிலைய வீதி,

் புத்வ அறிவகம் தின் அனுசரணையுடன்
ள் தேவைகளை நிறைவேற்றிக்
அறிமுகம் செய்கிறோம்.
igital Printing igital Imaging
த்தல் சேவை Separation) தி செய்தல் 1 Printing)
சகல சேவைகளையும் . செய்து வைப்பதில்
டைகின்றோம்.
Printing maging
கிளிநொச்சி

Page 4
கார்த்திகை நாளில் கார்த்திகைப் பூவைக்
கதொழுதோம். கண்ணீர் சரமெடுத்து கல்லற வீரான் கால் வந்தோம்.
கே."
இன்

வெளிச்சம் கார்த்திகை - மார்கழி 2004
இதை
தேசியத் தலைவரின் கருத்துரையுடன்
கவிதை
மாலிகா புதுவை இரத்தினதுரை
கை.சரவணன்
செல்வா
சிறுகதை
முல்லை யேசுதாசன்
க.சட்டநாதன் மு.அநாதரட்சகன் செ.யோகநாதன்
- கட்டுரை மயிலங்கூடல் பி.நடராசன்
செங்கை ஆழியான் மனோன்மணி சண்முகதாஸ்
ஞானரதன்
மதிப்பீடு யோ. சத்யன் ஈ.குமரன்
மூதறிஞர் சொக்கன், கவிஞர் தில்லைச் சிவன், எழுத்தாளர் வி. நடராஜன் ஆகியோருக்கு அஞ்சலியுடன் குறிப்புகள் அம்பல...
வேல், 53;

Page 5
வெளிச்சம் கார்த்திகை- மார்கழி 2004
இதழ் 89
குர
தொகுப்பும் அமைப்பும் ஆசிரியர் குழு
ஒளிப்படங்கள் இ.சோபிதன், திலகன், விடுதலைப்புலிகள் புகைப்படப்பிரிவு
நெடுங்காலமாகத் பறிப்பும், கட்டவிழ்த்து விளைந்தது. எமது அடக்குமுறையாளரி ஏவிவிட்ட பிணந்தின் பெருங்குரலெடுத்த எ ஆரவாரங்களுக்கு கொலைகளும், நில பாரபட்சமும், பண் ஆயுதமேந்த வைத்த
ஓவியங்கள் கோபாலி, புகழ், ட்ரொஸ்கி மருது.
அச்சுப்பதிப்பு நிலா பதிப்பகம் கிளிநொச்சி
அட்டை ஓவியம் ட்ரொஸ்கி மருது
தமிழீழ விடுதலை ஆயுத எழுச்சி மக்கள் தமிழர் விடுதலைச் விடுதலைப்புலிகளி கண்களைத் திறக்க தமிழரின் விடுதலை ஸ்ரீலங்கா அரசு போ உலக அரங்கைத் திற தொடர்ந்து எரிந்த எப் நம்பிக்கையிலும், எ மேனும் மேல்நோக். எமது போராட்டத்தி கருதியும் 'சரி பேசித்த
வெளியீடு விடுதலைப் புலிகள் கலை,பண்பாட்டுக் கழகம் நடுவப்பணியகம்
தமிழீழம்.
இணையத்தில் வெளிச்சம் WWW.Velichcham.com
தொடர்புகளுக்கு:
வெளிச்சம் புதுக்குடியிருப்பு-04
முல்லைத்தீவு
வெளிச்சம் விடுதலைப்புலிகள் கலை,பண்பாட்டுக்கழகம் மாவட்டச் செயலகம் பொற்பதி வீதி கோண்டாவில் யாழ்ப்பாணம்.
கடந்த இரண்டல் தமிழருக்கு ஏதும் கி அனைத்துலக சட்ட ஸ்ரீலங்கா அரசிடம் றும், இனங்களுக்கில் இந்த வரைபு பெரும் ஆற்றல் அவர்கள் போருக்கான முழக்க தங்களின் உண்மை குரங்குகள் பிய்த்தெ கிட்டாது என்பது மீன் அதற்குத் தயாராவா

தலைவாசல்
கார்த்திகை - மார்கழி 2004.
"பூமாலை தொடுத்து ங்கிடம் கொடுத்தோம்."
ந் தொடர்ந்த எம் இனத்தின் மீதான ஒடுக்கலும், உரிமை த வன்முறையும்தான் தவிர்க்க முடியாததான போராய் முந்திய தலைமுறையினரின் அறவழிப்போராட்டங்களால் ன் கண்களைத் திறக்க முடியவில்லை. அரச அதிகாரம் னிகளான இராணுவத்தினரால் எம் மக்கள் குதறப்பட்டனர். மது ஓலம் உலகத்திசைகளை எட்டாமல் கடலின் அலையடி ர் அடங்கிப்போனது. தொடர்ந்த வகைதொகையற்ற ப்பறிப்பும், பெண்கள் மீதான வன்புணர்ச்சியும், கல்வியிற் பாட்டின்மீதான நெருக்குவாரங்களும் ஈழத்தமிழரை
ன.
லப்புலிகளின் தலைமையிலும், வழிகாட்டலிலும் எழுந்த ள் போராட்டமாக மலர்ந்தது. இந்த மக்கள்சக்தி இணைந்த சேனை ஓயாத அலைகளாகக் கெம்பி அலையெறிந்தது. ன் போரியல் வெற்றியின் கதிர்வீச்சுக்களே எதிரியின் வைத்தது மட்டுமல்ல திறந்த கண்களைக் கூசவும் வைத்தது. ப்போருக்கு இனி ஈடுகொடுக்க முடியாது என்பதை அறிந்த ச்சுவார்த்தை எனும் பொய் நாடகத்துக்கான ஒப்பனையுடன் ஐந்தது. எமது தேசியத் தலைமையும் போரின் வெக்கையில் மக்களுக்குத் தற்காலிகமாகவேனும் ஆறுதல் கிட்டுமெனும் ம்மக்களின் சிதைந்துபோன வாழ்வாதாரங் நீ நகர்த்த முடியும் எனும் எண்ணத்திலும், உலக அரங்கில் ன் உண்மைத் தன்மையை உணர்த்தவேண்டிய தேவை தான் பார்ப்போமே' என்ற முடிவுக்கு வந்தது.
சிதைந்.கமாகாயும் ே
மர வருடங்களாகத் தொடர்ந்த பேச்சுவார்த்தைகளின்போது ட்டாத நிலையிலும் இடைக்கால நிர்வாக வரைபு ஒன்றை , அரசியல் அறிஞர்களின் ஒத்துழைப்புடன் உருவாக்கி கையளித்தது. பேச்சென்றும், சமாதானமென்றும், தீர்வென் ஊடயேஐக்கியமென்றும் உலகத்துக்கு நாடகமாடியோர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. புலிகளின் அரசியல் இராஜதந்திர க்குள் பேரிடியாக இறங்கியது. அவ்வளவுதான். மீண்டும் ங்களும், இராணுவத் தயார் படுத்தல்களும் தொடங்கிவிட்டன. - வடிவைக் காட்டி நாம் தொடுத்துக்கொடுத்த பூமாலையை மியத்தொடங்கிவிட்டன. போராட்டமின்றி எமக்கான விடுதலை எடும் உறுதிப் படுத்தப்பட்டாயிற்று. என்னசெய்வது? நாமும் மதத் தவிர எமக்கு வேறு வழியேதும் இல்லை. தயாராவோம்.

Page 6
PUBLIC L FRARY )
அச்சடிப்பு
கிடம்
TAF:"!?
இன்று ஒரு புனிதமான நாள். தமது உன்னதமான உயிருக்கும் மேலாக, தமது தேசத்தின் விடுதலையை அதி உன்னதமான தாக நேசித்து, அந்த உயரிய இலட்சியத்துக் காகச் சாவைத் தழுவிக்கொண்ட எமது மாவீரர்களை நாம் போற்றி வணங்கும் நன்நாள்.
எமது மாவீரர்களின் வீரம் செறிந்த போராட்ட வாழ்வையும் அவர்களது ஒப்பற்ற தியாகங்களையும் அற்புதமான அர்ப்பணிப்பு களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூரும் இத் திருநாளில் ஒரு முக்கிய விடயத்தைக் கவனத்தில் கொள்ளுமாறு நான் உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்...
மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த எமது வீர விடுதலைப்போராட்டத்தில் எமது மாவீரர்கள் புரிந்த சாதனைகளை நாம் நிலைநாட்டினோம். உலகமே விய. விரட்டியடித்து வெற்றிகளை ஈட்டினோம்.
சிங்கள் இராணுவ ஆக்கிரமிப்புக்கு ஆளாகியிருந்த அங்கெல்லாம் எமது நிர்வாக ஆட்சி அதிகாரத்தை நிறுவிடு ஸ்ரீ லங்கா அரசினது ஆயுதப்படைகளுக்கு ஈடாக படைவ தேசிய விடுதலைப்போராட்டத்தைச் சர்வதேச மயப்படுத்தி, எமது மாவீரர் கண்ட இலட்சியக் கனவு இன்னும் நிறைவு நிறைவு பெறவில்லை. எமது மக்கள் இன்னும் பூரண சுதந்
தமிழீழத்தின் தொன்மை வாய்ந்த, வரலாற்றுப் புகழ்மிக்க மக்களும் இன்னும் சிங்கள் இராணுவ ஆக்கிரமிப்புப் பிடி சிறைச்சாலைகளில் அடைபட்டு, நசிபட்டு, மிதிபட்டு வாழ்க் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் தாம் பிறந்து வா அல்லற்படுகிறார்கள். எமது மக்களின் துயரும் துன்பமும் மாவீரர்கள் கனவுகண்ட அந்தச் சத்திய இலட்சியம் இன்னு

வெளிச்சம் காத்திகை - மார்கழி 2004
23
மாவீரர் களவு றும் நிறைவு பெறவில்லை.
"2:13:15
தி
தற்போத;
கசடத்தக்க.
மகத்தான தியாகங்கள் காரணமாக ஒப்பற்ற போரியற் க்கும் வகையிற் போர் அரங்குகளில் எதிரிப்படைகளை
எமது தாயக மண்ணின் பெரும்பகுதியை மீட்டெடுத்து னோம். உலக நாடுகளின் உதவியுடன் கட்டியெழுப்பப்பட்ட லுச் சமநிலையை நிலைநாட்டினோம். தமிழீழ மக்களின் உலகத்தின் கவனத்தை எம்மீது திருப்பினோம். எனினும் பெறவில்லை. எமது தாயக மண் இன்னும் முழுமையாக திரம் அடைந்துவிடவில்லை.
கநகரங்களும் பட்டினங்களும் அங்கு வாழ்ந்துவரும் எமது யில் இருந்து விடுபடவில்லை. அவர்கள் திறந்தவெளிச் கிறார்கள். தமது சொந்த மண்ணிலிருந்து வேர் அறுபட்டு ழ்ந்த நிலங்களுக்குத் திரும்ப முடியாது அகதி முகாம்களில் தொடர்கிறது. தேசவிடுதலை என்ற எமது இலட்சியம், எமது
ம் நிறைவுபெறவில்லை.
27:11:2004 அன்று தமிழீழத்தேசியத்தலைவியின்
மாவீரர் நாள் உரையிலிருந்து.

Page 7
வெளிச்சம் கார்த்திகை- மார்கழி 2004
மலகா கவிதை
5 9
ப
இ க த உ ப ட
ம
நக
உ
..
பய
முன்
எல்
அ.
நீயும்
தவ
உ
பே
தெ

சைவழி தவறா நடத்தலிற்தான் சரிடமடையும் விரைவிருக்கிறது. ாலையும் சோலையும் இடைவரும் நாளில் ரலையிற் தளர்ந்தும் சாலையிற் கிளர்ந்தும் தடுமாறல் பணத்துக்காகாது.
லக்கின் தலைமேலுள்ள குறியில் ழியகலக்கூடாது. உத்தல்
ண்டும் நடத்தல் தாடர்ந்தும் தொடர்ந்தும் நடத்தலெனும் சரயத்தனமே வெற்றிதரும். வய்யிலடிக்கும்போது நட ழைபொழியும் நாளில் நட சியும் புயலும் தின்னும் ரவோ பகலோ நட. உந்தபின் கொஞ்சம் ஓய்வெடு பக்கமுன் இளைப்பாறாதே. டை பயணத்துக்கு வேண்டியது டற்பலமல்ல பிக்கைப் பலம். சிநெடுகிலும் பார்த்தபடி போ. னக்கு முந்திய யாத்திரியரின் லும்புக்கூடுகள் கிடைக்கும் பணவழிக் குறிப்புகள் கிட்டும்
ன்னோடிகளின் காற்தடங்கள் அகப்படும்" மலாவற்றையும் கடந்துபோ
வை வழிகாட்டும் உனக்கு. டையில் விழுந்தாலும் தகைமையுடைச் சாவுவரும். ளைய பயணிக்கு ம் திசைசொல்லியாய்க் கிடக்கும் பம் பலித்த ஒருவனாக, ன் தடமிருக்கும் மண்ணில். "தாதா உனக்கு ாடர்ந்து நட.

Page 8
ஈழம், இலங்கை, லங்கா, சிறீலங்கா, சீலான், சீலாவோ, சிலோன் முதலிய பல் வேறு பெயர்களைக் கொண்ட நாடு இந்துப் பெருங்கடலில் உள்ள ஒரு சிறு தீவாகும். இத்தீவு இந்தியா அல்லது பாரதம் எனப்படும் ஒரு பெருநாட்டின் கீழ்ப்பகுதியில் அதனோடு ஒரு நெருங்கிய தொடர்பு கொண்டதாக அமைந்துள்ளது. ஈழத்தில் தமிழர், சிங்களர் என்ற இரு மொழிபேசும் மக்கள் வாழ்கின்ற னர். இவர்களோடு நெருங்கிய தொடர்புகொண்ட மக்களே இந்தியாவிலும் வாழ்கின்றனர்.
இவ்விரு நாடுகளும் 4300 ஆண்டுகளுக்கு முன்னர்வரை ஒரு பெருநாட்டின் பகுதிகளாக இணைந்து இருந்தன. மூன்று முறை கள் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்ந்த கடல் பரவ லின்முன் கட லற்ற
பகுதியில் தெற்கு நோக் கிப் பரந்த பெருநாடாக இருந்தது. ஞாயிறினின்று சிதறி விழுந்த அனற்பிழம்பே பின் பூமியானது. அதில் முதலில் குளிரத் தொடங்கிய நிலம் பற்றிப் பேராசிரியர் மது.ச.விமலானந்தம் பின்வருமாறு விளக்கம் தருகிறார்:
"முதன்முதலில் குளிர்ந்தது உலகின் மேற் பரப்பே. அந்நிலம் தமிழ் நிலமே. அப்பகுதி அப்படி முதல் நிலமாக அமையக்காரணம் உலகின் நடுக்கோட்டிற்கு அணித்தாய் இருந்த மையே. அம்முதல் நிலமே குமரிக்கண்டம். குமரிமலை ஆறுகொண்டு குமரிநாடு என்று பெயரிட்டனர். இதன் வடக்கே குமரியாறு; தெற்கே பஃறுளியாறு என்பவற்றின் இடையே கீழ்மேலாக எழுநூறு காவதம் பரப்பாக நீண்டு கிடந்தது. இது நாற்பத்தொன்பது நாடுகளாகப்

வெளிச்சம் கார்த்திகை - மார்கழி 2004
222 5 1
"..'AY |
-':- **கா
1:44
போ*
பிரிக்கப்பெற்றிருந்தது. ஏழ்மதுரை நாட்டுக்குத் தென்பால் இருந்த காரணத்தால் மதுரை 'தென்மதுரை' எனப்பட்டது. இதனை அரசிருக் கையாகக் கொண்டு ஆண்டவன் ஆழிவடிவம் பலம் நின்ற பாண்டியன் என்ற முதலாம்நிலம் தரு திருவிற் பாண்டியன்...''
- தமிழ் இலக்கிய வரலாற்றுக்
களஞ்சியம், தொகுதி 2, ஐந்திணைப் பதிப்பகம்,
ST தொன்மை
சென்னை. 1987. ப.1670.
- மயிvங்கூடப் பி.நடராசன்
இவ்வாறு தோன்றிய பரந்த தமிழ்நாடு பெருமளவில் கடல்கோளுக்குட் பட்டது. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் இப்பேரழிவைப் பின்வருமாறு பாடுகின்றார்:
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
இறையனார் களவியலுரையும் இளம்பூரணர் தொல்காப்பிய உரையும் பிறவும் இக்கடல் கோளைக் குறிப்பிடுகின்றன. தமிழ்நிலத்தின் தென்பகுதி கொடிய கடலாற் கொள்ளப்பட்ட போதிலும் நிலைபேறடைந்த வடபகுதி தமிழை அழியாது காத்தது. இந்த வடபகுதி இன்றைய தென்தமிழ்நாடு மட்டுமன்று அதற்கு மேலேயி ருந்த வடபகுதியுமாகும். இப்பேரழிவில் அழி யாது தப்பிய தமிழ்ப்பகுதியாக ஈழமும் அமைந்தது. தொடர்ந்த இக்கடல்கோளைப் பேராசிரியர் மா.இராசமாணிக்கனார் பின்வரு மாறு விளக்குகின்றார்:
"இலங்கை வரலாற்றில் குறிப்பிடப்படும்

Page 9
5 வெளிச்சம் கார்த்திகை - மார்கழி 2004
மூன்று கடல்கோள்களுள் முதலாவது கடல் கோள் கி.மு. 2387 இல் நிகழ்ந்தது. இது இலங்கையை இந்தியாவிலிருந்து பிரித்தது. இரண்டாவது கடல்கோள் கி.மு. 504 இல் நிகழ்ந்தது. இரண்டாம் கடல்கோளில் பேரழிவு நிகழவில்லை. மூன்றாவது கடல்கோள் கி.மு. 306 இல் நிகழ்ந்தது. இக்காலத்தில் தேவநம்பி யதீசன் இலங்கையை ஆண்டான். இது பாரத் வரலாற்றில் அசோகன் காலமாகும். இம்மூன் றாவது கடல்கோளினால் ஒரு நூறாயிரம் (இலட்சம்) கிராமங்களும் தொளாயிரத்துப் பத்து மீனவர் சிற்றூர்களும் முத்துக்குளிப் போர் வாழ்ந்த நானூறு ஊர்களும் கடலுள் மூழ்கின. இறையனார் அகப்பொருள் உரை யில் ஒரு கடல்கோள் தென்மதுரையையும் இன்னொரு கடல்கோள் கபாடபுரத்தையும் அழித்தன என்று குறிப்பிட்டார்.”
- The Date of Tolkappiyam, Annals of Oriental Research,
University of Madras, %l.XIX Part II, 1964.Reprint P. 16 - 17.
மேற்கூறிய கருத்தின் மூலம் பெருந்தீவாக இருந்த தமிழ் ஈழம் சிறிய தீவானது எனலாம்.
இப்பேரழிவு பற்றி விளக்கும் மது.ச.விமலா னந்தம் பின்வருமாறு மேலதிக விளக்கம் தரு கிறார்:
"கடல்கொண்ட இதே சமயத்தில்தான் கடலுள் அமிழ்ந்து கிடந்த இமயம் மேலெழுந் தது. தெற்கே கடல்கொள்ள வடக்கே நீர்வ டிந்து இமயம் தோன்றியது."
- மேலது.ப.167]
இப்பரந்த குமரிக்கண்டம் முழுவதும் ஒரு காலத்தில் தமிழர் வாழ்ந்த நாடாகும். இத் தொடர்பினாலேதான் பின்வந்த ஆரிய மொழி யின் தாக்கத்தால் இந்தியாவின் மேற்பகுதி ஆரிய நாடாக, தென்பகுதியின் தமிழ்மொழி ஆரியத்தாக்கத்தால் பல திராவிட மொழிகளா னது. (மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு, பிராகி, சிங்களம்.....) மேலே குறிப்பிட்ட திராவிட மொழிகள் மட்டுமன்றி ஆரியமொழி

களும் தமிழ்ச்சார்புடைய திராவிட மொழிகளே என்பது தமிழக மொழியியல் அறிஞர் முனை வர் கு.அரசேந்திரன் கருத்தாகும். அது வரு மாறு:
"இந்திய ஆரிய மொழிகள் என்பன உண் மையில் கொடும் திராவிட மொழிகளே. ஆரியர் இந்தியம் புகுந்த கி.மு. 1500 இன் முன் இந்தியா முழுமையும் வழங்கிய மொழி தமிழே. தமிழ் மிகப்பல கிளைமொழிகளாக வடக்கே செல்லச்செல்ல திரிந்துபோயிற்று. பாவாணர், பன்மொழிப்புலவர் அப்பாத்துரை யார் போன்றோர் இவற்றை விளக்கியுள்ளனர். வடவிந்திய மொழிகளை உடைத்துப்பார்த் தால் அவற்றின் உள் ஊற்றாகத் தமிழ் இருப்பது தெரியும். இந்த உண்மை உலகிற்குத் தெரியாமல் இருப்பதற்குக் காரணம் தமிழின் வன் கொடுத்திரிபான சமற்கிருதக் கந்தற்பாய் இந்திய மொழிகளின் மேல் பரப்பப்பட்டிருப்ப தேயாகும்."
- தமிழால் தழைத்த சிங்களம். ப.77.
ஈழம் முழுமையும் தொன்மையான தமிழ் ஈழம் என்பது இதுவரை கூறியவற்றால் புலனா கும். ஈழத்தில் சிங்களம் ஒரு மொழியாக உள்ளது. இது பொதுவாக ஆரிய மொழி யென்று சிங்கள மக்களால் கூறப்படுகிறது. இது பொருத்தமான கருத்தா என்பது ஆராயப் படவேண்டும். தென்னிலங்கையின் தொன்மை யான வரலாற்றை ஆராய்வதன்மூலம் இதன் உண்மை தெளிவாகும்.
தென்னிலங்கையின் தொன்மையான வரலாற்றைக் கூறும் இரண்டு பாளி நூல்கள் முதலில் எழுந்தன. அவற்றுள் ஒன்று பலர் தொடர்ந்து எழுதியதாகக் கருதப்படும் தீபவம்சம் (கி.பி.4). இரண்டாவது நூல் மகா நாயக தேரர் என்ற பௌத்தபிக்கு எழுதிய மகாவம்சம் (கி.பி. 6). மகாவம்ச நூலாசிரியர் அதன் முன்னோடி நூல் பற்றிப் பின்வருமாறு "புத்தர் வருகை” என்ற முதல் இயலின் தொடக்கத்தில் கூறுகின்றார்:
''... எவ்விதத்திலும் குறையில்லாததும் எல்லாம் நிறைந்ததுமான மகாவம்சத்தைக்

Page 10
கூறத் தொடங்குகின்றேன்.
புராதன முனிவர்களால் தொகுக்கப்பெற்ற அது (மகாவம்சம்) இங்கே விரிவாகக் கூறப் பட்டுள்ளது. பழையநூல் சுருக்கமானது; பல இடங்களில் ஒரே விஷயம் திரும்பத்திரும்பச் சொல்லப்பட்டுள்ளது.
இப்போது சொல்வது அத்தகைய குறைகள் இல்லாதது."
- ப.9.
மகாவம்சம் முதல் ஐந்து இயல்களிலும் புத்தரின் மூன்று வருகை பற்றியும் பெளத்தமதம் பற்றியுமே கூறுகின்றது. ஆறாவது இயல் "விஜ யன் வருகை'' என அ ைம ந து ள் ள து . தொடர்ந்து அரசர்கள் வரலாறும் பௌத்தசமய வளர்ச்சியும் கூறப்படு கின்றன. இந்நூலின் காவிய நாயகர் துட்ட கைமுனு (துட்டகா மணி). விஜயன் முதல் மகா சேன ன வரை (கி.மு.543 - கி.பி.302) பதின்னான்கு அரசர் வரலாறு கூறுகின்றது. முதலாவது இயலில் ஈழத்தில் வாழ்ந்த தமிழர்கள் யார்கள், நாகர்கள் என்று கூறப்படுகின்றனர். விஜயன் இயக்கர் மரபைச் சேர்ந்த இளவரசி குவன்னா (குவேனி) என்பவளை மணந்து அரசனானான். பின் தமிழகப் பாண்டிய மன்னனுடைய மகளை மணந்தான். குவேனி கொல்லப்பட் டாள். புத்தர் நாகதீபம் வந்து பௌத்தக் கோட்பாட்டைப் பரப்பியதும் கூறப்படுகின்றது. நாகதீபம் இலங்கையின் வடமேற்குப் பகுதி என்றும் யாழ்ப்பாணம் என்றும் வரலாற்று அறிஞர்களால் விளக்கப்படுகின்றது. மகாவம் சத்தின் காவிய நாயகர் துட்டகைமுனு (கி.மு.164 - 140) ஈழத்துத் தமிழ் அரசனான எல்லாளனை (கி.மு. 204 - 164) வென்ற செய்தி முதல் இயலில் பின்வருமாறு கூறப்படுகின்றது:

வெளிச்சம் கார்த்திகை - மார்கழி 2004
"துட்டகாமணி மன்னன் தமிழர்களுடன் போரிட்டபோது இந்த இடத்திற் தங்கியிருக்க நேரிட்டது."
- ப.14.
அசோகன் காலத்தில் ஈழத்தைத் தேவநம்பி யதீசன் (கி.மு.307 - 266) ஆண்டான். புத்தர் காலத்தில் புத்தர் மூலமே பெளத்தம் ஈழத் திற்கு வந்தது என்று கூறப்பட்டபோதிலும் அசோகன் காலத்திலேயே பெளத்தம் இலங் கைக்கு வந்தது என்பது வரலாற்று அறிஞர்
கருத்தாகும். இக்காலத் சது'
தில் வட இந்தியாவிலும் தென்னிந்தியத் தமிழகத் திலும் தென்னிலங்கை யிலும் நாகதீபத்திலும் பெளத்தம் பரவியது. இக்காலத்தில் பாளி மொழிமூலம் பெளத்தம் பரவியது. தீபவம்சம், மகாவம்சம், சூளவம்சம் ஆகிய பௌத்த நூல்கள் பாளி மொழியில் எழு தப்பட்டன. எனினும் தமிழகத்திலும் தமிழீழத் திலும் தமிழ் மூலமே பௌத்தம் பரவியது.
மணிமேகலை நுால் இதற்குச்சான்றாகும்.
ஈழத்தில் இன்று தமிழ், சிங்களம் என்ற இருமொழிகள் வழக்கில் உள்ளன. எனினும் கி.மு.1000 ஆண்டளவில் ஈழத்தில் தமிழ் மொழியும் திராவிட மொழியும் இருந்தன. இதனைப் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் பின் வருமாறு விளக்குகின்றார்:
"... தமிழ்க் குடியேற்றத்தின் பழைமை... தற்போதைய ஆய்வுகள், அதுவும் பன்முகப் பார்வையில் கிடைத்துள்ள சான்றுகள் இற் றைக்கு மூவாயிரம் வருடங்களுக்கு முன்னரே, - சுமார் கி.மு.1000 ஆண்டளவில் ஈழத்தில் தமிழ்மொழி பேசுவோரும் தற்காலச் சிங் களமொழி பேசுவோரின் மூதாதை மொழி யாகிய தமிழின் கிளைமொழியாகிய எலு

Page 11
: வெளிச்சம் கார்த்திகை - மார்கழி 2004
மொழி பேசுவோரும் வாழ்ந்ததை உறுதி செய்கின்றன. இன்னொரு கோணத்தில் நோக் கும்போது தொல்காப்பியர் காலத்தில் (கி.மு. 3 ஆம் நூற்றாண்டு) தமிழகத்தில் செந்தமி ழும் கொடுந்தமிழும் காணப்பட்டதுபோன்றே ஈழத்திலும் தமிழ் (செந்தமிழ்), எலு (கொடுந் தமிழ்) ஆகிய மொழிகள் காணப்பட்டன எனலாம்."
- பண்டைய ஈழத்தில் தமிழர் - ஒரு பார்வை,
யாழ்.பல்கலைக்கழகம். 2000.ப.50.
தொல்காப்பியர் ஈழத்துத் தமிழறிஞர் என்ற கருத்து உள்ளது என்பதும் இங்கு கருதத் தக்கது.
ஈழத்து ஆதிக்குடிகள் பற்றிய கருத்துக்கள் வரலாற்று நெறியில் அண்மையிலேயே சரி யாகக் கூறப்படுகின்றன. எனினும் மேலே கூறப்பட்ட பாளி நூல்கள் ஆரியக் குடியேற் றத்தை விஜயன் கதை மூலம் ஐதீகமாக உருவ கப்படுத்தியுள்ளன. நவீன சிங்கள் வரலாற் றாசிரியர்கள் சிலர் விஜயன் கதையை ஏற்காது 'இது தொடர்ந்து நிகழ்ந்த ஆரியர் குடியேற்றத் தைக் கற்பனை முறையில் கூறுவது" என நிராகரிப்பர். சிங்களம் ஆரிய மொழி என்ற கருத்தை நிரூபிப்பதே இதன் நோக்கம். ஆனால் சிங்களம் திராவிட மொழி என்பதே பன்மொழி ஆய்வாளர் கருத்தாகும். மொழி யியல் அறிஞரான முனைவர் கு.அரசேந் திரன் "உண்மையில் சிங்களம் என்பது தமிழின் எழுபது விழுக்காட்டுச் சிதைந்த வடிவமே” என்பார். அவர் மேற் குறிப்பிட்ட கட்டுரையில் சில சிங்களச் சொற்களை விளக் கியதோடு, “தமிழால் தழைத்த சிங்களம்” என்ற ஆயிரம் பக் கங்களுக்கு மேற்பட்ட நூலில் இத்தொடர் ஆய்வை வெளி யிடவிருப்பதாகவும் கூறியுள்
ளார்.
- (ப.81.)
ஈழத்திலும் தமிழகத்தி லும் பெளத்தமதம் பரவிய

காலம் 'பெருங்கற் பண்பாட்டுக்காலம்' எனத் தொல்லியல் ஆய்வாளர்களால் ஆய்ந்து நிறு வப்பட்டுள்ளது. இக்கால ஈழச் சாசனங்களை யும் தொல்பொருள்களையும் ஆராய்ந்த வர லாற்றுத் தமிழ் அறிஞர்களான சி.க.சிற்றம் பலம், பொ.இரகுபதி, செல்லையா கிருஷ்ண ராசா, பரமு புஷ்பரட்ணம் முதலியோரும் எஸ்.யூ.தெரணியகல முதலிய அறிஞர்களும் இவை தமிழ் சார்புடையவை என நிறுவியுள்ள னர். இக்கல்வெட்டுக்கள் பிராமிக் கல்வெட்டுக் கள் எனப்படுகின்றன. இவை பற்றிப் பேராசிரி யர் சி.க.சிற்றம்பலம் பின்வருமாறு விளக்கு கின்றார்:
'பெளத்த மதத்திற்குக் கொடுக்கப்பட்ட தானங்களை எடுத்தியம்பும் இவை சிங்கள் மக்களின் ஆதிக்குடியேற்றத்திற்கான சான்று களாக மட்டுமன்றி, இவற்றிற் காணப்படும் பிராகிருத மொழி (ஒரு மதத்தின் மொழி) ஈழத்து மக்களின் மொழி எனவும் தவறாகக் கருதப்பட்டு வந்தது. இப்பிராமிக் கல்வெட் டுக்கள் பெருங்கற்கால மையங்களுக்குக் கிட்டக் காணப்படுவது மட்டுமன்றி இவற்றில் காணப்படும் குறியீடுகள், பெருங்கற்கால மக் களின் பண்பாட்டில் இருந்த பானை ஓடுகளில் உள்ள குறியீடுகளை ஒத்துக் காணப்படுவதால் பெருங்கற்கால மக்களே பௌத்தமதத்தைத் தழுவினர் என்பது உறுதியாகிறது. இம்மக்கள்
அளித்த தானங்கள் பௌத்தத்தின் மொழியாகிய பிராகிருத மொழியிலே பதியப்பட்டதையே இவை எடுத்துக்
காட்டுகின்றன.”
- பண்டைய ஈழத்தில் தமிழர்...., 2000.ப.47.
இச்சாசனங்களில் ஆரி யப் பிராகிருத மொழியும் * திராவிடப் பிராகிருத மொழி
யும் உள்ளன. இச்சாசன வரிவடிவங்கள் பின்வரு மாறு பாகுபடுத்தப்பட்டுள் ளன:
1. பௌத்தத்துடன் வந்த

Page 12
வட இந்திய வரிவடிவத் திற்கு முன்னர் வழக்கில் இருந்த வரிவடிவம். இது திராவிட வரிவடிவம் ஆகும். தமிழை எழுதப் பயன் பட்டதால் இது தமிழ்ப் பிராமி. இத்த கைய வரிவடிவமே தமி ழகம், ஈழம் ஆகிய பகுதி களில் பௌத்தத்துடன் வந்த வட இந்தியப் பிராமி வடிவத்துக்கு முன்னர் வழக்கிலிருந்தது.
2. பெளத்தத்துடன் ஈழம் வந்த வரிவடிவம். இதன் செல்வாக்கால் தமிழ்ப் பிராமி வழக்கொழிய (கி.பி. காலத்தில்) வட இந்தியப் பிராமி வரிவடிவமே தென் ஈழத் தின் ஆதிப்பிராமி வரிவடிவாக வளர்ச்சி பெற்றது.
இவற்றின் அடிப்படையில் தமிழ், சிங்கள் வேறுபாட்டிற்கு முந்திய நிலையை சி.க.சிற்றம் பலம் பின்வருமாறு முடிவு செய்கிறார்:
“இப்பிராமி வரிவடிவத்தில் காணப்படும் குல் / குழுப்பெயர்களான வேள், ஆய், பத / பரத போன்றவையும் பருமக போன்ற பிற தமிழ்ப் பெயர்களும் தமிழை ஒத்த மொழி பேசியோரே இன்றைய தமிழ், சிங்கள மொழிகளின் மூதாதையினராக விளங்கினர் என்பதை உறுதி செய்கின்றன.”
தொன்மைத் தமிழில் வழங்கிய ஏழ் என்ற நாட்டுப் பெயரே பின் ஈழ , எல் என மாறின என்ற கருத்து உள்ளது. ஈழ கல என மாறிப் பின் கள் ஆகி, சிறீ என்ற சமஸ்கிருதச் சொல் சீ ஆகி சீகள் ஆனது என்றும் இதுவே பின் சிகள், சிங்கள என மாறியதாகவும் கருதப்படு கிறது. இதேபோலவே இலங்கை லங்கா ஆகி பின் சமஸ்கிருத சிறீயுடன் சேர்ந்து சிறீலங்கா
ஆனது என்றும் கருதப்படுகிறது.
ஈழம் என்ற பெயர் தமிழின் தொன்மை இலக்கியங்களான சங்க இலக்கியங்களில்

வெளிச்சம் கார்த்திகை - மார்கழி 2004
,
காணப்படுகின்றது. இக் காலத்திலும் தமிழகத் திற்கும் ஈழத்திற்கும் பல நெருங்கிய தொடர்புகள் இருந்தன. அவற்றுள் ஒன்று உணவு வணிகத் தொடர்பு. பட்டினப்பாலை என்ற சங்கத்தமிழ் நூலில்,
'ஈழத் துணவும் காள கத் தாக்கமும்'
என்ற வரி உள்ளது.
மேலும் நற்றிணை, குறுந் தொகை, அகநானூறு ஆகிய சங்க நூல்க ளில் உள்ள ஏழு பாடல்களில் மதுரை ஈழத்துப் பூதன்தேவனார், ஈழத்துப் பூதன்தேவனார் என்ற சங்கப் புலவர் பெயர்களில் ஈழம் காணப்படுகின்றது. மேலே கூறப்பட்ட சான்று களின் அடிப்படையில் ஈழம், குமரிக்கண்டம் என்ற குமரி நாடுகளில் ஒன்றாக இருந்தது என்பதும் தமிழ் நிலமாக இருந்தது என்பதும் பின் கடல்கோளால் ஈழம் என்ற பெரிய தீவாகி, பின் சிறிய தீவானது என்பதும் உறுதி யாகின்றது. அதனோடு இன்றைய தென்னி லங்கைச் சிங்களம் ஆரியமொழியன்று என்ப தும் அது பாளி மூலம் தொடர்பு கொண்ட முப்பது வீதம் ஆரியமும் நிலையான மொழி யான எழுபது வீதத் தமிழ் கொண்ட திராவிட மொழி என்பதும் உறுதியாகின்றது. எனவே, ஈழம் “திராவிட” நாடு என்பதும் உறுதியாகும்.
ஈழம் தமிழகமாகத் தொடர்ந்து இருந்த தனால் இங்கு தமிழ்க் கல்வி உயர்ந்த நிலை யில் இருந்து பல புலவர்களும் பல நூல்களும் தோன்றியிருக்கும் என்பது உறுதி. ஆனால் இந்நூல்கள் எதுவும் இன்று எமக்குக் கிடைக்க வில்லை. தமிழகத்திலும் சங்ககாலத்தில் மிக அதிக நூல்கள் தோன்றியிருக்க முடியும் எனி னும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்ற பதி னெட்டு நூல்கள் மட்டுமே கிடைத்தன. ஈழத்து அறிஞர்களான ஆறுமுக நாவலர், சி.வை.தாமோ தரம்பிள்ளை, வி.கனகசபைப்பிள்ளை ஆகி யோரே இவை அச்சுவடிவுபெற்றுத்தப்ப

Page 13
வெளிச்சம் கார்த்திகை - மார்கழி 2004
மூலகாரணமாய் இருந்தனர். ஆனால், ஈழத் தில் தோன்றிய பழைய தமிழ் இலக்கியங்கள் தோன்றி அழிந்தன என்பதே பொருத்தமாகும். இது பற்றிக் கலாநிதி எஸ்.சிவலிங்கராஜா பின்வருமாறு விளக்கம் தருகிறார்:
"தமிழ்நாட்டிற் சங்க இலக்கியங்கள் தோன் றிய காலகட்டத்திலே ஈழத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களும் இலக்கியங்களை ஆற்றியிருப் பார்கள். இப்புலவர்களின் ஆக்கங்கள் தொகுப் போர், தொகுப்பிப்போர் இன்றி நாளடைவில் அழிந்திருக்கலாம். நீண்ட நெடுங்காலமாகத் தாம் வாழ்ந்த சூழலிலே தம் பண்பாட்டுப் பின்னணியில் இலக்கியம் படைக்காத ஒரு சமூகத்தினைக் காண்பது அரிது. தமிழக உறவுகளும் தொடர்புகளும் மிக்கிருந்த நிலை யிலே சிறப்பானதோர் தமிழ் இலக்கியப் பாரம் பரியம் ஈழத்தில் நிலவியிருக்கும் என்று கருது" வது தவறாகாது.”
- ஈழத்துத் தமிழ் இலக்கியச் செல்நெறி, திருநெல்வேலி தனலக்குமி புத்தகசாலை, 2001.பக்.5-6.
ன
இதனை உறுதி செய்வதுதான் மேலே குறிப்பிடப்பட்ட ஈழத்துப் பூதன்தேவனாரின் சங்க இலக்கியக் கவிதைகள். எனினும், சிலர் இதனை ஏற்பதில்லை. அவருடைய பாடல் களில் 'ஈழம்' என்ற சொல் இல்லை என்பதே இவர்களுடைய கருத்துக்குக் காரணம். மேலே கூறப்பட்ட பேராசிரியர் மது.ச.விமலானந்தன் "ஈழம் என்பது இலங்கையைத்தான் குறிக்கி றதா? இவர் பாட்டினுள் ஈழம் பற்றிய குறிப்பும் இல்லை. ஈழத் தமிழர் வரலாறு இவரிலிருந்தே தொடங்குகின்றது. தலைச்சங்க முரஞ்சியூர் முடிநாகராயர் ஈழநாட்டவர்; நாகர் குடியினர்.. தொல்காப்பியரின் பிறப்பகம்கூட ஈழத்தில் உளது என்றொரு ஆய்வும் உளது. தமிழு ணர்ச்சி குன்றிய காலத்தில் தமிழுக்கு அரும் பணியாற்றி, இலங்கைப் பழம்பெருமை வெளி
காட்டிய சிறப்பினர்."
- மேலது ப.1862 - 1863.
தமக்கு ஏற்படும் ஐயத்தை அவர்களே

மறுப்பதை இப்பகுதியிலேயே காணலாம். ஈழம் இலங்கையைத்தான் குறிக்கின்றது என் பது மேலே குறிப்பிட்ட சான்றுகள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளன. நாகதீவே நயினா தீவு என்ற கருத்தும், நாகதீவே யாழ்ப்பாணம் என்ற கருத்தும் உள். எனினும் முழு இலங்கை யுமே நாகதீவு (நாகநாடு) எனப்பட்டிருக்கலாம் என்று கருதவும் இடமுளது. இது விரிவாக ஆராயப்படவேண்டும். குமரிநாடே நாகநாடு என்ற பெயரால் அழைக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கும் நாக' என்ற பெயர் சான்றாகக்கூ டும். "ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்” என்ற பெருநூலைப் பேராசிரியர் ஆ.சதாசிவம் ஈழத்துப் பூதன்தேவனார் பாடல்களுடன் தொடங்குகின்றார். எனினும், முரஞ்சியூர் முடி நாகனாரை ஈழத்தவராக ஏற்று சங்ககாலப் பகுதியில் அவரைச் சேர்த்துக்கொள்ளவில்லை. "வேறும் ஈழத்துப் புலவர் சங்கத்திலமர்ந் திருந்தனர் என்பதை அறிந்துகொள்ள முடிய வில்லை." (சாகித்திய மண்டலம், கொழும்பு, 1966, ப.1.)
L
சங்க இலக்கியங்களில் பூதன்தேவனார் என்ற பெயருடன் மூவர் இடம்பெற்றுள்ளனர். அவை வருமாறு:
1. மதுரை ஈழத்துப் பூதன்தேவனார்.
- நற்றிணை 366; அகநானூறு 231,307; குறுந்தொகை 189 , 360.
2. ஈழத்துப் பூதன்தேவனார்.
- அகநானூறு 88; குறுந்தொகை; 343. 3. பூதன்தேவனார்.
- நற்றிணை 80.
தமிழகத்திற் பூதன்தேவனார் என்று ஒரு புலவர் இருந்ததால் தமிழீழத்தில் இருந்து சென்ற கவிஞரை அவரிலிருந்து வேறுபடுத்த ஈழத்துப் பூதன் தேவனார் என அவருக்கு அடைமொழி வழங்கப்பட்டது என்பது அறிஞர் கள் கருத்து. ஈழத்துப்பூதன்தேவனர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் இருந்ததால் மதுரை ஈழத் துப் பூதன்தேவனார் எனப்பட்டார் என்பதும் அறிஞர் கருத்தாகும். எனினும் மூன்று பெயர்க ளையும் ஒப்பிடும்போது மூவரும் ஒருவர் என்று கருதுவதே பொருத்தமானது என்று தோன்று

Page 14
கின்றது. இருவரும் ஒருவர் என்பதற்கு ஈழம் சான்றாக அமைந்தால் மூன்றாமவரை அவரி லிருந்து வேறுபடுத்த அவருக்கும் பெயர் முன் இடப்பெயர் சூட்டப்பட்டிருக்கவேண்டும். சாத்த னார் என்று சங்க இலக்கியத்தில் இரு புலவர் கள் உள்ளனர். ஒருவர் பேரி சாத்தனார் எனப் படுகிறார். மற்றவர் சீத்தலைச் சாத்தனர் எனப் படுகின்றார். இதுவே, சங்ககால மரபானால் தமிழகத்தவர் என்று கருதப்படும் புலவருக்கும் அடைமொழிப் பெயர் ஒன்று சூட்டப்பட்டி ருக்கும் என்பது உறுதி. மூவரும் ஒருவர் என்பதாலேயே இவ்வாறு மூவகைப் பெயர் களும் வழக்கில் இருந்தன என்பதே பொருத்த மானதாகத் தோன்றுகின்றது. இது மேலும் ஆய்ந்து உறுதி செய்யப்படவேண்டும்.
ஈழத்துப் பூதன்தேவனார் முதல் இன்றைய புதிய கவிஞர்கள்வரை, சங்ககாலம் முதல் இன்றுவரை இடையீடற்ற இலக்கிய வளர்ச்சி ஈழத்தில் தொடர்ந்தது என்பது மேலே கூறப் பட்ட கருத்துக்கள் மூலம் உறுதி பெறுகின்றன.
ஈழத்தில் நிலையாக வாழ்ந்த தமிழர் எவரும் இருக்கவில்லை என்றும் சிங்கள அரசுகள்மீது படையெடுக்க வந்த சோழ , பாண்டியர் படைகளுடனேயே தமிழ் மக்கள் ஈழத்தில் வந்து குடியேறினர் என்றும் பிற்காலத்தில் ஏற்பட்ட இத்தமிழர்களுடனான 'நெருங்கி வாழ்ந்த தொடர்பே சிங்களத்தில் தமிழ்ச் சொற்கள் சேரக்காரணமானது என்ற கருத்தும் முழு இலங்கையிலும் சிங்களவரே வாழ்ந்தனர் என்ற கருத்தும் சில அறிஞர்களி டம் உள்ளது. -
மேலே கூறப்பட்ட தொல்லியல் ஆய்வு அடிப்படையில் நோக்கும்போது இக்கருத்துத் தவறானது என்பது தெளிவாகும். எனவே, உலகளாவிய தொல்லியல் அறிஞர்கள் தமிழகத்திலும் ஈழத்திலும் தனித்தும் இணைந்தும் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுகள் ஈழம் தொன்மையான தமிழகம் என்பதையும் சிங்களம் ஒரு திராவிட மொழி என்பதையும் ஐயத்திற்கிடமின்றி உறுதி செய் கின்றன. எனவே, ஈழத்தில் வாழும் தமிழர்கள் தொன்மையானவர்கள் என்பதில் ஐயமில்லை.
©

வெளிச்சம்.கார்த்திகை - மார்கழி 2004
அஞ்சலி
நாட்டுப்பற்றாளர் - மூதறிஞர் - கலாநிதி க.சொக்கலிங்கம் (சொக்கன்) அவர்களின் மறைவுக்கு வெளிச்சத்தின் கண்ணீர்க்
காணிக்கை.
ஐயநின் அறிவும், பேச்சில் அங்கதக் கசிவும் ; நெஞ்சைக் கொய்திடும் எழுத்தும்; வாரிக் கொடுத்திடும் தமிழும்; காட்டும் பொய்யிலா அன்பும்; உந்தன் பொக்கைவாய்ச் சிரிப்பும்; யார்க்கும் கைவரா திருக்கும் நாளில் கணக்கினை முடித்தாய் ஐயா.
0 நீயெனக் காட்டும் வண்ணம் நிமிர்வுடன் இருந்தாய்; எங்கள்
தாயென வந்தோம் தூக்கித் தாங்கினாய்; தமிழை உந்தன். வாயினில் எழுத்தில் நெஞ்சில் வைத்துமே வாழ்ந்தாய்; இன்றோ தோளினில் காவச் சொல்லி சுருண்டுபோய்க் கிடக்கின் றாயே.
0 வேரெலாம் கதற; தொங்கும் விழுதுகள் கதற; பெற்ற பேரெலாம் கதற; தீயில் போகவா போறாய் ஐயா? ஊரெலாம் திரிந்த உந்தன் உடலது இறுதி யாக சேரிடம் தேடி இன்று செம்மணி வெளிக்கா போகும்?
0
ஒருவரும் அறியாச் சின்ன ஊரினிற் பிறந்தாய்; நூறு பெருவரம் பெற்ற ஞானப் பொலிவெனக் கனிந்தாய்; நல்லைத் தெருவினில் வணங்கும் தெய்வத் தேரெனத் திரிந்தாய்; இன்றுன் திருவுடல் எரியும் போதில் செந்தமிழ் துடித்தே போகும்.
0
புதுவை இரத்தினதுரை
வெளிச்சம்

Page 15
வெளிச்சம் கார்த்திகை - மார்கழி 2004
யாழ்ப்பாணம்பார்-3
ஆவுரோஞ்சிக்கல்
E *
செங்கை ஆழியான்

எல்லாப் பிள்ளைகளும் கைகளை விரித்துவிட்டார்கள்.
"ஐயா ஏன் உங்களுக்கு இப்ப காசு? தங்கச்சிமாருக்குக் கொடுக்கப் போறியளோ? எங்களுக்கு வலு கஷ்டம். சாப்பாட்டிற்கு வழியில்லையெண்டால் அனுப்புறன்." என்று கனடாவில் இருக்கிற மூத்தவன் எழுதிவிட் டான்.
"விசர் வேலை பார்க்கிறியள்? இப்ப உது தான் அவசரமோ? இந்தக்காலத்தில உதெல் லாம் ஆருக்குத் தேவை. ஊராக்கள் சிரிக்கப் போகினம்.'' - இது இரண்டாவது மகன்.
"சீவிக்கவே வழிதெரியாமல் இருக்கிறம். நீங்க இப்பவும் சின்னப்பிள்ளையாட்டம். பேசாமல் எங்களோட வந்திடுங்கோ." பெண் பிள்ளைகள் ஒரே குரலில் சொல்லிவிட்டார் கள். மொத்தத்தில் எல்லாரும் கைவிரித்து விட்டார்கள்.
அவருக்கு நெஞ்சு கனக்கிறது. அப்படியே அழியவிட்டுவிடுவதா? அவர் மூதாதையர் கள் அதற்காகவா அவற்றினை அமைத்தார் கள்?
ஒரு மாதத்திற்கு முன் வயல்வெளிப் பாதை அதிகாலைப் பனியில் குளித்துக் கொண்டிருந்தவேளை தம்பையாக்கிழவர் தடியை அவதானமாக ஊன்றியபடி

Page 16
விளைந்து குடலை கக்கியிருந்த நெற்கதிர் களைப் பார்த்தபடி காலாற நடந்துவந்து கொண்டிருந்தார். அவர் ஓடிவிளையாடிய வயல் வரம்புகள், மாடுகள் பூட்டி அவர் உழுத வயல்கள், விதைகளை அள்ளிப் பக்குவமாக ஈரமண்ணில் தூவிய கரங்கள், குனிந்து இடக்கரத்தால் விளைந்து தலை சாய்த்த கதிர்களைப் பற்றி வலக்கரத்தால் அரிவு செய்த உடம்பு, தொண்ணூறு வயதிற் குப் பிறகும் வயலில் இறங்கி வேளாண்மை செய்ய மனதில் ஆசையிருந்தும் உடலில் தெம்பில்லை.
அரையில் வேட்டியும் தோளில் கொய்து இட்ட சால்வையுமாக வயல்வெளிப்பாதை யில் பனிக்குளிரில் நடந்துவரும் தம்பை. யாக்கிழவரை சின்னப்பு எதிர்கொண்டான்.
"ஏன் அம்மான்..... சேட்டுக்கட்டை பெனியன் கினியனைப் போடக்கூடாதே?"
11 i 111 |
''ஏன்ராப்பா? உனக்கென்ன குளிருதே? இது கண்டியோ வயிரம் பாய்ந்த உடம்பு. குளிரும் மழையும் ஒண்டும் செய்யாது.'' என்றபடி கிழவர் அவனைக் கடந்தார். சற்றுத்தூரம் நடந்ததும் ஓரிடத்தில் அவர் தரித்து நின்றார். அவர் விழிகளில் இருந்தாற்போல் பிரகாசம் படர்ந்தது. கண்கொட்டாது பார்த்தபடி நின்றிருந்தார். ஒவ்வொருநாளும் இவ்விடத்தில் அவர் கால்கள் கட்டப்பட்டு நின்றுவிடும்.
அவர் வயலின் தொடக்கத்தில் பாதை யோடு நெருங்கியதாக ஒரு துரவு நீண்டு கிடந்தது. சுற்றிவரக் கேணிக்கட்டும், ஒரு பக்கத்தில் மாடுகள் இலகுவாக இறங்கி நீர ருந்த வசதியாகச் சாய்தளமும், இன்னொரு பக்கத்தில் மனிதர் இறங்கிக் கால்முகம் கழுவ வாய்ப்பாகப் படித்துறையும் அமைக் கப்பட்டிருந்தன, துரவுக் கேணியின் அருகில் ஒன்றரையடிச் சுற்றில் நான்கடி உயரத்தில் ஒரு குத்துக்கல் ஆவுரோஞ்சிக்கல்லாக நாட்டப்பட்டிருந்தது.
வானம் பார்த்த வயல்கள். மாரி யில்

வெளிச்சம் கார்த்திகை - மார்கழி 2004
பழ 13
விளைந்துவிட்டு அல்லது குடலையாகக் கருகிவிட்டு கோடையில் காய்ந்து வறள் புற்களோடு காட்சிதரும். அக்காலத்தில் ஊர் மாடுகள் எல்லாம் வயற்தரையில் மேய்ச்ச லிற்கு வந்துவிடும். வெயில் மேலைவானில் சரியத்தொடங்கியதும் ஒவ்வொன்றாகத் துரவை நாடிவரத் தொடங்கும். ஒவ்வொன் றாக மேய்ச்சல் உடற் திணிவைத் தணிக்க அல்லது மயிர்களுள் புகுந்து கடிதரும் பேன்களையும் உண்ணிகளையும் களைய ஆவுரோஞ்சிக்கல்லில் வளம் மாறிமாறி உரஞ்சிக்கொள்ளும். பின்னர் வரிசையாகத் துரவின் சாய்வுத்தளத்தில் இறங்கி ஆவ லோடு நீரை அருந்திவிட்டு பட்டிக்குத் திரும் பத்தொடங்கும்..
எவ்வகைக் கோடையிலும் அவர் துரவு வற்றிவிடுவதில்லை. எப்பொழுதும் நீருடன் தளதளவென விளங்கும்.
ஆம் அவர் துரவுதான். அவர் கொள்ளுப் பேரன் வேலுப்பிள்ளைக் கமக்காரன் ஊர்ச் சனத்திற்காகவும் ஊர்மாடுகளுக்காகவும் கட்டிவிட்ட தருமச்சாதனம் அது. அதன் பெயரே பெரியகமக்காரன் துரவு. அத்துர விற்கு அருகில் அவருடைய பேரனார் மயில் வாகனத்தார் புன்னாலைக்கட்டுவனுக்கு வண்டில் கட்டிச் சென்று, ஒருநாள் முழுவதும் மினக்கெட்டுத் தேடியெடுத்துப் பொளிவித்துக் கொண்டுவந்து நாட்டியது இந்த ஆவுரோஞ் சிக்கல். தம்பையாக்கிழவரின் தகப்பனார் அடிக்கடி இத்துரவினதும் ஆவுரோஞ்சிக் கல்லினதும் பெருமைகளைச் சொல்லிப் பூரித்துப்போவார்.
"அதையேன் கேக்கிறாய் ராசா, கோடை யில தண்ணிகுடிக்க இல்லாமல் ஊர்மாடுகள் பட்ட அவஸ்தையைக் கண்டு என்ர பூட்டனார் வேலுப்பிள்ளைக் கமக்காரர் இந்தத் துரவைத் தன் செலவில் வெட்டுவித்தார். கிணறுகள்கூட சிலவேளை கோடையில வற்றிவிடும் என்றால் பாரன். தண்ணிக்கு அப்படியொரு கஷ்டம். இந்தத் துரவு வெட்டிக்கட்டப்பட்ட தும் ஊர்க்கிணறுகளிலும் கோடையில தண்ணி வத்தவில்லை. வேலியளிலும் பனை

Page 17
வெளிச்சம் கார்த்திகை - மார்கழி 2004
களிலும் மேய்ச்சல் மாடுகள் உடம்பைத் தேய்ப் பதைக் கண்ட என்ர பேரனார் மயில்வாகனத் தார் இந்த ஆவுரோஞ்சிக்கல்லைப் புன்னா லைக்கட்டுவனெல்லாம் அலைஞ்சு திரிஞ்சு கொண்டுவந்தார். நம்பமாட்டாய் இந்தக் கல்லின்ர நீளம் எவ்வளவு தெரியுமே? ஏழடி ... மூண்டடி நிலத்துக்குள்ள தாட்டிருக் குது. இல்லாட்டா உடல் உளைவுக்குத் தேய்க் கிறமாடு கல்லோட சரிஞ்சு விழுந்திடும்."
நீள்கயிற்றில் பிணைத்திருந்த மாடொன்று கல்லில் உடலை தேய்த்துக்கொண்டது. பின்னர் மேயத்தலைப்பட்டது. தம்பையா
கிழவருக்குத் தன் மூதாதையர்களை நினைக் கப் பெருமிதமாக இருந்தது. எத்தகைய நிலையான தர்ம கைங்கரியம் செய்திருக் கிறார்கள்.? அவருடைய தகப்பனார் காலம் வரை அத்துரவைக் கண்போலப் பேணிப் பாதுகாத்திருக்கின்றனர். அத்துரவின் கேணிக்கட்டிலோ படியிலோ சிறுசேதம் ஏற்பட்டாலும் துடித்துப்பதைத்து உடனே மேசனை அழைப்பித்துத் திருத்தம் செய்து விடுவார்கள். அவரும் அதற்குப் பின்னிற்ப வரல்லர். பலதடவைகள் அவர் திருத்து வித் திருக்கிறார். அவருக்குப்பின் அவர் பிள்ளை கள் இத்துரவைக் கவனிப்பார்களா?
நினைவே வலியைத் தந்தது. படிப்புத்தந்த கெளரவத்தால் இரண்டு பிள்ளைகள் வெளி நாட்டிற்கு ஓடிவிட்டார்கள். அவர்கள் அதற் குச் சொன்ன காரணம், 'இங்க இருக்கவா முடியும் ?' ஒருவன் கொழும் பில பெரியதொரு உத்தியோகம் பார்க்கிறான். அவன் சொல்கிற காரணம் - 'அப்பு பாவம் தனிச்சுப் போனார் கொள்ளி வைச்சு அனுப்பிவிட்டு உங்களோட கனடாவுக்கு வாறன்.' யாழ்ப்பாணத்திற்குள் ஒவ்வொரு வனுக்கு வாழ்க்கைப்பட்டு பிள்ளைகுட்டி களோடு வாழ்கிற மூன்று பெண்பிள்ளை களும் எப்போதாவது வந்து அவரை எட்டிப்பார்த்துவிட்டு வெட்டி வைத்திருக்கின்ற தானியங்களைப் பங்கு போட்டுக்கொண்டு போய்விடுவார்கள். அவர்கள் வலிந்து கூப்பிட்டாலும் அவர் ஊரைவிட்டு எங்கும் போகத் தயாராகவில்லை.

அவர் தாயின் உதரத்திலிருந்து விழுந்த மண் இது. அவர் ஓடியாடி விளையாடி வளர்ந்த நிலம். அவர் அங்கேயே மண்ணில் சரிய வேண்டும். இந்த வயல் வெளியில் நடக்கும்போது, இந்தப்பயிர் தழுவிய காற் றைச் சுவாசிக்கும்போது, அவர் மூதாதையர் கட்டிய இத்துரவின் கரையில் நிற்கும்போது, ஆவுரோஞ்சிக்கல்லில் ஊர்மாடுகள் தம் உடலைத்தேய்க்கும்போது ஏற்படும் மகிழ் விற்கு இணை உலகில் எங்குமில்லை என்பது அவர் திடமான நம்பிக்கை. இச்சூழலின் காற்று அவர் உடலைத் தழுவும்போது அவர் மூதாதையர்கள் அவரைத் தடவுவதாக அவர் உணர்கிறார்.
அவர் கொள்ளுப்பேரனார், பேரனார், தகப்பனார் ஏன் அவர்கூட ஏதோ ஒரு வகை யில் ஊராக்களுக்கும் பிள்ளைகளுக்கும் இந்த ஆவுரோஞ்சிக்கல் போல விளங்கியுள்ளனர். துயரென்று உதவிநாடி அவர்களை நாடி வந்தவர்கள் ஏமாற்றத்துடன் சென்றது கிடை யாது. ஊராக்களின் சுகதுக்கங்களுக்கு வாரிக்கொடுத்த கரங்கள். சென்றமாதம்கூட மூத்தவள் ஒருநாள் பதகளிப்புடன் ஓடிவந்து அவரிடம் எஞ்சியிருந்தவற்றையும் பேத்தி யின் கலியாணத்தைச் சாட்டிக் கொண்டு போனாள். பேணிக் காத்து
வைத்திருந்த மனைவியின் நகைகளையும் தூக்கிக் கொடுத்துவிட்டார். அதைக் கேள்விப் பட்டு ஓடிவந்த
இரண்டாவது மகள் அழுது மாய்மாளம் கொட்டி எஞ்சியிருந்த தோட்டக்காணியை வற பத துக காசாக்கிக்கொண்டு போய்விட்டாள். கன டாவிற்குப் போவ தற்காக வயற்காணி யில் பெரும் பகுதியை மூத்தவன் விற்றுப் பணம் பெற்று புலம்
பெயர்ந்துவிட்டான். இப்போது அவருக்கென

Page 18
எஞ்சியிருப்பது பத்துப்பரப்பு வயற்துண்டு மட்டுந்தான். 'அப்புவுக்குத் தோட்டந்துரவு இருக்குது. சாப்பாட்டிற்குக் காணும்' என்று பிள்ளைகள் எதுவும் அனுப்புவதில்லை. ஏதோ அவர்காலம் எவரிடமும் கையேந் தாமல் ஓடியது.
அவருடைய பத்துப் பரப்பு வயலையும் எப்படியாவது வாங்கித் தன்வயலோடு சேர்த்துவிட வேண்டுமென்று வேலாயுதம் ஓயாமல் அவரை நச்சரித்துத் திரிவது வேறு
கதை.
"உதேன் அம்மான்... எனக்குத் தந்திட்டுக் காசை வாங்கி பாங்கில் போட்டிட்டு கடைசி காலத்தில் ராசா மாதிரி இருக்காமல் .."
"பத்துப்பரப்பு வயல் வித்து வாற காசு இருந்து சாப்பிடக் காணுமென்கிறாய் .... விசரா? அதை மட்டும் கேட்காதை. என்ர எஞ்சிய சொத்து அந்த வயலும் இந்தத் துரவுந்தான். துரவு ஊர்ச்சொத்து. வயற் துண்டு எஞ்சியிருக்கிற என்ர உசிர். இரண் டையும் விக்கேலாது. நான் செத்தபிறகு பிள் ளையள் ஏதாவது செய்திட்டுப் போகட்டும்.'' என்று திடமாகக் கூறிவிட்டார்.

w வெளிச்சம் கார்த்திகை - மார்கழி 2004,
-- 200 15.
அவர் நெடுமூச்சுடன் நிமிர்ந்தபோது துரவின் எதிர்ப்பக்கத்தில் சண்முகத்தான் கண்ணில் பட்டான். வயற் கரையில் எங்கோ குந்திவிட்டுத் துரவை நோக்கி வந்தவன் கிழ வர். நிற்பதைக் கண்டு சற்றுத் துணுக்குற் றான்.
"உனக்கு சண்முகம் எத்தனை தரம் சொல் லிப்போட்டன். இதில வந்து அடிகழுவாதை எண்டு ... கேக்கிறாயில்லை. மாடுகளும் மனிசரும் பாவிக்கிற நீர்நிலை கண்டியோ?" என்று தம்பையாக்கிழவர் பொரிந்து தள்ளி
னார்.
''நான் அதுக்கு வரவில்லை அப்பு. ஒரு ஊமல் எடுத்தால் விசயம் முடியுது. உன்ர துரவுத் தண்ணியே வேணும்." என்று கத்திய சண்முகம், இஞ்ச வடகிழக்குப் பக்கத்திலை உன்ர கேணிக்கட்டு பிளந்து பாறிக்கிடக்குது.
நீ அப்பு காணலையே?” என்றான்.
கிழவர் துடித்துப்போனார். அப்படியே நிலம் பிளந்து அதில் தான்புதைந்தது போன்ற தொரு உணர்வு. வேகமாய் பதைபதைப்புடன் ஓடிவந்தார். சண்முகம் கூறியது உண்மை தான். கேணிக்கட்டின் ஒருபகுதி தண்ணிக்குள் சரிந்து கிடந்தது. அவருடைய தந்தை சரிந்து கிடப்பது போல... அவருடைய பேரனார் சரிந்து கிடப்பது போல... அவருடைய கொள் ளுப் பேரனார் சரிந்து கிடப்பதுபோல் உணர்வு.
'எப்படியாவது கட்டிவிட வேணும்.'
பிள்ளைகள் எல்லாரும் கைவிரித்து . விட்டார்கள். "ஐயாவிற்கு விசர்... கேணி திருத்தப்போறாராம்... கேணி. அது ஆருக்கு இப்ப வேணும்? அதை இப்ப ஆர் பயன் படுத்துகினம்? ஊரில் பெரிய மாட்டுப்பட்டி இருக்கிறதாக ஐயாவுக்கு நினைப்பு. மாடெல் லாம் கசாப்புக் கடைக்குப்போட்டுது. உழவு மாடுகளையே றகரர் வாங்க வித்துப்போட் டான்கள். ஊர்க்கிணற்றில் தண்ணி நிக்க துரவு வேணுமாம். பைப்பைப்பூட்டி தண்ணி யுள்ள இடத்திலிருந்து வீட்டுக்குள்ளயே பைப் வைக்கலாம். நவீனகாலம் உவருக்கு விளங்க

Page 19
16
வெளிச்சம் கார்த்திகை - - ஏர். 2004
தாதததததததத
வில்லை. சாப்பிட்டமா இருந்துமா என்றில்லா மல் கிழவன் கேணி திருத்தப் போறாராம். அதுக்குக் காசு அனுப்பட்டாம்...'' பிள்ளைக ளின் பேச்சின் எழுத்தின் சாராம்சம் இதுதான்.
ஊராக்களிடம் கேட்டுப்பார்க்கலாம் என்ற எண்ணம் அவருக்கு வந்தது.
''உதுக்கு நாங்க இப்ப செலவழிக்கத் தேவையில்லை. ஏ.ஜி. ஏயிட்ட எழுதிக்கொடுத் தால் திருத்துவிப்பது அவர் கடமை அப்பு. இந்தத் துரவு என்னத்துக்கு அப்பு? மண் போட்டு மூடினால் ஒரு பொலிபோல் கிறவுண்ட் கிடைக்கும். நல்ல இடம்.." என் றான் சனசமூகநிலையத் தலைவன் கனக சூரியன். அவனைக் கோபத்துடனும் பரி தாபத்துடனும் அவர் பார்த்தார்.
சரிந்துகிடக்கும் கேணிக்கட்டினைப் பார்க்க அவர் உடல் பதறியது. நெஞ்சம் கனத்து இருள்கிறது. இப்படியே விட்டால் படிப்படி யாகத் துரவுக்கட்டுகள் சிதைந்து ... அழிந்து போகவேண்டியதுதான். பையன்கள் இவற் றின் பாரம்பரியப் பெறுமானம் தெரியாமல் மண்ணிட்டு மேடாக்கி பொலிபோல் பந்து விளையாடுவார்கள். எண்ணமே அவரை வருத்தியது. 'ஒரு போதும் அழியவிடமாட் டேன்.'
அவர் மெதுவாக கிழக்கு நோக்கி நடக் கிறார். அவர் வயற்துண்டு அறுவடை முடிந்து ஆறிக்கிடக்கிறது. பக்கத்து வயலில் வேலாயு தம் எள் விதைப்புக்கு ஆயத்தங்கள் செய்து கொண்டிருக்கிறான்.
"தம்பி வேலாயுதம் இஞ்ச ஒருக்கா வா மோனை..” அழைக்கும்போதே குரல் தளு தளுக்கிறது.
வேலாயுதம் அவரிடம் விரைந்து வந்தான்.
"என்ன அம்மான்?"
"என்ர வயற்துண்டை உனக்கு விக்கிறதா முடிவு செய்திட்டன்...''

வேலாயுதம் அவரை வியப்புடன் ஏறிட் டான்.
"இப்ப வேண்டாமென்றுமட்டும் சொல்லி டாதை..” குரல் எந்த நேரத்திலும் உடைந்து
விடலாம்.
“ஏன்...? இப்ப என்ன அவசரம் வந்தது
அம்மான்?”
"துரவைத் திருத்த எனக்குக் காசு வேணும் வேலாயுதம். எனக்கு வேறுவழி தெரிய வில்லை." அவர் விழிகள் கலங்கித்தவித் தன.
வேலாயுதம் அப்படியே சில்லிட்டு நின்று விட்டான். அவரை ஏறிட்டுப் பார்த்தான். அவர் சிகரத்தைத் தொடுமாப்போல் உயர்ந்து நிற்பதாகப்படுகிறது.
“என்ன வேலாயுதம் பேசாமல் நிக்கிறாய்? ஓமென்ட்டா மோனை.''
"சரி நான் வாங்கிக் கொள்கிறன் அம் மான். ஆனா ஒரு நிபந்தனை.”
"சொல்லு அப்பன்.''
"நீங்க இருக்குமட்டும் அந்த வயற்துண்டு உங்களிடமே இருக்கட்டும். அது உங்கட உசிர் எண்டனீங்கள் அம்மான். அதைப் பறித்துவிட எனக்கு விருப்பமில்லை.”
வேலாயுதத்தின் கரங்களைத் தம்பை யாக்கிழவர் பற்றிக்கொண்டார்.
''மோனை எனக்குப் பிறகு இந்தத் துரவுக்கும் ஆவுரோஞ்சிக் கல்லுக்கும் நீதான் பொறுப்பு. அழியவிடாமல் பார்த்துக்கொள். அவை எங்கட முதுசொம். எங்கட அடை யாளம்." விழிகள் கலங்கித் தவிக்கின்றன.
ய
(குறிப்பு: வேலாயுதத்திடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு அவன் கரங்களைப் பற்றிக் கொண்டு தம்பையாக்கிழவர் அவ்விடத்தில் பூரண திருப்தியோடு இறந்துபோனார் என்பதுதான் உண்மை
வரலாறு.)

Page 20
குமுகம்
இனிமேற்பட்டு, வாழ்க்கையில், கலியாண வீட்டுப்படமெடுக்கப் போறதில்லை. என்ன சனம் அதுகள். கேவலம் கெட்டதுகள். மண் டைக்குள்ள இருக்கிற அடிப்படையான ஊர்வ ன மூளை , பின்னுக்கு வந்த பகுத்தறிவு மூளையைவிட, இன்னமும் முன்னுக்கு முட்டிக்கொண்டுதான் நிக்குது பலபேருக்கு . இதுகளெல்லாம் உலகத்தில் இருந்து என்ன. பிரயோசனம்.
பரந்தன் சந்தியில வச்சிருக்கிற அந்தப் பெரிய கட் அவுட்டை எல்லாரும் பாக் கோணும். கட்டாயமாய். சீதனத்தட்டில் ஒரு பொம்புளை சோகமாய் இருக்கிற அந்தப் படத்தை ஒவ்வொரு ஊரிலயும் சனம் புளங் கிற இடத்தில நட்டுவைக்கோணும்.
சிலவேளை பொம்பிளையளில ஆத்திரம் வருகுது. சிலவேளை ஆம்பிளையளில ஆத்திரம் ஆத்திரமாய் வருகுது.
ஒவ்வொரு கல்யாண வீட்டிலையும் படமெடுக்கப்போய் கவலைப்பட்டு அழுது கொண்டு வருகிறதைவிட போகாமலே இருக் கிறது மேல். இனிமேற்பட்டு, வாழ்க்கையில படமெடுக்கப்போறதில்லை. இதோட, கமரா வைக் கொண்டுபோய் எங்கேனும் முகட்டில் கட்டித்தூக்கி விடவேணும். அவ்வளவு ஆத்

வெளிச்சம் கார்த்திகை - மார்கழி 2004
17.
0 முயேசுதாசன்
மெளனம்

Page 21
வெளிச்சம் - கார்த்திகை
- மகழ்2004
திரம்தான்.
இந்தமுறை அந்தக்கலியாண வீட்டுக்குப் | டுக்கப் போக முன்னமும், கன இடத்தில் பட்ட திருக்கு, அதெல்லாம் இப்படியில்லை.
களெல்லாத்தையும் விட இது மோசம்.
இதுக்குள்ள வீடியோக்கமரா, ஸ்டில்கமரா விட பெரிய பொக்ஸ் வைச்சு மன்மதராசா, மன்மத, பாட்டு வேற , மாப்பிள்ளை என்ன மன்மதராச தெரியாது. நான் காணேல்ல. இவ்வளவத்துக்குள் ஐசிங் கேக் என்ன, மெழுகுதிரி சோடினை ! மேக்கப்புக்கு ஒரு பொம்பிள பத்தாமல் இன்னும் ஆம்பிள. பொம்பிளை சும்மாவே நல்ல 6 பேந்தேன் மேக்கப். என்னத்துக்கு உதையென செய் துச் சுகளோ தெரியாது. ஆனா அ; கஸ்ரப்பட்ட குடும்பம்தான்.
வெளிநாடுகளில் அப்படித்தானாம். சின 'படத்தில வாறதுமாதிரி பால் எல்லாம் கொண்டு மாப்பிள்ளைக்குக் குடுக்கிறேல்லயாம். கடை . மாப்பிளையும் பொம்பிளையும் விஸ். குடிக்கோணுமாம். எல்லாம் மாப்பிளையின்ர அ அந்த ஆட்டக்காரிதான் சொன்னவளம். களகள் போட்டு கொழுத்தோணும்.
அவளின்ர புருசனும் வெளிநாட்டிலயாம். அவ முந்தி மாப்பிள்ளையை சுவிசிற்கு எடுத்தவராம். தான் அக்கா அவனுக்கு எல்லாமாம்.
இந்த மாப்பிள்ளை வெளிநாட்டில இருந்து க ணத்துக்கெண்டு வந்து, ஊர்சுத்தி திரியேக்கதா தப்பெட்டை கண்ணில் தட்டுப்பட்டதாம். நல்ல ளைத்தோல் அவளுக்கு. இவனுக்குப் பிடிச்சுப்ே ஒத்தைக்காலில் அவன் நிண்டு, இப்ப கலியாண நிக்குது. பெட்டையின் விருப்பத்தைப்பற்றி ஆர் கே
வெளிநாட்டு மாப்பிளை எண்டாலே கிராக்கி ஆனால் அவளையும் பாவம் எண்டுதான் செ வேணும். எந்தப் பாண் பேக்கரியிலயோ? அ எந்த கோழிப்பண்ணையிலயோ? அல்லது எந்த தில நிண்டு கக்கூஸ் கழுவினானோ? ஆருக்குத்தெ அப்படி அவங்கள் உழைக்கிற காசு இஞ்ச வ கனக்கமாதிரித் தெரிய மரியாதைதான். அவனு வீட்டுக்காரர் இஞ்ச பெரிய மனிசர். சாணி 6 வீடு மெழுகினாலும், நிலத்துக்கு சென்ற் அடிப்பு
இப்ப இந்தப்பெட்டை மாட்டுப்பட்டுட்டுது. அ

ததஜ
படமெ மெடுத் அது
அதை ஏாசா... சாவோ Tளயும் என்ன. மொரு வடிவு . ல்லாம் துகள்
(டிரா
சிமாப் போய் சியில் கியும் புக்கா, ாலை ,
1 1 1 1:114* 4111 ?
ர்தான் அது
லியா ள் உந் வெள் பாச்சு த்தில்
ட்டது.
ரனே. சால்ல ல்லது இடத் ரியும். ரேக்க டைய பாட்டு பினம்.
துக்கு
பணம்

Page 22
தகப்பன் இல்லைப்போல. ஒரு அண்ணன் காரனும், அண்ணியும், ரெண்டு தங்கச்சிமா ரும்தான் அங்கினேக்க ஓடித்திரியுதுகள். தாய் மனிசிக்கு ஒரு ஆசை, மூத்த பிள்ளைக்கு சாமத்தியச்சடங்கு செய்யேல்ல, இந்தக் கலி யாணத்தோட அதையும் செய்துவிடவேணும் என்கிற ஒரு மடத்தனமான ஆசை. என்ன செய்யுங்கள் பெத்ததுகள்தான். காலமை தொடங்கின சாமத்தியச்சடங்கு இன்னும் முடியேல்ல. சும்மா, வெளிக்கிடாமல் இருக் கேக்கையே, கமராவுக்குள்ளால பார்க்க பெட்டை ஒரு வடிவுதான். கமராவுக்கேத்த முகம். அந்த மாதிரி எல்லாம் எனக்குள்ளயும் ஒரு ஆசைதான். ஊர்வனமூளை வேலை செய்யுது. சீ அதைவிடு.
கலியாண வீட்டுக்கு வந்த பொம்பிளை பகுதிச் சொந்தக்காரர், அவ்வளவு காசுக்காரர் எண்டும் இல்லைப்போல. மாப்பிளை பகுதி யில ரெண்டு மூண்டு பேர் வந்து நிண்டது கள். ஆக்கள் பரவாயில்லை வெளிநாட்டு வாசம்.
பெட்டைக்கு ஒவ்வொருத்தரா பால்வைச்சு எல்லாம் முடிஞ்சுபோச்சு. இன்னும் தாய் வந்து பால்வைக்கேல்ல. எல்லாரும் ஆளை யாள் பார்த்துக்கொண்டு நிக்கினம். எடுக்க வேண்டிய படமெல்லாம் ஸ்டில்காரன் எடுத் திட்டான். எல்லாரையும், நானும்தான். என்னு டைய பங்கிற்கு எல்லா ஆங்கிளிலயும் எடுத் தாச்சு. றிவைன்ட் பண்ணிப் பார்த்தா எல்லாமே நல்ல ஷொட்சுகள்தான்.
நேரம் போய்க்கொண்டே இருக்குது. இன் னும் தாய் வந்து பால் வைக்கேல்ல. பக்கத் தில வந்த மேக்கப்காரருக்கு பொறுக்கேல்ல.
என்ன வீடியோக்காரர் என்னவாம் பிரச் சனை. இப்படியே பாலில் பெட்டை ஊறிப் போய் பாலும் காஞ்சு போச்சுது. அம்மாக் காரியை இன்னும் காணேல்ல. நானும் இந்தப்பெட்டையின்ர மேக்கப்பை முடிச்சிட்டு இன்ணொண்டுக்கு போகவேணும். அதுவும் பெரியவீட்டு கலியாணமடாப்பா. தலைக்கு மேக்கப் போட்டு முடிக்கவே ரெண்டு மணித் தியாலம் வேணும்டாப்பா. இனி மற்ற மேக் கப் காது, கழுத்து, மூக்கு, கழுத்துக்குக் கீழயும் இறங்கி மேக்கப் பூச்சு பூசச்சொல்லு

FUB1.1 1/14ARY!
- கொதகை - கேழ்2004 5
துகள். நான் இப்பெல்லாம் ஆக்களுக்கு முன்னால வச்சுத்தான் மேக்கப்போடுறது. என்னத்துக்கு இந்த மேக்கப் வேலையைப் பழகினனோ. அல்லாட்டில் இந்த மேக்கப் செய்யிற பாசன் என்னண்டு தமிழர் வரைக் கும் தெரிஞ்சுதோ நானறியன். ஆனா நல்ல தொழில்தான் நல்ல காசுதான்.
"உதையார் உன்னட்டக் கேட்டது.'' அப்ப டித்தான் கேக்கோணும் எண்டு நினைச்ச னான் கேக்கேல்ல. சனத்துக்கும் காசு கூடக் கூடத்தான் எப்பிடி எப்பிடியெல்லாம் செல்வ ழிக்கோணும் என்கிற ஐடியாவே வருகுது. எவர் கெட்டாலும் எனக்கென்ன நானும் ஐஞ் சப்பத்தை உழைக்கோணும்தானே. சனத் துக்கு இந்த வீடியோ ஆசை இருக்கிறவரைக் கும்தான் என்ர காட்டிலயும் மழையடிக்கும்.
மெல்லமாக கமராவைத்திருப்பி பெட் டைக்கு குளோசப்புக்கு கொண்டுபோய் வியூ பைண்டருக்குள்ளால பார்த்தால் பெட்டை தேம்பித் தேம்பி அழுகுது. கலியாணவீட்டில் பொம்பிளைக்கு என்னடா கவலை என்று நினைக்க, மேக்கப்காரர் மெதுவாக என்ர முதுகைச் சுரண்டுகிறார். என்ன என்று திரும் பினால் " அங்க பாரப்பா புதினத்தை” என்கி
றார்.
கலியாண வீடுகளில் வழமையா நடக்கிற விசயம்தான். ஆனால் இது கொஞ்சம் ஓவர். ஒரு தடிச்ச பொம்பிளை பெரிசாக் கத்திக் கொண்டிருக்கிறாள். கலியாணப் பொம்பிளை யின்ர அண்ணன்காரன் போல, தயங்கித் தயங்கி தடிச்சிக்கு பயந்து பணிஞ்சு கதைச்சுக் கொண்டிருக்கிறான். அம்மா வாசலில் குந் திக்கொண்டு அழுதபடியிருக்குது மனிசி. என் னடாப்பா இந்தக்கலியாணம் சந்தோசமாய் நடக்காதோ.
"இஞ்ச்பார் நீ என்னண்டாலும் செய் எனக்கது தேவையில்லை. முதலில் என்ர பிரச்சனை யை முடியுங்கோ. இல்லாட்டிலும் விடுங்கோ ஆனா கலியாணம் நடக்குமெண்டு கனவில் யும் நினையாதையுங்கோ.” மாப்பிளையின்ர அக்கா தடிச்சிதான் கத்திக்கொண்டிருந்தாள்.
"அக்கா காசு பிரச்சனையில்லை இவ்வளவு சீதனத்தையும் சரியாத்தந்திட்டம். இதென்ன

Page 23
20 வெளிச்சம்.கார்த்திகை - மார்கழி 2004ல
கொஞ்சக் காசுதானே கலியாணம் நடக் கட்டும் கட்டாயம் தந்திடுவன். பொம்பிளை யின்ர அண்ணன்காரன் கெஞ்சிக்கொண்டிருந் தான்.
நான் இப்ப உன்னை தரமாட்டாத ஆளெண்டே சொன்னனான். ஆனால் அவ னுக்கு, கலியாணம் முடியிறதுக்கிடையில எனக்கு என்ர பிரச்சனை முடியவேணும். நான் என்ர காணியை வித்துத்தான் அவனை வெளியில் அனுப்பினது. அந்தக்காணியை யும் இன்னும் மீட்டுத்தரேல்ல அவன். அதுக் கிடையில் அவருக்கு ஒரு பொம்பிளை வேணுமோ. அவவுக்கு நான் பொம்பிளைத் தோழி. இவன் இனி எப்ப திரும்பவும் போய் எனக்கு காணி எடுத்து தரப்போறான். மனிசி யைக் கண்டவுடன் அவளுக்குத் தலையாட்ட வெளிக்கிட்டுட்டால் எனக்கு காணி கிடை யாது. நான் ஒண்டுஞ் செய்யேல்லாது. இப்ப எனக்கு உங்கட காணி உறுதி வேணும். இல்லாட்டில் கலி யாணம் நடக்க விடன்.
எல்லாவற்றையும் றெக்கோட் பண்ணி யாச்சு. நல்லதொரு யதார்த்த சினிமா. இதை எல்லாருக் கும் போட்டுக்காட்ட வேணும். இதெல் லாம் ஊருக்குத் தெரி யோணும் இப்படி நடக்குதென்று.
கலியாணம் நடக் குமோ என்று சந் தேகம் மேக்கப்கார ருக்கு. காணி உறு தியைக் குடுத்தா கலியாணம் நடக் கும் என்றேன் நான். பொம்பிளை இன் னும் பால் வச்சபடி காய்ந்துபோய் இன் னமும் அழுது கொண்டிருந்தாள்.

அந்த நேரம் பொம்பிளையின்ர அம்மா வீட்டுக்குள்ள இருந்து வெளியில் வருகிறா காணி உறுதியோட. அப்பாடா கலியாணம் நடக்கத்தான் போகுது. ஆனாலும் பாவங்கள் இதுகள் என்றார் கவலையோடு மேக்கப்காரர். எரிச்சலாய் இருந்தது எனக்கு கல்லுமாதிரி குந்தின குந்தில் இருந்த பெட்டையைப் பார்க்க, இவ்வளவு பிரச்சனை நடந்தும் அந்த இடத்தை விட்டு எழும்பாமல் இருக்கி றாள் என்று.
இந்த மாப்பிள்ளை இல்லாட்டி வேற ஒருத் தன் கிடைக்காமலா போயிடுவான். காதலும் கத்தரிக்காயும் அதெல்லாம் பொய். என்ன இன்னும் கொஞ்ச நாளில் எல்லாம் விளங் கும். எழும்பிப் போடி. அப்படிச் செய்தால் தான் ஆம்பிளயளும் திருந்த வாய்ப்பிருக்கும்.
எனக்கு. அந்த மனுசி யும் அண்ணன்காரனும் பாவம்.
எல்லாம் செண்டி மெண்ட் கணக்காப் போய்ட்டுது. தமிழ் சினிமாவில் அடிக் கடி வருகிற விச யம் மாதிரிக் கலி யாணப் பந்தலில மாப்பிள்ளை சீத னம் காணாது, அல் லாட்டி சொன்ன தைத் தரேல் ல என்று எழும்பிப் போயிடுவார் என் றால் பொம்பிளை யை இனி மேல் ஆருமே கல் யா ணம் கட்டமாட் டான் என்கிற சினிமா செண்டி மெண்ட் எங்கட ஊருக்குள்ளையும் இருக்குது. காதுக் குள்ள மெதுவாய்ச் சொன்னார் மேக்கப், காரர் .
சரிடியம்'
பகி-டுக..
சர்கள் மனம் , 45,ம்சமாக
காணி உறுதி கையில கிடைச்சது
ஐயா

Page 24
தான் தாமதம் மாப்பிள்ளையின் அக்காக்காரி மளமளவென்று போய்விட்டா. இன்னும்
அழுதபடி காய்ந்து போய் பொம்பிளை.
-" இருந்ததையும் குடுத்தாச்சு இனி என்ன செய்யப்போறான், இருக்கிற ரெண்டு பிள்ளையளுக்கும் இருக்க ஒரு இல்லிடம் வேணுமே'' தாய் மனுசி கோடிக்குப் பின்னால போய் பெரிய ஒப்பாரி. ஆக்கள் ஒரு மாதிரி ஆறுதல் சொல்லிக் கூட்டிவந்து பொம்பிளைக்குப் பால்வச்ச பிறகுதான் பொம்பிளை அந்த இடத்தைவிட்டு எழும்பினது.
''காணி உறுதியை குடுத்தாச்சு என்று சொன்ன பிறகுதான் பொம்பிளை முழிச்சது. கலியாணம் வேண்டாம் எண்டு வீட்டுக்க ஓடிட்டுது. ஏன்ரா இந்தக் கலியாணத்துக்கு வந்தன் என்கிறது மாதிரிப் போச்சு எனக்கு.
அண்ணன்காரன் அடிச்சுப்போட்டான் பெட் டைக்கு. எடியே காதலிக்கேக்க கண்மண் தெரி யேல்ல. இப்ப என்னடி கதைக்கிறாய். ஊர் முழுக்க உன்ர விசயம் தெரிஞ்சபிறகு எவனடி இனிக்கட்டப்போறான். எங்கையாலும் போய்த் துலை, அங்கயும் செண்டிமெண்ட்தான்.
பொம்பிளைக்கு முழுகவாத்து உடுப்புடுத் திக்கொண்டு வர நல்லா நேரம் போச்சுது. இவ்வளவுக்கும் பொம்பிளைத் தோழி
அதுதான் அந்த ஆட்டக்காறி மாம்பிளை யின்ர அக்கா இன்னும் இல்லை. காலமை எட்டுமணிக்குத் தொடங்கின கலியாணவீடு பன்னிரெண்டு மணியாச்சு இன்னும் நடக் கேல்ல. தாலிகட்டுக்கு வந்திருந்த சனமெல்
லாம் அரைவாசி திரும்பிப்போட்டுது.
பொம்பிளைத்தோழி வரும் வரும் என்று காத்திருந்து, ரெண்டரை ஆச்சு. பொம்பி ளையின்ர அண்ணன் மாப்பிளை வீட்ட போய் அக்காக்காரியைக் கூட்டிக்கொண்டுவாறன் எண்டு போனவன் போனவன்தான். நாலு மணிக்கு வாறான்.
"என்னடா" என்று கேட்டால் அக்காக் காரிக்கு சரியான அலுப்பாம், நித்திரையு மாம்.

வெளிச்சம் கார்த்திகை - மார்கழி 2004 )
21/7
உறுதி குடுக்கேக்க எல்லாரும்தான் நினைச்சது கலியாணம் உடன நடக்கும் என்று. கலியாணக்கனவு பெட்டைக்கும் இருக்கும்தானே. அதுவும் வெளிக்கிட்டபடி நிற்கிறது. மேக்கப்காரர் நல்லாத்தான் மேக் கப் போட்டிருந்தார். எல்லா வியூவிலயும் வீடி யோவுக்குள்ள போட்டாச்சு. நூறு வீதம் அழகி. அவளுக்குத்தானாம் சீதனம் மாப் பிளை கொடுக்கோணும். இந்த முஸ்லீம் நாடுகள் மாதிரி எங்கட ஊர்களும் வராதோ?
பெட்டையைப் பார்க்கப் பாவமாய் இருந் தது. முகம் முழுக்க ஒரே சோகம். மாப் பிள்ளையை நினைக்க ஆத்திரம் ஆத்திர மாய் வந்தது. ஒழுங்கா ஒரு பெட்டைக்குத் தாலி கட்ட முடியாதவன் பேந்தேன் காதலிச் சவனாம்.
திமிர் பிடிச்சவள் அக்காக்காரி. அவளுக்கு காணி உறுதி வந்தால் போதும். என்ன மனுசி அவள். அவளின்ர புருசன் என்ன பேக்கி ளாஞ்சியோ? கலியாணம் நடந்தால் என்ன விட்டால் என்ன என்று கலியாணத்துக்கு வந்த சனம் அரைவாசிக்குமேல திரும்பிப்போக கலியாணப்பந்தல் வெளிச்சுப்போச்சு.
என்ன சொன்னாலும் பொம்பிளையளின்ர வாழ்க்கைக்கு எதிரி என்றால் இன்னொரு பொம்பிளைதான். அது ஒரு சாபம். எப்படித் தான் பெண்ணடிமைத்தனம் பற்றிப் பேசினா லும் அடக்கப்படுகிறது பொம்பிளைதான் என் கிறது முற்று முழுதா தெரிஞ்சு போச்சு. ஆனா அதுக்குக் காரணம் பொம்பிளைதான் என்கிற தும் வெளிச்சப்பாடு.
இருட்டுப்பட்டுக்கொண்டு வந்த பிறகும் மாப்பிளையோ மாப்பிளை வீட்டுக்காரரோ வரேல்ல. அவங்களுக்குள்ளும் என்ன பிரச் சனை ஏதுமே தெரியாது. கலியாணம் இல்லையெண்டா காணி உறுதிக்கேன் நாண்டுகொண்டு நிண்டவை என்று அண் ணன்காரன் சயிக்கிளை எடுத்துக்கொண்டு போனான். சிலவேளை சண்டை ஒன்று நடந்து கலியாணம் நிண்டு போகலாம். அல் லது சமாளிச்சு இரவுக்கும் தாலிகட்டுப்பட லாம்.
இனி இருந்தென்ன செய்யிறதென்று

Page 25
வெளிச்சம் கார்த்திகை - மார்கழி 2004
கேட்டார் மேக்கப்காரர். இனிப்படமெடுக்கிற தென்றால் லைட் ஒழுங்குவேணும். கமரா சாமான்களை எல்லாம் கட்டிவச்ச பிறகும், ஆருமே என்னை நில் என்று சொல் லேல்லை. பிறகேன் நிற்பான். மோட்டார் சைக்கிள் ஸ்ராட்.
சே, என்ன சீவியம், என்ன கலியாணம் இது . இனிமேல் வாழ்க்கையில் இந்தக் கலியாண வீட்டுப்படமெடுக்கிறதே இல்லை. அது ஒரு சீரழிவு பிடிச்ச வேலையடாப்பா.
இதை நானும் கதைக்க லாயக்கு இல் லாத ஆள்தான். ஏனெண்டால் எனக்கும் அம்மா சீதனம் வாங்கித்தான் கலியாணம் முடிச்சு வச்சவ. என்ர மனிசியின்ர காசில கமரா, மோட்டார்சைக்கிள், தங்கச்சிக்கு சீத னக்காசு. என்ர கலியாண வீட்டிலையும் சண்டை நடந்திருக்கலாம். அதுதான் என்ர மனிசியும் அடிக்கடி பாயிறவளோ. அவள் இப்பவே மகன வச்சுக் கொஞ்சுவாள், நீ வளர்ந்தவுடன் உனக்கு இருபது இலட்சம் சீதனம் வேண்டித்தான்ரா உன்ன கட்டி வைக் கிறது என்று. என்ன பெண்கள் ஒருவரை ஒருவர் பரம்பரை பரம் பரையாகப் பழிதீர்த்துக் கொண்டே போகப் போகி றார்களோ? தான் பழிவாங்கப்பட்டதற்கு இன் னொருவரைப் பழிவாங்குவது சந்தோசமா? என்றாலும் அந்தப்பெட்டை அந்த மாப்பிளையை வேண்டாம் என்று சொல்லிப் போடோணும். அந்த மாப்பிள்ளை ; எண்டவன் ஆம்பிளை இல்லை. தான் வாழு றதுக்காக இன்னொரு ஆம்பிளையின் உழைப்பை சுரண்டுவது பிழைதான்.
நானும் அப்படித்தானோ? எனக்கு அப்படி நடக்குமோ? பொம்பிளைப்பிள்ளை பிறந்தால் தானே பிரச்சினை. சே, நானும்.
எனக்கும் ஊர்வன மூளைதான்.
புத்தகம் |
நூல் அறிமுகப் பகுதிக்கு படைப்பாளிகள் மற்றும் வெளியீட்டகங்களிலிருந்து இரண்டு புத்தகங்கள் வரவேற்கப்படுகின்றன. படைப்புகளுக்கான விமர்சனங் களையும் எதிர்பார்க்கின்றோம்.

அஞ்சலி த.
கவிஞர் தில்லைச்சிவனின் மறைவுக்கு வெளிச்சம் அஞ்சலி செலுத்துகிறது.
ஈழத்தின் மூத்த கவிஞனாகவும், இளவயதிலிருந்தே தமிழ்த் தேசிய விழிப்புணர்ச்சிகொண்ட இலக்கியப் போராளியாகவும் இருந்து போனாய். வெளிச்சத்தின் வளர்ச்சியில் அக்கறை உள்ளோனாய் வாசலுக்கு வருவாய். இனியுன் வருகை இல்லையென ஆச்சு. நீள் துயரிருக்கும் எம் நெஞ்சில்.
ப
வெச்சம்
அஞ்சலி
எழுத்தாளர் கே.வி.நடராஜன் அவர்களின் பிரிவுக்கு வெளிச்சம் அஞ்சலி
செலுத்துகிறது. ஈழத்தின் தலைசிறந்த சிறுகதை ஆசிரியனாகத் திகழ்ந்து 'யாழ்ப்பாணக் கதைகள்' மூலம் எம்தேசத்துக்குப் பெருமை சேர்த்தாய். உன் இறுதிக்கால எழுத்துக்களில் தமிழ்த்தேசியத்தையும், தமிழீழ விடுதலைப்போராட்டத்தையும் உணர்த்தி அமர இலக்கியங்கள் படைத் தேகினாய். உன் நினைவைச் சுமந்து இந்நிலம் இருக்கும்.
வெளிச்சம்

Page 26
அலைந்தழிந்து போக
எனது சிலுவையை நானாயே விரும்பித் தோளேற்றிச் சுமந்து கொண்டிருக்கிறேன், எனது உடல், எனது ? மனம்போலவே முழுமையும் என்னிடத்தில். அனுதாபம் என்ற வார்த்தைகளைப் பொருத்திய நண்பனில் ஏளனமே மணத்தது பெரிதாக நாறி.
அவனது மூளையை உயரிக் கிளையில் வைத்து காகம் கொத்திக்கொண்டும், காலடிக்கிளையில் அலகு துடைத்தபடியாயும் இருந்தது. நாவினை, அறணை நக்கிக்கொண்டிருந்தது. வயிற்றினை அடங்காப் பசிமீறிய . யானை கொண்டு போயிற்று
இரவலாக மட்டும் என்றான் நண்பன். அவனது கைகளால் குரங்கு சொறிந்துகொண்டது முதுகு, தலை, கை, கால் எங்குமாக மாறிமாறி. வேகமூட்டவென நத்தைகள் கால்களை ஊர்ந்து கொண்டிருந்தன. கண்களில் வெளவால்கள் குடிகொள்ள வாடகைக்கு எடுத்திருந்தன. மீந்துபோன தனது பகுதிகளை பதுக்கியிருந்தான், பாம்புப் புற்றிலோ அல்லது வேறெங்காகிலுமோ.
0 கைசரா
1 அக் 2011

வெளிச்சம் கார்த்திகை - மார்கழி 2004
அதிதிதிதி,
நாதை, 23 ?
ஏஇரங்கல் கடிதம்
இது பற்றியும் ਗਰੀ
இவை பற்றியும் அவன் ஏதும்
பேசவில்லை, பிரயத்தன் மெடுக்கவும் இல்லை.
நானாகவே தோளில் ஏற்றுக்கொண்ட சிலுவையினது கனம் பற்றி பஞ்சினது பொறாமை பூத்த
வார்த்தைகளில் நண்பனுக்குச் சுவறிவிட முடியவில்லை. இரங்கல் தெரிவித்துக்கொள்வதாக
மட்டும் அடிக்கடி என்மேல் வார்த்தையாடினான்.
அதிலெல்லாம் அவனது ஏளனமே மணத்தது நாறியபடி.
ஆனால் பாவம், தன்னைவிட என்னையே அதிகமாக நேசிக்க முடிந்தது
அவ்வளவே அவன்.
18 1991 ம் ம்

Page 27
வெளிச்சம் கார்ததகை - மார்கழி 2004
இஒன் இவிழ்க்கூட
பாலையின் தகிப்பு அந்தப் பாழ்வெளி யெங்கும் பரவியிருந்தது. பசுமையின் களை அழிந்துபோன அந்த வெட்டையைப் பார்த்த படி, கிருஷ்ணி இருந்தாள். அவளது பார்வை நெடுந்தூரம் வரை நிலைத்திருந்தது.
அவளது உடல் சிதைந்து, கரைந்து, கோலங்கெட்டுக் கிடந்தது. கையும் காலும் உள்வளைவு கொள்ள, வயிறு பெருத்து, பாண்டு நோயாளிபோல அவள் காணப்பட்

III
9 © 9
க.சட்டநாதன்
டாள். நீர்ப்பசை உலர்ந்த அவளது உடலில், ஈரக்கசிவுடன் இருந்தவை அவளது கண்கள் மட்டும்தான். அந்தக் கண்களும் மாற்றம் ஏதும் இல்லாமல், முன்னர் போல பெரிதாயும் பரிவைச் சொரிவதாயும் இருந்தன.
அவள் முன்பாக விரிந்து கிடந்த அந்தப் பெருவெளியில், முகை கருகிப்போன - உவர் நிலத்துக்கே உரிய - கோரைப் புற்களும், சிறு அறுகும், வறள் முள்ளிச் செடிகளுமே இருந் தன. தூரத்தில் சதுரக் கள்ளியும் சப்பாத்துக் கள்ளியும் வளர்ச்சி குன்றி, பச்சையம் அழிந்து, செத்தலாய்ச் சரிந்து கிடந்தன. படரும் கொடிகளும் சிறு செடிகளும்கூட, அங்கொன்

Page 28
றும் இங்கொன்றுமாக ஆதாரம் அழிந்த நிலையில் காணப்பட்டன.
அந்த வெளியில் கிழக்குப் பக்கமாக, சாம்பல் மேடொன்று இருந்தது. அந்தச் சாம் பல் மேடுதான் ஊரின் சுடுகாடு.
கிராமத்தில் - துர்மரணங்களும் பட்டினிச் சாவும் மலிந்து போனதால், சுடுகாட்டில் பிணங் கள் குவியலாக எரிந்தன. தீயில் கருகும் பிணங்களின் வாடை ஊர்முழுதும் கவிந்தி
ருந்தது.
சுடுகாட்டுக்குச் சற்றுத் தூரத்தில், ஒரு வெட்டுக்குளம். அது தூர்ந்துபோன நிலை யில் நீரில்லாது வரண்டு கிடந்தது. குளத்தின் வடக்குப் பக்கம் ஏகாலிகளின் படித்துறை இருந்தது. துணி துவைக்கும் கற்களும் சில அங்கு கிடந்தன.
குளத்தின் தெற்குப் பகுதியில் உள்ள வயல்கள் - கலடுதட்டி, வரம்பழிந்த நிலையில் கிடந்தன. வயல்களுக்கு அப்பால் ஒரு ஒற்றைய டிப் பாதை ஊரைப் பார்த்து வந்துகொண்டி ருந்தது.
அந்த வெளியின் மேற்குச் சாய்வில் - ஊர்மனை இருந்தது. கிருஷ்ணியின் குடிசை ஊரைவிட்டுச் சற்று
விலகி, சனசந்தடி இல் லாமல் இருந்தது.
கிருஷ்ணி இப்பொ ழுதெல்லாம் பாடசா லைக்குப் போவதில்லை. அவளது யசோவின் அகால மரணத்தின் பின் படிப்பில் அவள் அதிக ஆர்வம் காட்டு வதில்லை. அந்த மர ணமும் அதனடியான

w வெளிச்சம் கார்ததகை - மார்கழி2004 5)
துயரமும் அவளை ஆழமாகவே பாதித்து விட்டது. பாடசாலை கூட, பல நாட்களுக்கு முன்னர் மூடப்பட்டுவிட்டது. பாடசாலை இருந்த இடத்தில் இப்பொழுது மண்கும்பங் களும் கற்குவியல்களும் சில அஸ்பெஸ் ரோஸ் தகடுகளும் மட்டுமே சாட்சியமாய்க் கிடந்தன.
0
விதானையார்வீடு, சங்கக்கடை, கிராம் சபைக் கட்டிடம், அதற்குக் கிழக்காக இருந்த சில மண் குடிசைகள் என யாவும் இடிபா டுகளுடன் கிடந்தன - ஊரின் குப்பை எல் லாமே அங்கு கொட்டப்பட்டதுபோல், அது ஒரு குப்பை மேடுபோலவும் காட்சியளித்தது.
முத்துமாரியம்மன் கோயில் இருந்த இடத்தில், பெரியபுற்று ஒன்று காணப்பட்டது. அப் புற்றில் நாகபாம்புகள் வளைய வருவ தாக ஊர்மக்கள் கதைத்துக்கொண்டார்கள். ஐந்துதலை நாகம்கூட உண்டு என்ற பேச்சும் அடிபட்டது. கிருஷ்ணிகூட, வெள்ளி அரை
ஞாண் கொடி போல ஒரு பாம்பைக் கண்டி ருக்கிறாள். அது படம் விரித்து ஆடியதையும் பார்த்திருக்கிறாள். அப் பாம்பு வேறுயாருமல்ல, கோயில் பூசகர் மூர்த்தி ஐயர்தான் என்ற கதை யும் ஊரில் உண்டு.
ஊர் மக்களின் பிர யாசை முழுவதும் இப் பொழுது ஒருமுகப் பட்ட ஒன்றாகவே இருக் கிறது. ஒருவேளையா வது கொதிக்கும் தமது கும்பியை நிரப்ப வேண் டும் என்பதுதான் அவர் களது கவனமாகும்.
கோரைக்கிழங்கு, முள்ளிவேர் - அவற்று டன் கரப்பான் பூச்சிக ளையும் புற்று எலிக ளையும் அவர் கள்

Page 29
வெளிச்சம் கார்த்திகை - மார்கழி 2004 726ராக
உணவாகக் கொண்டார்கள். அயற் கிராமங் களில் உள்ள தோட்டங்களில் திருடிவந்த : சாமி, குரக்கன், எள்ளு, மரவள்ளி போன்ற வற்றையும் அவர்கள் ரகசியமாகப் பகிர்ந்து கொள்ளவும் செய்தார்கள்.
எல்லா விஷயங்களிலும் துல்லியமான புரிதல் உடைய கிருஷ்ணி , ஊரில் நடக்கும் துர்ச்சம்பவங்களுக்கும் அழிவுகளுக்கும் யசோவின் மரணமே காரணம் என்பதைப் புரிந்து வைத்திருந்தாள்.
கிணற்றடியில் முகம் அலம்பிவிட்டுத் திரும்பிய கிருஷ்ணி ஏதோ ஓர் உள்ளுணர் வால் உந்தப்பட்டு, ஊரைப் பார்த்து வந்து கொண்டிருந்த அந்த ஒற்றையடிப் பாதை யைப் பார்த்தாள். பாதையில் சிறு புள்ளியாய் ஓர் அசைவு ...
'யாரது... யார் வருகிறார்கள்?' குழம்பிய நிலையிலும் ஏதோ தெளிவு பெற்றவள் போலத் தனக்குள்ளாகவே பேசிக்கொண் டாள்.
'ஊருக்கு நல்லது நடக்கப்போகிறதா...? சூனியத்துள் இருந்து.... இன்மையில் இருந்து வரும் அந்தத் தூதுவன் யார்...? எத்தகைய தூது மொழியுடன் வருகிறான்.'
நினைவுகளோடு விரைந்து -- வந்தவள் பாதையைத் தொட்டபடி நின்று பார்த்தாள்.
அந்தப் பாதையின் வழியாக, அமானுஷத் தோற்றமுடைய முதுகிழவன் ஒருவன் வந்து கொண்டிருந்தான். காலத்தின் தொடர்ச்சியை உறுதி செய்பவன்போல் அவன் இருந்தான். அவனது பராயம் பல நூறைத் தாண்டியி ருக்கவேண்டும். இன்னும் சற்றுக்கூடுதலா கவும் இருக்கலாம்.
- அவனது அங்கங்கள் கலைத்துப் போடப் பட்டு, மீளவும் பொருத்தப்பட்டவாகில் இருந் தன. அவனது தலைப்பாகம் கீழாக, பாதங் கள் இருக்கவேண்டிய இடத்திலும் - கால்கள் மேலாக, தலை இருக்கவேண்டிய இடத்தி

லும் இருந்தன. கண்களும், மூக்கும், வாயும் - முகம் அழிந்த நிலையில் - வயிற்றில் முளைத்திருந்தன. காதுகள், காற்பெருவிரல் களோடு இருந்தன; அவை பெரிதாக யானை யின் காதுகளை ஒத்திருந்தன.
கிருஷ்ணியை நெருங்கிய அந்தக் கிழவன் அவளைப் பார்த்து உரத்த குரலில் ஏதேதோ பேசினான்:
"ஏய்.... சிறு பெண்ணே உன்னைத்தான்...! என்ன... இங்கு இப்படித் தியானத்தில் ஆழ்ந் துவிட்டாய்... உனக்குச் செய்தி தெரியாதா? ஊரே கொட்டுதோட்டப் பக்கம் விரைந்து
கூடுகிறது. போ... போய் அங்கு என்ன நடக் கிறது என்று பார்....."
கிழவன் பேசியபோது அவனது நாக்கு வெளியே துருத்திக் கொள்வதையும் - நுனி நாக்கில் நெருப்புத் தணற்துண்டுகள் சொரி வதையும் கிருஷ்ணி கவனித்தாள். அந்த நெருப்புத் தணல்கள் தரையில் விழுந்த கணத்திலேயே பனிக்கட்டிகளாக உருமாறி உறைந்தன. பின்னர் சிறுசிறு நீர்த்துளிகளாய் மாறின. சிறு துளிகள் புணர்ந்து சிறு அரு வியாய் விம்மியது. அருவியின் இரு மருங் கும் தழையும் பசும் புற்கள். புற்கள் திட்டுத் திட்டாக இருந்தபோதும், பச்சைப் பட்டு மாலைபோல அழகாய் இருந்தது.
கிழவனை வழிமறித்த கிருஷ்ணி கூவி. னாள்:
'முதியோனே ஊருக்கு நல்லது நடக்கப் போகிறதா...? இது மரணங்கள் மலிந்த மண். வறுமையும் பிணியும் எங்களைத் தொடர்ந்து தொல்லை தருகிறது. அவற்றில் இருந்து நமக்கு விடுதலை கிடைக்குமா....? நில். நின்று நிதானமாய் எனக்குப் பதில் தந்து
போ...'
கிருஷ்ணியின் குரலைக் கேட்டதும் கிழ வன் சற்றுக் கோபமாகவே திரும்பினான். அவனது கண்கள் தீச்சுடரை உமிழ்ந்தன. ஒரு கணம் திகைத்துப்போன கிருஷ்ணி,

Page 30
வாய் பிளந்த நிலை யில் அவன் போன திசையையே பார்த்த படி நின்றாள். கிழவ னின் உருவம் அழிந்து, வளியிடை கரைந்து போனது. 'இதென்ன உருவெளித் தோற்ற மா...? காற்றில் கரைந்து போன மாயம் தான் என்ன...?' அவனை, அந்தக் கிழவனை ஓடி யோடித் தேடிப்பார்த் தாள். கிழவனின் குரல் மட்டும் அரூபமாய் ஒலித்தது.
''பெண்ணே! என் னைத் தேடுவதை விட்டுவிடு. அது வீண் முயற்சி கொட்டு தோட்டப் பக்கம்போ. போனால் பயனடை வாய் .... அங்கு, உனது பிரியை யசோதாவையும் காணலாம்.''
''யசோவா..... அது... அது எப்படிச் சாத்தியமாகும். இப்பொழுது அவள் கடவு ளின் குழந்தையல்லவா... அவள் எங்களைப் பிரிந்து சென்று எத்தனை நாட்களாகி விட்டன. மீளவும் அவளை எப்படி..."
கிருஷ்ணி கண்ணீர் மல்க விம்மினாள்,
''அவள் கடவுளின் குழந்தைதான் ..... அவளது வழிகாட்டலில் நீ நட... அவளது அகால மரணத்தால் ஊருக்கு வந்த அபவா தம் நீங்கப்போகிறது. அதற்குரிய நேரம் வந்துவிட்டது. அவளது வசீகர ஆளுகைக் கும் இரட்சிப்புக்கும் உரியவள் நீ ...... உன் வழி, ஊரில் எல்லாமே நல்லதாய் நடக்கப் போகிறது.”
மந்திரவசப் பட்டவள் போல எழுந்த கிருஷ்ணி, கொட்டுதோட்டப்பக்கம் விரைந்து

வெளிச்சம் கார்த்திகை - மார்கழி 2004 )
இதை, 27 1
நடந்தாள்.
தோட்டத்தில் ஊரே கூடியிருந்தது. அது அவளுக்கு அதிசய மாக இருந்தது.
தோட்டத் தன மையத்தைத் தொட் டபடி, சனக்கும்பல் நின்றது. கும்பலை விலத்தி உள்நுழைந்த கிருஷ்ணி , புதிதாய் தளிர் எறிந்து தழைத் திருந்த பசுஞ்செடி ஒன் றைக் கண்டாள். அதன் குளிர்ச்சியும் தளதளப் பும் சூழலில் வெம்மை யைப் பெரிதும் தணித் தது.
அந்தச் செடியின் பக்கமாக நின்ற அம் லன் சேர் ஏதோ சொன்
னார்:
"இது... இந்த மண் கண்டிராத செடி .... குழப்பம் ஏதுமில்லை.... இது முசுக்கட்டைச் செடிதான். பட்டுப்பூச்சிகள் உணவாகக் கொள் ளும் இந்தச் செடி.... இங்கு எப்படி... இந்த நீர்க்கசிவே இல்லாத பாலையில் ..... இதன் தளிர்கள் கருகிவிடாதோ....'
“முசுக்கட்டையா..?”
அமலன் சேருக்குப் பக்கமாக நின்ற தயா ரீச்சர் கேட்டா.
தயாரீச்சரை நெருங்கி வந்த கிருஷ்ணி, அவவைப் பார்த்துச் சிரித்தாள்.
“அட நம்ம கிருஷ்ணி..."
குதூகலித்த ரீச்சர், கிருஷ்ணியை அன்பு டன் அணைத்துக்கொண்டாள்.

Page 31
வெளிச்சம் கார்த்திகை - மார்கழி 2004
சனம் பார்த்திருக்க, சிற்றிலை சில விட்டு, துளிர்த்த முசுக்கட்டை கிசு கிசு என வளர்ந் தது. செடியைச் சுற்றி, கூட்டமாய்ப் பட்டாம் பூச்சிகள் பறந்தன. சிறு முணுமுணுப்புடன் வீசிய காற்றில் லேசான குளிர். திடீரெனத் திரண்ட மேகங்கள், தென்மேற்கு வானில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்தன. சிறு தூறலாய்த் தொடங்கிய மழை, பெருமழை யாய்க் கொட்டத்தொடங்கியது. எங்கோ தூரத்தில், மழையில் நனைந்த தவிப்பில், ஒற்றைக் குயில் ஒன்றின் துயர்தோய்ந்த, குரலிசை. கும்பலாய் நின்ற சனம் மழையில் நனைந்து கரைந்த மாயம் அங்கு நடந்தது.
ஒளிக்கசிவின் முதல் ரேகை பூமியில் பட்டவேளை கிருஷ்ணி விழித்துக்கொண் டாள். ஏதோ மந்திரவசப்பட்டவள்போல, கொட்டுதோட்டப்பக்கம் அவள் விரைந்தாள். அவளைத் தொடர்ந்து, ஊரில் உள்ளவர் களும் அயல்கிராமத்தவர்களும் தூரத்தில் இருந்த நகரவாசிகளும் தோட்டப்பக்கம் கூடினார்கள். அந்தச் சனத்திரளின் மொசு மொசுப்பு, சமுத்திரத்தின் பேரிரைச்சலை ஒத்திருந்தது.
தோட்டத்தில் தோன்றிய முசுக்கட்டைச் செடி, இப்பொழுது ஒரு புதராய் வளர்ந் திருந்தது. அதனுடைய முச்சோணை இலை கள் சூரிய ஒளியில் பளபளத்தன. கொத்துக் கொத்தாய் மலர்களும் காய்களும் கனிகளும் செடியில் குலுங்கின. கிருஷ்ணிக்கு வியப்புத் தாள முடியவில்லை.
பொன் துகள்கள் சொரியும் பட்டுநூல் இழைத்த கூடொன்றை, அச்செடியில் கிருஷ்ணி கண்டாள். அந்தக் கூட்டை உதைத்து, உடைத்துக்கொண்டு ஒரு சிறு பூச்சி , சிறகுகளை அசைத்தபடி வெளியே வந்தது. அது பட்டுப்பூச்சியா? அப்படித் தோன்றியபோதும் அல்ல என்று அங்கு கூடி நின்றவர்கள் கூறினார்கள்.
பட்டுப்பூச்சியைவிட அது சிறியதாக

இருந்தது. அதன் சிறகுகளின் படபடப்புச் சூழலில் ஒரு உதைப்பை ஏற்படுத்தியது. அத் தோடு, அந்தப் பூச்சியின் சுவாசம் பட்ட இடமெல்லாம் மனதைக் கவ்வும் ஒரு வாச மும் சேர்ந்து பரவியது.
பூச்சியை நெருங்கிப் பார்த்தபொழுது - அது சிறகுகளைக் கொண்டிருந்தபோதும் - மனித உருவம் கொண்டதாயும் மானிட அம்சம் பொதிந்ததாயும் இருந்ததைக் கவனம் கொள்ள முடிந்தது. அதனுடைய கண் கள் சிறியதாக இருந்தன. ஆனால், அவை உமிழும் ஒளிப்பிரபை, பல ரசவாதங்களை ஏற்படுத்தக்கூடிய ஏதுக்களைக் கொண்டி ருந்தது. நாசித்துவாரம் இருப்பதே தெரியாத மூக்கு. குச்சிக் கைகள், கால்கள், விரல்கள் நூல் இழையாய் நொய்ந்து கிடந்தன.
அந்தப் பூச்சி தன்னை உருமாற்றிக் கொள் ளும் இயல்புடையதாக இருந்தது. பட்டுநூற் குவியலாய்க் காட்சியளித்த அது அடுத்த கணங்களில் சிறகு முளைத்த சிறு குழந்தை போலவும். ஒரு சின்னத் தேவதைபோலவும் தோற்றம் காட்டியது. இந்த விநோத உயிரை அங்கு கூடிநின்ற மக்கள் வியப்புடன் பார்த் தார்கள்.
மஞ்சள் பூசிய ஒரு பொன் நிழலை தன்னு டன் சுமந்துவந்த அப்பூச்சி, மனங்கவரும் அந்த அற்புத வாசத்தையும் தழையவிட்ட படி, சிறகடித்துப் பறந்து திரிந்தது.
அந்தப் பறத்தலின் மூலம் ஊரின் மூலை முடுக்குகளை மட்டுமல்ல, உயிர் உள்ள, உயிர் அற்ற அனைத்துப் பொருள்களையும் தன் ஆளுகைக்கு உட்படுத்தி, ஒரு ஈர்ப்பு மையத்தை அது ஏற்படுத்தியது. அங்கு கூடிநின்ற மக்களை நெருங்கும்போதெல்லாம் அத்தேவதை ஏதோ சில சொற்களைப் பரம் ரகசியம் போல உதிர்க்கவும் செய்தது. அச் சொற்கள் ஒரு வகையான மந்திர உச்சாட னம் போலவும் இசைப்பிணிப்பு மிகுந்த பாடல்கள் போலவும் இருந்தன:
“உங்களது வாழ்வு சமநிலை தளர்ந்து

Page 32
சரிந்து போனமை எமக்குத் தெரியும். ஜீவித சுகம் அழிந்து அல்லல்படும் நீங்கள் துன் பங்களில் இருந்து விடுதலைபெறவேண்டும். இங்கு சொர்க்கபுரி ஒன்றை உருவாக்க நான் வரவில்லை. ஆனாலும், இல்லாமை ஒழிந்து, எல்லாமும் உள்ள ஒரு உலகு உங்களுக்குக் கிடைக்கவேண்டும். அதற்கு எனது வல்லபம் உங்களுக்கு உதவும்...''
தேவதையின் பேச்சில் இழைந்த கனிவும் உறுதியும் சனங்களின் இடையே இருந்த அதிபருக்குத் துணிவைத் தந்திருக்கவேண் டும். சற்று முன்னால் வந்த அவர், தளர்ச்சி யான குரலில் மன்றாடுவதுபோலப் பேசினார்:
"எம்மை ரட்சிப்பவளே.... உமது அருள் எமக்கு எப்பொழுதுமுண்டு. உமது ஒளி பட்டு இந்த மண் புனிதமடைந்துள்ளது. நாமும் புனிதரானோம். பாடசாலையில் படிக்கும் ஏழைப்பிள்ளைகளின் துன்பம் நீங்கும் வகை யில் அவர்களது மதிய உணவுக்காக ஒரு நிதியத்தை உருவாக்கியுள்ளோம். அந்த நிதி யத்துக்கு தம்பையா ரீச்சர்தான் பொறுப்பாக உள்ளார். பாடசாலைக் கட்டடங்களும் இடி பாடுகளுடன் கிடக்கின்றன.... புதிய கட்டடங் கள் உருவாக வேண்டும் .... தளபாட வசதி யும் இல்லை ..... கல்வி செயல்வடிவம் பெற இவை தேவை....."
அதிபர் பேசி முடிந்ததும் திருமதி.தம் பையா முன்நகர்ந்து, கால்களை மடித்து, நிலத்தில் வீழ்ந்து கண்ணீர்சோரத் தொழு தாள். தம்பையா ரீச்சரைத் தொடர்ந்து ராம் லிங்க வாத்தியார், அமலன் சேர், தயாரீச்சர், யசோவின் அம்மா, தங்கை என்று எல்லாரும் வணங்கினார்கள்..
அனைவருக்கும் அருள்பாலித்த தேவதை மிகுந்த பாந்தமுடன் பேசியது:
"உங்களது முயற்சி எதுவாயிருந்தாலும் அதற்கு எனது அனுசரணை உண்டு. பாட சாலையின் இடிபாடுகள் இரண்டொரு தினங் களில் சீர்செய்யப்படும். பிள்ளைகளும் படிக்க வருவார்கள். பாடசாலை மட்டுமல்ல ஊர்

433 2: அ
- 77 நாட்
பு11:5%A'
வெளிச்சம் கார்த்திகை- மார்கம் 2004
ராததறாத 291
வாசிகளான உங்களது இல்லிடங்களும் செப் பனிடப்படும், உங்களது தேவைகளுக்கு நீங் கள் என்னை அணுகலாம். கிருஷ்ணியும் உங்களது உதவிக்கு வருவாள்.”
கூறிய தேவதை, எல்லாரும் பார்த்திருக்க - பேருருக்காட்டி ஒளிப்பிழம்பாய் ஜொலித்தது. மீளவும் சிறு பூச்சியாகிப் பறந்து சென்று, முசுக்கட்டைச் செடியில் அமர்ந்து, இளம் குருத்துக்களைக் கடித்துச் சுவைத்தது.
அங்கு திரண்டு நின்ற மக்கள் பரவசநிலை அடைந்து ஓங்காரமிட்டு ஆரவாரித்தனர்.
கிருஷ்ணிக்கு அருகாகத் திரும்பவும் பறந் துவந்த தேவதை, அவளுக்கும் தனக்குமான தூரத்தை நிதானப்படுத்திக்கொண்டு, அவளை நோக்கி நறுமணம் தழைந்து விம்மும் பல வண்ணத் தேவபுஸ்பங்களைத் தூவி ஆசீர்
வதித்தது.
என்ன அதிசயம்! சிறுமியாக இருந்த கிருஷ்ணி, அழகிய இளம் பெண்ணாக மாறி னாள். வெண் பட்டுச்சேலை பளபளக்க அலங்கார பூஷிதையாய் அவள் தோற்றம் அற்புதமாய் இருந்தது.
வெங்காயச்சருகு நிறம். நேர் கோடு கிளித்தது போன்ற வளர்த்தி காட்டும் உடல்வாகு. செதுக்கி எடுத்த சிற்பத்தின் -- வார்ப்புடன் - மூக்கும் . முழியுமாய் ஊர்க்கோயில் அம்மன் சிலை போல அவள் அழகர் காக இரு ந தாள் . கா மு க  ைன ப பொசுக்கும் தேஜஸ் அவ ளோடு இழைந் தது. அங்கு கூடி 4 நின்ற ஊரவர்
மீளவும் ஓங்கார ஒலியெழுப்பி, ஆனந்தித்து ஆரவாரித்தனர்.

Page 33
. 30 தராக
வெ.பளிச்சம் கார்த்திகை - மார்கழி 2004
அந்த ஒலி, அலையலையாக எங்கும் வியாபகம் கொண்ட அதிசயம் அங்கு நடந்தது.
புதுப்பொலிவு கொண்ட கிருஷ்ணி, யசோதாவை விட்டுவிலகி மாரியம்மன் கோயிலை நோக்கி நடந்தாள். கோவிலில் மூர்த்திஐயர் ஒதுங்கி நின்று, பவ்வியமாக அவளை வரவேற்றார். கோயிலின் பலி பீடத்தை அடைந்த கிருஷ்ணி, அதன் முன் நின்றபடி அங்கிருந்த சனத்திரளைப் பார்த் துப் பேசினாள்:
"நமக்கு வளமும் வாழ்வும் தர வந்துள்ள இந்தக் குட்டித்தேவதை வேறுயாருமல்ல யசோதான். இவள் மீளவும் உயிர்த்துவந் துள்ள செய்தியை, ஊருக்கு - வழிப்போக்க னாய் வந்த, முதுகிழவன் ஒருவன் எனக்கு முன்னரே கூறிச் சென்றுள்ளான்."
“யசோ சிறு பூச்சியுருவில் இருந்தாலும் அவளது சக்தி அபரிமிதமானது.”
“அதோ அவளைச் சூழ உள்ள ஒளிவட்டத் தைப் பாருங்கள். நீலமும் வெண்மையும் கலந்த வெளிர் நீலம். அந்த ஒளிவெள்ளத்தை நாம் நெருங்க முடியாது. அது தேவதைக ளுக்கே உரியது. இச்சையில் உழலும் அற்ப மனிதர்களான எம்மை அது பொசுக்கிவிடும். நமது அக அழுக்குகளை நீக்கி, நம்மைப் புனிதர்களாகவும் அது ஆக்கவல்லது. இத னோடு இன்னுமொரு செய்தியையும் நான் உங்களுக்குக் கூறவேண்டும்:"'
"இன்று ஏகாதசி. இன்றிலிருந்து நான்காம் நாள் பூரணை. யசோவின் ஜன்ம நட்சத்திர மான சுவாதி கூடும் நாள். அன்று நடக்கும் சுபகாரியங்களையும் அற்புதங்களையும் காத் திருந்து பார்க்குமாறு எமது யசோ எங்களைக் கேட்டுக்கொள்ளுகிறாள்.”' கிருஷ்ணியின் நீண்ட பிரசங்கத்துடன் சனம் கலையத்
தொடங்கியது.
தேவதையின் வாக்குக்கு அமைவாக

ஊரில் எல்லாமே நடந்தன. பெளர்ணமி அன்று அதி காலையிலேயே - வேத மந்திர உச்சாடனம், மாயக்குரலாக பிரபஞ்ச ) வெளியெங்கும் ஒலித்
தது.
வேத பாராயண ஒலியைத் தொடர்ந்து, இதய பீடத்திலி ருந்து விகசிக்கும் காயத்திரி மந்திர ஒலி, தமிழ் வேத மான தேவார ) பாராயணம் இவை அனைத் தும் அந்தச் சூழலுக்கு ஒரு புனித உணர்வையும் பரவசத்
தையும் அளித்தது.
உதயத்துக்கு முன்பாகவே அந்த அற் புதங்கள் நிகழத்தொடங்கின. கிழக்கில் இருந்து பரவிய அந்த அதிசய வாசத்துடன் அது ஆரம்பமானது. அந்த வாசத்தில் முகை *உடைந்த மல்லிகையின் மணமே தூக்கலாக
இருந்தது.
அனல் வீசும் அந்தப் பங்குனி மாதத்தில் வழமைக்கு மாறாகக் குளிர்காற்று வீசியது. லேசான மழைத்தூறல். நிலத்தைத் தழுவிய மழைத்துளிகள் வெண் பனிக்கட்டிகளாக மாறின.
உலர்ந்த மரங்களிலும், செடிகளிலும், கொடிகளிலும், முகை உலர்ந்த உவர்ப் புல் லிலும், கட்டாந்தரையில் தலை நெகிழ்த்திச் சிரிக்கும் சிறு பூக்களிலும் உயிர்ப்பின் நித் தியம் சலனமுற்றது.
எல்லாத் தருக்களுமே மலர்களைச் சுமந்தி ருந்தன. மலர்கள் பெரிதாகவும் இருந்தன. அம்மலர்களில் இருந்து, தேன் - அளவுக்கு அதிகமாகச் சுரந்து சொரிந்தன.

Page 34
பனை, தென்னை, கமுகு, வாழை போன்ற மரங்கள் கிளை விட்டுச் சடைத்துத் தலைய சைத்தன. கிளைகள் தொகை தொகையாகக் காய்களையும் கனிகளையும் சுமந்திருந்தன.
தூரத்தில் சற்று வடமேற்காக, கருநீலமும் ஊதாவும் கலவையிட மலைமுகடுகள். மலைச்சாரலின் குளிர்ச்சியும், அருவியின் சலசலப்பும், ஆறு ஓடிவரும் ஓசையும் கேட் டது. மலையில் இருந்து வழுவிவந்த ஆறு, கிருஷ்ணியின் வீட்டுப் பக்கமாக இருந்த வெள்ள வாய்க்காலில் அகலித்துப் பாய்ந் தது. ஆற்றுநீர் பளிங்குபோல் சுழித்து ஓடி யது. 'இது பேராற்றின் கிளை நதியா? பேரா றுதானா?” கிருஷ்ணி குழம்பினாள். ஆற்று நீரில் புரண்டு, பாய்ந்து உருளும் மீன்கள்: பருத்த வாழை, கெண்டை, மீசை முளைத்த கெளுத்தி என நீருடன் அள்ளுண்டு போயின. வெள்ளவாய்க்காலை மேவி ஓடிய ஆறு, ஊரின் தெருவெளியைக் கடந்து சென்று, கிழக்குக் கடலில் சங்கமமாகியது. ஆற்றின் கரையோரம் மக்கள் கூட்டம் கரைபுரண்டது.
சலவைக்கல் பதித்த, தனது அழகிய வீட்டைவிட்டு வெளியே வந்த கிருஷ்ணிக்கு ஆச்சரியம் தாளவில்லை. ஆற்று நீரில் கால் வைத்தவள், 'உய்' எனும் ஓசையுடன் கால் களை வெளியே இழுத்துக்கொண்டாள். ஆற்று நீரின் குளிர்ச்சியை அவளால் தாள் முடியவில்லை.
கலைமடியா தெம்பா யப்பப்படியாயப்பா பாப்பான்கான்
ஆற்றங்கரையை ஒட்டி அடர்ந்த புல்வெளி கள். அந்த வெளியில் மேயும் உரோமம் அடர்ந்த செம்மறி ஆடுகள். பலவகையான உயரினப் பசுக்கள் - ஐஷெயர், ஜேர்ஸி, ஃ ப்றிசியன் - எல்லாமே சீமைப் பசுக்கள். இவற்றுடன் சிந்தி, காங்கேயம் பசுக்களும், காளைகளும் காணப்பட்டன. கரிய மலை போன்ற எருமைக் கிடாரிகளும், அவற்றைத் துரத்தித் தொத்தத் துடிக்கும் கடாக்களும் அங்கு உலாவின.
குறிஞ்சியும் மருதமும் மயங்கிக் கிடந்த அந்தப் பெருவெளியில், பச்சைப்பசேலென்ற வயற்தடங்களும் இருந்தன. வயல்களில் பொன் வண்ண நெல்மணிகளைத் தாங்கி, தலை

வெளிச்சம் கார்த்திகை- மார்கழி 2004
சாய்ந்து நிற்கும் நெற்பயிர்கள்.
ஊருக்கு வடக்கே, பாடசாலைக்கு அருகாக , ஆற்றின் கிளைநதி ஓடுவதாகச் சனம் கூறக் கேட்டு, கிருஷ்ணி அதைப்பார்ப்பதற்குப் பிர தானவீதி வழியாக விரைந்தாள். வீதியின் இரு மருங்கும் புதிய அழகான வீடுகள். எல்லாமே பளிங்கு போன்ற சலவைக் கற் களாலானவை. இவ்விடங்களிலெல்லாம் - முன்னர் - சுவரிடிந்து, கூரைசரிந்து, மூளி யாய் நின்ற குடிசைகளைத்தான் அவள் பார்த் திருக்கிறாள். அது அவளது ஞாபகத்துக்கு
வந்தது.
வீதியில் புதிய நவீன ரக வாகனங்க ளுடன் இரட்டைக்குதிரைகள் பூட்டிய வண்டி - களையும் கண்டாள். அவ்வண்டிகளில் தேவர் களை ஒத்த புருஷர்கள் பவனி வந்தார்கள். அவர்கள் அந்நிய தேசத்து வணிகர்கள் என்பதை அவள் சற்றுக் காலதாமதமாகவே
அறிந்து கொண்டாள்.
வீதியால் உலாவந்த தெய்வக்களை பொருந்திய அந்த அழகிய பெண்ணைக் கண்ட ஊர் இளைஞர்கள் எதுவித கல்மிஷ மும் இல்லாமல் அவளை நிமிர்ந்து பார்த் தார்கள். அவள் பார்வை எதேச்சையாக அவர்கள் மீது பட்டவேளை, தங்களை அறி யாமலேயே அவர்கள் ஒதுங்கி நடந்தார்கள். கண்களாலேயே கற்பழிக்கும் இளைஞர் களைக்கண்டு பழக்கப்பட்ட அவளுக்கு, இது அதிசயமாய் இருந்தது. எதையுமே பொருட் படுத்தாதவளாக நதியைப் பார்ப்பதற்கு
அவள் விரைந்து நடந்தாள்.
பாடசாலை புதுப்பொலிவுடன் - பல கட்டி டங்களோடு நிமிர்ந்துநின்றது. அதை விழிமலர்த்திப் பார்த்தவள், தனது சிநேகிதி யசோவுக்கு மனதளவில் நன்றி சொல்லிக் கொள்ளவும் செய்தாள்.
பாடசாலை மதிலுக்கு அப்பால், முத்து மாரியம்மன் கோயிற்படிகளை அலசியபடி, சலசலப்புடன் அந்தக் கிளைந்தி பாய்ந்தது. அவ்வாற்றின் போக்கும் கிழக்கு நோக்கிய தாகத்தான் இருந்தது. கோயிலின் பக்கமாக

Page 35
வெளிச்சம் கார்த்திகை - மார்கழி 2004
அந்த ஆற்றுக்குப் படித்துறைகள் இருந்தன. ஊர் மக்கள் படித்துறைவழி இறங்கி நீராடு
வதையும் கிருஷ்ணி கண்டாள்.
மொ
நதியை அண்மித்ததும் அதன் மகி மையை முதன்முதலாக அவள் உணர்ந்து கொண்டாள். நதியின் கரையோரமாக இருந்த கற்பாறைகள் பொற்படிவுகளுடன் ஜொலித்தன. பொற்படிவுகளின் இடையே பட்டையிடா வைரங்கள் நிரையிட்டன.
ஆற்றில் இறங்கிய கிருஷ்ணி, கரையில் கிடந்த கூழாங்கற்கள் சிலவற்றை எடுத்து நீரில் தோய்த்தாள். என்ன அதியசயம்! நீர் பட்டதும் அந்தக் கற்கள் பொற்கட்டிகளாக மாற்றமடைந்தன. இந்தப் புதுமை தெரிய வந்தால் சன சமுத்திரமே இங்கு மல்லாடும் என நினைத்து, தன்னுள் சிரித்துக்கொண் டாள். குதிரை வண்டிகளில் உலாவரும் விதேசி வியாபாரிகளுக்கும் இது இன்னமும் தெரியாதோ? என நினைத்துக்கொள்ளவும் செய்தாள்.
திடீரென, அவளைச் சூழ - அவளுக்கு நன்கு பழக்கப்பட்ட அந்த உதைப்பு. அத்து டன் அந்த மனங்கவரும் வாசம். யசோ வந்திருப்பதை உணர்ந்து கொண்ட கிருஷ்ணி மிகுந்த குதூகலமடைந்தாள்.
கிருஷ்ணிக்கு அருகாகப் பறந்துவந்த அந்தப் பட்டுப்பூச்சி பேசியது:
"கிருஷ்ணி! எல்லாம் திருப்திதானே.”
"திருப்தி... பூரண திருப்தி.”
குரலை உயர்த்திக் கிருஷ்ணியால் பேச முடியவில்லை.
அந்தப் பட்டுப்பூச்சியின் ஈர்ப்பு வலையில் அகப்பட்டு - வசமிழந்து, அதன் பின்னால் அவள் அள்ளுண்டு போனாள்.
''கிருஷ்ணி! என்னைத் தொடராதே, தொடர்ந்து வருவது உனக்கு ஆபத்து..."

தேவதையின் கட்டளையைப் பொருட் படுத்தாது அவள் அதனை நெருங்கினாள்.
"கிருஷ்ணி! எனது ஒளிவட்டத்துள் நீ வந்தால் சாம்பலாகிவிடுவாய். சற்று மேலே பார் நீ தொட முடியாத தூரத்தில் நான் இருப்பது உனக்குத் தெரியும்."
மேலே பார்த்த கிருஷ்ணி, அந்தத் தேவ மங்கை, உயரஉயரப் பறந்து போவதைக் கவ னம் கொண்டாள். கண்களுக்குப் புலனாகாத உயரத்தில், ஒரு சிறு பொட்டாக அவள் பறந்தாள். அவளது குரல் மட்டும் இவளுக் குக் கேட்டுக்கொண்டே இருந்தது. இவளுக் கும் சிறகுகள் முளைத்ததான ஓர் உணர்வு. இவளும் உயரஉயரப் பறக்க முயற்சித்தாள். குறித்த ஓர் உயரத்துக்குமேல் இவளால் பறக்க முடியவில்லை. இவளது சிறகுகள் பலமி ழந்து போன வேளை, அந்தப் பாரிய கரு முகிற் திரள்வந்து இவளைப் பலமாகத் தாக் கியது. நிலைகுலைந்து போன இவள் - தலைகீழாக வந்து, உடல் சிதறத் தரையில் விழுந்தாள். தரையில் விழுந்து கூழாகிப் போன இவளை, யாரோ கூட்டி அள்ளி எடுப் பதுபோல் இருந்தது.
'யாரது அம்மாவா?'
பதறியவள் விழித்துக்கொண்டாள்.
'இது கனவா..? இல்லை இல்லை..... இது கனவாக இருக்க முடியாது....'
அவளது உள்மனம் ஓலமிட்டது.
'ஓ....! அந்த உதைப்பும் மனதை வசீகரிக் கும் அந்த வாசமும் என்னோடு இழைகி றதே....'
'இது கனவா..? இல்லை இல்லை....'
வாய் புலம்பியபடி, கிருஷ்ணி மீளவும் அயர்ந்து தூங்கினாள். ஆழ்ந்த உறக்கம் அவளைத் தழுவிக்கொண்டது.

Page 36
0 மு.அநாதரட்சகன்
//
காலையில் வீட்டைவிட்டுக் தோல்வியைச் சுமந்தபடிதான்
நெஞ்சில் கனக்கும் துய வில்லை.
என் முயற்சி பலிதமாகாத்த யுமே நிறைந்துபோயுள்ளது. 6 கிறது.
வீட்டில் ஆறஅமர இருந்து பலநாட்களாகிவிட்டன.
பசியை மறந்து தூக்கம் ளுக்கு மீதியாகித் தொடர்கி எத்தனை நாட்கள்தான் இ வீட்டுக்கு வந்ததும் அவன கண்மணி.... கண்மணி.... ! தனக்கு ஆறுதல் தேடி அ. மனம் எண்ணிக்கொள்கிறது. க சேட்டைக்கழற்றி சுவரில் மா "இருளில் ... அங்கே... கண்ம யில் ஆழ்ந்தபடி இருக்கிறான்

வெளிச்சம் கார்த்திகை - மார்கழி 2004
சIII II III|
கிளம்பி வழக்கம்போல், இன்றும் - வந்திருக்கிறேன்.
ரைத் தாங்கிக்கொள்ள முடிய
பால் மனதில் ஏமாற்றமும் விரக்தி பயிறுவேறு புகைந்து பசியெடுக்
வாய்க்கு ருசியாகச் சாப்பிட்டுப்
கெட்டுப்போன நாட்களே எங்க ன்றன. ப்படி...? களத் தேடுகிறேன்.
எங்கே போயிருப்பாள்? பலவரிடம் போயிருப்பாள் என கூடத்தின் உள்ளே காலடியெடுத்து எட்டிவிட்டுத் திரும்புகிறேன். -ணி தூணில் சாய்ந்து யோசனை

Page 37
24 வெளிச்சம் கார்த்திகை - மார்கழி 2004.
முன்னரெல்லாம் நான் வெளியே போனால் என் வரவுக்காக வாசல்வரை வந்து காத்து இருப்பவள். என்னை வரவேற்பதில் அக மகிழ்ந்து போயிருப்பவள்.
இப்போது... அந்தச் சம்பிரதாயமெல்லாம் அவசியமற்றுப்போய்விட்டது அவளுக்கு. சமீப நாட்களாக அவளது நடவடிக்கைகள் அர்த்தமிழந்து வருவதாக எனக்குப்படுகிறது.
என்னிடம் முகம் மலர்த்திப்பேசி எத்தனை நாட்களாகிவிட்டன.
அந்தச் சம்பவத்திற்கு பின்னர் பேயறைந்த வள்போலாகிவிட்டாள்.
ஆரம்பத்தில், செய்தியறிந்து உறவினர் கள், நண்பர்கள், அயலவர்களென நிறையப் பேர் அனுதாபம் தெரிவிக்க வந்துபோயினர்.
இப்போ அவர்களின் வரவும் அருகி விட்டது.
கடைசிவரை அவளுக்கு ஆறுதலளிக்க என்னைவிட்டால் யார் இருக்கிறார்கள்.
நித்திய சோகத்தில் தவித்து என்னவாக மாறிவிட்டாள். நன்றாக உடல் நலிந்து விட்டாள். பாவம், எப்படி, அவளுக்கு ஆறு தல் கூறுவது .....?
கண்மணி எனக்கு வாழ்க்கைப்பட்டதிலி ருந்து, அப்படியென்ன சுகத்தைக் கண்டாள். மத்தியதரக்குடும்ப வாழ்வின் நெருக்கடிகளை என்னுடன் பகிர்ந்து வந்திருக்கிறாள். எனது அற்ப சம்பளத்தில் போதாமைகளைச் சரிக் கட்டி வாழப்பழகியிருந்தாள். இந்த முப்பத் தைந்து வருட தாம்பத்தியத்தின் பேறு அந்த மகன் ஒருத்தன் தான். எங்கள் வாழ்வின் பிடிப்பே அவனாக இருக்கையில்...
அவனைப் பறிகொடுத்துவிட்டு வாழ் வது.....
எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்..?

இடம்பெயர்ந்துபோய் வடமராட்சியில் தெரிந்தவர் வீட்டில் ஒதுங்கி, வீடு, காணி சொத்து என்ற நினைப்பில் மீளவும் வந்து குடியேறியபோதுதான் அந்தத் துயரம் எங்க ளுக்கு நேரிட்டது.
கண்மணி என்னிடம் அடிக்கடி குறைப்படு வதுபோல் ... சனத்தோடு சனமாக வன்னிக் குப் போயிருந்தால் மகனைக் காப்பாற்றியி ; ருக்கலாமோ.....?
அந்த நப்பாசை' மேலெழ, கண்களில் திரைகட்டிய நீரைக் கையினால் அழுத்தித் துடைத்துக் கொள்கிறேன்.
பெற்றவர்கள் எங்கள் கண்முன் நடந்த அக்கொடிய சம்பவத்தை மறந்துவிட்டு எப்படி நிம்மதியாக...? அன்று ஜீவனடங்கிப் போன எமது வாழ்வு சோபை இழந்துவிட் டது. எங்கள் மனங்களும் இருள் மண்டிப் போய் சூனியமாகிவிட்டன.
சிதைந்துபோன வாழ்வைச் சீர்செய்யச் சொந்த இடத்தில் வந்து குடியேறியது எங்கள் தப்பா....?
அன்று.... அந்த மனம் வெறுக்கும் நாளில்.....
ஊர் அடங்கிப்போயிருந்தவேளை, நாய்க ளின் குரைப்பொலி மட்டும் கேட்டுக்கொண் டிருந்தது. வீட்டில் தாயும் பிள்ளையும் நன் றாகத் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.
கேற்றைத்தட்டி உள்ளே வந்தவர்கள் கத வைத்திறக்கும்படியும், வீட்டைச் சோதனை யிடவேண்டுமெனவும் அதட்டி உள்ளே வந்தனர். இறுதியில் எதுவும் கிடைக்காமை யால், மகனை மட்டும் விசாரணைக்காகக் கூட்டிச் செல்லவேண்டுமெனப் பிடிவாதமாக நின்றார்கள்.
அவன் பாடசாலையில் படித்துக்கொண்டி ருக்கும் மாணவன் என்பதற்கு ஆதாரங்க ளைக் காட்டினோம்.

Page 38
ஏதுமறியாத எங்கள் பிள்ளையை விட்டு விடும் படி மன்றாடினோம்.
அவர்கள் மசிவதாகத் தெரியவில்லை. பிள்ளை யை எப்படியும் தங்களுடன் கொண்டு செல்வதில்தான் உறுதியாக நின்றனர்.
பிள்ளையை ஒன்றும் செய்ய வேண்டாமெனக் கையெடுத்துக் கும்பிட்டோம்
அவர்களின் முகத்தில் எந்த இசைவையும் காண முடியவில்லை. தங்களது முடிவை மாற்றவில்லை.
எங்களைப் பிரியமன மில்லாமல் அழுது கொண்டு போனவனை, தன்னைக் காலையில் புங்கன் குளம் முகாமில் வந்து பார்க்கும்படி கூறிச் சென்றவனை இன்றுவரை தேடி அலுத்துவிட் டோம்.
எல்லாம் நேற்று நடந்ததுபோல, நினைவுத் தடத்தில் மீண்டுவர, இதயம் வெடித்துவிடும் போலிருக்கிறது.
அவனில் மிகுந்த வாஞ்சைகாட்டி வளர்த்த கண்மணியால் இதை எப்படித் தாங்கிக் கொள்ள இயலும்.
மகனில் எவ்வளவு நம்பிக்கையை வளர்த் துவிட்டிருந்தோம். கடைசிவரை எங்களுக்குத் துணையிருப்பான் என எத்தனை கற்பனை களை வளர்த்திருந்தோம்.
அந்த இனிமையான வாழ்வின் சோபிதங் களை நடு இரவில் பறிகொடுப்பதென்பது....
அவனுடன் வாழ்ந்த இனிய பொழுதுகள் இனியும் மீளமாட்டாதா என்ற ஏக்கம் என். னுள் கிளர்கிறது. துயரத்தால் மனம் வெதும்ப அவனது அறையைப் பார்க்கிறேன்.

M- வெளிச்சம் கார்த்திகை - மார்கழி 2004
3!!! 1.17 ARY 1
அதுவும் எங்கள் மனம் போல வெறிச்சுக்கிடக்
-FF!
கிறது.
மேசையில் அவனது புத்தகங்கள் பரவிக்கிடக் கின்றன. அவன்கூடவே இருக்கும் சிறிய வானொலி தீண்டுவாரற்றுக் கிடக்கி றது. ஆசையுடன் வாங்கி மேசையை அலங்கரித்த பூச்செண்டு சரிந்து போய்... அவன் அடிக்கடி விரும்பி அணிந்து அழகுபார்க்கும் அந்த நீலநிற ரீசேட், கறுப்பு ஜீன்ஸ் இன்னும் அதேயி டத்தில் ...
அவற்றையெல்லாம் ஒருமுறை ஆசைதீரத்
தொட்டுப்பார்க்க மனம் அவாவுகின்றது.
கண்மணி கூடத்தில் இருந்து என்னை அவதானித்துக் கொண்டிருப்பது தெரிகிறது.
அவளுக்கு என்ன பதில் சொல்வது...?
இன்றுவரை பிள்ளையைப் பற்றித் தகவல் எதுவும் இல்லை.
நகரிலுள்ள முகாம்கள், காவலரண்கள், பொலிஸ் நிலையம் என நாயாய் அலைந்தும் | கண்டபயன் ஒன்றுமில்லை.
இன்றும்கூட செஞ்சிலுவைச் சங்கத்துக்கு மனுக்கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். முன்னர் போல அல்ல. இப்போது என்னுள் அவநம்பிக்கையே வலுத்துவருகின்றது.
இந்நிலையில் ... அவளை.. கண்மணி யை ..... எப்படித் தேற்றுவது ...?
என் வார்த்தைகளையும் அவள் நம்ப மறுத்து வருவதாகப்படுகிறது.

Page 39
7 36 தைரராஜ
26 வெளிச்சம்.கார்த்திகை-மார்கழி 2004
முன்னர், மகன் எங்களுடன் இருந்த வேளை, அவனுக்கு ஏழரைச் சனியன் தோஷம் ஆரம்பித்துவிட்டதெனக் கூறி, தன்னை ஒறுத்து எத்தனை விரதங்கள்
இருந்திருக்கிறாள்.
சனியனுக்குச் சாந்தி செய்யவேண்டு மெனக் கோவில் கோவிலாகப் போய் வந்தி ருக்கிறாள்.
இறுதியில், எல்லாமே பயனற்றுப் போய்.... வெறுப்பைத்தருகிறது. உடல் வேறு அடித் துப்போட்டதுபோல அசதியாக இருக்கின்றது.
மேசையிலிருந்த தண்ணீரை அருந்திவிட் டுக் கட்டிலில் வந்து சாய்கிறேன்.
பிள்ளையைப் பற்றி ஏதும் தகவல் கொண்டு வந்திருப்பேன் என எண்ணி அருகில் வந்து நிற்கிறாள்.
அவளின் முகத்தை எதிர்கொள்ளும் துணிவு எனக்கு வரவில்லை. எனது இயலா
மையை எப்படி அவளிடம் இயம்புவது?
விசும்பியபடி என்னைப் பார்க்கும் அவ ளில் இரக்கம் மேலிடுகிறது.
கண்மணியுடன் மனம்விட்டுப்பேசி, இத யத்திலிருந்து எழும் துயரத்தை அவளுடன் பகிர்ந்து, ஆரத்தழுவி ஆறுதல் கூறவேண்டும் என மனம் உந்துகிறது.
பின்னர் சமநிலைக்கு மீண்டு,
''கண்மணி.... கண்மணி.... எனக்குப் பசிக் குது. சாப்பிட ஏதும்..?"
சூழ்நிலையிலிருந்து நழுவும் பிரயத்தனத் துடன் கேட்கிறேன்.
என்னை ஒருமுறை பரிவுடன் பார்த்து விட்டுக் கண்களைத் துடைத்தபடி சமையல றைக்குள் செல்கிறாள்.
பின்தொடர்ந்து சென்று கீழே அமர்கிறேன்.

ஆக்கிவைத்ததைக் கோப்பையில் போட்டு நான் சாப்பிடுவதைப் பார்த்துக்கொண்டி
ருக்கிறாள்.
"கண்மணி... நீ சாப்பிட்டியா...?”
"........'
என்னிடம் குற்றவுணர்வு அரும்புகிறது. அவள் என்னிடம் ஏதோ கேட்க விழைவதும் தயங்குவதுமாக இருக்கிறாள்.
"இண்டைக்குப் பேப்பர் பாத்தனீங்களோ...?”
- நீண்ட மௌனம் கலைத்து கேட்கிறாள்.
"இல்லையப்பா... ஏன்...?”
“கிழக்கரியாலையிலை ஒரு கிணத்துக்கை எலும்புக்கூடுகள் கிடக்குதாம்...?"
“யார் சொன்னது....?”
"பரஞ்சோதியக்கா வந்து சொன்னவ...”
« 99
''அவங்கள் பிடிச்சுக் கொண்டுபோன பிள்ளையளின்ரையாம், அதில எங்கட பிள் ளையோட பிடிச்ச விதானைப் பெடியன்ரையு மாம்...''
'.........''
"அதுதான்.... சிறாப்பர் சிவலிங்கத்தாற்ரை
மகன்"
நான் சாப்பிட்டபடி அவள் சொல்வதை உள்வாங்கிக் கொண்டிருக்கிறேன்.
அவளிருக்கும் நிலையில் இச்செய்தி அவளை மோசமாகப் பாதிக்கும் என்பதால், அலட்சியமாகக் கூறுகிறேன். "பேப்பரில் வாறதெல்லாம் உண்மையே..."

Page 40
"ஓ, நீங்கள் இப்ப வரவர எனக்கு ஒண்டும் சொல்லுறேல்லை"
- எனச்சொல்லியபடி மீன் குழம்பை ஊற்று கிறாள்.
இடையில் நீண்ட பெருமூச்சொன்றை விட்டுவிட்டு,
"என்ரை பிள்ளை இப்ப என்ன சாப்பிடு குதோ....? பட்டினிதான் கிடக்குதோ....?
பெற்றவளின் ஆதங்கம் என்னையும் உறுத் துகிறது. அவளை ஏறிட்டுப்பார்க்க இய லாமல் எழுந்து சென்று கட்டிலில் சாய்கி றேன்.
அவளுக்கும் என் இயலாமை புரிந்திருக்க வேண்டும். அதற்குமேல் எதுவும் பேசாமல், அருகில் வெறுந்தரையில் படுக்கின்றாள்.
பிள்ளை இவ்வேளை என்னவானானோ என்ற தவிப்பில் கணமும் அவன் நினைவில் உருகி வருகிறாள் சமீப நாட்களாக ...
Tாக.
இரவில் அடிக்கடி கனவுகண்டு பதறிய டித்து எழுவதும், ஓ... வென்று நீண்டநேரம் அழுவதும், நித்திரையின்றித் தவிப்பதுமாகத் தான் அவளது பொழுதுகள் கழிகின்றன.
நானும் நன்றாகக் கண்ணயர்ந்து போயி ருந்தவேளை... நடுநிசியில் ...
அப்படித்தான் ஏதோ கனவுகண்டிருக்க வேண்டும்.
''ஐயோ... ஐயோ .... என்ரை பிள்ளையைக் கொண்டுபோறாங்கள்....'
அவளது அலறல் என்னைத் திடுக்கிட வைக்க அதிர்ந்துபோகிறேன். கீழே அருகில் படுத்திருந்தவளை உற்றுப்பார்க்கிறேன்.
முகம் ஒளியிழந்து விகாரமாய்....
கண்கள் செம்மை பாரித்து வெறித்தபடி....

வெளிச்சம் கார்த்திகை - மார்கழி 2004
வார்த்தைகள் பிசிறுதட்டிக் குழம்பியபடி....
உடல் பலவீனமாய் நடுங்கியபடி....
- அவள் சுயத்தை இழந்துவிட்டது தெரி கிறது.
"கண்மணி.... கண்மணி....''
ஆதரவாக அழைத்தபடி அவள் கைகளைப் பற்றுகிறேன். கைகளை வெடுக்கெனப் பறித்துக்கொள்கிறாள்.
அவளது உடலசைவில் ஒரு மிரட்சி, வேகம் தெரிகிறது.
கலைந்து கிடந்த கூந்தலை அப்படியே அலையவிட்டுவிட்டு, சேலையை அள்ளித் தூக்கிப்பிடித்தபடி வெளியே ஓட எத்தனிக் கிறாள்.
''கண்மணி.... கண்மணி. எங்கே.....'
- இன்னொருமுறை அதட்டுகிறேன்.
அவள் எதையும் காதில் வாங்கிக்கொள் ளும் நிலையில் இல்லை.
பிள்ளையைத் தேடித் தெருவில் இறங்கத் துணிந்துவிட்டாள்.
அவளில் ஓர் தர்மாவேசம் வெளிப்படு கிறது.
பிள்ளையைப் பறிகொடுத்த கவலை அவளுக்கு.
இருவரையும் இழந்துவிட்ட சோகத்தில் நான் தவித்து நிற்கிறேன்.
| படைப்பாளிகளிடமிருந்து படைப்புக்கள் எதிர் vாம்க்கப்படுகிறது. தமிழிழ தேசிய இலக்கியத் துக்கானதும், சமூக மேம்பாட்டுக்கானதும் நவீனப்ரேக்கியதனது பைடைப்புக்களைத் |ந்து காவப்பணியில் இணையுங்கள்.

Page 41
வெளிச்சம் கார்த்திகை - மர்கழி 2004
வேலச் சண்டை விசரணை அல்லது சமாதானக் கிழவனின் சாவு
புதவகிரத்தினது
1,15. 1'. - - -

பேச்சுவார்த்தை சுமந்து சுமந்து களைத்த
சமாதானக் கிழவனின் உயிர்போய்
இந்தோ விறைத்துக் கிடக்கிறான். இருந்த இறுதிமூச்சையும் வெளியிலெறிந்து
நேற்றுத்தான் விழிபிதுங்கி
மூச்சுத்திணறிச் சரிந்தான். எந்த உரிமைக்காரரும் அருகின்றி எடுத்துப் பால்வார்க்க எவருமின்றி
வேண்டியவர்களுக்கு வார்த்தையொன்றும் கூறாமல் பொதுக்கெனப்போனது உயிர்.
உயிர்கொண்டுலவிய நாளில் ரை
ஓடியோடி வந்த பலரைக் காணவில்லை ஒதுங்கிக்கொண்டனர் எல்லோரும். தனித்துக் கிடக்கிறது சடலம்.
மூக்கில் நீர்வழிய
கண்களில் பீளைசாறி ஈமொய்க்கக் கிடக்கிறது இளைத்த உடல். இழவுசொல்லிகளுக்காகக் காத்திருக்கிறது
உறுதிப்படுத்துவதற்காக உலகம்.. எவ்வண்ணம் இறப்பு நிகழ்ந்தது?
மூச்சுத்திணறியதா?
கொலையா?
தற்கொலையா? இனிப் பிரேதபரிசோதனை நடத்துவர்
மத்தியஸ்தமருத்துவர்.
பாவம் சமாதானக் கிழவன் எத்தனை நம்பிக்கையுடன் இருந்தான். தன் பிள்ளைகளிருவரும் ஒன்றாயமர்ந்து
' பேசித் தீர்த்து தாயுறுதியிலுள்ள எல்லைகளை ஏற்கும்
நாளொன்று சாத்தியமாகுமென புன்னகைவீசித் திரிந்தான்
பொக்கைவாய்க்கிழவன். தன் அந்திமத்துக்கு முன்னம்
மகளும்
மகனும் பகைமறந்து ஒருவருக்கொருவர் உருகுவரெனும்
எதிர்பார்ப்பில் இடிவிழுந்துபோக

Page 42

-- வெளிச்சம் கார்த்திகை - மார்கழி2004,
நின்றபடி சரிந்தான் நிகழ்ந்தது மரணம்.
ஏனோ தெரியாது
சமாதானக் கிழவனை பிறந்த நாளிருந்தே மகளுக்குப் பிடிக்காது. ஊராரின் பழிச்சொல்லுக்கு அஞ்சி
இடைக்கிடை வருவாள்
ஏதேனும் பேசுவாள்
சந்தர்ப்பம் பார்த்திருந்து தகப்பன் துரோகமிழைப்பதாய்ச் சொல்லி நிமிர்ந்து தம்பிமுகம் பாராது போய்விடுவாள். சாதுரியமாய் ஊரை வசப்படுத்துவதில்
மகள் மகாசூரி. சண்டையை வலிந்திழுத்துவிட்டு
அடியாட்களை ஏவி எல்லைகளை முன்னகர்த்துவாள்.
தனக்கே காணிமுழுதும் சொந்தமெனும் நினைப்பில் தம்பி வளவுக்கான தண்ணீர்ப்பங்கைக்கூட
தரமறுப்பாள். ஒவ்வொரு தடவையும் ஊர்பழிப்பது தம்பியைத்தான். அக்காக்காரியின் ஆட்டமறியாமல் அவளையே நம்பும் அயல்.
கிழவன் பாவம். உள்ளே அழுதபடி உறங்கிப்போவான்.
திரும்பவும் எழுவான். பிள்ளைகளை ஒன்றாக்க முயன்று
தோற்றுச் சுருள்வான். எத்தனை முறை முயன்று
எத்தனை முறை தோற்று மீண்டும் மீண்டும் எத்தனித்தகிழவன்
இம்முறை செத்தேபோனான்.
சடலஒப்படைப்பு யாரிடம் எடுத்துப்போகவும் வருமா உலங்கு வானூர்தி?
மரணச்செய்தி விளம்பரத்துக்காக த்திருக்கின்றன எல்லா மக்கள் தினசரிகளும்.
பாவம் கிழவன் இனியாவது உறங்கட்டுமே எரியும்வரை.

Page 43
வெளிச்சம் கார்த்திகை - மார்கழி 2004
பண்டைத்தமிழ் இலக்கியப் பதிவுகள் காலத்தைக் கடந்து நிற்பவை. செந்நாப் புலவர் பாடிய பாடல்களின் தொகுப்பு இன்று எம் கையில் கிடைத்துள்ளது. அவற்றுள் ''புறநானூறு" என்னும் 400 பாடல்களின் தொகுப்பு பண்டைத் தமிழரின் புறவாழ்வியல் பற்றிய செய்திகளை உள்ளடக்கியது. வாய் மொழியாக வழங்கிவந்த பாடல்கள் புறநா னூறு' என்ற தொகுப்பாக அமைக்கப்பட்ட போது கடவுள் வாழ்த்துப் பாடலும் 400 எனும் எண் ணிக்கையில் சேர்க்கப்பட் டுள்ளது. நூல் தொகுப்பு
எத்திசைச் யாரால், யார் கேட்டதற்கு இணங்கத் தெரகுக்கப்பட்டது
அத்திசை என்ற விளக்கமும் இல்லை. எனவே வரலாறு பதிவு செய்யப்பட்டபோது உண் மையான செய்திகள் மறைக் கப்பட்ட நிலையையும் நாம் உணர முடிகிறது.
சேரன்மன்
எனினும் புறநானூற்றுப் பாடல்கள் கூறும் செய்தி கள் பண்டைய தமிழரின் புறவாழ்வியலைக் காட்சிப் படுத்திக் காட்டும் சிறந்த கவிதைகள். இன்றைய கவி
ஞர்களின் முன்னோடிக் ளான சங்கப் புலவரின் புலமைத்திறனுக்குச் சான் றாக நின்று நிலைத்திருக் கும் செய்யுள்கள். அவற் றைப் படிக்கும்போது எமது இலக்கிய வழியின் தடத்தை அறியலாம். இப்போதைய கவிஞர்களின் கவிதைக்குப் பாடுபொருளாக அமைய வேண்டியது என்ன என வழிகாட்டும் 'திசைகாட்டி'

யாகவும் புறநானூற்றுப் பாடல்கள் தோன்று வதை, பாடல்களை ஆழமாகக் கருத்தூன்றிக் கற்போர் உணர்ந்துகொள்வர். செந்தமிழ் நடையில் சிறந்த கருத்துக்கள் பாடல்களிலே விரவிக்கிடக்கின்றன. தமிழ்மொழியின் கவி தைப் பண்பு நலனையும் ஊடகத் தொடர்பான ஆற்றல் நிலையையும் வெளிக்கொணர ஒரு மீள் கற்கைநெறியும் இன்று இன்றியமை யாதது.
அத்தகைய கற்கைநெறியிலே செல்லும் முயற்சியில் இக்கட்டுரை சில பாடல்களை வகைமாதிரியாக எடுத்துக்காட்ட முனைகி
றது. குறிப்பாகப் பெண்பாற் புலவர்களின் புலமைத்தி றனையும் வாழ்க்கை நோக்
கையும் வெளிப்படுத்தும். = செலினும்
தமிழர் வாழ்வியல் மரபில் =ச் சோறே
பெண்மையின் பங்கை எப் படி இணைக்கலாம் என்று எண்ணியிருப் போருக்கு ஒரு கைவிளக்காகவும் இது பயன்படும்.
சண்முகதாஷ்
புறநானூற்றுத் தொகுப் பிலே பாடல்கள் பாடிய புல வர்கள் பலராவர். பல் வேறு தொழில் செய்வோ ரும் பல் வேறிடங்களில் வாழ்ந்தவரும் எனப் புலவர் கள் நாடெங்கும் பரந்து வாழ்ந்ததை இது காட்டுகி றது. இவர்களில் ஒளவை யார் என்னும் பெண்பாற் புலவர் பாடிய பாடல் பெண் மை பற்றிய குணநலன் ஒன் றைத் தனித்துவமாகக் காட் டுகிறது. பெண் ஒருத்திக்கு இவ்வளவு நெஞ்சுரம் இருந் ததா என வியக்கவைக்கும் இடம். "பெண்ணென்று பூமி தனில் பிறந்துவிட்டால் பெரும் பீழை இருக்குதடி” என்று இருபதாம் நூற்

Page 44
றாண்டின் இணையற்ற கவிஞன் பாரதி பாடினான். பாரதிக்குப் புறநானூற்றுப் பாடல் களைப் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனவே ஒளவையின் புலமை வீரம் தெரிய வில்லை.
44:1; *1:.::::::::41pi' '': "144'•titi::::::
ஒளவையின் பாடல்கள் அவருடைய தமிழ்மொழிப் புலமையையும் யாருக்கும் அஞ்சாத வீர உணர்வையும் வெளிப்படுத் தும். மன்னன் அவையிலே சென்று நல்ல தமிழ்ப் பாடல்களைப் பாடிப் பாராட்டும் பரிசும் பெறும் புலவர் வாழ்க்கையில் ஆண், பெண் என்ற வேறுபாடு அந்நாளில் இருக்க வில்லை. மன்னனுடன் நட்புடையராக இருந்த புலவர்களில் ஒளவையாரும் ஒருவர். 'ஒளவை' என்ற பெயரில் பலர் இருந்ததா கவும் கருதப்படுகிறது. ஆனால் 'அதிய மான் நெடுமானஞ்சி' எனும் மன்னனிடம் பாடிப்பரிசில் பெறச் சென்ற ஒளவையார் பற்றிய செய்தி அவருடைய பாடல் மூலம் பெறப்பட்டது.புலமையின் செருக் கும் பெண்மையெனப் பணிந்து போகாத பண்புநலனையும் அப்பாடல் பதிவு செய்துள்ளது. மன்னனைப் பற்றித் துணி வோடு எடுத்துரைக்கும் ஆற் றலும் மனவுரமும் கல்விப் புலமையால் அக் காலத்துப் பெண்மை பெற்றிருந்ததையே
அப்பாடல் சான்று காட்டி நிற்கிறது. கற்றோ ருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு உண்டு என்ற கருத்தை முதலில் வலியுறுத்திக் காட் டியவர் ஒளவையார் எனலாம். மொழி ஆற்ற லால் வாழ்க்கைக்குத் தேவையானதைப் பெறமுடி யும். வயிற்றுப்பசிக்கு வேண்டிய சோறு திக்கெங்கும் உண்டு. உன் மன்னனை மட்டும் நான் நம்பியிருக்கவில்லை என்று நிறு திட்டமாகக் கூறும் அவருடைய நெஞ் சுரம் புலமை ஆற்றலால் பெற்ற பெருவீரம் என்றால் மிகையாகாது. நாட்டை ஆளும் மன்னனையே துச்சமாகக் கருதித் தூக்கி யெறிந்து பேசும் பெண்மையின் கற்பு நெறி எமக்கும் வேண்டும். ஒளவையார் பாடிய பாடல் அவரது சான்றாண்மையையும் காட்டி நிற்கிறது.

வெளிச்சம் கார்த்தனை - மார்கழி 2004
''வாயிலோயே வாயிலோயே வள்ளியோர் செவிமுதல் வயங்கு மொழி வித்தி
தாம் முன்னியது முடிக்கும் முரணுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்
- கைப் பரிசிலர்க்கு அடையா வாயிலோயே கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி தன் அறி யலன்கொல் என்னறி யலன்
- கொல் அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென வறுந்தலை உலகமும் அன்றே அதனால் காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர் மழுவுடைக் காட்டகத்து அற்றே
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே"
(புறநானூறு: 206)
II
மன்னன் அவையிலே சென்று தமிழால் பாடி அதற்கான பரிசினையும் பெற
லாம் என்ற நோக்கோடு அதி யமான் நெடுமான் அஞ்சி யின் அரண்மனை சென்றார் ஒளவையார் அரண்மனை யின் அடையாத வாயிலிலே சென்று தான் வந்திருக்கும்
செய்தியை மன்னனுக்கு வாயில் காப்போன் மூலம் அறிவித்துவிட்டு நீண்ட நேரமாகக் காத்துநின்றார். வாயில் -
காவலன் செய்தியை மன்னனுக்கு அனுப்பி விட்டுத் தன் கடமையில் நிற்கிறான். நேரம் கடந்து கொண்டி ருந்தது. புலவர் ஒளவையா ருக்கு உள்ளே செல்வதற்கான மன்னன் அழைப்பு வரவில்லை. ஒளவையார் பொறு மையோடு காத்திருக்கிறார். அவர் உள்ளத் தில் ஒரு எண்ணம் தோன்றுகிறது. பெண் என்று கருதி மன்னன் காலம் தாழ்த்துகி றானோ? மரபான நடைமுறையை அவர் நினைவில் காண்கிறார். ஆனால் அடுத்த கணம் அந்த நினைப்பை உதறி எறிந்து விட்டுப் புலமையின் ஆற்றலைக் கவசமாக் கிப் பாடுகிறார்.
வாயிற்காவலனை விளித்து அவர் பாடிய

Page 45
வெளிச்சம் கார்ததகை - மார்கழி 2004
முறைமை அதனைத் தெளிவாக உணர்த் துகிறது. அவருடைய புலமை நெறிநின்று வீரமாக அவனை விளித்துக் கூறும் செய்தி தான் முக்கியமானது. உன்னுடைய மன்னன் தன்னிலை அறியாதவன் போலும்! என்னு டைய தரத்தையும் அறியாதவனா? ஒளவை யின் வினா கூரிய வாள்வீச்சாகச் சொல்வீச் சாக வந்து விழுகிறது.
'இதுவரை பரிசிலர்க்கு அடையாத வாயி லைக் காத்து நிற்பவனே' என வாயிற்காப் போனை அவன் செய்யும் உன்னதமான பணியை நினைவூட்டுகிறார். இந்த அரண் மனை வாயிலின் சிறப்புத் தனித்துவமானது. தமிழின் சிறப்பையும் வளத்தையும் வரம் பிலா ஆற்றலையும் எங்கும் பரப்பும் புலமை யாளரை வரவேற்கும் அடையாத வாயில் என்ற பெருமையை உன் மன்னன் மறந்து . விட்டான். தமிழ்ப் புலமையாளர் வாழ்வை வளம்படுத்துவதற்காகப் பரிசில் வழங்கும் மன்னன் தன்னிலை உணரவேண்டும். எமது மொழியென்னும் ஊடகத்தினூடாக அவன் நிலை எங்கும் பரப்பப்படுகிறது என்பதை அவன் உணரவில்லை. அவன் வாழ்வும் , வரலாறும் எமது பாடல்களில் பேசப்பட்டு எல்லோரும் அறியும் வண்ணம் நாம் செய்யும் செம்மையான பணியை அவன் மதிக்கா விட்டால் நாம் கவலை கொள்ளமாட்டோம். அறிவும் புகழும் உடையோர் இல்லாத வறிய இடத்தில் நாம் வாழவிரும்பவில்லை. எனவே இசைக் கருவியான படைக்கலங்களைப் பையிலே கட்டி எடுத்துக்கொண்டு செல்கி றோம். ஒளவையாரின் கூற்று மன்னனின் குணநலக் குறைவைப் பாடலிலே மறைமுக மாகப் பதிவு செய்துவிட்டது.
புலமையின் ஆற்றலை விளக்க ஒளவை யார் எடுத்துக்காட்டிய உவமை இங்கு மனங் கொள்ளத்தக்கது. மரத்தைத் துணித்து தொழில் செய்யும் தச்சன் கைவல்லமை யுடையவனாக இருந்தால் காட்டிற்குச் சென் றால் அந்தக் காட்டை அவன் ஏற்றவகையில் சிறப்பாகப் பயன்படுத்துவான். அவன் தொழி லின் திறமையை வெளிப்படுத்துவான். அதே போன்று மொழிப்புலமையோர் எங்கே சென் றாலும் அப்புலமையால் நலம் தரும் பணி

யைச் செய்வர். கல்வியாளருக்கு எத்திசை யிலே சென்றாலும் சோறுகிடைக்கும் என்று ஒளவை கூறுவது வெறும் வயிற்றுப் பசி யைத் தீர்ப்பதற்காக மட்டும் நாம் மன்னரைப் பாடவில்லை. மன்னர் குறையை நாடறியச் செய்யவும் பாடுகிறோம் என்பதைத்தான் காட்டுகிறது.
பெண்மைக்குக் கல்வி கவசமாக இணைந்து இருந்தால் அதன் வீரம் எப்படியிருக்கும் என்பதைப் புறநானூறு காட்டுகிறது. தன்னு
டைய புலமையால் யார்க்கும் அஞ்சாமல் உள்ளதை உள்ளவாறு எடுத்துரைக்கும் நேர்மை நாம் அறிய வேண்டியது. அதே வேளையில் பண்டைத்தமிழர் மரபில் பெண் ணின் மென்மை மட்டும் பேசப்படவில்லை. அதன் திண்மையும் பேசப்பட்டுள்ளது. அந்த மரபு மீண்டும் இன்று துளிர்ப்பதை எமது பெண் போராளிகளின் கவிதையில் காணும் போது பெண்மையின் பேராற்றல் என்பது ஒரு வற்றாத வளந்தியாக உலகை வலம்வரு வது உணர்த்தப்படுகிறது.
எமது மண்ணில் களத்துப் போராடிய வீராங்கனைகளின் உள்ளத்து உரம் எனும் போராயுதம் ஒளவையின் பாடல்வழி வந்த ஊற்று என்பதில் ஐயமில்லை. புதிய புறநா னூறு தொகுக்கும் வரலாற்றுப் பாதையில் தமிழ்மொழி தரித்துநிற்கும் இந்த வேளை யில் புலமையாற்றல்மிகுந்த பெண்போராளிக் கவிஞர்களின் 'புதிய புறநானூறு' தொகுக் கப்படும் பணி விரைவில் நடைபெறவேண் டும். பூவொன்று புயலாகியதை ஒளவையின் பாடல் காட்சிப்படுத்தியுள்ளது. அவருடைய கல்விச் செருக்கையே பாரதி 'திமிர்ந்த ஞானச் செருக்கு' என்றான். இருபத்தியோராம் நூற்றாண்டு தகவல் தொழில்நுட்ப ஆண் டாகி உலகை வலம் வரும் வேளையில் தமிழ்மொழிப் புலமை தந்த பதிவுகளை மீள் பதிவு செய்து எமது வரலாற்றுச் செல்நெறி யைச் சீர்செய்ய வேண்டியுள்ளது. அதற்கான பெண்மையின் பங்களிப்பு புதியதொரு உத வும் கரம் என்பதில் ஐயமில்லை. போர் வெற்றி படைத்த பெண் எழுத்திலும் வெற்றிதரக்
காத்திருக்கிறாள்.

Page 46
உயிரோடு வேர்கிழிந்து நரம்புக்குள் மட்டும் ஈரம் கசியும் உணர்வு
யாராலும் அறியப்படாத என் கனவுலகிலும் இல்லாத
வீரம் மகத்தானது. விடுபட்ட தமிழன் எல்லைகளில் எதிரியின்
முகாம்கள். வெடிக்கும் சத்தத்தில் மட்டும் அடையாளப் படுத்தியது. இடிமின்னலில் வரும் மழையைப் போல் ஒளிக்கீற்றுக்களின் உள்ளே
13
என் கனவிலும்
காணாமல் போனீர்கள்.
அதனால் இன்று வானமாய் ஆனீர்கள். நிழலில்
ஆலமரமாக இருந்தாலும் கற்பாறை இடுக்கே உட்புகுந்து இருந்தாலும் வேர் குளிர்காயவும் செய்யும். இரவு நேரங்களில் வெளிச்சம் தேடிப்போனவன் நீ. நிலவின் பின் முதுகு தெரியாது
அதேபோல் நீயும் திரும்பி வரப்போவதில்லை. ஆனால் இரவில் உனது வெளிச்சம் வழிகாட்டிக் கொண்டிருக்கும். உனது விரல் பிடித்து வளர்ந்த நகம் வெட்டும்போது குளறியும், தலையில்
* 1:191.21:34!!! '14 41 1 4:''1,441': 4 ''

வெளிச்சம் கார்த்திகை - மார்கழி 2004
லை, 43 )
எண்ணெய் வைக்கும் போது
அழுதும், காய்ச்சலில் ஒரு குளுசை
போடுவதற்கு கத்திக் கூச்சலிட்டும்,
இரவானதும் வீட்டுக்குள் அடங்கும்
ஒரு தாயுடன் இருந்த காலம் மட்டும்
எப்படி. இன்று எத்தனை தாய்க்குப்
பிள்ளை நீ. உன்னோடு பழகிய அந்த
ஆல மரத்தடி ஒற்றைப் பனையடி நல்ல தண்ணீர் கோயில் -
கிணற்றடி வாய் பேச முடிந்தால் உன்னைப் பற்றி நிறையச்
சொல்லும்.
கால
D இல்லாத வீரம்
ITHI 111"
செல்வா
உன்னோடு பழகியவர்கள் பயிற்சி முகாம் முற்றம் நடந்து சென்றபாதை
இன்னும் தனிமைப்படவில்லை.
நீண்ட தூரம் இலக்கு நோக்கி நடந்த
கால்கள், களைத்துவிட்ட பாதை
இங்கே இருக்கும் மட்டும், தூரக்கண்ணோட்டத்தில் பார்வை இழந்த இடங்கள்
இருக்கு மட்டும், வலிந்து தொண்டை இறுகி
காய்ந்தும்
உட்புகும் சொட்டுத் தண்ணீரிலும்
கூட உன் முகம் தூய சிந்தனையில் விடுதலைப் பரவசத்தில்

Page 47
44 டெளிச்சம்
வெளிச்சம் கார்ததகை - மார்கழி 2004
1 Mahat.சிகள்#karthik
பழந்தமிழ் குடித்து நிறைந்தது அதனால் வீரவெறி உன்னோடு ஒட்டியதுமில்லை, கோழைத்தனம் உன்னோடு நெருங்கியதுமில்லை.
எதிரியின் குண்டு மழையில் வெடித்துச் சிதறி, துண்டங்களாக இரத்தம் உறைந்த நிலத்தில் கிடந்தும், புகைமண்டலத்தில்
மூச்சுத்திணறிய போதும் கூட் நுரையீரல் வரைவந்த 'காற்று
முதன் முதலில் தீண்டாமல் திரும்பிய போதுதான் நீ மாறிவிட்டாய்.
அடிவேரைச் சாய்க்கும் உனது முடிவை நினைக்கையில்,
ஆழ உலுக்கி அதிர்வில் இருந்து எழும்பும் எதிரிக்கு நடுக்கம் ஏற்படும். எங்கிருந்து வருவான்? எப்படி வருவான்? யாருக்கும் தெரியாது. வெடி ஓசையின் அதிர்வில் நடந்து முடிந்துவிட்டது செய்தி வரும். ஆழக்கடலில் மீள முடியாமல் சென்றுவரும் போதும் உயிர்கொல்லிகள் வழிமறித்து வழிமறித்து சாவுகொண்ட உன்னைவிட கடலுக்கும் திமிர் உண்டு. ஓட ஓடத் துரத்தி வெடிக்கையில் கூடுதலான ஆனந்த கொந்தளிப்பில்

- கெக்கலிகள் !
எம்மையும் மீறிவிட்டாய். எத்தனை பேர்கள் வரிசையாக வந்து கொண்டிருக்க இனியும் எத்தனை நாட்கள் எங்கள் மண்ணில் இருக்கப் போகின்றாய். செத்தவனைக் கேட்கவும் | அவன் உடலைப் பார்க்கவும் முடியாது. காயப்பட்டவனாக ஒருவரும் இருக்கவும் முடியாது. தூரவரும் சத்தம்கேட்டு ஓடியவனைக் கேள், கரும்புலி எப்படிப்பட்டவன். நீ எதிர்பார்த்த திசையில் சண்டை நடக்கும். நீ எதிர்பார்க்காத திசையில் கரும்புலி வெடிக்கும். நீ செத்ததிற்கான அடையாளம் இல்லாமல் உனது குடும்பம் பிறந்தநாள் கொண்டாடும், இனிமேல் ஆவது இறந்ததிற்கான அடையாளம் கொண்டு பிறந்தநாள் கொண்டாடு. உன்னையே எதிர்பார்த்திருப்பான் இனிமேலும் வந்துவிடாதே சாகவில்லை பிறக்கின்றான் கரும்புலி.

Page 48
சமகால வரலாற்றைச் சொல்லு
பச்சை 2
வைக
:11:1:1 '-
15 88) |
பச்சைவயல் கனவு
பயோ'
தாமரைச்செல்வி
வெளியீடு: சுப்ரம் பிரசுராலயம்
இல. 17, குமரபுரம், பரந்தன்.
விலை 250. 00

வெளிச்சம் கார்த்திகை - மார்கழி 2004
ம் சிறந்த நாவல்
து;
7 5ஜ0 2215ாழியா? 14பிகா 21:12
0 செ.யோகநாதன்
ஈழத்து நாவல் வரலாறை எழுதுகின்ற விமர்சகர்கள் மிகுந்த கவனிப்போடு எழுதத்தக்க விதத்தில் வெளியாகி உள்ள ஆக்கங்கள் மிகக் குறைவாகவே உள்ளன. எமது வாழ்வை மிக நுணுக்கமாக அணுகி வரலாற்றுப்போக்குப் பிச காமல் எழுதப்பட்ட நாவல்களை கைவிரல்களுக் குள் எண்ணி அடக்கிவிடலாம். அதுவும் பெரும் பாலான நாவல்கள் சம்பவக்கோவைகளாகவும் தமிழக நாவல்களின் கதை சொல்லும் பாணி யிலும் அமைந்திருக்கின்றன. தமிழ் மக்களின் வாழ்வுப்போக்கை வரலாற்றோடு சேர்த்து நுணுக் கமாக அணுகி எழுதும் நாவலாசிரியர்கள் ஈழத்தமிழ் இலக்கியத்திற்கு வாய்க்காமற்போன நிலைமை அண்மைக்காலமாக மெல்ல மெல்ல மாறிவருகின்றது. குறிப்பாக வன்னிப்பகுதியிலி ருந்து எழுதப்பட்ட அனுபவசாரம் வாய்ந்த நாவல் களை எடுத்துச் சொல்லலாம். இத்தகைய பின் புலத்திலேதான் தாமரைச்செல்வியின் புதிய நாவ லான பச்சைவயல் கனவு வெளியாகி உள்ளது.
தாமரைச் செல்வியினுடைய கதா மாந்தர்கள் மிகச் சாதாரணமானவர்களே. வன்னிப் பகுதியின் மண்ணிலே இவர்கள் தவழ்ந்து விளையாடியவர் கள். ஒருவரோடு ஒருவர் நேயம் பாராட்டி உறவு கொண்டாடியவர்கள். மண்வாசனை வீசத் தமது கனவுகளை வளர்த்துக் கொண்டவர்கள். இவர்க ளின் மொழி எவ்வித நெருடலும் அற்றது. உப்புக் கரிக்கும் வியர்வை மணத்தில் இவர்களின் கனவு கள் பகிரங்கப்படுத்தப்பட்டது. ஒரு குறுகிய எல்லையை உடைய சின்னஞ்சிறு உலகத்தினுள் இவர்கள் சலனமோ, சஞ்சலமோ இன்றி வாழ்ந்து வந்தனர். இந்த வாழ்வு திடீர் என்று தலைகீழாக மாறியது. இராணுவம் தன் கொடூரமான கரங்க ளால் இந்த மக்களின் அமைதியான வாழ்க் கையை நாசமாக்கியது. பசுமை படர்ந்திருந்த வயல்களில், சிற்றோடைகளில், வீடுகளில், கோயில் களில், பள்ளிக்கூடங்களில் இரத்தம் அள்ளித்

Page 49
வெளிச்சம் கார்த்திகை - மார்கழி 2004
46 தாக
தெளிக்கப்பட்டது. இராணுவமும், இந்திய அமை திப்படையும், முகத்தை மறைத்துக் கொண்ட பேடிகளும் இந்த மக்களின் வாழ்க்கையை, இந்த மண்ணின் அமைதியை, காற்றின் நேயத்தை, சுக்கல் சுக்கலாகக் கிழித்து வீசின. இந்த வாழ்க்கை கிளிநொச்சி மண்ணைச் சோகம் ததும்பும் விளைநிலமாக மாற்றி அமைத்தது. பச்சைவயல் கனவு இந்தக் காலகட்டத்து வாழ் வைத்தான் கதையாகச் சொல்ல முனைந்துள்ளது. இந்தக் கதையிலுள்ள எல்லாப் பாத்திரங்களும் கிளிநொச்சி, மண்ணின் மணம் வீசும் மனிதர் களே. வன்னி நிலங்களைத் தமது கடும் உழைப் பால் பொன் விளையும் பூமியாக்க கிளிநொச்சி, பரந்தன் பகுதிகளுக்கு யாழ்.குடாநாட்டின் பல் வேறு திக்குகளில் இருந்தும் சென்று குடியேறி னர். நிறையக் கனவுகளோடு உழைப்பையே பல மாகக் கொண்டு அந்த மண்ணை இவர்கள் வளம் கொழிக்கும் பூமியாக மாற்றியமைத்தனர். அந்த மண்ணைப் பொன்விளையும் பூமியாக மாற்ற வேண்டும் என்ற கனவைத்தவிர இவர்க ளிடம் வேறு எந்த ஆசையும் இருக்கவில்லை.
பாரம்பரியமான வாழ்வே என்பதற்குப் பதி லாக இந்த மண்ணோடு சார்ந்த வாழ்வை இவர் கள் ஆரம்பித்தனர். இந்த மக்கள் புற உலகின் நிர்ப்பந்தங்களுக்குத் திடீர் என்று ஆட்பட்டபோது இவர்களின் உளப்பாங்கே தலைகீழாக மாறிப் போயிற்று. அமைதியான கனவுகள் இரத்தம் படரத்தொடங்கின. வாழ்வைப் பற்றிய கவலை இவர்களின் சிந்தனையை முற்றிலுமே சீரழித்தது.
கிளிநொச்சிப் பகுதியின் வாழ்க்கையை, அதன் அமைதிப்போக்கிலிருந்து அடக்குமுறைகள் சூழ் ந்தகாலத்தை தாமரைச்செல்வி வெகு கவனத் தோடு பதிவு செய்திருக்கிறார். விவசாயிகளை யும், பெண்களையும், கோரமான ஆக்கிரமிப்பு எவ்விதத்தில் சிதைத்துச் சீரழித்தது என்பதைச் சம்பவத் தொடர்ச்சிகளோடு மனதைப் பிணிக்கும் விதத்தில் தாமரைச்செல்வி சொல்லியிருக் கிறார். மெல்ல, மெல்ல அந்த மண்ணில் ஏற்பட்ட முன்னேற்றங்களையும், அதைவிட வேக மாக நிகழ்ந்த நாசங்களையும் பாத்திரங்கள் ஊடாக அவர்களின் வாழ்க்கைச் சிதைவுகளின் வழியே எந்தவித பொய்மையுமின்றி தாமரைச் செல்வி சொல்லிக் கதையை நகர்த்தியிருக்கிறார்.
கிளிநொச்சிப் பிரதேசத்தில் வாழ்ந்தவர் களும் அதை அறிந்தவர்களும் இந்தக் கதை யோடு மேலும் நெருக்கமடைவார்கள். கிளி நொச்சியில் உயிரோடு வாழ்ந்த பலர் உண் மையாக இயங்கிய இயக்கங்கள் என்பன இந்த நாவலில் சிறப்பாகவே பதிவு செய்யப்பட்டிருக் கின்றன. ஒரு காலகட்டத்தில் கிளிநொச்சியில்

சாதாரண மக்களுக்குப் பலவிதத்திலும் உதவி செய்த நவஜீவன இயக்கமும், அதன் போதகர் களும் நாவலிலே உலவிச் செல்கிறார்கள். அவர் களின் புன்னகை, கனிவான பேச்சு என்பன உயிர்ப்போடு நம் கண்ணெதிரே வந்துபோகிறது. இதுபோல சின்னஞ்சிறு தூண், மரம் என்பன கூட நம்முன் பிண்டப்பிரமாணமாகத் தோன்றி மறைகிறது. யுத்தத்தினால் சீரழிந்துபோன கிளி நொச்சி, பரந்தன் பகுதி மக்களின் வாழ்வை மட்டுமல்லாது கிளிநொச்சி பரந்தன் பகுதிகளின் நகர அமைப்பையும் இந்த நாவல் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறது.
தமிழில் வெளியான நல்ல ஒரு சமகால வர லாற்று நாவலாக இதைக்குறிப்பிடும் வேளையிற் துல்லியமாகத் தெரியும் குறைகளைப் பற்றியும் சொல்லும் அவசியமுள்ளது.
கிளிநொச்சி, பரந்தனின் வரலாற்றில் சமூக மாற்றங்களை ஏற்படுத்திய அரசியல் போக்கும் சமுதாய நெருக்கடிகளும் மிக முக்கியமானவை. அரசியல்வாதிகளின் ஆதிக்கமும், தாக்கங்களும் தனிமனித வாழ்க்கையை வெகுவாகப் பாதித் துள்ளது. அவர்கள் மக்களை ஏமாற்றியிருக் கிறார்கள், வஞ்சித்திருக்கிறார்கள், போக்குக்காட் டியிருக்கிறார்கள். இதுபோலவே அரசாங்க அதி காரிகளும் இப்பிரதேச மக்களின் வாழ்வுப்போக்கை அழுத்தமாகத் தீர்மானிப்பவர்களாக இருந்திருக்கி றார்கள். குறிப்பாக விவசாய வளர்ச்சியில் இந்த இரு பகுதியினரும் மக்களோடு பெருமளவு உடன் பட்டும் அது போலவே, முரண்பட்டுமிருக்கிறார் கள். இந்தப்போக்கு அழுத்தமாக இந்த நாவலில் பதிவு செய்யப்படவில்லை.
கிளிநொச்சிப் பகுதியின் பண்பாட்டுப் போக்கு ஏனைய தமிழ்ப் பகுதிகளைவிட வேறுபட்டதாகவே இருந்து வந்திருக்கின்றது. அவர்களுடைய கடு மையான வாழ்க்கைமுறை இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
கிளிநொச்சி, பரந்தன் பகுதிகளின் வாழ்க் கைப் போக்கையும் மனித உணர்வுகளையும் முன் னூறு பக்கங்களுள் முழுமையாகக் கொண்டுவர முடியாது என்பது உண்மைதான். ஆனாலும் தாம ரைச்செல்வி இந்தக் கடினமான முயற்சியில் இறங்கிக் கணிசமான வெற்றியடைந்திருக்கிறார் என்பதற்காக அவரை தமிழ்ப்படைப்புலகம் மன மாரப் பாராட்டும். தனக்கே உரிய எளிமையான நடையில் மிக நுணுக்கமாக இந்த நாவலை எழுதியுள்ள தாமரைச்செல்வி மேலும் இதன் தொடர்ச்சியையும் எழுதுவது ஈழத்தமிழ் இலக்கி யத்துக்கு வளம் சேர்க்கும் முயற்சியாக அமையும். இந்தநூல் அழகாக வெளியிடப்பட்டுள்ளது.

Page 50
சிறந்த குழந்தை இலக்கியம்
காடு =
கடு - நாடு
11 -2 , ,
அவு64டன்
வெளியீடு: கலையழகன் வெளியீட்டகம் புதுத்தோட்டம், நெல்லியடி கிழக்கு, கரவெட்டி.
2ம் லெப்.கலையழகனின் ஆறாம் ஆண்டு நினைவாக இலவச பிரசுரம்

வெளிச்சம் கார்த்திகை - மார்கழி 2004
= நாடு
சிறுவர் நாடகம்
0யோ.சத்யன்
தமிழில் குழந்தை இலக்கியங்கள் அரிதா கவே வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அவர் களுக்காகப் படைக்கப்படும் குழந்தை இலக்கி யங்கள் பெரும்பாலானவை அவர்களின் மன நிலையை தெரிந்துகொள்ளத்தக்கதாகவும், அவர்களால் இலகுவில் விளங்கிக் கொள்ளத் தக்கதாகவும் இருப்பதில்லை. அவர்களின் உள் வியல், சொல்வளம் என்பவற்றை அறியாத வையாக அவற்றில் பெரும்பாலானவை வெளி யாகிக் கொண்டிருக்கின்றன. குழந்தை இலக்கி யத்தில் ஓவியங்கள் என்பவை மிகவும் முக்கியமானது. குழ்ந்தைகள் தங்களுக்காக எழுதப்படும் கதைகளில் உள்ள ஓவியங்களை மிகவும் விரும்புவார்கள். அந்த ஓவியங்களைப் பார்த்தே தங்கள் கற்பனையை வளர்த்து அந் தக் கதையோடு மேலும் நெருக்கமாக ஒன்றிப் போய்விடுவார்கள். உலகில் சிறந்த குழந்தை இலக்கியங்கள் யாவும் இத்தகைய சிறப்பி னையும், பெருமையையும் பெற்றவையே.
இத்தகைய சிறப்புடன் நீண்ட காலத்தின் பின் தமிழிலே காடு = நாடு என்ற குழந்தை இலக்கியம் வெளியாகியுள்ளது. குழந்தைகள் மிகவும் விருப்பத்தோடும், ஆசையோடும் இந் தப் புத்தகத்தை படித்து மகிழ்வார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
குழந்தைகள் தாமாகவே படித்து இயல்பா கவே இந்த நாடகத்தை நடிக்கும் விதத்தில் அவர்களின் மனதைக் கவரும் விதத்தில் அவர் களின் மனோதத்துவத்திற்கு ஏற்ப அவர்களின் கபடற்ற பிஞ்சு மொழியில் இந்த நாடகத்தை வளநாடன் எழுதியுள்ளார். குரங்குகளுடைய வாழ்க்கை அவற்றின் இயல்பு, குறும்புகள்,

Page 51
AQ வெளிச்சம் கார்த்திகை - மார்கழி 2004
நடமாட்டம் என்பனவற்றை அவர்களின் பேச்சு களின் ஊடே குழந்தைகள் எளிதில் விளங்கிக் கொள்ளும் சித்திரமாக வளநாடன் பதிவு செய்திருக்கிறார்.
கவிதை வரிகள்போல குரங்குகளின் உரை யாடலை வளநாடன் அமைத்துள்ளார். குரங்கு களுக்கே உரிய சுறுசுறுப்பு, நடமாட்டம், பழக்க வழக்கம் என்பனவற்றைச் சின்னச் சின்ன வார்த்தைகளில் வளநாடன் பதிவு செய்திருக் கிறார். குரங்குகளின் பார்வை ஊடாக அவற் றின் மொழியிலே ஒவ்வொரு காட்சியையும் வளநாடன் குழந்தைகள் ஆர்வத்தோடு படிக் கும்படி விறுவிறுப்பாக அமைத்துள்ளார்.
குரங்குகளைச் சுற்றிவளைக்கும் பெரிய மிருகங்களின் வருகையை மிக அருமையாக வளநாடன் காட்சிப்படுத்தியுள்ளார்.
ஆக்கிரமித்த மிருகங்களைக் கண்டு குரங் குகள் அஞ்சவில்லை. தம்மை அச்சுறுத்திப் பழங்களைத் தின்னவரும் ஆக்கிரமிப்புகளைக்
குரங்குகள் தைரியமாக எதிர்ப்பதைச் சிறந்த . முறையிற் படமாக்கியுள்ளார்.
ஆக்கிரமிப்பும், அநியாயமும் செய்யவரும் மிருகங்களை மிகத்தைரியத்துடன் குரங்குகள் தோற்கடிப்பதை இறுதிக் காட்சியிலே நாடகா சிரியர் வெகு நுட்பமாக மனதைத் தொடும் விதத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இந்த நாடகத்தை நடிக்கும் குழந்தைகளும், பார்க்கும் குழந்தைகளும் தைரியமும், மகிழ்ச்சியும் கொள்ளும் விதத்தில் இந்த நாடகத்தின் உள்ளடக்கம் ஆக்கப்பட்டுள்ளது. குரங்குகளின் உரையாடல், குழந்தைகள் இசை யோடும், உற்சாகத்தோடும் பாடத்தக்க விதத் தில் மிக நுட்பமாக அமைக்கப்பட்டுள்ளது. குரங்குகளின் சுறுசுறுப்பான இயல்பை அவற் றின் வார்த்தைகளுக்கூடாக வளநாடன் சிறப் பாகப் பதிவு செய்து நாடகத்தின் போக்கை விறுவிறுப்பாக்கியிருக்கிறார். குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் நாடகத்தின் விரைவான போக்கு அமைக்கப்பட்டுள்ளது.
நாடகத்தைப் பார்க்கும் சிறுவர்கள் அவர் களை அறியாமலே சிறந்த கருத்தினையும், வழிகாட்டுதலையும் இந்த நாடகத்தின் மூலம் பெற்றுக்கொள்வார்கள். இந்த வகையில்

காலத்துக்கு ஏற்ற உன்னதமான கருத்தினைக் குழந்தைகளின் மனதிலே வளநாடன் செம் மையாகப் பதிய வைத்துள்ளார்.
"பாதகம் செய்பவரைக் கண்டால் பயம் கொள்ளலாகாது பாப்பா. மோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா" என்றும், "அச்சம் தவிர்" எனவும் மகாகவி பாரதி குழந்தைகளைப் பார்த்துக் கூறினான். அந்தக் குரலை வளநாடனின் இந்த நாட கத்தில் உறுதியாகவும், கலையழகோடும் துல்லியமாகக் கேட்கமுடிகிறது.
சின்னஞ்சிறிய நாடகமாயினும் இந்த அற் புதமான கருத்தைக் கலையழகோடு காணும் போது குழந்தைகளுக்குக் கிடைத்த அரும் பொக் கிஷமாக இந்தச் சின்னஞ்சிறிய நாடகத்தை உணர்ந்துகொள்ள முடிகிறது.
பல ஆண்டுகளின் முன்னர் குழந்தை இலக் கியம் தனது பொற்காலத்தைக் கண்டிருந்தது. கண்ணன், பூஞ்சோலை, சித்திரக்குள்ளன், ஜில் ஜில், ஜிங்கி, கரும்பு என்று பல்வேறு குழந்தை களுக்கான இதழ்கள் வெளியாகிக்கொண்டி ருந்தன. இந்த இதழ்கள் குழந்தைகளின் உள் ளத்தை வெகுவாகக் கவர்ந்தன. அவர்களை ஆர்வமுள்ள வாசகர்கள் ஆக்கின. இவற்றோடு குழந்தைகளுக்காக அவர்களை ஆர்வத்தோடு படிக்கத்தூண்டும் விதத்தில் சிறிய அளவில் குழந்தைக் கதைப் புத்தகங்கள் பெருமளவில் வெளியாகின. அந்தப் பொற்காலம் இல்லாமல் போயிற்று. வளநாடனின் காடு = நாடு என்ற சின்னஞ்சிறு வடிவில் அற்புதமான ஓவியங்க ளோடு வெளியாகியுள்ள இந்தக் குழந்தை இலக்கியம் மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக் கையையும் தருகிறது.
வளநாடன் போன்றவர்கள் இத்தகைய குழந்தை இலக்கியங்களைத் தொடர்ந்து வெளி யிடுவதன் மூலம் தமிழில் புதிய நம்பிக்கையை யும் குழந்தை இலக்கியத்தின் பொற்காலத்தை யும் உருவாக்க வேண்டும். இந்தச் சிறந்த குழந்தை இலக்கியத்தை ஒவ்வொரு பெற்றோ ரும் தங்கள் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று இந்தச் சந்தர்ப்பத் தில் வலியுறுத்துகிறேன். வளநாடனின் கதைக்கு அருமையான ஓவியங்களை வரைந்த ஓவியருக்கும் தமிழ் - தனது மனம் நிறைந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்ளும்.
©

Page 52
நினைவு மீன்
நினைவுள் மீள்தல்
நினைவுள் மீள்தல்
தன4. விஷ்ணு
வெளியீடு: விஷால் பதிப்பகம்
இமையாணன் கிழக்கு, உடுப்பிட்டி.

வெளிச்சம் கார்த்திகை - மார்கழி 2004 49
மதிப்பீடு
01 வரநாதப் roாகுமரன்
'நினைவுள் மீள்தல்' என்னும் இக்கவிதைத் தொகுப்பு கவிஞர் தானா.விஷ்ணுவின் முதலாவது தொகுதியாகும். இத்தொகுதியில் 25 கவிதைகள் உள்ளன. இக்கவிதைகள் அவரது சொந்த அநுபவம் சார்ந்தவை. தான் கண்டதை, கேட்டதை - தனது சுய அநுபவங்களுக்குட்பட்டவற்றை அவர் கவிதையாக் கியுள்ளார். அவரது அநுபவ எல்லை விரிந்தது. எமக்கு முன்னே எரிகின்ற பிரச்சினையாகவுள்ள இராணுவ ஆக்கிரமிப்பினை மட்டுமன்றி, ஆக்கிரமிப்பினால் சிதைந்து போன அமைதி வாழ்க்கை இராணுவ அட்டூழியத்துள் நசுங்கி வருந்தும் மக்களின் துயரநிலை, இடப்பெயர் வின் கொடூர அநுபவங்கள், ஆக்கிரமிப்பின் மத்தியிலும் இருப்பில் உறுதிகொண்ட மக்களின் வாழ்வியற் கோலங் கள், சமாதானத்தின்மீதான எதிர்பார்ப்பு, தனிமனித மன அவசம், இழந்துபோன நட்பு, தொலைந்துபோன காதல் எனப் பல விடயங்களையும் அவர் தன் கவிதை களுக்குக் கருப்பொருளாக்கியுள்ளார்.
தான் அறிந்ததை எவருக்காகவும் எதற்காகவும் ஒளித்துக்கொள்ளாமல் வெளியிடும் போக்கு விஷ்ணுவி டம் உண்டு. அந்தவகையில் தனது மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாதவகையில் கவிதைகளைப் படைக் கும் கவிஞனாக விஷ்ணுவைக் காண்கிறேன்.
தானா.விஷ்ணுவின், தனிமனித அவசங்களை வெளிப்படுத்தும் கவிதைகள் தனித்து நோக்கத் தக்கவை. சிக்கலானதும், வெளிப்படுத்துவதற்குக் கூச்சந் தருவது மான மென்மையான மன உணர்வுகளைக் கலைத்து வத்துடன் கவிதைகளில் அவர் கொண்டுவரும் தன்மை வியக்கத்தக்கதாகும். இத்தகைய கவிதைகள் பலவற் றில் நம்பிக்கை வரட்சியும் வாழ்க்கை மீதான வெறுப்பு ணர்வும் வெளிப்பட்டு நிற்பது உண்மையே. எனினும் நல்வாழ்க்கையின் எதிர்பார்ப்புக்களை - இழப்பின் மத்தியிலும் நம்பிக்கைகளை அவர் கவிதைகள் சுட்டிக் காட்டத் தவறவில்லை. வாழ்க்கை பற்றியும் கவிதை பற்றியும் ஆழமான புரிதலின்றி இக்கவிதைகளை அவர்
ஆக்கியிருத்தல் முடியாது.
"போ தூரம் போ என்னில் இருந்து உன்னை விலக்கி. இடிந்து போய்க்கிடக்கும் என் வீட்டுச் சுவரில்

Page 53
50 வெளிச்சம் கார்த்திகை - மார்கழி 2004
ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு பல்லி உன்னை ஞாபகமூட்டுவது எனக்குப் போதுமானது.''
என்னும் கவிதை வரிகளை வகைமாதிரியாக எடுத்துக் காட்டலாம்.
கவிதைக்கு அழகு சேர்க்கும் வகையில் படிமங்கள், குறியீடுகள், இருண்மை என்பன விஷ்ணுவின் கவிதை களில் பரவலாகப் பயின்று வருகின்றன. குறிப்பாக, இருண்மை அவரது கவிதைகளில் நன்கு பிரயோகமாகி வந்துள்ளது. அவ் இருண்மை அவரது கவிதைகளுக் குத் தனிக் கவனிப்பையே பெற்றுத் தந்துள்ளன. தன் கவிதைகளில் இருண்மையை விஷ்ணு அதிகமாகக் கையாளுவதற்கு அவர் கவிதையினூடே வெளிப்படுத்த முனைந்த கருத்து நிலையே காரணம் எனலாம். இரா ணுவ ஆக்கிரமிப்பின் அச்சுறுத்தல் தமிழர் வாழ் பிர தேசங்களில் முனைப்புற்றிருந்த ஒரு காலப்பகுதியிலே (2001 - 2003) விஷ்ணு அவ் இராணுவ அடக்குமுறை களுக்கு எதிரானதும் அவ் இராணுவ அடக்குமுறைகள் விளைவித்த துன்பியல் நிகழ்வுகள் சம்பந்தமானதுமான கவிதைகளைப் படைத்திருந்தார். சொல்ல விழைந்த விடயங்களை நேரடியாக வெளிப்படுத்த முடியாத அச் சச்சூழல் அவரை இத்தகைய இருண்மை சார்ந்து கவிதைகளைப் படைக்கத் தூண்டியிருக்கலாம். அவரது கவிதைகளில் பயின்றுவரும் இருண்மை கவிதைகளுக்கு மேலும் அழகினைச் சேர்க்கின்றது. மாறாக, இருண்மை இறுகிப்போய் கவிதையே புரியாமற் போய்விடும் அபாயநிலை விஷ்ணுவின் கவிதைகளில் இல்லை.
விஷ்ணுவின் கவிதைகளில் வரும் குறியீடுகள், படிமங்கள் என்பனவுங்கூட விரும்புதற்குரியவை. அவை எளிமையானவை: புரிந்துகொள்வதற்கு எவ்வித இடர் பாடுகளும் தராதவை. அவையுங்கூட ஒரு வகையில் போர்ச்சூழலில் அவர் தன் உள்ளக்கிடக்கையைப் பூடகமாக வெளிப்படுத்த உதவியுள்ளன. குறிப்பாக, இராணுவ அடக்குமுறைகளையே விஷ்ணு அதிகம் குறியீடாக்க முயன்றுள்ளார். இராணுவ இயந்திரத்தை 'பேய்', 'அசுரன்' என்றும், இராணுவ அடக்குமுறையை 'அசுரக்காற்று' 'வன்மக்காற்று' என்றும் அவர் குறியீடாக் குவது கவனித்தற்குரியதாகும். சிறந்த புதிய உவமைக ளைக் கவிதைகளில் பொருத்தமுறச் சேர்த்துவிடும் திறனையும் விஷ்ணுவின் கவிதைகளில் காணலாம். 'ஒரு வனாந்தரத்தின் தனிப் பாடகனாய்', 'நனைந்து போன பூனைக்குட்டிபோல' என அவர் பயன்படுத்தும் உவமைகள் புதுமையானவை: புதிய அநுபவத்தைத் தரவல்லவை.
விஷ்ணு கவிதைகளில் பயன்படுத்தும் மொழிநடை யுங்கூட அநுபவப் பரிமாற்றத்துக்கு ஏற்ற கூர்மை கொண்டு விளங்குகின்றது. சொற்களை மிகவும் லாவக மாக அவர் கையாள முனைகின்றார். தன் உளக் கருத்துகளுக்கு ஏற்பச் சொற்களை வளைத்துக்கொள் ளும் ஆற்றல் இயல்பாகவே அவரிடம் காணப்படு கின்றது. அவர் கவிதையில் பயன்படுத்தும் சொற்கள்

எளிமையானவை. எமது அன்றாடப் பேச்சுவழக்கில் தொனிப்பவை. அவை பொருத்தமான இடங்களில் பொருத்தமான முறையில் வருகின்றன.
"அவன் மனதுள் ஒரு கவிதை நொருங்கிப் போவதனை - நான் அறிந்ததே இல்லை” |
"இந்தப் பொழுதில் நீ தலையணைக் கடியில் உன் விழிகளை உதிர்த்துவிட்டு பிரமாண்டமான கனவொன்றுக்குள் புகுந்திருக்கக் கூடும்!"
விஷ்ணுவின் கூர்மையான மொழியாட்சிக்கு இதைப் போல் பல சான்றுகள் இத்தொகுதியிலுள்ளன. ஆனால் சில இடங்களில் தனது திறமையை வெளிப்படுத்தும் நோக்கில் சொற்களைப் பயன்படுத்த முனையும் போது அவரது மொழியாட்சியில் சற்றுத் தளர்ச்சி ஏற்படுவதை யும் அவதானிக்காமலிருக்க முடியவில்லை.
கவிதையிலே வார்த்தைகளுக்குள் மௌனங்களைத் தொக்கவைத்துள்ளார் விஷ்ணு. இம் மௌனங்கள் சொல்லாமல் சொல்லும் செய்திகள் பலவாகும்.' கவி தையினூடாக ஆழ்மனக் கிடக்கைகளை வெளிக் கொணரும் இடங்களில் இம் மௌனங்களின் பயன்பாடு உச்சமானதாகக் காணப்படுகிறது.
"அவசரமான கதவு திறக்கும் சத்தங்களின் எந்தத் தடயமும் அற்று எந்த ஓசையும் அற்று மறைந்து போயிற்றுப் பூனை. இருந்தும் நான் அசையாது இருக்கின்றேன் மனதுள் இன்னொரு குருட்டுப் பூனை இறங்கி இருக்கிறது இப்போது”
எனும் கவிதைவரிகளில் ஆழ்ந்து கிடக்கும் மெளனம் அறிந்து சுவைக்கத் தக்கது.
ஒட்டுமொத்தமாக நோக்குகின்றபோது தனது முதல் தொகுதியினூடாகத் தனது கவித்துவ ஆளுமையை, ஆரோக்கியமான சமுதாயப் பார்வையை வெளிப்படுத்தி யுள்ளார் கவிஞர் விஷ்ணு. பரந்த அநுபவம் , கூர்மை யான நோக்கு, நிதானம், அறிவுசார்ந்த அணுகுமுறை என்பன அவர் கவிதைகளுக்குத் தனிக் கவனிப்பைப் பெற்றுத் தந்துள்ளன. ஆர்ப்பாட்டமற்ற அவரது கவிதை நடை அநுபவப் பரிமாற்றத்தினைச் சிறப்பாகவே நிகழ்த்தி விடுகின்றது. கவிதையில் புதைந்துள்ள மௌனங்கள், குறியீடுகள், படிமங்கள், உவமைகள், இருண்மை என்பன குறிப்பிட்டுச் சொல்லத்தக்க சிறப்புமிக்கன. கவிதையின் மொழியில் இளங்கவிஞர்களுக்கு ஏற்படும் சிக்கல் விஷ்ணுவுக்கும் இருந்தபோதிலும் அவரது கவிதைமொழி புதிய வீச்சும் வேகமுங்கொண்டது என்பதை மறுத்தலியலாது.

Page 54
(டிச்சது
'அப்பன் மதப்பட்டான் ஆத்தை எதிர்ப்பட்டாள் நானும் புறப்பட்டேன்' - பழங்காலத்தில் புலவர் ஒருவரின் வரிகள் இவை. அந்த இளைஞனைக் கண்ட போது சட்டென மனதில் மின்னல் வெட்டாக இந்த வரிகள் ஓடி மறைந்தன. அவனின் தோற்றம், செயல் கள் என் கவனத்தை வலிந்து இழுத்தன. அந்த இளைஞனைப் பற்றிய அகம், புறம் சார்ந்த வர்ணிப்பு கள் அவசியமற்றவை, ஏனெனில் இவனைப் போன்ற பலரை நீங்களும் அன்றாடம் கண்டிருக்கக்கூடும். அவனைப் பற்றிய படிம வார்ப்பு உங்களின் வேலை.
'இயற்கையின் சீற்றம், மிருகங்களின் இடையறாத அச்சுறுத்தல் நடுவே வாழ்ந்த ஆதி மனிதன் தான் கொண்டிருந்த பயத்தின் காரணமாக, தன்னிலும் பார்க்க வலிமையுடையதாக, தன்னால் ஒரு போதுமே அடைய முடியாத தனது கற்பனை உலகைத்தேடும் முயற்சியில் வல்லமையுள்ள கடவுளை உருவாக்கினான்' என்று கூறும் ரஷ்ய எழுத்தாளர் மக்சிம் கோர்க்கி எல்லா வற்றையுமே மனித உழைப்பின் மாற்றீடுகளாகப் பார்த்ததைக் காண முடிகிறது.
ஒரு சிறந்த கவிதையைப் படிக் கும்போது தனக்கு அக்கவிதையின் பின்னால் உள்ள கவிஞனின் உழைப்பையே கூடுதலாக நேசிக்க முடிகிறது என்று 'இலக்கியம் பற்றி' (On Literature) என்ற கட்டுரைத் தொடரில் குறிப்பிடுகிறார் கோர்க்கி.
சக மனிதனின் உழைப்புச் சுரண்டப்பட்டுப் பொருள் குவிக்கும் அநீதியைப் பொறுக்க முடியாத இந்த மார்க்சிய எழுத்தாளர்கள் படைத்த இலக்கியங்கள் மட்டும் வாழ்ந்துகொண்டிருக்கும் சூட்சுமம் என்னவாக இருக்கும்.
இன்றைய உலக ஒழுங்கில், தனிமனிதனிலிருந்து விரியும் உல கம் காட்டி நிற்பது 'வலியது எத்த னித்து உயிர் வாழும், வளர்ச்சி
னித்து "ட்டி நிற்பது விரியும்"

Mவெளிச்சம் கார்த்திகை - மார்கழி 2004 51
5- 5
கநைடை -6
ஆத்த?
(நாரதன்
பெறும்' என்ற ஆதிகாலக் காட்டுக் கொள்கையைத் தானா? இனக் குழுமங்கள், நாடுகள் எல்லாமே 'வலியாரும் மெலியாருமாக' மாறிவிட்ட நிலையைக் காண்கிறோம்.
இந்த அமளிக்குள் மனித உரிமை, மனித நேயம், மனித நாகரிகம் என்ற கூப்பாடுகள் ஒரு புறம். மெலி யாருக்கு நீதி வழங்குவது காட்டுச் சிங்கம் ஆட்டுக்குட் டிக்கு வழங்கிய நீதி மாதிரியா? வலியசிங்கம் காட்டில் ஆதிக்கம் செலுத்தும். ஆனால் அது மிருக நேயம் பற்றிப் பொய்பேச விரும்புவதில்லை. இந்த பௌத்த சிங்கம் இலங்கைத் தீவில் பண்ணிய அட்டகாசம் கொஞ்ச நஞ்சமா? தேசியக் கொடியில் வாளேந்தி தமிழர்களை அச்சுறுத்தத் தொடங்கிய நாளிலிருந்து,
'யாழ் குடாவில் கடைசியாகச் சீறிய 'மல்ரி பரல்' எறிகணை வீச்சுவரை ஆடாத ஆட்டமாடி இப்பொழுது பெரு மூச்சு விடுகிறதா அல்லது ஓய்வெடுக் கிறதா என்று யாருக்குத் தெரியும்.
MMA வி.Mauம்.
மீண்டும் விமானங்கள் குண்டு களை வீசுமா, எறிகணைகள் வந்து விழுமா என்ற ஐயப்பாடு குடாநாட்டு மக்கள் மனதில் எழாமல் இருப்பதற் கான காரணங்களைத் தேடிப் பார்க் கிறேன். வர்த்தக நிலையங்களில் விற் பனைகள் அமோகம். கையடக்கத் தொலைபேசிகளுடன் இளைஞர்கள், யுவதிகள். சீமெந்து லொறிகள் சோத னைச் சாவடிகள் தாண்டி வந்த வண்ண முள்ளன. பெரும் வர்த்தக நிறுவனங் கள் குடாநாட்டில் குறிவைக்கின்றன. இங்குதான் செல்வம் கொழிக்கிறது என்ற நினைப்பாக்கும். அரசியல்வா திகள், அரசியல் ஆய்வாளர்கள், பத் திரிகைக்காரர்களுக்கு விளங்காத காய் நகர்த்தலை மக்கள் இனங்கண்டுவிட் டார்களா அல்லது ஒரு சூதாட்டம்

Page 55
1 52 நாரதாதாரராக
வெளிச்சம் கார்ததகை - மார்கழி 2004
போல "வாய்ப்பான் பிழைப்பான்' கோட்பாட்டில் எல்லாம் ஒப்பேறுகின்றனவா என்பதுதான் புரியவில்லை.
இப்படித்தான் வடமராட்சியில் வீடுகளைப் பூசி மினுக்கி 1987ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்தோம். மக்களின் காதுகள் குண்டுவீச்சு விமானங்களின் ஒலியை மிகத் தொலைவில் கூட உள்வாங்கும் ஆற்ற லைப் பெற்றது எல்லாம் பின்னால் வந்த நாட்களின் கதை.
அது 1987ம் ஆண்டின் முற்பகுதி . விமானக்குண்டு வீச்சிலிருந்து எவ்வாறு காப்பாற்றிக்கொள்ளலாம் என்ற விடுதலைப்புலிகளின் கைநூல்கள் மக்களின் கைக ளில் உலாவின. பதுங்குகுழிகள் வெட்டுவதற்கு வசதி உள்ளவர்களும் இல்லாதவர்களும் ஓடித்திரிந்தனர். பனங்குற்றிகள், தென்னங்குற்றிகள் தெருக்களில் நகர்ந் தன. வளிமண்டலம் வெப்பமடைந்தாலென்ன குளிர்ச்சி யடைந்தாலென்ன. "ஓய் காணும்! மனிசன்ர உயிர் போன பிறகு மரஞ்செடி என்ன இழவுக்கு" என்று பதில்வரும் வீட்டுக்கு வீடு, குறிப்பாக வடமராட்சிப் பகுதியில் (நான் அறிந்த வரையில் அக்காலப்பகுதியில் மிகவும் மும்முரமாக) பதுங்கு குழிகள் வெட்டப்பட்டன. அப்பொழுது அடிக்கடி வல்வைப் பாலத்தில் போகும் வாகனங்களை பலாலியிருந்து வரும் உலங்கு வானூர்திகள் துரத்தித் துரத்திச் சுடும். 'றொக்கற் மோட்டர்' அடிக்கும். மக்கள் செத்ததும் தான். காயப் பட்டதும்தான். உலங்கு வானூர்திச் சத்தம் கேட்டால் வாகனங்கள் வல்லைப்பாலத்தில் 'ஒலிம்பிக்' ஓட்டம் தான். ஏன் இப்படி வல்லைப் பாலத்தில் அடிக்கிறான் என்று யாருக்குமே அப்பொழுது தெரிந்திருக்கவில்லை. வல்வை ஊறணி வைத்திசாலையிலிருந்து 'குளுக் கோஸ்' ஏற்றியபடியே கொண்டுசென்ற வாகனம் வல் லையில் விமானத்தாக்குதலுக்கு இலக்காகி மருத்து வத்தாதி உட்பட அனைவரும் அதிலேயே மடிந்தனர். சின்னாபின்னப்பட்ட அந்த வாகனம் வல்லையில் அதா வது முனியப்பர் கோவிலை அண்டிய பகுதியில் துருப் பிடித்து மண்ணில் நீண்ட காலம் புதையுண்டு கிடந் ததை நீங்கள் அவ்வழியால் போய்வரும்போது காண வில்லையா? இப்பொழுது வல்லை முச்சந்தியில் பேய்க் கத்தை மரங்களைத் தெருவோரம் நட்டு, பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் நட்டு வளர்த்த சவுக்கு மர நிழல் பகுதியில் அழகுபடுத்தலில் ஈடுபட்டிருக்கிறது இராணுவம். பனை ஓலைகளை வட்டமாக வெட்டி வேலி அடைத்திருக்கின்றனர். அந்த வட்டவடிவ வடலி ஓலை அமைப்பு புத்த பிக்குவின் கையில் உள்ள விசிறியை ஞாபகப்படுத்துகின்றதோ தெரியவில்லை. வல்லைச் சந்தியில் உள்ள 'வடமராட்சி உங்களை வரவேற்கிறது' என்று படைப்பிரிவு இலக்கமும் போட்டி ருக்கிறார்கள். எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. அந்தச் சந்தியால் போகும் சிலர் அவர்களோடு எவ் வளவு அன்புகாட்ட விரும்புகிறார்கள். ஆனால் அவர் கள் இலேசில் தமிழர்களைக் கட்டிப்பிடிக்கத் தயா ரில்லை என்பது இவர்களுக்குத் தெரியவில்லையா?

இவர்கள் இவர்களுடைய அலுவலோடு அவர்கள் அவர்களுடைய அலுவலோடு. காலம் இருளுக்குள் நீச்சலடித்துக்கொண்டிருக்கிறது.
மீண்டும் 1987ம் ஆண்டுக்கு வருவோம் - சாவு அடுத்த கணப்பொழுதிலும் நிகழலாம் என்ற ஏக்கத் தோடு குடாநாட்டு மக்கள் வாழத்தொடங்கிய காலத் தின் வருகையை எவர் மறந்துவிட முடியும்?
வானத்தின் மூலைகளிலிருந்து கண்களுக்குத் தென்படாமல் திடீரென முளைத்துச் சீறி வட்டமிடும் (சியாமா ஸெட்டியோ என்னவோ பெயர்கள் கொண்ட) குண்டுவீச்சு விமானங்கள். வீடுகள், குடிசைகள், வயல் வெளிகள், பள்ளிக்கூடங்கள், கோவில்கள், தேவால யங்கள், தெருக்கள் எதுவுமே விலக்கல்ல. இவ்விமா னங்கள் உயிர்ப்பலிகள் கொண்டு சற்று அடங்கும். மீண்டும் அன்று மாலையோ, அடுத்த நாளோ அல்லது அதற்கடுத்த நாளோ என்று மனித உயிர்கள் பெறுமதி யற்றுப் போயிருந்தன. அழிக்கப்பட்டுக்கொண்டிருந்த சொத்துடமைகளை அப்போது மக்கள் கணக்கில் எடுக்கவில்லை. பதுங்கு குழிகளிலும் குண்டுகள் வீழ்ந் தன. மண்ணைத் துடைத்துப் பிணங்களை வெளியே எடுத்து நிரையாக வைத்தபோது, 'குஞ்சு குருமான்கள்' உட்பட, வானதிரப்போட்ட அவலக்குரல்கள் இன்னும் என் நெஞ்சை அதிரவைக்கும்.
விடுதலைப் புலிகளின் முகாம்களுக்குத்தான் குறிவைத்துப்போடுவான், பௌத்த குடும்பங்களின் நன் மக்கள் எனக் குண்டுவீச்சு விமானிகளுக்கு நற்சான் றிதழ் வழங்கிய என் அயல் வீட்டு நண்பரின் வீட்டின் மீதும் குண்டு வீழ்ந்தது ஒருநாள். இறந்துபோன அவரின் மகளை (அப்பொழுது ஏ.எல்., படித்துக்கொண்டிருந்த சிறந்த மாணவி) இடிபாட்டிலிருந்து மீட்க உடனடியாக அயலவர்கள் எவரும் ஓடி வரவில்லை. ஏனெனில் அப்பொழுதும் மூன்று குண்டுவீச்சு விமானங்கள் வானத்தில் கிணுகிணுத்தபடி மரண ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன. குண்டுவீச்சு விமானங்கள் விலகிச் சென்றதும் உலங்கு வானூர்திகள் வந்து ஊரைச் சல்லடை போட்டுவிட்டு பலாலிப் பக்கம் போகும். வல்வெட்டித்துறைப் பக்கம் கடுமையான உலங்கு வானூர்தி வேட்டுக்கள் அதிகாலை கேட்கத் தொடங்கி னால் “எங்கேயோ பொடியளிட்டை வேண்டிக்கட்டியிருக் கினம்போல' என்று சனம் முகம்மலரப் பேசிக்கொள் ளும். அந்தப் பயச் சூழலிலும் 'வேண்டிக்கட்டின' விடயம் மக்களுக்கு இதமளிப்பதாகவே இருந்தது.
அன்று 1987ம் ஆண்டின் மே 26ம் நாள். வடமராட்சிக்கு, குறிப்பாக விடுதலைப்புலிகளுக்குக் குறிவைக்கப்பட்ட நாள். அதிகாலையிலேயே உடுப் பிட்டிக் கிராமம் அதிரத் தொடங்கியது. 'டென்சில் கொப்பேக்கடுவ'வின் மூளை பிரசவித்த 'ஒப்பரேசன் லிபறேசன் - இரண்டாவது உலகப்போரை முடிவுக்குக் கொண்டுவந்த நோர்மண்டி தாக்குதலின் உத்தியைப்

Page 56
போல
எதிர் பாராத போர் முனையைத் திறந் து முற்றுகையிடத் தொடங் கிய இராணுவ நடவடிக்கை இது என்பது எங்களுக்கு எப்படிப் புரியும்? 'இந்த வடமராட்சி ஒரு கெட்ட சாமான், இதைக் கைப்பற்றிவிட்டால் எல்லாம் அடங்கிவிடும்' என்று கொப்பேக்கடுவ முடிவுகட்டியிருக்கலாம். குண்டுவீச்சு விமானங்களின் சாகச விளையாட் டுக்கள், எறிகணை விசிறல்கள், உலங்குவானூர்திகள், பீப்பாக்குண்டு கள் வீசுகிற 'அவ்ரோ' விமானங்கள், இராணுவ நிலைகளிலிருந் து 'ஆட்லறி எறிகணைகள் என்ற நம் பல்முனைத் தாக் குதல்களுடன் தொடங் கப் பட்ட போது சனம் அல் லோல கல் லோலப் பட் டது. மரணத்தின் பிடிக்குள் அகப்பட்டுவிட்டதாகப் பரிதவித் தனர் மக்கள்.
பாதுகாப்புக்காகக் கோவில்களில் தஞ்சமடையுமாறு அரைகுறைத் தமிழில் துண்டுப்பிரசுரங்கள் உலங்கு வானூர்திகளிலிருந்து வந்து வீழ்ந்தன. என்னே மனிதா பிமானம்?
இனிப் பதுங்கு குழிகளிலிருந்து தப்பேலாது என்று புற்றீசல்களாக மக்கள் உடுத்த உடைகளோடு, உயிர் களை மட்டும் சுமந்து, போக்கிடம் தெரியாமல், இருப் பிடங்களிலிருந்து புறப்பட்டனர். பொருள், பண்டம், ஆடுமாடுகள், எழுந்து நடக்கமுடியாத முதியோர் என எல்லாவற்றையும் கைவிட்டு, எறிகணைகள் விரட்டிக் கொண்டிருக்கக் கண்களுக்கு எதிர்ப்பட்ட கோவில் களில் தஞ்சமடைந்தனர். அங்கும் எறிகணைகள் விழ மீண்டும் நடந்தார்கள்.
கரவெட்டி தச்சன்தோப்பு பிள்ளையார் கோவிலில் வரலாறுபடைத்த சனத்திரள் கூடியது. இராணுவம் ஊர்மனைக்குள் அதன்பின் இறங்கியது. அசைவதை யெல்லாம் சுட்டுத்தள்ளினார்கள். இராணுவத்தின் துப்புர வாக்கும் பணி மிக விமரிசையாய் நடந்தேறிய அதே நேரம், இறந்தவர்களின் (முதியவர்கள் பெரும்பாலும்) உடல்களை எரிக்கவோ, அடக்கம் செய்யவோ முடியாது உறவினர்கள் தச்சன்தோப்புப் பிள்ளையாரிடம் கண்ணீர் வடித்து முறையிட்டதைக் கண்டிருக்கிறேன்.
வடமராட்சியை இராணுவம் கைப்பற்றி கொப்பேக் கடுவவுக்கு துட்டகைமுனுவின் வாரிசுப் 'பட்டி' கிடைத்து இரண்டு மாதங்களிலிருக்கலாம். கரும்புலி கப்டன் மில்லர் தோன்றி இராணுவத்துக்குப் புதிய தொரு பாடத்தைத் தொடக்கிச் சவால் விட்டான். எல்லாம் தலைகீழாகி மீண்டும் சிங்கள இராணுவம் கிலேசத்துக்குள்ளாகி இந்திய அமைதிப்படை கால் பதித்தது எல்லாம் பின்னர் நடந்தவை. வடமராட்சி

வெளிச்சம் கார்த்திகை - மார்கழி 2004
ராஜ 531
இராணுவ நடவடிக்கையின்போது விமானப்படை வீசிய நெருப்புக் குண்டின் றப்பர் பகுதி யொன்றைக் கண் டெடுத்த பையனொ ருவன் (Made in India) இந் தியாவில் தயாரிக்கப்பட்டது என்ற ஆங்கில எழுத் துக்களைக் காட்டி 'இந்தியாக்காரன் தானே இந்தக் குண்டுகளைக் குடுத்தி ருக்கிறான்' எனப்பேசியது இந்தியா மீது அபார நம்பிக்கை கொண்டிருந்த அன் றைய மக்களிடம் அவ்வளவு எடுபட வில்லை. அந்த மாணவன் அன்றே இந்தியாவின் முகத்தைக் கண்டுவிட் டானா?
இன்றைய சிறுவர்கள், இளை ஞர்கள், யுவதிகளுக்கு இந்த அனுப வத் தடங்கள் உபகதையாகவே இருக் கும். இவர்களில் சிலர் குழந்தைகளாகப் பதுங்கி குழியினுள்ளே கட்டியிருந்த ஏணையில் படுத்துறங் கியிருக்கக் கூடும். இன்று அவர்களின் உலகம் வேறு. உழைப்பில்லா வாழ்க்கை. 'துள்ளல்' கலாச்சாரம் - குளிர்தேசக் காசின் வருகை தருகின்ற கிளுகிளுப்பு அவர்களுக்குப் பெரிது. இனி அவர் களும் தங் களின் தொடர்புகளுடாக, கல்வி தேவையில்லாச் சம்பாத்தியத் தைத் தேடி ஓடத்தான் முனைகின்றனர் போலிருக்கிறது. தமிழ்த்தேசியத்தின் மூலதனங்கள் எல்லாவற்றையும் குத்தகைக்கு விடச் செய்கின்ற பௌத்த சிங்களத் தேசியத்தின் நெருக்குவாரம் வெற்றியடையுமா? தமிழர் களின் மொழி, பண்பாடு வளர்க்கப் புறப்பட்டுள்ளதாகக் கூறிக்கொள்ளும் வியாபாரத் தந்திரம் இன்று சில தொலைக்காட்சி அலைவரிசைகளில் உரத்துக் கூறப் படுகின்றன. புலம்பெயர் ஈழத்தமிழர்களின் தமிழ்த் தேசிய அபிமானத்தைச் சுரண்டிப் பொருள் குவிக்கும் இவர்களின் நோக்கத்தை எம்மவர்கள் அறிய முடியா தவர்களா? இவர்களின் திருகுதாளம் வெற்றியளிக்கும் வரை இலாபம்தான்.
மனிதனின் பலவீனங்களையும், புலன்களையும் வைத்து தீனிபோடுகிற விளையாட்டை நடத்துகிறார்கள். மக்களும் விரும்புகிறார்கள். இரு பகுதியினரும் உடன் பாடுடன் நடத்துகிற விபச்சாரத் தொழில் போன்றது இது மேற்குலகில் சிறுவர்களின், கல்வி, வளர்ச்சி, முன்னேற்றம், நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கக் கூடிய தயார்ப்படுத்தலுக்கான வழிநடத்தல்கள், கலை ரசனை, விளையாட்டு, விஞ்ஞானம் என எத்தனையோ அலை வரிசைகளைத் திட்டமிட்டு நடத்துவது ஏன்? அங்கு கூடுதலான விஞ்ஞானிகளும், புத்திஜீவிகளும் உருவாவதற்கு நவீன ஊடகங்கள் பயன்படுத்தப் படுவதைப்போல எமது தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள் நிறைவேற்றிவிடும் என எண்ணுகிறார்களா? வாழ்க இவர்களின் சமூகப்பணி?

Page 57
வெளிச்சம் கார்த்திகை - மார்கழி 2004
வானத்திலே நட்சத்திரங்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கையில் மாணிக்கவாசகர் இருளை வெறித் துப்பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். பனங்கூடலும் இருளுக்குள்ளே முற்றாகவே மூடிக்கிடந்தது. சுவர்க் கோழியின் சத்தம் அந்த விரிந்த மெளனத்துக்கிடையே காதுகளை ஓங்கி அறைந்து எரிச்சலூட்டிற்று. அது எதிரே தெரிந்தால் பெருவிரலால் நசிக்க வேண்டும் போல மனதினுள்ளே மூர்க்கம் கொதித்தது. பிறகு தன்னை அமைதிக்குக் கொண்டுவர முயன்றான். பத்மா வின் முகமும் குரலும் மனவெளியில் தோன்றி ஒலித் தன. கனிவான முகம், நேசம் இழைந்த குரல், பத்மா அடிக்கடி சொல்லுவாள்: "எதுக்கும் அடிக்கடி கடுமை யாகக் கோபப்படாதேங்க..."
அவளை நினைத்தபோது கோபம் மெல்லவே மங்கிப்போய் வேதனையும் மனதிலே பரவிற்று. அந்தக் கம்பீரமான உருவம் எதிரே நடந்து வருவதுபோலத் தோன்றிற்று. அணிவகுப்பில் ஒத்திசைவாக நடப்பது போல ஆளுமைசெறிந்த நடை.
மாணிக்கவாசகரும் அவளும் ஒன்றாகவே படித் தனர். ஒன்றிரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் தான் அவர்கள் ஒருவரை ஒருவர் முந்தி முதலாமிடத்துக்கு வருவர். அவள் முதலாமிடத்துக்கு வந்தால் அவ னால் தாங்கிக்கொள்ள முடியாது. இரண்டு நாட்களுக்கு அவளோடு எதுவுமே கதைக்கமாட்டான். வேண்டுமென்று ஒதுங்கிக்கொள்ளுவான். அவள் இயல்பாகக் கதைக்க வரும்போதெல்லாம் வெடுக்கென்று எரிந்து விழுவான். அப்போதும் பத்மா அவனைச் சினக்கவே மாட்டாள். பரிவோடு அவனைப் பார்ப்பாள். கண்களில் மலர்ந்த புன்னகை இருக்கும். மறுநாள், அதற்கு மறுநாள் அவனைப் பார்க்கிறபோது அதே பரிவோடும் புன்னகை யோடும் எதிர்கொள்வாள். முன்னர் எதுவுமே நடக் காததுபோல நடக்கும் அவளைப் பார்க்கிறபோது தன்னையிட்டு அவன் அவமானமடைவான். ஏதாவது அதைப்பற்றி சொல்ல வாயெடுத்தால் " சரி சரி இப்ப அந்தக் கதையை விட்டிடுங்க'' என்று குறுக்கிட்டுக் கூறி, அவன் வார்த்தைகளைத் தொடரவிடாமல்
காக

வேறெங்கோ கவனத்தை இழுத்துச் செல்வாள். அந்த வளரிளம் பருவத்திலேயே அவனுக்கு அவள் சொல்லு தற்கரிய அற்புதமாகப் பளிச்சிட்டாள்.
தற்செயலாக ஒருநாள் பத்மாவின் வீட்டிற்கு அவன் சென்றான். வீடு ஒரே பரபரப்பாக இருந்தது. உள்ளே போகலாமா , திரும்பலாமா என்று அவன் நினைத்துக் கொண்டிருந்தபோது அவளது குரல் தான் அவனை உள்ளே அழைத்தது. "வீட்டுக்கு வந்திட்டு ஏன் திரும்பப்போறியள்? உள்ளே வாருங்க...'' பதில் பேசாமல் அவன் உள்ளே சென்றபோது பத்மாவின் அக்கா சரோஜினி தடுமாறிய குரலிலே, "தம்பி, பத்மாவினுடைய வேலையப் பாருங்க, ஒரு நாகபாம் பைக் கையாலை பிடிச்சு நிலத்தில் தூக்கி அடிச்சுக் கொன்று இருக்கிறா... அங்கை பாரும்...'' என்றாள்.
மாணிக்கவாசகர் திகைத்துத் தடுமாறிப்போனான். சுவர் ஓரமாக தலைநசிந்து உடல் சிதைந்து சிதறிப் போய்க் கிடக்கும் பெரிய நாகபாம்பு, அதைப் பார்த்த போதே உடம்பு புல்லரித்துச் சிலிர்த்தது. சட்டென்று பார்வையை அந்த இடத்திலிருந்து தூக்கிய போதிலும், மனதிற்குள் தலைநசித்து உடல் சிதைந்து சிதறிப் போய்க் கிடக்கின்ற அந்தக் கோரம் மட்டும் அழுத்த மாகப் பதிந்துபோய்விட்டது.
"என்ன கடுமையான யோசனை?'
பத்மாவின் குரல் அவனைச் சுயத்திற்குக் கொண்டு வர எதிரே நின்ற அவளைப் பார்த்தான்.
"என்ன வேலை செய்திருக்கிறியள்?'
அச்சம் படிந்திருந்த அவனது வார்த்தைகளைக் கேட்டு அவளது முகத்தில் புன்னகை.
அவனே தொடர்ந்தான்:
"சரியான விஷப்பாம்புபோல இருக்குது கடிச்சிருந் தால் என்ன செய்திருப்பியள், இப்படிச் செய்யப் பயமே இல்லையோ...?'
“அதுதானே, அதைக்கேளும் தம்பி...."
குறுக்கிட்டாள் சரோஜினி.
0செ.யோகநாதன்

Page 58
நீண்டிருந்த ஒற்றைப் பின்னலை, தோளிலிருந்து பின்னே தள்ளிவிட்டவாறு அவர்களைப் பார்த்தாள் பத்மா.
“பாருங்க, நான் வீட்டுக்குள்ள வந்தபோது தடுக்குப் பாயிலை குழந்தை சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தது. அதுக்குப் பக்கத்திலை இந்தப் பாம்பு படம் விரிச்சு ஆடிக்கொண்டிருந்தது. கொஞ்சநேரம் விட்டிருந்தாலும் அது குழந்தையைக் கொத்தியி ருக்கும். எனக்கு அப்போ குழந்தையைக் காப்பாத்துறது தான் முக்கியமாத் தெரிஞ்சுது. பாம்பை ஆபத்தில் லாமல் பிடிக்கவேணுமெண்டால் கழுத்திலை பிடிச்சு தூக்கி எறிய வேணும். இல்லையென்றால் வாலைப் பிடிச்சுத்தூக்கி நல்லா இறுக்கிச் சுற்றிவிட்டு தூரமாய் எறிய வேணுமென்று எங்கேயோ படிச்சது நினைவிலை வந்தது, உடனே பாம்பை வால் நுனியிலை பிடிச்சுத் தூக்கி இறுக்கி வீச்சாகச் சுழற்றிவிட்டுச் சுவரோடை வீசி எறிஞ்சிட்டன், அவ்வளவுதான் எனக்குத் தெரி யும்...''
அவள் சொன்னதிற்கு என்ன கூறுவதென்றே மாணிக்கவாசகருக்குத் தோன்றவில்லை. பத்மா ஒவ்வொரு விஷயத்தையும் தீர்க்கமாக யோசனை செய்தபிறகே செய்கிறாளென அவன் எண்ணினான். பல சந்தர்ப்பங்களில் இதை அவன் வெகு நுணுக்க மாகவே கவனித்து வந்திருக்கிறான். அவளைப் பற்றிய அபிப்பிராயம் மேலும் மேலும் அவனது மனதினிலே அதிகரித்து வந்தது.
மழை சோனாவாரியாகப் பெய்துகொண்டிருந்த ஐப்பசி வெள்ளியொன்றின்போது அந்தச் செய்தியை அவன் கேள்விப்பட்டு மனம் உடைந்து போனான். பத்மா, தான் இயக்கத்தில் சேரப்போவதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டுக் காணாமற்போய்விட்டாள்.
ஒரு மாதத்தின் முன் அவளின் உறவுப் பெண் ஒருத்தி வெறிபிடித்த சிப்பாய்களால் மூர்க்கத்தனமாகப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு பின் குப்பைக் குழியொன்றினுள் தூக்கி வீசப்பட்டிருந்தாள். கழுத்துச் சிதைந்த நிலையிலேயே அவளின் சடலம் கண்டெடுக் கப்பட்டு அடையாளம் காணப்பட்டாள். பத்மா அந்தப் பெண்ணின் பிறந்தநாளுக்கு வழங்கிய பாதசரங்களை வைத்தே அவள் அடையாளத்தினைத் தெரிந்துகொள்ள முடிந்தது.
அதன் பிறகு ஒரு வாரமாக அவள் கல்லூரிக்கு வரவில்லை. பின்னர் வந்தவளின் முகத்தில் மலர்ச்சி முற்றாகவே கருகிப்போயிருந்தது. பார்வை எங்கோ வெறிச்சோடிற்று. இரண்டொரு வார்த்தைகளைப் பேசு வதே அபூர்வமாயிருந்தது. இப்படியான நிலையின் தொடர்ச்சியில் அவள் காணாமற்போன செய்தி வந்தது. அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மன தினுள் சொல்ல முடியாததோர் வெற்றிடம் விரிந்தது.

-- வெளிச்சம் கார்த்திகை - மார்கழி 2004
மா 200 55 5
நீண்ட நாட்களுக்குப் பிறகு முல்லைத்தீவுச் சமரில் அவள் ஒற்றைக்காலினை இழந்தாள் என வந்த செய்தி யினைக் கேள்விப்பட்டு அவன் முற்றாகவே மனம் ஒடிந்துபோனான். ஒற்றைக் காலை இழந்த அந்தக் கம்பீரத்தைக் கற்பனை செய்து பார்க்கவே அவனது மனம் நொந்து வலித்தது.
நேற்றுக் கிடைத்த செய்தி அவனது மனதிலே திகைப்பையும், பயத்தையும், இனம்தெரியாத மகிழ்ச்சி யையும் உண்டாக்கிற்று. இங்கே வந்து இந்த இருளி டையே உட்கார்ந்திருக்கிறான்.
சுவர்க்கோழி இன்னமும் சத்தமிட்டது.
திடீரென்று இடியும், மின்னலும். பனங்கூடலுள் மின்னல் வெளிச்சத்தை அள்ளிக் கொட்டிற்று. அவன் அவசரமாக எழுந்து உள்ளே சென்றான்.
நாளைக்குத் தன்னுடைய வீட்டிற்கு வரவிருக்கும் பத்மாவின் முகம் மட்டும் அவனது கண்களிலே வந் தது. அவன் வெளிக்கதவை மூடிவிட்டு உள்ளே சென்ற போது மின்னற் கொடியொன்று சட்டென வேர்களாய்ப் பரப்பி வெளிச்ச ஊற்றினைக் காணும் திக்கெல்லாம் அள்ளி எற்றியது. இடியோசை நெஞ்சை அச்சம் கொள்ளவைத்துத் தொடர்ச்சியாக உறுமிற்று. காற்று ஊளையிட்டுக் கூத்தாடிற்று. இதே போன்ற நாளொன்றின் போதுதான் பத்மா கடிதம் எழுதி வைத்துவிட்டுக் காணாமற்போனாள். இப்படியான கால நிலைக்குள் பத்மா எப்படித்தான் இயங்கப் போகிறாளோ என்ற நினைவு பாரமான மின்னலைப்போல அவனது நெஞ் சத்துக்குள்ளே குதித்து வீழ்ந்தது.
வாசற் பக்கமாக உள் ளே நுழையப் போனவனை அந் தக் கலகலப்பான சிரிப்பு, கொஞ்சம் நில் என்று
கூறி நிறுத்திற்று. பத்மாவின் சிரிப்பு அது. வெளியே நின்ற ஹொண்டா மோட்டார் சைக்கிளை ஒருகணம் வியப்போடு பார்த்தான்.
''ஏன் வெளியிலை நிக்கிறியள்? உள்ளுக் குள்ளை வாருங்கோ
வன்...''
கம்பீரமான நடை யோடு அவனை அழைத்தவாறு வாசற் பக்கம் வந்த பத்மா வைக் கண்டதும் திகைத்துத் திடுக்

Page 59
வெளிச்சம் கார்த்திகை - மார்கழி2004ல
கிட்டுப் போய்விட்டான் மாணிக்கவாசகர்.
நீண்ட தலைமுடியை 'கிராப்பாக வெட்டி மேலே சேர்ட் போன்ற பிளவ்சும், நீண்ட பாவாடை வடிவத்துச் சட்டையும் அணிந்து அதே கம்பீரமும் பெருமிதமுமாய் நின்றாள் பத்மா.
அவளை அவன் மேலும் கீழுமாகப் பார்த்தான். அவனது மனம் பிடரியினைச் சொறிந்துகொண்டு சந் தேகத்துள் அமுங்கிற்று. இப்போது உண்மையாகவே தலையைச் சொறிந்துகொண்டான்.
"அவள் முன்னே நடந்தவள், திரும்பி அவனைப் பார்த்தாள்.
"எப்பிடி இருக்கிறியள்?'
"இருக்கிறன்....'
அவனைப் பரிவோடு ஏறிட்டாள்.
"ஏன் சோர்ந்துபோய்க் கதைக்கிறியள்.''
வெறுமையாகச் சிரித்தான் மாணிக்கவாசகர்.
"சொல்லுங்க...''
“அப்படி ஒன்றுமில்லை...''
"பொறுங்க... நான் இப்போ உங்களுக்கு ஒருவரை அறிமுகப்படுத்துகிறன்...''
''யார்...?
"தியாகு இங்கை ஒருக்கால் வாருங்க...''
இடதுபுற அறையிலிருந்து இளைஞன் ஒருவன் வெளியே வந்தான். கறுப்புக் கண்ணாடி அணிந்திருந் தான், வலதுகை முற்றாக இல்லை, சேர்ட்கை தொங் கியது.
"பத்மா... யார் இது?
"தியாகு, இவர் சின்ன வயதிலையிருந்து என்னோடு ஒன்றாகப் படித்தவர், பெரிய உத்தியோகம் பார்க்க வேணுமென்று விருப்பப்பட்டவர், நாட்டு நிலைமை யாலை அது முடியேல்லை.... இந்தக் கவலையோ டையே இருக்கிறார்....''
இளநகை தியாகுவின் முகத்தில் படர அவன் மெல்லத் தலையை ஆட்டிக்கொண்டான்.
“இவரைப்பற்றிச் சொல்லுறன், இயக்கப்போராளி, களத்திலை இரண்டு கண்களையும் ஒற்றைக் கையை யும் பறிகொடுத்தவர். ஆனால், அண்ணனிட்டைக்கேட்டு

இன்னும் களத்திலை இருக்கிறார். கண் வெளிச்சம் இல்லாட்டிலும் எந்த ஆயுதத்தையும் விரலால் தொட்டுப் பார்த்தே அதிலை உள்ள பிழையைச் சொல்லி சரியா கத் திருத்தி விடுவார்,....."
பெருமை பரிமளித்தது அவளது குரலிலே. வாஞ்சை பொங்க தியாகுவைப் பாாத்தாள். பெருமி தத்தோடு, "ஒரு மெல்லிய சத்தம் கேட்டாலே போதும், அந்த இடத்திலே என்ன இருக்குதென்று சரியாகச் சொல்லிவிடுவார்...'' என்றாள்.
அப்போது சரோஜினி வெளியே வந்தாள். மாணிக்க வாசகரைக் கண்டு முகமலர்ந்தாள்.
"எப்பிடி இருக்கிறியள் தம்பி..? "
"இருக்கிறன்.... அக்கா....''
"இப்ப நாட்டு நிலைமை எல்லாம் மெல்ல மெல்லச் சரியாகிக்கொண்டு வருகுது. நீர் இனி என்ன செய்யப் போகிறீர்?"
"இன்னும் அதைப்பற்றி முடிவு செய்யேல்லை...''
சொல்லியவாறு நெற்றியை வருடிக்கொண்டான் மாணிக்கவாசகர்.
“பொறுங்க.... குடிக்க ஏதாவது கொண்டு வாறன்...'' என்றவாறே பரபரப்பாக உள்ளே போனாள் பத்மா.
“பத்மாவோடை கதைக்கவே ஆசையா இருக்கு.... எவ்வளவு அறிவும் கெட்டிதனமும் உள்ள பிள்ளை. எங்களுக்கு எவ்வளவு பெருமையாக இருக்கு...''
"தம்பி எலுமிச்சம் பழத் தண்ணீர்... குடியுங்க...''
மாணிக்கவாசகர் கோப்பையை வாங்கிக்கொண்டான்.
“கொஞ்சநேரத்தில் முக்கியமான ஒருவரை நாங்க இரண்டுபேரும் போய்ச் சந்திக்கவேண்டும். பின்னேரம் வீட்டுக்கு வாருங்க...''
பம்பரமாய் தியாகுவோடு வெளியே போனாள் பத்மா.
"தியாகு ஏறிவிட்டீங்களோ? மோட்டார் சைக்கிள் குதிரையாய் உறுமிக்கொண்டே புறப்பட்டது. கம்பீரமாக மோட்டார் சைக்கிளை ஓட்டியவாறே சென்றாள் பத்மா.
"பாருந்தம்பி என்ன வீச்சாகப் போறா, இவ்வளவுக் கும் வலது காலிலை முழங்காலுக்குக் கீழே இல்லை. பொய்க்கால் கட்டியிருக்கிறா என்றால் ஒருத்தரும் நம்பமாட்டினம்...'' என்றாள் சரோஜினி.
மாணிக்கவாசகர் பேச்சற்று நின்றான்.

Page 60
உங்கள் தேடு வாழ்த்து மடல்கள் வடிவமைப்பு 'அழைப்பிதழ்கள் வடிவமைப் புத்தகங்கள் வடிவமைப்பு எந்தத் தேவையாயின்
நிலா 1
அதி
கல அச்ச விரை நேர்த்தி
அழக செய்து
நிலா |
புதையிரத நிலைய வீதி

வைகள் என்ன?
ரா,
ப்பா,
பா,
அம் நாடுங்கள்.
திப்பகம்
நவீன னிணி
மைப்பில் வாகவும், யொகவும், காகவும்
கொள்ள
மதிப்பகம்
கிளிநொச்சி