கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து ஒளி 2014.08-09

Page 1
4 சிக்குது
ஜய வருடம் ஆவணி - புரட்டாதி
மராத்திரி
அகில இலங்கை இந்து Religious Journal of AI

இந்து ஒளி
L HINDU OLI தீபம் - 18 சுடர் - 07
சிறப்பிதழ் " மாமன்ற ஆன்மீக இதழ் I Ceylon Hindu Congress
August - September
- 2014

Page 2
மாமன்றத்தின் வன்னிப் பிரதேச பணிமனைக்கா
கீரிமலையில் நீத்தார் நினைவு சிறப்பு நிகழ்க
ப3
திரு. எஸ். ரி. எஸ். திரு. மாவை சேனாதிராஜா ஈகைச்சுடர் ஏற்றுகிறார்.'
அருகில் விடை
செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன்
உரையாற்றுகிறார்.

ன அடிக்கல் நாட்டும் வைபவம் (4.09.204
அகில இலங்கை இந்து மாமன்றம்
(பிராந்திய அலுவலகம் - அல் ) All Ceylon Hindu Congress
(Regitial tities) - 42mins )
கள்; வீதி,
| key *சர், தித்ஒக்கர்த,
1ாபங்சாத். சரி }ர் : ஆg சீதக் கோழிச்சாடி
நர், ஒரு ச ககாரில்லர், ஆ ஏகே4ர்- உமாக 4தலாம்.
வரக்காட்சி
வும், இந்து ஒளி வெளியீடும் (26.07.2014)
அருளானந்தன் ஈகைச்சுடர் ஏற்றி வைக்கிறார். க்கொடிச்செல்வர் சின்னத்துரை தனபாலா |
மாமன்றத் தலைவர் உரை
ALL CEYLON HINDU C
*காரிகள் லெனனா கேக்
2 0வ )
வலி வடக்கு பிரதேசசபை தலைவர் திரு.சுகிர்தன் அவர்களுக்கு இந்து ஒளி வழங்கப்படுகிறது.

Page 3
சிவமய
(தீபம் - 18)
தீபா - 18
இந்து
'ஜய வருடம் புரட்டாதித் திங்கள் !
ARSARSSASAMARSARRRRRRR
பஞ்ச புராணங்கள்
திருச்சிற்றம்பலம்
தேவாரம் மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைவிட மானி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாள்தொறும் பரவ பொங்கழ லுருவன் பூதநாய கனால்
வேதமும் பொருள்களும் அருளி அங்கயற்கண்ணி தன்னொடு மமர்ந்த
ஆலவாய் ஆவது மிதுவே!
திருவாசகம் யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும் மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே!
திருவிசைப்பா பெருமையிற் சிறுமை பெண்ணொடா ணாய்என்
பிறப்பிறப் பறுத்தபே ரொளியே கருமையின் வெளியே கயற்கணாள் இமவான்
மகன்உமை யவள்களை கண்ணே அருமையின் மறைநான் கோலமிட் டரற்றும்
அப்பனே அம்பலத் தமுதே - ஒருமையிற் பலபுக் குருவிநின்றாயைத்
தொண்டனேன் உரைக்குமா றுரையே!
திருப்பல்லாண்டு சீருந் திருவும் பொலியச்
சிவலோக நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெறாத அறிவு
பெற்றேன், பெற்றதார் பெருவாருலகில் ஊரும் உலகும் கழற்
உளறி உமைமண வாளனுக்காட் பாரும் விசும்பும் அறியும்
பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே!
திருப்புராணம் மனிதருந் தேவருமாயா முனிவரும் வந்து சென்னி குனிதருஞ் சேவடிக் கோமளமே கொன்றைவார் சடைமேற் பனிதருந் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த புனிதரு நீயுமென் புந்தி யெந்நாளும் பொருந்துகவே!
திருச்சிற்றம்பலம்
(இந்து ஒளி

பிபிசி
டெ274 சதம் * *..
4படி * ATY 21.
ஒளி
சுடர் - 07
09 ஆம் நாள் 25. 09. 2014)
YAYAYAYAYAYAYAYAYAYAYAYAYAYAYA பாரதமாதா எங்களை பரிவுடன்
பார்க்கவேண்டும்
இந்துக்களின் பெரும் சாம்ராஜ்யமாக விளங்குவது பாரத நாடு என போற்றப்படும் இந்தியா. இந்தியாவை எம் தாய்நாடு என்று முன்னோர்கள் சொல்லும் மரபு இன்னும் ஓயவில்லை. கடல் பிரித்த போதிலும் உறவால் பிரியாத தொடர்பு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் உண்டு. இந்து மதம் பிறந்தது இந்தியாவில், பௌத்தம் பிறந்தது இந்தியாவில். தன் நாட்டில் உருவான மொழி மதங்களைக் கொண்ட மக்கள் வாழும் இலங்கைத் தீவில் இன்னலின்றி அனைவரும் வாழ இந்தியா இன்று பரிபூரணமாக உதவ வேண்டும்.
இலங்கையில் இந்து மக்கள் இனரீதியாகப் பாதிக்கப்பட்டு இருப்பது சர்வதேசமும் அறிந்ததே. இதனால் இந்தியத் திருநாடு எம் மண்ணில் நிம்மதியை உருவாக்கும் என பலரும் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். இந்திய நாட்டில் எம் மக்கள் இலட்சக்கணக்காக அமைதியாக வாழ்கிறார்கள். அந்த மக்களுக்கு முகாம் அமைத்து, வாழ்வாதாரம் கொடுத்து இன்று வரை அவர்களை நேசிக்கும் தன்மையை யாரும் மறந்துவிட முடியாது.
இந்திய இலங்கை அரசியல், கருத்தியல் இவற்றுக்கு அப்பால் மக்களுக்கு இந்தியத்திருநாடு உதவி வரும் பணிகளை இன்றும் நன்றியோடு போற்றக் கடமைப்பட்டிருக்கின்றோம். அவ்வகையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்திய வீட்டுத்திட்டம் மறக்கமுடியாத மனித நேயப் பணி எனலாம். வீடிழந்து அலையும் எம் மக்களுக்கு இது ஆறுதல் அளிக்கும். இந்த வீட்டுத்திட்டத்தை நன்றியோடு போற்றக் கடமைப்பட்டிருக்கிறோம்.
இதற்கு அப்பால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளர்ச்சியில் குறிப்பாக விவசாயப் பீட வளர்ச்சியில் இந்தியத் திருநாடு அக்கறை கொண்டு அபிவிருத்திக்கு உதவி வருவது மிகவும் பாராட்டத்தக்கது. எங்கள் புராதன தலமாகிய திருக்கேதீஸ்வரத்தின் புனருத்தாரணப் பணிகளில் அதிக அக்கறை கொண்டு பல கோடி ரூபா செலவில் திருப்பணியை பாரம்பரிய கலாசார கட்டுமானப் பணியாக நிறைவேற்ற முன்வந்திருப்பது, மேலும் இலங்கை வாழ் இந்துக்களால் மறக்க முடியாத விடயம். இந்நிலையில் இந்திய அரசு வடக்கு தெற்கு புகையிரதப் பாதையை அமைக்கும் பணியிலும் தம் பங்களிப்பை வழங்கி வருவது அப்பாவி மக்களின் பயணத்துக்கு பேருதவி எனலாம்.
ஜய வருடம் ஆவணி - புரட்டாதி)

Page 4
இத்தகைய உதவிகள் தொடர்ந்தாலும் எம் மக்களின் உரிமைகள் நிலை நாட்டப்பட்டு அவர்கள் இடரின்றி வாழ இந்தியத் திருநாடு அதீத அக்கறை கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
யாழ்ப்பாணத்தில் பல கோடி ரூபா செலவில் இந்திய கலாசார நிலையம் ஆரம்பிக்கப்படுவது குறித்து, நிறைந்த பயன் கிடைக்கும் என மக்கள் கருதுகிறார்கள். அதனால் எங்கள் பாரம்பரிய கலைகள், பண்பாட்டு மரபுகள் பாதுகாக்கப் படுவதற்கு கலாசார நிலையம் காத்திரமான பங்களிப்பை வழங்கவேண்டும். இந்தியத் திருத்தலங்களுக்கு யாத்திரை செய்யும் வழக்கம் இலங்கை இந்துக்களின் நீண்டகால பாரம்பரியமாக பேணப்பட்டு வருகின்றது. சிதம்பரம் திருக்கோயிலுக்காக வடக்கில் பல நிலங்களை எம்மக்கள் தானமாகக் கொடுத்த வரலாறு
அனைவரும் அறிந்ததே.
யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு படகில் ஏறிச் செல்லும் வழக்கம் அந்நியர் ஆட்சிக்கு முன் சர்வசாதாரணமாக இருந்துள்ளது. பின்பு இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு சட்டப்பிரகாரம் அனுமதி பெற்று கடல் மார்க்கமாகவும் ஆகாய மார்க்கமாகவும் மக்கள் சென்று வந்தனர். கடந்த இருபத்தைந்து ஆண்டு காலமாக தலைமன்னார் கடல் பயணம் தடைப்பட்டு போய்விட்டது. இந்திய தலயாத்திரைக்கு வசதியுள்ளவர்கள் மட்டும் விமானத்தில் பயணம் செய்து யாத்திரையை நிறைவேற்றுகிறார்கள். சாதாரண மக்களால் யாத்திரையை நிறைவேற்ற முடியாமலிருக்கின்றது. வடபகுதி ஊடாக மக்கள் சுலபமாக தல யாத்திரை செய்வதற்கு இந்தியாவும் இலங்கை அரசும் தக்க ஏற்பாடு செய்தல் பெரும் பயன் தரும்.
இருபத்தோராம் நூற்றாண்டில், முப்பத்தெட்டு மைல் இடைத்தூரம் கொண்ட வட இலங்கை - தென்னிந்திய பாதை வழிசெய்யப்படாமல் இருப்பது பொருத்தமானதாக இல்லை. மேலை நாடுகளில் குறுகிய துாரங்களைக் கொண்ட கடல் பாதைகள் நவீன வசதிகள் செய்யப்பட்டு மக்கள் சுலபமாக போக்குவரத்துச் செய்யக்கூடியதாக உள்ளது. இது விடயத்தில் இந்திய அரசு அக்கறை கொள்ளவேண்டும்.
இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயில மாணவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டங்கள் ஊடாக சந்தர்ப்பம் வழங்கிவருவது கண்டு மகிழ்ச்சியடைகின்றோம். எனினும் இலங்கையில் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத ஏராளமான மாணவர்களின் எதிர்கால வாழ்வுக்கு
இந்தியா வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டும்.
அரசியலுக்கு அப் பால் ஆன்மீக நிலையில் நின்று அமைதியை வேண்டுபவர்களுக்கு விரைவில் 2 விமோசனம் கிடைக்க பிரார்த்தித்து காத்திருக்கின்றோம்.
(இந்து ஒளி

வாழ்த்து பாணி யிற்கொள் படித வடத்தின் ளாணி முத்தி னழகிய மேனியள் சேணி ருக்குமத் தேவரெ லாம்புகழ் வாணி பொற்பத மாமலர் போற்றுவாம் !
இந்து ஒளி அகில இலங்கை இந்து மாமன்ற இந்து ஆராய்ச்சி நிலையத்தின் வெளியீடு
நவராத்திரி சிறப்பிதழ் (ஜய வருடம் ஆவணி - புரட்டாதி) 25.09.2014 ஆசிரியர் குழு :
திரு. கந்தையா நீலகண்டன்
சைவஞானபானு கலாநிதி ஆறு.திருமுருகன் கலாநிதி முத்தையா கதிர்காமநாதன் சிவஸ்ரீ ம. பாலகைலாசநாத சர்மா திரு. த. மனோகரன்
திரு. அ. கனகசூரியர் ஒரு பிரதியின் விலை
ரூபா 50.00 வருடாந்தச் சந்தா (உள்நாடு)
ரூபா 300.00
(தபாற் செலவு தனி) வருடாந்தச் சந்தா (வெளிநாடு) US டொலர் 15
அகில இலங்கை இந்து மாமன்றம்
A.C. H. C. கட்டிடம் 91/5, சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு - 2, இலங்கை. யாழ் பணிமனை : 211/17, கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம். இணையத்தளம்
: http:/www.hinduCongress.lk மின்னஞ்சல்
: hinducongress@gmail.com தொலைபேசி
: 0112434990, தொலைநகல் : 0112344720 இந்து ஒளியில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ஆக்கியோன்களுடையதே.
HINDU OLI
Publication of HINDU RESEARCH CENTRE OF ALL CEYLON HINDU CONGRESS
Nawarathri Special Issue 25.09.2014 Editorial Board :
Mr. Kandiah Neelakandan Dr. Aru. Thirumurugan Dr. Muthiah Kathirgamanathan Sivasri M. Balakailasanatha Sarma Mr. D. Manoharan
Mr. A.Kanagasooriar Price
Rs.50.00 Annual Subscription (Inland)
Rs.300.00
(Excluding Postage) Annual Subscription (Foreign) U.S. $15
(Including Postage) ALL CEYLON HINDU CONGRESS
A.C. H. C. Bldg. 91/5, Sir Chittampalam A. Gardiner Mawatha Colombo - 2, Sri Lanka. Jaffna Office : 211/17, Temple Road, Nallur, Jaffna.
Website : http://www.hinduCongress.lk
E-Mail: hinduCongress@gmail.com Telephone No.: 011 2434990, Fax No.: 011 2344720 Views expressed in the articles in Hindu Oli
are those of the contributors. ISSN : 2012 - 9645
ஜய வருடம் ஆவணி - புரட்டாதி)

Page 5
ஆன்மீகக்
அருள் குளம் முதலான நீர்ந்
திருப்பணியை
இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் அண்மைக்காலமாக வரலாறு காணாத வரட்சி நிலை நிலவி வருகிறது. இதற்கு மழை நீர் இன்மைதான் காரணம் என்பது யாவரும் அறிந்ததே.குளம் முதலான நீர்நிலைகளில் இருந்து நீர் வற்றியதால் நீர் மட்டம் கீழே சென்று கிணறுகளும் வற்றிய நிலை உருவாகிவிட்டது.
வரண்ட பிரதேசத்திலுள்ள மக்கள் மழையை நம்பியே வாழ்கின்றார்கள். மழையால் கிடைக்கும் ஒவ்வொரு துளி நீரையும் குளம். கேணி, வாவி போன்ற நீர் நிலைகளில் சேகரித்து நிலத்திற்கு கீழ் நீர்மட்டம் இறங்காமல் தடுத்து வைத்து விவசாயம் மற்றும் மக்களது வாழ்க்கைத் தேவைகளுக்கு நம் முன்னோர்கள் பாவித்து வந்தார்கள். கடந்த கால யுத்த அனர்த்தங்கள் காரணமாக பல குளங்கள் கேணிகள் மற்றும் நீர்நிலைகளது அணைக்கட்டுகள்
சேதமாக்கப்பட்டும். அதனால் பாழடைந்த நிலைமைகளும் ஏற்பட்டுவிட்டன.
அண்மையில் கிடைக்கப்பெற்ற ஊடகச் செய்தியொன்றில் வட பகுதியில் 1670 குளங்கள். கேணிகள் மற்றும் நீர்நிலைகள் பாழடைந்த நிலையில் காணப் படுகின் றன என குறிப்பிடப்பட்டிருந்தது. இவற்றைத் திருத்தி ஆழமாக்கிப் புனரமைத்து, அதில் மழை நீரை எவ்வளவு தூரம் பேணுகின்றோமோ அதன் மூலம் வரட்சியைத் தடுக்கலாம் என ஊடகச் செய்தி தொடர்பாக சர்வதேச நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள்.
மழைநீரின சிறப்பைப் பற்றி திருவள்ளுவரும்.
"வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று” என எடுத்துக்காட்டியுள்ளார்.
" எமது சைவ சமயத்திலே திருக்குளம் அமைத்தல் ஒரு சிவப்பணியாகும். சைவநாயன்மார்களுள் ஒருவரான தண்டியடிகள் இதற்கு ஒரு முன்னுதாரணமாகும். அவர் தன் வாழ்வில் ஒரு சிவதொண்டாக திருக்குளத்தை புனரமைப்புச் செய்து முத்தியடைந்தவர். எமது நாட்டிலும் ஒவ்வொரு ஆலயச் சூழலிலும் கேணி, குளம் என்பன காணப்படுகின்றன. ஆனால் இப்போது இவற்றுள் பல பாழடைந்த நிலையில் இருப்பது வருந்தத்தக்க விஷ யம். பலர் ஆலயங்களை புனருத்தாரணம் செய்தல், கோபுரங்கள். மணிமண்டபங்கள். திருமண மண்டபங்கள் போன்றவற்றை கட்டுவதுடன் நின்றுவிடுகிறார்கள். ஆனால் அதே ஆலயத்தைச் சாந்த திாத்தக் கேணி. அருகிலுள்ள குளம் போன்ற நீர்நிலைகளை புனரமைப்புச் செய்யத் தவறிவிடுகிறார்கள். அதன் மூலம் நீர்வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பது பற்றி சிந்திப்பதே இல்லை. எமதுவை ஆலயங்களும்நயனமா காட்டிய நெறிய திருக்குளத் திருப்பணியைச் செய்து எதிர்காலத்தில் வரட்சியை
HHHE E
HHH 2
பசி FA A #
ர
- *ப.
சகபயEEEEHERE:
இந்து ஒளி
AAAAAAAAAIlakவெட்கப்படபபடயயயயயயயயயயயயயயயயயயாகம்

ச்சுடரின்
F - வT:- H THI 16!
THE
FEET பட Hா
17 LHI 10:52
5-12-2-:
பாடகர்
மடல்
லைகளைப் பேணும் ச் செய்வோம்!
சமாளிக்கும் வகையில் இப்பொழுதே ஆவன செய்ய வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும்
இத்தகைய நல்ல கைங்கரியத்துக்கு புலம்பெயர் தமிழ் மக்களுடைய பங்களிப்பும் மிகவும் அத்தியாவசியமானதாகும். புலம்பெயர் வாழ் மக்களிடையே உள்ள பொறியியலாளர்களும். குடிசார் இயந்திரவியல் நிபுணர்களும் தங்களது தொழில்நுட்ப அறிவைக்கொண்டு நம்மவர்களுக்கு உதவிசெய்வதுடன். அதிநவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி நமது மண்ணின் நி வளத்தை பாதுகாக்க ஆவன செய்ய வேண்டும். இன்னும் ஒரு பாரிய நீர்வளப் பிரச்சினையையும் எமது மண் எதிர்நோக்கியுள்ளது. யாழ் குடாநாட்டுகிணறுகளிலுள்ள குழஹீரானது உவர்த்தன்மையாக மாறிவருவதே அந்தப் பிரச்சினையாகும். அது பற்றி கடந்த முப்பது வருடங்களுக்கு முன்னரே யாழ் பல்கலைக்கழக உபவேந்தராக இருந்த அமரர் பேராசிரியர் துரைராஜா அவர்கள் குறிப்பிட்டதுடன் அதனை நாம் அனைவரும் தடுக்கும் வகையில் ஆவன செய்ய வேண்டும் என்றும் கேட்டிருந்தார். போதுமான மழைநீரை குளங்கள். கேணிகள். வாவிகள் போன்றநாநிலைகளில்பாதுகாப்பதன் மூலமும் உவர்த்தன்மையுள்ள இடங்களில் அதற்குப் பொருத்தமான தாவரங்களை பயிரிடுவதன மூலமும் நீர்மட்டத்தின் கீழே உவர்த்தன்மை ஏற்படாமல் தடுக்க முடியும் என நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளார்கள். இதிலிருந்து எமது மண்ணின் எதிர்கால சுபீட்சத்துக்கு குளம். வாவி, கேணி போன்ற நீர்நிலைகள் முக்கியமானதாக இருப்பதை நன்கு அறிந்து கொள்ளமுடிகிறது.
எமது எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி. நாம் இன்று செயற்படவேண்டிய தேவையுள்ளது.
எம் மண்ணில் உள்ள குளம். கேணி போன்றவற்றைப் பாதுகாப்பது என்பது ஒரு பாரிய பணியாகும். இதை ஒரு தனி நபரோஸ்தாபனமோ செய்ய முடியாது. ஆனால் கிராமங்களிலுள்ள ஆலயங்கள், அறநிலையங்கள் என்பன இது விடயத்தில்கவனம் எடுப்பதன் மூலம் வெற்றிகரமான நிலையை உருவாக்கமும் என்பதில் நம்பிக்கை கொள்ளலாம்.
-- சங்க இலக்கியத்திலுள்ள புறநானுாறு நுாலில் நீரும் நிலனும் பற்றி.
"உணவெனப் படுவது நிலத்தொடுநீரே
நீரும் நிலனும் புணரியோர் எண்டு உடம்பும் உயிரும் படைத்திசி னோரே வித்திவான் கொக்கும் பலர் கண்ணகள் வைப்பற்று ஆயினும் நண்ணி ஆரும்....... என்ற பாடல் வரிகளில் அழகாகச் சொல்லப்பட்டிருப்பதையும் நாம் நோக்கலாம்.
HHFr:
11 4,
EHA
ஜய வருடம் ஆவணி - புரட்டாதி)

Page 6
நவராத்திரி
அ.
கிராமங்களிலும் 6 பலவாறாக வைத்து வழிபடும் விதமான விழாக்கள் இருந்
சிவபெருமானுக்குப் பக இரவு உற்சவம் சிறப்புடைய விஷேசமாகும். நவ- ஒன் தினங்களிலும் பூசை வழிபா பத்தாம் நாள் விஜயதசமியன் கல்வி கற்க (வித்யா ஆரம் சேர்த்து மகிழ்வர்
நவராத்திரியின் காலம்
நவராத்திரி காலங்களில் வீட்டிலும் திருக்கோயில்களிலும் கொலுவினை அமைத்து
வழிபடுதல் இன்றும் வழக்கத்தில் இருந்து வருகிறது. கொலு என்பது தெலுங்குச் சொல்லின் தமிழுருவமாகும். இக்கொலுவில் உலகத்தில் உள்ள பல்வேறு உயிரினங்கள் மற்றும் உயிரற்றவைகள் அனைத்தும் பொம்மைகளாகவும் அதனுள் நடுநாயகமாக அம்பிகையினை வைத்து வழிபடுதல் இயற்கையின் தத்துவத்தையும் இறைவியின் தத்துவத்தையும், உணர்த்தவேண்டி நம் முன்னோர்கள் அமைத்தார்கள். எல்லா உயிர்களுக்கும் அன்னையாக விளங்கும் தேவியை
ஆராதனை செய்யும் காலம் சித்திரை மாதத்தில் வருகின்ற வசந்த நவராத்திரி விரதமும், புரட்டாதி மாதத்தில் வருகின்ற பாத்ரபத நவராத்திரி
விரதமும் ஆகும். இவ்விரதம் (பூஜை- விழா) புரட்டாதி மாதத்தில் சுக்கிலபட்ச பிரதமையில் ஆரம்பித்து தசமியன்று முடிவுறும். இதில் வரும் அஷ்டமி நவமிக்கு மகாஷ்டமி மகாநவமி என்று பெயர். சித்திரை மாதத்தில் வருகின்ற வசந்த நவராத்திரியை பூசிக்கும் தன்மைகளை தேவி உபநிஷதத்திலும், அதர்வண வேதத்திலும் சில பாகங்களால் விளக்கம் செய்யப்பட்டுள்ளது. சித்திரை மாத பெளர்ணமி மட்டிலும் (இரவில்) தேவியை ஆராதனை செய்வதும், ஸ்ரீசண்டி ஹோமம் செய்வதும் உத்தமம் ஆகும். இப்பிரபஞ்சத்தில் இருக்கும் உயிர்களுக்கு உய்வு தரும் பொருட்டு சித்ரா பெளர்ணமியிலும், புரட்டாதி நவராத்திரியிலும் விண்ணுலகத்திலிருந்து இந்த மண்ணுலகத்திற்கு வந்து அருள் சுரக்கின்றாள் என்பது ஞானிகளின் கூற்றாகும்.
(நன்றி : ஸ்ரீமகா சரஸ்வதி - தி
(இந்து ஒளி

பின் சிறப்பு
ம்பிகையின் விழா
பரிய நகரங்களிலும் உள்ள ஆலயங்களில் அம்பிகையை கின்றார்கள். ஜகன்மாதாவாக இருக்கின்றவளுக்கு எத்தனை
தாலும் நவராத்திரி விழா மிகச் சிறப்புடையதாகும்.
ல் உற்சவம் மிகச் சிறப்புடையதாகும். ஆனால் அம்பிகைக்கு பதாக இருந்தாலும் நவராத்திரி காலத்தில் இரவும் பகலும் பது; ராத்திரி-இரவு. ஆக நவராத்திரி நாளான ஒன்பது Tடு செய்தால் எல்லா நலன்களையும் அம்பிகை அருளுவாள். சுறு செய்யவேண்டிய தொழில்களைத் தொடங்குவர். குறிப்பாக பம்) முதன் முதலாக கல்விச்சாலைகளில் குழந்தைகளைச்
சரஸ்வதி பூஜையின்
தத்துவம்
சக்தியின் உதவியை உண்மையில்
நாடுபவன் வல்லவனாகிறான். அத்தகைய வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
ஆதலால் வல்லவனாகி ஆயுதத்தை
ஒழுங்காக உபயோகிப்பவனே ஆயுத பூஜை செய்பவனாகின்றான். அத்தகையவன்
வருஷம் ஒருமுறை ஆயுதத்தை அலங்கரித்து வழிபடுவது சாலப்
பொருத்தமாகும். சிலர் நவமியன்று சுவடிகளில் (புத்தகம்)
ஆவாஹணம் செய்து சரஸ்வதியை வணங்குவர். குறிப்பாக எல்லாக் கல்விக் கூடங்களிலும் மிக விமரிசையாக வணங்கி மகிழ்வர். எவ்வாறு எனில் உணவு உடலுக்கு
உறுதி தருவது போல கல்வியானது
உள்ளத்திற்கு உறுதி அளிக்கின்றது. கல்வியே அஞ்ஞான இருளை அகற்ற வல்லது.
ஆகவே தினம் உள் ஒளியை உண்டாக்க வல்லது என்பதனை உணர்த்தவே நவமியன்று கலைமகளை (சரஸ்வதியை) புத்தகங்களில்
ஆவாஹணம் செய்து அல்லது சாஸ்திர சம்பந்தப்பட்ட ஓலைச்சுவடிகளில் ஆவாஹணம் செய்து பூசித்து, தசமியன்று (விஜயதசமி) விசர்சனம் (கலைத்து) செய்து பாடம்
தொடங்குவர்.
அன்றுதான் வித்யாரம்பம். அகிலாண்ட நாயகியின் அனுக்கிரகத்தைப்
பெற நம் முன்னோர் கண்ட நெறி இது.
நவாவடுதுறை ஆதீன வெளியீடு)
ஜய வருடம் ஆவணி - புரட்டாதி)

Page 7
சமரசசாரை நச்சரரேடுசாரமேடுகாயரருமசாரைசசாரல் அன்னையின் அரு
- நவராத்திரி
திருமதி நாச்சியார் முதுநிலை விரிவுரையாளர், இந்து நாக
அலைநாது
தமிழ் நாட்டில் நவராத்திரி என்றும், கர்நாடகாவில் தசரா என்றும், வங்காளத்தில் துர்க்காபூஜை என்றும், அழைக்கப் படுவது இந்தப் பண்டிகை. மற்றெல்லா விழாக்களிலும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது இது. சிறுவர் முதல் பெரியோர் வரையில் வயது வித்தியாசமின்றி ஆண் பெண் என்ற பால் பாகுபாடின்றி அனைவராலும் விரதமாகவும் விழாவாகவும் கொண்டாடப்படும் பெருமைக்குரியது இவ்விழா.
அன்னை உலக மக்களையும் உயிர்களையும், இயற்கையையும் இரட்சிப்பதற்காக துர்க்கையாகவும், லட்சுமியாகவும், சரஸ்வதியாகவும் தோன்றி வீரத்தையும் செல்வத்தையும் ஞானத்தையும் கொடுக்கும் புனித நாட்களே நவராத்திரி நாட்களாகும். பலமும் ஐஸ்வர்யமும் ஞானமும் மனித வாழ்விற்கு அடிப்படையாகவும் மனித வாழ்வை பூரணப்படுத்துவதாகவும் அமைவன. இவற்றை பெற்றுக் கொள்ளும் இடமாக அண்டசராசரங்களுக்கும் சக்திகொடுக்கும் அன்னையாக ஆதிபராசக்தி விளங்குகிறாள் எனவே அவளை சரணடைந்தால் சக்தியின் அருள் கிட்டுகின்றது. அம்பிகையைச் சரணடைந்தால் அனைத்து வரம் பெறலாம் என்பது பாரதி என்ற ஞானக் கவிஞனின் அருள்மொழி. உள்ளத் தூய்மையுடையவர்களே சக்தியிடம் உண்மையான சரணாகதி அடையமுடியும். உள்ளத் தூய்மையுடன் நாம் பழகும்போது நமது மனதில் உண்மையான மகிழ்ச்சியும் குதூகலமும் ஏற்படமுடியும். அவ்வகையில் அம்பிகையின் அருளுக்கு பாத்திரமாகும் வகையில் மனத் துாய்மையுடன் விரதமிருந்து குடும்பத்தவருடனும் அயலவருடனும் சமூகத்துடனும் உளமாரப் பழகி அம்பிகைக்கு படையல் செய்த பட்சணங்களை அவர்களுக்கு உவந்தளித்து மகிழும் கொண்டாட்டம்தான் நவராத்திரி.
நவராத்திரியில் "கொலு" வைத்தல் என்பது மிக முக்கியமான நிகழ்வாகும். கொலுவை அமைக்கும் போது கொலுப்படிகளை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற முறையில் ஒற்றைப்படை எண்ணிக்கையில் அமைப்பது வழக்கம். உச்சியில் உள்ள கடைசிப்படியில் கலசத்தை வைக்கவேண்டும். அந்தக் கலசத்தில் உள்ள நீரில் அனைத்துப் புண்ணிய நதிகளும் அடங்கியிருப்பதாக மனத்தால் எண்ணவேண்டும். அந்த உச்சிப்படியில் விநாயகர், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி போன்ற தெய்வங்களின் உருவங்களை வைக்க வேண்டும். அதற்கடுத்த படியில் கிருஷ்ணர், இராமர் போன்ற தெய்வ அவதாரங்களின் திருவுருவை வைக்க வேண்டும் அதற்கடுத்த படியில் சங்கரர், விவேகானந்தர், இராமகிருஷ்ணர்,
(இந்து ஒளி

தி
லை
தி
ஒடுக்குகிற முதன் முதற்றேடுச்சால்முடுடு டுடுது மார் Sள் பிரவாகிக்கும்
1 பண்டிகை -
1 செல்வநாயகம்
ரிகத்துறை, யாழ். பல்கலைக்கழகம்
பதில்
சாரதாதேவி போன்ற ஞானிகளின் திருவுருவங்களையும், அடுத்த படியில் ஆறறிவு படைத் த பல்வேறு வகைப்பட்ட மனித உருவங் களையும், அடுத்த படியில் ஐந்தறிவு படைத்த பசு போன்ற விலங்கினங்களையும்
அதற்கடுத்த படியில் நான்கு அறிவுள்ள பறவையினங்களையும், அதற்கடுத்து மூன்று அறிவுள்ள எறும்பு போன்றவற்றையும் அடுத்த படியில் இரண்டு அறிவுள்ள உயிரினங்களான நத்தை, சங்கு போன்றவற்றையும், கடைசியாக உள்ள கீழ்ப் படியில் ஓரறிவுள்ள செடிகொடிகளையும், பூங்கா போன்றவற்றையும் அமைக்க வேண்டும்.
இக் கொலுத் தத்துவமானது உயிரினங்களின் பரிணாமத்தை காட்டுவதுடன் இதற்கெல்லாம் மூலமாக இருப்பது சக்தியே என்பதையும் எடுத்துக்கூறி சக்தியிடம் பூரணபக்தியாகிய சரணாகதியையும் ஏற்படுத்தும் வகையில் அமைவதாகும். பக்தி என்பது அமிர்தமயமானது என்பது நாரத பக்தி சூத்திரத்தின் கருத்து. தூய அன்பில் வாழும் போதே ஒருவன் இறவாமையை எட்டுகின்றான். உள்ளம் கமலமாகுவது உண்மை அன்பினாலன்றோ. அவ்வகையில் குழந்தைகளிடம், இளையவர்களிடம் முதியவர்களிடம் அனைத்து ஜீவராசிகளிடம், மனிதன் இதயபூர்வமான அன்பை செலுத்தும் போது அவன் உலகத்தில் காணப்படும் அனைத்து உயிர்களிடத்துமிருந்து வாழ்த்தைப் பெற்று ஞானியரின் அருட்பார்வைக்கு இலக்காகி அவர்களின் ஆசியைப் பெறுகின்றான். இதன் மூலமாக தெய்வ அனுக்கிரகத்தால் இம்மை வாழ்வு மேன்மையடைகின்றது. முத்தி என்று சொல்லப்படும் பூரணநிலையும் கிட்டுகின்றது. "அன்பென்று கொட்டு முரசே ஆக்கமுண்டா மென்று கொட்டு" என்றார் மகாகவி பாரதி. நவராத்திரிக் கொலுவின் தத்துவமும் இயற்கையனைத்தையும் அன்பு செய்து போற்றி வாழ்வதனாலேயே மனதில் அமைதியும் ஆனந்தமும் கிட்டுகின்றது என்பதையும், அந் நிலையில் சக்தியின் அருட்கடாட்சமும் கிட்டுகின்றமையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. வெறும் அழகுக்காக வைப்பது கொலுவல்ல. வழிபாட்டிற்காக நன்றியுணர்வில் நம்மை வளர்ப்பதற்காக ஏற்பட்டதே கொலுத் தத்துவம். ஓரறிவு படைத்த உயிரினம் முதல் ஆறறிவு படைத்த மனிதன் வரை நமக்கு செய்யும் உபகாரத்தையும், ஞானியர் நம்மை உரிய வழியில் தர்மநெறியில் வழிகாட்டுவதையும் தர்மத்தை பாதுகாப்பதற்கு தெய்வம் அவதாரம் எடுத்து அருள் புரிதலையும், மேலான கருணைக்கடலான மாபெரும் சக்தியான உலக அன்னையின் மேலான அருட் கொடையையும் மறவாது.
ஜய வருடம் ஆவணி - புரட்டாதி)

Page 8
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை" செய்நன்றி கொன்ற மகர்க்கு” என்ற பொய் யா மொழிக்கிணங்க வாழ வழிகாட்டும் உயரிய தத்துவத்தை பறைசாற்றி நிற்பதே கொலு. அன்னையின் அரசு அன்பரசு. தீமைகளை அழித்து தர்மத்தை இரட்சிக்கும் அன்னை மகிஷன் என்னும் அசுரனை விஜயதசமி அன்று கொன்றதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே வெற்றித் திருநாளாக விஜயதசமி கொண்டாடப்படுகின்றது. எருமைத் தலை கொண்ட அசுரனை அறிவுச்சுடரான அன்புக்கடலான அன்னை சங்கரித்தாள். எருமைத்தலை என்பது மூடபுத்தியைச் சுட்டுவது. உலகில் ஏற்படும் துன்பங்களுக் கெல்லாம் காரணம் அறியாமையே.
அறியாமையே துயரத்தின் தாய் என்பது ஞானிகள் கூற்று. எனவே அறியாமையினால் பிறருக்கு தீங்கு செய் பவர்களை வதம் செய் து நல்லாட்சியை நிலைநிறுத்துவதற்காக சக்தியானவள் தன் பரப்பிரம்ம
©2
துக்க நிவார
இமங்கள ரூபிணி மதியணி சூலினி
மன்மத பாணியளே; சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும்
சங்கரி செளந்தரியே; கங்கண பாணியள் கனிமுகங் கண்டநல்
கற்பகக் காமினியே; ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி!
கானுறு மலரெனக் கதிர்ஒளி காட்டிக்
காத்திட வந்திடுவாள்; தானுறு தவஒளி தாரொளி மதியொளி
தாங்கியே வீசிடுவாள்; மானுறு விழியாள் மாதவர் மொழியாள்
மாலைகள் சூடிடுவாள்; ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி !
சங்கரி செளந்தரி சதுர்முகன் போற்றிடச்
சபையினில் வந்தவளே; பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப்
பொருந்திட வந்தவளே; எங்குலந் தழைத்திட எழில்வடி வுடனே
எழுந்தநல் துர்க்கையளே; ஜெய ஜெய சங்கரி கெளரிக்ருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி !
3
தணதண தந்தண தவிலொலி முழங்கிடத்
தண்மணி நீ வருவாய் ; பணபண பம்பண் பறையொலி கூவிடப்
பண்மணி நீ வருவாய் ; கண கண கங்கண கதிர்ஒளி வீசிடக்
கண்மணி நீ வருவாய் ; ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி!
இந்து ஒளி

நிலையிலிருந்து தேவையான காலங்களில் இறங்கி பல்வேறு வடிவங்களை தாங்கி அருள் செய்கின்றாள். இத்தகைய அருள் நிலைப்பட்ட செயலை மேற்கொண்ட நாள்களில் விஜயதசமி முக்கியத்துவமுடையது. இறையருளை பெறும் வழிதான் சமயம். சக்தியின் பேரருள் கிடைக்கின்ற காலமாகிய நவராத்திரியில் சக்தியின் அருள் வெள்ளத்தில் உண்மையான பக்தியில் மூழ்கினால் நமக்கு வாழ்வில் வெற்றி நிச்சயம். இராமர் சீதையை மீட்பதற்கு நவராத்திரி விரதத்தை அனுட்டித்ததாகவும் தேவிபாகவதம் கூறுகின்றது. நவ என்பதற்கு புதுமை என்ற கருத்துண்டு. அவ்வகையில் மனிதனை அறியாமையினின்றும் புதுப்பித்து அறிவாக்கிவிடும் சக்தி அதிர்வுகளை கொடுப்பது நவராத்திரி என்பதை நாம் அனுபவத்தால் உணர்ந்து நவராத்திரிப் பண்டிகையைக் கொண்டாடி வாழ்வில் உயர்வோமாக!
ஒரே
ண அஷ்டகம்
பஞ்சமி பெஞ்சநல் பனைக்கு
ஒலD
பஞ்சமி பைரவி பர்வத புத்திரி
பஞ்சநல் பாணியளே; கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேலனைக்
கொடுத்த நல் குமரியளே; சங்கடம் தீர்த்திடச் சமரது செய்த நற்
சக்தியெனும் மாயே; ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி !
மைமிபமா
எண்ணியபடி நீ யருளிட வருவாய்
எங்குல தேவியளே; பண்ணிய செயலின் பலனது நலமாய்ப்
பல்கிட அருளிடுவாய்; கண்ணொளி யதனால் கருணையே காட்டிக்
கவலைகள் தீர்ப்பவளே; ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி !
6
இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை
யென்று நீ சொல்லிடுவாய்; சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச்
சுகமதைத் தந்திடுவாய்; படர்தரு இருளில் பரிதியாய் வந்து
பழவினை ஓட்டிடுவாய்; ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி !
ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி
ஜெய ஜெய ஸ்ரீ தேவி; ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீ பரமேஸ்வரி
ஜெய ஜெய ஸ்ரீ தேவி ; ஜெய ஜெய ஜெயந்தி மங்கள் காளி
ஜெய ஜெய ஸ்ரீ தேவி; ஜெய ஜெய சங்கரி கெளரிக்ருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி !
8
ஜய வருடம் ஆவணி - புரட்டாதி)

Page 9
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
நவராத்தி வழிபடும் முறைகளும் ச
நவராத்திரியை வழிபடும் முறைகள் பலவுள. கன ஒன்று முதல் ஒன்பது வயதுடைய பெண்களைத் தேர்ந் வயதுடைய குழந்தையையும், இரண்டாம் நாள் இரண்டு ஒன்பது தினங்களும் அவ்வெண்ணிக்கைக்கேற்ப வயதுள் கருதி அலங்கார தீபதுாப முதலியவற்றால் வழிபட வேண் வந்த ஒருமுறை. குழந்தைகளை அங்ஙனம் வழிபட பின்னி கொண்டாடும் இடத்திலே" என்பார்கள். தெய்வம் குழந்
குழந்தை. பாலகிருஷ்ணன் குழந்தை தெய்வத்திற்குச் 6 குழந்தைக்குச் செய்தல் ஆகும். நவராத்திரி குழந்தை | வழிபாட்டைச் செய்து கலைமகள் அருளைப் பெற வேண்
பாம்பாடு
N'S
வா பாயாமம் னாளால்
111hil]
சக்தி என்ற சொல்லும் ஒரு சக்தி வா சிவமும் இயங்காது" எனவும் கூறுகின்ற தெய்வங்கள் யாவும் சக்தியோடு சேர்ந்தி இல்லாது தனித்திருப்பதையும் காண்கின்ரே இதிலே இன்னுமொரு சிறப்பு எழுத்துக்கள் ஒரு சக்தி இயக்குகின்றது. "என்னை ஏ இவற்றினால் சக்தியின் மகத்துவம் புலம் "சக்தியும் சிவமுமாய் தன்மையில் உலக பிரம்மனிடம் சிருட்டி சக்தியாகவும், விஷ்னு சக்தியாகவும் விளங்குகின்றது. நவராத்திரி ஜஸ்வரியங்களையும் அளிக்கும் மகாசக்தி வெற்றி, பூமி, தண்ணீர் முதலான எல்லா 2 சக்தி வீட்டின் திருவிளக்கு. குடும்பக் குல யாவும் அளிப்பன சக்தியே. அறம், பொருள் மூலமே அடையலாகும். சாத்வீகம், இராசதம் ஞானாசக்தி, கிரியாசக்தி, இச்சாசக்தி ெ பராசக்தி, இலக்குமி துர்க்கை சரஸ்வதிபெ
நவராத்திரி வழிபாடு மிகவும் புராதன காலந்தொட்டே இமயம் தொட்டு கன்னியாகுமரி வரை இவ்வழிபாடு இன்று குப்தன் ஆட்சிக்காலத்தில் அது ஒரு வீர விழாவாக அனுஷ் பலசாலிகளும் இந்த நாட்களில் பிரதானமாக விஜயதசமியில் காட்டுவார்களாம். கலா விற்பன்னர்கள் கூட தமது திறை அக்பர் போன்ற மொகலாய சக்கரவர்த்திகள் காலத்தில் வந்தது. சிவாஜி மன்னன் காலத்திலும் வெகு சிறப்பா சிறப்பான ஆற்றல்கள் சேர்ந்த மூர்த்தமே துர்க்காதேவி அழைக்கப்பட்டவர்கள் வங்காள மக்கள். அவர்கள் தூர்க் நவராத்திரிப் பண்டிகையின் போது பெண்கள் கும்மியடித் நடனத்துக்கு "கரபோ" என்று பெயர். சக்தியால் உலகம் 2 விரும்பினால் சக்தியை வணங்குதல் வேண்டும். சக்தியை
இந்து ஒளி

எம்.
பி.
பொது இச 4
URY ) 4_2rK INY
- 1'
HIllullululllulliullilullilullullulllullillulllulllul Sk
ரி நாளில் க்தி வழிபாட்டுச் சிறப்பும்
மலமகள் பெண்மணி: அவளை வழிபட தெடுத்தல் வேண்டும். முதனாள் ஒரு வயதுடைய குழந்தையையும், இவ்வாறு ள குழந்தைகளையும் கலைமகளாகவே படும். இது பண்டை நாளில் நடைபெற்று
ற்றல் ஆகாது. "குழந்தையும் தெய்வமும் தையாயிருக்கின்றது. பாலசுப்பிரமணியன் செய்யப்படும் வழிபாடுகள் அனைத்தும் வழிபாட்டை நினைப்பூட்டுகிறது. கன்னி டும்.
யா
ட=ார் - மனோ
அறய 195ாதி)-).
ய்ந்தது. தேவியைச் சக்தி என்கின்றோம்."சக்தியின்றிச் 3னர். உண்மைதான். ஏனெனில் உலகத்தில் ஆண் நப்பதையும், பெண் தெய்வங்கள் ஆண் தெய்வங்கள் றாம். இதனால் சக்தி பிரதானமென்பது புலப்படுகின்றது. ர் கூட வல்ல எழுத்துக்கள். இந்த உலகத்தைக் கூட தோ ஒரு சக்தி தூண்டுகின்றது" என்கிறோமல்லவா? பாகின்றது. பராசக்தியும் பரமாத்மாவும் ஒன்றேயாகும். மெல்லாம்" என்கிறது சிவஞானசித்தியார். பராசக்தியே னுவிடம் ஸ்திதி சக்தியாகவும், உருத்திரனிடம் சம்கார
நாட்களில் மேற்கூறியவாறு அருள் புரிகின்றது. சகல = - பெண். கல்வி, சங்கீதம், கீர்த்தி, செல்வம், தானியம், அம்சங்களுக்கும் தலைமை தாங்குவன பெண் சக்திகளே. - விளக்கு. ஆண்களுக்கு வீரம், புகழ், கீர்த்தி, மதிப்பு ள், இன்பம், வீடு என்னும் குறிக்கோள்களைச் சக்தியின் ம், தாமதம் என்பன முக்குணங்கள். இவை அமைந்துள்ள யன்னும் மூவகைத் தோற்றங்களைக் கொண்டருளும் பனவும் படுமென்பர்.
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
நடத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவில் ம் சிறப்பாக நடந்து வருகின்றது. சந்திர டிக்கப்பட்டது. மற்போர் வீரர்களும் மற்றும் ல் ஒன்று கூடித் தங்களின் திறமைகளைக் மகளைக் காட்டியும் பரிசு பெறுவார்கள். இவ்விழா 'தசரா' என அழைக்கப்பட்டு க நடைபெற்றது. பல தெய்வங்களின் யோவாள். சக்தி வணக்கக்காரர் என்று கையை வணங்குகிறார்கள். குஜராத்தில்
WANANAVASAN துச் சக்தியை வணங்குகிறார்கள். இந்த
AMMAV
\\2 இயங்குகின்றது; வாழ்கின்றது. நாம் வாழ
வேண்டினால் சக்தி பெறலாகும். - (நன்றி : விரதங்களும் பண்டிகைகளும்)
2NAN
ஜய வருடம் ஆவணி - புரட்டாதி)

Page 10
ஒரரரர ரிரிஈஈஈரேராசசேVராராசேசரோஜகுரா
கன்னி மாதத்த
( ஆத்மஜோதி
கன்னித்திங்கள் வருகுது ஐயா காசு பணம் சேர்க்க வேண்டும்.” என்று பாடி சிறிய வயதில் வீடு தோறும் கோலாட்டம் அடித்துப் பாடசாலைக்கு பொருள் சேர்த்த செய்தி இன்றும் பசுமையாக நினைவில் இருக்கின்றது. புரட்டாதி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் வருகின்றபடியால் புரட்டாதி மாதத்திற்குக் கன்னி மாதம் என்றொரு பெயருமுண்டு.
தேவி வழிபாட்டின் தொன்மைக்கு கன்னி மாதத்தில் நடைபெறும் நவராத்திரி வழிபாடே சான்றாகும். வட நாட்டார் இதனைத் தசரா என்று அழைப்பர். இவ்வழிபாடு எப்பொழுது தோன்றியதென்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. மிக மிகத் தொன்மை வாய்ந்தது. வீடு தோறும் இவ்வழிபாடு மிக பண்டு தொட்டே நடைபெற்று வந்துள்ளது. இச்சக்தி வழிபாடு சிறிது பெயர் மாற்றங்களுடன் உலகம் முழுவதும் பரவியிருந்திருக்கின்றது.
புரட்டாதி மாதத்தில் அமாவாசையைத் தொடர்ந்து வருகின்ற ஒன்பது நாட்களும் நவராத்திரி எனப்படும். பத்தாவது நாள் விஜயதசமி எனப்படும். சக்திக்கு ஒன்பது இராத்திரி நவராத்திரி. சிவனுக்கு ஒரு இராத்திரி - அது சிவராத்திரி. இதிலிருந்தே சக்தி வழிபாட்டின் மேன்மை விளங்குகின்றது. மைசூரிலிருந்தே வங்காளத்திலும் தசரா கொண்டாட்டம் ஒரு தனிச் சோபையுடன் கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழர்கள் வளம் பெருக்கி விளைவிக்கும் மண்ணை நிலமகள் என்றார்கள். செல்வத்தைத் திருமகள் என்கிறார்கள். வீரத்தை வீரத்திருமகள் அல்லது துர்க்கை என்றார்கள்.
மக்களுக்கு வீரம் செல்வம் கல்வி மூன்றும் தேவை என்பதற்காகவே முதல் மூன்று நாட்களும் துர்க்கை வழிபாடாகவும், அடுத்த மூன்று நாட்களும் இலட்சுமி வழிபாடாகவும், இறுதி மூன்று நாட்களும் கலைமகள் வழிபாடாகவும் கொண்டாடி வருகின்றனர். பத்தாவது
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள். உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின்று ஒளிர்வாள் கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்து உட்பொரு ளாவாள்
(மகாகவி சுப்பிர
(இந்து ஒளி

ரோசாyேyyஈரேரரரரரரரரரரரரரரரரஏஏஏ97 நில் நவராத்திரி *
நா.முத்தையா
பயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயபபட
நாள் விஜயதசமி அல்லது வெற்றித் திருநாள் எனப்படும். தேவி மகிடாசுரனை வதைத்த திருநாள். மகிடம் என்பது தாமச குணமாகும். தாமச குணத்தை போக்கி சாத்வீக குணத்தை கொடுத்த திருநாள். அன்றைய தினம் எல்லா ஆயுதங்களுக்கும் ஓய்வு கொடுத்து ஆயுத பூஜை செய்யும் திருநாள். பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு அன்றைய தினம் பெருங் கொண்டாட்ட தினமாகும். புதிய பிள்ளைகளுக்கு வித்தியாரம்பத்திற்கு ஏற்ற நாள்.
கலையழகு வெளிப் படுத்தும் பண்டிகையே பொம்மைகளைக் கொலு வைக்கும் நவராத்திரிப் பண்டிகை ஆகும். அக் கொலு வைக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகின்றது. தெய்வப் பிரார்த்தனை, கலையார்வம் இவைகள் பிரதிபலிப்பதே இவ்விழாவின் முக்கியத்துவம். வங்காளத்தில் காளி பூஜையும், உத்தரப் பிரதேசத்தில் பஞ்சாப் ஆகிய இடங்களில் ராம லீலையும், மைசூரில் சாமுண்டேஸ்வரி பூஜையும் முக்கிய இடம் பெறும். ஒன்பது இரவுகள் சக்தியாக விளங்கியவள் சிவனுடன் சேர்ந்து அர்த்தநாரீயாகி விடுகிறாள்.
விஜயதசமியன்று அரச குடும்பத்தினர் வன்னி மரத்தடிக்குச் சென்று அம்மரத்தை பூஜை செய்வர். இந்த வைபவத்தை ஒட்டியே அன்று கோவில்களில் அம்பு போடும் உற்சவம் நடைபெறுகின்றது. வன்னிமரம் பாவத்தையும் சத்துருக்களையும் அழிக்கக் கூடியதென்று சொல்வதுண்டு. துர்க்கையின் உருவம் என்று தங்கள் ஆயுதங்களை வன்னி மரத்தின் மேல் ஒளித்து வைத்திருந்து எடுத்துச் சண்டை போட்டு வெற்றி பெற்றனர்.
இராவணனைச் சம்ஹரிக்க இராமர் சக்தியைப் பூஜை செய்தார். அதனைக் கொண்டாடுவதே நவராத்திரி என்று வங்க மொழியில் இராமாயணம் தந்த கிருத்தியவாய் என்ற கவி எழுதியிருக்கிறார்.
(நன்றி: பன்னிருமாத நினைவுகள்)
மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள் கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள் கோது அகன்ற தொழில் உடைத்தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில் ஈத னைத்தின் எழிலிடை உற்றாள்
இன்பமே வடிவா கிடப் பெற்றாள்
மணிய பாரதியார்)
ஜய வருடம் ஆவணி - புரட்டாதி)

Page 11
பழந்தமிழ் நூல்
அம்பிகை
அம்பிகை வழிபாடு பாரத நாட்டில் தொன்று தொட்டு நிலவி வருகின்றது. தமிழ் நாட்டில் அம்பிகையை பல்வேறு வடிவங்களில் வைத்து வழிபடும் வழக்கம் நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்ததென்பதை பழந்தமிழ் நூல்களால் அறியலாம். பொது மக்கள் அம்பிகையை மிகுதியாக வழிபட்டு தங்களுக்கு வேண்டிய வரங்களை பெற்றுவந்தார்கள். இன்றும் எல்லாச் சாதியினரும் வழிபடும் கிராம தேவதைகளின் பெரும்பாலாக உள்ள மூர்த்திகள் அம்பிகையின் அம்சங்களாகவே இருப்பதைக் காணலாம். அம்பிகையின் வீரத் திருமூர்த்தியாகிய துர்க்கையை கொற்றவை என்று தமிழிற் சொல்வார்கள். வீரர்கள் கொற்றவையை வணங்கிப் பலி கொடுத்து வழிபட்டார்கள். தம் தலையையே வெட்டிப் பலியாக இட்டார்கள் என்று பழைய நூல்களிலிருந்தும் சிற்பங்களில் இருந்தும் தெரிய வருகின்றது.
தமிழ் இலக்கணம் நிலத்தை ஐந்து பகுதியாக பிரித்துச் சொல்கின்றது. மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி எனப்படும். ஈரமில்லாமல் வெறும் கரடுகளாக உள்ள நிலம் பாலை. காடும் காடு சார்ந்த இடம் முல்லை. வயலும் வயல் சார்ந்த இடம் மருதம். கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல். ஒவ்வொரு நிலத்துக்கும் ஆட்சி புரியும் தெய்வம் உண்டு. அந்த வகையில் பாலை நிலத்துக்குக் கொற்றவை அல்லது துர்க்கை தெய்வம். தொல்காப்பியம் என்ற பழைய இலக்கண நூலில் பாலை நிலத்துக்கு தெய்வம் கூறப்படவில்லை. என்றாலும் இலக்கியங்களை ஆராய்ந்தால் அந்த நிலத்துக்கு கொற்றவையே தெய்வம் என்பது தெரியவரும். பாலை நிலத்திலுள்ள மறவர்கள் கொற்றவையை வழிபடுவார்கள். சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரி என்ற பகுதி இருக்கிறது. அங்கே பாலை நிலத்திலுள்ள வேட்டுவர்கள் கொற்றவையை வழிபட்டு வாழ்த்துவதாக அமைகின்றது. பிற்காலத்தில் தோன்றிய பரணி நூல்களில் பாலை பாடியது என்ற பகுதி வரும். அங்கே கொற்றவை தெய்வமாக வீற்றிருப்பதும், அவளைச் சூழப் பேய்கள் இருப்பதும், அந்தப் பேய்கள் கொற்றவைக்குப் பல செய்திகளை சொல்வதுமாகிய நிகழ்ச்சிகளை காணலாம். இவ்வாறு பேய்கள் துர்க்கைக்கு நடந்த கதைகளை சொல்வது வழக்கம் என்பதைச் சங்ககாலத்து நூல்களாலும் தெரிந்து கொள்ளலாம்.
"பைம்பூண் சேய் பயந்தமா மோட்டுத் துணங்கையஞ் செல்விக்கு அணங்குநொடித் தாங்கு"
என்பது பெரும்பாணாற்றுப்படை. "பசும்பொன்னாலாகிய ஆபரணங்களை அணிந்த முருகனைப் பெற்ற பெரு வயிற்றையும், கை கோர்த்து ஆடும் குரவைக் கூத்தையும் உடைய துர்க்கைக்கு பேய்கள் கதை சொன்னாற்
(இந்து ஒளி

மகளில்
* விடியல
போல" என்பது இதன் கருத்து. கலித்தொகை என்ற நூலிலும் இந்தச் செய்தி வருகிறது.
"பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய்நொடித் தாங்கு”
(பெரிய பாலைவனத்தில் எழுந்தருளியிருக்கும் துர்க்கைக்கு பேய் கதை சொன்னாற்போல்)
பாலைவனத்துக்குரிய தெய்வமாக இருப்பதனால் துர்க்கைக்கு காடுகான் என்ற பெயர் தமிழில் வழங்கும்.
"சண்டைக்கு எடுபிடி மாடுபிடி" என்பது ஒரு பழமொழி. போர் உண்டாவதற்கு முன் முதலில் பகைவர் களின் மாடுகளை பிடித்து வருவது பழைய வழக்கம். பாரதத்தில் விராட பர்வத்தில் மாடுபிடி சண்டை வருகிறது. தொல்காப்பியத்தில் புறத்திணை இயல் என்ற பகுதியில் போர் முறைகளைப்பற்றிய இலக்கணங்கள் உள்ளன. அவை தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே உள்ளவை. பழைய இலக்கண நூல்கள் கிடைக்க வில்லை. இப்போது கிடைக்கும் தமிழ் நூல்கள் எல்லாவற்றிலும் மிகப்பழைமையானது தொல்காப்பியம். அந்நூலில் போர் முறைகளின் இலக்கணத்தை வகுக்கும் புறத்திணையியலில் போர் நிகழ்ச்சிகளைச் சொல்லும் துறைகள் பல உண்டு. அந்தத் துறைகளில் ஒன்று கொற்றவை நிலை என்பது. பகைவர்களுடைய மாடுகளைப் பிடித்துக் கொண்டு வரச்செல்லும் வீரர்களும், பகைவர் அழைத்துச் செல்லும் மாடுகளை மீட்கச் செல்லும் வீரர்களும் தங்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டுமென்று துர்க்கையை வேண்டிக் கொள்வார்கள். அதைச் சொல்லும் துறைக்குக் கொற்றவை நிலை என்று பெயர்.
அங்கே ஒரு பழம் பாட்டை உரையாசிரியர் உதாரணம் காட்டுகிறார்.
"வந்த நிறையின் இருப்பு மணியுடன்
எந்தலைநின்றலை யாம்தருதும்; - முந்நூநீ மற்றவை பெற்று வயவேந்தன் கோல் ஓங்கக் கொற்றவை! கொற்றம் கொடு."
(கொற்றவையே நாங்கள் அழைத்துவந்த பசு மாடுகளின் இரும்பு மணிகளுடன் எம் தலைகளையும் உன்னிடத்தில் யாம் சமர்ப்பிப்போம். அவற்றை நீ முதலில் ஏற்றுக்கொண்டு எங்கள் வலிமையுடைய அரசருடைய செங்கோலாட்சி எங்கும் ஓங்கும் படி வெற்றியைத் தருவாயாக.)
(நன்றி : துர்க்கா கலைக்களஞ்சியம்)
ஜய வருடம் ஆவணி - புரட்டாதி)

Page 12
நவராத்திரி மகத்துவம்
இந்தியாவிலும் இலங்கையிலும் இந்துக்கள் வாழும் பிற நாடுகளிலும் நவராத்திரி வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. கிருதயுகத்திலே வாழ்ந்து வந்த சுகேது மன்னனும் அவன் மனைவி சுதேவியும் உறவினராதிகளுடனான போரில் நாடு, நகர் இழந்து வனம் புகுந்தனர். அங்கு மிகுந்த மனவருத்தத்துடன் இருந்த இவர்களை ஆங்கீரச முனிவர் கண்டு ஆறுதல் சொல்லி நவராத்திரி விரதத்தை உபதேசித்தார். அவர்கள் இருவரும் முறைப்படி இவ்விரதத்தை அனுஷ்டித்து வந்தனர். அதன் பயனாக இவர்களுக்கு சூரியப்பிரதாபன் என்ற மகன் பிறந்தான். அவன் கல்வியறிவிலும் சிறந்து விளங்கினான். படை எடுத்துச் சென்று மீண்டும் நாட்டைக் கைப்பற்றினான். நவராத்திரி விரதம் பற்றிய மகிமை மக்களிடையே பரவலாயிற்று. நவராத்திரி விரதம் சக்தி மகிமையை விளக்குகின்றது. இந்தியாவின் ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு பெயரில் நவராத்திரி விழா அழைக்கப்படுகின்றது. கர்நாடக மாநிலத்தில் நவராத்திரி விழாவை பத்துநாள் விழாவாக "தசரா” என்ற பெயரால் கொண்டாடுகிறார்கள். மைசூரில் சாமுண்டேஸ்வரிதேவி கோயிலில் பத்தாவது நாள் விஜயதசமி அன்று மிகப் பெரிய நகர்வலம் நடைபெறுகின்றது. மைசூர் மன்னனின் அரண்மனையும் அலங்கரிக்கப்பட்டு மன்னர் யானை மீது ஊர்வலம் வருவார். ஸ்ரீதுர்க்கையை இராமர் பூஜித்த வரலாற்றை நினைவு கூரும் முகமாக உத்தரப்பிரதேசத்தில் இன்றும் "ராமலீலா" என்று கொண் டாடுகிறார் கள். கிராமம் தோறும் ராமலீலா அன்று கொண்டாடப்பட்டு விஜயதசமியன்று இராவணனின் உருவத்தைச் செய்து அந்தப் பொம்மைக்குள் பட்டாஸ் பாணம் மத்தாப்பூக்களை வைத்து மூடி கிராம் மைதானத்தில் வைத்துக் கொழுத்துவார்கள். இது "ராவண தகனம்" எனப்படும். இதே போல் டெல்லியிலும் இராம நாடகத்துடன் "நவராத்திரி இராம் லீலா" விழாவாகத் தொடங்கி பத்தாவது நாள் விஜயதசமியன்று இராவணன் கும்பகர்ணன் ஆகியோரது உருவங்களைப் பொம்மைகளாகச் செய்து இராமனின் வில்லிலிருந்து தீ கொழுத்தப்பட்ட அம்பை எய்து இராவண சம்காரம் கொண்டாடுகிறார்கள்.
வங்காளத்தில் துர்க்கா பூசை எனக் கொண்டாடப்படுகிறது. மிகப்பெரிய காளி சிலைகளைப் பூஜித்து பத்தாவது நாளான விஜயதசமியன்று அச்சிலைகளை கடலில் விடுகின்றார்கள். கல்கத்தா சக்தி உபாசனை தொடர்பாக பிரசித்து பெற்றது. இராமகிருஷ்ண பரமஹம்ஸரை மகாஞானியாக்கிய காளி மாதாவின் திருவருட் சிறப்பை விளக்கும் முறையில் நவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள். மகாராஷ்டிரத்தில் சில கோயில்களிலுள்ள விக்கிரகங்களை கோயிலிலிருந்து வெளியே கொண்டு வந்து வன்னி மரத்தடியில் வைத்துப் பூஜித்து பூசை முடிந்ததும் சிறுவர்கள் வன்னிமரத்து இலைகளைப் பறித்து உறவினர் நண்பர்களது வீட்டிற்குச் சென்று "சொர்ணம் பெற்றுக் கொள்ளுங்கள்" என இலைகளைக் கொடுத்து வணங்குவது வழக்கம். இதே போல் ராஜஸ்தான், காசி போன்ற இடங்களில் இராமல்லா எனப் பெயரிட்டுக் கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாட்களும் நவராத்திரி விழா கொண்டாடி விஜயதசமியன்று ஆயுதங்களையும் இசைக்கருவிகளையும் பூசையில் வைத்து வழிபடுகிறார்கள்.
(நன்றி : இந்து கலைக்களஞ்சியம்)
(இந்து ஒளி

லகலகலகலகலகலகலவிலல்
தாய்மை வழிபாட்டின் தொன்மை
தலைலைலைலைலைலைலைலைலைலைலை
*SS
தாய்மை பல்வேறு அம்சங்களின் உறைவிடமாகும். இதில் தெய்வீகத்தைக் கண்ட நம் முன்னோர் தமது அறிவு வளர்ச்சிக்கேற்ப இவ்வம்சங்களை உருவகப்படுத்தினர். இம்மகாசக்தியை இலட்சுமியாகவும், துர்க்கையாகவும், சரஸ்வதியாகவும் அவள் அள்ளிச் சொரியும் கருணைக்கேற்ப உருவம் கொடுத்து வழிபட்டனர். அத்துடன் இவளைச் சிறுகுழந்தையாகக் கொண்டு வழிபடுமிடத்து சந்திகா என்றும், ஏழு வயதில் சண்டிகா என்றும், எட்டு வயதில் சாம்பவி என்றும், பத்து வயதில் கெளரி என்றும், சிருஷ்டியில் மகா காளி என்றும், பிரளயத்தில் மகாமாரி என்றும், செல்வத்தை அளிப்பதில் இலட்சுமி என்றும், செல்வத்தை அழிப்பதில் மூதேவி என்றும் கொள்வர். இத்தகைய கோட்பாடு உண்மையிலேயே தாய்மைத் தத்துவத்தின் ஆக்க, அழிவு (சாந்த, கொடூர) மூர்த்தங்களின் அம்சங்களையே வெளிக்காட்டுகின்றது எனலாம். அத்துடன் நம்மவர்கள் இச்சிறப்பியல்புகள் கொண்ட பராசக்தியை மதுரையில் மீனாட்சியாகவும், காஞ்சியில் காமாட்சியாகவும், காசியில் விசாலாட்சியாகவும்
அகக்கண்களிற் கண்டு களிக்கவுந் தவறில்லை.
எனவே ஈழத்து மத வரலாற்றிலுஞ் சக்தி வழிபாடு பழமையும் பாரம்பரியமும் உடையதாகிறது. இதை இலக்கிய தொல்லியற் சான்றுகள் உறுதி செய்கின்றன. ஆரம்பத்தில் பராசக்தியாகத் தனித்து வளர்ந்த இவ்வழிபாடு காலகதியில் இந்து மதத்தின் ஏனைய கடவுளர்களதும் சக்திகளதும் வழிபாடாக விரிந்தது. பௌத்த மதத்தில் இது பத்தினி வழிபாடாகப் பரந்தது. ஈழத்தைப் போன்றே தென்கிழக்காசிய நாடுகளிலும் இந்து மதம் கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முன்னரே பரந்திருந்தது. இவ்வித பரவலிற்கு இந்நாடுகளுக்குச் சென்ற இந்திய வர்த்தகர்களின் பங்களிப்புக் கணிசமானது. இன்று இந்நாடுகளிற் பௌத்தம், இஸ்லாம் ஆகிய மதங்கள் மேலோங்கிக் காணப்பட்டாலும்கூட, இந்நாடுகளிற் கண்டெடுக்கப்பட்ட இந்துமத உருவங்கள், கோயில்கள், கல்வெட்டுக்கள், பண்டைய காலத்தில் இப்பிராந்தியத்தில் இந்து மதம் பெற்றிருந்த செல்வாக்கை எடுத்துக் காட்டுகின்றன. சிவ, விஷ்ணு, பிரம வழிபாட்டோடு இவர்களின் சக்திகளும் இவ்வழிபாட்டில் முக்கியம் பெற்றிருந்தன. பகவதி, சதுர்புஜதேவி, துர்க்கை, கங்கை, கெளரி, இந்திராணி, உமா, சரஸ்வதி, இலட்சுமி, மகிஷாசுரமர்த்தனி போன்ற அம்சங்களில் தேவி இங்கே துதிக்கப்பட்டாள். சிவசக்தியின் இணைப்பை இங்கே கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கங்களும் விளக்குகின்றன.
- பேராசிரியர் சி.க.சிற்றம்பலம். (நன்றி: சிவத்தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
10 )
ஜய வருடம் ஆவணி - புரட்டாதி)

Page 13
ஐஸ்வரிய மகாலட்சுமி
ஐஸ்வரியம் என்பது உலகிலுள்ள செல்வங்களையும் குறிக்கும் சொல்லாகும். மகாலட்சுமி அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியாக இருப்பதனால் ஐஸ்வரிய மகாலட்சுமி என்று அழைக்கப்படுகிறாள். பாற்கடலில் இருந்து மகாலட்சுமி தோன்றிய போது அவளுடைய செல்வச் செழிப்பை நல்கும் அனேக பொருட்களும் தோன்றின. அவை அனைத்தையும் வழிபட்டுத் தேவர்கள் எடுத்துக் கொண்டனர். அந்த செல்வம் நல்கும் பொருட்களுடன் லட்சுமிதேவியின் உருவத்தை எழுதி வழிபடும் வழிபாடே ஜஸ்வரிய மகாலட்சுமி வழிபாடாகும். நடைமுறையில் அனைத்து செல்வங்களின் உருவங்களையும் எழுத முடியாது என்பதால் ஐராவதம், காமதேனு, கற்பக விருட்சம், இந்திரன், தன்வந்திரி, வாருணி, அப்சரஸ் ஆகிய உருவங்களை மட்டும் மகாலட்சுமியுடன் அமைத்து வழிபடுகின்றனர்.
இந்த நிலையில் அவள் கன்யா லட்சுமியாக போற்றப்படுகின்றாள் கடல் அலைகள் மீது ஐராவதம் படுத்திருக்கின்றது. அதன் முதுகின் மீது மகாலட்சுமி மேற்கரங்களில் தாமரை மலர்களையும் கீழ்க்கரங்களில் அபயமுத்திரை அமுதகலசம் தாங்கி
(தீபத்தின் சுடராய் விளங்கும் திருமகள்
மலர்ச்சோலைகளில் திருமகள் விரும்பிவாழ்வதைப் போலவே தீபங்களில் திருவிளக்குகளில் மகாலட்சுமியை நிலைப்படுத்திப் பூசை செய்கின்றனர். திக திருமகளையும் இல்லுறை தெய்வங்களையும் அதில் இருப்பதாகப் போற்றி : உச்சியில் லட்சுமியின் திருவுருவம் அமைந்திருப்பதைக் காணலாம். தங்கத் திருமகளையும் சேர்த்து அமைக்கின்றனர். தீபம் ஏந்திய பெண் அல்லது மகாலட்சு இல்லத்தில் பெருஞ் செல்வம் உண்டாகும். இராமாயணத்தில் அசோகவனத்தில் அவளுக்கு நன்மையுண்டாக்கத்தக்க பல கனவுகளைத் தான் கண்டதாக கூறுகின் கொண்ட ஒரு பெரிய திருவிளக்கை ஏந்தியவாறு திருமகள் இராவண்ணின் அர இதன் பயனாக இராவணண் மாண்டு விபூஷணன் இலங்கைக்கு அரசனானான். க வடிவங்களைக் காண்கின்றோம். இவை பாவை விளக்குகள் என்றும், தீபவக்சுவிச செல்வச் செழிப்புடன் இருப்பதைக் குறிக்கும் வகையில் ஏராளமான அணிமணி திளைத்திருப்பதைக் குறிக்கும் வகையில் இவர்களுடைய தோள்களில் கிளிகள்
(இந்து ஒளி

தரு,
ச.
தம்
கடாகச ந, 8 ஒக!
41 முப்.31 ம்
அமர்ந்துள்ளாள். அவளுடைய பாதத்தில் தேவர்கள் அர்ச்சித்த பொற்காசுகளும் மலர்களும் குவிந்துள்ளன.
அவளுக்கு பின்புறம் மலர்கள் நிறைந்த கற்பக மரம் நிழல் பரப்புகிறது. இது வேண்டியவற்றை விரும்பியவாறு தரும் தெய்வீக மரமாகும். அவளுடைய வலப்புறம் செல்வத்தைக் காவல் புரிவதுடன் அச்சம் அகற்றி மகிழ்ச்சியை அளிக்கும் தேவியான விந்தியாவாசினி எனப்படும் துர்க்கை நிற்கின்றாள். அவளுக்கு வலப்புறம் மன மகிழ்ச்சியையும் இன்பங்களையும் தரும் சந்திரன் நிற்கின்றான். இவன் லட்சுமியை அன்புடன் வழிபடுவர்களுக்கு மகிழ்ச்சியையும் இன்ப போகங்களையும் அளிக்கின்றான். ஐஸ்வரிய மகாலட்சுமியின் இடப்புறம் தேவப் பணிப்பெண்ணாக அப்சரஸ் மணமாலையை ஏந்தியவாறு நிற்கின்றாள். இந்த மணமாலையை சூட்டித்தான் திருமகள் பின்னாளில் திருமாலை மணக்கின்றாள். அவள், உலகில் பருவமடைந்த பெண்களுக்கு விரைவில் திருமகள் அருளால் சுகமான வாழ்வு கிடைக்கும் என்பதனைப் பார்வையாலேயே தெரிவிக்கின்றாள். இவளுடைய இடப்புறம் தேவ வைத்தியனான தன்வந்திரி நிற்கின்றார். இவர் அன்பர்களின் நோய் நொடிகளை தீர்த்து வைப்பதுடன் துன்பங்கள் தாக்காமலும் பார்த்துக் கொள்கின்றார். இவர்களுக்கு பின்னணியில் காமதேனு என்னும் தெய்வீகப் பசு உள்ளது. இது அன்பர்களுக்கு சுவையான உணவை வேண்டிய நேரத்தில் விரைந்து அளிக்கின்றது. மேலும் தனி உலகத்தை படைக்கும் ஆற்றல் பெற்றதாகவும் உள்ளது. இதற்கு இணையாக வலப்புறம் உச்சைச்வரஸ் என்னும் குதிரை நிற்கின்றது. இது நினைத்த இடத்திற்கு இமைக்கும் நேரத்தில் செல்லும் ஆற்றல் உடையதாகும்.
நினைத்த இடத்திற்கு விரைந்து செல்லும் ஆற்றல், வேண்டியதை விரும்பியவாறு பெறுதல், சுவையான உணவு, நினைத்ததை முடிக்கும் ஆற்றல், எடுத்த காரியத்தை உறுதியுடன் நிறைவேற்றும் சக்தி, தொடரும் வம்ச பரம்பரை, திருமணத்துடன் சுகமான வாழ்வு, நோயற்ற அதிக பலமான உறுதி உடல் ஆகியவற்றைப் பெறுவதற்காக ஐஸ்வரிய மகாலட்சுமியை வழிபடுகின்றோம். இந்த வழிபாட்டினால் மகிழும் தேவி அன்பர்களுக்கு அவற்றை வழங்குகின்றாள். குல தெய்வங்களை மறந்து போனவர்கள், தமது குல தெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் இந்த ஐஸ்வரிய மகாலட்சுமியை வழிபட்டுவர குலதெய்வங்களின் அருள் கிடைக்கும். வீடுகளில் உண்டாகும் காரியத்தடை, திருமணத்தடை, நோய்நொடிகள், துக்கம் முதலியன மறைந்து சுகமான வாழ்வு செழிக்கும்.
மாதா பராசக்தி மிகப்பணிந்து வாழ்வோமே! மாதா பராசக்தி வையமெல்லாம் நீ நிறைந்தாய் ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே ஏதாயினும் வழிநீ சொல்வாய் எமதுயிரே வேதாவின் தாயே மிகப்பணிந்து வாழ்வோமே!
லும் வாழ்கின்றாள். சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ரமும் மாலையில் பூசை மாடத்தில் விளக்கேற்றி வழிபடுகின்றனர். பெரிய நிலை விளக்குகளின் தால் விளக்குகளைச் செய்யும் போது அதில் நெமது வீட்டுக்கு வருவது போல் கனவுகண்டால் ல் சிறையிருந்த சீதையிடம் திரிசடை என்பவள் ஜாள். அவற்றிலொன்றாக ஆயிரம் தீபங்களைக் ண்மனைக்குள் சென்றாள் என்று கூறுகின்றாள். அவயங்களில் விளக்குகளை ஏந்தி நிற்கும் பெண் கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இப்பெண்கள் கெளை அணிந்துள்ளனர். எப்போதும் சுகத்தில் எ (சுகங்கள்) அமைக்கப்பட்டுள்ளன.
ஜய வருடம் ஆவணி - புரட்டாதி

Page 14
Uெபாக். சரஸ்வதி தேவியானவள் பிரமனின் மனைவி ஆவாள் எனப் புராணம் நுால்களும் சிற்பநுால்களும் விவரிக்கின்றன. ஒவள் பிரமன் மணவியானது தெய்வமானதால் வாணி எனவும், கலைகளின் பிறப்பிடமாக விளங்குவதால். தேவதையையும் மக்கள் வழிபட்டனர். அதுவே பிற்காலத்தில் சரஸ்வதி என்று
MMMMMMM* கலைஞான வடிவம் கல்விச் செல்வத்திற்கும் கலைச் செல்வத்திற்கும் அதி தெய்வமாகச் சரஸ்வதிதேவியானவள் போற்றப்படுகின்றாள். தொன்மைக் காலத்தில் இருந்தே கலைகளின் வடிவமாய் விளங்கும் சரஸ்வதிதேவியினை வழிபடும் வழக்கம் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் இருந்து வருகிறது. சரஸ்வதிதேவியின் திருவுருவம் சிவாலயங்களின் உள் ஆவரணத்தின் வாயு பாகத்தில் பிரதிட்டை செய்யப்பட்டிருக்கும்.
இத்தேவியின் திருவுருவத்தின் பக்கத்திலேயே இலட்சுமிதேவியையும் காணலாம். இவ்விருவரும் மக்களுக்கு கல்விச் சிறப்பையும் செல்வத்தின் இன்றியாமையையும் அறிவிக்கும் திருமேனிகளாய் விளங்குகின்றனர். சிவாலயங்கள், விஷ்ணு, ஆலயங்கள், புத்த ஆலயங்கள், ஜைன ஆலயங்கள் மற்றும் பிறநாடுகளிலும் சரஸ்வதி தேவி வழிபாடு இன்றும் நடைமுறையில் உள்ளது. இத்தேவியினை கலைமகள்,
வாக்தேவி, வாகீஸ்வரி, மகாசரஸ்வதி, பாரதி, வாணிஇ சகலகலாவல்லிஇ சரஸ்வதி எனப் பலவாறாகப் போற்றுவர். மகா சரஸ்வதியின் வடிவம் அன்னை பார்வதியின் வடிவமாகும்.
சகலகலாவல்லி
கல்வி ஞானத்திற்குப்
அனைத்து உயிர்களின் நாவிடர் என்று கந்தபுராணம் கூறும். மக்கள் அளிக்கும் கடமை சரஸ்வதி தேவிக்கே வளர்ப்பதுபோல் நல்ல உயிர்களை ஞானப் பா வழி வகுப்பவள் சரஸ்வதி தேவியேயாவாள். க துதிக்கப்படுகின்றாள். வாக்கு சொல் ஆகியவற்றிற் சரஸ்வதி, கலைமகள், பாரதி, வாணி, வாக்கிறைவி வித்யாதேவி, சொல்லிருங்கிழத்தி, சொற்கலையாள்,
இவள் மக்களுக்கு ஞானத்தைப் புகட்டுவதால் ஞானப் பிராட்டி, ஞானப் பூங்கொடி என்றும், கவிக்
நாமிசைக் கிழத்தி, நாவுக்கரசி என்றெல்லாம் ஞான சொரூபிணியாகையால் "வித்யா" என்றும் ''சின்மயீ" எனவும் குறிப்பிடுவதுண்டு. கல் பூரண அறிவு வளர்ச்சியுடனே நிறைவுறு ஆயகலைகள் அறுபத்து நான்கு இக்கலைகளுக்கெல்லாம் ;
கலைம்
(இந்து ஒளி

காரணம் ங்கள் கூறும் சரகர்வதியின் திருவுருவத்தினைப் பல நிலைகளாக வேதாகம கால் பிராமினைவும், எல்லாவற்றையும் தாங்குவதால் பாரதி எனவும், வாக்குத் சரஸ்வதி எனவும் கூறப்படுகின்றாள். வேதகாலத்தில் "சரசு" ஆற்றையும் வாக்'
பெயர் ஏற்படக் காரணமாயிற்று
4
சரஸ்வதியின் உருவ அமைப்பு சரஸ்வதியின் உருவ அமைப்பு பற்றி சிவாகம
நூல்கள் கூறுகின்றன. சரஸ்வதியானவள் வெள்ளையுடை அணிந்து வெண்தாமரை மீது வீற்றிருப்பாள்.
பின்வலக்கரத்தில் அக்ஷ மாலையும், முன்வலக்கரத்தில் வியாக்கியான முத்திரையும், பின் இடக்கரத்தில் வெண்தாமரையும், முன் இடக்கரத்தில்
புத்தகமும் (சுவடி) விளங்கும். வீணையை
வைத்துக்கொண்டிருப்பவளாகவும், கமண்டலத்தை ஏந்தியிருப்பவளாகவும்
சில ஆகமங்கள் கூறுகின்றன. சரஸ்வதியானவள் பிரம்மன் நாவில் வீற்றிருக்கின்றாள் எனப் புராணங்கள் கூறுகின்றன. இவள் பிரமவித்தையை முகமாகவும், நான்கு தேவங்களைக்
கரங்களாகவும், எண்ணையும் எழுத்தையும் கண்களாகவும், இசையையும் இலக்கணத்தையும் இரு தரங்களாகவும்,
இதிகாச புராணங்களைத் திருவடிகளாகவும், ஓங்காரத்தை யாழாகவும் (வீணையாகவும்) கொண்டு
விளங்குகின்றாள்.
சரஸ்வதிதேவி
க்கும் » அதிதெய்வம்
த்தும் கலைமகள் வீற்றிருக்கின்றாள் நக்குக் கல்வி என்னும் வித்தையை
உரியது. பிள்ளைகளுக்குப் பால் ஊட்டி லூட்டி வளர்த்து அவை இறைவனை அடைய கல்விக்குத் தனிக் தெய்வமாக இவள் போற்றித்
கெல்லாம் அதிபதியாக விளங்குவதால் இவளைச் - வாக்கின் செல்வி, வாக்குத்தேவி, வாக்கு வாதினி,
சொல் மங்கை எனப் பல நூல்கள் குறிப்பிடுகின்றன.
ஞானக்கொடி, ஞானக் கொழுந்து, ஞான அமலி, களின் நாவில் குடிகொண்டிருப்பதால் நாமடந்தை, ம் அழைப்பர். ஞானமோகத்தைக் கொடுக்கும் D, சைதன்ய ரூபியாக (உலகம்) விளங்குவதால்
வியறிவு என்பது ஏட்டுப்படிப்புடன் முடியாமல் ம். இவற்றிற்குக் கலையறிவு அவசியம்.
என்று கணக்கிடுவர் பெரியோர். தலைவியே சரஸ்வதி எனும் கள்.
ஜய வருடம் ஆவணி - புரட்டாதி)

Page 15
மகாசரஸ்
இரட்டைப் புலவர்கள்
பெண்ணையாற்றின் கரையில் அமைந்துள்ள திருவாமாத்தூர் எனும் சிவத்தலத்தின் மீது இரட்டைப் புலவர்கள் ஒரு கலம்பகம் பாடினர். அதிலுள்ள ஒரு பாடலில் ஆற்றின் மேற்கரையில் கோயில் அமைந்திருப்பதாக தவறாகப் பாடிவிட்டனர். இப்பிழையை அரங்கேற்றத்தின் போது பிறர் சுட்டிக் காட்டினர். "எங்களின் நாவில் உள்ள கலைமகள் பொய் சொல்லாள்” என்று புலவர்கள் கூறினர். அன்று இரவில் பெய்த கடும் மழையில் ஆறு திசைமாறி ஓடத் தொடங்கியது. புலவர்களைக் காப்பாற்றும் பொருட்டு ஆற்றோட்டத்தின் திசையையே மாற்றிய கலைமகளின் கருணையை என்னென்பது.
சரியாசனம் பெற்ற காளமேகம்
ருமலைராயன் என்ற மன்னன் தமிழ்ப் புலவர்களைப் போற்றி வந்தவன். இவனது ஆஸ்தான கவி அதிமதுரம் என்பவர். இவர் கவி காளமேகத்தைப் பற்றி குறைவுபடச் சொல்லியுள்ளார். அதனால் மன்னன் கவி காளமேகத்திற்கு சரியான ஆசனம் (இருக்கை) கொடுக்கவில்லை. இதனைக் கண்ட கவி காளமேகம் சரஸ்வதியினை தியானம் செய்தார். அரசனின் சிம்மாசனத்திற்கு இணையாக அவள் அருளால் ஓர் உயரிய ஆசனம் வந்தது.
அப்போது காளமேகம். வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் - வெள்ளை
அரியாசனத்தில் அரசரோடு என்னை சரியாசனம் வைத்த தாய்."
என்று போற்றிப் பாடினார். அரசனும் மக்களும் புலவரைப் போற்றி மகிழ்ந்தனர்.
(இந்து ஒளி

வைதி அருள் பெற்றோர்
- கலைமகளின் கருணையைப் பெற்ற கம்பர்
கம்பர் அருளிச் செய்த சரஸ்வதி அந்தாதி என்பது சரஸ்வதியைப் போற்றும் பாடல்களைக் கொண்ட நுால். அந்தாதித் தொடையில் அமைந்ததோர் சிற்றிலக்கியம். கல்விக்கும் கலைகளுக்கும் உரிய தெய்வமாகப் போற்றப் பெறும் தெய்வம் கலைமகள், கலைமடந்தை, நாமடந்தை, நாவின் கிழத்தி, சொல்லின் கிழத்தி, வெண்டாமரைச் செல்வி முதலிய பெயர்களால் இலக்கியங்களில் புகழப்படுகின்றாள். இவள் பிரமதேவனின் தேவியாவாள். இவளைக் குறிக்கும் சரஸ்வதி என்னும் வடமொழிப் பெயர் பிற்கால நூலாகிய சூடாமணி நிகண்டில்தான் இடம்பெறுகிறது. சரஸ்வதி அந்தாதியைப் பற்றிய ஒரு செவிவழிச் செய்தியை வை.மு.கோபால கிருஷ்ணாச்சாரியார் சுட்டியுள்ளார். சோழ மன்னன் அவையை அலங்கரித்த கம்பர் அம்மன்னனுடன் மாறுபட்டு அந்நாட்டை விட்டு வெளியேறி, மாறுவேடம் பூண்டு சேர மன்னனை அடுத்து அவற்கு அடைப்பைக்காரராய் இருந்தார். சேர மன்னனின் அவைப் புலவர் பொறாமையால் கம்பரை இழிவுபடுத்தச் செய்த சூழ்ச்சியை முறியடிக்க வேண்டிக் கம்பர் சரஸ்வதி தேவியை இந்த அந்தாதியால் போற்றி அவளுடைய இடக்காற் சிலம்பைப் பெற்றார் என்றும். பின்னர் மன்னன் வேண்டுகோளுக்கு இசைந்து தேவியைத் துதிக்க கலைமகள் தன் வலக்கால் ஒற்றைச் சிலம்புடன் தோன்றி நடனமிட்டுக் கம்பருக்கு அளித்த இடக்காற் சிலம்பை மீண்டும் அணிந்து கொண்டு காட்சி தந்தாள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. சரஸ்வதி அந்தாதி முப்பது கட்டளைகளைக் கலித்துறைப் பாடல்களால் அமைந்ததோர் துதிமாலை. இதன் காப்பாக "ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் என்றும், "படிகநிறமும் பவளச் செவ்வாயும்" என்றும் தொடங்கும் இரு வெண்பாக்கள் இடம் பெற்றுள்ளன. இந்தக் காப்புப் பாடல்களைப் பின்னாளில் பல்வேறு நுால்களைப் பதிப்பித்தவர்கள் தம் நுால்களின் தொடக்கத்தில் வரைந்துள்ளமையை காணலாம். இந்நூலில் சகல கலைகளையும் தந்தருளும் தேவியின் திருவுருவையும், அவள் கலைநாயகியாய் வணங்குவார்க்குப் புலமையளித்தருளும் திறத்தையும் வெளிப்படையாகக் காணலாம். மேலும் சரஸ்வதிதேவி எல்லாவகையான மேம்பாட்டிற்கும் காரணமாக விளங்குகிறாள் என்பதை இந்நுால் விளக்கமாக கூறுகின்றது.
கொட்டிக்கிழங்கு விற்கும் பெண்ணாக
- வந்த சரஸ்வதிதேவி கம்பரின் மகன் அம்பிகாவதி சோழ மன்னனின் மகளாகிய அமராவதி மேல் ஆசை கொண்டு அவளைப் பார்த்ததும் " இட்ட அடி நோக" என்றும், ''பூவரசடியிலே புதுநிலவிலே" என்றும் காமவயப்பட்டுப் பாடலைப் பாடியதும் மன்னன் மிகுந்த சினம் கொண்டான். கம்பர் அதனை மாற்றி தெருவில் கொட்டிக் கிழங்கு விற்கும் பெண்ணைப் பற்றிய பாடல் இது என்றார். ஆனால் மன்னன் நம்ப மறுத்தான். கம்பரின் நிலையினை உணர்ந்து சரஸ்வதி தேவி வெள்ளையாடை உடுத்தி வயோதிகத் தோற்றத்துடன் கொட்டிக்கிழங்கு விற்பவளாக வந்து நின்றாள். கம்பர் தாம் தோத்தரித்த தேவியே இவள் என்பதனை உணர்ந்தார். மன்னனின் சினம் தணிந்தது.
ஜய வருடம் ஆவணி - புரட்டாதி

Page 16
ஒட்டக்கூத்தர் வழிபட்ட ஆற்றங்கள்
பல்லவருக்குப் பின் சோழப் பேரரசைச் சிறப்புறச் செய்த மூவர் ஒட்டக்கூத்தரை தங்கள் ஆஸ்தான புலவராகக் கொ இப்புலவர் இயற்றிய மூவர் உலா ஒன்றே போதிய வரலாறு நாகை மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் கூத்தனுாரில் கவி . பேரனார் ஓவாத கூத்தர் சரஸ்வதி தேவிக்கு ஓர் ஆலயம் சரஸ்வதி தேவியின் திருவுருவத்தை பிரதிஷ்டை செய்தும் இத்தேவியின் சிறப்பினை எடுத்துக் கூறும் முகத்தான் இத் வழிபட்டு 'தக்கயாகப் பரணி' என்னும் இலக்கியத்தையும் இ இந்தப் பரணி இலக்கியம் மக்களுள் ஒருவனை தலைவனா கொண்டு பாடாமல் "வீரபத்திரர்" ஆகிய கடவுளை தலைவராகக் கொண்டு அமைந்ததாகும். இந்த தக்கயாகப் பரணி இலக்கியமானது. - நுாற்காப்பு, கடவுள் வாழ்த்து, கடை திறப்பு, காடு பாடியது, தேவியை பாடியது, பேய்களைப் பாடியது, கோயிலைப் பாடியது, பேய் முறைப்பாடு, கூழ் அடுதலும் இடுதலும் களம் காட்டலும், வாழ்த்து என்ற முறையில் அமைந்துள்ளது. ஒட்டக்கூத்தர் பலமுறை கூத்தனுாரில்
அரசிலாற்றங்கரையில் அமைந்த சரஸ்வதி தேவியை வழிபட்டுச் சிறந்தமையினால் கலிங்கத்துப் பரணியில் வாழ்த்துப் பகுதியில் சரஸ்வதி தேவியை 'ஆற்றங்கரை சொற்கிழத்தி' என்று போற்றுகின்றார்'
ஆக்கம் பெருக்கும் மடந்தை வாழியே ஆற்றங் கரைச் சொற்கிழத்தி வாழியே கோக்கும் தமிழ்கொத்து அனைத்தும் வாழியே
ஸ்ரீ வை கூத்தன் கவிச் சக்கரவர்த்தி வாழியே'
மகவாகத் பொருள் : ஆக்கம் - பொருள் - ,
முருக பெருக்கும் - அதனைப் பெருக்கும்,
என் மடந்தை - இலக்குமி,
செந்தமிழ் சொற்கிழத்தி - கலைமகள், - ஆசிரியர்-ஒட்டகக் கூத்தர்,
(திருட் -ஆற்றங்கரை
(வாரணாசியில் அரசிலாற்றங்கரையில்,
இருந்தபோது அ சோழ மன்னர்கள் தமக்கு
கங்கையோடு தெய் அளித்த கூத்தனுாரில்
குமரகுருபரர் திருவுள்ளம் விளங்கும்
எண்ணினார். சுல்தானின் கலைமகளே
"முதலில் மன் இத்தாழிசையில்
பின்னர் அவனிடம் உரைய குறிக்கப்பட்டுள்ளாள்.
வேண்டும்” என்று நினைத் மேலும் கலைமகளுக்கு
அபாரத் தெளிவுடன் என்றொரு கோயில் தமிழ்நாட்டில்
பாமாலைகளை கா கூத்தனுாரில்
சூட்டினார். பத்தாம் பாடல் விளங்குகின்றது.
பண்கண்ட அளவில் பணியச் செ மேலும் பிரம்மனுக்கு
முன்தோன்றி அநுக்கிர திருக்கண்டியூர்
ஒரு சிங்கம். அவருக்கு ? தலத்தின்
கேட்பானேன்? சிங்கம் சாதுவாக சிவாலயத்தின்
அதிசயத்தை சுல்தானும் தர்பாரி தனிச்சந்நிதியாக
ஹிந்துஸ்தானியில் அவர் 2 சரஸ்வதியும்
கவிச்சிங்கமாகவும் உணர்ந்தான் சுல்தி பிரம்மனும்
தவச்சாலை அமைந்தது. (தற் ஒன்றாக உள்ளனர்.
அதனால் இத்திருமடத்தின் அதிபராக
(நன்றி : ஸ்ரீ மகாசரஸ்வதி - திருவாவடுதுறை ஆதீன வெளியீடு (இந்து ஒளி

மர சொற்கிழத்தி
5வர்கள் பிற்கால சோழர்கள். அவர்களில் Tாண்டு ஆட்சி செய்தனர். இதற்கு ற்றுச் சான்றாய் உள்ளன. ச்சக்கரவர்த்திகளின்
கட்டியும் அதில்
வழிபட்டனர். தேவியினை யற்றினார். கக்
சகலகலாவல்லி அருள் பெற்ற
குமரகுருபரர்
பகுண்டத்தில் சண்முக சிகாமணிக் கவிராயருக்கு அருமை
தோன்றியவர். ஐந்தாண்டு வரையில் ஊமையாக இருந்து நன் அருளால் ஊமை நீங்கப் பெற்று கந்தர் கலிவெண்பா எனும் சாத்திர தோத்திர நூலை அருளினார். இன்னும் பல
நூல்களையும் அருளிச்செய்தவர். இவரே காசி மடத்தின் 1பனந்தாள் காசி மடம்) முதல்வராவார். இவரால் காசியில் b) மடம் நிறுவப்பட்டது. காசியில் குமரகுருபரர் சுவாமிகள் பங்கே முஸ்லீம் மன்னரின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. வத் தமிழ் மறைகளும் சேர்ந்து ஒலிக்கவேண்டுமென்பது 5. அதற்காக அங்கு ஒரு சைவ மடாலயம் அமைக்க அவர் | அனுமதியும் மானியமும் இன்றி மடம் எழுப்ப இயலாது. னன் தன்னை மதித்து தர்பாருக்குள் அனுமதிக்கவேண்டும். ாடுவது என்றால் ஹிந்துஸ்தானி (ஹிந்தி மொழி) அறிதல் து சுவாமி கங்கைக்கரையில் நின்றவாறு கங்கை போன்ற னும் ஆழத்துடனும் 'சகலகலாவல்லி மாலை' என்ற பத்துப் மலத் தெய்வமாக விளங்கும் சரஸ்வதி பாத கமலங்களில் நில், 'மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என் சய்வாய்' என்று பிரார்த்தித்தார். சரஸ்வதிதேவி சுவாமிகள் கம் செய்ய குமரகுருபரர்க்குப் பக்கத்திலே வந்து நின்றது ஹிந்துஸ்தானி மொழியறிவும் உண்டாகி விட்டது. அப்புறம் அமைந்து சாதுவை (சுவாமிகள்) ஏற்றிக் கொண்டு வரும் ல் உள்ள அனைவரும் கண்டு வியந்து வணங்கினார்கள். உரையாடியது கேட்டு சுவாமிகளைத் தவராஜசிங்கமாகவும் தான். காசியில் சைவத்துக்கு மடம் எழுந்தது. தமிழுக்குத் போது திருப்பனந்தாள் தலைமை மடமாக விளங்குகிறது.) விளங்குபவர்கள் ''காசிவாசி" என்ற அடைமொழியினைத்
தங்கள் திருப்பெயரோடு சேர்த்துக் கொள்கின்றனர்.
ஜய வருடம் ஆவணி - புரட்டாதி)

Page 17
சகலகலாவ
வெண்டா மரைக்கன்றி நின்பதந்
தாங்க வென் வெள்ளையுள்ளத் தண்டாமரைக்குத் தகாது கொலோ
சக மேழு மளித் துண்டா னுறங்க வொழித்தான்பித்
தாகவுண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே
சகலகலா வல்லியே
நாடும் பொருட்சுவை சொற்சுவை
தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள்
வாய் பங்கயாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே
கன தனக் குன்றுமைம்பாற் காடுஞ் சுமக்கும் கரும்பே
சகலகலா வல்லியே
அளிக்கும் செழுந்தமிழ் தெள்ளமு
தார்ந்துன் னருட்கடலிற் குளிக்கும் படிகென்று கூடுங்கொ
லோவுள்ளங் கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர்
கவிமழை சிந்தக் கண்டு களிக்குங் கலாப மயிலே
சகலகலா வல்லியே
தூக்கும் பனுவற் துறை தோய்ந்த
கல்வியுஞ் சொற்சுவை தோய் வாக்கும் பெருகப் பணித்தருள்
வாய்வட நூற்கடலும் தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமுந்
தொண்டர் செந் நாவினின்று காக்குங் கருணைக் கடலே
சகலகலா வல்லியே
பஞ்சப் பிதந்தரு செய்யபொற்
பாதபங் கேருக்மென் நெஞ்சத் தடத்தல ராததென்
நேநெடுந் தாட்கமலத் தஞ்சத் துவச் முயர்ந்தோன் செந்
நாவு மகமும் வெள்ளைக் கஞ்சத் தவிசொத் திருந்தாய்
சகலகலா வல்லியே
(இந்து ஒளி

ஒட17ாகன்ன !
UN > 2)
பல்லி மாலை
பண்ணும் பரதமும் கல்வியுந்
தீஞ்சொற் பனுவலும் யான் எண்ணும் பொழுதெளி தெய்தநல்
காயெழு தாமறையும் விண்ணும் புவியும் புனலுங்
கனலும் வெங் காலுமன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய்
சகலகலா வல்லியே
பாட்டும் பொருளும் பொருளாற்
பொருந்தும் பயனுமென்பாற் கூட்டும் படி நின் கடைக்கணல்
காயுளங் கொண்டு தொண்டர் தீட்டும் கலைத்தமிழ் தீம்பா
லமுதம் தெளிக்கும் வண்ணம் காட்டும் வெள்ளோதிமப் பேடே
சகலகலா வல்லியே
சொல்லிற் பனமு மவதான
முங்கவி சொல்லவல்ல நல்வித்தை யுந்தந் தடிமை கொள்
வாய் நளி னாசனஞ் சேர் செல்விக் கரிதென் றொருகால
முஞ்சிதை யாமைநல்குங் கல்விப் பெருஞ் செல்வப் பேறே
சகலகலா வல்லியே
சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ்
ஞானத்தின் தோற்றமென்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர்
யார் நிலந் தோய்புழைக்கை நற்குஞ்சரத்தின் பிடியோ
டரசன்ன நாண நடை கற்கும் பதாம்புயத் தாயே
சகலகலா வல்லியே
மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னருமென் பண்கண்டளவிற் பணியச் செய்
வாய்படைப் போன்முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்
டேனும் விளம்பிலுன் போற் கண்கண்ட தெய்வம் உளதோ
சகலகலா வல்லியே.
ஜய வருடம் ஆவணி - புரட்டாதி)

Page 18
கேதா
சிSH4
மாலைமலர்
கேதார கெளரி விரதம்
ஐப்பசித்த
அCை
துத்
த ல 24
44
ஆதி காலத்தில் ஸ்ரீ கைலாயத்திலே நவரத்தினங் களினாலிழைத்த சிங்காசனத்தின் மீது பரமேஸ்வரரும் பார்வதி தேவியும் கொலுவீற்றிருக்கையில் பிரம்மா, விஷ்ணு, தேவேந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள் நாற்பத்தோராயிரம் ரிஷிகள், அஷ்டவணுக்கள், கின்னரர், கிம்புருடர், கருட காந்தர்வர், சித்தவித்யாதாரர், ஜனகஜனனாதரி, ஸனத்குமாரர், தும்புருநாரதர், மற்றுமுண்டான தேவரிஷிகளும், பிரதிதினம் வந்து பரமசிவனையும், பார்வதி தேவியையும் பிரதட்சண நமஸ்காரஞ் செய்து கொண்டு போவார்கள். இப்படியிருக்க ஒரு நாள் ஸமஸ்த தேவர்களும், ரிஷிகளும் வந்து ஈஸ்வரரையும், ஈஸ்வரியையும் பிரதட்சண நமஸ்காரம் தோத்திரஞ் செய்து செலவு (விடை) பெற்றுக்கொண்டு தங்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு போகிற சமயத்தில் பிருங்கியென்கிற ரிஷி ஒருவர் மாத்திரம் பார்வதி அம்மனைப் புறம்பாக தள்ளி ஈசுவரரை மாத்திரம் பிரதட்சண நமஸ்காரஞ் செய்து ஆனந்தக் கூத்தாடினார்.
அப்பொழுது பார்வதியம்மனுக்கு மஹா கோபமுண்டாகி பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், தேவேந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும், மற்றுமுண்டான தேவர்களும் வந்து ஈஸ்வரரையும் நம்மையுங்கண்டு வணங்கிப் போகின்றனர். இந்த பிருங்கி மஹரிஷி நம்மைப் புறம்பாகத் தள்ளி ஈஸ்வரரை மாத்திரம் நமஸ்கரித்து நின்றானேயென்று கோபத்துடனே பரமேஸ்வரி கேட்கப் பரமேஸ்வரன் சொல்லுகிறார். "பர்வதராஜ குமாரியே! பிருங்கிரிஷி பாக்கியத்தைக் கோரினவனல்ல. மோட்சத்தைக் கோரினவனான படியால் எம்மை மாத்திரம் பிரதட்சண நமஸ்காரஞ் செய்தான்” என்று சொல்ல பரமேஸ்வரி, பிருங்கி ரிஷியைப் பார்த்து ஓ! பிருங்கி ரிஷியே உன் தேகத்திலே
(இந்து ஒளி

பர கௌரி விரதச் சிறப்பு
திருமதி கெளரி விமலேந்திரன் தம் புரட்டாதித் திங்கள் 17 ஆம் நாளன்று (3.10.2014) ஆரம்பமாகி திங்கள் 6ஆம் நாளன்று (23.10.2014) நிறைவுபெறுகிறது.
இருக்கிற ரத்தம் மாமிசம் நம்முடைய கூறாயிற்றே ! அவைகளை நீ கொடுத்து விடு என்று சொல்ல அப்பொழுது பிருங்கிரிஷி தன் சரீரத்திலிருந்த ரத்த மாமிசத்தை உதறிவிட அம்பிகை தன்னுடைய கூறாகிய ரத்த மாமிசத்தை எடுத்துக்கொண்டாள். இதனால் பிருங்கிமஹாரிஷி நிற்க முடியாமல் அசக்தனாயிருப்பதைப் பார்த்த பரமேஸ்வரர் " ஏ பிருங்கி மஹரிஷியே! ஏன் அசக்தனானாய்" என்று கேட்க பிருங்கி பரமனை வணங்கி "பரமேஸ்வரா! அம்பிகையை நீக்கி தங்களை மட்டும் வணங்கினதால் அம்பிகை கோபித்து அடியேனுக்களித்த தண்டனை இது" என்று கூற, பரமேஸ்வரன் மனமிரங்கி ஒரு தண்டைக் கொடுக்க பிருங்கி மகரிஷி தண்டை ஊன்றிக் கொண்டு மறுபடியும் பரமேஸ்வரரை
நமஸ்கரித்து விட்டு ஆசிரமத்திற்கு எழுந்தருளினார்.
பிறகு பரமேஸ்வரி பரமேஸ்வரரைப் பார்த்து நீர் என்னை அசட்டை செய்யலாமோ? இனி எனக்கு காரியமென்னவென்று கைலாயத்தை விட்டு பூலோகத்தில் கெளதம மகரிஷி சஞ்சரிக்க நின்ற பூங்காவனத்தில் ஒரு விருட்சத்தின் அடியில் எழுந்தருளியிருந்தாள். அத்திசையில் ஏற்கனவே பன்னிரண்டு ஆண்டு மழையின்றி விருட்சங்கள் செடிகள் உலர்ந்து வாடியிருக்க
அம்பிகையின் வரவால் அவைகளெல்லாம் துளிர்த்துத் தழைத்து புஷ்பித்துக் காய்த்து பழுத்து இன்னும் அனேக பூச்செடிகளெல்லாம் மல்லிகை, முல்லை, கொங்கு, இருவாட்சி, மந்தாரை, பாரிஜாதம், சண்பகம், சிறுமுல்லை, புன்னை, பாதிரி, வில்வம், பத்திரி, துளசி மற்றுமுண்டான சகலஜாதி புஷ்பங்களும் நான்கு திக்கிலும் விஸ்தாரமாய், பூத்து பரிமளித்து நின்றன. அந்த சமயத்தில் கெளதம மகரிஷி தம் பூங்காவனத்தைப் பார்த்து அதிசயப்பட்டு பன்னிரண்டு வருஷம் மழையில்லாமல் உலர்ந்திருந்த விருட்சங்களெல்லாம் இப்பொழுது துளிர்த்துப் பூத்து காய்த்துப் பழுத்திருக்கின்ற ஆச்சரியம் என்னவோ தெரியவில்லையென்று மனதில் நினைத்துக்கொண்டு பூங்காவனத்திற்கு வந்தார்.
வந்தவர் சகலபுவனகர்த்தாவாகிய பரமேஸ்வரன், பரமேஸ்வரி, பிரம்மா, விஷ்ணு வந்திருக்கிறார்களோ என எண்ணி அவர்களை காணவேண்டுமென்று அந்த வனமெல்லாம் சுற்றி ஆராய்ந்து பார்க்கையில் ஸ்ரீ பார்வதி தேவி வில்வ விருட்சத்தின் அடியில் எழுந்தருளியிருக்கக் கண்டு மூவருக்கு முதன்மையான தாயே! முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் நாற்பத்தெண்ணாயிரம் முனிவர்களுக்கும் ஒப்பற்ற தெய்வமாய் நின்ற பராசக்தியான ஈஸ்வரியே நான் எத்தனை கோடி தவஞ் செய்தேனோ? இந்த பூங்காவனத்திலே எனக்கு காட்சி கொடுக்கக்கைலாயத்தைவிட்டு பூலோகத்திற்கு நீர் எழுந்தருளின தென்னவோ? என்று கெளதம் முனிவர் கேட்டார்.
பார்வதி தேவியார் கெளதம் முனிவரே! ஸ்ரீ கைலாயத்திலே பரமேஸ்வரரும் நாமும் ஒரு நவரத்தின் சிம்மாசனத்தில்
16)
ஜய வருடம் ஆவணி - புரட்டாதி)

Page 19
வீற்றிருக்கையில் பிரம்மா, விஷ்ணு, தேவேந்திரன் முதலான தேவர்களும் மற்றுமுண்டான மஹாரிஷிகளும் வந்து இருவரையும் நமஸ்கரித்துப் போனார்கள். பிருங்கி முனிவர் சுவாமியை மாத்திரம் நமஸ்கரித்து நம்மைப் புறம்பாகத் தள்ளினான். அப்பொழுது இவனா நம்மைப் புறம்பாகத் தள்ளுகிறவனென்று கோபத்துடன் என் கூறான இரத்த மாமிசத்தை வாங்கிக் கொண்டேன். அப்பொழுது பரமேஸ்வரர் அவனுக்கு ஒரு தண்டு கொடுத்தார். இப்படி செய்யலாமோ என்று கேட்டதற்கு அவர் மறுமொழி சொல்லவில்லை. ஆகையால் நமக்கு கோபம் பிறந்து பூலோகத்திற்கு வருகிறபொழுது இந்த பூங்காவனத்தைக் கண்டு இங்கே தங்கினோம் என்று பார்வதியம்மையார் கெளதமருக்கு உரைத்தார். அவரும் அம்பிகையைத் தன் ஆச்சிரமத்திற் கெழுந்தருளும்படி வேண்ட அம்பிகையும் அவரிஷ்டப்படியே எழுந்தருள முனிவர் அம்பிகை இருக்க ஒரு ஆச்சிரமும் ஒரு நவரத்தின சிம்மாசனமும் உண்டுபண்ணி அந்த சிம்மாசனத்தின் மீது எழுந்தருளின் பின் பரமேஸ்வரி கெளதம் முனிவரைப் பார்த்து ஓ! தபசியே இந்த பூலோகத்தில் நான் ஒரு விரதம் அனுஷ்டிக்க வேண்டும். நூதனமும் மேலான தூய்மையான விரதம் ஒன்றிருக்குமாயின் அதை எனக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்க கௌதம முனிவர் அம்பிகையைத் தொழுது தாயே! லோகமாதாவே! அபிராமியே! திரிபுரபம்மாரி! சிவகாமி! கெளரி கைலாச வாசகி! விபூதி, ருத்ராக்ஷ! கிருபாசமுத்ரி! கிருபாநந்தி! தேவஸ்ரூபி உம்முடைய சன்னிதானத்தில் அடியேன் ஒரு விண்ணப்பம் செய்கிறேன். கோபமில்லாமல் கேட்டு திருவுள்ளம் பற்றவேண்டும் என்று சொல்ல, அதென்னவென்று அம்பிகை கேட்க ஜெகத்ரட்சகியே! இந்த பூலோகத்தில் ஒருவருக்குந் தெரியாத ஒரு விரதமுண்டு. அந்த விரதத்திற்கு கேதாரேஸ்வரர் நோன்பென்று பெயர். அதை இதுவரையில் யாரும் அனுஷ்டிக்கவில்லை. நீர் அந்த விரதத்தை அனுஷ்டித்தால் இஷ்டஸித்தியாகும் என்று கூறினார். அதை பரமேஸ்வரி கேட்டு அந்த விரதம் எக்காலத்தில் எவ்விதமாக அனுஷ்டிக்க வேண்டும் என்பதை விவரமாய் சொல்லவேண்டும் என்று வினவினார்.
இவ்விரதம் பெரும்பாலும் புரட்டாதி மாதச் சுக்கில பட்ச நவமி அல்லது அதற்கு முன்னாக அட்டமி தசமி தினத்தில் ஆரம்பித்து ஐப்பசி மாதத்து கிருஷ்ண பட்சதீபாவளி அமாவாசையில் முடிவுறும். இது இருபத்து ஒரு நாள் விரதமாகும். இவ்விரதத்தை அனுட்டிப்போர் ஒவ்வொரு நாளும் ஸ்நானம் செய்து சந்தியாவந்தனம் முடித்துக் கொண்டு ஆலமரத்தடியில் அல்லது பொருத்தமான வேறு விருட்சத்தினடியில் ஈரமண்ணால் சிவலிங்கம் பிடித்து வைத்து முறைப்படி இலிங்கத்தில் கேதாரேஸ்வரரை ஆவாகணம் செய்து நீர் தெளித்து விபூதி, சந்தனம், புஸ்பம், மாலை, பட்டு என்பவற்றால் அலங்கரித்து பின் அர்க்கியம், தூபம், தீபம், நைவேத்தியம் முதலிய எல்லா உபசாரங்களுடனும் பூசை செய்தல் வேண்டும்.
பூசைக்கு நைவேத்தியமாக எள்ளுருண்டை, மஞ்சளுருண்டை, அதிரசம், வாழைப்பழம், தேங்காய், தாம்பூலம் என்பன இடம் பெற வேண்டும். நைவேத்தியம் சமர்ப்பிப்பதில் இந்த பூசைக்கு ஒரு விசேட ஒழுங்குண்டு. ஆரம்ப தினமாகிய முதல் நாள் ஒரு எள்ளுருண்டை, ஒரு மஞ்சளுருண்டை, ஒரு அதிரசம், ஒரு வாழைப்பழம், ஒரு தேங்காய், ஒரு வெற்றிலை, ஒரு பாக்கு என்பன நைவேத்தியமாக இடம்பெற வேண்டும். அடுத்த இரண்டாம் நாள் அவை இரட்டிப்பாக அதிகரிக்கும். இப்படியாக ஒவ்வொரு நாளும்
(இந்து ஒளி

ஒவ்வொன்றாக அதிகரித்து இறுதி நாளாகிய இருபத்தொராவது நாள் நைவேத்திய திரவியங்கள் ஒவ்வொன்றும் இருபத்தொன்றாக அமையும். மேலும் இருபத்தொரு பட்டு நூல்களை ஒன்றாக முறுக்கி இலிங்கத்தில் முதல் நாளே சாத்தி வைக்க வேண்டும். இதை தோரணக் காப்பு என்பர். பூசை முடிவில் ஒவ்வொரு நாளும் சிவலிங்கத்தை வலம் வந்து நமஸ்கரித்து குறித்த தோரணக் கயிற்றில் ஒரு முடிச்சு இடல் வேண்டும். இரண்டாம் நாள் இரு முறை வலம் வந்து ஒரு முடிச்சை இட வேண்டும். இப்படியாக நாட்கள் ஏற ஏற வலம் வருதல் அதிகரித்து கடைசிநாள் இருபத்தொரு முறை வலம் வந்து இருபத்தோராவது முடிச்சை இடல் வேண்டும். இப்படியாக இருபத்தொரு நாள் வழிபாடு நிறைவு பெற்றபின் கேதார நாதரின் அருளை வேண்டி தோரணக் காப்பை தம் விருப்பப்படி முன் கையிலோ, புயத்திலோ, கழுத்திலோ தரித்துக் கொள்ளல் வேண்டும். இத் தோரணம் அடுத்த வருடம் விரதம், அனுட்டித்து இது போன்ற மறு தோரணக் காப்பு கட்டப்படும் போது மட்டுமே இக் கயிறு விலக்கப்பட்டு விலக்கிய கயிற்றையும் பூசித்த இலிங்கத்தையும் புண்ணிய தீர்த்தத்தில் விட்டு விட வேண்டும்.
இவ்விரதம் அனுட்டித்தவர் பூசைக்கு உபயோகித்த தீர்த்தத்தையும், நைவேத்தியம் செய்யப்பட்ட உணவுப் பண்டங் களையும் மட்டுமே உண்ண வேண்டும். இவ்வாறு பார்வதி தேவி இவ்விரதத்தை அனுட்டித்தால் தீபாவளி அமாவாசையில் அன்று பரமேஸ்வரர் இடப வாகனத்தில் எழுந்தருளி வந்து காட்சி கொடுத்து தேவியின் விருப்பத்தை பூர்த்தி செய்வார் என்று கௌதம முனிவர் விரத விபரத்தைக் கூறினார்.
இதைக் கேட்டு திருவுளம் பூரித்த தேவி முனிவர் மூலமாக வேண்டிய ஏற்பாடுகளை செய்து முனிவரையே குருவாக வைத்து முறைப்படி விரதத்தை அனுட்டித்ததும் தீபாவளி அமாவாசையன்று இறைவன் உமை முன் தோன்றி அவரை இமயமலைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள திருப்பதியில் தமது திருவுருவில் இடது பாகத்தை தந்து அருளினார். இத் தெய்வீக நிகழ்ச்சி நடைபெற்ற ஸ்தலமே கேதார நாதம் ஆகும். இங்கு கோவில் கொண்டுள்ள அர்த்த நாரீஸ்வரருக்கு கேதார நாதர், கேதார கெளரி என்ற பெயர்கள் அன்று தொட்டு வழங்கலாயிற்று.
இறைவனும் இறைவியும் ஓர் உருவில் தாம் சரிபாதியாக இணைந்த பின்னும் பிருங்கி முனிவர் தன் வழிபாட்டு முறையை அதாவது சிவனை மட்டும் வலம் வந்து தரிசிப்பதை கைவிடவில்லை. சிவனும் பார்வதியும் இலிங்க உருவில் சரிபாதியாக இருப்பதை உணர்ந்து பிருங்கி முனிவர் தனது தபோபலத்தால் மிகவும் சக்தி வாய்ந்த வண்டின் உருவமெடுத்து இலிங்கத்தின் நடுமையத்தில் பின்புறமாக இருந்து துவாரமுண்டாக்கி இலிங்கத்தின் வலப் பாகத்தை மட்டும் வலம் வந்து வணங்கி தம் கருத்தை நிறைவேற்றினார். தம் பெயரையும் அர்த்த பூர்வமான பெயராக்கிக் கொண்டார். (பிருங்கம் - வண்டு) அவர் பூசித்த இலிங்கம் அவரின் செயற்பாட்டுக்கு இலக்கான துளை உள்ள இலிங்கமாக திருநல்லூர் திருப்பதியில் மூலவறையில் இருப்பதை இன்றும் காணலாம். சுவாமி பொன் வண்ணமாக இருக்கின்றார். ஒரு நாளில் ஐந்து வர்ணமாகத் தோன்றுகின்றார். இவ் இலிங்கத்தில் சில துவாரங்களும் உண்டு. இவ் இறைவனே திருநாவுக்கரசு நாயனாருக்கு திருவடி தீட்ஷை செய்தார். அமர்நீதி நாயனார் முத்தி பெற்ற ஸ்தலமும் இதுவே. அப்பரும் சம்பந்தரும் இத் திருக்கோவிலின் மேல் தேவாரம் பாடியுள்ளனர்.
ஜய வருடம் ஆவணி - புரட்டாதி)

Page 20
(நாவலர் பக்கம்
சைவநெறி க
0
: *
இலக்கிய கலாநிதி க.
நல்லவர் களை நாட் டுக் கும் , மொழிக்கும், கலைக்கும், சமயத்துக்கும் அரும்பணிபுரிந்து எம்மிடையே இறவாப் புகழுடன் வாழும் பெருமக்களை நாம் நன்றிக்கடனுடன் நினைவு கூருதல் தமிழ்ப் பண்பாகும். இப்பெரும் பண்பு இன்றும் ஓரளவு நிலவுதலால்தான் தமிழ் இனம் வாழ்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்த வரிசையிலே யாழ்ப்பாணத்து நல்லூர் தந்த நாவலர், தென்னகத்துத் திறலோர் தரத்தினின்றும்
பிப். எவ்வாற்றலும் குறையாமல், அவர்கள் வாழ்த்துக்கும் போற்றுதலுக்கும் இலக்காக வாழ்ந்து தொண்டாற்றியவர்.
உண்மை மறந்து பொய்மை தலைதுக்கும் காலத்து நெறிகாக்க உத்தமர்கள் தோற்றுவிக்கப்படுகிறார்கள் என்று பன்நெடுங்காலமாக நம்பி வாழும் தமிழ் இனம் நாவலர் போன்ற சைவக்காவலரைப் பெற்றகாலை செம்மாந்து நின்றது. நாவலரின் தொண்டின் சிறப்பையும், ஒழுக்கத்தின் உறைப்பையும் உள்ளபடி உணரமுனைவோர் நாவலர் வாழ்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணச் சமுதாய அமைப்பை முதற்கண் சிந்திப்பீர்களாக. பிறநாட்டார் செல்வாக்கெனும் சீர்கேட்டில், ஆங்கிலமொழி மோகமெனும் அவலத்தில் உத்தியோகம் என்ற ஏமாற்று வித்தையில் தமிழ் வாழ்வும் சைவத்திறனும் அலைக்கப்பட்ட ஒரு காலத்தில் நாவலர் தோன்றினார். வீட்டில் ஒரு வாழ்வு, நாட்டில் ஒரு வாழ்வு, சிந்தையில் ஒரு வாழ்வு, செயலில் ஒரு வாழ்வு - இப்படி நமது மக்கள் போலிகளாகவும் கூலிகளாகவும் வாழ்ந்த காலத்தன்றோ நாவலர் வாழ வேண்டியதாயிற்று.
கற்றது, சேவை செய்தது, மிஷனரியார் நடாத்திய பாடசாலையில் ; பழகியது, பணிபுரிந்தது பர்சிவல் பாதிரியாரிடம்; இருப்பினும் நாவலரின் ஒழுக்க நெறி எனும் சிவாக்கினி, சைவம் எனும் அன்புநெறி, தமிழும் சைவமும் செய்த தவம், நாவலரை மாசு மறுவற்ற சைவக் காவலனாக வாழ வைத்தது. எம்மை வாழ்வித்தது என்றே கூறவிரும்புகின்றேன். சமய நெறி வாழாது நின்று சிவப்பேறெய்திய பலரை எமது சமய நூல்கள் காட்டுகின்றன. இங்கும் தமிழ் நாட்டின் தொண்டர் தம் பெருமை தனிச் சிறப்பு வாய்ந்தது. தாம் பெற்ற பேரின்பத்தை, அள்ளி அள்ளி உண்ட தெவிட்டாத தெய்வத் திருவருளை 'அள்ளி உண்டிடலாம் வாரீர்'' என்று அறைகூவிப் பங்கு கொண்ட பெரியோர்கள் பெருவரிசையில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மணிவாசகர் திருநாமங்கள் ஒளிவீசுவதைக் காண்கின்றோம். சமணமும் பௌத்தமும் அலைக்கத் தமிழ்நாடு ஆட்டங்கண்ட
(இந்து ஒளி

ரத்த நாவலர்
வராமலிங்கம்பிள்ளை)
(குக் 5)
காலத்துத் தோன்றித் தொன்மை நெறியாய் சைவநெறி காத்தவர்கள் நால்வர் பெருமக்கள். இவர்கள் தொண்டும் நெறியும் மங்கிவிட்டதோ! மறக்கப்பட்டுவிட்டதோ! என்று சைவப் பேருலகு கண் கலங்கிய காலத்து, அன்பும் அறனும் அதன்வழிப் பண்பும் பயனும் சிவப்பேறென வாழ்ந்த இனம் மயக்கமெய்தத் தொடங்கிய நேரத்து; காரிருள் கடிந்து பேரொளி
பரப்பும் சிவசூரியனாக ஐந்தாங்குரவரென - ப்ப்ப்ப்
அரன் அடியார் போற்றும் நாவலர்
தோன்றிப் பணிசெய்யத் தொடங்கினார். ஆங்கில ஆட்சியின் பயனால் மக்கள் வயிறு நிரப்புதலும் காசுப்பைகளை நிரப்புதலும்தான் வாழ்வின் நோக்கமாக வாழத் தலைப்பட்டார்கள். தவப்பொழுது அவப்பொழுதாகத் தொடங்கியது. செம்பொருள் பொதிந்து நிற்கும் பாடல்களால் ஆக்கப்பட்ட நுால்களைப் படித்தறியும் அவகாசமும், ஆற்றலையும் மக்கள் இழக்கத் தொடங்கினர். வந்தவர்கள் இலகுவான வசனநடையில் தங்கள் சமயக் கருத்துக்களை துண்டுப் பிரசுரங்கள் வாயிலாக மக்கள்மேல் திணித்தார்கள்.இவற்றைக் கண்ட நாவலர் தெய்வத் திருநிறைந்த காவியங்களை, கருத்திலும் தரத்திலும் எவ்வித குறையும் நேராது வசனநடையில் தந்து மக்கள் மனங்கவர்ந்து வழிகாட்டினார். பெரியபுராண சூசனம் ஒரு பேரிலக்கியம். பெரியபுராணவசனம், கந்தபுராண வசனம், திருவிளையாடற்புராண வசனம் போன்ற நூல்கள் படைக்கப்பட்டிருக்காவிட்டால் சிவநெறிப் பேராற்றின் செழிப்பான ஓட்டம் தடைபட்டுத் தெய்வச்சாலி விளைச்சல் குன்றியிருக்கும் என்பதை யார்தான் மறுத்தல் கூடும்.
சைவதுாஷணம் செய்பவர் வாய் அடைக்கும் திறனுடைய சொற்பொழிவுகளால் சைவப்பெருநெறி பாய்ந்து பயன் பெறச் செய்த செம்மல் நாவலர். இதனாலன்றோ தென்னகமும் போற்றிப் பட்டம் தந்து மகிழ்ந்தது. சைவநெறி காக்கும் கலைக்கோட்டங்கள் பல கண்டு சிவம் மணக்கும் செந்தமிழ் வளர்க்க வழி செய்திராவிட்டால் யாது நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்ப்போமானால் கலக்கம் தருமன்றோ?
நாவலர் கருத்தில் எழுந்த பெரும் சைவக்கல்லூரியன்றோ, இன்று இந்து மதத்தவர் தலை நிமிர்கழகமாம் இந்துக் கல்லுாரியாக விளங்குகிறது.
நாவலர் காத்து வளர்த்த சைவநெறி எம்மால் போற்றப்பட வேண்டும்.
நாவலன் தமிழ் வாழ்க!
(நன்றி: இந்துப் பண்பாட்டியல் )
ஜய வருடம் ஆவணி - புரட்டாதி)

Page 21
நல்லூர் மு
1. நல்லூர் வீதியில் இராகம் -பிலகரி
தாளம் -ரூபகம்
பல்லவி
எந்நாளும் நல்லூரை வலம்வந்து வணங்கினால் இடர்கள் எல்லாம் போமே
அநுபல்லவி அந்நாளில் ஆசான் அருந்தவம் செய்த இடம் அதுவாத லாலே அதிசயம் மெத்த உண்டு
(எந்நாளும்) சரணங்கள் வேதாந்த சித்தாந்தம் கற்றதனா லென்ன வேடிக்கைக் கதைகள் பேசினா லென்ன வீதியில் வந்தோருக்கால் விழுந்து கும்பிட்டால் வில்லங்கம் எல்லாம் இல்லாமற் போமே
(எந்நாளும்) சத்தியம் பொறுமை சாந்தம் அடக்கம் நித்தியா நித்தியந் தெரியும் நிபுணர் பத்திசெய் உத்தமர் பரவும் நல்லூரில் நித்தியம் வந்து பார்த்தால் முத்திநிச் சயமே
(எந்நாளும்) 2. நல்லைப்பதிக்கு நடந்து போவோம் இராகம் -பைரவி
தாளம் - ரூபகம்
பல்லவி நல்லைப் பதிக்கு நேராய் நடந்து போவோம் நாமெல்லாம் வாரீர் சீராய்
அநுபல்லவி அல்லற்றுயர் தருமூழ் மெல்ல அகன்று போம் நீ வா
(நல்லை)
கல்லொத் திடு மனங் கணத்திலே கரைந்து போம் விரைந்து வா
(நல்லை)
நில்லன் பொடு நினைந்து நினைந்து நீநான் அறநின்று மகிழ்ந்து
(நல்லை) சரணம் செல்லப் பனைத்தினம் சேவிக்கும் நற்றவன் செல்வச் சிவயோக நாதனுக் குற்றவன் தில்லையம் பலம்சே விக்கும்பொற் பாதன் தித்தித்தா தகுதகு கிடதோம் தளங்கு தரிகிட கிடதோம் தித்தித்தா திமிதிமி யென நிர்த்தஞ் செய் மயி லேறிய சத்திதான் தரு மைந்தன் வாழ்!
(நல்லை)
(இந்து ஒளி

யோகர் சுவாமிகள் பக்கம்
சிவயோக சுவாமிகள் ஈகன் மீது பாடிய பாமாலை
3. நல்லூரான் திருவடி நல்லூரான் திருவடியை நான்நினைத்த மாத்திரத்தில் எல்லாம் மறப்பேனெடி - கிளியே இரவுபகல் காணேனெடி!
ஆன்மா அழியாதென்று அன்றெனக்குச் சொன்ன மொழி நான்மறந்து போவேனோடி - கிளியே! நல்லுாரான் தஞ்சமெடி! தேவர் சிறைமீட்ட செல்வன் திருவடிகள் காவல் எனக்காமெடி - கிளியே! கவலையெல்லாம் போகுமெடி!
எத்தொழிலைச் செய்தாலென் ஏதவத்தைப் பட்டாலென் கர்த்தன் திருவடிகள் - கிளியே! காவல் அறிந்திடெடி!
பஞ்சம்படை வந்தாலும் பாரெல்லாம் வெந்தாலும் அஞ்சுவமோ நாங்களெடி - கிளியே! ஆறுமுகன் தஞ்சமெடி! பரிதிகாயில் வாடாது பவனம்வீசில் வீழாது
பரவைசூழில் ஆழாதேடி - கிளியே! படைகள் மோதில் மாயாதெடி!
அந்தமாதி இல்லாத ஆன்மாவே நாங்களென்று . சிந்தைதந்த செல்வனெடி - கிளியே! சீரார்நல்லூ ராசானெடி! வந்ததிலும் போனதிலும் மனதைவை யாதேயென விந்தையுடன் சொன்னானெடி - கிளியே! விளங்குநல்லூர் வாசனெடி!
சாதனை செய்தபேர்கள் சாகார் உலகிலெனக் காதலுடன் சொன்னானெடி - கிளியே! கலங்காத வீரனெடி!
சுவாமி யோகநாதன் சொன்னதிருப் பாடல்பத்தும் பூமியிற் சொன்னாலெடி - கிளியே! பொல்லாங்கு தீருமெடி!
ஜய வருடம் ஆவணி - புரட்டாதி)

Page 22
விபுலானந்தர் பக்கம்
விபுலான கங்கையில் !
ல
"தோன்றிற் புகழொடு தோன்றுக - அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று” என்னும் குறள் மொழிக்கொப்ப நம் ஈழமணித் திருநாடான இலங்கையில் பலர் தோன்றி தமிழுக்கும் சைவத்திற்கும் அரும்பெரும் தொண்டாற்றி இறைபதம் எய்தியும் நீங்காப் புகழுடன் திகழ்வதை அறிய உள்ளது.
இந்த வகையில் ஆறுமுகநாவலர், சேர் பொன். இராமநாதன், விபுலானந்தர் போன்றோர்களைக் குறிப்பிடலாம். அவர்களுள் ஈழநாட்டின் கிழக்கில் ''காரேறும் மூதூர்' எனப் போற்றப்படும் காரைதீவிலே சாமித்தம்பியாருக்கும் கண்ணம்மையாருக்கும் ஞானத்தின் துயர் துடைக்க வந்த நன்மகனாக மயில்வாகனன் என்ற இளமைப் பெயருடன் தோன்றி வளர்ந்து காலம் செல்ல துறவு வாழ்க்கையில் காலடி பதித்து தமது வாழ் நாளிலே ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட அரிய நூல்களை வெளியிட்ட போதிலும் அகவற்பாவினால் கொச்சகப் பாடலாகப் பாடப்பட்ட "கங்கையில் எழுதியிட்ட ஓலை” என்னும் பாடலானது மிகத்தத்துவ உண்மைகளையும், மனிதப்பிறப்பு, இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள தத்துவப்போக்கு, கனவுகளின் தன்மைகள், நல்வினை, தீவினை, நட்பு, கல்வியின் தன்மை, நதியின் போக்கு போன்ற தாற்பரியங்களை உள்ளடக்கியதான தத்துவார்த்தத்தை உள்ளுறை உவமைகளாக வைத்துள்ளது என்பதனை நோக்குவது சிறந்ததாகும்.
முதலிலே பாடல் தொகுதியை நோக்கும் போது விபுலானந்த அடிகள் படிப்பின் நிமித்தம் கந்தசாமி என்னும் பெயருடைய நண்பனை தென்பாண்டி நாட்டிலே சோழ வந்தான் என்னும் ஊரிலே உள்ள சைவநெறித் திருமடத்திலே வாழ்கின்றபோது காணுகின்றார். அதன் வாயிலாக இருவரும் நட்பூண்டு உறவாடியமையை அடிகள் "அன்பெனும் கயிறு கொண்டு பிணித்தான்” என்று பாடலடியில் குறிப்பிடுவதோடு அடிகள் வட நாடு சென்றதை அறிந்து அவர் கந்தசாமி அடிகளையும் அவர் வசிக்கின்ற தவப்பள்ளியின் முகவரியையும் வினாவியுள்ளான் என அடிகளது வேறொரு அன்பன் மூலம் அறிந்தமையை விபுலானந்த அடிகள்,
"நம்மடிகள் உறைகின்ற தவப் பள்ளியாது
நற்றவத்தோர் முகவரியாதென வினாவித் தெரிந்து செம்மையுறஞ் செய்திபாதி ஓலையொன்று விடுக்கச் சிந்தைவைத்தான் என்னவெனக்கோர் அன்பனறிவித்தான்." என தனது பாடலிலே பாடியுள்ளார். மேற்படி செய்தியைக்
இந்து ஒளி

ந்த அடிகளாரும் எழுதியிட்ட ஓலையும்
. குமாரசாமி, மண்டூர் )
கேட்டதும் அடிகளார் அன்பு, பாசம், நட்பு ஆகியன சேர்ந்த நிலையில் இன்பக்கடலிலே திளைத்து விளையாடினார். அது மட்டுமல்லாது நண்பனை மூதறிஞன் என்றும் வியந்த நிலையிலே பின்வருமாறு கூறுகிறார்.
"அகநெருமன் பினாலூறும் உரை பகளும் பொருட்டோ ஆய்ந்த சில கலைமுடிபு தேர்ந்துணரும் பொருட்டோ முகவரி பெற்றோலைவிட முயன்றனன் பேரன்பன் மூதறிஞனென வெண்ணி ஆதரமுற்றிருந்தேன் என்று அன்பு நட்புப் பெருக்கால் களிப்புற்ற நிலையில் மறுகணம் துன்பம் அங்கே அணுகிவிட்டது. இப்பேற்பட்ட நண்பன் திடீரென மாரடைப்பால் வானுலகம் சென்று விட்டார். இப்பேற்பட்ட நிலையிலும் விபுலானந்த அடிகள், -
ஓரிரு நாள் கழியுமுன்னர் மார்படைப்பு நோயால் ஊனுடலம் பாரில்விழ வானுலகு புகுந்தான்
ஆருயிர்நேர் நண்ஸ்னெனும் அவலவுரை செவியில் அனற்பிழம்பாய்ப் புகுந்துளத்தை உருக்கியதப் பொழுதில்" என்று அழகுபட எதுகை மோனையுடன் இலக்கண மரபுக்குட்படுத்தியும் பாடியதோடமையாது , அத்துயரமானது, விபுலானந்த அடிகளது மனத்திலே புகுந்து அனற்பிழம்பாய் உள்ளத்தை உருக்கியதாகவும் குறிப்பிடுவது அன்பினுட னான சந்தோசத்தை விட துயரமானது, தன்மையும் கொடியதும் தாங்கொணாது கொண்ட தென் இங்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
இப்பேற்பட்ட பொங்கி எழுந்த மாய வாழ்க்கையாகிய பொய்யான உலகின் உண்மையினை அறிவதற்குமாகக் கருதி கங்கையாற்றின் தெய்வநதிக்கரையை அடைந்து "கல்” என்று சத்தத்துடன் விழுகின்ற நீர்ச்சமுத்திரத்தைக் கண்டதாகவும் கூறுகின்றார். அதாவது அமைதியை வேண்டி கங்கை நதியின் கரையில் அமர்ந்து நோக்குகின்றார்.
இவ்வேளையிலே மேற்கு வானம் சிவந்து சுடுகாட்டில் எரியும் நெருப்பை போன்று சிவந்து காட்சியளிக்க சூரியன் தனது கிரணங்களை சுருக்கி மெலிந்தவர் போல் மெல்ல மெல்ல மறைகிறது என்றும், மேலும் நலிந்தவர் உள்ளம் போல் மெல்லிய தென்றல் காற்று வீசவும், பனி நீரானது தூர்த்தப்படுவதாகவும், வான் வெளியானது இருள் சூழ வானமும் ஒளியிழந்த தன்மையை "மேற்றிசைவான் ஈமத்தீ போல் சிவக்க...." என்னும் பாடல் மூலம் கூறுகின்றார்.
இப்படியாகச் சூரியன் மறைந்து இருள் சூழ அதனை நீக்குவதாக வானிலே பத்து நாட்சென்ற வெண்மதியானது தோன்றி தனது பிரகாசத்துடன் கூடிய குளிர்ச்சியான கதிர்கள் மூலம் இருளைப் போக்குவதாகவும் கூறுகின்றார். இங்கே துன்பமான இருளை அகற்ற இன்பமான திங்கள் ஒளியை வீசுகின்றமையை காணலாம். இதேவேளையிலே நண்பனது
ஜய வருடம் ஆவணி - புரட்டாதி)

Page 23
மரணச் செய்தியை தேவர்கள் அறிந்திருந்தால் அவர்களிடம் அறிவேன் என்ற சிந்தனையில் கற்பனையில் திழைத்தவராகி திகைத்திருந்தேன் என்றும் குறிப்பிடுகிறார்.
திகைத்திருந்து தெளிந்த நிலையில் விபுலானந்த அடிகள் நதியின் கரையிலே உள்ள சுடுகாட்டில் நரிகள் அழும் குரலானது தனது செவியை அடைத்ததாகவும், திரும்பிய வேளையில் விபுலானந்த அடிகள் இருந்த கரையிலே மரத்திலிருந்த சருகுகளும் குச்சிகளும் நீரினால் அடித்துச் செல்லப்பட்டு செயலின்றி எல்லா இடங்களிலும் கிடப்பதையும் அவதானித்து கங்கையை நோக்குகிறார். அங்கே நீர்த்திரையால் இழுக்கப்பட்ட ஒரு குச்சியானது சிறுகணமேனும் நில்லாது மேலெழுந்தும் கீழ் விழுந்தும் அலைந்து கிடக்கின்ற தன்மையினை நோக்கி அடிகளது மனம் சிந்திக்கின்றது. அதனால் மானுடர்கள் வாழ்க்கை இது என்று அவர் பதிலையும் கூறுகின்றார். இதனை உணர்த்தும் விபுலானந்த அடிகளது கருத்து " நீர்த்திரையால் இழுப்புண்ட குச்சி...” என்னும் பாடல் மூலம் தெளிவு றுத்தப்படுகின்றது. அதன் உட்பொருளாக மனிதர்கள் மரணம் பிறகு மறுபிறவியாகிய (கன்மம், மறுபிறப்பு) அலையினால் கவரப்பட்டு கருவி கரணங்களுடன் உலகிலே பிறந்து வளர்ந்து இன்புறுவதுடன் பலவித வேதனைகளையும் அடைவார்கள் என்னும் கற்பனையில் திழைக்கின்றமையும் புலப்படுத்தப்படுகின்றது.
இத்தோடமையாது வானிலே தோன்றிய சந்திரனை நோக்கி அதன் பெருமையை வியப்பது போல் நட்சத்திரங்களுக்குள்ளே முதன்மையாய் விளங்கும் சந்திரனே நீர் சிவனுடைய சடையிலே அமர்ந்திருக்கும் நலம் பெற்றாய் என்று விளித்து அதனிடம் சில கேள்விகளைக் கேட்பது போலவும் பாடியுள்ளார். அதாவது மனிதர்களில் சிலர் தாழ்வதும் சிலர் மடிவதும், வேறு சிலர் பல நலமும் பெற்று வாழ்வதும் எப்படி வந்தது என்று கேட்பது போன்ற கேள்விகளுக்கு அந்த வான்மதியானது அடிகளாரிடம் பதில் கூறுவது போல "மானுடனே கேள்” என்று கூறி மானுடர்கள் இறத்தல் பிறத்தல் வளர்தல் தேய்தல் என்பது போல சந்திரனாகிய நானும் இப்பேற்பட்ட நிலையிலே உள்ளேன் என்று கூறியது போன்று பாடல்வரி மூலம் தெரிவிக்கிறார்.
மேலும் சந்திரன் இறப்பதுபோல துயிலல், விளிப்பது போல துயிலெழல் என்று கூறியவாறும், நல்ல கனவு சுவர்க்கம் தீய கனவு நரகம் என்று கனவுகளிலே சொர்க்கம் நரகம் தெரிவிக்கப்படுகின்றமையும் மேற்படி செயல்கள் நல்வினை தீவினைகளால் ஏற்படுபவை என்ற கருத்துப்படவும் பாடியுள்ளார்.
மறுகணம் நண்பர் கந்தசாமியின் நினைவு தோன்ற தான் கற்ற கல்வி மாய்ந்து மறைந்து விடுமோ என்ற வினாவையும் சந்திரனிடம் கேட்பது போலவும், அதற்குச் சந்திரன் கல்வியானது எழுபிறப்பிலும் உதவும் என்று கூறக்கேட்டலும் நண்பன் இலக்கண நூல் கற்றவன். ஏற்கனவே வானகத்திலே சேர்ந்த பாணினி, தொல்காப்பியன், பதஞ்சலி முனிவர் வாழும் உலகிலே படர்ந்துள்ளான் என்னும் பொருள் படவும் பாடல் இயற்றியுள்ளார்.
மானிட வாழ்விலே தோன்றுவதும் மறைவதும் இயல்பு என்பதையும் அறிந்து மனதையும் தேற்றியவராய் நண்பரது அன்பு தொடர்பு அகலாமையால் அவருக்கு கடிதம் ஒன்று
(இந்து ஒளி

வரைந்தனுப்ப எண்ணி அதற்கேற்ப பாசம் நிறைந்த வாசகங்களை பனையோலை ஒன்றிலே எழுதி, அறிவு அற்றங்காக்கும் அறநெறி இன்பமும் அமைதியும் வழங்கும் நட்பானது நிலைபெறும் என்னும் உறுதிப்பாடலையும் எழுதி, ஈற்றில் விபுலானந்த அடிகளது உரை என்றும் எழுதி, செல்வம் மலிந்து விளங்கும் விண்நாட்டிலே அரிய கலைத் தெய்வங்கள் வாழ்கின்ற அழகிய நகரில் தமிழ் மொழி பேசப்படும் தெருவிலுள்ள ஒரு மனையிலே எதுவித துன்பங்களுமின்றி வாழ்கின்ற கந்தசாமி ஆகிய அறிஞனுக்கு இவ்வோலை என்றும் அடையாளமிடப்பட்ட நிலையில் சிந்தித்து வையகத்தில் உள்ளோர் அன்னத்தையும் கிளியையும் முகிலையும் தூதாக விடுத்தனர். ஆனால் நான் எழுதிய மேற்படி ஓலையைக் கொண்டு விண்ணிலேயுள்ள நண்பனிடம் சேர்க்கும் உதவியைப் புரியவல்லவர் யார்? என்று கேட்டுத் தனக்குள்ளே விளித்து தெளிவுபெற்ற நிலையிலே கங்கையாகிய செல்வம் பொருந்தியதான நதி தேவர்களும் புகழும் பேறும் சிவனது சடாமுடியிலே வாழும் வரமும் பெற்றதோடு அமையாது மூன்று உலகங்களிலும் சென்று வரும் பாக்கியமும் பெற்றவளாகவும் உள்ளதால் அவளிடம் உதவியைப் பெறுவேன் என்று துணிவு பெற்று அப்பேற்பட்ட நிதியை வியந்து வணங்குவதான பாடல் வரிகள் மூலம் நன்கு உணர்த்தப்படுகின்றது.
செம்பவளக் கொம்பிடைச் சேர்ந்தழுத்து மாலையைப் போல் எம் பெருமான் செஞ்சடையை எய்திநின்ற வானதியே எம்பெருமான் செஞ்சடைவிட்டிங்கு வந்து தண்ணளியால் வெம்பருதித் தீயகற்றும் மின்னே நினைத் தொழுதேன்” "மாற்றுயர்ந்த பொன்மலைமேல் வைத்த வெள்ளிக் கோல்போல ஏற்றியல்வோன் பொற்சடையை எய்தி நின்ற வானதியே ஏற்றியல்வோன் பொற்சடைவிட்டிங்கு வந்து மக்கள்பசி ஆற்றி உணவளிக்கும் அன்னாய் நினைத்தொழுதேன்” சுடர் கதிரைச் சூழ்ந் தொளிருந் தூாவெண் முகில்போல் இடர்களைவோன் நீள்சடையை எய்துநின்ற வானதியே இடர்களைவோன் நீள்சடைவிட்டிங்கு வந்து பூதனத்தோர் தொடர்பிறவி வேர்களையுந் தூயோய் நினைத்தொழுதேன்"
இப்பேற்பட்ட நிலையிலும் மூன்று முறை நினைந்து வணங்கிய வேளையிலும் சிவனது உமையின் பாதத்திலே ஒலிக்கின்ற சிலம்பின் ஓசை அரற்றவும் பாதங்களானது சிவந்த மலர் போல் விளங்கவும் குற்றமற்ற சந்திரன் போன்ற முகத்தில் புன்முறுவல் தவளவும் மீனாகிய கொடியிலே அமர்ந்து மின்னற்கொடிபோல அந்த கங்கையாற்றின் நீரிலே தோன்றி மறைந்தனள் என்றும், இதனைக்கண்டு விபுலானந்த அடிகள் வணங்கி மேனாட்டிலே வதியும் தனது நண்பனின் கையில் இவ்வோலை கடிதத்தைச் சேர்க்க என்று தனது கடித ஓலையை அந்த கங்கையில் விடலும் அச்செயலை நதியானது செய்வதாக ஏற்றுக்கொண்டு சென்றதாகவும் தனது பாவினை முடித்துள்ளமையைக் காணலாம்.
விபுலானந்த அடிகளாரது "கங்கையில் எழுதியிட்ட ஓலையும்" என்னும் பாடலை நோக்கின் அதனுள் பல உண்மையான கருத்துக்களை உள்ளடக்கியதாகவும் தென் படுகின்றமையை காணலாம். முதலாவதாக அன்புடனான நண்பனின் உறவு இப்பேற்பட்ட அன்பு பொருந்திய நட்பு
ஜய வருடம் ஆவணி - புரட்டாதி)

Page 24
இறைவனிடம் சேர்க்கும் என்ற தன்மை சுந்தரமூர்த்தி நாயனார் தோழமை மூலம் இறைவனை "பித்தா” என்று
கூறி நற்பரகதி சேர்ந்ததை நினைவு கூருகின்றது.
அடுத்தாக கல்வி பற்றியும் கூறப்படுகின்றது. கல்வி யானது ஏழு பிறப்புக்களிலும் உதவும் என்பதுடன் நமது மானுட வாழ்வினிலே “மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கில்” என்னும் பாட்டிக்கேற்ப கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதனையும், சந்திரனானது வளர்தல், தேய்தல், பிறத்தல், ஒளியிடல் என்பன மனித
கற்பகவல்லி நின் பொற்பதங்கள்
பிடித்தேன்!
இணுவில் ந.வீரமணியர்.
-- கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா - தேவி = (கற்பகவல்லி) பற்பலரும் போற்றும் பதிமயிலா புரியில் சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட
(கற்பகவல்லி)
நீ இந்த வேளை தன்னில் சேயன் எனை மறந்தால் நானிந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ ஏனிந்த மெளனம் அம்மா ஏழை எனக்கருள் ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா
(கற்பகவல்லி)
எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இறங்கி என்றும் நல்லாக்கி வைத்திடும் நாயகியே நித்ய கல்யாணியே கபாலி காதல் புரியும் - அந்த உல்லாசியே உமா உனை நம்பினேனம்மா
(கற்பகவல்லி)
நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய் வாகேஸ்வரி மாயே வாராய் இது தருணம் பாகேஸ்வரி தாயே பார்வதியே இந்த லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா
(கற்பகவல்லி)
அஞ்சன மையிடும் அம்பிகையே எம்பிரான் கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே நின்னிடம் தஞ்சம் என அடைந்தேன் தாயே உன்சேய் நான் ரஞ்சனியே ரக்ஷிப்பாய் கெஞ்சுகிறேனம்மா!
(கற்பகவல்லி)
(இந்து ஒளி

வாழ்விலும், பிறப்பு, வளர்தல், கல்வியினால் ஒளியிடல், நோய்வாய்ப்படல், இறத்தல் என்பனவற்றையும், இவைகள் நமது கருமங்களுக்கேற்ப நடைபெறும் என்பதனையும் கூறுவதோடு நித்திரை சாக்காடு என்பதனையும், துயிலெழல் பிறப்பு என்பதனையும், நற்கனவு - சுவர்க்கம், தீய கனவு நரகம் என்னும் தத்துவத்தையும் தெரிவித்து, பிறப்பதும் இறப்பதும் மானுட வாழ்விலே இயல்பு வாழ்க்கை என்பதும், வாழ்க்கை நிலையானதல்ல என்பதும் இப்பாடல்களின் மூலமாக அறிகின்றமையும் நோக்கற்பாலதாகும்.
விஜயதசமியின் சிறப்பு
விஜயதசமியன்று ஆரம்பிக்கப்படும் நற்காரியங்கள் எல்லாம் வெற்றியடையும். வீடுகளிலும் கோயில்களிலும் தொழிற்சாலைகளிலும் வேலைத்தளங்களிலும் பாடசாலைகளிலும் இது வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும். பண்டைக்கால மன்னர்கள் விஜய தசமியன்று சிம் மாசனம் , வெண்கொற்றக் குடை, செங்கோல், சாமரம் மற்றும் தங்கள் படைக்கலங்களையும் யானை குதிரை போன்ற வாகனங்களையும் பூஜித்ததாக கல்வெட்டுக்கள் மூலம் கண்டறிய முடிகிறது. விஜயதசமியன்று மகிஷாசுரவதம், வன்னிமரம், வாழைமரம் வெட்டி அப்புராணக்கதை நினைவு கூறப்படுகின்றது. மகிஷாசுரன் மட்டுமன்றி பண்டாசுரன், மதுகை இடம்பர்கள், சும்ப நிசும்பர்கள் முதலிய பல அரக்கர்களை அம்பிகை கொன்றொழித்த கதைகள் தேவி பாகவதத்தில் காணப்படுகின்றன. விஜயதசமி அன்று வன்னி வாழைமரம் வெட்டுவது இவற்றை நினைவூட்டவே.வன்னி மரத்தை வழிபாடு செய்யும் வழக்கம் ஆதி காலத்திலிருந்து வருகின்றது. உமாதேவியார் களைப்புற்ற போது வன்னி மரத்தின் கீழ் ஒரு சமயம் இளைப்பாறினார். இராமன் சீதையைத் தேடிப் புறப்பட்டபோது வன்னிமரத்தை வலம் வந்து வணங்கியே புறப்பட்டான் எனக் கூறப்படுகின்றது. பாண்டவர்கள் அஞ்ஞாதவாசத்தின்போது தமது ஆயுதங்களை வன்னி மரத்தில் ஒளித்து வைத்திருந்து, அஞ்ஞாதவாசம் முடித்து தசமியன்று தேவியை வழிபட்டு மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டார்கள். விஜயம் அதாவது வெற்றி தரும் தசமி என்பதாலும், விஜயனால் பக்தியுடன் பூஜிக்கப்பட்டதாலும் விஜயதசமி என பெயர் பெற்றது என்பர். இதனைவிட விஜயதசமியை விஜய நவராத்திரி என்றும், வன்னி நவராத்திரி என்றும், வனதுர்க்கா நவராத்திரி என்றும் அழைப்பார்கள். சீதையைப் பிரிந்த இராமன் நாரதரின் ஆலோசனைப்படி இராவணனை வெல்ல நவராத்திரி விரதம் அனுட்டித்தான். இராமன் கானகத்தில் செய்த பூசையை வன்ய நவராத்திரி என்பர். இராமர் சக்தியை வழிபட்டு இராவணனை விஜய தசமியான பத்தாவது நாளில்தான் வென்றான் என்று புராணம் கூறுகின்றது.மேலும் தர்மத்தின் வடிவமான தருமனும், தனது மாங்கல்ய பலம் குறையாமல் இருக்க சாவித்திரியும் இவ்விரதத்தைக் கடைப்பிடித்துள்ளனர். கண்ணபிரானும் பிருந்தாவனத்திலிருந்து நவராத்திரி விரதத்தைக் கடைப்பிடித்து சக்தியின் அருள் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.
(நன்றி : இந்து கலைக்களஞ்சியம்)
ஜய வருடம் ஆவணி - புரட்டாதி)

Page 25
அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான ஏனாதிநா
இதனையொட்டி இந்த சிற
திருநீற்று மேன்மை
சைவ வித்தகர் எ
வந்தாறுமூலை
ைேசவசமயிகளின் அடையாளச் சின்னமாக விளங்குகின்ற மங்களகரமான வெண்ணீறானது அக்கால அருளாளர்கள் முதல் இக்கால அடியவர்கள் வரை பல அற்புதமான கைங்கரியங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் மேன்மையும் மகத்துவமும் காலத்திற்குக் காலம் தோன்றி மறைந்த அருளாளர்களால் பல்வேறு செயற்பாடுகளின் மூலமாக எடுத்துக்காட்டப்பட்டு வந்துள்ளது.
அதற்கமைய சைவசமயத்தின் சாரமாக விளங்குகின்ற திருமுறைகளுள் பதினோரம் திருமுறையாகிய பெரிய புராணத்தில் வையகத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்களின் சரித்திர மேன்மையும், திருத்தொண்டின் மகிமையையும் இறைவனின் திருவருளால் சேக்கிழாரால் தொகுக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதனுள் திருவெண்ணீற்று மேன்மையை உலகிற்கு உணர்த்திய அடியவர்களுள் ஏனாதிநாதநாயனாரும், மெய்ப்பொருள் நாயனாரும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
இவர்களுள் ஏனாதிநாத நாயனாரின் வாழ்வியலின் ஊடாக திருவெண்ணீற்று மேன்மையையும், அதன் மூலமாக எவ்வாறு சமூகத்திற்கு எடுத்துகாட்டாக வாழ்ந்திருந்தார் எனவும், அதன் ஊடாக இறைவனின் திருத்தாளினை
அடைந்த முறையினையும் எடுத்து நோக்கலாம்.
சோழவள நாட்டிலே எயின்னுார் எனும் ஊரிலே ஈழக்குலச் சான்றார் குலத்திலே உத்தமராக உதித்த ஏனாதிநாத நாயனார் தொன்மைத் திருநீற்றுத் தொண்டின் வழிபாட்டின் நன்மைக்கண் நின்று, நலம் என்றும் குன்றாதவராக வாழ்ந்து வந்தார்.
இவர் மன்னர்களுக்கு வாட்படை பயிற்றும் தொழிலில் மேம்பாடுற்றிருந்தார். வாட்படை பயிற்றுவதால் வரும் வளமனைத்தையும் சிவபிரான் அடித்தொண்டருக்கே நாள்தோறும் கொடுத்து வந்தார்.
இப்படி நிகழும் காலத்தில் ஏனாதிநாதநாயனார் தோன்றிய அதேகுடியில் தோன்றிய அதிசூரன் எனும் வாட்படைத் தொழிலாளி இருந்தான். அவன் வாட்படை தொழிலில் தன்னை விஞ்சியவர்கள் இல்லை எனும் செருக்குடன் வாழ்ந்து வந்தான். ஏனாதிநாதருக்கு பொருள் வளம் பெருக , அதுகண்டு அழுக்காறு கொண்ட அதிசூரன் பகைமையாக மாற்றி தனக்கு துணையாக சிலரை அமர்த்திக் கொண்டான்.
"வாண்மை தரும் குலத்தாய்த் தொழிலை வலியவரே பெறவேண்டும் ஆதலினால் நாம் இருவரும் போர் செய்வோம். போரில் வென்றவர்க்கே அத்தொழில் உரியது. எனவே போருக்கு எழுக” என ஏனாதிநாதரை கூவி அழைத்தான் அதிசூரன்.
இந்து ஒளி

த நாயனாரின் குருபூசைதினம் 2014.10.3ஆம் திகதியாகும். ப்புக் கட்டுரை பிரசுரமாகிறது.
ய உணர்த்திய உத்தமர்
வற்றிவேல் சசிகரன் ல, மட்டக்களப்பு.
இச் செயலை " வெட்கப் புலிகிடந்த வெம்முழையிற் சென்றழைக்கும் பைங்கட் குறு நரியின் சொல் போலாயிற்று" என்பார் சேக்கிழார் சுவாமிகள்.
அறைகூவல் கேட் ட ஏனாதிநாத நாயனார் "ஆர்கொல் பொர அழைத்தார் என்று அடியேறு போற் கிளர்ந்தெழுந்தார்." இடையில் போருடை விரித்துக்கட்டி காலில் வீரக்கழல் அணிந்து வலக்கையில் வாளேந்தி இடக்கையில் கேடயந்தாங்கி போர்முனைக்கு புறப்பட்டார். அப்போது அவருடன் அவரிடத்திலே போர்த்தொழில் கற்கும் மாணாக்கர்களும் மறைப்படை வாள் சுற்றத்தாரும் ஏனாதி நாதருக்கு துணை நின்றனர்.
இருவர் படைகளும் அணிவகுத்து நின்று போர் புரிந்தன. போர்க்களத்தே இருதிறத்து வீரர்கள் பலரும் விண்ணுல கெய்தினர். மாளாது எஞ்சிநின்ற தம்படை வீரர்களை பின்னே நிறுத்தி விட்டு போர்முனையில் சினங்கொண்டு எழுந்த ஏனாதிநாதருக்கு தோற்று, எஞ்சிய சில சேனைகளோடு அதிசூரன் போர்க்களத்தை விட்டு புறங்காட்டி ஓடினான்.
அதிசூரன் அவமானத்தால் மனம் புழுங்கி ஏனாதி நாதரை எவ்வாறு வெல்வது எனும் எண்ணமே அவனைத் துன்புறுத்தியது. ஈனமிகு வஞ்சனையால் வெல்வேன் எனத் துணிந்து விடியற்காலத்திலே "நமக்கு உதவியாக நம் ஊரவர்களை அழைத்துக்கொள்ளாமல் நாம் இருவரும் வேறு ஓர் இடத்திலே போர் செய்வோம் வாரும்" என்று ஏனாதிநாதருக்கு தெரிவிக்கும்படி இருவரை அனுப்பினான். ஏனாதிநாத நாயனார் அதைக்கேட்டு அதற்கு உடன்பட்டு தம்முடைய சுற்றத்தவர்கள் ஒருவரும் அறியாதபடி வாளையும் பரிசையையும் எடுத்துக்கொண்டு தனியே புறப்பட்டுச் சென்றார்.
முன்பொருபொழுதும் விபூதி தரியாத அதிசூரன், விபூதி தரித்தவர்களுக்கு ஏனாதிநாத நாயனார் எவ்விடத்திலும் துன்பஞ் செய்யமாட்டார் என்பதனை அறிந்து நெற்றியிலே விபூதியைப்பூசி வாளையும் பரிசையையும் எடுத்துக்கொண்டு தான் குறித்த யுத்தக்களத்திற்குச் சென்று அங்கு நின்ற ஏனாதிநாத நாயனாரை கண்டு அவர் சமீபத்திலே போகும் வரைக்கும் நெற்றியைப் பரிசையினால் மறைத்துக்கொண்டு
அவருக்கு முன்னே முடுகி நடந்தான்.
"வெண்ணீறு நெற்றி விரவப் புறம்பூசி உண்நெஞ்சில் வஞ்சகக் கறுப்பும் உடன்கொண்டு வண்ணச் சுடர்வாள் மணிப்பைைக கைக்கொண்டு புண்ணியப்போர் வீரர்க்குச் சொன்ன இடம் புகுந்தான்”
ஜய வருடம் ஆவணி - புரட்டாதி)

Page 26
ஏனாதிநாத நாயனார் அவ் அதிசூரனைக் கொல்வதற்கு சமயம் தெரிந்து கொண்டு அடியெடுத்து வைத்ததும் அதிசூரன் தன் முகத்தை மறைத்துக் கொண்டிருந்த பரிசையை புறத்திலே எடுக்க ஏனாதிநாதநாயனார் அவனது நெற்றியிலே தரிக்கப்பட்ட விபூதியைக் கண்டார்.
"கண்டபொழு தேகெட்டேன் முன்வெர்மேற் காணாத வெண்டிருநீற் நின்பொலிவு மேற்கண்டேன் வேறினிஎன் அண்டர்பிரான் சீரடியார் ஆயினார் என்றுமங் கொண்டுஇவர்தங் கொள்கைக் குறிவழிநிற் பேன்கன்று” கண்டபொழுதே "ஆ கெட்டேன்! முன்பொரு பொழுதும் இவர் மேற்காணாத திருவெண்ணீற்றின் பொலிவு கண்டேன். இனி வேறென்ன ஆலோசனை? அண்டர்பிரான் சீரடியார் ஆயினார்!. இனி இவரது உள்ளகக் குறிப்பின் வழியே நிற்பேன்." என்று திருவுள்ளத்திலே நினைந்து கைவாளையும் பரிசையையும் கீழே போட முடிவுசெய்த அவர் சிறிது நேரம் கழித்து “யான் படைக்கலத்தை கீழே போட்டு விடுவேனாகில் நிராயுதராம் ஏனாதிநாதரைக் கொன்றான் அதிசூரன் என்ற பழியல்லோ இவருக்கு வந்தெய்தும். என்னால் இவருக்கு வரலெய்தலாகாது.” என்று எண்ணி அவருக்கு முன் வாளோடு போர் செய்வது போல் நிற்க, பாதனாகிய அதிசூரன் அவரைக்கொன்று தான் எண்ணிய கருமத்தை நிறைவேற்றிக்கொண்டான்.
இதனைச் சேக்கிழார் "அந் நின்ற தொண்டர் திருவுள்ளம் ஆரறிவார், முன்னின்ற பாதகராம் தன் கருத்தே முற்றுவித்தார்” என்பார். அப்பொழுது சிவபெருமான் அவர் முன் எழுந்தருளி பகைவர் விளையாமல் உலகத் தொடர்பை அறுத்துக் கொண்ட ஏனாதிநாத நாயனாருக்கு தம்மைவிட்டு பிரியாத பேரின்ப வாழ்வை அளித்தருளினார்.
இவ்வாறு சிவனருளாலே தன்பணியைச் சிவப்பணியாக கருதி வாழ்ந்து திருவெண்ணீற்று மேன்மையை உலகறியச் செய்த உத்தமரான ஏனாதிநாத நாயனாரின் குருபூசை தினமான புரட்டாதி திங்கள் உத்தராட நாளன்று அவரை நினைவு கூர்ந்து மட்டக்களப்பு, அம்பாறை பகுதிகளில் அவரது வம்சாவழியினராகிய சான்றோர் குலத்தவர்களால் தற்காலத்தில் சிறப்பாக நிகழ்த்தப்பட்டு வருகின்றது.
ஆகையினால் இவ் அடியவர்களின் பரந்த நோக்குடனான சமூகமயப்பட்ட சிந்தனைகளையும் செயல்விளைவுகளையும் கற்றறிந்து, தமிழோடு சைவ அடையாளங்களை பேணிப்பாதுகாத்து சைவ ஒழுக்க சீலர்களாக வாழ்வதற்கு வழிகாட்டிகளாக திகழ்வதன் மூலம், தற்கால சமூகத்தினையும் எதிர்கால சந்ததியினரையும் சிறந்த சைவ சமயிகளாக உருவாக்கி, பற்றற்ற பரம்பொருளாகிய பரமசிவனின் பாதக்கமலங்களை அணுகி மனிதப்பிறவியின் பயனை அடைந்து கொள்ள
முடியும்.
"ஈழக்குல சான்றோர் எயினனுார் வாழ்
ஏனாதி நாதனார் இறைவன் நீற்றைத் தாழத் தொழுமரபார் படைகளாற்றும்
தன்மைபெற அதிசூரன் சமரில் தோற்று வாழத் திருநீறு சாத்தக்கண்டு மருண்டார்
நெருண்டார் கைவாள் விடார் நேர் வீழக்கழிப்பார் போல் நின்ற யாக்கை
விடுவித்து சிவனருளே மேவினரோ
(திருத்தொண்டர் புராண சாரம்)
(இந்து ஒளி

இலட்சுமி பிரார்த்தனை! திரு வேட்கை
நாட ராகம்
சதுஸ்ர ஏகதாளம் மலரின் மேவு திருவே - உன்மேல்
மையல் பொங்கி நின்றேன் நிலவு செய்யு முகமும் - காண்பார்
நினைவழிக்கும் விழியும் கலகலென்ற மொழியும் - தெய்வக்
களிதுலங்கு நகையும் இலகு செல்வ வடிவும் - கண்டுன்
இன்பம்வேண்டு கின்றேன்!
கமலமேவு திருவே - நின்மேல்
காதலாகி நின்றேன் குமரி நின்னை யிங்கே - பெற்றார்
கோடியின்ப முற்றார் அமரர் போல வாழ்வேன் - என்மேல்
அன்புகொள்வை யாயின் இமய வெற்பின் மோத - நின்மேல்
இசைகள்பாடி வாழ்வேன்!
இது பிக ரசிகர் பட்டர்
வாணி தன்னை யென்றும் - நினது
வரிசைபாட வைப்பேன் நாணி யேக லாமோ? - என்னை
நன்கறிந்தி லாயோ? பேணி வைய மெல்லாம் - நன்மை
பெருகவைக்கும் விரதம் பூணு மைந்த ரெல்லாம் - கண்ணன்
பொறிகளாவ ரன்றோ?
பொன்னு நல்ல மணியும் - சுடர்செய்
பூண்களேந்தி வந்தாய் மின்னு நின்றன் வடிவிற் - பணிகள்
மேவிநிற்கு மழகை என்னுரைப்ப னேடீ - திருவே,
என்னுயிர்க்கொ ரமுதே, நின்னை மார்பு சேரத் - தழுவி
நிகரிலாது வாழ்வேன்!
செல்வ மெட்டு மெய்தி - நின்னாற்
செம்மையேறி வாழ்வேன். இல்லை யென்ற கொடுமை - உலகில்
இல்லையாக வைப்பேன் முல்லை போன்ற முறுவல் - காட்டி
மோகவாதை நீக்கி எல்லையற்ற சுவையே - எனை நீ
என்றும் வாழ வைப்பாய்!
- மகாகவி பாரதியார்
ஜய வருடம் ஆவணி - புரட்டாதி)

Page 27
இசையும் இ
கலாபூஷணம் பிள்ை
நாடி
இசையின் மூலம் இறையடியை அடைந்து முக்தி நிலைப்பேற்றை பெற முடியும். இதற்கு இந்து சமயத்தை சார்ந்த நாயன்மார்கள் வாழ்ந்து வழிகாட்டியுள்ளனர். தேவார திருவாசக பண்ணிசைகள் மூலம் தாமும் பாடி மற்றவர்களையும் இசைக்க வைத்து முக்தி நிலையை எய்த வைத்துள்ளனர்.
இசைப்பாடல்களில் பல்லவி , அனுபல்லவி, சரணம் என்ற மூன்று பகுதிகள் உள்ளன. இதில் பல்லவி என்பது இறை திருவடி. அனுபல்லவி என்பது இறை திருவடியை அனுபவித்தல். சரணம் என்பது இறை சக்தியிடம் சரணாகதியடைதல். எனவே இறைசக்தியை பெற இசை வடிவமைக்கின்றது.
நல்லிசையின் மூலம் சங்கீத உலகின் மும் மூர்த்திகள்' மோட்சப் பேறு பெற்றார்கள் என்பது இசையுலகம் அறியும். தியாகராஜ சுவாமிகள் இயற்றிய கீர்த்தனைகள் இவற்றிற்கு சான்று பகரும். அமைதி, சாந்தம், சமாதானம், உடல்நலம் பெறுவதற்கு இசை மாபெரும் சாதனையாக அமைந்துள்ளதை தியாகராஜா சுவாமிகளது “சாந்தமுலேகா சௌக்கியமுலேகா” என்ற கீர்த்தனையில் இசையை இசைப்பவர்கள் மட்டுமல்ல கேட்பவர்கள் கூட மோட்சப் பெறுபேற்றைப் பெறுகிறார்கள் என்று வெளிப்படுத்தியுள்ளார்கள்."
இசை விலங்குகளையும் கட்டுப்படுத்துகின்றது என்பதற்கு தமிழ் இலக்கிய நூல்களில் கலித்தொகை பாட்டில் யானையையும் இசை மூலம் கட்டுப்படுத்திய தகவல் தரப்பட்டது.
இசையின் மூலம் நெற்பயிர் சிறப்பாக வளர்வதற்கும் மற்றும் தாவரங்கள் செழிப்பாக வளர்வதற்கும் பரிசோதனைகள் செய்து நல்ல பயன் தருகிறது என்பதனை இசை வல்லுனர்கள் நிரூபித்துள்ளனர்.
இசையினை உன்னத நிலைக்கு எடுத்துச் செல்வதற்கு இருகூட்டு இணைப்பு தேவைப்படுகிறது. இவை அணிசேர் கலைஞர்கள்மூலம் தான் ஏற்படுகின்றது. இது ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி, பிள்ளைகள் யாவரும் சேர்ந்திருக்கும் போதுதான் குடும்பம் மகிழ்ச்சியில் திகழும் என்பதற்கு ஒப்பிடலாம். எந்த ஒரு இசையும் ரசிகர்களின் பாராட்டு கிடைக்காவிட்டால் பூரணமாகாது. எனவே ரசிகர்களின் ஆதரவு, பாராட்டுத்தான் உண்மையான சன்மானமாகும். ஓர் அரசன் இசையரங்கில் பாடலைக் கேட்டு அதனுடன் ஒன்றி தலையாட்டக்கூடாது என்று சட்டம் போட்டான். ஆனால் அன்றைய தினம் ஒருவர் இசையைக் கேட்டு தனது ஆனந்த
(இந்து ஒளி

றையின்பமும்
7/11
பாநாயகம் திருநாவுக்கரசு
லப்பிட்டி
மேலீட்டத்தால் தனது தலையை ஆட்டிவிட்டார். பின்னர் அரசன் தலையாட்டியவருக்கு பரிசு வழங்கினார். காரணம் அவர்தான் உண்மையான ரசிகர், தனக்கு ஏற்படப்போகும் உயிரிழப்பையும் பொருட்படுத்தாது இசையினை ரசித்து பேரானந்தத்தை வெளிப்படுத்தினார் என்பதால்.
இந்தியாவின் தமிழ் நாட்டில் அக்காலத்து வெள்ளையர் ஆட்சிக் காலத்தின்போது ஆர்மோனிய சக்கரவர்த்தியான காதர் பாச்சா என்பவருக்கு சுதந்திரப் போராட்டத்தின் போது சுதந்திரம் வேண்டி எழுச்சிப் பாடல்கள் பாடியதால் தேசத்துரோகக் குற்றம் சாட்டி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்குரிய தூக்குத் தண்டனை நிறைவேறும் பட்சத்தில் அக்காலத்து வழக்கமான அவரது இறுதி ஆசை கேட்கப்பட்டது. தான் இறுதியாக ஒரு பாட்டுப் பாட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். அதன்படி அவருக்கு ஓர் ஆர்மோனியம் வழங்கப்பட்டது. அப்போது அவர் அண்ணாமலைச் செட்டியாரால் இயற்றப்பட்ட காவடிச் சிந்தில் புள்ளிமான் வாகனம் என்ற பாடலைப் பாடினார். அதனை மெய்மறந்து இரசித்துக் கொண்டிருந்த அரசின் ஆளணிகளால் தூக்கிலிடும் நேரம் தவறவிடப்பட்டது. அன்றைய கால கட்டத்தில் இருந்த சட்டத்தின்படி குறித்த நேரம் தவறினால் தூக்குத்தண்டனை ரத்தாகி விடும். எனவே இசையினால் அவரது உயிர் போக்கும் தூக்குத் தண்டனையில் இருந்து விலக்களிக்கப்பட்டது. எனவேதான் கீதம் சங்கீதம் உயிர்வளர்க்கும் உடல் சிலிர்க்கும் என்பதும் உண்மையென நிரூபிக்கப்பட்டது.
மனிதனாக இவ்வுலகில் வாழும்போது தான் மட்டும் வாழ்ந்தால் போதாது, மற்றவர்கள் பயன்பட வாழ வேண்டும். மனிதநேயமிக்கவனாக உருவாக வேண்டும். எனவே மற்றவர்கள் பயன்பட வாழ்வதற்கு கர்நாடக இசையும் பல வழிகளில் பேருதவி புரிகின்றது. தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கிணங்க இசையை தான் பாடும்போது அல்லது வாத்தியக்கருவியினால் வாசிக்கும்போது தான் மட்டுமல்ல மற்றவர்களின் கவலையைப் போக்கி உளநலம் பெற்று இன்ப வாழ்க்கைக்கு உறுதுணை புரிகிறார்கள். எனவே உலகிலுள்ள சிற்றின்பங்களை நாடி மக்கள் சீரழிந்து தங்களை தாங்களாகவே அழித்துக் கொள்வதிலிருந்து பேரின்பத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இசைக்கலையை கலைஞர்கள் வழங்குவதால் அவர்கள் இசைக்கலை கொடை வள்ளல்களாக திகழ்கிறார்கள்.
ஜய வருடம் ஆவணி - புரட்டாதி)

Page 28
இந்நீர்
அமெ:
தலவிருட்சம்
முனைவர்
POVRENCOVCOVCEVAKAVAANVAS:CSENCSEVASEVEROVER
உலக உயிரினங்களில் மிகப் பழங்காலத்தில் தோன்றியவை மரங்களாகும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே மரங்கள் இருந்துள்ளன. மக்களுக்குப் பல விதங்களில் பயன்பட்டுள்ளன. மரங்களில் தெய்வங்கள் உள்ளன என்று கருதிவழிபாடு செய்துள்ளனர். சிந்துவெளி நாகரிகத்தில் மரவழிபாடு இடம் பெற்றுள்ளது. சிந்துவெளி முத்திரைகளில் அரசமரங்கள் அதிகம் இடம் பெற்றுள்ளன. தாய்த் தெய்வ வழிபாடு தொன்மையானதைப் போலவே மரவழிபாடும் தொன்மையானது ஆகும். மெசபொத்தேமியாவில் மரக்கிளைகள் தெய்வப் பண்புடன் முத்திரைகளில் பொறிக்கப்பட்டுள்ளன. இந்து சமயத்தினரால் வழிபாட்டுக்குரியதாக ஏற்றுக் கொள்ளப்படும் மரங்களில் ஒன்றான அரசமரம் சிந்துவெளி முத்திரைகளில் காணப்படுவதால் ஐந்தாயிரம் ஆண்டுகளாக மக்கள் மனதில் வழிபாட்டுச் சின்னமாக மரம் இடம் பெற்றுள்ளது என்று ஆய்வாளர் கோசாம்பி குறிப்பிட்டுள்ளார். சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட ஆடைகளின்றிப் பெண் தெய்வம் ஒன்று காணப்படுகிறது. நீண்ட கூந்தலும் கைகளில் காப்புகளும் காணப்படுகின்றன. மக்கள் உருவங்களும் விலங்கு உருவங்களும் அந்த அன்னை தெய்வத்திற்குப் பணிந்து அஞ்சலி செய்து நிற்கின்றன. அரசமரமும் அதனுடன் சேர்ந்த அன்னை வழிபாடும் ஆரியர் காலத்துக்கு முற்பட்டன என்பதற்கு இதனையும் சான்றாகக் கொள்வர் வரலாற்று ஆசிரியர் என்று கலாநிதி கைலாசபதி குறிப்பிட்டுள்ளார். தமிழில் இன்று கிடைக்கும் நூல்களில் தொல்காப்பியமே மிகப் பழமையானதாகும். தொல்காப்பியத்தில் மரங்களைப் பற்றிய செய்திகள் மிகுதியாக உள்ளன. மாமரம், புளியமரம், ஒடுமரம், சேமரம், விசைமரம், பனை, இல்லம், ஆல், வேல் முதலிய மரங்களுக்கு எழுத்து அதிகாரத்தில் புணர்ச்சி விதி கூறியுள்ளார் தொல்காப்பியர்.
மரங்களின் மிகுதியால் கடம்பவனம், தில்லைவனம், ஆலங்காடு, மாங்காடு என்று அந்தந்த மரத்தால் பெயர் வழங்கலாயிற்று. கடம்பவனம் - மதுரை - இன்றும் மதுரைக் கோவிலில் தலமரம் கடம்ப மரமே. தில்லைவனம் - சிதம்பரம் - தில்லை மரமே சிதம்பரத்தின் தலமரமாகும். தில்லைச் சிற்றம்பலம் என்பது தேவார வழக்கு. மரம் அடர்ந்த காடாக இருந்து பின் ஊரானபோது அவ்வாறு பெயர் ஏற்பட்டிருக்கும். மரத்தின் அடியில்தான் முதலில் தெய்வத்தை வழிபட்டனர். பின் கோவில் கட்டி வழிபட்ட போது மரத்தைக் கோவிலில் அமைத்தனர். அதுவே தலமரம் எனப் பெயர் பெற்றது.
காஞ்சிபுரத்தில் மாமரம் மிகப் பழமையானதாகும். மாமரத்தின்கீழ் இருப்பதனால் இறைவனுக்கு மாமூலர் என்று பெயர். சங்க காலத்தில் மாமூலனார் என்ற பெயரில் புலவர் ஒருவர் உள்ளார். பிற்காலத்தில் வடமொழியில் ஏகாம்பரம் என்று அழைக்கப்பட்டது. இப்பெயரே, ஏகம் - ஒற்றை, ஆம்பரம் - மாமரம். ஒற்றை மாவின் கீழ் உள்ளார் என்ற பொருளில் ஏகாம்பரர், ஏகம்பர நாதர் என வழங்கலாயிற்று. இன்றும் மாமரமே அங்கு தலமரமாகும். திருவானைக்காவில் நாவல் மரம் தலமரமாகும். நாவல் மரத்தின் கீழிருந்த இறைவனைச் சிலந்தியும், யானையும் பூசித்தன. மரத்திலிருந்து சருகுகள் விழாமல் சிலந்தி நூலிழைத்துப் பந்தலாக அமைத்து வழிபட்டது. யானை நாள்தோறும்
இந்து ஒளி

2007
RேSS
த்தின் தனித்துவம்
ந. இரா சென்னியப்பனார்
BBC)
96 R
காவிரியில் நீராடி துதிக்கையில் நீரைக் கொணர்ந்து திருமஞ்சனம் ஆட்டியது யானையால் சிலந்திக் கூட்டுப் பந்தல் சிதைந்தது. மீண்டும் சிலந்தி பந்தல் அமைத்தது. அடுத்த நாளும் யானை வந்து நீர்விட்டு வழிபட்டபோது சிலந்திக் கூட்டுப் பந்தல் அழிந்தது. கோபம் கொண்ட சிலந்தி யானையின் துதிக்கையின் துவாரத்தினுள் புகுந்தது, யானை கீழே விழுந்து துதிக்கையை நிலத்தில் அடித்துக்கொண்டு இறந்தது. சிலந்தியும் இறந்தது. யானைக்கு முத்தி கொடுத்துச் சிலந்தியை அடுத்த பிறப்பில் சோழர் மரபில் பிறக்குமாறு செய்தான் இறைவன். அவ்வாறு பிறந்த மன்னனே கோச்செங்கட் சோழன் ஆவான். திருக்கோவில் பணிகள் பல செய்தான்.
சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழல் பந்தர்செய்து உலந்தவண் இறந்தபோதே கோச்செங்கோ ணானும் ஆகக் கலந்தநீர்க் காவிரிசூழ் சோணாட்டுச் சோழர்தங்கள்
குலந்தனிற் பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்டனாரே" என்பது தேவாரப் பாடல். வெண்ணாவல் மரத்தின் கீழிருந்ததால் இறைவனுக்கு வெண்ணாவலீசுவரர் என்று பெயர். நாவல் என்பது வடமொழியில் சம்பு எனப் பெறும். இறைவன் சம்பு நாதர் ஆனார். ஆனை வழிபட்டதால் ஆனைக்கா எனப் பெயர் ஏற்பட்டது. ஆனைக்கா என்பதைவடமொழியில் தந்திவனம், கஜாரண்யம் என மாற்றப்பட்டது. ஆனாலும் ஆனைக்காவே வழக்கில் வழங்கி வருகின்றது. பிற்காலத்தில் கோவில் கட்டப்பெற்ற போது நாவல் மரம் தலமரம் ஆயிற்று.பெரும்பாலான கோவில்களில் மரங்களில் கீழேயே கடவுளரை அமைத்து வழிபட்டனர். பிற்காலத்தில் கோவில் கட்டப்பெற்றபோது மரங்கள் தலமரங்கள் ஆயின. திருப்புன்கூர், திருப்பனையூர், திருப்பயற்றூர், திருமகல், திருவிரும்பூளை, திருத்தெங்கூர், திருநெல்லிக்கா, எருக்கத்தம்புலியூர், திருத்தினைநகர், திருப்பாதிரிப்புலியூர், கச்சிநெறிகாரைகாடு, திருவாலங்காடு, திருப்பாசூர், திருக்கள்ளில், திருமுல்லை வாயில், திருவேற்காடு முதலிய தலங்கள் மரங்கள் அடிப்படையில் அமைந்தவையே ஆகும். திருக்கோவில் மரங்களில் உயர்வு தாழ்வு இல்லை. மாமரமும் உண்டு. எருக்கிலை, கொட்டைச் செடி முதலியவைகளும் தலமரமாக உள்ளன. அப்பகுதி மக்களால் எளிதில் வளர்க்கக் கூடிய வளரக்கூடிய மரங்கள் தலமரங்களாயின. மக்களுக்கும், கால்நடைகளுக்கும் நிழல் தரும் மரங்கள் இறைவனுக்கும் மரமாயிற்று. இயற்கைச் சூழல் வழிபாடு, இயற்கையோடு அமைந்த வாழ்வு தமிழ் மக்கள் மேற்கொண்டவை. மரம், செடி, கொடிகளை மக்கள் போற்றினர். இலை, காய், கனி உணவாயிற்று. வேர், பட்டை முதலியன மருந்தாயிற்று. 'மருந்தாகித் தப்பா மரம்' என்பார் வள்ளுவர். மரம், செடி, கொடிகள் பாதுகாக்கப்பெற வேண்டியவை. வீணாக அழிக்கக் கூடாது என்று எண்ணிய தமிழ்ச் சான்றோர் கடவுளரோடு அவற்றைத் தொடர்பு படுத்தினர். கிராமப்புறங்களில் இன்றும் கோவில் மரங்களை வெட்டக்கூடாது. வெட்டினாலும் வீட்டு விறகாக எரிக்கக் கூடாது என்ற நம்பிக்கை இருப்பதைக் காணலாம்.
(நன்றி : இணையம்)
ஜய வருடம் ஆவணி - புரட்டாதி)

Page 29
இரண்டு
திருமுருக
இப்போது இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உயிர் என்றைக்கும் உள்ள பொருள். உடம்பு மாறி மாறி வரும்.
''புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்” - என்கிறார் மாணிக்கவாசக சுவாமிகள்.
ஆகவே, நாம் பிறவா நிலனும் இல்லை. நாம் இறவா நிலனும் இல்லை. நம்மைப் பெறாத உயிர்களும் இல்லை. நாம் பெறாத உயிர்களும் இல்லை. உண்ணாத உணவுமில்லை; அநுபவிக்காத போகமும் இல்லை. எத்தனையோ ஊழிக்காலமாகப் பிறந்தும், இந்தப் பிறவி வந்த வண்ணமாகவே இருக்கின்றது.
எத்தனையோ உலகங்கள் இருக்கின்றன. எத்தனையோ வகைப்பட்ட உயிர்கள், ஆடு-மாடு, புலி - எலி, ஆனை - பூனை, ஓணான் - உடும்பு, மான் - மீன், பாம்பு -பல்லி, செடி, கொடி, மரம், புல் - கல் இப்படிப் பல உயிர்கள். இவற்றை எல்லாம் இரு பிரிவில் அடக்கி விடலாம். ஒன்று சரம் (அசையும் உயிர்), மற்றொன்று அசரம் (அசையாத உயிர்).
'செயிரிலா உலகினில் சென்று நின்று வாழ் உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்" - என்கின்றார் கம்பநாடர்.
சென்று வாழ் உயிர்; நின்று வாழ் உயிர் என்ற இந்த இரு பிரிவில் எல்லா உயிர்களும் அடங்குவது போல், எல்லா உலகங்களையும் ஒளி உலகம், இருள் உலகம் என்ற இரு பிரிவில் அடக்கிவிடலாம்.
ஒளி உலகம் - இன்ப உலகம்; இருள் உலகம் - துன்ப உலகம். ஒளி உலகம் என்பதில் தேவலோகம், பிரமலோகம், விஷ்ணுலோகம் முதலிய உலகங்கள் அடங்கும். இருள் உலகம் என்பதில் யமலோகம், கும்பி பாகம் முதலிய நரகங்கள் அடங்கும்.
இனி, இந்த இரு உலகங்களின் தன்மையை ஆராய்வோம். ஒளி உலகம் நறுமணத்துடன் கூடியது. கற்பகம் முதலிய தெய்வத் தருக்களின் நிழலால் இனிய காற்று வீசிக் கொண்டிருக்கும். சதா இனிய சங்கீத ஒலி ஒலித்துக் கொண்டிருக்கும். அரம்பையரது ஆடலும் பாடலும் நிறைந்திருக்கும். வெப்பமே இன்றி நல்ல குளிர்ச்சியாகத் திகழும். அங்கே பசி, தாகம், வியர்வை முதலிய துன்பங்கள் இல்லை.
இருள் உலகம் பொறுக்க முடியாத நாற்றமும், வெப்பமும், கொடுமையும் நிறைந்திருக்கும். வெட்டு,
(இந்து ஒளி

உலகங்கள்
கிருபானந்தவாரியார்.
குத்து, அடி, கொல் என்ற வல்லோசையுடன் கூடிப் பெருந் துன்பமயமாக இருக்கும். கொலை, புலை, களவு, சூது, வாது, வஞ்சனை முதலிய தீவினைகள் புரிவோர் இருள் உலகம் போய் பெருந்துன்பத்தை நுகர்வார்கள்.
புகைவண்டியில் ஏறுவோர்க்கு நுழைவுச் சீட்டு இன்றியமையாதது. அதுபோல் ஒளி உலகிற்குச் செல்ல வேண்டுமானால் அதற்கு நுழைவுச் சீட்டு அருள் ஒன்றே தான்.
"அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு) இவ்வுலகம் இல்லாகி யாங்கு. - (திருக்குறள்). ஒரு பெருந் தனவந்தர். அவருக்கு அறுபது லட்சம் ரூபாய் சொத்து. அவர் சென்னையில் பெருமிதமாக வாழ்பவர். பெங்களூர் போகப் புறப்பட்டார். சென்னை மத்திய புகைவண்டி நிலையத்தில் முதல் வகுப்பில் இடம் ஒதுக்கி அவர் பேர் எழுதிய அட்டை தொங்க விடப்பட்டது. வண்டியில் பெட்டி, படுக்கை, தண்ணீர், திருகு செம்பு, குடை முதலிய பலவும் ஏற்றப்பட்டன. வண்டி புறப்படுமுன் காரில் வந்து வண்டியில் ஏறினார். வண்டி புறப்பட்டது. செய்தித்தாள் படித்தார். சற்று இளைப்பாறினார். அரக்கோணம் வந்தது. காபி பலகாரம் கொணர்ந்து ஒருவன் கொடுக்க அருந்தினார். பணந்தரும் பொருட்டுச் சட்டைப் பையில் கையை விட்டார். மூவாயிரம் ரூபாயும் சில்லறையும் அடங்கிய பணப்பை இல்லை. அதனை எடுத்தவர் எப்படியோ சட்டைப் பையில் வைக்க மறந்துவிட்டார். வீட்டில் நின்றுவிட்டது. பெட்டியிலும் பார்த்தார்; இல்லை. காபியும் பலகாரமும் தந்தவன், "ஐயா! நான் போகவேண்டும். நேரம் ஆகின்றது. சீக்கிரம் தாருங்கள்” என்று நெருக்கினான். என்ன செய்வார். சென்னையில் அறுபது லட்சம் ரூபாய்கள் இருக்கின்றன. ஆனால், அரக்கோணத்தில் ஒரு பணமும் இல்லை. திருதிரு என்று விழித்தார்.
"ஏனையா! பணம் இல்லையா? இல்லாதவர் ஏன் காபி குடிக்கவேண்டும்? ஆள் பெரிய ஆள்தான் போலும்" என்றான் அவன்.
"ஐயா! பணப்பையை எடுக்கவில்லை போலும்; சற்றுப் பொறு; தருகிறேன்" என்றார்.
அவன் கடிந்து கொண்டான். அடுத்து இருந்த ஒருவரிடம் கடன் வாங்கிக் கொடுத்தார்.
வண்டி பெங்களூர் சென்றது. சாமான்களைத் தூக்கும் கூலிக்கும் பணம் இல்லை. கைம்மாற்று வாங்கியதையும் தர இயலவில்லை; மிக்க வருத்தமுற்றார்.
பொருள் இல்லாதானுக்கு என்னதான் இருக்கும். அதுபோல் இவ்வுலகில் பட்டம், பதவி, நிலபுலம், பொன், பொருள் எத்தனையிருப்பினும் அருள் இல்லாத
ஜய வருடம் ஆவணி - புரட்டாதி

Page 30
ஒருவன் அவ்வுலகில் வேதனையுறுவான் - ஆகவே அருளையீட்டாதவர் அவ்வுலகம் பெறுவதில்லை.
அருள் நலம் பெற்றவர் இருள் சேர்ந்த இடர் உலகம் போகமாட்டார்.
"அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை அருள்சேர்ந்த இன்னா வுலகம் புகல்" - (திருக்குறள்).
இம்மையில் எல்லாவுயிர்கட்கும் அன்பினால் உதவி செய்தல் வேண்டும். அன்பினால்தான் அருள் வரும். அன்பில்லையேல் அருளைப் பெற முடியாது. அருளைப் பெறாதார் அவ்வுலகம் பெறுகிலர்.
பலர், மற்றோர் உலகம் இருக்கின்றது; நாம் என்றிருந்தாலும் ஒரு நாள் உடம்பை உதறிவிட்டுப் புறப்படுவோம். மரணத்திற்குப் பின் நாம் என்ன நிலையை அடைவோம்? எங்கே போவோம்? என்ற எண்ணமேயின்றி இருக்கின்றார்கள்; உலாவுகின்றார்கள்; உறங்குகின்றார்கள்; பொருள் ஈட்டுகின்றார்கள்; கற்ற வித்தைகளைப் பிறருக்குக் காட்டுகின்றார்கள். ஆனால், உடம்பை விட்டு உயிர் பிரிந்தபின் அடையும் உலகைப் பற்றிச் சிறிதும் சிந்திப்பதில்லை.
திருவிழாக் காலங்களில் புகைவண்டியில் மக்கள் கூட்டம் எள் வீழ்ந்தால் கீழே விழ முடியாத அளவில் நெருக்கமாக இருக்கும். வண்டியில் ஏற முடியாது பலர் தத்தளிக்கின்றார்கள்.
சித்த
நெறிமுறை, குறை, நிறை, வரையறை வகுத்துக்கூற முடியாத நிலையில் இருப்பவன் இறைவன்.
நாம் எது சொன்னாலும், அஃது அல்ல, ஆண்டவன்! நாம் ஏதும் இல்லையென்றாலும், அதிலும் இருப்பவன் இறைவன். இவ்வாறு எதையும், கடந்து, எல்லாமுமாகி நிற்பவன், ஈசன் முடிவில்லாத பரம்பொருள்.
கடவுள் நிலை என்பது, காண்போரைப் பற்றிய பேச்சே தவிர, கடவுள் இருந்த நிலையிலேயே என்றும் இருப்பவன். அவனைக் காண முயற்சி செய்பவனுடைய மனநிலையைப் பொருத்துதன், கடவுள் காட்சியைப் பெறுதலும், பெறாது உழலுதலும்!
நிற கடவுள் 2 இரும்? செ
என்னிலே இருந்ததொன்றை யான் அறிந்ததில்லையே! என்னிலே இருந்ததொன்றை
யான் அறிந்துகொண்ட பின், என்ணிலே இருந்ததொன்றை யாவர் காணவல்லீரோ என்னிலே இருந்தவொன்றை
யானும் உணர்ந்துகொண்டேனே!
என்று, இறைவனைக் கண்டுகொள்ளாமல் தவிர்த்த நாட்களை, சிவவாக்கியர் நினைவு கூர்கிறார். மேற்கண்ட
(இந்து ஒளி

அறிவாளி நான்கு நாட்களுக்கு முன் முதல் வகுப்பு அல்லது இரண்டாவது வகுப்பு முதலிய சிறப்புப் பெட்டியில் இடம் ஒதுக்கப் பணம் கட்டிச் சீட்டு ஒட்டுமாறு செய்துவிட்டால் எத்துணை நெருக்கமாக இருப்பினும் அந்த இடத்தில் பரமசுகமாக இருந்து பிரயாணம் புரியலாம் அல்லவா?
அதுபோல், இந்தவுலகில் புண்ணியம் என்ற சீட்டு ஒட்டிவிட்டால் அங்கு அதிக இன்புறலாம்.
பாவம் புரிந்தோர்கள் தீவினைத்தேரில் ஏறி நரகில் சேர்ந்து துன்புறுவார்கள்.
கொல்வதே கன்றி நின்றார் கொடியவர் கடிய நீரார் அல்லையே அம்மை யல்லால் உம்மையும் உயிரும் என்பார் அல்துைம் நவமு மில்லை தானமும் இழுவென் பாரும் சென்அந் நகரந்தன்னுள் தீவினைத் தேர்கள் ஊர்ந்தே.
(சிந்தாமணி).
எனவே, மக்களாகப் பிறந்த நாம் இன்சொல், உண்மை, ஒழுக்கம், அன்பு, பண்பு, நேர்மை, நீதி, நெறி, கருணை முதலிய நற்குணங்களைப் பூண்டு இம்மையில் இனிது வாழ்ந்து இறுதியில் ஒளி உலகம் புகுவோமாக!
(நன்றி : இரு துருவங்கள்)
ம தெளிவோம்
பாட்டின் முதல் அடியை அடுத்து, இரண்டாவதாக 'ஞானக்கண் திறக்கின்றது' முனிவர் மட்டும் இறைவனைக் காண்கிறார். வெளியில் எவருக்கும் தெரியாத இறைவன், மனப்பக்குவம் பெற்றுள்ள அவருக்கு மட்டும் இறைகாட்சி கிட்டுகிறது.
நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயம் இது. சித்த புருஷர்கள், எங்கும் நிறைந்து நிற்கும் இறைவனை ஊரூராகச் சுற்றி அலைந்து நாடும், காடும் தேடித் திரிந்து, எவரும் இறைவனைக் காணாமல் தவிக்க வேண்டாம். அகப்பார்வையைக் கொண்டு நோக்கினால் உன்னுள்ளே அகப்படுவான் அவன்! என்று தாமும் அப்படி தேடியலைந்து தெய்வதரிசனம் பெறாமல் தவித்ததாகக் கூறுகிறார் சிவவாக்கியர்.
'எதிலும் எங்கும் இருப்பவனாகினும் எம்பெருமான் எல்லாவற்றிலும் இரண்டறக் கலந்து, தன்னை மறைத்துக் கொள்ளும் கள்வன். ஆனபடியால் ஒளிந்துவாழும் அவனை, ஞானக்கண் கொண்டு நோக்கி அவனை கண்டுணரவேண்டும்' என்கிறார். அதாவது,
ஆடுகின்ற எம்பிரானை
அங்குமிங்கும் என்று நீர் தேடுகின்ற பாவிகாள்...!
காடு, நாடு வீடுவிண்
ஜய வருடம் ஆவணி - புரட்டாதி)

Page 31
கலந்து நின்ற கள்வனை
நாடியோடி உம்முள்ளே நயந்துணர்ந்து பாருமே!'
இறைவனைத் தேடித்தேடி தவிப்போரை 'பாவிகள்' என்று கூறும் முனிவர், 'எவ்வளவு சொன்னாலும் நீங்கள் கேட்பதில்லை. தெரிந்து கொள்ளவதில்லை; தெளிந்த ஒன்றை அறிவதில்லை ; எங்குமாக நிலவி நிற்கும் நீர்மலி வேணியனை, நிலவு சூடியவனை நயந்து உணர்கின்ற வழியைப் பாருங்கள்' என்கிறார்.
இதையே, திருமூல நாயனாரும், 'கனிந்தவர், ஈசன் கழலடி காண்பார்' என்று கூறுகிறார். வீடு, காடு, நாடு, கோயில், விண் எங்கும் ஈசன் பரந்து நிற்பது உண்மையே! ஆனால் வெளியில் தெரியும் வண்ணம், அவன் திருக்காட்சி தருபவன் அல்லன்!
'உள்ளத்திலுள்ள பரம்பொருளை, எவரும், மண்ணிலும், விண்ணிலும் தேடி வீணில் வருந்த வேண்டாம்' என்கிறது வேறு ஒரு பாடல்!
'கடவுள், எட்டி எங்கோ வெகு தொலைவில் இருப்பதாகச் சொல்பவர்கள் சோம்பேறிகள்' என்கிறார் சிவவாக்கியர். ஏனென்றால், எட்டியுள்ள பரமனைப் போய்ப் பற்றிக் கொண்டு காலத்தைக் கடத்தி விடாதீர்கள் மண்ணிலும், விண்ணிலும் அங்கெங்கெனாதபடி , எங்கும் மேவி நிற்கும் பராபரன் உங்கள் உள்ளத்தினுள்ளேயே உள்ளான்' என்பதை.
நூரம் தூரம் தூரம் என்று
சொல்லுவார்கள் சோம்பேறிகள்! நினைப்புமாய் மறைப்புமாய்
நின்ற மாயை மாயையோ! அனைத்துமாய் அகண்டமாய்
அனாதிமுன் அமைதியாய் எனக்குள் நீ உனக்குள் நான்
இருக்கும் ஆறு அது எங்கோ?
என்று முனிவர் கூறும் இந்தப்பாடல், வேறு சிந்தையே அற்ற நிலையைக் கூறுகிறது. இறைவனை நோக்கி 'எனக்குள்ளே நீ; உனக்குள்ளே நான்' என்ற இரண்டறக் கலந்த நிலையே, 'ஞானநிலை' யாகும்.
ஞானிகள் உள்ளத்தில் உதித்த உண்மைகளை நாம் நம்பி, சிந்தித்து, சித்தம் தெளிதல் வேண்டும்.
கடவுள் நிலையறியாது, போலியாக மனிதர்கள் போடும் ஆட்டத்தை, 'கடவுள்' என்று நம்பி ஏமாறக் கூடாது. ஆடு, கோழிகளைப் பலி கொடுப்பது போன்ற அறியாமை இருளிலிருந்து விடுபட்டு, உண்மை நிலையை உணர்வோமாக!
உடல் உறுப்புகளின் தேவைகளை இறையருளால் நிறைவு செய்தவர்கள் யாரிடமும் எதற்காகவும் செல்ல மாட்டார்கள். அவர்கள் தாம் மக்கள் தொண்டர்கள். மெய் கண் டர் ஒருவருக்கு உதவி செய்யாமல் எப்படி தொண்டராக முடியும்? பிறருக்கு இடையூறு செய்யாதிருப்பதுதான் பெருந்தொண்டு ஆகும். மேலும் அவர் தமது உடம்பில் தொண்டைக் குழிக்குமேல் பாகமுள்ள ஊசி முனைவாசல் என்ற தொண்டை துவாரத்தை திறந்து இறைவனின் இருப்பிடமாகிய சித்தாசாசம் சென்றவராவார். தொண்டை எனப்படும் கண்டத்தைவிட்டு அகலாமல் நின்று நீல கண்டமாக விளங்கும் (நீலம் விஷம் சளி) சளியினை போக்கி குதமாகிய வாசல் வழி வாயு குதிக்கின்ற இடத்திலிருக்கும் கதவினைத் திறந்து அந்த சொர்க்க
(இந்து ஒளி

வாசல் வழி இறைவன் பதம் சேர்ந்தவராகும். உடம்பில் உள்ள எப்போதும் பூட்டியே அடைத்தே இருக்கும் வாசலை அதாவது உயர்ந்த மதிற்சுவரில் சிறு ஓட்டை போட்டு நுழைவதற்குரிய வழியைச் செய்தவர் சித்தர் ஆவார். அவர்தான் பணி செய்து கிடப்பவர்.
"என் கடன் பணி செய்து கிடப்பதே”
என பாடியது உயர்ந்த பணியாகிய சங்கராபரணத்தை அணிந்து சிறப்புறுவதுதான் பணியிற் சிறந்த பணியாகும். இறவாது வாழும் பெரும்பேறு பெற்றவர். அத்தகைய தொண்டரின் பெருமை சொல்லவும் அரிதே.
நன் கடம்பனைப் பெற்றவன் பங்கினன் தென்கடம்பைத் திருக்காகக் கோயிலான் தன் கடன் அடியேனையும் தாங்குதல் என் கடன் பணிசெய்து கிடப்பதே
- தேவாரம்
குற்றமற்ற சிவனுக்கு குண்டலமானாய் கூறும் திருமாலினுக்கு குடையானாய் கற்றை குழல் பார்வதிக்கு கங்கணமானாய் கரவாது உள்ளம் களித்தாடுபாம்பே
- பாம்பாட்டிச் சித்தர்
பணி - பாம்பு என்பது வெளி உலகில் நம்ம கண்ணுக்கு காணப்படும் பாம்பு அல்ல. மூச்சுக் காற்றெனும் வாசிக் கணலாகி சுருண்டு கிடக்கும் குண்டலினி சக்தியாகும். அனைத்து உயிர்களிடமும் விளக்கம் பெறுமானால் அவ்வுயிர் கருணையே ஜீவகாருண்யமாகும்.
எறும்பு போன்ற சிற்றுயிர் முதல் ஆறறிவு கொண்ட மனிதன் ஈடாக உள்ள அனைத்து உயிர்களுமே இறைவன் குடிகொண்டுள்ள கோவில்கள், இவ்வுணர்வுடன் உயிர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை நீக்குதல் வேண்டும். பசி, தாகம், பிணி போன்ற துன்பங்களிலிருந்து அவ்வுயிர்களை நாம் காப்பாற்ற வேண்டும். அப்போது இறைவனின் பெருங்கருணை நம்மீது வந்திறங்கும்.
"உயிருள்ளாம் எம்முள் உயிர் இவையுணர்ந்தே உயிர், நலம் பரவுக என்றுணர்ந்த மெய்சிவமே”
என்று அகவலின் வரிகள் ஜீவ காருண்யத்தின் அடிப்படைத் தத்துவத்தை விளக்க வல்லவை. இத்தகைய உண்மைதான்,
"வாடிய பயிரைக் கண்டாலும் வாடும் காக்கைகள் கரைய மனம் கலங்கும்”
மண்ணுலகத்தில் உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ஒரு சிறிதேனும் கணமும் நான் சகித்திட மாட்டேன். எனவரும் வள்ளலின் வார்த்தைகளே வள்ளலாரின் உயிர் இறக்கத்திற்கு என்றும் இலக்கணமாகத் திகழ்பவை.
சன்மார்க்கத்தின் மற்றுமோர் படி ஆன்மநேய ஒருமைப்பாடாகும். முன்னரே குறிப்பிட்டவாறு உயிர்கள் அனைத்தும் இறைவன் திருநடம்புரிகின்ற கோவில்கள் என்ற உணர்வுடன் ஒவ்வொரு உயிரின் நலத்தையும் நாம் பேணுதல் வேண்டும். அகம் - புறப் பாகுபாடுகள் தோன்றாத வண்ணம் உயிர்களை ஒத்து நோக்கும் பண்பும் வேண்டும்.
நன்றி : அருட்சித்தர் பிரம்மஸ்ரீ கயிலாச்சாமி வெளியிட்ட நமது வழிபாட்டின் தத்துவங்கள் (மலேசியா வெளியீடு)
ஜய வருடம் ஆவணி - புரட்டாதி)

Page 32
(மாமன்றச் செய்திகள்)
யாழ் நகரில் சுவ
நினைவுதினம்
அகில இலங்கை இந்து மாமன்றம், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் நினைவு தின வைபவம் கடந்த ஜூலை மாதம் 27 ஆம் திகதியன்று மாலை மாமன்றத்தின் யாழ் பணிமனையில் நடைபெற்றது.
மாமன்ற உபதலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் இடம் பெற்ற இந்த
வைபவம் மங்கள விளக்கேற்றலின் பின், சிவதொண்டர் அணியினரின் தேவார பாராயணத்துடன் ஆரம்பமானது. மாமன்றத் தலைவர் திரு கந்தையா நீலகண்டன் நந்திக்கொடி ஏற்றி வைத்தார்.
இந்த நிகழ்வில் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். இவர் தனது ஆசியுரையின் போது, "வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு இடையே சமய ரீதியான பாலத்தை அமைத்து, மொழி மதம் என்பவைகளைப் பெருமைப்படுத்தியவர் சுவாமி விபுலானந்தர். கல்விப் பணி ஊடாக யாழ் மண்ணையும் சிறப்பித்த பெருமைக்குரியவர். இவரின் நினைவு என்றென்றும் தமிழ் மக்கள் மத்தியில் நிலைபெற்றிருக்கும்” என்று குறிப்பிட்டார்.
நிகழ்வுக்கு தலைமை வகித்த செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், தனது உரையின்போது, ''சுவாமி விபுலானந்தர் இந்துப் பாரம்பரியத்தை காப்பாற்றிய தனித்துவ பெருமைக்குரியவர். சைவத்தமிழ் பாடசாலைகள் தோன்றுவதற்கு காரணமாக இருந்தவர். முதற் தமிழ்ப் பேராசிரியர் என்ற பெருமையைப் பெற்றவர். யாழ் நுால் மூலம் மிகப் பெரிய ஆய்வை தந்தவர் இவர். இந்தப் பெருமகன் சாதித்த சாதனைகள் ஏராளம். இசைப் பல்கலைக்கழகமாக சிறப்புப் பெறும் கிழக்கிலங்கை சுவாமி விபுலானந்தர் இசைக் கல்லூரி இவரது நினைவை எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறது.'' என்று கூறினார்.
யாழ் பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறை தலைவர் பேராசிரியர் மா.வேதநாதன் சிறப்புரையாற்றும்போது, யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்புக்கும் இடையே பாலமாக விளங்கியவர் சுவாமி விபுலானந்தர். பேச்சு, எழுத்து, கவிதைகளில் கூட யாழ்ப்பாணத்தைச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார். வேதாந்தியாக, சமய ஞானியாக, தத்துவ ஞானியாக, கல்வியாளராக திகழ்ந்தவர்" என்று தெரிவித்தார்.
கிழக்குப் பல்கலைக்கழக சமஸ்கிருததுறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி ம. பாலகைலாசநாத சர்மா தனது சிறப்புரையில், "சுவாமி விபுலானந்தர் சிறந்த சமய சமூகப் பணியாளர், திறமைமிகு ஆய்வாளர், துாரநோக்கு கொண்ட சிந்தனையாளர். சித்தாந்தம் காவியம் என்பது
(இந்து ஒளி

மி விபுலானந்தர் ர வைபவம்
மட்டுமல்ல மேனாட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபாடு
கொண்டிருந்தவர்" என்று குறிப்பிட்டார்.
சைவப்புலவர் திருமதி சிவானந்தஜோதி ஞானசூரியம் சிறப்புரையாற்றும் போது, "சுவாமி விபுலானந்தர் தமிழ் உலகத்திற்கு கிடைத்த பெரும் நிதியம். தனக்கென வாழாது பிறருக்காக வாழ்ந்தவர். பிறந்த மண்ணுக்கும் பிறந்த நாட்டுக்கும் மங்காத புகழ் வாங்கித் தந்தவர்” என்றார்.
சைவவித்தகர் வெ. சசிகரன் தனது சிறப்புரையில், "மாணவர் மத்தியிலிருந்து அறியாமையை நீக்கி, அறிவொளி ஊட்டியவர் சுவாமி விபுலானந்தர் . மட்டக்களப்பு மண் செய்த மாதவத்தினால் பிறந்த அடிகளார் இன்றும் மக்கள் மனங்களில்
வாழ்ந்துகொண்டிருக்கிறார். அறிவுச் சமுதாயத்தை கட்டியெழுப்ப கல்விக்கூடங்களை நிறுவியவர். அவை இன்றும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன.'' என்று தெரிவித்தார்.
கவிஞர் கதிர் பாரதிதாசன் பேசும்போது, "" வடக்கில் அளப்பரிய பணியாற்றிய ஆறுமுகநாவலரைப் போல கிழக்கிலங்கையில் சுவாமி விபுலானந்தரின் பணி சிறப்பாகச் சொல்லத்தக்கது. தமிழர் பெருமையை எழுத்துக்களில் வடிக்கவேண்டும், உலகுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு
ஆராய்ச்சி மேற்கொண்டவர்." என்று தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் உபதலைவர் அ.செல்வேந்திரன் உரையாற்றும்போது, ''சைவமும் தமிழும் வாழவேண்டும் என்பதற்காகவே நாவலர் பெருமானுக்கும், சுவாமி விபுலானந்தருக்கும் விழா எடுக்கப்படுகிறது. வடக்கும் கிழக்கும் பாரம்பரிய பிரதேசம் என்பதற்கு மேலாக, இரு பிரதேசங்களினதும் சைவத்தமிழ் அறிவு வளர்ச்சிக்கு இவர்கள் இருவரும் பெரிதும் உழைத்தவர்கள். இதற்காகவே கிழக்கிலங்கையில் நாவலர் பெருமானுக்கும், வடக்கில் சுவாமி விபுலானந்தருக்கும் விழாநடத்தி வருகிறார்கள்'' என்றார்.
மாமன்றத் தலைவர் திரு.கந்தையா நீலகண்டன் நிறைவுரையுடன் நன்றியுரையையும் வழங்கினார். "வடக்கு கிழக்கு இடையிலான உறவுப் பாலத்தை வளர்க்கவேண்டும். இன்று கிழக்கிலிருந்து ஏராளமானவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டிருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. வருடாந்தம் இப்படியான வைபவம் நடைபெறவேண்டும். இன்றைய நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறுவதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்தார். நிகழ்வின் இறுதியில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை சார்பாக அதன் செயலாளர் எஸ். மதிசுதன் வைபவத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துப் பேசினார்.
(யாழ் மண்ணிலிருந்து அ. கனகசூரியர்)
ஜய வருடம் ஆவணி - புரட்டாதி)

Page 33
அகில இலங்கை இந்து ம
27. 08. 2014ஆம் திகதியன்று வீரகேசரி மற்றும் "தினக்குரல் ஆகிய தமிழ் நாழிதழ்களில் முறையே பெளத்த . இந்து தர்ம பாதுகாப்புச் சபை உதயம் மற்றும் இந்துக்கள் மதம் மாற்றப்படுவதைத் தடுக்க பொதுபல சேனாவுடன் இணைந்து செயற்படுவோம் ஆகிய தலையங்கங்களில் பிரசுரமாகியிருந்த செய்தியறிக்கை தொடர்பாக அகில இலங்கை இந்து மாமன்றம் ஆழ்ந்த கவலையும் பெரும் அதிர்ச்சியும் அடைந்துள்ளதோடு தனது கடும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.
இந்நாட்டின் இந்து மக்களின் ஏகோபித்த குரலாக இலங்கையின் இந்து மன்ற அமைப்புக்களினதும் ஆலய நம்பிக்கைப் பொறுப்புக்களினதும் ஒன்றியமாக - உச்ச நிறுவனமாக அகில இலங்கை இந்து மாமன்றம் ஐந்தரை தசாப்தங்களுக்கு மேலாக குரல் கொடுத்து வருவதுடன், இந்நாட்டு இந்து மக்களின் தேவைகளை அறிந்துணர்ந்து முடியுமானவரை பல பணிகளையும் செய்துவருகின்றது.
இந்து மக்களுக்கு மட்டுமல்ல இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற ஏனைய சிறுபான்மை மதங்களுக்கும் இடையூறு ஏற்படும் போது துணிந்து குரல் கொடுப்பதுடன் எமது கண்டனத்தையும் அவ்வப்போது திெரிவித்துள்ளோம். அகில இலங்கை இந்து மாமன்றத்தின் குறிக்கோள்களாக, 0) இந்து தர்மம் அறிவினையும் சாதனையையும் விருத்தி
செய்தல்.
இந்து கலாசாரத்தையும் கல்வியையும் விருத்தி செய்தல் 0 இந்து சமய தாபனங்கள், ஆலயங்கள் சமய நிறுவனங்கள்
முதலியவற்றை அமைத்ததும் பேணலும். 0 இந்து தாபனங்களை வலிமையடையச் செய்வதோடு அவற்றின் ஊடாக சமூக சேவைகள், கல்வி நடவடிக்கைகளை
முன்னெடுத்தல். 0 வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல்
போன்ற சமய சமூகப் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். அகில இலங்கை இந்து மான்றம் எவ்வித அரசியல் கலப்பும் இல்லாத ஒரு தொண்டு நிறுவனமாகும்.
இவ்வாறிருக்க, அகில இலங்கை இந்து சம்மேளனம் என்ற பெயரில் அரசியல் நடத்தும் சிலர் இவ்வளவு காலமும் எங்கிருந்தார்கள் எனத் தெரியவில்லை.
பிறமதங்களை சீர்குலைத்து அதன்மூலம் எமது மதத்தை வளர்க்கும் நெறிமுறை இந்து மாமன்றத்துக்குக் கிடையாது.
அத்துடன் பிறசமயத்தை அழிப்பதன் மூலம் தம்மை வளர்த்துக்கொள்ள முனையும் எவருக்கும் அகில இலங்கை இந்து மாமன்றம் இடம் கொடுக்காது.
பொதுபலசேனா அமைப்பென்பது குறுகிய நோக்கம் கொண்டதும் ஏனைய மதத்தையும் இனத்தையும் அழிப்பதன் மூலம் தமது இருப்பைத் தக்கவைக்க முனையும் ஒரு மதவாத - இனவாத அமைப்பென்பது சர்வதேச ரீதியாக அறியப்பட்ட உண்மை. இதற்கு, சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற களுத்துறை, பேருவளை சம்பவங்கள் ஒரு எடுத்துக்காட்டு. அவர்களின் இவ்வாறான இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு அகில இலங்கை இந்து சம்மேளனம் என்ற அமைப்பு ஒத்துழைக்கின்றதா? இவ்வமைப்பின் தலைவர் இவ்வளவு காலமும் எங்கிருந்தார்? 2009 இல்
(இந்து ஒளி

எமன்றம் விடுத்துள்ள
கண்டன அறிக்கை
முடிவுற்ற யுத்தத்தின் பின் எமது மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகள், இழப்புகள் மற்றும் இந்து ஆலயங்கள் அழித்தொழிக்கப்பட்டு அவ்விடத்தில் விகாரைகள் அமைக்கப்படுவதும், புத்தர் சிலைகள் அமைக்கப்படுவதும் திரு. அருண் சாந்த் அவர்களுக்குத் தெரியாதா?
சிங்கள மக்கள் வாழாத பகுதிகளில் விகாரைகள் அமைக்கப்படுவதும் புத்தர் சிலைகள் நிறுவப்படுவதும் தேவையானதா?
மன்னார் ஆயர் மேற்கொள்ளும் மனிதாபிமான நடவடிக்கைகள் யாவும் திரு.அருண்சாந்த் போன்றவர்களுக்கு மதமாற்ற நடவடிக்கையாகத் திெரிகிறது.
மதம் மாறுவது என்பது தாயை மாற்றுவது போன்றதாகும். எனவே மதப்பற்றுள்ள ஒருவன் எவ்விதத்திலும் தனது மதத்தைவிட்டு பிறிதொரு மதத்தைத் தழுவமாட்டான். இது அருண் சாந்த் போன்றவர்களுக்கு விளங்கவில்லையா? இவர்களெல்லாம் எவ்வாறு ஒரு நிறுவனத்தை வழி நடத்துகிறார்கள்.?
திரு. அருண் சாந்த் அவர்களே! தங்களுக்குக் கூட்டுச்சேர ஆளில்லாமல் சுயநலத்திற்காகப் பொதுபலசேனா போன்ற அமைப்புக்களுடன் கூடி சமுதாயத்தைக் கெடுக்க எண்ணாதீர்கள்.
சிங்களவர்களில் பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் இருப்பது போன்று தமிழர்களிலும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் இருக்கின்றார்கள். இதேபோல் தமிழ் பேசுவோர் இஸ்லாம் மதத்தில் உள்ளார்கள். இவை கூடத்தெரியாது சுயநல அரசியல் நோக்கோடு இந்து மதத்தைப் பற்றியோ இந்துக்களின் நலன்கள் பற்றியோ அறிக்கைகள் விடுவதற்கு இந்து சம்மேளனம் என்ற அமைப்பிற்கு அருகதையில்லை.
இந்துக்களின் நலன்களில் அக்கறை கொள்ள, இந்து மதத்தை வழிநடத்திச் செல்ல, இந்து சமுதாயத்தை காப்பாற்றிக்கொள்ள அகில இலங்கை இந்து மாமன்றம் என்ற அமைப்புக்கே முடியும். இதற்கே அவ் உரிமையும் பொறுப்பும் உண்டு. வேறெவருக்கும் இதில் தலையிட அருகதையில்லை.
அதற்கு அகில இலங்கை இந்து மாமன்றம் அனுமதிக்காது.
அகில இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவர் அவர்களே! நீங்கள் உங்கள் சுயநலன் கருதி பொதுபலசேனா போன்ற அமைப்புக்களுடன் ஒட்டி உறவாடுங்கள். அதற்காக இந்து மக்களைக் காட்டிக்கொடுக்கும் கேவலமான வேலையைச் செய்யாதீர்கள்.
இந்து மக்களின் மத உரிமை தொடர் பிலான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், இந்து மக்களை இந்து தர்மத்தின் பாதையில் வழிநடத்துவதற்கும் அகில இலங்கை இந்து மாமன்றம் தனித்து நின்று வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எதிர்காலத்திலும் அவை தொடருமென்பதை இந்து மாமன்றம் தெரிவித்துக்கொள்கின்றது. மு. கதிர்காமநாதன்
கந்தையா நீலகண்டன் பொதுச் செயலாளர்
தலைவர்
ஜய வருடம் ஆவணி புரட்டாதி)

Page 34
இந்தச் சுடரில்....
ஃபஞ்ச புராணங்கள்
ஆன்மீகச்சுடரின் அருள்மடல் நவராத்திரியின் சிறப்பு
A .
அன்னையின் அருள் பிரவாகிக்கும் நவராத்திரிப் பண்டிகை
துக்க நிவாரண அஷ்டகம்
:
-----
* நவராத்திரி நாளில்
வழிபடும் முறைகளும் சக்தி வழிபாட்டுச் சிறப்பும் கன்னி மாதத்தில் நவராத்திரி பழந்தமிழ் நூல்களில் அம்பிகை * நவராத்திரி மகத்துவம் / தாய்மை வழிபாட்டின் தொன்மை 10
N 0 0
ஐஸ்வரிய மகாலட்சுமி
சகலகலாவல்லி சரஸ்வதிதேவி மகாசரஸ்வதி அருள் பெற்றோர்
* சகலகலாவல்லி மாலை
க க க க 3
* கேதார கெளரி விரதச் சிறப்பு
* சைவநெறி காத்த நாவலர்
.
20 |
22
23
சிவயோக சுவாமிகள் நல்லூர் முருகன் மீது பாடிய பாமாலை
விபுலானந்த அடிகளாரும் கங்கையில் எழுதியிட்ட ஓலையும் கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்! / விஜயதசமியின் சிறப்பு திருநீற்று மேன்மையை உணர்த்திய உத்தமர் ஃ இலட்சுமி பிரார்த்தனை!
இசையும் இறையின்பமும் தலவிருட்சத்தின் தனித்துவம் * இரண்டு உலகங்கள் * சித்தம் தெளிவோம்
மாமன்றச் செய்திகள்
24
25
26
28
30
XXXXXXXXXXXXXX
வாணி கலைத்தெய்வம் மணிவாக் குதவிடுவாள் ஆணி முத்தைப் போலே அறிவு முத்து மாலையினாள் காணுகின்ற காட்சியாய்க் காண்பதெல்லாம் காட்டுவதாய் மானுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே!
- பாரதியார்
(இந்து ஒளி

(மாமன்றச் செய்திகள்)
இந்து ஒளி (ஆடி அமாவாசை - சுவாமி விபுலானந்தர் நினைவுச் சிறப்பிதழ்)
வெளியீட்டு வைபவம்
மாமன்றத்தின் ஆன்மீக இதழான இந்து ஒளி (ஆனி - ஆடி) ஆடி அமாவாசை - சுவாமி விபுலானந்தர் நினைவுச் சிறப்பிதழின் வெளியீட்டு வைபவம் , ஆடி அமாவாசை தினமான ஜூலை 26ஆம் திகதியன்று கீரிமலையிலுள்ள சிவபூமி மடத்தின் புதிய கட்டிடத்தில் நடைபெற்றது.
மாமன்றத்தின் உபதலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாவை ஆதீன குரு சிவஸ்ரீ இரத்தினசபாபதிக் குருக்கள், நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஆகியோர் ஆசியுரை வழங்கினார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களும், மாமன்றத் தலைவர் திரு. கந்தையா நீலகண்டன் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.
இந்து ஒளி சிறப்பிதழின் முதற் பிரதியை மாமன்றத் தலைவர் நல்லை ஆதீன முதல்வருக்கு வழங்கினார். மாவை ஆதீன குரு, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்கள் உட்பட, வைபவத்தில் கலந்து கொண்ட பலருக்கு சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன. 美美建楼建美美美是一类类業类类業業类業崇港崇
மாமன்றம் நடத்திய நீத்தார்
நினைவு தின நிகழ்வு
":22:25.2. கலகலக லக லக லக லல்லல்
அகில இலங்கை இந்து மாமன்றத்தில் இணைந்திருந்து அதன் வளர்ச்சிக்காக அரும்பணியாற்றி அமரத்துவமடைந்த முன்னோர்களை நன்றி மறவாது நினைவுகூரும் வகையில் நீத்தார் நினைவு சிறப்பு நிகழ்வொன்று ஆடி அமாவாசை தினமாகிய ஜூலை 26ஆம் திகதியன்று காலை கீரிமலை புனித பூமியில் இடம்பெற்றது.
மாமன்றத்தின் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்வின் போது அமரத்துவமடைந்தவர்களின் பின்னுரித்தாளர்கள் பலர் ஈகைச்சுடர் ஏற்றிவைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
சரஸ்வதி துதி ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய உருப்பளிங்கு போல்வாளென் உள்ளத்திள் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்
லகள் அறுபத்தனம்மை - தூய திள் உள்ளே
படிக நிறமும் பவளச் செவ்வாயும் கடிகமழ்பூந் தாமரைபோற் கையும் - துடியிடையும் அல்லும் பகலும் அனவரதமும் துதித்தாற் கல்லும் சொல்லாதோ கவி
- கம்பர்
ஜய வருடம் ஆவணி - புரட்டாதி)

Page 35
இ-க!!:ir:
சர்க்கரெட் பொங்க்
| பாரதன் 11:27:
தி 1
'' - EFFஅயன்'
* **இப:52:19:4
காதல்
செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் உரை
In .
கே.க=ே==
பநம்
சைவவித்தகர் வெ. சசிகரன் உரை சைவப்புலவர் ஞா. சிவானந்தஜோதி 2
நிகழ்வுக்கு வருகைதந்தோரில் ஒரு பகுதியினர்
வரவேற்பு/பிரில்
மாற்றலாகிச் செல்லும் இந்திய துணைத்தூதுவர் திரு. பி. குமரன் த வந்திருக்கும் திரு அரின்டம் பக்ஷி தம்பதியினருக்கு வரவேற்பு உப

யாழ் நகரில் சுவாமி விபுலானந்தர் நினைவுதினம் (27.07.2014)
Cit-வா
91/5, பேர் சிற்றமயலர் பாம்
2 01
ALL CEYLON
S தொபமாரா பார்
மின்/ம
கலாநிதி ம. பாலகைலாசநாத சர்மா உரை
அகா, இலங்கை அரச
91/5, செர் கிற்றம்பயாச்ரயற்பாவால
ALL CEYLON
அUCONGRESS
மறுபாதாது
உரை
பேராசிரியர் மா. வேதநாதன் உரை
வுபசார வைபவம்
ம்பதியினருக்கு பிரிவுபசார வைபவமும், புதிய துணைத் தூதுவராக சார வைபவமும் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நிகழ்ந்தபோது.

Page 36
HINDU OLI - REGISTERED IN THE DEPARTMENT OF A
கீரிமலையில் நீத்தார் நினைவு சிறப்பு நிகழ்வும், இந்து ஒளி வெளியீடும்
(26.07.2014)
11. பட்டம்
ஈகைச்சுடர் அஞ்சலி
நல்லை ஆதீன முதல்வருக்கு இந்து ஒளி வழங்கப்படுகிறது.
திரு. எஸ்.பி. சாமி அவர்களுக்கு இந்து ஒளி வழங்கப்படுகிறது.
இவ்விதழ் இல. 48B, புளுமெண்டால் வீதி, கொழும்பு - 13, யுனி ஆர்ட்ஸ் (பிறைவேட் லிமிட்டட் நிறு

PosTS OF SRI LANKA UNDER No. QDI52INEws/2014
யாழ் நகரில் சுவாமி விபுலானந்தர் நினைவுதினம் (27.07.2014)
- அல்
தேவார பாராயணம்
Ouow a தமன்றம்,
91. சர் சிற்றம்பலம் த கார்டினா மாத்தமா ALL CEYLON
* * வேத க அ கி
மஞ்சல்
EEEe:
நல்லை ஆதீன முதல்வர் ஆசியுரை வழங்குகிறார்.
கல . 96 சேர்சிற்றம்பலம் மார்புக
L CEYLON HI
- *சம் ஒt இல் 41தி :
- அதேசி - yiார்
மாமன்றத் தலைவர் உரையாற்றுகிறார்.
அகில இலங்கை இந்து மன்றம்
9 ம் சித்தார் காது - 3
ALL CEYLO
பா. "தக தக்ச
1 பா ரா.rinார்:-
வி த தி பதிப்பு :
திரு. மாவை சேனாதிராஜா (பா.உ) உரையாற்றுகிறார்.
-வனத்தில் அச்சிடப்பட்டு அகில இலங்கை இந்து மாமன்றத்தினால் வெளியிடப்பட்டது.
17 * * 01 - 1964 007