கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இணுவில் ஒலி 2012.09-10

Page 1
இணுவி

பல லல :
இந்திகள் எடு); அபூரட்டாதிஜப்பசி2024 -
விலை 80E

Page 2
V KRS. TRA INTERNATIONAL IN
TOOL
K.R.S. TRA No. 134/A, New Moor
Tel : 2344952
E-mail : Krs
INTERNATIONAL M No. 312, Sri Sangaraja Tel : 2432956, 2432007,
TOOL No. 358, Sri Sangaraja
Tel : 2473362
NAN O MATADOR U
PILOT
— GUNT
ZUL

DE CENTRE PARKETING CENTRE
R. Kailayapillai (Srie) | Managing Director
DE CENTRE - Street, Colombo - 12.
Fax : 2342308 sri@sltnet.lk
MARKETING CENTRE
Mawatha, Colombo - 10. 2344952 Fax ; 2342308
- MART
Mawatha, Colombo - 10.
Fax : 2473364
Iሰሲ " ፀ በለ codess
COOPER
LAIDUNT
ics

Page 3
"பெற்ற தாயும் பிறந்த நற்றவ வானிலும் நம்
'இணுவி
(தாயக மண்ணின் தனித்துவம் வில் - 1 ஒலி - 1
புரட்டாதி - ஐப்
வெளியீட்டு முகாமை :
நடராசா சச்சிதானந்தன்
ஆசிரியர்:
த. சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா)
தொ.பேசி : 071 8676482
நிர்வாக ஆசிரியர் :
சிவலிங்கம் சரவணபவன்
தொ.பேசி : 077 3126802
சஞ்சிகைக்கும் !
மூ, சிவலிங்கம் கா, வைத்தீஸ்வரன் பேராசிரியர் க. தேவராஜா திருமதி. க, வைகுந்தம்
அ. குகதாசன் சு. சண்முகதமார் மா. ந, பரமேஸ்வரன் ம. காண்டீபன் க, பரமேஸ்வரன்
க, கண்ணபிரான்
வெளிநாட்டுப் பிரதிநிதிகள் ;
இலண்டன் 1 சபேசன் சண்முகநாதன் அவுஸ்திரேலியா : தி.திருநந்தகுமார் கனடா : ம.இராஜகுலசூரியர் ஜேர்மனி : ச.ஆ.பூபதிபாலவடிவேற்கரசன் டென்மார்க் : கணேசு பரமநாதன் சுவிஸ் :
நடராஜா மனோகரன் நோர்வே : நல்லையா சண்முகப்பிரபு அமெரிக்கா : வே.பிரேமதயாளன் தொடர் :
9 - 2/1, நெல்சன் இடம், கொழும்பு - 06, இலங்கை. தொ.பேசி: 011 4902406
47, கருணாகரப் பிள்ளையார் வீதி, இளந்தாரி கோவிலடி, இணுவில் கிழக்கு, சுன்னாகம், இலங்கை,
E-mail: inuviloli@hotmail.com
படைப்புகளுக்குப் படைப்பாளிகளே பொறுப்பு டையவர்கள், ஆக்கங்கள் செம்மை பார்த்தபின் பிரசுரமாகும்.
- ஆசிரியர் - |

த பொன்னாடும் னி சிறந்தனவே."
ல் ஒலி?
- காக்கும் இருதிங்கள் ஏடு) பசி 2012 வள்ளுவர் ஆண்டு 2043
உள்ளே ஒலிப்பவை
பேனா முனையிலிருந்து... கட்டுரை :
அழகியல் வெளியில் உலாவந்த இணுவை வீரமணி ஐயர். இணுவையூர் மாணவர்களின் இன்றைய கல்விக்களம் நாடக வரலாற்றில் இணுவில் திருவூரின் பங்களிப்பு. நல்ல குடும்பம் பல்கலைக்கழகம். இயற்கை வனப்பும் இனிய சூழலும் இனிதே அமைந்த இணையிலி. இணுவில் திருவூரின் கல்விப் பாரம்பரியமும் வளர்ச்சியும். எமது கிராமமும் விவசாயமும். தமிழும் சைவமும், பாரதியாரின் கல்விச் சிந்தனை
ஒரு நோக்கு. கவிதை :
• சிறுக்கிக்கேன் இந்தச் செயல்? மங்கையர் மாண்பு :
. இணுவில் திருவூரின் பெருமையில்
பெண்களின் பங்களிப்பு பண்பாட்டுப் பாரம்பரியம் :
இன்றைக்கொரு சோறுண்டு சிறுவர் உலகம் :
- பாரதியார் நிகழ்வுகளின் சங்கமம் :
> இளம் கலைஞர் மன்றம் அரங்கேற்றிய
'இசைமாலை'. * இணுவைச் சிவகாமியம்மைக்கு
ஓர் இசைப்பாடல் தொகுப்பு...
னையவை :
தற்கால ஆய்வாளர்கள். நாட்டார் இலக்கியம்.
• சிறப்புமிகு புறநானூறு, 1க
பொதுசன. சாலகம்
ய!)pse777 53ti..

Page 4
பேனா முனையிலிருந்
மனிதசமுதாயம் முன்பு செயற்பாடுகளைத் தரணிக்கு எ காலகட்டத்திலே வாழ்ந்து கொ படைக்க முடியுமா? என்ற ! தோன்றிநிற்க எம்மண், மண்ணை தேவைகள், அவர்களின் முன்னே போன்ற இன்னோரன்ன விடயம் வரினதும் கவனம் குவியப்பட ே கசப்பான சம்பவங்கள், இடப் என் பன எமது மண்ணின் உள்ளாகியிருந்தன. கல்வி, வி பெரும்பின்னடைவைக் கண்டுகெ
கல்வி முன்னேற்றம், தொழில் வாய்ப்புகள், தொழிற்ற எழுச்சியை நாம் காணவேண் எம் மால் மேற் கொள் ளப் ப பயனுள்ளதாக அமையவேணி மண்ணின் சிறப்புக்கோர் பா நிற்கின்றது. மொழி, கலை பொருளாதாரம், சமூகநல 'இணுவில் ஒலி” தாங்கிவரும்
எமது மண்ணின் படை! வெளிநாடுகளில் வாழும் ஒன்றிணைக்கவும் “இணு தாயக மண்ணின் தனித் தரணிபோற்றும் இலக்கிய எம்மைச் சார்ந்துள்ளது ஒலியை முன்னிறுத்தியுள் வர்த்தகப் பெருமக்கள், ஏ ஆகியோர் 'இணுவில் வழிநடத்துவீர்கள் என உள் இதழில் சந்திப்போம்.
“அமிழ்தில் இனியா

து....
னேற்றம் கண்டு பல அரிய வழங்கிக் கொண்டிருக்கின்ற எண்டு, எம்மாலும் வரலாறு உந்துதல் மனக் கண் முன் ரின் மக்கள், மக்களுக்கான சுற்றத்திற்கான வழிமுறைகள் ங்களின் பால் எம் ஒவ்வொரு வண்டியுள்ளது. கடந்தகாலக் பெயர்வுகள், புலப்பெயர்வுகள் மக் களையும் பாதிப்புக் கு விவசாயம், தொழில் என்பன காண்டது.
விவசாயப் பெருக்கம், கைத் அறை வளர்ச்சி போன்றவற்றின்
டும். வருங்கால சமுதாயத்திற்கு நம் ஒவ் வொரு செயற் பாடும் Tடும். அந்தவகையில் இணுவில் அவலாக 'இணுவில் ஒலி' ஒலித்து , இலக்கியம், கல்வி, ஆன்மீகம், நன் சார்ந்து பல அம்சங்களை
ப்பாளிகளை உலகறியச் செய்யவும், - எம் மண்ணின் மைந்தர்களை வில் ஒலி' சங்கற்பம் பூண்டுள்ளது. தவம் காக்க வேண்டிய பொறுப்பும், யம் படைக்க வேண்டிய பொறுப்பும்
என்பதை உணர்ந்து 'இணுவில் ாளோம். பெரு மனம் படைத்தவர்கள், ஆக்கப் படைப்பாளிகள், வாசகர்கள் ஒலி'க்கு ஆதரவுதந்து எம்மை ரமார நம்பகின்றோம். மீண்டும் அடுத்த
து நம் ஆன்றோர்கள் தேசம்”
- ஆசிரியர் -

Page 5
மேகாகவி
(மண்ணின் மைந்தர்)
அழகியல் வெ
பூடா பாபுயாலா யூ பாபா பாமானாட
வி.
தமிழ்ப் பண்பாட்டின் அழகியல் வெளி வ யிலே தனித்துவம் மிக்க பங்களிப்பை வழங்கி உலா வந்தவர் பிரமஸ்ரீ வீரமணி க ஐயர் அவர்கள். தமிழின் இசைவளத்தை ய மேம்படுத்தும் கீர்த்தனைகளை இயற்றி யமை, பரதநாட்டியத்தின் ஆழ்ந்த மரபு வத களின் தரிசனங்களை அடியொற்றி புதிய அ. உருப்படிகளை உருவாக்கியமை முதலி | யவை ஐயர் அவர்களின் அழகியல் ஆக்க | மலர்ச்சியின் பதிவுகளாக அமைந்தன. து. அபூர்வ இராகங்களிலே அவர் உருவாக் கள் கிய கீர்தனைகளும், கலை வளத்தோடு கள் அவர் புனைந்த நாட்டிய நாடகங்களும் அ இந்நாட்டின் மண் வாசனையுடன் கலந்த ஆ
அழகியற் கோலங்களாக அமைந்தன.
மு
ஐ.
கலை வளம் மிக்க இணுவில் கிராமத் தின் அழகியற் சூழலும், தெய்வீக இங்கி நா தமும், வைதீக வழிபாட்டுடன் இணைந்த அ குடும்பப் பின்புலமும், இசையாட்சி கொண்ட தந்தையாரின் ஆற்றுப்படுத் தலும் ஐயர் அவர்களின் கலையெழுச் ஆ சிக்குப் பின்புலமாக அமைந்தன. இணு வில் சைவ மகாஜன வித்தியாசாலையிலும் வி உடுவில் மான்ஸ் ஆங்கிலப் பாடசாலை யிலும் கல்வி கற்ற அவர், தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும் மொழிகளிலும் ஆற்றல்மிக்கவராக மேலெ
முந்தார்.
படு
இர
வி
இIE
தி
அs
அவரது தந்தையார் பிரமஸ்ரீ ம.த.நட
ரா. ராஜ ஐயர் இசையை வரன்முறையாகக் கற்றவர். ஒரு சிறந்த வயலின் கலைஞர்.
மு இசைக்கும் விஞ்ஞானத்துக்குமுள்ள
கெ தொடர்புகளை நன்கு விளங்கிக் கொண்
தம் டவர். அதேவேளை அந்தணர்கள் மத்தி அ யிலே முற்போக்குச் சிந்தனைகளை தம்
இணுவில் ஒலி ---

ാകാംക്ഷാ ரியில் உலாவந்த இணுவை வீரமணி ஐயர்
- பேராசிரியர் சபா ஜெயராசா
ளர்த்து வந்தவர். மரபு வழியான சமஸ் நதக் கல்வியுடன் விஞ்ஞானத்தையும் ற்றுக் கொள்ளவேண்டியதன் முக்கி த்துவத்தையும் வலியுறுத்திய அவர் ஞ்ஞானத்துறையிலே பட்டம் பெறு தற்கு வீரமணி ஐயரை தமிழகத்துக்கு
னுப்பினார்.
சென்னையிலுள்ள கலாஷேத்திரத் க்குச் சென்ற வீரமணி ஐயர் விஞ்ஞானக் ல்வியை மறந்து, முற்றிலும் அழகியற் ல்விக்குள் அமிழ்ந்திக் கொண்டார். தனோடு இணைந்த வகையிலே பங்கிலம், தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு
தலாம்மொழிகளையும் கற்கலானார்.
கலாஷேத்திரத்தில் அவருக்குரிய பரத ட்டியப் பாடத்தை ருக்மிணிதேவி ம்மையார் தொடக்கி வைத்தார். யரோடு இணைந்து நாட்டியம் கற்ற திதொருமாணவர் புகழ் பெற்ற ஆடல் சிரியர் அடையாறு லட்சுமணன் ஆவார். ரண்டு ஆண் மாணவர்களும் அதீத நப்புடன் பரத நாட்டியத்தின் அறிமுறை பரங்களையும் ஆற்றுகை நுட்பங்க ளயும் கற்றுக்கொண்டனர்.
தமிழ்த் தியாகராஜர் என்று குறிப்பிடப் ம் பாபநாசம் சிவன் அவர்கள் அக்காலத் லே கலாஷேத்திரத்தின் இசையாசிரிய கப் பணியாற்றிக் கொண்டிருந்தார். வரிடத்துக் கர்நாடக இசையை வரன் றையாக வீரமணி ஐயர் கற்றுக் காண்டார். பாபநாசம் சிவன் அவர்களது பிழ்க் கீர்த்தனைகளின் உச்சங்களை னுபவித்த ஐயர் அவர்கள் தாமும் ழிலே கீர்த்தனைகளை எழுத வேண்
07

Page 6
டும் என்ற உற்சாகத்துக்கு உந்தப்பட்டார். அந்த வகையில் அவர் மயிலைக் கற்பகாம் பாளுக்குச் சமர்ப்பணமாக “கற்பகவல்லி” என்று தொடங் கும் கீர்த்தனையை முதலில் எழுதினார். அந்தக் கீர்தனையை செளந்தரராஜன் அவர்கள் பாட ஹிஸ் மாஸ்டேர்ஸ்வைஸ் நிறுவனம் இசைத் தட்டாக வெளியிட்டது. அக்காலத்தில் அதிக அளவு விற்பனையாகிய இசைத் தட்டாக அது அமைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கலாஷேத்திரத்தின் கல்விச் சூழல் நாட்டிய நாடகங்களை எழுதும் முயற்சி களுக்கு ஐயருக்கு உற்சாகத்தை வழங்கி யது. ரூசிய நாட்டின் பலே நடன ஆக்கங் களை நேரிலே பார்த்து அனுபவித்த ருக்மிணி தேவி அம்மையார் பரத நாட்டி யத்தை அடியொற்றிய கதை சொல்லும் பரிசோதனை ஆக்கங்களை மேற்கொள்ள லானார். அந்த வகையில் அவர் குறவஞ்சி நாட்டிய நாடகங்களைத் தயாரித்தார்.
கோயில்களிலே ஆடப்பெற்ற திருச் சதிர் என்ற ஆடலுக்கு இந்திய சுதந்திரப் போராட்ட காலத்திலே ஈ.கிருஷ்ண ஐயரின் முயற்சியினால் பரத நாட்டியம் என்ற பெயர் சூடப்பெற்றது. அதனோடு இணைந்த சமாந்தர நடவடிக்கையாக" ஆலயங்களில் மட்டுமன்றி அரங்குகளி லும் ஆடும் நிலையை அது பெற்றுக் கொண்டது. அரங்குகளில் ஆற்றுகை செய்யப்படத்தக்க பொருத்தமான ஆடல் வடிவமாக நாட்டிய நாடகம் உருவாக்கம் பெற்றது.
அத்தகைய வளர்ச்சிகளைத் தெளி வாகப் புலக்காட்சி கொண்டு உள்வாங்கிய வீரமணி ஐயர் அவர்கள் நாட்டிய நாடகப் பிரதிகளை உருவாக்கலானார். தொன்மக் கதைகள், இலக்கியக்கதைகள், தனியாள் வரலாறு முதலியவை மட்டுமன்றி தாம் வாழ்ந்த காலத்துச் சம்பவங்களை அடி
இணுவில் ஒலி -----

யொற்றிய நாட்டிய நாடகப் பிரதிகளையும் ஆக்கம் செய்தார். தமிழில் மிகக்கூடு தலான அளவு நாட்டிய நாடகங்கள்
அவரால் எழுதப் பெற்றன.
கலாஷேத்திரத்திலிருந்து தமது கல்வி யை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய வீரமணி ஐயர் நடன ஆசிரியராகவும், பின்னர் ஆசிரிய கலாசாலைகளில் விரிவுரையாளராகவும், பல்கலைக்கழக வருகை விரிவுரையாளராகவும் கடமை யாற்றினார். அக்காலத்தில் அவர் "ஆடல் இயற்றலியல்” (CHOREOGRAPHY) என்ற துறையைச் செழுமைபெற முன்னெடுத் தார். அத்துறையில் மேலைப் புலத்தில் நிகழ்ந்த பரிசோதனைகளைத் தமது ஆங்கில மொழிப்புலமை காரணமாக வாசித்துத் தெரிந்து கொண்டார். அசைவு கள், அசைவுகளின் தொடர்கள், அடைவு கள், சாதாரண உடலசைவுகளை அழகி யல் சார்ந்த அசைவுகளாக நிலை மாற்று தல், முத்திரைகளின் பிரயோகம், பாவங் கள், உடல்மொழி, என்ற அனைத்தையும் உள்ளடக்கிய அதேவேளை பரத நாட்டிய மரபிலும் தளத்திலும் நின்று ஆடல் இயற்றல்களை மேற்கொண்டார்.
மீனவர் வாழ்க்கையைச் சித்தரிக்கும் “மீனு வாங்கலையோ” என்ற தலைப் பிலான ஆடற்காட்சிகளை இலங்கையின் சுதந்திர தின நிகழ்ச்சியில் இணுவில் சைவமகாஜன வித்தியாசாலை அரங்கிலே மேடையேற்றினார். 1950ஆம் ஆண்டு அந்த நிகழ்ச்சி இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து பல பாடசாலைகள் ஐயர் அவர் களின் உதவியைப் பெற்று ஆடல் ஆங்கங் களை மேடை யேற்றின.
ஐயரின் முக்கியமான கலைப் பங்களிப்பு இலங்கையின் மண்வாசனையைக் கீர்த்த னைகளில் உள்ளடக்கி ஆடல்களில் வெளிக்கொண்டு வந்தமையாகும். மட்டக் களப்பு வாவியில் உள்ள மீன்களைத் தூது
------ 04
"[04

Page 7
விடும் வகையில் அவர் உருவாக்கிய பாட 6 லும் ஆடலும் “மட்டுநகர் வாவியிலே | கொட்டமிடும் மீன் இனங்காள்" என்ற தொடக்க அடி யோடு ஆரம்பமாகின்றது.
3 4 2 2 - தி, 1
நல்லூர், சுட்டிபுரம், கோணேஸ்வரம், கேதீஸ்வரம், மாவிட்டபுரம், கீரிமலை, திருகோணமலை, இணுவில், சிலாபம், கொக்குவில், கண்டி, மானிப்பாய், பருத்தித் துறை, மட்டக்களப்பு, செல்வச்சந்நிதி, நயினை, வடக்கம்பரை, காரைநகர், முத லாம் இடங்களின் நுண் பண்பாட்டுச் சூழலையும், அங்கு எழுந்தருளியிருக்கும் தெய்வங்களை அடியொற்றிய கீர்த்தனை களையும் ஊஞ்சற் பாக்களையும் ஐயர் எழுதினார்.
மகாராஜபுரம் சந்தானம் அவர்கள் இணுவில் மருதனார் மடத்து இராமநாதன் | இசைக்கல்லூரியிலே பேராசிரியராகக் கடமையாற்றியவேளை ஐயரின் கீர்த்தனை " களை அரங்குகளிலேபாடி ஆற்றுகை நிலையில் வலுவூட்டினார். இலங்கைக்கு வந்திருந்த சீர்காழி கோவிந்தராஜன், மதுரைச்சோமு, ரதா ஜெயலட்சுமி முதலி ; யோரும் ஐயரின் கீர்த்தனைகளின் இசை யாளுமை வெளிப்படப் பாடினர்.
* * E GS 1= 1, அ E F 1= 2 E =
கர்நாடக இசையின் வெளிப்பாட்டு க வடிவில் கீர்த்தனை மற்றும் கிருதி ஆகி யவை சிறப்பார்ந்த இடத்தைப் பெறு கின்றன. இராகக் கட்டுமானம், தாளக் கட்டுமானம் ஆகியவற்றோடு இணைந்த சொல்லடுக்கு முறைமை ஆகியவை அந்த அமைப்பிலே முக்கியத்துவம் பெறு கின்றன. தியாகராஜ சுவாமிகள் பேச்சு - வழக்கில் உள்ள தெலுங்குச்சொற்களைத் தமது ஆக்கங்களிலே பயன்படுத்தியமை Y போன்று வீரமணி ஐயரும் பேச்சு வழக் கினைத் தமது ஆக்கங்களிலே எடுத் தாண்டார்.
3 4 5) 3 4 5 " - 5 4
ஐயரிடத்து ஆழ்ந்திருந்த சமஸ்கிருத | இணுவில் ஒலி

மொழியறிவும், தமிழறிவும் கீர்த்தனை களுக்குரிய சொல்லடுக்கில் இராகங்களுக் தரிய இசைச் செழுமையைச் செவ்விதாக முன்னெடுப்பதற்கு உதவின. எடுத்துக் காட் டாக நாட்டைக்குறிஞ்சி இராகத்திலும் ஆதி காளத்திலும் அவர் அமைத்த கீர்த்தனை ஒன்றின் பல்லவி வருமாறு:
"நவரஸ் நாயகி சிவனை அடைந்தகதை மதுரஸமானதடி -சகியே சிருங்கார, பீபத்ஸ, பயானக, ஆச்சார்ய ஹாஸ்யா, வீர, கோப, சாந்தா, கருணா
(நவரஸ்)
நவரஸங்களை வெளியிடும் வகையில் எழுதப்பெற்ற அந்தக் கீர்த்தனை பரத காட்டிய ஆற்றுகைக்கு மிகவும் பொருத்த மாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கீர்த்தனைகள் பெரும்பாலும் அருவ திலைச் சிந்தனையுடன் இணைந்த பக்திப் பரவச மேலெழுச்சி இசையுடன் தொடர்பு பட்டிருக்கும். அவற்றுக்கு உருவ ஆட்சி கொடுக்கும் அழகியல் முயற் சியின் வடிவமாகப் பரதநாட்டிய அமைப்பியல் அமைந் து ள் ளது. அதாவது அருவ நிலையான அல்லது சூட்சும நிலையான இசை எண்ணக்கருக்களுக்கு காட்சி நிலை பான உருவ அடையாளங்களின் பதிவு களை பரத நாட்டியம் உருவாக்கிக் கொடுக் கின்றது.
பரதநாட்டிய அழகியல் இரஸக் கோட் சாட்டுடன் தொடர்புடையது. நவரஸங் களை அழகியல் நிலையிலே புலப்படுத் தெல் பரநாட்டிய ஆக்கத்தின் சிறப்பார்ந்த பரிமாணமாகவுள்ளது. அனைத்து இரஸங் களையும் ஒரே கீர்த்தனையின் வாயிலாக வெளிப் படுத்தும் நுட்பவியலை ஐயர் அவர்கள் மேற்குறித்த கீர்த்தனையிலே பயன்படுத்தியுள்ளார்.
ஆலயங்களிலும், பாடசாலைகளிலும், விழாக்களிலும் திடீரென ஏற்படும் தேவை கருதி உடனடியாகக் கீர்த்தனையாக்கம்
--டதுசன நூலகம்
பாழ்ப்பாணம்.

Page 8
செய்யும் திறனும் பாடலாக்கம் செய்யும் ஆற்றலும் அவருக்கு இருந்தது. அவ்வாறு இணக்கல் (IMPROVISATION) செய்யும் திறன் உள்ளத்தின் பாடல் நிலைப்பட்ட அறிகைத் தளத்துடன் தொடர்புடையது. உடனடியாக இழைத்து எழுதுதல் மட்டு மன்றி இராக சுத்தத்துடன் அக்கணத்தி லேயே ஆற்றுகை செய்யும் திறனும் அவருக்கு இருந்தது. 1964 ஆம் ஆண்டிலே பேராதனைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்க்கலை விழாவில் ஐயர் அவர்கள் மேற்கொண்ட அந்த முயற்சியை பேரா சிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்கள் நேர டியாகப் பாராட்டியதுடன் யாழ்ப்பாணப் பேச்சு மொழியை பாடலில் எடுத்தாண்ட சிறப்பைச் சுட்டிக்காட்டி விதந்ததாகச் சொல்லப்படுகின்றது.
ஐயர் அவர்கள் மேற்கொண்ட முயற்சி களில் மிகமுக்கியமானது சௌந்தர்ய லஹரியைத் தமிழ்க் கீர்த்தனை வடிவிலே தந்தமையாகும். பதினாறாம் நூற்றாண்டு முதல் சௌந்தர்ய லஹரியைத் தழுவித் தமிழிற் பாடல் புனையும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெண் தெய்வ வழிபாட்டுடன் இணைந்த பக்தி மொழியுடனும், இசைப் பரவசத்துடனும் பரிணாம வளர்ச்சி கொண்டு சமஸ்கிருத மொழியில் மேலெழுந்த ஆக்கமாக செளந்தர்ய லஹரி அமைந்துள்ளது. செளந்தர்யம் என்பது அழகு, லஹரி என்பது அலை. செளந்தர்ய லஹரி என்பது அழகின் அலையாகக்கொள்ளப்படும்.
யாழ்ப்பாணத்துப் புத்தூரைச் சேர்ந்த பண்டிதர் சுப்பிரமணியம் என்பவர் சௌந் தர்ய லஹரியைக் கடந்த நூற்றாண்டில் தமிழ் மொழியாக்கம் செய்தார். ஆனால் வீரமணிஐயர் அவர்கள் அவற்றைத் தமிழ்க் கீர்த்தனை வடிவிலே ஆக்கம் செய்தார். பக்தியும் இசையும் கலந்த அந்தக் கீர்த்தனைகளில் அருள்நிலை இலட்சிய வியல் (MYTHICALDEALISM) சார்ந்த படிமங்
இணுவில் ஒலி

களின் வெளிப்பாடுகளைக் காணமுடியும்.
வகை மாதிரிக்குப் பின்வரும் கீர்த்தனை யைச் சுட்டிக்காட்டலாம்.
ஸ்ரீதேவியின் வாக்குவன்மை
இராகம்:காம்போதி
தாளம்: ஆதி
பல்லவி வீணாகானத்திலும் இனிக்கும்வாக்கு -
வாணியினர் வீணையிசை மாந்தித்தேவி " ஆஹா" எனச்
- சொல்வது
அநுபல்லவி கானமிர்த வீணையிலே கபாலியின்புகழ்கேட்டு தேனாமிர்த இசைபருகும் தேவியின் ரஸனை
= வார்த்தை
சரணம் பரமனின் புகழ்பாடி பாட்டொலிவாணிசெய்தே
விரல்தடவிமீட்டும் விபஞ்சியும் நாணம்கொள்ள ஸரஸ்வதி வீணையைஉறையினால் மூடினாள் பரதேவிஉன்வாக்கு அதிமதுரம் அன்றோ.
கானப் ரியாதேவி கண்ணகாபரமேஸ்வரி மோன இணுவைவட்டு வினிக்காயத்திரிபீட
ஞான தர்மஸாஸ்தா குருகுல நிவாஸினி ஆனந்த ரூபியே அம்புஜப் பதம் சரணம்.
வீரமணி ஐயரின் சிறப்பார்ந்த இசைப் பங்களிப்பாகக் கருதத்தக்கது எழுபத்து இரண்டு மேளகர்த்தா இராகங்களிலும் கீர்த்தனைகளை வடிவமைத்தமையாகும். தமிழிசை மரபிலிருந்தே மேளகர்த்தா என்ற கருத்துருவாக்கம் தோற்றம் பெற்றது. பெரும் பண்ணின் தொகுதிக்குப் பிற் காலத்தில் மேளகர்த்தா என்று பெய ரிட்டனர். மேளம் என்ற சொல்லின் பொருள் கூட்டம் அல்லது சேர்க்கை என்ப தாகும். "மேளம் கட்டல்” என்ற தொடர் யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கில் காணப் படுதல் குறிப்பிடத்தக்கது.
வேங்கடமகி அவர்கள் தாம் எழுதிய “சதுர்தண்டிப் பிரகாசிகை” என்ற நூலிலே 72 மேளகர்த்தா பற்றிய கருத்துக்களை வெளியிட்டார், அவருக்குப் பின்னர்
தி

Page 9
கோவிந்தாச்சாரியார் “கனகாங்கி இரத் ப தினாங்கிப் பட்டியல்” என்பதை உருவாக் வ கினார்.
இசையில் விதந்து பேசப்படும் 72 மேள பி கர்த்தா இராகங்களிலும் கீர்த்தனைகளை வ இயற்றி ஒரு விளக்கநூலை ஐயர் அவர்கள் வ வெளியிட்டதுடன் அவற்றை ஆற்றுகை ஸ் செய்வதற்குரிய நடவடிக்கைகளையும் வ
முன்னெடுத்தார்.
இ ஒ க க த ஒ த (E
இசை மற்றும் பரதநாட்டியத்துறை களில் அவர் ஒரு வினைப்பாட்டாளராகச் (ACTIVIST) செயற்பட்டார். பாடசாலை களிலும், ஆசிரிய கலாசாலைகளிலும் 6 பரதநாட்டியத்தை ஒரு பாட நெறியாக்க கி வினைப்பட்டவர்களுள் ஐயரும் ஒரு வராவர். அவற்றுக்கான பாடத்திட்டங் களை உருவாக்குவதிலும் அவர் பங்கு எ கொண்டார். யாழ்ப்பாணப் பல்கலைக் உ கழகத்து இராமநாதன் நுண்கலைத் வ துறையில் இசை நடனத் துறைகளிலே ம பட்டப் படிப்புக்களை ஆரம்பிக்கும் முயற்சி 6 ஏற்பட்டவேளை இக் கட்டுரை ஆசிரியரே அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றி ருந்தார். அவ்வேளை பரத நாட்டியப் பு பட்டப் படிப்புக்குரிய அறிமுறை செய்யும் முறை முதலாம் பாடத்திட்டங்களை உருவாக்குவதற்கு ஐயரின் பங்களிப்பும் சிறந்ததாக அமைந்தமையைச் சுட்டிக் காட்ட வேண்டும்.
= 2 ( 17 உ .
ஐயர் அவர்களின் இசை நடனப் படைப் பாற்றலை பேராசிரியர் சாம்பமூர்த்தி, டைகர் வரதாச்சாரியார், பாபநாசம் சிவன், ஸ்ரீமதி ருக்மிணிதேவி, மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், கவியோகி சுத்தானந்த பாரதியார், மகாவித்துவான் ஸ்ரீ கணே சையர், கி.வா.ஜகந்நாதன், வழுவூர் ராமையாபிள்ளை, எஸ்.பாலச்சந்தர், எம்.டி.ராமநாதன், முசுரி சுப்பிரமணியஐயர் முதலியோர் வாழ்த்தியுள்ளனர். யாழ்
இணுவில் ஒலி

ல்கலைக்கழகமும் அவருக்குக் கெளர பப் பட்டத்தை வழங்கியது.
நாட்டிய கலாகேசரி வழுவூர் ராமையா பிள்ளை அவர்கள் 1956ஆம் ஆண்டில் பீரமணி ஐயர் பற்றி எழுதிய வரிகள் பருமாறு. "யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரீ என்.வீரமணி அவர்கள் தமது 25வது பயதில் கலையின் தேர்சியடைந்து கலா "தவியின் அருளால் கவிதாசக்தியும் பாய்ந்து எழுதியிருக்கும் திருமயிலைக் தறவஞ்சி என்னும் நாட்டிய நாடகமும், சிருங்கார பதங்களும் பக்தி பூர்வமான ர்ேத்தனைகளும் பார்த்தேன்; பாடவும் "கட்டேன்; மிகவும் திருப்திகரமாக இருக் றெது.” (வீரமணிஐயர், 1996)
வர்ணம், பதம், கீர்த்தனம், தில்லானா, என்றவாறு கச்சேரி அமைப்பின் அனைத்து உறுப்புக்களுக்குமுரிய பாவடிவங்களை பீரமணி ஐயர் எழுதினார். அவரின் ஆக்க மலர்ச்சி அத்தனை விரிவும் செழுமையும் கொண்டதாக அமைந்தது. அவரின் கலை பாழ்க்கை இந்நாட்டில் நிகழ்ந்த இசை -டனக்கல்வி வளர்ச்சியின் செய்தியாகவும் "திய சாகித்தியங்களின் பிரவாகத்தை பிபரிக்கும் கவின்கலை மொழிவாகவு முள்ளது. *
இணுவில் ஒலி - சந்தா விபரம்
கனிப்பிரதி - ரூபா 50/= ஒரு வருடச் சந்தா - ரூபா 500/= (அஞ்சல் செலவுடன்) வெளிநாடு - $25(U.S.) உங்கள் 'இணுவில் ஒலி'யின் வளர்ச்சிக்குச் சந்தாதாரர் களாகச் சேர்ந்து ஆதரவு நல்லுங்கள்.
தரடப்பு:- 5.சிவசுப்பிரமணியம்,
-21, நெல்சன் பிளேஸ், காழும்பு -06 இலங்கை
தா.இல: 0114902406
0718676482
சி.சரவணபவன், 47, கருணாகரப் பிள்ளையார் விதி, களந்தாரி கோவிலடி, கறுவில் கிழக்கு சுன்னாகம். ஆலங்கை, தொ.கல: 07 3126802
07

Page 10
*
கிறுக்கிக்
கவிதை
பறவைகளில் அன்னம்போல், பன்மலரில் தாமரைபோல் துறைநகரப் பட்டினத்துள் தொல்பூம் புகார்நகரே! காவிரிக்குங் காவிரியாள் கடல்முகத்துக் கழிகளெலாம் பூவிரிக்குங் காவிரிப்பூம் பட்டினத்தில் அன்றொருநாள்! ஏரோடு வித்தின்பம் எழில்குவிக்கும் இந்திரற்கு நீராடு விப்பந்நாள்! நிலம்நெளிய விழவர்கள்!
புகழ்குவித்த போர்மறவர் அங்காடிப் பூதம்முன் இகழ்வின்னல் இன்றாக மன்னவனுக் கென்றுதலை கொய்தெடுத்து வைக்குமுயிர்க் கொடைகண்டீர்! நாடோங்கச் செய்தசெயல் மறங்கண்டு தெருவெல்லாம் ஆர்ப்பொலிகள்! பசிபிணிகள் நீங்கிடுக! பகையொழிந்து சோணாட்டில் வசிவளன்கள் மல்கென்று மறக்குலத்து மங்கையர்கள் மலர் மடைகள் தந்தேத்தி வணங்குகின்ற பொதுநோக்கில் நிலம்புரக்கும் தாய்மையுளம் நிரம்பிநின்று நெஞ்சள்ளும்!
எண்பேரா யம்ஐந்து பெருங்குழுவின் எண்ணம்போல் கண்போலத் தமிழ்நாடு காக்கின்றார், தனியுரிமை
முடியாட்சிக் காலத்தும் முன்னோடும் பெருமையுடன் குடியாட்சிப் பண்புகளும் குலவிநின்ற மூவேந்தர்!
கூத்தழகு பாட்டினிமை குலவும் புகார் மறுகில் மூத்ததமிழ் இன்கலைகள் முறுவலிப்பில் இன்பமழை!
நுழைபுலத்தார் கூர்க்கின்ற நுண்ணறிவால் பேரறிவுப் பிழையகலப் பேசிடவே நிற்கின்றார்! கொடி கொண்டார்!
அரிசியெனும் தமிழினிதாய் அருங்குதலை யவனரிடம் அறெசெயெனும் தமிழான அச்சிரிப்பின் ஒலிகேளீர்!
ஓயாத நீர்ப்பொன்னி உறங்காப் புகார் நகரம் பாயாடு பல்கப்பற் படைகண் டுளங்குளிரும் சாயாத கொங்கைமலர்த் தடங்கண்ணார் குழுமலிந்த வேயாத மாடநிரை வீதியெலாம் இன்பஅலை!
சேலோடும் நீருடனே தேனோடும் பழனத்தால் பாலோடுந் தேனேங்கும் பரந்தோட வைக்குங்கை ஏராளர் மன்னவனுக் கிணையாய்ப்பட் டினப்பாக்கத் தேரோடும் வீதிகளில் திருமலிந்து வாழ்கின்றார்!
இணுவில் ஒலி

கேன்
இந்தச் செயல்?
" - கவிஞர் சு. வே. பஞ்சாட்சரம்
கடல்தோய்ந்த கைப்பாலே காவிரிநீர்த் தேனாடி உடல்தோய்ந்த இனிமையுடன் ஒடுங்கிடையார் காளையரின் இதழ்தோய்ந்து மெய்குளிரும் காட்சியிதோ எக்கரிலே! சிதறுமணல் கால்சிந்தத் திரிந்திளையோர் உறவாடும் கைதைநறுங் கானலிலே கைதழுவுங் காதலர்கள் பொய்தழுவாப் புகழாட்சி புனைந்தகவின் ஓவியங்கள்!
புலிபொறித்த பண்டங்கள் பொதியிமயம் துள்ளுமறி கிலிபிடித்துப் பாய்சரக்கின் கிடங்கெல்லாம் மலைதெரியும்
வடவர்கள் திறையளிக்க மாவளத்தான் ஆழிமுகத் | திடல்முன்னே எடுத்ததிருச் சித்திரமண் டபம் அருகில்
பன்னாட்டுப் பண்டங்கள், பண்பாடு, நல்மணங்கள், பன்னாட்டுக் கப்பல்கள் வணிபத்தார் பயில்நகரம் தென்னவரின் செங்கோலின் பண்புரைக்கும் சின்னங்கள் பொன்மலையைச் சிறுகறையான் புற்றாக்க வந்தவராய் ஓரினத்தை ஓயாத உட்பகையால் பொருதழித்த சீரழிவு தீர்ந்தின்று திகழ்கின்றார் மூவேந்தர்! பிற்காலச் சந்ததிக்குப் பெருமெடுத்துக் காட்டமைக்கும் பொற்காலம்! இன்பமுடன் பொலிவெங்கும் தமிழ்நாட்டில்
குழையாத கொங்கையெனும் கொடுமலையார் கவின்களினால் விழையாத “ நோய்” ஊடல் விளைக்கப் பெருந்தேவி வளையாத செங்கோலை வளைத்திறந்த பாண்டியனும், வளையாத செங்கோலும் வளைந்திடவே தானிறந்த | நெறிகடந்த குோவலனும், நிறைபொதுவென் றாடவர்க்கும் அறிவுறுத்தும் ஆயிரங்கண் இந்திரர்கள் ஆகிடவும்..! மனம்பொய்யில் கற்புடைய மாமணியாள் கார்முகிலின் இனம்பெய்யச் செயுங்கோயில் எழில்வன்மைக் கண்ணகியாள் கறைமிஞ்சும் பண்புடையார் கணக்கில்லா திருந்திடினும் நிறைகொஞ்சும் ஒருவர்முன் நீறென் றறைந்திடவும்..!
வில்சுமந்த கொடிவேந்தன் வீரம் தனக்கஞ்சிக் கல்சுமந்தார் கண்ணகிக்கு, தமிழ்பழித்த ஆரியர்கள்! கல்சுமந்த ஆரியரின் கதைதமிழை இகழ்வோர்க்கு நல்குமெழிற் பாடமினி! நடக்கவிந்த நல்நிகழ்ச்சி காலான கானல்வரி கூடாரத் தங்கிருந்து மேலே மிதந்தெழுந்து வருகிறதே காற்றினிலே!
08

Page 11
பொன்னொதுக்கிப் பூப்பரந்து பொங்கிவரும்
பொன்னியெலாம் தென்னிலத்தின் பூமரக்கா தீட்டிவிட்ட பட்டோலை! மஞ்சளிஞ்சி செங்கரும்பு மைந்தரின்ப மெல்லடிகள் கொஞ்சிவருங் காவிரித்தாய் கூட்டிவிட்ட பல்வளத்தை மன்றமைந்தின் முன்பரப்பும் வண்ணமடைப் பலிகளிலே, குன்றமைந்த கூலமணிக் குலமருவூர்ப் பாக்கத்தில், பொன்னடிக்கும் ஆர்ப்பினிலே போய்ப்புதைய மற்றொலிகள் மின்னெறிக்கும் மணிமுத்தில் வெயில்மாளுந்
தண்ணொளியில், தொழில்வளங்கள் மிஞ்சுதலில் சொர்க்கமடா இதுவென்னும் எழில்வளங்கள் மிஞ்சிமிடை இடம்நெருங்கு கடைகளிலே, சந்தனமும் காரகிலும் தண்மணங்கள் பொங்கிடினும் செந்தமிழ்நாட் டுண்டி மணம் திகழ்தெருவில்-கண்டிடலாம்.
உலகத்துத் துறைமுகங்கள் ஒன்றல்லப் பலவற்றில் நிலைபெற்ற நெறிமுறைகள் நின்று நின்று கண்டகன்றும் ஊரெல்லாம் ஊரெ! இவ் வுலகெல்லாம் ஒன்றென்னும் பேரெல்லை நெஞ்சத்தார் பெரும்பண்பு கண்டதிலோ சரக்கேற்றி வருகின்ற சவ்வனத்துக் கப்பலெலாம் | நிரைக்கிங்கே நின்றாடும் நிலையாய்ப் புகார்த்துறையில்? సారొసారియోసాగిసారొసారొసాఊఊఊడి
உண்மையான வாத்தியார்
பிரம்பில்லாமல் பாடம் சொல்லித்தரும் வாத்திய வருகின்றார். அவர் சொல்லித் தருவதற்குச் ச போகும் போது அவர் தூங்காமல் நமக்காக விழி தேவையாக இருக்கும் சமயம் கண் மறைவா அவருக்கு நாம் தப்புச் செய்தாலும் கடிந்து ஓ தெரியாத சுத்த அசமந்தமாக இருந்தாலும் இப்பேர்ப்பட்ட தங்கமான வாத்தியாரை எப்படி வேறுயாருமில்லை, புத்தகம்.
ஈகரைசர்லாசம்
முகப்பு அட்டைவ
> ஸ்ரீ பரர > காரைக் > சிவகாம்
> கந்தகம் ஆகிய வரலாற்று எழில்மிகு தோற்
ஒரு "
இணுவில் ஒலி -

குடமலையில் தோன்றிமெலக் குதித்துக் குழைந்தோடித் 5டவயலில், பொன்மயிலார் சதுராடும் நீர்த்துறையில், மடைகளிலே, மள்ளர் மதகுகளில், கனிகிழங்கு அடகருந்து தூயவரின் அறப்பள்ளிச் சோலைகளில், கன்னிநறுந் தமிழென்னுங் கவின்தேறல் மாந்தியவள் பொன்னியெனுந் திருக்குமரி புகாரில் பலநாட்டார் கத்துமொழி தாங்காமல் கடலில் இருசெவியும் பொத்திவந்து குதிப்பாளோ? அன்றேல் பொருத்தங்கள் பத்துமினி திருப்பதனால் பான்மையுளங் கூட்டிவிட | மெத்தமனங் கூத்தாட மெய்யொசிந்த பொன்னிமெல
ஆழியிளங் காதலவன் அணைப்பீயுஞ் சுகந்தன்னைக் கூழைநறுங் கனவினிலே குடமலையில் கண்டெழுந்தும் ஒவியப்பூஞ் செழும்பட்டுப் போர்த்துடலில் ஓடிவந்தும் தாவிஅலைக் கைகளிலே தனைமறந்தாள்! தனைமறந்த கிறக்கத்தால் மண்மூடிக் கொடுப்பாளோ பட்டினத்தை? சிறுக்கிக்கேன் இந்தச் செயல்? *
-மாற்றாற்றாற்றாடி
பார் உலகத்தில் ஆதி நாள் முதல் இருந்து சம்பளம் கிடையாது. நாம் அவரை நாடிப் த்துக் கொண்டிருப்பார். அவருடைய தயவு பக ஒளியும் வழக்கம் அவரிடம் இல்லை. ரு வர்த்தை சொல்ல மாட்டார். ஒன்றும் அவனைப் பார்த்து சிரிப்பதில்லை அவர். அலட்சியம் செய்யமுடியும்? வாத்தியார்...
- ரிச்சாட் டிப்யூரி -சபீற்றிற்றற்றாற்றார்
பில்.
ரசசேகரப் பிள்ளையார் கோவில் கோல் சிவன் கோவில் அம்மன் கோவில் பாமி கோவில் துப் பெருமைமிக்க திருத்தலங்களின்
மறம்.
(பு

Page 12
கவலைைைக
இணுவையூர் ம
கல்வி
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு, மாடல்ல மற்றை யவை
- திருக்குறள்
அறிவும் உணர்வும் அகத்தில் வளர் வன. ஆக்கமும் கேடும் இன்பமும் துன்ப மும் நுகர்வதும் தவிர்ப்பதும் இந்த இரண் டையும் பொறுத்தே அமையும். இவ் உணர்வு, அறிவு ஆகிய அக உறுப்புகளை வளர்க்கும்கருவியே கல்வி ஆகும். எனவே அறிவையும் உணர்வையும் வளரச் செய்வதே கல்வியின் பிரதான நோக்க மாகும். இவ் அறிவினை வகுத்து தொகுத்து முறைப்படுத்தித் தருகின்ற பொக்கிஷங் கள் நூல்கள் ஆகும். உணர்வின் கூறுகள் சுவைகளும் மெய்ப்பாடுகளுமாகும். உணர் வுகளை வெளிப்படுத்தவே கலைகள் காவியம், ஓவியம், இயல், இசை, நாடகம்
முதலியன பயிலப்படுகின்றன.
இத்தகைய சிறப்புப் பொருந்திய கல்வி நிலைமைகள் தொடர்பான மாணவர் களின் தற்காலப்பங்கு பற்றிய ஒரு - கருத்தை இணுவில் கிராமத்தை மையமாக கொண்டு சிந்திக்கலாம்.
சகல வளங்களும் பொருந்திய இலங் கைத் திருநாட்டின் சிகரமென விளங்கும் யாழ்ப்பாண மாநகரின் கண்ணே வடக்குத் திசையில் தனக்கென தனிச்சிறப்புடைய எழிலான தோற்றத்துடன் விளங்கும் தொன்மை வரலாறு கொண்ட “இணையிலி” எனப் புகழ் பெறும் இணுவில் கிராமம் திகழ்கிறது.
இணுவில் கிராமம் சைவக் கலை, பண் பாடுகளுக்கும், தமிழ், இயல், இசை, நாடக
இணுவில் ஒலி

மாணவர்களின்
இன்றைய கல்விக்களம்
*- செல்வன் எஸ். ஒதுஷன் யாழ். இந்துக்கல்லூரி மாணவன் துறைகளுக்கும் பெயர் பெற்றது. வேளாண் மையும் இங்கு செழிப்பாக வளர்கிறது. வானளாவ நெடுந்துயர்ந்த கோபுரங் களைக் கொண்ட புகழ்பூத்த புண்ணிய திருத்தலங்கள், கல்விக் கூடங்கள் “பொன்” என பயிர்கள்விளையும் உழவர்நிலங்கள், புராதன கால் விருட்சங்கள் எனச் சகல நிலைகளிலும் இயற்கை வனப்புடன் கம்பீர மாகத் தோற்றமளிக்கும் இக்கிராமம் யாழ்ப் பாண மரபில் பண்பாட்டுச் சின்னமாகும்.
இத்துணை சிறப்பு வாய்ந்த இவ்வூரில் பல கல்விமான்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கலைஞர்கள், எழுத் தாளர்கள் தோன்றி மேலும் பெருமை சேர்த் தார்கள். இன்றும் சேர்த்த வண்ணம் உள் ளார்கள். இறைவனிடமிருந்து பெறுதற் கரிய ஞானத்தை பெற்று முற்றும் உணர்ந்த சித்தர்கள், தவயோகிககள், மகான்கள், குருசிரேஷ்டர்கள், அந்தண உத்தமர்கள் எனப் பலரும் இவ்வூரின் தெய்வீகப் பொலிவை மெருகூட்டி உள்ளார்கள்.
இந்த வகையிலே தான் தனக்கே உரித் தான கல்விப் பாரம்பரியத்தை கொண்ட இணுவில் கிராமத்தில் இன்று பல நூற்றுக் கணக்கான மாணவர்கள் எதிர்காலத்தில் மருத்துவர்களாக, பொறியியலாளர்களாக, நிர்வாக அதிகாரிகளாக, விரிவுரையாளர் களாக, ஆசிரியர்களாக, போதனாசிரியர் களாக வரவேண் டும் என்ற உன்னத நோக்கத்தோடு கல்வி கற்ற வண்ணம் உள்ளார்கள். அவர்களின் கல்வி முதலில் முன்பள்ளி, ஆரம்பப்பள்ளி, இடை நிலைக் கல்வி, உயர்தரம், பல்கலைக் கழகம், பட்டப்படிப்புகள், மேற்படிப்புகள் என்ற வாறாக வியாபித்து இருக்கிறது. இப்
----- 10

Page 13
படிப்புகளுக்கு உறுதுணையாக அவர் களின் குடும்பச்சூழ்நிலைகள், பொரு ளாதார வசதி, புலமைப்பரிசில் வாய்ப்பு கள், கற்றலில் ஆர்வம், போக்கு வரத்து வசதிகள், விளையாட்டு, நூலகம் முதலிய துணையான செயற்பாடுகள் யாவும் சாதகமாக அமையவேண்டும் என்பதே எல்லோரதும் அவா.
தமது மழலைப்பருவத்தில் குதூகலித்து விளையாடும் நான்கு, ஐந்து வயதுக் குழந்தைகளுக்கு அடிப்படை அறிவை புகட்டுகின்ற பல முன்பள்ளிகள் இங்கு இருக்கின்றன. தாய் தந்தையருக்கு அடுத்த படியாக இந்தச் சூழலை அந்தப் பிஞ்சு உள்ளத்தினுள் அறிமுகப்படுத்தும் பல முன்பள்ளி ஆசிரியர்கள் தமது பணி யினை கிரமமாகச் செவ்வனே ஆற்றி
வருகின்றார்கள்.
இக் குழந்தைப் பருவத்திலே தான் மூளையின் கோடிக்கணக்கான நரம்புக் கலங்களின் இணைப்பு மூலம் மூளை வளர்ச்சி நிகழ்கிறது. எதிர்காலத்தில் மாணவர்கள் மொழிவளர்ச்சி, நுண்கலை களின் வளர்ச்சி, சிறந்த ஆளுமை வெளிப் பாடு, இயக்கத்திறன், ஆக்கத்திறன் வெளிப்பாடுகளை வளர்க்க இம்முன் பள்ளிகல்வி அவசியமாகிறது.
குறிப்பாக இணுவில் இளந்தொண்டர் சபை முன்பள்ளி, இணுவில் பொது நூலக முன் பள் ளி, இணுவில் மஞ் சத்தடி விவேகானந்த முன்பள்ளி முதலிய பல சிறுவர் பாடசாலைகள் சீரிய கல்விப்பணி புரிந்து வருவதையாவரும் நன்கறிவர்.
முன்பள்ளிப்பருவம் கழிந்தபின் தரம் 1 தொடக்கம் தரம் 5 வரை ஆரம்பப் பாட சாலைகள் கல்வி போதிக்கின்றன. பிள்ளைகள் சுயசிந்தனை பெறும்வரை அவர்களுக்கு சூழலின் மூலம் அனுபவங் களை பெறுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்
இணுவில் ஒலி

படுகிறது. இது அறியும் பருவம் ஆகையால் பலவற்றை கற்பதற்கும் விளையாட்டு, பேச்சு, நாடகம், வாசிப்பு முதலிய துணை உளவளச் செயற்பாடுகளை மேம்படுத்து வதற்கும் மகிழ்ச்சியை அனுபவிக்கவும் வழிசமைத்துக்கொடுக்கப்படுகிறது.
வறுமைக்கு உட்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கும் பாட சாலைகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மென நடத்தப் படும் புலமைப் பரிசில் பரீட்சையில் தரம் 5 ஐ சேர்ந்த இணுவையூர் மாணவர்கள் பலர் சிறப்பான புள்ளிகளை பெற்றும் அதிவிசேட சித்திபெற்றும் பிறந்த மண்ணுக்கும் பெற்றோருக்கும் கல்விச் சாலைகளுக்கும் பெருமையை சம்பாதித்து கொடுத்துள்ளனர்.
இணுவிற்திருவூரின் கண்ணே இணுவில் இந்துக்கல்லூரி, இணுவில் மத்திய கல்லூரி, இராமநாதன் கல்லூரி முதலிய உயர் கல்விக் கூடங்கள் மாணவர்களின் இடைநிலைக்கல்வி, உயர் கல்வியை போதி க்கும் பாடசாலைகளாக மிளிர்கின்றன,
இலங்கை அரசினால் அரசபாடசாலை களாக பிரகடனப்படுத்தப்பட்டு மாடிக் கட்டடத்தொகுதிகள், வகுப்பறைக் கூடங் கள், விஞ்ஞான ஆய்வு கூடங்கள், தொழிற் கூடங்கள், பிரார்த்தனை மண்டபங்கள், கணினிக் கூடங்கள், சிறப்பான கழிப்பறை வசதிகள், விசாலமான விளையாட்டு மைதானங்கள் என பல்வேறு வகையிலும் சிறப்பான அபிவிருத்தியை கண்டுள்ளன. |
இப்பாடசாலைகளில் ஒட்டு மொத்தமாக 3500 இற்கு மேற்பட்ட மாணவர்களும் 200 இற்கு மேற்பட்ட ஆசிரியர்கள், மற்றும் கல்விசாரா ஊழியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
மாணவர்கள் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சை
--- 11

Page 14
களில் சிறப்பான திறமையை வெளிப் படுத்தி அதிவிசேட சித்திகளை பெற்றுக் கொடுத்துள்ளனர். மேலும், தமிழ்மொழித் தினம், ஆங்கில மொழித்தினம், அகில இலங்கை மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்ச்சிகளில் வலய, மாவட்ட, மாகாண ரீதியிலும் தேசிய மட்டத்திலும் பல சாதனைகளை நிலை நாட்டியதுடன் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பெரும்புகழ் ஈட்டிய வண்ணம் உள்ளனர்.
பலமாணவர்கள் தங்கள் கடின உழைப் பாலும் விடாமுயற்சியாலும் உயர்தரத்தில் சிறப்பான சித்தி பெற்று பல்கலைக்கழக பட்டப்படிப்பை இனிதே நிறைவு செய்து மருத்துவர்களாக, பொறியியலாளர்களாக, உயர் அரச அதிகாரிகளாக, பேராசிரியர் களாக, ஆசிரியர்களாக சீரிய தொழி
லாற்றி இன்று பூரண சந்தோசத்துடனும் மனநிறைவுடனும் உள்ளூரிலும், புலம் பெயர்ந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கள். மருதனார் மடம் நுண்கலைப் பீடம் கர்நாடக சங்கீதம், சித்திரமும் வடிவமைப் பும், ஓவியம், நடனம், பண்ணிசை, மிருதங் கம் உள்ளிட்ட பல அழகியல் கலைகளை போதிக்கும் யாழ். பல்கலைக்கழகத்தின் இணைப்பாக கலைத்துறை மாணவர்க்கு கடலெனப் பெரும்பணி ஆற்றி வரு கின்றது.
எது எப்படி இருப்பினும், இவ்வூரின் புனிதமான நிலத்தில் விளையாடி இவ் வூரின் குளிர்ந்த ஊற்று நீரை அருந்தி இவ்வூரின் சில்லென்ற தென்றல் காற்றை சுவாசித்து இவ் ஊரிலே அரும்பி வெவ் வேறு பிரதேசம் எங்கணும் கிளை பரப்பி பெருவிருட்சமாய் கிளைகொண்ட, இணு வைத்திருவூரின் 'தவமைந்தர்கள்” - நன் மாணாக்கர்கள் அன்றும் இன்றும் என்றும் இவ்வூரின் புனிதத் தன்மை சிறிது பிசகாம லும் சைவசமயப் பண்பாட்டை நெறி தவறாது பேணிவருவதும் இவ்வூருக்கே சிறப்பை தருகிறது. இவ்வூர் மாணவர்
இணுவில் ஒலி

களின் கல்விவரலாற்றில் இணுவில் பொது நூலகம், இணுவில் அறிவாலயம், மரு தனார் மடம் பொது நூலகம் ஆகியன அரும்பணி ஆற்றிவருகின்றன எனின் அது மிகையன்று.
மாணவர்களின் அறிவுப்பசிக்கு பெரு விருந்தாக இந்நூலகங்கள் நூல்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் என பல்வேறு விதமாகக் கற்கவும் வாசிக்கவும், சுயமாக படிப்பதற்கும் பல்வேறு கோணங்களில் பேருதவி புரிந்துள்ளமையை அவற்றின் வாசகர்கள் என்றும் நன்றியுணர்வோடு நினைவு கூருவர்.
மாணவர்கள் தமது கற்றலுடன் நின்று விடாது சங்கீதம், பண்ணிசை, நடனம், நாடகம், வில்லிசை, பேச்சு, மிருதங்கம் முதலிய அழகியற் கலைகளையும் கணினி, இணையம் முதலிய பயன் தருவிடயங் களையும், சமயம் சார்ந்த ஒழுக்க விழுமியங் களையும் இணைபாடவிதானச் செயற்பாடு களில் தம்மை ஈடுபடுத்தி சகலதுறை களிலும் தாம் வல்லவர்கள் என நிரூபித் துள்ளார்கள். இணுவில் கந்தசுவாமி கோவில் இளந்தொண்டர்சபை, இணுவில் திருநெறித் தமிழ்மறைக் கழகம், சைவத் திரு நெறிக்கழகம் முதலிய பல அமைப்பு களில் மாணவர்கள் இணைந்து பயன் பெறு கிறார்கள்.
மாணவர்களின் வினைத்திறன் வாய்ந்த கல்விச்செயற்பாட்டிற்கு உறுதுணையாக அருள் கல்வி நிலையம், எவரெஸ்ற் கல்வி நிலையம், பொருளியல் கல்லூரி, திகழ் கல்வி நிலையம், அகிலா கல்வி நிலையம் ஆகியன தனியார் கல்வி நிலையங்களாக அமைந்துள்ளன. இணுவில் கணினியியல் கல்லூரி, இணுவில் பொதுநூலக கணினிப் பிரிவு ஆகியன கணினிக் கற்கை நெறி களை மாணவர்களுக்கு திறம்பட நடாத்து கின்றன. மேலும் இணுவில் கிழக்கு இளைஞர் சேவை மன்ற கணினிப் பிரிவு

Page 15
முதலியனவும் இதனுள் அடங்கும். தவில், நாதஸ்வரம் முதலியவற்றிலும் இசை வேளாளர் குல மாணவர்கள் பெரும் புகழ் ஈட்டுயுள்ளனர்.
போக்குவரத்து வசதி, மின்சாரவசதி, சிறப்பான அபிவிருத்தி, தாராளமான நிதி வளம், இரம்மியமான சூழல், பெருமனம் படைத்த கொடை வள்ளல்கள் என கல்விக்கு சாதகமான சகல உருப்படி களையும் கொண்ட தன்னிறைவான கிராமமாக இணுவில் இருக்கிறது. போது மான வசதிகளுடன் கூடிய சிறப்பான பல விளையாட்டு மைதானங்களையும் காண முடிகிறது. இத்தகைய வரப்பிரசாதங் களை சீரழிக்காது பேணிப் பாதுகாத்து இவ்வளங்களை சிறப்பாக முகாமை ' செய்து பயன்படுத்தி கல்வியில் பெரும் புக மீட்டி நீடித்திருக்கும் பெருமையை பெறு வது மாணவர்களின் தலையாய கடமை யாகும்.
விஞ்ஞானத்தின் வளர்ச்சியாலும் பல நவீன கண்டுபிடிப்புகளாலும் இன்று “நவநாகரிகம்' என்ற சுழல் காற்றில் எமது சமுதாயம் சிக்குண்டுள்ளது. இன்று படிக் கின்ற மாணவர்களிடையே சில விஷமி களால் புகைப்பிடித்தல், மது அருந்துதல் முதலியன லாவகரமாக புகுத்தப்பட் டுள்ளன. சிறுவர்கள் தொடக்கம் பெரி யோர் வரை பெருமளவான இளைஞர்கள் பலரும் இத்தீய பழக்கத்திற்கு அடிமை யாகி உள்ளனர். இதற்கு நமது ஊரும் விதிவிலக்கல்ல. மேலும் இன்று போதைப் பொருள் பாவனையும் தலைதூக்கி யுள்ளது. மேலும் பெரும்பாலானோர் கைப் பேசி பாவனைக்கு முற்றாக அடிமையாகி விட்டனர். கைப்பேசிகள் வீடுகள், வீதிகள், ஆலயங்கள் என பல இடங்களிலும் எந் நேரமும் “அழுத வண்ணம் உள்ளன. அதி கரித்த தொலைக்காட்சி பார்த்தலும், நீடித்த இணையப்பாவனையும் சாதாரண மாகி விட்டன. ஆலயங்களில் பக்தி
இணுவில் ஒலி

"மெலிந்து விட்டது. இன்றைய சமுதாயம் ஆலய உற்சவங்களை 'கொண் டாடு வதற்கு' எத்தனிக் கிறது. தமிழ்க் கலாசார ரீதியான ஆடைகள் அணிவதை பலரும் மறந்து விட்டார்கள். இத்தனையும் சில ருக்கே பொருந்தும் இன்னும் பலர் "தமிழ் வாழ்வு' வாழ்ந்த வண்ணமும் இருப்பதை நான் மறுக்க வில்லை.
பெற்றோர்களும், மாணவர்களும், சான்றோர்களும் இவ்விடயத்தில் நன்கு அவதானத்துடன் இருத்தல் அவசியம். எங்கள் எதிர்கால மாணவ சமுதாயம் இப் புகழ் பூத்த சீர் இணுவை திருவூரின் கண்ணே எந்தப் பிரச்சினையும் இன்றி பரி பூரணமான இனிய நல்வாழ்வு வாழ்ந்து நன்னெறி பேணி நாற்றிசையும் பரவும் புகழுடன் நிமிர்ந்து நிற்க இன்றைய கால கட்டம் சிறந்த அத்திபாரம் இடல் வேண்டும்.
இல்லை எனில் தமிழக்கலை, கலாசார உறைவிடம் எனத் திகழும் இணுவையூர் மாணவர்களின் கல்வி கேள்விக்குறி ஆகி விடும். எமது கிராமத்தின் சிறப்பை, கல்விப் பாரம்பரியத்தை, சைவப் பண்பாட்டை, தமிழ்க் கலாசாரத்தை என்றும் “பொன்” எனப் பாதகாத்து மாணவர்களாகிய நாம் மதிநுட்பத்துடன் செயற்பட்டு புதிய யுகம் ஒன்று படைத்திடுவோம். “வெற்றி நமதே!'
"கற்கை நன்றேகற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே”
- ஒளவையார்
வாசக நெஞ்சங்களே!
அடுத்த 'இணுவில் ஒலி பல சுவையான அம்சங்களைத் தாங்கி புதுமெருகுடன் வெளிவரவிருக்கின்றது. உங்கள் பிரதியைப் பெற்றுக் கொள்ள எம்மிடம் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
- ஆசிரியர்
1ெ }ாதுசன நூலகம்
---------------- 13

Page 16
பண்பாட்டுப் பாரம்பரியம்|
இன்றைக்கெ
அந்தக் காலத்தில் இணுவிலில் வாழ்ந்த மக்கள் “ இன் றைக் கொரு சோறுண்டு” என தமக்குள்ளே ஒரு செய்தியைப் பரிமாறிக் கொள்வார்கள். இதன் பொருள் என்ன? வழமைக்கு மாறாக அவர்களுக்கு விருந்துச் சாப் பாட்டிற்கு ஒரு அழைப்பு விடுக்கப்பட் டிருக்கிறது. என்பதே அச் செய்தியின் பொருளாகும். அதை ஏன் அவர்கள் “இன்றைக்கொரு சோறுண்டு” எனக் குறிப்பிட வேண்டும் என்பது ஆய்வுக் குரியது.
இணுவிற் பழங்குடியினரது வாழ்வில் அந்தக் காலத்தில் சோறு மதிய போசன மாக என்றுமே இருந்ததில்லை. கிராமத் தில் அத்தி பூத்தாற் போல அரிதாக விசேட நிகழ்வுகள் இடம் பெறுவதுண்டு. அவை கலியாண வைபங்களாக இருக்கலாம். அல்லது வீடு குடிபுகுதல் நிகழ்வாகவோ அன்றி பூம்புப்புனித நீராட்டு விழா வாகத் தானும் அமையலாம். இவ்வைபங் களில் நல்ல பருப்பும் சோறும்பல்வேறு கறிவகை களுடன் அறுசுவை உணவாகப் பரிமாறப் படுவதுண்டு. பகல் உணவாக சோறு பரி மாறப்படுவதென்பது அந்நாட்களில் மிகச் சிறப்பானதோர் அரிய நிகழ்வாகும். இவற் றையே “இன்றைக்கொரு சோறுண்டு” எனப் புதினமாக மக்கள் தமக்குள்ளே கதைத்து செய்தி பரிமாறிக் கொண்டனர். இச்செய்தியின் பின்னணி பற்றி ஆராய்தல் சிறப்புடையது.
பெரும்எடுப்பின்விளைவு
பண்டைக்கால இணுவிற் கிராம மக்கள் அனைவரும் கமக்காரர்களாகவே வாழ்ந் துள்ளனர். இவர்களது கமங்களில் பெரும்
இணுவில் ஒலி

கட்டப்
Tரு சோறுண்டு
காபூைஷணம் செல்லப்பா நடராசா
(மூத்தபத்திரிகையாளர்) எடுப்பில் தினை, குரக்கன், பயறு முதலிய தானியங்கள் விளைவிக்கப்பட்டன, மர வள்ளிக் கிழங்கும் இவர்களது கமங்களில் வருடம் முழுவதும் விளைவிக்கப்படும் மிக முக்கியமானதோர் உணவுப் பொருளாகும். மரவள்ளியுடன் இராசவள்ளி, கொம்பு வள்ளி, சிறு கிழங்கு வகைகளையும் அவர் கள் பணப் பயிராகவும் தமது உணவுத் தேவைகளுக்காகவும் அமோகமாக விளை
வித்தார்கள்.
தன்கையே தனக்குதவி
தன்கையே தனக்குதவி என்ற பெரு மையுடன் வாழ்ந்த சிறப்பியல்பு இணுவில் கிராம மக்களுக்குரியது. இம்மக்கள் வேறொருவரது தயவிலும் வாழ்ந்த வாழ்க்கை வரலாறென்பது சரித்திரத்தி லேயே கிடையது. பகலில் தினை அரிசிச் சாதமே மக்களது பிரதான உணவாக இடம் பிடித்துக்கொண்டது. இரவில் குரக்கன் மாப் பண்டங்ளை ஆகாரமாகக் கொண்டனர். காலையில் மரவள்ளிக் கிழங்கு தினை அரிசித் தோசை அல்லது வள்ளிக் கிழங்கு வகைகளில் ஏதவாது ஒன்றை உணவாகக் கொண்டனர். சுருக்கமாகச் சொல்வ தானால் அன்றைய இணுவில், குடியானவர் கள் அனைவரும் தாம் தத்தமது கமங்களில் விளைவித்த உணவுப் பொருட்களையே தமது உணவாகக் கைக்கொண்டனர். தன் மானத்துடன் வாழ்ந்து காட்டிய பெருமை அவர்களுக்குரியது. வருடம் முழு வதும் முந்நூற்று அறுபத்தைந்து நாட் களில் இரண்டொரு சிறப்பு நிகழ்வுகள் இடம் பெற்றால் அன்றைக்கு மட்டுமே அவர்களுக்கு பருப்பும் சோறும் விருந்துச் சாப்படாகக் கிடைக்கும். "இன்றைக்கொரு
14

Page 17
சோறுண்டு” என்று பேசும் அளவுக்கு க அந்தக் காலத்தல் இணுவிற் கிராம ப மக்களின் வாழ்வியல்புகள் அமைந் ) திருந்தன எனலாம்.
கடின உழைப்பாளிகள்
கிராம மக்கள் அனைவருமே கடின உழைப்பாளிகள் அதிகாலையில் கோழி கூவ முன் துயில் விட்டெழுந்து காலைக் கடன்களை முடித்து நெற்றியில் பட்டை யாக் திருநீற்றை அள்ளிப் பூசிக்கொண்டு பொழுது புலரமுன் தத்தம் கமங்களுக்குச் செல்லும் வாழ்வு அவர்களுடையது. மீண்டும் மாலையில் தான் அதாவது ம பொழுது படத்தான் வீட்டில் வளர்க்கப் படும் பசுக்களுக்கும் ஆடுகளுக்கும் புல்லுக்கட்டுகளுடன் வீடு திரும்புவர். பகற் பொழுதில் தோட்டத்து அட்டாளைகளின் கீழ் மரவள்ளிக் கிழங்கை அவித்துப் புசித்தும் தேநீர் தயாரித்துப் பருகியும் களைப்பாறுபவர்களாகவும் பலர் விளங்கி யுள்ளனர். காலையில் தமக்கு வேண்டிய அணி அடுக்குகளுடன் அனேகமனோர் தூர இடங்களிலுள்ள தத்தமது கமங் களுக்குத் திருக்கல் வண்டிகளிலேயே செல்வதுமுண்டு. இவ்வாறே மாலையில் புல்லுக் கட்டுக்களுடன் வீடுகளுக்குத் திரும்பும் வாழ்வியல்புகளை கொண்டி ருந்தனர்,
த அ இ அ "E F E ஐ ஒ ஓ எ 2 இ க க ,1. ஒ க E #
2 E = 2 E 26 )
சிவபக்தியும் தன்மன உணர்வும்
இம்மக்கட் கூட்டத்தினரிடம் காணப் பட்ட முக்கியமானதொரு பண்பு சிவபக்தி எ யும் தன்மான உணர்வுமேயாகும். முதன் முதலில் கிறிஸ்தவ பாதிரிமார்கள் இணு வில் பக்கம் வந்து தமது மத பிரசாரங்களை மேற் கொண் ட போதும் ஒரே ஒரு இணுவில் மகனை தன்னும் தம்பக்கம் சேர்க்க முடியாது படுதோல்வியடைந் தனர் என்பது வரலாறாகும். பணத்திற்கோ பண்டத்திற்கோ அல்லது வேறு சுக போகங்களிற்கோ ஆசைப்பட்டவர்கள் அல்லது ஆசைப்படுபவர்கள் நாங்
இணுவில் ஒலி

களல்லர் என்று நிரூபித்த பெருமை சண்டைக் காலத்தில் வாழ்ந்த இணுவிற் கிராம மக்களுக்குரியது. தமது பிரசாரங்கள் ஊக்குவிப்பு முறைகள் அனைத்திலும் அன்று அறவே தோற்றுப் போனதாக கிறிஸ்தவ பாதிரிமார்கள் கூறினார்களாம். இலந்தை முள்ளைத் திருத்தினாலும் இணு விலானைத் திருத்த முடியாது' என்பதாகும். இக் கூற்றுானது வசை மொழியன்று, புகழ் மொழி என்பதே எனது கருத்தாகும். உணவிலும் சைவ சமயத் மதக் காப்பற்றுவதிலும் தன்மானம் பேணி பந்துள்ளனர். அன்றைய இணுவிற் கிராம் மக்களின் வாழ்வியல்புகள் என்றும் எமக்கு முன்மாதிரியானவை என்பேன். கிறிஸ்தவ பாதிரிமார்களின் ஆசை வார்த்தைகளுக்கு மாறாமல் வாழ்ந்து காட்டிய அன்றைய இணுவிற் கிராம மக்களின் பண்புகள் எனக்கொரு திருக்குறளை ஞாபகப்படுத்து பதுண்டு.
"எப்பொருள்யார்யார்வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு' என்பதாகும்..
பொய்யாமொழிப்புலவர் வள்ளுவப் பெருந்தகையின் இந்த இலக்கியத்திற்கு இலக்கணமாக அன்றைய இணுவில் மக்கள் வாழ்ந்துள்ளனர். திருநீற்றின் மகி மெயை அன்றும் இன்றும் என்றும் உல கிற்கு உணர்த்தி வந்துள்ளனர். இணுவிற் கிராமத்து மண் கூடத் திருநீற்றிற் கொப் ானது என்பதில் ஐயமில்லை என்பது எனது கருத்தாகும்.*
உங்கள் விருந்து 'இணுவில் ஒலி பற்றிய உங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றறோம். அடுத்த இதழி லிருந்து அவை 'உங்கள் கிருத்து' என்ற பகுதியில் இடம்பெறும் என்பதை வாசகப் பெருமக்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.
- ஆசிரியர் |
15

Page 18
இணுவில் திரு
பெண்க
மங்கையர் மாண்பு |
முத்தமிழும், கவின்கலைகளும் சிறந்து விளங்கும் யாழ்மண்ணில் சைவத்தமிழ் பண்பாட்டு நெறி வளர்ச்சியிலே சிறப்புமிகு சீருடன் விளங்குவது இணுவையம்பதி, இந்தப் புனிதமிகு திருப்பதியிலே மண் ணின் பெருமைமிகு வளர்ச்சிக்காகத் தம்மை அர்ப்பணித்து தமது கடமையை சிறப்போடு செய்பவர்கள் என்றுமே போற்றுதற்குரியவர்கள். இந்தச் சிறப்புமிகு பணியினிலே இல்லறத்தை நல்லற மாக்கும் பெரும்பங்கில் துணைபுரியும் பெண்ணினமும் போற்றுதற்குரியதே.
எம்மண்ணிலே அன்றைய காலத்திலே பெண்கள் வீட்டினுள் அடக்கமாக இல் லறத்தை பணிவோடு பேணிக் காத்தனர். இந்த நிலையிலும் இவர்கள் இறை தியானம், தேவார திருப்பதிகங் கள் ஓதுதல், விருந்தோம்புதல், சமூகநலன் பேணல் என்பவற்றில் தவறியதில்லை. ஆயினும் இன்றைய நூற்றாண்டிலே பாரதி கண்ட புதுமைப் பெண்களாக பெண் ., ணியப் பயணம் தொடர்கிறது. இல்லறக் கடமையுடனும் சமூகநலன் என்பதை தாங்கி பட்டங்கள் பெற்றும் சட்டங்கள் ஆண்டும் கல்வி என்னும் உயர்நிலையில் முன்நிற்கின்றார்கள். பெண்கல்வி என்பது ஒளி இழந்து நின்ற காலம்போய், எட்டும் அறிவினில் ஆணுக்கு நிகராக சகலதுறை களிலும், சமூகப்பணிகளிலும் பெண்கள் உயர்ந்து சிறப்போடு உள்ளமை என்பது மண்ணின் பெருமைமிகு சிறப்பே. பாரினில் சாதனை கண்ட பெண்களின் மகத்து வத்தை நன்கு அறிந்தவர்கள், அவர்கள் வழியினில் திறனுடன் செயற்படுபவர்கள் இணுவையூர் பெண்கள்.
இணுவில் ஒலி

சாப்பாட்டைப்
நவூரின் பெருமையில் களின் பங்களிப்பு
- முத்தமிழ்ச் செல்வி சிந்து சிவபாலன் யாழ்.பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவி
பெண்ணானவள் இல்லறம் என்னும் ஒர் வட்டத்துடன் பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்றிராது பல அறங்களை செய்ய சமூகப்பணியில் ஈடுபட்டால் அவள் பணி சிறப்புக்குரியதே. இந்தப் புனிதமான பணியில் இணுவில் திருவூரை அலங் கரித்த, அலங்கரிக்கின்ற, அலங்கரிக்கக் காத்திருக்கின்ற பெண்களும் தம் தூய பணிச் சிறப்பினால் உயர்நிலையில் உள்ளார்கள். இல்வாழ்வு, சமையல், கல்வி, கவின்கலை என தம்மை ஒவ்வோர் துறை யிலும் பண்படுத்தி சமூகநலன் பேண முன் நிற்கிறார்கள். இவர்கள் பணி என்றுமே நிலையானது.
இணுவையம்பதியிலே தம் பணியை இறைபணியாக்கிப் பொதுநல மனப் பான்மைதனைக் கொண்டு கடமையால் இன்றும் பலர் உள்ளங்களில் நிலைத் திருக்கும் பெண்மணி அன்னை சாத்தி ரம்மா. ஆலயப்பணியில் தம்மை அர்ப் பணித்து இணுவில் கிழக்கினிலே அன்னை சிவகாமசுந்தரி அம்பாள் ஆலய அறப் பணிக்கு உதவியவர்.
இக்கோயில் பல வருடங்களுக்கு முன்னர் சிறு மண் குடிசைக்கோயிலாகவே காணப்பட்டது. இவ்வேளையிலே ஆலய வழிபாட்டிற்கென வரும் பக்தர்களின் வசதிக்கேற்ப ஆலய அகப்புறத்தை சுத்த மாக்கி வாரம் ஒருமுறையேனும் மெழுகி தூய்மைப்படுத்தியவர். அன்னை சிவகாமி அம்பாளின் திருவுளப்படி திருவாக்கு சொல்லியதுடன் ஊரிலுள்ள பக்தர்களிடம் அம்பாளின் திருப்பணிக்கென பிடியரிசி எடுத்தார். இவரின் இந்தத் தூயபணி
16

Page 19
பேரிளம் பெண்ணாக இருக்கும்போது ஆரம்பிக்கப் பட்டது. நாற்பது வருட காலம் இடையறாத திருப்பணிக்கான பிடியரிசி சேர்த்து கட்டுமானப் பணியினையும் ஏற்றார். இப்பணியினிலே தான் ஓர் பெண்மணியாக தனித்து நின்று பணி ஆற்றினார். இவரது ஆலயப் பணிக்கு இவரின் கணவர் மற்றும் பிள்ளைகள் தடையின்றி மேலும் உதவினர். இவர் இணுவையிலுள்ள வீடுகளுக்குச் சென்று அம்பாளின் திருப்பணிக்கென கூறியதும், இவ்வூர் இல்லத்தரசிகளும் அன்னையை உபசரித்து நீராகாரம் தந்து நாளாந்தம் உலையில் இடும் அரிசியில் அம்பாளின் திருப்பணிக்கு ஒரு பங்கும் மேலும் சிறு தொகை பணமும் மன நிறைவுடன் | கையளித்தனர். இவ்வாறு அரிசி விற்கும் " பணமும், விருப்புடன் கிடைத்த சிறு தொகையும், திருவாக்குச் சொல்லும் போது கிடைக்கும் சிறுபணமும் ஒன்றுசேர பெருநிதியமாக வளர்ந்தது.
அன்னை சக்தியின் திருப்பணிக்காக அன்னை சாத்திரம்மா என்னும் சக்தி அன்னை சிவகாமி அம்மன் ஆலயம் உருப்பெற காரணமாகியது. அன்னை சாத்திரம்மாவினது பணி அம்மையாரின் இளமைப் பருவம் முதல் முதுமைப் பருவம் வரை நாற்பது வருடங்கள் தொடர்ந்தது. முதலில் கருவறை, அர்த்தமண்டம், மகா மண்டபம் யாவும் கருங்கல்லினாலும் வெள்ளைவைரக்கல்லினாலும் அமைப்புப் பெற்றது. தொடர்ந்து இதர மண்டபங்கள் ஐந்து தளங்கள் கொண்ட வானுயர் கோபுரம், முன்மணிமண்டபம் யாவும் "சத்திரம்மா” என்னும் பெண் சக்தியினால் இணுவை மண்ணில் உருவானது. இவரது பணி எவராலுமே நினைத்துப் பார்க்க
முடியாத சிறப்புடையது. |
இதனை யாவரும் வியக்கும் வண்ணம் 1 இணுவையூர் முத்தமிழ் வித்தகர் பிரம்ம ஸ்ரீ
வீரமணிஐயர் இணுவில் சைவத்திரு
இணுவில் ஒலி

நெறிக் கழகத்தால் வெளியிடப்பட்ட "சிவகாமி அம்பாளின் கீர்த்தனைகள்” என்ற ஒலி நாடாவை இசை அமைத்து ஓர் பாடலிலே “பிடியரிசி எடுத்தே பெருங் கோயில் அமைத்த சாத்திரம்மாவுக்கே பெரும் பேறு தந்தாள் சிவகாமி...” என்று தொடரும் பாடலில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையிலே எந்தப் பெண் ணும் துணியாத பணியில் தன்னை அர்ப் பணித்த அன்னை சாத்திரம்மா, சிவகாமி அம்பா ளுடைய கோபுரம் உள்ள வரையும் நினைவு கூரத்தக்கவர்.
இவ வாறு அன்னையின் பெருங் கருணையால் உருவான இவ் ஆலயம் இன்றும் பொலிவு மங்காது விளங்குகிறது. இவ்ஆலயத்தூய்மைப் பணியிலே தினமும் பெண்களே பங்கு கொண்டு சிறப்பிக் கின்றனர். இவ்வாறாக “ஆலயதரிசனம் கோடி புண்ணியம்” என தம் கடமைகளுக்கு செல்ல முன் ஒவ்வொரு பெண்களும் அன்னை சக்தியின் அருளை பெற்று செல்லவது வழக்கமாகவே உள்ளது.
இணுவைப் பெண் களின் கல்விச் சிறப்பும் இணையில்லா பெருஞ்சிறப்பே. “குஞ்சி அழகும் கொடுத்தனைக் கோட்ட ஒகும் மஞ்சள் அழகும் அழகல்ல, நெஞ் சத்து நல்லம்யாம் எனும் நடுவுநிலைமை பால் கல்வி அழகே அழகு” என்கிறது நாலடியார். கல்வி மனிதனை மனிதருள் மாணிக்கமாகத் திகழவைப்பது. பெண் கல்வி என்பது பாரினில் உயர்ந்திட வேண்டிய விடயமே. ஓர் பெண் கற்றால் வையகமே கல்வி அறிவு கண்ட பேரொளி போன்றது. இந்த பேரொளியை உண டாக்கும் பெருமையில் இணுவைப் பெண் களும் உயர்ந்த நிலை வகிப்பவர்களே.
பெண்ணாகப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண் டுமம்மா... என்றான் மஹாகவி பாரதி. இந்த உண்மையை ஊரே அறியப் புலப்படுத்திய பெண்களும் பெருமை
--- 17

Page 20
பெற உகந்தவர்களே. இணுவில் மேற்கி லுள்ள பிரபல கல்விமான் மாணிக்கச் சட்டம்பியாரின் மகள் ஆயிலிலம் வேலுப்பிள்ளை அவர்கள் முதன்முதலில் நன்கு கற்று இணுவில் பாடசாலையில் ஆசிரியராக, அதிபராக மட்டுமன்றி தம்மை நாடி வந்து கல்விகற்கும் மாணவர்களின் மேலதிக அறிவுப்பசியை கடமை உணர் வோடு வழங்கியவர். அம்மையாரிடம் கற்ற பலர் சிறந்த கல்விமான்களாக பல துறைகளிலே தம்மை உயர்த்தியுள்ளனர். மேலும் திருமதி இராசம்மா, அன்னலட்சுமி, திருமதி ப.சிவபாக்கியம், திருமதி தையல் நாயகி போன்ற பலர் ஆசிரியைகளாகப் பணியாற்றினார்கள். இவர்கள் இணுவை மண் பெருமையைச் சிறப்பித்து கல்வி அறிவுக்கு எடுத்துக் காட்டாக விளங்கிய வர்கள்.
“படித்தால் மட்டும் போதுமா...? பண்பு கள் வேண்டாமா...? என கல்வியுடன் நற் பண்புகள், இறைபக்தி, சமூகத் தொண்டு களை மாணவர்கள் புரிய வழிவகுத்தவர் கள். தாமும் கற்று தாம் கற்ற அறிவை மேலும் அபிவிருத்தி செய்து மாணவர் களை உருவாக்கும் ஆசிரியப்பணி மகத் தானதே. இந்த உயரிய பணியினை மனநிறைவுடன் புரிந்தவர்கள் இணுவைப் பெண்கள், மேலும் சரஸ்வதி ஆறுமுகம், தங்கேஸ்வரி, பரமேஸ்வரி ஆசிரியர்கள் தம் பணியை மனநிறைவோடு செய்து ஓய்வுநிலையில் உள்ளனர்.
மேலும் பசுமையான புல்லைத் தின்று அருமையான பாலைத் தரும் பசுவினைப் போல தாம் கற்ற கல்வியை மேலும் அபிவிருத்தி செய்து தம் சேவைக் காலம் முதல், இன்று ஓய்வூதியம் பெற்று வாழும் காலத்திலும் பண்டிதைகளான கலா பூஷணம் வைகுந்தம் கணேசபிள்ளை, தனலட்சுமி மகாலிங்கம் ஆகியோர் சைவத் தமிழ், கலைப் பண் பாட்டு வளர்ச்சிப் பாதையில் தம்மை ஈடுபடுத்தி
இணுவில் ஓலி

யுள்ளனர். இவர்கள் தம்மைத் தேடி வரும் மாணவ உள்ளங்களைப் பாராட்டி அவர் களின் கல்வித் தேவையை இன்முகத்துட னேயே வழங்கி இணுவையம்பதிக்குக் கெளரவம் அளிக்கின்றனர்.
இணுவையின் இதரபணிகளை சிறப் போடு செய்யும் பெண்மணிகள் வரிசை யிலே திருமதி சரஸ்வதி சொக்கலிங்கம் பிரதேச சபையின் செயலாளராக பணியாற்றி ஒய்வூதியம் பெற்றவர். திருமதி பத்மாசினி வரதராசா விவசாயப் பாட சாலை குண்டசாலை, வவுனியாவில் அதிபராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். திருமதி இராஜேஸ்வரி கருணானந்தராசா யாழ் பல்கலைக்கழக நூலகத்தில் பிரதம நூலகராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அருளானந்தம் ஸ்ரீ காந்தலட்சுமி தற்போது யாழ்பல்கலைக்கழக நூலகத்தில் பிரதம நூலகராகப் பணியாற்றுகின்றார். மேலும் Dr.பிரேமா சிவசண்முகராஜா கைதடி அரசினர் வைத்தியசாலையின் பிரதம சித்த வைத்திய நிபுணராகச் சிறப்போடு பணி யாற்றுகின்றார். இவ்வாறு பலர் முதுகலை மாணி, கலைமாணி பட்டத்துடன் ஆசிரியப் பணியாற்றுகின்றனர். வைத்தியப் பணி, சமுர்த்திப் பணியிலும் பலர் ஈடுபட் டுள்ளனர்.
மேலும் இணுவை மணி, மனதை மயக்கும் கவின் கலை வளர்ச்சியிலும் உயர்நிலையில் இருப்பதாகும். நடனம். சங்கீதம், ஓவியம். வயலின். வீணை. மிருதங்கம் என கலைகளின் உயர்வில் இணுவைப் பெண்களின் பங்களிப்பு இணையில்லாதது. ஏரம்பு சுப்பையா அவர் கள் இணுவை மண்ணின் சிறந்த கலைஞர். இவரது கலைத்திறனின் பங்களிப்பு மகள் சாந்தினி சிவணேசன் இன்று சிறந்த நாடு போற்றும் நடனக் கலைஞராக, விரிவுரை யாளராக சிறந்து விளங்குகின்றார். அரச பணியிலிருந்து ஓய்வு கண்டாலும் மங்காத கலைப் பணியில் இருந்து இன்னும்
18

Page 21
பேரொளியுடன் பிரகாசிக்கின்றார். க “கலாபவனம்” என மங்காத கலைக்கென ெ நடனப் பள்ளியை அமைத்து காலம் | காலமாய் பல கலைஞர் களை உருவாக்கி நம் ஊரை பெருமைப்படுத்து கிறார். ப இவரது கலைப் பயிற்சியின் சாதனையால் க இவரது மகள் உட்பட ஏராளமான கலைஞர் கள் இல ங் கை, மற் றும் கடல்கடந்த நாடுகளிலும் ஆசிரியர்களாக, விரிவுரையாளராக பணியாற்றுவது இணுவை மண்ணின் பெருமைக்குரிய சிறப்பாகும். இந்தப் பெண் கலைஞர்களை ய கண்குளிர கண்டதும் இணுவை மண் செய்த பெரும் பாக்கியமே ஆகும்.
E 5 5 E F G E (s.
மேலும் இணுவையூர்ப் பெண்மணிகள் தம் ஊரின் சிறப்பிற்குப் பெருமை சேர்க்கு மாறு வெளிநாடுகளிலும் நற்பணி ஆற்று ம் கின்றனர். இணுவில் கிழக்கை சேர்ந்த ம
ம.இராசகுலசூரியரின் புதல்வி துர்க்கா என்பவர் சட்டத்துறையில் இரு பட்டங் களை பெற்று கனடாவில் சட்டவல்லு த னராக பணியாற்றுகின்றார். மற்றும் பல 6 பெண் கள் இலங்கையிலும், வெளி ப நாடுகளிலும் வைத்தியகலாநிதிகளாக, ெ பொறியியலாளராக, கணக்காளர்களாக, ம ஆசிரியர்களாக, விரிவுரையாளர்களாக உ மேலும் உயர் பதவிகளை அலங்கரித்து எம் த இணுவை மாதாவின் பெயர் துலங்க | புகழை உயர்த்தியுள்ளனர்.
மஹாகவி பாரதி பாரினிலே புதுமைப் பெண்கள் நிமிர்ந்த நன்னடை, நேர் ச கொண்ட பார்வை, நிலத்தில் யாருக்கும் உ அஞ்சாத மனத்துணிவுடனும் உருவாக இ வேண்டும் என குரல் கொடுத்தவர். இவரது கனவு இன்று நனவாகி பாரினில் பெண்கள் புதுமைப் பெண் களாகவே உலாவரு கின்றனர். இணுவை மண்ணிலும் பெண் கள் கல்வி அறிவில் மேன்மைமிகு இடம் பிடித்தவர்களாகவே உள்ளனர்.
* 48 9 நி நீ EL # 3
சமுதாயத்திலே புதுமைப்பெண்களா
இணுவில் ஒலி -------

கச் சாதிக்கும் பெண்களை இணுவை மண் பெற்றதும் பெரும்பாக்கியமே. இணுவில் மேற் கிலே வாழும் சோமேஸ் வரி வாமதேவன் என்பவர் கணவரின் மறைவின் என அவரின் அமைப்பான " சிற்றி காமன்ஸ்” எனும் தையற்சாலையை விரிவு "டுத்தி மேலும் பல இளம் பெண்களை தன் கலைத் துறையிலே இணைத்து சிறப்புடன் நேர்த்தியாக நடைமுறைப்படுத்துகின்றார். இவரது விடாமுயற்சியும், தொழில் நுட்பமும், மதிநுட்பமும், தையல்கலை பின் நேர்த்தியும் தரமும், கடமையுணர்வும் சிறப்படைந்ததால் பல கண்காட்சிகளில் "ங்குபெறவும் உதவியது. இவரது சிறப்பு
குபணி இருமுறை தேசியவிருது பெற எதுவானது. இவரது சேவை மகத்தானது. இத்தகைய விடாமுயற்சி உடைய திறமை பிகு பெண்மணியை கண்டதும் இணுவை மண்ணின் பெருமையே ஆகும்.
மேலும் சமூக சேவை என்பது ஓர் தன்னலமற்ற சேவை ஆகும். இச் சேவையை பெண்ணினம் செய்வது மிகவும் பாராட்டுக் குரியதே. தன்னலம் இன்றி பெண்கள் பொதுநலத்தில் ஈடுபடுவதும் மகத்தானதே. இந்தச் சமூக சேவையால் உயர்ந்த திருமதி.கு.செல்வலட்சுமி சமா தான நீதிவானாக (J.P) பட்டம் பெற்று இன்றும் ஊரினுடைய நற்பணிகளுக்கு
தவுகின்றமை சிறப்புக்குரியதே.
இவ்வாறு இணுவையின் பெண்கள் =ாதனை மிகு வல்லுனர்களாக உருவாகி ரினைப் பெருமைப்படுத்தியுள்ளனர். இந்த பெருமை என்றுமே காலத்தால் அழியாதது. இந்த நம்பிக்கை இன்று கல்லூரிகளில் கற்கும் மாணவிகளை கொண்டு உறுதியளிக்கலாம். வளர்ந்து வரும் தலைமுறையான இளம் மாணவிகள் சைவ சமயப் பேச்சு, அறிவுப் போட்டிகள், நடன, நாடகத் துறைகள், கட்டுரை, கவிதை, சிற்பம், ஓவியம் இவற்றில் தேர்ச்சி பெற்றவர்களாக மாவட்ட, மாகாண, தேசிய
பொதுசன நூலகம் 9
யாழ்ப்பாணம்.

Page 22
மட்டங்களில் பல விருதுகளையும், பரிசில் களையும் நற்பெயர்களையும் பெற்று இணுவை மண்ணுக்குப் பெருமையைத் தேடித்தந்துள்ளனர். இன்னும் பல பெருமைகளை தர திறமையுடன் காத் திருக்கின்றனர்.
இணையிலியின் ஈடற்ற பல பெருமை களுக்கு இத்திருவூரின் பெண் களின் பங்களிப்பு இணையற்றதே. மனத்தினில் துணிவு கொண்டு, அறிவெனும் பொக்கி சத்தை வரப்பிரசாதமாக்கி, முகமலர்ச்சி
நிகழ்வுகளின் சங்கமம்
இளம் கலைஞர் மன்றம் 8
இளம் கலைஞர் மன்றத்தின் "இசை மாலை" 15 மண்டபத்தில் சிறப்பாக அரங்கேற்றியது. எமது ! களையும், அரங்கேற்றம் கண்டவர்களையும் ஊக்கு
முதல் நிகழ்வு மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.
இலங்கை, தமிழ்நாடு, நோர்வே ஆகிய நா புல்லாங்குழல், வாய்ப்பாட்டு, பரதநாட்டியம் மாணவர்கள் தமது திறமைகளைச் சிறப்பாக வெள எல்லா நிகழ்ச்சிகளும் மிகவும் தரமானவையாக ே இலண்டனில் கடந்த இருபது வருடங்களுக்குமேலா நுண்கலைப் பரீட்சைச் சபையின் (OFAAL) பட்டம்
இலண்டன் இணுவில் ஒன்றியத்தின் தலைவ ஏற்றிவைத்து விழாவை ஆரம்பித்து வைத்தார். தியாகராஜா, திரு.அரவிந்தாக்ஷன், திரு.ஆனந் திரு.கிருபாகரன், திரு.நாகராஜூ, திரு.ராக திருமதி.வசந்தகுமாரி, திருமதி.கலைவாணி இந்திரா திரு.சோமசுந்தரதேசிகர், திரு.பாலச்சந்தர், திரு. அரங்கத்தை அலங்கரித்தார்கள். திருமதி ஜானக தொகுத்து வழங்கினார்.
இந்த இளம் கலைஞர் மன்றத்தின் இசை மாவு வருடத்திற்குரிய ஆயத்தங்களை இப்போதே ஆரம்ப எத்தனையே சிரமங்கள், பண விரயங்கள், 6 நுண்கலைகளை அரங்கேறியவுடன் அடியோடு சந்ததியினர் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் | நடாத்தப்பட்ட இந்த நிகழ்வில் பெற்ற இலாபம் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டதும் பாராட்டுதற்கு
இணுவில் மண் இறை பக்தியும், இசை மணமும் பல் இசைக்கலைஞர்கள், சமூக சேவையாளர்க மண்ணிலிருந்து வந்த திரு.பதஞ்சலி நவேந்திர (தனியொருவராக முன்னின்று எடுத்த இந்தக் கன்னி
நடந்தேறியது.
இணுவில் ஒலி

யுடன், விடாமுயற்சியுடன் இணுவைப் பெண்களின் பணி என்றுமே காலத்தினால் அழியாது நினைவுபெற வேண்டியதே. இந்தப் பணி அன்று மட்டுமல்ல, இன்று மட்டுமல்ல, என்றும் தொடரும்... என்ற மகத்தான நம்பிக்கை இணுவை மண ணுக்கு உண்டு. மகாசக்தியாய் விளங்கும் அம்பாளின் அனுக்கிரகமுடன் ஈடு இணையற்ற சேவையினை ஆற்றும் பெண்களின் பணி நீளநினைந்து நினைவு
கூறுவது பெரும் பேறாகும். *
அரங்கேற்றிய இசைமாலை”
5.09.2012 சனிக்கிழமை அன்று Winston Churchill பாரம்பரிய நுண்கலைகளைக் கற்கும் இளையோர் தவிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த மன்றத்தின்
டுகளில் இருந்து வீணை, வயலின், மிருதங்கம், என்பவற்றில் பாண்டித்தியம் பெற்றவர்களின் சிப்படுத்திக் காட்டினர். ஆரம்பம் முதல் இறுதிவரை வ அமைந்திருந்தன. இதில் பெரும்பான்மையினர் கச் சமூகப்பணியாற்றி வரும் இலண்டன் கீழத்தேய 5 பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பர் திரு.நடராசா சச்சிதானந்தன் குத்துவிளக்கை வீணை, நடன ஆசிரியை திருமதி துஷ்யந்தி தவரதன், அமரர் திரு.குற்றாலம் நாகராஜன், -வராமன், திருமதி.மாதினி தனபாலசிங்கம், தமார், திருமதி.மாலதி யோயேந்திரன் (நோர்வே), பத்மநாபன், இன்னும் பலருடைய மாணவர்கள் : பாலசுப்பிரமணியன் நிகழ்ச்சிகளை அழகாகத்
லை' வருடாவருடம் நடைபெறும் எனவும், அடுத்த பித்துவிட்டதாகவும் மேடையில் அறிவிக்கப்பட்டது. பொழுது விரயங்கள் செய்து கற்கும் எமதரிய
மறக்கும் நிலைக்குத் தள்ளப்படும் எம்மினம் கொள்ளலாம். எதுவித இலாப நோக்கமுமின்றி ம் யாவும் “ORHAN” என்ற அறக்கட்டளைக்கு ரியது. 5 கூடிய மண், வீரமணி ஐயர் தொட்டு இன்றுவரை கள், கல்விமான்கள் ஆகியோரின் காலடிபட்ட ரன் இசையின் மேல் கொண்ட ஆர்வத்தினால் 7 முயற்சி மண்டபம் நிறைந்த மக்களுடன் சிறப்பாக
லண்டனிலிருந்து
எம்.ரி.லவ்வராமா.

Page 23
நாடக வரலாற்ற
திருவூரி
பாயாச படமராட்டம்
கலை
- மா.ந.பரயே
பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இணுவில் திருவூரில் வாழ்ந்த பெருங்குடி மக்கள் சைவமும், தமிழ்ப் பாரம்பரிய கலைகளும் வளர உதவினர். அக்காலந் ) தொட்டே சமயப் பாரம்பரியமும் சமயத் தோடமைந்த தமிழோடிசை பாடலும் கல்மனதையும் கனிய வைக்கும் தன்மை பெற்றிருந்தன. இந்த வகையில் பண்ணும் பரதமும் அமையப்பெற்று அதன் மூலம் | மக்களிடையே புராண இதிகாச இலக்கி - 8 யங்கள் வேரூன்றவகைசெய்தது.
இதற்கமைவாக வள்ளிதிருமணம், சிவத்தொண்டர் புராணம், நந்தனார் கதை, கண்ணகி கோவலன் கதை போன்றவை உடுக்கு வாத்தியத்துடன் ஆலயங்களின் முன்றலில் பாடப்பட்டன. இவைகள் கூத்து களாக இசைலயம் ததும்ப இணுவை மண்ணில் ஆடியும் காண்பிக்கப்பட்டன. | இதுவே இணுவை மண்ணின் நாட்டுக் கூத்தின் ஆரம்ப வடிவம் எனலாம்.
மின்சாரம் மற்றம் பெற்றோலிய எண் ணெய் வசதியோ அற்ற காலத்தில் நிலவு எறிக்கும் ஒளியில் இலுப்பைச் சருகு, கமுகோலை போன்றவற்றை எரித்து அந்த வெளிச்சத்தில் கூத்துகள் ஆடிக் காண்பிக் கப்பட்டதாக எம்மூதாதையர் கூறுவர். இக்காலத்தில் நாட்டுக் கூத்து வரிசையில் சுப்பர் பெரியதம்பி (பிராமணப் பெரியதம்பி) வள்ளியம்மன் வேதவனம். மாரீசன் கந்தப்பு, மயில்ராவணன் தம்பையா ஆகி யோரைக் குறிப்பிடலாம் இவர்களுள் பிராமணப் பெரியதம்பி என அழைக்கப் பட்டவர் சொந்தமான பெருநிலப்பரப்பின் உரிமையாளராவார். இவர் பிராமணக் கூத்து என்னும் நந்தனார் என்னும் நாட்டுக்
இணுவில் ஒலி

காவமா.
பில் இணுவில் ன் பங்களிப்பு
சேயாடும்
பாதாடாத கடிப்படியாக படிப்படியாக
மஸ்வரன்
கூத்தை மேடையேற்று வந்தன் பேரில் தமது நிலங்களை விற்று நாடகச் சிறப்பை மேம்படுத்தினார். இதனாலேயே இவரைப் பிராமணப் பெரியதம்பி என ஊர் மக்கள் அழைத்தனர்.
இவர்களைத் தொடர்ந்து நம்பிராசன் பொன்னையா, நாரதர் முதலித்தம்பி, சுப்பிரமணியர் விசுவலிங்கம், அனுமான் கதிர்காமர் ஆகியோர் நாட்டுக் கூத்தை வடிவமைத்து மேடையை அலங்கரித்தனர். இவர்கள் நடித்த பாத்திரங்களில் தம்மை இணைத்துக் கொண்டதால் அவர்களின் பெயருக்கு அடைமொழியாகவே அப்பெயர் கள் அமைந்தன. அன்று அவர்கள் பாவித்த நாடக அலங்காரப் பொருட்களை கிரீடம், புசகிரி, கண்டகி போன்றவை மரத்தினால் அழகுறச் செய்யப்பட்டன. அக்காலத்தில் பெரிய சந்நியாசியார், அவரது சகோதரர் வேலாயுதர் சந்நியாசியார் இந்த நாடகக் கலைக்குப் பேராதரவளித்தனர். நடிகர் களின் உடுப்பு மற்றும் பாவித்த அலங்காரப் பொருட்கள் மஞ்சத்தடி முருகன் ஆலயத் தில் இதற்கான ஓரறையில் பாதுகாப்பி லிருந்தன. காலப் போக்கில் இவை அவ் விடத்திலிருந்து மறைந்து விட்டன.
இந்த நாட்டுக் கூத்து, வடிவங்கள் மேலைத் தேய பாசிய நாடகங்களின் வரவால் அதற்கமைவாக வாத்தியங்களான ஹாமோனியம் அரங்கப் பொருட்களான சீன், மணி உடுப்புகள், பெற்றோலிய விளக்கு கள் போன்றவற்றால் மெருகூட்டப் பெற்று இசை நாடக வடிவத்தினைப் பெற்றது. இந்த வகையில் அண்ணாவியார் ஏரம்பு நாட்டுக் கூத்துக்கும் இசைக்கும் இணைப்பாலமான அண்ணாவியாராக விளங்கினார்.
---- 21

Page 24
எம்நாட்டுக்கு வந்து பங்குபற்றும் இந்திய நாடகக் கலைஞர்களும் எம்மவருடன் இணை ந் து நாடகங் களை மேடை யேற்றினர். முதலில் வள்ளி திருமணம் இசை நாடகமாக இணுவில் சிவகாமி அம்மன் கோயில் வீதியில் மேடையேற்றப் பெற்றது. இதுவே ஈழத்தின் முதலாவது இசை நாடகமாகும். இணுவில் சின்னத் தம்பிப் புலவர், பண்டிதர் சரவணமுத்து போன்றோரால் எழுதப் பெற்ற நாட கங்களே மேடையேற்றப் பட்டாலும் சங்கரதாஸ் சுவாமிகளின் இசை நாட கங்களே நடிக்கப் பெற்றன.
அண்ணாவியார் நாகலிங்கம் இசை நாடக அமைப்பில் சிறந்து விளங்கினார். இவர் இந்திய நடிகர் M.R.கோவிந்தனுடன் இணையாக நடித்து ரசிகர்களால் பாராட்டப் பெற்றவர். நடிகவேள், இலங்கை இராஜ சிங்கன், ராஜபாட் எனப் பலவாறு பாராட்டப் பெற்றவர். இவரின் சகோதரர் சுப்பர் (சீதைச் சுப்பர்) சிறந்த நடிகராகவும் திகழ்ந்தர்.
ஏரம்பு சுப்பையாவும் தந்தை வழி பயின்று நடிகராகவும் நாடகப் பயிற்றுவிப் பாளராகவும் பணியாற்றியதால் “இணுவில் சண்முகானந்த பாலிய கான நாடகசபா” என்னும் நாடக அமைப்பினை அமைத்து அதன் மூலம் நாடகங்களை உருவாக்கி மேடையேற்றினர். இதனால் இணுவில் மட்டுமன்றி இலங்கையின் இதரபாகங் களிலும் இசை நாடகங்கள் அரங்கேற்ற வழிவகுத்தது. தொடர்ந்து மெய்கண்டான் சரவணமுத்து என்பவரால் "டப்பாசெற்” என்னும் நாடக அமைப்பு உருவாகிப் பல நாடகங்களை மேடையேற்றிப் பிரபல மடைந்தது. இது போன்ற நாடகங்கள் கோயில் வாசல் சந்தி பிரதான வீதியின் கீழ் திசையில் பெரிய கொட்டகைகளில் மேடையேற்றப் பெற்றன. அக்காலத்தில் இரவோடு இரவாக நடைபெறும் நாடகங் களைப் பார்க்கவெனப் பல ஊர்களி லிருந்தும் மக்கள் மாட்டு வண்டில் மூலம்
இணுவில் ஒலி

பல்லா யிரக்கணக்கில் வந்து சேர்வர். நாடகப் பார்வையாளரின் வசதிக்கேற்ப ஐயாயிரம் பேர் தங்கும் பாரிய நாடகக் கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது.
இதே காலத்தில் இசை நாடக நடிகர் களான விசுவலிங்கம் மாசிலாமணி (நாதஸ்வர மேதை) ஏரம்பு சுப்பையா (நடன மேதை) பெரியதம்பி கந்தையா (பண்ணி சையாளர்) மயியர் வேலுப்பிள்ளை, சுப்பர் வடிவேலுவில்லிசைக் கலைஞர்) வேல் நாயக்கர் சரவணமுத்து (ஹாமோனியம்) வீரசைவர் நடராசா, குணம், இராமநாதன் போன்றோர் திகழ்ந்தனர்.
1943ஆம் ஆண்டு வரையில் சிறப்புடன் இருந்த இசை நாடகம் சினிமாப் படங்களின் வரவால் சிறிது சிறிதாக அருகத் தொடங் கியது. தொடர்ந்தும் பெரியதம்பி கந்தையா, மயிலர் வேலுப்பிள்ளை, சரவணமுத்து போன்றோர் பாடல் பாடிப் புத்துயிரளிக்க முன்வந்தாலும் நாடக வரலாறு மறையத் தொடங்கியது.
1974இல் சண்முகநாதன் (பொலிஸ் உத்தியோகத்தர்) என்பவர் மட்டுவிலைச் சேர்ந்த தமது பரம்பரை நாடக அனுபவத் துடன் ஆரம்பித்த "செகராசசேகரன் நாடக மன்றத்தின் மூலம் நாடக மரபு இணுவிலில் புதுப் பிக்' கப் பெற் ற தென லாம் . சண்முகநாதன் கர்ணனாகத் தோன்றி நடித்த இசையும் கதையும் சேர்ந்த நாடகத்துக்கு உயிரூட்டியதன் பேரில் முன்னர் “டப்பாசெற்' நடிகர்களான பெரிய தம்பி கந்தையா, கலைமணி வடிவேலு, மயிலர் வேதவனம். வேல நாயக்கர் சரவணமுத்து ஆகியோரையும் இணைத்து நாடக ஆக்கங்கள் ஆரம்பமானது. இத் தொடரில் 'அரிச்சந்திர மயானகாண்டம்', "சத்தியவான் சாவித்திரி” போன்ற இசை நாடகங்களை இணுவில் கந்தசுவாமி கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் மேடை யேற்றினர். இந்த நாடகங்களில் மூத்த
---- 22

Page 25
நாடகக் கலைஞர்களுடன் புதிய தலை 6 முறைக் கலைஞர்களும் இணைக்கப்பட்டி ருந்தனர். இவர்களின் "கர்ணன்" என்னும் நாடகம் இணுவிலிலும் ஏனைய இடங் களிலும் மேடை ஏற்றப்பட்டது.
இந்த வகையில் செகராசசேகரன் நாடக மன்றத்தின் ஒன்று கூடலே இன்று இணுவில் கந்தசுவாமி கோவில் இளந் தொண்டர் சபையின் நாடக வளர்ச்சிக்கும் வித்தாக அமைந்தது. இளந்தொண்டர் சபையினரால் வள்ளி திருமணம், சத்திய வான் சாவித்திரி, நந்தனார் என்னும் இசை நாடகங்கள் மேடையேற்றப்பட்டு வரு கின்றன. இச்சபையினரின் சிறுவர் நாடகங்களுள் “குட்டி அனுபவம்” என்னும் | நாடகம் தேசிய சிறுவர் நாடகவிழா 1 2011இல் விருதுக்குரிய நாடகமாகத் 4 தேர்ந்தெடுக்கப்பட்டது. உரிய காலத்தில் ந விருதுகளும் பரிசில்களும் கிடைத்தன, ; அதே போல் அரச நாட்டிய நாடக . ஒசற்றற்றசாற்றலற்றம்
தற்கால ஆயி
ஆய்வுகளில் நினைவுக்கு வந்ததைக் முன்வைத்த கருத்திற்கு அரண் செ காட்டுவதில் மிக-மிக கவனமாக இ. பலவற்றைக் கூறிவிட்டு அவற்றில் இரு கருத்திற்கு அரண்செய்யும் வகையில் 5 இற்றை நாள் முனைவர் கட்டு இடம்பெறுவதில்லை. எந்த ஒரு மேற்கோ. தோன்றிய காலம், தோன்றிய சூழ்நிலை எழுத்தாளனுடைய அறிவு வளர்ச்சி, வற்றையெல்லாம், கருத்தில் கொண்டு, சமயங்களில் மிகப்பழைய நூல்களிலிருந் பிறர் ஒருவர் அதனை எடுத்துக் காட விடுகின்றனர். மூலநூலைத் தேடிச் வேண்டுமான பகுதியை எடுத்துக் காட்டு காண்பதரிது.
---- -- - பர்கா
இணுவில் ஒலி -

விழாவில் 'வள்ளி திருமணம்' என்னும் தாட்டிய நாடகம் இறுதிச் சுற்றுக்குத்தெரிவு செய்யப்பட்டது.
இளந்தொண்டர் சபையினரால் ஆக்கப் பட்ட “சங்கிலியன்' என்னும் நாடகம் 08.09.2012 அன்று வலிதெற்கு பிரதேச கலாசராப் பேரவையால் நடாத்தப்பட்ட கலை விழாவில் மேடையேற்றப்பட்டது. மேலும் கதாப்பிரசங்கம். வில்லிசை. நாடகம், இசை நாடகம் என்று இளந் தொண்டர் சபையினர் தொடர் பயிற்சி களை அறநெறிப் பாடசாலை மாணவர் களுக்கு வழங்கி வருவதன் மூலம் எமது திருவூரின் கலை வளர்ச்சிக்குத் தொண் டாற்றி வருகின்றனர். இக்கட்டுரையில் நாடக வரலாறு பற்றிச் சுருக்கமாகவே கூறப்பட்டுள்ளது. இணுவில் திருவூரின் நாடக வரலாறு நீண்ட ஆய்வுக்கு உட்படுத் தப்படும் போது அதன் முழுமையைப் பெற்றுக்கொள்ள முடியும். * -சசசசசசசசசசசசசன்
ப்வாளர்கள் -
நியெல்லாம் எழுதி விட்டு. தான் ய்யும் முறையில் மேற்கோள்கள் ருத்தல் வேண்டும். வாலாயமான ந்து சிறப்பாக நாம் காணும் புதிய மேற்கோள்கள் அமைதல் வேண்டும். அரகளில் இவை பெரும்பாலும் களையும் ஆய்வு செய்யும் போது, அது ஸ், அதில் கூறிய கவிஞன் அல்லது - அனுபவ முதிர்ச்சி என்வன தான் விளக்கம் தரவேண்டும். பல இது மேற்கோள்கள் காட்டும் போது, ட்டியதை தாமும் எடுத்துக் காட்டி சென்று தக்க ஆதாரங்களுடன் ம் பழக்கம் தற்கால ஆய்வாளர்களில்
சம்பந்தன்

Page 26
|S நல்ல குடும்ப
இல்லறவாழ்வு செழுமையாக அமை வதற்குக் குடும்ப உறவுகள் இன்றியமை யாததாகும். பெற்றோர் பொறுமை பேணுப வராகவும், அன்னியோன்யமாக மற்றவர் களை மதித்து நடப்பவராகவும், பிரதி உபகாரம் கருதாது தேவை ஏற்படுபவர் க்ளுக்குச் சேவை அளிப்பவராகவும் நடந்து கொள்வார்களாகில் அவர்தம் இல்லற வாழ்வு நல்லறமாக அமைய முடியும். ஆரோக்கிய வாழ்வின் இரகசியம் நாம் ஊக்கமுடையவர்களாகவும், யாவ ரையும் மதிக்கும் மனப்பாங்கு உள்ளவர் களாகவும் அமைதல் அவசியமாகின்றது.
குடும்ப வாழ்க்கையின் உன்னதம்
தாயும், தந்தையும் இல்லற வாழ்வின் முதன்மையானவர் ஆகின்றனர். கணவன், மனைவியிடை யே பரஸ்பர நல்லுறவு சீர்பெற அமையுமாகில் அவர்தம் பிள்ளை கள், மனநிறைவாக வளரும் பாக்கியம் கிட்டியவர்களாக அமைந்து விடுவர்.
"மங்கலம் என்ப மனைமாட்சி; மற்று அதன் நன்கலம் நன்மக்கட் பேறு - குறள் 60
கருத்துரை - மனைவியின் நற்பண்பே இல் வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர். நல்லமக்களைப் பெறுதலே அதற்கு நல்ல அணிகலம் என்றும் கூறுவர் டாக்டர் மு.வ. இல்லற வாழ்வு இனிதே அமையுமாகில், அவர் தம் குழந்தைகள் வற்றாத நீர் ஊற்றுப் போலவும், நீர்பாய்ச்சிய பயிர்கள் போலவும் செழிப்புடன் மிளிர்வர். தாய், தந்தையருக்கிடையில் கருத்து வேறு பாடுகள், வாக்குவாதங்கள் தலைதூக்கு மாகில், குழந்தைகளின் வாழ்க்கை சின்னா பின்னமாவதைத் தவிர்க்க முடியாது.
இணுவில் ஒலி

ப.கேட்கப்பட்டப்ட்ட்ட்ட்ட்டதாக
ம் பல்கலைக்கழகம்
RT-1LA4.FILD: +9
- கா.வைத்தீஸ்வரன்
(உளவள ஆலோசகர்) குடும்பத்தில் நோய், பிணி, பிரிவு, காணாமற் போதல், விபத்து முதலானவை தோற்றம் பெறுமாகில் குடும்ப அங்கத்தவர் யாவரி லும் இத்தாக்கத்தை உணரமுடியும்.
அன்புபாராட்டுதல்
ஒருவர் இன்னொருவர் பால் காட்டும் செயலாக்கமான அக்கறையே அன்பு ஆகும் என உளவியல் அறிஞர் எரிக்ஃப்ராம் குறிப்பிடுகிறார். ஆண், பெண் இருவரும் திருமண அன்பால் இணைந்து வாழும் அடிப்படையான சமூக அமைப்பே குடும்ப மாகும். குடும்ப வாழ்வு அதன் ஆரம்பம் தொடக்கம், இறுதி வரையும் அடங்கிய சகல வடிவங்களிலும் அன்புருவேயாகும். அன்பு நிறைவாக நிலவும் குடும்பம் மகிழ்வின் பிறப்பிடமாகும். தாய் தந்தையர் நல்ல பண்பாளாராகவும், நல்லபழக்க வழக்கம் கொண்டவர்களாகவும் அமைவ தனூடாகவே நல்ல குடும்பத்தை உரு
வாக்க முடியும்.
அன்பின் தன்மை
அன்பு என்பது தன்னைப் போல மற்றவர் களையும் நேசிப்பதாகும். சிலவேளை களில் தன்னை விட அதிகமாக நேசிப்ப தோடு இன்னொருவரை வாழவைப்பதாக அமைவதும் உண்டு. மேலும் அவரைக் குதூகலமாக வைத்திருப்பதாகவும் அமைய முடியும். உறவுகளின் தொகுப்பாகவே அன்பை நாம் கருதலாம். இவ்வடிப்படை யில் இல்வாழ்க்கை ஓர் பெரிய அன்புப் பயணமாகும். கணவன் - மனைவி இரு உடல்களாக இருப்பினும் இரு இதயங் களின் இணைந்த துடிப்பு, அவர்களை ஒத்த தன்மை ஆனவர்களாக்குதலை உணர
24

Page 27
லாம். இருவர் பார்வையிலும் பாசப் 4 பிணைப்பை உணரலாம். இதன் மூலம் 6 இன்னோர் உயிரை ஆளாக்குகின்றனர். இதன் தொகுப்பே இல்லறமாக அமைந்து 9 விடுகிறது. இல் வாழ் வில் அன பு பாராட்டுதல் அரும்பெரும் கலையாகும்.
பண்புடையவராதல் அவசியம்
"தூய்ம்ை, அருள், கணிசுருக்கம்பொறை,
செவ்வை வாய்மைநிலமைவளர்த்தலே மற்ற இவை காமம், களவு, கொலை எனக்காண்பவை நேரிசர்ஐந்து நியமித்தன் ஆமெ"
திருமந்திரம் 556 குடும்பம் நல்லறமாக அமைவதற்கு பண்பு அடிப்படைத் தேவையாகும். ஒருவருக்கு | இருக்கவேண்டிய பண்புகளாவன: * அகம் புறம் தூய்மையாக இருத்தல் * இறையருளோடு இருத்தல் * உணவைச் சுருக்கியிருத்தல்
(அளவறிந்து உண்ணுதல்) * சாந்தமாக இருத்தல் | * சரியானவற்றைச் செய்தல்
வாய்மைகாத்தல் (உரையாடல்) காமவெறி அற்றிருத்தல் * எல்லாவிதமான நல்ல நிலைப்பாடு
களைவளர்த்தல் களவு செய்யாது இருத்தல் * கொலை செய்யாதிருத்தல்
இல்வாழ்வின் இருப்பிடமாகக் கணவன் - மனைவி அமைவதனால், யாவரிடத்தும் அன்பு பாராட்டக் கூடியவராக அமைவத னூடாகக் குடும்ப வாழ்க்கை நல்லறமாக அமைகிறது. பெற்றோர் வழிகாட்டல் முன் உதாரணங்களைப் பின்பற்றிப் பிள்ளை களும் இனம் சுற்றத்தார் நண்பர்களை அர | வணைத்து வாழக் கற்றுக் கொள்வர். மற்றவர்களை உபசரித்து, அன்புபாராட்டு வதனால் நாமும் மற்றவர்களால் மதிக்கப் . படுகிறோம். போற்றப்படுகிறோம். அன்பின் உறைவிடம் ஆகிவிடுகிறோம். இதன் மூலம் மனிதப் பண்பு எம்மில் மிளிர்வதை ம உணரலாம். மக்கள் மற்றவர்களால் அன்பு 3 செய்யப்பட வேண்டும் என ஏங்குகிறார் 0
பி பி 6 1G அ அ
இணுவில் ஒலி

கள், இதுவே மக்களின் பிரதானமான தேவையாகும்.
மெச்சக் கற்றுக்கொள்வோம்
குழந்தைகள், கணவன், மனைவி, இன பந்துக்கள், நண்பர், அயலார் எவராக இருப் பினும் அவர்களின் முயற்சிகளை உற் சாகம் ஊட்டலுடன் மெச்சுதல் வேண்டும். appreciation) நாம் அனைவரும் மற்றவர் களால் மதிக்கப்படுகிறோம். மெச்சப்படு நிறோம் எனும் நிலமை இன்றியமையாத நாகும். இவை எம் அனைவரினதும் அடிப்படைத் தேவையாகும். ஒருவரைப் புகழத் தேவையில்லை. உள்ளதை உள்ள படி பாராட்டினால் போதுமானதாகும்.
பசாணையான வார்த்தைகள்
அமைதிபேணிய உபசரணையான வார்த்தைகள் எம் அனைவருக்கம் இன்றிய மையாதாகும். உபசரிப்புடன் ஆதரவுடனான சொற்களையே நாம் அனைவரும் எதிர் பார்க்கிறோம். மனித இனம் மாத்திரமல்ல பறவைகள், மிருகங்கள் முதலானவைகள் தமது இளசுகளை எப்படி அரவணைக் கின்றன; பாதுகாக்கின்றன; உணவூட்டு கின்றன; ஆதரவளிக்கின்றன. எமது வீட்டில் வளர்க்கும் பூனையை ஒருமுறை அதன் முதுகைத் தடவிக் கொடுங்கள். அப்பூனை நனது அன்பை எப்படி எமக்கு வெளிப்படுத்து நின்றது என்பதை அவதானியுங்கள்.
வாழ்க்கையில் அனைவரையும் அரவ ணைக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வோம். இதன் மூலம் நாம் மன நிறைவு கொள்பவராக அமைந்து விடுதல் கண்கூடு. இந்நிலை கைகூடின் இல் வாழ்க்கை தினம் தினம் மேன்மையடை வதை உணரலாம்.
நல்லோர் இணக்கம், மற்றவர்களை மதிக்கும் பக்குவம் ஏனையவர் உணர்வு களை இனம் காணும் ஆற்றல் கிடைக்கப் பெறின், எமது குடும்ப வாழ்க்கை செழிப்
25

Page 28
படையும். எமது குடும்பத்தார், அயலார், இனபந்துக்கள் முதலானோரிடம் எமது உறவுகள் சிறப்பாக அமைய முடியும். இல்லற வாழ்வு நல்லறமாக அமைவதற்கு மற்றவர் மேல் காருண்ய சீலர்களாக அமைதல் அவசியமாகும். மற்றவர் உணர்வுகளைப் பாதிக்காது நடப்பதே
பெரிய அறக்கொடையாகும்.
நல்லகுடும்பம் பல்கலைக்கழகம்
இல்லற வாழ்வில் கணவன் - மனைவி ஒருவரை ஒருவர் ஆழத் தெரிந்து, இணைந்து வாழ்தல் பெரும் பேறாகும். இவையே நல்லறமாகும். இப்பேறுடை யோர் பெருவாழ்வு உடையோராவர். ஈசாகசசசசசசசசசசர்
தமிழ்ப் பண்பும் அதன் தனிப் பண்பும்
"தமிழ்ப் பண்பாடு உலகத்தில் எல்லா தோழர்களாகவும் ஏற்றுக் கொள்ளும். | வரவேற்கும். எந்த மொழியையும் உரிய உலகின் எந்தக் கோடியில் இருந்தாலும் தமிழர்கள் தமக்கு என்று உள்ளதை ஒருர
மொழிப்பற்றிலிருந்து......
கற்பித்தலும் கற்றலும் தாய்மொழியில் இ தமிழ் நாட்டு அறிஞர்க்கு வேண்டும், ஒம் இடங்கொடுப்போமானால், அடுத்த தலை மொழியிலே இயற்றப்பட்டு விடும். இந்தத் ; வளர இடம் கொடுப்போம். அடுத்த தலை ஆவோம். இந்த நாட்டில் அறிவுக்குப் பஞ்சம் உடைய நாடு இது. ஆதலின் நம்பிக்கை கொ
இணுவில் ஒலி

தவமும் தவமுடையார்க்கே அமையும். அன்புடையவராதல், இன்னா செய்யாது இருத்தல், இன்முகம் காட்டி உபசரித்தல், இயன்ற சேவையை இயலாதவர்களுக்கு அளித்தல் முதலான குணங்கள் யாவும் இல்வாழ்வானுக்குரிய பெரியபேறாகும். இவ்விதமான வாழ்வியல் அனுபவம் பெற்றவன். சிறந்த கல்விமான் பெற்றதைப் போன்ற ஆற்றல், அறிவு, உளப்பாங்கில் செழித்து மகிழும் பாக்கியம் கிட்டியவன் ஆவான். இந்நிலையை விஞ்சிநிற்கும் ஆற்றல் உடைய வாழ்வியல் அனுபவம் கொண்ட பலபேரறிஞர்களை இன்று எம் மத்தியில் காண்கிறோம்.*
அன்பே சிவம்! மாற்றாற்றாற்றினார்
மனிதர்களையும் சகோதரர்களாகவும்,
தன்னிடம் வருபவர்களை வாழ்த்தி * முறையில் மதிக்கும். அறிவுச் செல்வம் தேடிச் சென்று எடுத்துவரும். ஆனால், காளும் இழக்க சம்மதிக்க மாட்டார்கள்.”
- பேரறிஞர் அண்ணா
ஒருத்தல் கடமை என்ற தெளிவுதான் இன்று ந தலைமுறை வரையில் இந்த நிலைக்கு முறையிலே அறிவியல் நூல்கள் பல தாய் தலை முறையில் தாய் மொழியில் சிந்தனை முறையில் நூல்கள் எழ வழி வகுத்தவர்கள் 5 இல்லை. தொன்று தொட்டு மூளை வளம் எள்வோம்.
- டாக்டர் மு.வரதராசன்

Page 29
கோளாகக்காம
இயற்கை வனப்பும் இனிதே அமைந்
ஈழத்திருநாட்டின் வடபால் யாழ் மண் 4 ணில் ஆணி முத்தாக விளங்கும் இணுவில் ! திருவூர் யாழ் மாவட்டத்தின் நடுவே இயற்கை அழகுடன் விளங்குகிறது.
சிவநெறி போற்றும் அருள் பொலியும் ஆலயங்களும், சிவநெறி புகட்டிய சித்தர் களும், அருளாளர்களும், நற்கல்விமான் களும், ஏழிசை போற்றும் மங்கல இசைக் கலைஞர்களும், பல்லிசை விற்பன்னர் ( களும், தமிழ் மரபுபேணி மேடையேற்றும் ' நாடகப் படைப்பாளர்களும், என்றும் ஊண் தந்து வாழ வைக்கும் மேழிச் செல்வமும், பகுத்துண்டு வாழ்ந்து பல்லுயிரோம்பும் பாவையார்களும், உடல் உளப் பிணிய கற்றி உயிர் காக்கும் மருத்துவ உத்தமர் களும், மழலை மொழி பேசி கல்வியால் அபிநயத்தால் அருஞ் செயலாற்றும் அழகுப் பதுமைகளான பாலவர்களும், பிறர் நலம் விரும்பும் சமூகத் தொண்டர் களும், இயற்கையான செம்மண்ணும், வற்றாத நன்னீரூற்றும் நிறைந்துள்ளதால் ஏனைய கிராமங்களுடன் ஒப்பிடும் போது இணையில்லாத திருவூராக அமைந்து 2 அன்று “இணையிலி” என்னும் பெயருடன் விளங்கியது. காலப்போக்கில் இப்பெயர் மருவி இணுவில் என மாறியது.
fi, f, 7 " FIF) ,
இணையிலி என்பதற்கு வேறொரு காரணமும் உண்டென்பதை எமது மூதா 0 தையர் எடுத்துரைத்தனர். இணுவில் திருவூரின் மத்தியிலமைந்த கந்தசுவாமி கோயிலை மையமாக வைத்து நாற்புறமும் 4 தரைமட்டம் பதிவாகவே அமைந்திருந்தது. ற மழைகாலங்களில் நாற் புறத்திலிருந்தும் மழை வெள்ளம் இப்பகுதியை நாடி ஓடி வந்து சேரும். அதற்கமைவாக அன்று
இணுவில் ஒலி

• இனிய சூழலும் த இணையிலி கணன"
- மூ.சிவலிங்கம் வீதிகளின் குறுக்கே மதகுகளும் கட்டப் பட்டிருந்தன. அந்த பெரு நிலப்பரப்பில் இரு இணைந்த குளங்களும் அமைந்திருந்தன. இணைந்த குளங்கள் (இணை+வில்) இணைவில் மருவி இணுவில் என வந்த தாகவும் சொல்லப்படுகின்றது.
சீர் இணுவைத் திருவூரின் எல்லை களாக தென் மேற்கில் தாவடியும் மேற்கிலும் வடமேற்கிலும் உடுவிலும் வடக்கே சுன்னாகமும் வடகிழக்கே உரும்பிராயும் தென்கிழக்கு மற்றம் தெற் கில் கோண்டாவிலும் அயற்கிராமங்களாக அமைந்துள்ளது. இத்திருவூரை ஊடறுத்து தெற்கு வடக்காக யாழ்.காங்கேசன்துறை வீதிசெல்கிறது.
முற்காலத்தில் இணுவையூர் மத்தியி லமைந்த இருகுளங்களின் நீரின் சிறப்பால் தெற்கில் செந்நெல்லும், செங்கரும்பும், கமுகு வாழை மற்றும் தென்னை ஆகி பவை பயிரிடப்பட்டன. வடக்கில் தற்போது செகராசசேகரப்பிள்ளையார் கோயிலச் சூழலில் பருத்திச் செய்கை பண்ணப் பட்டது. பயிர்ப் பாதுகாப்பின் பேரில் பருத்தி செய்கை பண்ணிய காணியை சிறுகண் டங்களாக்கி அடைப்புக்களில் வளர்த்தனர். இவ்வாறமைந்த ஒரு (பருத்தி) அடைப்பில் தோற்றுவிக்கப்பட்டதுதான் செகராச சேகரப்பிள்ளையார் ஆயலம். அன்றி லிருந்து இன்று வரை இவ்வாலயம் பருத்தி அடைப்புப் பிள்ளையார் கோயில் என்றே அழைக்கப்படுவது வரலாற்றுச் சான் மாகும்.
மக்களின் குடியிருப்புகளின் கிழக்கு, வடக்கு, மேற்குத் திசைகள் சிறந்த
-- 27
27

Page 30
விவசாயப் பூமியாக அமைந்திருந்தன. அக் காலந்தொட்டே புகையிலை சிறுதானிய வகை, கிழங்கு வகை, மற்றும் மரக்கறி வகைகள் யாவும் பயிட்ட விவசாயிகள் பெருநன்மையடைந்தனர். செம்மண்ணும் வற்றாத நன்னீர்க் கிணறுகளும் பேரு தவிபுரிந்ததால் பயிர்கள் நன்கு சிறப்பான பலிதத்தைத் தந்தன.
புகையிலை வெட்டி உலர்த்தி வீடுகளிற் பாடமாக அடுக்கிவைத்திருப்பர். அயலூர் வியாபாரிகள் நல்லவிலை தந்து வாங்கிச் செல்வர். புகையிலை பணப் பயிராகவே விளங்கியது. சிறுதானிய வகையில் தினை வரகு, குரக்கன், பயறு போன்றவை அறு வடை செய்ததும் பெரிய பனை ஓலைக் கூடைகளிலும், சாக்குகளிலும் நிரப்பி வீட்டினுள் கோர்க்காலியில் அடுக்கி வைப்பர், இத்தானியம் வருடம் முழுவதும் சத்துள்ள உணவாகப் பயன்படும். கிழங்கு வகைகளில் இராசவள்ளி, கொம்பு வள்ளி, சிறுகிழங்கு, கொடிக்கரணை, சட்டிக் கரணை ஆகியன உரிய காலத்தில் அறு வடை செய்து தமது வீட்டில் மண் நிலத் தில் பரப்பிவைத்துத் தமது தேவைக்கேற்ப பாவிப்பர். மரவள்ளிக் கிழங்கு தோட்டத் தில் கூடிய காலம் விட்டுத் தேவைக்கேற்ப நாளாந்தம் உபயோகிப்பர். தேவைக்கு மிஞ்சிய மரவள்ளி உட்பட ஏனைய கிழங்கு . வகைகளையும் இணுவிலின் வடபால் அமைந்த மருனார் மடச் சந்தையில் விற்று தமது வாழ்வை வளப்படுத்துவர். மரக்கறி வகைகளையும் கூடுதலாக நட்டு தமது தேவைக்கு மிஞ்சிய யாவற்றையும் சந்தை யில் விற்பர். இதனால் சிறப்புடன்
வாழ்ந்தனர்.
அன்றைய எம்மிணுவை மக்கள் பெரும் பாலும் விவசாயத்தையே தமது வாழ்வா தராமாகக் கொண்டனர். ஒரு சிலர் உப தொழிலாக சுறுட்டுக் கைத்தொழிலையும் மேற்கொண்டனர். கடின உழைப்பு உற் சாகமான நல்வாழ்வுக்கு உறுதுணையாக
இணுவில் ஒலி ---

இருந்தது. குடியிருப்பபுக் காணியில் பலா, மா, வாழை மற்றும் கனிதரு மரங்களை நாட்டி அதனால் நற்பலனடைந்தனர்.
எருப்பசளைக்காகவும் பாலுணவுத் தேவைக்காகவும் வீட்டிலும் தோட்டத்திலும் மாடுகளை பட்டியாகவும் தொட்டில்களிலும் கட்டியும் வளர்த்து வந்தனர். இதனால் நல்ல நிறைவான சத்துணவை உண்டும் பகுத் துண்டும் வாழ்ந்தனர். ஆடு மாடுகளுக்குத் தோட்டங்களிலிருந்து பசும்புல் தீவன மாகக் கிடைத்தது. எம்மவர்களுக்கு ஏனைய உணவுகளுடன் பாற் பொருட்களும் கிடைத்தன. இதனால் யாவரும் நோயற்ற வாழ்வில், இல்லறமாம் நல்லறம் பேணி அறவாழ்வு வாழ்ந்தனர். .
எம்மண்ணின் இயற்கை வளமான குளங் களின் பேறாக அச்சூழலில் தென்னை மற்றும் கனிதரும் மரங்களும் பெருவளர்ச்சி கண்டன. பறவையினங்களும் தங்கும் பேறு பெற்றன. காகங்கள் மயில்கள் தங்குவ துடன் மரங்களிற் கூடு கட்டிக் குஞ்சு பொரித்துத் தம்மினத்தைப் பெருக்கின. பகல் நேரங்களில் மயில்கள் கந்தசுவாமி கோயில் வீதியில் உலாவி மகிழ்வதால் ஆடவும், குயில்கள் கூவவும் இதரபட்சிகள் இனிய குரலெழுப்பவும் ஆலயச் சூழல் புனித புண்ணிய பதியாக அமைந்தது. இணுவில் திருவூரின் சிறப்புக்கு இவையே
முக்கியகாரணமாகும்.
இப்புனித பூமியில் வாழ்ந்த எம்மக்கள் வன் செயல், பாதகச் செயல்கள் யாவற்றை யும் கடிந்து இனிய வாழ்வில் மிளிர்ந்தனர். ஆலயச் சூழலும், வரவுமிகுந்த செய் தொழிலும், ஆன்மிக சிந்தனையும், பகுத் துண்டுவாழும் நற்பண்பும், அனைவரையும் அன்புடன் அரவணைக்கும் குலமரபும் இணுவையூர் மக்களின் அணிகலன்களாக அமைந்திருந்தன. எனவேதான் இணை யில்லாத திருவூராக இணுவில் சிறப்புப் பெற்றுள்ளது.*
28

Page 31
(சிறுவர் உலகம்)
பாரதி
ஸ்ரீ பரராசசேகர
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி பி போல் எங்கும் காணோம்' என்று பாடியவர் கி பாரதி. பாரதியார் ஒரு தமிழ்ப் புலவர். இவர் “ட இந்தியாவில் எட்டயபுரத்தில் 1892 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 11ம் நாள் அவதரித் தார். பல மொழிகள் அறிந்தவர் , ெ தமிழுக்கும் தமிழர்களுக்கும் நற்தொண்டு கு செய்தவர். இவர் 39 ஆண்டுகளே இவ் . உலகில் வாழ்ந்தவர். ஆயினும் இவர் செய்த பணி மிகப்பெரியது.
சி # 5
தலைப்பாகையும், கறுத்த ஓவக் ந கோட்டும், மீசையும் இவரது எடுப்பான தோற்றமாகும். இவர் அலகாபாத் பல் கலைக்கழகத்தில் சிறிய காலம் பயின்றார். தமிழ்மொழிக்குப் புதிய சுவையும், தமிழுல கத்திற்கு புதிய உயிரும் தொடுத்தவர் பாரதி. தேசிய எழுச்சியில் ஈடுபட்டார். பு. கவிதை மழை பொழிந்தார். புரட்சிக் கவி படி புதுமைக்கவி என்றெல்லாம் பாராட்டைப் ம பெற்றார். தமிழகம் மட்டுமன்றி தமிழர்கள் வாழும் நல்லுலகமும் அவரைப் பாராட்டி யது. அவரது பாடல்கள் எங்கும் ஒலிக் கின்றன.
அச்சம் தவிர் - ஆண்மைதவறேல் உடலினை உறுதிசெய் ஏறுபோல் நட என்பன அவரது புதிய ஆத்திசூடி வாசகங் காளகும்.
உ S இ ஒ 5 5 2 , 5 சி = 1
தமிழ்மொழி இனிமையானது. தமிழ் மொழியை நாம் நன்றாக படிப்பதில்லை.
இணுவில் ஒலி

யோர்
++ பூபாயLஈ. செல்வி குகநாதன் ஐனார்த்தனி தரம் 4 ப்பிள்ளையார் அறநெறிப் பாடசாலை மாணவி
றர் இகழ்ந்து கூறும் அறிவிலிகளாய் வாழ் ன்றோம் என்பதைச் சுட்டிக் காட்டி பாமரராய் விலங்குகளாய் நாமும் தமிழ ரன வாழ்தல் நன்றோ” என்று கூறு என்றார். தேமதுரத் தமிழோசை உலக மல்லாம் பரவச் செய்ய வேண்டுமென்று கரல் எழுப்பினார்.
எமக்கு முன் தோன்றிய புலவர்களின் Tடல்களை பிழையின்றி வாசிக்கவோ, ருத்தை விளக்கவோ முடியாதவர்களாக எம் இருக்கின்றோம். இக்கருத்தை ஊமை ராய், செவிடராய், குருடராய் வாழ்கின் றாம் என்று கூட்டிக் காட்டுகின்றார். நாம் மிழை நன்றாகக் கற்க வேண்டும். தமிழ் "மாழி நீண்ட காலம் வாழ வேண்டும் என்று ாரதி விரும்பினார். தமிழையும் தமிழ்ப் லவர்களையும் போற்றினார். தமிழ்ப் ற்றும் தேசபக்தியும் கொண்ட பாரதி, க்களைத் தட்டி எழுப்பும் உணர்ச்சி மிக்க ாடல்களைப் பாடினார். பல பாடல்களைப் எடிய பாரதி, இந்திய சுதந்திரத்தை மனக் ண்ணில் கண்டு களித்தார். "ஆடுவோமே ள்ளுப் பாடுவோமே... ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று பாடுவோமே”
ன்று பாடினார். புதுமைக் கவிஞன் பாரதி 921ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் ாள் இவ்வுலக வாழ்வை நீத்தார். ஆயினும் வெர் இவ்வுலகில் உள்ளோரின் மனதில் 5டி கொண்டுள்ளார். பாரதியாரை தமிழ Tகிய நாம் போற்றுவோம். பணிவுடன் பணங்குவோம்.*
20
பொதுசன நூலகம்
யாழ்ப்பாணம்

Page 32
മായാമാ
இணுவில் கல்விப் பாரம்பரிய
= கப் இனுவில் ஸ்ரீபரர
"தள்ளாவிளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு" என்ற வள்ளுவன் வாக்கிற்கமைய விளங்கு வது இணுவில் திருவூர். இது பரந்த நிலப் பரப்பையுடையது. நீர் வளத்தால், நில வளத்தால் சிறந்து விளங்குவது. சித்தர்கள் ஞானிகள் வாழ்ந்த பூமி. ஆன்மீகத்தின் நிலைக்களங்களாகப் பல ஆலயங்களைக் கொண்டு விளங்குவது. மக்கள் வாழ்வை வளம்படுத்தும் கல்விச்சாலைகள், கலை நிறுவனங்கள், வைத்திய சோதிட நிலை யங்கள், தொழிற்சாலைகள் பலவும் உள்ள டக்கிய சிறப்பினையுடையது.
ஒரு நாட்டின் வளர்ச்சி அந்நாட்டின் கல்வி வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது. இந்த வகையில் எமது கிராமம் மேலோங்கி நிற்பதற்கு வித்திட்ட கல்விமான்களை நினைவிற் கொள்ள வேண்டும். அந்நியர் ஆட்சி நம்நாட்டில் வேரூன்றிய காலத்தில் எமது கல்வி, கலை பண்பாடு யாவும் சீரழிக் கப்பட்டது. அதேவேளை உதயசூரிய னெனத் தோற்றம் பெற்றார் ஆறுமுக' நாவலர் பெருமான். அவர் வழியில் சைவத் தமிழ்ப் பாரம்பரியம் மீண்டுந் தலை தூக்கியது. அக்காலத்தில் அவரின் வழி
காட்டலில் திண்ணைப் பள்ளிக் கூடங்கள் மூலம் சிறார்களின் கல்வி வளர்க்கப் பட்டது.
இந்த வகையில் இணுவில் கிராமத்தில் ஆங்காங்கே பல திண்ணைப் பள்ளிக் 'கூடங்கள் தோன்றின. இணுவில் தெற்கில் அம்பிகைபாகப் புலவரினாலும் வெங்கடா சல ஐயரினாலும், மேற்கில் சரவணைச் சட்டம்பியாரினாலும், அவர் வழியில் வந்த அப்பாக்குட்டியரினாலும், கிழக்கில்
இணுவில் ஒலி ---

திருவூரின் மமும் வளர்ச்சியும்
பூஷணம் பண்டிதை திருமதி.வை.கணேசபிள்ளை எசசேகரப்பிள்ளையார் அ.கெ.பா.பொறுப்பாசியர்
சின்னத்தம்பிப் புலவரினாலும் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் நடாத்தப்பட்டன. இந்த வரிசையிலே சேதுச் சட்டம்பியார், வடிவேற் சுவாமிகளும் சிறுவர் கல்விக்கு வித்திட்ட வர்களாவர். இவர்கள் போன்று இலை மறை காயாகப் பலபடித்த உபாத்தியாயர் கள் கல்வித் தானங்களை ஆங்காங்கே வளர்த்தனர். இவர்கள் மாணவர்களிடம் எதுவித வேதனமும் பெறாது தியாக சிந்தையுடன் அறநெறிக் கல்வியை வாரி வழங்கினர்.
நல்ல எண்ணமும் தியாக சிந்தையுட னும் நல்லவர்களை உருவாக்க வேண்டு மென்ற உயர் நோக்கமுங் கொண்டு அறநெறிச் சிந்தனைக்கு வித்திட்ட இந்த மகான்களை நாம் மறந்து விடக்கூடாது. இவர்கள் சிந்திய விதைகள், ஆங்காங்கே வளர்ந்து கல்வி நிறுவனங்களாக உரு வெடுத்து பெருவிருட்சமாகி விழுது விட்டு இணுவில் கிராமத்தை அலங்கரித்து நிற் கின்றன. இந்த வகையில் இணுவில் கிரா மத்தில் வளர்ச்சியுற்ற இருகல்வி நிலையங் களைக் காணலாம். ஒன்று அம்பிகைபா கரினால் 1864இல் தோற்றுவிக்கப்பட்ட இணுவில் சைவப்பிரகாச வித்தியாசாலை (தற்போது இணுவில் இந்துக் கல்லூரி) மற்றது அப்பாக்குட்டியரால் 1930இல தோற்றுவிக்கப்பட்ட இணுவில் சைவ மகாஜன வித்தியாசாலை (தற்போது இணுவில் மத்திய கல்லூரி) ஆகும்.
இக்கல்வி நிறுவனங்கள் பல கல்வி மான்களை, கலைஞர்களை, பல பண்டிதர் களை, புலவர்களைத் தோற்றுவித்தது. மேலும் உயர்கல்வி பெற்றுச் சிறந்த
---- 30
30

Page 33
வைத்திய கலாநிதிகளையும், பொறி த யியலாளர்களையும் இணுவில் கிராமம் வ பெற்றெடுத்தது. மேலும் இசைக்கலை இ வல்லுநர்கள், நடனக்கலை வல்லுநர்கள் ப. தோற்றம் பெற்றனர். இவர்களுள் உலகப் பிரசித்தி பெற்றவர் களான தவில் வித்துவான் தட்செணாமூர்த்தியையும் கலைச்செல்வன் ஏரம்பு சுப்பையாவையும், ந மகாவித்துவான் வீரமணிஐயர் அவர் களையும் உருவாக்கியது இணுவில் கிராமே. பிரசித்தி பெற்றதவில் வித்துவான் கள், நாதஸ்வர வித்துவான்கள், வயலின் வித்துவான்கள், நாடகக் கலைஞர்கள், கூத்துக் கலைஞர்கள் பலரையும் எமது வ கிராமம் கொண்டுள்ளது.
9 G" இ = 2 ( E
மேலும் எமது கிராமத்தில் பல சமய நிறுவனங்கள் கல்விப் பணியை, கலைப் பணியை முன்னெடுத்துச் செல்கின்றன. இந்த வகையில், ஸ்ரீபரராசசேகரப்பிள்ளை யார் அறநெறிப் பாடசாலை, திருநெறித் சற்றற்ற்ற்ற்றரசராசனார்
தீமைக்கு என்ன வயல் வெளியால் விவசாயி ஒருவன் ( பாம்பொன்று வரம்பிலே குற்றுயிராக் கிட பரிதாபகராமாக இருந்தது. எடுத்துத் தன் நெ முயற்சித்தான். நெஞ்சுச் சூட்டினால் பாம்பு வேலையாக அந்த விவசாயியை உடனே ெ விஷம் தலைக்கேறப்பெற்ற விவசாயி பின்வ
"தீயவனைக் கொன்றழிக்காமல் உயிர் கொடு
நீதி : எது தீமையோ, பிற்போக்கோ அதை தாட்சண்யமுமின்றி உடனே அழித்து
(ஈசாப் கதை
வெளிநாடுகளில் வாழுகின்ற எமது ம களை 'இணுவில் ஒலிக்கு அனுப்பிவை கள் அடுத்த இதழில் பிரசுரமாகும் என் கின்றோம்.
இணுவில் ஒலி

தமிழ்மறை கழகத்தினால் நடாத்தப்பட்டு பருகிறது. இணுவில் கந்தசுவாமி கோவில் இளந்தொண்டர் சவையினால் அறநெறிப் பாடசாலை இயக்கப்பட்டு வருகிறது.
சைவத்திருநெறிக் கழகத்தினால் வெகாமி அம்மன் அறநெறிப் பாடசாலை டாத்தப்பட்டு வருகிறது. அத்தோடு இணுவில் கிராமத்தில் நான்கு முன் ள்ளிகள் இயங்கிவருகின்றன. மேலதிக ல்வி நிறுவனங்களும் சனசமூக நிலை "ங் களும், அறிவாலயமும், பொது பாலகமும் இணுவில் கிராமத்தின் கல்வி சளர்ச்சியிலும், கலை வளர்ச்சியிலும் ங்களிப்பைச் செய்து வருகின்றன. இன்று இணுவில் கிராமம் பல்வேறு அனர்த் ங்களிடையேயும் தன் தனித்துத்தை ஊழந்து விடாது தலை நிமிர்ந்து நிற்கின்றது. தெற்கு எமது முன்னோரின் தியாக "ந்தனையே காணரமாகும்.*
மாற்றாசம்மநாமம்
1 தீர்ப்பு? போய்க்கொண்டிருந்தான். அடிபட்ட ந்தது. விவசாயிக்கு அதைப்பார்க்கப் ஞ்சோடு அணைத்து அதைச் சூடேற்ற உயிர் பிழைத்துக்கொண்டது. முதல் நெஞ்சில் பட்பட்டென்று கொத்தியது. ருமாறு முனகிக் கொண்டு செத்தான்:
தேத்ததால் வந்த வினை இது!
ஒருவித இரக்கமும் கவிடவேண்டும்.
மண்ணின் உறவுகள் தங்கள் ஆக்கங் பத்துள்ளார்கள். அவர்களின் படைப்புக் பதைத் தெரிவித்துக் கொள்ளு
- ஆசிரியர்
--------- 31

Page 34
எமது கிராமமு
உபதலைவர் இணுவி சீர் இணுவைத் திருவூரில் வாழும் மக் களின் மூலோபாய வருமானத்தைத் தரும் தொழில் விவசாயமாகும். "உண்டிகொடுத் தோர் உயிர் கொடுத்தோர்” என்ற வாக்கியத்திற்கமய எமது கிராம மக்கள் தமது உடல்சக்தியை நூறு வீதம் பயன் படுத்தி விவசாயம் செய்கின்றார்கள். இந்த நவீன காலத்தில் பிற இடங்களில் இயந்திர மயமான விவசாயம் நடைபெறுகின்றது. இங்கு அப்படியான பெருநிலப்பரப்போ நீர்ப்பாசன வசதிகயோ இல்லை. ஆறு களோ குளங்கயோ வேறு நீர்த் தேக்கங் களோ இல்லை. ஆக உள்ளது மூன்று மாத மழை நீர் நிலத்தடியில் இயற்கை யாகத் தேங்கி நிற்பதால் 30, 40 அடி ஆளத் திற்குக் கிணறுகள் வெட்டி அதன் மூலம் பெறும் நீரை இறைத்து விவசாயச் செய்கை நடைபெறுகின்றது.
விவசாயிகள் தமக்குள்ள சிறு சிறு நிலப் பரப்புக்களை உரிய முறையில் பயன் படுத்தி வருடத்தில் மூன்று போக மேட்டு. நிலப்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுவரு கின்றார்கள். பிரதானமாக மரக்கறிகள், கிழங்கு வகைகள், வாழை, வெங்காயம், புகையிலை, என்பன மாற்றுப் பயிர் செய் கையாக நடைபெறுகின்றது. அத்துடன் இங்குள்ள தரிசு நிலங்களுக்குக் கீழ் உள்ள கல்லுகளைக் கிளறி எடுத்துவிட்டு, திராட்சை, பப்பாசி, மா, பலா போன்ற கனிதரு தோட்டங்களை உருவாக்கி யுள் ளார்கள். நிலவசதி இருந்தால் இவற்றைப் பெருந்தோட்டமாகச் செய்யலாம்.
மேலும் இந்த மக்களுக்கு விளை பொருட்களாக சந்தைப்படுத்தும் வசதி
இணுவில் ஒலி

ம் விவசாயமும்
ணக்குமார்
பாயா
- சி.திருக்குமார் பில் விவசாயிகள் சம்மேளனம்
களை அவர்களே ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை உள்ளது. ஸ்தாபன ரீதியாகவோ, கொள்முதல் செய் வதற்கு எந்த வசதிகளும் இல்லை இங்குள்ள சந்தைகளிலும் விளை பொருட் களை உரிய முறையில் விற்க முடியாது உள்ளது. அதனால் உரிய வருமானத்தைப் பெறமுடியாதுள்ளது.
எமது மக்கள் தொன்று தொட்டு இயற்கைப் பசளைகளையே பயிர்களுக்கு உரமாக இட்டு பயிர்களையும் நிலத்தையும் ஒரு சீரான போசாக்குள்ள விவசாயமாகச் செய் கை பண ண மக்களை யும் நிலத்தையும் பாதுகாத்து வந்தார்கள். “சிறு துளி பெருவெள்ளம்” என்பதற்கு அமைய வீடுகளில் பசுக்களையும் ஆடுகளையும் கோழிகளையும் வளர்த்து வருகின்றார்கள். பசும்பால் உற்பத்தி இயற்கைப் பசளை உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. தமது தேவை களைப் பூர்த்தி செய்து மிகுதிப் பசும் பாலை பால் சங்கங்களுக்குக் கொடுத்து மற்றமக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்து கூடிய வருமானத்தையும் பெற்றுக் கொள்கின்றார்கள். இந்த வளர்ப்பு முறை கள் பெரிய பண்ணைகளை விட பொது மக் களுக்கு மிகவும் பிரயோசனமாக உள்ளது. அது மட்டுமல்லாது மாட்டுக் கழிவுகளையும் வீட்டுக் கழிவுகளையும் பயன் படுத்தி கூட்டுப்பசளை தயாரித்து பயிர் களையும் மண்வளத்தையும் பாதுகாக் கின்றர்கள். எமது கிராமமண் வளம் செம் பாட்டு மண்வளமாக உள்ளதால் எவ்வகை யான பயிர்களையும் எந்தக் காலத்திலும் உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது.
---- 32
1)

Page 35
மனிதக் கூலி வளம் நாட்டுப் பிரச்சினை கள் காரணமாகப் பற்றாக்குறையாக உள்ளதானால் உற்பத்தி குறைகின்றது. அத்துடன் வெளிஇடங்களில் இருந்து வரு கின்ற உருளைக்கிழங்கு, வெங்காயம் புகையிலை உற்பத்திகள் போன்றவற்றா லும் உரிய பலனைப் பெற முடியாது உள்ளது.
தற்போது விளைபொருட்களுக்கு இரசாயனப் பொருட்கள் பாவனை அதி கரித்துச் செல்வதனால் அவற்றின் விலை களும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டு போவதனாலும் வருமானத்தில் பெரும் பகுதி செலவாகின்றது. நீர் இறைக்கும் செலவும் பல மடங்கு கூடி விட்டது. பீடை களைக் கட்டுப்படுத்துவதற்கு இயற்கை வளங்களைப் பயன்படுத்துவது மிகவும் அருகிவிட்டதனால் பிடைகளைக் கட்டுப் படுத்துவது சிரமமாக உள்ளது. மாற்றுப் பயிர் செய்கை மூலம் குறிப்பாக மர முந்திரிகை, திராட்சை, சூரிய காந்தி, சோளப் பயிர், எள்ளு, நிலக் கடலை, சோயா, போன்ற பல உபஉணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதால் அதன் பலன்களையும் வேலைவாய்ப்பு களையும் பெறமுடியும்.
ஒரு கிராமத்திற்கு ஒரு விவசாயச்சம் மேளனம் இருந்தாலும் அவற்றின் செயற் பாடு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. காரணம் அவற்றிக்கு ஒரு நிலையான வருமானமோ, நிலையான உத்தியோகத்தர்களோ இல்லாதிருப்பது பெரும் குறையாக உள்ளது. மேலும் விவ சாயக் காணிகள் பல கட்டடங்களாக மாறி வருவதால் விவசாய நிலப்பரப்பு குறைந்து கொண்டே செல்கிறது என்பதும் உண் மையே. எமது கிராமம் விவசாயத்தில் தன்னிறைவு பெற்றால் மக்கள் பொருளா தாரம் உன்னத நிலை அடையும். *
இணுவில் ஒலி

நாட்டார் இலக்கியம் கற்றோரும், கல்லாதோரும் இன்புறும் பாடல்கள், கதைகள், நொடிகள் இவை யெல்லாம் நாட்டார் இலக்கியங்களாகும். பாட்டாளி மக்கள் பாடுபட்டுத் தேடித்தந்த பல்வகைச் சம்பத்துக்களில் நாட்டார் இலக்கி யமும் ஒன்றாகும். நாட்டார் பாடல்கள் வாய்| மொழி வாயிலாகவே தொன்று தொட்டு இருந்து வந்துள்ளன. பழந்தமிழ்மக்கள் தங் களுடைய உழைப்பின் போது சோர்வின்றி) உல்லாசமாக இருப்பதற்காக தெம்மாங்கு) களைப் பாடி மகிழ்ந்தனர். 'ஆடிப்பாடி வேலை) செய்தால் அலுப்பு இருக்காது'. ஆட்டமும் பாட்டமும் இசையோடு தோன்றின.
கிராமந்தோறும் நடைபெற்ற தொழில் களை ஒட்டியவாறு பாடல்களும் எழுந்தன.| உழுதல், விதைத்தல், களை பிடுங்குதல், அரிவி வெட்டுதல், சூடு மிதித்தல், வண்டி ஓட்டுதல், நெல் குற்றல் போன்ற தொழில் களை அலுப்பின்றிச் செய்யும் வேளையிலும் நாட்டார் பாடல்கள் தோன்றலாயின. மேலும் பொழுது போக்காக ஆடும் ஊஞ்ச| லாடல், கிராமத்து விளையாட்டுக்கள் இவற் றிலும் பாடல்கள் எழுந்தன. பிள்ளைகளைத் தொட்டிலிலிட்டு ஆட்டும் வேளைகளில் தலாட்டுப் பாடி அவர்களைத் தூங்க வைப் பார்கள். இன்பமான வேளையிலும், துன்பம் மான வேளையிலும் பாடல்கள் எழுந்தன. மரண வீடுகளில் 'ஒப்பாரி பாடும் வழக்கம் இருந்து வந்துள்ளது.
நாட்டார் இலக்கியத்தின் மேன்மையை உணர்ந்து அக்காலத்தில் இளங்கோவடிகள் தமது செந்தமிழ்க் காப்பியமான சிலப்பதி காரத்தில் நாடோடிப் பாடல்களின் சாயலிற் பல கவிகள் புனைந்துள்ளார். மாணிக்கவாச கரின் திருவாசகத்திலும் நாட்டுப் பாடல்) களின் சாயல் தொனிப்பதை அவதானிக் கலாம்.
நாட்டார் இலக்கியங்கள் மக்களின் பாரம் பரியம். பண்பாடு, கலைகள் என்பவற்றை நமக்கு அவை புலப்படுத்தி, மக்களின் வர லாற்றினை அறிய உதவுகின்றன. மக்களின் பழக்க வழக்கங்கள், அவர்கள் அனுபவித்த இன்ப துன்பங்கள் ஆகியவற்றையும் எடுத்துக் காட்டுகின்றன. பல்வேறு வகை நம்பிக்கைகளை நாம் அறிய உதவுவதுடன், மக்களின் தொண்மை நாகரிகத்தையும் அது வளர்ந்த வரலாற்றையும் அவை எடுத்தக் கூறுகின்றன. *
தபாதம் 4ம் ம்
------------------- 10

Page 36
சகாக்கரகககககககா
தமிழும் 6
தமிழும் சைவமும் மலரும் மணமும் போல ஒன்றையொன்று தழுவி வளர்ந் தவை. வடவேங்கடம் தென்குமரியா யிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து மொழி யும் சமயமுமாக முகிழ்ந்தவை. தமிழ் கூறும் நல்லுலகத்துக் கடவுள் "தென்னா டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” எனும் மாணிக்கவாசக சுவாமிகள் வாக்கின் வண்ணம் சிவன் என்னும் நாமம் கொண்டவன். ஆதியும் அந்தமும் இல்லாதவன். அவ்விதமே தென்னாட்டு மொழியாகிய தமிழும் ஆதி யும் அந்தமும் இல்லாதது. சிவனால் தோற்றுவிக்கப்பட்டது. இச்செய்தியை மகாகவி பாரதியார். தனது தமிழ்த்தாய் எனும் பாடலில்
ஆதிசிவன் பெற்றுவிட்டன் - என்னை ஆரியமைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே-நிறை மேவும் இலக்கணஞ்செய்துகொடுத்தான்
மூன்றுகுலத்தமிழ் மன்னர்-என்னை மூண்டநல் லன்பொடுநித்தம்வளர்த்தார்
ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர் ஆரியத்துக்கு நிகரென வாழ்ந்தேன். சிவனால் தோற்றுவிக்கப்பட்ட மொழி தமிழ் என்றும் அதற்கு அகத்தியர் முத னூல் வகுத்தார் என்றும், சேர சோழ பாண்டியர் ஆகிய மூவேந்தரும் வளர்த் தார்கள் என்றும், ஆரிய மொழியாகிய சமஸ்கிருதத்திற்கு நிகரான மொழியாக வளர்ந்ததாகவும் தமிழ்த் தாயின் தன் கூற்றாகச் சொல்கின்றார்.
உலகப் பொதுமறையாம் திருக்குறள் தந்த வள்ளுவனார் சைவத்தையும் தமிழையும் ஒன்றாகவே கண்டு
இணுவில் ஒலி

மககககககககககககககககககககககககக
சைவமும்
மயானகா - கலாபூஷணம் சைவப்புலவர் சு.செல்லத்துரை
'அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு' என எழுத்துக்கள் எல்லாவற்றுக்கும் தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாய 'அ' என்பதே முதல் என்றும் அதே வேளை ஆதிபகவன் ஆகிய சிவன் உலகத்துக்கு முதல் ஆவான் என்றும் சொல்வதன் மூலம் தமிழும் சைவமும் அநாதியானவை என்பதை அறிவிக்கின்றார்.
தமிழ் மொழி வளர்ந்த வரலாற்றைப் பிற்காலப் புலவன் ஒருவன்
"பொருப்பிலே பிறந்து தென்னன்
புகழிலேகிடந்து சங்கத்து இருப்பிலே இருந்துவைகை
ஏட்டிலே தவழ்ந்து நெருப்பிலே நின்று கற்றோர்
நினைவிலே நடந்து ஓர்ஏன மருப்பிலே பயின்றபாவை
மருங்கிலே வளருகின்றாள். எனக் 'கூறுகின்றார். பாரதியார் கூற்றை மெய்ப்பித்து அகத்தியார் வாழ்ந்த தமிழ் மலையாகிய கொதிய மலையில் அகத்தி யம் எனும் நூலாகப் பிறந்து பாண்டியர் நிறுவிய தமிழ்ச்சங்கத்தில் சங்க இலக்கிய மாக எழுந்திருந்து, தமிழ் விரகர் சம்பந்தர் தேவாரமாக ஏட்டில் எழுதி வைகை ஆற்றில் இட்டபோது எதிரேறித் தவழ்ந்து, நெருப்பில் இட்ட போது எதியாமல் நின்று, கற்றறிந்த புலவர் மனதிலே நடந்து இன்று நம்பக்கத்தில் வளருகின்றாள்.
புலவர் பெருமக்கள் காலத்துக்குக் காலம்படைத்துத் தந்த காலத்தால் அழியா ஐம்பெருங் காப்பியங்களை அணிகலன்

Page 37
களாகவும், வள்ளுவனார் தந்த திருக் எ குறளைச் செங்கோல் ஆகவும் கொண்டு நீதி வழுவா நெறிமுறையில் உலகை ஆள்கின்றான்.
PE
காதொளிரும் குண்டலத்தாள்
கனிமொழியாள்வாழ்க- (குண்டலகேசி) கைக்குவளையாபதிகொள்-(வளையாபதி)
கன்னிகையாள்வாழ்க. மேதகுமென் மார்பிடைச்
சிந்தாமணியாள்வாழ்க -(சீவகசிந்தாமணி) | மின்னுமணிமேகலைசூழ் - (மணிமேகலை)
மெல்லிடையாள்வாழ்க சீதமலர்ப் பாகுமொலிச் |
சிலம்புடையாள்வாழ்க - (சிலப்பதிகாரம்) சேரசோழபாண்டியர்தம்
செல்வமகள்வாழ்க நீதியுறும்செங்கோலாய்த்
தூயகுறள்தாங்கும் - திருக்குறள் நிகரறியாச் செந்தமிழ்த்தாய் |
நீடுழி வாழ்க.
தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், திருமுறைகள் பிற்கால இலக்கியங்கள் இயல், இசை, நாடகங்கள் இக்காலச் சிறு கதைகள், கவிதைகள் நவீனங்கள் முதலாய இலக்கண இலக்கியங்களாக இன்றும் வளர்ந்து கொண்டே இருக் கின்றது தமிழ்.
தமிழ்போலவே சைவமும் "சைவம் சிவனுடன் சம்பந்தமாவது” எனும் திரு மூலர் கூற்றின் வண்ணம் சிவனால் தோற்றுவிக்கப்பட்டு சைவத்திருமுறைகள் சித்தாந்த சாத்திரங்கள், பிற்காலப் புராணங்கள் ஆகிய அருளாளர்களின் வாக்காகி வளர்ந்து கொண்டே இருக் கின்றது. எங்கே தமிழ் உண்டோ அங்கே சைவமும் உண்டு.
புலம்பெயர்ந்து நம்தமிழர் வாழ்கின்ற நாடுகளில் எல்லாம் சைவாலயங்களை நிறு விச சைவ வழிபாடி யற் றித திருமுறைகள் புராணங்களைப் போற்றிச்
இணுவில் ஒலி

சைவர்களாகவே வாழ்கின்றனர். அது போலப் புலம்பெயர் நாடுகளில் தமிழை மறவாது இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழையும் வளர்த்து வாழ்வதையும் காணமுடிகிறது.
எனவே தமிழும் சைவமும் அநாதி பானவை மட்டுமல்ல ஒன்றில் இருந்து ஒன்றைப் பிரிக்க முடியாதவையாக என்றும் இன்று நிலவி வளர்வதைக் காண முடியும். இணுவில் திருவூரே இதற்குச் சான்று.*
சிறப்புமிகு புறநானூறு
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, பைந்தமிழ் நலத்தைப் பாரிக்கக் கருதிய | பாண்டியப் பேரரசர்கள், தமிழ் நலத்தாற் செறிவுற்றிருந்த சான்றோர்களுள் சிலரை ஒருங்கே கூட்டித் தமிழ்ச்சங்கங்களை நிறுவித் தாய்மொழியாம் தன்னிகரில்லாத் தமிழ் மொழியைப் பேணிக் காத்தனர். ஆய்வுக் களங்களையும், அறிவியல் மன்றங் களையும் அமைத்துச் சிறப்பித்தனர். இவ்வாறு சங்கங்களை நிறுவித் தாய்மொழி யைப் பேணிய பெருமை பழந்தமிழர்களுக்கு மட்டுமே உரியதாகும்..
பழந்தமிழ்ச் சான்றோர் தொகுத்துப் பேணிய தமிழ்ச் செல்வங்களுள், புற நானூற்றுத் தொகை நூல் ஒப்பற்ற ஒளிர் மணிக் கோவையாகும். அருளும் ஆண்மை பும், பண்பும் பாசமும், பாவும் பாவலரும், இசையும் இசைப்போரும், அரசும் நாடும், மக்களும் மன்னரும், அன்பும் பண்பும் உயிர்ப்புடன் விளங்குகின்ற நிலைகளை புறநானூற்றுள் கண்டு களிக்கலாம். புத் துணர்வும், புதுவாழ்வும் பெறத் துடிதுடிக்கும் நமிழ் மக்களுக்குப் புறநானூறு ஓர் ஒப்பற்ற அறிவுச் சுரங்கமாகும். பண்டைய வீர வர யாற்றைக் காட்டி, நம்மையும் வீரஞ் செறிந்த தமிழராக்கும் தூண்டுகோல் புற நானூறு எனில், அது சாலவே பொருந்தும்.*
பி

Page 38
காகாககாகாககாகா
பாரதியாரின் க
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்க் கவிஞன் பாரதி. சுவை புதிது, பொருள் புதிது, சொல் புதிது என்று கூறத் தக்க வகையில் பாரதியாரின் நற்கவிதை கள் இன உணர்வையும் மொழி உணர்வை யும், பெண் உரிமைச் சிந்தனையையும் பொதுமைச் சிந்தனைகளையும் விரிந்து பரந்து ஒலி எழுப்புவனவாக மிளிர்கின்றன. நாட்டின் விடுதலையை, தேசியப்பற்றை, மொழிப்பற்றை ஊட்டும் கவிதைகளை பாரதியார் தந்துள்ளார் என்று அவரை நோக்குபவர்கள் அதிகம். இருந்தாலும் இலக்கியத்தையும் தமது படைப்புகளால் முன்வைத்துள்ளார். பாரதியாரின் இலக்கி யங்களில் பல மேல்நாட்டு இலக்கியக் கோட்பாடுகளின் தாக்கம் காணப்படுவதை அவதானிக்கலாம். 'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் வேண்டும்' என்கிறார். பொதுவாகவே அவரது கவிதைகளில், சிறுகதைகளில் புரட்சிகரமான புனை வியல் போக்கைக் காண முடிகிறது. யதார்த்தப் பண்பை அவருடைய படைப்பு கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. இவ்வாறு பல்வகைப் பரிமாணங்களுடன் ஆளுமை மிக்கவராக முனைப்புப் பெற்றிருக்கும் பாரதியார் கல்வியின் முக்கியத்தை முன்னிறுத்தி கல்விச் சிந்தனைகளைத் தந்துள்ளார்.
அறிவியல் அணுகுமுறையை அவர்தம் பாடல்கள் வழியாக எடுத்துக் காட்டி யுள்ளார். அறிவியல் என்பது விஞ்ஞானத் தைக் குறிக்கும். எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அதன் காரண காரி யத்தை ஆராய்ந்து பார்ப்பதே அறிவியல். இதன் பயன் மனித இனத்திற்கு முழுமை
இணுவில் ஒலி

கவிச் சிந்தனைகள்
ஒரு நோக்கு
LFாடியா
- தமிழ்த்தென்றல் தம்பு சிவா
யாகச் சென்று சேரவேண்டும் என்று பாரதி விரும்பினார்.
"நல்லதோர் வீணை செய்தே - அதை | நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி - என்னைச் சுடர்மிகு மறிவுடன் படைத்து விட்டாய்.” இந்தச் சுடர்மிகு அறிவு அறிவியல் அறிவேயாகும். தமிழின் அறிவியல்துறை சாதனை படைக்க வேண்டும் என்பதே பாரதியின் கனவாக இருந்துள்ளது. எல்லோரும் அறிவாற்றல் மிக்கராகி விட்டால் அடிமைநிலை மட்டுமல்ல, அறியாமை மடமை உள்ளிட்ட அனைத்தும் மாறிவிடும் என எண்ணினார். அந்த அறிவு பிறருக்குப் பயன்படத்தக்க வகையில் சமுதாயப் பணிகளை ஆற்ற வேண்டும் என்றும், அப்போதுதான் கற்ற கல்விக்கும் பெற்ற அறிவிற்கும் பெருமை ஏற்படும் என்கிறார், பிறருக்குப் பயன்படாதவனின் அறிவு உயர்ந்ததாக இருந்தாலும் அது பயனற்றதாகும் என்பதே அவரது வாதம்.
அறிவியல் துறையில் அவரது தூர நோக்கானது எம்மையெல்லாம் அதி சயிக்க வைத்துள்ளது. தொலைபேசி அரிதான அந்தக் காலத்தில் எவ்வளவு உயர்ந்த சிந்தனைகள் அவர் மனத்தில் தோன்றியிருக்கின்றன.
"காசிநகர் புலவர்பேசுமுறைதான் காஞ்சியிற் கேட்பதற்கோர்கருவிசெய்வோம் என்று பாரதியார் கண்ட கனவு இன்று தகவல் தொழில் நுட்பம் வேகமாக வளர்ந்த தன் காரணமாக நிறைவேறியுள்ளது. எங்கு நடக்கின்ற நிகழ்ச்சியானாலும் அடுத்த விநாடி கேட்பதுமில்லாமல் காண்பதற் கான வளர்ச்சியையும் இன்று நாம் பெற்றுள்ளோம்.
36

Page 39
"மந்திரங்கற்போம்வினைத் தந்திரங்கற்போம்
வானையளப்போம் கடல் மீனையளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் சந்தி தெருப்பெருக்கும் சாத்திரங்கற்போம்"
சந்திர மண்டலத்தில் மனிதன் கால் பதித்ததையும், செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திப் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதையும் தமது தூர நோக்கால் பாரதியார் சொல்லி வைத் துள்ளார்.
(18 . 2 6, 8
கல்வி என்பது மனித சமுதாயத்தை மேம்படுத்தும் கருவி. வாழ்க்கையை நெறிப்படுத்திச் சிறந்த இலக்கை அடைய மு வழிவகுக்கும் சட்டம். கல்வியினால் ே மட்டுமே ஒரு சமுதாயத்தை மாற்றிய மைக்க முடியும். கல்வி தனிமனித வாழ்வுக் கும், குடும்ப வாழ்வுக்கும், சமுதாய வாழ்வுக்கும் ஏற்றம்தர வல்லதாகும். கல்வி என்பதற்குப் பொதுவாகக் கற்றல் என்ப துடன் இணைந்தே பொருள் கொள்ளப்படு கின்றது. அச்சத்தைப் போக்கி அறியா மையை நீக்கி வலிமையையும் தன்னம் பிக்கையையும் அளிப்பதாகக் கல்வி |
அமைய வேண்டும்.
6) H
பாரதியாரின் கல்விச் சிந்தனைகளுக் குள் குடும்பக் கல்வி, தாய்மொழிக் கல்வி, அனைவருக்கும் கல்வி, தேசிய ஒற்றுமை, நிலம் பற்றிய ஆய்வு, அரசியல் சாஸ்திரம், அறிவியல் சிந்தனைகள், சுயதொழில் அறிவு ஆகிய அம்சங்கள் உள்ளக்கப்பட்டி ருப்பதை அவதானிக்கலாம்.
8 9 & E F 5 அE [ 4 ] 1, 1, அ இ க .
மனிதன் மனிதனாக வாழ வேண்டு மானால் கல்வி மிகவும் இன்றியமையாத ஒன்றாக அமைந்துள்ளது. சமுதாயத் திற்குப் பயனுள்ள மனிதர்களை உருவாக் குவதே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். அடிப்படைக் கல்வியை ஒவ் வொரு குடும்பத்தினரும் பெற்றால்தான் தேசம் நல்வழிப்படும் எனக் கூறும் பாரதி, குடும்பக் கல்வியே தேசக் கல்விக்கு அடிப்படை என்கிறார்.
இணுவில் ஒலி

கல்வியை அவரவர் தாய்மொழியில் கற்றால்தான் அக்கல்வி மாணவர்களைச் சென்று அடையும். தாய்மொழிக் கல்வியே பிறந்தது என்றும், அதன் மூலம் கற்பதே எளிது என்றும், ஆய்வுகளை மேற்கொண்டு வெற்றி பெறுவதற்கு இக்கல்வி முறைதான் உகந்தது என்று வலியுறுத்துகின்றார்.
“வீடுதோறும்கலையின்விளக்கம்
வீதிதோறும் இரண்டொரு பள்ளி நாடு முற்றிலும்உள்ளனர்கள்
நகர்களெங்கும்பலப்பல்பள்ளி
இப்பாடலின் வாயிலாகக் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வீதி தோறும், ஊர்தோறும் பள்ளிகளை நிறுவ வேண்டும் என்கிறார்.
“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடையபுதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்" பிறநாடுகளிலுள்ள அரிய பிறமொழி பல்களையும், வரலாறுகளையும் தமிழ் மொழியில் பெயர்த்துப் பயன் பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் குழந்தைகளுக்குப் பூமிப்படங்கள், கோளங் கள், வர்ணப்படங்கள் முதலியவற்றை டபயோகப்படுத்தி, கண்டங்கள் பற்றியும் அவற்றிலுள்ள முக்கிய தேசங் கள் , அவற்றின் ஜனத்தொகை, நாட்டின் நிலை, வியாபாரம் முக்கியமான விளையாட்டுக் கள், முக்கிய தைத்தொழில்கள் போன்ற "ல விடயங்களையும் விளக்கிக் கூறி மாணவர்கள் அவற்றை அறிந்து கொள்ளச் செய்ய வேண்டும். அத்துடன் சிறப்பு வாய்ந்த சிற்பத்தொழில்கள், கோயில்கள் பற்றிய அறிவினையும் அவர்களுக்கு வழங் குதல் வேண்டும். பழங்கால நினைவுச் சின்னங் களை அழிவிலிருந்து மீள உருவாக்கம் செய்யவும், புதியனவறைற்றை -ரு வாக்கவும் தெரிந்து கொள் ள வேண்டும் என்கிறார்.
பொருளாதாரத்தில் நாடு முன்னேற்றம் காண வேண்டும் என்ற நோக்கில் பிற
17

Page 40
நாட்டுப் பொருளாதாரப் புரட்சி கொள்கை களை மாணவர்களுக்குக் கற்பித்தல் மூலம் அறிமுகப்படுத்த வேண்டும். வியா பாரத்தில் கூட்டு வியாபாரம், தொழிலாளர் களின் உழைப்பால் மேம்படும் உற்பத்திப் பெருக்கம் போன்றவற்றை ஊக்குவிப்ப துடன், பொருளாதார ஏற்றத்தாழ்வு களைச் சீர்செய்து வீட்டுயர்வையும் நாட்டு யர்வையும் ஏற்படுத்த முனைய வேண்டும் என்கிறார்.
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வும், ஒற்றுமையை உருவாக்கவும் குழந்தைகள் மனதில் பாப்பாப் பாட்டு மூலம் நல்ல சிந்தனையை விதைத் துள்ளார்.
ஓடி விளையாடு பாப்பா-நீ ஓய்ந்திருக்க லாகாதுபாப்பா! கூடிவிளையாடு பாப்பா =ஒரு குழந்தையைவையாதே பாப்பா!"
கல்வி கற்றலையும், பாட்டுப் பாடுவதை யும், விளையாட்டையும் முக்கியப்படுத்தி பிஞ்சு உள்ளங்களில் நல்ல விதைகளை
விதைத்துள்ளார்.
"காலைஎழுந்தவுடன் படிப்பு-பின்பு கனிவுகொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுவதும் விளையாட்டு -என்று வழக்கப்படுத்திக்கொள்ளுபாப்பா!" என்று அமைகிறது அவருடைய சிந்தனை.
காலந்தோறும் பலவகையான இலக்கி யங்களைத் தோற்றுவித்து, மாறிவரும் ஒசாமாற்றாற்றாற்றார்
வாழ்த்துகின்றோம்! எமது மண்ணின் மைந்தன், தமிழ்த்துறைத் தலைவர் கலா? அவர்கள் பேராசிரியராகப் | இணுவில் ஒலி" தனது வ. தெரிவித்துக் கொள்ளுகின்றது.
இணுவில் ஒலி

புவியியல், உளவியல், தொடர்பியல் அடிப் படையில் இலக்கண நூல்களை உரு வாக்கிக் கொண்ட செம்மொழி என்னும் அந்தஸ்தைப் பெற்று நிற்கும் தமிழுக்குத் தன் பங்களிப்பைச் செய்த பாரதியின் சிந்தனைகள் இன்றும் ஏற்புடையதாகவே உள்ளன,
ஒரு மொழியில் உருவாகும் நூல்கள் மொழியைச் செழிக்கச் செய்யும். புத் தொளி பெறச்செய்யும். பாரதியின் படைப்பு களில் நாட்டுப் பற்று, மனிதவிடுதலை, பெண்விடுதலை, கல்வி, மனித நேயம். இறையாண்மை, இறைமை, பொருளியல் எனப் பல்துறைக் கருத்துக்கள் பொதிந்து கிடக்கின்றன. அக்கருத்துக்கள் அவர் வாழ்ந்த காலச் சூழலுக்கு மட்டுமன்றி ஒரு நூற்றாண்டை யும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சி பெருமுன்னேற்றம் கண்டு நிற்கின்ற இன்றைய காலச் சூழலுக்கும் பொருந்தக் கூடிய பரிமாணங்களையும் உள்ளடக்கியுள்ளன.
சொல்லடி சிவசக்தி - எனைச் சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்! வல்லமைதாராயோ இந்த மாநிலம்பயனுற வாழ்வதற்கே" என்பதற்கேற்பத் தமது சுடர்மிகு அறிவை முன்நிறுத்தி மாநிலம் பயனுற்று வாழ வழி சமைத்தார். பாரதி சொன்னால் அது உண்மையே!*
ஒசாமாசாமாசமாக
பேராதனைப் பல்கலைக்கழகத் நிதி வல்லிபுரம் மகேஸ்வரன் பதவியுயர்வு பெற்றமைக்காக ாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன்
18

Page 41
மலானை
5. ச 689
இணுவைச் சிவக
ஓர் இசைப்பாடல்
- கவிஞர்
எமது இந்து மதப் பாரம்பரியத்தில் சக்தி ! வழிபாடு என்பதும் அந்த சக்தியை இ அம்பிகை ரூபமாகக் கொண்ட ஆலய வழி ! பாடுகளும் தனிச்சிறப்புப் பெற்று விளங்கு வனவாகும். ஏனெனில் சக்தி வழிபாடு என் றாலே அது தாய்மையை, கருணையை ப கசியவைக்கின்ற போற்றுகின்ற தாய் வழிபாடு என றே அதிகம் பொருள் கொள்ளப்படுகிறது. எனவேதான் இந்த 6 உலகையாளும் அன்னை பராசக்தியே ' அனைத்துக் குமான இயங்குநிலைக் காரணியாக இருக்கின்றாள் என்கிறது ந எமது இந்துமதம். அதனால்தான் சக்தி வழிபாடு என்பது இன்று ஆழ்மனத்தின் 4 அம்பிகை உபாசனை முதல் மேல் 6 மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு வரை வியாபகம் கண்டிருக்கிறது.
- HL 3 ஓ *!
2 ]= E 1, 2 = 1, 1= து
G
9 2
அதன் வழி யாழ்ப்பாண புண்ணிய ம பூமியில் இணுவையம்பதி எனும் திவ்விய | கிராமத்தில் உள்ள சிவகாமி அம்மன் கோயிலும் தனிச்சிறப்பு பெற்றதாகும். சிதம்பர வளவிலுறை சிவகாமி என போற்றப்படும் இந்த அன்னை இவ்வூர் மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்து விட்ட தெய்வமாக, அவர்களின் எ வழிபாட்டு, மற்றும் பண்பாட்டியலின் அடை யாளமாகப் போற்றப்படுகிறாள். ஆகமவழி ப அமைந்து இந்த ஆலயத்தின் திருக் கோபுரம் திருத்தேர் உட்பட அனைத்துமே தனிச்சிறப்பு வாய்ந்தவை. தேடிவந்து அம்மா என அழைக்கும் அடியவர்களை எல்லாம் நாடிச் சென்றே நல்லருள் சுருக்கும் அதிசயத் தெய்வமாக இந்த இணுவைச் சிவகாமி விளங்குகிறாள். இந்த இ நவசக்தி நாயகியின் பெருமைகளை G
16 (1 ( E .
இணுவில் ஒலி

ாமியம்மைக்கு * தொகுப்பு......
8 88 ..
5.வீரா
போற்றி பிரவாகித்த இசைப் பாடல் இறுவட்டே “சிதம்பரவளவாளே போற்றி போற்றி” எனும் ஒலிப்பாடல் தொகுப்பாகும்.
இணுவிலைச் சார்ந்த புலம்பெயர்ந்த பாசத்து உறவுகளின் அனுசரணையுடன் திரு. உமாசதீஸ் என்பவரது தயாரிப்பு நெறி பாள்கையுடன் வெளிவந்துள்ளது. இவ் வாலய திருக்கல்யாண மண்டபத்தில் அண்மையில் இவ்இறுவட்டு வெளியீட்டு விழா இடம்பெற்று இருந்தது. அரங்கு நிறைந்த மக்கட் திரளின் முன்னிலையில் அம்பாள் மீது பாடிய பாடல்கள் காற்றலை பில் தவழவிடப்பட்டன. இன்றைய சூழலில் முக்கியமாக இளைஞர்களினால் முன் னெடுக்கப்பட்ட இந்த பக்தி முயற்சிக்கு அத்தனை ஊர் மக்களும் வருகை தந்து ஒரு வெளியீட்டு விழா நடத்திருயிருந்தமை பிகப் பெரும் தனிச்சிறப்பு வாய்ந்த கேழ்ச்சியாகும். இதனை இணுவை மண் னுக்கே உரிய பக்தி பண்பாடு என்றே சொல்ல முடியும்.
யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட உதவிப் பதிவாளர் திரு. சர்வேஸ்வரா தலை மையில் நடைபெற்ற இந்த வெளியீட்டு விழாவின் பிரதம விருந்தினராக யாழ் "ல கலைக் கழக முன்னாள் துணை வேந்தரும் சமூகவியற்றுறைப் பேராசிரியரு மான பேராசிரியர் நா.சண்முகலிங்கன் அவர்கள் பங்குகொண்டு சிறப்பித்தார்கள். அவர் தமது உரையிலும் பாடல்களின் கனித்துவம் பற்றிக் குறிப்பிட்டார். அது போல சிறப்பு விருந்தினராக வருகைதந்த இந்த மண்ணின் மைந்தர் செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன் அவர்களும்
--- 19

Page 42
இந்தப் பாடல்கள் எப்படி பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் எனும் தொனிப் பட தனக்கே உரிய லாவகமான மொழி நடையில் சிறப்புரை வழங்கினார். ஆக இணுவையம்பதியில் நடைபெற்ற ஒரு பக்தி மணம்கமழும் ஒரு திருநிகழ்வாக இது அமைந்தது மட்டுமல்லாமல் அதனை இளைஞர்கள் முன்னின்று நடத்திக் காட்டி யது ஒரு சிறந்த முன்னுதாரணமாகும்.
தென்னிந்திய இசையமைப்பாளர் அக்னி அவர்களின் இசையில் உருவான இந்த சிதம்பரவளவாளே போற்றி போற்றி எனும் ஒலிப்பாடல் தொகுப்பின் பாடல் களை தமது எண்ணக்கருக்களாய் எழுதிய பாடலாசிரியர்கள் K.யோகு, செல்வ ரட்ணம் உதயன், தினேஷ் ஏகாம் பரம், இரத்தினசிங்கம் சர்வேஸ்வரா, T.S.சஜீத், உமாசதீஸ், தமிழகக் கவிஞர் மதுரகவி ஆகியோரின் பாடல்களை தமது தேமதுரக் குரலால் பாடிய பாடகர்கள் S.G.சாந்தன், உமாசதீஸ், உதயன், மதுரா இவர்களோடு சசசசசசசசசசசசசசர்
(Video, Photo 8 -=-=-=-=-=-=. Photography & Album Makers, 1. and Animation for TV Commercial
& Mixing VHS (Video
310, Galle Road, Wellawatte,
Colombo 06, Sri Lanka. | Hotline : 0777-743873
------------- E-mail : denshifoto@gmail.com
இணுவில் ஒலி

தென்னிந்தியப் பாடகர்கள் முருகேஷ் மற்றும் பிரபாகர் ஆகியோராவர். கல்வியங்காடு அருணா கேதீஸ் அவர் களின் துல்லி ஒலிப்பதிவில் இந்த இறுவட்டு முழுமை பெற்றுச் சிறப்பு ஒலிப்பாடல் தொகுப்பாக வெளி வந்துள்ளது. இந்த முயற்சி உண்மையில் இணுவை சிவகாமி அம்பாளை உலகெங்கும் காற்றலைகளில் எம்முறவுகள் தரிசிக்க வழி சமைத்துள்ளது என் பதில் எள்ளளவும் ஐயமில்லை. நிறைவாக இந்த ஆலயத்தின் இளைய தர்மகர்த்தா சிவரூபன் அவர்களது நன்றி யுரையுடன் விழா இனிது நிறைவு பெற்றது.
உண்மையில் இந்த ஒலிப் பாடல் தொகுப்பு ஒவ்வொருவர் இல்லங்களிலும் இருந்து பக்தி மழை பொழிய வேண்டும் என்பதும், இறையருள் ஒன்றுதான் எம்மை எந்தக் காலத்திலும் வழிநடத்தும் ஒரே சாதனம் என்பதும் நாம் என்றும் மனம் கொள்ள வேண்டிய விடயங்களாகும்.*
சசசசசசசசசசசசசன்
Lion K. Srithr
ISHI
& Digital Vision
Video Filming, Computer Graphics 1, Audio Dubbling, Computer Titling 5) to CD, DVD Transfer
K.K.S. Road, Inuvil, Jaffna, Hotline : 072-7743873
Web ; WWW.edenshi.com
40

Page 43
O Inta Lan
Importers and Distributors of Ric Diesel Engines, Electric Mote
Water Pumps, Be
GIJO LFU hai
WI!Piddy ThrashHO
Crushi 許但也许阳
O pla Guil9
141 A, Messenger Str Tel : 2430300, 486233.

za (Pte) Ltd
“House of Machinery” e Mill Machinery, Grinders, ers, All Types of Belting,
arings, Etc.
reet, Colombo 12. 1 Fax: 2330492

Page 44
உடல் வ
ஜீவா
சிறியோர் முதல் பெரி
உகந்த ச
JEEV
ජීවිකා
'ஆரிY Faily Pr-E:
பாவ 200ர.
Manufac ANNA INDUS
T.P: 021
Printed By: சத்தது
பரபரப
#4, 17iFi la", HHHHத்து

பளர்ச்சிக்கு
'ல் காரம்
ரியோர் வரை பாவிக்க சத்துணவு
ANINA AKARAM
அடு ஜீவாகாரம்
ooked supplementary Food
கராதி HEAM டே -
දුත් එm ලිපිය
tured By : STRY, INUVIL. - 2223565
=fts, சwர் = [தி, TE: 13தியிகி 7