கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகவிழி 2014.08

Page 1
ஓகஸ்ட் - 2014
இக6
மனித மேம்பாட்டின் உயிர்ப்பு மிகு கல்
விழி 10 பார்வை 108
www.viluthu.org

பிடி
தவிக்காய்...
ISSN 1800-1246
விலை: 100/-

Page 2
இது
ஆசிரியத்து
உள்ளே......
ஆன்மீக நுண்மதி
CN
தென் கொரியாவின் கல்வித்துறைச் சாதனை
உலகளாவிய ஆசிரியர் கல்வியின் புதிய போக்குக இலங்கையின் ஆசிரியர் கல்வியில் அதன் விளைவு
இன்றைய உலகில் பொருளாதார நோக்கில் பெண் .
3.
உலகமயமாக்கலும் இலங்கையின் கல்விச் செல்நெறி
மேனாட்டுப் பல்கலைக்கழகங்களில் இந்து நாகரிகம்
0 1 0
மேலதிக மொழிகளைக் கற்பித்தல்
O -
ஆவர்த்தன அட்டவணை வரலாறு
10. கல்வியின் மாறுபாடுகள் அனைத்துலக மனிதனை (
அகவிழியில் இ
பொறுப்பு
AHAVILI 3, Torrington Avenue
Colombo 07
Tel.: 011 250 6272 E-mail: ahavili.viluthu@gmail.com
t?

வ நோக்கு..,
- 1900-45
4
ளும்
புகளும்
கல்வியின் முக்கியத்துவம்
A 3 க 3 க 3 க - -
றியும்
நோக்கி
டம்பெறும் கட்டுரைகளுக்கு அதன் ஆசிரியர்களே - கட்டுரைகளில் இடம்பெறும் கருத்துக்கள்
அகவிழி" யின் கருத்துக்கள் அல்ல.
பொதுசன நஜகம் யாழப்ப ஓனர்,

Page 3
ISSN )
ஆ:
ஆசிரி
ம
ஆசிர ச. இந்தி நிர்வாக .
சாந்தி சச்சி நிறைவேற்றுப் பன
ஆசிரிய க.சண்மு பத்மா சோ
ஆலோ
பேராசிரியர் சோ. சந்திரசேகரம்
முன்னாள் கல்விப் பீடாதிபதி கொழும்புப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் தை. தனராஜ் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
கலாநிதி சசிகலா குகமூர்த்தி
சிரேஷ்ட விரிவுரையாளர் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
து. ராஜேந்திரம் முன்னாள் முதுநிலை விரிவுரையாளர் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
லெனின் மதிவானம் பிரதிக் கல்வி வெளியீட்டு ஆணையாளர்
கல்வி அமைச்சு
வீ. தியாகராஜா சிரேஷ்ட ஆலோசகர், சமூக விஞ்ஞானக் கற்கைகள் துறை,
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
ஆசிரியரிடமிருந்து......
அகவிழி ஓகஸ்ட் 2014
இலவசக் கல்வியின் உரிமையினைத் தொடர்ந்தும் பாதுகாத்து கல்விக் கொள்கையினை நீடித்த நிரந்தரமாகப் பேணி பண்புசார் விருத்தியினை துரிதகதியில் யதார்த்த பூர்வமான பிரவேசமாக முன்னெடுப்பது கல்வி அமைச்சின் பிரதான இலக்காகும். இதன் போது 1000 இடைநிலைப் பாடசாலைகளை விருத்தி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் பாரிய முதலீடு மற்றும் அதனுடன் இணைந்த 5000

800-1246
வீடு
பத்துவ நோககு...
5 இதழ்
பியர் ரகுமார் ஆசிரியர் தானந்தம் ரிப்பாளர்(விழுது)
ர் குழு கலிங்கம்
மகாந்தன்
சகர் குழு
கே. சாம்பசிவம் தேசிய ஆலோசகர்: கல்வி முகாமைத்துவம்
பேராசிரியர் வ. மகேஸ்வரன்
தலைவர் தமிழ்த்துறை பேராதனைப் பல்கலைக்கழகம்
க. இரகுபரன் முதுநிலை விரிவுரையாளர் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பேராசிரியர் துரை மனோகரன்
தமிழ்த்துறை பேராதனைப் பல்கலைக்கழகம்
திருமதி. அருந்ததி ராஜவிஜயன்
ஆசிரிய ஆலோசகர் கொழும்பு கல்வி வலயம்
எஸ்.கே. பிரபாகரன் விரிவுரையாளர், வணிகக்கல்வித்துறை
தேசிய கல்வி நிறுவகம்
ஆரம்பப் பாடசாலை விருத்திக்காக விரிவான பிரவேசம் மற்றும் உரிய இலக்கு கொண்ட பல வேலைத்திட்டங்கள் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக உள் நாட்டினைப் போன்று வெளிநாட்டு நிதி முதலீடுகளினையும் மேற்கொள்ளவும் தேவையான செயற்பாடுகள் முன் னெடுக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி முகாமையாளர்கள் மற்றும் நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ளோரின் உயரிய பண்புசார்

Page 4
தரத்துடன் திறமைகளை மேம்படுத்துவது கல்வி அபிவிருத்தியின் பிரதான அம்சமாக இனங்காணப் பட்டுள்ளதுடன் அதியுயரிய கல்வி அபிவிருத்தித் திட்டங் களை வகுப்பதற்கும், அத்திட்டங்களின் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு வினைத்திறன் மற்றும் பயன்மிக்கதாக அமுல்படுத்துவதற்கும், அவற்றை தொடர்ச்சியான மேற்பார்வை மற்றும் மதிப்பீட்டுக்கு உட்படுத்துவதும் கல்வி அமைச்சின் பிரதான பொறுப்பாகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
உத்தேச தெற்காசிய வலய ஆசிரிய பயிற்சி மத்திய நிலையம் இலங்கையில் மாத்திரமன்றி பிராந்திய ரீதியில் விசேட பயிற்சி நிலையாகமாக அபிவிருத்தி செய்யப்பட வுள்ளது. வலயக் கல்வி அலுவலகங்கள் பாடசாலைக்கு அண்மித்த அபிவிருத்திக்கான ஒத்துழைப்புக்களை வழங்கும் பயன்மிக்க நிறுவனமாக முன்னேற்றுவதற்கும் விசேடமாக அதிசிறந்த பாடசாலைக் கல்வியினை வழங்குவதற்குத் தேவையான சகல வியூகங்களும் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளன.
மேற்குறித்த செய்தி கல்வி அமைச்சின் செயலாளரினால் 2012 இல் விடுக்கப்பட்ட அறிக்கையில் உள்ள செய்தியாகும். இதன் அடிப்படையில் கல்வி அமைச்சின் செலவினத் தலைப்பின் கீழ் செயற்பாட்டு வேலைத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆகிய பிரதான இரு வேலைத்திட்டங்கள் ஊடாக நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மீண்டெழும் செலவினத்தின் பிரதான 9 துறைகளுக்குரிய செயற்றிட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுவதுடன் 2012 ஆம் ஆண்டு மீண்டெழும் செலவினமாக ரூபா 27043 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 11,596 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பது இடைநிலைக் கல்விக்காகும்.
கல்வி அமைச்சின் மூலதனச் செலவினம் மேற்கூறப்பட்ட பிரதான இரு வேலைத்திட்டங்களின் கீழ் 8 செயற் றிட்டங்களுக்காக அமுல்படுத்தப்பட்டுள்ளன. 2010 ஆம் ஆண்டின் மொத்த மூலதன ஒதுக்கீடு 5502 மில்லியன் ஆகும். அத்துடன் இன்னும் பல செலவீனங்களை செய்திருப்பதாக 2012ஆம் ஆண்டு மகிந்த சிந்தனை மூலோபாய அறிக்கை மேலும் குறிப்பிடுகின்றது.
மகிந்த சிந்தனையின் மேற்குறித்த அறிக்கையினை இங்கு குறிப்பிட காரணம் கல்விக்காக செலவிடப்படும் செலவினம் மிகப்பெரியதாக இருப்பதாகவும் இச்செலவினங் களினூடாக கல்விக்கான தேவைகளை பூர்த்தி செய்து
ILாக
கதை

விடுவதாகவும் காட்ட முனைவதாக தெரிகிறது. ஆனால் இச்செலவினங்கள் ஏனைய ஆசிய, தெற்காசிய நாடு களுடன் ஓப்பிடும் போது மிகக் குறைவு என்பதனை அனைவரும் அறிவர். மற்றும் மேற்குறித்த திட்டங்கள் எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டியதாகும். இவ்விடத்தில் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் அவர்கள் கொரிய நாட்டின் கல்வி கல்வித்துறைச் சாதனை பற்றி குறிப்பிடுகையில் அங்கு உலகில் சிறந்த கல்வி முறையை உருவாக்கப் பிரதானமாக ஆசிரியர்கள் மீதான முதலீடு முக்கியமானது என்று முடிவுசெய்யப்பட்டது. அறிவின் மீதும் ஆசிரியர்கள் மீதும் இருந்த மதிப்பின் காரணமாக ஆசிரியர்களின் நிழலை மிதிப்பதும் தவறு என்று கொன்பியூசியசின் கொள்கை பின்பற்றப்பட்டது. கொரிய நாட்டு ஆசிரியர்கள் 100% பயிற்றப்பட்டவர்கள். சான்றிதழ் பெறவென பரீட்சைகள் வேறாக உண்டு. கணித ஆசிரியர்களில் 95% கணிதத்தில் பட்டம் பெற்றவர்கள். கணிதக் கல்வி கற்பிப்பதில் பயிற்சி பெற்றவர்கள். ஐக்கிய அமெரிக்காவில் கூட 70% மான கணித ஆசிரியர்களுக்கே இவ்வாறான தகுதிகள் உண்டு.
ஆசிரியர்களின் சம்பளங்கள் பொறியியலாளரை விட அதிகம் அவர்கள் சம்பளங்கள் மருத்துவர் சம்பளங்களுக்கு அடுத்தது. அவர்களின் சம்பளங்கள் அமெரிக்க ஆசிரியர் சம்பளங்களை விட 250% கொள்வனவுச் சக்தி அதிகம்.
ஆசிரியர் பயிற்சியும் கல்வியும் நிறைவேறிய பின்னர் ஆசிரியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தக் கூடிய சான்றிதழ் வழங்கப்படுகின்றது. இதனால் ஆசிரியர் கள் தொடர்ந்து அதே பணியில் இருக்க முடிகின்றது. உயர்ந்த சம்பளங்களும் சிறந்த வேலை நிலைமைகளும் தொடர்ந்து பணியாற்றுவதை உறுதி செய்கின்றன. என்கின்றார்.
இவ்வாறானதொரு கட்டமைப்பினை இலங்கையில் மேற்கொள்வதற்கு கல்விக்காக ஓதுக்கப்படும் செலவீனம் பற்றாக்குறை என்பதோடு மேலும் பல விடயங்கள் செல் வாக்கு செலுத்தலாம். இருப்பினும் இதற்கான மூலோபாயங் களை திட்டமிடுவதன் மூலமும் போதுமான அளவு நிதி ஒதுக்கீடு செய்வதன் மூலமும் தான் இலங்கையின் கல்வித்துறையில் எழுச்சி காண முடியும். அன்றேல் மேலும் பல காலம் கல்வித்துறையில் பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்பதில் ஐயமில்லை.
ச. இந்திரகுமார்
அகவிழி |ஓகஸ்ட் 2014 (?

Page 5
ஆன்மீக நுண்மதி (Spritual Intelligen
Professor P. C. Pakkeer Jaufar, Ed.D (SFU, Canada)
HIEEE யாரைக் காக்க
= == 25ாகா
யே 5 5 4
பள ப ன்
அகவிழி ஓகஸ்ட் 2014
அறிமுகம் மதரீதியான பாரம்பரியத்துக்கு உட்பட்டோ உட்படாமலோ, ஆண்களினதும் பெண்களினதும் உள்ளங்களில் காணப்படுவதே ஆன்மீகம் ஆகும். போல் ரில்லிச் என்பவரின் கருத்தின்படி "ஆன்மீகம் " என்பது முடிவான
அக்கறையாகும். இதன்படி பார்த்தால் ஒவ்வொருவரிடமும் மே முடிவான அக்கறை காணப்படுவதனால் எல்லோரிடமும் ஆன்மீகம் காணப்படுகின்றது எனலாம். எவ்வாறாயினும்

ce)
“முடிவான அக்கறை” என்ற பதம் பல்வேறு விதமாக வியாக்கியானம் செய்யப்படலாம். சிலர் தங்களையோ தங்கள் அக்கறையையோ ஆன்மீகமாகக் கருதுவதில்லை. மனவெழுச்சி போன்று ஆன்மீகமும் பல்வேறான அளவுகளில் ஆழமானதாகக் காணப்படலாம். இவ்வாறே, அதன் வெளிக்காட்டலும் பல்வேறான அளவுகளில் காணப்படலாம். இது உணர்வுடனோ அல்லது உணர்வற்றோ, சார்ந்தோ அல்லது சாராமலோ, ஆரோக்கியமானதாகவோ அல்லது ஆரோக்கியமற்றோ, மிகவும் எளிமையானதாகவோ அல்லது எளிமையற்றோ, பயனுள்ளதாகவோ அல்லது அபாயகரமாக திரிபடையச் செய்யப்பட்டதாகவோ காணப்படலாம்.
ஆன்மீகம் தொடர்பான சில தற்கால வரைவிலக் கணங்களைச் சுருக்கமாகப் பின்வருமாறு காட்டலாம்:
1.
* N
எந்தவொரு அபிவிருத்தி நிலைமையினதும் உச்ச மட்டத்துடன் இது சம்பந்தப்பட்டிருக்கின்றது. உதாரணமாக அறிதல் சார் விருத்தி, நன்நடத்தை விருத்தி, மனவெழுச்சி விருத்தி, ஆளிடைத் தொடர்பு விருத்தி என்பனவற்றை இங்கு குறிப்பிடலாம். ஆன்மீகம் என்பது தன்னளவிலேயே வேறாக விருத்தி யானதொரு நிலைமையாகும். எந்தவொரு நிலைமையிலும் உள்ள மனப்பான்மையே ஆன்மீகமாகும். உதாரணமாக, வெளிப்படையான அன்பு. ஆத்மீகம் என்பது மேடையேற்றப்படாத அனுபவங்களின் சிகரம் ஆகும்.
3.
4.
இவ்வாறான வித்தியாசமான கண்ணோக்குகளையும் இன்னும் பலவற்றையும் ஒன்றிணைக்கப்பட்டதாக ஆன்மீகம் பற்றிய நோக்கு காணப்படுகின்றது (Wilber, 2000).
இருக்கைக்கான எல்லை கடந்த கருத்தைக் கொண்ட தாக அல்லது அதனுடன் தொடர்புடையதாகவும் ஆன்மீகம் விபரிக்கப்படலாம். இறைவனுடன் மனிதர்களின் அல்லது பூமியின் தொடர்பைக் காட்டும் வகையில் சிலர் ஆன்மீகத்தை விபரிக்கின்றார்கள். குறித்த நம்பிக்கைக்கான அல்லது அனுஷ்ட்டானத்துக்கான தியாகமாகவும்

Page 6
என
கடப்பாடாகவும் ஏனையோர் இதை வரையறுக்கின்றார்கள். சிறந்த வாழ்க்கைக்கு ஆன்மீகம் எவ்வாறு பங்களிப்புச் செய்கின்றது என்பதை விளங்குவதற்காக, பூரண மனிதனாக வாழ்வதற்கான முழுமையான சாத்தியத்தை உறுதிப் படுத்துவதே ஆன்மீகம் என மானிடவியற் பதத்தினால் இதை வரையறுக்கலாம் (Anastoos, 1998). எனவே, சிறந்த வாழ்க்கைக்குத் தீங்கு பயக்கும் நம்பிக்கைகள், அனுஷ்ட்டானங்கள் என்பனவற்றில் இருந்து ஆரோக்கியமான ஆன்மீகத்தை வேறுபடுத்துவது இங்கு அவசியமாகின்றது. இது , ஆன்மீக நுண்மதியை வரையறுப்பதற்கான சவாலுக்கு இட்டுச் செல்கின்றது.
ஆன்மீகம் தொடர்பான வரைவிலக்கணங்களுக்கிடையே குறைவான உடன்பாடே காணப்படுவதனால் ஆன்மீக நுண்மதி தொடர்பான விபரித்தல் என்பது இறுதியானதொரு வரையறுக்கப்பட்ட முடிவாக இருப்பதை விடவும் ஆராய்ந்து பார்க்கும் ஒன்றாக அமைவதே பொருத்தமானதாக இருக்கும். ஆன்மீக நுண்மதி என்றால் என்ன? என்ற வினாவுடன் தொடங்குவதன் மூலம் தொடர்ந்து வரும் பகுதிகளுக்கு வாசகர்களை வழிநடத்தலாம் என எண்ணுகின்றேன்.
பல்நுண்மதிகள்
"அறிதல் சார் சிக்கல்களைச் சமாளிக்கும் ஆற்றல்" என நுண்மதி சில வேளைகளில் வரையறுக்கப்படு கின்றது. தற்போதைய பயன்பாட்டை நுணுகி ஆராயும் போது, நுண்மதிக்கும் காரணங்காணலுக்குமான வேறுபாடுகள் பெருமளவில் இழக்கப்பட்டுள்ளதைக் காண்கின்றோம். உதாரணமாக, Webster's Dictionary (Mish, 1993), இல் தரப்பட்டுள்ள வரைவிலக்கணத்தைக் கருத்திற் கொண்டால், விளங்குவதற்கான ஆற்றல், அறிவைப் பிரயோகிப்பதற்கான ஆற்றல், காரணங்களை திறமையுடன் பயன்படுத்துவதற்கான ஆற்றல், சூழலை ஏற்ற வகையில் ஒருவர் மாற்றியமைப்பதற்கான ஆற்றல் என்பனவற்றைக் கொண்டதே நுண்மதியாகும். நுண்மதி பல்வகையான ஆற்றல்களை உள்ளடக்கியுள்ளது என்ற கண்ணோக்கு தற்கால நரம்பியல், அறிதல்சார் உளவியல் செல் நெறிகளால் பலப்படுத்தப்பட்டுள்ளது.
நுண்மதியின் பல்வேறு வகைகளை புதிதுகண்ட பல ஆய்வாளர்களுள் ஹவார்ட் கார்ட்னரின் Howard Gardner(1993) பல்நுண்மதி பற்றி ஹவார்ட்டில் செய்யப்பட்ட பல முன்னோடி ஆய்வுகள் நுண்மதி பன்முகங்களை உடையது என்ற உண்மையை மக்கள் விளங்கிக் கொள்ள பெரிதும் உதவியாக அமைந்தது. அவருடைய வேலைகள் இன்று அமெரிக்காவில் பல பாடசாலைகளில் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. கார்ட்னரின் ஆய்வுகளின்படி, நுண்மதியின் பல்வேறு வகைகள் ஒன்றில் ஒன்று

சாராவண்ணம் விருத்தியடைகின்றன. அத்துடன் ஒரு நுண்மதி வகையில் கொண்டுள்ள தேர்ச்சி மற்றைய நுண்மதி வகையின் தேர்ச்சியில் செல்வாக்கு செலுத்துவ தில்லை. உதாரணமாக, சொற்களுடனான மொழி சார்ந்த திறன் எண்களுடனான தர்க்கரீதியான கணிதவாற்றல்களில் இருந்தும், இடைவெளிகளுக்கு இடையேயுள்ள தொடர்பு களை புலக்காட்சி பெறும் ஆற்றல்களில் இருந்தும் வேறுபடுத்தப்படலாம். நுண்மதியின் ஒரு பகுதியில் ஒருவர் கொண்டுள்ள உயர்வு மற்றொன்றிலுள்ள அவரின் உயர்வு பற்றி காட்ட வேண்டிய அவசியம் இங்கு இல்லை. மேலும், நடனம், விளையாட்டு போன்றனவற்றுடன் சம்பந்தப்பட்ட உடலை முற்றிலும் வித்தியாசமான முறையிலும் திறன் மிக்க வகையிலும் இயக்கும் உடலியக்க நுண்மதி (Kinesthetic Intelligence) எல்லா வகையான சங்கீத உளச் சார்புக்கும் தேவையான சங்கீத நுண்மதி (Musical Intelligence) ஏனையவர்களுடன் நம்மை அவர்களுடைய அனுபவங்களை உணரும் வகையில் இணைக்கும் ஆளிடை நுண்மதி (Interpersonal Intelligence) என்றவாறு பல வகையான நுண்மதிகளைப் பற்றி கார்ட்னர் விளக்கிக் காட்டியுள்ளார். ஆயினும், விருத்தியின் வேறானதொரு வகையாக ஆன்மீக நுண்மதியைப் பற்றி எதுவும் இங்கு
குறிப்பிடப்படவில்லை.
“ஆட்களினுள், மற்றும் ஆட்களிடை” நுண்மதியை அடிப்படையாகக் கொண்டு டேனியல் கோல்மேன் DanielGoleman (1995) இனால் செய்யப்பட்ட “மனவெழுச்சி நுண்மதி" பற்றிய ஆய்வு வாழ்க்கையின் பெரும்பாலான பகுதிகளின் வெற்றி அறிதல்சார் ஆற்றலில் தங்கியிருப்பதைப் போன்று மனவெழுச்சி திறன்களிலும் தங்கியிருப்பதாகக் காட்டியது. சுய-விழிப்புணர்வு, தன்னடக்கம், மற்றவர்களுடன் சேர்ந்து செயலாற்றும் திறன் என்பவைகளை மனவெழுச்சி நுண்மதி உள்ளடக்கியுள்ளது. இங்கு மற்றவர்களுடன் சேர்ந்து செயலாற்றுதல் என்பதனால் கருதப்படுவது யாதெனில் மற்றவர்கள் சொல்வதை அவதானமாகக் கேட்டல், அவர்களுடன் தொடர்பாடல்களில் ஈடுபடல், அவர்களின் பின்னூட்டல்களை ஏற்றுக் கொள்ளல், அவர்களின் வித்தியாசமான கண்ணோட்டங்களை ஒத்துணர்ந்து கொள்ளல் போன்றனவற்றிற்கான ஆற்றல் களை ஒருவர் பெற்றிருக்க வேண்டும் என்பதாகும்.
கோல்மேன் மற்றும் ஏனையோரின் கருத்துக்களின்படி, வித்தியாசமான வகை நுண்மதிகள் மூளையின் பல்வேறு பகுதிகளுடன் இணைந்து காணப்படுகின்றன. ஆன்மீகத்துடன் இணைந்து காணப்படும் மூளையின் பகுதிகளை வேறாக்கிப் பார்ப்பதற்கான ஆய்வுகள் இதுவரை மிகக் குறைவாகவே செய்யப்பட்டுள்ள போதிலும் "தியானம்" சம்பந்தமான பெருமளவான ஆய்வுகளின்படி, வரையறுக்கப்பட்ட 2 பயிற்சிகளினால்கூட முக்கியமான உடலியக்க மாற்றங்களை
அகவிழி ஓகஸ்ட் 2014 ம

Page 7
விளைவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிகின்றோம் (Murphy & Donovan, 1999; Shapiro & Walsh, 1984; Walsh & Vaughan, 1993).மனவெழுச்சி மற்றும் ஆன்மீக உணர்திறனை மேம்படுத்துவதற்கு மேலதிகமாக, முக்கியமான உளவியற் பயன்களையும் நீண்டகாலப் பயிற்சிகள் அளிப்பதாக இவ்வாய்வுகள் காட்டுகின்றன.
எம்மானுவல் ஸ்வீடன்பர்க் (Emmanuel Swedenborg) என்பவர் பற்றிய சுவாரஸ்யமானதொரு துணுக்கு இங்கு குறிப்பிடத்தக்கது. இவர் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தொரு விஞ்ஞானியாவார். பிற்காலத்தில் ஆன்மீகத் துறையில் ஈடுபட்டு தொலைநோக்கினைக் கொண்டதொரு மெய்ஞ்ஞானியாகத் திகழ்ந்தவர். Swedenborgian என்றதொரு கிறிஸ்தவ கோயிலை அமைத்து ஆன்மீகப் பணியில் ஈடுபட்டுவந்தவர். திடீரென இவர் உடல்நலக் கேட்டுக் குள்ளாகி உடலின் ஒரு பகுதி பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டபோது இவர் தனது தொலைநோக்கு ஆற்றலை இழந்துவிட்டார் (Wulff, 1991).மூளையின் குறித்த பகுதியுடன் ஆன்மீக வெகுமதியானது இணைந் துள்ளது என்பதை இந்நிகழ்ச்சி உறுதிப்படுத்துகின்றது. எவ்வாறாயினும், ஆன்மீக அனுபவங்கள் உடலியக்கத் துடனான இணைப்பை மூளையில் கொண்டுள்ளது என்பதனால், அவை மூளையினாற்றான் உண்டாக வேண்டும் என்ற அவசியமில்லை என்பதை இங்கு கவனத் திற் கொள்ளல் வேண்டும். எல்லா அனுபவங்களுடனும் நரம்பியல் உடலியக்கம் (Neurophysiology) வகிபங் கொன்றைக் கொண்டிருந்தாலும் மூளை மற்றும் உடலியக்கம்சார் செயன்முறைகள் ஆன்மீக அனுபவங்களை முற்றாக விளங்கிக் கொள்ள அல்லது அவற்றின் முக்கியத்துவத்தை மதிப்பிட உதவமாட்டாது.
உடல் மற்றும் உள் ஆரோக்கியத்துடன் சில குறிப் பான ஆன்மீக நம்பிக்கைகளும் பயிற்சிகளும் ஆன்மீகத் துடன் நேரான இணைப்பைக் கொண்டுள்ளன என்பதை அண்மைக்கால ஆய்வுகள் பல காட்டியுள்ளன (Eg. Richards, 1999). ஆரோக்கியம், நோய் சுகமாக்குதல் என்பனவற்றிற்கு (Dossay, 1993) மேலதிகமாக, மரணித்தல் செயன்முறையில் ஆன்மீக நம்பிக்கையின் தாக்கங்கள் பற்றியும் ஆய்வாளர்கள் கவனம் செலுத்தியுள்ளனர் (Gallup, 1997). ஆன்மீகத்தின் நடைமுறைப் பிரயோகமாக மருத்துவம் மற்றும் சிகிச்சைக்கான மாற்று வழிகளைக் காணல் அமைந்துள்ளதாக பலர் கருதுகின்றனர் (Boyle, 1999). அத்துடன், மத ஈடுபாட்டிற்கும் ஆன்மீகத்துக்கும் இடையேயான வேறுபாடுகளும் தற்போது ஆராயப் படுகின்றன (Wuthnow, 1998).
அகவிழி ஓகஸ்ட் 2014
ஆன்மீக நுண்மதியை வரையறுத்தல்
ஆன்மாவினதும் உள்ளத்தினதும் உள்ளார்ந்த வாழ்க்கை, உலகத்தில் நாம் இருப்பதற்கும் இதற்கும் உள்ள தொடர்பு

என்பன சம்பந்தப்பட்டதே ஆன்மீக நுண்மதியாகும். மெய்மை நிலை சார்ந்த வினாக்கள் பற்றிய ஆழ்ந்த விளக்கங்கள், உணர்வு நிலையின் பல்வேறு மட்டங்கள் பற்றிய அகக்காட்சி என்பனவற்றைப் பெறுவதற்கான ஆற்றல்களை ஆன்மீக நுண்மதி அளிக்கின்றது. நமது இருக்கைக்கான காரணமாக அல்லது சிலரின் கருத்துப்படி, பரிணாம வளர்ச்சியின் ஆக்கபூர்வமான உயிர் விசையாக நமது ஆன்மாவைப் பற்றிய விழிப்புணர்வையும் ஆன்மீக நுண்மதி வழங்குகின்றது. சடப்பொருள், வாழ்க்கை, உடல், உயிர், உள்ளம், ஆன்மா என்றவாறான விழிப்புணர்வின் பேறான பரிணாம வளர்ச்சியில் இருந்து ஆன்மீக நுண்மதி உதித்தெழுகின்றது.
இதில் இருந்து, ஆன்மீக நுண்மதி என்பது ஒருவரின் உளவாற்றலை விடவும் அதிகமானதொன்று என புரிந்து கொள்ளலாம். இது "நான்" என்பதை "ஆன்மாவுடன்" இணைக்கின்றது. ஆன்மீக நுண்மதி பாரம்பரிய உளவியல் விருத்திக்கும் அப்பால் செல்கின்றது. சுய விழிப்புணர்வுக்கும் மேலதிகமாக எல்லைகளுக்கு அப்பால் சென்று ஒவ்வொரு வருடனும், புவியுடனும், இருக்கும் எல்லாவற்றுடனும் உள்ள தொடர்பைப் பற்றிய விழிப்புணர்வை ஆன்மீக நுண்மதி வழங்குகின்றது.
ஆன்மீக நுண்மதி இருதயத்தைத் திறந்து, உள்ளத்தை ஒளிபெறச் செய்து, ஆன்மாவை எழுச்சி யூட்டி, தனிமனித உள்ளத்தை அவனது இருக்கைக்கான மறைபொருளாக உள்ள காரணத்துடன் தொடர்பு படுத்துகின்றது. பயிற்சியின் மூலம் ஆன்மீக நுண்மதியை விருத்தி செய்யலாம். இது மாயத் தோற்றத்தில் இருந்து யதார்த்தத்தை வேறு படுத்திக்காண ஒருவருக்கு உதவுகின்றது. எந்தக் கலாசாரத்திலும் இது அன்பாக, மெய்யறிவாக, சேவையாக வெளிக்காட்டப்படலாம்.
ஆளினுள்ளானதும், ஆளிடையானதுமான உணர் திறனை விருத்தி செய்தலைக் கொண்டிருப்பதனால் ஆன்மீக நுண் மதி மனவெழுச்சி நுண் மதியுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. அகவயச் சிந்தனைகளிலும் உணர்வுகளிலும் கவனம் செலுத்தி ஒத்துணர்வை விதைத்தல் உள்ளார்ந்த ஆன்மீக வாழ்க்கையின் விழிப்புணர்வை விருத்தி செய்வதன் ஒரு பகுதியாகும்.
ஒன்றுக்கு மேற்பட்ட நோக்குடன் பொருட்களைக் காணுதல், புலக்காட்சி, நம்பிக்கை, நடத்தை என்பவை களுக்கிடையேயுள்ள தொடர்புகளை இனம் காணல் போன்ற ஆற்றல்களில் ஆன்மீக நுண்மதி தங்கியுள்ளது. அதிகமானோர் தமது நடத்தைக்கான பொறுப்பை ஏற்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றார்களே ஒழிய இதனுடன் மிக நெருக்கமான தொடர்பை உடைய நம்பிக்கைகள், புலக்காட்சிகள் என்பனவற்றுக்கான பொறுப்பை ஏற்க எதிர்பார்க்கப்படுவதில்லை. எந்த நுண்மதி

Page 8
வடிவமைப்பையும் துல்லியமாக்கும்போது பயிற்சி, ஒழுக்கம் என்பன கட்டாயமாகத் தேவைப்படுகின்றன. எனவே, ஆன்மீக நுண்மதியும் இதற்கு விதிவிலக்கானதல்ல.
நான் யார்? நான் ஏன் இங்கு இருக்கின்றேன்? சிந்தித்துக் கவனம் செலுத்த வேண்டிய காரியம் உண்மையில் எது ? போன்ற வினாக்களின் கருத்தை ஆராயும்போது ஆன்மீக நுண்மதியில் நாம் தங்க வேண்டியுள்ளது. நாளாந்த வாழ்க்கையில் நாம் எதிர் கொள்ளும் அமளி, மனவழுத்தங்களுக்குக் கீழ் மறைந்து கிடக்கும் அன்பு, ஆனந்தம் என்பனவைகளின் ஊற்றைக் கண்டு பிடிக்க ஒருவருக்கு ஆன்மீக நுண்மதி பெரும்பாலும் உதவ முடியும்.
மான
ஆன்மீக நுண்மதியை அறிந்து கொள்வதற்கான வித்தியாசமான வழிகள் அறிந்து கொள்வதற்கான வித்தியாசமான வழிகளை குறிப் பிடாவிட்டால் ஆன்மீக நுண்மதிக்கான வரைவிலக்கணங்கள் பூரணமடையமாட்டாது. கீழ்மட்ட ஆன்மீகம் பற்றிய ஆய்வொன்றில் ஈடுபட்ட றொபர்ட் போமன் (Robert Forman, 1997) என்பவரின் அறிக்கையின்படி, வித்தியாசமான பல்வேறு பாரம்பரியங்களை உடைய மக்கள் இன்று ஆன்மீகத்தை வெறுமனே கருத்துருவாக நோக்குவதை விடவும் அனுபவ ரீதியாக பெறும் செல்நெறியைக் கொண்டிருக்கின்றனர் என்பதை அறிய முடிகின்றது.
ஆன்மீக நுண்மதியைத் துல்லியமாக்குவதற்குப் பொருத்தமானதொன்றாகத் "தியானம்" கருதப்படுகின்றது. ஏனெனில், இது ஆகக் குறைந்தது புலனுணர்வு பெறல், பகுத்துணர்தல், கூர்ந்து ஆராய்தல் என்னும் மூன்று தெளிவான அறிவதற்கான வழிகளில் தங்கியுள்ளது. சிலர் மெய்ப்பித்துக் காட்டியுள்ளபடி, இம்மூன்று வழிகளும் ஆன்மீக நுண்மதியின் ஒன்றிணைந்த பகுதிகளாக அமைந்துள்ளன.
ஏனைய வகை நுண்மதிகளில் இருந்து ஆன்மீக நுண்மதியை வேறுபடுத்துவதற்குத் தேவையான பயன்மிக்க படவாக்கம் ஒன்றினை அறிநிலையின் பல் வேறு மட்டங்களின் விபரம் அளிக்கின்றது (Wilber, 1995).மேலும், வில்பர் (1999) என்பவரின் கருத்துப்படி, நம்மில் அதிக மானோர் தனியாள் அடையாளத்துக்குரிய எல்லைகளுக்கு அப்பால் பெறும் உணர்வுநிலைக்கு இட்டுச் செல்லும் உச்சநிலை அனுபவங்களைக் கொண்டிருந்தபோதும் பொருத்தமான பயிற்சிகள் மூலமே எல்லா மட்டங்களையும் பற்றிய தூய விழிப்புணர்வுக்கான தொடர்ச்சியான வழியை எம்மால் பெற்றுக் கொள்ள முடியும். "மேற்கூறப்பட்டுள்ள மூன்று நிலைகளிலும் ஏற்கனவே இவ்விழிப்புணர்வு தோன்றியுள்ளதால் இதனை நடக்கும்போதும், தூங்கும் போதும், கனவுகாணும்போதும் கூட பேண முடியும். ஆன்மா

என்பது அறிகை நிலையின் ஒரு மாற்றப்பட்ட நிலையுமல்ல அல்லது ஒரு அசாதாரண நிலையுமல்ல. வித்தியாசமான நிலைகள் ஆன்மாவில் இருந்தே தோன்றுகின்றன (பக். 322)." என வில்பர் குறிப்பிடுகின்றார். இன்னொரு கண்ணோக்கில் செய்யிது ஹுஸ்ஸைன் நஸ்ர் SeyyedHossein Nasr(1989) என்பவர் குறிப்பிடுகின்றார்: “மாயை என்னும் முகத்திரையை ஊடறுத்துச் சென்று யதார்த்தத்தை அப்படியே காண்பதற்கு உதவும் நுண்மதி இறைவனின் அருட்கொடையாகும் (பக் 146)." இச்சந்தர்ப்பத்தில், நுண்மதி என்பது மறைவான சக்திகளையும் ஆன்மீக இயல்காட்சிகளையும் உணர்தல் என்பதற்கும் அப்பால் சென்று " மாயத்தோற்றத்தில்" இருந்து "யதார்த்தத்தை" அடையாளம் காணும் ஆற்றல் என நாம் விளங்கிக் கொள்ளலாம்.
தன்னுணர்வற்ற திரிபுகளில் இருந்தும் விடுபட்டு, விடயங்களை அப்படியே உள்ளது உள்ளபடி பார்க்கக் கூடிய ஆற்றலைத் தருவது ஆன்மீக நுண்மதியாகும். விருப்புசார் எண்ணம், நிச்சயப்படுத்திக் கொள்வதற்காக ஒன்றை மூளையில் வாங்கிக் கொள்ளும் திறன் என்பன வற்றுக்கு மாறாக சுயாதீனம், துன்பம், மரணம் போன்ற உளதாயிருக்கும் யதார்த்தங்களுக்கு முகம் கொடுக்கவும் இவற்றின் நிலையான கருத்தைப் புரிந்து கொள்ளவும் ஆன்மீக நுண்மதியை பயிற்சி செய்தல் உதவியாக அமையும்.
அதிகமானோருக்கு அழகியல் உணர்வையும், அழகின் மதிப்பை அறிந்து துயிக்கவும் ஆன்மீக நுண்மதி உதவுகின்றது. நமது உடலில் சுற்றியோடும் மறைவான சக்தியை சில வேளைகளில் உணர்ந்து கொள்வதுடன் ஆன்மீக நுண்மதி இணைந்துள்ளது. தியானம், யோகப் பயிற்சி மற்றும் கராத்தே ஜூடோ போன்ற வீர விளை யாட்டுக்கள் மனத்தை அமைதிப்படுத்தி விழிப்புணர்வை விரிவாக்கி சக்தி, ஒலி, ஒளி, அறிகையின் மறைவான மட்டங்கள் போன்றனவற்றிற்கான புலக்காட்சி உணர் திறனை துல்லியமாக்கும்.
ஆதி காலத்தில் இருந்தே மனித வாழ்க்கையின் ஒன்றிணைக்கப்பட்ட பகுதியாக ஆன்மீகம் இருந்து வருகின்றது. ஒவ்வொருவருக்கும் உள்ளுணர்வு பெறல், சிந்தித்தல், புலனுணர்வு பெறல், உணர்தல் போன்றன வற்றிற்கான ஆற்றல் இருப்பது போன்று ஒவ்வொருவருக்கும் ஆன்மீக நுண்மதியை விருத்தி செய்து கொள்ளும் ஆற்றலும் உண்டு என நம்புகின்றேன். நாம் எந்த அளவு இவ்வாற்றல்களில் கவனம் செலுத்துகின்றோம் என்பதைப் ப பொறுத்தே நம்பகரமான முறையில் இது சாத்தியமாகும். ஆன்மீகம் சம்பந்தமான பிரச்சினைகளை சிலர் உதாசீனம் செய்துவரும் அதேவேளையில், ஏனையோர் ஆன்மீக உணர்திறனை விருத்தி செய்வதில் கவனம் செலுத்தி
அகவிழி ஓகஸ்ட் 2014
கடIாக 4 , 25/-
17
7 த
தான்

Page 9
வருவதைக் காண்கின்றோம். ஆன்மீகம் கற்பித்தலுக்கான பரந்த வழி முறைகள் பல தற்போது காணப்படுவதால் புத்திசாலித்தனமான தெரிவை மேற்கொள்வதற்கும் ஆன்மீகம் சார்ந்த சில வகையான மாயை சபலங்களுக்குள் அகப்பட்டுக் கொள்வதைத் தவிர்ப்பதற்கும் மதிநுட்பமான கூர்ந்து கவனித்தல் அவசியமாகும் (Anthony, Ecker, & Wilber,1987; Deikman, 1990; Vaughan, 1995).
ஆன்மீக முதிர்ச்சி
கவனப் பயிற்சி, மனவெழுச்சிகளைச் செப்பம் செய்தல், ஒழுக்க விழுமியங்களை விதைத்தல் போன்ற பல்வேறு பயிற்சிகளின் மூலம் ஆன்மீக நுண்மதியை விருத்தி செய்யலாம். இத்தகைய பயிற்சிகள் தனியான குறிப்பிட்டதொரு மத பழக்கவழக்கங்களுக்கோ ஆன்மீகக் கற்பித்தலுக்கோ சொந்தமானவை என்று கூற முடியாது. ஆன்மீக நுண்மதி அறிதல் சார் , எழுச்சிசார் , ஒழுக்க விருத்திசார் அம்சங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்பட்டாலும் இவற்றுள் எதனுடனும் இது முற்றிலும் ஒத்தது என்றும் எம்மால் கூற முடியாது. இரண்டு வித்தியாசமான நுண்மதிகள் வித்தியாசமான வீதத்தில் விருத்தியடைவதால் ஒருவர் இவற்றில் ஒன்றில் அதிக விருத்தியடைந்தும் மற்றயதில் போதிய முதிர்ச்சி பெறாமலும் காணப்பட முடியும். தீர்க்கப்படாத மனவெழுச்சிப் பிரச்சினைகள், அல்லது ஒழுக்கப்பிரச்சினைகள் விடப்பட்டுக் காணப்படுமானால் அவை நிச்சியமாக ஆன்மீக விருத்தியைத் தடுப்பதாக அமையும். ஆன்மீக நுண்மதியின் வெளிக்காட்டுகையாக ஆன்மீக முதிர்ச்சியானது மனவெழுச்சி, ஒழுக்க முதிர்ச்சி மற்றும் ஒழுக்க நடத்தையின் அளவீடொன்றை எடுத்துக் காட்டுகின்றது.
நான் இதை விளங்கியுள்ளதன்படி, ஏனைய மக்களிடம் உள்ள தொடர்பின்போது ஞானத்தையும் கருணையையும் பால், சமய நம்பிக்கைகள், வயது, இனம் என்பவைகளைக் கருத்திற் கொள்ளாது பயன் படுத்துவதையே ஆன்மீக முதிர்ச்சி கொடுக்கின்றது. மாயையை இனம் காணவேண்டும், நிலையாமையின் மத்தியிலும் அன்பு செலுத்துதல் வேண்டும், இருக்கும் சுயாதீனம் மற்றும் ஒழுக்கத்தினை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவாவைப் பொறுத்து அகக் காட்சியையும் விளக்கத்தையும் ஆன்மீக முதிர்ச்சியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். நோக்குகளின் முழுமையானதொரு நிரலையும் பல்வேறு அறிந்துகொள்ளும் விதங்களையும் கொண்டுள்ள ஆழ அகலமானதொரு தொலை நோக்கை இது அளிக்கின்றது. மேலும் உலகில் நடைமுறையில் உள்ள வெளிவாழ்க்கையின் செயல்கள், சேவைகளுடன் உள்ளத்தினதும் ஆன்மாவினதும் உள்ளார்ந்த வாழ்க்கையை ஆன்மீக முதிர்ச்சி இணைக் கின்றது.
ள் தொவிக்கைகயன் படு
20 அகவிழி ஓகஸ்ட் 2014

ஆன்மீக முதிர்ச்சியின் விருத்திக்கு சுய - விழிப்புணர்வு மிகவும் அவசியமாகும். எமது கவனத்தை உள் நோக்கிச் செலுத்தினால், நமது உள்ளுணர்வுகளையும் எண்ணங் களையும் பற்றி ஒரு நிமிடத்துக்காவது கவனிக்கத் தொடங்கி விடுவோம். உள்ளமானது அகவயமான முறையில் கடந்த காலத்தைப் பற்றி மீளாய்வு செய்து கொண்டும் எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டும் இருக்கின்றது.
விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையுடனும் மற்றும் பூரணமடைதலுக்கான அவாவுடனும் ஒருவர் ஆழமான ஆய்வுச் சிந்தனையில் மூழ்குவார் எனில் ஆன்மீக வழி திறந்து படிப்படியாக ஆன்மீக முதிர்ச்சிக்கு அவரை இட்டுச் செல்லும். வாழ்க்கையின் அங்கமாக இருக்கும் சவால்களுக்கு மத்தியில் அன்பு செலுத்துதல், நேர்மை, சகிப்புத் தன்மை, திறந்த மனம், உள்ளார்ந்த அமைதி போன்ற பண்புகள் ஆன்மீக முதிர்ச்சியுடன் இணைந்திருக்கும் போக்கைக் கொண்டுள்ளன.
ஆன்மீக நுண்மதியும் உளவியல் ஆரோக்கியமும் ஆன்மீகத்தின் சில வடிவங்கள் இயங்காமலோ அல்லது நோய் வாய்ப்பட் டோ இருந்தாலும் கூட, ஆன்மீக நுண்மதி பொதுவாக உள ஆரோக்கியத்துடன் இணைந்து காணப்படமுடியும். ஆன்மீக நம்பிக்கைகள் மறுதலித்தலையும் எதிர்கால ஊகங்களையும் பேணி பயம், முரண்பாடு என்பவைகளுக்கு இட்டுச் செல்லுமானால், அவை அழிவை உண்டாக்குபவையாகவோ அல்லது மிகவும் பிரச்சினைவையாகவோ அமையலாம். உதாரண மாக, மதத்தலைவர் ஒருவர் மக்களின் பயம் மற்றும் குற்ற உணர்வைக் கையாளுவதன் மூலம் அவர்களில் ஆதிக்கம் செலுத்த விழைவார் எனில் இயங்கு நிலையற்ற குடும்பம் ஒன்றின் பண்புகளை அக்குறிப்பிட்ட சமூகம் வெளிக்காட்டலாம். இந்நிலைமையில், நுணுகி ஆராயாத ஆன்மீகக் கடப்பாட்டில் இருந்து ஒருவர் மீளுவதற்கு பல வருடங்கள் செல்லாம்.
பாரம்பரிய சமயம் ஒருவருக்கு பாதுகாப்புணர்வு, சமூக உடைமையாக இருக்கும் உணர்வு போன்றனவற்றை வழங்குவதன் மூலம் சமூக ஆதரவு உதவியை அதன் உறுப்பினர்களுக்கு வழங்கும். பாரம்பரிய சமயத்தினால் மாயையிலிருந்து விடுபட்டவர்கள் மத்தியில் ஆன்மீகம் தன்னுள் நோக்கி திசைப்படுத்தப்பட்டதாக அமைந்திருக்கும். ஒருவர் குழுவொன்றைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஆனால் அவரின் ஆன்மீக நுண்மதி காரணமாக மற்றவர்கள் பற்றிய ஒத்துணர்வைக் கொண்டவராக இருந்து இவ்வியல்பை விரிவாக்குவதன் மூலம் மக்களின் சேம நலனில் அதிக அக்கறை கொண்டவராக இருக்கலாம். நமது ஆளிடைத் தொடர்புகளையும் ஆளிடைத் தங்கி

Page 10
யிருத்தலையும் நாம் உணரும்போது பல்வேறு விதமாக உலகை நோக்குவது சாத்தியமாகின்றது.
நியமங்களை மீறிய தனியாள் வளர்ச்சி உள்ளிட்ட ஆன்மீக நுண்மதி மேம்பாடு ஆரோக்கியமான உளவியல் விருத்திக்கு இட்டுச் செல்லும். உண்மை யதார்த்தத்தையும் சுய விழிப்புணர்வையும் மனத்தில் பதித்தல், எல்லாவற்றின் மீதும் கவனம் செலுத்தி பயிற்சி பண்ணல் என்பனவற்றுடன் இது ஆரம்பிக்கின்றது. பாரம்பரிய நற்பண்புகளான பொய் சொல்லாமை, பணிவு, தருமம் என்பனவற்றுடன் மெய்யான நடத்தை, வித்தியாசங்களை மதித்தல், மற்றவர்களுக்கு சேவை செய்தல் போன்ற சில தனியாள் பண்புகள் ஆன்மீக நுண்மதியுடன் சேர்ந்து காணப்படுகின்றன. விமர்சனங்களுக்கு அளவுக்கு மீறிய கூருணர்ச்சி, வெறுப்பு என்பனவற்றை முற்றிலும் தவிர்த்து அன்பு, பெரும்தன்மை, தாராள மனப்பான்மை என்பனவற்றுடன் பெருமளவில் இணைந்ததாக ஆன்மீக நுண்மதி காணப்படும். ஆம்! தம்மை ஆன்மீகவாதியாகக் கருதாத அதே நேரம் ஆரோக்கியமான உளநிலையை உடையவர்களிடமும் இத்தகைய பண்புகள் காணப்படலாம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இத்தகைய பண்புகள் ஆன்மீக நுண்மதிக்கு அவசியமானவையாயினும் போதுமான நிபந்தனைகள் அல்ல.
நுண்மதி ஆய்வு
வித்தியாசமான ஆய்வுப் பகுதிகளில் ஆன்மீக நுண்மதி எவ்வாறு இனம் காணப்படலாம் என்பதற்கான சில உதாரணங்கள் கீழே தரப்படுகின்றன:
விஞ்ஞான ஆய்வு
மருத்துவம், உளவியல், இறப்பியல் (thanatology) போன்ற பல்வேறு விஞ்ஞான பிரிவுகளில் இன்று ஆன்மீகம் பற்றிய ஆய்வுகள் பெருமளவில் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. பல்வேறு ஆய்வுப் பிரிவுகளில் ஆன்மீக நுண்மதியின் பிரயோகம் என்பதால் நாம் கருதுவது என்னவெனில் யதார்த்தம் பற்றிய நம்பிக்கைகளையும் எடுகோள்களையும் மீளாய்வு செய்து புற, மற்றும் அகவயமான நோக்குகளைச் சீரமைத்தலாகும். தகவல்கள் அவசியமானவை ஆனால் விஞ்ஞான அறிவுக்குப் போதுமானவையல்ல என்பதைப் போன்று அறிவு அவசியமானது ஆனால் அகக் காட்சியுடன் அறிவு விளக்கங்களையும் அனுபவங்களையும் பொது அறிவையும் பயன்படுத்தும் ஆற்றலுக்கு போதுமானதல்ல.
ஆன்மீகத் தெரிவுகள்
எந்தப் புத்தகக் கடையிலும் இன்று பல்வேறு விதமான ஆன்மீக முறைகள் அடங்கிய புத்தகங்கள் இலகுவாகக் கிடைக்கின்றன. பல்வேறு வகைகளில் பெருந்தொகையான

தகவல்கள் கிடைக்கும்போது பெறுமதியான, சரியான வற்றைத் தெரிய வேண்டிய தேவை எழுகின்றது. ஆன்மீக நுண்மதி உடையவர் இந்நிலைமையில் மிகச் சரியானவற்றைச் சரியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றார்.
உறவுகள் ஆழமான அன்பான உறவுகளுக்கு மேலதிகமாக, குடும்பங்களிலும் நண்பர்களுக்கிடையும் ஒன்றாகக் கடமையாற்றுவோர்களுக்கிடையிலும் உள்ள உறவுகளில் ஆரோக்கியமான நிலைமையை ஆன்மீக நுண்மதி உருவாக்குகின்றது. உள்ளத்தையும் இருதயத்தையும் ஒன்றிணைப்பதன் மூலம் ஆன்மீக நுண்மதி மன்னிப்பதன் சக்தியை மக்கள் உணர்ந்து கொள்ளவும் அன்பைக் கொடுத்து அன்பைப் பெறுவதற்கான ஆற்றலை வளர்த்துக் கொள்ளவும் மக்களுக்கு உதவுகின்றது. நெருக்கமான உறவுகள் மூலம் நமது தவறுகளை உணர்ந்து சரியான தெரிவுகளை நாம் மேற்கொள்ள ஆன்மீக நுண்மதி இட்டுச் செல்கின்றது.
பெற்றோரின் வளர்ப்பு சிறு பிராயத்தின்போது ஏற்படும் ஆன்மீக அனுபவங்கள் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தவல்லன் (Hoffman, 1992) தமது கற்பனைகளின் உள்ளார்ந்த உலகத்தை ஆராயும் போது பிள்ளை ஆன்மீக நுண்மதியின் அடிப்படை மூலங்களைக் கற்றுக் கொள்கின்றான்.
தனித்திருத்தல்
ஆன்மீக விசாரணைக்கு தனிமை, மௌனம் என்பனவற்றின் பெறுமதியை கண்டுகொள்ளல் வேண்டும். தனிமை, சுயாதீனம், மரணம் என்பனவற்றின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்வதற்கு தனித்திருக்கும் காலம் பெரிதும் உதவி செய்யும்.
பல்வேறு விதமான ஆன்மீக அனுபவங்கள்
அகலமான வீச்சை உடைய பல்வேறு ஆன்மீக அனுபவங் களைப் பற்றிக் கலந்துரையாடாது விடின் ஆன்மீக நுண்மதி பற்றிய எந்தக் கலந்துரையாடலும் பூரணமடைய மாட்டாது. முக்கியமான அகக்காட்சியை இவ்வனுபவங்கள் வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆயினும், அறிதல் சார் மற்றும் மனவெழுச்சிசார் காரணிகளைப் பொறுத்து நம்பிக்கைகள், வெற்றிகரமான வகையில் ஆன்மீகத்துடன் ஒன்றிணைதல் என்பனவற்றினால் ஒருவரின் வியாக்கியானம் தவிர்க்கமுடியாத வகையில் சீரமைக்கப்படுகின்றது.
அகவிழி ஓகஸ்ட் 2014 )

Page 11
சுய-எண்ணக்கரு
ஆன்மீக ஆய்வில் மிக முக்கியமான பகுதி நான் யார்? நான் எதைப்பற்றிச் சிந்திக்கின்றேன்? என்பன போன்ற வினாக்கள் பற்றிய நமது சொந்த நம்பிக்கைகளை ஆராய்வதாகும். நான் யார்? என்ற தனியான வினாவை மனத்திற் கொண்டு நிலையான தியானத்தில் ஈடுபடுவதன் மூலம் தன்னிறைவை அடைந்து மன அமைதி, மகிழ்ச்சி என்பனவற்றை நாம் பெற்றுக் கொள்ளலாம். அதிகமான ஆன்மீக அறிவுறுத்தல்கள் தனது ஆத்மாவை ஒருபோதும் திருப்பதிப்படுத்தாது "நான்" என்ற மமதையில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்றே வலியுறுத்துகின்றன.
ஆன்மீக நுண்மதியின் ஒன்றிணைவு
பல்வேறு வகையான ஒன்றிணைப்புப்பற்றிய தூர நோக்குகள் பின்நவீனத்துவத்தின் ஒழுங்கற்ற சிதைவுகளில் இருந்து உண்டாவதுபோல் தோன்றுகின்றது. விஞ்ஞானத்தையும் சமயத்தையும் ஒன்றிணைப்பது பற்றிய கென் வில்பர் Ken Wilber (1998) இன் வேலையைப் போன்று நன்னிலைக்கான உடலியல், மனவெழுச்சி, உளவியல், ஆன்மீக அம்சங்களை மானிடவியல் மற்றும் மனித இயல்புகளுக்கு அப்பாலான இயல்புகள் பற்றிய கொள்கைகள் ஒன்றிணைப்பதைப் போன்று கலாசாரங்களுக்கிடையேயான ஒன்றிணைக்கப்பட்ட நடைமுறைகளைப் போன்று மனத்தின் உள்ளார்ந்த வாழ்க்கையையும் ஆன்மாவையும் உலகத்தின் செயற் பாடுகளுடன் ஒன்றிணைக்கும் பொதுவான வேலையைப் போன்று - குணப்படுத்துதலுக்கும் முழுமைக்குமான முக்கியமானதொரு திறப்பாக ஒன்றிணைப்பை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும்.
ஆன்மீக நுண்மதியின் ஒன்றிணைக்கப்பட்டதொரு கண்ணோக்கானது பல் - நுண்மதியை உள்ளடக்கி இருப்பதுடன் ஒருவரின் முழுமையான வாழ்க்கையாக ஆன்மீக நுண்மதியைப் பார்க்கின்றது. ஞானம், கருணை, செயற்பாடு என்றவகையில் உலகில் வெளிக்காட்டப்படாத நிலைமையில் ஆன் மீகம் பற்றிய அறிவைக் கொண்டிருப்பதாகக் கூறுவதில் எந்தப் பயனும் இல்லை. ஒருவர் தனது முக்கியமான நம்பிக்கைகளுக்கேற்ப வாழ்வதுதான் ஆன்மீக நுண்மதியை ஒன்றிணைத்தல் என்பதன் அர்த்தமாகும். ஆன்மீக நுண்மதி விருத்திக்குத் தேவையான உள்ளார்ந்த வேலைகளில் ஈடுபடும்போது, அதிகமானவர்கள் நன்றியுணர்வையும் அர்த்தமுள்ள நோக்கங்களையும் வெளிக் காட்டுவதைக் கண்டுள்ளேன். வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கும் ஞானத்திற்கான எல்லையற்ற தேடலே ஆன்மீக ஆய்வாகும்.
5 அகவிழி ஓகஸ்ட் 2014

உசாத்துணைகள் Anastoos, C. (1998). Humanistic psychology and ecopsychology The Humanistic
Psychologist, 26, 3-4. Anthony. H., Ecker, B., & Wilber, K. (Eds.).(1987). Spiritual choices. New York:
ParagonHouse. Boyle, P (1999). Integrating spirituality in the healthcare setting.Park Ridge
Center Bulletin, 7,2. Deikman, A. (1990). The wrong way home.Boston: Beacon. Dossey, L. (1993). Healing words: The power of prayer and the practice of
medicine. SanFrancisco: HarperCollins. Fadiman, J., &Frager, R. (Eds.). (1997). Essential Sufism. San Francisco:
HarperCollins Forman, R. (1997). Grassroots spirituality. Report prepared for the Fetzer
Institute. Hastings onthe Hudson, NY: Forge Institute. Gallup International Institute. (1997, October).Spiritual beliefs and the dying
process.Princeton, NJ: Author. Gardner, H. (1993). Multiple intelligences.New York: Basic Books. Golernan, D. (1995). Emotional intelligence. New York: Bantam Books. Grey, A. (1998). Themission of art.Boston: Shambhala.32 What Is Spiritual
Intelligence? Hoffman, E. (1992). Visions of innocence: Spiritual and inspirational experiences
of childhood. Boston: Shambhala. Mish. F. C. (Ed.). (1993). Merriam Webster, Inc collegiate dictionary (10th ed.).
Springfield,MA: Merriam-Webster, Inc.
Murphy, M., & Donovan, S.(1999). The physical and psychological effects of
meditation (2nded.). Sausalito, CA: Institute of Noetic Sciences. Richards, P. S. (1999). Spiritual influences in healing and psychotherapy. Award
Address, Division 36, American Psychological Association.Psychology of Religion Newsletter, 25(1),1-6.
Shapiro, D., & Walsh, R. (Eds.). (1984).Meditation: Classic and contemporary
perspectives. New York: Aldine.
Smith, H. (1993). Do drugs have religious import? In R. Walsh & F’. Vaughan
(Eds.), Pathsbeyond ego: The
transpersonal vision (pp. 91-93). Los Angeles: Tarcher/Putnam. Vaughan, F. (1979).Awakening intuition. New York: Doubleday/Anchor. Vaughan,
F. (1995).Shadows of the sacred: Seeing through spiritual illusions.
Wheaton, IL: Quest Books. Wilber, K. (1995). Sex, ecology, spirituality.Boston: Shambhala. Wilber, K. (1997). The eye of spirit.Boston: Shambhala. Wilber, K. (1998). The marriage of sense and soul.New York: Random House. Wilber, K. (1999). One taste.Boston: Shambhala. Wilber, K. (2000). Integral psychology. Boston: Shambhala. Wulff, D. (1991). The psychology of religion. New York: John Wiley. Wuthnow, R. (1998). After heaven: Spirituality in America since the 1950-s.
Berkeley: University of California Press.

Page 12
தென் கொரியாவின் கல்வித்துறை
'பேராசிரியர் சோ. சந்திரசேகரம்
ஆசியாவின் தூர கிழக்கு நாடான தென்கொரியா இன்று வளர்ச்சி அடைந்த நாடாகப் பொருளாதாரத்திலும் கல்வித்துறையிலும் பெருவளர்ச்சி பெற்று மேலை நாடுகளையும் பெரிதும் கவர்ந்துள்ளது. ஐக்கிய அமெரிக்கக் கல்வி ஆய்வாளர்கள் தென்கொரியாவின் கல்விமுறை வளர்ச்சியிலிருந்து ஏதேனும் பாடங்களைக் கற்றுக்கொள்ள விரும்புகின்றனர். இதற்குக் காரணம் கணிதம், விஞ்ஞானம், ஆகிய பாடங்களில் கொரிய மாணவர்கள் ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளை விட உயர்சித்திகளைப் பெற்றமையாகும். கணிதத்தில் கொரியா உலகில் பத்தாவது இடத்தைப் பெற்றவிடத்து ஐக்கிய அமெரிக்கா 29 ஆவது இடத்தைப் பெற்றது ; விஞ்ஞானத்தில் கொரியா நான்காவது இடத்தைப் பெற்றவிடத்து ஐக்கிய அமெரிக்கா 35 ஆவது இடத்தைப் பெற்றது. ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், டென்மார்க், சுவீடன் முதலிய நாடுகளையும் தென்கொரியா முந்திவிட்டது. (PISA பரீட்சை 2006). இதன் காரணமாகவே கொரியாவின் கல்விமுறையில் மேலைநாடுகள் அக்கறை செலுத்தி விடுகின்றன.
கொரியாவின் கல்விமுறையில் இரு பிரதான அம்சங்களைக் காணமுடியும். முதலாவது கல்வி வாய்ப்புக்களைச் சமப்படுத்தும் முயற்சி; இரண்டாவது கொரியச் சமூகம் வரலாற்று ரீதியாகவே கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றது என்பதாகும். கொரியாவில் நவீன கல்வி முறை ஆரம்பித்த காலம் தொடக்கம் சமய, சமூக வகுப்பு, பாலினம் மற்றும் வாழ்விட வேறுபாடின்றி யாவருக்கும் கல்வித்துறையில் சமவாய்ப்புகளை வழங் குவது அரசாங்கக் கொள்கையாயிற்று. கொரியா ஜப்பானியக் குடியேற்ற நாடாக இருந்ததோடு 1950களில் கொரியப் போரிலும் ஈடுபட்டது. அதன் பின்னர் கல்வி மீதான ஆர்வம் மேலும் பெருகி, கல்வியின் மீது முதலீட்டை அதிபரிப்பதில் அதிக ஈடுபாடு ஏற்பட்டது; கட்டிடங்கள், இயந்திரங்களைவிட மக்கள் மீதான முதலீடு சிறந்தது எனக் கொரிய அரசு
முடிவு செய்தது.

ச் சாதனை
ஆசிரியர்கள்
உலகில் சிறந்த கல்வி முறையை உருவாக்கப் பிரதானமாக ஆசிரியர்கள் மீதான முதலீடு முக்கியமானது என்று முடிவுசெய்யப்பட்டது. அறிவின் மீதும் ஆசிரியர்கள் மீதும் இருந்த மதிப்பின் காரணமாக "ஆசிரியர்களின் நிழலை மிதிப்பதும் தவறு என்று கொன்பியூசியசின் கொள்கை பின்பற்றப்பட்டது. கொரிய நாட்டு ஆசிரியர்கள் 100% பயிற்றப்பட்டவர்கள். சான்றிதழ் பெறவென பரீட்சைகள் வேறாக உண்டு. கணித ஆசிரியர்களில் 95% கணிதத்தில் பட்டம் பெற்றவர்கள். கணிதக் கல்வி கற்பிப்பதில் பயிற்சி பெற்றவர்கள். ஐக்கிய அமெரிக்காவில் கூட 70% மான கணித ஆசிரியர்களுக்கே இவ்வாறான தகுதிகள் உண்டு.
மான
ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களும் இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களும் பல்கலைக்கழகங்களில் நான்கு ஆண்டு கல்வி பெற்றவர்கள். 11 அரசுப் பல்கலைக்கழகங்களும் இரு தனியார் பல்கலைக்கழகங்களும் ஆசிரியர்களைப் பயிற்றுகின்றன. பாட விடயத்தோடு (கணிதம், விஞ்ஞானம்) பிள்ளை விருத்தி, கற்பித்தல் முறைகள், மதிப்பீட்டு முறைகள், பாட ஏற்பாட்டுத் தத்துவங்கள், கற்பித்தல் பயிற்சி என்பன உண்டு.
கொரியாவில் ஆசிரியர்களுக்கு உரிய கௌரவம் உண்டு. கொரியன் சமூகத்தின் படி சமயகுரவர்களுக்குரிய அந்தஸ்து ஆசிரியர்களுக்கும் உண்டு. 'அரசர், ஆசிரியர், பெற்றோர் யாவரும் சமமானவர்கள்' என்பது கொன்பியூசியஸ் சிந்தனை. (மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது போல்)
ஆசிரியர்களின் சம்பளங்கள் பொறியியலாளரை விட அதிகம்; அவர்கள் சம்பளங்கள் மருத்துவர் சம்பளங்களுக்கு அடுத்தது. அவர்களின் சம்பளங்கள் அமெரிக்க ஆசிரியர் சம்பளங்களை விட 250% கொள்வனவுச் சக்தி அதிகம்.
ஆசிரியர் பயிற்சியும் கல்வியும் நிறைவேறிய பின்னர் ஆசிரியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தக் கூடிய சான்றிதழ் வழங்கப்படுகின்றது. இதனால் ஆசிரியர்கள் தொடர்ந்து அதே பணியில் இருக்க முடிகின்றது. உயர்ந்த சம்பளங்களும் சிறந்த வேலை நிலைமைகளும் தொடர்ந்து பணியாற்றுவதை உறுதி
செய்கின்றன.
அகவிழி ஓகஸ்ட் 2014 -
பொதுசன ந, 8லகம் பூசாழ்ப்பானம்.

Page 13
தகுதிகளையும் சான்றிதழ்களையும் பெற்றாலும் ஆசிரியர் பதவிகளுக்கும் போட்டி அதிகம். தலைநகர் கோலில் 20 பேருக்கு ஒருவருக்கே பதவி கிட்டும் பதவியில் அமர்த்தப்பட்டால் இளைப்பாறும் வரை தடையின்றிப் பணியாற்றலாம்.
இடைநிலைப் பாடசாலைக்குத் தேவையான ஆசிரியர்களை விட ஐந்து மடங்கு ஆசிரியர்கள் பயிற்றப்படுகின்றனர். ஆரம்பப் பாடசாலைகளில் வகுப்பறை மாணவர் தொகை குறைக்கப்பட்டு, ஆசிரியர்களுடைய இளைப்பாறும் வயதும் குறைக்கப்பட்டமையால் ஆசிரியர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது.
ஆசிரியர்களுக்கான வேலை நிலைமைகளும் கவர்ச்சிகரமானவை. ஜப்பான், சிங்கப்பூர், ஆகிய நாடுகள் போன்று கொரியாவில் ஆசிரியர்கள் தமது வேலை நேரத்தில் 35% நேரத்தை மட்டுமே கற்பித்தல் பணியில் செலவிடுகின்றனர் . ஐக்கிய அமெரிக்காவில் 80% நேரம் கற்பித்தலுக்குச் செலவிடப்படுகின்றது. கொரியப் பாடசாலைகளில் ஆசிரியர்கள் 65% நேரத்தைப் பல்வேறு பணிகளில் செலவிடுகின்றனர். உதாரணமாக, பெற்றோர்களைச் சந்தித்தல், அடுத்தநாள் பாடத்தைத் திட்டமிடல், ஏனைய ஆசிரியர்களுடன் கலந்துரையாடல், நிர்வாகப் பணி போன்றன . சகல ஆசிரியர்களுக்கும் கற்பித்தல் இல்லாத நேரங்களில் பொது அலுவலக அறையை மாறி மாறிப் பயன்படுத்துகின்றனர். இதனால்
UTL
2014 S) அகவிழி ஓகஸ்ட்

அவர்களுக்கிடையே தொடர்புகள் ஏற்படுகின்றன. பரஸ்பரம் உதவிக் கொள்கின்றனர். வளங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். இந்த ஏற்பாடு புதிய ஆசிரியர்களுக்கு உதவுகின்றது.
புதிய ஆசிரியர் களுக்கு ஆறுமாத காலம் 'திசைமுகப்படுத்தும்' நிகழ்ச்சித் திட்டம் உண்டு. அதிபர், துணை அதிபர், மூத்த ஆசிரியர் போன்றோர் இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துகின்றனர். அவர்கள் புதிய ஆசிரியர்களுக்கு வழிகாட்டல்களை வழங்கி அவர்களை மேற்பார்வை செய்கின்றனர்.
ஆசிரியர்களுக்கு சேவைக்காலப் பயிற்சி ஏற்பாடுகள் உண்டு. நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை 90 மணித்தியால சேவைக்காலப் பயிற்சி உண்டு. கல்வி அமைச்சும் உள்ளுர்கல்விச் சபைகளும் இப்பயிற்சி நெறிகளுக்கும் பொறுப்பானவை.
ஆசிரியர் தொழில் விருத்திக்கான வாய்ப்புகள் இணைய வழியிலும் பாடசாலை மட்டத்திலும் உண்டு. உலகில் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிலையத்தை எற்படுத்தும் முயற்சியில் கற்றல் தொடர்பான சகல தகவல்களையும் கொண்ட இணையவழிக் கற்றல் நிலையமொன்று (Edunet) அந்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. 80% ஆசிரியர்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர் (2003). இந்த இணைய நிலையத்துக்கான எண்மய (digital) நூல்நிலையமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

Page 14
இவ்வாறான கற்கைகளில் பெறப்படும் சான்றிதழ்கள் பதவி உயர்வுகளைப் பெற உதவுகின்றன. சேவைமூப்பு, கற்பித்தல் செயலாற்றம், ஆராய்ச்சி என்பனவும் பதவி உயர்வுகளுக்குக் கருத்திற்கொள்ளப்படுகின்றன. அதிக ஆசிரியர் தேவையுள்ள பிரதேசங்களில் பணியாற்று வோருக்குப் போதிய புள்ளிகள் வழங்கப்படுகின்றன. சிறிய வகுப்புகள், குறைந்த கற்பித்தல் நேரம், சம்பளத்துக்கு மேலதிகமான கொடுப்பனவுகள், பின்தங்கிய பாடசாலைகளில் கற்பிப்போருக்கு பிற்காலத்தில் பாடசாலைகளைத் தெரிவு செய்து கொள்ளும் உரிமை என்பன வேறு சில ஊக்குவிப்புக்களாகும்.
இத்தகைய கொள்கைகளும் நடைமுறைகளும் உறுதியான, சிறந்த, தகுதியுடைய ஆசிரியர் தொகுதி உருவாகக் காரணமாகின்றன.
பாட எற்பாடு
பா
கொரியாவில் ஒவ்வொரு 5 - 10 ஆண்டுகளுக்கிடையில் பாட ஏற்பாடு திருத்தியமைக்கப்படுகிறது. 1950களில் அமெரிக்கக் கல்விச் சிந்தனையாளர் ஜோன் டூயியின் பிள்ளை மையக் கல்விச் சிந்தனைகள் பாடசாலை பாட ஏற்பாட்டைப் பாதித்திருந்தன. அதன் பின்னர் ஜெ. புருணரின் சிந்தனைகளின் அடிப்படையில் கண்டறிதல், துருவி நோக்குதல் என்பன முக்கியத்துவம் பெற்றன. மொத்தத்தில் பிள்ளைகளின் அழகியல், உடலியல், அறிவு, ஆன்மீக மற்றும் ஒழுக்கவியல் சார்ந்த முழுமையான பிள்ளை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
தற்போது கொரிய கல்வி முறையின் இலக்குகளாவன * சமச்சீரான உடல் வளர்ச்சிக்கு * நாளாந்த வாழ்க்கைப் பிரச்சினைகளை இனங் காண்பதும் தீர்த்து வைப்பதற்குமான ஆற்றல்கள்; தர்க்கரீதியாகவும் ஆக்கத் திறனுடனும் சிந்தித்தல்; சொந்த உணர்வுகளையும் சிந்தனைகளையும் முறையாக வெளியிடும் ஆற்றல்.
கோளமயமான உலகுக்குப் பொருத்தமான முறையில் கலாசாரத்தையும் மரபுகளையும் வரவேற்கும் உளப்பாங்கை வளர்த்தல்.
உழைக்கும் உலகுக்குத் தேவையான அறிவையும், திறன்களையும் விருத்தி செய்தல்; அயலவர்களையும் நாட்டையும் விரும்புதல், உலகப் பிரஜை என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளல்.
கொரியப் பாட ஏற்பாடு அதிக நேரத்தை கலைக் கல்வியில் செலவிடுகின்றது. சமூகக்கல்வி, விஞ்ஞானம், இசை என்பவற்றோடு இசை நுண்கலைகள், ஒழுக்கக்கல்வி, ஆங்கிலம், செயல் முறைக் கலைகள், பல் வகை

இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் என்பவற்றுக்கு அதிக நேரம் ஒதுக்கப்படுகின்றது. இவ்வனைத்துப் பாடங்களும் மூன்று தொகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றது. மகிழ்ச்சிகரமான வாழ்க்கை (இசை, நுண்கலை ) ஒழுக்கமான வாழ்க்கை (கணிதம், விஞ்ஞானம்) , விவேகமான வாழ்க்கை.
இந்தப் பல்வேறு பாடங்களுக்கான தேசிய நியமங்கள் அல்லது தராதரங்கள் உண்டு. ஆனால் பிராந்திய ரீதியாக பாட ஏற்பாட்டு சட்டகங்கள் தயாரிக்கப்படுகின்றன. பாடசாலை மட்டத்தில் ஆசிரியர்களால் பாட ஏற்பாட்டுச் சாதனங்களும் பாடங்களும் தயாரிக்கப்படுகின்றன. அரசாங்கமானது பாடநூல்களை எழுதி அங்கீகரிக்கின்றது. ஆனால் பாட நூல்களைத் தெரிவு செய்வதில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பங்குகொள்வர்.
பாட ஏற்பாட்டின் தராதரம் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படுகின்றது. கல்வி அதிகாரிகள் பாடசாலைகளுக்கு ஒழுங்காக விஜயம் செய்து பாட ஏற்பாடு நடை முறையாவதைப் பரிசீலனை செய்கின்றனர். இவ்விடயம் பற்றி கொரிய பாட ஏற்பாட்டு மதிப்பீட்டு நிலையம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றது. பாடசாலைகள் தம்மைச் சுயமதிப்பீடு செய்யும் ஏற்பாடுகள் உண்டு.
பள்ளி இறுதி வகுப்புவரை மாணவர்களுக்கு அதிக அளவு வெளிவாரிப் பரீட்சைகள் (க.பொ.த சா/த, உ/த போன்று) இல்லை. பாடசாலைகளுக்குள் ஆசிரியர்கள் தயாரித்து நடாத்தும் பரீட்சைகளே உண்டு. எழுத்துப் பரீட்சைகளும் விஞ்ஞான ஆய்வு கூடப் பரிசோதனைகள் போன்ற செயலாற்றப் பரீட்சைகள் உண்டு. இவை திறனாய்வுச் சிந்தனை பிரச்சினை தீர்த்தல் போன்ற திறன்களைப் பரிசோதிப்பன.
எவ்வாறாயினும் தரங்கள் 6,9,10 வகுப்புகளில் பயிலும் 1% - 3% மாணவர்களுக்கு மட்டும் பாட ஏற்பாட்டை மதிப்பீடு செய்யும் நோக்குடன் பரீட்சைகள் நடாத்தப்படும். முக்கிய பாடங்களான கொரியன் மொழி, ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், சமூகக்கல்வி ஆகிய பாடங்களில்
இம்மாதிரிப் பரீட்சை நடாத்தப்படும்.
தற்காலச் சீர்திருத்தங்கள் யுனெஸ்கோ 1996 இல் வெளியிட்ட டெலர்ஸ் அறிக்கையின் (Delors Report) பரிந்துரைகளை கொரிய அரசு அப்படியே ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தியது.
ஒவ்வொரு மனிதனதும் பல்வகைப்பட்ட செழுமை (கு நிறைந்த ஆற்றல் கல்வியினூடாக விருத்தி செய்யப்படல் இ வேண்டும். அறியக் கற்றல், செய்யக் கற்றல், வாழக்கற்றல், போன்ற கல்வியின் பிரதான தூண்கள் கல்வியினூடாக த விருத்தி செய்யப்படல் வேண்டும் என இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. கொரியாவில் பிரகடனப்படுத்தப்பட்ட
அகவிழி |ஓகஸ்ட் 2014 (?

Page 15
கல்வியின் இலக்குகள் அமெரிக்காவை விட மிகவும் விரிவானவை; அவை பின்தங்கிய வகுப்புப் பிள்ளைகளை அதிக அளவுக்கு இலக்காகக் கொண்டவை என்பது அமெரிக்கக் கல்வியாளர் கருத்து. அவ்விலக்குகளாவன
*
அறிவுத்திறன்களையும் பிரயோகத்திறன்களையும் மேம்படுத்தல்
மனவெழுச்சித் திறன்களையும் பண்புகளையும் மேம்படுத்தல்
ஆக்கத்திறன், அழகியல், ஆன்மீக நலன், தன்னைப் பற்றிய அறிவு, தொடர்பான இலக்குகள்.
*
சகிப்புத்தன்மை, சமாதானம், மற்றவர்களை மதித்தல் தொடர்பான இலக்குகள்.
எவ்வாறாயினும் உயர்கல்வி நிறுவனங்களில் (கல் லூரிகளில்) அனுமதி பெறுவதற்கான பரீட்சைகள் மனனம் செய்தல், பரீட்சைக்கான ஆயத்தம் என்பவற்றை ஊக்குவித்து, இத்தகைய சிறந்த இலக்குகளைச் சிதறடித்து விடுகின்றன. இதனையிட்டு கல்வியாளர்கள் கவலை கொண்டுள்ளனர்.
கல்லூரி அனுமதிப்பிரச்சினை உதாரணமாக மாணவர்கள் இலங்கையில் போன்று பாடசாலைகளுக்கு வெளியே தனியார் போதனையை நாடுகின்றனர். இதனால் அரசாங்கம் கல்லூரி அனுமதிக்கும் பாடசாலைகளின் கணிப்பீடுகளையும் மாணவரது ஏனைய கல்விச் சாதனைகளையும் கருத்திற் கொள்ளுமாறு கல்லூரிகளைக் கேட்டுக் கொள்கின்றது.
ன
எவ்வாறாயினும் கல்லூரி அனுமதிக்கான போட்டி காரணமாகத் தனியார் போதனையும் பிரபல்யம் பெற்றுள்ளது. இப்பிரச்சினையைக் குறைக்க பாடசாலைகள் இலவச மேலதிக வகுப்புகளை நடாத்துகின்றது. தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில் பாடங்கள் நடாத்தப்படுகின்றன. பின்தங்கிய குடும்பத்துப் பிள்ளை களுக்கு விசேட புலமைப் பரிசில் ஏற்பாடுகள் உண்டு.
1997 தொடக்கம் கொரிய கல்வி அமைச்சு விரிவான பாடப் பொருளைக் கற்பிக்கும் கொள்கையைக் கைவிட்டு, பாடம் சார்ந்த எண்ணக்கருக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியது. இன்றைய அறிவுத் தொகுதி விரிவானது மட்டுமன்றி நாளாந்தம் பெருகிச் செல்வது. எனவே அதனைப் பாடசாலைக் காலத்தில் கற்பித்து விட முடியாது. மாணவர்கள் சுயமாக அறிவைப் பெறும் வழிமுறைகளை வழங் குவதும் அடிப்படையான எண்ணக்கருக்களை வழங்குவதும் சிறப்பானது என்ற நவீன கொள்கை கொரியக் கல்வி முறையில் பின்பற்றப் படுகின்றது. அவ்வெண்ணக்கருக்கள் மாணவர்களின் உயர்மட்ட (high order) சிந்தனையும் பிரச்சினை தீர்க்கும்
அகவிழி ஓகஸ்ட் 2014
14

திறன்களையும் வளர்க்கவில்லை. கொரியாவின் ஏழாவது தேசிய பாட ஏற்பாடானது சில புதிய குறிக்கோள்களை முன்வைக்கின்றது.
* அறிவு மையப் பொருளாதாரத்தில் தேவைகளை
நிறைவு செய்தல். மாணவர்களின் சுய சிந்தனை ஆற்றலை விருத்தி செய்தல் புதிய அறிவை உருவாக்கும் ஆற்றலை விருத்தி செய்தல்
அவ்வறிவை மற்றவர்களுக்குச் சிறப்பாக வழங்கும் திறனை விருத்தி செய்தல்.
இதற்காகத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது மற்றொரு குறிக்கோள். 2002 ஆண்டளவில் சகல கொரியப் பாடசாலைகளிலும் துரித வேக இணையத் தொடர்புகளை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு பாடத்திலும் 10% தகவல் தொழில் நுட்ப அம்சம் இருத்தல் வேண்டும். அண்மைக்காலச் சீர்திருத்தங்கள் மொத்தக் கற்பித்தல் நேரத்தைக் குறைக்கும் நோக்குடையவை. சுமையான பாட விடயத்தைக் குறைக்கும் முயற்சியும் உண்டு. பாடத்தை விரிவாக அன்றி ஆழமாகக் கற்றல், மாணவர்கள் சுயமாகக் கற்றல், படைப்பாக்கல் திறன்கள் போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.
கொரிய மாணவர்கள் ஆண்டுக்கு 220 நாட்கள் பாடசாலை செல்லுகின்றனர். ஆயினும் ஆரம்ப வகுப்புக்களில் 553 - 725 மணி நேரமும் உயர்நிலைப் பள்ளியில் (தரம் 10, 11, 12) 1020 மணி நேரமும் கற்கின்றனர். இது ஐக்கிய அமெரிக்காவை விடக் குறைவு. (அங்கு ஆரம்ப நிலையில் 900 மணி நேரம், உயர்கல்வி நிலையில் 1080 மணி நேரம்). மொத்தத்தில் கொரியாவில் பாடசாலை நேரம் ஆசிரியரின் கற்பித்தலை அவதானிப்பதற்கு மேலாகப் பல் வேறு கல்வி நடவடிக்கைகளில் செலவிடப்படுகின்றது. * ஆசிரியரின் நிழலைக் கூட மிதிப்பது தவறு.
*
அரசன், பெற்றோர், ஆசிரியர் யாவரும் சமமானவர்கள் கொன்பியூசியஸ் சிந்தனை.
வகுப்பறைக் கற்பித்தல் நேரம், பாட உள்ளடக்கச் சுமை என்பவற்றைக் குறைப்பது பிரதான கல்விச்
சீர்திருத்தங்கள்.
கொரியச் சமூகத்தில் ஆசிரியர்கள் துறவிகள் போன்று நம்பிக்கைக்குரியவர்கள்; கெளரவத்திற்குரியவர்கள்.

Page 16
உலகளாவிய ஆசிரியர் கல்வியின் புதிய இலங்கையின் ஆசிரியர் கல்வியில் அத
Pon. Ramathas Senior Lecturer, Sripada National College of Education Patana
தொடர்ச்சி ......
இலங்கையின் ஆசிரியர் கல்வியை மீளவடிவமைப்பதில் இந்தப் புதியப் போக்குகளின் தாக்கம்
இலங்கையில் இன்று பாடசாலைக் கல்வி முறைமையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாடசாலை மட்டக் கணிப்பீடு போன்றே பாடசாலை மட்ட முகாமைத்துவம் (School Based Management) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதே போன்று கல்வித்துறையில் சீர்த்திருத்தங்களை முன்வைப்போரும் கல்வி முகாமைத்துவத்துறையில் பணி புரிவோரும் பாடசாலை மட்ட ஆசிரியர் அபிவிருத்தி (School Based Teacher Development) பற்றியும் பேசி வருகின்றனர். இது இன்னும் சட்ட ரீதியாக இலங்கை பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படாவிட்டாலும் கொழும்பு, கண்டி, கம்பஹா போன்ற மாவட்டங்களில் காணப்படும் பொருளாதாரரீதியில் வசதி படைத்த பாடசாலைகள் தமது ஆசிரியர்களில் விருத்தி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கும் விடயத்தலைப்புகளை மையமாகக் கொண்ட பாடசாலை சார்ந்த ஆசிரியர் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை ஒழுங்கு செய்து கொள்கின்றன. இதற்கு வளவாளர்களாக தேசிய கல்வி நிறுவகம், பல்கலைக்கழகங்கள் போன்ற நிறுவன விரிவுரையாளர்கள் அழைக்கப்படுகின்றனர். மேலும் இம்முறைக்கு ஒருபடி மேலே சென்று அயலில் உள்ள 10 தொடக்கம் 12 பாடசாலைகளை இணைத்து குடும்பப்பாடசாலைகள் (Family School) உருவாக்கப்பட்டு சீடா, புவுணு, போன்ற அமைப்புகள் Inner House Training Programme போன்றவற்றை நடாத்தின. இவையும் கிட்டத்தட்ட பாடசாலை சார்ந்த பயிற்சியாகவே அமை கின்றன. இது உலகில் ஆசிரியர் கல்வியில் பாடசாலை சார்ந்த பயிற்சிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தின் விளைவேயாகும்.
வேறு பயிற்சி முறைகளில் கூறுகளை ஒருங்கிணைத்துப் பெறும் ஒன்று சேர் முறை இன்று உலகளாவிய ஆசிரியர் கல்வியில் காணப்படும் ஒரு புதிய போக்காகும். இதற்கேற்ப இலங்கையில் ஆசிரியர் கல்வித்துறையில் நடைமுறைப் படுத்தப்படும் கலைத்திட்டம் ஆசிரியர் தொழில் வாண்மை

ப போக்குகளும் தன் விளைவுகளும்
விருத்தி, பாடம் சம்பந்தமான விருத்தி, கற்பித்தல் செயல்முறை என்பவற்றுக்கு மேலதிகமாக வழிகாட்டலும் ஆலோசனை கூறலும், வகுப்பறை முகாமைத்துவம், விசேட உதவி தேவைப்படுவோருக்கு கற்பித்தல், பாடசாலையும் சமுதாயத்தொடர்பும், போன்ற வேறு பல கூறுகள் ஒன்று சேர் முறையில் வழங்கப்படுகின்றன. அத்தோடு நவீன தகவல் தொழினுட்பம் தொடர்பான பயிற்சியும் வழங்கப்படுகின்றது. ஆசிரியர் தான் கற்பிக்கும் விசேட பாடத்திற்கு மேலதிகமாக வேறு ஒரு பாடத்தைக் கற்பிப்பதற்கும், எல்லா ஆசிரியர்களுக்கும் ஆங்கிலக் கல்வியும், கணினிக்கல்வியும் வழங்கப்படுகின்றது. இதனைவிட ஆசிரியர் துறை தவிர்ந்த ஏனைய துறைகளில் பயன் படுத்தப்பட்டு வந்த கட்டுறுப்பயில்வு இன்று இலங்கையின் ஆசிரியர் கல்வித்துறையிலும் புகுத்தப் பட்டுள்ளது. ஆய்வுப்பணிகளில் அசிரியரும் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறு வேறு பயிற்சி முறைகளின் கூறுகளை ஒருங்கிணைத்துப் பெறும் ஒன்று சேர் பயிற்சி முறை இலங்கையிலும் ஆசிரியர் கல்வியை மீளவடிவமைப்பதில் தாக்கம் விளைவித்துள்ளது.
இங்கிலாந்தில் ஆசிரியர் கல்விக்கான தேசிய அதிகாரசபை (CATE) நிறுவப்பட்டது. அதேபோன்று ஐக்கிய அமெரிக்காவில் தொழில் வாண்மைத்துவ கற்பித்தல் தரத்திற்கான தேசிய சபை உருவாக்கப்பட வேண்டுமென கார்னேகி மன்றத்தால் முன்மொழியப்பட்டது. இந்தியாவில் ஆசிரியக் கல்விக்கான தேசிய மன்றம் (NCTE) உருவாக்கப்பட்டது. இவற்றின் பிரதான பணி தேசிய அளவுகோல்களை உருவாக்கி அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆசிரிய கல்விப் பாடநெறிகளை மேற்பார்வை செய்து அங்கீகரித்து நம்பிக்கைத் தராதரப் பத்திரத்தை (Accreditation Standards) வழங்குவதாகும். இதற்கு ஒப்பான பணியை ஆற்றுவதற்காக இலங்கையிலும், 1998 ஆம் ஆண்டு தேசிய ஆசிரிய கல்வி அதிகாரசபை சட்டம் பராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு தேசிய ஆசிரிய கல்வி அதிகாரசபை உருவாக்கப்பட்டது. அது இ தனது பணியாகிய ஆசிரியக் கல்விப் பாடநெறிகளை அங்கீகரிப்பதற்கான தேசிய நியமங்களை உருவாக்கு வதற்கான ஆரம்பப்பணிகளை செய்து கொண்டிருந்தது.
அகவிழி ஓகஸ்ட் 2014 -

Page 17
நம்பிக்கைத் தராதாரப் பத்திரத்தை வழங்குவதற்கான முயற்சிகளையும் செய்தது. இருந்தபோதிலும் 2003 ஆம் ஆண்டு இறுதியாகும் போது இச்சபையில்லாமல் செய்யப்பட்டது. எப்படியாயினும் உலகளாவிய ஆசிரியர் கல்வியில் ஏற்பட்ட இந்த நம்பிக்கை தராதரப் பத்திரத்தை அறிமுகப்படுத்தல் என்ற போக்கு இலங்கையின் ஆசிரியர் கல்வியிலும் தாக்கத்தை விளைவித்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் தொழில் வாண்மைத்துவ கற்பித்தல் தரத்திற் கான தேசிய சபை, ஆசிரியர்களின் அறிவு, அவர்களது கற்பித்தல் என்ப வற்றிற்கு தரம் விதிக்கவேண்டும். ஆசிரியர்கள் அந்த தரத்தைப் பேணு கிறார்களா என உறுதிப்படுத்த வேண்டும் என்ற சிபாரிசுகளை செய்தது போல், இலங்கை யில் NATER உம் ஆசிரியர் தரக் கணிப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது அது தற்போது நடைமுறையிலும் உள்ளது.
ஆசிரியர் கல்வியில் உலகளாவிய ரீதியில் காணப்பட்ட போக்குகளில் பல்கட்டத் தராதரப் பத்திரத்தை (Multistage Certification) அறிமுகப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சியும் குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையில் 1995 ஆம் ஆண்டு முதல் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணக்குறிப்பு ஆசிரியர் சேவையை 5 வகுப்புகளாக வகுத்தமைத்தது. இதில் ஒரு வகுப்பிலிருந்து அதனை அடுத்த வகுப்பிற்கு பதவி உயர்வு பெறுவதற்கு பல நிபந்தனைகளும் முன்வைக்கப்பட்டது. அதன்படி குறிப்பிட்ட மணித்தியாலங்கள் சேவைக்காலப் பயிற்சி செயலமர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் என சொல்லப்பட்டது. அதேபோன்று பட்டதாரி ஆசிரியர்கள் பட்டமேற் கல்வி டிப்ளோமா சான்றிதழைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என சொல்லப்பட்டது. மேலும் சேவையில் முதலாம் வகுப்பிற்கு செல்லப் போட்டிப்பரீட்சை ஒரு மார்க்கமாகவும், கல்வியில் முது கலைமாணிப்பட்டத்தைப் பெற்றுக் கொள்ளல் வேறு ஒரு மார்க்கமாகவும் சொல்லப்பட்டது. இது தொழிலுக்குள் புகும் போது பெற்றுக் கொண்ட பயிற்சியுடன் அல்லது அறிவுடன் இளைப்பாறும் வரை இருந்து விட முடியாது என்பதையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தமது சான்றிதழ்களை அல்லது பயிற்சியை மீள புதுபித்துக் கொள்ளல் வேண்டும் என்பதை உணர்த்துகின்றது. இவ்வாறு இலங்கையில் ஆசிரியர் சேவை தாபிக்கப்பட்டதில் இந்த பல்கட்டத் தராதாரப் பத்திரத்தை அறிமுகஞ் செய்தல் என்ற போக்கு
அகவிழி ஓகஸ்ட் 2014

பு:ரேட்டாபாத்:கம்',
செல்வாக்குச் செலுத்தியுள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது.
உலகளாவிய ஆசிரியர் கல்வியில் தொழில் அனுபவத்திற்கும் களப் பயிற்சிக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதற்காக ஆசிரியப்பயிற்சியை வழங்கும் நிறுவனங்களும் பாடசாலைகளும் நெருங்கி ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும் எனக் கூறப்பட்டது . ஐக்கிய அமெரிக்காவில் இது சிகிச்சை நிலைய அனுபவ முறை என்றும் ஒரு பங்கீடு மாதிரி முறை என்றும் அழைக்கப்பட்டது. உலகளாவிய ரீதியில் ஆசிரியர் கல்வியில் களப்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்ட போக்கு இலங்கையின் ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை மீள திட்டமிடலிலும் தாக்கம் விளைவித்துள்ளது. இன்று தேசிய கல்வி நிறுவகம், பல்கலைக்கழகங்கள் போன்றன வழங்கும் கல்வி மாணிப்பாடநெறிகள், பட்டப்பின் கல்வி டிப்ளோமா பாடநெறிகள் போன்றவற்றில் கற்பித்தல் பயிற்சியினை விளைதிறன் உள்ளதாக செய்வதற்கு மிகவும் கூடிய கவனஞ்செலுத்தப்படுகிறது. இத்தோடு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி வழங்கும் பயிற்சியிலும் தேசிய கல்வி நிறுவகம் வழங் கும் தொலைக்கல்வி அடிப் படையிலான பயிற்சிநெறியிலும் கற்பித்தல் பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக சேவை முன் பயிற்சியை வழங்கும் தேசியக் கல்விக் கல்லூரிகள் ஆசிரிய மாணவர்களுக்கு தொழில்சார் அனுபவத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக களப்பயிற்சிக்கு கூடியளவு முக்கியத்துவமளித்துச் செயல்படுகிறது. மாணவர்கள் கல்லூரிகளுக்கு உள்ளீர்ப்புச் செய்யப்பட்டவுடன் பாடசாலை விபரத்திரட்டு ஒன்றை தயாரிப்பதன் ஊடாக பாடசாலை முறைமை தொடர்பான அனுபவத்தைப் பெற்றுக் கொள்வதற்காக பாடசாலைகளுக்கு அனுப்பப்படு

Page 18
கின்றனர். பின்னர் குறிப்பிட்ட பாடசாலை மாணவர்கள் கல்லூரிக்கு அழைத்துவரப்பட்டு நுண்ணிய கற்பித்தல், மாதிரிக் கற்பித்தல் அனுபவங்கள் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன. தொடர்ந்து 2 வருட உள்ளகப் பயிற்சியின் போது கற்பித்தல் பயிற்சிக்காக 40 நாட்கள் பாடசாலைக்கு அனுப்பப்படுகிறார்கள். அத்துடன் “பாடசாலை சமூகத்தொடர்பு வேலைத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்குச் சென்று செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். இதற்கு மேலதிகமாக 3வது வருடம் முழுதும் கட்டுறுப்பயில்விற்காக ஒரு பாடசாலைக்கு அனுப்பப்படுகிறார்கள். அவர்கள் கற்றல் - கற்பித்தல் தொடர்பாகவும் இணைப்பாடவிதானம், செயற்றிட்டம், செயல் மூல ஆய்வு, பாடசாலை முகாமைத்துவம் ஆகிய செயற்பாடுகளில் ஈடுபட்டு அனுபவத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். இக்காலத்தில் பாடசாலை அதிபர், பாடசாலையில் கல்லூரியால் பயிற்றுவிக்கப்பட்டு நியமிக்கப்பட்டிருக்கும் தொழில் வழிப்படுத்தனர் (Mentor) மற்றும் ஆசிரிய கல்வியாளர் போன்றோர்களின் வழிகாட்டுதல்களையும், பெற்றுக் கொள்கின்றனர். இவ்வாறு இலங்கையின் தேசிய கல்வியல் கல்லூரிகள் வழங்கும் சேவை முன் பயிற்சிப் பாடநெறிகளை பாடசாலைகளோடு நெருங்கிய ஒத்துழைப்போடு செயற்பட்டு ஆசிரிய மாணவர்களுக்கு களப்பயிற்சியையும், அனுபவத்தையும், பெற்றுக் கொடுக்கக்கூடிய விதத்தில் ஒழுங்கமைக்கப்படுதலில் உலகளாவிய ரீதியில் இவ்விடயத்திற்கு வழங்கப்பட்ட முக்கியத்துவமும் பங்களிப்புச் செய்துள்ளது.
உலகளாவிய ரீதியில் ஆசிரியர் தொடருறு கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் போக்கு காணப்படுகிறது. இதற்காக ஆசிரிய கல்வி நிலையங்கள் இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டது. அதே போன்று ஐக்கிய தன்சானிய குடியரசிலும் பஹ்ரேன் நாட்டிலும், ஆசிரிய வள மையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இந்தியாவில் 1500 சேவை முன் பயிற்சியை வழங்கிய நிறுவனங்களில் 275 நிறுவனங்கள் சேவைக்காலப்பயிற்சியை வழங் கும் நிறுவனங்களாக மாற்றப் பட்டதோடு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு பல்கலைக்கழக மட்ட ஆசிரியர்களின் தொடர்ச்சியான கல்விக்காக 43 கல்விக் கல்லூரிகளையும் தாபித்தது. இதேபோன்றே பாகிஸ்தானும் ஆசிரியர் வளமையங்களை தாபித்தது. இவ்வாறு சேவையிலுள்ள ஆசிரியர்களின் தொழில்சார் வளர்ச்சி மேம்பாட்டிற்காகத் திட்டமிட்ட முறையில் அல்லது முறைசார் பாடநெறிகள் மூலம் அவர்களுக்கு தொடர்ந்தும் பயிற்சியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டன. தொழிற்றகைமை பெற்றுள்ள ஆசிரியர்களின் தற்காலத் தேவைகளுக்கு ஏற்றவாறு பாடநெறிகள் திட்டமிடப்பட்டு முன்வைக்கப்படுகின்றன.

இத்தகைய நிலையங்கள் தமது கற்றல் - கற்பித்தல் பாடம் தொடர்பான சந்தேகங்களை போக்கிக் கொள்வதற் கான ஒன்று கூடும் இடங்களாகவும், மேற்படிப்பிற்காகவும், ஆய்வுகளுக்காகவும், நூலக வசதிகளை பெற்றுக் கொள்ளக்கூடிய ஆய்வு மையங்களாகவும், கற்றல் - கற்பித்தலுக்கு தேவையான உபகரணங்களையும் வளங் களையும் பெற்றுக் கொள்ளக்கூடிய வளநிலையங்களாகவும் பயன்படுகின்றன. இவ்வாறு ஆசிரியர்களின் தொடருறு கல்விக்கான வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்கும் போக்கை அடிப்படையாகக் கொண்டு இலங்கையிலும் இத்தகைய நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. பாடத்தொடர்பானதும் கற்பித்தல் தொடர்பானதும் தரத்தினை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு 18 தேசியக் கல்விக் கல்லூரிகள், 3 ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் (3 Teacher Education Institute) மற்றும் 100 ஆசிரியர் மத்திய நிலையங்கள் (100 Teacher Centres) என்பன தற்போது நாட்டில் தொடருறு கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை வழங்குகின்றன.
ஆசிரியர் ஓர் ஆய்வாளர் என்ற எண்ணக்கரு உலகளாவிய ஆசிரியர் கல்வியில் காணப்படும் ஒரு முக்கியமான புதிய போக்காகும். பெரும்பாலான மேலைத் தேய நாடுகளில் ஆசிரியர் கல்விப் பாடநெறிகள் - ஆசிரியர்களுக்கு செயல்மூல ஆய்வு (Action Research) தொடர்பான விடயங்களை கற்பிப்பதோடு பாடநெறிகளின் பகுதித் தேவைகளின் ஒன்றாக ஆய்வு அறிக்கைகளையும் கட்டாயப்படுத்தியுள்ளது. காரணம் ஆசிரியர்கள் நாளாந்தம் கற்றல் - கற்பித்தல் மற்றும் பல்வேறு செயற்பாடுகளின் போது பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர். இப்பிரச்சினைகளை ஒரு ஆய்வாளன் என்ற நோக்கில் பார்த்து அவற்றை தீர்ப்பதனூடாக தனது தொழில் திறன்களை விருத்திச் செய்து கொள்ள வேண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதனால் ஆசிரியர் கல்விப் பாடநெறிகள் இந்த எண்ணக்கருவுக்கு தமது கலைத் திட்டத்தில் முக்கியத்துவம் கொடுத்துள்ளன. இலங்கையில் ஆரம்ப முன் சேவைப் பயிற்சியை தேசிய கல்விக் கல் லூரிகளில் பயிலும் ஆசிரிய மாணவர்கள் கட்டுறுப்பயில்வுக் காலத்தில் செயல் மூல ஆய்வொன்றினை சமர்ப்பிக்க வேண்டும் என கேட்கப்படுகிறார்கள். அதே போன்று தேசிய கல்வி நிறுவகம் வழங்கும் கல்விமாணிப் பாடநெறியிலும் செயல்மூல ஆய்வு கட்டாயப்படுத்தப் பட்டுள்ளது. அதேபோன்று கல்வி முதுமாணிப் பாடநெறிகளிலும் இது வலியுறுத்தப்படுகின்றது. இவ்வாறு இலங்கையில் ஆசிரியர் கல்வியில் ஆசிரியர் ஒரு புத ஆய்வாளர் என்ற எண்ணக்கருவுக்கு முக்கியத்துவம் அளித்ததன் காரணம் இது தொடர்பான உலகளாவிய போக்காகும்.
உலகளாவிய ரீதியில் ஆசிரியர் கல்வியில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் இன்னொரு முக்கிய
கவிழி |ஓகஸ்ட் 2014 (E
ட31ாதுசன ந,லகச் பயர்ழ்ப்க்டா" ம்.

Page 19
அம்சமாக காணப்படுவது மீள்நோக்கு சிந்தனை ஆகும். அதாவது ஆசிரியமாணவர்கள் மற்றும் கற்றல், கற்பித்தல் கருமங்களின் போது மீள் நோக்கு சிந்தனைக் குறிப்பேடுகளை பராமரிக்க வேண்டும். அவ்வாறு பராமரிப்பதனூடாக அவர்கள் குறிப்பிட்ட செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக கொண்டிருக்கும் தேர்ச்சிகள் மற்றும் திறன்கள் எந்தளவிற்குப் போதுமானது. அவ்வாறு தேவையான அத்தியாவசிய தேர்ச்சி மட்டத்தை அச்செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு தான் கொண்டிராவிடத்து அவர் அதனை மீள் சிந்தனைக்கு உட்படுத்தி நூலகத்தில் இலக்கிய மீளாய் வுகளை செய் வதனூடாகவும் , பொருத்தமானவர்களிடம் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளவதனூடாகவும் விருத்தி செய்து கொண்டு தொடர்ந்து குறிப்பிட்ட செயற்பாட்டில் ஈடுபடலாம். இது ஏனைய தொழில்களைவிட ஆசிரியர் தொழிக்கு மிகவும் பொருத்தமான ஒரு நுட்பமாகும். அதாவது நுண்முறைக் கற்பித்தல், மாதிரி கற்பித்தல், கற்பித்தல் பயிற்சி மற்றும் கட்டுறுப்பயில்வுக் காலத்தில் பராமரிக்கும் இத்தகைய மீள்நோக்கு சிந்தனைக் குறிப்புகள் கற்றல் - கற்பித்தல் சார்ந்த தொழில்சார் திறன்களை பட்டெறிதல் ஊடாக சுயவிமர்சனம் செய்து திருத்தியமைத்து விருத்தி செய்துகொள்ளலாம். இவ்வாறு உலகளாவிய ரீதியில் ஆசிரியர் கல்வியில் காணப்பட்ட இந்த இரு நுட்பங்கள்
இலங்கையில் ஆசிரியர் கல்விப் பாடநெறிகளில் தற்போது - வலியுறுத்தப்படுகிறது. உதாரணமாக தேசிய கல்விக்
கல்லூரிகளில் ஆசிரியமாணவர்கள் அன்றாட வகுப்பறைச் செயற்பாடுகள் மற்றும் கற்பித்தல் பயிற்சி, கட்டுறுப்பயில்வு தொடர்பான செயற்பாடுகள் தொடர்பாக மீள்நோக்கு சிந்தனைக்குறிப்பேடுகளை பேணுதல் வேண்டும். என வலியுறுத்தப்படுகின்றது. அத்தோடு கற்பித்தலின் பல்வேறு
» அகவிழி ஓகஸ்ட் 2014

சந்தர்ப்பங்களில் ஆசிரியர் மாணவர்கள் தங்களது பாட சாலைக்கால அனுபவத்தை மீட்டிப்பார்ப்பதற்கும் தங்களது ஆசிரியர்களை நினைவுப்படுத்துவதற்கும் இட்டுச்செல்லப் படுகின்றனர். இவ்வாறு இலங்கையின் ஆசிரியர் கல்வியில் இந் நுட்பங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவது உலகளாவிய போக்கின் அடிப்படையிலாகும்.
உலகளாவியப் போக்கில் ஆசிரியர் ஒரு முகாமை யாளரும் ஆவார். அவர் கற்றல் - கற்பித்தலுக்காக பெளதிய மனித வளங்களை முகாமை செய்ய வேண்டியவராக உள்ளார். அத்தோடு பாடசாலையில் முகாமைத்துவ செயற்பாடுகளில் அவர் பங்களிப்புச் செய்ய வேண்டும். இத்தகைய காரணங்களால் ஆசிரியர் கல்விப்பாட நெறிகளில் கல்வி முகாமைத்துவம் தொடர்பான விடயங்களும் சேர்த்துக் கொள்ளப்படல் முக்கியம் என உணரப்பட்டது. இதனடிப்படையில் இலங்கையில் ஆசிரியர் கல்விக்கான தொழில்சார் பாடக்கலைத்திட்டத்தை மீளமைப்புச் செய்யும் போது இவ்விடயத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கல்லூரிகளில் தொழில்சார் பாடங்களில் பாடசாலை ஒழுங்கமைப்பும், வகுப்பறை முகாமைத்துவமும் என்ற பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் பட்ட மேற் கல்வி டிப்ளோமா பாடநெறிகளில் பாடசாலை முகாமைத்துவம் கற்பிக்கப்படுகின்றது. மேலும் தேசிய கல்வி நிறுவகம் வழங்கும் கல்விமாணிப் பாடநெறிகளிலும் இது சேர்க்கப்பட்டுள்ளது. இது தவிர கல்வி முதுமாணிப்பாட நெறிகளிலும் கல்வி முகாமைத்துவம் ஒரு பாடமாக உள்ளது. இவ்வாறு ஆசிரியர் கல்வியில் முகாமைத்துவ அம்சங்கள் சேர்க்கப்பட்டமைக்கு உலகளாவிய இத்தகையப் போக்குகள் பங்களிப்புச்
செய்துள்ளன.

Page 20
ஆசிரியர் கல்விப் பாடநெறிகளின் கலைத்திட்டங்களில் பாடம் சம்பந்தமான விடயங்களைக் காட்டிலும் தொழில் வாண்மை சம்பந்தமான விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் போக்கு உலகளாவிய ரீதியில் காணப்பட்ட ஒரு அம்சமாகும். காரணம் ஆசிரியர்களாக வரப்போகின்றவர்கள் ஏற்கனவே பாடம் தொடர்பில் பொது உயர் தராதரத்தையும் பெற்றுள்ளதோடு பெரும்பாலான நாடுகளில் இளமாணிப்பட்டத்தையும் பெற்றுக்கொண்ட வர்களாக காணப்படுகின்றனர். இதனால் இவர்களுக்கு தொழில்சார் விடயங்களில் கூடிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற போக்கு காணப்பட்டது. இதனடிப்படையில் இலங்கையில் 1980 இற்கு பிற்பட்ட காலங்களில் ஆசிரியர் கல்விக் கலைத்திட்டத்தில் தொழில் வாண்மையோடு தொடர்புபட்ட தொழில்சார் பாடங்களுக்கும் கற்பித்தல் செயல்முறைகளுக்கும் தொழிநுட்ப விடயங்களுக்கும் அதிக அழுத்தம் கொடுப்பதாக மாற்றங்கள் அறிமுகப்படுத்தப் பட்டன. இது இலங்கையின் சேவை முன் பயிற்சி பாடநெறிகளை நடத்தும் தேசிய கல்விக் கல்லூரிகளின் கலைத்திட்டங்களை மீளமைப்புச் செய்வதற்கு உதவி செய்த GTZ போன்ற அமைப்புகளின் சர்வதேச நிபுணத்துவ ஆலோசகர்களாலும் வலியுறுத்தப்பட்டது. இத்தகைய மாற்றங்களைச் செய்வதற்கு ஆசிரியர் கல்வியில் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட இது தொடர்பான புதிய போக்கே காரணம் எனலாம்.
உலகளாவியரீதியில் ஆசிரியர் நியமனம் முன்சேவைப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கே வழங்கப் படவேண்டும் என்ற கொள்கை பரவலாக ஏற்றுக்கொள்ளப் பட்டது. இதனால் இலங்கையிலும் தற்போது ஆசிரியர் நியமனங்கள் முன்சேவைப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கே வழங்கப்படும் என்ற கொள்கைத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும் சில பிரதேசங்களில், மொழி அடிப்படையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக முன்சேவை பயிற்சியை பெற்றுக் கொள்ளாதவர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் நிலை தற்போதும் காணப்படுகிறது. இவ்வாறான கொள்கை தீர்மானங்களால் ஆசிரியர் கல்வியில் முன்சேவைப் பயிற்சி நெறிகளின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. பட்டதாரிகள் கூட பட்டமேற் கல்வி டிப்ளோமா பட்டத்தை ஆசிரியர்களாக நியமனம் பெறுவதற்கு முன்பு பெற்றுக் கொள்வதற்கு முனைகின்ற போக்க தற்போது காணப்படுகின்றது.
ஆசிரியர் கல்வியில் உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்படும் நுட்பங்களாக நுண்முறைக் கற்பித்தல், போலக் கற்பித்தல் நுட்பங்கள், மீள்சிந்தனை, சொற்கள் அற்ற தொடர்பாடல் போன்றன காணப்படுகின்றன. ஆசிரிய மாணவர்களில் கற்பித்தல் தொடர்பான பல்வேறு திறன் களையும் நுட்பங்களையும் விருத்தி செய்வதற்கு

நுண்முறைக் கற்பித்தல் மிகவும் பிரயோசனம் உள்ள ஒரு முறையாக காணப்படுகின்றது. இதனை உலகத்தில் பெரும் பாலான நாடுகள் ஆசிரியர் பயிற்சியில் பயன்படுத்துகின்றன. இதற்காக தொழினுட்ப சாதனங்களான வீடியோ மற்றும் ஓடியோ பதிவு கருவிகள் சிகிச்சை நிலைய அல்லது ஆய்வு கூட பாடசாலைகள் அல்லது வகுப்பறைகள் போன்றன பயன்படுத்தப்படுகின்றன. சகல ஆசிரிய கல்வி நிலையங்களும் இத்தகைய வசதிகளை கொண்டவையாக மாற்றப்பட்டுள்ளன. இலங்கையில் ஆசிரிய கல்வியை வழங்கும் நிறுவனங்கள் இத்தகைய உயரிய வசதிகளை பெற்றுக் கொள்ளாவிட்டாலும் இயலுமான அளவில் இந்த முறை பயன்படுத்தப்படுகின்றது. இதற்கான முக்கியத்துவமும் வலியுறுத்தப்படுகின்றது. இவ்வாறு நுண்முறைக் கற்பித்தல் வலியுறத்தப்படுவதற்கு உலகளாவிய ரீதியில் இம்முறைக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமே காரணமாகும். இதே போல் போலக் கற்பித்தல் நுட்பம் இன்று மாதிரிக்கற்பித்தல், சகபாடிக் கற்பித்தல் போன்ற வடிவங்களில் பயன்படுத்தப்படுகிறது. மீள் நோக்கு சிந்தனை முக்கியம் பெற்றுள்ளது. ஆசிரியர் பாடத்தை முன்வைக்கும்போது வெறுமனே உணர்வற்ற இயந்திரம் போல் அல்லாமல் உணர்வுள்ளவராக உயிரோட்டம் உள்ளவராக அன்பு, கருணை, இரக்க சுபாவம் உடையவராக தனது தொடர்பாடலை, இடைத் தொடர்புகளை பேண வேண்டும் என்பதற்காக முகபாவம் அங்க அசைவுகள், நடிப்புத்திறன், இரசனைத்திறன் போன்ற வற்றை வெளிப்படுத்தும் சொல் சாரா தொடர்பாடல் உலகளாவிய ஆசிரியர் கல்வியில் வலியுறுத்தப்பட்டது. இது தற்போது இலங்கையிலும் வலியுத்தப்படுகின்றது. மேலும் உலகளாவிய ரீதியில் ஆசிரியர்களுக்கு ஒரு தராதரம் விதிக்க வேண்டும், அதை அவர்கள் பேணுகின்றார்களா என்பதை மேற்பர்வை செய்து கணீப்பீடு செய்ய வேண்டும். என்பன போன்ற புதிய போக்குகளின் விளைவாக ஆசிரியர்களுக்கென ஆசிரியர் தரக்கணிப்பீடுகள் அறிமுகப்படுத்தபட்டு தற்போது நடைமுறைபடுத்தப்படு கின்றன. இவ்வாறு ஆசிரியர்களின் தரங் கணிப்பீடு செய்யப்படுவதன் காரணமாக அவர்கள் தமது தேர்ச்சிகளை, திறன்களை விருத்தி செய்து கொள்வதற்காக சேவைக் காலப் பயிற்சிகளில் பங்குபற்றுவர். இவ்வாறு சேவைக் கால ஆசிரியர் பயிற்சியின் முக்கியத்துவம் அதிகரிக்க இந்த உலகளாவிய புதிய போக்கு வித்திட்டுள்ளது.
எனவே மேற்போன்ற பல்வேறு புதிய போக்குகள் உலகலாவிய ஆசிரிய கல்வியில் இடம்பெற்றன. இவை இலங்கையின் ஆசிரிய கல்வியின் பண்பு ரீதியான தரத்தை மேம்படுத்துவதற்கும் ஆசிரியர்களின் தொழில்வாண்மை திறன்களை உயர்த்துவதற்கும் பல்வேறு வழிகளில் உதவுகின்றது.
கவிழி |ஓகஸ்ட் 2014 (2)

Page 21
இன்றைய உலகில் பொருளாத பெண் கல்வியின் முக்கியத்துவ
ம.மரியராசா
IEEE EEEாப்ப #
அறிமுகம்
மாறிவருகின்ற உலகில் பொருளாதார வளர்ச்சி, அபிவிருத்தி, பால் இன சமத்துவம், அரசியல் பங்கேற்பு உலகின் முன்னணி நிறுவனங்களின் உயர் பதவிகளினை அலங்கரித்தல் போன்ற பல் வேறு நிலைகளிலும் பெண் கல்வியின் முக்கியத்துவமே மறைமுகமாக உணர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. உலகளாவிய ரீதியில் ஆண்களின் கல்வி மீதான முதலீடுகளிலும் பார்க்க மிக குறைந்தளவான முதலீடே பெண்கல்வியில் இடப்பட்டுள்ளது என்பது உண்மையான விடயமாகும்.
அகவிழி ஓகஸ்ட் 2014
இன்று உலகின் சமூக பொருளாதார அபிவிருத்திச் செயன்முறைகளில் முக்கிய பங்கிளிப்பினை பெண் மனித வளம் வழங்கி வருகின்ற போதிலும் அதன் முக்கியத்துவம் மிகச் சரியாக அங்கீகரிக்கப்பட்டதாக தெரியவில்லை. பெருமளவிலான மனித மணித்தியாலங்களை வேலைத் தளங்களில் செலவு செய்கின்ற பெண்கள் வளமானது உலக சொத்துக்களிலும் வருமானங்களிலும் மிக குறைந்த பங்கினையே அனுபவிப்பவர்களாக காணப்படுகின்றார்கள்.
20

பார நோக்கில்
இந்நிலையில் பெண்களின் மனித வளவிருத்திக்கான நடவடிக்கைகளில் கல்வி பயிற்சி தொடர்பான செயற்பாடுகள் அதிகளவில் இணைக்கப்பட வேண்டும் என பெண்ணிய கோட்பாட்டாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பெண்களின் மனித வள மேம்பாட்டில் அவர்களது ஊட்டம் சேமநலம், சுகாதாரம் என்பவற்றுடன் ஒன்றிணைந்த அம்சம் கல்வியும் தொழிற்பயிற்சியுமாகும்.
மாக
பெண்கள் சமுக மாற்றத்தின் முகவர்கள்
எமது நாட்டில் பெண்களிற்கான கல்வியின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது போல் ஆண்களுக்குச் சமமாக பெண்களும் கல்வி பெறும் வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது. ஆனால் கல்வி பெறும் வாய்ப்புக்கள் காணப்படுகின்ற போதும் அதனை உயர்நிலைக் கல்வி வரை பெண்கள் பெற்றுக்கொள்வதற்கும் பல காரணிகள் தடையாக காணப்படுகின்றது என்பதும் முக்கியமாக கவனத்தில் கொள்ளப் படத்தக்கவையே. பெண்களிற்கு அதிக கல்வி தேவை இல்லை எனும் மனப்பாங்கும், பெண்பிள்ளைகளுக்கு கல்வியில் செலவு செய்யப்படும் பணம் மீண்டும் கிடைக்காது என்கின்ற மனப்போக்கும், நிறுவனங்களில் பெண்களிற்கு எதிராக இழைக்கப்படுகின்ற பாலியல் தொந்தரவுகள், நிறுவனங் களில் இடம்பெறுகின்ற அதிகநேர வேலை, குறைந்த சம்பளம் போன்ற இன்னோரன்ன காரணிகளினால் பாதுகாவலரும், பெற்றோரும் பெண்களிற்கான கல்வியினை பெற்றுக்கொடுப்பதில் பின் நிற்கின்றனர்.
இவ்வாறான மனநிலைகள் இருந்தாலும் சமூக பொருளாதார அபிவிருத்தியின் முக்கிய பங்காளிகளாக பெண்கள் கருதப்படுகின்றார்கள் என்பதும் உண்மையே. பெண்கள் சமூக மாற்றத்திற்கான முகவர் என்ற அங்கீகாரத் தினைப் பெறவேண்டும். பெண் என்ற செயற்றிறன் மிக்க முகவரூடாகவே சமூக நீதி நிலை நாட்டப்படவேண்டும். பெண்கள் சமூக பொருளாதார அரசியல் வாழ்க்கையில் பங்கேற்பது தடை செய்யப்படுவதால் இடையூறுகளுக்கு

Page 22
உள்ளாகின்றவர்கள் பெண்கள் மட்டுமல்ல சகல மக்களுமே. பெண்களின் விடுதலை பெண்களின் பிரச்சினை மட்டுமல்ல, சமூக மேம்பாட்டுடன் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு விடயமே பெண்விடுதலை என பேராசிரியர் அமர்த்தியா சென் குறிப்பிடுகின்றார்.
கடந்த மூன்று தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முயற்சிகள் நாடுகளின் அபிவிருத்தியிலான பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளன. பெண்கல்வி விருத்தி, பெண்களின் தனிப்பட்ட கல்விக்கான வருவாய்களை மாத்திரம் அதிகரிக்க உதவுவதில்லை. சிறிய மற்றும் வறிய குடும்பங்களின் முன்னேற்றங்களை பெண்கல்வி பெருமளவில் நிர்ணயிக்கின்றது. கல்வி கற்ற பெற்றோரின் பிள்ளைகள் ஆரோக்கியமான குழந்தைகளாக வளர்வதில் தந்தையரின் கல்வியைவிட தாயாரின் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி பெரும் செல்வாக்குச் செலுத்தி வருகின்றது.
ஊழியச் சந்தையில் கல்வி கற்ற பெண்கள் அதிகளவு பங்கேற்பதனுாடாகவும், அவர்களது வருமானம் கல்வி கற்பதன் மூலம் உயர்ந்து செல்வதனுாடாகவும் வளர்முக நாடுகளின் வறுமையைப் பெருமளவில் தணிக்க முடியும். இத்தகைய நலன்களை உறுதி செய்வதற்கு மனிதவள் முதலீடு என்ற நோக்கில் பெண்கல்விக்கு முன்னுரிமை வழங்ப்படவேண்டும் என்று உலக வங்கி 10 ஆண்டுகளுக்கு முன்பே உணர்த்தியிருந்தது.
பெண்கள் சமுதாயத்தின் இன்றியமையாத பிரிவினராக செயற்பட்டு வருகின்றனர். குடும்பங்கள் அடிப்படையிலான வாழ்வு, இலக்குகள், தேவைகள் என்பவற்றை நிறைவேற்றுவதில் அவர்கள் பங்கு பிரதானமாக இருந்து வந்துள்ளது. தற்போது வீட்டுக்கு வெளியே சமூக பொருளாதார செயற்பாடுகளிலும் அவர்களின் பங்கு அவசியமாயுள்ளது. தேசிய மனித வளத்தில் அல்லது தொழிற்படையில் அவர்கள் பங்களிப்பு எல்லா நாடுகளிலும் முக்கியமானதாகிவிட்டது. வரலாற்றுக் காலத்தில் குடும்பத்துடன் இணைந்த உற்பத்தி செயன்முறையில் பெண் ஊழியம் முதன்மை பெற்றிருந்தது. அவ்வாறே கிராமிய மட்ட உற்பத்தியிலும் சில வகையான உற்பத்திச் செயன்முறைகளிலும் பெண்கள் குறிப்பிடத்தக்கவளவு முக்கியத்துவம் பெறுகின்றனர்.
கல்வியியலாளர் பிள்ளையின் வளர்ச்சியை மனதிற் கொண்ட கல்விச் செயன்முறையே முக்கியத்துவம் உடையதென வலியுறுத்தி வருகின்றனர். இதன் அடிப் படையில் பெண்களிற்குரிய ஆரம்பக்கல்வி குடும்ப உறுப்பினரின் ஊட்டம், நலவாழ்வு, ஒழுக்கம் என்பவற்றை மேம்படுத்தி, அவ்வாறே குடும்ப அளவுகளை சிறிதாக பேணுவதற்கான குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தவும் பெண்கல்வி வலியுறுத்தப்பட்டது. பொருளியலாளரின்

பொருளாதாரக் கொள்கை, செயற்பாட்டு ஆற்றல் என்ப வற்றின் பலவீனங்களை குறைநிரப்புச் செய்ய இத்தகைய வெளிவாரி நோக்கங்கள் பெண்கல்வியில் வற்புறுத்தப் படலாயின.
பெண்களின் கல்வி நிலை
குடும்ப மட்ட நிதிவளங்களை பேணுதல், பங்கிடுதல், குடும்ப மட்ட சுயதேவை உற்பத்தி முறைகளை நிர்வகித்தல் தொடர்பான அறிவையும் ஆற்றலையும் ஏற்படுத்தவும், மேம்படுத்தவும் பெண்களுக்குரிய ஆரம்பக்கல்வி வலி யுறுத்தப்பட்டது. வளர்முக நாடுகளில் அவர்களினை பாடசாலைக்கு அனுப்புவதிலோ, அதற்காக நேரத்தினை செலவழிப்பதிலோ பெரிதும் விரும்புவதில்லை. இதனால் ஆரம்பக்கல்வி பெறாத பெண்கள் தென்னாசியாவில் அதிகம் உள்ளனர். உலகளாவிய ரீதியில் பெண்களின் கல்வி நிலை திருப்தியானதாக இல்லை என்றே கொள்ள வேண்டும்.
தொழில் வாய்ப்புக்கான தகுதியை மேம்படுத்துவதற்கான பிரதான உள்ளீடாகவே கல்வி கருதப்படவேண்டும் என்று பொருளியலாளர்கள் கருதுகின்றனர். தரமான வினைத்திறன் மிக்க மனித ஊழியத்தை வெளியீடாகப் பெறுவதற்கான உள்ளீடாக கல்வி விளங்க வேண்டும் என்பது கல்விப் பொருளியலாளர்களின் கருத்தாகும்.
இதன் படி பெண்களிடம் இருந்து உழைப்பை வினைத்திறனுடன் தேசிய உற்பத்தித்துறைகளுக்கென பெறவேண்டுமானால் கல்வி உள்ளீட்டை அவர்களுக்கு வழங்க வேண்டியுள்ளது. ஆனால் அதற்குரிய பூரண உரிமையையும் வாய்ப்பையும் வசதிகளையும் ஆண் மேலாதிக்க சமுதாயம் வழங்குவதில்லை என பெண்நிலை வாதிகள் கூறிவருகின்றனர்.
தொழில் உலகு தொடர்பாக பெண்கள் பின்வரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
1) பெண்களின் சம அந்தஸ்து அங்கீகரிக்கப்படவில்லை. 2) பெண்களின் கல்வி மற்றும் தொழில் தொடர்பான
முடிவுகளை பெண்கள் எடுப்பதில்லை. உற்பத்தி, சேவை முயற்சிகளில் ஊழியர் பங் கேற்புக்குத் தேவையான தன்னம்பிக்கை வளர்க்கக்
கூடிய கல்வி ஏற்பாடுகள் போதியளவில் இல்லை. 4)
பெண்களின் முழு ஆற்றலையும் பயன்படுத்தக்கூடிய மனிதவள விருத்திக்குரிய கல்வி ஆலோசனை மேற்கொள்ளப்படவில்லை. பெண்முயற்சியாண்மை, பெண்முகாமையாளர், பெண் உயர் நிர்வாகிகள் போன்ற பதவி மற்றும் தகைமை நிலை விருத்திக்குதவும் கல்வித்திட்டங்கள் இல்லை.
5) |
அகவிழி |ஓகஸ்ட் 2014 8

Page 23
உலகில் பள்ளி செல்லும் 13 கோடி சிறுவர்களுள் 8.1 கோடிப்பேர் பெண்களாவர். வளர்முக நாடுகளில் 45 கோடி பெண்கள் சிறுபருவ போசாக்கின்மையால் பாதிக்கப் படும் நிலமையும் கல்வி ஊக்கத்தை தடை செய்கின்றது. மேலும் சிறுமிகள் தொழில் செய்வதற்குரிய குறைந்தபட்ச வயதெல்லையை அடையும் முன்பே இழிவான, மன அழுத்தம் தரக்கூடிய சுரண்டலுக்குட்படும் துறைகளில் சட்டபூர்வமற்ற முறையில் பயன்படுத்தப்படுவதாலும் அவர்களின் கல்விக்கான சந்தர்ப்பங்கள் மறுக்கப்படுகின்றன. இவ்வாறான போக்கினை கட்டாய கல்வி போன்ற சட்ட ரீதியான நடவடிக்கைகளே கட்டுப்படுத்த முடியும்.
பெண்களிற்கான கல்வியினை உரிய முறையில் அவர்களிற்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கான சந்தர்ப்பங்களினை உருவாக்க வேண்டும் என்ற நோக் கோடு சமூக, அரச ஆதரவை திரட்டுவதில் வெகு சனத் தொடர்பு சாதனங்கள் கணிசமான பங்கினை ஆற்றி வருகின்றன.
தொழில் உலகிற்கு பொருத்தமான வகையில் பெண்மனிதவளம் விருத்தி செய்யப்பட வேண்டுமானால் கல்வி தொடர்பாக பின்வரும் அம்சங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
5)
1)
பெண்கள் புலமை சார்ந்தவராகவும், ஓழுக்கம், உளவியல் கலாச்சார சமூக பொருளாதார அடிப்படை களில் தகைமைமிக்கவராக்கப்பட வேண்டும் பல்வகைப்பட்ட தொழிற்பாடுகளிலும் ஈடுபடக்கூடிய திறன்கள் விருத்தி செய்யப்படல் வேண்டும். தொழில் நிறுவன கலாசாரத்திற்கு பொருந்தக் கூடியவராக்குதல். நாட்டின் பௌதிக, நிதி, மற்றும் அறிவியல் வளங் களுடன் நெருக்கமான தொடர்புடைய வராக்கப்படல். பெண்களுக்கான தொழில் நிறுவனங்கள், பெண்களுக்கான உயர் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் என்பன அதிகளவில் உருவாக்கப்படுதலும் நவீன் மயமாக்கப்படுதலும்.
தேசங்களின் குடித் தொகையின் அளவு, குடித்தொகையில் பெருக்கம் மற்றும் சேர்க்கை என்கின்ற பல அம்சங்களில் பெண்கள் வலுவான காரணியாக துலங்குகின்ற நிலமையானது பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியிலான உயர்கல்விப் பங்களிப்பு பற்றிய புத்தாய்வுகளில் பெண்களின் அறிதல் தொடர்பான காத்திரமான தேவைகளுக்குரிய தளத்தினை அமைக்க வேண்டும்.
அகவிழி ஓகஸ்ட் 2014
மனிதனை ஒரு சமூகப் பிராணியாக மதித்து ஆராய் கின்ற சமூகவியல் அணுகு முறை கார்ள்ஸ்மாக்சின் சித்தாந்தத்திற்கு பின்பு ஏற்பட்ட முன்னேற்றமாகும்.

தனிமனித செய்றபாடுகளை தனித்து நோக்காது, மாறாக மனிதனையும் அவனது இயல்புகளையும் சமுதாயத்தின் ஓர் அங்கமாக நோக்குவது இவ் ஆய்வு முறையாகும். இதன்படி உயர்கல்வியின் பொருளாதார மற்றும் சமுக அபிவிருத்தி பங்களிப்புப் பற்றிய ஆய்வில் பெண்களின் நிலையை தனியாக பிரித்து ஆராய்வது அவசியமாயுள்ளது.
இந்தியாவில் 1960 - 1970 களில் உருவான பசுமைப் புரட்சியும் 1980 களில் ஏற்பட்ட வெண்மைப் புரட்சியிலும் கிராமிய மக்களில் பங்களிப்பு உற்பத்திப் பக்கத்தில் முக்கியமானதாக அமைந்த போது அவர்களது தனியாள் வினைத்திறன் மாற்றங்களில் அவர்தம் கல்வியின் அளவு கொண்டிருந்த செல்வாக்கு ஆய்வாளர்களினால் உணரப் பட்டது. உலகில் அதிகளவு கிராமியப் பெண்களைக் கொண்ட நாடுகளான சீனா, இந்தியா போன்ற நாடுகளில் நெல் உற்பத்தியிலான அபரிமிதமான பெருக்கத்தை பெண் கல்வியுடன் தொடர்புபடுத்தி ஆராயும் போக்கு வலுவடைந்துள்ளது.
முடிவுரை
தேசிய ரீதியில் உற்பத்தி தொடர்பாக பாரிய திட்ட முனைப்புக்கள் தோன்றிய போதெல்லாம் பொது முகாமைத்துவ வகுப்பினரான அதிகார வர்க்கத்தில் பெண்கள் உரிய இடத்தைப் பெற்றிருக்கவில்லை. இதற்கு உயர்கல்வி நோக்கிய பெண்களின் நகர்வு விசை குறைந்து காணப்பட்டமையும் ஒரு வலுவான காரணியாயிற்று. தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் அல்லாத நிரந்தரப் பொதுத்துறை நிர்வாக உயர் பதவிகளுக்கு தலைமை தாங்குபவர்களில் பெண்களின் சதவீதம் நியாயமான அளவில் பேணப்படாமைக்கு உயர்கல்வி நோக்கி அவர்களைத் தள்ளும் காரணிகள் பலவீனமாக இருந்தமை உணரப்பட்டது.
இவற்றையெல்லாம் தொகுத்து நோக்குகின்றபோது பெண்களுக்கான கல்வியினை மேற்கூறப் பட்ட காரணங்களுக்காக மென்மேலும் பலப்படுத்தக்கூடிய வழிகளினை கையாண்டு எமது பொருளாதாரத்திற்கு பொருத்தமான முறைகளில் மாற்றியமைத்து பெண்கள் கல்வியினை பொருத்தப்பாடு காண இன்னும் முயற்சிகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
உசாத்துணை நுால்கள்
1.
கல்வியும் மனிதவள விருத்தியும், பேரா.சோ.சந்திரசேகரன், பேரா.மா.சின்னத்தம்பி, மார்ச் 2002, லங்கா புத்தகசாலை,
கொழும்பு - 12 2.
சீமாட்டி லீலாவதி, இராமநாதன் நினைவுப் பேருரை - 2010, உயர்கல்வியில் பெண்கள்.. சமூக பொருளாதார அணுகுமுறை,
பேரா.மா.சின்னத்தம்பி 3.
கல்வியின் பொருளியல், மா.சின்னத்தம்பி, 2007, குமரன் புத்தக நிலையம், கொழும்பு, சென்னை.

Page 24
உலகமயமாக்கலும் இலங்கையின் கல்விச் செல்ெ
ஷாஐஹான் ஷிஃபான் Lecturer Department of Teacher Education, The National Institute of
இன்றய நவீன உலகின் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பில் தாராளமயமாக்கல் (Liberalization), தனியார்மயமாக்கல் (Privatization), உலகமயமாக்கல் (Globalization) போன்ற பிரதான மூன்று கருத்தியல்கள் பெரிதும் செல்வாக்குச் செலுத்துவதனை தெளிவாக உணரலாம்.
உலக மயமாக்கல் என் பதற் கு பல் வேறு வரைவிலக்கணங்கள் காணப்படுகின்ற போதும் பொதுவாக உலக நாடுகளிடையே பொருளாதார அடிப்படையில் ஒன்றையொன்று சார்ந்த வளர்ச்சிப் பாதையே உலக மயமாக்கல் எனவும் (Kaval jit Sigh), உலகம் ஒற்றை இடமாக (Single Place) மாறிவரும் நடைமுறையே உலகமயமாக்கல் (Roland Robatson) எனவும் முன் வைத்துள்ள வரைவிலக்கணங்களை நோக்க முடியும்.
எவ்வாறாயினும் உலகமயமாக்கல் என்பது உலக நாடுகளையும் அவற்றில் வாழும் மக்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு செயன் முறையாகும். இது பொருளாதார, தொழில்நுட்ப, கலாசார, கல்வி மற்றும் அரசியல் பிணைப்புகளுக் கூடாக உலக மக்களை மிக அருகில் கொண்டு வருவதுடன் அவர்கள் ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கும் நிலையையும் அதிகரிக்கச் செய்கின்றது எனலாம். அத்துடன் போட்டித்தன்மையை குறைத்தல், வேலைவாய்ப்பு, முதலீடு, மூலதனம் என்பனவற்றின் உட்பாய்ச்சல், சர்வதேச வர்த்தகம், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் பரவல், கலாசார பரிவர்த்தனை, கல்விப் பரிவர்த்தனை, சர்வதேச சட்டங்கள், சுற்றாடல் பற்றிய கவனம், சமூக விழிப்புணர்வு என்பவற்றை உள்ளடக்கியதாகும்.
கி.பி. 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் குறிப்பாக இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட காலனியாதிக்கத்தை உலகமய மாக்கலால் தொடங்கி வைக்கப்பட்டது. தொழிற்புரட்சி, பண்டங்களின் அதிகரித்த உற்பத்தி, மூலதனத்தின் அமோகமான வளர்ச்சி, உலகளாவிய சந்தை, தேச எல்லைகளை உடைத்துக் கொண்டு வளர்ந்த தொழிலாளர் ஒற்றுமை, உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் பெற்றுத் தந்த உலகப் பார்வை என்பனவே உலகமயமாதல்

நறியும்
Education
என்கிற வார்த்தைக்கு முழு அர்த்தத்தையும் தகுதியையும் கொடுத்தன.
பொருளாதார கண்ணோட்டத்தில் நோக்கும் பொழுது உலகமயமாக்கல் என்பது அனைத்து நாடுகளினதும் வளர்ந்து வரும் பொருளாதார ஒருங்கிணைப்பாகவும், தேசிய சந்தைகள் ஓர் உலகளாவிய சந்தையில் ஒருங்கிணையும் ஒரு செயன்முறையாகவும் வியாபித்துள்ளது. உலகின் ஒரு பகுதி மக்கள் மாத்திரம் பெருமளவான வளங்களை நுகர்கின்ற தன்மையினை விடுத்து அனைத்து மக்களும் பொருளாதார தொழிநுட்ப மேம்பாட்டின் பயனை அனுபவிக்க முடியுமாகின்றது. தேசிய சந்தைகளின் பொருட்கள் மற்றும் சேவைகள் என்பவற்றிலான அதிகரித்த உற்பத்தியானது எல்லை தாண்டிய வர்த்தகத்திலும், சர்வதேச மூலதனம் மற்றும் பணம் என்பவற்றின் அசைவுகளுக் கூடாகவும் தொழில்நுட்ப பரிமாற்றத்துக் கூடாகவும் இன்று உலகமயமாதல் எளிதாகிவிட்டது. மேலும் மக்கள் ஒரு நாட்டிலிருந்து ஏனைய நாடுகளுக்கு சென்று வருவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுதல், நாடுகளுக்கிடையிலான வணிகக் கட்டுப்பாடுகள் இழிவாக்கப்படல், உள்ளுர் சந்தைகள் வெளிநாட்டு முதலீடுகளுக்காக திறந்து விடப்படல், நாடுகளுக் கிடையிலான தொலைத் தொடர்புகள் விரிவாக்கப்படல், மக்கள் கலாசாரம் ஒன்றிணைக்கப்படல் என்பனவற்றையும் உலகமயமாக்கல் ஏற்படுத்தத் தவறவில்லை.
அரசியல் அடிப்படையில் நோக்கும்போது உலக மயமாக்கல் என்பது ஜனநாயகம், மனித உரிமைகள், அடிப்படை சுதந்திரங்கள், பால் சமத்துவம், ஒளிவு மறைவற்ற ஆட்சி மற்றும் அரச சாரா அமைப்புகளின் பெருக்கம் என்ற வகையில் விரிந்து செல்கின்றது.
உலக மக்களுக்கிடையிலான ஒன்றிணைந்த வாழ்கை முறைமையினை ஏற்படுத்தியதில் உலகமயமாதல் கூடிய பங்களிப்பை வழங்கியுள்ளது. இதனடிப்படையிற் சர்வதேச மொழியாக ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்ளல், திடீர் " உணவகங்கள், மேற்கத்தைய சினிமா, இசை, நாகரீக உடைகள், நவீன வாழ்க்கை முறைகள் என்பன சமூக 8 வியலில் உலகமயமாதலின் செல்வாக்குகளை எடுத்துக் காட்டுகின்றன.
அகவிழி |ஓகஸ்ட் 2014 (3
12:N TE
*3 27 ? , 8லகம்
பட 22 டதா 43:50ாம்.

Page 25
DெF
உற்பத்தி, தகவல் தொடர்பாடல், கலாசாரம் மற்றும் கல்வி என்பவற்றில் இன்று உலகமயமாதலின் செல்வாக்கினை தெளிவாக அவதானிக்கக் கூடிய . ஒன்றாகிவிட்டது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி கல்வியோடு இணைக்கப்பட்டதானது கல்வியின் எல்லையற்ற வளர்ச்சிக்கு அடித்தளமாயிற்று. ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டமையால் இணையத்தின் மூலமாக தகவல்களை விரைவாகப் பெற முடிதலும் சர்வதேசப் பாடசாலைகள், தனியார் பல்கலைக்கழகங்கள், பன்மொழி அறிவு பரவலாக்கம், கலாசாரப் பரிமாற்றம், கற்றல் - கற்பித்தல் முறைகளில் நவீனமாற்றம், ஆசிரிய வாண்மை விருத்தியிற் நவீன நுட்பங்கள் உட்புகுந்தமை போன்றனவும் உலகமயமாதலானது கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் பெருக்கியதுடன் கல்வி பெறுவதற்கான தடைகளையும் தகர்த்தெறிந்துள்ளது என்றால் மிகையாகாது.
மேலைத்தேயப் பண்பாடு வாழ்க்கைக் கோலங்கள், நுகர்ச்சி முறைமை, அறிவுக் கையளிப்பு முதலியவற்றை வேகமாகப் பரவச் செய்யும் நடவடிக்கையையே உலக மயமாக்கல் முன்னெடுத்து வருகின்றது. ஆகவே உலக மயமாக்கல் என்பது மக்கள் ஒன்றுகூடி வாழுதலை மட்டும் கொண்டதல்ல. மாறாக கலாசாரம், வழிகாட்டல்கள், விழுமியங்கள் என்பவற்றின் பரிவர்த்தனைக்கான ஒரு திறந்தவெளி எனவும் நோக்கப்படத்தக்கது.
உலகமயமாதல் செயற்பாடுகள் என்பது இன்று உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் எல்லா வகையிலும் அழுத்தம் கொடுக்கும் பிரதான கருவியாக மாற்றம் பெற்றுள்ளது. இது பொருளாதார, சமூக, கலாசார, தொழிநுட்ப மற்றும் கல்வித் துறைகளில் நேரடியான செல்வாக்கினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
இலங்கையில் 1977 ஆம் ஆண்டிற்கு பின்னரான திறந்த பொருளாதார கொள்கைகளும் தனியார்மயமாக்கல் மற்றும் தாரளமயமாக்கல் பூட்கைகளும் உலகமயமாக்கல் செயற்பாடுகளுக்கு அடித்தளமிட்டன. அவ்வாறான உலகமயமாக்கல் செயற்பாடுகள் எமது நாட்டின் கல்வி முறைமையிலும் நேரானதும் ஏதிர்மறையானதுமான விளைவுகளை ஏற்படுதியுள்ளமையினைத் தெளிவாக காணலாம்.
உலகமயமாக்கல் இன்று பூகோளக் கிராமங்களை உருவாக்கியுள்ளது. (Global Village) கற்றவர்கள், தொழில் சார் நிபுணத்துவர்கள் தற்போது உள்நாட்டு தொழில் வாய்ப்புகளில் மட்டும் தங்கியிருக்க வேண்டிய நிலைமை மற்றமுற்று வேறு நாடுகளில் கூடிய வேதனத்துடனான தொழிற் துறைகளைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. உள்நாட்டு இலவசக் கல்வி மூலமான பயன்களைப் பெற்று இவர்கள் வேறு நாடுகளில் இவ்வாறு
வா
அகவிழி ஓகஸ்ட் 2014
24

தொழில்களைப் பெற்றுச் செல்வது கல்வி மீது அரசு மேற்கொண்ட செலவினங்கள் உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படாது போவதுடன் கல்வி மீதான மூலதன செலவினங்கள் மேலும் அதிகரிக்கவும் செய்கின்றன.
உலகமயமாக்கலின் விளைவாக சர்வதேச பாடசாலைகளின் தோற்றமானது இலங்கையின் கல்விச் செயற்பாட்டில் சில அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளன. பல்வேறு வெளிநாட்டு தொழில்சார் நிபுணர்கள் எமது நாட்டில் தொழில் புரிவதால் அவர்களது பிள்ளைகளை இலக்காகக் கொண்டே இச் சர்வதேச பாடசாலைகள் தோற்றம் பெறலாயின. இவ்வாறாயினும் தற்போது இப்பாடசாலைகள் பணம் படைத்த உள்நாட்டவர்களது பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலைகளாக மாற்ற மடைந்துள்ளதுடன் மேலைத்தேய கல்வி முறைகளையும் கலைத்திட்டங்களையும் கலாசார பாங்குகளையும் இறக்குமதி செய்யும் நிறுவனங்களாகவும் தொழிற்படுகின்றன. இந்நிலைமையானது இலவசக் கல்வி முறைமைக்கும் உள்நாட்டு கலாசார விழுமியங்களுக்கும் அச்சுறுத்லாக அமைவதுடன் கல்வி மீதான சமவாய்ப்பினையும் இழிவடயச் செய்துள்ளது.
உலகில் அபிவிருத்தி அடைந்த செல்வந்த நாடுகள் குறைவிருத்தி நாடுகளுக்கு பொருளாதார உதவிகள் என்ற வகையில் நவகாலனித்துவ வாதத்தினை உலக மயமாக்கல் என்ற போர்வையின் ஊடாக உட்புகுத்த பிரயத்தனங்களை மேற் கொள்வதனை அவதானிக்க முடிகின்றது. சில வேளைகளில் பொருளாதார உதவிகள் எமக்கு நன்மை பயப்பதாக அமைந்தாலும், நாட்டின் இறைமை, சுயாதீனத் தன்மைகளுக்கு நவகாலனித்துவம் சவால் விடுப்பதாகவே அமைகின்றது. நிதி வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் அல்லது சர்வதேச அரச சாரா நிறுவனங்கள் உள்நாட்டு கல்வி முறைமைகளில் தலையீடு செய்ய முயற்சிப்பது உலகமயமாதலின் பாதகமான விளைவினை எடுத்துக் காட்டுகின்றது. உதாரணமாக உலக வர்த்தக அமைப்பு (WTO) சர்வதேச நாணய நிதியம் (IMF) உலக வங்கி (WB) என்பவற்றின் செல்வாக்கு இந் நாடுகளில் அதிகரித்துள்ளது.
உலகமயமாதலானது அறிவினைப் பெறும் மூலாதாரங் களைப் பெருமளவிற்கு விரிவடையச் செய்துள்ளமை இதன் முக்கியமான பங்களிப்பாகும். இதன் மூலமாக இன்று உலகில் அறிவுப் பிரவாகம் (Knowledge Explosion) பரவலடைந்துள்ளது. இணையம் மூலம் அறிவு தேடல் இன்று இலகுவான காரியமாகிவிட்டது. மாணவர்கள் அறிவினைப் பெற்றுக் கொள்ளும் பிராதன ஊடகமாக இன்று இணையம் தொழிற்படுகின்றது. அத்துடன் இணையத் தினுடான கல்வி வாய்ப்புகள் அதிகரித்துள்ளமையும் தொழிற் கல்விக்கான ஆதாரங்கள் வெகுவாகக் காணப் படலும், மாணவர்களுக்கு மரபு ரீதியான பாடசாலைக்

Page 26
கல்வி மீதான நம்பிக்கையினைச் சிதைவடையச் செய்துள்ளது. எனவே வகுப்பறையிற் கற்றல் - கற்பித்தல் செயற்பாடு ஆசிரியர்களுக்கு சவாலாக அமைந்துள்ளதுடன் தமது வகிபாகத்தினையும் நவீன தகவல் தொடர்பாடல் நுட்பத்திற்கு ஏற்ப இயைபாக்கிக் கொள்ள வேண்டிய
அவசியம் நடைமுறையிற் தோன்றியுள்ளது.
இலங்கையிற் பல்கலைக்கழக நுழைவு ஆண்டுதோறும் சுமார் 3% மான மாணவர்களுக்கே கிடைக்கின்றது. உயர் கல்வி வாய்ப்புகளைப் பெற முடியாமையினால் இளைஞர் மத்தியிற் தோன்றும் விரக்தி இலங்கை எதிர் நோக்கும் பாரிய சமூக சவாலாகும். எனினும் இணையம் மூலமான சர்வதேச பல்கலைக்கழக தொலை கற்கை நெறிகள், வருவழிக் கற்கைகள் (Online courses) மற்றும் தொழில்சார் பாடநெறிகள் என்பனவும் உள்நாட்டில் செயற்படும் இணைந்த பல்கலைக்கழகங்களும், (Affiliated Universities) தனியார் பல்கலைக்கழகங்களின் வரவும் உயர் கல்வியினைப் பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்கி யுள்ளமையினால் இளைஞர் விரக்தி நிலைமை ஓரளவிற்கேனும் குறைக் கப் பட் டுள் ளதெனலாம். இவையனைத்தும் உலகமயமாதல் மூலம் இலங்கை அடைந்து கொண்ட அநுகூலங்களே.
உலகமயமாதல் சர்வதேச போக்குவரத்தினை விருத்தி செய்ததுடன் நாடுகளுக்கிடையான பயணச் சட்டங்களையும் தளர்த்தியுள்ளது. எனவே வெளிநாட்டுப் பல்கலைக்கழகங் களில் உயர் கல்வி வாய்ப்புகளை இலங்கை மாணவர்களும் பெறுவதற்கு முடியுமாவதுடன் வெளிநாட்டு மாணவர்கள் இங்கு வரவும் முடியுமாகின்றது. இதனால் கல்வி, கலை கலாசார விழுமியங்களை சர்வதேச ரீதியாக பரிமாற்றிக் கொள்ள முடிவதுடன் நாடுகளிற்கிடையான புரிந்துணர் வினையும் வளர்க்க முடிகின்றது.
உயர் கல்வியில் மட்டுமன்றி முழுமையான கல்வி முறைமையிலும் உலகமயமாதலின் விளைவுகளைக்

காணமுடிகின்றது. விசேடமாக வகுப்பறையிற் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளில் கணிசமான அளவு தொழில் நு ட்ப ங் க ள து பாவனையினைக் காண முடிகின்றது. எனினும் ஏனைய வளர் ந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது நாடு என்ற வகையிற் நாம் இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. நவீன தொழில்நுட்ப அறிவினை நாம் பெற்றுக் கொள்ளும் வேகம் திருப்திகரமானதாக இல்லை. உலகமயமாதலினால் அபிவிருத்தி அடைந்த நாடுகள் மிக விரைவாக
வளர்ச்சி எய்துவதுடன் குறைவிருத்தி நாடுகள் இதன் பயன்களை மெதுவாகவே அடைந்து கொள்ள முடியுமாகின்றன.
நடைமுறையில் எமது கல்வி முறையானது நவீனத்துவத்திற்கு முகம் கொடுப்பற்கான அடிப்படை ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும். விசேடமாக கலைத்திட்ட அபிவிருத்தியிற் இவை தொடர்பான வலுவான கவனம் செலுத்தப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. மேலும் தகவல் தொழில்நுட்பப் பாடத்தினை கலைத்திட்டத்துள் உள்வாங்கியுள்ளமையும் சர்வதேச மொழியான ஆங்கிலக் கல்விக்கான கற்றல் வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளமையும் இங்கு பாராட்டத் தக்கவைகளாகும். முழுமையாக நோக்கும் போது எமது மாணவர்களின் தகவற் தொழில் நுட்ப அறிவு உயர் மட்டத்திலேயே உள்ளது எனலாம். அநேகமான பாடசாலைகளில் இணையத்தினைக் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதனையும், கற்றல் முகாமைச் செயற்பாட்டில் (Learning Management System) இணைந்திருப்பதனையும் காணலாம்.
உலகமயமாதல் செயற்பாடுகளின் உயிர் நாடியாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமே தொழிற்படுகின்றது. ஆகவே இலங்கையின் கல்வி முறைமைகளில் உலகமயமாதலால் தோன்றியுள்ள விளைவுகளை நேரான மனப்பாங்குடன் ஏற்றுக் கொள்வதுடன் தெற்காசிய நாடுகளிற்கிடையிற் எமது நாடு கல்விச் செயற்பாடுகளில் முன்னிலை வகிப்பதனை மேலும் வளர்ச்சியடையச் செய்வற்கு உலகமயமாதலின் நேரான விளைவுகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் வெகுவாக உள்ளது.
இலங்கையின் சமூக வளர்ச்சியும், அறிவுப் பரவலாக்க மும், தொடர்பாடல் ஊடகங்களின் வேகமான வளர்ச்சியின் காரணமாகவும் 21 ஆம் நூற்றாண்டில் கல்வி இலக்குகள் வேறுபட்டுள்ளன. இதனால் தொடர்ந்து மாற்றமடைந்து வரும் கல்விச் சூழலுக்கு ஏற்ற கல்வி முறையொன்றினை
அகவிழி ) ஓகஸ்ட் 2014 (5

Page 27
வழங்க வேண்டிய தேவைப்பாடு இலங்கை கல்விப் போக்கில் தற்போது தீவிரமாக உணரப்படுகின்றது. டெலோ அறிக்கையிற் குறிப்பிடப்பட்டுள்ள கல்வியின் நான்கு தூண்களின் (Four Pillars of Education) அடிப்படையிற் கற்றல் முறைகளும் தேர்ச்சிகளும் அடையப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ் இலக்குகளின் அடிப்படையிற் இலங்கையின் பண்புத்தர விருத்திக்கு உலகமயமாதல் செயற்பாடுகள் மூலமாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் அதிகமாகும். இதற்கென தொடர்ச்சியாக விரிவடையும் கல்விச் சூழலில் உயர் பலன்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் ஆசிரியர்கள் வலுவூட்டப்பட வேண்டும். இதற்கென உலகளாவிய ரீதியிற் காணப்படும் நிலைமைகள் ஆராயப்பட்டு ஏற்புடைய வகையிற் ஆசிரியர்கள் வலுவூட்டப்பட வேண்டும். அறிவினைப் தேடிப் பெறவும் அவற்றைப் புதுப்பித்துக் கொள்வதற்குமான நவீன மூலாதரங்கள் தொடர்பாக விழிப்பூட்டப்பட வேண்டும். அத்துடன் உலக சமூகக் கட்டமைப்பு தொடர்ச்சியாக மாற்றமடைந்து வருவதனால் ஏனைய அபிவிருத்திச் செயன்முறைகளுக்கு ஏற்ற வகையிலும் ஆசிரியர்கள் தமது திறன்களை விருத்தி செய்து கொள்ள வேண்டியுள்ளது. இங்கு பல்வேறு மொழிகள் தொடர்பாகவும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அறிவினையும் வழங்குவதன் மூலம் ஆசிரியர்கள் அறிவினைத் தேடிச் செல்பவராக மாற்றமடைவதுடன் மாற்ற முகவராகவும் (Change Agent) தொழிற்பட வேண்டியுள்ளது.
நடைமுறைக் கல்வி முறையின் கீழ் செயற்படுத்தப்படும் கலைத்திட்டதில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விடய உள்ளடக்கங்கள் போதுமானதாக இல்லை யென்பதனை வெளிப்படையாகவே ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. கல்வியின் தரப்பண்பினை விருத்தி செய்ய தகவல் தொழில்நுட்பத்தினை உயர்வாகப் பயன்படுத்த முடியும். விசேடமாக கணனியினை ஆதார மாகக் கொண்ட இணையப் பயன்பாட்டை விருத்தி செய்த கற்றல் - கற்பித்தல் முறைகள் கிரமமாக உள்வாங்கப்பட வேண்டியுள்ளது. இதனடிப்படையிற் கலைத்திட்டத்தினை நவீன மயப்படுத்த வேண்டும். எனினும் இவ்வாறன செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது பல தடைகள் காணப்படுகிற்ற போதும் அவற்றை வெற்றி கொண்டு
மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும் இலங்கையின் கல்வி முறை KASP முறையினை அடிப்படையாகக் கொண்டுள்ள போதும் பெரும்பாலும் அறிவினை மட்டும் முதன்மைப்படுத்திய செயற்பாடுகளுக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகின்றன. உலக சவால்களை எதிர் நோக்க அறிவு மட்டுமன்றி திறன்களும் நடைமுறைப் பிரயோகத்தினையும் வளர்ச்சியடையச் செய்ய வேண்டும். இதனால் முழுமையான
6 அகவிழி ஓகஸ்ட் 2014

பொ
செயற்திறன் உடைய எதிர்கால மாணவச் சமூதாயத்தினை உருவாக்க முடியுமாகும். இதற்கான ஏற்பாடுகளை உலக மயமாதலினுடாகவே வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்பது தெளிவான உண்மையாகும்.
மரபு ரீதியான வகுப்பறைக் கற்பித்தலில் இருந்து விடுபட்டு நவீன E - Leaning, M-Learning முறைகளைக் கையாள வேண்டியுள்ளது. இதன் மூலமாக மாணவர்களின் கற்றல் ஊக்கத்தினை அதிகரிக்கச் செய்வதுடன் மகிழ்ச்சி கரமான கற்றல் சூழலினை உருவாக்க முடிகின்றது. வருவழி நூல் நிலையங்கள் (Online Library), இணைய வகுப்பறைகள் (Virtual Class Rooms) என்பன இன்று எமது கல்வி முறைக்குள்ளும் கொண்டுவரப்பட வேண்டும். இவற்றின் மூலமாக கல்வி மீதான செலவினங்களை சிக்கனப்படுத்திக் கொள்ள முடிவதுடன் சர்வதேச நாடுகளின் கல்வி முறைகளுடன் போட்டி இடக் கூடிய நிலைமையினையும் ஏற்படுத்த முடிகின்றது.
உலகமயமாதல் செயற்பாடுகள் மூலமாக கற்றல் சமூகமொன்றைத் (Learning Society) தோற்றுவிக்க இயலுமாகின்றது. இலங்கையின் கல்வி முறையானது அதன் சமூகக் கட்டமைப்பு மாற்றத்தினை விட மெதுவாகவே பயணிக்கின்றது. எனினும் நாடு அபிவிருத்தி அடைய அதன் கல்வியானது சமூகக் கட்டமைப்பு மாற்றத்தினை விட வேகமாக பயணிக்க வேண்டும். ஆகவே மரபு ரீதியான கல்வி முறைகளில் இருந்தும் நகர்ந்து நவீன கல்விச் செயற்பாட்டினுள் இணைய வேண்டும். இவ்வாறு செயற்பட்ட சிங்கப்பூர், மலேசியா, யப்பான் போன்ற நாடுகள் இன்று அதிசயக்கத்தக்க வளர்ச்சிகளைக் கண்டுவருகின்றன.
எனவே நவீன கல்விச் செயற்பாட்டினுள் இணைவதற் கான பாதையாக உலகமயமாக்கல் செயற்பாடுகள் முன்னிற்கின்றன. இலங்கையும் இப்பாதையில் வெற்றி கரமாகப் பயணிக்க எல்லாத் தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டியுள்ளது.
உசாத்துணை நூல்கள்
1.
3.
மக்கள் வங்கி (ஏப்ரல்/மே 2000) பொருளியல் நோக்கு , கலாநிதி. ஜே.பி. கலேகம் உலகமயமாக்கல், மக்கள் வங்கி தலைமையகம், கொழும்பு 12 மக்கள் வங்கி (ஆவணி புரட்டாதி 2010) பொருளியல் நோக்கு, கலாநிதி . உபாலி எம் செடர், அறிவுப் பொருளாதாரமும் பொதுக் கல்வியும், மக்கள் வங்கித் தலைமைகம், கொழும்பு 02 இலங்கை முற்போக்குக் கலை இலக்கியப் பேரவை ஜெயராசா. சபா (2006) கோளமயமாக்கலும் இலங்கையின் கல்வியும், கொழும்பு. சேமமடு பதிப்பகம், ஜெயராசா. சபா (2011) கல்வியில் எழுவினாக்கள், கொழும்பு. ICDE International Conference, S.Chinnamai, Effects of Globalization on Education and Culture, University of Madras , 2005 November 19-23.
4.
5.

Page 28
மேனாட்டுப் பல்கலைக்கழகங்க
திருமதி. எஸ்.கேசவன் B.A (Hons), M.A., PhD Scholar தலைவர், இந்து நாகரிகத்துறை, கலை கலாசார பீடம் கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
ஆய்வுச் சுருக்கம்
இந்து நாகரிகத்தை சரியாக உணர்ந்து கொள்வதனூடாக வழிபாடு, கலை, அறிவியல், அறவியல், தத்துவம், வரலாறு. மருத்துவம், யோகா, கலைகள், சமூகவியற் சிந்தனைகள், இவ்வாறு பல துறைகளை விளங்கிக் கொள்வதுடன் இவை மனித வாழ்வை செம்மைப்படுத்துகின்றன என்பதையும் யாரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. இன்று நாம் இந்துப் பாரம்பரியத்தில் உள்ள நல்ல அம்சங்களை எல்லாம் தொலைத்துக் கொண்டு வருகின்றோம். ஆனால், மேலைத்தேசத்தில் அமைந்திருக்கின்ற பல்கலைக்கழகங்கள் தங்கள் கற்கைநெறிகளுள் இந்து நாகரிகத்தையும் பிரதிபலிப்பனவாக அமைத்திருக்கின்றார்கள். குறிப்பாக மேலை நாட்டினர் யதார்த்த உலகுக்கு ஏற்ப உலகளாவிய ரீதியில் இந்துப் பண்பாட்டு அம்சங்கங்களில் கவனஞ் செலுத்தி அவற்றை வளர்த்து வருவதுடன், தம் பல்கலைக்கழக கல்விக் கொள்கையிலும், அவற்றை உள்வாங்கியிருப்பது இந்து நாகரிகத்தின் சிறப்பினையும் நவீன போக்கினையும் எடுத்துக் காட்டுகின்றது.
குறிப்பாகப் பெரிய பிரித்தானியாவில் உள்ள Oxford university for Hindu Studies, அமெரிக்காவில் உள்ள Hindu University (A Unique dimension of Hindu thought and Traditions), International Vedic Hindu university, (Bringing Vedic Sciences to Life), Paramanand University, தென்னாபிரிக்காவில் உள்ள Faculty of Peace Studies, Spirituality and Hindu Culture, falhtpy; cs;s Hindu Studies at Concordia University என்பவை சில எடுத்துக் காட்டுக் களாகும்.
மேனாட்டுப் பல்கலைக்கழகங்கள் சமயம், தத்துவம், கலைகள், சமூகம், அறிவியல், மொழியியல் போன்றவற்றை உள்ளடக்கிய கற்கைநெறிகளைக் கொண்டுள்ளன. அத்துடன் இந்து சமயப் பிரதேசங்கள், இந்து தத்துவவியல், யோக ஞானம், தியானம், யோக தத்துவவியல், ஆயுர்வேதம், இந்து வானவியல், சமஸ்கிருதம், வேதாந்தம், வாஸ்து சாஸ்திரம் முதலியவற்றையும் தன்னகத்தே கொண்டு மாணவர்களுக்கு போதித்து வருகின்றன. தொடக்க காலம் மட்டுமல்ல அண்மைக் காலங்களில்

ளில் இந்து நாகரிகம்
கூட இந்து நாகரிக கற்கை களைக் கொண்ட புதிய பல் கலைக்கழகங்கள் உருவாகி யுள் ளன. எனவே இவை தோன்றுவதற்குரிய பின்னணி பற்றியும், அதன் சிறப்பம்சங்கள் பற்றியும் ஆராய்வதுடன், எமது. நாட்டின் உயர் கல்வியில் இந்து நாகரிகக் கலைத் திட்டத்தில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள், விழிப்புணர்வுகள் என்பவற்றுடன்
பேராசிரியர் மொனியர் இந்துநாகரிகத்தினை இன்றைய
வில்லியம்ஸ் தகவல் தொழில்நுட்ப அறிவியல் யுகத்திற்கும் நாளைய தேவைக்கும் காத்திரமாய் அமைக்கும் வகையில் "மேனாட்டுப் பல்கலைக்கழகங்களில் இந்து நாகரிகம்” எனும் தலைப்பிலான இவ்வாய்வு அமைகிறது. இவ்வாய்வின் தூண்டல்கள் பல்கலைக்கழகப் புலமைசார் பெருமக்களிடம் மட்டுமன்றி இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த இந்து சமூகத்திலும் துலங்கல்களை ஏற்படுத்த வேண்டும் என்பதே இக்கட்டுரை ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பாகும்.
-அறிமுகம்
இந்து நாகரிகம் காலத்தினால் பழமையானது, இன்று வரை நிலைத்திருப்பது, நாளைய தேவைக்கும் காத்திரமாய் அமையும் பெருமைக்குரியது, இன்றைய நவீன உலகிற்கு ஏற்ப அறிவியல் யுகத்தில் இந்து நாகரிகத்தின் சிறப்பினை உணர்ந்து, மேனாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் இந்து நாகரிக கற்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை நாம் காணக் கூடியதாகவுள்ளது. இச் செயற்பாடு எம்மை ஒருகணம் சிந்திக்கத் தூண்டுவது மட்டுமல்ல மேலைநாட்டினரை மேல்நோக்கி பார்க்கும் பார்வையையும் (Look Upward raising head) எமக்கு கொடுத்துள்ளது.
இந்த வகையில் உலகில் பல பல்கலைக்கழகங்கள் 5 காணப்படுகின்றன. இவற்றுள் மேனாட்டில் உள்ள பல் கலைக்கழகங்கள் பலவற்றில் இந்து நாகரிக பீடங்களும், துறைகளும், புலங்களும் இன்றும் தோன்றிய வண்ணம்
அகவிழி ஓகஸ்ட் 2014

Page 29
ஓக்ஸ்போட் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடம்
உள்ளன. அத்துடன் நம் கலாசார, இந்து பாரம்பரியங்களுடன் மனித விழுமியங்களை, மனிதன் உலகில் வாழும் முறைமையினையும் (உடல்நல , உளநல) கருத்திற் கொண்டு நவீன கல்வி முறையினூடாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும். எனவே பல்கலைக்கழக மட்டத்தில் மட்டுமல்ல அனைத்து சமூகத்தினரும் பயன்படும் சமூக அமைப்பினை முன்னெடுப்பதற்கான ஒரு மாதிரியாகவே "மேனாட்டுப் பல்கலைக்கழகங்களில் இந்து நாகரிகம்" என்ற தலைப்பின் கீழ் இவ்வாய்வு அமைகின்றது. எதிர்காலத்தில் சமூக, சமய கட்டமைப்பில் ஏற்படுத்தும் தாக்கத்தினையும் இவ்வாய்வு தெளிவுபடுத்தும்.
ஆய்வுப் பிரதேசம் ஆய்வுக்குரிய பல்கலைக்கழகங்களாக ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் இந்து கற்கைகளுக்கான பீடம், ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாகணத்தில் உள்ள இந்துப் பல்கலைக்கழகம், தென்னாபிரிக்காவில் உள்ள இராம கிருஷ்ண சமாதான கற்கைள், ஆன்மீக மற்றும் கலாசார பீடம், கனடாவில் உள்ள கொங்கோர்டியா இந்து கற்கைகள் பீடம் என்பன ஆய்வின் எல்லைகளாகும்.
ஆய்வின் கருதுகோள்
"மேனாட்டுப் பல்கலைக்கழகங்களில் இந்து நாகரிகம்" தொடர்பான விடயங்களை அறிவதினூடாக இலங்கையில் நடைமுறையில் உள்ள இந்து நாகரிகக் கற்கைகள் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியதுமான விருப்பார்வங்களும் மனப்பாங்குகளும் மேலும் மேல் நோக்கியதாக அமைந்திருக்கும் என்பதே இவ்வாய்வின் கருதுகோளாக அமைகிறது.
ஆய்வின் நோக்கங்கள்
8 அகவிழி ஓகஸ்ட் 2014
இன்று இந்துக்கள் அதிகம் வாழும் பிரதேசத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் இந்து நாகரிக கற்கைநெறிக்கு கொடுக்கப்படுகின்ற முக்கியத்து

வத்தோடு ஒப்பிடுகையில் மேனாட்டுப் பல்கலைக் கழகங்கள் எத்தகைய முக்கியத்துவத்தை இக் கற்கைநெறிக்கு கொடுக்கின்றன என் பதை
கண்டறிதல்.
02) இந்தியாவில் தோன்றி வளர்ந்த இந்து நாகரிகமானது
உலகளாவிய ரீதியில் குறிப்பாக பல்கலைக்கழக மட்டத்தில் எவ்வாறு பரம்பலடைந்துள்ளது என்பதை
வெளிப்படுத்தல். 03) இந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்ட
நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் இந்து நாகரிகம் தொடர்பான கற்கைநெறியில் உள்ளடங் கியுள்ள விடயங்களை மேனாட்டுப் பல்கலைக் கழகங் கள் எவ்வாறு நவீன முறையில்
உள்வாங்கியுள்ளன என்பதனை அறிந்து கொள்ளல். 04) இந்து நாகரிக கற்கைநெறி தொடர்பாக மேனாட்
டவர்கள் எத்தகைய ஆர்வத்தினை கொண்டுள்ளனர்
என்பதை எம்மவர்க்குப் புலப்படுத்தி விழிப்பூட்டுதல். 05) மேனாட்டில் இந்து நாகரிக கற்கையை நிறைவு
செய்த மாணவர்களின் நிலை பற்றிய கருத்துக்களை
முன்வைத்தல். 06) எமது நாட்டில் இந்துநாகரிக சிறப்பு, பொது கற்கை
நெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கு மேற்படிப்பிற்கான தளத்தை அடையாளப்படுத்தல். மேனாட்டுப் பல்கலைக்கழகங்களில் இந்து நாகரிகத்தின் தோற்றத்திற்கான காரணங்கள் மேனாட்டுப் பல்கலைக்கழகங்களில் இந்து நாகரிகத்தின் தோற்றத் திற்கான காரணங்களாக கீழைநாடுகளிற்கு ஐரோப்பியர் களின் வருகை, இந்து இயக்கங்களின் செல்வாக்கு, மேனாட்டு அறிஞர்களின் ஆய்வுகள், இந்துக்களது குடியேற்றங்கள், புலம்பெயர்வுகள் போன்ற இன்னோரன்ன பல விடயங்கள் காரணங்களாக அமைகின்றன.
பதினாறாம் நூற்றாண்டு காலப் பகுதியில் ஐரோப்பியர்கள் கீழைத்தேசங்களை தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தார்கள். இக் காலப்பகுதி புராதன இந்துப் பனுவல்களை (Verse, Treatise) உலகம் புரிந்து கொள்ள வழிவகுத்தது. குறிப்பாக இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சியின் போது கிழக்கிந்திய வர்த்தக கம்பனியினால் பிரித்தானியா இந்திய, அரசாங்க , உயர் நிர்வாக அதிகாரிகளுக்கு கல்விப் போதனை வழங்குவதற்கு கல்கத்தாவில் ஒரு கீழைத்தேய உயர்கல்வி நிறுவனம் ஒன்றினை நிறுவியது. இந் நிறுவனம் ஆசியவியல் கழகம் (The Asiatic Society, 1784) என அழைக்கப்பட்டது.
இக் கழகத்தின் கீழ் மேலைத்தேய அறிஞர்கள் பலரும் புராதன இந்துப் பனுவல்களை ஆராய்ந்து

Page 30
அவற்றை பிற மொழிகளில் மொழிபெயர்த்தமை, கல் வெட்டுக்களை சேகரித்தமை, படியெடுத்தமை இவ்வாறான விடயங்களை பதிப்பித்தமையின் விளைவு, இந்து நாகரிகம் பற்றிய வித்துவக் கிளர்ச்சிக்கும், மேலைத்தேசத்தில் இந்து சமயம், பண்பாடு என்பன பற்றிய தெளிவான விளக்கத்திற்கும், விழிப்புணர்வுகளுக்கும் காரணமாக அமைந்தன. இந்த நிலை மேனாட்டில் ஒரு சாதகமான கருத்து நிலை ஏற்படவும் வழிவகுத்தன. அது மட்டுமன்றி மேனாட்டினர் பலர் இந்து சமய அபிமானிகளாயினர்.
விவேகானந்தரது (Swami Vivekananda, 1863-1902) சிக்காக்கோ சொற்பொழிவுகள் (1893) இந்து சமயத்தின் உயரிய நிலையினை உலகளாவிய ரீதியில் அடையாளப் படுத்திக் கொண்டன. அத்துடன் நவீன கால சீர் திருத்த இந்து இயக்கங்கள் குறிப்பாக ஹரே கிருஷ்ண இயக்கம் (International Society for Krishna Consciousness (ISKCON), இராமகிருஷ்ண மிஷன் (Ramakrishna Mission), காந்தீய இயக்கங்கள் போன்றவற்றின் பணிகள் முதன்மையாவை. இவ் இயக்கங்களின் செயற்பாடுகள் இந்து மதத்தினை மேனாட்டவர்கள் புரிந்து கொள்ளவும், விளங்கிக் கொள்ளவும் காரணமாக அமைந்தன. இச் சீர்திருத்த இயக் கங்களின் செயற்பாடுகளும் இன்றைய காலப் பகுதியில் கல்லூரிகளாகவும், பல்கலைக்கழகங்களாகவும் விரிவடையக் காரணங்களாக அமைந்தமையினைக் காணலாம்.
மேலைத்தேச அறிஞர்களின் ஆய்வுகள் என்ற வகையில் இந்து இலக்கியங்களின் சிறப்பினை உலகறிய வைத்தவரான மக்ஸ் மூலர் (Friedrich Max Miller, 18231900) "ஜரோப்பியர்கள் வெறும் கிரேக்க, உரோம், யூத தத்துவங்களை மட்டும் படித்தால் போதாது. நம்முடைய அக வாழ்க்கை நிறைவானதாகவும், மனநலம் பொதிந்த தாகவும், உலக அளவில் விரிந்ததாகவும், உண்மையிலேயே உயரிய மனித இயல்புடையதாகவும் அமைய வேண்டு மாயின், இந்தியத் தத்துவ நூல்களை நாம் படிக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். அது நம் முடைய குறைகளைப் போக்கித் திருத்திச் செம்மைப்படுத்த வல்லதாக உள்ளது' எனக் கூறியுள்ளமை கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
மேலும் விக்டர் கசின் (Victor Cousin, 1792-1867) என்னும் அறிஞர் “இந்திய நாட்டின் கவிதை, இலக்கியங்கள், தத்துவ நூல்கள் ஆகியவற்றை ஆராயும் பொழுது அவைகளிற் பொதிந்துள்ள உண்மைகள் மிகவும் சிறப்புடையனவாகக் காணப்படுகின்றன. அவற்றின் உயரிய தத்துவக் கொள்கை நலன்களை நம்முடைய ஐரோப்பிய அறிவு நலனுடன் ஒருங்கு வைத்து ஆராயும் போது மண்டியிட்டு வணங்கிப் பணிய வேண்டிய நிலையில் இருக்கிறோம்" என விளக்கியமை நமது இந்துப் பாரம் பரியத்திற்கு கிடைத்த கொடை எனக் கூறிக் கொள்ளலாம்.

யோகப் பயிற்சி வகுப்பு-ஜக்கிய அமெரிக்கா
மேற்கூறப்பட்ட காரணங்கள் மட்டுமல்ல இன்னும் பல காரணங்கள் இந்து நாகரிக கற்கைகள் மேனாட்டில் தோன்றக் காரணங்களாகமைந்தன. இவை தனியாக ஆராயப்படவேண்டிவை. மேனாட்டுப் பல்கலைக்கழகங்களில் இந்து சமயம், பண்பாடு, தத்துவம், மொழியியல் போன்ற கற்கைநெறிகளை போதிக்கவும், ஆய்வு செய்யவும், தனியான பீடங்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள் என்பது
குறிப்பிடத்தக்கதாகும்.
மேனாட்டில் இந்துப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் உள்ள வாரணாசி இந்துப் பல்கலைக்கழகமே இந்துப் பல்கலைக்கழகங்களில் காலத்தினால் (1916) முற்பட்டதாகும். இவை தவிர புதுடில்லி, பீகார் ஆகிய பல மாநிலங்களிலும் இந்துப் பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ளன. மேனாட்டில் , ஓக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் இந்து கற்கைகளுக்கான பீடம், ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தில் உள்ள இந்துப் பல்கலைக்கழகம், கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் உள்ள இந்து கற்கைகள் நிலையம், நீயூ கரோலினா மகாணத்தில் உள்ள இந்து கற்கைகள் துறை, கலிபோர்னியாவில் உள்ள மகரிஷி முகாமைத்துவ பல்கலைக்கழகம், அவுஸ்ரேலியாவில் உள்ள வேத கால வானவியல் கல்லூரி, கனடாவில் உள்ள கொங்கோர்டியா பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடம், தென்னாபிரிக்காவில் உள்ள சமாதான கற்கைள், ஆன்மீக மற்றும் கலாசார பீடம் என்பன ஒரு சில எடுத்துக் காட்டுக்களாகும்.
மேனாட்டுப் பல்கலைக்கழகங்களில் இந்து நாகரிகம் என்ற மையக் கருத்து அங்குள்ள இந்து நாகரிக பீடங்கள், துறைகள், புலங்களில் போதிக்கப்படும் கற்கைநெறிகளை அடிப்படையாகக் கொண்டு விளக்கப்படுகின்றன. அந்த வகையில் ஆய்வுக்குரிய நான்கு மேனாட்டுப் பல்
2014 (8
டொக மாக கலகம்
டர் - 5

Page 31
சமாதான கற்கைள்
கலைக்கழகங்களின் கற்கை நெறிகள் இங்கு விரிவாக
ஆராயப்படுகின்றன.
ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் இந்து கற்கை களுக்கான பீடம் (The Oxford Centre for Hindu Studies) - (OCHS)
The Oxford Centre for Hindu Studies
A RECOGNISED INDEPENDENT CENTRE OF THE UNIVERSITY OF OXFORD
ஓஸ்க்போர்ட் பல்கலைக்கழகமானது ஜக்கிய இராச்சியத்தின் ஒக்ஸ்போர்ட் என்னும் நகரத்தில் அமைந் துள்ள தொன்மைப் புகழ் வாய்ந்த பல்கலைக்கழகமாகும். இதுவே ஆங்கிலம் பேசும் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் யாவற்றினும் பழமை வாய்ந்ததாகும். இதன் தொடக்கம் கி.பி பதினொராம் நூற்றாண்டு எனக் கூறுவர். ஆரம் பத்தில் உலகத் தரத்திலான புலமையாளர்களையும், மாணவர்களையும் இணைத்துக் கொண்டது.
1883 ஆம் ஆண்டு பேராசிரியர் மொனியர் வில்லியம்ஸ் (Sir Monier Monier - Williams, 1819-1899) (படம் :1) என்பவரினால் இந்திய கற்கைகள் நிலையம் (Indian Institute) என்ற பெயரில் தொடங்கப்பட்டதாகும். இவரே இப் பல்கலைக்கழகத்தின் முதல் சமஸ்கிருதப் பேராசிரிய ராவர். மேலைநாட்டினைச் சேர்ந்த மாக்ஸ் மூல்லர், மாக்டெனால்ட், வின்டனிட்ஸ், போன்ற அறிஞர்கள் இப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களாக இருந் துள்ளார்கள். இது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கீழ் இந்து கற்கைகளுக்கான பீடமாக 1997 ஆம் ஆண்டு தரமுயர்த்தப்பட்டு, மேலும் 2006 ஆம் ஆண்டுக்குப் பிற்பாடு சுதந்திரமாக இயங்கி வருகின்றது. (படம்: 2) தற்போது இதன் தலைமை இயக்குநராக சௌனகா ரிஷி தாஸ் (Mr. Shaunaka Rishi Das) என்பவரும், இந்த ஆண்டுக் கான இயக்குநராக பேராசிரியர் கெவின் வுட் (Prof. Gavin Flood) என்பவரும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
8 அகவிழி ஓகஸ்ட் 201.

இத் துறையின் பிரதான நோக்கம், இந்து கற்கைகளில் புலமைத்துவம் வாய்ந்த மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்குவதும், ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஊக்கி விப்பதும், ஆராய்ச்சி முடிவுகளை வெளியீடாக்குவதும் ஆகும் . இவர்கள் வருடந்தோறும் இந்துக் கற்கைகளுக்கான சஞ்சிகை (Journal of Hindu Studies) (படம்:3) ஒன்றினையும் வெளியிடுகின்றனர்.
“The official association provides a platform for the Oxford Centre for Hindu Studies and Oxford University to move forward together in teaching, research and publishing. It will also open to students and researchers the wonderful Indian resources Oxford holds, including the Indian Institute Library, housing the largest collection of Sanskrit texts outside of India. - Lord Patten of Barnes, Chancellor of Oxford University எனும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக வேந்தர் கூற்று ஒக்ஸ்போர்டில் இந்துகற்கைகளை மேற்கொள்ளும் சிறப்பினை எடுத்துக் காட்டுகின்றது.
இந்து இலக்கியங்கள் (literature), சமயம் (religion), பண்பாடு (culture), சமூகம் (society) தத்துவவியல் (philosophy), மொழியியல் (languages), வரலாறு (history), கலைகள் (arts) என்ற பிரிவுகளின் கீழ் கற்கை நெறிகள் போதிக்கப்படுகின்றன. சிறப்பாக இந்திய கலாசார மரபுரிமை மற்றும் அதன் விருத்தி தொடர்பாக விரிவாக கற்பிக்கப்படுகின்றன. ஜப்பான், பெல்ஜியம், தன்சானியா, இஸ்ரேல், ஜக்கிய அமெரிக்கா, ஜேர்மனி, அயர்லாந்து போன்ற உலகின் பல பாகங்களிலிருந்தும் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுகின்றார்கள். இளம் ஆய் வாளர்களுக்கு பல்வேறு வளங்களையும் இப் பல் கலைக்கழகம் வழங்கி வருகின்றது. இன்று கூட கல்விசார் விரிவுரைகளுடன், கருத்தரங்குகள், மகாநாடுகள், புறநிலைக் கற்கைகள், பயிற்சிகள் நடைபெறுகின்றன. இந்தியாவுக்கு வெளியே அதிகளவு இந்து நாகரிக மூல நூல்களைக் கொண்டு விளங்கும் பெரிய நூலகத்தினைக்
இது கொண்டுள்ளது.
இந்து நாகரிக கற்கை நெறிகள்
LD
இந்து சமயத்தை பூரணமாக விளங்கிக் கொள்ளுதல் (Understanding Hindu Identity), வேதங் களும் உபநிடதங்களும் (Vedas and Upanishads) , பகவக்கீதையின் விளக்கம் (Bhagavad Gita), மகாபாரதம் மற்றும் இராமாயணம் (Mahabharata and Ramayana) எனும் பாடநெறிகள் போதிக்கப்படுகின்றன. ஒவ்வொன்றும் ஏழு பருவ காலங்களாக பிரிக்கப்பட்டு கற்பிக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் பல பிரிவுகளைக் கொண்டவை. இவை இணையத்தின் ஊடாகவும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பினை வழங்கியுள்ளன.

Page 32
Session One - இந்து சமயமும் இந்து சமயப் பிரிவுகளும் (Hinduism and the Hindu Identity) இந்து சமய வரையறை, இந்து சமயப் பிரிவுகள், இவற்றின் வித்தியாசமான நடைமுறைகள், பழக்க வழக்கங்கள் என்பன
Session Two - இந்து சமய உற்பத்தியும் அதன் வரலாற்று படிமுறை வளர்ச்சிகளும் (Origins and Historical Development); வரலாற்று ரீதியாக இந்து சமய வளர்ச்சிக் கால கட்டங்களும் அதனால் ஏற்பட்ட மாற்றங்களும் என்பன
Session Three - இந்து வேதங்கள் (The Hindu Scripture) வேதங்களினுள் உள்ளடக்கப்பட்டுள்ள பிரமம், ஆன்மா, பிரபஞ்சம் என்பன
Session four - இந்து சமயத் தத்துவங்கள் (Hindu Religious Philosophy) இந்து சமய இறையியல், மூவகைத் (சங்கர, இராமனுஜ , மத்துவ) தத்துவங்கள்
Session Five - இந்து சமய அனுஷ்டானங்கள் (Hindu Religious Practice) இந்து சமய ஆலய வழிபாடுகள்
மூர்த்திகள், பூசைகள், பாத யாத்திரைகள் என்பன
Session Six - இந்து சமூகம் - இந்து சமூகக் கட்டமைப்பு (Hindu Society - Caste and Gender) மரபு வழியான இந்து சமூக அடுக்கமைவு, சாதிப் பாகுபாடு, பால் வேறுபாடுகள்
Session Seven - மேலைத்தேசத்தில் இந்து மதம் (Modern Trends in Hinduism) அங்குள்ள ஆலயங்கள், இந்து நிறுவனங்கள், பண்டிகைகள் என்பன
உயர் பட்டப்படிப்பு ஆய்வாளர்களுக்கான தலைப்புக்கள்
நவீன கால இந்து மதம் (Hinduism and Modernity), சென்நெறி கால இந்து மதம் (Classical Hinduism), பகவத்கீதை மற்றும் புராண ஆய்வுகள் (Bhagavata Purana Research Project), ஒப்பீட்டு தத்துவவியல் மற்றும் சமயம் (Comparative philosophy and religion), வரலாற்று ரீதியான இந்துக் கலாசாரம் (Historical Perpectives on Hindu Culture), இந்து தொல்லியல் மற்றும் பனுவல்கள் (Hindu Archaeology and Text Project) என்பன வழங்கப்படுகின்றன.
மேலும் இந்து சமய இருப்பிடங்கள், இந்து இலக்கியங்கள், இந்து சமூக மரபுகள், இந்து அரசியல், இந்துக் கலைகள், இந்து சமயமும் உலகமயமாக்கமும் என்னும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டு, வாய்மொழி சம்பந்தமான வரலாறு, இந்து ஆவணங்கள் என்ற இரண்டு தலைப்பின் கீழ் ஆய்வுத் தலைப்புக்கள் வழங்கப்படுகின்றன.
பகவக்கீதை மற்றும் புராண ஆய்வுகள், சாக்த மரபுகள், வரலாறு, கோட்பாடுகள், நடைமுறைகள் பற்றி ஆய்வு என்ற இரண்டு தலைப்புக்களும். ஓப்பிட்டு

பாப்பாபட்EE
ஆன்மீக மற்றும் கலாசார பீடம் பட்டமளிப்பு விழா தென்னாபிரிக்கா
தத்துவவியல் மற்றும் சமயம் என்ற தலைப்பில் இந்து சமயங்களுக்கு இடையிலான தத்துவவியல், இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து, பௌத்த சமயத் தத்துவத் தொடர்புகள் என்ற இரண்டு தலைப்புக்களும், வரலாற்று ரீதியான இந்துக் கலாசாரம் என்ற தலைப்பில் இந்து தொல் பொருளியல் என்ற விடயங்கள் அடங்கிய தலைப்புக்கள் வழங்கப்படுகின்றன என்பவை ஒரு சில எடுத்துக்காட்டுக்களே.
இப் பல்கலைக்கழகமானது வேல்ஸ், லம்பெற்றர் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து நாடுபூராகவும் ஆறு நிலையங்களில் சான்றிதழ், டிப்ளோமாக் கற்கை நெறிகளை நடத்தி வருகின்றது. லண்டன், வேர்மிங்காம், லைசெஸ்டர் போன்ற நகரங்களுக்கும் இக் கற்கைநெறி விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
ஜக்கிய அமெரிக் காவின் உள்ள இந்துப் பல்கலைக்கழகம் (Hindu University of America) (HUA)
ஜக்கிய அமெரிக்காவில் உள்ள இந்துக் கல்வி நிறுவனங்களில் முதன்மையானதாக விளங்குகின்றது. புளோரிடா மாநிலத்தின் ஓர்லண்டோ (Orlando) எனும் இடத்தில் அமைந்துள்ளதாகும். இப் பல்கலைக்கழகம் ஆரம்பத்தில் 1989 ஆம் ஆண்டு சுவாமி திலாக் (Swami Tilak) என்பவரினால் இந்து வேத கற்கைகளுக்கான உலக மையம் (International Vedic Hindu University) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டதாகும். 1993 ஆம் ஆண்டு ஒக்டொபர் 24 ஆம் திகதி பல்கலைக் கழகமாக தரம் உயர்த்தப்பட்டது. இப் பல்கலைக்கழகத்திற்கு 2000 ஆம் | ஆண்டு புனோரிடா மாநிலத்தின் Torbon Spring எனும் இடத்தில் 9.7 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு புதிய அலுவலகம், தி. பல விரிவுரைக் கட்டடங்கள், நூலகங்கள், தியான, யோக பயிற்சிக்கான மண்டபம், தங்குமிட வசதி என்பனவற்றைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாகும்.
அகவிழி ஓகஸ்ட் 2014 (5

Page 33
இப் பல்கலைக்கழகத்தின் கீழ் அமெரிக்க வேத வானவியல் கல்லூரி, கலிபோரினியா ஆயுள்வேதக் கல் லூரி (California College of Ayurveda - Ayurvedic School), சுவாமி விவேகானந்தர் யோகப் பல்கலைக்கழகம் (Yoga University - SVYASA), பரமானந்த பல்கலைக்கழகம் (Paramanand University), அம்ரித் யோக நிறுவகம் (Amrit Yoga Institute) என்பன காணப்படுகின்றன. இணையம் மூலமாக சான்றிதழ் கற்கை நெறியினையும், முதுமாணி, கலாநிதி பட்டத்திற்காக உலகலாவிய ரீதியில் பல்கலைக்கழக விரிவுரைகளும் போதிக்கப்படுகின்றன.
இப் பல்கலைக்கழகம் ஏழு இந்துக் கற்கைநெறிகளின் கீழ் போதிக்கின்றன. இந்து சமயப் பிரதேசங்கள், இந்து தத்துவவியல் (Hindu Philosophy), யோக ஞானம் (wisdom of Yoga), (படம் :4) தியானம் (Meditation), யோக தத்துவவியல் (Yoga Philosophy), ஆயுர்வேதம் (Ayurveda), இந்து வானியல் (Hindu Astrology), சமஸ்கிருதம் (Sanskrit), வேதாந்தம் (Vedanta ), வாஸ்து சாஸ்திரம் (Vaastu), என்பனவாகும். இப் பாட நெறிகள் யாவும் இன்றைய உலக நடைமுறைக்கு ஏற்றவாறு கற்பிக்கப்படுகின்றமை
குறிப்பிடத்தக்கதாகும்.
இந்து நாகரிக கற்கை நெறிகள்
HIN 5301 - சமணம் - சமண தத்துவம் மற்றும் ஆன்மீகம் (Jainism - Jain Philosophy and Spirituality)
HIN 5302 - பௌத்த தர்மம் மற்றும் திபெத் பெளத்த அறிமுகம் (Buddhism: Buddha Dharma - A Practical Introduction to Tibetan Buddhism),
HIN 5603 - ஆன்மாவின் பயணம் (Journey of the Soul),
HNP 5002 - உபநிடதங்களில் தத்துவம் (Philosophy of the Upanishads),
HNP5003 - ஸ்ரீமத் பகவக்கீதை தத்துவம் (Philosophy of Srimad Bhagavad-Gita),
HNP5301 - வைணவ தத்துவம் (Vaishnava Philosophy),
HNP 5701 - சமகால இந்து தத்துவஞானிகள் (Contemporary Hindu Philosophers),
HUC5001 - இந்து சமய அடிப்படைக் கொள்கைகள் (Principles of Hinduism),
HUC5002 - இந்து சமய அனுஷ்டானங்கள் (Practices of Hinduism),
S) அகவிழி ஓகஸ்ட் 2014
HUC5003 - அடிப்படை சமஸ்கிருதம் (Basic Sanskrit),
HUC 5004 - ஆய்வு முறைமையியல் (Research Methodology),

JYO5101 - பொதுவான சோதிடம் மற்றும் வானவியல் (General Astrology& Astronomy),
JYO 5401 - இடைக்கால வானவியல் (Medical Astronomy)
JYO 5402 - இடைக்கால வானவியல் (Medical Astronomy)
YPM5001- பதஞ்சலி யோக தரிசனம் (Patanjalis Yoga Darshana),
YPM5002 - கபில் சாங்கிய தரிசனம் (Kapila's Samkhya Darshana),
YPM 5003 - யோக தத்துவ மற்றும் தியானம் (Yoga Philosophy and Meditation)
என்னும் கற்கை நெறிகளை போதிக்கின்றது. இவை யாவும் இணையத்தின் ஊடாகவும் கற்கும் வாய்ப்பினையும் அளித்துள்ளது.
முதுகலைமாணிப் பட்டத்திற்கான இந்துக் கற்கை நெறிகள் ஜக்கிய அமெரிக்க இந்துப் பல்கலைக்கழகத்தின் முதுகலைமாணிப் பட்டத்திற்காக கற்கை நெறிகளாக யோக கல்வியியல் (Yoga Education), யோக தத்துவம் மற்றும் தியானம் (Yoga Philosophy & Meditation), ஆயுர்வேதம் (Ayurveda), இந்து சமயம் (Hinduism), இந்து தத்துவம் (Hindu Philosophies), வேத வானவியல் (Vedic Astrology) ஸ்ரீ அரோபின்டோ கற்கை நெறிகள் (Sri Aurobindo Studies), இந்துப் புரோகிதருக்கான பயிற்சிகள் (Master of Divinity - Hindu Priest Training) என்னும் தலைப்புகளின் கீழ் ஒவ்வொன்றுக்குமாக விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமையினைக் காணலாம். இவை ஒவ்வொன்றும் முப்பது மாணித்தியாலங்களைக் கொண்டவையாகும்.
பல்கலைக்கழக உள்ளக கற்கை நெறிகளாக மூன்று கற்கை நெறிகளும், யோக தத்துவம் மற்றும் தியானத்துடன் தொடர்புடைய உள்ளக கற்கை நெறிகளாக மூன்று கற்கை நெறிகளும், யோக தத்துவம் மற்றும் தியானத்துடன் தொடர்புடைய தேர்ந்தெடுக்கின்ற கற்கை நெறிகளாக இரண்டு கற்கைநெறிகளும் அமைகின்றன. இவை யாவும் மூன்று மணித்தியாலப் கற்கைநெறிகளாகும். இறுதி ஆறு மணித்தியாலத்திற்குரியதாக புலமைசார் விபரணக் கட்டுரை
அமைகின்றது.

Page 34
முதுகலைமாணிப் பட்டத்திற்கான யோக தத்துவம் மற்றும் தியான இந்துக் கற்கை நெறிகள்
கற்கை நெறிகள்
நேரம்
YPM 5003
பல்கலைக்கழக உள்ளக கற்கை நெறிகள்
HUC 5001
கற்கை நெறிகளுக்கான
தலைப்புகள் யோக தத்துவம் மற்றும் தியானம் இந்துசமய அடிப்படைக் கொள்கைகள்
அடிப்படை சமஸ்கிருதம் யோக உளவியல் பதஞ்சலி யோக தரிசனம்
கபில் சங்கிய தரிசனம்
HUC 5003
YPM 5004
YPM 5001
03 உள்ளக கற்கை நெறிகள் - யோக தத்துவம் மற்றும் தியானம்
YPM 5002
02
தேர்ந்தெடுக்கின்ற கற்கை நெறி யோக தத்துவம் மற்றும் தியானம் புலமைசார்
விபரணக் கட்டுரை
னம்
கலாநிதி பட்டத்திற்கான இந்துக் கற்கைநெறிகள்
ஜக்கிய அமெரிக்க இந்துப் பல்கலைக்கழகத்தின் கலாநிதி பட்டத்திற்கான கற்கை நெறிகளாக, யோக தத்துவம் மற்றும் தியானம், இந்து சமயம், இந்து தத்துவம், என்னும் தலைப்புகளின் கீழ் ஒவ்வொன்றுக்குமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமையினைக் காணலாம். இவை ஒவ்வொன்றும் ஆறுபத்திமூன்று மாணித்தியாலங்களைக் கொண்டவையாகும்.
பல்கலைக்கழக உள்ளக கற்கை நெறிகளாக மூன்று கற்கைநெறிகளும், இந்து சமயத்துடன் தொடர்புடைய உள்ளக கற்கை நெறிகளாக மூன்று கற்கை நெறிகளும், இந்து சமயத்துடன் தொடர்புடைய தேர்ந்தெடுக்கின்ற கற்கை நெறிகளாக நான்கு கற்கைநெறிகளும் அமை கின்றன. மூன்று மணித்தியாலங்களைக் கொண்டதாக ஆய்வு முறைமையியல் அமைகின்றது. இவை யாவும் மூன்று மணித்தியாலப் கற்கை நெறிகளாகும். இறுதி முப்பது மணித்தியாலத்திற்குரியதாக கலாநிதி பட்டத் திற்கான புலமைசார் விபரணக் கட்டுரை அமைகின்றது.

கலாநிதி பட்டத்திற்கான இந்துக் கற்கைநெறிகள்
கற்கை நெறிகள்
கற்கை நெறிகளுக்கான தலைப்புகள்
நேரம்
HUC 5001
இந்துசமய அடிப்படைக் கொள்கைகள்
3 பல்கலைக்கழக உள்ளக கற்கை நெறிகள்
HUC 5002
இந்துசமய அனுஷ்டானங்கள்
HUC 5003
HIN 5001
அடிப்படை சமஸ்கிருதம் இந்து வேதங்களின்
அடிப்படைகள் இந்து சமயம் கூறும் பிரபஞ்சம்
இந்து சமய வரலாறு படிமுறைகள்
3 இந்து சமயத்துடன் தொடர்புடைய பல்கலைக்கழக உள்ளக கற்கை நெறிகள்
HIN 5002
HIN 5003
4 இந்து சமயத்துடன் தொடர்புடைய தேர்ந்தெடுக்கின்ற கற்கை நெறிகள் ஆய்வுக்கான கற்கை நெறி டாக்டர் பட்டத்திற் கான புலமைசார் விபரணக் கட்டுரை
HUC 5004
ஆய்வு முறைமையியல்
30
தென்னாபிரிக்காவில் உள்ள இராம கிருஷ்ண கற்கைகள் நிலையம் (Ramakrishna Centre of South Africa)
Faculty of Peace Studies, Spirituality and Culture
தென்னாபிரிக்காவின் டர்பன் (Durban) நகரத்தில் உள்ள இராம கிருஷ்ண கற்கைகள் நிலையம் அமைந்துள்ளதாகும். (படம்:6) இங்கு இந்து நாகரிகக் கற்கை நெறிகள் போதிக்கப்படுகின்றன. சமதான கற்கைள், ஆன்மீக மற்றும் கலாசார பீடம் (The Faculty of Peace Studies, Spirituality and Hindu Culture), விழுமியக் கல்வியின் அடிப்படைகள் (Value Based Education), வேத இலக்கிய வகுப்புக்கள் மற்றும் சமய கலந்துரையாடல்கள் (Scriptural Classes & Religious Discourses) கராத்தே பயிற்சி வகுப்புக்கள் (Karate Classes) என்ற பிரிவுகள் அமைந்துள்ளன.
குறிப்பாக சமாதான கற்கைள், ஆன்மீக மற்றும் கலாசார பீடத்தின் கீழ் சான்றிதழ் கற்கை நெறிகளாக (படம்:7,8) இந்து கற்கைகள் (Certificate in Hindu Studies) பகவக்கீதை கற்கைள் (Certificate in Bhagavad Gita Studies), சமயக் கல்வி (Certificate in Religious Educare) போன்ற
அகவிழி ஓகஸ்ட் 2014 2

Page 35
சான்றிதழ் கற்கை நெறிகள் என்பன இடம்பெறுகின்றன.
கனடாவில் உள்ள கொங்கோர்டியா பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடம் இப் பல்கலைக்கழகம் கனடாவின் மொன்றியல் நகரத்தில் அமைந்துள்ளதாகும். 1989 ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. இந்து நாகரிகத் துறையில் இளமாணி, முதுகலை மாணி, கலாநிதிப் பட்டங்களை பெறும் வகையில் மாணவர்களுக்கு வாய்ப்பளித்து வருகின்றது. இங்கு சிறப்பு, பொது இளமாணிப் பட்டங்களும் வழங்கப்படுகின்றன. இந்து நாகரிகத்துக்குரிய கற்கைநெறிகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
பீடத்தின் இன்றைய தலைவராக Dr. T.S.Rukmani CS;shh;. Dr. Leslie Orr, Dr. Shaman Hatley, Dr.Markdes Jardins, Dr. Richard Foltz ஆகியோரினால் விரிவுரைகள் நடத்தப்படுகின்றன.
கொங்கோர்டியா பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீட பாடநெறிகள்
RELI340/2 AA: வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் (Vedas and Upanisads)
RELI 225/2 - A: இந்து சமயம் ஒர் அறிமுகம் (Introduction to Hinduism)
RELI341/4-A: இந்து சாதனம் : யாகத்தில் இருந்து யோகம் வரை (Hindu Sadhana: from Yajna to Yoga)
RELI384/4 - A: பெண்களும் இந்து மதமும் (Women and Religion: Hinduism)
RELI 342/2: மத்திய கால இந்து மதம்: பக்தியின் பொற்காலம் (Medieval Hinduism: the Golden Age of Bhakti)
RELI 346/4: நவீன கால இந்து மதம் : இராஜராம் மோகன்ராய் தொடக்கம் மகாத்மா காந்தி மற்றும் அதன் பிற்காலமும் (Modern Hinduism: from Rammohun Roy to
Mahatma Gandhi and Beyond)
RELI498ZI614I: தென்னாசியாவில் தாந்திரீகம் (Tantra in South Asia)
RELI352B/4: Topics in Diaspora Studies: Hindu Diaspora
RELI 379A/2: ,e;) kiwQhdk; (Topics in the Study of Mysticism: Hindu Mysticism)
RELI 398T/2: ஆறுவகைச் சமயச் சிந்தனைகள் (Special Topics in Religion: Six Schools of Hindu Though)
RELI351/2: From Satyagraha to Svadhyaya: Hinduismin Dialogue with the Modern World
இவ்வாறு பல கற்கை நெறிகள் மேற் கொள்ளப் படுகின்றன.
அகவிழி ஓகஸ்ட் 2014

முடிவுரை
"மேனாட்டுப் பல்கலைக்கழகங்களில் இந்து நாகரிகம்" எனும் தலைப்பிலான இவ்வாய்வானது இந்து நாகரிகம் பற்றி உலகளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்கள் கொண்டுள்ள விருத்திச் செயற்பாட்டினை மதிப்பிடுவதாக அமைகின்றது. அத்துடன் எதிர்காலத்தில் எமது நாட்டில், பல்கலைக்கழக மட்டத்தில் இன்றைய நவீன போக்குக்கு ஏற்ப இந்து நாகரிகத்தினை கட்டியெழுப்பும் செயற்பாட்டுக்கும் இது வித்திடும். அத்துடன் இந்து நாகரிகத்தில் சிறப்பு, பொது கற்கை நெறியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் மேற்படிப்பினை மேற் கொள்ளுவதற்குரிய தளத்தினை அடையாளங் கண்டு இந்த நாகரிகத்தின் சிறப்பம்சங்களை சமூக தளத்திற்கு கொண்டு செல்வதற்கும் வழி வகுக்கும் என்பதும் இதனால் உணரப்படுகின்றது.
Reference
01)
Chakrabarty, R., (2008). The Asiatic Society:1784-2008, An Overview in Time Past and Time Present: Two Hundred and Twenty-five Years of the Asiatic Society, Kolkata: The Asiatic Society, pp.2-24
02)
Laderman, Gary., (2003). Religion and American Cultures: An Encyclopedia of Traditions, Diversity, and Popular Expressions. Santa Barbara, Calif: ABC-CLIO.
03)
குகபாலன், கா., (2007), உலகில் இந்து மக்களின் பரம்பல், அகில இலங்கை இந்து மாமன்றம் பொன்விழா மலர் - 2007, பக்.685-690.
07)
04) |
திருமுருகன், ஆறு., (2003), மேலைத்தேய நாடுகளில் இந்து
சமயம், இரண்டாவது உலக இந்து மகாநாடு, பக்.459-467.
05) முருகவேள், ரா.ந., (1982) , இந்து சமயத்தின் உலகளாவிய
இனிய இயல்பு, அகில உலக இந்து மகாநாட்டு மலர். ப.179. 06) BANARAS HINDU UNIVERSITY (PDF) 2005-07-26. http://www.ias.
ac.in/currsci/sep102005/899.pdf. Retrieved 2007-04-19.
Gillian Evison., (Last updated: 15 March, 2009), History of the Indian Institute (PDF), http://web.archive.org/web/20061001190153/http://
www.headington.org.uk/oxon/broad/buildings/east/history_faculty/ 08)
Oxford Centre for Hindu Studies : Online Hindu Studies http://www. ochs.org.uk/ced/
Oxford Centre for Hindu Studies, http://www.ochs.org.uk/ 10)
Hindu University in US expands Vedic base, Rediff News. November 20, 2007. http://www.rediff.com/news/2007/nov/20ia.htm. Retrieved 11
January 2010.
11)
Prez of US vedic univvisits BHU". Times of India, 24 August 2009. http:// timesofindia.indiatimes.com/news/city/varanasi/Prez-of-US-vedic-univ
visits-BHU/articleshow/4928958. cms. Retrieved 11 January 2010. 12)
Hindu University of America, http://www.hua.edu/ Ramakrishna Centre of South Africa, http://www.ramakrishna-sa.org.
za/education_hindu_studies.php 14)
Chairs - Hindu Studies at Concordia University, http://hindustudies. concordia.ca/curriculum.html
09)

Page 36
மேலதிக மொழிகளைக் கற்பித்த
எலியட் எல். ஜீட் லிஹீவாடான் ஹேர்பேர்ட் ஜே. வோல்பேர்க்
அறிமுகம்
வழமையாகப் பயன்படுத்தப்படும் 'இரண்டாம் மொழிகள்' அல்லது 'அந்நிய மொழிகள் ' என்ற பதங்களைப் பயன் படுத்தாமல் இக்கைந்நூலின் பெயரிலுள்ள, 'மேலதிக மொழிகளைக் கற்பித்தல்' என்ற முதல் இரண்டு சொற்களையும் பல காரணங்களுக்காக நாம் தெரிவு செய்திருக்கின்றோம். உண்மையில், மாணாக் கர்கள் இரண்டாம் மொழியை அன்றி மூன்றாம் மொழியொன்றையோ நான்காம் மொழியொன்றையோ கற்பவர்களாக இருக்கக்கூடும். 'மேலதிக ' என்ற சொல், முதலாம் மொழியைத் தவிர, கற்கப்படும் ஏனைய மொழிகள் அத்தனைக்கும் பொருந்தும். மேலும், மேலதிக மொழியொன்று, அந்நிய மொழியாக இல்லாதிருக்கலாம். ஏனெனில், அம்மொழி, குறிப்பிட்ட நாட்டில், பல மக்கள், சாதாரணமாகப் பேசப்படும் ஒரு மொழியாக இருக்கக்கூடும். அத்துடன் 'அந்நிய ' என்ற வார்த்தை 'முன் பின் அறியாத', 'அயற்பண்புடைய' என்ற அர்த்தத்தையும், 'விருப்பத்திற்கு ஒவ்வாத' என்ற அர்த்தத்தையும், கூடக் கொண்டிருக்கலாம். இச்சொற்றொடர்கள் யாவும் விரும்பத்தகாத பொருள்படுவனவாகும். நாம் தெரிவு செய்துள்ள 'மேலதிக ' என்ற பதம், மேலதிக மொழிகள் தாழ்வானவையாக அல்லது உயர்வானவையாக இருக்க வேண்டியதில்லை என்ற நமது நம்பிக்கையையும் அம்மொழிகள் மாணாக்கரின் முதல் மொழிக்குப் பதிலீடாக அமைய வேண்டியதில்லை என்ற நமது நம்பிக்கையையும் வற்புறுத்துகின்றது.
உண்மையான தொடர்பாடலுக்காக, ஒரு மேலதிக மொழியைத் தெளிவாகவும் துல்லியமாகவும் பயனுறுதி வாய்ந்த வகையிலும் பயன்படுத்தலாம் என்பதை மாணாக்கர்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டும் என்பதே நமது கருத்தாகும். அவர்கள் மொழியை எழுதவும் கேட்கவும் வேண்டும்; பிறப்பிட மொழி (தாய்மொழி) பேசுவோரும் பிறப்பிட மொழியாக (தாய்மொழியாக) அன்றி அம்மொழியைப் பேசுவோரும் விளங்கிக் கொள்ளக்கூடிய விதத்தில் இவர்கள் மொழியைப் பேசவும் எழுதவும் வேண்டும். மேலும், கற்போர் இறுதியில், ஓர்
ஆசிரியரின் உதவியின்றி, மேலதிக மொழிகளைச்

தல்
சுயேச்சையாக எழுதக்கூடியவர்களாகவும் கிரகிக்கக்
கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்.
அத்தகைய 'தொடர்பாடல் சார்ந்த மொழி' யைக் கற்பித்தல் சம்பந்தமான பொதுவான சில மையத் தத்துவங்களை முன்வைப்பதன் மூலம் நாம் ஆரம்பித்து, அதைத் தொடர்ந்து, பிரத்தியேகமான கற்பித்தல் வகைகள் சம்பந்தப்பட்ட தத்துவங்களை முன்வைப்போம். ஒவ்வொன்றும் தொடர்பாக நாம் ஆராய்ச்சிகளைச் சுருக்கிக் கூறி, அதன் பின்னர் அவற்றிலிருந்து ஊற் றெடுக்கும் வகுப்பறை நடைமுறைகளைப் பற்றிக் கலந்துரையாடுவோம். நாம் முன்வைத்தவற்றை விரிவாக்க உதவும் விதந்துரைக்கப்பட்ட வாசிப்பு நூல்களின் பட்டியல், ஒவ்வொரு பிரிவின் இறுதியிலும் இடம் பெற்றுள்ளது. இந்நூல்கள், மேலதிகத் தத்துவங்களையும் ஆராய்ச்சி களையும் வகுப்பறைச் செயன் முறைகளையும் உள்ளடக்கியவையாக இருக்கும்.
01. விளங்கிக்கொள்ளக்கூடிய உள்ளீடு பற்பல அர்த்த பூர்வமான, விளங்கிக் கொள்ளக்கூடிய மொழிக்குக் கற்போரை உட்படுத்த வேண்டும்.
ஆராய்ச்சிகளின் பெறுபேறுகள்
கற்போரின் தற்போதைய அடைவு மட்டத்தைவிட ஓரளவு உயர்ந்த, அர்த்தபூர்வமான வாய் (பேச்சு) மொழியையும் எழுத்து மொழியையும், விளங்கிக் கொள்ளக்கூடிய நிலையை உள்ளீடு, இலக்கணத்தையும் சொல் வளத்தையும் பெறுவதற்கு வழிவகுக்கும். இவ்வாறு மேலதிக உள்ளீடுகளுக்கு உட்படுத்தப்படுதல், அந்த உள்ளீடுகளுக்கு வழிவகுக்கும். மொழிக்கு மேன்மேலும் உட்படுத்துதல் மட்டும் போதுமானதல்ல. விளங்கிக் கொள்ளக்கூடிய உள்ளீடு, நன்மை பயக்குவதாக இருக்க வேண்டுமேயானால், கற்போர் பிரதான இயல்பு களைக் கவனிக்க வேண்டும். இத்தகைய உள்ளீடு அவசியமென்றாலும், இடைத்தாக்கத்திற்கான வாய்ப்புக்கள் என்ற அடுத்த பகுதியில் ஆராயப்பட்டுள்ளவற்றை வைத்துப் பார்க்கும் போது, இத்தகைய உள்ளீடு போதாது.
அகவிழி ஓகஸ்ட் 2014 (8

Page 37
வகுப்பறையில் விளங்கிக்கொள்ளக்கூடிய உள்ளீடு என்ற கருத்திலிருந்து, வகுப்பறைக் கற்பித்தல் பற்றிய மூலோபாயங்கள் பலவும் உருவாகியுள்ளன:
மாணாக்கர்களின் நடப்பு மொழித் தேர்ச்சி மட்டங்களிலிருந்து சற்று உயர் மட்டத்தில் அமைந்த, விஷயங்களைக் கேட்கும் விதத்திலும், வாசிக்கும் விதத்திலும் ஆசிரியர்கள், மாணாக்கர்களைத்தூண்டி, அவற்றிற்குட்படுத்த வேண்டும்.
விஷயங்களை வெறுமனே ஒப்பிக்காமல் , மாணாக்கர்கள் விஷயத்தை விளங்கிக் கொள்ள வேண்டுமென்று மாணாக்கர்களிடம் கூறவேண்டும்.
மைய இலக்கணத்திலும் சொல் வளத்திலும் மாணாக்கர்களின் கவனத்தை ஆசிரியர்கள் ஈர்க்க வேண்டும்.
குறிப்பிட்ட விஷயம் பற்றிய தமது முன் அறிவையும் தரப்பட்டுள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளன, தாம் ஏற்கனவே அறிந்து வைத்துள்ள ஏனைய சொற்களையும் எண்ணக் கருக்களையும் அடிப்படையாக வைத்துக் கொண்டு, தரப்பட்ட பகுதியின் அர்த்தத்தை ஊகிக்க வேண்டுமென்று மாணாக்கர்களைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.
விளங்கிக்கொள்ளக்கூடிய விஷயங்கள் இருக்கும் மூலாதாரங்களுக்குள் மாணாக்கர்களை உட்படுத்தும் விதத்தில், வகுப்பறையினுள்ளும் வகுப்பறைக்கு வெளியிலும் காணக் கூடிய நிலைமைகளை உருவாக்குவதற்கு ஆசிரியர்கள் முயல வேண்டும்.
02. மொழி வாய்ப்புக்கள்
தமது சக வகுப்பு மாணாக்கர்களுடன் இயற்கையானதும் ஆக்கபூர்வமானதுமான மொழியை மாணாக்கர்கள் பயன்படுத்துவதற்கு வகுப்பறைச் செயற்பாடுகள் வழிவகுக்க வேண்டும்.
ஆராய்ச்சிகளின் பெறுபேறுகள்
ஒருவருடன் ஒருவர், மொழியைப் பேசிப் பயிற்சி செய்வதற்கு, கற்போருக்கு வாய்ப்புக்கள் இருக்க வேண்டியது அவசியம். கற்போர், உரையாடல்கள் பற்றிக் கவனமாகவும் ஈடுபாடுடையவர்களாகவும் இருக்க வேண்டிய அவசியம் உள்ளதால், உரையாடல்கள் முக்கியம். உரையாடுவதன் மூலம் குறிப்பிட்ட ஒரு நிலமையில் பயன்படுத்த வேண்டிய வார்த்தைகளையும் அந்நிலமைக்கேற்ற இலக்கணத்தையும் பயன்படுத்தும் பயிற்சியை மாணாக்கர்கள் பெறலாம். இதன் மூலம், உரையாடலை விளங்கிக்கொள்ளக் கூடியதாக்குவதற்கு,
அவர்கள் தமது சொந்த பங்களிப்பைச் செய்யலாம்.
8 அகவிழி ஓகஸ்ட் 2014

இத்தகைய கற்றலுக்கான மிகச் சிறந்த உரையாடல்கள், யதார்த்தமான தகவல் பரிமாற்றத்தையும் கருத்துப் பரிமாற்றத்தையும் உணர்வுப் பரிமாற்றத்தையும் பங்கு பற்றுநர்களுக்கிடையில் ஏற்படுத்தும். இத்தகைய செயற் பாடுகளில் ஈடுபடுவதன் மூலம், தாம் கூறுவதை மற்றவர்கள் விளங்கிக் கொள்ளும் படி செய்ய முயல்வதற்குக் கற்போருக்குச் சந்தர்ப்பங்கள் ஏற்படும். தாம் உரையாடலில் வெற்றி பெற்றார்களா என்றும் வித்தியாசமானமொழிப் பிரயோகம் எங்கே அவசியம் என்றும் அறிந்துகொள்வதற்கு மாணாக்கர்கள் உடனடியான பின்னூட்டலைப் பெறுவார்கள். இப்படியான பரிமாற்றங்களில் கற்போர் ஈடுபடும் போது, விளங்கிக் கொள்ளக்கூடிய மேலதிக உள்ளீட்டைக் கற்போர் பெறுவார்கள். மொழியைக் கிரகித்துக்கொள்வதற்கு இது மேலும் உதவியாக அமையும்.
வகுப்பறையில் இவ்வாராய்ச்சிகளின் பெறுபேறு களிலிருந்து, வகுப்பறைக் கற்பித்தல் மூலோபாயங்கள் பலவும் உருவாகியுள்ளன.
யதார்த்தமான மொழி நிலைமைகளில், இயல்பான மொழியாக அமையும் உதாரணங்களை மாணாக்கர்கள் உபயோகிக்கக்கூடிய செயற்பாடுகளைப் பயன்படுத்துவதன் மூலம், வகுப்பறையில் அர்த்தபூர்வமான இடைத் தாக்கத்திற்கான வாய்ப்புக்களை உருவாக்கும் பொருட்டு, ஆசிரியர்கள், ஒரே கோலத்தில் அமைந்தனவற்றைத் தொடர்ந்த பயிற்சி மூலம் மனதில் படிய வைத்தல் போன்ற எளிமையான மொழிப் பயிற்சிக்கப்பாற் செல்ல வேண்டும்.
கட்டுப்படுத்தும் சக்தியாக இருப்பதை விட, அவ்வப்போது உதவி செய்யும் ஓர் அவதானிப்பாளராக ஆசிரியர் பணி புரிந்து, ஜோடியாக இணைந்து அல்லது சிறு குழுக்களாக இணைந்து வேலை செய்யும்படி மாணாக்கர்களை ஊக்குவிக்கவேண்டும்.
பிரச்சினைகளை மாணாக்கர்கள் தீர்த்து வைக்க வேண்டிய விதத்தில் அமைந்த செயற்பாடுகளை ஆசிரியர்கள் வழங்க வேண்டும்; ஒவ்வொரு தரப்பினரும் மற்றவர்களிடம் இல்லாத தகவல்களையும் மாணாக்கர் களுக்கு அறைகூவலாக அமையக் கூடிய தகவல்களையும்
வழங்க வேண்டும்.
சாத்தியப்படும்போது, பணிகள், மாணாக்கர்களின் தேவைகளுடனும் ஆர்வங்களுடனும் தொடர்புபட்டவையாக இருத்தல் வேண்டும், அத்தகைய பணிகளே அவர்களுக்குத் தூண்டுதலாக அமையும்.
இச்செயற்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது, பொதுவாக, தலையிடுவதை ஆசிரியர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், அவர்கள் செயற் பாட்டைப் பூர்த்தி செய்த பின்னர் பின்னூட்டலை வழங்க வேண்டும்.
தொடரும்.....

Page 38
ஆவர்த்தன அட்டவணை வரலாறு
12
DES SUBSTANCES SIMPLES: TA R I & A v D E S St B S TAN C E S SIM pr F8
VIN TULLUNIY CLASSEMENT NATUREL DES CORPS $H
ஈழ நிர 9Fy++ +1க $thttpt BKALAASWF 1616W MA tucorinக
*" 4t, test ez சட்சை0 3++ஒலச்: dt 83தி4 th R
»t * ஓங்கார்ரக்ரி சேச்
புங்க;
tல்ல சி+ fe | ஈகா | உ rat 8வே +
1294
டியதாகயா -1- பேயாக, "பு:4 மகா சாதம்
கத்
Noms nouveaux. Noms anciens correspondans. LAimitrei111..., I.urniere.
Chaleur.
Principe de la chaleur. Calorique:...ம்.... Fluide ignd. -- 3ances fcree- !
Feu. pls டியம் 4ppar- 1
(Matiere du feu &de la chalkar, tienrent cuts |
Air, déphlogistique, trois régués &
Air empirtal. ச'an peut reger.
Air vitail. der Comine les i
(Haie de l'air vial,' 4 atineas , விரு 60,
(Gaz phlogiltigué: Azote,..,.,
>{lisfete.
(Ba{e de la fmafete.. Hydrogenc. .டி ...
fGaz inflammable.
Base du gaz inflamnaable: Soufre....
|Soufre: {Photophore......
|Photphere: Substances fine Pes non mult
Charbon puis ஒtes t.rioubtitIRadical mariatique+ |Incounu: அதும் acidiable+;, Ihadical fiaorique.. |Inconnai ,
(Radical boracique. Incontini,
22 " 19 ; ([Antimoines, * * *
|Aprinpine: | Argent..
|Argent 5 Allenic,,,,,
| Attenic. Bitiாநth. tபம்
Bitinuth, 2 = 1cobolt, ;
Cobolt, தச பகுதி 2 பழX Cuivre..
Fain; த ஆ ஆ ) இ " Subana im- Fer, .....
Fer. pks métaliigues Manganese. .
Manganese, oxidables & adi
ables.
Mercure.
vi. |Mercure. தர மஆதி 3 Malybdene:
Molybdène. INickel.
INickel,
Or, Plzine..:.
|Platines. Plomb,,
Plomb. Tungiene....,
|Tungstède, Inc., +:11:14
IZin. (Chaux,,
Terre calcale, chaux: Magnetie) , , ,
Magnefile, bafe du (el d'Epion, Subiancer m- Bar te.
Barore, terre pefante. ples falifiables. Alumine:
|Argile, terre de l'aluா, bate tu.ச.
le 1 alue; ... Terrekliceம், terre vitritable,
Cuivre } ப / அம்
----- 4", "பர் +2 படி.
'49*த்***
, 4:AFாபி ? பு- Hy, சுக-ம் 4 *
எ, *
15 டிப.4ாக்க" * பிசாசு,"* என 4hy"k: ' , 61: "41 -4
1 ஓக..." " f=" |
தா.. rக்கா., - **/
ff4ல் பா.
நவீன ஆவர்த்தன அட்டவணையும், அதன் உரு வாக்கத்திற்கு வழிகாட்டியாக இருந்த ஆவணங்களினதும் தொகுப்பு (கடிகாரச் சுழற்சியில் மேல் இடதுபக்கம் தொடங்கி, கீழ் இடது பக்கம் முடிகின்றபடி) - இலாவோசியரின் 'எளிய பதார்த்தங்களுக்கான அட்டவணை' அலெக்சாண்டர் எமிலின் Vis Tellurique என்றழைக்கப்பட்டும் முறையில் அமைந்த 'ஆவர்த்தன அட்டவணை' மென் டெலேயேவினது ஆவர்த்தன அட்டவணையின் கையெழுத்துப் பிரதி a நவீன ஆவர்த்தன அட்டவணை ஜான் டால்ட்டனின் அணு நிறையையும், குறியீடுகளையும் கொண்ட பட்டியல்.
ஆவர்த்தன அல்லது மூலக அட்டவணை வரலாறு இரசாயனப் பண்புகளைப் புரிந்துகொள்ளவதில் ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலகட்டத்தில் ஏற்பட்ட வளர்ச்சியைப் காட்டுகின்றது. இந்த வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வாக 1869 ல் திமீத்ரி மென்டெலெயேவ்

பு IPLES OU RADICAUX tf அல்வாழws |
... வெ.... .4;த
டிடி. , பசு. டிமாதபல்.
ஜ aேnங்க்ழ+ை பிடிஈ சி பி ஃபக்கம்
* * * 'g 5 * 6 *
ரிக்ட்
A # (ist
# //
1. :)
டர் .
|-ம் கடிக்கின்னர்.
9.4 டிமம்) #4 14)
கடி :
படி: 7.!
படிடி டே
ம» 'எடிசன் ச.க)க)'
-LTT*
-- -|t 'ஈ -: கடாசர்ரி
அம்.
செயர் 14:19:14 P*: +91-74491"41 + சி'!
கம், காது
trயாயக்க,
--டி -சபு
%.... !'...,,, '...4.. !'டி.- +.
அவர்களின் மூலக அட்டவணை வெளியீடு அமைந்தது.' மென்டெலெயேவுக்கு முன்னரே அந்துவான் இலவாசியே போன்ற சில இரசாயனவியலாளர்கள் இதன் வளர்ச்சிக்கு வித்திட்டாலும் உருசிய இரசாயனவியலாளரான திமீத்ரி மென்டெலெயேவுக்கே மூலக அட்டவணை உருவாக்கி யதற்கான சிறப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மூலகங்களின் பண்புகளை வெவ்வேறு தொகுதிகளாக இலகுவில் அறிந்துகொள்ள அட்டவணைப்படுத்தல் தேவையாகின்றது. இது மூலக வரிசை அட்டவணை அல்லது ஆவர்த்தன அட்டவணை எனப்படுகின்றது. தொடக்கத்தில் மூலகங்கள் அவற்றின் அணு நிறையின் (தொடர்பணுத்திணிவு) அடிப்படையில் வகைப்படுத்தப் பட்டன. பெரும்பான்மையான இரசாயனவியலாளர்கள் 8 மூலகங்களை வகைப்படுத்தி அவற்றின் பண்புகளை ஆய்ந்தனர்.
கவிழி ஓகஸ்ட் 2014 (5

Page 39
F. M * * *
பதிழைக்ர்
e- G..
8: 9
ம்ம்்்் ் ் 6
் ் ் ் ல்ஸ் ல்லன் ம ம க க
ஃஃஃ வடிமாணங்களிலா. ஒo 888
பாரி:
0+ 9. |
ஈரான்ச்ாச்சாரம்
8 :3 08
-alஅபே சுகம்
al- கட
பiFlaliாசlR
li> IEI சl 8
Tallalil ன
பசும்கயறியாபாரி
ரோகி*
ITHIIIF
18ப்படிப்புகள்
'வ து, பன்' தா ன வா ய பன்
பழங்காலத்தில் மூலகங்கள் மக்கள், பழங்காலத்தில், இயற்கையில் உள்ள இயல்பு வடிவத்தில் காணப்படுகின்ற தங்கம், வெள்ளி, செப்புபோன்ற மூலகங்களைத் தெரிந்து கொண்டிருந்தனர். எளிய உபகரணங்களைப் பயன்படுத்தி இவற்றை அகழ்ந்தெடுக்க
முடிந்தது.'
அறிவொளிக் காலம்
ஜேர்மானிய நாட்டைச் சேர்ந்த என்னிக் பிராண்ட் (Hennig Brand) எனும் இரசவாதி 1669ம் ஆண்டளவில் பொசுபரசைக் கண்டுபிடித்தார், இதுவே புதியதொரு மூலகத்தை மனிதன் அறிந்ததற்கான முதற்பதிவாக உள்ளது. ஏனைய இரசவாதிகள் போன்று, மதிப்புக் குறைந்த உலோகங்களைத் தங்கமாக மாற்றும், இறவாத் தன்மையைக் கொடுக்கும், இளமையாக உருமாற்றும் தத்துவஞானியின் கல் (Philosopherls stone) அல்லது இரசவாதக்கல் என்று அழைக்கப்படும் பதார்த்தம் ஒன்றைத் தேடி இவரும் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். இத்தகைய ஆய்வில் சிறுநீரைப் பயன்படுத்தி இருந்தார். சிறுநீரை பல படிமுறைகளுக்குட்படுத்தி வடித்த போது இறுதியில் வெண்மையான பிரகாசிக்கும் பதார்த்தம் ஒன்றைப் பெற்றார், இதற்கு பொசுபரசு எனப் பெயரிட்டார்.'
S) அகவிழி ஓகஸ்ட் 2014
1789-ஆம் ஆண்டில் இரசாயனவியல் மூலகங்கள் பற்றிய ஒரு பாடநூலை இலாவோசியர் வெளியிட்டார். இதுவே முதலாவது புதிய காலத்து இரசாயனவியற் பாடநூ லாகக் கருதப்படுகின்றது. தற்கால இரசாயனவியலுக்கு அடிப்படையாக விளங்கும் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் அந்தப் பாட நூலில் ஆதாரங்களுடன் விளக்கினார். மூலகங்கள் என்று தான் கருதிய பொருட்களின் பட்டியலையும் அந்தப் பாட நூலில்

The Periodic Table of the Elements
"மாங்காண்ைைாறகக ைகையினால பானவர்க
மிர்கா லுது.. -
: IIIHT.
சாகாபயா
E-ma E FEE RE)
பு4hritiiWWWTIMINITATICTAr/En/
இணைத்திருந்தார். ஒருசில தவறுகள் நீங்கலாக இலவாசியே கண்டு சொன்ன பெரும் பாலான வேதிப்பொருட்கள் இன்றைய தற்கால இரசாயனவியலின் பொருட்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. இவர் மூலகங்களை உலோகங்கள், அல்லுலோகங்கள் என்று மட்டுமே வகைப்படுத்தி இருந்தார்.
Antoine Laurent de Lavoisier
டோபரின்னரின் மும்மைகள்
1828- இல் இத்தாலிய இரசாயனவியலாளர் ஜொகான் வோல்வ்காங்க் டோபரின்னர் என்பவர் இயல்பொப்பின் அடிப்படையில் மூலகங்களை மூன்று தொகுதிகளாக

Page 40
வகைப்படுத்தினார். இத்தொகுதிகள் மூலக மும்மைகள் (மூலக மும்மை) எனப்படும். இவ்விதிப்படி மூன்று மூலகங்கள் அவற்றின் அணுநிறையின் ஏறுவரிசையில் வரிசைப்படுத்தப்படுகின்றன. நடுவில் உள்ள மூலகத்தின் அணு நிறையானது மற்ற இரண்டு மூலகங்களின் அணுநிறைகளின் இயற்கணித சராசரியாக இருக்கும்.
உதாரணமாக,
குளோரின், புரோமின், அயோடின் ஆகியவை ஒரு மும்மைத் தொகுதியாக உள்ளது. லிதியம், சோடியம், பொட்டாசியம் வேறொரு மும்மையாக உள்ளது.
மூலகங்கள்
அணுநிறை குளோரின் (CI)
35.5 புரோமின் (Br)
80 அயோடின் (1)
127 (35.5+ 127) / 2 = 81.5 மூலகங்கள்
அணுநிறை இலிதியம் (Li) சோடியம் (Na)
23 பொட்டாசியம் (K) 39
(7 + 39) / 2 = 23
மூலக வகைப்படுத்தல் அலெக்சாண்டர் எமில்
1862 - ஆம் ஆண்டளவில் அலெக்சாண்டர் எமில் (AlexandreEmile Bguyer de Chancourtois) எனும் பிரான்சிய புவியியலாளர் மூலகங்கள் ஓர் ஒழுங்கான இடைவெளியில் அமைந் திருப்பதை அவதானித்தார். இதன்படி ஆரம்ப ஆவர்த்தன அட்டவணை ஒன்றை உருவாக்கினார். இரசாயனவியற் கலைச்சொற்கள் பயன்படுத்தப்படாமையினாலும் விளக்கப் படமின்மையாலும் இது பிரபல்யமடையவில்லை.
ஜோன் நியுலாண்ட்ஸ்
|H|I|Be|Bc Nolf Na|Mg Asi psci
J. A. R. Newlands| law of octaves
ஜோன் நியுலாண்ட்ஸ் (John Newlands) எனும் ஆங்கில இரசாயனவியல் அறிஞர் 1865 - இல்45 56 மூலகங்களை வகைப்படுத்தினார். ஒத்த பண்புள்ள மூலகங்களின் அணுநிறை எட்டால் அதிகரித்துக்கொண்டு செல்வதை அவதானித்து எண்ம விதியை (அட்டமசுர விதி - law of

Octaves) முன்மொழிந்தார். சங்கீதத்தில் ச, ரி, க, ம, ப, த, நி, ச எனும் சுரங்களில் ச எட்டாவதாகத் திரும்ப அமைவதுபோல அணுநிறை ஏறுவரிசையில் மூலகங்களை ஒழுங்குபடுத்தும்போது இயல்பொத்தவை எட்டாம் இடத்தில் திரும்ப அமையும் என்று விளக்கினார். ஆனால் அவர் காலத்து அறிவியலாளர்களால் இது நிராகரிக்கப்பட்டது.
இவ்விதியானது குறைந்த அணுநிறை கொண்ட மூலகங்களுக்குப் பொருந்தக் கூடியது. ஆனால் அதிக அணுநிறை கொண்ட மூலகங்களுக்குப் பொருந்தாது.
லொதர் மேயர்
ஜூலியஸ் லொதர் வொன் மேயர் எனும் ஜேர்மானிய இரசாயனவியல் நிபுணர் 28 மூலகங்களைக் கொண்ட ஆவர்த்தன அட்டவணையை 1864-இல் உருவாக்கினார். இவரது அட்டவணை மூலகத் தின் வலுவளவை மையமாக வைத்து ஆறு மூலகக் குடும்பங்களாக உருவாக்கப்பட்டிருந்தது.
திமீத்ரி மென்டெலேயேவ் திமீத்ரி இவானவிச் மென் டெலேயேவ் (டிமித்ரி மென்டெலீவ்) எனும் ருசிய நாட்டு இரசாயனவியல் வல்லுனர் தற் காலத்துப் பயன்பாட்டில் உள்ளதை ஒத்த ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கியவர் ஆவார். 1869-இல் அப்போது கண்டறியப்பட்ட 63 மூலகங்களை அவற்றின் அணுநிறையின் ஏறுவரிசையில் அட்டவணைப்படுத்தினார். இக்காலத்தில் இலத்திரன்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஓர் ருசிய சஞ்சிகையில் 1869-இல் வெளியான மென் டெலேயேவின் அட்டவணை பற்றிய தகவல்களில் இவ்வாறு குறிப்பிடப்பட்டு இருந்தது:
மூலகங்களை அவற்றின் அணுநிறைக்கேற்ப ஏறு வரிசையில் அமைக்கும் போது அவற்றின் பண்புகள் சீரான இடைவெளிகளில் ஒரே மாதிரியாக இருக்கும்.
1.
இரசாயனவியற் பண்புகள் ஒத்த மூலகங்களின் அணு நிறை கிட்டத்தட்ட ஒரே பெறுமானமாக இருக்கும் (எ.கா: Pt, Ir, Os) அல்லது ஒழுங்கான ஏறுவரிசையில் அமையும் (எ.கா: K, Rb, CS).
3.
அணுநிறைக்கேற்ப மூலகங்களை அல்லது மூலகக் குழுமங்களை ஒழுங்கமைப்பது அவற்றின் வலு வளவுடனும் (இணைதிறன்), அதேநேரத்தில் சிறிதளவு அவற்றின் சிறப்பு இரசாயனவியல் இயல்புடனும் தொடர்புடையதாக இருக்கின்றது.
அகவிழி ஓகஸ்ட் 2014 8

Page 41
4.
எதிர்காலத்தில் அலுமினியம் அல்லது சிலிக்கனை ஒத்த வேறு மூலகங்கள் கண்டறியப்படும், இவற்றின் அணுநிறை 65க்கும் 75க்கும் இடையில் இருக்கும்.
அவர் அறிமுகப்படுத்திய மூலகங்களை வகைப்படுத்தும் முறையானது ஆவர்த்தன விதி எனப்படும். இவ்விதிப்படி, மூலகங்களை அவற்றின் அணுநிறைகளின் ஏறுவரிசையில் அமைக்கும் போது அவற்றின் பண்புகள் சீரான இடைவெளிகளில் ஒரே மாதிரியாக இருக்கும். ஆவர்த்தன விதியின் அடிப்படையில் மென்டெலேயேவ் மூலகங்களை அவற்றின் அணுநிறைகளின் ஏறுவரிசையில் கிடைமட்டமாக வரிசைப்படுத்தினார்.
இதன்படி அணுநிறை குறைந்த மூலகம் இடது பக்கத்திலும், அதைவிட அணுநிறை கூடியது வலது பக்கத்திலும் கிடையாக ஒழுங்குபடுத்தப்பட்டது. இவை ஆவர்த்தனங்கள் என அழைக்கப்பட்டன. பண்பொத்த மூலகங்கள் நிலை வரிசையில் அமைக்கப்பட்டன. இவை கூட்டங்கள் என்று அழைக்கப்பட்டது. இவற்றின் இரசாயனவியல் வினைகள் ஒரேமாதிரியாக இருந்தன.
மென்டெலேயேவ் மூலக வரிசை அட்டவணையை ஆராயும்போது நிலையாக அமைந்துள்ள அடுத்தடுத்த இரண்டு மூலகங்களுக்கிடையே ஒத்துப் போகும் தன்மை இல்லாததை கண்டறிந்தார். எனவே, இக்குறையைப் போக்குவதற்கு அந்த இடங்கள் வெற்றிடமாக்கப்பட்டு இருந்தது. எதிர்காலத்தில் வேறு மூலகங்கள் கண்டறியப்பட்ட போது அந்த இடங்கள் பொருத்தமாக இருந்தது. உதார ணமாக, காலியம் மற்றும் ஜெர்மானியம் ஆகியவை மென் டெலேயேவ் மூலக வரிசை அட்டவணையை உருவாக்கியபோது கண்டுபிடிக்கப் படவில்லை. மென் டெலேயேவ் அவற்றை முறையே எகா - அலுமினியம் மற்றும் எகா - சிலிக்கான் என்றும் பெயரிட்டார். ஏனெனில், அவை முறையே அலுமினியம் மற்றும் சிலிக்கான் ஆகியவற்றின் பண்புகளை ஒத்து இருக்கும் என்று நம்பிக்கையிலிருந்தார். பின்னர் இம்மூலகங்கள் கண்டு பிடிக்கப்பட்டபோது இவற்றின் பண்புகள் மென் டெலேயேவ்
கூறியவாறு அமைந்திருந்தன.
மென் டெலேயேவ் ஆவர்த்தன அட்டவணையின் குறைகள்:
1.
மூலகங்களின் பண்புகள் அணுநிறையில் தங்கியுள்ளது எனும் தவறான கோட்பாடு.
v 2.
5) அகவிழி ஓகஸ்ட் 2014
ஐதரசனுக்குரிய சரியான இடம் தரப்படாமை. உறழ் வளிமங்களுக்குரிய (மந்த வளிமங்கள் அல்லது சடத்துவ வாயுக்கள்) இடம் ஒதுக்கப்பட்ட தெனினும் அவை கொடுக்கப்படவில்லை. உறழ் வளிமங்கள் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு சேர்க்கப்பட்டது.

புதிய மூலகங்கள் கண்டுபிடித்தலும், தொகுத்தலும் இன்றும் தொடர்வதால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மூலகங்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.
ள்ள மூலகங்கள் இயற்கையில் கிடைப்பவையாக உள்ளன. எஞ்சியவை ஆய்வகங்களில் தொகுக்கப்பட்டு கண்டறியப்பட்டுள்ள மற்ற மூலகங்கள் யுரேனியம் கடந்த மூலகங்கள் எனப்படுகின்றன. இவை அதிக நிலைத் தன்மையற்றதாகவும், கதிரியக்கத்தால் சிதைவடைவனவாகவும் உள்ளன.
பெ
ஆவர்த்தன அட்டவணையின் புதிதாக்கம்
1913-14 களில் என்ரி மொசெலே (Henry Moseley) என்பவர் தனது பரிசோதனையில் இருந்து ஒரு மூலகத்தின்எக்ஸ்கதிர் அலை நீளத்துக்கும் அணு எண்ணுக்கும் இடையே உள்ள தொடர்பைக் கண்டுபிடித்தார். ஒரு மூலகம் இன்னொரு மூலகத்துடன் வேறுபட்டுக் காணப்படுவதற்கு அவற்றில் காணப்படும் நேர்மின்னிகளே (புரோத்தன்கள்) காரணம் என்று கண்டுகொண்டார். எனவே மூலகங்களை வரிசைப்படுத்த அவற்றின் அணுநிறையைவிட அணு எண் மிகப்பொருத்தமானது என்று தீர்மானித்தார். இதன்படி ஆவர்த்தன அட்டவணை மீள ஒழுங்கமைக்கப்பட்டது.
இதனால் ஆர்கன் - பொட்டாசியம் ஒழுங்கமைப்புச் சிக்கலுக்குத் தீர்வு கிடைத்தது. முன்னர் இருந்த ஆவர்த்தன அட்டவணையின்படி இவற்றை ஒரே பண்புள்ள குழுமத்தில் சேர்த்தல் சிக்கலாக இருந்தது. ஏனெனில், ஆர்கனின் (Ar) அணுநிறை (39.9) பொட்டாசியத்தின் (K) அணு நிறையைவிடக் (39.1) கூடுதலாக இருந்தது. ஆர்கன் ஒரு உறழ் வளிமம், ஆனால் பொட்டாசியம் ஒரு கார உலோகம். அணு எண்ணின்படி இவை தத்தமது பண்புடைய குழுமத்தில் சேர்க்கப்பட்டன. இதே போலக் கோபால்ட் - நிக்கல் சிக்கலும் தீர்ந்தது.
மொசெலே மென் டெலேயேவ்வின் கோட்பாடு போன்று அணு எண்கள் 43, 61, 72, 75 உடைய புதிய மூலகங்களுக்கு இடம் ஒதுக்கினார், அதன்படி பின்னர் டெக்னீசியம், புரோமித்தியம், ஆப்வினியம், ரேனியம் முதலியவை கண்டுபிடிக்கப்பட்டன.
1943-இல் கிளென் சீபோர்க் என்பவர் அமெரிக்கம் (95) மற்றும் கியுரியம் (96) ஆகிய மூலகங்களைப் பாகுபடுத்துவதில் சிரமத்தை எதிர்கொண்டார். இவை வேறொரு குழுமத்தைச் சேர்ந்தவை என்று அறிந்து கொண்டதன் பிரகாரம் ஆவர்த்தன அட்டவணையில் மேலும் திருத்தம் கொண்டுவரப்பட்டது அக்டினைட் வரிசைகள் உருவாக்கப்பட்டன

Page 42
கல்வியின் மாறுபாடுகள் அனைத்துலக மனிதனை நோக்கி
ரவீந்திரநாத் தாகூர்
வாழ்க்கைக்கு, வேண்டிய இன்றியமையாத தேவைகளுடன் மட்டும் மனிதர்கள் அமைதியடைந்துவிட முடியாது. ஓரளவு தத்தம் தேவைகளால் பிணைக்கப்பட்டும், ஓரளவு சுதந்திரமாகவும் அவர்கள் வாழ்கின்றனர். சாதாரண சராசரி மனிதன் மூன்றரை முழம் உயரம் இருப்பினும் அதைவிட மிக அதிகமான உயரமுள்ள வீட்டில் குடி இருக்கிறான். அவனுடைய சுகாதாரத்துக்கும், வசதிக்கும், புழக்கத்துக்கும் ஏற்றவகையில் பெரிய வீட்டில் வாழ்கிறான். கல்விக்கும் கூட இது முற்றிலும் பொருந்தும். பள்ளிக் கூடத்திற்குப் படிக்கவேண்டிய பாடப் புத்தகங்களுடன், மாணவன் தானே விரும்பிப் படிக்கும் நூல்களையும் படிக்குமாறு உரிமை வழங்க வேண்டும். இவ்வாறு செய்யாவிட்டால் அவனுடைய மனவளர்ச்சி தடைப்பட்டு, உடலளவில் பெரிய மனிதனாக வளர்ந்தும் மன வளர்ச்சியில் ஒரு பையனைப் போலவே இருக்க நேரிடும்.
இந்த நாட்டில், ஒரு பையனுக்கு, அவன் விருப்பம் போல் செலவழிப்பதற்கு மிகக் குறைந்த நேரமே ஒதுக்கி இப்பது துரதிஷ்டந்தான். மிகச் சுருங்கிய காலத்தில், பிறநாட்டு மொழி ஒன்றைக் கற்று, பல தேர்வுகளில் வெற்றி பெற்று, ஒரு வேலைக்கும் தகுதியுள்ளவனாக

அவன் ஆகவேண்டும். எனவே, எல்லை மீறிய வேகத்தில் சில பாடப் புத்தகங்களை உருப் போடுவது தவிர அவன் வேறு என்ன செய்யமுயும்? பொழுது போக்குக்காக ஒரு நூலைப் படித்து அவனுடைய பொன்போன்ற காலத்தை வீணடிப்பதை அவன் பெற்றோர்களும், ஆசிரியர்களும் அனுமதிப்பதில்லை, அவனிடத்தில் அத்தகைய புத்தகம் எதையாவது கண்டால் உடனே அதனைப் பறித்து விடுகின்றனர்.
வங்காளிப் பையன் பத்திய உணவாகிய இலக்கணம், அகராதி, பூகோளம் என்பவற்றுடன் மட்டும் வாழ வேண்டும் என்று கொடிய விதி வகுத்திருக்கிறது. சூம்பி மெலிந்த கால்களைத் தொங்கவிட்டு ஆட்டிக்கொண்டு வகுப்பறையில் அவன் அமர்ந்திருப்பதைப் பார்க்கும்பொழுது, உலகத் திலேயே மிகுந்த துரதிஷ்டம் பிடித்த பையனைப் பார்க்கின்றோம். பிறநாடுகளில் அவனை ஒத்த குழந்தைகள் பலவிதமான கேளிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் பொழுது, இவன் ஆசிரியருடைய பிரம்படியை உண்ணவேண்டி இருக்கிறது. இந்தப் பிரம்படி உணவிற்கு ஊறுகாயாக ஆசிரியரின் ஏச்சும் பேச்சும் உதவுகின்றன.
இத்தகைய உணவு முறை நிச்சயமாக யாருடைய சீரணத்தையும் ஒழித்துவிடும். சத்தும், பொழுதுபோக்கும் இன்மையால் வங்காளிப் பையன் அவனுடைய உடம்பும் மனமும் நன்கு ஊட்டம் பெறாமலே வளர்கிறான். மிக உயர்ந்த பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெற்று, பல நூல்களை எழுதினாற்கூட, ஓர் இனத்தார் என்ற முறையில் நம்முடைய மனம் நல்ல வளர்ச்சியுடனோ, சுறு சுறுப்புடனோ காணப் படுவதில்லை. எந்த ஒன்றையும் நன் கு பற்றிக்கொள்ளவோ, வலிமையுடன் நிற்கச் செய்யவோ, தொடக்கத்திலிருந்து முடிவுவரை ஒன்றைச் செய்து முடிக்கவோ நம்மால் ஆகாது. நல்ல வயது வந்த இளைஞர்களைப்போலப் பேசவோ நினைக்கவோ, செயற்படவோ நம்மால் முடிவதில்லை. எனவே நம்முடைய மன வறுமையை ஈடுசெய்யும் முறையில் மிகுத்துக்கூறல், வீம்பு பேசுதல், ஆடம்பரஞ் செய்தல் ஆகியவற்றை மேற் கொள்ளுகிறோம்.
அகவிழி |ஓகஸ்ட் 2014 (ச

Page 43
ை
குழந்தைப் பருவத்திலிருந்தே நம் குழந்தைகள் பெறும் மகிழ்ச்சியற்ற கல்வியின் முக்கிய பயனாகும் இது. இக் கல்வியின்படி சில பாடப்புத்தகங்களை மனப்பாடஞ் செய்து, சில விஷயங்களைக்கூட முழுவதுங் கற்காமல், அவற்றில் ஓரளவு அறிவுமட்டுமே பெறுகிறார்கள். மனிதர்கள் பசியைத் தணிக்க உணவுதான் தேவையே தவிரக் காற்றன்று ஆனால், அந்த உணவை நன்கு சீரணிக்கக் காற்றும் தேவைப்படுகிறது. ஒரு பாடப் புத்தகத்தை சீரணிக்கப் பொழுதுபோக்குப் புத்தகங்கள் பல தேவைப்படுகின்றன. இன்பத்தின் பொருட்டாக ஒரு பையன் ஒரு நூலைப் படிக்கும் பொழுது அவனையும் அறியாமல் படிக்கும் பழக்கம் அதிகமாகிறது. பலவற்றைக் கற்று, மனத்தில் நிறுத்திக் கொள்ளும் சக்தியும் இயல்பான எளிய முறையில் வந்துவிடுகிறது.
மொழிதான் நம்முடைய முதல் தொல்லை. இலக்கணத்தாலும் சொல்லாக்கத்தாலும் நம்முடைய தாய்மொழிக்கும் ஆங்கிலத்திற்கும் உள்ள மிகப் பெரிய வேறுபாடு காரணமாக, ஆங்கிலம் நம்மை பொறுத்தவரை பிறநாட்டு மொழியாகவே உள்ளது. இதையடுத்து நூலில் சொல்லப்பட்ட பொருளைப் புரிந்து கொள்ளும் தொல்லை எனவே, ஒரு ஆங்கில நூல் நமக்கு இரண்டு வகையிலும் வெளிநாட்டுப் பொருளாகி விடுகிறது. அதில் கூறப்பெற்ற வாழ்க்கையோ நமக்கு ஒரு சிறிதும் தொடர்பின்மையின், அதனைப் புரிந்து கொள்ளாமலே உருப்போட்டு விடுகிறோம். இது உணவை மெல்லாமல் விழுங்குவதேபோல ஆகிறது. ஒரு குழந்தையின் ஆங்கிலப் பாட புத்தகத்தில், வைக்கோல் போர் தயாரிப்பதைப் பற்றிய ஒரு கதையும், சார்லியம், கேட்டியும் பனி உருண்டை உருட்டி விளையாடுகையில் தம்முள் போட்டுக் கொண்ட சண்டை பற்றியும் எழுதி இருப்பதாக வைத்துக் கொள்வோம். இக் கதைகளில் வரும் நிகழ்ச்சிகள் ஆங்கிலக் குழந்தைகள் நன்கு அறிந்துள்ள நிகழ்ச்சிகள் பற்றியன. அவர்கள் அவற்றைப் படித்து மகிழ்ச்சியடைய முடியும். ஆனால், இக் கதைகள் நம் குழந்தைகள் மனத் திரையில் எந்த நினைவையும் தோற்றுவிப்பதுமில்லை. இத்தகைய புத்தகங்களைப் படிக்கையில் நம் குழந்தைகள் இருட்டில்தான் துழாவுகின்றன.
நம்முடைய பள்ளிகளின் கீழ் வகுப்புக்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தகுந்த அளவு பயிற்சி பெற்றவர்களல்லர். ஒரு சிலர் மெட்ரிக்குலேஷன் தேர்ச்சி பெற்றுள்ளனர்; ஒரு சிலர் அதுவும் பெறவில்லை. மேலும், ஆங்கில மொழி , இலக்கியம் ஆகியவற்றில் தக்க அறிவையும், ஆங்கிலேயர் வாழ்க்கை, எண்ணம் என்பவற்றில் போதுமான அறிவையும் இவர்களில் யாருமே பெற்றதில்லை. இவ்வாறு இருந்தும், ஆங்கிலக் கல்வியை நமக்கு அறிமுகம் செய்து வைப்பவர்கள் இந்த ஆசிரியர்களேயாவர். செம்மையான ஆங்கிலமோ, செம்மையான வங்காளி மொழியோ
R அகவிழி ஓகஸ்ட் 2014

அவர்கட்குத் தெரியாது. அவர்கள் செய்யக்கூடியதெல்லாம் கற்பிக்கத் தெரியாமல் கற்பிப்பதேயாகும்.
இரங்கத்தக்க இவர்களைக் குற்றங்கூறவும் முடியாது. உதாரணமாக, 'குதிரை ஒரு மேன்மையான (Noble) பிராணி' என்ற ஆங்கில வாக்கியத்தை வங்காளியில் நான் மொழிப்பெயர்ப்பதாக வைத்துக் கொள்வோம். நான் அதனை எவ்வாறு செய்யமுடியும்? ஒரே நேரத்தில் எவ்வாறு இரண்டு மொழிகட்கு நான் உண்மையுள்ளவனாக இருக்கமுடியும். குதிரை ஒரு 'மேன்மையான' பிராணி என்பதா, அன்றி 'மேல் ஜாதி' பிராணி என்பதா, அன்றி 'மிக நல்ல' பிராணி என்பதா அல்லது வேறு எவ்வாறு இதனைக் கூறுவது? வங்காளி மொழியில் காணப்படும் எந்தச் சொல்லும் 'நோபிள்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேர் பொருள் உடையதாகத் தெரியவில்லை. ஆராய்ச்சி முடிவில் வேறு சொல்லைப் போட்டு ஏமாற்றுவது தவிர யான் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. ஆகவே, முடிவில் தப்பித்துக்கொள்ளும் வழியை, ஆசிரியர் மேற் கொண்டால் யான் அவரைக் குறைகூற முடியாது.
இதன் முடிந்த பயன் என்னவெனில், * பையன் ஒன்றையும் கற்றுக்கொள்ள முடிவதில்லை. வங்காளியைத் தவிர வேறு மொழியை அவன் கற்காதிருப்பின், பள்ளிக்கூடத்திற்கே அவன் போகாதிருப்பின், அவன் விருப்பம் போல், விளையாடவும், மரம் ஏறவும், குளத்திலும் ஆற்றிலும் நீச்சல் அடிக்கவும், மலர்கள் பறிக்கவும் இயற்கைக்கு ஆயிரமான தொல்லைகள் உண்டாக்கவும் ஆக, இவற்றிலாவது பொழுதை அவன் விருப்பப்படி கழிக்கமுடியும். இவ்வாறு செய்தால் அவனுடைய இளமை இயல்பையாவது திருப்திப்படுத்த முடியும். அதன் பயனாகத் திடமான உடலுடன் மகிழ்ச்சியான மனத்தையும் பெற முடியும். ஆனால், ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்ளச் செய்யும் பெரு முயற்சியில், அவன் அதனைக் கற்றுக் கொள்வதுமில்லை மகிழ்ச்சியடைவதுமில்லை ' இலக்கியங் காட்டும் கற்பனை உலகில் அவன் நுழைவதற்குரிய சக்தியைப் பெறுவதுமில்லை இவை இல்லாவிடினும், காட்சியளவில் உள்ள இயற்கை உலகில் நுழைவதற்குரிய காலத்தையாவது அவன் பெறுகின்றானா என்றால் அதுவும் இல்லை.
அகத்தே உள்ள ஓர் உலகத்திற்கும் புறத்தே உள்ள ஓர் உலகத்திற்கும் ஆக இரண்டு உலகங்கட்குச் சொந்தமாகிறான் மனிதன். இவ்வுலகங்கள் அவனுக்கு உயிரையும், சுகாதாரத்தையும், வலிமையையும் தந்து, வடிவம், நிறம், வாசனை, இயக்கம், இசை, காதல், இன்பம் என்ற அலைகளாக அவனைத் தாக்கி அவன் வாழ்வை மலரச் செய்கின்றன. இரண்டு சொந்த நாடுகளிலும் தங்க விடாமல் வெருட்டப்பட்டு அந்நிய நாட்டுச் சிறையில் வாடும் ஒருவரைப் போல நம்

Page 44
சு0
குழந்தைகள் இந்த அக, புற உலகங்களிலிருந்து வெருட்டப்படுகின்றன. குழந்தைகட்குத் தேவையான அன்பை, நிறைந்த அளவு கொடுப்பதற்காகவே, பெற்றோர்களின் உள்ளத்தில் அன்பை நிறைத்தும், குழந்தைகள் உடலமைப்பு மிகச் சிறியதாக இருப்பினும் வீட்டிலுள்ள காலி இடம் முழுவதுங்கூட அவர்கள் விளையாடுவதற்குப் போதுமானதாக இல்லை. நம்முடைய காலத்தை எங்கே சென்று கழிக்குமாறு விட்டிருக்கின்றோம்? பிற மொழியின் இலக்கணம், அகராதி என்பவற்றினிடையேயும், சுவையற்ற, முடிவிலாத, பள்ளி வேலை என்னும் குறுகிய சந்திலேயும் அவர்களை விட்டிருக்கின்றோம்.
ஒரு மனிதனுடைய ஆயுளில் ஓர் ஆண்டு, ஒரு சங்கிலியில் ஒரு கணுவைப் போன்றதாகும். குழந்தைப் பருவம் படிப்படியாகச் சென்று இளமைப் பருவத்தில் முடிகிறது என்பதைக் கூறத்தேவை இல்லை. நன்கு வளர்ச்சியடைந்து செயல்படும் உலகில் நுழைகின்ற ஒரு மனிதனுக்குச் சில மனக் குணங்கள் இன்றியமையாமல் வேண்டப்படுகின்றன. ஆனால், இந்தக் குணங்கள் உடனே கிடைப்பதில்லை அவற்றை வளர்க்க வேண்டும். நம்முடைய கையும் காலும் அந்த அந்த நேரத் தேவைக்குத் தகுந்தபடி வளர்வதைப் போல மனக் குணங்களும் வளர்ச்சி யடைகின்றன. தேவைப்படும் பொழுது கடையில் சென்று வாங்கக்கூடிய முன்னரே தைக்கப்பட்ட உடுப்புக்களைப் போல இவை அகப்படுவதில்லை.
வாழ்க்கையின் கடமைகளை நிறைவேற்றுவதற்கு, நினைவுச் சக்தியும் கற்பனைச் சக்தியும் மிகவும் தேவைப் படுகின்றன, உண்மையான மனிதர்களாக நாம் வாழ வேண்டுமாயின் இந்த இரண்டு சக்திகளும் இல்லாமல் வாழ முடியாது. குழந்தைப் பருவத்தில் இவற்றை வளர்த்தால் ஒழிய, நாம் வளர்ந்துவிட்ட பிறகு இவற்றைப் பெற முடியாது.
நம்முடைய தற்காலக் கல்வி முறை இவற்றை வளர்த்துக் கொள்ள இடந்தருவதில்லை. வேற்று மொழியைப் போதிப்பதற்குத் தகுதி பெறாத ஆசிரியர்களால் கற்பிக்கப் பெறும் ஒரு வேற்று மொழியைக் கற்றுக் கொள்வதில், குழந்தைப் பருவத்தின் பல ஆண்டுகளைக் கழிக்கின்றோம். ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்வதே கடினம் ஆங்கில மக்களின் எண்ணம், உணர்ச்சி ஆகிய வற்றை நாம் நன்கு புரிந்து கொள்வது அதைவிடக் கடினம். மேலும், இவற்றைச் செய்ய மிக நீண்ட காலத்தைச் செலவழிக்கின்றோம் அவ்வளவு காலமும் வெளியே போக்கிடம் இன்மையால் நம்முடைய நினைவாற்றல் தொழிற்படாமல் அப்படியே நின்று விடுகிறது.
சிந்திக்காமல் கற்பதென்பது, எதனையும் கட்டாமல், கட்டடப் பொருள்களைச் சேகரித்து நிரப்புவது போலாகும். மலைபோன்று உயர்ந்து நிற்கும் அளவுக்குச் சுண்ணாம்பு,

மணல், செங்கல், உத்தரக்கட்டை, குறுக்குச் சட்டம் ஆகியவற்றைச் சேர்த்துக் குவித்த பிறகு, பல்கலைக் கழகத்திலிருந்து மூன்றாவது மாடியின் கூரையைப் போடும்படியாகத் திடீரென்று ஓர் ஆணை பிறக்கிறது. உடனே நம்முடைய குவியலின் மேலே ஏறிச் சென்று இரண்டாண்டுகட்கு இடைவிடாமல் அதனை அடித்து நொருக்குகிறோம். அடிமேல் அடி அடித்ததன் விளைவாக அக் குவியல் சரிந்து வீட்டின் மேல் தளம் போல ஒரே சமமாக ஆகி விடுகிறது. இவ்வாறு சம தரையாக ஆகிவிட்டமையின் இதனை ஒரு வீடு என்ற கூற முடியுமா? காற்றையும் ஒளியையும் உள்ளே அனுமதிப்பதற்கு ஜன்னல்கள் எவையேனும் அதில் உண்டா? ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் வாழ்வதற்கு இதனைப் பயன்படுத்த முடியுமா? அதில் ஒழுங்குமுறை, அழகு, ஒன்றல் ஆகிய எவையேனும் இருக்குமா?
வரலாற்றில் இதுவரைக் காணப்படாத முறையில் ஒரு பெரிய கட்டடத்தை நம் நாட்டில் கட்டுவதற்கு மிகப் பெரிய அளவில் சாமான்கள் சேகரிக்கப்படுகின்றன. சேகரிக்கக் கற்று விட்டதால் கட்டவும் கற்று விட்டோம் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். சாமான் சேகரமும், வீடு கட்டும் முயற்சியும் ஒரே நேரத்தில் படிப் படியாக நடைபெற்றால் ஒழிய நல்ல பயனைக் காணமுடியாது.
எனவே, என் மகன் ஒரு மனிதனாக வளர வேண்டுமென்று நான் விரும்பினால், அவனுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே ஒரு மனிதனாக வளர்வதற் குரிய முயற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும். அவன், தன்னுடைய மனனம் செய்யும் நினைவாற்றலை மட்டும் நம்பிவாழாமல், தானே சிந்திப்பதற்கும், தன் கற்பனையைப் பயன்படுத்துவதற்கும் பழக்கப்படுத்தப்பட வேண்டும். நல்ல பயனைக் காண வேண்டுமாயின் ஏர் உழுது, பறம்படிப்பதுடன் வயலுக்கு நீரும் விட வேண்டும். அதிலும் நெற்பயிர் நல்ல நீர்வளமுள்ள பகுதியில் நன்கு பயிராகிறது. நெற்பயிர் வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மழை மிகவும் அவசியமாகிறது மிகவும் தேவைப்படும் அந்த நேரத்தில் மழை இல்லாவிட்டால் நெற்பயிர் அழிந்து விடுகிறது. அந்தச் சமயம் கடந்த பிறகு எவ்வளவு மழை பெய்தாலும் பயனில்லை பயிர் பிழைக்காது. குழந்தைப் பருவம், இளம் பருவம் ஆகிய பருவங்களில் மனிதன் நல்ல வளர்ச்சி யடைவதற்கு இலக்கியத்தூண்டுதல் மிகவும் தேவைப்படுகிறது. இந்தத் தூண்டுதல் பட்டவுடன், அவனுடைய மனமும், இருதயமும் மெல்ல வளர்ந்து 2 ஒளியும் காற்றும் உள்ள இடத்தில் தலை நீட்டி, நல்ல சுகாதாரத்துடனும் வலிமையுடனும், வளர்ச்சியடையும். வெறும் இலக்கணத்தையும் அகராதியையும் படிப்பதில் அந்தப் பருவம் கழிந்தால் இவை வளர்ச்சியடையாமல் அப்படியே நின்று விடும். அதன் பிறகு ஐரோப்பிய
அகவிழி |ஓகஸ்ட் 2014 (?

Page 45
இலக்கியத்தில் காணப்படும் மிகச் சிறந்த உண்மைகள் மிக உயர்ந்த கருத்துக்கள், அழகான எண்ணங்கள் ஆகியவற்றை அந்த மனிதனின் வாழ்நாள் முழுவதும் அவன் தலையில் கொட்டினாலும் அவற்றின் ஆழமான உண்மைகளையோ கருத்தையோ அவன் அறிய முடியாது.
நம் வாழ்நாளின் மிக உயர்ந்த பகுதி, மகிழ்ச்சி தராத கல்வியைக் கற்பதில் செலவழிந்து விடுகிறது. குழந்தைப் பருவத்திலிருந்து இளம் பருவம் வரையிலும், கலைமகளின் கூலியாள்களாகவே இருக்கிறோம் நம்முடைய வளைந்த முதுகுகளில் எண்ணற்ற சொற்கள் என்னும் பாரத்தை ஏற்றிக் கொள்கிறோம். முடிவாக, ஆங்கிலக் கருத்துக்கள் நிரம்பிய இடத்தில் புகும் பொழுது நமக்கு ஏற்ற சூழ்நிலையாக அது இருப்பதில்லை. அந்தக் கருத்துக்களை ஒருவாறு புரிந்து கொண்டாலும் நம்முடைய ஆழமான இயல்புகளிலோ, அவற்றை நாம் செய்யும் சொற்பொழிவுகளிலும், எழுதும் நூல்களிலும் பயன் படுத்தினாலும், அன்றாட வாழ்க்கையிலோ நேரிடையாகப் பயன்படுத்த முடிவதில்லை.
எனவே, வாழ்க்கையின் முதல் இருபது, இருபத்திரண்டு ஆண்டுகள் ஆங்கில நூல்களிலிருந்து கருத்துக்களைப் பொறுக்கிக் கொள்வதில் கழிந்து விடுகிறது. என்றாலும், எந்தக் காலத்திலும் இக் கருத்துக்கள் நம் உள்ளத்தில் ஒட்டி உறவாடுவதில்லை. இதன் பயன் என்ன வெனில், நம்முடைய மனம் பல இடங்களில் காரை உதிர்ந்த சுவர் போலக் காட்சி அளிக்கின்றது. சில இடங்களில் காரை உதிராமல் உள்ள பகுதியைப் போலச் சில கருத்துக்கள் ஒட்டிக் கொண்டும், சில கருத்துக்கள் ஒட்டாமலும் இருக்கும். நம்முடைய அக வாழ்க்கையோடு ஒட்டாத ஐரோப்பியக் கல்வியை மேலாகப் பூசிக் கொண்டு, பழைய காலக் காட்டுமிராண்டிகள், தங்கள் ஒளி பொருந்திய உடம்பைச் சாயத்தாலும், பச்சை குத்திக் கொள்வதாலும் அசிங்கப்படுத்திக் கொள்வதைப் போல நாமும் பெருமையடித்துக் கொள்கிறோம். காட்டு மிராண்டிகளின் தலைவர்கள் ஐரோப்பிய உடையைத் தரித்துக் கொண்டு, மலிவான ஐரோப்பிய நாட்டு மணிகளை அணிந்து கொள்ளும்பொழுது எவ்வளவு அழகற்றுக் காட்சியளிக்கிறார்கள் என்பதை அவர்கள் அறிவதில்லை. நமக்குத் தெரிந்த சாதாரண ஐரோப்பிய வார்த்தைகளை வெளியிடும்பொழுது எவ்வளவு கேலிக்கூத்தான நிலையை அடைகிறோம் என்பதையும் நாம் அறிவதில்லை. மிக உயர்ந்த ஐரோப்பியக் கருத்துக்களை எவ்வளவு தவறாகப் பயன்படுத்துகிறோம் என்பதையும் அறியமுடிவதில்லை. பிறர் யாரேனும் நம்மைக் கண்டு சிரித்தால் இன்னும் ஆணித்தரமாகப் பேசி அவர்களைக் கவர முயல்கிறோம்.
அகவிழி ஓகஸ்ட் 2014
நம்முடைய கல்வி நம்முடைய வாழ்க்கையோடு பொருந்தவில்லை. நாம் கற்கும் நூல்கள் நம்முடைய
44.

வீடுகள் பற்றியோ நம்முடைய சமுதாயத்தின் குறிக்கோள் பற்றியோ ஒன்றும் கூறுவதில்லை. நமது அன்றாட வாழ்வில் செய்யும் முயற்சிகள் பற்றி இந் நூல்களில் ஒன்றும் இல்லை. நம்முடைய நண்பர்கள் அல்லது சுற்றத்தார்கள், நமது ஆகாயம், நமது நிலம் , நமது காலை அல்லது மாலை, நமது விளைநிலம், ஆறுகள் ஆகிய எவை பற்றியும் அந்நூல்களில் ஒன்றுங் காணப்படுவதில்லை. இத்தகைய சூழ்நிலையில் கல்வியும் வாழ்க்கையும் ஒன்றாக இர இடையில் ஒரு குறுக்குச் சுவருடன் இவை இரண்டும் தனித்தே நிற்கும். நாம் பெறும் கல்வி நம்முடைய வேருக்கு அப்பால் வெகு தூரத்தில் பெய்கின்ற மழையாகவே இருக்கும். வேரைப் பிரிக்கும் மண்ணைத் தாண்டி மழை செல்ல முடியாத நிலையில், அது நம் தாகம் தணிக்க முடியாமல் இருக்கிறது.
இந்த நாட்டைப் பொறுத்தவரை, வாழ்க்கையையும் கல்வியையும் பிரிக்கும் குறுக்குச் சுவர் கடக்க முடியாமல் இருப்பதால், இவை இரண்டையும் சேர்த்தல் இயலாது. இவை இரண்டின் இடையே ஒரு பகைமை வளர்வதே, அடிக்கடி விளையும் பயனாகும். பள்ளிகளிலும் கல் லூரிகளிலும் நாம் கற்கின்ற பாடங்களை, நம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கை ஒவ்வொரு படியிலும் மறுத்து . நிற்பதால், நாம் கற்பவை மீது அவநம்பிக்கையும், வெறுப்பும் வளரத் தொடங்கி விடுகின்றன. நாம் அரைகுறை உண்மைகளையே கற்றுக் கொள்கிறோம் என்ற எண்ணம் உண்டாகிறது ஐரோப்பிய நாகரிகமே அரைகுறை உண்மைகளின் மேல்தான் கட்டப்பட்டுள்ளது என்றும் கருதுகிறோம். இந்திய நாகரிகம் சத்தியத்தின் மேல் கட்டப் பட்டுள்ளதென்றும் நம் முடைய கல்வி மகிழ்சியூட்டுகின்ற பொய்யில் தான் கொண்டுவிடும் என்றும் கருதுகிறோம். ஐரோப்பியக் கல்வி நமக்குப் பயன்படாமல் போவதற்குரிய காரணத்தை அக் கல்வியில் தேடியலைந்து பயனில்லை. அதனெதிராக நம்முடைய வாழ்க்கையில் காணப்படும் பொருத்தமற்ற சூழ்நிலையில் தான் காண முற்பட வேண்டும். என்றாலும், ஐரோப்பியக் கல்வி நமக்குப் பயன்படவில்லை என்றே கூறுகிறோம். ஏனென்றால், தோல்வி என்பது அதனுடைய இயல்பிலேயே அமைந்து கிடக்கிறது. நாம் எவ்வளவுக்கெவ்வளவு அழுத்தமாக அக் கல்வியை வெறுக்கிறோமோ, அவ்வளவுக் கவ்வளவு குறைந்த அளவிலேயே அது நமக்கு நன்மை செய்கிறது. எனவே, நமது வாழ்க்கைக்கும் கல்விக்கும் இடையே உள்ள போராட்டம் வலுப்படுகிறது. இவை இரண்டும் பிரிந்து செல்லச் செல்ல, நம் வாழ்நாளே ஒரு மேடையாக மாறி, அதில் இவை ஒன்றுக் கொன்று நாடகப் பாத்திரங்கள் போல் கேலி செய்து கொண்டும், ஒன்றை யொன்று தாழ்த்திக் கொண்டும் பொழுதைக் கழிக்கின்றன.
தொடரும்.....

Page 46


Page 47
உ.
கிடைக்கும் பூபாலசிங்கம் புத்தகக்கடை 202, செட்டியார் தெரு, கொழும்பு - 11
தொ.பே.இல.: 011-2422321 பூபாலசிங்கம் புத்தகக்கடை 4A, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்
தொ.பே.இல.: 021-2226693 நியூ கேசவன் புக்ஸ்டோல் 52 டன்பார் வீதி, ஹட்டன்
தொ.பே.இல: 051-2222504, 051-2222977
அறிவாலயம் புத்தகக்கடை 190 B புகையிரத வீதி,
வைரவப்புளியங்குளம், வவுனியா தொ.பே.இல.: 024-4920733 இஸ்லாமிக் புத்தக இல்லம் 77, தெமட்டக்கொட வீதி, கொழும்பு - 09
தொ.பே.இல.: 011-2688102
Easwaran Book Depot No. 126/1, Colombo Street, Kandy Tel.: 081-2220820
குமரன் புக் சென்டர் 18, டெய்லிபயர் கொம்பிலக்ஸ் நுவரெலியா
தொ.பே.இல.: 052-2223416 விழுது - மட்டக்களப்பு இல 22, கலைமகள் வீதி, நெச்சிமுனை, மட்டக்களப்பு தொ.பே.இல - 065 - 2222500 விழுது - திருகோணமலை 81யு, ராஜவரோதயம் வீதி, திருகோணமலை
தொ.பே.இல - 026 2224941
0int Kumaran Pr 39, 30Tn Lane
umor)
Registered in the Department of Posts

வி.
மிடங்கள்
பூபாலசிங்கம் புத்தகக்கடை 309-A 2/3 காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு
தொ.பே.இல.: 4515775, 2504266 அல்குரசி புத்தக நிலையம் 28, 1/2, புகையிரத வீதி, மாத்தளை
தொ.பே.இல.: 066-3662228 அறிவுந்தி புத்தகசாலை இல 06, கனகபுரம் வீதி, கிளிநொச்சி தொ.பே.இல.: 077 6737535
Zeen Baby Care 121B, Arm Mill Road, Addalaichenai -01 Tel.: 077 3651138) புக் லாப் 20, 22 சேர் பொன் ராமநாதன் வீதி, பரமேஸ்வரா சந்தி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம் தொ.பே.இல: 021-2227290, அன்பு ஸ்டோர்ஸ் 14 பிரதான வீதி, கல்முனை தொ.பே.இல.: 067-2229540 பரணி புத்தகக் கூடம் நெல்லியடி ம.ம வீதி, நெல்லியடி தொ.பே.இல - 077 5991949 விழுது - புத்தளம் இல 24801 கொழும்பு வீதி, தில்லையடி, புத்தளம் தொ.பே.இல - 032 - 5740094 விழுது - யாழ் மாவட்டம் இல 23, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி வடக்கு, யாழ்ப்பாணம்
தொ.பே.இல் - 021 2229866
070 ISSN 1800-1246
Ed 0 25s (Pvt) Ltd. 5 Coombo 06 -n: 0ா
பதFE lெl771 80011, E4 005II
of Sri Lanka under OD/26/News/2014

Page 48
இகவிடு
சங்க உதது த.3 4:
ரெசி-201
பணித மேம்பா.
இகவி
தே (வேதா மீராகு கல்விக்கான்.
பாக
அகவிடு
'மனித மேம்பாட்டின் உயிர்ப்பு மக்கு கல்விக்க
இகவிடு
பசித ம் 13 ம் உலர்/ பிகு அல்லால்
2013 ஆம் ஆண்டிற்கான அ.
ஆசிரியர்கள் உடனடியாக

அகவிடு
மாணவர்களின் சி
இணைப்பாடவிதாவது ஆசிரியர்கள் முக்கியத்துக
கவிடு
டின் உயிர்ப்பு மிகு கல்லாய் -
சட், கே
ஏப்ரல் 2014
இகவின்
' சக மேம்பாட்பு, 3 2கர்:1 ifகு கல்விக்காய்..
15* - .
கவிடு
4ன் உயிர்ப்பு மீது கல்விக்கப்..
கவிழிகளை பெற விரும்பும்
தொடர்பு கொள்ளவும்.