கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2014.09

Page 1
கலை இ6
பாபர் 7
வாழப்பாலனம்,
இனம், மொழி இலக்கியத்தை தேசபந்து
ஸ்ரீசுமண
WWW.ghanamIK
WWW.gnana, IT,
விலை :
ரூபா 100/=

னம்
மக்கியச் சஞ்சிகை
செப்டெம்பர் கடந்து 2014 த நேசிக்கும்
1772
7கொடகே

Page 2
asonam qnda qorasogio Nagalnேga1)
Jeu
Designers and Manufa 22kt Sovereign Gold
Quality Jewellery
101, Colombo Street, Kandy Tel: 081 - 2232545
CENTER
Suppliers
DEALERS IN ALL KINI FOOD COLOURS,
CAKE INGR
76B, Kings Tel: 081 - 2224187, 081

B....
NS
vellers
cturers of
SED DES
COMO
AL ESSENCE SUPPLIERS
to Confectioners & Bakers
DS OF FOOD ESSENCES,
FOOD CHEMICALS, EDIENTS ETC.
Street, Kandy.
- 2204480, 081 - 4471563

Page 3
ஒளி:15 பகிர்தலின் மூலம்
சுடர் :04 பNைopலம்
இ 6 6 (டி ஓ 5 5 8, து
ஒ உ க
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவுமாயின், பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவிகொள்வர்.
ஆசிரியர் குழு ஆசிரியர் , ஸ்தாபகர் : தி.ஞானசேகரன் இணை ஆசிரியர் : ஞானம் ஞானசேகரன் நிர்வாக ஆசிரியர் : ஞா. பாலச்சந்திரன்
தொடர்புகளுக்கு தொ.பேசி. * 0094-11-2586013
0094-77-7306506 தொ.நகல் 7 0094-11-2362862 இணையம் ச WWW.gnanam.info
WWW.gnanam.lk
தளம்.ஞானம். இலங்கை மின்னஞ்சல்: editor@gnanam.info
editor@gnanam.lk அஞ்சல் 7 3B-46h Lane, Colombo-6,
Sri Lanka வங்கி விபரம் T. Gnanasekaran
ACC. No. - 009010344631 Hatton National Bank, Wellawatha Branch. Swift Code : HBLILKLX (மணியோடர் மூலம் சந்தா அனுப்பு) பவர்கள் வெள்ளவத்தை தபாற் கந்தோரில் மாற்றக்கூடியதாக
அனுப்புதல் வேண்டும்) சந்தா விபரம்: Sri Lanka
ஒரு வருடம் :ரூ 1,000/= ஆறு வருடம் :ரூ 5,000/= ஆயுள் சந்தா ரூ 20,000/= III
ஒரு வருடம் | Australia (AUS)
50) Europe (€)
40 India (Indian Rs.) 1250 Malaysia (RM)
100 Canada ($) UK (£) Singapore (Sin. $)
Other (US$) ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்பு களின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.
புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந் தப் பெயர், தொலைபேசி எண், முகவரி, ஆகிய வற்றை வேறாக இணைத்தல்வேண்டும்.-
பிரசுரத்திற்குத் தேர்வாகும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமையுண்டு.
படைப்புகள் கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு மின்னஞ்சலில் அனுப்பப்படவேண்டும்.
| (அட்ை
1 15W.",
5 5 5 5 5 5 5 5
40)
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014

வவும்ஜமமும் வரணுஞானமி? அதிரள்ளே ...
15
27
விதைகள் பச்செல்வன் Tனந்தன்
19 லா தமிழின்தாசன்
25 கணிப்பித்தன்
26 கியோபி .யாழவன்
39 மல்லை ரமணன்
53 மார் கார்த்தீபன்
42 0 கட்டுரைகள்
பத்மா சோமகாந்தன், எஸ். முத்துமீரான்
வாகரைவாணன் சிறுகதைகள் 77. ஜீவகுமாரன் திசை எட்வேட்
© பத்தி
-வே.தில்லைநாதன்
அந்தனி ஜீவா
பேரா. துரை மனோகரன் னிமா வநீதா லோகநாதன்
43
47
28
மகால இலக்கிய நிகழ்வுகள் க. பொன்னுத்துரை
52
யண இலக்கியக் கட்டுரை - ஞானசேகரன்
ரல் அறிமுகம்
க.எஸ்.சிவகுமாரன்
41
ரசகர் பேசுகிறார்
54
டப்பட ஓவியம் - மு.க.சு. சிவகுமாரன், யேர்மனி)

Page 4
ஆசிமியர் பக்கம்
இலங்கை இனப்பிரச்சினை செ
"பாலுக்கும் காவல்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் 23-08 நரேந்திர மோடியைச் சந்தித்து, போருக்குப்
அவருக்கு விளக்கியுள்ளார்கள்.
'இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பா தமிழர் பிரதேசங்களில் இனப்பரம்பலை ! ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்கிறது. ஏற்பட்டிருக்கிறது; அவர்களில் கணிசமான இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ் நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் ஏற்படு பாதிக்கப்படுகிறது; வடமாகாண சபை முட்டுக்கட்டையாக இருக்கிறது' போன்ற அரசியல் தீர்வுக்கு இந்தியா உதவவேன என்றும் கூறியுள்ளனர்.
இதற்குப் பதிலளித்த இந்தியப் பிரதமர் தமிழ்மக்களின் சமத்துவம், கெளரவம், நீதி
அரசியல் தீர்வு காணப்படுவது அவசியம் திருத்தத்தில் கூறப்பட்டுள்ளதைவிட அது வேண்டுமென இலங்கை அரசை இந்தியா
ஆனால், அண்மையில் அலரி மாளிகை சந்திப்பின்போது 13ஆவது திருத்தச்சட் விட்டதாகவும் இனிமேல் நடைமுறைப்படு. ஜனாதிபதி கூறியுள்ளார். காணி, பொலீ குறிப்பிடவில்லை.
நீண்ட காலமாக இலங்கையின் இனப்ப நுழைத்து வந்திருக்கிறது. அதிக உயிரிழப் அதிக வலிகளை ஏற்படுத்தியதுமான இந் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டிய தார்மீகப்
ஆனால், இலங்கை இனப்பிரச்சினைப் காவல் பூனைக்கும் தோழன்' என்ற நிலை செயற்பாடுகள் உணர்த்துகின்றன.
இந்தியா எடுத்த எடுப்பிலேயே தமிழ்த் செவிசாய்க்கும் என்று எண்ணமுடியாது. போகிறது என்பது இலங்கை அரசுடனான ! இலங்கையை எவ்வாறு தனது மூலோ கொள்கிறதோ அது போலவே இந்தியா இலங்கையுடனான விரோதப்போக்கை வ அணுகுமுறை அமையப் போவதில்லை.
இந்தியப் பிரதமருடனான கூட்டமைப்பி ஏற்படுத்துமா என்பதை உலகெங்கும் பரந் கொண்டிருக்கிறார்கள். இந்த விடயத்தில் கண்டிப்புடன் செயற்படவேண்டும்; தீர்க்கம தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற் என்பதே தமிழ்மக்களின் எதிர்பார்ப்பாகும்.

டர்பான இந்தியாவின் அணுகுமுறை 5 பூனைக்கும் தோழன்" -2014 அன்று புதுடில்லியில் இந்தியப் பிரதமர் 1 பின்னரான வடக்கு - கிழக்கு நிலைமைகளை
மத இலங்கை அரசு தட்டிக்கழித்து வருகிறது. மாற்றி அமைக்க சிங்களக் குடியேற்றங்களை தமிழ் மக்களது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் னவர்கள் தங்கள் பூர்வீக நிலங்களிலிருந்து கிறார்கள். தமிழர்களது பாரம்பரிய தொழில் டுத்தப்படுவதனால் அவர்களது வாழ்வாதாரம்
சுதந்திரமாகச் செயற்படுவதற்கு அரசு விபரங்களை எடுத்துரைத்து இவற்றிற்கான ன்டும் இதுவே தமிழ்மக்களது விருப்பமாகும்
[ நரேந்திர மோடி, 'ஒன்றுபட்ட இலங்கைக்குள் என்பவற்றை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் - இலங்கை அரசியல் அமைப்பின் 13ஆவது திக அதிகாரத்தை தமிழர்களுக்கு வழங்க
வலியுறுத்தும்' எனக் கூறியுள்ளார். கயில் வெளிநாட்டுச் செய்தியாளர்களுடனான படம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு த்துவதற்கு எதுவுமில்லை என்றும் இலங்கை ஸ் அதிகாரங்கள் குறித்து அவர் எதனையும்
பிரச்சினை விடயத்தில் இந்தியா தனது மூக்கை ப்புகளையும் அதிக பொருள் இழப்புகளையும். தப் பிரச்சினைக்கு இணக்கமானதோர் தீர்வை
பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது. பில் இந்தியாவின் அணுகுமுறை, 'பாலுக்கும் வயிலேதான் உள்ளது என்பதை கடந்த காலச்
த் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்குச்
இந்த விடயத்தில் எவ்வாறு செயற்படப் உறவுகளை மையப்படுத்தியதாகவே இருக்கும். பாயப் பங்காளியாக சீனா அரவணைத்துக் ரவும் அரவணைத்துச் செல்லவே விரும்பும். பளர்த்துக்கொள்ளும் அளவுக்கு இந்தியாவின்
பினரின் சந்திப்பு ஆக்க பூர்வமான விளைவுகளை துவாழும் தமிழ் மக்கள் ஆவலுடன் பார்த்துக்
இந்தியா நழுவல் போக்கினை விடுத்து, ான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். றுத்தர இதயசுத்தியுடன் முனைய வேண்டும்

Page 5
இப்பரந்த பூமிப்பந்தில் மானிட சமுதாயத்தின் மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கான பல்வேறு காரணிகளுள் இலக்கிய மும் முக்கிய இடத்தை வகிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இதனை வெகு நுட்பமாகவும் சிறப்பாகவும் அழகாகவும் வளர்த்தெடுக்க வேண்டுமென்பதே இலக்கியவாதிகளதும், கல்விமான்கள், அறிஞர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலதரப்பட்டோரினதும் எதிர்பார்ப்பும் இலட்சியமுமாகும். இவ்வெதிர்பார்ப்புகளுக்கு உதவுவோர் மிகச்சிலரே. இச்சிலருள் மிக வித்தியாசமானவரே இன்று எமக்கு
கம்
இனம், மொழி கடந்து
இலக்கியத்தை நேசிக்கு தேசபந்து ஸ்ரீசுமண ெ
அறிமுகமாகிறார்.
இவர், தான் இலக்கியத்தை ஆழ்ந்து அலசிக் கற்காவிட்டாலும் ஒரு ஆக்க இலக்கிய கர்த்தா வாகத் தன்னை வரித்துக் கொள்ளா விட்டாலும்கூட இலக்கியத்தின் சாதனைகளைப் பயன்பாட்டை நன்குணர்ந்து அதன் தேவையை
பத்மா சோம் வரித்திழுத்து இலக்கிய வளர்ச்சிக்கு உரம்போட்டுப் பாதுகாத்து வளர்த் தெடுக்கும் காவலனாக இலைமறைகாயாக வாழ்ந்து கொண்டிருக்கும் தேசபந்து ஸ்ரீசுமண கொடகே அவர்களே இம்மாத ஞானம் சஞ்சிகையின் அட்டைப்பட அதிதியாக எமது கவனத்தை ஈர்த்திருக்கின்றார்.
இப்பெரியார் தனக்குள்ள தாய்மொழிப் பற்று, இனப்பற்று, சமூகப்பற்று என்பவற்றின் வளர்ச்சிக்காகவே இத்தகைய பணிகளை முன்னெடுக்கிறார் என நாம் கருதலாம்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

அட்டைப்பட அதிதி
ஆனால் இவர் ஒரு தன் மொழிப்பற்றாளன் மட்டுமல்ல, இலங்கையில் வாழும் வேற்றினங்க ளுக்கிடையேயான பிரச்சினைகள் மோதல்கள், முறுகல்கள் எட்டியுள்ள காலங்களிலும்கூட இனம் மொழி என்ற வேறுபாடின்றி தம் சகோதர மொழியான தமிழ்மொழி இலக்கியத்தையும் இலக்கியப் படைப்பாளிகளையும் மதித்து நேசித்து அவர்களோடும் நட்புப்பாராட்டி அவர்களுக்கான இலக்கிய உலகின் வாசல்கள் அகலத்திறப்பதில் ஆர்வம் காட்டிவரும் இலக்கிய உள்ளம் படைத்தவர்.
காடகே.
மனித உள்ளங்களில் மறைந்து கிடக்கும் உன்னதமான உணர்வுகளை மனிதநேயப் பண்புகளை மன்பதை யின் மத்தியில் பகரவும், பகிரவும் பதிவுபண்ணக்கூடிய சக்தி எந்த மொழி இலக்கியத்திற்கும் உண்டு. எனவே தான் பல்லினமக்கள் வாழும்
நம் நாட்டில் அமைதியையும் சமா அகாந்தன்
தானத்தையும் ஒற்றுமையையும்
நிலை நிறுத்துவதற்கான சூழலைக் கட்டியெழுப்பவும் இனங்களுக்கிடையே ஒருவரோடொருவர் புரிந்துணர்வை ஏற்படுத்திச் செளஜன்யத்தை வளர்த்தெடுப்பதற்கும் இலக் கியம் சிறந்த ஒளடதம் என்பதை நன்கு உணர்ந்து கொண்டவரே இந்த இலக்கிய
நேசர்.
தனது மனவுணர்வின் ஆழத்தில் ஒளி விட்டுக் கிளர்ந்தெழும் இவ்வேட்கையை நிறைவேற்றப்போலும் சிங்களம், தமிழ் ஆகிய

Page 6
இருமொழிகளிலும் வருடாவருடம் வெளிவரும் தலைசிறந்த இலக்கிய நூல்களுக்குப் பரிச் ளித்து ஊக்குவித்துவருகிறார்.
தமிழ்மொழியில் வெளியாகும் நூல் களில் அம்மக்களின் அன்றாடவாழ்வியல் கோலங்களையும், அவர்களது அபிலாசைகள், சஞ்சலங்கள் போன்றவற்றைச் சித்திரிக்கும் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் ஆகிய வற்றை மொழிமாற்றம் செய்து வெளியிட்டும் வருகிறார். இதனால் எமது கலாசாரம், அன்றாட எமது வாழ்வில் புதைந்துள்ள துயரச்சுமைகள் என்பவற்றையெல்லாம் எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏனைய இனமக்களும் படித் துணரக்கூடிய வகையில் காலத்துக்கேற்ற மிக அத்தியாவசியமான பணியாகவே இவற்றை நாம் கொள்ளலாம். இப்படியே சிங்கள ஆங்கில மொழி நூல்களையும், தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டும் இலக்கியப் பாலமாகவே வலம்வருகிறார்.
'நூல்கள் அறிவின் திறவுகோல்கள்' என்பதை நன்கு நெஞ்சிலே பதியவைத்துள்ள இவர் நூல்களின் அருமை பெருமைகளைப் போற்றுவதோடு அவற்றைத் தொட்டு வணங்கிப் பராமரித்து அட்டை போட்டு அழகாகக் கட்டி, பலரும் பயனுறவேண்டுமென்ற பெருநோக்குடன் பெற்றதாய் குழந்தையை எப்படிப் பேணிவளர்ப்பாளோ அத்தகைய மன உணர்வோடு நூல்களைப் போற்றி பாது காத்துவருகிறார். இப்பண்பு எப்படியோ இவருக்கு இளமையிலிருந்தே துளிர்விடத் தொடங்கிவிட்டது.
எல்லோரையும் படிக்கவைக்கவேண்டும், எழுத்தாளர்களை ஊக்குவிக்கவேண்டும், அறி வைப் பரப்பவேண்டும் இனங்களுக்கிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தவேண்டும் என்ற பல நல்நோக்கம் கருதியே கடந்த சில ஆண்டுகளாகச் சிங்கள மொழியில் வெளியாகும் மிகச்சிறந்த கவிதைநூல், சிறுகதை நூல், நாவல் ஆகிய ஒவ்வொன்றிற்கும் ஐம்பதாயிரம் ரூபா பணப் பரிசளித்துப் பாராட்டிக் கெளரவித்து வரு கிறார்.
இவற்றோடு மொழிக்காக வாழ்நாள் முழுவதும் சேவையாற்றிய ஒவ்வொரு பெரி யாரையும் பாராட்டிக் கெளரவித்தும் வருகிறார். கடந்த ஐந்து வருடங்களாக இப் பணிகளை தமிழ் மொழிக்காகவும் விரிவுபடுத்தியுள்ளார். தமிழ் மொழியில் வெளியாகும் சிறந்த கவிதை, சிறுகதை, நாவல் ஆகியவற்றிற்கும்

கயதாக
ரூபா 50ஆயிரம் பணப்பரிசு
கொடுத்துக் கெளரவித்துவருகிறார்.
எந்த ஒரு தனிப்பட்ட
நிறுவனமோ இலக்கிய அமைப்புக்களோ இதுவரை செய்யாத செய்யத்துணியாத பணியைக் கடந்த ஐந்து வருடங்களாக சிங்கள தமிழ் இருமொழிகளிலும் வெளியாகும் சிறந்த நாவலுக்காக ஒரு இலட்சம் ரூபா பணப் பரிசாக அளித்து நாவல் இலக்கியத்தை வளர்த்தெடுப்பதற்காக ஊக்குவித்துவருவதும் இலக்கிய உலகை முன்னெடுத்துச் செல்வ தற்கான செயல்பாடேயாகும்.
தான் ஒரு படைப்பாளியாகவோ விமர்சகராகவோ அன்றேல் - இலக்கிய உலகில் நீண்டகாலம் சஞ்சரித்து அதனுள் பயணித்து அனுபவித்த ரசனையோ கூட
அதிகம் பெற்றிராதவராயிருந்தும்
இனிய பண்புகளோடு இலக்கிய நேசனாகத் தன்னை இனங்காட்டிக்கொண்டிருக்கும் இவர் சதா புத்தகங்களையே சுவாசித்துக் கொண்டு நூல் குவியல்கள் மத்தியிலே புன்னகையோடு வீற் றிருப்பார்.
அமைதியும் சாந்தமும் தவழும் முகம், யாவரையுமே பணிந்துவணங்கி கரங்கூப்பி வரவேற்கும் பண்பு, அவரது துகில் வீசும் உடை போன்ற வெள்ளை உள்ளம், சராசரிக்கும் குறைவான உயரம், அதற்கேற்ற பருமன், சிவந்த மேனி, பின்னோக்கி வாரிவிடப்பட்ட பிறைச்சந்திரனைக் கவிழ்த்து வைத்தது போன்ற தலை மூடி, எத்தனை பணிச்சுமைகளின் மத்தியிலும் பௌவியமான பேச்சு. இவை திரு. கொடகே அவர்களைப்பற்றிய சிறு அறிமுகம்.
இனமோ மொழியோ ஒரு சாசுவதமல்ல, அன்பும் மனித நேயமும் ஆழ்ந்த பற்றுதலுமே மனித ஒருமைப்பாட்டின் மேன்மைக்கும் நெருக்கத்திற்கும் உந்துதலைக் கொடுக்கு மென்ற உயர்ந்த குறிக்கோளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் கொடகே புத்தக இல்லத்தின் அதிபரான இவருக்குப் பின்னாலே சுவையான ஒரு கதையுமுண்டு.
மாத்தறையைச் சார்ந்த பாலாட்டுவ என்ற ஊரிலே வறுமை சூழ்ந்த ஏழை விவசாயக் குடும்பத்திலே அப்புஹாமி , டியு முகாமி என்ற பெற்றோருக்கு 7ஆவது மகனாகப்பிறந்த குழந்தையே ஸ்ரீசுமண கொடகே. இவருக்கு மேலே மூன்று அண்ணாமாரும் மூன்று அக்காமாரும் உள்ளனர். 1936ம் ஆண்டு மே பதினெட்டாம் திகதி பிறந்த இவர் மிகவும்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

Page 7
வாடி, மெலிந்து வலுவற்ற நோஞ்சான் குழந்தையாகவே இருந்தார். கடும் பலவீனமான இப்பாலகனை வலிப்பு நோயும் ஒட்டிக்கொண்டது.
அன்றாட சீவியமே கஷ்டமாக இருந்ததால் தந்தை கூலிவேலையில் ஈடுபடக் குழந்தைகளும் புல்வெட்டுதல், புல் கட்டி விற்றல் போன்ற வேலைகளில் ஈடுபட்டுத் தந்தையாருக்கு உதவினார். இத்தகைய சூழ்நிலையால் கல்விபற்றிய பிரக்ஞையே இன்றி வாழ்ந்தனர். போதாததற்கு உலக மகாயுத்தமும் இடம்பெற்றிருந்த வேளையான தால் உலகின் பல்வேறு நாடுகளையும் பஞ்சம் வறுமை என்பன கபளீகரம் செய்திருந்தது. அதனால் கல்வியில் யாரும் அக்கறை கொள்ளவில்லை.
கொடகே அவர்கள் இளமைக் காலக் கல்வியை குணரத்தின் வித்திய சாலையிலேயே தொடங்கி ஒரு சில ஆண்டுகளுடன் விலகியும் விட்டார்.
நன்மைதீமை விளங்காத சிறு பராயத்திலேயே கால் போன இடமெல்லாம் சுற்றியலைந்து பதினைந்து வயதுகளில் இரத்மலானை பால் பண்ணையொன்றில் வேலை செய்தார். இயல்பிலேயே இனிய மென்மையான சுபாவங்களைக் கொண்ட இச்சிறுவன் அப்பண்ணையின் ஒரு பாங்கே இருந்த கிளி, மயில், குயில் போன்ற பறவைகளையும் அழகிய பூஞ் சோலைகளையும் பார்த்து மகிழ்ந்து, அந்த ரசனையோடு 'பெயின்ற்' பூசும் வேலை யிலும் ஈடுபாடுகொண்டிருந்தார்.
பின் சிறிய தந்தையாரின் வழிகாட்டலில் தெமட்டகொட 'பஞ்சலவில் தங்கி யிருந்து படித்தார். அச்சகமொன்றில் வேலை பார்க்கப்போய் புத்தகம் கட்டும் வேலையில் ஈடுபட்டதும் அதிலே அவர் மனம் மிகுந்த ஈடுபாடு கொண்டது. 'மானுட சமுதாயத்திற்கே தேடற்கரிய சொத்தாக அரும்பெரும் பொக்கிஷமாக அமைந்தவை நூல்களே' என்ற எண்ணம் கொடகே இளைஞனின் நுண்ணறிவில் அறைந்தது. அந்த ஒளிக்கீறல்களே அவன் மனதில் ஆழமாக நூலைப்பற்றி சிந்தனைக்கான
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 204(

பொறியைத் தட்டிவிட்டது. இருண்டுகிடக்கும் இவ்வுலகிற்கு ஒளிவெள்ளம் பாய்ச்சும் வலிமை நூல்களுக்கே உண்டு என்ற எண்ணத்தின் பிரதிபலிப்புத்தான் மருதானைச் சந்தியிலே கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் ஸ்ரீகொடகே புத்தக இல்லம்.
தன்னைச் சூழவரப் பெருவாரியாக மண்டிக்கிடக்கும் புத்தகச் சோலையின் பக்கங் களின் ஆழமாகப் பயணிக்காவிட்டாலும்கூட, யாரோ ஒரு அறிஞர் குறிப்பிட்டவாறு புத்தகத்தோடு இருக்கும்போதுதான் மனித இயல்பு மிக இளகிய தன்மையுடன் செயற் படுகிறது என்பதற்கிணங்க இப்பெரியார் இளகிய நேசிக்கும் இயல்புமிக்க இலக்கிய உள்ளத்தோடு இனம் கடந்து, மொழிகடந்து, மனிதநேயத்தை வளர்க்க வேண்டுமென்ற நோக்கில் கைபிடித்து அழைத்துச் செல்லும் இலக்கியப் பாதை இலங்கையில் சமாதானத் தையும் அமைதியையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்தவேண்டும் என வாழ்த்துவோம்; வரவேற்போம்; இலக்கியத்தை இலட்சியமாகக் கையிலேந்தி இத்தகைய அரிய பணிகளில் ஈடுபட்டிருக்கும் இவருடைய வாழ்வு நீண்டகாலம் நீடிக்கவேண்டுமெனப் பிரார்த்திப்போம்.
0 0 0 0 0
என
நூல்: கலையும் இலக்கியமும்
ஆசிரியர்: கலாநிதி கனகசபாபதி நாகேந்திரன் வெளியீடு: கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன்
மணிவிழாக்குழு பழந்தமிழர் வரலாறு, சமயம், பண்பாடு, கலை, கல்வி, இலக்கியம், மருத்துவம், விரதங்கள், விழாக்கள் எனப் பல்துறை சார் கட்டுரைகளின் தொகுப்பு பான இந்நூலில் 23 ) பயன்மிக்க கட்டுரைகள்
- கலையும் அடங்கியுள்ளன. ஆசிரி,
இலக்கியமும் யர் காய்தல் உவத்தல் இன்றி கருத்துக்களைக் கூறியுள் இளார். படித்துப் பயன் திபெற பலவிடயங்கள் இக் * கட்டுரைத் தொகுப்பில்
4 அடங்கியுள்ளன.
கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன்
|
யெகோ

Page 8
POOBALASIN
IMPORTERS, EXPORTERS
STATIONER
பூபாலசிங்கம் புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி, இறக்
தலை இல. 202, செட்டியார் தெரு, கொழும்பு - 11, இலங்கை, தொ.பே.: 2
கிளைகள் : 340, செட்டியார் தெரு, கொழும்பு 1
தொ.பே.: 2395885
இல. 309 A2/3, காலி கொழும்பு 06 தொ. பே.:4515m5,
புதிய வ
| புத்தகங்களின்வர்
| பதிப்பாசிரியர்
கப்படக்காடு
பசுந்திரா சசி
இந்து இலக்கியங்களில் - பொருளியல் அரசியல் நீதிபரிபாலனம்
சு. முகுந்தன்
திரை விலகும்போது
ஏ. ஆர். திருச்சந்திரன்
சித்திரா ரீச்சர்
சமரபாகு சீனா உதய
அப்புறமென்ன
கனிவுமதி
\\\\\
பசீர் சேகுதாவூத்
சோர்விலாச்சொல் NANNANNANN
மனசோடுபழகும் மல்லிகைஜீவா \\\ வெப்ப வியக்க வியல்
தெணியான்
அருண பண்டார

GHAM BOOK DEPOT
SELLERS & PUBLISHERS OF BOOKS, IS AND NEWS AGENTS.
புத்தகசாலை
குமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள் மை : } 422321 துெ. நகல் 233733 மின்னஞ்சல்: pbdho@sltnet.lk
தா,
கே.4A, ஆஸ்பதிரி வீதி, பஸ் நிலையம், யாழ்ப்பாணம்.
2504286
ரவுகள்
பதிப்பகம்
விலை
பூபாலசிங்கம்
550.00
பூபாலசிங்கம்
490. - 00
சுமதி பதிப்பகம்
500.00
பகுமார்
மீரா பதிப்பகம்
400.00
கனிதா
200.00
\\\\\
விளிம்பு
600.00
250.00
AB Publishers
350.00
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

Page 9
1 இ
ஆதாம் காக்
புதுமைப்பித்தனின் "கடவுளும் கந்த சாமிப்பிள்ளையும்' என்ற கதையை எனது பதினைந்து வயதில் வாசித்ததில் இருந்தே எப்போதும் ஒரு பயம் இருந்து கொண்டே வந்தது. ரியூசனுக்கு என்று வீட்டில் சொல்லி விட்டு, மனோகரா தியேட்டரில் போய் 10 மணி காலைக்காட்சியையும், அக்காமாருடன் வந்து மூலைகளில் உட்கார்ந்திருக்கும் அண்ணா மாரையும் கடைக்கண்களால் ரசிக்கும் பொழுது 'கடவுள் என் பக்கத்தில் வந்து இருந்து எப்படி ரியூசன் போகுது என்று கேட்டால் என்ன சொல்வது?' என்ற பயம்தான் அது.
எனது ஐம்பதாவது வயதில் இருந்து தீவிரமாய் எழுதத் தொடங்கிய பின்பு இந்தப் பயம் இன்னமும் அதிகரிக்கத் தொடங்கியது - கடற்கரையில் பானை மூடியைத் திறந்து
விட்டதும் எழுந்து வரும் பூதம் போல.
சரி... கடவுள் வந்தால் வந்து விட்டுப் போகட்டும்... சைவச்சாப்பாடு கேட்டால் சரவணபவனுக்கோ.. அசைவ சாப்பாடு கேட்டால் மக்டொனால்ட்ஸ்க்கோ அல்லது ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)
* 8

வி. ஜீவகுமாரன்
க. க...
கென்ரெக் சிக்கன் கடைக்கோ கூட்டிப் போய்விட்டால் போச்சு என்ற இருந்துவிட்டேன்.
(கடவுள் எல்லாம் மாமிசம் சாப்பிடுவாரா... அப்பிடி எல் லாம் நீ நினைக்கலாமா. அபிஷ்டு என்று என்னை யாரும் திட்ட வேண்டாம். வியாழக்கிழமை மாமிசம் உண்டு விட்டு சனிக்கிழமை பிறந்தநாள் பார்ட்டியையும் தண்ணிப் பார்ட்டியை நினைத்துக் கொண்டு
வெள்ளிக்கிழமை 'அரோகரா' என கடவுளின் கொம்புதடியை கூட்டத்தோடு கூட்டமாய் தோளில் தூக்கிவைக்கும்பொழுதும். அல்லது சப்பாணி போட்டு பூமாலை கட்டும் பொழுதும்.. கடவுள் மாமிசம் சாப்பிட்டால் தான் என்ன? சாப்பிடாமல் விட்டால்தான் என்ன? உங்களுக்கு வேண்டியதெல்லாம் நீங்கள் படைத்த மோதகம், வடை, சுண்டல், பொங்கலுக்கு பதிலாக இன்னும் பத்து மடங்கு பலன்தானே? அல்லது இதற்கென்றே தவில்காரரும் நாதஸ்வரக்காரரும் ஒரு தரம் வாசிக்க உபயம் இன்னார் என்று ஐயர் தர இருக்கும் காளாஞ்சியும் தானே?)
0 0 0 0 0 அன்று ஒரு சனிக்கிழமை இரவு 9 மணியிருக்கும்.
திங்கட்கிழமை காலை எனது புத்தகம் பதிப்புக்குச் செல்ல வேண்டும்.
அதற்கிடையில் முழுப் பிழை திருத்தங்களையும் செய்ய வேண்டும்.
"

Page 10
அதுவும் இந்தியப் பதிப்பகத்தில் பிழை திருத்தத்திற்கு பொறுப்பாய் -
உள்ள பெண்ணுக்கு டென்மார்க்கில் கணனிக்கு முன்பு இருந்தபடியே சொல்லிச் சொல்லித் திருத்த வேண்டும்.
அவள் திருமணத்திற்கு முன் அதிக ஆண்கள் வேலை செய்யும் ஒரு நிறுவனத்தில் நடத்துநராய் இருந்திருக்கிறாள் போலும். மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதைவிட தான் சொல்வதை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்ற எண்ணங் கொண்டவள்.
எனது கதைகளின் பிழைகளை திருத்துவதற்குப் பதிலாக கதையின் போக்கையே தானே தீர்மானிப்பாள் போல் இருந்தது.
ஸ்கைப்பில் உள்ள வீடியோ வசதியைப் பாவிப்பதில் அவளின் இரண்டாவது கணவனுக்கு உடன்பாடில்லை - தான் மூன்றாவது கணவனாய்ப் போய்விடலாம் என்ற பயம் அல்லது முன்னெச்செரிக்கை காரணமாக இருக்கலாம்.... எனவே தனியே தொலைபேசியையும் சற்பொக்ஸையும் வைத்துத்தான் பிழை திருத்தம் செய்ய வேண்டியிருந்தது.
பாலைப்பழம் என்று நான் எழுதியிருந்ததை அவள் பலாப்பழம் என்று எழுதியிருந்தாள்.
பல தடவை பாலைப்பழம் என நான் திருத்தியதை அவள் திருத்தியதாகத் தெரியவில்லை.
அவள் பலாப்பழத்துடனேயே ஒட்டிக் கொண்டு நின்றாள். பாலைப்பழப் பக்கம் வருவதாய் இல்லை.
இது மஞ்சள் நிறமான பழம் என்றேன். பலாப்பழமும் மஞ்சள் தான் சார் என்றாள்.
இதன் பால் கையில் ஒட்டும். பலாப் பழப்பாலும் ஒட்டும் சார். கடவுளே.... இந்தப் பழத்தின் முட்கள் குற்றும் என்றேன்.
இந்தப் பழத்தில் உள்ள முட்களும் குற்றும்தான் என்றாள்.
கடைசியா ஒரு தாளை எடுத்து பலாப் பழத்தையும் பாலப்பழத்தையும் கீறி அதனை
ஸ்கேன் செய்து அனுப்பும் பொழுது,
என் பின்னே இருந்து, "பலாப்பழத்தை பஞ்சாமிருதத்துக்கு போடுவார்கள். பாலைப் பழத்தை பஞ்சாமிருதத்துக்குள் போடுவ தில்லை” என்று சொல்லியிருக்கலாமே என்று

பரிகால்
குரல் கேட்டது.
கூடவே குசினியுள் இருந்து ஒருவித கருக்கல் மணமும் வந்தது.
யார் பஞ்சாமிர்தத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்?... ஏன் குசினிக்குள் இருந்து கருக்கல் மணம் வருகிறது என்ற எண்ணத்துடன்
குசினிக்குள் போனேன்.
போனபொழுது அதிர்ந்து விட்டேன்.
நேற்று வெள்ளிக்கிழமை மனைவி கோயிலில் இருந்து வேண்டிக்கொண்டுவந்து பிறிச்சில் வைத்திருந்த குழையல் சோற்றை ஒருவர் சூடாக்கிக் கொண்டு நின்றார்.
கொஞ்சம் மனத்துள் பயத்துடன் கிட்டவாகப்போய் பார்த்தேன்.
சாட்சாட் முருகனேதான்.
வள்ளி தெய்வானை இல்லாது தனியே ஆண்டிக் கோலத்தில் முருகன்.
காவி வேட்டி. காவி நிறச் சால்வை, சவரம் செய்யாத முகம். தோளில் பையினுள் ஒரு மடிக்கணனி.
அதிர்ந்து போனேன்! “பின்னேரம் கோயிலிலை ஒரே பிரச்சனை குருக்கள் வேறு நிர்வாகத்துடன் கோபித்துக் கொண்டு போய்விட்டார். யாரும் ஏதும் படைக்கேல்லை. சம பசி எனக்கு", என்றவாறு சூடாக்கிய சாப்பாட்டை ஒரு தட்டில் போட்டார் முருகன்.
"கடவுளே... அது மாமிசக் கோப்பை”
உதட்டினுள் சிரித்தார்.
அதன் அர்த்தம் எனக்கு விளங்கியது போலவும் இருந்தது. விளங்காதது போலவும் இருந்தது.
"அப்பளம் மிளகாய் ஏதாவது பொரிச்சுத் தரட்டா?”
“இல்லை வேண்டாம்”
"ஊர்ச் சின்ன வெங்காயம் இருக்கு... உரிச்சுத் தரட்டா...? நல்ல தயிரும் இருக்கு'
"ஓம் அது பறவாயில்லை... குழையல் சோற்றுக்கு நல்லாய் இருக்கும்”
சின்ன வெங்காயத்தை எடுத்து உரித்து அவர் தட்டில் வைக்கத் தொடங்கினேன்.
அவர் 'அவுக்.. அவுக்' என்று சாப்பிட்டார் நல்ல பசி போலும். பாலும் ... தேனும்... பஞ்சாமிர்தமும்... குத்தரிசிப் பொங்கலும் ... பசுமதி அரிசிச் சோறும் கறியும் என சாப்பிட்டுக் கொண்டிருந்த மனுஷன் நேற்று இரவு தொடக்கம் சம பட்டினி.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

Page 11
"இன்னும் கொஞ்சம் சூடாக்கவா?” “ஊம்.. கொஞ்சமாய்" தான் அடுப்பில் சூடாக்கியதை நான் மைக்கிரோ ஓவனில் செய்ததை வியப்பாக பார்த்தார்.
கோவிலில் மைக்கிரோ ஒவன் இல்லைப் போலும்!
மரவள்ளிக் கிழங்கு கருகும் வாசனை வெளிவர நான் சாப்பாட்டை வெளியில் எடுத்தேன்.
வாசனை மனைவியை நித்திரையால் எழுப்பியிருக்க வேண்டும்.
“இப்பிடி சாமம் ஏமம் எண்டு சோத்தை திண்டு டயபிற்றிஸைக் கூட்டுங்கோ.. ஒரு நாள் நான் தாலியை இழக்கப் போறன்" படுக்கை அறையில் இருந்து கத்தினாள்.
"பயப்பிடாதை.. பயப்பிடாதை... தாலி போனாலும் சுளையாய் உனக்கு ஐந்து இலட்சம் குறோன்கள் வரும்”
“வாய் ஓயாமல் சொல்லுங்கோ. ஒரு நாளைக்கு நடக்கப் போகுது " தனது யானை உடம்பைப் பிரட்டியபடி அவள் மீண்டும் குறட்டை விட்டுக் கொண்டு தூங்கலானாள்.
அவளின் குறட்டை யானை பிளிறுவது போல் இருந்தது.
"எனக்கு அண்ணாவின் ஞாபகம் வந்து விட்டது" என முருகன் சிரித்தார்.
"எனக்கு வள்ளி தெய்வானையின் ஞாபகம் வந்து விட்டது முருகா”
“ஏன்?”
"எப்பிடி முருகா இரண்டு பேருடன்..." எங்கள் வீட்டில் ஒவ்வொரு நாளும் ஒரு
சூரன்போர்தான்"
முருகன் சிரித்தார். இப்போ எனக்கு பயம் போய்விட்டது.
அது என்றுமே எனக்கு முருகன் மேல் இருந்ததும் இல்லை.
சிலவேளை சிவபெருமான் என்றால் பயந்திருப்பேனோ என்னவோ.
"அது சரி.. நீ செத்தால் ஐந்து லட்சம் குறோன்கள் கிடைக்கும் என்று உன் மனைவியிடம் சொன்னியே?” |
"ஆமாம்... இன்சூரன்ஸ் பணம்”
முருகன் ஏதோ யோசனையில் தலையாட்டியபடி தன்னுடைய மடிக்கணனியைத் திறந்து ஏதோ ஒன்றை கூகிள் பண்ணினார்.
எட்டிப் பார்ப்பது மரியாதைக் குறைவான செயல் என்று என்னை நான் கட்டுப்படுத்திக் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

பொதுச்ன உலகம் கொழப்பானம்.
பல இ
கொண்டு விட்டேன்.
எனக்குள்ள ஒரேயொரு ஆர்வம் முருகன் என்ன பாஷையில் கூகிள் பண்ணுவார் என்பதுதான்.
“முருகா" கணனியில்
இருந்து தலையைத் தூக்காமல் "ஊம்" கொட்டினார்.
"ஏன் இன்சூரன்ஸ் பற்றியும் ஐந்து இலட்சம் பற்றியும் கேட்டீர்கள்?”
"இப்போ ஐந்து லட்சம் தான் பிரச்சனை" "எனக்கு புரியவில்லை முருகா"
"நீ கோயிலும் வேண்டாம்... குளமும் வேண்டாம் எண்டு நிம்மதியாய் இருக்கிறாய் ... உனக்கு எதுவுமே புரிய வேண்டாம். போய்ப்படு .. ஆனால் நான் கடவுள்தான் என்று நிரூபிக்க எனக்கு இப்போ ஐந்து லட்சம் தேவை ... அதுதான் யோசித்துக் கொண்டு திரிகிறன்"
சோபாவைத் தட்டி துணி போட்டு முருகனுக்கு படுக்கையை ஆயத்தம் செய்து கொடுத்துவிட்டு தொடர்ந்தும் எனது கதைகளில் பிழை திருத்தம் செய்வதற்காக போய்க் கம்பியூட்டர் முன் அமர்ந்தேன்.
கணனியின் திரை அணைந்திருந்தது.
நூல்: தலைநகரில் தமிழ் நாடக அரங்கு
ஆசிரியர்: அந்தனி ஜீவா வெளியீடு: குமரன் புத்தக இல்லம். தலைநகர் கொழும்பு மாநகரின் அரை நூற்றாண்டு நாடக வரலாறு பற்றி நூலா சிரியரின் பதிவுகளாக அமைந்த இந்நூலில் 31 தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன. நூலாசிரியர் தலைநகர் தமிழ்நாடக மேடையின் பங்காளராகவும் பார்வையாளராகவும் இருந்து பங்களிப்புச் செய்தவர் என்ற வகையில் பல்வேறு
தலைநகரில் வரலாற்றுத் தகவல்களைச்
தமிழ் நாடக சிறப்புறத் தந்துள்ளார்.
அரங்கு ர தலைநகர் தமிழ்நாடக
வரலாற்றைத் தேடும் ஆய்வாளர்களுக்கும் நாடக # ஆர்வலர்களுக்கும்
பயன்மிக்க நூல்.
அந்சம் அவர்
F1 - 4

Page 12
ஆனால்
கம்பியூட்டரின்
மறுபுறம் சம்பாசணை கேட்டது.
"சாமம் சாமமாய் என்னடி
பிழை திருத்தம்”
“இந்தியாவிலைதான் சாமம்.. இப்போது டென்மார்க்கிலை இரவு பத்து மணிதான்”
"சரி அப்பிடியே இருக்கட்டும்... இப்ப வந்து படு...நாளைக்கு பிழைதிருத்தலாம்”
"நீங்க ரொம்ம மோசம்... ஒவ்வொரு நாளும்”
கம்பியூட்டரை அணைக்காமல் அவர்கள் நடத்தும் சம்பாசணைகளும் சிலுமிஷங்களும் கேட்டது.
'இது என்ன கொடுமை முருகா'
கம்பியூட்டரை அணைத்துவிட்டேன் மனத்துள் முருகனைத் திட்டியபடி.
"கூப்பிட்டியா பக்தனே”
"நான் உன்னைக் கூப்பிடவும் இல்லை.. நான் உந்தன் பக்தனும் இல்லை.. ஆளை விடு
முருகா”
"என்ன தொடர் தமிழ்ரியூப்பில் போகுது” - இது என் மனைவி.
இந்த இரவில் கோயிலில் இருந்து முருகன்வந்து எங்கள் வீட்டு ஹோலில் படுத்துக் கொண்டு... எனக்கு விசரைக் கிளப்பிக் கொண்டு இருக்கிறார் என என்று விளக்கிக்கொண்டு இருக்க முடியுமா?
பிழை திருத்தம் வேறு பிந்திப் போகிறது என்ற வெப்பிசாரம் வேறு.
"வாயைப்பொத்திக் கொண்டு பட்டி” எல்லோரும் ஏன்தான்
என்னை வெறுப்பேற்றுகிறார்களோ?
வெள்ளி மாலை வேலையால் கிளம்பும் பொழுது “உங்களின் சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் சந்தோசமாக இருக்கட்டும்” என சம்பிரதாய வார்த்தைகள் சொல்லும் என் சக ஊழியர்களை மனம் சபித்தது.
முருகனின் குறட்டைச் சத்தம் கேட்கத் தொடங்கியது.
இரவு பத்து மணிக்கு குழைய சோறும் தயிரும் சின்ன வெங்காயமும் சாப்பிட்டு விட்டுப் படுத்தால் குறட்டை வராதா என்ன?
0 0 0 0 0
இரவு
முழுக்க
நித்திரைக்கும் நித்திரையின்மைக்கும் இடையே எழுந்து உலாவித் திரிவது போல இருந்தது.
10

விடிந்ததும்முருகனுக்கும் என் மனைவிக்கும் இடையே என்ன பாடுபடப்போகின்றேனோ என்ற தவிப்பு வேறு.
நல்ல காலம்!... வந்த கடவுள் ஒரு ஆண் கடவுள் என்றளவில் எனக்கு கொஞ்சம் மன ஆறுதல்.
இரவு இரண்டு தரம் ரொயிலற்றுக்குள் தண்ணீர் இழுத்துச் சத்தம் கேட்டது என்னை மேலும் குழப்பியது.
கடவுளுக்கு இந்தக் கக்கூசு, ரிசூ பேப்பர் எல்லாம் சரிவருமா?... அல்லது படுக்க முதல் ஒரு சின்ன வாளியை எடுத்து வைத்திருக்கலாமே, சுடு நீரையும் குளிர் நீரையும் எப்படிக் கலந்து பைப்பின் வழியால் எடுப்பது என்றெல்லாம் காட்டிக் கொடுக்காமல் விட்டு விட்டேனே என்ற எண்ணங்கள் வேறு என் நித்திரையைக் குழப்பிக் கொண்டு இருந்தன.
அதிகாலை ஐந்தரை மணிக்கே எழுந்து வந்து ஹோலுக்குள் எட்டிப் பார்த்தேன்.
கடவுளைக் காணவில்லை.
பெட்சீற் மட்டும் வடிவாக மடித்து தலையணிக்கு மேல் வைக்கப்பட்டிருந்தது.
குசினிக்குள்ளும் இரவு சாப்பிட்ட அனைத்தும் வடிவாக கழுவி துடைத்து அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
கடவுள் கொஞ்சம் உசத்திதான் என மனம் சொன்னது!
விருந்தினராக வீட்டுக்கு வந்தால் அதி காரத் தோரணையுடன் எல்லாவற்றையும் நானும் என் மனைவியுமே செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் உறவினர்கள் போல் அல்லாது முருகன் எல்லாத்தையும் சுத்தமாக செய்து விட்டுப் போய் இருக்கிறார் என்பது மகிழ்ச்சியாக இருந்தது.
ஆமா?... எதற்காக
என்னிடம் வந்தார்?... ஐந்து இலட்சம்தான் பிரச்சனை என்று சொன்னாரே.. அதுதான் எனக்கு விளங்கவில்லை.. அதுக்கு என்னிடம் ஏன் தேடி வந்தார்?
வீட்டில் உள்ள எல்லாவற்றையும் இன்ஸ்ரோல்மென்ற்றில் வாங்கிப் போட்டு விட்டு பணக்கார தோரணையுடன் வாழும் நானா கிடைத்தேன், கடவுளுக்கு ஐந்து இலட்சம் கடன் கேட்க?
தொலைபேசிமணி அடித்தது. பக்கத்து நகரில் இருந்து சேகர் அண்ணை தான் பேசினார்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

Page 13
“இராத்திரி எங்கே போனீங்கள்?”
"ஒரு இடமும் இல்லையே.. வீட்டைதான் இருந்தனாங்கள்”
"எத்தினை தரம் தொலைபேசி எடுத்த னாங்கள்... ரிங் டோன் வந்து கொண்டே இருந்தது. ஆனால் நீங்கள்தான் எடுக்க வில்லை"
"எத்தனை மணியிருக்கும்” "பத்து மணியிருக்கும்"
அப்போதான் கடவுள் வந்திருந்த நேரம். ஆனால் தொலைபேசி அழைப்பு எனக்குக் கேட்கவில்லை.
அது எனக்கு வியப்பாய் இருந்தது. "சொல்லுங்கோ"
"கோயில் எழுந்தருளிச் சிலையை காணேல்லை. இங்கே எல்லோரும் கூயா. மாயா.. என்று கொண்டு இருக்கிறார்கள்”
கோயிலடியில் நின்று பேசுகின்றார் எனப் புரிந்தது.
"யாரும் போலந்துக்கார் திருடியிருப் பினமா?”
"அப்பிடி என்றால் வள்ளி தெய்வானை யையும் சேர்த்தல்லவா கொண்டு போயிருப் பான்கள் .. இங்கே முருகனை மட்டும் காணேல்லை"
முருகன் தனியே ஆண்டியாக என் வீட்டுக் வந்ததுக்கும் இதற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருந்ததுபோல் இருந்தது.
மனைவி நித்திரைக் கலக்கத்தில் இருந்து கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்து, "என்ன நடந்தது" எனக் கேட்டாள்.
"கோயிலிலை முருகன் சிலையைக் காணேல்லையாம்.
எல்லாச் சிற்றியில் இருந்தும் சனம் சனமாய் கோயிலடிக்கு போகினமாம்". "ஏன்?" "துக்கம் விசாரிக்கப் போலும்" என் வார்த்தையில் இருந்த ஏளனம் அவளைக் கொஞ்சம் கோபப்படுத்தியது போல உணர்ந்தேன்.
"பார்த்துக் கொண்டே இருங்கோ... நீங்கள் கடவுளுக்கு செய்கிற நிந்தனைகளுக்கு ஒரு நாள் கடவுள் உங்களை தண்டிக்கப் போறார்"
அவள் சொன்னபொழுது என்னையும் அறியாமால் எனக்கு மனத்துள் நடுக்கம் கண்டது.
இரவு வீட்டுக்கு வந்த முருகன் ஏதும் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

காரணத்தால் என் வீட்டுக்கு சிலையைக் கொண்டு வந்து ஏதாவது ஒரு இடத்தில் மறைத்து
வைத்து இருப்பாரோ?
கோயிலுக்குப் போகாததையிட்டே சனம் என்னை ஒரு இனத்துரோகி போலை பார்க்குது ... இதிலை முருகனின் சிலை என் வீட்டுக்குள் இருந்தால் கதை அவ்வளவுதான்!
மெதுவாக வளவையும் வீட்டையும் ஒருமுறை சுற்றி வந்தேன்.
எதையும் காணவேயில்லை.
"ஏன் ஹோலுக்குள் இராத்திரி படுத் தீங்கள்?”
"இல்லையே” "சோபாவிலை தலையாணியும்.. பெட் சீற்றும் கிடக்குது... அதுகள் தானாய் நடந்து வந்ததா?"
நான் முழுசினேன். "நானும்தான் பார்க்கிறன்.. இப்ப எல் லாம் உங்களுக்கு தனியப் படுக்கத்தான் பிடிக்குது!"
"அடக் கடவுளே!” நானும் வெகுவிரைவில் ஆண்டியாவேன் போல எனக்குள் ஒரு மனப்பிரமை.
0 0 0 0 0 எப்போதும் புதினம் பார்ப்பதில் எனக்கு ஒரு அலாதிப் பிரியம்.
இந்தியாவிலும் இலங்கையிலும் இருந்த பொழுது அக்கம் பக்கத்து வேலிச்சண்டைகள்... றோட்டில் நடக்கும் குடிகாரர்களின் இழுபறிகள்... கிராமக் கோட்டுக்கு வரும் சின்ன, சின்ன, மாமி-மருமகள் பிரச்சனைகள்... கடற்கரையில் போடும் மீன் ஏலங்கள்... கூறுபோட்டு விற்கும் கறிக்காறிகளின் தூஷண வார்த்தைகள்... மீற்றர் போட்டு ஓட வேண்டும் என்றாலும் அதனை மீறும் ஆட்டோக்காரனுடன் பக்கத்து வீட்டு ஐயங்கார் குமாஸ்தாவின் வாக்குவாதம் எல்லாமே எனக்கும் தித்திக்கும்.
அது டென்மார்க்கில் ரொம்பவே மிஸ் ஸிங் - இங்கே எல்லாம் சிரித்துக் கொண்டும் கைகளைக் குலுக்கிக் கொண்டும் காலை வாருதல்தான்.
கோயிலடிக்கு போய் புதினம் பார்க்க வேண்டும் போல் இருந்தது.
"நீங்கள் கோயிலுக்கு பொதுவாக போற தில்லை ... இப்ப ஏன் போறீங்கள்"
"சாமி உள்ளே இருக்கும்வரைதானே கோயில் ... இப்பதான் சாமியை காணேல்லையே” என்றபடியே போய்க் காரில் ஏறினேன்.
11

Page 14
“இருந்தாலும் உங்களுக்கு வாய்க் கொழுப்பு ஜாஸ்தி” மனைவியின் அர்ச்சனை தொடர்ந்தது.
காரின் பின் சீற்றில் முருகன் தூங்கிக் கொண்டு இருந்தார்.
மனைவி அவரைக் காணமுதல் காரின் கறுத்த திரைச்சேலையை கீழே இறக்கி விட்டேன்.
சனிப் பெயர்ச்சி எனக்கு நல்லாய்த்தான் வேலை செய்கிறது எனப் புரிந்தது.
காரை ஸ்ராட் செய்தேன்.
முருகன் திடுக்கிட்டு எழுந்தார். "ஏன் என்னைப் பயப்பிடுத்திறமாதிரி காரை ஸ்ராட் செய்கிறாய்?”
"நீங்கள் மட்டும் சொல்லாமல் கொள்ளாமல் எழுந்து போனால் நான் மட்டும் பயப்பிட மாட்டேனா என்ன?”
"நடுக்ஹோலில் படுத்துக் கொண்டு உனக்கு இன்னமும் பிரச்சனை தரவா”
கார் வீதியில் இறங்கியது. மனம் ஊரில் இருந்த எங்கள் முருகமூர்த்தி கோவிலையும் இங்கு உள்ள முருகன் கோவிலையும் ஒப்பீடு செய்து பார்த்தது.
அங்கு எங்களுக்கு முருகன் தேவைப் பட்டார்.
58
நூல்: ஈழத்து முச்சந்தி இலக்கியம்
ஆசிரியர்: பேராசிரியர் செ.யோகராசா வெளியீடு : மகுடம் பப்ளிகேஷன்ஸ் விலை : ரூபா 200/-
இனாசித்த வயாகரா
தமிழில் அண்மைக்காலமாக கவனத்துக்கு உள்ளாகி வருகின்ற முச்சந்தி இலக்கியம் புதியதொரு இலக்கிய வகையைச் சார்ந்தது. இந்நூல் ஈழத்து முச்சந்தி இலக்கியத்தின் முக்கியத்துவம் பற்றி சுருக்கமாக அறிமுகம் செய்கிறது. இதுவே ஈழத்து முச்சந்தி இலக்கியம் பற்றி ர அறிமுகம் செய்கின்ற
முதல் நூல் என்ற தகுதி மயைப் பெறுகின்றது.
அவ்வகையிலும் ஈழத்து 4 இலக்கிய வரலாற்றில்
# இந்நூல் முக்கியத் //துவம் உடையது.
ஈழத்து முச்சந்தி இலக்கியம்
கல - }
KLapw
12

இங்கு முருகனுக்கு நாங்கள் தேவைப் படுகிறம்.
"நீ சரியாய்தான் யோசிக்கிறாய்” நான் மனதினுள் நினைத்ததை முருகன் ஆமோ தித்தார்.
காரை ஓட்டியபடியே பின் சீற்றில் இருந்த முருகனைப் பார்த்தேன்.
அவரின் கண்கள் ஏனோ கலங்கி யிருந்தன.
கைகள் கணனியில் தொடர்ந்து அழுத்திக் கொண்டு இருந்தன.
"என்ன செய்கிறீர்கள் முருகா”
"பேஸ்புக்கில் வந்த எல்லாத்துக்கும் 'லைக்' போடுகிறன்”
“இது உங்களுக்குத் தேவையா? "மொக்கையோ.. சொத்தையோ... லைக் போட்டால்தான் கோயிலுக்கே வாறான்கள்.... இல்லாட்டி வேறை கோயிலுக்குப் போய் விடுவாங்கள்”
முருகனை நினைக்க பாவமாய் இருந்தது.
மனிதர்கள் எல்லாம் தெய்வநிலையை அடைய இறைவனிடம் கையேந்திக் கொண்டு நிற்க இவர் மனிதரிடம் இறங்கி வந்திருக்கிறார். மனிதக் குணங்கள் இவரைத் தொற்றப் போகுதே என அவருக்காக என் மனம் கழிவிரக்கம் கொண்டது.
0 0 0 0 0
கோயிலினுள்ளும் வெளியிலும் ஒரே சனக்கும்பலாய் இருந்தது.
"பொலிசுக்கு சொல்லியாச்சோ?
"இப்ப வேண்டாம்” மிகக் கலவரப்பட்டுக் கொண்டு நின்றார் தலைவர்.
"நாங்களாய் தேடிப் பார்ப்பம். முடியாட்டி பொலிசிட்டை சொல்லுறதைப்
பற்றி யோசிப்பம்” அவரே தொடர்ந்தார்.
"எங்கை தேடிப் பார்க்கப் போறியள்... கோயிலுக்கையும் இல்லை... வெளிவீதியிலும் இல்லை.... இனி ஒவ்வொரு தமிழாக்கள் வீடு வீடாக போய் தேடப் போறியளா..” இது எப்போதும் தலைவருடன் முரண்டுபிடிக்கும் ஒரு நிர்வாகசபை உறுப்பினர்.
ஒருவர் என்னைப் பார்த்தபடி, "இது யாரோ கோயிலுக்கு எதிரான ஆட்கள்தான் செய்து இருக்க வேணும்... முருகன் பார்த்துக் கொண்டே இருக்கப் போறார்?” என்றவர்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

Page 15
கொஞ்சம் மூச்சை உள்ளே இழுந்து வெளியே விட்டபடி, "இப்பதான் கனபேருக்கு கடவுள் நம்பிக்கையே சுத்தமாக இல்லையே" என தன் பங்குங்கு ஒரு வாங்கு வாங்கினார்.
நான் கண்டு கொள்ளவில்லை.
எல்லாவற்றையும் கண்டு கொள்வதும் புத்திசாலித்தனம் இல்லை என்பதுதான் என் புதிய ஆத்திசூடி.
"எது எண்டாலும் கெதியாய் முருகனைக் கண்டு பிடித்து பிரதிஷ்டை செய்ய வேணும்” புதிதாய் வந்திருந்த குருக்கள் பதற்றப்பட்டார்.
"இல்லாட்டி... உடனேயே வேறை ஒரு முருகனை கொண்டுவந்து வள்ளிக்கும் தெய்வானைக்கும் கல்யாணம் செய்து வைக்க வேணும்” கோயிலுக்கு மாலைகட்டும் சைவம்
கூறினார்.
என் காலில் யாரோ மிதித்தார்கள். திரும்பிப் பார்த்தேன்.
முருகன்தான்! 'எப்பிடியும் நிற்பாட்டு' முருகனின் கண்கள் மன்றாடியது.
"சிலைக்கு எங்கை போறது முருகா?” "நான்தான் இங்கை நிற்கிறனே”
"அப்ப போய் வள்ளிக்கும் தெய்வானைக்கும் நடுவிலை நில்லுங்கோவன்”
"அதுதான் முடியாதே... என்னைத் தூக்கி விடுவான்களே?”
"குழப்பிறியள் முருகன்” "நான்குழப்பேல்லை மகனே!
நான் இருக்கிறது எண்டு நிரூபிக்க எனக்கு ஐந்து இலட்சம் குரோன்கள் வேணும்.”
"அதுக்கு இப்ப என்ன செய்யுறது?” "நீ செத்துப் போ” - நான் ஆடிப் போய் விட்டேன். "செத்துப் போனால்...”
"உன்னைப் போலை ஆட்களுக்கு ஐந்து இலட்சம் இன்சூரன்ஸ் வரும் எண்டு சொன்னியே"
"சுத்தம்" "என்ன கோவிலுக்கு வந்திருக்கிறியள்... அதிசயமாய் இருக்கிறது” முகத்தில் கலவரத் துடனும் எனக்காக வலிந்து இழுந்த புன்னகை யுடனும் எனது உயர் அதிகாரியான எஞ்ஜினியர் சுந்தரமூர்த்தி ..
'அவனருளாளே அவன்தாள் வணங்கி? என அச்சிட்டிருந்த காவி வேட்டியும் சால்வை சகிதம் நின்று கொண்டிருந்தார்.
பக்கத்தில் நின்றிருந்த முருகனை விநோத
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172

மாகப் பார்த்தார்.
"நம்ம மனைவி வழிச் சொந்தம்... பக்கத்து சிற்றியில் இருந்து வந்திருக்கிறார்” என நான் முந்திக் கொண்டேன்.
இருவரும் கை குலுக்கிக் கொண்டார்கள்.
அதே வேகத்தில் முருகன் தனது மடிக்கணனியை எடுத்து ஏதோ தடவினார்.
பின்பு என் பக்கம் திரும்பி, “இவருக்கு ஐந்து லட்சத்தை விட அதிகமாய் வரும் போலை இருக்கே?"
எனக்கு தலை சுற்றிக் கொண்டு வந்தது போல் இருந்தது.
"குறைந்தது ஏழு இலட்சம் என்றாலும் வரும்”
முருகன் கிணற்றினுள் நின்று சொல்வது போலத் இருந்தது.
பின் எனக்கு எதுவுமே தெரியவில்லை.
0 0 0 0 0
முருகன் வள்ளி தெய்வானை சகிதம் வீதி வலம் வந்து கொண்டிருந்தார்.
அரோகரா என்ற கோஷம் வானைப் பிளந்தது.
ஜேர்மனியிலும் பிரான்சிலும் இருந்து வந்திருந்த மேளக்காரர் ஒவ்வோர் வீதியின் சந்தியில் நின்று அட்டகாசமாக தவில் கச்சேரி நடாத்திக் கொண்டிருந்தார்கள்.
"இந்த வேளையில் சுந்தரமூர்த்தி அண்ணை எங்களோடை இருந்தால் எவ்வளவு நல்லாய் இருந்திருக்கும்? கோயிலுக்கு கடன், கடன் என்று சதா கவலைப்பட்டுக் கொண்டு இருந்தவர். இப்ப பணக்கார முருகனைப் பார்க்க அவருக்கு கொடுத்து வைக்கவில்லையே ஆளுக்காள் தங்களுக்குள் பேசிக் கொண்டும்... மேளத்திற்கு தாளம் போட்டுக் கொண்டும் ....
"வேல் வேல் முருகா... வெற்றி வேல் முருகா” என்று பெண்கள் பாடிக் கொண்டும்... பக்கத்தே வரும் மற்றப் பெண்களின் சேலையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டும்... வெளிவீதியைச் சுற்றிக் கொண்டு வந்தார்கள்.
இப்போ முருகனின் வங்கிக் கணக்கில் இரண்டு இலட்சம் மேலதிகமாக இருக்காம் - பணக்கார முருகன் என்று பக்தர்கள் அனைவர்க்கும் மகிழ்ச்சியாம்.
முருகனின் சிலையை உற்றுப் பார்த்தேன். சிலையின் இடக்கண் என்னைப் பார்த்து சிமிட்டியது.
13

Page 16
எனக்கு 'திக்' என்றது. நம்பவே முடியவில்லை.
இப்படி எல்லாம் நடக்குமா? உலகத்தின் சொர்க்கபுரி என்று எண்ணி யிருந்த ஐரோப்பாவில் வேலை இல்லாத் திண்டாட்டங்களும் பணத்தட்டுப்பாடுகளும் திருட்டுகளும் பெருகும்போது...
டெனிஸ்காரனை விட வெளிநாட்டவர்கள் பெரிய கார்களும் படகுகளும் வைத்திருக்கும் பொழுது...
வங்கிகள் திவாலாகியதால் பெரிய பெரிய வீடுகள் மலிவு விலையில் ஏலத்திற்குப் போகும் பொழுது....
வயதுக்கு வந்ததும் தாய்மாமன் தென்னோலைத் தட்டிகட்டி வீட்டின் தாழ்வாரத்தில் இருந்த நிலைமாறி, பூப்படைந்த பெண்ணை விழா மண்டபத்திற்கு கெலிகொப்டரில் கொண்டு வந்து இறக்கி பல்லக்கில் வைத்து தோளில் வைத்துக் காவிக்கொண்டு போகும் பொழுது....
ஏழு பவுணில் கட்டிய தாலிக் கொடிகள் இருபத்தைந்தாவது திருமண நாள் அன்று இருபக்கமும் பூட்டிய புறோச்சருடன் சேர்த்து இருபத்தைந்து பவுண் ஆகும் பொழுது....
ராணித்தியேட்டரில் அடிமைப் பெண் படத்துக்கு எம்.ஜி.ஆருக்கு கட் அவுட் கட்டியது போல், புலம்பெயர் தேசத்து கோயில் ஒன்றின் தேர் முட்டியின் உயரத்துக்கு கோயில் நிர்வாகியின் கட் அவுட் தொங்க ... தேருடன் அவரையும் தொலைக்காட்சி உலகமெங்கும் காட்டி நேர்முகவர்ணனை செய்யும் பொழுது....
தாமரைக் கேணியுடன் கூடிய மிகப் பிரமாண்டமான ஒரு அழகிய கோவிலில் அம்மனின் அவதாரம் எனச் சொல்லிக் கொள்ளப்படும் என்தேசத்து சகோதரி ஒருவரை தூக்கி தேரில் வைத்து உள்வீதி சுற்றி தேரில் இருந்து இறக்கியதும் காலைப்பட்டுத் துணியின் மீது வைத்து பன்னீராலும் விபூதியாலும் சந்தனத்தாலும் குங்குமத்தாலும் பாதபூஜை செய்யும் பொழுது....
புலம் பெயர் தேசத்து தேர்களின் சக்கரங்கள் சனி, ஞாயிறுகளில் மட்டுமே உருளும் பொழுது...
நடராசர் என்பவர்
பரதநாட்டிய அரங்கேற்றத்தின் பொழுது ஒற்றைக் காலைத் தூக்கிக் கொண்டு நிற்கும் ஒரு சிலையாக மாறிவிட்ட பின்பு... 14
தேரு மங்குழுது.''

மேலாக சைவம் என்பது நெற்றியில் மட்டும் வாழும் நிலை வந்த பின்பு...
பாலைவனங்களில்கூட பனி மழைப் பெய்யும் காலம் தொடங்கிவிட்ட பின்பு ....
ஊரில் பழையபடி கோயில்களில் கிடாய் வெட்டி வேள்விகள் தொடங்கி விட்ட
பின்பு....
1111111111111111ார்
முருகன் வந்த அன்றிரவு பலமுறை பிழை திருத்தம் செய்த பொழுதும் அச்சாகிய சிறுகதைப் புத்தகத்தில் பாலைப்பழம் பலாப் பழம் என்றே அச்சாகியிருந்த பொழுது....
முருகன் கோவிலுக்கு கடன் கொடுத்தவன் தலைவரிடம் கடனை கேட்டு மிரட்டி விட்டு, பணத்தை தராது விட்டால் - அன்றிரவே முருகனைத் தூக்குவேன் என்று மிரட்டும் பொழுது....
நான் இறந்தால் என் சொத்து எல்லாம் உனக்கே முருகா என கோயிலே கதியென தனியே வாழ்ந்த என் மூத்த அதிகாரி எஞ்ஜினியர் சுந்தரமூர்த்தி ... என்னுடன் கதைத்தபடி முருகனுக்கு கை குலுக்கிய அதே சுந்தரமூர்த்தி ... முருகன் காணாமல் போன அடுத்த தினத்திலேயே நித்திரையில் இறந்து போன பொழுது..
நடக்க முடியாதது என்று எதுவுமே யில்லை!
இப்போது அதிகமாகவே முருகன் கோவிலுக்கு போகின்றேன் - தெய்வநிந்தனை செய்து கொண்டு திரிந்ததனால்தான் இவன் இந்த இளம் வயதில் போய்ச் சேர்ந்தவன் என்று என் மனைவி உட்பட யாருமே என் மரணத்திற்கு பின் மரணச்சான்றிதழ் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக....
ஆனால் முருகன்மீது எனக்கு இன்னமும் அதிக கோபம் இருந்து கொண்டே இருக்கிறது.
ஒன்று... முருகன் வந்த குழப்பத்தினாலேயே பலாப்பழம் பாலைப் பழமாக கணனியில் சேமிக்கப்படாமல் புத்தகத்திலும் அதே பிழையுடன் அச்சாகி யிருந்தது..
இரண்டாவது..... எஞ்ஜினியர் சுந்தர மூர்த்தியின் மரணம்.
(முற்றும்)
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

Page 17
பொப்பாப்பLேAttai104hthriE11!
தீபச்செல்வ
பள்ளிக்கூடம் செல்ல
ஓர் தொலைக் காட்டவில்லை காரைணப்பு
ஓர் 6கரைக் காட்டவில்லை
துள்ளித்திரிய ஒரு புல்வெளிலைலோ ஊஞ்சலா. ஒரு பூங்காலையோ காட்டவில்லை
பூர்வீக நிலத்தையும் மூதாதையரின் எடையும் கா.. முடியவில்லை
சிறு அமைதிலைலோ அச்சமற்ற ஓர் பொழுதையோ காட்டவுமில்லை
கார்டினோம் பாதுகாப்பற்ற நிலத்தை
அலைகடலையும் எழும் சூரியனையும் காயங்களிற்கு ஒரு பொம்மையையும் கிழியாத பூக்கரையும் முலைகள் நிறைந்த 2ானத்தையும் காட்ட முடியவில்லை
ஏல்லா உறுப்புக்களையும் புணர்பனர்களை சுழ நிறுத்திவிட்டு காட்ட முடியாதிருந்தோம் ஒளியிருக்கும் திசையை
என்ஜில் எழங்கியிருக்கிறோம் ஆண்குறிகசை( அடையாரம் காடுமொடு காலத்தை.
குறிகளைஅலையாளம்
காட்டும் சிறுமி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

ன் கவிதைகள்
வண்டி குஜாலான்
குழந்தைகள் அஞ்சிய
பதுங்கியிருக்கும் நகரில் பிறக்கப்போகும் இன்னொரு குழந்தைக்காய்
எப்படிக் காத்திருப்பது?
ஒவ்வொரு இஸ்ரேலியப் படையினனும்
துரத்திக் கொண்டிருக்கிறான் ஒரு பாலஸ்தீனக் குழந்தையை
அவர்கள் ஏன் குழந்தைகள்மீது குண்டுகளை வீசுகிறார்கள்?
தமது துப்பாக்கிகளை ஏன் குழந்தைகளுக்கு எதிராய்
திருப்புகிறார்கள்?
ஒவ்வொரு பாலஸ்தீனரின் கைகளிலும்
ஒரு குழந்தையின் பிணம்
குழந்தைகளற்ற குழந்தைகள் பதுங்கியிருக்கும்
ஓர் நகரை எப்படி அழைப்பது?
ஓர் ஈழக் குழந்தை கருவில் கரைக்கப்படுகையில் பாலஸ்தீனக் குழந்தை ஒன்றை குண்டுகள் தின்று போட்டிருக்கின்றன
குழந்தைகளைக் கொல்பவர்களின் நோக்கம்
என்னவாய் இருக்கும்?

Page 18
- கடிக்கிலங்கை நஸ்ர்ப்பு
கிராமத்து
கிழக்கே இல்லை யென்று சொல்லாமல் அள்ளிக் கொடுக்கும் வங்களா விரிகுடாவை
யும், மேற்கே பச்சைப் பசேலென்று விரிந்து கிடக்கும் வயல் நிலங்களையும், மலைகளையும், காடுகளையும் கொண்ட கிழக்கிலங்கையில் முஸ்லிம்கள் வாழும் கிராமங்கள் வளம் கொழித்துக் கிடப் பதை இன்றும் காணலாம். முல்லையும், மருதமும், நெய்தலும், குறிஞ்சியும் வாழ்த் தொலி முழங்க, செழிப்போடு இயற்கையின் இனிய தாலாட்டில் என்றும் கோலோச்சிக் கொண்டிருக்கும் இக்கிராமத்து மக்களால் பாடப்பட்டு, இன்றும் ஏடுகளைக் காணாது இவர்களின் இதயங்களே தஞ்சமெனக் கிடக்கும், இம்மக்களின் நாட்டுப்புறப் பாடல்கள் இனிமையும், எளிமையும் கொண்ட வைகள். இவைகளில் இவர்கள் வாழும் கிராமங்களின் பெயர்களைக் கொண்ட பாடல்களையும், இப்பாடல்கள் இவர்களின் கிராமத்து வளங்களையும் வாழ்வியல் பற்றியெல்லாம் கூறும் சிறப்புக்களையும் இப்பொழுது பார்க்கலாம். கிழக்கிலங்கை, முஸ்லிம் மக்கள் வாழும் கிராமங்கள் தனித்துவமான இஸ்லாமிய விழுமியங்களையும் சிறப்புக்களைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடைய கலை கலாசாரம், பண்பாடு என்பன இக் கிராமங்களில் பளிச்சிட்டுக் கொண்டிருக்கும். இவை அனைத்தும் இம்மக்களின்
நாட்டுப்புறப்பாடல்களில்

சேப்லிகேளின் விகளும் ப்பெயர்களும்
எஸ்.முத்துமீரான்
தெளிவாகச் சொல்லப்படுவதைக் காணலாம். ஒழுக்க நெறிகளும், சமயப் பண்பாட்டு விழுமியங்களும். இங்கு வாழும் கிராமத்து மக்களிடையே நிறைந்திருக்கும். எவ்வளவுதான் நாகரிகம் வளர்ச்சி பெற்று வானுயரப் பறந்தாலும், இக்கிராமங்களில் வாழும் முஸ்லிம்கள் ஒழுக்க நெறி தவறாமல், உயர் பண்புகள் மாறுபடாமல், மரபு முறைகளில் மாற்றங்கள் குலையாது, வாழ்ந்துவரும் பண்புள்ளவர்களாக இருப்பதைக் காணலாம்.
செழுமையும், சிறப்பும் பெற்று இன்றும் இளமைப்பொலிவோடு கிராமங்களில் கோலோச்சிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களின் நாட்டுப்புறப்பாடல்கள் காதலும் நையாண்டியும், கருணையும், காதலொழுக்கமும், பக்தியும், பண்பாட்டு விழுமியங்களும் நிறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடல்களில் இங்குள்ள ஊர்ப் பெயர்களை வெளிப்படுத்தும் சில பாடல்களை இங்கே பார்ப்போம்.
இப்பொழுது கிழக்கிலங்கையில் உள்ள பொத்துவில் என்னும் பழைமையான சிறப்புமிக்க ஒரு முஸ்லிம் கிராமத்தைப் பற்றி எழுந்துள்ள சில நாட்டார் பாடலைப் பார்க்கலாம். இக்கிராமம் பண்டைய சிங்கள மன்னர்களின் கோடைகால விடுமுறை வாசஸ்தலமாகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குடாக் கடலும் இக்கிராமத்திற்கு சிறப்பூட்டிக் கொண்டிருப்பதும் தனிச்சிறப்பெனலாம்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

Page 19
01. சீனட்டி நெல்லும்
செல்ல இறால் ஆணமும் பொத்துவில் ஊரும் - இப்ப பொருந்தினதோ வன்னிமைக்கு?
ஆணம் : கறி அக்காலத்தில் கிராமப்புறங்களில் அமைந் துள்ள குளங்களிலிருந்து விவசாயத்திற்கு நீர்பாய்ச்சும் வேலைகளையும் விவசாயி களிடமிருந்து விவசாய வரி அறவிடப் படும் வேலைகளையும் கவனிப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் ஓரளவு ஆங்கிலம் தெரிந்த இலங்கையர்களை அதிகாரிகளாக நியமித்திருந்தது. இவர்களை நீர்ப்பாசன வன்னியனார் அல்லது வன்னிமையென்று அழைப்பார்கள். இவர்கள் அக்காலத்தில் குதிரைகளில் சில நேரம் வண்டில்களில் இவ்வூர்களுக்குச் சென்று, அங்குள்ள குளங்களிலிருந்து, விவசாயத்துக்கு நீரைத் திறந்து கொடுப்பது வழக்கம். இப்படிப்போகும் வன்னிமைகள் சில நேரங்களில் அவ்வூர்களில் மாதக் கணக்கில் தங்கி விடுவார்கள். இவர் களையும் இவர்களின் வாழ்வியலையும் நாசுக் காக நையாண்டி செய்யும் தோரணையில் பாடப்பட்டுள்ள இந்நாட்டார் பாடல், படிக்கப் படிக்க ருசிக்கிறது. கிராமத்து மக்களின் களவொழுக்கம் எவ்வளவு பண்போடு இப்பாட லில் வெளிக்காட்டப்படுகிறது என்பதைக் காணும்போது உள்ளமெல்லாம் புல்லரிக்கிறது. எழுத்தறிவில்லா இவ்வேழைக் கிராமத்து மக்களின் ஒழுக்க நெறிக்குத்தான் நிகரேது?
அக்காலத்தில் பல பெயர்களைக் கொண்ட நெல்லினங்கள், இங்குள்ள மக் களால் வயல்களில் விதைக்கப்பட்டன. இந்நெல்லினங்களில், "சீனட்டி நெல்லின் அரிசி சாப்பாட்டுக்கு கூடிய சுவைதரும் ஒரு நெல் இனமாகும். மேலும் பொத்துவில் கோரக் களப்பில் விளையும் இறாலும், ருசியும், சுவையு முடையன. இதனால்தான் "சீனட்டி நெல்லும் செல்ல இறால் ஆணமும்' என்று சாப்பாட்டின் சுவையை இந்நாட்டுப்புறப்பாடல் மெருகூட்டிக் கூறுகின்றது. இயற்கையோடு ஒன்றித்து வாழும் கிராமப்புற மக்களின் வாழ்க்கை புனிதமும், இனிமையும் நிறைந்தது.
பொத்துவிலுக்கு போன வன்னிமை நாட்கள் கடந்தும் அவருடைய சொந்த ஊருக்கு வராமல் பல நாட்களாக இங்கேயே தங்கி விட்டதால், இவர் அங்கு கலியாணம்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

முடித்து வாழ்கின்றாரோ என்று சந்தேகம் வந்து வன்னிமையை நையாண்டியாக "பொருந்தினதோ வன்னிமைக்கு' என்று இப்பாடலின் மூலம் இந்நாட்டுப்புறக் கவிஞன் வன்னிமையை கேலி செய்கிறான். இந்நாட்டுப்புறப்பாடல் பொத்துவிலுக்கு நீர்ப்பாசன விடயமாகப் போன வன்னிமை நாட்கள் கடந்தும் ஊருக்கு வராததினால் இக் கிராமத்து நாட்டுப்புறக் கவிஞனொருவன் நகைச்சுவையோடு வன்னிமை யைக் கேலி செய்வது எவ்வளவு சிறப்பாக இருக்கிறது. இதைப்போன்ற இன்னொரு பாடலையும் பாருங்கள்.
02. போறாருகா வன்னியனார்
பொத்துவிலப் பாப்பமென்டு மாயமருந்தால் - கள்ளி மயக்கிறாளோ நானறியேன்!
மாயமருந்து : வசியம் செய்தல் பொத்துவில் ஊர் செழிப்பான ஊர். இவ்வூரில் வாழும் பெண்களும் அழகான வர்கள். இங்கு ஒருவர் போனால் இங்குள்ள நல்ல வடிவான ஏழைப்பெண்களைப் பார்த்து முறைப்படி பேசித் திருமணம் முடிக்கலாமென்றும் கூறுவார்கள். இப்படி அங்கு போய்த் திருமணம் முடித்தவர்கள் எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள். இதற்கு மூலகாரணம், இங்கு வாழும் மக்களில் அநேகம்பேர் ஏழைகளாக இருப்பதேயாகும். இப்பாடலில் வரும் "மாயமருந்து' என்னும் சொல் இக்கிராமத்தில் வாழும் ஏழைப்பெண்களின் அழகிற்கே உவமையாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்பெண்களின் அழகு எல்லோரையும் வசிகரித்து மயக்கத்தக்கது. கிராமத்து இளம் பெண்களின் அழகில் மயங்காதோர் யாருளர்? இவர்களின் செயற்கை இல்லா அழகு, என்றும் சிறப்பானதே.
இதைப்போன்று கீழ்வரும் நாட்டார் பாடலும், கிராமத்தில் வதியும் பெண்கள் ஒழுக்கமானவர்கள். இவர்கள் யாராலும் வஞ்சிக்கப்பட்டால்
அவ்வஞ்சித்தவனை சாபமிட்டு அவனுக்கு கேடு இறையிடம் பிரார்த்தனை செய்வார்கள். இம்மக்களின் இறை பக்தி மேலானது. இதை இந்நாட்டார் பாடல் சிறப்பாகக் கூறுகிறது. 03. பொத்துவில் ஊராள்
பொல்லாத ராசுடையாள்

Page 20
திட்டுப் பலிச்சா - நம்முட சீவனுக்கும் தீங்கு வரும். கற்புடைய ஏழைப் பெண்களுக்கு நாங்கள் தீங்கு செய்தால், அது எங்களுக்கு பாவத்தையும் பழியையும் கொண்டு வரும் என்பதை இந்நாட்டார் பாடல் அழகாகக் கூறுகிறது. இப்பாடலில் வரும் "திட்டுதல்' என்னும் சொல் சபிக்கின்றதையே குறிக்கும். கற்பின் மகத்துவத்தை இப்பாடல் புடம் போட்டுக் காட்டுகிறது. இப்பொழுது,
கிழக்கிலங்கையில் முக்கியமான கிராமங்களில் ஒன்றான அக்கரைப்பற்றைப் பற்றி குறிப்பிடப்பட்ட பாடல்களைப் பார்ப்போம். இக்கிராமத்தில்தான் கூடுதலான நாட்டுப்புறப்பாடல்கள் என் கள் ஆய்வில், தேடி எடுக்கப்பட்டன. இங்கு நல்ல புலவர்களும், கவிஞர்களும் இருந்து சிறந்த இலக்கியப் படைப்புகளை ஆக்கித் தந்து இலக்கிய உலகிற்கு அழகு சேர்த்துள்ளனர். இப்பொழுது இங்கு தேடியெடுக்கப்பட்ட நாட்டுப்புறப் பாடலொன்றைப் பார்ப்போம். இப்பாடல், காதல் வயப்பட்ட ஒரு இளைஞனின் இதயதாபத்தை சிறப்பாக வெளிப்படுத்துகின்றது. வெட்டுக்குத்துக்காலம் இங்குள்ள வயலொன்றில் சில பெண்கள் கதிரு பொறுக்கிக் கொண்ருக்கின்றனர். இவர்கள் அக்கரைப்பற்றுக் கிராமத்தையும், பாலமுனைக் கிராமத்தையும் சேர்ந்தவர்கள். இங்கே உப்பெட்டிகைச் சேர்த்து கட்டுகளாகக் கட்டிக் கொண்டிருக்கும் இளைஞன் ஒருவன் பாலமுனைக் கிராமத்தைச் சேர்ந்த அழகி யொருத்தியின் மேல் காதல் கொள்கிறான். அன்பு மேலோங்க இவன் தன் இதயதாபத்தை வெளிக்காட்ட பாலமுனை அழகியைப் பார்த்து சிலேடையாக இப்படிப் பாடுகிறான்.
04. அக்கரைப்பற்று
அழிஞ்சாலும் குத்தமில்ல - என்ர பாலமுனை ஊரு - இப்ப பவுத்திரண்டா ஆண்டவனே
பவுத்திரம் : கவனம் இப்பாடலின் மூலம், தான் விரும்பிய பாலமுனைப் பெண்ணுக்கு தன்னுடைய உள்ளக்கிடக்கையை இவ்விளைஞன் சிலேடை யாக இங்கு வெளியிடுகின்றான். இது ஒரு அழகான காதல் பாடலாகும். இப்பாடல் இப்பகுதியில் உள்ள அக்கரைப்பற்று,
18

பாலமுனை ஆகிய இரு கிராமங்களை சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறது. கிரா மத்து மக்களின் காதல்தான் எத்தனை உயிர்த்துடிப்பானது என்பதற்கு இப்பாடல் நல்ல உதாரணமாகும்.
இதே போன்று, அக்கரைப்பற்று, கரவாகு, சாய்ந்தமருது ஆகிய கிராமங்களின் பெயர்களைச் சொல்லும் நாட்டுப்புறப் பாடலொன்றைப் பார்ப்போம். இப்பாடல் கிழக் கிலங்கையில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிராமங்களை வெளிக்காட்டி நிற்கிறது.
05. அக்கரைப்பத்தோ, இல்ல
அவரும் கரவாகோ? சாய்ந்தமருதூரில் - அவருக்கு
சாதிசனம் உண்டாமோ? இப்பாடல், சாய்ந்தமருது
என்னும் கிராமத்துப் பெண்ணொருத்தியை திருமணம் முடிக்க நிச்சயிக்கப்பட்ட இளைஞனொருவனின் பூர்வீகம் பற்றி பெண் பகுதியிலிருந்து, இளைஞனின் உறவினர்களிடமிருந்து அறிந்து கொள்ள பாடப்பட்ட பாடலாகும். கிராமத்து மக்கள் திருமணங்களின்போது ஆணின் பூர்வீகம் பற்றி அறிகின்ற பழக்கம் இன்றும் இப்பகுதிகளில் இருப்பதைக் காணலாம்.
06. அக்கரைப்பற்றில், இப்ப
அதிக மழபேஞ்சி நம்முட ஊரழிஞ்சி போச்சாம் - இதை உத்துணர்ந்து பார் ராசா....
மழ : மழை இப்பாடலிலும், அக்கரைப்பற்று கிராமம் சிறப்பாக விளித்து சொல்லப்படுகிறது. இறையின் மகத்துவத்தையும், அவனின் சக்தியையும் வாழ்வியலோடு ஒப்பிட்டுப் பாடப்பட்ட இப்பாடல், நம்பவைத்துக் கழுத் தறுக்கும் இளைஞர்களுக்கும், அநியா யம் செய்வோருக்கும் படிப்பினையாகப் பாடப்பட்டது. ஒரு கிராமத்தில் பாவம் மலிந்தால் அக்கிராமத்தையே ஈசன் அழித்து விடுவான் என்ற உண்மையை இப்பாடல் வெளிப்படுத்துகிறது.
07. அக்கரைப்பத்திலயோ - இல்ல
அங்கு கரவாகிலயோ சம்மாந்துறையிலயோ - என்ர தங்க வண்டார் தங்கிறது? இப்பாடலிலும் கிழக்கிலங்கை அம்பாரை மாவட்டத்தில் பேர்போன கிராமங்களான அக்கரைப்பற்று, கரவாகு, சம்மாந்துறை ஆகிய முஸ்லிம் கிராமங்கள் விளிக்கப்படுவதைக்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

Page 21
தம்பியின் தவிப்பு
வட்டார அதில் ஸ் 'ரேலைனேரோவிறிஹாரே
ஏர்வேஸ் ராப்ரடாம்
ராட்டசாட்டுது சோழில் வைத்ரனே
இன்ரைஸஸ்லாம் | தம் எற்றும் கரும் ஈரனல் போல்ட்டம் சோறு ஏலாக்கற்றிலும் முன்னால்
மாட்டிண்டேன்
இசைப்றம் சப்போட்டுக்கும் ஆயில்ல
அம்மாவும் அணுக்ஸ் ஆரே வீட்டில் மலத்ரைலரேஜேர் கரை அடக்டுறு
பவுனே ago என்ற ஆட்டம் ஆட
இந்த நந்தனாரே எழுந்து எங்வுேம் எல்லாரோ?
வகைகள் கேலரியில் அக் -
மானந்தன்
அல்வாய்
காணலாம். இதுவும் காதல் வயப்பட்ட நாட்டுப்புறப் பாடலாகும். பெண்ணொருத்தி அவள் விரும்பிய இளைஞனின் ஊர் பற்றியும் அவனின் பூர்வீகம் பற்றியும் வினாவுகின்றாள். இவள் தன் உள்ளம் கவர்ந்த இளைஞனைத் "தங்க வண்டாக' உருவகப்படுத்திப் பாடுவது சிறப்பாக இருக்கிறது. அவளை மலராகவும், தன் காதலனை வண்டாகவும் இவள் உருவகப்படுத்திக் காட்டும் நிலை சங்ககால அகநானூற்றுப் பாடல்களை எங்களுக்கு நினைவூட்டி நிற்கிறது. கிராமத்து கவிஞன், கற்பனையில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்று விட்டான் என்பதை நினைக்கும்போது உள்ளமெல்லாம் புல்லரிக்கிறது.
கீழ்வரும் பாடலும் அக்கரைப்பற்று கிராமத்தைச் சேர்ந்த பட்டியடிப்புட்டியென்னும் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

ஊரைப்பற்றியும் அதன் வளத்தைப் பற்றியும்
அழகாக எடுத்துரைக்கின்றது.
08. பட்டியடிப்புட்டி
பால் தயிரு கனத்த இடம் நெய்யுருக்கி ஊத்துறாங்க - என்ர நேசக்கிளி போயிருக்கி
கனத்த : கூடுதலான பட்டியடிப்புட்டி என்னும் கிராமம் அக்கரைப்பற்றிலுள்ளது. இங்கே கூடுதலான பசு எருமை மாட்டுப் பட்டிகளை அக்கரைப்பற்று பணக்காரப் போடிமார்கள் விவசாயத் தேவை களுக்காக வைத்திருந்தார்கள். மேலும் இங்கு பாலும், தயிரும், நெய்யும் கூடுதலாக இருந் ததையே இந்நாட்டுப்புறப் பாடல் கூறுகின்றது. இதையே "பால் தயிரு' கனத்த இடமென்று, இக்கவிஞன் கூறுகிறான்.
மேலும் கிழக்கிலங்கையில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிராமங்களான காத்தான் குடி, சம்மாந்துறை, நிந்தவூர் ஆகிய கிராமங் களையும் இங்கு வாழும் மக்களுடைய வாழ் வியலையும் பற்றி கீழ்வரும் நாட்டார் பாடல் சிறப்பாகக் கூறுகின்றது.
09. அப்பம் சுடும் காத்தான்குடி
அவல் இடிக்கும் காரைதீவு முட்டி தூக்கும் சம்மாந்துறை - நாங்க
முகப்பழக்கம் நிந்தவூரு இப்பாடல் மூலம், இக்கிராமங்களில் வாழும் மக்களின் பண்புகளையும், அவர்களின் தொழி லையும் அறியக்கூடியதாக இருக்கிறது. காத்தாங்குடி, காரைதீவு, சம்மாந்துறை ஆகிய கிராமங்களை இப்பாடல் சிறப்பாகச் சித்தரிக் கின்றது.
இப்பகுதியில் அட்டாளைச்சேனை சிறப்புப் பொருந்திய கிராமமாகும். மீன்பிடி தொழிலுக் கும், பாய், தட்டு இழைத்தலுக்கும் பேர்போன இக்கிராமத்தில் கூடுதலான மெளலவிகள் இருக்கின்றனர். இங்குள்ள வயல்நிலங்களிலும், சதுப்பு நிலமான அல்லையிலும் கூடுதலாகப் பன் வளர்கின்றது. இதையே கீழ்வரும் பாடலும் எடுத்துக் காட்டுகிறது. இங்குள்ள பெண்கள் அழகான பாய்களை பன்களால் இழைப்பார்கள்.
10. அட்டாளைச்சேனை
அல்லயில பன்புழங்கி பாயிழைச்சி போட்டிரிக்கன் - அவர் பக்குவமாப்படுத்துறங்க .
19

Page 22
கணவன் படுத்துறங்க அழகான பாய் இழைத்துப் போட்டிருக்கும், மனைவியின் அன்பை இப்பாடல் எடுத்துக் காட்டுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் கூடுதலாக வாழும் ஏறாவூர் கிராமத்தைகீழ்வரும் நாட்டார் பாடல் சொல்லிக் காட்டுகிறது. ஏறாவூர் தமிழ் கிராமங்களுக்கிடையில் இருந்தாலும், இங்கு வாழும் முஸ்லிம்கள் தனித்துவமான பண்பும், பழக்க வழக்கங்களும் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. 11. ஏறாவூரிலிருந்து
எளயமச்சான் வந்திரிக்கார், பூமுளையாச்சலொன்ற-பகலைக்கு
புடிச்சறுகா சோத்துக்கு. இப்பாடல் மூலம், இக்கிராமத்து ஏழை மக்களுடைய வாழ்வியல் பண்பாடு, பளிச்சென்று வெளிப்படுகிறது. விருந்தோம்ப லில் ஏழைக் கிராமத்து முஸ்லிம் மக்கள் என்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை இப்பாடல் மூலம் அறியக் கிடக்கிறது.
கீழ்வரும் பாடல், கிழக்கிலங்கையில் சின்ன மக்கா என்று சிறப்பாக அழைக்கப்படும் மருதமுனைக் கிராமத்தைக் கூறுகின்றது. 12. மருதமுனை மச்சானுக்கு - இந்த
மச்சிர ஊட்ட வர காலென்ன கொட்டானாமோ இல்ல கண்ணென்ன பொட்டயாமோ? கேலியும், குத்தலும்
நிறைந்த இந்நாட்டுப்புறப்பாடல் உறவின் ஒழுக்கத்தை உரிமையுடன் தொட்டுக் காட்டுகிறது. படிக்கப்படிக்க ருசிக்கிறது. கிழக்கிலங்கையில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிராமங்களில் மருதமுனையும் ஒன்றாகும். இங்கே, காத்தான் குடியின் பெயரை தாங்கிய நாட்டுப்புறப் பாடலொன்றைப் பார்ப்போம். 13. காத்தான்குடியிருந்து
கன்னிநாகு வந்திரிக்காம், காசத்தா வாப்பா - நானத
கைவிலைக்கு வாங்கி வாறன் இப்பாடல் ஒரு இளைஞனின் ஆசையை அப்பட்டமாக வெளிக்காட்டி நிற்கிறது. அன்பு கொண்ட பெண்ணைத் திருமணம் முடித்து தருமாறு, தகப்பனிடம் தனயன் எவ்வளவு ஒழுக்கமாகக் கேட்கிறான். இங்கே, "மகர் கொடுத்து திருமணம் முடிக்கும் இஸ்லாமியப் பண்பு சிறப்பாகக் காட்டப்படுகிறது.
20

மேற்குறிப்பிட்ட ஊர்ப்பெயர்களை மைய மாகக் கொண்டு பாடப்பெற்ற ஆயிரக்கணக்கான நாட்டுப்புறப் பாடல்கள், இப்பகுதிகளில் வாழ்ந்த எழுத்தறிவில்லா ஏழைக்கிராமத்து முஸ்லிம் மக்களின் இதயங்களே தஞ்சமெனக் கிடந்து அவர்களின் வாழ்வோடு அவைகளும் மறைந்து விட்டன. இதற்கு முக்கிய காரணம் சர்வகலாசாலைகளில் கோலோச்சிக் கொண் டிருந்த முஸ்லிம் பேராசிரியர்களும், கலாநிதிகளும் நாட்டாரியலைத் தேடிக் கள் ஆய்வு செய்யாமலும் கண்டு கொள்ளாமலும் மாக்ஷிய சித்தாந்த வெறிபிடித்து அலைந்து திரிந்தமையேயாகும். விலைமதிப்பற்ற இவ்விலக்கியப் பொக்கிசங்கள் மறைந்து அழிவதைத் தடுக்க முன்வராமல் இவர்கள் போனதற்கு (மார்க்ஸிய) கம்மினிச சித்தாந்தங்களை மட்டும் பேசிக்கொண்டு திரிந்தமையேயாகும். ஆன்மீகம் கிஞ் சித்துமில்லாமல் வாழ்ந்த, வாழ்ந்து கொண் டிருக்கின்ற இஸ்லாமியப் பேராசிரியர்களும், கலாநிதிகளும், இவர்களைப் பின்பற்றி வாய்ச்சவாடல் பேசிக்கொண்டிருக்கும் இவர் களின் அடிவருடிகளும் எப்பொழுது முன்வரப் போகிறார்களோ? நுனிப் புல்லோட்டத்தில் நாட்டுப்புறவியலில் ஏதோ ஓரிரு கட்டுரைகள் எழுதிவிடுவதினால் மட்டும், ஆய்வுகள் நிறைந்து விடாது.
எதையும் புரியாமல், புரிந்து கொள்ள முடியாமல் செஞ்சோற்றுக் கடனுக்காக உயிரை மாய்த்த கர்ணனைப் போல் வாழும் இச்சித்தாந்தவாதிகள், உண்மையைப் புரிந்து தான் வாழும் முஸ்லிம் சமூகத்திற்காக, நாட்டுப்புற இலக்கியத்தில் கள ஆய்வு செய்து முஸ்லிம்களின் நாட்டுப்புற இலக்கியம் வளர உதவுதல் வேண்டும். ஏதோ சாட்டிற்கு சில காதல் வயப்பட்ட நாட்டுப்புறப் பாடல்களை மட்டும் வைத்து கட்டுரைகளை எழுதிவிட்டு பெருமூச்சு விடுதல், ஒருபோதும் நாட்டுப்புற இலக்கிய ஆய்வாகக் கருதப்படலாகாது. இதுவொரு வெறும் கண்துடைப்பு மட்டுமே. பட்டங்கள் பெறுவதற்காக பக்திவயப்பட்ட சில மாணவர்கள் இக்கட்டுரைகளை வானுயரத் தூக்கிப் பிடிக்கலாம். ஆனால் இதுவெல்லாம்
அடிமைத்துவ புலுடாக்களே.
0 0 0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

Page 23
சிறுகதை
நாம்"
வட்டுவாயிலை திறந்து இல்ல
ஆசிரியர் அருட் பிரகாசம் அதிகாலையில் கண் விழித்தார். பறவை களின் ஆரவார ஒலி கேட்டுத்தான் கண் விழித் தார்! துயில் நீங்கியதும், 'ஆண்டவரே, இன்றையப் பொழுது யாதொரு பொல் லாப்பும் இல்லாமல் நல்ல பொழுதாக இருந்து, எல்லாம் நல்லபடியாக நடக்க அருள் செய்யும்!' இயேசுவின் படத்தின் முன் னால் நின்று இவ்வாறு மன்றாடிவிட்டு, தன் சிரம் பரிகாரங்களை முடிக்கப் போனார்.
வீட்டுவாயிலை திறந்து வெளி முற்றத்தை பார்த் தார். நிலம் தெளிந்து வந்து கொண்டிருந்தது. பூமரங்கள் பூத்துச் சிரித்தன! இவர் அகமும் முகமும் மலர்ந்தது! 'மொசஞ்தாஸ்' மரங்கள் இரண்டு வெள்ளைப் பூக்களையும் சிவந்த பூக்களையும் இலை தெரியாமல் பூத்து சடைத்து உயர்ந்து நின்று அழகைக் கொட்டி அழகுச் சோலையாக்கிக் கொண்டிருந்தது! முல்லை மல்லிகை கனகாம்பரம் நந்தியாவட்டை ரோஜா ... என்று வரிசைக்கிரமமாக நின்று இவரைப்பார்த்துச் சிரித்தது! குறோட்டன்'களும் பலவர்ண இலைகளை விதம் விதமாய் காட்டி செழித்தோங்கி நின்று அழகுக்கு அழகு சேர்த்தது! எதிர்ப்புறமாக 'சைப்பிரஸ்' மரம் வன்ன பின்னலிட்ட (றேந்தை) இலைகளால் முட்டை வடிவில் - பச்சைக் கூடாரம் போல் சடைத்து நின்று எழிலூட்டியது! பூக்கள் சொரிந்து நிலமகளுக்கு நகைபோட்டு அழகு சேர்த்தது!
கண்விழித்ததும் இவைகளைப் பார்ப்பது அவருக்கு உற்சாக பானம் அருந்துவதாகும் ஆசிரியராய் இருந்து இளைப்பாறிய பின் னர் அவர் பொழுது இந்த சூரிச்!
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

க - லை
பாக:
கபடி ut'. "சாகம்
முயற்சியில்த்தான் கழிந்து வருகிறது! தேடித்தேடி எடுத்து முறைப்படி கிரமமாக சிரத்தையுடன் சிரமப்பட்டு இவற்றை ஆக்கி யுள்ளார். இப்போது பரவசப்பட்டு நின்று அதன் பலனை அனுபவிக்கிறார்!
மடித்துக் கட்டிக்கொண்டு வீட்டுக்குப் பின்பக்கமாகப் போனார். அங்கே கீரைவகைகள் செழித்தோங்கி நின்றன! முளைக்கீரை வல்லாரை கானாங்கி ... என்று செழித்து நின்றன! வெண்டி கத்தரி, பாகல் பயற்றை அவரைக் கொடிகளும் செடிகளும் காயும் பிஞ்சுமாய் நின்று வரவேற்றன! ஆசிரியர்
வேலையில் இந்தப் பொடியளோடு கத்தி குளறி பணிசெய்வதில் கிட்டாத மன ஆறுதலை, இப்பணி யால் அவர் அடைந்தே வருகிறார் போலிருக்கிறது!
வீட்டுக்காரியின்
வாழ்த் தொலியும் கிடைப்பதாயிருக்கிறது! இரட்டிப்புமகிழ்ச்சிதான்! அவர் மனம் வைத்து வீட்டுத்தோட்ட முயற்சியில் இறங்கலானார்! தோட்டப்பயிர் களைக் கவனித்து நீர்பாய்ச்சிய களையுடனும் மனநிறைவுடனும் இல்முன் வந்தார். அவர் முகம்
எட்வேட்
21

Page 24
வாடிவிட்டது! மனையாள் கூட்டுக்கம் போடு நின்று கூட்டிக்கொண்டிருந்தாள். முற்றத்தில் அழகுக் கோலமிட்டிருந்த பூக்கள் ஒன்றையும் காணோம்! எல்லாம் கூட்டி அள்ளிப்போட்டாள்! பூத்துக்குலுங்கிய மலர்களையும் அதிகம் காணவில்லை! இங்கொன்றும் அங்கொன்று மாயே நின்று சிரித்தன! எல்லாம் மாதா படத்துக்கும் ஆண்டவர் படத்துக்கும் அந் தோனியார் படத்துக்கும் சூடியிருப்பாள்!
இவளோடு கதைப்பதில் பிரயோசன மில்லை! நெடுகிலும் இவ்வாறே செய்வாள்! கேட்டால், “இண்டைக்கு செவ்வாய்க்கிழமை
அந்தோனியார்ர நாள் அதுதான்!”
அருட்பிரகாசம் கிணற்றடிக்குப் போனார் மேல்காலைக் கழுவி தன் மற்றப்பணிகளைத் தொடர். காலைச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு தண்ணீர் குடிக்கும்போது தெரு வாயிலை பலமாக தட்டும் ஓசை கேட்டது! வெளியே போய் வாயிலை அண்மிக்கு முன்னமே, திறந்து கொண்டு உள்ளிட்டுவிட்டனர் எட்டுப் பத்துப்பேர்! அவர்கள் காக்கிச்சட்டைக்காரர், வெள்ளை கால்ச்சட்டை போட்டவர்களாயிருந் தனர்! இவர்களை எல்லாம் ஒருசேரப் பார்த்தது அவருக்கு சற்றுத் திகிலாகவே இருந்தது! "நாங்கள் 'டெங்கு' ஒழிப்புக்காக எல்லா இடங்களையும் சோதனை போட்டு வருகிறோம்! இப்ப உங்கட வளவ பரிசோதனை யிடப்போறம்!.... எங்களோட ஒத்துழைச்சீங்கள் என்றால் நல்லது!” என்று முன்னே வந்த அதிகாரி அதிகார தோரணையில் சொன்னார்!
ஆசிரியருக்கு இப்போதுதான் ஞாபகம் வந்தது, கொஞ்சநாளாக டெங்கு ஒழிப்புக் காரர் எச்சரிக்கை செய்து திரிவதும், தீவிர வேட்டையாடுவதும் தண்டிப்பதுமாக நடந்துதான் வருகிறது! என்றாலும் அவர் கலங்கவில்லை! அவர்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவர் வீடு வளவை துப்பரவாகவே வைத்திருப்பவர்! பிரயோ சனமான பயிர் பச்சைகளைத்தவிர வேறொன்றும் இல்லை! எல்லாம் வலு சுத்தம் சுகாதாரமாயே இருக்கின்றன... 'இதென்ன எங்கட வீடுவளவு புனிதமாக வைச்சிருந்தால் எங்களுக்குத்தானே நன்மை! ஆருமா சொல்லவேணும்' என்பார்!
"வாங்கோ ஐயா, நல்ல தாராளமாகச் சுத்திப்பாருங்கோ!” ஊழியர்கள் நான்கு பக்கமும் சுற்றிச்சுழன்று தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள்!.... சிரட்டைகள் கோம்பைகள்,

பேணிகள் போத்தல்கள், பொலித்தீன் பைகள், எதிலாவது கொஞ்சம் நீர் இருந்தால்காணும், தண்டிக்கப்படும் குற்றப் பணம் அறவிடப்படும் ஆயிரக்கணக்கில்! அதிகாரிகள் நின்று கொண்டிருப்பது ஆசிரியருக்குச் சங்கடமாக இருந்தது! உள்ளேபோய் கதிரைகளை எடுத்து வைத்தார். அவர்கள் கெம்பீரமாக அமர்ந்திருந்தார்கள். அப்போதுதான் அவர்களைக் கூர்ந்து கவனித்தார்.... காவல்துறை அதிகாரிகள், சுகாதாரப் பரிசோதகர், கிராமசேவகர், ஊர்ப்பிரமுகர்களாயிருந்தனர்! அப்போது யோசித்தார் : 'எத்தனையோ பெறுமதிமிக்க உயிர்கள் அவலமாய் அநியாயமாய்ச் செத்த நம்நாட்டில், வெறும் நுளம்பால் ஒரு உயிரும் சாகாமல் இருக்க எவ்வளவு அக்கறையாகச் செயல்ப்படுகிறார்கள்!'... இப்படி எண்ணி தனக்குள் சிரித்துக்கொண்டார்.
"உங்கள் எனக்கு நல்லாத் தெரியும் ஐயா, உங்கட பேர் அருட்பிரகாசம்தானே, நீங்கள் எழுதின கதைகள் கட்டுரைகள் பத்திரிகைகளில் வாறது. நான் படிச்சிருக்கிறன். நாட்டுக்குப் பிரயோசனமான நல்ல விஷயங்கள் சொல்லிவாறீங்க ஐயா!” இவரின் இந்த அறிமுகவுரையைக் கேட்டு வந்திருப்பவர்களின் முகங்களில் சிறிது பரபரப்புக் காணப்பட்டது!
நூல்: திரை விலகும்போது (வானொலி மேடை நாடகங்கள்) ஆசிரியர்: ஏ. ஆர். திருச்செந்தூரன் வெளியீடு: சுமதி பதிப்பகம் விலை: ரூபா 500/- சூரியனின் முன்னாள் அறிவிப்பாளர் ஏ. ஆர். திருச்செந்தூரன் எழுதிய 13 வானொலி - மேடை நாடகங்களின் தொகுப்பு இந்நூல். இதில் 11 வானொலி நாடகங்களும் மேடை நாடகங்களும் அடங்கியுள்ளன. இவற்றுள் 3 சமூக நாடகங்கள், மூன்று திகில் நாடகங்கள், இரண்டு காதல் நாடகங்கள், இரண்டு பெண்ணியச் சிந்தனை நாடகங்கள், இவற்றோடு
மர்மம், சரித்திரம், நகைச் சுவை நிறைந்த நாடகங்
திரை விலகும்போது... குகளும் அடங்கியுள்ளன. சகல வயதினருக்கும்
ஏற்ற சிறந்த பொழுது போக்கு நூலாக இந்நூல் 4 அமைந்துள்ளது.
ஆசிரியர்
(17. அறிந்திருச்சேத்தான் பாராட்டுக்குரியவர்.
BRASSASSONNE
A\ t\ t 1:44
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

Page 25
iiiiiiiiiiiiiiil
'மெயா மீடியா மினுசு!' காவல் அதிகாரி முணுமுணுத்தார்! அறிமுகப்படுத்திய பிரமுகர் வரவிருக்கும் திருகோணமலை நகரசபைத் தேர்தலில் இந்த வட்டாரத்தில் வேட்பாளராகப் போட்டியிட இருப்பவர் என்று கேள்வி!
இப்போது தேடுதல் வேட்டை நடத்திய ஊழியர்கள் பரபரப்பாக ஓடி வந்தனர்! ஒருவனின் கையில் ஐஸ்கிரீம் வெற்றுக் கப் இருந்தது! அதை அதிகாரிகள் பார்வையிட்டு பெரும் பீதி கொண்டு பரபரப்பாகினர்! அதை ஆசிரியருக்கும் காட்டினர். அருட்பிரகாசம் அதைப் பார்த்தார். அந்த 'டப்பா கப்பில்' ஒரு அங்குல உயரத்துக்கு அழுக்கு நீர் இருந்தது. அதனுள் சில கிருமிகள் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தன!'
ஆசிரியரின் வளவு பெரியது. அப்படியிருந்தாலும் அவர் மெத்தக்கவனமாக துப்பரவுப் பணியைச் செய்து வருபவர். யாரோ தெருவால் போகிறவன் ஐஸ்கிரீமைக் குடித்து விட்டு வெறும் கப்பை மதிலுக்கு மேலால் வீசியிருக்கிறான்! அது மூலையில் கல் இடுக்கில் இருந்திருக்கிறது இவர் கண்ணில் படாமல் ! அதிகாரிகள் இவரையொரு பயங்கரக் குற்றவாளியைப் பார்ப்பது போலப் பார்த்தார்கள்! பிரமுகர்கள் கேலியாகப் பார்த்தார்கள்! 'பெரிய ஆள்மாதிரித் திரிகிறார், இப்ப வசமாய் மாட்டிக்கிட்டார்! என்று பரிகசிப்பது போலிருந்தது! ஒருவன் மரியாதையாக வாழ்ந்து நல்ல பேரெடுப்பதும் பலருக்குப் பொறுக்காது!
"உங்கட பகுதியில் இரண்டு பேர் டெங்குவந்து ஆசுப்பத்திரியில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறாங்க! அதனாலதான் நாங்கள் தீவிர கவனமெடுக்கிறம்!” என்றார் சுகாதார அதிகாரி. "இதுக்காக உங்கள்ள இருபத்தாறாயிரம் குற்றப்பணம் தண்டம் அடிக்க இருக்கிறம்!" என்று சொன்னார் காவல் அதிகாரி. இதற்காக அருட்பிரகாசம் கூனிக்குறு கவுமில்லை கதிகலங்கமில்லை! அவர் மனதுக்குள் சிரித்துக்கொண்டார்!
'இன்னும் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்...'
அதிகாரிகள் எழுந்தனர். தாங்களும் மிடுக்காக ஒருநடை நடந்து சுற்றிவந்து பார்க்கலாயினர்! பூமரங்களும் கொடிகளும் குறோட்டன்களும் தோகைவிரித்து நிற்கும் சைப்பிரசும் அவர்கள் கண்ணை உறுத்தியதோ, பொறாமைத் தீயை தீட்டியதோ, வெறித்தே பார்த்துக்கொண்டு நின்றனர்!
"இந்தக் குறோட்டன், சைப்பிரஸ், ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

பூமரங்கள்...
எல்லாம் கூடிப்போச்சுது. சடைச்சு நிக்குது! இதுக்கு சரியான நுளம்பு வாறது! உங்களுக்கும் ஆபத்துவாறது, அங்கால இங்கால இருக்கிற ஆக்களுக்கும் ஆபத்து வாறது! எல்லாம் நல்லா வெட்டி குறைக்கவேணும்! இல்லாட்டி சரியான தண்டணை தாறது..!" அந்தச் சிங்கள அதிகாரி இவ்வாறு அதிகார மிரட்டலோடு பேசினார்!
அதனைத் தொடர்ந்து ஊர்ப்பிரமுகர்கள் நெருங்கி வந்தனர். "ஐயா, இதெல்லாம் பழைய 'பாசன்'! இப்ப நோய் பரவாம இருக்கிறதுதான் முக்கியம்! இதெல்லாத்தையும் வெட்டி எறியுங்க! இல்லாட்டி உங்கள்ள கடுமையான குற்றம் அடிப்பாங்க! நீங்க, கிறிஸ்மஸ் நாளையில் இந்தக் கிறிஸ்மஸ் மரத்தில் சின்னச்சின்ன மிளகாய் வெங்காய பல்ப்பூட்டி பத்திப்பத்தி நூரவிட்டிருப்பீங்க! பார்க்க வடிவாத்தான் இருக்கும்... ஆனா இப்ப காலத்துக்கேற்ற மாதிரி நடக்க வேணுமையா! எல்லாத்தையும் வெட்டி எறியுங்க."
அவர்கள் சொல்வதை இவர்கள் பெருப்பித்துப் பேசுகிறார்கள்! தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயுமாம்! வாத்தியாருக்குப் பத்திக்கொண்டு வந்தது! என்றாலும் வெளிக்காட்டவில்லை. சகித்துக் கொண்டார். சகிக்கத்தானே வேண்டும்!
ஆனால் அவர் உள்ளம் குமுறியது.
'வெட்டவாம், குறைக்கவாம்! இரண்டும் ஒன்றுதானே!... நான் என்ன பாடுபட்டு தேடியெடுத்து நட்டனான், வளர்த்தெடுத்து விட்டனான் என்று இவர்களுக்குத் தெரியுமா!.... வந்துற்றாங்கள் பெரிய படிச்ச துரைமார்மாதிரி கால்சட்டையும் போட்டுக்கொண்டு எல்லாம் தெரிஞ்ச பெரியமனுசர் மாதிரி!... ஆனால் வந்தவங்கள் ஒருவருக்கும் ஒரு அழகுணர்ச் சியோ, கலைரசனையோ ஒருமண்ணுமில்ல!.. அவர்கள் காணியைச் சுற்றி பின் வளவுக்கு வந்தனர்!... அங்கே கீரைகள் சடைத்து நின்றன. பார்க்கப் பசுமையாகவே இருந்தது! மரக்கறி செடிகள் கொடிகள் எல்லாம் காயும் பூவும் பிஞ்சுமாய் நின்று குலுங்கி மனதைக் கவர்ந்தன! உண்மையில் நல்லமனம் படைத்தவனாக இருந்தால் இந்த முயற்சித்திறனைப் பாராட்டியே ஆகவேண்டும்!... ஆனால்... "இதாலதான் சரியா நுளம்பு வாறது! எல்லாத்தையும் எடுத்துப்போடுறது!... அடுத்தமுறை வரக்குள்ள இது ஒண்டும் இருக்கிறது இல்லே" என்றார்
23

Page 26
அதிகாரி .
"பாத்தீங்களா ஐயா உங்க ளுக்காக துரை சலுகை செய்கிறார்! இப்ப தண்டணை விதிக்க இல்ல! இப்ப எல்லாத்தையும் அழிச்சுப்போடத்தான் சொல்லுறார்! சொல்லுறத கேக்காமல் விட்டீங்களோ, அடுத்தமுறை ஆயிரக்கணக்கில் குற்றமடிப்பாங்கள்”- பிரமுகர் அருட்பிரகாசத்துக்கு சினம் சினமாக வந்தது! நல்ல உயிர்த்துடிப்புள்ள மரக்கறி வகைகளை மனையாள் மகிழ்வோடு ஆக்கிப்படைப்பாள்! மிஞ்சியதை அயலுக்கும் கொடுத்து பெருமை கொள்வாள்! இந்த சுகந்த நிகழ்வை எல்லாம் அழிக்கப் பார்க்கிறார்களே பாவிகள்!... அதுசரி கமநலசேவை திணைக்களம், வீட்டுத்தோட்டம் செய்யச்சொல்லி பிரசாரம் செய்கிறது. அதற்காக சில சலுகைகளையும் வசதிகளையும் ஏன் கடனுதவிகளையும் செய்துவருகிறது! ஆனால் சுகாதாரப்பகுதி அழிக்கச் சொல்கிறது! 'என்னதான் நடக்கிறது இங்கே! - அவர் பொருமிக் கொள்கிறார்!
"இப்பிடி பத்தமாதிரி கீரைகள் வளர்ந்தால் உங்களுக்கும் டெங்கு வரும், அயலுக்கும் ஆபத்துவரும்!... "பெரிய படித்தவர்கள் போல கதைக்கிறார்களே இவங்கள் படித்ததை மறந்து கதைக்கிறார்களா, மறைத்துக் கதைக்கிறார்களா?..... எனக்கு படிச்சதும் படிப்பிச்சதும் இன்னும் நல்லா ஞாபகமிருக்கு : தாவரங்கள்ள வாற நுளம்புவகை இலைகள்ள இருக்கிற சாரத்தத்தான் உறிஞ்சி எடுக்கும். அது இரத்தம் குடிக்கிற இல்ல! அதனால நோய்பரவுற இல்ல!... பிரயோசனமான பயிர்பச்சைகள் எல்லாம் வெட்டி அழிக்கச் சொல்லுறது பெரிய அநியாயம்!... அயலுக்கு ஆபத்துவருமாம்! எப்படிவரும் நுளம்புகள் அறுபது அடிக்குமேல் பறக்காது! இங்கே எல்லாருக்கும் பெரும்காணி. எட்ட எட்டத்தான் குடிகள் இருக்கு. எப்படி நோய்பரவ முடியும்?!..... அவர் உள்ளம் குமுறி கேள்விக்கணைகளைத் தொடுத்தது!
அடுத்த மேற்குக்கரை எல்லைக்கு வந்துநின்று இவர் எல்லைக்கு அப்பால் இருக்கும் காணியைக் கூர்ந்து பார்த்தனர்! வாத்தியார் காணி பற்றைகள் குப்பை கூளங்கள் இல்லாமல் துப்பரவாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த எதிர்க்காணி ஏன் இப்படி பற்றைக்காடாய் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது! யாரும் குடியிருப்பதாகவும் தெரியவில்லை! இது அவர்கள் கவனிப்புக்கு இடமானது! “இது ஆற்றகாணி? ஏன் இப்பிடி கவனிப்பு இல்லாமல் கிடக்குது!” அவர்கள் விசாரித்தனர். 24
கதைக்கிறார்.தக்கிறார்கள் பங்கள் படித்

“இது எங்கட தம்பியார்ர காணிதான் ஐயா. அவர் யாழ்ப்பாணத்தில கலியாணம் முடிச்சவர். அங்கதான் இப்ப சீவிக்கிறார். நாங்கதான் அதைப் பராமரிக்கிறம். அவர் இடைக்கிடை எண்டாலும் எங்களையும் காணியையும் பார்த்துக் கொண்டுதான் போறவர்!” ஆசிரியர் மிகப்பவ்வியமாக இதைச் சொன்னார். "அவர் அங்க இருக்கிறவர் இங்க காணிவைச்சிருக்க ஏலாது! இப்பிடி ஆக்கள் குடியில்லாம பத்த வளர்ந்து கவனிப்பாரில்லாம கிடந்தா நாம் 'சீல்' வைக்கிறது!”
பிரமுகர் ஒருவர் அருட்பிரகாசத்தை தனியாகக் கூட்டிக்கொண்டு போய்சொன்னார் : “ஐயா இப்பிடி அனாதரவாகக் கிடக்கிற எத்தினையோ காணிகள் அரசாங்க உடமை யாக்கிக் கொண்டுவாறாங்கள்!... நீங்கள் தம்பிய வரச்சொல்லி வேலிய அடைச்சி வடிவாத்துப் பரவாக்கி ஒரு கொட்டில எண்டாலும் போட்டு ஆரையும் குடியிருத்தினால்தான் இந்தக் காணியப் பாதுகாக்கலாம்!” அவர் தகுந்த ஆலோசனைதான் வழங்கினார். ஆனால் ஆசிரியருக்கு இதயத்தைக் குடைவதாகவே இருந்தது!.... 'எந்த நாட்டுமக்களுக்கும் இல்லா மல் நாம் மட்டும் இப்படிச் செய்ய வேண்டிய அவசியம் என்ன, நியாயம் என்ன?!'
அடுத்து இந்த துரைமார், தெற்கு வேலிப்பக்கம் வந்தனர்! அந்தவளவு பிர தான கண்டிவீதியை முன் எல்லையாய்க் கொண்டது! நாலுகடைகளும் அந்த வளவில் அமைந்துள்ளன! வீடும் இருக்கிறது ஆனால் அதில் ஆக்கள் இல்லை! பின்பக்கம் முழுக்கப் பற்றைக்காடு! பழைய மலகூடம் ஒன்றுள்ளது. கடைக்காரர் இப்பவும் பாவிக்கிறார்கள். ஆனால் மலக்குழி இடிந்து போய்விட்டது! மழைநீரெல்லாம் அதற்குள் சங்கமிக்கும்! நுளம்புகளின் சுரங்கமாகிவிட்டது! ஒரு மழைபெய்தால் காணும் அயலெல்லாம் துர்நாற்றம் வீசும்! சாப்பாட்டு அறைக்கும் வந்துவிடும் கெட்ட நாற்றம்!
இப்போது இந்த காற்சட்டைக்காரர் என்ன செய்கிறார்கள்...? கண்டும் காணாததுபோல மூக்கைப் பொத்திக்கொண்டு தம்பாட்டில் போகிறார்கள்!
என்ன காரணம்?
அந்தவளவு உரிமையாளன் ஆரியசிங்க
முதலாளி என்ற பெயர் மட்டும்தான் காரணம்! அவர் முன்னர் இங்கு இருந்தவர்தான். ஆனால் கனகாலமாய் அவர் இங்கு இல்லை! குருநாகலில் போய் ஐக்கியமாகிவிட்டார்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

Page 27
அது சேர்ந்த சொட்டு நீரே இருந்தது' (
அவர் மச்சினன் ரூபசேன பக்கத்தில் அபேபுரத்தில்தான் இருக்கிறார். வாடகைப் பணத்தை கிரமமாக அவருக்கு அனுப்பி வருவார். அவர் இங்கு வருவதே இல்லை. எந்தக் கவனிப்போ பராபரிப்போ இல்லை.....! எந்தக் கெடுபிடியோ பரிசோதனையோ விசாரனையோ ஒன்றும் இல்லை! எந்தக் காலத்திலும் எந்த அதிகாரியும் உள்ளிட்டதாக சரித்திரமே இல்லை....! அப்பகுதியை கடைக்கண்ணாலும் கவனிக்காமல் போகும் அதிகாரிகளைப் பார்த்து அழுவதா சிரிப்பதா , நம் தலைவிதியை நோவதா என்று புரியவில்லை அருட்பிரகாசத்துக்கு! அப்படியே சுற்றிவந்து முன்வந்த வாயிலுக்கே வந்து சேர்ந்தனர் எல்லாரும். அந்த 'ஐஸ்கிரீம்' கப் சொட்டு நீரோடு வாயிலின் சீமென்று தரையில் அப்படியே இருந்தது! ஆசிரியரைக் கூப்பிட்டார்கள். அதைக்காட்டி, வெயில்படும் இடத்தில் நீரை ஊற்றி, 'கப்பை' காலால் உழக்கி சப்பையாக்கச் சொன்னார்கள் !
அதிகார தோரணையில்!
வாத்தியார் அவ்விதமே செய்தார்! இதயத்தில் போர்ப்பறை ஒலித்தது!
மதில்கரை நீளத்துக்கு, வீதிக்கரை எங்கும் பள்ள நிலமாக வாய்க்காலாக நீண்டு கிடக்கிறது. வீதி மேடாக உயர்ந்து
நிற்கிறது. மழை பெய்தால் வீதிக்கரையில் நீர்தேங்கி வெள்ளமாகிவிடும்! நுளம்புகளுக்கு வழிகாலாயிருக்கும்!..... எப்போதோ கான் கட்டி இதைத் தடுத்திருக்க வேண்டும்!.... இதைச் சொல்வார் யார்? அவர்களால் முடிந்ததெல்லாம் ஐஸ்கிரீம் கப் நீருக்கு தண்டணை கொடுப்பதுதான்!
அதிகாரிகள் கதிரைகளில் வந்து மீண்டும் அமர்ந்தனர். ஒரு அதிகாரி காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டு வலுகெம்பீரமாக வீற்றிருந்து கொண்டு, ஒரு பத்திரத்தில் ஏதோவெல்லாம் எழுதித்தள்ளினார்! ஆசிரியரிடம் பெயரை முகவரியை குடும்ப உறுப்பினர்களின் பெயர் விபரங்களை எல்லாம் கேட்டார். இவரும் சொன்னார். எல்லாம் எழுதிப்பதிந்தார்! இன்னும் ஏதேதோவெல்லாம் கனக்கையாக எழுதினார்!
எழுதியதை அருட்பிரகாசத்தின் கையில் கொடுத்து அடியிலே கையெழுத்துப் போடுமாறு சொன்னார். ஆசிரியர் மெத்தப் பவ்வியமாக வேண்டிப்பார்த்தார். அவருக்குத் திகிலாகவே இருந்தது! ஒரே குழப்பமாகவே இருந்தது! ஒரு எழுத்தைக்கூட வாசிக்க
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

மலையகத்தின் பிரபல எழுத்தாளரும் ஆய்வாளருமான சாரல் நாடனின் மறைவு ஈழத்து இலக்கிய நெஞ்சங்களைப்
பெருஞ்சோகத்தில் ஆழ்த்திவிட்டது. அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தித்து ஞானம்'
தன் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்துகிறது.
சாரல்நாடன் எனும் சந்தனத் தோப்பு
முகிலுரகம் மலைநாட்டில்
முகிழ்த்த வாசமலர்) சாரல் நாடனி எனுஞ் சந்தனத் தோப்பு சாய்ந்திட்டதெனுஞ் செய்தி - எம் இதயத்தில்
பாய்ந்திட்ட ஆப்பு மானுடநேயத்தைச் சுமந்த நெஞ்சம் மணித்தமிழ்த் தாகத்தால் நிறைந்த நெஞ்சம்
இலக்கிய வாளேந்திக் களமாடி
இலங்கிய உயர் களமாடி? சாந்தந் தவழும் தண்ணிலா முகம் இனிமை தோய்ந்த கனிவான பேச்சு கனவுகளைச் சுமந்தியங்கும் காந்தவிழி
(மலையக மக்கள் சுமக்கும்
துயரச் சுமைகளைத்) தன் எழுத்தாணி கொண்டு இறக்க நினைத்த ஏந்தல் தேயிலையின் ஊறலிற்
சிவந்த தேநீர் தோட்ட மக்களின் செந்நீர் என்பதை உலகுக் குணர்த்தப் "பேனா" கொண்டுழைத்த "சா நா?
இலக்கியத் தொண்டுக்காய் ஏற்ற தொழிலையும் விடத்துணிந்த
தமிழ்த் தொண்டன் கவிதை, சிறுகதை, நாவலும்
ஆய்வுடன் பற்பல ஆக்கங்கள் தேய்விலாது படைத்தளித்த பிரம்மா
ஓய்விலாது உழைத்தமைக்குப் பரிசாக வாய்த்தது நிரந்தர ஓய்வெனுஞ் சாவா?
நெஞ்சு பொறுக்கு தில்லையே மலைக் காற்றுச் சுமந்து வரும் சாரலும் மலை தழுவும் முகில் மொழியும் மழையும் மக்கள் விளி சொரியுந் துளிகளுங்கூடத்
சாரல் நாடனே! உனக்கான கண்ணீர் அஞ்சலிகளே..!
நிம்மதியாய் நீயுறங்கு
நீ நினைத்தபடி நிச்சயம் மலையகம் விழிக்கும்)
-கவிஞர் நிலா தமிழின் தாசன்
25

Page 28
இயலவில்லை! ஒரு தமிழ் எழுத்தையும் அ காணவில்லை! அனைத்தும் சிங்களத்தில்!
ஆசிரியருக்கு தலையைச் சுற்றியது! மய வருவதுபோலிருந்தது! கனவுலகில் ஏ நடப்பது போலிருந்தது... இதயத்தில் பே பறை தட்டியது!..."என்ன, பேசாம யோசி கொண்டிருக்கிறது! கேதியாக் கையெழுத்துப் ே றதுதானே! நேரம் போறது, நாங்க இன்னும் எத் இடம் போகவேண்டி இருக்கிறது!” “என்னால இ இப்போதைக்கு கையெழுத்துப்போட ஏலாது ஐய "ஏன்.. ஏன்.. என்ன வந்தது! சரியான 'பிஸ்ச
"எனக்குச் சிங்களம் தெரியாது! வாசிக்க கையெழுத்துப்போட ஏலாது!” ஏதோ விட நடக்கப்போவது போலிருந்தது!.... பிரமுகர் ஓடிவந் எழுதியிருப்பதை தமிழில் விளங்கப்படுத்தி : "ஏனையா வில்லங்கத்த விலைக்கு வா
போறீங்களா? அவங்கள் சொன்னதையெல் இரண்டு வாரத்துக்குள்ள செய்து முடிக்காட்டித் தண்டிக்கப்படுவீர்கள், எண்டுதான் இதில எழுதியிரு நீங்க பயப்படாம கையெழுத்த போடலாம்!”
"அதை நான் என்னெண்டு நம்புறது! நீங்க அவங்கள்றவால்பிடிகள்தானே! வால்பிடிகள பார்த்து தான் நாங்கள் கூடப் பயப்பட வேண்டியிருக்கு!
".. என்ர வீடு வளவு எல்லாத்தையும் - அதிகாரியிர பேரில் எழுதிப்போட்டு கையெழுத்து போடச் சொன்னா நான் போடுவனா?.... தப எழுதிக்கொண்டாங்க வடிவா படிச்சுப்போட்டு ! சொன்ன இடத்தில் கையெழுத்தப் போடுறன்!”
அதிகாரி வாய்க்குள் முணுமுணுத்தார் : "இவன் சரியான மீடியாக்காரன் போல, நமக் கரைச்சல் குடுக்க வாறதுபோல!.... இவன ( விதமாகத்தான் கையாளவேணும் போல!” அதி எழுந்தார்! உறுமிக்கொண்டு சொன்னார் : ' ஒங்கள்ள 'கேஸ்' பைல் பண்ணுறது, சரிய தண்டன வாங்கித்தாறது!"
"நானும் கோட்டில் உங்களச் சந்தி தயாராகத்தான் இருக்கிறன்!”
0 0 0 0 0 "என்னையா யோசிச்சுக்கொண்டு இருக்கு! கெதியா கையொப்பத்த போடுங்கோவன்!” பிர பிரஸ்தாபித்ததைக் கேட்டு வாத்தியார் கனவுலகத் இருந்து இந்த உலகத்துக்கு மீண்டார்! அவ காட்டிய இடத்தில் கையெழுத்தைப் போ வழியனுப்பி வைத்தார்! ஏன்றாலும் - உள்ளம் போர்ப்பறை தட்டிக்கொண்டே இருந் கனவுலகில் நடந்ததுபோல் செயல்படுத்தாமல் 6 கையறு நிலையை எண்ணி வருந்தினார்!.... இ எல்லாம் செயல்படுத்தும் நிலையில் நாம் இப்ே இல்லை!... நாம் நாமாக இல்லை!
26

வ்கே
க்கம் தோ பார்ப் ச்சுக் பாடு தின தில்
வீட்டில் ஒற்றுமை வளரச்செய்வோம்.
பா!”
//”,
எது
மேல் ரீதம் தார். னார் ங்கப் லாம் தான்
வான வில்லாய் வாழ்க்கை போக்க மாயத் தோற்றமாய் மாறிப் போச்சு கூனல் விழுந்த குறியாய் வாழிவு குலைந்து போச்சே கூடுவதெப்போ?
வாழும் வீட்டில் நிம்மதி இல்லை வழிகள் எல்லாம் முள்ளாயிலாக்க
ஏழை வாழ்வில் ஏற்றம் இல்லை ஏய்த்து வாழுதல் உலகமாய் போச்சு
க்கு!
ளும் ந்துத்
பசித்தால் மட்டும் வேட்டையாடும் பகுத்தறி வில்லா விலங்கினங்கள் பசியாத போதும் புதிய வழிகளில் பதுக்கி வாழும் மனிதவிலங்கினம்
அந்த
த்துப் மிழ்ழ நீங்க
நான்கு கற்சுவர்களைக் காவலிட்டு நல்ல செயல்களை வெளியில்விட்டு தோன்றும் பல்வகைச் சாத்திரங்கள் சொல்வதை மாற்றிச் செய்திடுவார்.
க்குக் வேற கொரி
நாம் பான
மக்களை மாக்களாய் மாற்றிடுவார் மதத்தின் பெயரால் பிரித்திடுவார் மக்காய் போன மனிதர்களால்தான் மானிலம் அழிவைக் காணுதப்பா
க்கத்
நீங்க
முகர்
மனிதர்கள் என்று மாண்புறுவர் மானிலம் என்றோ புனிதமாகும் இனிவரும் காலம் இருள்மயமே
எங்கும் அழிவுப் பிரளயமே
ந்தில்
ர்கள்
ரட்டு அவர்
- கேணிப்பித்தன் 0
தது!
விட்ட
மனிதா மாண்புறு வழிதேடு)
மனதை மாற்றிப் புகழ்தேடு புனிதம் பெறுமாம் இவ்வுலகம் புனிதராய் வாழ்வோம் ஒன்றாய்ச்சேர்.
இதை
பாது
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

Page 29
தீரண
காலக் கல்லடித்து நகம் கழன்றது
சாவலிகண்ட சதை கண்ணிரெல்லாம் செந்நீராகக் கத்துகிறது குளறுகிறது! ஊமைகண்டகனவொன்று உள்சொரித்துக் கொண்டது
கந்தவனத்தாரின் கண்களில் சென்றொழிந்த காலத் தாண்டவம்!
7 17:
பம்:::
சொற்பவருவாவில் சோக்காய் இல்லாண்டவள் ஒன்றன்பின்னொன்றாகப் பிள்ளைகளாறு பெற்றறெடுத்தபோதும்
சோராதவள் ஏதும் பேசாதவன்
ஓலை வெட்டி வகிர்ந்தெடுத்துப்.
பெப்போய் இழைத்து ஆடு, மாடு, கோழி வளர்த்து அங்க இங்க சீட்டுப் போட்டு
ஆதாரத்தைப் பெருக்கியவம் அப்பப்பா எத்தனை சாதனைகள்
அசைபோரும் கந்தவனத்தாரின் கண்களைக்காண மார்கழி வானம் நாணிய
இறுதி மரியாதை இருகாப்பு
ஊர் கூடி நின்ற "அரிசி போடுறாக்கள் போடுங் கொள்ளிக்காரன்போப்பால் போடேலா
அங்கொருகு எல்லாரும் போப்பாச்ச
மற்றொரு கு அனைத்துக் கிரிகைகளும் நிறைவே ஆறடிப் பெட்டிக்குள் ஒருவர்
அடங்கிக் கிடக்க தகனத்திற்கான ஆயத்தங் நகைகளைக் கற்றத் தொடங்
அயோபிகா
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

E :
இந்தக் காப்பு இளையவளின் மகளுக்கு இந்தச் சங்கிலி நடுவிலாளிமைகளுக்கு இந்தப் பதக்கம் மூத்தவரின் மகளுக்கு தாலிக்கொடி! அது செலவுபார்க்கும் மூத்தவனின் மகனுக்கு! பாகம்பாகமாப் பகிர்ந்துகொள்ள வெறுமையானால்கனகம்மா! இவள்..இவள்பாருக்கு?
4==
ப : 1-பு
சுடலையில் கிடைத்த ஞானம், கந்தவனத்தாரைச் சித்தனாக்கியது! அந்த நகைகளைச் சேர்ப்பதற்காய் அவள் பட்டபாட்டை எண்ணியவர் 6ே என்ற நெடிலொலியால், உரத்தகுரலெடுத்து ஓங்கியழுதார் நெருமூச்செறிந்து நெஞ்சழிந்தார் அடையாள அணிவகுப்பில் நின்றவாறே சிதையை நோக்கினார்!
-==
= = = 3 -- --
பெட்டிக்குள் இருந்த புதுச்சாளிகள் நான்கினையும் பக்குவமாய் வெளியே எடுத்துவைக்கக் கண்டு வெஞ்சினங் கொண்டகந்தவனத்தாரோ "வேண்டாம், அதையெடுக்கவேண்டாம்! அது அவர் ஆசையாய் வாங்கியது! அதை அதுக்குள்ளேயே போடுங்கோ!” மயான அமைதிலை தின்றந்தச் சோகக்குரல்!
ல்!
து! கோ
சல்
காறி
கரன்!
சிதை மூண்டது சிந்தை வறண்டது! நகரமனமற்ற கால்கள் நகர்ந்தன சற்றுத் தூரத்தே சென்றதும் சடுதியாய்த் திரும்பிப் பார்த்தார். சிதையில் தீச்சுவாலை வாகனம்! அதில் அவளது முகம்! அங்கு அந்தரங்கமான அவளது காந்தக்குரல்! "என்னங்கோ! என்ர ராசா! என் மானங் காத்தவரே! கவனமாயிருங்கோ! நான் போறன்” விண்ணேகும் வாகனத்தைப் பார்த்துக் கண்ணோக வெம்பி வெதும்பி மெது மெதுவாய் மண்தடவியது கந்தவனத்தாரின் பாதங்கள்! நெஞ்சிலோ தீராவலி!
பறின
லாறு
றெது! கள். கினர்.

Page 30
உலகசினி
WHAT TIME SITT
பிறக்கும்போது தனித்தே பிறக்கிறோம். இறக்கும் போதும் தனித்தே இறக்கிறோம் . ஆனால் இடைப்பட்ட இந்த வாழ்வில்...
யாரும் இல்லாத தனிமையும் வெறுமையும் நம்மால் ஏற்றுகொள்ள முடியாத வலிதான் ...
பிறந்தவுடன் குழந்தை தன்னை நோக்கி வரும் விரல்களை பற்றி பிடித்துகொள்ளும். அதுபோல வாழ்நாள் முழுக்க யாரோ ஒருவரின் (அல்லது சிலரின்) பிரியங்களுக்காகவும் துணைக்காகவும் ஏங்கித்தவிக்கிறோம். - யாருமில்லாத நிலையில் நகராத வாழ்வும், சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும் நிழல்போல தொடரும் மனத்தனிமையும், உணரும் மனிதர்களின் வலியை
எப்போதும் பிறரால் உணரமுடியாது ...
அப்படிப்பட்ட மனிதர்களின் தவிர்க்க முடியாத தனிமையை திரைமொழியில் தந்த படம்தான் What time is it there?
கேங் தந்தையின் திடீர் மரணத்துக்கு பிறகு இரவுகளில் பயம் கலந்த தனிமையை உணர்கிறான். தூக்கம் வராது விழித்திருந்து பின்னிரவுகளில் உறங்குகிறான்.
கடிகாரங்களை விற்பனை செய்யும் அவன் வாழ்வில் நேரத்தை
கடத்த துணையாக யாருமில்லை. - வேலை, வீடு தவிர்த்து அவன் உலகத்தில் எதுவுமில்லை யாருமில்லை. - ஒரு நாள் கேங்கிடம் கடிகாரம் வாங்க வருகிறாள் சியி என்ற இளம் பெண் .இரண்டு நாட்டின் நேரத்தை காட்டக்கூடிய கடிகாரத்தை கேட்க கேங்கிடம் அது போன்ற கடிகாரங்கள் இல்லை.
ஆனால் கேங் அணிந்திருப்பது அது போன்ற கடிகாரம் என்பதை அறிந்த சியி அதை

HEREP
அ" வானேல்
வித்தியடின் நேரத்து பாரிஸ் நோ
தனக்கு விற்பனை செய்யுமாறு கேட்கிறாள். முதலில் தரமறுக்கும் கேங் அதன் பிறகு சம்மதிக்கின்றான். தான் பாரிஸ் செல்வதாக கூறிவிட்டு கேங்குக்கு பரிசாக ஒரு கேக்கையும் வழங்கி விட்டு சியி செல்ல அவளை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறான் கேங்.
- கேங் பாரிஸுக்கு சென்ற சியி நினை வாகவே இருக்கிறான். பாரிஸ் நேரத்துக்கும் தன் நாட்டின் நேரத்துக்கும் 7 மணித்தியாலம் வித்தியாசம் என்பதை அறிந்து கொண்டு தன் கடிகாரத்தில் பாரீஸின் நேரத்துக்கு ஏற்ப மாற்றி வைக்கிறான்.
- விற்பனைக்காக தன்னிடம் உள்ள கடிகாரங்கள், வீட்டின் கடிகாரம், செல்லும் இடத்தில் உள்ள சகல கடிகாரங்களின் நேரத்தையும் மாற்றி வைக்கிறான்
- கேங்கின் தாயார் இறந்து போன - தன் கணவருக்காக தினமும் பிரார்த்தனை செய்கிறார். மகனுக்காக உணவு பரிமாறும் போதுகணவருக்காகவும் உணவுபரிமாறுகிறாள். "உங்களுக்காக சமைத்திருகின்றேன்” என்று சொல்லிக்கொண்டே உணவை பரிமாறுகிறாள்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

Page 31
ஒரு கரப்பான் பூச்சியை மகன் கேங் கொல்ல முயல தடுக்கிறார் "அது உன் அப்பாவின் மறு பிறவியாக இருக்கலாம் அதை கொல்லாதே” என்று சொல்கிறார். ஆனால் அதை கேட்காத கேங் கரப்பான் பூச்சியை மீன் தொட்டிக்குள் போட தொட்டியில் இருந்த பெரிய மீன் அதை தின்றுவிடுகிறது. அம்மா வருத்தத்துடன் அதைப் பார்க்கிறாள் .
மகன் கடிகார நேரத்தை மாற்றி வைத்ததை அறியாத தாயார், "தந்தை தான் இதை மாற்றி இருக்கிறார் அவர் வரப்போவதை நமக்கு உணர்த்துகிறார்” என்று கூறி அந்த கடிகாரத்தை வணங்க தொடங்குகிறார்.
நள்ளிரவில் விழிக்கும் தாயார் கணவருக் காக உணவு சமைத்து விட்டு வீட்டின் வெளிச்சம் வரும் பகுதிகளை மூடுகிறாள்.
மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் தனி யாக அமர்ந்திருக்கும் தாயாரை பார்த்து கோபப்படும் மகன் கேங் "என்ன செய்றிங்க?' என்று கேட்கிறான்.
“உன் அப்பா வெளிச்சத்தை பார்த்து பயப்படுகிறார். அதான் வர தயங்குகிறார் வெளிச்சம் வருகிற இடங்களை நான் அடைத்து விட்டேன்” என்று கூறுகிறாள். "முட்டாள் தனமாக நடந்து கொள்ளவேண்டாம்” என்று சொல்லி தாயார் ஓட்டிய அடைப்புகளை எல்லாம் கிழிக்கிறான் கேங்.
அதைப் பார்த்து கோபப்படும் தாயார் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

"அப்பா விரும்பும்படி வீட்டை இருக்க விடமாட்டேன் என்கிறாய், நீ தான் அவரை வர விடமாட்டேன் என்கிறாய்” என்று கூறி அழ அவளை மாற்ற முடியாது என்று உணரும் மகன் கேங் அங்கிருந்து செல்கிறான். கணவர் வருவார் என்று நம்பும் தாயார் பிரார்த்திக்க
ஆரம்பிக்கிறார்.
பாரிஸ்க்கு சென்ற சியிக்கு தனிமை மட்டுமே துணை. தனியாக அறையில் தூங்கும்போது மேல் தளத்தில் யாரோ நடமாடுவது போல உணர்வு தோன்ற இரவில் உறக்கம் வராது தடுமாறுகிறாள்.
மொழி தெரியாத இடத்தில் தனிமையை உணரும்
சியி சாலைகளில், ரயில் நலைய ங் க ளில் தனியே நடந்து திரி கிறாள்.
ஒருநாள் உணவ கத்துக்கு வருகிறாள் சியி. உடல் நலமில்லாது இருக்கும் சியிக்கு ஒரு பெண் உதவுகிறாள். இருவருக்கும் அறிமுகம் ஏற்படுகிறது. அன்றிரவு இருவரும் ஒன்றாக தங்குகிறார்கள்.
அன்றிரவு .....
தனது காரில் தனியாக
அமர்ந்
திருக்கிறான் கேங்... வீட்டுக்கு போக மனமில்லாது வெறுமையை உணர்ந்தவனாக அமர்ந்திருக்கிறான்.
அவனைத் தேடி ஒரு விலைமாது வருகிறாள். அவளோடு உறவு கொள்ள தொடங்குகின்றான் கேங்.
தன் கணவர் திரும்பி வருவார் என்று நம்பும் தாயார் தன்னை அழகுபடுத்திக் கொண்டு தந்தையின் அறைக்கு வருகிறாள்
படுக்கையில் அமர்ந்து ஒரு ஓலைப் பெட்டியை கணவனாக நினைத்து முத்தமிடுகிறாள். கொஞ்சம் கொஞ்சமாக சுய இன்பத்தில் ஈடுபடத்தொடங்குகிறாள்.
ஒரே கட்டிலில் படுத்திருக்கின்றார்கள் சியியும் தோழியும். தோழி உறங்கிவிட சியிக்கு தூக்கம் வராமல் தவிக்கிறாள். ஒரு கட்டத்தில் மெல்ல தோழியின் அருகில் சென்று அவளோடு உறவில் ஈடுபட முனைகிறாள்.
தனிமை பொறுக்க முடியாத அந்த
29

Page 32
எIII
மூவருக்கும் தனிமையிலிருந்து தற்காலிக விடுதலை அளிக்கிறது காமம்.
விடிந்ததும் வீடு திரும்பும் கேங் அப்பாவின் புகைப்படத்துக்கு கீழே உறங்கும் தாயை பார்கிறான். மனதில் குற்ற உணர்வு தோன்ற தாயின் அருகில் சென்று படுகிறான்.
பாரிஸில் தோழியை பிரிந்து அறையை விட்டுக் கிளம்புகிறாள் சியி.
ஓர் ஏரிக்கரையில் சென்று அமர்கிறாள். அவள் கண்கள் கலங்குகின்றன கண்ணீர் பெருக.. தீராத தனிமையின் துயரோடு
முடிவடைகிறது திரைப்படம்.
கடிகாரம், இரயில் நிலையம், கல்லறை தோட்டம், திரையரங்கம், மாடிப்படி, கழிவறை, மனிதர்கள் குறைவான சாலை, லேசான வெளிச்சம் கவிழும் மாடியறை, மீன் தொட்டி, ஏரிக்கரை என்று படத்தில் காட்டப்படும் இடங்கள் பொருட்கள் எல்லாமே தனிமையின் குறியீடுகளாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கேங் கடிகாரங்களில் நேரத்தை மாற்றி வைப்பதும், பிரான்ஸ் நாட்டு படங்கள் பார்ப்பதும் அவனின் தனிமையை வெளிப்படுத்தும் காட்சிகள்.
சியி 2 நாட்டு நேரம் காட்டும் கடிக்காரத்தை வாங்கும் காட்சியில் வெளிப்படும் பாதுகாப்பற்ற மனநிலையும் தனிமையும் இறுதிக்காட்சிவரை நீடிக்கிறது.
நள்ளிரவில் உணவு தயாரிப்பது, மீனை கணவனாக நினைத்து பேசுவது, கணவர் வருவார் என்ற நம்பிக்கையில் கண்ணீருடன் காத்திருப்பது என்று திடீரென்று ஏற்பட்ட தனிமையை ஏற்கவும் விலக்கவும் முடியாது தவிக்கும் தாயாரின் நிலை...
இப்படி மூவரின் காட்சிகள் வழியே தவிர்க்க முடியாத தனிமையை திரை யாக்கியிருகிறார் இயக்குநர்.
தனிமை என்ற ஒற்றை வார்த்தை ஒவ்வொருவர் வாழ்விலும் எப்படி எல்லாம் தாக்கம் செலுத்துகிறது என்பதை பதிவு செய்த இந்த தைவான் நாட்டு திரைப்படத்தின் இயக்குநர் சாய் மிங் லியாங்
சிக்காகோ திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான ஜூரி விருது மற்றும் சிறந்த ஒளிப்பதிவு ஆகிய விருதுகளை பெற்றுக்கொண்டது இந்த படம். 2001க்கான கேன்ஸ் திரைப்பட விழாவில் தங்கபனை விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் உணர்த்துவது முழுக்க 30

முழுக்க தனிமையை ...
தீராத தனிமையில் நேரம் நகரவே நகராது.
படத்தில் அந்த 3 கதாபாத்திரங்கள் உணரும் தனிமையை, வெறுமையை, நேரம் போகாத எரிச்சலை படம் பார்க்கும் நாமும் உணரவேண்டும் என்பதற்காவே வித்தியாசமாக படத்தை எடுத்திருக்கிறார்கள்.
மிக நீளமான காட்சிகளால் அவர்களது செயல்களை முடியும்வரை படமாக்கி புள்ளார்கள். கேமரா அசைவே இல்லா மல், குளோசப் காட்சிகள் இல்லாமல் எடுக்கப்பட்டிருகிறது. வித்தியாசமான நேர்த்தி யான ஒளிப்பதிவு.
படத்தில் பின்னணி இசையே இல்லை .. இயற்கையான சத்தங்கள்தான். குறைவான கதாபாத்திரங்கள், அரிதான வசனங்கள், உணர்வுகளை காட்சிகள் வழியே கடத்தல் என்று அற்புதமாக கையாளப்பட்ட திரை மொழி
ஆச்சர்யப்படுத்துகிறது.
0 0 0 0 0
நூல்: நவீன திறனாய்வுக் கோட்பாடுகள் (ஓர் அறிமுகம்)
ஆசிரியர் : கே.எஸ்.சிவகுமாரன் வெளியீடு : குமரன் புத்தக இல்லம் விலை : ரூபா 400/- திறனாய்வு என்றால் என்ன என்பதனை இலகு தமிழில் விளக்குகின்றது இந்நூல். குறிப்பாக 20ஆம் நூற்றாண்டில் மேனாட்டு இலக்கியங்கள் சார்ந்த கருத்தியல்கள் உள்வாங்கப்பட்டதன் காரணமாக எழுந்த திறனாய்வுக் கோட்பாடுகளை அறிந்து கொள்ள இந்நூல் பெரிதும் உதவுகின்றது. நீண்ட காலம் திறனாய்வுத் துறையில் ஈடுபாடு கொண்ட ஆசிரியரின் அனுபவம் சார்ந்த 13 கட்டுரைகளும் பின்னிணைப்பாக ஆய்வறி நிவாளர் கைலாசபதியும்
நூல் ஆசிரியரும்; என்ற (கட்டுரையும் இந்நூலில்
ந்வி 72 இடம்பெற்றிருக்கின்றன.
திறனாய்வக இலக்கிய மாணவர்
கோட்பாடுகள் களுக்கும் ஆய்வாளர் களுக்கும் பயன்மிக்க நூல்.
|
HHE டாக்காரி 47HEIMAuTHE
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

Page 33
எமது இலண்டன் பயணத்திற்கான முக்கிய நோக்கம் அங்கு
நடைபெற்ற உலக இலக்கிய மாநாட்டில் கலந்து ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிப்பதே என்பதை இக்கட்டுரைத் தொடரின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்தேன்.
நாம் அந்த மாநாட்டில் பங்கு கொள்வோம் என்பது முடிவானதும் 'ஞானம்' 150 ஆவது சிறப்பு மலராக வெளிவந்த 'ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழின் அறிமுக விழாவை இலண்டனில் நடத்தலாம் என்ற ஆலோசனையை எழுத்தாளர் வவுனியூர் உதயணன் தெரிவித்தார்.
வுவுனியூர் இரா.உதயணன் பற்றி இலக்கிய உலகில் அறியாதார் இருக்கமுடியாது. இலண்டனில் வாழ்ந்து கொண்டு வவுனியூர் என்ற தனது பிரதேசத்தை உலகெங்கும் ஒலிக்கச் செய்து ஈழமண்ணுக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் இவர் சிறுகதை, நாடகம், நாவல் ஆகிய துறைகளில் பிரகாசித்துக் கொண்டிருப்பவர். 'விதிவரைந்த பாதையிலே' என்ற நாவலுக்கு 2008ல் சாகித்திய விருதினைப் பெற்றவர். 'பனிநிலவு நாவலுக்கு கொடகே நிறுவனத்தின் தேசிய விருதையும் தமிழ்நாடு கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை விருதையும் பெற்றவர். இந்த நாவலும் 'நூலறுந்த பட்டங்கள்' என்ற நாவலும் இந்தி, மலையாளம், சிங்களம் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. திரு . உதயணன் 'ஞானம்' சஞ்சிகையின் வளர்ச்சியில் அதிக
அக்கறை காட்டிவருபவர்.
அவரது ஆலோசனையை ஏற்று, ஈழத்துப் போர் இலக்கிய சிறப்பிதழின் பிரதிகளை நாங்கள் இலண்டனுக்குப் புறப்படுவதற்கு முன்னரே விமானப் பொதியில் அனுப்பி வைத்தோம்.
விழாவை இலண்டனில் ஏற்பாடு செய்வதில் அதிக அக்கறையுடன் செயற்பட்டவர்களில் நூலியலாளர் திரு. செல்வராஜா அவர்களும்
முக்கியமானவர்.
இந்த விழாவுக்கு யார் யாருக்கு அழைப்பிதழ்கள் கொடுக்க வேண்டும் என ஆலோசனை கூறியதோடு தனது சார்பிலும் பலரை விழாவுக்கு அழைத்துச் சிறப்புச் செய்தவர் இணுவில் திரு. சச்சிதானந்தன் அவர்கள். இவர், உரும்பராய் இந்துக் கல்லூ ரியில் நான் மாணவப் பருவத்தில் எழுதித் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

9
தி.ஞானசேகரன்
எழுதும் இலண்டன் - பயண. அபைவங்கள்
="24
.r-G+42:/-:ஈக்க":12:76-41::l: ஈழ14.1-
19:ா
--
எ:
F-கம்
ர:57 +++++ஓடிவி
எக்க..
----------.::
+ த் +E9) = 3-44-4 = ;
தயாரித்து நடித்த நாடகமொன்றில் நடித்தவர். இலண்டனில் லூசியம் சிவன்கோயில் நிர்மாணத்தில் பெரும்பங்காற்றியவர். சமூக மேம்பாட்டுச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருபவர்.
இந்த வெளியீட்டு விழா 24-08 2013 அன்று மாலை இலண்டன் லூசியம் சிவன் கோயிலில்
சுடரொளி ஆசிரியர் திரு. ஐ. ரி. சம்பந்தன் » அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
ஐ.ரி. சம்பந்தன் அவர்கள் சுடரொளி வெளியீட்டுக் கழகம் என்ற அமைப்பினூடாகப் பல இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர். சமூக சேவையாளராகவும் விளங்குபவர். ஞானம் சஞ்சிகையுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பிருந்தது. 'கலைச்செல்வி' ஆசிரியர் சிற்பி சரவணபவன் அவர்களது பவளவிழா மலரை 'ஞானம்' வெளியிடுவதற்கு பலவழி களிலும் பக்கபலமாக நின்று செயற்பட்டவர்.
திரு மு. நித்தியானந்தன், இளைய அப்துல்லா, திரு. தி .பிரபாகரன் ஆகியோர் விழாவில் நூல்விமர்சனம் செய்தார்கள். இவர்களில் திரு. மு. நித்தியானந்தன் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளராக இருந்த காலத்தில் நான் எழுதிய 'குருதிமலை' நாவலுக்கு குரும்பசிட்டி சன்மார்க்க சபை நடத்திய அறிமுக விழாவில் விமர்சன உரை நிகழ்த்தியவர். இளைய அப்துல்லா இலங்கையில் இருந்த காலத்திலும் இங்கி லாந்து சென்ற பின்னரும் 'ஞானம்' சஞ்சிகை யில் சிறுகதைகள், கவிதைகள் எழுதியதோடு
31

Page 34
'மற்றவை நேரில்' என்ற பத்தியையும் தொடராக எழுதியவர். இலண்டன் 'தீபம்' தொலைக்காட்சியில் பணிபுரிந்த ஊடகவியலாளர். இவர்கள் மூவரது விமர் சனங்களும் வெவ்வேறு கோணங்களில் மிகவும் கனதியானவையாக அமைந்தன.
விழாவை மங்கல விளக்கேற்றி ஆரம் பித்ததோடு முதற்பிரதியையும் பெற்றுச் சிறப்பித்தவர்கள் டாக்டர் நவரட்னம் தம்பதிகள். இத்தம்பதிகள் இலங்கையில் இருந்த காலத்தில் எனது பெரிய தந்தையாரான பிரம்மஸ்ரீ. து. குமாரசாமி ஐயர் அவர்களைத் தமது குருவாக ஏற்று அவருடன் நெருக்கமாக உறவு பூண்டிருந்தவர்கள்.
கருத்துரை வழங்கியவர் இங்கிலாந்தில் பிரபல சட்டத்தரணியாக விழங்கும் பஷீர் அவர்கள். இவர் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச இலக்கிய விழாவிலும் உலக இலக்கிய மாநாட்டிலும் பங்குபற்றி ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்த காலத்தில் என்னோடு தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டவர்.
இந்த அறிமுக விழா எமக்குப் பெரிதும் மன நிறைவைத் தந்த விழாவாக அமைந்ததோடு எமக்குத் தெரிந்த பல நண்பர் களையும் சந்தித்து அளவளாவக் கூடிய சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
இனி இலண்டனில் இருந்த காலத்தில் நான் அவ்வப்போது அவதானித்த சில விடயங்களை இங்கு பதிவு செய்ய விளைகிறேன்.
இலண்டனில் உள்ள வீதியோரங்களில் நடந்தால் எதிரே எப்படியும் ஒரு இலங்கைத் தமிழரையோ அல்லது இந்தியத் தமிழரையோ காண முடிகிறது.
பல இலங்கை இந்திய உணவுக் கடைகள் மற்றும் பலசரக்குக் கடைகள் ஆங்காங்கே காணப்படுகின்றன.
இந்தியாவில் இருந்து வந்த குஜராத்திக் காரர்களின் துணிக்கடைகள், மினி மார்க்கட்டு களையும் சைனாக்காரர்களின் வியாபார ஸ்தலங்கள் பலவற்றையும் காணக்கூடியதாக இருக்கிறது.
இந்திய சினிமாப்பட 'சீ.டீ'க்கள் கடை களில் தாராளமாகக் கிடைக்கின்றன. இந்தச் 'சீ.டீ.'களில் இந்திய தமிழ் ஹிந்தி சினிமாக்களைப் பார்ப்பது இலண்டன் வாழ் தமிழ்மக்களின் பொழுது போக்காக இருக்கிறது. வீட்டில் வளரும் அடுத்த சந்ததியின் காதுகளில் தமிழ்ச் சொற்கள்
32

விழவும் தமிழர்வாழ்க்கை முறைகளை அவர்கள் தெரிந்து கொள்ளவும் தமிழரின் பண்பாட்டு அம்சங்களை தெரிந்து கொள்ளவும் இந்திய தமிழ்ச் சினிமாக்கள் உதவுவதாக சில பெற்றோர்கள் நம்புகிறார்கள்.
இலண்டனில் உள்ள ஒவ்வொரு ஊர்களில் அருகிலும் ஒவ்வொரு பூங்கா அமைத்திருக்கிறது. அங்கு தேகப்பயிற்சி செய்பவர்கள், சிறுவர்களைப் பூங்காவுக்கு அழைத்து வருபவர்கள், காற்றோட்டமாக அமர்ந்து புத்தகம் வாசிப்பவர்கள், சைக்கிள் ஓடப்பழகுபவர்கள், எனப் பல்வேறு வகையான பொழுது போக்குகளிலும் ஈடுபடுபவர்களையும் காணலாம்.
நான் முன்னர் குறிப்பிட்ட இலண்டன் பிறிட்ஜ்ஜின் சிறிது தூரத்தில் மாவீரன் நெல்சன் நினைவுச் சதுக்கம் (Nelson's Coloumns) அமைந்திருக்கிறது. நெல்சன் ஒரு கடற்படைத் தளபதியாக விளங்கியவன். 1805ல் பாரிய கடல்யுத்தம் ஒன்று பிரான்ஸ் நாட்டுக்கும் ஆங்கிலக் கடற்படைக்கும் இடையில் நடந்தது. அந்தப்போரில் பிரான்ஸ் கடற்படையைத் தோல்வியுறச் செய்த நெல்சனின் நினைவாக 170 அடி உயரத்தில் ஒரு தூணை எழுப்பியுள்ளார்கள். இத்தூ
ணின் அடிப்பாகத்தில் நாற்புறமும் பெரிய சிங்கங்களில் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ன. நெல்சனின் உருவச்சிலையும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. இச்சதுக்கத்தை அழகுபடுத்த நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. எப்போது பார்த்தாலும் இந்தச் சதுக்கத்தின் அருகில் சுற்றுலாப்பயணிகள் நிறைந்து காணப்படுகின்றனர். நூற்றுக்கணக்கான மாடப்புறாக்கள் அங்கு காணப்படுகின்றன. இந்தப்புறாக்கள் சுற்றுலாப்பயணிகளைச் சூழ்ந்து கொண்டு அவர்கள் கொடுக்கும் உணவுகளை உண்பதோடு அவர்களைச் சுற்றித் திரிகின்றன. சில் அவர்களது தோள்களில் அமர்ந்து மகிழ்வூட்டுகின்றன.
அங்கிருந்து சற்றுத் தூரம் நடந்து சென்றால் பேச்சாளர் பகுதி (Speakers's Corner) என்ற இடத்தை அடையலாம். அந்த இடத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் வந்து கூடுவார்களாம். அந்த இடத்தில் இருந்து நீங்கள் எதைப்பற்றியும் பேசலாம், யாரையும் விமர்சிக்கலாம் உங்கள் பேச்சைக்கேட்க ஒரு கூட்டம் தயாராக இருக்கும்.
எமது நாட்டில் இனவிடுதலைக்கான போர் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

Page 35
Winston Churchill
- நler)
1 III
Speakers's Corner -
உச்சம் பெற்றிருந்த காலகட்டத்தில் எம்மவர்கள் பலர் இந்த இடத்தில் இருந்து போருக்கான நியாயப்பாட்டை விளக்கினார்கள் என்றும் அறிய முடிகிறது. இந்த பேச்சாளர் பகுதியில் பல அரசியல் தலைவர்கள் பேச்சுக்கலையில் பயிற்சி பெற்றார்கள் எனவும் கூறுகிறார்கள். இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்துக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்த வின்ஸ்டன் சேர்ச்சில் தனது பேச்சுக்கலையை வளர்த்துக் கொண்டதும் இந்த இடத்திலேதானாம்.
இலண்டன் நகர் பல்லின மக்களின் வதிப்பிடம் என்பதை - ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்தேன். ஆபிரிக்கா ஆசியாக் கண்டங்களில் இருந்து சென்றவர்கள் சீனா, இத்தாலி கிறீஸ், துருக்கி சைபிரஸ் போலந்து, அவுஸ்திரேலியா, நியூசீலாந்து மற்றும் கனடா அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்தும் மக்கள் பிரித்தானியாவுக்குள் சென்று குடியேறி யிருக்கிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றியம் (European Union) என்பது இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஐரோப்பாவில் அரசியல் மற்றும் பொருளாதார ஒற்றுமை ஏற்பட நிறுவப்பட்ட அமைப்பாகும். போருக்குப்பின் நடைபெற்ற சமுதாய மறுசீரமைப்புப் பணியின் முக்கிய அம்சமாக ஐரோப்பிய ஒன்றியம் உருவானது. 1993 நவம்பர் 1 ஆம் தேதி 'மாசுடிரிச்' ஒப்பந்தம் செயல்படத்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172

தொடங்கியபோது ஐரோப்பிய ஒன்றியம் முறைப்படி நிறுவப்பட்டது. காலத்துக்குக் காலம் பலவேறு ஐரோப்பிய நாடுகள் இவ்வமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. இறுதியாக 2007இல் ரூமேனியா, பல்கேரியா ஆகிய நாடுகள் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்ட
சா ப க :
Nelson's Coloumns
திலிருந்து பிரித்தானியா எதிர்பாராத பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். ஐரோப் பிய ஒன்றியத்தில் இதுவரை டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நோர்வே, சுவீடன், நெதர்லன்ட், சுவிற்சலாந்து உட்பட 31
33

Page 36
51
நாடுகள் அங்கத்துவ நாடுகளாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் பிரித்தானியாவுக்குள் வீஸா பெறாமலே உள்நுழைய முடியும். இதனைப் புலம்பெயர்ந்து சென்ற நம்மவர்களில் பலர் தமக்குச் சாதகமாகப் பயன் படுத்து வதைக் காணமுடிகிறது. ஐரோப்பிய நாடு களில் அந்தந்த நாட்டின் மொழியைக் கற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் இருக் கிறது. அந்த நாட்டின் மொழியிலேதான் கல்விகற்க வேண்டியுமுள்ளது.
இதனைத் தவிர்ப்பதற்காக அனேகர் பிரித்தானியாவில் தம்பிள்ளைகளின் ஆங்கில மொழிக் கல்விக்காக இலண்டனை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.
ஐரோப்பிய நாடுகளில்
இருந்து வருபவர்கள் பிரித்தானியாவிலேயே தங்கி விடுகிறார்கள். இவர்கள் சொந்தமாக இங்கு வீடுகளை வாங்குவதால் வீடுகளின் விலை ஏறிக்கொண்டே போகிறது. தொழில் வாய்ப்புகளைப் பெறுவதிலும் கடும் போட்டி நிலவுகின்றது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு வருபவர்களுக்கு விஸா அனுமதி தேவையற்றிருப்பதினால் எப்படியான ஒருவர் நாட்டிற்குள் வருகிறார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது. சட்ட விரோதக் குடியேற்றக்காரர்கள், போதைப் பொருள் கடத்துவோர் ஆள் கடத்தல்காரர்கள், எனப் பலதரப்பட்டவர்களும் உள்நுழைந்து விடுகின்றனர்
ஐரோப்பிய ஒன்றியம் உருவானதிலிருந்து பிரித்தானிய மக்கள் தமது சொந்த நாட்டை விட்டு வெளியேறி வெற்று நாடுகளில் புகலிடம் தேடிக்கொண்டிருப்பதாகவும் அந்த நிலைமைக்குக் காரணம் அரசாங்கத்தின் ஐரோப்பியக் கொள்கையே என ஒரு சாரார் அரசியல் கண்டனங்கள் தொடுக்கிறார்கள்.
எனது உறவினர் ஒருவர் டென்மார்க்கில் நீண்டகாலம் வாழ்ந்தவர் தற்போது இந்த ஐரோப்பிய ஒன்றிய உடன்படிக்கையின் பிரகாரம் இலண்டனுக்கு வந்து இலண்டன் வாசியாகிவிட்டார். அதற்கான காரணத்தை நான் வினவியபோது தனக்கும் மனைவிக்கும் டென்மார்க்கிலிருந்து மாதா மாதம் பென்ஷன் வருவதாகவும் அதனைப் பெற்றுக்கொண்டு இலண்டனில் தான் வேறு தொழில்பார்த்து வாழ்வதாகவும் கூறினார். தனது பிள்ளைகளின் 34

பத்மநாப ஐயருடன் ஆசிரியர் எதிர்காலத்திற்கு இலண்டன் வாழ்க்கையே எற்றது என்றும் கூறினார்.
பிரித்தானியாவில் தமிழரின் பாரம்பரிய இசைநடன கலைகளைப் பயில்வதற்கு அதிக வசதிகள் இருப்பதாக அறிந்தேன். இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலில் இத்தகைய பாரம்பரியக் கலைகள் வளர்வதைவிட
இங்கு அதிக வசதிகளுடன் வளர்ச்சியடைவதாகக் கூறு கிறார்கள். தகுதிபெற்ற 50க்கும் மேற்பட்ட இசை நடன ஆசிரியர்கள் இங்கு இருப்பதாக அறிய முடிந்தது. சில பாடசாலைகளிலும் ஆலயங்களிலும் இலவச இசை நடன வகுப்புகள் இடம்பெறுகின்றன.
பிரித்தானிய அரசு 60 வயது நிறைவடைந்தவர்களுக்குப் பல சலுகைகளை வழங்குகிறது. ரயில் பேருந்துப் பயணங்களுக்கு இலவச பாஸ்களை வழங்குகிறது. 65 வயதாகிவிட்டால், பராமரிப்புச் செலவாக ஒரு தொகைப்பணத்தை வாராவாரம் வழங்குகிறது. இதைத்தவிர இருப்பிட வசதியையும் அதற்கான வாடகைப் பணத்தையும் வழங்குகிறது.
ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்த அனேகர் இத்தகைய வசதிகளைப் பெற்றுள்ளனர். தஞ்சம் கோரி வந்தவர்களுக்கும் இத்தகைய வீட்டுரிமை கிடைக்கிறது. இதன்காரணமாக தஞ்சம் கோரி வந்தவர்களில் அநேகர் சபையால் வழங்கப்படும் வீடுகளில் வசிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
எனது பால்ய நண்பன் ஒருவனைச் சந்தித்தபோதுதான் இத்தகவல்களை நான் அறிந்து கொண்டேன். அவனது பெயர் ஸ்ரீராமச்சந்திரன். நானும் அவனும் சிறு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

Page 37
பராயத்தில் இணைபிரியாத நண்பர்களாக இருந்தோம். சிறுவயதில் நான் வாசிப்புப் பழக்கத்தை மேற்கொள்ளவும் காலக்கிரமத்தில் எழுத்தாளனாக உருவாகுவதற்கும் அவனது நெருக்கமான நட்பு பெரிதும் உதவியிருக்கிறது. அந்த நண்பன் இலண்டனில் வாழ்கிறான் என்ற செய்தியை நான் ஏற்கனவே அறிந்திருந்தேன். இந்த நண்பனை நீண்டகாலத்தின் பின் நான் தேடிச்சென்று அளவளாவி மகிழ்ந்தேன்.
பிரித்தானிய வெள்ளைக்கார இளைஞர்கள் அனேகமாக
இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்களை விரும்பித் திருமணம் செய்வதையும் சமீப காலங்களில் அவதானிக்க முடிகிறது. அதற்கான அங்கீகாரத்தை பெண் களின் பெற்றோர்களும் வழங்கும் காலம் கனிந்திருப்பதாகவே தோன்றுகிறது. எப்படி யெனில் முதலில் தாலிகட்டும் திருமணம் தமிழ் முறைப்படி நடைபெறுகிறது. அடுத்து கிறிஸ்தவ தேவாலயத்தில் இடம்பெறுகிறது. இந்தத் தமிழர்களின் போக்கு இந்துக்களின் மதமாற்றத்துக்கும் இட்டுச்செல்வதாக ஒரு நண்பர் குறைப்பட்டுக் கொண்டார்.
இந்தப்பயணத்தில் எனது பள்ளிப்பருவ சகமாணவர்கள் சிலரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சுந்தரலிங்கம் பள்ளிப்பருவத்தில் நான் எழுதித் தயாரித்த நாடகத்தில் நடித்தவர். கனகாம்பிகை, சோமசுந்தரி ஆகியோர் உயர்வகுப்பில் என்னோடு கல்விகற்றவர்கள். இவர்களைவிட
எனது கிராமமாகிய புன்னாலைக்கட்டுவன் கிராம முன்னேற்றத்தில் என்னுடன் தொடர்பு கொண்டு உழைத்து வரும் சூரிய நாராயணன் ஆகியோர் குறிப்பிடப்பட வேண்டியவர்கள்.
இவர்களை நான் சந்தித்தபோது அறிந்து கொண்ட முக்கிய விடயம் யாதெனில் இவர்கள் புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழ்ந்ததில் கிடைத்த பெரும்பேறு இவர்களது அடுத்த சந்ததி கல்வியில் உச்சங்களைத் தொட்டதுதான் என நினைக்கிறேன். எமது நாட்டில் உயர்கல்வி பெறுவதில் இருக்கக்கூடிய தடைகள் எதுவும் அங்கு இல்லை. பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கொள்வதற்கான தரப்படுத்தல்கள் எதுவும் அங்கில்லை. திறமைசாலிகள் பல்கலைக் கழகங்களில் சேர்ந்து பல்வேறு துறைகளில் பட்டதாரிகளாகி விடுகிறார்கள். சட்டத்துறை, கணினி, கணக்காளர், வைத்தியத்துறை உட்பட இன்னும் பல துறைகளில் இவர்களது பிள்ளைகள் முன்னணி வகிக்கிறார்கள். ஆங்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

கிலம் நாட்டின் அரச மொழியாக இருப்பதும் இதற்கான வாய்ப்பை அதிகரித்திருக்கிறது.
இலக்கியத் துறையில் ஆர்வமுள்ள இளந்தலைமுறையொன்றும் உருவாகி வரு வதையும் அறிந்து கொண்டேன். நூலியலாளர் என். செல்வராஜாவின் மகள் மெளலியா பதின்மூன்று வயது நிரம்பியபோதே ஆங்கிலத்தில் இரண்டு சிறு நாவல்களை எழுதியுள்ளார். பத்து வயதிலேயே இவர் எழுதிய Dangerous New World என்ற நூலினை எழுதி அப்போது பிரதமராக இருந்த Tony Blair இன் பாராட்டைப் பெற்றிருக்கிறார். இவரது மற்ற நூல் Secret of Mansion என்பதாகும். அத்தோடு சிறுகதைப்போட்டி ஒன்றில் 'Turning a New Leaf' என்ற சிறுகதையை எழுதி முதற்பரிசினைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப் பிடத்தக்கது.
இவற்றைவிட, உள்ளூராட்சி நகர மன்றத் தேர்தல்களிலும் பல ஈழத் தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். சசிகலா என்ற பெண் தெரிவு செய்யப்பட்டு கவுன்சிலராக இருந்திருக்கிறார். கல்வி தொடர்பான விட யங்களில் இலங்கைத் தமிழர்கள் பெரும் பாய்ச்லை ஏற்படுத்தியுள்ளார்கள் என்பதை நான் சந்தித்த நண்பர்கள் பலரும் எடுத்துக்
கூறினார்கள்.
இலண்டனில் இருந்த கால கட்டத்தில் நான் சந்தித்த முக்கிய இலக்கியப் பிரமுகர்களில் ஒருவர் திரு பத்மநாப ஐயர். இவர் ஈழத்து இலக்கியத்துக்குப் பெரும் பங்காற்றி வரும் இலக்கிய ஆர்வலர். ஈழத்து இலக்கிய உலகில் மட்டுமல்ல, தமிழக இலக்கிய உலகிலும் நன்கு அறியப்பட்டவர். வெளியீட்டுத் துறையிலும் ஆக்கங்களைத் தொகுப்பதிலும் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர். தரமான, நேர்த்தியான பல நூல்களைப் பதிப்பித்தவர். தனது வாழ்வில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்து இலக்கியத் துறையிலும் வெளியீட்டுத் துறையிலும் தனக்கென ஒரு முத்திரையை பதித்துக்கொண்டவர். இலக்கியப் பங்களிப்புக்காக கனடிய இயல் விருது பெற்றவர். இலண்டன்
தமிழர் நலன்புரிச்சங்க ஆண்டுத் தொகுதிகளாக அவர் வெளிக்கொணர்ந்த 'கிழக்கும் மேற்கும்', 'இன்னுமொரு காலடி', 'யுகம் மாறும்' 'கண் ணில் தெரியுது வானம்' ஆகியவை அவர் பதிப்பித்த நூல்களில் பெரும் வரவேற்பைப் பெற்றவை,
35

Page 38
Sch
auth
பிரித்தானிய பிரதமரால் பாராட்டப்பட்ட
மெளலியா செல்வராஜா பிரதமரின் மனைவி செர்ரி பிளேயருடன்
இலண்டனில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் எனது ஆய்வுக்கட்டுரை வாசிக் கப்பட்டபின் அவர் என்னை நேரில் சந்தித்துப் பாராட்டினார். அதன்பின்னர்
அவரது இல்லத்திற்கு இரண்டு தடவைகள் சென்று நாம் அவரை சந்தித்தோம். அச்சந்திப்புகளின் போது அவர் பல பயன்மிக்க நூல்களை எமக்கு அன்பளிப்புச் செய்தார். அத்தோடு எம்மிடம் ஒரு வேண்டுகோளையும் முன்வைத்தார். 'ஈழத்துப் புலம்பெயர் இலக்கியத் தொகுப்பை வெளிக்கொணரவேண்டும் அதற்கான கட் டமைப்பு தற்போது ஞானத்திடம் உள்ளது எனக்கூறி உற்சாகப்படுத்தினார்.
இலக்கிய கர்த்தாக்களில் என்னை வந்து சந்தித்தவர்களில் டாக்டர் அம்பி அவர்களும் முக்கியமானவர். அவர் ஞானம் சஞ்சிகையில் சில ஆக்கங்களை எழுதியுள்ளார். 'கண்டேன் கைாசம்' என்ற பயண இலக்கிய தொடரின் ஆசிரியர் இவர்.
பிரபல எழுத்தாளரான இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் நீண்டகாலம் இலண்டனில் வாழ்பவர். அங்கு கல்விகற்றவர். பெண்ணிய சிந்தனையாளர். பலநாவல்கள் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதிப் புகழ்பெற்றவர். ஞானம் சஞ்சிகையிலும் இவரது கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன. உலக இலக்கிய மாநாட்டில் அவரைச் சந்தித்து இரண்டு நாட்கள் உரையாடும் வாய்புக்கிடைத்தது.
கவிஞரும் சிறுகதை ஆசிரியரும் கட்டுரையாளருமான நவஜோதி ஜோகரட்னம் லண்டன் தமிழ் தொலைக்காட்சியிலும் 36

polgirl
or gets e from y Blair
4 பாப்பா பாபா காயம்
வானொலியிலும் அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்து அனுபவம்மிக்கவர். ஞானம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப்போட்டிகள் சிலவற்றில் பரிசுகள் பெற்றவர். அவர் தற்போது பாமுகம் FA TV யில் அறிவிப்பாளராகவும் மகரந்தச் சிதறல் என்ற நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் விளங்குகிறார். அவர் என்னையும் மனை வியையும் தனித்தனியாக பேட்டிகண்டு தலா அரை மணிநேர தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒளிபரப்புச் செய்தார். இந்தப் பேட்டி நிகழ்ச்சிகளில் நேயர்கள் பங்குகொள்ளும் நிகழ்சியாக சுவாரஸ்யம் மிகுந்ததாக அமைந்தது
இந்த இலண்டன் பயண இலக்கியத் தொடர் இந்த அத்தியாயத்தடன் நிறைவு பெறுகிறது. எமது இலண்டன் பயணம் வெற்றிகரமாக அமைய பெரிதும் உதவியவர்கள் எனது மைத்துனர் பா. சுதாகரன் அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் குறிப்பாக அவர்களது மகள் சந்தியாவும்தான். அவர்களின் உதவியால்தான் நாம் இலண்டனில் பல இடங்களையும் சுற்றிப்பார்க்க முடிந்தது. அவர்களுக்கு எமது அன்பையும் நன்றியையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
இத்தொடரை அவ்வப்போது வாசித்து உற்சாகமூட்டிய வாசகர்களுக்கும் எமது நன்றி உரியது.
(முற்றும்) 0 0 0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டொபர் 2014 (172)

Page 39
மொழி
புதிய
செ
வாகரைவாணன்
ஒரு மொழியின் வளர்ச்சியில் அதனோடு வந்து இணையும் புதிய சொற்களுக்கும் பெரும் பங்குண்டு என்பதற்கு, உலக மொழியாக விளங்கும் ஆங்கிலம் மிகச் சிறந்ததோர் உதாரணம் ஆகும். இது தொடர்பில் மொழியியல் அறிஞர் டாக்டர் மு.வரதராசனார் தெரிவித்துள்ள கருத்துக்கள் இங்கு குறிப்பிடப்பட வேண்டியவை.
புதிய கருத்துக்கள் பரவும் போது புதிய சொற்கள் ஏற்படுகின்றன. அவை இரு வகைப்படும். ஒன்று, கருத்துக்கள் எந்த மொழியாரிடம் இருந்து வந்தனவோ, அந்த மொழியிலிருந்தே அவற்றிற்கு ஏற்ற சொற்களைக் கடன் வாங்குதல். மோட்டார், பென்ஸிலின் முதலிய சொற்களைத் தமிழ் பெற்றது அப்படியே ஆகும். மற்றொரு வகை, கருத்துக்கள் பரவும்போது அவற்றைக் கற்கும் மக்கள் அம்மொழியிலிருந்து ஓரளவு பொருந்தி வரும் சொற்களை ஆக்கிக்கொள்ளுதல், புகைவண்டி, வானொலி, நீர் மூழ்கி முதலிய சொற்கள் அவ்வாறு தமிழில் அமைந்தனவே ஆகும். (மொழியியற் கட்டுரைகள் பக்கம் - 131)
அறிஞரால் எடுத்துக் காட்டப்பட்ட இருவகைச் சொற்களில் இரண்டாவதாக உள்ள சொற்கள் சாதாரண மக்களாலும் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருப்பதோடு அவை, காரணத்தின் நிமித்தம் உருவான சொற்களாக இருப்பதையும் காணலாம். இத்தகைய சொற்களே ஒரு மொழியின் வளர்ச்சிக்கு உறு துணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
தமிழில் உருவான அல்லது உருவாக்கப் பட்ட சொற்களின் பக்கம் நமது கவனத்தைத் திருப்புவதற்கு முன்பு, ஆங்கில மொழியில், ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

யிெல்
எல்லாக்கம்
1411
புதிய சொற்கள் தோற்றம் பெற்ற விதத்தை ஆய்வுக்கெடுத்துக் கொள்ளலாம். இவ்வாய்வின் ஊடாக ஆங்கிலத்திலும் தமிழிலும் உள்ள புதிய சொற்களுக்கிடையே காணக்கூடிய ஒற்றுமை வேற்றுமையை நாம் உணர்ந்து கொள்ளுதல் கூடும்.
ஆங்கிலச் சொற்களில் பெரும்பாலானவை லத்தீன், கிரேக்கம், ஆகிய இந்தோ - ஐரோப்பிய மொழிச் சொற்களை அடிப்படை யாகக் கொண்டு பிறந்தவை என்பதற்கு அநேக உதாரணங்கள் உண்டு. ஆயினும் விரிவஞ்சி, இந்கு இரண்டொரு சொற்களே முன்வைக்கப்படுகின்றன.
ஆங்கில மொழியில் உள்ள LIBRARY என்னும் சொல், புத்தகம் என்னும் பொருள் தரும் LIBER என்னும் லத்தீன் சொல்லையும் ஒழுங்கு - அல்லது வரிசை என்னும் கருத்தினைத் தரும் ARRAY என்னும் பழைய ஆங்கிலச் சொல்லையும் ஆதாரமாகக் கொண்டே பிறந்தது. ஆனால் இச்சொல் சிறிது
வேறுபாட்டோடு 'நூலகம்' என்று தமிழில் வழங்குகின்றது. இவ்வேறுபாட்டிற்கு 'அகம்' என்னும் சொல்லின் பொருளே காரணம் ஆகும். ஆயினும் எத்தகைய விமரிசனமும் இன்றித் தமிழுலகம் இதனை ஏற்றுக்கொண்டு விட்டது.
இச்சொல் போன்றே, HOSPITIUM அல்லது HOSPITUS என்னும் லத்தீன் சொல்லை அடியாகக் கொண்டு உருவான HOSPITAL என்னும் சொல், எங்கிருந்து எவர் வந்தாலும் அவரை விருந்தினர் போல வரவேற்கும் இடம் என்னும் கருத்தையே அது தரும். இக்கருத்தினையே அதே சொல்லின் அடியாகப் பிறந்த HOSPITALITY என்னும் சொல்லும் உணர்த்தும். ஆனால் HOSPITAL
37

Page 40
என்னும் சொல், அதன் அர்த்தத்தையே இழந்து விட்டமையைக் காண்கின்றோம். மேலும், இச்சொல் தமிழில் வைத்தியசாலை என்று வழங்குதல் அதன் மூலச் சொல்லின் (HOSPITAL) கருத்திற்கு முற்றிலும் மாறுபட்டது ஆகும். ஏனெனில் வைத்தியசாலை என்னும் சொல் வைத்தியம் நடைபெறும் இடத்தையே (சாலை - இடம்) குறித்து நிற்கும். இதனையே ஆங்கிலத்தில் DISPENSARY என்பர்.
இவ்விதம் பிறமொழிகளிலிருந்து ஆங் கிலம் எண்ணற்ற சொற்களைக் கடன் வாங்கிக் கொண்டாலும் அது தன் பழைய சொற்களிலிருந்து புதிய சொற்களைப் படைத்துள்ளமைக்கு MONDAY, MONTH ஆகிய சொற்கள் சான்று ஆகும். MOON (நிலவு) என்னும் சொல்லிலிருந்து உருவான இச்சொற்கள் போன்றே, தமிழிலும், திங்கள் என்ற சொல் நிலவையும் மாதத்தையும் குறிக்கும். ENGLAND என்னும் சொல்லும் ENGLISH LAND என்பதன் திரிபு ஆகும். இது ஒரு வகையில் 'தமிழகம்' என்னும் சொல்லைப் போன்றது. ஆங்கில மொழியில் சொற்கள் அமைந்த விதம் இதுதான். மக்களும் அவற்றை மனமார ஏற்றுக்கொண்டனர். மொழியும் மளமளவென வளர்ந்தது.
தமிழில் உள்ள பிறமொழிச் சொற்களில் வடமொழிச் சொற்களே அதிகம் என்பர். ஆனால் இன்றைய மொழியியல் ஆய்வுகள், ஆரியரின் முதல் சமய இலக்கியப் படைப்புக்களான நான்கு வேதங்களிலும் தமிழ்ச் சொற்கள் இருப்பதைக் காட்டுவதோடு புஸ்பம், கலா, ஜலம், தெய்வம் முதலிய சொற்களை பூ, கலை, சலம், தே ஆகிய தமிழ்ச் சொற்களின் சமஸ்கிருத வடிவம் எனவும் கூறுவர். பூ என்னும் சொல் லத்தீன் மொழியில் FLOS எனத் திரிந்து, ஆங்கிலத்தில் FLOWER என மாற்றம் பெற்றதென அதே ஆய்வுகள் வெளிப்படுத்தும். இப்படி, தமிழ்ச் சொற்கள் பல சமஸ்கிருதம் உட்பட பிறமொழிகளில் உருமாறி இருப்பதை தமிழ் உலகம் இன்னும் சரிவர அறியவில்லை என்பது தமிழார்வலர்களைப் பொறுத்தவரையில் பெரும் ஆதங்கம் ஆகும்.
ஆங்கில மொழி போன்றே, தமிழில் உள்ள பழைய சொற்களில் இருந்தும் புதிய சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு மின் என்னும் சொல்லைக்
38

காட்டலாம். இதிலிருந்தே மின்னல், மினுமினுப்பு மின்மினி, மின்கலம், மின்மானி , மின்னஞ்சல், மீன் முதலான சொற்கள் பிறப்பெடுத்துள்ளன. இது போன்றே, கொள் என்னும் பழந்தமிழ்ச் சொல்லில் இருந்தே, கொள்கை, கோட்பாடு, கோள், கொள்முதல் முதலான சொற்கள் தோன்றின.
இக்காலத்திலும், தமிழ் ஆங்கில மொழிகளில் மட்டுமன்றி பிறமொழிகளிலும் புதிய சொற்கள் உருவாகின்றன. இது இயல்பு ஆகும். எனினும் நம் தாய்மொழி தமிழில் உருவாக்கப்படும் புதிய சொற்களில் பல தெளிவற்று படித்தவர்களால் கூட புரிந்துகொள்ள முடியாதவையாகவுள்ளன. அத்தகைய சொற்களில் சில இங்கு ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அவை அனைத்தும் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்களால் உருவாக்கப்பட்டவை ஆகும்.
பேராசிரியர் அவர்கள் கல்வித்துறை சார்ந்த அறிஞர்களில் ஒருவர். கட்டுரைகள் ஊடாக மக்கள் கவனத்தைத் தம் பக்கம் திருப்புபவர். ஆனால், அவரது மொழிநடை போல் அவரால் உருவாக்கப்படும் புதிய சொற்களும் பலராலும் விமர்சிக்கப்படுபவை. இவ்வாய்வுரை, 'ஞானம்' சஞ்சிகையில் (மே,யூலை இதழ்கள்) வெளிவந்த அவரது கட்டுரையில் உள்ள எட்டுச் சொற்களை மட்டுமே இப்போது ஆய்விற்கு எடுத்துக்கொள்கிறது.
அச்சொற்களில் முதலில் ACTIVIST என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு அவர் தந்துள்ள 'வினைப்படுவோர்' என்னும் சொல்லை எடுத்துக் கொள்வோம். ACTIONIS என்னும் லத்தீன் சொல்லை மூலமாகவுடைய அச்சொல்லுக்குப் பதிலாகப் பலரும் நன்கறிந்த 'செயல்' என்னும் சொல்லைப் பகுதியாகக் கொண்ட செயற்படுவோர் என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம். ஏனெனில் வினை என்னும் சொல்லுக்கும் செயல் என்றுதான் பொருள். அதே நேரம் வினை என்னும் சொல்லுக்கு விரும்பத்தகாத பொருள் (செய்வினை, தீவினை, வினை விதைத்தவன்) இருப்பதால் செயல் என்னும் சொல்லைப் பயன்படுத்தலே சிறப்பு ஆகும். SECRET என்னும் சொல்லை அடிப்படையாகக் கொண்டு உருவான SECRETARY என்னும் ஆங்கிலச் சொல்லைத் தமிழில் செயலாளர் (செயலை ஆள்வோர்) என்று வழங்குவதும்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெர்பர் 2014 (172)

Page 41
துரித கதியில் விரைவு வழியில்..
சாவைவிழுங்கவும் சவுவந்து விழுங்கவுமென
இருந்தோமிராமி!
இனத்தின் அடையாளங்களை துடைத்தழிக்கவிட்டுவிட்டு
இயலுமானவரை நாமும் மறைத்தே வழிந்து வருகின்றோம்
நாட்ட,நாட்ட நிலக்கரி வைரமாகுமென
அறிந்த நாம்
எம் நாட்களை வெறும் நாட்களாக்கிக்கொண்டிருக்கிறோம்
விடுதலை பற்றிய கனவுகளுடன்
விரிந்த சிறகுகளை
* இடுப்புக்கு கிழே இயங்கமுடியாமலாக்கிவிட்டு
ஒருவேளை உணவுக்கு அல்லலிட வைத்துவிட்டோம்!
இங்கு மனம் கொள்ளத்தக்கது.
இதே போன்று, ACTIVISM என்னும் சொல்லுக்கு 'வினைப்பாட்டு வாதம்' என்று பொருள் தந்திருப்பது எத்தனை பேருக்குப் புரியும்? அதில் உள்ள ISM என்னும் சொல்லுக்குக் கோட்பாடு என்று அர்த்தம். இதன்படி அச்சொல்லைச் செயற்பாட்டுக் கோட்பாடு, அல்லது செயற்பாட்டுத் தத்துவம் (முதலாளித்துவம் என்ற சொல் போல) என்றே வழங்குதல் வேண்டும். வினைப்பாட்டு ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

ரளவில் மட்டுமே இன்று எல்லாமும்
கிதருக்களை கொண்டாடுகின்றன ரணித்துவாரங்கள் துளசிச்செடி தீட்டுப்பாட்டு கருகிப்போன அரலிச்செறமுளைத்திருக்கிறது நமாற்றத்தில்
ஆண்குறி சைமா?அசைவமா? பற்றமன்றம் நடத்துகிறது இலக்கியம்
1554
- "ஸ்ட்ரா? குமருகளிடம் பொலிஸ்காரன் போன்நம்பரி அண்ணன், தம்பி சட்டைப்பைக்குள் - ஆணுறைகள்
முப்பாள் அந்த முண்டாசுக்கவிஞன் தமிழ் இனமல்லச்சாகுளன்றான் இதோ துரிதகதியில் വിദ്ധ്യ ത്തിൽ
மு.யாழவன்
வாதம் என்பது கருத்து முதல்வாதம் என்னும் சொற்றொடரை ஒட்டி அமைந்தது போலத் தோன்றுகிறது.
VISUS என்னும் லத்தீன் சொல்லுக்குப் பார்வை (SIGHT) என்று பொருள். இதிலிருந்தே VISUAL என்னும் சொல் பிறந்தது. இதனைக் காண்பியம் என்று குறிப்பிடுவதை விடுத்து, காண்கை (இதற்கு அறிவு, காணுதல் என்று பொருள்) என்று கூறுவது தக்கது. காண்பியம் என்னும் சொல்லுக்கு காண்பதை இயம்புதல்
39

Page 42
(இயம் - இயம்புதல்) என்றே பொருள். பேராசிரியர் வேறு சில சொற்களிலும் பொருத்தம் இன்றி இச்சொல்லைப் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம்.
RESIST என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு மூலமாக இருப்பது SISTO என்னும் லத்தீன் சொல் ஆகும். இதற்கு நிறுத்து என்று பொருள். எனவே RESISTANCE என்னும் சொல் தமிழில் தடுத்து நிறுத்துதல் என்றே, வழங்குதல் வேண்டும். பேராசிரியரின் 'எதிர்விசைப்பு' என்றால் என்னவென்றே புரியவில்லை.
BINARY என்னும் ஆங்கிலச் சொல் BINUS என்னும் லத்தீன் சொல்லில் இருந்தே பிறந்தது. இதற்கு இரண்டு இரண்டாக (TWO BY TWO) அல்லது இரு துண்டுகள் (TWO PIECES) என்றே பொருள். ஆனால் இது இரு கோடல் எனப்படுகிறது. கோடல் என்னும் சொல்லுக்குக் கொள்ளல் வளைதல், மனம் குன்றுதல் என்றல்லவா பொருள்?
OXFORD DICTIONARY யின்படி ECLECTIC என்னும் ஆங்கிலச் சொல் EKLEIPSIS என்றும் கிரேக்க மொழிச்சொல்லை வேராகக் கொண்டது. இதற்கு, பலவற்றிலிருந்தும் பொருத்தமானவற்றைத் தெரிந்தெடுத்தல் என்று பொருள். எனவே, மேற்படி ஆங்கிலச் சொல்லுக்குத் 'தக்கது தெரிதல்' என்னும் சொல்லே பொருத்தமானது. நலன் என்னும் சொல்லுக்கு சுகம் என்றும் பொருள் உண்டு அல்லவா?
ஓரம் அல்லது விளிம்பு என்னும் தமிழ்ச் சொல் ஆங்கிலத்தில் MARGIN என வழங்கும். இது MAR GOINS என்னும் லத்தீன் சொல்லை மூலமாகக் கொண்டது. இப்பொருளின் அடிப்படையிலேயே பேராசிரியரால் ஓரம் கட்டப்பட்டவர் என்னும் சொல் தரப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு ஒதுக்கப்பட்டோர் என்னும் சொல் ஒத்த சொல் அன்று. எனவே REJICID என்னும் லத்தீன் சொல்லில் இருந்து உருவான REJECTED என்னும் சொல்லே அதற்கு ஏற்றது ஆகும்.
DEMOCRACY என்னும் ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் மக்களாட்சி என்னும் பொருள் இருப்பதைக் கவனத்தில் கொண்டே பேராசிரியர் BUREUCRACY என்னும் சொல்லுக்குப் பணியாட்சி என்று பொருள் தந்திருப்பதுபோல் தெரிகிறது.
40

ஆனால் மக்கள் ஆட்சி என்பது, மக்களின் ஆட்சி, மக்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி என்றெல்லாம் பொருள் தரும். இவ்விதம், பணி ஆட்சி என்னும் சொல் பொருள் தருமா? உயர்திணையும் அஃறிணையும் ஒன்றாக முடியுமா? எனவே, OXFORD அகராதியின்படி, அலுவலகம் அல்லது திணைக்களம் என்னும் பொருள் தரும் BUREAU என்னும் பிரென்சுச் சொல்லையும் CRACY என்னும் கிரீக் சொல்லையும் ஒன்றாகக் கொண்ட அச்சொல்லுக்கு அதே அகராதியின்படி விசேட பணி அலுவலகம் அல்லது திணைக்களம் (DEPARTMENT FOR SPECIFIC BUSINESS) என்றே பொருள் தருதல் வேண்டும்."
தமிழில் ஏற்கனவே பல புதிய சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில், பண்பாடு, புரட்சி, நவீனம் ஆகிய சொற்களை இங்கு உதாரணமாகக் காட்டலாம். பண், பண்பு என்னும் பழந்தமிழ்ச் சொற்களையும் CULTURA, CULTURE ஆகிய லத்தீன், ஆங்கிலச் சொற்களின் கருத்தையும் உள்ளடக்கியே அச்சொல் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே கலாசாரம் என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்குப் பதிலாக பண்பாடு என்னும் சொல்லே பயன்படுத்தப்படுதல் வேண்டும்.
பண்பாடு என்னும் சொல் போன்றே புரட்சி என்னும் சொல் REVOLVO என்னும் லத்தீன் சொல்லையும் நவீனம், நவம் (நவகவிதை) என்னும் சொற்கள், NOVUS அல்லது NOVO ஆகிய லத்தீன் சொல்லையும் மூலமாகக் கொண்டவை. சமஸ்கிருதமும் , லத்தீனும் சகோதரமொழிகள் என்பதால் நவ , NOVO என்னும் சொற்களுக்கிடையே உள்ள நெருங்கிய தொடர்பு புரிந்து கொள்ளக்கூடியதொன்று.
ஒரு மொழியில் சொல்லாக்கம் என்பது எளிதான செயல் அன்று. அது பன்மொழிப் புலமைக்கும் ஆய்விற்கும் உரியது. இக்கட்டுரையில் ஆய்விற்கெடுத்துக் கொள்ளப்பட்ட சொற்களுக்குப் பதிலாக முன்வைக்கப்பட்ட சொற்களின் உருவாக் கத்திலும் தவறுகள் இருந்தால் அவற்றைக் கல்விமான்கள் சுட்டிக் காட்டலாம். திருத்தம் தேவையானதொன்று. புதிய சொல்லாக்கத்திற்கு இது பேருதவியாக அமையும்.
0 0 0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

Page 43
வரலாற்றைத் தெ
ni EEE "
நிவேதா உத்யரா இங்கிலாந்தில் வாழும் ஈழம் வரையிலான ஒரு தொலைத்த தமிழர்” எ இந்த சிறு நூலை, வெளியிட்டுள்ளனர். நூலின் இந்திய விளை
முகவுரை உட்பட ஆய்வுக்கட்டுரையிது.
சுமேரியர் பற்றிய என்பவரை நினைவு க ஆசிரியர்.
இந்த நூலாசிரியர் நலம். கடந்த 14 ஆண்டுகளாக இங்கிலாந்த கற்பித்தலில் ஈடுபாடு கொண்டு செயற்பட் அறிந்தது, பிரித்தானிய ஐக்கிய இராச்சியத் பட்டறை ஆசிரியராகவும், பாடசாலை அதிப
இவர் கதை, கவிதை, கட்டுரை, நாட இலக்கியத்துக்குப் பங்களித்து வருகிறார். சம்பாஷிப்பதிலிருந்து அறிந்து கொண்டேன்.
இந்தப் புத்தகம் சுமேரியர் பற்றிய | இவருடைய முடிவுகளை வரலாற்று ஆசி இருந்தபோதிலும் புலமையாளர்கள் இவரு நிலையில் இருப்பதையும் வருத்தத்துடன் அ
இந்த நூலில் எனக்குப் பிடித்த சில இங்கு தருகிறேன். முழு நூலையும் நீங்களே சரியாக இருக்கும்.
தனது முகவரியின் 3ஆவது பந்தியிலே ஒன்றைக் குறிப்பிடுகிறார்.
"மெசொபொத்தேமியாவில் விவசாயத் தனை நாகரீகம் என்னும் பாரிய நகர்வு
பொறிமுறையாக்கப்பட்ட விவசாயம், சுே உன்னத அறிவியல் வளர்ச்சிக்கு உந்த உன்னத சுமேரியரின் வழித்தோன்றல்களே அசைக்க முடியாத நம்பிக்கை மட்டுமன்றி நிறுவவேண்டியவர்களாகவும் உள்ளோம்.
இன்னொரு பகுதியில் இவ்வாறு எழுது
"உலகில் மனித இனம் தோன்றிப் ப தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மாந்த
சமோ கொலமரர்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

- கே.எஸ்.சிவகுமார்
ரயன் என்ற பெண்மணி இலங்கையில் பிறந்து ஓர் ஆய்வாளர். மெசொபொத்தேமியாவிலிருந்து வரலாற்றுப் பார்வையைத் தனது, "வரலாற்றைத் ன்ற தலைப்பில் தந்துள்ளார். படங்களுடன் கூடிய சென்னையிலுள்ள Green Beets நிறுவனத்தினர் மொத்தமாக 64 பக்கங்களைக் கொண்ட இந்த 0 ரூபாய் 40/- ஆகும்.
15 சிறு கட்டுரைகளாக அமைந்த நீண்டதோர்
ஆய்வில் இவரை ஊக்குவித்த சிவகணேசன் கூர்ந்து இச்சிறுநூலைச் சமர்ப்பித்து இருக்கிறார்
யார் என்பதையும் நாம் அறிந்து வைத்திருத்தல் திலுள்ள தமிழ்ப்பிள்ளைகளுக்கு இவர் தமிழைக் டு வருகிறார். முகநூல் மூலம் இவரை நான் திலே, தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பராகவும் இருந்து வருகிறார். கம் போன்றவற்றை எழுதி இங்கிலாந்து தமிழ் திறனாற்றல் மிகுந்தவர் என்பதை இவருடன்
மார்
நிறையத் தகவல்களைத் தருகிறது. ஆயினும் சியர்களே சரியென ஒப்புக்கொள்ள வேண்டும். தடைய கருத்துக்களை ஏற்றுக்கொள்ளமுடியாத அவதானிக்கின்றோம்.
பகுதிகளை மாத்திரம் 1 படித்துப் பார்ப்பதுதான்
வரலாற்றைத்
தொலைத்த தமிழர் லயே திடமாக ஆசிரியர்
இதுதான் த்த்தாத்து பூம் இறே -
EEE:
"பப் பட்டயப் பய
கதின் தோற்றம் மனி க்கு இட்டுச்சென்றதுடன் மரிய இனத்தை அதி கித் தள்ளியது. அந்த - நாம் என்பதே என் ,ெ உலகின் முன் அதை
" தள்ளின் அன்?
கிறார் ஆசிரியர். ரவிப் பெருகி அழிந்து 5 இனங்களின் பழமை ,

Page 44
ஞானப்களைப் பெற பகுதியின் முதல
தொன்மை, நாகரீகம், வாழ்வியல் என்பவற்றை 6
வரலாற்றை ஆதாரங்களுடன் எழுதப்பயன்படு கல்வெட்டுக்கள், மட்பாண்டச்சரிதவியல், ரெடியே கல்லறைகள், ஈமத்தாழிகள், நாணயங்கள் முதல
“மாந்த வரலாறு” என்ற பகுதியிலே, ஆசிரிய
"தமிழர்களைப் பொறுத்தவரை தமிழரின் தெ ஞானப்பிரகாசரையே சாரும். 20ஆம் நூற்றாண்டி அறிஞர் தேவநேயப் பாவாணர் நிறுவமுனைந்தா,
அதன் பின்னர் ஆசிரியர் 20ஆம் பக்கம் தொட தொடர்பான சில செய்திகளைத் தருகிறார்.
தொடர்ந்து 43 ஆம் பக்கத்திலிருந்து, சுமேரி எழுதிய பின்னர், முடிவாக, "சுமேரியர்தான் தமிழர்
அதில் ஒரு பகுதி: “எம் தொன்மையைப் பற்றி அறிந்து கொண்ட எப்படி மூடி மறைக்கலாம் என முனைப்புக் நம்பிக்கொண்டு எம்காலம் நகர்கிறது. பல்கலை தொன்மை பற்றிய உண்மைகளை வெளிக்கொன அதிகம் இல்லை. அதுவும், புதிய தலை முறையில் தன்னினத்தையும் மொழியையும் அழிய விடுபவன் தூரநோக்கில் சிந்திக்க முடியாது என்பது எம்மில் Uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu
பொழுது?
சில்லறைகள் சுமக்கும் பாக்கெற்றுப் பையின் குழியில் கசக்கி மழத்த வெண்தாள் கற்பனைகளைப் புதைத்து வைத்திருந்தது விலையில்லா அந்தச் சின்னக் கவியை
அடிக்கடி விரல்கள் தடவிப் பார்க்கும் வறுமையின் சர்வாதிகாரக் கொடுமை வயிறு நிரப்ப மறுத்தது. மனதை நிரப்பத் தயங்கவில்லை.
சில்லென்று காற்றும் -கொஞ்சம் மஞ்சள் விழுத்திய பொழுதும் நிறுத்தி அவனை வான் நோக்கி அண்ணார வைத்தது தரையதை சிம்மாசனம் செய்தான் தொடையிலே மேசை அமைத்தான் நரம்புகளும் பேனையும் ஒத்திருந்த கையினால் - அந்த அழகிய குறிப்பைக் கொய்தான்
மயங்கியே சாய்ந்தவன் எழுகையில் பொழுது கடந்து வானம் மையிருளைப் போர்த்திக் கிடந்தது குருடனைப் போலே வீடதனை நோக்கி தடுமாறி நகர்ந்தான் நடக்க ஒரு காலும் தடுமாற்றத்தில் மறுகாலும் எடுத்தே வைத்து

ழுதுவது வரலாறு. பவை அகழ்வாய்வுகள், மண்படைச்சரிதவியல், [ கார்பன் ஆய்வு 14, மரபுயிரியற் சோதனை,
னவை.” ர் இவ்வாறு கூறுகிறார்.
ன்மை பற்றிக் கூறிய பெருமை ஈழத்து சுவாமி ல், உலகின் முதல் மொழி தமிழ் என இந்திய
-”
க்கம் 48ஆம் பக்கம் வரை மெசொப்பத்தேமியா பர் இடப்பெயர்வு, சிந்துவெளி நாகரீகம் பற்றி ” என்ற முற்றுக்கு வருகிறார் |
மற்றவர்கள் அதை வெளியே தெரியாதவாறு காட்டுகின்றனர். அவர்களின் மாயைகளை க்கழகங்களுடன் சவால் விடுவதற்கும் எமது பரவும் எம்மிடையே அத்துறையில் கற்றவர்கள் இல்லவே இல்லை. தற்பெருமை பேசிப் பேசியே தமிழன் மட்டும்தான். தன்னுணர்வு அற்றவனால் ரத்தின் சாபமேயன்றி வேறென்ன???"
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
கள்
அமாவாசை இருளில் வீட்டுக் கூரையில் பொத்தான் அடைபட்டுக் கிடந்தது மின்சாரம் இல்லாக்கிராமம்
இருளுக்கு இசைவாக்கம் பெற்றிருந்தது இவன் மட்டும் கொஞ்சம் - குறைவாய்த்தான் பெற்றான்
மனையாள் வழமையான கேள்வி இவனும் வழக்கமான பதில் வீட்டில் உண்ணயில்லை உணவு அவளும் கேட்கவில்லை ஏனோ , அவனோ உறங்கிவிட்டான் பரம்பரைப் பீத்தற்பாயில் படித்தேன்
-காலை வழக்கமான ஆடையை உடுத்திக்கொண்டு பயணிக்க இவனும் தான் மனைவியிடம் சின்னதொரு கவிதை - நேற்றெழுதி வைத்தேன்
விற்க மனமில்லை - பசியோ அப்பா வயிற்றை விடவில்லை ) அந்தப் பெருங்கவிஞனிடம் கொடுத்து பணம் பெற்று வாறேன் - வழமை போலே - பொழுதுகள் தொடரும்
சகுமார் கார்த்தீபன்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

Page 45
மதங்கள் மனிதகுல ஈடேற்றத்துக்கா சுயநல நோக்கங்களுக்காக மதத்தைத் மதங்களிலும் இருக்கவே செய்கின்றனர். நடந்த அட்டூழியங்கள் சுயநல அரசியல் ே அறிஞர்களும், பத்திரிகையாளர்களும் கன பெரிதும் வெறுப்பேற்றிய ஒருவர் பற்றி எ
நான் திருகோணமலையில் ஆங்கில காலத்தில் புலமைப்பரிசில் பெற்று இங்கி எழுத்துப் பரீட்சையின் அடிப்படையில் ே தமிழருமாக எழுவர் கடல் கடந்து சென்றி நானுமாக மூவர் ஆங்கிலங்கற்பிப்பது எக்ஸெட்டர் பல்கலைக்கழகத்துடன் இல் அனுமதிக்கப்பட்டோம்.
வெளிநாட்டு மாணவருடன் மத்திய கிழ. தொழில்வாய்ப்புக் கிடைக்கும் என்பதா கல்விபயின்றனர். அவர்களுள் ஒருத்தி ஆ அங்கே பயின்ற உள்நாட்டு வெளிநாட்டுப் எமது டிப்லோமா கற்றைநெறி மாணவர்கள் வயதினராக இருந்தனர்.
நான்கு படுக்கையறைகளும், இரண் ஒரு குசினியும் கொண்ட ஒரு
விடுதியின் மேல்மாடியில் இரு ஆபிரிக் கீழே நானும் சிங்கள் நண்பரும் தங்கியிரு இன்னொரு விடுதியில் சிங்களப் பெண்ணு
எனக்குச் சமைக்கத் தெரியாவிடினும் நன்கு பழகிய சிங்கள் நண்பர் எனக்கும்
செலவு கட்டுப்படுத்தப்பட்டது.
சிங்களப் பெண்மணி எப்போதுமே வேறுபாடு காட்டாதும் பழகிவந்தார். ஆண் ஆரம்பத்தில் தான் தமிழரின் நெருங் கலவரத்தின்போது பல தமிழர்களைக் நம்பியிருந்தாலும் காலப்போக்கில் அவர் கப் புரிந்துகொள்ளமுடிந்தது. எனக்கெதிரான சிங்களப் பெண்மணி என்பது வியப்புக்குரி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

க எனத் தோற்றம் பெற்றிருப்பினும் தத்தமது துணைக்கழைக்கும் சுயநலவாதிகள் எல்லா அண்மையில் அளுத்கமவிலும், பேருவளையிலும் நாக்கங்கொண்டவை எனச் சில சிங்கள பௌத்த Tடனக்குரல் எழுப்பும் இத்தருணத்தில் என்னைப் ழுத என் மனம் விழைகிறது.
சேவைக்கால ஆலோசகராகப் பணியாற்றிய லாந்தில் கல்விகற்கும் ஒரு வாய்ப்புக்கிட்டியது. தர்ந்தெடுக்கப்பட்டு ஆறு சிங்களவர்களும் ஒரு பிருந்தோம். ஒரு சிங்களப் பெண்ணும், ஆணும், சம்பந்தமான ஓராண்டுப் பயிற்சி நெறிக்காக ணைந்த ஒரு பல்கலைக்கழகக் கல்லூரியில்
க்கில் நல்ல ஊதியத்துடன் ஆங்கில ஆசிரியராகத் ல் வெள்ளையின் மாணவியரும் எம்முடன் ங்கிலேயரை மணந்த பிரான்ஸ் நாட்டுப் பெண். பட்டதாரி மாணவர்கள் இளவயதினராக இருக்க ர் இருபத்தைந்துக்கும் ஐம்பதுக்கும் இடைப்பட்ட
நி குளியலறைகளும் சகல வசதிகளுடனுமான
100)
- வே.தில்லைநாதன்
க பட்டதாரி மாணவர்களும் கந்தோம். நேரெதிரே இருந்த க்கு இடங்கிடைத்திருந்தது. என்னோடு ஆரம்பகாலத்தில் சேர்த்துச் சமைத்தமையால்
என்னோடு இயல்பாகவும் மாணவரைப் பொறுத்தவரை கிய நண்பரென்றும் 1983
காப்பாற்றியிருந்ததாகவும் கதைவிட்டதை நான் டத்தனத்துடன் என்னோடு பழகி வந்ததை என்னால் அவரது செயற்பாடுகளை எனக்குணர்த்தியதே ய விடயமாகும்.
43

Page 46
அவர் ஒருநாள், “சில்வா உன்னிடம் கருணை கொண்டு உனக்குச் சமைத்துப்போடுகிறார் என்று நம்புகிறாயா? அவரது ஆதாயத்தைக் கருதியே உதவுகிறார். ஏமாந்து போகாதே” என்றார். ஆயினும் அவரது எச்சரிக்கை போலன்றி நண்பர் என்னைத் தனது கண்காணிப்பின் கீழும் கட்டுப்பாட்டிலும் வைத்திருப்பதற்காகவே தானாக முன்வந்து எனக்கு உதவினார் என்று தோன்றியது. பின்னர் நடந்த சம்பவங்கள் என் சந்தேகத்தை உறுதிப்படுத்தின.
எனது சக வெள்ளைக்கார மாணவியரைப் பொறுத்தவரை ஓர் இளம் யுவதி, "நான் சூப்பர் மார்க்கெட்டுக்குப் போகிறேன். நீயும் வருகிறாயா” என என்னையும் எப்போதாவது காரில் அழைத்துச் செல்வாள். என்னை விட வயதில் மூத்தவளான இன்னொரு பெண் நான் கண்ணில் ஒரு பிரச்சினையால் அவஸ்தைப்பட்டபோது ஹோமியோபதி மருந்து கொண்டுவந்து தந்ததோடு ஒரு தடவை தனது விவாகரத்தையும் மறுமணத்தையும் தாங்க முடியாது ஒரு மகள் போதைவஸ்துவுக்கு அடிமையாகி விட்டதாகவும் கவலையுடன் கூறினாள். சக மாணவிகளான டெனீசும், காதரீனும் நண்பர் மனோகரனும் லண்டனின் வெவ்வேறு பகுதிகளை எனக்குச் சுற்றிக்காட்டியிருந்தனர். அதிக குளிர் காரணமாக ஏனைய மாணவர்கள் போல வகுப்பில் ஜாக்கெட்டைக் கழற்றாது வெப்பமூட்டிக்கருகிலுள்ள ஆசனத்திலேயே நான் அமர்ந்திருப்பேன். கோடை காலத்தில் ஒரு நாள் நான் ஜாக்கெட்டைக் கழற்றியதும் என்னிடம் அதிகம் பேசிப் பழகாத ஓர் ஆங்கிலேய மாணவி Hi Tillai (தில்லை) என்று ஓடி வந்து என்னை அணைத்துக் கொண்டாள்.
வெள்ளைக்காரிகள் என்னோடு நன்கு பழகியது சில்வாவுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்று தோன்றியது. இலங்கை பற்றிய செய்திகள், போராளிகளுக்கும் இராணுவத்தினருக்கும் நடக்கும் சமர் பற்றியெல்லாம் அவ்வப்போது பத்திரிகைகளில் செய்திகள் வரும். யாராவது சில்வாவிடம் அதுபற்றிக் கேட்டுவிட்டால் நான்தான் நடக்கும்
மா!
44

சம்பவங்கள் பற்றிக் கூறுகிறேனோ என அறிவதற்காக அவர் தந்திரமாக என்னிடம் கேள்விக் கணைகள் தொடுப்பார்.
பிரான்ஸ் நாட்டுப்பெண்ணான காதரீன் எனது நெருங்கிய தோழியாக விளங்கினாள். ஒரு நாள் சில்வா, "உனது இயலாமை காரணமாகவே அவள் உன்னுடன் பிரியமாக இருக்கிறாள். நீ ஏதும் பிழையாக விளங்கிவிடாதே” என என்னை எச்சரித்தார். பிழையாக விளங்குவதற்கு என்ன இருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லையாயினும் அவர் வயதில் மூத்தவரென்பதால் நான் வார்த்தையாடவில்லை.
ஒரு நாள் இரவு உணவுக்காக ஒரு விரிவுரையாள் வகுப்பிலுள்ளோரை இல்லத்துக்கு அழைத்திருந்தார். அது வார இறுதி என்பதால் மதிய உணவைத் தங்களுடன் அருந்தும்படியும் அங்கிருந்து இருவரும் ஒன்றாக இரவு உணவுக்காகச் செல்லலாமென்றும் காதரீன்
கேட்டிருந்தாள்.
கல்லூரி நீச்சல் தடாகத்தில் நீந்திய பின்னர் காதரீன் காரில் என்னை அழைத்துச் சென்றாள். அவளுக்கும் ஆங்கிலேயக் கணவருக்கும் இருந்த ஒப்பந்தப்படி அன்று கணவர் சமைக்கும் நாள். அவர் சமையலில் ஈடுபட நானும் அவளும் பேசிக்கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் கணவர் எங்களை அழைத்தார், “எனக்கு போரடிக்கிறது. இங்கே வந்து பேசிக்கொண்டிருங்கள். நான் சமைக்கிறேன்” என்றார். நான் முட்டையைத் தவிர வேறு மாமிசம் உண்பதில்லை என்பதால் அவர் எங்களோடு பேசியபடி எனக்கேற்ற உணவையும் தயார்செய்தார்.
அவர்களுடனும், ஆணும் பெண்ணுமான அவர்களது இரு பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தபின்னர் விரிவுரையாளர் வீடு சென்றோம். இரவு உணவின் பின்னர் திரும்பியபோது நள்ளிரவா கியிருந்தது. தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த கணவர் எம்மை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். நான் அங்கேயே இரவைக் கழித்தேன்.
மிகவும் அன்னியோன்னியமான தம்பதிகள் என நான் நம்பிய இந்தத் தம்பதியரிடையே ஒரு விரிசல் இருந்தமை பின்னரே எனக்குத்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

Page 47
தெரியவந்தது. லண்டன் மாநகரை எனக்குச் சுற்றிக் காட்டிய காதரீன் ஓரிடத்தில் தரித்து நின்று ஒரு வீட்டின் மேல் மாடியை அண்ணாந்து பார்த்தவாறு நின்றாள். அவளது கண்கள் கலங்கியிருந்தன. "மேலே குடியிருந்த எனது சகோதரி தற்கொலை செய்து கொண்டாள். அதே காலப்பகுதியில் எனது கணவருக்கும் வேறொரு பெண்ணுடன் தொடர்பிருந்தது." என அவளுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியளித்த இரு சம்பவங்கள் பற்றிக் குறிப்பிட்டாள்.
பின்னர் ஒரு சமயம் என்னை ஒரு கடைக்கு அழைத்துச் சென்ற அவள் காரை ஓரிடத்தில் ஓரமாக நிறுத்திவிட்டு, "உன்னிடம் மனம் விட்டுப் பேசவேண்டும் என்றாள். நான் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்க அவள் சொன்னாள், "நான் என் கணவரை மிகவும் நேசிக்கிறேன். ஆனாலும் அவர் செய்த துரோகத்தை என்னால் மன்னிக்க
நூல் விந்தைபுரி விஞ்ஞானிகள் (பாகம்-1)
ஆசிரியர் : கவிஞர் த.துரைசிங்கம் வெளியீடு : உமா பதிப்பகம், கொழும்பு -06
மனித குலத்தின் நன்மைக்காகத் தங்களையே அர்ப்பணித்துத் தொண்டாற்றிய அறிவியல் மேதைகளை இன்றைய இளம் சந்ததியினர் அறிந்திட வேண்டும், புதியன காண முயன்றிடவேண்டும் என்ற உந்தலால் எழுந்த இந்நூல், மருத்துவம், கணிதம், கதிரியக்கம், அணுவியல், தகவல் தொழில் நுட்பம் ஆதியாம் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 40 விஞ்ஞானிகளை அறிமுகம் செய்கிறது. மாணவர்கள் படித்துப்பாது காக்க வேண்டிய பயனுள்ள
நூல் இது. ஆசிரியர்
விந்தைகள் புரிந்த இத்தகைய
விஞ்ஞானிகள் நூல்களை மேலும்
(பாகம் 1) வெளிக்கொணர்தல்
எதிர் காலச் 2 சந்ததியினருக்குப்
பயனளிக்கக்
, - 9 ( கூடியதாக
அமையும்.
- கவிஞர் த. துரைசிங்கம்
(115)
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

iiiiiiiiiiiiiiiiiil
முடியவில்லை. சிலவேளைகளில் பதிலுக்கு நானும் துரோகம் செய்ய வேண்டும் போன்ற வெறி ஏற்படுகிறது." என்று கூறினாள். "ஏய் அதற்காக நீ ஒருவனைத் தேடியலையப் போகிறாயா? (Are you going to hunt for somebody?)” என அவளது பிடரி மயிரைப் பிடித்து உலுக்கியவாறு நான் கேட்டேன். அவள் விசும்பியது என்னை மிகவும் பாதித்தது.
பின்னர் நான் விடுதியில் இருந்தபோது நாடுவிட்டு நாடு சென்று ஆங்கிலத்தில் சிறப்புப் பட்டமும் பெற்ற அந்தப் பெண்ணுக்குத் தனது மனச்சுமையை இறக்கி வைக்க ஒரு நட்புத் தேவைப்பட்டதை நான் புரிந்து கொண்டேன்.
இதையெல்லாம் தெரிந்துகொள்ளாத சில்வா நான் தனது இனத்தை வெள்ளையருக்குக்
காட்டிக் கொடுக்க முனைவதாக எண்ணுகிறாரென்று எனக்குத் தோன்றியது. எனது எண்ணம் தவறானது என்றும் சில்வா சில விடயங்களைத் திட்டமிட்டே செய்தாரென்றும் நாளடைவில் எனக்குப் புரிய வைத்தார் எனது சிங்கள நண்பி.
அவர்தந்த தகவல்கள்
என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குவதாக
இருந்தன. எனக்குப் புலிகளுடன் தொடர்பிருப்பதாகவும், இந்தியாவிலிருந்து எனக்குக் கடிதங்கள் வருவதாகவும் இங்கிலாந்திலுள்ள புலி ஆதரவாளர்களோடு நான் தொடர்பு வைத்துக் கொண்டு புகலிடம் தேட முனைவதாகவும் எமது கற்கை நெறிக்குப் பொறுப்பானவரிடம் சில்வா தெரிவித்திருந்தாராம்.
நான் இங்கிலாந்தில் புகலிடங்கோர முயன்றதேயில்லை. ஒரு காலத்தில் எனது சக ஆசிரியராக இருந்து ஒரு சிங்களப் பெண்ணை மணந்து இங்கிலாந்தில் வாழ்ந்த நண்பர் மனோகரனுடன் இரு வாரங்கள் ஒரு விடுமுறையின்போது தங்கியிருந்துள்ளேன். இங்கிலாந்தில் குடும்பத்துடன் வாழ்ந்த வைத்தியரான அவரது தமையனார் அக்காலத்தில் இங்கிலாந்தில் புகலிடம் தேடுவது இலகுவானதென்றும் நான் விரும்பினால் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி எனக்கும் புகலிடம் பெற்றுத் தரமுடியுமென்றும் கூறினார். நான் அதற்குச் சம்மதிக்கவில்லை. அப்போது
45

Page 48
மதுரையில் வசித்த இலங்கையரான வைத்திய நண்பரொருவர் எனக்கொரு கடிதமெழுதியிருந்தார். சில்வாவே கடிதத்தை எடுத்து என்னிடம் தந்திருந்தார். அதை வைத்தே அவர் கதை புனைந்திருந்தார்.
இங்கிலாந்தில் எனக்குத் தமிழ்ப்பேசும் தாகமிருந்தது. கல்லூரியில் நெற்றியில் திலகத்துடன் வளைய வந்த ஓர் இளம் பெண்ணைப் பார்த்து, "Do you speak Tamil by any chance?" என நான் கேட்டபோது அவள் சிரித்தவாறே இல்லையென்றும், தான் ஒரு மலையாளி என்றும் கூறினாள். அதே போன்று
ஆங்கிலேயப் பெண்ணை மணந்து அங்கே சட்ட விரிவுரையாளராக இருந்த வேலணை வாசி ஒருவரை எனது சக மாணவி ஒருத்தி அறிமுகப்படுத்தியபோது அவர் என்னுடன் ஆங்கிலத்திலேயே பேசினார். "நீங்கள் தமிழே பேசுவதில்லையா?” என்று நான் கேட்க அவர் "what's the point?" என்று திருப்பிக் கேட்டார். எனினும் தமிழைப் பேசுவதற்காக எனக்குத் தெரிந்த இலங்கையரை நான் தொடர்பு கொள்ள முயன்றதில்லை. அப்படி இருக்க எனது தொடர்புகள் பற்றி சில்வா கூறியது அபத்தமான கூற்று. மனோகரன் தந்த ஒரு தொலைபேசி இலக்கத்தை அழுத்தினால் முதல் நாள் இலங்கையில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு தமிழில் பதியப்பட்டு ஒலிக்கும். அதை மட்டுமே தவறாது கேட்டு வந்தேன். வேறு தொடர்பேதுமில்லை.
நான் சில்வாவை விட அதிக புள்ளிகளைப் பெற்றமையால் நாங்கள் நாடு திரும்பியதும் எங்களுக்குத் தரப்படுவதாக இருந்த பொறுப்புகளில் தான் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுவேனோ என்ற சுயநலம் கலந்த அச்சமே தான் சிங்கள இனத்தின் காவலன் என்ற நாடகத்தை
சில்வா அரங்கேற்றியதுக்கான காரணம்
என்பது எனக்குத் தெளிவாகவே புரிந்தது.
கற்கை நெறி நிறைவெய்தி நாடு திரும்புவதற்கான விமானச் சீட்டைப்பெற நான் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் கவுன்ஸில் தலைமையகம் சென்றபோது விமானச் சீட்டை என்னிடம் கையளித்த பெண்மணி சிரித்தவாறு,
46

"நான் இதை உனக்குச் சொல்லக்கூடாது. என்றாலும் சொல்கிறேன். கல்லூரியிலிருந்து உன்னைப்பற்றி excellentreportவந்திருக்கிறது” என்று கூறினார்.
அதுமட்டுமன்றி எமது |
கற்கை நெறிக்குப் பொறுப்பான ஆங்கிலேயர் கல்வி அமைச்சிலுள்ள ஆங்கிலப் பிரிவுக்கு உத்தியோக பூர்வமாகச் சென்றபோது என்னைப் பற்றிய அவதூறுகள் பற்றியும் கூறியதோடு நான் ஒரு பாவமும் அறியாதவன் என வலியுறுத்தியிருந்ததாக அங்கே கடமையாற்றிய அதிகாரியும் ஆங்கில எழுத்தாளருமான கிளைவ் ஜயத்திலக்க என்னிடம் கூறினார். ஆயினும் சிங்கள இனத்துக்கு நான் எதிரானவன் என்று சில்வா கொடுத்த றிப்போட்டை மேலதிகாரி முற்று முழுதாக நம்பியதால் ஆங்கிலேயரின் பரிந்துரை - 'ஒட்டை கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்' என்பது போலாயிற்று. அத்துடன் எனக்குக் கிடைக்க இருந்த பொறுப்புக்கும் நான் அருகதையற்றவன் ஆக்கப்பட்டேன்.
அதனால் மனம் உடைந்திருந்த நான் ஒரு கல்வியியற் கல்லூரிக்கு விரிவுரையாளர்கள் தேவை என விண்ணப்பங்கள் கோரப்பட்டபோது விண்ணப்பித்து ஓர் ஆசிரியராக இணைந்து கொண்டேன். சிறிது காலத்தின் பின்னர் நான் பல்கலைக்கழக சேவையில் இணைந்திருந்த வேளையில் கல்வி அமைச்சின் ஆங்கிலப் பிரிவின் இரண்டாவது நிலை அதிகாரி என்னைச் சந்திக்க நேர்ந்தது. "நீர் எப்பொழுது யூக்கேயிலிருந்து வந்தீர்?” என்று அவர் என்னைக் கேட்டார். அங்கே நான் போகவேயில்லையே என்ற எனது பதிலைக்கேட்டு அவரது முகம் மாறியதிலிருந்து அவர் சில்வாவின் பேச்சை நம்பி ஏமாந்தவர் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.
இலங்கையில் இன்று இனத்தையும் மதத்தையும் வைத்துப் பிழைப்பவர்களைப் பெரும்பான்மைச் சமூகத்தினர் எவ்வளவு தூரம் நம்பத்தயாராக இருக்கிறார்களென்பது போகத் போகத்தான் புரியும்.
0 0 0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014

Page 49
":::::"'''''''1:11:11:21''''''''''''''1:11-1'''''''''''''''141/11/11'''''11!!!1114'''''''''''''''''''''''''''11/14:1-11-1:14:"':1!'=1:1:1 '''
சில் பற்றிய அகதி )
சி.வி.யின் நூற்றாண்டு
மலையக இலக்கியத்தின் சிகர மாகத் திகழும் மக்கள் கவிமணி சி.வியின் நூற்றாண்டு செப்டம்பர் மாதம் 14ம் திகதி வருகிறது. அவரைப்பற்றிய நினைவுகள் நெஞ் சில் மலர்கின்றன.
மக்கள் கவிமணி என்று அன் ம் போடு அழைக்கப்படும் சி.வி.வேலுப் பிள்ளை அவர்கள் எழுத்தாளர், கவிஞர், தெ உறுப்பினராக இருந்தவர். இத்தனைக்கும் மேல் பாடிய வானம்பாடி. மலையக மக்கள் கவி சந்தித்தேன் என ஞாபகக்குறிப்புகளை புரட்டி சிறகடிக்கின்றன.
அவைகள் எங்கோ சிறகடித்து பறக்கின்றன எம்.ஏ.ரஹ்மானின் "ரெயின்போ" அச்சகத்திற்கு
அப்பொழுது வெண்ணிற ஆடையில் ( அமர்ந்திருந்தார். அவர்தான் சி.வி.வேலுப்பிள்ல வுடன் ஆங்கிலத்தில் தான் உரையாடினார்.
அமைதியாக எல்லாவற்றையும் கவனித்துக் பேசவில்லை. பின்னர் கவிஞர் பாராக்கிரம கொ தொகுதியின் வெளியீட்டு விழாவில் கோட்டை சந்தித்தேன். ஒரு புன்னகையுடன் விடைபெற்று
ஆனால், அவரை முழுமையாக அறியும் நினைவுகூரவேண்டும்.
"இலங்கை வானொலியில் மலையக மக்க நிகழ்ச்சி ஒன்று ஒலிப்பரப்பானது. அதனை தொ இலக்கிய முன்னோடியான இரா.சிவலிங்கமாவ
இரா. சிவலிங்கத்திற்கு பின்னர் பதுளை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பொழுது | எழுதிய கட்டுரையை என்னையே வாசிக்கும்ப
அந்த நிகழ்ச்சியில் பங்குபற்ற வானொலி கவிமணி சி.வி.யும் வந்திருந்தார். என்னைக் க அருகில் வரும்படி அழைத்தார். என்னைப் பற்
பின்னர் என் கையிலிருந்த "மலையக படித்துப்பார்த்தார்.
உங்களுடன் இந்த கட்டுரை பற்றியும், மலை வசதியிருக்கும்பொழுது பம்பலப்பிட்டியிலுள்ள என்றார். "உங்களை சந்தித்து மலையக 2 எனக்குறிப்பிட்டேன். எனது முகவரியை சி.வி.
பின்னர் மு.நித்தியானந்தன் எங்களை வா அழைத்துச்சென்றார்.
அங்கே பிரபல இசையமைப்பாளர் மு அவர்களுடன் இன்னொருவரும் இருந்தார். . அழகுப்பிள்ளை.
அங்கே குன்றின் குரல் நிகழ்ச்சியில் மலையா இருந்தது. அதற்குரிய விளக்கத்தை வழங்க வந் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

மலரும் நினைவுகள்)
- அந்தனி ஜீவா
-ாழிற்சங்கவாதி, தலவாக்கெல்லை பாராளுமன்ற லாக மக்களை நேசித்த மனிதாபிமானி. மானுடம் மணியை முதன் முதலில் எங்கே எப்பொழுது ப் பார்க்கிறேன். பழைய நினைவுகள் மனதில்
எ. ஒரு தடவை "இளம்பிறை” சஞ்சிகை நடத்திய
எஸ்.பொ.வை சந்திக்க சென்றிருந்தேன். ஒரு கம்பீரமான தோற்றம் கொண்ட ஒருவர் மள என அறிந்து கொண்டேன். அவர் எஸ்.பொ.
- கொண்டிருந்த நான் அச்சம் காரணமாக ஏதுவும் ரடிதுவக்கு வெளியிட்ட “இந்து சாலங்கா" கவிதை - வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் மீண்டும் சி.வியைச் எக்கொண்டேன்.
வாய்ப்பு கிடைத்த சந்தர்ப்பத்தை நிச்சயமாக
ளுக்காக "குன்றின்குரல்" என்ற அரை மணிநேர ரடக்கி வைத்து தொகுத்து வழங்கியவர் மலையக பார். ளச்சேர்ந்த கலாநிதி.மு.நித்தியானந்தன் அந்த "மலையக நாடகங்கள்" என்ற மகுடத்தில் நான் டி அழைத்திருந்தார்.
நிலையம் சென்றிருந்தபொழுது அங்கு மக்கள் ண்டதும் புன்னகை தவழும் முகத்துடன் என்னை றி மிகுந்த அக்கறையுடன் விசாரித்தார். - ஞாபகங்கள்" என்ற கட்டுரையை வாங்கி
லயக இலக்கியம் சம்பந்தமாகவும் பேசவேண்டும். தொழிற்சங்க காரியாலயத்தில் வந்து சந்தியுங்கள் இலக்கியங்கள் பற்றி பேச எனக்கும் ஆசை" யாங்கிக்கொண்டார்.
னொலி நிலையத்தின் ஒலிப்பதிவு அறைக்குள்
த்துசாமியும், பாடகி கலாவதியம் இருந்தனர். அவர் எனக்கு ஏற்கனவே அறிமுகமான கவிஞர்
க நாட்டார் பாடல்கள் சில ஒலிப்பதிவு செய்யப்பட திருந்தார் மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை.
47

Page 50
பாடலுக்கான இசையமைப்புக்குரிய ஒத்தி கவனித்துக்கொண்டிருந்த சி.வி. தயாரிப்பாளரான ஒப்பாரி போன்றவை இசை எவ்வாறு இருக்கவே நித்தியானந்தன் இசையமைப்பாளர் முத்துசாமியி
மக்கள் கவிமணியின் பன்முக ஆற்றன அமைப்பாளரான முத்துசாமி கோபத்துடன் “இ என கோபமாக கூறிவிட்டு மீண்டும் டப்பாங்கு வாசித்துக்காட்டினார்.
அதனை கவனித்த சி.வி. அந்த நாட்டார் பாட தனது கைகளால் தாளம் போட்டுக்காட்டினார். க ஏற்றுக்கொள்வதாக இல்லை. மு.நித்தியானந்தனு
சிறிது நேரத்திற்கு பின்னர் சி.வி. எழுந்து நின் அழைத்தார். "தயவு செய்து நாட்டார் பாடலை ஒ திரும்பிப்பார்த்தார். அவர் ஏதோ சொல்ல விரும்
"நாளை மறுநாள் திங்கட்கிழமை மூன்று மா கூறிவிட்டு கம்பீரமாக அறைவிட்டு ஒரு இராணு
குன்றின் குரல் தயாரிப்பாளர் அந்த நாட்டார் பதிலாக வேறு ஒரு பாடலை ஒலிப்பதிவு செய்தா
அந்த கவிஞன் கம்பீரமாக நடந்து சென்றது
அன்றைய சம்பவம் எனக்கு சி.வி. மீது ெ கோபத்தை உணர்ந்து கொள்ளமுடிந்தது. அ வருகின்றபோது இந்த நினைவுகள் என் நெஞ்சில்
0 0 0
அமரர் செம்பியன் செல்வன் (ஆ.
'ஞாபகார்த்தச் சிறுகதைப் ே (அனுசரணை : செம்பியன் செல்வன்
முதற் பரிசு : ரூபா 50 இரண்டாம் பரிசு: ரூபா ?
மூன்றாம் பரிசு: ரூபா 2 ஏனைய ஏழு சிறுகதைகளுக்கு பரிசுச் சான்ற
போட்டிக்கா சிறுகதைகள் முன்னர் எங்கும் பிரசுரி போட்டியில் பங்குபற்றுபவர்கள் தமது பெயர்
இணைத்தல் தபால் உறையின் இடது பக்க மூலையில் "
சிறுகதைப் போட்டி” எனக் 6 அனுப்ப வேண்டிய முகவரி:
ஞானம் கிளை அலுவலகம் - 3B, 4 | போட்டி முடிவுத் தி முடிவு திகதிக்குப் பின்னர் கிடைக்கும் கதைகள்

கை நடைபெற்றது. அதனை உன்னிப்பாக எ மு.நித்தியானந்தனை அழைத்து தாலாட்டு, ண்டும் எனக்குறிப்பிட்டார். சி. வி. கூறியவற்றை டம் தெரிவித்தார். லயும் ஆளுமையையும் அறியாத இசை சையைப் பற்றி எனக்கா சொல்லித்தருவது?” தத்து இசையைப்போல வாத்தியக்கருவியை
லுக்கு இசை எவ்வாறு இருக்க வேண்டும் என புவர் கூறுவதை இசையமைப்பாளர் முத்துசாமி
க்கு தர்ம சங்கடமான நிலை. றார். "மிஸ்டர் நித்தி”... என்று நித்தியானந்தனை லிபரப்பவேண்டாம்” எனக் கூறிவிட்டு என்னைத் புகிறார் என்று அருகில் சென்றேன். ணிபோல என்னை வந்து பாருங்கள்..." என்று வ வீரனைப்போல வெளியேறினார்.
பாடல் நிகழ்ச்சியை ரத்து செய்து, அதற்கு
என் நெஞ்சில் பசுமையாக உள்ளது. பருமதிப்பை உருவாக்கியது. ஒரு கவிஞனின் ந்த கவிஞரின் பிறந்த நாள் நூற்றாண்டு ல் மலர்ந்தன. 0 0
இராஜகோபால்) பாட்டி 2014 ன் குடும்பத்தினர்) 00/= 3000/= 000/= இதழ்கள் வழங்கப்படும்.
ன விதிகள் க்கப்படாததாக இருத்தல் வேண்டும். , முகவரி போன்ற விடயங்களை வேறாக வேண்டும். அமரர் செம்பியன் செல்வன் ஞாபகார்த்தச் தறிப்பிடப்படல் வேண்டும்.
5ஆவது ஒழுங்கை, கொழும்பு 06. கதி: 30.1.2014 - போட்டியில் சேர்க்கப்படமாட்டாது. - ஆசிரியர்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

Page 51
எழுதத் இது எண்ணல்.
பட்டியல் வேண்டாம்
அண்மையில் மருதானை வை.எம். எம்.ஏ மண்டபத்தில் கிராமத்தான் கலீபாவின் நழுவி என்ற கவிதை நூல் வெளியீட்டுவிழா சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்தென்றல் அலி அக்பர் தலைமையில் நிகழ்ந்த இவ்விழாவில் பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாசித் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். புரவலர் ஹாசிம் உமர் முன்னிலை வகித்தார். வரவேற்புரையை எஸ்.ஜனூஸும், நூல் அறிமுகத்தை முஸ்டீனும் செய்தனர். கவி வாழ்த்தினைக் கவிஞர் கிண்ணியா அமீர் அலி வழங்கினார். வாழ்த்துரையை மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத்தும், கலைவாதி கலீலும் நிகழ்த்தினர். திறனாய்வு உரைகளைப் பேராசிரியர் துரை. மனோகரனும், கவிஞர் நாச்சியாதீவு பர்வீனும் வழங்கினர். இந்திய அறிஞர் ஒருவரும் பேசினார். நூலின் முதற்பிரதியைத் தொழில் அதிபர் மீராலெப்பை முஸம்மில் பெற்றுக்கொண்டார். ஏற்புரையை நூலாசிரியர் கிராமத்தான் சலீபா நிகழ்த்தினார். நிகழ்ச்சித் தொகுப்பை எஸ்.எழில்வேந்தன் அழகாகச் செய்தார். மொத்தத்தில் விழா நன்றாகவே நடைபெற்றது. நூலாசிரியர் கிராமத்தான் கலீபா எதிர்காலத்தில் பெயர் சொல்லக்கூடிய கவிஞராகத்
க திகழ்வார் என்பதை அவரது முதல் கவிதைத்தொகுப்பு இனங்காட்டுகின்றது.
இந்த வெளியீட்டுவிழாவில் எனது திறனாய்வு உரையின்போது, இலங்கையில் நவீன கவிதையை, அதன் உச்சத்துக்கும், உன்னதத்துக்கும் கொண்டு சென்றவர்களாக மஹாகவி, நீலாவணன், முருகையன் ஆகியோரைக் குறிப்பிட்டுப் பேசியதோடு, வேறு சில முக்கியமான கவிஞர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுச் சென்றேன். இலங்கைத் தமிழ்க் கவிதை வளர்ச்சியை இனங்காட்டுவதற்கே அவ்வாறு சிலரை எடுத்துக்காட்டாகக் காட்டிச் சென்றேன்.
இலங்கைத்", குறிப்பிட்ட கவிஞர்களின்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

Tண்டும்
கள்
பேராசிரியர் துரை மனோகரன்
எனக்குப் பின்னர் வாழ்த்துரை வழங்கவந்த கலைவாதிகலீல், "பேராசிரியர் துரை.மனோகரன் சில பெயர்களைத் தவறுதலாக விட்டுவிட்டார்” என்று குறிப்பிட்டார். அவரைத் தொடர்ந்து திறனாய்வுரை ஆற்றவந்த கவிஞர் நாச்சியாதீவு பர்வீன், சில பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களை எல்லாம் பேராசிரியர் துரை. மனோகரன் குறிப்பிடாததற்குக் காரணமென்ன? இதற்கான பதிலை அவரிடம் எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்தார். நான் ஏற்கனவே விழாவில் பேசி முடித்துவிட்டமையினாலும், திரும்பவும் அவருக்குப் பதிலளிக்க முயற்சிப்பது அழகல்ல என்பதனாலும் நான் பதிலளிப்பதைத் தவிர்த்துக்கொண்டேன். ஆயினும், ஏன் சில பெயர்களைக் குறிப்பிடவில்லை என்றும், அதற்கான பதிலைத் தாம் எதிர்பார்ப்பதாகவும் கவிஞர் நாச்சியாதீவு பர்வீன் விழாவில் தெரிவித்ததன் காரணமாகவும், இது இருவருக்கிடையிலான கேள்வி - பதில் என்றில்லாமல், ஈழத்துத் தமிழ்க்கவிதை வரலாற்றோடு சம்பந்தப்பட்டிருப்பதன் காரண மாகவும் சுருக்கமான என் பதிலைத் தெரிவிப்பது பொருத்தம் என்று கருதுகிறேன்.
இலக்கிய வரலாற்றாசிரியனோ, திறனாய் வாளனோ குறிப்பிட்ட ஒரு துறை தொடர்பான வளர்ச்சி நிலையையே காட்டிச் செல்வான். அதற்கு எடுத்துக்காட்டாகச் சில பெயர்களைக் குறிப்பிட்டுச் செல்வான். பட்டியல் போடுவது அவனது வேலையல்ல. இலங்கையின் நவீன தமிழ்க் கவிதை வளர்ச்சியில் மஹா கவி, நீலாவணன், முருகையன் முதலி யோரின் பங்களிப்பினைக் குறிப்பிடுவது தவிர்க்கவியலாதது. அதற்காக மற்றைய கவிஞர்கள் தரமற்றவர்கள் என்பது அர்த்தமல்ல. மொத்தத் தமிழ் இலக்கிய வளர்ச்சியிலும் வள்ளுவர், இளங்கோ, கம்பர், பாரதி ஆகி யோரை மகாகவிகள் என்கிறோம். அதற்காக, மற்றவர்களின் பங்களிப்புகள் குறைந்தவை
அல்ல. இலக்கிய வளர்ச்சி
நிலையில்
49

Page 52
திறனாப்பம்
மைல்கற்களாகத் திகழ்பவர்களையே இலக்கிய வரலாற்றாசிரியனும்,
திறனாய்வாளனும் முதன்மைப்படுத்துவான். எல்லோருடைய பெயர்களும் ஒரு திறனாய்வு உரையிலே இடம்பெறவேண்டும் என எதிர்பார்ப்பது சாத்தியப்படாத ஒன்று. அதேவேளையில், இலக்கிய வளர்ச்சியை இன, மத, பிரதேச ரீதியில் பார்க்க முனைவதும் தவறானது. இந்தப் பக்குவம் எதிர்காலத்திலாயினும் எமது இலக்கியவாதிகளுக்கு ஏற்படுமாயின் அது
வரவேற்றகத்தக்கது.
தலைநகரத்தில் தமிழ் நாடகம்
இலங்கையின்
நாடகத்துறையில் தமக்கென்று ஓரிடத்தைப் பதிவு செய்து வைத்திருப்பவர், அந்தனி ஜீவா. தமது முதல் நாடகப் படைப்பான முள்ளில் ரோஜாவை 1970இல் கொழும்பு லும்பினி மண்டபத்தில் மேடையேற்றியதன் வாயிலாக, நாடகத்துறையுள் அவர் நுழைந்தார். அதனைத் தொடர்ந்து பறவைகள் (1971), அக்கினிப்பூக்கள் (1971), கவிதா (1972), அலைகள் (1978) ஆகியவற்றோடு, சாத்தான் வேதம் ஓதுகிறது, பறக்காத கழுகுகள் ஆகிய நாடகங்களையும் எழுதி மேடையேற்றினார். இளங்கீரன் எழுதிய வானொலி நாடகமான மகாகவி பாரதியை (இந்நாடகத்ததை நான் வானொலியில் கேட்டு ரசித்திருந்தேன்) அவர் மேடை நாடகமாக்கியபோது, அவருடன் இணைந்து அந்தனி ஜீவா அதனை மேடையேற்றினார். ஆராரோ ஆரிரரோ, ஒன்று எங்கள் ஜாதியே ஆகிய நாடகங்களை நெறியாள்கை செய்திருந்தார். பின்னதன் கதை: அந்தனி ஜீவா: மேடை நாடகப் பிரதி: கவிஞர் சு.முரளிதரன்.
அந்தனி ஜீவா இயல்பாகவே கலைஞர்களை யும், இலக்கியவாதிகளையும் நேசிப்பவர். அவர்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால், உதவுவதற்கு முன்னிற்பவர். அவரது இந்த நல்ல பண்பைச் சிலர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.
அந்தனி ஜீவாவுக்கும், எனக்கும் இடை யில் அவ்வப்போது கருத்துவேறுபாடுகள் ஏற்படுவதுண்டு. ஆயினும், நேரில் சந்திக் கும் வேளைகளில், இருவரில்
எவரும் கருத்துவேறுபாடுகளைப் பாராட்டியதில்லை. அவரைக் காணும்போது நான் "ஜீவா" என்று அன்புடன் முதுகில் தட்டி அழைப்பதும், அவரும் "சேர்" என்று அழைத்து மனம் திறந்து பேசுவதும் வழமையான நிகழ்ச்சிகள்.
50

தாயகமாடியா
சில மாதங்களுக்கு முன்னர் ஒரு நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்தபோது, தலைநகரில் தமிழ் நாடக அரங்கு என்ற தமது நூலைக் கையில் தந்து, "சேர், நீங்கள் நாடகத்துறையில் ஈடுபாடு உள்ளவர். இந்த நூல் பற்றிக் குறிப்பொன்று எழுதவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். நானும் மகிழ்ச்சியுடன் வாங்கிப் படிக்கத் தொடங்கினேன்.
தலைநகர் கொழும்பின் தமிழ்நாடக அரங்குபற்றி அவ்வப்போது குறிப்பிடப்பட்டு வந்தாலும், அதை ஆவணப்படுத்தும் முயற்சிகள் முழுமையாக இடம்பெற்றதில்லை. அந்த வகையில், அந்தனி ஜீவாவின் இம்முயற்சி பாராட்டத்தக்கதும், போற்றத்தக்கதும் ஆகும். இந்நூலுக்குப் பேராசிரியர் சபா.ஜெயராசா பொருத்தமானதோர் அணிந்துரையை வழங் கியுள்ளார். 31 தலைப்புகளில் நூலை வடிவமைத்துள்ளார் நூலாசிரியர்.
இந்நூலின் முதல் ஆறு இயல்களும் தலைநகரில் தமிழ்நாட்டு நாடகங்களின் செல்வாக்கை
எடுத்துக்காட்டுகின்றன. மற்றையவை தலைநகரின் தமிழ்நாடக வளர்ச்சியைக் குறிப்பிட்டுச் செல்கின்றன. பிரித்தானியர் ஆட்சியிலே பார்ஸி இசை வடிவங்கள் ஏற்படுத்திய தாக்கம், தென்னிந்திய நாடகக்கம்பனிகளின் செல்வாக்கு, சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள், டி.கே.சண்முகம், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் உட்படப் பலர் கொழும்பில் (பிற இடங்களிலும்) நாடகங்களை மேடையேற்றியமையால் ஏற்பட்ட தாக்கம் முதலியவற்றை நூலாசிரியர் பதிவுசெய்துள்ளார். இதேவேளை, குறிப்பிடத்தக்க சுவாரசியமான விடயமொன்றையும் நூலாசிரியர் குறிப்பிட் டுள்ளார். "தமிழ் சினிமா உலகில் இருபெரும் திலகங்களாக திகழ்ந்த
நடிகர்திலகம் சிவாஜிகணேசனும், மக்கள் திலகம் எம். ஜி.ராமச்சந்திரனும் நாடகமேடையில் பெண் வேடமிட்டவர்கள். இவர்கள் இருவரும் இங்கு வந்து கொட்டாஞ்சேனை ஜிந்துப்பிட்டி முருகன் தியேட்டரில் பெண்வேடத்தில் நடித்துள்ளனர்" என்ற விடயம் பலருக்குத் தெரியாதது.
பம்மல் சம்பந்த முதலியாரைத் தமது குருவாக வரித்துக்கொண்ட கலையரசு சொர்ணலிங்கம் இலங்கை சுபேத லிலாஸ சபா என்ற நாடகமன்றத்தினை ஏற்படுத்தி நாடகங்களை மேடையேற்றினார். அதேவேளை, கலைஞர் கருணாநிதியின் நாடகங்களும் தலைநகர நாடக மேடைகளை
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

Page 53
ஓச்.
11 II 11:11
அலங்கரித்தன. இவை பற்றியும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மேடை நாடகத்தின் வரலாறு இராஜேந்திரன் மாஸ்டருடன் தொடங்குகிறது என்பதை அந்தனி ஜீவா நூலில் விரிவாக விளக்கியுள்ளார். மனோரஞ்சித கான சபா என்ற நாடக சபாவை ஏற்படுத்தி, பல நாடகக் கலைஞர்களை இராஜேந்திரன் மாஸ்டர் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார். அதேவேளை, இலங்கைத் தமிழ் நாடக வரலாற்றில் முதன்முதலில் பெண்களை நாடகங்களில் நடிக்கவைத்த பெருமையும் அவரையே சாரும் என்று நூலாசிரியர் தெரிவிக்கின்றார்.
இலங்கை வானொலி
நாடகங்கள் பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் சானா (சண்முகநாதன்) வின் நினைவே எவருக்கும் ஏற்படும். இலங்கை வானொலியின் நாடகத் தரத்தை உயர்த்தியவர், அவர். வானொலி நாடகங்களில் சினிமாசாயல் பரவாதவாறு
அதன் தரத்தை அவர் பேணிக்கொண்டார். இத்தகைய விடயங்களையும் நூலாசிரியர் நூலில் தந்துள்ளார்.
1950களின் பிற்பகுதியிலும், 1960களிலும் கொழும்பில் பல நாடகமன்றங்கள் இயங்கின.வாரம் ஒரு நாடகமாவது மேடையேற்றப்பட்டதுண்டு. பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபம், கொட்டாஞ்சேனை விவேகானந்தா மண்டபம், கமலாமோடி மண்டபம், பொரளை வை.எம். பி.ஏ மண்டபம், பிறின்ஸ் கல்லூரி மண்டபம் முதலானவற்றில் இம்மன்றங்களின் நாடகங்கள் மேடையேறின. மனோரஞ்சித கான சபாவுடன் தலைநகரில் ஏறத்தாழப் பத்துக்கு மேற்பட்ட நாடகமன்றங்கள் அக்காலத்தில் இயங்கிவந்தன. 1970, 80களில் மேலும் சில நாடகமன்றங்கள் தோன்றி மறைந்தன. இவை பற்றியும் அந்தனி ஜீவா தமது நூலில் பதிவு செய்துள்ளார். மானா மக்கீன் எழுதி நெறிப்படுத்திய டயல் எம்போர் மேர்டர் என்ற நாடக அரங்கேற்றத்தின் பின்னரே லயனல்வென்ற் அரங்கில் தமிழ் நாடகத்துக்கான வாசல் திறந்துவிடப்பட்டது என்ற செய்தியையும் நூலாசிரியர் தெரிவித்துள்ளார்.
தலைநகரின் தமிழ் நாடக அரங்கில் தகுந்த பணியாற்றிய நாடகக் கலைஞர்களின் பங்களிப்புகளைத் தனித்தனித் தலைப்புகளில் நூலாசிரியர் அந்தனி ஜீவா தந்துள்ளார். நடிகவேள் லடீஸ் வீமணி, சுஹைர் ஹமீட், அப்துல் ஜப்பார், விசாலாட்சி ஹமீத், கே. பாலச்சந்திரன், பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை, ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

அ.தாஸீஸியஸ், பேராசிரியர் கா.சிவத்தம்பி, மானா மக்கீன் , எம் எச் பௌசுல் அமீர், ஜோர்ஜ் சந்திரசேகரன், ஏ.ரகுநாதன், பி.எஸ். கிருஷ்ணகுமார், கலைச்செல்வன், கே.எம். வாசகம், எஸ்.எஸ்.கணேசபிள்ளை, ஜே.பி. றொபர்ட், ஏ.ஸி. எம். ஹாசைன் பாரூக் , பூந்தான் யோசேப், வி.ரி.வைரமுத்து, எம்.ஏ. அப்பாஸ், ஹெலன் குமாரி, ஹிலேரியன் பெர்னாண்டோ, கே.செல்வராசா, அந்தனி ஜீவா உட்படப் பலரின் பங்களிப்புகளையும் நூலில் தந்துள்ளார்.
அந்தனி ஜீவாவின் தலைநகரில் தமிழ் நாடக அரங்கு என்ற நூல், இலங்கைத் தமிழ் நாடகத்துறை தொடர்பாக வெளிவந்த குறிப்பிடத்தக்க நூல்களுள் ஒன்றாக விளங்கு கின்றது. இலங்கையின் தமிழ் நாடகத்துறை பற்றிப் பொதுவாக அறிய விரும்புவோர்க்கும், தலைநகரில் தமிழ் நாடக வளர்ச்சி பற்றிச் சிறப்பாகத் தெரிந்துகொள்ள விழைவோர்க்கும் இந்த நூல் பயன்படும் என்பதில் சந்தேக மில்லை.
0 0 0 0 0
எல் தமிழ் றிய விரும்பாகத்துறை
நூல்: இலக்கியத்தில் சமூகம்
- பார்வைகளும் பதிவுகளும் ஆசிரியர்: இ.இராஜேஸ்கண்ணன். வெளியீடு : ஜீவந்தி, அல்வாய்
விலை: ரூபா 250/- 'கலையின் சமூகவியல்' சில சிந்தனா கூடங்களின் வழியான தேடல், யாழ்ப்பாணத்துச் சமூக பண்பாட்டு அசைவியக்கத்தில் பண்பாட்டு ஆளுமைகளின் வகிபாகம், பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் காதலியாற்றுப்படை, திருக்குறள் புலப்படுத்தும் மக்கள் பங்கேற்றலின் கூறுகள், ஒளவையை மறுதலிக்கும் அவ்வை கள், கவிதை மொழி உணர்வுத்தளமும் கருத்தியல் தளமும், ஈழத்து கவிதைத் தடத்தில் 'கைகூ' கவிதைகள், யுகசந்தி, சாபவிமோசனம், ஆத்திசூடி ஒளவையார் பாரதி முருகையன் ஒரு கருத்தியல் ரீதியான ஒப்பாய்வு ஆகிய சமூகவியல் நோக்கில் அமைந்த 10 கட்டுரைகளின் தொகுப்பு
இந்நூல். இலக்கிய மீள்
வாசிப்பினூடாக தமிழர் வாழ்வியலை, பண்பாட்டு வரலாற்றினை
காவியத்தில் சமாரிது வெளிப்படுத்தும் ஆசிரியது க கட்டுரைகள் பண்பாட்டு
மேம்பாட்டுக்கான செல்நெறியையும் உணர்த்துகின்றன. சிறந்ததொரு கட்டுரைத்
தொகுப்பு நூல்.
ஈ பர்கனாவதி பல்.
:41 ! ப.

Page 54
'சிம கால .. இலை இலக நிகழ்வுக
- கே.
இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்
கலாநிதி ந. இரவீந்திரனின் இரட்டைத் தேக் விமர்சன அரங்கு கடந்த 03.08.2014 அன்று வெ லெனின் மதிவானம் தலைமையில் நடைபெற்ற. சந்தி திலகர், தஇராஜரட்ணம், வை.வன்னியசிங் கலாநிதி ந. இரவீந்திரன் ஏற்புரை நிகழ்த்தினார்.
கர்நாடக இசைக்கச்சேரி
மகாகவி பாரதியின் கொள்ளுப்பேரன் ஸ்ரீராம் கற்றவரும் இலண்டனில் பல மேடைகளில் இல சுரேன் அவர்களின் கர்நாடக இசைக்கச்சேரி கடற் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் பேராசிரியர் சபா. ெ கலைஞர்களாக மிருதங்கம் லயஞான பூபதி “மி சர்மா, வயலின் எஸ். திபாகரன், கஞ்சிரா "கலை சிறப்புச் செய்தார்கள். நூற்றுக்கணக்கான இசை
திரை விலகும் போது...
ஏ. ஆர். திருச்செந்தூரனின் வானொலி, விலகும்போது...” என்ற நூலின் வெளியீட்டு விழா தலைமையில் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண் வரவேற்புரையை கொழும்புத் தமிழ்ச் சங்கத் த நிகழ்த்த, வெளியீட்டுரையை சூரியன் எப். எம். நூல் நயவுரையை ஆசிரியர் க. கலாதரன், நிகழ்த்தினார்கள். ஏற்புரையையும், நன்றியுரை ை சபை நிறைந்த பார்வையாளர்கள் கலந்து கொ
சொற்சிலம்பம் - 2014
இலங்கை தமிழ் விவாதிகள் கழகம் பெருபை கடந்த ஞாயிற்றுக்கிழமை 10.08.2014 அன்று நடைபெற்றது. சிறப்பு அதிதியாக ஸ்ரீ பொன்னம் சுவாமிநாதன் அவர்கள் கலந்து கொண்டார். இலா ரீதியாக நடத்திய "மொழி முனை 2014” வி. வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்த நினைவுக்கேடயத்தை பெற்றுக் கொண்டது. ! பாரம்பரிய விவாதம் என மூன்று வித விவாதம் முன்னிலையில் நிகழ்த்திக் காட்டினார்கள் 8 சமூகத்தின் பால் அக்கறை உண்டு என்பதை பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்தார்கள்.
52

பொன்னுத்துரை
யெமும் பண்பாட்டுப் புரட்சியும் என்று நூலின் வள்ளவத்தை பெண்கள் ஆய்வு நிலையத்தில் து. நூலின் விமர்சன உரையை மல்லியப்பூச் கம் ஆகியோர் நிகழ்த்தினார்கள். நூலாசிரியர்
ஜ் குமார் பாரதியிடம் இசை நுணுக்கங்களைக் செக்கசேரி நிகழ்த்தியவருமான செல்வி ஸ்ருதி ந்த 03.08.2014 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்க ஜயராசா தலைமையில் நடைபெற்றது. அணிசேர் ருதங்க கலாகீர்த்தி” பிரம்மஸ்ரீ க. சுவாமிநாதன் வாருதி" ப. பிரம்மநாயகம் ஆகியோர் கலந்து ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
மேடை நாடகங்களின் தொகுப்பான "திரை - சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ். எழில்வேந்தன் டபத்தில் 09.08.2014 அன்று நடைபெற்றது. நலைவர் ஆ. இரகுபதி பாலஸ்ரீதரன் அவர்கள் பணிப்பாளர் ஏ. ஆர். லோஷன் நிகழ்த்தினார்.
சட்டத்தரணி சோ. தேவராஜா ஆகியோர் யயும் ஏ. ஆர். திருச்செந்தூரன் நிகழ்த்தினார். ண்டனர்.
மயுடன் வழங்கிய "சொற்சிலம்பம் 2014” நிகழ்வு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் பலேஸ்வரா தேவஸ்தான அறங்காவலர் டி.எம். ங்கை தமிழ் விவாதிகள் கழகம் அகில இலங்கை பாதப் போட்டித் தொடரில் வெற்றி கொண்ட யொலம், பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி பாராளுமன்ற விவாதம், சுழலும் சொற்போர், ரகளையும் அரங்கு நிறைந்த பார்வையாளர்கள் இளைய தளபதியினர். இளையோர்களுக்கும் விவாதத் தலைப்புகள் வெளிக்காட்டின எனப்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

Page 55
பாடசாலை மட்டத்தில் தமிழ் விவாத வளர்ச்சியில் அரும்பணியாற்றிய ஆசிரியர் களான திரு முகமது லியாகத் அலி, திருமதி மலர் பாலேந்திரன், திரு. விஸ்வலிங்கம் குகாதரன், திருமதி சாரதா ஜெயக்குமார், திரு வைரமுத்து பேரின்பம் ஆகியோர் முன்னாள் விவாதிகளால் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டனர். “நழுவி கவிதை நூல் வெளியீடு
பொத்துவில் கலீபாவின் "நழுவி” கவிதை நூல் வெளியீடு கொழும்பு வை.எம். எம்.ஏ மண்டபத்தில் தமிழ்த் தென்றல் அலி அக்பர் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாசீத் கலந்து கொண்டார். நூலின் முதற்பிரதியை மீரா லெப்பை முசம்மில் பெற்றுச் சிறப்புச் செய்தார். பேராசிரியர் துரை மனோகரன், நாச்சியாதீவு பர்வின், கின்னியா அமீர் அலி, மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத், கலைவாதி கலீல் ஆகியோரும் உரை நிகழ்த்தினார்கள். சோர்விலாச் சொல் நூல் வெளியீடு
உற்பத்தி ஊக்குவிப்புத் திறன் அபிவிருத்தி அமைச்சர் பஷீர் சேகுதாவுத் தனது 1991-2011 காலப் பாராளுமன்ற உரைகளை "சோர்விலாச் சொல்" என்ற தலைப்பில் வெளியிட்டார். முஸ்லிம் கவுன்ஸில் தலைவரும், நவமணி பத்திரிகையின் ஆசிரியரும் மூத்த ஊடகவிய லாளருமான என்.எம். அமீன் தலைமையில் இவ்விழா கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கிம் கலந்து சிறப்பிக்க, நூலின் பிரதியை “இலக்கிய புரவலர்” ஹாசிம் உமர் பெற்றுச் சிறப்புச் செய்தார்.
இந்நூல் பற்றிய உரைகளை பேராசிரியர் எம். எஸ்.அனஸ், எம்.ரி.ஹசன் அலி, ரவி சுந்தரலிங்கம் மற்றும் பிரித்தானியா குருநானக்தேவ்பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி என். முத்துமோகன் ஆகியோர் நிகழ்த்தினார்கள். கலை இலக்கிய அரசியல் பிரமுகர்கள் பலர் சமூகம் தந்து விழாவைச் சிறப்புச் செய்தனர்.
0 0 0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014

ஜன்னலோரம்
முல்லை ரமணன்
(அமைதியான அந்தக் காலைப் பொழுது சூரியக்கதிர்கள் பிரகாசிக்கின்றன
தென்றல் தடவும் வயலோரம்
கொக்கும் நீர்க்காகமும் காத்திருக்கும் வரண்ட குளக்கரை
பள்ளி செல்லும் வெள்ளைப் புறாக்கள்
போன்ற மாணவர்கள்
வாழ்வுக்காய் மிதி வண்டியில்
விறகு சுமக்கும் கூலியின் வியர்வைத் துளிகள் அரும்பும் உடல்
எவ்வித சலனமும் இல்லாமல், அவசரத்தில் பயணிக்கும் மனித இனம்
மரநிழலில் கச்சான் கடலை விற்கும் பாட்டி
ஏழ்மையின் சின்னமாய் காலில் செருப்பில்லாமல் நடந்து செல்லும் சிறுமி
புன்னகை புரிந்து நிற்கும்
அரைகுறை ஆடைகளில் சிங்கார நடிகைகளின் சுவரொட்டிகள்
மாலைகருக்கலில் மறையும் சூரியன் வானில் எழும் நிலா இவையனைத்தும்
கட்புலன் வழியில் மனதில் பதிந்த
அன்றைய யன்னலோர பயணக் காட்சிகள்

Page 56
வாசகர் (
ஞானம் 171 இதழ் பார்த்தேன். வழமைபே தனித்துவத்தை மெருகேற்றிச் செல்வதைக் கான
மல்லிகை டொமினிக் ஜீவா ஐயாவிற்குக் கி சமத்துவமானதே! அதற்காக உங்களைப் பாராட்
மிகிராணி மதுசங்கிகா எனும் சிங்கள மொழி வெளிவந்த கவிதைகளில் "போருக்குப் பின்னரான உணர்வுகள் சார்ந்த விடயங்கள் எவ்வாறு பிரதி மேற்கொண்டு தனது பட்டப்படிப்பை நிறைவே சஞ்சிகையின் ஈழத்து இலக்கியப் பணியின் வ அந்த ஆய்வு கட்டயமாக புத்தகமாக வெளிவர
உலக சினமா பற்றிய பவநீதா லோகநாதனின் The Red Balloon பற்றிய அவரின் பார்வை மெச்.
இலண்டன் பயண அனுபவங்கள் பயணத் பொக்கிசமாகத் தந்துகொண்டு போகும் நேரிய படிக்கவேணும், புதுவிடயங்கள் அறிய வேண்டும்
சாதிக்கதை எழுதுகிறோம். அதில் சாதிக்கி 'எங்களில் ஒருத்தி' என்கிற ஷெல்லிதாசனின் சிறுக இப்படியும் சொல்லலாம் என்பதற்கு முதல்தரம் படிப்பவர்களை நெகிழ வைத்துவிட்டார்.
0 0 0 வாசகர் கடிதம் பகுதி பார்த்தேன். எனக்கு; படைப்பாளியாக இருப்பதை விட போராளி எழுத்தாளர்கள் தள்ளப்படுகிறார்கள். அதனை மு
ஆனால் இந்தச் சண்டைக்கு ஞானம் கள் ஆதங்கம். முதலிலேயே அந்தப் பெண் எழுதிய க எனத் தோன்றுகிறது.
மற்றது மிக அண்மையில் இந்தியாவில் ஒ அங்கு நடக்கும் பாலியல், ஓரினச் சேர்க்கை பி கொண்டு இருக்கிறது.
தமிழில் மிகக் குறைவு என்றாலும் பெயர் நி. 2 நாவல்கள் எழுதியுள்ளார். அது அவரின் சுய
ஓரினச் சேர்க்கை என்பது பேசாப்பொருளாய் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.
0 0 0 கலாநிதி துரைமனோகரனின் எழுதத்தூண்டு என்ற அவரது துணிவைக் கண்டேன் மிகமகிழ்ந்
எழுத்தாளர் அல்லாத பேராசிரியர் ஒருவரு விருது கொடுக்கப்பட்டது தொடர்பான தன்னுன சொல்ல முற்பட்ட அவரது துணிவு குறித்து விய
அதிலும், தனக்கு ஒருவேளை 'சாகித்தியர் என்ற நப்பாசை சிறிதும் இல்லாமல், எழுத்தாள வழங்கக் கூடாது என்ற அவரது ஆணித்தரமான
54

பேசுகிறார்
ால் பலவகை இலக்கிய அம்சங்களோடு தனது ரக் கூடியதாக இருந்தது. டைத்த இயல்விருது பற்றிய தங்களின் பார்வை டலாம்! I விசேடதுறை மாணவி ஞானம் சஞ்சிகையில் 1 தமிழ் மக்களின் நிலைமை மற்றும் அவர்களது பலித்துள்ளன என்பது பற்றிய ஓர் ஆய்வினை ற்றவுள்ளார்” என்பதை அறியும்போது ஞானம் பிரிவும், ஆழமும் துல்லியமாகத் தெரிகின்றன. வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.
கன்னி முயற்சி முதிர்ச்சியாக ஜொலிக்கின்றது. சக்கூடியது. இன்னும் தொடரட்டும்.... தோடு பயணிக்காது அரிய பல விடயங்களை | சிந்தனை வியக்கத்தக்கதாகும். தொடர்ந்து ம் என்ற எண்ணத்தைத் தூண்டுகின்றது.. றோம். என்று தம்பட்டம் கட்டும் ஒரு சிலருக்கு தை சமர்ப்பிக்கப்படவேண்டும். சாதியக்கதைகள் மான இக்கதை ஒரு சான்று. ஷெல்லிதாசன்
-கிருசாந்தி உதயகுமார் 1 0 0
த் தெரிந்த குறுகிய கால இலக்கிய உலகில் "யாக இருக்க வேண்டிய கட்டாயத்துக்குள் மஸ்டீனின் எழுத்தில் தெரிகிறது.
ம் அமைக்க வேண்டுமா என்பதுதான் எனது கடிதத்தை பிரசுரிக்காமலேயே விட்டிருக்கலாமோ
ரு கன்னியாஸ்திரி அதனை விட்டு வெளியேறி பிரச்சனைகள் பற்றி எழுதி பரபரப்பாக விற்றுக்
னைவில்லை. கொழும்பைச் சேர்ந்த ஒரு தமிழர்
அனுபவம் என விமர்சிக்கப்படுகிறது. இருக்கின்றதே தவிர பேசப்படக்கூடாத பொருள்
வி.ஜீவகுமாரன், டென்மார்க் ) 0 0
ம் எண்ணங்களில் "இனியொருவிதி செய்வோம்' தேன்! க்கு - பல ஆண்டுகளுக்குமுன் - 'சாகித்திய ரத்னா' மடய எதிர்ப்பை, இவ்வளவு காலங்கடந்தேனும் பப்புடன் கூடியமகிழ்ச்சி!
த்னா' விருது கிடைக்க வாய்ப்பிருக்கலாமோ ர் அல்லாத பேராசிரியர்களுக்கு அந்தவிருதை ஈமுடிவு மிகமிகப் பாராட்டத்தக்கது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

Page 57
'சாகித்தியரத்னா'
விருது எழுத்தாளர் ஒரு முறை தீரச் சிந்திப்பது நல்லது ஏனெ மொழிபெயர்ப்புக்களுக்கெல்லாம் கொடுக்கிற மாத்திரமன்றி, இலக்கியம் பற்றிய அறிவும் அந் என்பதல்லவா அர்த்தம்? அதுமட்டுமன்றி, இ ஆங்கில மொழிகள் தொடர்பிலும் பெரும்பாலு வழங்கப்படுகிறது. அது தொடர்பாகவும் கலாநி ஆங்கிலத்தில் அல்லது சிங்களத்தில் எழுதி வெ
ஆனால், ஒன்று: உலகளாவிய ரீதியில் இலக்கியமாகக் கொள்ளப்படுவன அல்ல புனை புனைகதையாசிரியர்கள், கவிஞர்கள் மாத்திர கருத்திற்கொள்ளவேண்டும்.
அதுபோக, இலக்கியவாதிகள் பலருக்கு அப்பால் இலக்கியம் பற்றிய - எங்கள் பரந்து சிறிதேனும் இருப்பதாகத் தெரியவில்லையே! தானும் அறவே இல்லையே! அந்த அறிவு மிக்க எழுதுகிறவன் எல்லாம் எழுத்தாளன் என்ற மயக்க போட்டிக்கும் பரிசுக்கும் எதையாவது நாவல் நாமே எழுத்தாளன் என்று எண்ணிக்கொள்ளும் ! 'இனி ஒரு விதி செய்வோம், அதை எந்த நாளும் க
0 0 ( அதிக முஸ்லீம் எழுத்தாளர்களை உருவா என ஆசிரியர் அவர்கள் கூறியுள்ளதை நான்மறு முஸ்லிம் எழுத்தாளர்களை உருவாக்கிய பெரு முன் வெளிவந்த 'இன்ஸான்' என்ற வார ஏ அபூதாலிப் அப்துல் லரீப் என்பவரை ஆசிரியர அரசியல் சார்பான ஏடாக இருந்தாலும் கலை, வழங்கியது.
தமிழ் மணி மானா மக்கீன் அவர்களின் பத் கூறியுள்ளார். அதை வாசித்த எனக்கும் நூதன தமிழ்மணி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். . சமரும் நூதனமாகவே இருக்கிறது. அச்சர் மனக்குழப்பத்தில் உள்ளவர் அல்லது இவ்வி இருப்பார் என நினைக்கிறேன். பேராசிரியர் : தானே விழா ஏற்பாடு செய்யும் கதாநாயகர்
கூரப்படவேண்டும்.
உலகசினிமா என்ற தலைப்பில் பவநீதாலோக என்ற குறும்படத்தை பற்றிய பற்றிய விமர். மாயா ஜாலப்படங்களை நினைவூட்டியது.
0 0 1 ஜூலை மாத ஞானம் வழமைபோல் சுவை வெளிவந்தது. அதிலே மருதமைந்தன் அவர்களி கவர்ந்தது. முடிவுபற்றி நான் பலமுறை சிந்த சந்தேகித்தேன். (நான் எனது பண்பாட்டிலிருந்து உண்மையில் என்னைப் பலமுறை யோசிக்க என்றே நினைக்கிறேன். ஆசிரியருக்கு எனது 6 பேராசிரியர் துரை மனோகரன் அவர்களின் காட்டுவதுடன் எம்மையும் எழுதத் தூண்டுகின்ற ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

களுக்கு மட்டும்தான் பொருந்துவதா என்று ன்றால் சாகித்திய விருதை ஆய்வு நூல்கள், எர்களே! ஆகவே இலக்கிப் படைப்பாற்றல் த விருதுக்கான தகுதியாகக் கொள்ளப்படுகிறது லங்கையில் 'சாகித்திய ரத்னா' விருது சிங்கள், ம் எழுத்தாளர்களுக்கு அன்றி அறிஞர்களுக்கே தி துரைமனோகரன் தன்னுடைய கண்டனத்தை "ளியிட்டால் அதிகம் பிரயோசனப்படலாம்.
புனைகதை, கவிதை என்பன மட்டும்தான் கதை சாரா இலக்கியங்களும் உண்டு. ஆகையால் ரம்தான் எழுத்தாளர்கள் அல்ல என்பதையும்
ஓரளவு எழுதத் தெரிகிறதேயல்லாமல் அதற்கு பிரிந்த இலக்கியப் பாரம்பரியம் பற்றிய அறிவு தங்கள் தங்கள் எழுத்தின் தரம் பற்றிய அறிவு கமிக அவசியமாக அல்லவா வேண்டப்படுகிறது. க்கத்தை விடுவோம். பாடசாலைக் காலங்களிலே என்றும் சிறுகதை என்றும் எழுதிவிட்டு எம்மை மயக்கத்தை அறவேவிடுவோம்! பாரதி பாணியில் காப்போம்!'
- இ. ரமணன், மீசாலை 0 0 0 க்கிய பெருமை 'மல்லிகை' இதழுக்கு உண்டு பக்கவில்லை. என்றாலும் கூடுதலான முற்போக்கு மை ஏறக்குறைய ஐந்து தசாப்த காலங்களுக்கு ட்டையே சாரும். சோஷலிச சிந்தனையுள்ள - ரகக் கொண்டு வெளிவந்த அப்பத்திரிகையானது கலாசார, இலக்கியங்களுக்கும் முக்கியத்துவம்
ந்தி எழுத்தில் அவர்கண்ட நூதன அனுபவத்தை அனுபவமாக இருக்கிறது. அச்செய்தியைத்தந்த மேலும் கே.விஜயன் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ள ச்சையை உருவாக்கிய ஆண் படைப்பாளி வகாரத்தில் அவர் ஒரு மனவியாதியுள்ளவராக துரை மனோகரன் சுட்டிக்காட்டியுள்ள தனக்குத் களும் மனக்குழப்பவாதிகள் என்றே நினைவு
கநாதன் அவர்கள்தான்பார்த்துரசித்த த ரெட் பலூன் சனம் படித்தேன். பழைய விட்டல் சார்யாவின்
- பாணந்துறை எம்.பி. எம். நிஸ்வான் ) 0 0 வயான தேவையான பல அம்சங்களைத்தாங்கி இன் 'தண்ணி வெடி' சிறுகதை என்னைப் பெரிதும் தித்தேன். யதார்த்தத்தில் அது நடக்குமா என வெளியே வரவேண்டும் என நினைக்கிறேன்.) வைத்த அச்சிறுகதை வெற்றி பெற்றுவிட்டது வாழ்த்துக்கள் எழுதத் தூண்டும் எண்ணங்களில்
துணிகரமான எழுத்துக்கள் யதார்த்தத்தைக் ன. கலைஞர் கருணாநிதி அவர்களின் அரசியல்
, 55

Page 58
பக்கங்களைத்தவிர்த்து இலக்கியப்பக்கத்தைய இடையிலான உறவுகளையும் இளந்தலைமு ை 'படித்ததுதம் கேட்டதும்' காலத்திற்குத் தேவையா
0 0 0 அர்த்தமுள்ள ஆசிரியர்பக்கம் மல்லிகை இயம்பியதுடன், மல்லிகை வரலாற்று மணத்தை அலங்கரித்த கலாநிதி. மு.க.சு. சிவகுமாரன் | எம்மவர் உயரட்டும். சிறுகதைகளாக ஜூனை, ஷெல்லிதாசனின் 'எங்களில் ஒருத்தி' மற்றும் . எம்மை இலண்டனுக்கு அழைத்துச் சென்று கா அனுபவங்கள் யாவுமே நயம்பட ஜொலித்தன.
0 0 ( எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் உபாலி தாங்கிவந்த 170ஆவது ஞானம் இதழின் | சுவைத்ததில் மருதமைந்தனின் 'தண்ணி வெடியை தண்ணி வெடியைப்பற்றி அநேகர் அறிய வா கரைகளில் வேட்டையாடுவது வழக்கில் இருக்க மருத மைந்தன் தந்திருக்கிறார். இந்த இடத்தி விஷயத்தைத் தெளிவுபடுத்தலாம். என நினைக் மிருகங்களை வதைத்துக் கொல்கிறார்கள் என அல்லது பிராணி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக் இரத்தத்தை ஓட்டவேண்டும் என்பது தான் இஸ். மிருகங்களின் இரத்தம் ஓட்டப்படாமல் உண்பது ஆடு, மாடு. மான், மரை, ஒட்டகம் போன்ற மிரு தடுக்கப்பட்டுளது. எனவேதான் கதையில் வரும் ? முற்படுகிறார். எதிர்பாராதவிதமாக அது எதிர்மா மாஸ்டர்தான் கொன்றுவிட்டதாக ஒப்பாரிவைக்கு நம்பத்தயாரில்லை. என்றாலும் "தன்வினை த தாவூத்ஷா இறக்க நேர்ந்தது என்ற குற்ற 2 அதிபரின் மனைவி எதிர்பாராமல் எடுத்த முடி விடுகிறது. மொத்தத்தில் சிறந்ததொரு கதை. நன்றிகள்.
0 0 0 கடந்த 2014 ”ஞானம்” ஜூலை இதழில் அவர்களின் பணிகள் பங்களிப்புகள் தொடர்பாக பார்த்தேன். மிக நல்ல விடயம். மல்லிகை ஆசி சகோதர எழுத்தாளர்கள் கலைஞர்களை கொ இராமகிருஷ்ண மண்டபம் தமிழ்ச்சங்கம் ஆக பெரும்பான்மையின் சகோதரர்களும் கலந்துகெ
தகுதி திறமை ஆகியவற்றுக்கே முதலிடம் : உருவாக்கும் படைப்புகள் இடம்பெறுவது மகி நிகழ்வுகளை தொகுத்துத்தரும் கே.பொன்னுத்து
(ஞானத்திற்கு ஆக்கங்களை அனுப்புபவர்கள் தமது முழுப்லெ வேண்டும். இந்த விபரங்கள் இணைக்கப்படாதவை நிராகரிக்க (Editing) ஆசிரியருக்கு உரிமையுண்டு. வாசகர் கடிதங்கள் 3
56

ம் அவருக்கும் அறிஞர் அண்ணாவுக்கும் றயினராகிய எமக்கு அறியத்தந்த விஜயனின் ான பத்தியே.
செ. பிறைசில், 3ஆம் வருடம், பேராதனைப்பல்ககை கழகம் ) 0 0
ஜீவாவுக்குகு கிடைக்கும் இயல்விருது பற்றி நயும் அள்ளி வீசியது. அட்டைப்பட அதிதியாக பற்றி அறியச் செய்தமை அகமகிழ்வளித்தது. தா ஷெரீப் அவர்களின் ஓங்கி ஒரு குத்து, கவிதைகள் கட்டுரைகளுடன் ஞானம் ஆசிரியர் ட்டுவதுபோல அமைந்துள்ள இலண்டன் பயண
-நிரை தமிழின் தாசன், மட்டக்களப்பு ) 0 0
லீலா ரத்னவின் முகப்பு அட்டைப்படத்தைத் படைப்பாளிகளின் பலசுவைப்படைப்பகளையும் 1 ஒரு தடவைக்கு இருதடவை சுவைக்க நேர்ந்தது. ய்ப்பில்லை. கிழக்கு மாகாணத்திலே தண்ணீர் மாம் அத்தகையதொரு அனுபவக்கதையைத்தான் ல் எமது மாற்று மதச் சகோதரர்களுக்கு ஒரு 5கிறேன். இல்லையேல் அவர்கள் முஸ்லிம்கள் எ நினைக்கலாம். வேட்டையாடப்படும் மிருகம் காகி இறப்பதற்கு முன்னர் அதனை அறுத்து லாமிய விதிமுறை. உணவுக்காக அறுக்கப்படும் தடுக்கப்பட்டுள்ளது.. செத்த பிராணியை அல்லது தகங்களின் அறுக்கப்படாத மாமிசத்தை உண்பது தாவூத்ஷா அதனை இறப்பதற்கு முன்னர் அறுக்க றையாக அமைந்துவிட்டது. தாவூத்ஷாவை அந்த நம் தாவூத்ஷாவின் மனைவி பரீதா உண்மையை என்னைச்சுடும்” என்பதைப்போல தன்னால்தான் உணர்வு அதிபரின் உள்ளத்தை வாட்டினாலும் டவு கதையில் எதிர்பாராத முடிவாக அமைந்து ஆசிரியருக்குப் பாராட்டுக்கள். ஞானத்துக்கும்
எம். எம். மன்ஸுர் மாவனல்லை. ) 0 0
மொழி பெயர்ப்பாளர் உபாலி லீலாரட்ன ன கட்டுரை மற்றும் அவரது படம் ஆகியவற்றை சிரியர் டொமினிக் ஜீவாவும் ஆரம்ப கால முதல் ளரவித்தது நினைவுக்கு வந்தது. அண்மையில் கிய இடங்களில் ஜீவாவைக் கெளரவித்தபோது ாண்டது குறிப்பிடத்தக்கது. அளித்து வரும் ஞானம் இதழில் நல்லிணக்கத்தை ழ்ச்சியை தருகிறது. சமகால கலை இலக்கிய பரையின் இக்கட்டுரையும் பாராட்டுக்குரியது.
-உடுவை எஸ். தில்லைநடராசா, கொழும்பு
பயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றைத் தெரிவிக்க படும். ஞானத்தில் வெளியாகும் விடயங்களைசெவ்வைப்படுத்த 00 சொற்களுக்குள் அடங்க வேண்டும் - ஆசிரியர்)
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - செப்டெம்பர் 2014 (172)

Page 59
ஐsthi.
OUR PRODUCTS ARE THE FOLLOWIN
> MASALA POWDERS > IDDLY PODDY ITEMS
VADAGAM ITEMS - PICKLES ITEMS
Manufactured by: SITHI ENTERPRISES
6 497/02, Madang
“ஞானம்” சஞ்சிகை
பூபாலசிங்கம் 202, 340, செட்டியார்
பூபாலசிங்க 309A 2/3, காலி வ
பூபாலசிங்கம் 4, ஆஸ்பத்திரி |
தூர் சுன்
அல்வாய். தொல்
லங்கா சென்ற 84, கொழும்

Enterprises
G,
Our Products are healthier and ரேரiemical,
prepared
բlioան. մատես։
' Tel: 011 - 2540093 |
கிடைக்கும் இடங்கள்
ம் புத்தகசாலை
தெரு, கொழும்பு-11
ம் புத்தகசாலை பீதி, வெள்ளவத்தை.
ம் புத்தகசாலை வீதி, யாழ்ப்பாணம்.
எக்கா
னாகம்
வந்தி லைபேசி: 077 5991949
றல் புத்தகசாலை
பு வீதி, கண்டி.

Page 60
GNANAM - Registered in the Department of Po
Lucky BISC MANUFAC
(Cuckyland
NATTARANPOTHA, KUN T: +94 081 2420574, 24202
E: luckylan
Printed by : Tharanjee Prints, 506, Highlevel R

sts of Si Lanka under No. aDI18/News/2014
-land)
EUT CTURERS
உலக சாதனை எங்கள் பாரம்பரியம்
' பிஸ்கட்டிலும் தான் !
NIDASALE, SRI LANKA. 217. F: +94 081 2420740 @ெsltnet.lk
oad, Nawinna, Maliaravarna - Tel: 2804773