கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆசிரியம் 2012.10

Page 1
அறச்ரிய
3 ஆ
கல்வியில் உற்றெழல்
2சூழல்
"அறிவுச் சமூகத்தின் வேட்கை வினைத்திறன் மிக்க ஆசிரியர் தான்
இதழ் 18
ஒக்டோபர்
C.W.W.கன்னங்கரா
கல்விச்சிந்தனைகள் வலுவிழந்து செல்கின்றதா?
சோ.சந்திரசேகரன்/ ஆர்.லோ
த.மனோகரன்/ கி.புண்ணிய வே.சேந்தன்/ நெடுந்தீவு ம

ISSN 2021-9041
Aasiriyam (pedagogy)
சிசியம்
எல்லையற்று விரியும் அறிவுத்தளம்...
2012
ரூபா 100/-
உயர்கல்வி துறையில் ஊழல்களும் முறைகேடுகளும்
புதிய அதிபர் நியமனங்களும்
சம்பள சிக்கல்களும்
கேஸ்வரன்/ அ.கருணாகரன்
மூர்த்தி / சபா.ஜெயராசா கேஸ்/ அன்பு ஜவஹர்ஷா

Page 2
மீண்டும் 2012 முத
நங்கூரம்
சமூக அறிவியல் ஏடு
பொலோனியக் கொலைகள்
ரெங்கேறும் அயறுக்கப் பயங்கரவாதம்!
அ - அ : 1) அ ல பா பா
இதழ் 2 வெளிவந்
ஆசிரியர்:
தெ.மதுசூதனன்
விலை: ரூபா.200.00
தொடர்புகளுக்கு: சமூகவெளி 11/8, பண்டாரிக்குளம் மேற்கு ஒழுங்கை நல்லூர் வடக்கு.
யாழ்ப்பாணம் தொ.பேசி: 075-0710602
077-1381747
புவிக
மேப்
(மி

ல் வெளிவருகிறது...!
ஆசிரியர்:
பொ.ஐங்கரநேசன் பிலை: ரூபா.60.00
தொடர்புகளுக்கு:
திவாளர் ஒழுங்கை திருநெல்வேலி கிழக்கு பாழ்ப்பாணம்
தா.பேசி: 0777-969644 பின்னஞ்சல்:nankkoorum@yahoo.com
கதுவிட்டது....!
சமுக வெளி
கேன் கடிதம் வலை
|
11 அம்மாவா?
சார் அரசியலில் மாற்றம்... லே பூதம் கீழே ஆழ்கடல்லை
அடையாள அரசியலின் இயங்கியல்
பாh.00
1SSN:2279-1418

Page 3
உள்ளே...
புதிய அதிபர் நியமனங்களும் .........
உல!
(c.w.W.கன்னங்கரா கல்விச்சிந்தனைகள்
கல்ல
பரீட்சைகளும் அவற்றின் பெறுபேறுகளின்.......
|ஆரம்ப வகுப்புகளில்
வேலை பெறக்கூடிய பட்டதாரிகளை.....
| உள்ளடங்கல் வகுப்
| பாடசாலை அதிபர்கள் முகாமையாளர் மட்டுமல்ல
( ஊமைத் துயரங்கள்
நமது பிரச்சினைகளுக்கு ஆசிரியத்தில் தீர்வுகள்
"ஆசி
தொடர்புகளுக்கு
தெ.மதுசூதனன் காசுபதி நடராஜா மர்சூம் மௌலானா அ.ஸ்ரீகாந்தலட்சுமி
படைப்புகள் அனுப்ப :
aasiriyam@gmail.con mathusoothanan22@;
பணம் அனுப்ப
Chemamadu book cen Chemamadu book cen

களாவிய உயர்கல்வி
07
வி தனியார்மய ஒழிப்பு
20
0 கணிப்பீடு
23
27
பறை
29
32
33
36
ரியம்?
077 1381747/ 011 2366309/ 021 2227147 0777 333890 077 4747235
0777 286211
mail.com
tre - BOC Bank - A/C- NO :8081150 tre - COM Bank - A/C NO:1120017031

Page 4
ஆசிரியரிடமிருந்து...
நாம் என்ன செய்கிறோம்...!
இன்று இலங்கையில் ஏனைய துறைகளை விட கல்வித்துறை தான் மிகமோசமான பல்வேறு நெருக்கடி களை முகங்கொடுக்கின்றது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பல்கலைக்கழகங்கள் இயங்கவில்லை, க.பொ.த உ/த பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை, விரிவுரையாளர்கள் போராட்டம், மாணவர்கள் போராட்டம் யாவும் பலநிலைகளில் விரிவாக்கம் பெறுகின்றது.
இதைவிட அண்மையில் ஏற்பட்ட Z புள்ளிப் பிரச்சினை, முதலாம் தரத்தில் மாணவர்களைச் சேர்த்தல், கல்வித்துறை நியமனங்களில் அரசியலாதிக்கம் போன் றவை சமகாலத்தில் வெளித்தெரியும் முக்கியப் பிரச்சி னைகள் ஆகும். இவ்வாறு கல்வித்துறையில் ஏற்பட்டு வரும் நெருக்கடிகளை அரசாங்கம் மற்றும் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தீர்க்கும் நடவடிக் கைகளில் இறங்குவதாகத் தெரியவில்லை. இதனால் ஏற்படக்கூடிய பாரிய எதிர்விளைவுகளை தூர நோக்கில்
"ஈறிவும் சமூகத்தின் லேட்க கம்பாத்திரம் மிக்க ஆசிரியர்;" / 76கல்
(ISSN 2021-9041)
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
இணை ஆசிரியர்கள் :
அ.ஸ்ரீகாந்தலட்சுமி எம்.என்.மர்சூம் மெளலானா
காசுபதி நடராசா
ஆசிரியர்குழு : பேரா.க.சின்னத்தம்பி பேரா.சபா.ஜெயராசா பேரா.சோ.சந்திரசேகரன்
பேரா.எம்.ஏ.நுஃமான் சிறப்பு ஆலோசகர்கள் ! சுந்தரம் டிவகலாலா சி.தண்டாயுதபாணி அன்பு ஜவஹர்ஷா வல்வை ந.அனந்தராஜ் த.மனோகரன்
Printed by: cbc pre தொடர்புகளுக்கு : "Aasiriyam" 180/1/50 |
E-mail : aasiriyam@gmail.com, Web
' ஒக்டோபர் 2012

புரிந்துகொள் வதாகவும் இல்லை. கல்விச் சமூகம் பொறுமை இழந்து மாற்று நடவடிக்கையில் இறங்கும் சூழமைவு உருவாவதும் தவிர்க்க முடியாது. இந்த நிலைமைகள் தவிர்க்கப்பட வேண்டும். ஆனால் சம்பந் தப்பட்டவர்கள் இதனைப் புரிந்துகொள்வதாக இல்லை.
இன்று வடக்குக்கிழக்குப் பிரதேசங்களில் போரியல் சூழல் ஏற்படுத்திய தாக்கம், அழிவுகள் மிக மோசமானவை. ஆனால் இவற்றை உணர்ந்து செயற்படும் நிலையில் கல்வித்துறையினர் இல்லை. நாம் எந்தச் சூழலில் இயங்கு கிறோம்? ஏனைய சூழல்களுக்கும் நமது சூழல்களுக்கும் என்ன வித்தியாசம்? இங்குள்ள விசேட தேவைகள் என்ன? இவை பற்றியெல்லாம் யாரும் அக்கறைப்படுவ தாக இல்லை. எந்த விசேடத்துவமும் மாற்று அணுகு முறைகளும் இல்லாமல் இயங்கும் "கல்வி நிருவாகிகள்” தமிழ்ப் பிரதேசங்களில் இருப்பது சிக்கலுக்குரியது. இந்த நிலைமை போரியல் தாக்கத்தையும் மிஞ்சிய பாரிய அழிவுகளையும் வலிகளையும் ஏற்படுத்துபவை. இன்னும் சிலர் உண்மை நடப்புக்கும் அப்பாற்பட்ட புள்ளிவிபரங் களையும் பிழையான தரிசன புலக்காட்சிகளையும் கற்பிதமாக காட்டும் மேதாவித்தனத்தை வெளிப்படுத்து கின்றனர். இது அயோக்கியத்தனமானது.
Aasiriyamu
எல்லையபற்று விரியும் அறிவத்தம்....
மாத இதழ் -- 18
ஆலோசகர் குழு : பேரா.மா.கருணாநிதி பேரா.மா.சின்னத்தம்பி பேரா.மா.செல்வராஜா முனைவர் த.கலாமணி
ஆய்வாளர்.தை.தனராஜ் முனைவர் அனுஷ்யா சத்தியசீலன் முனைவர் ஜெயலக்சுமி இராசநாயகம்
செ.அருண்மொழி
சு.முரளிதரன் பொ.ஐங்கரநேசன் ஓ.எல்.எம்.அஸ்ஹர் நிர்வாக ஆசிரியர் :
சதபூ.பத்மசீலன் இதழ் வடிவமைப்பு :
வை.கோமளா
es, Tel: 0777 345 666 "eople's Park, Colombo -11, Tel: 011-2331475
www.chemamadu.comlaasiriyam.aspx
2.
- ஆசிரியம்

Page 5
இன்று வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் கல்விச்சூழல் மிக மோசமாகப் பாதிக்கப்படுவதற்கும் தரம் தாழ்ந்து செல்வதற்கும் சில அதிகாரிகள்தான் காரணமாக உள்ளனர். ஓய்வு பெறக்கூடிய அதிகாரிகள் தமது ஓய்வுக் காலம் நெருங்கும்போது எப்படியாவது இன்னும் சிலகாலம் தமது பதவியைத் தக்கவைத்துக் கொள்ள அல்லது தமக்கான ஒப்பந்தக் காலத்தை நீடித்துக் கொள்ள படாதபாடுகள், ஆற்றுகைகள் மேற்கொள்கின்றனர். இவற்றில் காட்டும் அக்கறையை கவனத்தை கல்வித்தர அபிவிருத்தியில் காட்டுவதாக இல்லை. எப்போதும் மேலதிகாரிகளைத் திருப்திப் படுத்தும் வகையில்தான் இயங்குகின்றனர். எந்த அரசியல் வாதிகளையாவது வால்பிடித்து தமது இருப்பை உத்தரவாதப்படுத்தும் நயவஞ்சகக் கூட்டத்தின் பிடியி லிருந்து நமது கல்விச்சமூகம் முதலில் காப்பாற்றப்பட வேண்டும். கல்வியின் நோக்கு, கல்வியின் நிலைப் பாடுகள் புதிதாக மாறிவரும் சமூக நிலைமைகளுக்கேற்ப பொருள்கோடல் செய்யப்பட வேண்டும்.
பொதுவாக கல்வித்துறை நியமனங்களில் அரசியலா திக்கம் நிறுவனமயப்பட்டு விட்டது. பாடசாலை அதிபர், ஆசிரியர் நியமனங்களில் இந்தப் போக்கு வலுப்பெற்றுள் ளது. பாடசாலைகளுக்கு நிரந்தரமாக அதிபரை நியமிக்க முடியாதளவிற்கு இன்று அரசியல் சக்திகளின் "கையோங்கல்” மிக மோசமாக உள்ளது. அதிபரின்றி இயங்கும் பாடசாலைகளும் நடைமுறையில் உள்ளன. இதைவிட எந்த முன்னறிவிப்புமின்றி பழிவாங்கும் நடவடிக்கையாக அதிபர்களை இடமாற்றும் நிகழ்வுக ளும் சாதாரணமாகி வருகின்றன. இங்கு கொள்கை சார்ந்த நிர்வாகக் கட்டமைப்புக்குட்பட்ட அணுகுமுறை கள் பின்பற்றப்படின் இந்த இடமாற்றங்கள் ஒரு விவகாரமாக மாறாது. ஆனால் தற்போது நடைபெறும் நிகழ்வுகள் யாவும் அரசியலாதிக்கத்துக்கு உட்பட்ட தாகவே உள் ளன. அந்த நிகழ்ச்சி நிரலின் படியே இயங்குகின்றன.
அதிபர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், முறைகேடு கள் பற்றியோ அல்லது ஆசிரியர்களுக்கு ஏற்படும் முறைகேடுகள், அநீதிகள் பற்றியோ பேசுவதற்கு உரிய வகையில் தீர்வுகளை அடைவதற்கு பொருத்தமான களங்கள் இல்லை. தற்போது அதிபர் சங்கம், ஆசிரியர் சங்கம் முதலானவை பெயருக்கு இருக்கலாம். ஆனால் இவைகள் நடைமுறையில் இயங்குவதற்கான ஆற்றலும்
முதிர்ச்சியும் நேர்மையும் இல்லாதவையாக உள்ளன.
தற் போது யாழ்ப்பாணப் பிரதேசத்தில் சில குறிப்பிட்ட அதிபர்கள் தம்மை ஒரு தனியான குழுவாக அடையாளப்படுத்துகின்றனர். அந்தளவிற்கு இவர்களுக்கு அறிவும் தகுதியும் உள்ளது. ஆனால் இவர்கள் கல்வி சார்ந்த நடவடிக்கைகளில் பொருத்தமான குறுக்கீடு களைச் செய்வதற்கான துணிச்சலும் நேர்மையும் இல்லாதவர்கள் கல்வித் தலைமைத்துவம் பற்றிய
ஒக்டோபர் 2012

சிந்தனையாலும் உணர்வாலும் வளர்க்கப்படாதவர்களாக உள்ளனர். இப்போது இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை ஆராய்வதுதான் நமக்கு உடனடிப் பிரயோசன மாக இருக்கும்.
இவர்கள் தம்மை தனியான குழுவாக அடையாளம் காட்டுவதில் வெளிப்படுத்தும் உணர்வலைகளை மனவெழுச்சிகளை மடைமாற்றம் செய்யும் நேர் மனப்பாங்கு கொண் டவர்களாக இல்லை. தமது பாடசாலை வளவுக்குள் மட்டும் நிற்காமல் கல்வித் துறையின் முழுமைக்குள் நின்று நிமிர்ந்து பார்க்க முயல வேண்டும், இயங்க வேண்டும். கல்விச் சிந்தனை மற்றும் கல்வித் தலைமைத்துவம் பற்றிய மீள்சிந்தனைக்கு தம்மைத் தயார்ப்படுத்த வேண்டும். சமூக மட்டத்தில் மற்றும் கல்விசார் மட்டத்தில் தமது தொழில்சார் அணி மட்டத்தில் என்ன நடைபெறுகிறது? என்பது பற்றி தமது கண்களைத் திறந்து பார்க்க வேண்டும். இதுவே இவர் களுக்கான தற்துணிவுக்கான சக்தியைக் கொடுக்கும்.
ரா,
இன்று பலர் ஆசிரியர்களாக இருப்பதை விட அதிபர்களாக இருக்கவே ஆசைப்படுகின்றனர். அப்படி வந்தவர்கள், தாம் ஆசிரியராக முதலில் இருந்தோம் என்பதைக் கூட மறந்து அதிகாரம் பண்ணும் அதிகாரிக ளாக மாறுகின்றனர். பொதுவாக ஆசிரியராக இருந்து கற்பித்தலில் பிரகாசிக்க முடியாத ஒரு சிலர் அதிபர் பதவியை அலங்கரிப்பதை நடைமுறையில் காணலாம். இதற்கும் தம்மைத் தயார்ப்படுத்தாதவர்கள் கல்வி நிருவாக சேவைக்குள் எப்படியும் உள்நுழைந்து அதிகாரி களாக மாறுகின்றனர். இவர்கள் யாவரும் கல்வித்துறை சார்ந்த கட்டமைப்பில் இயங்குகின்றோம் என்பதை மறந்துவிடுகின்றனர்.
சமான
குறிப்பாக அதிபர்கள் கற்பித்தற் தலைமைத்துவம் நிருவாகிகள் கல்வித் தலைமைத்துவம் போன்றவற்றில் விசேடத்துவமும் சிறப்புத் தேர்ச்சியும் கொண்டவர்களாக அமைய வேண்டும். சமகாலத்தில் இவற்றில் ஏற்பட்ட வறுமையும் வரட்சியும் தான் கல்விப் பிரச்சினைகளின் அடித்தளமாக உள்ளது. அதாவது தமிழ்ப் பிரதேசங்களில் கல்வித் தலைமைத்துவம், கற்பித்தற் தலைமைத்துவம் உரியவாறு பொருத்தமாக பேணப்படாததன் விளைவுக ளால் மிக மோசமான பிரச் சினைப் பாடுகளை முகங்கொடுக்கின்றோம். இந்த நடைமுறை எதார்த் தங்களை விளங்க முடியாத அரசியலாளர்கள் தமது குறுகிய அரசியல் லாபங்களுக்கு அதிகாரத் திமிருக்கு கல்வித்துறையை அடிபணிய வைக்கின்றனர். இந்த அரசியல்வாதிகளின் அடிவருடிகள் கல்வித் துறையில் நிமிர்ந்து நிற்கின்றனர். இவர்கள் யாவரும் கைகோர்த்து கூட்டணி அமைத்து கல்வித்துறையில் பெரும் நாசங் , களை உருவாக்குகின்றனர். தற்போதைய கல்வித்துறை சத்திரசிகிச்சைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். நமக்கு சுயத்துவமும் சுயமரியாதையும் வேண்டும்.
தெ.மதுசூதனன்
ஆசிரியம்

Page 6
புதிய அதிபர் நியமனங்களும் சம்பள சிக்கல்களும்
அன்பு ஜவஹர்ஷா
மேல் காணப்படும் தலைப்புக்கான விடயத்திற்கு வரும் முன்னர் ஒரு சம்பவத்தைச் சொல்லி தொடங்குவது உபயோகமாக இருக்கும் என நம்புகின்றேன். பல ஆசிரியர், அதிபர், தொழிற்சங்கங்களும், செயற்பாட்டா ளர்களும் இருந்தாலும் இவர்களின் தொழில்சார் விடயங் கள் தொடர்பான கேள்விகள் சிங்கள், தமிழ்மொழி மூல ஆளனியிடமிருந்து என்னிடமே வினாவப்படுகின்றன.
கடந்த பத்தாண்டு காலத்திற்கு மேலாக எங்களது அதிபர் தொழிற்சங்க உறுப்பினராக இருக்கும் பெரும் பான்மை அதிபர் ஒருவர் 2000.08.04 தொடக்கம் செயல்படும் வண்ணம் கடமை பார்த்த வகையில் இலங்கை அதிபர் சேவையின் 2-II நியமனம் கிடைத்தது. அப்போது இவர் ஆசிரியர் சேவையில் 2-1 தரத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு இருந்தார்.
2001.12.07 தொடக்கம் கடமையேற்றபடியால் அன்று தொடக்கமே நியமனம் செல்லுபடியானது. இரண்டு சேவைகளின் வருடாந்த சம்பளயேற்றங்கள் சமமாக இருந்தபடியாலும் அதிபர் பதவி தேவையாக இருந்தபடியாலும் அதிபர் பதவியையேற்று கடமையாற்றி வந்தார். இலங்கை ஆசிரியர் சேவை பதவி உயர்வு தொடர்பான 2005/04 இலக்கச் சுற்றறிக்கை 2005ஆம் ஆண்டு வெளியானபடியால் இவரது ஆசிரியர் சேவைக்கு மேலும் புள்ளிகள் கிடைத்தமையால் 1999.01.01 தொடக்கம் இவருக்கு ஆசிரியர் சேவையின் முதலாவது வகுப்பு கிடைத்தது. இதன் வருடாந்த சம்பள ஏற்றம் தற்போது 645 ரூபாவாகும். அப்போது 460 ரூபாவாகும். அதிபர் சேவையின் 2-II தர வருடாந்த சம்பள ஏற்றம் 250 ரூபாவாகும். மேல்சொல்லப்பட்ட பதவி உயர்வை வேண்டும் கடிதத்தை தயாரித்துக் கொடுத்து, 1999.01.01 தொடக்கம் 460 ரூபா வருடாந்த சம்பள ஏற்றமும் ரூபா வருடாந்த சம்பள ஏற்றமும் 2001.12.07 தொடக்கம்
ஒக்டோபர் 2012

: க '' * ' ' -'
அதிபர் பதவியை ஏற்றுள்ளதால், அதிபர் சேவையின் சம்பளத் திட்டத்தின்படி 250 ரூபா வருடாந்த சம்பள உயர்வே கிடைக்கும் என்பதைத் தெளிவாக விளக்கி இருந்தேன்.
- 1999.01.01 தொடக்கம் இலங்கை ஆசிரியர் சேவையின் முதலாவது வகுப்பைப் பெற்று சம்பளத்தை சரி செய்துகொண்டார். எடுக்கும் சம்பளத்தை குறைக்க முடியாது என்ற வாதத்தை வைத்துக்கொண்டு தொடர்ந்து இலங்கை ஆசிரியர் சேவையின் சம்பளத்தையே பெற்றுக்கொண்டு வந்தார்.
இப்படியானவர்களின் சம்பள மாற்றியமைப்பு தொடர்பாக பல சுற்றறிக்கைகள் வந்தாலும் நூற்றுக் கணக்கானவர்கள் அறிந்தோ, அறியாமலோ இன்று வரை முதலாம் வகுப்பு சம்பளத்தைப் பெற்று வருகின்றார்கள். நான் மேல் குறிப்பிட்ட அதிபர் 2007 ஆம் ஆண்டு இலங்கை அதிபர் சேவையின் 2-1 தர பதவி உயர்வைப் பெற்றுள்ளார். இதன் பின்னர் இரண்டு சேவையின் வருடாந்த சம்பள உயர்ச்சியும் சமமானதாகும். 2007க்கு
ஆசிரியர்

Page 7
பின்னர் இந்த முரண்பாடு தோன்றமாட்டாது. இந்த அதிபர் கடந்த வாரம் ஓய்வுபெற்றுள்ளார். அடிக்கடி என்னை சந்திப்பதால் உங்களின் சம்பளத்தை சரி செய்து கொள்ளுங்கள் எனச் சொல்லி வந்துள்ளேன்.
ஓய்வூதியத்திற்காக வரலாற்றைத் தானே தயாரிக்க வேண்டியிருப்பதால் இவரது அதிபர் சம்பளத்தை செய்யவேண்டும் என இவரது சுயவிபரக்கோவையைக் கையாளும் முகாமைத்துவ உதவியாளர் சொல்லி அதற்கான வேலையில் இறங்கியுள் ளார். எந்தச் சுற்றறிக்கைச் சம்பளம் செய்யப்பட்டாலும் 2001.12.07 தொடக்கம் 2007 வரை பெற்றுக்கொண்ட மேலதிக வருடாந்த சம்பள உயர்ச்சி மீள அறவிடப்படும். இத்தொகை ஆயிரக்கணக்கில் அல்லது இலட்சக் கணக்கில் இருக்கலாம்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் கூட இவ்வாறு அதிக சம்பளம் பெற்று வந்த ஒருவரின் ஓய்வூதிய பணிக்கொடையில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தொகை மீள அறவிடப்பட்ட கதையை எழுதியிருந்தேன். தற்போது சுமார் 3000க்கு மேற்பட்ட அதிபர் நியமனங் கள் வழங்கப்படவுள்ளதால் இந்த விடயத்தை மீண்டும் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
2009 ஆம் ஆண்டு பலர் குழுவாகச் சேர்ந்தும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உதவியுடனும் அதிபர் நியமனம் தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டு சார்பாக தீர்ப்புக்கள் கிடைத்தன. 2012.01.24, 2012.01.26 ஆகிய திகதிகளில், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வழிநடத்துதலில் தொடரப்பட்ட வழக் குகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்களின்படி அதிபர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இந்த 3 ஆண்டுகளில் வழங்கப் பட்ட நியமனங்கள் 7000க்கும் மேற்பட்டதாகும்.
2005 ஆம் ஆண்டு விண்ணப்பம் கோரப்பட்ட நியமனமாகையால் 2-II தரத்தில் இருந்த ஆசிரியர் 2-1 தரத்திற்கும் 2-1 தரத்தில் இருந்த ஆசிரியர்கள் 1 ஆம் வகுப்புக்கும் தற்போது பதவி உயர்வு பெற்றுள்ளார்கள். இன்று ஆசிரியர், அதிபர் சேவையின் வருடாந்த சம்பள ஏற்றமானது பின்வருமாறே உள்ளது.
ஆசிரியர்
வகுப்பு/தரம்) சேவை
அதிபர் சேவை
645/-
645/-
2
400/-
645/-
2-II
330/-
400/-
330/-
ஒக்டோபர் 2012

மேல் சொல்லப்பட்ட விடயம் பலமுறை தெளிவு படுத்தப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து கேட்கப்படும் கேள்வி என்னவென்றால் சம்பளம் குறையுமா என்பதா கும். உறுதியான, சரியான பதில் என்னவென்றால் அதிபர் நியமனத்தைப் பொறுப்பு எடுக்கும்போது நீங்கள் பெற்றுக்கொண்டு ஆசிரியர் சேவையின் சம்பளமானது எந்தக் காரணத்தைக் கொண்டும் குறையமாட்டாது.
ஆனால் 2012.01.26 அன்று இலங்கை ஆசிரியர் சேவையின் முதலாம் வகுப்பில் சீராக்கல்படியுடன் 34,165 ரூபா சம்பளத்தைப் பெற்றுக்கொண்டிருக்கும் உங்களுக்கு இத்திகதி தொடக்கம் 2-II தரம் அதிபர் நியமனம் கிடைத்தால் 400 ரூபா வருடாந்த சம்பள உயர்ச்சியுடன் பின்வருமாறு உங்களது சம்பளமானது மாற்றியமைக்கப் படும். இவ்வாறு சம்பளம் பெற்ற 1ம் இலங்கை ஆசிரியர் சேவையின் 1ம் வகுப்பு ஆசிரியர்கள் 94ஆம் ஆண்டு 1ம் வகுப்பைப் பெற்றவர்களாக இருப்பார்கள்.
திகதி
சம்பளம்
2012.01.26
34,445/-
2013.01.26
34,845/-
2014.01.26
35,245/-
2015.01.26
35,645/-
2016.01.26
36,045/-
2017.01.26
36,445/-
கல்வியமைச்சின் 2010/20 இலக்கச் சுற்றறிக்கைப் படி இப்படியே வழங்கப்பட வேண்டும். யார் என்ன சொன்னாலும் சம்பளத்தைக் குறைக்கமாட்டார்கள் என்பதையும் ஓய்வு பெறும்போது இலங்கை அதிபர் சேவையில் பெற்றுக்கொண்டிருக்கும் சம்பளத்தின்படியே ஓய் வு பெற வேண் டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 2012.01.26 அன்று நியமனம் பெறும் ஒருவர் 2017.01.26 அன்று அதிபர் சேவையைப் பெற்றுக்கொள்ளாமல் ஆசிரியர் சேவையில் இருந்தால் தற்போது நடைமுறையில் உள்ள சம்பளத் திட்டம் தொடருமானால் 2017.01.26 அன்று 37,740ரூபா சம்பளத்தைப் பெற உரித்துடையவராவர். ஐந்து வருட காலத்தில் வருடாந்த சம்பள உயர்ச்சி முரண்பாட்டால் 1,295 ரூபா மட்டுமே குறையும் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற நிலைப்பாட்டில் இருக்காமல் சரியான விடயத்தைத் தெரிவு செய்ய வேண்டும்.
(கு, 5.
ஆசிசியம்

Page 8
2009ஆம் ஆண்டு நியமனம் பெற்ற நூற்றுக்கண கானவர்கள் சம்பளம் குறையும் என்பதால் பதவியை பொறுப்பு எடுக்கவில்லை. அல்லது பின்னர் விலகியும் ளார்கள். ஆசிரியர்கள் சிறு பிள்ளைகளோ அல்ல; கணக்குத் தெரியாதவர்களோ அல்ல.
சரியான விடயங்களைத் தெரிந்துகொண்டு சரியா தீர்மானத்தை எடுத்து தற்போது வழங்கப்படும் அத்திப் பதவியைப் பொறுப்பு எடுப்பதே முறையானதாகும்.
வழக்குகளில் சம்பந்தப்படாத அல்லது அதற்கு சம்மதம் தெரிவிக்காதவர்கள் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும் இலங்கை அதிபர் சேவைக் கு முத முதலாக ஸ்தாபிக்கப்பட்ட அதிபர் சங்கத்தின் தலைவ என்ற வகையில் ஆசிரியர், அதிபரின் தொழில்சா சம்பள முரண்பாடு விடயங்களின் சரியான தகவல்.
ளைத் தெரிவிக்க வேண்டிய கடற்பாடு எனக்கு உண்டு
க
)ன்
3ஆம் வகுப்புக்கு வெட்டுப்புள்ளியானது 133 ஆக கொள்ளப்பட்டமைக்குக் காரணம் 2012.01.24 திகதி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி 1,223 நியமனங்களை வழங்குவதற்கேயாகும்.
இதே போல 2-II அதிபர் நியமனத்திற்கு எழுத்துப் பரீட்சையில் 113 புள்ளிகளைப் பெற்று மொத்தமாக 21. புள்ளிகளைப் பெற்ற சகலருக்கும் நியமனம் வழங். வேண்டும். இதுவே 2012.01.26 திகதிய தீர்ப்பாகும். - 3 ஆம் வகுப்பு நியமனமானது 1223 தொன வழங்கும் வரை வெட்டுப்புள்ளி குறையும். 2-II த, வெட்டுப்புள்ளியானது குறையமாட்டாது.
சம்பளம் தொடர்பான சரியான தீர்மானத்தை மேற் கொண்டு இப்பதவியைப் பொறுப்பு எடுக்க வேண்டும். பவியை ஏற்றுக்கொண்டு கை விடுவதே அல்லது பொறுப்பு எடுக்காமல் இருப்பதோ மற்றவர் களின் வாய்ப்பைக் கெடுக்கும் விடயமாகும்.
பாடசாலை தரத்தைக் கொண்டு பின்வருமாறு பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றுகின்றவர் களுக்கு கொடுப்பனவொன்றும் வழங்கப்படுகின்றது
என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பாடசாலைதரம்
கொடுப்பனவு
1AB
750/-
1C
600/-
450/-
ல N
300/-
| ஒக்டோபர் 2012

க்
T
ச
3 ட • --
இந்தக் கொடுப்பனவு தரம் இருந்தாலும் இல்லாவிட் ) டாலும் பிரதி உதவி அதிபர்களுக்கு கிடைக்கமாட்டாது.
பாடசாலைகளின் தரத்திற்கு ஏற்ப வழங்கப்படும் இந்த கொடுப்பனவானது எந்தக் காரணத்தைக் கொண்டும் ஓய்வூதியத்தோடு சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். - கடந்த நான்கு வருடங்களில் ஆசிரியர்கள் அதிபர் பதவி ஏற்பதால் உண்டாகும் சம்பள முரண்பாடு தொடர்பாக தெளிவாக அட்டவணைகளுடன் விளங்கப் படுத்தப்பட்டுள்ளது. உண்மையான ஆசையையும், தேவையையும் இனங்கண்டு சரியான முடிவை மேற் கொண்டு பதவியை பொறுப்பேற்ற பின்னர் பாடசாலை யினதும், கல்வியினதும் வளர்ச்சிக்கு கடமையாற்றுவதே சிறப்பானதாகும்.
|2012.01.24, 2012.01.26 ஆகிய திகதிகளில் வழங்கப் பட்ட தீர்ப்புக்களின்படி நேர்முகப் பரீட்சை நடத்தப் பட்டு உரிய வெட்டுப்புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு நியமனம் வழங்க சகல ஏற்பாடுகளும் முடிந்துவிட்ட தாகக் கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வைபவமொன்றின் மூலம் இந்த நியமனத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.
அக்டோபர் மாதம் 2ம் திகதி அலரிமாளிகையில் ஜனாதிபதி அவர்களால் மேல் சொல்லப்பட்ட அதிகர்க ளுக்கும் சேவை மூப்பு திறமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட கல்வி நிர்வாக சேவையின் 1ம் வகுப்பு ஆளனியினருக்கும் நியமனம் வழங்கப்பட்டது.
2 ஆசிரியம்

Page 9
உலகளாவிய உயர் ஊழல்களும் மு
கல்வியின் உயர்மட்ட நோக்கங்களுள் ஒன்று நல்லொழுக்கமும் சமூகப் பற்றும் நிறைந்த பல்திறமை மிக்க பிரசைகளை உருவாக்குதல்; இது வழிவழியாகப் போற்றப்படும் ஒரு கல்வியின் இலக்கு. ஆயினும் இத்தகைய பிரஜைகளை உருவாக்கும் பொறுப்பு வாய்ந்த பல உயர்கல்வி நிறுவனங்களின் இன்றைய போக்கு கவலை தருவதாக உள்ளது. உயர்கல்வி முறைகளைப் பற்றி பல காலமாக ஆராய்ந்து வரும் உயர்கல்வியியல் பேராசிரியர் பிலிப் ஆல்ட்பாக் (Philip Altbach) வளர்ச்சியடைந்த நாடுகளின் உயர்கல்வி நிறுவனங்களில் மலிந்து காணப்படும் ஊழல்கள், முறைகேடுகள் பற்றி விரிவாக ஆராய்ந்து வருகின்றார்.
அவருடைய கருத்தின்படி இன்று உயர்கல்வி முறைமையில் அதிகரித்து வரும் சர்வதேச மயமாக்கம் தவிர்க்க முடியாததொன்று. இன்றைய உயர்கல்வி நிலையங்கள் அனைத்துமே உலகமயமாக்கத்தை நாடுவன; இது கோளமயமாக்கத்தின் ஒரு பிரதான அம்சம்; அத்துடன் சர்வதேச உயர்கல்வி முறைமையின் ஒரு பிரதான போக்கு. உன்னத ரீதியாக உயர் கல்வி நிலையங்கள் அனைத்தும் ஒரே போக்கைப் பின்பற்றி செமெஸ்டர் முறை, கற்கை அலகுத்திட்டம் (Course umit System), தொடர் மதிப்பீடு, புள்ளிகளுக்குப் பதிலாக
Credit வழங்குதல் எனப்பட்டியல் நீளுகின்றது.
மூன்று பிரதான பாடங்களைக் கற்றவர்கள் இன்று மூன்று அல்லது நான்கு ஆண்டுப் பட்டப்படிப்பின் போது 20/25 கற்கை நெறிகளைப் பயில வேண்டும்.
ஒக்டோபர் 2012

கல்வித் துறையில் றைகேடுகளும்
சோ.சந்திரசேகரன்
ஓராண்டின் அல்லது ஈராண்டின் முடிவில் இறுதிப் பரீட்சைகள் என்ற ஏற்பாடு நீங்கி மாணவர்கள் தமது கற்கையின் போது தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படு கின் றார்கள். உலகளாவிய ரீதியில் பல்கலைக் கழகங்களில் ஆங்கில வழிக்கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. ஆங்கிலத் தொடர்பற்ற ஐரோப்பிய நாடுகள் (ஜெர்மனி, நெதர்லாந்து), ஜப்பான், சீனா எங்கும் ஆங்கில வழிக்கற்கை நெறிகள் அறிமுகமாகி வருகின்றன. பல் கலைக்கழகங்கள் வெளிநாட்டு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடமளித்து வருகின்றன. உயர்கல்விக் கற்கை நெறிகளில் தொழிற் சார்பு அதிகரித்து வருகின்றது. தொழில் வாய்ப்புக் குறைந்த புலமைசார் பாடங்களைக் கற்போர் தொகை குறைந்து வருகின்றது. இவை யாவும் ஊழல் தொடர்பற்ற சர்வதேச மயமாக்கலின் சில விளைவுகள். இலங்கையின் உயர்கல்வி முறைமையிலும் இவ்வாறான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
கோளமயமாக்கத்தின் ஒரு பிரதான அம்சம் தனியார் துறையினருக்குப் பொருளாதார முறையில் கிடைத் துள்ள அங்கீகாரமும் ஊக்கமுமாகும். இதனால் உயர்கல்வித் துறையிலும் தனியார் துறையின் பங்கேற்பு அதிகரித்து வருகின்றது. இவ்விடயம் பற்றி பல சந்தர்ப்பங்களில் யாம் விரிவாக ஆராய்ந்தோம். இன்று மேலைநாடுகளில் மட்டுமன்றி தனியார் துறைக்கு எதிரான அரசியல், பொருளாதாரக் கொள்கைக்குப் பேர் போன சீனா, ரஷ்யா, இந்தியா, இலங்கை முதலிய நாடுகளிலும் தனியார் உயர்கல்வி நிலையங்கள் எழுந்து வருகின்றன.
Tன்
7
ஆசிரியம்

Page 10
இது ஒரு புறமிருக்க வெளிநாட்டுப் பல்கலைக் கழகப் பட்டங்கள் இன்று இந்தியா, சீனா, இலங்கை மலேசியா போன்ற நாடுகளில் பெரிதும் மதிக்கப்படு கின்றன. வெளிநாட்டு உயர்கல்விக்கும் (குறிப்பாக மேலைநாட்டு உயர்கல்வி) பெரிய அளவிலான கேள்வி எழுந்துள்ளது. இன்று 20 இலட்சம் மாணவர்கள் தமது தாய்நாட்டை விட்டு மேலைநாடுகளில் கல்வி பயிலு கின்றனர். இத்தொகை 2020 ஆம் ஆண்டளவில் 30 இலட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் 8 இலட்சம் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். இவர்களில் 80,000 பேர் இந்திய மாணவர்கள். இவர்களால் ஐக்கிய அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு 1500 கோடி டொலர் வெளிநாட்டுச் செலவாணி கிட்டுகின்றது.
உயர்கல்வித் துறையில் சிறந்து விளங்கும் ஏனைய நாடுகளான இங்கிலாந்து, ஜெர்மனி, அவுஸ்திரேலியா முதலிய நாடுகளில் உயர் கல்வியானது, வெளிநாட்டுச் செலவாணியை உழைப்பதற்கான ஒரு பிரதானமான மூலாதாரமாக விளங்கி வருகின்றது. மேலைநாட்டுப் பட்டங்களுக்குள்ள மதிப்பின் காரணமாக, உலக மயமாக்கம் தருகின்ற வர்த்தக வாய்ப்புகளைத் தனியார் துறையினர் பயன்படுத்திக் கொள்ள முன்வருவதில் எதுவித ஆச்சரியமுமில்லை என்கிறார் பேராசிரியர் ஆலட்பாக்.
உயர்கல்வித்துறையில் இலாபமீட்டும் நோக்குடன் வர்த்தகத் துறையினர் ஊடுருவி வருகின்றார்கள் ; அவர்களில் பலர் அப்பணியைக் கெளரவமாகச் செய்ய முற் படவில்லை. சில பல்கலைக்கழகங்கள் கூட இச்சர்வதேச மயமாக்கத்தைப் பணமீட்டும் நோக்குட னேயே பார்க்கின்றன என்பது அவருடைய கருத்து.
இன்று உயர்கல்வித்துறையில் விரிவடைந்து வரும் தனியார் துறையினர், இலாபமீட்டுவதையே நோக்காகக் கொண்டவர்கள், அத்துடன் அவுஸ்திரேலியா, பிரித்தானியா ஆகிய நாடுகளின், "உயர்கல்விச் சர்வதேச மயமாக்கம்” தொடர்பான அரசாங்கக் கொள்கைகளும் கூட பணமீட் டும் நோக்கினை வலியுறுத்துவதாகவே உள்ளன என அப்பேராசிரியர் வலியுறுத்துகின்றார்.
ஊழல் நிறைந்த உயர்கல்வி முறைகள் சர்வதேச உயர்கல்வி முறைமையில் சேர்ந்து கொள்ள ஏராளமான மாணவர்களை அனுப்புகின்றன என்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைப்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றன என்றும் பேராசிரியர் ஆல்ட்பாக் கருத்துரைக்கின்றார். எவ்வாறாயினும் இந்தியா, இலங்கை முதலிய நாடுகளின் உயர்மட்ட வகுப்பினர் பொதுவாகவே தமது நாடுகளின் உயர்கல்வி முறைகளை அதிகம் மதிப்பதில்லை. இதனால் அவர்கள் கௌரவ
ஒக்டோபர் 2012

மிக்க வெளிநாட்டுப் பல்கலைக்கழகப் பட்டங்களை நாடுகின்றனர். ஆயினும் வளர்முக நாடுகள் என்றில் லாது ஊழல் என்பது உலகளாவிய உயர்கல்வியின் ஒரு போக்காகவே உள்ளது.
உலகில் சிறந்த ஏராளமான பல்கலைகளைக் கொண்ட ஐக்கிய அமெரிக் காவின் உயர்கல்வி முறைமையிலும் முறைகேடுகள் இல்லாமல் இல்லை. ஐக்கிய அமெரிக்காவின் Tri - Valley பல்கலைக்கழகம் அங்கீகாரம் பெறாத ஒரு மோசடிப் பல்கலைக்கழகம்; ஏராளமான வெளிநாட்டு மாணவர்களை அனுமதித்துக் கட்டணங்களையும் சேகரித்துக் கொண்டது. ஆனால் மாணவர்கள் வகுப்பறைகளுக்குச் செல்லத் தேவை யில்லை. குடிவரவுச் சட்ட விதிகளை மீறி அம்மாணவர் கள் வேலைகளில் சேர்ந்துகொள்ள ஊக்குவிக்கப் பட்டனர்.
மேலும் பல அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் குறைந்த கல்வித் தகுதிகளைக் கொண்ட வெளிநாட்டு மாணவர்களுக்கும் அனுமதி வழங்கத் தொடங்கின. இங்கிலாந்து
உயர்கல்வி தொடர்பான மற்றொரு முறைகேடு மாணவர் அனுமதி தொடர்பானது. தனியாக துறையின ரின் இலாப நோக்கின் காரணமாக, விதிமுறைகளுக்கு மாறாக, தகுதி குறைந்த மாணவர்களுக்கு அனுமதி வழங்குகின்றனர். அண்மையில் இங்கிலாந்தின் லண்டன் மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகம் தனக்கு அரசாங்கம் வழங்கிய பல சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தி, ஏராளமான வெளிநாட்டு மாணவர்களுக்கு (2500 பேர்) அனுமதி வழங்கி உள்ளது. அவர்கள் இந்தியா மற்றும் ஆபிரிக்கா, கரிபியன் நாடுகளைச் சேர்ந்தவர்கள். 300 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வழங்கிய கல்விக் கட்டணம் 30,000-40,000 பவுண் வரையாகும். இவர்களுடைய அனுமதித் தகுதிகளும் ஆங்கிலத் தகுதிகளும் கேள்விக் குரியவை; இங்கிலாந்தில் நுழைந்து கொள் ளத் தேவையான அனுமதியை இப்பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது என்பது அரசாங்கத்தின் குற்றச்சாட்டு. இவர்கள் வகுப்புகளுக்குச் சமூகமளிப்பதுமில்லை.
இக் குற்றச் சாட்டுக்களின் அடிப்படையில் அரசாங்கம் இப்பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களை அனுமதித்து, கல்வி வழங்கும் உரிமையை ரத்துச் செய்தது. மாணவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் வேறு பல்கலைக்கழகங்களில் சேர்ந்து விட வேண்டும். இல்லாவிடில் அவர்கள் தாய்நாட்டிற்குத் திருப்பி விட வேண்டும் என அரசு கெடுபிடி செய்தது.
- ஆசிரியம்

Page 11
ஊழல்கள் அற்ற உயர்கல்வி நிலையங்களின் பண்புகள்
கல்வி வாய்ப்புகளை பொறுத்தவரையில் சமத்துவ தத்துவத்தை பின்பற்றுதல். கல்வித் தொடர்பான சாதனங்கள், பாட ஏற்பாடு என்பவற்றை நியாயமான முறையில் பகிர்ந்தளித்தல். உயர்கல்வி மற்றும் விசேட பயிற்சிக்கான தெரிவுகளில் நியாயத் தன்மையையும் வெளிப் படை தன்மையையும் பேணுதல்.
உயர்கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் போது உயர்கல்வி தராதரங்களை பேணுவதில் நியாயத் தன்மையை பேணுதல். கல்வி தொடர்பான சாதனங்களையும் சேவை களையும் பெற்றுக்கொள்வதிலும் கொள்வனவு செய்வதிலும் நியாயத்தன்மை கடைபிடித்தல். உயர்கல்வி நிறுவனங்களை நிர்வகிப்போரும் அங்கு கற்பிப்போரும் மிக உயர்தரமான தொழில் முறை தராதரங்களை பேணிக்கொள்ளுதல். உயர்கல்வியில் ஊழல் என்பது தற்போது உலக மயமாகிவிட்டது. வளர்முக நாடுகள் மட்டுமன்றி வளர்ச்சியடைந்த நாடுகளிலும் உயர்கல்வி நிலையங்கள் ஊழல்களுக்கு இரையாகிவிட்டன என்பதற்கு ஆதாரங்கள் உண்டு.
-The Chronicle of Higher Education (2002)
உயர்கல்வி நிலையங்களில் அனுமதி பெறவும் உயர்ந்த புள்ளிகளைப் பெறவும் இலஞ்சங்களை வழங்க வேண்டியது அவசியமாகிவிட்டது.
உலக வங்கியின் ஆய்வறிக்கைகள்
இங்கிலாந்தில் உயர்கல்வியின் 'தராதரங்களை உறுதிப்படுத்தும் பல அமைப்புகள்' உள்ளன (Quality Assurance Agencies). பிரித்தானியப் பட்டங்களை வழங்கும் பல நிகழ்ச்சித் திட்டங்களுக்கு அங்கு அதிகாரம் (Granchise) வழங்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடுகளில் பல முறைகேடுகள் இருப்பதாகவும் கண்டறியப் பட்டுள்ளது. (இவ்வாறான ஊழல்கள் அவுஸ்திரேலியா வின் பட்டம் வழங்கும் ஏற்பாடுகளிலும் இனங்காணப் பட்டுள்ளன) இதற்கு உதாரணம் அந்நாட்டின் (U.K) இரண்டாவது பெரிய பல்கலைக்கழகமான வேல்ஸ் பல்கலைக்கழகமாகும். அதன் 130 உலகளாவிய கல்லூரிகளில் 70,000 மாணவர்கள் பயிலுகின்றனர். இம்முறைகேடுகள் காரணமாக, இலாபம் தரக்கூடிய பல பட்ட நிகழ்ச்சித் திட்டங்களையும் கற்கை நெறிகளையும்
" ஒக்டோபர் 2012

நிறுத்த வேண்டியதாயிற்று என்று பேராசிரியர் ஆல்ட்பாக் தெரிவிக்கின்றார்.
Dால்
ன
மாணவர் அனுமதியைப் பொறுத்தவரையில் உலகளாவிய ரீதியில் நேர்மையற்ற முகவர்கள் தகுதியற்ற மாணவர்களை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் அனுமதிபெற உதவுகிறார்கள். இது பாரதூரமான தீர்க்கமுடியாத பிரச்சினையாக உள்ளது. சீன முகவர் ஒருவர் சீன மாணவர்களுக்குப் பிரித்தானியப் பல்கலைக் கழகங்களில் அனுமதி பெற்றுக் கொடுக்க ஏமாற்று வேலைகள் செய்தமை கண்டறியப்பட்டது. இப்பிரச் சினை எந்த அளவுக்குப் பாரதூரமானது என்பது சரிவரத் தெரியாவிட்டாலும், இம்முறைகேடு தொடர்பான ஏராளமான செய்தி அறிக்கைகள் இப்போது வெளிவரு கின்றன. இவை பிரித்தானிய பல்கலைக்கழக அனுமதியு டன் தொடர்புடையதாகும்.
ஏராளமான மாணவர்களை அனுப்பும் சீனா, இந்தியா முதலிய நாடுகளிலேயே முகவர்கள் இவ்வா றான முறைகேடுகளில் தாரளமாக ஈடுபட்டு வருகின்ற னர். இம்முகவர்கள் பல்கலைக்கழகங்களிலிருந்து பல மில்லியன் டொலர்களைக் கமிவுனாகப் பெறுகின்றனர். 2011ஆம் ஆண்டில் நொட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்ற மாணவர்களில் 25% முகவர்களால் அனுப்பப்பட்டவர்களாவர்.
வரைபடம்
உயர்கல்வியில் ஊழல்
கல்வி தொடர்பான
ஊழல்
நிர்வாகத்தில் ஊழல்
புலமைசார் ஊழல்
சேவைகளில் ஊழல்
மாணவர்-நிர்வாகி மாணவர் - ஆசிரியர் தொடர்பில் ஊழல் தொடர்பில் ஊழல்
உயர்கல்வி தொடர்பில் உருவாக்கப்பட்டு வரும் மாதிரிகை
(Model)
கள்ள ஆவணங்கள்
தந்திரமாகத் திருத்தப்பட்ட கள்ள ஆவணங்கள் நீண்டகாலமாகவே சர்வதேசப் பல்கலைக்கழக அனுமதி களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கணினித் தொழில்நுட்பம் இவ்வாறான மோசடிகளில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. போலி ஆவணங்களைத்
சிஆசிரியம்

Page 12
தயாரிப்பது சில நாடுகளில் ஒரு சிறு தொழில் முயற்சியாக இருந்து வருகின்றது.
பல்கலைக்கழகக் கல்வி நடவடிக்கைகளின்போது மாணவர் பரீட்சைகளுக்கான ஒப்படைகளைத் தயாரிக் கும்போது, மற்றவர்களுடைய ஒப்படைகளைப் பார்த்து எழுதுவதும் ஒரு வகையான முறைகேடு. இது பற்றித் தனியாக ஆராயப்படல் வேண்டும். உலகில் தலைசிறந்த ஒரு பல்கலைக்கழகமான அமெரிக்க ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் வரலாற்றிலேயே மிகப் பெரிய இத்தகைய முறைகேடொன்று அண்மையில் கண்டறியப் பட்டது. 120 மாணவர்கள் தனியாக எழுதிச் சமர்ப்பிக்கப் பட வேண்டிய இறுதிப் பரீட்சை ஒப்படையொன்றை அவர்கள் குழுக்களாகச் சேர்ந்து முறைகேடாகத் தயாரித்துள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகம் இது திட்டவட்டமான 'பார்த்து எழுதுதல்' என்றும் 'புலமை சார் நேர்மையீனம்' என்றும் தெரிவித்தது. ஹவார்ட் நிர்வாகம் இம்முறைகேடு பற்றி விசாரித்து வருகின்றது. சம்பந்தப்பட்ட 120 மாணவர்களும் ஓராண்டு காலத்துக்கு இடைநிறுத்தப்படும் சாத்தியமும் உண்டு. மாணவர் களின் விடைத்தாள்களில் காணப்பட்ட அசாதாரண மான ஒருமைப்பாடுகளைக் கண்டறிந்த ஒரு பேராசிரியர் இது தொடர்பான முறைப்பாட்டைச் செய்திருந்தார்.
கள்ள ஆவணங்களை சமர்ப்பிப்பதாகச் சந்தேகத் துக்குள்ளாகி உள்ள பல உயர்கல்வி நிறுவனங்களின் சான்றிதழ்கள் மேல் நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படு வதில்லை பல அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் ரஷ்ய உயர்கல்வி நிறுவனங்களின் சான்றிதழ்களை அங்கீகரிப் பதில்லை. இதற்குக் காரணம் இந்நிறுவனங்களின் சான்றிதழ்கள் போலியானவை எனப் பல சந்தர்ப்பங் களில் கண்டறியப்பட்டமையாகும். அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் தம்மிடம் சமர்ப்பிக்கப்படும் சான்றிதழ்களைச் சரி பார்ப்பது மிகவும் சிரமமான பணி எனக் கூறுகின்றன. இதனால் உண்மையான சான்றிதழ் களை சமர்ப்பிக்கும் மாணவர்களும் பல பிரச்சினை களை எதிர்நோக்குகின்றனர்.
அனுமதிக்குப் பயன்படுத்தப்படும் சர்வதேசப் பரீட்சைப் பெறுபேறுகளில் திருத்தம் செய்தல், புள்ளிகளை மாற்றுதல் போன்ற முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் காரணமாகச் சில நாடுகளில் நடைபெற வேண்டிய சர்வதேசப் பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இணைய வழியில் பரீட்சை களை நடத்தும் நடைமுறையும், இத்தகைய முறைகேடு கள் காரணமாக மறுபரிசீலனைக்குள்ளாகியுள்ளன. இத்தகைய பிரச்சினைகள் காரணமாக மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறுவதும் சிக்கலாகி உள்ளது.
ஒக்டோபர் 2012

சட்டபூர்வத்தன்மை
இணைய தளங்களைக் கொண்ட பல வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களை நம்பி ஏமாந்த மாணவர்கள் பலர் உள்ளனர். நேரில் சென்று பார்த்தால், இணைய தளத்தில் கூறப்பட்ட கற்கைநெறிகளும் வசதிகளும் இருக்காது. இறுதியில் மாணவர்கள் எங்கே முறைப்பாடு செய்வது என்பது கூடத் தெரியாது தவிப்பதுண்டு.
இலங்கையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் அங்கீகாரம் பெற்று உலகப் பல்கலைக்கழகங்களின் பட்டியல் உண்டு. எனவே வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறு முன்னர் அல்லது அவற்றுடன் இணைந்து பணியாற்ற முயலும் முன்னரும் அவை உரிய முறையில் சட்டபூர்வ அங்கீகாரம் பெற்றுள்ளனவா எனப் பார்க்க வேண்டிய அவசியமுண்டு. பொதுநலவாயமைப்பில் உள்ள 50க்கும் மேற்பட்ட நாடுகளின் பட்டியல் பொதுநலவமைப்பு அதிகார பீடத்தால் வெளியிடப்படுகின்றது. Times Higher Education என்ற புகழ்பெற்ற சஞ்சிகையும் வுங்காய் பல்கலைக்கழகமும் உலகநாடுகளின் பல் கலைக் கழகங்களை ஆராய்ந்து வரிசைப்படுத்தியவை (Ranking) இந்தியாவும் ரஷ்யாவும் இப்பட்டியல்களைப் பயன்படுத்தி உலகப் பல்கலைக்கழகங்களின் சட்டபூர்வ தன்மையை அறிந்து கொள்வதாக அறிவித்துள்ளன. உயர்கல்வியில் முறைகேடுகளையும் மாணவர் ஏமாற்றத்தைத் தவிர்க்கவும் இந்நாடுகள் இவ்வாறான வழிமுறைகளை அறிமுகம் செய்துள்ளன.
உயர்கல்வியில் புகழ்பெற்ற ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா ஆகிய நாடுகளும் இவ்வாறான முறைகேடுகளைத் தவிர்க்க, பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள் ளன. இந் நாடுகளில் உயர்கல்வி அதிக அளவில் வணிகமயமாக்கப்பட்டி ருப்பதால், வெளிநாட்டு மாணவர் வருகைக்குப் புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள் ளன. இத்தகைய வணிகமயமாக்கத்தின் செல்வாக்கு ஏனைய ஐரோப்பிய நாடுகளில் சற்று குறைவு; அதன் காரணமாக முறைகேடு களும் அங்கு குறைவு எனக் கூறப்படுகின்றது.
இம்முறைகேடுகளுக்கு இணையதள வசதிகளும் ஒரு காரணமாகும். ஒரு நிறுவனத்தை மிகக் கவர்ச்சியான தாகவும் தரம் மிக்கதாகவும் காட்டும் வகையில் இணையத்தளங்களை உருவாக்கிக்கொள்ள முடியும். வேறு பல்கலைக்கழகங்களின் பாடங்களைப் பயன் படுத்துவதும் இலகு. எவ்வாறாயினும் இந்த விடயம் பற்றி இன்னும் விரிவாக ஆராய வேண்டும்.
பன
ஆசிசியம்

Page 13
C.W.W.கன்னங்கர
வலுவிழந்து
ஆர்.லோகேஸ்வரன்
இலங்கையின் கல்வி கொள்கைகள் பண்டைய காலத்திலிருந்தே கல்வி நிலையங்களை உருவாக்கு வதிலும், ஒழுங்கமைப்பதிலும் நேரடி விளைவுகளை ஏற்படுத்தி வந்துள்ளன. ஆரம்பகால தமிழர்களின் கல்வி மரபானது குருகுல கல்வி முறையிலும், திண்ணைப் பள்ளிகள், மடாலயங்கள் என் பவற்றின் ஊடாக வளர்ச்சியடைந்தன. அதேவேளை நிலாப்பள்ளிகள், கிராமிய அரங்குகள், மரநிழற் பள்ளிகள் முதலானவை முறைசாரா கல்வியை வழங்கின. அக்காலத்தில் சிங்கள கல்வி மரபை பொறுத்தவரையில் குருகேத்திரம், பன்சால், பிரிவேனா போன்றன சிறப்புப் பெற்றிருந்தன. ஆனால் அந்நியர்களின் வருகையின் பின்னர் கல்விக் கொள்கை களில் அல்லது நோக்கங்களில் ஒரு மாற்றத்தைக் கண்டுக்கொள்ள முடிந்தது.
இதில் போர்த்துக்கீசர்கள் (1505-1658) திருச்சபை களின் ஊடாகவே (பிரான்சிஸ்கள், ஜேசு, டொமினிக்கன், ஒகஸ்தீனியன்) தமது கல்வி ஒழுங்கமைப்புகளை மேற்கொண்டனர். இவர்களின் பிரதான நோக்கம் கல்வியின் ஊடாக சமயத்தை பரப்புவதாகும். அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் மேல்வர்க்க
ஒக்டோபர் 2012

T கல்விச்சிந்தனைகள் செல்கின்றதா?
மக்களுக்கு பிரதான நகரங்களில் பல கல்லூரிகளையும், கீழ்வர்க்க மக்களுக்கு அடிப்படை கல்வியை வழங்க கோயில்பற்று பாடசாலைகளையும், கிராமிய பாடசாலை களையும் ஒழுங்கமைத்தனர்.
போர்த்துகீசரை தொடர்ந்து ஆட்சியமைத்த ஒல்லாந்தர்கள் தமது காலத்தில் (1658-1756) கோயிற்பற்று பாடசாலைகள், ஒல்லாந்துப் பாடசாலைகள், செமினறிகள் போன்ற கல்வி ஒழுங்கமைப்புகளை ஏற்படுத்தினர். இதில் கோயில் பற்று பாடசாலைகள் அடிமட்ட மக்களுக்கு அடிப்படை கல்வியை வழங்க ஒல்லாந்துப் பாடசாலைகள் ஐரோப்பிய சிறார்களுக்குரிய தரமான அடிப்படைக் கல்வியை வழங்கின. அதேவேளை மேல்வர்க்க மக்களுக்கான கல்வி செமினறிகள் வாயிலாக வழங்கப்பட்டு அவர்கள் உயர்கல்விக்காக ஒல்லாந்துப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டனர். இவர்களின் கல்வி நோக்கமாக புரட்டஸ்தாந்து மதத்தை பரப்புவதும், ஏகாதிபத்தியத்தை விரிவாக்குவதுமாக அமைந்திருந்தது.
ஒல்லாந்தரை தொடர்ந்து நாட்டைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் தமது காலத்தில் (1796-1948) மெதடிஸ்சபை, வெஸ்லியன் சபை ஆகிய திருச்சபைகளின் ஊடாக கல்வி
(ஆசிரியம்

Page 14
நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆங்கிலேயர்களின் பிரதான இலக்கு ஏகாதிபத்தியத்தை தீவிரமாக்குவதும், தமது நாட்டுக்கு சொத்துக்களை சேர்ப்பதுமே ஆகும். இவர்களது காலத்தில் எழுத்தறிவை விரிவாக்குவதற்கு திருச்சபைகள் ஊடாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கை மத்திய வர்க்கத்தினர் மத்தியில் ஆங்கில கல்வி வளர்ச்சியடைய பெரிதும் உதவியது. இம்மத்திய வர்க்கத்தினரின் கல்வி வளர்ச்சியால் பல சீர்திருத்த கோரிக்கைகள் முன்வை கப்பட்டன. அது அரசியல் ரீதியாக அமைந்தாலும் அதன் தாக்கத்தினை கல்வியிலும் காண முடிந்தது. இச்சீர்திருத்தப் பிரேரணைகளில் கல்வி தொடர்பான மாற்றங்களை ஏற்படுத்தியதில் மோர்கன் குழுவினரின் நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கதாகும். இக்குழுவினரின் நடவடிக்கைகள் தாய்மொழி கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது. மோர்கன் குழு நாட்டின் பெரும்பாலோரின் அறியாமையை போக்க பரந்த அளவில் கல்வியை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியது.
இம்மோர்கன் குழுவின் பரிந்துரையைத் தொடர்ந்து இலங்கையின் கல்வி வளர்ச்சியில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்திய சீர்திருத்தமாக நாம் டொனமூர் சீர்திருத்தத் தினை கண்டுகொள்ளலாம். இச்சீர்திருத்தத்தின் ஊடாக இலங்கை மக்கள் சர்வஜன வாக்குரிமையை பெற்றுக் கொண்டனர். இலங்கை மக்களிடம் அரசியல் ரீதியாக ஏற்பட்ட இம்மாற்றங்கள் சமூகம் நோக்கிய விழிப்புணர் விலும் மாற்றங்களை ஏற்படுத்தத் தவறவில்லை. இவ்வாறான ஒரு சமூகமாற்றம் கல்வியினூடாகவே உருவாக வேண்டும் என தேசியவாதிகள் வலியுறுத்தி வந்தனர். இக்காலப்பகுதியிலேயே பிரித்தானியர்கள் நிருவாக குழு முறையை இலங்கையில் அறிமுகப்படுத் தினர். இந்நிருவாக குழுக்களில் கல்விக்காக உருவாக்கப் பட்ட நிருவாக குழுவில் கலாநிதி C.W.W கன்னங்கரா அவர்கள் தவிசாளராக நியமிக்கப்பட்டார். அவ்வாறு கலாநிதி C.W. Wகன்னங்கராவை தவிசாளராக கொண்டு உருவாக்கப்பட்ட கல்வி மீதான சிறப்புக் குழுவின் அறிக்கை 1943 ஆம் ஆண்டிலே வெளியிடப்பட்டது. இதுவே 1943ம் ஆண்டு கல்வி சீர்திருத்தமாக அடையாளம் காணப்படுகிறது. இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட இக்கல்வி சீர்திருத்தம் இலங்கையின் கல்வி வரலாற்றில் குறிப்பிடத்தக்க வலுவான சில மாற்றங்களை ஏற்படுத்தியதோடு கல்வித்துறையில் ஜனநாயக ரீதியான பரவலாக்கலை சாத்தியமாக்கியது. அவற்றுள், 1. இலவசக் கல்வித்திட்டம் 2.
இடைநிலை மட்டத்தில் தாய்மொழிக்கல்வி (தாய்மொழியை கல்வி மொழியாக்குதல்)
மத்திய பாடசாலைகள் திட்டம்
" ஒக்டோபர் 2012

- 4.
தனியார் பாடசாலைகளை அரச கல்விக் கொள்கையோடு ஒன்றிணைத்தல்
5.
அனைத்து சமய மாணவர்களுக்கும் சமயக் கல்வியை பாடசாலைகளில் வழங்குதல்.
6.
மூன்றாம் வகுப்பிலிருந்து ஆங்கிலத்தை கட்டாய மாக்குதல்.
போன்றன முக்கியமானவையாகும். இச்சீர்திருத்த பிரேரணைகள் கல்வி வாயிலாக சமூக மாற்றத்தை அல்லது சமூகம் முன்னோக்கிய நகர்வுக்கான உந்து சக்தியை வழங்குவதாக அமைந்தது. அத்தோடு வறிய, மத்தியதர வகுப்பினரின் கல்வி ஈடுபாட்டிற்கு அடித்தளத் தையும் வழங்கியது. இந்த வகையில் C.W.W கன்னங்கரா அவர்களின் பிரேரணைகள் இலங்கையின் எதிர்கால கல்வி விருத்தியில் ஒரு குறிகாட்டியாகவும் அமைந்தது. ஆனால் இன்று அவை மெல்ல மெல்ல வலுவிழந்து செல்லும் நிலையில் உள்ளதை காணலாம். எனவே இதனை மிக ஆழமாக நோக்க வேண்டிய தேவை உருவாகியுள்ளது. இவை தொடர்பாக ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இலவசக்கல்வி
ஆற்றல்களும், திறன்களும் ஒரு குறிப்பிட்ட சமூக வகுப்புக்கோ, அல்லது குழுவுக்கோ உரியன அல்ல. எச்சமூக அமைப்பும் அவை வெளிப்படுத்தப்படுவதற்கு ஏதுவாக கல்வித்துறையிற் சமவாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற கருத்து உலக ரீதியாக ஏற்றுக்கொள்ளப் பட்டதொன்றாகும். இதனை அடித்தளமாகக் கொண்டு கல்வியில் சமவாய்ப்பும், சமசந்தர்ப்பமும் அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் “பாலர் வகுப்பு தொடக்கம் பல்கலைக்கழகம் வரை இலவச கல்வி வழங்கப்படல் வேண்டும்” என கன்னங்கரா குழுவினரால் விதந்துரைக்கப்பட்டது. குறிப்பாக ஆங்கிலம் கல்வி மொழியாக இருந்தமையும், கல்வி மொழியை அடிப்படை யாகக் கொண்டு கட்டணம் அறவிடப்பட்டமையும், ஆங்கிலம், சுயமொழி கல்வி ஏற்பாடுகளில் காணப்பட்ட இரட்டை தன் மையை நீக்குவதற்கும், கல்வியில் சமசந்தர்ப்பத்தை சாத்தியமாக்குவதற்கும் உரிய வழி இலவசக்கல்வியே என எடுத்துரைக்கப்பட்டது.
இதனடிப்படையில் 1943இல் வெளியிடப்பட்ட விசேட கல்வி அறிக்கையில் குறிப்பிடப்பட்டு 1945இல் இலவசக் கல்வி சட்டம் நடைமுறைக்கு வந்தது. கல்வி மூலம் உயர்ந்த பயனை பெறமுடியாத வறிய, அடிமட்ட மக்களுக்கு இவ் இலவசக் கல்வியான பெரும் வரப் பிரசாதமாக அமைந்தது.
மேற்படி C.W.W. கன்னங்கரா அவர்களால் கொண்டு வரப்பட்ட இலவசக் கல்வி திட்டத்தின் முழுபயனை
12
- ஆசிரியம்

Page 15
அடையும் வகையிலும், கல்வியில் பங்குபற்றலை அதிகரிக்க செய்ய வேண்டும் என்ற நோக்கிலும் மேலும் பல நடவடிக்கைகள் சுதந்திரத்திற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்டன.
மாணவருக்கு உடை இல்லையென்றால் ஏனைய உரிமைகள் கிடையாது என்பதை உணர்ந்து - இலவச சீருடையும்
பாடபுத்தகங்கள் இல்லையென்றால் கல்வி செயற்பாடு அற்றுப்போகும் என்ற காரணத்தால் - இலவச பாடப் புத்தகமும்
உணவு இல்லையென்றால் சக்தி இல்லாமல் போய்விடும் என்பதை கருதிக்கொண்டு - மதிய உணவு வழங்கும் திட்டமும்
நடைமுறைக்கு வந்தன. இன்றும் பல குறைபாடு களுக்கு மத்தியில் இவை நடைமுறைப்படுத்தப்படு கின்றன. இவை அனைத்தும் கல்வி உரிமையை வழங்குவதில் எமது நாடு உலக நாடுகளுக்கு முன்னு தாரணமாக நோக்கப்பட்டது.
ஆனால் அண்மைக் காலங்களில் கல்வி துறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் இலவசக் கல்வி முறையை இல்லாதொழிப்பதற்கே நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதாக சந்தேகக் கண்ணோட்டத்தில் நோக்கப்படு கின்றது. குறிப்பாக கல்வி அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கை இல-2011/115ம், 2011.05.29 பாடசாலைக்கு பிள்ளைகளை அனுமதித்தல் சுற்றறிக்கை 21.0 பந்தியும்
அரச பாடசாலைகளில் பிள்ளைகளை அனுமதிப்பதற் : காக பணமும், உதவிகளும் பெற்றுக்கொள்ள தடை என (
' ஒக்டோபர் 2012

கூறப்படுகிறது. இருந்தபோதும் அரச பாடசாலைகளில் மாணவரை அனுமதிக்கும்போது வசதிகள் சேவைகள் கட்டணம், பாடசாலை அபிவிருத்திசபை அங்கத்தவர் கட்டணம் மற்றும் ஏனைய கட்டணங்கள் நன்கொடை கள், பொருட்கள் என்ற பெயரில் பெற்றோரிடமிருந்து பெருந்தொகையான பணம் அறவிடப்படுகிறது. இலவசக் கல்வி என்று கூறப்பட்டபோதும் பிள்ளைகளை பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கு பெற்றோர் இன்று பெருந்தொகையான பணத்தை செலவிட வேண்டியுள்ளதாக முறைப்படுகின்றனர்.
மேலும் நாட்டின் வருடாந்த வரவு-செலவு திட்டத் தில் கல்வியமைச்சு தமது நிதி ஒதுக்கீட்டில் இலவசப் பாடப்புத்தகம், இலவச சீருடை என்பவற்றை கவனத்திற் கொண்டே நிதியை ஒதுக்குகிறது. இவ்வாறு ஒதுக்கப் பட்டபோதும் உரிய காலத்தில் இவை பாடசாலைகளில் கிடைப்பதில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக முதலாந் தவணை முடிந்த பின்னுங்கூட இவை முறையாக வழங்கப்படுவதில்லை என புகார் கூறப்படுகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சீருடை வழங்குவதில் பல குறைபாடுகள் இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்ட போதும் அவற்றை உடனடியாக நிவர்த்திக்க நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் படாமலே உள்ளது.
இவற்றோடு அண்மை காலங்களில் சர்வதேச பாடசாலைகளினதும், சர்வதேச பல்கலைக்கழகங்களின தும் வருகை இலவசக் கல்வியை மேலும் கேள்விக் குறியாக்கியுள்ளது. சர்வதேச கல்வி நிறுவனங்களின்
- 13
ஆசிசியம்

Page 16
அல்லது தனியார் கல்வி நிறுவனங்களை ஸ்தாபிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் நிலையில் போதிய நிதியின்மை காரணமாக சுமார் 1500 அர பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின் றன. அதேபோல் தற்போது தனியார் பல்கலைக்கழக சட்டமூலம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட வுள்ளது. இது நிறைவேற்றப்படும் போது சாதாரண மக்களுக்கு உயர்கல்வியானது எட்டாக் கனியாகும் நிலையை உருவாக்கும் என கூறப்படுகின்றது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டின் 2012 ஆம் ஆண்டு வரவுசெலவு திட்ட நிதியில் கல்விக்காக மிக குறைந்த தொகையே (3,326கோடி 1.6%) ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
எனவே இந்நிலைமைகள் வைத்து நோக்கும்போது அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகள் படிப்படியாக இலவசக் கல்வி திட்டத்துக்கு முற்றுபுள்ளி வைக்கும் மறைமுகமான நடவடிக்கைகளாக நோக்கப்படுகின்றது இது பெற்றோர்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும் அதிருப்தியுற்ற நிலையை தோற்றுவித்துள்ளது. எமது நாட்டில் வறுமைக் கோட்டுக்குள் வாழும் குறைந்த வருமானமுடைய குடும்பங்களைப் பொறுத்தவரை இலவசக்கல்வி என்பது ஒரு பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. ஆனால் இன்று இப்பிள்ளைகள் தமது கல்வியை இடைநிறுத்தும் நிலைமை உருவாகியுள்ளது இது அரசாங்கம் வறிய பிள்ளைகளுக்கு செய்யும் துரோக செயலாக பார்க்கப்படுகின்றது. இந்தவகையில் கன்னங்கரா அவர்களால் கொண்டுவரப்பட்ட இலவசக் கல்வித் திட்டமாவது இன்று மெல்ல மெல்ல வலுவிழந்து செல்லும் நிலையை அடைந்துள்ளது என்றே கூறலாம். தாய்மொழி கல்வி மொழியாக்கம்
கன்னங்கரா அவர்களின் பரிந்துரைக்கு முன்னர் இலங்கை கல்வி முறைமையில் இருமொழி கொள்கையே காணப்பட்டது. உயர்ந்த வர்க்கத்தை சேர்ந்தோர் ஆங்கில கல்வியை பெற கீழ்நிலையில் இருந்த மக்கள் சுயமொழி கல்வியையே பெற்றனர். அவ்வாறு சுயமொழி கல்வியைப் பெற்றோர் ஆரம்பக்கல்வியை தாய்மொழியில் பெற்றது டன் தொடர்ந்து இடைநிலைக் கல்வியை பெறுவதற்கு ஆங்கில மொழிக்கொள்கை அவர்களுக்கு தடையாக அமைந்தது. ஆனாலும் மோர்கன் குழுவினரின் சிபார்சு களின் பின்னர் நாட்டில் தாய்மொழிக் கல்வியும் வளர்ச்சி பெற தொடங்கியது. இவ்வாறு தாய்மொழிக் கல்வி ஓரளவு வளர்ச்சி பெற்றிருந்த போதும் கன்னங்கரா அவர்களை தலைவராக கொண்ட நிருவாக குழுவினர் சுதந்திரம் எதிர்நோக்கியுள்ள ஜனநாயக நாடு அந்நிய மொழியை பயன்படுத்துவது என்பது மக்கள் பெற்றுக் கொள்ளும் புதிய சுதந்திரத்திற்கு முரண் பட்டதாக அமையும் எனக் கருதியதால் "தாய்மொழியே கல்வி
ஒக்டோபர் 2012

த மொழியாக இருக்க வேண்டும்” என்பதில் ஆழ்ந்த
கவனம் செலுத்தினர். இதன் ஆரம்ப நடவடிக்கையாக - பாலர் வகுப்பு தொடக்கம் ஐந்தாம் வகுப்பு வரை
அனைத்துப் பாடசாலைகளிலும் தாய்மொழியே கல்வி ஊடகமாக இருத்தல் வேண்டும் என்று விதந்துரைத்தனர்.
இது 1945ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. - (ஆனால் ஆங்கிலத்தை கல்வி மொழியாகக் கொண்ட 5 பாடசாலைகளில் இந்த மாற்றம் படிப்படியாக ஒழுங்கு
செய்யப்பட்டது) இந்த சுயமொழிகல்விக் கொள்கையானது - 1952இல் எட்டாம் வகுப்புவரை நடைமுறைக்கு வந்தது. 5 பின்னர் 1962இல் பல்கலைக்கழகக்கல்வி (கலைபீடம்) 5 வரை விஸ்தரிக்கப்பட்டது.
1 பாடசா
இவ்வாறு சுயமொழியிலேயே கல்வியை வழங்கும் | கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டதன் விளைவாக சமூக பொருளாதார நிலைமையிற் பின்தங்கிய (வறிய) பிள் ளைகள் உயர்கல்வி வரை தொடர வாய்ப்பு உருவாகியது. இது இன்றுவரை தொடர்கின்றது என்றே
கூறலாம்.
ஆனாலும் அண்மைக்காலங்களில் நாட்டில் அதிகரித்துச் செல்லும் சர்வதேச பாடசாலைகள் காரண மாக கன்னங்கரா அவர்களால் முன்வைக்கப்பட்ட இந்த சுயமொழிக் கொள்கையானது இன்று வலுவிழந்து செல்லும் நிலையை எட்டியுள்ளது. இலங்கையில் இன்று வசதியான குடும்பங்களை சேர்ந்த 18% மான பாடசாலை மாணவர்கள் சர்வதேச பாடசாலைகளில் ஆங்கில மொழியிலான கல்வியையே பெறுகின்றனர் என ஒரு ஆய்வு கூறுகிறது. கடந்த காலங்களில் நகர்புறங்களில் செயற்பட்ட இவ்வாறான பாடசாலைகள் தற்போது கிராமபுறத்திலும் பரம்பலடையத் தொடங்கியுள்ளன. இவை தற்போது நடுத்தர/ மத்தியதர குடும்ப மக்கள் மத்தியில் ஆங்கில கல்வி மீதான ஆசைகளை தூண்டி மக்களிடம் பெருந்தொகையான பணத்தை கறக்கும் நிறுவனங்களாக மாறி வருகின்றன. மேற்படி ஆங்கில கல்வி மொழியின் வளர்ச்சியும், தாய்மொழிக் கல்வியின் வீழ்ச்சியும் மக்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துக் காணப்பட்ட பழக்கவழக்கங்கள், பண்பாட்டு அம்சங்கள், கலை கலாசாரங்கள் போன்றவற்றில் ஒரு சீர்கேடான நிலைமையை தோற்றுவித்துள்ளது.
எனவே ஆங்கில மொழி மூலமான சர்வதேச பாடசாலைகளின் அதிகரிப்பு மீண் டும் ஆரம்ப காலங்களை போன்று இரு மொழிக்கொள்கை என்ற நிலையை உருவாக்கியுள்ளது. இதில் பொருளாதார வசதி உடையவர்கள் எதிர்காலத்தில் புதிய வாய்ப்புகளை தரகூடிய நவீன முறையிலான ஆங்கில மொழிமூல கல்வியை பெற்று உயர் பதவியை பெற வறிய நிலையில் உள்ள பிள்ளைகள் தாய்மொழிக் கல்வியை பெற்று இன்றைய தொழில் உலகுக்குள் பிரவேசிக்க முடியாத
கன்
கள்
-14
-ஆசிசியம்

Page 17
வெ
நிலைக்கு அல்லது குறிப்பிட்ட சில தொழில்களை மட்டும் பெற்றுக்கொள்ளும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதனால் சுதேச மொழியில் கற்றோர் ஆங்கில மொழி யில் கற்றோர் மத்தியில் ஒரு அங்கீகாரம் இழந்த நிலையை அடையும் ஒரு பரிதாப நிலை உருவாகியுள்ளது.
எனவே சமூக அமைப்பில் மேலும் சமூக வேறுபாடு களை உருவாக்கிய இரு மொழி கொள்கையை நீக்கி சுய மொழிக்கல்வி என்ற கன்னங்கரா அவர்களின் விதந்துரைப்பு சர்வதேச பாடசாலைகளின் வருகையுடன் அல்லது ஆங்கில மொழி பாடசாலைகளின் அதிகரிப்பு டன் இன்று கேள்விக்குறியாகியுள்ளது. மத்திய பாடசாலைகள் (ம.ம.வி)
C.W.W கன்னங்கரா அவர்கள் இந்நாட்டில் துன்புறும் நிலையில் வசித்துவரும் பெற்றோரின் பிள்ளைகள் தங்களின் இரு கால்களிலும் எழுந்து நிற்கக்கூடிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக மத்திய மகா வித்தியாலயங்களை உருவாக்கினார். அதன்படி ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் ஒவ்வொரு மத்திய மகா வித்தியாலயங்கள் உருவாக்கப்பட்டன. உள் ளூர் சூழலுடன் கல்வியை இயைபுபட வைத்தல், நகரங்களுக்கு மேற்கல்விக்கு செல்லாது உள்ளூரில் அவற்றை தரமாக பெற்றுக்கொள்ள வாய்ப்பளித்தல், உள்ளூர் மூலவளங் களை வினைத்திறனுடன் பயன்படுத்துதல் என பல பரிமாணங்களை கொண்டதாக இம் மத்திய மகா வித்தியாலயங்கள் உருவாக்கப்பட்டன. கிராமபுற கல்வி மேம்பாட்டில் இது ஒரு மைல்கல்லாக அமைந்தது. இலங்கையின் பாடசாலைகளின் அமைப்பு வளர்ச்சியிலும் இப்பாடசாலைகள் முக்கிய இடத்தை வகித்தன. கிராம் புறங்களில் இருந்துவரும் திறமைமிக்க மாணவர்களுக்கு நல்ல சூழலிற் கல்வியை பெறுவதற்கு ஏற்ப வாய்ப்பை பெற்றுக் கொடுப்பது இதன் பிரதான நோக்கமாக அமைந்தது.
இப்பாடசாலைகள் பல வசதிகளையும், புதிய கற்கை நெறிகளையும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டு வந்தன. ஐந்தாம், எட்டாம் வகுப்பு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கு இம் மத்திய மகா வித்தியாலயங்களில் அனுமதி வழங்கப் பட்டன. அவ்வாறு அனுமதி பெறும் மாணவர்கள் அங்கேயே தங்கியிருந்து கற்பதற்கான வாய்ப்புகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. கிராமப்புற வறிய மாணவர்கள் இடைநிலை கல்வியை பெற மிக நீண்ட ( தூரம் (நகரங்களுக்கு) செல்ல வேண்டிய கடினமான நிலையை இப்பாடசாலைகள் இல்லாமல் செய்தன. இப்பாடசாலைகளில் கல்விகற்ற பலர் எதிர்காலத்தில் மிக உயர்ந்த நிலையை அடைந்தனர்.
மாக
Dான்
ஒக்டோபர் 2012

மக]
இவ்வாறாக கிராமபுற சிறுவர்களின் சுபீட்சத்துக் காக கன்னங்கரா அவர்களால் உருவாக்கப்பட்ட இம் மத்திய மகா வித்தியாலயங்கள் இன்று வலுவிழந்த நிலையை அடைந்துள்ளது. மத்திய மகா வித்தியாலயம் என்பது இன்று பெயரளவில் செயற்படுகின்றதே ஒழிய கன்னங்கரா அவர்கள் எதிர்பார்த்த நோக்கங்களை நிறைவேற்றுவதாக அமையவில்லை. இதனை அடியொட் டியதாக அண்மைக்காலங்களில் "நகர்புற பாடசாலை களின் போட்டியை தவிர்த்து, கிராம மட்டத்திலேயே தரமான உயர்கல்வியை பெறுதல்” என்ற நோக்கில் கொண்டுவரப்பட்ட இசுறு பாடசாலைகள் முறைமை, நவவோதய பாடசாலைகள் முறைமை, ஆயிரம் பாட சாலைகள் முறைமை என்பனகூட செயற்திறன் உடைய தாக அமையவில்லை என பல மட்டங்களிலும் குற்றஞ் சாட்டப்படுகிறது.
எனவே கிராமபுற மக்களுக்காக கன்னங்கரா அவர்களால் கொண்டுவரப்பட்ட மத்திய மகா வித்தியாலயம் என்ற துாரநோக்கு சிந்தனை இன்று செயலற்ற தொன்றாகவே காணப்படுகின்றது.
தனியார் பாடசாலைகளை அரச கல்வி முறையோடு ஒன்றிணைத்தல்
ன்
பாசான்
C.W.W கன்னங்கரா அவர்களின் விதந்துரைப்புக்கு முன்னர் இரண்டு வகையான பாடசாலைகளை நாட்டில் காண முடிந்தது. இதில் கட்டணம் செலுத்தி கல்வி பெறக்கூடியோர் ஒருவகை பாடசாலைகளில் கற்க (ஆங்கில பாடசாலைகள்), கட்டணம் செலுத்தி கல்வி பெற முடியாதோர் வேறுவகை பாடசாலைகளில் (சுயமொழி பாடசாலைகள்) கற்றனர். ஆனால் கன்னங்கரா அவர்களின் விதந்துரைக்குப் பின்னர் சகல தனியார் மதகுழு பாடசாலைகளும் அரசாங்கத்தால் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனை அடிப் படையாக கொண்டு சட்டம் ஒன்று 1960களில் கொண்டு வரப்பட்டு பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட மதசார்புடைய கல்வி நிறுவனங்கள் அனைத்தும் அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப் பட்டது. (சில பாடசாலைகள் மட்டும் தொடர்ந்து இயங்க அனுமதி வழங்கப்பட்டது) இந்த வகையில் 1960களுக்கு பின்னர் ஒரே வகையான (அரச பாடசாலைகள்) பாடசாலைகளே நடைமுறையில் இருந்தன.
யை
- ஆனால் இன்றைய சூழலில் கன்னங்கரா அவர்கள் விதந்துரைத்த ஒரே வகையான பாடசாலை முறையை காண முடியாத நிலையே உருவாகியுள்ளது. அதாவது தேசிய கல்வி அமைப்பில் தேசிய கல்வியை பின்பற்றும் ஈதேச பாடசாலைகளும், இத்தகைய தேசிய கல்வி அமைப்பின் குறிக்கோள்களை முற்றாக நிராகரித்து அல்லது இவற்றிலிருந்து விலகிச் செல்கின்ற சர்வதேச
- 15 |
ஆசிசியம்

Page 18
பாடசாலைக்குமென இரண்டு வகையான பாடசா ை முறையை காணமுடிகின்றது. அதிலும் அண்மை காலங்களில் குறிப்பாக இச் சர்வதேச பாடசாலைகளில் நிரம்பல் மிக விரைவாக அதிகரிக்க தொடங்கியுள்ள இப்பாடசாலைகளின் கல்வித்திட்டம் அமெரிக்க கனடா, பிரித்தானியா, ரஷ்யா, அவுஸ் திரேலிய இந்தியா போன்ற நாடுகளின் கல்வித் திட்டங்களையும் பாட ஏற்பாடுகளையும் அடியொட்டியதாக அமைந்துள்ளது
இவ்வகையான பாடசாலைகள் இன்று மி பெருந்தொகையான நிதியை அறவிடும் தனியார் கல் நிலையங்களாக மாறியுள்ளன. உயர், மத்தியதர மக்கள் இன்று பெரும் பொருட் செலவுடன் உயர்கல்விவன் (ஆங்கில மொழி மூலமாக) இச் சர்வதேச பாடசாை களில் சந்ததியினருக்கு கல்வியை பெற்றுக்கொடுப்பதி முன் நிற்கின்றனர். இதனை மேலும் ஊக்குவிக்கு வகையில் பல தனியார் பல்கலைக்கழகங்களு செயற்பட தொடங்கியுள்ளன. இலங்கையில் தற்போ 29 தனியார் பல்கலைக்கழகங்கள் கம்பனிகள் சட்டத்தில் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் மாலேம்பே தனியா பல்கலைக்கழகத்துக்கு வைத்திய பட்டத்தினை வழங் வதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பா 75 இலட்சம் ரூபாவுடன் "மாலேபே சைதம்” நிறுவன தில் வைத்திய பட்டத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை காணப்படுகின்றது.
எனவே இதுவரை காணப்பட்ட அரச பாடசாலை கள், அரச பல்கலைக்கழகங்கள் என்ற ஏகபோக உரிை இல்லாதொழிக்கப்பட்டு இன்று சர்வதேச பாடசாலை கள், சர்வதேச பல்கலைக்கழகங்கள் என்ற நிலை உருவாகியுள்ளது. இதில் அரச பாடசாலைகளில், அர பல்கலைக்கழகங்களில் கற்றோர் (சுயமொழியில் சர்வதேச பாடசாலைகளில், சர்வதேச பல்கலை. கழகங்களில் கற்றோருடன் போட்டியிட வேண்டி நிலை தோன்றியுள் ளது. இந்த வகையில் தேசி! குறிக்கோள்களை எய்துவதற்காக சுதேச சிங்கள, தமிழ் மொழி மூல பாடசாலைகள் இயங்கும் நாட்டுக்கு தேசிய குறிக் கோள்களிலிருந்து விலகி வெளிநாடு ஒன்றின் கல்வி திட்டத்தைப் பயிற்றுவிக்கும் மற்றுமொ பாடசாலைத் தொகுதி தோன்றி வருகின்றமை எதி காலத்தில் பாடசாலை முறைமையில் பெரும் நெருக்கம் களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே இலவசக் கல்வியின் பயனை நாட்டி உள்ள அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்
நோக்கில் கன்னங்கரா அவர்களால் கொண்டுவரப்பட்ட தனியார் பாடசாலைகளை அரச கல்வி முறைக்குள் ஒன்றிணைத்தல் என்ற பரிந்துரையும் இன்று கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஒக்டோபர் 2012

b,
\ர |
S. S. SH 5. 6.
ல முடிவுரை
C.W.W. கன்னங்கரா அவர்களின் தூரநோக்கு சிந்தனையிலிருந்து உருவாகிய இலவசக் கல்வி, சுயமொழிக்கல்வி, பாடசாலை முறைமை என்பன இன்று அதன் நோக்கத்திலிருந்து விலகிச் செல்ல தொடங்கியுள்ளன. சமூகத்தில் அடிமட்ட மக்களுக்காக அல்லது கீழ்நிலை மக்களுக்காக அவர் ஏற்படுத்திய இலவசக் கல்வி இன்று நிச்சயமற்றதாகியுள் ளது. இலங்கையின் எல்லா கல்வி நிலையங்களிலும் தாய்மொழியே போதனா மொழியாக இருக்க வேண்டும் ள் என்ற அவரின் கொள்கையும் இன்று ஆங்கில மொழியின்
செல்வாக்கு காரணமாக கடுமையான போட்டியிட்டு தமது அங்கீகாரத்தை இழக்கும் நிலையில் உள்ளது.
கிராமபுற மாணவர்கள் இடைநிலைக் கல்விக்காக நீண்டதூரம் சென்று கல்வியை பெற்றுக்கொள்ளும் கடுமையான நிலையை இல்லாமல் செய்வதுடன் அங்கேயே தங்கியிருந்து ஏதாவது ஒரு கைத்தொழிலை யாவது கற்று வெளியேற வேண்டும் என்பதற்காக அவர் உருவாக்கிய பாடசாலை முறையும் இன்று பெயரளவி லேயே இயங்கும் நிலையில் உள்ளது. நாட்டில் இரண்டு வகையான பாடசாலை முறைகள் இல்லாதொழிக்கப் பட்டு எல்லா பாடசாலைகளும் அரச கல்வி முறையோடு ஒன்றிணைக்க வேண்டும் என்று அவரால் கொண்டு
வரப்பட்ட ஒரே வகையான பாடசாலை முறையும் ல (அரசாங்க பாடசாலைகள் முறை) இன்று கேள்விக் ம குறியாகியுள்ளது.
- எனவே கன்னங்கரா அவர்களின் விதந்துரைகள் தொடர்ந்து வலுவிழந்து செல்லும் அல்லது சிதைவடைந்து செல்லும் நிலையானது நாட்டில் மீண்டும் சுதந்திரத்திற்கு முன்பிருந்த கல்வி சூழலையே தோற்றுவித்துள்ளது எனலாம். குறிப்பாக இன்று சர்வதேச பாடசாலைகளின் அல்லது சர்வதேச பல்கலைக்கழகங்களின் வருகையும், நாட்டில் கல்வித்துறையில் ஏற்பட்டுவரும் விரைவான மாற்றங்களும் எமது தேசிய பாடசாலைகளினதும், பல்கலைக்கழகங்களினதும் நடைமுறையில் உள்ள இலவசக்கல்வி முறையிலும் சுயமொழிக் கல்வியிலும் எத்தகைய தாக்கத்தை எதிர்காலத்தில் ஏற் படுத்த போகிறது என் பது தெளிவாகின்றது. இத்தகைய மாற்றங்கள் நாட்டின் எதிர்கால கல்விபுலத்தில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
த
79..
R H' |
ஆசிசியம்

Page 19
கல்வி தனியா
கடந்த ஜூலை 17-ம் தேதி சென்னை மதுரவாயலில் 1 "கல்வி தனியார் மய ஒழிப்பு” மாநாட்டில் ஓய்வு பெ சுருக்கம். பேரா கருணானந்தம் விவேகானந்தா கல் பாடத்திட்டக் குழு உறுப்பினராகவும் பணி புரிந்தவர்.
அறிவாளிகள், மேதாவிகள் என்று ஊடகங்களால் முன் வைக்கப்படுபவர்களிடம் உண்மையில் அறிவு நேர்மை இருப்பதில்லை. "கனவு காணுங்கள்” என்ற வாசகம் அப்துல்கலாம் சொன்னதாக பெரிதுபடுத்தப் பட்டது. ஆனால், அதை முதலில் சொன்னவர் மார்ட்டின் லூதர் கிங். “I have a dream நான் கனவு காண்கிறேன்” என்று கருப்பு இன மக்களுக்கு சம வாழ்வு கிடைப்பது பற்றிய ஏக்கத்தை அவர் குறிப்பிட்டார்.
கனவு காண்பது என்பது ஏக்கத்தை குறிப்பிடுவது. ஏ சி சண்முகம் போன்ற கல்வி வியாபாரிகள் கோடிக் கணக்கில் பணம் குவிக்க ஆசைப்படுகிறார்கள். அவர்கள் கனவு காணலாம். கல்வி அனைவருக்கும் வேண்டும் என்பது தேவை. ஆசைக்கு கனவு காணலாம், ஆனால் தேவைக்கு போராட வேண்டும். மாணவர்கள் கனவு காண்பது சமூகத்தை பாழாக்கி விடும். "கனவு காணுங் கள்” என்று சொல்லும் அப்துல் கலாம் தேவைகளுக்காக ஏன் போராட சொல்லவில்ல்ை | ஒக்டோபர் 2012 |
மாம்

ர்மய ஒழிப்பு
அ.கருணாகரன்
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியால் நடத்தப்பட்ட பற்ற பேராசிரியர் அ. கருணானந்தம் ஆற்றிய உரையின் லூரி வரலாற்றுத் துறை தலைவராகவும், சமச்சீர் கல்வி இந்த உரை “புதிய ஜனநாயகம்” இதழில் வெளிவந்தது.
கல்வி அனைவருக்கும் வேண்டும் எனும் போது | "கல்வி என்பது என்ன?” என்ற ஒரு கேள்வியும், “யாருக்கு
கல்வி?” என்ற ஒரு கேள்வியும் எழுகின்றன.
கல்வி ஆதிக்க வர்க்கத்தின் கருவியாக இருந்தது என்று மார்க்ஸ் சொன்னார். பல ஆயிரம் ஆண்டுகளாக மனு தர்மத்தின் படி தாழ்த்தப்பட்ட சூத்திர, வைசிய, மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. ஆதிக்க சாதியினர் குருகுலத்தில் குதிரை ஏற்றம், வாள் பயிற்சி என்று மக்களை ஒடுக்குவதற்கான பயிற்சி பெற்றார்கள். கல்வி யார் பெற வேண் டும் என்று ஆதிக்க சாதியினர் தீர்மானித்தார்கள். உழைக்கும் மக்களுக்கு, ஆதிக்க வர்க்கத்திற்கு தொண்டூழியம் செய்வதற்காக விதிக்கப் பட்டவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. "கல்வியார் பெற வேண்டும்” என்பதை தரும் சாஸ்திரங்கள் வரையறுக் கின்றன. "ஒடுக்கப்பட்ட பிரிவினர் தவறிப் போய் அறிவு தரும் விஷயங்களை கேட்டுவிட்டால் அவன் காதில்
17
ஆசிசியம்

Page 20
ஈயத்தை காய்ச்சி ஊற்று” என்று சொல்கின்றன தரும் சாஸ்திரங்கள்.
நாம் விரும்பும் கல்வி என்பது உழைக்கும் மக்களுக் கான கல்வி. இன்று தனியார் கல்வி நிறுவனங்கள் ஆதிக்க வர்க்க மாணவர்களை எடுத்து தேச விரோதிகளை உருவாக்குகிறார்கள். அவர்கள் அமெரிக்காவில் போய் கிரீன் கார்டு வாங்கிக் கொள்கிறார்கள், "குழந்தையை அமெரிக்க மண்ணிலேயே பெற்றுக்கொள்ள வேண்டும், அப்போதுதான் குடியுரிமை கிடைக் கும்” என்று திட்டமிடுகிறார்கள். இது தேச விரோத கிரிமினல்களை உருவாக்கும் கல்வி.
நாம் விரும்பும் கல்வி மக்களிடமிருந்து மாணவர் களை அன்னியப்படுத்தாத கல்வி. நாட்டில் கல்வி பற்றிய திட்டமிடும் குழுக்களில் சாம் பிட்ரோடா போன்ற மக்களோடு தொடர்பில்லாத நபர்கள் இடம் பெறுகிறார் கள். வேலை வாய்ப்புக்கான கல்வி, அறிவை பெறுவதற் கான கல்வி என்று பேசுகிறார்கள். சமூக நலனுக்கான கல்வி, நாட்டு நலனுக்கான கல்வி என்பது பேசப் படுவதில்லை.
நாம் விரும்புவது மக்கள் பற்றை அடிப்படையாகக் கொண்ட கல்வி. ஆனால், ஆட்சியாளர்களின் கொள்கை எந்தத் திசையில் செயல்படுகிறது? ( இந்தியாவிற்கு அடுத்த சீர்திருத்த அலை தேவை என்று ஒபாமா சொல்லியிருக்கிறார். அவர் சொல்லும் சீர்திருத்தம் வேறு, இந்திய மக்களுக்குத் தேவையான சீர்திருத்தம் வேறு. சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு பற்றியும் மோசமாகி வரும் முதலீடு சூழலைப் பற்றியும் அமெரிக்க நிறுவனங்களின் கவலையை அவர் வெளிப்படுத்தினார். அவர் சொல்லாமல் விட்டது கல்வித் துறையில் அன்னிய நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவதை பற்றிதான். கல்வி நடத்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இடம் வேண்டும் என்பது அவர்களது முக்கிய குறிக்கோள்.
ஒபாமாவின் கருத்துக்கு இந்திய தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தாலும், அவை வந்த விதத்தைப் பார்க்க வேண்டும். "அன்னிய சக்திகள் இந்தியாவைப் பற்றி தவறான தகவல்களை பரப்புகின்றன, சில தனி நபர்களின் கருத்துக்களின் அடிப்படையில் ஒபாமா இப்படி பேசுகிறார். அடிப்படை பொருளாதார காரணிகள் அவர் கவனிக்கவில்லை. ஏற்கனவே நிறைய சாதித்திருக்கி றோம். இன்னும் தொடர்ந்து அமெரிக்க தேவைகளை நிறைவேற்றுவோம்” என்று அவர்கள் நீளமான விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கிறது.
அதனால்தான் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை அனுமதிப்பதற்கான மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று கபில் சிபல் அக்கறையுடன் பேசுகிறார்.
ஒக்டோபர் 2012

கல்வியை அதன் சமூக பொருளாதார சூழலிலிருந்து பிரித்து பார்க்க முடியாது. மற்ற துறைகளிலெல்லாம் தனியார் மயமாக இருக்கும்போது கல்வித் துறையில் தனியார் தாராள உலக மயத்தை எப்படி தடுத்து நிறுத்த முடியும்.
Iெ 9
1946-ம் ஆண்டு சுதந்திரம் எத்தகையது? பாகிஸ்தானை பிரிக்க வேண்டுமா வேண்டாமா என்று கலவரங்கள் நடந்தன. காங்கிரசுக் கட்சி 1946-ம் ஆண்டு தேர்தலுக்கான தனது அறிக்கையில் ஒன்றுபட்ட இந்தியாவை விரும்புவதாக குறிப்பிட்டிருந்தது. ஆனால் பிரிட்டிஷ் அமைச்சரவை குழுவிடம் சமர்ப்பிக்கும்போது அதை நீக்கி விட்டு எந்த ஒரு தேசிய இனத்துக்கும் சுய நிர்ணய உரிமையை மறுக்கப் போவதில்லை என்றார்கள். அதாவது முஸ்லீம் களுக்கு தனிநாடு பிரித்துக் கொடுப்பதை அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். எதை செய்தாவது தாம் உடனடி யாக அதிகாரத்தைக் கைப்பற்றி விட வேண்டும் என்ற குறிக்கோள் கொண்டிருந்தார்கள்.
அப்படி அதிகாரத்தைப் பிடித்தவர்கள் தான் இப்போது அமெரிக்காவை தமது எஜமானர்களாக ஏற்றுக் கொண்டு கொஞ்சம் பொறுத்திருக்குமாறு மன்றாடுகிறார்கள்.
2002-ல் அரசியல் சட்டத்தின் 86வது பிரிவுக்கு திருத்தம் கொண்டு வந்தது பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி அரசு. காங்கிரசும் அதை ஏற்றுக் கொண்டது. அந்த திருத்தத்தை பலர் வெற்றியாக கொண்டாடினார்கள். மக்களுக்கு கல்வி அளிக்க அரசு எடுக்கும் நடவடிக்கை என்று சித்தரித்தார்கள். உண்மை யில் மாற்றியது என்ன? 1. அடிப்படை உரிமைகளில் ஒன்றை புதிதாக சேர்ப்பது
க
2. வழிகாட்டும் நெறிகளில் ஒன்றை மாற்றுவது
3. அடிப்படை கடமைகளின் ஒன்றை புதிதாக சேர்ப்பது.
21A சரத்தில் 6 முதல் 14 வயது வரையிலான எல்லா குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி வழங்க வேண்டும் என்பது சேர்க்கப்பட்டது. ஆனால் அதற்கான பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. மத்திய அரசு மாநில அரசை காட்டுகிறது, மாநில அரசு உள்ளூராட்சி அரசை காட்டுகிறது. பொறுப்பை தள்ளி விடுகின்றன.
அரசியலமைப்புச் சட்டத்தின் 45வது சரத்தில் 10 ஆண்டுகளுக்குள் (அதாவது 1960க்குள்) 14 வயதிலான அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி கொடுக்க அரசு முயற்சிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதை, 6 வயது வரை மழலையர் பராமரிப்பு கல்வியை தர முயற்சிக்க வேண்டும் என்று மாற்றியிருக்கிறார்கள்.
- 18
- ஆசிரியம்

Page 21
மூன்றாவதாக, கடமைகளில் ஒன்றாக பெற்றோர் 6முதல் 14 வயது வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பதை சேர்த்திருக்கிறார்கள்.
மழலையர் பராமரிப்பு உரிமையாகவோ கட்டாய மாகவோ சொல்லப்படவில்லை, இலவசமாக கொடுக்கப் பட வேண்டும் என்றும் சொல்லப்படவில்லை. 6 வயது முதல் 14 வயது வரை அரசு கல்வி தரும். ஆனால் கல்வி என்பது இதற்கு முன்பே ஆரம்பமாகிறது. 6 ஆண்டு வரையில் பணக்கார குழந்தைகளுக்கும் ஏழை குழந்தை களுக்கும் ஏற்படப் போகும் இடைவெளியை நிரப்ப எந்த உதவியும் பேசப்படவில்லை.
2009-ம் ஆண்டில் இயற்றப்பட்ட கல்வி பெறும் உரிமை சட்டத்தின்படி நான்கு வகையான பள்ளிகள் இயங்குவதை அனுமதித்தார்கள் - சிறப்பு பள்ளிகள், அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள். இப்படி இருந்தால் சமத்துவம் எப்படி தர
முடியும்?
அருகாமைப் பள்ளி என்பதன் வரையறையில் தனியார் சிறப்புப் பள்ளிகளைச் சேர்க்கவில்லை. உதாரணமாக சென்னை தரமணியில் இருக்கும் அமெரிக்க பன்னாட்டு பள்ளியில் போய் கல்வி பெறும் உரிமை சட்டத்தின்படியான ஒதுக்கீடு கோர முடியாது. அந்த விதி குட்டிமுதலாளிகள் நடத்தும் பள்ளிகளுக்குத்தான் பொருந்தும். கார்பொரேட் பள்ளிக் கூடங்களுக்கு பொருந்தப் போவதில்லை.
j d ahHgs $ a y ;25% இடம் ஏழை மாணவர்க ளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு நியாயமான கட்டணத்தை அரசே செலுத்திவிடும் என்கிறார்கள். இலவசம் என்று சொல்லி விட்டு நியாயமான கட்டணம் என்றால் எப்படி? அவர்கள் சொல்லும் நியாயமான கட்டணம் என்பது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கட்டுப்படியாவது என் பதில்லை, பள் ளிகளுக்கு கட்டுப்படியாகுமா என்பதைத்தான் குறிக்கிறது.
"ஆசிரியர் சம்பளம், மற்ற தினசரி செலவுகளோடு எதிர்காலத்தில் விரிவாக்கத்துக்கான நிதியையும் கட்டணமாக வாங்கலாம்” என்கிறார்கள். விரிவாக்கம் தனியார் முதலாளிக்கு எதிர்காலத்தில் லாபத்தை தரப் போகிறது, அதற்கு மாணவர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்?
கல்வியாளர்களாக மாறிய தனியார் முதலாளிகள் அதில் குவிக்கும் பணத்தை எடுத்து தொலைக்காட்சி சேனல் ஆரம்பிக்கிறார்கள், அரசியல் கட்சி ஆரம்பிக்கி றார்கள். இந்த மாநாடு நடக்கும் இடத்துக்கு எதிரில் இருக்கும் கல்லூரியின் அதிபர் ஏ சி சண்முகம் புதிய நீதிக் கட்சி ஆரம்பித்திருக்கிறார்.
' ஒக்டோபர் 2012

இந்த அடிப்படையிலான தனியார் கட்டண வசூலுக்கு நீதிமன்றமும் அங்கீகாரம் கொடுத்திருக்கிறது. அடிப்படை வசதிகள் இல்லாமல் முறையான கட்டிடங்கள் இல்லாமல் பள்ளிகள் நடத்துகிறார்கள். கும்பகோணம் தனியார் பள்ளியில் தீ விபத்து நடந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆண்டுதோறும் கண்ணீர் விடுவதைத் தவிர எதுவும் செய்ய முடியவில்லை. நீதிமன்றம் இன்று வரை எந்த கட்டளையும் தரவில்லை. பள்ளியில் கட்டமைப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
அனைவருக்கும் தரமான கல்வி பெற வேண்டு மானால் தனியார், தாராள, உலக மய திட்டங்களை எதிர்க்க வேண்டும். அரசாங்கம் சட்டங்களை மட்டும் போட்டுவிட்டு அவற்றை நிறைவேற்றத் தேவையான திட்டங்களை போடுவதில்லை. கல்வி பெறும் உரிமைச் சட்டம் ஒரு பகுதியில் தேவையான அரசு பள்ளிகளை உருவாக்கும் பொறுப்பை அரசுக்கு தரவில்லை. இத்தகைய புதிய சமூக அநீதிக் கொள்கையின் விளைவுக ளுடன் நாம் மோதிக் கொண்டிருக்க முடியாது. நாம் போய் தனியார் முதலாளிகளுடன் கல்வி பெறும் உரிமைக்காக சண்டை போட்டுக் கொண் டிருக்க
முடியாது.
காமராசர் காலத்தில் பெரும்பாலும் அரசுப் பள்ளி, அருகாமைப் பள்ளி இருந்தன, மற்றவை அரசு உதவி பெறும் பள்ளிகளாக இருந்தன. 1970களுக்குப் பிறகுதான் மெட்ரிக் பள்ளிகள் வர ஆரம்பித்தன. பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்க அரசிடம் பணம் இல்லை என்கிறார்கள். 1300 கோடி ரூபாய் செலவில் தலைமைச் செயலக கட்டிடம் கட்டி அதை மருத்துவமனையாக மாற்றுவதாக சொல் கிறார்கள். அண்ணா நூல் நிலையத்தை மாற்றுகிறேன் என்கிறார்கள் அதற்கெல்லாம் பணம் இருக்கிறது. பள்ளிக்கூடம் கட்ட வேண்டுமென்றால் பணம் இல்லை என்கிறார்கள். | அடிப்படையில் மக்கள் கல்விக்கு கல்விக் கூடங்கள் அரசால் நடத்தப்பட வேண்டும். அதற்கு கல்வியில் தனியார் மயம் ஒழிக்கப்பட வேண்டும். அதை சாதிக்க தனியார், தாராள, உலக மய கொள்கைகளை அவை எந்த உருவத்தில் வந்தாலும் மக்கள் எதிர்த்து போராட வேண்டும்.
கல்வி என்பது வறுமையிலிருந்து தப்பிப்பதற்காக அல்ல, வறுமையுடன் போராடுவதற்காக
19
ஆசிரியம்

Page 22
(0-
த.மனோகரன்
பரீ அவற்றின் பெறு
இன்றைய உலகில் ஒரு சராசரி மனிதனின் தகுதியை எடைபோடப் பல தகைமைகள் அளவுகோல் களாகக் கொள்ளப்படுகின்றன. பணம், செல்வாக்கு
அதிகாரம் என்று பல கொள்ளப்பட்டாலும் கூட கல்வித் தகைமைக்கு முதலிடம் கொடுக்கப்படுகின்றது. பல நிலைகளில் கல்வித் தகைமை பின் தள்ளப்படும் சந்தர்ப்பங்களும் காணப்பட்டாலும் கூட ஒவ்வொருவர தும் கல்வித் தகைமை அவரவர் தகுதியை எடைபோடும் சான்றாக விளங்குகின்றது என் பதை மறுக்கவும்
முடியாது, மறைக்கவும் முடியாது.
கல்வித் தகைமையை வெளிப்படுத்துவது எது? அதற்கான வழிமுறை எவ்வாறு அமைந்துள் ளது என்பதையும், அந்த வழிமுறையில் இன்று ஏற்பட்டுள்ள தடுமாற்ற நிலைமையையும் அவதானிக்க வேண்டும். கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவரின் அறிவை வெளிப்படுத்துவது கல்வித் தகைமை. அதேவேளை அறிவுக்கும், புத்திக்கும் வேறுபாடு காண் போரும் உள்ளனர். கற்று அறிவது அறிவு என்றும் சிந்தித்து செயற்பட வழிசெய்வது புத்தியென்றும் மதிப்பிடப்பட் டுள்ளது.
" ஒக்டோபர் 2012

ட்சைகளும் பேறுகளின் பெறுமதியும்
எது எவ்வாறாயினும் ஒருவருக்கு சமூகத்தில் > தகைமையைத் தரும் கல்வித் தகைமை பற்றி கவனம் . செலுத்த வேண்டும். கல்வித் தகைமையை வெளிப் 5 படுத்துவது எது? ஒவ்வொருவரும் தாம் கற்ற கல்வி நிலைக்கேற்ப பெற்றுக்கொள்ளும் சான்றிதழ்களே கல்வித்தகைமைக்குரிய ஆதாரங்களாக விளங்குகின்றன.
உலகளாவிய ரீதியில் பல்வேறு துறைகளுக்கான கல்வியைப் பெற்று அதன் முடிவில் பெற்றுக்கொள்ளும் சான்றிதழ்கள் பலதரப்பட்டவையாயுள்ளன. குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் அங்கீகரிக்கப்படும் கல்விச் சான்றிதழ்கள் உள்ளது போன்று உலகளாவிய தரம் கொண்டவையுமுள்ளன.
நமது நாட்டைப் பொறுத்தவரை பாடசாலை மட்டம், பல்கலைக்கழக மட்டம் மற்றும் பல்வேறு துறைகள்சார் கல்வி மட்டங்களில் கல்விச்சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அரசதுறை கல்வி நிறுவனச் சான்றிதழ்கள் போன்றே பல்வேறு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களும் சான்றிதழ்கள் வழங்கு கின்றன. அரசு சார்ந்த பாடசாலை, பல்கலைக்கழகங்கள்
- 20
4 ஆசிரியம்

Page 23
போன்று இன்று தனியார் பாடசாலைகளும், பல்கலைக் கழகங்களும் நிலைபேறும் காலமாக இன்றைய நிலை அமைந்துள்ளது.
நாம் அரச நிர்வாகத்திற்குட்பட்ட அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவோம். குறிப்பிட்ட அரசுத்துறைசார் நிறுவனங் களில் பயின்ற மாணவ, மாணவியரின் கல்வித் தரம் கணிக்கப்பட பொதுப் பரீட்சைகள் நடத்தப்படுகின்றன.
ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அங்கு கற்கும் மாணவ, மாணவியருக்கு அங்கேயே பரீட்சைகள் நடத்தி சான்றிதழ்கள் வழங்கி வருவது வழமையாகவுள்ளது. இது போன்று தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலுவோர் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும் பல்வேறு துறைசார் பரீட்சைகளுக்குத் தோற்றிப் பெற்றுக்கொள்ளும் பெறுபேறுகளுக்கமைந்த சான்றிதழ் களைப் பெற்றுக்கொள்வதும் வழக்கத்திலுள்ளது.
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் தேசிய ரீதியான பாடசாலை மாணவ, மாணவியருக்காக ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணதரப் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைகளை ஆண்டுதோறும் நடத்தி வருவதுடன் அரசதுறைசார் ஆட்சேர்ப்புப் பரீட்சைகள், பதவி உயர்வுப் பரீட்சைகள் போன்றவற்றையும் காலத்திற் குக் காலம் நடத்தி வருகின்றது.
தேசிய பாடசாலைகளுக்கும், அதுபோன்ற உயர்த் தரத்தில் கல்பெறக்கூடியதாக நம்பப்படும் பாடசாலை களுக்கும் ஆறாம் தரத்தில் பிள்ளைகளை அனுமதித்துக் கொள்வதற்காகவும், குறைந்த வருமானம் பெறும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் பெற்றுக் கொள்ள வழிசெய்வதற்காகவும் ஐந்தாம் ஆண்டில் பயிலும் பிள்ளைகளுக்கான பரீட்சையாக ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் உள்ளது. மொழி ரீதியாகவோ, தேசிய மட்டத்திலோ சமத்துவம் கொண்ட பரீட்சையாக இது அமையவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மாவட்ட ரீதியாகத் தரப்படுத்தப்படும் இப்பரீட்சை யில் ஒரு மாவட்டத்தில் ஒரு மொழி மூலம் தோற்றிய பிள்ளைகளுக்கான தெரிவு மட்டப் புள்ளிகள் ஒரு அளவாகவும், அதே பரீட்சைக்குத் தோற்றிய மற்ற மொழிப்பிள்ளையின் தெரிவு மட்டப் புள்ளிகள் அதிகமாகவோ, குறைவாகவோ இருந்து வருகின்றது. அதேபோல் மாவட்டங்களுக்கிடையேயான தெரிவு மட்டப் புள்ளிகளும் ஒத்த அளவில் கணிக்கப்படு
ஒக்டோபர் 2012

வதில்லை. புள்ளி மட்டத்தில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக கொழும்பு மாவட்டத்தில் சிங்கள மொழி மூலம் தோற்றிய பிள்ளையின் தெரிவு மட்டப் புள்ளிகள் 170 ஆக இருக்கும். அதேவேளை தமிழ்மொழி மூலம் தோற்றிய பிள்ளையின் தெரிவு மட்டப்புள் ளிகள் 120 ஆகவும் அமைகின்றமை வழக்கிலுள்ளது. பொதுவாக வடக்கு, கிழக்கு மாகாணங் களுக்கு வெளியே பயிலும் தமிழ்ப் பிள்ளைகளின் தேர்ச்சி மட்டப்புள்ளிகள் சிங்கள மொழிமூலம் தோற்றும் பிள்ளைகளை விட வழமையாகக் குறைந்த நிலையி லேயே இருந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
இவ்வாறான நிலையைச் சரியாக மதிப்பிடும் போது தமிழ்மொழி மூலம் பயிலும் மாணவ, மாணவியரின் கல்வித் தரம் சிங்கள மொழிமூலக் கற்கும் மாணவ, மாணவியரின் கல்வித்தரத்தோடு ஒத்ததாயில்லை என்பதும் பின்னடைந்த நிலையிலுள்ளதும் தெளிவா கின்றது. ஏன் இவ்வாறான நிலை நிலவுகின்றது? குறைந்த அளவு புள்ளிகளுடன் தமிழ்ப்பிள்ளைகள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைவதை ஒரு சாதனையாகக் கொள்ள முடியுமா? என்பதைக் கல்விப் புலத்திலுள்ள கல்விமான்கள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் கவனத் தில் கொள்ள வேண்டும். தமிழ்மொழி மூலம் கற்கும் பிள்ளைகளின் ஆரம்பக் கல்வியில் கவனம் செலுத்தி தரமுயர்வுக்கு வழிகாண வேண்டும்.
- தேசிய ரீதியில் நடத்தப்படும் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையில் மொழி, மாவட்ட மற்றும் எந்தவொரு ஏற்றத்தாழ்வுகளும் புள்ளி வழங்களில் காட்டப்படுவதில்லை. சரியாக கணிப்பிடும் போது மேற்படி பரீட்சையையே தேசியப் பரீட்சையாகக் கொள்ள முடியும். இப்பரீட்சையில் பெற்றுக்கொள்ளும் பெறுபேறுகளே அரச சேவை ஆட்சேர்ப்பின்போது அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றது. வேறு தகைமை கள் எதிர்பார்க்கப்படும் வேளைகளிலும் இப்பரீட்சையில் மொழி, கணிதம் ஆகிய பாடங்களுடன் குறிப்பிட்ட அளவு பாடங்களில் திறமைச் சித்திகள் எதிர்பார்க் கப்படுகின்றன. எத்தனை தகைமைகள் பெற்றிருந்தாலும் எத்தனை திறமைச் சித்திகள் பெற்றிருந்தாலும் சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் கணிதமும், மொழியும் திறமைச் சித்திக்குக் குறையாத பெறுபேற்றைக் கொண்ட பாடங்களாக இருக்க வேண்டும் என்பது வழக்கத்தி லுள்ள பொது விதியாகவுள்ளது. எண்ணும், எழுத்தும் கண்ணெனத் தகும் என்று இதைத்தான் நம்முன்னோர்
அன்றே கூறினார்கள் போலும்.
21
2.ஆசிசியம்

Page 24
இன்றுள்ள யதார்த்த நிலையை நோக்கும்போது கணித பாடத்தின் முக்கியத்துவம் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. குறைந்த அளவினரே கணித பாடத்தில் சித்தியடைவதும் சித்தியடைபவர்களிலும் மிகக் குறைந்த அளவினரே திறமைச் சித்தியோ, அதற்கும் மேம்பட்ட சித்தியோ பெற்றுக் கொள்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கணித பாடத்தின் முக்கியத்துவமும் சாதாரணதரப் பரீட்சையில் அப்பாடத்தில் உயர்ந்த பெறுபேற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையும் பிள்ளைகளுக்கு உணர்த்தப்பட வேண்டும். பெற்றோரையும் விழிப்படை யச் செய்ய வேண்டும். ஆசிரியர்களும் இது தொடர்பில் பொறுப்புடன் அக்கறை செலுத்த வேண்டும்.
தேசிய ரீதியில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை நடத்தப்பட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டாலும் தேசிய ரீதியில் குறிப்பிட்ட அளவினரின் பெறுபேறுகள் பெற்றுக்கொண்ட உயர் மட்ட புள்ளிகளின் அளவில் தரப்படுத்தப்படும் அதேவேளை மாவட்ட ரீதியாக ஏற்ற இறக்கங்களு டனேயே பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தல் புள்ளிகளின் அளவு அமைகின்றது. அதுவும் மாவட்ட மக்கள் தொகையின் வீதாசாரத்திற்கேற்பவே இடம் பெற்று வருகின்றது.
இதனால், சாதக, பாதக நிலைகள் உள்ள போதிலும் நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை உட்பட தமிழ்மக்கள் கணிசமான அளவில் வாழ்ந்தபோதிலும் அவர்களது கல்வி வசதியின்மையால் உயர்தரப் பரீட்சையில் உயர் பெறுபேறு பெற முடியாத நிலையில் தமிழர்களையும் உள்ளடக்கிய சனத் தொகை மதிப்பீட்டின் படியான பல்கலைக்கழக உள்வாங்களில் வேறு சமூகத்துப் பிள்ளைகளே பயனடைகின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதாவது தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமது கல்வியைத் தமிழ் மொழி மூலம் கற்பதற்கு போதிய, உயர்ந்த வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை யென்பதும் அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய பல்கலைக்கழக அனுமதிகளுக்கான அளவை வேற்று சமூகத்தினர் பெற்றுக்கொள்கின்றனர் என்பதும் தமிழர் கல்விநிலை தொடர்பில் கவனம் செலுத்துவோர் அவதானிக்க வேண்டிய முக்கிய விடயமாகும்.
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்ட பரீட்சைகளின் உரிய பாடங்களுக்கு அவ்வப்பாடங்களில் உரிய தகைமை பெற்றவர்களையே பரீட்சைகளின் விடைத்தாள் மதிப்பீட்டிற்கு நியமனம் செய்வது விதியாக இருந்து வருகின்றது. அது மட்டுமன்றி குறிப்பிட்ட
ஒக்டோபர் 2012

தகைமையுடன் கூடிய ஆசிரியரோ, ஆசிரியையோ குறிப்பிட்ட அதாவது விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பாடத்தை உரிய பரீட்சைக்குரிய வகுப்பில் பாடசாலையில் கற்பிப்பவராகவும் இருத்தல் வேண்டுமென்ற விதியும் கட்டாயப்படுத்தப்பட்டிருந்தது. இது நடைமுறையிலும் உள்ளது. ஏதாவது ஒருவழியில் மதிப்பீடு செய்யும் பாடத்துடன் நேரடித் தொடர்பில் ஈடுபட்டிருந்தால் மட்டுமே பாடப்புலம் தொடர்பான அறிவும், மதிப்பீடும் தகுதியும் உண்டு என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால், சில ஆசிரியர்களும், அதிபர்களும் உயர்ந்த இம்மதிப்பீட்டுப் பணியைத் தரமிறக்கும் செயற்பாட்டி லும் ஈடுபட்டு வருவதும் மறுப்பதற்கில்லை. நேரசூசி அற்றவர்களுக்கு அதாவது பாடம் தொடர்பில் வகுப்பறைக்கே அடிவைக்காதவர்களுக்கு பரீட்சகராகத் தெரிவாகக் கூடியதாகப் போலி நேர சூசிகளை வழங்குவதும், அதைப் பயன்படுத்தி சில ரூபாக்களுக்காக கல்விப் புலத்தில் தவறிழைப்பவர்களையும் காண முடிகின்றது. உண்மை நிலையை மறைக்க முடியாது. பரீட்சையின் மதிப்பீட்டுத் தரம் இதனால் பாதிக்கப்படு கின்றது. இதன் முடிவு பிள்ளைகளின் பெறுபேற்றிலும் தாக்கம் செலுத்துகின்றது. பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
பரீட்சை மதிப்பீடுகளுக்கு ஆசிரியர்களைச் சிபாரிசு செய்யும்போது உண்மை நிலையை வெளிப்படுத்தத் தயங்கும், தவறுகளுக்கு ஒத்துழைக்கும் அதிபர்களும் ஏற்க முடியாத வழியில் மதிப்பீட்டாளர் பதவியைப் பெற்றுக்கொள்ள எண்ணும் ஆசிரியத் துறைசார்ந்த வர்களும் பரீட்சையின் புனிதத் தன்மையைப் பேண வழிவிட்டு செயற்பட வேண்டும்.
பரீட்சைகளின் நம்பகத் தன்மை அதேபோல் பெறுபேறுகளின் உண்மைநிலை என்பவற்றை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டியது நாட்டின் சகலரதும் பொறுப்பும், விருப்புமாகும். தனிமனிதனின் கல்வித் தகைமையை நேர்மையான முறையில் உறுதிப்படுத்த, வெளிப்படுத்த வேண்டியது கல்வித்துறையினரின் பாரிய பொறுப்பு. கல்வியில் சீரழிவும், பரீட்சைகளில் நம்பிக்கையீனமும் நாட்டின் எதிர்காலத்திற்கும், மேன்மைக்கும், வளத்திற்கும் பாதகமாகயமையு மென்பதால், பரீட்சைகளும், பெறுபேறுகளும் கெளரவிக்கப்பட வேண்டும். உயர்ந்த நிலையில் பேணப்பட வேண் டும். பொறுப்பான வகையில் சிந்திப்பதும் செயற்படுவதும்
- இக்காலத்தில் அவசியமாகிறது.
22
ஆசிரியம்

Page 25
கி.புண்ணியமூர்த்தி
ஆரம்ப வகுப்புக மதிப்பீடுகளின் நடை
ஆரம்ப வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்கள் மிகவும் மெதுவாகவே கல்வி கற்கின்றனர். ஒவ்வொரு அடைவு மட்டத்தையும் படிப்படியாகவே கடக்கின்றனர். ஒரு அடைவு மட்டத்தைக் கடக்கத் தவறும் குழந்தை அடுத்த மட்டத்தை அடைவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்குவதாக இருக்கும். ஆரம்ப வகுப்புகளில் மாணவர்கள் கற்கும் முறைமை, அவர்கள் பெற்றுக் கொள்ளும் அடைவுகள், அவர்களது விருப்பு வெறுப்புக் கள், கற்றலின்போது அவர்கள் வெளிப்படுத்தும் பலம், பலவீனங்கள் போன்றவை தொடர்பான தரவுகளைத் திரட்டும் செயன்முறை கணிப்பீடு ஆகும்.
ஐரசின் (Airasin-1991) என்பவர் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளின்போது மாணவர்கள் தொடர்பாகத் தீர்மானமெடுக்கும் பொருட்டு அவர்களது முன்னேற்றம் தொடர்பான தகவல்களைத் திரட்டுவதும், அவற்றைப் பகுப்பாய்வு செய்வதுவும், அவை தொடர்பாக விளக்க மளிப்பதுவுமே கணிப்பீடாகும் எனக் குறிப்பிடுகின்றார்.
'ஒக்டோபர் 2012

களில் கணிப்பீடு -முறைப் பிரயோகம்
தேசிய கல்வி ஆணைக்குழு, கல்வி உயர்கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம் என்பவை இணைந்து தயாரித்த ஆரம்பக்கல்வி அதிபர்களுக்கும், ஆரம்பப் பாடசாலைப் பொறுப்பாளர்களுக்குமான அறிவுறுத் தல்கள் கையேட்டில் கணிப்பீடு தொடர்பாகப் பின்வரு மாறு கூறப்பட்டுள்ளது
வகுப்பறைக் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை ஒழுங்கமைத்துக் கொள்வதற்குப் பிள்ளைகளின் கற்றல் தொடர்பான நிறைவு, குறைவுகள், இடர்பாடுகள் என்பவற்றை இனங்காணுதல் அவசியமானதாகும். செயற்பாடுகள் மூலம் சேகரிக்கப்படும் இத்தகவல்களின் அடிப்படையில் முடிவுகள் தெளிவானவையாகவும், திட்டவட்டமானவையாகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறு குறிக்கோளின் அடிப்படையில் தகவல் சேகரிக்கும் செயற்பாடே கணிப்பீடாகும். கணிப்பீடு செய்தலானது ஒரு குறிக்கோளின் அடிப்படையில் வெளிப்படையான ஒரு செயலாக அமைதல் அத்தியாவசியமானது. இதன் மூலம் மாணவர்களது
23 |
2ஆசிரியம்

Page 26
நிறைவுகள், குறைவுகளை மட்டுமல்லாது ஆசிரியரது நிறைவு குறைவுகளையும் இனங்காண முடியும்
மேலும் இக்கையேட்டில் தகவல்களைச் சேகரிப்ப தற்கு அவதானித்தல், வாய்மொழி வினாக்களைக் கேட்டல், மாணவரைச் செவிமடுத்தல் போன்ற முறைசாராத கணிப்பீட்டு முறைகளையும் எழுத்துப் பரீட்சைகள் போன்ற வழமையான முறைசார்ந்த கணிப்பீட்டு முறைகளையும் பயன்படுத்தலாம். எனினும் ஆரம்பக்கல்வி நிலையில் முக்கியமாகக் கையாள வேண்டியது முறைசாராத கணிப்பீட்டு முறைகளைப் பயன் படுத்தித் திட்டவட்டமாகப் பெறப்படும் தகவல்களையேயாகும். இத் தகவல்களின் அடிப்படை யில் பிள்ளையின் கற்றல் பேறுகளை (தேர்ச்சிகளை) ஆசிரிய கைந்நூலில், தரப்பட்ட மாதிரி அட்டவணையை ஆதாரமாகக் கொண்டு தயாரிக்கப்படும் அட்டவணை யில் பதிவு செய்தல் எதிர்பார்க்கப்படுகிறது.
இக் கையேட்டின் படி தரம் 1 இல் முதலாம், இரண்டாம் தவணைகளின் இறுதியில் முறைசார்ந்த வினாக்கள் கொண்ட எழுத்துப் பரீட்சை நடாத்துதலைத் தவிர்த்தல் வேண்டும். அவ்வாறான ஒரு பரீட்சை அவசியமெனின் மூன்றாம் தவணை இறுதியில் மாத்திரம் நடாத்தலாம். ஆனால் அதற்கான வினாப்பத்திரங்கள் வகுப்பாசிரியரால் (சமாந்தர வகுப்புகளாயின் அவ் வகுப்புக்கள் ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரால்) தயாரிக்கப்படுதல் வேண் டும். நிறுவனங் களால் தயாரிக்கப்பட்ட வினாப் பத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் நடை முறையில் ஒவ்வொரு தவணைகளிலும் எழுத்துப் பரீட்சைகள் நடாத்தப்படுகின்றமையை அவதானிக்க முடிகின்றது. அது தவிர இப் பரீட்சைகள் கோட்ட மட்டங்களிலும் வலய மட்டங்களிலும் இடம் பெறுவதையும் அவதானிக்க முடிகின்றது.
பி.
கீழுள்ள இரு வினாப்பத்திரத் தலைப்புகளிலும் இது எடுத்துக் காட்டப்படுகின்றது. தரம் 1ற்கு முதலாம், இரண்டாம் தவணைகளில் வினாப்பத்திரங்கள் தயாரித்து எழுத்துப் பரீட்சைகள் வைப்பது தொடர்பாக ஒரு பிரபல பாடசாலையின் ஆரம்பக்கல்வி ஆசிரியரிடம் கேட்ட போது, எழுத்துப் பரீட்சைகள் வைக்காவிட்டால் "மாணவர்களை இனங்காண்பது சிரமம்” என்றார். மற்றொருவர் “எழுத்துப் பரீட்சைகள் வைக்காவிட்டால் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு மாணவர்களை ஆயத்தப் படுத்த முடியாது” என்றார். இன்னுமொருவர் ஒருபடி மேலே சென்று "தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தரம் I இல் இருந்தே ஆயத்தப்படுத்த வேண்டியுள்ளது அதற்கு எழுத்துப் பரீட்சை மிகவும் அவசியம்” என்றார். வேறொருவர் “வலய மட்டத்திலேயே இவ் எழுத்துப்
' ஒக்டோபர் 2012

பரீட்சைகளை செய்து நடாத்தும்போது இவ்வினா பொருத்தமற்றது” என்றார்.
வலய மட்டங்களால் எழுத்துப் பரீட்சைகளை ஏற்பாடு செய்து நடாத்துவது தொடர்பாக ஆரம்பக் கல்விக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் ஒருவரிடம் வினவியபோது “சில சிறிய பாடசாலைகளில் வினாப்பத்திரங்களைத் தயாரிப்பதற்கோ, அவற்றை அச்சுச் செய்வதற்கோ (Print) வசதிகள் இல்லாத காரணத்தாலும், செலவுச் சுருக்கத்தாலுமே இவ்வாறு கோட்ட, வலய மட்டங்களில் வினாப்பத்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன” எனக் குறிப்பிட்டார்.
படம் - 1
முதலாந் தவணைக் கம்
01. வேறுபடுத்தி வரைவோம்
படம் - 2
த்வான் காடு / கோறளைப்பற்று tn ற்க / நிவர்
வடாம் வாைம் ஆபப்பர்
மிர்ளார்
வயை போர், மெ
மர்
ங்க
ஒவ்வொரு முதன்மை நிலையின் இறுதியிலும் எல்லாப் பிள்ளைகளும் தமது நிலைக்குரிய விடயப் பரப்புகளின் அத்தியாவசியத் தேர்ச்சிகளில் தேர்ச்சி - நிலையை எய்தியிருத்தல் எதிர்பார்க்கப்படுகிறது
மாணவர்கள் எய்த வேண்டிய தேர்ச்சி மட்டங்களைக் கண்டறிதல் தொடர்பாக விசேட கணிப்பீட்டு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு பிள்ளையின் அடைவு மட்டத்துடன் இன்னொரு பிள்ளையின் அடைவு மட்டத்தை (புள்ளிகள்) ஒப்பிட்டுத் தீர்மானம் எடுக்கும் முறையிலிருந்து விடுபட்டுத் திட்டமிட்ட ஒரு குறிக்கோளின் அடிப்படையில் பிள்ளையின் உள்ளார்ந்த ஆற்றல்களின் விருத்தியைப் பிரதிபலிக்கும் முறைகளைக்
-ஆசிரியம்
24

Page 27
கையாளுவதற்கு ஆசிரியர்கள் நெறிப்படுத்தப்படுதல் வேண்டும். இவ்வாறு குறித்த கையேட்டில் வலியுறுத்தப் படுகின்றது. ஆனால் நடைமுறையில் மாணவர்கள் அளித்த விடைகளுக் குப் புள்ளியிட்டு ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிடும் செயன்முறை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
ஆரம்ப வகுப்புகளில் எழுத்துப் பரீட்சைகளை வைக்கும்போது வகுப்பாசிரியரே சுயமாக கணிப்பீட்டுப் பத்திரங்களைத் தயாரித்து வைக்கும் போதுதான் உண்மையிலேயே மாணவர்களின் பலம், பலவீனங்க ளைச் சரியாக இனங்கண்டுகொள்ள முடியும். இதற்காகக் கணினியில் தட்டச்சு செய்வதோ, அச்சுப் பிரதி எடுப்பதோ கட்டாயமானதல்ல. தெளிவான எழுத்துக் களில் தானே தயாரித்துத் தேவை ஏற்படின் புகைப்படப் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் சிறு குழந்தைகளுக்கு வினாப்பத்திரங்கள் தயாரிக்கப்படும் போது அவை தெளிவானதாகத் தயாரிக்கப்படுதல் வேண்டும். படம்3இல் காட்டப்படுவது ஒரு பிரபல பாடசாலையில் தரம் இரண் டிற்காகத் தயாரித்து வழங்கப்பட்ட ஒரு வினாப்பத்திரமாகும். இதில் "கூடுதலாக நீர் கொள்ளும் பாத்திரம்” என்பதைக் குழந்தை எவ்வாறு இனங்காண்பது என்பதற்கு முன் னால் இதனை எவ்வாறு வாசித்து விளங்கிக் கொள்வது என்பது குழந்தைக்குப் பாரிய பிரச்சினையாகும்.
படம் 3
படம் - 4 இல் காட்டப்படும் வினா உருப்படி தரம் - 2 இல் 2ம் தவணைக்காகத் தயாரிக்கப்பட்டதாகும். இதில் "குடும்ப அங்கத்தவர்கள் செய்யும் வேலைகளை” என் பதுடன் முடிந்துவிடுகின்றது. அவ்வினா பூரணப்படுத்தப்படவில்லை
| ஒக்டோபர் 2012

படம்-4
ஒரு வினாப்பத்திரத்தில் தெரிவு செய்யப்படும் வினா உருப்படிகள் மாணவர்களைக் குழப்புவதாக அமையக் கூடாது. படம் - 5 இல் காட்டப்படுவது தரம் 1 இன் முதலாம் தவணைக்காகத் தயாரிக்கப்பட்ட ஒரு வினாப்பத்திரமாகும் இதில் "அப்பா உடை கழுவுவார்” என்னும் வினாவிற்கான துலங்கலை வழங்கும்போது தந்தை, தாய் இருவரையும் தனித்தனியே உடைகள் கழுவும் போது அவதானித்த குழந்தை குழம்புவதற்கு இடமுண்டு.
படம் - 5
சரி) பிழை (K) இடுவோம்
1.எமது ஆசிரியர் அன்புடன் பழகுவார். ( ) 2.வகுப்பறையைச் சுத்தமாக வைத்திருக்க வேர் 3. அப்பா உ கைள் கழுவவார். (1) 4.காந்தா பாட்டிக்கு நாம் உதவ வேண்டும் (1) 5.மாற கூட்டமாக தோட்டத்திற்கு வரும், ( )
. சரியான விடையைக் கோடிடுவோம்
படம் 6 இல் காட்டப்படுவது தரம் 1 இன் முதலாம் தவணைக்காகச் சுற்றாடல் பாடத்திற்காகத் தயாரிக்கப் பட்ட கணிப்பீட்டுப் பத்திரத்தில் இருந்து தெரிவு செய்ததாகும். இதில் அதிபர் அறையில் (கரும்பலகை, கணினி) இருக்கும் என்னும் உருப்படியைப் பார்த்தால் அதிபர் அறையில் கணினி இருக்கும் என்பதற்கோ, கரும்பலகை இருக்காது என்பதற்கோ உத்தரவாத மில்லை. அது பாடசாலைகளின் வளங்களையும் தேவைகளையும் பொறுத்தது. அதேபோல் (பாட்டி, அக்கா) கதைகள் சொல்வார் என்ற உருப்படியும் இதே போன்றதுதான். அதாவது பாட்டி மாத்திரம்தான் கதை சொல்வார் என்றோ, அக்கா கதைகள் சொல்லமாட்டார் என் றோ கொள்ள முடியாது என் பது இங்கு
குறிப்பிடத்தக்கது.
25
ஆசிசியம் |

Page 28
படம்-6
பான் விடையைக்
கோடிடுவோம்
நாம் ( சீருடை பஞ்சாபி)
- மனிந்து பாடசாலை சென் திடர் அறையில் ( கரும்பலகை
கண) இருக்கும்.
(டாடி வழக்கா) கதைகள் சொல்வார்.
படமள்-வளிமா கியா தா இ க
ட்ப (சமைக்க உதவும்
பொருட்களின் படம் வரைவோம்
கல்வி அமைச்சின் செயலாளரால் 2012.05.08ம் திகதி வெளியிடப்பட்ட 2012/13ம் இலக்க ஆரம்பக் கல்விப் பாடத்திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப் படல் என்ற தலைப்பிடப்பட்ட சுற்றுநிருபத்தின்படி முதலாந்தரத்திலிருந்து ஐந்தாம் தரம் வரைக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாடத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படுவது அத்தியாவசியமாயிருந்தும் அவ்வாறு செய்யாது ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்டு வெளிவாரியாகப் பல்வேறு புத்தகங்கள், சஞ்சிகைகள் மற்றும் வெளிவாரி நிறுவனங்க ளில் பெற்றுக்கொள்ளப்படும் வினாத்தாள்கள் போன்றன பாடசாலை வேளையில் பயன்படுத்துவதற்கு மாணவர் கள் ஈடுபடுத்தப்படுவதாக அறியப்படுகிறது.
இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் 1995.04.28ம் திகதி வெளியிடப்பட்ட இல 7/95 சுற்றுநிருபம் மூலம் ஐந்தாம் தரத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் முதலாவது வினாப்பத்திரத்தில் மாணவரில் காணப்படும் கற்றல் திறன்கள் மற்றும் 14 நியதிகளை அளவிடுவதை யும், 2வது வினாத்தாளில் 1ம் தரத்திலிருந்து எம் தரம் வரைக்கும் வகுப்பறையிற் கற்பிக்கப்படும் பாட உள்ளடக்கத்தைச் சார்ந்ததாக மாணவர்கள் பெற்றுக் கொள்ளும் அறிவு, திறன் மனப்பாங்குகளை அளவிடுவதை யும் நோக்காகக் கொண்டுள்ளது என்பது குறிக்கப்பட் டுள்ளது. இதன்படி ஆரம்பக் கல்விப் பிரிவுக்கான பாடத் திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் இப் பரீட்சையை எதிர்கொள்வதற்கு அவசியமான தேர்ச்சி கள் மாணவர் மத்தியில் விருத்தி செய்யப்படல் வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டிருந்தும் அனேக பாடசாலைக ளில் 5ம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையை முதன்மைப் படுத்தி வெவ்வேறு நபர்கள் மற்றும் வெவ்வேறு நிறுவனங்களுடன் இணைந்த செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகள் என்பன பாடசாலை வேளையில் நடாத்துதல் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மாணவருக் கும் பெற்றோருக்கும் பல்வேறு புத்தகங்கள், இறுவட்டுக் களை விற்பனை செய்தல், ஒரு சில ஆசிரியர்கள் நிதி அறவிடுதல், மேலதிக வகுப்புகளுக்குச் சமுகம் தராத மாணவர்களை வற்புறுத்துதல் போன்ற சந்தர்ப்பங்களும் அறியப்பட்டுள்ளன. இவை மாணவர்களுக்கு நெருக்கடி
கன்
ஒக்டோபர் 2012

யாகவும் பெற்றோருக்கு மேலதிகச் செலவாகவும் காட்டப்படுகிறது. இத்தகைய நடவடிக்கைகள் பாடசாலை களில் இடம்பெறக்கூடாது என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
ஆரம்பக் கல்விப் பிரிவில் ஒவ்வொரு தரத்திற்கும் ஒவ்வொரு நிலையிலும் மாணவர் அடைய வேண்டிய தேர்ச்சி மட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இத் தேர்ச்சி மட்டங்களை மாணவர்கள் அடைந்துகொள்ளச் செய்வது உரிய நிலைக்குப் பொறுப்பான ஆசிரியர்களின் வகைகூறலாகும். எனவே ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியில் காட்டப்பட்டுள்ளதன்படி கணிப்பீடு செய்யும் முறை செயற்படுத்தப்பட வேண்டும். சில பாடசாலைகளில் வெவ்வேறு காரணங்களை அடிப்படை யாகக் கொண்டு சமாந்தர வகுப்புகளுக்கிடையே மாணவர்களை மாற்றிவிடுவது குறித்தும் தெரியவந்துள் ளது. இவ்வாறான மாற்றங்களைச் செய்ய முடியாது என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
முதலாந்தரம் தொடக்கம் ஐந்தாம் தரம் வரை தேசிய கல்வி நிறுவகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள் ள பாடத்திட்டம் ஆசிரியர் அறிவுரைப்புகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன் பாடத்திட்டத்திற்கு அமைவாகத் தரப்பட்டுள்ள பாடப் புத்தகங்களைப் பாவிப்பதற்கும் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில் கற்றல் கற்பித்தற் செயன்முறைகளை ஒழுங்கமைத்துச் செயற்படுத்துவது குறித்தும் அதிபர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
இச்சுற்றுநிருபம் சகல மாகாண வலயக் காரியால யங்களுக்கும் அனுப்பப்பட்டபோதும் ஆரம்பப் பாட சாலைகளில் எந்தவித மாற்றங்களையும் அவதானிக்க முடியவில்லை. தரம் I இல் இருந்து ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைக்குக் குழந்தையை ஆயத்தப் படுத்துவதும், தினமும் ஏராளமான புத்தங்களையும் இறுவட்டுக்களையும் வாங்கிக் குவிப்பதும் , நாள் முழுவதும் பிரத்தியேக வகுப்புகளுக்கு மாணவர்களை அனுப்புவதும் வழமையாகிவிட்டது. இன்றுவரை பெற் றோரும் ஆசிரியர்களும் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் மாயையில் உழல்வதையே அவதானிக்க முடிகிறது. ஏராளமான பணம் செலவிட்டும் தோல்வியடையும் குழந்தைகள் விரக்தியின் உச்சத்துக்குச் செல்வதையும் அவானிக்க முடிகிறது.
எனவே ஆரம்ப வகுப்புகளில் கற்பிக்கும் ஆசிரியர் கள் கணிப்பீடு, மதிப்பீடு எனும் எண்ணக்கருக்களை நன்கு புரிந்தே செயற்படுதல் வேண்டும். மேலும் கணிப்பீட்டுப் பத்திரங்களைத் தயாரிக்கும் போதும் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். இவையே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.
26
ஆசிசியம்

Page 29
வேலை பெறக்கூடிய பட
என்ற மாை
வேலை வழங்குவதற்குரிய இரண்டு முக்கியமான நிபந்தனைகளை நவீன பல்தேசிய நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. ஆங்கில அறிவு, கணனி அறிவு என்ற நிலைகளில் அவை அமைகின்றன. ஆனால் இந்தியச் சூழலில் அந்த இருநிலை அறிவும் மிக்க இலட்சக் கணக்கானோர் வேலையற்றிருப்பதாகச் சொல்லப்படுகின்றது.
நவீன உயர்கல்வியிலே தொழில் வழங் கும் நிறுவனங்கள் ஊடுருவல்களை மேற்கொள்வதற்குரிய பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு விதத்திலே மேலையுலகினதும், பல்தேசிய நிறுவனங் களினதும் மேலாதிக்கத்தைக் கல்வியூடாக மேற்கொள் ளும் முயற்சிகளாக கல்விசார் நிபந்தனைகளை விதித்தல் அமைந்து வருகின்றது.
னங்
வேலை பெறும் நிலையைக் (Employability) கற்போரிடத்து மேம்படுத்தும் பொருட்டுப் பிரித்தானி யாவில் உருவாக்கப்பட்டுள்ள ரிடென் நம்பிக்கை நிதியம் (Trident Trust) வேலை பெறுவதற்குரிய அடிப்படைத் திறன்களாகப் பின்வருவனவற்றைச் சுட்டிக் காட்டியுள்ளது.
தொடர்பாடல் மற்றும் ஆளிடைத் தொடர்புத் திறன்கள்.
2. பன்முகத் தொடர்புகள்.
'ஒக்டோபர் 2012

தாரிகளை உருவாக்குதல் யத் தோற்றம்
சபா.ஜெயராசா
பிரச்சினை விடுவிக்கும் திறன்.
என் si
கற்றலிலே தம்மைத்தாமே முகாமை செய்து கொள்ளும் திறன்.
அடிப்படை அறிவாற்றலுடன் மேற்கூறிய திறன்கள் இணைக்கப்படல் வேண்டும் என்று சுட்டிக்காட்டப் படுகின்றது. ஏற்கெனவே பாடசாலைகளும் பல்கலைக் கழகங்களும் நவீனப்பாட்டுக்குரிய செயற்பாடுகளை முன்னெடுக்கத் தொடங்கிவிட்டன. இலங்கையிலும் அத்தகைய நிலை முன் னெடுக்கப்பட்டுவிட்டது. ஆயினும் வேலை தேடுவோர் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகின்றது. தனித்துக் கல்விச் செயற்பாடுக ளால் மட்டும் வேலையின்மை எழுச்சிப்பாடுகளுக்குத் தீர்வு காணப்பட முடியாது என் பதை முதற்கண் நினைவிற்கொள்ள வேண்டியுள்ளது.
பரந்துபட்ட தொழில் வளர்ச்சிகளை முன்னெடுக் காது கல்வியை மட்டும் குவியப்படுத்திப் பிரச்சினை களுக்குத் தீர்வு காண முடியாது.
புதிய தொழில்களை நோக்கிப் பட்டதாரிகளை உருவாக்கும் நடவடிக்கைகளின் கீழ் “மரபு சாராத” புதிய பட்டதாரிகள் இலங்கையிலும் உருவாக்கப்பட்டு வருகின்றார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த தொழில்கள் கிடைக்கப் பெறாது கீழ் உழைப்புக்களில்
27
ஆசியம்

Page 30
ஈடுபட்டு வருகின்றனர். சிலர் சர்வதேசப் பாடசாலை களிலே மரபு வழியான தொழிலாகிய கற்பித்தலிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
ன.
தொழிற் சந்தையில் மாற்றங்கள் நிகழ்ந்த வண்ண முள்ளன. ஆனால் மாற்றங்கள் நிலைத்து நிற்பதில்லை. அவை தொடர்ந்து மாறிய வண்ணமே இருக் கும் அந்நிலையில் "மாற்றங்களை முகாமை செய்தல்” என்ற புதிய அறிவுத்துறையும் வளர்ச்சியடையத் தொடங்கி யுள்ளன.
உலக வரலாற்றை நோக்கும் பொழுது, பொருளுற் பத்தியிலே நிகழ்ந்து வரும் மாற்றங்கள் கல்வியின் முக்கியத்துவத்தைக் குவியப்படுத்தியே வந்துள்ளன நவீன சேவைப் பொருளாதாரத்தின் (Service Economy) வளர்ச்சியும் கல்வியின் முக்கியத்துவத்தை மேலும் முக்கியப்படுத்தியுள்ளது. அத்தகைய முக்கியத்துவத்தைப் பல்தேசிய நிறுவனங்கள் தமக்குச் சார்பாகப் பயன் படுத்தத் தொடங்கியுள்ளன. தமது மேலாதிக்கத்தைக் கல்வியூடாக நிலைநிறுத்தத் தொடங்கியுள்ளன.
அறிவு என்பது விற்பனைப் பண்டமாக மாறி வருகின்றது. கல்வி நிறுவனங்களிலே முதலீடு செய்தல் இலாபகரமானவையாய் அமைந்து விடுகின்றன. இலாப் மீட்டும் கற்கை நெறிகளை ஏற்படுத்துமாறு அரச பல்கலைக்கழகங்களே ஊக்குவிக்கப்படுகின்றன.
அறிவை உருவாக்குதல், பிரயோகித்தல், வழங்குதல் என்பவை இலாப நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பெரும் நிறுவனங்கள் அவற்றைத் தமது கட்டுப்பாட்டின் கீழே வருவிக்கத் தொடங்கியுள்ளன.
அறிவை உற்பத்திகளிலே பிரயோகிப்பதன் வழியாக உற்பத்தி அதிகரிக்கின்றது. வினைத்திறனும் விளைதிறன் களும் எட்டப்படுகின்றன. இலாப எல்லை விரிவாக்கம் பெறுகின்றது. சில பல்தேசிய நிறுவனங்கள் முன்பு ஓராண்டில் ஈட்டிய இலாபத்தை இப்போ மூன்று மாதங்களில் ஈட்டத் தொடங்கியுள்ளன.
1. அறிவு 2. தகவல் 3. உற்பத்திப் பொருட்கள் ஆகிய மூன்றும் ஒன்றிணைக்கப்படுகின்றன. அந்த ஒன்றிணைப் பால் ஒவ்வொரு பொருள்களிலும் முன்னால் “நிமிரல்” (Smart) என்ற அடைமொழி பயன் படுத்தப்பட்டு வருகின்றது. நிமிரல் ஆடை, நிமிரல் சேவை, நிமிரல் வங்கி, நிமிரல் நெடுஞ்சாலை போன்ற தொடர்கள் எடுத்தாளப்படுகின்றன.
கல்வி நிலையங்கள் “அறிவுத் தொழிற்சாலைகள்” என அழைக்கப்படுகின்றன. அறிவுத் தொழில்கள் (Knowledge Jobs) வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளன. அவ்வாறான புதிய வளர்ச்சி நிலையில் மரபு வழியான அறிவுத் தோட்டங்களையும், தூய விஞ்ஞான அறிவையும்
ஒக்டோபர் 2012

நிராகரித்து விடுதல் முற்றிலும் தவறான அணுகுமுறை யாகும். ஏனெனில் அறிவு என்பது ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டே வளர்ச்சியடைகின்றது.
எடுத்துக் காட்டாகத் தூய கணித அறிவின்றி கணினிக் கணித அறிவை வளர்த்தெடுக்க முடியாது. மொழி அறிவின்றித் தொடர்பாடல் அறிவை முன்னெடுத் தல் இயலாத காரியம். வேலை பெறக்கூடிய பட்டதாரி களை உருவாக்கும் பொழுது முன்னைய பழைமைகளை நிராகரித்தல் சமநிலை தவறிய அணுகுமுறையாகும்.
நவீன பொருளாதாரம் “வலைப்பின்னற் பொருளா தாரம்” (Network Economy) என்றும் அழைக்கப்படு கின்றது. தகவலும், செயற்பாடுகளும், நிறுவனங்களும் வலைப்பின்னலால் இணைக்கப்பட்டு வருகின்றன. வலைப்பின்னற் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகின்ற வேளை அவற்றின் வழியாக முன்னெடுக்கப் பட்டு வரும் சுரண்டல்களை இல்லாதொழிப்பதற்குப் பாரம்பரியமான சமூக விஞ்ஞான அறிவின் முக்கியத் துவம் மீளவலியுறுத்தப்பட்டு வருகின்றது.
அடிப்படையான கல்வியை நிராகரித்து விட்டு வேலை பெறக்கூடிய பட்டதாரிகளை உருவாக்கிவிட முடியாது. அடிப்படைக் கல்வித் தளத்திலேதான் புதிய மாற்றங்களுக்குரிய வடிவமைப்புக்களை மேற்கொள்ளல் வேண்டும்.. அறிவு என்பது ஒரு தளத்திலிருந்து இன் னொரு தளத்துக்கு வேண்டப்படும் பொழுது இடமாற்றம் செய்யப்படக்கூடியது. இவ்விடயத்தில் விரிவான ஆய் வுகள் கல்வி உளவியலிலே மேற் கொள் ளப் பட்டுள்ளன.
இலங்கைப் பல்கலைக்கழகங்களிலே பாளி, சமஸ் கிருதம், இலத்தீன் முதலிய மொழிகளைக் கற்றவர்கள் மிகச் சிறந்த நிர்வாக சேவை அதிகாரிகளாகச் செயலாற்றியமைக்குச் சான்றுகள் உள்ளன. அந்நிலை யிலே பழைய அறிவு பயன்படாது என்று கூறுதல் தவறானதாகும்.
தொடர்ந்து கற்றுக்கொண்டிருத்தல் நவீன தொழிற் சந்தையிலே தொழில்களைப் பெற்றுக்கொள்வதற்குரிய அடிப்படை நிபந்தனையாகும். பல்கலைக்கழகங்களிலே நவீன பாடநெறிகளைக் கற்றுப் பட்டம் பெற்ற பின்னர் ஒருவர் தொடர்ந்து கற்பதை நிறுத்தி விடுபவராயின் அவர் காலாவதியான பட்டதாரியாகி விடுவார். நவீன தொழில் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாதவராகி விடுவார். அந்நிலையில் கற்பதற்காகக் கற்றல், என்ற திறனையும் வியப்படுத்தி வளர்க்க வேண்டியுள்ளது.
ஒவ்வொரு மாணவரும் தத்தமது வளர்ச்சிப் பாதையைத் தாமே தீர்மானித்து முன்னெடுப்பதற்குரிய கல்வியையும் பயிற்சிகளையும் பாடசாலை
தொடர்ச்சி 31ஆம் பக்கம்
28
ஆசிசியம்

Page 31
உள்ளடங்கல் வகுப்பறையிலே மீயுயர் அறிகைத் திறனுக்கான கற்பித்தல் முறைகளில் சுய நெறிப்படுத்தப் பட்ட (Self Regulated Leaning) முறையும் ஒன்றாகும். அபிவிருத்தி அடைந்த நாடுகளில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு மட்டுமின்றி சாதாரண வகுப்பறை மாணவர்களுக்கும் கற்பிப்பதற்கான அணுகுமுறைகளில் இச் சுயநெறிப்படுத் தப்பட்ட கற்பித்தல் முறை பிரயோகிக்கப்படுகின்றது. மாணவர்களின் தனிநபர் வேறுபாடுகளை ஆசிரியர்கள் நேர் மனப்பாங்குடன் எதிர்கொள்வதற்கு இயைபான கற்பித்தல் முறையாக இது அமையப்பெறுகின்றது.
சுய நெறிப்படுத்தப்பட்ட கற்பித்தலின் நோக்க மானது ஒவ்வொரு மாணவரும் தனக்குரிய கற்றல் இலக்கை அடையாளம் கண்டு வரையறுக்க உதவி செய்கின்றது. ஒவ்வொரு மாணவரும் தனக்குரிய கற்றல் நடத்தையை தானே கண்காணிக்கவும், இலக்கு நோக்கி கற்றல் நடத்தையை செம்மைப்படுத்தவும் மீள் நோக்கவும் உதவுகின்றது. மேற்குறிப்பிட்ட செயன்முறைகளுக்கு ஊடாக ஒவ்வொரு மாணவரும் தமக்குரிய கற்றல் இலக்குகளை அடைய தாமே சுயநெறிப்படுத்தக்கூடிய கற்றல் நடத்தையை மேற் கொள் வதற் கு இச் சுயநெறிப்படுத்தப்பட்ட கற்றல் முறை உதவுகின்றது.
- இக்கற்றல் முறையானது எந்தவொரு வயதுப்பிரிவு மாணவருக்கும் எந்தவொரு பாடத்திலும் மேற்கொள்ள
முடிகிறது.
ஒக்டோபர் 2012

வேலும் மயிலும் சேந்தன்
உள்ளடங்கல் வகுப்பறையில் மீயுயர் அறிகைத் திறனுக்கான
கற்பித்தல் முறை I
சுய நெறிப்படுத்தப்பட்ட கற்றல் முறையானது பல்வேறு வகையான உபாயங்களையும், முறைமை களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அவையாவன, சுய கண்காணிப்பு, சுய மீள் வலியுறுத்தல், சுய விழிப்புணர்வு, சுய நெறிப்படுத்தப்படும் கற்றல், சுயமாக தீர்மானிக்கப்பட்ட கற்றல் இலக்குகள், சுய முகாமைத்து வம், சுயமதிப்பீடு, சுயமாகத் தீர்மானிக்கப்படும் பரிகார முறை முதலானவற்றை உள்ளடக்கியதாகும்.
சுய நெறிப்படுத்தப்பட்ட கற்றல் முறையானது ஆசிரியனை கற்றலை ஆற்றுப்படுத்தும் ஒரு நபராகவும் வளவாளராகவும் வகிபங்கேற்கச் செய்யும் அதேவேளை உருமாற்று வகிபாகத்தையே பெருமளவுக்கு வகிப்பவராக ஆசிரியராக வகுப்பறையில் தொழிற்படத் தூண்டு கின்றது. அதேநேரம் மாணவர்களைப் பொறுத்தவரை யில் தனது கற்றல் நடவடிக்கைக்கு தானே பொறுப்பேற்று வகைகூறும் நிலைக்கு இட்டுச்செல்கின்றது. இன்றைய ஜனநாயக வாழ்க்கைச் செல்நெறியில் மாணவர் தான் தொடர்பில் சுதந்திரமாகவும், தன்னாதிக்கம் உடையது மான தீர்மானங்களை சிறுவயதில் இருந்தே தானே தெரிந்தெடுத்துக் கொள்வதற்கான தேர்ச்சியை பெறுவதற் கான பயிற்சிக் களமாகவும் அமையப் பெறுகின்றது.
இக் கற்றல் முறையானது விசேட தேவையுடைய மாணவர்களைப் பொறுத்தவரையில் தாங்கள் தொடர் பில் தங்கள் தீர்மானங்களை எட்டுவதற்கு நெறிப்படுத்து கின்றது. விசேட தேவையுடைய மாணவர்கள் தொடர் பில் பெற்றோர், பாதுகாவலர் மற்றும் பிறர் தமக்காக தீர்மானமெடுத்து வருவதால் இக்குறித்த மாணவர்கள்
29
ஆசிரியம்

Page 32
தமது எதிர்கால வாழ்க்கையிலும் சுயமாகத் தீர்மானப் எடுக்க முடியாதவர்களாகவும் என்றைக்கும் தங்கு நிலையில் பிறரது தயவை எதிர்பார்த்திருப்பவர்களாவும் உருவாக்கப்படுவது இன்றைய சமூக யதார்த்தமாகும்.
மேற்குறித்த நிலையை ஓரளவுக்கேனும் மாற்றிய மைக்க இச் சுயநெறிப்படுத்தப்பட்ட கற்றல் முறை உதவுகின்றது. இக்கற்றல் முறை இவர்களை சுயமாக செயற்படுவதற்கான வாழ்க்கை வெளியை வழங்குகின்றது. இதனாலேயே விசேட தேவையுடைய மாணவர்களுக் கான தனியாள் கல்வித்திட்டத்தில் (IEP) சுய நெறிப்படுத் தப்பட்ட கற்றல் முறை (SRL) முதன்மை பெறுகிறது குறிப்பாக கற்றல் இடர்பாடுகளை உடைய மாணவர் களுக்கு இம்முறை மிகவும் பரிகரிக்கப்பட்ட முறையாக வுள்ளது. இதன் மூலம் கற்றல் இடர்பாடுகள் உள்ள மாணவர்கள் சாதாரண வகுப்பறையில் தோல்விகளை யும், சுயகணிப்பு இழப்பையும் தவிர்த்துக்கொள்வார்கள்.
கற்றலின் பால் ஊக்கம் குறைந்த மாணவர்களுக்கும் இம்முறை பரிகரிக்கப்படுகின்றது. சுய நெறிப்படுத்தப் பட்ட கற்றல் இலக்கு, சுய நம்பிக்கை, சுயகற்றல் பாங்கு முதலானவை இங்கு இணைந்து காணப்படுவதால் மாணவர் களுக்கு கற்றலின் பால் ஊக்கம் பெற வழிவகுக்கின்றது.
26
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு இக்கற்றல் முறையின் கற்றல் இலக்கு அவர்களின் விருப்பத்திற்கும் தேவைக்கும் இணங்க அவர்களால் தீர்மானிக்கப் படுவதால் இவர்களது கற்றல் இலக்குகள் இம் மாணவர்களால் மிகைக் கணிப்பீட்டிற்கோ (Over Estimate) அல்லது குறை கணிப்பீட்டுற்கோ (Under Estimate) உட்படலாம். அவர்களால் தமது கற்றல் இலக்குகள் தொடர்பில் சரியான கணிப்பீட்டை மேற்கொள் வதற்காக விசேட கல்வி ஆசிரியர்கள், பாடத்துறை ஆசிரியர்கள் மற்றும் துறைசார் மருத்துவர் கள் முதலியோர் இணைந்த குழுவினராலேயே கற்றல் இலக்குகள் தீர்மானிக்கப்பட வேண்டும். மேலும் இக் குழுவினர் மாணவரது கற்றலை கவனமாக மேற்பார்வை செய்து அவர்களது அறிகைத் திறனுக்கான சவால்களை இனங்கண்டு நிவர்த்தி செய் வதற்கு
ஆற்றுப்படுத்த வேண்டும்.
ஒக்டோபர் 2012

சுய நெறிப்படுத்தப்பட்ட கற்றல் மாதிரி
)
U"
மாணவர் தமது விருப்பம் மற்றும் தேவைக்கு இணங்க கற்றல் இலக்குகளை இனங்கண்டு
வரையறுத்தல்
கற்றல் இலக்குகளை நிறைவேற்றுவதற்காக செயற்கூறுகளை இனங்கண்டு
திட்டமிடல்
தமது கற்றல் இலக்கை அடைதல் தொடர்பாக சுய மதிப்பீட்டை
மேற்கொள்ளல்
திட்டமிடப்பட்ட கற்றல் செயற்கூறுகளை விருத்தி செய்தல்
செயற்கூறுகளை நடைமுறைப்படுத்தல்
சுய நெறிப்படுத் தப்பட்ட கற்றல் மாதிரியை செயற்படுத்தும் போது மூன்று பிரதான வழிகளினூடாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
கல்வியாளர்கள் நன்கு ஒருங்கமைத்து சுய நெறிப்படுத்தப்பட்ட கற்றலுக்கான சிறந்த அனுபவத்தை வழங்க வேண்டும். இந்த வகையில் மாணவர்கள் தமது கற்றல் விளைவு தொடர்பில் தமது கற்றல் நடவடிக்கைகளை தாமே செவ்வை பார்ப்பதற்கான ஒழுங்குமுறைகளை ஆசிரியர்கள் வடிவமைத்துக்கொடுக்க வேண்டும்.
சுய நெறிப்படுத்தப்பட்ட கற்றலில் மாணவர்கள் ஈடுபடுவதற்கும் அவை தொடர்பில் வேண்டுவன வற்றை நிறைவேற்றக் கூடிய வகையில் வகுப் பறைக் கவிவுநிலை, வகுப்பறை முகாமைத்துவம், வகுப்பறைக்கட்டமைப்பு முதலானவை வடிவமைக்கப்பட வேண்டும்.
மாணவர்கள் சுயநெறிப்படுத்தப்பட்ட கற்றலுக் கான வழிமுறைகள், செயற்கூறுகளை திட்டமிட வும் வடிவமைக்கவும் வேண்டிய அறிவுறுத்தல் களை கல்வியாளர்கள் நேரடியாகவும், வெளிப் படையாகவும் வழங்க வேண்டும்.
சுய நெறிப்படுத்தப்பட்ட கற்றலுக்கு மாணவர்களே முதன்மைச் செயற்பாட்டாளர்கள் என்பதால் பின் வரும் திறன்கள் மற்றும் தேர்ச்சிகளை அவர்கள் பெற்றிருக்க வேண்டுமென எதிர்பார்க் கப்படுகிறது.
கற்றல் தொடர்பான சுய விழிப்புணர்வும் சுய விருப்பமும் மாணவருக்கு இருத்தல் வேண்டும்.
30
-ஆசிரியம்

Page 33
தான் குறித்த கற்றல் இலக்கை அடைய வேண்டும் என்ற கற்றல் அகவூக்கம் மாணவருக்கு இன்றி யமையாததாக அமைய வேண்டும்.
சுய நெறிப்படுத்தப்பட்ட கற்றலுக்கான தயார்ப் படுத்தலையும் திட்டவரைபினையும் மாணவர் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும். மாணவர் சுய நெறிப்படுத்தப்பட்ட கற்றலுக்காக தயாராகும் போது பதகளிப்பு, அதீத ஆவல், மற்றும் மனவெழுச்சிகளை கட்டுப்படுத்தக்கூடிய தாக இருக்கும் அதேவேளை சுயகணிப்பு குறைந்து விடாதபடியும் தன்னைக் கண்காணித்துக்கொள்ள வேண்டும்.
மாணவர் நீண்ட கால, மற்றும் குறுங்கால கற்றல் இலக்குகளை கால அளவின்படி வகைப்படுத்தி திட்டமிடவும், திட்டத்தின் படி செயற்படவும் தயார்நிலையில் இருத்தல் வேண்டும்.
எந்தக் குறுங்கால கற்றல் இலக்குகளுக்கு ஊடாக நீண்ட கால கற்றல் இலக்குகளை அடைவது என்ற
28ஆம் பக்கத் தொடர்ச்சி
மட்டத்திலிருந்தே வளர்த்தெடுத்தல் வேண் டும். பல்கலைக்கழக மட்டத்தில் அது மேலும் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வலுவூட்டப்படல் வேண்டும்.
பட்டப்படிப்பை முடித்துக்கொண்டதும் தொழிற் சந்தையில் உள்ள தொழில் வழங்கும் நிறுவனங்கள் மீதே முற்றும் முழுதாகத் தங்கியிருக்கும் நிலையைக் கட்டி |யெழுப்பல் பல்வேறு அவலங்களை உருவாக்கி வருகின் றது. தன்னிலை நம்பிக்கையைக் காலனித்துவக் கல்வி
முறைமை உருவாக்கத் தவறி விட்டது. அதேவேளை நவீனமயப்பட்ட சுய தொழில்களிலே ஈடுபடக்கூடிய வாறு கல்வி முறைமையிலே புதிய அணுகுமுறைகள் முன் னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜப்பானிலும், சீனாவிலும் அத்தகைய முயற்சிகள் முன்னெடுக்கப்பட் டுள்ளன. சுயதொழில்களை மேற்கொள்வதற்குரிய கடனுதவித் திட்டங்கள் பல நாடுகளிலே உருவாக்கப்பட் டுள்ளன.
கல்வியை வேலை உலகோடு இணைத்தலில் இன்று ( காணப்படும் முக்கிய பிரச்சினைகள் வருமாறு.
தொழில்களில் மட்டுப்பாடான நிலை காணப்பட அவற்றைப் பெற்றுக்கொள்வதற்குரிய நவீன அறிவு படைத்தோர் எண்ணிக்கை மிகையாக இருத்தல்.
தொழில்கள் தொடர்பான பழைய மனக்கட்டுமை . (Mindset) மாற்றமடையும் பொழுது, கல்விச் (
ஒக்டோபர் 2012

தீர்மானத்தை மேற்கொள்ளும் திறன் இருத்தல் வேண்டும்.
கற்றலின் போது எதிர்பாராத விதமாக எழும் பிரச்சினைகளை வினைத்திறனாக கையாள்வதற் குரிய திறன்களை மாணவர் பெறுவதற்கு அவர் களை ஊக்குவிக்க வேண்டும்.
மாணவர் தனது கற்றல் இலக்குகளை நோக்கிய கற்றலில் தனது அடைவுகளை தாமே பதிவு செய்து தமது முன்னேற்றத்தை தாமே பக்கச்சார்பின்றி கண்காணித்துக் கொள்ளும் திறனை வளர்க்க வேண்டும்.
தனக்குரிய மீள் வலியுறுத்தல்களைத் தானே தனக்கு வழங்கக்கூடிய மனப்பாங்குகளை வளர்க்க வேண்டும். தேவைப்படும் இடத்து கல்வியாளர்களிடம் வெட்கம், கூச்சம் இன்றி ஆலோசனை பெறு வதற்கு வேண்டிய தேர்ச்சி இருத்தல் வேண்டும்.
3
செயற் பாடுகளைத் தவறான வழிகளில் முன்னெடுத்தல். தொழில் வாழ்க்கைய ஒட்டுமொத்தமான சமூக வாழ்க்கையோடும், மனித விழுமியங்களோடும் வேறுபடுத்திக் காணுதல்.
இயற்கைமீதும், சமூகத்தின் மீதும் தீவிர சுரண்டலை மேற்கொள்ளும் தொழில் வளர்ச்சிகள் விமரிசிக் கப்படாத நிலையில் அவற்றுக்கு இயைந்து செல்லக் கூடிய கல்வி முறைமையை உருவாக்குதல் பற்றிய கவனமே மேலோங்கிச் செல்லல்.
அருவமான (Abstract) அறிவுக்கும் பிரயோக அறிவுக்கும் இடையே உள்ள தொடர்புகளை அறி யாது, பிரயோக அறிவை மட்டும் முக்கியப்படுத்துதல்.
பழைய பாடநெறிகளிலே மட்டுப்பாடுகள் இருத்தல் போன்று புதிய நவீன பாடநெறிகளிலும் மட்டுப்பாடுகள் உண்டு. வேலை பெறக்கூடிய பட்டதாரிகளை உருவாக்) கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும்வேளை பில் பிறிதொரு “பக்கக் காரணியை”யும் கருத்திலே கொள்ள வேண்டியுள்ளது. தொழில் வழங்குதலில் திறமை மட்டுமன்றி வேறு பல காரணிகளும் வெளிப் படையாகச் செல்வாக்குச் செலுத்துதலையும் நிராகரிக்க முடியாதுள்ளது. சமூக அந்தஸ்தும் இனத்துவ நிலையும், அரசியற் சார்பும் சிலவேளைகளில் வெளிப்படையாகத் தெரிகின்றன.
31
ஆசிசியம்

Page 34
பாடசாலை அதிபர்கள் (
கல்வித்தலை
இன் று பாடசாலை அதிபர் களின் வகிபாக முகாமைத்துவம், தலைமைத்துவம் என்று இருவேறாக பிரிக்கப்படுகின்றது. அதிபர்கள் முகாமைத்துவப் பண்புகளுட தலைமைத்துவப் பண்புகளையும் கொண்டிருத்தல் வேண்டு முகாமைத்துவம் என்பது பாடசாலைகளின் நாளாந்த கற்ற பணிகள் சரிவர நடைபெறுவதை அதிபர் உறுதி செய்; கொள்வது, நாளாந்த ஆசிரியர் பணியையும் மாணவு கற்றலையும் மேற்பார்வை செய்வது, கற்றலுக்கா? வளங்களை ஒழுங்கு செய்வது, மாணவர்களின் ஒழுக்காற்றடை முகாமை செய் வது, கால அட்டவணைப்படி கற்ற6 நடை பெறு வதையும் பாட ஏற் பாடு நடை முறை! படுத்தப்படுவதையும் மேற்பார்வை செய்வது இவை யாவு! நாளாந்த பாடசாலைச் செயற்பாடுகள் சரியாக நடைபெறுவதை உறுதிசெய்யும் முகாமைத்துவப் பணிகள், இப்பணிகளை சரிவரச் செய்வதற்கான முகாமைத்துவத் திறன்களை அதிபர்கள் கொண்டிருக்க வேண்டும் அல்லது வளர்த்துக்கொள்ள வேண்டும்
மறுபுறம் இவை மட்டும் பாடசாலைக் கல்வியை மேம்படுத்தி விடப் போதாது. பாடசாலைக்கென உயரிய ஒரு தொலைநோக்கை வகுத்தல், அதனை ஆசிரியரிடம் பகிர்ந்து கொண் டு மேலும் செம் மைப் படுத் துதல் அத்தொலைநோக்கை அடைவதற்கான ஒரு பணிக்கூற்றுடன் செயற்படல் எனத் தலைமைத்துவப் பணி விரிந்து செல்லும் தற்போதைய நிலைமைக்கு அப்பால் வகுத்துக்கொண்ட தொலைநோக்கை அடைந்துகொள்ள ஆசிரியர், மாணவர் சூழஉள்ள சமூகம் என அனைவரையும் ஒன்றிணைத்து அரவணைத்துச் செல்லும் தலைமைத்துவப் பாங்கு அதிபரிடம் எதிர்பார்க்கப்படுகின்றது. அதிபர்களுடன் கல்வி அதிகாரிகளும் இவ்வாறான தலைமைத்துவப் பயிற்சியைப் பெறும் வகையில் அவர்களுக்கான கற்கை நெறிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் அடங்கிய பாடசாலைச் சமூகமே பாடசாலையின் எதிர்கால வளர்ச்சிக்குப் பொறுப்பு பாடசாலை பற்றிய சகல பிரச்சினைகளையும் அறிந்தவர்கள் அதிபர்களும் ஆசிரியர்களுமே! அவர்களே மாணவர்களின் கல்வி பெறும் ஆற்றல், குடும்பப் பின்னணி என்பன பற்றி நன்கு அறிந்தவர்கள். எனவே பாடசாலையின் நிர்வாகப் பொறுப்பு இவர்களிடமே ஒப்படைக்கப்படல் வேண்டும், இவ்வாறான ஏற்பாடு கல்வி அதிகாரம் பரவலாக்கப்படுவது அதிக அளவுக்குச் சனநாயகப் பாங் கானது. இவ்வாறான சிந் தனையின் அடிப்படையில் இன்று 'பாடசாலை மட்ட முகாமைத்துவம் ஏராளமான இலங்கைப் பாடசாலைகளில் உலக வங்கியின் அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இவ்வாறான முகாமைத்துவ முறையின் தத்துவங்களும் உபாயங்களும் இன்று பாடசாலைத் தலைவர்களுக்குக் கற்பிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் இச்செயற்பாட்டில் பெற்றோர்களையும் இணைத்துக் கொள்ளப் பாடசாலைத்
ஒக்டோபர் 2012

முகாமையாளர் மட்டுமல்ல வர்களும் கூட!
0 தலைவர்கள் எவ்வாறு சமூகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் ப் கொள்ள வேண் டும் என் பது பற்றியும் பயிற்சிகள் ன் வழங்கப்படுகின்றன.
பாடசாலைத் தலைவர்கள் அனைவரும் தமது பாடசாலைப் பிள்ளைகள் அனைவரும் கற்க வேண்டும், அவர்கள் 'அனைவரும் கற்கும் ஆற்றல்' உடையவர்கள் என்ற உணர்வுடன் செயற்படல் வேண்டும். 'யாவருக்கும் கல்வி' என்பது அவர்களுடைய தாரக , மந்திரமாகட்டும். ஆண்-பெண் வேறுபாடு, சமூக வகுப்பு வேறுபாடு, இனவேறுபாடு என்பவற்றைக் கருத்திற் கொள்ளாது கல்வி வழங்கல் வேண்டும். உடற்குறைபாடுடைய பிள்ளைகள் இன்று மாற்றுத்திறனாளிகளாகக் கருதப்பட்டு சாதாரண பிள்ளைகளுடன் சேர்ந்து கற்பது இன்றைய உலகக் கல்விச் செல்நெறியாகும். இச்சிந்தனைகளை அதிபர்கள் தமது ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
இன்றைய பாடசாலைகளைப் பிள்ளை நேயப் பாடசாலைகளாக்கும் இயக்கத்துக்கு அதிபர்கள் தலைமை தாங் க வேண் டும் . பிள் ளை நேயப் பாடசாலைகள் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு வழங்கி அவர்களுடைய உரிமைகளைப் பேணுகின்ற பாடசாலைகள் பாடசாலைச் சுற்றாடலைப் பரிசுத்தமாக வைத்துப் பிள்ளைகளைக் கவர்ந்திழுக்கும் பாடசாலைகள் பிள்ளைகளுக்கு வாழ்க்கைத் திறன்களை வழங்கக்கூடிய, பிள்ளை நேயக் கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தும் பாடசாலைகள் பெற்றோர்களின் மேலான ஒத்துழைப்பை நாடும் சமூக நேயப் பாடசாலைகள்.
இன்று உலகநாடுகள் அனைத்தும் அறிவுச் சமூகங்களாக | மாறிவரும் வேளையில், இலங்கை வாழ் தமிழ்ச்சமூகத்தை | அறிவுச் சமூகம் மாற்றும் பணி பாடசாலைகளிலேயே தொடங்கப்படல் வேண்டும். இப்பணிக்கு அதிபர்கள் தலைமை தாங்குதல் வேண்டும். பாடசாலையில் வழங்கப்படும் கல்வி அறிவானது, மாணவர்களுக்கூடாகப் பெற்றோர்களையும் சமூகத்தையும் சென்றடைதல் வேண்டும். பாடசாலைகள் 'கற்கும் நிறுவனங் களாக' வளர்ச்சியடையும் போது, அதன் செல் வாக்கினால் குடும் பங் களும் அலுவலகங்களும் தொழிற்சாலைகளும் 'கற்கும் நிறுவனங்களாக' வளர்ச்சி பெற வேண்டும். வளர்ச்சியடைந்த நாடுகள் வறுமையான நாடுகள் என்ற வேறுபாடுகள் ஒழிந்து அனைத்து நாடுகளும் சமூகங்களும் 'அறிவார்ந்த சமூகங்களாக' மிளிர வேண்டும். அறியாமையால் பீடிக்கப்பட்ட சமூகங்கள் என்ற வகைப்பாடு இல்லாதொழிய | வேண்டும். இத்தகைய சமூகத்தை உருவாக்க ஆசிரியர், அதிபர்கள் ஆகியோர் தலைமை தாங்கும் அறிவுசார் இயக்கத்துக்கு அனைவரும் தமது ஒத்துழைப்பை வழங்குதல் வேண்டும்.
(கொழும்பு கணபதி வித்தியாலயத்தில் நடைபெற்ற கொழும்பு மாவட்டத் தமிழ் பாடசாலை அதிபர்கள் மாநாட்டில் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் ஆற்றிய உரையின் சுருக்கம்)
32
ஆசிசியம்

Page 35
அன்று நிகழ்ந்த அந்தப் பழைய நினைவுகளை மறந்துவிடத் துடித்தாலும் ஏனோ அந்தச் சிறுவனைக் காணும் தோறும் ரீச் சருக்கு அந்த நினைவுகள் மேலெழுந்து மனதை உறுத்தின. அன்று நடந்தவற்றை மீட்டுப் பார்க்கும் போதெல்லாம் ரீச்சர் வேதனைக் குள்ளே ஆழ்ந்து அச்சகதியிலிருந்து வெளியேறும் வகை காணாது தவித்தார்.
தான் செய்தவைகளைத் தவறென உணர்ந்து ஒப்புக்கொள்ளும் துணிவின்றி அவரைச் சூழ்ந்து பீடித்துக் கொண்ட கெளரவத்தின் பலம் அதிகரிக்க அதனைத் தனக்கான பாதுகாப்புக் கவசமாக அணிந்தவாறு
அமர்ந்திருந்தார்.
அன்று விளையாட்டுப் போட்டிக்கான எல்லா ஆயத்தங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்த உடற்பயிற்சி நிகழ்ச்சிக்கெனத் தேர்ந்தெடுத்த இரண்டாம் தரத்தில் கற்கும் மாணவன் ஆரூரனைக் காணவில்லை. ஆனால் அவனது வகுப்பு ஆசிரியை சித்திரா அவனை அங்கே அழைத்து வந்து இவனையும் சேர்த்து கொள்ளுங் கள் ரீச்சர் என்று சொன்னதை அவர் மறந்துவிடவில்லை.
ஏனைய மாணவர்களைப் போல அவனையும் விருப்பமாகப் பயிற்சியில் சேர்த்துக் கொண்டபோது ஆரூரனின் உடலிலும் உள்ளத்திலும் புத்தம் புதியதோர்
ஒக்டோபர் 2012

நெடுந்தீவு மகேஸ்
ஊமைத் துயரங்கள்
உற்சாகம் எல்லோருடனும் இணைந்து சேர்ந்து சிரித்து ஓடிப் பாய்ந்து விளையாடி மகிழ்ந்த அந்த அழகுக் காட்சி. ஒரு குட்டி முயலையே ரீச்சருக்கு நினைவூட்டி நிலைத்தது.
நாளை நடக்கப் போகும் விளையாட்டுப் போட்டி யில் விருந்தினரை மகிழ்விக்கும் வண்ணம் சிறுவர்களைக் குதூகலிக்கச் செய்யும் உடற்பயிற்சியில் அவனுக்கான பங்களிப்பு உயர்ந்ததாகத் தெரிந்தது. அதற்கான சீருடையைத் தைப்பிக்க வகுப்பாசிரியர்களுக்கான அறிவுரை வழங்கப்பட்டது. அவர்கள் தமது வகுப்புப் பிள்ளைகளின் பெற்றோருக்கான குறிப்பைப் பயிற்சிக் கொப்பியில் எழுதி அனுப்பினர். பிங் கலர் காற்சட்டை யும் வெள்ளைநிற பெனியனும் தேவை என்பதாய் எழுதப்பட்ட குறிப்பு ஒவ்வொன்றும் பயிற்சிக் கொப்பி களின் மூலம் பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டது.
ஆரூரனின் கொப்பியிலும் அது இருந்தது. இரண்டாம் தரத்தில் படிக்கும் முதிர்வடையாத சிறுவன் அந்தப் பயிற்சிக் கொப்பி பற்றியோ அதில் எழுதப்பட்ட குறிப்புகள் பற்றியோ பெற்றோருக்குத் தெரிவிக்க வேண்டுமென்ற சிந்தனையோ செயற்பாடுகளோ அவனிடத்தில் இல்லை. வழமைபோல் அவன் சுமந்து திரியும் அவனது புத்தகப் பைக்குள்ளேயே தூக்கிக் கிடந்த பயிற்சிக் கொப்பியைத் தூக்கிக் கொண்டே இரண்டு தினங்களும் பள்ளிக்கான பயணத்தையும் பள்ளிக் காலத்தையும் ஓடியாடி முடித்தான்.
நாளைக்கு விளையாட்டுப் போட்டி, உடற் பயிற்சியில் சிறுவன் ஆரூரனும் ஒரு பங்காளன். அந்த நினைவு அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. தனது பயிற்சிச்
- 33
ஆசிரியம்

Page 36
சிறப்புகளை வீட்டிலே சொல்லிச் சொல்லியே ஆனந்த! பெருக்கோடு ஆரூரன் துள்ளிக் குதித்தபோதுதான அவனது தாயார் தவமணிக்கு உடற்பயிற்சிக்கான சீருடை பற்றிய எண்ணம் விரிந்தது. அதுபற்றி எவரும் அவளும் குத் தெரிவிக்கவில்லையே என ஆதங்கப்பட்டாள்.
மகனிடத்திலிருந்த வீரமும் விவேகமும் கலந்த விளையாட்டும் குறும்பும் அவளின் மனத்தை மகிழ்வித் தாலும் அந்தச் சீருடை பற்றிச் சிந்தித்தபோது எவருபே அது பற்றித் தெரிவிக்கவில்லையே என அங்கலாய்த்தாள் அதுபற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளப் பாடசாலைக்குச் சென்றாள். அப்பொழுதுதான் அது நிகழ்ந்தது.
சிறுவரின் சீருடை பற்றிய விபரம் அந்தப் பயிற்சிக் கொப்பியில் என்றோ எழுதி அனுப்பப்பட்ட விடயம் அப்பொழுதுதான் அது தவமணிக்குத் தெரியவந்தது.
அறியாமையால் சிறிது கடுகடுப்போடு துடித்த அவர்களின் கருத்தாடல்கள் இருவரின் மனத்தையும் புண்படுத்தின. தவமணியும் ஓர் ஆசிரியர்தான் என்பதை அறிந்தபோது அவரது வாதாட்டம் நீண்டது அதனால் அவர் மீது விளைந்த காழ்ப்புணர்வும் ஆத்திரமும் சாந்தியடையச் சில நிமிடங்கள் சென்றன.
நாளைக்கு விளையாட்டுப் போட்டி.
நாளைக்கே ஆரூரனுக்குச் சீருடை வேண்டும் என்று சொன்னபோது அந்தச் செய்தி அவளை அவசரப்படுத் தியது. அவளது சீருடை தைப்பிக்கும் வேகம் வெறி கொண்டது. சீருடைக்கான துணியைத் தேடவும் அதனைத் தைப்பிக்கவும் அவள் துரிதமடைந்தாள். தைத்த கையோடு அதனைத் தனது மகனுக்கு அணிவித்து அழகு பார்க்கும் ஆசையும் பெருகியது.
பிள்ளைகளுக்குத் தோன்றாத ஆசைகள் என்றுமே பெரியவர்களை ஆட்கொண்டு விடுகிறது. பெற்றோரு டன் கூடி ஆரூரனின் பாட்டன் பாட்டியும் அவனுக்கான சீருடை தேடும் வேட்டையில் தீவிரமாய் ஈடுபட்டனர்.
குறுகிய கால இடைவெளிக்குள் சிறுவனின் அந்த அழகிய உடற்பயிற்சிச் சீருடையைத் தைக்கும் அவசரம் அவர்கள் அனைவரின் தூக்கத்தையும் ஓய்வையும் கெடுத்தது. அவர்களை வேறு வேலையெதிலும் ஈடுபட எண்ணமிட அனுமதிக்காத ஓய்வகற்றிய நாயாக்கி அங்கிங்கென்று ஓடித் தேடிக் களைக்க வைத்தது. அன்று மாலையில் தொடங்கிய முயற்சி மறுநாள் காலையையும் தாண்டி ஒருவாறு மதியத்திற்கு முன்னதாக வெற்றிகர
மாக நிறைவெய்தியது.
மனம் நிறைந்த மகிழ்வு கலந்த திருப்தியோடு ஆரூரன் இப்பொழுது பள்ளியில் நடைபெறப் போகும்
ஒக்டோபர் 2012

னெ
உடற்பயிற்சியில் கலந்துகொள்ள ஆயத்தமானான். வீட்டார் அனைவரினதும் உள்ளங்களிலும் துள்ளிக் குதிக்கும் ஆனந்தம். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதா கவே சீருடையையும் எடுத்துக் கொண்டு ஆரூரன் பள்ளிக்குப் போய்விட்டான். வழமைக்கும் முன்னதா கவே மகனைப் பள்ளிக்கு அனுப்பி வைத்த பெற்றோரின் முயற்சியில் பூரண திருப்தி.
எல்லோரிடத்திலும் சிறுவன் ஆரூரனின் உடற் பயிற்சி நிகழ்ச்சியைக் காணும் ஆவல். இடைவேளையின் = போது விருந்தினரை மகிழ்வித்துச் சிறுவர்களின் திறமையை வெளிக்காட்டப் போகும் அரங்கேற்றம்.
உடற் பயிற்சி நிகழ்ச்சி தொடங்கிவிட்டது.
உடற்பயிற்சி மைதானத்தில் தோன்றிய சிறுவர்க ளின் மத்தியில் ஆரூரனைத் தேடும் கண்கள். அவனது அழகிய அந்தப் பிஞ்சு முகத்தையோ அவன் உடற் பயிற்சியில் பங்கு கொள்வதற்காக வீட்டில் செய்து காட்டிய அந்த உடற் பயிற்சிக் கான அவனது
அபிநயத்தையோ காணவில்லை.
ஆரூரனையே மைதானத்தில் காணவில்லை என்றபோது அவனது பெற்றோர் துடிதுடித்தனர்.
அவன் எங்கே போய்விட்டான்? தாய் பதைபதைத்தாள்.
எங்கே என் மகன் ? அவனை நான் எல்லா ஆயத்தங்களோடும் அனுப்பி வைத்தேனே! என்ற அந்தத் தாயின் தேடுதலோடு விரிந்த கேள்வி. அந்த விளையாட்டி டத்தைச் சுற்றி மரதனோட்டம் நடத்தியது. அவனைக் காணக் கூடி நின்றோர் கண்களில் ஆவல் பெருகின. அந்தரமும் அவசரமும் அவளை அடுத்த நிகழ்வுகளில் கவனம் கொள்ளச் செய்யவில்லை. உடற்பயிற்சி நிகழ்வு முடிந்த கையோடு ஆசிரியரைத் தேடி ஓடினாள்.
"உங்கட மகனை நான் விளையாட்டில் சேர்க்க யில்லை”
“ஏன்”
"அவன் பிந்தித்தான் வந்தவன்”
அதனைக் கேட்டதும் ஆத்திரமுற்ற தவமணி நாங்கள் எப்பவோ பிள்ளையை உங்களிடம் அனுப்பியி ருந்தோமே என்றபோது அத்தாயின் ஆற்றாமை அழுகையாய் வெடித்தது.
அயலில் நின்ற பலரும் எங்கே பிள்ளை? எங்கே பிள்ளை? என்று கேட்டு அனைத்துத் திசைகளையும் துளாவினர்.
அவனோ அவனுக்கெனத் தைத்த அந்தப் பிங்கலர் காற்சட்டையையும் வெள்ளை நிறப் பெனியனையும்
34
ஆசிசியம்

Page 37
அடக்கி வைத் திருந்த பொலித்தீன் பையினைக் கையிலேந்தியவாறு கண்களில் கண்ணீர் மல்க விம்மி விம்மி அழுதான்.
“ரீச்சர் என்னை விளையாட்டில் சேர்க்கயில்ல, கலைச்சுப் போட்டா” என்றபோது எழும் வேதனை விம்மல் அங்கே பார்த்து நின்ற பலரின் உள்ளத்தையும் தொட்டு வருத்தியது.
சையா
ஆற்றல் விரியும் அவனது சிறு பிள்ளைப் பருவம் தனது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மாத்திரமல்ல, தனது பாட்டன் பாட்டிக்கும் உறவினருக்கும் கூட உவகையை ஏற்படுத்தும் எனக் கனவு கண்டிருந்தது. தனது ஆற்றல் களின் ஒரு துளியாகவே தான் கற்றவற்றை காண்பிக்கத் தூண்டிய அவலில் விழுந்த பெரியதோர் இடியாக அது
அவனைத் துன்பத்தினுள் வீழ்த்தி நசித்தது.
அவனது சிறிய எல்லைக்குட்பட்ட சிந்தனைக்குள் விளைந்த ஆசை நிராசையானபோது அவன் அழுதான் அவனது விருப்புக்கும் வளர்ச்சிக்கும் துணை நின்ற அனைவருமே அதைப் பார்த்து வருந்தினர்.
மாலை இருண்ட வேளை விளையாட்டுப் போட்டி கள் முடிவடைந்தன. அயலில் மரங்களில் உறங்கிக் கிடந்த வெளவால்கள் சிறகடித்துப் பறந்தன.
அந்தச் சிறுவனும் பெற்றோரும் வருந்தினர். இது யார் செய்த தவறு
செய்தி அறிந்து அந்தப் பாடசாலையின் அதிபர் அங்கே வந்தபோது ரீச்சர் தனது நியாயத்தை உறுதி செய்ய முந்தினாலும் அவரின் உள் ளிருந்த உண்மையும் சத்தியமும் அவரை உறுத்தியது.
தனது விருப்புக்குரிய தோழியின் மகளுக்கு உடற் பயிற்சியில் இடம்கொடுக்கும் புதிய திட்டமிடலுக்குள் ஆரூரனின் பதிவுகள் எல்லாமே ஒரு தலைப்பட்சமாக அழிந்து போயின.
ஆரூரனின் தாயார் ரீச்சருடன் முதல்நாள் ஏதோ நியாயம் கேட்டுத் தர்க்கித்த ஆத்திரமும் அவரது கெளரவமும் சேர்ந்ததால் விளைந்த வெறுப்பும் பச்சிளம் பாலகன் ஆரூரனின் பிஞ்சு உள்ளத்தின் ஆசையைச் சிதைத்தது.
ரீச்சர் செய்த தவறைச் சரியென ஆதாரப்படுத்த அவரிடம் வார்த்தைகள் இல்லையெனினும் தவறை ஒப்புக்கொள்ளும் உயர்ந்த எண்ணமும் அவரிடத்தில் இருக்கவில்லை.
அதிபர் தொடக்கம் அதிகாரிகள் ஈறாக அவரது செயல் குறித்துக் கண்டித்த நிலையில் தவறை ஒப்புக் கொள்ளுதல் தன்னைத் தாழ்த்திக் கெளரவத்தைப்
- ஒக்டோபர் 2012

பாதிக்கும் என்பதாய் எண்ணியவாறு அவர் தனது பக்கத்தை நியாயப்படுத்தத் துணிந்தார்.
எனினும் தனது தவறை ஏற்றுக்கொண்டு மீண்டும் அவ்வாறான சந்தர்ப்பங்களுக்கு இடம் தராது பணியாற் றும் நண்பண்பு வராத நிலையில்
“அவன் சரியான குழப்படி”
"அவன் பெரிய கெட்டிக்காரனில்ல”
"அவன் நல்ல பிள்ளையில்ல”
போன்ற வாதங்களால் ரீச்சர் தனது தவறிலிருந்து தப்பித்துக் கொள்ள முயன்றார். ஆனால் அவரது உண்மையான உள்ளம் உறங்க மறுத்தது. அது அவரது உயிரணுவை அசைத்துச் சீண்டிச் சித்திரவதை செய்தது.
தவறு செய்தவள் நானே என்ற எண்ணம் ரீச்சரை வருத்தினாலும் அவரை ஆட்கொண்டிருந்த வரட்டுக் கெளரவம் மன்னிப்புக் கேட்கவோ தவறை ஒப்புக் கொள்ளவோ இடம் தரவில்லை.
ஆரூரனின் பெற்றோரும் உறவுகளும் இப்பொழுது நடந்தவை எல்லாவற்றையுமே மறந்து மெளனித்துப் போனார்கள்.
அவரவர் செய்தவை அவரவரோடு என்று சொல்லிக் கொண்டே ரீச்சரின் செய்கையின் மூலம் பாதிப்புற்ற சிறுவனையும் அவன் சிறுபிள்ளைதானே என்றெண்ணி அவன் சிந்தனையையும் அனைவருமே மறந்தே போனார்கள்.
ஆனால் ஆரூரனைக் காணும் தோறும் உள்ளம் உறுத்த ஊமையாகி உறுத்தும் நினைவுகளால் ரீச்சர் அழுங்குரல் ஆண்டவன் சன்னிதானத்தில் பேரொலியாய்க் கேட்பதாகத் தெரிந்தது.
“குட் மோர்ணிங் ரீச்சர்” என்ற இனித்த குரலோடும் சிரித்த முகத்தோடும் ரீச்சரின் முன்னால் நிற்கும் ஆரூரனின் கூரிய பார்வை என்றென்றும் ரீச்சரை உறுத்தவே செய்யும்.
வெட்கமும் வேதனையும் கலந்த அந்தப் பழைய சம்பவத்தை நினைவுறுத்தும் ஆரூரனின் காட்சி ரீச்சரின் தொடரும் ஆசிரிய வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் தெளிவைத் தரும் தீபமாயின. ஒவ்வொரு வேளையும் அது தெளிவைத் தந்தன.
எம்மிடம் கற்பவர்கள் சிறுபிள்ளைகள் தாம் ஆனாலும் அவர்களோ எதிர்காலத்தை உருவாக்கும் மென்மையான உள்ளமுள்ள சிற்பிகள் என்பதாய் உரத்துச் சொல்லி அழுத்தும் அந்தச் சிறுவர்களின் பார்வைகள் ரீச்சரைச் சூழ்ந்து கொள் ள ரீச்சர் திக்குமுக்காடிப் போனார்.
35
ஆசிசியம்

Page 38
ஆசிரிய மணி
நமது பிரச்சினைகளு ஆசிரியத்தில் தீர்வுகள்
இப்பகுதிக்காக தேர்ந் தெடுக்கப்படும் கே தொடர்பானவைகளாகவே இருக்கின்றன. ஆசிரியர் உண்மையான நோக்கமாகும். பதில்கள் சுற்றறிக்கை : குறிப்பிடப்படுவதால் இவைகளில் ஆதாரங்களின் அடி வேண்டியதைப் பெற்றுக்கொள்ள இவை வழிகாட்ட நிர்வாகியினரையும் மோதவிடும் நோக்கமாகக் கொள்ளு உதாரணத்தை வைத்து ஆசிரியர்கள் தமது பிரச்சனைகளு. ஏராளமான கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளன. த செய்யப்படுவதால் இவைகள் மூலம் ஆசிரியர்களின் பல திரும்ப ஒரே மாதிரியாகக் கேட்கப்படும் கேள்விகளுக்கு
வ 1994.10.03 அன்று பட்டாரி ஆசிரியராக
நியமனம் பெற்று, 1997ஆம் கல்விடிப்ளோமா
பட்டத்தை பெற்ற எனக்கு ஆசிரியர் சேவை முதலாம் வகுப்பு பதவி உயர்வை தந்து சம்பள நிலுவையும் தந்துவிட்டு தற்போது அந்த பதவி உயர்வை இரத்துச் செய்துள்ளார்கள். ஆனால் வேறு வலயங்களில் தொடர்ந்து வழங்கப்படுகின்றது. இது சரியா?
2008/45 இலக்கச் சுற்றறிக்கைப்படி 1994.10.06க்கு முன்னர் நியமனம் பெற்ற சகல பட்டதாரி ஆசிரியர்களும் தொழிற்றகைமையுள்ள பட்டதாரிகளாகக் கொள்ளலாம். இதன் அடிப்படையில் பல கல்வி வலயங்கள் 2007 அல்லது 2008ஆம் ஆண்டுகளில் இவர்களுக்கு முதலாம் வகுப்பு பதவி உயர்வை வழங்கி சம்பளத்தையும் வழங்கி வருகின்றன.
இந்தச் சுற்றறிக்கையை தெளிவுபடுத்த கல்வி அமைச்சு வெளியிட்ட இரண்டு விளக்க குறிப்புக்கள் குழப்பத்தை உண்டாக்கியபடியால் இன்னும் பல வலயங்களில் 2008/45 இலக்கச் சுற்றறிக்கைப்படி பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
ஒக்டோபர் 2012 |

உக்கு
அன்பு ஜவஹர்ஷா
T...
எள்விகள் பெரும்பாலும் நடைமுறை விடயங்கள் "கள், அதிபர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதே இலக்கங்கள், தாபனக்கோவை போன்றவற்றின் பிரிவுகள் உப்படையிலேயே அளிக்கப்படுகின்றன. தமக்குக் கிடைக்க லாக அமையக்கூடும். கல்வி ஆளணியினரையும் கல்வி "ம் செயலாக இதை இனங்காணக் கூடாது. குறிப்பிடுப்படும் க்கான தீர்வைக் கண்டு கொள்ளலாம். கடந்த பலமாதங்களாக தற்போது கடந்த 12 ஆசிரியம் ஒரு தொகுப்பாக விற்பனை - பிரச்சனைகளுக்கு தீர்வைக் கண்டுகொள்ளலாாம். திரும்ப 5 பதில் அளிப்பது தவிர்க்கப்படுகின்றது.
சுற்றறிக்கை வெளியிடப்பட்டு நான்கு வருடங்க ளாகியும் கல்வி அமைச்சு இன்னும் பிரச்சினைகளுக்கு சரியாக தீர்வு காணவில்லை. இவை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண தயாரிக்கப்பட்டுள்ள "மொன்டிகல அறிக்கையும்” தயாரிக்கப்பட்டு ஒரு வருடமாகியும் கிடப்பில் கிடக்கின்றது. இந்த அறிக்கை யில் உங்கள் பிரச்சனையில் சரியான தீர்வுள்ளது. இது சுற்றறிக்கையாக வெளியாகும் வரை உங்களது பிரச்சனை தொடரும். ஒரே வலயத்தில் அல்லது ஒரே மாகாணத்தில் ஒரே தகைமையைக் கொண்ட ஆசிரியர்களுக்கு இரண்டு வகையில் பதவி உயர்வு வழங்கப்படுவது முரண்பாடா னது மட்டுமல்ல சிக்கலான விடயமுமாகும்.
2005ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்ற எனக்கு தற்போது க.பொ.த
(சா.த) பரீட்சையில் கணித சித்தி சான்றித ழைக் கேட்டு வலயம் கடிதம் அனுப்பியுள்ளது. வெளிவாரியாக பட்டச் சான்றிதழையும் பெற்று நியமனம் பெற்ற நான் இதைச் சமர்ப்பிக்க வேண்டுமா?
- ஆசிரியர்
36

Page 39
பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பான வர்த்தமானப் பத்திரிகையில் இவ்விடயம் குறிப்பிடப் பட்டு இருந்தால் நீங்கள் அந்தத் தேவையை நிறைவு செய்து இருக்க வேண்டும். பலர் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று, அவை பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப் பட்டதாக இருந்தால் நியமனம் பெற்றுள்ளார்கள்.
பட்டதாரிகளுக்கு தொழில் வழங்க வேண்டும் என்று ஆயிரக்கணக்கில் பயிலுனர்களாக பட்டதாரிகளைச் சேர்த்துவிட்டு வேறு சேவைகளில் வெற்றிடங்கள் இல்லாதவிடத்து அவர்களை ஆசிரியர்களாக நியமித்து விட்டு தற்போது க.பொ.த (சா) தகைமைகளை கோருவது நகைப்புக்குரிய விடயமாகும்.
உங்களது நியமன விடய வர்த்தமானியில் இந்தத் தகைமை வேண்டப்படாவிட்டால் எவ்வாறு கோருவது நியாயாமாகாது. இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பில் கூட இப்படியான தகைமைகள் வேண்டப் படவில்லை. குறித்துரைக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டமொன்றே தகைமையாகக் கோரப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளும் பல்கலைக்கழகங்கள் இந்த வகுதிக்குள் அடங்கும்.
ஆகவே உங்களது பிரச்சினை தொடர்பாக சரியான தீர்வை மாகாண அரச சேவை ஆணைக்குழு அல்லது அரச சேவை ஆணைக்குழுவிடம் முன்வைத்து தீர்வு காண வேண்டும். இதுவும் சாத்தியமாகாவிட்டால் நீதிமன்றத்தையே நாட வேண்டும். அதற்கு முன்னர் மாகாணக் கல்விப் பணிப்பாளரிடம் அல்லது கல்வி அமைச்சு செயலாளரிடம் உங்களது கோரிக்கையை முன்வைத்து தீர்வுகாண முயற்சி செய்யுங்கள். அது சாத்தியப்படாவிட்டால்தான் மேல் சொல்லப்பட்ட வழிமுறைகளை நாடவேண்டும்.
நபை
1993ஆம் ஆண்டு மாகாண சேவையில்) "டெலிக்” ஆசிரியராக நியமனம் பெற்று
கடந்த 19 வருட காலமாக ஆசிரியராகக் கடமையாற்றி வந்த எனது பதவி, க.பொ.த (சா) பரீட்சையில் கணித சித்தி இல்லை என்று காரணம் காட்டி இடை நிறுத்தப்பட்டுள்ளது. இப்படிச் செய்யலாமா?
மேல் சொல்லப்பட்ட கேள்வியும் உங்களது பிரச்சினை தொடர்பானதே. ஆனால் க.பொ.த(சா) பரீட்சை நியமனமாக இருந்தால் கட்டாயம் கணித சித்தி இருக்க வேண்டும். கணிதம், தாய்மொழி ஆகிய இரண்டு பாடங்களை உள்ளடக்கி ஆறு பாடங்களில் சித்தி
ஒக்டோபர் 2012

இருந்தால் தான் அதை க.பொ.த(சா) பரீட்சை சித்தி என்று கொள்ளலாம்.
நீங்களோ அல்லது நேர்முகப் பரீட்சை நடத்தியவர் களோ இதைக் கவனத்தில் கொள்ளவில்லை போல் தெரிகின்றது. யார் பிழை விட்டாலும் இன்று உங்களது தொழிலே சிக்கலாகியுள்ளது. பின்னராவது இந்த தகைமையை நிறைவு செய்து இருந்தால் அதைக் காட்டி மேன்முறையீடு செய்யலாம். உங்கள் பிரச்ச னையை மத்திய கல்வி அமைச்சு மாகாண கல்வி அமைச்சு என கோவைகளை மாற்றிக்கொண்டு இருப் பார்கள். மாகாண ஆளுநருக்கு இதை விண்ணப்பித்துப் பாருங்கள். 1990ஆம் ஆண்டு நியமனம் வழங்கப்பட்ட பலருக்கு நிவாரணம் கிடைத்ததாக அறியப்படுகின்றது. இது பயிலுனர் ஆசிரியர் நியமனமாக இருக்கின்றது. உங்களது டெலிக் ஆசிரியர் என்ற வகையிலான போட்டி பரீட்சை நியமனமாகும். இதற்கான மேற்முறையீட்டுக்கு என்ன தீர்வு கிடைக்குமோ? தெரியாது.
சை
?
வருடாந்த சம்பள படியேற்றத்தை வழங்கு வதற்காக எங்களது வலயக் கல்விக் காரியால
யத்தில் க.பொ.த (சா) பரீட்சை பகுப்பாய் வைக் கேட்கின்றார்கள். நான் ஆரம்பக் கல்வி ஆசிரியராக இருப்பதால் எனக்கு இது பொருத்த மானதாக இல்லை. நான் என்ன செய்யலாம்?
வருடாந்தச் சம்பள ஏற்றமானது உழைத்துப் பெற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். வருட சம்பள ஏற்றத் திகதிக்கு முன் ஒரு வருட சேவை திருப்தியாக இருந்தால் மட்டுமே இதை வழங்க முடியும். முன்னர் வட்ாரக் கல்வி அதிகாரிகள் சேவையில் இருந்த காலத்தில் பல கேள்விகளுக்கு “திருப்தி” என்று குறிப்பு எழுதினால் மட்டுமே இது கிடைக்கும் பின்னர் அதிபர் இக்கேள்வி களுக்கு பதில் எழுதி சிபார்சு செய்து வழங்கப்பட்டு வந்தது. பின்னர் கணிப்பீட்டுப் படிவங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.
அதிபர்களின் கோட்டக்கல்வி அதிகாரிகளின் சிபார்சு இல்லாமல் வருடா வருடம் இதைப் பெற்றுக் கொண்டு வரும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும்
இன்றும் சேவையில் உள்ளார்கள்.
- கடந்த பத்தாண்டுகளில் சுய மதிப்பீடு, கணிப்பீடு, மதிப்பாய்வு என்று பல்வேறு பெயர்களில் இந்த நடைமுறை மாறி மாறி வந்துள்ளது. ஆனால் பரீட்சைப் புள்ளி பகுப்பாய்வை கட்டாயமாகக் கோருவது சாத்திய மற்ற செயல்பாடாகும். ஒரு பாடசாலையில் குறிப்பிட்ட அளவு ஆசிரியர்களே க.பொ.த (சா) வகுப்பில்
37
ஆசிரியம்

Page 40
கற்பிப்பார்கள். இவ்வாறு கட்டாயப்படுத்தி எந்தக் சுற்றறிக்கை யும் வெளியானதாகத் தெரியவில்லை. இது நடைமுறைச் சாத்தியமற்ற விடயமாகும்.
கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் இப்படியான பாடங்களைப் போதிக்கும் ஆசிரியர்களுக்கு இதை அளவுகோலாகக் கொண்டு சம்பள ஏற்றம் வழங்கத் தொடங்கினால் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு இது வழங்க முடியாமல் போகும். "டியூஷன்” கலாசாரம் சட்டபூர்வமான தடைசெய்யப்படாத நிலையில் பிரபல பாடசாலைகளின் அல்லது நகரப்புறம் பாடசாலைகளில் பரீட்சைப் பெறுபேறுகளை “டிஜிட்டல்” அச்சில் அச்சிட்டு 'A' சித்திகளைப் பெற்ற மாணவர்களின் படங்களை தங்களது “டியுஷன்” கடைகளில் தொங்க விட்டு பிரபல ஆசிரியர்களே அந்தச் சாதனைக்கு உரிமை கோருகின்றார்கள். பின்தங்கிய, வசதி குறைந்த கணித, விஞ்ஞான, ஆங்கில ஆசிரியர்கள் இல்லாத நூற்றுக் கணக்கான பாடசாலைகள் இலங்கையில் உள்ள இவைகளில் தியாகத்தின் அடிப்படையில் கல்விப் போதிக்கும் ஆசிரியர்கள் இதற்கு பலிக்கடாவாக
முடியாது.
UL
60_க
வலயக் கல்விப் பணிப்பாளர்களின் அல்லது திட்டமிடல் பணிப்பாளர்களின் நிகழ்ச்சி நிரலின்படி வருடாந்த சம்பள ஏற்றங்களை வழங்க முடியாது. கல்வி அமைச்சினால் தாபனக் கோவை விதிகளின் படியே இவை அமுலாக்கப்பட வேண்டும். அதுவும் சகல
ஒக்டோபர் 2012

ஆசிரியர்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். வலயங்களின் அல்லது மாகாணங்களின் பரீட்சை பெறுபேற்று சுட்டெண் அதிகரிப்பு வீதம் என்பதும் ஆசிரியர்கள் உழைத்துக் கொண்ட சம்பளப் படியேற்றம் என்பதும் இரண்டு வகையான விடயங்கள் என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
7---
1990.01.02 அன்று பயிலுரை ஆசிரியராக) நியமனம் பெற்று, 1995.08.01 அன்று பயிற்சி
சான்றிதழையும், 2003.10.01 அன்று கல்விமாணி சிறப்புச் சான்றிதழையும் பெற்ற எனக்கு, 1997.08.01 தொடக்கம் இலங்கை ஆசிரியர் சேவையில் 2-II தரமும், 2007.08.01 தொடக்கம் 2-1 தரமும் கிடைத்தது. 2010.02.03 அன்று தொடக்கம் இலங்கை அதிபர் சேவையின் 2-11 தரமும் கிடைத்துள்ளது. எனக்கு தற் போது 20,445 ரூபா சம்பளம் கிடைக்கின்றது. இது சரியானதா?
ஆசிரியர் சேவையின் பதவி உயர்வானது கிடைத்த திகதி சரியானது. உங்களது கல்விமாணி சிறப்பு பட்டத்திற்கு தற்போதுள்ள சுற்றறிக்கையின்படி புள்ளிகள் கிடைக்கமாட்டாது. அதிபர் சேவையில் பதவியேற்ற திகதியே முதல் நியமனத் திகதியாகக் கருதப்படும். உங்களது சம் பளமானது பின் வருமாறு அமைய வேண்டும்.
38
ஆசிசியம்

Page 41
இ.ஆ.சே. 2-L
2007.08.01
18,845/-
2008.08.01
19,245/-
2009.08.01
19,645/-
இ.அ.சே 2-II
2010
20,045/-
2011
20,445/-
2012
20,845/-
வருடாந்த சம்பள ஏற்ற திகதி நீங்கள் பதவியைப் பொறுப்பு எடுத்த திகதியாக இருக்கும். நீங்கள் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி பொறுப்பு எடுத்து இருந்தால் உங்களது வருடாந்த சம்பள ஏற்றத் திகதி அதுவாகவே இருக்கும்.
இலங்கை அதிபர் சேவை நியமனம்) அக்டோபர் இரண்டாம் திகதி வழங்கப்படும்
என உங்களது கட்டுரையொன்றில் குறிப்பிடப்பட்டு இருந்தது. நேர்முகப் பரீட்சை தொடர்பாக சில வதந்திகள் நிலவுகின்றன. தவறுகள் இடம்பெற்று இருக்குமா?
2008ஆம் ஆண்டு தொடக்கம் வழங்கப்பட்டு வரும் இந்த நியமனம், வழக்குகள், வெட்டுப் புள்ளிகள் தொடர்பாக தகவல்களைத் தெரிவித்து வருகின்றேன். கடைசியாக 2012.01.24, 2012.01.26 திகதிகளில் வழங்கப்பட்ட தீர்ப்புக்களின்படியே நீங்கள் இதை வாசிக்கும்போது நியமனங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
எழுத்துப் பரீட்சை புள்ளிகள் சகலருக்கும் அனுப்பப் பட்டுள்ளதால் இதைப்பற்றி விவாதம் இருக்க இயலாது. 3ஆம் வகுப்பு எழுத்துப் பரீட்சையில் 82 புள்ளிகளும் 2II தரத்திற்கு 113 புள்ளிகளுமே தற்போதைய அடிப்படைத் தேவையாகும்.
3ஆம் வகுப்பு நேர்முகப் பரீட்சைக்கு 12 விடயங்க ளுக்கு 100 புள்ளிகளும், 2-II தரத்திற்கு 12 விடயங்களுக்கு 150 புள்ளிகளும் வழங்கப்பட வேண்டும். இது ரகசிய மாகச் செய்யப்பட முடியாது. வலய/மாகாண கல்வி பணிப்பாளர்கள் உரிய விடயங்களை அத்தாட்சிப்
படுத்தினால் இப்புள்ளிகளை பெற்றுக்கொள்லாம்.
இம்முறை நேர்முகப் பரீட்சை புள்ளிகள் சகலருக் கும் நேர்முகப்பரீட்சையின் போது சொல்லாதபடியால் சில சந்தேகங்கள் இருக்கலாம். ஆனால் சரியாக, சான்றிதழ்கள் அத்தாட்சிப் படுத்தப்பட்டு இருந்தால்
ஒக்டோபர் 2012

ஆளுமைப் புள்ளியை விட மற்றைய புள்ளிகளை சகலரும் தாமே கணக்கிட்டுக் கொள்ளலாம். இதில் தவறு நடந்து இருந்தால் மேன்முறையீடு செய்யலாம்.
வதந்திகள் உண்மையாக இருக்க வேண் டும் என்றோ, பொய்யாக இருக்க வேண்டும் என்றோ விதி எதுவும் இல்லை. தவறுகள் நடந்தால் இனம் காணவும், காட்டிக்கொடுக்கவும் வழிகள் இருக்கின்றன. இங்கு - சகலருக்கும் நீதி கிடைக்க வேண் டும் என்பதே
முக்கியமானதாகும்.
1999.01.04 ஆண்டு போட்டிப்பரீட்சை மூலம்) இலங்கை கல்வி நிருவாக சேவை 3ஆம்
வகுப்பு நியமனம் பெற்ற எனக்கு 2006க்குப் பிறகு சம்பள உயர்வு மறுக்கப்படுகின்றது. 1994.10.06 முதல் இ.ஆ.சே முதலாம் வகுப்பு பதவி உயர்வு கிடைத்தது இதன்படி சம்பளம் செய்த போது 2006ஆம் ஆண்டு 33,255 ரூபா உச்ச எல்லையைக் கடந்துவிட்டமையே காரணமாகக் காட்டப்படு கின்றது.
உங்களது பிரச்சனைக்கு 2010/20 இலக்க கல்வி அமைச்சின் சுற்றறிக்கையில் தெளிவான அறிவுறுத்தல் உண்டு. நீங்கள் எவ்வளவு சம்பளம் பெற்றுக்கொண்டு இருந்தாலும், 40,000 ரூபாவாக இருந்தாலும் கூட 1999.01.04 தொடக்கம் 10 வருடாந்த சம்பள ஏற்றங்கள் உழைத்துக் கொண்ட அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். 2009.01.04 வரை 10 சம்பள படியேற்றங்கள் உண்டு. 2009இல் இரண்டாம் வகுப்பு பதவி உயர்வைப் பெற்ற பின்னரும் அதில் 7 சம்பள உயர்ச்சிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
வடக்கு, கிழக்கில்தான் இந்த சிக்கல்கள் இருப்பதாக அறியப்படுகின்றது. கல்வி அமைச்சின் மாகாணக் கல்விச் செயலாளரின் பணிப்புரைகளை கூட ஒரு சில முகாமைத் துவ உதவியாளர்கள் தொலைபேசி அழைப்பால் நிறுத்துவது கவலைக்குரிய விடயமாகும். சுற்றறிக்கை களை முழுமையாக வாசிக்காமல் தம்மைவிட மற்றவர் கள் சம்பளம் கூட எடுக்கின்றார்கள் என்ற அடிப்படை யில் இயங்கும் உத்தியோகஸ்தர்களை அடக்க உயர் அதிகாரிகளால் முடியாவிட்டால் சட்ட துணையையே நாட வேண்டியிருக்கும். நாளை தலைமைப் பதவிகளுக்கு செல்ல வேண் டிய நீங்களே இதற்கு வழிகாட்ட வேண்டும்.
39
ஆசிசியம்

Page 42
PRINCE CITY
ஆசிரியர்களுக்கான
ஆசிரியர்களின் நன்மை கருதி அவர்களுக்கான தனி ஆசிரியர்களுக்கான விசேட சலுகைகள் இவ் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினை தொட உயர் டிப்ளோமா (International Higher Diploma) ம பெற்றுக்கொள்ள இதோ அரிய சந்தர்ப்பம்.
* மிகக் குறைந்த தகைமை : GC.E.A/L பரீட்ை
காலடியில்...!
EdHat International Higher Dip
1 HEAD OFFI
தொடர்புகளுக்கு: PRINCE CITY CAMPUS
NO. 31 -1/1, 42nd L:
Colombo - 06. Tel: 011 31 72 63 Hotline: 0775 9491
JK COPIER
PHOTOCOPY PAPER
SINEAR SPECTRn
COLOUR PHOTO COPY PAPER
Luck
PHOTOC0
PACKSCO CEY
No- 19 St. Michael's Tel: 2343100-2 Fax: 234311
ஒக்டோபர் 2012

CAMPUS வழங்கும் - ஓர் அரிய சந்தர்ப்பம்!
பிரிவுகள் இப்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, - அரிய சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள்.! இலங்கை ர முடியவில்லை எனும் கவலை வேண்டாம். சர்வதேச ற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பினை
சயில் இரண்டு பாடங்களில் சித்தி எமது சேவை உங்கள்
loma in Law Leading to LL.B (UK)
த BRANCH.
ane,
No.28, Bar Road, Batticaloa
Tel: 065 222 3327 NO.275, Clock Tower Road, Jaffna.
E-Mail: info@princeccsl.com Web: www.princeccsl.com
1
072
//விளம்பரம்
INKotoma(
B A L L P E N S.
Oப்ப2/U7) PHD
(20)
PY PAPER
LON (PVT) LTD. Road, Colombo -03, 13 E-mail: packsco@sltnet.lk
//விளம்பரம்
40
பி ஆசிசியம்

Page 43
சேமமடு
E EEE)
கா: கம்பகா கம்
ர் - 1
15 நாட்{NHFA 2
ஆச்
உளவியல் ஊடுதலையீடுகள்
சபா.ஜெயராசா
ஆசிரியர்: ப.சந்திரசேகரம்
விலை : 300.00
CHEMAMADU
UG.50 People's
Tel:011-2472362, 232 E-Mail:chemamadu@yahoo.
Website:www.

5 பதிப்பகம்
சிரியர்: சபா.ஜெயராசா - விலை : 300.00
கல்வியியற் சிந்தனைகள்
1.சந்திரசேகரம்
மகா
பாதகா க
BOOK CENTRE
Park, Colombo -11 21905 Fax: 011-2448624 com, chemamadu50@gmail.com,
chemamadu.com

Page 44
ஆசிசியம்
தொடர்பு
யாழ்ப்பாணம் புக்லாப் (ரவீந்திரன்) .021-2227290/077-1285749 பூபாலசிங்கம் புத்தகசாலை (யாழ்) 021-2226693 மா.மோகனகிருஷ்ணன் ....075-0710602
மட்டக்களப்பு கி.புண்ணியமூர்த்தி ...077-7034528/065-2250114 ச.ஜெயராஜா .....065-2225812/077-7249729 ராஜாஸ் புத்தகநிலையம் .....065-2222371
மன்னார் ஜோதி புத்தக நிலையம் ....023-2222052 டி.கிறிஷ்டிராஜ் ....071-2261010
மூதூர் க.கனகசிங்கம் .....077-8730736
கிளிநொச்சி பெருமாள் கணேசன் ....077-0789749
முல்லைத்தீவு வேல் நந்தகுமார் ....077-9297479
- ஓட்டமாவடி எம்.பி.டி.கான் ....077-9068898
மாவனெல்லை எம்.ஏ.எம்.நிஸ்தார் ....071-8257562
புஸ்ஸல்லாவை T.லோகேஸ்வரன் ....077-9706504
ஹட்டன் முரளி புத்தக நிலையம் ....051-7911571
அக்கறைப்பற்று டி.கணேசரட்ணம் .....071-3914771/067-2277192

களுக்கு..
வவுனியா தா.அமிர்தலிங்கம் ..071-8457290 ஆ.விஜேந்திரன் ....077-4412518 சி.ரமேஸ் ...077-4744810 சு.பரமானந்தம் ....071-8457260 அறிவாலயம் புத்தக நிலையம் ....024-4920733 கஜன் புத்தகசாலை ....077-1615150
கொழும்பு சேமமடு பொத்தகசாலை ...011-2472362 பூபாலசிங்கம் புத்தகசாலை ...011-2504266 சங்கர் புத்தகசாலை ....077-7732160 நிவ் கோகிலம் புத்தகசாலை 077-5941031
திருகோணமலை இ.புவனேந்திரன் ....026-2222426 ச.தேவசகாயம் ....026-2227345
கிண்ணியா எம்.எஸ்.எம்.ஹனீபா ...077-2344586
அனுராதபுரம் அன்பு ஜவஹர்ஷா ...071-0881950
அம்பாறை அமீர் அலி ...077-2224025
கல்முனை அன்பு புத்தக நிலையம் ....077-6446046
கண்டி ஈஸ்வரன் புத்தகசாலை ....077-7663709
பண்டாரவளை பி.புண்ணியமூர்த்தி ...077-1155609
நுவரெலியா குமரன் புக் சென்டர் ....052-2223416