கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து ஒளி 2014.10-11

Page 1
சேர 1 ல )
IE : 21
பன்.
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை
நாவலர் நிகை அகில இலங்கை இந்து
Religious Journal of A

இந்து ஒளி
HINDU OLI
தீபம் - 19 சுடர் - 01
1 1 1
7வுச் சிறப்பிதழ்
மாமன்ற ஆன்மீக இதழ் i Ceylon Hindu Congress
October - November
2014

Page 2
காத்தாமாரிதான்
கொழும்பு இந்து மகளிர் மன்ற வயோதிபர் இல்லத்திற்கு மின்தூக்கி வாங்குவதற்கு மாமன்றத்தின் நிதி அன்பளிப்பை மன்ற திட்டத்
தலைவர் திருமதி வனஜா தவயோகராஜாவிடம் மாமன்றப் பொருளாளர் திரு. வே. கந்தசாமி வழங்குகிறார். நடுவில் மாமன்றத்
தலைவர்.
நவம்பர் 10ஆம் 11ஆம் திகதிகளில் யாழ். பல்கலைக்
பங்குபற்றிய மாமன்ற சிவதொண்டர் அல்ல
கொஸ்லந்த மீரியபெத்த பகுதியில் அண்மையில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும்
மாமன்ற உபதலைவரும் சமூகநலன் குழுத் தலைவருமான திரு. சின்னத்துரை தனபாலா, மாமன்ற உபதலைவர் செஞ்சொற்செல்வ
கலாநிதி ஆறு.திருமுருகன் ஆகியோர்.

கனடா ஆத்மஜோதி நிலையத்தில் கவிஞர் வி. கந்தவனம் தலைமையில் நடந்த வைபவத்தில் சைவஞானபானு செஞ்சொற்செல்வர் கலாநிதி
ஆறு. திருமுருகன் உரையாற்றிய போது கௌரவிக்கப்படுகிறார். சிவத்திரு சிவ. முத்துலிங்கம் (குப்பிளான்) இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு
செய்திருந்தார்.
கழக வருடாந்த பட்டமளிப்பு வைபவத்தின் ஊர்வலத்தில்
னியினர் (செய்திக் குறிப்பு 44ஆம் பக்கத்தில்)
பாலாசராசதா? 8ாமோ மன். அல் சலம்
ஒai.
ப ர்
கடந்தகால போர்ச்சூழ்நிலைகளினால் பாதிக்கப்பட்ட திருமுறிகண்டி பாது பகுதியைச் சேர்ந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தலைவி
ஒருவருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் போது
திரு. சின்னத்துரை தனபாலா அவர்கள்.

Page 3
சிவமய
தீபம் - 19) இந்து
| 10பதியர்க்கம்
ஜய வருடம் கார்த்திகைத் திங்கள் RRRRRRRRRRRRRRRRR
பஞ்ச புராணங்கள்
திருச்சிற்றம்பலம்
தேவாரம் கடிதென வந்த கரிதனை யுரித்து
அவ்வுரி மேனிமேற் போர்ப்பர் பிடியன நடையாள் பெய்வளை மடந்தை
பிறைநுத லவளொடும் உடனாய்க் கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து
கொள்ளமும் நித்திலஞ் சுமந்து குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றும்
கோணமா மலை அமர்ந் தாரே!
ப) -
திருவாசகம் வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு ஆழ்கின்றாய் ஆழாமற் காப்பானை ஏத்தாதே சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன் பல்காலும் வீழ்கின்றாய் நீஅவலக் கடல் ஆய வெள்ளத்தே!
திருவிசைப்பா இவ்வரும் பிறவிப் பௌவநீர் நீந்தும்
ஏழை யேற்கு) என்னுடன் பிறந்த ஐவரும் பகையே யார்துணை என்றால்
அஞ்சல் என்றருள் செய்வான் கோயில் கைவரும் பழனங் குழைத்தசெஞ் சாலிக்
கடைசி யர்களை தரு நீலம் செய்வரம்பு அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே!
திருப்பல்லாண்டு சொல்லாண்ட சுருதிப் பொருள்
சோதித்த துாய்மனத் தொண்டருள்ளீர் 'சில்லாண்டிற் சிதை யுஞ்சில
தேவர் சிறுநெறி சேராமே வில்லாண்ட கனகத் திரள்
மேரு விடங்கன் விடைப்பாகன் பல்லாண் டென்னும் பதங்கடந்
தானுக்கே பல்லாண்டு கூறுதுமே!
திருப்புராணம் செறிதரு முயிர்தொறுந் திகழ்ந்து மன்னிய மறுவறு மானிட மரபின் மேவியே அறுவகை நெறிகளும் பிறவு மாகிய இறவிதன் மலரடி யிறஞ்சி ஏத்துவாம்!
திருச்சிற்றம்பலம்
(இந்து ஒளி

11
ஓளி
சுடர் - 01
சுடர் - 01
5 13 ஆம் நாள் (29. 11. 2014) RRRRRRRRRRRRRRSS
பதிப்புப் பணியின் முன்னோடி
நாவலர் பெருமான்
சைவமும் தமிழும் வளர்ச்சிபெறுவதற்கு பெருந் தொண்டாற்றிய பெருமகன் நாவலர் பெருமான். சைவம், தமிழ் சார்ந்த வகையில் அவர் ஆற்றிய பணிகள் பலவகையானவை. இவற்றுள் ஒன்றாகப் பதிப்புப் பணியை குறிப்பிடலாம்.
நாவலர் பெருமான், தான் மேற் கொண்ட தமிழ்ப்பணிக்கும், சமயப்பணிக்கும் இரண்டு சாதனங்கள் அவசியமாக இருப்பதை உணர்ந்தார். இதில் ஒன்று கல்விக்கூடம், மற்றொன்று அச்சுக்கூடம்.
மாணவர்கள் கல்வியைத் தொடருவதற்கு நுால்கள் தேவைப்பட்டன. அந்தக் காலத்தில் சைவசமய கொள்கைகளையும், வாழ்க்கை நெறிமுறைகளையும் போதிக்கும் நல்ல நூல்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. அவ்விதமாக நுால்கள் கிடைத்தாலும் அச்சுப் பிழைகள் உள்ளனவாகவும், சைவசமய நெறிமுறைகளுக்கு எதிரான கருத்துக்கள் கொண்டனவாகவும் காணப்பட்டன.
எனவே, நல்ல நூல்களை தாமே உருவாக்கிக் கொள்ளவேண்டிய தவிர்க்க முடியாத நிலை நாவலர் பெருமானுக்கு ஏற்பட்டது. அதுவே அவர் நுாலாசிரியராகவும், பதிப்பாசிரியராகவும் மாறவேண்டிய நிலையை தோற்றுவித்துவிட்டது.
அந்நாளில் கல்விக்கூடமும், அச்சுக்கூடமும் ஐரோப்பியரான மிஷனரியினரின் கையிலேதான் இருந்தன. இந்நிலையில், அவர்கள் நாவலரின் சைவத்தமிழ் நூல்களை அச்சிட்டுக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. எனவே, தாமே அச்சுக்கூடம் நிறுவவேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார் நாவலர். இந்தியா சென்று அச்சு இயந்திரத்தைப் பெற்றுக்கொண்டு யாழ்ப்பாணம் திரும்பி 'வித்தியாநுபாலன யந்திரசாலை' என்ற பெயரில் அச்சகமொன்றை நிறுவினார்.
இதன் மூலம் யாழ்ப்பாணத்தில் முதன்முதலாக அச்சுக்கூடம் அமைத்த ஐரோப்பியர் அல்லாத ஒருவர் என்ற பெருமையை நாவலர் பெருமான் பெற்றுக்கொண்டார். கிறிஸ்தவ மிஷனரிமார்கள் இலவசமாக வெளியிட்டுவந்த சிறு பிரசுரங்கள் ஊடாக சமயத்தை பரப்பும் முயற்சிகளை முறியடிக்கும்
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை

Page 4
வகையில் சைவசமயப் பிரசாரத்திற்கும், கல்வி * போதனைக்கும் ஏற்ற வகையிலான நூல்களையும் பிரசுரங்களையும் வெளியிடுவதற் கு தனது அச்சகத்தை நாவலர் பயன்படுத்திக் கொண்டதன் மூலம் பதிப்புப் பணியை முன்னெடுத்துச் சென்றார் என்பது வரலாறு.
இதன் ஊடாக நாவலர் அச்சுத் தொழிலுக்கு வழி காட்டியாகவும் , முன் னோடியாக வும் விளங்குகிறார். நாவலரின் இத்தகைய பதிப்புப் பணியைப் பின்பற்றியதாக நாவலர் வழிநின்று நற்பணியாற்றிவரும் அகில இலங்கை இந்து மாமன்றமும் தனது செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்கிறது. சமய, சமூக, கல்விப் பணிகளுடன் இணைந்து மாமன்றத்தின் பதிப்புப் பணியும் அமைந்திருக்கிறது.
மாமன்றத்தின் இத்தகைய பதிப்புப் பணியின் ஆரம்பமாக 1996ஆம் ஆண்டு கார்த்திகை தீபத் திருநாளன்று உதயமான "இந்து ஒளி' ஆன்மீக சஞ்சிகை பதினெட்டு வருடங்களை நிறைவுசெய்து கொண்டிருப்பதுடன், உங்கள் கரங்களில் தவழும் இந்த இதழ் பத்தொன்பதாவது வருடத்தின் முதலாவது வெளியீடாகவும் மலர்ந்துள்ளது. இதற்கும் மேலாக பதிப்புப் பணியின் முன்னோடியான நாவலர் பெருமானின் நினைவுச் சிறப்பிதழாகவும் இதனை வெளியிடுவதில் மாமன்றம் பெருமையடைகிறது.
இந்த பதிப்புப் பணி தொடரில் மாணவர்கள் மற்றும் இந்து மக்களுக்கு பயனுள்ள பல சமய நூல்களையும் மாமன்றம் வெளியிட்டு வருகிறது. இது தொடர்பான விபரங்களை இனிவரும் "இந்து ஒளி” இதழ்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
சைவ மறுமலர்ச்சியையும் சமூகச் சீர்திருத் தத்தையும் ஏற்படுத்திய நாவலர் பெருமானுக்கு, அவரது சிறப்பான பணியை மறவாது இன்றும் சைவத்தமிழுலகம் போற்றித் துதித்து வருகிறது. அந்தவகையில் மாமன்றமும் வருடந்தோறும் அவரது நினைவுதின வைபவத்தை நடத்திவருவதுடன், மாமன்றத்தின் ஆன்மீக இதழான "இந்து ஒளி” நாவலர் நினைவுச் சிறப்பிதழாகவும் மலர்ந்து வருகிறது.
இந்த வேளையில் இன்னொரு செய்தியாக, அகில இலங்கை இந்து மாமன்றம் எதிர்வரும் தை 3 மாதத்தில் அறுபது வருடங்களை நிறைவுசெய்து
வைரவிழா காணுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அடுத்த சுடர் ஜய வருடம் மார்கழி - தை
இந்து ஒளி

வாழ்த்து வாழ்கவே வாழ்க வென்நந்தி திருவடி வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம் வாழ்கவே வாழ்க மெஞ்ஞானத் தவன்தாள் வாழ்கவே வாழ்க மனமிலான் பாதமே!
இந்து ஒளி அகில இலங்கை இந்து மாமன்ற இந்து ஆராய்ச்சி நிலையத்தின் வெளியீடு
நாவலர் நினைவுச் சிறப்பிதழ் ஜய வருடம் ஐப்பசி-கார்த்திகை (29.11.2014) ஆசிரியர் குழு :
திரு. கந்தையா நீலகண்டன்
சைவஞானபானு கலாநிதி ஆறு.திருமுருகன் கலாநிதி முத்தையா கதிர்காமநாதன் கலாநிதி ம. பாலகைலாசநாத சர்மா திரு. த. மனோகரன் திரு. அ. கனகசூரியர் ஒரு பிரதியின் விலை
ரூபா 50.00 வருடாந்தச் சந்தா (உள்நாடு)
ரூபா 300.00
(தபாற் செலவு தனி) வருடாந்தச் சந்தா (வெளிநாடு) US டொலர் 15
அகில இலங்கை இந்து மாமன்றம்
A.C. H. C. கட்டிடம் 91/5, சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு - 2, இலங்கை. யாழ் பணிமனை : 211/17, கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம். இணையத்தளம்
: http:/www.hinduCongress.lk மின்னஞ்சல்
: hinducongress@gmail.com தொலைபேசி
: 0112434990, தொலைநகல் : 0112344720 இந்து ஒளியில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ஆக்கியோன்களுடையதே.
HINDU OLI
Publication of HINDU RESEARCH CENTRE OF ALL CEYLON HINDU CONGRESS
Navalar Commemorative Issue - 29.11.2014 Editorial Board :
Mr. Kandiah Neelakandan Dr. Aru. Thirumurugan Dr. Muthiah Kathirgamanathan Dr. M. Balakailasanatha Sarma Mr. D. Manoharan
Mr. A. Kanagasooriar Price
Rs.50.00 Annual Subscription (Inland)
Rs.300.00
(Excluding Postage) Annual Subscription (Foreign) U. S. $ 15
(Including Postage) ALL CEYLON HINDU CONGRESS
A.C.H.C. Bldg. 91/5, Sir Chittampalam A. Gardiner Mawatha Colombo - 2, Sri Lanka, Jaffna Office : 211/17, Temple Road, Nalur, Jaffna.
Website : http://www.hinducongress.lk
E-Mail : hinducongress@gmail.com Telephone No.: 011 2434990, Fax No.: 011 2344720 Views expressed in the articles in Hindu Oli
are those of the contributors. ISSN : 2012 - 9645
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை)

Page 5
ஆன்மீகம்
அருள்
மலையகத் தமிழ் மக்களுக்
அமைத்துக் கொ அனைவரினதும் உதவியும்
உலகம் முழுவதும் மனிதாபிமானம் பற்றிய எண்ணக்கரு மேலோங்கியிருக்கிறது. இனம், மதம், மொழி கடந்து எங்கெல்லாம் மனிதன் இருக்கிறானோ அங்கு பசியால் வாடி துன்பப்படுகிறவனுக்கும், கல்வியைத் தொடருவதற்கு வசதியில்லாமல் கவலை - கொள்பவனுக்கும் , இரக்கம் காட்டுகின்ற மனித நேயம் உலகளாவிய ரீதியில் வளர்ச்சி பெற்றுள்ளது.
இலங்கையில் குறிப்பாக மலையகப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய திருநாட்டிலிருந்து வந்த சைவத்தமிழ் வம்சாவழியினர் காலத்துக்குக் காலம் இயற்கை அனர்த்தங்களால் அனுபவித்துவரும் துயரங்கள் எல்லையற்றது. பிறந்த மண்ணைவிட்டு, பிரித்தானிய ஆட்சியாளரால் அழைத்து வரப் பட்ட அப்பாவி தமிழ் மக்களின் வம்சத்தினர் நீண்ட காலமாகவே பலவித கஷ்டங்களுக்கு மத்தியில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் தாம் சார்ந்த மதத்தைவிட்டு மாறாமல், சிவன் மற்றும் மாரியம்மன் முதலான தெய்வ வழிபாட்டு கருமங்களை தவறாது மேற்கொண்டு வாழ்க்கையை நடாத்தி வருகிறார்கள்.
- அண்மைக்காலத்தில் மலையகத்தில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தம் உலகத்தின் பார்வையைமலையகத்தின் பக்கம் திருப்பியுள்ளது. பதுளை மாவட்டத்திலுள்ள கொஸ்லாந்தை மீரியாபெத்த தோட்டத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவு அனர்த்தமானது உலகில்வாழும் மனிதநேயமுள்ள அனைவரினதும் கவனத்தை ஈர்த்திருப்பதுடன், அவர்களை சிந்திக்கவும் வைத்துள்ளது. மலையகத்தில் பாதுகாப்பற்ற சூழலிலுள்ள லயன்களிலேயே யாருக்கும் தீமையில்லாத வகையில் அங்குள்ள மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இத்தகைய தொடர் லயன்களில் குடிசைகள் போன்ற வீடுகளில் வாழ்ந்துவரும் மக்களுக்கு காலநிலைக்கும், இடத்திற்கும் ஏற்றவகையிலான பாதுகாப்பான வீடுகள் அமைவது
பய க உ க பாப்பு
I).
பசுபதிபி
Tெ113
"24 F * * *
தகவல்
ஈ at 4:44
4ம் :
சங்க யாரை MEEணி யாத்யாகாப்பியடிக்காWWEASEHEEEEாயாகபருதவியாகபோகாது
இந்து ஒளி
பலியாவின் மகன்களையண்டிய
எப்படிப்பாட்டையபத்மப்பையாயாயாயாயிராயங்காளியாயப்பட்டயம்

ச்சுடரின்
பாயம்
பாடல்
தப் பாதுகாப்பான வீடுகள் நக்க வேண்டும். ஒத்துழைப்பும் அவசியம், - அவசியமாகிறது. தமது குருதியை உறையவைத்து நாட்டின்
உற்பத்திகளுக்காக அயராது உழைத்துவரும் அந்த மக்கள் - பாதுகாப்பான வீடின்றி சுகாதார வசதிகளும் இல்லாமல் - பிறந்தோம், வாழ்ந்தோம் என தங்கள் வாழ்க்கைப் பயணத்தை நடத்திக்கொண்டிருப்பது பெரிதும் வேதனையைத் தருகிறது.
மலையகத் தமிழ் மக்களின் வீட்டுப்பிரச்சினை சம்பந்தமாக பலதடவைகள் பத்திரிகைகளிலும், மேடைகளிலும் பேசப்பட்டு வந்துள்ளன. ஆனால் அது செயல்வடிவம் பெறவில்லை. இவர்களுக்குரிய முதற் தேவையாக பாதுகாப்பான வீடுகள் அமைத்துக்கொடுக்க வேண்டியது மனிதநேயமுள்ள அனைவரினதும் கடமையாகும். - அப்பாவி மக்களாகிய இவர்கள் ஏனைய மக்களைப்போல வசதிகளுடனும், பாதுகாப்புடனும் வாழ்வதற்கு இரக்கமுள்ள மக்கள் அக்கறை கொள்ள வேண்டும். ' உலகளாவிய - - இந்து நிறுவனங்கள் இவர்களது வீட்டுத்திட்டம் பற்றி அக்கறை கொண்டால் பெரும் பயனாக இருக்கும். இந்நிலையில், இந்து மக்களாகிய மலையகத் தொழிலாளர்களின் துயரத்தை அறிந்து அண்மையில் இந்து நிறுவனமாகிய சுவாமி ராமதாஸ் அறக்கட்டளையினர் நவீன முறையிலான வீட்டுத் தொகுதிகளை அமைத்து மக்களுக்கு இலவசமாக வழங்கியிருப்பது பலரும் அறியாத செய்தியாகும். இத்தகைய நற்பணியானது போற்றுதற்குரியது.
மலையகப் பகுதிகளில் கல்வியை மேம்படுத்துவதற்காக பல பெரியோர்கள் தம்மாலான முயற்சிகளை செய்துள்ளனர். அகில இலங்கை இந்து மாமன்றம் மலையகத்தில் அறநெறிப் பாடசாலைகளை உருவாக்கி, மலையக மாணவர்களது கல்வி மேம்பாட்டுக்கு சிறப்பான வகையில் பணியாற்றிவருவதை, அடியேன் மலையகம் சென்றிருந்தபோது நேரடியாகவே காண முடிந்தது. அதேபோன்று, மாத்தளை முத்துமாரி அம்மன் ஆலயமும் பல சமூகநலத் திட்டங்களை உருவாக்கி
INE IN பகயைகங்காயைகயைஇயககககககககககக
EாயகயாகாWைith MIMEINNINAIAEAயாங்யாங் கன்னங்க,
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை
கைவைலயாப்பாய்யா

Page 6
மலையக மக்களின் நலனுக்காக உழைத்து வருகின்றது. இந்த முன்மாதிரியை மலையகத்திலுள்ள ஏனைய ஆலயங்களும் பின்பற்றி மக்கள் சேவையை முன்னெடுக்க வேண்டும்.
மாத்தளை நகரிலுள்ள வர்த்தகப் பெருமக்கள் ஒன்று சேர்ந்து 'சுபீட்சம்' என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவி, அதன் ஊடாக தோட்டப் பகுதிகளில் வறுமை நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களின் கல்வி மற்றும் சுகாதார நலன்களுக்காக பெரும் பங்காற்றி வருகிறார்கள். மாத்தளை நகர் வர்த்தகப் பெருமக்கள் மாதாந்தம் வழங்கும் நன்கொடைகள் மூலம் இந்த 'சுபீட்சம்' அறக்கட்டளை இயங்கிவருகிறது. இது பெரிதும் போற்றுதலுக்குரிய பணியாகும். இதுபோன்று மலையகத்து ஏனைய இடங்களிலுள்ள வர்த்தகப் பெருமக்களும் தங்கள் பகுதிகளில் அறக்கட்டளைகளை நிறுவி மலையகத் தோட்டங்களில் வாழும் மக்களது சமூக மேம்பாட்டுக்கு உதவ முன்வரவேண்டும்.
நாவலரின்
நித்தி
சூரியன் உதிக்க இரண்டு மணிநேரத்துக்கு முன்னே நித்திரை விட்டெழுந்து கை கால் முதலியன கழுவி இயன்றவரையிற் சுத்தனாய், கடவுளைத் தியானித்துத் தோத்திரம்பண்ணி, அதன் பின் பாடங்களைப்படித்து மனனஞ் செய்தல் வேண்டும். சிறுபிராயத்திலே கற்கின்ற கல்வி மனசிலே நன்றாகப் பதிதல் போல, யாவருக்கும் விடியற்காலத்திலே படிக்கும் வித்தை மனசிலே நன்றாகப் பதியும். ஆதலால், கல்வியை விரும்பிக் கற்கும் மாணாக்கர்கள் விடியற்காலத்திலே படிப்பது உத்தமம்.
விடியற்காலத்திலே பாடங்களைப் படித்து வரப் பண்ணிக் கொண்டபின்பு, விதிப்படி மலமோசனாதிகள் செய்து இயல்பாகிய துவருள்ள பற்கொம்பினாலேதந்தசுத்திசெய்து, வாய்கொப்பளித்து முகத்தையும் கைகளையும் கால்களையும் கழுவி ஸ்நானஞ் செய்தல் வேண்டும். ஸ்நானஞ் செய்யுமுன் உடுத்த
'சைவக் கல்விப் பாரம்பரியத்துக்கு வித்திட்டவர்
அந்தக் காலத்தில் பாடசாலை என கட்டுக் கோப்பு கிடையாத போது நம்மர் கல்வி
கேள்விகளில் சிறந்து விளங்கக் காரணமாயிருந்தது ஒரு பாரம்பரியம். அதுவே நமது சைவக் கல்விப் பாரம்பரியமாகும்.
அது பெரியவர்களையன்றி அடக்கவொடுக்கமாக ஒழுகி அவரிடம் 3
வரன்முறையாக எல்லாவற்றையும் கற்றறிதலாகும். ஈழத்திலும் தமிழ் நாட்டிலும் சைவக் கல்வி மறுமலர்ச்சியின்
ஒளிவிளக்காகத் திகழ்ந்தவர்களுள் நாயக மணியாக விளங்கியவர் நல்லுார் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களாவர்.
சைவப்புலவர் கா.சி.குலரத்தினம். நன்றி:- சிவத்தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள்-1985)
கை
(இந்து ஒளி

இத்தகைய சமய சமூக நலப் பணியானது, இன்று நாம் தொடங்கும் ஒரு செயற்பாடு அல்ல. இது ஆறுமுகநாவலரின் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. குறிப்பாக யாழ் மண்ணில் பிறசமய ஆதிக்கம் வேரூன்றி கல்விக்காக மக்கள் மதம் மாறுகின்ற நிலை ஏற்பட்டபோது, நாவலர் கல்விச்சாலைகள் நிறுவி, சைவ மக்கள் தமது சமயத்திலிருந்த வண்ணமே கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர். அத்தகைய பெருமைக்குரிய நாவலர் வழிநின்று எங்கள் சமய, சமூகப் பணிகளையும் தொடர வேண்டும் என்பதுடன், அது காலத்தின் அவசியமாகவும் கட்டாயமாகவும் இருப்பதையும் குறிப்பிடவேண்டும். நாவலரின் குருபூசை நாளில் அவரை நினைத்துப் போற்றி அவர் வழிநின்று, நண்பணிகளை முன்னெடுப்போமாக!
- தொண்டுநாதன்
நற்போதனை
யெகருமம்
வஸ்திரமுதலியவற்றைத் தோய்த்து அலம்பி அரையிலே தரித்துக் கொண்டு, உடம்பை நன்றாகக் தேய்த்து ஸ்நானஞ் செய்தல் வேண்டும். சலத்திலே நெடுநேரம் ஈரம் ஊறும்படி நிற்கலாகாது. ஸ்நானஞ் செய்த உடனே உடம்பிலுள்ள ஈரத்தைத் துவட்டி, தோய்த்துலர்ந்த வஸ்திரந் தரித்துக் கொண்டு, அநுட்டானஞ் செய்தல் வேண்டும். ஸ்நானஞ் செய்வதற்கு மத்தியான காலத்திலும் பிராதக்காலம் உத்தமம். ஆற்றிலே ஸ்நானஞ் செய்வது விசேஷம். அது சமீபத்தில் இல்லையாயின், குளம், கிணறு
முதலியவைகளில் ஸ்நானஞ் செய்யலாம்.
உடம்பு வேர்த்துக் களைக்க வேலை செய்தவுடனே - ஸ்நானஞ் செய்யலாகாது. சிறிது நேரம் இருந்து வேர்வையாறின்பின் ஸ்நானஞ் செய்தல் வேண்டும். காலையில் உண்டபோசனம் சீரணமாகுமுன்னும் சீதளமான இரவிலும் ஸ்நானஞ் செய்யலாகாது.
(பாலபாடம் - மூன்றாம்)
அன்னையும் பிதாவுமான நாவலர் பெருமான்
ஆறுமுக நாவலர் தமிழ்ப் பிள்ளைகளுக்கு அன்னையாயும் பிதாவாயும் இருக்கிறார்.
தமிழ் அறிவை வளரச் செய்தலால் அவர் நமக்கெல்லாம் அன்னை : சமய அறிவை வளரச் செய்தலால் அவர் பிதா. அன்னையும் பிதாவுமான நாவலர் பெருமானை நாம் மறக்கலாகாது. நாவலர் சரித்திரத்தை நாங்கள் படிக்க வேண்டும்.
நாவலர் பெருமான் தந்த பெரிய புராண வசனம் சமய பக்தியை வளர்க்கும் ஒரு பண்டசாலை. அந்த பண்டசாலையில் பிரவேசிப்பதற்கும்
நாவலர் சரித்திரம் உபகாரமாயிருக்கும்.
- பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை

Page 7
O III IST vperTrvi"Prrrrryண'?
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்
நாவலர் குருபூசை / நினைவு தினத்தையொட்டி மாமன்றத்தி
மலர்ந்துள்ளது. தமிழ்கூறும் நல்லுலகம் போற்றும் சைவம் பெருமானுக்கு காணிக்கையாக 'இந்து ஒளி' சிறப்பிதழை சம்
நாவலரின் வாழ்க்கை
TH 1 IE ள
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்சித்திரபானு புதன்கிழமை பிறந்தார். தந்தையார் சிவகாமியார்.
இவர் ஐந்தாவது வயதில் நல்லூர் நல்லூர்வேலாயுத முதலியாரிடமும் ஆண்டு ஆவணி மாதத்தில் யாழ். (பின்னர் மத்திய கல்லூரி என கல்வி கற்கத் தொடங்கினார். சேனாதிராய முதலியார், நல்லூர் ம. தமிழ் கற்றார். 1841 ஆம் ஆண்டில் தமிழ், ஆங்கில ஆசிரியராக நியமனம்
நாவலர் 1847 மார்கழி மாதத்தில் வண்ணை சமயச் சொற்பொழிவு செய்ய ஆரம்பித்தார். அவரது வேதத் பாதிரியாருடன் 1848ஆம் ஆண்டு முதலாவது இந்தியப் பிரப மாதத்தில் யாழ். வண்ணார்பண்ணையில் சைவப்பிரகாச மாதத்தில் வெஸ்லியன் மிஷன் கல்லூரியின் ஆசிரியர் பத
1849ஆம் ஆண்டு ஆடி மாதம் அச்சியந்திரம் வாங்கு மேற்கொண்டார். அந்தவேளையில்தான் திருவாவடுது வழங்கிக் கௌரவித்தது.
1854ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்தில் மூன்றாவது இந்தியப் ஆண்டு ஆனி மாதத்தில் நான்காவது இந்தியப் பிரயான வித்தியாநுபாலன அச்சியந்திரசாலையை ஸ்தாபித்தார். 8 சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவுவதற்கான ஒரு யாழ்ப்பாணம் திரும்பிய ஆறுமுகநாவலர், அதே ஆண்டு சாலையிலும் பருத்தித்துறை சித்தி விநாயகர் கோயிலிலும், சைவ அன்பர்களின் உதவியைப்பெற்றுக்கொள்ளும் வகை அன்பர்களிடமிருந்து நிதியுதவிகள் கிடைத்தன.
1864ஆம் ஆண்டு தை மாதத்தில் ஐந்தாவது இந்திய ஐப்பசி மாதத்தில் சிதம்பரத்தில் சைவ வித்தியாசாலையை மாசி மாதம் யாழ்ப்பாணம் திரும்பினார். 1872 ஆம் ஆண் வித்தியாசாலையையும், கோப்பாய் புலோலி ஆகிய இ நிறுவினார்.
ஆறுமுகநாவலரின் சமய, சமூக கல்விப் பணிகள் சிறு நிகழ்த்தி வந்தார். 1879ஆம் ஆண்டு ஆடி மாதத்தில் சுந் நாவலரின் சொற்பொழிவே, இவரது இறுதி நிகழ்வாக அமை வருடம் கார்த்திகைத் திங்கள் 21ஆம் நாளன்று (5.12.1879)
இவ்வருடம் ஆறுமுகநாவலரின் 135ஆவது நினைவு டிசம்பர் 5ஆம் திகதி இவரது நினைவு தினமும், டிசம்பர் 15
இந்து ஒளி

- SII- IIIO mmmmmmmm நினைவுதின சிறப்பிதழ்
IIIாதது ஆட
ன் ஆன்மீக இதழான் இந்து ஒளி' விசேட வெளியீடாக மொடு தமிழ் வளர்த்துப் பெரும்பணியாற்றிய நாவலர் ரப்பணம் செய்வதில் மாமன்றம் பெருமகிழ்ச்சியடைகிறது.
வரலாற்றுச் சுருக்கம்
வருடம் மார்கழி மாதம் 5ஆம் நாள் (18.12.1822) பெயர் ப. கந்தப்பிள்ளை, தாயார் பெயர்
சுப்பிரமணிய உபாத்தியாயரிடமும் ஆரம்பக்கல்வியைக்கற்றார். 1834ஆம் வெஸ்லியன் மிஷன் கல்லூரியில் அழைக்கப்பட்டது) ஆங்கிலக் அதேவேளையில் இருபாலை நெ. சரவணமுத்துப் புலவர் ஆகியோரிடம் யாழ். வெஸ்லியன் மிஷன் கல்லூரியில் பெற்றார். வைத்தீசுவரன் கோயில் வசந்த மண்டபத்திலே தாகம மொழிபெயர்ப்பை ஒப்புவிப்பதற்காக பேர்சிவல் பாணத்தை மேற்கொண்டார். அதே ஆண்டு ஆவணி = வித்தியாசாலையை ஸ்தாபித்தார். 1848 புரட்டாதி
வியிலிருந்து விலகிக் கொண்டார். தவதற்காக இரண்டாவது இந்தியப் பிரயாணத்தை றை ஆதீனம் அவருக்கு " நாவலர்” என்ற பட்டத்தை
யார் EI IST
பிரயாணத்தை மேற்கொண்டார். தொடர்ந்து 1858ஆம் எத்தை மேற்கொண்டார். அப்போது சென்னையில் சென்னையில் தங்கியிருந்த காலத்தில், சிதம்பரத்தில் வண்டுகோளை விடுத்திருந்தார். 1862 பங்குனி மாதம் வகாசி, ஆடி மாதங்களில்வண்ணைசைவ வித்தியா - சிதம்பரத்தில் சைவ வித்தியாசாலை நிறுவுவதற்காக கயில் சமயச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். சைவ
ப் பிரயாணத்தை மேற்கொண்டார். அதே ஆண்டு ப ஸ்தாபித்தார். ஆறு வருட காலத்தின் பின், 1870 டில் யாழ். வண்ணார்பண்ணையில் சைவ ஆங்கில டங்களில் சைவப்பிரகாச வித்தியாசாலையையும்
LL |
பாகத் தொடர்ந்தன. சமயச் சொற்பொழிவுகளையும் தரமூர்த்தி நாயனார் குருபூசையின் போது நிகழ்த்திய ந்திருந்தது. சிறிதுகால சுகயீனத்தின் பின்னர், பிரமாதி
மக நட்சத்திரத்தில் இறையடி சேர்ந்தார். தினத்தை சைவப்பெருமக்கள் அனுஷ்டிக்கிறார்கள். 2ஆம் திகதியன்று குருபூசை தினமுமாகும்.
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை

Page 8
史学家,教要义美学之父”之
நாவலரு
- மே தலைவர், இந் ***?
கயாக
இலங்கையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சைவப் பண்பாட்டை மேம்பாடு பெறச் செய்த பெருந்தகையாக
யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ - ஆறுமுகநாவலர் விளங்குகின்றார். ''மேன்மைகொள் சைவ நீதி" எனும் கந்தபுராண மகாவாக்கியத்தை இலங்கையிலே, சிறப்பாக யாழ்ப்பாணத்திலே பிரகாசிக்கச் செய்தவர் ஞானசூரியன் நாவலராவர். எத்துணைக் காலந் திருப்பித் திருப்பி படிக்கினும் கேட்பினும் எத்துணையுந் தெவிட்டாது தித்தித்த முதூறும் அதியற்புத அதிமதுரத் திவ்விய வாக்குகளே கந்தபுராணத் திருவிருத்தங்கள் என்பது நாவலரின் வாக்காகும்.
கந்தபுராணம், திருமுறை வரிசையில் வைத்துப் போற்றும் தகைமையது. கந்தபுராணத்தை இயற்றிய கச்சியப்ப சிவாச்சாரியார் காலத்திலேயே கந்தபுராணம் யாழ்ப்பாணத்திற்கு வந்துவிட்டதாக இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை குறிப்பிடுகின்றார். கச்சிக்கணேசையரும், யாழ்பாடியும் கச்சியப்ப சிவாச்சாரியாரின் காலத்தவர் என்பது அவரின் கருத்தாகும்.
நாவலரே கந்தபுராணத்தை முதன்முதல் 1869 இல் பதிப்பித்து வெளியிட்ட பெருமைக்குரியவர். கந்தபுராணத்தை பட்டிதொட்டி எங்கும் பரப்புரை செய்யும் நோக்குடன் நாவலரால் எழுதத் தொடங்கிய நூல் கந்தபுராண வசனமாகும் கந்த புராண வசனம் முதன்முதல் 1861 ஆம் ஆண்டில் சென்னைப் பட்டணம் வாணி நிகேதன் அச்சுக்கூடத்தில் பதிப்பிப்பிக்கப்பட்டுள்ளது.
நாவலர்கந்த புராணத்தைப்பிரசங்கமூலமும், கந்தபுராண படன் மூலமும் வளர்த்தெடுத்த சைவச் சான்றோராவர். இலங்கையில் மட்டுமன்றி தமிழ்நாட்டிலும் கந்தபுராணம் சிந்தனைகள் பிரசங்க மூலம் கந்த புராண கலாசாரத்தை நாவலர் பரப்புரை செய்தார். நாவலர் சிறு வயதினராக இருக்குங் காலத்தில் ஒரு முறை நாகபட்டினம் போயிருந்தார். அப்போது அங்கிருந்த பிரபு திலகராகியசெல்வநாயகச்செட்டியார் இவரை அழைத்து, "தம்பீ! நீர் யாழ்ப்பாணத்திலே நம்முடைய சிவன் கோயிலிலும் பிறவிடங்களிலும் மிக அலங்காரமாகப் பிரசங்கங்கள் செய்கிறீரென்றும், புராணங்களுக்கு அர்த்தல் சொல்லுகிறீரென்றும் கேள்விப்பட்டேன். இவைகளை நான் கேட்கலாகாதா" என்றார். உடனே நாவல கந்தபுராணத்திலுள்ள 'காடுபோந்தன்னிந்திரன், என்னுஞ் செய்யுளைச் சொல்லி அதற்கு அர்த்தமும், அதையே பீடிகையாகக் கொண்டு ஒரு பிரசங்கமும் செய்தார். செட்டியா
இந்து ஒளி
வெ

நம் கந்தபுராணமும்
ராசிரியர் மா. வேதநாதன் - துநாகரிகத்துறை, யாழ் பல்கலைக்கழகம் ஒல்லல் சின்ன
அவர்களை மிகுந்த ஆராமையோடு கேட்டுச் சந்தோசமடைந்து பாராட்டி இவரைக் கட்டித் தழுவினார். தமிழ்நாட்டில் மட்டுமன்றி யாழ்ப்பாணத்திலும் நாவலரின் கந்தபுராண பிரசங்கங்கள் தனிச்சிறப்புடையனவாக விளங்கின.
"கந்தபுராண படனம்” எனும் முறைமையிலும் கந்தபுராணம் யாழ்ப்பாணத்தில் நன்கு வளர்த்தெடுக்கப்பட்டது. கந்தபுராணபடனம் நாவலருக்கு முன்னே யாழ்ப்பாணத்தில் தொடக்கப்பட்டபோதும், நாவலர் காலத்திலேயே அது உச்சநிலையில் விளங்கியது. 1872 ஆம் ஆண்டில் நல்லூர்கந்தசுவாமி கோயிலில் கந்தபுராண படனம் நாவலர் நிகழ்த்தினார். நாவலரின் மருகரும் அவரின் மாணவருமாகிய வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை கந்தபுராணப் பாடல்களை வாசிக்க அதற்கு நாவலர் பொருள் கூறினார். அற்புதமான நிகழ்வு அதுவாகும்.
வண்ணை வைத்தீஸ்வரன் ஆலயத்திலும் நாவலரும், பொன்னம்பலப்பிள்ளையும் கந்தபுரான படனம் செய்யும் காட்சி மிகவும் உணர்வு பூர்வமாக இருக்கும். பலரும் பல இடங்களிலிருந்து இவர்களின் புராணபடனத்தைக்
கேட்பதற்கென்றே வருவது வழக்கமாகும்.
கந்தபுராண படனம் யாழ்ப்பாணத்தில் தனித்தொரு முறையில் யௌவன தசையை அடைந்து, உச்சநிலையில் விளக்கமுறச் செய்தவர் நாவலரே என்று பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை குறிப்பிடுகின்றார்.
- சந்நிதி விரோதமின்றி ஒருவர் கந்தபுராணப் பாடலை வாசிக்க மற்றொருவர் பயன் சொல்லுகின்ற முறை யாழ்ப்பாணப் பண்பாட்டிற்குரிய சிறப்பு முறையாகும். காலத்திற்கும் விஷய குணபாவத்திற்கும் ஏற்ப எச்சுருதியில், எவ்விராகத்தில் கந்தபுராணப் பாடல்கள் வாசிக்கப்படுகின்றதோ, அச்சுருதியில் அவ்விராகத்திற்றானே பொருள் சொல்ல வேண்டும் என்று நாவலர் எழுதிய சிவபுராண படனவிதி செப்பிநிற்கின்றது. -
கந்தபுராண படனத்தின் முதன்மையும் முக்கியத்துவமும் சேர்த்துள்ளார். எல்லோரும் கேட்டு உய்யும் பொருட்டுத் திருக்கோயில்களிலே யோக்கியர்களைக் கொண்டு புராணங்களை வாசித்துப் பொருள் சொல்லுவித்தல் மிக மேலாகிய புண்ணியமாகும் என்பது நாவலர் வாக்காகும்.
சைவபுராணங்களைப் படித்தல், கேட்டல், சிந்தித்தல் முதலான சிவபுண்ணியங்களைச் செய்துவரின் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பேறுகளை அடையலாம் என்பது சைவ சமய உண்மை. இது சிவஞானசித்தியாரில்,
"ஞானநூல் தனைஓதல் ஓதுவித்தல்
DS
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை

Page 9
நற்பொருளைக் கேட்பித்தல் தான் கேட்டல் நன்றா ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும் இறைவனடி அடைவிக்கும் எழில்ஞான பூசை"
என வருதலால் அறியலாம். கந்தபுராணத்தை பக்தி சிரத்தையுடன் படிப்பதனால் ஏற்படும் பயனைக் கச்சியப்ப சிவாச்சாரியார், .
''இந்திர ராகிப் பார்மே லன்பமுற்றினிது தேவிச் சிந்தை யினினைந்தமுற்றிச் சிவசக்தி யதனிற் சேர்வர் அந்தமி லவுணர் தங்க ளடல் கெட முனிந்த செவ்வேற் கந்தவேள் புராணந் தன்னைக் காதலித்தோதுவோரே"
என்று மொழிவர். இங்கு "கந்தவேள் புராணந்தன்னை ... ஓதுவோர் இந்திரராகி ... இன்பமுற்று ... சிவகதியதனிற்சேர்வர்" என்று கூறியதனால், புராணங்கேட்டலாகிய அறமும் அதனால் பெறப்படும் பொருள், இன்பம், வீடென்பனவும் சித்தியாகும்
( வ ம ய
மிய
மிய
(8)
S)
இ ய ம ய இய கல கல கல கல ல ம ய மல மல மல மல ம
3
ல மி ல ம வ
(3)
க நாவலர் பெருமானின் பெ
(சேக்கிழார் அடிப்பொடி இலக்கிய
1852ஆம் ஆண்டு. அப்போது நாவலர் பெருமானுக்கு முப்பது வயது. இந்த இளவயதிலே தான் பெரியபுராணத்தை - உரைநடை வடிவிலே - எமக்குத் தந்தார். இன்றளவும் அதை மிஞ்சக்கூடிய உரைநடை நூல் பிறக்கவில்லை. எத்தனையோ அறிஞர்கள் பெரியபுராணத்தைச் சுருக்கி நமக்குத் தந்திருக்கிறார்கள். அவர்கள் எண்ணிக்கை இன்றும் அதிகமாக இருக்கிறது. இருந்த போதிலும், யார் எப்படி எழுதினாலும் சரி, நம்முடைய நாவலர் பெருமான் எழுதிய அளவிற்கு எவரது தமிழ் உரைநடையும் சிறக்கவில்லை என்பதை சொல்வேன். அவ்வளவு அருமையாக அந்த உரைநடையில் பெரிய புராணத்தை எமக்கு அமைத்துத் தந்தார். அதுதான் இன்னும் போற்றப்பட்டு வருகிறது.
நான் ஒரு பெரியபுராணப்பிரியன். சேக்கிழார் சுவாமிகளின் அடிப்பொடி. என்னுடைய தெய்வம் சேக்கிழார் பெருமான். பெரியபுராணம் பற்றி வெளியான நூல்களில் பல படிகளைச் சேர்த்து
கந்தவேள் செய்தவம்போற் கான மைந்தனாம் நாவலன்போல் பை வல்லவர்க ளன்னவன்போல் வ இல்லையில்லை இல்லை இனி
நல்லைநகர் ஆறுமுக நாவலர் பி சொல்லுதமிழ் எங்கே சுருதி எங் ஏத்துபுரா ணாகமங்கள் எங்கே பி ஆத்தன்றி வெங்கே அறை.
(இந்து ஒளி

பொதுசன நூலகம் யாழப்பாணம்
என்பது தெளிவு பெறுகின்றது.
இதனை நன்கு உணர்ந்தமையினாலன்றோ நாவலர் கந்த புராணத்தில் பெரிதும் கரிசனை காட்டினார். இன்று கந்தபுராணப் பிரசங்கங்களோ, கந்தபுராண படன் முறைமைகளோ மிகவும் அருகிக் காணப்படுவது மிகவும் மனவேதனையைத் தருகின்றது. இலங்கையில் இந்து சமயப்பணிகளை முன்னெடுத்துவரும் அகில இலங்கை இந்து மாமன்றம் கந்தபுராண படனத்தை மீண்டும் மறுமலர்ச்சியடையச் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பது காலத்தின் கட்டாய தேவையாகவுள்ளது. "யாழ்ப்பாணக் கலாசார மூலம் கந்தபுராணம்" என்று இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை கூறியுள்ள சிந்தனையை செயற்படுத்தினால் எல்லோருக்கும் நன்மை உண்டு.
- ம ம ல ம வ யில்
(8)
13
கல் கல் மல் கல் கல கல கல கல இல 5
O|
盖盖盖类崇类类崇盖盖类类类 பரியபுராண வசன நடை
கலாநிதி தி.ந.இராமச்சந்திரன் )
இ
வைத்திருக்கிறேன். தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தார் வெளியிட்ட நாவலர் பெருமானின் பெரியபுராண வசன நடை நூலொன்றின் பிரதியை தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையார் அவர்கள் எனக்கு அன்பளிப்புச் செய்திருந்தார்கள். அதிலே நாவலர் பெருமானின் பெரியபுராண உரைநடை நூல் பதினெட்டுத் தடவை அச்சிடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. என்னுடைய கணக்குப் பிரகாரம் இருபத்துநான்கு முறை அது அச்சிடப்பட்டிருக்கிறது.
படித்தால் நாவலர் பெருமான் அருளிய அந்தப் பெரியபுராண உரைநடையைத் தான் நாம் படிக்க வேண்டும். அது ஆதார பூர்வமானது. சைவசித்தாந்த விரோதமில்லாதது. சைவ சாஸ்திரக் கருத்துக்களையெல்லாம் தன்னகத்தே தேக்கி வைத்திருக்கக்கூடிய பெரிய பெட்டகமாக விளங்குவது. என்றும் நின்று நிலவுவது. அது தான் சிறந்த நூல். அதையே நீங்கள் அனைவரும் ஓதி வரவேண்டும் என்பது எனது பிரார்த்தனை.
நன்றி : இந்து சாதனம் - 31.10.2001)
அந் தவமுமவன் மந்தர்களும் - செந்தமிழில் ந்திடுவ தும்முலகில்
- முருகேச பண்டிதர்
றந்திலரேற் கே - எல்லவரும் பிரசங்கமெங்கே
- சி.வை.தாமோதரம்பிள்ளை
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை

Page 10
நாவலரின் நற்
8 சிவத்தம்
....................*
தன்னுடைய முயற்சியினால், ஆளுமையினால், செயற்பாட்டினால் சைவத்தமிழ் உலகத்தில் முதன்மை பெற்றவர்தான் நாவலர். "விளையும் பயிரை முளையிலே தெரியும்” என்ற முதுமொழிக்கேற்ப இவர் மாணவனாக இருந்த காலத்தில் கல்வியில் மிகவும் அக்கறை காட்டி வந்தார். இவர் இயற்கையாகவே ஒரு விவேகி, பாலமேதை. தமது ஒன்பதாவது வயதில் தந்தையார் எழுதிய நாடக எழுத்துப் பிரதியின் குறையைப் பூர்த்தி செய்தவர். உளவியல்காரர் கூறுவது போன்று கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தையாக இவரை ஏற்றுக் கொள்ளலாம்.
ஆரம்பத்தில் நல்லூரில் சுப்பிரமணியம் என்பவரிடம் மூதுரை, நிகண்டு முதலிய கருவி நூல்களைக் கற்றார். பின்னர் சரவணமுத்துப்புலவர், இருபாலை சேனாதிராஜ முதலியார் போன்றோரிடம் உயர் தமிழ்க் கல்வியைப் பெற்றார். வடமொழியைத் தனது சொந்த முயற்சியால் கற்றார். தனது பன்னிரண்டாவது வயதில் 1834ஆம் ஆண்டு ஆங்கிலக் கல்வியைப் பெறுவதற்காக யாழ் மத்திய கல்லூ ரிக்குச் சென்றார். ஏழு வருட காலம் மாணவனாகவும் அடுத்த ஏழுவருட காலம் ஆசிரியராகவும் கடமையாற்றினார். கீழ் வகுப்புகளுக்கு ஆங்கிலமும் மேல் வகுப்புகளுக்கு தமிழும் கற்பித்தார்.பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்தார். பார்சிவல் பாதிரியாருக்கு தமிழ் கற்பிக்கும் ஆசானாகவும் கடமையாற்றினார்.
சைவப்பாரம்பரிய விளை நிலத்திலே விளைந்த நாவலர் பெருமான் பதினான்கு வருடங்கள் கடும் கிறிஸ்தவ சூழலிலே வாழ்ந்தார். கிறிஸ்தவராக மாறாவிட்டாலும் கிறிஸ்தவ சூழலில் வாழ்ந்ததால் நாவலர் பெருமான் கிறிஸ்தவர்களுடைய பலத்தையும் பலவீனத்தையும் அறிந்து கொண்டார்.
எமது மதத்தையும் பண்பாட்டையும் மறையச் செய்து கிறிஸ்தவ மதத்தையும் ஆங்கிலேயரின் பண்பாட்டு நாகரிகத்தையும் கல்வி என்ற போர்வையிலே குழந்தைகளின் பிஞ்சு உள்ளத்திலே திணிப்பதற்கு பாதிரிமாரும் அவர்களுடைய பாடசாலைகளும் முயற்சி செய்தனர். ஆங்கிலக் கல்வி என்ற இனிப்புப் பண்டத்தைக் காட்டி மதமாற்றம் செய்யும் முயற்சிகள் மறைமுகமாக மிசனரிகளால் நடாத்தப்பட்டு வந்தன.
பலவந்தமாக மதமாற்றம் செய்பவர்களைப் போல வெளியிலே காட்டிக் கொள்ளாமல் ஜனநாயகத் தன்மை நிறைந்தவர்களைப் போலத் தம்மைக் காட்டிக்கொண்டு உள்ளூர நடந்த சுதேசிய மதத்துக்கு எதிரான சூழ்ச்சிகளை எல்லாம் நாவலர் பார்சிவல் பாதிரியாருடைய பாடசாலையில் அவர்களோடு மாணவனாகவும் ஆசிரியனாகவும் இருந்ததினால் அறிந்து கொண்டார். நாவலர் 1848 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் அப்பாடசாலையில் கற்பித்து வந்த தனது ஆசிரியப் பணியைத் துறந்தார்.
(இந்து ஒளி

பணிகள் - சில தகவல்கள்
ழ் வித்தகர் சிவ.மகாலிங்கம் அ
சன் என்
நாவலரின் கல்விப் பணி
சைவப் பிள்ளைகள் சைவசமயச் சூழலில் கல்வி கற்க வேண்டுமென்று விரும்பிய நாவலர் பெருமான் 1848ஆம் ஆண்டு ஆவணி மாதம் 5ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவினார். இவ் வித்தியாசாலையில் ஏழு வகுப்புக்கள் தொடங்கப்பட்டன. தரத்தில் மிகக் கூடிய வகுப்பு முதலாம் வகுப்பு என்றும் தரத்தில் மிகக்குறைந்த வகுப்பு ஏழாம் வகுப்பு என்றும் வகுக்கப்பட்டன. டாக்டர் பெல் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட மேல் வகுப்பு மாணவர்கள் கீழ் வகுப்புகளிற்கு பாடம் கற்பிக்கும் சட்டாம்பிள்ளை முறையை (Monitorial System) இவர் தனது பாடசாலையிலே நடைமுறைப்படுத்தினார்.
1846 இல் தனது வீட்டிலே நடாத்திய திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்த சதாசிவப்பிள்ளை, சுவாமிநாதையர், நடராசையர், விசுவநாத ஐயர், ஆறுமுகப்பிள்ளை, கந்தசுவாமிப்பிள்ளை, ஆறுமுகச்செட்டியார் ஆகிய ஏழு பேரையும் ஏழு வகுப்புக்களுக்கும் வேதனமின்றிக் கற்பிக்கும் ஆசிரியர்களாக நியமனம் செய்தார். நாவலர் மேலதிகாரியாகவும் ஆசிரியராகவும் கடமையாற்றி வந்தார் மாணவர்களுக்கு இலவசக்கல்வியே வழங்கப்பட்டது. 1870ஆம் ஆண்டில் அக்காலக் கல்வி இயக்குனராக கடமையாற்றி வந்த ஜே.எஸ்.லாறி என்பாரின் சிபார்சினால் அரசாங்க உதவிப்பணம் கிடைக்கப் பெற்றது. 1872 ஆம் ஆண்டிலேதான் இப்பாடசாலையில் மாணவிகளும் சேர்க்கப்பட்டார்கள். 1864ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மக்கள் உபகரித்த பொருளுடன் சிதம்பரத்திலும் சைவப்பிரகாச வித்தியாசாலை நிறுவினார். இவர் தனது பாடசாலையில் பெரிய புராணம், திருவாதவூரர் புராணம் முதலிய சமய நூல்களையும் நாலடியார், திருக்குறள், நீதிநெறி விளக்கம், வாக்குண்டாம், நல்வழி முதலிய நீதி நூ ல்களையும் பாடநூல்களாக்கினார்.
1871ஆம் ஆண்டில் வண்ணார்பண்ணையில் யோன் கில்னர் என்பவர் நடாத்திய வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலையில் சைவமாணாக்கர்கள் விபூதியணிந்து சென்றமைக்காக பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நாவலர் அப்பிள்ளைகளின் நன்மையினைக் கருதி ஒரு சைவ ஆங்கிலப் பாடசாலையினை வண்ணார்பண்ணையில் 1872இல் நிறுவினார். போதிய பணமின்மையாலும் பிள்ளைகள் பலர் சேராமையாலும் இவ் ஆங்கிலப் பாடசாலை நான்கு ஆண்டுகளே நடைபெற்றது. கிறிஸ்தவ மதக் குழுக்களால் நடாத்தப்படும் பாடசாலைகளில் தான் ஆங்கிலக் கல்வி சீராகப் போதிக்கப்படுவதோடு மாணவர்களிடம் ஒழுக்கம், ஒழுங்கு ஆகியவையும்
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை

Page 11
பேணப்படுகின்றன என்ற நினைப்பு அக்காலத்தில் நமது சமூகத்தில்வாழ்ந்த மேல்தட்டு வர்க்கத்தினரிடம் நிலவிவந்தது. எமது மக்களின் ஆதரவு போதாமையால் நாவலரின் ஆங்கிலப் பாடசாலை செயலிழந்தது. நாவலருடைய ஞான வாரிசுகளாகத் திகழ்ந்த வித்துவசிரோமணி ச.பொன்னம்பலபிள்ளையைத் தலைவராகவும், ஸ்ரீமத் த . கைலாசபிள்ளை அவர்களைத் தனாதிகாரியாகவும் கொண்டு 1888 ஆம் ஆண்டு சித்திரை மாதம் மூன்றாம் திகதிசைவபரிபாலன சபை ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் மொழியையும் சைவசமயத்தையும் பேணுவதற்கு ஒரு சபை இயங்க வேண்டும் என்ற நாவலரது எண்ணத்துக்கு இவர்கள் செயல் வடிவம் கொடுத்தார்கள். வண்ணை வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து குத்து விளக்கேற்றி அதன் தீபத்துடன் நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலைக்கு வருகை தந்து
சைவபரிபாலன சபையை ஆரம்பித்தார்கள்.)
சைவ சமயச் சூழலிலே சைவப்பிள்ளைகள் கல்வி பயில வேண்டும் என்று விருப்பம் கொண்ட பல சைவப்பெரியார்களின் கூட்டு முயற்சியினால் 1890ஆம் ஆண்டு விஜயதசமி நாளில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து சில வருடகாலம் சைவபரிபாலன சபையாரால் பரிபாலிக்கப் பெற்ற இலங்கை - வாழ் இந்துக்களின் உயர்கல்வி நிலையமாக இன்றுவரை மிளிர்ந்து கொண்டிருப்பதே யாழ் இந்துக் கல்லூரி ஆகும். தொடர்ந்து நமது நாட்டில் பல இந்துக் கல்லூரிகளும் சைவ வித்தியா விருத்திச் சங்கத்தால் ஸ்தாபிக்கப்பெற்ற பாடசாலைகளும் உருவாகுவதற்கு வித்திட்ட பெருமை நாவலர் பெருமானையே சாரும் என்றால் அது மிகையாகாது.
பதிப்புப் பணி
கற்பித்தலில் ஏட்டுச் சுவடிகளே பயன்பட்டு வந்தன. நாவலர் புத்தக முறையைக் கையாள விரும்பினார். பாலபாடங்கள் சைவ வினாவிடைகள் இலக்கணச் சுருக்கம் ஆகிய புத்தகங்களை வெளியிடவிரும்பினார். ஆத்திசூடிமுதலிய நீதிச் செய்யுள்களுக்கும் உரை எழுதினார். கிறிஸ்தவர் செய்யும் சைவ தூஷணங்களுக்கு உடனுக்குடன் மறுப்பு வெளியிட வேண்டும் என்று விரும்பினார். இவற்றை அச்சிடுவதற்கு அச்சியந்திரம் வாங்க விரும்பிய நாவலர் 1849 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்குச் சென்றார். வண்ணார்பண்ணையில் நிறுவிய தனது பாடசாலைக்கு அருகாமையில் “வித்தியானுபாலன யந்திரசாலை”என்ற அச்சுக்கூடத்தை நிறுவினார். அழிந்து போகும் நிலையில் இருந்த பல புத்தகங்கள் அச்சு வாகனமேறின. இவரால் வெளியிடப்பட்ட புத்தகங்களில் எழுத்துப்பிழையோவாக்கியப்பிழையோ இலக்கணப்பிழையோ ஏற்படாததோடு அச்சுப்பிழையும் ஏற்படாமல் இருந்தது மிகச் சிறந்த அம்சமாகும். தமிழ் வசன நடையிற் குறியீடுகளாட்சியும் சந்தி பிரித்தலும் இவர்களாற்றான் முதன் முதல் கையாளப் பெற்றன என்கிறார் தென் இந்தியப் பேரறிஞர்களில் ஒருவராகிய சே. வே. ஜம்புலிங்கம்பிள்ளை அவர்கள். பழைய நூல்களைப் பதிப்பிக்கும் துறையில் ஆறுமுகநாவலர் செய்த பணிக்கு ஈடு இணை கிடையாது. அரசாங்க உதவியின்றித் தாமாகவே பழைய இலக்கண இலக்கிய நூல்களைப் பதிப்பிக்க ஆரம்பித்த முதலாவது அறிஞர் ஆறுமுகநாவலர் அவர்களே என்கிறார் பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அவர்கள்.
இந்து ஒளி

நாவலரின் சமுதாயப் பணி (கஞ்சித் தொட்டித் தருமம்)
நாவலருடைய உள்ளத்திலே சான்றான்மைவீரம் இருந்தது போல நெஞ்சிலே ஈரமும் இருந்தது. மக்கள் பட்டினியால் வாடிய பொழுது இவருடைய உள்ளம் வேதனையால் வாடியது. 1876 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் மழை மிகக் குறைவாகப் பெய்தமையினால் பயிர் விளைவுகள் ஏற்படவில்லை. கோதாரி (Colera ) என்று அழைக்கப்படுகின்ற கொடிய நோய் மக்களை வருத்தியது. உணவுப் பொருள்களின் விலை நாம் இன்று அனுபவிக்கும் நிலைபோல என்றுமில்லாதவாறு உயர்ந்தன. பஞ்சமும் கொலரா என்ற கொடிய நோயும் ஏற்பட்டதால் மக்கள் பலர் பரிதாபமாகப் பலியானார்கள். இந்தத் துன்பச் சூழ்நிலையைக் கண்டும் காணாதவர்கள் போல அக்கால ஆட்சியாளர்கள் வாளாவிருந்தனர். மனிதாபிமானம் படைத்த நாவலர் அக்காலத்திற் சிறந்த சமூகத் தொண்டரானார். இக்காலத்தில் நாவலர் கஞ்சித்தொட்டித் தருமம் நடாத்தினார். வண்ணார்பண்ணையில் இந்தக் கஞ்சித் தொட்டித் தருமம் ஆரம்பிக்கப்பட்டது. இக்கஞ்சி அரிசி தேங்காய் உப்பு முதலியன கொண்டு ஆக்கப்பட்டு பனையோலையினால் இழைக்கப்பட்ட தொன்னையில் மக்களுக்கு வழங்கப்பட்டது. 1877ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 3ஆம் திகதி தொடக்கம் நாடோறும் சிறாம்பியடியிற் கஞ்சித்தொட்டித் தருமம் நடாத்தப்பட்டு வந்தது. கஞ்சித் தொட்டித் தருமத்தில் நாவலருடன் முன்னின்று உழைத்தவர் சி . பிறிற்றோ ஆவார். இக் கஞ்சித் தொட்டித் தருமத்தைப் பற்றி அக்காலப் பத்திரிகைகளான உதயதாரகை, இலங்கைநேசன், கத்தோலிக்க பாதுகாவலன் ஆகியன பிரசாரம் செய்து உதவின. நாளொன்றுக்கு 8000 மக்கள் இதனால் பயனடைந்தார்கள் என இலங்கை நேசன் பத்திரிகை எழுதியுள்ளது.
பொது என் நூலகம் சேர்.பொன்.இராமநாதன் யாழப்பாணம். தெரிவுக்கு முன்னின்றவர்.
1979ஆம் ஆண்டில் இலங்கை அரச சட்டசபைக்குரிய பிரதிநிதிக்கான தேர்தல் ஒன்று நடைபெற்றது. அந்த தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட விருந்த பிறிற்றோவை எதிர்த்து 27 வயதுடைய சேர்.பொன் இராமநாதன் சட்டசபைக்குத் தெரிவாகுவதற்கு உதவியாக இருந்தார். சேர். பொன் இராமநாதன் சட்டசபையில் நாவலரை இந்துக்களின் சீர்திருத்தவீரர் என வர்ணித்திருக்கிறார். நாவலரின் கனவை நனவாக்கும் பணியில் சேர். பொன் இராமநாதன் சட்டசபையில் சைவக் கல்வியின் வளர்ச்சிக்காக செய்த பணிகள் அனைவரும் அறிந்தவையாகும். தமிழர் வாழும் பிரதேசத்தின் மூலை முடுக்குகளெல்லாம் சைவப் பாடசாலைகளை நிறுவிய சைவவித்தியா விருத்திச் சங்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவராகவும் பரமேஸ்வராக் கல்லூரி (இன்றைய நமது பல்கலைக்கழகம்) இராமநாதன் கல்லூரி ஆகியவற்றை தனது சொந்தப்பணத்திலே ஸ்தாபித்த வள்ளலாகவும், பல்லவ சோழ மன்னர்கள் செய்த பணிக்குச் சமமாக கொழும்பிலே கொட்டாஞ்சேனையிலே பொன்னம்பலவானேஸ்வரத்தை ஸ்தாபித்த சைவச் சான்றோனாகவும் பல பயன் கருதாப் பணிகளை சேர். பொன் இராமநாதன் ஆற்றுவதற்கு அவரை
வழிப்படுத்திய பெருமை நாவலரையே சாரும்.
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை

Page 12
நாவலர் பெருமான் கே
ஆர் அச்சுவேலி குமாரசுவாமிக்குருக்
- கலாநிதி மஹேஸ் சிரேஷ்ட விரிவுரையாளர், சமஸ்கிருதத்துறை, சு சார் என் என்
"நாவலப் பெருந்தகையார் சமயத்தின் பொருட்டுத் தமது உயிரையும் விடச்சித்தமாயிருந்தனர். அவர்களைப் போல் இனி ஒரு புண்ணிய புருஷன் பிறப்பதில்லை. இதனாலே நாவலர் அவர்களை ஐந்தாங்குரவர் என்றும் சைவப்பிரசாரகர் என்றும் சைவ உலகம் போற்றுகின்றது. இப்பெரியார் போல் அகத்தூய்மையோடு கருமங்களைச் செய்து நிறைவேற்றுவது மற்றையோருக்கு அரியதெனினும், அவர் காட்டிய கொள்கைகளைக் கடைப்பிடித்தொழுகச் சைவர்கள் ஒவ்வொருவரும் கடமைப் பட்டுள்ளார்கள்.”
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரவர்கள் சைவசமய வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளை மதிப்பிடும் வகையில் அமைந்த இக்கூற்று, நாவலர் மறைந்து எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர் (1949) வெளிவந்த ஒரு பத்திரிகையின் ஆசிரியத் தலையங்கத்தின் பகுதியாகும். இப் பத்திரிகையின் பெயர் ஆறுமுகநாவலர். பத்திரிகையை வெளியிட்டவர்கள் யாழ்ப்பாணம் வேதாகம சைவ சித்தாந்த சபையினர். பத்திரிகையின் ஆசிரியர் அச்சுவேலி சிவாகமஞானபாநு சிவஸ்ரீ ச. குமாரசுவாமிகுருக்கள். (1886-1971). வேதசிவாகமங்களின் அடிப்படையிலான சைவத்தை நிலை நிறுத்துவதற்குத் தனது வாழ்நாளின் முப்பத்திரண்டு வருடங்களை அர்ப்பணித்த ஆறுமுகநாவலர் தனி மனிதனாகப் புரிந்த பணிகளை அவர் மறைந்த பின் தொடர்ந்து நடத்தும் நோக்கினைக் கொண்டு, இலங்கையில் உருவான பல்வேறு நிறுவனங்களில் ஒன்று வேதாகம சைவசித்தாந்த சபை, இச்சபையின் தலைமைப் பொறுப்பை வகித்தவர் சிவஸ்ரீ குருக்கள் அவர்களேயாவார். நாவலரின் பரந்துபட்ட ஆளுமையினால் ஈர்க்கப்பட்ட பலர் அவர் காட்டிய வழிநின்று அவரது மரபு வழுவாத சமயக் கொள்கைகளையும் பணிகளையும் பேணும் தலையாய கடமையிலே தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர். இதன் காரணமாக நாவலரை ஆதர்ஷமாகக் கொண்டு ஒரு ஞானபரம்பரையே உருவாகியதை அவதானிக்கலாம். இந்த ஞானபரம்பரையினர் மேற்கொண்ட பணிகள் யாவும் நாவலர் பணியின் வளர்ச்சியும் தொடர்ச்சியுமாக அமைந்தன என்பது மனங்கொள்ளத்தக்கது. இவ்வகையில் இந்நூற்றாண்டிலே நாவலரின் இலட்சியங்களை நிறைவேற்றுவதில் தம்மை ஈடுபடுத்திய ஒருவராகத் திகழ்பவர் சிவஸ்ரீ குருக்களாவார்.
நாவலர் மறைந்து (1879) ஏழு ஆண்டுகளின் பின்னரே குருக்களவர்கள் பிறந்திருக்கிறார். 1886 இல் ஆதிசைவ
(இந்து ஒளி |

வத சிவாகமககிரியை நெறிகளுக்கு ஊறிய பங்களிப்பு
களை அடிப்படையாகக் கொண்ட பொதுப்பார்வை வரக் குருக்கள் பாலகைலாசநாதசர்மா த பாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம்.
கன்ன்ன்ன்ன்
அந்தண குலத்தில் அச்சுவேலி ந. சபாபதிக்குருக்களுக்குப் புத்திரனாகப் பிறந்த குருக்களவர்களின் கல்வி, கேள்வி விருத்திக்குக் காரணமாக அமைந்தவர்கள் நாவலர் மரபில் வந்தவர்களே.
நாவலரினால் நெறிப்படுத்தப்பட்ட சைவ இயக்கத்தில் நெருங்கி உழைத்த நீர்வேலி ஸ்ரீலஸ்ரீ சிவசங்கர பண்டிதர் அவர்களின் குமாரரும் நாவலரிடம் இடையிடையே பாடங்கேட்டவருமாகிய சிவப்பிரகாச பண்டிதரிடம் குருக்கள் தமிழையும் சமஸ்கிருதத்தையும் பயின்றார். அத்துடன் சுன்னாகம் வித்துவசிரோமணி ஸ்ரீமத் அ. குமாரசுவாமிப் புலவர்களிடத்தும் முறைப்படி கற்றதோடு நாவலரின் பெருமகனாகிய ஸ்ரீமத். த. கைலாசபிள்ளை அவர்களிடத்தும் தமிழ்நூல், சித்தாந்த நூல் ஆகியவற்றைப் பாடங்கேட்டவர். சங்கானை அ. அருணாசல சாஸ்திரிகளிடமும் புலோலி ம. முத்துக்குமாரசுவாமிக் குருக்களிடமும் சென்று சிவாகமங்களைக் கற்றவர். ஸ்ரீமத். த. கைலாசபிள்ளையால், வண்ணைசைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆரம்பிக்கப்பட்டு சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரால் நடத்தப்பட்ட காவிய வகுப்புகளில் பயின்றவர். உடுவில் அம்மன் கோவில் வித்துவான் ச. பஞ்சாட்சர ஐயர், திருகோணமலை இ. கு. பூரணானந்தேசுவரக் குருக்கள் முதலியவர்கள் இவரது காலத்தில் பயின்ற சக மாணவர்கள். நாவலரின் மரபிலே பயின்ற நாவலரின் சமயக் கருத்துக்களை நடைமுறைப்படுத்துகின்ற பணியில் தனது சமயப் பணியைத் தொடங்கினார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் நாவலர் நடத்திய இயக்கத்தின் உயிர்நாடி வேதமாக வழிவந்து சைவ உணர்வாக இருந்தது. சைவ சமயத்தையும் அதன் வளர்ச்சிக்குக் கருவியாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டும் என்பதே அவரது நோக்கங்களாக அமைந்தன. சைவப் பணியே அவரது உயிர்மூச்சாக இருந்தது. நாவலரின் இயக்கம் இரு முக்கிய முனைகளைக் கொண்டிருந்தது. பரசமயத்தவர்களால் சைவக் கோட்பாடுகளுக்கும் வழிபாட்டு முறைகளுக்கும் எதிராகப் பரப்பப்பட்ட தூஷணங்களைக் கண்டித்து, சைவ சமய ஆதாரங்களை வேதசிவாகமங்கள் ஆகிய முதனூல்களிலிருந்தும், திருமுறைகள், கந்தபுராணம் ஆகிய வழி நூல்களிலிருந்தும் பிரமாணங்களுடன் எடுத்துக்காட்டுவது ஒன்று. நாவலரின் . சைவதூஷண பரிகாரம் (1854) இதற்கு எடுத்துக்காட்டு. மற்றையது சைவர்களாக வாழுகின்றவர் மத்தியிலே சமயம் தொடர்பாக நிலவிய அறியாமையையும் ஒழுக்கக் குறைபாடுகளையும் களைவதாகும். குருக்கள்வர்களது சைவப் பணி இரண்டாவது அம்சத்தையே அடிப்படையாகக் கொண்டு விளங்கியதென்பது குறிப்பிடத்தக்கது.
10
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை)

Page 13
ஒரு சமயத்தைப் பின்பற்றுபவர்களிடம் காணப்படக்கூடிய அறியாமை, ஒழுக்கக்கேடு என்பவற்றிற்கு அச்சமயத்தை வழி நடத்தும் குருமாரும் ஒரு வகையிற் காரணமாவர். இதனை நாவலர் நன்கு உணர்ந்திருந்தார். வேதசிவாகம் நெறிப்படி ஒழுகத்தவறிய பிராமணர்களைக் கண்டித்தார். இக்காலத்தார் தங்கள் தங்கள் கருத்துக்கிசைய நடந்த பிராமணர்கள் எத்துணைப் பாதகர்களாயினும் அவர்களையே மேன்மக்கள் என்று பிரதிட்டை பூசை திருவிழா முதலியன செய்ய நியோகிக்கின்றார்கள். இவ்வாறு கண்டித்த நாவலர், சைவாகம் உணர்ச்சியும் நல்லொழுக்கமும் சிவபக்தியும் உள்ள பிராமணர்களே ஆலயக் கிரியை செய்யத் தகுதியானவரெனக் கருதினர். இதனைப் பின்வரும் கூற்றால் உணரலாம். "நமது சைவசமயிகள் ஒற்றுமையுடையவர்களாய்த் திரண்டு, தேவாலயங்களெங்கும் சைவாகமங்களில் விதித்த இலக்கணங்களமைந்த பிராமணர்களைக் கொண்டே பிரதிட்டை, பூசை, திருவிழா முதலியவற்றை விதிவழுவாது இயற்றுவித்தலும்.......”இவ்வகையில் நாவலர் எதிர்பார்த்த ஓர் அந்தணப் பெருமகனின் இடத்தைத் தமது சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றால் சிவஸ்ரீ குருக்கள் நிறைவு செய்ய முனைந்தார். நாவலரவர்கள் சிவாகமம் விதிக்கும் சிவதீஷை பற்றியும் உறுதியான கொள்கையுடையவராக இருந்தார். சைவத் திருக் கோயில்களில் சிவதீஷை பெற்றவர்களே குருமாராகக் கடமைபுரியத் தகுதியுடையவரென்பது நாவலரின் உறுதியான கருத்து. நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைப் பற்றி (1:10-11) நாவலர் பிரஸ்தாபிக்கும் பொழுது இவ்விஷயத்தில் அவரது தீவிரமான கொள்கையை உணரலாம்.
நாவலரவர்கள் தமது காலத்தில் சமயக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார். அவ்வெண்ணத்தைச் செயற்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் சைவப்பிரகாச வித்தியாசாலைகளைத் தாபித்தார். வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலை, மற்றும் கோப்பாய், புலோலி ஆகிய இடங்களிலும் வித்தியாசாலைகளை நிறுவினார். அவரது வழிவந்த குருக்கள் அவர்களும் 1918 ஆம் ஆண்டு அச்சுவேலியில் விநாயகராலய மேற்கு வீதியில் தமது சொந்த நிலத்தில் "சரஸ்வதி வித்தியாசாலை" என்ற பெயரில் பாடசாலையை தாபித்தும் மற்றும் மருதன்கேணியிலும் சோரன்பற்றிலும் சைவப் பாடசாலைகளை ஆரம்பித்தும் வைத்தார். சைவசமயத்தைச் சைவசமயிகள் முறையாக அறிவதற்குப் பிரசங்கம் துணை செய்யும் என உணர்ந்து இதனையே தம் பணியாகக் கொண்டவர். இதனை, குருக்களவர்கள் தமது பாடசாலையில் செயற்படுத்தியவர். ஈழத்துச் சமயப் பெரியார்களும் இப் பாடசாலையில் நிகழ்ந்த மாதப்பிரசங்களிலும் கலந்துகொண்டனர்.
நாவலரவர்கள் சிதம்பரத்தில் ஒரு குருகுலம் தாபிப்பதற்குத் திட்டம் வகுத்து மக்களிடம் பொருள் கோரினர். போதிய பணம் சேராமையால் அவர்களுடைய முயற்சி சிதம்பரத்தில் வித்தியாசாலை நிறுவுவதோடு நின்றுவிட்டது. குருக்கள்வர்கள் நாவலரின் இக்கனவைப் பலவழிகளில் நனவாக்க முயன்றார். நாவலர் போற்றிய திருக்கேதீச்சர ஸ்தலத்தில் உருவாகிய வேதாகமப்பயிற்சி நிலையத்திற்குக் குருக்கள் முழுமனதுடன் உழைத்தார். "அர்ச்சகர் பயிற்சிக் கல்லூரி அமைத்து அர்ச்சகர்களைச் சிறந்த குருமாராக வரச்செய்வது மிகமேலாகிய
இந்து ஒளி

சிவபுண்ணியச் செயலாகும்” என்ற உறுதி கொண்ட குருக்கள்வர்களுக்கு திருக்கேதீச்சரத் திருப்பணிச்சபை, அப்போதைய இந்து மாமன்றம் போன்றவற்றின் நல்லாதரவும் கிட்டியது. இந்நிறுவனங்களின் முயற்சியினால் சிவானந்த குருகுலம் என்ற பெயரால் இப்பயிற்சி நிலையம் உருவாகியது, சிவஸ்ரீ குருக்களவர்களே பிரதம குருவாகவும், அதிபராகவும் விளங்கினார். குருகுலம் தற்பொழுது யாழ்ப்பாணத்திலே இந்து மாமன்றத்தின் ஆதரவுடன் சிவானந்த குருகுல பரிபாலன சபையால் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
குருக்களவர்கள் தம்முடைய இல்லத்தில் பிராமணப் பிள்ளைகளுக்கும் சைவப் பிள்ளைகளுக்கும் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் தேவையான நூல்களையும் படிப்பித்தவர். யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் பிராமணப் பிள்ளைகளுக்கும், சைவப் பிள்ளைகளுக்கும் நலன் கருதி நடத்தப்பட்ட வகுப்புக்களில் சிவாகமங்கள், பத்ததி
முதலியவற்றைப் போதித்து, சமயநூல்களையும் படித்தார்.
நாவலரைப் பின்பற்றிக் குருக்களவர்களும் நூல்களை எழுதியும், ஆகமங்களிலிருந்து தொகுத்தும், மொழிபெயர்த்தும், நூல்களைப் பதிப்பித்தும், நூல்களுக்கு உரை எழுதியும், அருந் தொண்டாற்றினார். திருக்கோயில் கிரியை செய்யும் குருமாருக்குப் பயன்படக்கூடிய பிரதிஷ்டா நூல்களைப் பெருமளவில் ஆகமங்களிலிருந்து தொகுத்து வெளியிட்டமை குறிப்பிடத்தக்கதாகும். தமிழபிமானம், சைவப்பற்று, ஆழ்ந்த சமய ஞானம் ஆகிய அம்சங்கள் இவரது நூல்களில் மிளிர்கின்றன.
நாவலர் மரபில் வந்த குருக்கள் பெற்ற தமிழ், சமஸ்கிருத மொழிகளின் புலமைக்கு இந் நூல்கள் சான்றாகும். திருக்கோயில் கிரியைகளில் ஈடுபடும் குருமார் வேதாகம அறிவில் மேம்பட்டவர்களாக விளங்கவேண்டுமென நாவலர் கொண்ட இலட்சியத்தினை நிறைவு செய்ய முனைந்தது போல் அவரது சைவக்கிரியை, பிரதிட்டை பற்றிய நூல்கள் விளங்குகின்றன.
யாழ்ப்பாணத்திலே வேதாமகங்களின் மரபுக்கெதிராக எதிர்ப்பொன்று உருவாகியபோது கரணவாய் சைவ ஆராய்ச்சி சங்கத்தினரின் ஆதரவுடன் குருக்கள் எழுதிய நூல் வேதாகம் நிரூபணம் ஆகும். 1950(1) 1951(1). அவரது நிதானத்தையும் சமய அனுபவ முதிர்ச்சியையும் இந்நூல் வெளிப்படுத்துகின்றது. சைவம் தமிழ்ச் சமயம் என்று கூறி வேதாகமங்களின் தொன்மையை எதிர்ப்பவர்களை உரிய ஆதாரங்களுடன் மறுத்து வேதசிவாகமங்களே சுத்தாததுவித வைதிக சைவசித்தாந்த முதனூல்கள் என குருக்கள் நுண்ணிய ஆராய்ச்சித் திறனுடன் எழுதியவைதான் இவ்விரு நூல்கள். இந்நூலில் நாவலர் நடையின் சாயலைக் காணலாம். நாவலரின் பணியில் குருக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் மதிப்பும் இந்நூலில் வெளிப்படுகிறது.
ஆறுமுகநாவலர் பழைய வைதிக சைவத்தைப் புனருத்தாரணம் செய்ய வந்த பெரியார். சமய குரவர், சந்தான குரவர் முதலிய அருட்செல்வர்கள் காட்டிய நெறியிலே நின்று நமது சற்சமயமாகிய வைதிக சைவத்தைப் பரிபாலனஞ் செய்தார். அதுவன்றிப் புதியதொரு நெறியை நிறுவினாரல்லர். இந்நூலில் குருக்கள் தான் உருவாகி வந்த பரம்பரையைப்
சDI
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை

Page 14
lெini
பற்றிக் கூறும் கருத்தும் குறிப்பிடத்தக்கது. நாவலரும் சங்கர) பண்டிதரும் திருத்தி வைத்த பரம்பரையே நம் நாட்டில்
இன்றும் சைவத்தைப் பரந்து வருகிறது.
யாழ்ப்பாணம் வேதாகம சைவ சித்தாந்த சங்கத்தின் தலைவராக இருந்து குருக்கள் மேற்கொண்ட பணிதான் அவர் காலத்தின் உச்சக்கட்டம் எனலாம். நாவலர் மரபு வந்த சைவப்பணி என இதனைக் குறிப்பிடலாம். நாவலரின் கொள்கைகளைச் சைவ உலகுக்கு பிரகடனப்படுத்தும் பணியாக இக்காலம் அமைந்தது. கட்டுரையின் தொடக்கத்தில் மேற்கோளாகத் தரப்பட்டது சபையின் வெளியீடாகிய ஆறுமுகநாவலர் பத்திரிகையில் (1949) இடம் பெற்ற குருக்களின் ஆசிரியத் தலையங்கக் கூற்றின் பகுதியாகும். இக்கூற்று நாவலரைப் பற்றிய குருக்களது மதிப்புரையாகவும் பத்திரிகையின் நோக்கமாகவும் அமைந்து விளங்குவது குறிப்பிடத்தக்கது.
நாவலர் தமது காலத்தில் உதயபானு என்ற பத்திரிகை நடத்த விரும்பினரெனவும் அவ்விருப்பம் அவரது மாணவரால் மேற்கொள்ளப்பட்டுப் பின் இந்துசாதனமாகவும் மலர்ந்ததாகவும் அறிய முடிகின்றது. இவ்வகையில் நாவலரின் வழிவந்த குருக்களும் நாவலர் பயன்படுத்த விரும்பிய பொதுசன சாதனத்தை அவரது கொள்கைள்ளைப் பரப்பம் தளமாக கருதிச் செயற்பட்டார். நாவலர் பரம்பரையில் பயின்று அவரது சைவக் கொள்கைகளில் ஊறிய குருக்களுக்கு நாவலரின் சிந்தனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல இச்சாதனம் நன்கு துணை புரிந்தது எனில் மிகையில்லை. "ஏதமில்சீர் ஆறுமுக நாவலரவர்கள் இச் சஞ்சிகை ரூபமாகப் புனர் ஜென்மம் எடுத்து வருகிறார்" என்றே இப்பத்திரிகை மக்களுக்கு அறிமுகஞ் செய்து வைக்கப்பட்டமை இங்கு கவனிக்கத்தக்கதொன்றாகும். நாவலரின் திருவுருவப் படத்தை ஒவ்வொரு இதழும் தாங்கி வெளிவந்தமை மேலும்
குறிப்பிடத்தக்கது.
ஈழத்திலுள்ள திருக்கோயில்களில் நடைபெற்ற உற்சவ வைபவங்களில் பெருமளவு கலந்து சிறப்பித்துள்ளதோடு மந்திரம், கிரியை, பாவனை மூன்றும் வழுவாது பிரதிட்டை உற்சவாதி கிரியைகள் செய்வதில் பிரசித்திபெற்றவர் குருக்கள்வர்கள். ஆலய அமைப்பின் சகல துறைகளிலும் குருக்கள் போதிய அனுபவம் பெற்று விளங்கியவர். நாவலர் சைவப்பணிகளை திருக்கோயிலைக் கேந்திரமாகக் கொண்டே நிறைவேற்றினார்.
அதே போன்று குருக்கள் அவர்களும் திருக்கோவிலோடு தொடர்புள்ள எல்லா நுணுக்கங்களையும் அறிந்து சமுதாயத்திற்கு பெருந்துணை புரிந்தார். திருக்கேதீச்சர திருப்பணிச் சபைக்கு வேதாகம வழுவின்றி ஆலயப் புனருத்தாரணம் நடைபெற்ற வேளையில் நல்ல ஆலோசனைகளை வழங்கியதையும் நினைவு கூர்தல் அவசியமாகும்.
தமிழகத்தில் திருவாவடுதுறை ஆதீனம் நாவலர் பட்டம் சூட்டி நாவலர் பெருமானைக் கௌரவித்து இலங்கைச் சைவப் பெரியாருக்குப் பெருமை பாராட்டியது, அதே போன்று குருக்களவர்களின் சிவாகம் அறிவின்படி ஆழத்தையும் புலமையையும் பாராட்டும் வகையில் மதுரை திருஞான (இந்து ஒளி

சம்பந்த ஆதீனம் அவருக்கு "சிவாகம ஞான பானு" என்ற பட்டத்தைச் சூட்டிக் கௌரவித்தமை (1966) ஆறுமுக நாவலர் பரம்பரைக்குக் கிடைத்த கௌரவமெனலாம்.
நாவலரின் வழிநின்றுசைவத்தொண்டு புரிந்த குருக்களின் சேவையைச் சைவ உலகம் மறக்கவில்லை. நாவலரின் வைதிக சைவநெறியைப் பேணியதோடு மாத்திரமின்றி அதன் வழி சைவம் காத்த பெருமையைப் பாராட்டும் வகையில் ஒரு விழா (1960) குருக்கள்வர்களுக்கு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியிலிருந்து சைவ உலகம் குருக்கள் அவர்களை எவ்வாறு உயர்ந்த நிலையில் வைத்து மதிக்கின்றது என்பது புலப்படுகின்றது. அப்பொழுதுயாழ்ப்பாண அரச அதிபராக விளங்கிய திரு. ம. ஸ்ரீகாந்தா அவர்களின் தலைமையில் குருக்கள் பாராட்டு விழாச்சபை அமைக்கப்பட்டு செயற்பட்டது. யாழ்ப்பாணம் வைத்தீஸ்வர வித்தியாலய அதிபராகவிருந்த திரு.ச.அம்பிகைபாகன் தலைமையில் மலர் வெளியீட்டுச் சபை அமைக்கப்பட்டு குருக்கள் பாராட்டு விழா மலர் ஒன்று வெளியிடப்பட்டது. குருக்களின் சேவையைச் சைவ உலகு உணரும் பல அறிஞர்கள் குருக்களின் சைவத் தொண்டை மதிப்பீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. திரு. ச. அம்பிகைபாகன் பதிப்புரையில், "குருக்கள் அவர்கள் ஈழநாட்டிலும் தமிழ் நாட்டிலும் சைவத்தையும் தமிழையும் வளர்த்த ஞானப்பிரகாச முனிவர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர், காசிவாசி செந்திநாதையர், இலக்கணம் முத்துக்குமாரத் தம்பிரான் போல் வேதாகமங்கள், சைவ சித்தாந்த சாஸ்திரங்கள், திருமுறைகள் முதலியவற்றைத் துறைபோகக் கற்றவர்கள். இதனாலேயே குருக்கள் அவர்கள் சைவ சித்தாந்த உண்மைகளை மரபு பிறழாது எடுத்துரைக்க முடிகிறது” எனக்
கூறுவது மனங் கொள்ளத்தக்கது.
திருக்கேதீச்சர கும்பாபிஷேகம் 1976 இல் நிகழ்ந்த போது வெளியிடப்பட்ட திருக்குட திருமஞ்சன மலரில் குருக்களைப் பற்றிய கட்டுரையில் இடம்பெற்ற மதிப்பீடு குருக்களின்
சைவத்தொண்டின் பெருமையை விளக்கும்.
- சிவாச்சாரியார் திலகமாய்த் திகழ்ந்து சைவ சமய வளர்ச்சிக்கு வேண்டிய வழிமுறைகளை ஆராய்ந்து ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களுக்குப் பின்னர், இவ்விருபதாம் நூ ற்றாண்டிற்தொண்டாற்றியவர் அச்சுவேலி"சிவாகமஞானபானு சிவஸ்ரீ ச. குமாரசுவாமிக் குருக்கள்வர்களாவர். சைவசமயம் பற்றி எழுந்த நூல்களை அழியாது பாதுகாக்கவும் போற்றவும் குருக்கள்வர்கள் ஆற்றிய பணிகள் அளப்பரியன.
திருக்கேதீச்சர திருப்பணித் தலைவராகப் பணிபுரிந்த சிவமணி சேர் கந்தையா வைத்தியநாதன் குருக்களிடம் உயர்ந்த மதிப்புக் கொண்டவர். குருக்களோடு திருப்பணி விடயங்களில் நெருங்கிய தொடர்பு கொண்டவர். குருக்களைப் பற்றி அவருடைய கருத்து மனங்கொள்ளத்தக்கது.
“வேதாகமம், பன்னிரு திருமுறை, மெய்கண்ட சாஸ்திரம் முதலாம் சைவசித்தாந்த நூல்களுக்கு விளக்கமும் அருள் உரையும் பகர்வதில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளுக்குப் பெருமை தந்த பெருமான் ஆவார். அங்ஙனமே இருபதாம் நூற்றாண்டுகளுக்குப் பெருமை அளித்து வருபவர் சிவஸ்ரீ ச. குமாரசுவாமிக் குருக்கள் அவர்களே" எனக் கூறுவது மிகையாகாது. 12
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை)

Page 15
நாவலர் பெரும்
கேலாபூஷணம் திரு
த்
எந்த ஒரு ஸ்தாபனமுமோ , பலர் இணைந்து நின்றோ ஆற்றமுடியாத பல நற்பணிகளை, ஒரு தனிமனிதனாக நின்று மிகச் சிறப்பாக பலரும் போற்றும் வண்ணம் ஆற்றிய பெருமை, யாழ்ப்பாணம் நல்லை நகர் தந்த நாவலருக்கே உரியது என்பதை எவராலும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது. சமயப்பணி, கல்விப்பணி, சமூகப்பணி என் நாவலர் பெருமானது நற்பெரும் பணிகளை மூன்றாக வகுக்கலாம். சகலரும் நாடும் இல்லற இன்பத்தை ஓரமாக வைத்துவிட்டு, தனது மதத்துக்கும், மொழிக்கும், இனத்துக்கும், அவற்றின் வளர்ச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து வழிகாட்டியவர் நாவலர் பெருந்தகை என்றால் அது மிகையாகாது.
"யான் இவ்வாழ்க்கையிற் புகாத காரணம் சைவ சமயத்தையும் அதன் வளர்ச்சிக்குக் கருவியாக அமையும் கல்வியையும் வளர்த்தாக வேண்டும் என்னும் பேராசை என் மனதில் தோன்றியமையேயாகும்,” என்னும் பொருள்பட, நாவலர் பெருமான் பல இடங்களில் பல சந்தர்ப்பங்களில், தனது சொற்பொழிவுகளில் குறிப்பிட்டுள்ளமை கண்கூடு.
நாவலர் பெருமான் பிறந்த இடம் யாழ்ப்பாணத்து அருள் மணக்கும் நல்லூர் ஆகும். திருவாளர் க. கந்தப்பிள்ளை சிவகாமி தம்பதியினருக்கு, ஆறாவது குழந்தையாக 1822ஆம் ஆண்டு மார்கழி மாதம் 5ஆம் திகதி நாவலர் பிறந்தார். அவருடைய நட்சத்திரம் அவிட்டம் ஆகும். ஆறுமுகம்பிள்ளை என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர் தனது அளப்பரிய நாவன்மையால், பேச்சாற்றலால் ஆறுமுகநாவலர் எனப் பெருமையோடு பிற்காலத்தில் அழைக்கப்பட்டமை யாம் அறிந்ததே.
நாவலர் பிறந்த காலத்திற்கேற்ப குருகுல வாச முறைப்படி கல்விபயின்ற இவரது ஆசிரியர்களாக பின்வருவோரைக் குறிப்பிடலாம். வித்தியாரம்பம் செய்யப்பெற்ற காலத்திலிருந்து இவரது ஆசான்களாக விளங்கிய அறிவும், ஆற்றலும், அனுபவமும் உடைய சுப்பிரமணிய உபாத்தியாயர், வேலாயுத முதலியார், சரவணமுத்து உபாத்தியாயர், சேனாதிராய முதலியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களிடம் அகரம் முதற்கொண்டு நீதி நூல்கள், எண் சுவடி என்பன தொடர்ந்து, நைடதம், கந்தபுராணம், பாரதம், அந்தாதி வகைகள் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார் நாவலர் தான் வாழ்ந்த காலத்தில் ஆங்கில அறிவின் முக்கியத்துவத்தை நன்கு புரிந்து கொண்ட நாவலர், பீற்றர் பார்சிவல் என்னும் பாதிரியாரிடம் ஆங்கில மொழியையும் கற்றுக்கொண்டார். பீற்றர் பார்சிவல் இவருடைய ஞாபக சக்தியையும் தமிழில் இலக்கண இலக்கிய புலமையையும் கண்டு வியந்து
1ாக
(இந்து ஒளி

பனின் சமய நற்பணிகள்
மதி இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு ஒ
சின்ன சின்ன சின்ன
அவரை அதே பாடசாலையில் ஆசிரியராக்கினார். பார்சிவல் இத்தோடு நாவலரை விடுவதாக இல்லை. அவரிடம் தான் தமிழைக் கற்றுக் கொண்டார். அத்தோடு விவிலிய நூலை தமிழில் மொழிபெயர்க்க நாவலரின் உதவியையும் வழிகாட்டலையும் பெற்றுக் கொண்டார். இதனை பார்சிவல் துரையின் விவேகமான சாதுரியமான புத்திசாலித்தனம் என்றுதான் சொல்லியாக வேண்டும்.
நாவலர் பெருமானுடைய மூன்று வகைப்பணிகளாக சமயப்பணி, கல்விப்பணி, சமூகப்பணி ஆகியவற்றுள் அன்னாரது சமயப்பணியை சற்று
விரிவாக நோக்குவோம்.
பார்சிவல் பாதிரியாரின் தொடர்பும் நாவலரது சமயப் பணிக்கு காரணமாக அமைந்தது என்றும் சொல்ல இடமுண்டு. பாதிரியாரும் தனது அளவில் சமயப்பணி ஆற்றிக்கொண்டிருந்தார். இதனை அவதானித்த நாவலருக்கு தானும் சமயப்பணிகள் ஆற்றியாக வேண்டும் என்ற ஓர் ஆர்வம் தோன்றியது. எனவே சைவசமயம் பற்றி ஆழமாக தெளிவாக அறிய வேண்டும் என அவருக்குத் தோன்றவே அவர் சித்தாந்த சாஸ்திரங்களைக் கற்க விழைந்தார். ஆசிரியர் எவரையும் நாடாது தானாகவே வேதாகமங்களையும் அவற்றின் உட்பொருளையும் கற்க முயன்றார். இம்முயற்சியில் வடமொழி அவருக்குத் தேவைப்பட்டது. எனவே மனஉறுதியுடன் வடமொழியையும் பிறர் உதவியின்றிக் கற்றுத்தேறி மும்மொழிப் புலவருமானார் நாவலர் பெருமான்.
இந்நேரத்தில் ஆங்கில அரசாட்சி இலங்கையில் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. அரசியலாளர் உட்பட தமது மதத்தை எம்நாட்டவர் மீது திணித்து அவர்களை மதம்மாற்ற பல கவர்ச்சிகரமான செயல்களைச் செய்வாராயினர். இதனால் சைவர்கள் சிறிது சிறிதாக மதம் மாற முற்படுவதை அவதானித்த நாவலர் வீறு கொண்டெழுந்தார். பலரை மதம் மாறாமல் தடுக்கவும் செய்தார். இதனால் அவர்கள் ஆங்கிலேயரிடமிருந்து புதிதாக கிடைத்த தமது புதிய பதவிகளை சலுகைகளை இழக்க நேரிட்டது. இவற்றைப் பெரிதுபடுத்தாது எமது மதமும் மொழியுமே எமது இரு கண்கள் என அவர்களுக்குப் புரிய வைத்தார் நாவலர். அப்படியிருந்தும் ஒரு சிலர் எல்லை மீறினர். இதனால் நாவலர் பெருமானது சமயப் பணிகள் தீவிரமாயின. அவற்றைப் பின்வருமாறு வகுக்கலாம்.
சமயப்பிரசங்கங்கள் ஆற்றுதல், ஆலயங்கள் தோறும் புராணபடனம் செய்வித்தல், சமய சின்னங்களுக்கு விளக்கமும் முக்கியமும் அளித்தல், சிவாலயங்களைப்
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை

Page 16
புனருத்தாரணம் செய்வித்தல், சமய - நுால்களை வெளியிடல், பண்ணிசை வளர்த்தல், சமயாசாரியார்களைக் கெளரவித்தல், சைவப் பாடசாலைகள் ஆரம்பித்தல், சைவத்தை இகழ்ந்த பிறசமய
வாதிகளைக் கண்டித்தல், தாமே சைவநெறிப் படி வாழ்ந்து காட்டல் என்பனவையாகும்.
இந்த வகையில் நாவலர் சைவத்தைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் முற்பட்டார். இதனால் சைவமும் தமிழும் இணைந்து வளரலாயின. தனது சமய பிரசங்கத்திற்கு அவர் தேர்ந்தெடுத்த இடம் யாழ் வண்ணார்பண்ணை சிவன் கோயிலாகும். 1847ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வாலயத்தில் வெள்ளிக்கிழமை தோறும் சைவப் பிரசங்கம் நிகழ்த்தி வந்தார் நாவலர் பெருமான். சைவசித்தாந்த உண்மைகளை அவர் எளிய தமிழில் இனிய குரலில் எடுத்துரைத்தார். மக்கள் அவர் பேச்சால் ஈர்க்கப்பட்டனர். இதன் பயனாக சைவசமயத்துக்கு உகந்த பல நற்பழக்கங்களை மேற்கொண்டனர். மாமிச போசனம் உண்பதைத் தவிர்த்தனர். மதுபானம் அருந்துவதை நிறுத்தினர். திருநீறு சந்தனம் தரித்து சிவதீட்சையும் பெறலாயினர். நாவலர் அறிமுகப்படுத்திய புராணபடனம் சைவசமய பாரம்பரியத்தில் இக்காலத்தில் முக்கியத்துவம் பெறலாயிற்று. புராணபடனத்தை நல்லூர் கந்தசுவாமி கோயில் உட்பட பல ஆலயங்களில் நாவலர் பெருமான் நிகழ்த்தி வந்தார். புராணப் பாடல்களை ஒருவர் இராக பூர்வமாகப் பாட மற்றவர் அதன் பொருளைக் கூறுவார். இதுவே புராணபடனம் ஆற்றப்பெற்ற முறையாகும். அந்தந்தக் காலத்துக்குரிய முறையில் பெரியபுராணம், கந்தபுராணம், திருவிளையாடற் புராணம் ஆகியவை புராணபடனத்தில் இடம்பெற்றன.
இதன் பயனாக மக்கள் சிவபிரானின் பெருங் கருணையையும் மேன்மையையும் உணர்ந்து சிவப்பணிகள் பல புரிந்தனர். கேணி, குளங்கள் வெட்டினர். ஆலய வழிபாடு மேற்கொண்டனர். பசுவதையைத் தடுத்தனர். ஆவுரஞ்சுங்கற்களை நாட்டினர்.
ஆங்கிலேயர் ஆட்சியின் போது இடிபட்டும் கவனியாதும் கிடந்த பாழடைந்த பல ஆலயங்கள் நாவலரின் ஏற்பாட்டால் புனருத்தாரணம் செய்யப்பட்டன. உதாரணமாக பாடல் பெற்ற திருத்தலங்களுள் ஒன்றான திருக்கேதீஸ்வரம் மண்மூடிக் காடு வளர்ந்து போயிருப்பதனை உணர்ந்து அதனை வெளிக் கொணர்ந்து புனருத்தாரணம் செய்து நித்திய நைமித்திய பூசைகள் செய்தாக வேண்டும். அதற்கான முயற்சிகளைத் தாமதியாது செய்யும் வண்ணம் சைவமக்களுக்கு அறிவுறுத்தினார். கீரிமலைச் சிவன் ஆலயத்துக்கு அவசியம் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றி மக்களுக்கு அறிவுறுத்தியதோடு தொண்டர்களுள் ஒருவராகத் தாமும் இப்பணியில் அயராது உழைத்தார். பண்ணிசையை வளர்த்து சைவப்பாடல்களை மக்களுக்குப் பயிற்றுவித்த பெருமையும் நாவலர் பெருமானைச் சாரும். நல்லுார் கந்தசுவாமி ஆலய உற்சவகாலத் திருவிழாவின் போது சுவாமி உள்வீதியிலும் வெளிவீதியிலும் உலாவரும் சமயம் தமிழ் வேதப் பாக்களை ஓதுவதற்கு என்று தமிழ் நாடு திருவாவடு துறையிலிருந்து ஓதுவார்களை அழைத்து யாழ்ப்பாணத்தில் தங்கவைத்து இவ்வரும் பெரும்
(இந்து ஒளி

பணியை ஆற்றுவித்தார். இதன் பயன் இன்று பஜனை என்னும் பெயரில் உற்சவகால சுவாமி உலாவில் நல்லைக் கந்தன் ஆலயத்தில் பண்பாடல் இடம் பெறுவதை யாம் காணலாம்.
ஆங்கிலேயர் ஆட்சியின் போது சைவம் சார்ந்த மத நூல்கள் கிடைப்பதென்பது குதிரைக் கொம்பாக இருந்தது. இதனால் சைவச்சிறார்களின் நலன்கருதி சைவ வினாவிடை, திருமுருகாற்றுப்படை உரை நூல், கந்தபுராண வசனம், தேவாரத்திரட்டு, இவையாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல் பெரியபுராண வசனம் ஆகிய சைவம் சார்ந்த அரும்பெரும் நூல்களை எழுதிப் பதிப்பிட்டு வெளியிட்ட நல்லைப் பெருந்தகை நாவலரை சைவர்களான யாம் எப்படி மறக்க முடியும்? இன்றும் இந்நூ ல்கள் எம் எல்லோர்க்கும் வழிகாட்டியாய் அமைவது மறுக்க முடியாத உண்மை. அவற்றை இன்று பயன்படுத்துதல் எம்மவரது பெருங்கடமை. இவற்றை அலட்சியம் செய்தால் அது எமது மடமை.
யாழ்ப்பாணம் அன்றும் இன்றும் ஆலயங்களிலே புராணபடனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது கண்கூடு. இதற்கு அடிப்படைக் காரணமாக செயற்பட்டவர் நாவலர் பெருமான் ஆவர்.
ஆலயங்களில் பலியிடும் வழக்கம் அன்று வழக்கத்தில் இருந்தது. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தவர் நாவலர் பெருமான். இருப்பினும் மிகச் சில ஆலயங்களில் இப்பழக்கம் இன்றும் காணப்படுதல் அவரவர் அறியாமையைக் காட்டுகின்றது. இது மிகவும் பரிதாபத்திற்கும் மனவேதனைக்குமுரிய விடயமாகும்.
தான் எதிர்பார்த்த அளவுக்கு சைவமும் தமிழும் பெரும் வளர்ச்சியடையாமை கண்ட நாவலர் பெருமான் தனது பணிகளை தமிழ் நாட்டிலும் மேற்கொள்ள விரும்பினார். இதற்காகப் பல தடவைகள் நாவலர் தமிழ் நாட்டுக்குப் பயணித்தார். அங்குள்ள சமய ஆதீனங்கள், மடாலயங்கள், சமயப் பெரியோர்கள் இவரை ஆதரித்து கெளரவித்து இவரது அயரா முயற்சியையும், அருள் தமிழையும் பாராட்டி மெய்ச்சினர். சிதம்பரத்திலே நாவலர் பெருமான் ஸ்தாபித்த சைவப்பிரகாச வித்தியாசாலை இன்றும் பசுமை நிறைந்த நினைவுகளை சைவப் பெருமக்களுக்கு உணர்த்துவதோடு அல்லாது நல்லதோர் கல்விக்கூடமாக வளர்ந்துள்ளமை பாராட்டுக்குரியது. தமிழ் நாட்டைச் சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனம் "நாவலர்” என்ற பட்டத்தை இவருக்கு வழங்கியமை இங்கு குறிப்பிடத்தக்கதொன்றாகும். சைவ தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிடுவதற்கு தனிப்பட்ட முறையில் ஒரு அச்சியந்திரசாலையையும் வண்ணார்பண்ணையில் நிறுவினார் என்றால் நாவலரது ஆளுமையை, ஆற்றலை , செயல் வேகத்தை என்னென்பது? சைவச்சிறார்கள் அன்றைய நிலையில் மதம் மாறாது உயர்படிப்பு படித்தாக வேண்டும் என்ற உன்னத காரணத்துக்காக நாவலர் பெருமான் வண்ணார்பண்ணை, புலோலி, கோப்பாய், ஆகிய இடங்களில் சைவப்பாடசாலைகளை நிறுவி இலவசக்கல்வியும் அளித்தார். ஆசிரியர்கட்கு நிவேதனம் வழங்கும் பொருட்டு பிடியரிசி பெற்று அதன் மூலம் அக்கடமையை நிறைவேற்றினார். இத்தகைய உயர் எண்ணங்கள் எம்மில் எத்தனைபேர் மனதில் இன்று எழும்? சிந்தித்துப் பார்ப்போமா?
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை

Page 17
ஆறு தோற்றுவிக்க
- த சைவவித்
கதைகனை
வந்த
செந்தமிழும் சித்தாந்த நன்நெறியும் செய்திட்ட சீர்தவத்தின் பலனாக மணித்திருநாடாகிய ஈழப் பெருநாட்டிலே நல்லை நகர்தனிலே வந்துதித்த ஆறுமுகநாவலர் பெருமான் பிறந்து வாழும் காலத்தில் அவரது சீரிய சிந்தனையில் தோன்றிய விடயங்களை சமூகத்தின் எல்லாத் தரப்பினருக்கும் எடுத்துச் செல்வதற்கு
கையாண்ட மார்க்கமே பிரசங்க மரபு ஆகும்.
இம் மரபு நாவலரவர்கள் மூலமாக உருவாகிய முறைமையும், இதனூடாக அவரது பிரசங்கத்திறன் வெளிப்படுத்தப்பட்ட விதமும், அதனுள் காணப்பட்ட உட்கிடக்கைகளும், அவற்றின் பயன்களும், அப்பிரசங்க மரபினால் சமூகத்தின் மத்தியில் ஏற்பட்ட சீரிய மாற்றங்களும் அதனைத் தக்கவைக்கும் பொருட்டு நாவலர் மேற்கொண்ட முயற்சிகளின் ஊடாக பிரசங்க மரபை அவரது இறுதிக்காலம் வரையும் தொடர்ந்ததுடன், அடுத்த சந்ததி தொடரும் பொருட்டு தற்கால சைவப்பிரசாரகர்களின் தேவையையும் எடுத்தியம்பி அதன்மூலமாக தற்கால சமுதாயத்தையும் எதிர்கால சந்ததியினரையும் நல்லதோர் பாதையில் அழைத்துச் செல்ல நாவலரது சிந்தனை எஞ்ஞான்றும் துணைநிற்கும்.
நாவலர் பெருமானின் பிரசங்க மரபு உருவாகிய முறையை நோக்குமிடத்து அவர் வாழ்ந்த காலப்பகுதியில் ஆங்கிலமே நாகரீகம், கிறிஸ்தவமே அரசியல் மதம் என மக்கள் மதிமயக்கம் நிறைந்திருந்த வேளையில் அநேகமானோர் சற்சமயமாகிய சைவசமயத்திலிருந்து கிறிஸ்தவ சமயத்திற்கு பிரவேசித்ததற்கு காரணம் சைவசமய உண்மையை அறியாமையே என அறிந்த நாவலர் பெருமான் "நமது சைவசமயத்து உண்மைகளை நம்மவர்க்கு போதித்தலினை விட வேறு புண்ணியம் யாதொன்றுமில்லை" என துணிந்து அந்நிய தேசத்தார் இத்தேசத்திலே வந்து தமது சமயத்தை நம்மவர்க்கு போதித்து அவர்களை தம்மதத்தவர்களாக்குகின்றார்களே, நம்முடைய சமயம் நம்மவர்களுக்குப் போதிக்கப்பட்டால் அவர்கள் மதப்பிரவேசம் செய்ய மாட்டார்களே என்றும் தெளிந்து சைவப்பிரசங்கம் செய்வதற்கு முயன்று யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயில் வசந்த மண்டபத்திலே 1847 மார்கழி 18ஆம் நாளன்று சைவமென்னும் பெருஞ்சாலி வளரும் பொருட்டு பிரசங்கம் என்னும் மழையை முதன்முதற் பொழிந்தார். அந்நாள் முதலாக ஒவ்வொரு சுக்கிரவாரத்து இரவிலும் நியமமாக சைவப்பிரசங்கம் செய்து வந்தார்.
இவ்வாறு சைவசமயிகளுக்குள்ளே நெடுங்காலமாக இல்லாது இருந்த பிரசங்க மரபை ஆறுமுக நாவலரவர்கள்
(இந்து ஒளி

என நாலகம்
யாழப்பந்தத்.
முகநாவலரால் கப்பட்ட பிரசங்க மரபு தகர் வெற்றிவேல் சசிகரன், ஈ.
காறுமூலை, மட்டக்களப்பு
தன் :
22ருந்தார்.
செய்யத் தொடங்கிய பின்னர் அவரது பிரசங்கத்திறன் வெளிப்பாட்டினை நேரடியாக காணும் பொருட்டு பிராமணர்கள், வித்துவான்கள், பிரபுக்கள் என்னும் எத்திறத்தார்க்கும் இவர் செய்யும் பிரசங்கங்கள் அவர்கள் செய்யும் பிரசங்கங்களில் கடினமான விடயங்களாகவும், பலநுால்களின் சாரங்களாகவும், இம்மை மறுமைப் பயன்களை தருவனவாகவும், காதுக்கு இனியனவாகவும், கேட்போருக்கு இனிமையாக விளங்கிக் கொள்ளக் கூடியதாகவும் இருப்பதைக் கேள்வியுற்று ஆச்சரியமடைந்து அதிக தூரத்திலிருந்து ஊக்கத்தோடும் அன்போடும் ஒவ்வொரு கிராமங்களிலும் இருந்து வருபவர்களாக பலர் காணப்பட்டனர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த பிரசங்கத்தின் உட்கிடக்கைகளாக, சைவசமயம் இப்படிப்பட்டதென்றும், சைவசமயிகள் வழிபடும் கடவுள் இத்தன்மை உடையவர் என்றும், சைவசமயிகள் அத்தியாவசியமாக தரிக்க வேண்டிய சின்னங்கள் இவையென்றும், சைவசமயிகளுக்கு வேண்டிய இலட்சணங்கள் இவையென்றும் பிரசங்கித்தலே தகுதியெனக்கண்டு இவ்விடயங்களை அதிக பிரபல பிரமாணங்களோடும், அன்றாட வாழ்வியலோடும் இணைத்து பிரசங்கித்திருந்தார்.
அக் காலகட்டத்தில் அவரால் செய்யப்பட்ட பிரசங்கங்களாக கடவுள் வாழ்த்து, உருத்திராஷதாரணம், சிவபக்தி, வேதாகமங்கள், திருவிழா, சிவலிங்கோபாசனை, யாக்கை நிலையாமை, சிவதீட்சை, ஒழுக்கம், இகபர சிலாக்கியங்கள், தருமம், செய்நன்றியறிதல், கல்விகற்பித்தல், கடவுளொருவர் உண்டு எனல், பசுக்காத்தல், கல்வி கற்பித்தல், அறிவு ஒழுக்கங்களில் சிறந்தோரைத் தழுவி நடத்தல், பிரபஞ்ச மாயை, பேதமை, கொல்லாமை, கள்ளுண்ணல், சிவதிவ்வியங் கவர்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இப்பிரசங்கங்களின் வாயிலாக ஏற்பட்ட பயனால் சமூகத்தின் மத்தியில் பற்பல மாற்றங்கள் உதிக்கப் பெற்றன. இவ்வாறான வாழ்வியலோடு ஒருமித்த விடயங்களை அதிகமாக பிரபல நியமங்களைக்கொண்டு சைவசமயிகளுக்கு புலப்படும்படி பிரசங்கித்த பின்பு மாமிச போசனஞ் செய்த அநேகர், அது செய்யாது விட்டார்கள். மதுபானம் அருந்திய அநேகர், அதனை அருந்தாது விட்டார்கள். தீட்சை பெற்று சந்திய வந்தனஞ் செய்யாத அநேகர், மீண்டும் தீட்சை பெற்று கிரமமாய் சந்திய வந்தனஞ் செய்து வந்தார்கள். உருத்திராட்சம் தரியாது ஆலய தரிசனஞ் செய்த அநேகர், உருத்திராட்சதாரிகளாய் கோயிலுக்குப்போய் தரிசனஞ் செய்யத் தொடங்கினார்கள். தரிசன காலங்களிலே ஒரு சிறிது நேரம் தோத்திரஞ் செய்யாத அநேகர் தோத்திர
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை)

Page 18
திரட்டுக்களை நெட்டுருப்பண்ணி கோயில்களிலே தோத்திரம் பண்ணத் தொடங்கினார்கள்.
ஒரு காலத்தினும் ஆலய தரிசனஞ் செய்யாத அநேகர் சோமவாரம், மங்கலவாரம், சுக்கிர வாரம், பிரதோசம், கார்த்திகை, அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, சிவராத்திரி, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, கந்தசஷ்டி, முதலிய புண்ணிய காலங்களில் தரிசனஞ் செய்யத் தொடங்கினர். சைவசமய நூல்களெல்லாம் சில விவேகிகளால் அவ்வக்காலங்களிலே தங்கள் பிளைப்புக்காகச் செய்யப்பட்டன என்றுசொல்லும் பாதிரிமாரின் சொல்லை விசுவாசித்திருந்த அநேகர், பாதிரிமாரும் அவர் களைச் சார் ந் தவர் களுஞ் சொல்வனவெல்லாம் பொய்யென்றும், சிவபெருமான் ஆன்மாக்கள் பொருட்டு வேத சிவாகமம் என்னும் முதல் நுால்களை அருளிச்செய்தாரென்றும், அவைகளின் வழிநுால் சார்பு நுால்களும் அக்காலங்களிலே தோற்றம் பெற்றன. என்றும் மற்றைய சித்தாந்த நுால்களும் அவர் அருள் பெற்றவர்களாலேயே செய்யப்பட்டனவென்றும் விசுவாசித்துக் கொண்டார்கள்.
கோயில்களிலே சுவாமியைத் தாங்குதல் தங்களுக்கு அவமானம் என்று எண்ணியிருந்த அநேகர் சுவாமியைத் தாங்குவதால் வரும் பயன் இதுவென்றும் அதனால் நாங்கள் ஸ்ரீபாதந் தாங்கிகள் என்னும் திவ்விய நாமத்தைப் பெற்றுக் கொள்வோம் என்றும் அறிந்து, தாங்கத் தொடங்கினார்கள். தலைக்குட்டையோடு கோயில்களுக்குப்போய் சுவாமி தரிசனஞ் செய்து வந்த அநேகர், அது விலக்கென்று கண்டு தலைக்குட்டை இல்லாது தரிசனஞ் செய்யத்தொடங்கினார்கள்.
தங்கள் சரீரம் நெடுங்காலம் இருக்கும் என்றும், தாங்கள் என்றும் சுக சரீரிகளாக சீவிப்பார்கள் என்றும், மரணத்தை குறித்து ஒருபோதும் சிந்தியாது வாழ்ந்த அநேகர், சரீரம் நிலையற்றதென்றும் இருவினைக்கு ஈடாகிய சுக துக்கங்களை அனுபவித்தல் நிச்சயமென்றும் உணர்ந்து கொண்டார்கள். ஒருபோதுந் தருமசிந்தனை இல்லாது தாமும் தமது பெண்டீர் பிள்ளைகளும் நன்றாக உண்டுடுத்துக்கொண்டு களிப்புற்ற அநேகர் தருமஞ்செய்தலின் மிக்க புண்ணியம் பிறிதொன்றுமில்லை என்று கண்டு தருமஞ் செய்யத் தொடங்கினார்கள். தமக்கு எவ்வளவோ நன்றி செய்த அநேகர், செய்நன்றி மறத்தல் கேடு என்று அறிந்தார்கள்.
இவ்வாறு சமூக மாற்றங்கள் சைவசமயத்திற்கு சாதகமாக ஏற்பட்டதைத் தொடர்ந்து நிலைநிறுத்தி வைக்கும் பொருட்டு சைவசமயத்திற் பிறந்த பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்தி கிறிஸ்தவ மத பாதிரிமார்களால் உள்வாங்கப்பட்ட கல்வி வித்தியாசாலைகளிலே கருவி நூல்களோடு (பாட நுால்) அவர்கள் சமய நூல்கள் கற்பிக்கப்படுதலையும் அதேவேளை சைவசமயிகளினால் பற்பல இடங்களில் உருவாக்கப்படும் வித்தியாசாலைகளிலே கருவி நூல்கள் மாத்திரம் கற்பிக்கப்படுதலையும் கண்ணுற்ற நாவலர் சைவசமய பிள்ளைகளுக்கு கருவி நூல்களோடு சமய நுால்களையும் கற்பிக்கப்பட்டால் அவர்கள் தம்மதத்தில் நிலைத்து நிற்பதுடன் மாத்திரமன்றி பிற மதங்களையும் கண்டிப்பதற்கு சக்தி உடையவர்களாகவும் உருவாகுவார்கள்
(இந்து ஒளி

என்பதை நன்றாக அறிந்து தாம் ஒரு வித்தியாசாலை தாபித்தல் வேண்டும் எனத் திடம் கொண்டு வண்ணார் பண்ணையிலே ஓர் வித்தியாசாலையை தாபித்தார். அதன் பொருட்டு அவர் தனது தொழிலை துறந்து முழுநேரமாக சைவப்பிள்ளைகளின் அறிவை பரந்துபட்டதாக வளர்க்கும் பொருட்டு அரும்பணியாற்றியிருந்தார்.
சைவசமய கோயில்களிலே பிரசங்க மண்டபம் அமைக்கப்படுதல் வேண்டும் என்றும், பிரசங்கம் செய்வதற்கு கல்வி ஒழுக்கங்களில் சிறந்த பிரசாரகர்கள் நியமிக்கப்பட்டு அதன் மூலமாக சைவசமயத்தின் உண்மைகளையும் சமய கிரமங்களையும் கற்றோர் முதல் மற்றோர் வரை எல்லோரையும் இலகுவாக கவரும் வகையில் எளிதில் விளங்கும்படி எடுத்துரைக்கக் கூடிய வல்லவர்களுக்கு தேர்ச்சி கொடுத்து இத்தொண்டில் ஊக்குவித்திருந்தார்.
பிரசங்க மரபை நேரிய பாதையில் கொண்டு சென்ற நாவலரது கடைசிப் பிரசங்கம் 1979 ஆம் ஆண்டு ஆடிச்சுவாதி நாளில் இடம்பெற்றது. அன்று "பொன்னும் பொருளும் தருவானை" என்ற சுந்தரரின் தேவாரத்தை பீடிகையாக வைத்து பிரசங்கித்தார். "நிலையில்லாத இந்தச் சரீரம் உள்ள பொழுதே எனது கருத்துக்கள் நிறைவேறுமோ என்னும் கவலை இராப்பகலாக என்னை வருத்துகின்றது. அதாவது சைவமும் தமிழும் வளர்ச்சியடைவதற்கு வித்தியாசாலைகளை தோற்றுவித்தலும், சைவப்பிரசங்கத்தை செய்வித்தலும் இன்றியமையாதனவாகும். நான் உங்களிடத்துக் கைமாறு கருதாமல் முப்பத்தியிரண்டு ஆண்டுகள் தமிழ்ப்பணியும் சைவப்பணியும் செய்துள்ளேன். எனக்குப்பின் சைவசமயம் குன்றிப்போகும் எனப் பாதிரிமார்கள் சொல்லுகிறார்கள். என வே உங் களுக் காக சைவப் பிரசாரகரைத் தேடிக்கொள்ளுங்கள். இதுவே என்னுடைய கடைசிப் பிரசங்கம். இனிமேல் நான் உங்களுக்கு பிரசங்கம் செய்ய மாட்டேன்.'' என்ற கருத்துப்பட பேசினார். அப்பிரசங்கத்திற்கு வந்தவர்களில் கண்ணீர் விட்டு அழாதவர் எவருமில்லை. மறுநாள் நேற்றிரவு ஏன் அவ்வாறு பிரசங்கம் செய்தீர்கள் என்று அன்பரொருவர் கேட்ட போது தமக்கு அந்நேரம் ஒன்றும் தெரியவில்லை என்றார் நாவலர். அவரது கூற்றுப்படியே அப்பிரசங்கம் நாவலர் பெருமானது கடைசிப்பிரசங்கமாக அமைந்திருந்தது. இப்பிரசங்கம் நடைபெற்று நான்கு மாதங்களின் பின்னர் நாவலர் பெருமானார் சிவபதமடைந்தார்.
இவ்வாறு மனிதருள் மாணிக்கமாக திகழ்ந்து தனது சீரிய சிந்தனையினால் மேற்குறிப்பிட்ட செயற்கரிய செயல்களை செய்து அதன் மூலமாக தற்கால சமுதாயத்திற்கும் எதிர்கால சந்ததியினருக்கும் தோன்றாத்துணையாக செயற்படுகின்ற நாவலர் பெருமானின் சிந்தனையில் உதித்த பிரசங்க மரபினைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு சிறந்த சைவசமய பிரசாரகர்கள் தொண்டர்களாக உருவாக வேண்டும். அதன் விளைவாக சைவசமயமும் அதன் பண்பாட்டு விழுமியங்களும் என்றும் நிலைபெற்று இவ் வையகத்தை வளப்படுத்த எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக!
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை

Page 19
நாவலரின் ஏற்பட்ட சமய, ச
|
கன்
ஈழநாட்டிலும் தென்னகத்திலும் சைவ நன்னெறியும் தமிழ் மொழியும் ஏற்றம் குன்றி நின்ற காலத்திலே , ஆங்கிலமே நாகரிகம், கிறிஸ்தவமே அரசியல் மதம் என மக்கள் மயக்கம் நிறைந்து நின்ற நேரத்திலே, கிறிஸ்தவப் பாதிரிமாரின் சூழ்ச்சியும் வஞ்சகமும் மக்களைப் பலிகொண்ட வேளையிலே அஞ்ஞானத்தின் துயர்துடைக்க வந்த மெஞ்ஞான சூரியனாக யாழ்ப்பாணத்து நல்லுாரிலே நாவலர் பெருமான் அவதரித்தார். அவரது வருகையால் சைவமும் தமிழும் ஏற்றமும் வாழ்வும் பெற்றது.
இவர் இருபாலைச் சேனாதிராஜ முதலியாரிடமும் நல்லுார் சரவணமுத்துப் புலவரிடமும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத்தேறினார். பீற்றர் பார்சிவல் துரைமகனாரின் ஆங்கில கலாசாலையில் ஆங்கிலம் கற்று அம்மொழியிலும் புலமை பெற்றார். அத்தோடு வடமொழியிலும் தேர்ச்சியெய்தினார். இவரது திறமையைக் கண்ட பீற்றர் பார்சிவல் துரையவர்கள் இவரைத் தனது பாடசாலையிலேயே ஆசிரியராக அமர்த்தினார். அதுமட்டுமன்றி பீற்றர் பார்சிவல் துரைமகனாரின் வேண்டுகோளிற்கிணங்க கிறிஸ்தவ வேதத்தை தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்தார். இந்த மொழிபெயர்ப்பினை இலங்கை அறிஞர்களும், இந்திய அறிஞர்களும் சிறந்த மொழிபெயர்ப்பெனப் போற்றினார்கள்.
நாவலர் பெருமான் கிறிஸ்தவப் பாடசாலையிலே ஆசிரியராகக் கடமையாற்றிய காலத்தில் கிறிஸ்தவப் பாதிரிமார்கள் சைவர்களை அஞ்ஞானிகள் என இகழ்ந்தும் மதமாற்றத்திற்குட்படுத்தியும் கேடு புரிந்தமையைக் கண்டு மனம் பொறாது தான் வகித்த ஆசிரியப் பதவியைத் துறந்து தனது கண்களைப் போன்றனவாகிய சைவம், தமிழ் என்னும் இரண்டினையும் தன்னை அர்ப்பணித்து வளர்க்க முனைந்தார். அப்படி அவர் தனது வாழ்வில் செய்த சேவைகளை சமயப்பணி, சமூகப்பணி, கல்விப்பணி என வகுத்து நோக்கலாம்.
அந்த வகையிலே சமயப்பணிபற்றி நோக்கும்போது மாணவர்களைச் சேர்த்து பிற்பகலிலும், இரவிலும் இலவசமாக சமய நூல்களையும், கல்வி நூல்களையும் கற்பித்து வந்தார். அத்தோடு ஊர்கள் தோறும் சைவப் பாடசாலைகளை அமைத்தும், மக்களிடையே நடைமுறையிலிருந்த சுடலை மாடன், காடேறி முதலிய சிறுதெய்வ வழிபாட்டை விலக்கவும் பாடுபட்டார்.
மேலும் கோயில் நிருவாகத்திலே உள்ள சீர்கேடுகளையும் திருத்தமுயன்றார். திண்ணைப்பள்ளிமுறையை ஏற்படுத்தி
இரவில் மாணவர்கள் கற்கத்தக்க வகையில் வழிசெய்தார்.
(இந்து ஒளி

- இரு இந்திய ஆஆஆ ம்
- வாழ்வியலுாடாக்
மூக, கல்வி மாற்றங்கள். கே.குமாரசாமி அ.
மண்டூர். கர்ல் காதல்
பிரசாரமூலம் கிறிஸ்தவ சமயத்தைக் கண்டிக்கவும் எண்ணங் கொண்டு 1847ஆம் வருடமாகிய தனது 25 ஆவது வயதில் வண்ணார்பண்ணை சிவன் கோயில் வசந்த மண்டபத்திலே முதன்முதலாக கிறிஸ்தவ மதப் பிரசாரத்தைக் கண்டித்துச் சைவப்பிரசங்கம் செய்யத் தொடங்கினார். அப்பிரசாரமானது அன்று முதல் இவரது இறுதிக்காலம் வரை தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வந்தது. இவர் இல்லாதவிடத்தும் அதனை நடாத்த பதிலேற்பாடுகளையும் செய்து பிரசாரம் ஒழுங்காக நடைபெற வழி வகுத்தார்.
பாதிரிமார்கள் தங்கள் சமயத்தைப் பரப்ப பிள்ளைகளை மதம் மாற்றியமை , தொழில் வழங்கிப் பிறரை மதம் மாற்றியமை, பிரசங்கம் மூலம் மக்களை மதம் மாற்றியமை தொடர்பாகவும் நாவலர் பெருமான் பல யுத்திகளைக் கையாண்டார். அந்த வகையிலே பிள்ளைகளது தாய், தந்தையர்களிடம்சைவசமய உண்மைகளை எடுத்துரைத்தும், தொழில்ரீதியாக மதம் மாறுவோருக்குத் தம்மாலியன்ற உதவிகளை வழங்கியும் மதமாற்றத்தைத் தடுத்ததுடன், கிறிஸ்தவர்களுக்கு எதிராகச் சமயச் சொற்பொழிவுகளையும், கண்டன உரைகளையும் எடுத்துரைத்து சமயத்தை வளர்த்து
நெறிப்படுத்தினார்.
இவரது பேச்சுத்திறன், கண்டன ஆற்றல், பிரசங்கம் என்பனவற்றை அறிந்த திருவாவடுதுறை ஆதீனம் இவருக்கு "நாவலர்" என்னும் பட்டத்தைச் சூட்டிக் கௌரவித்தது.
இவர் ஆலயங்கள் தோறும் புராணபடனங்கள் பாடும் முறையே ஏற்படுத்தினார். புராணபடனம் ஈழத்திற்குத் தனிச்சிறப்புடையதாகும். அதாவது ஒருவர் பாட ஒருவர் பயன்சொல்லும் முறையில் அமைந்ததாகும். இது பிற்காலத்தில் விரிவுபட்டு சகல ஆலயங்களிலும் இன்றுவரை ஒரு வழக்காறாகச் செயற்பட்டுவருவதும் நோக்கற்பாலதாகும். அந்த வகையிலே கிழக்கிலங்கையிலேயுள்ள மண்டூர் முருகன் ஆலயத்திலே கந்தசஷ்டி விரதகாலத்தில் திருச்செந்துார் புராணம் ஓதும் முறை தொன்று தொட்டு இன்றுவரை நடைபெற்று வருவதும் ஒரு தனிச்சிறப்பாகும்.
மேலும் கல்முனை நகரத்தை அண்மித்துள்ள பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்திலும் உற்சவ காலத்திலே பாரதம் பாடப்பட்டு பயன் சொல்வதும் இன்றுவரை காணக்கூடியதாக உள்ளது.
இதேபோன்று பிரசித்திபெற்ற உகந்தை முருகன் ஆலயம், கதிர்காமம் போன்ற தலங்களிலும் கந்தசஷ்டி விரதகாலத்தில் சூரபத்மன் வதைப்படலம் ஓதி பயன் சொல்லும் நடைமுறையையும் நேரடியாகக் காணலாம்.
பிரபந்தம் இயற்றுவதிலும் நாவலர் சிறந்து விளங்கினார். புலோலி ஸ்ரீபசுபதீஸ்வரப் பெருமான் ஊஞ்சல், கதிர்காமக் கந்தன் மீது பாடிய கீர்த்தனை என்பன சிறந்ததாகும்.
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை)

Page 20
கம்
Dள்
நாவலர் பெருமானது சமூகப்பணி பற்றி நோக்கும் போது 1876, 1877இல் ஏழைகளுக்கு கஞ்சித்தொட்டி தர்மஞ்செய்ததுடன், மட்டக்களப்பிலும், யாழ்ப்பாணத்திலும் வேளாண்மைச் சங்கங்களை அமைத்தும் விவசாயம் சார்ந்த மக்களை மேம்படுத்தினார். அத்தோடு தேவாரங்களை இன்னிசைமூலம் ஓதுவதற்கு ஓதுவார்களை நியமித்து மக்களுக்கு இலக்கிய ரசனை, சமய அறிவு, பண்ணிசை என்பனவற்றையும் ஊட்டினார். இது ஒருவகையிலே முதியோரும் ஈடுபட்டு வாழ்நாட்களுடன் அவர்களை ஈடுபடுத்திய கல்வியாகவும் காணப்பட்டது.
நல்லுார் கந்தசுவாமி கோயிலிலும் ஆகமமுறையைக் கடைப்பிடிக்கவும், அக்கோயில் பொதுச் சொத்துக்களை சகலருக்கும் கணக்குக்காட்டும் முறையையும் ஏற்படுத்தினார். அதுமட்டுமன்றி தீட்சைபெறாது கோயிலில் சேவை செய்யும் சிதம்பர ஆலயத் தீட்சகர்களைக் கண்டித்து தீட்சைபெற வழிவகுத்ததுடன் ஆடு வெட்டி வேள்வி செய்யும் முறையையும் கண்டித்து தடுத்து நிறுத்தினார்.
சாதிப்பாகுபாட்டை நீக்கிச் சகலரும் ஒரே கல்வியைக் கற்று கல்வியில் முன்னேறவும் பாடசாலைகளை ஏற்படுத்தினார். மேலும் நாவலரது கல்விப்பணி பற்றி நோக்கும்போது
கோப்பாயில் சைவப்பிரகாச வித்தியாசாலையை அமைத்தார். நல்லுாரிலே வித்தியாநுபாலன அச்சியந்திரசாலையை நிறுவினார். அதன்மூலமாகப் பாலபாடம் சிதம்பரமான்மியம், பெரியபுராணவசனம் முதலிய நூல்களை வெளியிட்டும் அரும்பெரும் தொண்டாற்றினார்.
ΧOOX
00
MT
**
Tao
**
*ன்
*?
0
3
囊囊囊囊囊囊囊囊囊囊囊囊囊囊囊囊囊囊囊囊囊囊
ஐ.ஐ. தன்மான உணர்வோடு
அறிவு, ஆற்றல் படைத்த தலைவர்கள் பலர் எம்மினத்த தம் அறிவாற்றலை, தாம் பெற்ற அநுபவத்தை தமது பிறந்த வளத்திற்கும் பயன்படுத்தியுள்ளனர். இத்தகைய குறிப்பிடத்த. மேல்நாட்டு நாகரிகத்துக்கும் வாழ்க்கை முறைக்கும் அடிபை அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக - கலங்கரை விளக்கமாக
ஈழம் வாழ் தமிழினத்தின் மிக நெருக்கடியான காலத்து வரலாறே வேறுவிதமாக அமைந்திருக்கும்.
நாவலரின் சமயப்பணி முக்கியத்துவமுடையதாயினும் தனிமனிதனாக நின்று ஆற்றிய பணி என்றும் நன்றியுண உரைநடையின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணி அளவிடற்கரிய பேச்சில் வெல்லும் சொல் கையாண்டு தமிழ் மக்களை வழி
தாம் கொண்ட கொள்கைக்காக, குறிக்கோளுக்காக கண்டவர் நாவலர்.
- சா.ஜே.வே. செல்வநாயகம் முன்னால்
தமிழ் மக்களின் நன்மையின் பொருட்டு
அர்ப்பணம் செய்த
(இந்து ஒளி

அத்தோடமையாது .
சகலரும்
பயன்பெறும் வகையாக பாலபாடம், சைவ வினாவிடை, இலக்கண வினாவிடை, இலக்கணச் சுருக்கம், பெரியபுராண வசனம், திருவிளையாடற்புராண வசனம், கந்தபுராண வசனம், சைவசமய நெறியுரை, நன்னூற் காண்டிகையுரை முதலிய சிறந்த நூல்களை இயற்றியும் கந்தபுராணம், பெரியபுராணம், சேதுபுராணம், திருக்குறள் பரிமேலழகருரை, தொல்காப்பியம் சேனவரையுரை, இலக்கணக் கொத்து, தொல்காப்பியச் சூத்திரவிருத்தி, நன்னுால் விருத்தியுரை என்னும் நூல்களை அச்சிற் பதிப்பித்து வெளியிட்டும் உதவிபுரிந்துள்ளார்.
இவர் எழுத்து வன்மையிலும் சிறந்து விளங்கினார். அதனால் "வசன நடை கைவந்த வல்லாளர்" என்னும் சிறப்பு பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.
இவ்வாறாக நாவலர் பெருமான் வடக்கிலே பிறந்து கிழக்கு உள்ளிட்ட சகல மக்களுக்கும் பயன்பெறும் வகையில் தனது சமய, சமூக, கல்விப் பணிகளைத் தன்னலம் கருதாது ஆற்றி சமயத்தையும், சமூகத்தையும் மேம்படுத்தி இன்றுவரை சகல இனமக்களும் போற்றி மதிக்கும் பெருமகனாக “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” நன்மகனாக நினைவு கூரப்படுகிறார்.
"நல்லை நகராறுமுக நாவலர் பிறந்திலரேற் சொல்லுதமி ழெங்கே சுருதியெங்கே - எல்லவரும் ஏத்து புராணாகமங்க ளெங்கே பிரசங்கமெங்கே
ஆத்தன்றி வெங்கே அறை" என்று புகழ்ந்து பாடியமையும் நோக்கற்பாலதாகும்.
*ப்*
* :
*00.
*
போராடி வெற்றி கண்டவர்
தில் தோன்றியுள்ளனர். ஆனால், அவர்களுள் ஒருசிலர்தான் த நாட்டுக்கும், தமது இனத்திற்கும், தாம் பேசும் மொழியின் தக்க ஒருசிலருள் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரும் ஒருவராவார். Dயாகி, தமிழினம் தன்னிலை தவறித் தத்தளித்த வேளையில் க விளங்கியவர் நாவலர் அவர்கள். தில் நாவலர் தோன்றி பணிபுரிந்திராதிருப்பின் தமிழருடைய
ம், அவர் தமிழுக்கும் தமிழ்ப் பிள்ளைகளின் கல்விக்கும் ர்வுடன் போற்றுதற்குரியது. நாவீறு படைத்த நாவலர் தமிழ் து. எண்ணத்தில் ஏற்றம் கொண்டு, எழுத்தில் எழுச்சி கூட்டி, ப்படுத்தி நெறிப்படுத்திய பெருமை நாவலரை சார்ந்ததாகும். தன்மான உணர்வோடு இறுதிவரையும் போராடி வெற்றி
ள் பாராளுமன்ற உறுப்பினர்) நாவலர் மாநாடு விழா மலர் -1969)
த் தம் உடல் பொருள் ஆவி மூன்றையும் பெரியார் நாவலர்.
- எஸ்.வையாபுரிப்பிள்ளை
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை)

Page 21
ஈழத்து நாவலரு
- செல்
ஆசிரியர், அம்மன்
கனல்
பத்தொன்பதாம் நூற்றாண்டிலே, திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம் எனும் அருளாளர்களால் பாடல் பெற்ற தலங்களிரண்டினையும் இரண்டு கண்களாக கொண்டமைந்த இலங்காபுரியிலே “ஆறுமுகப்பிள்ளை” எனும் இளமைப்பெயருடன் அவதாரம் செய்தவர் ஆறுமுகநாவலர் பெருமான் ஆவார். இவர் ஐம்பத்தேழு ஆண்டுகள்(18221879). இவ் உலகில் வாழ்ந்து சைவத்திற்கும் தமிழிற்கும் அரும்பணி ஆற்றியிருந்தார். தனது சிறுபராயம் முதலே அநாதிமலமுத்தபதியாகிய சிவபெருமான் பிறப்பில்லாத கடவுள் என்றும், பாற்கடலுட் பிறந்த மீன்கள் அப்பாலினை உண்ணாது வேறு பலவற்றை உண்ணல் போல சைவசமயிகள் மெய்நூ லாகிய தங்கள் சைவ நூல்களைக் கல்லாது கற்பனா சமய நூ ல்களைக் கற்று தங்கள் வாழ்நாளை வீணாக கழிக்கின்றனர் என்பதால் அவர்களுக்கு மெய்யறிவூட்டல் வேண்டும் என்ற கொள்கையை கொண்டிருந்தார். சமுதாயத்திற்கு இன்றியமையாததாக வேண்டப்படுவது எவை என்பதை ஆராய்ந்து அவற்றை செயற்படுத்த தம் வாழ்க்கையை தியாகம் செய்தமை அவருடைய தனித்துவத்திற்கு
அடிப்படையானதாகும்.
சைவத்திற்கும் தமிழிற்கும் பாரிய தொண்டாற்றியுள்ள ஆறுமுக நாவலரவர்கள் ஆதீனங்களோடு இணைந்து செயற்பட்டவாற்றை நோக்குமிடத்து, யாழ்ப்பாணத்திலே வித்தியாசாலையை நிறுவி அங்கு கல்வி கற்கும் மாணாக்கர்களுக்கு கல்வி நூலுணர்ச்சியும், கருவி நூலுணர்ச்சியும் ஊட்டத்தக்க நூல்கள் இங்கு இல்லாமல் இருந்தமையாலும் இங்கிருந்த நூல்கள் எழுத்துப்பிழை, சொற்பிழை, வசனப்பிழை கொண்டு காணப்பட்டமையாலும் அவற்றை புதுப்பிக்க வேண்டிய தேவை காணப்பட்டது. அச்சிலும் ஏட்டுப்பிரதிகளிலும் உள்ளவற்றை தாம் பரிசோதித்தலும் புதிதாக சில நூல்களை செய்தலுமாகிய இரண்டினாலும் மாணாக்கருக்கு பயன் பெரிதும் கிடைக்கப் பெறலாம் என எண்ணி ஓர் அச்சியந்திரத்தை கொண்டு வரும் பொருட்டு சென்னைப்பட்டணம் போக முயன்று வித்தியாசாலையை தம் மாணாக்கர் சிலரிடம் ஒப்படைத்து விட்டு தம்மிடம் எப்போது கல்வி கற்க வந்தாரோ அக்காலம் தொட்டு தன்னைவிட்டு நீங்காத நல்லூர் சதாசிவம் பிள்ளையையும் கூட்டிக் கொண்டு செளமிய வருடம் (1849) ஆடிமாதம் சென்னைக்கு புறப்பட்டார். அங்கு வேதாரணியம் போய் அங்கு நின்றும் மயூர மார்க்கமாய்ச் சென்று, திருமூலர் திருமந்திரம் எனும் தமிழ் நூலை அருளிச் செய்த தலமாகிய திருவாவடுதுறை மடத்தை அடைந்தார்.
இந்து ஒளி

ம இந்திய ஆதீனங்களும்
வி மைதிலி பாலசிங்கம், ஓ.
அறநெறிப் பாடசாலை, வந்தாறுமூலை
அங்கேயிருக்கும் பொழுது கல்வியறிவொழுக்கங்களிற் சிறந்த பண்டார சந்நிதிகளும் தமிழ் வித்துவான்களும் இதற்கு முன்னரே அவருடைய கல்வித்திறமை முதலியவற்றை கேள்விப்பட்டிருந்தார்களாதலால் அவரிடத்திலே இலக்கண விலக்கியங்களிலும் சைவசித்தாந்த சாஸ்திரங்களிலும் பலவாட் சேபங்களையும் வினவுவாராகினர். அவ்வாட்சேபங்களுக்கு அவர் சொல்லிய விடைகள் பல நூலின் சாரமாயும் அறிவு அனுபவங்களுக்கு உபயோகமானதாகவும் இருந்தன.
ஒரு நாள் பண்டாரசந்நிதிகள் சைவபிரசங்கஞ் செய்யும்படி அவரை கேட்டார்கள். அப்பொழுது அவர் செய்த பிரசங்கஞ் சிவாகமங்களிலே பிரதிபலிக்கப்படும் பதி பசு பாசங்களை உணர்த்துவதாயும், சுருங்கச் சொல்லல் முதலிய திவ்விய இலக்கணஞ் செறிந்த செந்தமிழ் வசனமாயும் இலக்கண அமைதிக்கு ஒரு சிறிதும் மாறுபாடில்லாததாயும், தருக்க சம்பிரதாயம் நிறைந்ததாயும் பிறரொருவரால் செய்தற்கரியதாகவும் கடவுட் பக்தியுடையாரை மட்டுமன்றி எல்லோரையும் மனமுருகி கண்ணீர் சொரிய பண்ணுவதாயும் காணப்பட்டது. “தேருந்தோறு மிதாந் தமிழ்” என்றபடி கேட்க கேட்க தெவிட்டாததாயும் இருந்தபடியால் திருக்கைலாச பரம்பரை திருவாவடுதுறையாதீனத்து உபய சந்நிதானங்களும் மற்றை வித்துவான்களும் அவருடைய வாக்கு ஆச்சரியமும் சந்தோசமுங் கொண்டு அவருக்குரிய இயற்பெயரிற்கு பின் "நாவலர்” என்னும் திவ்ய சிறப்பு நாமத்தை சூட்டினார்கள். அப் பெரியோர் கூறியபடியே ஏனையோரும் அக்காரண சிறப்பு பெயரை அவருடைய இயற்பெயரின் பின் வைத்து ஆறுமுக நாவலர் என அழைப்பாராயினர். பின் அங்கு நின்றும் புறப்பட்டு சென்னையை சேர்ந்தார்.
தருமபுர ஆதீனம்
இங்கு சில காலம் தங்கும்படி பண்டார சந்நிதியாற் கேட்கப்பட்டார். அங்கிருக்கும் போது சைவப்பிரசங்கம் செய்வதிலேயே தம் நேரத்தை போக்கினார் பின்னர் அவ்விடத்தை விட்டகன்று சீர்காழி சிதம்பரம் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு சென்னைப்பட்டணம் புறப்பட்டார். அங்கே திருவாசகம், திருக்கோவையார் எனுமிரண்டையும் பரிசோதித்தும் அவருடைய மாணாக்கராகிய சதாசிவம்பிள்ளை பெயராலே சித்தார்த்தி (1859) வைகாசி மாதம் வெளிப்படுத்தினார். அவ்வருடத்திலே வேறு அநேக புத்தகங்களையும் அச்சிட்டு வெளிப்படுத்தினார். அப்போது அவருக்கு வயது முப்பத்தேழாயிற்று. கல்வி செல்வம்
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை

Page 22
எனுமிரண்டிலும் மேம்பட்டவரும் வித்துவான்களுக்கு அவரவர் திறமைக்கேற்ப சம்மானம் செய்பவரும் தம்மிடத்தே வருபவர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் இராமபுரத்து ஜெமிந்தாரின் மாநேசருமாயிருந்த "பொன்னுச்சாமித் தேவர்" நாவலருடைய பெருமையையும் அவர் பதிப்பித்த புத்தகங்களையும் அறிந்து திருக்கோவையார், நச்சினார்க் கினியாரையும், திருக்குறள் பரிமேலழகர் உரையையும் தருக்க சங்கிரகம் அன்னம் பட்டியத்தையும் பரிசோதித்து அச்சிடும்படியும் அதற்கு செலவு தாமே தருவோம் என்றும் வேண்டினார். அவ் வேண்டுகோளின்படி முந்தியதை ரௌத்தி வருடம் (1860) ஐப்பசி மாதமும், பிந்திய இரண்டையும் துன்மதி வருடம் (1861) வைகாசி மாதமும் வெளிப்படுத்தினார்.
திருவண்ணாமலையாதீனம்
சைவசமய நூலுணர்ச்சியும் தமிழ் கல்வியும் கொண்டவரென பேர்படைத்து
வருங்காலத்திலே சென்னைப்பட்டணத்திற்கு சமீபமாயிருந்த திருமயிலாப்பூரில் உள்ள திருவண்ணாமலையாதீனத்து சின்னப்பட்டமாகிய ஆறுமுக தேசிகர் நாவலரை தாம் பார்த்துக் கொள்ளல் வேண்டுமென்ற அவாவிலே அவரிடத்திற்கு சில ஓதுவார்களை அனுப்பி தம்முடைய திருமடத்திற்கு அழைப்பித்து அவருடைய இலக்கணவிலக்கியத் திறமையையும் சித்தாந்த நூலுணர்ச்சியையும் கண்டு, மிகவும் சந்தோசங் கொண்டு தான் தரித்திருந்த உருத்திர காஞ்சியத்தை ஞாபகப் பொருட்டாக இருக்கட்டும் என்று அவருடைய மேனியிலே தனது திருக்கரங்களால் அணிவித்தார். அதன் பின் அவசியம் யாழ்ப்பாணம் வரவேண்டியிருந்தமையால் சென்னைப்பட்டணத்தை விட்டு பல தலங்களையும் வணங்கிக் கொண்டு திருநாகைக்காரோணத்திற்கு வந்து அவ்வூரின் வேண்டுகோளின்படி சைவப் பிரசங்கம் செய்து சில நாட்கள் அவர்களுக்கு விடைகொடுத்த பின் தோணியேறி துன்மதி வருடம் (1862) பங்குனி மாதம் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார்.
மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனம்
மதுரையில் உள்ள திருஞானசம்பந்தராதீனத்து பண்டார சந்நிதிகளும் மற்றையசைவபிரபுக்களும் கேட்டுக் கொண்டபடி அத்தலத்திலே சிலகாலம் தங்கியிருக்கும் பொழுது கோயிலுக்கு சிலகாலம் நியமமாக போய்ச் சுவாமி தரிசனஞ் செய்து கொண்டு வருவார். அப்படியிருக்கும் நாட்களிலே பண்டார சந்நிதிகள் கேட்டுக்கொண்டபடி மீனாட்சியம்மை சந்நிதானத்திலே அத்தலத்தின் பெருமையையும் அதிலெழுந்தருளியிக்கும் சொக்கலிங்க மூர்த்தியினுடைய பெருமையையும் சைவசித்தாந்தத்தினுடைய உயர்வையும் விரித்து மக்களுக்கு இனிது விளங்கும்படி பிரசங்கித்தார். உடனே கோயில் அர்ச்சகர் அம்மைக்கு சாத்திய விபூதி பிரசாதத்தை சைவபிரசாரகருடைய கையிற் கொடுத்து பரிவட்டத்தை சிரசிலே கட்டி, மாலையை தோளிலிட்டு ஆசிர்வதித்தார். பின்னர் கோயிலில் நின்று வாத்தியம் முதலிய வரிசைகளோடு மடத்திற்கு
(இந்து ஒளி

அனுப்பப்பட்டார். அம் மக்கள் இப்படிப்பட்ட பிரசங்கத்தை முன்னொருபோதும் கேட்டிராதபடியால் பிரசங்கத்தில் ஆர்வமும் அவர்மீது அன்பும் வைத்தனர். இன்னுஞ் சில காலம் சென்றபின் தங்கள் மடத்திலே பிரசங்கம் செய்வித்தார்கள். பிரசங்கம் முடிந்தவுடன் மகாசந்நிதானம் சந்தோசங் கொண்டு தனது திருச்செவிகளில் அணிந்திருந்த சுந்தரடேங்களைக் கழற்றி நாவலருடைய செவிகளில் அணிய அது கண்ட சின்னசந்நிதானம் தாம் அணிந்திருந்த ஆறு கட்டிகைகளையும் கழற்றி அவ்வாறு செய்ய உபய சந்நிதானங்களும் பிரசங்கத்தை இனிது பாராட்டி வரிசையோடு அனுப்பிவைத்தனர். சின்னச் சந்நிதானம் இலக்கண கொதிதலுள்ள சந்தேகங்களைக் கேட்டு நிவர்த்திபண்ணிக் கொண்டார். அங்கிருக்கும் போது திருப்பூனம், திருவேடகம் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு திருப்பரங்குன்றத்திற்குப் போய் அத்தலத்திலிருக்கின்ற சுப்பிரமணியப் பெருமானை வணங்கி சிலநாள்கள் அங்கிருந்து மீண்டும் மதுரைக்கு வந்தார். பின் உபய சந்நிதானங்களிடம் அனுமதி பெற்றுக்கொண்டு பிரயாணப்பட்டு வரும்போது வழியேயுள்ள திருப்பத்தூர் என்னுந் தலத்தை வணங்கிக்கொண்டு மயூரகிரியென்னும் ஆன்றோராற் போற்றப்படும் குன்றக்குடிக்கு வந்தார்.
குன்றக்குடியாதீனம்
குன்றக்குடியிலே தாபிக்கப்பட்டுள்ள இவ்வாதீன பண்டார சந்நிதிகளும் தமது திருமடத்திலே தங்கியிருந்து போகும்படி கேட்டுக் கொண்டனர். அங்கிருக்கும் காலம் சித்தாந்த விடயங்களிலே பண்டார சந்நிதிகள் செய்யும் ஆட்சேபங்களுக்கு சொல்லுதலில் போக்கப்பட்டது. ஒருநாள் சித்தாந்தத்தினது உயர்வையும் அதன்வழி ஒழுகுவோர் எய்தும் பயனையும் குறித்து அத்திருமடத்திலே பிரசங்கம் செய்யும்படி பண்டார சந்நிதிகளால் கேட்டுக்கொள்ளப்பட்டு பிரசங்கம் செய்தார். அப்போது பண்டார சந்நிதிகள், சாஸ்திரிகள், ஓதுவார்கள், தம்பிரான்கள், சைவபிரபுக்கள் முதலியோர் சிரத்தையோடு வந்து கேட்டனர். பிரசங்கம் செய்துமுடித்த பின் வேறு வேறும்மடத்து பண்டார சந்நிதிகள் தானும் அத்திருமடத்து வீதிவழியே பல்லக்கு ஏறிக்கொண்டு போனால் தமது கட்டுப்பாடு அழிந்துபோகுமென்று அதற்கு இடம்கொடாத பண்டார சந்நிதிகள் பல்லக்கொன்று திட்டப்படுத்தி சித்தாந்த சைவப் பிரவர்த்தகராகிய நாவலரை அதன்மேலேற்றி சாஸ்திரிகள், ஓதுவார்கள், தம்பிரான்கள் முதலானோர் சூழ்ந்து செல்ல கட்டியத்தடி, வானத்தடி, கோணத்தடி, வெள்ளிக்கைப்பந்தி முதலிய விருதுகளும், பெரிய மேளம் முதலிய வாத்தியங்களும் முன் செல்ல பட்டண பிரவேசம் செய்வித்தார்கள். பின்னர் சில நாள் மடத்திலேயிருந்து பண்டார சந்நிதிகளிடம் விடைபெற்றுக் கொண்டு திருப்பெருந்துறைக்குப் போனார். அங்குள்ள திருவாவடுதுறையாதீன மடத்திலிருந்த கட்டளைத்தம்பிரானால் உபசரிக்கப்பட்டு அம்மடத்திலிருந்து சுவாமி தரிசனஞ் செய்து வந்தார். இந்நாளிலே இராமநாதபுரம் இராமசுவாமிப்பிள்ளை திருவிடையாடற் புராணத்திலும், வன்றொண்டச் செட்டியார் நன்னூல் விருத்தியுரையிலும்,
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை)

Page 23
தங்களுக்குள்ள சந்தேகங்களைக் கேட்டு நிவர்த்தி செய்து கொண்டனர். அதன் பின்னர் புதுக்கோட்டைக்கு பயணமானார். அங்கு நாட்டுக் கோட்டை வர்த்தகர்களால் நெடுங்குடி கும்பாபிஷேகத்தின் பொருட்டு அழைக்கப்பட்டார். அதன்போது பிரசங்கம் செய்யும்படி நாவலரிடம் அவர்கள் வேண்டிக் கொண்டனர். அதற்கிசைந்த அவர் சிவபெருமானுடைய பெருமைகளையும் அவரை வழிபடுவோர் தரிக்குஞ் சிவசின்னங்களின் வரலாறுகளையும் விரித்துப்பேசி முடிவிலே அச்சின்னங்களை தரிப்பவர்கள் - மாமிச போசனங்களை உண்ணாதவராக இருக்க வேண்டும் எனவும் பிரசங்கித்தார்.
நாவலரின் ந
நன்மான
நல்ல மாணாக்கன் அதிகாலையில் நித்திரை விட்டெழும்புவான். அவன் கல்வியில் விருப்பமும், ஊக்கமும் உடையவனாயிருப்பான். வித்தியாசாலைக்கு ஒழுங்காகப் போவான். உபாத்தியாயரிடத்து அன்பும் பணிவும் உடையவனாய், அவருடைய சொல்லுக்கு அடங்கி நடப்பான். அவர் சொல்லும் பாடங்களை வேறு சிந்தனையின்றிக் கேட்டு, கேட்ட பாடங்களைப் பலதரஞ் சிந்தித்துத் தனக்குச் சந்தேகமான பொருள்களைத் தன் வகுப்பு மாணாக்கர்களை வினாவியறிவான். அவர்கள் சந்தேகமுற்று வினாவியவைகளுக்குத் தான் உத்தரஞ் சொல்லுவான். அவர்களிடத்து அன்புஞ் சினேகமும் உடையவனாயிருப்பான்.
அவன், தான் நோயாயிருக்குங்காலமும் தன் பிதா மாதா முதலிய பெரியோர்கள் முக்கிய கருமங்களுக்காகத் தடைசெய்த காலமும் அல்லாத மற்றை எப்பொழுதாவது, பள்ளிக்கூடத்துக்குப் போகாமலிருக்கமாட்டான். போகாதபொழுதும், தான் வித்தியாசாலைக்கு வரமுடியாமைக்குக் காரணத்தைத் தன் உபாத்தியாயருக்குத் தெரிவித்து அவர் அநுமதி பெற்றுக்கொள்வான். வராத நாளிற் பாடத்தைத் தவறாமல் படித்து அதன் பொருளைக் கேட்டுத் தெரிந்து கொள்வான். தன் பாடத்தைக் கவனித்தலை விட்டுக் கெட்ட பிள்ளைகளுடைய வீண் பேச்சுக்களுக்கு ஒருபோதுஞ் செவிகொடுக்க மாட்டான். அவர்களோடு கூட வீண்விளையாட்டுக்களுக்குப் போகமாட்டான். ஒருவேளை தான் செய்யுங் குற்றத்துக்காக உபாத்தியாயர் தன்னைத் தண்டித்தாராயினும், அவர் தன்மேல் வைத்த நேசத்தினால் அது செய்தார் என்று நினைத்து, தான் அவர்மேல்வைத்த அன்பை ஒருபோதும் மறக்கமாட்டான்.
உலகத்துக்கு கருத்தா சிவபெருமான். இவர் என்றும் 2 வல்லவர். ஆன்மாக்களுக்காக படைத்தல், காத்தல், அழி
(இந்து ஒளி

அதனைத் தொடர்ந்து செடுங்குடிக்குச் சென்று சுவாமி தரிசனஞ் செய்து பிரசங்கம் பண்ணிவிட்டு மீண்டும் புதுக்கோட்டைக்கு வந்து சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருச்சிராப்பள்ளி, திருவானைக்கா, தஞ்சாவூர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு கும்பகோணம் வந்தார். இவ்வாறு ஒவ்வொரு ஆதீனங்கள் வாயிலாகவும் பிரசங்கம் செய்து சைவ சமயத்தின் பெருமைகளையும் தமிழ் மொழியின் சிறப்பையும் உலகறியச் செய்த நாவலரின் சிறப்புகள் தமிழ் கூறும் நல்லுலகு உள்ளவரை நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
ற்போதனை பாக்கன்
ஒவ்வொரு வேளைகளில் தான் வாசிக்கும் பாடங்கள் கடினமாயிருந்தாலும் அதற்காகப் பயந்து அவைகளைப் படிக்காமல் விட்டுவிடமாட்டான். அவைகளை நாளுக்குநாட் படித்துப் பொருள் தெரிந்துகொள்ளுவான். பழம் பாடங்களை நாடோறும் சிறிதுசிறிதாகப் படித்துப் போற்றிக் கொள்வான். இன்னும், கல்விக்குப் பயன் அறிவும், அறிவுக்குப் பயன் அறிந்தபடி நடத்தலுமே எனத்தெளிந்து, தான் படித்த பாடங்களிற் சொல்லியபடி நடக்கப் பழகிக் கொள்வான்.
இப்படி வித்தையை விரும்பிக் கற்பதும் நற்பழக்கமும் அவனை அகலாமல் இருக்கும் பொழுது அந்த நன்மாணாக்கனுக்கு வித்தியாசாலைக்குப் போகாமற் கழிக்கிற ஒருநாள் ஒரு யுகம்போலக் கவலைக்கிடமாய்க் கழியும். இந்த நன்மாணாக்கன், கல்வியையும் அதன் பயனாகிய அறிவையும் அவ்வறிவின் பயனாகிய ஒழுக்கத்தையும் உடையவனாய், அறிவுடையோர்களால் நன்கு மதிக்கப்பட்டுப், பொருளையும் புகழையும்
இன்பத்தையும் அடைகிறான்.
கல்வியை விரும்பிக் கற்கும் மாணாக்கர்கள் இந்த நல்ல மாணாக்கனைப்போலப் பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காகப் போய், உபாத்தியாயருடைய சொல்லுக்கு அடங்கி நடந்து, பாலிய வயசிலே கல்வியை அவமதியாது கற்றுக்கொள்ளக்கடவர்கள். "சிறுமையிற் கல்வி சிலையிலெழத்து”, “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே”, “கேடில் விழுச் செல்வங் கல்வி", “அறிவுடை யொருவனை அரசனும் விரும்பும்” என்னும் பெரியோர் வாக்குகளை மாணாக்கர்கள் எப்பொழுதும் சிந்தித்தல் வேண்டும்.
(பாலபாடம் - மூன்றாம் புத்தகம்)
உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிவர்; எல்லாம் த்தல் என்றும் முத்தொழில்களைச் செய்கிறார்.
- நாவலர் பெருமான்
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை

Page 24
ஆறு சத்தியவித்தகர் நீத
சைவர்களாகப் பிறந்த மக்கள் சைவ சமயத்தை அறியாது வாழ்ந்து வந்தமை ஆறுமுகப்பிள்ளைக்கு மனவருத்தத்தைக் கொடுத்தது. நம்முடைய சமயமானது நம்மவர்களுக்குப் போதிக்கப்பட்டால் அவர்கள் பிற மதப்பிரவேசஞ் செய்ய மாட்டார்கள் என்று அவர் கண்டு கொண்டார். ஆகவே 1847 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆந் திகதி தொடக்கம் சைவப்பிரசங்கம் செய்யத் தொடங்கினார். அப்பொழுது அவருக்கு வயது இருபத்தைந்து.
கோவில்
- 8
'S-
சைவத்தின் தன்மை, அவர்கள் வழிபடுந் தெய்வங்கள், அவர்கள் தரிக்க வேண்டிய சின்னங்கள், அவர்களுக்குரிய இலட்சணங்கள் என்று பல விடயங்களைத் தமது பிரசங்கங்களில் நாவலர் கூறினார். முக்கியமாகச் சிவபெருமான் ஒருவரே பிறப்பு இறப்பு இல்லாத ஆதியும் அந்தமும் இல்லாத தெய்வம் என்பதை எடுத்துக்காட்டினார். வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயில் வசந்த மண்டபத்திலே அவர் பிரசங்கங்கள் நிகழ்ந்தன. அவரின் பேச்சுக்கள் பலரைக் கவர்ந்தன. மாமிச போசனத்தைப் பலர் விட்டார்கள். மது பானத்தைச் சிலர் தவிர்த்தார்கள். பலர் தீட்சை பெற்றார்கள். உருத்திராட்சம் அணிந்தார்கள். தேவாரத் தோத்திரங்களைக் கோயில்களில் பாடத் தொடங்கினார்கள். பலர் விரதங்கள் இருக்கத் தொடங்கினார்கள். கோயில்களில் சுவாமியைத் தாங்கல் அவமானம் என்று நினைத்திருந்த பலர் சுவாமியைத் தாங்கும் பயன் பற்றி
அறிந்து முனைந்து தூக்க முன் வந்தார்கள். ஸ்ரீ பாதந் தாங்கிகள் என்ற திவ்விய நாமத்தைப் பெற்றார்கள். தருமம் செய்யப் பலர் முன் வந்தார்கள். சூது, களவு, பிறன் மனை விழைதலில் ஈடுபட்ட பலர் அவர் பிரசங்கங்களைக் கேட்டுத் திருத்தத் தொடங்கினர். பசுக்களை வதைக்காமல் அன்பு காட்டத் தொடங்கினார்கள். மக்கள் வலிந்து கல்வி கற்கத் தொடங்கினார்கள். சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஆறுமுகப்பிள்ளை நாவலர் ஆகும் காலம் அண்மித்துவிட்டது.
.................................................... (இந்து ஒளி
••••••••

முகநாவலர் பற்றி தியரசர் க.வி.விக்னேஸ்வரன்
(இந்துசமய சிந்தனைகள் நூலிலிருந்து .......)
நக்கீரன் பரம்பரை நாவலர், கற்றவர், மற்றவர், பிரபுக்கள், பிற மக்கள், பிராமணர் அல்லாதோர் என்று பார்க்காமல் சைவசமய விதிகளுக்கு மாறாக நடப்பவர்கள் அனைவரையும் கண்டித்து வந்தார். இதனால் பகைவர்கள் பலர் சேர்ந்தனர். இடையூறுகள் செய்தனர். ஆனால் அவை அவரைப்
பாதிக்கவில்லை.
அசல்
S
க.ை
ஆHD
நாவலர் திருவாவடுதுறை மடத்தை அடைந்தார். அங்கு அவரின் தகைமை அறிந்து
சைவப் பிரசங்கம் செய்யும்படி கேட்க, மக்களைப் பெரிதும் கவரும் வண்ணம்
நற்பிரசங்கங்கள் செய்தார். ஆதீன உபய - சந்நிதானங்களும் மற்றைய வித்துவான்களும்
சேர்ந்து நாவலர் என்ற சிறப்பு நாமத்தை ஆறுமுகப்பிள்ளையின் பெயரின் பின் சூட்டி
ஆறுமுகநாவலர் என்று அழைத்தனர்.
Lபய
கு
..........................
இரண்டு பெண்டாட்டிக்காரன் உங்கள் முருகன் என்று கேலி செய்த கிறிஸ்தவர்களுக்கு மறுமொழி கூறும் வண்ணம் 'சுப்பிரபோதம்' என்ற நூலை நாவலர் வெளியிட்டார். முருகனை
வெறும் மனிதனாகப் பாவிப்பது மடமை என்றும் ஆறு குணங்களையே ஆறுமுகம் குறிக்கின்றன எனவும் வேல் ஞான சக்தியையும் தெய்வானை கிரியா சக்தியையும் வள்ளி இச்சா
சக்தியையும் குறிக்கின்றன எனக் கூறி இந்து மதம் எவ்வாறு ஒரே நேரத்தில் பரந்த அகன்ற ஆழமான ஆன்மீக அறிவுக்கும்,
அதேநேரத்தில் பொதுமக்களின் அன்புக்கும் மதிப்புக்கும் வித்திட்டுள்ளது என்பதை விளக்கியும் எழுதி வைத்தார். இதன்பின்
பாதிரிமாரின் துர்போதனை குறைந்தது. சைவமக்களுந் தம் மதத்தின் மீது ஈடுபாடு கொள்ள ஆரம்பித்தனர். முருகனின் விசேட
தினங்களான சுக்கிரவாரம், கார்த்திகை, கந்தசஷ்டி ஆகியன மக்களை முருகன் கோயில்களுக்கு பெருவாரியாக ஈர்த்தன.
நாவலருக்கு அப்போது வயது முப்பத்தொன்று.
........................
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை)

Page 25
நவலர் பாதிரிமாரின் பைபிள் நூலை நன்றாய் ஆராய்ந்த பின் தமது மதத்திற்கு கிறிஸ்தவ மதம் ஈடாகாது என்று கண்டு பாதிரிமார் ஈடுபட்ட நடவடிக்கைகளிலேயே அவரும் ஈடுபட்டுத் தன் மதம் சார்பில் வெற்றியுங் காணத் தொடங்கினார். சைவப் பிரசங்கங்கள் செய்தார். அச்சுக்கூடம் தாபித்து சைவ நூல்களை வெளியிட்டார். அவற்றின் ஊடாக மக்களுக்கு நற்சமய வாழ்க்கையையும் சைவ பாரம்பரியத்தையும் வசன நடையில் போதித்தார்.
...............
நாவலர் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம் போன்றவற்றிற்குச் சென்று சைவப் பிரசங்கங்கள் செய்தார். பின்னர் சென்னை சென்று திருவாசகம், திருக்கோவையார் போன்ற நூல்களையும் அச்சிட்டு வெளிப்படுத்தினார். முன்னர் பதிப்பில் இல்லாதிருந்த ஓலைச்சுவடிகளில் இருந்த சைவ இலக்கியம் மக்களின் எளிதான பார்வைக்காக, பருகுதலுக்காக அச்சில் வரத் தொடங்கின. பொன்னுச்சாமித் தேவர் என்பவரின் உதவியுடன் நச்சினார்க்கினியர் உரையும், திருக்குறள் பரிமேலழகர் உரையும், தருக்க சங்கிகரகம் ஆகியனவும் வெளிவந்தன. நாவலரால் ஈழமக்களின் பெருமை தமிழ்நாட்டில் பரவச் செய்தது. திருவாவடுதுறை ஆதீன மகா வித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை தமது சிறப்புப் பாயிரத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்.
'நீடு புகழ் திருக்கேதீஸ்வரம் திருக்கோணாசல மின் நிலவா நின்ற நாடுபுகழ்த் தலம் பொலி யாழ்ப்பாணத்து நல்லூர் வாழ்நகராகக் கொண்டோன் தேடு புகழ் உரு அமைந்த கந்த வேடவத்துதித்த செல்வன் யாரும் பாடுபுகழ் ஆறுமுக நாவலன் அவ்வாறு அச்சிற் பதிப்பித்தானே'
0.••.
நாவலர் பல ஆதீனங்களில் தங்கி இருந்து சைவப் பிரசங்கங்கள் செய்த பின் தமது 39 ஆவது வயதில் திரும்பவும் யாழ் திரும்பினார். நாவலரின் விறைப்பான சமய ஒழுக்கநெறி யாழ். மக்களின் மனதில் பதியத் தொடங்கியது. இன்று அதை நாங்கள் யாழ்ப்பாண நாவலர் பாரம்பரியம் என்று அடையாளம் காட்டவுந் தலைப்படுகிறோம்.
ஒ ....................................... மத அறிவற்ற தமிழ் மக்களைத் தமது சமயத்தின் மீது பற்றுக் கொள்ள வைத்தவர் அவர். அவர்கள் ஒழுக்கசீலர்களாக விளங்க அரும்பாடுபட்டவர் நாவலர். மற்றைய மதங்களின் தாக்கத்தை வெகுவாகக் குறைக்க வழிகோலியவர்.
000.00••••••
(இந்து ஒளி

நல்லூர் கந்தசாமி கோயில் அத்தருணத்தில் சிவ ஆகம் விதிகளுக்கு முழு விரோதமாக அமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தமையால் சுமார் இருபத்தைந்து வருடங்கள் அக்கோயிலுக்குப்
போவதை நல்லூரில் பிறந்த நாவலர் தவிர்த்திருந்தார். ஆனால் இக்காலகட்டத்தில் நாவலரை அழைத்து உரிய திருத்தங்கள் செய்து பிரதிஷ்டையுஞ் செய்து ஆவன செய்து கொண்டார்கள் மேற்படி
கோயிலார்.
...................
... 0
• : 8 : உழல்
யாழப்பாணம்
அடுத்த வருடம் நல்லூர்க் கந்தசாமி கோயிலின் மகோற்சவத்திற்கு நாவலரை அழைத்தபோது உங்கள் கோயிலிலே கிராம சாந்தியிலும் தேர்த்திருவிழாவிலும் வைரவ பூசையிலும் ஆடு வெட்டுகிறபடியால், நான் அக்கோயிலுக்கு வரேன்' என்றாராம். அவர் வேண்டுகோளின்படி ஆடு வெட்டல் கைவிடப்பட்டது. அவரும் கோயிலுக்குப் போகத் தொடங்கினார். நாவலரின் அறிவிலும் ஒழுக்கத்திலும் அன்றைய மக்களுக்கிருந்த
அலாதியான நம்பிக்கையை இது வெளிப்படுத்துகிறது.
•••••••••••.....
.......
... 0
5ெ00
நாவலருக்கு 56 வயது ஆயிற்று. ஒருநாள் சைவப் பிரசங்கஞ் செய்தபோது சனங்களைப் பார்த்துப் பின்வருமாறு கூறினாராம். "நான் உங்கள் இடத்தே கைமாறு பெறுதலைச் சிறிதும் எண்ணாது, நம் சமயத்தவர்களோடும் பிறசமயத்தவர்களோடும்
பெரும் பகையை எடுத்து முப்பத்திரண்டு வருஷ காலமாக உங்களுக்குச் சைவ சமயத்து உண்மையைப் போதித்து வந்தேன். எனக்குப் பின் சைவ சமயம் குன்றிப் போகுமென்று பாதிரிமார்கள்
சொல்கிறார்கள். ஆதலால் நான் உயிரோடிருக்கும் போதே உங்களுக்காக ஒரு சைவப் பிரசாரகரைத் தேடிக் கொள்ளுங்கள். இன்னும் என்னைப்போலே படித்தவர்களும் சன்மார்க்கர்களுமாய் அநேகர் வருவார்கள். ஆனால் உங்களுடைய வைவைக் கேட்டுக் கேட்டுக் கைமாறு கருதாது சமயத்தைப் போதிக்க என்னைப் போல
ஒருவரும் வரார்"
1 வை:
சமயப் பிரசாரஞ் செய்தல், சமய சிந்தனையோடு வாழ்தல், கல்வியில் சிறந்து விளங்குதல், சமய நோக்குடன் வாழ்தல், நூல்களைப் பதிப்பித்து அறிவைப் பரப்புதல், புதிய புதிய நூல்களை மக்கள் மேம்பாட்டுக்காக எழுதுதல், புதிய மாணவர் பரம்பரையை உருவாக்குதல், அஞ்சாது வாழ்தல் - இவற்றைத் தம் வாழ்வில்
வாழ்ந்து காட்டிய ஒழுக்க சீலர் நாவலர்.
1000சி
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை

Page 26
நாவலரின் நற்
S் அருட் கலைமாமணி முதுநிலை விரிவுரையால்
நாவலரின் நற்பணிகள் நாம் மறவோம் நானிலத்தில் பாவலராய்ப் பண்பினராய்ப் பணி செய்தார் - பாரினிலே வேறுபல தொழில் செய்யா வித்தகராய் உயர்ந்திட்டார் ஆறுதலே அவர் நினை வு தான்!
* கோலவுடை தரித்துக் குவலயத்தில் வாழ்பவர்போல்
சால அலங்கரித்து வாழவில்லை, தாம் வரித்த கொள்கைகளை விட்டு வேற்றுமதஞ் சாரவில்லை எல்லையில்லா வித்தகராய் இயங்கியவர் கல்வியிலும் கதாப்பிரசங்கஞ் செய்வதிலும் எல்லையிலாப் பேரறிவு எய்திப் பிறமதத்தார் சொன்னவற்றைக் கண்டித்த தூயர் செயற்கரிய தூய பணிகள் பல செய்திட்டார் வல்லபமே வாழி நிதம் வாழி!
*
நல்லை நகர் தந்த நாவலரே ஞாயிறென வல்ல ஒளிபரப்பிச் சைவத்தை வாழ்வித்த எல்லையிலாப் பேரறிவு ஏந்தலிவர் தில்லைச் சிவன் பாதம் போற்றும் நற்சிந்தனையால் தீட்ஷை தனைப் பெற்ற சீலர், கவி வல்லோன் சாற்றற்கரிய சால்பெல்லாங் கொண்டவராம் போற்றற்கரிய பணிகள் பல செய்தவராய்ச் சீற்றஞ் சினமின்றிச் சிந்தனையால் உயர்ந்திட்டார்!
சொல்லுதமிழ் காத்த தூயவராம் வேதநெறி வெல்லுந் தருக்கநெறி, அச்சுநெறி, அறநெறியும் வல்லசீர்திருத்த வாதியவர் சொலல்வல்லான் செல்லும் வழி எழுதிச் சீரான வழிகாட்டும் வள்ளல் அச்சகத்தின் ஆக்கநூல் பலதந்து நின்ற பேரறிஞன். ஆங்கிலத்தார் சமயநெறி நன்குகற்ற கல்விக்கடல் பைபிள்தனைத் தமிழில் பெயர்த்த தகைசான்றோன் நல்லபல நூல்கள்தனை எழுதிப் பதிப்பித்தோன்!
* 20...
நீதிநெறி வல்லோன் நேர்மையாளன் தானெவர்க்கும் அஞ்சாத நெஞ்சம் படைத்த அருங்குணத்தான் நெஞ்சாரக் கடவுள்தமை நேசித்த தன்மையினால் பஞ்சான எளிமை பாரமிலா அறி வுவளம்
துஞ்சாதரும் பணிகள் துடிப்புடனே செய்துவென்றார். பெண்சாதி தமிழணங்கே என்ன மனங்கொண்டார் தன் சாதி வெல்லத் தகைசார் பணிபுரிந்தார்!
*
சைவத்தமிழுலகு தளைக்கப் பணி செய்தார் மெச்சு பல பதிப்பு மேற்கொண்டு வெளியிட்டார் அச்சுதனைச் சென்னையிலும் ஆக்கிநூல் வெளியிட்டார் வண்ணை நகரில் நாவலர் பாடசாலை எண்ணம் உதிக்க எடுத்திட்டார் முன்முயற்சி தமிழ் சைவச் சீலமிக்க மாணாக்கர் பயின்றிடவே பல நூல்கள் பாலபாடம், சைவவினா விடையெழுதித் துணிவாகத் தமிழ்சைவம் தான்வளர்த்தார் காவலனாய்!
* இலக்கணத்தில் வித்தகராய் இருந்த எம் நாவலனார்
இனிய தமிழ்ப் பிரபந்தம் பலவியற்றி நின்றவராம் நல்லை நகர்க்கந்தன் சீர்திருத்தச் சிந்தனைகள் எல்லையிலா தெழுதிக் குவித்த பணிபற்றி வல்ல தமிழறிஞர் வாதிடுவோர் ஆய்வாளர் புல்லுருவி எதிராளர் புரிந்த வழக்குநிலை சொல்ல முடியாத சூழ்ச்சிகளை யுஞ்செய்து நாவலரைத் துச்சமென மதித்த துயரமது வரலாறு!
(இந்து ஒளி

பணிகள் நாம் மறவோம்
- கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன், - பர், மொழித்துறை, சப்ரகமுவ பல்கலைக்கழகம்.
கல்வி
* தியாகத்தின் பேரொளியாய் திடமனது கொண்டவராய் நியாயத்தின் பக்கமே நின்று செயற் பட்டுவந்தோன் கஞ்சித் தொட்டித் தருமம் சமூகச் சிந்தனை வீச்சால் நெஞ்சில் நினைத்து நிதந்தொழவும் வைத்திடுமே!
சைவநெறி முறைகள் பிசகாது நூலெழுதி நல்ல முறையில் நல்லறிவுச் சுடர்கொளுத்தி நாளுமனுட் டானஞ் செய்து நம்பன் கழலடிகள் பாடும் திருமுறைகள் ஓங்கவழி செய்தவராம்!
*
கண்டனங்கள், துண்டுப் பிரசுரங்கள் என்றவிவை கொண்ட கிறிஸ்தவத்தின் வழியறிந்து கடைப்பிடித்துத்
தாமும் அதுவழியே தக்க வாதாரங்களுடன். நாளும் பொழுதும் நயமாகப் போதித்தும் பாழும் வழிவிடுத்துப் பார்போற்றும் சைவத்தின் சீலத்தை வென்றெடுத்தார் நாமின்று கொண்டுள்ளோம். மாநிலத்தவர் மேன்மை மதிக்கத் தெரிந்திட்டால் வேறுளதோ நற்சைவப் பேறு!
*
ஒழுக்கத்தின் உயர் குணங்கள் ஓங்கி வளர்ந்திடவும் பழக்கத்தில் ஆசாரசீலரென வாழ்வதற்கும் மயக்கத்தில் பிறமதத்தில் மதிமயங்கிப் போகாமல் இறுக்கத்திற் சைவநெறி நிற்க வழி வகுத்திட்டார்!
* பக்தி குணம் பண்பாடு படிப்பிற் செம்மை
பார்போற்றும் மானுடத்தின் மாண்புக் கொள்கை எத்திக்குச் சென்றாலும் நிமிர்ந்த நேர்மை எடுத்தியம்பும் நாவலனார் இதய மேன்மை!
புராணத்திற் புனிதத்தில் உண்மை வாழ்வில் புண்ணிய நற்கருமத்தில் உறைத்த சீலர்
அந்நியரின் ஆசார மின்மை கண்டு ஆர்ப்பரித் தெழுந்திட்ட அறிஞர் கண்டீர்! எண்ணிய நற் கருமங்கள் ஏற்றமாக எடுத்தாண்ட வித்தகராம் நாவலரின் கண்ணியத்தைக் காரியத்தைக் கடமை தன்னைக் கருதாத தன்மையது இழிவாம் கண்டீர்!
நாவலரை யெதிரியெனக் காணுஞ் சில்லோர் நாப்பிழக்கப் பொய்யுரைத்து நன்மை காணார்! பூப்பறிந்து புனிதமான இறைவன் தன்னைப் பூவுலகி லில்லையெனப் புகன்று பேசி நின்று ஆர்ப்பரித்து அவலங்கள் செய்ததாலே அழிந்ததுவே சைவம் அதன் சீலமெல்லாம் பேய்பிடித்த மூச்சியராய் நீறுமின்றிப் பிதற்றுகின்ற பேச்சுரைகள் பொய்யே! பொய்யே!
* செந்தமிழைப் பிழையின்றி அச்சடித்த :
செயற்கரிய செய்த நாவலனார் வாழி நந்தமிழைச் சைவத்தை வாழ்விற் கொண்ட
நற்பெரியோனாறுமுகநாவலர் தாள் வாழி முந்துமதம் காத்தளித்துப் பணிகள் செய்து
முழுவுலகுஞ் சைவத்தைப் போற்றி வாழத் தந்துதவிநின்ற தவப்புதல்வர் பணி நின்றென்றும்
தலைக் கொண்டு நன்றுநின்று வாழுவோமே!
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை)

Page 27
Sri La Sri Arumuga Navalar THE CHAMPION F
• Dr. Kun FITXXXXXXI.
Sri La Sri Arumuga Navalar, the Champion Reformer of the Hindus, was born in Nallur in the Jaffna peninsula, on the 18th, December 1822, this was a time when the Hindu Tamil world was earnestly praying for a saviour who could safeguard the Hindu religion/ Tamil language and culture from the clutches of the foreign imperialists. He lived and worked relentlessly to fulfill his expected tasks with commitment and
dedication.
Three centuries of foreign domination, had almost strangled the national languages, national religions and national culture of the Lankans. It is appropriate to mention that Arumuga Navalar's services and contributions for the upliftment and promotion of Hinduism, Tamil language and culture were as great and valuable as Anagarika Dharmapala's, to Buddhism and sinhala culture in the South Lanka.
Arumuga Navalar, roused the Hindu Tamils from their prolonged slumber, stimulated them to be aware of their rich religion and culture and motivated them to be on the alert. For this, he led an exemplary celebrate life and strictly observed the tenets of the Hindu religion. He was a role model for those who would look upto him. He started the Hindu Tamils Renaissance movement and carried on successfully.
His education and Scholarship
Arumugam had his early education in the traditional, non formal, Guru - Shisya mode of learning. He was a prodigy. He not only mastered Tamil grammar and Literature but Sanskrit also. He made a deep study of the Saiva philosophical works and literary works – 14 Saiva Siddhanta works and 12 Thirumuraikal. He studied Vedas and Siva Agamas in their original Sanskrit under competent teachers. At the age of twelve, he almost completed his Tamil education.
Thereafter, Arumugam joined Jaffna Methodist English School for his English education. This, later came to be known as Jaffna central College. The Principal of the School, at that time, was Rev. Peter Percival, an Englishman who had taken a liking for Arumugam, from the beginning, because of his ways and scholarship in Tamil Language. Arumugam was appointed as a teacher of Tamil Language in the Upper School.
Rev. Percival learnt Tamil from Arumugam earnestly. He never interfered with Arumugam's religions practices and observances within and outside the school. He gave due respect for Arumugam.
On the request made by Rev. Percival, Arumugam made an earnest attempt to translate the Holy Bible which was in English into Tamil. He completed this assignment to the utmost satisfaction of all concerned. Infact, his translation
(இந்து ஒளி

REFORMER OF THE HINDUS
(1822-1879) narasamy Somasundaram -
was assessed the best among all translations submitted for review in Madras by a great Tamil Scholar who acted as the adjudicator. The Madras Tamil Scholar admired the excellence of the Tamil diction, prevalent in Jaffna.
His Hindu (Saiva) Missionary work
Arumugam emerged the champion of the Hindu (Saiva) Renaissance movement of the nineteenth century, both in Jaffna and in South India.
Arumugam gained a profound knowledge of the Bible. He spent, nearly fourteen years in the Christian environment, as a student, a teacher and a translator of the Bible. During this period, Arumugam became well acquainted and familiar with the Methodologies, Strategies and techniques, adopted by the Christian Missionaries to serve and promote Christian religion and western culture, in this country. Arumugam adopted the same strategies and techniques and also modified some of them to serve and promote his religion - Hinduism.
Arumugam, through massive propaganda, making use of the print medium and public meetings, developed positives concepts and attitudes among peoples , about their Mother land, mother tongue, mother Religion, mother Culture and the need for the revival of all of them. He set up Printing presses in Jaffna and Madras o publish hisown religious and Tamil works as well as propaganda materials to counteract ill - - informed criticisms of Hinduism and Tamil culture. He did all those with a missionary zeal. He even condemned the Hindus for their lethargic attitude and the Hindu Priesthood form its ignorance of Saiva agamic principles of conducting meaningful temple services; there were challenges from outside and inside. Arumuga Navalar tackled both with courage and
determination. Always he stood for justice and truth.
Arumuga Navalar was a versatile writer, eloquent speaker and an efficient debater. All these he cultivated to promote Hinduism, Tamil language and Tamil Culture.
His concept of education
The English education that was prevalent at that time was job-oriented and aimed at westernizing the learners. This system of education was bent on destroying the indigenous culture and religiosity and enthroning the western culture and Christian religion in this country. The English educated people despised their own religious practices and values and even felt shy to speak and write in their own mother tongue. They aped western lifestyles, habits and manners. This pained Navalar's heart.
Arumuga Navalar established schools in important places and caused the dissemination of Saiva doctrines as instruments
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை)

Page 28
for the development of Tamil education and Saiva Faith. In 1848, the first such school was established at Vannarpannai, Jaffna named Saivaprgasa Vidyasalai. In 1854, a similar school
was established at Chidambaram, South India.
Navalar wrote suitable text books such as Saiva Vinavidai series and Pala Padam Series an published with a view to instil into the minds of the young children the way to spiritual,
moral, cultural, physical and social life. In fact, he designed a five years education development plan which still remain as an unfinished task.
Navalar also organised non - formal, adult education centres in Temples where he introduced "Purana-Padanam" - recital of Hindu Puranas and explaining elaborately the underlying meanings and religious talks. He himself got involved in these activities. In this way, Navalar tried to propagate the “Kandapurana Kalasaram" (Kanadapurana culture) among the masses. This helped the common people to lead a righteous life.
The concept of education as enunciated by Navalar was both material and spirituality oriented. He was not totally against English education. On the other hand, he wanted it to be more meaningful and also to retain the spiritual, moral, ethical and cultural aspects of the Tamil education system.
Tamil Renaissance movement,
Navalar was the author of not only school text books but was the author of a number of treatises on Tamil grammar, Literature and Hindu Literary and philosophical works. He has been hailed as the "father of Tamil Prose: He wrote simple prose, understandable to common people. He printed and published some of the rare books of ancient Sangam period, which were hitherto found in palmyrah ola leaves. Had Navalar not ventured to do this stupendous task, the Tamil world would have lost such treasures.
In this way, Navalar initiated the Tamil Renaissance movement in Sri Lanka and in South India. The tamils in Sri Lanka and Tamilnadu soon began to realize the fact that they were in matters relating to Philosophy and Religion, Language and Literature; Art and Architecture humanism and spirituality richer and more advanced and highly developed than the western world that was imposing its culture forcibly on them. For the first time, the Tamils awoke to the richness and prosperity of their heritages.
பல்துறை வித்தகர் ந
நாவலர் பெருமான் வாழ்ந்த வாழ்வு பெருவாழ்வு. ஊ பாடசாலைகளின் நிறுவுனராக, நிர்வாகியாக, அ. சொந்தக்காரராக , நூல் வெளியீட்டாளராக, வியாக்கியான மொழிபெயர்ப்பாளராக, கவிஞராக, கிடைத்தற்கரி தேடிச் சேகரித்தவராக, பேச்சாளராக, பிரசங்கியாராக, துண்டுப்பிரசுர (சிறுநூல்) எழுத்தாளராக, பாடநூல் எழு அரசாங்கத்திடம் விண்ணப்பிப்போனாக, சக மனித 66GIOITIB, FPLX6 – LDLL-9 flulop – 6m56IIIpITg 8 பெருமான் ஆற்றிய பணிகள் அளப்பரியன.
இந்து ஒளி

In Sri Lanka, a long succession of national leaders emerged, from Sir Ponnampalam Ramanathan who have drown inspiration from Šri La Sri Arumaga Navalar.
For the excellent work, carried out by Arumugam, the renouned Saiva Aatheenam in Dharmapuram, South India conferred the title “Navalar" on him. Navalar made a tremendous impression in Tamil Nadu.
Navalar's Viewpoint
Navalar was of the view that before achieving political freedom, a country should strive hard to achieve religious, cultural, spiritual and language liberation, so that the political freedom could be made meaningful and permanent. This freedom is very essential for the improvement of the quality of human life and conduct which will lead to establishing peace and harmony in individual, family, society and the country.
Navalar called a spade, a spade. He was always with justice. He never hesitated to criticise or condemn his own people, Hindu Religious leaders, temple authorities, Hindu Priests, Hindu Religious bodies, social and political leaders - if they went wrong or indulged in misconduct and
misappropriation. At the same time he never failed to praise the positive aspects of even his opponents He was both human and humane. He worked for the humanity as a whole and not to boost any individual or relation. He respected other Religions. His involvement in Bible translation bears testimony to this. He could not be branded as a person who propagated caste - consciousness, based on one's own birth. According to him, even a person ho was born in a so-called “High caste” family, if he/she commits acts of sins and behaves immorally in society, such person cannot be considered as a high caste person in society, even a person who was born in a so - called "Low caste” family, behaves morally, possesses good human qualities and refrain from all acts of sins, such a person is to be looked up as a high caste person. Birth is not the criterion; possession human and humane qualities and moral conduct should be the criterion for social differences. Navalar's position should be properly understood in this regard and not haphazardly be misinterpreted.
Navalar's vision as to create a new social order, which would be rich both materially and spiritually; and would uphold justice and truth.
ாவலர்
தியம் பெறாத ஆசிரியராக, ச்சியந்திர கூடங்களின் செய்பவராக, பதிப்பாளரா, ய ஓலைச்சுவடிகளைத் கண்டன் எழுத்தாளராக, ஒத்தாளராக, நிதியுதவிக்கு
ODDI தர்களின் துன்பங்களை ர்திருத்தவாதியாக நாவலர்
(Boörd : Engorb - 30.11.2001)
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை

Page 29
நல்லுார் 6
க.
கல்வி
கிழக்கிலங்கை தந்த பேராசான் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர். இவர், வட இலங்கை பெற்றெடுத்த சைவத் தமிழ்க் காவலன் நாவலர் பெருமானைப் போற்றி பாடிய பாடல் இது.
தொல்லியல் வழுவாச் சைவநூற் புலவர் - தூநெறித் தமிழுரை யாளர் | நல்லியற் புலவர் இசைதரும் புலவர்
நாடக நவிற்றிய புலவர் சொல்லியற் றொகைநூல் வானநூல் தருக்கம்
தோமறு கணிதநூல் முதலாம் பல்கலைப் புலவர்க்கு உறைவிட மாகிப்
பரந்திசை யெய்தும் யாழ்ப் பாணம்
ஆரியர் ஆழி வேந்தரென் றவனி
புகழ்ந்துரை அளிக்கநல் லூரிற் சீரிய செங்கோல் செலுத்திய வேந்தர்
சென்றபின் சைவநிந் தனைசெய் பூரியர் ஆட்சி புக்கது கண்டு
பொறாதுபுண் ணியத்திசை நடந்த நேரியல் ஞான விளக்கெனு முனிவன்
நிறைபுகழ் மரபுமேம் படவே!
தில்லைவாழ் கூத்தன் திருவரு ளுருவாம்
சீர்ச்சிவ காமசுந் தரியார் எல்லையில் கருணைக் கொள்கல மாய
எழிற்சிவ காமியார் வயிற்றில் நல்லைவாழ் கந்தன் அருளினால் நல்லைக்
கந்தர்தம் தவப்பய னாக வில்லைநேர் நுதலார் கண்வலைப் படாத
மெய்த்தவன் மகவென உதித்தான்.
குலந்தரு செல்வன் அறுமுகப் பெயரும்
கோதில்சீர் ஒழுக்கமும் மருவி நலந்தரு கல்வி கேள்வியால் நிறைந்து
நற்றமிழ் வடமொழி குடபால் நிலந்தரு மன்னர் மொழியிவை யுணர்ந்து
நீடுசீர் முருகனே யென்ன அலந்தவர்க் குதவி நினைந்தது முடிக்கும்
ஆற்றலும் பெற்றுயர் வடைந்தான்!
(இந்து ஒளி

ஆறுமுகநாவலனார்
சுவாமி விபுலானந்தர் ஒ
சின்ன சின்ன கதைகள்
தன்னியல் புணரத் தலைவன் தியல்பு
சாற்றிய சைவநூல் பலவும் மின்னியல் சடையார் அருளினால் அச்சில்
மேவுதல் நலமெனத் துணிந்து பன்னல மிகுந்த சென்னைமா நகர்க்குப்
படர்தர வெண்ணிநான் மறைகள் துன்னிநின் றேத்துந் தொல்பதி தொழுது
தொலைவில்சீர் ஆவடு துறையில்
பாவலர் போற்றும் ஞானதேசிகரைப்
பணிந்தவ ராணையின் வண்ணம் பூவலர் கொன்றை புனைந்தவர் புகழைப்
புலமிகு மறிவர் கூட்டுண்ணக் காவலர் வியப்ப உரைத்திடல் கேட்டுக்
கருணைகூர் தேசிகர் இவர்க்கு நாவல் ரெனும்பேர் தகுமென அளித்தார்
ஞாலத்தார் தகுந்தகும் என்ன
சொல்லுதல் வல்லான் சோர்விலன் அஞ்சான்
துணிவுகொள் சிந்தையான் அவனை வெல்லுதல் யார்க்கும் அரிதென உரைத்த
மெய்ம்மறைப் பொருட்கிலக் காகி | நல்லையி லுதித்த நாவலர் பெருமான்
நலந்திகழ் சென்னை மா நகரின் எல்லையை நண்ணி இயற்கலை பரப்பும்
இயந்திரம் வாங்கிய பின்னர்
கருணையே யுருவாங் கண்ணுதற் பெருமான்
கழலினைப் பதிந்த வுள்ளத்தார் அருணைமால் வரையின் சாரலிற் சின்னாள்
அமர்ந்தனர் திருமடத் ததிபர் பொருணிறை தமிழன் புலத்துறை முற்றும்
புண்ணியர் தகவினை யெண்ணித் தெருணிறை யுரவோய் ஈண்டு நீ வைகச்
சிந்தை செய் திடல்நலம் என்றார்.
தம்மை யீன்றெடுத்த யாழியல் நாட்டிற்
சைவமாஞ் சமயமும் புலவர் செம்மைசே ருளத்திற் பொலிந்தமுத் தமிழும்
சீருறப் பணிபல புரிதல் இம்மையிற் பிறவிக் கியைந்தமா தவமென்
றெண்ணியே விடைபெற்று மீண்டார் எம்மையும் பயந்த ஈழமா நாட்டின்
இணையிலாப் பெருநிதி யனையார்
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை)

Page 30
கடிகமழ் கொன்றைத் தாரினார் அழகிற்
காதலுற் றுருகுமெய் யன்பர் வடியிலை வேற்க ணரம்பையர் வரினும்
மதித்திடா ராதலின் விதித்த படியினிற் றூய நெறிபுக நினைந்து
படிகலிங் கத்தினிற் றலைவன் துடிமழுக் கரஞ்சேர் சுந்தர வடிவைத்
தொழுதிட எண்ணிய தூயோர்
நண்ணிணர் வினைகள் நலிவுற அருளும்
நாவலந் தீவினை யடைந்து புண்ணியந் திரண்ட உருவியல் ஞான
போதகா சிரியனைத் தொழுது மண்ணினிற் பிறந்தோர் மனமய லகல
வளரொளிப் பிழம்பென நின்ற விண்ணவர் முதலைப் பூசனை புரியும்
விதியினை மதியினிற் றெளிந்தார்
மன்னுமீ ழத்தை யடைந்து தொண் டாற்றி
மாமறைக் காட்டினை மேவித் தொன்னலத் துறைசை தருமையம் பதியிற்
றொகைவிரி யுரைபல நவிற்றி முன்னமே ழிசையாற் செழுந்தமிழ் வளர்த்த
முதல்வரைப் பயந்தசீ காழி என்னுமா நகரில் இறைவர்தாள் தொழுதார்
இன்றமிழ் வளர்த்தநா வலனார்.
உரையுணர் விறந்த தனிமுதல் கருணை
உருவுகொண் டுலகெல்லாம் பயந்த வரைமகள் உவகை விழியினாற் பருக
மாதவர் வாழ்த்தொலி யெடுப்பப் பரையுரு வாய மாமணி மன்று
பதஞ்சலி யாதுநின் றாடும் விரைகமழ் கொன்றைத் தாரினா ராடல்
விரும்பிவந் தமரரும் பணிவார்
அத்திற மாய தில்லையம் பதியில்
ஆகம அளவையாற் சமைந்த வித்தகக் கோயிற் கோபுரங் கண்டார்
விழிகணீர் பெருக மெய்ம் மறந்தார் பத்தர்சீர் பரவும் நல்லைநா வலனார்
பாரினிற் பன்முறை விழுந்தார் அத்தரே யென்றார் அம்மையே யென்றார்
ஆடினார் பாடினார் அன்பால்.
மாமணி மன்றுட் டிருநடங் கண்டார்
மனநெகிழ்ந் துடையவர் பாதம் பாமணி மாலைப் பனுவலாற் பரவிப்
பல்பகல் பிரிந்தகா தலனார் தாமணி மையிலே வருதல்கண் டுவகை
தழைத்தமெல் லியலெனத் தளர்ந்தார் பூமணிச் சிலம்பி னொலிசெவிப் படலும்
புதுமைசேர் மருட்கையுற் றெழுந்தார்!
இந்து ஒளி

நாவலரின் நற்போதனை
கடவுள் உதவி கடவுளுதவியாவது, கடவுளால் ஆன்மாக்களாகிய எங்களுக்குச் செய்யப்படும் உதவி. கடவுள் தம்முடைய அனுபவத்தின் பொருட்டுவேறொன்றையும் வேண்டுபவர். ஆதனால், அவருக்கு நாம் செய்யும் உதவி ஒன்றுமில்லை. ஒருவர் ஒருவருக்கு ஓர் உதவியைச் செய்வது, அதனைப் பெற்றுக் கொண்டவர் அதனாற் சுகம் உறுதற்கே.துக்க நீக்கத்தின் பொருட்டுச் செய்யும் உதவியும் சுகத்தின் பாற்படும். அச்சுகம் சரீரசுகம், ஆன்ம சுகம் என இருவகைப்படும். இவ்விரண்டினுள், நிலையில்லாத சரீர சுகத்தின் பொருட்டுச் செய்யும் உதவியினும் நிலையுள்ள ஆன்மசுகத்தின் பொருட்டுச் செய்யும் உதவியே சிறந்தது. அதினும் சுகம், ஆன்ம சுகம் என்னும் இரண்டின் பொருட்டுச் செய்யும் உதவி மிகச்சிறந்தது. இந்த இரண்டு சுகங்களையும் நமக்குத் தந்தருளுபவர் கடவுளே.
கடவுள் நம்மேற்கொண்ட இரக்கத்தினால் நாம் இருத்தற்குப்புமியையும், உலாவுவதற்கு ஆகாயத்தையும், உண்ணுதற்குச் சலமுதலியவற்றையும், உணவுகளைப் பாகம் பண்ணுதற்கு அக்கினியையும், சுவாசித்தற்கு வாயுவையும் உதவினார். இன்னும், வேலை செய்யுங் காலமாகிய பகற்காலத்தில் ஒளியைக் கொடுத்தற் பொருட்டு பேரொளியாகிய சூரியனையும், இளைப்பாறுங் காலமாகிய இரவில் ஒளியைக் கொடுத்தற் பொருட்டுச் சந்திரனையும், கிரகங்களையும் நட்சத்திரங்களையும் உதவினர்.
- இவைகளை மாத்திரமா? உயிர்களாகிய நாம் வசித்தற்கு ஒன்பது வாசல்களையுடையதும், எழும்புதல், வீழ்தல், வளைதல், நிமிர்தல் நடத்தல் என்னும் ஐவகைத் தொழில்களைச் செய்வதும் ஆகிய ஒரு நடை வீட்டையும் உதவினார். இவற்றையெல்லாம் கொடுத்து இவைகளை அறிந்து அனுபவிக்கும்படி அறிவையும், அவ்வறிவினாலே ஆன்மசுகத்தை அடைதற்குக் காரணமாகிய ஞானத்தைப் பெறும்படி வேதாகமங்களையும் உதவினார். அது மாத்திரமா? உயிர்க்குயிராய் நின்று உணர்த்துதலையும் செய்கின்றார்.
- இவ்வியல்புடைய கடவுளுக்கு நாமும் இவ்வுலகமும் அடிமைப் பொருள்களும் உடைமைப் பொருள்களுமாம். ஆதலால், அவர் நமக்கு ஆபத்துக் காலத்திற் செய்வனவும், கைம்மாறு கருதாது செய்வனவும், செய்யாமற் செய்வனவும் ஆகிய இப் பேருதவிகளைக் குறித்து நாம் அவருக்குக் கைம்மாறாகச் செய்யும் உதவி ஒன்றுமில்லை. ஆயினும், அக்கடவுளையும் அவர் செய்யும் நன்றிகளையும் இடைவிடாது சிந்தித்து, அவரை எவரினும் மேலானவராக மதித்து, வழிபட்டுக் கொண்டு வருதல் ஆன்மாக்களாகிய நமக்குக் கடமையாகும்.
(பாலபாடம் - மூன்றாம் புத்தகம்
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை)

Page 31
டிசெம்பர் 5ஆம் திகதியன்று த இதன் சிறப்பை எடுத்துச் சொல்லும் எழில்மிகு திருவண்ணாமலை ஒஒஒஒஒஒஒலை
மே 993
திருக்கார்த்திசை
\\IIIா///ilillார்,
99
கதிர்.
தபம் இருளை விலக்கி ஒளியைப் பெருக்கி பொருளை விளக்கம் செய்யும். இத்தகைய சிறப்புமிக்க தீபத்தை ஆலயங்களில் மட்டுமல்ல வீடுகளிலும் ஏற்றிவைத்து வழிபாடு செய்யும் ஒரு நாளாக கார்த்திகை மாதத்து கார்த்திகை நட்சத்திர- நாள் அமைந்திருக்கிறது. இதுவே திருக்கார்த்திகை திருநாளாக இந்துமக்களால் கொண்டாடப்படுகிறது. இதனை கார்த்திகை விளக்கீடு என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த கார்த்திகை தீபத்திருநாள் தொன்மை வாய்ந்தது. கி.மு 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இத்திருநாள் இந்து மக்களால் கொண்டாடப்பட்டு வருவதாகவும், சங்க இலக்கியங்களில் இதுபற்றிய குறிப்புகள் காணப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
- கார்த்திகை தீபத்திருநாள் திருவண்ணாமலையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதனை திருவண்ணாமலை தீபம் என்றும் அழைப்பார்கள். இங்கு சிவபெருமான் ஜோதி வடிவமாகக் காட்சியளித்ததை நினைவுகூரும் வகையில், திருக்கார்த்திகை தினத்தன்று திருவண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றி வைக்கப்பட்டு பூஜை வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம்.தீபதரிசனமானது பிறவிப்பிணியை நீக்க வல்லது என்பது ஐதீகம்.
ஒருதடவை படைப்புக் கடவுளான பிரமனுக்கும், காத்தல் கடவுளான திருமாலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் மற்றவரைவிட தாமே பெரியவர் என வாதிட்டனர். அந்த வாக்குவாதம் முற்றியதால் அவர்கள் இருவருக்குமிடையே சிவபெருமான் ஒளிப்பிளம்பாகத் தோன்றினார். அந்த ஜோதியானது பூமியிலிருந்து ஆகாயம் வரை பரந்து நின்றது. அதன் அடியையும் முடியையும் யார் முதலில் கண்டுகொண்டு வருகிறாரோஇ அவரே பெரியவர் என்று சிவபெருமான் கேட்டுக் கொண்டார்.
பிரம்மா அன்னப்பட்சி வடிவமாகி முடியைத் தேடுவதற்காக ஆகாயத்தை நோக்கியும், திருமால் பன்றி வடிவமாகி அடியைத்
"கல்வியின் வரம்பு கண்டோன், சிவநெறி செழிக்க ை பெருமக்களால் - தமிழ் பேசும் மக்களால் போற்றிப் புகழப்பு தேசிய இயக்கத்தின் மூத்த முதல்வராக , முன்னோடி மூல் நெறிச் செம்மல், மதம் காத்த சான்றோன், தவக்கோலம் கணிக்கப்பட்டவர் நாவலர் பெருமான்
இந்த நாட்டின் ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவ உருத்திராட்சம் காயுமாகக் காட்சி தந்த ஒரு சீலரை முழு வெளியிட்டுக் கெளரவித்ததுடன் அவர் வாழ்ந்த இடிபாடு பிறந்த எந்த மகோன்னதமான மேதைக்கும் இதுவரை கி
(இந்து ஒளி

திருக்கார்த்திகை திருநாள்.
ல திருத்தோற்றத்தை இந்து ஒளி அட்டை படம் சித்தரிக்கிறது.
ஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒ
க தீபத்திருநாள்
999
வன்
Se=
தேடுவதற்காக பூமியை நோக்கியும் சென்றார்கள். இருவரும் அடிஇ முடி காணமுடியாமல் போய்விட்டது. தாமே பெரியவர் என்று கருதிய ஆணவத்தை விட்டுஇ அவர்கள் இருவரும் புறப்பட்ட இடத்திற்கு திரும்பி வந்து விட்டனர். இந்த தத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையிலும்இ சிவபெருமான் ஜோதிவடிவமாகத் தோன்றிய திருத்தலம் திருவண்ணாமலை என்பதாலும் இங்கு திருக்கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
மணப்பெண்களுக்கு வழங்கப்படும் சீர்களுள் முதல் இடத்தைப் பெறுவது திருவிளக்கேயாகும். இதனால் பெண்கள் மணமான முதலாம் ஆண்டில் வரும் திருக்கார்த்திகை திருநாளை தலைக் கார்த்திகையாகக் கொண்டாடும் வழக்கம் இந்தியாவின் தமிழ் நாட்டில் காணப்படுகிறது.
திருக்கார்த்திகை தினம் முருகப் பெருமான் தோற்றம் பெற்ற நாளாகவும் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலானோர் இத்தினத்தில் காலை முதல் விரதமிருந்து மாலை பூஜை முடிந்த பின்னர் வீட்டு வாசலிலிருந்து கொல்லைப்புறம் வரை சகல இடங்களிலும் அகல்விளக்கை ஏற்றி வைப்பார்கள். இதுவே தீபத்திருநாளின் முக்கிய நிகழ்வாக அமைகிறது. இத்தினத்தில் முருகன் ஆலயங்களில் மாவிளக்கு ஏற்றிவைத்து வழிபாடு செய்யும் வழக்கமும் இருக்கிறது.
திருக்கார்த்திகை நாளன்று சில ஆலயங்களில் சொக்கப்பனை எனப்படும் பெருந்தீபம் ஏற்றப்படுவதும் வழக்கமாகும். முன்னொரு காலத்தில் முனிவர்களை துன்புறுத்திய அசுரர்களின் இரதங்களை சின்னாபின்னமாக்கி சிவபெருமான் நெற்றிக்கண்ணால் எரித்த நிகழ்வின் அடையாளமாகவே சொக்கப்பனை கொளுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. பொதுவாக சிவபெருமானை ஜோதி வடிவமாகக் காண்பதற்காகவும் சொக்கப்பனை கொளுத்தும் வழக்கம் ஏற்பட்டது என்றும் இன்னொரு காரணம் தெரிவிக்கப்படுகிறது.
வத்தோன், சொல்லு தமிழ் பொழிந்தோன்,” எனச் சைவப் பட்ட நல்லைநகர் ஆறுமுகநாவலர் இன்று இந்த நாட்டினது Dவராக முழு நாட்டாலுமே ஏற்றிப் போற்றப்படுகிறார். சிவ பூண்ட சீலர், சைவம் வளர்த்த ஐந்தாங் குரவர் எனக்
பரை, ஒரு சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவரை, திருநீறும்
ழ நாடும், நாடாளும் அரசும் புகழ்ந்து போற்றி, முத்திரை ற்ற இல்லத்தைத் தேசிய சொத்தாக்கி இந்த மண்ணில் டைக்காத தனிச் சிறப்பையும் அளித்துள்ளது.
- பிரேம்ஜிஞானசுந்தரன்
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை

Page 32
உருவ வழிபாடு
கற்சிலையில் கடவுளைக் காண முடியும்
ஸ்ரீ சிருங்கேரி சாரதாபீட சுவாமிகள்
* குணம், நிறம், அமைப்பு, பெயர் இவற்றையெல்லாம் கடந்தவர் பரம்பொருள். ஆனால் சாதாரண மனிதன் எப்படி அவ்வாறு கடவுளை அடையாளம் கண்டு கொள்ள முடியும்? கடவுளை
அவ்வாறு
நினைத்து வணங்கும்படி குழந்தையிடம் சொல்லிப்பாருங்கள்! அதற்கு எப்படி பக்தி உணர்வும் மரியாதையும் வரும்? ஆனால் அழகான கிருஷ்ணராக, பாலகனின் உருவில் முருகனாக வைத்து வணங்கச் சொல்லுங்கள். குழந்தைக்கு பக்தி உணர்வு தானே வந்துவிடுகிறது. இது ஓர் அடையாள பூர்வமான வழி அவ்வளவுதான். வழியைப் புரிந்துகொண்ட பிறகு பிம்பத்துக்கு முக்கியத்துவம் இல்லை. ஆனால் அந்த நிலைக்கு வருவதற்கு மிகுந்த மனப்பக்குவம் தேவை. ஆகையால் சாதாரண மக்களுக்கு மூர்த்தி பூஜை அவசியமாகிறது.
இறைவனும் சத்திய லோகத்தில் உயிர்களைப் ) படைக்கும்போது பிரம்மா, வைகுண்டத்தில் )
வீற்றிருந்து காத்தருளும்போது விஷ்ணு, கைலாசத்தில் தன்னுள் ஒடுக்கிக் கொள்ளும்போது ? சிவன். ஒரே இறைவன் தான், முத்தொழிலைப் ? புரியும்போது வெவ்வேறு வகையில் செயல்படுவதாக ? நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன. "ஏகைவ மூர்த்தி, பிபி தே தரிதைவ: ளோயோ யாம் யரம் தரும் பக்த; சரத்தை யாரச்சிதும் இச்சதி."
யார் யார் எந்த எந்த உருவில் வழிப்படுகிறார்களோ அந்த அந்த உருவிலே தோன்றி அருள்பாலித்து ( வந்திருக்கிறான் பகவான்.
(* கற்சிலைதானே! அதற்கு எவ்வாறு தெய்வ )
சாந்நித்தியம், மகிமை ஏற்படுகிறது? ப்ரதிமாயாம் து ஸாந்நித்யம்
அர்ச்கஸ்ய தபோ பவாந். பூஜிப்பவர்களின் தவவலிமையை நம்பிக்கையைப் பொறுத்து உருவங்களில் சாந்நித்யம் ஏற்படுகிறது என்கிறது சாஸ்திரம். அதுமட்டுமல்ல. சாஸ்திர முறைப்படி கும்பாபிஷேகம் செய்தால் ஆலயத்தில் அமைந்துள்ள கற்சிலையும் தெய்வத்தன்மை பெறுகிறது.
\\\\\
(இந்து ஒளி

விக்கிரக வழிபாட்டின் பலன்கள் காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள்
பரம்பொருள் எங்கும் நிறைந்ததாக, அறிந்ததாக எல்லாம் வல்லதாக விளங்குகின்றது. அதனை அப்படியே அனுபவிக்க சாதாரண மனிதர்களால் ஆகாது. எனவே பல்வேறு மூர்த்தங்களாக அறிந்து அனுபவித்தவர்கள் நமக்கு உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.
உதாரணமாக மின்சாரம் இருக்கிறது. எதையும் செய்யவல்ல ஆற்றல் அதற்கு இருக்கிறது. விளக்கில் ) ஒளியைத் தருகிறது. ஒலிபெருக்கியில் ஒலியை நெடுந்தொலைவு கொண்டு செல்லும் ஆற்றல் உடையதாகிறது. விசிறிகளில் காற்றைத் தருகிறது. பெரிய இயந்திரம் முதல் சிறிய இயந்திரம் வரை செயல்பட வைக்கிறது.
மின்சாரத்தைப்போல பரம்பொருளும், அதனால்) செயல்படும் கருவிகளைப்போலவிக்கிரகங்களும் நமது ) பெரியோர்கள் கண்டு அறிந்து தேர்ந்து அனுபவித்து, நமக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கின்றார்கள்.
0
விக்கிரக வழிபாடு ஏற்பட்டது எப்படி?
சுவாமி சின்மயானந்தர் -
* சாதாரண மனிதனும் புரிந்து கொண்டு, தெய்வ வடிவங் களாகக் கருதி வழிபடும் முறையை அப்போது அவர்கள் உருவாக் கினார்கள். தியானத்தில் ஈடுபடவும், மனத்தை ஒருமுகப்படுத்தவும் அந்த வழிபாட்டு முறையே சிறந்தது என்று அவர்கள் கருதினார்கள்.
- - -
''உன்னுடைய தந்தையும், தாயும் நீ கண் முன்னால் கண்டு வணங்க வேண்டிய உயிருள்ள தெய்வங்கள்'' என்று அவர்கள் சொல்லிக்கொடுத்தார்கள்.
அந்த உருவத்திலேயே வழிபாட்டையும் நடத்தக் கற்றுக் கொடுத்தார்கள். உயிருள்ள தெய்வங்களாகப் பெற்றோரை வணங்க முற்பட்டவன், அந்த வடிவத்தில் உள்ள இறைவனையும் உயிர்புள்ள பூஜையினால் வழிபடத் தொடங்கினான். விக்கிரக ஆராதனை என்பது இப்படித்தான் ஏற்பட்டது
- கேனோபநிடத விளக்கங்கள்'
என்ற நூலிலிருந்து.
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை)

Page 33
(இறைவன் ஒருவனே - உருவங்கள் பல)
திருமுருக கிருபானந்தவாரியார் ,
* பட்டினத்து சுவாமிகள்
ஓர் அருமையான பாடல் பாடியிருக்கிறார். அது வருமாறு -
ஒன்றென்றிரு; தெய்வம் உண்டென்றிரு;
உயர் செல்வ மெல்லாம் அன்றென்றிரு; பசித்தோர் முகம்பார்;
நல் அறமும் நட்பும் நன்றென்றிரு; நடு நீங்காம்
லேநமக் கிட்டபடி என்றென்றிரு மனமே!
உனக்குப தேசமிதே.
''தெய்வம் ஒன்று என்று இரு தெய்வம் உண்டு என்று இரு" என்று சுவாமிகள் உலகுக்கு உபதேசிக்கிறார்.
சிவன், திருமால், முருகன், கணபதி - இப்படி ? நாமங்கள் பல ; உருவங்கள் பல; தெய்வம் ஒன்றுதான்.
அகரமென அறிவாகி உலகமெங்கும்
அமாந்தகர உகர மகரங்கள் தம்மால் பகருமொரு முதலாகி வேறுமாகிப்
பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு புகரில் பொருள் நான்கினையும் இடர்தீர்ந் தெய்தப்
போற்றுநருக் கறக்கருணை புரிந்தல்லார்க்கு நிகரில்மறக் கருணை புரிந் தாண்டு கொள்ளும்
நிருமலனைக் கணபதியை நினைந்து வாழ்வம்
கச்சியப்பர்
என்று
விநாயகபுராணத்தில் கூறுகின்றனர்.
பலப்பல
எனவே இறைவன் ஒருவன்தான், பேதங்களைத் தாங்கி நிற்கின்றான்.
நடராஜர் உருவச்சிறப்பு
இறைவன் எங்கும் நிறைந்தவன். எல்லாம் அறிகின்றவன் கருணை நிறைந்தவன். இன்பமயமானவன். எல்லா ஆற்றல்களையும் உடையவன். ஆன்மாக்களின் பொருட்டு பல்வேறு திருமேனிகளை எடுத்துக் கொள்கிறான். அவற்றுன் இடையறாது ஆனந்தத் தாண்டவம் புரியும் நிலை ஒன்று. அது எல்லா மூர்த்திகளிலும் சிறந்தது. அந்த ஆனந்தக் கூத்து ஆன்மாக்களின் பொருட்டு ஓயாது சிவபெருமானால் நிகழ்த்தப்படுகிறது. அவன் . ஆடவில்லையானால் உலகத்தில் ஒன்றுமே ஆடாது. அந்தத் திருக்கூத்துக்கு முதலுமில்லை, முடிவுமில்லை. ஏனைய தெருக்கூத்துக்களைப் போன்றதன்று அந்தத் திருக்கூத்து. அற்புதத் தனிக்கூத்து அது. சேக்கிழார் சுவாமிகள்
'ஆதியு முடிவுமில்லா அற்புதத் தனிக் கூத்தாடும் நாதனார் கழல்கள் வாழ்த்தி வழிபடும் நலத்தின் மிக்கார்'
கூறி அருளினார்.
(இந்து ஒளி தி

( உருவ வழிபாட்டினால் புனிதப்படுவோம்
சுவாமி விவேகானந்தர்
* நாம் ஏதாவது ஒரு பிம்பத்தை மனத்தில் கொள்ளாமல் பிரார்த்தனை செய்வது என்பது நாம் மூச்சு விடாமல் உயிரோடு இருக்க முயல்வதைவிட சிரமமான காரியம். மனத்தில் பதிந்துள்ள ஓர் உருவமே நாம் மனதார அதைப் பற்றிச் சிந்திப்பதற்கு உதவுகிறது என்பது இயற்கையான ஒன்று. அதனாலேயே இந்துக்கள் வழிபடுவதற்கு ஒரு பிம்பத்தை மனத்தில் கொள்கிறார்கள். அது அவன் மனத்தை ஒருநிலைப்படுத்தி அவன் வணங்கும் தெய்வத்தின் மீது தன் பிரார்த்தனையை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதற்கு உதவுகிறது.
~~~~~~~~~~~~~~~ (எங்கும் நிறைந்து எல்லாமாய் ஆன இறைவன்)
சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியார் * விதவிதமாய் மூர்த்திகள் இருப்பதாலேயே உண்மையில் ஆண்டவன் எந்த ஒரு மூர்த்தத்துடனும் முடிந்து போகாத அருவப் பொருள் என்பதும், அவனுக்கு இலட்சணம் வகுத்துப் புரிந்துகொள்ள முடியாது என்பதும் நமக்கு இயல்பாக மனத்தில் பதிந்துவிடுகிறது. ஒருவனையே பல மூர்த்திகளாகக் கொள்வதால் இவை ஒவ்வொன்றிலுமுள்ள அவன் எங்கும் நிறைந்து எல்லாமாய் ஆனவன் என்பதும் ஏகமூர்த்தி உபாசகர்களைவிட அழுத்தமாய் நமக்குப் புரிகிறது. ஒன்றுக்கொன்று எத்தனையோ மாறுபட்ட தன்மைகள் படைத்த இந்த எல்லா மூர்த்தியாயும் ஒரே ஆண்டவன் இருக்கிறானென்று காண்பதாலேயே அவன் எல்லா குணம் குறிகளுக்கும் அப்பாற்பட்டவன் என்பதும் நம் மனத்துக்கு எளிதாகக் கைவந்து விடுகிறது.
நமக்குத் தெரியாத ஒன்றாக அனைத்தையும் மிஞ்சி நிற்பவன் அவன். "மாறுபட்டால் அறியும் முறை" (Method of difference) என்று கணித சாஸ்திரத்தில் ஒன்று உண்டு. தெரிந்த புள்ளி விவரங்களைக்கொண்டு தெரியாததை அறியும் முறை தெரிந்த விவரங்களில் பொதுவாயிருப்பதைக் கொண்டும் அவை ஒன்றுக்கொன்று எப்படி வித்தியாசப்படுகின்றன என்பதைக் கழித்துப் பார்த்தும், மிஞ்சுவதைக் கொண்டே தெரியாததையும் இந்த வழியால் அறிவார்கள். இப்படியே நமக்குப் புரியுமாறு அநேக மூர்த்திகளையும் மார்க்கங்களையும் கொடுத்து இவற்றில் 'மாறுபாட்டால் அறியும் முறை' யைப் பிரயோகித்து, எஞ்சி நிற்கும் புரியாத அருவ ஈசுவர தத்துவத்தை நாம் கிரகிக்க இந்து மதம் வழிகாட்டுகிறது. நம்மிடமே பல மார்க்கங்கள் இருப்பதால், இந்தக் கணக்கிலே அறிய முடிகிறது.
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை

Page 34
தவத்திரு சிவயோக சுவாமிகளின்
பாமர மக்கள்
எங்
சிவதொண்டன் தில்லையம்பா
50வது குருபூசை
மழவளநாட்டை சார்ந்த யாழ் மாவட்டத்தில் ஓர் சிற்றூர் மாவிட்டபுரம். சரித்திரப் புகழ் பெற்றதும், முருகப் பெருமான் அருள் ஒளி வீசும் இந்த மாவிட்டபுரம் சுவாமிகளின் பிறப்பிடம். இவர் அம்பலவாணர் - சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் புதல்வர்.
சுவாமிகள் இளமையில் தம்மை வெறுத்தார். உறவுத் தொடர்பற்றார். பிரமச்சாரியத்தை மேற்கொண்டார். முருக வழிபாட்டிலிறங்கினார். நல்லைக் கந்தனை நாடினார். யோக நாதனின் வரவைக் காத்திருந்தார் செல்லப்பா சுவாமிகள்.
இவரை விசர் செல்லப்பா எனவும் மக்கள் அழைப்பது வழக்கம். ஏனெனில் நல்லைக் கந்தன் மீதுகொண்ட பித்து. இதே பித்தரைச் சந்தித்தார் யோகநாதன். இவர் அருள் பெற்றார், சிஷ்யரானார். சித்தருமானார் யோகசுவாமிகள்.
கதிர்காம யாத்திரை
முருக பக்தரான யோகசுவாமிகள் கதிர்காம யாத்திரையை முடித்துக்கொண்டு வழி நடந்து அம்பாந்தோட்டை, மாத்தறை, காலிமார்க்கமாக கொழும்பு வந்து சேர்ந்தார். கொச்சிக்கடையில் ஓரிடத்தில் தங்கி இருந்து பிச்சையெடுத்துண்டு வந்தார். தெருக்கரையில் கரிவேலை செய்த கூலியாட்களுடன் படுத்துறங்கியவர். கதிர்காமத்தில் முன்கண்டது போல் பெரிய ஆனைக்குட்டிச்சாமியை இங்கு சந்தித்தார். அவர் ஓர் ஐந்து சதத்தைக் கொடுத்து இது தும்பிக்கை அது நம்பிக்கை என்று வாழ்த்தி அனுப்பினார். பிச்சைக்காரன் போல சேர். பொன்னம்பலம் அருணாசலத்திடம் சென்றார். அவர் ஓர் இருபத்தைந்து சதத்தை மாற்றிவித்து சுவாமிக்கு பத்துச் சதம் கொடுத்தார்.
பின் கொழும்பிலிருந்து கண்டி வழியாக மாத்தளைக்குச் சென்றார். துணியும் கந்தையாக அலங்கோல ரூபமாகக்காளை மாடுபோல் நடந்தார் என்றே கூறுகிறார். எம்பிரான் தோழன் அருள் புரிவானாயினன். சிவதொண்டன் நிலையத்தை நிறுவிய சங்கரத்தை வாசியான அமரர் தில்லையம்பலம் அவர்களின் மாமனார் சரவணமுத்து அங்கு வாழ்ந்து வந்தார். அவருடைய கனவில் எம்பிரான் தோன்றி என்னுடைய பக்தன் நடந்து மெலிந்து கதிர்காமத்திலிருந்து வருகிறான். அவனை ஆதரித்து புது உடையும் பணமும் கொடுத்து புகையிரத வண்டி மூலம் அனுப்பிவிடு என்று விண்ணப்பித்தார். விடிந்தெழுந்து சரவணமுத்து வழிபார்த்து நின்றார். சுவாமிகளைக் கண்டதும் இவர்தான் என்று எண்ணி அவரை அழைத்துச் சென்று ஸ்நானஞ் செய்வித்து உணவு கொடுத்து ஆதரித்தார். ஓர்
இந்து ஒளி

யோகர் சுவாமிகள் பக்கம் நக்கும் ஞானஒளி பரப்பிய
கள் குருநாதன்
லம் சிவயோகபதி - கனடா
இரவும் ஓர் பகலும் அங்கு தூங்கினார். இறைவனுடைய பேரருளைக் கண்டார். பொதிசோறு கொண்டு அன்பன் சரவணமுத்துவாக உருத்தாங்கி, அருளிய இறைவனை நினைந்து பாடுகிறார் சுவாமிகள்.
அப்பனும் அம்மையும் நீயே, அரிய சகோதரனும் நீயே ஒப்பிலா மனைவியும் நீயே, ஓதரும் மைந்தரும் நீயே செப்பில் அரசரும் நீயே, தேவாத தேவரும் நீயே
இப்புவி யெல்லாம் நீயே , என்னை யாண்டதும் நீயே!
நான்கு வருடமளவில் துறவியாக , ஊர் ஊராய் காடு வழியே அலைந்து திரிந்த சுவாமிகள் மாத்தளை வந்து சேர்ந்த மறுநாள் யாழ்ப்பாணம் திரும்ப வேண்டும் என்றார். சரவணமுத்து சொற்ப பணம் கொடுத்தார். அதில் புகையிரதவண்டிச் சீட்டிற்கு வேண்டிய பணத்தை மாத்திரம் பெற்றுக்கொண்டு மிகுதியைத் திருப்பிக் கொடுத்தார். புகைவண்டியிலேறி மறுநாள் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். சுவாமிகளின் முதற் கதிர்காம யாத்திரை முற்றுப்பெற்றது.
இரத்தினபுரி விஜயம் -
பின்பு பலமுறை சுவாமிகள் இரத்தினபுரிக்குச் சென்று அமரர் தில்லையம்பலம் வீட்டில் தங்கியிருந்து அங்குமிங்கும் எங்கும் உள்ளானே அரிய இரத்தினபுரியானே என்று பாடிப் படித்தும் சுவாமிகளுடன் அமரர் தில்லையம்பலம் சகிதம் சில அடியார்களும் சேர்ந்து பல தடவைகள் கதிர்காம யாத்திரை சென்ற மறக்க முடியாத அனுபவங்களை எனது அருமைத் தந்தையார் அடிக்கடி நினைவு கூர்ந்து ஆனந்தமடைவதுண்டு. சுவாமிகளின் விருப்பப்படி 1930ஆம் ஆண்டில் இரத்தின்புரியில் சிவன்கோயிலும் உருவாகியது. சுவாமிகளும் கும்பாபிஷே கத்தில் கலந்து கொண்டார்.
யாழ்நகரமக்களுக்கும் தம்ஞானஒளிபரப்பிப்பக்தர்களைப் பரமன் பதம் ஈர்த்து ஈடேற்ற பரம் ஆசான் நம் யோகசுவாமிகள் இறைபக்தி எனும் ஒளி குன்றி வருங்கால், தம் தியானம் திருமுறை ஓதுதல், அறிவுரை இறைமூலம் அன்பர்களுக்கு ஆறுதலாய் ஆன்மீக ஆசானாய் சீவன் முத்தராய்த் தூய நிலை எய்தி என்றும் இறைபக்தியுடன் இரண்டறக் கலந்து திகழ்ந்தார். சுவாமிகள் அருளிய நற்சிந்தனைகள் பல அன்பர்களுக்கு இன்றும் ஆன்ம ஈடேற்றத்திற்கு நல்வழி காட்டுகிறது.
சுவாமிகள் ஒரு சித்தர். சித்தராதல் மிக மிக அரிது. சித்தர் எனும் சொல்லே ஆன்மீக வாழ்விற்கு சித்தி பெறுதலாகும். எம் உடம்புடன் வாழும்போதே பேரின்ப வீட்டு நெறியை அடைபவர்
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை)

Page 35
சித்தர். இதனால் ஏற்பட்ட சொல்வடிவே சித்தன் போக்குச் சிவன் போக்கு. இந்நிலை அடைந்தவர்தாம் நம் யோகசுவாமிகள். சித்தருட் சித்தராய் நின்று சிவபிரானின் திருவருட் செயலாகப் பலர் பிணிகளையும் துயர்களையும் ஒழித்து அருள்மழை பொழிந்ந சித்தருள் ஒருவரே நம் சிவயோக சுவாமிகள்.
துட்டரைக் கண்டால் தூரத்தில் ஒற்றியும், பக்தரைக் கண்டால் பக்கத்தில் அணைத்தும் அவரவர் பாவ வினையைப் போக்கவும் நல்வழிப்படுத்தவுமாக அணைத்தும் கடிந்தும் ஆசி கூறி ஆறுதல் மொழி தந்திடுவார்.
சிவதொண்டன் நிலையம் - யாழ்ப்பாணம்
சுவாமிகள் நடமாடும் தெய்வமாக இருந்த காலத்தில் அவரின் அருட்கண் பார்வையில் 1953ஆம் ஆண்டு யாழ் வண்ணார்பண்ணையில் சிவதொண்டன் நிலையம் உருவாகியது. சுவாமிகளின் வழிகாட்டலில் மிகக் கட்டுப்பாடுகளுடனும், ஒழுங்கு முறைகளுடனும் வளர்ந்த ஒரு ஆன்மீக விருட்சம் தான் யாழ். சிவதொண்டன் நிலையம். சிவதொண்டன் நிலையத்தின் ஆன்மீக முக்கியத்துவத்தை மனப்பூர்வமாக நன்கு உணர்ந்து சில அன்பர்கள் நிர்வகிக்கும்படி சுவாமிகள் ஆரம்பகாலத்தில் நியமனம் செய்தார். அந்த மரபு இன்றும் யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலையத்தில் தொடருகிறது.
யாழ் சிவதொண்டன் நிலையத்திற்கு பல தடவைகள் சென்று அங்கேயே தங்கியிருந்து அதன் ஆன்மீக மகிமையை உணர்ந்து போற்றிப் புகழ்ந்து சில பெரியார்கள் சுவாமிகளுடன் நன்கு பழகினர். தமிழ் நாட்டைச் சேர்ந்த கல்வி மேதைகளாகிய அமரர்கள் தமிழ்ப் பேராசிரியர்களான தொ. ப. மீனாட்சி சுந்தரனார் (முன்னாள் உபவேந்தர், மதுரைப் பல்கலைக் கழகம்), கலாநிதி டி. எம். பி. மகாதேவன் (முன்னாள், இயக்குனர், தமிழ் ஆராய்ச்சித்துறை சென்னைப் பல்கலைக் கழகம்), அறிஞர் அ.ச.ஞானசம்பந்தன் மற்றும் இராமகிருஷ்ண மிஷனைச் சேர்ந்த பல சுவாமிகளுமாவார். கனடாவுக்கு வருகை தந்து சிவயோகசுவாமிகள் குருபூசையில் கலந்து கொண்டு அருளுரை ஆற்றிய ஹவாய் சற்குரு போதிநாத சுவாமிகள், யாழ் சிவதொண்டன் நிலையத்தின் தியான மண்டபத்தில் தனக்குக் கிடைத்த பூரண அமைதி பற்றிய அனுபவத்தை உருக்கமாகக் கூறினார்.
சிவயோக சுவாமிகளின் ஆசியுடன் கிழக்கிலுள்ள, செங்கலடியில் 1966 ஆம் ஆண்டில் சிவதொண்டன் நிலையம் உருவாகியது. அங்கும் பல சிவ தொண்டுகள் இன்றும் நடைபெற்று வருகின்றன.
குருபரன் திருவடிக்கலப்பு
யாழ்ப்பாணத்தின் சோதியாக விளங்கிய யோகர் சுவாமிகள் 23-03-1964 திங்கட்கிழமை இரவு சிவபதமடைந்தார். இச் செய்தி வானொலி மூலம் ஈழநாடு முழுவதும் தெரிவிக்கப்பட்டவுடன் ஈழநாட்டின் பல பாகங்களிலுமுள்ள அடியார்கள் ஏராளமானவர்கள் வந்து சேர்ந்தனர். 24-03-64 செவ்வாய்க்கிழமை முழுமையும்
(இந்து ஒளி

அடியார்களும் வித்தியாசாலை மாணவ மாணவிகளும் பிறரும் கொழும்புத்துறை ஆச்சிரமத்தில் வைக்கப்பட்டிருந்த சுவாமிகளின் பூதவுடலைத் தரிசித்து அஞ்சலி செலுத்தினார்கள். பக்தர்கள் கூட்டம் கூட்டமாக திருமுறைகள் மற்றும் தமிழ்த் தோத்திரங்கள், நற்சிந்தனைப் பாடல்களை மனம் கசிந்துருக இசையுடன் ஓதினார்கள். 25-03-64 புதன்கிழமை அதிகாலை 5:00 மணியளவில் சுவாமிகளுடைய பூதவுடலுக்கு பக்தி சிரத்தையுடன் அபிஷேகம் செய்யப்பட்டது. அவருடைய பூதவுடல் தூய வெண்துகிலினாலும், பூமாலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட பின் பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்ட சதுர வடிவமான தொட்டியில் வைத்துக் கொழும்புத்துறை வீதி வழியாகத் துண்டி சுடலைக்கு அடியார்கள் சுமந்து சென்றார்கள். சுவாமிகளுடைய ஆச்சிரமத்திலிருந்து சுடலை வரையுள்ள பாதை இருபக்கமும் மகரதோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த பூதவுடல் சென்ற வழியே வசிக்கும் மக்கள் வீட்டு வாயில்கள் தோறும் குத்துவிளக்குகள், நிறைகுடம் வைத்துப் பூமாரி பொழிந்து சுவாமிகளுக்குத் தங்கள் அன்பையும், வணக்கத்தையும் செலுத்தினார்கள். பூதவுடல் ஊர்வலம் வந்த பொழுது பஜனைக் கோஷ்டியினர் பக்திப்பாடல்கள் ஓதினார்கள்.
முற்பகல் 9.00 மணியளவில் பூதவுடல் மயானத்தை அடைந்தது. பல்லாயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர்களுமாகத் தகனக்கிரியையைப் பார்ப்பதற்காகக் கூடினார்கள். தொண்டர்கள் அவர்களை பெண்கள் வேறாகவும் ஆண்கள் வேறாகவும் உட்காரச் செய்தார்கள். எங்கும் அமைதி நிலவியது.
பூதவுடல் பூந்தொட்டியிலிருந்த விறகுகளினாலும், கால் அந்தருக்கு மேற்பட்ட சந்தனக் கட்டைகளாலும் அமைக்கப்பட்ட சிதையின்மீது வைக்கப்பட்டது. யாவரும் யோகசுவாமிகளின் அருளைத் தியானம் செய்து கொண்டிருந்தார்கள். கொக்குவில் திரு குமாரசுவாமிப் புலவர் திருவாசகப்பாக்கள் சிலவற்றையும், ஒரு புராணத்தையும் உருக்கமாக ஓதிய பின்பு, ஈகை நெருப்பு மூட்டப்பட்டது. யாவரும் அரோகராவென்று கோஷமிட்டுச் சோதியை வழிபட்டனர்.
இவ் வைபவத்தைப் பார்வையிட்டு சுவாமிகளுக்குத் தங்கள் அஞ்சலியைச் செலுத்துவதற்காகச் சிங்கள் சகோதரர்களும், இஸ்லாம் மதத்தவர்களும், கிறிஸ்தவர்களும் சமூகமளித்திருந்தார்கள்.
இங்ஙனம் எல்லோரும் சுவாமிகள் சோதியுட் கலந்த வைபவத்தை தரிசித்தார்கள். இந் நிகழ்ச்சிகளை எல்லாம் கண்ணுற்ற பொழுது அந்த இடமே பூலோக கைலாயமாகத்
தோற்றமளித்தது...
"நான் ஐம்பது வருடத்துக்கு மேலாகச் செய்ய வேண்டியவற்றை எல்லாம் செய்து விட்டேன். போதிக்க வேண்டியவற்றைப் போதித்து விட்டேன். ஒரு குறையும் விடவில்லை” என உருக்கமாகச் சுவாமிகள் கூறியுள்ளார்கள்.
ஆகவே சுவாமிகள் அரைநூற்றாண்டுக்கு மேற்பட்ட காலமாக நமக்குக்காட்டிய வழியை பின்பற்றி உய்தியடைவோமாக!
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை

Page 36
பொலநறுவை மண்ண
சிவதொண்டர்
இளஞ்சைவப்புலவர், சித்தாந்த
சமன்பிட்டி -
''இன்னறுங் கனிச் சோலைகள் செய்தல் இனிய நீர்த்தண் சுனைகளியற்றல் அன்ன சத்திரமாயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் இன்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கியொளிர நிறுத்தல் அன்ன யாவினும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”
என்ற பாரதியின் பாவரிகளை மகுட வாக்கியமாகக் கொண்டு 2010 ஆம் வருடம் தை மாதம் 14 ஆம் திகதி அறநெறிச் செம்மல்களை அகிலத்திற்கு தருவிக்க ஆதிகால வரலாற்றாய்வில் சிவபூமி எனும் பெயர் பொறித்த பொக்கிஷமாம் பொலநறுவை மண்ணில் சமன்பிட்டி எனும் இறைகடாட்சம் கூடிய திருவூரில் உருவானதே அன்னை ஸ்ரீ சாரதாதேவி அறநெறிப்பாடசாலையாகும்.
அறம் என்றால் என்ன? சமயத்தின் உட்பொருள் என்றால் என்ன? வழிபாட்டு முறைகள் என்றால் என்ன? என அறியாத எதுவும் தெரியாத நிலையில் தொடங்கிய இவ் அறநெறிக்கூடம் இன்று ஈழம் அறிந்த பல பண்புடைச் சிறார்களை உருவாக்கியதில் மட்டறிந்த மகிழ்நிலையில் உளதெனலாம். பாடசாலையின் வரலாற்றை ஒருபுறம் வைத்து இக்கூடத்திற்குள்ளாக வந்து சிவத்தொண்டு எனும் சீரிய பணிகளை செய்யும் சிவதொண்டர் அணிபற்றி கூற விளைகிறேன். அகில இலங்கை இந்து மாமன்றத்தில் பதிவிலே உள்ள எமது சிறார்களது சிவத்தொண்டு பற்றி வியக்காதவர்கள் இல்லை எனலாம். சுமார் இருபது சிறார்கள் தமது பாடசாலையின் வழிகாட்டல்களை மையப்படுத்தி இங்கு இரு குழுவினராக சிவதொண்டு புரிகின்றனர். இந்து மாமன்றத்தின் யாழ் பணிமனையில் மட்டுமல்லாது மட்டக்களப்பு இந்து கலாசார நிலையத்திலும் மூன்று தடவைகள் விசேட பயிற்சி பெற்று சிறந்ததொரு கட்டமைப்பின் கீழ் பணிகளை செய்கின்றனர்.
குறித்த செம்மையில் இவர்களுக்கு தூய்மையைக் குறிக்க வெண்மை நிறச் சீருடை தயார் செய்யப்பட்டு திறம்படச் செய்யும் இச்சிறார்கள் மூலம் ஊரிலே 2010 ஆம் வருடம் இருந்த நிலையினை விட இன்று ஆத்மீகம், ஆலயம் பற்றி பலர் விழிப்படைந்திருப்பதுதான் எமது அணியினரது சேவைக்கு கிடைத்த முதல் மரியாதை.
அரசையடி எனும் சிறு ஆலயத்தை தமது கட்டுக்கோப்பில் வைத்து பராமரிப்பதும் ஒவ்வொரு வாரமும் கூட்டுப் பிரார்த்தனை செய்வதும், ஆலயம் தோறும் சிரமதானம் செய்வதும் வாரம் இரு தடவை கணினிப் பயிற்சியில் ஈடுபடுவதும், தரம் - 03அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு யோகாசனம், சூரிய நமஸ்காரம் கற்பிப்பதும், பெரியார்கள், நாயன்மார்கள் மற்றும் விரத விழாக்களை முறைப்படி கொண்டாடுவதும், நாட்டார் பாடல்களை தேடி நலமோடு அதைத் தொகுத்து முறைப்படி பாடி மனனம் செய்வதும், சிவராத்திரி தின கொடி விற்பனையில் ஈடுபடுவதும், தமிழர்
(இந்து ஒளி

ல் சிவப்பணிபுரியும் " அணியினர்
ரத்தினம் க. ரோ. தினேஷ்குமார், பொலநறுவை.
பண்பாடுகளைப் பேணும் நாரினால் மாலை கட்டுதல், மாக்கோலம் போடுதல் எனவும் இவர்களது பணியினை விரித்துக் கொண்டே போகலாம்.
தொழில்நுட்பத்தில் தொலைந்து போகும் இவ்வுலக மானிடர்கள் மத்தியில் பெரும்பான்மையினர் செறிந்து வாழும் மாவட்டத்திலே இவர்களது பணி மிக அவசியமான தொன்றே. அது மறுப்பதற்கில்லை.
"அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கிவிட்டாய் இன்பநிலைதானே வந்தெய்தும் பராபரமே'
என தாயுமானவர் விரும்பியதை எமது சிறார்கள் விநயமுடன் ஆற்றி வருகின்றார்கள்.
ஒவ்வொரு பெற்றோரும் தமது குழந்தைகளை மிக மகிழ்வோடு எமது அன்னையின் அறப்பள்ளிக்கு அனுப்பி வைப்பதில் அவர்களது பேரவா, மனமாற்றம் இவையாவும் எமது பாடசாலைக்கும், சிவதொண்டர் அணிக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியே என்றால் மறுப்பதற்கில்லை.
எமது பணிக்கு வலுவூட்டுவோர் வரிசையில் அகில இலங்கை இந்துமாமன்றமும் கைகொடுப்பது பெறும்பேறு இரண்டு கணினிகள், 700 அப்பியாசக் கொப்பிகள், மாதாந்த இந்து ஒளி வெளியீடு என எமது சிறார்களுக்கு அவர்களது உதவிக்கரங்கள் கிடைப்பது அவர்களது கற்றலை வளப்படுத்தும் பெரும் பாலமாக அமைகின்றது.
இதற்கும் மேலாக செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் ஐயா நேரடியாக எமது சிறார்களை எமது ஊரில் வந்து சந்தித்து அவர்களது பணிக்கு இந்து மாமன்றத்தின் சார்பாக உதவ முன் வந்திருப்பது நாங்களல்ல எங்கள் முன்னோர், செய்த தவப் பயன் என்றே கூறலாம். விஞ்ஞான உலகோடு போராடி மெய்ஞ்ஞானத்தை மெய்மறந்து கூட சிலர் நினையா இவ்வுலகில் இவர்களது பணியைச் செப்பும்போது உள்ளம் நிறைகிறது; பூரணத்துவம் பெறுகிறது.
இத்தனைக்கும் இவர்களது கல்வி நிலையும் மிகச் சிறந்த முறையில் இடம்பெறுகின்றது. இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் வருடந்தோறும் நடாத்துகின்ற இந்து சமய பொது அறிவுப்போட்டிப் பரீட்சையில் எமது பாடசாலையில் இருந்து மட்டும் சுமார் 11 மாணவர்கள் இவ்வருடம் பரிசு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் அகில இலங்கை இந்து மாமன்றம், கொழும்பு தமிழ்ச் சங்கம், கொழும்பு இராமகிருஷ்ண மிஷன், லேக்ஹவுஸ் இந்து மன்றம், கொழும்பு பல்கலைக்கழகம் என சகல நிறுவனங்களும் நடாத்துகின்ற போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி வாகை சூடுவது கற்றல் மட்டும் அல்ல, இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் எமது மாணவர்களுக்குள்ள இடம் எடுத்துரைக்கப்படுகின்றது.
''பேரறிவாய் பெருஞ்சுடரொன்று அதன் வேரறியாமையை விளம்புகின்றேனே" என திருமூலர் கூறியதுபோல சிவதொண்டர் அணியினர் செய்யும் சிவப்பணிகளை எடுத்தியம்பியதில் ஓரளவு திருப்தி யடைகிறோம்.
''அன்பே சிவம் - அதுவே நலம்"
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை)

Page 37
மதி7 இந்து ஒளி - நவர
தீபம் 18 சைவவித்தகர் யோக சேனைக்குடியிரு
84 MSL4
அடி கம் #466.3:
இந்து சமுத்திரத்தின் மத்தியில் சிவ பூமியாய் விளங்கும் இலங்கைத் திருநாட்டில் இந்து நிறுவனங்களுக்கு தலைமை தாங்கி வழிப்படுத்தி அறச்சேவையாற்றும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஆன்மீக இதழாக வெளிவரும் இந்து ஒளி ஜய வருடம் புரட்டாதித்திங்கள் 09 ஆம் நாள் (25. 09. 2014) (ஆவணி - புரட்டாதி) நவராத்திரி சிறப்பிதழாக வெளிவந்திருக்கின்றது.
இச்சிறப்பிதழின் முகப்பு அட்டையானது பார் போற்றும் முப்பெருந்தேவியர் கொலு வீற்றிருக்கும் படத்துடன் தெய்வீகமாக காட்சியளிக்கிறது. உட்புற அட்டையில் மாமன்றத்தின் வன்னிப்பிரதேச பணிமனைக் காக செஞ்சொற் செல்வரால் அடிக்கல் நாட்டப்படும் படமும் கீரிமலையில் நீத்தார் நினைவு நிழற்படங்களும் காணப் படுகின்றன.
முகவுரையை நோக்குமிடத்து பாரதமாதா எங்களை பரிவுடன் பார்த்துக் கொள்ள வேண்டும் எனும் தலைப்பினூ டாக எம்மக்களுக்கு இந்திய அரசு செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், எங்களின் உரிமைகளை பாதுகாக்கவும் குறிப்பாக பாரத நாட்டிற்கு ஆன்மீக யாத்திரை செய்பவர்கள் கடல் மார்க்கமாக பயணிக்க, இந்திய இலங்கை அரசுகள் உதவ வேண்டும் எனவும் ஆன்மிக நிலையில் நின்று அமைதி வேண்டுபவர்களுக்கு விமோசனம் வேண்டி பிரார்த்திப்பதாகவும் அமையப்பெற்றுள்ளது.
அடுத்து ஆன்மீக சுடரின் அருள்மடல் ஊடாக "குளம் முதலான நீர்நிலைகளைப் பேணும் திருப்பணிகளைச் செய்வோம்” எனும் தலைப்பில் ஆன்மீகச் சுடர் தொண்டு நாதன் சுவாமிகள் வடகிழக்கு பகுதிகளில் நிலவும் வறட்சி நிலையையும், மழைநீரின் சிறப்பையும், எதிர்கால சந்ததியின் நன்மை கருதி நீர்நிலைகளை பாதுகாக்க நாம் அனைவரும் முன்வர வேண்டும் என கூறியிருப்பது கவனத்தில் கொள்ளவேண்டும்.
நவராத்திரியின் சிறப்பு எனும் தலைப்பின் வாயிலாக நவராத்திரியின் காலம், சரஸ்வதி பூஜையின் தத்துவம் எனும் உப தலைப்புகளில் நவராத்திரி மகிமை பற்றி மகாசரஸ்வதி திருவாவடுதுறையாதீன வெளியீடு பகுதியிலிருந்து பிரசுரமாகியிருக்கிறது.
அடுத்து அன்னையின் அருள் பிரவாகிக்கும் நவராத்திரி பண்டிகை எனும் தலைப்பில் யாழ் பல்கலைக்
(இந்து ஒளி

ப்பீடு ராத்திரி சிறப்பிதழ்
சுடர் 07)
உராஜா கஜேந்திரா,
ப்பு, கல்முனை.
*ப #}013 04
தக்க ஜே -
அSt - gtnt -#StarW - 2014
கழக இந்து நாகரிகத்துறை முதுநிலை இந்து ஒளி
விரிவுரையாளர் திருமதி நாச்சியார் செல்வ நாயகம் அவர்களின் கட்டுரை காணப்படுகிறது. நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படும் அவசியத்தையும் பராசக்தி முப்பெரும் தேவராக அருளாட்சிபுரிந்து அருள்கின்ற வடிவமதை தத்துவார்த்த ரீதியாகவும், கொலுவழிபாட்டின் முக்கியத்துவத்தினையும் பக்தி மணம்மணக்க கூறுவதாக அக்கட்டுரை காணப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து துக்க நிவாரண அஷ்டகம், நவராத்திரி நாளில் வழிபடும் முறைகளும் சக்தி வழிபாட்டுச் சிறப்பும் எனும் தலைப்பில் சக்திவழிபாட்டின் மகிமை பற்றி
கூறப்பட்டுள்ளது. மேலும் அழகு சேர்க்கும் முகமாக ஆத்மஜோதி முத்தையா அவர்களின் "கன்னி மாதத்தில் நவராத்திரி" எனும் தலைப்பில் கலையழகை வெளிப்படுத்தும் பண்டிகையே கொலு வைக்கும் நவராத்திரி பண்டிகை போன்ற பல விடயங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 'பழந்தமிழ் நூல்களில் அம்பிகை' எனும் தலைப்பினூடாக அம்பிகையினை பண்டைய மக்கள் போற்றிய முறையினையும் அம்பிகையின் சிறப்பையும் பரணி, தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களை ஆதாரங்காட்டி இக்கட்டுரை காணப்படுகின்றது.
தாய்மை வழிபாட்டின் தொன்மை பற்றி சிவத்தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரையில் வெளிவந்த பேராசிரியர் சி. க. சிற்றம்பலம் அவர்களது கருத்தானது ஈழநாட்டின் தாய் வழிபாட்டின் பழமையையும் பிற நாடுகளில் காணப்பட்ட கல்வெட்டுக்கள் கோயில்கள் போன்றவற்றினைக் கொண்டு தாய் வழிபாட்டு தொன்மை பற்றி குறிப்பிடப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து சிறுதலைப்பு வடிவில் துர்க்கா, இலக்குமி, சரஸ்வதி போன்ற தெய்வங்களின் மகிமை கூறுவதாக காணப்படுகிறது. ஜஸ்வரிய மகாலட்சுமி எனும் தலைப்பில் மகாலட்சுமி வழிபாட்டு முறைகளையும், மகாலட்சுமி தத்துவத்திைைனயும் கூறுவதாய் காணப்படுகிறது. அடுத்த பக்கத்தில் பெயர்க் காரணம் எனும் தலைப்பில் சரஸ்வதியின் கலை வடிவம், சரஸ்வதி தேவியின் உருவ அமைப்பு மற்றும் சகலகலாவல்லிமாலையின் தகவல்கள் பயனுடையதாக காணப்படுகிறது. அடுத்த பக்கத்தில் மகா சரஸ்வதி அருள் பெற்றோர் எனும் தலைப்பில் கலைமகளின் கருணையைப் பெற்ற கம்பர் பற்றியும் இரட்டை புலவர்கள், காளமேகப்புலவர், அம்பிகாவதி, ஒட்டக்கூத்தர் வழிபட்ட ஆற்றல்களை
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை

Page 38
'சொற்கிழத்தி எனும் சிறு தலைப்புகளில் வாணியருள் பெற்ற தெய்வ புலவர்கள் அம்பிகை அருள் பெற்ற மகிமையினை கூறுவதாயும் உள்ளது.
மேலும் இவ் இதழுக்கு அழகு சேர்க்கும் விதமாக கேதார கௌரி விரத சிறப்பு பற்றி திருமதி கெளரி விமலேந்திரன் அவர்களின் கட்டுரையில் இறைவன் அம்பிகைக்கு அருள்புரிந்த வரலாற்றினையும், இவ்விரதம் கடைப்பிடிக்க வேண்டிய காலம், விரத நியமமுறை, அர்த்தநாரீஸ்வரர் தத்துவம் போன்ற விடயங்களை மிக துல்லியமாகவும் பக்தி நயமாகவும் குறிப்பிட்டு காட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து நாவலர் பக்கத்தில் "சைவநெறி காத்த நாவலர்” எனும் தலைப்பின் ஊடாக இலக்கிய கலாநிதிக.சிவராமலிங்கம்பிள்ளை அவர்கள் நாவலர் பெருமான் சைவத்துடன் இணைந்த தமிழைக் காப்பதற்காக பற்பல நூல்களை உருவாக்கிய தொண்டினை எடுத்துக்காட்டியிருந்தார்.
மேலும் சிவயோக சுவாமிகள் நல்லூர் முருகன் மீது பாடிய பாமாலை பிரசுரமாகி அமைந்துள்ளதுடன், சுவாமி விபுலானந்தர் பக்கத்தில் "விபுலானந்த அடிகளாரும் கங்கையில் எழுதியிட்ட ஓலையும்” எனும் தலைப்பில் மண்டூரைச் சேர்ந்த க.குமாரசாமி அவர்களின் கட்டுரை காணப்படுகிறது. விபுலானந்த அடிகளாரால் இயற்றப்பட்ட கங்கையில் எழுதிட்ட ஓலை எனும் பாடலில் தத்துவ உண்மைகளையும், மனிதப்பிறவியின் மாண்பு, கனவுகளின் தன்மை, நல்வினை தீவினை, நட்பு, கல்வியின் தன்மை போன்ற பல செய்திகளை பாடல் வரிகளோடும் அற்புதமாக கூறியிருப்பதனை காணலாம். அடுத்த பக்கத்தில் ந.வீரமணி ஐயரின் "கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்” எனும் பாடல் மனதில் பக்தியினை தூண்டுவதாயும் அமைந்துள்ளது.
இதனையடுத்து இந்து ஒளி சஞ்சிகையை மேலும் அலங்கரிக்கும் முகமாக அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான ஏனாதிநாத நாயனாரின் குருபூசை தினத்தை யொட்டிய சிறப்புக் கட்டுரையாக "திருநீற்று மேன்மையை உணர்த்திய உத்தமர்" எனும் தலைப்பில் வந்தாறுமூலையைச் சேர்ந்த சைவவித்தகர் வெற்றிவேல் சசிகரன் அவர்களின் கட்டுரை பிரசுரமாகியிருந்தது. அதன் உட்கிடையாக சிவபணியினை உயர்பணியாக நினைத்து ஈசனின் வடிமாக விளங்கும் திருநீற்றிற்காக தனது இன்னுயிரினையும் மாய்க்க துணிந்த ஏனாதிநாத நாயனார் இறைவன் அருள் பெற்று முக்தி எய்திய வரலாற்றினை கூறியிருப்பது சிறப்பாக அமையப் பெற்றுள்ளது.
இந்து ஒளியினை மேலும் அலங்கரிக்க “இசையும் இறையின்பமும்” எனும் தலைப்பில் கலாபூஷணம் பிள்ளை நாயகம் திருநாவுக்கரசு அவர்கள் இசையினால் இறைவனை அடையலாம், இசை மனிதனை வழிப்படுத்துகிறது, சங்கீதம் உயிரையும் காக்கும், போன்ற கருத்துகள் உண்மைச் சம்பவங்களின் ஊடாக அமையப் பெற்றிருக்கின்றது. மேலும் தலவிருட்சத்தின் தனித்துவம் எனும் தலைப்பில் முனைவர் ந. இரா. சென்னியப்பனார் அவர்களுடைய கட்டுரை காணப்படுகிறது. இதில் மரங்கள் தெய்வ வழிபாட்டுடன் காணப்பட்டிருந்த தொடர்பினையும், மரங்களை தெய்வமாக வழிபட்டதாகவும், பல ஊர்கள் மரங்களின் பெயரினால் அழைக்கப்படும் மரபினை கூறுவதாகவும் காணப்படுகின்றது. மேலும் திருமுருக கிருபானந்தவாரியாரின் இரண்டு உலகங்கள் தலைப்பில் வெளிவந்த கட்டுரையில் ஒளி உலகம் , இன்ப
(இந்து ஒளி

உலகம், இருள் உலகம் பற்றிய குறிப்புக்களும் காணப் பட்டிருந்தன. மனிதர்கள் பஞ்சமாபாதகங்களை விலக்கிய ஒளி உலகம் செல்ல வேண்டும் எனும் வகையில் இக் கட்டுரை அமைந்துள்ளது. இதற்கு அடுத்த படியாக அருட்சித்தர் பிரம்மஸ்ரீ கைலாச்சாமி வெளியிட்ட நமது வழிபாட்டின் தத்துவங்கள் எனும் நூலிலிருந்து "சித்தம் தெளிவோம்" எனும் தலைப்பில் இச் செய்தி காணப்படுகிறது. எம்முள் இருக்கும் இறைவனை எவ்வாறு அறியலாம், இறைவனுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு, பிறருக்கு இவ் உறுப்புகளால் இடையூறு செய்யாதிருப்பதே உயர்ந்த தொண்டு எனும் சீரிய சிந்தனைகளினை தாங்கியதாக காணப்படுகிறது.
அடுத்ததாக மாமன்றச் செய்திகள் பக்கத்தில் யாழ். அ. கனகசூரியரால் யாழ் நகரில் சுவாமி விபுலானந்தர் நினைவுதின் வைபவம் எனும் தலைப்பில் அகில இலங்கை இந்து மாமன்றமும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சுவாமி விபுலானந்தர் நினைவு தின வைபவம் பற்றியும் அங்கு உரையாற்றிய சான்றோர்களின் உரையினை சுருக்கமாகவும் நேர்த்தியாகவும் எழுத்து வடிவில் குறிப்பிட்டு பிரசுரமாகியிருந்தது.
மேலும் அகில இலங்கை இந்து மாமன்ற தலைவர் திரு. கந்தையா நீலகண்டன், பொதுச் செயலாளர் திரு. மு.கதிர்காமநாதன் ஆகியோர் இணைந்து அகில இலங்கை இந்து மாமன்றம் விடுத்துள்ள கண்டன அறிக்கை அமையப் பெற்றிருந்தது. அதில் 27.08.2014 அன்று பிரசுரமாகியிருந்த நாளிதழ்களில் வெளியான செய்தியில் “இந்துக்கள் மதம் மாற்றப்படுவதை தடுக்க பொதுபலசேனாவுடன் இணைந்து செயற்படுவோம்” எனும் செய்திக்கு கண்டனம் தெரிவிக்கும் முகமாகவும் இந்து மாமன்றத்தின் குறிக்கோள், சேவை போன்றவற்றினை தெளிவாக எடுத்துக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இறுதியாக மாமன்ற செய்திகள் பக்கத்தில் இந்து ஒளியின் (ஆடி அமாவாசை / சுவாமி விபுலானந்தர் நினைவு சிறப்பிதழ்) வெளியீட்டு வைபவம் பற்றிய செய்தியும், மாமன்றம் நடாத்திய நீத்தார் தின நிகழ்வு பற்றிய செய்தியும், பிரசுரமாகியிருந்தது. அதனையடுத்து யாழ் நகரில் சுவாமி விபுலானந்தர் நினைவு தினம் (27.07.2014) அன்று செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளின் வேளையில் அன்றைய தினம் வருகை தந்தவர்கள் மற்றும் சிறப்புரையாற்றுபவர்களின் படங்களுடன் இந்து மாமன்றத்தின் சிறப்பு நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இந்து ஒளியின் அட்டைப்படங்களை அலங்கரித்துள்ளன. மேற்கூறப்பட்ட அனைத்து அம்சங்களும் மிகவும் தெளிவாகவும் புதிய செய்திகளை அறியக்கூடியதாகவும் இந்துமதத்தில் தெரியாத பல அரிய தகவல்களை வெளிப்படுத்தக் கூடியதாகவும் கட்டுரை வடிவிலும், செய்திகளாகவும் அமைந்து காணப்படுகின்றது. மேலும் காலாண்டு இதழாக முன்பு வெளிந்த வந்த இந்து ஒளி சஞ்சிகையானது தற்போது இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளிவருவது மாணவர்கள், பெரியோர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச் சமய சஞ்சிகையானது மென்மேலும் பல புதிய விடயங்களை மேற்கொள்ள இவ் அறிவுசார் அறப்பணியினை ஆற்றுகின்ற இந்து மாமன்றத்திற்கும், இந்து ஒளி பதிப்புக் குழுவினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து இச் சஞ்சிகையானது என்றும் நிலைபெற்று வளம் பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரா ர்த்திக்கின்றேன்.
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை)

Page 39
TEMPLE WORS
R. SUBE Senior Deputy Registrar (Retir
SSSSS.
Every religion insists on worship and provides the place for worship. It goes by many names such as Koyil, Alayam, Mantram (Mandir), Gurudwara, Vihara, Church, Mosque etc. We hereunder discuss the temples of Hinduism, in particular Saivite shrines.
“It is well known that it is the Aagamas which inculate the art of housing THAT which is the Home-of-All, sentient as well as insentient. The very idea of providing for the Provider is at once sublime and lofty. What is more, it is daring. Whence did man learn to dare, and his daring, we daresay, is but an inspired form of humility" – Sekkizhar — Adi-p-Podi Dr. T.N. Ramachandran (St. Sekkizhar's Periya Puranam – Part I).
Faiths like Saivism and Vaishnavism are rooted in the Vedas and the Aagamas. The Vedas do not deal with temples as we know them. Louis Renou is right when he says, “it must be remembered that there were no temples at the Vedic period: “the sacrifice takes place within the officiants themselves’ says one of the Brahmanas. The term ayatana, which later came to mean ‘sanctuary' merely designates the ordinary domestic hearth in Vedic times. The temple cult of the classical period must have grown out of the domestic cult. Sacrifice took place on a specially prepared piece of ground, but the same spot was not necessarily used again for subsequent ceremonies. There was no building other than temporary huts” (The Destiny of the Veda in India).
The Light which is para (supernal) is symbolized by an "icon made by stone, wood, metal, etc. Even a stump of wood was sufficient in this connection. It is called Nadutari (BGBD). The pointed reference to this by St. Tirunaavukkarasar in his Kanraappur Decad brings to fore the symbol of Skamba of the
(இந்து ஒளி

HIP IN SAIVISM
BARAYALU ed), Tamil University, Thanjavur.
Atharva Veda. The word Skamba and Stamba are understood as synonymous. The word Stamba (column of fire) is depicted as the Lingodbhava in almost all the Saivite temples.
That which is apara is symbolized both by water and tree. After completing his invocatory chapter, St. Tiruvalluvar immediately projects the importance of water, but for which life will become extinct. It is the temple which sustains the society. And this temple is sustained by water.
“சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈஈஈஈண்டு.”
"Should rains cease, festivals and pujas To gods will also cease."
Temple-tree represents the entire flora without which no fauna can exist; the tree indeed is the tree of life. Near the tree of life is a pool, whose water is purificatory. The icon is installed under the tree of life and close to the purificatory pool.
An ancient shrine comprised these three only. Later on walls, towers, sub-shrines etc., were added. The temple also became a part of the polis.
Selection of a temple-site is guided by the rules laid down by the Aagamas. Sacred sites abound on riverbanks, forests, seashores etc. St. Tirunaavukkarasar lists out some of the temples which are present on the banks of rivers and pools.
"நள்ளாறும் பழையாறுங் கோட்டாற் றோடு நலந்திகழும் நாலாறுந் திருவை யாறுந் தெள்ளாறும் வளைகுளமுந் தளிக்குளமு நல் லிடைக்குளமுந் திருக்குளத்தோ டஞ்சைக்களம் விள்ளாத நெடுங்களம்வேட் களம் நெல்லிக்கா கோலக்கா ஆனைக்கா வியன்கோடிகா குள்ளாந்த கொன்றையான் நின்ற ஆறுங் குளம் களங்கா என அனைத்துங் கூறுவோமே.'
"We will hail every Aaru, Kulam, Kalam and Kaa where The Lord adorned with melliferous Konrai, Abides; Such as Nallaaru, Pazhaiyaaru, Kottaaru, Naalaaru Of goodly weal, Tiruvaiyaaru, Tellaaru, Valaikulam Talikkulam, goodly Idaikkulam, Tirukkulam, Anjaikkalam Nedungkulam, Vetkalam, Nellikkaa Kolakkaa Aanaikkaa and extensive Kodikaa"
. -Tirumurai the Sixth: 720 [Tr; Dr. T.N.R.]
37
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை)

Page 40
Saivism is both a religion and a way of life. The worship of Siva and service to Saivite devotees are the basic duties of the Saivities. The capstone of the Sivagnanabotha sutras is as follows:
"செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா
அம்மலம் கழீஇ அன்பரொடு மரீஇ மால்அற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயந் தானும் அரன் எனத் தொழுமே"
"Cleansed of the impurity of Aanava, Karma and Maya which prevent soul from attaining the Lord's sustaining feet which are like unto ruddy lotus-flowers, and blessed with the company of holy servitors, soul now standing freed from delusion, adores as Siva Himself the very habit (Vetnam) of Siva's devotees and His shrines” -Sivagnanabotham: 12 [Tr; Dr. T.N.R.)
Auvaiyaar emphasizes the importance of the worship at temple in her didactic work named Konraiventhan. To worship in a temple is pre-eminently good,’ she asserts (E6DWILD தொழுவது சாலவும் நன்று
The Hindu religion prescribes fourth paths to the realization of God, they being Carya, Kriya, Yoga and Gnaana. These are the paths which eventually lead the practitioner to God Himself. These exhort the Saivite to dedicate totally his life and limb to God.
St. Tirunaavukkarasar's Tiru Angka Maali is a Saiva Aagama in a nutshell.
All worship must be in tune with the Saiva Aagamas. This is insisted by all the Saivite Tirumurais. This insistence is born of the sacred dictum of Lord Siva addressed to Uma Herself. Hearing this, Uma desired to demonstrate to the world the Siva pooja par excellence.
"எண்ணில் ஆகமம் இயம்பிய இறவைர் தாம் விரும்பும் உண்மையாவது பூசனை என உரைத்தருள் அண்ணலார்தமை அர்ச்சனைபுரிய ஆதரித்தாள் பெண்ணின் நல்லவள் ஆயின் பெருந்தவக் கொழுந்து.
"When the Lord graced Her with the truth that it is puja Hailed by the innumerable Aagamas, which is
endearing to Him, She, the greatest of women, The shoot, as it were, of great askesis, Desired to perform puja for the Lord-God."
Periya Puranam: 1128 (Tr: Dr.T.N.R.]
Temple worship is the living proof of the Aagamic rites, rituals etc. the Vaakeesa Aasgama highlights this.
"நிலை பெறுமாறு என்னுதியேல், நெஞ்சே நீவா நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு.
(இந்து ஒளி

புலர்வதன் முன் அலகிட்டு, மெழுக்கும் இட்டு பூமாலை புனைந்து ஏத்தி புகழ்ந்து பாடி தலைஆரக் கும்பிட்டு கூத்தும் ஆடி சங்கரா. சய போற்றி போற்றி என்றும் அலைபுனல் சேர் செஞ்சடை எம்ஆதீ என்றும் ஆரூரா என்று என்றே அலறாநில்லே!"
"O heart, come here! if you seek life eternal do these:
Wake up before day break every day; enter the premises of Our Lord's shrine; sweep the precincts (with a broom);
Coat them with cow-dung; weave garlands adoringly; Sing His glory; bow with your head and enact a dance;
Cy aloud in fervour thus: "Hail Sankara! All Hail Sankara! O Aadi in whose matted hair flows
The river of billowy water! O Lord of Aarur!"
Tirumurai the Sixty; 312 [tr: Dr. T.N.R.]
One's attendance during the stipulated hours in a temple is a must. This is possible only for the people who have renounced the world totally. A householder is burdened with so many duties. However, ifhe So wills, he can visit the temple during a stated service.
Though God is omnipresent, His presence is more felt in sanctified areas, in particular the temples. Even though water is available everywhere beneath the earth, we can get it extracted only from the wells. Similarly the grade of God can be gained from the temples.
Truly speaking, what is a temple? It is the very body of a perfected soul. Tirumular says:
“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுர வாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே .
"For the Bounteous Lord This heart is the sanctum holy, The fleshy body is temple vast The mouth is the tower gate; To them that discern, Jiva is Sivalingam; The deceptive senses but he lights that illume."
Tirumantiram: Tantra Seven: 11:1 [Tr: Dr. B. Natarajan]
Saint Tirunavukkarasar affirms this:
"காயமே கோயிலாகக் கடிமன மடிமையாக
வாய்ரைமயே தூய்மையாக மனமணி யிலிங்கமாக நேயமே நெய்யும் பாலா நிறைய நீரமைய வாட்டிப் பூசனை யீசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே.
"This body is indeed the temple; the flawless manam ls sevitorship, truth is the sanctum sanctorum,
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை

Page 41
And Manonmani (Sakti) is Sivalinga:
My loving devotion serves as milk, ghee And abundant water for His ablutions Thus is performed His puja in which The offered havis (neivedyam) is obeisance."
- Tirumurai the Fourth: 739 (Tr: Dr. T.N.R.]
This is also the message of the Puranam relating to St. Pusalaar.
The human body comprises five Kosas viz., Annamayakosa, Praanamayakosa, Manonmayakosa, Vignaanamayakosa and Anandamayakosa. As the human body is replica of the temple, we are taught to identify the Kosas in the temple also.
The human body has six aadharas viz., Moolaadhaaram, Swaathittaanam, Manipurakam, Anaakatham, Visutthi and Aasjani. The temple also consists of six aadhaaras in the form of mantaps, they being Garbhagriha, Ardhamantap,
Mahamantap, Abhishekamantap, Alankaaramantap and Sabhamantap.
The human body has the vertebral column (backbone) comprising 32 joints. This is represented by the flag post in the temple. It is made up of 32 nodes. The temple represents the human body and the worship in the temple is symbolic of the progress of the soul by degrees.
We come across different types of temples of Lord Siva as revealed by St. Tirunavukkarasar in his Tirutthaandakam.
“பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினொடு எட்டும், மற்றும் கரக்கோயில், கடிபொழில்சூழ் ஞாழற்கோயில் கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில். இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயில். மணிக்கோயில், ஆலக்கோயில் - திருக்கோயில் - சிவன் உறையும் கோயில் சூழ்ந்து தாழ்ந்து இறைஞ்ச தீவினைகள் தீரும் அன்றே."
"If the seventyeight great temples of the Lord
Whose matted crest is adorned with the great flood, Karakkoyil, Gnaazharkoyil girt with well-protected Groves, the hill-like Kokudikkoyil of Karuppariyal, illangkoyil where the chanting the Rig Veda The Brahmins hail and adore the Lord, Manikkoyil, Aalakkoyil and every Tirukkoyil where Siva abides, Are circumambulated and hailed in humble Adoration, evil Karma will get annulled"
-Tirumurai the Sixty:715 (Tr: Dr. T.N.R.)
Temples in the past were constructed by Asurars, Devas, Rishis, Kings and men. Idols in most cases were sculpted. A few are known as swayampu (self-born). They were Siva's own making.
The word Vitangkam means unsculpted. Vitangka kshetrams are seven in number, they being (1) Tiruvarur, (2) Tirunallaaru, (3) Tirunaakaikkaaronam, (4) Tirukkaaraayil, (5) (இந்து ஒளி -

Tirukkollili, (6) Tiruvaamur and (7) Tirumaraikkaadu.
Siva was pleased to make His heroic exploits in many places. Eight of them are regarded as exceptionally great. They are known as Ashta Veeratta Sthala, they being (1) Tirukkantiyur, (2) Tirunallaaru, (3) Tiruatikai, (4) Tiruppariyalur, (5) Tiruvirkudi, (6) Vazhuvur, (7) Tirukkurukkai and (8) Tirukkadaiyur.
The five elements are sacred. Five are pancha-bootha kshethras, they being Chidamabaram (space), Kalahasthai (Air), Tiruvannamalai (Fire), Tiruaanaikka (Water) and Tiruvarur (Earth). Kanchipuram is known as the Sakthi-Prithvi Kshethra and Triuvaarur as the Siva-Prithvi Kshethra.
St. Nandi was born in Tiruvaiyaaru. Siva Himself led his wedding procession, which covered seven places viz., (1) Tiruvaiyaaru, (2) Tiruppazhanam, (3) Tirucchotrutthurai, (4) Tiruvedikudfi, (5) Tirukkantiyur, (6) Tiruppunthurutthi and (7) Tiruneitthaanam.
Five are the Sabhas (Forums where Siva enacted His dance). They are:
(1) Ratnasabhai (Ruby)
Aalankaadu (2) Kanakasabhai (Gold)
Chidambaram (3) Rajathasabhai (Silver)
Madurai (4) Taamirasabhai (Copper) -
Tirunelveli and (5) Chitrasabhai (Half of pictures)
Tirukkutraalam
;lver) -
Twelve are the Jyothirlingams which are situate in (1) Ketaaram, (2) Somanaatham, (3) Mahakaalam (Ujjain), (4) Viswanaatham (Kasil), (5) Vaidhyanatham, (6) Beemanatham, (7) Nageswaram, (8) Onkareswaram, (9) Thrayambakam, (10) Kusumesam, (11) Mallikaarjunam (Sri Sailam) and (12) Ramanathan (Rameswaram).
Since cleanliness is next to Godliness, a devotee can enter a temple only after a purification bath. He cannot go empty handed to the temple. He must take with him offerings such as fresh flowers, fruits and the like.
The gopuram of the temple is constructed in the form of a tower, so that any person at a distance can have its darshan.
Whenever a gopuram is sighted, the devotee is expected to fall on the ground and adore it. At least he should fold his palms in obeisance. Such place is called the boundary (Tiru ellai). He should also adore the street (Tiru veedi) and the entrance of the temple (gopuram). The gopuram represents the sthoola lingam and worshipping the gopuram implies worship to Sivalingam.
When a devotee reaches the flag post, he has to pay obeisance before it, facing north. The whole body should touch the ground. This is called ashtaangka namskaaram, the eight angkas being two feet, two hands, two ears, forehead and the chest. Women have to do panchaangka namaskaram. The two knees, two palms and the head have to touch the ground.
Next to the flag post, the Tirupeetam is situate. This is the place where the ahankaaram and mamkaaram (1-ness and
My-ness) are sacrificed at the altar. This worship purifies the inner sensorium.
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை
39

Page 42
When the devotee reaches the ‘tiruvaayil’ or the main entrance he is greeted by Dwarapaalakas one on the right and the other at the left. When Lord Siva burnt the three citadels of the asurars, which floated on the sky and caused havoc, only three asuras were spared by Siva. Two of them became Dwarapaalakas and the third one was blessed to play Kudamuzha when the Lord-Dancer enacted his dance.
The idols of Vinaayaka and Muruka are found installed in the sides of the entrance. These represent the filial aspect of Godhead.
Nandi is the Chamberlain of Siva. He is known as Adhikaara Nandi. He has a bovine face and a human form. If a temple lacks this idol, the sacred bull known as Rishabadevi does office for Nandi. He is also known as Nandi. A devotee should seek Rishabhadeva's leave and then proceed towards the sanctum sanctorum.
The garbhagriha, where the main idol is installed is the holy of holies. Only the Archaka, who is Sivaachaarya is entitled to step into it. Others must stand outside to have darshan of the Lord.
The sub-shrines situate in the temple campus demand our adoration. The tower raised over the sanctum sanctorum is known as Vimaana. On its sides are installed Dakshinamurthy,
இலவச கல்வி
நாவலர் கோயில்களில் மலிந்து கிடந்த ஊழல்களை எதிர்த்தும், அந்நியராட்சியினது நிர்வாக ஊழலையும் கொடு தர்மகர்த்தாக்களான நிலக்கிழார்கள் கோயில் பணத்தைக் அபசாரப்படுத்துவதையும் உயிர்ப்பலி போன்ற மூடத்தன் கொதித்தது. "சுவாமி எழுந்தருளும் தேரின் உருளையிலே கோயிலதிகாரிகள் வெட்டிக் குவிக்கிறார்கள். கொடுமை" 6 கந்தசுவாமி கோயில் சீர்திருத்தத்திற்காக இவர் நடத்திய
நாவலர் பெருமான் சிதம்பரத்தில்
நல்லை நகர் நாவலர் பெருமான் அச்சு இயந்தரம் வாங்கு பெயர்க்கும் பணிக்காக இந்தியா சென்று வந்தபின், சைவத்தம் என்ற பேராவாலைப் பூர்த்தி செய்வதற்காக அவர் இப்பயணத் கொள்வனவு செய்த நாவலர் பெருமான் அதை இயக்கும் முன் சென்ற பெருமானுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. தில்லைவாழ் மதிக்கப்பட்டவர்கள். பெருமைக்குரிய தில்லை மரபில் வந்த இருப்பதை உணர்ந்தார். தீட்சிதர்களில் சிலர் வாயில் வெற்றி கண்டுகண்ணீர் விட்டார். தான் வாங்கிய அச்சு இயந்திரத்தில் என்ற பிரசுரத்தை வெளியிட்டு சிதம்பரத்தில் விநியோகித்தார். தொடர்ந்தது.
இந்நிலையில் மிகவும் கவலையுற்ற நாவலர் பெரும் கல்விச்சாலையை உருவாக்குதலே என முடிவெடுத்தார். இ தென் திசையில் மாலைகட்டித் தெருவுக்கு சமீபமாக சைவப்பிர ஏனையோரும் இலவசமாகப் படிப்பதற்கு ஏற்பாடு செய்தார். நாவலர் உயர்நிலைப்பள்ளிக்கு 150 ஆண்டு பூர்த்தி விழா ந ை
இந்து ஒளி
40

Lingodhbhava and Durga. A separate shrine is allotted to Chandeswara, who is the last to be worshipped. The devotee should implore him to confer on him the fruit of his adoration of Siva. This Chandeeswara is dear to Siva and he actually runs the temple. He is entitled to half a circumambulation.
It is the duty of the Saivite devotee to read, remember and practice the rules prescribed in the manual indited by Sri-la-/ Sri Arumukha Naavalar. This manual is known as ‘Sivaalaya Darisana Vidi'.
Temple worship enables the devotee to worship Siva enshrined in the temples and eventually enables him to become a shrine of Siva.
Quoted from:
SAIVA DARSHANAM A VADE MECUM OF SAIVA SIDDHANTA
Compiled and Edited by Seekkizhaar Adi-p-Podi
DR. T. N. RAMACHANDRAN, D. Litt., (Jaffna)
(Director, International Institute of Saiva Siddhanta Research, Dharmapuram)
பின் மூல பிதா
எதிர்த்தும், நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் சீர்கேட்டை மையையும் எதிர்த்தும் அவர் எரிசரமாகப் போராடினார். கொள்ளையிடுவதையும் ஆண்டவன் சன்னிதானத்தை ங்களை வளர்ப்பதையும் கண்டு நாவலரின் இதயம் 0 ஆடுவெட்டுவது வைரவருக்குப் பிரியம் என்று இக் என்று நாவலர் இந்த உயிர் வதையைக் கண்டித்தார்.
போராட்டம் வரலாற்றுப் புகழ்மிக்கது.
செய்த செயற்கரும் செய்கை
வதற்காக ஒருமுறை இந்தியா சென்றார். பைபிளை மொழி ழ்ெ நூல்களை அச்சுவாகனம் ஏற்றிக் காப்பாற்ற வேண்டும் தை மேற்கொண்டார். காலால் இயக்கும் இயந்திரத்தைக் பறயை தானே கற்றார். இந்நாளில் சிதம்பரத்தை தரிசிக்கச் அந்தணர்கள் இறை நிலையில் எம்முன்னோர்களால் தீட்சிதர்களின் பிள்ளைகள் படிப்பில் அக்கறை காட்டாது லையோடு ஆசாரம் இல்லாமல் கோவிலுக்குள் நிற்பதைக் முதலாவது பிரசுரமாக சிதம்பரத்து தீட்சிதருக்குக்கண்டனம் இதனால் தீட்சிதர்க்கும் நாவலருக்குமிடையே விவாதித்தல்
மான் அடுத்த சந்ததியைக் காப்பதற்கு தகுந்த பரிகாரம் ற்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன் நாவலர் சிதம்பரம் ரகாச பாடசாலையை நிறுவி தீட்சதர்களின் பிள்ளைகளும் இந்த ஆண்டு நிறைவுடன் நாவலர் பெருமான் கட்டிய டபெறவிருப்பது பெருமைக்குரிய விடயமாகும்.
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை)

Page 43
02.11.2014 கொழும்பில் நடை திரு. ஐ.தி. சம்பந்தன் அவர்க
சபையோர்
14 4 4 4 4 4
க458 54 இ
* தத்
மேடையில் திரு. கந்தையா நீலகண்டன், திரு. ஐ. தி. சம்பந்தன், திரு. சி. தில்லைநடராஜா, திரு. சி. வி. கே. சிவஞானம் (வடமாகாண சபை அவைத் தலைவர்), திரு. தி. மார்க்கண்டு, திரு. கே. இராஜகுலேந்திரா,
தமிழருவி த. சிவகுமாரன், திரு. வி. தனபாலசிங்கம்.
லண்டனில் நடைபெற்ற “நீங்காத நிக
திங்கள் நினைவுகள் நூலகவளிடுவிறா
பழமை)
ஒலிபரப்பாளர் திரு. இளையதம்பி தயானந்தா தலைமையில் நடைபெற்றது
இந்து ஒளி
எயாய்பாபியாண்டுப்பயாண்பார்ப்பதாயாயப்பபடவி2ாசேப்
யேகமப்பாட்டமானithாமதப்படுவராகப்பைய -

பெற்ற “நீங்காத நினைவுகள்” ரின் நூல் வெளியீட்டு வைபவம்
திரு. ஐ.தி. சம்பந்தன்
அS )
திரு. சி. வி. கே. சிவஞானம் நூலை வெளியிட்டு வைக்கிறார். (இ-வ)
நிகழ்வுகளுக்கு தலைமைதாங்கிய திரு.சி. தில்லைநடராஜா, திரு. ஐ. தி. சம்பந்தன், திரு சிவஞானம்
நடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன்.
னைவுகள்” நூல் வெளியீட்டு வைபவம்
ரணரிவுகள்
- இறா
கெழ்வின்போது நூலாசிரியரும், வ. இராமநாதனும், ஏனைய பிரமுகர்களும்
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை

Page 44
மாமன்றச் செய்தி
தீபாவளி திருர மாமன்றம் விடுத்திய
தீபாவளியைக் களிப்புடன் கொண்டாட இன்னும் எமது மக்களுக்குத் திருவருள் கிடைக்கவில்லை. எனினும் இப்புனித நன்னாளில் இந்து மக்கள் தமது ஆன்மீகப் பாதை தவறாது இறை வழிபாட்டில் ஈடுபடவேண்டும். வெறுமனே விளக்கேற்றி வழிபடுவதுடன் அமையாமல் உள்ளத்தில் ஞான விளக்கேற்றி அருட்பெருஞ்சோதியை
வழிபடுதல் வேண்டும்..
ஆலயங்களையும் சமய அனுஷ்டானங்களையும் மையமாக வைத்தே இறைவழிபாடு நடத்தப்படுகிறது. எமது இந்துமக்களின் இறைபக்தியின் பலத்தை எவரும் மறக்கமுடியாது, மறுக்கவும் முடியாது. அந்த வழிபாடு அவர்களுக்குத் தரும் மேம்பாட்டையும் மறைக்கமுடியாது. அந்தப் பலம்தான் எமது மக்களைத் துணிவுடன் பல எதிர் நீச்சல்களைப் போடும் தைரியத்தையும் தந்தது. வெளிநாட்டாரின் ஆதிக்கம் இருந்த காலகட்டத்தைத் தொடர்ந்து சுதந்திரம் கிடைத்தது என்று சொல்லப்பட்டும் எமக்கெல்லாம் சுதந்திரம் மறுக்கப்பட்டுவரும் காலத்திலும் பல சக்திகள், எமது மதத்தினருக்குப் பல இடர்பாடுகளையும் இன்னல்களையும் தொடர்ந்தும் ஏற்படுத்தி வந்தாலும் நம்பிக்கையுடன் இறையருளினால் எமது சமயமும் எமது மக்களும் காப்பாற்றப்பட்டு வந்திருக்கின்றமை குறிப்பிடற்பாலது.
எமது பாரம்பரியங்களையும் கலாசாரத்தையும் நாங்கள் தொடர்ந்தும் பேணி வாழ வேண்டும். இன்று பலவித தாக்கங்களின் பாதிப்பால் எமது மக்கள் குழப்பநிலைக்கு சில வேளைகளில் ஆளாக்கப் படுகின்றார்கள். இந்துக்கள் தெளிவான சிந்தனையுடனும் மனப்பக்குவத்துடனும் எமது சமயம் காட்டும் வழியில்
வாழ்ந்து உய்ய வேண்டும்.
அரசியற் சக்திகளின் தாக்கங்களுக்கோ, வேறுவழியில் பலம் மிக்கவர்கள் ஏற்படுத்துகின்ற ஆதிக்கங்களுக்கோ
இந்து மக்கள் என்றும் சரணடையமாட்டார்கள். அ எமது மதத்தை மாசுப்படுத்தகூடிய சில நடவடிக் கைகள் அங்கும் இங்கும் நடைபெற்றாலும் அந்த மாசுக்களை களைந்து நல்லனவே செய்ய எல்லோரும் முயல்வோமாக.
வெறும் சம்பிரதாயங்கள் தான் எமது சமயம் என்ற மாயநிலை கலைக்கப்பட்டு இறைவனை நாடுவதற்கு உரிய உயர்ந்த பக்தி மார்க்கம் எமது சமயம் என்பதை இளம் தலைமுறையினரும் உணர்ந்தறிய அகில இலங்கை இந்து மாமன்றம், சிவ தொண்டர் அணி, மற்றும் ஆன்மீக வெளியீடுகள் (இணையத்தளத்திலும்
(இந்து ஒளி

நாளையொட்டி நந்த சிறப்புச் செய்தி
எமது ஆன்மீக சஞ்சிகையை வாசிக்கலாம்) மூலம் பணியாற்றி வருகின்றது.
இப்பணியில் இணையுமாறு எம்முடன் சகல ஆலயங்களையும் இந்து நிறுவனங்களையும் இப்புனித நாளில் மீண்டும் அழைக்க விரும்புகிறோம்.
"இறைவரோ தொண்டர் தம் உள்ளத் தொடுக்கம். தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே" என்றார் ஒளவைப்பிராட்டி. அப்படியான பெருமைமிக்க சிவ தொண்டர்கள் இந்நாட்டில் பெருகவேண்டும்.
இன்றும் எமது மக்கள் தங்கள் சொந்த நாட்டிலும் அகதிகளாக அவலப்படுகின்ற நிலைமையையும் எடுத்துக்காட்டுவது எமது கடமையாகும். உதாரணத்திற்கு யாழ்மாவட்டத்தில் 38 நலன்புரி நிலையங்கள் என்ற பெயரில், அகதிமுகாம்களாகக் காட்சி தரும் அந்த முகாம்களில் தங்கள் சொந்த இடங்களில் குடியேறத் தடுக்கப்பட்டு இருக்கின்ற மக்கள் வாழவழியின்றித் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
வடமாகாண சபை மூலம் அகில இலங்கை இந்து மாமன்றமும் மனிதநேய நிதியமும் அந்த முகாம்களில் இருக்கும் வயோதிபர்களுக்கும் நோயாளி களுக்கும் பிள்ளைகளுக்கும் ஓரளவு உதவியைச் செய்துவருகின்றோம். அது போதாது.
அவர்களுக்கு உடனே உலர் உணவு மீண்டும் வழங்கப்படவேண்டும் எனவும், தாமதியாது அவர்களைச் சொந்த இடங்களில் குடியேற்ற ஒழுங்கு செய்யுமாறும் அரசாங்கத்தைக் கேட்டிருந்தோம். இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
"தர்மம் தலை காக்கும்" என்பது எங்களுடைய தாரக மந்திரம். "அறம் செய விரும்பு என்ற ஒளவைப்பாட்டியின் அறிவுரையையும் நாங்கள் மறக்கக்கூடாது. மாமன்றம் செய்துவரும் சமூகப் பணிகளில் தவறாது எல்லோரையும் அறம் செய்ய விரும்புமாறும் இப்புனித நன்னாளில் வேண்டுகின்றோம்.
"இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க என் பிரார்த்தித்து இந்து மக்கள் நாங்கள் என்பதையும் என்றும் நினைவுகூர வேண்டும்.
எமது மக்களுக்கு விமோசனம் கிடைக்க ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ நடராஜப் பெருமானை பிரார்த்தித்து நிற்கின்றோம்.
கந்தையா நீலகண்டன் தலைவர்
முத்தையா கதிர்காமநாதன்
பொதுச் செயலாளர்
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை)

Page 45
மாமன்றத்தின்
அமரர் வி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியரும் முன்னாள் சமஸ்கிருத விரிவுரையாளருமாகிய திரு.விநா எய்தியதை அறிந்து அகில இலங்கை இந்து மாமன்ற தெரிவிக்கின்றது.
அமரர் விநாயகமூர்த்தி சிவசாமி அவர்கள் பல்கலை மட்டுப்படுத்தாது சமய மற்றும் சமூக மேம்பாட்டிற்கும் வளர்ச்
சமஸ்கிருதம், வரலாறு, தமிழ், இந்துப் பண்பாடு நுன இவை தொடர்பாக பல அரிய நூல்களை ஆக்கியுள்ள தொடர்பைக் கொண்டிருந்தார். எமது சமயக் கருத்தரங்குகளி நடவடிக்கைகளுக்கு எந்நேரமும் ஒத்துழைப்பை வழங்கிய
இந்து மாமன்றத்துடன் நெருங்கிய உறவைப் பேன் பிரச்சினைகளையும் தீர்த்திருப்பதோடு அவ்வப்போது வேண்
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தாரின் துயரில் இந்து மாமன்றத்தின் சார்பாக எல்லாம் வல்ல சிவகாமி அம்பு
நாவலரும்
1876ம் ஆண்டுகளில் கொடிய பஞ்சமும் வாந்தி பேதியும் யாழ்ப்பாணத்து மக்களை வதைத்தது. நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கவும், கஞ்சித் தொட்டி வைத்துக் கஞ்சி ஊற்றவும் ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் இவை உத்தியோகஸ்தர்களால் முறையாக நடத்தப்படவில்லை. அன்று வெள்ளையராட்சியின் பிரதிநிதியாக யாழ்ப்பாணத்திலிருந்த துவைனந்துரை வீடுகளில் புகுந்து துணிமணிகளைக் கொழுத்தி மக்களை இம்சைப்படுத்தினான். ஆட்சியாளரும் அவர்களின் அடிவருடிகளும் மக்களுக்கு எதிராக இழைத் த இக்கொடுமைகளைக் கண்டு நாவலர் சீறிப் பொங்கினார். மக்களின் கூட்டங்களைக்கூட்டினார். துவைனந்துரையையும் அவனது உத்தியோகப் பரிவாரத்தினரையும் கண்டித்தார். யாழ்ப்பாணம் வந்த கவர்னர் லங்டனிடம் மக்கள் சார்பில் ஒரு விண்ணப்பத்தைக் கையளித்தார். "சென்ற சில ஆண்டுகளாக பஞ்சமும் பேதியும் யாழ்ப்பாணத்தைக் கடுமையாகப் பீடித்து வருகின்றன. இப்போதுள்ள ஏஜன்டு துவைனந்துரை வந்தது முதல் சென்ற மூன்று ஆண்டுகளாக நாங்கள் படுந்துயரம் சொல்லி முடியாது" என்று அந்த விண்ணப்பத்தில் மக்கள் துயரை நெஞ்சு நெக்குருக வர்ணித்தார். வெள்ளைக்கார கவர்னர் நயமாகப் பேசி விசாரணைக்கு வந்த ஆளை அனுப்பிவிட்டார். அதிகாரிகள் அட்டகாசம் தொடர்ந்து நீடித்தது. இதனால் மனம் குமுறிய
(இந்து ஒளி

அனுதாபச் செய்தி 1. சிவசாமி ப
\\III/
- யாழ்ப்பாணக் கல்லூரி மற்றும் பேராதனைப் பல்கலைக்கழக யகமூர்த்தி சிவசாமி அவர்கள் 08.11.2014 அன்று இறைபதம் Dம் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் கவலையையும்
மக்கழக கல்விசார் நடவடிக்கைகளுடன் தனது சேவையை சிக்கும் பெரும்பங்காற்றிய பெருமகனாவார்.
ன்கலைகள் எனப் பல துறைகளில் ஆளுமை பெற்றிருந்தார். தாடு அகில இலங்கை இந்து மாமன்றத்துடன் நெருங்கிய லும் மாநாடுகளிலும் கலந்து கொண்டதுடன் சமய சம்பந்தமான பராவார்.
ரி வந்த அமரர் சிவசாமி எமக்கு ஏற்படும் ஐயங்களையும், டிய ஆலோசனைகளையும் வழங்கி வந்தார்.
பங்குகொண்டு அவர் ஆத்மா சாந்தியடைய அகில இலங்கை பாள் சமேத ஸ்ரீ நடராஜப் பெருமானை வேண்டி நிற்கின்றோம்.
போராட்டமும்
நாவலர் போராட்டத்தைக் கைசோரவிடவில்லை. அவர் தொடர்ந்து கிளர்ச்சி செய்தார். மக்களைத் திரட்டி இயக்கம் நடத்தினார். இதன் பயனாக ஒரு விசாரணைக் கமிஷன் வந்தது.
அப்போது "மக்களே விழித்துக் கொள்ளுங்கள். இது சமயம். விசாரணை அதிகாரி வந்த பொழுது துவைனந்துரை தந்திர வேலை செய்து தன்கீழ்ப்பட்ட உத்தியோகத்தர்களைக் கொண்டு நாடகம் நடத்தி தமது குற்றங்களை மறைத்துவிட்டார். தம்மீது வந்த வழக்குகளையெல்லாம் தந்திரமாக விலகச் செய் து அநியாயராச்சியம் நடத்துகிறார்'' என்று நாவலர் வெள்ளைக்கார ஆட்சியாளரின் அக்கிரமத்தை எதிர்க்க மக்களைத் தர்மாவேசத்துடன் தட்டி எழுப்பினார். யாழ்ப்பாணத்திலே அதிகார வர்க்கம் நடத்திய அட்டகாசங்களை, மக்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளை சேர் முத்துக்குமாரசாமி மூலம் சட்ட நிரூபண சபையில் நாவலர் அம்பலப்படுத்துவித்தார். சட்ட நிரூபண சபையில் நடத்துவித்த போராட்டத்திற்குப் பக்கபலமாக வெளியே மக்களைத் திரட்டி நாவலர் வெகுஜன இயக்கம் நடத்தினார். நாவலர் மக்களுக்காக அவர்களின் நலன்களுக்காகப்
போராடிய போது மத, இன வேறுபாடுகளையும் தாண்டி அனைத்து மதங்களையும் இனங்களையும் சேர்ந்த மக்களைப் பொதுப் போராட்டத்தில் ஒன்றுதிரட்டினார். இவர்கள் அனைவரினதும் நலன்களுக்கிடையில் ஒருமைப்பாட்டைக் கண்டார்.
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை

Page 46
* *. *. * *
இந்தச் சுடரில் ...
* பஞ்ச புராணங்கள்
* ஆன்மீகச்சுடரின் அருள்மடல்
* நாவலரின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்
நாவலரும் கந்தபுராணமும்
* நாவலரின் நற்பணிகள் - சில தகவல்கள்
க க 6 ல ம ம -
* நாவலர் பெருமான் வேதசிவாகமக்கிரியை
நெறிகளுக்கு ஆற்றிய பங்களிப்பு
* நாவலர் பெருமானின் சமய நற்பணிகள்
* ஆறுமுக நாவலரால் தோற்றுவிக்கப்பட்ட பிரசங்க மரபு
* நாவலரின் வாழ்வியலுாடாக ஏற்பட்ட சமய, சமூக, கல்வி மாற்றங்கள்.
6 -
* ஈழத்து நாவலரும் இந்திய ஆதீனங்களும்
ஆறுமுகநாவலர் பற்றி சத்தியவித்தகர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
22
நாவலரின் நற்பணிகள் நாம் மறவோம்
24
* Sri La Sri Arumuga Navalar
The Champion Reformer of the Hindus (1822-1879) 25
* நல்லூர் ஆறுமுகநாவலனார்
27
* திருக்கார்த்திகை தீபத்திருநாள்
29
உருவ வழிபாடு
30
பாமர மக்களுக்கும் ஞானஒளி பரப்பிய எங்கள் குருநாதன்
ல் 8 8 8 8 8 க
32
பொலநறுவை மண்ணில் - சிவப்பணிபுரியும் சிவதொண்டர் அணியினர்
34
* மதிப்பீடு - இந்து ஒளி - நவராத்திரி சிறப்பிதழ்
35
* Temple Worship in Saivism
37
* மாமன்றச் செய்தி - தீபாவளி திருநாளையொட்டி
மாமன்றம் விடுத்திருந்த சிறப்புச் செய்தி
42
* மாமன்றத்தின் அனுதாபச் செய்தி
43 !
(இந்து ஒளி

மாமன்றச் செய்தி
யாழ் பல்கலைக்கழக வருடாந்த பட்டமளிப்பு விழாவில் மாமன்றத்தின்
சிவதொண்டர் அணி இம்மாதம் (நவம்பர்) 10ஆம் 11ஆம் திகதிகளில் நடைபெற்றயாழ்பல்கலைக்கழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு நிகழ்வின் வரவேற்பு ஊர்வலத்தில் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் யாழ். சிவதொண்டர் அணியினரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
யாழ் மண்ணின் தமிழ்ப் பாரம்பரிய கலாசார விழுமியங்களோடு அமைந்த வகையிலான குடை, கொடி, ஆலவட்டம் தாங்கியதாக மாமன்றத்தின் சிவதொண்டர் அணியினர் பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்வின் வரவேற்பு ஊர்வலத்தில் பங்குகொண்டு தமிழ்க் கலாசார சிறப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
மாமன்ற யாழ் பணிமனையின் சிவதொண்டர் அணியைச் சேர்ந்த ச.ஸ்ரீகயன், பா. சாருஜன், ம. டினோஜன், கி. செந்தூரன், ச. சுமணன், க. கஜிந்தன், வி. மோகானுஜன், சு. குகப்பிரியன், து. அகீபன், சி. மதனரூபன், ம.விதுஜன் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.
- © 29கல்வி ஞானி
நல்லைவளர் வேளின்ரு ளொன்றுதிரண்டே - பண்டை
ஞானநிலை சோர்வடைதல் சீர்பெறநன்றே நல்லைநக ராறுமுக நாவலரென்றே - பெயர் நல்கிவரு கல்மலி ஞானியரென்போம்.
- முதுதமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி -60
நாவலர் பெருமானால் உயர்நிலை பெற்ற புராண படன முறை புராண படனம் என்பது ஒருவர் வாசிக்க மற்றொருவர் பயன் சொல்லும் முறையாகும். இது ஈழநாட்டிற்கே குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு உரிய சிறப்பு முறையாகும். நாவலர் காலத்திலே புராண படனம் உயர்நிலை பெற்று இன்றும்
ஆலயங்களிலே நடைபெற்று வருகின்றது. நாவலர் புராண படனம் செய்வதோடு நின்று விடாது தமது மாணவ பரம்பரையினருக்கும் இம்முறையினை
நன்கு பயிற்றுவித்து புராண படன முறையை மேன்மையடையச் செய்தார். இவரது புராண படனம்
நல்லுாரில் நான் ஆரம்பமானது.
ஜய வருடம் ஐப்பசி - கார்த்திகை

Page 47
பொலனறுவை சம அன்னை ஸ்ரீ சாரதாதேவி அறநெ
கே.
பாடசாலையின் 2013ஆம் ஆண்டு சிறந்த வரவு முதன்மையாளர்கள்
ஒடு!
மாணவ மாணவிகளுக்கு கணினி கற்பிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமைதோறும் பஜனை நிகழ்வின்போது

ன்பிட்டி கறப்பளை இப் பாடசாலை சிவதொண்டர் அணி
பிசி 92es.
சிவதொண்டர் அணி அங்கத்தவர்கள்
ஆலய சிரமதானப் பணிகளில் சிவதொண்டர் அணியினர்
பூமாலை கட்டும் பயிற்சியில் சிவதொண்டர் அணியினர்

Page 48
HINDU OLI - REGISTERED IN THE DEPARTMENT OF
மாமன்றத்தில் சரஸ்வதி
மாமன்றத்தில் சரஸ்வதி பூசை நிகழ்வு இடம்பெறுவதை முதலாவது ! செயலாளர் திரு. சிவசுப்பிரமணியத்திற்குப் பொருளாளர் திரு. வே. நிறுவன மாமன்றத் தலைமையக பிரார்த்தனை மண்டபத்தில்
திரு. கந்தையா நீலகண்டன் உரையாற்றும்
AIA காப்புறுதி நிறுவனத்தில் கடமையாற்றுபவர்கள் சரஸ்வதி பூசை 6
இந்து வித்தியாவிருத்திச் சங்கத்தில் 2
இந்து வித்தியாவிருத்திச் சங்கம் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில்
சக்தி இல்ல மாணவிகள் வழ
இவ்விதழ் இல. 488 புளுமெண்டால் வீதி, கொழும்பு - 13, யுனி ஆர்ட்ஸ் (பிறைவேட் லிமிட்டட் நிறுவ

•osTS OF SRI LANKA UNDER NO. QDI52/NEws/2014 பூஜைஸைவம் (2014)
படத்திலும், இந்துஒளி நவராத்திரி சிறப்பிதழை சமய விவகாரக்குழுச் கந்தசாமி வழங்குவதை இரண்டாவது படத்திலும், AIA காப்புறுதி நடத்திய சரஸ்வதி பூசை நிகழ்வின்போது மாமன்றத் தலைவர் வதை மூன்றாவது படத்திலும் காணலாம்.
வைபவத்தில் பங்கேற்பு. சகலகலாவல்லி மாலை படிக்கப்படுகின்றது.
நடைபெற்ற சரஸ்வதி பூசை வைபவம்
நடத்திய சரஸ்வதி பூசை வைபவத்தில் பங்குபற்றிய சபையினரும், ங்கிய கலை நிகழ்ச்சிகளும்
னத்தில் அச்சிடப்பட்டு அகில இலங்கை இந்து மாமன்றத்தினால் வெளியிடப்பட்டது.
72 012 19 64 0ர்?