கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இணுவில் ஒலி 2013.03-04

Page 1
இணு[6
உலகப் பெருமஞ்சம்
பங்குனி - சித்திரை 2013

வில் ஒலி
இரு திங்கள் ஏடு
விலை ரூபா 50/=

Page 2
உடல் வ
ஜீவா
சிறியோர் முதல் டெ
உகந்த
JEEL
පීවාය
உா சகடு Pா
20பர்,
Manufa ANNA INDU
T.P: 02

ளர்ச்சிக்கு
காரம்
பரியோர் வரை பாவிக்க
சத்துணவு
ANNA JAKARAM
வ08 ஜீவாகாரம் -
'-பனான்மனி நயகாத்காரனை
actured By: ISTRY, INUVIL
1 2223565

Page 3
EL
இ
வா
"பெற்ற தாயும் பிறந் நற்றவ வானிலும் ந
'இணுவி
(தாயக மண்ணின் தனித்துவம் வள்ளுவர் ஆண்டு 2044
பங்குனி-சி
நிறுவுனர்/காப்பாளர்
நடராசா சச்சிதானந்தன் ஆசிரியர்:
த.சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா )
தொ.பேசி : 071 8676482 நிர்வாக ஆசிரியர்:
சிவலிங்கம் சரவணபவன்
தொ.பேசி: 077 3126802 சஞ்சிகைக் குழு : மு.சிவலிங்கம்
அ.குகதாசன் கா.வைத்தீஸ்வரன்
ம.காண்டீபன் பேராசிரியர் க.தேவராஜா
சொ, ஹெரிசங்கர் க.பரமேஸ்வரன்
தே.சதீசன் சு.சண்முககுமார்
பி.அஜந்தன் மா.ந.பரமேஸ்வரன்
யோ..சுதந்திரன் சு.பரமேஸ்வரலிங்கம் திருமதி கவ.கணேசபிள்ளை க.கண்ணபிரான் திருமதி க.கிருஸ்ணபிள்ளை வெளிநாட்டுப் பிரதிநிதிகள்:
இலண்டன் : சபேசன் சண்முகநாதன்
சி அவுஸ்திரேலியா தி.திருநந்தகுமார் கனடா
: ம.இராஜகுலசூரியர் ஜேர்மனி
: ஆ.வடிவேற்கரசன் டென்மார்க்
: கணேசு பரமநாதன் சுவிஸ்
- நடராஜா மனோகரன் நோர்வே
* நல்லையா சர்முகப்பிரபு அமெரிக்கா
: வே.பிரேமதயாளன் தொடர்பு :
9 - 2/1, நெல்சன் இடம், கொழும்பு - 06, இலங்கை,
தொ.பேசி: 0114902406 47, கருணாகரப்பிள்ளையார் கோவில் வீதி, இளந்தாரி கோவிலடி, இணுவில் கிழக்கு,
சுன்னாகம், இலங்கை. E-Mail : inuviloli@hotmail.com
பர
மா
படைப்புகளுக்குப்படைப்பளிகளே பொறுப்புடையவர்கள். ஆக்கங்கள் செம்மை பார்த்தபின் பிரசுரமாகும்.
-ஆசிரியர்-1

22 MAR 2013
த பொன்னாடும் னி சிறந்தனவே" ல் ஒலி காக்கும் இருதிங்கள் ஏடு) சித்திரை 2013 வில் - 1
ஒலி - 4)
உள்ளே ஒலிப்பவை
பக்கம்
02
03
09
[4
:
21
24
பனா முனையிலிருந்து...... அவனரிடமிருந்து எழ்த்துக்கள்...... -டுரை :
• இணுவில் பெரிய சந்நியாசியார்
• நூற்றாண்டு வரலாறு கண்ட
இராமநாதன் கல்லூரி
• இரா.சுந்தரலிங்கம் என்னும் கல்வியாளர் சங்க இலக்கியங்கள் சுட்டும் தந்தி வாத்தியங்களள் பாடசாலை பயிற்சிக் களமாதல் வேண்டும் ன்பாட்டுப் பாரம்பரியம்: .
• முருகேசு அப்பாக்குட்டி றுகதை:
• வாழவைத்த தெய்வம் விதை:
• என் இணுவிலாள்! கணவர் உலகம்:
* சோதனைகளை
சாதனையாக்குவோம்
• தகவல் தொடர்பாடல்
• வளர்ந்துவரும் சமுதாயத்தின்
பங்களிப்பு
• பனைமரம் (கவிதை) ங்கள் விருந்து:
கனயவை:
• அரசு வழங்கிய கலாபூஷணம் விருது அறிந்தவையும் தெரிந்தவையும்
8 2 2 5 5 3 3
33
8 * 2
34
20
30

Page 4
பேனா முனையிலிருந்து ..
பெரியோர்களை மதிக்கும் பண்பாடு முற்றாகப் எண்ணி ஒதுக்கும் செயற்பாடு மேலோங்கி நிற்கிற என்றே சொல்லவேண்டும். பெற்று வளர்க்கப் படாத உருவாக்கிவிட்டவர்களை உதாசீனம் செய்யும் பிள்ள எண்ணத் தோன்றுகிறது.
திருமணம் செய்த பின் தம்பதியினர் தங்கள் தக லாக இருப்பதாகவே எண்ணுகிறார்கள். ஆண்பிள்ன ஒதுக்குகின்றார்கள். பெண் பிள்ளைகளோ தமது பேசாமல் கிடவுங்கோ” என்று வசைபாடுகிறார்கள்.
"நெஞ்சு பெறுக்குதிலையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டாலி"
மனித சமுதாயம் எவ்வளவோ முன்னேற்றம் கொண்ட மனிதர்களைக் காணமுடியவில்லையே
இல்லை,
"பெரிசுகள், கிழடுகள் உங்களுக்கு என்ன தெரி இளவட்டங்களின் நகைப்பு. ஏளனம் செய்தல் சர்வ.
“காவோலை விழ குருத்தோலை சிரித்ததாம்" - - என்ற பழமொழி எங்கள் பிரதேசத்தில் பேசு ஒருநாள் குருத்தோலையும் காவோலையாகும் என்
பொருள், பண்டங்கள் உள்ள பெற்றோரிடம் உ விட்டுத் துரத்திவிட்ட பிள்ளைகளின் கைங்கரியங்க சேர்ந்த ஒருவர் வெள்ளவத்தையில் பிச்சையெடு இப்படியாகிவிட்டாரே!" என்று என்மனம் உண்மையி
முதியவர்களை வயோதிபர் இல்லங்களில், - வளர்ந்துவருவதை இன்று அவதானிக்கக் கூடியதா ஒதுக்கப்பட்ட எத்தனையோ பெற்றோர்கள் அ ருக்கின்றார்கள், நோய் காரணமாகவும் முதிர்ச்ச வாட்டிக்கொண்டிக்கின்றது. உடல் ரீதியாகவும் உ இதனால் பலர் மனநோயாளிகளாக மாறிக்கொண்
வெளிநாடுகளில் உள்ளவர்கள் தமது வயோ தங்கவைத்து அவர்களின் பராமரிப்புச் செலவுகளை எல்லா வசதிகளும் செய்து கொடுத்துள்ளபோதிலும் பிள்ளைகள்தங்களைவந்து பார்க்கமாட்டார்களா? ஏமாந்து நிற்கின்றார்கள் அவர்கள்.
ஆகவே பொதுவாக நோக்குமிடத்து இன்றைய பரிதாபத்துக்குரியதாகவே அமைந்துள்ளது. தமது சமுதாயம் எண்ணாதவரை அவர்களின் விடிவை 5
“என்று தணியும் இந்த முதியோரின் தாகம்?"
மீண்டும் அடுத்த

| புறந்தள்ளப்பட்டு, அவர்களைப் பெரும்சுமையாக து. இது இன்றைய தமிழர்முதாயத்தின்வக்கேடு பாடுபட்டு, கல்வி புகட்டி தங்களது நலநிலைக்கு Dளகளைக் காணும்போது என்னஉலகமயஎன்று
சிப்பட்ட சுகவாழ்வுக்குத் தம்பெற்றோர்கள் இடைஞ்ச >ளகள் பெண் தாசகர்களாகமாறி பெற்றோர்களை பெற்றோர்களை பட்டிக்காடுகள் உங்கட பாட்டிலை
கண்டு வளர்ந்துவிட்டபோதிலும் நல் மனங்களைக் என்ற ஆதங்கம் பலர் மனங்களில் தோன்றாமல்
பியும்?” என்று கேட்கின்ற நிலையில்தான் இன்றைய சாதாரண நிகழ்ச்சியாகிவிட்டது.
சப்பட்டு வருவதை அவதானிக்கும்போது... என்றோ இபதை அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
ள்ளவற்றைப் பறித்துக்கொண்டு அவர்களை வீட்டை களும் அரங்கேறி வருகின்றன, யாழ்ப்பாணத்தைச் நித்துக் கொண்டிருந்தபோது... 'எப்படி இருந்தவர் விலேயே வேதனைப்பட்டது.
அனாதை இல்லங்களில் ஒப்படைக்கும் கலாசாரம் ாக இருக்கின்றது. பிள்ளைகளால் கவனிக்கப்படாமல் மனாதை இல்லங்களில் அல்லலுற்றுக்கொண்டி சி காரணமாகவும் ஆறுதலற்ற நிலை அவர்களை உளரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள், டிருக்கின்றார்கள். பதிபப் பெற்றோர்களை வயோதிபர் இல்லங்களில் யும் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு அவர்களின் மனங்களில் மகிழ்ச்சியில்லை. தங்கள் என்ற ஏக்கத்துடன் பிள்ளைகளின் வரவை எதிர்பார்த்து
காலகட்டத்தில் வாழுகின்ற வயோதிபர்களின் நிலை பெற்றோர்களை, முதியவர்களை தமது சொத்து என்று
திர்பார்க்க முடியாது. "
இதழில் சந்திப்போம். - ஆசிரியர்.

Page 5
நிறுவுநரிடமிருந்து.... “இணுவில் ஒலி" ஒரு சமூக நலன் பேணும் தாங்கி வெளிவரவேண்டும் என்பதே எமது நோக்க
எமது இணுவில் கிராமத்தின் பாரம்பரியமான கலாசாரம், சம்பிரதாயம், தொழில் போன்றவற்றின் எமது இலக்காகும்.
இந்த இலக்கை அடைவதற்கு இணுவில் மக் பொறுப்பாளிகள். இதை மனதில் வைத்து “எனது தட்டிக் கேட்டு “இணுவில் ஒலி”யின் மலர்ச்சிக்கு உ
எப்படி உதவலாம் என்று சிந்திக்கிறீர்களா? நம் முன்வாருங்கள்.
இணுவிலுக்கு மகிமைதரும் விடயங்கள்... காலத் மாற்றமடைந்தவையும் “இணுவில் ஒலி”க்கு நல்வி எழுத்து வடிவத்தில் எமக்கு அனுப்புங்கள். எமது எப்போதும் ஒலிக்கட்டும்.
என்! இவனும்
என் இணுவை, மண்பரப்பே!
உன்மடியில் கண்ட சுகம் இன்னும் என் நெஞ்சில்
இனிக்கிறதே! இனிக்கிறதே! வான் நீந்தி முத்தமிடும்
வண்ணநிலா பாய் விரிப்பில் ஊன் காய்ந்து மெய் சோர
உழைத்து உண்ட அந்த சுகம் இன்றும் என் நெஞ்சில்
இருக்கிறதே! இனிக்கிறதே!
லண்டன் - 29-01-2013
இணுவில் ஒலி

இதழ். அதற்கமைந்த விடயதானங்களைத் கமாகும். கல்வி, சமயம், மொழி, இலக்கியம், கலை, ஒளியாகப் பிரகாசிக்க வேண்டுமென்பதே
களாகிய நாங்கள் ஒவ்வொருவரும்தான் பங்களிப்பு என்ன?” என்று மனங்களைத் தவுங்கள், ல்லது, நமது சில யோசனைகள். சிந்தித்து
த்தால் மறைந்தவையும், மறந்தவைகளும், நந்தாகும். இவற்றைத் தேடிக் கண்டுபிடித்து இணுவில் கிராமத்தின் பெருமை எங்கும்,
- நடராசா சச்சிதானந்தன்
விலாள்.......!
மண் தாண்டிப் புறம் சென்றோம்
மாற்றான் மடிக் கிடந்தோம் விண்தாண்டி மேல் சென்றோம்
விடிவெள்ளி பல தொட்டோம் வண்ணக் கனவுலகில்
வாழ்ந்தோம், பொருள் துலைத்து, கண் காணா தூரத்தே - நாம்
கண்ட சுகம் அத்தனையும் பொய்யென்போம்! மெய்யில்லை
போற்றுகின்றோம், உன் சிறப்பை!
- கணபதி சர்வானந்தா

Page 6
உலகப் பெருமைமிக்க உருவாக்கித் தந்த இணு
இணுவில் கிழக்கில் அரசோலைப் பிள்ளையார் என வழங்கப்பெறும் பழமை வாய்ந்த கப்பனைப் பிள்ளையார் கோயில் சூழலில் வாழ்ந்த கந்தர் - தெய்வானை தம்பதியினரின் இரண்டாவது மகனாக 1860 இல் பிறந்தவர் சுப்பிரமணியம் என் னும் தவசீலர்.
விவசாயிகளான பெற்றோரால் வளர்க் கப்பட்டு வந்த ஆநிரைகளைத் தமது பதி னெட்டாவது வயதிலிருந்து மேய்க்கும் பணியினை எற்றார். தினமும் அதிகாலை யில் எழுந்து காலைக் கடன்களை நிறைவு செய்ததும் ஆலய தரிசனம் காண்பார். பின் தாயார் கொடுக்கும் காலை உணவை உண்பார். குடும்ப ஆநிரைகளைப் பட்டியி லிருந்து அழைத்துச் சென்று காரைக்கால் புல்வெளிகளில் மேயவிடுவார். காரைக் கால் சிவன் ஆலயத்தில் தரிசனத்தை மேற்கொண்டபின் ஓய்வெடுப்பார். கால் நடைகளையும் கண்காணித்துக்கொண்டு இருப்பார். தினமும் தாயார் மதிய உண வைப் பனை ஓலைப் பெட்டியில் வைத்து மூடிக் கொண்டு வந்து கொடுப்பது வழக் கம்.
ஒருநாள் காரைக்காலில் குடி கொண்டி ருந்து அருள்பாலிக்கும் மாரியம்பாள் தனது திருவிளையாடலுக்காக, தெய் வானை உணவு சமைப்பதில் தாமதத்தை ஏற்படுத்தினார். மதிய உணவு வரப்பிந்தி யதும் பசியால் வாடிய சுப்பிரமணியம் மாரியம்பாளின் சந்நிதிச் சூழலில் நின்று “மாரியம்பாளே நீதான் தஞ்சம்” எனக்கூறி படுத்து உறங்கிவிட்டார். தன்பிள்ளையின் பசியைத்தீர்க்கத்திருவுளம் கொண்ட மாரி யம்பாள், சுப்பிரமணியத்தின் தாயார் போல் வந்து அவரைத் துயிலெழுப்பி பனை
இணுவில் ஒலி -

கலைப் பொக்கிஷத்தை வில் பெரிய சந்நியாசியார்
- கலாபூஷணம் மூ.சிவலிங்கம்
11 சாடல்
பட்டாபரா
யோலை மூடல் பெட்டியினுள் வைத்தி ருந்த திருவமுதை வழங்கிப் பசியாற்றி.
னார்.
சிறிது நேரத்தின் பின் ஓடோடி வந்த தெய்வானை வழமைபோல் உணவைக் கொடுக்க, திருவமுதின் சிறப்பு வெளிப்பட் டது. தாயாரிடமும் + சற்று முன்தானே மதிய உணவைக் கொண்டு வந்து தந்தீர் கள்” என்று சுப்பிரமணியம் கூறினார். மாரி யம்பாளின் திருவமுதுஞானத்தை உணர்த தியது. ஆடினார், பாடினார், ஓடினார், மாரி யம்பாளைப் போற்றி வழிபட்டார். தாயாரும் அன்னையை வழிபட்டு, தன் மகனுக்குக் கிடைத்த தெய்வீக அருளை வியந்த வண் ணம் எல்லோருக்கும் அந்த நற்செய்தி யைச் சொல்வதற்காக தமது இல்லமேகி னார். அன்னை சக்தியின் பேரருளால் சுப்பிரமணியம் முக்காலும் உணர்ந்த பெருஞ்சித்தரானார்.

Page 7
E பூ உ E 15, A = 415 )
க
பி
சித்தரான பெரிய சந்நியாசியாரின் பணிகள் 6
சந்நியாசிக் கோலம் பூண்டு நின்ற ந சுப்பிரமணியம் இறைபணியுடன் அறப்பணி - யையும் மேற்கொண்டார். தம்மை நாடி ந வருவோருக்குத் திருநீறிட்டு, மணிமந்திரம் - ஓதித் திருவாக்குச் சொல்லி வந்தார். சித்த மருத்துவத்தில் எதுவித தேர்ச்சியில்லாத போதும் சித்து மகிமையால் மூலிகைப் எ பொருட்களுடன் வைத்தியமும் செய்து கீ மக்களின் உடல், உளப் பிணிகளை நீக்கி ய னார். அதனால் அவரை எல்லோரும் பெரிய சந்நாசியார் என்று அன்புடனும் பய பக்தியுடனும் அழைக்கலாயினர். பெரியார் இ மகிமை திக்கெட்டும் பரவியது. உடல் ந நோய்கள், மனநோய்கள் ஆகியவற்றால் ச பீடிக்கப்பட்டோர் இவரிடம் வந்துவிட்டால் . அங்குள்ள வைரவர் சந்நிதி முன்பாக அவர் களை அமரச் செய்து குணப்படுத்துவார். பில்லிசூனியம், பேய்பிசாசு நம்பிக்கை கூடி க யிருந்த அக்காலப் பகுதியில் பீடிக்கப்பட் டோரை கிழக்கேயுள்ள உருத்திர பூமி ய யாகிய காரைக்கால் மயானத்தில் கழித்து
மா அகற்றிவிடுவார். நம்பிக்கை உள்ளவர் டி களுக்கு அது பலனைக் கொடுத்தது. இப்பெரியாரின் தெய்வீகச் சக்தியால் உடல் உள் நோய்களால் பாதிக்கப்பட்ட வர்கள் குணமடைந்தனர். அவரின் தெய் இ வீக சாதுரியத்தையும், நோய்களைக் குணப் மீ படுத்தும் ஆற்றலையும் கண்டு கேட்டு |
அறிந்து கவரப்பட்ட பலர் தொடர்ந்து ஏற வந்து அவரிடத்தில் கூடுவர். பெரியாரும்
அ தம்மை நாடி வருவோரை அரவணைத்து க ஆதரவு தந்து எதிர்காலப் பலன்களையும் அவர்களுக்குச் சொல்லுவார். இதன் ெ காரணமாக எந்நேரமும் பெருந்தொகை | யானவர்கள் அவரைச் சூழ்ந்து காணப்படு வர். இறையுணர்வு பெற்ற பெரிய சந்நி பு: யாசியார் தமது அடியார்களின் உதவியு து டன் ஆலயச் சூழலிலும் காரைக்கால் மயா னத்திலும் மூலிகை மரங்கள், கனிதரு மரங்கள், நிழல்தரும் மரங்கள் எனப் பல
இணுவில் ஒலி
வி
ப
3)

கையிலும் பயன்தரும் 1008 நன்மரங்களை எட்டினார். கோடையில் இவற்றைப் பராம க்க வேண்டிய நீரைப் பெறவும், கால் டைகள் நீரைப் பருகவும் வேண்டி இரு ணறுகள் உட்பட ஆலய வீதிகளில் ஏழு ர் நிலைகளைத் தோண்டிவித்தார். இறை ருளும், சித்தரின் மகிமையும், அடியார்க உன் சிரமதானப்பணியும் ஒருங்கமைய குறு ய காலத்தில் காரைக்கால்பதி பசுமை Tன சோலை வனமாகியது.
ஆலய அபிவிருத்தி பெரியாரின் சிந்தனையில் உருவான றைபணி சிவாலய அபிவிருத்தியை எடியது. சிவனாரின் சந்நிதியை அழகுற புமைப்பதற்காக சுற்றுச் சூழலிலுள்ள சடி கொடிகளை வெட்டித் துப்புரவு சய்து அகற்றினார்கள் அவரது அடியார் ள். மேலும் அங்கு காணப்பட்ட புற்றுக் ளையும் அகற்றும் பணியில் புற்றை வெட் ம்போது நெடிய பாம்புகள் வெளிவந்து எவரையும் துரத்தின. விசுவநாதப் பெரு சனின் ஆலயத்தின் அருகில் குடிகொண் நந்த பாம்புகள் தம்மை அங்கு செல்ல டாது துரத்தியதை அடியார்கள் பெரிய ந்நியாசியாரிடம் தெரிவித்தார்கள். அவர் றைவனை நினைந்து வேண்டியதால், ருவார காலத்தின் பின் ஆலயப் பணியை ண்டும் தொடர இறையருள் உணர்த்தி து. பெரியாரின் திருவாக்கை யாவரும் நறு மீண்டும் பணியை ஆரம்பித்தனர். ங்கு குடிகொண்டிருந்த பாம்புகள் தாமா வே அவ்விடத்தைவிட்டு அன்றையதினம் வளி யேறிவிட்டன. அவை விசுநாதப் ருமானின் பாதுகாவலர்களோ என்று டியார்கள் ஆச்சரியப்பட்டார்கள். தொடர்ந்து திருத்தலத்தின் உள்ளும் மும் செம்மைப்படுத்தப்பட்டு முடிந்த ம் அதைத் தொடர்ந்து பெரியாருக்குத் நவமுது கொடுத்த மாரியம்பாள் சந்நிதி 5, திருநீறிட்டு அருள்வாக்குச் சொல்ல வக்கும் ஞான வைரவரின் சந்நிதியும்

Page 8
அடங்கலாக சிவாலயத்தின் எல்லாப் பகுதிகளும் சிறப்பான முறையில் சீராக் கப்பட்டன. இப்புனிதமான காரைக்கால் திருப்பதியில் யாவரும் வந்து மன நிறை வுடன் தரிசனம் மேற்கொள்ளலாயினர். பொயசந்நியாசியாரின் ஆலயப் பணியில் எல்லோரும் மனநிறைவு கண்டனர்.
இணுவைக் கந்தப் பெருமானின்
ஆலயப் பணி காரைக்கால் சிவன்கோவிலின் புன ருத்தாரணப் பணியுடன் பெரிய சந்நி யாசியார் தமது மூதாதையரின் உரிமை யான இணுவில் கந்தப் பெருமானின் ஆலயப் பணியையும் உள்ளன்போடு செய்து வந்தார். ஒரு புண்ணிய காலத்து சுபதின இரவு பெரியார் முருகப் பெருமா னைத் தியானித்த வண்ணம் உறங்கி விட்டார். பெரியாரின் கனவில் தோன் றிய முருகப் பெருமான் தாம் உல்லாச மாக வீதி உலா வருவதற்கு பெருமஞ் . சம் ஒன்றை அமைக்குமாறு கூறி அதன் மாதிரி உருவமைப்பையும் காண்பித்து மறைந்தருளினார். காலையில் எழுந்த பெரியார் கனவில் கண்ட திருமஞ்சத் தின் அமைப்பை மனதில் ஆழப் பதித்தவ ராய் அதனை உருவாக்கச் சித்தம் கொண் டார்.
திருமஞ்சம் உருவாக்கம் வழமையாகப் பொழுது புலர்ந்ததும் அன்று காலை தமது அன்றாட கடமை களை முடித்துக்கொண்டு ஆலய தரி சனம் செய்தார். பின்பு காரைக்கால்பதியை அடைந்தார். வழமை போலத்தம்மை நாடி வரும் அடியார்களிடம் தாம் கனவில் கண்ட இனிமையான செய்தியை எடுத்துரைத்து, முருகப்பெருமானுக்குத் திருமஞ்சம் அமைக்கும் அமைப்பையும் விபரித்தார். அடியார்கள் புடைசூழவர பெரியசந்நியா சியார் எமது ஊரிலுள்ள பொதுமக்களிடம் மஞ்சம் செய்வதற்குத் தரமான மரங்கள் தேவை என்று கேட்டுக் கொண்டார்.
இணுவில் ஒலி

பார்ட்
உலகப் பெருமஞ்சம்
பொதுமக்கள் மனமுவந்து அன்பளிப்பாக வழங்கிய மரங்களைச் சிரமதான முறை யில் அடியார்கள் தறித்துக் கொண்டு வந்து பெரியாரின் இல்லச் சூழலில் மலைபோலக் குவித்தார்கள். முருகப் பெருமானின் திரு மஞ்சம் செய்வதற்காகப் போதுமான மரங் கள் கிடைத்த போதும் சிற்ப வேலைக்குரிய ஆசாரிமாரைப் பெற்றுக் கொள்வதில் சிர மம் ஏற்பட்டது. முருகப் பெருமானே பெரிய சந்நியாசியார் உருவத்தில் தென்னிந்திய சிற்பாசாரியாரிடம் சென்று 'இணுவில் கந்தசுவாமி கோயிலுக்கு ஒரு புதிய மஞ்சம் செய்ய வருமாறு கூறி அவ்விடத்துக்கு வரும் பாதையையும் தெரிவித்து மறைந்த ருளினார். அக்கணமே அவ் ஆசாரியார் தமது வேலைக்குத் தேவையான ஆயுதங் களையும் எடுத்துக்கொண்டு உதவியாட்

Page 9
9 (1. டி 4  ெ& 4 5 6 7 21, 22 &
சீ
களையும் அழைத்துக் கொண்டு இணு சி விலை வந்தடைந்தார். முருகப் பெரு ஓ மானின் அருளை எண்ணி பெரியசந்நி யாசியார் மகிழ்ச்சியடைந்தார்.
திருமஞ்ச வேலைகள் ஆரம்பம் தமிழகத்திலிருந்து வந்த சிற்பாசாரி யார், பெரியசந்நியாசியாரின் ஆலோச னையில் 1902 ஆம் ஆண்டு ஒரு நல்ல சுப் தினத்தில் திருமஞ்சத்துக்கான அச்சை ஏற்றினார். சந்நியாசியாரின் வீட்டின் அய லில் இருக்கும் முருகன் ஆலயத்தின் தென்பகுதியில் இவ்வேலைகள் ஆரம்பம் மாயின. முருகனின் திருவருளும், பெரிய சந்நியாசியாரின் சித்து மகிமையும், விடா முயற்சியும், ஆசாரிமாரின் வேலைத் திற மையும் காரணமாக திருமஞ்சத்தின் பீடம் வரையான வேலைகள் நிறைவடைந்ததும் மஞ்சப் பணி இறையருளினால் தடைப்பட் டது. பெரியார் இறையருளை வேண்டித் தியானித்ததும் மிகுதி வேலைகளை கந்த
ப! சுவாமி கோயில் வளாகத்தில் செய்யுமாறு ள உணர்த்தியது. அடித்தளம் சில்லுகள் "ெ பூட்டப்பட்டு கந்தசுவாமி கோயிலுக்கு வ உருட்டிச் செல்லப்பட்டது. மஞ்சவேலை கள் ஆரம்பித்துச் செய்யப்பட்ட இடம் சே இன்றும் மஞ்சத்தடி என்றே அழைக்கப்படு ப கின்றது, அடித்தள மஞ்சம் இணுவில் | கந்தசுவாமி கோவிலின் தென் கிழக்கு உ வீதியில் இருக்கும் மருத மரத்தின் கிழ் ன நிறுத்தப்பட்டு அதற்குரிய கொட்டகையும் அமைக்கப்பட்டு மிகுதி வேலைகள் சுறு சுறுப்பாக நடைபெறலாயின. இறைவனின் சித்தப்படி 1906 ஆம் ஆண்டின் தைப்பூசத் தினத்தன்று முதன்முதலாக திருமஞ்சம்
வீதிவலம் வந்தது.
திருப்பெருமஞ்சத்தின் சிறப்பு இப்பெருமஞ்சம் முப்பத்தொன்பரை | அடி உயரமும் மிகப் பிரமாண்டமான பு, தோற்றமும் கொண்டது. இதன் அடிப் பாகத்திலிருந்து மேல் விமானம் வரை பல வகையான அமைப்புகளுடன் கூடிய
இணுவில் ஒலி
ய
6 36 4 (இ - 6
ய

அற்பத் தொழில்நுட்ப வேலைகளும் உயிர் ஓவியங்களாகவே அமைந்துள்ளன. அண்டசராசரங்கள், முருகனின் திரு விளையாடல்கள், மனித வாழ்வின் சகல வளர்ச்சிப் பரிமாணங்கள், தேவர்களும், முனிவர்களும், கந்தர்வர்களும் முருகனை வழிபடும் காட்சிகள் யாவும் அடங்கிய சிற்ப, சித்திரக்காட்சிகள் மஞ்சத்தை அலங்கரிக் கின்றன. இம்மஞ்சத்தில் ஆங்காங்கே தொங்கவிடப்பட்டுள்ள 1008 சிறிய மணி கள் மஞ்சம் அசையும் வேளை ஓங்காரத் வடன் ஒலிக்கும். அசைவின்போது அதன் அற்புதக் காட்சி 'ஆடி அசையும் சித்திரக் எடமோ' என்று பலரும் வியக்கும் அற் தமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. இப்பெருமஞ்சத்தை நேரில் கண்டு வியந்த சிற்ப மேதைகளும் விற்பன்னர்களும் ாதாரணமாக இப்படியான அமைப்பை "டைய மஞ்சத்தை மனதார எண்ணியும் சர்க்கமுடியாது எனப் பெருமையளித்துள் எனர். முருகப் பெருமான் தமக்கெனச் "சய்வித்த இவ்வருட் சக்தியாலேயே இவ் சாறு அமைந்துள்ளதெனப் புகழ்ந்தனர். ஒன்றும் கூட உலகின் எங்காவது இது பான்ற உயர்ந்த, அகன்ற, சிற்ப வேலைப் இடுடைய பெருமஞ்சத்தைக் காண முடி பாது. அதனால் உலகப் பெருமஞ்சமாக டயர்ந்து நின்று எமது மண்ணின் பெருமை மயப் பறைசாற்றுகின்றது. இப்பெருமஞ் ம் வருடாவருடம் தைப்பூசத்தன்றும், ஆனிமாதம் வரும் வருடாந்தப் பெருவிழா ன் பன்னிரண்டாம் திருவிழாவன்றும் வனி வருவதைக் காணலாம். )
நூறு வருடங்களுக்கு முன், வருடாந்த பருவிழாக்காலத் தேரோட்டம் பெரிய ந்நியாசியாரின் திருவுளப்படி ஏழு தேர் ணுவில் கந்தசுவாமி கோவிலில் இருந்து றப்பட்டு காரைக்கால் சிவன் கோவில் "தியைச் சுற்றி வரும் பவனி நடைபெற் ள்ளது. இத்தேர்ப் பவனிக்காகப் பெரி எர் தேரோடும் வீதியை முப்பத்தாறு அடி

Page 10
அகலத்தில் அமைத்துள்ளார். காலப் போக்கில் தேர்ப்பவனி இல்லாததால் வீதிகளும் குறுகிவிட்டன. பல தெய்வீக நிகழ்வுகளைக் கண்டு மகிழ்ந்த பெரியார் இப்பகுதியின் நாட்டார்பாடலுக்கும், கூத் துக் கலைக்கும் பெரும் ஆதரவு நல்கி யுமுள்ளார்.
சமாதி நிலை பெரிய சந்நியாசியார் தாம் சமாதியடை யும் காலத்தை முன்கூட்டியே அறிந்திருந் தமையால் சமாதிக்குரிய இடத்தையும் தேர்வுசெய்து அந்த இடத்தில் சமாதிக் கிடங்கையும் வெட்டிவித்து வைத்திருந் தார். முன்கூறிய நாள் நேரத்தில் சமாதியு மடைந்தார். இவர் சமாதியடைந்தது 1917 ஆம் ஆண்டு சித்திரை மாத திருவோண நட்சத்திரமாகும். இப்பெரியார் சமாதி யடைந்த இடத்தில் அவரால் வணங்கப் பட்டு வந்த வேல் நாட்டப்பட்டு மக்கள் வழி பாடு செய்தனர். அவ்வழிபாட்டிடம் மஞ் சத்தடி அருணகிரிநாத சிவசுப்பிர மணியர் ஆலயமாக வளர்ந்து உயர்ந்து காட்சிய ளிக்கிறது. இக்கோவிலில், பெரியாரின்
ஜனாதிபதி பதக்கப் யா/இராமநாதன் கல்லூரி நூற்றாண்டு காலத்தில் எமது ஊர்ப் பாடசாலையில் உயர் தரம் (2013) கலைப்பிரிவில் கல்வி கற்கும் மாணவியாகிய
செல்ல செல்வி கீதாஞ்ஜனி பொன்
சுற்றா னானந்தம் மத்திய சுற்றாடல் அதி கார சபையின் கீழ் மேற் கொள்ளப்பட்டு வருகின்ற “சுற்றாடலைக் காப்போம்” என்ற தொனிப்பொருளிலே செயற்படும் சுற்றாடல் முன் னோடிப் படையணியில் ஜனாதிபதி பதக்க மாணவியாகத் திகழ்கிறார். அவரை 'இணு
E
இணுவில் ஒலி -

சமாதித் திதியான சித்திரை மாத திரு வோணத்தன்று தீர்த்தத் திருவிழா நடை பெற்று வருகின்றது.
இப்பெரியார் முற்காலத்தையும் உணர்ந்த சித்தராக வாழ்ந்தமையால், வடிவேற் சுவாமிகள், தட்செணாமூர்த்தி ஆகியோ ரின் தந்தையர்கள் பெரியாரின் முதன் மைச் சீடராக இருந்தமையால் முன்கூட் டியே இவர்களின் பிறப்பையும் எதிர்காலச் சிறப்பையும் கூறியிருந்ததாக அறிய முடி கிறது. இணுவில் சந்நியாசியார் என எல் லோராலும் அழைக்கப்பட்ட இப்பெருஞ் சித்தரின் காலத்திருந்தே சமய நெறியும், கிராமியக்கலைகளும் வளர்ந்து இணுவை மண்ணின் மங்காப்புகழுக்கு வித்திட்டுள் ளதை யாவரும் அறிவர். இணுவில் மண் ணின் பெருமைக்கும், சிறப்புக்கும் இப் பெருஞ்சித்தர் வாழ்ந்து காட்டிய பாதை நீண்ட வரலாற்றுப் பாதையாகவே செல்கி
றது.
இப்புனித மண்ணில் பிறந்த நாமனை வரும் செய்த பூர்வீக நல்வினைப் பய னென்றே கூறி இன்புறுவோமாக!
ம் வென்ற முதல் மாணவி
- யா/இராமநாதன் கல்லூரி - நூற்றாண்டு விழா கால முதலாவது
உயர் அடைவு சுற்றாடல் முன்னோடி வி.கீதாஞ்ஜனி.பொன்னானந்தம் . டல் முன்னோடிகளுக்கான உயர் விருதான - ஜனாதிபதி பதக்கத்தினை பிகையின் முதலாவது தமிழ் மாணவியாக
பெற்றுள்ளார்.
கத்தினை வென்ற இலங்கையின் முதல் தமிழ் வில் ஒலி' வாழ்த்துகின்றது.

Page 11
இணுவில் ஒலியை வா
செஞ்சொற்செல்வ
இணுவில் கிராமத்தின் டே முயற்சியாக வெளிவரும் “இன யில் ஆர்வம் கொண்டு உழை மான வாழ்த்துக்களையும் ந றேன். இலண்டனில் வாழும் களின் ஊர்ப்பற்றும் சைவத் த.
கள்திரு. தம்பு சிவா, கலாபூஷ« சரவணபவன் அனைவரது அயராத முயற்சியா? தேசம் முழுவதும் வாழும் இணுவில் வாழ்மக் ஒலி விளங்கும் என்பதில் ஐயமில்லை. இணுவ ளின் படைப்புக்கள் முதல் இன்றைய தலைமு அணி செய்யவிருப்பது பாராட்டுக்குரியது. இ6 மலரப் பிரார்த்தித்து வாழ்த்தி அமைகிறேன். )
தலைவர் - ஸ்ரீதுர்க்க
இணுவில் ஒலிக்கு எம் இதயத்
1 இணுவில் ஒலியின் முதல் ரூ நிறுவுனர் திரு நடராசா சச்சி கையளித்தார். நேற்றிரவே அ. தேன். ஏனெனில் அவற்றில் இ 1 Nன் இலக்கிய வாசனையும் சே
மீண்டும் வாசித்து மகிழுங்கள்
பலின் கோவில்கள், கல்வி நிலை டைப் படங்களில் ஒளிசொரிந்து பேரொலியும்
தம்பு சிவா எனும் பிரபலமான எழுத்தாளர் இதழாசிரியர் என அறிந்து இன்னும் கூட மகிழ் லண்டன் வந்திருந்தபோது இலக்கிய ஆர்வல. னோம். நாங்கள் எங்கள் நூல்கள் சிலவற்றைப் பு
இணுவிலைப்பற்றி முதலில் நான் அறிந்த ஆனந்தர் மூலமே என்பதை பெருமையுடன் ( எமக்குச் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலே என் தமிழும்திருக்குறளும் தேவநாகர மொழியும் பாட சீக்கிரம் இணுவில் ஒலியில் ஒரு கட்டுரை எழுத மடலை முடிக்கிறேன். வாழ்க, இணுவிலின் நா
இணுவில் ஒலி

ழ்த்துகின்றார்கள் பரின் வாழ்த்து மன்மைகளை ஆவணப்படுத்தும் அற்புத னுவில் ஒலி” கண்டு இன்புற்றேன். இப்பணி மக்கும் அனைவருக்கும் எனது இதயபூர்வ ன்றிகளையும் சமர்ப்பித்துக் கொள்கின் திருமிகு நடராசா சச்சிதானந்தன் அவர் மிழ்ப்பற்றும் பெருமைக்குரியவை. அன்பர் ணம் திரு.மூ.சிவலிங்கம், திரு.சிவலிங்கம் எல் “இணுவில் ஒலி” தொடர்கிறது. சர்வ களை இணைக்கும் பாலமாக இணுவில் வில் பெற்றெடுத்த சான்றோர் பெருமக்க றையின் படைப்புக்கள் வரை இந்நூலில் றையருளால் “இணுவில் ஒலி” நித்தியம்
கலாநிதி ஆறு.திருமுருகன், காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை.
தலைவர் - சிவபூமி அறக்கட்டளை. ந்து உதித்த வாழ்த்துக்கள் மூன்று இதழ்களையும் அதன் வெளியீட்டு சிதானந்தன் நேற்றைய தினம் எனக்குக் வற்றைப் பார்வையிட்டுப் பரவசமடைந் ணுெவில் மண்ணின் மணமும், ஈழத் தமி ர்ந்து கம கம என்று வீசி எம்மை மீண்டும் - எனக் கூடி வரவழைக்கின்றன. இணுவி லயங்கள், கலாசார ஆராதனைகள், அட்
எழுப்புகின்றன. - திரு. தம்பு சிவசுப்பிரமணியம் அதன் கிறோம். ஏனெனில் அண்மையில் அவர் - திருமலை பாலா மூலம் அறிமுகமா பரிமாறிக்கொண்டோம். து மறைந்த தமிழாசான் உயர்திரு சபா தெரிவிக்கிறேன். ஏனெனில் 1940களில் றுமே நாங்கள் மறக்க முடியாத வகையில் டிக்கற்பித்த பெருமகன். அவரைப் பற்றிச் இருக்கிறேன் எனக்கூறி இச்சிறு வாழ்த்து மம்!
பேராசிரியர் கோபன் மகாதேவா, MSc, PhD, Hon DLitt, FIET, FCMI, FRSPH

Page 12
சைவ ம். முன்னினி
இதிகாச காலந்
இந்து சமுத்திரத்தி பொ.பஞ்சாட்சரம்
தினமாக இலங்ல இலண்டன்.
அமைந்த யாழ்ப்ப யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி ய நலாம் மைல் கல்லுக்கும் ஐந்தரை மைல் யில் அமைந்த அழகிய கிராமமே “இணை அழைக்கப்பட்ட இணுவில் என்னும் கிரா பல கோயில்களையும் காணிப் பெயர் காணலாம். பரராசசேகரப் பிள்ளையார் சேகரப்பிள்ளையார் கோயில், அரசசே கோயில், மன்னன் தோட்டம், சேவகன் க. நல்ல உதாரணங்கள். இந்த நிலப்பரப்பி மாண்புற வாழ்ந்து வருவாராயினர்.
இவ்வாறு வாழ்ந்து வரும் வேளான வைத்திய பரம்பரை ஒன்று வருவதாயிற். வைத்தியர் சீரும் சிறப்புமாக திகழ்ந்தார். ராலேயே இச்சந்ததியினர் வைத்தியர் கர் அழைக்கப்படுகின்றனர். வைத்தியர் கர்த்த வேலாயுதருக்கு முந்தியவராக இருக்கவே கால் பத்திரங்கள் எதிலும் கர்த்தர் என் வில்லை. பல்லப்பை என்ற குறிஞ்சி இ உண்டு. இந்தப் பகுதியிலும் கர்த்தர் பரம்ப அப்பாக்குட்டி முருகையா ஆசிரியர் கூறச
வைத்தியர் கர்த்தர் பரம்பரையில் ; முருகேசுவுக்கு ஏக புத்திரனாக அப்பாக்கு சைவமும் தமிழும் இசையும் நாடகமும் த சித்தர்கள் வாழ்ந்த இணுவிலில் அவதி உடன்பிறப்புக்கள் எவரும் இல்லாதபடிய யப்பா பிள்ளைகளான திருவாளர்கள் தம் காமசேகரம்பிள்ளை, சின்னக்குட்டியர், மா நகேந்திரி, கனகர், கதிரவேலு, திருமதிகள் ணாத்தை, சுப்பர் நாகமுத்து... ஆகியோரு டன் வாழ்ந்து வந்தார்.
திரு அப்பாக்குட்டி தனிப்பிள்ளைய மிகவும் செல்லமாகவும் கண்ணுங்கருத்து
இணுவில் ஒலி -

காஜனா உருவாகத்தில் றமுருகேசு அப்பாக்குட்டி
தொட்டு இன்றுவரை ல் ஓர் ஓப்பிலா இரத் கயின் தலையாக எண தீபகற்பத்தில் பில் அண்ணளவாக 5 கல்லுக்கும் இடை பில்” என்று ஆதியில் மம். அரசர்களோடு = களையும் இங்கு
கோயில், செகராச =ாலை பிள்ளையார் ாடு ஆகிய பெயர்கள் ல் பல சைவ மக்கள்
அப்பாக்குட்டி அவர்கள்
ர்குடிகள் மத்தியில் று. கர்த்தர் என்னும் எனவே இவர் பெய த்தர் பரம்பரை என்று கர் என்பர் குழந்தையர் வண்டும். அண்மைக் ற பெயர் காணப்பட ணுவில் கிராமத்தில் கரை இருந்ததாக திரு க் கேட்டிருக்கிறேன். திரு வினாசித்தம்பி
ட்டி 1865ஆம் ஆண்டு தழைத்தோங்கிய பல தரித்தார். இவருக்கு பால் சித்தப்பா, பெரி Dபர் கனகசபை, கதிர் எரிமுத்து, ஆறுமுகம், சான மாரிமுத்து, கண் தடன் மிகுந்த பாசத்து
iri
மயில்வாகனம் அவர்கள்
பாக இருந்தபடியால் பமாகத் தாய் தந்தைய
பொன்னையா அவர்கள்

Page 13
ம
ப
கி.
தர
த)
ரால் வளர்க்கப்பட்டு வந்தார். ஏட்டுக் கல்வியுடன் பல கலைகளையும் வீட்டி
5) லேயே தந்தையிடமும் காலத்திற்குக் காலம் தென்னிந்தியா விலிருந்து வரும் அறிஞர், சித்தர் முதலியோரிடம் இருந்தும் கற்றார். இவரது தந்தையாரிடமே வைத்தி
பு; யத்தையும் கற்று சிறந்த வைத்தியராகத்
ப திகழ்ந்தார். விஷகடி வைத்தியம் உட்பட சித்தவைத்தியம், கர்த்தர் பரம்பரையின் | குடும்பச்சொத்து, உயிர் ஆபத்தை உண்டு பண்ணக் கூடிய வருத்தத்தால் பீடிக்கப் பட்டு, சேடம் இழுத்து, மூச்சுவிட கஷ் டப்பட்டுக்கொண்டிருக்கும் நோயாளர்க ளுக்கு சிறிது ஆறுதல்படுத்த ஏதாவது செ செய்யுங்கள் என்று அலறிக் கொண்டு செ இவரை நாடி ஓடி வருபவர்களுக்கு அன்
சப் பான ஆறுதல் வார்த்தைகள் கூறி ஏற்ற மருந்தைக் கொடுத்து நோயைத் தீர்ப்பார். வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தை அடைந்தவர்களுக்கு எந்த மருந்தும் சித் திப்பதில்லை. இந்த நேரத்தில் மாத்திரம் தெ பொட்டகத்தில் பக்குவமாய் பட்டு துணை
யுட யில் கட்டி வைத்திருக்கும் மாத்திரைக்
வ கட்டையை எடுத்து பாவிப்பார். மாத்திரை
I கட்டையைத்தானானவே பாலில் உரைத்து
வ நோயாளிகளுக்கு பருக்குவார். உடனடியா கவே சேடம் இழுப்பதெல்லம் நின்று நோயாளியின் மூச்சுத்திணறலும் மறைந்து கதைக்கமுடியாமல் இருந்தவர்கதைக்கக்
வா கூடிய நிலைக்கு வந்துவிடுவர். மீண்டும்
6ெ நோயுற்று இறுதிக் கட்டத்தை அடைந்த
ை வர்களுக்கு சேடம் இழுத்தல், மூச்சுத்
கம் திணறல் இருக்கமாட்டாது. உயிர் அமைதி படி யாக பிரியும். இதுதான் இந்த அரு மருந் தின் சிறப்பு. இந்த மாத்திரைக் கட்டையின்
ை உரைத்துக் கொடுத்து ஆயிரக்கணக்கான நோயாளிகளின் இயமவேதனைகளை
டி தீர்த்திருக்கின்றார் திரு. அப்பாக்குட்டி.
Iா 1938 ஆம் ஆண்டு முற்பகுதியில் இவர்
வா வெளியில் நடமாடுவதை குறைத்துக் கொண்டபடியினால் இவரது இளைய
வி இணுவில் ஒலி
கம்
ରି
வி
ରି

கன் ஆசிரியர் திரு. முருகையா மாத்தி "ரக் கட்டை உரைத்துக் கொடுக்கும் ணியை செய்து ஆயிரக்கணக்கான நாயாளிகளை ஆறுதல் படுத்தியிருக் றார். திரு முருகையா அவர்கள் உள்ளூர் த்தம் காரணமாக 1990 இற்குப் பின்னர் ல வீடுகளில் மாறி மாறி இருந்திருக் றார். இந்தக் காலகட்டத்தில் அருமந் என மாத்திரைக்கட்டை மாயமாகமறைந்து "ட்டது. பலமுயற்சிகள் எடுத்தும் அந்த அருமருந்து அகப்படவே இல்லை. இது ருபெரிய இழப்பாகும். மாத்திரைக்கட்டை ருந்திருந்தால் அதைப் பகுப்பாய்வு சய்து ஒரு புதிய மாத்திரை கட்டையைச் சய்திருக்கிலாம். இந்த மாத்திரை கட்டை ம்பந்தமான செய்முறை ஒன்றும் நம்மவர் நவருக்கும் தெரியவில்லை. ஏட்டுப்பிர கள் பல இருந்தன. அவையும் காலத் ால் அழிந்துவிட்டன.
திரு. அப்பாக்குட்டி அவர்கள்வைத்திய தாழிலுடன் மேட்டுப்பயிர்ச் செய்கையை ம் இணுவிலில் பெரிய அளவில் செய்து ந்தார். இதைவிட சண்டிலிப்பாயில் னைவி விசாலாட்சி மூலம் சீதனமாக ந்த வயற் காணிகளும் பனந்தோப்புக் ளும் இருந்தன. அங்கு நெல், சனல், எள்ளு போன்ற பயிர்களும் செய்து வந்தார். வர் வசித்த வீடு நாற்சார் வீடு என்னும் சதியான வீடு. வீட்டின் நடுவில் காற்று வளிச்சம் வரக்கூடிய முற்றம். முற்றத் தச் சுற்றிவர விறாந்தைகளும் அறை ளும். வெளிப்பக்கத்தில் கிழக்கே அடுப் ஓயும் விறாந்தையும் வடக்கேயும் ஒரு றாந்தை. வடக்கே உள்ள விறாந்தை யச் சேர்ந்தாற் போல் தலைவாசல் என்று சொல்லப்படும் பாரிய ஓலைக்கொட் 3. மழைக்காலங்களில் இவரது இரட்டை எட்டு வண்டி நேரே தலைவாசலுக்கு ந்து இவரை நனையாமல் இறக்கிவிடும். 1930 ஆம் ஆண்டு வைகாசி மாதமள ல் வைத்தியர் அப்பாக்குட்டி வீட்டின்
- 11

Page 14
வடக்கு வெளி விறாந்தை ஒரு பாடசாலை யாக உருவெடுத்தது. இது சம்பந்தமாக அமரர் திரு தம்பையா நடராசா ஆசிரியர் அவர்கள் சைவமகாஜன வித்தியாசாலை யில் இந்த பாடசாலை ஆரம்பித்த விதம் பற்றி ஒரு பொது கூட்டத்தில் பேசிய வற்றைப் பார்ப்போம்.
“நான் அப்பொழுது அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் கற்றுக்கொண்டு இருந்தேன். அன்று காலையும் வழக்கம் போல சில மாணவர்களுடன் பாட சாலைக்குச் சென்று கொண்டிருந்தேன். எங்களை சில பெரியவர்கள் வழிமறித்து இனி உங்களுக்குப் பள்ளிக்கூடம் அப்பாக் குட்டியர் வீட்டில்தான் என்று சொல்லிக் கூட்டிச் சென்றார்கள். அங்கு தொடர்ந்து சில நாட்கள் வகுப்புக்கள் நடந்தன. பின்பு அவர் வீட்டிற்கு முன்னால் இருந்த காணி யில் கொட்டில் போட்டு பாடசாலை நடந்
தது*
1930களில் இணுவில் மக்கள் அனை வரும் சைவ சமயத்தவரர்களாகவே இருந் தனர். எனவே பெற்றோர் தங்கள் பிள்ளை களைச் சைவசூழலில் சைவ பாரம்பரியத் தில் கற்பிக்க விரும்பினார்கள். அது ஒரு மக்கள் போராட்டமாகவே வெடித்தது. அந்த நிகழ்ச்சியின் ஒரு சிறு அங்கத்தை தான் மேலே ஆசிரியர் சொல்ல கேட்டீர் கள். அமெரிக்கன் மிஷன் பாடசாலைக்கும் புதிதாக அமைத்த பாடாசாலைக்கும் இடைத்தூரம் 300 மீற்றர்தான். எனவே ஆங்கிலேய அரசாங்கம் புதிதாக ஆரம் பித்த பாடசாலையை அங்கீகரித்து நிதி உதவி செய்ய பின்னின்றது. ஒரு கிறிஸ்த வப் பாடசாலைப் பிள்ளைகளைச் சேர்த்து உருவாக்கிய சைவ மகாஜன வித்தியா சாலையை வந்து பார்க்கவே பின்நின்றது. இந்தத் தருணத்தில் கல்விக் கந்தோரில் வட்டாரப் பரீட்சை உத்தியோகத்தராக இருந்த சதாசிவ ஐயர் என்பவரது உதவி பலன் தரத் தொடங்கியது. இந்தக் கால்
இணுவில் ஒலி

கட்டத்தில் வேதனம் ஏதும் பெறாமல் இந் தப்பாடசாலையில் ஆரம்பத்தில் படிப்பித்த சைவப் பெரியார்திரு சேதுலிங்கம் செதர்ச் சட்டம்பியார்), சைவ உபாத்தியார் திரு சபா பதிப்பிள்ளை ஆகியோரை நாம் நன்றியு டன் நினைவுகூரவேண்டும்.
ஆரம்ப காலத்தில் கட்டடங்கள் கட்ட வும் ஆசிரியருக்கு ஊதியம் வழங்கவும் பெரிய நிதி தேவைப்பட்டது. அந்த நிதியை உரிய நேரத்தில் உதவிய பெருவள்ளல் திருவாளர் சிதம்பரநாதர் மயில்வாகனம். இவர் உடையார் சிதம்பரநாதரின் மகன். சிங்கப்பூரில் புகையிரதத் திணைக்களத் தில் உயர் உத்தியோகத்தில் இருந்தவர். இப்படியாக இருக்கும் நேரத்தில் பாட் சாலையின் அன்றாட கடமைகளைச் செவ்வனே நிர்வகித்து வந்தவர் காணிச் சுவாந்தரான திரு கதிர்காமசேகரம்பிள்ளை பொன்னையா அவர்கள். இவரைக் கல் வீட்டுப் பொன்னையா என்று ஊரவர் அழைப்பர், ஊரவர் ஆதரவுடனும் திரு. மயில்வாகனத்தின் ஆசியுடனும் திரு. கதிர்காமசேகரம்பிள்ளை பொன்னை யாவை சைவமகாஜன வித்தியாசாலை யின் முகாமையாளராக நியமித்து அவரின் பெயருக்கே திரு. அப்பாக்குட்டி மூன்று பரப்புக் காணியை பாடசாலை நடத்த தர்ம சாதனமாகக் கையளித்தார்.
இந்த முகாமையாளரே கட்டடங்களை யும் கட்டி சிறந்த ஆசிரியர்களையும் தேடிப் பிடித்து நியமித்து உரிய புள்ளி விவ ரங்களை கல்விக் கத்தோருக்கு சமர்ப் பித்து சைவ மகாஜன வித்தியாசாலையை உதவி நன்கொடை பெறும் பாடசாலை யாக மாற்றினார். பாடசாலையைச் சுற்றிவர இருந்த காலஞ்சென்றவர்களான அப்பாக் குட்டி பொன்னம்பலம், அப்பாக்குட்டி சிவஞானம், குருசாமி ஞானேஸ்வரி ஆகி யோருக்குச் சொந்தமான 3 பரப்புக் காணி யையும் பாடசாலை பாவிப்பதற்கே அனு மதித்தனர். 1960ஆம் வருடம் பாடசாலை

Page 15
3 4 4 4 * 4
கள் எல்லாம் அரச உடமையாக்கப்பட்ட ஐ பொழுது இந்தக் காணியும் அரச உடமை யானது. திரு அப்பாக்குட்டியின் மகள் அன்னப்பிள்ளை செல்லப்பாவுக்கும் திரு. அப்பாக்குட்டி முருகையாவுக்கும் திரு அப்பாக்குட்டியரால் கொடுக்கப்பட்ட வீடும் காணியும் சேர்த்து ஆறு பரப்பு ஒரு பகுதி விலையாகவும் மற்றப் பகுதி இனாமாகவும் கு பாடசாலைக்குக் கிடைத்தது. 1930 இல் 30 பி பிள்ளைகளுடன் ஆரம்பித்த ஒரு சிறு பாட சாலையை 350 மாணவர்கள் படிக்கின்ற பாரிய வித்தியாசாலையாக்கி, 1953 இல் ப திருவாளர் பொன்னையா அவர்கள் சிவ பதம் அடைந்தார். இந்த முகாமையாளர் என்னை ஆங்கில உதவி ஆசிரியர் பதவி யில் 1949 ஆம் ஆண்டு நியமித்தார் என் க பதை நன்றியறிதலுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். பதினெட்டு மாதங்களின் பின் எனக்கு உள்நாட்டுத் திணைக்களத் தில் தொழில் கிடைத்ததால் ஆசிரியத் தொழிலை விட்டுவிட்டேன்.
இணுவில் கந்தசுவாமிப் பெருமான் மீது திரு அப்பாக்குட்டி அவர்கள் மிகுந்த பக்தி 3 உடையவராகத் திகழ்ந்தார். இவரது சகோ தர முறையான திரு. கதிர்காமசேகரம் பிள்ளை இணுவில் கந்தசுவாமி கோயிலில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற மஞ்சத்தை செய்வித்த பெரிய சந்நியாசியாரிடம் க பக்தியும் பெருமதிப்பும் உடையவர். பெரிய 6 சந்நியா சியார் சிவபதம் அடைந்த பொழுது நீ அவரை அடக்கஞ்செய்து அந்த இடத்தில் ஒரு முருகன் ஆலயம் கட்ட ஆக்கமும் ஊக்க மும் கொடுத்தார் இப்பெருந்தகை. ட பிரசித்திபெற்ற மஞ்சம் செய்த புண்ணிய ம பூமியில் கட்டப்பட்ட ஆலயத்தை மஞ்சத் ய தடி முருகன் ஆலயம் என்றே அழைக்கின் றனர். கோயில் கட்டி முருகனைத் ஸ்தா பு பித்து கும்பாபிஷேகத்தையும் இவரே முன் னின்று நடத்திச் சிறப்பித்தார். இக்கோயி
ே லுக்கு திருவிழாக்கள் ஏற்படுத்தப்பட்ட பொழுது கொடியேற்றத் திருவிழாவையும் பூ
இணுவில் ஒலி
5 , 5ெ ( 9 E
-) / 3

ஜப்பசிக் கார்த்திகை திருவிழாவையும் நான் செய்ய ஒப்புக்கொண்டார். பெரிய =ந்நியாசியரின் அண்ணன் வேலாயுதச் =ந்நியாசியாரிடம் அபிமானம் கொண்டு அவர் செய்யும் தொண்டுகளுக்கு உதவிக் கரம் நீட்டினார்.
சித்திரை வருடப்பிறப்பை திரு அப்பாக் தட்டி சிறப்பாக கொண்டாடுவார். வருடப் சிறப்புக்கு முந்திய இரவிலேயே இவர் அயலில் உள்ளவர்களுடன் சேர்ந்து சைவ மகாஜனாக் கல்லூரிக்கு தென்கிழக்குப் க்கமாக நின்ற இலுப்பை மரத்தின் கீழ் பொங்குவார்கள். திரு அப்பாக்குட்டியின் வீட்டின் நடு முற்றத்தில் பல இரும்புச் சட்டி களும் பானைகளும் வைத்து வடை, மோத கம், அரியதரம், பாலுரட்டி முதலிய பல காரம் செய்வார்கள். இரவு 10 மணியளவில் வீட்டின் ஓர் அறையில் சிவன், அம்மன் படத்திற்கு முன்னால் பொங்கல்பானை யையும் பலகாரங்களையும் மாம்பழம் லாப்பழம், வாழைப்பழம் ஆகிய கனி வர்க் கங்களையும் மடை பரவி, பூசையாகத் தேவாராம் புராணம் படிக்கப்படும். இதற் கிடையில்வெளி விறாந்தையில் நோயாளி களுடன் கதைத்துக்கொண்டும் சிகிச்சை செய்துகொண்டும் இருக்கும் திரு அப்பாக் நட்டி அழைக்கப்டுவார். அவர் கால் முகம் கழுவி, நீறணிந்து, ஒரு செம்பில் நீர் கொண்டு வந்து மடை மாற்ற ஆயத்தமாக மற்பார். தேவார புராணம் பாடி முடிந்தவு டன் அவரே மடைமாற்றி தீபத்தைக்காட்டு பார். மடைமாற்றுவதென்பது படைத்த பண் டங்களை கடவுளுக்கு அர்ப்பணிக்கும் முக மாக நீரை மூன்று முறைதெளித்தல். பின்பு யாவரும் பிரசாதம் உண்டு மகிழ்வார்கள். பின்பு ஒரு நல்ல நாளில் கைவிசேஷ மும் ஏர்பூட்டு விழாவும் நடைபெறும். கெவிசேஷம் என்றால் சிறுவர்கள் எல் "லாருக்கும் காசுகள் பெறப்போகிறோம் என்று ஒரே மகிழ்ச்சி, படத்துக்குமுன்னால் -ரண கும்பம் வைத்து வாழைப்பழம்,
- 13

Page 16
வெற்றிலை, பாக்கு முதலியனவும் ஒருதட் டில் 5 சதக்குற்றிகளும் மற்றைய தட்டில் 1 சதக் குற்றிகளும் பரப்பிவைக்கப்படும்.
திரு அப்பாக்குட்டி படத்திற்கு தீபம் காட்டிவிட்டு முதலில் பெரியவர்களுக்கு கைவிசேஷம்கொடுப்பார். அதிகமாக 1 பணம் கொடுக்கப்படும் 6 காசுகள்). பின்பு சிறியவர்களுக்கு 3 சதம் கொடுக்கப்படும். அந்த 3 சதத்திற்கு 3 விதமான பண்டங்கள் வாங்கலாம். 1 சதத்திற்கு சுண்டற் கடலை வாங்கினால் நாலு ஐந்து சிறுபிள்ளைகள் சாப்பிடலாம். 1 சதத்திற்கு இரு கை நிறை யக் கச்சான் வாங்கலாம். 1 சதத்திற்கு கறுவா வாங்கினால் 10 பிள்ளைகள் நாள் முழுக்கக் கொறிக்கலாம்.
“சீரைத் தேடின் ஏரைத்தேடு” என்பது பழமொழி அப்பாக்குட்டி வீட்டின் மேற்கு விறாந்தைச் சுவரில் ஏருக்கு அன்று மஞ் சள் நீர் தெளித்து துப்புரவு செய்து திரு நீற்று குறி இழுத்து பொட்டும் இட்டு கண பதியை வணங்கி ஏரைத்தூக்கி திரு அப் பாக்குட்டி ஒருவரின் தோளில் வைப்பார். அந்த விழாவைச் செல்லையா அத்தான் என்று அனைவராலும் அன்பாக அழைக் கப்படும் ஒருவரே முன்னின்று நடத்துவார். ஏரைத்தூக்கி ஒருவரின் தோளில் வைப்ப தோடு திரு அப்பாக்குட்டியின் பங்கு முற் றுப் பெற்று விடும். அவருக்கான பல நோயாளிகள் காத்துக்கொண்டு நிற்பார் கள். இந்தச் செல்லையா அத்தான் என்ப வர் திரு அப்பாக்குட்டியின் மருமகன் முறை யானவர். செல்லையா அத்தான் தலை மையில் ஏரோடு ஒரு சிறு ஊர்வலம் மக் மக்கிளியேட் வைத்தியசாலைக்கு வடக்கே உள்ள நீலாம்பற்றை என்ற தோட்டத்திற்கு போகும். ஏற்கனவே அங்கு கொண்டு செல்லப்பட்ட சோடி மாடுகளை ஏரில் பூட்டி மூன்று வட்டங்கள் நாளுக்கு உழப்படும். அங்கு சங்கரநாதர் என்னும் ஒரு பெரியார் பானையில் தேநீர் ஆயத்தமாக வைத்தி ருப்பார். அதை அவர் ஒரு தொண்டாகவே
இணுவில் ஒலி

செய்து வந்தார். அந்த வட்டாரத்திலுள்ள பல கமக்காரர்கள் அங்கு வந்து களை யாறுவார்கள். ஏர்பூட்டு விழாவுக்கு கொண்டு வந்த பலகாரங்களையும் பழங்களையும் சாப்பிட்டு சங்கரி அப்பாவின் தேநீருடன் ஏர் பூட்டு விழா இனிது நிறைவுபெறும். திரு அப்பாக்குட்டி காலத்திற்குப் பிறகு இவ் விழா மறக்கப்பட்டுவிட்டது. தமிழர் அனை வரும் கொண்டாடும் தைப்பொங்கல் விழா வில் திரு அப்பாக்குட்டியாரின் ஒரு சிறப்பு என்னவென்றால் மார்கழி மாதத்தில் வண் ணக் கோலத்தில் ஏற்றிய பிள்ளையார் எல்லாவற்றையும் ஒரு சிறு தேர்கட்டி மலர் களாலும் துணிகளாலும் அலங்கரித்து அயலவர்களின் பிள்ளைகளையும் சேர்த்து மன்னன் தோட்டத்தில் உள்ள ஒரு பாவ னையில் இல்லாத கிணற்றில் வாலிபர்கள் கொண்டு சோர்ப்பார்கள். திரு அப்பாக்குட்டி யின் பேரன் காலஞ்சென்ற ஆயுள்வேத வைத்தியர் அழகேசு நாகையாவே தடிக ளாலும் வண்ணக் கடதாசிகளாலும் தேரைக் கட்டுவார்.
திரு அப்பாக்குட்டியின் பாரியார் திருமதி விசாலாட்சி கோயில், குளம் என்று அலட் டிக்கொள்வதில்லை. அவருக்கு கண வனே கண் கண்ட தெய்வம். மேலும் பொங்கல் பூசை என்று வீட்டிலேயே அடிக் கடி நடக்குந்தானே? சமையல் வேலை செய்ய மகளும் வளர்ப்புப் பிள்ளைகளும் இருப்பார்கள். திரு அப்பாக்குட்டியின் வசதியான வாழ்க்கைக்கு முக்கிய காரணம் விசாலாட்சியின் ஒத்துழைப்பும் விடா முயற்சியும்தான். திரு அப்பாக்குட்டி வீட்டில் பழஞ்சோறும் பழம் தண்ணியும் தான் காலைச்சாப்பாடு. காலை 10 மணிய ளவில் போகின்ற வருகின்ற எல்லோரை யும் கூப்பிட்டு அப்பாக்குட்டியின் மூத்த மகள் அன்னம் (திருமதி அன்னப் பிள்ளை செல்லப்பா) பழஞ்சோறும் மரவள்ளிக் கிழங்குக் கறியும் சொதியும் சேர்த்துக் குழைத்து ஒரு திரளை சோறு கொடுப்பார்.
- 14

Page 17
ய
அப்பாக்குட்டியரும் வெளி விறாந்தைக் திண்ணையில் இருந்து கொண்டு “அன் னம் அன்னம் பசி ஆற்றிவிடு” என்று வரு கின்ற விருந்தினர்களை கவனித்துக் கொண்டு இருப்பார். அவர் வீட்டில் அடிக் கடி வந்து தங்குபவர்கள் பலர். கறுவல் சாத்திரியார், அவர் மகன் ஐயாத்துரைச் சாத்திரியார், எண்ணைகார கந்தையா, வைத்தியம் பெறும் பொருட்டு தங்குப் வர்கள், விசக் கடியால் சாமத்தில் வருபவர் ெ கள் என்று இப்படிப் பலர். இவர்களை எல்லாம் மனம் கோணாமல் உணவளித்து சி வீட்டிலேயே தங்கவைத்து பராமரிப்பார். மாலையில் தேநீர் கொடுப்பதென்றால் 30, நு 40 பேருக்கு 4 மணியில் இருந்து 5 மணி | வரை கொடுக்க வேண்டியிருக்கும். இந்த ம வேலையை ஒரு பிரமச்சாரியாக இருந்து ஒ மருந்து பதப்படுத்தும் தொழிலைச் செய்து த வந்த அப்பாக்குட்டியின் சகோதரம் முறை
மாணவர்களுக்கான பாடசாலை அதிபர்கள், வெளிநாட்டுப் பிரதிநித இணங்க கட்டுரைகள் அனுப்பும் காலம் பிற்பே கட்டுரைப் போட்டிக்கான கட்டுரைகளை 31.03 இப்போட்டி மூன்று பிரிவுகளாக நடத். 01) கீழ்ப்பிரிவு (10 வயதுக்குள்) 02) மத்திய பிரிவு (11 - 15 வயது வரை) 03) மேற்பிரிவு (16 -20 வயது வரை) கட்டுரைத் தலைப்புகள் 01) கீழ்ப்பிரிவு - “நான் விரும்பும் 02) மத்திய பிரிவு - இயற்கை வளங் 03) மேற்பிரிவு - 'இன்றைய மாண
அதற்கான தீர்வு? கட்டுரைகள் யாவும் பாடசாலை அதிபர் ஊடா கூடியதாக கட்டுரைப் போட்டி, 'இணுவில் ஒலி , ('Inuvil oli', 9-2/1 Nelson Place, Colomb அனுப்பி வைக்கப்படவேண்டும்.
• சிறந்த கட்டுரையாளர்களுக்கு விருதுகளும்
• புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் மாணவர்
பாடசாலை மூலமாக பங்குகொள்ளலாம், | இணுவில் ஒலி

பான கனகசபை என்பவரே செய்வார். இவர் 1949இல் சிவபதம் அடைந்தார். அப் பாக்குட்டியின் வீட்டில் அடிக்கடி ஏதாவது கொண்டாட்டம் நடந்தபடியே இருக்கும். அது வீட்டு அம்மனுக்கு பொங்கல் பூசை அல்லது திவசம் திதி என்றிருக்கும். தெற்கு நண்பர்கள், அயலவர்கள், உற பினர் என்று எல்லோரும் அழைக்கப்படு பார்கள். ஐந்து ஆண்களுக்கும் மூன்று "பண்களுக்கும் தந்தையான அப்பாக் 5ட்டி 1938 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் வெபதம் அடைந்தார். .
"மிகினும் குறையினும் நோய் செய்யும் பாலோர் வளி முதலா எண்ணிய மூன்று” வாதம், பித்தம், சிலேத்துமம் என்று ருத்துவ நூலோர்கணித்துள்ள மூன்றில் ன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந் பாலும் நோய் உண்டாகும்.
கட்டுரைப் போட்டி நிகள் ஆகியோரின் வேண்டுகோளுக்கு பாடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான .2013 வரை அனுப்பலாம். தப்படும்
பெரியார்”(50 சொற்கள்) | களைப் பாதுகாப்போம்” (300 சொற்கள்) எவர்கள் எதிர்நோக்கும் சவால்களும் களும்” (நான்கு புல்ஸ்காப் தாள்) | -க 31.03.2013 இற்கு முன் கிடைக்கக் 9-2/1 நெல்சன் இடம், கொழும்பு - 06 0 - 06, Srilanka) என்ற முகவரிக்கு
சான்றிதழ்களும் வழங்கப்படும். -களும் தாங்கள் கல்வி கற்கும் தமிழ்ப்
15

Page 18
( ၇၁ဇာ
வாழவைத்த
மனம்விட்டுப் பேசிப் பார்த்தேன். சுமதி ஒரே பிடிவாதமாக மறுத்துவிட்டாள்.
“தம்பி என்னைப் பார்க்க வேணும் எண்டதுக்காக உன்ன நம்பி வந்தவள விட் டுப் பிரிஞ்சிருக்கலாமே. அவள் பாவம் கூட் டிக்கொண்டு போராசா”
“இல்லை அம்மா. உங்கள் தனிய விட் டுப் போட்டு நான் எப்படி போறது?”
“இல்ல ராசா இஞ்ச வரவர பிரச்சினை கூடிக்கொண்டே போகுது. இந்தப் பிஞ்சு கள் ரண்டையும் காப்பாத்த வேண்டாமே? சுமதி சொல்லுற மாதிரி நீ கனடாவுக்குப் போறதுதான் நல்லது” |
சுமதியின் தாய், தகப்பன், சகோதரங்கள் எல்லாம் கனடாவில். அவர்களின் வற்பு றுத்தலால் சுமதி அழுங்குப் பிடியாய் நிற் கின்றாள். எவ்வளவோ சொல்லிப் பார்த் தும் அவள் தான் கொண்ட நிலையில் இருந்தும் மாறவில்லை.
“சுமதி நான் ஒரு பட்டதாரி ஆசிரியன். அந்த உத்தியோகத்துச் சம்பளத்தோடு, ரியூசன் கொடுப்பதாலயும் கணிசமான தொகை வருகுது. ஊரோட சொந்த வீடு. அத்தோட என்னை விட்டால் அம்மாவுக் குத் துணையெண்டு இருக்க ஒருவரும் இல்லை. அதால...”
அதால..." என்ன இழுக்கிறியள்?* “கனடா ஆசையை விட்டுவிட்டு இஞ்சை இருப்பம்”
"அங்க எல்லாரும் நல்லாயிருக்கேக்க நாங்கள் மட்டும் இஞ்ச இருந்து மட்டை யடிக்கிறதே?*
“என்ன நல்லாயிருக்கினம். எஞ்சினிய ருக்குப் படிச்ச உன்ர மூத்த கொண்ணன் வாச்சர் வேலை பார்கிறானாம். உன்ர மற்ற அண்ணன் சுரேஷ் ஹோட்டலில
இணுவில் ஒலி

தம்பு சிவா
தெய்வம்
அ ன் 4" *
கோப்பை கழுவுகிறா னாம்”
“என்ன வேலை செய் தாலும் நல்ல காசு கிடைக்குதல்லே. வீடு, கார் எண்டு எல்லாம் சொந்தமாக வச்சி ருக்கினம். எல்லாரும் அப்பா அம்மாவோட கடைசி காலத்தில் ஒண்டாயிருப்பம் எண் டெல்லே அண்ணன்மார் பொன்சர் பண்ணி எங்களை எடுப்பிக்கினம். எல்லோருக்கும் இப்படிச் சந்தர்ப்பம் கிடைக்காது. நீங்கள் எங்களோட வாறத்த விட்டுவிட்டு கொம்மா வோட கட்டிப்பிடிச்சுக் கொண்டு இருப்பம் எண்டு சொல்லுறியள்”
“சுமதி உனக்கு உன்ர அப்பா அம்மா எப்படியோ அப்பிடித்தான் எனக்கும் என்ர அம்மா பெரிசு. சின்ன வயசில் அப்பாவைப் பறிகொடுத்து நின்ற எனக்கு அம்மாதான் எல்லாம். தன் துயர் பாராது அயலட்டையி லுள்ள வீடுகளுக்குச் சென்று மா இடிச்சுக் கொடுக்கின்ற பணத்தில என்னையும் வளர்த்து படிப்பிச்சு இந்த நிலைக்குக் கொண்டு வந்த என் தாயைத் தனிய இஞ்ச விட்டுவிட்டு என்னால் கனடாவுக்கு வர முடியாது. தயவு செய்து உன்ர மனதை மாற்றிக் கொண்டால் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது” |
“இந்தப் பாழ்பட்ட ஊரில பட்டிக்காடு களோட என்னால இருக்க முடியாது. நீங் கள் வராட்டி இஞ்ச இருங்கோ நானும் பிள்ளையளும் போறம்.” |
"உன்னைத் திருத்தேலாது. நீ போற தெண்டால் போ. நான் வரமாட்டன் அம் மாவை விட்டுப் போட்டு”
"தம்பி அற்புதன் என்னைப் பாக்க எத் தனை பேர் இருக்கினம். நீ சுமதி சொல் லுற மாதிரி கனடாவுக்குப் போராசா”
16

Page 19
"அம்மா அவள் விசரி, வெளிநாட்டு மோகத்தில் கத்துகிறாள். நீங்கள் பேசா ! மல் இருங்கோ. நான் உங்களைத் தனிய விட்டு ஒரு இடமும் போகமாட்டன். தயவு 6 செய்து என்னைத் தொந்தரவு செய்யா தி தேங்கோ”
15 E த ந R # 15 in
தி 3
“கற்பகம் அக்கா” “யாரடி பிள்ளை பறுவதமே! வா இரு என்ன அலுவலாய் வந்தனி?”
“ஒண்டுமில்ல அக்கா. கனநாளாய் இந் 6 தப் பக்கம் வரேல்ல. உங்கள் ஒருக்கா பாத்துவிட்டு போகலாமெண்டு வந்தனான்”
"சரி. இந்தா தேத்தண்ணியைக் குடி. கொக்காவின்ரை பெடியனை போனமாதம் 6 தொடக்கம் கணேல்ல எண்டு கதைச் சினம். பெடியன்ரை பாடு என்னவாம்?”
“ஒண்டுமாய் தெரியேல்ல. உயிரோடை இருக்கிறானோ அல்லது கொன்று போட் டாங்களோ தெரியாது. அத்தானும் என்ரை அவரும் தேடாத இடமில்லை. பொலிசிலும் அறிவிச்சு, மனித உரிமைகள் க கந்தோரிலும் சொல்லியாச்சு. இற்றை வரை ஒரு பிரயோசனமும் இல்லை. அக் காவைப் பாக்கேலாது ஒரெயோரு பிள்ளை யையும் பறிகொடுத்து விசர் பிடிச்ச மாதிரி யல்லே இருக்கிறா. இஞ்ச பிடிக்கிற வையை தூர இடத்துக்குக் கொண்டுபோய் பி முடிச்சுப் போடுவாங்களாம் எண்டு சனம் கதைக்கினம். ஆனால் இந்தப் பெடியனை யார் பிடிச்சு என்ன செய்தாங்களோ தெரி யாது. போன கிழமை இரண்டு மூண்டு இடங் பு. களில் இளம் பெடியளைக் காணேல்ல எண்டு தாய் தகப்பன் சகோதரங்கள் மனித . உரிமைகள் கந்தோரில வந்து குழறிக் கத்துதுகளாம் எண்டு இவர் வந்து சொன் னவர்.”
“அப்படியே சங்கதி. இப்ப இளம் பிள் ளைகளை வீட்டில் வைச்சிருக்கிறது மடி யுக்குள்ள நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்கிறமாதிரிண்ெடு சொல்லன்.”
இணுவில் ஒலி
[ சூ
( 4 )
:

“சரி அக்கா நான் ஒரு கதை கேள்விப் மட்டன். உண்மைதானோ? உங்கட மக அம் மருமேளும் பிள்ளைகளும் கனடா புக்குப் போகப்போயினமாம். அப்ப நீங்கள் இனிய இருந்து என்ன செய்யப் போறியள்?*
“ஓமடி பறுவதம். நாடு இப்ப இருக்கிற லெமேல் அதுகள் அங்க போயெண்டாலும் ஆறுதலாக இருக்கட்டுமே. எனக்கென்ன இண்டைக்கோ நாளைக்கோ எண்டு இருக் கிறனான்; அதுகளை எனக் காண்டி மறிக்க பாமே?. மகன்தான் உன்னை விட்டுப்போக மாட்டன் எண்டு சொல்லுகிறான். அவ னும் பாவம். ஒரு பக்கத்தால் மனிசிக்காறி பிடாப்பிடியாக நிற்கிறாள். பிறந்தநாள் தொடக்கம் என்னோடையே இருந்த பாழ்ந்தவன் என்னைப் பிரிய முடியாமல் கஷ்டப்படுகிறான். உள்ளதைச் சொன்னா. லென்ன எனக்கும் பிள்ளையை விட்டுச்
ரிஞ்சு இருக்கேலாது”
கற்பகம் வாழ்க்கையில் பட்ட கஷ்டங் ள் சொல்லி ஆறாது. கற்பகத்தின் தாய் ற்பகம் பிறந்த அன்றே இறந்துவிட்டார். கப்பன் சிறியதாயை இரண்டாம் தாரமாக
ணம் முடித்துக்கொண்டார். .
ஆரம்பத்தில் சிறியதாயார் கற்பகத்தில் புன்பு காட்டினாலும், அவர் அடுத்தடுத்து ள்ளைகளைப் பெற்றெடுத்ததும் கற்பகத் ன் மேலுள்ள அக்கறை குறைந்துவிட் து. பள்ளிக்குச் சென்று வந்த கற்பகம் 'ட்டு வேலைகளைப் பார்பதற்காகப் படிப் க்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. ந்தையோ தன் புதிய மனைவியின் சொல் லக்கேட்டு கற்பகத்துக்கு அடிப்பதும், காடுமைப்படுத்துவதுமாக இருந்தார். த்தியோ நித்தம் பேச்சும் அடியும். சாப் "டு கூடச் சரியாகக் கொடுப்பதில்லை.
இந்த நிலையைக் கவனித்து வந்த கற்ப ந்தின் தாய்மாமன் பொறுக்கமுடியாமல் ற்பகத்தைக் கூட்டி வந்து தனது வீட்டில் ருக்கச் செய்தார். வீட்டில் தொடர்ந்து

Page 20
வைத்திருக்க விரும்பாத மாமனின் மனைவி கணவனுடன் “இது என்ன சத்திரமே” என்று சொல்லிசண்டை பிடிப்பாள். கற்பகம்தான் பாவம் என்ன செய்வாள். தன்னால் மாமா வும் கஷ்டப்படுகின்றாரே என்று எண்ணி வேதனைப்படுவாள்.
மனைவியின் நச்சரிப்புத் தாங்க முடியா மல் கற்பகத்தையும் கூட்டிக்கொண்டு திருகோணமலைக்கு வந்து அன்பு இல் லத்தில் சேர்த்துவிட்டார். |
பன்னிரண்டு வயதில் திருகோண மலைக்கு வந்த கற்பகம் அங்கு சிறந்த முறையில் அன்பு இல்லத்தாரால் பராமரிக் கப்பட்டாள். அங்கிருந்துகொண்டு பாட சாலைக்குப் படிக்கவும் சென்றாள். அன்பு இல்லத்தில் இருந்து வளர்ந்து பருவ வயதை எய்தியபின், துறைமுகத் தொழி லாளியான கோணேசன் என்பவரைக் கரம் பிடித்தாள்.
நாட்கள் நகர்ந்தன. மகனையும் பெற் றெடுத்தாள். அதன் பிறவு கணவனின் நட வடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டன. தினமும் குடித்துவிட்டு நேரம் பிந்தி வாற தும், வீட்டுச் செலவுக்குப் பணம் கொடுக் காமல் விடுவதும், கற்பகம் ஏதாவது கதைத்தால் அடிப்பதுமாக வாழ்க்கை சக் கரம் உருண்டோடியது.
மகனை வளர்ப்பதற்காகத் தன் உடலை வருத்தவேண்டிய கட்டத்திற்கு வந்த கற்பகம் வீடுகளுக்குச் சென்று மா இடித் துக் கொடுத்து கிடைக்கும் பணத்தில் வாழ்க்கை வண்டியை ஓட்டிக்கொண்டி ருந்தாள்.
கோணேசன் ஒழுங்காக வீட்டுக்கே வருவதில்லை. வந்தாலும் ஏதாவது பிரச் சினை இருக்கும். குடிப்பதற்கு காசுதா என்று கற்பகத்தைப் போட்டு அடிப்பான். பாவம் கற்பகம் இதைச் சமுதாயச் சீர்கேடு என்று நோக்க அவளுக்கு எப்படித் தெரியும்.?
இணுவில் ஒலி

ஒரு நாள் இரவு வேலைக்குப் போன கோணேசன் சுடுபட்டு இறந்த செய்தி கேட்டு பதறிக்கொண்டு ஓடிய கற்பகம் அக் காட்சியைப் பார்த்ததும் மயங்கியே விட் டாள். கற்பகத்தின் நிலைமையும், ஏழு வய துச் சிறுவன் தகப்பனுக்குக் கொள்ளி வைக்கும் காட்சியும் அந்தக் கிராமத்து மக் களை உறைய வைத்துவிட்டன. கண வனை இழந்த மனைவி;தகப்பனை இழந்த மகன். இவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாய் நின்றது.
இப்படிக் கஷ்ட துன்பங்களை அனுப் வித்து அனுபவித்து பழக்கப்பட்ட கற்பகம் சோர்ந்து விடவில்லை. எப்பாடுபட்டாவது மகனைப் படிப்பிக்கவேண்டும் என்ற வைராக்கியத்துடன் செயற்பட்டாள்.
வீடுகளுக்குச் சென்று மா இடித்து வறுத்துக் கொடுக்கும் வேலையில் ஈடு பட்டு வந்தாள். சுத்தமான, நேர்மையான வேலையைச் செய்துவந்தமையால் ஊரிலை கற்பகத்திற்கு ஒரு மதிப்பு இருந்தது. சில வேளைகளில் கல்யாண வீட்டுக்கார ருக்குப் பலகாரங்களும் சுட்டுக்கொடுத்தும் வந்தாள். தான் உழைத்துப் பெறும் பணத் துடன் வாழ்க்கையை ஓட்டி வந்தாள்.
அதேவேளை மகனின் கல்வி நடவடிக் கைகளையும் அக்கறையோடு கவனித்து வந்தாள்.
இச்சந்தர்ப்பத்தில் கணவனின் ஊழியர் சேமலாப நிதியும் கிடைத்தது. அத் தொகையை வங்கியில் வைப்பு வைத்துக் கிடைக்கும் வட்டியுடன் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தாள். மகனும்வளர்ந்து படித்து பல்கலைக்கழகம் சென்று விஞ் ஞானப் பட்டதாரியாக வெளிவந்தான். ஊரி லுள்ள முதல்தரப் பாடசாலையில் ஆசிரி யத் தொழிலும் கிடைத்தது.
தாய் கற்பகம் வாழ்க்கையில் முதல் முறையாக அன்றுதான் சந்தோஷப்பட் டாள்.
பாடசாலையில் அற்புதன் மாஸ்டர்

Page 21
என்றால் தெரியாத பிள்ளை இருக்கமுடி யாது. ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் கற்பித்த லில் எல்லோரையும் வசீகரிக்கும் ஆற்றல் கொண்டவராக இருந்தமையால் பலரா லும் மதிக்கப்பட்டார். அதிபர், சக ஆசிரி யர்கள் மேல் மதிப்பும் மாணவர்கள் மேல் | அன்பும் கொண்டிருந்தார். பாடசாலையில் தனது பாட மாணவர்களின் கல்வியில் மிகுந்த அக்கறையுடன் கற்பித்துவந்தார். பாடசாலைக்கு வெளியில் வேறு பாட சாலை மாணவர்களுக்கு ரியூசனும் கொடுத்து வந்தார். கஷ்டமான குடும்பத் துப் பிள்ளைகளுக்கு இலவசமாகவே பாடம் போதித்துவந்தார். இதனால் ஊரில் அற்புதன் மாஸ்டருக்கு ஒரு தனிமதிப்பு இருந்தது. இதனால் அவருக்குப் பெண் கொடுக்கப் பலரும் முன்வந்தனர். பெற்ற வள் பெருமைப்பட்டாள்.
"தம்பி காலாகாலத்தில் நான் கண்ணை மூடுவதற்கு முன் அந்த நல்ல காரியத் தைச் செய்து போட்டன் எண்டால் நிம்மதி யாகப் போய்ச்சேர்ந்துவிடுவன்.*
“என்னம்மா சொல்லுறியள். நீங்கள் ஏன் கண்ணை மூடவேண்டும்? இவ்வளவு காலமும் எனக்காக உடம்பை வருத்தி, ஆறுதலின்றி, நிம்மதியின்றி, எவ்வளவு G கஷ்டங்களுடன் எதிர்நீச்சல்போட்டு என்னை வாழவைத்த தெய்வமல்லவா நீங்கள்? இனியாவது உங்களை ஆறுதலாக வைத் க துப் பார்க்கவேண்டும் என்ற எனது | ஆசையை நிறைவேற்ற எனக்குக் கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகக் கொண்டு நீங்கள் இருக்கும்வரை உங்களுடன் இருக்க விரும்பு கிறேன் அம்மா”
“காலகாலத்தில் நடக்கவேண்டியதை க தானே தம்பி நான் சொலுகிறன். எனக்கும் க பேரப்பிள்ளையளை பார்க்க ஆசையிருக் 6 காதே? நீ ராசா கலியாணம் முடிச்சாலும் ஒ நானும் உன்னோடதானே இருப்பன். என்ர ராசாவல்லே. அம்மாவின்ர சொல்லைக் கேள் ஐயா.”
இணுவில் ஒலி
- 1= E ஐ டி ரு டி - ]= 14 15 அ 14 பி - 2 5 10 11 12 1
* * *
G 2 E ) |

கல்யாணம் முடிப்பதை விரும்பாத போதிலும் தாயின் வற்புறுத்தலால் அற்பு தனின் மனமும் மாற்றப்பட்டுவிட்டது. பாட சாலை அதிபரின் மருமகளைத் திருமணம் செய்து வாழ்க்கையை நடத்த ஆரம்பித்து ஐந்து வருடங்கள் ஓடி மறைந்துவிட்டன. கற்பகம் ஆனந்தத்துடன் மகன், மருமகள், பேரப்பிள்ளைகளுடன் வாழ்ந்து கொண்டி
தந்தார்,
வாழ்க்கையில் இப்படி பேரிடி வரும் சன்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. அது தான் மகன் குடும்பம் தன்னைத் தனியாக விட்டு விட்டு கனடாவுக்குப் போகப் போகும் நிகழ்வு. நினைத்துப் பார்க்கவே அவளுக்கு நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது. தனிமையில் இருந்து கவலையால் பல காள்கள் அழுதிருப்பாள். தன் கவலையை வெளிக்காட்டாமல் மகனுக்கு ஆறுதல் கூறி மருமகளின் விருப்பப்படி கனடாவுக் தப் போவது நல்லது என்று எடுத்துரைக் கின்றாள். தன்னைப் பிரிந்து செல்ல மகன் விரும்பவில்லை என்று தெரிந்திருந்தும் மகனை வற்புறுத்தி அனுப்பிவைக்க நாட்டு நிலைமையைத் தனக்குத் சாதகமாகப் பயன்படுத்துகின்றாள். அற்புதனும் தாய் சொல் தட்டாத தனையனல்லவா?
கனடாவுக்குப் போவதற்கான ஒழுங்கு களை மேற்கொள்ள கொழும்புக்குப் போக வேண்டும். அதற்கான திகதியும் குறித்தா
கிவிட்டது.
பாடசாலை மாணவர்கள், பெற்றோர் கள் மாஸ்டர் வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.
“மாஸ்டர் உங்களை நம்பித்தான் எங் கடை பிள்ளைகள் படிக்கிறார்கள். அவர் களை நடுவழியிலை விட்டுவிட்டு எப்படி வெளியாட்டுக்குப் போகந் துணிந்தீர்கள்? ஒவ்வொரு முறையும் உங்களிட்ட படித்த த்து பன்னிரண்டு பிள்ளைகள் மெடிசி அக்கு எடுபட்டு பல்கலைக்கழகம் போகு ங்கள். உங்கள் அக்கறையும் கவனிப்பும்

Page 22
கற்பித்தல் முறையும் பிள்ளைகளுக்குக் கல்வியில் உற்சாகத்தைக்கொடுத்து அவர் களை மேல் நிலைக்கு உயர்த்தியுள்ளது. உங்களிடம் படித்த எத்தனையோ பிள்ளை கள் டாக்டர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் உங்களை மதிக்கின்றார்கள். நாங்களும் எங்கள் பிள்ளைகளும் இந்த நாட்டில் உங்கள் சேவை தொடரவேண்டும் என்று விரும்புகின்றோம். இந்நாட்டிலை குறிப்பாக எங்கள் ஊரிலை உங்களுக்குக் கிடைக்கின்ற கௌரவம் மரியாதை நீங்கள் போகும் நாட்டில் கிடைக்குமா? நாட்டுப் பிரச்சினை எண்டு தப்பிக்கலாமா? நாங்களும் எங்கள் பிள்ளைகளும் இந் நாட்டிலதானே இருக்கிறம்: வாழப்போறம்: உங்களைப்போன்ற சேவை மனப்பான்மை உள்ள ஆசிரியர்களால் தான் பாட சாலைக்கு மதிப்பு, தயவு செய்து உங்கள் தீர்மானத்தை மாற்றிக் கொண்டு இங்கேயே இருங் கள்"
பிள்ளைகள் பலர் விம்மி அழத் தொடங்கிவிட்டார்கள்.
அற்புதன் மாஸ்டரின் கண்களும் கலங்கிவிட்டன. ஒன்றுமே பேசாது மௌமா னார். இந்தச்சம்பவத்திற்குப் பின் கொழும்புக்குப் போவ தைச் சற்றுத் தாமதிக்க லாம் என எண்ணினார். இருந்தும் மனைவி சுமதி யின் நச்சரிப்புத் தாங்க முடியவில்லை. நீங்கள் வரா விட்டால் நான் தற்கொலை செய்வன் என்ற மிரட்டியும் பார்த்தாள். அற்புதன் அசை வதாகத் தெரியவில்லை.
இந்த நாடகங்களைப் பார்த்துக் கொண்டிருந்த கற்பம் மனக்குமுறல்களை அடக்கிக் கொண்டு மகன்
இணுவில் ஒலி

அற்புதனைப் பெரிதும் வற்புறுத்தி கனடா வுக்கு போகும்படி கூறுகின்றார்.
அந்நாளும் வந்தது.... அற்புதன் கண்ணீருடன் தாயிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு வாசலுக்கு வந்தவன். தன் தாயை ஒருமுறை திரும்பிப் பார்கிறான். தாய் விழுந்து கிடக்கின்றார்.
“அம்மா” என்று அழைத்தபடி தாயிடம் ஓடி வருகின்றான். தாயைத் தூக்க முயல் கின்றான். தூக்க முடியவில்லை. அவள் இறந்துவிட்டாள் என்று தெரிந்ததும் கதறி அழுகிறான்.
வானமும் சோகம் தாங்காது சோ என்று மழையைக் கொட்டிக்கொண்டி ருந்தது.
சுமதி செய்வதறியாது மழையில் நனைந்து கொண்டு நிற்கிறாள்.

Page 23
நூற்றாண்டு வரலாறு க. யா/ இராமநாதன் கல்லு
27 j- 3 - ] 1,
"I - 4, தி,
சேர் பொன் இராமநாதன் அவர்களால் இ சைவசமயத்தையும் தமிழர் பண்பாட்டை யும் பேணிக் காக்க, பெண்களுக்கான கல்வி அறிவை முன்னேற்ற. கலாசாரத்தை ப சீரியமுறையில் கடைப்பிடிக்க பெண் களுக்கான தனியான கல்விக் கூடம் நிறு வப்பட்டது. 1913 ஆம் ஆண்டு தை மாதம் 20ஆம் திகதி முதல் மருதனார் மடத்தில் இராமநாதன் கல்லூரி இயங்கத் தொடங் 8 கியது. யாழ்ப்பாணத்தில் முதற் தரமான 1. கல்லூரியாக பெருமையுடன் விளங்கியது. இந்தக் கல்லூரியிலே அயல் கிராமத்துப் பிள் ளைகளே பெரும்பாலும் கல்வி கற்ற னர். வெளியிடத்துப் பிள்ளைகள் விடுதி யில் தங்கியிருந்த கல்வியை மேற்கொண் டனர். அது ஒரு பொன்னான காலமாக இருந்தது.
சைவப்பிள்ளைகள் வணக்கம் செலுத் 4 ன துவதற்காக கல்லூரி வளாகத்துக்குள் சிவன் கோயில் ஒன்றையம் சேர் பொன் இராமநாதன் அமைத்திருந்தார். சைவ மர ந பில் கல்வி கற்கக்கூடிய வகையில் கல்விக் .
கூடம் ஒன்றை நிறுவவேண்டும் என்ற எண் ணம் சேர் பொன் இராமநாதன் அவர் களுக்கு ஏற்பட்டமை யாழ்ப்பாணப் பெண் களின் கல்வி மேம்பாட்டின் முக்கிய படியா கும். முதலில் இக்கல்லூரியை கோப்பா யில் தாபிக்க எண்ணி அங்கு 25 ஏக்கர் நிலத்தை வாங்கினார். பின்னர் அவரிடம் கோப்பாயிலும் பார்க்க மருதனார்மடம் பொருத்தமானது என்று பலர் எடுத்துக் கூறியதும், அங்கு 15 ஏக்கர் நிலத்தை வாங்கினார். மருதனார்மடத்தில் பெண் கள கல்லூரியைத்தாபிப்பதற்கான முயற்சி களை மேற்கொண்ட வேளை, உடுவில் பெண்கள் பாடசாலைக்கு அணித்தாக |
இணுவில் ஒலி
த [1, 15 11 E 5 E 4 F [3
> [..

ண்
7ாரி
0
இப் பாட சாலை அமைவது கிறிஸ் நவக் கல்லூரிக்குப் பங்கம் ஏற்படுத்த லாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அது ஆங்கிலேயர் ஆட்சி நிலவிய காலம் என்பதும் கவனத்துக்குரியது.
இவ் விடயம் குறித்து இராமநாதன் அவர்கள் மிக ஆணித்தரமான வகையில் 910ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி வணஸ்கொட் பாதிரியாருக்கு கடி 5ம் அனுப்பியிருந்தார்.
அக்கடிதத்தில் சைவப் பெண்கள் கல் லூரியின் அவசியத்தைச் சுட்டிக்காட்டி, கிறிஸ்தவப் பிள்ளைகள் கிறிஸ்தவ பாட சாலைகளில் படிப்பது எவ்வளவு அவசி பமோ அவ்வளவு அவசியம் சைவப்பிள் ளைகள் சைவப் பள்ளிக்கூடத்திற் படிப் து” என்று குறிப்பிட்டிருந்தார். 1913 ஆம் ஆண்டு அயராத முயற்சியினால் இராம -ாதன் கல்லூரி தனது கல்விப் பணியை ஆரம்பித்தது. சைவத் தமிழ்ப் பெண்க நக்கான கல்லூரியாக அது வரலாற்றில் திவானது. சமயப் பண்பும், அறநெறியும், அறிவுத்திறனும் ஒன்றிணைந்த மகளிர் முலமே தமிழ்நெறி மரபையும், சைவநெறி

Page 24
மரபையும் இணைத்து வளர்ச்சிப் பாதையில் முன்னெடுக்க முடியும் என்று கருதினார்.
இதன் காரணமாக யாழ்ப்பாணத்து சைவத் தமிழ் பெற்றோர்கள் தமது பெண் பிள்ளைகளுக்கு ஒழுக்கமும் பாதுகாப்பும் கிடைக்கும் என நம்பி தமது பிள்ளைகளை இராமநாதன் கல்லூரியில் சேர்த்தனர். இது வரலாற்றில் இடம்பெற்ற மகத்தான முன்னேற்றமாகும்.
எதிர்பார்த்த எண்ணங்கள் செயலுரு வம் பெற இராமநாதன் கல்லூரி செயற்பட ஆரம்பித்தது. 07.02.1913 அன்று வெளி வந்த 'இந்து ஓகன்' பத்திரிகையில், இராம நாதன் கல்லூரியின் ஆரம்பம் பற்றிக் குறிப் பிடுகையில் “இக்கல்லூரியின் ஆரம்பம், தமிழர் வரலாற்றில் புதிய சகாப்தத்தை உருவாக்கும். இலங்கை இந்து மக்கள் தம் வாழ்வில் என்றும் நினைவிலிருத்தும் தினம்” என்று தெரிவித்திருந்தது.
யாழ்ப்பாணப் பெண்களின் கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பினைச் செய்த சேர் பொன் இராமநாதன் அவர் கள் இந்துப் பெண்களின் கல்வி பற்றி பேசப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் எடுத் துக் கூறியிருந்தார். அதன்படி சைவசமயம், தமிழ் மொழி ஆகியவற்றுடன் ஆங்கிலக் கல்வியையும் இராமநாதன் கல்லூரியில் போதித்தனர். பாடசாலைகள் தேசியமய மாக்கப்பட்டு தாய்மொழிக் கல்வி முக்கியத் துவம் பெறும்வரை யாழ்ப்பாணத்திலுள்ள கல்லூரிகள் எல்லாம் ஆங்கிலக் கல்வி யையே போதித்துவந்துள்ளன.
இராமநாதன் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவிகள் அக்காலம் முதல் தூய வெள்ளை நிற ஆடைகளையே அணிந்து பாடசாலைக்குச் சென்று வந் தனர். சிறுபிள்ளைகள் பாவாடை சட்டை யும், பருவமடைந்த பிள்ளைகள் பாவாடை சட்டையுடன் அரைத்தாவணி போட்டும்,
இணுவில் ஒலி

பெரிய வகுப்புப் பிள்ளைகள் வெள்ளை சேலை கட்டியும் தமிழர் தம் கலாசாரத் தைப் பேணி ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் கல்வியை மேற்கொண்டனர். 1980கள் வரை உன்னதமான நிலையில் இயங்கி வந்த இராமநாதன் கல்லூரி யுத்தக் கெடுபிடிகளாலும், பிள்ளைகள் பாட சாலையை விட்டு வேறு பாடசாலைக ளுக்குச் சென்றதாலும் பின்னடைவைச் சந்திக்க நேர்ந்தது.
நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் பழைய நிலைக்குக் கட்டியெழுப்பவேண். டிய பாரிய பொறுப்பு கல்விச் சமூகத்திற்கு உண்டு. பழைய கட்டடங்களுக்குப் பதிலா கப் புதிய கட்டங்கள் அமைத்தல், பௌதீக வளங்களை மேம்படுத்தல் மற்றும் வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், கற் றல், விளையாட்டு உபகரணங்கள் என்ற தேவைகள் அதிகரித்துள்ளன. பெற்றோர், ஆசிரியர், சமூகம் இணைந்து மாணவர் களின் கல்வி முன்னேற்றத்தில் அக்கறை யுடன் செயற்படவேண்டும். முக்கியமாகப் பழையமாணவர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டிய காலகட்டம் உதயமாயிருக் கிறது.
இணுவிலைச் சேர்ந்தவரும் இராம நாதன் கல்லூரியின் பழைய மாணவியும் ஆற்றல் மிக்க கல்வியாளருமாகிய திருமதி கமலராணி கிருஸ்ணபிள்ளை புதிய அதிபராகப் பொறுப்பேற்று பாடசாலை யைச் சிறந்த முறையில் கொண்டு நடத்து கின்றார். ஆகவே நாமும் பாடசாலையின் அபிவிருத்தியில் அக்கறையுடன் செயற் பட்டு கல்லூரியின் முன்னேற்றத்துக்காக இந்நூற்றாண்டு காலத்தில் உழைக்கத் திட சங்கற்பத்துடன் உறுதிபூணுவோம். வெளிநாடுகளில் வாழுகின்ற எம் உறவு களும் இக்கல்விப் பணிக்கு உதவமுன்வர வேண்டும்.
- இணுவிலான்.

Page 25
“இணுவில் ஒலி” பொங்கல் மலர் வெளியீட்டு விழா
இணுவில் ஒலி
பாப்ர்ப்பங்காயாகப் பய 5 5-பிப் புட் பாயாசபடயார் பொதுப் பாட்டா பாரா
பேராசி
F%A பாமாராசும் 'சாய காப்புப்பட்ட படம் கேப்டரிடம் பாடா பட்டாபய ஈட்சிகா Pா |
''இணுவில் ஒலி” பொங் 'கல் மலரின் வெளியீட்டு 'வழாஇணுவில்பொதுநூலக மண்டபத்தில் நூலகத் 'தலைவர் திரு.ம. ஜெயகாந் 'தன் தலைமையில் நடை 'பெற்றது. பிரதம விருந்தின 'ராக யாழ். பல்கலைக்கழக 'தமிழ்த்துறைத் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.ஈ.கும 'ரன் வருகை தந்து சிறப்பித் 'தார். பேராசிரியர் க. தேவ 'ராசாவாழ்த்துரை வழங்குவ 'தையும் மேடையில் திரு. ம. ஜெயகாந்தன், சிவஸ்ரீவை. சோமாஸ்கந்தக் குருக்கள், திரு.ஈ.குமரன், சஞ்சிகை

போய் பொடியாசபதம்
பாக பயம்
ஆசிரியர் தம்பு சிவா, திரு. 'ம,பா.மகாலிங் கசிவம் | 'ஆகியோர் வீற்றிருப்பதை 'யும்அறிமுகஉரையை திரு. 'ம ா , ந.பரமேஸ் வரன் நிகழ்த்துவதையும், சஞ் 'சிகை ஆசிரியரிடமிருந்து 'முதல் பிரதியை செல்வி கிருபாமூர்த்தி பெற்றுக் 'கொள்வதையும் அருகில் கலாபூஷணம் திருமதிவை. கணேசபிள்ளை இருப்ப 'தையும் மற்றும் வெளியீட்டு விழாவில் கலந்து சிறப்பித்த முக்கியஸப்தர் களையும் 'படங்களில் காணலாம்.
விழா மற்றும் இரும்

Page 26
இரா.சுந்தரலிங்கம் எ
அன்னாரின் ஆறாவது சிரார்த்த தினத்தை (05.04.2013) நினைவு கூர்ந்து இக்கட்டுரை பிரசுரமாகிறது.
செந்தமிழும் செம்கலையும் கொஞ்சி விளையாடும் இணுவையம்பதியிலே 1935 ஆம் ஆண்டு மேமாதம்பதினைந்தாம்திகதி இராமுப்பிள்ளை சுந்தரலிங்கம் அவர் கள் பிறந்தார்கள். சாதாரண விவசாயக் குடும் பத்தில் பிறந்த இவர் 'முயற்சி திருவினை யாக்கும்” என்ற முதுமொழிக்கு இலக்கண' மாக கல்வியிலே கண்ணும் கருத்துமாக இருந்து, ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்ந் தார். சிறுவயது முதற்கொண்டு கடவுள் நம்பிக்கை கொண்டவராக அதேவேளை மூடக்கொள்கைகளுக்கு எதிரானவராகவும் வாழ்ந்தார். கல்வியில் நாட்டம் கொண்டு அதன் பால் ஈர்ப்புடன் இருந்தார்.
"தொட்டனைத்தூறும் மணற்கேணி
மாந்தற்கு கற்றனைத்தூறும் அறிவு” என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக் குக்கு அமைய கல்வித் தேடலில் பெரும் சாதனை புரிந்துள்ளார். முதலில் தமிழ் மொழியில் கற்று தமிழ் எஸ்.எஸ்.சி.சித்தி யடைந்தார்.
தொடர்ந்து ஆங்கிலத்தில் கல்வி கற்று எஸ்.எஸ்.சி.(S.S.C) பரீட்சையிலும் தேறி னார். மேற்படிப்பை மேற்கொள்வதற்காக இந்தியாவுக்குச் சென்ற இவர் மற்றாஸ் (Madras) பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஒரு விஞ்ஞானப் பட்டதாரியாக வெளிவந்தார். மீண்டும் இலங்கைக்குத் திரும்பிய சுந்தர லிங்கம் தனது கல்வித் தேடலை நிறுத்தா மல் தொடர்ந்தார். ஆசிரியராகப் பணி புரிந்துகொண்டு பாளி, சமஸ்கிருதம், தமிழ் ஆகிய பாடங்களைப் பயின்று லண்டன் பல்கலைக்கழக இளமாணி(B.A) பரீட்சை யில் தேறினார். இதன் மூலம் இரண்டு
இணுவில் ஒலி -

ன்னும் கல்வியியாளர்
துறைப் பட்டதாரியாக, அறிவாற்றல் மிக்கவராக, பல மொழிகள் தெரிந்தவராகத் தன்னை உயர்த்திக் கொண்டார். கொழும்புப் பல்கலைக்கழத்தில் கல்வி டிப் ளோமா (Diploma in Education) கற்கை நெறியை மேற்கொண்டு அதில் சித்திய டைந்தார். இதன் பெறுபேற்றின் அடிப்ப டையில் தங்கப்பதக்கம் பெற்றார். யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.(M.A) பாடநெறியை மேற்கொண்டார். மேலும் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்தி நிறு வனத்தின் பரீட்சையில் சித்திடைந்து தமிழ்ப் பண்டிதராக வெளிவந்தார். அத்து டன் கலைகளின் மேல் இருந்த பற்றுதல் காரணமாக சென்கை கலாசேஷ்திரா (Chennai Kalashesthira) வின் நடன டிப்ளோமா (Diploma in Dance) பெற்றார்.
எல்லோருடனும் புன்சிரிப்புடன் பழகும் சுபாவம் கொண்டவராகிய திரு.சுந்தரலிங் கம் நகைச்சுவையாகப் பேசும் வல்லமை கொண்டவர். ஆழமான, கருத்து நிறைந்த சொல்வளத்தால் எல்லோரையும் கவரக் கூடியவராக உரையாடுவார். பேசும் போது பழமொழிகள், உவமைகள், உதாரணங்க ளுடன் பேசும் பாங்கு எல்லோரையும் ஈர்த்து நிற்கும். மேலும் தான் கொண்ட கருத்தை ஆணித்தரமாக நிலைநிறுத்து வதில் வல்லவராக இருந்தார். பகிடிகள் சொல்லிக் கதைத்து மற்றவர்களையும் சிரிக்கவைத்து தானும் சிரிப்பார். அவரின் தனித்துவம் மொழி நடையின் சிறப்பு என்று
- 24

Page 27
& 3G H F * 1- அ அ அ அ 15 5 15 -
சொல்லாம். கலை ஆர்வமும் இலக்கிய ப ஆர்வமும் மிக்கவர். மரபுக் கவிதைகளை ற வாசித்து ரசிப்பார். மொழி, இலக்கியம், கலை ஆகிய பல்வகைப் பரிமாணங்களுடன் நடமாடும்ஒரு பல்கலைக்கழகமாக உயர்ந்து நின்றார். மனித நேயம் கொண்ட ஒரு கல்வியாளனாக அவர் கல்விச்சேவைக்கு |
ஆற்றிய பணிகள் அளப்பரியன. அதனால் இலங்கையின் கல்வி உலகத்தில் பலரா லும் பேசப்பட்ட ஒரு மதிப்புக்குரியவராக நிமிர்ந்து நின்றார். கிராமப்புறப் பாடசாலை களின் வளர்ச்சியில் அவர் கொண்டிருந்த அக்கறை, ஈடுபாடு காரணமாக பலர் மனங் களில் அவர் வீற்றிருக்கின்றார்.
கல்வித்துறையில் அவர் வகித்த பதவி கள் பல. கொழும்புப் பரீட்சைத் திணக் களத்தின் பிரதி ஆணையாளராக பதி னாறு வருடங்கள் கடமையாற்றியுள்ளார். அதைத் தொடர்ந்து பத்து வருடங்கள் வடமாநில கல்விப் பணிப்பாளராகச் செய லாற்றினார். மஹரகம தேசிய கல்வி நிறு வகத்தின் ஆலோசகராக மூன்று வரு டங்கள் கடமையாற்றியுள்ளார். வடக்கு, கிழக்கு மாகாண பரீட்சைகள் ஆணை யாளராக நான்கு வருடங்கள் பணியாற்றி யுள்ளார். தேசிய தொகையீட்டு நிகழ்ச்சித் திட்ட அலகின் (National Integration programme Unit-Chief Co-ordinatior) பிரதம இணைப்பா ளராகவும் இருந்துள்ளார்.
திரு.சுந்தரலிங்கத்தின் பொதுப்பணி பரந்துபட்டது. கொழும்புத் தமிழ்ச்சங்கத் தில் தலைவராக இருந்து பணியாற்றி யுள்ளார். உலக இந்துக் கவுன்சிலின் கொழும்புக் கிளை நிர்வாக சபை உறுப் பினராகவும் அகில இலங்கை இந்துக் காங்கிரசின் நிர்வாக சபை உறுப்பினரா G கவும் பதவி வகித்துள்ளார். SLAAED த அங்கத்தவராகவும் யாழ்ப்பாணப் பல் ப கலைக்கழக கவுன்சில் உறுப்பினராக வும் இருந்துள்ளார். பொதுப்பணிகளில்தன்னை ஈடுபடுத்தி உழைத்து வந்தார். இதனால்
இணுவில் ஒலி
3, 51, *! A B 24 G H = "4, 4 இ
16 Eெ 3 .

பலருடைய அறிமுகம் கிடைக்கப் பெற் மது. “நல்லோரைக் காண்பதுவும் நன்றே” சன்ற முதுமொழிக்கு அமைய அவருடன் நட்புப் பாராட்டுவதில் பலர் ஆர்வம் கொண்டிருந்தனர். அவர் எல்லோராலும் விரும்பப்பட்ட ஒரு நேசமுள்ள மனிதனாக வாழ்ந்து காட்டினார்.
தான் பிறந்து, வளர்ந்து, உலாவிய இணு வில் என்ற கிராம் மண்ணின் மைந்தன் அக்கிராமத்தின் மேல் கொண்ட காதலால் கல்வி மேம்பாட்டிற்கு பெரும் பணி ஆற்றி புள்ளார். இணுவில் ஒரு பெரிய விவசாயக் கிராமம். அங்கு பிறந்த பிள்ளைகள் இடைநிலைக் கல்வியைத் தொடர்வதற்கு வெளி ஊர்களிலுள்ள பெரிய பாட =ாலைகளுக்கே சென்று கல்வி பயில வேண்டிய கட்டாயம் பல ஆண்டு கால் மாக இருந்து வந்தது. இக்குறையை எவருமேதீர்த்துவைக்க முன்வரவில்லை. இக்காலகட்டத்தில் கல்விப் பணிப்பாள ாக இருந்த திரு. இரா.சுந்தரலிங்கம் தனது மேலான பணிகளுக்கு மத்தியிலும் அயராத உழைப்புக் காரணமாக இரண்டு கல்லூரிகளை இணுவில் கிராமத்தில் தரம் உயர்த்தினார். இணுவில் மத்திய கல்லூரி, இணுவில் இந்துக் கல்லூரி என நாமம் கொண்டு கிட்டத்தட்ட 4000 பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு அவை பணியாற்று கின்றன. இணுவில் மாணவர்களின் காலத் பின் கல்வித் தேவையறிந்து செயற்பட்ட கல்வியாளனாக, பொது நலத் தொண்ட எாகப் போற்றப்படுகின்றார். இத்தகைய பெரியார் தனது 72 ஆவது வயதில் 5.04.2007 அன்று காலமாகிய செய்தி "லரை அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன் சொல்லணா வேதனையையும் கொடுத் துே என்பதைப் பலரும் இன்று ஞாபகப் "டுத்திக் கொண்டே இருக்கின்றார்கள். இணுவில் மைந்தன் திரு. இரா.சுந்தர
யிங்கம் என்றும் பேசப்படுவார்.
தம்பு சிவசுப்பிரமணியம்.
25

Page 28
சங்க இலக்கியங்க தந்தி வாத்தியங்க
மனித வாழ்க்கையில் முக்கிய பங்கினை வகிக்கும் இசை மனிதன் மட்டு மன்றி அனைத்து உயிரினங்களையும் உணர்ச்சி யடையச் செய்யும் தன்மை வாய்ந்தது. இன்பத்திலும் துன்பத்திலும் உள்ளத்தில் இருக்கும் உணர்ச்சிகளை வெளிப்படுத் தும் சக்தி இசைக்குண்டு. இசையை மக் கள்தாம் வாழும் இயல்புக்குத் தக்கவாறும், சூழலுக்கேற்றவாறும் வாழ்க்கை முறைக் கேற்பவும் இசைமரபுகளை ஏற்படுத்தியுள் ளனர். அதற்கேற்ப இசையமைப்பு, இசைக் கருவிகள், இசைக்கும்முறை. இசைச்சூழல் இடத்திற்கு இடம் மாறுபட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழகத்தில் பாணன், பறையன், துடியன் முதலிய இனத்தவர்கள் தோன்றிவிட்ட னர். பாணர்கள் யாழ். வாசிப்பதில் சிறந்த வர்கள் ஆதலால் இவர்களுக்கு யாழ்ப்பா ணர் என்ற பெயர் எழுந்தது என்று கூறுவதி லிருந்து தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே பாணர்களும், பாடினிகளும் தோன்றிவிட்டனர் என்று நன்கறியலாம்.
தொல்காப்பியம் சங்க இலக்கியங்க ளில் இருந்து கிடைக்கும் செய்திகள் மூலம் அக்காலத் தமிழிசை முறை பற்றி அறிய லாம். ஏழிசைப் பகுப்பு, பண்ணமைப்பு, கருவியிசை முதலியன பற்றி சங்க இலக் கியங்கள் உறுதிப்படுத்திக் காட்டுகின்றன. பழந்தமிழ் மக்கள் ஸ்வரங்களையும் சுருதி களையும், இராகம் பாடும் முறைகளையும் உணர்ந்து 12000 இராகங்களைப் பாடி வந்தனர் என்றும் இவ் இராகங்களில் பல இப்போது வேற்றுமொழிப் பெயர்களைச் சூடிக் கொண்டு உலாவருகின்றன. இது தமிழிசையின் உயர்வுக்கு தனிச்சிறப்பு,
இணுவில் ஒலி -

கள் சுட்டும்
இத்தகையதமிழிசை என்றுகூறவேண்டிய நிலையில், பிற இசைகளுடன் கலந்து
அவற்றைத் தழுவிக் காணப்படுகிறது.
தொல்காப்பியம், சங்க இலக்கியம். பதிணென்கீழ்கணக்கு நூல்கள், சிலப்பதி
காரம் முதல் கம்பராமாயணம் வரையுள்ள காப்பியங்கள், தேவாரம், திருவாசகம், நாலாயிரத் திவ்யபிரபந்தம்,பெரிய புரா ணம் முதலிய பக்தி இலக்கியங்கள் வரைத் தமிழிசைப் பண்களே தமிழ் வானில் ஒலித் துக் கொண்டிருந்தன.
தொல்காப்பியர் காலத்தில் இசை' வாணர்கள் பற்றிய குறிப்புக்களை அறிய முடியாத போதும் பரத்தையின் பிரிவு கார ணமாகப் பாணர், பாடினி, உத்தர், விரலியர் போன்றோர் ஊடல் தீர்க்கும் வாயிலாக அனுப்பும் மரபுகூறப்படுகிறது. இப்பாணர், உத்தன், பாடினி, விறலி ஆகியோர் இசை யிலும், கூத்திலும் சிறந்தவர்கள் என்பதை பண்டைய இலக்கியங்கள் சுட்டுகின்றன.
தொல்காப்பியர் நிலங்களின் கருப் பொருளாகப் பலவற்றை குறிப்பிடுகின் றனர்.
"தெய்வ முணாவே மாமரம் புட்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ இவ்வகை பிறவும் கருவென மொழிப” இப்பாடலில் தாளக் கருவி ஆகிய பறை யும், பண்ணிசைக் கருவியாகிய யாழ் பற்றி யும், அவை பயன்படுத்தும் முறை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது
• குறிஞ்சிக்குத் தொண்டகப் பறையும்,
குறுஞ்சி யாழும்
• பாலைக்குத் துடியும், பாலை யாழும்
•முல்லைக்கு ஏறுகோட் பறையும், |
• 26

Page 29
G - - - 2)
C 194 F
முல்லை யாழும்
• மருதத்திற்கு நெல்லரிகிணையும்
மணமுழவும் நெய்தலுக்கு மீன்கோட் பறையும், .
நாவாய்ப் பம்பையும் விளரியாழும் பயன்பட்டன. | சங்க காலத்தில் இசை மிகவும் சிறந்த இடத்தினை வகித்துள்ளது. அக்காலத்தில் பாணர், பாடினியர், ஆடல்மகளிர் போன்
றோர் பாடல்களைப் பாடி மன்னரையும் ப மக்களையும் மகிழ்வித்துள்ளனர். இக் கலைஞர்களில் பெரும்பாலானோர் ஆட வ லும், பாடலும் தெரிந்தவர்களாக இருந்த க னர். அக்கால இசையை வளர்த்தவர்கள் ப பாணர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாணர் சங்க கால இசைக் கலைஞர்களில் ே பாணர் மிகச் சிறந்த இடத்தைப் பெறுகின் தி றனர். பாணரில் இசைப் பாணர், யாழ்ப் பா பாணர், மண்டைப் பாணர் எனப் பல பிரிவி னர் இருந்தனர். இவர்களில் யாழ் வாசிப் பதில் சிறந்தவர்கள் யாழ்ப்பாணர் என மி அழைக்கப்பட்டனர். இசைக் கலைஞர் என்ற சிறப்பைப் பெற்ற பாணர்கள் யாழி
சைத்துப் பாடுவதில் சிறந்தவர்கள். யாழி க சைப்பது போன்று பாட்டிசைப்பதிலும் இவர்கள் சிறந்தவர்கள். பேரியாழ், சீறி
க யாழ் ஆகிய இரண்டையும் இசைக்கும் ம. பாணர்களில், பெரும்பாணாற்றுப்படை
பேரியாழ்பாணரைப்பற்றியும், சிறு பாணாற் ஸ றுப்படை சீறியாழ் பாணரைப் பற்றியும் விளங்குகின்றன. சிறந்த இசைத் திறனு | டைய கலைஞர்களாக விளங்கிய பாணர்
ய கள் மிகவும் வறிய நிலையில் இருந்தவர் கள் என்பதை ஆற்றுப்படைப் பாடல்கள் மூலம் அறியலாம். இசையில் நாட்டமுள்ள | வள்ளல்கள் இவர்களை ஆதரித்தனர் என் பதும் குறிப்பிடத்தக்கது. மங்கலப் பொரு அ
ளாகக் கருதப்பட்ட யாழை பாணர் மாலை சூட்டி, அதனை கருமை நிறமுடைய பைக் குள் வைத்துப் பாதுகாத்தனர்.
ரு இணுவில் ஒலி
ய
ம
ய
ம்
கா
யா
வி

[A, E72 F% 2.
பாணர்களின் ஆண்களை, சென்னியர், உயிரியர், செபரியர், மதங்கர், இசைக்காரர், வாணர் எனப்பிங்கல நிகண்டும் பெண்களை சாடினி, விறலி, பாட்டி, மதங்கி, பாணர், மகள் எனத் திவாகரமும் கூறுகின்றன. இசையில் சிறந்தவர்களாகிய பாணர்கள், பாடினிகள், கூத்தர்கள், யாழ் மீட்டிப் பாடி பும் ஆடியும் அரசனைப் புகழ்ந்தும், மகிழ்ந் பும் அரசனிடமிருந்து பரிசில்களை யும்
ட்டங்களையும் பெற்றனர்.
பாணர்கள் யாழ்மீட்பு இசையில் சிறந்த ! பர் என்பதற்கு எடுத்துக்காட்டாக திருநீல. கண்ட யாழ்ப்பாணர், திருப்பாணாழ்வார், ாணபத்திரர், மதங்க சூளாமணியார் "பான்றோரைக் குறிப்பிடலாம்.
மன்னர்கள் போருக்குச் செல்லும் "பாதும் போரில் வென்று வெற்றியுடன் விரும்பும் போதும் பாணர் அவர்களைப்
உடல்களால் மகிழ்வித்தனர்.
யாழ் | சங்க காலத்தில் இசையுலகில் யாழ் மிகவும் சிறந்த இடத்தினை வகித்துள்ளது. ரம்புக்கருவிகளில் சிறந்ததான யாழ் ஊனிமையான நாதத்தையுடையது. அக் எலத்தில் வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளை மனிமையூட்டி சிறப்பிப்பதற்கு இவ்விசைக் கருவி பயன் படுத்தப்பட்டுள்ளது. பழந்தமிழ் க்கள் யாழைக் கொண்டு இசைக்கும் "லக்கணம் வகுத்ததன் காரணத்தால் வைரங்களை நரம்புகள் என்றும்பண்களை Tழ். என்றும் அழைத்தனர். இதன் காரண Tக நான்கு பண்களும் முறையே பாலை Tழ், மருதயாழ், நெய்தல் யாழ்., குறிஞ்சி Tழ் என அழைக்கப்பட்டன.
ஆதிகாலத்தில் வேட்டையாடித்திரிந்த னிதன் விலங்குகளைக் கொல்வதற்கு எட்டிற்குச் சென்று அம்பை எய்தபொழுது தன் நாணிலிருந்து எழும்பிய இனிமை சன நாதத்தை அனுபவித்தான். இதுவே "ல்யாழ் தோன்றுவதற்கு காரணமாயி ந்திருக்கலாம்.

Page 30
வில் யாழ் இவ்விசைக்கருவியே முதன்முதலாகத் தோன்றியது எனக் கருதப்படுகிறது. முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள் வில் யாழ் எனும் இசைக்கருவியை உருவாக்கி னர். வேடன் தனது வில்லில் வெவ்வேறு நீளத்தையுடைய நாண்களைக் கட்டி மீட் டிய பொழுது அதிலிருந்து பலவித இனி மையான ஸ்வரங்கள் ஒலிப்பதைக் கவ னித்தான். இதுவே யாழின் வளர்ச்சிக்குக் காரணமாய் இருந்தது. இத்தகைய கருவி களுக்கு ஆரம்பத்தில் மெல்லிய கயிறு பயன்படுத்தப்பட்டன. நாளடைவில்
தோல்வி தோல்வி
செயல்களைக் செய்வதான ஆரம்பத்தில் நீங்கள் தோல்வி. கள் குறைகளைத்திருத்திக் கொ டையலாம். நாற்காலியில் அமர்ந் வும் நிகழப்போவதில்லை. அது உ ஆக்கிவிடும். சிலர் நல்லகாரியங் மன உறுதி குலைத்து நம்பிக்கை. கள் உண்டாகின்றன. எந்த ந6 விக்கினங்கள் ஏற்படுவது இயற்ன உறுதியைச் சோதிப்பதற்காகவே பிக்கை, உறுதி மற்றும் மனத் தூப் கின்றன. ஏதாவது உருப்படியாகக் உறுதி அதிகரிக்கின்ற அளவு 6 அதைக் கண்டு மனம் தளரவேண் களிடம் நம்பிக்கை கொண்டு அ. சோதனைகளையும் இடுக்கண்க துறையிலும் உங்களால் வெற்றி தெரிந்துகொள்ளுங்கள்
இணுவில் ஒலி

கயிற்றுக்குப் பதிலாக நரம்புகள் இடம் பெற்றன.
இவ்வாறாகத் தமிழ் இலக்கியங்களின் ஆரம்ப காலமாக கருதப்படுகின்ற சங்க காலத்தில் கருவியிசையும் அவற்றுள் ஒரு வகையான தந்தி வாத்தியங்களின் சிறப்பும், அவை கையாள்பவரின் வகுப்பும் அவற் றின் வகைகள் பற்றியும் “சங்க இலக்கி யங்கள் சுட்டும் தந்தி வாத்தியங்கள்” எனும் கட்டுரை நோக்குகின்றது.
செல்வி தனுஷா குணபாலசிங்கம்
(B.E.A.) ஆசிரியர்
என்பது
• அல்ல!
து தன்னம்பிக்கையை அளிக்கும். அடைந்தாலும் பராவாயில்லை. உங் ண்டு அடுத்தமுறை நீங்கள் வெற்றிய துேகொண்டு கவலைப்படுவதால் எது உங்களை ஒரு நம்பிக்கை அற்றவராக களைச்செய்யத் தொடங்கும் போதே இழக்கின்றனர். அதனால் விக்கினங் ல்ல காரியம் செய்யும் பொழுதும் மகயே. காரியம் செய்பவருடைய மன வ அவை வருகின்றன. அவரது நம் ப்மையைச் சோதிக்கவே அவை வரு ச் செய்யவேண்டும் என்று உங்களது எதிரிடை சக்திகளும் பலமடையும். -டாம். அதற்கு மசிய வேண்டாம். உங் ந்த இடுக்கண்களை வெல்லுங்கள். களையும் எதிர்கொள்ளாமல் எந்தத் "யை அடைய முடியாது என்பதைத்
- சுவாமி சிவானந்தா

Page 31
அரசு வழங்கிய கல பல் சீரும் பெற்ற இணுவில் திருவூர் ஏனைய இடங்களை விடச் சிறப்படைந்த 2 பெருமையை இவ்வருடம் கிடைத்த வெகு மதியான “கலாபூஷணம்” என்னும் அரச விருது மூலம் எட்டியுள்ளது.
இலங்கையின் மூவின மக்களிடையே - பாரம்பரிய கலைகளிற் சிறந்து விளங்கிய அறுபது வயதைக்கடந்தமுதுபெரும்கலை 2
ஞர்களைஅரசுபாராட்டிக்கெளரவித்துள்ளது.
1984 தொடக்கம் எமது நாட்டில் இலக் 2 கியம், இசை, நடனம், நாடகம், சிற்பம், ஓவி யம், ஊடகத்துறை போன்ற பிரிவுகளிற் | சிறந்து விளங்கிய கலைஞர்களைப் பாராட் டும் வகையில் அரச கலாசார அமைச்சு “கலாபூஷணம்” என்னும் தேசிய விருது வழங்கிக் கௌரவித்து வருகிறது. இதன் 6 போறாக இணுவில் மண்ணின் மைந்தர் கள் பலர் சிறப்படைந்தனர். .
- 01. முதன்முதல் உலகறிந்த பெருங் கலைஞர் மகாவித்துவான் பிரம்மஸ்ரீ ந.வீர 4 மணி ஐயர் இவ்விருதைப் பெற்றுச் சிறப் பித்தார்.
இணுவில் ஓலி - சந்தா விவரம் ஒரு வருடச் சந்தா - ரூபா 800 (அஞ்சல் செலவுடன்) வெளிநாடு - $ 25 (U.S)
உங்கள் இணுவில் ஒலியின் வளர்ச்சிக்குச் சந்தாதாரர்களாகச் சேர்ந்து ஆதரவு நல்குங்கள். தொடர்பு : த.சிவசுப்பிரமணியம்
சி.சரவணபவன் G-2/1, நெல்சன் பிளேஸ்,
காரைக்கால் ஒழுங்கை, கொழும்பு - 06.
இணுவில் கிழக்கு, இலங்கை
சுண்னாகம், இலங்கை, தொ.இல. 071 8876482 தொ.இல. 077 3126802 வங்கிக் கணக்கு விவரம்: வங்கி Barnk : Corrrriercial Barnk - Wellawattc
A/C No: 8100086490
இணுவில் ஒலி

ரபூஷணம் விருது
02. தொடர்ந்து புலவர்மணிவை. க.சிற் றம்பலம் - 2002 - இலக்கியத்துறை. -
03. கே.ஆர்.சுந்தரமூர்த்தி (நாதஸ்வரம்) - 2006 - இசைத்துறை.
04. உ.இராதாகிருஷ்ணன் - (வயலின்) - இசைத்துறை.
05. K.S.ஆனந்தன் (எழுத்தாக்கம்) - 2010 - இலக்கியத்துறை |
06. வி.கே.கானமூர்த்தி (நாதஸ்வரம்) - 2010 - இசைத்துறை.
07. பண்டிதை திருமதி வைகுந்தம் கணேசபிள்ளை - 2011 - இலக்கியத்துறை.
08. கா.வைத்தீஸ்வரன் (உளவளக் கல்வியாளர்) - 2012 - இலக்கியத்துறை.
09. மூ.சிவலிங்கம் (சமய இலக்கிய எழுத்தாக்கம்) - 2012 - இலக்கியத்துறை.
10. உ.பாலகிருஷ்ணன் (நாதஸ்வரம்) - E012 - இசைத்துறை.
11. தம்பு சிவசுப்பிரமணியம் (எழுத்தாக் கம்) - 2012 - இலக்கியத்துறை.
12. ஏரம்பு சுப்பையா மகள் திருமதி சாந்தினி சிவனேசன் - 2012 - நடனத்துறை.
13. வை.க.சிற்றம்பலம் சிவானந்தராசா - 2012 - இசைத்துறை.
இவ் வருடம் இலங்கை முழுவதும் விருது பெற்ற அறுபது தமிழ்க் கலைஞர் களுள் எமது திருவூர் மண்ணின் மைந்தர் கள் ஆறுபேர் தெரிவுசெய்யப்பட்டமை எமது இணுவை மண்ணுக்குக் கிடைத்த பெரும் பேறாகும். மேற்கூறிய “கலாபூஷ ணம்” என்னும் அரச விருதுகள் பெற்ற கலைஞர்களைப் பாராட்டுவதுடன் மேலும் பல கலைஞர்கள் தொடர்ந்து பிரகாசிக்க வேண்டுமென இறைவனைப் பிரார்த்திக் கிறேன்.
மா.ந.பரமேஸ்வரன் இணுவில் இளந்தொண்டர் சபை
29.

Page 32
அறிந்தவையும் தெரிந்
* வடக்கு, கிழக்கில் யுத்தம் முடிவ டைந்த பின்னரும் கூட அதிகளவான மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடை விலகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2011 இல் இலங்கை முழுவதும் 126,000 வரையான மாணவர்கள் பாடசாலைக் கல்வியிலிருந்து இடைவிலகியதாக, மதிப் பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன. இவ்வாறு இடைவிலகிய மாணவர்களில் அதிகம் பேர் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் கள் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.
2011 இல் இலங்கையில் வடமாகாணத் தைச் சேர்ந்த 38,321 மாணவர்கள் பாட சாலைகளிலிருந்து இடைவிலகியதாகப் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இதேபோன்று, பாடசாலையை விட்டு விலகிய கிழக்கு மாகாண மாணவர்களின் எண்ணிக்கையானது இரண்டாவது இடத் தில் உள்ளது. 24,614 மாணவர்கள் 2011 இல் கிழக்கு மாகாணப் பாடசாலைகளிலி ருந்து இடை விலகியுள்ளதாக கல்வி அமைச்சின் புள்ளி விபரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இலங்கையில் இலவச கல்வி முறை நடைமுறையிலுள்ள போதிலும், இவ்வாறு பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடை விலகுவ தானது அதிர்ச்சி தருவதாக, சிறுவர் பாது காப்பு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.
போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்தும் நிலவும் வறுமை காரணமாகப் பாடசாலை மாண வர்கள் தமது கல்வியைப் பாதியில் நிறுத்து வதாக ஆய்வொன்றில் சுட்டிக்காட்டப்பட் டுள்ளது. இவ்வாறு வறுமையில் வாடும் சிறார்கள், தொழிலுக்குச் செல்லவேண் டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அத் துடன், இவ்விரு மாகாணங்களிலும் போதி
இணுவில் ஒலி

தவையும்
யளவு ஆசிரியர்கள் காணப்படவில்லை. கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இன்ன மும் நிறைவு செய்யப்படவில்லை. இவ்வா றான காரணங்களால் மாணவர்கள் பாட சாலையிலிருந்து இடைவிலகுவதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.)
இவ்வாறான மாணவர் விலகலைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் போதிலும், தொடர்ந்தும் மாணவர்கள் இடை விலகும் நிலை அதிகரித்துச் செல்வ தும் இங்கு குறிப்பிடத்தக்கது. -
* செவ்வியல் அல்லது தொல்சீர் ஆடல்கள் கிராமிய நடனங்களில் இருந்து முகிழ்ப்பும், கூர்ப்பும் அடைந்தவை. பரத நாட்டியம், கதகளி, குச்சிப்புடி, யக்சகானம், கதக், மணிப்புரி, ஒடிசி முதலியவை இந்தியாவின் தொல்சீர் ஆடல்களாகக் கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் நில விய சின்னமேளம் அல்லது திருச் சதிராட் டத்துக்குப் பரதநாட்டியம் என்ற பெயரை அதனைச் சமஸ்கிருத மயப் படுத்தியோர் சூட்டினர். கேரளத்துப் பண்பாட்டில் கதை கூறும் ஆடல் கதகளி ஆகும். மோகினி ஆட்டமும்கேரளப்பண்பாட்டுடன் இணைந் தது. கதகளி மற்றும் பரத நாட்டியத்தின் இணைப்பை மோகினி ஆடலிலே காண லாம்.
குச்சிப்புடி ஆந்திரப் பண் பாட்டில் முகிழ்த்தது. இது பரதநாட்டியத்தின் அடிப் படைகளுடன் தொடர்புடையது. யக்சகா னம் கர்னாடகப் பண்பாட்டிலே தோற்றம் பெற்றது. ஒரே நிலையில் காலடிகளை அதிவிரைவுடன் தட்டி ஆடும் தனித்து வத்தை கதக் கொண்டுள்ளது. வட இந்தி யப் பண்பாட்டிலே தோற்றம் பெற்ற ஆடல் வகைகளாக மணிப்புரியும் ஒடிசியும் அமைக்கின்றன. மணிப்புரி சமய உணர்வு களை வெளிப்படுத்தும் கூட்டு ஆடல். ஒடிசி வழிப்பாட்டுடன் இணைந்த ஆடலாகும்.

Page 33
(மாணவர் உலகம்
சோதனைகளை சாத என்னாலே முடியுமென்ற நம்பிக்கை ? என்னாளும் மக்களது இலட்சிய நன பொன்னாலும் பொருளாலும் சாதிக்க என்னாலே முடியுமென்ற எண்ணத்தா
மாற்றுவலு எல்லோர்க்கும் மறைபொழு ஊற்றுக்கண் மனமாகும் உறுதியுடன் ஏற்றவர்கள் வழிகாட்டல் இருந்திட்டா என்னாலே முடியுமென்ற எண்ணம் வ
காலாலே பேனைபிடித்து கையில்லார் வாயாலே தூரிகையால் ஓவியங்கள் காலில்லார் பொய்க்காலால் கருமங்க கண்ணில்லார் கல்வியிலே உயர்வை
அங்கங்கள் குறைந்தாலும் நம்பிக்:ை இங்கவர்கள் கொண்டுலகு வியக்க : மின்னல் போல் உடலெங்கும் வியாபக எண்ணியதை முடிக்கின்ற வலுவந்து
மாற்றுவலு இல்லையென்று நினைத் சோதனைகள் வென்று நாம் சாதனை நம்பிக்கையெனும் சக்தியுடன் இறுத இங்கதுவே வாழ்வினில் முயற்சியால்
உன்னத தரணியிலே ஊனம் உற்றே மனசு தானடா ஊனம் - அதை மடக்கிப் பாராடா வாழ்வில் வெற்றி உ தோழா! ஊனம் வாழ்வின் தடையல்ல
இணுவில் ஒலி

னையாக்குவோம்
ஒன்றேதான் மந்திரமாம் - முடியாததை -ல் வென்றிடலாம்!
நளாய் உண்டதனில்
முயற்சித்தால் ால் எப்போதும்
ந்து சேர்ந்திடுமே!
ர் எழுதுவதும்
தீட்டுவதும் கள் ஆற்றுவதும் தயும் காணீரே!
க இருக்குமெனில் வாழ்வார் கமாய் வீறுகொண்டு | சேர்ந்திடுமே!
திட்டால் அக்கணமே எகள் படைத்திடுவோம் திவரை செயற்பட்டால்
ல் உலகுதனை வென்றிடுவோம்!
யார் யாருமில்லை
லண்ட்டா டொ!
- செல்வி ர.சுகிர்தா
(தரம் 11) யா/இணுவில் இந்துக் கல்லூரி.
31

Page 34
(மாலைர் உலகம் )
இன்றைய தகவ சாதனத்தின் முடி
கல்லைக் கல்லோடு உரசித் தீயைக் கண்டுபிடித்த மனிதன் பல்வேறு யுகங்க ளைக் கடந்து இன்று 21ஆம் நூற்றாண் டிலே காலடி எடுத்துவைத்துள்ளான்.
அன்றுமுதல் இன்றுவரை அவன் பல யுகங்களையும்கடந்து பல வெற்றிகளையும் கண்டுள்ளான். அவற்றுள் மகத்துவமான துறையே இந்தத் தகவல் தொடர்பாடல் துறையாகும்.
தகவல் தொடர்பு என்று கூறும்பொழுது ஒரு தகவலை ஒருவரிடம் இருந்து ஒரு தனி மனிதனுக்கோ அல்லது குழுவினருக்கோ பரிமாறிக்கொள்வதாகும்.
பண்டைய காலத்தில் தகவலை பரி மாறிக்கொண்ட முறையானது கூக்குரல் இடுவதன் மூலம், பறவைகள் மூலம் , கடி தங்கள் மூலம், தீ மூட்டுதல் மூலம் அமைந் தது
இவ்வாறான மிகவும் கஷ்டமான நிலை மையினால் தகவல் பரிமாற்றமானது அவர் களுக்குக் காலம் தாழ்த்திக் கிடைத்தல் மற்றும் உரியவரிடம் சென்றடையாமை போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்கினர். இவ்வாறு இருந்த தகவல் தொடர்பாடலா னது இன்று மிகவும் வளர்ச்சி அடைந்து உலகளாவிய ரீதியில் உலகம் முழுவதும் பிரகாசித்துக் கொண்டு இருப்பதை நாம் காணக் கூடியதாக இருக்கின்றது. |
இவற்றின் தொழிற்பாட்டை சொல்லு வோமானால் அது மிகையாகாது. அந்த வகையில் இன்றைய நவீன கால கட்டத் தில் கணினி, தொலைக்காட்சி, தொலை பேசி, இணையம், மின்னஞ்சல், தொலை நகல் போன்ற இவ்வாறான பல்வேறு தொழில்நுட்ப சாதனங்கள் நமது தேவை யைச் செம்மையாக ஆற்றிவருகின்றன.
இணுவில் ஒலி

கல்தொடர்பாடல்
க்கியத்துவம்
தொலைபேசி மூலம் எமது உடனடித். தேவைகளை தொடர்பாடல் மூலம் பூர்த்தி செய் வது மட்டும் அல்லாது வெளிநாட்டு மற் றும் புதிய நண்பர்களுடன் தொடர் பாடல் செய்யவும் இது உதவுகின்றது. தொலைக்காட்சியை எடுத்து நோக்குவோ மானால் நேரடி தொடர்பாடல், நேரடி ஒலி பரப்பு மூலம் நமக்கு உலகில் நடக்கும் பிரச் சினைகளையும் நமக்குத் தெரியாத இடங் களையும் பார்க்க இயல்கின்றது.
ஏன் எமது நாட்டின் கல்வி வளர்ச்சி யினதும் பெரும் அதிபதி உத்தியாகக் காணப்படுவது கணினியாகும்.
பாடசாலைச் செயற்பாடுகளை வீட்டில் இருந்து கொண்டே ஆற்றமுடிகின்றது. இது கல்வி வளர்ச்சிக்கும் கணினி அறி வுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது.
இவ்வாறான தகவல் தொடர்பாடல் சாதனம் மூலம் சில தீமைகள் கூட கிடைக் கின்றன. அவையாவன - கணினிகளைத் தொடர்ந்து பாவிப்பதன் மூலம் கண்ணில் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண் டியிருக்கும். மற்றும் தமக்கு இனந்தெரியாத வர்களுடன் தொடர்பாடல்களை வைத்தி ருத்தல். இதன் மூலம் பல பிரச்சினை களை தாமே தேடிக்கொள்கின்றனர், இன்றைய உலகத்தில் எங்கு பார்த்தாலும் நவீன தொடர்பாடல் யுகமே ஒவ்வொரு இடத்தையும் தொட்டுத் தொட்டு பறந்த வண்ணம் உள்ளது. இவ்வாறான தகவல் தொடர்பாடல்சாதனமானது மழை போன்ற நன்மையைத் தந்தாலும்ஒரு மலை போன்ற தீமையையும் நமக்கு அளிக்கின்றது. இதனை அறிந்த நாம் அந்த சில தீமை களை “சீ” என உதறிவிட்டு சரியான முறை
32

Page 35
சா
( மாணவர் உலகம் - யில் பயன்படுத்துவதன் மூலம் பூரண அறி கு
வைப் பெற்று நல்ல தொரு பிரஜையாக வாழ இயலும். விலங்குகளிடம் இருந்து
கிய பிரிதெடுக்கக்கூடிய பகுத்தறிவையுடைய
லே நாம் தீமைகளை விட்டு நன்மைகளைத் தேடவேண்டும். நமக்கு நலன் விளைவிக்
வா
;ெ
பிட
இணுவை ஊருக்கு 6 சமுதாயத்தின் பங்க
இவ்வுலகில் ஆரம்பகால மனித இன ள மான வேடுவர் தமது தேவைகளை சூழ புக் லில் இருந்து பெற்றுக்கொண்டனர். இருந்த கா போதிலும் சுற்றாடலில் ஏற்படும் மழை, யத மின்னல், புயல் என்பவற்றை கண்டு ஆச்ச ரியமும் அச்சமும் அவன் மனதில் எழுத் தது. தனது சுற்றாடலையும், தன்னையும் அது பாதித்துவிடக்கூடாது என எண்ணி அவற்றின் அருள்வேண்டியும் அவற்றைத் | தெய்வமாகக் கருதி வழிபட்டான். அக்கால எ மனிதன் எவ்வாறு தனது சூழலை பாது காத்தானோ அதேபோன்று இக்கால் மணி கம் தர்கள் தமது திறன்களை வெளிப்படுத்தியும் தமது ஆற்றல்களின் மூலமாகவும் தத் தமது ஊரிற்கு பெருமைகளைத் தேடித் தந்துகொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் எமது இணுவையும் |
கி; தமது சமுதாயத்தினரது நல் ஆற்றல்கள் |
பு மூலமும் நற்பண்புகள் மூலமும் ஆன்மீக வளர்ச்சி மூலமாகவும் உயர்ச்சி அடைந்து |
க வருகின்றது. இவ்வூர் இவ்வளவு உயர்ச்சி |
5) அடைந்திருக்கக் காரணம் இணுவை சமுதாயமும் அவர்களின் நற்செயல்களும் - தான் என்று கூறுவதே இதற்கு ஒப்பானதா கும். மேலும் இந்த இணுவை ஊரில் கலை, கலாசாரம், சமயம் என்பவற்றை பேணிப் பாதுகாத்து அடுத்து வரும் தலைமுறைக்கு அதனை புகட்டுவதற்கு இவ்வூரில் எவ்வ
இணுவில் ஒலி
பூ!

ம் வகையில் தகவல், தொடர்பாடல் தனைத்தைப் பயன்படுத்தி அதன் முக் பத்துவத்திற்கு மதிப்பளித்து பயன்பெறு வாமாக.
ப.லுக்ஷிகா (யா/இராமநாதன் கல்லூரி)
வளர்ந்து வரும்
ளிப்பு
வோசைவபணிமனைகளும்சமய அமைப் க்களும் தோன்றி தமது நோக்கங்களை, சரியங்களை நிறைவேற்றி இளம் சமுதா த்தினரது நல்வாழ்விற்கு வழிவகுத்து ருகின்றன. இதுவும் இணுவையின் நல் ளர்சிக்கும் இளம் சமுதாயத்தினரது ல்வாழ்க்கைக்கும் காரணமாக அமை றது.
இன்று விஞ்ஞானமயமாகவே மாறிவரும் மது உலகம் ஆன்மீகத்தைக் கடைப் டிக்காது உலக வாழ்விற்காக செல்வங் ளை தேடுவதிலும் தமது தேவையினைப் ர்த்தி செய்வதுமாக மட்டுமே இருந்து னித வாழ்க்கையை அமைத்து வருகிறது. தன் மூலம் பழமையும், கலாசாரங்களும் பழிந்துவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக் ன்றது. ஆனால் எமது கலாசாரங்களை ம்பழமையையும் பேணி நற்பிரஜைகளை லகிற்குத் தரும் ஓர் ஊராக உதாரணம் எட்ட எமது இணுவையூரே சிறந்தது என
ரம்.
மேலும் எமது இளம் சமுதாயத்தினர் மது கலைகளையும் ஆற்றல்களையும் வளிப்படுத்தி தேசிய மட்டங்களிலும் இன் வம்பல போட்டிகளிலும் தமது திறமையை வளிப்படுத்தி முதலிடத்தை தட்டிச் சன்றுதமக்கும் தமது ஊருக்கும்பெருமை தடித் தந்து கொண்டு இருக்கிறார்கள்.
- 33

Page 36
மாணவர் உலகம்
பேச்சுப் போட்டி, நாட்டிய நாடகம், இசை நாடகம், நடனம், வில்லுப்பாட்டு போன்ற தேசிய மட்ட நிகழ்வுகளில் பங்குபற்றி தமது திறனை வெளிப்படுத்தி எம் இணுவை யூர் மைந்தர்கள் தமது ஊரிற்கு அழகு சேர்த்து பெருமையை தேடித்தந்திருக்கி றார்கள்.
மேலும் வளர்ந்து வரும் எமது இளம் சமுதாயத்தினர் இணுவை எனும் தங்க மகுடத்தினை அலங்கரித்து முத்துகளா கவும் வைரங்களாகவும் திகழ்கின்றனர். இவ்வாறு இந்த சமுதாயம் தன்னகத்தே ஆற்றல்களை மட்டும் கொண்டிருந்தால் இந்நிலைக்கு வந்திருக்கமுடியாது. இவர் களின் பெற்றோரது உந்துசக்தியும் இறை
பனை
பனை மரமாம் பனைமரம் பலன்கள் பலவும் தரும் மரம் வான் நோக்கி வளர்திடுமாம் யாழ். மண்ணை விளக்கிடுமாம்!
காலை மாலை ருசித்து மகிழ பதமாய் பதநீர் நுங்கு தந்திடுமாம் கன்னங் கரேலென்று கட்டியாக கருப்பட்டி சிப்பம் அளித்திடுமாம்!
ஏழை எளியோர் வசித்திடவே சட்டமும் விட்டமும் அளித்திடுமாம்! பாட்டுத் தமிழ் ஏட்டில் நிலைத்திட ஏடும் சுவடியும் தந்திடுமாம்!
இணுவில் ஒலி

வனது அருட்கடாட்சமும் இவர்களுக்குக் கிட்டி இருப்பது இணுவையூர் செய்த தவப்பயன் ஆகும்.
இதேபோன்று இனிவரும் சமுதாயத் தினரும் தமது மரபு வழியைப் பின்பற்றி இணுவையின் பழமை, கலாசாரம் என்ப வற்றைப் பேணி, இணுவை எனும் மகு டத்திற்கு நற்பிரகாசத்தையும் பெருமையை யும் தேடித்தர வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து மேலும் இணுவை மைந்த னாக வாழ்ந்து இறை அருள் பெறுவோ
மாக,
ப.கெளரீசன்
தரம் 10 கொக்குவில் இந்துக் கல்லூரி, இணுவில் இளந்தொண்டர் சபை
பாலபவன்,
ர மரம்
கற்கண்டு, கிழங்கு, மிட்டாய், பெட்டி ஒடியல், பனாட்டு, பனங்களி பலன்கள் பல தருவதாலே 'கற்பகதரு' எனப் புகழ்பெற்றாய்!
இ.வைஸ்ணவி,
70 யா/இணுவில் மத்திய கல்லூரி

Page 37
உங்கள் “இணுவில் ஒலி' 2ஆம் இ இணுவில் ஒலியின் இரண்டால் மண்ணின் மைந்தர்கள் இணுவிலில்
பயத்தை விழிப்பு நிலைக்குக் கொண் தளங்களை மேலெழச் செய்யும் விசையைக் கொ துள்ளனர். இணுவில் மண்ணின் மைந்தர்களால் இய நாட்டில் எம்மக்கள் பங்களிப்பு, அறிவு விருத்திப் பா வெளிப்படுத்தும் தகவல்கள், ஏனைய ஊர் மக்கன கியத்தை ஆசிரியர் ஏன் மறந்தாரோ புரியவில்ல பாளிகளை இணுவில் மண் புனைவிலக்கியத்துக்கு, இது கவனிக்கப்படுமென நம்புகிறோம்.
மாற்றுச் சிந் 'இணுவில் ஓலி” கார்த்திகை - மா யிலிருந்து..., ஆசிரியர் தலையங்கம் | நிலையை அது கூறுகின்றது. குறிப்பா போதை, மது பாவனை, புதிய சந் யாழ்.மண்ணின் நல்ல பாரம்பரியங்க
நழுவிச் செல்கின்ற நிலைமை, புதிய சிந்தனையாளர்களிடையே காணப்பட்ட நில நல்ல 3 கள் இப்படிப்பல யாழின் அல்லது வடக்கு கிழக்கின் 1 கண்டு உள்ளம் துன்புறுகிறோம்.
இந்தப் பின்னணியில் வெளிவரும் இணுவில் ஒல் பாட்டு கோலங்களுக்கும் வழிவிடல்வேண்டும். மாறில் வேண்டிவை ஆகும். இணுவில் ஒலியில் இவைகள் ஏ
அறிவுத்தே இலங்கையில் வெளிவருகின்ற எழுத்தாளர்களின் கட்டுரை, 5 முக்கியத்துவம் கொடுத்து ஏதோ சாத் புகழாரம் தேடிக்கொள்ளுகின்றன செல்வங்களுக்கும் களம் அமைத்
பணியில் ஈடுபட்டுள்ளமைசிறப்பம்சம் - கூடிய பயன்தரும் பல்வகை அம்சங்களைத் தாங்கிவ உந்து சக்தியாக அமைகிறது எனலாம். “இணுவில் எனது வாழ்த்துக்கள்
இணுவில் ஒலி

ள் விருந்து கதழ் (கார்த்திகை - மார்கழி 2012) வது இதழ் வெளிவந்துள்ளது. இணுவில் ன் விழுமியங்கள் சம்பந்தமாகவும் சமுதா டு வந்து, அதன் அறிவு - இலக்கியம் சார் நிக்கும் ஆக்கங்களை இவ்விதழில் படைத் ஈக்கப்பட்டும் லண்டன் ஒன்றியம், புலம்பெயர் ணியில் பொதுநூலகம் ஆகிய ஆக்கங்கள் மளயும் சிந்திக்க வைப்பவை. ஆக்க இலக் மல. நாடறிந்த ஆக்க இலக்கியப் படைப் த் தந்திருக்கின்றதல்லவா? எதிர்காலத்தில்
'தினக்குரல்'
05.01.2013
தனைக்கு வழி செய்க! சர்கழி 2012 இதழ் கண்டேன், பேனா முனை ம் நன்று. பொதுவாக இன்றைய நாட்டின் சக யாழ். நிலையைச் சுட்டிக்காட்டுகின்றது. தேதிகளின் வித்தியாசமாக போக்குகள் ளையும் விழுமியங்களையும் பின்பற்றாமல் ப குடியேற்ற வாசிகளும் பாரம்பரிய கிராமிய அம்சங்களுக்கும் இடையேயான முரண்பாடு மண்ணில் நச்சு விதைகளாகி வருகின்றமை
பி” மாற்றுச் சிந்தனைக்கும் புதிய நல்ல பண் வரும் புதிய நல்ல விடயங்கள் வரவேற்கப்பட ஒலிக்கப்பட "களம்” அமைக்கப்படின் நலம். - மொழிவரதன் C.மகாலிங்கம்
கொட்டகல்.
தடலின் உந்துசக்தி
அநேகமான சஞ்சிகைகள் பிரபல்யமான கவிதை, சிறுகதை போன்றவற்றுக்கு தனை படைத்துவிட்டதாகத் தமக்குத்தாமே 7. ஆனால், 'இணுவில் ஒலி” மாணவச் துக்கொடுத்து அவர்களை ஊக்குவிக்கும் மாகும். மேலும் குறுகிய நேரத்தில் வாசிக்கக் வருவது வாசகர்களின் அறிவுத்தேடலுக்கும் ஒலி” தனது பணிணைச் சிறப்புடன் தொடர்
- மா.ச.கனகரத்தினம்
மல்லாகம்.
AE

Page 38
இராமநாதன் கல்லூரி நூற்றாண்டு விழாவும் மரங்கள் நாட்டும் நிகழ்வும்
இணுவில் ஒலி
பாப

இணுவில் மருதனார் மடம் இராமநாதன் கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அதன் முதல் நிகழ்வாகக் கல்லூரியின் அதிபர் திருமதி கமலராணி கிருஷ்ணபிள்ளை அவர்களின் தலைமையில் கல்லூரி வளாகத்தில் மரங்கள் நாட்டும் வைபவம் நடைபெற்றது. பிரதம அதிதிகளாக லண்டன் சைவமுன்னேற்றக் கழகத்தின் ஸ்தாபகர் திரு. இரத்தினம் இராமநாதன் மற்றும் திருமதி இராமநாதன் ஆகியோரும், சிறப்பு அதிதிகளாகக் கல்லூரியின் பழைய மாணவிகளான யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட நூலகர் திருமதி ஸ்ரீகாந்தலக்சுமி சிவநேசன் மற்றும் டாக்டர் ஜயந்தி சேனாதிராசா அவர்களும் பங்குகொண்டு சிறப்பித்தார்கள். மேலும் கல்லூரியின் அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர், பெற்றோர், நலன்விரும்பிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். நூற்றாண்டு விழாவில் நூறு பயன்தரு மரங்கள் நாட்டப்பட்டமை வரலாற்று நிகழ்வாகும். இந்த முக்கிய செயற்பாட்டுக்கு இணுவில் மைந்தன் நடராசா சச்சிதானந்தன் 1 (லண்டன்) முழுமையான ஆதரவை நல்கியிருந்தமை விசேட அம்சமாகும்.
1E

Page 39
ச
9 2 . )
தி
பி
று
பாடசாலை பயிற்சிக் கள்
கல்வியை வழங்குவதற்கு என ஒழுங்க மைக்கப்பட ஒரு நிறுவனமே பாடசாலை யாகும். பாடசாலை சமூகத்தின் உயிர் நாடி எனலாம். சமூகத்தில் சேர்ந்து, இணைந்து வாழ்வதற்கு ஏற்ற பயிற்சியை வழங்குவது பாடசாலையாகும். அன்னையின் மடியில்
தட தவழ்ந்து விளையாடும் குழந்தை, தனது |
ல ஐந்தாவது வயது முடிவில் பாடசாலையில் சேர்க்கப்படுகின்றான். சமூகத்தில் உயர்ந்த | வனாக, ஒழுக்கம் உடையவனாக, அறிஞ . னாக, ஆளுமை பொருந்திய நல்ல தலை | வனாக தன்பிள்ளை வளர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் குழந்தை பாடசாலை யில் சேர்க்கப்படுகின்றான். பாடசாலைச் சமூகத்தில் குழந்தை இணைக்கப்படுவ தானது, அக்குழந்தைக்குப் புதிய அனுபவ மாக அமைகின்றது. அக்குழந்தைக்கு இயல்பா த கவே அமைந்துள்ள திறன்களை வெளிக் | கொணர்ந்து, அறிவு விருத்தி பெறவும், நல்ல மனப்பாங்கை பெற்றுக் கொள்ளவும், | பாடசாலைச் செயற்பாடுகள் பொருத்த முடையனவாக அமைதல் வேண்டும்.
அரசினால் உருவாக்கப்படும் கலைத் திட்டங்கள், பாடசாலையில் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. இக்கலைத்திட்டங் | களை மாணவர்கள் பயன்பெறும் நோக் கில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு | ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்
சார் கள் பாடசாலையில் நியமிக்கப்படுகின்ற னர். அத்துடன் முன்பயிற்சி, சேவைக் காலப்பயிற்சி, ஆசிரியப்பயிற்சி போன்ற பயிற்சிகள் பல்வேறு நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகின்றன. இவர்கள் பெறும் பயிற்சி மூலம் தமது வாண்மையை விருத்தியடையச் செய்வதுடன் மாணவர் களும்பயன்பெற இயைபுபடுத்தல்வேண்டும்.
வாழ்க்கையே கல்வியாக அமெரிக்க கல்வித் தத்துவஞானி இணுவில் ஒலி
கன்
al.
ழ
து
:
கப்
ய
ய;
கர்
ப

ரமாதல் வேண்டும்
திரு.அ.சதானந்தன்
அதிபர், யா/இணுவில் மத்திய கல்லூரி
ஜோன்டூயி” கருத்துப்படி மாணவர்கள் ம் முன்னோர் பெற்ற அனுபவங்கள் வாயி Tக பெறுவதே கல்வி ஆகும். பாடசாலை ல் வழங்கும் கல்வி மாணவர்களது வாழ்க் கக்கு உதவக்கூடிய அனுபவங்களைப் பற உதவவேண்டும். வகுப்பறைகள் வலைக்களங்களாகவும், பயிற்சிக்களங்க பாகவும், அமைதல் வேண்டும் என்பது வரது கருத்தாகும். கல்வி என்பது வாழ் தற்கு தயார்படுத்தல் அல்ல; வாழ்வதே ல்வியாகும். எனவே எதிர்கால வாழ்க் கக்கு மாணவர்களைத் தயார்படுத்துவ ன்றி பாடசாலையில் யாதேனும் விதத் ல் வாழ்வதற்கான சந்தர்ப்பத்தைப் பெற் -க் கொடுத்தல் வேண்டும் என்பதையே
ல்வி மூலம் அவர் எதிர்பார்க்கின்றார்.
பாடசாலையினுள்ளும் பாடசாலைக்கு வளியேயும் பெறும் அனுபவங்களுக் டையில் ஒற்றுமை காணப்படல் வேண் ம். பாடசாலைப் பாடவிதானத்திற்கும் "னுபவ உலகத்திற்கும் இடையிலான ரஸ்பர தொடர்புகட்டியெழுப்பப்படல் வண்டுமென்பது டூயி கருத்தாகும். பாட சலையின் அனுபவங்களை வாழ்க்கை "னுபவங்களுடன் தொடர்புபடுத்துவது "வசியமானதாகும். மாணவர்களை சமூக Tழ்க்கைக்கு தயார்படுத்தாத பாடசாலை ளை கல்வி நிறுவனங்களாகக் கருத முடி Tது. பிள்ளைகளின் முதிர்ச்சிக்கு ஏற்ப றன்கள், ஆசைகள், ஆர்வங்கள் வளர்ச்சி டைகின்றன. இவ்வளர்ச்சிக்கு இயைய ற்றலையும், அனுபவங்களையும் தொழிற் எடுகளையும் ஒழுங்கமைத்துக் கொள்ள வண்டும் என டூயி பிரேரிக்கின்றார்.

Page 40
அனுபவமே கல்வியாக ஒவ்வொரு பாடத்தையும் கற்பிப்பதற் குப் பதிலாக சமூகக் கருமங்களில் ஈடு படுத்திக் கொள்வதற்கும் கூட்டுத் தொழிற் பாடுகள் மூலம் சமூகம் தொடர்பான அறி வைப் பெற்றுக்கொள்வதற்குமான நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண் டும். விஞ்ஞானம், விவசாயம், வாழ்க் கைத்திறன், மனையியல் ஆகிய செய் முறைப் பாடங்களுக்குக் கூடுதலான அளவு செய்முறையில் மாணவர்கள் ஈடுபட்டு அனுபவ வாயிலாக அறிவைப் பெற ஒழுங் கமைத்துக் கொள்ளுதல் வேண்டும். ஏனைய பாடங்களுக்கும் பொருத்தப்பாடான இடங்களில் செய்முறையில் ஈடுபட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும்.
வர்த்தகப் பாடத்தில் கூட்டுறவு அமைப் புப்பற்றிய விடயத்தைக் கற்பிக்கும் முக மாக பாடசாலைக் கூட்டுறவுச் சங்கம் அமைத்தலும் அதன் கொள்கைகள், தத்து வங்கள் என்பவற்றை விளங்கிக் கொள்ள வும் அனுபவவாயிலாக அதன் அனுகூலங் களைக் கண்டு கொள்ளவும் வழியமைத்தல் வேண்டும். ஒருவருக்காகப் பலரும் பலருக் காக ஒருவரும் ஈடுபடவும் ஒற்றுமை, சமத்துவம், ஜனநாயக அடிப்படையினை அனுபவ வாழ்க்கையாக காண்பதற்கும் ஒழுங்கமைக்கப்படல் வேண்டும்.
கல்விச் சுற்றுலா ஊடாக சமூகக்கல்வி விஞ்ஞானம் போன்ற பாடங்கள் சூழல் அனுபவங்களை நேரடி யாகப் பெறத்தக்க வகையில் ஒழுங்கு செய் தல் வேண்டும். கடற்கரை மலைப் பகுதி களில் நீர்வீழ்ச்சிகள், இயற்கைத் தாவரங் கள், கடற்கரைத் தாவரங்கள், வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் போன்ற வற்றை நேரடியாக காண்பதன் மூலம் பெறும் அனுபவவாயிலாக அறிவு வளர்க் கப்படல் வேண்டும். ஆய்வு ரீதியாக மாண வர்கள் ஈடுபட வரலாற்று ஆசிரியர்கள்
இணுவில் ஒலி

வழிகாட்டுதல்வேண்டும். இதன்பொருட்டு நன்கு திட்டமிடப்பட்ட வகையில் பொருத்தமான கால அட்டவணையைத் தயாரித்துக் கொள்ள வேண்டும்.
தொழிற்சாலைகளைப்
பார்வையிடுதல் மூலம் வர்த்தகப் பாடத்தில் குடிசைக் கைத் தொழில் பற்றிய விடயத்தில் போதுமான விளக்கங்களைப் பெறவும் குடிசைக் கைத் தொழில் நடைபெறும் இடங்களிற் பயிற்சி பெறவும் மாணவர்கள் நேரடியாகப் பார் வையிடவும் அதன் மூலமாக சுய நம்பிக்கை கொள்ளவைக்கவும் ஒழுங்கமைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
இவ்வாறான வெளிப்புற வேலைத் திட் டங்களின் போது மாணவர்களை குழுக்க ளாக வகுத்து. அவர்களுக்கு வழங்கும் ஆலோசனைகள் மூலம் அவர்களே திட்ட மிடவும் ஒழுங்கமைக்கவும் ஏற்ற முறையில்
ஈடுபடவைத்தல் வேண்டும்.
தமிழ்மொழிப்பாடத்தில் கலை, இலக் கிய சஞ்சிகைகள் உருவாக்கப்பட மாணவர் கள் வழிப்படுத்தல் வேண்டும். ஆசிரியர் கள் வழிகாட்டிகளாக இருந்து மாணவர் களே ஆக்கங்களை வெளிக் கொணர்ந்து சமூகப் பயன்பாட்டிற்கு உதவச் செய்தல் வேண்டும். பல்வேறுபாடங்களுக்கும் இவ்
வாறான பயிற்சி அவசியமானதாகும்.
பொருட்காட்சிகள் ஊடாக வகுப்பறையில்செவி வாயிலாகப்பெறும் அறிவு வாழ்க்கைக்கு உதவமாட்டாது. அதனை அனுபவ வாயிலாக செயற்பட வைக்கின்றபோது உண்மையான கல்வி அறிவு ஏற்படவும் மாணவர்களின் சிந் தனை மேலும் தூண்டப்படவும் ஏதுவா கின்றது.
ஜோன்டூயி அவர்களது வாழ்ந்து கற்றல் என்பதற்குப் பொருத்தமான கல்விக் கொள்கை நாட்டிற்கு உகந்த முறையில்

Page 41
தி
ம்.
கட்
காணப்படல் வேண்டும். தற்போது வழக் .ெ கில் உள்ள கல்விக் கொள்கையானது கல்வி வ. கற்கும் மாணவர்தொகையில் சிறு வீதத்தி னர் மட்டும் உயர் கல்வி கற்பதற்கும் அத . னூடாக உயர் கண்ணியத் தொழில் பெற வும் மற்றைய சிறுபகுதியினர் அரச நிறு
ம் வனங்களில் வேலை வாய்ப்பு பெறவும் உத .
ய வுகின்றது. பெரும்பாலோர் வாழ்க்கைக்கு உதவக் கூடிய தொழில் வாய்ப்பிற்குரிய பயிற்சி இல்லாது பாடசாலையில் இருந்து தி வெளியேறுகின்றனர். இதனால் வேலை | வாய்ப்பு அற்றோர் தொகை அதிகரித்து வருகின்றது. நாட்டில் கைத்தொழில் மய மாக்கும் கொள்கையும் நாட்டின் பொரு ளாதார அபிவிருத்திக்கு மக்களின் தொழில் | வாய்ப்புக்கும் உதவக்கூடியதாக அமைதல் | வேண்டும். என்ற கருத்து பல வருடகால மாகப் பொதுவாகப்பலராலும் பேசப்பட்டு வருகின்றது. பாடசாலையின் கலைத் திட் டப்பாடங்கள் அனைத்திற்கும் பொருட் காட்சி ஆண்டு தோறும் ஒழுங்கமைக்கப் படல் வேண்டும். கல்வியின் மூலம் பெற்ற |
அறிவும் பிரயோகம் வெளிக்கொணரப்பட மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமை | கின்றது. வகுப்பறையில் மாணவர்கள் பெறும் குறிப்புக்கள், மதிப்பீடுகள் வாயி லாக அவர்கள் பெற்றுக் கொள்ளும் அறிவு என்பவற்றை விட அவ்வாறு பெற்ற அறி வினைச் செயன்முறையாக வெளிப்படுத்த வும் கண்காட்சி உதவும் எனலாம். அழகி யல், உணர்வுகள் சிறப்பாக வெளிக்கொண
I ரப்பட கண்காட்சி உதவும் எனலாம். பரீட்சைமையக்கல்வி முறைமையிலிருந்து - தொழில் விருத்திக் கல்விமுறைமைக்கு...
இன்றைய கல்வித்திட்டம்மாணவர்களுக் | குப் பரீட்சையை மையமாகக் கொண்டு அமைவதாகப் பெரும்பாலானவர்களால் | சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது. கோவை கள் பேரேடுகள் பேணுவதிலும் அலுவல | கத்தில் தூய சீருடை அணிந்து வேலை -
2 [ 2 5 2 9 ஆ ) 2 * 8 5
3 ஓ ஏ 4 3 4 5 4
ச.
பு:
க
இணுவில் ஒலி

F, F** 257 தி
- -
சகட்ட
சய்யவும்பழக்கப்பட்டவர்களாக மாற்றும் கையிலேயே கல்வித்திட்ட நடைமுறை Tணப்படுகின்றது. இதனோடு பல்வேறு தாழில்களுக்கிடையே சம்பள ஏற்றத் Tழ்வு பெருமளவு காணப்படுகின்றது. னித உழைப்பு சரியாக மதிப்பீடு செய் ப்படாத நிலையில் வருமான வேறுபாடு க்களிடையேகாணப்படுகின்றது. தொழில் "றன் விருத்தி ஏற்படுத்தும் பயிற்சிகள் ட்டமிடப்பட்ட அடிப்படை யில் வழங் ப்படுதல் பயனுடையதாகும்.
21ஆம் நூற்றாண்டில் இதனை நடை மறைக்கு கொண்டு வர அரசு விழைந்து ற்கின்றது எனலாம். இதற்காக 21ம் நூற் Tண்டு கல்வித்துறையில் நவீன எண்ணக் நக்களை புகுத்தவும் விஞ்ஞான நோக்கு -டயதாகவும் நவீன உருவாக்கங்கள் பறவும் உயர்கல்விக்கொள்கை நன்கு ட்டமிடப்பட்டு வகுக்கப்பட வேண்டும். எவ்வாறு வகுக்கப்படும் கல்விக் கொள் -கயின் அடிப்படையில் பாடசாலை சயற்பாடுகள் நடைமுறைக்கு கொண்டு ரப்படும் போது தற்போது வழங்கப் ட்டு வரும் கல்வி முறையில் பெறும் பய Tலும் கூடுதலான பயன்பெற வாய்ப்பு ஏற்
டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கணினித் தொழில்நுட்பக் கல்வி
முறைமை ஊடாக இன்றைய உலகம் பல்வேறு மாற்றங் -ளுக்கு உட்பட்டு தகவல்களாக மாற்ற டைந்து வருகின்றது. இந்த எண்குறிக் எலத்தில் நாம் கல்வியில் பல்வேறு சவால் ளை எதிர்நோக்கப்போகின்றோம். அறிவு எர் உலகத்திலே அறிவுக்கு முக்கியத்துவம் காடுக்கும் போது அதன் பின்புலமாக ல்வியின் வளர்ச்சி முக்கியம் பெறுகின்
து.
உலக நாடுகள் 2015 இல் எல்லோருக் ம் கல்வி வசதி என்ற தூர நோக்கோடு சயற்பட்டு வருகின்றது. அதனை அடை
- 39

Page 42
வதற்கு சகல நாடுகளும் தந்திரோபாயங் களை முன்னெடுத்து வருகின்றன. இதன் விளைவாக 2012ம் ஆண்டு சிறுவர் தினத் தின் தொனிப்பொருளாக ஒவ்வொரு பிள்ளையும் பாடசாலையில் என்பது முன் வைக்கப்பட்டுள்ளது. எமது எதிர்காலம் கல்வி வளர்ச்சி அறிவின் தேட்டத்திலேயே தங்கியுள்ளது. என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். நவீன விஞ்ஞானத் தொழிநுட்ப முறையினால் ஏற்படும் சவால்களை எதிர் கொள்ள மாணவர்க ளிற்கான கல்வி வழங்கப்பட வேண்டும். கல்விமுறை பாடங்களில் ஏற்படும் மாற் றங்கள் கவனத்தில் கொள்ளப்படுதல் வேண்டும். கணினிப் பிரயோக வாழ்க்கைத் திறனில் ஆங்கில மொழி ஆகியவற்றின் முக்கியத்துவம் இன்று பலராலும் உண ரப்பட்டு வருகின்றது. இந் நடைமுறை களை அறிந்து தெளிந்து நன்கு பயிற்சி பெற்றவர்களாக ஆசிரியர்கள் தம்மை மாற்றிக் கொண்டும் அறிவுசார் தகவல் களை இளைப்படுத்திக் கொண்டவர்களாக தமது வாண்மையை உயர்த்திக் கொண்டு மாணவர்களுக்கு நல்ல வழிகாட்ட ஆசிரி யர்கள் தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். சேவை, அர்ப்பணிப்பு, நேர்மை, உயர்நம்பிக்கை, நல்லொழுக்கம் என்பன ஆசிரியர்கள் கொண்டு இருத்தல் மிக இன்றியமையாததாகும். மாணவர்களைச் சிறப்பாக வழிநடத்த கூடியவர்களாகவும் இருத்தல் வேண்டும். சிறந்த புலமைத்து வம் உடைய வினைத்திறன் மிக்க ஆசிரி யர்களாலேயே நல்ல சமூகத்தை உருவாக்க முடியும். கல்வியானது இன்று online வாயிலாக வழங் கப்பட்டு வருவதைக் காணமுடிகின்றது.
உயிர்ப்புள்ள செயற்பாட்டுக் களமாக
பாடசாலை பரீட்சை முறைகளிலும் மாற்றங்கள் ஏற் படக் கூடிய நிலமை உருவாகி வருகின்றது.
இணுவில் ஒலி -

தற்போது ஞாபக சக்தியில் பரீட்சை எழு தும் முறைகளிலும் மாற்றங்கள் ஏற்படக் கூடிய நிலமை எதிர்காலத்தில் உருவாகும். எனவே உடல் உள்ளம் சார்ந்த வகையில் முழுமையான கல்வி வழங்குவதற்கு ஆசிரி யர்கள் தாம் பெறும் அனுபவத்தின் வாயி லாகவே மாணவர்களுக்கு கல்வி அனுப்ப வம் வழங்க முடியும்.
மாணவர்கள் புதுமையான அணுகு முறையிகளிலும் விமர்சன ரீதியான சிந்த னைகளிலும் ஈடுபட வாய்ப்புக்கள் வழங் கப்படல் வேண்டும். புத்தாக்கப்படைப் புக்கள் கல்வியின் உயர் வெளிப்பாடாகவே கொள்ளப்படுகின்றது. மாணவர்கள் நல் லொழுக்கம் ஜனநாயக ரீதியான பண்பு களை என்றும் பின்பற்றுபவர்களாக சமா தான வாழ்க்கை நெறிகளை விரும்புகின்ற வர்களாக மாணவர்களை உருவாக்க வேண்டும். அறிவுத்திறன் பொருட்டு மாண வர்களை புத்திக் கூர்மையும், ஆன்மீகம், ஒழுக்க மேம்பாடு கொண்டு விருத்தி ஏற் படுத்தப்படல் வேண்டும்.
பாடசாலை எப்போதும் உயிர்ப்புள்ள தான செயற்பாடுகளுடையதாக ஒழுங்கு படுத்தப்படல் வேண்டும், பாடசாலைகள் பயிற்சிக்களங்களாக அமையும் போது விளைதிறன், வினைத்திறன் ஏற் பட்டு அதிக பயன்பெற வாய்ப்பு ஏற்படும்.
வாசகப் பெருமக்களே! மாண வச் செல்வங்களே!
நீங்கள் அறிந்த, தெரிந்த சிறு, சிறு விடயங்களைச் சுருக்கமாக எமக்கு அனுப்பிவைத்தால் அவற்றை அறிந்த வையும் தெரிந்தவையும் பகுதியில் வெளி யிடுவோம். உண்மைகள் என்றும் மறைக் கப்படக்கூடாது. எனவே தவறாது எழு துங்கள்.
- ஆசிரியர்.

Page 43
TAPROBAN
All Kinds of Engineering T General Hardware Mercha
AAAA
Raju Baskaran No 218, Messenger Street, Colombo Tel : +94(0) 11 2449425, 2386121, Fax: + 94(O) 11 2386120 E-mail: tapro220@sltnet.lk

VE TRADING
ools, Bolts & Nuts, ants, Importers & Suppllers.
\os。
%ER
12.
|2333076

Page 44
RA
Internatior Importers, Exporters
101, Sri Kathiresa Tel : 011-2438630 E
www
SUBRAMANI IMPORTERS OF BEEDI LEAV
|101/2, Sri Kathiresan SI
Tel : 011 - 245953
Flaugmub LTHOUGLİ, 20(32), havayrfa

GU
nal (PVT) LTD = & Commission Agents in Street, Colombo-13. -mail : raguint@sltnet.lk
TAM AND SON
ES AND TOBACCO EXPORTERS
creet, Colombo-13, Srilanka. 31 Fax : 011 - 2459532
F5), umjuuTMLD. OHIT. GL. 021 221 9440