கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அருள் ஒளி 2014.08

Page 1
அருள்
---- 11-2'
8: :: க ட
பெருந்திருவிழ
வெ 98 ஸ்ரீ துர்க்காதே
தெல்லிப்பல

பக்கம் 2
பாச் சிறப்பு மலர்
ரியீடு : வி தேவஸ்தானம் ஊழ, இலங்கை
014

Page 2
சந்நிதி வேலவனின் தி
சங்பப்ப்ப்பகப்பல்க
பாபாசா:++++++++++++++++'கார்
*********

2:18
திருவிழாக் காட்சிகள்....

Page 3
(மா
கலாநிதி
சைவத்
வெளியீடு: ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்,
தெல்லிப்பழை, இலங்கை. e-mail : thurkaiammantemple@gmail.com Facebook: tellidurga@gmail.com
திருக்கோவில்களில்
சமய சொற்பொழிவு
சைவத்திருக்கோவில்களில் பூ நற்சிந்தனைகள், சமய பிரசங்கங்கள் ! இதனால் சைவ சமய உண்மைகளும் விழுமியங்கள் அறியாத சமூகம் உருவா நாவலர் பெருமான் ஈழத்திருநாட்டில் ச
அதன் அவசியத்தையும் வலியுறுத்தினா கிரியைகள், பூசைகள் நடைபெற்றா மாற்றக்கூடிய சக்தி நல்ல சமய சொ பெருமான் சொற்பொழிவுகளால் பல ; மக்களிடம் சமய அறிவு வளர்ந்தது. 6 அறங்காவலர்கள் மற்றும் பலரே செ பெருமான் வழியில் பலர் சமயச் சிந்; பரப்பினர். சுன்னாகம் குமாரசாமிப் புலம் சைவசமய பிரசாரகராக விளங்கினர். « அருகி வருகிறது. சங்கர சுப்பையர், மண புலவர், சைவமணி சிவசம்பு எனப்பல 6 எம்மண்ணில் கதா பிரசங்கங்களைச் ெ

ருள் ஒளி
தாந்த சஞ்சிகை)
ஆசிரியர் ஆறு.திருமுருகன் அவர்கள்
உதவி ஆசிரியர் , திரு. கா. சிவபாலன் அவர்கள் ---- ஆவணி மரத மலர்
2014
Stocks .3% .
wொம் :)
('"")
சின்
-- 2014
* ''ப4:42 13:23:41.
பதிவு இல.: QD/747NEWS/2006Y
சைவநற்சிந்தனை, பு அவசியமாகும்
சை வழிபாடுகள் முடிந்ததும் சைவ நடக்கும் வழக்கம் அருகி வருகிறது. B, சைவசமய தத்துவங்கள், மனித சக வாய்ப்பு ஏற்படுகிறது. நல்லைநகர் மய பிரசங்க மரபைத் தோற்றுவித்து, சர். திருக்கோவில்களில் நீண்ட நேரம் -லும் மனிதர்களின் சிந்தனையை ற்பொழிவுகளுக்கு உண்டு. நாவலர் திருக்கோவில்கள் புனிதம் பெற்றன. "காவில்களில் குருமார்கள் அல்லது கால்ல முன்வரவேண்டும். நாவலர் தனைகளை கோவில் விழாக்களில் பர் போன்றவர்கள் நாவலருக்குப் பின் சைவசமய கதாபிரசங்க மரபு இன்று பாகவதர், அருட்கவிவிநாசித்தம்பிப் பெரியவர்கள் பக்கவாத்தியங்களுடன் சய்தனர்.

Page 4
தள்
உலகம் போற்றும் எங்கள் அ அம்மா அவர்கள் ஐம்பது ஆண்டுக் ஊடாகப் பல காரியங்களைச் 0 முன்னுதாரணமாகத்தன் நாவன்மை பிரசங்க மரபுக்கு புத்துயிர் கொடுத்த ஆலயங்களில் உரையாற்றிய காலம் முன் போர்ச்சூழலில் கோவில்கள் பெற்றிருந்தது.
1996இற்குப் பின் எம்மண்ண செய்யப்பட்டது. ஆலயங்களில் ச கொடுக்கும் தன்மை மிகவும் குறைவா சிவாச்சாரியர்களாக கடமையாற விளக்கங்களை மக்களுக்குச் சொ கோவில்களில் சமய பிரசங்க மரபு ே
இன்றைய தலைமுறையிலே அடைவதைக் கண்டு மிகவும் வேத செய்திகள் அறியாத சமூகம் ஆப் என்பதில் ஐயமில்லை. ஆலயங்க போதிப்பதற்கு சமய பிரசங்க பாரம்ப அத்தியாவசியம் ஆகும். இந்நிலை பே சமய அறிவை எள்ளளவும் எதிர்பார்க
அருள் ஒளி

ஆன்மீக அன்னை சிவத்தமிழ்ச்செல்வி களுக்கு மேல் சமயச் சொற்பொழிவின் செய்தார். இளைய தலைமுறைக்கு -யால் கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் எர். பல சமய பொற்பொழிவாளர்கள் பல ம மறக்கமுடியாதவை. இடப்பெயர்வுக்கு சில் பிரசங்கம் மிகவும் செல்வாக்குப்
ல் ஆலயங்கள் பல புனருத்தாரணம் மய சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் டைந்து வருகிறது. ஆலயங்களில் பிரதம ற்றுபவர்கள் நித்திய கிரியைகளின் ல்லும் வழக்கம் உருவாக வேண்டும். பணிப் பாதுகாக்கப்பட வேண்டும்.
பெ
சமய விழுமியங்கள் பூச்சிய நிலையை தனையாக உள்ளது. புராண இதிகாச சத்து நிறைந்த சமூகமாக உருவாகும் கள் தோறும் அறச் சிந்தனைகளைப் ரியத்தை மிகவும் கருத்திற்கொள்ளுதல் மணாவிட்டால் அடுத்த தலைமுறையிடம் நக முடியாது.
- ஆசிரியர்
- 2 -
ஆவணி மாத மலர் - 2014

Page 5
சித்த
கலாநீ சித்தத்தைச் சிவன்பால் வைத்தவர்கள் சித்தர்கள். சித்தம் தெளிந்தவர்கள்; அகச் சுத்தம் உடையவர்கள்; சித்தசக்தி உடைய வர்கள்; மலங்கள் நீங்கப்பெற்ற சித்தத்தைக் கொண்டவர்கள்; மனதற்ற நிலையில் உள்ளவர்கள்; உள்ளத்துறவு பூண்டவர்கள் சித்தர்கள். அவர்கள் மகாஞானிகள். மானு டத்திற்கு உய்யும் வழிகாட்டிய ஞானக்குர வர்கள். சித் துக்கள் செய்யும் அற்புத ஆற்றல் உடையவர்கள். ஆத்மசக்தி பெற்றவர்கள். "நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்கள். "செயற்கரிய செய்வர், பெரியர் ஆவர்.
விருப்பு, வெறுப்பு; இன்பம், துன்பம்; வேண்டுதல், வேண்டாமை என்னும் இருமை நிலையிலிருந்து விடுபட்டவர்கள் சித்தர்கள். சமரச ஞானிகள். "காதலுற்றிலன், இகழ்ந் திலன்", என இத் தகைமை பற்றி, கம்பன் இராமனின் குண இயல்புகள் தொடர்பாகப் பேசும்போது குறிப்பிடுவான்.
சித்தர்கள், சமயம், சாதி, குலம், கோத் திரம், வருணம், இனம் என்பவற்றின் அடிப் படையிலான வேற்றுமைகள், பேதங்கள் கடந்தோர். அவர்கள் நாத்திகர்கள் அல்ல. சித்தர்கள், கட்டுக்கள், பந்தங்கள், பாசங்கள்; இன்னார், இனியவர்; புகழ், கீர்த்தி என்ப வற்றிற்கு கட்டுப்படாதவர்கள். அவர்கள் சுதந்திரர். எல்லாவிதக் கட்டுப் பாடுகைளயும் விட்டுவிலகியிருப்பவர்கள். தன்னை உணர்ந் தவர்கள்; தன்னிறைவு பெற்றவர்கள் சித்தர்கள். அருட் செயல்கள் செய்யவல்ல அருளாற்றல் நிறையப் பெற்றவர்கள்.
“ஒன்றே குலம், ஒருவனே தேவன்", என மொழிந்தவர். மூத்த சித்தர், திரு மூலர்
அருள் ஒளி

ர்கள் தி குமாரசாமி சோமசுந்தரம் அவர்கள் ஆவார். முதல் சித்தர், சிவபெருமான் ஆவார் என நூல்கள் கூறும். திருமூலர், போகர், கருவூர்சித்தர், புலிப்பாணி, கொங்கணர், மச்சமுனி, அகத்தியர், தேரையர், கோரக்கர், பாம்பாட்டிச் சித்தர், சிவவாக்கியர் உள் ளிட்ட பதினெண் சித்தர்கள் தமிழ்நாட்டில் இருந்துள்ளனர். அவர்களுக்குப் பின்னர் சித்தர்கள் பலர், வெளிப்படையாகவும், இலை மறை காய் போலவும் வாழ்ந்து, ஞான பரம்பரையைத் தொடர வைத்துள்ளார்கள். தாயுமானவர், பட்டினத்தடிகள், இராமலிங்க வள்ளலார், சுப்பிரமணிய பாரதியார், வேதாத்திரி மகரிஷி போன்றவர்களைச் சித்தர் வரிசையில் வத்ைதுப் போற்றும் வழக்கம் இருந்து வருகிறது.
எமது இலங்கை நாட்டிலும் சித்தர் பரம்பரை இருந்து வருகின்றது. இலங்கை யைச் சிவபூமி என்று குறிப்பிட்டுப் பெருமைப்படுத்தியவர், ஆதி சித்தரான திருமூலர். சிவனுக்குரிய ஈச்சரங்கள், இலங்கையின் நாலாபுறங்களிலும், இரா வணேஸ்வரன் காலத்திலிருந்தே இருந்து வருவதற்கு வரலாற்று மற்றும் புராண, இதிகாலச் சான்றுகள் உள்ளன. சித்தத்தைச் சிவன்பால் வைத்த சித்தர்கள் தோன்றி, உலாவிய சிறப்பும் தெய்வீகமும் நிறைந்த நாடு, இலங்கைத் திருநாடு ஆகும்.
இலங்கையிலும், முத்தியானந்தர் என்னும் கடையிற்சுவாமிகள், செல்லப்பாச் சுவாமிகள், சிவயோக சுவாமிகள் என் றொரு சித்தர் பரம்பரையைச் பெற்றுள்ளன பெரும் பேற்றினையும் பெற்றுள்ளோம். மற்றும் நவநாதசித்தர், பெரியானைக்குட்டி சுவாமிகள், சித்தானைக்குட்டிச் சுவாமிகள்
ஆவணி மாத மலர் - 2014

Page 6
ஆகிய சித்தர்களும் இலங்கைத் திரு நாட்டில் தங்கள் ஞானச்சுவடுகளைப் பதித்துள்ளனர்
இலங்கையின் பல பாகங்களிலும், சித்தர் பெருமக்களின் சமாதிக் கோயில்கள் அமைந்து காணப்படுகின்றன. எனினும், யாழ்ப்பாணப் பிரதேசத்திலேயே, கூடுத லாகக் காணப்படுகின்றன. மடங்களாகவும், ஆன்மீகப் பண்பாட்டு நிலையங்களாகவும் அவை விளங்குகின்றன. அவை, குருபூசை மடங்கள் என்னும் பெயரில் அமைந்து ஆன்மீக உரைகள், கலந்துரையாடல்கள், பிரார்த்தனைகள், சத்சங்கங்கள், தியா னங்கள் என்பன நிகழும் நிலையங்களாக வும்; அன்னதானம், தாகசாந்தி என்பன இடம்பெறும் தர்மஸ்தாபனங்களாகவும் இருந்து வருகின்றன. பல நல்ல உள்ளம் படைத்தவர் முன்னின்று இவற்றைப் பரிபாலனம் செய்து வருகின்றார்கள். ஞானத் தேடலுக்கும் ஞான ஒடுக்கத்திற்கு முரிய நல்ல சூழலும், சித்தர்களின் அருள் ஒளியும் நிறைந்த இடங்களாகவும் அவை திகழ்கின்றன. சித்தர்கள் மறைந்தும், மறை யாதவர்களாகவும் ; தோன்றாத் துணை யாகவும் நின்று, மக்களை வழிப்படுத்தியும் பாதுகாத்தும் வருவதாக மக்கள் மத்தியில் நம்பிக்கை இன்றும் காணப்படுகிறது. நல்லூர்த் தேரடியில் சித்தர்களின் அதிர்வு களை இன்றும் உணரக்கூடியதாகவுள்ளது.
சித்தர்கள், வாழும் பொது சீவன் முத் தர்களாக விளங்குபவர்கள். கடவுளைக் காண முயற்சி செய்வோர் பக்தர்கள்; கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள், ஆவர். உள்ளத்திற்குள்ளே உறுபொருள் கண்ட வர்கள். சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறன் அடையப் பெற்றவர்கள். மன அடக்கம், புலனடக்கம் என்பன கைவரப் பெற்றவர்கள். ஐம்புலன்களை
அருள் ஒளி

யும் அடங்கச் செய்ய வல்லவர்கள்; ஆத்ம சக்தி பெற்றவர்கள்; ஐம்பூதங்களையும் அடக்க வல்லவர்கள் ஆகிவிடுகின்றனர். ஐந்தவித்தான் ஆற்றல் அளவிடற்கரியது. அவையாவும் ஆன்மீக முதிர்ச்சி பெற்றதன் விளைவுகள் ஆகும்.
சித்தர்கள், உலகம் பழித்தவற்றை ஒழித்தவர்கள். ஏனையோரும் அவற்றை ஒழிக்கவேண்டி அவர்களை நெறிப்படுத் தியவர்கள். அவர்கள் மகாஞானிகள். உலகமாந்தர் உய்வுபெறும் பொருட்டு ஞானவிளக்கு ஏற்றியவர்கள்; அணையா விளக்காக என்றும் சுடர்விட்டுப் பிர காசிக்கும் தன்மையது. சித்தர்கள் திரு வாய் மலர்ந்தருளிய மகா வாக்கியங்கள், மகுட வாசகங்கள், திருப்பாடல்கள் அனைத்தும் மந்திரங்கள் ஆகும்.
"நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளர்ந்த மறைமொழிகள் மந்திரம் ஆகும். மந்திரங்கள், மனித மனங்களைத் தூய்மைப்படுத்தி, வளம்படுத்தி, மனிதர் களை நல்வாழ்வு வாழ வழிப்படுத்தும் ஆற்றல் மிக்கவை. இவ்வாறு உடலை வளம்படுத்தவும், உயிரை வளம்படுத்தவும், அறிவை மேம்படுத்தவும் மனித குலத் திற்கு வழி சொன்னவர்கள் சித்தர்கள்.
"பொறிவழிச் செல்லும் பொல்லா மனத்தை அறிவாலடக்கில் ஆனந்தமாமே"
என்பது சிவயோக சுவாமிகள் தரும் அமுத வாக்கு ஆகும். சித்தர் காட்டும் செந்நெறியில் நின்று வாழ்பவர்களுக்கு ஒரு பொல்லாப்பும் இல்லை; முழுதும் உண்மை.
வாழ்க வளமுடன், வாழ்க வையகம்.
ஆவணி மாத மலர் - 2014

Page 7
தேரோடும் க
“திருவாரூர்த் தேரழகு ; திருவிடை மருதூர்த் தெருவழகு" என்பது தமிழ் நாட்டில் தொன்றுதொட்டு வழங்கிவரும் முதுமொழியாகும். ஊர் அமைப்பில் பிரதானமாகத் திகழ்வது தேரோடும் வீதிகளே. பண்டைக் காலத்தில் மதுரை நகரின் அமைப்பு தாமரை மலரை ஒத்த தாக இருந்தது என்று பரிபாடல் சுட்டும். மாடங்கள் சூழ் மது ரயில் தேர்வலம் வருதலையொட்டியே கீழ இரதவீதி, மேல இரத வீதி, தெற்கு இரத வீதி, வடக்கு இரத வீதி என்று இப்போதும் வழங்கப்படுகிறது. தேர் என்ற ஊர்தி பண்டைக் காலத்தில் போக்குவரவிற்கும், போர் செய்வதற்கும் மட்டுமே பயன்பட்டு வந்தது. பிற்காலங் களில் இறைவன் குடிகொள்ளும் நகரும் கோயிலாக மாறிவிட்டது.
சொல்லும் பொருளும் :
தமிழில் "தேர்" என்று வழங்கப்பெறும் சொல் வடமொழியில் “இரதம்" என்று அழைக்கப்படுகிறது. தேர் என்ற சொல் தமிழில் “உயர்ந்த " என்ற பொருளைக் குறிக்கும். இரும்பினால் ஆக்கப்பட்டதும், எளிதிற் செல்லத்தக்க உருளைகளை யுடையதும், பரியங்க இருக்கையுடை யதும், தாமே தூக்கி அசையத்தக்க படி களையுடையதும், நடுவமைந்த இருக்கை யில் அமர்ந்து நடத்தத்தக்க தேர்ப்பாக னையுடையதும், அம்பு, வாள் முதலிய போர்க்கருவிகளை யுடையதுமான நடுவிடத்தையுடையதும், விரும்பியதும், விரும்பிய வண்ணம் நிழலைச் செய்வதும், அழகுமிக்கதும் சிறந்த குதிரைகளையுடை அருள் ஒளி
5

வீதியிலே...
தொகுப்பு : மயூரகிரிசர்மா
யதுமானது "தேர்” என்றும், பல சக்கரங்கள், ஆர், தட்டு, பார், கொடிஞ்சி, கூம்பு , கிடுகு முதலிய உறுப்புகளால் ஆக்கப்பட்டு இரண்டு முதல் பல குதிரைகளால் இழுக்கப்படுவது “இரதம் என்றும் பொருள் விளக்கம் தருகிறது அபிதான சிந்தாமணி, “இரதம்” என்ற சொல்லிற்குப் புணர்ச்சி, தேர், பல், சாறு, அன்னரசம், சுவை, இனிமை, வாயூறு நீர், வண்டு, பாதரசம், இரசலிங்கம், பாவனை, அரைஞாண், மாமரம், கால், உடல், வஞ்சி, மரம், வாகனம், எழுதுவகை, அனுராகம், நீர், வலி, நஞ்சு, இத்தி, ஏழுவகைத் தாதுக் களில் ஒன்று என்ற 25 வகைப் பொருட் களைத் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது. தேர் என்பது "உற்சவ மூர்த்தியை வைத்து நீண்ட வடக்கயிற்றைக் கொண்டு இழுத்துச் செல் லப்படும் கோபுரம் போன்ற மேல் அமைப்பை யும் , பெய சக்கரங்களையும் கொண்ட கோயில் வாகனம் என விளக்கம் தருகிறது கியாவின் தற்காலத் தமிழ் அகராதி.
பண்டைக் காலத்தில் அரசர்களும், போர் வீரர்களும், தேரின் மீது நின்று போர் செய்யும் செயல் மிகவும் கடினமானது. ஆய கலைகள் அறுபத்து நான்கில் "இரத பரீட்சை" யும் ஒன்று. இராமபிரானின் தந்தை பத்து திசைகளிலும் தேரைச் செலுத்தும் திறமை பெற்றிருந்ததால் "தசரதன்" என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
தேர் அமைப்பு :
தேர் கோயிலின் கருவறை போன்றே தேரும் உப்பீடம், அதிட்டானம், பாதம், விமானம் போன்ற உறுப்புகளால் அமைந்
ஆவணி மாத மலர் - 2014

Page 8
திருப்பதால் "கோயிலின் மறுவடிவம்" என்றும், "நகரும் கோயில்" என்றும் அழைக்கப்படுகிறது. தேர், அழகிய வேலைப் பாடுகளுடன் கூடிய சிற்பங்கள், அழகிய வண்ணம் தீட்டிய ஆலவட்டங்கள், தோர ணங்கள் முதலியவற்றால் அலங் கரிக்கப் பட்டிருக்கும் தேரினை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என மான சாரமும், விட்டுணு தத்துவ சம்கிருதையும் இலக்கணம் வகுத்திருக்கின்றன. மான சாரம் தேரின் அமைப்பு முறையையும், அதில் படிமங்கள் அமையவேண்டிய இடங்களையும் வரை யறை செய்கின்றது. விட்டுணு தத்துவ சம்கிருதை “இரத நிர்மாணப்படலம்" முழு வதும் தேர் செய்யும் நியதிகளை விளக்கு கிறது. தேர் செய்ய உறுதியும் வலிமையும் கொண்ட இலுப்பை மரம் அதிகமாகப் பயன்படுத் தப்படுகிறது. தேர் நிறுத்தி வைக்கும் இடத்தை “தேர்முட்டி” என்று வழங்குவர். தேர் நிற்கும் இடம் தேர்முட்டி.
தேரின் வகைகள் :
தேரினை அதன் பயன்பாட்டின் அடிப் படையில் நாள்தோறும் போக்குவர விற்குப் பயன்படும் தேர், போருக்குப் பயன்படும் தேர், கடவுளர் வீதி உலாவரும் தேர் என்றும், அமைப்பின் அடிப்படையில் நாகரம் (சதுர வடிவம்), திராவிடம் (எண்பட்டை வடிவம்), வேசரம் (வட்ட வடிவம்), சட்டதேர் (மாடுகளால் இழுக்கப் படும் மிகச்சிறிய அடிப்பாகம் கொண்டு விமானம் போன்ற அமைப்பு) என்றும், பயன்படும் பொருட்கள் அடிப்படையில் மரத்தேர், கற்றேர், தங்கத்தேர், சட்டத்தேர் (உறுதியான நான்கு சக்கரங்களுடன் கூடிய அடிப்பாகம், மேல்பகுதி முழுவதும் சட்டங்களால் கட்டப்படுவது) என்றும் பல வகைகள் உண்டு.
அருள் ஒளி

காலந்தோறும் தேர்
தொல்காப்பியம் முதல் இன்று வரை தேர் பற்றிய செய்திகள் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. போர்ப் படை களிலே தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை, யானைப்படை என்ற நால் வகைப் படைகள் குறித்துத் தொல்காப்பியர்,
'தேரும் யானையும் குதிரையும் பிறவும் ஊர்ந்தனர் இயங்கலும் உரியவர் என்பர்"
(தொல். 1158) என்று குறிப்பிடுகிறார். வெற்றி பெற்ற மன்னனை வாழ்த்தி முன்தேரக் குரவை, பின்தேர்க் குரவை ஆகியவற்றை நிகழ்த்திய தாகக் குறிப்புகள் உள்.
சங்க இலக்கியங்களிலும் தேர் பற்றிய செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. யானை, தேர், குதிரை, காலாள் ஆகிய நாற்படை களும் உடைய உருவப் பஃறேர்
இளஞ்சேட்சென்னி, தேரில் வரும் போது, பொலிவோடும், வலிவோடும் காட்சி தருவான் எனப் பரணர் பாடுகிறார். பல்வேறுபட்ட உருவங்களில் அமைந்த பல தேர்கள் இருந்தமையால் உருவப் பஃறேர் (பல + தேர்) என்ற அடைமொழியுடன் இச்சோழ மன்னன் அழைக்கப்பெறுகிறான்.
பாரி என்ற வள்ளல் முல்லைக் கொடிக்குத் தனது தேரைப் பந்தலாக விட்டுச் சென்றுள்ள செய்தியையும் அறியமுடிகிறது. சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் தேர் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.
மனுநீதிச் சோழன் நீதியை நிலை நாட்டத் தன் மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்றான் என்ற செய்தியை, 'வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
6
ஆவணி மாத மலர் - 2014

Page 9
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்”
(சிலம்பு. 20, 53-55) என்ற சிலப்பதிகார அடிகள் உணர்த்தும்.
தமிழகக் கோயிற்கலை வரலாற்றின் முதல்வர்களான பல்லவர்கள் குடை வரைக் கோயில்களையும், ஒற்றைக் கல் கோயில்களையும் கட்டத் தொடங்கினர். மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ஒற்றைக் கல் கோயில்கள், விமானத்தைப் போல வும், தேர் போலவும் உள்ளமையால் "பஞ்சபாண்டவ இரதங்கள்" என்று மக்கள் இவற்றை அழைக்கத் தொடங்கினர். ஆனால் இது தவறான கருத்தாகும். கி.பி. 5ஆம் நூற் றாண்டில் இந்தியாவிற்கு வந்த சீன நாட்டுப் பயணி பாகியான் தான் கண்ட பௌத்தமதத் தேரோட்ட விழா பற்றிய செய்திகளைத் தமது நூலில் குறிப் பிட்டுள்ளார்.
பன்னிரு திருமுறைகளில் தேர் பற்றிய செய்திகள் அதிகம் இடம்பெற்றுள்ளன. திருநாவுக்கரசர் “ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே" என்று பாடுகிறார். இன்று நாவுக்கரசர் பாடிய ஆழித்தேர் இல்லை. அது தீக்கு இரையாகிவிட்டது. பெரிய புராணத்திலே சேக்கிழார், சிதம்பரம், சீர்காழி, திருமறைக்காடு, திருவான்மியூர், திருப்புவனம், திருப் புன்கூர், திருநறையூர், திருநல்லூர், திருசேய் நல்லூர் போன்ற ஊர்களில் தேர்த் திருவிழாக்கள் சிறப்பாக நடந்த தாகப் பாடியுள்ளார்.
சேக்கிழார், மனுநீதிச் சோழன் வாழ்ந்த திருவாரூர் நகரின் அழகைப் பெரிய புராணத்தில் திருநகர்ப்படலத்தில் சிறப் பிக்கிறார். திருவாரூர் ஆழித்தேர் எண்
அருள் ஒளி

கோணமாக இல்லாமல் 20 பட்டைகளாக அலங்கரிக்கப்படுவது தனிச்சிறப்பாகும்.
தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக் கியங்களில் உலாவும் ஒன்று. முதல் உலாவான திருக்கயிலாய ஞான உலாவில் சிவபெருமான் தேரில் உலா வந்த சிறப்பினைச் சேரமான் பெருமாள் நாயனார் பாடுகிறார். மற்றொரு சிற்றி லக்கிய வகையான பிள்ளைத் தமிழின் பருவங்களில் குறிப்பிடத்தக்கது சிறுதேர் உருட்டல் ஆகும். ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்கு மட்டுமே உரிய பருவமாக இதனைக் குறிப்பிடுவர்.
பயணம் செய்யும் ஊர்தியாக இருந்த தேரினைப் பிற்காலங்களில் ஊராத கற்றேராகவும் வடிக்கத் தொடங்கினர். 12ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு கோயில் களில் கருவறைக்கு முன் சக்கர்களால் அமைந்த மண்டபங்கள் தேர் போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்டன. அம்மண் டபங்களைக் குதிரை, யானை போன்றவை இழுத்துச் செல்வது போல வடிவமைக்கப் படும் கலைப்பாணி தோன்றியது. (சான்று : தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில்). அதனைத் தொடர்ந்து விசய நகரப் பேரரசை ஆண்ட மன்னர்களும் கல்லால் ஆன தேர்களைச் செய்யத் தொடங்கினர். விசய நகர மன்னர்களின் தொடர்பால் ஹம்பியில் மிகப்பெரிய ஊராத கல்தேர் காண்போரைக் கவரும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விசயநகரப் பேரரசை வழிநடத்திய மன்னர்கள், கோயிலின் பிற பகுதிகளான மண்டபங்கள், தேர்கள் முதலியவற்றை அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் வடித்தனர். இதனால் தேர்கள் புதிய
ஆவணி மாத மலர் - 2014

Page 10
பொலிவினைப் பெறத் தொடங்கின. எனவே மதுரை நாயக்கர்கள் காலம் தேர்களின் பொற்காலமாகவே திகழ்ந்தது என்றால் அது மிகையாகாது.
தேர்கள் குறித்தும், தேர்த்திருவிழா குறித்தும் திருவில்லிபுத்தூர், திரு வரங்கம், திருசேய் நல்லூர், மதுரை ஆகிய இடங்களில் உள்ள கோயில் கட்வெட்டுகளில் பல அரிய செய்திகள் கிடைக்கின்றன. சித்திரக் கவிகளில் ஒன்று "இரத பந்தம், பாட்டைத் தேர் போலப் படம் வரைந்து ஒவ்வொரு எழுத்தாக எழுதிப் பாட்டாக்கி இருப்பர். இது புதுக் கவிதையின் முன்னோடி.
வள்ளுவர் கோட்டம் :
"வள்ளுவர் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாட்டில் வள்ளுவனுக்குக் கோட்டம் சமைக்கும் முயற்சியில் டாக்டர் கலைஞர் மு.கருணா நிதி அவர்கள் ஈடுபட்டார். அதன் விளை வாகச் சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டது. திருவாரூர்த் தேரையே சென்னை மாநகருக்குக் கொண்டு வந்தது போல் வள்ளுவர் கோட்டத்தின் மணி முடியாய், காண்போரின் கருத்தைக் கவரும் வண்ணம் உயர்ந்து நிற்கும் சிற்பத்தேர் அமைந்துள்ளது. சிற்பத்தேரின் கருவறையில் திருக்குறளின் முப்பாலைக் குறிக்கும் வகையில் மூன்று விரல்களை உயர்த்திய நிலையில் அழகிய பீடத்தில் ஒளிமிகுந்த கருங்கல்லில் திருவள்ளுவர் சிலை உயிரோட்டமாக வடிவமைக்கப் பட்டுள்ளது இச்சிற்பத்தேரின் தனிச்சிறப் பாகும். நான்கு சக்கரங்கள் கொண்ட இச்சிற்பத் தேரை இரண்டு யானைகள் இழுத்துச் செல்வதுபோல் செதுக்கப் பட்டுள்ளது.
அருள் ஒளி

தங்கத்தேர் :
மக்களின் வழிபாட்டு முறைகளில் வேண்டுதலும் ஒன்றாகும். தாம் நினைத்த காரியம் நிறைவேறினால் தங்கத் தேர் இழுப்பதாக வேண்டிக் கொள்வர். தமி ழகத்தில் பழனி, திருச்செந்தூர், சென்னை (கபாலீசுவரர் கோயில்), திருத்தணி, திருப்பரங்குன்றம் போன்ற இடங்களில் உள்ள கோயில்களில் தங்கத்தேர் உள்ளது. இங்குள்ள கோயில்களின் உள்பிர காரங்களில் "தங்கத்தேர் இழுத்து : வரப்படும். சென்னை கபாலீசுவரர் கோயிலில் உள்ள தங்கத்தேர் 11.5 கிலோ தங்கம் 130 கிலோ வெள்ளி கலந்து ரூ. 75 இலட்சம் மதிப்பில் செய்யப்பட்டு நடைபெற்றது. இத்தங்கத் தேரைக் கட்டணம் செலுத்தி இழுத்துத் தங்களின் வேண்டுதலை மக்கள் நிறைவேற்று கின்றனர்.
தேர்த் திருவிழாவின் நோக்கம் :
கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட இயலாத முதியவர்கள், நோயாளி கள் ஆகியோருக்காக இறைவனே கோயில் விமானம் போன்ற அமைப்புடைய தேரில் ஒளி ஏற்றி அவர்களின் இல்லம் தோறும் சென்று அருள் வழங்கும் முகமாகத் தேர்த் திருவிழாக்களைச் சான்றோர்கள் ஏற்படுத் தினர். பெரும்பாலும் அனைத்து ஊர் களிலும் உள்ள கோயில்களில் வருடத்தில் | ஒரு முறையாவது பிரம்மோத்சவ விழா (பத்துநாள்) சிறப்பாக நடைபெறும். விழாவின்போது எட்டாவது நாள் அன்று இறைவன் தேரில் உலாவரும் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் தில்லையில் (சிதம்பரம்) மட்டும் நடராசப் பெருமாள் இரண்டு முறை திருவீதியுலா (ஆனி, மார்கழி) வருகிறார். திருத்தேரின் வடம்
8 -
ஆவணி மாத மலர் - 2014

Page 11
பிடித்துத் தேரினை இழுப்பதால் கயிலை யிலும், வைகுந்தத்திலும் இடம் கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர்.
தேர்த்திருவிழா முடிந்த அடுத்தநாள் தேர் சென்ற தடம் முழுவதும் பெண்கள் விழுந்து வணங்கித் தங்களது வேண்டு தல்களை இறைவனிடம் வேண்டிக் கொள்வர். இந்நிகழ்ச்சி “தேர்த்தடம் பார்த்தல்” என்று அழைக்கப்படுகிறது. தேர்த் திருவிழா வின்போது தேர் நிற்கும் இடத்திலிருந்து கோயிலின் பிரகாரத்தைச் சுற்றித் தொடங்கிய இடத்ற்கே வருதலை “நிலைக்கு வருதல்" என்பர். தேர்த் திருவிழா சிறப்பாக நடத்தி முடிப்பது பெரிய செயலாகும். இவ்வாறு தேர் பழைய இடத்திற்கு வராத சூழ்நிலை ஏற்பட்டால் அந்த ஊருக்குத் தீங்கு ஏற்படும் என்று மக்கள் நம்புகின்றனர்.
திருவாரூர்த் தேர்த்திருவிழா :
தேர் என்றதும் அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவாரூரே. இங்கு மனுநீதித் (ஊராத கல்தேர்) தேர் உட்பட மூன்று தேர்கள் இருக்கின்றன. திருநாவுக்கரசர் பாடிய ஆழித்தேர் தீப்பிடித்துச் சிதைந்துவிட்டது. பிறகு பெல் (Bhel) நிறுவனம் ஒரு மிகப்பெரிய தேரைத் தயாரித்து வழங்கியுள்ளது. இக்கோயிலில் உள்ள இறைவன் தேருக்கு எழுந்தருளும் போது பொற்பூவும், வெள்ளிப்பூவும் வாரி இறைப்பதால் ஆயிரம் பொன் வழங்கியவர் என்ற பெய ரையும் இங்குள்ள இறைவன் பெறுகிறார். இங்குள்ள இறைவனின் பெயர் வீதி விடங்கர் ஆவார். "விடங்கர்" என்ற சொல் உளியால் செதுக்கப்படாதவர்; ஆண்மை யுடையவர்; அழகர்; காமம் மிக்கவர் என்ற
அருள் ஒளி

பொருள்களில் வழங்கப்படுகிறது. திரு வீதியில் வரும் இறைவன் அழகைக் கண்டு பக்தர்கள் காமுறும் செயலைக் கொண்டே இறைவனுக்கு வீதி விடங்கர்" என்ற பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும்.
இந்து சமயத்தில் தேர்த்திருவிழா போன்று கிறிஸ்தவ சமயத்தில் சப்பரத் திருவிழாவும் நடைபெறுகிறது. அன்னை வேளாங்கன்னித் தேவாலயத்தில் நடை பெறும் சப்பரத் திருவிழா சிறப்புடையது. வேளாங்கன்னிக் கோயில் கடலோர மணற்பரப்பாகத் திகழ்வதால் அலங்கரிக் கப்பட்ட சப்பரத்தில் மாதாவை வைத்துத் தூக்கி வருவர்.
சிற்பக் கலைக்கூடம்
இறைவன் திருவீதி உலாவரும் வாகனமாகத் திகழும் தேர், சிற்பக் கலைக்கூடமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு கோயில்களிலும் உள்ள தேர்களில் அந்தத் திருத்தலத்தின் புராணச் செய்திகளுடன் தொடர்புடைய திருவுருவங்கள் சிற்பமாக இடம்பெறுகின்றன. சென்னை கபாலீசு வரர் திருக்கோயிலில் உள்ள தங்கத் தேரில் "புன்னை மரத்தின் கீழ் மயில் உருவில் கற்பகம்பாள் அமர்ந்து இலிங்க வடிவில் உள்ள ஈசனை வழிபடும் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டச் சிற்பத் தேரின் மையப்பகுதியில் 133 குறட்பாக்களின் பொருள் விளக்கம் தரும் வகையில் அழகிய சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. தேர்களில் கடவுளர் சிற்பம், புராண மரபுகளுடன் இதிகாசத் தொடர்புடைய சிற்பங்கள், யானை, குதிரை வீரர் சிற்பம், சங்கநிதி, பதுமநிதி முதலிய நூற்றுக்கும் மேலான சிற்பங் களுடன் காமசூத்திரச் சிற்பங்களும்
ஆவணி மாத மலர் - 2014

Page 12
நிறைந்து தேர் ஒரு சிற்பக் கலைக்கூட மாகத் திகழ்கிறது.
போக்குவரத்திற்கும், போருக்கும் முதலில் பயன்பட்டுவந்த தேர் பின்னர் கடவுளர் அமர்ந்து வீதி உலா வரும் நகரும் கோயிலாக மாறியது. தேர்த்திருவிழா வின் போது கிராம மக்கள் அலங்கரிக் கப்பட்ட தேரின் முன் அமர்ந்து தங்கள் கிரா மங்களுக்கு இடையேயான மரியாதை, மீன்பிடித்தல் போன்ற தகராறுகளைப் பேசித் தீர்த்துக் கொள்வர். இவ்வாறாக “ஊர்கூடித் தேர் இழுத்தல்” என்ற வழக்குத்
கணபதியில்
ஒருமுறை பிரணவ வனத்தில் பர ஓடினாள். சிவபெருமான் அவளை ஆண் வேளையில் இருவருக்குமிடையே யான
தெய்வ நல் வடிவுடன் கூடிய அ. மகிழ்ந்தனர். அவரைக்கணங்களின் அத சிவபெருமான். கணபதியைத் தம் மடிமீ
அக்கோலம் ஆனைமுகற்கு அரு கின்றது. அதனால் சிவனை கஜ அ எனவும் அழைப்பர்.
சிவன் ஆண் யானையாகவும் அப் விநாயகரான கணபதி தோன்றினார் என அருளிச் செய்தார்.
பிடியதன் உருவுகை வடிகொடிதனதடி கடிகண பதிவர அரு வடிவினர் பயில்வலி
அருள் ஒளி

தோன்றி, தேர் என்னும் கருவி சமுதாய ஒற்றுமையை வளர்க்கும் சாதனமாகத் திகழத் தொடங்கியது. ஆனால் இன்று அந்தச் சமுதாய ஒற்றுமைச் சாதனத்தை இழுப்பதில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு அதுவே ஒற்றுமையைச் சிதைக்கும் சாதன மாகிவிட்டது. சிற்பக் கலைக்கூடமாக மட்டுமன்றி, சமுதாய ஒருமைப்பாட்டுச் சாதனமாகவும் திகழும் தேர் செல்லும் வீதிகளில் இன்று இரத்த ஆறு ஓடும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகும்.
நன்றி : இணையதளம்
ர் பிரபாவம்
ரசக்தி பெண் யானை வடிவு கொண்டு எயானை வடிவில் பின் தொடர்ந்தார். அந்த
ன வடிவில் ஒரு சக்தி வெளிப்பட்டது. க்குழந்தையை சிவசக்தியர் அணைத்து திபதியாக்கி கணபதி என்று பெயர் சூட்டினார் து அமர்த்திப் பட்டாபிஷேகம் செய்தார்.
ளிய அண்ணல்' என்று கொண்டாடப்படு னுக்கிரகர் என்றும் விக்னேசப் பிரசாதர்
bபிகை பெண் யானையாகவும் இருக்க, ன்பதை திருஞானசம்பந்தர் பின்வருமாறு
கொள மிகு கரியது வழிபடும் அவரிடர் நளினன் மிகுகொடை
வலம்உறை இறையே!
- பூசை.ச. அருணவசந்தன்
10 -
ஆவணி மாத மலர் - 2014

Page 13
முல்லைக்
இயற்கை வளம் நிறைந்த மலை பறம்பு மலை. அந்த மலையைச் சூழ்ந்து அழகான முந்நூறு ஊர்கள் இருந்தன. பறம்பு நாடு என்று அழைத்தனர். பறம்பு நாட்டைப் பாரி என்ற அரசர் ஆண்டு வந்தார். தமிழ் மீது பேரன்பு கொண்டிருந்தார் அவர். புலவர் களை மதித்துப் போற்றினார்.
தன்னை நாடி வந்தவர்களுக்கு இல்லை என்னாது வாரி வழங்கினார். வள்ளல் பாரி என்று அவரை எல்லோரும் புகழ்ந்தார்கள். அவர் புகழ் உலகெங்கும் பரவியது. பெரும் புலவர் கபிலர் அவரின் நெருங்கிய நண்பராக விளங்கினார்.
அவருடைய அரசவையில் புலவர்கள் நிறைந்திருந்தார்கள். அவரைப் புகழ்ந்து பாடுவதைப் புலவர்கள் பெருமையாகக் கருதினார்கள். வழக்கம்போல அரசவை கூடியிருந்தது. அரியணையில் அமர்ந்தி ருந்தார் பாரி. புலவர்கள் அவரவர் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். செல்வம் மிகுந்தவர்களைப்போலப்புலவர்கள் காட்சி தந்தனர்.
புலவர் எழிலனார் எழுந்தார். அரசர் பெருமான் வாழ்க அவரைப் போன்று வாரி வழங்கும் வள்ளல் யார் இருக்கிறார்கள்? அவர் வள்ளன்மையால் இரவலர்களே இந்த நாட்டில் இல்லை! என்று புகழ்ந்தார்.
அடுத்ததாகப் புரவலர் திண்ணனார் எழுந்தார். புலவர் எழிலனார் சொன்னது முக்காலத்திற்கும் பொருந்தும். வாரி வழங்கும் வள்ளல் என்றாலே அது பாரி அருள் ஒளி

குத்தேர்
தான். அவரைப்போன்று எந்த அரசரும் கடந்த காலத்தில் இருந்தது இல்லை. நிகழ் காலத்திலும் இல்லை. வரும் எதிர் காலத்திலும் இருக்கப்போவது இல்லை. இது உறுதி என்றார்.
: ய
பயன் நோக்காமல் வாரி வழங்கும் வள்ளல் பாரி ஒருவர் தான். பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் விறலியர் வந்தால் போதும், தம் நாட்டையே பரிசாக நல்குவார். அது மட்டுமல்ல. தம் உயிரையே கேட்டாலும் மகிழ்ச்சியுடன் தருவார். பழங்கள் நிறைந்த மரத்தைப் பறவைகள் தேடி வரும். அதேபோலப் புலவர்கள் பாரியை நாடி வந்தவண்ணம் உள்ளார்கள் என்று புகழ்ந்தார் நன்னனார்.
அடுத்ததாகப் பெரும்புலவர் கபிலர் எழுந்தார். எப்பொழுதும் கருத்துக்களில் மோதும் புலவர்கள் நீங்கள். என்ன வியப்பு! வள்ளல் பாரியைப் புகழ்வதில் ஒன்றுபட்டு இருக்கிறீர்கள். புலவர்களிடம் பொது நோக்கு வேண்டாமா? பயன் கருதாமல் வாரி வழங்குபவர் வள்ளல் பாரி மட்டும் தானா? இன்னொருவரும் இருக்கின்றாரே. ஏன் நீங்கள் அவரை மறந்துவிட்டீர்கள்? உங் களில் யாரும் அவரைப் புகழவில்லையே. ஏன்? என்று கேட்டார்?
பாரியை இகழ்ந்து கபிலர் பேசுகிறாரே என்று புலவர்கள் திகைப்பு அடைந்தனர்.
கபிலரே! என்ன பேசுகின்றீர்? முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நன்னாடு. முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர். இவ்வாறு பாரியைப் புகழ்ந்து பாடியவர் 1
ஆவணி மாத மலர் - 2014

Page 14
நீங்கள் தானே. ஆனால் இப்பொழுதே பாரியை இகழ்ந்து பேசுகிறீர். இது முறையா? அவரைப் போன்று வார் வழங்கும் வள்ளல் யார் இருக்கிறார்கள் என்றார் எழிலனார்.
பாரியின் அருள் உள்ளத்தை எல் லோரும் அறிவார்கள். அவரைப் போலவே வாரி வழங்க முடியுடை மூவேந்தர்களும் முயன்றனர். அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. வள்ளல் என்று சொன் னாலே அது பாரியைத் தான் குறிக்கும். இதை இந்த உலகம் அறியும்.
கபிலரே! பாரியைப் போன்றே கைம் மாறு கருதாது உதவுபவர் இன்னொருவர் இருக்கிறாரா? யார் அவர்? பெயரைச் சொல்லும் என்று கோபத்துடன் கேட்டார் திண்ணனார்.
*,
பெரும் புலவர் கபிலரே! வள்ளல் பாரியின் நெருங்கிய நண்பர்கள் நீங்கள். அவரது வள்ளன்மையை நன்கு அறிந்தவர். பறம்பு மலைக்கு வந்து யாரும் பரிசில் பெறாமல் சென்றது இல்லை. கைம்மாறு கருதாமல் வாரி வழங்கும் வள்ளல் பாரி ஒருவர்தான். இன்னொருவர் இருக்கவே இயலாது. அப்டி இருந்தால் சொல்லுங்கள் என்றார் நன்னனார்.
கபிலர் எழுந்தார். புலவர்களே! வள்ளல் பாரியிடம் நீங்கள் வைத்தி ருக்கும் பெருமதிப்பைக் கண்டு மகிழ்கிறேன். பாரியைப் போன்றே வாரி வழங்கும் வள்ளல் இன்னொருவர் இருக் கிறார். அவரை உங்களுக்குத் தெரியும். ஆனால் நீங்கள் அனைவரும் பாரி ஒரு வரையே புகழ்ந்து பாடுகிறீர்கள். இன் னொருவரை மறந்துவிட்டீர்கள் என்றார் அவர். அருள் ஒளி

கபிலரே! புதிர் போடாதீர்கள். பாரியைப் போன்றே வாரி வழங்கும் இன்னொரு வள்ளல் யார்? அவர் பெயரைச் சொல்லுங்கள் என்று கேட்டார் எழிலனார்.
புலவர்களே! பாரி போன்றே மாரியும் கைம்மாறு கருதுவது இல்லை. மழை பொழிந்து இந்த உலகைக் காப்பாற்றுகிறது. மாரி மழை பொழியவில்லை. பிறகு இந்த உலகின் நிலை என்ன ஆகும்? நீங்கள் மாரியை மறந்துவிட்டீர்கள். வாரி வழங்கும் வள்ளல் என்று பாரியையே புகழ்ந்து பாடுகிறீர்கள். இது தகுமா? அதனால் தான் இப்படிக் கேட்டேன்! என்றார் கபிலர்.
இந்த விளக்கத்தைக் கேட்ட புலவர்கள் மகிழ்ந்தனர். கபிலரே! வள்ளல் பாரிக்கு இணையானவர் யாரும் இந்த நிலவுல கத்தில் இல்லை. கைம்மாறு கருதாமல் மழை பொழிந்து உலகத்தைக்காக்கிறது மாரி. அந்த மாரி தான் அவருக்கு ஒப்பாகும்
மாரி போன்றவர் பாரி எவ்வளவு அழகாகச் சொல்லி வீட்டீர். உங்கள் புலமைக்கு என்ன பாராட்டுக்கள் என்றார் நன்னனார்.
கபிலரே! உம்மைப் பெரும் புலவர் என்று எல்லோரும் பாராட்டுகிறார்கள். அது உண்மை தான் என்றார் எழிலனார். புலவர்களுக்கு இடையே நடந்த உரை யாடலைக் கேட்டுக் கொண்டிருந்தார் பாரி. அவர் உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது. அரச உடை அணிந்து பெரு மிதமாகக் காட்சி அளித்தார் பாரி. அரண்மனையில் உலாவிக் கொண்டி ருந்தார். தேரோட்டி அங்கு வந்தான்.
12 -
ஆவணி மாத மலர் - 2014

Page 15
அரசே! வாழ்க! நீதி நெறி தவறாத மன்னவ வாழ்க! குடிமக்களைக் காக்கும் கோவே வாழ்க! என்று பணிவாக வணங்கி னான். தேரோட்டியே! உன் வருகைக்காகத் தான் காத்திருந்தேன். நம் நாட்டின் மலை வளம் காண விரும்புகிறேன். இப்பொழுதே புறப்பட வேண்டும் என்றார் பாரி.
அரசே! அரண்மனை வாயிலில் தேர் நிற்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் புறப்படலாம் என்றார் அவர். தேரோட்டி முன்னே செல்லப் பாரி பின்னால் வந்தார்.
அரண்மனை வாயிலில் அலங்கரிக்கப் பட்ட அழகான தேர் இருந்தது. அதில் வலிமையான குதிரைகள் பூட்டப்பட்டி ருந்தன. அரசரும் பெருமிதத்துடன் தேரில் ஏறி அமர்ந்தார். சூழ்ந்து நின்ற வீரர்களைப் பார்த்தார் அவர். நான்மலை வளம்காணச் சொல்கிறேன். நீங்கள் யாரும் என்னுடன் வரவேண்டாம். நீங்கள் வந்தால் அங்கே பெரும் ஆரவாரம் எழும். நான் காண விரும்பும் இனிய சூழல் கெடும் என்றார்.
வீரத்தலைவன் அரசரைப் பணிவாக வணங்கினான். அரசே! உங்கள் கட்டளைப் படி நடப்போம் என்றான். தேரோட்டி ! தேரைச் செலுத்து என்றார் அரசர் பாரி.
தேர் வேகமாகச் செல்லத் தொடங்கியது. சிறிது நேரத்தில் தலைநகரம் அவர்கள் கண்ணுக்கு மறைந்தது. மலைப்பாதையில் தேர் ஏறத் தொடங்கியது. தேரோட்டி! தேரை மெல்ல செலுத்து. வளமான பறம்பு மலை எவ்வளவு அழகாகக் காட்சி தருகிறது.இதன் அழகைக் காண கண்கோடி வேண்டுமே. ஆட்சியைத் துறந்து இங்கேயே இருந்து விடலாம்.
அருள் ஒளி

அடிக்கடி இங்கு வர விரும்புகிறேன். அரச அலுவல்களால் அது முடிவதும் இல்லை. இந்த இயற்கைச் சூழலில் என் உள்ளம் புத்துணர்ச்சி பெறுகிறது. வெற்றுப் புகழுரைகளை அரண்மனையில் கேட்டுக் கேட்டுச் சலித்து விட்டது. இங்கே என்ன அமைதியான சூழல்! எங்கும் பசுமை நிறைந்து வளமாகக் காட்சி அளிக்கிறதே!
ஆம் அரசே! இந்த மலை வளம்தான் நம் நாட்டிற்கு வற்றாத செல்வத்தைத் தருகிறது. தேரோட்டி! நீயும் மற்றவர்களைப் போலத் தான் இருக்கிறாய். இந்த மலை தரும் செல்வத்தையே பெரிதாக எண்ணு கிறாய். ஆனால் நானோ இந்தச் செல்வத்தைப் பெரியதாக நினைக்கவில்லை. என்னை அறியாத ஏதோ ஒரு இன்ப வெள்ளத்தில் மூழ்குகிறேன். அருவி கொட்டும் ஓசை உன் செவிகளில் வீழ்கிறதா?
அரசே! என் செவிகளிலும் வீழ்கிறது. ஆ! என்ன சுவையான அருவி நீர். இதன் சுவையைப் புகழ்ந்து பாடாத புலவர்கள் இல்லையே. இந்த அருவி நீரைக் குடித்த வர்களுக்குத் தேனும் துவர்க்குமே. நம் நாட்டை வளமாக்கும் வற்றாத அருவி - ஆயிற்றே!
அந்த அருவி கொட்டும் ஓசை இனிய இசையாக என் செவிகளில் வீழ்கிறது. அந்த இசையில் என்னையே நான் மறந்துவிடுகிறேன். மலைப்பகுதிக்கு வந்துவிட்டோம். இனிமேல் தேர் அசைந்து மெல்ல செல்லட்டும். தேரில் கட்டியுள்ள மணிகளை எடுத்துவிடு.
அப்படியே செய்கிறேன் அரசே! என்ற தேரோட்டி மணிகளை எடுக்கிறான்.
3 -
ஆவணி மாத மலர் - 2014

Page 16
எதற்காக மணிகளை எடுக்கச் சொன்னேன் தெரியுமா?
அரசே! தேரின் மணியோசை கேட்டு இங்குள்ள உயிர்கள் அஞ்சும். அவற்றின் இனிமைக்கு எந்த இடையூறும் ஏற்படக் கூடாது. அதனால் தானே இங்கு வரும் போது தேரின் மணிகளை எடுக்கச் சொல்கிறீர்கள்.
தேரோட்டியே! என் உள்ளத்தைப் புரிந்து வைத்திருக்கிறாய். அதோ அங்கே பார். தேரை நிறுத்து. எவ்வளவு மகிழ்ச்சி யாக மான் கூட்டங்கள் துள்ளிக்குதித்து ஓடுகின்றன. அந்த மான்குட்டியின் அழ கைப்பார். அதன் மருண்ட பார்வைக்கு இந்த உலகத்தையே பரிசாக அளிக்கலாமே!
அரசே இங்கேயே சிறிது நேரம் இருந்து விட்டோம். மான்கள் கூட்டமும் சென்று விட்டது. தேரை மெல்ல செலுத் தட்டுமா?
செலுத்து.
தேர் மெல்ல நகர்கிறது. ஆ! மேகக் கூட்டங்களைக் கண்ட மயில்களுக்குத் தான் எவ்வளவு மகிழ்ச்சி! தோகையை விரித்து ஆடுகின்றனவே. இவற்றின் தோகைகள் வானவில்லின் வண்ணத்தையே மிஞ்சு கின்றனவே. என்ன அழகிய காட்சி! இயற்கை தரும் இன்பத்திற்கு ஈடு இணை ஏது?
தேர் அங்கிருந்து மெல்ல நகர்கிறது.
ஆ! மான்களும் மயில்களும் என்னுடன் பேசுவதைப் போல் உணர்கிறேனே. வண்டு களும் தும்பிகளும் தேனீக்களும் இசை எழுப்புகின்றனவே. அவை என்னை வாழ்த்துவதைப் போல் உள்ளதே! அருள் ஒளி

நிழல் தரும் இந்த இனிய மரங்கள் காற்றில் அசைகின்றனவே. என்னிடம் ஏதோ பேச முற்படுவதைப் போல உள்ளதே. கொடிகள் அசைந்து ஆடுவது என்னிடம் கொஞ்சுவதைப் போல உள்ளதே.
உணர்வு எல்லா உயிரினங்களுக்கும் பொதுமையானது தானே. அதைச் சொல்லநா வேண்டுமா? கேட்க செவி வேண்டுமா? நமக்கு உணர்வு இருந்தால் எல்லாவற்றின் உணர்வுகளையும் அறிந்து கொள்ளலாமே.
- சூழ்ச்சி வஞ்சம் ஏதும் அறியாத இனிய உலகம் அல்லவா இது. மானாக மயிலாக நான் பிறக்கவில்லையே. அப்படிப் பிறந்திருந்தால் இங்கேயே மகிழ்ச்சியாக - இருப்பேனே.
தேர் மெல்ல சென்றுகொண்டிருந்தது. ஒரு முல்லைக்கொடிக்கு அருகில் கொழும் கொம்பு இல்லை. அதனால் காற்றில் அங்கும் இங்கும் ஆடிக் கொண்டி ருந்தது. இந்த அவலக் காட்சியைக் கண்டார் பாரி. அவர் உள்ளம் துடித்தது. ஆ என்று அலறினார். தேரிலிருந்து கீழே குதித்தார்.
எதிர்பாராதது நடந்ததைக் கண்டு திகைத்தான் தேரோட்டி, தேரை நிறுத்தி னான். தேரை விட்டு இறங்கிய அவன், அரசே என்ன நிகழ்ந்தது? என்று பணி வாகக் கேட்டான். அவரைப் பின் தொடர்ந்தான்.
ஏதும் பேசாத அவர் அந்த முல்லைக் கொடியின் அருகே சென்றார். கொழு கொம்பு இல்லாததால் காற்றில் தள்ளாடித்
14
ஆவணி மாத மலர் - 2014

Page 17
தவிக்கும் அந்தக் கொடியைப் பார்த்தார். அருள் உள்ளம் கொண்ட அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது.
முல்லைக்கொடியே! உன் நிலை இரங்கத் தக்கது. நீ படர்ந்து தழைக்க அருகே கொழு கொம்பில்லை. காற்று அலைக்கழிக்க நீ அங்கும் இங்கும் அசைந்து துன்புறுகிறாய். இந்தக் காட்சி என்னிடம் முறையிடுவது போல உள்ளதே.
மன்னனே! எல்லோர்க்கும் நீதி வழங்குபவனே! என் அவல நிலையப் பார்த்தாயா? கொழு கொம்பின்றித் தவிக்கிறேனே. எனக்கு அருள் செய்ய மாட்டாயா என்று கேட்கிறதே. என்னிடம் வந்து யாரும் வெறுங்கையுடன் சென்றது இல்லை. அவர்கள் நினைத்ததற்கு அதிகமாகப் பரிசிலைப் பெறுவார்கள். மகிழ்ச்சியுடன் செல்வார்கள்.
முல்லைக்கொடியே! நீ இரந்தது வாரி வழங்கும் வள்ளல் பாரியிடம். பாரியின் வள்ளன்மையை நீ உணரப்போகிறாய் என்று உணர்ச்சியுடன் சொன்னார் அவர். பிறகு தேரோட்டியைப் பார்த்துத் தேரை இந்த முல்லைக்கொடியின் அருகே நிறுத்து என்று கட்டளை இட்டார்.
தேரை முல்லைக்கொடியின் அருகே இழுத்து வந்து நிறுத்தினான் தேரோட்டி. குதிரைகளை அவிழ்த்துவிடு. அவை நம் அரண்மனை சேரட்டும் என்றார் அவர்.
அருள் ஒளி

குதிரைகளை அவிழ்த்துவிட்டான் தேரோட்டி அவை தலை நகரத்தை நோக்கி ஓடத் தொடங்கின. முல்லைக் கொடியின் அருகே நின்றார். அந்தக் கொடியை அன்புடன் தடவிக் கொடுத்தார். மெல்ல அதை எடுத்துத் தேரின் மேல் படர விட்டார்.
தன்னை மறந்து அங்கேயே நின்றி ருந்தார். அதையே மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் கொடி இப்பொழுது காற்றில் அசையவில்லை. தேரில் நன்கு படர்ந்தது. அதன் துன்பத்தைத் தீர்த்ததை எண்ணி அவர் உள்ளம் மகிழ்ந்தது.
அந்தக் கொடியை மீண்டும் அன்புடன் தடவிக்கொடுத்தார். நன்றி தெரிவிப்பது போலத் தன் தளிரை அசைத்தது அது. எழுந்த அவர், தேரோட்டி ! நாம் நடந்தே அரண்மனை அடைவோம் என்றார்.
இருவரும் மெல்ல நடந்து தலை நகரத்தை நெருங்கினார்கள். அரசர் நடந்து வருவதை மக்கள் திகைப்புடன் பார்த்தார்கள். தேரோட்டி வாயிலாக நடந்ததை அறிந்தார்கள்.
மகிழ்ச்சியடைந்த அவர்கள் பாரி வாழ்க! முல்லைக்குத் தேரீந்த வள்ளல் வாழ்க! என்று வாழ்த்தொலி எழுப்பி னார்கள். வள்ளல் பாரி மகிழ்ச்சியுடன் அரண்மனைக்குச் சென்றார்.
15 -
ஆவணி மாத மலர் - 2014

Page 18
துர்க்காதேவியின் கொ
காப்
அருள் ஒளி

பழயேற்றத் திருவிழாக் சிகள்
Haliarumtom
-
ஆவணி மாத மலர் - 2014

Page 19
துர்க்காதேவியின் தி
அருள் ஒளி

ருமஞ்சத் திருவிழா
கா
பார்நிக்காய்ருடியோ தெக்லப்பா
7
ஆவணி மாத மலர் - 2014

Page 20
ப றற ஸ்ரீதேவி
அருள் ஒளி
- 18

மம் இருாரூசத்திருவிறு
ரம், திருமஞ்த்திருவிழா
ஆவணி மாத மலர் - 2014

Page 21
சந்நிதி வேலவனி
அருள் ஒளி

ன் திருவிழாக் காட்சி
19 -
ஆவணி மாத மலர் - 2014

Page 22
துர்க்காதேவியின் திருமுறை
துர்க்காதேவியின் திருமஞ்சத்திருவி
அருள் ஒளி
- 20

மத் திருவிழா (3ம் திருவிழா)
நம்பிக்கெர்ம் வைபோதேய்ய்ப்பு
ழாவில் மங்கல இசைக்கலைஞர்கள்
ஆவணி மாத மலர் - 2014

Page 23
கோண்டாவில் குமரகோட்ட
குடைச்சு உருவச்சிலை
FA S
அருள் ஒளி

தில் இம்மாதம் நிறுவப்பட்ட சாமிகளின்
திறப்பு விழா
*****
21 -
ஆவணி மாத மலர் - 2014

Page 24
கோண்டாவில் குமரகோட்டத்தில் கு
இணுவில் கந்தசுவாமி கோவில் .
சந்நியாசியாரின் அருள் ஒளி
- 22

டைச் சுவாமிகளின் உருவச்சிலை
": ',84,4444444,4"
முன்றலில் நிறுவப்பட்ட பெரிய T உருவச்சிலை
ஆவணி மாத மலர் - 2014

Page 25
அவுஸ்ரேலியா சிட்னி முருகன்
ஆரம்பமான உலக சைவ 1
1,aliயெறி II IVANI RICON
இம்ரா
அருள் ஒளி

கோவிலில் ஆவணிச் சதுர்த்தியில் மாநாட்டுக் காட்சிகள் - 2014
பயபடு 20 அING: பழம்
23 -
ஆவணி மாத மலர் - 2014

Page 26
உலக சைவ மாநாட்டில் திருமதி. 6
சைவசித்தாந்தம் பற்றி
: ஃபசல்
400க்மாயக்க காணலேகா
க் க்ணய
2. wp-டிமக்...
**-லல்ல.
ஈ
&ont
அருள் ஒளி
- 24

கசினி கோணேஸ்வரன் அவர்கள்
உரையாற்றுகிறார்.
劉警
WW T5 DW - 204

Page 27
தேர்கள் : நமது பண்
சின்ன
வடமொழியில் இரதம் என்று சொல் லப்படுவதே தமிழில் தேர் என்று வழங்கு கிறது. இது சிறப்பாக அரசர்களின் ஊர்தியைக் குறித்து நிற்கிறது. ஆனால் தமிழ் இலக்கிய வழக்கில் கானல் நீரை, பேய்த்தேர் என்றும் ரோகிணி நட்சத்திரத்தை சூடாமணி நிகண்டு தேர் என்ற வினைச் சொல்லாலும் குறிப்பிடக் காணலாம்
தேர் பற்றி திருக்குறளிலும் பல்வேறு செய்திகள் உண்டு. உதாரணமாக "உருள் பெரும் தேர்க்கு அச்சாணி அன்னார்" (குறள் 667) என்று வள்ளுவர் உவமை
கூறக்காணலாம்.
எனினும் இரதம் என்ற சொல்லாட்சி பொலிவும் விரைந்த செயலும் உள்ள அனைத்தையும் குறிக்கும் சொல்லாக உள்ளது. வானில் பறக்கும் விமானங்களை ஆகாசரதம் என்றும் மனவியல் கற்பனைத் திறனை மனோரதம் என்றும் அறிவாற்றலை ஞானரதம் என்றும் சிறந்த தர்க்கத்தை வாதரதம் என்றும் கூறுவர். எருதுகளால் இழுக்கப்படுவதை 'கோரதம் என்றும் குறிப்பிடுவர். இதனை கொல்லா வண்டி என்றும் கூறுவர். ஸ்ரீமத் நாராயணன் எழுந்தருளும் கருடத்தாழ்வாரை 'விஷ்ணு ரதம்' என்றும் முருகனின் மயிலை ஸ்கந்தரதம் என்றும் அழைக்கும் வழக்கமும் உண்டு. மஹாதிரிபுர சுந்தரியாகிய அம்பாள் எழுந்தருள்வது 'ஸ்ரீ சக்ரரதம்' என்பர். தமிழிலுள்ள ஆண்பாற் பிள்ளைத்தமிழில் 'சிறுதேர் உருட்டல்' என்று ஒரு பருவம்
அருள் ஒளி

பாட்டுப் பெருமிதத்தின்
ங்கள்
இருப்பதும் சித்திரக்கவி மரபில் இரதபந்தம் என்ற ஒரு வகை இலக்கியம் இருப்பதும் ஈண்டு சிந்திக்கத்தக்கது.
இலக்கியங்களில் தேர்
கடோபநிஷதத்தில் மனிதனின் உடலைத் தேராகவும் உயிரைத் தேர்த் தலைவனாகவும் புலன்களைக் குதிரை களாகவும் புத்தியைத் தேர்ப்பாகனாகவும் புலன்சார் விடயங்களைத் தேரோடும் வீதியாகவும் உவமித்திருக்கும் முற்று ருவகம் ஒன்றைக் காணலாம். இது போலவே கிரேக்க உரோம் நாகரிகங் களிலும் தேர் சிறப்பிடம் பெறுவதை அவர்களின் இலக்கியங்களினூடே அவ தானிக்க முடிகின்றது.
ஸ்ரீ ருத்திர பூர்வ பாகமாகிய நமகத்தில் ரதிப்யோ ரதேப்யச்ச வோநமோ நமோ ரதேப்ய: ரதபதிப்யச்ச வோநமோ நமோ என்று வருவதும் குறிக்கத்தக்கது.
அதாவது, “தேர்களாகவும் (ரதேப்ய - தேர்வலவர்களாகவும் (ரத பதிப்யச்ச) உள்ள ஸ்ரீ பரமேஸ்வரனாகிய பகவானுக்கு முன்னும் பின்னும் நமஸ்காரம் என்கிறது.
சங்க காலத்தில் மன்னர்கள் புலவர் களுக்கு தேர்களைப் பரிசாக வழங்கிய தாகச் செய்திகள் உண்டு. இத்தகு செயல்கள் தேர்வண்மை எனப்படும். கறங்கு மணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த புரந்தோங்கு சிறப்பிற் பாரி (புறம் 200)
25 -
ஆவணி மாத மலர் - 2014

Page 28
பொலந்தேர் மிசைப்பொலிவு தோன்றி (புறம் 4)
என்பன இவற்றைக் காட்டும்.
முல்லைக்கு பாரி தேரளித்தமையும் குறிப்பிட வேண்டியது. ஒளவையார் தேர் செய்ய வல்லவர்கள் பற்றித் தனது ஒரு பாடலில், "... வைகல் எண்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த காலன்னோனே: என்று பதிவு செய்கிறார்.
இது போலவே சிறுபாணாற்றுப்படையில், புருவ வானத்துப் பாற்கதிர் பரப்பி உருவ வான்மதி ஊர்கொண்டாங்கு ஊருளி பொருத வடுவாழ்நோன்குறட் ஆரஞ் சூழ்ந்த வயில் வாய் நேமியொடு
என்று தேர் செய்யும் முறையை சங்கப் புலவர்கள் அருமையாகப் பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இது போலவே பரிபாடலில் சிவபெரு மான் முப்புரம் அழிக்க, பூமியாகிய தேரில் வேதக்குதிரைகள் பூட்டி நான்முகச்சாரதி யுடன் மேரு மலையை வில்லாகவும் ஆதிசேஷனை நாணாகவும் கொண்டு சிரிப்பால் எரித்தழித்தமை குறிப்பிடப்படு கின்றமை சங்க காலத்திலேயே வேத புராண மரபுடன் தமிழிலக்கியம் பின்னிப் பிணைந்திருந்தது என்பதையும் செம் மொழித் திறனையும் அக்காலத்தில் தேர்த்திறன் பற்றியிருந்த எண்ணப் பாங்கையும் வெளிக்காட்டுகிறது. ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ வேத மாபூண் வையத் தேரூர்ந்து நாக நாணும் மலை வில்லாக முவகை யாரெயில் ஓராழல் அம்பின் முனிய மாதிரம் அழல்வெய்து அமரர் வேள்விப் பாகம் உண்ட பைங்கட் பார்ப்பான்
(பரிபாடல் - 5- வரி 22-27)
அருள் ஒளி

இதைத் திருமூலர் தனது திருமந்தி ரத்தில்
அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள் முப்புரமாவது மும்மலக்காரியம்
அப்புரம் எய்தமை ஆரறிவாரே என்கிறார். இது தொடர்பில் இலங்கையில் அழித்தல் தொழிலை வெளிப்படுத்தும் தேர்த் திருவிழாவில் புதுமணத் தம்பதியர் கலந்து கொள்ளக்கூடாது என்றோர் மூடநம்பிக்கை சாதாரண மக்களிடம் புரையோடிப் போயி ருக்கவும் காணலாம். ஆனால் அழித்தல் என்பது மும்மலங் களாகிய எம்மிடமுள்ள கெட்ட ஆணவாதி மலங்களையே என்பது நினைவில் கொள்ளவேண்டியது.
மஹாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ணன் அருச்சுனனின் ரத சாரதியாக இருந்து உபதேசித்த பகவத்கீதை பிரஸ்தானத் திரை யங்களுள் ஒன்றாகும் பெருமை பெற் றுள்ளது. காஞ்சி கச்சியப்ப சிவாச்சாரியார் பாடிய கந்தபுராணத்தில் தேர் பற்றிய பல அபூர்வ செய்திகள் உண்டு. சூரபத்மனுக்கு அவனது தவத்தின் பொருட்டு சிவபெருமான் வழங்கிய தேரின் பெயர் இந்திரஞாலம். இது உண்ணிலா மாயை வல்ல ஒரு தனித் தேர் என்று சிவாச்சாரியார் குறிப்பிடுவார். அதாவது தானியங்கி நிலையில் மிகுந்த சாமர்த்தியமுடையது இப்பெருந் தேர் என்று குறிக்கப்படுகிறது. பாரத்வாஜர் எழுதிய இயந்திர சர்வாஸ்தா என்ற இந்து சிற்ப இயந்திர சாஸ்திரமும் இருப்பதாகக் கூறப்படுவதும் சிந்திக்கத் தூண்டுகிறது.
சிறப்புமிக்க தேர்கள்
திருவாரூர்த்தேர் முதன்மை பெற்றுத் திகழ்கிறது. 300 தொன் எடையுள்ள தமிழகத்தின் எடை அதிகமுள்ள தேர்
6
ஆவணி மாத மலர் - 2014

Page 29
என்பதால் ஆழித் தேர் என்றும் அழைக் கப் படுகிறது. திருநெல்வேலி மற்றும் வில்லிபுத்தூர் திருச்செந்தூர், மதுரை, திருவிடை மருதூர், சிறீரங்கம் திருத் தேர்கள் சிறப்புற்றுத் திகழ்வதும் இவ் விடத்தில் மனங்கொள்ளத்தக்கது. ஸ்ரீ ரங்கம் பங்குனி உத்திர கோரதம் நம் ஆழ்வாரால் அரங்கருக்குப் பரிசாக வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கடந்த காலப் போரினால் பழுதுபட்டுள்ள யாழ்ப்பாணத்து மாவிட்டபுரம் ஸ்கந்தஸ் சுவாமி ஆலயத் திருத்தேர் மஹோத்திர மஹா ரதம் என்ற பெல் அழைக்கப்படு வதும் இங்கு குறிப் வேண்டியது. பூரி ஜகன்நாதர் ஆலயத் தேரும் மிகப் பிரசித்தமானது. வருடாவருடம் புதிதாகச் செய்யப்படுவது.
ரதம் செலுத்துவதில் சிறந்தோரை அதிரதன்' என்றும், 'மகாரதன்' என்றும் இதிகாசங்கள் சிறப்பிக்கும். ஸ்ரீ இராம பிரானின் தந்தை தசரதன் என்ற பெயர் பெற்றதும் இக்காரணம் பற்றியே யாகும்.
கஜ ரத துரக பதாதி என்ற சதுரங்கச் சேனைகளில் ரதம் என்ற தேரும் இடம் பெறுகின்றது. சிந்துவெளிக் காலத்திலே தேரூரும் மக்கட் குழுமமொன்று இருந்த தாக மேலைத்தேய அறிஞர்களான ஏ.எல். பசாம் போன்றோர் கூறியுள்ளனர்.
வேதகாலத்தில் பூஷனால் செலுத்தப் பெறும் சூரிய பகவானுடைய தேர் மற்றும் ஐஸ்வினி தேவர்களுடைய தேர்கள் பற்றிய செய்திகளைக் காணமுடியும். தைத்திரிய சம்ஹிதை யாகமண்டபங்கள் இரத ஸ்ரூப் மாக அமைக்கப்பட்டதாகக் கூறுகிறது. கடலில் செல்லும் நீராவிப் படகுகள் அக்கினி
அருள் ஒளி

ரதம் என்று அழைக்கப்பட்டன என்ற கருத்தும் உண்டு. பிரம்மாவின் தேரை வைராஜம் என்றும் வருணனின் தேரை மானிகம் என்றும் இந்திரனின் தேரை திரிவிஷ்டபம் என்றும் வழங்குவதாகக்
குறிப்பிடப்படு கின்றது.
புராண மரபில் சிவபெருமான் திரி புரங்களை எரிக்க எழுந்தருளிய தேருக்கும் இராவணன் மற்றும் குபேரனுடைய புஷ்பக விமானம் என்ற ஆகாசரதத்திற்கும் அதிக முதன்மை உண்டு.
திருநாவுக்கரசர் பெருமான் தமது தேவாரத்தில்
வருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினொட்டெட்டு மற்றும் கரக்கோயில் கடிபொழில் சூழ் ஞாழற்கோயில் கருப்பறியற் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில் திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீருமன்றே
என்று குறிப்பிடும்போது கூறும் கரக்கோயில் என்பது தேர் வடிவில் செய்யப்படும் கோயிலாகும் என்பது இராமநாதபுரம் கலாசேகரி ஆதம்பித்துரை ஸ்தபதியின் கருத்தாகும். இந்த வகையில் கும்பகோணம் ஆராவமுதப் பெருமான் கோயிலும் திருக்கடம்பூர் மற்றும் திருவதிகை ஆகிய கோயில்களிலும் மூலாலயம் தேர் வடிவில் அமைக்கப்பெற்றிருப்பதையும் காணலாம். மாமல்லபுரம் பஞ்சபாண்டவர் இரதங்கள் என்பனவும் இவ்வகையில் நோக்கத்தக்கன.
தற்போது தங்க வெள்ளி ரதங்களும் ஆலயங்களில் உள்ளன. ஆயினும் இர
27 -
ஆவணி மாத மலர் - 2014

Page 30
தோற்சவத்திற்கு மரத்தாலான சிற்ப வேலைப் பாடுகளுடன் கூடிய மகா ரதமே பயன் படுத்தப்படுகின்றது. காரணம் காமிகம் முதலிய ஆகமங்களிலும் வைஷ்ணவாகமங் களிலும் குமார தந்திரத்திலும் தேர்கள் பற்றிய செய்திகளை அவதானிக்கமுடியும். ரதப் பரீட்சை என்பது 64 கலைகளில் ஒன் றாகக் கூறப்படுவதும் கவனிக்கத்தக்கது.
தேரின் பாகங்கள்
தேரின் சில்லில் இருந்து இறைவன் எழுந்தருளும் பீடம் வரையான பகுதி 3 பிரிவாகவோ ஐந்து பிரிவாகவோ வகுக்கப் பட்டு சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இறைவன் காட்சி தரும் பகுதிக்கு மேலுள்ள சிகரம் தமிழகத்தில் ஆண்டு தோறும் வண்ணத் துணிகளால் அலங்கரிக்கப்பட்டு மூலாலாய விமானத்தின் மறு வடிவம் போல அழகுறக் காட்சி தரும். இலங்கையில் இவ்வாறு வருடாந்தம் அமைக்காமல் நிரந் தரமாகவே மரக்கூட்டு வேலைப்பாடுகளால் மேற் தளத்தை அமைக்கும் வழக்கமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தேரை ஆக்க வல்லவர் ஸ்தபதி எனப் படுவார். திராவிட உத்தர மட்டம் மற்றும் முக பத்திரம் முதலிய கலை மரபுகள் இவற்றுக்கு உண்டு. பார்விதானம், உப்பீடம், அதிஷ் டானம், கமலாகார பண்டிகை, நராசன மட்டம், தேவாசனமட்டம், உபசித்தூர் மட்டம் போன்ற அங்கங்கள் இறைவனின் இருக்கைப் பகுதிக்குக் கீழும், இருக்கைப் பகுதியில் தேர்ச்சாரதி தேர்க்குதிரைகள் மற்றும் பவளக்கால்களும் மணி மண்டபமும் மேல் விதானம் யாழிகளாலும் சிம்மங்களாலும் தாங்கப் பெறுவதாய் முக பத்திரமடக்கை முதலிய அம்சங்களுடனும் அமைக்கப்படு வதைக் காணலாம்.
அருள் ஒளி

இவற்றை தமிழ் இலக்கண இலக்கியங் களில் முறையே தேரின் அச்சிலிருந்து பீடம் வரையான பாகங்களை ஆரக்கால் உருள் (சில்லு - சக்கரம்). கிடுகு (தேர்த் தட்டைச் சுற்றி அமைக்கப்படும் மரச்சட்டகம் - நிகண்டு), என்றெல்லாம் அழைப்பர். பீடப் பகுதியில் உள்ள தாமரை மொட்டு வடிவில் உள்ள அமைப்பை கூவிரம் என்றும், தேரின் நுகக்காலையும் சிகரத்தையும் இணைக்கும் பகுதியை கொடிஞ்சி என்றும் தேரின் வெளிப்பாகத்து நீண்ட மேல் வளைவை கொடுங்கை என்றும் தேரை அலங்கரிக்கக் கட்டும் சீலையை தேர்ச்சீலை என்றும், தேரின் நடுவிட்டம், தேர்த்தட்டு அல்லது தேர்த்தளம் என்றும் சில நிகண்டுகளில் நாப்பண் என்றும் அழைப்பர்.
தேரின் மேற்றட்டைச் சுற்றியுள்ள மரக்கைப்பிடிச் சுவர் பாகர் என்றும், தேரின் நடுவிலுள்ள பீடம் பார் என்றும், வேதிகை என்றும், தேரில் ஏறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேடையை பிரம்பு அல்லது தேர்முட்டி என்றும் அழைப்பர். இதை வடமொழியில் 'ரதாரோஹண மண்டபம்' என்பதும் குறிப்பிடவேண்டியது. இதுபோலவே தேர்ச்சில்லை தேர்வட்டை என்றும் குறிப்பிடப்படுகின்றது. தேரோட்டு பவரை தேர்ப்பாகன் என்றும் தேர் வலவன் என்றும் கூறும் வழக்கம் உள்ளது.
தேர் : சைவசித்தாந்த விளக்கம்
மந்திர கேசரி மலைகள் அச்சு, சூரிய சந்திரர் சில்லுகள், ஷட்ருதுக்கள் சந்திகள், 14 உலகங்கள் தட்டுகள், ஆகாச ஆசனம், நதிகள் கொடிகள், மோட்ச உலகம் மேல் விரிவு, யாகங்கள் சட்டம், நாள், திதி நட்சத்திரம் போன்றன குறுக்கு மரங்கள், அஷ்டபர்வதங்கள் தூண்கள், அஷ்ட
28 -
ஆவணி மாத மலர் - 2014

Page 31
திக்கஜங்கள் தாங்கும் ஆதாரங்கள் : ஏழு கடல்கள் திரைச்சீலைகள், உபவேதங்கள் மணிகள், வாயுக்கள் படிகள், நால் வேதங்கள் குதிரைகள், உச்சிக்குடை பிரமமந்திரம், கலசம் சோடஷாந்தத்தானம் ஆக தேரானது சிவரூபம் என்கிறது சைவ சித்தாந்திகளின் கருத்து. அகோர சிவாச்சாரியார் பத்ததியின் அடிப்படையில் ரதப் பிரதிஷ்டா பத்ததி என்ற ஒரு கிரந்த நூலும் அபூர்வமாக வழக்கி லிருப்பதாகத் தெரி கிறது.
அதே போலவே தேர் பிண்டஸ்ரூபமாக: சக்கரங்கள் - தச வாயுக்கள், முதலாமடுக்கு - கீழ் அண்டம் அச்சு - மூலாதாரம் அதன் மேல் - சுவாதிட்டானம் அதன் மேல் - மணிபூரகம் - நாபித்தானம் பீடம் - அநாகதம் - ஹிருதயஸ்தானம் - பகவான் எழுந்தருளும் இடம் மேலே - விசுத்தி - கழுத்துப்பகுதி 32 குத்துக்கால்கள் - 32 தத்துவங்கள் மேலே - ஆஞ்ஞா முடிப்பகுதி- பிரமமந்திரம், சஹஸ்ரகமலம் என்றும் விளக்குவர்.
தேர்த்திருவிழா தொடர்பான நடைமுறைகள்
பொதுவாக இறைவனை நோக்கி ஆலயத்திற்கு மக்கள் வருவதே வழக்கம். ஆனால் தேர்த்திருவிழாவில் மக்களை இறைவன் வருவதை அவதானிக்கலாம். கி.பி. 5ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த சீன யாத்திரிகனான பாஹியன் என்பவனும் தனது குறிப்பில் இத்தேர்
அருள் ஒளி
- 2

விழா பற்றிக் கூறியுள்ளான். சோழர் காலக் கல்வெட்டுக்கள் பலவற்றிலும் தேர்த்திருவிழா பற்றிக் கூறுப்பட்டுள்ளதை யும் அறிய முடிகின்றது.
கோயில் தேர்த் திருவிழாவில் குழந்தை களின் மகிழ்ச்சிக்காக அவர்களுக்குப் பெற்றோர் வழங்கும் காசினை தேர்க்காசு என்று வழங்குவதன் ஊடாக ஆலயத் தேர்விழா ஒரு பண்டிகையாகக் கொண் பாடப்பட்டு வந்துள்ளதை அவதானிக்கலாம். இது போலவே தனது மாப்பிள்ளைக்கு இவ்விழாயொட்டி மாமனார் அளிக்கும் சன்மானம் தேரடிச் சம்பாவனை என்றும் கூறப்படும் தேரோடும் வீதியில் இடத்திற்கிடம் அதனை நிறுத்தி வைக்கவும், அதனைத் திசை திருப்பவும் தேர்ச்சில்லுக்கு முட்டுக் கட்டை இடுவர் இதனைச் சறுக்குக்கட்டை என்றும் கூறுவதுண்டு.
இதுபோலவே தேர்நிலைக்கு வந்து விட்டது என்பது ஒரு பெருங் காரியத்தை நிறைவு செய்ததைச் சொல்லாகப் பயன் படுத்தப்படுவதையும் அவதானிக்கலாம். ஸ்ரீவில்லிபுத்தூர் தேர் நிலைக்கு வர குறைந்தது இரண்டு மூன்று நாட்களி லிருந்து ஒரு வாரம் பத்து நாள் என் றெல்லாாம் ஆகி வந்த காலத்தில் தேரோடு கிளம்பி தெருவோடு நின்றாளாம் என்றே ஆண்டாளுக்கு ஒரு வாக்கிய வழக்கு உள்ளது.
நன்றி : நீர்வை மயூரகிரி சர்மா
இணையத்தளம்.
ஆவணி மாத மலர் - 2014

Page 32
நீள நினைர்
த
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று எல்லோரும் படித்திருக்கிறோம் இச்சொல்லை மாணவர்கள் சிறு பராயத்தில் மனனம் செய்வார்கள். இந்தத் தலைப்பிலே கட்டுரை எழுதுமாறு ஆசிரியர்கள், மாண வர்களை வலியுறுத்துவார்கள். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற உயர் கருத்தினை சமயத்தின் பேரால் எழுந்த சகல தத்துவங்களும் நன்கு விளக்குகின்றன. நாம் நல்லன செய்தால் நன்மையையே சந்திப் போம், தீயன செய்தால் என்றோ ஒரு நாள் அனுபவிப்போம்.
எனது சிறு பராயத்தில் மாலைப் பொழு திலே வயல் வெளிகளிலும் தோட்டங்களிலும் விளையாடும் வாய்ப்புக் கிட்டியது. ஒரு நாள் மாலைப்பொழுதில் தோட்டத்தில் விளையாடும் போது அருகேயிருந்த தென் னைமரப் பொந்திலிருந்து எதிர்பாராத விதமாக சில கிளிக் குஞ்சுகள் கீழே விழுந் தன. சிறகு முளைக்காத அந்தச் சிறிய குஞ்சு களை நானும் எனது நண்பர் களும் பிடித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு குஞ்சு வீதம் அவரவர் வீட்டக்குக் கொண்டு போனோம். எனது வீட்டிலே சிறிய கூட்டை ஆயத்தம் செய்து பிடித்துக்கொண்டு போன கிளிக் குஞ்சை அதில் அடைத்து வைத்தேன். எனது தாயாரும் தந்தையாரும் ஏசினார்கள். சின் னஞ்சிறிய கிளிக்குஞ்சைக் கொண்டுவந்து அடைத்து வைத்திருக்கிறாய், இந்தக் குஞ்சி னுடைய தாய் எவ்வளவு துன்பப்படும் தெரி யுமா? பிடித்த இடத்திலேயே கொண்டு போய் இந்தக் குஞ்சை விட்டுவிடு என்றார்கள்.
அருள் ஒளி

எது சொல்வேன் சஞ்சொற்செல்வர் லாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள்
நானோ கிளிக்குஞ்சை விடவில்லை. மறுநாள் அதே விளையாட்டிடம் சென்று சிறுவர்களாகிய நாம் கொண்டுபோன கிளிக்குஞ்சுகள் பற்றிச் சம்பாஷணை செய்தோம். பாவம் அந்தத் தாய்க்கிளி தன் குஞ்சுகளை நினைத்தது போலும். அதே தென்னைமரப் பொந்தின் அருகே அது காத்திருந்ததைக் கண்டோம். இரண் டாவது நாள் நண்பன் ஒருவன்தன் கிளிக் குஞ்சு இறந்துபோன செய்தியைச் சொன் னான். எந்தப் பழத்தைக் கொடுத்தாலும் கிளிக் குஞ்சுகள் உண்பதாக இல்லை. தாயை நினைத்து அந்தக் குஞ்சுகள் துன்பப்பட்டது உண்மை. மூன்றாவது நாள் என் வீட்டில் கூட்டிலே அடைத்து வைத்திருந்த கிளிக் குஞ்சோடு நான் நேரத்தைச் செலவு செய்து கொண்டிருந்தேன். அவ்வேளை, எனக்கு சிறுபராயத்தில் பாடம் சொல்லித்தந்த என்மீது அன்பு காட்டிய ஆசிரியர் வீட்டுக்கு வந்தார். அவர் யோகர் சுவாமிகளுடைய உயர்ந்த பக்தர், பிராமணக்குடும்பத்தைச் சார்ந் தவர். கணபதி ஐயர் ஸ்ரீராகவன் ஐயர் என்பது அவரது பெயர். வீட்டுக்கு வந்தவர் என்னை அழைத்தார். அப்போது என் தாயார் அங்கு வந்து விளையாடப்போன இடத்தில் கிளிக்குஞ்சு ஒன்றைக் கொண்டுவந்து கூட்டில் அடைத்து வைத்து 3 நாட்களாகக் கூட்டுக்கு அருகே நேரத்தைச் செலவு செய்கிறார். அவருக்குப் புத்தி சொல்லுங்கள் என்று கூறினார்.
என்னருகே வந்த ஆசிரியர் ஸ்ரீ ராகவன் ஐயர் அப்பப்பா சின்னக் கிளிக்
30 -
ஆவணி மாத மலர் - 2014

Page 33
குஞ்சு பாவம் இதைப் பிடித்த இடத்தில் கொண்டுபோய் விடவேண்டும் என வலி யுறுத்தினார். "நான் மட்டுமல்ல, நண்பர் களும் ஒவ்வொரு கிளிக் குஞ்சுகளைப் பிடித்து வைத்திருக்கிறார்கள்" என்று சொன்னேன். இது பாவத்திற்குரிய செயல். ஒரு குற்றமும் அறியாத கிளிக்குஞ்சு தாயின் அரவணைப்பில் வாழவேண்டிய காலத்தில் ஏன் தனியாகப் பிரித்து வைத்தீர்கள்? ஒரு அப்பாவி உயிர் ஊசலாடுகிறது. ஒரு தாயின் அருகில் இக்குஞ்சு போய்ச் சேர்ந்தால் தாயும் மகிழ்ச்சியடையும் குரு களும் வாழ்த்தும் என்றார் ஆசிரியர்.
அவர் இன்னும் எத்தனையோ இரக்க முள்ள கதைகளை எடுத்துச் சொன்னார். எனது சிறு பராயத்துக் குறும்புத்தனத்தால் கிளிக்குஞ்சைக் கொண்டுபோய் விடு வதற்கு எனக்கு மனம் வரவில்லை. ஆசிரியர் ஸ்ரீராகவன் ஐயர் அன்று எனக்கு இறுதியாகச் சொன்ன வார்த்தை ஒரு நாளைக்கு நீயும் கூட்டில் தனியாக இருக்கப் போகிறாய் என்பதாகும். மறு நாள் வழமைபோல நான் பாடசாலைக்குச் சென்றிருந்தேன். என்னருகே அமர்ந்தி ருந்த ஒரு நண்பன் ஒரு வாரத்தின் பின்னர் அன்று வந்திருந்தான். தனது தந்தை கச்சதீவுக்குச் சென்று வந்தபோது இந்தியாவிலிருந்து அங்கு வந்தவரிட மிருந்து தொற்றிய கண்நோய் தங்கள் வீட்டில் அனைவரையும் பற்றிக்கொண்ட தாகவும் இதனாலேயே தான் ஒரு வாரகாலம் பாடசாலைக்கு வரவில்லை என்பதையும் வகுப்பு ஆசிரியருக்குச் சொல்லிவைத்தான். அவனுடைய கண்கள் முற்றாகக் குணமடையாத நிலையில் காணப்பட்டது. அவனுக்கு அருகிலிருந்து
அருள் ஒளி
- 31

நான் பாடசாலை வகுப்பு முடித்து
வீட்டுக்குச் சென்றுவிட்டேன்.
அன்றைய தினம் மாலை நேரம் என் கண்கள் சிவக்கத் தொடங்கின. பொல் லாத கண்நோயை நான் கொண்டு வந்து விட்டேன் என்பதை அறிந்து எனது தாயார் பெரிதும் பதற்றப்பட்டார். உடனடியாகவே என்னைத் தனிமைப்படுத்த நினைத்தவ ராக அறையொன்றுக்குள் அழைத்துச் சென்று பூட்டிவைத்து விட்டார். என் தாயார் கண்டிப்பான ஒரு ஆசிரியராக விளங்கினார். எனக்கு முன்னாலும்பின் னாலும் பிறந்த சகோதர, சகோதரிகள் கண்நோய்க்கு ஆளாகி பாடசாலைக்குப் போகாது நிற்கக்கூடாது என்பதற்காகவே அறையில் தனித்து இருக்கவேண்டுமென அவர் கட்டளையிட்டிருந்தார். தனியாக அறையில் கண் வேதனையோடு அழுது கொண்டிருந்தேன் . விடிந்தபோது எனது கண்கள் மேலும் பாதிக்கப்பட்டு திறக்க முடியாது அவலப்பட்டேன். எழுபதுகளில் கச்சதீவு யாத்திரிகர் சந்தித்த கண்நோய் மிகவும் பொல்லாதது. அதை அனுபவித்த பலரும் உணர்வர். தனியாக அறையில் தடுத்து வைக்கப்பட்ட நான் மிகவும் கஷ்டப்பட்டேன். எனக்கு முன்னால் பிறந்த எனது சகோதரன் ஜன்னல் ஓரமாக நின்று "நாங்கள் பலாப்பழம் சாப்பிடு கிறோம்" என்று சொல்லிச் சொல்லிச் சாப்பிட்டார்.
அன்று மாலை ஆசிரியர் ஸ்ரீ ராகவன் ஐயர் வீட்டக்கு வந்து என்னை அழைத்தார். எனது தாயார் என் நிலைமையைக் கூறி அறையில் பூட்டி வைத்திருப்பதாகச் சொன்னார். ஜன்னல் வழியாக என்னை அழைத்த ஆசிரியர் மிகவும் கவலைப் பட்டு ஒன்றும் அறியாத கிளிக்குஞ்சைக்
ஆவணி மாத மலர் - 2014

Page 34
கூட்டில் நிறுத்தினாய் நீயும் இப்போது தனியாகக் கூட்டில் இருக்கிறாய்” என்றார்.
அந்தக் கிளிக்குஞ்சு தென்னைமரப் பொந்து அருகே கொண்டு சென்று விடப் பட்டது. "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்ற 'கருத்து நன்கு விளங் கியது. நம் முன்னோர்கள் கருணை இரக்கம் கொண்டவர்கள். எந்தவொரு உயிருக்கும் தீங்கு விளைவிக்கக்கூடாது என் பதை எமக்கு எவ்வாறெல்லாம் போதித்தார்கள். இன்று நாம் எமது பிள்ளை களுக்குப் பல்வேறு உதாரணங்கள் கூறிப் பக்குவப்படுத்த வேண்டும். இல்லை யென்றால் அவர்கள் வாழ்வில் பல இன்னல்களைச் சந்திக்க நேரிடும்.
ஆசிரியர் ஸ்ரீராகவன் ஐயர் சிறந்த கல்விமான். எனது சிறு பராயத்தில் எவ் வளவோ விடயங்களைச் சொல்லித்
சிவபூமிகா தானங்களில் சிறந்த தான. வாருங்கள். உங்கள் இறப்புக் ஒருவருக்கு ஒளி கொடுக்க நீங் இப்புண்ணிய காரியத்திற்கு ஒப்
தொடர்பு
கலாநிதி ஆறு.திருமுருகன் 021 : 222 6550
அருள் ஒளி

தருவார். இறுதிக் காலத்தில் அவர் தனி மையில் வசித்தவர். அவருக்கு வேறு உற வினர்கள் யாரும் இல்லை. அவரது தாய், தந்தையர் இந்தியாவிலிருந்து சுன்னாகம் இராமநாதன் கல்லூரிக்கு ஆசிரியப் பணிக் காக வந்து உடுவிலில் நிரந்தரமாக வசித் தார்கள். ஸ்ரீராகவன் ஐயர் எம்.ஏ. பட்டதாரி. அவரது வீடு வளவு அவருடைய இறப்புக்குப் பின்பு புற்றுநோய் காப்பகத்துக்கு சிறியேன் கையளித்தேன். கேன் புற்றுநோய் காப்பகத்தில் இன்று பல நோயாளர்கள் ஆறுதல் அடைகிறார்கள். அவர் பறவைகள், மிருகங்கள் மீது காட்டிய இரக்கம் அவர் பெயரால் இன்று நோயினால் துடிக்கும் மனிதர்களுக்கு உதவும் காப்பக மாக மாறிவிட்டது. எங்கள் வாழ்க்கையில் நாம் நீள நினைந்து சிந்திக்க வேண்டிய இத்தகைய சம்பவங்கள் பலருக்கு உதவும் என்பதில் ஐயமில்லை.
நன்றி : தினக்குரல்
ன்தானசபை
மாக கண் தானத்தைச் செய்ய முன் குப் பின் பார்வையற்றிருக்கும் கள் உதவுங்கள். வாழும் போதே புதல் தாருங்கள்.
களுக்கு
கண் வைத்திய நிபுணர் Dr. ச. குகதாசன் 021 : 222 3645
32 -
ஆவணி மாத மலர் - 2014

Page 35
கவின் கலைக்கோ
போற்றப்பட்ட கலை துர்க்காதேவியின் திருத்தே
கவின் கலைக்கோர் கலாகேசரி என்று போற்றப்பட்ட கலைஞர் அ. தம்பித்துரை அவர்கள், திருநெல்வேலியில் 1932ஆம் ஆண்டின் பிரபல ஆண்டின் சிற்பாசிரியர் வி.ஆறுமுகத்தின் மூத்த புதல்வராகப் பிறந்தார். எஸ். ஆர். கனகசபையின் “வின்சர் ஆட் கிளப்”பில் சித்திரம் பயின்று 1954இல் சித்திர ஆசிரிய தராதரப் பத்திரப் பரீட்சையில் சித்தியடைந்தார்.
1955இல் மகாஜனக் கல்லூரியில் சித்திர ஆசிரிய நியமனம் பெற்றார். கலாகேசரி அவர்கள் 1955இலிருந்து 1994 இல் கால மாகும் வரை 39 ஆண்டுகள் குரும்பசிட்டி வாசியாகவே வாழ்ந்தவர். தனது சொந்த இடமாகக் குரும்பசிட்டியைக் கருதினார். குரும்பசிட்டியின் பொது வாழ்வில் தன்னை இணைத்துக்கொண்டார். குரும்பசிட்டி சன் மார்க்க சபையின் தலைவராக இருந்து இலக்கிய, சமய, கலைப்பணிகளைச் செய்தார்.
1968ம் ஆண்டு சித்திர வித்தியாதி காரியாக நியமனம் பெற்ற தம்பித்துரை அவர்கள் மாவட்டம் முழுவதுமே ஓவியக் கலையை முன்னெடுக்க முயன்றுழைத்தார். இலவசமாகத் தானே கற்பித்து ஊக்குவிப்புச் செய்வதுடன் சித்திரத்தைப் பல் கலைக் கழகப் பாடநெறியாக்க வேண்டுமென்று குரல் கொடுத்து வந்தார். அது இன்று வெற்றி தந்துள்ளது. 1964இல் தனது தந்தை யாரின் பெயரால் ஆறுமுகம் சிற்பாலயம் என்ற நிறுவனத்தைப் பதிவு செய்து சிற்பக் கலையை முன்னெடுத்தார். குரும்பசிட்டி அம்மன், நந்தாவில் அம்மன், பண்ணாகம் முருகமூர்த்தி, வண்ணார் பண்ணை விசு வேச விநாயகர், ஐயனார் ஆலயங்களின்
அருள் ஒளி

ரகலாகேசரி என்று
ஞர் அ. தம்பித்துரை கரை உருவாக்கிய கலைஞர்
சித்திரத் தேர்களை நிர்மாணித்தார். நந்தாவில் அம்மன் தேர் நிறுவிய புதுமை யைப் பாராட்டிக் "கலாகேசரி” என்னும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
1970களில் ஆரம்பத்தில் "குரும்பசிட்டி கலாகேசரி கலாலயம் என்ற நிறுவனத்தை அமைத்து அதன் பேரில் சுதுமலை அம்மன், குப்பிளான் கற்பக விநாயகர், மாத்தளை முத்துமாரியம்மன், தெல்லிப்பளை துர்க்கை யம்மன், புற்றளை விநாயகர், கொக்குவில் சிவசுப்பிரமணியர், கோண்டாவில் சிவபூத ராயர், சுன்னாகம் சிவன், இணுவில் செகராச சேகரப் பிள்ளையார் ஆலயங்கள் முத லானவற்றை தனித் தனி கலை அம்சங்கள் நுணுக்கங்களோடு தேர்களை நியமித்தார். இவற்றோடு மஞ்ஜம், சப்பரம், கேடகம், வாகனம் போன்றவற்றை வகை தொகை யாகச் செய்து ஆலயங்களுக்கு வழங்கினார். பாடசாலையில் சிறுவர் சித்திரத்தை ஊக்கு விப்பதுடன், வர்ண காகித ஒட்டு வேலைகள், களிமண், மணல், பசை, மரம், சிளகுச் சித்திரங்களை ஆசிரியர்களுக்கு அறிமுகம் செய்தார். பரம்பரை சிற்ப ஓவியக் கலைஞராகத் திகழ்ந்தார். கல்வியுலகில் தன்னிகரற்றவராக விளங்கினார்.
இவருக்கு வழங்கப்பட்ட விருதுகள் கலாகேசரி, கலாபூஷணம், இராஜஸ்தபதி, இரதச்சக்கரவர்த்தி, சிற்பக்கலாதிலகம் போன்றனவாகும். சிற்பம், சித்திரம் சம்பந்த மாக பல நூல்களையும் எழுதினார். இரசிக மணி கனகசெந்திநாதன் இவரைப்பற்றி கவின் கலைக்கோர் கலாகேசரி என்னும் நூலை எழுதியுள்ளார்.
நன்றி : குரும்பசிட்டி இணையம்
3 -
ஆவணி மாத மலர் - 2014

Page 36
அமரர் தணிகா. கர்மவீரர் திரு.தன
ஆடிக் கடைசிச் செல்க அம்பாளின் திருவடி “எல்லாம் வெற்றி"
இன்று மெள சிவத்தமிழ்ச்செ
தெல்லிப்பழை அருள்மிகு ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் இணைச் செய லாளரில் ஒருவரான திரு.கந்தையா தணிகாசலத்தின் மறைவு குறித்து எமது தேவஸ்தானம் ஆழ்ந்த கவலையடைந் துள்ளது. தனது ஆளுமையையும், ஆற்றலை யும் கொண்டு பதினெட்டு வருடம் கர்ம வீரராகப் பணிபுரிந்தவர் இப் பெரியார். அவருடைய பதவிக் காலத்திலே இவ்வா லயம் அடைந்த முன்னேற்றங்கள் அளப்பில. திருப்பணிகள், கோயில் ஒழுங்குகள், நிதி சேகரித்தல், கட்டுப்பாட்டை நிலவச் செய்தல், தலைமைப்பீடத்தின் மதிப்புக்கு முழு ஆதரவாக இருந்து கருமமாற்றல் ஆகிய அனைத்திலும் திரு.தணிகாசலம் அவர்கள் முதன்மையான பங்கெடுத்துக் கொண்டார். சித்திரத்தேர், இராசகோபுரம், கலியாண மண்டபம், தீர்த்தத் தடாகம், மகளிர் இல்லம் அனைத்தும் இவர் செயலாளராகப் பணி புரிந்த காலத்திலேயே உருவாக்கப் பட்டவை. எம்மைப் போல் இருந்தும், நடந்தும் பணி செய்தவரல்லர் இவர். ஓடி ஓடிப் பணி செய்த உத்தமர்; உறங்காமல் பணி செய்த தொண்டர்; கண்ணியமாகப் பணி செய்த புண்ணியவாளர்; மனவுறுதி யோடு அம்பாளை முன்வைத்து ஆலயப் பணிகளை மேலோங்கச் செய்த அம்பாள்
அடித்தொண்டர்.
அருள் ஒளி

சலம் நினைவுகள் விகாசலம் அவர்கள் பாய் (15-8-89) அன்று யை அடைந்து விட்டார் என்று ஒலிக்கும் நா னமாகிவிட்டது. ல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் தலைவர் ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்.
நான் இப்பெரியாரை "மாமா" என்று அன்புடன் அழைப்பேன். தேவஸ்தானத்தில் அனைவரும் "மாமா" என்றே அழைப்பது வழக்கம். எல்லோர்க்கும் அவர் இனியவர்; எவருடைய இன்பதுன்ப நிகழ்ச்சியிலும் முன்னின்று பங்கு கொள்வார். எந்த ஒரு கருமத்தையும் அவரிடம் ஒப்படைத்து விட்டால் முடிவில் அனைவரும் வியக்கத் தக்கதாக நிறை வேற்றி முடிப்பார். பேரும் புகழும் தலைவரென்ற ரீதியில் எனக்குப் பிரமாதமாகக் கிடைக்கும். ஆனால் இதற்குச் சூத்திரதாரி அவர் தான் என்பதை யும் அறியாதவர் களில்லை. 1981ஆம் ஆண்டு சென்னை சைவசித்தாந்த மகா சமாசத்தின் எழுபத்தைந்தாம் ஆண்டு பவள் விழா எங்கள் ஆலய முன்றிலில் நடைபெற்றபோது பல்லோரும் வியக்கத் தக்க முறையில் மூன்றுநாள் நிகழ்ச்சி களையும் சிறப்புற நடைபெற அச்சாணி யாக விளங்கியவர் இப்பெரியார். தமிழ் நாட்டிலிருந்து மகா நாட்டுக்கு வருகைதந்த பேராளர்கள் முந்நூறு பேரையும் தலை மன்னார் துறைமுகத்திற்குச் சென்று வரவேற்றது தொடக்கம் ஒரு வாரகால நிகழ்ச்சிகளின் பின் வழியனுப்பு வைபவம் வரை இனிதாகவும் எல்லார் உள்ளத்திலும் இடம்பெறக்கூடியதாகவும் நடத்தி வெற்றி கண்டவர் இப்பெரியார்.
34
ஆவணி மாத மலர் - 2014

Page 37
"எல்லாம் வெற்றி என்பது இவருடைய தாரகமந்திரம். அது பூரணமாக எமது தேவஸ்தானத்துக்குப் பொருத்தமாக அமைந்தது. ஆறு பிள்ளைகளுக்குத் தந்தை யாகவும் அடிசிற்கினிய அன்புடை மனை யாளைப் பெற்றவராகவும் சிறந்த ஒரு இல்லறத்தானாகவும் வாழ்ந்த போதிலும் இலெளகீகமும் இல்லற சுகமும் இவரை மூழ்கடிக்கவில்லை. அம்பாளின் திருவருள் தான் இவரை வளைத்துக் கொண்டது என்று
கூறினால் அது முற்றிலும் பொருந்தும்.
அமரர் அவர்களின் இறுதி ஆசை தெல்லிப்பழை துர்க்காபுரம் மக்களின் அந்திமக்கிரியை நடைபெற இருக்கும் சுடுகாட்டைத் திருத்தி மண்டபம், கிணறு, சுற்றுமதில் ஆகியவற்றை நல்லபடி
எங்கள் இத
அமரர் திரு.கந்தையா தணிகாசலம் அவர்களின் மறைவு தெல்லிப்பழை துர்க்காதேவி பக்தர்களுக்கு மிகவும் துயரத்தை அளித்துள்ளது. 1970ம் ஆண்டு தொடக்கம் இற்றை வரை அம்பாள் தொண்டில் திளைத்த பெருமகனார் இன்று இல்லை என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அமரர் அவர்கள் தமது 70 ஆண்டு வாழ்க்கையில் பெரும் பகுதியை பொதுத் தொண்டில் ஈடுபட்டு உழைத்த பெருமைக் குரியவர். அரசாங்க சேவையில் நீர்ப் பாசனத் திணைக்களத்தில் களஞ்சியப்
அருள் ஒளி
- 35

8
அமைத்து இறுதியாத்திரை செய்பவர் களின் ஆத்ம திருப்தியை ஏற்படுத்த வேண்டும் என்பதே. ஓராண்டுகாலம் நோய் வாய்ப்பட்டிருந்தமையால் இந்த விருப்பம் நிறைவேற்ற முடியவில்லை. என்றாலும் அவருடைய கனவைக் கூடிய கெதியில் நனவாக்க எமது தேவஸ்தானமும் குறிப்பிட்ட சுடுகாட்டு அபிவிருத்திச் சங்கமும் நடவடிக்கை எடுக்கும் என்பது எமது நம்பிக்கை. மேலும் அம்பாள் அடித்தொண்டர் திரு.தணிகாசலம் ஐயா அவர்களின் திருநாமம் என்றும் நின்று நிலவுக எனப் பிரார்த்தித்து அமைகின்றேன். அவர்கள் குடும்பத்துக்கு எமது தேவஸ் தானத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறேன்.
ய அஞ்சலி
சு. சிவவாகீசர் அவர்கள்
பொறுப்பாளராக நற்சேவையாற்றி எல் லோரிடமும் நன்மதிப்பைப் பெற்றதுடன், இளமை தொடக்கம் தமது கிராமம், உற்றார், உறவினர் மற்றும் நண்பர் களுக்குத் தாமாகவே இயன்ற உதவி களைச் செய்தமை நாம் எல்லோரும்
அறிந்ததொன்றாகும்.
அவர் துர்க்கை அம்பாள் தேவஸ்தான நிர்வாக சபை உறுப்பினராக 1970ம் ஆண்டு நியமிக்கப்பட்ட சமயத்தில் அம்பாள் ஆலயம் புதுவிக்கும் பணிகள் ஒவ்வொன்றாக நிறைவேறி வந்த கால மாகும். திருப்பணிக்குரிய நிதி பற்றாக்
ஆவணி மாத மலர் - 2014

Page 38
குறை நிலவிய காலமும் அதுவாகும். அதனால் அம்பாள் பக்தர்களைத் திருப் பணிகளில் ஈடுபடுத்த நாம் வீடு வீடாகச் சென்று நிதி சேகரிக்க நேரிட்டது. இச் சமயத்தில் அமரர் தணிகாசலம் அவர்கள் நிதிசேகரிக்கும் பணியில் விடாமுயற்சி யுடன் ஈடுபட்டு வெற்றி ஈட்டினார். அங்ஙனம் சேகரிக்கப்பட்ட நிதியைக் கொண்டு திருப்பணிகளை நிறைவேற்று வதில் முன்னின்று உழைத்தார். அவர் இணைச் செயலாளராகச் சேவையாற்றிய காலப்பகுதியில் அம்பாள் ஆலயம் திருப் பொலிவுடன் மிளிர்வது அவருக்கு ஆத்ம திருப்தியை அளித்திருக்குமென்பது எமது நம்பிக்கை.
துர்க்காபுரம் மகளிர் இல்லம் தேவஸ் தான ஆதரவில் 1982 ஆம் ஆண்டு ஆரம் பிக்கப்பட்ட சமயம் தொடக்கம் அமரர் அவர்கள் அங்கு வதியும் பிள்ளைகளின் பராமரிப்புக்கு துர்க்கா துரந்தரி அம்மை யார் அவர்களுக்கு உறுதுணையாக இயற்றிய பணிகளை நாம் என்றும் நினைவு கூரக் கடப்பாடுடையோம்.
மெளனத்தின் பலன் பிரார்த்தனை பிரார்த்தனையின் பலன் நம்பிக்கை நம்பிக்கையின் பலன் சேவை சேவையின் பலன் சமாதானம்
- அன்னை தெரேசா
அருள் ஒளி

1987ஆம் ஆண்டு நடுப்பகுதியில் நாட்டின் இனக்கலவர வன்செயல்களில் சிக்கி அகதிகளாகத் தேவஸ்தானத்தில் தஞ்சம் புகுந்த மக்களுக்கு துயர் துடைக்கும் பணியை அவர் பொறுப்பேற்று தானும் தேவஸ்தானத்தில் தங்கியிருந்து ஆற்றிய அரும்பெரும் சேவையை நன்றி உணர் வுடன் நினைக்கப்பாலது.
இன்று தேவஸ்தான சூழலில் உள்ள நிழல் மரங்களும் பயன்தரு மரங்களும் கம்பீரமாக வளர்ந்து காட்சியளிப்பது அவர் அவற்றை நாட்ட எடுத்த பெரு முயற்சியை அம்மரங்களே நினைவூட்டிய வண்ணம் இருக்கின்றன.
காயம்
இங்ஙனம் துர்க்கை அம்பாள் தொண்டில் தீவிரமாக ஈடுபட்ட கர்மவீரன் மறைவு எமக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் அவரின் குடும்பம் இன் பந்துக்கள் எல்லோருக்கும் தர்மகர்த்தா சபையின் சார்பில் எமது ஆழ்ந்த அனு தாபத்தைத் தெரிவிப்பதுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல துர்க்கை அம்பாளைப் பிரார்த்திக் கின்றோம்.
மகாபாரதம் கூறும் வெட்டித்தள்ள வேண்டியவை
1.
உடம்பு உண்மை என்னும் எண்ணம் 2. சந்தேகம். 3. பயன்கருதிச் செய்யும் விரதங்கள். 4. புலன் அனுபவிக்கும் விஷய விருப்பம். 5. கோபம்
- நெ.இராமன்
B6 -
ஆவணி மாத மலர் - 2014

Page 39
எமது தேவஸ்தானத் அமரர் ச.தணிகாசலம் பூ
88aa”。台”。
靈
அருள் ஒளி

நதில் அமைக்கப்பட்ட
ஞ்சோலை திறப்புவிழா
ஆவணி மாத மலர் - 2014

Page 40
அருள் ஒளி

38 -
ஆவணி மாத மலர் - 2014

Page 41
தணிகாசலம்
அமரர் ச.த (செயலாளர் ஸ்ரீ துர்க்காதே
அவரது மனைவி திருமதி.
அமைக்கப்பெற்று 1
' கலாநிதி ஆறு (தலைவர் ஸ்ரீ துர்க்கா 'அவர்களால் திறந்து
பEA
அருள் ஒளி

பூஞ்சோலை ணிகாசலம் 1 தேவஸ்தானம்) நினைவாக புவனேஸ்வரி அவர்களால் 2.08.2014 அன்று 1 திருமுருகன் தேவி தேவஸ்தானம்) 1 வைக்கப்பெற்றது.
ஆவணி மாத மலர் - 2014

Page 42
அருள் ஒளி சி அமரர் தணிகாசலம் திருமதி நந்தினி கமல்
அருள் ஒளி

றப்பு மலரினை
அவர்களின் புதல்வி லநாதன் பெறுகிறார்.
40 -
ஆவணி மாத மலர் - 2014

Page 43
ஆவணித் திங்க
ஆவணித் திங்களருள் ஒ6
அன்னையருள் ஆன் தேவிபுகழ் மாலைபல பாடு
தெய்வீகப் பேரொளி சங்குசக் கரம்வில் வாள்க
பொங்கும் அபயமது அங்கை கூப்பித்தொழும்.
ஓடிநலம் காட்டில வெற்றித்திர சூலிதுர்க்கை
வேதனையாம் தீயில் சுற்றியெமை வாட்டும் தூய
சுந்தரநல் நிலையம் தேவியெமை யாளும்தெல்
தேசவிளக் காகியை ஆவித்துணையெனவே ஆ
ஆதிசக்தி துர்க்கை கைலாய வாகனத்தில் ஏறி
கண்மலரில் தன்னரு சைலமெல்லாம் சுற்றிநபா
தன்னடியார் படுதுய வேட்டையன வேட்பைபல
வேதனைகள் யானை இப்படமுடன் சப்பரத்தில் ஏறி
இன்னருளைச் சிந்த அன்னைமணித் தேரினிலே
அன்பர்வம்தொட்டி தன்னருளே சிந்தும் ஓணர்
தன்னுடனே தானும் ஐந்தொழிலின் மகத்துவமே
அன்னைதுர்க்கை வ சிந்தை கனியச்சொல்லும்
சித்தமதில் வந்துமய
அருள் ஒளி 2

4.4 சிக்கந்தக்"
ளருள் ஒளி பாடும்! D ரீ பாடும் லயத்தில் கொடியேறும் நம் பாடும் ஈயே எங்கும் கூடும் சூலம்
ற் காட்டிவருவாள் அடியார்துயரம் பமைக் காத்திடுவாள்
புகழ்பட னையே அணைத்தருள்வாள்
ம் நிலையோட்டி நளிக் காத்திடுவாள் கலி யூரமர்ந்தாள் எளி கூப்டிநிற்பாய்
டிவருவாள் புகழ்பாடிஹகிழ்வீர்
வருவாள் களைக் காட்டிவருவாள் » ஆடிவருவாள் ரம் நீக்கியருள்வாள்
ஆடிவருவாள் வயுமே நீக்கியருள்வாள் இவருவாள் கநலம் கூட்டிடுவாள்
ஏறிவருவாள் ழுக்க ஆடிவருவாள் தென்னிலடியார் நீராடியருள்வாள் மகாட்டியருளும் பருந்திரு விழாவினருமை சொல்லினருமை நள் ஒளிநலம் கூட்டும்.
சு. குகதேவன் !
தெல்லிப்பழை .-- 41 -
ஆவணி மாத மலர் - 2014

Page 44
துர்க்காதேவி
"கோயிலில்லாவூரில் குடியிருக்க வேண்டாம்" என்கின்ற அப்பர் சுவாமி அவர்களின் வாக்கிற்கிணங்க மனிதப் பிறவி பெற்ற நாம், எமது சூழலிலே ஆலயம் அமைத்து வழிபாடு செய்யவேண்டியது தலையாய கடப்பாடாகும். அந்த வகையிலே தெல்லியூரிலே உழகுடைப்பதியிலே அம்பிகையின் அருட்கடாட்சத்தினைப் பெற்று வாழும் நிலை கிடைத்ததனை நினைந்து என் மனம் நித்தம் உவகை கொள்கின்றது. ஆம் அன்னை சிவத்தமிழ்ச் செல்வி அவர்களது அரும்பணியினால் உருவாக்கப்பட்ட துர்க்காபுரம் மகளிர் இல்லத்திலிருந்து கல்வி கற்று இன்று யாழ். பல்கலைக்கழகத்திலே கல்வி கற்றுக் கொண்டிருக்கும் பேற்றினை எட்டியுள்ளேன். இதற்குக் காரணம் அன்னையின் அருட் கடாட்சமும், அம்பிகையின் பணியினை அன்னைக்குப்பின் அற்புதமாகச் செயற் படுத்திக் கொண்டிக்கும் எமது இன்றைய தலைவர் செஞ்சொற் செல்வர் திரு.ஆறு. திருமுருகன் ஐயா அவர்களும், எம்மைச் சுற்றியுள்ள அன்பு நெஞ்சங்களும் தான்.
எமது ஆலயத்தின் பூர்வீகம் மிகவும் சிறப்பும் மகிமையும் வாய்ந்தது. ஆம் தலயாத்திரை புரிவதில் பக்தியும், சிரத்தை யும் உடையவராக விளங்கிய தெல்லிப் பழை உடையாராகவிருந்த பூதப்பிள்ளை கதிரேசு அவர்களால் பிரதிஷ்டை செய்யப் பட்டு சிறு குடிலாக அமைக்கப்பெற்றது. இதன் மகிமை சொல்லில் அடங்காதது. கதிர்காமர் காசி யாத்திரை முடித்து 1760ம் ஆண்டு யாழ்ப்பாணம் திரும்பும்போது அருள் ஒளி

பின் திருவருள்
செல்வி. பூ. செல்வதியம்மா
துர்க்காபுரம் மகளிர் இல்லம். துர்க்காதேவி இயந்திரமும், திருமுகக் கெண்டியும் கொணர்ந்தார். அவர் தனது ம், பிரயாணக் களைப்பினைப் போக்கிக் கொள்ள இலுப்பைத் தோப்பிலே அயர்ந்தார். அன்னையின் திருவருளினால் அங்கே அச் சக்கரத்தை ஸ்தாபிக்கும்படி ஓர் ஒளி, ஒலி வாக்காகக் கேட்டது. அதனை சிரமேற்கொண்ட கதிர்காமர் உடனே திறம்பட நிறைவேற்றினார். இங்கே நாகசர்ப்பங்கள் பூஜை நேரங்களில் வந்து போகும் திருநிலைகளும் காணப்பட்டன.
இதன் பின்னர் பலரது அயராத உழைப்பினாலும், அன்பு நிறை பக்தி யினாலும் இவ் ஆலயம் சிறந்து விளங்கியது. இதன் ஆரம்ப பராமரிப்பு நிலை அனைத்துமே தர்மகர்த்தா சபையினரிடம் தான் இருந்தது. ஆனால் காலப்போக்கில : மக்களோடு ஒன்றித்து பணியாற்ற வேண்டும் என்ற உயர்நிலை எண்ணப்பாங்கோடு - நிர்வாக சபை ஸ்தாபிக்கப்பட்டது. இது 18 அங்கத்தவர்களைக் கொண்ட குழு ஒன்றியமாக அமையப்பெற்றது. இதில் திரு.சே.தியாகராசா அவர்கள் முதற் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டமை இங்கே குறிப்பிடத்தக்கது. 1977ம் ஆண்டு ஆண்டளவிலே துர்க்கா துரந்தரி சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் ஆலய வளர்ச்சி அன்னையின் அற்புத ஸ்தாபன அன்பு மழலைகளின் பணியுடன் உன்னதம் பெற்றது. அன்னையிடம் பிரசங்கம் செய்யும் திறன் அபரீதமாக இருந்தது. அவரது பேச்சுக்குக் கட்டுப்படாத அன்பர்கள்
42 -
ஆவணி மாத மலர் - 2014

Page 45
எவருமேயில்லையென்றுதான் கூற வேண்டும். அன்னையின் முன் மறு பேச்சுக்குத் துணிந்தவர்கள் ஒரு சிலரே. அந்தளவு அவரிடம் பயபக்தி, மரியாதை என்பன இருந்தமை தெல்லியூர் அன்பர்கள் யாவரும் அறிந்ததே. அன்னையின் பணி அவர்களது பெருமை என்பனவற்றைச் சொன்னால் அது கட்டு அடங்காது. அவரால் உருவாக்கப்பட்ட துர்க்காபுரம் இன்று புதுப் பொலிவுடன் விளங்குகின்றது. அன்னை யவர்கள் 1982ம் ஆண்டு சைவப் பெண் பிள்ளைகள். அதிலும் குறிப்பாக அநாதர வற்ற பிள்ளைகளின் ஓர் உயர்நிலை ஸ்தானத்தினை எட்ட வைப்பதினை உயர் நோக்காகக் கொண்டு ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்" என்கின்ற அற்புத மகுட வாசகத்தினைக் கொண்டு இம் இல்லத்தினை உருவாக்கினார். அதிலிருந்து திறம்பட்ட பல்கலைக்கழக பட்டதாரிகளாக வும், கல்வியியற் கல்லூரி ஆசிரியர்களாகவும் இல்லத்தரசிகளாகவும் வெளியேறிய மாண விகள் எத்தனையோ பேர்.
அன்னையின் இத்துணை பணிகளும் அவரது எதிர்பாராத இழப்பினால் தடைப்பட்டு விடுமோ? என்று எண்ணி கலங்கிய அன்பர்கள் எத்தனையோ? 2008-06-15 நாம் ஓர் பொக்கிசத்தினை இழந்து பரிதவித்த நாள். அன்னையின் பணி இன்றும் திறம்பட நிலைத்து நிற்கும் வகையில் அன்னையின் பின் தலைமைப் பதவி வகித்து நிற்கும் ஆறு.திருமுருகன் ஐயா அவர்கள் ஆற்றி வருகின்றார். ஆல யத்தின் இன்றைய நிலை புதுப்பொலிவு, விஸ்தரிப்பு என்பனவும் 50 பெண் களுடன் மட்டும் விளங்கிய எமது துர்க்கா புரம் மகளிர் இல்லம் இன்று 140 பிள்ளை களுடனும் விளங்குகின்றது. புதிய
அருள் ஒளி

பிள்ளைகளின் சேர்க்கைக்காக "சிறுவர் இல்லம் அமைத்து வன்னிப் போரினால் அநாதரவாக்கப்பட்ட பெண் பிள்ளை களுக்கு உயர் நிலையினைக் காட்ட உதவியவர். ஐயா அவர்களது பணி பரந்து விரிந்தது. அதனைக் கூற வார்த்தைகள் போதாது. இன்றைய எமது ஆலய வளர்ச்சி, துர்க்காபுரம் மகளிர் இல்ல வளர்ச்சி என்பன சிறப்பாக அமைந்து காணப்படுவது யாவரும் நோக்கத்தக்கது. எமது இல்லத்திலிருந்து வெளியேறிய மூத்த சகோதரிகளில் வீடில்லாமல் திண் டாடும் பிள்ளைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் பணி மிகவும் போற்றுதற் குரியது. "யாருமற்ற எம்மாலும் வாழ முடியும்” என்று உலகிலே வாழ்வாங்கு வாழ்வதற்கு பணியாற்றிய இவர்கள் என்றும் போற்றுதற்குரியவர்களே. இவ் இரு ஸ்தாபனங்களும் உயர்நிலை பெற்று மென்மேலும் வளரவேண்டும். உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே” என்பது எத்துனை உண்மை வாசகம். மனித உருவில் வந்தவர்கள் அனைவரும் மனிதப் பிறவிகள் என்று கூறிவிடமுடியாது. அதற் குரிய பண்பாட்டோடு வாழவேண்டும் என்பது இயல்பு". ஆனால் அதனைக் கைவிட்டு, தொலைத்து வாழும் மனித மிருகங்கள் தான். இவ்வுலகிலே எண்ணி றைந்த இடப்பாகத்திலே வகிக்கின்றன. அந்நிலை மாறவேண்டும். இவ்வுலகு உய்யவேண்டும். மனித வாழ்வும், சமய வாழ்வும் ஒன்றே என்ற நிலை உருவாக வேண்டும். அம்பிகையின் அருட் கடாட்சம் அனைவருக்கும் கிடைத்திட வேண்டும். அன்போடு அருள்நிலை பெற்று அனை வரும் வாழவேண்டும் என்று இம்மகோற்சவ நன்நாளிலே எல்லாம்வல்ல துர்க்காதேவி யிடம் வேண்டிப் பிரார்த்திப் போமாக!?
3 -
ஆவணி மாத மலர் - 2014

Page 46
பிரார்த்தனை
பிராணனுக்
இப்பரந்த நிலவுலகின் கண்ணே மனிதப்பிறவி எடுத்த நாம் உண்மையில் பாக்கியசாலிகளே! ஏனெனில், மானிடப் பிறவி ஒரு மகத்தான உன்னத பிறவி. 'இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க் குமோ?' என்பதற்கிணங்க கிடைத்தற் கரிய மானிடப்பிறவி எடுத்த நாங்கள் அதனுடைய பயனைப் பெற்றுக் கொள் ளுதல் மிகவும் அவசியமாகும்.
இறைவனுடைய திருவடிப் பேற்றை அடைவதற்கும் அவனுடைய திருத்தாண்டவ ஆடலழகைக் காண்பதற்கும் இம்மனிதப் பிறவி தேவையே.
"குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறும் இனித்தமுடைய எடுத்த பொற்பாதமுங் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.
'அரிது அரிது மானிடராய்ப் பிறத்தரிது என்பது ஔவையார் திருவாக்கு. ஆகவே, நாம் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி அவனது நாமத்தை உச்சரிப்பதற்கு இப்பிறவியே உகந்தது. நற்றவாவுனை நான் மறக்கினுங் சொல்லும் நா நமச்சிவாயவே என்பதை எமது உள்ளங்களில் பதிக்க வேண்டும்.
இறைவா! உனை நான் மறந்து போய்விட்டாலும் என்னுடைய நாக்கு
அருள் ஒளி

ஒன்றே தான் கு ஆதாரம்
க. சாந்தரூபி துர்க்காபுரம் மகளிர் இல்லம்.
உனை மறக்காமல் 'சிவாயநம' என்று உச்சரித்துப் பழக்கப்பட்டுவிட்டது' என்பது சுந்தரர் கூற்று.
இறைநாம பஜனை மூலம் நாம் நம் மனத்தை ஒடுக்கி அடக்கி ஒருநிலைப் படுத்தலாம். கூட்டுப் பிரார்த்தனை, பஜனை மிகவும் சக்தி மிக்க சாதனங்கள். ஒற்றைக் கைக்கு ஓசை கிடையாது. இரண்டு கைகளும் சேர்ந்தால் தான் ஒலியெழுப்ப முடியும். ஒற்றுமையே பலம். இதை நினைவிற் கொள்ளுதல் வேண்டும். இன்றைய கால கட்டத்தில் எமது துன்ப துயரங்கள் அகலவும், இடுக்கண்கள் நீங்கவும் ஒரே வழி இறைநாம பஜனையே. "சேரவாரும் ஜெகத்தீரே" என அழைத்து ஓர் அன்பான வேண்டுகோள் விடுக்கின்றார் அப்பரடிகள். “சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன். நலந்தீங்கினும் உன்னை மறந்தறியேன் உன் நாமம் என் நாவில் மறந்தறியேன் என்பது அவர் தேவாரம்
"தலையே நீ வணங்காய்" என்று தொடங்கி வாய், கண், மூக்கு, காது, கை, கால், உடம்பு என்று இன்னோரன்ன பல உறுப்புக்களுக்கு தொண்டு செய்யுமாறு பணித்து வேலை கொடுக்கின்றார். அத்துடன் இது நாம் செய்த பாக்கியம் என்கிறார். இது அவரது பட்டறிவிலிருந்து வந்த உண்மை யாகும்.
“மனிதர்கள் இங்கே வம்மொன்று சொல்வேன். கனி தந்தால் உண்ணவும்
44 -
ஆவணி மாத மலர் - 2014

Page 47
வல்லீரே" என்று பரிவோடு அழைக் கின்றார். கனியிருப்பக் காய் கவர வேண்டாம். அதாவது "பாற்கலன் மேற் பூனை" என்று உமாபதி சிவாசாரியார் திருவருட்பயனில் குறிப்பிடப்பட்டது போன்று பால்நிறைய இருந்தும் அதைப் பருகாமல் கரப்பான் பூச்சியை நாடுகின்ற பூனைக்கு நம்மை ஒப்பிடுகின்றார். திருவருளில் வாழ்ந்து கொண்டே நாம் திருவருளை அறியாமல் ஆணவ முனைப்பில் அழுந்திக் கிடக்கின்றோம். அந்த ஆணவ முனைப்பு நீங்குவதற்கு ஆண்டவன் நினைப்பு வரல் வேண்டும்.
இன்றைய சிறு
தலை
நாம் சிறு பிராயத்திலிருந்து படித்து முன்னேறினால் நாம் எம் நாட்டின் தலை வர்கள் ஆகலாம் நம் பெற்றோர்கள் நம்மை எவ்வளவு துன்பத்தின் மத்தியில் எம்மை வளர்த்து படிக்க வைக்கிறார்கள். எமது தாய் எம்மைப் பத்து மாதம் கருவோடு எம்மைச் சுமந்து பெற்றெடுத்தார்கள். எமது தந்தை எம்மை நல்ல பிள்ளையாக வளர்க்க வேண்டும், அவர்களை ஒரு நாட்டின் தலைவர்கள் ஆக்க வேண்டுமென இரவு பகலாக உழைத்து எம்மைப் படிக்கவைத்து பாதுகாத்து வளர்க்கிறார். நாம் ஒரு சமுதாயத்தில் மதிக்கத்தக்கவராக இருக்க வேண்டும். மற்றவர்கள் எம்மைப் பார்த்து கேலி பண்ணுபவராக இருக்கக்கூடாது. நாம் எமது தாய் தந்தையினரின் கனவுகளை நனவாக்க வேண்டும். அது நாம் பெற்றோருக்குச் செய்கின்ற கடமை ஆகும். அருள் ஒளி
- 4

அப்போதுதான் நம்மை நாமே உணரமுடியும். பிறருடைய குற்றங்களை நாம் பெரிதுபடுத்துவதன் முன் எம்முடைய குற்றங்களை அறிந்து திருந்த வேண்டும். "உன் முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு. முதலில் அதனைக் கழுவுங்கள்' என்று பாடல் வரியும் உண்டு. மனம் பொறி வழி போகாது கட்டுப்படுவதற்கு ஆண்டவனே துணை புரிவான். மனத்தை முதலில் அடக்கப் பழக வேண்டும். அதற்குக் கூட்டுப் பிரார்த்தனையே நல்ல ஒளடதம்.
வர்கள் நாளைய வர்கள்
ஜெகராசா ருலக்சனா
தரம் 10, துர்க்காபுரம் மகளிர் இல்லம். ஒரு பிள்ளையைச் சமூகத்தில் மதிக் காமல் ஒதுக்கி வைத்தால் அந்தப் பிள்ளை தாய் தந்தையின் சொல்லுக்குக் கீழ்ப்படி யாமல் தான் நினைத்தபடி கண்ட கண்ட இடங்களுக்குச் சென்று கெட்ட எண்ணங் களை நினைத்து கெட்ட மாதிரி நடந்து கொண்டால் சமுதாயம் அவர்களை மதிக்காது. அவர்களை ஓர் ஓரமாய் ஒதுக்கித்தான் வைக்கும் என பிள்ளைகள் ஆகிய நாங்கள் எமது பெற்றோரின் கனவை நனவாக்கி அவர்களின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து நடந்து கொள்ள வேண்டும். "விளையும் பயிரை முளையில் தெரியும். ஒரு பிள்ளையின் பழக்கவழக்கத்தை அவரின் சிறுவயதிலே அறிந்து கொள்ளலாம் எனவே, மாணவராகிய நாங்கள் எமது பெற்றோரின் சொல்லுக்கு மதிப்பளித்து அவர்களின் ஆசையை நிறைவு செய்வோம்
5
ஆவணி மாத மலர் - 204

Page 48
கொடியேற்
சரித்திர பிரசித்திபெற்ற தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்றத் திருவிழா மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்றது. எல்லாம் வல்ல ஆதி பராசக்தி தெல்லிப்பழை பதியிலே துர்க்கையாக வீற்றிருந்து அருள்புரி கின்றாள்.
வழிபடும் அடியவர்களின் வல்வினை போக்கி நல்லருள் புரிந்திடும் துர்க்கை இன்று படைப்பதற்காக திருவீதி வலம் வந்து உயிர்களைப் படைக்கின்றாள். ஓர் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் இன்றைய கொடியேற்றம் படைத்தல் தொழிலைக் குறிப்பதாகும். அந்த வகையில் துர்க்கை அம்பிகை படைத்தல் தொழிலைக் காத்திட திருவீதி வலம் வருகின்றாள்.
தன்னை நாடிவரும் அடியவர்களுடைய துன்ப துயரங்களையெல்லாம் தனது அருட் கடாட்சத்தினால் நீக்கி அருளுகின்றாள். அன்னையின் மணியோசை அகிலம் எல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. அடியார்கள் அம்பிகையின் மீது அளவற்ற பக்தி கொண்டு பெருந்திரளாகத் தெல்லிப் பழையில் கூடுகின்றார்கள்.
"அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியாக" என்று அபிராமிப் பட்டர் அபிராமி அந்தாதியில் குறிப்பிட்டவாறு அழகொழுகு திருக்கோலத்துடன் அம்பிகை தெல்லிப்பழை பதியில் வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றாள். அருள் ஒளி

ற திருவிழா
செ. ஞானசவுந்தரி துர்க்காபுரம் மகளிர் இல்லம்.
இந்த அருளாட்சி செய்கின்ற அம்பிகையை வழிபட்டு அருளமுதைப் பெற்றுக்கொள் வதற்காக அடியவர்கள் பெருமளவில் தெல்லிப்பதிக்குச் செல்கின்றார்கள்.
வருடந்தோறும் நடைபெறும் மகோற் சவத்தில் பல்லாயிரக்கணக்கான அடி யார்கள் பங்குகொண்டு தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகின்றார்கள். அம்பிகையின் இவ்வருட மகோற்சவம் 27-08-2014இல் கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகவுள்ளது.
அடியார்கள் மகோற்சவ காலத்தில் தங்களின் பிரயாணக் கஷ்டத்தையும் பொருட்படுத்தாது தெல்லிப்பழைப் பகுதிக்குச் சென்றார்கள்.
'தனம் தரும் கல்வி தரும்
ஒரு நாளும் தளர்வறியா . மனம் தரும் தெய்வ வடிவும் தரும்
நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும்
அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங்குழலாள் அபிராமி
கடைக்கண்களே'
அம்பிகையின் கடைக்கண் பார்வை எல்லாவற்றையும் தரும் என அபிராமிப்பட்டர் அம்பிகையின் திருவுருவத்தின் மீது மனதைப் பறிகொடுத்து தம்மை மறந்து பாடியுள்ளார்.
06
46 -
ஆவணி மாத மலர் - 2014

Page 49
அம்பிகயிைன் அருள் நிறைவாகக் கிடைக்கும் என்று அன்னை அடியவர் களுக்கு அருள் பாலிக்கின்றாள். அன்னை அடியவர்களின் 'அரோகரா' சத்தம் வானத்தைத் தொட்டு நிற்கும் அடியவர்கள் தங்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்காக விடியற் காலை யிலே ஆலயத்திற்கு வந்து அங்கப்பிர தட்சணம் செய்கின்றார்கள். அம்பாள் வீதிகள் எல்லாம் சனசமுத்திரமாகவே காட்சியளிக்கும். அன்னையென அனு தினமும் அடியார்கள் போற்றுகின்ற அம்பிகையைத் தரிசி: கின்ற பல்லாயிரக் கணக்கான அடியார்களுக்கு அன்னதான சபையினர் அன்னதானம் வழங்கு
மழை வேண்டி
வானமழைபொழியவும் ஏற்கும்
வள்ளலே கருணை புரிவா வற்றாத நாடெங்கும் சிற்றாறு
வடிவில் நீபெருகி வருவாய் ஞானவள நாடுபசி தாகம் என
நல்லருள்புரிக விரைவாய் நஞ்செய்யும் புன்செய்யும்
பொன்செய்து முப்போகம்
மானமுடன் நல்லோர்கள் வால்
மண்மீது தருக புதிதாய் மன்னுயிர் அனைத்துமே இன்
வாழ ஒரு மார்க்கம் தருவ தேனருவி அனையதிருவாசக
தீவினை விலக்கும் அருகே தென்னன் பெருந்துறை மன்ன சிவயோக வல்லி உமையே!
அருள் ஒளி

கின்றார்கள். அம்பிகையின் அருளும் சுரந்து சுரக்கின்றது. ஒவ்வொரு வரு டமும் இச்சேவை சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
அருள்மழை பொழியும் அம்பிகை 'அரோகரா' என்ற ஒலி வானம் பிளக்க பஜனைக் கோஷ்டிகளின் ஒலி காதைப் பிளக்க அம்பிகை வீதி உலா வருகின்றாள். அற்புதமான அருட்காட்சியைக் காணலாம்.
"மண்ணில் நல்ல வண்ணம் வாழ தெல்லிப்பழை துர்க்கை நல்லருள் புரிவாளாக'
ஒரு வேண்டுதல்
பாம் நிறையவும்
1பேராறு
ஷபமல்
நன்றாக அருளாய்
ழம்வகை அரசாட்சி
பவமாடும் அன்போடும்
ம்இசைப்பர்
-வன் உகந்திடும்
கு.செ. இராமசாமி
ஆவணி மாத மலர் - 2014

Page 50
சைவத்தின்
சைவ சமயம் இறைவன் ஒருவனே என்று கூறுகிறது. சிவபெருமான் என்று அந்த இறைவனைச் சைவம் அழைக்கிறது. ஏனைய தெய்வங்கள் யாவும் சிவபெரு மானின் மூர்த்தங்கள். அதனால் அத்தெய் வங்களும் எமது வழிபாட்டிற்கு உரி யவையே. விநாயகர், முருகன், அம்பாள், வைரவர், விஷ்ணு எனப் பல கடவுளர்களை நாம் வழிபாடு செய்கிறோம். “யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி யாங்கே மாதொருபாகனர் தான் வருவர்" என்று சிவஞானசித்தியார் குறிப்பிடு கின்றது. நாம் எந்தத் தெய்வத்தை இஷ்ட தெய்வமாக வணங்கினாலும் நாம் வணங்குவது பரம்பொருளாகிய சிவபெரு மானே ஆகும். இறைவன் உயிர்களோடு ஒன்றாய், உடனாய், வேறாய் உள்ளான் என்று சைவம் கூறுகின்றது. இறைவன் அங்கிங்கெனாதபடி எங்கும் எல்லாவற் றிலும் நீக்கமற நிறைந்தும் வியாபித்தும் உள்ளான் என்பதை ஏற்றுக்கொள்ளும் நாம் எல்லா உயிர்கள் மீதும் அன்பாய் இருக்க வேண்டும் நாம் கடவுளில் அன்பாய் இருக்கிறோம். அந்தக் கடவுள் எல்லா உயிர்களிடமும் வதிவதை நாம் சந்தேக மின்றி உணர்கிறோம். அந்தக் கடவுள் உணர்வு எல்லா உயிர்களிடம் நாம் அன்பு செலுத்தவேண்டியது அவசியமாகிறது. அவ்வாறு செய்யாமல் விட்டால் கடவுள்மீது நாம் அன்பு கொள்ளாதவர் ஆகி விடுவோம்.
அருள் ஒளி
4

மேன்மை
கிருசாளினி
தரம் 11
துர்க்காபுரம் மகளிர் இல்லம்
கடவுள் எங்கும் எதிலும் நிறைந் துள்ளவர் என்னும் தத்துவத்தை ஏற்றுக் கொள்பவர் எல்லோரும் பிறரைக் கோபிக்கமாட்டார்கள். நன்மை செய்யவோ துன்பம் செய்யவோ துணியார்கள். தொல்லைகள், கொடுமைகளைப் பிற சாதனைகளிலும் காட்டவேண்டும் என்பதே சைவத்தின் நிலைப்பாடு. சாதனை யில்லாத போதனையால் ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை. உண்மை யென்று உணர்ந்தவற்றை நாம் வாழ்க்கை யில் கடைப்பிடித்து ஒழுகும்போதே நல்ல சமயி ஆகிறோம்.
வேதம், ஆகமம், திருமந்திரம், திருக்குறள், தேவார திருமுறைகள் மற்றும் சாத்திர நூல்கள் என்பன சைவசமயத்தின் புனித நூல்கள். இந்த உலகம் முழுவதிலும் வியாபித்துள்ள கடவுளைப் புரிந்துகொண்டு அவரின் திருவடிகளை அடைதற் பொருட்டே நமக்கு இந்த மானிட சரீரம் கிடைத் திருக்கிறது. அவர்கள் அனைவரும் மானிடப் பிறவியின் அதி உயர் குறிக்கோள் அதற்குரிய வழி தர்மம் ஆகும். இவ்வாறு இப்புனித நூல்கள் எமக்கு எடுத்துக் கூறுகின்றன. இவை யாவும் இறைவனின் கருத்துக்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
ஆவணி மாத மலர் - 2014

Page 51
சிறுவர் விருந்து
மூத்தோர் வார்
அன்பான பிள்ளைகளே!
அன்பு வாழ்த்து! இப்போ பாட சாலை விடுமுறைக்காலம். வீட்டிலே நல்லாக் கும்மாளம் போடலாம். விரும்பியபடி விளையாடலாம் என்ன? சரி, விடுமுறை நாட்களில் வேறும் நல்ல காரியங்கள் செய்யலாம். நிறைய கதைப் புத்தகங்கள் வாசிக்கலாம்.... அதிருக்கட்டும். இப்போதெல்லாம் இளம்பிள்ளைகளுக்கு முதியவர்கள் பற்றிய நல்ல எண்ணங்கள் குறைவு. என்றாலும் முதியோரை மதிக்க வேண்டும். இந்தக் கதையைக் கேட்டுப் பாருங்களேன்.
முன்னொரு காலத்திலே ஒரு ஊரில் புதிய அரசர் ஒருவர் ஆட்சி பண்ண வந்தார். அவர் நல்ல இளம் வயது. அழகான வடிவம் உள்ளவர். அவருக்கு ஏனோ உடல் தளர்ந்த முதியோர்களைப் பிடிப்பதே இல்லை. தான் ஆட்சிக்கு வந்ததும் அந்தத் தலைநகரத்திலே உள்ளவர்களுக்கு ஒரு கட்டளை இட்டார்.
"தலைநகரில் ஒரு வயோதிபரும் இருக்கக்கூடாது. அனைவரும் வெளி யேற்றப்படவேண்டும்! யாராவது தங்கள் வீட்டில் முதியவர்கள் இருந்தால் அவர் களைத் தூர இடங்களில் கொண்டு போய் விட்டுவிட வேண்டும். இந்தக் கட்டளையை மீறுவோர் கடுமையான அருள் ஒளி

த்தை அமிர்தம்
சகோதரி யதீஸ்வரி அவர்கள்
தண்டனை அடைவர்!” என்று அறி வித்துவிட்டார். வீட்டிலே அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என்று இருந்தவர்களை நகரவாசிகள் தூரத்துக் கிராமங்களில் கொண்டுபோய், உறவினர்கள், தெரிந் தவர்களோடு விட்டுவிட்டு வந்தார்கள். தலைநகர வீடுகளில் முதியோர்களே இல்லாமற் போய்விட்டது. ஆனால், நகர எல்லையில் வாழ்ந்த ஒரு இளைஞன் தன் அன்பிற்குரிய, மதிப்பிற்குரிய தகப்பனாரை வேறு எங்கும் விட விரும்பவில்லை. இரகசியமாக அவரை ஒளித்துவைத்துப் பேணி வந்தான்.
{ 4
சில நாட்களில் அரசர் நகரில் உள்ளவர்களிடமிருந்து பல பிரச் சினைகளை எதிர்கொள்ள நேரிட்டது. அந்த ராஜாவுக்கு நிம்மதியே இல்லாமற் போய்விட்டது. அதனால் அந்த ராஜா ஒரு புதிய சட்டம் போட்டார். தான் தன் பரிவாரங்களுடன் தேச்சஞ்சாரம் (ஊர் . சுற்றுவது) செய்யப் போவதாகவும், தன்னோடு வரவிரும்பும் பொதுமக்களும் வரலாம் என்றும் அறிவித்தார். தகப்பனை ஒளித்து வைத்த இளைஞனும் அந்தப் பயணத்தில் இணைந்து கொண்டான். மந்திரிப் பிரதானிகளுடன் குடிமக்கள் சிலரும் அரசனோடு புறப்பட்டனர். ஒரு பெரிய யாத்திரை போல அந்தக்கூட்டம் வழியில் தங்கித் தங்கிப் போய்க் கொண்டிருந்தது. போகிற வழியில் ஒரு
49 -
ஆவணி மாத மலர் - 2014

Page 52
பாலைவனப்பகுதி எதிர்ப்பட்டது. அத னோடு போகும்போது எல்லோருக்கும் தண்ணீர்த் தாகம் கடுமையாக ஏற் பட்டது. அரசனுக்கும் அவன் பரிவாரங் களுக்கும் தண்ணீர் கொண்டு வரும்படி ராஜா பலரை ஏவினான். அந்தச் சுற்று வட்டாரத்தில் தண்ணீர் கிடைக்கவே இல்லை. பலரும் பல இடங்களில் திரிந்து களைத்தார்கள். தண்ணீர் தண்ணீர் என்று தவித்தார்கள். அந்த நேரம் நான் முன் குறிப்பிட்ட இளைஞன் பக்குவமாக யாரும் அறியாமல் அழைத்து வந்திருந்த தன் தகப்பனிடம் இதைத் தெரிவித்தான். அவர், "மகனே! உயர மான மரம் ஒன்றில் ஏறிக் கவனி. தூரத்தில் எங்காவது பறவைகள் வானில் பறப்பது தெரிந்தால் அந்த இடத்தில் போய்ப்பார், தண்ணீர் இருக்கும்” என்றார். இளைஞன் ஒரு உயரமான மரத்தில் ஏறி நாலாபக்கமும் பார்த்தான். தூரத்தில் ஒரு இடத்தில் பறவைகள் பறப்பது தெரிந்தது. அவன் இறங்கி, அந்தத் திசையில் நடந்தான். ஒரு குறிப்பிட்ட தூரத்தில் தூய நீர்ச் சுனையுடன் பசுந்தரைப்பகுதி காணப் பட்டது. இரண்டு பெரிய பாத்திரங்களில் நல்ல தண்ணீர் எடுத்துவந்து அரச னிடம் கொடுத்தான். தாகத்தால் தவித்த அரசனுக்கு உயிர் மீண்டது போல இருந்தது. அவனுடன் பலரும் சென்று தேவையான நீரைப் பெற்றுக் கொண் டனர்.
இன்னொரு நாள் அரச பரிவாரம் சென்ற காட்டு வழியில் ஒரு இரவியல் மிகவும் குளிர் வாட்டியது. சற்றுத் தூரத்தில் வேடுவர் குடியிருப்பில்
அருள் ஒளி

இருந்து நெருப்பு எடுத்து வந்து குளிர்காய நினைத்த அரசன் நெருப்பு எடுத்துவர ஆளை அனுப்பினான். அந்த ஆளும் வேடுவர் சேரியில் போய் ஒரு பந்தம் எடுத்துவந்தான். இடையில் வீசிய கடும் காற்றில் பந்தம் அணைந்து விட்டது. பலமுறை முயற்சி செய்தும் பந்தத்தை அரசன் இருக்கும் இடத் திற்குக் கொண்டுசெல்ல முடிய வில்லை. குளிரால் வாடிய அரசன் கோபத்துடன் கத்தினான். "யாராவது விரைவாக நெருப்பைக் கொண்டு வாருங்கள்! உயிர் போகிறது குளி ரால்...! பலரும் முயன்று தோற்றார்கள்.
அந்த இளைஞன் அப்பாவிடம் கேட்டான் "ஒரு பானையை உறி போலக் கட்டி எடுத்துப்போ மகனே! அதற்குள் தணலை எடுத்துவா. வரும் வழியில் சிறு சுற்றிகளையும் அதனோடு சேர்த்துக்கொள்" என்றார் தகப்பன். இளைஞன் விரைந்து சென்று பானை ஒன்றில் தணல் கொண்டு வந்தான். நெருப்பை மூட்டி அரசன் குளிர்காய உதவினான். கூட்டத்துள் மெள்ள மறைந்து போய்விட்டான்.
சில நாட்களின் பின் அந்தக் கூட்டம் செல்லும் வழியில் ஒரு ஆற்றுள் மிகப் பிரகாசமான வைரம் ஒன்று கிடந்து மின்னுவதை அரசன் கண்டான். அதை எடுத்துத் தருமாறு பலரை ஏவினான். ஆற்றில் பலர் இறங்கி வைரத்தை எடுக்க முயன்று தோற்றனர். வைரம் அவர்களை அலைக்கழித்தபடி அங்கு மிங்கும் தண்ணீரில் ஆடித் துள்ளிக் கொண்டிருந்தது.
50 -
ஆவணி மாத மலர் - 2014

Page 53
இளைஞன் தன் தகப்பனிடம் இதைக் கூறினான். "மகனே! வைரம் ஆற்றில் இல்லை, ஆற்றங்கரையில் உள்ள உயர்ந்த மரத்தில் உள்ள பறவைக்கூட்டில் இருக்கிறது என்றார் அப்பா. இளைஞன் நன்றாகக் கவ னித்துக் குறிப்பிட்ட மரத்தில் ஏறினான். ஒரு பெரிய பறவைக் கூட்டில் அழகான வைரம் இருந்தது. எடுத்துவந்து அரச னிடம் கொடுத்தான். இம்முறை இளை ஞனை அரசன் மிகவும் பாராட்டினான். "வீரனே! நீ மூன்று முறையும் எனக்குப் பேருதவி புரிந்திருக் கிறாய். நீ என்ன கேட்டாலும் தருவேன்! உன் திற மையை மெச்சுகிறேன். இத்தகைய சாதுரியம் உனக்கு எப்படி வாய்த்தது?” என மகிழ்வோடு கேட்டான்.
இளைஞன் அரசன் காலடியில் மண்டியிட்டு “அரசே! என்னை நீங்கள் மன்னிக்கவேண்டும். எனக்கு மன்னிப் புத் தந்தால் நான் உண்மையைச் சொல்வேன்" என்றான்.
"அரசனோ, "என்மீது ஆணை! நான் உன்னைத் தண்டிக்க மாட்டேன். உண்மையைச் சொல்!" என்றான். இளைஞன் கண்ணீருடன் சொன்னான்; "அரசே! என் தந்தை எனக்கு உயிர் போன்றவர். அவரை விட்டுப் பிரிய மாட்டாமல், உங்கள் கட்டளையை மீறி என் தகப்பனாரை வீட்டில் ஒளித்து வைத்திருந்தேன். இந்தப்பயணத்திலும்
அருள் ஒளி

மிக இரகசியமாக யான் அவரை உடன் அழைத்து வந்துள்ளேன். அவர்தான் இந்தக் காரியங்களைச் செய்ய எனக்கு அறிவுரையும் துணிவும் தந்தவர்”
அரசன் திகைத்தான். பின் இளை ஞனைத் தழுவி "பயப்படாதே! நீ செய்த உதவிகளுக்கு யான் என்ன பதில் உதவி செய்யப்போகிறேன் தெரியுமா? மீண்டும் தலைநகருக்குப் போனவுடன் உனக்கு உயர்ந்த பதவி தருவேன்” என்றான். மீண்டும் அந்தக் கூட்டம் தலைநகருக்குத் திரும்பியது. வழி யெல்லாம் அரசன் நன்கு சிந்தித்தான். நகருக்கு வந்தவுடன் மீண்டும் கட்டளை இட்டான். எல்லோரும் உங்கள் முதிய உற்றார் பெற்றாரை உடனடியாக அழைத்து வாருங்கள்" என்று.
மகிழ்வுடன் எல்லோரும் தமது பெற்றோர், தாத்தா பாட்டிகளை அழைத்து வந்தனர். அரசனும் தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டு, இளைஞனுக்கும், அவன் தகப்பனுக்கும் தனது அரண்மனையிலேயே இடம் கொடுத்தான். முதியோரின் வழிகாட்ட லால் வீடுகளில் பிரச்சினைகள் தீர்ந்தன. மக்கள் அமைதியாக வாழ்ந் தார்கள். அரசனுக்கும் நிம்மதிகிடைத்தது. பட்டறிவு மிகுந்த முதியோர்கள் நாட்டிற்கு மிகப்பெரிய சொத்தும் காவலும் என்று உணர்ந்தான் அந்த
அரசன்.
ஆவணி மாத மலர் - 2014

Page 54
அருள் ஒளி தக
மட்டக்களப்பு சித்தாண்டி சித்திர வேலாயுத சுவாமி கோவில்
வருடாந்த பெருந்திருவிழா 25-08-14 ஆரம்பமாகி 09-09-2014 அன்று நிறைவு பெறும். பிரதம குருவாக ஸ்ரீ ஐயப்பதாஸ் சாம்பசிவ சிவாச்சாரியார் பணியாற்ற வுள்ளார்.
திருக்கோணேஸ்வரம் பாலஸ்தாபனம்
வரலாற்றுப் பெருமைமிக்க தெட் சண கைலாயம் திருக்கோணேஸ்வரம் பாலஸ்தாபன அபிஷேகம் 22-08-2014 வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. பாலஸ்தாபன பிரதமகுருவாக சிவஸ்ரீ. சதா. மகாலிங்கக்குருக்கள் (நாயன் மார்கட்டு) கலந்துகொள்கிறார்.
பா
கிளிநொச்சி அருள்மிகு கந்தசாமி கோவில்
வருடாந்த பெருந்திருவிழா 30-08-14 ஆரம்பமாகி 08-09-2014 அன்று முடி வடையும். தினமும் கிளிநொச்சி திருநெறிக் கழகத்தின் ஏற்பாட்டில் சமயச் சொற்பொழிவு இடம்பெறும். பிரதம குருவாக சிவஸ்ரீ. ஜெக.ஜெயந்திக் குருக்கள் பணியாற்றவுள்ளார்.
குடைச்சாமியாரின் திருவுருவச்சிலை திறப்புவிழா
கோண்டாவில் குமரகோட்டத்தில் தவஞானியாக விளங்கிய குடைச்சாமி என அன்பர்களால் அழைக்கப்பட்ட கந்தையாசுவாமிகளின் திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு 23-08-2014 திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அருள் ஒளி 2

வல் களஞ்சியம்
அரியாலை பிரப்பங்குளம் மாரி அம்மன் ஆலயம்
அரியாலை பிரப்பங்குளம் மாரி அம்மன் ஆலயத்தில் பல லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய கல்யாண மண்டபம் 22-09-2014 அன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
இணுவில் கந்தசாமி கோவிலில் பத்தாயிரம் கலசங்களால்
அபிஷேகம்
இணுவில் கந்தசாமி கோவில் மண்ட லாபிஷேக பூர்த்தியன்று (22-08-2014) பத்தாயிரம் கலச அபிஷேகம் நடை பெற்றது. பல ஆலயங்களில் செம்புகள், குடங்கள் சேர்க்கப்பட்டு இவ் அபி ஷேகம் நடைபெற்றது.
பெரிய சந்நியாசிரியார் உருவச்சிலை
இணுவில் கந்தசாமி கோவில் அறிவாலயத்திற்கு முன்பாக பெரிய சந்நியாசியார் என்னும் மகானின் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. உலகப்பெரு மஞ்சத்தை உருவாக்கிய சித்தர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமுறிகண்டியில் வன்னி இந்து மாமன்ற பிராந்திய அலுவலகம்
வன்னிப் பிரதேசத்தில் இந்துமா மன்றப்பணிகளைச் சிறப்பாகச் செய் வதற்காக முறிகண்டிப் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இந்துமாமன்ற கட்டடப் பணிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
52 -
ஆவணி மாத மலர் -2014

Page 55
பட .
சந்நிதி வேலவனின்
ஆவணி மாதத்தில்
சகே?,449**:*'*?*,',''ப41 ********
3444

வேல் உலாக் காட்சி
தேசப்பு!
- அவனியில் உதித்தான்

Page 56
ஸ்ரீதுர்க்காதேவி
ஸ்ரீ துர்க்காதேவி அம்பாள் கைலாம்
/AN RAPRINTERS T.P 021 222 8929

நாகை : -ட்டில்
மாட்ட காதல்
பார்க்க
பாபா: 14hாளம்
அவர் 5
- 19 நரம்-3
வின் திருமஞ்சம்
- கைலாச வாகனம்
வாகனத்தில் வீற்றிருக்கும் காட்சி