கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆசிரியம் 2013.01-02

Page 1
பாடு
அரசிய
ல்வியில் உற்றெழல்
வாண்டு
சூெழல்
1ை1
"அறிவுச் சமூகத்தின் வேட்கை வினைத்திறன் மிக்க ஆசிரியர்"
ආසිරියම්
இதழ் 21-22
ஜன-பெப்
ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் -
இடம்மாறும் இணைக்கலைத்திரம்
கல்வித்துறையில் தொடரும் நெருக்கடி
-==-=- 11-=ாம்-------
ஸ்ரீகாந்தலட்சுமி/ சபா.ஜெ வீ.கே.ரவீகரன் / எஸ்.சுதந்தி க.கோமளேஸ்வரன்/ எஸ்.எல்.

ISSN 2021-9041
Aasiriyam (pedagogy)
சியம்
எல்லையற்று விரியும் அறிவுத்தளம்.
ரூபா 100/-
2013
ELD
ஜயராசா/ எஸ்.அதிதரன் ரென்/ஆர்.லோகேஸ்வரன்
மன்சூர்/அன்பு ஜவஹர்ஷா

Page 2
பரா = EEE
ITE:12ாக - ETAE11 E E படுEEE -EHா - 3
ராம் = EEE : பாEE EEEEETF 5 E EEEEEE El:EEEாப்பா
புதிய நூ
- =115 E = = = = = = = = = 1
EEE, EEE LE :11
- அப்பா ப
= = 58EE E = = =பவம்
12 மாயம் மே பர 1:22
பேராசிரியர்தாஞானகுமரன்
வேதாந்த மெய்யியல் (IB)
தளா பாப்பராகலாமா
IHE பார்
:18, 2
விலை:460.00
11:11:25:51
பேராசிரியர் நா.ஞானகுமாரன்
E - 191 EVE
(B
SHE
விலை:420.00
--- தோப்படும் - 2
CHEMAMADU B
- EE =
பாக எEEாக்கம்-2)
UG.50 People's Pa - Tel:011-2472362, 23219 E-Mail:chemamadu@yahoo.com
Website:www.che

பல்கள்
'மாயை பற்றிய கருத்தும் | சங்கர வேதாந்தக்காட்சியும்
பேராசிரியர் நா.ஞானகுமாரன்
விலை:300.00
aa
யாழ்ப்பாணத்தில் பெண்கல்வி:
தோற்றமும் வளர்ச்சியும்
- கயாயமாக E E - போக்காக்க -
THE THாட்
சசிகலா குகமூர்த்தி
விலை:260.00
OOK CENTRE
பயனராக
rk, Colombo -11 05 Fax: 011-2448624 - chemamadu50@gmail.com, emamadu.com

Page 3
உள்6
கல்வி Vs அறிவு
குலைவு ஆளுமை
விளைதிறன் மிக்க கற்றலுக்கான ஊக்க
இடம்மாறும் இணைக்கலைத்திட்டம்
மாணவர் உளநிலையில் “இடப்பெயர்வு”.
கல்வித்துறையில் தொடரும் நெருக்கடி
உயர் பண்புத் தரமிக்க ஆசிரியர்
கல்விக்கான சிறந்த அத்திவாரமாக ...
நமது பிரச்சினைகளுக்கு ஆசிரியத்தில் ,
'ஆசிர
தொடர்புகளுக்கு
தெ.மதுசூதனன் காசுபதி நடராஜா மர்சூம் மௌலானா அ.ஸ்ரீகாந்தலட்சுமி
படைப்புகள் அனுப்ப :
aasiriyam@gmail mathusoothanan2
பணம் அனுப்ப :
Chemamadu book Chemamadu book

ஸ்ரீகாந்தலட்சுமி
04
சபா.ஜெயராசா
எஸ்.அதிதரன்
வீ.கே.ரவீகரன்
எஸ்.சுதந்திரன்
20
ஆர்.லோகேஸ்வரன் 22
க.கோமளேஸ்வரன் 27
எஸ்.எல்.மன்சூர்
- 31
தீர்வுகள்...
அன்பு ஜவஹர்ஷா 36
பியம்?
- 077 1381747 / 0112366309/ 0212227147
0777 333890
077 4747235
0777 286211
com 2@gmail.com
centre - BOC Bank - A/C- NO:8081150 centre - COM Bank - A/C- NO:1120017031

Page 4
ஆசிரியரிடமிருந்து...
மாற்றம் பற்றிய தேடல்...!
நாம் புதிய ஆண்டில் காலடியெடுத்து வைத்து ளோம். இத்தருணத்தில் யாவருக்கும் புதுவருட தைப்பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தற்போது தொடர்ந்து கொட்டும் மழையினால் மி மோசமான அழிவுகளை இழப்புகளை சமூகம் முகம் கொடுத்து வருகின்றது. இதைவிட பரந்தளவில் மேற்கொ ளப்பட்ட பயிர்செய்கை விவசாயமும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த க.பொ.த (சா/த பரீட்சையைக் கூட சில இடங்களில் மாணவர்கள் எழுத முடியாத சூழலும் உருவானது. இன்று இயற்கையும் நம்மை எல்லா வழிகளிலும் வஞ்சிக்கிறது போலும் இதைவிட அரசாங்கத்தின் அதிகார வர்க்கத்தின வஞ்சனைகள், ஏமாற்றுகள் மேலும் மேலும் அதிகரித்து கொண்டே போகிறது. தினமும் அரசாங்கத்திற்கு எதிரான
போராட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
"அறிவுச் சமூகத்தின் லேசட்கை எலிசsbளத்திதரன மிக்க ஆசி://டியர்' 1 )கெடு
ISSN 2021-9041)
ஆசிரியர் : தெ.மதுசூதனன் இணை ஆசிரியர்கள் :
அ.ஸ்ரீகாந்தலட்சுமி எம்.என்.மர்சூம் மௌலானா
காசுபதி நடராசா
ஆசிரியர்குழு : பேரா.க.சின்னத்தம்பி பேரா.சபா.ஜெயராசா பேரா.சோ.சந்திரசேகரன்
பேரா.எம்.ஏ.நுஃமான் சிறப்பு ஆலோசகர்கள் : சுந்தரம் டிவகலாலா
ச.சுப்பிரமணியம் சி.தண்டாயுதபாணி அன்பு ஜவஹர்ஷா வல்வை ந.அனந்தராஜ்
த.மனோகரன் தொடர்புகளுக்கு : “Aasiriyam” 180/1/50
E-mail : aasiriyam@gmail.com, Wet
'ஜன-பெப் 2013 |

S•
5.
இப்போது பாராளுமன்றத்திற்கும் நீதித்துறைக்கும் - இடையே யுத்தநிறுத்தம் வேண்டுமென்று கோரிக்கை
விடுக்குமளவுக்கு நிலைமைகள் உள்ளன. முன்னொரு போதுமில்லாத அரசியலமைப்பு நெருக்கடி இலங்கையில் தோன்றியுள்ளது. குறிப்பாக அரசாங்கத்தின் மூன்று முக்கிய நிறுவனங்களான நிறைவேற்று அதிகாரமும் சட்டவாக்கமும் (பாராளுமன்றம்) நீதித்துறையும் எதிர்எதிர் திசையில் பயணிக்கின்றன. இவை ஒன்றை ஒன்று முட்டிமோதித் தள்ளிவிட்டுச் செல்வதற்கு எத்தனிக்கின்றன. இந்த நிலையில் சட்ட ஆட்சியின் கதி தொடர்பாக அச்சப்பட வேண்டிய நிலையும் உருவாகியுள்ளது. | பாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளை 78 (ஏ) க் யின் பிரகாரம் சபாநாயகர் நியமித்திருந்த பிரதம நீதியரசர் எ சிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப் பிரேரணையை விசாரிக்க பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் அரசு தரப்பு உறுப்பினர்கள் 7 பேரினால்
Aasiriyam ieiutgartosi
சியம்
எல்லையற்று விரியும் அறிவுத்தளம...
மாத இதழ் - 21-22
ஆலோசகர் குழு ! பேரா.மா.கருணாநிதி பேரா.மா.சின்னத்தம்பி பேரா.மா.செல்வராஜா முனைவர் த.கலாமணி
ஆய்வாளர்.தை.தனராஜ் முனைவர் அனுஷ்யா சத்தியசீலன் முனைவர் ஜெயலக்சுமி இராசநாயகம்
செ.அருண்மொழி
சு.முரளிதரன் பொ.ஐங்கரநேசன்
நிர்வாக ஆசிரியர் :
சதபூ.பத்மசீலன் இதழ் வடிவமைப்பு :
வை.கோமளா
Printed by: cbc prees,
Tel: 0777 345 666 People's Park, Colombo -11,Tel: 011-2331475 b:www.chemamadu.com/aasiriyam.aspx |
2 ஆசிரியம்

Page 5
மாத்திரம் தயாரிக்கப்பட்ட அறிக்கை சட்ட வலுவற்றது என்று நாட்டின் உயர்மட்ட நீதிமன்றங்களில் ஒன்றான மேன்முறையீட்டு நீதிமன்றமும் அறிவித்துள்ளது. எவ்வா றாயினும் பிரதம நீதியரசரை பதவியிலிருந்து நீக்குவதற் கான நிகழ்ச்சித் திட்டத்தில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. பிரதம நீதியரசரை பதவியிலிருந்து அகற்றுவதற் கான முன்னகர்வுகளை நீதிச்சேவை ஆணைக்குழு, சட்டத்தரணிகள் சங்கம் என்பன கடுமையாக ஆட்சேபித் துள்ளன. இதைவிட சர்வதேச மனித உரிமை நீதி அமைப்புக்கள் பலவும் இந்த விவகாரம் தொடர்பில் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளன.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் முதன்முதலாக மிகக் கடுமையான அரசியலமைப்பு நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. இதிலிருந்தும் விடுபடுவதற்கான தொலைநோக்குடன் கூடிய அரசியல் ஞானத்தை வெளிப் படுத்தும் அரசியல் கலாசாரம் இலங்கையில் உள்ளதா? என்பது அடிப்படையான கேள்வி மட்டுமல்ல நமது எதிர்காலத்திற்கான அபாயச் சமிக்ஞையாகவும் நாம் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
சமகாலக் கல்வித்துறையின் நிலைமையும் பல்வேறு சிக்கல்களால்தான் வழிநடத்தப்படுகின்றது. ஆசிரிய இடமாற்றங்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யும் நிலைமைகளும் உருவாகியுள்ளன. கல்வியமைச்சு ஆசிரியர்களின் இடமாற்றத்தினை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தி ஆசிரியர்களுக்கு உரிய வகையில் இடமாற்றம் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை பலவாறு வெளிப்படுகிறது. இதுவரை ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் தெளிவான கொள்கையை கடைப்பிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. ஆகவே சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் ஆசிரியர் இடமாற்றக் கொள்கையைப் பொருத்தமாகவும் நெகிழ்வுத் தன்மையாகவும் கடைப்பிடிக்க வேண்டும். தனிநபர் விருப்பு வெறுப்பு மற்றும் அரசியல் தலையீடுகளுக்கு அப்பால் மாணவர் நலன் சார்ந்து "கல்வி முகாமைத்துவம்” மீள் வரைவிற் கும் மீள் சிந்தனைக்கும் மற்றும் மீள் சட்டகப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட வேண்டும்.
பொதுவாக கற்றல் கற்பித்தல் வினைத்திறனுடனும் விளைவாற்றலுடனும் மேம்படுத்துவதற்குரிய திட்டங்களை ஆக்குதலும் செயற்பாடுகளை முன்னெடுத்தலும் செயல் வளம்மிக்க சூழலை உருவாக்குதலும் இன்றைய கல்வி முகாமைத்துவத்தில் சிறப்பாகக் கூறப்படுகின்றது. ஆனால் இதனைப் புரிந்து செயலாற்றும் ஆளணியினர் நம்மிடம் இல்லாமல் இருப்பதுதான் கல்வி முகாமைத்துவமாக உள்ளது.
கல்வி நிறுவன கட்டமைப்பில் இசைவாக்கங்களை வளமாக்குதல், உடனடியான வெகுமதிகளை வழங்குதல், விளைதிறன் குழுக்களுக்கு உரிய செயல் நியமங்களை உருவாக்குதல் முதலியவை சமகாலக் கல்வி
ஜன-பெப் 2013

முகாமைத்துவ நடவடிக்கைகளில் முன்னுரிமைப்படுத் தப்படுகின்றன. இந்த விடயங்களை ஆழமாகவும் நுணுக்கமாகவும் எடுத்துரைக்கும் கல்வி வளவாளர்கள் நம்மிடம் அதிகமாக உள்ளனர். ஆனால் இவர்கள் இந்த விடயங் களை பண்புகளை இம்மியளவும் பேண முடியாதவர்களாகவும் கடைப்பிடிக்க முடியாதவர்களாக வும் உள்ளனர்.
இன்று முகாமைத்துவச் சூழல் யாரால் மாசுபட்டு காணப்படுகின்றது என்ற விளக்கமும் தெளிவும் இல்லாத பணியாட்சி இறுக்கமடைந்துள் ளது. விஞ்ஞான முகாமைத்துவம் எனும் அறிவுத் தொகுதியில் "கல்வியிய லும் முகாமைத்துவம்” எனும் பாடத்தில் நாம் பன்முகச் சிந்தனைகளைப் படித்திருப்போம். இவற்றையே பரீட் சைக்கும் எழுதியிருப்போம். ஆனால் இந்த விஞ்ஞான முகாமைத்துவம் சமூக நன்மைகளை அடியொட்டி | இயக்கப்படும் அம்சங்களை கவனத்தில் கொள்வதாக இல்லை. படிநிலை அதிகார கட்டமைப்பில் கல்விக்கான விஞ்ஞான முகாமைத்துவம் எத்தகையவாறு அமையு மென்பது பற்றிய தேடல் ஆய்வு அவசியமாகின்றது.
இதுபோல் ஒடுக்குமுறைக்குரிய விளிம்புநிலையில் இருப்போருக்குரிய கருத்தியல் தளத்தில் கல்விக்கான விஞ்ஞான முகாமைத்துவம் இயக்கப்படும் பொழுது எவ்வாறு அமையும் என்பது பற்றிய அறிவுநிலையும் ஆற்றுகை நிலையும் முக்கியம். நாம் இவ்வாறான வேறுபட்ட அணுகுமுறைகள் கொண்டு பார்க்கும் பொழுதுதான் நமக்கான கல்வி முகாமைத்துவம் பற்றிய உரத்த சிந்தனைக்கும் விரிவான செயற்பாட்டுக்கும் உரிய களங்களை இனங்காண முடியும். மேலும் தரச்சிறப்பு மிக்க கல்வி வழங்குவதற்கான கல்விப் பண்பாட்டு நிறுவனக் கட்டமைப்பையும் உருவாக்க முடியும்.
அண்மைக்காலத்தில் ஒவ்வொரு மனிதரதும் தனித்து வமான இயல்புகளுக்கு ஏற்றவாறு கற்றல் கற்பித்தலையும் முகாமைப்படுத்தலையும் மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்து ஓங்கி முன்வைக்கப்படுகின்றது. இந்தச் சிந்தனை யின் தருக்க ரீதியான இன்னொரு கட்டம் பிரதேசத்திற் குப் பிரதேசம் அதன் தனித்துவமான பிரச்சினைகளுக்கும் வித்தியாசமான இயல்புகளுக்கும் ஏற்றவாறு கற்றல் கற்பித்தல் முகாமைத்துவம் தொடர்பிலான சிந்தனை இன்னும் மாற்றுவகையில் விரிவாக்கம் பெறும். ஆகவே நமக்கு வடக்கு கிழக்கு மலையகம் உள்ளிட்ட பிரதேசங் கள் மற்றும் பின்தங்கிய கிராமப்புறப் பிரதேசங்கள் முதலானவற்றைக் குவியப்படுத்திய கருத்தியல் வினைப் பாடு முக்கியமாகின்றது. இதற்கான விரிநிலை சிந்தனை யும் ஆழமான ஆய்வும் நமக்கு அவசியமாகின்றது. சமகாலத்திய கல்வி நிர்வாகமும் முகாமைத்துவமும் நெறிப்படுத்தல் மற்றும் மேற்பார்வை ஆகிய துறைகளில் மாற்றுப் பார் வைகளை உள்வாங்கிச் செல்வது காலத்தின் கட்டாயமாகின்றது.
தெ.மதுசூதனன்
3
ஆசிரியம்

Page 6
ஸ்ரீகாந்தலட்சுமி
கல்வி Vs அறிவு
கல்வி
முறைமை என்ற அடிப்படையில் கல்விசார் நிறுவனங்களான பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் மக்களுக்கு கற்பித்தலை மேற் கொள்கிற முறைமை கல்வி எனப்படுகிறது. செய்முறை என்ற வகையில் ஒரு சமுதாயம் மதித்துப் போற்றும் வாழ்க்கை நோக்கங்கள், குறிக்கோள்கள் ஆகியவற்றையும் வழிவழியாக அதனுள் பரவிக் காணப்படும் திறன்களையும் இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு அளிக்க சமுதாயம் மேற்கொள்ளும் பல்வேறு செயல்முறைகளின் தொகுப்பாகவோ அல்லது
அறிவு, விழுமியங்கள், திறன்கள், மனப்பாங்குகள் என்பவற்றைப் பெற்றுக்கொள்ளும் செய்முறையாகவோ அதுவுமன்றி அறிவைத் தருவதற்கும் திறன்களை விருத்தி செய்வதற்குமென பயிற்சியும் அறிவுறுத்தலும் வழங்கும் செய் முறையாகவோ பல்வேறு வகையில் பொருள் கொள்ளப்படுகிறது. அறிவு என்ற வகையில் முறைசார்ந்த படிப்பினூடான அடையப்படுகின்ற அறிவு எனக் கருதப்படுகிறது. கற்கை நெறி என்ற வகையில் கற்பித்தல் தொடர்பான கோட்பாடுகளையும் முறைகளையும் உள்ளடக்கிய ஒரு துறையாக கல்வி என்பது பொருள் கொள்ளப்படுகிறது.
அறிவு
கல்வி மற்றும் அனுபவம் ஆகிய இரண்டினூடாக வும் தனிநபரால் பெறப்படுகின்ற புலமைத்துவமும் திறனும் அறிவு எனப்படுகிறது. தொடர்ச்சியான கற்றல் செயற்பாட்டினூடாக ஒரு பொருட்துறை பற்றி ஒரு மனிதன் மூளையில் பதிந்து வைத்திருக்கின்ற அல்லது அனைத்து மக்களாலும் பயன்படுத்தப்படும் பொருட்டு பகிர்ந்து கொள்ளப்படுகின்ற தகவலும் அது தொடர்பான புரிதலும் அறிவு எனப்படுகிறது. சிதைந்துகொண்டு
ஜன-பெப் 2013

tாசா - சச:44:44:44:49:47:சசசசசசசசச **
போகும் மனிதப் பண் பை விருத்தி செய் வதற்கு அடிப்படையாக இருப்பது அறிவு. விலங்குத்தன்மையை கூடியவரை தவிர்த்து மனிதத்தன்மையை தக்கவைப்ப தற்கு மனிதனுக்கு இன்றியமையாததாக இருப்பது அறிவு. மானுட மேம்பாட்டுக்கு அடிப்படை அறிவு.
கண்டவை, கேட்டவை, படித்தவை, உணர்ந்தவை எனப் புலன்களால் பெற்ற அறிவை புலனுக்குப் புறம்பாக உள்ள பகுத்தறிவின் துணைகொண்டு அலசி ஆராய்ந்து, ஒப்புநோக்கி, உண்மை கண்டு, புதிய கருத்துக்களை உருவாக்கி, அவற்றை மேலும் ஆய்வுசெய்து, சரிபார்த்து, கோட்பாடு கண்டு, சட்டமாக்கி உலகை வழிநடத்தும் ஆற்றலைப் பெறுவதற்கு அறிவு சார் சிந்தனை அவசிய மாகும். அறிவுசார் சிந்தனையை உருவாக்குவதற்குப் பரந்த வாசிப்புத் திறன் முக்கியம். தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிலிருந்து தன்னை விடுவிப்பதற்கு உதவுகின்ற, தனித்துவமான, தனக்குத் தானே நீதிபதியாகக் கூடிய வல்லமையை அளிப்பது இந்தப் பரந்துபட்ட வாசிப்புத் திறனே. வாசிப்பதன் மூலமோ, கேள்வி ஞானத்தினாலோ நாம் பெறும் தகவலை தகவலாகவே வைத்திருக்காது அறிந்து கொண்டவற்றை ஆய்வுக்குட்படுத்தி ஆராய்ந்து சொல்லும் போதுதான் “அறிவு” எமக்குள் ஊறும். இதையே “கற்றனைத்து ஊறும் அறிவு”, “மெய்ப்பொருள் காண்பது அறிவு” ஆகிய குறள்களின் வரிகள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன. தனிமனித வளர்ச்சிக்கு அறிவு எந்தளவுக்கு அடிப்படையாக உள்ளதோ சமூக வளர்ச்சிக் கும் அடிப்படை அறிவே. இந்த அறிவுங்கூட தன்னை வளர்ப்பதை மட்டும் கருத்தில் கொள்ளாது தனது சமூகத் தையும் வளர்க்கும் உணர்வைத் தரும்போது மட்டுமே சமூக மேம்பாடு என்பது சாத்தியமாகும்.
ஆசிசியம்

Page 7
அறிவு என்பது மனிதருக்கு மனிதர் வேறுபடும். எமக்கு நிச்சயம் என்று தெரிந்தவை தொடர்பான அறிவாதார அனுபவங்களையும் இவை தொடர்பான தகவலையும் இது உள்ளடக்கும். எடுத்துக்காட்டாக நூலகம் என்ற எண்ணக்கருவை எடுத்துக்கொண்டால் சாதாரண நபரைப் பொறுத்து நூலகம் என்பது நூல்களைக் கொண் டுள்ள இடம். இதுவே படிக்கும் மாணவரைப் பொறுத்து மேலதிக வாசிப்புக்கான வாய்ப்பைத் தரும் இடம். நூலக அறிவைப் பெற்ற ஒருவரைப் பொறுத்து அது அறிவுப் பதிவேடுகளின் சுரங்கம். இதுவே ஆய்வாளர்களைப் பொறுத்து தமது ஆய்வுகளுக்கான தரவுகளைத் தரும் ஒரு இடம். நூல்களைக் கொண்டுள்ள இடம் நூலகம் என்ற கருத்து நூலகத்தைப் பயன்படுத்தாத ஒருவரைப் பொறுத்து அவதானிப்பினூடாகப் பெறப்பட்ட ஒரு அறிவாதார அனுபவம். இந்த அறிவாதார அனுபவம் எவ்வித செய் முறைகளுக்கும் உட்படுத்தப்படாது நேரடியாக மனித மூளைக்குள் கருக்கொள்ளும் அறிவாகலாம். நூலகத் தைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும் வாசகனைப் பொறுத்து இந்த அறிவாதார அனுபவம் மேலதிக அவதானிப்பினூடாகவோ தொடர்புச் செய் முறையினூ டாகவோ பரிசோதிக்கப்பட்டு உறுதிப்படுத் தப்படின் அது இன்னொருவருக்கு செய்திக் குறிப்பாகப் போய்ச் சேரலாம் அல்லது பெருத்த எண்ணிக்கையுடைய மக்க ளுக்கு பொதுசனத் தொடர்பு ஊடகம் ஒன்றினால் செய்தி வடிவில் பரப்பப்படலாம். உறுதிப்படுத்தப்படாத போது இக்கருத்துநிலை தொடர்பான மேலதிக தேடல்கள் தரவாகத் தோற்றம் பெற்று இத் தரவுகள் செய்முறைப்படுத்தப் பட்டு தகவலாகத் தோற்றம் பெறலாம். இத் தகவலி லிருந்து அகநிலையில் கருக்கொள்வதே அறிவாகின்றது.
அறிவு பலதரப்பட்ட உட்பொருட்களில் நிலை கொண்டிருக்கும். தனிநபர் ஒருவரின் உள்ளக அறிவாற்றல் அமைப்பின் ஒரு மூலக்கூறாக நிலை கொண்டு தனிநபர் நுண்ணறிவாகத் தீர்மானம் எடுத்தல் செய்முறைக்கு இது அவருக்கு உதவலாம். சமூக நினைவகத்தில் நிலை கொண்டு சமூக நலனுக்கு உதவலாம். நூலக தகவல் நிறுவனங்களில் பதிவேடுகளின் வடிவில் நிலைகொண்டு நூலக தகவல் நுண்ணறிவாக அங்குள்ள தொழிற்திறன் சார்ந்த, சாராத அலுவலர்களின் அனுபவம் நுண்ணறிவு என்பவற்றின் தொகுப்பாக நிலைகொண்டிருக்கலாம். கணினி என்று வரும்போது நிபுணி அமைப்பில் நிலை கொண்டு அறிவுத் தளத்தின் மூலக்கூறாக இயங்கி அவற்றின் அபிவிருத்திக்கு உதவலாம். கல்வி-அறிவு
கல்வி ஒரு செய்முறை. இது முறைசார்ந்தது. அதே சமயம் அறிவு என்பது அனுபவம். இது முறைசாராதது.
ஜன-பெப் 2013

பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற கல்விசார் நிறுவனங்களின் வழி கல்வியைப் பெற்றுக் கொள்ளலாம். அறிவு என்பது வாழ்க்கை அனுபவங்களின் மூலம் பெற்றுக்கொள்ளப்படுவது. பயனுள்ள சில பிரயோகங்களுக்காக அறிவைப் பெற்றுக் கொள்ளும் செய்முறை கல்வியாக இருக்க நல்ல கல்வி, நல்ல தோழர்கள், நல்ல கலந்துரையாடல்கள், தீவிர வாசிப்பு என்பவற்றினூடாக அடையப் பெறுவதே அறிவாக இருக்கிறது.
கல்வி என்பது ஆசிரியர்களால் மாணவர்களுக்குப் போதிக்கப்படுவது. அறிவோ தானாக உருவாவது, சுயமாக அடையப்பெறுவது. கல்வி என்பது கற்றல் செயற்பாட்டினூடாக அடையப்படுவது. பலதரப்பட்ட உண்மைகள், கருத்துகள், கோட்பாடுகள் போன்றவற்றை கல்வி மூலம் அறிய முடியும். இவற்றை பிரயோகிப்பதே அறிவு எனப்படுகிறது. ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட சட்டங்கள், ஒழுங்குவிதிகள், பாடத்திட்டங்கள் போன்ற வற்றை கல்வி கொண்டிருக்கும் அதேசமயம் அறிவைப் பெறுவதற்கென எந்தவொரு வழிகாட்டுதல் கொள்கை களும் கிடையாது. மாணவர்கள், பெற் றோர்கள், நண்பர்கள், வாழ்க்கையில் வலியை அல்லது மகிழ்ச்சியை ஏற் படுத்தும் கணங்கள், குழந்தைகள் போன்ற எதனூடாகவும் அறிவைப் பெறமுடியும்.
க!
பாடநூல்களிலிருந்து பெறப்படுவது கல் வி. வாழ்க்கை அனுபவங்களிலிருந்து பெறப்படுவது அறிவு. கல்விக்கு வயதெல்லை உண்டு. வயது அதிகரிக்க அதிகரிக்க கல்வி மட்டமும் அதிகரிக்கும். அறிவுக்கு வயதெல்லை கிடையாது. கல்வித் தகுதியில் கூடிய நபர் ஒருவரைவிட குழந்தை ஒன்று அதிக அறிவுள்ளதாக இருக்கலாம்.
இதிலிருந்து தெரியவருவது கல்வி என்பது முதற் பொருள், அறிவு என்பது முடிவுப் பொருள். கல்விக்கு அடிப்படை கற்பித்தல், அறிவுக்கு அடிப்படை கற்றல். கல்விக்கான பிரதான தளம் கல்விக் கூடங்கள்.
அறிவிற்கான பிரதான தளம் நூலகங்கள்.
கல்வி-அறிவு = கற்பித்தல் -கற்றல்
கல்வி என்பது பெரும்பாலும் கற்பித்தலுடன் இணைத்துப் பொருள் கொள்ளப்படுகிறது. ஒரு விடயம் தொடர்பாக ஆசிரியருக்கும் மாணவருக்குமிடையில் நடக்கும் இடைவினைத்தொடர்பே கற்பித்தல் எனப்படு கிறது. மாணவரின் தொகை வயது, பால், நுண்ணறிவு, உடலாற்றல், கற்றலுக்கான ஊக்கம், பொருளாதாரநிலை போன்றவற்றில் பலதரப்பட்ட ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டிருக்கக்கூடும். அதே போன்று ஆசிரியரின்
க.,
5
ஆசிசியம்

Page 8
உதவியுடனோ, அது இன்றியோ, கற்பித்தற் துணை சாதனங்களின் உதவியுடனோ கற்பித்தல் நிகழலாம் விடயம் இலகுவானதாகவோ, சிக்கல் வாய்ந்ததாகவோ இருக்கலாம் கற்பிக்கும் இடமானது பாடசாலைக்கு உள் ளேயோ அல்லது வெளியிலோ இருக்கலாம் கற்பித்தலுக்குத் தேவையான மூன்று முக்கிய கூறுகளான ஆசிரியர், மாணவர், விடயம் என்ற மூன்றும் மாற்ற முறுவதில்லை. கற்பித்தல் என் பது ஆசிரியரால் யாருக்கோ, எதைப்பற்றியோ எங்கேயோ கற்பிக்க முயற்சி செய்வதுடன் சம்பந்தப்படும் ஒன்றாகும்.
அறிவு என்பது பொதுவாக கற்றல் என்பதுடன் இணைத்துப் பொருள் கொள்ளப்படுகிறது. படிப்பு, அனுபவம் அல்லது கற்பித்தல் போன்றவற்றால் அறிவும் திறனும் பெறும் செய்முறை கற்றல் எனப்படுகின்றது கற்றல் எனப்படுவது படிப்படியாக நடத்தையில் பொருத்தப்பாட்டை அடைவதாகும் என்கிறார் ஸ்கின்னர் அவர்கள். மனதின் சக்தியால் உந்தப்பட்டு தன் செயல்களால் ஒருவர் பெறும் மாற்றங்களையே கற்றல் என நாம் கூறுகின்றோம்.
வெறும் உற்றறிவு மட்டும் கற்றலுக்குப் போதுமான தல்ல. அனுபவங்களிலிருந்து ஒருவர் பெறுகின்ற அறிவைத் தீர்மானிப்பது அவரிடம் ஏற்கெனவே இருக் கின்ற அறிவு. இந்த முன்னறிவின்றி கற்றல் சாத்திய மில்லை. இந்த முன்னறிவானது கற்றலை கருத்துநிலை மாற்றமாக நோக்குவதற்கான கோட்பாடு ரீதியான புறப்பாடாக நிர்ப்பந்திக்கிறது. முன்னறிவு என்பது பெரும்பாலும் குறிப்பிட்ட பொருட்துறை சார்ந்த அறிவாக இருப்பதனால் மனித ஆர்வத்துறைகள் அனைத்திலும் ஒருவருக்கு இருக்கக்கூடிய முன்னறிவை பட்டியலிடுவது சாத்தியமற்றது. ஏனைய துறைகளை விடவும் அறிவியல் மற்றும் கணிதத்துறைக்கு இந்த முன்னறிவு மிக அவசிமானது. அறிவியல் அறிவு என்பது நாளாந்தம் நாம் பெறும் அறிவைவிட வேறுபட்டது. நாளாந்த அறிவு என் பது உருவகங்கள் மற்றும் எண்ணக்கருக்கள் அடங்கிய பெரிய சேமிப்பகத்தைக் கொண்டது. இந்த அறிவை அறிவியல் அறிவாக மாற்றுவதற்கு தொடர்ந்து எம்மிடையே தேடல் இருத்தல் அவசியமானது. தேடலுக் குக் களமாக அமைபவை நூலகங்கள். அறிவியலாளர்கள் முன்னறிவிலிருந்து பெறப்படுகின்ற உருவகங்களையும் எண்ணக்கருக்களையும் மீள பயன்படுத்துவதன் மூலம்
அறிவியல் அறிவைப் பெற்றுக்கொள்கின்றனர்.
கல்வியும் அறிஞர்களும்
"குழந்தைகளுக்குக் கற்றுத் தரவேண்டுமானால் அவர்களை நேசிக்க வேண்டும். ஆசிரியர் ஒவ்வொரு குழந்தையின் இதயத்துக்கும் வழி கண்டுபிடிக்க வேண்
ஜன-பெப் 2013

- டும். குழந்தையின் நெருக்கத்தை ஆசிரியர் உணர வேண் டும். குழந்தையின் குதூகலத்தையும் வருத்தத்தையும் அனுபவிக்க வேண்டும். குழந்தையின் இடத்தில் தன்னை வைத்துப் பார்க்க வேண்டும். தானும்
ஒரு குழந்தையாக இருந்திருக்கிறோம் என்பதை ஆசிரியர் r மறக்கக்கூடாது” ரஷ்ய எழுத்தாளர் வசீலி சுகம்வீனஸ்கி > அவர்களின் கருத்து இது.
"குழந்தைகளினுடைய மனதின் இரகசியத்தையும், ஆசிரியர் பயிற்சி என்னும் கலையையும், ஆசிரியரின் திறமைகளையும் அறிய முற்படுகையில் ஒவ்வொரு குழந்தையிடமும் நான் எனது ஆசிரியனை, ஆசானைக் காண்பேன்” என்ற வாசகத்தின் உண்மையை, பயனைச் > சரிபார்த்து குழந்தைகளின் நடவடிக்கைகளின் உட்பொரு
ளினுள் ஆழப் புகுவதன் மூலம், குழந்தையின் உள்ளாற் றல்களைப் பயன்படுத்தி, அன்பு பரந்த மனப்பாங்கு, நகைச்சுவை உணர்வு, துடியார்வம், யதார்த்தத்தை அறியும் ஆக்கபூர்வமான அணுகுமுறை ஆகியவற்றைத் தட்டியெழுப்பி இவர்களுக்கு அவசியமான சமூக அம்சங்களை அளிக்கலாம்” இது ஆறுவயதுக் குழந்தைக்கு படிப்பு சொல்லிக் கொடுப்பதை தனது மிக விருப்புக்குரிய தொழிலாக ஏற்ற ருஷ்ய விண் வெளிக் கழகத்தின் தலைவரும் இயற்பியல் விஞ்ஞானியுமான அமனஷ்வீலியின்
கூற்று.
ஐம்புலன்களில் கண், காது, வாய் ஆகிய மூன்று புலன்களையும் பறிகொடுத்தவர் ஹெலன் ஹெல்லர். "19ம் நூற்றாண்டின் பெரியவர்கள் என்று சொல்லக் கூடியவர்கள் இருவர். நெப்போலியனும் ஹெலன் ஹெல்லரும்” என 20 வயதை அடையமுன்னரேயே உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் மார்க் ட்வெயினால் போற்றப்படும் அளவிற்கு பெருமைபெற்றவர். மிகச் சிறந்த கல்வியாளர்களில் ஒருவராக வைத்தெண்ணப் படுபவர். கல்வி பற்றிய இவரது கூற்று பின்வருமாறு.
"கல்வி என்பது கரடுமுரடான கற்கள் நிறைந்த ஆற்றுப்படுகை. அதன்மேல் ஓடுகின்ற தெளிந்த நீரோட் டத்தைப் போல ஆழமற்றதும், தெளிவானதும் தான் குழந்தை மனம். ஆற்றைப் போலவே குழந்தையின் மனமும் ஒரு இடத்தில் மேகத்தைப் பிரதிபலிக்கும். இன்னொரு இடத்தில் ஒரு மலரைப் பிரதிபலிக்கும். வேறொரு இடத்தில் புதரைப் பிரதிபலிக்கும். ஆறு பெருகி உபயோகப்படுவதற்கு கண்ணுக்குப் புலப்படாத ஊற்றுக்கள் தேவை. மலை அருவிகள், நீர்வீழ்ச்சிகள் தேவை. இவையனைத்தும் அந்தந்த இடத்தில் வந்து கலக்கவேண்டும். இல்லாவிடில் குழந்தை மனம் என்ற சிற்றாறு கலங்கிவிடும். கரைபுரண்டு தண்ணீர் வீணாகி விடும். மலைகளையும், மடுக்களையும் நீலவானையும்
- 6
- ஆசிசியம்

Page 9
மலரைப் போல் பிரதிபலிக்கக்கூடிய திடம் ஏற்பட வேண்டும் அந்தச் சிற்றாறுக்கு”
கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாக நாம் அறியக் கூடிய அல்லது எமக்குக் கிடைக்கக்கூடிய மேற்கத்தேய சிந்தனைகள் கைத்தொழில் சமூகம் ஒன்றின் தோற்றத் துடன் இணைந்ததாக இருக்க, தமிழ்ச் சமூகத்தின் சிந்தனைகளோ இரு ஆயிரியங்களைக் கடந்து நிற்கிறது. “கல்வி கரையில கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கின் பிணிபல” என்னும் நாலடியார் இதற்கு நல்லதொரு
எடுத்துக்காட்டு.
பிறப்புமுதல் நம்மிடம் இயற்கையாக அமைந்து காணப்படாமல் நாம் பின்னர் பெறும் அனுபவங்களும் அவற்றின் விளைவுகளும் கற்றல் என்பதில் அடங்குவதாக இந்திய கல்வியியலாளர் சந்தானம் குறிப்பிடுகிறார். இவ்வனுபவங்கள் அறிவுசார்ந்தவையாகவோ, மனவெழுச்சி கள் சார்ந்தவையாகவோ, உடலியக்கங்கள் சார்ந்தவை யாகவோ அல்லது இவையாவற்றுடனும் ஒருங்கே தொடர் புடையதாவோ இருக்கலாம். பிறப்பு முதல் இறப்பு வரை நமது வாழ்க்கையில் கற்றல் தொடர்ந்து நிகழ்கிறது. அறிவும் அறிஞர்களும்
அறிவு பற்றி மிகத் தெளிவாக முன்வைத்தவர்களில் பிரான்சிஸ் பேக்கன் முக்கியமானவர். ஒரு நாட்டின் அபிவிருத்தியின் ஆதாரமாக அறிவு விளங்கும் என்பதை 16ம் நூற்றாண்டிலேயே மிகச் சரியாகக் கணித்து “அறிவே ஆற்றல்” என்று விளம்பியது மட்டுமன்றி வாசிப்பு மனிதனை முழுமையாக்கும் என்ற இன்னொரு வாசகத்தின் மூலம் அறிவுக்கு அடிப்படை வாசிப்பு என் பதை தீர்க்கமாக முன்வைத்த பெருமைக்குரியவர். “அறிவு என்பது இருவகை. எமக்குத் தெரிந்த அறிவு ஒரு வகை, எமக்குத் தெரியாத தகவலை எங்கே பெறலாம் என்ற அறிவு இன்னொரு வகை” என 18ம் நூற்றாண்டிலேயே அறிவு அகநிலைப்பட்டது, தகவல் வெளிநிலைப்பட்டது என அறிவையும் தகவலையும் தெளிவாகப் பிரித்துக் காட்டுகிறார் அறிஞர் சாமுவேல் ஜோன்சன். மேற்படி வரிகளின் உட்பொருளை நன்கு அறிந்தவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே "கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு” என்ற அவ்வை யின் வரிகளின் உட்பொருளை நன்கு புரிந்து கொள்வர். மிக நீண்ட காலம் உறுதியுடன் நீடித்து நிலைத்திருக் கின்ற தகவலே அறிவு என்கிறார் வெயிஸ்மன்.
"தொட்டனைத்து ஊறும் மணற்கேணி நாளும் கற்றனைத்து ஊறும் அறிவு” என்னும் திருக்குறள், "நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்னும் ஒளவையின்
ஜன-பெப் 2013

முதுமொழி போன்றன எமக்கு உணர்த்தி நிற்பது அறிவின் முக்கியத்துவம் என்பது தமிழ் மக்களால் இன்று நேற்று உணரப்பட்டதொன்றல்ல என்பதையே. தேடல்கள்
- கல்வித் தகுதிக்கான கற்றல் செயற்பாட்டிலிருந்து அறிவு ஊறுவதற்கான கற்றல் செயற்பாட்டுக்குள் என்னை நுழைத்துக் கொண்ட காலம் முதலாய் கல்விக்கும் அறிவுக்கும் இடையில் ஒரு இணைப்பைத் தேடித் தான் எனது பெரும்பாலான தேடல் இருந்திருக் கிறது. கற்கக் கற்க அறிவு ஊறும் என்ற வள்ளுவன் வாக்கு உண்மையானால் கற்றல் கற்றலாக மட்டும் ஏன் நிற்கிறது என்ற வினவல் இந்தத் தேடல் நோக்கி என்னை உந்தித் தள்ளியது. படிப்பு கல்வியைத் தரும் பரந்துபட்ட வாசிப்பு அறிவைத் தரும் என்பது நன்கு தெளிவாகத் தெரிந்திருந் தும் கூட கல்வியா அறிவா பெரிது என்ற வாதப்பிரதி வாதங்களின் அடிப்படையில் அறிவைப் பெரிதாக்கி கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் பொய்மைகளே உண்மைக ளாய் திசையின்றி அலைந்த எனது மனத்தைச் செப்ப னிட்ட தடங்களைக் கண்டடைந்தேன் பாடசாலைகள் மற்றும் இன்றுவரை எனது மனதில் பூசிக்கும் பேறு பெற்ற எழுத்தறிவித்த இறைவர்களையும், சுமைகளின் அழுத்தங்களுக்குள் தப்பிப் பிழைப்பதற்கான உபாயங் களைத் தந்த பல்கலைக்கழகங்களையும் அடியோடு ஒதுக்கிவிடவோ அல்லது கல்வியைப் பெரிதாக்கி கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் ஒத்ததுகளைப் பிணைத்து ஒவ்வாமைகளை விலக்கும் அறிவுக்கு ஆணிவேராக இருந்த நூலகத்தை ஒதுக்கிவிடவோ நான் தயாராக இல்லை. எனவே இரண்டுக்குமிடையிலான சமநிலை யைத் தேடி ஓடிய எனது முயற்சி வீண் போகவில்லை.
கல்வி அறிவு என்ற இரண்டு அம்சங்களும் முறையே கற்பித்தல், கற்றல் என்ற இருபெரும் செய் முறையில் தங்கியிருப்பினும் “கற்பதற்கான கற்றல்” என்ற அம்சமும் "கற்பதற்கான கற்பித்தல்” என்ற அம்சமும் அனைத்தை யும் விட முக்கியமானது என்பது தெளிவாகின்றது. எனவே குடும்பம் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் விட கற்றல் கற்பித்தல் பணியின் பெரும் பொறுப்பு ஆசிரிய சமூகத்திடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. - “ஒரு மனிதன் கற்பது எவ்வாறு எனக் கற்றுக் கொள்வதே கல்வியின் இலக்காகும். கற்றுக் கொள்வதற் கான ஆற்றலானது அறிவை விட முக்கியமானதாகும். அறிவு, காலத்திற்கொவ்வாததாகப் போனாலும் கற்கும் திறனானது அனைத்து அறிவுகளுக்குமான திறவு கோலாக விளங்குகிறது” என்ற கூற்று அறிவை விட கல்வி முக்கியம் என்ற கருத்து நிலையைத் தருகின் றது. அப்படியாயின் பாடசாலைகள் ஏன் அறிவுக்கான
க
ஆசிசியம்

Page 10
திறவுகோலாகச் செயற்பட முடியாதுள்ளது என்ற வினா எழுவதும் இங்கு தவிர்க்க முடியாததாகிறது.
துரதிருஷ்டவசமாக எமது கல்விமுறையானது சுயகற்றலுக்கு வழிப்படுத்தத் தவறுகின்ற ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. பாடசாலைகள் மட்டுமன்ற பல்கலைக்கழகங்கள் கூட தயார்நிலைக்கல்வியிலேயே கருத்துச்செலுத்துகின்றன. இதன்காரணமாக கற்பித்தல் என்ற செய்முறை மேலோங்கி இருப்பது மட்டுமன்
ஆசிரியர்களின் மிகப் பெரும் சுமையாகவும் பார்க்கப்படு கிறது. மாணவர்களுக்கான கல்வித்திட்டங்கள் மாணவர் களுக்கான கற்பித்தற் செயற்பாட்டிலிருந்து கற்றற் செயற்பாடு நோக்கி வழிப்படுத்துவதை இலக்காகக் கொண்டிருக்க ஆசிரியருக்கான கல்வித்திட்டங்கள் அவர்களின் சுயகற்றலை மழுங்கடித்து கற்பித்தல் செயற் பாடு நோக்கி வழிப்படுத்துகின்றதோ என எண்ணுமளவிற்கு ஆசிரிய சமூகத்தை ஆக்கிரமித்திருக் கின்றன. ஆசிரியர்களின் அறிவை உயர்த்தும் நன்நோக் குடன் முனைப்புப்படுத்தப்பட்டிருக்கின்ற இத்தகைய பயிற்சிப் பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகள் மூலமான ஆசிரியர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் வார இறுதிநாட்களில் கூட ஓய்வின்றி அலையுமளவிற்கு ஆசிரியர்களின் சுமையை இன்னும் அதிகமாக்கியிருக் கின்றமையானது கற்பித்தல் செயற்பாட்டை ஊக்குவிப் பதற்குப் பதில் அதில் தொய்வு நிலையைத் தான் ஏற்படுத்தியிருக்கின்றது, கசடு அறக் கற்பதற்கு தம்மைப் பயிற்றுவிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் மாணவு சமூகத்திடமிருந்து ஆசிரிய சமூகத்திற்கும் ஆசிரிய சமூகத்திடமிருந்து ஆசிரி நிர்வாகத்திற்கும் எப்போது வரத் தொடங்குகின்றதோ அப்போது தான் கற்றலும் கற்பித்தலும் மனதார விரும்பி மேற்கொள்ளும் ஒரு பணியாக இருக்கும்.
தேடலுணர்வு கணிசமாக மழுங்கடிக்கப்பட்ட இரண்டாம்நிலைக் கல்வியைக் கடந்து தேடலுணர்வுக்கு களமமைக்காத பல்கலைக்கழகக் கல்வியில் புகுந்து வெளிக்கிளம்பும் ஆசிரிய சமூகத்திடம் நிரம்பிய கல்வி, ஆழமான அறிவு, விசாலமான ஆராய்ச்சி, பரந்த மனப் பான்மை, உயர்ந்த கொள்கை, சூழலைப் பயன் செய்தல், தேசிய நோக்கம் முதலிய பல கருத்துக்களை உள்ளடக் கிய புலவர் மணி ஏ.பெரியதம்பிப் பிள்ளை அவர்களின் "ஆசிரியர் என்பவர் சூழ்ந்த பார்வையுடையவர்” என்ற வரைவிலக்கணத்தையோ "21ம் நூற்றாண்டின் ஆசிரிய ருக் குத் தமது மாணவர்களிடையே காணப்படும் அடிப்படை நிபுணத்துவங்கள், படைப்பாற்றல் திறன் மாற்றம் அல்லது புதுமை காணல் என்பவற்றின் சிறப்பம்சங்கள், பல்துறைப்புலமை, மாறும் நிலைக் கேற்ப அமைதல், விமர்சனப்பாங்கு, பிரச்சினைகளை
ஜன-பெப் 2013

இனங்காணல், மற்றும் தீர்ப்புத் திறமை என்பன பற்றிய ஆற்றல் இருக்க வேண்டும்” என்ற யுனெஸ்கோ நிறுவனத்தின் கொள்கையையோ எதிர்பார்க்க முடியாது. உலகளாவிய ரீதியில் நடைமுறையிலிருக்கும் சிறந்த திட்டங்களின் தொகுப்பாக இலங்கையின் கல்வித் திட்டங்கள் அமைந்திருந்தபோதும் கல்வித்திட்டங்களில் ஏற்படுத்தும் மாற்றங்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்கான பயிற்சியோ அவர்களிடம் மனமாற்றத்தைக் கொண்டு வருவதற்கான தூண்டுதல் களோ மிகக்குறைவு. வறுமை வேலையின்மை போன்ற பொருளாதாரக் காரணிகளின் தாக்கம் மிக அதிகமாக உள்ள எமது தேசத்தில் கல்வியின் முழு நோக்கமுமே தொழில் நோக்கமாகவே உள்ளது.
அதுமட்டுமன்றி ஆசிரியத் தொழிலின் பின்னரான பட்டப்பின் கல்வித் தகைமைகளோ அல்லது வேறு தகைமைகளோ ஆசிரியர் என்ற தனிநபரின் தகுதியை நிர்ணயிக்கும் பத்திரங்களாகத் தொழிற்படுகின்றன வேயன்றி ஆசிரியத் தொழிலின் மேன்மையை வெளிப் ( படுத்தும் ஒன்றாக அமையாமை காரணமாக முழுக்க முழுக்க வகை மாதிரி தேவைப்படும் பாடசாலையின் மாணவப்பருவ வாழ்க்கையில் கல்விசார் தலைமைத்துவம் என்பது இன்றுவரை வெற்றிடமாகவே உள்ளமையை மறுக்கமுடியாது. --- அனுபவங்கள்
நூலகர் என்ற வகையில் கல்விக்கும் அறிவுக்கு மிடையிலான இணைப்பில் அறிவுக்கு அடித்தளமான சுயகற்றல் செயற்பாட்டுக்கு வழிநடத்திய ஓரிருவரைப் பற்றி குறிப்பிடுவது இங்கு பொருத்தமானது.
"எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்பதிலும் எனக்கு ஆழமான நம்பிக்கை உண்டு. இந்த வாசகங்களை நான் பாடப்புத்தகத்தில் படிக்கவில்லை. நூலகத்திலும் பெற்றுக்கொள்ளவில்லை. வீட்டு முன்புறம் உள்ள போட்டிக்கோவில் அமர்ந்திருக்கும் இரண்டாம் வகுப்புப் படித்த அப்பாவிற்கும் வீட்டின் பின்புற அறையில் மரியாதை நிமித்தம் மருமகன் பார்வையிலிருந்து தவிர்த்திருக்க விரும்பும் பாலபண்டிதையான எனது ஆச்சிக்கும் (அம்மாவின் தாய்) இடையில் இடையிடையே நடைபெறும் இலக்கியத் தூதுகளிலிருந்து பொறுக்கியெடுத்தவற்றில் ஒன்று இது. பொறுக்கியெடுத்தவற்றை அப்படியே அணியும் எண்ணமும் கூட எனக்கு எப்போதுமே இருந்த தில்லை. "எதனையும் உற்றுணர்ந்து, சீர்தூக்கிப் பார்த்து, நிதானித்து, எதிர்விளைவுகள் பக்க விளைவுகளை அடையாளங் கண் டு, பயன் விளைவு ஆராய்ந்து, அனுகூலங்கள் பிரதிகூலங்களை கருத்தில் கொண்டு,
8
1 ஆசிரியம்

Page 11
ஒன்றைக் கூறும் - நம்பும் தீர்மானிக்கும் - தீர்வு காணும் - செயற்படுத்தும் - அறிவும் மனப்பாங்கும் உடைய உள்ளம் அறிவு சார் உள்ளம் என்றும் அத்தகைய சிந்தனை அறிவு சார் சிந்தனை என்றும் படிப்பு என்ற நூலில் படியாதவன் கூறும் விளக்கத்தின் எடுத்துக்காட் டாக இருக்க நான் விரும்பியமையால் ஐம்புலன்வழி பெறும் உற்றறிவு, ஊடுருவறிவு, படிப்பறிவு, காண்பறிவு, தொட்டுணர் அறிவு, அனைத்தையும் கேள்விக்குள்ளாக்க விழைகிறேன்.
கற்பித்தலானது பாடப்புத்தகத்தை நெட்டுருப் போடுவதற்குப் பயிற்றுவித்தல் அல்ல என்பதில் எனக்கு ஆழமான நம்பிக்கை உண்டு. மனிதப்பண்புகளின் வளர்ப்புப் பண்ணைகள் எனக் கருதப்படும் குடும்பம், கூட்டாளிக்குழுக்கள் மற்றும் சனசமூகநிலையங்கள் ஆகிய மூன்றிலும் குடும்பம் என்னைச் செதுக்குவதற்குப் பெரிதாக உதவவில்லை. மற்றைய இரண்டினதும் அருகாமைகூட எனக்கு இருந்ததில்லை. அதுபோன்று பாடசாலைக்காலத்தின் முதற் பத்து வருடங்கள் கூட உற்றறிவின் வழியே தான் எனது பெரும்பாலான கற்றல் இருந்திருக்கிறது. எனினும் அந்தக்காலத்தில் இந்த உற்றறிவினூடாக பல மாதிரிகள் எனக்குக் கிடைத்திருக் கின்றன. ஆணோ பெண்ணோ “தலைமை வாத்தியார்” என்ற பெயருக்கே உரித்தான சகல அம்சங்களுடனும் உள்ள அதிபர்களின் காலம் கிட்டத்தட்ட 1970களின் இறுதிப்பகுதியிலிருந்து மெல்ல மெல்ல மறையத் தொடங்கிவிட்டது இந்த கசப்பான யதார்த்தத்தை உள் வாங்கும் இத்தருணத்தில் இந்தத் தலைமை வாத்தியார்களின் அகத் தோற்றத்தை விடவும் அவர்களின் நடத்தைக் கோலங்கள் எனக்கு நிறையவே கற்றுத் தந்திருக்கிறது.
கற்பதற்கான கற்றல் நோக்கி வழிப்படுத்திய முதலாவது ஆசிரியர் என்ற பெருமைக்குரியவர் “குஞ்சக்கா” என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட மறைந்த எனது மதிப்புக்குரிய ஆசிரியர் திருமதி. யோகலட்சுமி இராசரத்தினம் அவர்கள். க.பொ.த உயர்தர வகுப்பில் புவியியல் பாட ஆசிரியையாக இருந்தபோது அவரது வகுப்பில் பாடக்குறிப்பு எதுவும் எழுதியதாக எனக்கு நினைவில்லை. உலகப்படத்தில் இடங்களின் அமைவிடத்தை அவர் கற்பித்ததாகவும் எனக்கு ஞாபக மில்லை. மாறாக நாளாந்தம் வெளிவரும் ஆங்கில செய்தித்தாள்களில் உள்ளடக்கப்படுகின்ற வெளிநாட்டுச் செய்திகள் ஒவ்வொன்றிலும் குறிப்பிடப்படும் நாடுகள் ஒவ்வொன்றையும் உலகப்படத்தில் குறித்து வந்து அவரிடம் ஒப்படைப்பதே எமது பணி. பௌதிகப் புவியியல் கற்பித்த முறை இன்னும் அலாதியானது. மொங்கவுசின் “பௌதிகப் புவியியல் தத்துவங்கள்” என்னும் நூல் நூலகத்தில் இருக்கும் இடத்தை அறிந்து
ஜன-பெப் 2013 |

வந்து அவரிடம் சொல்லுதல், ஊசியிலைக் காடுகள் தொடர்பாக ஒரு கட்டுரை எழுதி ஒப்படைத்தல் இப்படித் தான் ஒவ்வொரு வகுப்பும் நகரும். இதில் இன்னுமொரு சுவாரஸ்யமான விடயம் வகுப்புப் பரீட்சைகள் நடந்து முடிந்ததும் பரீட்சைத்தாள்களில் உள்ள வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் அவர் அளிக்கும் விளக்கத்துக்கமைய அவரவர் பரீட்சைத்தாள்களை அவரவர்களே திருத்தி தமக்குரிய புள்ளிகளைப் போட்டு அவரிடம் ஒப்ப டைப்பது. பயிற்சிப்பட்டறைகள் நிரம்பி வழியாத 1980களின் ஆசிரிய சமூகத்தின் கற்பதற்கான சிறந்த கற்பித்தல் முறையாக நான் இதைக் கருதுகின்றேன். இதன் வெளிப்பாடுதான் பல்கலைக்கழகக் கல்விக் காலத்தில் சுய கற்றலுக்கு அடித்தளமான நூலகத்தில் அதிக பொழுதுகளைக் கழிக்கவும் பாடசாலையில் வகுப்பிலேயே மிகக் குறைந்த புள்ளிகள் எடுத்திருந்த ஒரு பாடத்துறைசார்ந்து என்னால் சிறப்புத் தேர்ச்சி பெறவும் உயர் புள்ளிகள் எடுக்கவும் முடிந்தது.
எமது புரிதல்கள் தொடர்பாக எம்மிடையே மாற்றம் வேண்டும். "தெள்ளிய அறிவும் நன்நடத்தையும் கொண்ட பண்பட்ட மக்களை உருவாக்குவதே கல்வி” என்ற மாட்டின் லூதர், “மனிதனை மனிதனாக வாழ வைப்பதே உண்மைக் கல்வி” என்ற சுவாமி விவேகானந்தர், "அன்பை உணருதல், அன்பு காட்டுதல் என்றால் என்ன என்று கண்டுபிடித்தல், அன்பு காட்டுதல் என்பவையே கல்வி” என்ற இந்திய கல்விச் சிந்தனையாளர் ஜே.கிருஸ்ணமூர்த்தி, "உன்னத மரபுகளையும் அன்பை யும், இரக்கத்தையும் ஒருவரிடம் பேணி வளர்க்கவும் முழுமையான வாழ்க்கையை வாழ உதவுவதுமே கல்வி” என்ற கல்வியியலாளர் ராதாகிருஷ்ணன் போன்றோரின் சிந்தனைகள் எமக்கு வெளிக்காட்டுவது மனிதத்தை மனிதர்களிடம் உருவாக்குவதே உண்மைக் கல்வியின் நோக்கம் என்பதையே. அறிவுசார் சிந்தனையானது மனிதநேயத்துடன் இணைந்ததாக இல்லாதுவிடின் கல்வியின் நோக்கம் நிறைவேறுவது கடினம். அறிவு சார் சிந்தனையை உருவாக்குவதற்கு பரந்த வாசிப்புத் திறன் முக்கியம். தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிலிருந்து விடுவிப்பதற்கு தனித்துவமான, தனக்குத் தானே நீதிபதி யாகக் கூடிய வல்லமையை அளிப்பது இந்த பரந்து பட்ட வாசிப்புத் திறனே. வாசிப்புத் திறனை ஊக்குவிக்கக் கூடிய பிரதான தளம் நூலகம் என்பதில் எவ்வித கருத்து முரண்பாட்டுக்கும் இடம் இருக்காது. மனித வாழ்வைச் சரியான முறையில் கொண்டு நடத்துவதற்கு முக்கியமானது சிந்தனைகள், செயலுக்கு அடிநாதம் சிந்தனைகள். ஒவ்வொரு மனிதரின் வெற்றிக்கு அத்திவாரமாக இருப்பது அவரது எண்ணங்கள். நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்வதற்கு அவசியமானது வாசிப்பேயாகும்.
ஆசிசியம்

Page 12
குலைவு ஆளுமை
"குலைவு ஆளுமை” (Psychopathic Personality) என்பது உளவியலிலே தனித்த ஆய்வுக்கு உட்படுத்தப் படும் கருத்தாக்கமாகவுள்ளது. பல்வேறு விதமான தனித்துவங்களையும் எதிர்ப் பண்புகளையும் விலகல் நடத்தைகளையும் கொண் டோர் இப்பிரிவினுள்
அடக்கப்படுகின்றனர்.
ஆளுமை என் பது மனித இயக்கநிலைகளை உள்ளடக்கிய திரட்டிய ஓர் எண்ணக்கருவாகும். மனித வளர்ச்சியின்போது மாற்றங்களைக் கொண்டதாக அது நீட்சி கொண்டு செல்லும். சூழலோடு இடைவினைகள் நிகழ்த்தப்படும் நிலையில் சுயநலம் மிக்க எதிர்ப் பரிமாணங்கள் மேலெழ உளக் குலைவு ஆளுமை தோற்றம் பெறுகின்றது.
ஆளுமை பல்வேறு உறுபண்புகளின் (Traits) ஒன்றி ணைப்பால் ஆக்கம் பெறுகின்றது. எதிர்மறையான உறு பண்புகள் ஒன்றிணைக்கப்படும் பொழுது குலைவு ஆளுமை தோற்றம் பெறுகின்றது. சூழலோடு நிகழ்த்தப் படும் இடைவினையைப் பிறர்க்கு நலன்தராத நிலையில் மேற்கொள்ளல்குலைவு ஆளுமையின் வெளிப்பாடாகின்றது.
அந்நிலையில் எதிர்நிலை உறுபண்புகளின் ஒழுங்க மைப்பே ஆளுமை என்ற கருத்தும் முன்வைக்கப்படு கின்றது. ஒருவருக்குரிய உளப்பாங்குகள், விருப்புக்கள், ஆற்றல்கள், திறன்கள், உளச்சார்புகள், நடத்தைக் கோலங் கள் முதலியவற்றின் தொகுப்புநிலை ஆளுமையாக உரு வெடுக்கின்றது. அந்நிலையில் அவற்றின் இயக்கமும், விளைவுகளும் மாறுபாடான நிலையில் அமைதல் "குலைவு ஆளுமை” என்று பொதுவாகக் குறிப்பிடப்படும்.
சமூக எதிர் நடத்தைகளை வெளிப்படுத்துதல் குலைவு ஆளுமையின் ஒரு பரிமாணமாகக் கொள்ளப் படுகின்றது. ஆனால் எதிர்நடத்தைகளை விளக்குவதிலே பல சிக்கல்கள் இருக்கின்றன. எதிர்நடத்தை என்பது சார்புநிலைக்கு உட்பட்டது. மேலும் சில எதிர்நடத்தை கள் நல்லன உருவாக்கும் எதிர் நடத்தைகளாகவும் காணப்படுகின்றன. இதனைத் தலைச்சமூகவியலாளர் சுட்டிக் காட்டுகின்றனர்.
சமூக எதிர்நடத்தைகள் குறிப்பிட்ட நுண்மதி வீச்சில் உள்ளவர்களிடத்து மட்டும் காணப்படுதல் இல்லை. பல்வேறு நிலைகளில் நுண்மதி வீச்சுக் கொண்டவர் களிடத்தும் காணப்படுதல் குறிப்பிடத்தக்கது.
குலைவு ஆளுமை கொண்டோர் பிறருக்கு ஏற்படும் துன்பங்களையும், தாக்கங்களையும் பாதிப்புக்களையும் கருத்திலே கொள்வதில்லை. பிறரின் அவதியிலே தமக்கு
'ஜன-பெப் 2013

சபா.ஜெயராசா
ஏற்படக்கூடிய மகிழ்ச்சியையும் திருப்தியையும் மட்டுமே கருத்திற் கொள்வர்.
தமது அனுபவங்களையும் தொழிற்பாடுகளையும் புறவயமான மதிப்பீடுகளுக்கு உட்படுத்தாது, ஒற்றைப் பரிமாண நிலையிலே அகவயமான மதிப்பீடுகளை மேற்கொள்வர். தமது புலக்காட்சி மற்றும் தமக்குரிய அனுபவங்கள் முதலியவற்றை அடியொற்றிச் சமூகப் பயன்தரும் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத திணறல் நிலைக்கும் உள்ளாகியிருப்பர்.
திரிபடைந்த மனவெழுச்சிக் கோலங்கள் அவர்களி டத்தே மேலெழுதல் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் தமது மனவெழுச்சிகளைத் தாமே கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருப்பர். அவர்களின் செயற்பாடு கள் எதிர்வு கூற முடியாத நிலையிலே காணப்படும். மனவெழுச்சிக் கோலங்களைப் பொறுத்தவரை அவர்க ளிடத்து அதீத தளம் பல்நிலைகள் காணப்படுதலை உளவியலாளர் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒரு கணம் அமைதியாக இருத்தலும் மறுகணம் அதை உடைத்துக் கொண்டு குமுறிப் பாய்தலும் என்ற பெரும் ஊசலாட்டம்
அவர்களின் ஆளுமையில் உள்ளடங்கியிருக்கும்.
குலைவு ஆளுமை கொண் டோரது இலக்கும், நோக்கும், குறிக்கோளும் ஆற்றுகையும் தொடர்ந்து மாறிய வண்ணமும், உடனுக்குடன் ஏறுதல் இறங்குதல் கொண்டவையாயும் இருக்கும். எதுவித புறக்காரணமு மின்றி அகவய நிலையில் தமது தொழிற்பாடுகளை மாற்றிய வண்ணமிருப்பர். அவற்றை யாராயினும் புறவய நிலையிலே விமர்சித்தாலும் அதனைப் பொறுக்க முடியாத நிலையில் இருப்பர். எதிலும் தரித்து நிற்க முடியாத “உளவியல் நாடோடி"வாழ்க்கையை வாழந்த வண்ணமிருப்பர். அதனால் அவற்றை உற்றுநோக்கும் மற்றவர்களும் மனச்சுமைகளுக்கு உட்படுதல் உண்டு.
குலைவு ஆளுமை கொண்டவர்களது பாலியல் நடத்தைகளிலும் விலகல் காணப்படுதலை உளவிய லாளர் சுட்டிக்காட்டுகின்றனர். அவ்வகை ஆளுமை கொண்டவர்களது மணவாழ்க்கையும் வெற்றிகரமாக அமையாதிருத்தல் கண்டறியப்பட்டுள்ளது.
குலைவு ஆளுமையினரில் ஒட்டுமொத்தமான விலகற் பண்புகொண்டவர்களும் சமூகத்திலே காணப்
10
ஆசிசியம்

Page 13
டைம்
படுகின்றனர். ஒருசில விலகற் பண்பு கொண்டவர்களும் காணப்படுகின்றனர். விலகற் பண்புகளின் செறிவிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. மென்போக்குடைய விலகற் பண்புகளும் காணப்படுகின்றன. தீவிர இயல்பு டைய பண்புகள் கொண்டோரும் காணப்படுகின்றனர்.
“உளநோய் வாய்ப்பட்டவர்கள்” என்ற பாகுபாட்டி னரோடு இவர்களைச் சேர்க்க முடியாது அதீத சுயநலப் போக்கும், தன்மயப்பட்ட வாழ்வும், சமூகமயமாக்கற் குறைபாடுகளும், பறவயத் திறனாய்வு வழியே அனுபவங் களைத் திரட்டிக்கொள்ள முடியாத நிலையும் குலைவு ஆளுமை உருவாக்கத்திலே பெருமளவு செல்வாக்குச் செலுத்துகின்றன.
“குலைவு ஆளுமை” என்ற பிரிவில் உள்ளமைந்த வகைப்பாடுகளும் வேறுபாடுகளும் காணப்படுகின்றன. அதீத தன்னலமும் கொண்டவர்களாகச் சிலர் இருந்தா லும், பிறரைக் கவரக்கூடியவாறு நடந்து கொள்பவரும் இருக்கின்றனர். அந்நிலையிற் குலைவு ஆளுமை என்ற பொதுப்பகையான வகைப்பாட்டிலும் சிக்கல்கள் காணப்படுகின்றன.
நுண்மதி காரணமாக அவர்களுக்கு இசைவாக்கற் பிரச்சினை ஏற்படுதல் இல்லை. அதேவேளை சரியான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாத அதீத சுயநலப் போக்கு நுண்மதித் தொழிற்பாட்டுக்கு இடையூறாக அமைந்து விடுதல் உண்டு. சூழலுக்கு இசைந்தவாறு தம்மை ஆளுகை செய்யும் திறனை சிலவேளைகளில் இழந்து விடுவதன் காரணமாகக் குழப்பங்கள் மேலெழுத லும் உண்டு.
பிறரைத் தமது நுண் மதியால் ஏமாற்றி விடும் போக்கும் குலைவு ஆளுமை கொண்டவர்களிடத்துக் காணப்படும். தமக்குரிய நலன்களைப் பெற்றுக்கொள் வதற்குப் பிறரின் ஆற்றல்களைப் பயன்படுத்தும் வேளை தமது நுண் மதியை வினைத்திறனுடன் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலும் கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களுக் குரிய சீர்மிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலும் கடினமானது. ஏனெனில் சீர்மியருக்கு சரியான தகவல்களை வழங்காமலும், ஒத்துழையாமலும் ஏமாற்றும் செயல்முறைகளில் அத்தகையோர் செயற் படுதல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உயர்ந்த பண்பாடுகளையும், விழுமியங்களையும் பேணிப்பாதுகாப்பது போன்று செயற்பட்டுக்கொண்டு அதன் வழியாக உயர்வான தற்படிமத்தை உருவாக்கி, அதனைப் பயன்படுத்திப் பிறரை ஏமாற்றிக்கொள்ளும் திறன்களும் குலைவு ஆளுமை கொண்டோரிடத்துக் கண்டறியப்பட்டுள்ளது.
குலைவு ஆளுமை கொண்டோர் தமது ஆளுமைக் கோலம் சரியானதென்ற சுயநிறைவையும் கொண்டிருப் பர். அதன் காரணமாகத் தமக்குரிய மட்டுப்பாடுகளையும்
ஜன-பெப் 2013

தம் மிடத்தே காணப்படும் இடைவெளிகளையும் உய்த்தறிய முடியாதோராய் இருப்பர்.
தமது கருத்துக்களை வலிந்து பிறர்மீது திணித்து விடும் செயற்பாட்டினைக் கண்ணும் கருத்துமாக மேற் கொள்வர். அவர்களது செயற்பாடுகளும் முடிவுகளும் தவறானவை என்று பிறரால் சுட்டிக்காட்டப் பட்டாலும் அவற்றை உடனடியாக நிராகரித்து அவற்றுக்குரிய காரணங்களையும் தமக்குரிய நுண்மதியாலே தேடிக் கொள்வர். அவர்களால் முன்வைக்கப்படும் காரணங்கள் முற்றிலும் சுயநலவயப்பட்டதாயிருக்கும் நிலையில் பிறர் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையிலும் தமது நியாயங்களைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருப்பர்.
அந்நிலையில் அவர்களது ஆளுமையில் ஒரு தலைப்பட்சமான உறுதியும் வலிமையும் மேலோங்கியி ருக்கும். அந்த உறுதியை நிலைகுலையவிடாது பராமரித் துக் கொள்ளலும் அவர்களுக்குரிய தனித்துவமான குணவியல்பாகக் காணப்படும்.
தமக்குரிய சுயநலனை வென்றெடுப்பதற்காக சில வகையான விட்டுக்கொடுப்புக்களில் ஈடுபடும் குலைவு ஆளுமை கொண்டவர்களும் இருக்கின்றனர். அந்த விட்டுக் கொடுப்புக்களினால் அவர்களுக்குரிய தன்னல இலக்கு எட்டப்பட முடியாவிடில் உடனடியாகத் தமது விட்டுக் கொடுப்புக்களை நிறுத்திக் கொள்வர்.
குலைவு ஆளுமை கொண்டோரை இரண்டு பெரும் வகைப்பாட்டினுள் அடக்கும் செயற் பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அ. ஒரு பிரிவில் தமது சொந்த நலனின் பொருட்டு உயர்ந்த விழுமியங்களைக் கடைப்பிடித்துக் கவர்ச் சியை உருவாக்கிக் கொள்வோர் இடம்பெறுவர்.
ஆ. அடுத்த பிரிவில் போதாமை கொண்டு ஒடுங்கி நலிந்தவர்கள் இடம்பெறுவர். அவர்கள் பிறரைக் கவர்ந்து கொள்ள முடியாதவர்களாக இருப்பர்.
ஆனால் இருசாராரிடத்தும் அதீத தன்னலமும் தம்மை மட்டுமே குவியப்படுத்தும் நிரந்தரமான செயற்பாடுகளும் தொடர்ந்த வண்ணமிருக்கும்.
அதீத சுயநலம் கொண்ட ஆளுமைகளின் உருவாக் கம் சமூக இருப்பை அடியொற்றி மேலெழுகின்றது. சமூகத்தில் நிகழ்ந்த தனிச் சொத்துரிமையின் வளர்ச்சி மனித மனங்களிலும் ஆளுமையிலும் அதீத சுயநல நோக்கை மேலெழச் செய்துள்ளது. நிலமானிய சமூக வளர்ச்சியோடு தீவிரம் பெறத் தொடங்கி தனிச் சொத்துரிமை முதலாளிய சமூகத்தில் மேலும் உச்சங்களை எட்டியது. அவ்வாறான சமூக இருப்பிலிருந்தும் பின் புலத்திலிருந்தும் குலைவு ஆளுமைக் கோலங்கள் தோற்றமும் வலிமையும் பெற்று வருகின்றன.
ஆசிரியம்

Page 14
எஸ்.அதிதரன்
விளைதிறன் மிக்க 8
கற்றல் செயற்பாடுகளை விளைதிறனுடையதாக அமைத்துக் கொள்வதற்காக பல்வேறுபட்ட செயற்பாடு கள் காலத்திற்குக் காலம் முன் னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆரம்பத்தில் ஆசிரியர் மையமாக இருந்த கற்பித்தல் அணுகுமுறை பின்னர் மாணவர் மைய அணுகுமுறையாக (Student Centered) மாற்றம் பெற்றது. இது தவிர பிள்ளை நேய பாடசாலை (Chid friendly School) உட்படுத்தற்கல்வி (Inclusive Education), 5E கற்பித்தல் அணுகுமுறை, செயற்பாடுகளை அடிப்படை யாகக் கொண்ட கற்றல் (activity base Learning) போன்ற 'அணுகுமுறைகள் ஊடாக மாணவர்களது கற்றல் மீதான ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்வது, மாணவர் இடை விலகலை குறைப்பது, மாணவர் வரவினை அதிகரிப்பது ஆளுமையை விருத்தி செய்வது, போன்றவற்றை அடைய எதிர்பார்க்கப்படுகிறது. உயர்ந்த ஊக்கல் மாணவர் இடைவிலகல் வீதத்தை குறைவடையச் செய்வதுடன் மாணவர் அடைவு மட்டத்தை உயர்வடையச் செய்கிறது (New maan, BRYK & Nagaoka 2001) எவ்வாறாயினும் இவற்றின் விளைதிறன் என்பது உண்மையில் ஆசிரியர் வகிபாகம், அணுகுமுறை என்பவற்றிலேயே தங்கியுள்ளது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
ஆசிரிய வகிபாகம் கடத்துகை (Transmission) வகிபாகத்திலிருந்து கொடுக்கல் வாங்கல் வகிபாகம் (Transection), பரிமாற்றல் வகிபாகம் (Transformation) என்ற நிலையை அடைந்துள் ளதுடன் ஆசிரியர்
ஜன-பெப் 2013

நற்றலுக்கான ஊக்கல்
வசதியளிப்பவர் (Teacher is a Facilitator) ஆக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகிபாக மாற்றங்கள் மாணவர்களை மையப்படுத்துவதாகவும் மாணவர்களின் சிந்தனை விருத்தி, மற்றும் செயற்பாடு கள்சார் குழுநிலைக் கற்றல் என்பவற்றை முதன்மைப் படுத்துவதாகவும் அமைகின்றது. எனினும் சமகாலத்தில் ஆசிரியர்கள் இந்நோக்கங்களை சரியாக விளங்கிச் செயற்படுகின்றனரா என்பது கேள்விக்குரிய விடயமாகவே உள்ளது.
கற்றலின் நவீன போக்குகளில் பூரணமான தெளி வின்மை மற்றும் பரீட்சை மையமான தேர்ச்சி, அளவீடு என்பன ஆசிரியர்கள் இவ் அணுகுமுறைகளில் நம்பிக்கை வைத்துச் செயற்படுவதில் தடைக்கல்லாக அமைகிறது. பெருமளவான ஆசிரியர்கள் விரிவுரை முறையிலான கற்பித்தல் முறையிலேயே அதிக நம்பிக்கை கொண்டவர் களாகவும், மனனம் செய்வதன் மூலமாகவே கற்றல் நிகழ முடியும் என்ற கருத்தினை வலுவாக ஏற்றுக்கொள்பவர் களாகவும் இருந்து கொண்டு வகுப்பறைகளில் பணி யாற்றுகின்றனர். அதாவது மாணவர் மைய அணுகுமுறை களில் அவநம்பிக்கை கொண்டவர்களாக இவர்கள் உள்ளனர். அதாவது குழுமுறைக் கற்பித்தல் ஊடாக பாடப்பரப்பை பூர்த்தி செய்ய முடியாது விரிவுரை முறைக் கற்பித்தலே விளைதிறன் மிக்கது என்ற கருத்துநிலைப் பட்டவர்களாக இவர்கள் காணப்படுகின்றனர். இந்த இடத்தில் போலோ பிறேறி (Paulo Freire) குறிப்பிட்ட
12
-ஆசிசியம்

Page 15
கருத்தினை நோக்குவது முக்கியமானதாகும். "கல்வியில் வங்கிமுறை (Banking Systm of Education) என்ற கருத்தினை இவர் முன்வைத்தார். அதாவது வகுப்பறை யில் ஆசிரியர் அறிவை மாணவரிடத்து வைப்புச் செய்கிறார் (Deposit) மாணவர் பரீட்சை மண்டபத்தில் அதனை மீட்டெடுக்கிறான் (Withdraw). இக்கல்வி மாணவரிற்கு நூலியத்தை வாசிக்க கற்றுக் கொடுக் கின்றதே தவிர மாணவருக்கோ சமூகத்திற்கோ இதனால் பயன் எதுவும் இல்லை என்பதாக இவரது கருத்து உள்ளது.
எனவே உண்மையான கற்றல் என்பது மாணவர் கள் செயற்பாடுகள் மூலமாக தாமாக விளங்கி சிந்தித்து நிகழும் கற்றலே என்பதை ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். மாறாக பாடவேளை முழுவதும் தாமே சத்தமாக பேசி கற்பிப்பதன் ஊடாகவே உண்மையான கற்றல் நிகழும் என்ற சிந்தனையிலிருந்து விடுபட வேண்டும்.
விளைதிறன் மிக்க கற்றல் கற்பித்தலில் ஆசிரியர் களின் கற்பித்தலிற்கும் மேலாக அவர்களது ஊக்கல், உளவியல் அணுகுமுறைகளே பெருமளவு செல்வாக்குச் செலுத்துகின்றன. கற்றல் என்பது வகுப்பறைக்குள் இடம்பெறுகின்ற ஒன்று; அது மனனம் செய்வதனூ டாகவே நிகழ்கின்றது என்ற கருத்துள்ள ஆசிரியர்கள் பிள்ளைகளின் ஆளுமையின் மீது பாரிய சவாலாக மாறிவிடுகின்றனர்.
ஆளுமை வகையின் இரு பிரதான வகைகளாக (Optimistic) நம்பிக்கை ஆளுமைக்கோலம், (Pessimistic) நம்பிக்கை குலைவு ஆளுமைக் கோலம் என்பன விளங்குகின்றன. இதில் பிள்ளைகள் நம் பிக்கை ஆளுமைக் கோலம் மிக்கவர்களாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இவ் நம்பிக்கை ஆளுமைக் கோலத்தையு டைய பிள்ளைகள் இயல்பாகவும், துணிச்சலாகவும், சாமர்த்தியமாகவும் செயற்படும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பர். எல்லாச் செயற்பாடுகளிலும் மட்டுமல்ல தோல்விகளிலும் ஒரு நன்மை இருக்கின்றது என்று நம்புபவர்களாக இருப்பர்.
நம்பிக்கை குலைவு ஆளுமைக் கோலத்தைக் கொண்ட பிள்ளைகள் வகுப்பறைகளில் பொதுவாக பின்வரிசையில் அல்லது மறைவான இடங்களில் அமர்பவர்களாகவும், தம்மால் சரியாக செய்ய முடியாது என்ற கருத்தினை கொண்டவர்களாகவும் இருப்பர். இவர்கள் தாமாக முன்வந்து பொறுப்புக்களை ஏற்க முன்வராதவர்களாகவும் செயற்பாடுகளில் இருக்கக் கூடிய ஆபத்துக்களையே முன்னிலைப்படுத்துபவர்க ளாகவும், தாம் அடைய வேண்டிய இலக்கு பற்றிய
( ஜன-பெப் 2013 |

தெளிவற்றவர்களாகவும் இருப்பர். இவ்வகை ஆளுமைக் கோலமுடைய பிள்ளைகள் கல்வியிலும் வாழ்க்கையிலும் தோல்வியடைபவர்களாக இருப்பர்.
இவ் ஆளுமைக் கோலங்கள் பிறப்பினால் அன்றி பெருமளவிற்கு வாழ்க்கைப் பராயத்திலேயே பிள்ளைக ளிடம் கட்டியெழுப்பப்படுகின்றது. கிராம - நகர வேறுபாடுகள், பெற்றோரின் கல்வி, தொழில், மற்றும் சமூகத் தொடர்புகள், சகபாடிகள், ஆசிரியர்கள் போன்ற காரணிகளே இவ்வாறான ஆளுமைக் கோலங்களை பிள்ளைகளிடத்தே வைப்புச் செய்கின்றன. எவ்வாறாயி னும் பிள்ளைகளிடத்தே (Optimistic) ஆளுமைக் கோலத் தினை ஏற்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு மிகக் காத்திரமானதாகும்.
எனவே ஆசிரியர்கள் வெற்றிகரமான கற்றல் கற்பித்தலுக்கான அடிப்படையாக அமையக்கூடிய நம்பிக்கை ஆளுமைக் கோலத்தினை பிள்ளைகளிடத்தே வளர்த்தெடுக்க வேண்டும். இந்நம்பிக்கை ஆளுமைக் கோலத்தினை வளர்த்தெடுத்துவிட்டால் பிள்ளைகள் ஆர்வத்தோடு கற்பவர்களாக, தாமாக செயற்பட்டு கற்பவர்களாக, கற்றலுக்காக தம்மை தயார்படுத்துபவர் களாக பன்முக ஆளுமையை விருத்தி செய்பவர்களாக தம்மை அமைத்துக்கொள்வர். இந்த நிலையில் ஆசிரியரை மாணவர்கள் ஒரு வசதியளிப்பவராகவே பயன்படுத்த முற்படுவர். இது ஆசிரியரின் பணியை இலகுவான தாகவும், விளைதிறன் மிக்க கற்றல் கற்பித்தலை - மேற்கொள்ளவும் சந்தர்ப்பம் அளிக்கிறது.
நம்பிக்கை ஆளுமையை கட்டியெழுப்புவதில் ஆசிரியரின் உளவியல், ஊக்கல் அணுகுமுறைகளே கணிசமான செல்வாக்கு செலுத்தவல்லன. பொருத்த மான, போதுமான, சந்தர்ப்பத்திற்கு ஏற்ற ஊக்கல் செயற்பாடுகள் பிள்ளைகள் தம்மிடையே உயர்ந்த இலக்குகளை ஏற்படுத்திக்கொள்ள மட்டுமன்றி அதை அடைவதற்கான சுயமான செயற்பாடுகளிற்கும் இட்டுச் செல்லும், பொதுவாக இன்று பாடசாலைகளில் பரிசளிப்பு விழாக்கள், போட்டிகளில் வெற்றி பெறுவோரிற்கான சான்றிதழ் வழங்கல், மற்றும் பொருத்தமான செயற்பாடு களிற்காக கைதட்டுதல் போன்றவற்றுடன் ஊக்கல் செயற்பாடுகள் ஏறத்தாழ முற்றுப்பெற்றுவிடுகின்றன. 1. தேவைகளை அங்கீகரித்தல்/ ஏற்றுக்கொள்ளல்
மாணவர்கள் பல்வேறு அடிப்படை தேவைகளைக் கொண்டிருப்பர் இத்தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டியது மிக அவசியமானதாகும். இத்தேவைகள் நிறைவு செய்யப்படும்போதே கற்றல் நிகழ முடியும். இது தொடர்பாக Abraham maslow என்பார் முன்வைத்த
13
ஆசிசியம்

Page 16
ஊக்கல் கொள்கை தொடர்பாக ஆசிரியர்கள் கவனப் செலுத்த வேண்டும். உடலியற் தேவைகள், காப்புத் தேவை, சமூகத் தேவைகள், கணிப்புத் தேவைகள் சுயதிறன் விளைவுத் தேவைகள் என ஐந்து வகையான தேவைகளை பட்டியலிட்டார் இவை ஒவ்வொன்றும் நிறைவு செய்யப்படும் போதுதான் அடுத்த கட்ட தேவை எழும் என்றும் குறிப்பிட்டார்.
சுயதிறன் தேவைகள்
கணிப்புத் தேவைகள்
சமூகத் தேவைகள்
- காப்புத் தேவைகள்
- உடலியற் தேவைகள்
எனவே ஆசிரியர்கள் பிள்ளைகளை இனங்கண்டு அவர்களது தேவைகளை குறிப்பாக அடிப்படைத் தேவைகளை நிறைவு செய் வது அவசியமாகும் இத்தேவைகளை ஏற்றுக்கொள்வது அதற்காக முடிந்தளவு அதனை நிறைவு செய்வதானது பிள்ளைகளிடத்து வலுவான ஊக்கலாக அமையும். 02. ஆசிரியர் எதிர்பார்ப்புக்கள்
ஆசிரியர்களின் எதிர்பார்ப்புக்களிற்கும் பிள்ளை களின் கற்றல் அடைவுகளிற்கும் இடையே நேரான தொடர்பு இருப்பது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட் டுள்ளது. ஆசிரியர் எதிர்பார்ப்புக்களை மாணவர்கள் விளங்கிக் கொள் பவர்களாகவும் அதற் கேற் பவே அவர்கள் தமது பதிற்குறிகளை வெளிப்படுத்துபவராக வும் மாணவர்கள் இருப்பர். ஆற்றல் குறைவான பிள்ளைகள் சோதனைகளில் ஆசிரியர்களின் எதிர்பார்ட் பிற்கு ஏற்ப செயற்படும் நிலை காணப்படுகின்றது மாணவரிற்கு சார்பான பதிற் குறிகளை ஆசிரியர் வெளிப்படுத்தினால் மாணவரும் அதற்கேற்ப துலங்கு வார் (Rober; 1948). எனவே மாணவர்கள் தொடர்பாக ஆசிரியர்கள் நேரான எதிர்பார்ப்புக்களை (Positiv thinking) கொண்டிருப்பதன் மூலம் பிள்ளைகளை உயர் அடைவை நோக்கி அழைத்துச் செல்ல முடியும் பிள்ளைகள் பற்றிய நேரான எதிர்பார்க்கை பிள்ளை ளிற்கு வலுவான ஊக்கலாக அமையும் என்பதை ஆசிரியர்கள் கருத்தில்கொண்டு அதற்கேற்ப செயற்பட வேண்டும். குறிப்பாக எல்லாப் பிள்ளைகளும் கற்கச் கூடியவர்களே, ஒவ்வொரு பிள்ளையிடத்தும் சிறப்பான ஆற்றல்கள் உண்டு என்பன போன்ற நேரான எண்ணட் பாங்குடன் ஆசிரியர்கள் இருப்பது மாணவர் உயர் அடைவுக்கான ஊக்கலாக அமையும்.
ஜன-பெப் 2013

03. நாம் தனித்துவ ஆற்றல் மிக்கவர் என்ற உணர்வை
வளர்த்தல்
ஒவ்வொரு பிள்ளையும் தனியாள் வேறுபாடுகளை கொண்டது என்பதையும் ஒவ்வொரு பிள்ளையும் வெவ்வேறு வகையான சிறப்பாற்றலை கொண்டுள்ளனர் என்பதை ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்பவர்களாகவும் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு சிறப்பாற்றல், தனித்துவம் மிக்கவர்கள் என்பதையும் பிள்ளைகள் உணரச் செய்ய வேண்டியது ஆசிரியரின் பிரதான ஊக்கல் பணியாகும். நாம் சிறப்பானவர் நமக்குள்ளே தனித்துவ ஆற்றல்கள் புதைந்திருக்கின்றன என்ற எண்ணப்பாங்கு பிள்ளைகளிடத்தே கட்டமைக்கப்பட்டால் அவர்களி டத்தே தன்னம்பிக்கையும் தற்துணிவும் ஏற்படும். இது அவர்கள் தம்மைப்பற்றி நேரான சிந்தனைகளை அமைத்துக் கொள்ள வழியமைப்பதாக அமையும். எனவே ஆசிரியர்கள் நாம் விசேடமானவர் என்ற மனப்படிமத்த மாணவர்களிடத்தே ஏற்படுத்த வேண்டும். . 04. நாம் அழகானவர் என்ற உணர்வை ஏற்படுத்தல்.
பிள்ளைகள் தமது வாழ்க்கையின் மீது தமது எதிர்காலம் மீது நம்பிக்கை கொண்டு செயற்பட்டா லேயே அவர்களது நிகழ்கால செயற்பாடுகள் பயனுறுதி மிக்கதாக அமையும். சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வு கள் பிள்ளைகளிடத்தே வேறுபாடுகளை உருவாக்கி வருகின்றன. பிள்ளைகள் தாழ்வு மனப்பாங்கினாலும் அதன் தொடர்ச்சியான உள் முரண்பாடு, நெருக்கீட்டி னாலும் விரக்தி நிலைப்பட்டவர்களாக காணப்படுகின்ற - னர். நாம் அழகற்றவர், நாம் மற்றவர்கள் போல அழகாக இல்லை என்றதான மனப்பாங்கு காரணமாக பிள்ளைகள் வாழ்க்கை மீதான நம்பிக்கையற்றவர்களாக இருப்பதை காணலாம். எனவே நாம் அழகானவர் என்ற சிந்தனையை மாணவர்களிடத்தில் ஆசிரியர்கள் வளர்த்தெடுக்க வேண்டும். 05. அங்கீகரித்தல்/ ஏற்றுக்கொள்ளல்
Tக
மாணவர் செயற்பாடுகளை அங்கீகரித்தல் ஊக்கலின் ஒரு அம்சமாகும். மாணவர்களது செயற்பாடுகளை நியாயப்படுத்தி அதற்கான அங்கீகாரத்தை வழங்குவது அவர்களது தொடர்ச்சியான செயற்பாடுகளில் மிக சிறந்த அடைவுகளிற்கு இட்டுச் செல்லும். ஒவ்வொரு செயலிலும் இருக்கக்கூடிய நல்ல அம்சங்களை, அதிலுள்ள நியாயத்து வத்தை ஏற்றுக்கொள்வது பிள்ளைகளை ஈடுபாட்டுடன் கற்க உதவும் என்பதை ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். உதாரணமாக மாணவர்கள் ஒரு வினாவிற்கு தவறான விடையை அளித்தால் கூட அது தவறு என்று
14.
ஆசிரியம்

Page 17
குறிப்பிடாது நீங்கள் கூறியதை இவ்வாறு கூறினால் மிகப் பொருத்தமாக இருக்குமல்லவா? என்று பொருத்தமான விடையை ஆசிரியர் முன்வைக்க வேண்டும். ஆசிரியரின் அங்கீகாரம் தனது ஆற்றலை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற உந்தல் நிலைக்கு மாணவரை இட்டுச் செல்லும்.
06. பாராட்டுதல்
பாராட்டுதல் என்பது வயது வேறுபாடுகளிற்கு அப்பால் மனிதர்களின் விருப்புக்குரிய ஓர் அம்சமாகும். எனினும் வகுப்பறைகளிலும் பாடசாலைகளிலும் போதுமான பாராட்டுதல் எமது பிள்ளைகளிற்குக் கிடைப்பதில்லை. மிக மிக வரையறுக்கப் பட்ட அளவிலேயே பாராட்டு வழங்குதல் காணப்படுகின்றது. மேற்கு நாடுகளிலேயே பிள்ளைகளிற்கு சிறப்பான முறையில் பாராட்டுதல்கள் வழங்கப்பட்டாலும் கீழைத்தேய நாடுகளில் இது வறிய நிலையிலேயே காணப்படுகின்றது. மேலைநாடுகளில் எதிர்பாராமல் பிள்ளைகள் செய்துவிடுகின்ற பொருத்தமற்ற நடத்தை களை கூட பாராட்டி பிள்ளைகளை மனஅழுத்தத்தில் இருந்து விடுவித்து விடுகின்றனர். அடிக்கடி அவர்கள் Very nice, Very good, Beautiful, Excellant, Wonderfull, Weldone இவை போன்ற சொற்களினூடாக பிள்ளை களை பாராட்டி அவர்களிடத்து இருக்கின்ற திறன்களை மேன்நிலைக்கு இட்டுச் செல்கின்றனர். ஆனால் எமது நாடுகளில் பாராட்டுதலை வழங்காதிருப்பது, அல்லது தண்டனை வழங்குவது என பிள்ளையிடத்து மன அழுத்தத்தையும் ஆளுமைக் குலைவையுமே ஆசிரியர் கள் ஏற்படுத்தி விடுகின்றனர்.
எனவே சின்னச் சின்னச் சொற்களை பயன்படுத்தி பிள்ளைகளை பாராட்டுவதன் மூலம் அதியுயர் செயலாற் றல்களை அவர்களிடத்து வளர்த்தெடுக்கலாம் என்பதில் நம்பிக்கை கொள்ள வேண்டும். இன்னொரு புறமாக பிள்ளையை மற்றொரு பிள்ளையுடன் ஒப்பிட்டு அதனைப் பாராட்டுவதை தவிர்த்து ஒரு பிள்ளையின் தற்போதைய நிலையை கடந்தகால நிலையுடன் ஒப்பிட்டு “முன்னரைவிட சிறப்பாக செயற்படுகிறாய்” "முன்னரை விட இப்போது உனது எழுத்து மிக அழகாக இருக்கிறது” இவ்வாறாக கடந்தகால அடைவுகளோடு ஒப்பிட்டு பிள்ளைகளை பாராட்டும்போது பிள்ளைதான் இன்னும் நன்றாக செயற் பட்டு மேலும் மேலும் பாராட்டை பெறவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் சிறப்பாக செயற்படும். எவ்வாறாயினும் பகிரங்கமாக, வெளிப்படையாக பாராட்டும் வழமையை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும்.
ஜன-பெப் 2013

07. இலகுவானது என்ற சிந்தனையை ஏற்படுத்தல்
பொதுவாக எமது பிள்ளைகளிடத்து கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பாடங்கள் கடின மானது என்ற கருத்தமைவை வளர்த்துவிட்டதில் ஆசிரியர்களிற்கு கணிசமான பங்குண்டு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் சாதரணமாக கூறுகின்ற விடயம் “கணிதம், விஞ்ஞானம் மற்றப்பாடங் கள் மாதிரி இல்லை. கடினமாகப் படித்தால் தான் சித்தியடைய முடியும்” இது போன்று கூறுவதன் ஊடாக மாணவர்களிடத்து இப்பாடங்கள் பற்றிய எதிர்மறைச் சிந்தனைகளை வைப்புச் செய்துவிடுகின்றனர். இதனை ஆசிரியர்கள் முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். மாறாக “மிக இலகுவானது”, “Very intersting Subject”, “ஒரு கஷ்டமும் இல்லை” போன்றவாறான சொற்கள் மூலமாக இவ்வாறான பாடங்கள் இலகுவானவை என்ற மனப்படிமத்தை பிள்ளைகளிடம் ஏற்படுத்தினால் பிள்ளைகள் இவ்வாறான பாடங்களிலும் உயர்வான
அடைவுகளை நிச்சயம் பெறுவர். 08. நேர் சிந்தனைகளை ஏற்படுத்துதல்
எமது கல்வி முறை, சமூக அமைப்பு என்பன நேர் சிந்தனைகளிற்கு பதில் எதிர்மறைச் சிந்தனைகளையே வளர்த்தெடுக்க முற்படுகின்றன. இச்சிந்தனைகள் தன்னம்பிக்கை நிலையிலும் விழுமிய நிலையிலும் பிள்ளைகளிடத்து செல்வாக்குச் செலுத்தவல்லன. அதாவது என்னால் முடியும், நிச்சயமாக செய்வேன், நான் முயற்சி செய்து பார்க்கிறேன் என்பதானவை தன்னம்பிக்கையையும், எமது நாடு, எமது சொத்து, நன்று செய்ய வேண்டும், பெரியோரை மதிக்க வேண்டும் போன்ற விழுமிய நேர் சிந்தனைகளையும் குறிக்கின்றன. எதிர்மறைச் சிந்தனையுடைய பிள்ளைகள் "என்னால் முடியாது”, "எனக்குத் தெரியாது” போன்றதான சொற் களை அதிகளவில் பயன்படுத்துபவர்களாக எதற்கும் முன்வராதவர்களாக தன்னம்பிக்கையற்றவர்களாக இருப்பர். எனவே ஆசிரியர்கள் நேர் சிந்தனையை பிள்ளைகள் வளர்க்கக்கூடிய வகையில் அவர்களிடத்து
நேர்மறை மனப்பாங்கை விருத்தி செய்ய வேண்டும்.
09. மாணவர்களுடனான இடைவினை
மாணவர்களுடன் ஆசிரியர்கள் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருப்பது, அவர்களது சுக துக்கங் களில் பங்கெடுப்பது, அவர்களது தனிநலன்களில் கவன மெடுப்பது, பாரபட்சம் காட்டாமை, மாணவர்களுடன் இணைந்து செயற்படுவது போன்றதான செயற்பாடுகள் மாணவர்களிற்கு சிறப்பான ஊக்கலாக அமையும். ஆரம்ப காலங்களில் ஆசிரியர் - மாணவர் இடைவினை நெருக்கமாக இருந்ததாயினும் இன்று ஆசிரியர் -
15 ஆசிசியில்

Page 18
மாணவர் இடைவெளி அகன்று செல்வதே அடைவு களின் வீழ்ச்சிக்கும் காரணமாக உள்ளது. பிள்ளையும் ஆசிரியரும் ஒரே நோக்கத்திற்கான ஒரு செயற்பாட்டின் பங்காளர்களாக இருப்பதால் ஆசிரியர்கள் மாணவர் களுடன் நெருக்கமான இடைவினைகளை கொண்டிருப் பது மாணவர்களது கற்றல் ஈடுபாட்டையும் ஆர்வத்தை யும் அதிகரிக்கச் செய்யும். 10. மாணவர் கருத்துக்களை செவிமடுத்தல்
மாணவர்களை கற்றல் செயற்பாட்டின் பிரதான தரப்பினராக கருதி அவர்களது கருத்துக்கள், சிந்தனை களிற்கு வாய்ப்பளித்து அவற்றை செவிமடுப்பவராக இருக்க வேண்டும். பாட விடயங்களில் பிள்ளைகள் வினாக்களை கேட்டு சந்தேகங்களை தீர்ப்பதற்கு போதுமான சந்தர்ப்பங்களையும், நேரத்தினையும் வழங்க வேண்டும். அவற்றை திருத்தங்களுடனாவது அங்கீகரிக்க வேண்டும். 11. அடைவுகளை காட்சிப்படுத்துவது/ வெளிப்படுத்துவது
மாணவர்களது அடைவுகள் மற்றவர்கள் பார்க்கக் கூடியவாறு, அறியக் கூடியவாறு காட்சிப்படுத்தல் / வெளிப்படுத்தப்படல் வேண்டும். இலங்கையின் ஆரம்ப வகுப்பு கலைத்திட்ட அம்சங்களில் ஒன்றாக காட்சிப் படுத்துவதற்கான வசதி வகுப்பறையில் இருக்க வேண் டும் என்பது வலியுறுத்தப்படுகின்றது. பிள்ளைகளின் அடைவுகள், சாதனைகள், ஆக்கங்கள், பிறர் அறியும் வகையில் காட்சிப்படுத்தப்படும் போது அவர்களிற்கு மிகுந்த திருப்தியும், இதனைவிட சிறப்பாக மேலும் செயற்பட வேண்டும் என்ற உணர்வையும் பங்குபற்றாத மாணவர் களிற்கு தாமும் தமது ஆக்கங்களை காட்சிப் படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்தும். எனவே அடைவுகளை காட்சிப்படுத்துவது சிறந்த ஊக்க லாக அமைவதுடன் உயர் அடைவுகளிற்கும் இட்டுச் செல்லும். 12. உயர்ந்த எதிர்ப்பார்ப்புக்களை உருவாக்குவது
மாணவர்கள் தம்மிடையே உயர்ந்த எதிர்பார்ப்புக் களை அமைத்துக்கொள்ள ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும். அதாவது தமது இலக்குகளை உயர்வாக அமைத்துக் கொள்ளவும் தமக்கான mission, vission என்பவற்றை உருவாக்கவும் வழிப்படுத்த வேண்டும். உயர்ந்த எதிர்பார்ப்புக்கள் உயர்ந்த அடைவுகளிற்கு இட்டுச் செல்வதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. உதாரணமாக ஆரம்ப நிலையிலேயே வைத்தியராக வரவேண்டும், பொறியியலாளராக வரவேண்டும் என்ற தான எதிர்பார்ப்புக்களை உருவாக்கினால் அவர்களது செயலாற்றல்களும் அவ்விலக்குகளை மையப்படுத்திய தாக அமையும். பிள்ளைப்பருவ விளையாட்டுக்களில்
'ஜன-பெப் 2013

இவ் உயர் எதிர்பார்ப்புக்கள் கட்டுமை செய்யப்படுகின்ற
மையை காணலாம். உதாரணமாக பிள்ளைகளிற்கு - ரெதஸ்கோப்பை கொடுத்து விடையாட செய்வதன் மூலம் தான் ஒரு வைத்தியராக வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துவர். அதுபோல கட்டட அமைப்புக்களை பொருத்தும் விளையாட்டுக்கள் மூலமாக பொறியியலா ளராக வரவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பை பிள்ளைப் பருவ விளையாட்டுக்கள் மூலமும் ஏற்படுத்த முடியும்.
13. தாங்கள் கற்றல் சமூகத்தின் மதிப்பு மிக்க உறுப்பினர் என்ற உணர்வை ஏற்படுத்துதல் அதாவது நாளைய தலைவர்கள், நாளைய சமூகத்தின் கட்டுமானிகள், சமூகம் தங்கள் மீது உயர் கணிப்பு ஒன்றினை கொண்டிருக்கின்றது என்ற உணர்வுகளை பிள்ளைகளிடத்து ஏற்படுத்த வேண்டும்.
14. மாணவர் விருப்பு வெறுப்புக்களை அறிந்துகொள்வது.
15. பிள்ளைகள் ஏற்றுக் கொள்ளக்கூடிய முன்மாதிரியாகக் தமது செயற்பாடுகளை வடிவமைத்துக் கொள்வது.
16. பிள்ளைகளின் நல்ல செயற் பாடுகளை - முன்மாதிரியாக காண்பிப்பது
17. இலக்குகளை வடிவமைப்பதில் மாணவர்களை பங்கெடுக்கச் செய்வது.
18. சுய ஒழுக்கத்திற்கான வழிகாட்டல்களை வழங்குவது
19. தேர்ச்சிகளை மதிப்பிடுகையில் மாணவர் சார்பு நிலையில் மதிப்பிடுதல்.
20. மாணவர்களிற்கு விருப்பமான கற்பித்தல் முறைகளை பயன்படுத்துவது.
இவை போன்ற இன்னோரன்ன செயற்பாடுகள் ஊடாக அதாவது நேரான ஊக்கலின் ஊடாக மாணவர் களது கற்றல், மற்றும் ஆளுமை விருத்தியை வெற்றிகர மாக முன்னெடுக்க முடியும். நிலையான நீடித்து நிற்கக் கூடிய கற்றல் மாணவர்கள் ஈடுபட்டு, செயற்பட்டு, சிந்தித்து நிகழ்கின்ற கற்றலாகும். எனவே இச் செயற்பாடு கள் வினைத்திறனாக இடம்பெற ஆசிரியர்கள் ஊக்கலை சிறப்பாகப் பயன்படுத்தி தம்மை வசதியளிப்பவர் என்ற நிலையில் வைத்து மாணவர்களின் கற்றலிற்கு வழிகாட்டு வது விளைதிறனுள்ள கற்றலிற்கு வழிகோலுவதாக அமையும். ஒவ்வொரு ஆசிரியரும் வகுப்பறைகளில் ஊக்கலின் விளைவுகளை அறிய சிறு செயலாய்வாக இதனை மேற்கொண்டு அடைவுகளில் மாற்றங்களை காண்பது அவசியமானதாகும்.
16
ஆசிசியம்

Page 19
இடம்மாறும் இணைக்கலைத்து
மாணவர்களின் நடத்தைக் கோலங்களை தீர்மானிக் கின்ற மிகப் பிரதான காரணிகளில் பாடசாலை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளும், மற்றும் அவரது பாடசாலை, குடும்பச் சூழல் என்பனவும் செல்வாக்குச் செலுத்து கின்றன. பாடசாலையின் கற்றல், கற்பித்தல் செயற்பாடு கள் பொதுவாக அறிகை சார்ந்த விடயங்களை குவியட் படுத்தியதாக இருப்பினும், தகவல் பொருளாதாரத்தோடு இணைந்த உலக மயமாக்கல் சவால்களை எதிர்கொண்டு வாழ்வதற்கு ஒவ்வொரு மாணவனும் உயர் அறிவாற்றல் களும் அதனோடு இணைந்த திறன்களும் உடையவர் களாக வலுவூட்டப்படுதல் இன்றியமையாதனவாகும். இதற்காக கல்விச் செயன்முறைகள் நன்கு திட்டமிடப் பட்டு, தேசம் எதிர்பார்க்கும் மனிதவள விருத்தியினை பாடசாலைகள் முன் னெடுக்க வேண் டும். இந்த வகையில் தற்காலத்தில் கல்வியியலாளர்களினால் வடிவமைக்கப்படுகின்ற பாடவிதான செயற்பாடுகளும், இணைப்பாடவிதானச் செயற்பாடுகளும், மாணவர்களின் ஆளுமை விருத்தியில் எத்தகைய பங்கினை ஆற்றுகின் றன? தேசிய கலைத்திட்ட குறிக்கோள்களிலிருந்து பாடசாலைகள் விலகி நிற்கின்றனவா? அன்றி அறிவுசார் விருத்தியில் செலுத்தும் அதேயளவு கரிசனை இணைக் கலைத்திட்டச் செயற்பாடுகளிலும் பாடசாலைகள் செலுத்துகின்றனவா? என்ற எழுவினாக்கள் தொடர்பில் அதிக கவனக் குவிப்பினை கல்விச் சமூகமும், கல்வி முதலீட்டாளர்களும் செலுத்துதல் காலத் தின் கட்டாயமாகும். ஆளுமையும் மாணவர்களும்
ஆளுமை பற்றிய வரைவிலக்கணங்களிலே ஹாவார்ட் பல்கலைக் கழகப் பேராசிரியர் G. W ஒல்போர்ட் வகுத்துள்ள வரைவிலக்கணம் கல்வி உலகில் சிறப்பானதாகும். இதன்படி “ஒருவரின், அவருக்கே உரிய நடத்தை, சிந்தனை ஆகியவற்றை நிச்சயிக்கின்ற அவரது உளநிலை, உடல் சார்ந்த அமைப்புக்களின் இயங்கியல் கூட்டமைப்பே ஆளுமை” என்கின்றார். இவரது வரைவிலக்கணப்படி ஆளுமையின் ஆறு நிலைகளாக,
1. ஆளுமை நடத்தைகளின் கூட்டமைப்பு
2. ஆளுமை எப்போதும் மாறுபடக் கூடியது
ஜன-பெப் 2013

நிட்டம்
வீ.கே.ரவீகரன்
3. ஆளுமையினது அடிப்படை ஒருவரின் உளநிலை,
உடல் நிலை சார்ந்தவைகளே ஆகும்
4. ஆளுமையானது ஒரு நோக்கமுடைய நடத்தை
ஆகும் ஆளுமையானது ஒருவருக்கு மட்டுமே சொந்தமானது ஆளுமையானது சிந்தனையிலும் நடத்தையிலும் வெளிப்படுவதொன்றாகும்
இத்தகைய ஆளுமையினது நிலைகள் மாணவர் களுக்கு பள்ளிவாழ்வினூடாக விருத்தியாக்கப்படல் முக்கியமானதாகும். இதற்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் இணைக்கலைத்திட்டமே ஆகும். இணைக் கலைத் திட்டத்தினை வரைவிலக்கணப்படுத்தும் போது, “பாடசாலைகளின் வகுப்பறைப் போதனைக்கு அப்பால் உடல் வளர்ச்சி, உள் வளர்ச்சி, சமுதாய வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி, ஆகியவற்றை வளர்க்கக்கூடிய பல்வேறுபட்ட நிகழ்ச்சித் திட்டங்களில் மாணவர்களைப் பங்குபற்றச் செய்வதன் மூலம் மாணவரை ஒரு முழு மனிதராக்கும் செயற்றிட்டமே இணைப்பாடவிதானம் என வரையறை செய்யலாம். தனியே வரையறுக்கப்பட்ட பாடப் புத்தகங்களினால் வழங்கப்பட முடியாத பல ஆளுமைத் திறன்களினை இவ் இணைக் கலைத்திட்டம் ஊடாக வழங்குதல் இயலுமானதாகும். குறிப்பாக,
© பூரண ஆளுமை விருத்தி
தலைமைத்துவ திறன்கள்
© சமூகநல மனப்பாங்குகள் © குழு ஒருமைப்பாடு
© ஓய்வு நேரத்தினை பயனுள்ள பணிகளில் செலவிடல்
© உடல், உளவளர்ச்சி © ஒழுக்க விழுமிய பண்புகள் © அழகியல் உணர்வுகள்
17
ஆசிசியம்

Page 20
© சமூக கலாச்சார விருத்தி பற்றிய உணர்வுகள் © விசுவாசமான போட்டி மனப்பாங்குகள்
0 இலக்குகளை அடையும் தூண்டல்
© மற்றையோர் நிலைக்குள்ளாகும் பண்பு © நேர முகாமைத்துவ திறன்கள் © வெற்றி தோல்விகளை ஏற்கும் மனப்பாங்கு © அணி ஒன்றினை வழிநடாத்தும் ஆற்றல்
போன்ற பல்வேறு திறன்விருத்திகளை வழங்கு வதில் இணைபாடவிதான செயற்பாடுகள் பாடசாலை களில் துணைநிற்பதோடு நாளைய சமூகத்தின் நற்பிரஜை களை பள்ளிகள் வெளியிடவும், தரங் கொண்ட வெளியீடாக மாணவர் திகழவும் இணைக்கலைத்திட்டச் செயற்பாடுகள் பூரணமாக நடைமுறைப்படுத்தல் அவசியமானதாகும்.
இணைக்கலைத்திட்டமும் இன்றைய பாடசாலைகளும்
வேறுபட்ட திறன்விருத்தி நோக்கங்களுடனான இணைக்கலைத்திட்டச் செயற்பாடுகள் இன்று பாட சாலைகளில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படு கின்றனவா? என நோக்குமிடத்து சில முன்னணிப் பாடசாலைகள், எதிர்காலத்திற்கான திட்டங்களினை முற்கூட்டியே தீட்டி தமது நாட்காட்டிகளில் பிரசுரித்துக் கொண்டு இணைக்கலைத்திட்டச் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடைமுறைப்படுத்தி வரு வதனை காணலாம். எனினும் பெருமளவான பாடசா லைகள் இதில் கூடுதல் கவனம் செலுத்துவதில்லை. இதற்குரிய முக்கிய காரணங்களாக, 0 பாடசாலைகளின் நிர்வாகம் இணைக்கலைத்திட்டச்
செயற்பாடுகளுக்கு அனுமதியும், ஊக்கமும் வழங்காமை. © பரீட்சையினை மையமாக கொண்ட நடவடிக்கை கள் ஊடாக மட்டுமே பாடசாலையின் வெளியீட்டுத் தரங்களை உயர்த்திக் காட்ட முற்படுதல்.
0
சில ஆசிரியர்கள் கற்பித்தல் பணியுடனான கடமை ஒன்றாக இணைப்பாடக் கலைத்திட்டத்தினை நோக்காது தனியே சுமையான பணியொன்றாக கருதிவிடல்.
© பிள்ளைகளது பரீட்சை முடிவுகளை இணைக் கலைத்திட்டச் செயற்பாடுகள் பாதிக்கும் என பெற்றோர் சிந்தித்தலும், இதன் வழி மாணவர் செயற்பாட்டிற்கு தடைவிதித்தலும்.
ஜன-பெப் 2013 |

பாடசாலை மன்றங்கள், கழகங்களில் முன்னின்று தலைமையேற்று நடத்தும் மாணவர்களை சக மாண வர்களும், சில ஆசிரியர்களும் விமர்சித்தலும் உளரீதியான நெருக்கீட்டினை ஏற்படுத்த
முனைதலும்.
தனியார் கல்வி நிறுவனங்களதும் பிரத்தியேக வகுப்புக்களதும் அதிகரித்து வரும் ஆதிக்கம் மாண வர்களை பாடசாலை முடிவுற்ற பின்னர் இச்செயற் பாடுகளுக்காக ஒன்று கூடுவதனை தடுத்து விடுதல். ஆசிரியர்களும் தமது மேலதிக வருமானத்திற்காக பாடசாலை முடிவுற்றதும் தனியார் கல்விநிறுவனங் களை நாடுவதும் மாணவர்களது வழிகாட்டல் களுக்கு இடையூறாக இருத்தல். பெற்றோரும் இவை தொடர்பில் போதிய அறிவற்ற வர்களாக இருப்பதுடன் பிள்ளைகளின் உடல் விருத்தியில் செலுத்தும் கவனம் உள் விருத்தியில் செலுத்தாதிருத்தல்.
O -
பாடசாலை முடிவுற்றதும் இவை தொடர்பில் ஒன்று கூடும் செயற்பாடுகளில் பிள்ளைகளது பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் என்பனவற்றை கருதி பெற்றோர் தடைவிதித்தல். 0 குடும்ப, பொருளாதார சூழல்களின் நிமித்தம்
மாணவர்களும் இவற்றில் ஆர்வம் இன்றி இருத்தல். © பிள்ளையின் மறைந்துள்ள ஆற்றல்களை பெற்
றோரும் ஆசிரியர்களும் சரியாக இனம் காணத் தவறுதலும் ஊக்குவிக்காமையும். 0 அதிபர், ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கிடையே
பரஸ் பர நல்லுறவும் இணக்கப்பாடின்மையும் - நிலவுதல். போதிய ஆசிரிய வளமும் மற்றும் பௌதிக வளங் களும் பாடசாலையில் பற்றாக்குறையாக இருத்தல்.
பாடசாலைக்கும் மாணவர்களது வீட்டிற்கும் இடையிலான தூரம் உயர்வாக இருத்தல்.
மேற்குறிப்பிட்டவற்றின் நிமித்தம் எதிர்பார்த்த இலக்குகளை இணைக்கலைத்திட்டம் ஏற்படுத்துவ தில்லை. ஒரு சில பாடசாலைகளில் இணைக் கலைத் திட்டம் நடைமுறைப் படினும் அவையும் பெயரளவில் மட்டுமே இயங்குநிலை கொண்டனவாக இருக்கின்றன. இதில் இணைந்த மாணவர்களும் கூட எவ்வித ஆளுமை விருத்தி மாற்றங் களுமின்றி மனச்சோர்வுடன் வெறுமனே தமது நற்சான்றுப் பத்திரத்தில் கழகத்தின் பெயரினையும் தனக்கு வழங்கப் பட்ட பதவியினையும் மட்டும்
குறிப்பிட்டுக் கொண்டு வெளியேறுகின்றனர்.
18
ஆசிரியம்

Page 21
இணைக்கலைத்திட்டம் இடமாறுகிறதா?
மாணவர்களது ஆளுமை விருத்திக்கென அறிமுகப் படுத்தப்பட்ட இவ் இணைக்கலைத்திட்டம் இன்று மாணவர்களது மறைந்துள்ள ஆற்றல்களை வெளிக் கொண்டு வருவதனை தவிர்த்து சில பாடசாலைகளில் ஆசிரியர்களது பதவி உயர்வுகள் மற்றும் நேர்முகப் பரீட்சைகளின் போதான வினைதிறன் மதிப்பீட்டுக்கு வெறுமனே ஆவணங்களில் எழுதப்படும் இணைக் கலைத்திட்ட செயற்பாட்டுக் கலாசாரம் இன்று தோன்றி வருவதனை அவதானிக்க முடிகின்றது.
தரங்கணிப்பீட்டு படிவங்களில் பாடசாலைகளில் காணப்படும் மன்றங்களது பொறுப்பாசிரியர் என்ற அதிபரது சான்றுறுதிப்படுத்தல்கள், ஆசிரியரது பதவி உயர்வுகளுக்கும் வேதன ஏற்றங்களுக்கும் மற்றும் உயர் கற்கை நெறிகள் சிலவற்றுக்கும் வசதி செய்ய முற்படு கின்றன. இவை மட்டுமன்றி சில பாடசாலைகளில் மாணவர்களது திறன்களை இனம் கண்டு அவர்களை வழிப்படுத்திச் செல்வதனை தவிர்த்து ஆசிரியர்களே மாணவர்களுக்காக கவிதை, கட்டுரை, சிறுகதை போன்ற ஆக்கங்களை எழுதி போட்டிகளில் அம்மாணவர் உயர் பெறுபேறுகளை எய்த துணைநிற்கின்றனர்.
இங்கு மாணவர் “ஒப்புவித்தல்” என்ற பணியினை மாத்திரமே ஆற்றி நிற்க, அதனூடே ஆக்கங்களை பிரசவித்த ஆசிரியர் பாடசாலை சமூகத்தால் உயர்வாக நோக்கப்படுகின்றார். அனைவராலும் பாராட்டப் படுகின்றார்.
இன்றும் சில பாடசாலைகளில் இல்ல விளையாட் டுப்போட்டி, கலாசாரப் போட்டிகள் போன்றனவற்றின் போது ஆசிரியர்கள் காட்டும் அக்கறையும் அர்ப்பணிப் பும் மாணவர்களிடம் இருப்பதில்லை. போட்டிகள் நடைபெறும்போதும் அவை முடிவுற்றதும் ஆசிரியர்கள் தமது அணிசார்பில் கருத்து முரண்பாடுகளை எதிர் அணி ஆசிரியர்களுடன் வளர்ப்பதும் நீண்ட நாட்கள் இம் முறுகல் நிலை பாடசாலையில் தொடர்வதும் கல்வியுலகம் அறியாமல் இல்லை.
இவை யாவற்றையும் தொகுத்து நோக்குமிடத்து இணைக்கலைத்திட்ட திறன் விருத்திகள் மாணவர் களுக்கா? அல்லது ஆசிரியர்களுக்கா? என்பது தொடர் பில் பாடசாலையின் உள்ளும் புறமும் சந்தேகம் ஏற்பட வைக்கின்றது. ஆசிரியர்கள் மாணவர்களது திறன்களை இனம் கண்டு அவற்றை வெளிக்கொணர்ந்து ஊக்கப் படுத்தி வளம் பெறச் செய்தல் வேண்டுமேயன்றி, அதனூடாக பாடசாலையினுள் குழப்பங்களினை ஏற்படுத்தி மாணவர்களிடம் குரோத எண்ணங்களினை வளர்த்துவிடுதல் ஆகாது.
ஜன-பெப் 2013

எனவே இணைக்கலைத்திட்டம் இடம்மாறக் கூடாது. எதிர்கால மனிதவள விருத்திக்கான உன்னதமான ஒரு தொழில்நுட்பமாக பாடசாலை என்ற தொழிற்சாலையில் இதனைப் பயன்படுத்துவதன் ஊடே வெளியீட்டுத் தரங்களை நிச்சயம் உயர்த்திவிட முடியும். இது தொடர்பில் பின்பற்றக்கூடிய சில ஆலோசனை களாக,
0 இணைபாடவிதானைச் செயற்பாட்டின் முக்கியத்து
வம் தொடர்பாக அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்விப்புலம் சார்ந்த யாவருக்கும் விழிப்புணர்வினை ஏற்படுத்துதல்
பாடங்களுடனான பரீட்சைகளுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை செயற்பாடுகளுடனான இலக் குகளைக் கொண்ட இணைக்கலைத் திட்டத்துக்கும் வழங்குதல்
0
பாடசாலையின் வருட திட்டமிடுகையின் போதே இணைக்கலைத்திட்டச் செயற்பாடுகளுக்கும் நாள் குறித்து அவை உரிய காலங்களில் உரியவாறு முன்னெடுக்கப்படுவதனை உறுதிசெய்தல் இணைபாடவிதான செயற்பாடுகளில் ஈடுபடும்
ஆசிரியர்களை பாராட்டி ஊக்குவித்தல்
ன்
கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளின் போது இணைக்கலைத் திட்டச் செயற்பாடுகளினால் தடைப்படும் மாணவர் கல்வி தொடர்பில் முறையான திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல் 0 மாணவர்களது திறன்வெளிப்பாட்டு நிகழ்வுகளில்
பெற்றோரினை அழைத்து கௌரவப்படுத்தல் © ஆசிரியர் தரங்கணிப்பீட்டில் ஒரு இணைபாட
விதானத்தையேனும் ஒரு ஆசிரியர் முன்வந்து பங்குபற்றி அவை முறையாக நிறைவேற்றுவதனை கண்காணித்தல்
இவ்வாறான சில ஆலோசனைகளை மனதில் நிறுத்துவதுடன் எட்டுப்பாட வேளைகளில் எட்ட முடியாத இலக்குகளை பாடசாலை நேரத்தின் முன்போ அன்றி பின்போ எய்துவதற்கான வாண்மைத்துவம் மீதான அர்ப்பணிப்பும் விசுவாசமும் என் கின்ற அத்திவாரத்தினூடாக இணைப்பாடவிதானச் செயற் பாடுகள் என்ற துாண் களைக் கொண்டு மாணவரிடம் திறன்கள் எனும் உயர்ந்த கோபுரத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை
19
"ஆசிரியம்

Page 22
மாணவர் உளநிலைய ஏற்படுத்திய தாக்கங்
கன்
நவீன கல்விச்சிந்தனைகள் கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகளில் உளவியல்சார் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. இன்றைய காலகட்டத்தில் யுத்தம் முடிவடைந்த பிரதேசங்களில் மாணவர்கள் மீண்டும் மீளக் குடியேறத் தொடங்கி பல்வேறு வடிவங்களில் பிரச்சினை களை எதிர்கொண்டு உளநெருக்கீடுகளுக் குள்ளான நிலையில் பாடசாலைக்கு வருகின்றனர். யுத்த நெருக்கடி களும், இடப்பெயர்வும் மாணவர்களின் உள நெருக்கீடு களை மேலும் தொடர் உளநெருக்கீடுகளை இறுக்கமடை யச் செய்துவிட்டன. உளநெருக்கீட்டுக்குரிய பிரச்சினை கள் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் தொடர்ச்சியான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இத்தகைய மாணவர்களின் நடத்தைக் கோலங்கள் வகுப்பறையில் ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு சவாலாகவும், மாணவர்களின் உளநிலையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துவதாக வும் அமைகின்றன. மாணவர்களின் நடத்தை முரண்பாடு களுக்கான காரணங்களை ஆசிரியர்கள் உளவியல் அணுகுமுறைகளுக்கூடாக சரியாக புரிந்துகொள்வதில்லை. இதனால் மாணவர் அடைவுகள் குறைந்து செல்ல வாய்ப்பேற்படுகின்றது.
இதனை சரியான முறையில் இனம் காண்பதுடன், மாணவர்களுக்கு உதவுவதற்கான சரியான நுட்பங்களை யும், உபாயங்களையும் பின்பற்றி அவர்களது பின்னணி களை அறிந்து வழிப்படுத்த வேண்டியது பாடசாலைச் சமூகத்தினதும், சமூகத்தினதும் முக்கிய கடப்பாடாக
அமைகின்றன.
சமகால உலக மாற்றங்கள் கல்வியில் பாரிய விளைவு களை ஏற்படுத்தியுள்ளன. கல்வி உலகமயமாதலின் கீழ் நாடுகளுக்கிடையே எல்லைக்கோடுகள் வலுவிழந்து தங்கு தடையின்றி நகர்த்தப்படும். ஒரு வணிகப்பண்ட மாக மாறியுள்ளது. அறிவுசார் பொருளா தார முறைமை யில் நாடுகள் தொழிற்படும்போது மாணவர்களுக்குக் கல்வியை தடையின்றிப் பெற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் உணரப்படுகின்றது. யாவருக்கும் கல்வி என்ற சிந்தனையில் பல சர்வதேச அமைப்புக்கள் வலுவாக செயற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. சுனாமி, வெள்ளப்பெருக்கு, பூகம்பம், வரட்சி, சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்களும் உள்நாட்டு யுத்தம், போன்ற இயற்கை அனர்த்தங்களும் உள் நாட்டு யுத்தம், குண்டுவெடிப்புக்கள், இன மோதல்கள் போன்ற மனிதனால் ஏற்படுத்தப்படுகின்ற அனர்த்தங்களும் இன்று மாணவர்களின் உளநிலையில் கல்விக்கு தடையாக பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.
யாக |
வை
ஜன-பெப் 2013

பில் “இடப்பெயர்வு” களும் சவால்களும்
எஸ்.சுதந்திரன்
குறிப்பாக சிறுவர்கள், வயோதிபர்கள், பெண்கள் மற்றும் விசேட தேவையுடையவர்கள் இவற்றால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றார்கள். இவ்வனர்த்தங்க ளால் ஏற்படுகின்ற இடப்பெயர்வுகளால் உருவாகும் நெருக்கீடானது இன்று மிகவும் மோசமான விளைவு களை ஏற்படுத்தியுள்ளதை காணமுடிகின்றது. உதாரண மாக 1990களில் முஸ்லிம் மக்களின் இடப்பெயர்வு, 2004இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம், 2009இல் வன்னிப் பிரதேசத்தில் நடந்து முடிந்த இறுதிக்கட்ட யுத்தம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இவை காரணமாக குறிப்பாக யுத்தம் காரணமாக பல இலட்சக் கணக்கான மக்கள் தங்களது உடைமை களையும், உறவுகளையும் இழந்தது மட்டுமல்லாமல் நலன்புரி நிலையங்களில் பல்வேறு உளத்தாக்கங்களை யும், உளச் சமூகநலப் பிரச்சினைகளையும் அனுபவித் தமை குறிப்பிடத்தக்கது.
ஒரு மனிதர் அன்றாட வாழ்வில் எதிர்பார்த்தோ அல்லது எதிர்பாராமலோ பல்வேறு சிக்கல்களுக்கும், பிரச்சினைகளுக்கும், இடையூறுகளுக்கும் முகம் கொடுக் கின்றார். அவ்வாறான சந்தர்ப்பங்களில் சிலர் தன்னம்பிக் கையோடு முகம்கொடுத்து சவாலாக வாழ்க்கையை நடாத்திச் செல்கின்றனர். வேறுசிலர் அதன்மூலம் மனத்தாக் கங்களுக்கும், நெருக்கீடுகளுக்கும் உட்பட்டு தமது வாழ்க்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதவர்களாக சிரமப்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. வன்செயல்களை நேரடியாகக் கண்டதன் மனவடுக்கள்
கொடூரமான முறையில் ஏற்பட்ட மரணங்கள், மரண அவஸ்தைகள், இரத்தப்பெருக்குகள், கொலைகள், வன்முறைகள், வெடிகுண்டுச்சத்தங்கள் மற்றும் கட்டாய படைச் சேர்ப்புக்கள் போன்ற ஆபத்தான சம்பவங்கள் மற்றும் இவ்வாறு காணப்படும் சமூகக் கட்டமைப்பு மாற்றங்களும், இழப்புக்களும் மாணவர் உளநிலையை பாதிப்பதாக அமைந்துள்ளது.
இவ் அனுபவங்கள் இவர்களின் மனதில் மன வடுவாக பதிந்துள்ளது. (Post Traumatic Strees Disorder - PTSD) இதன் விளைவாக இவர்கள் நடந்த பயங்கர அனுபவம் பற்றி திரும்பத்திரும்ப சிந்தித்தல், சிந்தித்தலை நிறுத்த முடியாதிருத்தல், நினைவுகளின் மீளோட்டம்,
- 20
ஆசிசியம்

Page 23
நிகழ்வுகள் திரும்பத்திரும்ப நிகழ்வது போன்ற அனுபவம் ஆகிய செயற்பாடுகளை மாணவர்கள் இடையிடையே வெளிப்படுத்துகின்றார்கள். இவர்களின் மனதில் ஒரு படக்காட்சி போல இவை அவர்கள் விழிப்பாக உள்ள போதும் மீண்டும் ஏற்படுகின்றது. ஆசிரியரால் அணுகப்படக்கூடிய உபாயங்கள்
நெருக்கீட்டிற்கு உள்ளான மாணவர்களை அவர்களது உணர்ச்சிகளை அடக்காது நெறிப்படுத்தச் செய்யும் வகையிலே நுட்பங்களையும், உத்திகளையும் கையாள்வதன் மூலம் அடக்கப்பட்ட உணர்வுத் தேக்கம் வெளிப்பட உதவி செய்தல் வேண்டும். உணர்வு வெளிப் பாட்டிற்கான ஊடகமாக விளையாட்டு, பாட்டு, இசை வும் அசைவும், நாடகம் என்பவற்றை பயன்படுத்தலாம்.
ஆசிரியர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும்போது எல்லா மாணவர்களின் திறன்களை கதைக்கவும், சிந்திக்கவும் வழியமைத்துக் கொடுக்க வேண்டும். பாடசாலைச் சூழலிலும், சமூகச் சூழலிலும் மாணவர்கள் தமது பிரச்சினைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள் வதையோ, ஒருவரின் மன உணர்வினை மற்றவர்கள் பகிர்ந்து கொள்வதையோ தடுக்கக்கூடாது.
சிவ பா
மாணவர்களின் வீட்டுச்சூழலில் பெற்றோர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை பெற்றோ ருக்கு அறிவுறுத்தல் சிறந்ததாகும். சிறுவர்களின் நடத்தை மாற்றங்களை பாடசாலைச் சமூகமும், பெற்றோரும் இணைந்து நடைமுறைப்படுத்தும்போது திறன்களை இனங்காணவும், வெளிப்படுத்தவும், தீர்க்கமான ( தீர்வுகாணவும் இலகுவாகின்றது.
ஆசிரியர் மாணவர்களது கருத்துக்களுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்புக்கொடுத்தல் வேண்டும். தமது மனங்களில் உறைந்துள்ள பயம், கவலை, கோபம் போன்ற உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும், வெளிப் படுத்தவும் சித்திரம், கதை, கவிதை போன்ற செயற்பாடு களில் ஈடுபடச் சந்தர்ப்பம் கொடுத்தல் வேண்டும்.
மாணவர்கள் தமது பிரச்சினைகளை ஆசிரியர்க ளிடம் சொல்லக்கூடியளவிற்கு நல்ல உறவுகளையும், நம்பிக்கைகளையும் பேணுதல் வேண்டும். துன்பங்களுக்குள்ளான மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகள் © மகிழ்ச்சி அழகியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தல். - 0 பாடநேரத்தை குறைத்து செயற்பாடுகளுக்கும்,
ஓய்விற்கும் முக்கியத்துவம் கொடுத்தல். சிரிப்பும், வினோதமும் நிறைந்த கதைகளைக் கூறுதல். வெளிக்களச் சுற்றுலாக்களில் ஈடுபடுத்துதல். 0 வெற்றிவாய்ப்புக்களை அடையக்கூடிய செயற்பாடு 6
களை அமைத்தலும், பாராட்டுதலும்.
உ உ . C, T. ) .
ஜன-பெப் 2013

9 மகிழ்ச்சிகரமான படங்கள், பூஞ்சோலைகள்,
இயற்கை காட்சிகள் என்பவற்றை பார்க்கச் செய்தல். பாடசாலை தமது முன்னேற்றத்தில் தொடர்ந்து அக்கறை செலுத்தும் என்பதை உணரச் செய்தல். தனது உடல்பற்றியும், உள்ளம் பற்றியும் உயர்வான எண்ணங்களை ஏற்படுத்துதல். 9 துன்பமான செய்திகளை செவிமடுப்பதையும்,
பார்வையிடுவதையும் தவிர்த்தல். உயர்கல்வி வாய்ப்புக்களும், தொழில் வாய்ப்புக் களும் உறுதி என்ற நம்பிக்கையை ஏற்படுத்துதல். இழவிரக்கம் (Grief) உள்ளவர்களுக்கு உதவுதல்
- இறப்புக்கள் நிட்சயமற்றதாய் உள்ளபோதும் காணாமல் போதல்) அல்லது இறந்த உடலை காணாத போதும், சடங்குகள் செய்யாத போதும் இழவிரக்கம் முற்றுப் பெறாததாகி விடுகின்றது. இவர்களுக்கு பின்வரும் வழிகளில் உதவலாம்.
9 தன்னம்பிக்கையையும் சுய மரியாதையையும் கட்டி
எழுப்ப உதவுதல். இறந்தவரைப் பற்றி கதைக்கச் செய்து அந்த
இழப்பை ஏற்றுக்கொள்ள உதவலாம். 2 மரண அனுட்டானங்களாகிய மாசியம்,
ஆண் டுத் திவசம் என் பவற்றை முறையாக கொண்டாடுவதன் மூலம் இழவிரக்கத்தில் இருந்து
மீளச் செய்யலாம். 9 குடும்ப, சமூக ஆதரவுகளை கிடைக்கச் செய்தல்.
பாதிக்கப்பட்ட மாணவர்களை நாளாந்த கருமங்கள், வேலைகளை செய்ய ஊக்கப்படுத்துவதுடன் சமய, சமூக விழாக்களிலும் பங்குபெறச் செய்தல்.
அவர்கள் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை இன்மை யைக் கொண்டிருப்பார்கள். இதனைப் போக்க உடன்பாடாக சிந்திப்பதற்காக அவர்களது திறமைக
ளையும் வெற்றிகளையும் சுட்டிக்காட்ட வேண்டும். » நேர்மாறான சிந்தனைகளை மாற்றி புதிய கண் ணோட்டம் மாற்று மீள் சட்டகப்படுத்தல் (Refreme) செய்ய உதவுதல்.
முடிவுரை
மாணவர்களின் கற்றல் முயற்சிகளுக்கு வலுவூட்டி அவர்களின் உள் ஆற்றல் மேம்பாட்டிற்கு தனியாக வகுப்பாசிரியர்களோ பாட ஆசிரியர்களோ பொறுப்பாக அல்லாமல் முழுமையான பாடசாலை ஆளணியினர், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், சமூகச் சூழல் அமைப்புக்கள் என்பன வலுவான கவனம் செலுத்துவதனால் மட்டுமே மாணவர்களது வளர்ச்சியிலும் அவர்களது ஆற்றுகைகளிலும் சாதகமான விளைவை பெறலாம் என்பது முடிவாகும்.
21
ஆசிசியம்

Page 24
ஆர்.லோகேஸ்வரன்
கல்வித்துறையில் தொடரும் நெருக்கடி
பயனுள்ள கல்விமுறையானது மனித சக்தியினை வளர்த்து அதனால் பயன்பெற உதவுவதாகும். இதனா லேயே கல்வித்துறை இன்று மனித மேம்பாட்டுத்துறை என அழைக்கப்படுகிறது. கல்வித் துறைக்கான முதலீடே நாட்டின் தலையாய முதலீடாகும். இன்று நாடுகளின் வளர்ச்சியின் இயற்கை வளங்களைவிட கல்வி அறிவு பெற்ற மனிதர்களே முக்கியமானவர்களாக கருதப்படு கின்றனர். அதேபோல் நாட்டில் முன்னேற்றத்துக்கும் தனிமனிதனின் நல்வாழ்வுக்கும் கல்வியே அடிப்படை யாகவும் அமைகின்றது. அதனால் அசாங்கங்கள் கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.
எமது நாட்டைப் பொறுத்தவரையில் 1945யில் C.W. W.கன்னங்கரா அவர்களால் இலவசக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டதன் பின் கீழைத்தேய நாடுகளுக் குள் சிறப்பான கல்வித்தரத்தினை கொண்ட நாடு என்ற பெயரை பெற்றிருந்தது. தொடர்ந்து வந்த அரசாங்கங் களும் நாட்டின் மனிதவள விருத்தியில் கல்வித்துறைக்கே தரவரிசையில் முன்னுரிமை வழங்கி வந்தது. ஆனால் அண்மைக்காலமாக நாட்டில் இடம்பெறும் நிகழ்வுகளை நோக்கும் போது கல்வித்துறையானது பலரின் விமரிசனத் துக்கு உள்ளான ஒன்றாக மாறிவருவதோடு, பாரிய நெருக்கடி நிலைக்குட்பட்டு சிக்குண்டிருப்பதையும் காண முடிகின்றது.
இதில் சுதந்திரம் பெற்ற காலம் முதல் கல்வித்துறை யில் அவ்வப்போது சில நெருக்கடிகள், குழப்பங்கள் ஏற்பட்டு வந்தது வழக்கமாக இருந்தபோதும் அண்மைக் காலமாக தொடர்ச்சியாக இது அதிகரித்தும் செல்லும் நிலையே காணப்படுகின்றது. இந்நெருக்கடி நிலைக்கான காரணங்கள் என்ன? தொடர்ச்சியாக இவ்வாறான நிலையிலிருந்து இதனை எவ்வாறு தடுப்பது? என்பவை தொடர்பில் ஆராய வேண்டிய தேவை இன்று கற்றோர் மத்தியில் உருவாகியுள்ளது. இவை தொடர்பாகவே இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது.
ஜன-பெப் 2013

2011- உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் - குழறுபடிகள்
எமது நாட்டில் பரீட்சை முறைகளில் மிக முக்கிய மானதாகவும் மாணவரின் எதிர்கால தலைவிதியினை தீர்மானிக்கும் பரீட்சையாகவும் உயர்தர பரீட்சையினைக் குறிப்பிடலாம். அந்த வகையில் 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளானது இன்னும் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே காணப்படுகிறது.
2011 உயர்தர பரீட்சையானது புதிய, பழைய . பாடத்திட்டத்துக்கு அமையவே இடம்பெற்றது. இவ்விரண்டு பாடத்திட்டத்துக்கு அமைவாகவே வினாப்பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு பரீட்சைகளும் இடம்பெற்றன. ஆனால் இரண்டு பாடத்திட்டத்தையும் ஒருங்கிணைத்தே Z புள்ளிகள் அறிவிக்கப்பட்டது. இது பாரிய குழறுபடி களை உருவாக்கியது. இதற்கு எதிராக மாணவர்கள் நீதிமன்றத்தை நாடினர். அதன்படி பழைய, புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப இருசாராருக்கும் வேறுவேறாக Z புள்ளிகள் கணிக்கப்பட வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
அவ்வாறு பழைய , புதிய பாடத்திட்டங்களுக்கு Z 5 புள்ளிகள் தனித்தனியாக கணிக்கப்பட்டு மாவட்ட
தேசிய நிலைகளை கணிக்கும்போது பழைய, புதிய பாடத்திட்ட மாணவர்கள் ஒரு குடித்தொகையாக கொண்டு முடிவு அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் வெளியிடப்பட்ட பெறுபேறால் மேலும் பல மாணவர் கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக பழைய பாடத்திட்டத் துக்கு அமைவாக பரீட்சை எழுதிய மாணவர்கள் மாவட்ட தரவரிசையில் மிகவும் பின்தள்ளப்பட்டனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீண்டும் நீதிமன்றம் சென்றனர். அதனால் உயர்தர பரீட்சைக்கான Z புள்ளியை பழைய, புதிய பாடத்துக்கு அமைவாக வெவ்வேறான குடித்தொகையாக கணக்கிட்டு அதனடிப் படையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வின் ஊடாக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளுமாறு உயர்நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியது.
- ஆசிரியம்
22

Page 25
(
ஆனால் அரசாங்கமோ, பல்கலைக்கழக மானியங் 4 கள் ஆணைக்குழுவோ - UGC இது தொடர்பாக எவ்வித ( நடவடிக்கையும் எடுக்காமல் மாணவர்களை பல்கலைக் 8 கழகத்துக்கு சேர்த்து கொள் வதில் தாமதத்தையே ஏற்படுத்தி வருகின்றன. முழுமையாக மாணவர்களை ! இணைத்துக்கொள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மார்ச் மாதம் வரை கால அவகாசம் ( கோரியுள்ளது. எனவே பல்கலைக்கழக அனுமதி ( தொடர்பான சர்ச்சை இன்னும் தொடரவே செய்கிறது.
Z புள்ளி பிரச்சினை தீர்க்கப்பட்டு முடிவுகள் | அறிவிக்கப்படுமாக இருந்தாலே அடுத்தகட்ட செயலில் | மாணவர் இறங்க முடியும். பல்கலைக்கழகத்துக்கு தெரி ( வாகும் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லவும் தெரிவு செய்யப்படாதவர்கள் வேறு உயர்கற்கை நெறி 6 களை தொடரவும் முடியும். ஆனால் அரசாங்கமோ, 6 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ எந்த 4 ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் மாணவர்கள் இன்ன ( மும் இருதலைக் கொள்ளி நிலையிலேயே உள்ளனர். இது கல்வித்துறையை பொறுத்தவரை ஒரு நெருக்கடி நிலையாகவே அனைவராலும் நோக்கப்படுகின்றது. 2012- பரீட்சைகளின் போது தோன்றிய நெருக்கடிகள்
கல்வித்துறையை வலுப்படுத்தும் நிறுவனங்களான கல்வியமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், பரீட்சை திணைக்களம், கல்வி வெளியீட்டு திணைக்களம், மாகாண கல்வி திணைக்களம் என்பவற்றில் பரீட்சை * திணைக்களமே தமது பணியினை நேர்த்தியாக மேற் கொண்டு வந்தது என்பது அனைவரும் அறிந்த விடயம். ஆனால் இதுவரை இல்லாதவாறு தற்போது அதிக விமரிசனத்துக்கு உள்ளான நிறுவனமாகவும் இது மாறியுள்ளது. 2012 உயர்தர பரீட்சையிலும், புலமைப் பரிசில் பரீட்சையிலும் பெரும் விமரிசனத்துக் கு உள்ளாகியமை யாவரும் அறிந்ததே. )
2012 உயர்தர பரீட்சையின் போது இரசாயனவியல், இணைந்த கணிதம், விவசாயம், அரசியல் விஞ்ஞானம் போன்ற வினாப்பத்திரங்களில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பாடத்திட்டத்திற்குள் உள்ளடங் காத வினாக்கள் வழங்கப்பட்டமை. விடைப்பெற்றுக் 1 கொள்ள முடியாத வினாக்கள் வழங்கப்படாமை, சில : வினாக்களில் உள்ள தவறுகளை திருத்தி வாசிக்குமாறு (
அறிவுறுத்தல் வழங்கப்படாமை என பல குழறுபடிகள் இடம்பெற்றது. இவ்வாறான தவறுகளால் மாணவர்கள் பெரும் அசௌகரிய நிலைக்கும், பதகளிப்பு நிலைக்கும் : உள்ளாகினர். உயர்தர பரீட்சையை பொறுத்தவரை ( மாணவருக்கு விடையளிக்க வழங்கப்படும் நேரம் மிக 3 முக்கியமானதாகும். ஆனால் இங்கு வினாப்பத்திரங் 8 களில் திருத்தங்கள் செய்யவும், விடைகாண முடியாத 1
1ம்
UL
ஜன-பெப் 2013

வினாக்களுக்கு விடைகாண முயற்சித்து அதற்கு அதிக நேரத்தை செலவிடவும் நேர்ந்ததாக மாணவர்கள் குற்றம் சுமத்தினர். ஒரு வினாத்தாள் தயாரிக்கப்பட்டு திபுணத்துவமிக்கவர்களால் பலமுறை சரிபார்த்து உறுதிபடுத்திய பின்னரே அது இறுதி வடிவத்தை பெறுவது வழக்கம். இந்நிலையில் எவ்வாறு இப்பிழைகள் ஏற்பட்டன. இது பரீட்சை திணைக்களம் ஆராய வேண்டிய விடயமாகும்.
இது இவ்வாறிருக்க 2012 புலமை பரிசில் பரீட்சை வினாப்பத்திரமும் பரீட்சைக்கு முன்னரே மாணவருக்கு வழங்கப்பட்டதாக பெற்றோரால் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டது. தொடர்ந்து தற்போது இடம்பெற்ற சாதாரணதர பரீட்சையிலும் விஞ்ஞானபாட வினாப்பத்திரம் முன்கூட்டியே வெளியாகியுள்ளதாக (19 வினாக்களும், அவற்றுக்கான விடைகளும்) அறியப்பட்டு சிலர் குற்றபுலனாய்வு பிரிவினரால் விசாரணைக் தட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. - எனவே 2011 பரீட்சை முடிவுகள் வெளிவந்த பின்னரே மாணவர்கள் மன உழைச்சலுக்கு உள்ளாகி
னர். ஆனால் 2012இல் மாணவர்கள் பரீட்சைகளின் போதே உளநெருக்கடிக்கு உள்ளான நிலை தோன்றியுள் எது. இவ்வாறான தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் பிழைகளுக்கு பரீட்சை திணைக்களமே வகைகூற வேண்டும். இன்று பரீட்சை திணைக்களத்தின் இரகசிய தன்மை கேள்விக்குறியதாகியுள்ளது. அத்தோடு பரீட்சை திணைக்களத்தின் மீதான நம்பகத்தன்மையும் குறைந்து செல்ல தொடங்கியுள்ளது. இதற்கு கல்வியமைச்சு, பரீட்சைத் திணைக்களம், வினாப்பத்திரங்களை தயாரிக்கும் நிபுணத்துவமுடையோர் போன்றவற்றுக் கிடையே முறையான தொடர்பு இல்லாமையே காரணம் என குற்றஞ்சாட்டப்படுகிறது. எனவே இன்று தொடர்ச்சி பாக குழறுபடிகளானது கல்வித்துறையில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. பல்கலைக்கழக கல்விசார்
ஆளனியினரின் போராட்டங்கள்
ளது. இவ்வாறான தொ
( இலங்கையில் பல்கலைக்கழக வரலாறானது 1942இல் இருந்தே ஆரம்பமானது. இன்று ஏறத்தாழ அரச பல்கலைக்கழகங்கள் 15 திறந்த பல்கலைக்கழக முமாக மொத்தம் 16 பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. இதில் சம்பள அதிகரிப்பு மற்றும் வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மே மாதம் முதல் 5 மாதங்களளவில் பல்கலைக்கழக ஆளனியினரின் வேலைநிறுத்தம் காரணமாக அனைத்து பல்கலைக் கழகங்களும் செயலிழந்து காணப்பட்டன. இதன் இறுதி காலங்களில் (3 மாதங்கள் அளவில்) அரசாங்கத்தால் 13 பல்கலைக்கழகங்கள் காலவரையரையன்றி மூடப்பட்டி
23
இஆசிரியம்

Page 26
ருந்தன. இதில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்று விரிவுரையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட வேை நிறுத்த போராட்டமானது நாட்டின் அனைவர கவனத்தையும் ஈர்ந்தது.
இவர்கள் தமது கல்வித்தகைமை, வாழ்க்கை செல் அதிகரிப்பு என்பவற்றுக்கு ஏற்ப வேதன உயர் வழங்கப்படுவதில்லை என்றும், நாட்டின் மொத்த தேசி வருவாயில் 6% ஐ கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்று கல்வித்துறையில் அரசியல் தலையீடுகள் நிறுத்தப்பட் சுதந்திரமாக இயங்க ஆவண செய்ய வேண்டும் என்று கோரிக்கைகளை முன் வைத்தே போராட்டத் முன்னெடுத்தனர். இதில் மொத்த தேசிய வருவாயில் 6 கல்விக்காக ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தது.
1939-31ம் இலக்க சட்டத்தின் 2ம் உபபிரிவு பிரகார பாலர் வகுப்பு தொடக்கம் பல்கலைக்கழக கல்விவல இலவசக்கல்வி வழங்கப்பட வேண்டும் என கல்வி சட்டம் குறிப்பிடும் போதும் இன்று அரச பல்கலை கழகங்களைவிட தனியார் பல்கலைக்கழகங்களுக்! அரசு அதிக முக்கியத்துவம் வழங்குவதாக சுட்டிக்காட் னர். அதேபோல் தனியார் பல்கலைக்கழகங்களில் 20 இலவசமாக அனுமதி வழங்கப்படும் என உயர்கல் அமைச்சு தெரிவித்த போதும் நடைமுறையில் அவ்வாறா செயன்முறை காணப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு களை முன்வைத்தனர். தற்போது இலங்கையில் உள் 5 அரச பல்கலைக்கழகங்களை சர்வதேச அளவிலா பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கு 50 மில்லிய
ரூபாவை ஒதுக்கிய அரசாங்கம் மாலபேயிலுள்ள தனியா பல்கலைக்கழகத்துக்கு 600 மில்லியன் ஒதுக்கியுள்ளதா சாடினர். இதன் மூலம் அரசாங்கம் நாட்டின் அர பல்கலைக்கழகங்களின் முக்கியத்துவத்தை குறைப்பதி மறைமுகமாக செயற்படுவதாக தெரிவித்தனர்.
அரசாங்கமானது அனைத்து மாணவருக்கு சர்வதேச தரத்திலான கல்வியை சகல வசதிகளுடன் வழங்குவோம் என தெரிவித்த போதும் பல்கலைக்கழ கல்விக்கான ஒதுக்கீடானது 2005இல் 0.5% மாகவு 2010இல் 0.27% ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இவ்வாறு உயர்கல்விக்கான நிதியை குறைந்துவரு
அரசாங்கம் எவ்வாறு சர்வதேச தரத்திலான கல்வி ை வழங்கப்போகிறது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது
இவ்வாறு விரிவுரையாளர்கள் நியாயமான கோரி கைகளை முன்வைத்து பகிஸ்கரிப்பில் ஈடுபட்டபோது அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் அலை சர்வதேசசதி என அரசாங்கம் குற்றஞ்சாட்டியது எவ்வாறாயினும் தற்போது இந்நெருக்கடி நிலை சற் தனிந்து பல்கலைக்கழகங்கள் இயங்கு நிலையில்
| ஜன-பெப் 2013

9
பம் உள்ளது. இவர்களின் வேதன உயர்வு தொடர்பான பிரச்சி
னைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறிவரு கின்றது. ஆனால் இவர்களின் கோரிக்கைகள் தொடர் பான பேச்சுவார்த்தைகள் தொடரவே செய்கின்றது. கல்விக்கான நிதி (GDP) குறைந்து செல்வதால் தோன்றியுள்ள நெருக்கடிகள்
6 6 = .5 6 7 8 ° 3
உலகில் பெரும்பாலான நாடுகள் தமது நிகரதேசிய உற்பத்தியில் பெருந்தொகையான நிதியை கல்வித் துறைக்கே ஒதுக்கி வருகின்றன. நாட்டின் வளர்ச்சிக்கு கல்வியறிவு பெற்ற மனிதவளமே அவசியம் என்பதை உணர்ந்து நிகர தேசிய உற்பத்தியில் கல்விக்கே அதிக முதலீட்டை செய்கின்றன. ஒவ்வொரு நாடும் கல்விக்காக நிகர தேசிய வருவாயில் 6% ஒதுக்க வேண்டும் என்பது
யுனெஸ்கோவின் இலக்காகும். எமது நாட்டில் யுத்த ம் சூழலில் இது சாத்தியப்படாத போதும் யுத்தம் முடிவுற்று ரை இன்று பொருளாதார வளர்ச்சி உயர்ந்து கொண்டு பிச் செல்வதாகக் கூறும் நிலையில் அரசாங்கம் இதனை மக் சாத்தியமாக்கலாம். ஆனால் 2005இல் இருந்து கல்விக் கே காக ஒதுக்கப்படும் நிதியின் அளவு குறைக்கப்பட்டே
வருவதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களும், % ஆசிரியர் தொழிற்சங்கங்களும் தொடர்ச்சியாக குற்றஞ் வி சாட்டி வருகின்றன. 2011 ஆம் ஆண்டு நாட்டின் நிகர ன தேசிய உற்பத்தியில் GDP - 2.9 சதவீதமாக கல்வித் க்ெ துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டபோதும் பின்னர் அது ள தற்போது அரசாங்கத்தினால் 1.9 சதவீதமாக குறைக்கப் ன பட்டு விட்டதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
3
ர்
“க
- கடந்த காலங்களில் இலங்கையை முன்மாதிரியாகக் கொண்டே கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை தென்காசிய நாடுகள் அதிகரிக்கத் தொடங்கியதாகவும் குறிப்பாக நிகர தேசிய உற்பத்தியில் நேபாளம் 4.7 சதவீதத்தையும், மாலைத்தீவு 3.7 சதவீதத்தையும் இந்தியா 3.2 சதவீதத்தை
யும், பாகிஸ்தான் 2.9 சதவீதத்தையும் பங்காளதேஷ் 2.4 ம் சதவீதத்தையும் அதேபோல் தென்னாசிய நாடுகளான ன் மலேசியா 6.2 சதவீதத்தையும், தாய்லாந்து 5.6 சதவீதத்தை கை யும் ஆபிரிக்க நாடுகள் 4.7 சதவீதத்தையும் ஒதுக்கும் ம் நிலையில் இலங்கையானது 1.9 சதவீதமாக இறக்க ம், நிலைக்கு செல்வதாகக் கல்விமான்கள் சுட்டிக்காட்டு
ம் கின்றனர்.
ய
மா.தே.உ. G.D.P ஆண்டு
கல்விக்கான ஒதுக்கீடு
சதவீதம்
2000
2.88
2005
2.59
2010
1.86
2012
1.60
24
ஆசிசியம்

Page 27
(அட்டவணையில் உள்ளது போன்று இலங்கையில் இந்நிலை 2000ம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டு ஆடும்போது வெகுவாக குறைந்து வருவதை காணலாம்)
இவ்வாறு GDP யில் கல்விக்கான ஒதுக்கீடு குறைந்து வருவதாலேயே நாட்டில் 1500க்கு மேற்பட்ட அரச பாடசாலைகள் மூடப்பட்டு வருவதாகவும், நாளுக்கு நாள் சர்வதேச பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் என்பன அதிகரிக்க இடம் வழங்கப்படுவதாகவும், அரசின் இவ்வாறான முயற்சியானது எமது எதிர்கால சந்ததியினரின் கல்விக்கான சமசந்தர்ப்பத்தை கேள்விக் குறியாக்கி உள்ளதாகவும் கல்விமான்கள் சாடுகின்றனர்.
குறிப்பாக 2011 உயர்தர பரீட்சையில் தோற்றி Z புள்ளி பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட 4447 பேர் மேலதிகமாக பல்கலைக்கழகங்களில் இணைக்கப்பட வுள்ளனர். இவர்களுக்காக புதிய பல்கலைக்கழகம் ஒன்றினை அமைக்க உள்ளதாக அரசு கூறி வருகின்றது. ஆனால் கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் இதனை நிறைவேற்ற முடியுமா? என்ற ஐயம் தற்போது தோன்றி யுள்ளது.
அதேபோல் பாடசாலை கல்வியில் தர விருத்தியி னையும், பண்புசார் விருத்தியையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அரசு குறிப்பிடுகிறது. 1000 இடைநிலை பாடசாலைகள் திட்டம், 5000 ஆரம்ப பாடசாலைகள் அபிவிருத்தி திட்டம், 1400 பிள்ளைநேய பாடசாலைகள் திட்டம் என்பவற்றை எல்லாம் எவ்வாறு மேற்கொள்ளப் போகிறது என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் இன்று உருவாகியுள்ளது. இவற்றுக்கு அரசு 2013 வரவு - செலவு திட்டத்திலாவது மேலதிக நிதியை ஒதுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அதில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே அரசாங் கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள இத்திட்டங்களை எவ்வாறு மேற்கொள்ள போகிறது என்ற வினாவும் தற்போது அனைவராலும் முன்வைக்கப்படுகின்றது. எனவே கல்விக்கான அரசின் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க கல்விப்புலத்தில் உள்ள அனைவரும் போராட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. எனவே இதுவும் இன்று கல்வித்துறையில் ஒரு நெருக்கடி நிலையாக மாறிவருகின்றது. கல்வித்துறையில் அதிகரித்துவரும் அரசியல் தலையீடுகள்
இன்று கல்வி முகாமைத்துவ முறையில் வினை யாற்றல் குறைந்து செல்ல காரணங்கள் என 2003இல் தேசிய கல்வி ஆணைக்குழு சில விடயங்களை சுட்டிக் காட்டியது. அதில் முதலாவதாக கூறப்பட்ட விடயம் "கல்வி நடைமுறையில் அனைத்து மட்டங்களிலும்
ஜன-பெப் 2013 |

அரசியல் தலையீடுகள் அதிகரித்து செல்கிறது” என்பதா கும். இது சுட்டிக்காட்டப்பட்டு இன்று 10 வருடங்களாகி யும் கல்வித்துறையானது சுயாதீனமாக இயங்க செய்வதற் கான எந்தஒரு நடவடிக் கையும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக அது அதிகரித்து செல்லும் நிலையே காணப்படுகின்றது. இன்று கல்வித் துறை மட்டுமல்ல அனைத்து துறைகளுமே அரசியல் மயமாக்கப்பட்டு செல்லும் நிலையே காணப்படுகிறது.
பாடசாலை கல்வி முறையில் அமைச்சு மட்டத்தில் உயர்பதவிகளில் இருந்து பாடசாலையின் கல்விசார் ஊழியர்கள் வரை பதவி நியமனங்கள், இடமாற்றங்கள் மற்றும் பாடசாலை நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தி லும் அரசியல் தலையீடுகள் அதிகரித்து செல்வதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன. தற்போது கல்வித்துறையில் உள்ள பதவிகளுக்கு அரசியல் கூட்டணியில் உள்ளவர்களே நியமிக்கப்படுகின்றனர். அவர்களின் தகுதி தம்மை தெரிவுசெய்த அமைச்சின் மீதுள்ள விசுவாசத்துக்கு ஏற்ப செயற்படுவதேயாகும். இதனால் கல்வி அமைப்பில் சகல மட்டங்களும் பலவீனமுற்று வருவதாகவும், அதிகார துஷ்பிரயோகங் கள் இடம் பெறுவதாகவும் (ஆசிரியர் சங்கங்கள் ) சுட்டிக்காட்டுகின்றன. எனவே அமைச்சு மட்ட அதிகாரி களாயினும், கல்வி அதிகாரிகளாயினும், பாடசாலை அதிபர் ஆசிரியர்களாயினும் அரசியல் பின்புலமென்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவரும் நிலையே காணப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க உயர்கல்வித்துறையை எடுத்துக் கொண்டால் பல்கலைக்கழகங்களில் இன்று சுதந்திரமாக நடந்து செல்ல முடியாதளவுக்கு அரசியல் தலையீடுகள் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. பல்கலைக்கழகங்களில் தமக்கு வேண்டப்படாத மாணவர்களின் பெயர்பட்டி யலை பகிடிவதைகளில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டி அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளு மாறு உபவேந்தரை கோரும் அளவுக்கு அரசியல் தலையீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப் படுகின்றது.
இலங்கை கல்வி அமைப்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவே பல்கலைக்கழகம் தொடர்பிலான அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருந்தது. ஆனால் இன்று அது உயர்கல்வி அமைச்சு மேற்கொள்ளும் முடிவுகளை செயற்படுத்தும் சாதாரண நிறுவனமாக மாறியுள்ளதாகவும்/ ஒரு அரச திணைக்களமாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்று பல்கலைக்கழகங்களின் அனைத்து உயர்பதவி களுக்கான (பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உட்பட) நியமனங்களின் போதும் அரசியல் தலையிடுகள் அதிகம் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
25
ஆசிரியம்

Page 28
அவ்வாறு நியமனம் பெற்றவர்கள் அரசாங்கத்தின் விசுவாசிகளாகவும், அரசாங்கத்தின் தேவைகளை மறைமுகமாக நிறைவேற்றுபவர்களாகவும் செயற்படுத்து வதாக குறை கூறப்படுகிறது.
தற்போது பல்கலைக்கழகம் நுழைவோருக்கான தலைமைத்துவ பயிற்சி என்ற அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சின் தலையீடும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. இந்த பயிற்சியால் மாணவரிடம் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்றும் எனவே இதனை இரத்து செய்ய வேண்டும் என்றும் அனைத்து மட்டங்களிலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி திட்டத்துக்கு அமையவே தற்போதும் இது தொடர்வதாக
குற்றம் சுமத்தப்படுகிறது.
இவ்வாறாக நாட்டின் பாடசாலை மற்றும் பல்கலைக் கழகக் கல்வி முறைமையில் அரசியல் தலையீடுகளின் அதிகரித்த போக்கானது எதிர்காலத்தில் இவை சுதந்திரமாக செயற்பட முடியாமல் அரசாங்கத் தின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப செயற்படும் நிலைமையையே உருவாக்கும் என சுட்டிக்காட்டப்படுகிறது. இதனை ஆசிரியர் - பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களும், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் தொடர்ச்சியாக கூறி வருகின்றன. இவ் அரசியல் தலையீடானது எதிர்காலத்தில் கல்வித்துறையின் சுதந்திரமான செயற்பாட்டுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்பதோடு மேலும் நெருக்கடியான நிலையை உருவாக்கும் என்றே கூறலாம். அதிபர் - ஆசிரியர் சம்பள முரண்பாடுகளால் தோன்றியுள்ள நெருக்கடிகள்
நாட்டில் அதிபர், ஆசிரியர் சம்பள பிரச்சினை யானது மிக நீண்டகாலமாகவே நிலவிய ஒன்றாகும். ஆனால் அண்மைக் காலங்களிலேயே இது அதிக அழுத்தம் பெற தொடங்கியுள்ளது. தற்போது சம்பள முரண்பாடு உட்பட 13 பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு ஆர்ப்பாட்டங் களில் அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டு வருகின்றன. அதில் முக்கியமாக, 0 அதிபர் - ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை
தீர்ப்பதற்கென அனுமதியளிக்கப்பட்ட இடைகால சம்பள திட்டத்தை அமுல்படுத்தல்.
அதிபர் - ஆசிரியர்களின் சம்பள நிலுவையை உடன் வழங்குதல்.
கல்வித்துறை அரசியல் மயப்படுவதை உடன் நிறுத்துதல்.
கால்ப
ஜன-பெப் 2013

© கல்விக்கு மொத்த தேசிய உற்பத்தியில் 6 சதவீதத்தை
ஒதுக்குதல்.
2010 டிசம்பர் 31க்கு பின் அதிபர் - ஆசிரியர்களுக்கு வழங்கப்படாதிருக்கும் பதவியுயர்வுகளை வழங்குதல்.
போன்ற கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி இவர்கள் ஆர்ப்பாட்ட பேரணிகள், பணிப்பகிஸ்கரிப்புகள் என்பவற்றில் தற்போது ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இதன் ஒரு கட்டமாக கடந்த டிசம்பர் மாதம் 4ம் திகதி நாட்டிலுள்ள சகல பாடசாலைகளிலும் பணிப்பகிஸ்கரிப் புக்கு அழைப்பு விடுத்து அதனை வெற்றிகரமாகவும் நடைமுறைப்படுத்தினர்.
குறிப்பாக அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண் பாட்டைத் தீர்க்க 6700 மில்லியன் ரூபாய் தேவையாக உள்ளது என்றும் ஆனால் இது தொடர்பாக 2013 வரவு - செலவு திட்டத்தில் எதுவும் கூறப்பட வில்லை என்றும் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே 2013ஆம் ஆண்டிலும் தமது சம்பள நிலுவை தொடர் பான பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படாது தாம் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் தமது நியாயமான கோரிக்கைகளை செவிசாய்க்காமல் அரசாங்கம் தமது தொழிற்சங்கங்களை பிரித்தாலும் கைங்கரியங்களிலேயே தொடர்ந்தும் ஈடுபடுவதாகவும் குறை கூறுகின்றனர்.
எனவே அதிபர் - ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் எதிர்வரும் நாட்களில் அவர்கள் மேலும் போராட்டங்களை முன்னெடுப்பர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதனால் இனிவரும் காலங்களில் பாடசாலை கல்வியி லும் பாரிய நெருக்கடி நிலை உருவாவதற்கான சூழலே காணப்படுகின்றது.
மேற்கூறப்பட்ட முக்கிய பிரச்சினைகளுடன் தற்போது மாணவர் இடைவிலகல் வருடாவருடம் அதிகரித்து செல்வது நாட்டில் பிரபல பாடசாலைகளில் தரம் -1 இற்கு மாணவர்களை அனுமதிப்பது. பாடசாலை களின் கல்வித்தரமானது தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்வது. மாகாண கல்வித் திணைக்களங்களில் இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளை நியமிப்பது என எல்லா மட்டங்களிலும் நெருக்கடி நிலை தொடர்ச்சியாக அதிகரித்து செல்லும் போக்கையே காண முடிகின்றது. இது கல்வித்துறையை பொறுத்தவரையில் ஒது பாதக மான சமிஞ்சையாகவே நோக்கப்படுகின்றது.
தொடர்ச்சி....35ம் பக்கம்
26
- ஆசிசியம்

Page 29
உயர் பண்பு ஆசிரியர் பயிற்சி
இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் இன்று வரை இலங்கையில் பல்வேறு காலப் பகுதிகளில் கலைத்திட்டச் சீர்திருத்தங்கள் நடைபெற்று அமுலாக்கப் பட்டு வந்துள்ளன. இவற்றில் பின்வரும் சீர்திருத்தங்கள் (அட்டவணை 1) ஆசிரியர்களின் பணிகளில் பல்வேறு மாற்றங்களை வெளிக்கொணர்ந்துள்ளன.
அட்டவணை 1: இலங்கையின் கல்விச்
சீர்திருத்தங்கள்
ஆண்டு
சீர்திருத்தங்கள்
(1953/1954
கைப்பணிகள் புகுத்தப்பட்டது
1961
வேலை அனுபவம் அறிமுகப்படுத்தப்பட்டது
1966
விவசாயம் கட்டாய பாடமாக்கப்பட்டது
1972
ஒன்றிணைந்த பாடங்கள், தொழில் முன்னிலைப் பாடங்கள், செயற்றிட்டப் பணி என்பற்றின் அறிமுகம்
2007
கல்வியில் பண் புத்தரத்தை உயர்த்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமை
இந்தவகையில் ஆசிரியர்களின் வாண்மை விருத்தி காலத்துடன் மாற்றம் பெறுதல் வேண்டும். இம்மாற் றத்தை வெளிக்கொணரும் வகையில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் வேலை மீதான பயிற்சி மற்றும் வேலைக்குப் புறம்பான பயிற்சி முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இலங்கையில் நடைபெறும் அனேக ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங் களை நோக்கும் போது அவை வினைத்திறன் மற்றும் விளைதிறன் வாய்ந்தவையா என்பது கேள்விக்ககுறியே.
பயிற்சி நிகழ்சித்திட்டதில் தீர்மானிக்கப்பட்ட பௌதிக, மனித, நிதி, நேர வளங்களை சிறப்பான முறையில் பயன் படுத்தி சிறந்த விளைவு ஏற்படும் வகையில் மேற்கொள் ளப்படும் ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் வினைத்திறன் உடையதாகக் கருதப்படும். அதேபோன்று
பியன்
ஜன-பெப் 2013

த் தரமிக்க நிகழ்ச்சித் திட்டம்
க.கோமளேஸ்வரன்
தீர்மானிக்கப்பட்ட நோக்கங்கள் அனைத்தும் அல்லது அவற்றின் பெரும்பாலான நோக்கங்கள் நிறைவேற்றப் படும் போது அந்நிகழ்சித்திட்டம் விளைதிறன் உடையதாகக் கருதப்படும்.
இவ்வினைத்திறன், விளைதிறன் என்பன ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களில் சிறந்த முறையில் பேணப்படாவிடத்து ஆசிரியர்களின் பங்கு பற்றல் பலவீனமடையும். இதனால் எதிர்பார்க்கப்பட்ட கல்விக் கொள்கைகளின் அமுலாக்கம் சிறப்பானதாக அமை யாது. இந்நிகழ்சித்திட்டங்களோ வீண் விரயத்தை உண்டாக்கும் ஓர் செயற்பாடாக மாறிவிடும். இறுதியாக இது நாட்டின் கல்வியில் பண்புத்தர வீழ்சியை ஏற்படுத் தும். ஆகவே ஆசிரியர் பயிற்சி நிகழ்சித்திட்டங்களில் விளைதிறனையும் வினைத்திறனையும் அதிகரிப்பதற்கு விஞ்ஞான ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட சிறந்த திட்டமிடல் அவசியமானதாகும் (Congo, 2005).
விஞ்ஞான ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட சிறந்த திட்டமிடலை ஆசிரியர் அபிவிருத்தியுடன் இணைக்கும் போது "ஆசிரியர் அபிவிருத்தியில் திட்டமிடல்” என்ற விடயம் வெளிக்கொணரப்படுகிறது. ஒரு நாடு, நாட்டின் சமூகம் என்ற வகையில் சில தேவைகளும் குறிக் கோள்களும் உள்ளன. அத்தேவைகளை ஆகக்கூடிய விளைதிறன் மற்றும் பயனுறுதித் தன்மையுடன் அடைவதற்கான விஞ்ஞான ரீதியில் அமைந்த ஒழுங்கான செயன்முறையைத் "திட்டமிடல்” என்ற பதம் எடுத்துக் காட்டுகிறது (சோ.சந்திரசேகரம்மற்றும்மா.சின்னத்தம்பி,2006). கல்வியின் வரலாற்றுப் பின்னணியையும் கல்வி அமைப் பின் மீது தற்காலப் போக்கு விடுக்கும் சவால்களையும் சார்பிலக்கியங்களினுாடாக நோக்கும் போது, கலைத்திட்டச் சீராக்கத்தின் உயர் அனுகூலங்களைச் சமூகம் பெறு வதற்கு ஆசிரியர் சேவைக்காலப் பயிற்சியின் தேவையும் அதன் திட்டமிடலும் மிக முக்கியமானதொன்றாகும் என்பதை கொன்கோ (2005) எடுத்துக் காட்டியுள்ளார். அத்துடன் "வெற்றிகரமான பாடசாலை அபிவிருத்தித்
27
ஆசிரியம்

Page 30
திட்டத்தின் அல்லது கலைத்திட்ட சீர்திருத்தத்தின் நோக்கங்களை உண்மையாக சமூகத்திற்கு மாற்றீடு செய்பவர்கள் மாணவர்களாக இருந்தாலும், மாணவர் சமூகத்தில் இவற்றை அமுலாக்குவதில் ஆசிரியர்கள் முக்கிய இடம் வகிக்கின்றனர். இதனால் ஆசிரியர் அபிவிருத்திக்கான பயிற்சித்திட்டமிடலானது ஆசிரியர் அபிவிருத்தியை மதிப்பிடும் ஒன்றாகவும், அவர்களின் அபிவிருத்தித் தேவைகளையும் திறன்களையும் பரி சோதிப்பதை உள்ளடக்கியதாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்பதை புளோவர் (Flowers, 2002) எடுத்துக்
கூறுகின்றார். பயிற்சிக்கான திட்டமிடல்
விளைதிறனான ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித்திட்டத் தைத் திட்டமிடுவதற்குப் பயிற்சித்திட்டமிடலாளர்கள், ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித்திட்டத்தில் நான்கு முக்கிய பண்புகளைக் கருத்தில்கொள்வது முக்கியமானதாகும் (கொன்கோ, 2005). அவை மேல்வருமாறு: 0 அனுபவக்கற்றல் (Experiential learning): இது
அனுபவம் (செயற் பாடுகளும் பயிற்சிகளும்), அனுபவத்தின் பிரதிபலிப்புக்கள் (தொழிற்தகுதி), பொருத்தமான எண்ணக்கரு உருவாக்கம், திட்ட மிடல் (அனுபவத்தைப்பயன்படுத்தல், பிரதிபலித்தல்) என்பவற்றை உள்ளடக்கியதாகும். © குறிப்பிட்ட திறன்களில் நிபுணத்துவம் (Mastery of
Specific Skill): வகுப்பறை முகாமைத்துவத்திறன்கள், வகுப்பறையில் வசதிவாய்ப்புக்களை வழங்குவதற் கான முறைகளைக் கையாளும் திறன்கள், குழுக் களை எவ்வாறு அவதானிப்பது, எவ்வாறு செயற் பாடுகளைச் செயற்படுத்துவது, எவ்வாறு குழு வேலைகளைச் செயற்படுத்துவது போன்ற திறன்கள், குழு வேலைகளை அபிவிருத்தி செய்வதற்கான திறன்கள், பகுப்பாய்வு மற்றும் மதிப்பீடு செய்வதற் கான திறன்கள், தெரிவுசெய்யப்பட்ட வகுப்பறை யொன்றை விருத்தி செய்வதற்கான திறன்கள் என்பன இதில் அடங்கும்.
Tன
பயிற்சி நடைமுறைகளுக்கும் வகுப்பறைகளுக்கும் இடையில் இணைப்பை ஏற்படுத்தல்.
திட்டமிடலில் நிகழ்ச்சித்திட்ட இலக்குகள், முறை கள் என்பவற்றை உருவாக்குவதிலும் கூட்டாகச் செயற்படுதல்.
கொன்கோவின் கருத்திற்கிணங்க பயிற்சிகளைச் செயற்படுத்துபவர் மேல்வரும் வினாக்களை வினவ வேண்டும்:
ஜன்-பெப் 2013

© பயிற்சியை ஆரம்பிப்பதற்கான பொருத்தமான
செயற்பாட்டு முறைகள் எவை?
செயற்பாடுகளைச் செயல்படுத்தலானது குறித்த ஒழுங்கில் நடைபெறுகின்றதா? (பயிற்சிகள்,
செயலொழுங்குகள்) - © திட்டமிடப்பட்ட செயலொழுங்குகளை எவ்வாறு
பொருத்தமாக அமுல்படுத்த வேண்டும்? 0 கருத்தில் கொள்ளப்பட்ட கோட்பாடுகள் பொருத்த
மான செயற்பாட்டுத் தொடர்களாக (செயற்பாடுகள் ஆசிரியர் பங்களிப்பை, கற்பவரின் பங்களிப்பை, வகுப்பறை முகாமைத்துவத்தை, கவனத்தைக் கவருதலை அடிப்படையாகக் கொண்டதாக)
ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதா? © எவ்விதமான வித்தியாசமான வழிகளில் பயிற்சியை
மேற்கொள்ளலாம்?
© தீர்மானிக்கப்பட்ட ஒழுங்கில் செயற்பாடுகள் பிரதிபலிக்கக்கூடிய வகையில் முன்னெடுக்கப்படு கின்றதா? 0 எளிதாக்குபவர் எண்ணக்கருக்களின் குறிப்பிட்ட பட்டியலை கணிப்பீட்டுக்குப் பொருத்தமானவாறு தயாரித்துள்ளாரா? அத்துடன் குறித்த ஒழுங்கில் செயல் படுத்தும் நோக்குடன் எண்ணக்கருக் களுக்குப் பொருத்தமான செயற்பாட்டுத் தொடர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனவா?
0
வகுப்பறைச் செயற்பாடுகளின் திட்டத்தை எளி தாக்குபவர் எவ்வாறு ஒழுங்குபடுத்தியுள்ளார்?
© எளிதாக்குபவரை வழிகாட்டக்கூடிய பிரதான
அடிப்படைகள்/கொள்கைகள் எவை?
இக்கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு "கல்குடா கல்வி வலய ஆசிரியர்களின் சேவைக்கால பயிற்சிகளின் மதிப்பீடு” தொடர்பாக நான் மேற் கொண்ட ஆய்வின் மூலம் பெற்ற அறிவின் பயனாக வினைத்திறன் மற்றும் விளைதிறன் கொண்ட பயிற்சி மாதிரிகை (உரு 1) ஒன்றை இங்கு தருகின்றேன்.
மேற்படிப் பயிற்சி மாதிரிகை ஐந்து தெளிவான படிநிலைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு படிநிலை யிலும் பயிற்றுவிப்பாளர்களினதும் பயிற்சியில் ஈடுபடும் ஆசிரியர்களினதும் பங்குபற்றல் உச்ச அளவு காணப் படுகிறது. 1. திட்டமிடல்
இங்கு ஆசிரியர்களுக்கு விருப்பமான மற்றும் தற்காலத்திற்குப் பொருத்தமான பயிற்சித் தேவைகளை
- ஆசிரியம்
+ 28

Page 31
நேர்காணல்கள், வினாக்கொத்து முறைகள், அவதான, ஆவணப் பகுப்பாய்வு முறைகள் மூலம் பகுத்தா ராயப்பட்டு முன்னுரிமைப் படுத்தப்பட்டு பயிற்சிக்கான பரப்புக்கள் தீரமானிக்கப்படுகின்றன (உரு 2).
2. பயிற்சி
இது பயிற்றுவிப்பாளர்களினதும் பயிற்சியில் ஈடுபடும் ஆசிரியர்களினதும் ஒன்றிணைப்புடனும் முற்சோத னையுடனும் ஆரம்பிக்கின்றது. பயிற்றுவிப்பாளர் களிடமும், பயிற்சியில் ஈடுபடும் ஆசிரியர்களிடமும் மேல்வரும் மேம்பாடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
பயிற்றுவிப்பாளர்கள் சார்பான மேம்பாடு
பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்றைத் திட்டமிடு வதற்கான அறிவையும் திறன்களையும் உருவாக்கும் பயிற்சிப் பட்டறைகளை, பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் முகாமையாளர்கள் போன்றோருக்காக ஒழுங்கு செய்து அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகள் சார்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கு முன்னர் இவ்வாறான
E- பின்னுாட்டல் 1. மொத்த செயற்பாடுகளினதும் பகுப்பாய்வு.
திருத்தியமைக்கப்பட்ட அல்லது
முன்னேற்றப்பட்ட விடயங்களை/ செயற்பாடுகளை எதிர்காலப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களில் பயன்படுத்தல்
D- மதிப்பீடு 1. பிற்சோதனை. 2. பயிற்சி சார்பாக ஆசிரியர்களின் திருப்தி. 3. கற்றல்-கற்பித்தல் வேளைகளில் ஆசிரியர்களை
அவதானித்தல். 4. ஆசிரியர்களின் கருத்துக் கணிப்பெடுத்தல். 5. மாணவர்களின் நேர்காணல்கள் 6. பயிற்சி பொருத்தப்பாடுகள் பற்றி ஆசிரியர்களின்
கருத்துக்கள்.
C- பின்தொடர் செயற் 1. ஆசிரியர் பாடத்திட்டத்தை பரிட்சித்தல். 2. வகுப்பறையில் ஆசிரியர் கற்பித்தலை 3. இடர்கள் பற்றி ஆசிரியர்களுடன் கலந்
ஆசிரியர் கருத்துக்களை வருவித்தலும் இரு செயலமர்வுகள்: செயலமர்வு 1: பொதுப்பிரச்சினைகளைக்
அதற்கான தீர்வுகளும் (கற்றல், கற்பித்த முன்னேற்றம் பற்றிய தீர்வுகள்). செயலமர்வு 2: பாடத்திட்டத்திலும் செயற் முன்னேற்றம் பற்றிய கலந்துரையாடல்க
ஜன-பெப் 2013

பயிற்சிகளில் பயிற்றுவிப்பாளர்களை உட்படுத்தல் அவசியமாகின்றது. அதாவது, ஆசிரியர்களிடம் நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்துள்ள பயிற்சிகளில் பயிற்றுவிப்பாளர்களை முதலில் ஈடுபடுத்துவது சிறந்த தாகும். பயிற்சியில் பயிற்றுவிப்பாளர்களுக்கு ஒதுக்கப் பட்ட சேவைப் பகிர்வில்/செயற்பாடுகளில் அவர்கள் எவ்வாறு செயற்படப் போகின்றார்கள் என்பதை அவர்கள் முதலில் திட்டமிட்டு அறிக்கையொன்றைத் தயாரித்தல் வேண்டும். பின்னர் இவ்வறிக்கையானது அனுபவம் வாய்ந்த மதிப்பீட்டாளர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு பயிற்றுவிப்பாளர்களின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். பயிற்சியில் ஈடுபடுவோர் சார்பான மேம்பாடு
- பயிற்சியொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் பயிற்சி நோக்கங்கள், பயிற்சி நடைமுறைகள், பயிற்சி விடயங்கள், பயிற்சிக் காலங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று பயிற்சியில் ஈடுபடும் ஆசிரியர் களுக்காக மேற்கொள்ளப்பட வேண்டும். இக்கலந்துரை யாடல் களில் பயிற் சியில் எதிர் பார்க் கப்படும்
- A - திட்டமிடல் ஆசிரியர் சேவைக்காலப் பயிற்சியொன்றைத் திட்டமிடும் போது கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்களையும் செயற்பாட்டுத் தொடர்களையும் உரு 2 விரிவான முறையில் எடுத்துக்காட்டுகின்றது.
- B- பயிற்சி 1. பயிற்சியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான
முற்சோதனை 2. பயிற்சியாளர்களையும் பயிற்றுவிப்பாளர்க
ளையும் செயற்படுத்தல். 3. பயிற்சிக்கான பௌதிக வளங்களைப்பயன்படுத்தல் 4. பயிற்சி உள்ளடக்கங்களையும் அதற்கான
செயற்பாடுகளையும் அமுலாக்கல்.
பாடு பாடசாலையில்:
அவதானித்தல். துரையாடல்களும்
கலந்துரையாடலும் கல் முறைகளில் மேலதிக
உரு 1: வினைத்திறன் மற்றும்
விளைதிறன் கொண்ட பயிற்சி
மாதிரிகை
பாடுகளிலும் தற்போதைய
ள்.
29
ஆசிசியம்

Page 32
நடை முறைப் பிரச் சினைகள், ஆசிரியர்களின் எதிர்பார்ப்புகள், ஆசிரியர்கள் எவ்வாறான ஆயத்த நிலையில் பயிற்சி களுக்குச் சமூகம் தரவேண்டும் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டு, முன்னறிவுட் பொன்றும் வழங்கப்பட வேண்டும். 3. பின்தொடர் செயற்பாடு
பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்தையும் வகுப்பறைக ளையும் இணைக்கும் செயற்பாடுகளாக இவை உள்ளன. பயிற்சிச் செயன்முறைகள் பயிற்சிப் பட்டறைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் வகுப்பறைகளிலும் மேற்கொள் ளப்படுவதைக் காணமுடிகின்றது. 4. மதிப்பீடு
இது முக்கியமான செயன்முறையாகும். பயனாளி கள், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், அதிபர்கள் போன்றோரி டம் நேர்காணல்கள், வினாக்கொத்துக்கள் மூலம்
பயிற்சித்தேவைகளைக் கணிப்பிடுதல்
பயிற்சி நோக்கங்களைத் தயாரித்தல்
பயிற்சிச் செயல் ஒழுங்குகளைத் தயாரித்தல்
வளங்களைத் தெரிதல்
மானிட வளங்கள்
பௌதீக வளங்கள்
பயிற்றுவிப்பாளர்கள் தமது செயற்பாடுகளைத் தீர்மானித்தல்
மதிப்பீட்டு முறைகளைத் தீர்மானித்தல்
ஜன-பெப் 2013

கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டு மதிப்பீடு மேற்கொள்படுகிறது. 5. பின்னூட்டல்
மதிப்பீடுகளிற் பெற்ற தகவல்களுக்கிணங்கப் பயிற்சி நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் திட்ட மிடப்படுகின்றன.
இவ்வாறான பயிற்சிச் செயன்முறை சாத்தியமற்றது, காலத்தைக் கடத்தி விடக்கூடியது, பணச்செலவை ஏற்படுத்துமொன்று எனப் பல காரணங்களைக் கூறி ஒதுக்கிவிடாமல் கல்வியியலாளர்களாகிய நாம் இவற்றை ஆசிரியர் வாண்மை விருத்திப் பயிற்சிச் செயன்முறை களில் நடைமுறைப்படுத்தி அவற்றினுடைய விளை திறனையும் வினைத்திறனையும் உயர்த்திக் கொள்வதற்கு முயற்சிப்போம்.
அனுபவம் மிக்க பயிற்சித்திட்டமிடலாளர்களுடன் கலந்துரையாடல்கள் மூலம் பொருத்தப்பாட்டை மதிப்பிடல்
பயிற்சியில் ஈடுபடவுள்ள
ஆசிரியர்களுடனான கலந்துரையாடல்கள் மூலம் பொருத்தப்பாட்டை மதிப்பிடல்
பின்னுாட்டல்
(உரு 2: திட்டமிடல் படிகள்)
30
ஆசிசியம்

Page 33
கல்விக்கான சிறந் பிள்ளைநேயப்பு
யாக
இலங்கை மிக நீண்ட கல்விப் பாரம்பரியங்களைக் கொண்ட ஒரு நாடாகும். சமய நிறுவனங்கள் ஊடாக குரு-சிஷ்ய முறைமையிலிருந்து மாற்றம் பெறுவதற்கு 1815 ஆண் டில் முழு நாட்டையும் ஆங்கிலேயர் கைப்பற்றியவுடன் கல்விக்கான மறுமலர்ச்சியும் புதிய உத்வேகமும் ஏற்படலாயின. அந்தவகையில் 1930ம் ஆண்டில் ஆரம்பித்த கல்வி முறைமையின் மாற்றங்கள் 1931இல் கிடைக்கப்பெற்ற சர்வஜன வாக்குரிமையுடன் சமூக மாற்றத்துடன்கூடிய கல்விமாற்றங்களும் ஏற்பட்டு 1939ஆண்டின் கொண்டுவரப்பட்ட கல்விச் சட்டத்துடன் மாற்றங்கள் காணவிளைந்ததன் விளைவாக 1940களின் பின்னர் மத்தியவகுப்பினரின் தோற்றம், மத்திய ( பாடசலைகள், புலமைப்பரிசில் திட்டம், உயர்கல்விக் . கான வாய்ப்புக்கள் போன்றவற்றுடன் சி.டபிள்யு டபிள்யு. கன்னங்கராவின் பாலர்முதல் பல்கலைக்கழகம் வரையிலான இலவசக்கல்வி முறைமைகள் நாட்டின் கல்வி வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையாக அமைந்திருந்தன.
அதனைத் தொடர்ந்து 1950களின் பின்னர் தாய்மொழிக் கல்வியின் அறிமுகம், நாடுமுழுவதும் பாடசாலைகள் உருவாக்கத்தைத் தொடர்ந்து, தனியாரிடம் இருந்த கல்வி | பிரிவுகள் அனைத்தும் 1961ஆம் ஆண்டில் அரசுடமை யாக்கப்பட்டமையாக்கப்பட்டதன் விளைவு சாதாரண மக்களையும் கல்வியின்பால் ஈடுபாடு காட்டக்கூடிய முனைப்பை ஏற்படுத்தின. இலவச மதிய உணவு, - போக்குவரத்து மானியம் போன்றன காரணமாக 6 பாடசாலையில் மாணவர்கள் சேருகின்ற வீதம் அதிகரித்து 1 எழுத்தறிவும் துரிதமாக வளர்ச்சியடைந்தன. கல்வியில் 4 பால்நிலை ஏற்றத்தாழ்வுகள் குறைவடைந்து கல்வி கற்றோர் வீதம் கூடி வேலையற்றோர் வீதமும் அதிகரித் ( துச் செல்ல ஏதுவாகின. இருப்பினும் பாடசாலைக் ( கல்வியானது வேலை உலகிற்கு பொருத்தமானதாகவும், 6 தரம், பொருத்தப்பாடின்மை போன்றனவும் எதிர்பார்த்த 6 வாறு விளைதிறனாக அமையவில்லை. படித்த இளைஞர் ! களது பட்டியல் நீண்டு சென்று, வேலையில்லாத் ? திண்டாட்டம் காரணமாக 1970 - 1980க்கு இடைப்பட்ட காலங்களில் போராட்டங்களும், பிரச்சினைகளும் தலைதுாக்கின. இதன்காரணமாக இடைநிலை மட்டத்தில் சமநிலை கொண்ட ஒரு பொதுக் கலைத்திட்டம் ஒன்றின்
அவசியம் உணரப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டன.
ப
- 0.
ஜன-பெப் 2013

த அத்திவாரமாக பாடசாலைகள்
எஸ்.எல்.மன்சூர்
தொடர்ந்து காலத்திற்கேற்ப கலைத்திட்ட சீர்திருத் தங்கள் ஏற்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு கடந்த 1999ஆம் ஆண்டுவரையான காலப்பகுதி அடங்க லாக பலதடவைகள் கல்விமீதான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நடைமுறையில் அவை பாரிய மாற்றங்களையும் ஏற்படுத்தின. எழுத்தறிவு வீதம் 95வீதத்தையும் தாண்டிய எமது மக்களின் கல்விமீதான பற்றுக்கள் அதிகரித்துக் காணப்படலாயின. கட்டாயக் கல்வி சட்ட ஏற்பாடுகள், அனைவருக்கும் கல்வி எனும் அடிப்படையான எண்ணக்கருக்கள் எழுத்துருவில் இருந்திட்ட போதிலும் பாடசாலைகளில் சேர்கின்ற மொத்த மாணவர்களுள் சுமார் 5வீதமானோர் ஆரம்பக் கல்வியை நிறைவு செய்வதில்லை என்றும், 14வயதுக்கு முன்னர் 13வீதமானோர் கல்வியிலிருந்து விலகியும் வருகின்றனர் என்பதை உணர்ந்து கொண்ட அன்றைய அரசு பல்வேறு மட்டங்களில் மாணவர்களின் வரவை அதிகரிக்கவும், 5 - 16வயதிற்குட்பட்ட அனைவருக்கும் கட்டாயக் கல்வியை வழங்க வேண்டும் எனவும்
கூறப்பட்டிருந்தது.
அதற்கமைவாக ஆரம்பக்கல்வி புலத்தை அபி விருத்தி அடைந்துவரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் ஆரம்பக்கல்வி 131நாடுகளுள் தரநிர்ண பத்தை பொறுத்தளவில் 42வது இடத்தைப் பெற்றிருந் தமை சிறப்பான அம்சமாகும். இதற்குரிய காரணங்களாக, ஆரம்பக்கல்வி குறிப்பிட்ட பல இலக்குகளை எட்டியுள் எமை மகிழ்ச்சிகரமாக இருப்பதுடன் நாடுமுழுவதும் பரவிக் காணப்படும் 9410 பாடசாலைகளிலும் கட்டாயக் கல்வி வயதை அடைந்தும் அவர்கள் பாராமுகமாக கற்றலின்பால் திரும்பாது இருப்பது கவலையளிக்கும் சயலாகவே காணப்படுகிறது. கிராமப் பிரதேசங்கள், பெருந்தோட்டப் பகுதிகள், கடந்தகால யுத்த சூழ்நிலைக் நள்ளாகிய பிரதேசங்கள், புவியியல் ரீதியாக இடர்களை (திர்நோக்கிய பிரதேசங்கள் போன்றவற்றில் உள்ள பிள்ளைகள் இந்த பாடசாலைகளில் சேர்கின்ற வீதமும், இடைவிலகல் வீதமும் அதிகரித்துக் காணப்படலாயின.
இந்நிலை மாத்திரமன்றி ஆரம்பகல்வியின் அடைவு ட்டங்களை நோக்குகையில் 2009இல் நெரக் (NEREC) ஆய்வின் பிரகாரம் தரம் 4 மாணவரது கணித பாட
31
ஆசிரியம்

Page 34
கா
Iாடசால்
அடைவு குறைவாக காணப்பட்டது. இதற்கான காரண! களாக பாடசாலைகளில் காணப்படும் அடித்தள கட்ட மைப்பு வசதிகள், பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் பற்றா குறை, நியமங்களுக்கு ஏற்ப அமைக்கப்படாத வகுப்படை கள், வகுப்பில் இருக்க வேண்டிய உச்ச மாணவர் தொகை தளபாடம் மற்றும் உபகரணத் தட்டுப்பாடு, ஆரோக்கி யம், பாதுகாப்பு போன்றவற்றிலும் குறைபாடுகள் காணப்படுகின்றமை காரணமாக அமைந்திருந்தன இவ்வாறான விடயங்களைக் கவனத்திற் கொண்ட பிள்ளைப் பருவத்தை பாடசாலையில் இரம்மியமான ஒ
சூழ்நிலையில் வெற்றிகரமாக கழிப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்கியும், மாணவர்கள் விரும்பி பாடசாலை சென்று கற்றல் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் எதிர்காலத்திற்கு ஏற்ற அனுபவங்களைப் பெற்று கொள்ளும் ஒரு இடமாகவும் பாடசாலைச் சூழலை மாற்றமுறச் செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு சமூக, திடம் காண்படுகின்றது. ஆரம்பக் கல்வியின் தரவிருத்தி காக ஒரு பின்னணியை உருவாகும் நோக்குடன் இந் சிறுவர் நேயப் பாடசாலைகளின் உருவாக்கப்
ஆரம்பமாகின்றது.
ண்
இலங்கைப் பாடசாலைகளில் இந்த சிறுவர் நேயமிக்கப் பாடசாலைகளின் உருவாக்கம் 2002 ஆண்டில் வடமேல் மாகாணத்திலுள்ள 124 பாடசாலைகளில் யுனிசெப் அமைப்பின் உதவியுடனும், கல்வியமைச்சினாலும் வடமேல் மாகாணக் கல்வித் திணைக்களத்தினாலும் இவ்வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் பெறுபேறுகள் எதிர்பார்த்த விளைவினை தொட்டுச் காட்டின. மாணவரின் நாளாந்த வரவு அதிகரித்தமை மகிழ்ச்சிகரமான ஆரோக்கியமான பாடசாலைப் பொறி தொகுதி, பாடசாலைக்கு அந்த சமூகத்தின் பங்களிப்பு எதிர்நோக்கிய பிரச்சினைகள், அதற்கான தீர்வுகளுக்கு கூட்டாக முயற்சி மேற்கொண்டமை இம்முன்னோடித் திட்டத்திற்கு வெற்றிப்படிகளாக அமைந்தன. இதனை தொடர்ந்து 2004ஆம் ஆண்டில் அரசு யுனிசெப் அமைப் பின் உதவியுடன் சுமார் 30வீதமான பாடசாலைகளில் இவ் வேலைத்திட்டத்தில் உள் வாங்கப்பட்டன அதற்கமைவாக நாட்டில் சுமார் 1400க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்த ஏதுவாகின. எதிர்காலத்தில் அனைத்துப் பாடசாலைகள் லும் இதனை அமுல்படுத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகின்றது.
சிறுவர் நேயப் பாடசாலை என்கிற பொறிக்குள் பாடசாலைகள் உள்வாங்கப்பட்டுவிட்டால் அங்கே சிறுவ நேயமிக்க தன்மைகளை விருத்தி செய்கின்ற வேலைத் திட்டங்களை முன்னெடுக்கின்ற ஒரு நிலைமை காண படுகின்றது. பொதுவாகக் சிறுவர் நேயப் பாடசாலை என்பது “சர்வதேச சிறுவர் உரிமைகள் பிரகடனத்தின்படி
|காள்
'ஜன-பெப் 2013

ங் சகல பிள்ளைகளினதும் சகல உரிமைகளையும் செயல் - ரீதியில் நிறைவேற்றும் பாடசலைகள்” எனக் கூறப்பட் க் டுள்ளது. இந்தவிடயங்கள் அதாவது தொடர்ச்சியாக ற நிகழும் வண்ணம் செயற்படுத் தப்படுதல் அவசியமாகும். 5, இந்த அடிப்படையில் இதற்குரிய அம்சமான ஆறு கி பரிணாமங்கள் கொண்ட விடயங்கள் கைக்கொள்ளப் ர் படல் வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. அதாவது,
": 01. உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட செயல்
- ரீதியான உட்படுத்தல் ல 02. ஆண் - பெண் சமூக நிலைப்பாட்டுக்குத் துலங்குதல்
ல் 03. பிள்ளைகளின் கற்றல் பேறுகளை விருத்தி செய்தல்
C 4. |
04. பிள்ளைகளின் சுகாதாரப் பாதுகாப்பையும்,
காப்பையும் உறுதிப்படுத்தல் த் 05. பிள்ளைகளின் குடும்பங்களும் சமூதாயத்தினரின்
செயல்ரீதியான பங்களிப்பு.
- சி
06. சிறுவர் நேய முறைமைகள், கொள்கைகள், ஒழுங்கு
விதிகள் மூலம் உதவி பெறல்
சிறுவர் நேயம் கொண்ட பாடசாலையானது மேற்படி ஆறு கட்டமைப்புக்களில் பரந்து விரிந்துள்ளது. இங்குள்ள பிள்ளைகள் பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் அன்பு காட்டுவதுடன், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பை மதிக்கின்ற ஒரு நிலையும் காணப்படும். ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர் பற்றி உடன்பாடான வகையில் உரை யாடும் போக்கும் உருவாக்கம் பெறும். இதன்பிரகாரம் மேலுள்ள ஆறு அம்சங்களை விரிவாக நோக்குவோம்.
01. உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட செயல்
ரீதியான உட்படுத்தல்
மகி
ஐ.நா.சபையினால் 1989ல் கொண்டுவரப்பட்ட த சிறுவர் உரிமைப் பிரகடனத்தை இலங்கை 1991ஆம் த ஆண்டில் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் கல்வி ப் பெறுவது ஒவ்வொரு பிள்ளையினதும் உரிமையாகும்.
அதற்காக சமூக, பொருளாதார, உடல், உள நிலைமை கள், பண்பாட்டு வேறுபாடுகள் இன்றி சகல பிள்ளை களையும் கல்வியில் உட்படுத்துவதைக் குறிக்கும். குறிப்பாக சிறுவர் உரிமை சாசனத்தில் காணப்படும் 42 உறுப்புரைகளில் கூறப்பட்டுள்ள விடயங்களை வாழ்வதற்கான உரிமை, பாதுப்பு உரிமை, அபிவிருத்தி உரிமை, பங்குபற்றலுக்கான உரிமை என நான்கு பிரிவுக்குள் உட்படுத்தலாம். இவ்விடயங்களை சிறுவர் நேயப் பாடசாலை எண்ணக்கரு ஊடாக உரிமைகளைக் காப்பதற்கு மிகப் பொருத்தமான நிலையை உருவாக்கு தல் முக்கியமாகும். வீட்டுவன்முறை, வறுமை, வாழுமிட மின்மை, கேலிக்குள்ளாதல், பாராமுகம், நோய்கள் புறக்கணிக்கப்படல், கல்விக்கான அணுகுமுறைகளில்
- ஆசிரியம்
32

Page 35
பாரபட்சம், பிள்ளைகளின் விசேட தேவைகளில் கவனம் செலுத்தாமை, சிறுவர் தொழிலில் ஈடுபடல், கடந்தகால யுத்த சூழ்நிலை போன்றனவும் பிள்ளையின் கல்வியில் பாதகத் தன்மையை உருவாக்கி பிள்ளைகளின் உரிமை கள் மீறப்படுகின்ற சந்தர்ப்பங்களாக இவை
முன்வைப்படுகின்றன.
உட்படுத்தல் என்பது "சகல பிள்ளைகளினதும் பல்வகைமைக்கு மதிப்பளித்து, அவர்களை எவ்வித வேறுபாட்டுக்கும் உட்படுத்தாது கல்வி பெற வாய்ப் பளித்தலாகும்.” எனவேதான் சிறுவர் நேயப் பாடசாலை எண்ணக்கருவை யதார்த்தமாக்குவதற்கு உட்படுத்தற் கல்வி செயற்படுதல், சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகிய விடயங்களை நிறைவேற்றுவதும் அவசியமாகும். இதனை நடைமுறைப்படுத்துவதற்காக பாடசாலைகளில் பின்வரும் நியமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அ) பாடசாலையிலிருந்து இடைவிலகுவதைத் தடுப்பதற்
கும், பாடசாலை செல்லாத பிள்ளைகள் தொடர்ச்சி யாக தேடியறிவதற்கும் துலங்கல் காட்டுவதற்கும் பயனுறுதியுடைய பொறிமுறை ஒன்று உள்ளது அப்பொறிமுறையானது சிறப்பான முறையில் செயற்படுகிறது. ஆ) பாடசாலையில் காணப்படும் செயற்பாடுகளில் -கலந்து கொள்வதற்கும் வளங்களைப் பயன்படுத்து வதற்கும் சகல பிள்ளைகளுக்கும் சமமான
வாய்ப்புண்டு இ) உடல், உளத் தண்டனைகள் நடைமுறைப்படுத்தப் படுவதில்லை. பயமுறுத்தல், தொந்தரவு செய்தல் போன்றனவற்றைத் தடுப்பதற்கான செயல்முறை களும் அவற்றுக்குத் துலங்குதல். ஈ) சிறுவர் உரிமை தொடர்பாக ஒட்டுமொத்தப் பாட சாலைச் சமூகத்தினரும் அறிவூட்டம் பெற்றுள்ளனர். அவ்விளக்கத்துடனே பாடசாலையின் செயற்பாடு கள் நடைபெறுகின்றன. என நான்குவகை நியமங் களின் அடிப்படையிலமைந்த செயற்பாடுகள்
கவனிக்கப்படுதல் வேண்டும். 02. ஆண் - பெண் சமூக நிலைப்பாட்டில் கவனம்
செலுத்துவது.
நமது பாடசாலைக் கல்வி முறையில் ஆண், பெண் என்கிற பேதமின்றி சகலருக்கும் கல்வி வழங்குவதுடன் பாரபட்சம் காட்டக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக பிள்ளைநேயப் பாடசாலைகளில் இந்நிலைமை தெளிவாக்கப்பட்டு அடிப்படையான வசதிகள் வழங்குவதில் அதிக கவனம் செலுத்தப்படு கின்றது என்பதையே இது சுட்டிக்காட்டுகின்றது.
இதற்கான நியமங்கள் வருமாறு:
ஜன-பெப் 2013

அ) ஆரம் பக்கல்வியைப் பூரணப்படுத்துவதற்கும் இடைநிலைக் கல்வியில் பிரவேசிப்பதற்கு உதவுமுக மாக ஆண் - பெண் பிள்ளைகளுக்கிடையில் சமவாய்ப்பினை வழங்குவது. ஆ) பாடசாலையில் சகல செயற்பாடுகளின்போதும் சம
அளவில் பங்குபற்றச் செய்வது
இ) பாடசாலையின் பௌதிக வளங்கள் ஆண், பெண் பிள்ளைகளுக்கு பொருத்தமான வித்தில் காணப்படு கிறது போன்ற விடயங்களில் அடிப்படையான வசதிகளை வெவ்வேறாக வழங்கி சகல பிள்ளை களிலும் கவனம் செலுத்துவதை இது குறிக்கும்.
03. பிள்ளைகளின் கற்றல் பேறுகளை விருத்தி செய்தல்
தரமான கல்வியின் மூலம் உச்சப் பயனை அடைந்து கொள்ளும் வகையில் மாணவரது அடைவினை மேம் படுத்துவது இதன் மூலம் நிறைவேற்றப்படுகின்றது. அறிவு, திறன், மனப்பாங்கு ஊடாக அத்தியவசியக்கற்றல் தேர்ச்சி மட்டங்களை அடைந்துகொள்வதற்கான கற்றல் சூழலை அமைத்துக் கொடுப்பதும் ஆசிரியர்களது கடமை யாகும். இதனை முழுமையாக அடைந்து கொள்வதற்கு வசதியாக பின் வரும் நியமங்கள் காணப்படுதல் வேண்டும்.
அ) கற்றலுக்கு உதவுவதற்காக மனித வளங்களும் வகுப் பறை வசதிகளும் போதுமான அளவில் உள்ளமை.
ஆ) வகுப்பறைச் சூழல் உட்படுத்தல் முறையில் அமைந்து காணப்படுவதுடன், அழுத்தங்களின்றி ஜனநாய முறையில் கற்றலுக்குப் பொருத்தமானதாக காணப்படு கின்றமை.
இ) பிரதேச சூழல், பண்பாடு போன்றவை பற்றிய அறி
வைப் பெற்றுக்கொடுப்பதற்கு பாடசாலைக் கலைத் திட்டத்தில் பொருத்தமாக இசைவாக்கப்பட்டுள்ளமை.
ஈ) வழங்கப்பட்டுள்ள வாய்ப்புக்களினுடாக சுய
ஆர்வத்துடன் ஆசிரியர்கள் தமது திறன்களைத் தொடர்ச்சியாக விருத்தி செய்து கொள்ளவும்.
உ) கற்பித்தலின்போது மாணவர் மையக் கற்பித்தல்
முறை பயன்படுத்தப்படவும். ஊ) அத்தியவசியக் கற்றல் தேர்ச்சிகள் முறையாக கணிப்பீடு செய்யப்பட்டு சகல மாணவர்களும் அத்தியவசியக் கற்றல் தேர்ச்சிகளில் பாண்டித்தி யத்தை அடையச் செய் வதற்காக பயனுள் ள வழிமுறைகள் மேற்கொள்ளப் படுவதையும் உறுதி செய்வதாக இச் செயற்பாடு அமைதல் அவசியமாகும்.
- 33)
ஆசிரியம்

Page 36
04. பிள்ளைகளின் சுகாதாரப் பாதுகாப்பையும்,
காப்பையும் உறுதிப்படுத்தல்
உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி சுகாதரம் என்பது தனியே நோய்கள், ஊனங்கள் இல்லாதிருத்தல் மாத்திரமன்றி உடல், உள, சமூக வாழ்வில் பூரணத்து வத்தை அடைவதையாகும் எனக் கூறுவதற்கேற்ப பிள்ளையின் ஆரோக்கியமானது அனைத்து விடயங்க ளிலும் பலம்பொருந்தியதாகவே உள்ளது. இதனை ஆரம்பக் கல்வியில் குறிப்பாக பிள்ளை நேயப் பாட சாலைகளில் நாளாந்தம் ஒவ்வொரு செயற்பாடுகளிலும் முன்னிலைப்படுத்தப்படுவதையே குறிக்கின்றது. இதற்கான நியமங்கள் வருமாறு:
அ) சுகாதாரம், கவனிப்பு, பாதுகாப்புத் தொடர்பாகப் பாடசாலை மட்டத்திலான கொள் கைகளை காணப்படுதல்
சால்
ஆ) உணவு, நீர், கழிவகற்றல் போன்றவை தொடர்பாகப் பாடசாலையில் போதுமான வசதிகள் காணப்படுதல்.
இ) உணவு, நீர், கழிவகற்றல் வசதிகளோடு பாடசலைச்
சூழல் பாதுகாப்பானதாகப் பேணிவரப்படுகின்றமை.
ஈ) மாணவர்களுக்கான தேர்ச்சி மையச் சுகாதரக் கல்வி
பயனுள்ளவாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றமை
உ) பயனுறுதியுள்ள உள சமூக உதவியுடன் வழிப்படுத்
தும் சேவைகள், அதன் பயன்பாடுகள்
ஊ) துன்புறுத்தல்கள், துஷ்பிரயோகங்கள், அழுத்தங்கள்
போன்றவற்றிலிருந்து பிள்ளைகள் பாதுகாக்கப்படுவது.
எ) அனர்த்த முகாமைக்காகத் திட்டமிட்ட முன்னாயத் தத்துடன் நடைமுறைப்படுத்தப்படுதல். ஆகியனவும் சிறுவர் நேயமிக்க பாடசாலைகளில் காணப்படு வதன் மூலம் மேம்பட்ட போசாக்கு மிக்க நற்சுகா தாரத்துடன்கூடிய சிறப்பான எதிர்கால சமூகத்தை கட்டியெழுப்பலாம். 05. பிள்ளைகளின் குடும்பங்களும் சமூதாயத்தினரின்
செயல்ரீதியான பங்களிப்பு.
அ) மாணவர்கள், குடும்பங்கள், சமூகத்தினர் போன்
றோரின் பயனுள்ள பங்களிப்புடன் சுய கணிப்பீடு இடம்பெறுவதுடன் பாடசாலை அபிவிருத்தித் - திட்டமும் ஒழுங்கப்பட்ட நிலை. ஆ) பாடசாலை அபிவிருத்தி திட்டம் (SDP) நடை
முறைப்படுத்தப்படும்போது அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், குடும்பம், சமூகம் போன்றோர் செயல்ரீதியாகப் பங்களிப்பு செய்கின்றமை.
இ) பாடசாலை அபிவிருத்தி திட்டம் கண்காணிப்பு,
மதிப்பீடு செய்யப்படுகின்றபோது அதிபர், ஆசிரியர்
ஜன-பெப் 2013

5 ஈ)
மாக
கள், மாணவர்கள், குடும்பம், சமூகம் போன்றோர் செயல்ரீதியாகப் பங்களிப்பு செய்கின்றமை சிறுவர் நேயமிக்க வீடு/ சமூகச் சூழல் போன்றவற் றின் மேம்பாட்டிற்காக பாடசாலை உயிரோட்டமாக பங்களிப்புச் செய்கிறது. போன்றன பிள்ளையின் ஆளுமை விருத்திகளில் பாரிய பங்களிப்பினை
வழங்குகின்றது. 06. சிறுவர் நேய முறைமைகள், கொள்கைகள்,
ஒழுங்குவிதிகள் மூலம் உதவி பெறல்
பாடசாலை என்பது கல்விப்புலத்தில் காணப்படும் அனைத்து நிறுவனங்களுடனும் தொடர்புகளை பேணி வருகின்ற நிறுவனமாகும். இதற்கான விதிமுறைகள், கொள்கைகள், அணுமுறைகள் போன்றனவும் செல்வாக் குச் செலுத்துவதால் பிள்ளை நேயத்தன்மையில் அதன் பங்கும், நாட்டின் கொள்கைகளையும் கவனத்திற் கொண்டு மேம்படுத்துவதாக அமைதல் வேண்டும் என்பதற்காக பின்வரும் நியமங்கள் பின்பற்றப்படு கின்றமை சிறப்பாகும்.
அ) அரச கொள்கைகளும் சட்ட திட்டங்களும் அவற்றை நடைமுறைப்பத்துதலும் சிறுவர் நேயப் பாடசாலை
அபிவிருத்திக்கு உதவுகின்றமை.
ஆ) குறித்த சகல அரச நிறுவனங்களுக்கிடையில் சகல
நிலைகளிலும் பயனுள்ள இணைப்பு காணப்படுதல். இ) நிதி வளங்கள் பல்வேறு நிலைகளிலும் பொருத்த
மாகப் பயன்படுதல்.
ஈ) சகல நிலைகளிலும் தரமான தொழில்நுட்ப உதவித்
தொகுதிகள் காணப்படுதல்.
உ) கலைத்திட்டதிலும் பாடநுால்களிலும், ஆசிரியர்
அறிவுரைப்பு வழிகாட்டி நுாலிலும் சிறுவர் நேயக் கோட்பாடுகள் அடங்கியிருத்தல் ஆகியன கற்றல் கற்பித்தல் செயன்முறைகள் நடைமுறைப்படுத் தப்படுவது சிறுவர் நேயப் பாடசாலைகளின் பொறுப்பாகும். அதன் மூலம் பாடசாலையில் சிறுவர் நேயம் மேன்மேலும் வலுப்பெறும்.
எனவே, இவ்வாறாக பிள்ளைநேயப் பாடசாலை கள் அமையப்பெற்று சமூகத்துடன் பாடசாலைகள் பின்னிப் பிணைகின்றபோது அங்கு இடைவிலகல், சிறுவர் மீதான உரிமை மீறல் சம்பவங்கள், பிள்ளை மீதான பற்றின்மை போன்றவை காணப்படாத நேயமிக்க பிள்ளைகள் உருவாக்கம் பெறுவதற்கு வழிசமைக்கும். இன்று பாடசாலைகளில் விட்டுவிட்டு வருகின்ற மாணவர்கள், இடைவிலகல் அதிகரிப்பு, உரிய வயதில் பாடசாலை செல்லாத ஒரு கும்பல் காணப்படுகின்ற இன்றைய சூழலில் இவ்வாறானதொரு செயற்பாடு
34
-ஆசிரியம்

Page 37
யுனிசெப் ஆதரவுடன் செயற்படுத்தப்பவதனால் பாட சாலைகள் புத்தெழுச்சி பெற்று மறுபிறவி எடுத்துள்ளன என்றுதான் கூறவேண்டும்.
கிராமப்புறப் பாடசாலைகளும், சிறிய சிறிய பாடசாலைகளும் இன்று நவீன வசதிகளுடன்கூடிய அழகுணர்வுமிக்க பாடசாலைகளாக மேம்படுத்தப்பட்டு பாடசாலைக்குள் வருகின்ற மாணவர்கள் விருப்புடன் வருகைதந்து கற்கின்ற ஒரு கவின் நிலைகளை ஏற்படுத் திய இவ்வேலைத்திட்டம் நாடுபூராகவுமுள்ள பாட சாலைகளுக்கும் விஸ்தரிக்கப்படுவதன் அவசியம் உணரப்பட்டுள்ளது. பிள்ளைநேயம் ஒரு பாடசாலையில் கட்டியெழுப்படுகின்ற சந்தர்ப்பங்களை பார்க்கின்ற
26ம் பக்கத் தொடர்ச்சி
முடிவுரை
நாட்டில் தற்போது கல்வித்துறையானது முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிக நெருக்கடி நிலைக்குட்பட்டுள்ளது. இதனால் பல்கலைக்கழகங்கள் மூன்று மாதங் களுக்கு மேல் மூடப்பட்டதுடன் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் அனைவரும் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலை காணப்பட்டது. தற்போது அதிபர்க ளும், ஆசிரியர்களும் தமது கோரிக்கைகளுக்காக வீதியில் நிற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அதேபோல் உயர்தர வகுப்பு மாணவர்கள் நீதிமன்றத் துக்கு அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று கல்வித்துறையில் உள்ளவர்கள் தமது ஒவ்வொரு உரிமையையும் போராடியே பெறவேண்டிய நிலை காணப்படுகின்றது.
மறுமுனையில் அரசாங்கமோ கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் சர்வதேச சதியே காரணம் எனக் கூறி தமது பொறுப்பில் இருந்து விலகி நிற்கவே முயற்சிக்கிறது.
அரசாங்கம் தமது பக்கமுள்ள பிழைகளை ஏற்காமல், நியாயத் தன்மையை நோக்காமல் இதனையே தொடர்ந்து கூறி வருகின்றது. அத்தோடு பேராசிரியர்கள், விரிவுரை யாளர்கள், அதிபர் - ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு சார்பான அமைப்புகள் என்பவற்றை அரசுக்கெதிரான சதிக்காரர்களாக கருதி அவர்களுக் குள்ளேயே எதிராக செயற்படும் வகையில் தொழிற்சங்க பேதங்களை உருவாக்கி பிரித்தாலும் செயலில் ஈடுபடுகிறது. எனவே அரசாங்கங்ம் தனது இவ்வாறான செயல்களைக் கைவிட்டு,
ஜன-பெப் 2013

ஆவல் அந்த சமூகத்தின் கைகளிலும், அதிபர், ஆசிரியர் களது பொற்கரங்களிலும் தங்கியுள்ளன.
குறிப்பாக ஆசிரியர்கள் இவ்விடயத்தில் கூடிய கவனமெடுத்து உதவுதல் அவசியமாகும். "கல்வி என்பது எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு தயாராக வேண்டிய தொன்றாகும். சமூகத்தில் அபிவிருத்தியைத் தோற்றுவிப்ப தற்காகக் கல்வியானது தலைமை தாங்கிச் செயற்பட வேண் டும். இளந்தலைமுறையினரின் எதிர்கால வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு தீர்வாகக்கூடிய விதத்தில் கல்வி வழங்கப்படல் வேண்டும்” என்பதனை மனதில் இருத்தி ஒவ்வொரு பிள்ளையின் வாழ்விலும் ஒளியேற்றி, பிள்ளைகள் விரும்புகின்ற பிள் ளை நேயத்தை பாடசாலைகளில் கட்டியெழுப்புவோம்.
© பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அதிபர் -
ஆசிரியர் சங்கங்கள் என்போரின் கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முனைதல்.
O
© 2011 - உயர்தர மாணவர்களின் Z புள் ளி
பிரச்சினையை மேலும் இழுத்தடிக்காமல் அதனை வெகுவிரைவில் முடிவுக்கு கொண்டுவருதல். தொடர்ச்சியாக வினாப்பத்திரங்களில் ஏற்பட்டு வரும் குழறுபடிகளை நீக்கி அதற்கு காத்திரமான நடவடிக்கைகளை எடுத்தல். மனிதவள விருத்தியில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து GDB ஒதுக்கீட்டை அதிகரிக்க ஆவனம்
செய்தல். 0 கல்வித்துறையில் அரசியல் மயமாக்கலை தவிர்த்து
சுதந்திரமாக செயற்பட வாய்ப்பளித்தல்.
என்பவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தூரநோக்குடன் அணுகுவதன் மூலம் மேற்படி நெருக்கடி நிலையை ஓரளவேனும் குறைத்துக் கொள் ளும் செயலில் ஈடுபட வேண்டும். இதற்கு மாறாக தற்போது மேற் கொண்டுவரும் பொருத்தமற்ற நடவடிக்கைகள் மூலம் மேலும் சிக்கல் நிலைமையை உருவாக்காமல் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை உரியவகையில் திட்டமிட்டு, அவற்றுக்கு முன்னுரிமை வழங்க தீர்வுகாண உதவுவதே நாட்டிற்கும், கல்வித் துறையில் உள்ள அனைவருக்கும் சிறந்ததாகும். அவ்வாறின்றேல் இன்று நீதித்துறையில் ஏற்பட்டுள்ளது போன்று பாரிய ஒரு நெருக்கடி நிலையினை கல்வித் துறையிலும் சந்திக்க நேரிடும் என் பதில் சந்தேகமில்லை.
35
ஆசிரியம்

Page 38
ஆசிரிய மணி
நமது பிரச்சி
ஆசிரியத்தில்
2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான ஆசிரி கடந்த டிசம்பர் வரை சம்பளம், பதவி உயர்வு உட்பம் சுமார் நூறு கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட கிடைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்கள். ஒரு தவிர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆசிரியம் வின் விலாசத்திற்கு கேள்விகளை தெளிவான விபரங்க கொள்ளலாம்.
ANPU.JAI 20. Jayant
Anurae
2007.01.01 முதல் இலங்கை அதிபர் சேவையின் இரண்டாம் வகுப்பு முதலாம்
தரம் பதவி உயர்வு கிடைத்த எனக்கு ஆறு வருடங்களாகியும் முதலாம் வகுப்பு கிடைக்கவில்லை. ஐந்து வருடங்கள் கடந்துவிட்டது. பதவி உயர்வு எப்போது கிடைக்கும்?
சரியான சந்தர்ப்பத்தில் நல்லதொரு கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். ஆனால் ஐந்து வருடத்தில் கட்டாயம் பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தவறானதாகும். இலங்கை அதிபர் சேவையின் பிரமாணக் குறிப்பின்படி 2-1 தரத்தில் ஐந்து வருடம் இருந்தால் முதலாம் வகுப்பு பதவி உயர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்பதே விதியாகும். பதவி உயர்வுகள் தீர்மானிக்கப்படும் காலத்தில் உள்ள வெற்றிடங்களின் படியே வழங்கப்படும்.
1992.06.01 திகதி 2-1 பதவி உயர்வு பெற்றவர்களுக்கு 2002.01.01 தொடக்கமும், 1993.06.01 திகதி நியமனம் பெற்றவர்களுக்கு 2004.01.01 தொடக்கமும், 1994.06.01 திகதி பதவி உயர்வு பெற்றவர்களுக்கு 2004.06.01 தொடக்கமுமே முதலாம் பதவி உயர்வு வழங்கப்பட்டது. பல சமயங்களில் 10 வருடங்கள் கடந்தும், சில சமயங்களில் 5 வருடங்களிலும் பதவி உயர்வு வழங்கப்பட் டுள்ளது. ஆகவே இந்த பதவி உயர்வுகள் குறிப்பிட்ட காலத்தில் உள்ள வெற்றிடங்களைப் பொறுத்த விடயமாகும்.
ப
ஜன-பெப் 2013

னைகளுக்கு 5 தீர்வுகள்...
அன்பு ஜவஹர்ஷா
யம் எட்டாம் இதழில் ஆரம்பிக்கப்பட்ட இப்பகுதியில் - சுற்றறிக்கைகள், பாடசாலை நிர்வாகம் தொடர்பான -டுள்ளது. பலர் தெளிவாக இருந்ததாகவும், பயன் ரே மாதிரியான கேள்விகளுக்கு பதில் அளிப்பது லாசத்திற்கு அல்லது பின்வரும் எனது தனிப்பட்ட களுடன் எழுதி அனுப்பி சந்தேகங்களைத் தீர்த்துக்
1AHARSHA hi Mawatha dhapura.
2004.06.01க்கு பிறகு இந்தப் பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை. அண்மையில் நடைபெற்ற தொழில் சங்கங்களின் போராட்டங்களின் பயனாக 2012.12.14 திகதிய அரச வர்த்தமானியில் “திறமைகள் மற்றும் சிரேஷ்ட அடிப்படையில் 1ஆம் வகுப்பு பதவியுயர் வுக்கான விண்ணப்பங்கள்” கோரப்பட்டுள் ளது. 2013.01.14 திகதிக்கு முன்னர் வலயக் கல்விப் பணிப்பாளர் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும்.
2008.07.01 திகதியன்று 2-1 தரத்தில் ஐந்து வருட காலத்தை நிறைவு செய்த அதிபர்களே அந்தப் பதவி உயர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். ஆகவே உங்களுக்கு இதற்கு விண்ணப்பிக்க முடியாது. 2008.12.31 திகதிய கல்வி அமைச்சின் கணக்கெடுப்பின்படி 1,084 முதலாம் வகுப்பு வெற்றிடங்களே இருந்தன. இதில் 40 வீதமான 434 வெற்றிடங்களையே பிரமாணக் குறிப்பின்படி சேவையில் உள்ளவர்களைக் கொண்டு நிரப்ப முடியும்.
1996.06.01 திகதியில் 2-1 தர பதவி உயர்வு பெற்ற 294 பேருக்கும், 1997 தொடக்கம் 2002 வரை 2-1 தர நியமனம் பெற்ற 316 பேர்களும் உள்ளார்கள். கடந்த 16வருட காலத்தில் இவர்களில் பலர் ஓய்வுபெற்று இருக்கலாம். ஆனால் 2008.07.01 திகதிவரையில் சேவையில் உள்ளவர் கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சேவைக்காலம், கல்வித்தகைமை, பாடசாலை செயற்பாடுகள், மொழித் தேர்ச்சி, கணினிபயன்பாடு, ஆளுமை போன்றவற்றுக்கு மொத்தமாக 150 புள்ளிகள் வழங்கப்படவுள்ளதால்
36.
- ஆசிரியம்

Page 39
2002.01.01 திகதியும் அதற்கு முன்னும் நியமனம் பெற்றவர்களைக் கொண்டு இந்த வெற்றிடங்கள் நிரப்பப் பட்டுவிடும். அடுத்த வாய்ப்பின் போதே உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம்.
நான் கல்வியியல் கல்லூரியில் டிப்ளோமா பட்டம் பெற்று 28.07.1997 அன்று இலங்கை
ஆசிரியர் சேவை 3-1 தரத்திற்கு நியமனம் பெற் றேன். 28.07.2002 அன்று ஐந்து வருட சேவைக்காலத்தை நிறைவு செய்தமையால் 2-II பதவி உயர்வு கிடைத்தது. 01.10.2002 திகதி தொடக்கம் செயல்படும்படியாக கல்விமாணி பட்டமும் பெற்றுள்ளேன். 13.11.2009 தொடக்கம் செயல்படும்படியாக இலங்கை அதிபர் சேவையின் 3ஆம் வகுப்பு நியமனம் கிடைத்து அத்தரத்திற்குரிய பாடசாலையொன்றின் அதிபராகக் கடமையாற்றி வருகின்றேன். 2010, 2011, 2012 வருடங்களுக்குரிய வருடாந்தச் சம்பளம் ஏற்றம் வழங்கப்படாத நிலையில் 17,195 ரூபாவை அடிப்படைச் சம்பளமாக பெற்று வருகின்றேன். கல்வி முதுமாணிப்பட்டப் படிப்பையும் மேற்கொண்டு வருகின்றேன். 28/2010 இலக்க சுற்றறிக்கைப்படி எனது சம்பளம் எவ்வாறு அமையும் என்பதையும், முதுமாணிப்பட்டப் படிப்பால் கிடைக்கக்கூடிய அனுகூலங்கள் பற்றியும் விளக்க முடியுமா?
வினாக்கள் இவ்வாறு விரிவாக விளக்கங்களை உள்ளடக்கி இருந்தால் பதில் அளிப்பது இலகுவாக இருக்கும். உங்களது கல்விமாணி பட்டத்தால் சம்பள மாற்றமொன்றும் கிடைக்கமாட்டாது. முதுமாணி பட்ட விடயமும் அப்படியே. 2012.12.14 வர்த்தமாணி அறிவித்த லின்படி பதவி உயர்வின்போது உயர்ந்த பட்சம் 10 புள்ளிகள் கிடைக்க வாய்ப்புண்டு. அதிபர் பதவி கிடைத்தமையால் பின்வருமாறு சம்பள மாற்றியமைப்பு அமைய வேண்டும். ஆனால் 28/2010 மாற்றியமைப் பின்படி நிலுவை 2011.07.01 தொடக்கமே கிடைக்கும். 06/ 2006 (iv) இலக்க அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கைப்படி உங்களது அசிரியர் சேவையின் சம்பளம் கீழ்வருமாறு அமையும்.
2007.06.01
16,955/-
2007.07.28
17,195/-
2008.07.28
17,525/-
2009.07.28
17,855/-
2009.11.13ஆம் திகதி நியமனத்தின்படி அன்றே அதிபர் பதவியைப் பொறுப்பு எடுத்து இருந்தால் அன்று தொடக்கம் பின் வருமாறு சம்பளம் வழங்கப்பட வேண்டும். சில தினங்கள் கழித்து பதவியைப் பொறுப்பு
' ஜன-பெப் 2013

எடுத்தால் அத்திகதி தொடக்கமே சம்பளம் அமையும்.
2009.11.13
17985/-
2010.11.13
18215/-
2011.11.13
18445/-
2012.11.13
18675/-
1988ஆம் ஆண்டு பயிற்றப்படாத) ஆசிரியையாக நியமனம் பெற்ற நான்
பயிற்சிபெற்று 2005.03.01 தொடக்கம் இலங்கை ஆசிரியர் சேவையின் 21 தர பதவி உயர்வை பெற்றுள்ளேன். சுகவீனம் காரணமாக 2013.03.01 தொடக்கம் ஓய்வுபெறவுள்ளேன். எனக்கு எவ்வளவு ஓய்வூதியம், சம்பளம் ஆகியவை கிடைக்கும் என விளக்க முடியுமா?
1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் நீங்கள் நியமனம் பெற்று இருந்தால் 2013.03.01 திகதிக்கு 25 வருட சேவையைப் பூர்த்தி செய்து இருப்பீர் கள். 30 வருட சேவையைப் பூர்த்தி செய்தவர்களுக்கு குறைக்கப்படாத ஓய்வூதியமாக 88 வீதமும், குறைக்கப் பட்ட ஓய்வூதியமாக 78 வீதமும் பெற்றுக் கொண்டி ருக்கும் சம்பளத்தின் அடிப்படையில் கிடைக்க வேண்டும்.
ாக
ஆறு மாத சேவைக் காலத்துக்கு ஒரு புள்ளி குறைவதால் குறையும் ஐந்து வருடத்திற்கு 10 புள்ளிகள் மொத்தத்தில் குறைவதால் உங்களுக்கு குறைக்கப்படாத ஓய்வூதியமாக 78வீதமும் குறைக்கப்பட்ட ஓய்வூதியமாக 68 வீதமும் கிடைக்கவேண்டும். 24 மாத ஓய்வூதிய பணிக்கொடையாக குறைக்கப்படாத ஓய்வூதியத்தின் படியே முழுத்தொகை கிடைக்கு. 10 வருட காலத்திற்கு குறைக்கப்பட்ட ஓய்வூதியத்தின்படியே ஓய்வூதியம் கிடைக்கும். இத்துடன் காலத்துக் காலம் வழங்கப்படும் வாழ்க்கைச் செலவுப்படியும் கிடைக்க வேண்டும்.
முதலில் உங்களது சம்பளத்தைப் பார்ப்போம். 28/ 2010 இலக்க அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கையின்படி இது கற்பனைச் சம்பளமாகும். உண்மையாக அதிகரிப்பானது 2011.07.01 தொடக்கமே சகலருக்கும் கிடைக்க வேண்டும்.
2007.01.01
18,950/-
2007.03.01
19,300/-
2007.06.01
20,445/-
2008.06.01
20,845/-
2009.06.01
21,245/-
2010.06.01
21,645/-
37

Page 40
உங்களுக்கு 2010.03.01 தொடக்கம் 2011/30 இலக்கு கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் படி இலங்கை ஆசிரியர் சேவையின் முதலாம் வகுப்பு பதவி உயர்வு கிடைத்தால் பின்வருமாறு சம்பளம் அமைய வேண்டும்
2010.03.01
22290/-
2011.03.01
22935/-
2012.03.01
23580/-
2013.03.01
24225/-
இதன்படி மாதாந்த ஓய்வூதியமாக 24,225/- x 68% = 16,473 ரூபா கிடைக்கும். அத்தோடு 2013.01.01 தொடக்கம் ஓய்வூதியகாரர்களுக்கு வழங்கப்படும் 3,175) - வாழ்க்கைச் செலவுப்படியும் கிடைக்க வேண்டும். ஓய்வூதியப் பணிக்கொடையாக 24,225 x 78 x 24 = 4,53,492 ரூபாவும் கிடைக்க வேண்டும்.
60 வயதை அடைய முன்னர் ஓய்வு பெறுகின்றவர்களின் ஓய்வுபெறும் திகதியை முதலாம் திகதியாக ஈடுபடுவதை நான் ஆதரிப்பது இல்லை. காரணம் ஏதாவது நன்மை கிடைத்தால் முதலாம் திகதி தொடக்கமே கிடைக்கும். ஆகவே 2013.03.02 என்று போடுவதே புத்திசாலித்தனமாகும்.
இலங்கை கல்வி நிருவாக சேவையின் III
வகுப்பு நியமனப் பட்டியலில் எனது பெயர் உள்ளது. இந்நியமனங்கள் எப்போது வழங்கப்படும்?
410 வெற்றிடங்கள் திறந்த, மட்டுப்படுத்தப்பட்ட, சேவைமூப்பு என்ற மூன்று அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும். திறந்த போட்டிப் பரீட்சையில் 25 வீதம் என்ற அடிப்படையில் 102 வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும். என்றாலும் இரண்டு பரீட்சைகளின் அடிப்படையிலும் 41 பேர்களே தகைமை பெற்றுள்ளார் கள். இவர்கள் தெரிவு செய்யப்பட்டு பயிற்சி நடைபெற்று வருகின்றது.
சேவை மூப்பு அடிப்படையில் 123 வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்றாலும் 115 முதலாம் வகுப்பு அதிபர்கள் போட்டிப்பரீட்சை மூலம் தெரிவு செய்யப் பட்டு 2011.06.11 தொடக்கம் செயல்படும் படியாக
அவர்களுக்கு 2012.10.02 அன்று ஜனாதிபதி மாளிகையில் வைத்து நியமனம் வழங்கப்பட்டது.
மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை பெயர்பட்டிய லில்தான் உங்களது பெயர் இருக்கவேண்டும் என நம்புகின்றேன். 185 பேர்கள் நியமிக்க வேண்டிய
ஜன-பெப் 2013

5 நிலையில் 167 பேர்களே தெரிவு செய்யப்பட்டு இருக்கி
றார்கள். தற்போது அரச சேவை ஆணைக்குழுவின் இணைத்தளத்தில் நியமனம் பெறவுள்ள 144 பேர்களின் பெயர் பட்டியலே உள்ளது. இவர்களுக்கு 2013.01.15 முதல் செயல் படும் படியாக நியமனம் வழங்கப் படவுள் ளது. ஆகவே இந்த நியமனப்பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா என்று பாருங்கள்.
40 வருட காலத்திற்கு மேல் சேவையாற்றி 2012.05.23 அன்று ஆசிரியர் சேவையில்
இருந்து 60 வயதில் ஓய்வு பெற்றேன். ஓய்வு பெற்று நான்கு மாத காலத்திற்குப் பின்னர் எனது ஓய்வூதிய பணிக்கொடையை எனது வங்கிக் கணக்கில் எனது வேண்டுகோளினபடி வைப்புச் செய்துள்ளார்கள். ஆனால் மாதாமாதம் ஓய்வூதியம் வழங்க பிரதேச செயலகத்திற்கு ஆவணங்கள் அனுப்பப்படவில்லை. விசாரிக்கும் போது மாகாண ஓய்வூதியப்பிரிவு சீராக்கப்படி தொடர்பான சிக்கலால் எனது கோவையை திருப்பி அனுப்பியுள்ளதாகச் சொல்கின்றார்கள்.
60 வயதில் ஓய்வுபெறும் ஒருவரின் சுயவிபரக் கோவை 6 மாதங்களுக்கு முன்னரே தற்காலப்படுத்தப்பட வேண்டும். ஓய்வூதியத் திணைக்களத்திற்கு விண்ணப் பங்களை அனுப்பும்போது சம்பளம் தொடர்பாக சரியாக கணிப்பீடு செய்தே பணிக் கொடை வழங்கப்பட வேண்டும்.
2006ஆம் ஆண்டு தொடக்கம் இழுபடும் இந்த சீராக்கல் படி தொடர்பாக பல கட்டுரைகள் ஆசிரியத்திலேயே வெளியாகியுள்ளன. தேசிய சம்பள பதவியணி ஆணைக்குழு, பொது நிருவாக அமைப்பு, கல்வியமைச்சு இது தொடர்பாக பரஸ்பரம் வித்தியாச மான ஆலோசனைகளையும் சுற்றறிக்கைகளையும் வெளியிட்டுள்ளமையே இதற்குக் காரணமாகும்.
28/2010 இலக்க அரசாங்க நிருவாகச் சுற்றறிக் கையை கல்வி அமைச்சு உட்பட வலயக் கல்விக் காரியாலயங்கள் பிழையாக விளங்கிக் கொண்டமையே இதற்குக் காரணமாகும்.
2011.02.15 திகதிய ஈடி/02/29/12/01/05 இலக்க கல்வியமைச்சின் சுற்றறிக்கையில் இரண்டாம் பந்தியில் இதை நிறுத்தச் சொல்லி அறிவுறுத்தல் வெளியாகிய மையே இதற்குக் காரணம்.
ஆனால் 2011.12.29 திகதிய கல்வி அமைச்சு செயலாளருக்கு தேசிய சம்பள பதவியணி ஆணைக்குழு செயலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில் இதை நிறுத்த
38
- ஆசிரியம்

Page 41
வேண்டாம் என்று அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது. இதை 2012.02.06 அன்று சகல மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சின் மேலதிக
செயலாளர் அறிவித்துள்ளார்.
2012.07.31 திகதி இதை நிறுத்துமாறு மாகாண கல்வி அமைச்சு , இதை நிறுத்துமாறு கடிதம் அனுப்பிவைத்துவிட்டு 2012.10.11 திகதி வழங்குமாறு கடிதம் ஒன்றை மாகாண, வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அனுப்பியுள்ளது.
இதுதான் இந்த தாமதத்திற்கும் சிக்கல்களுக்கும் காரணமாகும். கடிதத் திகதிகளை கவனித்துப் பார்த்தால் அரச நிறுவனங்களின் தொடர்பாடலில் உள்ள தாமதம் ஊழியர்களை எவ்வளவு அல்லல்படுத்துகின்றது என்று விளங்கும். நான் அறிந்த மட்டில் இன்னும் சீராக்கல்படி தொடர்பாக சரியான விளக்கம் யாருக்கும் கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும். இவர்களுக்கு 40 வருட சேவை, ஓய்வூதிய தாமதத்தால் உண்டாகும். பொருளாதார, மனக் கஷ்டங்கள் எல்லாம் பெரிய விடயமல்ல.
அரசாங்க ஊழியர்களுக்கு மூன்று சம்பள ஏற்றங்கள் வழங்கப்படுகின்றன. இலங்கை
ஆசிரியர் சேவை முதலாம் வகுப்பைச் சேர்ந்த எனக்கு இந்த சம்பள உயர்வு கிடைக்கவில்லையே.
இந்த மூன்று வருடாந்தச் சம்பள ஏற்றங்கள் என்ற விடயம். முற்றிலும் உண்மையானதல்ல. 06/2006 இலக்க அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கையினால் ஆரம்ப, நடுத்தர சம் பள மட்டங்களைக் கொண்ட அரசாங்க ஊழியர்களைவிட பதவிநிலை உயர்தொழில் வாண்மைத் துறையைச் சேர்ந்த ஊழியர்களின் சம்பளமானது பெருமளவில் அதிகரித்தது. தொழில் சங்கங்கள் இது தொடர்பாக குரல் எழுப்பியதை அடுத்து அரசாங்கம் பாதிக்கப்பட்ட மேற்படி ஊழியர்களின் ஆரம்பச் சம்பளத்தை சற்று அதிகரித்து, அதேபோல வருடாந்தச் சம்பளத்தை 10 ரூபா தொடக்கம் 50 ரூபா வரை அதிகரித்து வழங்குமுகமாக 2007.08.24ஆம் திகதி 06/ 2006 (iv) என இலக்கத்துடன் "அரசாங்கத் துறை சம்பள அளவுத் திட்டங்களின் சம்பள ஏற்றப் பெறுமதிகளின் சீராக்கம்” என்ற தலைப்பில் சுற்றறிக்கையொன்றை வெளியிட்டது.
2007.06.01 தொடக்கம் படிக்குப்படி சம்பளத்தை அதிகரிக்காது இருக்கும். சம்பள நிலையில் சிறிய சம்பள அதிகரிப்பையே இந்தச் சுற்றறிக்கை வழங்கியது. சில சேவையினருக்கு அப்போதைய சம்பளத்தில் ஐந்து ரூபா
'ஜன-பெப் 2013

அதிகரிப்பு மட்டுமே கிடைத்தது. அரசாங்கத் துறையைச் சேர்ந்த 25 சேவைகளைச் சேர்ந்தவர்களுக்கு இவ்வாறு சம்பள ஏற்றப் பெறுமதிகளின் சீராக்கம் நடைபெற்றது. இதன் காரண மாக சிறிதளவு சம் பள ஏற்றம் கிடைத்தாலும் வருடாந்த சம் பள ஏற்றமானது பல்லாயிரக் கணக்கான ஊழியர்களின் முதுநிலை தன்மையை பாதித்தது. 2007.05.31 அன்று நான்காம், ஐந்தாம் சம்பளபடி நிலைகளில் இருந்தவர்கள் 2007.06.01 தொடக்கம் முதலாம் சம்பள படிநிலைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். இதன் காரணமாக புதியவருக்கு அதிக சம்பள அதிகரிப்பும் மற்றவர்களுக்கு மிக குறைவான சம்பள அதிகரிப்பும் கிடைத்தது. - இந்த பாதிப்பு பல்லாண்டு காலமாக சுட்டிக்காட்டப்பட்டு வந்ததை அடுத்தே 2011ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு தொடர்பான விடயம் 28/2010 இலக்கச் சுற்றறிக்கையாக வெளியான போது இரண்டாம் கட்ட அதிகரிப்பாக 2011.07.01 தொடக்கம் நீங்கள் கேட்ட விடயம் பழைய நிலுவையின்றி செயல்படுத்தப்பட்டது. 2007.06.01 தொடக்கம் இருந்த முரண்பாடு நான்கு வருடங்களின் பின்னரே சீர் செய்யப்பட்டது. சிலருக்கு ஐந்து சம்பள ஏற்றங்கள் கிடைத்த நிலையில் பலருக்கு சம்பள ஏற்றம் கிடைக்கவில்லை. 2007.06.01 தொடக்கம் இலங்கை அதிபர் சேவை 1, 2-1 வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இலங்கை ஆசிரிய சேவை 1ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கும் 300 ரூபா அதிகரிப்பு கிடைத்தது. அப்போது இது படிக்குப் படியே வழங்கப்பட்டபடியால் 28/2010 இலக்கச் சுற்றறிக்கைப்படி சம்பள அதிகரிப்பு வழங்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஆகவேதான் உங்களைவிட குறைந்த தரத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு கிடைத்தபோது உங்களுக்கு அது கிடைக்காமல் இருந்தது.
இன்று பல்லாயிரக்கணக்கான அரசாங்க ஊழியர்களுக் கு இந்த சந்தேகம் நிலவுவதாலும், நடைமுறை விடயங்கள் தொடர்பான கேள்விகளுக்கு கூடிய முக்கியத்துவம் இப்பகுதியில் வழங்கப்படுவதாலும் இவ்வாறு விரிவாக பதில் அளிக்க வேண்டியதாயிற்று.
2001ஆம் ஆண்டு தொடக்கம் பதில் கடமை பார்க்கும் அதிபராக கடமையாற்றி
வருகின்றேன். எனக்கு நிரந்தர நியமனம் கிடைக்குமா?
39
ஆசிசியம்

Page 42
2009.11.13 வரை தொடச்சியாக 3 வருடம் கடடை பார்த்தவர்கள் 2118 பேர்களை அதிபர்களை நிரந்தரமாக்க அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டது. நீண்ட இழு பறியின் பின்னர் 34 பேர்களுக்கு 2012.10.02 அன்று அலா. மாளிகையில் வைத்து தற்காலிக நியமனக் கடிதம் வழங்கப்பட்டது. பரீட்சை எழுதி நியமனம் கிடைக்காத இருபது ஆசிரியர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள எஸ்சிஎப்ஆர்/640/12 இலக்க வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு 2013.05.13 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதால் இந்த நியமனங்கள் மேலும் தாமதமாகலாம்.
2013ஆம் ஆண்டு வரவுசெலவு திட்டத்தின் படி
ஆசிரியர்களின 'சம்பளமானது எவ்வாறு அதிகரிக்கும் என்பதை விளக்க முடியுமா?
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவு திட்ட அறிக்கையில் இது தெளிவாக சொல்லப்படாது இருந்தாலும் 2012.12.13 அன்று வெளியிடப்பட்ட 18/2012 இலக்கங் கொண்ட சுற்றறிக்கையில் அதிகரிக்கப்பட்ட சம்பளம் எவ்வாறு வழங்கப்படும் என விளக்கப்பட் டுள்ளது. 22,935 ரூபாவை ஆரம்பச் சம்பளமாகக் கொண்டிராத அரசாங்க ஊழியர் அல்லது ஆசிரியர் ஒருவர் தற்போது 23,245 ரூபா சம்பளத்தைப் பெற்றுக் கொண்டிருந்தால் தற்போது கிடைக்கும் சம்பளமும் 2013ஆம் ஆண்டில் இறுதிவரை அதிகரிக்கப்படும் சம்பளமும் பின்வருமாறு அமையும். 2012.12.31இல் பெற்ற சம்பளம்
23,245.00ரூபா
5850.00 ரூபா
வாழ்க்கை செலவுபடி விசேடபடி 15%
3,486.75 ரூபா
மொத்தம்
32,581.75 ரூபா
2013.01.01 இற்கு உரிய சம்பளம்
23,245.00ரூபா
வாழ்க்கை செலவுபடி
6,600.00ரூபா
விசேடபடி 15%
3,486.75 ரூபா
2013.05.01 இற்கு தொடக்கம் விசேடபடி 2 1/2 வீதம்
581.13 ரூபா
2013.09.01 விசேடபடி 2 1/2 வீதம்
581.12 ரூபா
மொத்தம்
34,494.00ரூபா
ஜன-பெப் 2013

இந்த சுற்றறிக்கைப்படி சகலருக்கும் 2013 க ஜனவரியில் 750/- ரூபாவை வாழ்க்கைச் செலவுப்படி ழ கிடைக் கும். 2013 மே மாதம் விசேட படியாக சி சம்பளத்தின் 5% அதிகரிப்பில் அரைவாசியும், 5 செப்டெம்பர் மாதம் மிகுதி அரைவாசியும் கிடைக்கும். த இந்த 5% அதிகரிப்பானது 750/- ரூபாவுக்கு T குறையாமலும் 2500/- ரூபாவுக்கு அதிகரிக்காமலும் கு இருக்க வேண்டும். மேற்காட்ட்பட்ட விபரங்களைக்
கொண்டு ஆசிரியர்கள் தங்களது சம்பளங்களை த கணித்துக் கொள்ளலாம்.
( 2013ஆம் ஆண்டுக்கான குறைந்த பட்ச அதிகரிப்பு 1500/- ஆக இருக்கும். ஆனால் சம்பளத்தைப் பொறுத்து இவ்வதிகரிப்பு உச்ச மட்டத்தில் 3250 ரூபா வரை இருக்க முடியும்.
முதலில் உங்களிற்கு எனது நத்தார் புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். எனது
பிரச்சினை என்னவென்றால் நான் 01.01.2005ம் ஆண்டு பட்டதாரி பயிலுனர்களாக பாடசாலைகளில் இணைக்கப்பட்டு கற்பித்தலினை மேற்கொண்டிருந்தேன். பின்னர் நடைபெற்ற போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்து 06.10.2005ம் திகதி ஆசிரிய சேவையின் 3-1 ற்கு உள்வாங்கப்பட்டிருந்தேன். கடந்த காலங்களைப் போன்று எனது பயிலுனர் காலப்பகுதி (9மாதம்) சேவையினையும் ஆசிரிய சேவையிற்குள் உள் வாங்கமாட்டார்களா? உள்வாங்குவதற்கு ஏதேனும் வழியுண்டா?
எனது வாழ்த்துக்களும் உங்களுக்கு உரித்தாகட்டும். 01.01.2005 தொடக்கம் பட்டதாரி பயிலுனராக பாட சாலையில் கடமையேற்று ஆசிரியர் பணியில் ஈடுபட்டு அதனூடாக விண்ணப்பித்து பரீட்சை மூலம் 06.10.2005 திகதி தொடக்கம் 3-1 தர நியமனம் கிடைத்து இருந்தால் கல்வி அமைச்சின் 2005/4 இலக்கச் சுற்றறிக்கைப்படியும் அதன் பின்னர் இதன் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட 2011/30 இலக்கச் சுற்றறிக்கைப்படியும் நீங்கள் 2010.01.01க்கு முன்னர் கல்வி டிப்ளோமா முடிக்காது இருந்தால் 2010.01.01 தொடக்கம் 2-II தர பதவி உயர்வை பெறலாம். அதற்கு முன்னர் முடித்திருந்தால் சான்றிதழ் செல்லுபடியாகும் திகதியில் இருந்து 2- IIதர பதவி உயர்வு கிடைக்கும். 01.01.2005 தொடக்கம் பாடசாலைக்கு பட்டதாரி பயிலுனராக நியமிக்கப்பட்டு, திணைக்களத் தலைவரூடாக போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பித்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
40
2 ஆசிசியம்

Page 43
2 2
காயகற்பம் பவாதகராறு
சேமமடு !
பயம் = = = = = = =ாயகம் 13
TEE EEEாம்: பா
= = = = = = = = =
ப : 1-க பாய
கான்கோ
அதிகாப் ஆகும்.
|21EE 1111 - 11:1:1 21:11:55TH - L : 1 2 H 11: :::
ETEA 2
பேசிய விக்கிம் கரிய பலம் அதிக TNA படை யது.
WWWW அ யா திம் தத் இ WINS II விழா க
51:15ாப்10 E = = =
அதே ன
825ா =யப ேப = = = = = =
-- E 22 காரட் 15 : 5
த லக் எம் கடலை சதிகோ 1 1 அக்கா RWHAsாரியம் யிம் பின் அதிகாரி கைகோத்தபா
- இயகள். (WWNலங்காத் தத்தா கிலாNAாகமாக மைக. வேதனையாக இருத்த ஆதிகயளிகறையானாவின் கை.
இைதில் இந்த எண் அலட்டளை அத்திக்கணை தொடர்பாக மகஇக வின் கைபேசி ஆகக் கதவம் கெட் கிண்கலம்
-- தத்ய கா Eார் - 2
===81ாயாக
உAEA MON MAN NAAI கேம் கால யாக ஏகாதா:மா இன் அசம்கார்
ட்பம்அகிலா'Fை 80 W 39:15E2) இறுத்தி இந்த காதல் வலைவாசல்க
EEE E E11ாக்கப= :
பாரா :
பயம் EEE ELEக : கார்
ETA 24 ETF
அங்கு இரக்கம் வி சWMA, Mான அகதிம் AW WWE WAாதனைகதையாம்.
வியைப்போன் வாங்க உதவித் திரிக்குப்பம் WWங்கியபடி காக் பாமக சார்பாக தர கா இMாட்டபம் கட்டிய பிராட்டவேனாமாயகாரா வினேகிதம்
இமயம் அமைக்க அ 5 சதம் : ஆசை காதர் தகவல் : 15
முக்கிய நிலை அரசியல் வக்காகன் விலையில் அணை கதையை வலது அங்: அ ஆ 25ம்
இதை இந்த தேர்தல் இந்தத் தித் தித்தித்த திக, தின. அரசாங்கத்தானை இந்த தன் தது. இடை அகதியாக சித்தனக்காப்பா)
EEEE1ாயக : 15
5 5 2 = 4:11:57
程就能在地。
' விலை:1600.00
11 11ம் =E -1ாம்
1 E ===
தமிழ்ச்சூழலில் ஆளுமையுட அருட்தந்தை லோங் அடிகளார், ஹன
சங்கரப்பிள்ளை வீரசிங்கம், ஒறேற் சா.வி.ஒ.சோமநாதர், சங். ஜே.ரி.அ வேலுப்பிள்ளை தம்பு, க.மூ.சி.சீனித்தம் பிலிப். ஜோர்ஜ் வாசிங்டன் தம்பர்,திருமதி.செ
ந.சபாரத்தினம்,க.பூரணம்பிள்ளை, ஐ.பி.து
சைவப்பெரிய முதலானோர் அடங்கிய ந
கயm
CHEMAMADU
|
UG.50 People';
Tel:011-2472362, 23 E-Mail:chemamadu@yahoo.
Website:www

பய - 112
- பாடல் 116
- 55 EEE1ம் :
பதிப்பகம்
5பு ====
பொ.கனகசபாபதி
EEEEE -
பானா 13 tiசன்.
எம்மை வாழ வைத்தவர்கள்
எம்மை வாழ வைத்தவர்கள்
பாப்
© (B
காபம் -- EEE:15
பக்கம் 504
-- -- - - - - - - - - -
EEE E = : பE -
உன் இயங்கிய அதிபர்கள் வரிசையில்
ன்டி.எஸ்.பேரின்பநாயகம் சங்.ஜோன் பிக்னெல், ரர் சி.சுப்பிரமணியம், தெ.து.ஜெயரத்தினம், ருளானந்தம்,சி.வண.பிதா.நவரத்தினசிங்கம், பி, சு.குமாரசாமி, செல்வி.இ.மு.தில்லையம்பலம், =ல்லம்மாபிள்ளை, ச.அம்பிகைபாகன் ,சி.கே.கந்தசாமி, துரைரத்தினம்,விபுலானந்த அடிகள், வீ.வீரசிங்கம், எர் சிவபாதசுந்தரனார் நூலாக இது ஆக்கம் பெற்றுள்ளது.
ட்யாமா : I
BOOK CENTRE
S Park, Colombo-11 =21905 Fax: 011-2448624
com, chemamadu50@gmail.com, 7.Chemamadu.com

Page 44
ஆசிரியம்
தொடர்பு
கர், பால்
யாழ்ப்பாணம் புக்லாப் (ரவீந்திரன்) ..021-2227290/077-1285749 பூபாலசிங்கம் புத்தகசாலை (யாழ்) 021-2226693
மா.மோகனகிருஷ்ணன் ..075-0710602 அறிவூற்றுக் களஞ்சியம் 075-4985394
மடடக்களப்புகி.புண்ணியமூர்த்தி ..077-7034528/065-2250114 ச.ஜெயராஜா ...065-2225812/077-7249729 ராஜாஸ் புத்தகநிலையம் ....065-2222371
மன்னார் ஜோதி புத்தக நிலையம் ....023-2222052 டி.கிறிஷ்டிராஜ் ....071-2261010
மூதூர் க.கனகசிங்கம் ....077-8730736
கிளிநொச்சி பெருமாள் கணேசன் ....077-0789749
முல்லைத்தீவு வேல் நந்தகுமார் ..077-9297479
ஓட்டமாவடி எம்.பி.டி.கான் ....077-9068898
மாவனெல்லை எம்.ஏ.எம்.நிஸ்தார் ....071-8257562
'புஸ்ஸல்லாவை ஜி.லோகேஸ்வரன் ....077-9706564
ஹட்டன் முரளி புத்தக நிலையம் ...051-7911571
" அக்கறைப்பற்று டி.கணேசரட்ணம் .....071-3914771/067-2277192

களுக்கு...
வவுனியா தா.அமிர்தலிங்கம் ..071-8457290 ஆ.விஜேந்திரன் ..077-4412518 சி.ரமேஸ் ..077-4744810 சு.பரமானந்தம் ....071-8457260 அறிவாலயம் புத்தக நிலையம் ....024-4920733 கஜன் புத்தகசாலை ...077-1615150
- கொழும்பு சேமமடு பொத்தகசாலை ...011-2472362 பூபாலசிங்கம் புத்தகசாலை ...011-2504266 சங்கர் புத்தகசாலை ...077-7732160 நிவ் கோகிலம் புத்தகசாலை 077-5941031
திருகோணமலை இ.புவனேந்திரன் ....026-2222426 ச.தேவசகாயம் ....026-2227345
கிண்ணியா எம்.எஸ்.எம்.ஹனீபா ...077-2344586
அம்பாறை அமீர் அலி ...077-2224025
கல்முனை
அன்பு புத்தக நிலையம் ....077-6446046
கண்டி
ஈஸ்வரன் புத்தகசாலை ...077-7663709
'பண்டாரவளை
பி.புண்ணியமூர்த்தி ...077-1155609
நுவரெலியா
குமரன் புக் சென்டர் ..052-2223416