கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகவிழி 2014.04

Page 1
GTur60 - 2014
eణ
மனித மேம்பாட்டின் உயிர்ப்பு மிகு கல்
unicool 104
సండే
WWW.viluthu.org

பின்
விக்காய்...
ISSN 1800-1246
விலை: 100/=

Page 2
இ
ஆசிரி.
உள்ளே...
1. ?
தேசிய இலக்குகள் மற்றும் அடிப்படைத் தேர்ச்சிக இடைநிலை தமிழ்மொழிப் பாடத்திட்டத்தின் பங்கு
2.
இலங்கையின் எதிர்கால கல்வி அபிவிருத்திக்கான
ஆசிரியர் சேவையும் ஆசிரியர் கல்வியும்
மட்டக்களப்பு மாவட்ட கல்வி வளர்ச்சியும், தேசிய சித்திபெறச் செய்தலும் அதன் முக்கியத்துவங்களு
4.
ஆசிரியரது பாத்திரம் பற்றிய புதிய நோக்கும் சிந்
5. கற்றல் கற்பித்தல் செயன்முறையும் ஆக்கத்திறனும்
கல்வியில் சமூகவியல் எண்ணக்கருக்கள்
ஏ ' பெற்ற மாணவர்களுக்குச் சிறப்பு விழாக்கள்
8
கல்வி முறைமை உள்ளடக்கம் மற்றும் செயற்பாடு
அகவிழியில்
பொறு.
AHAVILI 3, Torrington Avenue
Colombo 07
Tel.: 011 250 6272 | E-mail: ahavili.viluthu@gmail.com

வி6
பத்துவ நோக்கு.
ளை அடைவதில் களிப்பு
ஆலோசனைகள்
11
ப மட்டத்தில் உயர்தர மாணவர்களை
5.
16
தனையும்
20
* = 9 8 8 8 8 8
25
32
தேவையா?
35
டுகள்
38
இடம்பெறும் கட்டுரைகளுக்கு அதன் ஆசிரியர்களே ப்பு, கட்டுரைகளில் இடம்பெறும் கருத்துக்கள்
"அகவிழி” யின் கருத்துக்கள் அல்ல.

Page 3
16SIN 180
2 ) 53
-- ஆசிரியத்து
மாத இ
ஆசிரியர் ச. இந்திரகு நிர்வாக ஆசி
சாந்தி சச்சிதா நிறைவேற்றுப் பணிப்
ஆசிரியர் கு க. சண்முகல் பத்மா சோம்.
ஆலோசக
பேராசிரியர் சோ. சந்திரசேகரம்
முன்னாள் கல்விப் பீடாதிபதி கொழும்புப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் தை. தனராஜ் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
கலாநிதி சசிகலா குகமூர்த்தி
சிரேஷ்ட விரிவுரையாளர் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
து. ராஜேந்திரம் முன்னாள் முதுநிலை விரிவுரையாளர் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
லெனின் மதிவானம் பிரதிக் கல்வி வெளியீட்டு ஆணையாளர்
கல்வி அமைச்சு
வீ. தியாகராஜா சிரேஷ்ட ஆலோசகர், சமூக விஞ்ஞானக் கற்கைகள் துறை,
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
ஆசிரியரிடமிருந்து...
கல்வி முறையில் மாற்றந் தேவை
N அகவிழி | ஏப்ரல் 2014
2013 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 10ந் திகதியிலிருந்து 20ம் திகதி வரை நடைபெற்றது. பரீட்சை முடிவுகள் ஏப்ரல் மாதம் 1ம் வாரத்தில் வெளியிடப் பட்டிருந்தது. பரீட்சை ஆணையாளர் நாயகம் W.M.N.) புஸ்பகுமார அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் 580,100 பரீட்சார்த்திகள் மொத்தமாகப் பரீட்சைக்குத் தோற்றியிருந்ததாகவும் இவர்களில் 384,000 பேர் பாடசாலைப் பரீட்சார்த்திகள் எனவும் 196,100 பேர்

1246
வடி
வ நோககு...
இதழ்
5மார் சிரியர்
னந்தம் பாளர்(விழுது)
தழு
நிங்கம் காந்தன்
கர் குழு
கே. சாம்பசிவம் தேசிய ஆலோசகர்: கல்வி முகாமைத்துவம்
பேராசிரியர் வ. மகேஸ்வரன்
தலைவர் தமிழ்த்துறை பேராதனைப் பல்கலைக்கழகம்
க. இரகுபரன் முதுநிலை விரிவுரையாளர் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பேராசிரியர் துரை மனோகரன்
தமிழ்த்துறை பேராதனைப் பல்கலைக்கழகம் திருமதி. அருந்ததி ராஜவிஜயன்
ஆசிரிய ஆலோசகர் கொழும்பு கல்வி வலயம்
எஸ்.கே. பிரபாகரன் விரிவுரையாளர், வணிகக்கல்வித்துறை
தேசிய கல்வி நிறுவகம்
தனிப்பட்ட பரீட்சார்த்திகள் எனவும் இப்பரீட்சை 48 பாடங்களைக் கொண்டு 4312 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
பரீட்சை முடிவுகளின் படி 580,100 பேரில் 192,274 பேர் க.பொ.த உயர் தரத்திற்குச் செல்லத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மிகுதி 387,826 பேர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்தத் தவறியிருக்கின்றனர். மேலும் 5790 பேர் 9 பாடங்களிலும் A சித்தி பெற்றிருக்க 10,360 பேர் சகல பாடங்களிலும் சித்தியெய்தத் தவறியிருக்கின்றனர். பாடசாலைப் பரீட்சார்த்திகளாக 384,000 பேரில் 5738 பேர் 9 பாடங்களில் A சித்தியையும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளில்

Page 4
196,100 பேரில் 52 பேர் A சித்திகளைப் பெற்றிருக்கின்றனர். பாடசாலைப் பரீட்சார்த்திகளில் 184,317 பேரும் தனிப்பட்ட பரீட்சார்திகளில் 7957 பேரும் உயர்தர வகுப்புகளுக்குச் செல்லத் தகுதிபெற்றிருக்கின்றனர்.
அத்துடன் பாடங்களில் அடிப்படையில் தயாரிக்கப் பட்டுள்ள புள்ளிவிபரத் தகவல்களின் படி பாடசாலைப் பரீட்சார்த்திகளில் கணித பாடத்தில் 151,190 பேர் 'சித்தியடைந்ததுடன் 112,987 பேர் சித்தியடையத் தவறியுள்ளனர். விஞ்ஞான பாடத்தில் 178,485 பேர் சித்தியடைந்ததுடன் 85, 838 பேர் சித்தியடையத் தவறியுள்ளனர். ஆங்கில பாடத்தில் 126,443 பேர் சித்தியடைந்ததுடன் 137,724 பேர் சித்தியடையத் தவறியுள்ளனர். இவ்வாறு பாடங்களில் நிலையியல் தரங்கள் தொடர் தமிழ்மொழியும் இலக்கியமும் பாடத்தில் தோற்றிய 57,434 பேரில் 45,846 பேர் சித்தியடைய 11,588 பேர் சித்தியடையத் தவறியுள்ளனர். இவ்வாறான தகவல்களை ஒவ்வொரு மாவட்ட ரீதியிலும் சித்தியடைந்த, சித்தியடையத் தவறிய மாணவர்களின் விபரங்களையும் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்த கையோடு முதற் பத்து இடங்களையும் பெற்ற மாணவர்களை ஜனாதிபதி தனது மாளிகைக்கு அழைத்து கௌரவித்திருந்தார். இக் கெளரவத்துக்குள் தமிழ் மொழிமூல மாணவர்கள் எவரும் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. மேலும் பத்திரிகைகளும் ஊடகங்களும் 9 A சித்திகளைப் பெற்ற மாணவர்களை தடல்புடலாக கெளரவித்ததோடு கல்வி நிறுவனங்களும் வணிக நிறுவனங்களும் உச்சக் கட்ட நிலையில் விழாக்களை எடுத்திருந்தன. எமது கேள்வி எல்லாம் A தரச் சித்தி பெற்றவர்களுக்கு விழாக்கள் தேவையா? என்பதுதான். பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் எல்லோரினதும் உள்ளக் கிடக்கை பிள்ளைகள் எல்லாப் பாடங்களிலம் A சித்தி பெறவேண்டும் என்பதே ஆகும். இது நியாயமானதே, இருப்பினும் இதற்காக பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்கள் மீது ஒரு கட்டாயத் திணிப்பை செய்து வருவதையும் காண முடியும். அப்படி A சித்தி பெற்றவுடன் இதற்காகச் செயற்பட்ட அனைவரும் மாணவர்களுக்கு விழா எடுப்பதோடு ஏதோ ஒரு வகையில் அம்மாணவர்களுக் கிடையில் புகழையும் பெருமையையும் ஏற்படுத்தி விடுகின்றனர். இந்நிலைமை மாணவர்களிடையே விபரீதமான போட்டி மனப்பான்மை உருவாகி வளர காரணமாக இருப்பதனை இவர்கள் மறந்துவிடுகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க A சித்தி பெற்றவர்களுக்கு விழாக்களும் பாராட்டுக்களும் தேவையானது தான் என வைத்துக் கொண்டாலும் பரீட்சையில் சித்தியெய்தத் தவறிய மாணவர்களின் நிலை என்ன? இலங்கையின் கல்விக் கட்டமைப்பில் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைய தவறிய மாணவர்களுக்கு ஏதேனும் மாற்று ஏற்பாடுகள் இருக்கின்றதா? வேறு வகையிலேனும் உயர்கல்வியைத் தொடர்வதற்கு ஏற்பாடுகள் ஏதும்

செய்யப்பட்டுள்ளதா? எனில் அதற்கான எவ்விதமான மாற்றுத் திட்டங்களும் இல்லை என்பதே கசப்பான உண்மையாகும்.
387,826 பேர் நடந்து முடிந்த பரீட்சையில் சித்தியெய்தத் தவறியிருக்கின்றனர். பாடசாலைக் கல்விக் கட்டமைப்பில் கல்வியை ஆரம்பித்த இவர்கள் 11 வருடங்கள் பாடசாலையில் கழித்திருக்கின்றனர். 11 வருடகாலக் கல்விக்குப்பின் உயர்கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்படுகின்ற போது இவ்வளவு காலமும் அரசினாலும் பெற்றோரினாலும் செலவிடப்பட்ட செலவை எவ்வாறு ஈடு செய்வது. இதற்கான பயன் என்ன? மாணவர் ஒருவர் 11 வருடங்களின் பின் தனது வாழ்வைத் தீர்மானிக்கின்ற பரீட்சையில் தோல்வியடைகின்ற போது அவனது எதிர்கால வாழ்வு பற்றி எவ்வகையான முடிவை எடுக்க முடியும். சுய முன்னேற்றக் காரர்களும் சமூக ஆர்வலர்களும் பரீட்சையில் சித்தியெய்தத் தவறினாலென்ன? வாழ்க்கைக் கான தொழிற்கல்வி எத்தனையோ இருக்கிறது அவற்றைக் கற்றுக்கொண்டு வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லலாம் எனக் கூறுவர். ஆனால் அதுவல்ல இங்கு முக்கியமானது. 11 வருடங்கள் கற்ற பின் சித்தியெய்தத் தவறியது ஏன்? என்பதுதான், நமது கேள்வி. எங்கு இந்தக் குறைபாடு உள்ளது. கல்வியோடு தொடர்புடைய அமைச்சுக்களினதும் நிறுவனங்களிலும் உள்ள குறைபாடா? அல்லது கல்விக் கட்டமைப்பில் உள்ள குறைபாடா? அல்லது கல்விசார் ஆளணியினரின் குறைபாடா? வளங்களின்மையா? எதைக் கையில் எடுத்துக்கொண்டு மேற்குறித்த வினாக்களுக்கு தீர்வு காண முடியும் என்பது எமக்கு விளங்கவில்லை. கல்வி அமைச்சும் அதனோடு இணைந்த நிறுவனங்களும் கல்விக்காக உச்சக்கட்டப் பணிகளைச் செய்வதாகவும் ஆசிரியர் வாண்மைத்துவத்திற்கான முறைசார் பயிற்சிகள், வளப்பகிர்வு, தொழில்நுட்பக் கட்டமைப்புக்கள் என அனைத்து துறைசார் பணிகளையும் மேம்படுத்தி வருவதாகக் கூறிவருகின்றன ஆனால் முடிவுகள் தான் என்ன? பரீட்சைக்குத் தோற்றியவர்களில் ஏறத்தாழ 23 பகுதியினர் சித்தியெய்தத் தவறுகின்றனர். 11 வருடம் பாடசாலைக்குச் சென்றும் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் தவறுகின்ற ஒரு மாணவனுக் கும் பாடசாலைக்குச் செல்லாமல் இருந்தே பரீட்சையில் தோற்றி சித்தியெய்தத் தவறும் ஒரு மாணவனுக்கும் என்ன வேறுபாடு உண்டு. இதற்கான தீர்வு தான் என்ன? இக்குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படுவதற்கு எங்கிருந்து ஆரம்பிக்கப்படல் வேண்டும். இதற்கு கல்வி மாற்றம் தேவையா? என பல கேள்விகள் எம்முன் எழுந்து நிற்கிறது. தீர்வுகள் யாரிடத்தில்?
வெற்றி பெற்றவனுக்கு ஆயிரந் தந்தைகள் தோல்வி கண்டவன் அநாதை
- ஸ்பானியப் பழமொழி இதுபோலத்தான் நம் மாணவர்களின் நிலை.
அகவிழி | ஏப்ரல் 2014 )
35பாதுசன நூலகம் ச. இந்திரகுமார்
யாழப்பாணம்.

Page 5
தேசிய இலக்குகள் மற்றும் அடிப்படைத் 4 இடைநிலை தமிழ்மொழிப் பாடத்திட்டத்தி
'பேராசிரியர் தை. தனராஜ்
ஆய்வுச் சுருக்கம்
சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையின் சமூக, பொருளாதார, அரசியல் செல் நெறிகள் மற்றும் தேவைகளின் அடிப்படையில் அவ்வப்போது பாடசாலைக் கலைத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டபோதும் கலைத்திட்ட உருவாக்கத்துக்கான வழிகாட்டல்கள் ஏதும் இருக்கவில்லை. அதனை நிறைவு செய்யும் முகமாக 1992 ஆம் ஆண்டு தேசிய கல்வி ஆணைக்குழு முதன்முதலாக தேசிய இலக்குகள் மற்றும் அடிப்படைத் தேர்ச்சிகளை அறிமுகப்படுத்தியது. இவை பாடசாலைக் கலைத்திட்டத்திலும் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளிலும் எந்தளவுக்கு உள் வாங்கப் பட்டுள் ளன என் பதை கண்டறிவதே இந்த ஆய்வின் பிரதான நோக்கமாக அமைந்தது. அத்துடன் மேற்படி தேசிய இலக்குகள் மற்றும் அடிப்படைத் தேர்ச்சிகளின் பொருத்தமுடைமை, இவற்றை வகுப்பறையில் நடைமுறைப்படுத்துவதில் ஆசிரியர்களுக்குள்ள தேர்ச்சி நிலை ஆகியவையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
பண்புசார் ஆய்வு அணுகுமுறையைப் பயன்படுத்தி தமிழ் மொழி இடைநிலைப் பாடசாலையின் (தரம் 6 -11) பாடத்திட்டம், பாடநூல்கள் மற்றும் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டிகள் உள் ளடக்கப் பகுப் பாய் வுக் கு உட்படுத்தப்பட்டன. தொடர்ந்து தேசிய கல்வி நிறுவகத்தின் தெரிவு செய்யப்பட்ட அலுவலர்கள், முதன்மை ஆசிரியர்கள், பாடசாலை அதிபர்கள், பாடத்துக்குப் பொறுப்பான கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் நேர்காணல் செய்யப்பட்டனர். இவற்றுக்கு மேலதிகமாக வகுப்பறைகளில் தமிழ் கற்பித்தல் அவதானிக்கப்பட்டு இறுதியாக தொகுப்புரை தயாரிக்கப்பட்டது. தேசிய இலக்குகள், அடிப்படைத் தேர்ச்சிகள், இடைநிலை வகுப்பு தமிழ் ப் பாடத் தின் திட்டமிடப் பட்ட முறையில் உள்வாங்கப்படாததோடு இவ்விடயம் தொடர் பாக சம்பந்தப்பட்ட ஆளணியினருக்கு உரிய அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை. எனினும் சம்பந்தப்பட்ட கலைத்திட்ட ஆவணங்களில் தேசிய கல்வி இலக்குகள் மற்றும் அடிப்படைத் தேர்ச்சிகள் எதேச்சையான முறையில் உள் வாங்கப் பட்டுள்ளன. எனவே சம் பந்தப் பட்ட
- அகவிழி | ஏப்ரல் 2014

தேர்ச்சிகளை அடைவதில்
ன் பங்களிப்பு
ஆளணியினருக்கு கலைத்திட்டத்தில் மேற்படி தேசிய இலக்குகள் மற்றும் அடிப்படைத் தேர்ச்சிகளை ஒன்றிணைப்பது குறித்து உரிய அறிவுறுத்தல்களும் பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும். அத்துடன் கலைத்திட்ட உருவாக்க செயற்பாடுகளில் சம்பந்தப்பட்ட ஏனைய கல்விசார் நிறுவனங்களும் பல்கலக்கழகங்களின் கல்வித்துறைகளும் ஒன்றிணைக்கப்படுவதோடு கலைத்திட்ட உருவாக்கக் குழுவில் உளவியல், சமூகவியல், மொழியியல் துறைசார் நிபுணர்களும் உள்வாங்கப்பட வேண்டும்.
பிரதான சொற்கள்: தமிழ்மொழி கலைத்திட்டம், ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி, கற்றல் - கற்பித்தல் செயன்முறை, தேசிய இலக்குகள், அடிப்படைத் தேர்ச்சிகள்
அறிமுகம்
”கலைத்திட்டம்” என்னும் எண்ணக்கரு பற்றிய எமது சிந்தனைகளும் கோட்பாட்டு விளக்கங்களும் தொடர்ச்சியான மாற்றங்களுக்கு உட்பட்டு வந்திருக்கின்றன.
கலைத்திட்டம் பற்றிய முதலாவது நூலை எழுதிய பொப்பிற் (John Franklin Bobbit, 1918) கலைத்திட்டம் (Curriculum) என்பது கிரேக்கத்தின் தேரோட்டப் பாதையைக் குறிக்கும் currera என்னும் லத்தீன் சொல்லடியாகப் பிறந்தது எனவும் மாணவர்கள் வளர்ந்தோராக முதிர்ச்சி அடைவதற்கு ஆற்ற வேண்டிய செயற்பாடுகள், அடையவேண்டிய அனுபவங்களைக் கொண்ட வழித்தடம் (Course) தான் கலைத்திட்டம் எனவும் வரைவிலக்கணப் படுத்தினார். கலைத்திட்டம் பற்றிய சமகால கருத்துநிலைகள் பொப்பிற்றின் வரைவிலக்கணத்தை புறந்தள்ளி விட்டபோதிலும் "மாணவர்கள் பெறக்கூடிய அனுபவங்களின் தொகுப்பு” என்ற அடிப்படை அம்சம் இன்னும் ஏற்புடைமை கொண்டுள் ளது. இன்று கலைத்திட் டம் என்பது பாடசாலைக்கு உள்ளும் புறமும் தனியாகவோ அல்லது குழுவாகவோ பாடசாலைகளால் திட்டமிடப்பட்டு வழிகாட்டப்படும் சகல கற்றல்களையும் குறித்து நிற்கிறது (Kerr மேற்கோள் Kelly, 1983).
இலங்கை ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட கல்விப் பாரம்பரியத்தைச் கொண்டிருந்த போதிலும் தமது

Page 6
காலனித்துவத் தேவைகளை நிறைவேற்றும் நோக்குடன் 19ஆம் நூற்றாண்டில் ஆங்கில மொழிப் பாடசாலைகளில் கலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் 1931 இல் அரசாங்க சபையின் ஸ்தாபிதத்துடன் இலங்கையர் ஓரளவு ஆட்சியுரிமை பெற்றதைத் தொடர்ந்து கல்வி மீதான விசேட ஆணைக்குழு (1943) இலங்கைப் பாடசாலைகளில் பின் பற்றப்படும் கலைத்திட்டம் இலங்கையரின் அரசியல், சமூக, பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்னும் நோக்குடன் கலைத்திட்ட சீர்த்திருத்தங்களை முன் மொழிந்தது (SP XXIV, 1943).
தொடர்ந்து 1961 இல் நியமிக்கப்பட்ட பேராசிரியர் ஜே. ஈ. ஜயசூரிய தலைமையிலான தேசியக் கல்வி ஆணைக்குழு சுதேசிய நோக்குடனான கலைத்திட்ட சீர்த்திருத்தங்களை முன்வைத்தது. 1972 இல் இலங்கை கல்வி முறைமையில் பாரிய கலைத்திட்ட சீர்த்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் 1980களில் அரசின் திறந்த பொருளாதார கொள்கை கலைத்திட்ட உருவாக்கத்திலும் செல்வாக்கு செலுத்தியது.
இலங்கையின் கல்வி வரலாற்றில் 1991 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட தேசிய கல்வி ஆணைக்குழு முதன்முதலாக ஒன்பது தேசிய இலக்குகளையும் ஐந்து அடிப்படைத் தேர்ச்சிகளையும் முன்வைத்தது. எனினும் 2003 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய கல்வி ஆணைக்குழுவின் இரண்டாவது அறிக்கையில் தேசிய இலக்குகள் எட்டாகவும் அடிப்படைத் தேர்ச்சிகள் ஏழாகவும் மாற்றமடைகின்றன.
மேற்படி தேசிய இலக்குகளும் அடிப்படைத் தேர்ச்சிகளும் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளன. ஒரு நாட்டின் கல்வி முறைமையின் உருவாக்கத்திலும் நடைமுறைப்படுத்தலிலும் தேசிய இலக்குகள் செவ்விய
வழிகாட்டியாக அமைகின்றன.
பல நாடுகளில் தேசிய இல க் கு க ளை உருவாக்குவதற்காக (உதாரணமாக மலேசியாவில்) தனி யான ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. இலங்கையில் அவ்வாறான ஆணைக்குழுக்கள் அமைக்கப்படாத நிலையில் தேசிய கல்வி ஆணைக்குழு அப்பாரிய பொறுப்பினை தன்மீது தானே சுமத்திக் கொண்டது (NEC, 1992).
6-11 தரம் வரையிலான சமகால கலைத்திட்டம் குறிப்பாக தமிழ்மொழி கலைத்திட்டமானது மேற்படி தேசிய இலக்குகள் மற்றும் அடிப்படைத் தேர்ச்சிகளை அடைவதில் எந்தளவுக்கு பங்களிப்பு செய்துள்ளது என்பதைக் கண்டறிவதே இந்த ஆய்வின் பிரதான நோக்கமாகும். அத்துடன் பின்வரும் குறிப்பான நோக்கங்களையும் இந்த ஆய்வு அடைய முயற்சித்தது :

(1)
தேசிய இலக்குகள் மற்றும் அடிப்படைத் தேர்ச்சிகள் தமிழ் மொழி பாடத் திட்டத்தில் எந்தளவுக்கு உள்வாங்கப்பட்டுள்ளன.
(2)
ஒவ் வொரு தரத்திலும் (6-11) தமிழ் மொழி பாடத்திட்டத்தில் மேற்படி தேசிய இலக்குகளும் அடிப் படைத் தேர்ச் சிகளும் எந்தளவுக் கு அடையப்பட்டுள்ளன.
முன்மொழியப்பட்ட தேர்ச்சிகளும் தேர்ச்சி மட்டங்களும்
அந்தந்த வகுப்புகளுக்கு ஏற்புடையனவா? (4) பாடத்தின் உள்ளடக்கம் அந்தந்த வயதுப் பிரிவினர்க்கு
ஏற்புடையதா? (5) அந்தந்த தரத்தில் கற்கும் பிள்ளைகளின் வேறுபட்ட
ஆற்றல்கள், ஈடுபாடுகள், உளச்சார்புகளை குறிப்பிட்ட பாடத்திட்டம் பூர்த்தி செய்கின்றதா?
(6) மற்ற தேர்ச்சிகளை விருத்தி செய்வதற்கு வசதியாக
ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டிகள் போதியளவு
நெகிழ்ச்சித் தன்மையைக் கொண்டுள்ளதா? (7) மேற்படி தேர்ச்சிகளை விருத்தி செய்வதற்கு
பாடசாலை மட்டக் கணிப்பீடு (SBA) எந்தளவுக்கு பங்களிப்பு செய்கின்றது.
தமது கற்பித்தலின் போது மேற்படி தேர்ச்சிகளை மாணவர்கள் விருத்தி செய்வதற்கு போதுமான அளவு தேர்ச்சிகளை ஆசிரியர்கள் கொண்டுள்ளனரா.
(ன
சார்பிலக்கிய மீளாய்வு
இக்கட்டுரையில் ஏற்கனவே குறிப்பிட்டவாறு கலைத்திட்டம் பற்றிய வரைவிலக்கணங் களும் பார்வைகளும் அணுகுமுறைகளும் காலப்போக்கில் மாற்றமடைந்துள்ளன. அதுமாத்திரமன்றி ஒரு தேசத்தின் அரசியல், பொருளாதார, சமூக சூழமைவுகள் மற்றும் அரசியல் சித்தாந்தங்கள் அந்நாட்டின் கலைத்திட்ட உருவாக்கத்தில் பாரிய செல்வாக்கை செலுத்தி வந்துள்ளன. பொப்பிற் (1918) காலத்திலிருந்து பல கலைத்திட்ட சிந்தனையாளர் மற்றும் விற்பன்னர்கள் (Dewey, 1938 Tyler, 1949 Taba 1962 Freire, 1972 Stenhouse, 1975 Kelly, 1983 Grundy, 1987 Cornbleth, 1990 Blenkin, 1992 Rose 2000) பலரும் கலைத்திட்டம் தொடர்பான கருத்தியல் அதன் உள்ளடக்கம், செயன்முறை, மதிப்பீடு பற்றிய தமது கருத்துக்களையும் முன்வைத்துள்ளனர். கலைத்திட்டம் தொடர்பான நான்கு அணுகுமுறைகளை நாம் இனங்காண 2 முடிகிறது. அவையாவன: (1) கலைத்திட்டம் அறிவுத் தொகுதியை கடத்துகிறது.
(Transmission)
அகவிழி | ஏப்ரல் 2014 (ம

Page 7
(2) கலைத்திட்டம் மாணவர்களில் குறிப்பிட்ட
விளைவுகளை உருவாக்குகிறது. (Content)
(3) கலைத்திட்டம் ஒரு செயன்முறை (Process)
(4) கலைத்திட்டம் ஒரு நடைமுறை (praxis).
இவ்வாறுநான்கு அணுகுமுறைகள் இருப்பினும் கூட அடிப்படையில் சகல கலைத்திட்ட முயற்சிகளும் ரயிலரின் (1949) கலைத்திட்டம் கோட்பாடு முன்வைக்கும் பின்வரும் அடிப்படை அம்சங்களை உள்ளடக்கியிருத்தல் வேண்டும். (1) பாடசாலை அடைய விரும்பும் கல்வி நோக்குகள், (2) இந்நோக்குகளை அடைய எத்தகைய கல்வி
அனுபவங்கள் வழங்கப்பட வேண்டும் (3) இந்த கல்வி அனுபவங்களை எவ்வாறு வினைதிறனுடன்
ஒழுங்குபடுத்தலாம்
(4)
இந்த நோக்குகள் அடையப்பட்டுள்ளனவா என்பதை எவ்வாறு தீர்மானிக்கலாம் (Wikipedia.org/wiki/ curriculum theory - 1.10.2012).
மேற்படி பின்னணியில் ஒவ்வொரு நாடும் தத்தமது கலைத்திட்ட நோக்கங்களை முன்வைத்துள்ளன. அவற்றை பகுப்பாய்வு செய்யும் போது அவையாவும் இறுக்கமான, தொடர்புள்ள இரண்டு கிளைகளைக் கொண்டிருப்பதைக் காணலாம் (ஜயவீர, 2010)
(1) -
மனித அபிவிருத்திக்கு தொடர்பான தேசிய இலக்குகள், நியமங்கள், விழுமியங்கள் மற்றும்
மாறுகின்ற உலகளாவிய சமூக பரிமாணங்கள். (2) சகல கற்போரினதும் உள, உடல், சமூக,
பொருளாதார, தனிப்பட்ட நலன்களை மேம்படுத்தலும் பொதுவான திறன்கள், அறிவு, மற்றும் மனப் பாங்குகளை விருத்தி செய்தலும்.
இலங் கையில் கலைத்திட்ட வரலாற்றிலும் இலங்கையின் அரசியல், சமூக, பொருளாதார மாற்றங் களின் பிரதிபலிப்புகளைக் காணமுடிகிறது. காலனித்துவ காலத்தில் குறிப்பாக பிரித்தானியர்களின் ஆட்சிக் காலத்தில் காலனித்துவவாதிகளின் தேவைகளை நிறைவேற்றுவதே கலைத்திட்டத்தின் உள்ளடக்கமாகவும், செயன்முறையாகவும் இருந்துவந்துள்ளது. எனினும் கல்வி மீதான விசேட ஆணைக்குழு (1943)வும் தேசிய கல்வி ஆணைக்குழு (1961)வும், 1981ஆம் ஆண்டின் வெள்ளை அறிக்கையும், தேசிய தேவைகளுக்கு ஏற்ப பல மாற்றங்களை ஏற்படுத்த முயன்றன. எனினும் இவை எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. 1972 ஆம் ஆண்டு கலைத்திட்ட சீர்திருத்தங்கள் காத்திரமான மாற்றங்களை முன்மொழிந்தன. பொதுப்பரீட்சைகளின் பெயர்களும் கட்டமைப்பும் மாற்றப்பட்டதுடன் இடைநிலைக்
5 அகவிழி (ஏப்ரல் 2014

கல்வியில் சகல மாணவர்களுக்கும் கணிதம், விஞ்ஞானம், சமூகக்கல் வி ஆகியவை மையப் பாடங்களாக அறிமுகப்படுத் தப்பட்டன. எனினும் புதிதாக | அறிமுகப்படுத்தப்பட்ட நொரில் முள்ளிலைப் பாடங்கள் (Pre-Vocational s) எதிர்பார்த்த வெற்றியினை அடைய முடியவில்லை. 1959 இல் அய்ந்தாயிக்கப்பட்ட கலைத்திட்ட அபிவிருத்தி நிலையமும் அதனை உள்வாங்கி 1985 இல் உருவாக்கப்பட்ட தேசிய கல்வி நிறுவகமும் கலைத்திட்ட அபிவிருத்திக்கான ஒரு முழுமையான சட்டகத்தை உருவாக்குவதில் தவறிவிட்டன என்றே கூறவேண்டும் (ஜயவீர 2010). இனி கலைத்திட்ட மீளாய்வு தொடர்பாக அண்மைக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சில ஆய்வுகளை நோக்குவோம்.
உலகவங்கியின் உதவியுடன் பொதுக்கல்வி செயற்றிட்டம் 2 இன் கீழ் முன்னெடுக்கப்பட்ட ஆய்வானது (Perera et at, SLAAED, 1996) கலைத்திட்டம் தொடர்பான ஒரு அடிப் படைத் தத்துவம் இல் லாமலிருப்பதை சுட்டிக்காட்டியது.
அத்துடன் பாடங்களை தளமாகக் கொண்ட அணுகுமுறை, பரீட்சைகளை மையமாகக் கொண்டிருந்தல் மற்றும் கலைத்திட்ட உருவாக்கம் மற்றும் ஈடுபட்டுள்ள பல்வேறு முகவரகங்கள் மத்தியில் ஒருங்கினைப்பு இன்மை ஆகிய பொதுவான பலவீனங்களையும் சுட்டிக் காட்டியது. | 1997 இல் தேசிய கல்வி ஆணைக்குழு முன்மொழிந்த கலைத்திட்ட சீர்திருத்தங்கள் மேற்படி ஆய்வை அடிப்படையாகக் கொண்டிருந்ததோடு விதந்துரைகளை முன்வைப்பதற்காக பன்னிரு தொழில்நுட்பக் குழுக்களும் அமைக்கப்பட்டன. இதன்படி வாழ்க்கைத் தேர்ச்சிகள், விஞ்ஞானமும் தொழில்நுட்பவியலும் என்னும் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் நடைமுறை செயற்றிட்டங்களும், செயற்பாட்டு அறைகளும் முன்மொழியப்பட்டன. 2001 - 2004 காலப்பகுதியில் தேசிய கல்வி ஆணைக்குழு கலைத்திட்ட அமுலாக்கம் தொடர்பான 24 ஆய்வுகளை மேற்கொண்டது. இவற்றில் மூன்று ஆய்வுகள் கனிட்ட இடைநிலை, இடைநிலை மற்றும் சிரேட்ட இடைநிலை (தரம் 10 - 13) ஆகிய மட்டங்களில் கலைத்திட்ட அமுலாக்கத்தின் உடன்பாடான மற்றும் எதிர்மறையான அம்சங்களினை ஆராய்ந்தன.
குணவர்த்தன மற்றும் லேகம்கே (2004) கலைத்திட்ட அமுலாக்கம் குறித்து களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலுள்ள 22 பாடசாலைகளில் ஆய்வை மேற்கொண்டனர். புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சூழற்கல்வி (தரம் 6) விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வாழ்க்கைத் தேர்ச்சிகள் மற்றும் செய்முறையும் தொழில்நுட்பதிறன்களும் (7-9) ஆகிய பாடங்களில் அவர்கள் ஆய்வினை மேற்கொண்டனர். இப்பாடங்கள் வெறுமனே முன்னைய பாடங்களை பதிலீடு செய்தன

Page 8
எனவும் எதிர்பார்த்த மாற்றங்களை உருவாக்கத் தவறிவிட்டன எனவும் இப்பாடங்கள் பற்றி முதன்மை ஆசியரியர்கள் மற்றும் ஆசிரியர் மத்தியில் போதிய விளக்கம் இருக்கவில்லை எனவும் செய்முறைப் பாடங்கள் சிற்சில திறன்களை விருத்தி செய்தபோதும் பெரும்பாலான பாடசாலைகளில் வளப்பற்றாக்குறையும் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் பற்றாக்குறையும் காணப்பட்டிருந்தன எனவும் மேற்படி ஆய்வு சுட்டிக்காட்டியது.
குணவர்த்தன, விஜேதுங்க, பெரேரா (2004) ஆகியோர் தரம் 6 - 11 வகுப்புகளில் கலைத்திட்டச் சீர்த்திருத்தங்களின் தாக்கங்களினை ஆராய்ந்தனர். 225 பாடசாலைகளின் அதிபர்கள், 34 முதன்மை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களிடமிருந்து திரட்டிய தகவல்களின்படி பின்வரும் முடிவுகளுக்கு வந்தனர்: பெரும்பாலான பாடங்களில் தேசிய இலக்குகள் உள்வாங்கப்படவில்ல்ை சில பாடங்களில் கலைத்திட்ட நோக்கங்கள் அறவே பின்பற்றப்படவில்லை சுமார் 20% ஆன் ஆசிரியர்களின் கற்பித்தல் நிலை மிகவும் கீழ்மட்டத்தில் இருந்தது பெரும்பாலான பாடசாலையில் செய்முறை மற்றும் தொழில் நுட்ப பாடங்களைக் கற்பிக்கக்கூடிய பெளதீகவசதிகள் இருக்கவில்லை அத்துடன் பாடசாலை மட்டக் கணிப்பீட்டை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தக்கூடிய தேர்ச்சிகளும் மனப்பாங்குகளும் ஆசிரியர்களிடம் காணப்படவில்ல்ை சீர்திருத்தங்களை வினைத்திறனுடன் அமுல்படுத்தக் கூடியளவு மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் இருக்கவில்லை. விஜேதுங்க மற்றும் ரூபசிங்க (2004) கொழும்பு, அம்பாந்தோட்டை மாவட்டங்களில் தரம் 10-11 வகுப்புகளில் மேற்கொண்ட ஆய்வில் பௌதீக, மனித வளப்பற்றாக்குறை காரணமாக சில பாடசாலைகளில் பாடங்களை தெரிவு செய்வதில் மாணவர்கள் இடையூறுகளுக்கு முகம் கொடுக்கின்றனர். எனவும் 80 வீதத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் தனியார் வகுப்புகளை (ரியூஷன் ) வலியுறுத்துகின்றனர் என்பதும் கற்றல் - கற்பித்தல் செயன்முறைகளில் பாரம்பரிய முறைகளே இன்னும் பின்பற்றப்படுகின்றன என்பதும் அறியப்பட்டது.
2007 இல் புதிய கலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தரம் 6 - 10 வரை கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களின் அமுலாக்கம் மீது உலக வங்கியின் நிபுணத்துவ ஆலோசகரான Tom McCaul ஆய்வினை மேற்கொண்டார். புதிய கற்பித்தல் முறை செயற்பாடு சார்ந்ததாக இருந்தபோதும் தமக்குள்ள நேரத்துக்குள் குறிப்பிட்ட செயற்பாடுகளை பூரணப்படுத்த முடியவில்லை எனவும் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டிகளில் உள்ள மதிப்பீட்டு முறைகள் தமக்கு விளங்காமையின் காரணமாக மரபுசார்ந்த மதிப்பீட்டு முறைகளையே தாம் பின்பற்றுவதாகவும் ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.

தொடர்ந்து தேசிய கல்வி நிறுவகம் 2007ஆம் ஆண்டின் புதிய கலைத்திட்டம் தொடர்பான (பெரேரா, 2007, 2008) மேற்கொண்ட ஆய்வுகளில் தேர்ச்சி மையக் கலைத்திட்டம் மற்றும் 5 E அணுகுமுறையின் பல பலவீனங்கள் வெளிப்படுத்தப்பட்டன.
புதிய கலைத்திட்டம் தெளிவான கோட்பாட்டுப் பின்னணியை கொண்டிருக்கவில்லை என்பதும் கலைத்திட்ட உள்ளடக்கம், கற்பித்தல் முறைகள் முதலியவை முற்பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்பதும் 5E அணுகுமுறை சகல பாடங்களுக்கும் பொருந்தவில்லை என்பது மட்டுமல்லாமல் ஆசிரியர்களின் ஆக்கத்திறனுக்கு அது போதிய வாய்ப்பு தரவில்லை என்பதும் அறியப்பட்டன.
ஒட்டுமொத்தமாக நோக்கும்போது கலைத்திட்ட உருவாக்கத் தில் பொருத்தமான கோட் பாட்டு அடிப்படைகளைப் பின்பற்றத்தவறியமை, ஆய்வுகளைக் அடிப்படையாகக் கொள்ளாமை, பிள்ளையின் முழுமையான ஆளுமை வளர்ச்சியை விட பரீட்சைகளையே மையமாகக் கொண்டிருந்தமை போன்ற பிரதான பலவீனங்கள் தேசிய தேவைகளையும் சர்வதேச செயல்நெறிகளையும் கருத்தில் கொண்ட ஒரு வினைத்திறன் மிக்க பூரணமான கலைத்திட்டத்தை நடைமுறை சாத்தியமற்றதாக மாற்றிவிட்டன.
ஆய்வு முறையியல்
இந்த ஆய்வில் பண்புசார் ஆய்வு அணுகுமுறை (Qualitative Research Approach) யின் கீழ் இடைநிலை வகுப்புகளில் (தரம் 6 - 11 வரை) தமிழ் மொழி உட்பட பதினான்கு பாடங்கள் தொடர்பான கலைத்திட்ட ஆவணங்கள் உள்ளடக்க பகுப்பாய்வுக்கு (Content Analysis) உட்படுத்தப்பட்டன. அத்துடன் ஆசிரியர்கள், அதிபர்கள், முதன்மை ஆசிரியர்கள், தேசிய கல்வி நிறுவனத்தின் தெரிவு செய்யப்பட்ட கல்வியாளர்களை நேர்காணல்கள் செய்தமை மூலம் சான்றாதாரங்கள் பெறப்பட்டன.
இந்த ஆய்வானது நான்கு கட்டங்களில் மேற்கொள்ளப் பட்டது:
(1) தரம் 6 - 11 வரையிலான தமிழ்ப்பாட பாடத்திட்டம்,
பாடநூல்கள், ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டிகளில் எந்தளவுக்கு தேசிய இலக்குகளும் அடிப்படைத் தேர்ச்சிகளும் உள்வாங்கப்பட்டுள்ளன என்பது மீளாய்வு செய்யப்பட்டது இரண்டாவது கட்டத்தில் தேசிய கல்வி நிறுவனத்தின் கலைத்திட்ட அபிவிருத்தியாளர் ஒருவரும், இரு ஆசிரிய கல்வியாளர்களும், மூன்று முதன்மை ஆசிரியர்களும், மூன்று பாட ஆசிரியர்களும் உ.
(2)
அகவிழி ) ஏப்ரல் 2014 (-

Page 9
நேர்காணலுக்கு உட்படுத்தப்பட்டனர். அத்துடன் ஒரு
தமிழ்ப்பாட வேளையும் அவதானிக்கப்பட்டது
(3)
மேற்படி நேர்காணல்கள், அவதானங்கள், கலைத்திட்ட ஆவணங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வகுப்பு ரீதியாக ஆழமான பகுப்பாய்வு
மேற்கொள்ளப்பட்டது (4) இறுதியாக தமிழ் உட்பட 14 பாடங்கள் தொடர்பாகவும்
தொகுப்புரை (Synthesis) தயாரிக்கப்பட்டது.
கண்டறிதல்களும் விளக்கங்களும்
தரம் 6 -11 வரையிலான பாடத்திட்டம், பாடநூல்கள் மற்றும் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கலைத்திட்ட உள்ளடக்கம், செயன்முறை மற்றும் செயற்பாடுகள் பற்றி ஆழமான பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இவற்றில் தேசிய இலக்குகள் பற்றி குறிப்பிடாவிட்டாலும் பின்வரும் மொழி சார்ந்த இலக்குகள் தரம் 6 -11 வரை பொதுவாக உள்ளன. அவை தேசிய இலக்குகளுடன் தொடர்பு கொண்டுள்ள விதத்தை பின்வரும் அட்டவணை காட்டுகிறது.
அட்டவணை 1 : மொழிசார் இலக்குகளும் தேசிய இலக்குகளும் மொழிசார் இலக்குகள் தேசிய இலக்குகள்
மொழிசார் இலக்குகள்
தேசிய இலக்குகள்
(1) தமிழ்மொழியைத் தொடர்பாடற் கருவியாக
காலத்திற்குப் பொருத்தமான முறையில் வினைத்திறனுடன் கையாளுதல்.
5,7
(11) இலக்கியங்களினூடாக சமூக, கலாசார,
விழுமியங்களை அறிந்து அவற்றைப் போற்றுதல்.
1, 2, 3, 4
(ii) கலைகள், அறிவியல், தொழில்நுட்பத்துறைகள்
என்பவற்றின் வளர்ச்சிக்கேற்ப மொழியை செம்மையாய் பயன்படுத்தும் ஆற்றலை பெறுதல்.
7, 8
(iv) மொழியூடாக மாணவர் தம் ஆளுமையை வளர்த்துக்
கொள்ளல்.
4, 5, 6, 7
(v) தேசிய ஒருமைப்பாட்டுணர்வை வளர்க்க மொழியை
சாதனமாகக் கொள்ளல்.
1,8
0 அகவிழி | ஏப்ரல் 2014
தமிழ்ப் பாடத்தின் இலக்குகளுக்கும் தேசிய இலக்குகளுக்கும் காணப்படும் மேற்படி தொடர்பு ஊகத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதே தவிர திட்டவட்டமான சான்றுகள் காணப்படவில்லை.
தரம் 6 -11 வரையிலான பாடநூல்களில் பாடங்களின் எண்ணிக்கை மற்றும் பாடங்களின் தொனிப்பொருள் தொடர்பான ஒரு சமநிலையைக் காணமுடியவில்லை. 6 முதல் 11 ஆம் தரம் வரை பாடங்களின் எண்ணிக்கை

முறையே 22, 20, 18, 25, 12, 15 ஆகும். பாடநூல் தயாரிப்பில் பல்வேறு முகவரங்கள் ஈடுபட்டிருந்தமை காரணமாக இவ்வாறான சமநிலையின்மை ஏற்பட்டிருக்கக் | கூடும்.
- பின்வரும் அட்டவணை தரம் ரீதியாக பாடங்களில் தேசிய இலக்குகள் ஒன்றிணைக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.
அட்டவணை 2 : பாடங்களில் தேசிய இலக்குகளின் ஒன்றிணைப்பு
தேசிய இலக்கு கள்
தரம்:
தரம் 7
இராக
தரம்;
தரம்19
தரம்11
மொத்தம்
ண்
13.3
|15
14.3
எண் % ண் % ண் க ண் : 5 எண்
ண்
ண்
4.5
25.03 16.7 3
167)
| 8.3) 2
22.7
0.0) 0
0.0 0
00 0
0.0) 0
13.6)
20.0) 0.
0.0) 0
0.02.
16.7-
13.6
| 10.0) 3
16.73
16.7|
33.3|
0.0 5
9.8
دیا
13.3
10.5
6.7
(15
15.2
5
| S
7
22.7)
35.0) 10)55.6) 10
55.6
33.3
60.0
|45
42.9
4.5) 0
0.0) 0
0.0) 0
0.0) 0
0.0| 0
0.01
0.9
9.1
0.0) 0
0.0/ 0
0.0
0.0) 0
0.0
1.9
9.1) 2
| 10.0) 2
| 11.1) 2
11.11 ) 6.7) 1 | 6.7 11.1)
6.7
T10
9.5 22 (100.0 20 100.0) 18 /100.0) 18 /100.0) 12 (100.0) 15 (100.0 | 105 100.0)
0
67
', 12 2:1 2 100 2. 11. 2 ... 53 : 67 18 1. 23
பாடங்க ளின் எண்ணி
தை
மேற்படி அட்டவணையின்படி தரம் 6 - 11 வரை 105 பாடங்கள் / தொனிப் பொருள்களில் தேசிய இலக்குகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. எனினும் தரம் ரீதியாகவும் மொத்த எண்ணிக்கை அடிப்படையிலும் தேசிய இலக்குகளின் பிரதிபலிப்புகளில் சமநிலையைக் காணமுடியவில்லை. தேசிய இலக்குகளின் ஒன்றிணைப்பு எண்ணிக்கை 1 - 45 வரை வேறுபடுகிறது. தேசிய இலக்கு 6 ஒரு முறையும், 7 இருமுறையும் ஒன்றிணைக்கப்பட்டுள்ள அதே வேளை தேசிய இலக்கு 5 ஆனது 45 முறை ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து வெளிவரும் உண்மை என்னவெனில் பாடங்கள் எழுதப்படும் போது தேசிய இலக்குகளை ஒன்றிணைக்க வேண்டும் என்னும் விடயம் எழுத்தாளர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என் பதும், மேற்படி ஒன்றிணைப்பு தற்செயலாக ஏற்பட்டுள்ளதே அல்லாமல் பிரக்ஞை பூர்வமானதல்ல என்பதுமாகும்.
தேசிய இலக்குகளை பாடத்தில் ஒன்றிணைப்பது தொடர்பாக நாம் நேர்முகம் கண்ட கல்வியாளர்கள், ஆசிரியர்கள், முதன்மை ஆசிரியர்களுக்கு எவ்வித தெளிவும் இருக்கவில்லை. "தேசிய இலக்குகள் ஓரளவு ஒன்றிணைக்கப்பட்டுள்ளன” என எவ்வித நம்பிக்கையும் அற்ற நிலையிலேயே அவர்கள் பதில் இறுத்தனர். ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டிகள் மிகச் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டிருப்பினும் தேசிய இலக்குகளை

Page 10
கற்றல்-கற்பித்தல் செயன்முறையில் ஒன்றிணைப்பது தொடர்பாக எவ்வித குறிப்பையும் காணமுடியவில்லை.
அடிப்படைத் தேர்ச்சிகளை கற்றல் - கற்பித்தல் செயன்முறையில் ஒன்றிணைப்பது குறித்தும் தரம் 6- 11 வரையிலான பாடத்திட்டம், பாடநூல்கள் மற்றும் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டிகளில் - தெளிவாகவும் 1 வெளிப்படையாகவும் திட்டவட்டமாகவும் குறிப்பிடப் படவில்லை. எனினும் பின் வரும் அட்டவணை குறிக்கப்பட்டுள்ள பதினொரு மொழித் தேர்ச்சிகளில் அடிப்படைத் தேர்ச்சிகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகிறது. இதுவும் தேசிய இலக்குகள் விடயத்தில் குறிப்பிட்டிருப்பதைப் போல தற்செயலாக நடந்துள்ளதே தவிர திட்டமிடப்பட்ட ஒன்றிணைப்பு அல்ல என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.
ன
அட்டவணை 3 : அடிப்படைத் தேர்ச்சிகளின் ஒன்றிணைப்பு மொழித்தேர்ச்சிகள் அடிப்படைத் தேர்ச்சிகள்
மொழித்தேர்ச்சிகள்
அடிப்படைத் தேர்ச்சிகள்
1.0 பல்வேறு நோக்கங்களுக்கும் சந்தர்ப்பங்களுக்குமேற்ப |1, 7, 6
வினைத்திறனுடன் கேட்டு, இரசித்துத் துலங்குவார்.
1, 2
2.0 சந்தர்ப்பத்திற்கும் சூழ்நிலைக்கும் கேட்போருக்கும்
ஏற்ற வகையில் உரையாடுவார்.
1, 4
3.0 எண்ணக்கருக்களையும் அபிப்பிராயங்களையும்
புலப்படுத்தி பேசுவார்
1, 4, 8
4.0 உயிர்த்துடிப்புள்ள கட்டுருவாக்கச் செயல்
திறனுடையவராக செயற்படுவார்.
5.0 கிரகித்து பொருள் உணர்ந்தமை புலப்பட வாசிப்பார்.
1,2
6.0 நடைமுறைத் தேவைகளுக்காக வாசிப்பார்.
1,4
7.0 சூழ்நிலைத் திறனை மேம்படுத்துவதற்காக வாசிப்பார்.
1, 2,5
8.0 விருப்பத்திற்கேற்ப வாசிப்பார்.
1,5
9.0
1,4
அவதானமாகக் கிரகித்து எழுத்துப் பொறிமுறைகளை அனுசரித்து எழுத்தாக்க நுட்பங்களைப் பயன்படுத்தி எழுத்துக்கள், சொற்கள், வாக்கியங்கள் வழுவின்றி உரிய நிறுத்தக் குறிகளுடன் தெளிவாக எழுதுவார்.
1, 2, 4, 6, 7
10.0 பல்வேறு சந்தர்ப்பங்களுக்கும் நோக்கங்களுக்கும்
ஏற்றவாறு எழுதுவார்.
11.0 படைப்புக்களை வாசித்து அனுபவங்களினூடாக சுய 1,2,3
ஆக்கத்தினை எழுதுவார்.
மேற்படி அட்டவணை அடிப்படைத் தேர்ச்சிகளின் ஒன்றிணைப்பில் சமநிலை பேணப்படவில்லை என்பதைக் காட்டுகிறது. உண்மையில் தரம் 6 - 11 வரையிலான 105 பாடங்களில் / தொனிப் பொருள்களில் அடிப்படைத் தேர்ச்சிகள் 1 - 7 முறையே 105, 86, 59, 11, 40, 52, 17 முறை ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. அதாவது

க
அடிப்படைத்தேர்ச்சி ஒன்று 105 முறையும், அடிப்படைத்தேர்ச்சி நான்கு 11 முறையும் மட்டும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.
தேர்ச்சி மைய கலைத்திட்டம் குறித்து நாம் நேர்காணல் செய்த உரித்தாளர்கள் குறிப்பாக தேசிய கல்வி நிறுவகத்தின் கலைத்திட்ட அபிவிருத்தியாளர்கள் உடன்பாடான கருத்துக்களைத் தெரிவித்தனர். முன்னைய கலைத்திட்டம் ஆசிரியர் மையமாகவும் பாடநூல் மையமாகவும் இருந்ததாகவும், புதிய கலைத்திட்டம் மாணவர் மையமாக உள்ளதெனவும் அவர் கள் தெரிவித்தனர். தேர்ச்சி மைய செயற்பாடுகளில் மாணவர்கள் தாமே ஆர் வத்துடன் ஈடுபடுவதாலும் அதனால் ஆசிரியர்களுக்கு விசேட தேவைகள் உள்ள மாணவர்களில் கவனம் செலுத்த நேரம் கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால் தமிழ்ப்பாடத்தில் ஒவ்வொரு தரத்திலும் மாணவர்கள் அடைய வேண்டிய மொழித்தேர்ச்சி மட்டத்தை தீர்மானிக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடமே சுமத்தப்பட்டுள்ளது. பதினொரு மொழித்தேர்ச்சியிலும் சகல தரங்களுக்கும் பொதுவானவையாக உள்ளன. ஒரு குறிப்பிட்ட மொழித்தேர்ச்சியில் குறிப்பிட்ட வகுப்புக்குரிய தேர்ச்சி மட்டம் துல்லியமாக வரையறுக்கப்படவில்லை.
ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டிகள் பல்கலைக்கழக விரிவுரையாளர் கள் மற்றும் பேராசிரியர் களின் உதவியுடனும், முதன்மை ஆசிரியர்கள் மற்றும் சிரேஷ்ட ஆசிரியர்களின் பங்களிப்புடனும் மிகவும் தரமாக தயாரிக்கப்பட்டுள்ளன. பாடநூல்கள் தனிப்பட்ட ஒரு எழுத்தாளரினால் அல்லது குழுவினால் தயாரிக்கப்பட்டு பாடநூல் பிரசுர திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆசிரியர் வழிகாட்டிக்கும் பாடநூ லுக்குமிடையில் ஒருங்கிணைப்பைக் காணமுடியவில்லை.
அத்துடன் பாடநூல்கள் மற்றும் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டிகளில் உள்ளவற்றில் எதனைக் கற்பிப்பது என்பதில் ஆசிரியர்களுக்கும் முதன்மை ஆசிரியர்களுக்கும் குழப்பநிலை ஏற்பட்டது. எனினும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் வழிகாட்டி மற்றும் பாடநூல்களிலிருந்து விரும்பியவற்றை தெரிவு செய்து கற்பிப்பதற்கு சுதந்திரம் வழங்கப்பட்டு இக் குழப்பநிலை தீர்க்கப்பட்டதாக கூறப்பட்டது. பாடநூல்களில் காணப்படும் பல பாடங்கள் மாணவரது முதிர்ச்சிநிலைக்குப் பொருத்தமானதாகத் தென்படவில்லை. உதாரணமாக தரம் 6 இல் பதின்மூன்றாம் பாடம் பத்து பக்கங்களைக் கொண்டிருந்தது. நேர்காணலின் போது ஆசிரியர்கள் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி பற்றிய உடன்பாடான அபிப்பிராயத்தையும் பாடநூல்கள் 2 பற்றி மட்டுப்பாடான அபிப்பிராயத்தையும் தெரிவித்தனர்.
தேசிய கல்வி நிறுவகம் பாடத்திட்டத்தையும் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டிகளையும் தயாரிக்கும் செயற்பாட்டில் தேசியகல்வியியல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக கல் வித் துறை வள வா ளர்களை இணைத்துக்
1ான
அகவிழி | ஏப்ரல் 2014 (0
பொதுசன நூலகம் யாழ்ப்பாணம்.

Page 11
கொள்வதில்லை. இது தமிழ்மொழி தொடர்பான ஆசிரியர் பயிற்சியில் இடைவெளியை ஏற்படுத்துகின்றது. முதன்மை ஆசிரியர்கள் தேசிய கல்வி நிறுவகத்தில் தமக்கு கிடைத்த பயிற்சி பற்றி திருப்தி தெரிவித்தாலும் தொடருறு பயிற்சிக்கான வாய்ப்பில்லை எனவும் பயிற்சியை பெறத் தவறியவர்களுக்கு இன்னுமொரு வாய்ப்பு இல்லை எனவும் குறிப்பிட்டனர். வலய மட்டத்தில் தமக்கு கிடைக்கும் பயிற்சி பற்றி ஆசிரியர்கள் திருப்தி தெரிவித்தனர்.
அத்துடன் முதன்மை ஆசிரியர்கள் மூலம் தமக்கு கிடைக்கும் தொழில்சார் உதவிகள் பற்றியும் திருப்தி
தெரிவித்தனர்.
முடிவுகளும் விதந்துரைகளும் முடிவாக நோக்கும்போது தேசிய இலக்குகளையும் அடிப்படைத் தேர்ச்சிகளையும் திட்டமிட்ட முறையில் இடைநிலை வகுப்புகளில் தமிழ்மொழி பாடத்திட்டத்தில் உள்ளடக்கவேண்டும் என்னும் கருத்து கலைத்திட்ட அபிவிருத்தியாளர்களிடம் காணப்படவில்லை. இதைப்பற்றிய எவ்வித அறிவுறுத்தல்களும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய வேளையில் வழங்கப்படவுமில்லை. எனினும் தேசிய இலக்குகளும் அடிப்படைத் தேர்ச்சிகளும் தரம் 6 -11 வரையில் உள்ள பாடநூல்களில் எதேச்சையான முறையில் பிரதிபலிக்கவே செய்கின்றன. தமிழ்ப்பாடத்தை பொறுத்த மட்டில் மொழித்தேர்ச்சிகள் அனைத்தும் பாடத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருப்பினும் வயது, முதிர்ச்சிக் கேற்ற வகையில் தேர்ச்சி மட்டங்கள் துல்லியமாக வரையறுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டிகளில் காணப்படும் செழுமையும் நெகிழ்ச்சியும் மாணவர்களின் ஆற்றல்கள், தேவைகளுக்கு ஏற்ப செயற்பாடுகளைத் தெரிவு செய்து வழங்கும் வாய்ப்பை ஆசிரியர்களுக்கு வழங்குகின்றன.
மேற்படி பின்னணியில் பின்வரும் விதந்துரைகள் முன்வைக்கப்படுகின்றன: (1) தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வியாளர்களுக்கு
தேசிய இலக்குகளையும் அடிப்படை தேர்ச்சிகளையும் பாடத்திட்டத்திலும் மற்றும் பாடநூல்களிலும் எவ்வாறு
ஒன்றிணைப்பது பற்றிய பயிற்சி வழங்கப்பட வேண்டும் (2)
ஒவ்வொரு பாடம் தொனிப்பொருளுக்கு உரிய தேசிய இலக்குகள் மற்றும் அடிப்படைத் தேர்ச்சிகளை ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி துல்லியமாகக் காட்டுதல் வேண்டும்
முதன்மை ஆசிரியர்கள், பாடத்துக்குப் பொறுப்பான பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு இலக்கு களையும் தேர்ச்சிகளையும் பற்றிய விளக்கமும் அவற்றை கற்றல் - கற்பித்தல் செயன்முறையில் ஒன்றிணைப்பது பற்றிய விளக்கமும் வழங்கப்பட வேண்டும்
6 அகவிழி | ஏப்ரல் 2014
சேர் -

| (4) பாடத்திட்டம், ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டிக்கேற்ப
பாடநூல்கள் எழுதப்படுவதற்கு தேசிய கல்வி
நிறுவகம் அனுசரணை வழங்க வேண்டும் (5)
பாடத்திட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் தயாரிப்பு குழுவில் உளவியல் மொழியிய லாளர்களுக்கும் சமூகவியலாளர்களுக் கும் இடமளிக்கப்படவேண்டும் | கலைத்திட்ட செயற்பாடுகளில் தேசிய கல்வி நிறுவகம், ஆசிரியர் கல்வி நிறுவனங்கள், கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழகங்களுக்கிடையே ஒருங்கிணைப்பும் தொடர்ச்சியான கருத்தாடலாலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் கலைத்திட்ட அமுலாக்கம் கிரமமாக கண் காணிக்கப்படுவதோடு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். கண்காணிப்பில் கிடைக்கும் பின்னூ ட்டல்களும் ஆய்வுமுடிவுகளும் கலைத்திட்ட சீர்திருத்தத்தில் உள்வாங்கப்படவேண்டும். 9 - CM 15529
நன்றி: இவ்வாய்வுக் கட்டுரையை எழுதுவதற்கு அனுமதியையும் இலங்கை கல்வி முன்னேற்றத்துக்கான அமைப்பின் (SLAAED) ஆவணங்களிலிருந்து சில பகுதிகளை இக்கட்டுரையில் எடுத்தாளவும் அனுமதி அளித்த பேராசிரியர் சந்திரா குணவர்தன அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உசாத்துணைகள் Bobbitt, J.E. (1918) The Curriculum, Boston : Houghton Miரிin. Barrow, R. (1984) Giving Teaching back to Teachers. A critical introduction to
curriculum theory, Brighton: Wheatsheaf Books Blentin, G. M. etal (1992) Change andhe Cபாவபற,London Paul Chapman. Cornbleth, C. (1990) போiculan Conta, Bahingstoke: Falmer Press. Dewey J. (1902) The Child and the Cபாலயா, Chesity ofChicago Press. Freire, P. (1972) Pedagogy ofthe Oppாஜed, Harmonish: Penguin. Grundy, S. (1987) போiculum: product or p? FalnePress Lewes. Gunawardena,C.,Lekamge,D. (2004) Evaluation of the effectiveness of the
implementation of the junior secondary curriculum in Ratnapura and
Kalutara, Colombo:NEC. Gunawardena,C,Wijetunga,S.,&Perera,L (2004) Evaluation ofthe effectiveness
of the implementation of the education reforms at the secondary school
level, Colombo:NEC. Jayaweera,S (2010) Sri Lanka Association for the Advancement of Education,
A study on the current school curriculum and its contribution towards the achievement of national goals and basic competencies identified by
the national Education Commission, Colombo. Kelly, A. V. (1983; 1999) The Curriculum, Theory and practice 4e, London :
| Paul Chapman. McCaul, T. (2007) Study of the implementation of Mathematics and Science
curriculum in Grades 6-10, World Bank Office, Colombo. National Education Commission (1992) The first report of the NEC, Sessional
Paper V of 1992, Colombo: Government Press.

Page 12
இலங்கையின் எதிர்கால கல்வி அபிவிருத் ஆசிரியர் சேவையும் ஆசிரியர் .
பொன். இராமதாஸ்
விரிவுரையாளர், ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரி, பத்தலை
அறிமுகம்
தேசிய கல்வி ஆணைக்குழு (NEC) தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் மதிப்பீட்டு நிலையம் (NEREC) மற்றும் கல்வித்துறைசார் ஆய்வாளர்களால் அண்மைக்காலங்களில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய ஆய்வுகளில் இலங்கை அரசாங்கமானது கல்வித்துறை எதிர்நோக்கும் எழுவினாக்களுக்கு முகங்கொடுத்து அவற்றுக்கு பொருத்தமான தீர்வுகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் துறைவாரியான அபிவிருத்தி அணுகு முறையைப் (SWAP) பின்பற்ற வேண்டும் என்னும் பரிந்துரை முன்வைக்கப்பட்டது. இதற்கு அமைவாக 2006-2010 வரையான ஆண்டுகளுக்கான பரந்ததொரு கல்விக்கான துறைசார் அபிவிருத்திச் சட்டகமும் நிகழ்ச்சித்திட்டமும் (ESDFP) கல்வி அமைச்சினால் தயாரிக்கப்பட்டது. இந்த சட்டகத்தில் கல்வியில் சீர்திருத்தங்களை ஏற்படுத்த வேண்டியதற்கான இரண்டு பிரதான காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. முதலாவது கல்வியில் நியாயத்தன்மை, தரம் மற்றும் பொருத்தப்பாடு என்பவற்றில் நிலவும் அதிருப்தியாகும். இரண்டாவது சனத்தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் சமூக, பொருளாதார, இனத்துவ இயங்கியல் ஆகியவை கல்வியில் ஒரு புதிய மாற்றத்தை வேண்டி நிற்கின்றமை ஆகும். இத்தகைய நிலைமைகளை கவனத்திற் கொண்டுள்ள ESDP சட்டகமானது பின்வரும் நான்கு கல்வித்துறைசார் பரப்புகளில் நிலவும் எழுவினாக்களையும் அவற்றை தீர்ப்பதற்கான குறிக்கோள்கள் மற்றும் தந்திரோபாயங்களையும் முன்வைத்துள்ளது.
அடிப்படை மற்றும் இடைநிலைக் கல்வியில் நியாயத்தன்மையுடன் கூடிய வாய்ப்பினை மேம்படுத்தல் அடிப்படை மற்றும் இடைநிலைக் கல்வியின் தராதரத்தை மேம்படுத்தல். கல்வித்துறையில் வினைத்திறன், வள ஒதுக்கீட்டிலும் பகிர்விலும் நியாத்தன்மை என்பவற்றை மேம்படுத்தல்.
10)
கல்வி ஆளுகையை வலுப்படுத்தல்.

நீதிக்கான ஆலோசனைகள் கல்வியும்
Tன்
கல்வித்துறையின் மேம்பாட்டிற்காக தயாரிக்கப்பட்ட இந்த “கல்வித்துறை அபிவிருத்திச் சட்டகமும் நிகழ்ச்சித் திட்டமும்” என்னும் சட்டத்திற்கு மேலதிக நடவடிக்கையாக “பொதுக்கல்விக்கான புதிய சட்டத்தை உருவாக்கவதற்கான தேசிய குழு” 2009 ஆண்டு கல்வித் துறைசார் அபிவிருத்திக்கான வழிகாட்டல் மூலதத்துவங்கள் 26 இனை பின்வரும் தலைப்புகளில் முன்வைத்துள்ளது. இந்த முன்வைப்புக்களில் தற்போதைய சூழமைவில் காணப்படும் எழுவினாக்கள், அவற்றை தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் என்பன தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. 1) கல்வி முறைமை - கட்டமைப்பும் தொழிற்பாடுகளும் 2) கல்வி அமைப்பு - உள்ளடக்கமும் செயன்முறையும்
3) கல்வி முகாமைத்துவமும் தலைமைத்துவமும்
கல்விசார் ஆளணியினர்
5) கல்விசார் தராதரங்களும் தர உறுதிப்பாடும்
6) வளங்களை வழங்குதல் மற்றும் கல்வியில்
நிதியீட்டமும்.
கலாநிதி ஜீ.பி. குணவர்தன தலைமையிலான “பொதுக்கல்விக்கான புதிய சட்டத்தை உருவாக்குவதற்கான தேசிய குழு - 2009” சமர்ப்பித்த மேற்படி அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, "கல்விச் செயற்பாடுகள் தொடர்பான விசேட பாராளுமன்ற செயற்குழு சபை” கல்வி அமைச்சர் கெளரவ பந்துல குணவர்தன அவர்களை தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இக்குழுவில் கல்வி என்னும் விடயத்தோடு தொடர்புபட்ட ஏனைய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், ஆளுங்கட்சி மற்றும் எதிர் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர் கள் உள்ளடங்கியிருந்தனர். இந்த கல்வி தொடர்பான விசேட பாராளுமன்ற செயற்குழு சபைக்கு கல்வி அமைச்சரால் ந சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் எதிர்கால கல்வி அபிவிருத்திக்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல் குறிப்புகள் பல முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைகளில் பல ESDFP பொதுக்கல்விக்கான
அகவிழி ) ஏப்ரல் 2014 -

Page 13
புதிய சட்டத்தை உருவாக்குவதற்கான தேசிய குழு - 2009, என்பன முன்வைத்துள்ள விடயங்களுடன் ஒத்ததாக வுள்ளன. அதன்படி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் பின்வரும் ஒன்பது தலைப்புக்களை கொண்டுள்ளது.
1) நாட்டினது கல்விக்கான பொது நோக்கம் மற்றும்
வழிகாட்டல் விழுமியங்கள்.
2)
கல்வி முறைமை - கட்டமைப்பு மற்றும் செயற்பாடுகள்
6)
3)
கல்வி முறைமை - உள்ளடக்கம் மற்றும்
செயற்பாடுகள் 4) கல்வி முகாமைத்துவம் மற்றும் தலைமைத்துவம் 5) கல்விப் பணியாளர் சபை
கல்வித் தரம் மற்றும் பண்புசார் தர உறுதிப்பாடு
இலங்கையின் கல்விக்கான வளப்பயன்பாடு மற்றும் நிதியாக்கம்
தொழில் கல்வி 9) பிரிவேனாக் கல்வி
இவ்வாறு கலாநிதி ஜீ.பி. குணவர்தன குழுவின் ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்டு கல்வி அமைச்சரால் "கல்விச் செயற்பாடுகள் தொடர்பான விசேட பாராளுமன்ற செயற்குழு சபை" முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் “கல்விப் பணியாளர் சபை” என்னும் விடத்தலைப்பின்கீழ் ஆசிரியர்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கல்விக் கவுன்சில்
கல்வித்துறையின் சேவையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் களையும் ஏனைய ஆளணியினரையும் தொழில் வாண்மையாளர்களாக மேம்படுத்தும் வகையில் கல்விச் சேவையில் ஈடுபட்டுள்ளோர்களுக்குப் பொறுப்பான கல்விக் கவுன்சில் (Education Council) ஒன்று தாபிக்கப்படவுள்ளது. நாட்டில் ஏற்கனவே தொழில் வாண்மை அந்தஸ்தினை கொண்டுள்ள மருத்துவர்களுக்கான மருத்துவ கவுண்சில், (Medical Council) சட்டத்தரணிகளுக்கான அமைப்பு (Bar Association) போன்ற கவுன்சில்களை இதற்கு உதாரணங்களாக குறிப்பிடலாம். தாபிக்கப்படவுள்ள கல்விக் கவுன்சிலின் பணிகள் பின்வருமாறு. 1) தேசிய கல்விக் கொள்கைகளுக்கு அமைவாக
கல்வித்துறைசார் செயற்பாடுகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரியகல்வியலாளர்கள் மற்றும் கல்வி நிருவாக சேவையினர் போன்றோர்
R அகவிழி | ஏப்ரல் 2014

கொண்டிருக்க வேண்டிய குறைந்தபட்ச கல்வி மற்றும் தொழில்சார் தகைமைகளை நிர்ணயித்தல். கல்விசார் தொழிலாளர்களை (ஆசிரியர், அதிபர், ஆசிரியர் கல்வியாளர்கள், நிருவாக சேவையினர்) கல்விக் கவுன்சிலில் பதிவு செய்து அனுமதிப்பத்திரம் 1 (TaheLாயா?இரககக வழங்குதலும் அனுமதிப் பத்திரத்தினை தற்காலப்படுத்துவதற்கான தொழில் நிபந்தனைகளை விதித்தலும் இணையத்தளத்தின் ஊடாக அனுமதிப்பத்திரத்தை பகிரங்கப்படுத்தல். இதன்படி கல்விக் கவுன்சில் விதிக்கும் கல்வி மற்றும் தொழில்சார் தகைமைகளை குறிப்பிட்ட கால வொழுங்கில் உயர்த்திக் கொள்பவர்களது அனுமதிப்பத்திரம் புதிப்பிக்கப்படும். ஏனையோரின் அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்படும். இதனால் குறித்த ஆசிரியர்கள் தொழிலில் தொடர்ந்து ஈடுபட முடியாத நிலை ஏற்படும். தொடர்ந்து கல்விசார் தொழில்களில் நிலைத்திருக்க விரும்புவோர் தமது கற்பித்தல் சார்ந்த அறிவையும் திறன்களையும் மேம்படுத்திக் கொண்டேயிரக்க வேண்டும். இத்தகைய மேலைத்தேய அபிவிருத்தியடைந்த நாடுகளில் தற்போதும் பின்பற்றப்படுகிறது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
கல்விக் கவுன்சிலில் பதிவு செய்து கொண்டுள்ள ஆசிரியர் மற்றும் ஏனைய ஆளணியினருக்கான ஒழுக்கக் கோவையொன்றினை நடைமுறைப்படுத்துதல் மற்றொரு பொறுப்பாகும். இந்த ஆசிரியர் ஒழுக்கக் கோவை உரியவாறு பின்பற்றாத ஆசிரியர்களையும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் ஆசிரியர்களையும் விசாரணை செய்து ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளல், குற்றம் செய்தவர்களை பதிவுப் பட்டியலில் இருந்து நீக்குதல், ஆசிரியர் அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்தல் போன்ற அதிகாரங்கள் கவுன்சிலுக்கு இருக்கும். கல்வித் துறையில் ஈடுபட்டுள்ள அதிபர் கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் கல்வியாளர்களுக்கு தொழில்சார் தகைமைகளை பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வி நிறுவகம் போன்ற பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இத்தகைய நிறுவனங்கள் வழங்கும் ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை தரநிர்ணயம் செய்தல், அவற்றை சான்றுப்படுத்தி கெளரவித்தல், உரிய தரத்தினை எய் தாத நிறுவினங்களின் செயற்பாடுகளை இடைநிறுத்தி வைத்தலுக்கு பரிந்துரை செய்தல் என்பன கவுன்சிலின் கட்டுப்பாட்டினுள் அடங்கும். இத்தகைய நடவடிக்கை கள் மூலம் தகைமையற்றோர் கல்வித்துறைசார் தொழில்களில் ஈடுபடுவது தடைசெய்யப்படும்.

Page 14
ஆசிரியர் ஆட்சேர்ப்பும் சேவை - முன் ஆசிரியர் கல்வியும்.
உயர்ந்த செயற்சாதனை, தேர்ச்சி, ஒழுக்க விழுமியங்கள் ஆக்கத்திறன்கள், தொழில்சார் தரங்கள் என்பவற்றை ஆசிரியர்களிடத்தில் கட்டியெழுப்புவதனை நோக்காகக் கொண்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆசிரியர் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். இதற்கமைவான ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை திட்டமிடல், விருத்தி செய்தல் ஆசிரியர் கல்வி நிறுவனங் களிடையே இணைப்புக்களை ஏற்படுத்தல், தகவல்களை வழங்குதல் மேற்பார்வைக்குட்படுத்தல், தரச்சான்றிதழ்களை வழங்குதல் போன்றவற்றுக்கு பொறுப்புக்கூறக்கூடிய "ஆசிரியர் கல்விச் சபை" ஒன்றினை தேசிய கல்வி நிறுவகத்தில் உருவாக்குதல் வேண்டும் என்னும்
ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
சகல ஆசிரியர்களும் 2025 ஆம் ஆண்டில் பட்டதாரி ஆசிரியர்களாக இருக்க வேண்டும் என்ற கொள்கைத் தீர்மானம் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் சேவையிலுள்ள ஆசிரியர்கள் அனைவரும் பட்டதாரிகள் ஆவதற்கு ஊக்குவிக்கப்படுவார்கள். இந்த கொள்கைக்கு அமைவாக எதிர்காலத்தில் ஆரம்பப்பிரிவு, கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட இடைநிலைப்பிரிவுகள் அனைத்துக்கும் ஆசிரியர்களாக பட்டதாரிகளே ஆட்சேர்ப்புச் செய்யப்படுவார்கள். பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்ய முடியாத விசேட சந்தர்ப்பங்களில் மாத்திரமே பொருத்தமான டிப்ளோமாதாரர்கள் ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்படுவர். எனினும் இவர்கள் குறிப்பிட்ட கால எல்லைக்குள் பட்டதாரிகளாக வேண்டும் என்னும் நிபந்தனை விதிக்கப்படுவதோடு இவர்களை பட்டதாரிகளாக மாற்றும் பொறுப்பு தேசிய கல்வி நிறுவகத்திடம் ஒப்படைக்கப்படும்.
எதிர் காலத்தில் ஆசிரியர் கள் அனைவரும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்னும் கொள்கைக்கு இணங்க, நாட்டில் காணப்படும் தேசிய கல்விக் கல்லூ ரிகள் பட்டங்களை வழங்கும் நிறுவனங்களாக மாற்றி
யமைக்கப்படல் வேண்டும். இதனால் தேசிய கல்விக் கல்லூரிகளுக்கான ஆசிரியர் - மாணவர் அனுமதி "z” புள்ளிகளுக்கு அமைவாக செய்யப்பட வேண்டியதோடு, பாடநெறிக்கான காலம் நான் கு வருடங்களாக அதிகரிக்கப்படல் வேண்டும். இந்நடைமுறைகள் மூலம் ஆரம்பப்பிரிவுகளில் கற்பிப்பதற்கான பட்டதாரிகளையும் உருவாக்குதல் வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் ஆசிரிய மாணவர்களது ஆங்கில அறிவை மேம்படுத்தும் வகையில் கல்விக் கல்லூரி கலைத்திட்டத்தில் ஆங்கிலத்திற்கு கூடுதலான முக்கியத்துவம் வழங்கப்படல் வேண்டும்.

ஆசிரியர் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் தங்களுக்கு உரித்தான பாட நெறிகளை வழங்கி வருகின்றன. இதனால் பாடசாலைகளின் பாடரீதியான விசேடத் தேவைகளை நிறைவு செய்ய முடியாமல் உள்ளது என்னும் குற்றச்சாட்டு நீண்டகாலமாக கல்விசார் ஆய்வுகளில் முன் வைக்கப் பட்டுள்ளது. இதனால் பாடசாலைகளின் ஆரம்ப, கனிஷ்ட மற்றும் இடைநிலைப் பிரிவுகளில் நிலவும் பாடரீதியான விசேடத் தேவைகளை இனங்கண்டு, அத்தேவைகளை நிறைவு செய்யக்கூடிய ஆசிரியர் கல்விப் பாடநெறிகளை உருவாக்குவதற்கு ஏற்ற விதத்தில் தேசிய கல்விக் கல்லூ ரிகள் கலைத்திட்டங்களில் மாற்றங்களை செய்யவேண்டும். தேவைப்படுமிடத்தில் பொருத்தமான புதிய பாட நெறிகளையும் ஆரம்பிக்கலாம். மேலும் தேசிய பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் ஆசிரியர் கல்விப் பாடநெறிகள் கல்வி அமைச்சின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யும் வகையில் விசேட பாடரீதியான நிபுணத்துவ ஆசிரிய கல்வித் தகைமைகளை விருத்தி செய்யக் கூடிய வகையில் பாடநெறிகள் மாற்றிய மைக்கப்படல் வேண்டும். அத்தோடு பல்கலைக்கழக பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்புச் செய்து பாடசாலைகளுக்கு நியமனம் சேவை முன். பயிற்சி ஒன்றினை பெற்றுக்கொடுக்க வேண்டும். இப்பயிற்சியானது தேசிய கல்வி நிறுவகத்தால் முன்னெடுக்கப்படும். மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் ஆசிரியர் தேவை கணிப்பீட்டின் அடிப்படையில், நான்கு ஆண்டுகளின் பின்னர் மாகாணத்தின் ஆசிரியர் தேவை முன்னெறிகை (Teacher Projection) செய்யப்பட்டு அதற்கமைவாகவே தேசிய கல்விக்கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கப்படுவர்.
தொடருறு அல்லது சேவைக்கால ஆசிரியர் கல்வி
ஆசிரியர் கல்வியானது வாழ்நாள் நீடித்த ஆசிரியர் அபிவிருத்தியாக அமைதல் வேண்டும். இதனால் தொடருறு ஆசிரியர் கல்விக்குத் தேவையான மானிட, பௌதிக வளங்கள் போதுமானளவு வழங்கப்படல் வேண்டும். இதனூடாக கற்பித்தல் துறைசார்ந்த புதிய அறிவினை இனங்கண்டு, ஆய்வுக்குட்படுத்தி ஆசிரியர்களது ஆங்கில அறிவை விருத்தி செய்வதற்கும், ஆசிரியர்கள் மத்தியில் கணனி அறிவை மேம்படுத்துவதற்காகவும் நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்படும்.
தொடருறு அல்லது சேவைக்கால ஆசிரியர் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங் களுக் கு (SBTD) (த முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இதன்போது பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் கலைத்திட்டச் செயற்பாடுகளுக்கும் (கற்பிக்கும் பாடங்கள்) ஆசிரியர் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கும் இடையில் உயர்
அகவிழி | ஏப்ரல் 2014 2

Page 15
மட்டத்தினை இணைப்பினை பேணுவதற்கு முயற்சிக்க வேண்டும். மேலும் பாடசாலையின் அனுபவம் கூடிய ஆசிரியர்களை புதிதாக நியமனம் பெற்று சேவையில் ஈடுபடும் அனுபவம் குறைந்த இளம் ஆசிரியர்களை வழிப்படுத்தும் தொழில் வழிப்படுத்துநர்களாக பயன் படுத்துதல் வேண்டும். தற்போது தேசிய கல்விக் கல்லூ ரிகளின் கட்டுறுப்பயிலுனர்கள், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் பட்ட மேற் கல்வி டிப்ளோமாவைப் பின்பற்றும் ஆசிரியர்களுக்கான தொழில்வழிப்படுத்துநர் (Mentor) சேவை எதிர்பார்த்தளவு வெற்றியளிக்கவில்லை. காரணம் அதற்கான உத்தியோகப்பூர்வமான ஏற்பாடுகள் இல்லாமை ஆகும். ஆனால் புதிய ஆலோசனைகளுக் கமைவாக பாடசாலைகளில் தொழில் வழிப்படுத்துநர் கலாசாரத்தை இலகுவாக கட்டியெழுப்பலாம்.
ஆசிரியர்கள் வருடத்தில் இரண்டு தடவையேனும் பாடசாலைக்கு வெளியே இடம்பெறும் கட்டாய மீள்பயிற்சிகளில் பங்குப்பற்ற வேண்டும். இதற்காக ஆசிரியர் கலாசாலைகள், ஆசிரியர் மத்திய நிலையங்களை பயன்படுத்தலாம். இப்பயிற்சிகள் பாடசாலைத் தினங்களில் இடம்பெறுவது தடைசெய்யப்படல் வேண்டும். இந்த மீள்பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை தேசிய கல்வி நிறுவகம் திட்டமிட வேண்டும். இதன் நடைமுறைப்படுத்துதலில் ஆசிரிய ஆலோசகர்களும் பங்கேற்பது முக்கியமானது.
ஆசிரியர் செயலாற்றுகைத் தரக்கணிப்பீடு
ஆசிரியர்களின் விருத்தி மற்றும் பயிற்சிகளுக்கு இணையாக அவர்களின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படல் வேண்டும். அதன் அடிப்படையில் அவர் களுக்கு தரம் மற்றும் சம்பள அதிகரிப்புக்கான முறைகள் விருத்தி செய்யப்பட வேண்டும். இதனூடாக ஆசிரியர்களின் தொழில்சார் விருத்தியை ஊக்குவிக்கலாம். இத்தகைய செயலாற்றுகைத் தரக்கணிப்பீடுகளின் போது சரியான அடைவுகளை வெளிப்படுத்தாதவர்களை சேவையிலிருந்து நீக்கி, வேறு பொருத்தமான அரசு துறைசார் வேலைகளில் இணைப்புச் செய்யலாம்.
இலங்கை ஆசிரியர் சேவை இலங்கை ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவர், இவர்கள் கட்டாய மூன்று மாதகால முழு நேர சேவை - முன் பயிற்சியினை நிறைவு செய்திருத்தல் வேண்டும், இவ்வாறு ஆட்சேர்ப்புச் செய்யப் படுவோர் பாடசாலையில் நிலவும் பாட அடிப்படையிலான தேவைக்கு அமைய 6 வருட கட்டாய சேவை அடிப்படையில் பாடசாலைகளில் அமர்த்துகை செய்யப்படுவர். ஆசிரியர்கள் அனைவரும் தாபிக்கப்படவுள்ள கல்விக் கவுன்சிலில் பதிவுசெய்து அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொண்டதன்
E அகவிழி | ஏப்ரல் 2014

பின்னரே சேவையில் ஈடுபட முடியும். அனுமதிப் பத்திரம் இல்லாதவர் சட்டரீதியான ஆசிரியராக செயற்பட முடியாது.
ஆசிரியர் சேவையின் பதவியுயர்வின் போது ஆசிரியர் செயற்சாதனை மதிப்பீட்டு முறை தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பதவியுயர்வு, சம்பள
அதிகரிப்புக்கள் பெற்றுக் கொடுக்கப்படும் போது, தகைமைகள், அனுபவங்கள், பயிற்சி, திறமைகள், அர்ப்பணிப்பு, கஷ்டப்பயிரதேச சேவை என்பன கருத்திற் கொள்ளப்படும். கஷ்டப்பிரதேச ஆசிரியர்களுக்கு வதிவிடம் உட்பட்ட ஊக்குவிப்புக்கள் வழங்கப்படும். மாவட்ட மட்டத்தில் அதிசிறந்த ஆசிரியர்களுக்கான கெளரவிப்புக்கள் செய்யப்படும்.
ஆசிரிய இடமாற்றத்திற்காக தயாரிக்கப்படவுள்ள புதிய ஒழுங்கு விதிமுறைகளுக்கு அமைவாக ஆசிரியர் நியமனம், அமர்த்துகை, இடமாற்றம் போன்றவற்றின் போது ஆசிரியர்களின் பாடத்தேர்ச்சி பாடசாலைகளின் பாடரீதியான தேவை என்பவற்றுக்கு முதலிடம் வழங்கப்படும். ஒழுங்கீனமான செயற்பாடுகளின் போது ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவதை தவிர்த்து தொழிலில் இருந்தே நீக்கப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இலங்கை ஆசிரியர் சேவையின் தற்போதைய வகுப்புகளான 1) 3 ம் வகுப்பு தரம் 1 மற்றும் தரம் II 2) 2 ஆம் வகுப்பு தரம் 1 மற்றும் தரம் II 3) 1 ஆம் வகுப்பு
என்பவற்றுக்கு மேலதிகமாக விசேட வகுப்பு ஒன்று உருவாக்கப்படும்.
G - 03
இவ்வாறு உருவாக்கப்படும் விசேட வகுப்பிற்கு பொருத்தமான பரீட்சை மற்றும் பயிற்சியின் பின்னர் முதலாம் வகுப்பினைச் சேர்ந்த ஆசிரியர்கள் தரம் உயர்த்தப்படுவர், இவர்களில் இருந்தே கோட்டக்கல்வி காரியாலயங்களுக்கு இணைப்புச் செய்ய வேண்டியவர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், மேற்பார்வை மற்றும் மதிப்பீட்டுப் பணிகள் போன்றவற்றுக்கான ஆளணியினர் தெரிவு
செய்யப்படுவர்.
முடிவுரை
கொள்கை வகுப்பாளர்களால் யாதாயினும் விடயம் தொடர்பான முன்மொழிவுகள் அல்லது ஆலோசனைகள் முன்வைக்கப்படும் போது, அத்தகைய முன்மொழிவுகளால் பயனடையும் பயனாளிகள் மற்றும் அவர்கள் சார்ந்த

Page 16
தொழிற்சங்க மற்றும் நலன்புரி அமைப்புகள் அவற்றை ஆழமாக பகுப்பாய்வு செய்தல் வேண்டும். அதன் சாதகம் மற்றும் பாதகங்களை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கொள்கை வகுப்பாளர்களுக்கு தேவையான பின்னூட்டல்களை வழங்க முடியும். இது எதிர்காலத் திட்டமிடல்களுக்கு பயனுறுதி உள்ளவையாக அமையும். அந்த கல்வி என்னும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட ஆசிரியர் கள் தொடர்பான ஆலோசனைகளில் காணக்கூடியதாகவுள்ள சாதகமான மற்றும் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் கீழே தொகுத்து முன்வைக்கப்பட்டுள்ளன.
சாதகங்கள்
1. கல்விக் கவுன்சிலில் ஆசிரியர்களை பதிவு செய்து
ஆசிரியர் அனுமதிப்பத்திரம் வழங்குதல்.
3. '
2. ஆசிரியர் களுக் கான ஒழுக்கக் கோவையை
நடைமுறைப்படுத்தல்.
ஆசிரியர் கல்விக்குப் பொறுப்பாக சபையொன்றினை உருவாக்குதல்.
ஆசிரியர் செயற் சாதனை கணிப்பீடு மூலம் ஊக்குவிப்புக்களை பெற்றுக் கொடுத்தல்
பாடசாலைகளின் பாடரீதியான விசேடத்துவ தேவை கள் அடிப்படையில் ஆசிரிய கல்வி நிறுவனங்களின் பாடநெறிகள், கலைத்திட்டம் என்பன மறுசீரமைக்கப் படுதல்.
6.
8.
தொழில் வழிப்படுத்துநர் (Mentors) ஊடாக இளம், அனுபவம் குறைந்த ஆசிரியர்களை வழிப்படுத்தல் பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட ஆசிரியர் ஆட்சேர்ப்பு அறிமுகம் செய்யப்படுதல் சகல ஆசிரியர் களையும் பட் டதாரிகளாக உருவாக்குதல்
ஆசிரியர்களது கணனி மற்றும் ஆங்கில அறிவை மேம்படுத்துவதற்கான விசேட நிகழ்ச்சித்திட்டம் சேவை - முன் ஆசிரியர் கல்வியைப் பெற்றுக் கொண்டவர்களை மாத்திரம் ஆசிரியர்களாக நியமித்தல்
10.
11. தேசிய கல்விக் கல்லூரிகளை பட்டம் வழங்கும்
நிறுவனங்களாக தரம் உயர்த்துதல்.
12. ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் மற்றும் அவை
வழங் கும் பாடநெறிகளை தர நிர்ணயத்திற் குட்படுத்துதல்.

14. 5
13. சரியான முறையில் செயற்படாத ஆசிரியர்களை
வேறு அரச தொழில்களில் இணைத்தல். ஒழுங்கீனமாக செயற்படும் ஆசிரியர்களை சிறிய பாடசலைகளுக்கு தண்டனை இடமாற்றம் செய்யாமல்
அவர்களை தொழிலில் இருந்தே நீக்குதல். 15. தொழில்சார் அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்தலுக்காக
ஆசிரியர் களது அறிவு மற்றும் திறன் களை மேம்படுத்திக் கொள்வதற்கான ஆற்றுப்படுத்துகை.
16. ஆசிரியர் சேவையில் உருவாக்கப்படவுள்ள விசேட
வகுப்பு சிரேஷ்டத்துவம் கொண்டவர் களுக்கு ஊக்கவிப்பாக அமைதல்.
முன்மொழிவுகளில் சேர்க்க வேண்டிய அம்சங்கள்
1. அரிசி
ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ள நிதிரீதியான மற்றும் நிதிரீதியற்ற ஊக்குவிப்புக்கள் யாவை என குறிப்பாக குறிப்பிடப்படாமை.
ஆசிரியர் இடமாற்றத்தில் காணப்படும் அரசியல் மற்றும் தொழிற்சங்க தலையீடுகள் என்பவற்றை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகள் பற்றிய விடயங்கள் உள்ளடங்காமை.
ஆசிரியர்களுக்கு பெறுபேற்று அடிப்படையில் பெற்றுக் கொடுக்கக் கூடிய ஊக்கவிப்புக்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
பாரிய செலவுகள் செய்து ஆரம்பிக்கப்பட்ட தொடருறு ஆசிரியர் கல்வி நிலையங்கள், தொடருறு ஆசிரியர் கல்வியில் தேசிய கல்வி கல்லூரிகளின் பங்கு
பற்றிய விடயங்கள் உள்ளடங்காமை 5. கஷ்டப்பிரதேச ஆசிரியர் சேவையை ஊக்கு
விப்பதற்கான விசேடத் திட்டங்கள் விரிவாக கூறப்படவில்லை. ஆசிரியர்களது கல்வி மற்றும் தொழில்சார் தகைமை களை மேம்படுத்துவதற்கான உள்நாட்டு, வெளிநாட்டு புலமைப் பரிசில்கள் பற்றிய விடயங்களில் தெளிவில்லாமை
6.
7.
பாடசாலையிலுள்ள ஆசிரியர்கள் வகிக்கும் பல்வேறு பதவிகள் மற்றும் பொறுப்புக்களுக்கு வழங்கப்பட வேண்டிய மேலதிக ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள் எதுவும் பிரேரிக்கப்படாமை. ஆசிரியர்கள் போதுமானளவு செயற்சாதனைகள் மற்றும் பெறுபேறுகளை பெற்றுக்கொடுக்காத போது மேற்கொள்ள வேண்டிய நடடிக்கைகள் இடம்பெறாமை.
8.)
அகவிழி | ஏப்ரல் 2014 2

Page 17
மட்டக்களப்பு மாவட்ட கல்வி வளர்ச்சியும், உயர்தர மாணவர்களை சித்திபெறச் செய்த 'அதன் முக்கியத்துவங்களும்
கலாநிதி தெ. திருச்செல்வம்
முன்னாள் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர், ;
சென்ற இதழ்த்தொடர்ச்சி.....
அன்றைக்கான பாட குறிப்புகளை அன்றைய தினமே ஒரு தடைவ மீட்டிவிடுங்கள். இது அப்பாடத்தை கிரகிப்பதற்கு 45 நிமிடங்கள் போதுமானதென கல்வி ஆய் வாளர்கள் கண்டிருக்கின்றனர். எவ்வளவு கடினமான பாடமாயினும் தினந்தோறம் மீட்டுவதால் அது இலகுவாகின்றதென்பதுே உண்மை. நாட்கள் செல்லச்செல்ல அப்பாடத்திலுள்ள தெளிவும் குறைந்துசெல்ல வாய்ப்புண்டு. ஆகவே தினமும் வீட்டில் பாடங்களை மீட்பதற்கென ஒரு நேர அட்டவணையை தயார்செய்து அதன்படி மீட்டிக் கொள்ளுங்கள். இவ்வேளை எழுதிப் படிப்பது வெறுமனே வாசிப்பதைவிடவும் மேலாதென ஆய்வாளர்கள் கண்டிருக்கின்றனர். இவ்வேளையில் தான் அப்பாட குறிப்புக்கு தேவையான மேலதிக விபரங்களுக்காகவும், விளக்கங்களுக்காகவும் புத்தகங்கள், மேலதிக வகுப்புக்கள் என்பவற்றை நாடலாம்.
முடியுமான வரை நன் றாகப் படிக்க கூடிய மாணவர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு வாரமேனும்
க அகவிழி | ஏப்ரல் 2014
214 ப455

தேசிய மட்டத்தில் லும்
துறைத் தலைவர், இங்கிலாந்து
கூட்டாக பாடங்களைக் கற்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள் (Group Studies/Discussions) இது உங்களுக்கு தெரியாதவற்றை பிறரிடமிருந்து தெரிந்துகொள்வதற்கும், பிறரின் நுணுக்கங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் உதவியாக இருப்பதோடு கலந்துரையாடலின்போது பேசப்படும் விடயங்கள் வாசிப்பது, எழுதுவதைவிடவும் நீண்ட காலம் உங்கள்
ஞாபகத்தில் இருக்கும் என்பது ஆய்வு. மீட்டல்களை அமைதியான நேரங்களில், அமைதியான இடத்தில் மேற்கொள்ளுங்கள். இது உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கச் செய்வதோடு அப் பாடத்தை விளங்கிக் கொள் ள எடுக் கும் நேரத்தினையும் குறைக்கிறது. அதிகாலையில் குறைந்தது ஒருமணிநேரமாவது பாடங்களை மீட்டுவதற்கு பயன்படுத்துங்கள். இவ்வாறே கணிதம் மற்றும் விஞ்ஞானப் பிரிவு மாணவர்கள் தங்களது சிக்கலான விடயங்களையும், படங்களையும் உங்களுக்கு அருகிலுள்ள ஏதாவதொரு பாடசாலை யின் கரும்பலகையில் பாடசாலை இயங்காத நேரங்களில் அப்பாடசாலையின் நிர்வாகத்தின் அனுமதிபெற்று பயன்படுத்துங்கள். இது உங்கள் மீட்டலை இலகுவாக்குவதோடு கற்றலில் உங்களுக் கான செலவீனங்களைக்குறைத்து அமைதியான சுவாத்தியமான சூழலையும் அளிக்கிறது.
பாடசாலைகளில் நடைபெறும் எந்தவொரு செய்முறை வகுப்பையும் புறக்கணிக்காதீர்கள் (Practical Classes/ Field Trips) இது அப்பாடத்தில் உங்களுக்குள்ள சந்தேகங்களைப் போக்குவதற்கும், அப்பாடத்தினை மேலும் தெளிவாக விளங்கிக் கொள்வதற்கும் உதவியாக இருக்கும். ஒரு பாடத்தினைப் படிக்கும்போது அப்பாடத்தின் ஏதாவது ஒரு அலகு முடிந்திருந்தால் அந்த அலகில் கடந்த காலங்களில் வந்த அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க எத்தனியுங்கள் பின்னர் அதை ஒரு ஆசிரியரிடம் கொடுத்து திருத்திக்கொள்ளுங்கள். இவ்வேளை உங்களால் அனைத்து வினாக்களுக்கும் சரியாக விடையளிக்க முடியுமாக இருந்தால்
d.

Page 18
அப்பாடத்திட்டமானது முறையாக முடிவடைந்திக் கின்றதெனவும், நீங்களும் அப்பாடத்தினை முறையாக விளங் கியிருக் கின் றீர்களெனவும் முடிவுக்கு வருவதோடு அந்த அலகில் நீங்கள் எவ்வகையான வினாக்களையும் எதிர்கொண்டு முறையாக விடையளிபீர்கள் என்பதையும் தீர்மானிக்ககூடியதாக இருக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு அலகு முடிவுற்றதும் முயன்று பாருங்கள். அவ்வாறு அல்லாது உங்களால் விடையளிக்க முடியாதிருந்தால் அப்பாடத்திட்டம் சம்பந்தமான சந்தேகம் வருவதோடு நீங்கள் அந்த அலகை விளங்கிக் கொண்ட தன்மையிலும் தவறிருப்பது புலனாகிறது. ஆகவே மேற்படி பாட அலகுக்கு நீங்கள் மேலதிக நேரம் செலவிடுவதோடு அந்தப் பாடத்திட்டத்தை வேறு பாடசாலை மாணவர்களுடன் ஒப்பிட்டு விரைவாக அதனை நிவர்த்திசெய்வது உங்கள் தலையாய கடமையாகிறது. பாடத்திட்டங்கள் முற்றாக முடிவுற்று நீங்கள் மீட்டலை மேற் கொள்ளும் போதோ அன்றி பரீட்சைக்கு தயார்செய்யும் எந்த நேரத்திலும் கற்ற அனைத்து பாடங்களிைனதும் ஒட்டுமொத்தமான குறிப்புக்களை வடிகட்டிக்கொண்டே வாருங்கள் இந்நடைமுறையை சிறுகுறிப்பெடுத்தல் எனக் கொள்ளலாம் (Short Notes) இது எந்தவொரு மாணவரையும் குவியலான குறிப்புக் கட்டுக்களைக் கண்டு அஞ்சும் மனநிலையை குறைப்பதோடு உளவியல் ரீதியாக அப்பாடத்திலுள்ள பயத்தினையும் போக்க உதவியாக இருக்கும். இவ்வாறே பரீட்சைக்கு முந்திய தினத்தில் உங்கள் கைகளில் இறுதியாக விளங்கிக்கொள்வதற்குத் தேவையான சில சிறுகுறிப்பு தாள்களே உங்களிடம் இருக்கும் அடுத்த நாள் பரீட்சை பற்றிய பயம் எள்ளளவும் உங்களிடம் இருக்காது என்பது உண்மை. இதுபோல் ஒரு அலகில் முக்கியமான சில விடயங்கள் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாகத் தரப்பட்டிருக்கு மாயின் அவற்றை மனனம் செய்யும்போது அந்த தொகுதி முழுவதிலும் அவ் வரிசைகளுக்கு முன்னாலுள்ள ஒவ்வொரு வரியிலும் முதலெழுத்துக் களைக்கொண்டு ஏதாவதொரு சொல்லை அமைத்துக் கொள்ளுங்கள் அந்தச் சொல்லை வைத்து அந்த முதலெழுத்துக்குரிய வசனத்தை இலகுவாக உங்களால் மீட்டிக்கொள்ள முடியும். இது மனனம் செய்வதில் பிரச்சினையை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான இலகுவழியாக என்னால்
கூறமுடியும்.
g.--
பரீட்சைக்கு முந்திய தினத்தில் நீங்கள் அமைதியாக, குழப்ப மனநிலையற்று இருப்பதோடு அன்றைய தினத்தில் போதிய ஓய்வுடன் தெளிந்த மனநிலையுடன்

ஒவ்வொரு மாணவரும் காணப்படுவதோடு, சோர்வற்ற தன்மையைக் கொண்டிருக்கவேண்டும். இது அடுத்த நாள் பரீட்சை மண்டபத்தில் நீங்கள் இயல்பாக எந்த பதட்டமுமில்லாமல் விடையளிக்க உதவுவதோடு மனனம் செய்தவற்றை உங்களால் தடையின்றி மீட்க உதவியாகவும் இருக்கும். பரீட்சைக்கு விடையளிக்கும்போது தெளிவாகவும் முடியுமானவரை விடைகளை வரிசைக்கிரமமாகவும் (Points form) எழுத முனையுங்கள். இதேவேளை வழங்கப்படவேண்டிய இடங்களிலெல்லாம் அழகான படங்களையோ, பாய்சற்கோட்டுப் படங்களையோ அன்றி வரைபுகளையோ பயமின்றி வழங்குங்கள். இதனால் உங்களுக்கான புள்ளிகள் அதிகமாக வழங்கப்பட வாய்ப்புண்டு. இவ்வாறே படங்கள் வரையும்போது உறுப்பமைய வரைந்து அவற்றுக்கு
பொருத்தமாக நிறமூட்டுங்கள். j. இறுதியாக வினாக்களை தெளிவாக விளங்கிக்
கொள்ளுங்கள், விடையளிக்கவேண்டிய வினாக்களை வரிசைப்படுத்தி அவற்றை உடனடியாக ஆரம்பியுங்கள். தேவைக்கதிகமாக எந்தவொரு வினாவுக்கும் விடையளிக் காமலிருப்பதோடு எந்தவோரு வினாவுக்கும் அளவுக்கதிகமாக நேரத்தையும் செலவளிக்காதீர்கள், அனைத்து வினாக்களுக்கும் ஒழுங்காக விடையளித்தபின் இருக்கின்ற நேரத்தில் மீண்டும் மீண்டும் விடைகளை திருப்பிப் பார்த்து பிழைகளைத் திருத்திக்கொள்ளுங்கள். ஈற்றில் திருப்தியான முறையில் ஒரு பரீட்சையை சந்தித்த வெற்றிக்களிப்போடு மண்டபத்தைவிட்டு நீங்கள் செல்வது உறுதி.
நான் உங்களுக்கு கூறிக் கொள்வதெல்லாம் இவைகள்தான், நீங்கள் உயர்தரத்திற்குள் நுழைந்த வுடன் ஒரு வைராக்கியத்தை மனதில் ஏற்படுத்திக் கொள்ளுங்கள் இந்த வைராக்கியமானது உங்கள் பெற்றோரையும், சகோதர சகோதரிகளையும் கெளரவமாக வாழவைப்பதாகவோ, உங்கள் கிராமத்தை முன்னேற்றுவதாகவோ, மாவட்டத்தில் கெளரவம் பெறவேண்டுமென்பதாகவோ, மேற் படிப்பைத் தொடர வெளிநாடு செல்லவேண்டு மென்பதாகவோ அன்றி உங்கள் தனிப்பட்ட வாழ்வில் மிக நன்றாக நீங்கள் வாழவேண்டுமென்பதாகவோ இருக்கவேண்டும். கொள்கை, வைராக்கியத்துடன் வாழ்ந்த எவரும் தோற்றதாக சரித்திரமேயில்லை. இதுதான் என்னுடைய தாரக மந்திரம் “கற்கும்போது இ ஈடுபாட்டுடன் கற்றுக்கெள்ளுங்கள், உழக்ைகும்போது கடினமாக உழையுங்கள், சமூகத்தை உங்கள் பக்கம் எப்போதும் ஈர்த்து வைத்துக்கொள்ளப்பாருங்கள்
அகவிழி | ஏப்ரல் 2014 -

Page 19
அப்போது நீங்கள்தான் நீங்கள் சார்ந்த சமூகத்தின்
சிறந்த தலைவர்கள்”. 2. ஆசிரியர்கள்
உலகிலுள்ள தொழில்களில் சிறந்ததும், புனிதமானதும், கெளரவமானதும் எது என என்னிடம் கேட்டால் சிறிதளவேனும் தயங்காமல் ஆசிரியர் தொழில் என்றே மார்தட்டி சொல்வேன். முதற்தர அதிசெல்வந்தர்களான பில்கேட்ஸ் (Billgates), அம்பானி ஆகட்டும் அல்லது இன்று நாம் எல்லோரும் வாழ வழிசமைத்த போற்றத்தக்க விஞ்ஞானிகள், மேதைகள், அறிஞர்கள் அனைவரையும் உருவாக்கியவர்கள் நீங்களே என்னும் ஒரு திமிருடன் சமூகத்தை திரும்பி பாருங்கள் எல்லாமே உங்களுக்கு கீழிருப்பதைப்போல்தான் தோன்றும் அதுதான் உண்மை. ஒரு சிறந்த சமூகத்தை சிறப்பாக உருவாக்குவதால் என்னுடைய பார்வையில் நீங்களும் பிரம்மாக்களே.
சிறப்பான தொழில் என்பதற்கு என்னைப்பொறுத்தவரை வருமானம் ஒரு அளவுகோலல்ல கெளரவம்தான் காரணம். ஒரு நல்ல ஆசிரியரை மாத்திமே எமது சமூகம் அவர் வாழும் காலம்வரை “சேர்” (Sir) என்று கௌரவமாக மரியாதையுடன் அழைக்கிறதே தவிர வேறு எவரையுமல்ல. ஆகவே தயவுசெய்து இந்த புனிதமான பதவிக்கு நீங்கள் விரும்பி வந்தவராக இருந்தால் அப்பதவிக்கு எற்றவாறு உங்களை மாற்றவேண்டியதன் அவசியத்தை நீங்கள் முதற்கண் உணரவேண்டும். இப்பதவியிலிருக்கும்போது உங் களையே நம்பி தங் கள் எதிர்காலங் களை ஒப்படைத்திருக் கும் அத்தனை மாணவர்களையும் எண்ணிப்பாருங்கள் அவர்களை உருவாக்கும் பிரம்மாக்கள் நீங்களே என்கின்ற நற்சிந்தனையோடு ஒவ்வொருநாளும் உங்கள் கற்பித்தலைத் தொடருங்கள். நீங்கள் தேடிக்கொண்டே அவர்களுக்குப் போதிக்கவேண்டும் இதுவே சிறந்த கற்பித்தலாகும். இன்றைய மாணவர்கள் ஆக்கத்திறன், விடயங்களை அறியும் திறன், புது விடயங்களின்பால் ஈர்க்கப்படும் அளவு என்பவற்றில் மேலோங்கியிருப்பதால் நீங்களும் அவர்களுக்கு ஈடுகொடுக்கவேண்டியதன் கட்டாயம் தென்படுகிறதல்லவா. ஆகவே நீங்கள் 1980 களில் அல்லது 1990 களில் கற்ற விடயத்தை மட்டும் வைத்துக்கொண்டு இந்த நவீன கால ஓட்டத்துக்கு உங்களால் ஈடுகொடுக்காத பட்சத்தில் ஒரு சிறப்பான ஆசிரியர் என்ற அந்தஸ்தும் உங்களை விட்டுப்போய்விட வாய்ப்புண்டல்லவா. ஆகவே தயவுசெய்து தேடலை, பயிற்சிகளை, நவீன கற்றல் மற்றும் கற்பித்தல் யுக்திகளை தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்டே இருங்கள் என்றைக்கும் நீங்கள் ஆசான்களே.
இவ்வாறே, நான் மட்டக்களப்பில் வாழ்ந்த காலத்தில் ஆசிரியர்களுக்கான இடமாற்றம் என்னும் விடயமே கல்வி வட்டாரங்களில் அதிகளவு சர்ச்சைக்குரிய விடயமாக
3 அகவிழி | ஏப்ரல் 2014

இருந்ததை கண்கூடாக கண்டிருக்கிறேன். இவ்வகை யானதொரு இடமாற்றம் அடிப்படையில் இரண்டு முக்கிய சந்தர்ப்பங்களில் நடைபெற்று வருவதை நான் அவதானித் திருக்கிறேன். ஒன்று திடீரென்ற இடமாற்றம் இது ஒருவர்மீது பழிவாங்கப்படும் விதத்திலோ அன்றி அப்பாடசாலை நிர்வாகத்தின் தூண்டுதலாலோ அன்றி அரசியல் | பின்னணியிலோ நடைபெறுவதாக இருக்கும். இது தவிர பொதுவான இடமாற்றமாக ஒரு பாடசாலையின் தேவை கருதி இடம்பெறுவதும், வேறு எந்த தனிப்பட்ட விடயங்களின் பின்னணியுமற்றதுமாக இருக்கும். இவ்வகையானதொரு இடமாற்றம் உலகெங்கும் பொதுவாக நடைபெறுவதென்னும் அடிப்படையை முதலில் நீங்கள் உணர்ந்துகொண்டு என்னால் இங்கு முன்வைக்ககப்படும் நியாயப் பாட்டை சற்று கூர்ந்து கவனியுங்கள்.
ஒரு பின் தங்கிய வைத்தியசாலைக்கு (மட்டக்களப்பு வைத்தியசாலை போன்றது என வைத்துக்கொண்டால்) சில குறிப்பிட்ட பிரிவுக்கோ அல்லது பொதுவாகவோ வைத்தியர்கள் கள், தாதிமார்கள் போன் றேரின் தேவையிருக்கும். இத்தருணத்தில் பிற வைத்திய சாலைகளிலிருந்து வைத்தியர்களும் பிற உத்தி யோகத்தர்களும் இடமாற்றம் மூலம் வருகை தருகையில் எம்மவர் மனங்களெல்லாம் பூரித்துபோகின்றதல்லவா? இவ்வாறுதான் ஒரு பின்தங்கிய அல்லது தேவையுள்ள பாடசாலையொன்றிற்காக சிறப்பான ஆசிரியர்களை அனுப்ப எத்தனிக்கும் நடவடிக்கைதான் பொதுவான ஆசிரியர் இடமாற்றமும். இதை சகல ஆசிரியர்களும் மனமுவந்து எற்றுக்கொள்வதே சிறந்தது. உங்களுக்கான ஒரு சவால் எனக் கருதி ஏற்கனவே பணியாற்றிய பாடசாலைகளில் நீங்கள் என்னென்ன மாற்றங்களை, முன்னேற்றங்களைச் செய்தீர்களோ இவ்வாறே உங்களை வரவேற்கும் புதிய பாடசாலைக்கும் வழங்கவேண்டியதன் கட்டாயத்தை உணரவேண்டும். உங்கள் தொழில் மாற்றமடையவில்லை, உங்களுக்கான சம்பளத்தில் ஒரு சிறிதளவேனும் குறைக்கப்படவுமில்லை இப்படியிருக்க இடமாற்றத்தை வெறுப்பதற்கான எந்தவொரு நியாயமும் அடிப்படையில் இல்லையென்றே கொள்ளவேண்டும். ஒரு சில வசதிகள் இல்லாமல் போவதைத்தவிர வேறொன்று மில்லை. பதிலுக்கு நீங்கள் ஆற்றிக்கொண்டிருக்கும் சமூகக்கடமையை சிந்தித்துப்பாருங்கள் எல்லாமே சுகமாகத் தெரியும். எனது மண், எனது மக்கள் என்ற உணர்விருக்கும் ஒவ்வொருவரும் எதிர்காலங்களில் அபிவிருத்தி கருதி மேற்கொள்ளப்படும் இடமாற்றங்களை மனமுவந்து ஏற்றுக்கொள்வார்கள் என்றே நம்புகிறேன்.
அதிபர்கள்
ஒரு பாடசாலையின் வளர்ச்சியிலோ அல்லது ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியிலோ பெரிதும் பங்கு வகிப்பது

Page 20
அதனுடைய தலைமைத்துவமும் அதனோடு சார்ந்த நிர்வாகக் கட்டமைப்புமே என் பதில் எவருக்கும் சந்தேகமில்லையென்பது எனக்கு தெரியும். ஆகவே ஒரு மாவட்டக் கல்வி வளர்ச்சியென்பது வெறுமனே அரசியல் சார்ந்த கோசங்களாகவோ அன்றி வெற்று மேடைப்பேச்சுக்களாகவோ இல்லாமல் அது 4 சாத்தியமானதாக இருக்கவேண்டுமானால் எந்த வொரு நடவடிக்கையும் பாடசாலை மட்டத்தில் செயற்படுத்தப் படவேண்டும். அவ்வகையானதொரு அபிவிருத்தி திட்டம் அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பின்னர் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும்போது அது வெறுமனே நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்கும் பாய்வதாகத்தான் இருக்குமே தவிர நமது மாவட்டத்துக்கென்ற பிரத்தியேகமான திட்டங்களாக ஒருபோதும் இருக்கப்போவதில்லை.
ஆகவே எமது மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியில் அல்லது எதிர்கால கல்வி வளர்ச்சிக்காக நாம் என்ன செய்யமுடியும் என ஒவ்வொரு அதிபரும் சிந்திக்கவேண்டும். உதாரணமாக மாவட்டத்தின் ஏதாவதொரு பாடசாலை மட்டும் நல்ல பெறுபேற்றை பரீட்சைகளில் தொடர்ந்து பெற்றுக்கொண்டு வருமேயானால் என்னுடைய பாடசாலை ஏன் இவ்வாறு பெறமுடியாதென்ற வைரைக்கியமே அப்பாடசாலையின் கல்வி வளர்ச்சியின் ஆரம்பத்திருப்பமாக கொள்ளப்படும். ஆகவே ஒரு பாடசாலையின் ஒவ்வொரு நெளிவு சுளிவும், அசைவும், அதன் பெறுபேறுகளும் அப் பாடசாலையின் வளங்கள், நிர்வாகத் திறன் என்பவற்றிலேயே பெருமளவில் தற்கியிருக்கின்றதென்னும் உண்மை புலப் படுகிறது. இதற் குப் பின் னால் அப்பாடசாலையின் அதிபரே முதல் வரிசையிலுள்ளார் என்பது எனது கருத்தாகும். அதிபரது உத்வேகத்தினாலேயே ஒரு நல்ல ஆசிரியர் குழாம், சிறப்பான பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் துடிப்பான பழைய மாணவர் சங்கம் என்பன தோளோடு தோள் நிற்க ஈற்றில் மாவட்ட கல்வித் திணைக்களமோ அல்லது அமைச்சோ அப்பாடசாலையின்பால் பெரிதும் ஈர்க்கப்படும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
ஆகவே, உங்களது பாடசாலையின் தரத்தையும் அதனது தற்கால கல்வி நடவடிக்கைகளையும், குறை நிறைகளையும் பூரணமாகப் புரிந்துகொண்டு அதன்படி தொண்டாற்றவேண்டியவர்கள் முதற்கண் அப்பாடசாலையின் அதிபர்களே. வளங்களை கேட்டுப்பெற்றுக்கொண்டு இருக்கின்ற வளத்தை செவ்வனே பயன்படுத்தப்பாருங்கள். ஆசிரியர்களின் திறன், கற்பித்தலில் அவர்களது ஈடுபாடு, மாணவர்களின் வரவும் கல்வி நடவடிக்கைகளும், பரீட்சைக்குத் தயார்படுத்தலும் பரீட்சைப்பெறுபேறுகளும் போன்ற விடயங்களில் இடைவிடாது உங்களது ஈடுபாட்டைக்காட்டுங்கள். திறமையற்ற ஆசிரியர்களாக இருந்தால் அவர்களை திறமையுள்ளவர்களாக மாற்று

வதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். இடமாற்றம் மாத்திரமே ஒரு திறமையற்ற ஆசிரியரின் பிரச்சினைக்கு தீர்வாகாது என்பது எனது உறுதியான முடிவு.
பிறபாடசாலையுடன் போட்டிபோட்டு உங்கள் நிர்வாகத்தை நடாத்தி அவ்வகையானதொரு பாடசாலைக்கு உங்களுடைய பாடசாலை எந்தவகையிலும் சளைத்ததல்ல என்பதை நிருபிப்பதால் மட்டுமே உங்கள் நிர்வாகத்திறன் புடம்போட்ப்படுகிறது. இன்று 5ம் நிலையிலுள்ள உங்கள் பாடசாலையை அடுத்தமுறை முதலாம் நிலைக்கு எவ்வாறு கொண்டு செல்லமுடியும் என தொடர்ந்து ஆராயுங்கள் வெற்றி நிச்சயம். எமது மண், எமது மக்கள், எமது வளர்ச்சி என்பதையே தார்மீகக் கொள்கையாகக்கொண்டு உங்கள் பணிகளைச் செவ்வனே செய்யுங்கள். ஒரு ஆசிரியருக்கு சார்பாகவும் இன்னொருவருக்கு எதிராகவும் இருக்கும் மனநிலையை முற்றாக அகற்றுங்கள். எல்லோரும் உங்கள் ஆசிரியர்களே என்னும் உணர்வோடு அவர்கள் தோளோடு தோள் நின்று அனைத்திலும் தட்டிக்கொடுத்துப்பாருங்கள் எல்லாமே நிமிர்ந்து வரும். எந்தவேளையிலும் சிறப்பாக முன்னேற்றங்களை காட்டிவரும் பாடசாலையின் நுணுக்கங்களையும் வளங்களின் பயன்பாட்டையும் அடியொற்றுங்கள் மாவட்டந்தோறும் அனைத்தும் சிறப்பான பாடசாலைகளே என்னும் அளப்பரிய பெறுபேற்றைப் பெற்று எமது மண்ணுக்காகவும் எமது எதிர்காலச் சந்ததியினருக்காகவும் அளப்பரிய தொண்டாற்றியவர்கள் என்னும் புனிதமான பெயருடன் நீங்கள் இளைப்பாறுவீர்கள்.
முடிவாக
மேற்குறிப்பிட்ட வகையில் ஆரம்பிக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டக்கல்வி வளர்ச்சியின் பிரதான கூறான தேசிய மட்டத்தில் மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பும் இந்த சிறப்பான திட்டமொன்றிற்காக மட்டக்களப்பு வளர்ச்சிக்காக நான் அங்கிருந்து துரத்தப்படும்வரை தொண்டாற்றியவன் என்ற வகையிலும் எனது மண், எனது மக்கள் என்ற நினைப்பிலேயே தொடர்ந்தும் வாழ்ந்துகொண்டிருப்பவன் என்ற ரீதியிலும் என்னுடைய பங்களிப்பு நான் எங்கிருந்தாலும் இருக்கும் என்று கூறிக்கொண்டு. இத்திட்டத்தை கல்வித் திணைக்களமோ அன்றி அங்கீகரிக்கப்பட்ட கல்விசார் நிறுவனங்களோ முன் னெடுக் கும் பட்சத்தில் என்னாலான சகல ஒத்துழைப்புக்களையும் வழங் குவேன் எனக் கூறி (த இவ்வகையானதொரு துரித்திட்டம் செயற்படுத்தப்பட்டு தீ எதிர்பார்த்த விளைவுகள் கிடைக்கவேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கல்வியே எம் மண்ணின் கண்
கவிழி | ஏப்ரல் 2014 ”
பொதுசன நூலகம் யாழ்ப்பாணம்.

Page 21
ஆசிரியரது பாத்திரம் பற்றிய புதிய நோக்கும் சிந்தனையும்
ஜயசேன புத்பிட்டிய
பிரவேசத்துக்கான விடய ஆய்வுகள் 01. ஆசிரியர் தொழிலின் மேம்பாடு தொடர்பான ஒரு
வேலைத் திட் டத் தினைத் தயாரிப் பதற் காக ஆசிரியர்களின் கருத்துக்களை உசாவும் நோக்குடன் ஓர் ஆலோசகர் குறிப்பிட்ட ஒரு பாடசாலையை அடைந்தார். அங்கு ஆண்டு 5 இல் கற்பித்துக் கொண்டிருந்த ஓர் ஆசிரியர் பின் வருமாறு
குறிப்பிட்டார்.
வேறு பாடசாலைக்கச் செல்ல முடியாத கழிவுகளே இப்பாடசாலைக்கு வருகிறார்கள். முப்பது பிள்ளைகள் உள்ள இவ்வகுப்பில் படிக்கக் கூடியவர்களோ நாலைந்து பேர்தான் இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களும் கெட்டிக்காரர்கள் அல்லர். கூட்டல் தெரியாதவர்களும் பெயர் எழுதத் தெரியாதவர்களும்
இருக்கிறார்கள். நாங்கள் என்னதான் செய்ய முடியும்.
02.
மற்றொரு பாடசாலையில் ஆண்டு 11 இல் கணிதம் கற்பிக்கும் ஓர் ஆசிரியர் பின்வருமாறு தமது கருத்துக்களை வெளியிட்டார். "இப்பாடசாலையில் நான் ஒரு புதிய ஆசிரியர். எல்லா மாணவர்களும் வகுப்பிற்குரிய மட்டத்தை அடையவில்லை. நான் இப்பிள்ளைகளின் திறன்களுக்கேற்ப அவர்களை மூன்று குழுக்களாக இனங்கண்டு கொண்டேன். நலிவான பிள்ளைகளைக் கொண்ட குழுவுக்கு உதவும் நோக்குடன் மாலையில் வகுப்புகளை நடத்துகிறேன். ஒவ்வொரு கெட்டிக்கார மாணவனும் இரண்டு பின்தங்கிய மாணவர்களுக்கு உதவுவதற்கு ஆவன செய்துள்ளேன். நலிவான பிள்ளைகளின் ஆர்வம் அதிகரிப்பதாகத் தெரிகிறது. அனைவராலும் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறமுடியும் என நான் நினைக்கின்றேன்.”
அகவிழி ஏப்ரல் 2014
கலந்துரையாடல் 01. மேற்படி இரண்டு ஆசிரியர்களினதும் கற்பித்தல்
தொடர்பான நடவடிக்கைகளின் பிரதான பண்புகளைத் தனித்தனியாக இனங்காண உங்களால் இயலுமா?

02. ஓர் ஆசிரியரது பாத்திரத்தில் காணப்பட வேண்டிய
சிறந்த பண்புகள் என்ற வகையில் எந்த ஆசிரியர்களது கருத்துக்களை உங்களால் சுட்டிக்காட்ட முடியும்?
அதற்கான காரணங்களைக் கூறவும். 03. “நாங்கள் என்னதான் செய்ய முடியும்?” என்றவாறாகக்
கூறப்படும் தடைகளை இயன்றவரை குறைத்துக் கொள்வதற்காக நீங்கள் பின்பற்றக் கூடிய சில நடவடிக்கைகளை இயம்பவும்.
முதலாவது சம்பவம் இடம்பெறும் பாடசாலைக்கு நீங்கள் ஓர் ஆசிரியராக இடமாற்றம் பெற்றுச் செல்வீர்களேயாயின் நீங்கள் செய்யக் கூடிய மாற் றங் களை உங் களது நண் பர் களிடம் சமர்ப்பிக்கவும்.
04.
சிறு விளக்கம்
ன
ஆசிரியர் தொழிலானது மிகவும் விசேடமானது. ஒரு புறம் அது ஒரு தொழிலாகும். மறுபுறம் ஒரு சேவையாகவும் அமைகிறது. பெரும்பாலும் இவையிரண்டும் சேர்ந்த சிக்கல் பொருந்திய ஒரு கலவையே எனலாம். தத்துவங்களால் மாத்திரம் பிணைக்கப்பட்டுள்ள ஓர் ஆசிரியரால் தம் தொழிலில் செவ்வனே ஈடுபடமுடியாது. பாடசாலையில் அவரது தனித்துவமான அனுபவங்கள், பரீட்சார்த்தங்கள், வெற்றிகள் என்பன காணப்பட வேண்டும். மேற்படி இரண்டு சம்பவங்களுள் ஆக்கபூர்வமான ஓர் ஆசிரியர் இரண்டாம் சம்பவத்திலேயே இடம்பெறுகிறார். அவ்வாறான புதிய நோக்கு, சிந்தனை என்பவற்றைப் பின்னணியாகக் கொண்டவர்கள் மாத்திரம் ஈடுபடிக்கூடிய பணியே ஆசிரியர் பணியாகும். மேற்படி சிந்தனைக் கோலத்திலும் பிரவேசிக்கக் கூடியவர்களே இப்பணியினைத் தெரிவு செய்ய வேண்டும். யுனெஸ்கோவின் ஆசிரியர் சாசனம் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
“கற்பித்தல் ஒரு தொழிலாகக் கருதப்படல் வேண்டும். ஒரு வகையில் அது ஒரு சமூகப்பணியாகும். அதன் நிமித்தம் மிகுந்த முயற்சியோடு இடையறாது மேற் கொள்ளும் கற்றல் வாயிலாகப் பேணும் விசேட அறிவு மற்றும் விசேட திறமைகள் என்பன ஆசிரியரில் மிளிர

Page 22
வேண்டும். மேலும் தம் பொறுப்பிலுள்ள பிள்ளைகளின் கல்வி, நலன் என்பன தொடர்பான ஒரு தனிநபர் என்ற ரீதியிலும் கூட்டாகவும் தாம் பொறுப்பினைத் தாங்குவதாக அவர் உணருதல் வேண்டும்."
யுனெஸ்கோவின் ஆசிரியர் சாசனம்
- இப்பொறுப்புகள் - தொடர்பான நோக்கு
எதன் பொருட்டாகும்?
கல்வி என்பது எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு தயாராக வேண்டியதொன்றாகும். சமூகத்தில் அபிவிருத்தியைத் தோற்றுவிப்பதற்காகக் கல்வியானது தலைமை தாங்கிச் செயற்பட வேண்டும். இளந்தலைமுறையினரின் எதிர்கால வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு அவர்கள் முகங்கொடுக்கக் கூடிய வல்லமையினை அவர்களுக்கு அளிக்கத்தக்க விதத்தில் கல்வி வழங்கப்படவேண்டும்.
அறிவைத் தேடுவதற்காக தமது பிள்ளைகளைப் பெற்றார் பாடசாலைக்கு அனுப்புகிறார்கள். பிள்ளைகள் பிரவேசிக்கும் உலகு அவர்களுக்கு வனப்பானதாக அதைமதல் வேண்டும். அப்பணியினில் ஈடுபட்டுள்ள வலிமையான குழுவினர் ஆசிரியர்களேயாவார். அது மகோன்னதமான பணியாக விளங்குவதற்கான காரணமும்
அதுவேயாகும்.
ஆசிரியரது தத்துவம்
ஒரு நல்லாசிரியரது நடத்தை ஒழுகலாறு என்பன செவ்வனே அமைவதற்காக அவரை வழிப்படுத்தும் குறிப்பிட்டவொரு தத்துவமானது அவரைப் பின்தொடர்ந்து ஒரு சக்தியாகச் செயற்படவேண்டும். அவரைச் சரியான ஒரு நபராக உருவாக்கும் ஒப்பற்ற சக்தியாக விளங்குவது
அத்தத்துவமேயாகும்.
முன்னர் குறிப்பிடப்பட்ட முதலாம் சம்பவத்தில் இடம்பெற்ற ஆசிரியரில் எத்தத்துவமும் தென்படவில்லை. வகுப்பில் உள்ள பிள்ளைகளைக் "கழிவுகள்" எனக் குறிப்பிடுவதற்கான காரணிகள் எவை? தவறு பிள்ளையைச் சார்ந்ததா? அன்றி பாடசாலையைச் சார்ந்ததா? மாணவன் கணிதத்தில் பூச்சியம் பெற்றிருப்பின் அதற்கான காரணத்தை உசாவிப் பரிகாரம் காணவேண்டும். சில விடயங்களின் செல்வாக்கினாலேயே இவ்வாறான ஒரு நோக்கு உண்டா கின்றது.
பிள்ளை பற்றிய விளக்கம்
உளவியலாளரிடையே பிரபலமான ஜீன் பியாஜே (Jean Piaget) கூறியதன்படி பிள்ளைகள் ஒரு வயதில் குறிப்பிட்ட மனப்பாங்குகளை ஏற்படுத்திக் கொள்வதாக இருப்பினும் அவர்கள் வெவ்வேறு விதத்திற்கேற்ப அம்மனப்பாங்குகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். எனவே ஆசிரியர் பிள்ளையின்

உள்ளத்தைப் பற்றிய விளக்கத்தைக் கொண்டிருத்தல் வேண்டும்.
ஒரே அளிவிலான ஐந்து பளிங்குப் பந்துகளை இவ்விதம் வரிசைப்படுத்தி ஒரே வயதினையுடைய குழுவைச் சேர்ந்த பிள்ளைகளிடம் வினவப்பட்டபோது இரண்டாம் வரிசையை விட முதலாம் வரிசையில் அதிக பந்துகள் உள்ளதாகக் கூறிய சந்தர்ப்பங்கள் இவ்வுளவியல் சார்ந்த ஆய்வுகளின் போது புலனாயின. (எண்ணக் கருவாக்கம் தொடர்பான பியாஜேயின் தத்துவம் நான்காம் அத்தியாயத்தில் இடம் பெறுகிறது)
எண்ணக்கருவாக்கம் பிள்ளையின் வயது, சூழல் ஆகியவற்றக்கு ஏற்ப வேறுபடும். ஆசிரியரது தத்துவ அடிப்படையைக் கட்டியெழுப்பும் ஒரு துறையாக உளவியல் விளங்குகிறது.
பிள்ளையை இனங்காணல் பற்றிய விளக்கம்
ஒவ்வொரு பிள்ளையும் ஒரு விசேடமான ஜீவனேயாகும். ஒத்த இரட்டையரான பிள்ளைகளில் (Indentical Twins) கூட நுண்ணியமான வேறுபாடுகள், நடத்தைகள், எண்ணங்கள் உண்டென் உளவியலாளர்கள் கூறுகிறார்கள். எனவே வகுப்பில் ஒவ்வொரு பிள்ளை தொடர்பாக பல்வேறு கோணங்களிலும் இனங்கண்டு கொண்டு தெளிவான விளக்கம் ஒரு நல்லாசிரியரிடம் இருக்க வேண்டும்.
உளவியல்பு
உடலியல்பு பாட அடைவுகளின் மட்டம்
குடும்பத் தலைவர்கள்
போன்ற பிரதான துறைகள் பற்றியேனும் ஒரு பொதுவான விளக்கம் இல்லாத பட்சத்தில் மேற்படி முதலாவது சம்பவத்தில் இடம்பெற்ற ஆசிரியரைப் போன்று மாணவர்களைக் கழிவுகளாக முடிவுகட்ட நேரிடலாம்.
இரண்டாம் ஆசிரியர் திறமையற்ற மாணவர்களுக்கு உதவுவதற்காக ஒழுங்கு செய்துள்ள வேலைத்திட்டமோ மிகக் கவர்ச்சிகரமானதாகும். அங்கு ஆசிரியரும் மாணவர் கூட்டத்தாரும் பரஸ்பரம் உதவுகிறார்கள். மாணவர்களை இனங்காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சரியான கண் ணோட்டம் காரணமாகவே அப்பணி நன்கு நடைபெறுகிறது. *
பாடசாலையினது குறிக்கோள்கள் பற்றிய விளக்கம்
தாம் எந்நிலைப்பாட்டில் தரித்து எதன் நிமித்தம் பணி புரிவதென்பது தொடர்பான சரியான ஒரு நோக்கினைக்
அகவிழி | ஏப்ரல் 2014 v

Page 23
கொண்டிருத்தல் ஆசிரியரது கண்ணோட்டத்தினை வழிப்படுத்தும் பிரதான காரணியாகும். விசேடமாக ஒரு வகுப்பறைகளில் ஆக்கபூர்வமான பொறுப்பு ஆசிரியரிடமே உண்டு.
பாடசாலையின் குறிக்கோள்கள்
B <
மாணவர்களின் உள்/உல் வளர்ச்சி
மாணவர்களின் சுயவிபரங்கள்ை தொடர்பான தகவல்கள்
ஒரு நாடு என்ற வகையில் நாம் அனைவரும் கல்வி வாயிலாக எதிர்பார்க்கும் விடயங்கள் அடங்கிய தொகுப்பு ஒன்று உண்டு. எனினும் அவற்றைப் பூர்த்தி செய்வதற்குப் பாடசாலை மட்டத்தைச் சார்ந்த விசேட குறிக்கோள்களை இனங்காண இவற்றைப் பாடசாலையின் குறிக்கோள்கள் எனச் சுருக்கமாகக் குறிப்பிட முடியும்.
இரண்டாம் ஆசிரியர் நலிவான பிள்ளைகளைக் குறை கூறாது அவர் களது நலிவுகளை இயன்றவரை குறைப்பதற்காக முனைகிறார். ஏனெனில் அவர் பாடசாலையின் குறிக்கோள்களை விசேடமாக இனங்கண்டு கொண்டுள்ளார்.
ஒரே பாடசாலையச் சேர்ந்த ஆசிரியர்களிடையே கூட இத்தகைய வேறுபாடுகள் தென்படுவதற்கான காரணம் அவர்களது சரியான நோக்கு தொடர்பான பின்னணி தொடர்பான தெளிவற்றதாக இருப்பதேயாகும். இதன் பிரகாரம் ஆசிரியர் பணியினைத் திறம்பட மேற்கொள் வதற்காகப் பிரதானமான இரண்டு கொள்கைகள் பாடசாலையில் கடைப்பிடிக்க வேண்டும்.
S) அகவிழி | ஏப்ரல் 2014
01. இந்நோக்கினைக் கொண்டிராத ஆசிரியர்களில்
அதனை உருவாக்கவதற்கான ஒரு கல்வி முகாமைத் துவஞ்சார் செயற்பாட்டினை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அக்கண்ணோட்டத்தைக் கொண்ட ஆசிரியர்களின் உதவியினை ஏனைய ஆசிரியர்களுக்கு ஒரு பயிற்சி மாற்றம் என்ற வகையில் அளிப்பதற்காக ஒரு ஆசிரியர் அபிவிருத்திசார் நடிவடிக்கையினை இடையறாது பாடசாலையில் அமுலாக்கல் வேண்டும்.

இளைஞர் ஆணைக்குழு அறிக்கை பாடசாலைக்ட கல்வி பற்றிக் குறிப்பிடும் போது இவ்வாறு இயம்புகிறது. அது இன்று மாத்திரமன்றி என்றுமே ஆசிரியர் பாத்திரம் பற்றிய சிந்தனையினைச் செவ்வையாக்டகச் சிறந்தவொரு வழியாகும். * கல்வியின் பூரண குறிக்கோளாக அமைய வேண்டியது !
கற்றலேயன்றி கற்பித்தலல்ல. மற்றொரு விதமாக இயம்புவதாயின் பிள்ளைகள், அறிவினைப் பெறுகிறார்களா? தேவையான தேர்ச்சிகளைப் பெற்றக்கொள்கிறார்களா?
என்பதைக் கண்டறிவதற்காக.
*
நித்தம் அவதானிப்புக்கும் அறிவினைச் சமர்ப்பிக்கும் ஒரு முறைக்கும் உட்படுத்தப்படல் வேண்டும்.
ஆசிரியரது கண்ணோட்டத்தினை மையமாகக் கொண்டு அவரது பணி தயாரிக்கப்படுகிறது. ஆசிரியரது அர்ப்பணிப்பு குறைவாகும் எனக் கூறப்படின் அங்கு மறைந்துள்ள விடயம் ஒன்றுண்டு. அது ஆசிரியர் தொழிலில் காணப்படவேண்டிய மேற்படி முக்காரணிகளை
அப்படையாகக் கொள்ளாமையேயாகும்.
வெற்றிகரமான ஆசிரியர் பாத்திரத்துக்கு அடிப்படையாக அமைவது மேற்படி கண்ணோட்டமேயாகும்.
பாடசாலை 1> குறிக்கோள்கள் 1> பாடசாலை
Objectives
நோக்கங்கள் Goals
பணி Mission
தூரநோக்கு Vision
மேற்படி கண்ணோட்டங்களின் அடிப்படையில் குறிக்கோள்களைத் தெரிவு செய்து கொண்ட ஆசிரியரால் ஆற்றப்படும் பொறுப்பான பணிகள் நிறைவேறும் பட்சத்தில் மாத்திரமே விளைதிறன்மிக்க ஒரு பாடசாலையைக் காண
முடியும்.
புத்தாக்கம்
ஓர் ஆசிரியரின் பாத்திரம் எவ்விதம் புதுப்பிக்கப்படலாம்? பாடசாலிைன் குறிக்கோள்களை இன்ங்கண்டுகொள்ளாமல் இதனை ஆற்றவியலாது. இவ்வொத்த தன்மையினையும் வேறுபட்ட தன்மையினையும் இனங்கண்டு பாடசாலைக்குப் பொருத்தமான விதத்தில் புதுப்பித்துக் கொள்ளல் வேண்டும்.

Page 24
- - - -
இவ்விதம் தம் பாத்திரத்தை பாடசாலைச் சுற்றாடலுக்கு ஏற்புடையதாக ஆக்கிக்கொள்ளவேண்டும் என்பதையும் மற்றும் அவ்விதம் ஆக்கிக் கொள்ள இயலும் என்பதையும் பெரும்பாலான ஆசிரியர்கள் அறியாதிருக்கிறார்கள்.
உ+ம் : கணித ஆசிரியரோருவர் கொழும்பில் ஒரு
பாடசாலையில் வினைத்திறன் மிக்க ஆசிரியராக விளங்கினார் என்ற காரணத்தால் மாத்திரம் ஒரு கிராமப்புறப் பாடசாலையிலும் அதே விதமான நுட்பங்களைக் கையாள அவரால் முடியாது. ஒரே தத்துவமாக இருப்பினும் அதனை இரண்டு
விதமாகவே நடைமுறைப்படுத்த வேண்டும். ஒரே பாடமாக இருப்பினும் அதனை இரண்டு பாடசாலைகளில் ஒரே விதத்தில் கற்பிக்க முடியாது. ஆசிரியர் மாணவர், சமூகம் ஆகியோரின் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்ளக்கூடிய விதமும் பல்வேறு வகைப்பட்டதாக அமையும். இம்மாறுப்பட்ட தன்மைகள் ஊடாகவும் ஒத்த தன்மைகள் ஊடாகவும் ஆசிரியர் தம் குறிக்கோள்களை அடைந்து கொள்வதில் திறமைசாலியாக விளங்கு வாரேயாயின் அவரால் புதிய பிரச்சினைகளுக்கு வெற்றி கரமாக முகங்கொடுக்கவியலும். அதுவே ஆசிரியரது பணியுமாகும்.

ஆசிரியர் பணி
“பெயர் எழுதத் தெரியாதவர்களும் இருக்கிறார்கள் நாங்கள் என்னதான் செய்ய முடியும்?”
* வாட்ட்
மேற்படி வெளிப்பாட்டின்படி முதலாம் சம்பவத்தில் இடம் பெற்ற ஆசிரியரது நோக்குகள் பின்வருமாறு: ஒரு வாண்மையர் என்ற வகையில் அவர் அவ்வாறு கருதுதல் தகுமா?
வகுப்புக்குரிய பாடத்திட்டத்தினைப் பூர்த்திசெய்கையில் வேகங் குறைந்த மாணவர் கள் காரணமாக அவ்வேகத்தினைக் குறைத்துக்கொள்ள முடியாது. முன்னைய பல வகுப்புகள் ஊடாகவே மாணவர்களது நலிவுகள் பின்தொடர்ந்து வருகின்றன. அது தனி
ஓர் ஆசிரியரது தவறாகாது. வகுப்பு மட்டத்துக்கு ஒவ்வாத பிள்ளைகள் இருக்கிறார்கள். அதனைப் பொருட்படுத்தாது. திறமையான பிள்ளைகளோடு பணியாற்ற நேரிடுகிறது. இ உண்மையாகவே ஆசிரியர் பணியானது இதனை விட மாறுபட்டதாகும்.
ஆசிரியர் ஒரு தத்துவத்தை உடையவராக இருப்பின் இந்நோக்கு அவரில் உதயமாகும். இவ்வத்தியாயத்தின்
அகவிழி | ஏப்ரல் 2014 8

Page 25
*
ஆரம்பத்தில் 2ம் சம்பவத்தின் ஈற்றில் இடம்பெற்ற 4ம் வினாவின்படி நீங்கள் அவ்வகுப்பை அடைவீர்களேயாயின் உங்களது பணியில் இவ்விதமான புத்தாக்கம் காணப்படவேண்டும்.
குறைந்த வேகத்தில் செயற்படும் மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்காகக் குறிப்பிட்ட ஒப்படை முறைகளை நடைமுறைப்படுத்துதல். வகுப்பு மாணவர்களின் பிரவேச திறமைகளை நலிவுகளை அளவிட்டு ஆரம்பத்திலேயே மாணவர் களை இன்கண்டு கொள்ளல். அவர்களுக்கு கற்றல்
சார்ந்த விசேட உதவிகளை அளித்தல். தம்மால் ஆற்ற முடியாமல் போன விடயங்களிையிட்டு பின்வாங்காது மாற்று நடவடிக்கைகளைப் பரீட்சித்தப் பார்த்தல்.
இத்தகையவை புத்தாக்கங்கள் எனப்படுகின்றன. இத் தேர்ச்சிகளைப் பெற்றுக்கொள்வதற்காக அனைவரினதும் உதவியைப் பெறவியலுமாயின் புதிய கண்ணோட்டத்தைக் கொண்ட ஆசிரியரது பணி வெற்றிகரமாக அமையும்.
ஆசிரியர் நித்தம் தாம் ஆற்றுவன மற்றும் கூறுவன ஊடாகப் பிள்ளையின் வாழ்வில் மாற்றம் நிகழுகிறதா என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். எவ்விதமேனும் அதனால் பிள்ளையின் திறமைகள், தேர்ச்சிகள், மறைந்துள்ள ஆற்றல்கள் என்பன வெளிக்கொணரப் படுகின்றனவா என்பது பற்றிச் சிந்தித்தல் அவசியம். யுனெஸ்கோவினால் அன்மையில் வெளியிடப்பட்ட ஒரு புத்தம்புதிய கருத்து இங்கு இடம்பெறுகிறது. அது ஆசிரியர் பாத்திரத்தை எதிர்காலத்தில் செவ்வை யாக்குவதற்கான முன்மொழிதலாகும்.
நபர்களையும் சமூகத்தையும் 21ம் நூற்றாண்டுக் காகத் தயாரிக்கையில் பின்வரும் நான்கு விடயங்கள் தொடர்பாக இயக்கஞ் சார்ந்த மற்றும் ஆக்கபூர்வமான பொறுப்பு மிக்க பணியினைக் கல்வியானது நிறைவேற்ற வேண்டியுள்ளது.
அறிந்து கொள்வதற்காகக் கற்றல் குறிப்பிட்ட ஒன்றை ஆற்றுவதற்காகக் கற்றல் இணைந்து வாழ்வதற்காகக் கற்றல் ஆவதற்காகக் கற்றல்
ஜெகிஸ் டெலோர்ஸ் (தலைவர்) 21ம் நூற்றாண்டுக்கான கல்வி பற்றிய அனைத்துலக ஆணைக்குழு
இவ்விதமான விளைதிறன் பொருந்திய வாழ்க்கை மாற்றங்களுக்காக மாணவனை அணுகும் விதத்தில் பங்களிப்பினை நல்கவேண்டும். அவ்வாறு அமையும் பட்சத்தில் ஒரு நற்பிரசையை உருவாக்கும் உன்னதமான பணி நிறைவேறும்.
S அகவிழி | ஏப்ரல் 2014

கலந்துரையாடலுக்கான ஒப்படைகள்
*
இரு விடய ஆய்வுகளிலும் இடம்பெற்ற இரண்டு ஆசிரியர்களினதும் பணிகளில் நீங்கள் காணக்கூடிய வேறுபாடுகள் எவை. இங்கு மாணவர்களைக் கழிவுகள் எனக் குறிப்பிடுதல் நியாயமானதாகுமா? இது தொடர்பான உங்களது கருத்து யாது?
முதலாம் வினா
பிள்ளையின் வாழ்க்கையில் மாற்றம் நிகழுகிறதா என்பது தொடர்பாக ஒவ்வொருவரினதும் கண்ணோட்டத்திற்கேற்ப அவரவர்தம் பணிகளைப் பாடசாலையில் ஆற்றும் விதம் இங்கு இடம் பெறுகிறது. முதலாம் நபர்
*:
பிள்ளைகளின் நலிவுகளை மாற்ற முற்படுபவர்
அல்லர். * எதிர்மாறான மனப்பாங்குகளை உடையவர். எனவே
ஆற்றப்படும் பணிகளின் அளவு மிகக் குறைவாகும். இரண்டாம் நபர் * பிள்ளைகளின் பிரச்சினைகளை இனங்காணல் தமது
பொறுப்பே எனக் கருதுகிறார்.
*
ஆக்கபூர்வமான தீர்வுகளைத் தேடுகிறார். அவற்றை நடைமுறைப்படுத்துகிறார்.
இரண்டாம் வினா
*.
கற்றல் சார்ந்த திறன்கள், விவேகம், தேர்ச்சிகள் என்பன குறைவு அல்லது இல்லை என்பதை உணர்த்தல்.
உங்கள் கருத்து அதனை ஏற்பதாக இருத்தலாகாது. வேகங்குறைந்த அல்லது கூடிய மாணவர்கள் ஒரு வகுப்பறையில் காணப்படல் இயல்பானதாகும். நலிவான பிள்ளைகள் இல்லாத பாடசாலையே இல்லை எனலாம். இத்தாலியின் பார்பியானா என்ற பாடசாலையைச் சேர்ந்த பிள்ளைகளால் எழுதப்பட்ட கடிதம் இக் கருத்துகளை மிக ஆழமாகப் பகுப்பாய்வு செய்கிறது. -
பிள்ளைகளைக் கழிவுகள் என ஏன் ஒதுக்கவேண்டும்? அவர்களது நலிவுகளை இனங்கண்டு அவர்களுக்கான பரிகார நடவடிக்கைகளை மேற்கொள்ளல் பாடசாலை சார்ந்த பணியாகும். அவ்வாறு நிகழாவிடின் நோயாளிகளை வெளியேற்றிவிட்டுச் சுகதேகிகள் தங்க ஆவன செய்யும் ஓர் ஆஸ்பத்திரிகளே. அவ்வாறே வேகங்குறைந்த மாணவர்களைக் கழிவுகளாகக் கருதி நிராகரிக்கும் ஒரு நிறுவனத்தைப் பாடசாலை என அழைக்கவே முடியாது.

Page 26
வினைத்திறன் மிக்க கற்பித்த ஆக்கத்திறனும்
எஸ்.எஸ். சரூக்தீன் முதுநிலை விரிவுரையாளர் இடைநிலை மற்றும் மூன்றாம் நிலைக் கல்வித்துறை, இலங்
அறிமுகம்
இருபத்தோராம் நூற்றாண்டின் அறிவு மைய சமூகத்தில் (Knowledge based Society) ஆக்கத்திறன் (படைப்பாற்றல்) (Criativity) மற்றும் புத்தாக்கங்களின் (Innovation) முக்கியத்துவம் அதிகரித்து காணப்படுகிறது. கல்வி என்பது ஆக்கத்திறன் மற்றும் புத்தாக்கத்திறனின் மையப் புள்ளியாக உள் ளது. கற்றலை வெற்றி கரமானதாக்குவதற்கு ஆக்கத்திறன் காரணமாக அமைவதுடன் அறிவின் பல்வேறு துறைகளுக்கிடையிலான தொடர்புகளை விளங்கிக் கொள்வதற்கும் அதுவே காரணமாகின்றது. ஆதலால் கற்றல் கற்பித்தல் செயன்முறையினுள் படைப்பாற்றல் கற்றல் மற்றும் புத்தாக்க கற்பித்தல் மிகமுக்கிய அம்சங்களாகும்.
படைபாற்றலை அபிவிருத்தி செய்யவேண்டியதன் தேவை
கல்வித்துறைக்கு பொருத்தமாக படைப்பாற்றலை அபிவிருத்தி செய்யவேண்டியதன் அவசியத்தை பின்வரும் காரணங்கள் வலியுறுத்துகின்றன.
1.
நாளாந்த வாழ்க்கையில் ஆக்கத்திறன் மற்றும் புத்தாக்க முறைகள் மூலம் நவீன தொழில் நுட்ப பயன்பாட்டினூடாக மாணவர்களுக்கு முறைசார் மற்றும் முறைசாராகற்றல் சந்தர் பங்களைப் பெற்றுக்கொள்ளமுடியும். கட்புல - செவிப்புல ஊடகங்களினால் போஷிக்கப் பட்ட சூழலில் மாணவர்களுக்கு பல்வேறு விடயங் களை விளங்கிக்கொண்டு கற்றலுக்குரிய ஆற்றலை
விரிவுபடுத்திக்கொள்ள முடியுமாதல்
ஆக்கத்திறனை விருத்தி செய்வதன் மூலம் கற்றலின் நேர்ப்பாங்கான விருத்தியை ஏற்படுத்த முடியும். அதன்மூலம் மாணவரின் சுயகற்றலை எளிதுபடுத்துதல், கற்றலுக்கு - கற்றல், வாழ்நாள் நீடித்த கற்றல் ஆகிய தேர்ச்சிகளை விருத்திசெய்ய முடியுமாதல்.
படைப்பாற்றலை முன்னேற்றுவதன் மூலம் பூரண மனிதனை உருவாக்குவதற்கு உள்ள சந்தர்ப்பத்தை விரிவுபடுத்தல்.

ல் செயன்முறையும்
கைத் திறந்த பல்கலைக்கழகம்
இதனால் கற்றல் - கற்பித்தல் செயன்முறையினுள் ஆக்கத்திறன் மற்றும் புத்தாக்கம் எனும் இரண்டு அம்சங்களும் ஆசிரியர் - மாணவர் ஆகிய இரு சாராருக்கும் ஒரேவகையில் முக்கியத்துவமாகின்றது என்பது தெளிவாகின்றது.
ஆக்கபூர்வமான சிந்தனையினூடாக பிரச்சினை தீர்த்தல் சமூகத்தில் வாழும் நபர்களுக்கு நாளாந்தம் வாழ்க்கையில் பல்வேறுவகையில் பிரச்சினைகள் ஏற்படுகின்றது. அதற்கான தீர்வுகளை கண்டுபிடிக்கும் முறைகள் ஆளுக்கு ஆள் வேறுபடுகின்றன. எனினும் ஆக்கச் சிந்தனையுள்ள நபர்கள் பிரச்சினை தீர்க்கும் செயல்முறையினுள் புத்தாக்க முறைகளை கையாண்டு பார்ப்பதுடன் வெற்றிகரமான நுட் பமுறைகளை பயன் படுத்தி அவற்றின் மூலம் வினைத்திறனுள்ள தீர்வுகளையும் அடைவர்.
உதாரணமாக எளிய பிரச்சினை ஒன்றிற்கு கூட பல்வேறு நபர்களிடமிருந்து பல்வேறு வகையான விடைகள் கிடைக்க முடியும்.
பத்திரிகையினால் நீங்கள் பெறக்கூடிய பிரயோசனங்கள் யாவை எனும் Fieldman(2005) இன் வினாவுக்கு பத்து வயதுடைய பிள்ளைகள் தந்த 'விடைகள் கீழே தரப்படுகின்றன.
“எங்களுக்கு வாசிக்க முடியும். அதன்மேல் எழுத முடியும், அதன்மேல் உட்காரமுடியும் கதவுக்குத் தடுப்பாக இடமுடியும் கதிரை ஒழுங்கின்றி இருப்பின் அதற்கு இடமுடியும். ஒரு நாய்க்குட்டி இருப்பின் அதன் பெட்டியின் கீழ் இடமுடியும். அவ்வாறின்றேல் நாய்க்குட்டி அதன் உடன் விளையாடமுடியும். நீங்கள் யாதாயினுமொரு கட்டிடம் ஒன்றைக் கட்டுகையில் மற்றவர்கள் பார்க்காதவாறு இருக்கக் கூடியவாறு அதன் மேல் பத்திரிகைகளை ஒட்டமுடியும். கால்மிதி இல்லாதிருக்கையில் நிலத்திற்கு 15 போடமுடியும் ஜன்னல் புடவையாக பாவிக்க முடியும் பாதணி அளவிலும் பார்க்க பெரிதாக இருப்பின் அதனுள்ளே போடமுடியும் பட்டம் ஒன்று தயாரிக்க முடியும். மின்விளக்கு மிகவும் பிரகாசமாக இருப்பின் அதனை மறைப்பதற்கு பயன் படுத்த முடியும். பத்திரிகை மூலம் மீன்
அகவிழி | ஏப்ரல் 2014 (8

Page 27
போன்றவைகளை சுற்ற முடியும் யன்னல் களின் கண்ணாடிகளை துடைக்க முடியும். பத்திரிகை மூலம் பல்வேறு ஆக்கங்களை (தொப்பி, ஆகாயவிமானம், பாத்திரம்) அமைக்க முடியும்.
Fieldman(2005) இவ்வாறான எளிய பிரச்சினைகளுக்கு எதிர்பார்த்த விடையாக அமைவது "வாசிப்பு” (Reading) ஆக இருப்பினும் ஆக்கத்திறன் சிந்தனை உடைய பிள்ளையினால் அதற்கு மேல் சென்று பல்வேறுவகையான வேலைகளுக்கு பத்திரிகையை பயன்படுத்தக்கூடிய முறைகளை புத்தாக்கமாக காணமுடியும். அதனை பயன்படுத்துவதில் ஆக்கத்திறனுடைய புத்தாக்கங்கள்
காரணமாக அமைகின்றது என்பது தெளிவாகின்றது.
பல் வேறு நபர் கள் சமூகத்தில் அன்றாட பிரச்சினைகளுக்காக தீர்வுகளைக் காணும் முறை மற்றும் பெற்றுக்கொள்ளும் தீர்வுகள் தொடர்பாக ஆராய்கையில் அவர்களின் ஆக்கத்திறன் தன்மையிலும் புத்தாக்கத்திலும் வித்தியாசம் தெளிவாகின்றது.
ஆக்கத்திறன் மற்றும் புத்தாக்கம் தொடர்பாக வரைவிலக்கணம் ஆக்கத்திறன் மற்றும் புத்தாக்கம் என்பன மிகவும் சிக்கலான, பல் அர்த்தமுள்ள எண்ணக்கருவாக உள்ளதுடன் அவை கல்வி முகாமைத்துவம், வைத்தியம், கலை போன்ற பல்வேறு துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. பயன்பாடும் விளக்கங்களும் பல்வேறு வகைப்படினும் அது தொடர்பான வரைவிலக்கணங்களும் அதிகமாக உள்ளது.
Fieldma(ெ2005) என்பவர் “கருத்து அல்லது துலங்கலை புதிய வடிவில் தொடர்புபடுத்தும் ஆற்றல்” என ஆக்கத் திறனைக் வரைவிலக்கணப்படுத்துகின்றார்.
Sharp(2004) ஆக்கத் திறனின் பண்புகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றார்.
முன்னரில்லாத புதிய கருத்துக்களை ஏற்படுத்தும் ஆற்றல். விரிசிந்தனையூடாக பல்வேறுவகையான புதிய கருத்துக்களை பிறப்பிக்கும் ஆற்றல்
அறிவு மற்றும் ஆக்கத்திறனைப் பயன்படுத்தி பிரச்சினை தீர்த்தல் பெறுமானம் மற்றும் பெறுமதியான விளைவை ஏற்படுத்தும் ஆற்றல்
அதே ஆக்கத்திறனை வரைவிலக்கணப்படுத்தும் Craft(2005) “முன் வேறுயாராயினும் ஒரு தனிநபர் இனங்காணாத ஆற்றலை இனங்கண்டு கொள்ளும் சக்தி” எனக் கூறுகின்றார்.
* டெ
6 அகவிழி | ஏப்ரல் 2014

இதனடிப்படையில் ஆக்கத்திறன் மற்றும் புத்தாக்கம் என்பன ஒன்றுடன் ஒன்று இணைந்த இரு எண்ணக்கருக்கள் என தெளிவாகின்றது. ஆக்கத்திறன் என்பது புத்தாக்கம் ஏற்படுவதற்கு அடிப்படைக்காரணியாக இருப்பதுடன் புத்தாக்கம் என்பது ஆக்கத்திறனைப் பயன்பாட்டுக்கும் செயலுக்கும் உயர்த்தலாகும். ஆக்கத்திறன் மற்றும் புத்தாக்க அறிவு என்பன கற்றலுடனும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளவையாகும்.
ஆக்கத்திறனும்
அதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளும் ஆக்கத் திறனிற் கான ஆளு மை இ யல் புகள் முக்கியமானவையாக அமைவதுடன் அவை சூழல் காரணிகள் மூலம் மேலும் விருத்தி அடையும். அதனால் உள்ளார்ந்த ஊக்கலை ஏற்படுத்துவதற்கு கட்டுருவாக்கச் சூழல் காரணமாக அமையும். ஆக்கத்திறன் விருத்தியில் ஆளுமை இயல்புகள், எழுச்சிசார் செயன்முறை,அறிவுசார் செயன்முறை, நிபுணத்துவம், ஊக்கல், அறிவுசார் ஆற்றல் இகலாசார பெறுமானம் மற்றும் கலாசார சூழல் போன்றவை பங்களிப்புச் செய்கின்றன.
இதைத்தவிர Amabile (1998) ஆக்கத்திறனில் செல்வாக்குச் செலுத்தும் மூன்று பிரதான காரணிகளாக ஊக்கல் (Motivation) நிபுணத்துவம் (Expertize) மற்றும் ஆக்க பூர்வமான சிந்தனை (Creative thinking) என்பவற்றைக் குறிப்பிடுகிறார். இவரது கருத்தின் அடிப்படையில் உள்ளார்ந்த ஊக்கலே ஆக்கத்திறனிற்கான மிக முக்கிய காரணியாக உள்ளது. ஒரு நபர் உள்ளார்ந்த ஊக்கலின் அடிப்படையில் யாதாயினும் ஒரு செயலை தொடர்ச்சியாக செய்வதற்குத் தேவையான முயற்சி அல்லது விருப்பத்தினை ஏற்படுத்திக்கொள்வார். ஆக்கத்திறனுடைய நபர்கள் யாதாயினும் செயலில் ஈடுபட்டிருக்கையில் அச்செயலில் அவர்களில் ஏற்படுத்தும் முயற்சி, விருப்பத்தினால் அச்செயலில் தொடர்ச்சியாக சலிப்பின்றி ஈடுபடுவர். உதாரணமாக தோமஸ் அல்வா எடிசன் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு முயன்று தவறல் மூலம் புத்தாக்கங்கள் பலவற்றை உலகிற்கு தந்துள்ளார். அவரிடம் இருந்த நிபுணத்துவம், ஆக்கச் சிந்தனை என்பவற்றுக்கு மேலாக சுய ஊக்கல் காரணமாகவே குறிப்பிட்ட செயலில் ஓய்வின்றி ஈடுபட்டு பயன்மிக்க ஆக்கங்களை அவரால் கண்டறிய முடிந்தது.
கல்விச்செயன்முறையில் ஆக்கத்திறனைப்பயன்படுத்தல்
கல்விச் செயற்பாடுகளில் ஆக்கத்திறன் தொடர்பான எண்ணக்கருவினை பயன்படுத்திக் கொள்ளும் முறையினை அறிந்துகொள்ளுதல் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமாகும். ஆக்கத்திறனை நான்கு அடிப்படை அம்சங்களின்கீழ் பகுப்பாய்வு செய்யலாம்.

Page 28
1. அறிவுக்கான ஆக்கத்திறன் 2. ஆக்கத்திறனை உள்வாங்கும் சூழல்
ஆக்கத்திறன் கற்றல் மற்றும் புத்தாக்க கற்பித்தலுக் கான கலைத்திட்டம் ஆக்கத்திறனும் கணிப்பீடும்
1..
அறிவுக்கான ஆக்கத்திறன்
ஆக்கத்திறன் - நுண்மதி - அறிவு என்பவற்றுக்கிடையில் தொடர்புகள் உள்ளன. ஆக்கத்திறனுக்கு அறிவு முக்கியமெனினும் அதற்கான அத்தியாவசிய காரணியல்ல. Weisberg (1999) குறிப்பிட்டவாறு ஆக்கத்திறனுக்குத் தேவையான அறிவு தொடர்பாக வரையறை ஏதும் இல்லை. யாதாயினும் ஒன்றை நினைக்கும் முறையினை அறிந்து கொள்ளல், பல்வேறு முறைகளில் யாதாயினுமொன்றை கிரகித்துக்கொள்ளல். அல்லது யாதாயினுக்குமிடையிலான தொடர்புகளை கண்டுகொள்ளும் முறை ஆக்கத்திறனுக்கு அவசியமாகும்.
Boden (2001) அறிவை பெற்றுக்கொள்ளும் முறையின் அடிப்படையில் ஆக்கத்திறனை மூன்று வகைகளாக காட்டுகிறார்.
அ) கண்டறியும் ஆக்கத்திறன் (Exploratory Creativity)
யாதாயினும் இனங் கண்டு கொண் ட வீச் சினை விமர்சிப்பதற்கு இது உதவும். உதாரணமாக ஜேஸ் (Jazz) இசைக்கலைஞர் ஓர் பாடலுக்கு இசையமைக்கும்போது சங்கீத சம்பிரதாயங்கள் மற்றும் சங்கீத விதிக்கமைய
ஆக்கத்திறனை கண்டுபிடிக்கலாம்.
ஆ) ஒன்றுசேர்க்கும் ஆக்கத்திறன் (Combinative Creativity)
இங்கு புதிய கருத்துக்கள் மற்றும் பழைய கருத்துக்களை ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்துவதன் மூலம் அல்லது சேர்ப்பதன் மூலம் முன்னர் காணப்படாத புதிய முறைப்படி நவீன கருத்துக்கள் கட்டியெழுப்பப்படுகின்றன. தற்போதைய கருத்துக்கள் தொடர் பான விளக்கம் முன்னைய தொடர்புகள் மற்றும் கருத்துக்களை ஒன்றிணைப்பதனால் உறுதியாக்கப்படுகின்றது.
இ) நிலைமாற்று ஆக்கத்திறன் (Transformative Creativity)
இச்சந்தர்ப்பத்தில் தற்போதுள்ள ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டத்திற்கு அமைவாகவன்றி எண்ணக்கரு சார் வகையில் மற்றவர்களுக்கு குறிப்பாக வழிகாட்டும் ஆக்கத்திறன் கருதப்படுகின்றது. அதாவது முன் உள்ள எதனையும் கருத்திற் கொள்ளாது புதிய கருத்துக்களின் கூட்டினை உருவாக்குதலேயாகும். இதற்காக சுய-ஒழுக்கம் (Self discipline) மற்றும் போதுமானளவான அறிவுத் தொகுதி

(Substantial amount of knowledge) என்பன அவசியமாகும் உதாரணமாக சூரியனும் அதன் கிரகங்களும் சீரான ஒழுக்கில் சுற்றி பயணம் செய்வதாக அனைவரும் ஏற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் அப்பிழையான கருத்திற்கு பயமின்றி கண்டனம் தெரிவித்து அதிலும் பார்க்க வேறுபட்டதான புத்தாக்க கருத்தினை முன்வைத்தவர் கலிலியோ கலிலி. இதனை நிலைமாற்று ஆக்கத்திறனுக்கு உதாரணமாகக் குறிப்பிட முடியும்.
இவ்வாறு இனங்காணப்பட்ட ஆக்கத்திறன் வகைகள் மூலம் யாதாயினும் குறிப்பான அறிவைப் பெறல், கட்டுருவாக்கம் செய்தல் மற்றும் ஆய்வு தொடர்பாக அறிவுறுத்தல், பாடம், ஆக்கத்திறன் கருத்துத் தொடர்பான அறிவு என்பன குறிப்பாக அவதானிக்கப்படும். இது தற்போதைய கல்வி முறையுடன் ஒப்பிடுகையில் அறிவு மற்றும் ஆக்கத்திறன் இரண்டிற்குமிடையில் இடைத்தொடர்பு ஏற்படுவதற்குரிய அணுகுமுறையாக பயன்படுத்தப்பட முடியும். ஆதலால் மாணவருக்கு முன்விளக்கத்தின் அடிப்படையில் யாதாயினுமொன்றினை கட்டியெழுப்புவதற்கு பயிற்சியும் கற்பித்தலும் அவசியம். ஆக்கத்திறன், அறிவினைப் பயன்படுத்துவதற்கும் பெற்றுக்கொள்ளக கொள்வதற்கும் துணைசெய்வதுடன் புதிய ஆக்கச் சிந்தனைக் கோலத்திலும் மாணவரை ஈடுபடுத்தும்.
கல்விச் செயன்முறையில் ஆக்கத்திறனை ஏற்படுத்துவதற்கான சூழல்
ஆக்கத்திறன் அன்றாட வாழ்க்கையில் மிகமுக்கியமான தெனினும் கல்வியாளர் களின் செயற்பாடுகளால் பிள்ளைகளின் ஆக்கத்திறன் நாசமாக்கப்படுவதாக (Kill Creativity) பல்வேறு ஆய்வுகளின் மூலம் வெளிப்படுத்தப் பட்டுள்ளது. பாடசாலையில் ஆசிரியர் களினால் மாணவர்களின் ஆக்கத்திறன் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப் படுவதில்லை என்பதும் அதில் ஒரு குற்றச்சாட்டாகும்.
Beghetto(2007) யாதாயினுமொரு பிரச்சினைக்கு குறிப்பான விடைக்குப் பதிலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நியம் முறையின் அடிப்படையில் முன்னரே இனங்காணப்பட்ட விடையினை மாணவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் ஆற்றலே ஆசிரியர்களிடம் இருப்பதாகவும் அதனால் உண்மையான ஆசிரியர் வகிபங்கினுள் ஆக்க பூர்வமான சிந்தனைக்கான சந்தர்ப்பம் மாணவர்களுக்கு வழங்கப் படுவதில்லை எனவும் சுட்டிக் காட்டுகின்றார். உதாரணமாக முன்பள்ளிப் பிள்ளைக்கு பூ ஒன்றை வரையுமாறு ஆசிரியர் அறிவுறுத்தல் கொடுக்கையில் ஒரு பிள்ளை பாரம்பரிய ஐந்து இதழ்கள் கொண்ட பூவினை வரைவதற்குப்பதிலாக பல இதழ் பூவினை சித்திரமாக வரைவதற்கு இடமுண்டு. அவ்வாறான பிள்ளையின் ஆக்கத்திறனை கூடிய மட்டிலும் ஆசிரியர் ஊக்குவிக்க வேண்டும். இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் Beghelto (2007) "முறைசார் கல்வியின்
அகவிழி | ஏப்ரல் 2014 (வ

Page 29
மூலம் பொருத்தமான விடயங்களை மட்டும் ஏற்றுக் கொள்ளும் கலாசாரமே உள்ளதாக” குறிப்பிடுகின்றார்.
மேலும் மாணவர்கள் ஆக்கத்திறனை விரும்புவதுடன் அது ஆசிரியரின் வினைத்திறனில் தங்கியுள்ளதென Milgram (1990) குறிப்பிடுகின்றார். ஆக்கத்திறன் கற்பித்தல் அல்லது மாணவர்களின் ஆக்கத்திறன் ஆற்றலை முன்னேற்றுவதற்கு பங்களிப்பு செய்வதன் மூலம் ஆக்கத் திறனை மதிக்கும் கற்றல் சமூகத்தினை உருவாக்க ஆசிரியர்கள் பங்களிப்பு செய்ய முடியும். இவ்வாறான ஆசிரியர்கள் பாடஅறிவுக்கு மேலதிகமாக புதிய தொழிநுட்ப அறிவு, புதிய வளங்களை பயன்படுத்த விரும்புவதுடன் கற்றல் பாடப்புத்தகத்திற்கு மாத்திரம் எல்லைப்படுத்தப் படக்கூடாது என கருதுவதாகவும் Simplicio (2000)
கூறுகின்றார்.
மேலும் Beghetto (2007) வகுப்பறையில் கலந்துரை யாடல் முறைமூலம் மாணவர்களின் ஆக்கத்திறனை முன்னேற்ற முடியுமென இனங்கண்டுள்ளார். ஆக்கத்திறன் கற்பித்தலில் ஆசிரியரின் வகிபங்கு மாணவர்கள் தகவல்கள், அறிவு ஆகியவற்றை பெற்றுக்கொள்வதை மட்டும் எல்லைப்படுத்தாது அவர்களுக்கு அறிவை ஆய்வு செய்வதற்கு தேவையான வசதிகளை வழங்குவதுமாகும். இதைத்தவிர வெற்றியை நோக்கி செல்வதற்கும் மாணவர்கட்குத் தேவையான ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டலை ஒழுங்கான விதத்தில் வழங்குதலும் முக்கியமானதாகும். ஆசிரியர் சரியான முறையில் கற்பித்தலைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தும் போது மாணவர்கட்கு ஆய்விற்கும் விமர்சிப்பதற்கும் தேவையான
சூழலை வழங்கல் இலகுவாகும்.
ஆக்கத்திறனான கற்றல் மற்றும் கற்பித்தலுக்கான கலைத்திட்டம்
ஆக்கத்திறன் கற்றல் மற்றும் கற்பித்தலுக்காக கலைத் திட்டத்தை திட்டமிடுகையில் மாணவரிடம் ஆக்கத்திறன் சிந்தனையை உருவாக்கும் காரணிகள் தொடர்பாக கவனம் செலுத்துதல் முக்கியமாகும். கலைத்திட்டம் மாணவருக்கு கற்பிப்பதை மட்டுமல்லாது பல்வேறு ஆற்றல்களை மாணவர்களிடத்தே விருத்தி செய்யும் வகையில் கற்றல் - கற்பித்தல் செயல் முறையை ஒழுங்கமைக்கவும் உதவுவது முக்கியமானதாகும். அப்போதுதான் மாணவர் எதிர்கால வேலை உலகுக்கேற்ற ஆக்கச் சிந்தனை மிக்க தனியாளாக தம்மை உருவாக்கிக் கொள்வர். இதற்கு பல்வேறு பாடங்களுக்கிடையில் சிறந்த தொடர்பினைக் கட்டியெழுப்பும் வகையில் கலைத்திட்டத்தைத் திட்டமிட்டு அமுல்படுத்தல் வேண்டும். இலங்கையில் கலைத்திட்டத்தில் மாணவர் ஆக்கத்திறனை மேம்படுத்துவதற்காக பல்வேறு
முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
8 அகவிழி | ஏப்ரல் 2014

1998 இல் இலங்கையில் ஆரம்பக் கல்விச் சீர்திருத்தங்களின் மூலம் பிள்ளையின் பூரண விருத்திக்கு தேவையான மொழி, கணிதம் தேர்ச்சிகளுக்கு மேலதிகமாக மேலும் பல தேர்ச்சிகளை விருத்தி செய்யும் நோக்குடன் ஒன்றிணைந்த முறையில் சுற்றாடல் பாடத்தை அறிமுகப்படுத்தியமையை உதாரணமாகக் கொள்ளலாம். அழகியல், நிர்மாணம், விஞ்ஞானம், ஒழுக்கம், உடல்விருத்தி மற்றும் சுகாதாரம் போன்ற தேர்ச்சிகளை வேறு வேறு பாடங்களாக முன்வைத்தலிலும் பார்க்க ஒன்றிணைந்த முறையில் மாணவர்க்கு பொருந்தக்கூடிய தொனிப்பொருள்களின் மூலம் கற்றலைத் திட்டமிடுதல் மிகவும் பொருத்தமானதென இனங்காணப்பட்டது. இவ்வாறான 16 அடிப்படைத் தொனிப்பொருட்களை உள்ளடக்கிய சுற்றாடல்சார் செயற்பாடுகள் பாடத்தின் ஒன்றிணைந்த பண்புகள் மாணவரின் ஆக்க சிந்தனையை தூண்டுமெனத் எதிர்பார்க்கப்பட்டது.
.5க
தரம் 6-9 வரை அறிமுகப் படுத்தப்பட்டுள் ள | "வாழ்க்கைத் தேர்ச்சியும் குடியுரிமைக் கல்வியும்” பாடமூலமும் 10-11 தரங்களுக்கான "குடியுரிமைக்கல்வியும் நிர்வாகமும்” எனும் பாடத்தின் மூலமும் சமநிலை ஆளுமை உடைய அன்றாட சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்கக்கூடிய ஆக்கத்திறன்மிக்க மாணவர் பரம்பரையை உருவாக்குவதற்கு முயற்சி எடுக்கப் பட்டுள்ளது. 10-11 தரங்களுக்கு அமுல்படுத்தப்படும் | "நிர்மாணமும் தொழிநுட்பவியலும்" பாடத்தின் மூலமும் புதிய உற்பத்தியை நிர்மாணிப்பதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி மாணவரின் ஆக்கச் சிந்தனையை வளர்ப்பதற்கு முயற்சியெடுக்கப்பட்டுள்ளது. 6-9 தரங்களில் அமுல்படுத்தப்படும் “பிரயோக மற்றும் தொழினுட்பத்திறன்” பாடமூலமும் பல்வேறு பிரயோக மற்றும் தொழினுட்ப திறன்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் மாணவர்களின் பல்வகை ஆற்றல்களை விருத்தி செய்து வெற்றிகரமான புதிய ஆக்கங்களை உருவாக்குவதில் ஈடுபடுத்துவதற்கான சந்தர்ப்பங்களை வழங்க முடியும். அதேபோல் தற்போதைய பாடசாலைகளில் அமுல் நடத்தப் படும் தேர்ச்சி அடிப்படையிலான (Competency Based Education - 5E) கல்வி மூலம் கண்டறிதல் (Exploration) மற்றும் மாணவர் கண்டுபிடித்ததை விளக்குதல் (Explanation) போன்ற சந்தர்ப்பங்கள் இரண்டும் மாணவர்களின் ஆக்கத்திறனுக்கு
அடித்தளமிடுகின்றன.
- Craft (2005) என்பவர் “ஆக்கத்திறனைக் கலைப் பாடங்களுக்கு மட்டும் எல்லைப்படுத்தாமல் சகல பாடங்களுக்கும் பயன்படுத்தமுடியும்” எனக்கூறுகிறார். உதாரணமாக உடற்கல்வி பாடத்தினுள் ஆக்கத்திறனை ஏற்படுத்துவதற்கு புதிய விளையாட்டுகளை அறிமுகப் படுத்தமுடியும். சங்கீத பாடத்தினுள் தனியாள் அல்லது
கூட்டாக பாடலை அல்லது கவிதையை நிர்மாணிக்க

Page 30
சந்தர்ப்பம் ஏற்படுத்தலாம். கணிதபாடத்தில் பிரச்சினைக்கான தீர்வுகளை இனங்காண்பதில் ஆக்கபூர்வமான சிந்தனையை பயன்படுத்தும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தலாம். இந்த முறையில் கலைத்திட்டம் மூலம் கொள்கைசார் மற்றும் பிரயோக ரீதியில் மாணவர்கள் ஆக்கத்திறன் சிந்தனை சாதனைமட்டம், ஊக்கல், சுயநம்பிக்கை விருத்திக்களை Aஏற்படுத்தமுடியும்.
ஆய்வுகளின் அடிப்படையில் இணைப்பாடவிதான செயற்பாடுகள் மூலமும் ஆக்கத்திறனை விருத்தி செய்யமுடியுமென அறியப்பட்டுள்ளது. உதாரணமாக சித்திரம், விஞ்ஞானம், கலை, கணிதம் போன்ற பிரிவுகளில் ஆக்கத்திறன் கண்காட்சிஇ களப்பயணம், சுவர்ப்பத்திரிகை, மாணவர் சஞ்சிகை, போன்றவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மாணவரின் ஆக்கச் சிந்தனையை விருத்தி செய்ய முடியும்.
மேலும் பாடசாலை நேர அட்டவணையின் மூலம் ஒவ்வொரு பாடத்திற்கும் பகிர்ந்து ஒதுக்கப்பட்டுள்ள காலம் வரையறுக்கப்பட்டுள்ளதால் சில ஆற்றல்களை மாணவர்களில் விருத்திசெய்வதற்கான வாய்ப்புக்கள் மட்டுப்படுத்தப்படுகின்றன. இடைநிலை வகுப்புகளில் ஒரு பாடத்தைக் கற்பிப்பதற்கான நேரம் 40-80 நிமிடங்களுக்கு எல்லைப்படுத்தப்படுவதன் மூலம் சில வேளைகளில் கற்றலுக்கு - கற்றல், அறிவுசார் ஆற்றல், சமூக திறன் போன்ற திறன்களை மாணவர்களில் ஏற்படுத்துவதற்கு போதுமான வாய்ப்புக் கிடைப்பதில்லை. Craft (2005) தனித்தனிப் பாடங்களாக பிரித்து கற்பித்தல் பாடஒன்றிணைப்பு செய்தலிலும் பார்க்க கலைத்திட்டம் சார் பிரச்சினைகளுக்கு அடிப்படையாக அமையலாம் என குறிப்பிடுகிறார். இதை விட பாடசாலை கலைத்திட்டத்தினுள் கட்டாய பாடங்கள் (தாய்மொழி, கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், சமயம், வரலாறு) மற்றும் தெரிவுப்பாடம் (அழகியற்கல்வி, தொழினுட்பம், வர்த்தகம்) என்பவற்றுக்கிடையில் சிறந்த தொடர்பு இருப்பதுடன் அதன் மூலம் மாணவரின் ஆக்கச் சிந்தனையை அதிகரிப்பதிலும் ஆசிரியர் கவனம் செலுத்துதல் வேண்டும். மேலும் பாடங்களுக்கிடையில் சமமின்மை ஏற்படும் வகையில் குறித்த சில பாடங்கள் தொடர் பாகக் கூடிய கவனம் செலுத்துவதுடன் (உதாரணமாக கணிதம், விஞ்ஞானம்) வேறு சில பாடங்களுக்கு குறைந்த அவதானமும் (உதாரணமாக சித்திரம், சங்கீதம்) வழங்கலானது மாணவரின் ஆக்கச் சிந்தனைக்கு தடையாக அமைகின்றன.
எல்லா மாணவர்களுக்கும் தமது ஆக்கத்திறனை விருத்தி செய்வதற்கான வாய்ப்பு கலைத்திட்டம் மூலம் வழங்கப்படலாம். சகல மாணவர்களும் பல்வேறு வகை யான நுண்மதிமட்டம், இரசனை, ஆற்றல்கள் உள்ளவர் களாதலால் மாணவர்களின் பன்முக நுண்மதிகளை

விருத்திசெய்துகொள்வதற்கு தேவையான ஆக்கத்திறன் சூழல் கலைத்திட்டமூலம் ஏற்படுத்தப்படல் முக்கியமாகும். க.பொ.த.(உ.த) இல் கலைப்பாடத்தினை கற்பதற்கு க.பொ.த.(சா.த) பரீட்சையில் கணிதப்பாடம் சித்தி யடையாமை தடையில்லாதிருக்கும் வகையில் தற்போது நடைபெறும் பரீட்சை முறை மாற்றத்திற்கு உட்படுத்தப்பட வேண்டு மென கல்வி அமைச்சு அண்மையில் வெளிப்படுத்தியுள்ளது. இது பன்முக நுண்மதி உள்ள பிள்ளைகட்கு தமது ஆக்கத்திறன் ஆற்றலை பரந்த முறையில் பயன்படுத்தி முன்னேறுவதற்கு வழியமைக்கும் - மேலும் பாரம்பரிய பரீட்சை முறை சில மாணவர்கட்கு அனுகூலமாக அமைந்திருப்பினும் பல்வகை நுண்மதிகள் உள்ள பிள்ளைகட்கு அது பிரதிகூலமாகவே அமைகின்றது.
கலைத்திட்டத்தினுள் சகல வயது குழுக்களுக்கும் பொருந்தக் கூடியவாறு ஆக்கத்திறன் ஆற்றலைத் திட்டமிடுதல் முக்கியமாகும். மேலும் ஆக்கத்திறன் ஆரம்ப அல்லது இடைநிலை தரங்களுக்கு மட்டும் எல்லைப் படுத்தப்படாது பல்கலைக்கழக மட்டம் வரை விரிவடைந்து செல்வதற்கான தேவையுள்ளது. பாடவிடயமூலம் மட்டுமல்லாது பரிபூரணமான கலைத்திட்ட மூலமும் மாணவர்கட்கு ஆக்கத்திறன் மற்றும் புத்தாக்கமென கண்டறிதலுக்கு உள்ள காலம் மற்றும் வளங்கள் போதுமானதல்ல. இதை தவிர விதந்துரைக்கப்பட்டதை விட மேலதிகமாக திட்டமிடப்பட்ட கலைத்திட்டம் (Overloaded Curriculum) மாணவர்கட்கு மட்டுமல்லாது ஆசிரியர்கட்கும் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆசிரியர் கலைத்திட்டத்திலுள்ள சகல பாடவிடயத்தையும் கற்பிப்பதற்கு கூடிய காலம் எடுப்பதாக NACCE (1999) ஆய்வு காட்டுகின்றது அவ் ஆய்விற்காக 1000 பாடங்கள் அவதானிக்கப்பட்டதுடன், ஆசிரியர்கள் நேரத்தின் 70% மட்டும் பாடவிடய அறிவை மாணவர்கட்கு வழங்கு வதற்காகவே ஒதுக்கியிருந்தனர் ஆதலால் ஆக்கத்திறன் சிந்தனையை மாணவர் களில் ஏற்படுத்துவதற்காக போதுமான அளவு காலத்தை கலைத்திட்டத்தினுள் வழங்கப்படவில்லை என இதன்மூலம் விளங்குகின்றது.
உள்ளார்ந்த ஊக்கம் ஆக்கத்திறன் சிந்தனையின் பிரதான அங்கமாக அமைவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதனால் மாணவர்களின் விடய அறிவு (Factual Knowledge) மாணவரிடம் இரசனை மற்றும் சமநிலையை ஏற்படுத்து வதுடன் பிள்ளைகளிடம் ஆக்கத்திறன் சிந்தனையையும் ஏற்படுத்தமுடியும் . Runco (2003) எளிதுபடுத்தும் செயன் முறையை இரு அடிப்படை படிகளாகக் குறிப்பிட முடியும். 1) உள்ளார்ந்த இரசனையை விருத்திசெய்தல்
2)
மாணவர்களின் சமகால அனுபவங்களுடன் கலைத் திட்டத்தினை பொருத்துதல்
அகவிழி | ஏப்ரல் 2014 8

Page 31
(இதற்கு பல்வேறு தலைப்புக்களுக்கிடையில் மாணவர்களின் கவனத்தை பேணக்கூடிய தலைப்பு தொடர்பாக கவனம் செலுத்துதல் வேண்டும்)
இதன்படி கலைத்திட்டத்தினை திட்டமிடுகையில் மாணவரின் இரசனை தொடர்பாக கவனம் செலுத்துதல் மாணவர்கட்கு தமக்கு விரும்பியதை கற்பதற்கும் கண்டறிதலுக்கும் இயலுமானவிதத்தில் போதுமான அளவு நேரத்தையும் அவகாசத்தையும் வழங்குதல் என்பன முக்கியமானதாகும்.
ஆக்கத்திறனும் கணிப்பீடும்
கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் கணிப்பீடு (Assignment) என்பது மிக முக்கியமானதாகும். மேலும் அது கற்றல் - கற்பித்தல் எனும் இரு அம்சங்களினதும் முன்னேற்றத்தினை காட்டும் அளவீடாகவும் உள்ளது. மாணவர் மத்தியில் ஆக்கத்திறன் மற்றும் புத்தாக்கம் என்பன விருத்தி அடைவதில் தற்கால கணிப்பீட்டு முறை மூலம் குறைந்த அளவிலான வாய்ப்புக்களே கிடைப்பதாக ஆய்வுகள் மூலம் காட்டப்பட்டுள்ளது.
தற்காலத்தில் நடைமுறையிலுள்ள முறைசார் பரீட்சை செயல்முறை ஆக்கத்திறன் கற்றலுக்கு தடைகளை ஏற்படுத்துகிறது. Wyse and Jones (2003) ஆக்கத்திறன்கள் விருத்திக்கு பாடசாலையில் நடைமுறையிலுள்ள பரீட்சை முறைகள் வரையறுக்கப்பட்ட சந்தர்ப்பங்களையே வழங்குகிறது என கூறுகிறார்கள். அநேகமாக தேசிய மட்டத்தில் நடைபெறும் பரீட்சைகள் போன்று தவணை இறுதிப்பரீட்சையிலும் மாணவர்களின் ஆக்கத்திறனை கணிப்பீடு செய்தல் நடைபெறுவதில்லை. பரீட்சை மையக் கல்வி ஆசிரியர் மாணவர்களில் அதிக அழுத்தத்தையும் ஏற்படுத்துவதுடன் எல்லா நேரத்திலும் மிகவும் நல்ல தரத்தினை (Grade) பெற்றுக்கொள்வதை மட்டுமே ஆசிரியர் மாணவர் இருசாராரும் எதிர்பார்க்கின்றனர்.
எவ்வாறிருப்பினும் கணிப்பீட்டுச்செயன்முறையில் ஆசிரியர்கள் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அமைப்பு (Formative assessment) மற்றும் இறுதி (summative assessment) மதிப்பீட்டு முறைகளைவிட மாணவர் ஆக்கத்திறனை மதிக்கக்கூடியதாக ஆய்ந்தறி (குறைகாண்) கணிப்பீடு (Diagonostic assesment) போன்றவற்றை பயன் படுத்தமுடியும். மேலும் எல்லா வயது குழுக்களிலுமுள்ள மாணவர்களின் ஆக்கத்திறனை மதிப்பிடுவதற்கு அவ்வவ் வயதுகளுக்கு பொருத்தமானவாறு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஆக்கத்திறனுடன் நிர்ணயிக்கும் செயற்பாடுகளை திட்டமிடவும் முடியும் இவ்வாறான முறைகள் மூலம் மாணவர் ஆற்றல் (Capabilities) மற்றும் உளச்சார்புகளை (Aptitudes) விமர்சிப்பதற்கு ஆசிரியர்க்கு வாய்ப்புக்கள் உள்ளன.
8 அகவிழி | ஏப்ரல் 201.

ஆசிரியர் தரங்களை வழங்கி (Grades) மாணவர்களை ஊக்கப்படுத்துவதைக் காட்டிலும் கற்றல் - கற்பித்தல் செயல்முறையில் மாணவர்களை தொடர்ச்சியாக உற் சாகத்துடன் ஈடுபடுத்துவதற்கு முயற்சி எடுத்தல் வேண்டும் என Beghetto (2003) குறிப்பிடுகிறார். எனினும் மாணவர் மத்தியில் காணப்படும் பல்வகைமைக்கேற்ப கணிப்பீட்டுச் செயல்முறையில் மாணவர்களின் அடைவும் பரந்த வேறுபாட்டைக் காட்டும். உதாரணமாக சில மாணவர்கள் எழுத்து (Written) பரீட்சைகளில் உயர் அடைவையும் வாய்மொழி (Oral) பரீட்சையில் குறைந்த அடைவையும் காட்டுவர். மாணவர்களின் விடைகளின் தனித்துவத்தை மதிப்பிடல் (Valuing uniquness of responses) திறந்த வினாக்களைக்கேட்டல் (Asking open-ended questions), அறவொழுக்க பண்புகளை கணிப்பிடல் (Giving moral assessments) போன்ற முறைகளின் மூலம் கணிப்பீடுகளுடாக மாணவர் ஆக்கத்திறன் விருத்தியை ஏற்படுத்த முடியும். சுயகணிப்பீடு, சகபாடிக் கணிப்பீடு (Peer assessment methods) போன்றவற்றையும் ஆக்கத்திறன் கற்றல் விருத்திக்காக பயன்படுத்தமுடியும் அதன்மூலம் மாணவர்கள் ஒருவருக் கொருவர் போட்டியிட்டு “தரங்களை” பெற்றுக்கொள்ள முயற்சி எடுப்பதைவிடவும் தமது அடைவுமட்டத்தினை மேலும் விருத்தி செய்வதற்கு முயற்சி எடுப்பதினால் மாணவர் கற்றல் மகிழ்ச்சிகரமானதாகவும் ஆக்கபூர்வமான சிந்தனையை விருத்திசெய்வதாகவும் அமையும்.
ன
இதைவிட கல்வி இலக்கினை சரியாக அமைத்துக்கொள்வதும் ஆக்கபூர்வமான சிந்தனை விருத்திக்கு அவசியமானதாகும். Simplicio (2000) & Beghetto (2005) கல்வி இலக்கை திட்டமிடுதலின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிடுகையில் இலக்கை திட்டமிடுகையில் அது ஆசிரியர் மாணவர் இருசாரார்க்கும் தெளிவாக இருப்பதுடன் ஆசிரியர் கற்பிக்கும் முறைபோன்று மாணவர் கற்றல் நடைபெறும் முறை பற்றியும் இரு சாராருக்கும் சிறந்த விளக்கம் இருத்தல் வேண்டும் என தெரிவிக்கின்றனர். கணிப்பீட்டுச் செயன்முறையினுள் அடைவை இலக்காகக் கொண்ட அமைப்பின் (Programme goal structure) மூலம் பிழைகளைத் தவிர்த்தல், அதியுயர் ஆற்றலுடையதாதல் (To be best) என்பவற்றின் ஊடாக உயர்புள்ளி பெறுவதற்கு கவனம் செலுத்தப்படும் எனினும் இலக்கை ஆளுகை செய்வதன் (Mastering goal Structure) மூலம் சுய விருத்தி மற்றும் ஆற்றலை விருத்தி செய்தல் போன்றன தொடர்பாக கவனம் செலுத்தப்படுகிறது இங்கு கற்றல் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்படுவதுடன் புள்ளிகள் தொடர்பாக கவனம் செலுத்தப்படுவதில்லை.
இதன்மூலம் மாணவரின் மனவெழுச்சி, கற்றலுக்கு உள்ள. முயற்சி, இரசனை என்பன விருத்தி அடைவதுடன் ஆக்க பூர்வமான சிந்தனை ஆற்றலையும் அதிகரித்துக்கொள்வதற்கு தேவையான சூழல் ஏற்படுகின்றது.

Page 32
ஆக்கத்திறன் புதிய இலக்கு
தற்போதைய கற்றல் - கற்பித்தல் செயன்முறையினுள் ஆக்கத்திறனுடைய சூழலைக் கட்டியெழுப்புவதற்காக ஆசிரியர் வகிபங்கானது புதிய இலக்கு நோக்கு என்பவற்றை இனங்காணும் வகையில் மாற்றத்திற்கு உட்படவேண்டியுள்ளது. இந்த மாற்றத்திற்கு ஆசிரியர் ஆக்கத்திறன் மற்றும் புத்தாக்கத்தினை ஏற்படுத்தும் பிரதான நுட்பங்கள் காரணமாகின்றன. "ஆக்கத்திறனை விரும்பும் ஆசிரியர் தமது கற்பித்தல் முறையியலை மாற்றுவதற்கு விருப்பம் காட்ட வேண்டும்” என Simplicio (2000) குறிப்பிடுகிறார். ஆதலால் நவீன தொழினுட்ப மாற்றத்துடன் இசைந்து செல்லக்கூடிய மாணவர் மைய கற்பித்தல்முறைகள் மூலம் பல்வேறு நுண்மதிமட்டம், கற்றல் பாங்குகளையுடைய மாணவர்களின் ஆக்கத்திறன் கற்றலை விருத்தி செய்வதற்கு வசதியளிப்பவராக ஆசிரியர் செயற்படல் முக்கியமாகும்.
கல்வி புத்தாக்கத்தில் ஆசிரியர் சக ஆசிரியருடன் அறிவை பகிர்ந்துகொள்ளும் வலையமைப்பை (Network) ஏற்படுத்திக்கொள்வது முக்கியமாகும் தம்மிடம் உள்ள அறிவு அனுபவங்களை சக ஆசிரியருடன் பகிர்ந்து கொள் வதற்கு இது வாய்ப்பளிக்கும். தற்போது செயற் பாட்டிலுள்ள "School net web portal” ஊடாக ஆசிரியருக்குப் போன்று மாணவர்கட்கும் கற்றல் கற்பித்தல் செயல்முறையினுள் ஆக்கத்திறன் கற்றல் மற்றும் புத்தாக்க கற்பித்தல் முறைகளை பகிர்ந்துகொள்ளும் வலையமைப்பை ஏற்படுத்தி கொள்வது காலத்தின் தேவையாகும். தகவல் தொழினுட்பத்தின் அதீத வளர்ச்சி மற்றும் மாணவர் தேவைகளின் விரிவாக்கம் என்பவற்றுக்கேற்ப கற்பித்தல் பாங்கினை மாற்றுவதற்கு கல்வியியலாளர்கள், கல்வி நிறுவனங்கள் என்பவற்றின் ஆக்கத்திறனை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர் வகிபங்கும் மாற்றத்திற்கு உட்பட வேண்டும். ஆசிரியர் கற்றல் - கற்பித்தல் செயன்முறையினூ டாக ஊக்குவிப்பாளராகவும் வசதிப்படுத்துபவராகவும் செயற்பட வேண்டியதுடன் மாணவர்மைய முறைகள் பின்பற்றப்படுதலும் அவசியமாகும்.
ஆக்கத்திறன் கற்றல் மற்றும் புத்தாக்க கற்பித்தலுக்காக கற்றல் சூழல், கலைத்திட்டம் கணிப்பீட்டு முறைகள் போன்று தொழினுட்ப ஒன்றிணைப்பும் அவசியமாகும். புத்தாக்க மற்றும் ஆக்கத்திறன் கற்பித்தலுக்கு பயிற்சி உடன் கற்பித்தலுக்கான புத்தாக்க முறைகள் பயன் படுத்தப்படல் வேண்டும். மாணவர்கட்கு கண்டறிதலுக்கு தேவையான சுதந்திரம் மற்றும் நேரம் வழங்கப்படுவதுடன் மாணவர் இரசனையிலும் கவனம் செலுத்துதல் அவசிய மாகும். ஆக்கத்திறன் கற்றல் சூழலை ஏற்படுத்துவதில் ஆசிரியர்களே முக்கிய பங்கினை வகிக்கின்றனராயினும் அவர்களுக்கான கொள்கை உருவாக்கம் மற்றும் கல்வி

நிறுவனங்களின் உதவி ஒத்தழைப்புக்கள் அவசியமாகும் . ஆக்கத்திறன் மற்றும் புத்தாக்கப் பயன்பாட்டுக்கு அவசியமான வசதிகள் வழங்கப்படுவதுடன் பொருத்தமான விதத்தில் ஆசிரியர் பயிற்சியை நவீனமயப்படுத்துவதும் காலத்தின் தேவையாக உள்ளது.
உசாத்துணை நூல்கள்
Amabile T.M. (1998) How to kill creativity, Harvard business review 76(5), 76-87. Beghetto, R.A. (2007). Does creativity have a place in classroom discussion? prospective teachers response performances. Thinking Skills and Creativity 2, 1-9 Boden, M. (2001). Creativity and Knowledge. In A.Craft, B.Jeffrey &M.Leibling (Eds) Creativity in education (pp.95-102). London: Continuum Craft, A. (2005). Creativity in Schools: tensions and dilemmas. London : Routedge. Esquivel, G.B. (1995) Teachers behaviours that foster creativity. Educational psychology Review, 7(2), 185-202. Feldman, R.S. (2005) Essential of Understanding psychology. Mc Graw Hills Companies Ferrari, A., Cachia, R.and punie, Y. (2009) Innovation and creativity in Education and Training in the EU Member States : Fostering Creative Learning and supporting Innovative Teaching : Literature review on Innovation and creativity in E &T in the EU Member States (ICEAC), European Commission, Joint Research Centre Institute for prospective Technological Studies. Lubart, T.I. (1999). Creativity across cultures. In R.J. Sternberg (Ed) Handbook Creativity (pp. 339-350) Cambridge: Cambridge University Press.
Milgram, R.M. (1990). Creativity: An idea whose time has come and gone In R.S.Albert & M.A. Runco (Eds). Theories of Creativity of Creativity (pp215- 233) NY: London, Sage Publications. NACCCE. (1999). All Our Futures: Creativity, Culture and Education Retrived from http://www.cypni.org.uk/downloads/alloutfutures.pdf. on 28.12.2010
Ng, A.-K. & Smith, I. (2004) Why is there a paradox in promoting creativity in the Asian classroom? In Lau, A.N.N. Hui & G.Y.C.Ng (Eds). Creativity: When east meets west (pp.87-112): World Scientific publishing Company Runco M.A. (1999) Implicit Theories. In M.A. Runco & S.R.Pritzker (Eds), Encyclopedia of creativity (Vol.2, pp.27-30). San Diego, California; London; Academic. Russ, S. (1996). Development of CreativeProcess in Children. New Directions for Child Development, 72,31-42. Sharp, C.(2004) Developing young Children's Creativity: what can we learn from research? Topic, 32,5-12. Retrived from http://www.nfer. ac.uk/nfer/publications/55502/55502.pdf on 12.11.2010. Simplico, J.S.C.(2000). Teaching classroom educators how to be more effective and creative teachers Education, 120(4), 675-680.
Wyse,D.,&Jones, R. (2003). Creativity in the primary curriculum. London: David Fulton
*
J860 | gusi 2014 m
Diff Cigi bor ISTORIE
ALGTE ATT SKETE

Page 33
கல்வியில் சமூகவியல் எண்ணக்
ஜே.டீ. கரீம்தீன் விரிவுரையாளர், இடைநிலை, மூன்றாம் நிலைக் கல்வித்துறை கல்விப்பீடம், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
சமூக மாற்றங்கள் விரைவாக ஏற்படும் போது சமூகவியல்சார் கல்விச்சிந்தனைகளும் விரைவுபடுத்தப்படும். சமூக மாற்றங்களில் மிக முக்கியமானதாக விளங்கும் கல்வித்துறை மாற்றம், சமூக அசைவியக்கத்தை விரைவு படுத்தும். கல்வி மாற்றம் ஏற்படுவதில் பல காரணங்கள் செல்வாக்குச் செலுத்தினாலும் மிகப்பிரதானமானது சமூகத்தின் தொழிற்கட்டமைப்பில் ஏற்படும் மாற்றமாகும். தொழிற்கட்டமைப்பின் மாற்றம் கல்வி நிறுவனக்கட்டமைப்பை மாற்றுகின்றது. தொழிற்கட்டமைப்பின் மாற்றத்தால் நவீன வகைத் தொழில்களுக்கான கேள்வி உருவாகிறது. இக்கேள்வியால் தூண்டப்பெற்ற கல்வி நிறுவனங்கள் அத் தொழில்களுக்கத் தேவைப்படும் அறிவையும் திறன்களையும் கொண்ட இளம் தலைமுறையினர் உருவாக கல்விநிறுவனக்கட்டமைப்பும் மாற்றம் பெறுகிறது.
இருபதாம் நுாற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் சமூகவியலாளர்களும் கல்வியியளார்களும் ஒன்றிணைந்து எதிர்கால சமூகவியல் முன்னேற்றங்களை கருத்திற் கொண்டவர்களாக, அப்போது நடைமுறையில் இருந்த பல்வேறுபட்ட விதிகளினால் ஆளப்பட்ட நம்பிக்கைகள், மனித நடவடிக்கைகள், நடைமுறைகள் என்பனவற்றை நிராகரித்து அதற்கு மாற்றீடாக சமூகத்தின் ஆரோக்கியமான இலக்குகளை அடைவதற்கு புத்திஜிவிகளினால் மட்டுமே முடியும் என வலியுறுத்தினர். லிஸ்ட்டன் வோர்ட் (Lesten Ward), அல்பியன் ஸ்மோல் (Albion Small) ஆகிய சமூகவியல் முன்னோடிகள் மற்றும் வில்லியம் ஜேம்ஸ் (William James), ஜோன் டுயி (John Dewy) ஆகிய கல்வியியலாளர்களும் இதற்காக உழைத்தவர்களில்
முக்கியமானவர்களாவர்.
கல்வியில் சமூகவியல் என அடையாளப்படுத்தப்பட்ட இக்காலப்பகுதியில் சமூகவியலாளர்களும், கல்வியியலாளர் களும் ஒன்றிணைந்து நெருங்கிப் பணியாற்றினர். சமூகத்தினதும், மனித குலத்தினதும் முழுமைக்காக பணியாற்றுவதே இவர்களது இலக்காக இருந்தது. பாட சாலைகளினால் கற்ற சமூகங்களையும், புத்திஜீவிகளையும் உருவாக்க முடியும் எனவும் அவர்களினால் சமூகத்தினை சீர்திருத்த முடியும் எனவும் இந்த இரு பிரிவினரும் பொதுவான நம்பிக்கையை கொண்டிருந்தனர். சமூகங்களுக்
S அகவிழி ஏப்ரல் 2014

5கருக்கள்
மைய
கிடையிலானதும் கல்விக்கிடையிலானதுமான தொடர்பினை மையமாக வைத்து கல்வி சமூகவியியலர்களினால் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. உதாரணமாக பாடசாலைகளில் அறிவியல் ரீதியாக அனைத்துப் பாடங்களும் கற்பிக்கப்படும் சந்தர்ப்பத்தில் மட்டுமே எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்க கூடிய மனிதர்களை உருவாக்கலாம் என்றனர். சமூக நோய்களை கல்வியினால் மட்டுமே குறைக்க முடியும் என வாதாடினர். பாடசாலைகளுக்கும், குடும்பங்களுக்கும், விஷேட குழுக்களுக்கும், மாணவர் களுக்குமிடையிலான முரண்பாடுகளை நிர்வகிக்க கூடிய அனைத்து முறைமைகள் பற்றியும் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றள்ளன.
சமூகத்தின் அனைத்து செயற்பாடுகளுக்கும் கல்வி தேவையானதாகும். கல்வியானது முறைசார்ந்தாகவோ, முறைசாராததாகவோ, முறையில் கல்வியாகவோ இருக்கலாம். கல்விமாதிரியானது சமூகத்தின் பல்வேறுபட்ட செயற்பாடுகளையும் செய்கின்ற தேவைப்படுகின்ற திறமைகளின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
சமூகத்திற்கும் கல்விக்குமிடையிலான தொடர்புகளை ஆராய்வதுதான் கல்விச் சமூகவியல் என யுஉமழவவயறயல குறிப்பிடுகின்றார். மேலும் அவர் குறிப்பிடுகையில் கல்வி சமூகவியலானது கல்வியின் நோக்கங்கள், முறைகள், நிறுவனங்கள், நிர்வாகிகள் மற்றும் கலைத்திட்டம் என்பன ஒரு சமூகம் இயக்குகின்ற செயன் முறைகளான அச்சமூகத்தின் பொருளாதாரம், அரசியல், மதம், சமூக மற்றும் கலாசார அம்சங்களுடன் கொண்டிருக்கின்ற தொடர்புகளை ஆராயும் என்றார். ஒரு தனிநபரின் கல்வி எனும் போது சமூக வாழ்க்கை, மற்றும் சமூக தொடர்புகள் அவரின் ஆளுமை விருத்தியில் தாக்கம் செலுத்துவதை ஆராயும் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
கல்வி நிறுவனங்களையும் அவற்றின் தொழிற்பாடு களையும் சமூகவியல் சார்ந்த நிலைப் பாட்டிலிருந்து பார்க்கின்ற இயலாக கல்வி சமூகவியல் அமையும் பொழுது, கல்விக்கும் சமூக தொகுதிக்கும் இடையிலுள்ள தொடர்புகளும் அந்நிறுவனங்கள் கல்வியில் கொண்டுள்ள வகிபங்கும் இங்கு முக்கிய பொருளாக இடம்பெறுகின்றன.

Page 34
சமூக உறவுகள், சமூக அடுக்கமைவு இவை பற்றிய மனப்பாங்குகள், கல்வி நிறுவனங்களிடையில் நிலவும் ஊடாட்டங்கள் சார்ந்த ஒழுங்குமுறைகள், ஆசிரியர் மாணவர் உறவுகள் போன்ற வியடங்களில் கல்வி சமூகவியல் செல்வாக்குச் செலுத்துகின்றது.
கல்விக்கும் சமூகத்துக்குமுள்ள தொடர்புகளை விஞ்ஞான முறையிலும், உடன்பாடான முறையிலும் எடுத்துக்காட்டும் அணுகுமுறைகள் 20ம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் தோன்றின. கொம்டே சமூகவியலை ஒர் தனியியலாக அறிமுகப்படுத்திய காலத்தில், அதன் முக்கிய எண்ணக்கரு சமூக முன்னேற்றமாக இருந்தது. கல்வியும் சமூக முன்னேற்றத்துடன் தெளிவான தொடர்புகளை கொண்டிருந்ததால், கல்வியின் சமூகத் தொழிற்பாடுகள் சமூகவியலாளரின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்திருந்தது. இந்த வகையிலே கொம்டேயுடன், ஸ்பென்சர், எமில் டேர்கைமின் ஆகியோரும் முக்கியம் பெறுகின்றனர். இவர்களுள் எமில் டேர்கைமின் கல்வியின் விஞ்ஞானம் என்றவிடயம் பற்றி கூறுகையில், கல்வியின் சமூகம் சார்ந்த இயல்புகளை விஞ்ஞான ரீதியாக வரையறை செய் ததுடன் கல் வியானது இளந் தலைமுறையினரை முறைப்படி சமூகமயப்படுத்துகின்றது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
சமூகவியல் ரிதியில் “சமூகமயமாக்கல் ஒரு செயல் முறையென்றும், இச்செயல் முறை முக்கியமாகப் பாடசாலையச் சார்ந்தகாணப்படுகின்றது எனினும் ஒழுங்குட்பட்ட சகல கல்விச் செயற்பாடுகளும் முயற்சிகளும்

31-12
அவற்றின் இலக்ககளும் கல்விச் செயற்பாடுகளை ஓர் உறுதியானதிசையில் நெறிப்படத்துகின்றன. (Fairchild) இச் செயல்முறையின் மூலம் தனியாள் ஒருவர் நடத்தை களையும் பெறுமானங்களையும் கற்றுக் கொள்வதுடன் சமூகத்தில் குறிப்பிட்ட வகிபங்கினை ஏற்றுக்கொள்வதன் மூலம் ஏனையவரால் அங்கீகரிக்கப்படும் நிலைமையும் உருவாகின்றது. (கருணாநிதி. மாஇ 2008)
கல்விச் சமூகவியலின் நோக்கங்கள்
ஒரு தனிநபர் சக தனிநபருடன் கொண்டுள்ள தொடர்பானது, சமூக சூழ்நிலையில் சமூக தொடர்பாக அடையாளப் படுத்தப்படும். சமூக தொடர்பின் ஒரு முக்கியமான அம்சம் என்ன வெனில், தனி நபர்கள் அவர்கள் வாழும் குழுவிலே ஏனைய வகுப்பினர்களின் விருப்பங்கள், மனப்பாங்குகள் மற்றும் நடத்தைகளின் ஏதோ ஒருவகையில் செல்வாக்குக்கு உட்படுகின்றனர். குறிப்பிட்ட குழுவினர் நடத்தை மற்றும் மனப்பாங்கிற்கு ஏற்ப தனிநபரும் மாறுகின்றார்.
இதனை இடைவினை எனலாம். இந்த இடைவினை இரு தனிநபர்களுக்கிடையே மட்டும் நடைபெறுவதில்லை (ஆசிரிய - மாணவர்) மாறாக தனிநபருக்கும் ஒரு குறிப்பிட்ட குழுவிற்குமிடையில் இடம்பெறலாம். இரு குழுக்களுக்கிடையேயும் இந்த இடைவினை இடம்பெறலாம் 2 (இரண்டு பாடசாலைகளுக்கிடையே) அல்லது பல குழுக்களுக்கிடையேயும் இடம்பெறலாம் (பல பாடசாலைக் கிடையே நடைபெறும் போட்டி நிகழ்ச்சிகள்). கல்வி சமூக வியலானது இடைவினை பற்றி அதிகம் கரிசனை காட்டுகின்றது. ஒரு குழவிலுள்ள தனிநபர்களுக்கிடையே
2014 (8

Page 35
நிகழும் இடைவினைகள் ஒரு தனிநபருக்கும் குழுவிற்கு மிடையே இடம் பெறும் இடைவினைகள், இரண்டு குழுக்கிடையே அல்லது பல குழுக்கிடையே இடம்பெறும் இடைவினைகளை கல்வி சமூகவியல் அதிகம்
ஆராய்கின்றது என. J. Brown குறிப்பிட்டார்.
சமூகம் இடைவினைகளினூடாக ஒவ்வொரு தனிநபரும் அல்லது ஒவ்வொரு குழுவும் தமது குழுவிலே அவர்களின் அந்தஸ்தினையும், அந்த அந்தஸ்த்திற்கு ஏற்ப தாம் வகிக்க வேண்டிய தமது வகிபாகங்களையும் தெரிந்து கொள்வார்கள்.
தனிநபர்கள் சுயமாகவோ, தானாகவோ, ஒப்பீடு செய்தோ அவரது வாழ்க்கை பாணியையும், நடத்தை களையும் கற்றுக்கொள்கின்றனர்
கல்விசமூகவியலின் ஊடாக
சமூகத்தில் ஆசிரியர் தன் வகிபாகத்தை விளங்கிக் கொள்ளல். சமூக முன்னேற்றத்தின் ஒரு நிறுவனமாக பாடசாலை
அதன் வகிபாகத்தை விளங்கி கொள்ளல் ஜனநாயக அடையாளங்கள் மற்றும் கலாசார சமூக போக்குகள், பொருளாதாரம் என்பன முறை சார்ந்த முறைசாராத கல்வி நிறுவனங்களுடனான தொடர்புக் கேற்ப இந்நிறுவனங்களின் வகிபாகங்களை அறிந்து கொள்ளல். பாடசாலைகளைப் பாதிக்கின்ற சமூக காரணிகளை விளங்கிக்கொள்ளல். பாடசாலை முறையினால் மாணவர்களில் தாக்கம் செலுத்துகின்ற சமூக சக்திகளை விளங்கிக்கொள்ளல். கலைத் திட்டத்தை சமூக மயமாக்குதல்
இந்த நோக்கங்களை அடைந்து கொள்ள சமூகவியல் ஆய்வு நுட்பங்களையும் விமர்சன ரீதியான சிந்த னையையும் பாவித்தல்.
கல்விச் சமூகவியலும் ஆசிரியர்களும்
F) அகவிழி ஏப்ரல் 2014
சமூக மயமாக்கல் நிறுவனங்களில் பாடசாலை பிள்ளை களை சமூக மயப்படுத்துவதிலே பிரதான இடத்தினை வகிக்கின்றது. குறிப்பிட்ட சமூகத்தின் விழுமியங்கள், பழக்க வழக்கங்கள், பாரம்பரியம் மற்றும் கலாசாரம் என்பனவற்றை ஆசிரியர் அறிந்தவராக இருப்பதுடன் அவற்றுக்கு ஏற்ப தனது கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறவராகவும் இருக்க வேண்டும். சமூகத்தின். விழுமியங்கள், பழக்கவழக்கங்கள், பாரம்பரியம் மற்றும் கலாசாரம் என்பனவற்றை முறைசார்ந்த அடிப்படையில் பாகமாக்கும் வகிபாகத்தை பாடசாலை வகிக்கின்றது. சமூகமானது எவ்வித மாற்றமும்

இன்றி இயங்கி கொண்டிருப்பின் அங்கு ஆசிரியருக்கு தனது பணி இலகுவாகவே இருக்கும். சமூகமானது இயக்கமானதாகவும், மாற்றத்திற்குட்படுவதாகவும் இருப்பின் அம்மாற்றங்களையும் இயக்கங்களையும் ஆசிரியர் அறிந்து அதற்கு ஏற்ப தனது பணியை மேற்கொண்டால் மட்டுமே எதிர்கால சவால்களை எதிர்நோக்கக் கூடிய மாணவர் சமுதாயத்தினரை ஆசிரியரால் உருவாக்க முடியமாக, இருக்கும்.
சமூக செயன்முறைகளானது விரைவான மாற்றத்திற்கு உட்பட்டுக் கொண்டிருப்பின், அம்மாற்றங்களுக்கு ஏற்ப பாடசாலை தனது செயன்முறைகளையும் பரந்த அளவில் ஏற்றுக் கொண்டு சமூகத்தின் தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றக் கூடிய நிறுவனமாக பரிணமித்தல் வேண்டும். இதன் போது ஆசிரியர்கள் சமூகத்தின் இயங்கியல் செயன்முறை மாற்றங்களையும் இற்றைப் படுத்துபவராக எப்போதும் காணப்படுவார்.
பிள்ளைக்கு வழங்கப்படும் கல்வியானது, குடும்பம், சமூகம், நாட்டின் நலன்களையும் பேண முற்படுவது போல, பிள்ளைகளின் நலன்களையும் பேணுதல் வேண்டுமென்பது செப்பேர்ட்டின் கருத்தாகும். சேப்பேர்டின் கருத்துப்படி, கல்வியின் இலக்கு தனியான ஒருவரின் ஒழுக்க விருத்தியாகும். அவ்விருத்தியின் வழியே சமூக நலன்களை பேணும் வழிமுறைகளையும் விருத்தி செய்யலாம் என்பது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. புரோபல் சமூகவியல் அம்சங்களை விபரிக்கும் வேளைகளில் பாடசாலைகள் சிறிய சமூகங்கள் என்னும் கருத்தினை வலியுறுத்தியுள்ளார். கல்வி ஒரு முக்கோணத் தொடர்பு கொண்ட (ஆசிரியர், மாணவர், மற்றும் கற்கும் விடயம்) செயல்முறையாகும். ஆசிரியர்கள் மாணவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த, மாணவரின் அறிவினை அடிப்படையாகக் கொண்ட சில பொருள் பொதிந்த விளக்கங்களை உருவாக்க, நாம் கற்பிக்கும் பாடங்களிலும் மாணவரின் உளவியல் மற்றும் சமூகப் பின்னணிகளிலும் விளக்கமுடையவராக இருத்தல் வேண்டும். கற்பித்தலின் மூலம் மாணவர்கள் தமது சூழலை விளங்கிக் கொண்டு அதற்கேற்ப செயற்பட ஏதுவாகின்றது. கற்பித்தல் மூலம் மனவெழுச்சிக்கான பயிற்சிகளும் கற்பதற்கான தூண்டு தல்களும் உண்டாவதால், எதிர்கால வாழ்க்கைக்கு ஆயத்தஞ் செய்யப்படுகின்றனர். வகுப்பறையிலே ஆசிரியர்கள் செயற்பாடுகள் பற்றிய கோட்பாடுகளை விளக்குதல், போதிய ஊக்கலை வழங்குதல், கல்வி செயற் பாடுகளை வாழ்க்கை அனுபவங்களுடன் இணைத்தல், மாணவரிடையில் காணப்படும் தனியாள் வேறுபாடுகளை அறிதல், ஜனநாயக நடைமுறைகளை கற்பித்தல், மாணவரின் ஆக்கத்திறனை மேம்படுத்தல் என்பவற்றின் வாயிலாகவும் சமூகமயமாக்கலுக்கு உதவலாம்.

Page 36
' ஏ ' பெற்ற மாணவர்களுக்கு தேவையா?
கி., சீலதாஸ்
2013 ஆம் ஆண்டு க.பொ.த சா/த பரீட்சை முடிவுகள் பற்றி நாம் அறிந்ததைக் கொண்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது. தமிழக கல்வி நிலையை பற்றியதானாலும் எமது கல்விக் கொள்கைக்கும் பரீட்சை பெறுபேறுகளுக்கும் இவ்வாக்கம் மிக பொருத்தமானதென்பதால் பிரசுரமாகிறது.
ஆரம்ப நிலை, இடைநிலைப் பள்ளிகளில் இறுதியாக நடத்தப்படும் பரீட்சைகளில் “ஏ” பெற்ற மாணவர்களைச் சிறப்பிப்பதும், பணத்தை பரிசாகக் கொடுப்பதும், அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் சமுதாயத் தொண்டர்கள், பிரமுகர்கள், அரசியல்வாதிகள் கலந்து கொண்டு அவர்களை புகழ்ந்து பேசுவதும் இந்தச் செய்திகள் தமிழ் நாளிதழ்களில் பிரசுரமாவதும் ஒரு கலாச்சாரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. நானும் தனிப்பட்ட முறையில் என்னால் இயன்ற பொருள் உதவியைச் செய்துள்ளேன். “ஏ” பெற்றவர்களைப் புகழ்ந்து பேசியுமிருக்கிறேன். இது முறைதானா அல்லது இந்த முறை ஒரு கலாசாரமாக வளர்வதை ஊக்குவிக்கலாமா என்பதை ஆய்ந்து பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
சில காலமாகவே “ஏ” பெற்ற மாணவர்களைச் சிறப்புச் செய்யும் நிகழ்ச்சிகளைப் பற்றி நான் சிந்தித்ததுண்டு. மேலை நாட்டுக்காரர்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை. அதற்காக அங்கே எல்லா மாணவர்களும் சிறப்பான தரத்தைக் கொண்டவர்கள் என்று சொல்ல முடியாது. இந்தியாவிலும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடப்பதாக எந்தத் தகவலும் இல்லை. இந்நாட்டில் "வாழும் சீன, மலாய் சகோதரர்கள் இப்படிப்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துவதாகக் கேள்விபட்டதில்லை- ஆர்வங் கொண்டவர்களாகத் தெரியவில்லை. அதற்காகச் சீன, மலாய் மாணவர்கள் பல பாடங்களில் “ஏ” பெறத் தவறியதில்லையே.
பரீட்சை என்றதும் மாணவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் சங்கடமும், அச்சமும், பீதியும் ஏற்படுவது இயல்பு. ஆங்கிலேய எழுத்தாளரும், திருச்சபை சமய குருவானவரும் சார்லஸ் காளேப் கோல்ட்டன் (Charles Caleb Colton) பரீட்சைகள் பற்றி சொல்லும்போது:

ச் சிறப்பு விழாக்கள்
“நன்றாகத் தயார் நிலையில் இருப்பவர்களுக்குக்கூட பரீட்சைகள் அஞ்சத்தக்கதாக இருக்கும். காரணம், விவேகமானவர் பதிலளிக்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய முட்டாள் அதிகமான கேள்விகளைக் கேட்பான்” என்றார்.
எனவே, பரீட்சைக்குத் தயார் செய்யும் போது பல இன்னல்கள், மனச்சஞ்சலம், ஐயம், பயம் ஏற்படுவது தவிர்க்க முடியாதவையாகும். ஆசிரியர்கள் பரீட்சைகளில் எப்படிப்பட்ட அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்று சொல்லித் தருவதும் வழக்கமாகிவிட்டது. இப்போது நாளிதழ்களும், மாத, வார இதழ்களும் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு பரீட்சைகளில் எதிர்பார்க்க வேண்டிய வினாக்களைப் பற்றி குறிப்பிட்டு அவற்றை நன்றாக அலசிப் பார்த்து, மாதிரி விடைகளைத் தருகிறார்கள். மெச்சத்தக்கச் செயலே.
“பதினொன்றில் தேர்வு என்றால் அது மகிழ்வு, நேர்மை, உய்த்துணர்வு வளரும்படி செய்வோம்”, என்றார் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆசிரியரும் கல்விமானுமான ஏ.எஸ்.நீல் (A.S.NEIL) என்பவர்.
பிரபல ஆங்கில நாவலாசிரியர் விர்ஜினியா ஃபூல்வ் (Virginia Woolf) பரீட்சைகள் பற்றி, “சாதாரண மனிதனை சாதாரண தினத்தன்று பரிசோதிக்க வேண்டும்!” என்றார்.
பொதுவாகச் சொல்லவேண்டுமானால் பள்ளிக் கூடங்களில் நடத்தப் பெறும் பரீட்சைகளில் பற்றி மேலை நாட்டவர்களின் ஒருமித்த கருத்து என்னவெனில், அவை மாணவர் களின் திறமையை வெளிப்படுத்துவதைக் காட்டிலும் பரீட்சையை எப்படிச் சமாளிப்பது என்பதில்தான் கவனமும் அக்கறையும். எனவே பரீட்சை எனும் போது நன்றாகத் தயார் செய்து கொள். துணிந்து வினாக்களுக்கு விடைகளை எழுது. முடிவைப் பற்றி கவலைப்படாதே என்பதாகும். பரீட்சைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை மேலை நாட்டுப் பெற்றோர்கள் என்று சொல்லவில்லை. நம் மவர் கள் காட்டுகின்ற அளவுக்கு விஞ் சிய கவலையையும், அச்சத்தையும் காட்டமாட்டார்கள். பரீட்சைகளில் நன்றாக எழுதினால் போதும் என்ற மனப்பக்குவத்தை அவர்களிடம் காண முடிகிறது.
அகவிழி | ஏப்ரல் 2014 8

Page 37
இந்நிலையில் தங்கள் பிள்ளைகள் பரீட்சையில் நன்றாக எழுதிவிட்டால் அவர்களுக்கு மகிழ்வு. ஆனால் விழா எடுக்கமாட்டார்கள். இதற்கும் காரணம் இருக்கிறது. தம் பிள்ளைகள் மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை, குழந்தைகளுக்கு இருக்கும் மன உறுதி என்பனவாம். அதோடு வேண்டாத விழாக்களுக்கும், போலி சிறப்புக்கும், பகட்டுக்கும் அவர்கள் மரியாதை காட்டுவதில்லை என்பதை விட அப்படிப்பட்டவை அவர்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை.
நம் இனத்தவர்கள் மட்டும் ஏன் விழா எடுக்கிறார்கள் என்று சிந்தித்துப் பார்த்தபோது திகைப்பூட்டும் சில கருத்துக்கள் மிளிர்ந்தன. இதில் நன்மை இருக்கிறதா? அல்லது ஏதாவது கேடுகள் விளைவிக்கின்றனவா என்று நினைக்கவும் தோன்றுகிறது.
பெற் றோர் கள், ஆசிரியர் கள் ஆகியோரின் உள்ளக்கிடக்கை என்னவெனில் பிள்ளைகள் எல்லாப் பாடங்களிலும் “ஏ” பெறவேண்டும் என்பதாகும். இது நியாயமானதே! அப்படி "ஏ" பெற்றால் சில பொது அமைப்புக்கள் சிறப்புச் செய்யும், பரிசு கிடைக்கும், புகழும் வந்து சேரும் என்று எதிர்பார்ப்பவர்களும் உண்டு. பள்ளிகளைடையே, ஆசிரியர்களிடையே, பெற்றோர் களிடையே, மாணவர்களிடையே கூட விபரீதமான போட்டி மனப்பான்மை உருவாக, வளர காரணமாக இருப்பதை காணமுடிகிறது.
ஓர் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் நாற்பது மாணவர்கள் இறுதிப் பரீட்சை எழுதுகிறார்கள். அவர்களில் ஒருவர் எல்லாப் பாடங்களிலும் “ஏ” பெறுகிறார் மற்றும் இரண்டு, மூன்று பேர் ஒரு பாடத்தில் மட்டும் “ஏ” பெறுகிறார்கள். ஆக மொத்தத்தில் நான்கு மாணவர்கள் மட்டும் “ஏ” பெற்றிருக்கிறார்கள். அந்த வட்டாரத்தில் உள்ள பத்து பள்ளிக்கூடங்களில் உள்ள ஆறாம் வகுப்பு மாணவர்களின் மொத்தத் தொகை நானூறு என்று வைத்துக் கொள்வோம். இந்த நானூறு மாணவர்களும் பரீட்சையில் பங்கு பெற்றதில் பத்து பேர் மட்டும் “ஏ” பெறுகிறார்கள். இந்தப் பத்து மாணவர்களும் சிறப்புச் செய்யப்படுவர். மற்ற முந்நூற்றுத் தொண்ணூறு மாணவர்களின் நிலை என்ன? அவர்களைப் பற்றி நாம் சிந்திக்கின்றோமா? அவர்கள் பரீட்சையில் ஏன் “ஏ” பெற முடியவில்லை என்பதற்கான காரணத்தை நாம் சிந்தித்துப் பார்த்தோமா? இல்லை! நல்ல புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை மட்டும் கெளரவிக்கிறோம். பெரும்பான்மையான மாணவர்களின் பரிதாப நிலையை உதாசீனம் செய்கிறோம்.
மேலே குறிப்பிட்ட நானூறு மாணவர் களில் பெரும்பான்மையினர் ஏழைகளாக இருக்கலாம். வசதியான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை டியூஷனுக்கு அனுப்புவார்கள். அப்படிப்பட்ட வசதியை ஏழ்மையில்
6 அகவிழி ஏப்ரல் 2014

துவண்டு கிடக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வழங்க முடியாது.
சில குழந்தைகள் சரியாக' ஒருவேளை சாப்பிடுவதற்கான வசதியைக்கூட பெற்றிருக்க மாட்டார்கள். இதுவும் ஓர் அவல நிலைதான். இதை எல்லாம் நாம் சிந்திக்க மறந்துவிடுகிறோம், சிந்தப்பதில்லை.
டியூஷனுக்குப் போக வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்படுகிறது? பள்ளி ஆசிரியர்கள் சரியாகப் பாடம் சொல்லிக் கொடுத்தால் மாணவர்கள் டியூஷன் உதவியைத் தேட வேண்டியதில்லையே. பள்ளிக்கூடங்களில் போதுமான கல்வி அறிவு கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் தானே வசதி படைத்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை டியூஷனுக்கு அனுப்புகிறார் கள். சாப் பாட்டுக் கே தாளம்போடும் குடும்பத்தினர் எவ்வாறு இப்படிப்பட்ட டியூஷன் செலவைச் சமாளிப்பர்? இப்படிப் பட்ட மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த என்ன செய்யலாம் என்று சிந்தித்துச் செயல்பட்டால் நல்லது அல்லவா? பொது அமைப்புக்கள் ஒரு சிலரை சிறப்பிப்பதைக் காட்டிலும் கல்வியில் பின் தங்கியிருக்கும் எல்லா மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வழிகண்டால்
அதுவே மிகச் சிறந்த சேவையாகக் கருதப்பெறும்.
ஸ்பெயின் மொழியில் ஒரு பழமொழியுண்டு. “வெற்றி பெற்றவனுக்கு ஆயிரம் தந்தைகள், தோல்வி கண்டவன் அனாதை!” என்பதே அது. அதுபோலத்தான் நம் மாணவர்களின் நிலை.
நானூறு மாணவர்களின் பத்து பேர் மட்டும் “ஏ” பெற்றது முக்கியமல்ல. அந்த நானூறு மாணவர்களும் தேறினார்கள் என்பதே முக்கியம். மொத்தத்தில் பத்து வீதம் பரீட்சைகளில் வெற்றி பெற்று தொண்ணூறு வீதம் தோல்வி கண்டது என்றால் ஆசிரியர்களின் கற்பிக்கும் முறை சந்தேகத்தைக் கிளப்புகிறது.
“ஏ” பெற்ற மாணவர்களைச் சிறப்பிப்பது நம்முடைய அறியாமையையும், நம் முள் புதைந்து கிடக்கும் பலவீனத்தையும் வெளிப்படுத்துகிறது என்றாலும் தவறில்லை. நம்மிடம் அறிவு இல்லை, இருக்கும் அறிவு போதாது, கற்கும் திறன் இல்லாதவர்கள், கல்வியில் பின் தங்கியவர்கள் எனவே, யாராவது கொஞ்சம் தலையைத் தூக்கினால் போதும் அதில் மூழ்கிப் பெருமிதம் அடைகிறோம் என்று பிறர் நினைக்கக் கூடும். இப்படிப்பட்ட நடவடிக்கை நம்மிடம் இருக்கும் குழப்பத்தையும் வெளிப்படுத்துகிறது என்றால் மிகையாகாது. “ஏ” பெற்ற மாணவர்களை அவர்களின் பெற்றோர்கள் சிறப்பிக்கட்டும்.
அது பொருத்தமான செயல் எனலாம்.
எல்லா மாணவர்களும் தரமான கல்வி பெற நாம் முயற்சி செய்ய வேண்டும். படிப்பில் பலவீனத்தைக் காட்டும் மாணவர்களுக்குப் பிரத்தியேக வகுப்பு நடத்த

Page 38
வேண்டும். இதை நம் ஆசிரியர்கள் ஒரு சவாலாக ஏற்றுச் செயல்படுவார்களேயானால் சமுதாயம் அவர்களை மெச்சும். எதிர்கால சமுதாயம் அவர்களுக்கு நன்றி செலுத்தும்
சில ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மலாயாவில் வாழும் மலாய்க்காரப் பட்டதாரி ஒருவர் மலாய்க்கார மாணவர் களுக்கு இலவசமாகப் பாடம் சொல்லிக் கொடுப்பதை நாளிதழ்கள் மெச்சி வெளியிட்டன. நம் இனத்திலும் சில ஆசிரியர்கள் இப்படிப்பட்ட பரந்த நோக்கத்தைக் கொண்டு செயல்படுகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இவர்கள் சிறுபான்மையே. பெரும்பாலார் ஆதாயத்திலேயே குறியாக இருக்கிறார்கள் என்பதையும் நாம் அறியாதது அல்லவே! பொதுவாக மாணவர்களிடம் காணப்படும் குறைபாட்டைக் கண்டுபிடிப்பதில் ஆசிரியர்கள் கைதேந்தவர்கள். அப்படிப்பட்ட குறைபாட்டைக் களைய ஆசிரியர்கள் எத்தனிக்க வேண்டும்.
நம் மாணவர் சமுதாயம் கல்வியைப் பெற ஆர்வங் கொள்ள வேண்டும். பரிசும், புகழும் கிடைக்கும் என்ற குறுகிய நோக்கோடு மாணவர்களின் ஆர்வத்தை வளர்க்கக்கூடாது. அப்படி வளர்க்கப்படும் கல்வித் திறன் பயனற்றதாகவே இருக்கும். அப்படிப்பட்ட வழக்கத்தில் ஊறிப்போன மாணவர்கள் பரிசைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவார்கள். அவர்களின் அறிவு வளர்ச்சி மெச்சத்தக்கதாக இருக்காது.
திறமையானவர், திறமையற்றவர் என்று மாணவர்களைப் பிரித்துக் காண்பதைத் தவிர்த்து எல்லா மாணவர்களையும் சரிசமமாக நடத்தினால் எல்லோருக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். திறமையானவர்களை மட்டும் தேர்ந்தெடுத்துச் சிறப்பிக்கும் செயல், திறமையற்றவர் கள் என்று சொல்லப்படும் மாணவர்களை மேலும் பழிப்பது போலவும், புண்படுத்துவது போலவும் இருக்கிறது. இதைத் தவிர்க்க வேண்டியது நம் பொறுப்பல்லவா?
பெரும்பான்மையான மாணவர்கள் கல்வியில் நம்பிக்கை இழப்பார்களேயானால், அவர்களுடைய கவனம் தீய செயல்களின் பக்கம் திரும்பாது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. இந்த ஆபத்தையும் நாம் கவனத்தில் கொண்டு அவர்களின் கவனத்தைத் தீய செயலிலிருந்து திருப்ப வேண்டியது சமுதாயத்தின் கடமையாகும்.
பின்தங்கிய சமுதாயம், சில்லறை வெற்றிகளில் புளகாங்கிதம் அடைவது இயல்பு. அதோடு புது வீரர்களைத் தேடுவதை நிறுத்திக் கொள்ளாது. அதன் நோக்கமெல்லாம் பெருமையையும், புகழையும் தேடிக் கொள்வதே. காரணம், அந்தச் சமுதாயத்திடம் அப்படிப்பட்ட சிறப்பும், சிறப்பானவர்களும் இல்லாததுதான் அல்லது குறைவாகவே காணப்படலாம்.

தமிழ்ச் சமுதாயம் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமுதாயமாக இருப்பினும் அஃது இலக்கிய வளமும், வளமான பண்பாட்டையும், வாழ்க்கை நெறிமுறைகளைக் கொண்ட சமுதாயமாகும். இந்த அற்புதமான, அருமையான, விலைமதிப்பற்ற சொத்துக்களுக்கு நம் மாணவர் சமுதாயம் உரிமையாளர்கள் என்று உணர்த்த வேண்டும். அவர்கள் உணர வேண்டும். அவர்களுக்கு சிற்றுயிர் கொண்ட மகிழ்வும், தற்காலிக வீரர்களும், தலைவர்களும் தேவையில்லை. தமிழ் இனத்தின் சிறப்பை,திறமையை, அறிவு வலிமையை பகட்டுத்தன்மையால் உணர்த்த வேண்டிய அவசியமும் இல்லை, கட்டாயமும் இல்லை. தமிழ் மாணவர் சமுதாயம் தமக்குள் ஒளிந்து இருக்கும் திறமையை வெளிப்படுத்த நம் சமுதாயம் முன்வர வேண்டும், உதவ வேண்டும்.
நம் மாணவர் சமுதாயம் தன்மானத்தோடு நெஞ்சில் நல்லத் தூய்மையான எண்ணத்தையும், அப்பழுக்கற்ற வீரத்தையும், திசைமாறாத நல்ல உறுதியையும் கொண்டு தலை நிமிர்ந்து வாழ வேண்டும், வாழ முடியும். அறிவுக்கு என்றும் மதிப்புண்டு. விஞ்ஞானத்தின் மகிமை பெருகிவிட்ட காலத்தில் அறிவுக்குத் தான் மதிப்பு. அதை நம் மாணவர்கள் உணர்ந்தால் நல்லது.
மகாகவி பாரதியாரின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. அஃது இந்தியாவில் வாழும் இந்தியர்களுக்கு உரித்தான போதிலும் அவர் பாட்டில் இந்திய சமுதாயம் எங்கு வாழ்ந்தாலும் சுயமரியாதையுடனும் வாழவேண்டும், யாருக்கும் அடிபணிந்து போக வேண்டிய கீழ் நிலையை ஒதுக்கச் சொல்லுவது போல் இருப்பதோடு உலகத்துக்கு இந்தியர்கள் எடுத்துக்காட்டாக இருக்க முடியும் என்பதை வலியுறுத்துவதையும் உணரலாம். இதோ அந்தப் பாடல்:
ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடுவோமே எங்கும் சுதந்திர மென்பதே பேச்சு - நாம் எல்லோரும் சமமென்ப துறுதியாச்சு சங்குகொண்டே வெற்றி யூதுவோமே - இதைத் தரணிக்கெல் லாமெடுத் தோது வோமே ஆடுவோமே நாமிருக்கு நாடுநம் தென்பறிந்தோம் - இது நமக்கே யுரிமையா மென்பதறிந்தோம் - இந்தப் பூமியி லெவர்க்குமினி அடிமைசெய்யோம் - பரி பூரணுக் கேயடிமை செய்துவாழ்வோம் ஆடுவோம் இந்தப் பாடலுக்கு நாம் உரியவர்கள். அதில் சொல்லப்படும் துணிவான கருத்துக்கள் நம்மை உலகுக்கு வழி காட்டுகிறது. அதைத்தான் நாம் உணரவேண்டும், நம் மாணவ சமுதாயத்துக்கு உணர்த்த வேண்டும்.
அகவிழி | ஏப்ரல் 2014 (ம

Page 39
கல்வி முறைமை உள்ளடக்கம் மற்றும் செயற்பாடுகள்
தேசிய கல்விக் கொள்கைக்கு அமைவாக முறைசார் மற்றும் முறைசாரா அனுபவங்கள் ஊடாக போசிக்கப்பட்டு பாடசாலையின் ஒழுங்கமைப்பு, திட்டமிடலுக்கு மற்றும் செயற்பாடுகளுக்கு உட்பட்டு சகல கட்டமைக்கப்பட்ட கற்றல் அனுபவங்களும் பாடசாலைப் பாடவிதானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தேசிய மட்டத்தில் தயாரிக்கப்பட்டு பாடசாலைக்கு அறிமுகப்படுத்தப்படும் பாடவிதானத்தின் மூலம் கல்வியின் பண்புசார் தரத்தை கணிசமாக அதிகரிக்க எதிர்பார்க்க வேண்டும். அத்துடன் கோளமய மற்றும் அறவுசார் பொருளாதாரத்திற்குள் இடம்பெறக் கூடிய சகல மாற்றங்களுக்கும் மத்தியில் ஏற்படக் கூடிய நிலைமைகளை எதிர்கொண்டு தமது எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் உயர்ந்தபட்சப் பங்களிப்புக்களை வழங்கக் கூடியவாறு பாடசாலை முறைமையில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் நவீனமயப்படுத்தப்பட வேண்டும்.
2014 8) அகவிழி (ஏப்ரல்

கற் பித் தல் மொழி தொடர் பில் உண்மையாகவே காணப்படும் பிரச்சினைகள் தெளிவாகத் தீர்க்கப்பட வேண்டும். தேசிய நல்லிணக்கம் மிகுந்த தேவை கொண்ட இவ்வுயுகத்தில் கற்பிக்கும் மொழிப் பயன்பாடு மிகுந்த பலமாக அமைய வேண்டும். பாட விதானத்தை வகைப் படுத்துவதற்கும், கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் சமமான நிலைமையினைப் பலப்படுத்துவதற்கும் பங்களிப்புச் செய்யக் கூடிய பண்புசார் ரீதியைப் போன்று கவர்ச்சிகரமாகவும் பிள்ளை களின் உள்ளங்களை கவர்ச்சிக்குட்படுத்தக் கூடியவாறு தாய்மொழி மற்றும் தேசிய மொழி மூலம் பாடநூல்களை அச்சிட்டு உரிய நேரத்திற்கு இலவசமாக பிள்ளைகளுக்குக் கையளிப்பது தேசிய கல்விக் கொள்கையின் பிர தான அவசியத் தேவையாகும் . பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட பண்புசார் தரத்தினை விருத்தி செய்து உரிய ஒப்பளவுகளுக்கு அமைய பிள்ளைகள் பெறும் கற்றலை மதிப்பீடு மற்றும் மேற்பார்வைக்கு
உட்படுத்தப்பட வேண்டும். இதற்கு இணைவாக தேவைகள் கொண்ட சிறார்களின் கற்றலுக்கு உரிய வழிகாட்டல்களை வழங்கல் மற்றும் ஆலோசனைகள், கல்விச் செயற்பாட்டில் பெற்றோரின் பங்களிப்பு, விழுமியக் கல்வி ஆகிய முறையில் சமகாலப்படுத்தி விருத்தி செய்யக் கூடியவாறான ஒழுங்கு விதிமுறைகள் மற்றும் உபாயங்கள் திட்டமிடப்பட வேண்டும்.
அத்துடன் நவீன உலகில் கல்வியினை வழங்கு வதற்காக அபிவிருத்தியடைந்த நாடுகளில் பயன்படுத்தக் கூடிய தொழில்நுட்ப முறைகளும் இணையத்தளம், தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்ட பல்லூடகத் தொடர்புசாதனங்கள் எம்முறையில் எந்தளவு பாடசாலைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்துத் தீர்மானிக்கப்பட வேண்டும். இச்சகல நிலைமைகள் மற்றும் எதிர்காலப் பயணத்தில் காணப்படும் நெருக்கடிகளை வெற்றி கொள்வதாயின் கட்டாயமாக பாடசாலையில் நாளாந்தக்

Page 40
கற்றல் சூழல்கள், போதியளவினைப் போன்று பண்புசார் தரத்திலும் விருத்தி செய்து மற்றும் சகல வசதிகளுடனும் கூடியதாக பூர்த்தி செய்வதற்காக பாடசாலைப் பராமரிப்பு உட்பட உட்கட்டமைப்பு வசதிகள் விருத்தி செய்யப்பட வேண்டும். இத்தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக இக்கொள்கைத் திட்டத்தில் யோசனைகள் சமர்ப்பிக்கப் சிபட்டுள்ளன.
பாடவிதான அபிவிருத்தி, ஆரம்பம் மற்றும் இடைநிலை
பிள்ளைகளின் வயதுக்குப் பொருத்தமானவாறு அவர்களது அறிவு விருத்திக்கு பங்களிப்புச் செய்யக் கூடியவாறானவாறு அறிவு, திறமை, தேர்ச்சி கொண்ட பிரஜைகளை சமூகத்துக்கு வழங்ககக் கூடியவாறு பாடவிதானங்கள் வகுக்கப்பட வேண்டும்.
பாடவிதான மறுசீரமைப்பு மற்றும் சமகாலப்படுத்த வேண்டிய விடயங்கள் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையேனும் மேற்கொள்ளப்பட வேண்டும். அவை மேற்கொள்ளப்பட வேண்டியது கல்வியின் தேவை மற்றும் புதிய முன்னேற்றங்களைக் கருத்திற்கொண்டாகும். இது எவ்வாறாக இருப்பினும் பாடவிதான சமகால அடிப்படையில் மீளாய்வுகளுக்கும் உட்படுத்துவது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
ஆங்கில மொழி தொடர்பாக பாடவிதானங்களைத் தயாரிக்கும் போது பிரயோக மொழியாக்குவதற்காக முதலாம் தரம் தொடக்கம் செவிமடுத்தல், பேசுதல், எழுதுதல் மற்றும் வாசித்தல் ஆகிய நான்கு திறமைகளையும் சமமான மட்டத்தில் வெளிப்படுத்தக் கூடியவாறு சமமான மட்ட மதிப்பீடுகளைக் கட்டாயமாக மேற்கொள்ளல் வேண்டும். இதற்காக இலவச உதவிப் பாடநூல்கள் வழங்கப்பட வேண்டும்.
பாடவிதான விருத்தியின் போது வயதெல்லைக்கமைய கீழ்க்குறிப் பிடப் பட்ட மட்டங்களை இனங்கண்டு ஒவ்வொன்றுடனும் கூட்டிணைந்த கிரமமாக விருத்தியடையக் கூடியவாறு பாடவிதானங்கள் வகுக்கப்பட வேண்டும்.
ஆரம்ப மட்டம் முதலாவது பருவம் (1, 2 ஆம் தரங்கள்) இரண்டாவது பருவம் (3, 4 ஆம் தரங்கள்) மூன்றாவது பருவம் (5ஆம் தரம்) கனிஷ்ட இடைநிலை மட்டம் (6, 7, 8, 9 ஆம் தரங்கள்)
சிரேஷ்ட இடைநிலை மட்டம் முதலாவது பருவம் (10, 11ஆம் தரங்கள்)
இரண்டாவது பருவம் (12, 13ஆம் தரங்கள்)

கனிஷ்ட, இடைநிலை மட்டங்களில் சுகாதாரம் மற்றும் உடற்கல்வி, மொழி, கலை, சமூகம் மற்றும் இயற்கை விஞ்ஞானம், கணிதம், அழகியல் கல்வி, வாழ்க்கைத் தேர்ச்சி மற்றும் தொழினுட்பத் திறமைகளை விருத்தி செய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
சிரேஷ்ட இடைநிலை மட்டத்தில் முதல் பருவத்தில் தாய்மொழி, ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், வர்த்தகம் மற்றும் தொழில் முயற்சி ஆகிய கட்டாயப் பாடங்களையும், விருப்பத்திற்குரிய பாடப்பிரிவுகள் மூன்றிலிருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட இரு பாடங்களையும் உள்ளடக்குதல் வேண்டும். அப்பாடப் பிரிவு தொழினுட்பம், மேலதிக மொழி மற்றும் அழகியல் ஆகிய துறைகளைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
தேசிய மட்டத்திலான பரீட்சைகளுக்கு கட்டாய மற்றதாகக் காணப்பட்ட போதிலும் சிரேஷ்ட இடைநிலைப் பிரிவில் சுகாதாரம் மற்றும் இடைநிலைக் கல்வி கட்டாயப் பாடங்களாக பாடசாலைகளில் கற்பிக்கப்படுதல் வேண்டும்.
தாய்மொழியுடன் இலக்கியத்தையும் ஒன்றிணைக்க வேண்டும்.
ஆங் கிலம் மற்றும் கணிதத் துக் காக ஒரு வினாப்பத்திரத்தை இரு மட்டங்களில் இரு பிரிவுகளை உள்ளடக்கக் கூடியவாறு பாடவிதானங்கள் வகுக்கப்பட வேண்டும்.
விஞ்ஞானம், கணிதம், வர்த்தகம், கலை, தொழினுட்பம் மற்றும் ஏனைய ஆறு பாடவிதானங்களில் சிரேஷ்ட இடைநிலைப் பிரிவின் 2ம் கட்டத்துக்காக பாட விதானங்கள் தயாரிக்கப்பட வேண்டும். மேலும் அவ்வப் பாடவிதானங்கள் மூன்று பாடங்களுக்கு மேலதிகமாக பொது ஆங்கிலம், பொது தகவல் தொழினுட்பம் மற்றும் கணிதம் போன்ற பாடங்களுக்கான பாடவிதானங்களும் வகுக்கப்பட வேண்டும்.
சகல பாடவிதானங்களினதும் விருத்தியின் போது தேர்ச்சி அபிவிருத்தி மற்றும் பொது இயலுமைகளை விருத்தி செய்யக் கூடியவகையில் அமைய வேண்டும்.
பிள்ளைகளை அறிவினை நோக்கிப் பயணித்து சுய கற் பவராக மாற்றம் பெறுவதற் கும் அறிவினை களியாட்டங்கள், மகிழ்ச்சியாக மாற்றியமைக்கக் கூடியவாறு இலங்கைச் சிறார்களின் பொதுவான அறிவியல் மட்டத்துக்கு ஏற்றவாறு பல்வகைப்பட்ட அறிவுசார் தேர்ச்சியினை அடிப்படையாகக் கொண்டதாக சகல (2 பாடவிதானங்களும் தயாரிக்கப்படுதல் வேண்டும்.
பாடவிதாதனங்களை மறுசீரமைக்கும் போது சர்வதேச முன்னேற்றங்கள் உள்நாட்டுக்குப் பொருந்தக்கூடியவாறு அவற்றை முழுமையாக ஆய்வுக்குட்படுத்துவதற்கு 18
அகவிழி | ஏப்ரல் 2014 8

Page 41
மாதங்களை விடக் குறையாத காலத்தை வழங்க வேண்டும்.
தேசிய பொது நோக்கங்களுக்குப் புறம்பானதல்லாதவாறு தேசிய கல்வி நிறுவகத்தின் அங்கீகாரத்துடன் பிரதேச தேவைகளுக்கு ஏற்றவாறு பாடநெறிகளை மாற்றிய மைப்பதற்கும், மாகாணங்களுக்கு சுதந்திரம் இருத்தல் வேண்டும்.
கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகள்
பாடசாலை செல்லும் போது மற்றும் கற்கும் போது உண்மையான திருப்தியினை சகல பிள்ளைகளுக்கும் கிடைக்கக் கூடியவாறு ஆசிரியர்களின் செயற்பாடுகளை மாற்றியமைக்க வேண்டியதுடன் மாணவர் களை கேந்திரமாகக் கொண்ட செயற்பாடுகள், ஒத்துழைப்புக்கள், ஆய்வுகள், சுற்றாடல் ரீதியிலான பல்வேறு வகைப்பட்ட கற்றல் முறைகளைப் பயன் படுத்து வதற்காக கற்றல்கற்பித்தல் செயற்பாடுகள் வகுக்கப்பட வேண்டும்.
கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு விளக்கமான புதிய சிந்தனைகள், மேற்பார்வை மற்றும் வரவேற்புக்கள் மற்றும் கேள்விகள், விளக்கங்கள், குறிப்புக்களை எழுதுதல், பல்வேறுபட்ட தொடர்புசாதன உபாயங்கள் ஊடாக சமர்ப்பித்தல், மதிப்பீடுகள் போன்ற செயற்பாடுகளை காண்பிக்க இடமளிக்கப்பட வேண்டும்.
வகுப்பறையை நூலகமாகப் பயன்படுத்துவதற்காக பிள்ளையை வாசிப்பில் கூடுதலாக ஈடுபடுத்த வேண்டும்.
கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்காக வாழ்க்கைத் தேர்ச்சி, பல்வகை அறிவு, ஏனைய பொதுத் தேர்ச்சிகளை விருத்தி செய்து பிள்ளையிடம் பயன்மிக்க மற்றும் நற்பழக்க வழக்கங்களைக் கட்டியெழுப்ப வேண்டும்.
பாடவிதானத்தில் காணப் படும் பொதுவான பிரவேசங்களைப் பயன்படுத்தி விழுமியங்கள் மற்றும் பெறுமதிகள் (Values) உள்ளீர்ப்புச் செய்வதற்காக பிள்ளையை ஈடுபடுத்த வேண்டும்.
சகல ஆசிரியர்களுக்கும் ஓரளவு ஆலோசனை (Counsellor) வழங்க வேண்டும். அதனூடாக பிள்ளையின் தனிப்பட்ட, சமூக மற்றும் உணர்வு பூர்வமாக ஏற்படக் கூடிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி கொள்ளக் கூடிய மனோநிலை, சுய விளக்கம் மற்றும் சுய அபிமானத்துடன் கட்டியெழுப்புவதற்கும், அதனைப் புரிந்து கொள்வதற்கான இயலுமையும் தோல்வியை எதிர்கொள்ளக் கூடிய இயலுமையும் மாணவர் மத்தியில் விருத்தி செய்யப்பட வேண்டும்.
அகவிழி ஏப்ரல் 2014
புதிய இளம் பராயத்தின் பிள்ளைகளுக்காக தொழில்சார் ஆலோசனைகளை வழங்கி சுய இயலுமை

களை இனங்கண்டு வேலை உலகுடன் இணைக்கும் எதிர்பார்ப்பு, நோக்கங்கள் மற்றும் இலக்காக கொள் வதற்கும், அவ்விலக்கை எட்டுவதற்கும் உறுதிபூணும் சக்தியையும் வழங்க வேண்டும்.
கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்காக பிள்ளையின் அறிவினை மாத்திரம் அன்றி எதனை-யேனும் புரிபவர்களாக, மாற்றியமைக்க வேண்டும். இதற்காக கரங்கள், பாதங்களைப் பயன்படுத்துவதன் பெறுமதியினையும், வியர்வையின் பெறுமதியினையும் வலியுறுத்த வேண்டும். - 1, 2, 3ஆம் தரங்களின் மாணவர்களுக்கு வீட்டு வேலை (Home Work) கட்டாயமாக்கப்படக்கூடாது என்பதுடன் உயரிய மட்டங்களிலும் அதனைப் பொருத்த மானவாறு மட்டுப்படுத்த வேண்டும்.
பாடசாலைப் பையின் நிறையைக் குறைப்பதற்கான ஒழுங்குகள் வகுக்கப்பட வேண்டும்.
கனிஷ்ட, இடைநிலை மட்டங்களுக்கு மேற்பட்ட பாடங்களை ஆங்கில மொழி மூலம் கற்பித்தலை
முடியுமான அளவு ஊக்குவிக்க வேண்டும்.
தண்டனை விதிப்பதை அத்தியாவசிய சந்தர்ப்பங் களுக்கு மட்டுப்படுத்த வேண்டியதுடன் ஒழுக்காற்றுச் செயற்பாடுகளுக்காக பொதுவான செயலொழுங்குகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக ஒழுக்காற்றுச் சட்டக் கோவைகள், ஆசிரியர்கள், பெற்றோர்களின் பங்கேற்புடன் சகல பாடசாலைகளினாலும் தயாரிக்கப்படல் வேண்டும். மாணவர்களின் சிறந்த நல்லொழுக்கங்களைப் பாராட்டும் வகையில் சிவப்புப் புள்ளிகள், சான்றிதழ்கள் மற்றும் தங்கப் பதக்கங்கள் போன்றவற்றினை வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.
உடல் ரீதியான தண்டனைகள், பாதிப்புக்கள், துஷ்பிரயோகங்கள், பகிடிவதை போன்ற ஒழுக்கத்துக்கு விரோதமான செயற்பாடுகளுக்காக சிவில் சட்டங்களை அமுல்படுத்தல் வேண்டும்.
கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் பிள்ளையின் சமநிலையினை விருத்தி செய்வதனை உறுதி செய்யக் கூடியவகையில் பாட இணை மற்றும் பாடவெளிச் செயற்பாடுகளும் சுகாதாரம் மற்றும் போசாக்கிற்குரிய உள்ளீடுகளும், பெற்றோர், ஆசிரியர்களின் ஒத்துழைப் பினையும் தவறாது வழங்க வேண்டும்.
பாடவிதானத்தில் பாட இணை மற்றும் பாடத்துக்கு வெளி செயற்பாடுகளின் குழுச் செயற்பாடுகளுக்காக கணிசமான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டியதுடன் அதன் ஊடாக நபர்களுக்கிடையே தலைமைத்துவ இயலுமையை விருத்தி செய்வதற்கு மேலதிகமாக மற்றவர்களின் கருத்துக்களைக் கௌரவித்தல், அவற்றுக்கு

Page 42
பான்
உரிய நல்லிணக்கம், சமாதானம் மற்றும் சகவாழ்வுடன் வாழக் கூடிய சுயநிர்வாகம், ஒழுக்க விழுமியம் கொண்ட பிரஜைகளை உருவாக்கும் பாரிய சமூக அபிவிருத்திக் காரணிகள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
சகல மட்டங்களிலும் பாடங்களுக்காக ஆசிரிய வழிகாட்டல்கள் மற்றும் கையேடுகளைத் தயாரித்து "ஆசிரியர்களுக்கு உரிய நேரத்திற்கு இலவசமாக விநியோகிக்க வேண்டும். இப்புத்தகங்களை தேவையான அளவு கொள்வனவு செய்வதற்கு வசதிகள் வழங்கப்பட வேண்டும். புதிய கல்வி மறுசீரமைப்புக்களை ஏற்படுத்தும் போது இது மிகவும் முக்கியமானதாகும்.
உத்தேச தொலைக்காட்சி அலைவரிசை ஊடாகவும் செயலமர்வுகள், மாதிரி வேலைத்திட்டங்கள் மூலமாகவும் அதன் வழிகாட்டல் ஆலோசனைகளின் நோக்கங்கள், திட்டங்களை அமுல்படுத்த மற்றும் சுய மேற்பார்வை தொடர்பாக தொழில்சார் பயிற்சியை சகல ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். இச்செயற்பாடுகள் ஊடாக விசேடமாக புதிய கல்வி மறுசீரமைப்புக்கு பின்னணியாகக் கொள்ளப் பட்ட புதிய சிந்தனைகள் எவை என்பது தொடர்பில் கருத்திற்கொண்டு ஆசிரியர்கள் அதனை எட்டுவது அத்தியவசியத் தேவையாகும்.
ஆசிரிய வழிகாட்டல்கள் காணப்பட்ட போதிலும் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் புதிய பிரவேசத்தை ஆராய்ந்தும் மாற்றியமைத்தும் உருவாக்கியும் ஆசிரிய தொழில்சார் தரத்திற்கு ஆர்வமூட்டக் கூடிய நெகிழ்வுத் தன்மையைக் கொண்ட செயற்பாடுகள் இருக்க வேண்டும்.
ஆசிரிய ஆலோசகர்களின் பணிகளை வரைவிலக்கணப் படுத்தி சட்டபூர்வமானதாக மாற்றியமைக்க வேண்டும். அவர்களை பாடசாலை மேற்பார்வை மற்றும் மதிப்பீட்டுச் செயற்பாடுகளுக்காக ஈடுபடுத்துவதன் மூலம் கற்றல் கற்பித்தலின் பண்புசார் தரத்தினை உறுதிப்படுத்தக் கூடிய, ஏற்படக் கூடிய கஷ்டங்களை இனங்காணுதல், புதிய மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்காக ஆசிரியர்களுக்கு உதவுதல், அப்புதிய உபகரணங்கள் மற்றும் அறிவினை மீளாய்வுக்குட்படுத்தி தேவையான மாற்றங்கள் குறித்த யோசனைகள் போன்றவற்றை வழங்குதல் போன்ற பணிகளுக்காக அவர்களை வலுவூட்ட வேண்டும்.
கற்றல் கற்பித்தல் செய்றபாடுகளை வெற்றிகர மாக்குவதற்காக மேற்கொள்ளப்படும் புதிய மறுசீரமைப்புக் கள் மற்றும் செயற்பாட்டு ஒழுங்கு விதிமுறைகள் ஊடாக பெற்றோரை அறிவுறுத்த அதிபர்கள் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை வினைத்திறன் மிக்கதாக மாற்றியமைத்தல் பாடசாலை மட்டத்தில் மானிட, பெளதீகவியல், நிதி மற்றும் காலத்துக்குரிய வளங்களை

விடுவிக்கக் கூடியவாறு அவற்றை உயர்ந்தபட்சம் பயன்மிக்கதாகப் பயன்படுத்த வேண்டும். இதற்காக நெகிழ்வுத் தன்மையுடன் செயற்பட அதிபர்களுக்கு இடமளிக்க வேண்டும்.
பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட “பண்புசார் உள்ளீட்டு செலவினத் தலைப்பினை” செயற்படுத்தி வலுவூட்ட வேண்டும். விடுதியினை நடாத்தும் பாடசாலைகள் இதன் போது விசேடமாகக் கருத்திற்கொள்ளப்படல் வேண்டும்.
பரிசோதனை ஆய்வுகூடம் மற்றும் நூலகம் அற்ற சந்தர்ப்பங்களில் நடமாடும் பரிசோதனை ஆய்வுகூடம் மற்றும் நூகலச் சிந்தனையை ஊக்குவிக்க வேண்டும்.
கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளின் அறிவு விருத்தி மற்றும் அறிவினை கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரம் வரையறுக்காது பிரயோகச் செயற்பாடுகளின் மதிப்பீடுகள் மற்றும் மேற்பார்வைகள் மிக முக்கியத்துவம் மிக்கதாக இருக்க வேண்டும். பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட தொடர்ச்சியான மதிப்பீடுகள் மற்றும் மேற் பார்வைகள் ஊடாக மாணவர் அபிவிருத்தி மட்டத்தை இனங்கண்டு அதற்கமையச் செயற்பட்டு உரிய பொறுப்பு வாய்ந்த மட்டத்திற்கு மாணவர்களை வெற்றியீட்டச் செய்வதற்காக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும்.
பிள்ளைக்கு தேவையற்ற சுமை ஏற்படாதவாறு பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீடு மற்றும் மேற்பார்வைப் பணிகளை திட்டமிடுவதற்காக சர்வதேச மற்றும் தேசிய மட்டத்தில் காணப்படும் கருவிகள் தொடர் பாக ஆசிரியர்களை அறிவுறுத்தி மாதிரி வேலைத்திட்டங்கள் ஊடாக அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
க.பொ.த. (சா.த) பரீட்சைப் பெறுபேறுகளை வழங்கும் போது ஆங்கிலம், விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடங்களுக்கான புள் ளிகளுக்கு பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீட்டுப் புள்ளிகளின் விகிதாசாரத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் பொருத்தமானவாறு அவ்வாறு மேற்கொள்ளப்படும் பாடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.
ஆரம்பப் பிரிவின் மாணவர்களை மதிப்பீட்டுக்கு உட்படுத்தும் போது அவர்களின் உடல் உள இயலுமைகள் காணப்படுவது பல்வகை அறிவியியலில் எவ்வறிவுக்காக என்பது குறித்து இனங்காணுதல் மற்றும் அறிவிக்கும் வேலைத்திட்டங்களும் வகுக்க வேண்டும். அது சமூகம் சார் அறிவு தொடர்பாக பெற்றோரை அறிவுறுத்தி விசேடமாக வீட்டில் மற்றும் பாடசாலைக்கு வெளியேயும்
அகவிழி | ஏப்ரல் 2014 (ச

Page 43
அவ்வறிவினைக் கூடுதலாக விருத்தி செய்து போசிக்கும் வேலைத்திட்டங்களில் பெற்றோர் ஈடுபட வேண்டும்.
பிள்ளையின் வேறு குறைபாடுகளை இனங் காண்பதற்காக உரிய சுகாதார வைத்திய அலுவலகத்தின் பங்கேற்புடன் வைத்திய சிகிச்சைகள் நடாத்தப்பட வேண்டும். இதன் போது இனங்காணப் படுபவைகளுக்கு அமைய அப்பிள்ளைக்காக வழங்கப்படும் கல்வி மற்றும் அவர்கள் தொடர்பான ஒப்பளவு மதிப்பீடுகளை விரிவான அடிப்படையில் பொருத்தமானவாறு மாற்றியமைக்க வேண்டும்.
பாடசாலை தவணைப் பரீட்சைகளை மாகாண மட்டத்தில் ஒழுங்கு செய் து சிறந்த முறையில் மதிப்பீடுகளுக்கு உட்படுத்தி நம்பகத் தன்மையை மேம்படுத்த வேண்டும். பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும்.
பாடசாலை மட்டத்திலான மதிப்பீடுகள் பிள்ளையின் ஆரம்பக் கட்ட மட்டத்தில் இருந்து பெற்றுக்கொண்ட முன்னேற்றங்களைக் காண்பிக்கும் பரிசோதனை முறை மற்றும் அறிக்கைப்படுத்தல் முறைகளைக் கூடுதலாகப் பயன்படுத்த வேண்டும்.
பாடசாலைப் பரீட்சைகளில் மற்றும் பகிரங்கப் பரீட்சைகளில் பாடசாலைக் காலத்துக்குள் விருத்தி செய்யப்படும் அறிவு மற்றும் தேர்ச்சியினை அடிப்படையாகக் கொண்டு உண்மையான வாழ்வின் சந்தர்ப்பங்களை எதிர் கொள்வதற்காக பிள்ளைகள் காண்பிக்கும் தயார்படுத்தல்களை பரிசோதனை செய்யக்கூடியவாறு (Outhentic) பரிசோதனை உபகரணம் மற்றும் கருவிகளை முடியுமான அளவு உள்ளடக்க வேண்டும்.
தேசிய மட்டத்திலான பரீட்சைகளில் மாணவர்களை கெளரவிக்கும் போது அறிவினை அளவீடு செய்யக் கூடியதாக மாத்திரமன்றி அறிவினை உண்மையானவாறு பிரயோகச் செயற்பாடுகளில் பிரச் சினைகளைத் தீர்ப்பதற்காகவும், புதிய உற்பத்திகள் மற்றும் தீர்வுகளைச் சமர்ப்பிப்பதற்காகவும் பயன்படுத்த முடியுமா எனப் பரிசீலனை செய்தல் வேண்டும். அவ்வாறான செயற்பாட்டுக் கருவிகளைப் பயன்படுத்தி தேசிய மட்டத்திலான பரீட்சைகளில் 20 - 40% எனும் விகிதாசாரத்தை ஒதுக்க வேண்டும்.
இடைநிலை சிரேஷ்ட மட்ட பரீட்சைகளை பல்வேறுபட்ட" பாடங்களில் தீர்த்தல்
முறைகள் உள் ளிட்ட கணிதக் கணிப்பீடுகளின் அங் கீகரிக் கப் பட் ட பெறுமதிகளுக் கு அமைய வாய்ப்பாடமாக்குவதற்குப் பதிலாக அவற்றை அச்சிட்டு வழங்க கருத்திற்கொள்ளல் வேண்டும்.
5 அகவிழி | ஏப்ரல் 2014

அவ்வாறு மாணவர்களை கௌரவிக்கும் போது துண்டுப் பிரசுரங்கள் அவ்வவ் மாணவர்களுக்கு பொருத்தமான தகைமை மற்றும் அறிவுக்கு அமைய அவர்களின் எதிர்கால தொழிலலைத் தீர்மானிக்க பொருத்தமான வயது தொடக்கம் (9ம் தரத்தில் மாத்திரம்) பிள்ளைகளுக்கு தொழில்சார் ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
இதற்காக முதலாம் தரம் தொடக்கம் கட்டியெழுப்பப்படும் மாணவர் அறிக்கையில் சகல மாணவர்களையும் தொடர்புபடுத்திப் பேண சகல பாடசாலைகளுக்கும் முடியுமாக இருக்க வேண்டும். சகல பாடசாலைகளிலும் மாணவர்கள் தொடர்பில் இவ்வாறான அறிக்கைகள் மற்றும் புள்ளிவிபரங்களைக் கொண்ட மாணவர் தகவல் முறைமை (Student Information System) பேணப் பட வேண்டும்.
கற்பித்தல் மொழி
பிள்ளையின் 1, 2 இற்கிடைப்பட்டுள்ள கால எல்லையில் இரு மொழிகளில் கதைக்க ஆரம் பிக்கப் படும் பட்சத்தில் அப்பிள்ளையின் மொழி அறிவு விருத்தியில் தாமதம் ஏற்படுவதில்லை என்பதனால் பல்வேறுபட்ட சிந்தனைகள் பிள்ளையின் உள்ளத்துக்குள் பிரவேசிக்க இலகுபடுத்துவதற்காக ஆரம்ப தரங்களில் தாய்மொழியை பிரயோக மொழியாகப் பயன்படுத்துதல். ஆரம்பப் பாடசாலை மற்றும் ஆரம்பப் பருவத்தில் கற்பித்தல் மொழியாக தாய் மொழி இருக்க வேண்டும். தாய்மொழி எனப்படுவது பிறப்பில் இருந்து பிள்ளைக்கு உயர்ந்தபட்சம் கேட்கக் கூடிய மொழி என்பதனால் தாய் மொழியைத் தீர்மானிக்கும் உரிமை பெற்றோருக்கு உள்ளது.
சகல முன் பள்ளிகள் மற்றும் ஆரம்பப் பாடசாலைகளில் கல்வி மொழி தாய்மொழியாக இருக்க வேண்டும். அதாவது சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலமாக இருக்க வேண்டும்.கோளமய மொழி அல்லது இணைப்பு மொழியாக ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தைக் கொண்டு தாய்மொழி சிங்களம் அல்லது தமிழை பிள்ளைகளுக்கு இரண்டாம் மொழியாக ஆங்கிலத்தைக் கற்பிக்க வேண்டும். இரண்டாம் மொழியை செவிமடுக்க மற்றும் பேசுவதற்கு இலகுவான திறமைகளை ஆரம்பப் பாடசாலைப் பருவத்தில் இருந்தே வழங்க முடியும். முதலாவது மற்றும் இரண்டாம் தரங்களில் இதற்கு இலகுவான செவிமடுத்தல் வாசிப்புத் திறமைகளும் மூன்றாம் தரத்தில் இருந்து எழுதும் திறமைகளும் வாசிக்கும் திறமைகளும் இணைத்துக் கொள்ளப்படல் வேண்டும்.
கல்வி மொழி சிங்களம் அல்லது தமிழினைக் கொண்ட ஆரம்பப் பாடசாலைகளில் 3ம் தரத்திலிருந்து கட்டாயமாக இரண்டாம் மொழி பாடமாக ஆங்கிலம்

Page 44
கற்பிக்கப்பட வேண்டும். அத்துடன் கல்வி மொழி ஆங்கிலமாக அமையும் ஆரம்பப் பாடசாலைகளில் 3ம் தரம் தொடக்கம் கட்டாயமாக இரண்டாம் மொழியாக சிங்களம் அல்லது தமிழ் கற்பிக்கப்பட வேண்டும். தாய் மொழியை ஆங்கிலமாகக் கொள்ளும் மாணவர்கள் இரண்டாவது மொழியாக கட்டாயமாக சிங்களம் அல்லது தமிழைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மூன்றாம் தரத்திலிருந்து மேற் தரங்களில் எஞ்சிய தேசிய மொழிகளையும் கற்பிக்க
முடியும்.
இடைநிலைப் பாடசாலைகளில் கல்வி மொழி இரட்டை மொழியாக இருக்க வேண்டும். அவ்வாறாயின் தாய் மொழி மூலம் பல பாடங்கள் அல்லது இரண்டாம் மொழி மூலம் ஒரு சில பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும்.
சகல ஆசிரியர்களையும் முடியுமான அளவு இரட்டை மொழி ஆசிரியர்களாக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடும் இயலுமையை ஏற்படுத்துவதற்காக பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். இதற்காகவுள்ள பயிற்சி நிறுவனங்கள் பலப்படுத்தப்பட வேண்டும்
மதிப்பீடுகள் மற்றும் மேற்பார்வைகள்
பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீடுகள் பொதுவான பரீட்சை மதிப்பீடு ஆகிய இரு முறைகளிலும் மதிப்பீடுகளை மேற்கொள்ள வேண்டியதுடன் அவற்றை இணைக்க வேண்டும்.
தேசிய மட்டத்தில் பகிரங்கப் பரீட்சைகளிலும் பொருத்தமான பாடங்களுக்காக முன்னைய இரு வருடங்களுக்குள் பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீடுகளில் புள்ளிவிகிதாசாரங்களை உள்ளடக்கக் கூடியவாறான முறைகள் வகுக்கப்பட வேண்டும்.
பாடசாலையை அடிப் படையாகக் கொண்ட மதிப்பீடுகளின் செல்லுபடியாகும் தன்மை மற்றும் நம்பகத் தன்மையைப் பாதுகாக்கக் கூடியவாறும் ஒப்பீடு செய்யக் கூடியவாறும் தெளிவான உரிய மதிப்பீட்டு முறைகள் மற்றும் கருவிகளை அறிமுகப்படுத்த வேண்டும்.
கல்வி உத்தியோகத்தர்களுக்கு, அதிபர்களுக்கு, ஆசிரியர்களுக்கு பாடசாைைய அடிப்படையாகக் கொண்ட மதிப்பீடுகளின் நோக்கம் மற்றும் பொறுப்புக்கள், நம்பகத்தன்மையின் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தக் கூடியவாறு பயிற்சி வேலைத்திட்டங்கள் நடாத்தப்படல் வேண்டும். இதற்காக பெற்றோர் மத்தியிலும் விளக்கத்தை ஏற்படுத்துவது மிக முக்கியமாகும்.
1968 இல. 25 கொண்ட பரீட்ச்ை சட்டத்தை சமகாலத்துக்கு அமைய சீர்திருத்ததல் வேண்டும்.

விளையாட்டு மதிப்பீட்டுச் சான்றிதழ் மற்றும் சமயப் பாடசாலைச் சான்றிதழ்களுக்கும் மதிப்பீட்டின் போது உரிய பெறுமதியினை வழங்க வேண்டும்.
பாடநூல்கள்
தேசிய பாடவிதானங்கள் மற்றும் வயது எல்லைகளுக்கு பொருந்தக் கூடியவாறு தேசிய கல்வி நிறுவகத்தின் வழிகாட்டல் ஆலோசனைகளுக்கு அமைய பாடநூல்களைத் தயாரித்து அச்சிட வேண்டியது கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் மூலமாகும்.
பாடநூல்களை சகல பிள்ளைகளுக்கும் கிடைக்கக் கூடியவாறு இலவசமாக விநியோகிப்பது மாகாணக் கல்வி அமைச்சுக்களின் பொறுப்பாகும்.
பாடநூல்களின் கவர்ச்சிகரமான தன்மை, பண்புசார் தரத்தைப் பாதுகாத்து அவற்றை மாணவர்களின் பாடவிதானத்திற்கு, வயதிற்கு, பண்புக்கு, ஆளுமை விருத்திக் கு, அனுபவத்திற்கு மற்றும் சூழலுக்கு பொருத்தமானவாறு குறுகிய இலகுவான நடை
முறையில் உருவாக்குவதற்கும், அவற்றின் தொழினுட்பப் பெறுமதிகளை விருத்தி செய்வதற்கும், அவற்றைத் தயாரிக்கும் எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுக்கும் போது உபாயங் களை வகுக்கவும், அச் சிடல் , விநியோகித்தல் மற்றும் பயன்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் வகையில் பொருத்தமான நிபுணர்களைக் கொண்ட பாடநூல் சபை தாபிக்கப்பட வேண்டும்.
முடியமான சகல சந்தர்ப்பங்களிலும் பாடநூல்களை சிங்களம், மற்றும் தமிழ் ஆங்கிலப் பிரதிகளை ஒரே தடவையில் தயாரிப்பதன் மூலம் அவற்றில் காணப்படும் ஒவ்வாமைகளை ஒழிக்க வேண்டும்.
பாடநூல்களுக்கு மேலதிகமாக மேலதிக வாசிப்புப் புத்தகங்கள், தேசிய பரீட்சைக்கான கேள்விக் கொத்துக்கள், ஏனைய கல்விக்குரிய மொழிபெயர்ப்புக்கள் போன்றவற்றைத் தயாரித்து வெளியிடவும் அவற்றை நியாயமான விலையில் சந்தைக்கு வழங்கவும் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாடநூல் கள் மற்றும் ஆசிரிய கையேடுகள் போன்றவற்றை தேவையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு கொள்வனவு செய்யக்
கூடியவாறு அவற்றின் முகப்பு அட்டைகளை மாற்றியமைத்து (த சந்தைக்கு வழங்க வேண்டும்.
புத்தகங்களின் பருமனைக் குறைகக் கூடியவாறு '5 தேவையான சந்தர்ப்பங்களில் பகுதிகளாக்கி சிறிய பிரிவுகளாக அச்சிடுவது மிக முக்கியமாகும்.
அகவிழி | ஏப்ரல் 2014 2

Page 45
பாடநூல்கள், பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் வளவாளர் புத்தகங்கள் (Resource Books) அவ்வப் பகுதிகளுக்கு பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீடுகள் மேற் கொள்ள வேண்டிய முறைகள் தொடர் பான வழிகாட்டல்களும் மாதிரி ஒப்படைகளும் உள்ளடக்கப்படல் வேண்டும்.
சகல பாடநூல்களும் சகலருக்கும் இலவசமாகப் பயன்படுத்தக் கூடியவாறு அவற்றை இணையத்தளம் ஊடாகப் பகிரங்கப்படுத்துதல் வேண்டும்.
வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனை
தேசிய கல்விக் கல்லூரி பாடநெறிக்கு கட்டாய பாடமாக கல்வி ஆலோசனை, மனோவியல் ஆலோசனை மற்றும் தொழில்சார் ஆலோசனைகள் உள்ளடக்கி சகல ஆசிரியர்களையும் ஆசிரிய ஆலோசக இயலுமை கொண்டவர்களாக முன்னேற்ற வேண்டும்.
சகல பாடசாலைச் சிறார்களுக்கும் சமநிலையான மனோவியல் ஆலோசனைகளை வழங்கக் கூடிய முறைகள் வகுக்கப்பட வேண்டும். இதற்காக கல்வி அமைச்சின் இல. 2001, 16 கொண்ட சுற்றறிக்கையினை அமுல்படுத்த வேண்டியதுடன் இதற்காகக் காணப்படும் தடைகள்
நீக்கப்படுதல் வேண்டும்.
ஆரம்பப் பராயம் தொடக்கம் பிள்ளையின் இயலுமைகள் மற்றும் பின்னடைவுகளை இனங்கண்டு அவ்வவ் பிள்ளைகள் தொடர்பான அறிக்கையைப் பேணுவதன் மூலம் ஆலோசனைச் சேவையைப் பிரயோகப்படுத்த முடியும்.
8, 9 தரங்களில் உள்ள மாணவர்களின் திறமைகளைப் போன்று அவர்களது இரசனை மற்றும் இயலுமைகளுக்கு அமைய அவர்களுக்கு சரியான தொழில் வழிகாட்டல்களை வழங்கக் கூடியவாறு தொழில்சார் ஆலோசனை வழங்கப்பட வேண்டும். பிள்ளை விரும்பிய தொழில்களில் ஈடுபடுத்தக் கூடிய முறைகள், அதற்காகத் தேவையான அறிவு மேற்கொள்ள வேண்டிய பாடநெறிகளை தொடர்புபடுத்திக் கொள்ளவேண்டிய நிறுவனங்கள், பின்பற்ற வேண்டிய செயற்பாடுகள் குறித்து பிள்ளையை அறிவுறுத்தி அவர்களுக்கு தொழில் சார் கற்றல் ஆர்வத்தினை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.
சர்வதேச மற்றும் உள்நாட்டு தொழில் முயற்சித் துறைகளில் காணப்படும் நிலைமைகள் தொடர்பாக புரிந்துகொண்டு தற்போதுள்ள தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பங்களை உரியவாறு உருவாக்குவதற்காக 10, 11, 12, 13 ஆம் தரங்களின் மாணவர்களுக்காக தொழில் முயற்சித் துறையின் பொருத்தமான நிபுணர்கள் ஊடாக
F அகவிழி | ஏப்ரல் 2014

மாதத்துக்கு ஒரு முறை விரிவுரைகள் நடாத்தப்பட வேண்டும்.
வருடாந்தம் சமகாலப்படுத்தப்பட வேண்டிய பல் வேறுபட்ட தொழில்சார் திறமைகள் தொடர்பான நூல் களை பாடசாலை நூலகங்களுக்கு வழங்க வேண்டும். பொருத்தமான இணையத்தளம் ஊடாக இதனை
அறிவுறுத்த வேண்டும்.
கல்விச் செயற்பாட்டில் பெற்றோரின் பங்குகள்
பிள்ளை பிறந்தது தொடக்கம் பருவமடையும் வரை பெற்றோர் மற்றும் முதியோர் பிள்ளைகளின் முழுமையான கல்விச் செயற்பாட்டில் பங்காளர்களாக வேண்டும். அவர்கள் தமது கலாசாரம், மொழி, அனுபவம், தொழினுட்பப் பழக்கவழக்கங்கள் மற்றும் நற்குணங்கள், கலை, சமயம், சமூகப் பெறுமதிகள் மற்றும் திறமைகளை முடியமான வரை அடுத்த பரம்பரையினருக்கு கையளிக்க வேண்டும். இதனால் பெற்றோர்கள் சகல சந்தர்ப்பங்களிலும் சொல்லினால் மாத்திரமன்றி செயலினாலும் முன்மாதிரியாக நடத்தல் வேண்டும்.
சமூகத்தில் ஒரே இடத்திலேயே நிலைத்து நிற்பதனைத் தடுக்கும் வகையில் முதியோர் இவ்வாறு மேற்கொள்ளும் பொறுப்புக்களின் போதும் தெளிவுபடுத்தல்களின் போதும் அடுத்த பரம்பரைக்கு அப்பொறுப்பளித்தலுக்கு அப்பால் புதிய சிந்தனைகள், புதிய நூல்கள், புத்தாக்கங்கள் போன்றவற்றைச் சேர்க்கக் கூடியவாறு புதிதாகச் சிந்திக்க இடமளிக்க வேண்டும். சிறந்த நற்குணங்கள் கொண்ட நவீன மயப்படுத்தப்பட்ட மற்றும் மாற்றங்களுக்கு ஏற்றவாறு செயற்பட அடுத்த பரம்பரையினருக்கு இடமளிக்க வேண்டியதுடன் அவற்றைப் போற்ற வேண்டும். தனிநபர் மற்றும் சமூக விருத்தி இவ்வாறான நெகிழ்வுத் தன்மையூடாகவே இடம்பெற வேண்டும்.
1979ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட பெற்றோர் கொள்கைப் பிரகடனம் (Parent Charter) அடங்கியுள்ள உரிமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக சகல பெற்றோர் மற்றும் கல்வியுடன் தொடர்புபட்ட சகலரையும் அறிவுறுத்தி அக்கொள்கைப் பிரகடனத்தை அமுல்படுத்தப் பெற்றோர் ஆர்வம் காண்பிக்க வேண்டும். கல்வியுடன் தொடர்புபட்ட சகல உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதற்காகப் பெற்றோரை ஊக்குவிக்க வேண்டும்.
நன்றி : பாராமன்ற குழுக்கான கல்வி அறிக்கை
கல்வி அமைச்சு

Page 46
இl3
உள்ளே...
- ரச வாராந்த .
இவி
மனித மேம்பாட்டின் உயிர்ப்பு மிகு கல்விக்காய்
இகவி6
இகல்
2012 ஆம் ஆண்டிற்கான
ஆசிரியர்கள் உடனடி

வி3)
இகவின்
ஆசிரியத்து ெ(நோக:-
அபிவிருத்தியில் தேர்ச்சி மையத்தல்வியும் இலங்கையும் -
ஊர் நோக்கு
ரீட்சை வழிகாட்டல் கருத்தரங்குகள் தொடர்பான சில
சொல் இலக்கணங்கள் பலப்படுத்தும்
அகவி6
மார்க்கதர
1 இணைப்பாடவிதானம் கெ.
ஆசிரியர்கள் மதிக்க
கார் 4
அகவிடு
கம்சாட்டின் உப்பு மிகு கல்விக்கால்.
36
15 :ார் 11:
'அகவிழிகளை பெற விரும்பும்
யாக தொடர்பு கொள்ளவும்.

Page 47
"இs
கிடைக்கும் பூபாலசிங்கம் புத்தகக்கடை 202, செட்டியார் தெரு, கொழும்பு - 11
தொ.பே.இல.: 011-2422321 பூபாலசிங்கம் புத்தகக்கடை 4A, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்
தொ.பே.இல.: 021-2226693 நியூ கேசவன் புக்ஸ்டோல் 52 டன்பார் வீதி, ஹட்டன்
தொ.பே.இல: 051-2222504, 051-2222977
அறிவாலயம் புத்தகக்கடை 190 B புகையிரத வீதி,
வைரவப்புளியங்குளம், வவுனியா தொ.பே.இல.: 024-4920733 இஸ்லாமிக் புத்தக இல்லம் 77, தெமட்டக்கொட வீதி, கொழும்பு - 09
தொ.பே.இல.: 011-2688102 Easwaran Book Depot No. 126/1, Colombo Street, Kandy Tel.: 081-2220820 குமரன் புக் சென்டர் 18, டெய்லிபயர் கொம்பிலக்ஸ் நுவரெலியா தொ.பே.இல.: 052-2223416 விழுது - மட்டக்களப்பு இல 22, கலைமகள் வீதி, நெச்சிமுனை, மட்டக்களப்பு தொ.பே.இல - 065 - 2222500 விழுது - திருகோணமலை 81யு, ராஜவரோதயம் வீதி, திருகோணமலை
தொ.பே.இல - 026 2224941
Printe Kumaran Pres 39, 36th Lane,
kumbhlk@g
Registered in the Department of Posts o

வி.
படங்கள்
பூபாலசிங்கம் புத்தகக்கடை 309-A 2/3 காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு
தொ.பே.இல: 4515775, 2504266 அல்குரசி புத்தக நிலையம் 28, 1/2, புகையிரத வீதி, மாத்தளை
தொ.பே.இல.: 066-3662228 அறிவுநதி புத்தகசாலை இல 06, கனகபுரம் வீதி, கிளிநொச்சி தொ.பே.இல: 077 6737535 Zeen Baby Care 121B, Arm Mill Road, Addalaichenai -01 Tel.: 077 3651138
புக் லாப் 20, 22 சேர் பொன் ராமநாதன் வீதி, பரமேஸ்வரா சந்தி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம் தொ.பே.இல: 021-2227290, அன்பு ஸ்டோர்ஸ் 14 பிரதான வீதி, கல்முனை தொ.பே.இல.: 067-2229540 பரணி புத்தகக் கூடம் நெல்லியடி ம.ம வீதி, நெல்லியடி
தொ.பே.இல - 077 5991949 விழுது - புத்தளம் இல 24801 கொழும்பு வீதி, தில்லையடி, புத்தளம்
தொ.பே.இல • 032 • 5740094 விழுது - யாழ் மாவட்டம் இல 23, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி வடக்கு, யாழ்ப்பாணம் தொ.பே.இல - 021 2229866
ISSN 1800-1246
d by
ss (Pvt) Ltd.
olombo 06 mail.com
பk 9771 8 001.P 4 005II
fSri Lanka under OD/26/News/2014

Page 48
மனித ே உயிர்ப்பு மி
அகவி
இ3 AHAVILI
ஆசிரிய வாண்மைக்காக புதிய பார்வைகளோ? அறிவுசார் சமூகத்தை நோக்கி...
WWWW.viluthu.org

மம்பாட்டின் த கல்விக்காய்... 5டி 100
36
விலை: 200/=