கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2014.03

Page 1
திருகோணமலை மாவட்டச் சிறப்பிதழ்
வீடு
பிரதம ஆசிரியர்
கலை இலக்கிய மாத சம் பங்குனி- 204

: க.பரணீதரன்
நேர்காணல் மதாபி சுப்பிரமணியம்
திருகோணமலையும் தேசிறஇலக்கியம்போக்கும்
- திருமலை நவம் - திருமலை சில இலக்கியக்
' குறிப்புகள் - இராஜ தர்மராஜா - காலனித்துவ திருகோணமலை
' ஆக்கிரமிப்பாளர்களின் பதிவுகளுக்கூடாக வேர்களைத்
' தேடும் முயற்சிகள் -வி.கௌரிபாலன் -
120/=
ஞ்சிகை

Page 2

அடி»ே

Page 3
கட்டுரை
திருகோணமலை சில இலக்கியக் குறிப்புகள்
இராஜ. தர்மராஜா
திருகோணமலையும் தேசி இலக்கிய சம்போக்கும் திருமலை நவம்
நிலம் பிரிந்தவளின் (சுஜந்தளின்) கவிதைகள் ஒரு வாசகநிலைக்குறிப்பு யதிந்திரா
"காலனித்துவ திருகோணமலை" ஆக்கிரமிப்பாளர்கள் பதிவுகளுக்கூடாக வேர்களைத் தேடும் முயற்சி
வி.கௌரிபாலன்
நேர்காணல்
தா.பி.சுப்பிரமணியம்
அட்டைப்படம்
நன்றி இணையம்
பேசும் இதயங்கள்

| i4),
'பாபா.
*(*.3:
பொத31 { 20ம்
: ப்ப ம்.
நதியினுள்ளே...
சிறுகதை
கே.எம்.எம்.இக்பால் வீ. என் சந்திரகாந்தி ஏ.எஸ்.உபைத்துல்லா கிண்ணியா சபருள்ளா
ஷெல்லிதாசன் மூதூர் மொஹமட் ராபி திருமலை சுந்தா
சூசை எட்வேட் ஏ.எம்.எம்.அலி
கவிதை செ.ஞானராசா தாமரைத்தீவான்
மு.யாழவன் அ.கௌரிதாசன் எஸ்.பாயிஸா அலி
கேணிப்பித்தன் மூதூர் முகைதீன்
சோ.மீரா தி.பவித்திரன் மூதூர் கலைமேகம்

Page 4
ஜீவநதி)
2014 பங்குனி இதழ் - 66 பிரதம ஆசிரியர்
கலாமணி பரணீதரன்
துணை ஆசிரியர்கள்
வெற்றிவேல் துஷ்யந்தன் ப.விஷ்ணுவர்த்தினி
சிறப்புக் களில் தி வருவதி
பதிப்பாசிரியர்
கலாநிதி த. கலாமணி
1 பேர் காயம், சா 14
தொடர்புகளுக்கு :
கலை அகம் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி அல்வாய் வடமேற்கு அல்வாய் இலங்கை.
வெளியி அச்சிறப்பு படுத்தும் அமைந்த இரண்ட சிறப்பிதழ்
ஆலோசகர் குழு: திரு. தெணியான் திரு.கி.நடராஜா
பிரதேசத் அறிந்து சிறப்பிதல் ஏற்படுத்த இணை6 வாசகர்க படைப்புக ஆயினும் படைப்பு படைப்புக எழுதப்பட் என்பதும்
தொலைபேசி : 0775991949
0212262225
E-mail : jeevanathy@yahoo.com
வங்கித் தொடர்புகள்
K.Bharaneetharan Commercial Bank Nelliady A/C - 8108021808 CCEYLKLY
வரவேன் இருந்தார் எழுத்தா? தெரிவித்
தனிப்பிர
இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து ஆக்கங்களின் கருத்துகளுக்கும் அவற்றை எழுதிய ஆசிரியர்களே
பொறுப்புடையவர்கள்.
அல் அனுப் K.Bh
- ஆசிரியர் ,
- K.Bhal
02 கீவநதி - இத

ஜீவந்தி (கலை இலக்கிய மாத சஞ்சிகை)
அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி.... புதியதோர் உலகம் செய்வோம்..!
- பாரதிதாசன்-டான்ஸ்" பந்தியின் திருகோணமலை மாவட்டச் சிறப்பிதழ்
இந்த இதழ் "ஜீவந்தியின் பதினோராவது சிறப்பிதழ் என்ற பயது. மலையகச் சிறப்பிதழை வெளியிட்டு மூன்று மாதங் ருகோணமலை மாவட்டச் சிறப்பிதழை வெளிக்கொண்டு ல் மகிழ்ச்சி அடைகின்றேன். ம்.
-ஜீவநதி வெவ்வேறு நோக்கங்களில் சிறப்பிதழ்களை ட்டு வருகின்றது என்பதை ஜீவநதி வாசகர்கள் அறிவார்கள். பிதழ்களுள் இலங்கையின் பிரதேசங்களை முதன்மைப்
முதலாவது சிறப்பிதழாக மலையகச் சிறப்பிதழ் நது, அதனைத் தொடர்ந்து மூன்று மாத இடைவெளியில் ாவது சிறப்பிதழாகத் "திருகோணமலை மாவட்டச் ”வெளிவருகின்றது. பிரதேச சிறப்பிதழின் வெளியீட்டினூடாக குறித்த தின் இலக்கியப்பின்னணியையும் வரலாற்றையும் - கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை, மலையகச் ழைப் போன்று, திருகோணமலை மாவட்டச் சிறப்பிதழும் துகின்றது. ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களின் வுக்கும் இச்சிறப்பிதழ்கள் வழிவகுக்கின்றன என்பதை ள் உணர்ந்து கொள்வார்கள். இச்சிறப்பிதழில் உள்ள சில கள் திருகோணமலையை கருவாகக் கொள்ளாதவை. ம். அவை திருகோணமலைப் படைப்பாளிகளின் களாக அமைந்துள்ளன. இச்சிறப்பிதழில் உள்ள கள் அனைத்தும் படைப்பாளிகளால் இச்சிறப்பிதழுக்கென ட்டவை: முன்னர் எங்கேனும் பிரசுரமாகாத படைப்புகள் "குறிப்பிடத்தக்கது.
திருகோணமலைச் சிறப்பிதழை வெளிக்கொண்டு ன்டும் என்பதில் கவிஞர் ஷெல்லிதாசன் முனைப்பாக 1. அவருக்கும் இச்சிறப்பிதழுக்குப் பங்களிப்புச் செய்த ளர்கள் அனைவருக்கும் ஜீவந்தி தன் நன்றிகளைத் துக் கொள்கின்றது.
- க.பரணீதரன் ஜீவநதி சந்தா விபரம் தி - 30/= ஆண்டுச்சந்தா - 1200/= வெளிநாடு - $ 50U.S
மணியோடரை வாய் தபால் நிலையத்தில் மாற்றக்கூடியதாக பி வைக்கவும். அனுப்ப வேண்டிய பெயர்/முகவரி araneetharan, Kalaiaham , Alvai North West, வங்கி மூலம் சந்தா செலுத்த விரும்புவோர் Faneetharan Commercial Bank - Nelliady Branch - A/C No.- 8108021808 CCEYLKLY
vai.
ழ 66 பங்குனி 2014

Page 5
இராஜ.தர்மராஜா
உள்
ஊருகோணமலை மாவட்டம் எனும் போது அது ஒரு பெரிய மாவட்டமும் இல்லை; சிறிய மாவட்டமும் இல்லை. திருகோணமலை மூதூர், சேருவில என்னும் மூன்று தேர்தற் தொகுதிகளைக் கொண்ட ஒரு அளவான மாவட்டம் ஆகும். இது முன்பு திருகோணமலை பற்று, கொட்டியாபுரபற்று, தம்பலகமப்பற்று, கட்டுக்குளம் பற்று என பிரிக்கப் பட்டிருந்தது.
திருகோணமலையில் திருக்கோணேஸ் வரம் எனும் பழம் பெரும் ஆலயம் அமைந்துள்ள . தால் மிகவும் பிரசித்தி பெற்று திகழ்ந்துள்ளது. இத்திருக்கோணேஸ்வரம் கோவில் இதிகாச, புராணங்களுடன் தொடர்பு கொண்டதாகும். இதன் காரணமாக இக்கோயில் பற்றிய தல புராணங் 1 களும், கர்ண பரம்பரைக் கதைகளும் நிறைய உண்டு. இவற்றில் சில அழிந்து போக் சில இன்றும் வழக்கில் உள்ளன. திருக்கோணேஸ்வரம் பற்றி வட மொழியான சமஸ்கிருத மொழியிலும்
திருகோ6 சில இலக்கிர
புராணங்கள் உள்ளன. தமிழ் மொழியிலும் பல நூல்கள் உள்ளன. கவிராசர், பண்டிதராசர் போன்ற புலவர்களாலும் மற்றும் பெயர் தெரியா புலவர் களாலும் மற்றும் பெயர் தெரியாத புலவர்களாலும் பாடப் பெற்றுள்ளன. இன்றும் பல பண்டிதர்கள் பதி கங்கள், அந்தாதி, வெண்பா என்று பாடுகின்றார் கள். பண்டிதர் இ.வடிவேல், புலவர் வை.சோமஸ் கந்தர் போன்றவர்கள் இன்றும் கோணைநாயகர் மேல் பாக்களை இயற்றியும், கோணேஸ்வரம் பற்றிய நூல்களை பதிப்பித்தும் வருகின்றனர்.
கோணேசர் கோவிலில் மட்டுமல்ல, திருக்கோணமலையில் அமைந்துள்ள வேறு பல கோவில்கள் மேலும் பாக்களை பொழிந்துள்ளனர். வே. அகிலேசப்பிள்ளை, தி.த.சரவணமுத்துப் பிள்ளை, முத்துக்குமார, பண்டிதர் பீதம்பரன், பெ.பொ.சிவசேகரம், வீ.சி.கண்டிநாதன் போன்று பல புலவர்களும் பண்டிதர்களும் அடங்குவர். மகாவலிகங்கை கரையில் உள்ள பெயர் பெற்ற வெருகல் சித்திர வேலாயுதர் கோவில் மேல் தம்பலகமம் வீரக்கோன் முதலியார் பாடிய சித்திரவேலாயுதர் காதல் எனும் நூலும் வெகு
03/ ஜீவநதி - இதழ்

பிரசித்தமானதாகும். இதேபோல் திருக்கரசை புராணம் என்ற நூலும் பெயர் பெற்றது ஆகும்.
திருக்கோணேஸ்வரம் பற்றி இதிகாசம்,
ணமலை கீழிர கன்
புராணங்கள் மட்டுமல்ல தேவார, திருப்புகழ் பதிகங்கள் கூட உள்ளன. 7ம், 8ம் நூற்றாண்டு களில் வாழ்ந்த சமயக்குரவர்களில் திருஞான சம்பந்தர் திருகோணமலை பதிகம் என்ற பெயரில் பல பாக்களை பாடியுள்ளார். அவர் மட்டுமல்ல 14ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவராக கணிக்கப்படும் அருணகிரிநாதர் திருப்புகழ் என்ற பாமாலை புனைந்துள்ளார். இப்படியாக திருக்கோணேஸ்
வரம்பல வழிகளில் புகழ்பெறுகின்றது.
திருகோணேஸ்வரம் ஆலயம் மட்டுமல்ல இயற்கைத்துறைமுகம் மற்றும், மகாவலிகங்கை ஓடி வந்து சங்கமிப்பதும் திருகோணமலை கடலில் தான். இதனை இட்டு கங்கைபுராணம் என ஒன்று உதித்துள்ளது. திருக்கரசரை புராணமும் கங்கைக் கரையில் உள்ள திருக்கரசையை பற்றியது ஆகும். கன்னியா வெந்நீரூற்றுக்கள் பற்றி புலவர் மணி பெரியதம்பிபிள்ளை பாடியுள்ளார். கந்தளாய் குளம் முன்பு முத்துகுளித்த கிண்ணியா, கப்பல்துறை போன்ற இயற்கை வளங்கள் மற்றும் வனப்புமிக்க கடலோர பிரதேசங்கள் உல்லாசப் பயணிகளை கவர்ந்த இழுக்கின்றன. காடும்,வயலும் சார்ந்த
567 பங்குனி 2014

Page 6
இடங்கள், கங்கை நீரின் பசுமையிலும், குளங்கள் சார்ந்த நீர்ப்பாய்ச்சலினால் பசுமை பெறும் கழனி களும் வயல் வெளிகளும் திருகோணமலைக்கு வளம் சேர்க்கின்றன.
திருகோணமலையில் தொழில் வழங்கும் துறைகளாக, துறைமுகம் சார்ந்த கப்பல் தொழில் சார்ந்த துறைகள், கடற்படைதளம், விமானப் படைத்தளம் போன்றவை திகழ்கின்றன. நீண்ட கடலோரம் சார்ந்த பகுதியில் அதனை அண்டிய தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்களும் கழனிவயல்கள் சார்ந்து விவசாயிகளும் நிறைந்து காணப்படுகின்றனர். இன்னும் ஒன்றுடன்ஒன்று சார்ந்து தொழில்வளம் நிறைந்து காணப்படுவதால் இங்குள்ள மக்கள் அரசு சார்ந்த நிறுவனங்களில் தொழில் நடாத்தும் ஒரு காரணமாகும். பொதுவாக கிழக்க மாகாண வயல், கடல்சார்ந்த சுதந்திர தொழிலால் மக்கள் வளம் பெறும் போது வேறு சிறிய தொழில்களில் நாட்டம் கொள்வது இல்லை எனலாம். இலக்கியமும் இம்மக்கள் சார்ந்த நிலைகளையே பிரதிபலிக்கின்றது எனக் கூறலாம். கடல் சார்ந்த நாட்டுப் பாடல்கள், விவசாயம் சார்ந்த நாட்டுப்பாடல்கள், நாட்டுக் கூத்து என கிராமிய மணம் வீசும் கிராமிய இலக்கியங்களும் உண்டு.
நமது முன்னைய காலங்களில் கிராமிய பொருளாதாரமே மேலோங்கி நின்றன. அந்நியர் வரவால் பின்னர் இது சிதைவடையலாயிற்று. ஆரம்பத்தில் கோவில்களை மையமாக வைத்தே ஊர் மனைகள் அமையலாயிற்று. இதனால் கோயில்களை அண்டியே கலை, இலக்கியங்கள் உருவாயிற்று. இந்நிலமை இம்மாவட்டத்திற்கு மாத்திரமன்றி மற்றைய மாவட்டங்களுக்கும் பொது வான நிலைமையாயிற்று. மற்றுமொரு குறிப்பு நாட்டில் நிலையான ஆட்சி இன்றி குழப்பநிலை, அந்நியர் ஊடுருவல் போன்ற நிலைகளில் ஆலயங் களே முக்கியமாகின்றன. கடவுள் என்கிற கற்பிதம் மனங்களில் ஏற்பட்டு விடுகின்றன. இந்நிலையில் கடவுள் மேல் புராணங்கள், பிரபந்தங்கள், அந்தாதி, வெண்பாக்கள் என நிறைய பாடிவிடப்படு கின்றன. இந்நிலைமை திருக்கோணேஸ்வரத்தில் நிறையக் காணப்படுகின்றன. தட்சிணகைலாச புராணம், கோணேசர் வைபவம் என நீண்டு காணப் படுகின்றன இதேபோல் மகாவலி கங்கை சார்ந்த சித்திர வேலாயுதர்காதல், திருக்கரசை புராணம் என் எழுந்து விடுகின்றன. இதனை பின்னாளில் பலர் சுவடிகளில் இருந்து பாதுகாத்து அச்சு வாகன
மேற்றி பதிப்பித்து வெளியிட்டும் விடுகின்றனர்.
இலங்கையில் அந்நியர் ஆட்சி ஏற்பட்ட போது பல அழிவுகள் ஏற்பட்டன அதில் முக்கிய மானது கோவில் அழிப்புகளாகும். இங்கு அவர் களுக்கு பலத்த எதிர்பார்ப்புகள் ஏற்படவில்லை.
04/ கீவநதி - இதழ்

ஆரம்பத்தில் ஒரு சில அரசுகள் மும்முரமாக எதிர்த்தபோதும், பின்பு அவை அழித்தொழிக்கப் பட்டன. பின்னாட்களில் பெரிய எதிர்ப்போ யுத்தம் கலவரங்களோ ஏற்படவில்லை. பிற்பாடு இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன இடையில் வந்த குரங்காண்டால் என்ன என்ற நிலை காணப்பட்டது. பெரும்பாலும் அந்யிர் ஆட்சியுடன் ஒன்றிப் போகுந் தன்மையே காணப்பட்டது. அவர்களின் ஆட்சியை ஏற்று போற்றிப் புகழும் தன்மை காணப்பட்டது. அவர்கள் ஆட்சியை புகழ்ந்து முதலியார், மணியம், முகாந்திரம், சேர் என்கெளரவப் பட்டங் களையும் பெற்று உத்தியோகங்களையும் பெற்று அதன் மூலம் பெரும்பயன் அடைந்து துதிபாடும் தன்மையே காணப்பட்டது. லண்டன் மகாராணி யிடம் சேர் பட்டம் பெறுவது பெரும்பேறு எனக் கருதிய அடிமை மனப்பான்மையே மேலோங்கி யிருந்தது எனலாம். இதனை அக்காலத்தில் தோன்றிய நாட்டார் இலக்கியங்கள் காட்டி விடுகின்றன. அதனை விட அக்காலத்தில் ஏற்பட்ட இலக்கியத்தேக்கம் மற்றும் அந்நியர் விரோத எதிர்ப்பு இலக்கியங்களும் தோன்றியதாக இல்லை. கண்டி ராசன் கூத்து எனும் நாடக இலக்கியம்கூட கண்டி மன்னனை கொடிய கொடுங்கோலனாக காட்டியளவுக்கு ஆங்கிலே யரை கொடும் துரோகியாக , அந்நிய கொடுங் கோலனாக காட்ட முனையவில்லை. அக்காலங் களில் இலக்கியமும் மூடுண்டே இருந்து விட்டதை இது காட்டுகின்றன.
போர்த்துக்கீசர் ஒல்லாந்தர் வழியில் இறுதியில் ஆங்கிலேயர் நீண்டகாலம் தடம் பதித்து விட்டனர். இந்நிலையில் அந்நியரையோ அவர் தம் ஆட்சியையோ எதிர்க்காமல் அவர்கள் காட்டிய வழியில் கல்வி கற்று அவர்களிடமே உயர் உத்தியோகம் பெற்று சுபிட்சம் கண்டு சுகானுபவம் காணும் புகழ் பெறுவதே வாழ்க்கை ஆயிற்று. ஒய்வு நேரங்களில் திண்ணைப் புலவர்களிடம் தமிழ் இலக்கியம் கற்று தாங்களும் புலவர்கள் ஆயினர். இதனால் தமிழ் இலக்கிய பற்று கொண்டு பழம் பெரும் இலக்கிய சுவடிகளை தேடி படிக்கலாயினர். இதனால் உளம் விரிவடைந்த பற்றாளர்கள் சுவடிகளை தேடி எடுத்து தூசி தட்டி பக்திபரவசமாய் புகழ்ச்சி பாடி புத்துயிர் பெற வைத்ததும் ஒரு நன்மையாயிற்று. அவர்கள் தங்களை தியாகம் செய்து பழைய இலக்கிய சுவடிகளை தேடியயெடுத்து கஷ்ரப்பட்டு புதுப் பித்து அச்சு வாகனம் ஏற்றித் தந்தார்கள். இது காலத்தின் நன்மையாகும். இவர்கள்இல்லாவிடில் எமக்கு எம் பழைய இலக்கியங்கள் பல கிடைத்திருக்கமாட்டாது. செல் அரித்து, மண்
66 / பங்குனி 2014

Page 7
படிந்து கிடந்த சுவடிகளை எல்லாம் தேடி எடுத்து உருக்குலைந்தவை போக உயிருடன் எஞ்சியிருந்த "வைகளை ஒன்று சேர்த்து புது ரத்தம் பாய்ச்சிய உத்தமர்கள் இதில் தமிழகம் ஈழம் என இரு தேசத்து
அறிஞர்களும் உழைத்து இருக்கின்றார்கள்.
இப்படியாக கல்வி தாகம் ஏற்பட்டு திருகோணமலையில் இருந்தும் இரு சகோதரர்கள் தமிழகம் சென்று சாதனை நிலைநாட்டியுள்ளார் கள். அவர்கள் தான் தி.த.கனகசுந்தரம்பிள்ளை யும், தி.த.சரவணமுத்துப்பிள்ளையும் ஆவர்.
அன்று இலங்கை, இந்தியா எல்லாம் ஆங்கிலேயர் ஆட்சியில் ஒன்றாகத்தான் ஆட்சி செய்யப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியா ஒரு தலைமைப்பீடமாக விளங்கியது எனலாம். இந்த நிலையில் உயர்கல்வியை நாடியோர் இந்தியா சென்றது வியப்பு இல்லை. இவர்களில் ஒருவர் மேற்கல்வியைக்கற்று பேராசிரியர் ஆனார். மற்றவர் நூலகர் ஆனார். தமது கல்வி நிலை களுக்கு ஏற்ப மூத்தவர் ஆன தி.த.கனகசுந்தரம் பிள்ளை தமிழ் இலக்கியங்களை கற்பதிலும், சுவடிகளை தேடியெடுத்து படி எடுத்து செம்மைப் படுத்தி பதிப்பித்தலிலும் ஈடுபடலாயினர். இளைஞவர் ஆன தி.த.சரவணமுத்துப்பிள்ளை நூலகத்தில் பணியாற்றியதால் வரலாற்று நூல்களை கற்று புனைகதை எழுதுவதிலும் புகழ் ஈட்டினார். இவர் "மோகனாங்கி" எனும் சரித்திர நாவலை வெளியிட்டார், பின்னர் இதனை இவரது சகோதரன் சுருக்கி "சொக்கநாதர் நாயக்கர்" என வெளியிட்டு அக்கால பாடத்திட்டதிலும் சேர்த்து கல்லூரிபாடநூல் ஆக்கினார்.
தி.த.சரவணமுத்துப்பிள்ளையவர்களின் மோகனாங்கி நாவலுக்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பே எஸ்.இன்னாசித்தம்பி என்பவர் உசோன் பாலந்தை எனும் கதையை 1891 இல் இலங்கை யிலேயே வெளியிட்டு விடுகின்றார். இக்கதை கத்தோலிக்க மதம் சார்ந்த கதை ஒன்றின் தழுவ லாக கருதப்படுகின்றது. இது இரண்டு பதிப்புக்கள் வந்ததாகவும் பேசப்படுகின்றது. அக்காலத்தில் அந்நியருடன் மதம் பரப்ப என வந்த
தி.த.சரவண கத்தோலிக்க மதகுருமாரின் பிரச்சார , போதனை முயற்சியினால் உந்தப்பட்டு மதப் பிரச்சார விளக்கத் துக்காக இது வெளியிடப்பட்டதாக கருதப்படு கின்றது. சரவண முத்துப்பிள்ளை அவர்கள் நாயக்கர் கால வரலாற்று நூல்களால் உந்தப்பட்டு, ஒரு காதல் சம்பவத்தையும் புகுத்தி மோகனாங்கி என்ற புதினம் ஆக 1899 ஆம் ஆண்டில் வெளியிட்டுவிடுகின்றார். தமிழில் தேன்றிய முதல் புதினங்களில் இதுவும்
05/கீவநதி - இத

ஒன்றாக கருதப்படுகின்றது. பின்னர் இது சுருக்கி கல்லூரி பாடநூலுக்குள் சேர்க்கப்படுகிறது இது தமிழகத்தில் பதித்து வெளியிடப்பட்டதும்
முக்கியமானது.
தி.த.கனகசுந்தரம்பிள்ளை படைப்பு இலக்கியத்தில் இல்லாத கல்வித்துறையிலேயே புகழ் ஈட்டினர். இவர் பதிப்புத்துறையிலும், அகராதித் துறையிலுமே தம் வாழ் நாளை செலவிட்டார். இவர் பழைய இலக்கிய சுவடிகளை ஆராய்ந்து வெளியிடுதலில் உழைத்த ஆறுமுக நாவல், உ.வே.சாமிநாதையர், சி.வை.தமோதரம் பிள்ளை ஆகியோருக்க பதிப்பித்தலில் பக்க பலமாக உதவி உள்ளார். இதனை அவர்கள் இவருக்களித்த பாராட்டுரைகளே சாட்சியமா கின்றன. அத்துடன் நில்லாது தாமே தனித்தும் சில சுவடிகளை ஆராய்ந்து செம்மைப்படுத்தி பதிப்பித்தும் வெளியிட்டுள்ளார். அதனைவிட முக்கியமாக அக்காலத்தில் பெரிதும் பெசப்பட்ட மெட்ராஸ் லெக்சிகன் எனும் சென்னை தமிழ் அகராதியை ஆராய்ந்து தொகுப்பதிலும், பதிப் பித்தலிலும் முக்கிய பாத்திரம் வகித்து புகழடை கின்றார். திருகோணமலையில் இருந்து சென்ற இரு சகோதரர்களுமே இரு வேறு விதங்களில் பெயர் பொறித்து விடுகின்றனர்.
அகராதி எனும்போது இக்காலத்திலும் ஒருவர் புகழ் பெறுகின்றார். அக்காலத்தில் உயர் கல்விக்காக தழிழகத்துக்கு புலம் பெயர்ந்தார்கள். இக்காலத்தில் உலகத்தின் பல தேசங்களுக்கும் நம்மவர் புலம் பெயர்ந்து கொண்டு இருக் கின்றார்கள். அப்படி திருகோணமலையில் இருந்து ஜேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர் தான் திரு.கனகசபாபதி சரவணபவன். அவர் அங்கு வெறுமனவே காலத்தைக் கழிக்காது ஜெர்மன்
மொழியைக் கற்று, ஜேர்மன் - தமிழ் அகராதி என்ற பெரியதொரு தொகுப்பை அங்கு வருபவர்களுக் காக உருவாக்கிக் கொடுத்துள்ளார். இதன் மூலம் தழிழகத்தின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
அத்துடன் நில்லாது திருகோண எழுத்துப்பிள்ளை
மலையின் சுவடி களையும்
கல்வெட்டுக்களையும் ஆராய்ந்து திருகோணமலை வரலாறு, காலனித்துவ திரு கோணமலை என்ற இரு வரலாற்று நூல்களையும் மற்றும் ஜேர்மன் மொழி சார்ந்த நூல்களையும் வெளியிட்டுள்ளார். இங்கே இவருக்கும் கனக சுந்தரம்பிள்ளைக்கு மிடையே ஒரு ஒற்றுமை காணப்படுவதை குறிப்பிட வேண்டியுள்ளது.
இதேபோல் இன்னோர் குறிப்பையும் குறிப்பிட வேண்டியுள்ளது. சரவணமுத்துப்
ந 667 பங்குனி 2014

Page 8
பிள்ளை அவர்கள் தமிழகம் சென்று புனைகதை, கவிதை புனைதல் என்று பெயர் எடுத்தது போல் இன்னுமொருவர் இக்காலத்தில் தழிழகம் சென்று கவிதை இலக்கியத்தில் சாதனை படைத்துள்ளார். அவர் தான் தர்மசிவராமு எனும் நவீன தமிழ்க்கவிதை ஊற்றுக்காரர். இவர் பிரமிள் , பானு, அரூப் சிவராம் என பல புனைபெயர்களில் எழுதி யுள்ளார். கவிதை மட்டுமல்லாது விமர்சனத்திலும் கவனம் செலுத்தியதுடன் நாடகம், சிறுகதை என பல துறைகளிலும் எழுதி யிருக்கின்றார். சரவண முத்துப்பிள்ளை அவர்கள் தத்தை விடு தூது எனும் பாக்களையும் காதற் தோல்வியின் பிரிவு ஆற்றாமையையும் பாடுவதுடன் பிரி வாற்றாமை யினால் இளம் வயதிலேயே
தர்மு க உலகை துறந்து விடுவதாகவும் குறிப்பிடப்படுகிறது. அதே போல் தர்மு சிவராமுவையும் சில பிரிவாற்றாமைகள் வாட்டுவதையும் குறிப்பிட முடிகிறது. அவரது நாடகமான நட்சத்திர வாசியில் வரும் கதா பாத்திரமம் அவரே என்று குறிப்பிடப் படுகின்றது. இந்த நட்சத்திரவாசி இலங்கையிலும், இந்தியாவிலும் மேடையேற்றப்பட்டது குறிப்பிடத் தக்கது. 20.04.1939 இல் பிறந்த தர்மு சிவராமு என்பவர் ஆரம்பத்தில் சி.சு.செல்லப்பாவின் எழுத்து இதழ் களில் எழுதியும், மெளனியின் சிறுகதைத் தொகுப்புக்கு முன்னுரை எ ழு து வ தன மூல மு ம புகழ் பெறுகின்றார். 1970 ஆம் ஆண்டு கா ல க ட ட ங் க ள ன ப ன தமிழகத்திலேயே நிரந்தரமாக தங்கி பல இலக்கிய அதழ்களிலும் எழுதி புகழும், விமர்சன மும் பெறுகின்றார். இவர் கவிதைகளில் படிமங் களை மிக நுணுக்கமாக கையாள்வதில் தேர்ந்தவர் என போற்றப்படுவதுடன் ஆன்மீகமாக
க. சித்தி அ. எழுதுவதிலும் வல்லவர் ஆக விளங்கி யுள்ளார். இலக்கியத் தில் மட்டுமல்லாது ஓவியம், களிமண் சிற்பங்கள் என்ற கைவினை களிலும் தேர்ந்த கலை ஞா'. இவை தான' இ வ ரு க' கு பொருளாதாரத்தில் உதவியுள்ளன. இவர் பொருளா தாரத்துக்கு வேறு தொழில்களை நாடியது இல்லை. முழு நேர எழுத்து வாசிப்பு, ஓவியம் தான் தொழில். இதனால் தகுந்த வரு மானம் இன்றி கஷ்ரப்பட்ட நிலையிலேயே தனது வாழ்நாளை கழித்துள்ளார். இவரின் ஆன்மீகக் குருவாக திருகோணமலையில் சாது அப்பாத்துரை செட்டியாரும், மற்றும் ஜிட்டு ஜி.கிருஸ்ண மூர்த்தியும் விளங்கியுள்ளனர். மிகவும் கஷ்ரநிலை யில் வாழ்ந்த இவர் கடைசியில் வேலூரில் உள்ள கரடிக் குடி எனும் கிராமத்தில்
06/கீவநதி - இதழ்

.. 7
வராம்
06.01.1997 ஆம் ஆண்டு இவ்வுலக வாழ்வை விட்டு நீங்கினார்.
தர்மு சிவராமு போல அல்லாது வேறு தடத்தில் சென்று கவிதையில் சாதனை
படைக்கும் இன்னொருவர் பற்றியும் குறிப்பிட வேண் டும். அவர்தான் திருக்கோணமலையிற் பிறந்து பிற மாவட்டத்தில் வாழ்ந்து வரும் கவிஞர் சி.சிவசேகரம் அவர்களாவார். தர்மு ஆன்மீகம் என்றால் இவர் நடப்பியல் ரீதியில் கவிதை படைப்பதில் சாதனை படைக்கின்றார். இவரும் பிரதானமாக கவிதையில் நாட்டம் கொள்வதுடன் விமர்சனங்களும் எழுதி வருகின்றார். பல கவிதை தொகுப்பு களையும்
விமர்சன நூல்களையும் வெளியிட்டு புகழ் பெற்றுள்ளார். தொழில் ரீதியில் பேராசிரியராக இருந்து கொண்டும், வேலைப் பளுவிற்கிடையில் திறமாக கவிதை படைப்பதும் பேராசிரியர் சி.சிவசேகரத்தின் திறமை என்றே கூறவேண்டும்.
அக்காலத்தில் தி.த. கனக சுந்தரம் பிள்ளை, தி.த.சரவண முத்துப் பிள்ளை என்பவர்கள் போல் தமிழ் இலக்கிய உயர் கல்வியில் சிறந்து விளங்கிய ஒருவர் தான் திரு
கோணமலை வே. அகிலேசப்பிள்ளை ஆசிரியர் ஆவார். இவர் பெரும் கல்விமானாக திகழ்ந்து, பிறர் நூல்கள் வெளியிட உதவி செய்தும், பதிப்பித்தும் கொடுத்துள்ளார். தானும் சில நூல் களை எழுதியும் பதிப்பித்தும் வெளியிட்டுள்ளார். கண்டி ராசன் கூத்து எனும் நாடக நூலை எழுதி மேடை யேற்றியும் உள்ளார். இக்கூத்து நூல்
கையெழுத்துப்பிரதியாகவே இன்னும் மரசிங்கம்
' உள்ளது. அத்துடன் அக்காலத்தில் வெளிவந்த பல அரிய நூல்களை சேகரித்து தம் இல்லத்தையே புத்தகாலயம் ஆக்கியுள்ளார். அறிஞர் வே. அகிலேசப்பிள்ளையவர்கள் இங்கு பல புத்தகங் களை பதிப்பித்து வெளியிட்டு உதவியது போல் இக்காலத்திலும் ஒருவர் பதிப்பித்து வெளி யிட்டுள்ளார். ஈழத்து இலக்கியச்சோலை என்னும் அமைப்பை நிறுவி அதன் மூலம் இக்கலத்தில் பல புத்தகங்களை பதிப்பித்து வெளியிட்டுள்ளார் த.சித்தி அமரசிங்கம் என்பவர். இவர் யாழ். எனும் கையெழுத்து பிரதியை வெளியிட்டதுடன் நாடகத் திலும் ஈடுபாடு கொண்டு உழைத்துள்ளார். இன்னு மொருவர் திருகோணமலையில் இதுவரையும் நிலவி வந்த கலை இலக்கிய வரலாறு தடங்களை
66/பங்குனி 2014

Page 9
ஆராய்ந்து கலை, இலக்கிய, நாடக, இசை வரலாறு என பகுத்து எழுதி முக்கியதொரு நூலாக வெளியிட்டுள்ளார் சி.நவரட்ணம் எனும் திருமலை நவம். இவர் கவிதை, சிறுகதை, நாவல் எனும் துறைகளிலும் ஈடுபட்டு உழைத்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்நியர் ஆட்சியிலோ அதற்கு முன்போ புனைகதை வரலாற்றையோ மக்கள் வாழ்வையோ, சமூகத்தை பகைப் புலனாகக் கொண்ட படைப்புகளையோ, கதைகளையோ காண்பது
அரிது. கங்கை காவியம், குறிஞ்சா காவியம், குட்டிக்காளிகாவியம் என சில நாட்டார் இலக்கியம் அங் கொன்றாக இங்கொன்றாக காணக் கிடைப்பினும், படைப்பிலக்கியம் ரீதியாக வெறுமையே காணப்படுகின்றது. சரவணமுத்துப் பிள்ளையின் மோகனாங்கி நாயக்கர் காலத்தை ஒட்டிய காதல் கற்பனைக் கதையாகும். அதுபோல் எஸ். இன்னாசித்தம்பியின் ஊசோன் பாலந்தை கதையும் ஒரு தழுவல் கதை என்றே கூறப்படு கின்றது. இப்படி இருக்கையில் இவர்களை விட ஒருவர் வித்தியாசமாக போர்த்துக்கீசர் காலத்தை ஒட்டி நடந்த சம்பவத்தை வைத்து ஆங்கில நாவல் ஒன்றை எழுதி 1932 ஆம் ஆண்டில் வெளியிட்டு உள்ளார். அது தான் இன் த டேஸ் ஒவ் சாம்பசிவா (In The Days Of Sambasiva) ஆகும். இதனை எழுதியவர் ரி.ஐசக் தம்பையா ஆவார். இவர் போர்த்துக்கீசர் கோணேசர் கோவிலை இடித்து அழிப்பதையும் அழிக்குமுன் கோணேசர் கோவில் சட்டதிட்டங்களையும் கோயில் அமைப்பு வரலாற்றையும் சாம்பசிவா என்ற பூசகரை மையமாக முன் வைத்து நகர்த்துவதாகவும் பின்னர், கோயில் அழிந்த பிற்பாடு அதன் விக்கிரகங்களையும் மற்றும் பூஜை பொருட் களையும் பூசகர்களும், தொழும்பர்களும் மறைத்து காப்பாற்றுவதையும் கூறுவதாக சொல்லப்படு கின்றது. இது போர்த்துக்கீசர் காலத்தின் வடுவாக கூறப்படும் ஆலயங்களை அழிக்கும் கலாசாரத்தின் பண்புகளை கூறுவதாக அமையலாம். இன்று மேற்படி மூன்று நாவல்களும் கிடைப்பதாக இல்லை. யாரேனும் வைத்திருப்பின் அறியத் தந்தால் பயன்பாடாக இருக்கும்.
அந்நியர் ஆட்சி நீங்கி எம்மவர் ஆட்சி வந்தது எனக்கூறி ஒரு ஆட்சி மாற்றம் வந்தது. ஆனால் அரசு இயந்திரம் பழைய கதியிலேயே இயங்கியது. மக்களுக்கிடையே இனமுரண்பாடு கள், மற்றும் சமூக முரண்பாடுகள் வெளிப்படை யாக தோன்றத் தொடங்கின. இந்த நிலையில் இலக்கியவாதிகள் இடையே தேசிய இலக்கியம் என்ற கொள்கை வேரோடியது. எமது நாட்டு மண் வளம், மக்களின் வாழ்வு பிரதிபலிக்க
07/ ஜீவநதி - இதழ் 6

வேண்டும், கற்பனையில் கனவு காணாமல் நிஜ வாழ்வில் கற்பனைகளைக் காணவேண்டும் என்ற அவா மேலோங்கியது. பண்டிதர் களின் பழமைவாத போக்குக்காகவும் சாடி நின்றது. இந்த நிலையில் புதிய போக்குகள் வரத்தொடங்கின. திருகோண மலையிலும் இதன் தாக்கங்கள் எழுந்ததால் புதிய தொரு இலக்கியப் போக்கு எழத் • தொடங்கியது. இது கொட்டியா புரப்பற்றுவில் இருந்தே மலரத் தொடங்கியது. கொட்டியா புர மக்களின் வாழ்வு, கலாசாரம் மண்கமழ ஒருவர் இலக்கியம் படைக்க லானர். அவர் தான் வ.அ.இராசரத்தினம் ஆவார்.
மூதூர் மக்களின் ஆசாபாசங்கள், மூதூர் பிரதேசத்தின் வாழ் நிலங்கள் கடல் சார்ந்த, வயல் சார்ந்த மக்களின் பிரச்சினைகளை இலக்கிய மாக்கி வெளி உலகிற்கு தெரியப் படுத்தினர். இவர் நாவல்களையும் சிறுகதை களையும் ஏராளமாக படைத்தாலும், வ.அ.இராச ரத்தினத்துக்கு புகழ் சேர்த்தது சிறுகதை இலக்கியமே. இவரின் தோணி என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய மண்டலப் பரிசும் கிடைத்தது. அக்காலத்தில் பெரிதும் பேசப்பட்டது. பிறபாடு இவரின் நாவல் ஒன்றுக்கும் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்துள்ளது.
வ.அ.இராசரத்தினத்தின் சிறுகதை தொகுப்பிற்குப் பின் மூதூரைச் சோந்த அமா னுல்லாவின் வரால் மீன்கள் என்ற சிறுகதைத் தொகுப்பிற்கும், நந்தினி சேவியரின் நெல்லி மரப் பள்ளிக்கூடம் என்ற தொகுப்பிற்கும் திருகோண மலையில் சாகித்திய மண்டலப் பரிசுகிடைத்து உள்ளது. இதில் நந்தினிசேவியர் ஏற்கனவே அயற்கிராமத்தைச் சேர்ந்தவர் என்ற சிறுகதை தொகுப்பையும் வெளியிட்டுள்ளர். இவர்களை விட வேற சிலரும் சிறுகதைகளை எழுதி வெளியிட்டு வருகின்றனர்.
இன்றைய இயந்திரகதி தேசத்தில் வாழ்வு ஒடும்போது காலவேகத்தில் பலவும் மறக்கப்பட்டு விடுகின்றன. பலர் சிறுகதைகளை எழுதி வந்தா லும் மறந்துபோகும் நிலையிலேயே உள்ளனர். முன்பு க.சா.அரியநாயகம் என்பவர் நன்கு எழுதி வந்தாலும் இன்று அவர் பேசப்படுவது இல்லை. அவரின் தொகுப்புகளும் இல்லை. திருமலை சுந்தா தனது அம்மா பதிப்பகம் மூலம் தனது சிறுகதைகளை தொகுத்து வெளியிட்ட வரு கின்றார். இவரின் “வேள்வி" என்ற சிறுகதை தொகுப்பு முன்பு சிரித்திரன் வெளியீடாக வந்துள்ளது. அதேபோல் மூதூரைச் சேர்ந் தோரின் தொகுப்புகளும் வந் துள் ளன. எ.எஸ்.உபைத்துல்லாவின் "ஜலசமாதி" மற்றும் மு. ராஜ் கபூர், கனகசபை தேவகடாட்சம்,
56 பங்குனி 2014

Page 10
ந.பா
என்.சித்திரவேல், கே.எம்.எம்.இக்பால், ராணி சீறீதரன், சித்திரா நாகநாதன், திருமலை நவம், வீ.கெளரிபாலன், வீ.என்.சந்திரகாந்தி, கிண்ணியா அமீர் அலி, அண்மையில் சூசை எட்வேட் என்ப வரும் தனது “இவன் தான் மனிதன்" என்ற தொகுப்பை வெளியிட் டுள் ளார். இப்படியாக பலரும் எழுதியும் , வெளியிட்டும் வருகின்றனர்.
வ . அ . இராசத தான ம காலத்திலேயே இன்னொரு பெண் எழுத தாளா ஆன தருமத? ந.பாலேஸ்வரி இன்னொரு விதத்தில் புகழ் பெறுகின்றார். ஜனரஞ்சகமான நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதி வாசகர்களின் அன்பை பெற்று விடுகின்றார். தமிழகத்தில் லக்ஷ்மி போன்ற பெண் எழுத்தாளர்கள் போல் ந.பாலேஸ்வரியும் நிறைய நாவல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவரின் “சுடர் விளக்கு” என்ற முதல் நாவலே வாசகர் பலரை கவர்ந்து இவருக்கு பிரபல்யத்தை தேடிக் கொடுத்துவிடுகின்றது. தொடர்ந்து நாவல், சிறுகதை என எழுதி புகழ் சேர்த்து உள்ளார். பின்னாளில் இவரைப் போல் பல பெண் எழுத் தாளர்கள் உருவாகி உள்ளனர். அவர்களில் ராணி சிறீதரன் நாவல், சிறுகதை என நிறைய எழுதி வருகின்றார். மற்றொருவர் திருமதி அஸ்ரபா நூர்டீன் கவிதைத் துறையில் புகழ் பெற்று வருகின்றார். அண்மையில் இவர் தனது கவிதைத் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டு வைத்துள்ளார். ஜெயா தமிழினி என்பவரும் தனது கவிதைத் தொகுப்பை வெளியிட்டுவைத்துள்ளார். இப்படி யாக பெண்களும் எழுதி வருகின்றார்கள்.
வ.அ.இராசரத்தினத்தின் தோழனாக இருந்து கவிதையில் புகழ் ஈட்டியவர் கவிஞர் அண்ணல் ஆவார். வ.அ.இராசரத்தினம் சிறுகதை என்றால் என்.எஸ்.எம்.சாலி என்ற அண்ணல் கவிதைத் துறையில் பெயர்
தாமரை எடுக்கின்றார். கிண்ணியாவை சேர்ந்த அண்ணல் தனது அண்ணல் கவிதைகள் என்ற தொகுப்பை அக்காலத்திலேயே அரசு வெளியீடாக வெளி யிட்டுள்ளார். இவரின் வேறு தொகுப்புகள் வந்ததாக தெரிய வில்லை. இவரைப்போல் நிறைய கிண்ணியாவில் இருந்து உதயம் ஆகி உள்ளனர். இவர்களுள் கிண்ணியா ஏ.எம்.எம்.அலி என்பவர் குறிப்பிடத்தக்கவர். கிண்ணியாவின் அயற் கிராம் மான ஈச்சந்தீவை பிறப்பிடமாகக் கொண்டவர் முது பெரும் கவிஞர் தாமரைத்தீவான். மரபுக்
08/ஜீவநதி - இத

லேஸ்வரி
கவிதைகள் எழுதுவதில் பெயர்பெற்றவரான இவர் பல கவிதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.அ) சோ.இராஜேந்திரம் எனும் பெயர் உடைய இவரின். பிறந்த இடம் தாமரைக்கேணி ஆகும். இது ஈச்சந் தீவில் வருகின்றது. இவரின் அடுத்த ஊரான
ஆலங்கேணியில் இருந்து கவிதை படைப்பவர்கள் அ.கௌரிதாசன் , கேணிப்பித்தன் எனும் ச.அருளானந்தம் என்போர் அடங்குவர். எம்.தர்ம ராஜா என்ற பெயர் உடைய ஈழவாணன், கவிதை, கட்டுரை என எழுதியவர் அக்கினிப் பூக்கள் எனும் கவிதை இதழை வெளியிட்டு பெயர் பெறுகின்றார். திருகோணமலை கவிராயர் எனும் வில்வராஜா சிலேடைக் கவிதைகள் படைப்பதில் வல்லவர். திருகோண
மலையில் பிரசித்தமான அவரின் கவிதைத் தொகுப்புகள் ஒன்றும் வெளி வரவில்லை. மற்றுமொரு மூத்த கவிஞர் ஆன பே.கனகரத்தினம் என்ற ஷெல்லிதாசன் நீண்ட காலமாக எழுதி வந்த போதும் அண்மையில் தான் தனது "செம்மாதுளம் பூ", "நகர வீதியில் நதிப்பிரவாகம் ஆகிய கவிதை - தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
கவிதை இலக்கியம் எனும் போது திருகோணமலை மாவட்டத்தின் பிற பகுதிகளான கிண்ணியா, மூதூர், தம்பலகாமம், நிலாவெளி என பல இடங்களில் இருந்தும் பலர் கவிதைகள் எழுதி
வருகின்றனர். கவிதை தொகுப்புகள் பலவும் வெளிவருகின்றன. இது மற்றைய துறைகள் ஆன நாவல், சிறுகதை, விமர்சனம் என்பவற்றை விட அதிகம் ஆகும். சம்பூரிலிருந்து எழுதி வரும் ச. யோகானந்தன் "உண்மை என்றும் உயர்வு பெறும்” எனும் கவிதைத் தொகுப்புக்குச் சாகித்திய மண்டலப் பரிசும் பெற்றுக் கொள்கின்றார். அதன் பின்பு அதே யிடத்தைச் சேர்ந்த ப. சுயந்தன் "நிலம் பிரிந்தவனின் கவிதை"
என்ற தொகுப்புக்குப் பெறுகின்றார். இப்படி யாகக் கவிதைக்கு இருவர் சாகித்திய மண டலப் பரிசு பெறுகின்றனர். திரு கோணமலையிலிருந்து 'நீங்களும் எழுதலாம்” எனும் கவிதை இதழ் ஒன்றும் வெளிவருகின்றது. இதனை எஸ். ஆர். தனபாலசிங்கம் வெளியிட்டு வரு கின்றார். இன்னும் க.கோணேஸ்வரன், மைக்கல் கொலின், தம்பி தில்லை முகிலன், நிலவின் தாசன், மூதூர் முகைதீன், சிகஸ்டி தாசன், சேனையூர் அச்சுதன், வதனரூபன், ஞானராசா, திருமலை சந்திரன், கெஜதர்மா எனப்
ரத்தீவான்
ழ் 66 பங்குனி 2014

Page 11
வ.அ.
பலர் கவிதை படைத்து வருகின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தில் மூன்று இன மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இவர் களிடத்தில் சகஜ உணர்வே கூடுதலாக உள்ளது. சில சமயம் அரசியல் பித்தலாட்டம் காரண மாகவும்
அரசியல்வாதிகளாலும் சகஜ உணர்வு பாதிக்கப்பட்டு இன மோதல்களும் ஏற்படுவது உண்டு. என்றாலும் சமூக உ ற வு க ள' சு மு க ம ா க வே காணப்படுகின்றன. சில இடங்களில் சமூக உறவுகள் பலப்பட்டு இன உறவுகளும் இணைவு களும் ஏற்பட்டுப் பலமான உறவுகள் ஏற்படுவதும் உண்டு. இரத்த உறவுகளும் ஏற்படுவது உண்டு. இது திருகோண மலையில் மட்டுமல்ல, பல இன மக்கள் வாழும் எல்லா இடங்களிலும் ஏற்படுவது சகஜம். இந்த விதத்தில் இரு இனங் களுக்கு இடையில் ஏற்படும் இணைவை, அதன் பிரச்சினைகளை மையமாக வைத்து நாவல் எழுதிச் சாகித்திய மண்டலப் பரிசும் பெற்று விடுகின்றார் திரு.க. அருள்சுப்பிரமணியம். அக்கால கட்டத்தில் அவரின் “அவர்களுக்கு வயது வந்து விட்டது" என்ற நாவல் மிகவும் பேசப் பட்டது ஆகும். அவர் வேறு பல நாவல்களையும் சிறந்த சிறுகதை களையும் எழுதியுள்ளார். ஆனந்த விகடன் நாவல் போட்டியில் தேர்வும் பெற்றுள்ளார். நாவலுக்கு என்று திருகோணமலையில் முதல் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றுத் தொடங்கி வைக்கின்றார். அவரின் பின்பு தான் வ.அ.இராச ரத்தினத்திற்கு “மண்ணில் சமைத்த மனிதர்" என்ற நாவலுக்குச் சாகித்திய மண்டலப் பரிசு கிடைக்கின்றது. அதன் பின்பு ச.அருளானந்தன் என்ற கேணிப்பித்தனுக்குக் கிடைக்கின்றது. சிறுவர் இலக்கியத்திற்கும் இளையோர் நாவலுக்கும் கிடைக்கின்றது.
திருகோணமலையில் நாவல் இலக்கியம் பெரிதாக வளரவில்லை என்றே கூற வேண்டும். வ. அ.இராச ரத்தினத்திற்குச் சிறுகதைகள் புகழ் சேர்த்த அளவிற்கு நாவல் புகழ் சேர்க்க வில்லை என்றே கூற வேண்டும். ந. பாலேஸ்வரியும் நிறைய ஜனரஞ்சக மான நாவல்கள் படைத்தபோதும் அவை தொடர்கதையாக வாசகர் களைக் கவர்ந்த போதும் நாவல் என ற க ட டு க குள் பேசப் பட வில்லை. ஓரளவுக்கு அருள் சுப்பிரமணியம் தான் பேசப்படுகின்றார். மற்றும் தாபி. சுப்பிரமணியம், வி. தில்லைநாதன், மைக்கல் கொலின், வீ.என். சந்திரகாந்தி, கே. எம். இக்பால், எழிலோன் எனப் பல பேர்கள் நாவல் எழுதி வெளியிட்டுள்ளார்கள். அ. அ. ஜெயராசா என்பவர் சேகுவரா, அப்பா என இரு நாவல்களை எழுதி வெளியிட்டுப் பேசப் பட்டாலும் அவை பரவலாகக்
09/ஜீவநதி - இத

கிடைக்கவில்லை. சூசைப்பிள்ளை றோபேட் எனும் கோவிந்தன், "புதியதோர் உலகம்” எனும் நாவலையும் சில சிறுகதைகளையும் எழுதிப் பேசப் பட்டாலும் அவரது நாவல் பெருஞ் சர்ச்சைக் குள்ளானது என்பதும் கவனிக்கப்பட வேண்டும்.
பரிசுகள் எனும்போது தற்காலத்தில் பல அமைப்புகளும் பரிசுகளை வழங்கு கின்றன. அதை விட மாவட்ட, மாகாண சபைகளும் பரிசுகள் வழங்கி வரு கின்றன. முன்பு சாகித்திய மண்டலப் பரிசே பெரிதும் சிலாகித்துப் பேசப்பட்ட துண்டு. இன்று எங்கு பரிசுகள் பெறு கின்றார்கள் என்பதே தெரிவ தில்லை. பலரும் பலதுக்கும் பெறுகின்றார்கள்.
இதனால் பரிசுகளும் கவனம் பெறாமலே
ராசரத்தினம்
போய் விடு கின் றன . இப் படிப்
பார்க்கும்போது இங்கும் பலரும் பல பரிசுகள் பெற்றதைக் கவனிக்க முடியும்.
இலக்கிய அமைப்புகளும் நிறையத் திருகோணமலையில் தோன்றி மறைந்துள்ளன. இவற்றில் முன்னோடிகள் என்ற கலை- இலக்கிய அமைப்பு இலங்கையளவில் பெரிதும் பேசப்பட்ட அமைப்பாகும். அமைப்புகள் காலத்துக்குக் காலம் தோன்றி இலக்கிய உத்வேகத்தையும் எழுத்தாளர் களையும் உருவாக்கி யுள்ளன. ஆரம்பத்தில் மூத்த எழுத்தாளர்களால் தோற்றுவிக்கப்பட்ட திருகோணமலை தமிழ் எழுத்தாளர் சங்கம், பிற்பாடு கலை- இலக்கிய வட்டம், முன்னோடிகள், புதுமை நெஞ்சம், சங்கப் பலகை என்பன குறிப்பிடத் தக்கன. இன்று எஸ். ஆர்.தனபால சிங்கத்தின் நீங்களும் எழுதலாம் வாசகர் வட்டம் துடிப்புடன் இயங்கி வருவதையும் குறிப்பிடலாம்.
நாளும் பொழுதும் கால் மாற்றத்துக் கேற்ப மாறுவதுண்டு. முன்னைய காலகட்டம் இல்லை இன்று. காலம் வளர்ந்து கொண்டே இருப்பதுடன் மாறிக் கொண்டும் இருக்கும். இன்று தொழினுட்பங்கள், தொழில்கள், ஊடகம் என்பன வளர்ந்து விட்டன. பொழுதுபோக்கும் இன்று வீட்டுக்குள் முடங்கி விட்டது ஏனென் றால் சாதனங்கள் வீட்டுக்குள்ளும் வளர்ந்து விட்டன. அதே போல் மக்கள் வாழ்வு சமூக கலாசார பண்பாட்டு அம்சங்களும் மாறிக் கொண்டு தான் இருக்கின்றன. சமூக அரசியல் தளங்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை. இந்நிலை யில் இலக்கிய மும் மாற்றத்தைப் பிரதிபலிக் கின்றது. இதற்குத் தனிமனிதனும் விலக்கில்லை. மாற்றத்தை ஏற்கத்தான் வேண்டும். அந்த வகை யில் திருகோணமலை மாவட்ட இலக்கியங்களும் மாற்றங்களைப் பிரதிபலிக்கத் தான் செய்யும்.
66 பங்குனி 2014

Page 12
கே.எம்.எம்.இக்பால்
கிண்ணியா
ரண்டு இலட்சம்
388%ssi... :
களிலும், போது இதயத்துடிந்துபோனாள்.
“ஏன் இப்படிக்கத்துறீங்க...”
சாந்தனின் வார்த்தைகளின் உஷ்ணம் உயர்வாக இருந்தது.
அது கேட்டு, காமாட்சி இடிந்து போனாள்.
அவளது இதயத்தின் எல்லா அறை களிலும், சோக இருள் சூழ்ந்தது.
உள்ளத்தில் படர்ந்த சோகமேகத்தி லிருந்து, கண்ணீர்த்துளிகள் பிரவசமாகின.
இதயவானில் இதுவரை வீசிய இன்பத் தென்றல், தன் முகவரியைத் தொலைத்தது.
இருபத்தியைந்து வருடங்களாக உள்ளத்தை ஈரப்படுத்திக் கொண் டிருந்த சாந்தனின் அன்பு நதி, ஒரு கணத்தில் வற்றிப் போய்விட்டது என்ற உணர்வு, காமாட்சிக்கு ஏற்பட்டது.
தலையிடிக்குரிய குளிசை வாங்கி வருமாறு சொல்லத்தான், அவள் தன் மகன் சாந்தனை அழைத்தாள்.
அவ்வாறு அழைத்ததற்குத்தான், உள்ளத்தை பொசுக்கும் வார்த்தைகளை அவன் உதிர்த்துள்ளான்.
சூரியனது பொற்கதிர்கள் பட்டு இருள் காணாமல் போனாலும், காமாட்சியின் உள்ளத் தில் சோக இருள் வந்து அமர்ந்து கொண்டது.
அவளது உள்ளத்திலே மலரத்தயாராக இருந்த சந்தோச மொட்டுக்கள், இதழ் விரிக்க முன்பே வாடிவிட்டன.
இரவு முழுவதும் விழிகள் மூடுவதற்கு வேலை நிறுத்தம் செய்ததால், அவளுக்கு பசி ஏற்பட்டது.
எனினும் தேநீர் குடிக்காதே என்று, தன்மானம் அவளுக்கு உத்தரவு போட்டது.
அப்போதே இk83:43:33:39:42:25x2811488:23.248:2' & Wht ht கபாலல்லாத0558943இத்தகம்
10/ ஜீவநதி - இதழ் 6

அன்பில்லாமல் தரும் உணவு, தாமரை இலைத்தண்ணீர் போன்றது.
அது உடலில் ஒட்டாது.
காலையில் சாந்தன் கூறிய வார்த்தை களே, அவனது உள்ளத்தில் ஒலிபெருக்கியாய் மீண்டும் மீண்டும் அலறின.
"ஏன் இப்படி கத்துறீங்க...?”
அந்த வசனம் அவளின் நம்பிக்கை வேர்களில், நச்சு நீராய் விழுந்தது.
அவ்வாறு சாந்தனா சொன்னான்...?
காமாட்சிக்கு நம்புவது கடினமாக இருந்தது.
கண வன் மறைந்ததால் வழிந்த. கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, மகனுக் காகமீண்டும் எழுந்து நின்றவள் அவள்.
மகனின் வாழ்க்கைப் பயிருக்கு, அவளது கண்ணீரே நீராக அமைந்தது.
அவள் செய்த தியாகங்களுக்காக, அவன் காலையில் அழகிய நன்றி மாலையை அணிவித்துவிட்டான்.
அவனது உள்ளம், கல்லெறிந்த குளம் போல், குழம்பிப் போனது. அவனது வாயிலிருந்து வந்த சூறைக்காற்று, காமாட்சியின் உள்ளத்தில் கட்டப்பட்டிருந்த அன்பு மாளிகையை, தகர்த்து விட்டது.
காமாட்சியின் ஞாபக வானவீதியில், ஒருவாரத்திற்கு முன்பு நடந்த சம்பவம் மின்ன லென வந்து சென்றது.
56/பங்குனி 2014

Page 13
'?து. *
அன்று...
யன்னலினூடாக அனுமதியில்லாது உ நுழைந்த காற்று, சற்று வீரியத்துடன் செயற்பட்ட தால் மேசைக்கு மேலே இருந்த சில பொருட்கள், இடம்பெயர்ந்தன.
காற்று வலிமையான பொருட்களுடன் மட்டும், நட்புகரம் நீட்டியது.
இடம் மாறிய பொருட்களுடன், நீர் நிரம்பிய ஒரு பாத்திரமும், உள்ளடங்கியிருந்தது.
நிலத்தில் புரண்டு மகிழ்ந்த அப்பாத் திரத்திலிருந்து வெளியேறிய நீர், அறையின் பெரும்பகுதியை நீரினால் அபிசேகம் செய்தது. அறையின் ஈரத்தை துடைக்க வேண்டும் என்ற எண ணத்தை, அவளது உள்ளம் முன் மொழிந்தது.
ஆனால் அதனை ஆமோதிக்க உடல் மறுத்தது.
அறையின் நீர் வற்றமுன்பு ...
ஒரு சூறைப் புயல் மருமகள் சரசு உருவில், அந்த அறையை எட்டிப்பார்த்தது.
அதன் இரு விழிகளும் தண்ணீரைப் படம்பிடித்தன.
அடுத்த வினாடி ... ரிச்டர் அளவினையும் தாண்டி ....
அந்த அறையில் பூகம்பம் தொழிற் பட்டது.
சரசுவின் வாயிலிருந்து வெளியாகிய கோபக்குழம்பு, காமாட்சியின் உள்ளத்தைச் சுட்டது.
அந்த செயற்கை அனர்த்தம், பக்கத்து வீட்டார்களின் செவிகளுக்கும் தெளிவாகவே கேட்டது.
ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த இந்நிகழ் வினால், காமாட்சியின் உள்ளத்தில் ஏற்பட்ட காயம் இன்னும் ஆறாமலே இருந்தது.
இன்று அதைவிட பெரிய காயத்தை, மகன் ஏற்படுத்தியிருக்கிறான். இவ்வளவு காலமும் தென்றலாக இதம் தந்த சாந்தன், இன்று தாழமுக்கத்தால் உருவான புயல் போல் மாறி விட்டான்.
அவளது உள்ளத்தில் முளைவந்து வேர்விட்டு, கிளைபரப்பி, ஓங்கிவளர்ந்த பாச மரம், சாந்தனின் வார்த்தைகளால் வேரோடு மண்ணில் சாய்ந்து போனது.
காமாட்சி தன் கணவனோடு, இல்லறப் படகில் இனிதாகப் பயணித்த காட்சிகள்,
அவளது மனத்திரையில் மறு ஒளிபரப்பாகின.
அவர்களின் இன்பமாளிகையின் ஒளி,
H/ ஜீவநதி - இதழ் 6

பார்த்த கண்களை வசீகரித்தது.
நாட்கள் நிமிடங்களாக அவர்களுக்கு மட்டும் தெரிந்தன.
அவர்களது வாழ்க்கைப் பூங்காவில் மலர்ந்த ஒவ்வொரு நாள் மலரும், ஒவ்வொரு மணத்தை வழங்கி இதயத்தை நிரப்பியது.
மகிழ்ச்சி தேய்ந்த அந்த வாழ்வுக்கு, நீடித்த ஆயுள் இருக்கவில்லை.
அவர்களது இன்பப் பயணத்தை எமன் கைகாட்டி நிறுத்தினான்.
சாந்தன் பிறந்து ஒரு வருடத்திலேயே, விபத்து என்ற வடிவில் காலன் அவர்களது முகவரிதேடி வந்தான்.
அதனால் சந்தோசப் பறவையின் இறகுகள் கத்தரிக்கப்பட்டன.
இதழ்களின் விளிம்புகளில் நிலையாக இருந்த புன்னகை, காணாமல் போனது.
நாளடைவில், காமாட்சி மகனின் உருவில் கணவனைக் கண்டாள். அதனால், அவளது இதயத் தோட்டத்தில் மகிழ்ச்சிப் பூக்கள், மீண்டும் மலர ஆரம்பித்தன.
நம்பிக்கை வேர் அவள் உடலெங்கும் பரவி, உற்சாகம் நிலைத்திருக்க உதவியது.
மகனின் எதிர்காலம் அகலத் திறக்க வேண்டும் என்பதற்காக, பல இரவுகள் அவளின் விழிகள் இணையவில்லை
இவ்வாறு வளர்த்த மகன், இன்று இத்தகைய வார்த்தையைச் சொல்லிவிட்டான்.
நினைக்கும் போது, புவியின் ஆழத்தில் கொதிக்கும் தீக்குழம்பாக, அவளது உள்ளமும் கொதித்தது.
இரவு முழுவதும் உறக்கத்தைத் தடை செய்வதில் வெற்றி கொண்ட தலையிடி, சென்ற தடம் தெரியாமலே மறைந்து போனது.
"செத்தாலும் பரவாயில்லை இனி... என வருத்தத்தை யாருக் கும் சொல்ல மாட்டேன்...” என்று அவனது உள்ளம் முர சறைந்தது.
படுக்கைகுத்தும் முள்ளாக மாறியது.
சூரியனின் கதிர்களில் சில அவளது அறைக்குள் தலைநீட்டி, அவளிடம் நலம் விசாரித்தன.
கட்டிலிலிருந்து எழவேண்டும் என்று உள்ளம் நிறைவேற்றிய தீர்மானத்தை, உடல் நடைமுறைப்படுத்த மறுத்தது
கட்டிலிருந்து எழும்புவதற்கு கடுமை யான போராட்டம் நடத்த வேண்டி இருந்தது.
அறை யன்னலை நோக்கி அவளது
56/பங்குனி 2014

Page 14
பாதங்கள், ஊர்ந்து சென்றன.
யன்னலுக்கூடாக வீசிய காற்று, காமாட்சியின் உடலைத் தழுவிச் சென்றது.
அக்காற்று அவள் உள்ளத்தில் ஆறுதலை ஏற்படுத்தியது. பக்கத்தில் இருந்த சுடுகாட்டில் வளர்ந்த நெடுமரங்கள், காற்றின் கீதத்திற்கு ஏற்ப தலையசைத்தன.
அவை கைகளை நீட்டி தன்னை அழைப்பதாக காமாட்சிக்குத் தோன்றின.
"நீ விரும்பும் நிரந்தர நிம்மதி என்னிடம் உள்ளது விரைந்து வா” என்று அழைப்பதாகவே,
அவள் கண்களுக்குத் தெரிந்தது.
சுடலையிலிருந்து கிளம்பிய புகை, மேலெழுந்து வளிமண்டலத்தில் கரைந்து, காணாமல் போனது.
இன்று ஒரு ஆத்மாவுக்கு நிரந்தர ஓய்வை வழங்கி விட்டேன் என்ற மகிழ்ச்சி யினால், அது மேலெழுந்ததாகவே காமாட்சிக் குத் தோன்றியது.
பாசமழை பொழிந்து வளர்த்த மகன் விசக்காற்றாய் மாறியதால், மூச்சுத்திணறி அந்த ஆத்மா மரணத்தை தழுவியதோ...?
அல்லது....
வீட்டுக்கு விளக்கேற்ற வந்த மருமகள், வேதனைமுள்ளாக மாறி, நெஞ்சில் குத்தியதால் அது தன் உயிரை இழந்ததோ ...?
நானும் புகையாக மாறி, விண ணோக்கிச் செல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை... என்று நினைத்த போது....
காமாட்சியின் கண்களில் கண்ணீர் முத்துக்கள் திரண்டன.
அப்போது வாசல் பக்கத்தில் ....
வாலை ஆட்டும் நாய்க்கு சரசு பழைய சோற்றைப் போடும் காட்சி, காமாட்சியின் கண்களில் பதிவாகியது.
சரசுவின் முகம் பெளர்ணமி நிலவாக இருந்தது.
ஆனந்தமாக அவள் உணவு போட்டுக் கொண்டிருந்தாள்.
நான் நாயைவிட கேவலமாகிவிட்டேன்....
எண்ணிய போது காமாட்சியின் இதயம் கனத்தது.
இதயம் தரையில் விழுந்த மீன் போல், துடித்தது.
நன்றியுள்ள அஃறிணைக்கு நன்றி யில்லா உயர்திணை உணவு வழங்கிய காட்சி, காமாட்சிக்கு வேதனை விழுது, உள்ளத்தில் வேரூண்றவழிவகுத்தது.
12 கீவநதி - இதழ்

யன்னலோரப் புதுக்காற்று விதைத்த மகிழ்ச்சிப் பயிர்களை, சரசு பற்றிய சிந்தனை த வாடச்செய்து விட்டது.
உள்ளத்தில் சோகத்தை சுமந்தவளாக காமாட்சிதன் கட்டிலுக்குத் திரும்பினாள்.
அவளின் சிந்தனைத் திரையில், மீண்டும் பழையகாட்சிகள் நிழலாடின.
சாந்தனின் திருமணத்திற்கு மறு
நாள்...
சமையலறையில், காமாட்சி வேலை யோடு ஒன்றிணைந்தருந்தாள்.
அவளது கை பட்டதனால், சமயலறை யின் ஒளி அதிகரித்தது. ஒவ்வொரு பாத்திரமும் மின்னும் வரத்தைப் பெற்றது.
அவள் தயாரித்த உணவுப் பொருட் களின் சுவையும், மணமும் அவளது மனத்தைப் போலவே அமைந்திருந்தன. *
அப்போது.....
காமாட்சியின் தலை மெல்ல... சுற்ற ஆரம்பித்தது.
சூழவுள்ள பொருட்கள், தன்னைச் சுற்றி வட்டமிடுவது போன்ற உணர்வு, காமாட்சிக்கு ஏற்பட்டது.
பார்க்கும் திறன் பாதியாய் குறைந்து விட்டது போன்ற பிரமை.....
கால்கள் தமது பலத்தைப் பறி கொடுத்துவிட்டோம் என்று, பிரகடனம் செய்தன.
காமாட்சி அருகிலிருந்த தூணைப் பிடிக்க முயன்று தோல்வியடைந்து கீழே விழுந்தாள் ...
அவள் மீண்டும் கண் விழித்தபோது... சுற்றிலும்... உறவுகள்....
66 / பங்குனி 204

Page 15
கண்ணீரினால் நனைந்த முகங்கள்...
ஏதோ ஒன்று தன் உடம்புக்கு நடந்து F விட்டது என்று அங்கிருந்த சூழல் அவளுக்கு
பாடம் புகட்டியது ....
"என்ன நடந்தது?....”
என்று காமாட்சியின் கண்கள் சாந்தனிடம் வினவின.
" உங்களுக்கு ஒரு கிழமையாக ஒழுங்கான நித்திரையும் சாப்பாடும் இல்லாமல் உடல் நல்ல பலவீனமாய் இருக்காம். ஒரு கிழமைக்கு ரெஸ்ட் எடுத்தால் எல்லாம் சரியாகி விடுமாம் என்று டொக்டர் சொன்னார்”. சாந்தன் தாயிடம் மெதுவாகக் கூறினான்.
“அவர் அப்படித்தான் சொல்வார். புதுசா கல்யாணம் முடிச்ச உங்களை நான் தானே கவனிக்கனும்” .....
“எல்லா விடயங்களையும் நாங்க பார்த்துக்கொள்கிறோம்” என்று கூறிய சாந்தன் அம்மாவின் தலையைக் கோதிவிட்டான்.
கடல் தாயைக் காணத் துடிக்கும் ஆவலில், நுரைகள் பொங்க கற்களையும் பாறை களையும் உடைத்துக்கொண்டு ஆனந்தமாக ஓடும் ஆற்றைப்போல், அப்போது காமாட்சியின் உள்ளம் குதூகலித்தது.
பல வருடங்களாக சாந்தன் என்ற பாசப்பயிரை வளர்க்க ஊற்றிய கண்ணீர், வீண் போகவில்லை என்ற உணர்வு, அவனது உள்ளத்தில் மின்னலென ஒளிர்ந்தது.
காமாட்சியின் நினைவுத்திரையில், வந்து சென்ற நினைவலைகள், தற்போது அவளது உள்ளத்தை முட்களாக காயப்படுத்தின.
ஊண் உறக்கமின்றி உனக்காகவே வாழ்ந்த எனக்கு, இன்று நற்கூலி தந்துவிட்டாய்!
“தாரத்திற்கு பின்புதான் தாய்” என்பதை நெற்றியில் அடித்தாற்போல் சொல்லிவிட்டாய்!
பாசநிலவை காதல் மேகம் மறைத்து விட்டது.
அப்போது ...
திடீரென்று வீட்டுவாசலில் சத்தம் கேட்டது.
“வீட்டில் யாரு...?
"சாந்தன் சேர்... ஆஸ்பத்திரியிலே இருக்கார்...”
தொடர்ந்து ...
சரசு அலறும் சத்தம், வீடு முழுவதும் நிறைந்தது.
காமாட்சியின் எல்லா நரம்புகளிலும் பலம், மின்சாரம் போல பாய்ந்து சென்றது.
அவள் மெல்ல மெல்ல நடந்து,
13/ ஜீவநதி - இதழ்

வாசலுக்குச் சென்றாள்.
உள்ளத்தில் நிரம்பி வழிந்த துக்கம், உடலில் நடுக்கத்தை ஏற்படுத்தியது.
"தம்பி... சாந்தனுக்கு .... என்ன...?” "அவருக்கு ... விபத்து..."
அந்த வார்த்தை, கோடை இடியாய் அவளைத் தாக்கியது. சோகம், அவளது இதயத் தின் எல்லா இருக்குகளிலும் எதிரொலித்தது.
"தம்பி என்னையும் கூட்டிப்போங்க..."
சிறிது நேரத்தில் வைத்திய சாலையில் ... விபத்துப்பிரிவுக்கு முன்னால் ....
சோகத்தைப் போர்த்தியவர்களாக...
சரசுவும் காமாட்சியும் நின்று கொண்டிருந்தார்கள்.
நிலைகுலைந்துபோன சரசுவுக்கு, காமாட்சி கொழுகொம்பாக நின்றாள்.
கண்ணுக்கு முன் காயப்பட்ட கன்றைப் பார்த்த பசுவின் சோகம், காமாட்சியின் கண் களில் தெரிந்தது.
கடிகார முட்கள், நகர்வதற்கு தயக்கம் காட்டின. நீண்ட நேரத்திற்குப் பின்பு, விபத்துப் பிரிவை மூடியிருந்த கதவுகளின் இடைவெளி
அதிகரித்தது.
அப்போது அறைக்குள்ளிருந்து வந்த தாதிப் பெண்ணின் முகத்தில், அவசரம் தெரிந்தது.
அவள் அங்கு நீண்ட நேரம் ஆட்சி புரிந்த மெளனத்தை, முடிவுக்கு கொண்டுவந்தாள்.
"அவருக்கு உடன் ஒபரேசன் செய் யனும். இரண்டு இலட்சம் ரூபாவுக்கு ஏற்பாடு செய்ங்க...”
அதைக் கேட்ட சரசு, துடுப்பைத் தொலைத்த படகோட்டி போல், தவித்தாள்.
"நான் பணத்திற்கு என்ன செய்வேன்...” தன்னைக் கட்டியணைத்த சரசு வின் உதடுகள் மெதுவாக உச்சரித்ததை, காமாட்சி தெளி வாகவே கேட்டாள்.
காமாட்சியின் விரல்கள் , சரசுவின் விழிகளில் தேங்கிய நீரைத் துடைத்தன.
"கவலைப்படாதே... என் இறுதிச் சடங்கிற்காக, நான் சேமித்துவைத்த பணம் இரண்டு இலட்சம் இருக்கு உயிர் பிரிந்த பின் செலவழிக்க வைத்த பணம், உயிரைக் காக்க பயன்படட்டும்..."
அதைக்கேட்டதும்.... சரசு மாமியின் மடியிலிருந்து நழுவிக் கீழேவிழுந்தாள்.
அவளது விழிநீர், காமாட்சியின் பாதங்களைக் கழுவியது.
66 பங்குனி 2014

Page 16
சரியில்ல அக்காளின்.
க்காளின்ரை முகம் ஒரு கிழ ை சரியில்லை. கொலை செய்ய திட்டமிட்டவைய முகம் போலையோ களவெடுக்க தீர்மானிச்சவைய முகம் போலையோ வெளிறிக் கிடக்கு. எனக்கு அவ பாக்க பாவமாய் கிடக்கு .....
அவள் ஏதாவது செய்ய போய் அப்பா - விலை நான் பரிதாபப்படுகிற மாதிரி செய்து போடுவ எண்டு எனக்கு பயமாய்கிடக்கு.....
அப்பா அம்மாவுக்கு நாங்கள் மூண்டு பி கள்.... அக்காளும் நானும் மகளிர் கல்லூரி ஒண் உயர்தர, சாதாரண வகுப்புக்களிலை படிக்கிறம். ஆண்கள் கல்லூரி ஒண்டிலை படிக்கிறான்.
அப்பாயாழ்ப்பாணத்திலை இருந்து அரச வாய்ப்புக்கிடைத்து திருக்கோணமலைக்கு வந்து இ வருசமாகுது. நாங்கள் மூவரும் பிறந்தது இஞ்சைதா
நனவாகும்
அப்பா அடிக்கடி யாழ்ப்பாணத்தைப் பற்றிபு
"அங்கை என்ன படிப்பப்பா.... இல்லாட்டி வருமா..? எண்டு வாயை வாயைப் போட்டு அடிப்பா
இண்டைக்கு காலையிலை எழும்பின அராத்துப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
“சனிக்கிழமை கொஞ்சம் பிந்தி எழும்புவம் அக்கா கையில் " டூத் பிரஸ்” உடன் கிணற்றடிப்பக்க அழுதிருப்பாள் போலை....
அம்மா பாவம்... அப்பாவின்ரை செட்டு காரியம்தான்.
அப்பாவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சினேகித வாய்க்கொழுப்புதான்.
"நாங்கள் ஆர்தெரியுமே... கார் காத்த மே அவருடைய முகத்திலை ஒரு பெருமிதம் அநாயாசம்
ஆரையாவது முதற்றடவையாக சந்தித்த அவருடைய ஆக்களா? எவர் பகுதி ...? எண்ட கேட்பார் ......
வருபவர் அப்பாவின்ரை பகுதியெண்டா அப்படியில்லையெண்டால் வருபவர் பாவம் சோர்ந்து
ஒரு நாள் அப்பாவின்ரை கந்தோருக்கு பு; கலப்பு திருமணம் செய்திருந்தார். மனைவி உயர் பணிப்பாளரோடை மனம்விட்டு பேசியிருக்கிறார் ....
"எங்கடை பிரதம செயலாளர் இன்னார
வீ.என்.சந்
14/ கீவநதி - இதழ் |

மயாய்
ன்ரை ன்ரை பளைப்
அம்மா ாளோ
ள்ளை டிலை
தம்பி
வலை இருபது ன்.
கனவுகள் .
மழுகுவார்.
அங்கத்தயான் கலாச்சாரம் போல் வேறெங்கிலும்
ர்.
நேரம் தொடக்கம் அம்மாவோடை ஏதோ
எண்டால் ஆர்விடுகினை...” எண்டு புறுபுறுத்த படி கம் போகிறாள்... முகத்தை பார்த்தால் இரவிரவாய்
க் குணத்துக்கு அவா தாக்குப் பிடிக்கிறது பெரிய
பர்தான் இருக்கினம். அதுக்கு காரணம் அவரின்ரை
வளாளர் எல்லே..” எண்டு அவர் சொல்லேக்கை மாக தோன்றும். ரல் “நீர் எந்த ஊர் ... ? அங்கை எந்த திக்கு..? நீர் அநாவசியமான கேள்விகளைத்தான் முதல்லை
5 இருவரும் சேர்ந்து கொட்டம் அடிப்பார்கள்....
விடுவார். திய பணிப்பாளர் ஒருவர் வந்திருக்கிறார்... அவர் ' சாதிக்காரி எண்டு அப்பா எடுத்த தகவலின் படி
ம்...” எண்டு சொல்லி அப்பா சிரிச்சிருக்கிறார். திரகாந்தி
56/ பங்குனி 2014

Page 17
பணிப்பாளரின்ரைமுகம் கறுத்துவிட்டது.
பணிப்பாளரும் பிரதம செயலாளரும் : சொந்தக்காரர் எண்டு தெரிய வந்தபோது அப்பா பணிப் பாளர் முன் போய் அசடு வழிந்
திருக்கிறார் ....
அக்கா இப்பவெல்லாம் வேலை செய்ய போனால் தேவையில்லாமல் நியாயமான நேரம் மினக்கடுவாள். பல்லு தேய்ச்சு முகம் கழுவி வர அரைமணித்தியாலமாய் போய் ச்சு...... அவ்வளவுக்கு யோசனை .....
இதெல்லாம் அந்த அண்ணாவை அக்கா சந்திச்சபிறகு வந்த வினைதான்!
அந்த அண்ணா நல்லவர்..... அழகாய் உயரமாய் நிறமாய் வட இந்தியாக்காரன் மாதிரி இருப்பார். திருக்கோணமலை பாடசாலையில் படிச்சு கம்பஸ் போனவையிலை அவரும் ஒருத்தர்.
அக்கா அவரோடை கதைச்சுக் கொண்டிருக்கேக்கை அவர் வெட்கப்பட்டு வெட்கப்பட்டு நெளியிறதைப் பாக்க எனக்கு சிரிப்பு வரும். அக்காளின்ரை அழகு அவரை அப்படி நெகிழவைக்கு தெண்டு நினைப்பன்.
பேராதனையாலை சனி ஞாயிறுதான் அவர் ஊர் வருவார்... அந்த நாட்களிலேயே அக்கா ஏதாவது சாக்கு போக்க சொல்லிவிட்டு என்னையும் கூட்டிக்கொண்டு கோயில் எண்டோ கடைத்தெரு எண்டோ போவாள். அங்குதான் அண்ணாவை அவள் சந்திப்பாள்.
"அக்கா..... அண்ணாவை வீட்டை கூட்டிப் போவமடி ..." எண்டு ஒரு நாள் கேட்டேன்....
"அப்பாவோடை சமாளிக்க ஏலாது பிறகு பார்ப்போம்” எண்டு அக்கா மறுத்து
விட்டா ....
அக்காவுக்கும் அப்பாவிலை நம்பிக்கை யில்லை....! யாழ்ப்பாணத்திலை இருந்து அப்பாவின் நண்பர் ஒருவர் அடிக்கடி வருவார். அவரைக்கண்டால் போதும்... அப்பாவின் புழுகு எல்லை மீறிவிடும். அதற்கு காரணம் அவையள் இரண்டு போரும் ஓரே “கம்பஸில்” படிச்சவையெண்டோ அல்லது ஓரே திணைக் களத்திலை வேலை செய்தவையெண்டோ இல்லை... வேறென்ன! அவர்களுக்கு உரித் தான ஒரு கெடுபிடியான புரிந்துணர்வுதான்! அப்பா தன்ரை மற்ற நண்பர்களோடை கதைக்கேக்ேைக... அந்த நண்பரோடைதான் தனது பிள்ளைகளுக்கு கலியாண சம்மந்தம் வைக்க இருப்பதாக வாயடிப்பார். அதாலை
5 கீவநதி - இதழ்

அக்காவை பெண்கேட்டு எவராவது முன்வரக் கூடிய சந்தர்ப்பம் தடைப்படுவதை அப்பா புரிந்து கொள்ளவில்லை. அதே சமயம் அப்பாவின் நண்பருக்கும் அக்கா பற்றி எந்த "ஐடியா"வும்
இருக்கவில்லை!
இண்டு சனிக்கிழமையாயிருந்தும் அக்கா தன்னுடைய திட்டம் ஒன்றையும் எனக்கு. கூறவில்லை. எனவே நானே அவளை தேடி சந்தித்தேன்.
அவள் கட்டிலில் முகம் குப்புற கிடந்து அழுதுகொண்டிருந்தாள். என்னை கண்டதும் தன்னை சுதாகரித்துக்கொண்டு எழுந்தாள்.
"ஏன் அக்கா..... என்ன பிரச்சனை?”
“ஒண்டும் இல்லையடி இவன் தம்பி தேவையில்லாத வேலைகள் பார்த்துக் கொண்டு இருக்கிறான். முளைச்சு மூண்டு இலை விடேல்லை... என்ரை காதலை பற்றி அம்மாவிட்டை விமர்சித்திருக்கிறான்.” அக்கா கவலையுடன் கூறினாள்.
எனக்கு திக் எண்டது. "அப்ப நானும் மாட்டு ......!”
அம்மா என்னை ஒண்டும் கண்டிக்க வில்லை ஆனால் அதற்கு காரணம் என்ரை முகத்தை அவர் பாக்க விரும்பாதது தான். உன்னைத்தான் துளைச்செடுப்பா... கவனம். எல்லாம் உன்ரைகையிலைதான் இருக்கு...”
அம்மா பொறுமைசாலிதான். ஆனால் இப்படியான விசயத்திலை எப்படி நடந்து கொள்ளுவா எண்டு தெரியேல்லை. எனக்கு யோசனை பிடித்துவிட்டது.
இவன் தம்பி ஏன் இப்படி செய்தான். இவன் பெரிய ஆள் எண்டு இல்லை ..... முந்தி யொருக்கால் அக்காவட்டை கடிதம் வாங்கி தாறன் எண்டு கூறி ஒரு இளந்தாரியிட்டை காசு கேட்டிருக்கிறான். அவனும் அக்காவை காட்டு எண்டு கேட்க இவனும் எங்கையோ வைத்து காட்டியிருக்கான். அவனும் அக்காவிலை மருண்டு பெரும் தொகை பணத்தை குடுத் திட்டான். அந்த இளந்தாரியும் கடிதம் கேட்டு இவனுக்கு பின்னால திரிஞ்சிருகிறான். அவன்ரை கரைச்சல் மிகுதியாகி மிரட்டவும் தொடங்க இவனே ஒரு காதல் கடிதத்தை எழுதி அக்காவின்ரை கையெழுத்தையும் வைச்சு அவனிட்டை கொடுத்திட்டான்.
அந்த இடைவெளியிலை அந்த வாலிபன் அக்காவை தேடி தேடி “சைட்” அடிச் சிருக்கிறான். ஒரு நாள் அக்காவை நேரிலை எதிர்கொண்ட போது தான் தம்பியின்ரை கூத்து
56/ பங்குனி 2014

Page 18
உடைஞ்சுது.
இவன இப் ப அக்காவை பற்றி அம்மாவிட்டை போட்டுக்கொடுத்திருக்கிறான்.
பாப்பம் என்ன நடக்குதெண்டு....... - காலைச்சாப்பாட்டை ஆயத்தம் செய்த பிறகு தான் குசினியிலை இருந்து அம்மாவின் குரல் கேட்டது...
" எடி யேய்.... இளையவள் , வாடி இங்கே.....”
கோடை இடி எண்டு கதைக்கிறவங்கள். இப்ப தான் அது எனது செவிக்கு எட்டியிருக் கிறது. நெஞ்சு திக் திக் என அடிக்க வாயை பொத்தி கைகட்டி அம்மாவின் முன ஆஜரானேன்.
“என்னம்மா சத்தம் போடுறியள்...” சுதாகரித்துக்கொள்ளும் எனது முயற்சி...
“ என்னடி நடக்குது வீட்டிலை?”
"அதம் மா .... அப்பா சுவிஸிலை இருக்கிற தங்கச்சியை பற்றி புழுகிக் கொண்டிருக்கிறார்...”
அம்மாவின்ரை முகம் சிதம்பர சக்க ரத்தை கண ட பேய போலை விகார மடைஞ்சுது ...
“என்ன விளையாடிறியா...? நான் கேட்கிறது... எனக்கு தெரியாமல் இந்த வீட்டிலை என்ன நடக்குது எண்டு”
" என்னம்மா கேட்கிறியள்?”
நான் ஒரு அப்பாவி, எதுவும் அறியாதவள் எண்டு அபிநயம் செய்தேன்.
அம்மாவுக்கு அதற்கு மேல் பொறுமை இல்லை.....
"கொக்காள் என்னவாம்....?” "அதம்மா... அதம்மா...” "சொல்லடி நாயே...”
அம்மா பொறுமையாய் கேட்கும் போது நான் இழுத்தடித்தால் இனி பேய், கழுதை கூட
வீட்டு முத்தத்துக்கு வந்து விடும்!
"நான் சொல்லுறனம் மா... ஒரு அண்ணை அக்காவை விரும்புறார்..."
“அக்காள் விரும்பாமலோ...?”
"சொல்ல விடுங்கோவனம்மா.... அக்கா வுக்கும் விருப்பம்தான்... அந்த அண்ணாவை அவா ஒரு நாளும் தனிய சந்திக்கேல்லை... நானும் கூடத்தான் இருந்திருக்கிறன். அக்கா யோசிக்கிறாவேயல்லாமல் முடிவெதுவும் எடுக்கேல்லை. அம்மாவின்ரை விருப்பத்தை பெறாமல் அக்கா எந்த முடிவும் எடுக்க மாட்டா...” நான் உறுதியளித்தேன்.
16 கீவநதி - இத

இப்பதான் அம்மாவின் முகத்தில் கொஞ்சம் துணிவு தெரிஞ்சது!
" என்னவோ பிள்ளை .... அப்பாவின்ரை'! விருப்பத்திற்கு மாறாய் எந்த விசயமும் எங்கடை வீட்டிலை நடக்காது ... கொக்காவட்டை சொல்லு: அவாவின்ரை பேரையும் கெடுத்து எங்கடை குடும்ப பேரையும் கெடுக்க வேண்டாம் எண்டு...”
அக்காவுக்கு இது வரை தெரிஞ் சிருக்கும் எனக்கு அரிச்சனை நடக்குதெண்டு... நேரை அவளிடம் போனேன்.
அக்காள்முழுசிக்கொண்டிருந்தாள்.... " என்னடி அம்மா சொல்லுறா...?”
“அவா என்ன அப்பாவை காதலிச்சு கலியாணம் செய்தவாவே உன்ரை விசயத் திலை எடுத்த உடனை ஓம் எண்டு சொல்ல .... அப்பாவின்ரை குணம் இதுவரை காலத்திலை அவாவிலையும் தொத்தி இருக்காதே..?”
பெடியன் ஆர்? சாதி மதம் என்ன ? அதையெல்லாம் அவாவுக்கு நீ தெளிவு படுத்தினால் தான் அவா ஒண்டிலை இறங்கி வருவா இல்லாட்டி இன்னும் ஏறுவா .....?
"ஓமடி ... நான் அதையெல்லாம் கேட்காமல் அவரோடை பழகிப்போட்டன்... குணம்தான் எவரையும் கவருவது... இப்ப அவரைப் போய் நாகரீகம் அற்ற முறையிலை அப்பா மற்றவையை கேட்கிறமாதிரி நீங்கள் என்ன ஆக்கள் எண்டு கேட்கமுடியுமே?”
"அது சரிதான் அக்கா... திருக் கோணமலையிலை பெரிசாய் ஒருத்தரும் சாதியை தூக்கிப் பிடிக்கிறேல்லை ..... கலப்பு திருமணமும் பரவலாய் நடக்கிறதுதான் . அப்பா மாதிரி ஆக்கள்தான் இதையொரு பிரச்சினை யாய் இன்னும் தூக்கிப் பிடிக்கினம்.”
தம் பியினரை வேலையாலை இண்டைக்கு அக்கா அவரை சந்திக்கவும் போகேல்லை.
ஆனால் அந்தாள் இரண்டு மூண்டு தரம் எங்கடை வீட்டுப் படலையடியிலை போறதை நான் அவதானிச்சுப் போட்டு அக்காவிடம் சொன்னன்.
அக்கா சொன்னா...! சரி நீ ஏதாவது சாட்டைச்சொல்லி வெளிக்கிடப்பார்.... நான் தொற்ற முயற்சிக்கிறன்...”
அப்படியே நடந்தது. அக்கா அவரை ஒரு மறைவில் சந்தித்தா. நான் கடைகள் பார்க்க என்று போய்விட்டன்.
அக்கா விரைவாகவே என்னைத்தேடி
5 667 பங்குனி 2014

Page 19
வந்து விட்டா. முகம் தான் சரியில்லை....
"பார் தங்கச்சி உவன் தம்பி செய்த வேலையை ..... அவரை எங்கையோ சந்திச் சிருக்கிறான். அவருடைய மனது புண்பட பேசி இருக்கிறான்.. பெரிய ஆள் மாதிரி , " உங்களுக் கெல்லாம் உயர்சாதியிலை பெண் கேட்கு
தோ ...?” எண்டு குத்திகதைத்திருக்கிறான்!''
அக்காவின கண களால் நர் கொட்டியது ...
" நீ கவலைப்படாமல் இரு அக்கா.... நான் அவனை பேசித்திருத்திறன்..."
தம்பி இப்ப நேரத்துக்கு வீட்டை வாறதில்லை..... ஊர் சுத்துகிற குணம் வந்திட்டுது. மற்றது தான் மற்றவையளின்ரை தோளை விஞ்சிவிட்டன் எண்டு ஒரு நினைப்பு ....
பொழுது பட்ட பிறகுதான் தம்பி வந்தான். சைக்கிளை உள் மதிலோடை சாய்த்துவிட்டு கிணற்றடிப்பக்திம் போனான். நானும் பின் தொடர்ந்தேன்.
"என்ரா தம்பி அக்காவை வருத்திறாய்.... அவா உன மேலை எவ்வளவு அன்பு வைச்சிருக்கிறா தெரியுமே?..."
அது எனக்கு தெரியுமக்கா ..... ஆனால் அக்காவின்ரை வேலையாலை வீட்டிலை பெரிய நெருப்பு எழும்பும். அப்பா எரிமலை ஆகிறதை நீ பார்க்கப் போறியா அல்லாட்டி அக்காவை திருத்த போறியா?
தம்பியோடை கதைச்சதிலை எனக்கு ஒண்டு மட்டும் விளங்கியது. அக்காவின்ரை தெரிவை அப்பா ஏற்றுக்கொள்ளமாட்டார்!
வார இறுதி அக்காவின் கண்ணீருடன் விரைந்து சென்றுவிட்டது.
வாரமுதல் நாள் பள்ளிக்கூடம்.
பாடசாலையால் வந்ததும் அக்கா அம்மாவை குசினியில் வைத்து சந்தித்து உண்மை எல்லாத்தையும் போட்டுடைத்தா ....
அம்மா சொன்னா... " பொம்பிளை பிள்ளையெண்டால் அடக்க ஒடுக்கமாய் இருந்தால் பெத்தவை கவனிப்பினை ..... தம்பிக்கு விளங்கிறது உனக்கு விளங்கேல்லை எண்டுறதுதான் புதினமாயிருக்கு!"
அப்பாவுக்கு "பிரஸர்" இருக்கிறதாலை மாதாந்தம் "கிளினிக்” போவார். இண்டைக்கு அவருடைய கிளினிக் நாளாகையால் கந்தோருக்கு லீவு போட்டுவிட்டு ஆஸ்பத்திரிக்கு போயிருந்தார். நாங்கள் பாடசாலையால் திரும்பி வந்தபோது அவர் சிறிது களையுடன் சாய்மனைக் கதிரையில் சாய்ந்திருந்தார்.
17/ஜீவநதி - இதழ்

அவரது கையில் சுவிஸ் மாமியின் கடிதம் ஒன்று இருந்தது. மாமியினுடைய கடிதம் வந்தால் அவர் அன்றைய தினம் மகிழ்ச்சியோடு இருப்பார். அந்த கடிதத்தை ஒரு சிறுகதையை வாசிப்பது போல ஆற அமர்ந்திருந்து திரும்ப திரும்ப படிப்பார். அவருடைய தங்கையை , வெளிநாடு புறப்பட எல்லா ஆயத்தங்களையும் முடித்த நிலையில் இருந்த சொந்த மச்சான் ஒருவர் விவாகத்துக்காக கேட்ட போது ...
"நீர் வெளிநாடு போகிறீர் .... அங்கை போன பின்னர் எல்லாற்றை மன நிலையும் மாறுகிறது வழக்கம்... நீர் முதல்லை போய் ஒரு வருசம் இதே மனநிலையில் தாக்கு பிடித்தால் பிறகு யோசிப்பம். அதுவரையிலை தங்கச்சிக்கு கலியாணத்துக்கு அவசியமும் இல்லை" எண்டு
கூறினாராம்.
மச்சான்காரன்... "அப்ப உங்கடை தங்கச்சியும் நானும் கடித தொடர்பு
வைக்கலாமோ” ?
எண்டு கேட்டதற்கும் மறுத்து விட்டாராம்.
மச்சான் சுவிஸ் போய் ஒரு வருசமாய் காத்திருந்திருந்திருக்கிறார். அந்த காலத்திலை இடையிடையே மாமிக்கு கடிதம் எழுதி தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்திக் கொண்டி ருக்கிறார். ஆனால் மாமி அண்ணன்ரை நிபந்தனை பிரகாரம் ஒரு கடிதம் கூட எழுதின தில்லையாம்... பிறகு மாமா முறைப்படி வந்து கலியாணம் செய்து மாமியை கூட்டிக்கொண்டு போனாராம்.
இண்டைக்கும் நல்ல நிலையிலை உள்ள அவர்களுடைய மகளும் மகனும் மாமா மாமிக்கு நல்ல உறுதுணையாய் இருக்கினம். இந்த கதையை இப்போ ஆயிரத்து ஓராவது தடவையாக அப்பா எனக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார் .....
அக்கா எற்கனவே "யூனிபோர்மை” மாற்றி வந்து விட்டாள். நானும் சீருடையை மாற்றி மேல் கழுவி இருவருமாக அம்மாவிடம் போனோம். அம்மா அன் போடு உணவு பரிமாறினா.
அக்காவிற்கு சில புத்திமதிகளை கூறினா... தம்பியின் நிலைப்பாட்டை பாராட்டி கதைத்தா ..... அம்மாவுக்கு அவன் பெரிய ஆளாக போய்விட்டான். ஆனால் அவன் சிறிய ஆளாக இருந்துகொண்டு பெரியவர்களின் விடயங்களில் தலையிடுவதும் அக்காவின் விருப்பத்திற்குரியவரை அவமதிப்பதும்
66 / பங்குனி 2014

Page 20
அம்மாவுக்கு
அ கொண்டிருந் வகுப்பிற்கு 2 அண்ணனை வருவதால் அ
அக்க அவள் அவரிடம் கவலையாகிப் ே இப்படி பிரச்சினை சமூக விதிமுறை பழகவில்லை” ( பொறுக்கமுடியா
அந்த சைக்கிளில் எங்க
நாங்கள்
அப்போ சைக்கிளை தொட படுத்தாமல்.... "
அக்காவை கிண்ட
அக்காவிடம் அவன் சின்ன வயதி லிருந்து பூசை வாங்கிப்பழகினவன்தான்.... இண்டைக்கு வளந்திட்டான்.
அதே நேரம் இண்டைக்கு இருந்த மன நிலையிலை அவா எதையும் கணக்கு போட்டு பாக்க வேண்டிய தேவை அவாவுக்கு இருக்க வில்லை. அக்கா அவருடன் கதைத்துக் கொண்டிருந்த போது அவன் அவர்களை முறைத்துப் பார்த்துக் கொண்டு போனது அவளுக்கு பெரும் நெருடலாக இருந்தது.
திடீரெண்டு வீட்டின் கோடிப்பக்கம் தம்பி குரல் வைத்து சத்தம் போடுவது கேட்டது. அக்காவிடம் இண்டைக்கும் அகப் பட்ட நிலையில் அவா மொங்கு மொங்கு எண்டு மொங்கிப்போட்டுத்தான் விடுவா...
தம்பி இப்போ சின்ன பையனாக பழைய பாணியில் குளறிக் கொண்டு அப்பாவிடம்
ஓடிவந்து அழுது முறைப்பட்டான்.
"அப்பா... அக்காள் சாதி குறைஞ்ச பெடியன் ஒருவனை "லவ்' பண்ணுறா.. புத்தி சொன்னால் அடிக்கவாறா.."
அம்மா அக்கா இருவருமே முன்பக்கம் வந்துவிட்டார்கள். ஏறத்தாள வழக்கு விசாரணைக்கு வந்த மாதிரித்தான்....
எல்லோருமே திகைப்படைந்த நிலை யில் அமைதி காத்தனர். அதற்கு பிறகு
16/ கீவநதி - இதழ்

தெரியாது. காவுக்கு அவன் மேல் கோபம் ஏறிக் நது. அமைதி காத்தாள். மாலையில் தனியார் ருவரும் போனோம். எதிர்பாராத விதமாக அந்த
அக்கா சந்தித்தாள். மறுநாள் ஒரு விடுமுறை . வர் பேராதனைக்கு போகவில்லை. ரவுக்கு வீட்டில் நெருக்கடி அதிகரித்த நிலையில் ம் பிரச்சினையை உளறிவிட்டாள்... அவருக்கு பாய்விட்டது. அவர் நல்ல மனிதர்.... "அக்காவுக்கு
வரும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் களை உடைக்கும் நோக்குடன் தான் அக்காவுடன் என்றும் கூறி கண்ணீர் வடித்தார். அக்காவாலும் பில்லை.
நேரம் பார்த்து தம்பி வேறு நண்பர்களுடன்
ளை தாண்டிச் சென்றான். நேரத்துக்கு வீட்டுக்கு வந்துவிட்டோம். தான் சினத்துடன் வந்த தம்பி வாசலிலேயே தனது பென போட்டுவிட்டு அப்பா இருப்பதையும் பொருட் ரோட்டிலை காதல் “சீன்” நடத்துகினமாம்" எண்டு
ல் செய்து கொண்டு போனான் ....
அப்பாவை தவிர எவருக்குமே கதைக்க இடமில்லை.
சிறிது நேர மௌனத்திற்கு பிறகு அப்பா சொன்னார்.
"மகள் அந்த பெடியை செய்யிறதிலை எந்த தப்பும் இல்லை...!”
எல்லோரும் அதிர்ந்துவிட்டோம்!
சுவிஸ் மாமியின் கடிதத்தை அப்பா என்னிடம் விரித்து கொடுத்தார் ...
“அண்ணா... உலகம் இப்போ சுருங்கி விட்டது. ஆனால் நாகரீகம் வளர்ந்து விட்டது. எனது பிள்ளைகள் தமது வாழ்கையை அமைக்கவும் தீர்மானம் எடுக்கவும் தகுதியான வர்களாகிவிட்டார்கள். எனது மகள் பிரஞ்சுக் காரன் ஒருத்தனை காதலித்துக் கொண்டிருந் தாள். நேற்று திடீரென விவாகப்பதிவும் செய்து கொண்டார்கள். இனம், மதம், மொழி எல்லாம் மாறி அவளால் ஒருவனை காதல் செய்ய முடிகிறது. சாதி என்று இல்லாவிட்டாலும் சமூக ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் போகாது... ஆனாலும் அவள் விரும்புகிறாள்!
இந்த நிலையிலை எங்கடை பிறந்த மணணிலை எங்கடை இனம், மதம், மொழியிலை ஒன்றாக இருக்கிற இரத்தங்களை சாதி எண்ட பெயரிலை ஒதுக்கிறது நாங்கள் செய்கிற பெரிய துரோகம் தான் அண்ணா...!”
66 பங்குனி 2014

Page 21
திருமலை நவம்
திருகோணமலையும்
தேசிய இலக்கிய சமபோக்கும்
இலங்கையின் கிழக்குக்கரையில் அமைந்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இயற்கைவனப்புடன் கூடிய நகரம், திருகோண மலை. மிக நீண்ட வரலாற்றையும், வெளி நாட்டவர்கள் ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட முக்கியம் வாய்ந்த பிரதேசமாகவும் வடக்கு கிழக்கு மக்களின் நடுநாயகமாக விளங்கும் தலைநகரமிது.
திருகோணமலை அடையாளங்கள்
இந்தப் பிரதேசத்தின் முக்கிய அடை யாளங்களாக சுட்டிக் காட்டப்படும் கோணேசர் கோவில், இயற்கைத் துறைமுகம், கன்னியா வெந்நீரூற்று, கந்தளாய்க்குளம், வெருகலம்பதி, தம்பலகமம், மூதூர் அகத்தியர் போன்ற ஸ்தாபனம் வில்கம் விகாரை, முத்து விளையும் கிண்ணியா, நிலாவெளி போன்ற இன்னோரன்ன புகழ்ச் சின்னங்களிலிருந்து உருவாகியதே இப் பிரதேசத்தின் தொன்மைமிகு இலக்கியங்கள், கலைகள், மரபுகள், வரலாறுகள் ஆகும்.
புராணம்
இப்பிரதேசத்தின் கலை, இலக்கியங் களின் ஆரம்பம் கோணேசர் மரபை பின்பற்றி வளர்ந்துள்ளமையை திருகோணாசல புராணம், வாயு புராணம், திருக்கோணமலை புராணம், கோணேசர் கல்வெட்டு, மற்றும் கல்வெட்டுக் கள் என்ற வகையில் பெரிய குளக்கல் வெட்டு மாங்கனாய்க் கல்வெட்டு பள்மோட்டைக்கல் வெட்டு, கந்தளாய்க் கல்வெட்டு என 16 இற்கு மேற்பட்ட கல்வெட்டுக்கள் மூலம் அறியக்
கூடியதாகவுள்ளது.
படித்தாசர் எனும் புலவரால் இயற்றப்பெற்றதட்சணகைலாச புராணம் (1887),
19 கீவநதி - இதழ்

ක්‍රිකුණාමලය திருகோணமலை) FIf* * *
கவிராசர் எனும் புலவரால் இயற்றப்பெற்ற கோணேசர் கல்வெட்டு (1916) மற்றும் திரு கோணாசல புராணம், திருகோணாசல வெண்பா சார்ந்தவை.
18 ஆம் நூற்றாண்டில் எழுந்ததாகக் கருதப்படும் திருக்கரசைப் புராணம் (1890), சித்திரவேலாயுதர் காதல், கோணமலை அந்தாதி என்பன முன்னைய காலப் புராணங் களின் தொடர் நிலைப்பாடுகளின் பிறப்புகளாக, கோணேசர் கோவில் வரலாறு சார்ந்த மரபு களையும் சம்பவங்களையும் சொல்பவையாக காணப்படுகின்றன.
நவீன வரவுகள்
- 19ஆம் நூற்றாண்டின் நவீன வரவுகள் சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், மெல்லிசை சிறுவர் இலக்கிய வடிவங்கள் தமிழகத்தில் காலூன்றத் தொடங்குவதற்கு ஆதாரமாக ஈழத்தின் மூத்த நாவல்களான ஊசோன் பாலந்தை1891) மோகனாங்கி1895) ஆகிய இரு நாவல்களையும் எஸ் இன்னாசித் தம்பி, பண்டிதர் சரவணமுத்துப்பிள்ளை ஆகியோர் படைத்துள்ளனர். தமிழின் மூத்த நாவல்களான பிரதாப முதலியார் சரித்திரம் (1874) கமலாம் பாள் சரித்திரம் (1891) ஆகிய நாவல்கள் எழுந்த அதே காலப்பகுதியில் இவ்விரு நாவல்களும் திருகோணமலை அறிஞர்களால் எழுதப்பட்ட இருப்பது நான் மேலே சொன்ன கூற்றுக்கு ஆதாரமாகவுள்ளது.
இவ்விரு நாவல்களும் எழுந்த காலத்தி லிருந்து சுமார் அறுபது வருடகாலம் திருகோண மலையில் நாவல் எழுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இந்த இடை வெளியை நிரப்ப வ.அ.இராசரத்தினம். 1956 ஆம் ஆண்டு எழுதிய
56/பங்குனி 2014

Page 22
“கொழுகொம்பு” என்ற நாவலே திருமலையில் எழுந்த மூன்றாவது நாவலாக கொள்ளப் படுகிறது.
கிராமிய மணம் கமழும் பாத்திரங் களைக் கொண்ட இந்த நாவலை வ.அ. படைத் துள்ளார். “எனது கிராமத்து மாந்தர்கள் கதா பாத்திரமாக வரும் முதல் நாவல் இதுதான். அதுவே அதன் பெருமை” என அவர் குறிப் பிட்டுள்ளது இங்கு நினைவு கொள்ளத்தக்கது. அதன் பின்பு வ.அ.இராசரத்தினத்தின் துறைக் காரன்(1966), சுடர் விளக்கு ஆகிய நாவல்கள் திருமலையில் எழுந்த நாவல்களாகும்.
நா.பாலேஸ்வரி 12 நாவல்களுக்குமேல் எழுதிய சாதனை படைத்த பெண் எழுத்தாள் ராவார் இதனைத் தொடர்ந்து 1973 இல் க.அருள்சுப்பிரமணியம் எழுதிய "அவர்களுக்கு வயது வந்து விட்டது" என்ற நாவல் தேசிய நிலையை பற்றிக் கொண்ட நாவல் ஆகும்.
நவீன தமிழ்க்கவிதை
திருகோணமலையில் நவீன தமிழ் கவிதை மரபொன்று முளை கொள்ளத் தொடங்கியமையை 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காணக் கூடியதாகவுள்ளது. இந்த முனைப்புக்கு காரணமாக இருந்தவர்கள் வே. அகிலேசபிள்ளை, தி.த.கனகசுந்தரம் பிள்ளை, தம்பையாப்பிள்ளை, தி.த.பண்டிதர் சரவணமுத்துப்பிள்ளை, அ.அழகக்கோன், மா.முத்துக்குமாருப்புலவர், சட்டம்பி தம்பையா, சு.தம்பையாபிள்ளை ஆகியோர்.
மறுமலர்ச்சிக் கவிதை மரபொன்று சுதந்திரத்துக்குப் பின் குறிப்பாக 1950 ஆம் ஆண்டுக்குப்பின் கிண்ணியாவைச் சேர்ந்த அணணல் (1930-1974) என்ற கவிஞரின் வருகையுடன்தான் தலைநீட்டத் தொடங்கியது. வடக்கில் நாவற்குழியூர் நடராஜன். அ.ந.கந்த சாமி, சோ.நடராஜா, மஹாகவி போன்றவர்களின் காலப்பகுதியில் நவீன போக்குக்கு அமைவாக அண்ணல் 1945 ஆம் ஆண்டு முதல் எழுதி வந்தார். ஆனால் இவரது கவிதைகள் சமூக நாட்டம் கொண்டவையாக இல்லாமல் வாலிப உணர்வுகளை சித்திரிப்பவையாக அமைந்தன. அதேவேளை தர்மு சிவராமு(1939-1997) சற்று மாறுபட்ட வகையில் 1960களில் சில கவிதை களை எழுதினார்.
கவிஞர் அண்ணலைத் தொடர்ந்தே சற்றும் பிந்திய காலத்தின் பின் திருக் கோணமலைக் கவிராயர், தாமரைத்தீவான்,
20/ ஜீவநதி - இதழ்

கழகப் புலவர் பெ.பொ.சிவசேகரம், கவிஞர் ஈழ வாணன் போன்றவர்களின் வருகை திருகோண க. மலையில் நவீன கவிதைக்கு வளம் சேர்க்க தொடங்கியதைக் காணலாம்.
திருகோணமலை சிறுகதை முன்னோடி
இக்காலப்பகுதியின் சிறுகதைத் துறை யின் போக்கை நுண்ணுவோமாயின் ஈழத்தின் வடக்கே வைத்தியலிங்கம், இலங்கையர் கோன், சம்பந்தன், சிவபாதசுந்தரம் போன்றோர் (1930) ஆம் ஆண்டு இவ் வடிவத்தை ஈழத்துக்கு அறிமுகம் செய்த போதும், ஈழத்து சிறுகதை முன்னோடிகளான செ.கணேசலிங்கம், ரகுநாதன், டொமினிக் ஜீவா, கே. டானியல், எஸ்.பொ , நீர்வை பொன்னையன் போன்றோர் சிறுகதைத் எழுதத் தொடங்கிய காலத்தில் திரு கோணமலையின் சிறுகதை முன்னோடியாக திகழ்கிறார் வ.அ.இராசரத்தினம்.
இவருக்குப் பின் தர்மு சிவராமு, ந.பாலேஸ்வரி, க.சா.அரியநாயகம், தி.அரிய நாயகம், த.பி.சுப்பிரமணியம் போன்றோர் இத்துறைக்கு வளம் சேர்க்க வந்தார்கள். இதில் தர்மு சிவராமு ஞானரதம், செய்தி, தினகரன் ஆகிய பத்திரிகைகளில் இக்காலப்பகுதியில் ஒரு சில சிறுகதைகளை எழுதியுள்ளார் எனலாம்.
நாடக மரபு
திருகோணமலையின் நவீன நாடக மரபுகள் சிறு கதைபோல் அல்லாமல் சற்று மாறுபட்ட முறையில் 19 ஆம் நூற்றாண்டி லிருந்தே வளர்ச்சியடைய ஆரம்பிக்கின்றது. மரபு வழித்தன்மை கொண்ட கூத்துக்களும், விலாசங்களும் நீண்டகாலமாக திருகோண மலை பிரதேசத்தில் வளர்ந்து வந்துள்ளதை அவதானிக்கலாம். குறிப்பிட்ட 18ம் நூற் றாண்டுக்காலப் பகுதியிலிருந்தே கிராமப் புறங் களிலும் நகர மையப் பகுதியிலும் இவை ஆடப்பட்டு வந்துள்ளதை பல்வேறு ஆதாரங் களின் மூலம் அறியக்கூடியதாகவுள்ளது.
மட்டக்களப்புக்கும் யாழ்ப்பாணத் திற்கும் திருமலை மையமாகவும், வன்னியின் அயலாகவும் இருக்கின்ற காரணத்தினால் இந்தப் பிரதேசங்களிற்கு உரிய அரங்குகளாக வடமோடி, தென்மோடி, யாழ்ப்பாணவிலாசம் ஆகிய மரபுவழி கூத்து முறைகள் இப்பிரதேசத் தில் 18 ஆம் நூற்றாண்டிலிருந்தே ஆடப்பட்டு வந்துள்ளன.
இக்கூத்துமுறைகளின்” தொடர்ச்சி
66/பங்குனி 2014

Page 23
யாக வளர்ச்சியாகவே நவீன நாடக மரபொன்று ஆம் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் திருகோண > மலையில் அண்ணாவி தம்பிமுத்து காலத்தி லிருந்து(1900-1960)' ஆரம்பமாகின்றது. அவருக்குப் பின் சி.விசுவலிங்கம், எம்.சி. அந் தோனிப்பிள்ளை, அண்ணாவி சின்னையா, யேசு தாசன் போன்ற புதிய பரம்பரையின் வரவோடு நவீன நாடக மரபு திருகோணமலையில் உரு வாகியதோடு பல்வேறு நாடக மன்றங்கள் உரு வாகி நவீன நாடக பாரம்பரியங்கள் ஈழத்தின் எந்த பகுதியிலும் இல்லாத அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது.
இராவண தரிசனம் கொண' ட திருகோணமலையில் கர்நாடக சங்கீதம் மெல்லிசை ஆகியகலைகள் இன்னொரு துறையாக வளர்ச்சி அடைந்தமையை 19ஆம்
நூற்றாண்டிலிருந்து அவதானிக்க கூடியதாக வுள்ளது. புராண காலத்திலிருந்தே கோணேசர் கல்வெட்டில் கூறியதைப்போல் கோணேசர் கோயிலை மையப்படுத்தி ஓதுவார்கள். நடன மாதர்கள், சங்கீத விற்பன்னர்கள், ஆகிய கலை மாந்தர் பல்வேறு கலைகள் இப்பிரதேசத்தில் வளர்ந்து வந்துள்ளமையை பிற்கால நூல்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.
இதில் மரபு ரீதியான இசைத்துறைக்கு பங்காற்றியவர்களாக வீரக்கோன் முதலியார், வே. அகிலேசப்பிள்ளை, கார்த்திகேசுக்குருக்கள், அப்பாத்துரை ஐயர், சாம்பசிவம் ஐயர் ஆகியோர் காணப்பட இருபதாம் நூற்றாண்டின் கடைக்கால் பகுதியில் அத்துறைக்கு தொண்டாற்றியவர் களாகவே தில்லையம்பலம் மாஸ்ரர், சிவகாம சுந்தரி விஜயரட்ணம், இராஜராஜேஸ்வரி பால சுப்பிரமணியம் ஆகியோர் காணப்படுகிறார்கள்.
திருமலை மெல்லிசை
இதேவேளை காலத்தின் தேவை கருதி மெல்லிசை துறை வளர்ச்சியும், திருகோண மலையில் வளர்ச்சியடைய ஆரம்பிக்கிறது.
2ll வீவநதி - இதழ் 6

இத்துறையின் பிதாமகனாக திகழ்பவர் திருமலை பத்மநாதனாகும் (1966. அவரைத் தொடர்ந்து பிற்காலத்தில் இத்துறையை வளர்க்க பாடுபட்ட பரமேஸ் - கோணேஸ், இம்மானுவேல் போன்றோரும் மற்றும் கலை வாணி இசைக்குழு, கோணேஸ்வரா இசைக். குழு, நீரோ இசைக்குழு போன்றவற்றின் பங்களிப்பு முக்கியமானதாகும்.
முற்போக்கு சிந்தனை
1970 ஆம் ஆண்டுக்குபின் முற்போக்கு சிந்தனை எழுத்தாளர்களாக இராஜதருமராஜா, மு.ராஜ்கபூர், க.சா.அரியநாயகம் ஆகியோர் காணப்பட சமூக நெறிமுறைகளை நோக்கி யவர்களாக திருமலை சுந்தர், வி.தில்லைநாதன் போன்றோர் காணப்படுகிறார்கள்.
1970 ஆண்டுக்கு பின் கவிதைத் துறையில் ஓர் தேசிய விழிப்பு மிளிர்வதைக் காணலாம். அதற்கு உறுதுணையாக நிறுவன மயப் படுத்தப் பட்ட சமூக அயக்கங்கள். இலக்கிய மன்றங்கள், அரசியல் விழிப்புணர்வு கள் காரணமாகின. திருகோணமலையில் இயங்கிய முன்னோடி கலை இலக்கிய விமர்ச கர் குழுவைச் சேர்ந்த நல்லை அமிழ்தன், விக்னேஸ்வரன், திருமலை நவம் ஆகிய பல கவிஞர்கள் இக்காலப்பகுதியில் தமது பல்வேறு பரிமாண நகளை கவிதைத் துறையில் காட்டினர். அதேநேரத்தில் மெல்லிய மனவயப் பட்ட கவிதைகள் எழுதியவர்களாக ஆலன், நிலாதமிழின்தாசன், திருமலை அ.சந்திரன் போன றோரின கவிதைகள் இதற்க உதாரணமாகும்.
* நாவல் இலக்கியப்படைப்பில் 70ஆம் ஆண்டுக்கு முன் வ.அ.இராசரத்தினம். ந பாலேஸ்வரி ஆகியோரைத் தவிர வேறு எவரும் ஆர்வம் காட்டவில்லை. இக்காலப் பகுதியில் வ.அ.இராசரத்தினத்தின் கொழு கொம்பு(1956) துறைக்காரன்(1959), தேய்பிறை (1968) ஆகிய மூன்று நாவல்களும் வெளி வந்தன. சற்று பிந்திய காலப் பகுதியில் ந.பாலேஸ்வரி உறவுக்கப்பால்(1975), பூஜைக்கு வந்த மலர் 1972) ஆகிய நாவல்களை எழுதி யிருந்தார். இவரது நாவல்கள் மெல்லிய உறவு களையும் இளமைத் துடிப்புகளையும் எண்ணங் களையும் சொல்லும் நாவல்களாக காணப் பட்டது. ஆனால் 1973 ஆம் ஆண்டு க.அருள் சுப்பிரமணியத்தின் " அவர்களுக்கு வயது வந்து விட்டது” என்ற நாவலுடன் ஓர் தேசிய தரத்தை
6 பங்குனி 2014

Page 24
யும் பதிய பரிமாணத்தையும் நாவல் இலக்கியம் பெறத் தொடங்குகிறது.
மேடை நாடகத்துறையில் 1970 ஆம் ஆண்டு கணிசமான பதிவுகளை வாங்கிக் கொண்ட காலமாக இக்காலம் திகழ்கிறது. பெருந்தொகையான நாடக மன்றங்கள் உரு வாகிய காலம் இதுவாகும். இம்மன்றத்தின் பெருக்கத்தின் காரணமாக இயக்குநர்கள், நடிகர்கள் காட்சி அமைப்பு விற்பன்னர்கள் அதிகமாக உள்வரத் தொடங்கின காலமாக இது காணப்படுகின்றது.
வ.அ.இராசரத்தினம் (1956), துறைக் காரன்(1959), தேய்பிறை 1968), சந்தானாள் புரவி1973) கிளென்சப்பறவைகள் (1975), ஒரு காவியம் நிறைவு பெறுகிறது(1975), ஒரு வெண் மணிக் கிராமம் காத்துக் கொண்டிருக்கிறது (1993), மண்ணிற்சமைந்த மனிதர்கள் (1996), ந.பா உறவுக்குப்பால் (1975) கோவும் கோயிலும் (1980), உள்ளக்கோயில் (1983), பிராயசித்தம்(1984).
வரட்சிக்காலம்
1980 ஆம் ஆண்டுக்கும் 1990 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலம் கலை இலக்கிய வளர்ச்சியில் ஒரு வரட்சி கொண்ட காலத்தன்மை நிலவியதை சகல துறைகளிலும் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இக்காலப் பகுதியில் 1980-1990) கவிதைகளில் பல்துறை சார்ந்த வளர்ச்சி காணப்படுவதற்கு அடையாள மாக சி.சிவசேகரம், மைக்கல் கொலின் போன்றோர்களின் வீச்சுக் கவிதைகளும் மறுபுறம் அஸ்ராப்பா நூர்டின் போன்றவர்களின் நடுத்தன்மையான போக்கும் கவிதை வளர்ந்து வந்துள்ளமையினைக் காட்ட, சிறுகதைத்துறை யிலும் மெல்லிய வளர்ச்சி தன்மையை காணக்
கூடியதாக இருந்தது.
இக்காலப்பகுதியில் சித்திரா நாகநாதன் எழுதிய கிராமத்து மண்கள் சிவக்கின்றன(1990) எனும் சிறுகதை காலத்தின் பதிவாக எண்ணப் பட வேண்டியதும் போர்கால சூழ் நிலைகளை சித்திரிப்பவையாகவும் எழுதப்பட்டது. நாவல் இலக்கியத்துறையில் இக்காலம் வேறுபட்ட முறையில் தேசிய தரம் அல்லது சர்வதேச பார்வை கொண்ட நாவல்கள் எழுந்தகாலமாக இக்காலப்பகுதியைக் கூறலாம். அ. அ. ஜெய ராஜாவின் சேகுவரா, அப்பா மற்றும் சூ.நோபேட், கோவிந்தனின் "புதியதோர் உலகம்" ஆகிய நாவல்கள் மிக முக்கியத்துவம் கொண்ட நாவல் களாகக் காணப்படுகின்றது. ஜெயராஜாவின்
22 கீவநதி - இதழ்

நாவல்கள் சேகுவரா போராட்டத்தை மையப் பொருளாகக் கொண்டு எழுந்த நாவலாக காணப்பட்டது. கோவிந்தனின் நாவல் விடுதலை போராட்டத்தின் உள்ளீடுகளைச் சொல்லும் நாவலாக காணப்படுகிறது. இதேவேளை ந.பாலேஸ்வரி, செல்வகுமார், வீ.என்.சந்திர காந்தி போன்றோர்களின் நாவல் களும் பொது வாழ்வை சித்திரிக்கும் நாவல்களாக இக்காலப் பகுதியில் எழுந்தன.
2000 ஆண்டுக்குப் பின்
2000 ஆம் ஆண்டுக்குப் பின் நீர் ஓட்டம் போன்ற வளர்ச்சி மிக மெதுவாக ஊர்ந்து கொண்டு போவதை பொதுவாக அவதானிக்க கூடியதாக இருந்தது. அதிலும் கிண்ணியா மூதூர் பிரதேசத்தின் கவிஞர்களின் பங்களிப்பு இக்காலப்பகுதியில் திருகோணமலையின் கவிதைத்துறையை காத்து நின்றது.
சிறுகதைத்துறையில் திருமலை சுந்தா, ச.அருளானந்தம், வீ. என் சந்தரகாந்தி, கிண்ணியா அமீரலி, கனகசபை தேவகடாச்சம், ராணி சீதரன், ஏ.எஸ்.உபைத்துல்லா, அமா னுல்லா, ஏ.காதர், என்.சித்திரவேல் போன்றோர் கள் போதிய அளவில் எழுதி வந்த போதும் தற்கால சூழ்நிலை நெருடல்களை அனுபவ துருவல்களை இவர்களது கதைகளில் காண
முடியவில்லை.

Page 25
மீண்டும் வ.அ.இராசரத்தினத்தின் த வருகை மற்றும் புரட்சிபாலன் அன்வர்டீன் எழிலேன், மைக்கல் கொலின், வீ. என் சந்திர காந்தி, கா.இரத்தினலிங்கம், எஸ்.செல்வகுமார் போன்றோர்களின் ஓர சில நாவல்கள் பிராந்திய பசியை போக்கியதே தவிர நிகழ்கால நிழல் வடிவங்களாக அவை அமையவில்லை.
ந்தி, கா.இரால்கொலின, " அன்வர்டீன்
பாடசாலை நாடகங்கள்
மேடை நாடக துறையிலும் நாடக இலக்கிய துறையிலும் இக்காலப்பகுதியில் குறிப்பாக 2000 ஆம் ஆண்டுக்குப்பின் பாடசாலை நாடகங்கள் அதிசயிக்கத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளமையை பாடசாலை தரவுகள் எடுத்துக்காட்டுகின்றன. குறிப்பாக இராணி ஜெக சோதி, நக்கீரன், தில்லை முகிலன், இரட்ண சிங்கம், எஸ். பற்குணம், தஅமரசிங்கம், திருமலை நவம் போன்றோரின் உழைப்பினாலும் மன்றங்களான திருமலைக் கலாமன்றம், கீழைத்தென்றல் கலாமன்றம் போன்றவற்றின் பங்களிப்பினாலும் பாடசாலை நாடகங்கள் காத்திரமான வளர்ச்சியை காணுகின்றன.
நாடக இலக்கியம் என்ற துறையில் 1887 ஆம் ஆண்டு அகிலேசப்பிள்ளை என்பரால் எழுதப்பட்ட கண்டி நாடகத்தில் இருந்து வளர்ச்சி ஒன்று கருக்கொள்கிறது. ஏனைய மாவட்டங்கள் போல் நாடக இலக்கியத்தின் செம்மை சார்ந்த வளர்ச்சி திருகோணமலையில் குறிப்பிடக்கூடியதாக இல்லாது இருந்த போதும் 1990 ஆம் ஆண்டுக்குப் பின் பாலக்குமார், த. அமரசிங்கம், தபி சுப்பிரமணியம், கா.சிவ பாலன், திருமலை நவம் போன் றோர் ஆங்காங்கே எழுதிய நாடக இலக்கியங்கள் பற்றிய கட்டுரைகளை தவிர நாடக இலக்கியத் தின் நெறி சார்ந்த வளர்ச்சி திருகோணமலை பிரதேசத்தில் குறைவாகவே இருந்துள்ளது.
அதேவேளை நாவலின் வரவு மிக அருந்தலாகவே இருந்துள்ளது. ஆனால் சிறுகதையில் தேவகடாச்சம், திருமலை சுந்தா, என் சித்திரவேல், அ.ச.பாய்வவா , வீ.என்.சந்திர காந்தி போன்றோர் குறை நிரப்பும் தன்மையில் எழுதி வந்தமை சிறுகதை இலக்கியத்தை தூக்கிப் பிடிக்கும் கைங்கரியமாக இருந்தது. தெரிந்தோ தெரியாமலோ நுழைந்துவிட்ட தொலைக்காட்சி வடிவங்களின் உருவ அமைப்பு மிக சிறிய அளவில் திருகோணமலையில் 2000 ஆம் ஆண்டுக்குப் பின் வளர்ந்து வந்துள்ளது. கூட்டுமொத்தமாக திருகோணமலை கலை
23/ ஜீவநதி - இதழ்

இலக்கிய வளர்ச்சி என்பது ஏனைய பிரதேசங் களுடன் ஒப்பிடும் போது தரப்படுத்த முடியாத வளர்ச்சியாகவே காணப்படுகின்றது.
2010 ஆம் ஆண்டுக்குப் பின்
திருகோணமலையின் கலை இலக் கியத்துறையின் வளர்ச்சி ஓர் மந்தத்தன்மை கொண்டதாக இருந்த போதிலும் நாவல், சிறு கதை, நாடகம், தொலைக்காட்சி, மெல்லிசை, சங்கீதம் என்ற தொகை வகைப் பட்ட கலை இலக்கியத்தின் கூட்டு மொத்த வளர்ச்சியையும் ஓரளவு காணக்கூடியதாக வுள்ளது. குறிப்பாக கவிதைத்துறையில் மூதூர், கிண்ணியா போன்ற கிராமங்களில் இருந்து பெருந்தொகையான கவிஞர்கள் எழுத முற்பட்டதும் பல்வேறு கவிதை ஏடுகள் இக்காலப்பகுதியில் வெளி வந்தமையும் இதற்கு அடையாளங்களாகும். யுத்த நெருக்கடிகள் ஒய்ந்ததெனக் கூறப்படு
கின்ற 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னுள்ள கலை இலக்கியத்துறை வளர்ச்சியில் திருகோண மலை பிரதேசத்தில் கணிசமான முன்னேற்றங் கள் என்பதை விட கவிதை, குழந்தை இலக்கியம் ஆகிய துறை சார்ந்த நிலைகளிலும் எண்ணிக்கையாளர்களான எழுத்தாளர்களும் அவர்களின் வெளியீடுகளும் வெளிக் கொண்டு வரப் பட்டுள்ளன என்பதற்கான அடையாளமாக மூதூர் முகைதீனின் "ஒரு காலம் இருந்தது” (2010), சி.சிவசேகரத்தின "முட்கம்பி” (2010), சுஜந்தனின் “நிலம் பிரிந்தவனின் கவிதை” (2011), ஏ.நஸ்புள்ளாஹ்சின் “கனவுகளுக்கு மனமுண்டு” (2011) அஸ்ரப்பா நூர்தீனின் "ஆகக் குறைந்த பட்ஷம் (2012), த.பவித்தி ரனின் “குறியிடல்” (2012) ஆகியவற்றில் அடங்கி யுள்ள கவிதைகளை சுட்டிக்காட்டலாம்.
இந்த எல்லைப்படுத்தப்பட்ட காலப் பகுதியில் சிறுவர் இலக்கியம் என்ற 1 66 / பங்குனி 2014

Page 26
|
வடிவத்துக்குள் கவிதை, சிறுகதை, நாவல் எனப் பல்வேறு வடிவ சிறுவர் இலக்கியங்கள் முகிர்ந் துள்ளன. ச.அருளானந்தம், தேவதர்ஷினி, ஜெகள், சிந்தியா , வே.தங்கராஜா, செஞானராசா, பாயிஸா அலி, ஆலையூரான், பீ.ரீ.அஸீஸ், * ஞானராசர் அகிலா, எம்.எச். சுயானா, நாகூர் உம்மா, எம்.ஏ.அன்ஸ், இரா.பத் மினி ஆகியோரைக்குறிப்பிடலாம்.
2010ம் ஆண்டுக்குப் பின்னுள்ள சிறுகதை, நாவல் என்பவற்றின் வளர்ச்சி யும் தேசிய இலக்கிய சம்போக்கும் மிக மிக குறைவாகவே காணப்படுகின்றது என்று சொல்ல வேண்டும். வட கிழக்கு குறிப்பாக திருகோண மலையில் ஏற்பட்ட போர் கெடுதியையோ சமூக இழப்பு களையோ சொல்லும் சிறுகதைகளோ நாவல்களோ இக்காலப்பகுதியில் எழ வில்லை.
ச.அருளானந்தத்தின் " ஏன் வந்தாய்" (2009) திருமலை இ.மதனின் “பாதை மாறிய பயணங்கள் (2011), வே.தில்லைநாதனின " இடரும் உறவும்" (2011), ஏ.எம்.எம்.அலி "ஒரு தென்னை மரம்” (2011) ராணி சீதரன் "நிலவும் சுடும்” (2010) கிறிஷ்டி முருகுப் பிள்ளையின் “மீண்டும் எழுவோம்” (2012), நிலாதமிழின் தாசனின் "பள்ளிச்
சட்டையும் புத்தகப்பையும் (2012)
நாவலைப் பொறுத்தவரை இக் காலப் பகுதியில் எழுவில்லையென்றே கூறவேண்டும். அதேவேளை ஆய்வுகள் என்ற வகையில் கலாநிதி மு . அஸ்ரப் அவர்களின் மஹாகவியும் நீலா வாணனும் (2012) பதியப் பெற்ற ஆய்வு நூலாகக் காணப்படுவதுடன் திருமலை நவத்தின் திருகோணமலை கலை இலக்கிய வரலாறு (2012) குறிப்பிட்ட ஆய்வு இலக்கியங்களாகும்.
பொது நூல்கள் என்ற வகையில் யதிந்திராவின் "காலத்துயரும் காலத்தின் சாட்சியும் (2013) பாலகுமாரனின் "கொட்டி யாராம் என்பன குறிப்பிடத்தக்க பதிவு களாகும்.
24/ஜீவநதி - இத

ஓரணைமடுக்குளத்தின் .
குடிநீர் வழங்கல்!
குளநீரை குடிநீராக்கி யாழ் நகர்நோக்கி வளப்படுத்த வழங்கும் திட்டம் வரவே குளத்தில் குதித்தனர், எங்களில் சிலபேர் குளத்தைத் திருத்தாதீர்!, குடிநீர் வழங்காதீர்!
எது சரி! எது பிழை! என்றறியாமல்
எதுவோ எதற்காகவோ வாதாட்டம் அதுவரை பொறுத்திட அரசு தயாரில்லை. புதுவகைப் புலம்பல் எம்மில் எமக்குள்!
இருபத்தெட்டாயிரம் ஏக்கர் பயிர்ச்செய்கை உருப்படாமல் போகுமென ஒரு சிலர் பேச்சும் தருவதை தடுக்காதீரென இன்னுஞ்சிலர் மூச்சும் திருவிளையாடலாய் நடந்திடப் பார்க்கிறோம்
- பதினொரு ஆண்டிற்கு முன் கருவான திட்டம்
பதிவாகி இப்போது உருப்படும் தருணத்தில் எதிலுமே குறை காணும் எம்மவர் மனநிலை எதிர்ப்பினைக்காட்டி கொதிப்பினை ஊட்டும்!
ஆசிய அபிவிருத்தி வங்கி அனுசரணைத்திட்டம் பேசிப்பார்த்தனர் நேர்கண்டு ஆலோசகருடன் வாசியாய்க் கிடைத்தது, பாசியாய் படிவதோ? யோசியென்றார் தடுப்பது எமக்கே இழப்பாகும்!
இழந்தது எத்தனை இன்னும் இழப்பதே நோக்கமா?
பழம் பெருமை பேசி பயன்தான் என்னவோ
நலந்தருந்திட்டம் நலிவாய் போய்விடலாம் - சலந்தராமலும் இதனால் தடையும் நேரலாம்!
- கிளிநொச்சி யாழ்ப்பாணம் இரண்டுக்குமே கிடைத்திடும் நீரேந்தும் கொள்திறன் கூடுமே களிப்பாய் வாழ காலத்தால் தந்த கொடையை தளித்துக் கழித்தால் தேவை என்றும் தடையாம்!
குளத்தை திருத்த நீர்வளம் சிறக்கும் குளத்தைக் கலக்கி கொக்கிடம் விடாதீர்! குளத்தைப் பெருக்கி பலத்தைக் காண்போம் வளமாம் நீரை வழங்கிட மகிழ்வோம்
- செ.ஞானராசா -
ஓ 66 பங்குனி 2014

Page 27
ஊர்
வானப் பொட்டில் அறையுமாப் போல கடகடவென சுடு குழல்களின் அதிர்வு! வானம் இருளுக்குள் உறைந்திருந்தது. அதனைக் கரு மேகம் மூடிக் கொண்டது. மப்பும் மந்தாரமுமாக இருந்த வானத்திலே குறுக்கும் நெடுக்குமாக மல்டி பரல் குண்டுகள் ஒலி எழுப்பிக் கொண்டு சென்றன.
காதை செவிடாக்கியவாறு துப்பாக்கி வேட்டுகள் கேட்கின்றன. ஷெல் வீச்சுகளும், பீரங்கிச் சத்தங்களும் கேட்கின்றன. கடலில் கண்போட்டிலிருந்து குண்டுகள் வருவுது.
எண்ட வாழ்க்கையில் ஒரு நாளும் கேட்காத புதுப்புது சத்தமெல்லாம் கேட்குது. வெளியாலவர பயமா இருக்கு. ஒரே இருட்டு. மின் சாரமும் இல்ல. ஊர் அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது.
“மூதூரைச் சுத்தி புலிப் பொடியன்கள் நிற்கிறான்கள். ஊருக்குள்ள வந்துட்டான்கள். வெளியால் போக வேணாம் கவனமாக வீட்டுக் குள்ள பத்திரமாக இருங்க” என்று பக்கத்து வீட்டு காதர் நானா வேலிக்கு மேலால் மெதுவாக தலையை நீட்டி மனமடிவோடு என்னிடம் சொன்னாரு.
வீட்டுக்குள்ள இருந்த எனது தாயையும், சகோதரர்களையும் அமைதியாக இருக்கும் படி கூறி ஆறுதல் படுத்தினேன். எனது உழைப்பை மட்டும் நம்பிக் கொண்டு எதிர்காலத்தைப் பற்றி
25 கீவநதி - இதழ்

ஏ.எஸ்.உபைத்துல்லா
யொதுசன நூலகம் யாழ்ப்பாணம்.
துறந்து...
சிந்தித்துப் பார்க்காத சகோதரர்கள்! இவர்களை நினைக்க என்னுடைய நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று உடைவது போல் இருந்தது.
"ஆமிக்கும் புலிக் கும் சண ட தொடங்கிட்டுது. காட்டுக்குள்ள நடந்த சண்ட இப்ப ஊருக்குள்ள வந்திட்டுது. இதுல இருந்து தப்புறது கஸ்டம்தான். என்ன நடக்குமோ...? ஏது நடக்குமோ..?” என்ற நினைவிலே இருந்த போது வெள்ளாப்பு வெளுத்தது.
அன்றைய நாள் சேவல் கூவ மறுத்தது. ஏனைய பறவைகளின் சப்தம் கூட கேக்கல்ல, சுபகுக்கு பாங்கு சொல்லல்ல, கோயிலில் மணி அடிக்கல எல்லாமே வழமைக்கு மாறாக இருந்தது. ஊரே கதி கலங்கிப் போய் இருந்தது. பளார் என்று விடிந்தது. கடலால் வந்த ஆமி ஊரைக் கைப்பற்றியது. எல்லா றோட்டிலயும் ஆமிக்காரங்க நிக்கிறாங்க. புலிப் பொடியன் களைக்காணல்ல.
போர் தொடங்கிட்டுது இனிமேல் ஊர்ல இருக்கேலாது. சனங்கள் உடுத்தின உடுப் போடு கையில் அகப்பட்டதை எடுத்துக்கிட்டு பள்ளிக்கொடத்தையும், பள்ளிவாசலையும், மத்ரசாவையும் நோக்கி ஓடுதுகள். நான் செய்வ தறியாது வாசலில குந்திக் கொண்டு இருந்தேன். எனக்குப் பக்கத்தில் ஷெல் வந்து விழுந்தது. அந்த சத்தத்தில் வளவுக்குள்ள நின்றிருந்த கோழி, நாயெல்லாம் கத்திக்கிட்டு ஓடுது.
66 / பங்குனி 2014

Page 28
"இனியும் - ஊட்டுல இருக்கப்படாது) என்ற முடிவோடு உம்மாவை கைத்தாங்கலாகக் கூட்டிக் கொண்டு, கையில அம்புட்டதை எடுக்கும் படி எனது இரண்டு சகோதரர்களுக்கும் கூறினேன்.
ஷெல்வீச்சும், குண்டுச் சத்தமும் கர்ண கடூரமாக கேட்டபடி இருக்குது. சனங்களெல் லாம் எங்க போறதெண்டு தெரியாம தடுமாறு றாங்க.
எனக்குள் ஓர் உள்ளுணர்வு அபாயம் கூவத் தொடங்கியது. இனிமேல் இங்கு இருப்பது ஆபத்தென உணர்த்தியது. நான் அலைந்து திரிந்து விளையாடிய மண்ணையும், பிறந்து வளர்ந்த வீட்டையும், படித்த பாடசாலையையும், தொழுத பள்ளிவாசலையும், நான் வளர்த்த பசு மாடுகளையும் ஏகமாகப் பிரிவதை நினைக்கும் போது என் இதயம் பிய்ந்தது. வார்த்தைகள் குரல்வளையில் வந்து மரிக்கின்றன. கண்கள் பனித்து கோடு கட்டி நிற்கின்றன.
காதர் நானா மீண்டும் படலையைக் கிளப்பிக்கிட்டு வந்து சொன்னாரு தம்பி "நாம இனிமேல் இந்த இடத்தில் ஒரு நிமிசமும் இருக்கப்படாது. நம்மட உசிரக் காக்குறதா இருந்தா எங்காவது பாடசாலைக்குப் போவம் வா...” எண்டு கூப்பிட்டாரு. அவர்ர குடும்பத் தோட சேர்ந்திக்கிட்டுப் போகக்குள்ள மூதூர் வெளி, ஆலிம்சேனைப் பக்கமாக ஆமிக்கும் புலிக்கும் சண்ட நடந்துக்கிட்டிருந்தது.
அக்கரைச் சேனையிலிருந்து ஒருபடி யாக ஆனைச் சேனைக்குள் ஏறி, சின்னப் பாலத் தடியைக் கடந்து, ஆலமரத்தடிக்கு வந்து வடக்கு பக்கமாக பார்த்தேன். தமிழாக்கள் ஒருத் தருடைய நடமாட்டமும் இல்ல. வீடு எல்லாம் பூட்டிக் கிடக்குது. பின்னர் அங்கிருந்து மத்திய மஹா வித்தியாலத்திற்கு வந்தோம். அங்கேயும் சனங்கள் நிறைஞ்சிட்டுது. அதனால பள்ளிக் கூடத்திற்கு பக்கத்துல இருக்கிற நொக்ஸ் புளியமரத்தடியை சுற்றி சனங்கள் நின்று கொண்டு இருந்தனர். அதில் நாங்களும் சேர்ந்து கொண்டோம்.
நானூறு வருடங்களுக்கு முன்பு கிழக்கிந்திய கம்பனிக்குச் சொந்தமான “ANN என்ற கப்பல் வியாபாரத்திற்காக கொட்டியாரக் குடாவை அடைந்தது. வியாபாரிகளை இறக்கி விட்டுஇ ஒருமாத காலம் வரையில் தரித்து நிற்க வேண்டுமாதலால் மூதூரில் இருந்த சிற்றர சனுடன் (முதலி) நல்லுறவை ஏற்படுத்துவதற் காக கப்பல் தலைவன் "நொக்ஸ்” வந்தான்.
26/ ஜீவநதி - இதழ் :

அவ்வாறு வந்தவன் இவ்விடத்தில் இருந்த புளிய மரத்தடியில் ஓய்வெடுத்தான். அந்த மரம் இப்ப இல்ல. தன்படுவனாக முளைத்த புளியங் கன்றை வளைச்சி சுவர் எழுப்பி மண் நிரப்பி இருக்கு... அதுவும் நல்ல கிளைபரப்பி சடைச்சி வளர்ந்திருக்கு.
என்ட உம்மாவால் நடக்க முடியாது. காலையில் இருந்து ஒருவருடைய குடலுக் குள்ளும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூடப் போகல எல்லோருக்கும் ஓரே பசி மயக்கம். கை, காலெல்லாம் வலியினால் செயலற்று சோர்ந்து போய் கிடக்குது.
பரு மரத்தை சுற்றிய பல்லி போல் புளிய மரத்தை சுத்தி நிண்ட ஆட்களையெல்லாரை யும் நத்துவதுல் உலமா அரபுக் கல்லூரிக்கு வருமாறு கூறினார்கள். நாங்க எல்லாரும் அள்ளுப்பட்டு, இழுபட்டு அங்கே போனோம்.
அரபுக்கல்லூரி வளாகம் முழுவதும் "ஹோ' வென்ற இரைச்சலுடன் ஜனசமுத்திரம் அலையலையாய் தகித்துக் கொண்டிருந்தது. ஊர் சுருங்கி அகதி முகாமானது. தன் சொந்தங் களை இழந்து தேடி அலையும் மனிதர்களின் பதற்றமும் பரிதவிப்பும் அதிகரித்து காணப் பட்டது. நின்றிருந்தவர்களிடம் காற்று இறங்கிய இறப்பர் பலூனைப் போல் அவர்கள் உச்சாக மின்றி சப்பளிந்து காணப்பட்டார்கள்.
மதுரசாக் கட்டில் குந்திக் கொண்டி ருந்தேன். அங்கேயும் ஷெல் ஒன்னு வந்து உழுந்து. சின்னானும் அவன்ட மகனும் ரெத்த வெள்ளத்தில் கிடக்காங்க.
மையத்தை அடக்க மையவாடிக்கு போகேலாது. அங்கயும் சண்ட நடக்குது. இறாக்குழிப் பக்கத்தால் இருந்து வெடி வருவுது., சின்னான்ட குடும்பத்தின் அழுகையும் ஒலமும் வானை பிளந்தது! மதுரசாவில் ஓதுர பொடியன் கள் சனங்களுக்கு தண்ணியும், விஸ்கோத்தும் கொடுத்தார்கள். எங்களுக்கும் தந்தார்கள். சுருண்டு போய் கிடக்கிற உம்மாவுக்கும், எனது இடுப்போடு ஓட்டி கட்டிப்பிடிச்சிட்டிருக்கிற தம் பிரிக்கும், தங்கச்சிக்கும் அதைக் கொடுத்தேன்.
வாப்பா உசிரோட இருந்தா இந்தக் கக்கிசமெல்லாம் எனக்கு வந்திருக்காது. சூடை குடாவுக்குள்ள கடலுக்கு போனவரு இன்னும் ஊடு வரல்ல. ஏழு வருசமாச்சி அவரைப் பத்தி எந்த தகவலும் இல்ல. அதற்குப் பிறகு குடும்பப் பொறுப்பெல்லாம் என்ட தலையில தான். எனக்கே ஒழுங்கான பொழைப்பில்ல சண்ட
36 / பங்குனி 2014

Page 29
வந்த பிறகு கரையிலயும், கடலிலும் தொழில் செய்யலாது. வருவாய் இல்ல. சாமான்களின் விலை அதிகம். வாழ் ஏலாது. பசி பட்டினி வேறு...
"இனி இங்க இருக்க முடியாது எல்லோரும் போவம் வாங்க.." "வெளிக்குடுங்க போவம்.” "எனக்கு என்ன செய்றது என்டு தெரிதில்...?" “சுருக்கா வெளிக்குடுங்கோ...” "வெடிச்சத்தம் கேட்குது...” "ஆமிக்கும் புலிக்கும் சண்ட வந்திட்டுது...” "ஓடி தப்புவோம்.” " உயிர் பிழைச்சா போதும்
வாழ்ந்துக்கலாம்....." "இது பெரும் கொடும்.”
ஊரை விட்டு வெளியேறுபவர்களின் குரல்கள் இவ்வாறு கேட்டன.
வெயில் ஏறிக்கிட்டுப் போவுது. வெள்ளிக்கிழமையும் கூட. ஒருவருக்கும் ஜூம்ஆ தொழுகை கெடயாது. "இனி இந்த ஊரில் இரிக்கப்படாது. எங்காவது போய்த் தொலை வோம்” எண்ட முடிவோடு கால்நடையாக எல்லாரும் மூணாம் கட்ட மலைக்குன்று பக்க மாகபோக ஊர் மக்கள் கூடி ஆயத்தமானார்கள்.
மூதுாரின் எத்திசையில் நின்று பார்த்தாலும் மூணாங்கட்டை மலைக்குன்றின் முகடு மதர்ப்புடன் தெரியும். மலைக்குன்றின் முகட்டை வெறித்து நோக்குகிறேன். அது எனது மண்ணுக்குரிய மிகப்பெரிய மலைக்குன்று. அதுல ஏறி இருக்கிறேன். அதன் அடிவாரத்தில் கண் வைத்த தூரமெல்லாம் பச்சைப் பசே லென்ற வயல்வெளி. அந்த மலைக்குன்றின் அந்தத்தில் துருத்திக் கொண்டிருப்பதுதான் கினாந்தி முனை. அதனூடாகச் சென்று கந்தளாயை அடைவது என்ற எத்தனிப்போடு தேன்கூடு கலைந்தது போல ஊர் மக்கள் வெள்ளம் போல் திரண்டு கொடி புடிச்சிக்கிட்டு பெரிய பாலத்தக் கடந்து அறுபத்தி நாலாம் கட்டையை அடைந்து அங்கிருந்து கிழக்கு பக்கமாக திசை திரும்பிகினாந்தி முனை ஊடாக மூதூரைவிட்டு வெளியேற ஆயத்தமாகிச் சென்று கொண்டிருந்தார்கள்.
திசைமாறிய பறவைகளைப் போல மக்கள் பாதையில் பதற்றத்துடன் விழுந்தடித்து விரைந்து கொண்டிருந்தார்கள். பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்த இந்த மூதூர் மண்ணை
27 ஜீவநதி - இதழ்

விட்டு ஒரு நொடிப் பொழுதில் வெளியேற முடியுமா...? இது வெறும் மண்ணா..? எந்தை யும் தாயும் கூடிக்குழாவி மகிழ்ந்த மண்ணல் லவா...? வருங்கால சந்ததியினர் நிலைத்து நின்று வாழப்போகிற மண். இந்த ஊரை உயர , வளர வைக்க எத்தனை ஆண்டு காலம் நம் முன்னோர் உழைத்திருக்க வேண்டும்.
இடை இடையே கேட்கின்ற ஷெல் வீச்சுக்கள் அவர்களது வெளியேற்றத்தை துரிதப்படுத்தின.
"அல்லாஹ் நீ பார்த்துக் கொண்டா இருக்கிறாய் ...?” என்று வயது முதிர்ந்த கிழவர் பெரும் குரல் எடுத்து துவா கேட்கிறார். ஆறு அறிவு படைத்த மனிதர்களே இப்படி செய்யும் பொழுது இறைவனால் என்ன செய்ய
முடியும்..?
குண்டடி பட்டவர்களில் பலர் மூதூர் ஆஸ்பத்திரியில் இரத்த காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செத்தாலும் பொறந்த மண்ணிலே தான் சாக வேண்டும் என்ற வைராக்கியத்தோடு ஒருசில குடும்பங்கள் மூதூரை விட்டு வெளி யேற மறுத்து அங்கேயே இருக்கின்றனர்.
"பயங்காளிக்கு நூறு முறை சாவு வீரனுக்கு ஒரு முறை சாவு" என்ற எண்ணம் வந்ததோ...... என்னமோ... அவர்களுக்கு!
அவர்களோட சேர்ந்து நாமும் இருக்கலாம் என்றால் குடும்ப நிலை இடம் தருவதாக இல்லை. ஊரோட ஒத்துப் போகணும் என்ற எண்ணம் என்னை குடைந்தெடுத்தது.
திசையறியாத இலக்குகளை நோக்கி வந்து விழுந்து வெடிக்கும் ஷெல்களில் இருந்து கந்தக நாற்றம் பரவிக்கொண்டிருந்தது.
குழந்தைகளை சுமந்து செல்லும் தாய்மார்கள், வயதான தாய் தந்தையரை வழி நடத்தி செல்லும் பிள்ளைகள்.
மழை விட்டும் தூவானம் விடாதது போல இடை இடையே துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன. அதனைப் பொருட்படுத்தாது மக்கள் நடந்து கொண் டிருந்தார்கள். பசிக்கு அழுத சிறுவர்கள், பாலுக்கு அழுத குழந்தைகள், பால் கொடுக்கமுடியாது அவதிப்பட்ட தாய்மார்கள்.
" மூதுாரில் முஸ்லிமாக்களோட சேராட்டி தமிழனுக்கு வாழ்வில்ல. தமிழனோட சேராட்டி நமக்கும் வாழ்வில்ல." எங்களோடு ஒரு சில தமிழாக்களும் வந்து கொண்டிருந்தார்கள். ஊரே ஊழிக் காலம் போல் இருந்தது. உயிரைக் .
இ 66 பங்குனி 2014

Page 30
- கையில பிடிச்சிக்கிட்டு போறாப்
போல இருந்தது.
சனங்கள் வரிசையாக கினாந்தி முனையை நோக்கி நடந்தார்கள். பசியும், தண்ணீர்த் தாகமும் அவர்களை வாட்டி எடுத் தது. குழந்தைகள் அழ ஆரம்பித்தார்கள். முதியவர்கள் நடக்க சக்தியற்று, மண் றோட்டில் புழுதியோடு புழுதியாக இழுபட்டு மேல் மூச்சும் கீழ் மூச்சும் வாங்க நடந்து வந்தார்கள்.
மர ங் க ளெல்லாம் மௌன பூதங்களை போல் மண் ஒழுங்கையில் வரிசையாக காணப்பட்டன.
நான் உம்மாவைத் தூக்கிக் கொண்டு தம்பியையும், தங்கச்சியையும் பின்னால் வருமாறு கூறிச் சென்றேன். யாருக்கு யார் ஆறுதல் கூறுவது என்று தெரியல்ல. எல்லாருடைய நிலையும் அதோகதிதான்.
துப்பாக்கி வெடிகளினாலும், மல்டிபரல் சப்தங்களினாலும் அந்தப் பிரதேசம் அதிர்ந்தது. மூணாம் கட்ட மலை குன்றில் மோதி பயங்கர மாய் எதிரொலித்தது. பெரும் இரைச்சலுடன் கிபீர் விமானங்கள் மலையடிவாரத்தை வட்ட மிட்டன.
கினாந்தி முனை மலை இடுக்கான பள்ளத்தாக்குப் பிரதேசம். திட்டுத்திட்டாய் அமைந்த பாறைக் குன்றுகள். அருகில் இடிமண் ஆறு வளைந்து நெளிந்து ஓடிக் கொண்டி ருந்தது. குடியிருப்பு அதிகம் இல்லாத பகுதி. ஆலமரங்களும், அத்திப்பழ மரங்களும் நிறைந்து சேனைப் பயிர்ச்செய்கை பண்ணும் இடமாக இருந்தது.
கினாந்தி முனை மலையடிவாரத்தில் மக்கள் குழுமி நின்றார்கள். நான் எனது குடும்பத்தோடு மலைச்சரிவில் உள்ள மூங்கில் மரத்தடியில் அமர்ந்திருந்தேன். அன்றைய துயர சம்பவங்களை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. கண் எதிரே எத்தின் கொடுமைகள். மக்கள் பயத்தினால் உறைந்து போய் விட்டார்கள். ஏதோ விசாரணையின் பின்னர் மக்களை வெளியேற அனுமதிப்பதாக புலிகளிடமிருந்து வந்த தகவல் மரத்தால் விழுந்தனை மாடு ஏறி மிதிப்பது போல இருந்தது.
விசாரணைக்காக மக்கள் வரிசையில் நிறுத்தப்பட்டார்கள். விசாரணையும், அதன் அவலமும் மனக் கிடங்குகளில் மரணப்
28/ கீவநதி - இதழ் :

பயத்தையே விதைத்திருந்தது. மீதமிருந்த நம்பிக்கைகள் தீர்ந்து போயின . வாழ்வு குறித்து மக்கள் ஏங்கித் தவித்த கோரமது. மக்கள் முண்டியடித்துக் கொண்டு ஆவலாய், திகிலுடன் கூடிய பரபரப்புடன் நின்றிருந்தனர்.
ஆண்கள் ஒருபக்கமாகவும், பெண்கள் ஒரு பக்கமாகவும் வரிசையில் நிறுத்தப்பட்டார் கள். முகமெல்லாம் குறாவி , உடல் களைச்சுப் போய், ஏக்கப் பெருமூச்சுக்களை விட்டுக் கொண்டு, பாறைக் குன்றுகளிலும், வெல்லப் பத்தைகளுக்குக் கீழும் செய்வதறியாது நின்று கொண்டிருந்தனர்.
காலம்தான் மனித வாழ்கையில் எத்தனை மாற்றங்களை செய்துவிட்டது!
எனது நினைவெல்லாம் என குடும்பத்தைப்பத்தி சுற்றிச் சுற்றி வந்து... வந்து வட்டமிட்டது. என்னை ஆத்மார்த்தமாக நேசித்து எனக்காக ஏங்கித் தவித்த ஆபிதாவும் சுனாமிக்குள் அகப்பட்டு அமிழ்ந்து போனதும் என் நினைவுகளில் வந்தது. கலியாணத்துக்கு காத்து நிக்கிற் தங்கச்சி, படிக்க வேண்டிய தம்பி, நோய்வாய்ப்பட்ட உம்மா.
மாப்பிள்ளை தேடிக்க முடியாத காரியம். ஓவ்வொருவரும் ஏதாவது ஒன்னோட தொடர்பு வெச்சிக்கிட்டு வேலை வெட்டி இல்லாம ஊர் சுத்துகிறான்கள்.
வீடு வாசல் வளவெல்லாம் உட்டுப் போட்டு வந்திட்டோம். இனியும் திரும்பிப் போக லாமா? எப்ப போகலாம்..? ஊர்ல ஒளிச்சிக் கிட்டு இருக்கிற கறாமிகள் எல்லாத்தையும் ஒடச்சி எடுத்துப்போடும். அதுகளுக்குதான் வேட்டை.
வாப்பா உசிரோட இருக்கக்குள்ள சொந்தக்காரங்க எல்லோரும் வந்தாங்க, பார்த்தாங்க இப்ப ஒருத்தரும் சும்மா கூட வாற
S6/பங்குனி 2014

Page 31
தில்ல. வாப்பா காணாமப் போன பொறவு எங்கள் ஒதுக்கிட்டாங்க. அந்த வேதனயால் ஒடஞ்சி போன உம்மாவுக்கு வந்த நோய் இன்னும் தீரல்ல. கதையுமில்ல பேச்சுமில்ல படுத்த படுக்கைதான்.
நாம் எந்த ஊரில் அகதியா இருக்கப் போறோமோ...? பொறந்த ஊருக்கு எப்ப திரும்பி வரப் போறோமோ.....? அல்லாவுக்குத் தான் வெளிச்சம். அகதி முகாமுக்குள்ள நம்மட வாழ்க்கை முடிஞ்சிடப் போவுது.
கந்தளாய் நமக்கு பழக்கப்படாத ஊர். வயலோசையும் கரும்போசையும் கேக்கிற ஊர் மழை பெய்தால் கால் புதையும் சேறு. நமது ' அகதி முகாம் வயல் வெட்டைக்குள்ளேயா...? பாடசாலை வளவுக்குள்ளேயா ..? அல்லது பள்ளிவாசலுக்குள்ளேயா ...? யார் கண்டது ...?
நல்ல உடுப்பில்ல, சாப்பாடு இல்ல. எல்லாத்தையும் போட்டது போட்ட மாதிரி உட்டுட்டு வந்திட்டோம். உடுத்தின உடுப்புத் தான். இதெல்லாம் இன்னும் எத்தின நாளைக்கு. ஏக்கனவே கஷ்டப்பட்டுப் போன எங்களுக்கு இப்படி ஒரு உத்தரிப்பா...? எங்க போய் முடியப் போவுதோ தெரியல்ல...? இதையெல்லாம் வாயால் கூறி தணித்து கொள்ளமுடியல...?
ஏற்கனவே மூதூரில் (1987) ஏற்பட்ட வன்செயலால் இதப்போல் தான் வீடு வாசல் எல்லாம் உட்டுப் போட்டு கிண்ணியாவுக்கு அகதியாகப் போனோம். கிண்ணியா மக்கள் எங்கள் நல்லாக் கவனிச்சாங்க, உதவினாங்க. அதை இன்னும் நாங்க மறக்கல. அதற்கு பிறகு (2004) வந்த சுனாமியாலும் கஸ்டப்பட்டுப் போனோம்.
காலத்திற்கு காலம் என்னமோ தெரியாது கஸ்டப்படுரது எங்கட தொழிலா போச்சு. யார் விட்ட பிழை...?
வாப் பாவொட சேர்ந்துக்கிட்டு போட்டில் மீன் பிடிக்க போனவங்க எல்லாம் நல்லா இருக்காங்க. அவங்க எல்லாரும் எங்கள் கண்டும் காணாதவங்கள் போல் போறாங்க.
எல்லாம் நன்றி கெட்ட நாய்கள். மனிஷனை மறந்திட்டாங்க. அகதிகள் எண்ட பெயரும் எங்களுக்கு வரப்போவுது. நானும் சும்மா இருக்கல்ல. கடல் எண்டும், றோட்டு வேலை எண்டும் போய் ஒழைச்சன்.
என்னைப் போல வாலிபரெல்லாம் குசியா இருக்காங்க. எனக்கு அந்தச் சந்தோசம் கெடைக்கல. பிஞ்சியில் பழுத்தவன் போலாகி விட்டேன். எனக்கு இந்த நிலை வருமெண்டு
29/ ஜீவநதி - இதழ்

நான் நினைக்கல்ல. நாம நெனைக்கிறது நடக்குமா...? வாப்பா எங்கள் கஷ்டப்படுத் தல்ல. அதை எங்களுக்கு காட்டல்ல. நல்லாத் தான் வெச்சிருந்தாரு.
யுத்தம் என்கின்ற நான்கு எழுத்துக் களும் வாழ்கையின் மாற்றத்தினை ஏற்படுத்தி எங்களை மிகவும் ஆழமான இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டது.
திடீரென்று மல்டி பரல் ஒன்று வந்து விழுந்து வெடித்தது. அதனைத் தொடர்ந்து ஷெல் வீச்சுக்களும் இடம் பெற்றன. அதில் பலர் மரணமானார்கள். விசாரணை செய்தவர்களும், விசாரணைக்காக காத்திருந்தவர்களும் சிதறி திக்குத் தெரியாமல் தலை தெறிக்க ஓட்டம் பிடித்தனர்.
எங்களோடு வந்தவர்கள் எங்களை விட்டு கண் வைத்த தூரத்தில் வயல் வெளிக் கூடாகச் சென்றுகொண்டிருந்தார்கள்.
எனது சகோதரியும் சகோதரனும் இரத்த வெள்ளத்தில் குற்றுயிராகக் கிடக் கிறார்கள். நான் தாயை அணைத்தபடி நின்று கொண்டிருந்தேன்.
இந்த அவலம் எனக்கு மட்டுமா...? அல்லது இன்று மட்டுந்தானா...?
தாயின் வயிற்றிலிருந்து வழுவி பூமியைத் தழுவிய சில வினாடிகளில் உலகம் புரியாமல் அழுத நாங்கள் இன்று உலகத்தைப் புரிந்து கொண்டு அழுகின்றோம்!
காலம் ஒரு நாள் இக்கண்ணீரைத் துடைக்கும்!
சரச்சந்திர ஜயகொடி சாகித்திய விழா - 2013 இற்கான நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் முதலிடம் பெற்ற திருகோணமலை
சார்ந்த எழுத்தாளர் கலாநிதி கே.எம்.எம் இக்பால் அவர்களை பாராட்டி வாழ்த்துகின்றோம். இவரது “தாமரையின் ஆட்டம்” என்ற நூல்
2010 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபையினால் சிறந்த நூலாகத்
தெரிவு செய்யப்பட்டிருந்தது.
66 / பங்குனி 2014

Page 32
தாபி சுப்பிரமணியம்
செ.ஞானராசா
ஞானா- கலை இலக்க கொண்டிருக்கும் தங்க சிறப்பிதழுக்காக நேர்காண
தாபி- எனக்கும் மகிழ்ச்சி
சந்திப்பு
ஞானா- எழுத்துத் துறையி
தாபி- நிச்சயமாக! கல் போது “அறிவுச்சுடர் 6 மாதா மாதம் எழுத பத்திரிகைக்கான சகல
கல்லூரி ஆசி பெற்ற கையெழுத்துப் சிறுகதை ஒன்றை, ஆ. லிருந்து அப்போது வெ யான “கரும்பு” என்னும்
1 கரும்பு 11.12.1 செ.ஞானராசா
வெளிவந்த அந்த என் முறை வாசித்தேன் காலத்திலேயே அதுவும் மகிழ்ச்சியுமே நான் ! அன்றிலிருந்து (195 கொண்டிருக்கின்றேன்.
30/ஜீவநதி - இதழ்

நேர்காணல்
தா.பி.சுப்பிரமணியம்
கிய பரப்பில் பல்வேறு வடிவங்களில் பிரகாசித்துக் ளை “ஜீவநதி" சஞ்சிகையின் திருகோணமலை விழைகின்றேன்.
தான்.
பில் தங்களின் ஆரம்ப நிலையை அறியலாமா? -
விக்காலத்தில் 1954) S.S.C கற்றுக் கொண்டிருந்த என்ற பெயரில் கையெழுத்து பத்திரிகை ஒன்றை 7 வெளியிட்டுக் கொண்டிருந்தேன். அந்த ஓவியங்களையும் நானே வரைந்தேன். ரியர்களின் ஆதரவையும் அமோக பாராட்டையும் பிரதியில் வெளிவந்த "விடா முயற்சி” என்னும் சிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழகத்தி ளிவந்து கொண்டிருந்த பிரபல்ய சிறுவர் சஞ்சிகை இதழுக்கு அனுப்பிவைத்தேன். 955 இதழில் இச்சிறுகதை பிரசுரமாகியது. அச்சில் து சிறுகதையை நான் திருப்பித் திருப்பி எத்தனை என்று எனக்கே தெரியாது. பாடசாலைக் ம் என் முதற் சிறுகதையையே அச்சில் பிரசுரமான தொடர்ந்து எழுதத் துணையாக அமைந்தது. 5) தொடர்ச்சியாக இன்று வரை எழுதிக்
66/பங்குனி 2014

Page 33
ஞானா- ஆரம்ப காலத்தை - அதுவும் மாணவப் பருவத்தைக் குறிப்பிட்டீர்கள் மேலும் தொடர்ந்து - கொண்டிருப்பது பற்றி....
தாபி- அதன் பின் எழுத்துத் தொடர்பை மூன்று விதமாக அதாவது ஆரம்பகாலம், இடைக் காலம், தற்காலம் என மூன்று விதமாக நினைக் கின்றேன். 1. ஆரம்பகாலம்: இது மாணவப்பருவம் என்று சொன்னேன். அன்றைய ஆக்கங்கள் மாணவத் தன்மையானதாகவே இருந்தது, அன்றைய எனது முதலாவது சிறுகதை உருவாகிய விதத்தை பகிர்ந்து கொள்வது நல்லது என நினைக்கின்றேன்.
ஒருநாள் எங்கள் பாடசாலை அதிபரின் ஆசிரியப்பணியின் வெள்ளி விழாவை முன் னிட்டு பாடசாலை ஒரு நேரமாக முடிவடைந் தது. அன்றைய கால நடைமுறையில் பாடசாலைகள் இரு நேரமாக காலை 8.30 முதல் 12.00 வரை பின்னர் 1.30 முதல் 3.30 வரை நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. மேற்படி குறிப்பிட்ட தினத்தில் ஒரு நேரமாக மூடப்பட்டதனால் கிடைத்த அந்த அரைநேர லீவை மகிழ்ச்சியாகக் கழிக்கும் முகமாக வாசிக சாலைக்கு சென்றேன். (இந்த வாசிகசாலையே இலங்கையில் 1885 இல் நிறுவப் பட்ட
முதலாவது வாசிகசாலையாகும்.)
வாசிகசாலையின் உள்ளே நுழைய முற்பட்ட வேளை, வெளி வீதியில் பெரும் சத்தம் ஒன்று கேட்டது. எட்டிப் பார்த்தேன். கார் ஒன்று யாரையோ மோதிவிட்டு ஓடிக் கொண்டிருந்தது. காரின் இலக்கத்தை மனதில் பதிந்து கொண்டு, வாசிகசாலைக்குள் நுழைந்து பொக்கற்றுக்குள் இருந்த டைரியை எடுத்து காரின் இலக்கத்தை எழுதிக் கொண்டேன். இப்படி செய்தமைக்குக் காரணம், எனது அன்றைய (பாடசாலைக்கால) பொழுதுபோக்குகளில் ஒன்று, வீதியில் ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்களின் இலக்கம், அதன் நிறம், அமைப்பு என்பனவற்றை குறித்து வைப்பதே ஆகும். இச்சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு வகுப்பில் கற்றுக் கொண்டிருந்தவேளை, அதிகாரி அழைப்பதாக வகுப்பாசிரியர் கூறினார். பொலீஸ் என்றதும் மிகவும் பயந்த நிலையில் அதிபரின் அலுவலகத் திற்கு வந்தேன்.
"தம்பி, மூன்று நாட்களுக்கு முன் கடற்கரை வாசிகசாலைப் பக்கம் வாகன விபத்து ஒன்று நடைபெற்றுள்ளது. அதைப்பற்றி நாங்கள்
3/ ஜீவநதி - இதழ் 6

"11111': ''பம்
விசாரித்த வேளை, எங்களுக்கு கிடைத்த தகவலின்படி அந்தக்காரின் இலக்கத்தை நீர் குறித்து வைத்திருப்பதாக அறிந்தோம். அந்த இலக்கத்தைத் தரும்படி கேட்கிறோம்." இப்படி பொலிஸ் அதிகாரி கூறிய போது தான் என் பயம் நீங்கியது. காற்சட்டை பொக்கற்றில் இருந்த டைரியை எடுத்து காரின் நம்பரைக் கூறினேன். அவர் அதனைக் குறித்துக் கொண்டு வெளி யேறினார். இது நடந்து ஒரு கிழமைக்குப் பின் பாடசாலை முகவரிக்கு அதிபர் மேற் பார்த்து என் பெயரில் பார்சல் ஒன்று கிடைத்தது.
அதனோடு ஒரு கடிதம்.
"நீர் குறிப்பிட்டுத் தந்த இலக்க வாகன சாரதியைக் கைது செய்ததின் மூலம் உண்மை யான குற்றவாளியைக் கண்டு பிடிக்க முடிந்தது. அதற்காக பொலிஸாரின் அன்பளிப்புப் பொருளை இத்துடன் அனுப்பிவைத்துள்ளோம்” என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுவரை எல்லா மாணவர்களை யும் போல் கணிக்கப்பட்டு வந்த நான் அன்றைய தினம், மாணவர்களால் ஆசிரியர்களால் அதிபரால் உயர்ந்த நிலையில் கணிக்கப்பட்டேன்.
இச்சம்பவத்தை ஒரு சிறுகதை போல் எனது கையெழுத்துப் பத்திரிகையில் எழுதிய தோடு, தபாலில் சிறுவர் சஞ்சிகையான"கரும்பு" இதழுக்கு அனுப்பி வைத்தேன். அது 11.12.1955 ஆம் திகதியில் "விடாமுயற்சி" என்ற தலைப்பில் பிரசுரமாகியது.
2. இடைக்காலம்: வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் முன்னர் குறிப்பிட்ட வாசிகசாலையே எமக்கு கைகொடுத்து உதவியது என்றே சொல்ல வேண்டும். மணி வண்ணன், ஜெயகாந்தன், காண் டேகர், டொக்டர் மு.வரதராசன் போன்றோரின் எழுத்து நடை அப்போது என்னுள் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆயினும் பிற்காலத்தில் அவை கூட மனதில் நிற்காது போய்விட்டது என்றே கூற வேண்டும்.
3.தற்காலம்: தற்போது எனக்கென ஒரு தனித்துவத்தை வகுத்துக் கொண்டு, எதைக் கூற முற்பட்டாலும் அதில் ஒரு நகைச்சுவை பொதிந்த இரட்டை அர்த்தங்கள் கொண்ட கருத்துக்களை உள்ளடக்கியதாக ஆக்கங் களை எழுதிக் கொண்டிருக்கின்றேன்.
ஞானா - முதற் சிறுகதை பற்றிக் கூறினீர்கள். நீங்கள் நாவல்களும் எழுதியிருக்கிறீர்கள். சிறுகதையைப் போல் உங்களது முதல் நாவலான “இதயங்கள்
6 பங்குனி 2014

Page 34
அழுகின்றன என்பது பிறந்ததற்கு காரணம் ஏதாவது இருப்பின் கூற முடியுமா?
தாபி - நிச்சயமாக! அதுவும் ஒரு சுவையான அனுபவந்தான். எமது கல்விக்கொள்கைகள் அவ்வப்போது மாறுபட்டுக் கொண்டு வருவதை அனைவரும் அறிவோம். அதேபோல் 1975 ஆம் ஆண்டில் எமது ஆரம்பக்கல்வியில் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது அதுவரை எமது பாடசாலையில் கணிதம், பூமி சாஸ்திரம், சரித்திரம், சித்திரம், கைப்பணி போன்ற பல பாடங்கள் தனித்தனியாக கற்பிக்கப் பட்டு வந்தது.
இத்தனை பாடங்களையும் சேர்த்து புதிதாக ஒன்றிணைந்த பாடத்திட்டம்" என்ற பெயரில் 1975 இல் புதிய பாடத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்த அரசு விழைந்தது. இதற்காக புதிய முறைப்பயிற்சி ஒன்றினை ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கு அளிக்க விரும்பிய கல்வி அமைச்சுமுதலில் ஒவ்வொரு கல்வி வட்டாரத்தி லிருந்து ஒரு அனுபவ அதிபரை அழைத்து இந்தப் பயிற்சியை அளிக்க விரும்பியது. இதன் படி திருமலை கிண்ணியா வட்டாரக் கல்விப் பிரிவிலிருந்து பயிற்சிக்காக ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதால், எனது கல்வி அதிகாரியாக இருந்த ஜனாப் A.R இஷாக் என்பவர், பயிற்சி நெறிக்காக என்னைத் தெரிவு செய்தார். அப்போது நான் அவரது கல்வி நிர்வாகத்திற்குட்பட்டிருந்த தம்பலகாமம் சாரதா வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றக் கொண்டிருந்தேன். புதிய கல்வித்திட்டத்தின்படி ஒன்றிணைந்த பாடத்திட்டப் பயிற்சியை மேற் கொள்ள மட்டக்களப்பு ஆசிரியர் கல்லூரிக்கு அழைக்கப்பட்டேன். 1975 இல் பயிற்சி நெறி ஆரம்பமாகியது. நான் ஒரு குடும்பஸ்தன், குடும்ப கடமை, பாடசாலைக் கல்விப்பணி அவற்றோடு YMCA இயக்குனர் சபை உறுப்பினர், MPCS இயக்குனர் சபை உறுப்பினர் போன்றவற்றோடு அரசு சார்பற்ற (NGO) பல நிறுவனங்களை மேற் பார்வை செய்யும் நிறுவனமான கிழக்கிலங்கை புனரமைப்புக் கழக ERO) தலைவராகவும் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். நகராட்சி மன்றத்தின் முதலாம் வட்டார உறுப்பினராக மக்களால் தெரிவு செய்யப்பட்டு பின்னர் உப தலைவராக பணியாற்றியுள்ளேன்.
கல்வி அமைச்சினால் கொத்தணிப் பாடசாலை (Cluster school) அமுல்படுத்தப்பட்ட வேளை பட்டிணத்தில் முக்கிய பெரும் முறை
32 கீவநதி - இத

கல்லூரிகளை உள்ளடக்கிய "கிழக்கு கொத்தணிப் பாடசாலைகளின் துணைக் கொத்தணி அதிபராக கடமையாற்றிய வேளை எனது பாடசாலையோடு ஏனைய பாடசாலை களையும் அடிக்கடி மேற்பார்வை செய்து கல்வித்திணைக்களத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்பில் இருந்தேன்.
இவை போன்ற பல பொறுப்புகளை சுறுசுறுப்பாக ஆற்றிக் கொண்டிருந்த எனக்கு புதிய பயிற்சிக்காக சென்ற வேளை மாலை நேர ஓய்வுப் பொழுதைக் கழிப்பதில் பெரும் சிரமத்தை எதிர் கொண்டேன். இரண்டாம் நாள் மாலை வெளி விறாந்தையில் யோசித்துக் கொண்டு நின்றபோது ஒரு அறையில் வெளிச்சம் தெரிவதைக் கண்டு மெல்ல அங்கு சென்றேன். கல்லூரி கணித விரிவுரையாளர் திரு.கோ.கோணேசபிள்ளை அவர்கள் ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டு எழுதிக் கொண்டிருந்தார் என் நிழல் அசைவாட்டத்தைக் கண்டு நிமிர்ந்த அன்பாய் விசாரித்தார். எனது தர்மசங்கட நிலையைக் கூறினேன். சிரித்து விட்டு, தனது மேசை லாச்சியைத் திறந்து சிறிது தாள்களை எடுத்து என்னிடம் நீட்டினார்.
"நீரெல்லாம் கற்பனை வளமிக்கவர் என்பதை நானறிவேன்! எழுதக்கூடியவர். இந்த ஓய்வுச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எதை யாவது எழுதும்” என்றார். பொறி தட்டியது போலிருந்தது எனக்கு. அவர் தந்த தாள்களை வைத்துக் கொண்டு அடுத்த நாள் மாலையே சிறுகதை ஒன்றை எழுதத் தொடங்கினேன். அது சற்றுப் பெரிதாகி விட்டது. இன்னும் சில விடயங்களைச் சொல்ல விரும்பினேன். அது குறுநாவலாக விரிந்தது. மீண்டும் அதனைப் பிரதி பண்ணிக் கொண்டிருந்த போது அந்த விசேட பயிற்சியில் என்னோடு இருந்த கல் முனை கவிஞர் ஜீவா ஜீவரத்தினம் அதனைப் படித்துப் பார்த்து விட்டு மகிழ்ச்சி தெரிவித்த தோடு அதனை வீரகேசரி வெளியீட்டிற்கு அனுப்பி வைக்கும்படி ஆலோசனை கூறினார். அக்காலப்பகுதியில் (1975) வீரகேசரி நிறுவனம் மாதமொருமுறை எழுத்தளார்களின் நாவல் களை புத்தகமாக வெளியிட்டுக் கொண்டி ருந்தது. அவரின் ஆலோசனைக்கிணங்க, எழுதியதை வீரகேசரி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தேன். அந்த வாரமுடிவில் மட்டக்களப்பி லிருந்து திருமலைக்கு என் வீட்டிற்கு வந்த போது வீரகேசரி நிறுவனத்திடமிருந்து கடிதம் ஒன்று வந்து சேர்ந்திருந்தது. அதில் நாவல்
66 / பங்குனி 2014

Page 35
கிடைத்தது. பரிசீலனைக்குப் பின் முடிவு தெரிவிக்கப்படும் என்று காணப்பட்டது. மனம் மகிழ்ச்சியடைந்தது.'
இரண்டு வாரங்களின் பார்ஸல் ஒன்று கிடைத்தது. அதைப் பிரித்துப் பார்த்தேன். நான் அனுப்பி வைத்த அதே நாவல் பெரும் ஏமாற்றமாக இருந்தது. அதனோடு கூட கடிதம் ஒன்று. "நீங்களெல்லாம் எழுத்துத் துறைக்கு வரத்தான் வேண்டுமா?” என்ற வாசகங்களோடு அக்கடிதம் இருக்கும் என்ற எண்ணத்தோடு கடிதத்தை பிரித்துப் படித்தேன்.
"நாவல் வாசிக்கப்பட்டுள்ளது. பின் வரும் குறிப்புகளை அவதானிக்கவும். 1. கதையின் கரு மிக நன்று 2. மூலக்கதைக்குத் தொடர்பில்லாத அம்சங்கள் சில இடங்களில் காணப்படுகின்றன. 3. சில விடயங்கள் அவசரமாகச் சொல்லப்பட்டி ருக்கின்றன. 4. எங்கள் பிரசுரத்திற்கு 120 பக்கங்கள் வரக் கூடியதாக மேற்கறிப்பிட்டவற்றை மத்தில் கொண்டு மீண்டும் நாவலை எழுதி அனுப்புவீர் களானால் பிரசுரிப்பது பற்றி ஆலோசிக்கப்படும்.
மீண்டும் நாவலைப் பிரித்துப் பார்த் தேன். பல இடங்களில் சிவப்பு போனாவினால் அடிக்குறிப்புகள் . வினவப்பட்டன. மனதில் போராட்டம் என்னால் எழுதக்கூடியதை பிரதான கருவைச் சொல்லி விட்டேன். இதற்கு மேல் என்னால் எழுத முடியாது என்று முடி வெடுத்தேன். அதேவேளை எத்தனையோ வேலைப்பளுக்களுக்கு மத்தில் இதனைப் பொறுமையோடு வாசித்து எனக்கு எந்த விதத் திலும் முன்னனுபவம் இல்லாத “வீரகேசரி” நாவல் வெளியீட்டாளரான திரு.சி.பாலச் சந்திரன் அவர்களின் பரந்த நல்ல நெஞ்சத்தை நினைத்தபோது என்னுள் ஒரு சோகம் கிளர்த் தெழுந்தது. பயிற்சிக்காக அன்றிரவு மீண்டும் மட்டக்களப்பிற்கு புறப்பட்ட ரயில் பிரயாணத்தின் போது எனது நாவலை எவ்வாறு விரிவாக்குவது என்று சிந்தித்துக் கொண்டே சென்று மறுநாள் மாலை கலாசாலையில் எழுதத் தொடங்கி இரண்டு நாட்களில் அதனை முடித்து வீரகேசரிக்கு அனுப்பிவைத்தேன்.
ஞானா : இதன் பிறகு தங்களின் இலக்கியப் பங்களிப்புப் பற்றி....
தாபி: அந்த காலகட்டத்தில் என்னைச் சுற்றிக் காணப்பட்ட சமூகப் பணிகள் பெரிய அளவில்
33/ ஜீவநதி - இத

எழுத முடியாமல் பண்ணி விட்டது. ஆயினும், திருமலையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ரோனியோ சஞ்சிகைகளை டைப் செய்தும் வடிவமைத்தும் தேவையான சித்திரங்களை வரைந்தும் உதவியுள்ளேன். எடுத்துக்காட்டாக சில சஞ்சிகைகள்:- சித்தி அமரனின் "யாழ், மைக்கல் கொலினின் "தாகம்”, கே.ரத்னாவின் “உதயம்” முன் னோடி களின் "புதுமை நெஞ்சங்கள்”, பஸ்தாரின் “கமலை”, சசிக் குமாரின் - தில்லைக்குமரனின் “கோணைத் தென்றல்” போன்ற வெளியீடுகளுக்கு ஆலோ சனைகள் வழங்கி வழி நடத்தியுள்ளேன். இதனோடு கல்வி சம்பந்தமான வழிகாட்டி களாக பாடசாலை போட்டி நிகழ்ச்சி முன் அட்டைகள் போன்றவை என் கை வண்ணத் திலே வெளிவந்துள்ளன. ஆனால், இன்று இவை எல்லாம் கணனிமயப்பட்டு விட்டன.
ஞானா - கவிதைத் துறையிலே தங்களின் பங்களிப்பு ஏதேனும் உண்டோ?
தாபி - அவ்வப்போது மனதில் எண்ணங்களை கவிதை வடிவமாக்கிய வாய்ப்புகளும் நிறை வாகவே கிடைத்துள்ளன. "சு.பிதா” என்ற பெயரில் ஏராளமான கவிதைகள் வெளி வந்திருக்கின்றன. "நீரில் பூத்த மலர்” என்ற கவிதைத் தொகுப்பில் எனது கவிதை இடம் பெற்றுள்ளது. கவிதைத்துறையில் குறிப்பாக ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
உலகம் முழுவதிலுமுள்ள கவிஞர் களில் தெரிந்து எடுக்கப்பட்ட கவிஞர்களின் கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பான "செம்மாங்கனி" என்ற நூலின் அறிமுக விழா நிகழ்வு 1982 இல் திருமலை பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய பண்டிதர் இ.வடிவேலு ஐயா அவர்கள் ஆரம்பத்தில் மங்கல விளக்கினை ஏற்றிவைத்தார். நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போதே அந்த விளக்கை அவர் அணைத்தார் அங்கு பார்வை யாளராகக் கலந்து கொண்டிருந்த கலைஞர் களிடம் "தான் விளக்கை அணைத்ததற்கான காரணத்தை கவிதை வடிவில் தரும்படி” வேண்டுகோள் விடுத்தார்.
பங்கு கொண்டிருந்த கவிஞர்களில் பெரும்பாலானார் பதில் கவிதைகளை எழுதிக் கொடுத்தனர். விசேட விருந்தினராக வருகை
66/ பங்குனி 2014

Page 36
தந்திரந்த உலகக் கவிதைத் தொகுப்பின் தொகுப்பாளரான அழகாபுரி அழகுதாஸன் (மறைந்த பிரபல்ய கவியரசர் கண்ணதாசனின் மருமகன்) எழுதப்பட்ட அத்தனை திடீர் கவிதை களையும் பரீசீலனை செய்து பின்வரும் கவிதை சிறப்பாக உள்ளது. என்று வாழ்த்தியதோடு "தமிழகக் கவிஞர்களுக்கு நிகராக உடனடிக் கவிபுனையும் திருமலைக் கவிஞர் எந்த விதத்தி லும் குறைந்தவர்களல்ல" என்று குறிப்பிட்டார்.
அகத்தின் பொலிவுக்கு திரியில் ஒளிச்சுடர் முகத்தின் நெளிவுக்கு திரியில் புகைச் சுடர் நோக்கிய தலைவர் திரியைத் தீண்டினார் நோக்கம் மங்கல பொலிவு காத்தார்.
இவ்வாறு பாராட்டப்பெற்ற கவிதை எனது ஆக்கமே மிலேனியம் ஆண்டு என்று குறிக்கப்பட்ட புத்தாயிரம் ஆண்டு ஆரம்பித்த வேளை அதாவது 31.12.1999 நள்ளிரவு திரு மலை புனித மரியாள் பேராலயத்தில் புத்தாண்டு பிறப்பு ஆராதனையின் பின்னர் 1.1.2000 நள்ளிரவு ஒரு மணிக்கு ஆயர் மேதகு ஜோசப் கிங்ஸிலி சுவாம் பிள்ளை அவர்களினால் வெளியிடப்பட்ட "கவிதாலயம்” என்னும் கவிதைத் தொகுதியிலும் எனது கவிதை இடம்பெற்றுள்ளது. "ஈழத்து இலக்கியச் சோலை" நிறுவனத்தின் 11 ஆவது வெளியீடான இத் தொகுப்பில் 50 கவிஞர்களின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இதன் தொகுப்பாளர் சித்தி அமரசிங்கம்.
ஞானா - இதுவரை இலக்கியத்துறை பற்றிக் கூறினீர்கள். நன்றி தங்களுக்கு நாடகத்துறையிலும் நிறையத் தொடர்புண்டு என்று அறிகிறோம். அதனைப் பற்றி எம் வாசகர்களோடு பகிர்ந்து கொள்வீர்களா?"
தா.பி - நாடகத்துறையில் நிறையத் தொடர்புண்டு. பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்ட வேலை தேடும் நிலையில் இருந்த வேளையில் எனக்கு கிடைத்த நண்பர்களில் சிலரை நண்பர் கள் என்று சொல்வதை விட வழி காட்டிகள் என்பதே பொருத்தமாகும். திரு. ஜே. கருணை யோசப் என்பவர் இவர்களில் முதலிடம் பெறுகிறார். இவர் 1958 இல் கலைவாணி நாடகமன்றம் .. என்ற பெயரில் அமைப்பு ஒன்றை உருவாக்கினார். அதன் அங்குரார்ப்பன நிகழ்வு 22.11.1958 இல் புனித சூசையப்பர் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இந்த அங்குரார்ப் பண நிகழ்வில் நாடகம் ஒன்றை மேடையேற்ற கொழும்பிலிருந்து வானொலி நாடகங்கள் மூலம் புகழ் பெற்ற கலைஞர் T.S. பிச்சையப்பா ,
34 கீவநதி - இதழ் :

லடீஸ் வீரமணி, S.M.A. ஜபார், M.M.மக்கீன், S: சோமசுந்தரம் போன்றோர் வந்திருந்தனர். இவர்களோடு மன்றக் கலைஞர்களான சித்தி அமரசிங்கம் அவர்களும் நானும் இணைந்து நடிக்கச் சந்தர்ப்பங்கிடைத்தமை மறக்க
முடியாத இனிமையான நிகழ்வு.
அக்காலகட்டத்தில் பல நகைச்சுவை நாடகங்களை அடிக்கடி மேடையேற்றிய நிறைய சந்தர்ப்பங்கள் எங்கள் மன்றத்திற்கு கிடைத்தன. நகரத்தில் ஏதாவது விழாக்கள் நடைபெறும் போது அதன் இறுதி நிகழ்வாக எமது மன்றத்தினால் நாடகங்கள் மேடை யேற்றப்படுவது வழக்கமாகும். குறிப்பாக நகைச் சுவை நாடகங்கள்...,
ஞானா - வானொலி நாடகப் பிரதி தயாரிப்பதிலும் தங்களுக்கு அனுபவம் உண்டென்று அறிகிறோம் இத் பற்றிய அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளலாமே?...
தாபி - ஆமாம்! ஒரு காலகட்டத்தில் சராசரி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வானொலி தேசிய சேவையில் எனது நாடகங்கள் ஒலி பரப்பப்பட்ன. ஆசையை அவி, மகாஜோதி, கோயிலும் சுனையும், தனக்குத் தனக் கெண்டால், திருத்தப்படும் தீர்மானங்கள் என்று இப்படிப் பல நல்ல பரப்பப்பட்ட நாடகங்களைக் கூறலாம்.
இவற்றில் கோயிலும் சுனையும் என்ற நாடகம் திருமலை, திருக்கோணேஸ்வர ஆலய வருடாந்த உற்சவத்தையொட்டியும், மகரஜோதி என்ற நாடகம் வெசாக் தினத்தையொட்டியும் மறு ஒலி பரப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத் தக்கது. 1998 இல் பிரான்ஸ் தமிழ் ஒலிமன்றம் தினக்குரல் பத்திரிகையுடன் இணைந்து நடாத்திய சில்லையூர் செல்வராசன் நினைவு வானொலி நாடக ஒலிப்பேழைப்போட்டியில் என்னால் எழுதப்பட்ட தனக்கு தனக் கெண்டால்..." என்ற வானொலி நாடக ஒலிப் பேழைக்கு முதற்பரிசாக 50000/- கிடைத்தது. அதே போல் வடக்கு கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டு அமைச்சு நடாத்திய நாடகப் பிரதிப் போட்டியிலும் பரிசு கிடைத்தது. இன்று வானொலி நாடகத்தைக்கேட்போரின் தொகை பெருமளவு குறைந்துள்ளது. முற்றுமுழுதாக தொலைக்காட்சி நிகழ்விலேயே சங்கமமாகி விட்டார்கள் என்றே கூறவேண்டும். இன்றைய ரசிகர்கள் காதால் கேட்டு அனுபவிப்பதை விட கண்ணால் இரசிப்பதையே விரும்புகின்றனர்.
56/ பங்குனி 2014

Page 37
அதில் பெருமளவு நன்மையும் உண்டு என்பதில் சந்தேகமும் இல்லை. விரும்பியோ விரும் பாமலோ இதை நானும் ஏற்றுக் கொள் வேண்டியுள்ளது. எங்கள் காலத்தில் காதுக்கே அதிக வேலை. ஆசிரியர் சொல்வார் பெற்றார் சொல்வார் அதுவே நமக்கு வேத வாக்கு. ஆனால் இன்று நம்மைச் சுற்றி காணப்படும் தொடர்பாடல்கள், தொடர்பு சாதனங்கள் இவற்றிற்கு மேலாக நாம் அறியாத நமக்குப் புரியாத பலவற்றை வெளிக்கொணவதை எம்மால் மறுக்கமுடியாதுள்ளது.
ஞானா - சரி... அது உண்மைதான் யதர்த்தத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் இதுவரை நீங்கள் கூறியதற்கு மேலாக ஓவியத் துறையிலும் உங்களுக்கு ஈடுபாடு உண்டு என அறிந் திருக்கின்றேன். இதுபற்றி சிலவற்றை எம் வாசகர் களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.
தாபி- இப்படி நீங்கள் கேட்பதே பெரும் மகிழ்ச்சி எனது பாடசாலைக்காலத்தில் மாணவனாக இருந்த போது கையெழுத்து பிரதியொன்றை தயாரித்து வெளியிட்டேன் என்று கூறினேன். அந்தப் பத்திரிகைக்கு தேவைப்பட் ஓவியங்கள், அட்டைப்படம் உட்பட அனைத்தும் என்னா லேயே வரையப்பட்டன. முன்னர் குறிப்பிட்ட ஏனையோரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகைகளுக்கும் ஓவியங்கள் வரைந்து உதவியுள்ளேள்.
ஞானா - நல்லது ஒவியத் துறையில் போட்டிகளிலும் ஈடுபட்ட வாய்ப்பும் பரிசுகள் ஏதாவது கிடைக்கச் சந்தர்ப்பமும் கிடைத்துள்ளதா?
தாபி - எல்லாம் தானாகவே கிடைத்தவை என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்சி அடைகின்றேன். திருமலை நகர பொன்விழா மலர் 1990), சுவாமி விபுலானந்தர் சொற்பொழிவு நூற்றாண்டு மலர் போன்றவற்றின் முன் அட்டைகள் என் கைவண்ணமே. இதற்காக பாசுகள் கிடைத் துள்ளன. அழகியல் கல்வியில் சித்திர பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகராக சித்திர பாட முதன்மையாசிரியராக கடமையாற்றிய வேளையில் ஆசிரியர் களுக்கு பயன படுத்துவதற்கென சித்திர பாட வழிகாட்டி நூல்கள் பலவற்றை வெளிக் கொணர்ந் துள்ளேன். வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அழகியல் கல்வி(சித்திரம்) வள
35/ ஜீவநதி - இத!

ஆளணிகுழுவிலும் அங்கம் வகித்துள்ளேன்.
ஞானா - கையெழுத்துப் பத்திரிகையாளராக. ஆசிரியராக. அதிபராக, கொத்தணி உப தலைவர். அழகியற் கல்வி சித்திர பாட முதன்மை ஆசிரியராக, எழுத்தாளராக, நாவலாசிரியராக. ஆரம்ப கல்வி சித்திர பாட முதன்மையாசிரியராக இப்படி பல்வேறு பட்ட வகையில் ஆளுமையும் அனுபமும் கொண்ட உங்களுக்கு பாராட்டுக்கள் விருதுகள் கிடைத்திருக்க வேண்டுமே?
தாபி - பல கிடைத்துள்ளன. இவை கூட தானாகவே வந்தனவையே. எழுத்துத்துறை சார்ந்த விருதுகள், நாடகம் சார்ந்த விருதுகள், ஓவியத் துறை சார்ந்த விருதுகள், ஆளுநர் விருது எனப் பல் வேறு விருதுகளை பெற்றுள்ளேன்.
ஞானா - ஜீவநதியின் திருகோணமலை மாவட்ட சிறப்பிதழக்காக நேர்காணலை வழங்கிய உங்களுக்கு எமது நன்றிகள்.
தா.பி - நன்றி
வேண்டும்!
இதுவரையில் வாழ்ந்தறியாத் தமிழினத்தார்
இனியேனும் வாழ்ந்து வர முயல வேண்டும்! அதற்கேற்ப "ஜீவநதி”ஓட வேண்டும்,
அற்புதமாய் "உயிர் ஆறு" பாய வேண்டும்! புதிய பல வழிகாட்டிப் போக வேண்டும்,
புத்துணர் நம்மவர்க்குத் தோன்ற வேண்டும்! எதுவரினும் இடைவழியில் தாண்ட வேண்டும்,
இறுதிவரை தளராமல் ஏகவேண்டும்!
போனதெலாம் நினையாது மறக்க வேண்டும்,
புளுகுகளும் பூச்சுகளும் மறைய வேண்டும்! மானமுடன் வாழ்வாங்கு வாழ வேண்டும்,
மதியற்றோர் வார்த்தையெலாம் மங்க வேண்டும்! தேனமுதத் தமிழ் ஓங்கிச் செழிக்க வேண்டும்,
செம்மொழியைத் தேய்ப்பாரைத் தள்ள வேண்டும்! கூனியவர் இனியேனும் நிமிர வேண்டும்,
குறை தீர்ந்த நிறைவான வாழ்க்கை வேண்டும்!
தாமரைத்தீவான்
66 பங்குனி 2014

Page 38
"உங்களுக்கு தரப்பட்ட நேரம் முடிஞ்சாச்சு... நீங்க போகலாம்” என்ற குரலுக்குரியவன் காக்கி யூனிபோர்மில் வெற்றிலைக்காவின் வெளியே தெரிய .. வலப்பக்க தோள் பட்பையில் "பந்தனாகாரய்" என பொறிக்கப்பட்டிருந்த என்ன அது ... தெரியவில்லை... அதனை பொருத்தியிருந்தான்.
நேரம் முடிந்த பெண் கம்பி வலை அடிக்கப்பட்டு தடைச்சுவர் போடப்பட்டிருந்த அறைக்குள் நின்று கொண்டிருந்த கைதிகளுள் ஒருவனைப் பார்த்து... புருஷனாயிருக்க வேண்டும்... என்னவோ கேசில் மாட்டுப்பட்டு கடந்த ஒரு மாசமாய் இந்த விளக்க மறியலில் இருந்து வருகின்றான்.
அது நீங்கள் நினைத்தது சரிதான்.. சாட்சாத் ... சிறைச்சாலையே தான் ...
சூடிநிலை
மகனனாவை
இன்னோர் தடவை அழுது விட்டு கூட் முற்றுப்பெற்ற கண்ணீரோடு வெளியேறிச் சென்றவு விசிட்டர்களது தகவல்களை எழுதிக் கொண்டிரு மணித்தியாலமாக வெளியே காத்திருந்து இப்போது உள்ளேவர்.
நேற்று ஞாயிற்றுகிழமை லீவு அவனுக்கு பார்த்தால் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறைச்சாலை அனுமதிக்கப்படுவதில்லை என்று அவனுக்கு தகவல் எப்படியாவது சிறைச்சாலைக்கு வந்து விட வேண்டும்
இதோ அனுமதிக்காக மிக உயர்ந்த சுவர் போடப்பட்டு உள்ளே நுழைவதற்காக இருந்த ஒரே ஓ பார்க்க வருகின்ற ஒவ்வொரு விசிட்டரும் உள்ளே நுன்
வெளியே ஒரு மணித்தியாலம். இடது கை பார்க்கிறான். தற்போது மணி பதினொன்றைக் காட் அவன் வந்தபோது காலை நேரத்துக்கே வந்தவர்க காத்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த நாட்டிலே என்னத்துக்கு கியூ இல்ல கியூ ... டீ எஸ் ஓபீஸ்ல கியூ ... ஐடென்டி கார்டு தின கியூ... ஆஸ்பத்திரில கியூ ... ஹோட்டலில் பரா . கியூ ... மின்சார சபையில் மாமரக் கிளை விழுந்து ச
36 கீவநதி - இதழ் 6

கைதிகள்
டி வந்த தனது சிறு குழந்தைகளுடன் பாதி டன் ராபி அங்கு கைதிகளைப் பார்க்க வருகின்ற தக்கும் ஜெயில் காட்டிடம் சென்றான். ஒரு
தான் அவனுக்கு அனுமதி கிடைத்திருக்கின்றது :
- நேற்றே சிறைச்சாலைக்கு வருவோம் என்று லயில் கைதிகளைப் பார்க்க வெளி நபர்கள் ல் கிடைத்ததுடன் அந்த விடியலை விட்டு இன்று என்ற முடிவோடு... களிட்டு அவற்றின் உச்சந்தலையில் முட்கம்பி ரு பிரதான மரக்கதவும் பூட்டப்பட்டு கைதிகளைப் மழய அனுமதிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். கயில் கட்டியிருந்த சீக்கே பைவ் கடிகாரத்தைப் டிக் கொண்டிருந்தது. பத்து மணிக்கு வந்தவன்... -ள் ஒரு ஏழெட்டுப் பேர் அவனுக்கு முன்னதாக
லை... எதற்கெடுத்தாலும் கியூ . நிவாரணத்துக்கு ணெக்களத்தில் ட்டா சாப்பிட
கிண்ணியா சபருள்ளா சற்று சேதமான
56 பங்குனி 2014

Page 39
-- மின்மானியினை மாற்றித் தர முறைப்பாடு செய்ய க யு, ... மாட்டிறைச்சிக் கடையில கியூ ... மார்க்கெட்டில் கியூ . எதுலதான் கியூ இல்ல சிறைச்சாலை மட்டும் விதிவிலக்கா என்ன... பதினொரு மணி வெயிலின் பிரதான அனுசரணையில் முகத்தில் விளம்பரம் செய்யப் பட்டிருந்த வியர்வையினைத் துடைத்த போது ...
அவனுக்கு எரிச்சலாக இருந்தது... அவனது மனோநிலையில் தான் அங்கு கூடியிருந்த பலரும் இருக்கின்றார்கள் என்பதனை அவர்களது விழிகளைப் பார்த்து விளங்கிக் கொண்டான்.... பெரும்பாலும் எல்லோரது முகத்திலும் சொல்லி வைத்தாற் போல கவலையின் வேர்க்கடலை.*
ஜெயிலுக்கு வருகின்ற விசிட்டர்ஸ் முகத்தில் எப்படி சந்தோஷத்தினை எதிர்பார்க்க முடியும்... துயரமும் வேதனையும் சரிசம அளவில் மிக்ஸாகி அதனையும் தாண்டி எல்லோரின்ட விழிகளிலும் பெயரிடப்படாத அச்சம்... சிறைச்சாலையின் சூழல் மனசின் மிருதுவான உணர்வுகளை சிரச்சேதம் செய்து கொண்டிருந்தது.
"ராபி
இதுதான் என்றில்லாத பல்வேறுபட்ட சிக்கல்கள் பின்னிய சிந்தனைகளில் மாட்டுப் பட்டுக் கொண்டிருந்த ராபி பிரதான கதவின் ஒற்றைக் கதவு திறக்கப்பட்டு உள்ளே அனுமதிக் கப்பட்டான். வாசலில் காவலுக்கு நின்று கொண்டிருந்த ஒரு ஜெயில் கார்ட் உள்ளங் காலிலிருந்து உச்சந்தலை வரை கைகளைப் போட்டுப் போட்டுத் துழாவியதில் ஆங்காங்கு பட்ட கூச்சத்தில் நெளிந்தான் ராபி... இப்போ தெல்லாம் சிறைச்சாலைக்கு கைதி களைப் பார்க்க வருபவர்கள், அவர்கள் கைதிகளுக்கு கொண்டு வரும் பார்சல்கள் எல்லாமே மிகக் கடுமையாக பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டு... உட்படுத்தப்பட்டு... வாழ்க்கை வெறுக் கும்... அண்மையில் கைதிகளுக்கு கொண்டு வரப்பட்ட உணவுப் பொதிகளுள் குடு, ஹெரோ யின் மற்றும் செல்போன்ஸ் என கண்டு பிடிக்கப் பட்டன.... இப்படி கண்டு பிடிக்கப்படாமல் எத்தனையோ...
அதனால்தான் இப்போது இந்த மாதிரி யான கெடுபிடி... நிறைய ஃபோர்மலிட்டீஸ்... ப்ரொஸீஜர்ஸ் என்பதனை ஜெயில் கார்டுகள் காட்டிய புத்தகங்களில் ஒப்பமிட்ட போதும், அவனது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பதிவு செய்து கொண்ட போதும்...
37l ஜீவநதி - இத

அப்புறம்... கொஞ்சம் இருங்க... "யாரப் பார்க்கணும். ஆர்.ஜாரிஸ்... ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க... அவரக் கூட்டி வர ஆள் அனுப்பியிருக்கோம்...”
அப்போதுதான் ராபி அவதானித்தான் அந்த சிறைச்சாலைக்குள்ளே ஒரு கம்பிச்சுவர். அதன் பின்னே கைதிகள் அடைக்கப்பட்டு உலாவிக் கொண்டிருந்தனர். கடுமையான பாதுகாப்பு... இல்லையென்றால் எவனாச்சும் ஒரு கைதி தப்பி ஓடிவிட்டால்... அவ்வளவுதான் மூணு வருஷத்துக்கு முந்தி மூன்று கைதிகள் வெளியே தப்பி ஓடிவிட்ட சம்பவத்தில் கடமையி லிருந்த நான் கு சிறைச் சாலை உத்தி யோகத்தர்கள் பொலிசாரினால் கைது செய்யப் பட்டு உத்தியோகத்திலிருந்து இன்டெர்டிக்ட் பண்ணப்பட்டு இன்னி வரைக்கும் அவர்களுக் கெதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குப் போய்க் கொண்டிருக்கின்றது.
ராபியோடு சேர்ந்து நாலு பேர் அங்கு போடப்பட்டிருந்த வாங்கில் குந்திக் கொண்டி ருந்தார்கள். ஆவலோடு அங்கும் இங்கும் கண்களால் மேய்ந்து "பாவம் ஜாரிஸ். எப்படியிருக்கானோ தெரியல்ல... ஏன் இப்படி ஒரு காரியத்த செஞ்சான் பாவிப்பய அவனுக்கு என்னாச்சு. இந்தளவுக்கு இவன போக வெச்சது என்ன... எவ்வளவு நல்லவன். நேர்மை யானவன். எல்லாத்தையும் விட அல்லாஹ்வுக் குப் பயந்தவன்... போயும் போயும் எப்படி இப்படி ஒரு காரியத்த ... செஞ்சிருப்பானா... இல்லை.... இது பொய்க் கேசு... யாரோ மாட்டிய வலையில் இவன் ஒரு வெண் புறா.. அவ்வளவுதான்”
"ராபி யாரு... இந்தா உள்ளே போங்க சரியா பத்து நிமிஷம்தான்... அதுக்கப்புறம் ஒரு செக்கனும் இருக்க முடியாது ... சத்தம் போட்டு பேசக் கூடாது ஜாரிஸத்தானே பார்க்க வந்திருக் கீங்க... அந்தா வந்திருக்கிறார்” ஜெயில் கார்டின் முரட்டுத்தனமான குரலின் அனுமதியோடு உள்ளே போனான்... ஏற்கனவே நான்கு பேர் அங்கு நின்று கொண்டு... ரெண்டு பொம்புளயல் முந்தானையை வாயில் செருகி அழுது கொண்டு
கம்பிகளுக்குப் பின்னால்
“டேய் ... ஜாரிஸ். எப்படி மச்சான் இருக்க... " கடந்த ஒரு கிழமையாக சவரம் செய்யப்படாத முகத்தில் அடர்த்தியாய் முளைத்திருந்த தாடி மீசையில் வேறோர் உருவத்துக்கு மாறியிருந்த ஜாரிஸ். ராபியை நேராகப் பார்த்துக் குனிந்து கொண்டான்.
66 பங்குனி 2014

Page 40
“நேத்துத்தான் மச்சான் கேள்விப் பட்டேன். என்னாச்சுடா.. ரெண்டு கெழமையா நான் ஊர்ல இல்ல. ட்ரெயினிங் ப்ரோக்ராம் ஓன்னுக்காக மாத்தறை போயிருந்தேன்... நேத்து தான் வந்தேன் ... கேள்விப்பட்டதுமே ஷொக் காயிட்டேன் மச்சான்.. உடனேயே வரலாம்னு பார்த்தேன்... நேற்று ஞாயிற்றுக்கிழமைன்ன தால ஜெயில்ல கைதியைப் பார்க்க அனுமதி யில் லையாம்..... அதான இனனிக்கு காலைலேயே வந்துட்டேன்... என்ன மச்சான் இதெல்லாம் என்னால இப்ப கூட இத நம்ப ஏலாம இருக்கு... எப்படி மச்சான் .... நீ... நீ... ஜெயில்ல சத்தியமா என்னால் நம்ப முடியாம இருக்குடா....” வாயிலிருந்து வெளியான வார்த்தைகளில் கோர்வை கிடையாது.
ஜாரிஸ் எதுவும் பேசவில்லை. ராபி பேசப்பேச குனிந்தவாறு கேட்டுக் கொண்டிருந் தானே தவிர ராபியின் அடுத்தடுத்து தொடர்ச்சி யான மெகா சீரியல் லெவலில் வந்த கேள்வி களுக்கு அவன் எந்தவிதமான பதில்களையும் தராமல் பேசாதிருந்தான்.
"ஏன் மச்சான் சைலன்டா இருக்க... பேசு மச்சான்... நான்தான் வந்ததிலிருந்து பேசிக்கிட்டு இருக்கன்... நீ எதுவும் பேசுற மாதிரி இல்ல... ஏன் மச்சான்... என்னாச்சு மச்சான்... பொலிஸ் அரெஸ்ட் பண்ணி நாள் முழுக்க மூத்திர நாத்தம் அடிக்குற ஷெல்லுல வெச்சுக் கிட்டு அப்புறம் கோர்ட்ல ஆஜர் பண்ணி இப்ப என்னடான்னா பதினாலு நாள் ரிமான்ட்... இதெல்லாம் உண்மையாமச்சான்..."
"ஏன் மச்சான் இன்னமும் மெளனமா யிருக்க... எங்கிட்ட பேச விருப்பமில்லையா... இல்லே எதுவுமே பேசாம என்ன எவொய்ட் பண்ணுறியா..."
"நல்லாருக்கியா ராபி..." முதன் முதலாக வாய் திறந்தான் ஜாரிஸ்... இருவரின் கண் களும் நேர் கோட்டில் அழுத்தமாக
சந்தித்துக் கொண்டன.
"வலிக் குது மச்சான் எனக்கு ஒன...க்கு... ஒனக்கு... இந்த நிலைல ஒண்ண பார்க்க ஹார்ட் வெடிக்குதுடா..." ராபியின் கண் கள் கலங்கியிருந்தன. ஜாரிஸின் கண்களில் மின்னலின் ஒளிவிழா.. ஒரு சொட்டுக் கண்ணீர் விழியோரத்தின் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தது. ராபி தனது முகத்தை அவனுக்கும் ஜாரிசுக்கும் இடையில் இருந்த பலமான கம்பி வலையில் வைத்து அழுத்தினான்.
38/ கீவநதி - இதழ் |

"நிச்சயமாக இந்த வேலய நீ பண்ணி யிருக்கமாட்டேன்னு இப்ப கூட நான் நூறு வீதம் நம்புறேன்டா... நிச்சயமா நீ இதச் செய்யல... ஒன்னப் பத்தி எனக்கு ஒன்ன விட நல்லாவே தெரியும்... எப்படியும் என்ட பார்வைல நீ ஒரு மேன் ஒஃப் ஜெம்... யாரோ பொறாமைப் புடிச்சவங்கதான் ஒன்ன வேணும்னே மாட்டி வெச்சிருக்காங்க... அது மட்டும் எனக்கு நல்லாப் புரியுது.... போயும் போயும் ஒன்ன இந்தக் கோலத்துல... அந்த மாதிரியான ஒரு எடத்துல... ச்சே..." நாக்குழறினான் ராபி
இப்படித் தான வாழ்வில் சில சிக்கல்கள் நிறைந்த அசந்தர்ப்பங்கள் நமக்கு எதிர்பாராத தருணங்களில் கற்பனைக்கும் எட்டாத விதத்தில் இருந்தபோதும் அதுதான் யதார்த்தம் என சிம்பிளாகச் சொல்லிக் கொண்டு கடந்து போய்விடுகின்றன.. வாழ்வில் நாம் கொண்டுள்ள எல்லா தியரிகளும் கால வோட்டத்தில் மாற்றங்களுக்கு உட்படுகின்ற ரசவாதத்தைக் கொண்டிருக்கின்ற என்பதனை.
இப்போது கூட ராபியினால் நம்ப முடியவில்லை சின்ன வயசிலிருந்தே ஆத்ம நண்பனாகி விட்ட ஜாரிஸ் பாலர் வகுப்பிலிருந்து ஒன்றாக படித்தவன். இன்னைக்கு வரைக்கும் பிரியாதிருக்கின்ற அபூர்வமான நட்பு.. ராபி பல்கலைக்கழகத்துக்கு உயர் கல்விக்காக சென்று விட பல்கலைக்கழக அனுமதி கிடைக் காத ஜாரிஸ் வெளிவாரியாக ஆர்ட்ஸ் டிகிரியை முடித்துக் கொண்டு கடந்த பத்தாண்டுகளாக நீர்ப்பாசனத் திணைக்களத்தில் எக்கவுன்ட் பிராஞ்சில் பணிபுரிந்து கொண்டிருக்கிறான்.
ராபிக்கு சின்ன வயசில் இருந்தே தெரியும் ஜாரிஸ் அக்மார்க் ரிலீஜியஸ்... ரொம்பவும் சமயப் பற்றுள்ளவன். நேரத்துக்கு தொழுகை..> மாசச் சம்பளமென்றாலும் முடியு மானவரை சின்னச்சின்ன ஸதக்காக்கள். மாசத்துக்கு ஒரு நாளாவது சுன்னத்தான நோன்பு கட்டாயம் பிடிப்பான்.. இவை எல்லா வற்றையும் விட என்னதான் பொருளாதாரக் கஷ்டம் வந்தாலும் லோன் கீன் என்று எதுவு மில்லை... வட்டி கலந்து விடுமோ என்று கழுத்தை நெரிக்கும் பொருளாதார இறுக்கத் திலும் கூட பெண்டாட்டியிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச நகைகளில் எதனையும் வங்கியில் இது வரை அடகுவைத்ததாக வரலாறு கிடையாது...
சமயப்பற்றுள்ள நடுத்தர வர்க்கத் தினன்.
"மச்சான் ஒனக்கும் கல்யாணமாகி
56 பங்குனி 2014

Page 41
J ၏ ၆ GuTbuTim T @) (5 တံ (55 5... စ္ဆdb G5/T၈၆၀ဆံ/လ 9, i5
Gubb SGD 50ဏံဣ၊ ၈/mt 5) SUUIT/55.. ၆၆ Gubဗဲ(Bb bTf ITSis 6 5Liq
fb ၆လံလဲ Lဗဲလ 5LLq5 5/T655က Joi OIT... 6/အာဏu ဗုံ 35L bLT... 5.T လb
Luqul(6ဲ... ဤL DITEthumb L (ဗဲ6Lဆံတဲ့ Tစံအံစာ55 လေ55 u႕BITB...
(DIT EITI DIT f jullyစံ လbm.. BLDဆံ(5 (ရေITB Upmတံ့၏L၆ 6ဲဟဲ.. BITod God EITလံgကရေIT.. } အFLလ က 95IT/5] =(G53= g Bb... ©လံလIT DTလ ၆J Thu 5၈ဖြေLuu GuTI...” 07 JTTလံလျှbuTG5လံလTub .
- “ဏီ T G Td Tဏီ 90% Fuuu လံgက... (55T Dဤ Lဏ် စံ7T ofဗဲ5 uo၏ထု..၈၆လံလ 55uTu UT55) G5/Tt5T၏ ဆံပဲ...” bLGb fuu
၈01 ' IIT) ဆံ၈55flလံ ကိုလT bလံL) စာခ်UITfiq ဤ ကဲ DLLqulBl.
“$ Tလံလျှက DIT I၏ ၉db /Tim Lqဲ႕ စာလံလ...UL' လ 55) 5...ဘဲT R 5. GFi 5T1 စံ LDTo... J T BITGLDလံလTb ၉၆ Rဏ50 GU IT (5 T IT T T q စာD 55 5 T ၏ ... 5T လt
IT T6L DITOL၆ စဆံ E Tod ... 5/ 5 5ကံu STLD(BGLb DTဤ၌5T 5b”
“UULqIT D႕ DIT ဗf 50 GFé စT၂၀လံ Li007 /TLIT T5L GEi က Buလ @ful(6႕(ဆြစ် Lဆံ၏ဆံဗလံ၊ ၉ = (၆ ၆ လ ( ၆ ၆ 5 T ၆ ဗုံ 5 ဖိလ T
5/TNLiqလဲ =5TF တံ6 GITလံ ဤuIT... ၅uuqဗ်5ITဏီ ၆TF Ef ဗဲကျbIT ...
5555ITဗလ DTလဲ...”
“BITd abulq 5 Tလံလ J T... ၆TLDRGb BIT BT5 FubuTဃ ၏ Febဗုံဗုံ ၈s RITLu553TITL 5စာလ ၆ibfb DITလျှ Su(D55 5 တံ 55 5 လ စာခ်လ ၂ITpb...
ဩဗဲ5T TRIB) bTg 5ITE GFတံကျb...”
“ @ လဲ လဲ D = IT ၏ @ u u D T E FLbum႕လဲ BIT@b L Bybut II5ဃဆံ
5/TGmputbလံလTLD 550qLDT5ဗ်5IT IIT၌5 L၆ ©(6585Tub. SiB(လံလTကံ 55 5/Tput စာပ တံတံလ... fub 5တံ STစာဏub 55 LDTLLT) bTd DIT
လံလTကံ DLDL၆ @ဆံခ်... ဤL LDTဗုံ FbuT55 5 ၏ dOTTလ ၏ BGbuဗြဲခ် LDTuIT စောဗLT L Tဟံ တံ လ 8ဗ၈၅၂
ဒg oIP5 - စာခံ

யில்லாதத நெனச் சு அநாவசியமான தொந்தரவுகள் நானே ஏற்படுத்திக்க எனக்கு இஷ்ல...”
"நான் என்ன சொல்லுறேன்னா..."
"இல்ல மச்சான் இந்தக் கதைய இத்தோட விட்டுடு. அல்லாஹ் யாருக்கு என்ன ரிஸ்க்க அளக்குறானே அது அவன் அவனுக்கு எப்படியும் கெடச்சே ஆகும் இதுதான் உண்மை யான தாற்பரியம்... உணவளிப்பவர்களில் நான் தான் மிகச் சிறந்த உணவளிப்பவன்னு அல்லாங் சொல்லுறான்... எனக்கு அளந்தது எனக்கு கெடைக்கும்னு நான் நம்பி வாழ்ந்திட்டு இருக்கன்... அத விட்டுட்டு நாம் ஏன் ஆலாப் பறந்து நம்மள நாமே அழிச்சுக்கனும்.. என்ட மாசச் சம்பளத்துக்குள்ள நான் வாழப் பழகிக்குட்டன். அதவிட மேலதிகமான எனக்கும் எந்தத் தேவையும் ஏற்படல..”
என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் ராபி மாசச் சம்பளத்தைவிட மேலதிகமாக ஏதாவது செய்து நாலு காசு சேர்க்க வேண்டும் என ஜாரிஸிடம் உபதேசிக்கின்ற போதெல்லாம் ஜாரிஸ் இந்தத் தோரணையில்தான் பேசுவான்.
"என்ட மாசச் சம்பளத்துக்குள்ளே இருந்து கொண்டு நான் வாழப் பழகிக் கிட்டன்...” என்கின்ற வார்த்தைகள் எவ்வளவு நிதானமானதும் உண்மையானதும், தனது வருமானத்துக்கேத்தவாறு செலவுகளை சீர் செய்து கொண்டு அவனது குடும்பம் எந்தவித மான கடன் தெல்லைகள் தேவையற்ற பொருளாதாரப் பிரச்சினைகள் எதுவுமின்றி இன்று வரை சந்தோஷமாகத்தானே ஜாரிசும் அவனது குடும்பமும் வாழ்ந்து வருகின்றது.
பல தடவைகளில் ராபி ஆச்சரியப் பட்டிருக்கிறான். இத்தனை ஆகாயத்தினை துளைத்துக் கொண்டு எகிறுகின்ற வாழ்க்கைச் செலவிலும் மட்டுப்படுத்தப்பட்ட மாச வரு மானத்தோடு எப்படி இவனால் மட்டும் அன்றாடச் செலவுகளோடு மல்யுத்தம் நடாத்த முடிகின்றது. 'அத்தியாவசியத் தேவைக்கே போதாது போதாது என்று ஒற்றைக்கால் கொக்காய் அடம் பிடிக்கும் தினசரி நுகர்வுச் சந்தையில் இவன் போன்ற மத்யமர்களால் எப்படி எல்லையற்ற தேவைகளுக் குள் விழுந்தெழமுடிகின்றது.
தேவைகளைக் கட்டுப் படுத்து கின்றேன்... அத்தியவசியங்களோடு மட்டுப் படுத்துகின்றேன் ... தியரி சிம்பிள்... என்னால மட்டுமல்ல எல்லாருக்கும் இது முடியும்.
56/ பங்குனி 2014

Page 42
ஆச்சரியப்படுகின்ற தருணங்களில் போதி மரத்தின் கீழ் நிழலாகிக் கொண்டிருப்பான் ஜாரிஸ்.
இவ்வளவு ஏன் என்னதான் கஷ்ட மென்றாலும் நெடுநாள் நண்பனான ராபியிடம் கூட இதுவரை பத்து ரூபாய் அவன் கடன் கேட்டது கிடையாது.
"ஏன் மச்சான் பிரச்சினைன்னு வரும் போது அடுத்தவங்கள் விடு... எங்கிட்டயாவது கேக்கக்கூடாதா... ஒனக்கு என்னாலான உதவிய செய்ய நான் எப்பவுமே காத்திட்டு இருக்கேன். நீ என்னடான்னா அடுத்தவங்கள் 'பாக் குற் கண்
க ள ா லே யே என்னையும் பாக்குற... ஏன் மச்சான் எங்கிட்ட கூட ஒனக்கு ஈகோ வா... இல்லன்னா கொம்ப்லக்ஸா...”
"சேச சே... அப்படி யெல்லாம் எதுவுமில்ல... பெரிசா கஷ்டம் வரும்போது ஒங்கிட்ட நிச்சயமாக கேப்பேன். அப்போது நீ பெரிசா தர வேண்டி யிருக்கும். என்னடா இப்படிப் பொய தொகைய இவன கேக்குறானேன னு நீயே பயந்து போவ..."
சிரித்துக் கொண்டு சொன் னாலும் இன்னும் ஒரு நாள் கூட ராபியிடம் ஜாரிஸ்
ஒரு நுறு ரூபா கடனாகக் கொடு மச்சான் தந்துர் டரன் எனக் கேட்டதே யில்லை. அந்தளவில் மாபெரும் வருத்தம் ராபியை பொறுத்தவரைல அவனது மனசுக்குள் இருந்து இன்றுவரை இருந்து கொண்டேயிருக்கின்றது.
மானஸ்தன்
எல்லையற்ற தேவைகளுடன் மட்டுப் படுத்தப்பட்ட வருமானத்தோடு கெளரவமாக வாழ முயற்சித்துக் கொண்டிருக்கும் அதில் வெற்றி கண்டிருக்கும் நடுத்தர வர்க்கத்துக்கு நாயகன் ஜாரிஸ் இன்று விளக்கமறியலில் விதியை நொந்தழுது கொண்டிருக்கின்றான் என்றால் அது உணர்வு பூர்வமான அபூர்வமும்
40/ ஜீவநதி - இத

மனசின் இடுக்குளில் துயரம் ஊற்றெடுத்து நரம்புகள் பூரா வழியும் துர்ப்பாக்கியமும் தவிர வேறென்னவாக இருக்க முடியும்.
"என்ன மச்சான் ஜாரி.. ஊருக்குள்ளே என்னென்னமோ பேசுறாங்க .. ஒவ்வொருத் தரும் ஒவ்வொரு விதமாய் பேசுறாங்க... என்னாச்சுடா எனக்குன்னா எதுவுமே விளங் கல்ல... யார் பொய் சொல்றா... யார் உண்மை சொல்றான்னு... எனக்குப் பெரிய குழப்பமா இருக்கு... சொல்லு மச்சான் என்னதான் நடந்தது... ஆனா ஒன்னு மட்டும் உண்மை யாரோ திட்டமிட்டுத்தான் ஓன்ன இந்தக் கேசுக்கு மாட்டி விட்டிருக்காங்குறது மட்டும் எனக்கு நல்லாவே தெரியும்...”
"ராபி அந்தப் பேச்ச விடு எல்லாமே அவரவர் தல் நஸீபு.. கழா கத்ர்ல என்ன இருக்கோ அதுதான் நடக்கும். அத மீறி எதுவுமே ஆகப் போறதில்ல. என்ட தலைல அல்லாஹ் இப்படித்தான் எழுதியிருக்கான் போல.... விரும்பியோ விரும்பாமலோ அத ஏத்துக்கிட்டுத்தானே ஆகணும்....."
அவனது பேச்சில் அனகொன்டாவாக நெளிந்த விரக்தியும் வேதனையும் கொல்லன் பட்டறையில் தீட்டிய கூர்வாளாய் ராபியைக் கொன்றது. திணறிப் போனான் அவன் இந்த மாதிரி விரக்தியாகவோ அல்லது நெகட்டிவா கவோ ஜாரிஸ் இதுவரை பேசிப்பார்த்ததே யில்லை. ராபிக்கு எத்தனையோ தடவைகளில் இடறி விழ இருந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் ஜாரிஸின் வார்த்தைகள் அவனை நிலை குலையச் செய்யாமல் காத்து நின்றிருக் கின்றன.
“மச்சான் உன் மீது போடப்பட்டிருப்பது ஒரு பழி. நீ எவ்வளவு நேர்மையானவன். நாணயஸ்த்ன்னு எனக்கு மட்டுமல்ல இந்த ஊருக்கே தெரியும். எவ்வளவோ வாய்ப்பிருந்தும் நீ பணிபுரியுற திணைக்களத்துல் அல்லாஹ்வுக் குப் பயந்து இன்னி வரைக்கும் கை சுத்தமா வேலை பார்த்தவன். அப்படிப்பட்ட ஒனக்கு எதிரா இப்படி ஒரு கேஸ். அதுவும் பதினாலு நாள் ரிமான்ட். எப்படிடா...”
"அதான் சொன்னேனே எல்லாமே விதின்னு என்னப் போட்டுத் தோண்டாதே ராபி. ஏற்கனவே துண்டுதுண்டா ஒடஞ்சி போயிருக் கேன். நீ பேசப்பேச எங்கே அப்படியே செதஞ்சு போயிடுவேனோன்னு பயமா இருக்கு..."
இப்போது மெல்ல விசும்பிக் கொண்டி ருந்தான் ஜாரிஸ்... கீழே விழுந்து சிதறிய
இ66/பங்குனி 2014

Page 43
ஷெல்லின் துகள்களாக அவன் கிடந்தான தனக்கு முன்னிருந்த கம்பிகளை இரு கைகள் லும் பற்றிப் பிடித்துக் கொண்டு அழுத்தில் ரா நிலத்துக்குக் கீழே இழுக்கப்பட்டு மீண்டு மீண்டும் பூமியின் மேல் தளத்துக்கு கொண்
வரப்பட்டான்.
அங்கிருந்த ஏனைய விசிட்டர்ஸ் ஒரு முறை இவர்களைத் திரும்பி பார்த்துவிட்டு மீண்டும் தாம் பார்க்க வந்த கைதிகளுடன் அவசரம் அவசரமாக பேசிக் கொண்டிருந்தா கள். அவனவன் கவலை அவனுக்கு. சிறை சாலையில் சுதந்திரம் மறுக்கப்பட்ட ஒவ்வொரு கைதிக்குப் பின்னாலும் ஏதோ ஓர் துய படிந்தவாறு யார் யாருக்கு ஆறுதல் சொல் எனும் வினாவோடும் ஏக்கத் தோடும் நிலவுகின் சூழ்நிலை அதிர்ச்சிகர மானது. அதனால்தான் ஜாரிஸின் அழுகையோ ராபியின் கலக்கமே. அங்கிருப்பவர்களை எதுவுமே பண்ணவில்லை.
“இந்தா அப்பாவுக்கு ஒரு முத்தம் கொடு” என்று கொண்டு வந்த குழந்தையில் இதழ்களை குறுக்காக இருந்த கம்பி வலையில் பதிக்க உள்ளே அதற்கு நேரெதிரே நின்றிருந்த அப்பா எனும் அந்தக் கைதி குழந்தையின் உதடு களுக்கு சரி சமமாக செல்ல முத்தமிட்டான் அந்தப் பெண்ணை ஜெயில் கார்ட் “இந்தாம்ம ஒன்ட டைம் சரி.. நீ போகலாம்” என்ற கர்ண கொடூரத் தொனி அவளது இன்னும் ஒரு நிமிடம் எனற கெஞ் சலை காதில் போட்டுக கொள்ளவேயில்லை.
பரிதாபத்தோடும் துன்பியலோடு நகரும் அந்தப் பெண்ணும் குழந்தையும் ராபியை "பொண்டாட்டி புள்ளங்க எப்படிடா இருக்க காங்க...”
"என்னத்த மச்சான் சொல்ல... அல் அப்படியே இடிஞ்சி போயிட்டா.. புள்ளம் களுக்கும் ஓரளவு விஷயம் தெரிஞ்சிடுச்சின்னா நினைக்குறேன்.. இங்க வாற ஒவ்வொரு நாளும் அழுதுக்கிட்டே வாரதும் அழுதுக்கிட்டே போறதுமா... முடியல்ல மச்சான். இங்க வர வேணாம்னு சொன்னாலும் பானு கேக்குற இல்ல. ரொம்பப் பெரிய அவமானத்த உண்டாக கிட்டேன். அழியாத கறை.. அல்லாஹ் இத விட என்னை மௌத்தாக்கிடு .....?
முகத்தை மூடிக்கொண்ட ஜாரிஸ் அழுதான்.
"என்னடா பைத்தியமாட்டம் பேசுற. இந்த மாதிரியான நேரத்துலதான் டா ந தைரியமா இருக்கணும். எங்கள் விட நீதான
41/ ஜீவநதி - இத

ர்.
ம்
பெரிய துணிச்சல்காரன்னு நான் நெனச்சிட்டு இருக்கன். நீ என்னடான்னா பைத்தியம் மாதிரி. மோதல்ல கொழந்தப் புள்ளயாட்டம் அழுறத நிறுத்து...."
"இல்ல மச்சான் நீ சொல்ற மாதிரி எனக்குள்ளே பெரிய துணிச்சலும் தைரியமும் இருந்திச்சிதான். அதெல்லாம் என்ன பொலிஸ் அரெஸ்ட் பண்ண மொதல்ல .. ஆனா இப்ப .. இப்ப ...."
"இப்ப மட்டும் என்னாச்சு... ஒன்னும் இல்ல. நீ தைரியத்த இழக்காதே... நாங்க ளெல்லாம் என்னத்துக்கு இருக்கம். நல்ல லோயரைப் பார்த்து ஒன்ன வெளியே கொண்டு வாரது எம் பொறுப்பு... நீ எதப்பத்தியும் யோசிக்காதே நீ நல்லவன்டா அல்லாஹ் நிச்சயமா ஒன்ன எந்த வகையிலும் கைவிட மாட்டான் .....'
4. பி.
419 ட
விசும்பலை ஓரளவுக்கு ஜாரிஸ் நிறுத்தி யிருந்தான். ஆனாலும் கல் எறிந்தால் அடுத்த கணம் உடைந்து நொறுங்கும் கண்ணாடி போல இருந்தது அவனது மனோநிலை. கிரிமினல் களோடு ஒரு கிரிமினலாக.... அந்த எண்ணமே அவனை ரொம்பச் சித்திரவதை செய்தது. கற்பனைக்கும் எட்டாத அற்புதமிது அவனைப் பொறுத்தவரை.
அவன் தொழில் புரியும் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பத்து இலட்சம் ரூபாவினை குற்ற முறையாக கையாடல் புரிந்ததாக சந்தேகத்தின் பேரில் கடந்த வாரம் ஹெட் ஒஃப் த டிப்பார்ட்மென்ட் செய்த முறைப்பாட்டின் பேரில் பொலிசாரால் ஜாரிஸ் கைது செய்யப் பட்டு அடுத்த நாள் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு
" குறித்த வழக்கின் விசாரணை இன்னும் முடிவடையவில்லை. குறித்த வழக்கில் இன்னும் பலரை விசாரித்து அவர் களது வாக்குமூலங்களை பதிவு செய்ய வேண்டி இருப்பதனாலும் குறித்த குற்றம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் தவிர வேறு யாரேனும் நபர்களும் சம்பந்தப்பட்டிருக்கின்றார்களா என ஆராய்ந்து பார்க்க வேண்டி இருப்பதனாலும் சந்தேக நபரை எதிர்வரும் பதினைந்தாம் திகதி வரைவிளக்கமறியலில் வைக்க உத்தரவிடுமாறு கற்றறிந்த நீதவான் அவர்கள் தாழ்மையாக வேண்டிக்கொள்கிறேன்" என தன் பக்க நியாயத்தை பொலிஸ் தரப்பு நியாயமான காரணங்களோடு முன் வைத்ததனாலும்
தழ் 667 பங்குனி 204

Page 44
ஜாரிஸ்' கைது செய்யப்பட காரணமாகவிருந்த திணைக் களத்திற்குச் சொந்தமான பத்து இலட்சம் ரூபாவினை கையாடல் செய்த என்ற குற்றம் பாரதூரமாக காணப்பட்டாலும் ராபி சார்பில் ஆஜராகிய சட்டத்தரணியின் வாதம் வெற்று வார்த்தைகளாய் வீழ்ந்து காணாமல் போயின.
'"" எனவே பொலிசார் முன் வைத்த காரணங்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் குறித்த வழக்கில் அவசியம் என்பதனைக் கருத்திற் கொண்டு சந்தேகநபரை எதிர் வரும் பதினைந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளையிடு கின்றேன்...” நீதவானின் கட்டளை பிரசமாகி இதோ ஆறுநாளாயிற்று.
பத்து இலட்சம் ரூபா கையாடல்... அதுவும் அரச திணைக்களமொன்றில் .. பாரதூரமான குற்றம். அவ்வளவு லேசாக பிணை கிடைத்துவிடாது... மாசக் கணக்கில் கூட விளக்கமறிலில் ஆயுள் நீடிப்பு செய்யலாம். ஒத்த ரூபாவுக்கு கூட ஆசைப்படாத இவன் எப்படி பத்து இலட்சம் ரூபா கையாடல் மோசடி... நோ.. நோ.. இதில் ஏதோ ஒரு சதி இருக்க வேண்டும். வேண்டுமென்றே இவனை அவனது ஒபீசில் பிடிக்காத யாரோ இந்த வேலைய அவனுக்கெதி ராகச் செய்திருக்க வாய்ப்பிருக்கின்றது.
நிச்சயமாக.
“மச்சான் நீ எங்கிட்ட நடந்தத சொல்லியே ஆகணும்... என்னதான் மச்சான் நடந்தது. நீ எங்கிட்ட உண்மையை மறைக்காமச் சொல்லு... கஷ்டம்னு வந்தா கூட கடனா நூறு ரூபா கூட கேட்டுப் பழக்கமில்லாத நீ எப்படிடா பத்து லட்சம் ரூவாய் கையாடல் செஞ்ச . இல்ல மச்சான் இத நான் நம்பத் தயாராக இல்ல. சொல்லு மச்சான் என்னதான் நடந்திச்சு
“தயவு செய்து எதுவும் கேக்காதே ராபி எங்கக்கிட்டே ... நான்தான் சொன்னேனே இது என் விதின்னு..."
"விதின்னு நீ செல்லுற ஆனா நான் சதின்னு சொல்லுறன்...”
"இப்போது ஜாரிஸ் ராபியை பார்த்ததில் தீர்க்கமாயிருந்தது. கொங்கிரீட் தூணைப் போல இறுகிக் கிடந்த அவனது முகத்தில் மெல்லிசாய் ஒரு சிரிப்பு விழுந்து மறைந்து ..
"ஏன் மச்சான் எங்கிட்ட சொல்லவே கூடாதுன்னு முடிவெடுத்திட்டியா.. ப்ளீஸ் மச்சான் ஒன்ட எல்லா சுக துக்கத்திலேயும் அக்கறை செலுத்துற ஒரு ஆத்ம நண்பனாகக்
9V vv 9 ~L y
9
UU.
42 கீவநதி - இதழ் 6

கேக்குறன். சொல்லு மச்சான் என்னதான்
நடந்திச்சி...”
"ஏன் மச்சான் இன்னமும் பேசாம நிக்குற... ஏதோ ஒன்னு இதுக்குள்ள இருக்கு. ஆனா ஏதோ ஒரு காரணத்துக்காக அத மறைக்க நீ ட்ரை பண்ணுற... அப்படித்தானே சொல்லுடா... நான் தெரிஞ்சிக்கிறது மட்டு மில்லடா இதன் நோக்கம். நீ சொல்லுற விஷயத்த வெச்சித்தான் நம்ம லோயர் கூட உன் சார்பாக பேசமுடியும். சொல்லுமச்சான்..."
ஜாரிஷ் விழியோரங்களில் குந்திக் கொண்டு யோசனை செய்து கொண்டிருந்த கண்ணீரை துடைத்துக் கொண்டான்.
"ஆங்.. மிஸ்ரர் ராபி ஓங்க டைம் முடியுது.. இன்னும் ஒரு நிமிஷம்தான் பாக்கி ... டக்குன்னு பேசிட்டு வெளிக்கிடுங்க. மற்ற விசிட்டர்ஸும் வெளியே காத்திட்டு இருக் காங்க.... ஜெயில் கார்ட் விரட்டினார்.
"மச்சான் நீ என்ன நூறு வீதம் நம்புற இல்ல...”
"அதுல என்ன சந்தேகம்...
“அப்ப சொல்லுரேன்டா...” பெருமூச்சு விட்டபடி..
"வெரி சொரி மச்சான். அல்லாஹ்வுக் காக என்ன மன்னிச்சிடு... நான்தான்டா அந்த பத்து லட்சத்தயும்கையாடினேன்......"
”ஜா... ரி... ஸ்.... நீ.. நீ... நீ... என்னடா சொல்லுற...”
"பொலிஸ் எந்த பத்து லட்சம் கையாட லுக்காக சந்தேகத்தின் பேர்ல என்ன கைது செஞ்சாங்களோ அது உண்மை மச்சான். நான் தான் அந்த பத்து லட்சத்த
கையாடினேன்.....”
இப்போது ராபி பனிப்பாறைகளுக்குள் உறைந்து போய் படுத்துக் கிடந்தான். சில்லுச் சில்லாய் உடைந்து கிடந்தான். இதுவும் வாழ் வில் எதிர்பாராத தருணம். திடீரென்று சொல் லாமல் இடியொன்று தலையில் இறங்கியது மாதிரி... அனீஸ்தீஷியா இல்லாமல் கொடுப்புப் பல்லை குறடு கொண்டு பிடுங்கியது மாதிரி அப்புறம்... அவனுக்குள்ளிருந்த பல தியரிகள் வெயிலில் உருகிக் கொண்டிருக்கும் பனித் துளிகள் போல.
"நீ உண்மையாத்தான் சொல்லுறியா ஜாரிஸ்...”
"சத்தியமா சொல்லுரேன்டா... காசக் கையாடல் செஞ்சுட்டு அத மறுத்து வாதாடுற
57 பங்குனி 2014

Page 45
திறமை எங்கிட்ட இல்ல மச்சான். நான்தான் குத்தவாளி.... கள்ளன் .... தண் டனைக்கு தயாராயிட்டு இருக்கன்...”
“எப்ப மச்சான் இது நடந்தது" “இரண்டு மாசத்துக்கு முந்தி” "ரெண்டு மாசத்துக்கு முந்தியா” "ஆமா..." -
"எதுக்குடா இவ்வளவு காச நீ எடுத்த ... அப்படி என்னதான்டா ஒன்ட தேவ..."
இப்போது ஜாரிஸ் சிரித்ததில் வெறுமை தெறிப்படைந்து போய் விரக்தியை அழையா விருந்தாளியாக வீட்டுக்குள் கூட்டிக் கொண்டு வந்தது.
"என்ன தேவைன்னா கேட்ட...” "ஆமா.."
"தேவதான் மச்சான்... ஒனக்கே தெரியும் மாசச் சம்ளத்துல நான் மாரடிச்சு வாழ்ந்துக்கிட்டு இருக்குரவன்னு...”
"அதுக்கு"
" மூணு மாசத்துக்கு முந்தி என் ரெண்டாவது மகளுக்கு நோய் வந்து அது முத்தினப்போ அவக்கு கிட்னி ஃபெயிலியர்னு டொக்டர்ஸ் சொன்னாங்க... ஒனக்கும் தெரியும்னு நினைக்குறன்....”
“ஆமா தெரியும்."
"அவட கிட்னி ஃபெயிலியருக்கு கட்டாயம் உடனடியா சேர்ஜரி செய்யனும்னு டொக்டர்ஸ் சொல்லிட்டாங்க.. மொத்தமா இருபத்தைந்து லட்சம் தேவைப்பட்டது. நானும் முடிஞ்சளவு ட்ரை பண்ணி பானுட கைல காதுல கழுத்துல கெடந்தது. அப்புறம் சேமிப்புல இருந்ததுன்னு எப்படியோ ஒரு பத்து இலட்சம் பொரட்டி எடுத்துட்டேன். ஆனா மீதிக்காசுக்கு எந்த வழியுமே தெரியல்ல.. எல்லா வழியுமே அடைச்சிடுச்சி... உடனடியாக ஒப்பரேஷன் செய்யனும்னு டொக்டர்ஸ் வேறு சொல்லிட் டாங்க. அதனாலதான் வேறு வழி எதுவுமில்லாம ஓபீஸ்ல பத்து லட்சம் ரூபாவ குத்தம்னு தெரிஞ்சும் கையாடிட்டேன். என் மகட உசிரக் காப்பாத்த இத விட வேறு வழி எனக்குத் தெரியல்ல ராபி ... என்ட கெளரவத்த விட எம் புள்ளட உசிரு பெரிசுமச்சான்...”
அந்த சிறைச்சாலையை விட்டு வெளியே வந்த ராபியின் கண்களில் ஊற்றெடுத்த கண்ணீர் இனி எப்போது ஓயுமென்று எவருக்கும்
தெரியாது.
43/கீவநதி - இத

4. மெக்சிகோக்கில்,
எந்தக் கவிதையும்
அற்புதமானது அவ்வளவு எளிதானதன்று அது கடினமானதென்றும் சொல்ல முடியாது இறக்கையிருக்கும் பறவைகளெல்லாம் பறப்பதில்லை என்பது போலத்தான் இதுவும். பரம்பரை வழிவரும் என்பதும் பச்சைப் பொய் மரணம் போலத்தான் எப்போது வேண்டுமெனிலும் வரலாம் ஆனால் உயிர்ப்புள்ளது கால நேரம் கணிப்பிட்டு சொல்லமுடியாது இது பிரசவத்திற்கு ஒப்பானது எனினும் இறப்பின்றிய படைப்பு மரபுவழி வருவதுமுண்டு மரபை உடைத்து புதுவழி வருபவையுமுண்டு
இரண்டுமே மழலைகளின் புன்னகை போல
அழகானது பண்டிகைக் காலங்களில்
பல பேருக்கு வரும் காதலிப்பவர்க்கு கைவந்த கலையென்பர் எது எப்படி சொல்லப்படினும் கவிதை என்பது ஆழ்மனதிலிருந்து வரும் அத்தனை உணர்வுகளையும் அப்படியே வெளிக்கொணருமெனில்
அந்தக் கவிதை தனித்துவமானது
வாழ்வியல் வழியூடாக பயணித்து இனப்பற்றில் கொஞ்சம் தினவெடுத்து மொழியை மொழியாய் நேசித்து எங்கு எவன் வலியுறும் போதும் அங்கு அவன் வலியை தன் வலியாய் உணர்ந்து எழுதும் எந்தக் கவிதையும்
அற்புதமானது அழிவற்றது.
மார்யா°C)
ழ் 66 / பங்குனி 2014

Page 46
தலைவிதியா?
இரண்டு வருடங்கள் காதல் செய் திருந்து
இன்சனம் காண அன்னவனைக் கரம்பிடித்திட்டாள்; களிப்புடன் வாழ்வும்
கழிந்தது! தாய்மை கண்டிருந்தாள்! பெரும்போர் அனர்த்தம் பேரிடி தந்து
பிரித்தது ஆளனை, அவள் கலங்கி வருத்தம் மேலிட வாடிய முகத்துடன்
வையகம் மீதினில் வாழுகின்றாள்!
கட்டித்தயிரெனக் கட்டுடல் பெற்றவள்
கண்டவர் மயங்கும் பேரழகி! ஓட்டி யுலர்ந்தாள்; ஓவியப் பெண்ணாள்
உருக்குலைந்திட்டாள்! அன்னவள், கை - பற்றிய கணவன் பண்ணிய லீலைகள்
பகலிரவாகத் தீ மூட்ட பெட்டிப் பாம்பென அடங்கியிருந்து
பெருமூச்சொன்றை விடுகின்றாள்!
காலச் சக்கரம் சுற்றிச் சுழன்றிட
இ கடந்து “ஐயிரு மாதங்கள்" கோலக் குமரியாள் குன்றிடா முருகுறு
குழந்தை யொன்றைத் தானீன்றாள்! ஆலை யெழில் மரம் அடிபெயர்ந்திட்டதாய்
ஆனதே, அன்னவள் இல்வாழ்வு! - பாலை நிலத்திடை பயிரென அவள் நிலை -
பார்ப்பவர் விழிகளும் பனிக்கிறது!
நிலவு முகத்தினில் பளிச்சிடும் “திலகம்”
நீள் முடி சுமக்கும் எழில் "மலர்கள்” இலையே; அவளின் சங்குக் கழுத்தினில்
இருந்தே மின்னிடும் “மாங்கல்யம்!" தொலைந்தது; சோகம் தோய்ந்திட விரக்தித்
தோப்பினில் பட்ட தனிமரமாய், நிலைவர் வாழும் நிர்க்கதி வாழ்வினை
நிலமிசை யுள்ளவர் யாரறிவார்?
சிறப்பும் சீரும் செல்வமும் வளமும்
சேர்ந்திடு மாடி , மனை புலமும் பிறப்பும் இறப்பும் பிறங்கும் வாழ்வும்
பிரமன் படைப்பின் அருட்கொடையா? கணக்கு வழக்கில் கலிதரும் தீர்ப்பால்
கடவுள்தனையே நொந்து நிதம் நினைத்துப் பார்க்க இயலா விதமவள்
நிலமிசை வாழ்வதும் “தலைவிதியா?"
- அ.கௌரிதாசன்
4al கீவநதி - இதழ்

கடல்முற்றம்
- ஒளிக்சியும் கத்தரிப்பூக்கண்ணாடி ஜன்னலை
மெல்லத் திறக்கிறேன். கடல் முற்றத்தின் நீரலைகள் யாவுமே ஊசிக்காற்றலையாய் உருமாறி சரேலென முகம் மோதிற்று. முன் நெற்றி வரைக்குமாய் படர்ந்த முந்தானை அதனோடு போராடித் தோற்று படபடத்துக் கீழிறங்கி பின்கழுத்துக்குள் ஒடுங்கிற்று. உடல் சிலிர்த்து மனசு முழுக்க பனித்தூறல்.
இதே ஜன்னலூடேதான் முன்னரும் எரிகாற்றென எதிர்கொண்டிருந்தேன் முந்நூற்றுச்சொச்சம் பேரைத்தின்று தீர்த்த சுனாமியை ... தொடராய் கடற் தளத்திலிருந்து எனதூருக்கூடாய் சம்பூர்க்காடுகள் வரைக்குமாய் ஏவப் பட்டதில் வீட்டுச்சுவர்களையும் துளையிட்ட சில தீப்பொறிகளை.
பிறிதொரு ரம்ஸான் இரவில்
அனேகப் பெண்கள் நெஞ்சப் பரப்பெங்கிலும் அச்சத்தைக் கீறிச் சென்றவனின் தனித்த காலடிகளையும் அதைத் துரத்தி வந்த
ஆத்திரக் கொந்தளிப்புகளையும்
எந்த வல்லரசின் யுத்தக் கப்பலோ தெரியவில்லை இரண்டு மூன்று இரவுகளாய்... யுத்தம் தீர்க்கப்பட்டுவிட்டதாய் சொல்லப்படும் கீழ்க்கரையோரமாய்... கலியாணவீட்டின் மின்னொளி அலங்காரங்களோடு மிடுக்காய் மிதந்தொளிர்கிறது
- - - - -
அதன் பிரமாண்டங்களுக்குள் கரைந்தவளாய் நினைக்கிறேன்....
"வெக்கை நிறைந்த என் சமையலறைக்குள் நெற்றியிலும் கழுத்திலும் பெருக்கெடுத்தோடிய வியர்வையை முந்தானையால் ஒற்றியபடியே நான் துருவிக் குவித்த தேங்காய்ப்பூக் குவியலை நிறைக்கவே
- எஸ்.பாயிஸா அலி -
667 பங்குனி 2014

Page 47
“சுமதி ... ஏய்...சுமதி...'
பாடசாலை முடிந்ததும் அவசர அவசரம் என்னை யாரோ அழைத்துக்கொண்டிருந்தனர்.
யாரடாப்பா இவ்வளவு உரிமையுடன் பார்த்தேன்.
யாரோ நடுத்தர வயதுப்பெண் என்னை ( கையில் ஒரு ரவலிங் பாக் இருந்தது. யாராக இரு
 ேட்ட 5 6 5 % இ -
5 3 , 8 கலை )
து. பத்துப்பன்னிரெண்டு வருஷ இடைவெளிக்குள் இ மனதை வாட்டியது. அவ்வாறு அவளது உடல் அவளைக்காட்டியது.
* நானும் கோகிலாவும் இனியில்லையென் காலங்கள் இன்றும் பசுமையாக என் மனத்திரையில்
4 இருவரும் உவர்மலை விவேகானந்தா வகுப்பிலிருந்து அங்கு கல்வி பயின்று வந்தாலும்,
45 கீவநதி - இதழ்!

*ே - *:-:37:41** >>>
ஷெல்லிதாசன்
மாக கால்நடையாக வீடு திரும்பிக்கொண்டிருந்த
என்னை "ஏய்" போட்டு அழைப்பதென திரும்பிப்
நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தாள். அவளது தக்கும் நான் ஊகித்து அறியும் முன்னமேயே அவள் னது அண்மையில் வந்து நின்றபடி "என்னடி சுமதி ச்சர்... என்னை மறந்து போனியே" என்றாள்.
எனக்கு தூக்கி வாரிப்போட்டது. சுமதி ரீச்ச சாட் என்னடியும் போட்டு கூப்பிடக்கூடிய உரிமை காண்டாட எனது நெருங்கிய சிநேகிதிகளுக்கே மடியுமென சிந்தித்தபடி,
"யார் நீங்கள், நல்லா தெரிஞ்ச முகமாயிருக்கு, னா சரியா ஆரென்டு சொல்லேலாமலிருக்கு”
"என்ன சுமதி ... நிலாவெளி கோகிலாவை வ்வளவு கெதியிலை மறந்து போனியே"
பிரனாக ப ட 2 3
கடவுள்
"அடி கோகிலாவே, இங்க எப்பிடி ட்டக்களப்பிலை”
"இப்பத்தான் திருகோணமலையிலையிருந்து ட்டக்களப்பு பஸ் சாலை இறங்கிவாறன்”
"அது சரி ..... நான்.... இங்கை கல்லடியில் ருக்கிறனென்டு ஆர் சொன்னது"
அவள் பதிலைச் சொல்லுமுதல், "சரி... சரி... நீ ளைச்சுப் போனாய் .... வாவீட்டை போய் கதைப்பம்"
நான் வீட்டுக்கு அவளை அழைத்துப் பானேன்.
எனக்கே நம்ப முடியவில்லை. எவ்வளவு ழகாய், நீண்ட கூந்தலும், நெற்றிப்பொட்டும் துறு றுவென்ற விழிகளுமாய் இருந்த கோகிலா ப்படியெல்லாம் ஆகிவிட்டாளே என்ற ஏக்கம் எனது 5 ஒட்டி உலர்ந்து மூப்பு அடைந்த பெண்ணாக
**
ற நண்பிகளாக, கல்லூரிக்காலம் முதலாக இருந்த ல்ஓடியது.
கல்லூரியிலேயே கல்வி கற்றோம். நான் பாலர் நிலாவெளி கோகிலா ஆறாம் ஆண்டிலிருந்து அங்கு
> 66 பங்குனி 2014

Page 48
': 481: 1 /4:143444444444444444} /* : *
வந்து சேர்ந்து கொண்டாள்.
- கிராமப்புறத்தில் அவள் வளர்ந்தாலும் படிப்பிலோ படு சுட்டி. அதேமாதிரி நானும் அவளுக்கிணையாக படித்து வந்தேன். ஒரு தவணை அவள் முதலாம் பிள்ளையாக வந்தால், அடுத்த தவணைக்கு நான் முதலாம் பிள்ளை யாக வந்து விடுவேன். ஆனாலும் அந்தச் சிறு வயது முதல் சாதாரண தரம், உயர் தரம் படித்து கல்லுாரியை விட்டு வெளியேறும் வரை பொறாமை, எரிச்சல் எம்மை அணுகியது கிடையாது. இதைப் பார்த்தே பலருக்கு பொறாமையாக இருந்தது. எமது நட்புக்கு எப்படி யும் வேட்டு வைக்க வேண்டுமென திட்டம் போட்ட சக மாணவிகளின் வலையில் நாம் சிக்கியதே கிடையாது.
நாம் இருவரும் விஞ்ஞானப்பிரிவையே உயர்தரத்தில் தேர்ந்தெடுத்தோம். காரணம், பரஸ்பரம் இருவரும் இணைந்து படிக்கவும் விளங் காத பாடங்களை நாமே விவாதித்து விடை காணுவதற்கு அது எமக்கு கைகொடுக்கு மென்ற தூரநோக்குக்கருதி இந்த முடிவை எடுத்தோம்.
மிகவும் முயற்சி செய்து படித்தோம். இருவருமே பல்கலைக்கழகத்தில் நுழைந்து அங்கேயும் இணைபிரியாமல் படிப்பதற்கு.
ஆனால், எமது இருவரதும் கனவுகளை உயர்தரப்பரீட்சை முடிவு நிர்மூலமாக்கி விட்டது. வெட்டுப்புள்ளியானது அதற்கு முற்றுப்புள்ளியும் வைத்து விட்டது.
நாமெடுத்த நான்கு பாடங்களிலும் எனக்கு ஒரு ஏயும் மூன்று சீயும், அவளுக்கு ஒரு பீயும் மூன்று சீயும். சில புள்ளிகள் எம்மிரு
வரையும் காலைவாரிவிட்டன.
உயர் தரத்தில் சிறந்த பெறுபேறு எம்மிருவருக்கும் இருந்தமையால், வவுனியா கல்வியியற் கல்லூரிக்கு விண்ணப்பித்திருந் தோம். அங்கு எமக்கு அனுமதியும் கிடைத்தது. அங்கும் விஞ்ஞானப்பிரிவில் இருவரும் ஆசிரியர் பயிற்சியில் ஈடுபட்டோம். இருவரதும் நட்பும் எந்தத் தொய்வுமின்றி தொடர்ந்தது.
காலப்போக்கில் அவளுக்கு கிண்ணியா வும், எனக்கு சாம்பல்தீவு கல்லூரியும் விஞ்ஞான ஆசிரியர்களாக பணியாற்ற நியமனமும் கிடைத்தது.
நிலாவெளியில் தாயாருடன் வசித்து வந்த கோகிலா, அங்கு யுத்த பிரச்சினைகளால் தொடர்ந்து இருக்க முடியாது, திருகோணமலை நகரப்பகுதிக்கே தாயாருடன் வாடகைக்கு வீடெடுத்து வந்துவிட்டாள்.
46/ கீவநதி - இதழ் |

நான் எனது அப்பா, அம்மாவுக்கு ஒரே மகள். அப்பா நீர்ப்பாசணத்திணைக்களத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றி | வந்தார்.
கோகிலாவின் குடும்பமும் நாங்களும் உறவினர் போலவே பழகிவந்தோம்.
1 கோகிலாவின் அம்மா, அப்பம் சுடு வதில் கைதேர்ந்தவர். அங்கு அப்பம் சுடும் நாளில் எமக்கு பால் அப்பம், முட்டை அப்பம், வெள்ளை அப்பம், கட்டைச்சம்பல் என்றெல் லாம் வந்து சேரும். அந்த அப்பத்தின் ருசியை எனக்கு முப்பத்தாறு முப்பத்தேழு வயதாகி மூன்று பிள்ளைகளுக்குத் தாயாகியும் விட்டேன், இன்னும் மறக்கமுடியவில்லை.
கோகிலாவின் மாமி ஒருத்தி சாம்பல் தீவில் வசித்து வந்தாள். போர்ச்சூழல் நெருக்கடி யால், தனக்கிருந்த ஒரு மகனை இருந்த வீடு வளவுகாணியினை ஈடுவைத்து கனடாவுக்கு அனுப்பி வைத்து, தனது திருமண மான மகளுடன் வசித்து வந்தாள். -
மகன் கனடாவில் சிட்டிசன் கிடைத்து நல்ல வேலையிலும் அமர்ந்து சம்பாதித்துக் கொண்டான். ஆயினும் தாயாருக்கு அவ்வள் வாக பணம் அனுப்புவதில்லை. அவனது தந்தை சிறு வயதிலேயே இறந்து விட்டதால், கட்டுப் படுத்த முடியாத ஒருவனாக அவன் வளர்ந் திருந்தான்.
மாமியாருக்கு கோகிலாவில் ஒரு கண். அழகும், இளமை, நல்ல குணத்தையும் கொண்ட பெண்ணை யார்தான் விரும்ப மாட்டார்கள்.
தனது கனடாவில் வசிக்கும் மகனுக்கு கோகிலாவைக் கட்டி வைக்க வேண்டுமென் கின்ற ஆசை: அதற்காகவே அடிக்கடி மாமியார் தனது மகளுடன் கோகிலாவின் வீட்டுக்கு வருவார்.
கோகிலா படிக்கிற காலத்தில் எதுவித உதவியும் செய்யாதவள், இப்போ அவள் படித்து ரீச்சராயும் வந்து விட்டதும், அவளின் மேல் ஒரு விருப்பம் ஏற்பட்டு விட்டது.
எட்டாம் ஆண்டுக்கு மேலே படிப்பை தொடராத கணேசனுக்கு (அவளது மகன்) கோகிலாவைக் கட்டி வைத்து கனடாவுக்கு அனுப்பிவிட பல பிரயத்தனங்களை எடுத்தாள். "முரட்டு மூதேவிக்கு உவள் தான் சரி படிச்சவள் திருத்திப் போடுவாள்” என்பது மாமியின் எண்ணம்.
கோகிலாவின் அம்மாவுக்கு தனது
56/ பங்குனி 2014

Page 49
-யா, ம்,
மகளை கனடாவுக்கு அனுப்ப விருப்பமில்லை. எனினும் இருபத்தியாறு வயதான தனது மகளின் எதிர்காலத்தை அவள் யோசித்தாள். சீதனம் கொடுத்து கல்யாணம் கட்டிக்கொடுக்கிற அளவு வசதி அவளிடம் இல்லை.
- முடிவில் கனடா மாப்பிள்ளை இந்தியா விற்கு வர கோகிலாவும் அம்மாவும், மாமி, மகள் எல்லாரும் தமிழ் நாட்டுக்குச் சென்றனர். அங்கு திருமணமும் நடந்தேறியது.
கோகிலா என்னை விட்டுப் போகப் போகிறாள் என்ற ஏக்கம் எனக்குள் எரிந்து கொண்டிருந்தது.
அதற்கிடையில் எனக்கு மட்டக்களப்பு கல்லடியில் திருமணம் பேசப்பட்டது. மாப் பிள்ளை பாங்மனேஜராம் என கேள்விப்பட்டேன்.
எனது கல்யாணமும் திருகோணமலை காளி கோயில் மண்டபத்தில், அப்பாவின் நீர்ப்பாசணத்திணைக்கள உத்தியோகத்தர்கள், எனது ஆசிரியர் பட்டாளம், உறவினர்கள் சகிதம் மிகவும் கோலாகலமாக நடந்தேறியது.
காலப்போக்கில், கல்லடியிலுள்ள ஒரு பாடசாலைக்கு எனக்கு மாற்றம் கிடைக்க அங்கு எனது கணவருடன் சேர்ந்து குடும்பம் நடத்தத் தொடங்கினேன்.
அப்பாவும் பென்சன் எடுத்ததால் அம்மாவுடன் எங்களோடு வந்து இணைந்து கொண்டார். காலங்கள் உருண்டோட பிள்ளை குட்டி, பிள்ளை வளர்ப்பு, படிப்பு, பாடசாலை என்று எதையும் சிந்திக்க நேரமில்லாது நாட்கள் நகர்ந்தன. பத்து வருடங்களுக்குப் பின் நான் கோகிலாவைக் கண்டதால் அவளை அடை யாளம் காண முடியாது தவித்தது உண்மைதான்.
வீட்டுக்கு அழைத்துப்போன கோகிலா வுக்கு உடனடியாக தேனீர் பரிமாறி, ஆறுதலாக இருத்தி விட்டு, பாடசாலையால் வந்த எனது பிள்ளைகளைக் கவனித்து அவர்களுக்கு உணவு பரிமாறினேன். அவர்கள் "யாரம்மா இந்த ஆன்ரி, எங்கிருந்து வந்தவர் என என்னை அரித் தெடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு முடிந்த விபரங்களைச் சொல்லி வெளியே அனுப்பிவிட்டு,
கோகிலாவுக்குப் பிடித்த முட்டைப் பொரியலை நிறைய நல்லெண்ணெயில் மிளகாய், வெங்காயம், சீரகம் போட்டு பொரித்து தட்டிலே சோறுகறிகளுடன் வைத்துக் கொண்டு வந்து நீட்டினேன்.
சாப்பாட்டைப் பார்த்ததும் அவளது முகத்தில் ஒரு சந்தோஷப்புன்னகை விரிந்தது.
47 கீவநதி - இத

"கபே' ப441:44:ா க".
::::::
" ஏ ய க ம த ... த எ ன க கு நல்லெண்ணெய் முட்டைப் பொரியல் என்டால் நல்லா பிடிக்கும் என்பதை நீ மறக்கேல்லை. என்ர சாப்பாட்டு ருசியையே நினைவு வச்சிருக்கிற நீ என்னை மறந்து போனது தானடி -வேதனையா இருக்கு"
"அப்பிடிச் சொல்லாத கோகிலா, நீ மனிசனோட வெளிநாடு போட்டாய்யென்டும், என்னோட்தொடர்பு ஏதும் கொள்ளாமல் மறந்து போனாயென்டும் நான் அடிக்கடி நினைக்கி றனான். அதோட என்ர வேலை, பிள்ளை குட்டி, வீட்டு பிரச்சினைகளுக்க மூழ்கியதாலை அதுக் கங்காலை எதையும் நினைக்க முடியல்லை."
திருகோணமலை, மட்டக்களப்பு பிரயாணம் இப்பத்தான் மூண்டு மூண்டரை மணித்தியாலம். முந்தியெல்லாம் திருகோண மலைக்கு மட்டக்களப்பிலை இருந்து வார தென்டா ஒரு நாள் பயணம். நுாறு செக்கிங், ரயிலிலை வாரதென்டா கல்லோயாவிலை இறங்கி மூண்டு மணித்தியாலம் திருகோண மலை ரயிலுக்கு காவலிருக்க வேணும். உந்தத் தொல்லையால எங்கயும் பயணம் போய்
வாறதை நான்கைவிட்டிட்டன்” ;
இதையெல்லாம் கேட்டுக் கொண்டி ருந்த சுமதி “உண்மைதானடி , நானும் கனடாவுக்கு போற எண்ணத்தில், செய்த வேலையையும் விட்டுட்டு, இந்தா போறன் நாளை போறன் எண்டு கனவு கண்டு கொண்டு இருந்ததில உன்னைப்பற்றியும் நான் எண்ண வில்லை. ஆனா நீ மட்டக்களப்புக்கு இடம்மாறி கல்யாணங்கட்டிக் கொண்டு போயிட்டா எண்டு மாத்திரம் அறிஞ்சன்”
இப்படிச் சொல்லிக் கொண்டிருந்த கோகிலாவிடம் "அது சரியடி நீ ஏனடி கனடா போகல்லை , ஏன் உன்ர மனிசன் உன்னக் கூப்பி டேல்ல" எனக் கேள்வி தொடுத்தேன் நான்.
இந்தியாவில் தாலி கட்டி எல்லா இடமும் சுற்றிப்பார்த்து காட்டி விட்டுச் சென்ற கணேசன், கெதியிலை கோகிலாவை கனடா வுக்கு எடுப்பதாக தனது தாய்க்கும் கோகிலா வுக்கும் உறுதி அளித்து விட்டுச்சென்றான்.
அவர்களும் அவனுக்கு விடை கொடுத்து திருகோணமலைக்குத் திரும்பினர்.
கோகிலாவும் தாயாரும் சாம்பல் தீவுக்கே போய் மாமி குடும்பத்துடன் இருந்து கொண்டனர். யோகாவுக்கு ஒரு சில மாதங்கள் ஒழுங்காக கணேசன் பணம் அனுப்பினான். வர வர மூன்று நான்கு மாதம் என ஆகி ஒரு
ழ் 66/பங்குனி 2014

Page 50
வருடமாக அவன் பணம் அனுப்புவதே நின்று விட்டது. அத்துடன் அவனது தொடர்பும் அற்று விட்டது. பல முறை அவனைப் பற்றி அறிய கணேசனின் தாயார் முயற்சி எடுத்தும் தகவல் எதுவும் கிடைத்ததாக இல்லை."
கோகிலா மாமியினதும் அவள் மகள் பிள்ளைகளினது ஒரு வேலைக்காரியாகவே காலந்தள்ள வேண்டியிருந்தது. அவர்கள் கொடுப்பதை சாப்பிட வேண்டிய நிர்ப்பந்தம். இருந்த வேலையையும் விட்டு இப்ப அடிமைச் சீவியம் வாழும் கோகிலாவைப் பற்றி தாயார் தினம் மனங்குமுறி அழுவாள்.
மகளின் நிர்க்கதி நிலையால் படுக்கை யில் விழுந்த கோகிலாவின் தாயார் ஒரு நாள் கண்ணை மூடிவிட்டாள்.
கோகிலாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மாமி, மச்சாள் கொடுமை மிக மிக மோசமாக, சொல்லாமல் கொள்ளாமல் மட்டக்களப்புக்கு புறப்பட்டுவிட்டாள்.
நான் இருக்கும் இடத்தை யாரிடமோ கேட்டு அறிந்து என்னிடம் வந்து சேர்ந்த கோகிலாவுக்கு தான் ஒரு பெரிய பொறியி லிருந்து மீண்டதாக சந்தோஷம்.
- உண்மைதான், எனது ஆப்த நண்பி யான நிலாவெளி கோகிலாவின் வாழ்க்கை ஒளியை மறைக்கும் கருமுகிலை நீக்கி அவளை மீண்டும் புன்னகை புரிய வைக்க வேண்டுமென நித்தம் கனவு கண்டேன். கோகிலாவை எனது வீட்டோடு வைத்து ஆதரித்து அவளை நல்ல நிலைக்கு மீட்டெடுக்க சந்தர்ப்பத்தையும்
எதிர்பார்த்திருந்தேன்.
எனது கணவர் பாங்கில் மனேஜராக இருந்ததால், பல பொது நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது மக்களின் தொடர்பு அவருக்கு அதிகமாக இருந்தது. அது மட்டுமல்ல பல பொது நிகழ்ச்சிகள், நூல் வெளியீட்டு விழாக்கள் என்பவற்றிற்கும் அவருக்கு அழைப்பு நிச்சயமாக இருக்கும். பல வேளைகளில் ஒரு பேச்சாளராக நூல் விமர்சகராகவும் விளங்கி பிரபலம் பெற்றவர்.
"அப்பா, உங்களைத்தான்” என நான் எனது கணவரிடம் பேச்சை ஆரம்பித்தேன்.
"என்ன சுமதி சொல்லுமன்”
"இல்லையப்பா உவள் கோகிலா இருக்கிறாளே அவள் பாவம்”
"ஓ... இப்ப அதுக்கென்ன..."
"அவளும் என்னைப் போல ரீச்சரா இருந்தவள். ஒரு கண்டறியாத கனடாக்காரனை
48/ஜீவநதி - இதழ் 8

15:24:15hiv;.
*4:41:34:44 :::::::::::
க ல யாண ம க ட ட ப போய தன' ர வாழ்க்கையையே தொலச்சுப் போட்டு 'இங்க வந்து நிக்கிறாள்”
“இப்ப அதுக்கு என்னை என்ன செய்யச் சொல்லுறீர்”
"இல்லையப்பா கோகிலாவுக்கு எங்கையாகிலும் ஒரு வேலை பார்த்துக் கொடுங்கோவன்"
நான் எனது கணவரிடம் கெஞ்சாத குறையாக எனது வேண்டுதலை விடுத்தேன்.
எனது கணவரைப் பற்றி நானே ஜம்பமடிப்பது சரியல்ல, ஆனாலும் அவரைப் போல மனுசரை தேடிப்பிடிப்பது இந்தக் காலத்தில் இயலாது.
இரக்க சுபாவமும் , நேர்மை,
கண்ணியம், கட்டுப்பாடும், பெண்களை மதித்து நடக்கும் ஒரு நல்ல ஆண்மைச் சுபாவமும் கொண்டவர். 'பிறருக்கு உதவி செய்வதில் எப்பவும் முன்னுக்கு நிற்பார். ஒரு முற்போக்குச் சிந்தனைவாதி என்ற பெயரும், மதிப்பும் நிறைந்தவர், எனது கணவர்.
எனது கணவரின் நல்ல குணம் எனது கோரிக்கைக்கு வாய்ப்பாக அமைந்தது. ஒரு வாரத்திலேயே கோகிலாவுக்கு ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலையும் கிடைத்தது. சமூக சேவையோடு ஒட்டிய வெளிக்கள் வேலை யென்பதால் கோகிலாவுக்கு தனது துன்பத்தை மறந்து பலரோடும் அன்பாக, ஆதரவாக பழகும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.
கோகிலா இப்பொழுது சொந்தக் காலில் இயங்கும் ஒரு பெண்ணாகி விட்டதைக் காணும் போது எனக்கும் கணவருக்கும் கூட ஆனந்தமாக இருந்தது.
எமது வீட்டுக்கு அருகாமையிலுள்ள
56/ பங்குனி 2014

Page 51
***பப்)
ஒரு வீட்டில் "அனெக்ஸ்” ஆக ஒரு ரூம் பார்த்து கொடுத்து அவளை சுயமாக இயங்க வைத்தே நான்.
- நானும் அவளும் வெள்ளிக்கிழ ை களில் எனது பிள்ளைகளையும் கூட்டிக் கொண் பக்கத்திலே இருக்கும் முருகன் கோவிலுக்கு "போவோம்.
அங்கே எமது குடும்பக்கதை, தனி பட்ட இரகசியங்கள் என்பவற்றை கோவிலுக் முன்னால் பரப்பியிருக்கும் குருமணலி அமர்ந்திருந்து ஆற அமரப் பேசிக்கொள்வோம்
எனது கணவர் கோயில் பக்கமே வ மாட்டார்.
"ஏனப்பா நீங்களும் கோவிலுக் வந்தால் குறஞ்சா போகும்” என்பேன்.
"இஞ்சை சுமதி, உமக்கு விருப் மென்டா போம், நான் தடுக்கேல்ல. எனக் உதெல்லாம் சரிப்பட்டு வராது சுமதி, மனிசம் நேர்மை, நியாயம், ஆருக்கும் அநியாயம் - செய்யாமல் இருந்தால் போதும். கோயில் குளமென்டு அலையத் தேவையில்லை. நூறு விரதம், நித்தம் அஞ்சுபத்து தரம் ஆண்டவனை கும்பிட்டுக் கொண்டு அநியாயம் செய்யிற ை விட மனிசத்தன்மையோடு வாழுறது மேலென் தான் நான் நினைக்கிறன்.”
1 "சரி சரி விடுங்கோப்பா, நீங்கள் சொல்லுறதும் சரிதான். ஆனா வெள்ளிக்கிழமை என்டாலும் ஒரு நாளைக்கு கோயிலுக் போகாட்டி எனக்கு ஏதோ பறி கொடுத்தது போல் இருக்கும்.”
“சுமதி, நான் உம்மட சுதந்திரத்தில் எப்பவும் தலையிட மாட்டன். நீர் கோயிலுக் போறதை தடுக்கவும் மாட்டன். ஆனா என்னை மாத்திரம் கூப்பிடாதையும்” எனச் சொல்லி விட் எனது கணவர், உந்துருளியிலேறி பறந்து விடுவார்.
அவருக்கு மட்டக்களப்பு நூல்நிலையம் தான் மாலை வேளைகளில் தஞ்சம். உள். பத்திரிகையெல்லாம் படித்து விட்டு வீட்டுக் வருவார். வரும் போது கையில் வேறு புத்தகம் இருக்கும்.
கணவரின் மேசையில் பத்திரிகை புத்தகமென்று குவிந்து கிடக்கும். புத்தகங்கள் வைப்பதற்கென்று ஒரு பெரிய அலுமாரியும் வைத்திருக்கிறார்.)
அடிக்கடி தபாலில் கூட சஞ்சிகை புத்தகமென்று வந்து குவியும். இரவிரவாக வாசிக்கிறதும், வாசிப்பதைக் குறிப்பெடுக்
*14-7ctார்:-* :
'
49 கீவநதி - இ

* **சபா க' - =# 10:*.
பி 5 - 5
கு
2. -
டி சி. 9 2. 5.
2.24%, 5)
கிறதும், ஏதாவது எழுதுவதும்தான் அவருடைய வேலை.
பரவாயில்லை, ஊருலகத்திலிருக்கிற சில உத்தியோக ஆண்களைப் போல தண்ணிப் பாட்டி போட்டுட்டு வீட்டுக்கு வரவில்லையே, எனது கணவன் எனக்கு இனியில்லையென்ற
ஆறுதலும்கூட.
ஒரு நாள் வெள்ளிக்கிழமை, கோயி லுக்குப் போக கோகிலாவுடன் வெளிக்கிட்ட வேளை, உறவினர்கள் சிலர் வீட்டுக்கு வந்த தால், கோகிலாவையும் அவர்கள் போகும் வரை நிறுத்திவைத்தேன்.
மற்ற வேளைகளில் மரித்தால் பேசாமல் நிற்பவள் அன்று அவசரப்படுத் தினாள். சிறிது நேரத்தின் பின் ஏதும் சொல்லா மல் எனக்குத் தெரியாமலேயே விறு விறுவென நடந்து கோயிலுக்குப் போய்விட்டாள்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்னை விட்டு விட்டு எங்கும் அகலாத கோகிலா, இன்று மட்டும் ஏன் அப்படி?
உறவினர்கள் ஒரு அரை மணி நேரம் வரை மினக்கெடுத்தி அகன்று சென்றனர். அவர்கள் சென்ற கையோடு நானும் கோவிலை நோக்கி விரைந்தேன். கோவிலுக்குப் போன நான் கோகிலாவை அங்கு தேடினேன்.
எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது நான் : கண்ட காட்சி.
கோகிலா ஒரு நடுத்தர வயது ஆணுடன் ஏதோ பலமாக உரையாடிக் கொண்டிருந்ததை அவதானித்தேன். எனது வருகையை அவதானித்த கோகிலா, என்னை கையசைத்து அருகே வரும்படி அழைத்தாள். நானும் அருகே சென்றேன்.
"கோகிலா, இதாரடி?” எனக் கேள்வி தொடுத்தேன்.
"இதுதான் என்னை கை கழுவிவிட்டுப் போன புருஷ மகாராசன்" சற்று நக்கலாக அவள் எனக்குச் சொன்னாள்.
"என்ன...? இங்க அவர் எப்படி?”
"ஓமடி ... இப்பத்தான் அவருக்கு ஞானம் வந்ததாம். என்னைத் தேடி ஓடி வந்திருக்கிறார். கனடாவில் ஆரோ வெள்ளக் காரியோட உலகை சுத்திப் போட்டு, உள்ள காசு பணத்தையெல்லாம் அவள் உருவி விட்டு கலைக்க இப்ப என்னைக் கலைச்சுப் பிடிக்க இங்க வந்து நிற்கிறார்.” இப்படி நாம் கதைத்துக் கொண்டிருக்க, கோயில் பக்கமே வராத எனது கணவர் குமரேசன் சிரித்தபடி எம்மை நோக்கி
2 அ |
த ன
5. 4. அட - S.2..
க
தழ் 667 பங்குனி 2014

Page 52
28:19. !
வந்து கொண்டிருந்தார்.!
"சுமதி... இந்த காரியத்துக்கெல்லாம் இரகசிய சூத்திரதாரி வாறார் பார்" எனது கணவரை நோக்கி முகத்தை அசைத்து சைகை காட்டினாள், கோகிலா.
"என்ன... என்ர மனிசனோ?” எனக்கு அவள் சொன்னதைக் கேட்க மேலும் ஆச்சரியம் அதிகரித்தது.
- ஆமாம், எனது கணவருக்கு கனடா வில் கந்தசாமி என்ற நண்பரை பல காலம் பழக்கம். அவர்கள் இருவரும் அடிக்கடி தொலைபேசியில் உரையாடுவதுண்டு. நான் அவர்களுடைய தொலைபேசி உரையாடல் களையோ, கணவர் யாருடன் கதைத்தாலோ ஒட்டுக்கேட்டு தலையிடுவது கிடையாது. அதே போன்றே எனது கணவரும் யாருடனும் நான் தொலைபேசியில் கதைத்தாலும், யார் எவர் எனக் கேட்பது கிடையாது. பரஸ்பர நம்பிக்கை இல்லாமல் தொலை பேசியினாலேயே வாழ்க்கையைத் தொலைத்த பல குடும்பங்களை நாம் அறிந்ததால், நம்பிக்கையுடன் இருவரும் நடந்து கொண்டோம்.
அந்தக் கந்தசாமியின் கனடா நண்ப னாக இருந்தவன் கோகிலாவின் கணேசன். தனது சென்ற காலத்தவறுகளை கந்தசாமியிடம் சொன்ன கணேசன், தனது கோகிலா திருகோணமலையை விட்டு மட்டக்களப்புக்கு போய் மீண்டும் வரவில்லை. அவளுக்கு என்ன ஆனதென்று தெரியாததால், மிகவும் மன வேதனையடைந்து, தான் அவளுக்குச் செய்த துரோகத்திற்கு பிராயச்சித்தமாக மீண்டும் அவளைத் தேடிக்கண்டு பிடித்து அவளுக்கு வாழ்வு கொடுக்க வேண்டுமென்று கவலைப் பட்டு விட்டு, மட்டக்களப்பில் யாராவது நண்பர் கள் இருந்தால் அவளைப் பற்றி ஏதும் செய்தி கிடைத்தால் அறியத்தரவும் என கெஞ்சி கேட்டுக் கொண்டான். அத்துடன் எனது கணவரின் மின்னஞ்சலுக்குகணேசன் கொடுத்த கோகிலாவின் படத்தை கந்தசாமி அனுப்பி,
முடிந்த வரை தகவல் தரும்படி கேட்டிருந்தார்.
காரியம் கைகூடும் வரை எனக்கும், ஏன் கோகிலாவுக்கும் கூட தெரியாமல் காய் நகர்த்திய எனது கணவர், கணேசன் கனடாவில் இருந்து மட்டக்களப்பு வரும்வரை பரபரப்பில் லாமல் காரியமாற்றியிருந்தார். தற்செயலாக கணேசன் வருவதை அறிந்தால் கோகிலா, அவனில் உள்ள வெறுப்புக்கு தலைமறைவாகி
50/ ஜீவநதி - இதழ் 60

00011
பலி 12-41604408/199 AMாசடிக்க.
சர்கோங்க
0' கோடி சரி'
காரியம் கைகூடாமல் போகலாம் என்பதன்றி, வேறெந்த உள்நோக்கமும் எனது கணவருக்கு இருக்கவில்லை. -- ஆனாலும், கோகிலாவை விட்டு கொப்புத்தாவிய குரங்கின் மேல் எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.
அதேமாதிரி, கால்வாரிவிட்டு கழன்று சென்ற கணவனிடம் கோகிலாவுக்கும் நம்பிக்கை வரவில்லை.
* “கோகிலா நீங்கள் எதுக்கும் அஞ்சத் தேவையில்லை. கணேசன் கனடாவில் இருக்கேக்கையே நான் கந்தசாமி மூலம் எல்லாத்தையும் கதச்சிட்டன். உண்மையாக நடந்து கொள்ள நினைத்தால் மட்டும் கணேசனை இலங்கைக்கு வரச்சொன்னன். இன்னொரு தடவை ஏமாற்றிற எண்ணத்தை விட்டிட வேணும் எண்டும் எச்சரித்துத்தான் அவரை இங்க வரவழைச்சனான். கந்தசாமியும், கணேசன் உன்னோடு திரும்பி வந்து புது வாழ்க்கையைத் தொடங்கிறதெண்டால் வேண்டிய உதவியைச் செய்யிறனென்டு சொல்லி இருக்கிறான். நான் சொல்லுறதை நம்புங்கோ கோகிலா. உங்கட கணவரை ஏற்றுக் கொள்ளுங்கோ”
கண வரின' ஆணாத தர மான வேண்டுதலை நானும் ஏற்று,
“கோகிலா இனி நீ பயப்பிடத் தேவை யில்லை, எனது கணவர் எதையும் ஆராய்ந்து சரியென்றால் தான் முடிவெடுப்பார். என்ர அனுபவத்தில சொல்லுறன். கடவுளின் வாக்குப் பொய்த்தாலும் எனது கணவனின் வாக்குப் பொய்க்கிறேல்லரீநீ நம்பு அவர் சொல்லுறதை.”
எனது சொல்லை செவியுற்றதற்கு சம்மதமாக கோகிலா கணேசனின் அருகே சென்று அவனது கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள். கணேசனும் மிக ஆதரவுடன் அவளின் கரங்களைப் பற்றி, தன்னோடு இழுத்துத் தழுவிக் கொண்டான்.
அபலையாக வந்த தோழிக்கு, ஆதரவு நல்க எனக்கு உதவியதோடு, அவளது வாழ்விலும் மீண்டும் ஒரு விடியல் தோன்ற வித்திட்ட எனது கணவரைப் பார்த்தேன் நான்.
கோயில் கொண்டிருக்கும் அந்தக் குமரக்கடவுளே எனது கணவர் குமரேசனாக புன்சிரிப்புச் சிரித்தபடி என் முன்னால் நிற்பது
போல் ஒரு பிரமை எனக்கு ஏற்பட்டது.
5 பங்குனி 2014

Page 53
இறைவனைத் தேடுகிறேன்
பிரபஞ்சம் தோற்றத்தின் மூலமாம் புரளும் அலைகடல் மலையதின் தோற்றமாம் திரளும் வானலை வெண்முகில் கூட்டத்தின் திகழுவான் அருவுரு வானவனாம்
வானும் மண்ணும் வளியும் நீரும் வானில் ஊரும் மதியும் சுடரும் தோணும் பொருளும் சூழ்ந்திடு யாவும் தோன்றாச் சக்திகள் யாவிலும் தேடுறேன்
தேடும் பொருள்களின் உள்ளேயும் வெளியேயும் தோன்றித் தோன்றா திருப்பதாய் சொல்வார் ஆடும் உலகில் ஆட்டம் காட்டிக் காட்டி அலைத்திடும் சக்தியாம் : எங்கே தேடுவேன் ?
அற்புதம் செய்யும் அறிவுடை நம்பியை அறிவால் அறியலாம் என்றால் முடியுமா? -- விற்புருவ பொட்டின் மத்தியில் ஒடுங்கும் விஸ்வ ரூபமாம் தேடுறேன் முடியவில்லை.'
எந்த மூலையில் இருக்கின்றான்? அவனை ஒருமுறை பார்த்து அறைய எண்ணம் இந்தப் பிறவியை ஏனையா கொடுத்தாய்?- இறையே உனக்கு எஜமான் யார் சொல்?
உன்னை வைத்தே உலகில் ஆடுகின்றார் உலுத்தர் கூட்டத்தை ஏனோ படைத்தாய் உன்னை மனிதன் படைத்துக் காட்டி உலகைப் படைத்தாய் என்றாடுகின்றார்.
என்ன மொழியை பேசுவாய் இறைவா? நீ என்ன சமயத்தைச் சேர்ந்தவன் சொல்லு என்ன இனத்தைச் சார்ந்தவன் சொல்லும் எவரின் கட்சியைச் சேர்ந்தவன் சொல்லு
உருவம் இல்லா ஒரு பெரும் சக்திநீயெனில் உலகில் நடக்கும் கொடுமைகள் காணாயோ பெருக்கெடுத் தோடும் ஜீவநதி போல்வாய் பெருகி வந்தே புத்தியைக் கொடுப்பாய்.
கேணிப்பித்தன் ச.அருளானந்தம்
நூl லீவநதி - இதழ்

- வருத்தப்படாத வாலிபர்கள்
ஒவ்வொரு மாலை வேளையிலும் எங்களூர் மைதானங்களில் இன்னிசை கீதங்களுடன் இரவுப்பொழுதுகள் இனிமையாய் கரைய நாட்களை நகர்த்தும் நாளைய தலைவர்கள்!
S:
உறக்கமும் விழிப்புமான மோன நிலையில் உடல் மிதந்து செல்ல உதவி செய்யும் - உற்சாக பானங்களுடன் நட்புப் பகிர்வுகள் நாளும் தொடரும்! .
ஆத்மாக்களை ஆகாயத்தில் சஞ்சரிக்கவிட்டு போதை வஸ்த்துக்களுடன் . பேரானந்த உறவுகொள்ளும் பேர்சொல்லும் பிள்ளைகள் பாதையோரத்து ஒதுக்குப்புறங்களில்.
காதலுக்கும் காமத்துக்கும் கருத்துத் தெரியாமல் தெருத் தெருவாய்ச் சுற்றி - தேக சுகத்தில் மெய்மறந்து .. சுதந்திரமாய் காலம் கழிக்கும் தேசத்தின் புதல்வர்கள்!
கவலையை மறந்து கற்பனை உலகில் கனவு காணும் வருத்தப்படாத வாலிபர்களாய் வலம் வரும் இன்றைய இளைய தலைமுறைகள் விழிக்கும் வரை இடர்களுடனும் இழப்புக்களுடனும் எங்கள் வாழ்வு இன்னும் தொடர்கதையாய் தீர்வு காணப்படாமல் தீயாய் எரியும்!
மூதூர் முகைதீன் .
"66 / பங்குனி 2004

Page 54
கந்தளாயில் கணவன் வீட்டில் வசிக்கும் நிறைமாதக் கர்ப்பிணியான எனது மகளைப் போய்ப் பார்த்துவிட்டு மீண்டும் ஊர் திரும்புவதற்காக மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியை வந்தடைந்தேன். திருகோணமலை செல்லும் தனியார் பஸ்வண்டி ஒன்றில் ஏறி அமர்ந்திருந்தபோது பஸ்ஸின் பின்புறமாக காதைப் பிளக்கும் பலமான ஹோர்ன் சத்தம் ஒன்று கேட்டது. யன்னலினூடக எட்டிப் பார்த் தால், எங்கள் ஊர்காரர் சமது நானாவின் புது டெலிக்கா வேன் மரக்கறி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு பஸ்ஸைக் கடந்து செல்ல முயல் வதைக் கண்டேன். என்னுடைய பால்ய நண்ப னான ஜவாப்தீன்தான் வேனை ஓட்டிக்கொண்டு சென்றான். அவனோடு முன் ஆசனத்தில் சமது
முதலாளியும் இருந்தார்.
உடனே, "ஜவாப்தீன்! ஜவாப்தீன்!”
இப்படி பிப 001
என்று கடந்து செல்லும் அந்த வேனை நோக்கி பலமாக சத்தம் வைத்தேன். பஸ்சுக்குள் இருந்த அத்தனை தலைகளும் திரும்பிப் பார்த்தன. அதேவேகத்தில் பஸ்ஸிலிருந்து மளமளவென நான் இறங்கியபோது டிக்கட் எழுதிக் கொண்டிருந்த கண்டக்டர் பையன் சிங்களத் திலே கெட்டவார்த்தையால் வாய்க்குள் திட்டியது காதில் விழுந்தது. அதையெல்லாம் கவனிக்காமல் கைகளைப் பலமாக தட்டியபடி வேனின் பின்னே ஓடியதில் அது கந்தளாய் பெற்றோல் நிலையத்தைத் தாண்டி சற்றுத் தடுமாறிய பின்பு நின்றது. நம்
நான் ஓடிவந்ததை ஜவாப்தீன் பின் பக்கப் பார்வைக் கண்ணாடியிலே பார்த்திருக்க வேண்டும். அதனால் தான் நிறுத்தியிருக் கின்றான். வேனிற்கு அருகில் நான் போய்ச் சேர்ந்ததும், “என்ன ஜவாப்தீன்.. பஸ்ஸுக்குள்ள இருந்து கையைக் காட்டி கூப்பிட்டது விளங் கல்லியா..?” என்று கேட்டேன். ஓடிவந்ததிலே
மூச்சிரைத்தது எனக்கு.
"ஓ! நீதானா அது..? நான் கண்டன் தான் மச்சான். ஆனா மதிக்கயில்லடா.. வா வா உள் ள வந்து ஏறு! பின்னால் மரக்கறி
52/ லீவநதி - இதழ் 6

மூடையெல்லாம் கெடக்கு. இஞ்ச முன்னால.. முன்னால் வா! எங்கடா றிஹானாவப் பார்க்க 5 வந்தியா..? எப்ப உனக்கு பேரக் குழந்தை 3 கெடைக்க இருக்கு?” என்று கேட்டான் ஜவாப்தீன். சமது நானா புன்னகையுடன் முன்புறக் கதவைத் திறந்து தான் இறங்கிக் கொண்டு உள்ளே ஏறும்படி சாடை காட்டினார். 6
"ஓம் மச்சான்.. இன்டைக்கு ஆகஸ்ட் 21 தானே? இந்த மாசக் கடைசியில் என்டுதான் இ டேட் குடுத்திருக்காங்க. அதான் மனுஷியக் 3
மூதூர் மொகமட் ரயி
E!
புitt சாயக்க த
கொண்டு மகளோட வுட்டுட்டு வாறன். அதுசரி, நீங்க ரெண்டுபேரும் எங்க் தம்புள்ளை யிலருந்தா வாறீங்க? நேத்துப் பின்னேரம் ஊருக்குப் போயிட்டு திரும்பியும் வந்திருக்கீங்க F" போல்” என்றபடி உள்ளே ஏறி இருவருக்கும் - இடையில் நான் அமர்ந்து கொண்டதும் வேன்
மீண்டும் ஊரை நோக்கிக் கிளம்பியது.
"கந்தளாய் வரைக்கும் என்டுதான் - வந்தோம்.. பொறவு இவ்வளவு தூரம் வந்தாச்சி.. என்டு தம்புள்ளயில் தங்கி சாமானை ஏத்திட்டு வாறம்” என்றான் ஜவாப்தீன். .
"எப்பிடி சமது நானா, தம்புள்ளயில் மரக்கறி சாமான் விலையெல்லாம்..? இடையில் ஏதும் பிரச்சினையா?”
"வேலையெல்லாம் சரிதான் அனீஸ் தம்பி. செக் பொயிண்டுகளால் சமாளிச்சு மரக்கறிய டவுனுக்குக் கொண்டு போய்ச்
56/பங்குனி 2014

Page 55
சேத்திட்டாச்சரி.. கொஞ்சம் கூடக் கொறைய காசு பாக்கலாம்.." என்றார் சமது நானா.
சமது நானா அனுராதபுரச் சந்தியில் ஜவாப்தீனுடைய பக்கத்து வளவிலே வசிக்கும் ஒரு மொத்த வியாபாரி. நிரந்தரமான வியாபாரம் என்று அவருக்கு எதுவுமில்லை. அந்தந்த நேரத் திலே என்னென்ன டிமாண்ட்டாக உள்ளதோ அதை மொத்தமாக வாங்கி வந்து உள்ளூர் கடை களுக்கு விநியோகித்துப் பிழைக்கும் ஒரு சீஸன் வியாபாரிதான். வெகு அண்மையில்தான் அவர் இந்தப் புது வேனையும் சொந்தமாக வாங்க யிருந்தார். கடந்த ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகியதைத் தொடர்ந்து வடக்கு-கிழக்கு மாகாணங்களிலே அடுத்தடுத்து அமைதியற்ற அரசியல் சூழ்நிலைகளும் இனமுறுகல்களும் உண்டானது. அதனால் எழுந்த அச்சத்தால் சிங்களவர்கள் திருகோண மலை நகருக்கு வருவதும் தமிழர்கள் கந்தளாய் மற்றும் ஹபரண பகுதிகளைத் தாண்டிச் செல்வதும் உயிராபத்துக்குரிய நிலைமையில் இருந்தது. இதனால் தம்புள்ளையிலிருந்து சிங்களவர்களின் மரக்கறி லொறிகள் திருகோண மலைக்கு வருவது நின்றுபோக திடீரென அவற்றுக்குரிய கேள்வியும் விலையும் விஷம்போல ஏறிப்போனது.
இதையறிந்தால் விடுவாரா சமது நானா?
இந்த நேரத்தில் தம்புள்ளைக்குப் போய் காய்கறிகளைக் கொண்டுவந்தால் கொள்ளை இலாபம் சம்பாதிக்கலாம் என்று கணக்குப் போட்டார். அதன்படி இந்த வேனை வைத்து சிறிது காலமாக அந்த வேலையைத்தான் செய்து வருகின்றார். அதேவேளை தங் களுடைய உழைப்பு தடைப்பட்ட நிலைமையில் இருக்கும் சிங்கள வியாபாரிகள் முஸ்லீம்வியாபாரிகள் எது வித பிரச்சினையுமின்றி உழைப்பதைக் கண்டு பொறாமையுடன் கறுவிக்கொண்டிருந்தார்கள். இதையறிந்து சிலர் சமது நானாவை அவதான மாக இருக்குமாறு எச்சரித்தும் இருந்தனர். ஆனால் பேராசை கொண்டவரான அவர் அதைப் பொருட்படுத்தவில்லை.
" முதல் நாளன்று காலையிலே அவர் தம்புள்ளைக்குப் புறப்பட இருந்தபோது இதே வேனை ஓட்டும் அவருடைய வழமையான சாரதி ஏனோ திடீரென வராமல் நின்றுவிட்டான். இதனால் அவருக்கு அவசரத்திற்கு புதுச்சாரதி ஒருவன் தேவைப்பட்டான். உடனே வாடகைக் கார் ஓட்டிச் சம்பாதிக்கும் அயலவனான ஜவாப்
53/ கீவநதி - இத

தீனைச் சாரதியாக வருமாறு அழைத்திருந்தார் சமது நானா. வெளிநாடு சென்றிருந்த ஜவாப்தீனின்" மனைவி பல வருடங்களுக்குப் பின்பு அப்போதுதான் வீடு திரும்பியிருந்த நேரம் அது. சரியாகக் கூறுவதானால், அவள் வந்து முழுதாக இரண்டு நாட்கள் கூட ஆகியிருக்க வில்லை. காரை திருத்த வேலைக்காக கராஜில் போட்டு அங்கேயே பொழுதெல்லாம் கழிந்ததால் ஜவாப்தீனால் மனைவியோடு சரியாகப் பேசக்கூட நேரம் கிடைத்திருக்க வில்லை. இந்த நிலையில் அவ்வளவு தூரம் போய் வருவதா என்று அவன் முதலில் மறுத்து விட்டிருந்தான். ஆனாலும் சமது நானா விடவில்லை. முதலில் கந்தளாய் வரை போய் வருவோம்... நிலைமை பிரச்சினை இல்லை என்றால் மட்டும் மாலையில் தம்புள்ளைக்குப் போய் வருவோம் என்றிருக்கின்றார். அந்தப் பயணத்தின் ஆபத்துப் பற்றி அறிந்திருந்தும் பக்கத்து வீட்டுக்காரன் கூப்பிடும் போது ஜவாப்தீனால் ஏனோ மறுக்கமுடியவில்லை. சரி கந்தளாய் வரைக்கும்தானே என்று இருவரும் புறப்பட்டு வந்தது வரைக்கும்தான் எனக்குத் தெரியும். பிறகு நிலைமை அத்தனை தூரம் பிரச்சினையில்லை என்று அறிந்துதான் இவரும் தம்புள்ளைக்குப் போயிருக்கிறார்கள் போல.
- *என்ன அனீஸ் தம்பி, கந்தளாய் சிங்கள ஆக்கள் என்ன சொல்றா னொள்..?”
2 "வேறென்ன..? சும்மா முறுக்கிட்டுத் தான் இருக்கிறானொள். நம்மட ஆக்களும் கொஞ்சம் கவனமா இருந்தா நல்லது" என்றேன். "
"இவ னொள் அவனுந் தின்ன மாட்டான் மத்தவனையும் தின்னவுடமாட்டான் அனீஸ். இவ்வளவு காலமும் நம்மளை உடாம அவனுகள்தானே தொழில் செய்தானுகள் இப்ப நம்ம செஞ்சா மட்டும் ஏன் இப்பிடி வவுறெரியிறானொள்?"
- "அதுவுஞ் சரிதான்" என்று நானும் சமது நானாவும் தொடர்ந்து பேசிக்கொண்டே வர ஜவாப்தீன் மட்டும் பெரும் யோசனையி - லாழ்ந்தவனாக தார் வீதியை வெறித்தபடி வாகனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தான்.
எனக்கு அவனை நினைத்தால் பெரும் கவலையாக இருந்தது.
பாவம் அவனுக்கு ஆறு பெண் பிள்ளைகளும் ஒரு பையனும் இருக்கின்றார்கள். போதாதற்கு ஒருநாள் காரை ஓட்டிக்கொண்டு வரும் வழியில் நின்று தவித்துக்கொண்டிருந்த
ழ் 66 / பங்குனி 2004

Page 56
- ஒரு யாருமில்லாச் சிறுபையனையும் தத்தெடுத்து வளர்க்கின்றான். அவன் டாக்ஸி ஓட்டி சம்பாதிக்கும் பணத்தில்தான் அத்தனை பேரும் சாப்பிடவும் படிக்கவும் வேண்டும். அதற் காக எவ்வளவு பாடுபட்டு அவன் உழைத்தாலும் அது போதவில்லை. நேர்மையான உழைப்பாளி களிடம்தான் பணம் என்றைக்கும் தங்கிய தில்லையே. ஒருகட்டத்தில் குடும்பச் செலவு களைச் சமாளிக்கமுடியாமல் அவன் மனைவி வெளிநாடு சென்று உழைக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள். அதிலே அவனுக்கு சிறிதும் விருப்பமில்லாத போதிலும் ஆறு பெண்களை கரைசேர்க்கும் இயலாக் கடமையை நினைத்து மறுக்காமலிருந்தான்.
குடும்பத்தை எவ்வளவுதான் வறுமை வாட்டினாலும் ஜவாப்தீன் தன்னுடைய பிள்ளை களை எவருடைய தயவும் இல்லால் ஒழுக்க மாகவே வளர்த்திருக்கின்றான். அவர்கள் அனைவரும் வீட்டிற்கு அருகிலுள்ள உள்ளுர் பாடசாலையில் படித்தாலும் மூத்தவள் ஜரீனை மட்டும் ஓஎல் பாஸ் பண்ணியதும் ஏ எல் படிப்பதற் காக திருகோணமலை நகரிலுள்ள முஸ்லீம் கல்லூரிக்கு அனுப்பவேண்டிய நிலைமை அவனுக்கு. அவளும் திறமையாகப் படிக்கக் கூடியவள் என்பதால் தன் சிரமத்தையும் பாராது அதைச் செய்திருந்தான்.
ஆனால் சிறிது காலமாக மூத்தவள் ஜரீன் தொடர்பான ஒரு விடயம் அவனுடைய மனதைக் குழப்பிக் கொண்டிருப்பது எனக்குத் தான் நன்றாகத் தெரியும். ஜரீன் படிக்கும் அதே பாடசாலையிலே படிக்கும் ஒருவன் அவள் பின்னால் சுற்றித் திரிகின்றான் என்ற விடயம் அங்கு கெண்டீன் நடாத்திக் கொண்டிருக்கும் தூரத்து உறவுக்காரப் பையன் மூலமாக முதலிலே எனக்குத்தான் தெரிய வந்தது. என்னுடைய பால்ய நண்பனுடைய மகளின் விவகாரம் என்ற வகையிலே நான்தான் அந்த விடயத்தை பற்றி ஜவாப்தீனுக்கு இரகசியமாகக் கூறியிருந்தேன்.
, அதைக் கேட்டதுமே ஜவாப்தீன் மனம் குழம்பிப் போனான். தன்னுடைய மகளின் சீரிய குணம் பற்றி அவனுக்கு நன்றாகத் தெரியும். அவள் காதல், கத்தரிக்காய் விடயங்களி லெல்லாம் இறங்கித் தன்னுடைய படிப்பைக் கெடுத்துக் கொள்ளும் குணமுடையவளல்ல. தவிர அவள் குடும்பப் பொறுப்புத் தெரிந்த நல்ல தொரு பெண்பிள்ளையும் கூட. ஆனாலும் இந்தக்காலத்தில் எதையும் இலேசாக எடுத்துக்
ந4/ ஜீவநதி - இதழ் 6

கொள்ள கூடாது என்பதால் அதை தன் மகளிடமே பக்குவமாகக் கேட்கப் போவதாக கூறிய ஜவாப்தீன பின்பு அந்த யோசனையை ஏனோ கைவிட்டுவிட்டான். ஜரீனுடைய முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் தன்னால் அதுபற்றிக் கேட்க முடியாமலிருப்பதுதான் காரணம் என்று கடந்த வாரம் என்னிடம் சொல்லிக் கவலைப்பட்டிருந்தான்.
சில வேளை அந்தப் பையன்தான் அவளை ஒருதலையாக விரும்பிக் கொண்டு பின்னால் திரிய ஜரீனுக்கு அது பற்றித் எதுவுமே தெரியாமல் இருந்துவிட்டால் அவளை ஜவாப்தீனே வீணாகக் குழப்பிவிட்டது போலாகி விடும் என்று அவனை நான் எச்சரித்திருந்தேன். அது அவனுக்கும் நியாயமாகப் பட்டிருக்க வேண்டும். கடைசியில் மகளிடம் விசாரிக்காமல் நண்பர்கள் நாங்கள் இருவருமாகச் சேர்ந்து அதை வேறுவழியில் விசாரித்தறியலாம் என்று தீர்மானித்தோம். ஆனால் அல்லும் பகலும் டாக்ஸி ஓட்டி சம்பாதித்துக்கொண்டு திரியும் ஜவாப்தீனுக்கு இதையெல்லாம் கவனிக்க நேர மிருக்கவில்லை. ஆகையால் ஜவாப்தீனுக்காக நான் தான் களத்தில் இறங்கி விசாரிக்க
ஆரம்பித்தேன்.
அதே பாடசாலையில் படித்துக் கொண்டிருக்கும் எனக்குத் தெரிந்த ஒருவரது மகள் மூலமாக முழு விபரங்களையும் கேட்டறிய ஆரம்பித்தேன். அவன் பஸ்வண்டி கூடப் போய்த்திரும்பாத வெகுதூரத்திலுள்ள ஒரு பின்தங்கிய ஊர்ப்பக்கம் பிறந்து வளர்ந்த வனாம். தவிர, நான் முன்னர் யூகித்தது கூட முற்றிலும் சரியாகவே இருந்தது. ஆம், ஜரீனின் பின்னால் அந்தப் பையன் அலைந்து திரிவதும் அவள் அவனைப் பற்றி கணக்கெடுக்காமல் போவதும்தான் நடக்கின்றது என்பது உறுதி யானது. *
முதலில், அவனை யாரென்று ஒரு தடவை நேரிலே பார்க்க விரும்பினேன் நான். - அதன்படி அவனுக்குத் தெரியாமல் பார்க்கவும் செய்தேன். அழகு தேவதை போலிருக்கும் ஜரீனை ஒருதலையாக விரும்பிக்கொண்டு திரியும் அந்தக் கிராமத்தான் தோற்றத்திலாவது சிறிது பொருத்தமாக இருந்தானா? அதுவும் கிடையாது. துாய்மையான வெண்புறாவுக்குப் பக்கத்தில் ஒரு கருங்குரங்கை வைத்தது போல அவன் கன்னங்கரேலென்றிருந்தான். தவிர, அவனொரு மாணவன் போலவே தோற்ற மளிக்கவில்லை. கிராமத்திலே பலருடங்கள்
567 பங்குனி 2014

Page 57
பரீட்சைகளிலே பெயிலாகி கிடந்துதான் ஏஎல்
படிக்க இங்கு வந்திருப்பான் போல் யாரிடமாவது - அவனை ஜரீனின் ஒன்றுவிட்ட சித்தப்பா என்று
அறிமுகப்படுத்தினால் கேள்வி கேட்காமல் நம்பிவிடுவார்கள். அந்தளவு முதிர்ச்சியான தோற்றத்தில்தான் அவன் இருந்தான். எனக்குத் தகவல் கூறியவர்கள் மூலமாக பேச்சுக் கொடுத்து அந்தப் பின்தங்கிய கிராமத்தானின் குணங்களையும் எண்ணப் போக்குகளையும் நான் அறிந்துகொண்டேன்.
தன்னுடைய நோக்கத்திற்கு ஜரீன் சிறிதும் மசியாத காரணத்தால் அவளை வேறுவழியில் மடக்குவதற்காக அவளைத் தன்னுடைய காதலி என்று சகலரிடமும் சொல்லிக்கொண்டு திரிகின்றானாம். அதன் மூலம் ஒருவிதமான நிர்ப்பந்தத்தை அவள்மீது ஏற்படுத்தி அவளுடைய மனதைக் கலைப்பது தான் அவனது நோக்கமாம். தவிர, இதற்காக அவளோடு கூடப்படிக்கும் சில நண்பிகளின் ஒத்தாசையையும் பயன்படுத்துகின்றானாம். ஜரீனையும் அவளது குடும்பத்தவர்களின் விபரங் களையும் தேடி அறிந்துவைத்திருக்கின்றானாம். ஜரீனை தன் பக்கம் எடுப்பதிலே யார் தடையாக இருந்தாலும் அவர்களுக்கு எந்தவொரு தீங்கும் செய்வதற்குத் துணியக்கூடியவனாம் என்றும் ஒரு தகவல் கிடைத்தது எனக்கு.
நான் இதை அறிந்ததிலிருந்து தவித்துப்போய் இருக்கின்றேன். கடந்த வாரமே . இதையெல்லாம் ஜவாப்தீனிடம் சொல்லி அவனை எச்சரிக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் ஜவாப்தீனின் மனைவி திடீரென நாடு திரும்பியிருந்தாள். அதனால் அப்போதைக்கு அவனிடம் எதுவும் பேசாமல் இரண்டொரு தினங்கள் கழித்துச் சொல்லலாம் என்று ஒத்திப்போட்டிருந்தேன். அதற்குப் பிறகு வேலைப்பளு காரணமாக ஜவாப்தீனை சந்திக்க முடியவில்லை. இன்று தான் கண்டிருக்கின்றேன், இப்பொழுதே கவலையாகத் தோற்றமளிக்கும் அவனிடம் இதையும் சொன்னால் இன்னும் சோர்ந்து விடுவானே.. என்ன செய்யலாம்?
"என்ன ஜவாப்தீன், அனீஸ் தம்பி, ரெண்டு பேரும் ஒண்ணுமே பேசாம வாறீங்க.. ஏதும் பெரிய யோசனையோ?” என்ற சமது நானாவின் குரல் என்னைக் கலைத்தது. நானும் ஜவாப்தீனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். என்னையறியாமலே நீண்ட பெருமூச்சொன்று வெளியானது.
56 கீவநதி - இதழ்

"ஒண்ணுமில்ல இவனுக்கு வெளி நாட்டுல இருந்து முந்தா நாள்தான் மனுஷி வந்திருக்கா... அதுதான் மாப்பிளை கனவு காண்றாரு போல” என்றேன் நான், அவனைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டியவாறு.
அவனைக் கவலையிலிருந்து மீட்டு சிறிது உற்சாகப்படுத்துவதற்காகவே நான். அப்படிச் சொன்னேன். நண்பர்கள் நாங்கள் இருவரும் இப்படித்தான் வழமையாக வேடிக்கையாகப் பேசுவதுண்டு. இம்முறை சமது நானா கூட இருந்த காரணத்தால் அவன் என்னுடைய கிண்டலுக்கு பதிலுக்கு எதுவும்  ேப சா ம ல அ  ைம த யா க வ ந து கொண்டிருந்தான்.
அப்போது எங்கள் வேன் முள்ளிப் பொத்தானையை நெருங்கிக் கொண்டிருந்தது.
"என்ன ஜவாப்தீன், மனிசியோட ஏதும் பிரச்சினையா..?” என்று கேட்டார் சமது நானா.
“சேச்சே அதெல்லாம் ஒண்ணுமில்ல! இது வேற பிரச்சினை.." என்றான் ஜவாப்தீன் விரக்தியுடன். அவனுடைய பதில் எனக்கும் வேதனையைத் தந்தது.
“ சொல்லக் கூடிய தென டாச சொல்லுங்க ஜவாப்தீன். மனசுக்கும் பாரங் கொறையும்... நம் மளுக் குள் ளதானே. பிரச்சினை தெரிஞ்சா நம்மளால முடிஞ்சதைச் செய்யலாமே" என்றார் சமது நானா.
: ஜவாப்தீன் சட்டெனத் திரும்பி என்னைப் பார்த்தான். அவனுடைய கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன. அவனுக்கும் அவரிடம் பிரச்சினையைக் கூறினால் மனதுக்கு ஆறுதலாக இருக்கும் போலிருந்தது. "அனீஸ், நீதான் அந்த "பித்னா"வைச் சொல்லுமச்சான்” என்று கூறிவிட்டு அவன் வேனைச் செலுத்திக் கொண்டேயிருந்தான்.
நான் சமது நானாவிடம் அவனுடைய பிரச்சினையை ஒன்றும் விடாமல் எல்லா வற்றையும் கூறிமுடித்தேன். சிறிது நேரம் மூவரும் எதுவும் பேசிக் கொள்ளாமல் அமைதியாக வந்தோம். சமது நானாதான் மௌனத்தை முதலிலேகலைத்தார். பக்.
பட “இந்த நாளையில் உள்ள பொடிய னொள் படமும் டீவியும் பாத்துப் பாத்து இப்பிடித் தானே இருக்கிறானொள்.. கண்ணுக்குப் பார்வையான பொம்புளப் புள்ளைகளை நம்பி டவுண்ல எங்கயும் வுடேலாம இருக்கு பாருங்க..!” என்றார் சமது நானா.
"அதோட அவனுக்கு ஆமியில் யாரோ
66 / பங்குனி 2014

Page 58
பெரியவனைத் தெரியுமாம். அதால தான்ட லவ்வுக்கு யாராவது குறுக்கால நிண்டா அவங் கள் வுட்டுத் தூக்கிருவாராம் என்டெல்லாம் கதைச்சிருக்கான். அவன்ட திமிரப் பாத்தீங் களாசமது நானா?” என்றேன் எரிச்சலுடன்.
இது ஜவாப்தீனுக்குப் புதிய செய்தி. அதனால் அவன் அதிர்ச்சியடைந்தவனாக என்னைப் பார்த்தான்.
"இப்ப இதுதானே எல்லாருக்கும் வேலையாப் பொயிட்டு! ஆ ஊ என் டா ஆமியென் டுறதும் புலியென்றதும். நான் தெரியாமத்தான் கேக்கிறேன், அவனுகளுக்கு வேற வேலை இல்லியா என்ன?”
"இல்ல நானா, அந்தக் கறுவல் நாட்டான் கொஞ்சம் டேஞ்சரான ஆள்தானாம் என்டு அவனோட கூடப்படிக்கிற பொடியனுகள்ற கதையில் இருந்து தெரியுது.. அவன் எதுவுஞ் செய்யக்கூடியவனாம்!”
“யாரு ஆளெண்டு ஒருக்கா எனக்கிட்ட காட்டி வுடுங்களேன்.. நம்மட சென்றல் றோட் பசார் பொடியனுகளுக்கிட்ட சொல்லிப் பல்லைப் பேத்துருவோம்” என்றார் சமது நானா
சிறிது ஆவேசமாக.
"சீச்சீ.. அதெல்லாந் தேவையில்ல நானா. கொஞ்சம் ஆளை வெருட்டிவுட்டாப் போதும். மொதல்ல ஆள் யாரு எண்டு பாக்கணும்” என்றான் ஜவாப்தீன்.
"அப்ப ஒங்களுக்கு இன்னமும் அவனைத் தெரியாதா?” என்று கேட்டார் சமது நானா வியப்புடன்.
"நான் கேள்விப்பட்டதுதான். இன்னும் ஆளத்தெரியாது..!” என்றார் ஜவாப்தீன்.
“எனக்குத் தெரியும்.! ஒரே ஒருதரம் சோன வாடிப் பள்ளியில பாத்திருக்கன். இன்னொருதரம் அவனை எங்க கண்டாலும் மதிச்சுருவன். ஆள ஒங்களுக்குக் காட்டித் தரட்டா நானா?” தன்
"சரி, அனீஸ் நாளைக்கு பத்து மணி போல டவுண்ல பசாருக்கு வாங்க. இந்தியாக் கார துவான் நானாட ஹாட்வெயார்லதான் நான் நிப்பேன். துவான் நானாட தூரத்துச் சொந்தக் காரனாம். ஒரு பாய் முஸ்லீம் பொடியன் இந்தியன் ஆமில கேர்ணலா இருக்கான். பீச்சடி கேம்ப்ல ஆளப் போய்ச் சந்திப்பம். அவனிட்ட சொல்லி ஏதாவது வேற கேஸ்ல ஆளப்புடிச்சி ரெண்டு தட்டுத் தட்டச் சொன்னா தம்பி ஊருக்கே ஓடிப்போயிருவான்.”
"அதெல்லாம் வாணாம் சமது நானா."
56/ ஜீவநதி - இதழ்

-மல்.
என்று மீண்டும் மறுத்தான் ஜவாப்தீன். அவன் எப் போதும் இப்படித்தான். ஒரு சின்ன எறும்புக்குக்கூட தீங்கு செய்ய விடமாட்டான். அ.
"சும்மாயிரு ஜவாப்தீன்.! இனி இது ஒன்ட பிரச்சினையில்ல.. நாங்க பாத்துக் கிறோம்.”
“நீங்க கவலைப்படாதீங்க.. ஜவாப் தீன். இதைப் போய் ஒங்கட புள்ளைக்கிட்டயும் கேக்க வாணாம். மனிசிக்கிட்டயும் சொல்ல வேணாம். நீங்க எனக்கு அவசரத்துக்கு ஒதவிக்கு வந்திரிக்கீங்க. அதுக்கு நானும் ஒதவி செய்யணும். சரியா? அடுத்த கெழமை ஆள் பள்ளிக்கூடத்துல இரிக்க மாட்டான். நீங்க மனிசி புள்ளைகளோட சந்தோசமா இரிங்க.. அல்லாட ஒதவியால் எல்லாஞ் சரியா வரும். என்ன?” என்றார் சமதுநானா.
ஜவாப்தீன் எதுவுமே பேசவில்லை. வெறிச்சோடியிருந்த வீதியின் குறுக்கே நீண்ட தோகை கொண்ட ஆண் மயில் ஒன்று ஓடிமறைந்தது.
சிறிது நேர ஓட்டத்தில் கித்துல் உத்துவ எனும் காட்டுப்பகுதியை நெருங்கிக் கொண்டிருந்தோம். இன்னும் சில நிமிடங் களிலே இராணுவச் சோதனைச்சாவடி வந்து விடும். இங்கிருந்து ஊருக்கு இன்னும் பதினைந்து கிலோமீற்றர் தூரம் மட்டுமே இருந்தது. இனிவரும் பாதையின் இருபுறமும் மனிதக் குடியிருப்புகளே இல்லாமல் வெறும் காடுகள்தான் இருக்கும். இந்தப் பிரதேசத் தினுள் பொதுவாக இராணுவத்தினர் தவிர வேறு எவரும் நடமாடுவது கூடக் கிடையாது. இந்தப் பகுதியைக் கடந்து செல்லும்போது இஷ்டத்திற்கு வேகமாகச் செல்ல முடியு *மென்பதால் நேரத்திற்கு வீட்டுக்குச் சென்று விடலாம் என்ற சந்தோசம் இருக்குமே தவிர மனதிலே நிம்மதி இருக்காது.
அத சோதனைச் சாவடியில் வேனின் வேகத்தைக் குறைத்து இடது ஓரமாக நிறுத்தினான் ஜவாப்தீன். சாரதி இருக்கையி லிருந்து இறங்கிச் சென்று காவலரணிலே இருந்த பாதுகாப்பு அதிகாரியிடம் ஆவணங் களைக் காண்பித்து வாகனப் போக்குவரத்தைப் பதிவு செய்யும் புத்தகத்தில் கையெழுத்திட்டுக் கொண்டிருந்தான். அவன் வருவதற்கிடையில் சிப்பாய்கள் இருவர் துப்பாக்கி சகிதம் வேனைச் சோதனை செய்து முடித்தார்கள்.
அ " என ன ஜ வாப்தீன .. என ன கேட்டா னொள் சென்றியில..?” என்று கேட்டார்
66/பங்குனி 2014

Page 59
சமது நானா.
"மூணுபேர்ர பேரையும் கேட்டானொலி குடுத்தேன். மூணுபேரும் முஸ்லீம்தானே என் கேட்டான். ஓமென்டேன். மூணு பேரையு கொப்பில் வேறயா ஒரு தாளில் எழுதிப்போட்டு அதில் என்ட பேரைச் சுத்தி வட்டம் போட்டு . கிட்டு இருந்தான் அந்தா வயர்லஸ் வச்சி கிட்டிருக்கிறானே அந்த தடியன் ஆமிக்காரன் என்று அவனைக் காண்பித்தான் ஜவாப்தீன்.
"ஒன்ட பேரையா .. அது ஏன்..?” என்று கேட்டேன் நான் யோசனையோடு.
"அது ஒண்ணுமில்ல.. நம்மளுக்கிட் காசு கீசு ஏதும் கழட்டலாமென்டு யோசிச்சிரு பானொள்.. பொழுதுபடுமட்டும் காடு முழுக். இவனொள்தான் நிப்பானொள். இவனொலை பகைச்சிக்கிட்டா தொழில் செய்ய ஏலாது.. நீங். றைவர்தானே அதான் ஒங்கட பேரைக் கிறுக். யிருப்பான்.. பார்ப்பம் இடையில் என்னமாவது கேட்டாக் கொஞ்சம் குடுத்திட்டுப் போவலாம். என்று சமாதானம் சொன்னார் சமது நானா.
மீண்டும் நாங்கள் வேனில் ஏற திருகோணமலையை நோக்கிப் புறப்பட்டபோது நேரம் பிற்பகல் மூன்று மணியைத் தாண் யிருந்தது.
வேறு வாகனங்களின் போக்குவரத்து கூட இல்லாமல் வெறிச்சோடியிருந்த வீதி வழியே உச்ச வேகத்தில் வேனைச் செலுத்தி . கொண்டிருந்தான் ஜவாப்தீன். இராணுவ. சோதனைச் சாவடியிலிருந்து இரண்டு அல்லது மூன்று கிலோமீற்றர் தூரம் சென்றதும் ஒரு திருப்பத்தில் வீதியின் மத்தியில் சீருடை யணிந்தவர்களும் வேறு சிலருமாக ஐந்தாறுபே நின்றிருந்து எங்கள் வேனை மறித்தார்கள்.
வேகத்தைக் குறைத்து வேலை ஓரங்கட்டியதும் சற்றுத் தள்ளி நின்றிருந்த சிலரிலே ஒருவன் மீது என் பார்வை வீழ்ந்தது இதற்கு முன்பு அவனை எங்கோ பார்த்தது போலிருந்தது எனக்கு. "அவன் இலங்கை கிரிக்கட் வீரர்கள் அணியும் தொப்பி போ. ஒன்றை அணிந்து சாதாரண உடையில் நின்றிருந்தான். அந்தக் கறுப்பன் அங்குள்ள ஒரு மரத்தின் கீழே நின்றிருந்த சீருடைக்கார களோடு ஏதோ பேசிக்கொண்டு நின்றிருந்தான் எங்களைப் பார்த்ததும் தான் அணிந்திருந்த தொப்பியை கண்ணை மறைக்கும்படியாக இழுத்துவிட்டுக்கொண்டு மறுபுறம் திரும்ப நின்றான். எனக்கு அவன் மீதே பார்வையும் சிந்தனையும் சென்றது. ஆனால் அவன் யார்.
5l கீவநதி - இ

'சி. சி. ? 5.
': 19 ஆ ச 2 சி E. I'.
எங்கு பார்த்தேன் என்பது சட்டென நினைவுக்கு வரவில்லை.
"அந்த முகம்... அவனை எங்கே பார்த்தோம்..?"
அதற்கிடையில் அவர்களிலே சிலர் வேனின் அருகிலே வந்து, அதே வீதியில் சற்றுத்தள்ளி பெரும் மரமொன்று விழுந்திருப்ப தால் தொடர்ந்து செல்ல முடியாது என்றும் அதை வெட்டி அப்புறப்படுத்தும் வேலைகள் நடைபெற இரண்டு மூன்று மணிநேரம் தாமத மாகலாம் என்றும் கூறினார்கள். அவசரமாகச் செல்ல விரும்பினால் மட்டும் இங்கிருந்து உட்புறமாக காட்டுக்குள்ளாகச் செல்லும் செம்மண் கிறவல் பாதையினூடாகச் சுற்றிச் சென்று மீண்டும் பிரதான வீதிக்கு ஏறிப் பயணத்தைத் தொடரலாம் என்று சிங்களத்தில்
கூறினார்கள்.
தாமதிக்காமல் வீடு செல்ல வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்த காரணத்தால் ஜவாப்தீன எதையும் யோசிக்காமல் காட்டுக்குள் செல்லும் செம்மண் பாதைக்கு வேனைத் திருப்பி ஓட்ட ஆரம்பித்து விட்டான். நானும் அந்த தொப்பியணிந்து நின்ற கறுப் பனைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்த காரணத்தால் உடனடியாக வேறு எதையும் தீர்மானிக்க முடியாதவனாக இருந்து விட்டேன். ஆனால் எனக்கு உள்ளூர ஏதோ தப்பாக நடக்கிறது என்று தோன்றியது. அதற்குள் வேன் அந்த கிறவல் காட்டுப் பாதையிலே முக்கால் கிலோமீற்றர் தூரம் வரை உள்ளே வந்து விட்டிருந்தது. சட்டென எனக்குச் சந்தேகம் வந்து பின்னால் திரும்பிப் பார்த்தேன். நான் யூகித்தது சரியாகவே இருந்தது. எங்களைத் பின்தொடர்ந்து மோட்டார்சைக்கிள்களில் சிலர் ஆவேசமாக வந்து கொண்டிருந்தார்கள். அவர்களது கையிலே பொல்லு தடிகளும் நீண்ட வாள் கத்திகளும் இருந்தன. அவர்கள்
அனைவரும் கண்கள் தவிர முகத்தை கறுப்புத் 2 | துணியால் மறைத்துக்கட்டியிருந்தார்கள்.
ஆண்டவனே.. ஜவாப்தீன்! நம்மளை த) ஏமாத்திப் போட்டானொள்றா..! ஒடனே
வேனைத் திருப்பு: திருப்பு..! அவனொள் கிட்ட வாறதுக்குள்ள திருப்பி ரோட்டுக்கு பாஸ்ட்டா உடுறா!” என்று ஓலமிட்டேன். அப்பொழுது தான் சமது நானாவுக்கும் கூட நிலைமையின் தீவிரம் உறைத்திருக்க வேண்டும். அவரும் பதற்றமாகி , "நாசமாப் போற நாய்கள் பொய் சொல்லி ஏமாத்திப் போட்டானொள்றாப்பா!
4.
தி
0 ப க 9 -',
கழ 6/பங்குனி 204

Page 60
அல்லாஹ் எங்களைக் காப்பாத்து! யா அல்லாஹ்!” என்று அழுதபடி ஜவாப்தீனிடம் உடனடியாக வேனைத் திருப்புமாறு கத்தியபடி எழுந்து கொண்டார்.
ஆனால் ஒரு மோட்டார் சைக்கிளைக் கூட திருப்புவதற்குச் சிரமமான ஒடுக்கமான காட்டுப் பாதை அது. அதனால் ஜவாப்தீன் வேறுவழியின்றி செம்மண் பாதையின் ஓரத்தில் இருந்த காட்டுப்பற்றைக்குள் விட்டு வேனைத் திருப்பியெடுத்து மீண்டும் தார்ரோட்டுக்கு விட முயற்சித்தான். ஆனால் எங்கள் கெட்ட நேரம் ஓரத்தில் இறங்கிய வேனின் சக்கரங்கள் ஒரு சேற்றுக் குட்டைக்குள் இறங்கிவிட்டன. எவ்வளவு முயன்றும் மரக்கறிப் பொதிகளுடன் இருந்த வேனைப் பின்னோக்கி எடுக்க முடிய வில்லை. அதற்கிடையில் அந்தக் கொலை வெறியர்கள் எங்கள் மூவரையும் நெருங்கி விட்டனர். நாங்கள் சுதாரித்து தற்காப்பில் இறங்குவதற்குள் வேன் கதவைத் திறந்து எங்களை வெளியில் இழுத்துப் போட்டு சரமாரியாகத் தாக்க ஆரம்பித்தார்கள்.
"டேய் ஏண்டா அடிக்கிறீங்க... விடுங்கடா" என்று ஜவாப்தீனும் சமது நானாவும் அலறுவது கேட்டது. இனிமேல் தப்பிப்பதற்கு வழியில்லை என்று புரிந்ததும் எனக்கு ஆவேசம் வந்துவிட்டது. சில அடிகளை வாங்கிக் கொண்டே கடைசி முயற்சியாக அவர்களிலே ஒருவனின் கையிலிருந்த பொல்லை நான் பறித்தெடுத்து பலத்தைக் கூட்டி அவர்களைத் தாக்க ஆரம்பித்தேன். உடனே அவர்கள். ஜவாப்தீனையும் சமது நானாவையும் விட்டு விட்டு என்னைச் சூழ்ந்து கொண்டு தாக்கினார்கள். என் தலையிலும் தோளிலும் மடமட என்று அடி விழுந்து கொண்டிருந்தது.
க என்னால் முடிந்தவரை போராடினேன். அந்தக் காடையர்களில் இரண்டு பேரையாவது பலம் கொண்ட மட்டும் மண்டையில் அடித்து வீழ்த்தினேன். அவர்களின் மண்டை பிளந்து இரத்தம் பீறிட்டது. இனி அவர்கள் எழுந்திருப்பது சந்தேகம்தான். ஆனாலும் அவர்கள் ஆறு ஏழுபேருக்கும் அதிகமிருந்ததனால் என்னால் சமாளிக்க முடியவில்லை. ஒருபக்கம் ஜவாப்தீன், "அனீஸ். அனீஸ் உட்டுட்டு ஓடி வாடா டேய்! வாடா!” என்று கத்துவதும் காதிலே கேட்டது. ஆனால் அதற்கெல்லாம் நேரமிருக்கவில்லை எனக்கு. சரமாரியான தாக்குதலினால் என் கண்கள் கலங்கியது. நெற்றியில் வழிந்த இரத்தம் என் பார்வையை மறைத்தது. மூக்கிலும்
19 மே
56/ கீவநதி - இதழ் 6

வாயிலும் இரத்தமும் உமிழ்நீரும் கோர்த்து வழிந்து கொண்டிருந்தது. அப்போதும் என் கையிலிருந்த பொல்லைக் கொண்டு இயன்ற வரை அவர்களை எதிர்த்து நின்றுகொண்டே "ஜவாப்தீன் தார் ரோட்டுக்கு ஓடு! ஓடு! ஓடித்தப் புடா!” என்று கத்தினேன்.
திடீரென எனது பின் மண்டையில் இடிபோல ஒரு தாக்குதல் இறங்கியது. நான் நிலை தளர்ந்து நிலத்தில் விழுந்ததும் மின் வெட்டியது போல மூளைக்குள் பொறிகள் பறந்தன. சூழ்நிலைக்கு சம்பந்தேமேயில்லாமல் குழப்பமான பல பிம்பங்கள் கனவுகளில் வருவது போல தொடர்பில்லாமல் செருகிக்கொண்டு தோன்றித் தோன்றி மறைந்தன. என் மகள் றிஹானா சிரித்த முகத்தோடு "வாப்பா! வாப்பா!” என்று கூப்பிட்டாள். அப்போதுதான் பிறந்த குழந்தையொன்று இரத்தக்கறை படிந்த உடலோடு இரு கைகளையும் நீட்டி என்னைக் கிணற்றுக்குரலில் அழைத்தது. காட்டுச் செடி களின் வாசம் நாசியைத் துளைத்தது. ஜவாப் தீனின் மகள் ஜரீன் பாடசாலைச் சீருடையில் அந்தக் கறுப்பனோடு நின்று சிரித்தாள்.. ஆ! நாங்கள் வேனைக் காட்டு வழிக்குத் திருப்பிய இடத்திலே கண்ணை மறைத்து தொப்பி யணிந்து சீருடையினரோடு பேசிக்கொண்டு நின்றானே ஒருவன்.. அவன் யாரென்று அப்போதுதான் ஞாபகம் வந்தது. அவன் .. அவன் வேறுயாருமல்ல. ஜவாப்தீனின் மகள் - ஜரீனின் பின்னால் அலைந்து திரிந்தானே அந்தக் கன்னங்கரேல் நிறக் கிராமத்தான் தான்... ஆமாம்! அவன்தான் .. அவனேதான்!
“ஜவாதீன் ஓடுறா! ஓடித் தப்புடா! ஒன்ட ஜரீனைக்கா..ப்பா......"
க தூரத்தில் யாரோ ஓடுவது போலவும் சில உருவங்கள் துரத்துவது போலவும் தலைகீழாக கலங்கித் தெரிந்தது. மீண்டும் என் மண்டையிலே மற்றொரு மின்வெட்டு பளீரிட.. அதன் பிறகு உலகமே சட்டென இருண்டு போனது எனக்கு.
ஜீவநதி தொடர்ந்து வெளிவரவேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு சிறு தொகைப் பணத்தை தந்துதவிய கனடா வாழ்
பொறியியலாளர் து.ரமேஷ் அவர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
567 பங்குனி 2014

Page 61
நிலம் பிரிந்தவனின் (
ஒரு வாசகநி
இப்போதெல்லாம் முன்னரைப் போன்று கவிதைகள் வாசிக்க முடிவதில்லை. வாசிக்க முடிவதில்லை என்பதைவிடவும் * வாசிப்பதில் பெரிய ஆர்வம் இல்லை என்பதுதான் உண்மை. இதற்கு ஈழத்திலிருந்து வெளிவரும் கவிதை களின் பொதுத் தன்மையும் ஒரு காரணம் எனலாம். ஈழத்திலிருந்து வெளிவரும் ஒரு சில தொகுப்புக் களை படித்துவிட்டால், ஒட்டுமொத்த தொகுப்புக்களையும் படித்து முடித்து விட்டதான ஒரு அனுபவம் கிடைத்துவிடுகிறது. ஆனால் பிறமொழி கவிதைகளை வாசிக்க நேர்ந்த போதெல்லாம், ஒவ்வொரு முறையும், ஒரு புதுவிதமான அனுபவத்தை உணர முடிகிறது. சமீபத்தில் யமுனா ராஜேந்திரன் மற்றும்
ஆர்.பாலகிருஸ்ணன் ஆகியோரின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த, போலந்து கவிஞரான விஸ்லாவா சிம்போர்ஸ்க்காவின் "ஹிட்லரின் முதல் புகைப்படம்” என்னும் து" தொகுப்பை வாசித்துக் கொண்டிருந்த போது, . ஒரு மாறுபட்ட சூழலுக்குள் பிரவேசித்ததை உணர முடிந்தது. அது ஏன் எங்களுடைய கவிதைகளை வாசிக்கும் போது ஏற்படவில்லை? கப்பல்
இது குறித்து பல தடவைகள் நான் யோசித்ததுண்டு. ஒரு வேளை, எங்களுக்கு நன்கு தெரிந்த விடயங்களே மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதால், அதிலிருந்து ஒரு புது அனுபவம் சித்திக்க" வில்லையா? அல்லது எங்கள் கவிஞர்கள் சொல்ல விரும்பும் கருத்தும், அதனைச் சொல்லலை அவர்கள் தேர்ந் தெடுக்கும் மொழியும் சரியாக கலக்க வில்லையா? எனது பார்வையில் படைப்பு என்பது ஒரு மனநிலை. அது கோபமாக, தார்,
59 கீவநதி - இத

- யதீந்திரா -
சுஜந்தனின்) கவிதைகள்.
லைக் குறிப்பு...
கர்
பாமாலை
58 F:,காமகன்கம்
மகிழ்ச்சியாக அல்லது இரண்டினதும் அர்த்த நாரீஸ்வரச் சேர்க்கையாக இருக்கலாம். அதே வேளை அது ஒரு கருத்தையும் எங்களுக்குள் செருகிச் செல்ல முற்படுகிறது. ஒரு படைப்பாளி யின் மொழிக்கையாளுகைதான் வாசிப்பு மனநிலையில் பல்
அதிர்வுகளை ஏற்படுத்தவல்லது. படைப்பாளி சிரிக்கும் போது, வாசகனும் சேர்ந்து சிரிக்கிறான். படைப்பாளியின் கோபம் வாசகனையும் கோபப்படுத்துகிறது. படைப்பாளியின் ஏக்கவுணர்வு எங்களுக்குள்ளும் ஒரு ஏக்கத்தைச் தொற்றிச் செல்கிறது. அப்படியான ஆற்றல் கொண்ட படைப்புக்களே சிறந்த படைப்புக்கள் என்பேன். நான் தீவிர இலக்கிய வாசிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலத்தில் இதனை உணர
முயற்சித் திருக்கிறேன். சில படைப்புக்களை வாசித்துக் கொண்டிருக்கும் போது, முற்றிலும் மாறுபட்டதொரு சூழலுக்குள் நான் தூக்கி வீசப்பட்டதை உணர்ந்திருக்கிறேன். பொய் சொல்ல விரும்பவில்லை. இப்போது இலக்கிய
வாசிப்பு பெரிதும் குறைந்துவிட்டது. அரசியல் நேரத்தை அதிகம் தின்றுவிடுகிறது.
சுஜந்தனின் கவிதைகள் காதல் குறித்து பேச முற்படும் போது, அவரது கவிதைகள் நான் மேலே குறிப்பிட்டவாறான அம்சங்களை கொண்டிருக்கிறதா அல்லது இல்லையா என்பது பற்றி நான் இங்கு ஏதுவும் கூறவரவில்லை.
*பொதுவாக கவிதைகளை விமர்சிக்க முடியாது என்பது என் கருத்து. மாறாக அவைகள் எங்கள் மீது எத்தகைய
அதிர்வுகளை ஏற்படுத்தியது என்பதை மட்டுமே 0667 பங்குனி 204

Page 62
- நாம் சொல்ல முடியும். ஏனெனில் கவிதை
என்பது ஒரு குறிப்பிட்ட கவிஞனின் மனநிலை. ஒவ்வொரு கவிஞர்களும் தங்கள் மனநிலைகளை, தங்களுக்கேகுரித்தான மொழியாற்றலுடன் வெளிப்படுத்துகின்றனர். சிலரது கவிதைகள் எங்கள் மீது அதிர்வுகளை ஏற்படுத்துகின்றது. சிலரது கவிதைகளால் அது நிகழவில்லை. இதில் ஒன்று சரி மற்றையது பிழை என்றவாறான கறுப்பு - வெள்ளை முடிவு களை நாம் முன்வைக்க முடியாது. ஏனெனில் ய ஒரு கவிதையை அல்லது கவிதைத் தொகுப்பை - இது தவறு என்று நாம் குறிப்பிடும் போது, உண்மையில் நாம் ஒரு கவிஞனின் மனநிலை
சரியல்ல என்றே கூற முற்படுகிறோம்.
நிலம் பிரிதலின் சோகம் என்பது பெரும்பாலான ஈழத் தமிழர்கள் அனுபவித்த, அனுபவித்துக் கொண்டிருக்கிற சோகம். இதனை பல கவிஞர்களும் காலத்திற்கு காலம் பதிவு செய்தே வந்திருக்கின்றனர். சுஜந்தன் சம்பூர் கிராமத்தில் பிறந்து வாழ்ந்து தற்போது அப்பகுதியில் வாழும் உரிமை இழந்து நிற்கும் ஒருவர். இந்த தொகுப்பிலுள்ள கவிதைகள் அனைத்தும், ஏதோவொரு வகையில் தனது கரி | சொந்த நிலத்திலிருந்து பிரித்தெறியப்பட்ட அனுபவங்களின் வரிகளாகவே இருக்கின்றன..கண்க சின்ன வயதில்
அம்மா காணாமல் கோடிப் புறத்தில் பதுங்கி மண் கட்டி தின்பேன்
அந்த மண்ணின் கட்டியெல்லாம் இரைப்பையில் செரித்து உடம்பெல்லாம் இரத்தமாய் ஓடுமெனில்..
நானும் தப்பியும் மண்ணில் உருண்டு மணல்வீடு கட்டி விளையாடுவோம்
அந்த ஊத்தையெல்லாம் என் தோலில் இப்போதும்" ஒட்டியிருக்குமெனில்...
மண்ணோடும் - ஊரின் நினைப்போடும் இந்தப் பிறப்பில் வாழ இப்போதைக்கு இவை போதும் எனக்கு. - சம்பூர் என்றவுடனே நான் வேறு ஒரு தளத்திற்குள் சென்றுவிடுகின்றேன். சம்பூர் என்பதை வெறும் அரசியல் விடயமாகவே
60/ கீவநதி - இதழ் :

"2 3
மட்டுமே நான் பார்த்துப் பழகியிருக்கிறேன். என்னால் அப்படித்தான் பார்க்கவும் முடியும். எனது பிரதான அவதான விடயம் அரசியலாக இருப்பதால், சட்டென என் பார்வை அதனைத் தான் தேடியலையும். தவிர, பொது வாக ஒரு நிலப்பகுதியின் வாழ்வனுபவங்களை பிறிதொரு
வாழ்வனுபவத்துடன் அணுகும் போது, அதனை முழுமையாக புரிந்துகொள்ள - முடியாது. சாதாரணமாக பல்வேறுபட்ட
தரப்பினரின் அரசியல் நலன்கள் சங்கமித்துக் கிடக்கும் ஒரு குறியீட்டுச் சொல்லாகத்தான் இன்று "சம்பூர் என்னும் சொல் புரிந்து கொள்ளப்படுகிறது. அதிகார நலன்களின் முன்னால் சாதாரண மக்களின் குரல்கள் கொஞ்சம் கொஞ்சமாக, பெறுமதியற்றுப் போய்க்கொண்டிருக்கிற காலமிது. இப்படி யொரு சூழலில் இப்படியான கவிதைகள் - மட்டுமே தடயங்களாக எஞ்சிப் போகலாம்.
ஒரு வாசகன் என்னும் வகையில் இத்தொகுப்பிலுள்ள சகல கவிதைகளையும் உற்சாகத்துடன் என்னால் படிக்க முடிய. வில்லை. கவிஞர் வெளிப்படுத்த விரும்பிய விடயமும், அதனைச் சொல்லியிருக்கும் க முறையும், நன்றாக கலக்கவில்லை போலும்.
கவிதைகளை வாசிக்கும் போது மனது எனசோர்வடைகிறது. என்னால் உற்சாகமாக காலை படிக்க முடியவில்லை என்பதால், சுஜந்தன் என்னும் கவிஞர் தோற்றுவிட்டதாக அர்த்த மல்ல. நான் முன்னரே குறிப்பிட்ட வாறு, இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் ஒவ்வொன்றும் கவிஞரின் மனநிலையின் வெளிப்பாடுகள்தான். சில வெளிப்பாடுகள் - அதிர்வுகளை ஏற்படுத்த வல்லதாக இருக்க..
லாம் சிலவற்றால் முடியாது போகலாம். ஈழத்து கவிதைகளை புரட்டினால், "மரணத்துள் வாழ்தல்” தொடங்கி, இந்தத் தொகுப்புவரை எங்குமே இரத்த நெடில்தான். - சில வேளைகளில் இதுவே நான் கவிதைகளி - லிருந்து என்னை அன்னியப்படுத்திக் = கொள்வதற்கான காரணமாகவும் பக்கபலமாயகனாகாதா இருக்கிறது. முன்னர் படித்த ஜெபாலனின் கவிதை வரிகள் நினைவிற்கு வருகிறது நாங்கள் சாவை உதைத்து மூக்கும் முழியுமாக - வாழவே பிறந்தோம். இப்போது ஈழத் தமிழ்
சூழலுக்குத் தேவை வாழ்வின் மீதான நம்பிக்கைதானே தவிர, வாழ்வின் மீதான வெறுப்பல்ல. எங்களது அரசியல் அந்த நம்பிக்கையை கொடுப்பதில் தோற்றுவிட்டது. - படைப்பிலாவது அது நிகழட்டும்.
22 -ப்ர்-----
B6 7 பங்குனி 2042

Page 63
"பொடியள் வந்திட்டாங்கள்” "பொடியள் வந்திட்டாங்களாம்” "எப்ப?” “எப்படி?” “எங்கை?” "இங்கை! இப்ப! நிக்கிறாங்க! "என்னத்தோடை?” “ஆயுதத்தோடை?” “ஆயுதமா? எப்படி?” "ஏ.கே.!” "எஸ்.எம்.ஜி” "எம்.சிக்ஸ்டீன்” "எஸ்.செல்லார்!” "கிரெனைட்”
மர
?
இத்தனை இத்தனை குரல்கள் உற்சாகம் கரைபுரண்டோடியது. கன்னியாக சனங்களின் முகங்கள் பூரண சந்திரனாயிற்று இயக்கத்துக்குப் போகாத பொடியங்களின முகங்களில் சூரியன் பிரகாசித்தான். பெண்டு பிள்ளைகள் தாமரைகளாகினர். சூரிய காந்திகள் திரும்பித் திரும்பி தேடின. கமலக் கண்களுக்குப் கயல் விழிகளுக்கும் விருந்து கிட்டுமா என்ன?
பொடியங் கள் காட்டுப் பக்கமாக காம்பில் இருக்கிறாங்கள். ஊரெல்லாம்கதை.
கதைகதையாம், என்ன கதை? புதக் கதை! புதிய கதை! இது ஐம்பத்தெட்டுச் சத்தியாக்கிரகமா என்ன? அடி வாங்கிக் கறுவாக்
6ill கிவந்தி - இத

காட்டுக் காணுக்குள்ள கிடக்க? பொடியங்கள் விடாங்கள். எங்கட பொடியங்கள் விடாங்கள்!
ஈழப் போராளிகள் கன்னியாக் காட்டுக்குள் காத்திருந்தார்கள். கைகளிலே ஆயுதங்கள் மனதில் வரித்த லட்சியங்கள். லட்சங்கள் கொடுத்தாலும், விலைப்படுத்திவிட முடியாத சத்தியங்கள். வயசு பெரிசில்லை. அவர்கள் சொல்லும் வார்த்தைகள் தான் பெரிசு. பதினெட்டுப் பத்தொன்பது வயதுப் பொடியன்கள் . இளவட்டங்கள் போய்ப் பார்த்ததென்றால் நடுத்தரங்கள் விடலாமா?
பொல்லூன்றியும் போய்ப் பார்த் தார்கள். அக்காமார்கள் கடகப் பெட்டிகளில் கட்டுச் சோறு ! அம் மாக்கள் சும்மா விடுவினமோ? பாட்டிமார்கள் முட்டை அவித்துப் பாயாசமும் தயாரித்தனர். பல்லுக்
., 2 டன் -ப்சிட்ட
குத்தாத வாயாலே எச்சில் படக் கன்னம் கொஞ்சினர்.
ஆஹா! ஆஹா!
பொடிச்சிகளுக்கும் இப்படிச் செய் ! தால் என்ன என்ற ஆசைதான்! பொடியள் | விட்டால் தானே!
“தொட்டுப் பார்த்தேன்!” "என்னத்தை?" "தூக்கிப் பார்த்தேன்” “என்னத்தை "துவக்கை”. “சுட்டுப் பார்த்தியோ?” "மடையா ஒரு உயிரிண்ட விலை!
சிங்க
திருமலை சுந்தா
ழ 6 பங்குனி 2014

Page 64
"14-11:41ாக 4 சாகசம் - 13 T/////ww= Attrl+AM #
பொடியள் விடுவாங்களா? மரை சுடுகிறதெண்டு நினைச்சியோ? இது மனுசன் சுடுகிற சாமான். ஏகே.ரிவால்வர்.எஸ்.எம்.ஜி.”
"ஏ.கேயா?” “ரிவால்வரா?” "எஸ்.எம்.ஜியா?” "கிரெனைட் இல்லையா?”
பல்வேறு குரல்கள். எக்கம் தொனிக்க வினவின.
"யூனிபத்தோடையா?” “படத்தில் வாறமாதிரியா?” "பொலிஸ் யூனிபமா?” ஆமிக்காரர் மாதிரியா?”
“மடையா! இது போராட்ட யூனிபோம். எங்கட யூனிபோம்.” அவன் சொன்ன சொல்லில் மற்றவர்களின் நெஞ்சு நிமிர்ந்தது. உரங் கொண்டது. உறுதி தெரிந்தது. உத்வேகம் கொண்டனர்.
“செல்வோம்... செல்வோம்” “சந்திப்போம்... சந்திப்போம்” "புறப்படு... புறப்படு” சுட்டமாக எழுந்து புறப்பட்டனர்.
ஸ்ரீலங்கா என்ற பெயருக்கு முன்னர் “சிலோன்” என்று தான் உலக வரைபடத்தில் பெயர் குறிக்கப்பட்டிருந்தது. வெள்ளைக்காரன் கைவிட்டு ஓடியதும், இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தது. இது இந்திய உபகண்டத்தின் கீழே உள்ள சின்னஞ்சிறிய தீவு. இந்தியக் கவிஞன் பாரதி கூட, “சிங்களத் தீவினுக்கோர்” பால மமைப்போம்” என்று பாட முன்னமே இராமர் அணை போடப்பட்ட நாடு. மற்றுமொரு கவிஞன், இந்தியச் சுதந்திரம் பற்றிப் பாடுகையில், "இரவிலே வாங்கினோம், இன்னமும் விடியவே யில்லை” என்றான். நாங்கள் பகலில் பெற்ற சுதந்திரம் பறிபோயிற்று. பாலம் போடப்போன பொடியங்கள் வந்திறங்கிவிட்டனர்.
சூரனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஊரெல்லாம் போய்த் தகவல் சொன்னான். ஆள் திரட்டினான். விருந்துக்கும், வரவேற்புக்கும் ஆயத்தம் செய்தான். ஊரே திருவிழாக் கோலம் பூண்டது. அன்று கார்த்திகைத் தீபம் ஏற்றியது
போல், வாயிலின் முன்னெ தீப விளக்கேற்றினர். கோயில் மணிகள் ஒலித்தன. சங்கொலி முழங்கியது. வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
- ஊர் கூடிக் களியாட்ட விழாப்பூண்டது. போராளிகள் அதனை மறுக்கவில்லை. வீடியோப் படங்கள் காட்டப்பட்டன. மக்களின் மனங்களில் தங்கள் வாழ்வு தங்கியிருப்பதனைக்
62 கீவநதி - இதழ் 6

:: நt: 1' -
கண்டு மகிழ்சியடைந்தனர்.
கன்னியா என்ற அந்தப் பழம் பெரும் கிராமத்தில் சூரன் ஓர் குடியானவன். கல்லுடைத்துச் சீவிப்பவன். கம்மாலையில் சென்று உலையில் பழுக்கக் காச்சிய இரும்பைப் பாரச் சுத்தியல் கொண்டு நையப்புடைத்து வடிவமைப்பதில் சமர்த்தன். முப்பது வயது கடந்தும், இன்னமும் திருமணம் செய்த கொள்ளவில்லை. கிராமத்தில் இருபது கடந்தும் திருமணமாகாத ஆண்களையோ, பெண் களையோ காண முடியாது. ஒரு கண் தெரியாத பாட்டியின் வளர்ப்பு மாத்திரமே. சிறு வயதில், தன் தாயைக் கைவிட்டுச் சென்ற தந்தையை இன்றும் தேடிக் கொண்டிருக்கிறான். தாய் கால மாகி இருபது வருடங்களுக்கு மேலே என்றாலும் இவன் தாயின் புகைப்படத்தை மட்டுமே கும்பிடுவான். கோயில் குளங்களுக்குச் செல்ல மாட்டான். கடவுள் நம்பிக்கை இல்லாதவன். நல்லவன். ஆனால், சண்டியன். ஊர் வம்புதும்பு களுக்குப் போக மாட்டான். தேடி வந்தால் சும்மா விடவும் மாட்டான். சூரனைக் கண்டால். சனத்துக்குப் பயம் என்பதை விடவும், பக்தி என்றே சொல்ல வேண்டும். மனம் கோணாமல் எவருக்கும் உதவி செய்து கொடுப்பான்.
நல்ல உயரம், தடித்த தேகம், கடின உழைப்பினால் உருண்டு திரண்டு முறுக்கேறிய தேகம். அழகாகக் கத்தரித்து எண்ணெய் வைத்து மேவி வாரிவிடப்பட்ட சிகை. அரைக் கை சேர்ட் அணிந்து கையை மடித்து விட்டிருப் பான். கன்னியாக் கிராமத்திலேயே அரைக்கால் சட்டை அணிந்து திரிபவன் சூரன் ஒருத்தன் தான். வேட்டியோ, சாரனோ அணியான். கால் களில் "கன்சேஷ் ஷ” போடாமல் நடவான். விவசாயக் கூலிவேலை செய்யப்பாகமாட்டான். ஒன்றில் கம்மாலைத்தொழில் செய்வான். இல்லையேல், "கல்வாரி” வேலை செய்வான். "சுத்தியல் சூரன்” என்ற பட்டப் பெரும் உண்டு.
கிராமத்தில் நடைபெறும் சித்திரை வருஷத் திருவிழாவின் போது சைக்கிள் ஓட்டப் போட்டியில் கலந்து கொள்வான். பத்து வருடங்களாக முதலாவதாக வெற்றி பெற்று வருகிறான். அடிக்கடி ஆறு மைல்கள் தொலை தூரத்திலுள்ள திருகோணமலை நகரத்துக்குப் படம் பார்க்க, அந்த ரேஸ் ஓடும் சைக்கிளளைப் பாவிப்பான் குதிரைக்குட்டி ஒன்றினைக் காட்டில் பிடித்து வளர்த்து வருகிறான். அது நன்கு வளர்ந்துவிட்டது. அடிக்கடி அதன் மீதேறிப் பழக்கிச் செல்வான். கன்னியாக் கிராமத்தில்
57 பங்குனி 204

Page 65
அவன் ஓர் விநோதமான மனிதன்.
"தோழர்கள் எண்டுதான் கதைக்க \ வேணும்.” என்று மெல்ல இரகசியமாக அவனைப் பின்தொடர்ந்தவர்களிடம் சொல்லி வைத்தான் சூரன்.
"என் அப்பிடி? எங்கட பொடியள் தானே . பேர் சொல்லிக் கதைச்சால் என்ன" என்றனர் கூடி வந்தவர்கள்.
"இல்லை, அது பழைய கதை. இவர்கள் பயிற்சி பெற்ற தோழர்கள் இயக்கம். மரியாதைக் குரியவர்கள். நமது கிராமத்து மக்களின் மரியாதைக்கு உரியவர்கள். நேசிப்புக்குரியவர் கள்" என்றுமறுமொழி சொன்னான் சூரன்.
சூரன் பேசிய வசனங்கள் ஒரு படித்த பக்குவப்பட்ட மனிதனின் வார்த்தைகளாக வெளிப்பட்டது. சின்னத்தம்பி வாத்தியார் ஞாபகத்துக்கு வந்தார். அவர்கள் சூரனை ஒரு தடைவ பார்த்தனர். முன்னர் சூரன் சிவராத்திரி நாடகங்களில் நடித்திருக்கிறான் என்பது நினைவுக்கு வந்தது.
ஆளுக்கு ஒருவராக "தோழர்" என்ற சொல்லை மனனம் செய்யத் தொடங்கினர். புதிய சொல் ஞாபகத்தில் நிற்க மாட்டேன் என்றது. "ழ, ல, ள” களைச் சரிபார்த்து உறுப் போட்டனர். இங்கிலீஸ் ஸ்பெலிங் சொல் வதைப்போல் வாயினாலும் சொல்லிப் பார்த்துக் கொண்டனர். ஒருவன் தோழர் என்றால், தோளை தடவிப் பார்த்து விளங்கிக் கொண்டான். மற்றொருவன் தோல் என்பது உடம்பின் பாதுகாப்புப்போல, தோழர்கள் என்ற சொல் என விளக்கம் கண்டான். காம்பை நெருங்கும்போது "தோழர்" என்ற சொல் ஞாபகம் வரமாட்டேன் என்றது. சூரனை அழைத்துச் சொல்லச் சொல்லித் தாங்களும் சொல்லிப் பார்த்துக் காம்பினுள் உள்ளிட்டனர்.
கன்னியாக் கிராமத்தில் சூரன் இந்தச் சின்னப் பொடியங்களின் மீது இவ்வளவு மரியாதை வைத்திருக்கின்றான் என்பதும், தங்களையும் அப்படியே அமைக்குமாறு கேட் கிறான் என்பதினாலும் கூட வந்த மற்றவர் களுக்கும் ஒரு மரியாதை மிகுந்த பக்தி ஏற்பட்டது.
போராளிகள் தங்கியிருந்த பகுதியை நோக்கி நடந்து சென்றார்கள். அது கிராமத்தின் குடியிருப்புகளைத் தாண்டி, வயல் வெளியி னூடே நடந்து சென்று ஒரு தொலைவில் அமைக்கப்பட்ட பண்ணைக் குடில் காவல் போட்டுத்தங்கியிருந்தனர்.
சனங்களில் சிலர் வந்தும் போயும்
63/ கீவநதி - இத

கொண்டு இருந்தனர். ஓரிரண்டு பேர்கள் அமர்ந்திருந்து போராளிகளுடன் கதைபேசிக் கொண்டிருந்தனர்.
வடக்கு கிழக்கில் தமிழர் போராட்டம், சத்தியாக்கிரகமாக வெடித்த காலத்தில் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, மக்களால் "தியாகிகள்” என அமைக்கப்பட்டவர்கள். •
- அடிக்கடி முற்றுகையிட்டுத் தேடிச் செல்லும் சிங்கள் இராணுவத்தின் கெடுபிடிகள் பற்றி இவர்கள் அதிகமாகவே எடுத்துரைத்தனர். போராளிகளை விடவும் அவர்கள் வைத்திருந்த ஓரிரு ஆயுதங்களின்மீதும் அதீத நம்பிக்கை வைத்துக் கதை பேசினர்.
போராளிகளின் தலைவர் போன்று காணப்பட்டவர், அவர்கள் பேசுவதை மிகவும் உன்னிப்பாகக் கருத்தூன்றிக் கேட்டுக் கொண்டிருந்தார். சூரனுடன் வந்தவர்களைக் கண்டதும் தலைவர் எழுந்து வந்து சூரனுக்குக் கைகுலுக்கி, மற்றவர்களை அமரச் செய்து விட்டு, தானும் அமர்ந்து, விட்ட இடத்திலிருந்து கதையைக் கேட்கலானான். சூரனுடன் வந்தவர்களுக்கும், அவர்களின் பேச்சிலிருந்து இந்த வயோதிபர்கள் எவ்வளவு துாரம் போராளிகளின் மீது மதிப்பு வைத்து மிகவும் நிதானமாகப் பெரிய பெரிய விஷயங்களைக் கதைக்கிறார்கள், எனக் கேட்கலாயினர். தலைவர் போன்றிருந்தவர் பெரிய தொனியில் தலையை ஆட்டி ஓரிரு கேள்விகள் கேட்பதுடன் நிறுத்திக் கொண்டார். அவர் இடுப்பில் ஒரு “ரிவோல்வர்” செருகப்பட்டிருந்தது.
" காட்டிக் கொடுக்கிறவர்கள் யாருமிருக்கிறார்களா?”
எல்லாரும் தலையில் அடித்துக் கொண்டார்கள். கைகள் இரண்டினையும். பிசைந்து கொண்டனர். அழுது ஒப்பாரி
வைத்துச் சொன்னார்கள்.
"தம்பி சிங்களவனுகள் தோத்துப் போவானுகள். தோத்துப் போவானுகள். எங்கடவனுகள்...... எங்கடவனுகள் நாலைஞ்சு பேர். இவன் பால்கார கோபால் கட்டாடி - வடிவேலு, தபால்காரத் தங்கன், விறகு விக்கிற ராசன், இந்த நாலு பேருந்தான் தம்பி சுற்றி வளைப்பு நடந்தால் இவங்கள் தான் பார்த்துப் பார்த்துச் சொல்லிக் குடுப்பாங்கள்” என்றனர்.
“ஓஹோ! அப்படியென்றால், கிராமத் தில படையில் இருக்கிற ஒருவருமில்லையா?” என அதிகாரத் தொனியில் வினவினார் தலைவர்.
''F 2
கஜ 14ர்கHைi1934: சி.
தழ் 66 / பங்குனி 2014

Page 66
!*-81-க. நீட்சாதி
“தோழர் இலங்கை பொலிஸ் ஆமியில் ஒருத்தருமில்லை. காட்டிக் குடுக்கிறவங்களை நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கை செய்யணும்” என்றுகைகட்டிப் பணிவாகக் கூறினான் சூரன்.
தலைவர் எழுந்து நின்றார். அருகி லிருந்த பெரிய பாராங்கல்லின் மீது வலத காலைத் தூக்கி வைத்து, இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு, அங்கிருந்த பொதுமக்களையும் தோழர்களையும் பார்த்துக்
கூறினார்;
"தோழர் சொல்வது சரி. அவர்களை நாங்கள் எச்சரிக்கை செய்கிறோம். நீங்களும் எங்களுடன் வரவேண்டும்.” என்றார் தலைவர்.
கருக்கல் பொழுது. தலைவர் நேரம் பார்த்தார். சூரியன் மேற்கு வானில் தென்பட வில்லை. சூரனைத் தனியே அழைத்தார்.
"தோழர்கள் ஊருக்குள் வந்து தங்க வேண்டும். விடுதலை வேண்டிய ஆட்கள் நிறையப் பேர்கள் இருக்கிறார்கள். இயக்க உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். அலு வலகம் திறக்க வேண்டும்” என்று பணிவாகக் கூறினான் தோழர் சூரன்.
"தோழர் சொல்லுவது சரிதான். எங்களுக்கு நம்பிக்கையானவர்களைத் தான் இயக்கத்தின் உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்வது வழமை. இங்கு தினமும் வருகை தந்து சந்தித்துச் செல்பவர்களைக் கொண்டே எமது இயக்கத்துக்கான கிராமியக் குழு ஒன்றினை நியமனம் செய்ய உள்ளோம்.” என்று
கூறிய தலைவர் தோழர்களைப் பார்த்துச் சைகை செய்தார். நான்கு தோழர்கள் துப்பாக்கிகளைத் தாங்கிய வண்ணம் அணிவகுத்து நின்றனர்.
“ஓகே மூவ்" என்று தலைவர் தடித்த குரலில் கூறவே, அவர்கள் இருவர் இருவராக அணிவகுத்து முன்னே செல்லத் தலைவர் இடுப்பில் செருகி இருந்த ரிவோல்வரை உருவிக் கையில் தாங்கிய வண்ணம் கூடி நின்றவர்களை அழைத்தார். சூரன் மிகவும் அடக்கமாகத் தலைவருடன் சேர்ந்து கொண்டு நடக்கவே, பத்துப் பன்னிரெண்டு ஊர்ச் சனங்கள் ஊர்வல மாக இவர்களின் பின்னே அணிவகுத்துச் சென்றனர்.
சூரனுடன் வந்த இளவட்டங்களில் 'ஒருவன் காதைக் கடித்தான். "நாளைக்கு அரைக் கால்ச்சட்டை தைக்க வேணும், கன்வேஸ் ஷ வாங்க வேணும்”
தலைவர் சூரனுக்கு மட்டுமே கேட்கும் படி கூறினார்;
11 ரப* ***** ***** **கே: A 15; 3:1.-1::::::
64/ கீவநதி - இதழ்

“தோழர் இவங்கள் காட்டிக் குடுக்கிற ஆட்கள் என்று சொன்னவங்களைப்பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?” என்று தலைவர் இரகசிய மாக வினவினார்.
“தோழர் இவங்கள் சொல்லுறது சரி. ஆனால் அது இயக்கம் இல்லாத வேளையில் நடந்த பிழைகள். இப்ப நீங்கள் வந்திட்டீங்கள். இனிச் செய்யக்கூடாது” என்றான் பணிவாகத் தோழர் சூரன்.
தலைவர் பெருமிதமாக, சூரனின் முதுகில் கட்டிக் கொடுத்து, மெல்லச் சிரித்த படியே நெஞ்சை நிமிர்த்தி, கால்களை மடக்காமலேயேகம்பீர நடை போட்டார்.
ஆயுத பாணிகளாகிய இயக்கத் தோழர்கள் சகிதம் பலர் சேர்ந்து ஊருக்குள் வருவதை அறிந்து, திரண்டு வீதியில் நின்று தங்களின் அகமகிழ்வைத் தெரிவித்தனர்.
“தோழர் இவர்தான் தபால்காரத் தங்கன்” என்றான் தோழர் சூரன்.
கூவத் தங்கள் அருகே வரும் வரையும் தலைவர் காத்திருந்தார். தங்கனின் முகத்தில் வியர்வை முத்துக்கள் கோர்த்திருந்தன. கால்கள் நடுக்கமெடுத்தன. நெஞ்சுபடபடத்தது. ஒரு மாதத்திற்கு முன்னர் மட்டக்களப்புச் சந்தையில் போஸ்டில் கட்டப்பட்டுச் சுடப்பட்ட ஒருவனின் பெயரை வானொலிச் செய்தி தெரி வித்துக் கொண்டிருந்தது. தோழர் கதைக்கு முன்னமே அவர் கால்களில் விழுந்து கட்டிப்
பாரா-2-சாள சாக்:*:
கட்ட மதம், தாங்கள் :32. "வால்08:56:7)
66/பங்குனி 204

Page 67
://காதர்ராக்டி: 614:18க்:-
33 புது: ,- போர்க் 18!''*'
4: தாயார்
பிடித்துக் கெஞ்சினான் தபால்காரத்தங்கன்.
தலைவர் கனிந்து ஓர கயினால் எழந்திருக்குமாறு கூறினான். கூடியிரந்த மக்க பார்த்தார்.
"துரோகிகளிடமிருந்து மக்களைப் கடமைகளில் ஒன்று இனிப் பிழை விடாதீர்க நடந்தார் தலைவர்.
தபால்காரத் தங்கன் அந்தப் பதினெட் கால்களைக் கட்டிப்பிடித்து அழுவதைக்கண்டு அவன் மகன் ஆச்சர்யமாகப் பார்த்து 4 தந்தையுடன் சேர்ந்து சத்தம் போட்ட அழத் தெ
அன்று தோழர்கள் சேர்க்கப்பட்டனர் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். சூரனைத் செய்தனர்.
விதனையார் வீட்டில் போராளிகளுக்கு விதானையார் ஒரு நாளுமில்லாத திருநாளாம் பேசினார். சூரனுக்கும் சேர்த்தே “சலாம்” போட்
கோட்டை மதில் போன்ற விதானை யாரின் வளவு அடைப்பும், தென்னந்தோப்புடன் கூடிய அரண்மனை போன்ற வீடும்? உள்ளிருந்த பொருட்களும் நூறு வருஷப் பழங்கதை பேசின.
ஒரு புறம் தேங்காய்களை உரித்தபட்ட நாலைந்து கூலியாட்கள். நெல் அளந்தபடி சிலர் பம்பலாக வீட்டு வேலையாட்கள்.
பாசறை நோக்கிச் சென்றபோது தீடிரெனக் கேட்டார் தலைவர்; "தோழர் இந்த
விதானையார் எப்படி?”
சூரன் திடுக்குற்றுப்போனான். தான பிழையான இடம் ஒன்றினுக்கு இயக்கத்தை அழைத்துச் சென் று விருந்தளித்து விட்டேனோ? என்று பயமெடுத்தது. விதானை யாரைப்பற்றிய நல்லது கெட்டதைப்பற்றிக் சொல்ல முடியாமல் தடுமாறினான். துப்பாக்க தாங்கிய இயக்கத்துடனிருந்த சூரனுக்கு பரம்பரை பரம்பரையாக உள்ளூராட்சி நடத்த வந்த விதானையாரைப் பற்றி வார்த்தையாட முடியவில்லை.
மறுநாள் காலையில் இயக்கத தோழர்கள் கன்னியாக் கிராமத்தில் இல்லை சூரனை மட்டுமே பாதுகாப்பான ஓரிடத்தில் தங்க வைத்துவிட்டு ஓடைப்பாதையினூடே காட்டு வழ நடந்து இரவோடிரவாகப் பத்து மைல்கல் தொலைவிலுள்ள தம்பலகாமம் கிராமத்தைச் சென்றடைந்து விட்டனர்.
கன்னியாக் கிராமம் அதிகாலை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுத் தேடுதல் நடத்தப் பட்டபோது, காட்டின
65 கீவநதி - இ

அவன் தோளைத் தொட்டு ளை ஒரு தடைவ திரும்பிப்
பாதுகாப்பதும் எங்கள் ள்” என்று தொடர்ந்து
டு வயதுப் பொடியனின் பத்து வயது நிரம்பிய அழுது கொண்டிரந்த
டங்கினான். - கிராமியக் குழுவுக்கு தலைவாகத் தெரிவு
*''*
5
விருந்தளிக்கப்பட்டது. 5 குழைந்து குழைந்து டார். சுமத்தியிருந்த ஆலமர உச்சியிலிருந்து உற்று
ர் " நோக்கிக் கொண்டிருந்தான் தோழர் சூரன்.
* விடிகாலை தொடங் கிய சுற்றி வளைப்பு, மாலை மூன்று மணிவரையும் நீடித்தது. கருகல் பொழுதில் கூரன் ஊருக்குள் நுழைய முயன்றபோது, கிராமக் குழுத் தோழர்கள் பலரும், காடகள் மறைவிலிருந்து வெளிப்பட்டுச் சொந்து கொண்டனர்.
பலர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட செய்தி கேட்டதும், அவர் களுக்குத் துக்கம் மேலிட்டது. சூரன் ஆத்திரப் பட்டான். நல்லவேளை இயக்க ஆதரவாளர் களில் எவரும் கைது செய்யப்படவில்லை எனக் கிராமியக் குழுத் தோழர்கள் ஆறுதலை டைந்தனர்.
தோழர் சூரன் மக்களைச் சந்தித்து உற்சாகப்படுத்தினான். கைது செய்யப்பட்டவர் களின் விபரங்களைப் பெற்றுக் கொண்டு, அன்றிரவு தம் பலகாமத்தை நோக்கிப் பயணப்பட்டான்.
பிறகு தொடர்ச்சியாகவே சுற்றி ? வளைப்புக்களும், கைதுகளும், மக்களுக்குப் - பழக்கப் பட்டுப் போயிற்று. இனி செய்ய வேண்டியது என்ன என்ற கேள்விக்கு பதில் மட்டுமே தெளிவாகத் தெரியாமல் மாலைக் | கருக்கலில் காமாளைக் கண்கள் ஒளி வீசுமா. வென விழிகளை விரித்து விரித்துப் பார்த்துக் க கொண்டனர்.
தி த
*சின் HA11
த்
தழ் 66 / பங்குனி 2014

Page 68
வி.கெள்
“காலனித்துவ தி ஆக்கிரமிப்பாளர்கள்
வேர்களைத் 6ே
கவிக்சீயதி 1
கானிக் “வரலாற்றுச் சுவடுகளை
பிருகோ உள் வாங்காமல் நிகழ்காலத்தைப்
DLLIA II புரிந்து கொள்வது கடினமாகின்றது. ஒரு சமூகம் தன் வேர்களைத் தொட்டு ணரும் பேரனுபவத்தை வரலாற்றில் இருந்தே பெறமுடியும்.” (பக்கம் - 8) என்று கூறும் கனகசபாபதி சரவண பவன் அவர்களது திருகோணமலை தொடர்பான இரண்டாவது வரலாற்று நூல் “காலனித்துவ திருகோணமலை”யாகும். முதல் நூல், இதிகாசங்கள், புராணங்கள், ஐதீகக் கதைகள், கல்வெட்டுக்கள் இவற்றிற் கூடாக காலனித்துவத்திற்கு முற்பட்ட திருகோணமலை, திருகோணமலையின் வரலாற்றை பதிவு செய்யும் முயற்சி யாக அமைந்தது, "வரலாற்றுத் திரு கோண மலையாகும்."
போர்த்துக்கீசக் கிழக்கிந்தியக் கம்பனி யின் கொடி திருகோணமலைக் கோட்டையில் 1623 இல் ஏற்றப்பட்டு, 334 ஆண்டுகளின் பின்னர் 15.10.1957 இல் திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் பிரித்தானியக் கொடி இறக்கப்பட்ட காலவரம்பிற்குள் ஆக்கிரமிப்பாளர்களாக, ஆதிக்க சக்தியாக விளங்கிய காலனித்துவ ஆளுநர்கள், தளபதிகள், சிப்பாய்கள் போன்றவர் களுடன் இவர்களை எதிர்த்த யப்பானிய போர்த் தளபதிகள் போன்றவர்களது உத்தியோக பூர்வக் கடிதங்கள், நாட்குறிப்புகள், அவர்களால் எழுதப் பட்ட நூல்கள் என்பவற்றின் நேரடி மொழி பெயர்ப்புக்கூடாக, எமது கால்களுக்குக் கீழ் நகர்ந்து கொண்டிருக்கும் திருகோணமலையின் காலத்தை காலனித்துவ திருகோணமலை நூல் ஊடாக, காலனித்துவக் காலத்திற்கு உயிரோட்ட மாக, இரத்தமும், சதையும், உணர்வுகளுமாக பின் நோக்கி நகர்த்தி இருக்கிறார் க.சரவண பவன் அவர்கள்.
வரலாற்றில் எமது வேர்களைத் தேடுவதில் தீவிர அக்கறை யும், அர்பணிப்பும். அயராத தேடலை யும் பல ஆண்டுகள் தனது
66/ கீவநதி - இதழ்

சரிபாலன்
ருகோணமலை” பதிவுகளுக்கூடாக தேடும் முயற்சி
சச்
FIhthan |
துவ
பைலை
கடின உழைப்பையும் வழங்கிய வரலாற்று நேர்மை மிக்க படைப்பாளி திரு. க. சரவண பவன அவர் கள் என்பதை இந் நூலை வாசிப்பவர்கள் ஒவ்வொருவரும் உணர்வார்கள்.
காலனித்துவமும் அதன் சுரண டல் களும் அக்காலத்துடன் முடிந்து போனால் அவை பற்றி
பேசாதிருந்து விடலாம். சூழலியல் ஏகாதிபத்தியம் நவமுதலாளிய பல் தேசியக் கம்பனிகளின் அவசியத்துக்கு மீறியதும் அத்தியாவசியமற்றதுமான பொருட்களின் உபரி உற்பத்தியும் இவ்உபரி உற்பத்தியின் பாவனை யாளனே நாகரீக மனிதன் என்ற விளம்பர மாயத் தோற்றத்தை உண்டு பண்ணி, அவற்றின் ஊடான சுரண்டல் என நவகாலனித்துவத்தின் கொடுக்குகள் நம்மை தொடர்ந்தும் உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன. அடையாள மீட்பும், மரபை மீட்டுருவாக்கம் செய்தலும், பாரம்பரிய உணவு மற்றும் வாழ்க்கை முறையும் பாரம்பரிய சடங்குகள் சார்ந்த அணுகுமுறைகளின் தேடலும் இன்று அவசியமாகிறது.
ஒரு சமூகம் தன் இருப்பை அடை யாளத்தை தக்கவைத்துக் கொள்ளுதல் என்பது வெறுமனே நம் பழம் பெருமையைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதால் அடைந்து விட முடியாது. - எம் கால்களுக்கு கீழே நாம் வாழ்ந்து கொண்டி ருக்கும் மண்ணில் சில நூற்றாண்டுகள் மட்டுமே இருந்த ஆட்சிமுறை ஏற்படுத்திய தாக்கம், எமது மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட கலாசாரத் தில், மரபில் ஏற்படுத்திய தாக்கம், அக்காலத்தில் நசுங்கிய சுதேச மக்களின் கலகக் குரல்கள், எதிர்ப்புகள் அவற்றை எதிர் கொண்ட காலனித்துவவாதிகளின் பதிவு களுக்குள் வாசிப்புச் செய்வதற்கான பல நிகழ்வுகளை இந்நூல் துல்லியமாக கொண்டு வந்துள்ளது என்பது திடமான உண்மையாகும்.
இந்நூலின் அத்தியாம் - 4 ஒல்லாந்து ஆளுநர் Jaques Fabrice Van Senden அவர்களது
66/பங்குனி 2014

Page 69
திருகோணமலை மாவட்ட சுற்றுப்பயணம் என்ற அறிக்கை (15.05.1786 - 21. 06. 1786) முக்கிய ஆவணமாகும். இந்த ஆளுநரின் அறிக்கையின் படி இங்கு வாழ்ந்த சுதேச மக்கள் தமது பயணத்துக்காக சிறந்ததொரு நீர்வழிப்பயணப் பாதையை உருவாக்கி வைத்திருந்ததையும், அப்பாதை ஊடாகவே இவ் ஆளுநர் தோம்பு (நிலவுடமை மற்றும் மக்கள் தொகைக் கணக் கெடுப்பு தயாரிக்க இச்சுற்றுப் பயணத்தை, அவ் நீர் வழிப் பயணப் பாதையை பயன்படுத்தி இருந்த தையும், வாசிப்புக்குட்படுத்துவது அவசியமாகும்.
அதே போல் இச்சுற்றுப் பயணத்தின் போது ஆளுநர் மக்களை சந்தித்து தம் வரிகளை அதிகரிப்பதற்காக பல உமரி உற்பத்தி திட்டங் களை முன் மொழிந்த போது, அம்மக்கள் அளித்த பதில்கள்சிவற்றைக்கணிக்கலாம்.
"பின்னர் நான் அவர்களிடம் விவசாயம் குறித்து விசாரித்தேன் அவர்கள் தங்கள் சொந்தத் தேவைக்கு அளவாகவே விதைத்து அறுவடைய செய்வதாகக்கூறினார்கள்" (பக்-79)
இன்னுமோர் இடத்தில்,
"அவர்கள் மத்தியில் இருந்து குறைந் தளவு பழங்கள் சாப்பிடுகின்ற முதுமையினால் தளர்ச்சியடைந்த ஒருவர் முகத்தில் சிரிப்புடன் பேச முன் வந்தார். "நாங்கள் ஏன் இவற்றை யெல்லாம் செய்ய வேண்டும்? எங்கள் தாத்தாக் கள், அப்பாக்கள் இவற்றையெல்லாம் ஒரு போதும் செய்ததில்லை” என்றார். அவருடைய கருத்தைச் சுற்றியிருந்த அனைவரும் ஆரவாரத் துடன் எதிர்ஒலித்தார்கள். அது ஒரு மேலதிக மான ஆடம்பரமானது என அவர்கள் கண்டிப்பது போல் இருந்தது. தேங்காய்கள் கிடைக்கு மானால் அவற்றைச் சாப்பிடுவதை எதிர்க்கப் போவதில்லை என அவர் ஒத்துக் கொண்டார்." (பக்கம் - 82)
இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் இந்த மக்கள் காலனித்துவ காரர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களது உகரி உற்பத்தித் திட்டத்திற்கு அடிபணியவில்லை. ஆளுநரே பதிவு செய்வது போல் "நம் மூதாதையர் இந்த மண் நோகாமல் இதன் வளம் குன்றாமல் எமக்கு விட்டுச் சென்றுள்ளார்கள். நாம் எமது பிள்ளை களுக்கு விட்டுச் செல்கின்றோம். எமது பிள்ளை கள் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்வார் கள் என்ற கருத்துப்பட பல இடங்களில் குறிப்பிடப்பட்டது இங்கு பதிவு செய்யப்படு கின்றது. இதனையே ஆளுநர் பல இடங்களில் சுதேச மக்களை சோம்பேறிகள் என்று எரிச்சல் படுகின்றார். நம் காலத்தில் நமது மூத்தப்பா போன்றவர்களிடம் இந்தக் கொள்கை வலுவாக
67 கீவநதி - இதழ்

இருந்ததைக் கண்டிருக்கின்றேன். "வைக்கோல் பாட்டுக்கு வெள்ளாமை செய்தால் போது மானது என கூறக் கேட்டிருக்கின்றேன்.
ஆளுநரின் மற்றுமொரு கூற்று இங்கு கவனிக்கத்தக்கது. "இது திருகோணமலை, யாழ்ப் பாணம் மற்றும் கரையோரங்களில் இருந்து தப்பி யோடியவர்களின் கூட்டமாகும். தங்கள் கெட்ட குணங்களை வளர்த்தெடுப்பதற்கே தவிர வேறு எதற்காகவும் ஒன்று பட்டு இருப்பதாக தெரிய வில்லை. ஆதிக்குடிகளின் முட்டாள்த்தனம், சோம்பேறிகளான திரு கோணமலை மக்கள், கலகக் குணங்கொண்ட யாழ்ப்பாண மக்கள், துட்டர்களான கரையோர மக்கள், முஸ்லீம் களின் விசுவாசமற்ற தன்மையுடன் ஒன்று பட்டுள்ள இந்த சுதேசிய மக்களை வர்ணிப்ப தற்கு இந்தப்பேனாவை விட பலமான வேறு ஒரு பேனா தேவைப்படுகிறது" (பக்கம் 119-120) என்று எரிச்சலுடன் ஆளுநர் இவ்வாறு தன் அறிக்கையை முடிக்கிறார்.
"பழைமை பேணுவதில் நம்பிக்கை உள்ள வர்களாக காணப்படுவது குறித்து ஆச்சரியப் பட்டேன். ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினால், ஒரு இரத்த ஆறு ஓடும் அல்லது அவர்கள் குடியேற்றப்படுபவர்களை ஒதுக்கிவிடுவார்கள்"
ஆளுநரின் இந்தப்பயம் எவ்வாறு சுதேசிய மக்களை சூழ்ச்சியாலும், வஞ்சிப்புக் களாலும் வெற்றி கொள்வது என்ற சிந்தனையை தூண்டு வதை அவரது அறிக்கை முழுவதிலுமுள்ள உரையாகத் தொடர்வதை இவ்வறிக்கையை
வாசிக்கும் ஒவ்வொருவரும் உணர்வர்.
அதேபோன்று அத்தியாயம் - 11 இல் (அலெக்சாண்டர் அலெக்சாண்டர் என்பவர் எழுதிய "அவரது வாழ்க்கை வரலாறு நூலின் ஒரு பகுதியின் மொழிபெயர்ப்பு. இந்த மொழி பெயர்ப்பின் ஒரு பகுதி கூட வாசகரால் தவற விடப்படக்கூடாது. நுட்பமான பன்முக வாசிப்புக் கானது. அதில் சில பகுதிகள்.
"சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஊர் மக்கள் படை வீரர்களை கெட்ட வார்த்தை களால் திட்டுவதோடு, அவர்களின் முகங்களில் காறி உமிழ்வார்கள். இந்த நாட்டின் ஆக்கிர மிப்பாளர்கள் என வெறுக்கும் துட்டர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது." (பக்கம் 373-374)
"இங்கே தழிழர்கள், சிங்களவர்கள், முஸ்லீம்கள் வாழ்கின்றார்கள். என்னைப் பொறுத்தவரை அனைத்துச் சாதி மக்களும் கெட்ட பண்புகளாலும் ஐரோப்பியர்களை எதிர் பதிலும் ஒத்த தன்மை உடையவர்களாகவே இருக்கிறார்கள்" (பக்கம் - 375)
இந்த அத்தியாயம் மிக கூர்ந்த . ஓ 66 / பங்குனி 2014

Page 70
வாசிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். திரு கோணமலையின் (1803-1810 காலப்பகுதியின்) காலநிலை, நோய், சுதேசிய மக்களின் எதிர்ப்புக்கள், மத முரண்பாட்டுக் கலவரங்கள் எனத் துல்லியமான பதிவுகள் கொண்டது.
அத்தியாயம் 12 இல் லியோன் சார்ள்ஸ் (Lyon Charles) என்பவர் தனது நண்பருக்கு எழுதிய சில கடிதப் பகுதியின் மொழிபெயர்ப்பு. இவ்வத்தி யாயமும் சுதேசிய மக்களின் உணர்வுகளின் துல்லியமான பதிவு கொண்டது. உதாரணம் - "அவர்கள் நல்லொழுக்கமற்றவர்களாக இருக் கிறார்கள், ஐரோப்பியர்களுடன் ஒப்பிடும் போது குடிப்பழக்கம் குறைந்தவர்களாக இருக்கிறார் கள் ... கொலை சாதாரணமாக நிகழ்வதில்லை. எனக்கு தெரிந்த வரையிலும் தற் கொலை நடைபெறுவதில்லை. சுருக்கமாக கூறுவதாயின் இலண்டனில் உள்ள மதுக் கடைப்பகுதியில் காணப்படும் குற்றங்களைக் காட்டிலும், இந்த மக்களிடையே கெட்ட பழக்கங்கள் குறை வாகவே உள்ளது..... தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த வசதி வாய்ப்புகள் இருக்கின்ற போதும் அவர்கள் தங்கள் வாழ்க்கைக்கு தேவையானதற்கு மேலாக தேட விரும்புவ தில்லை . (பக்கம்389 - 390)
இந்த அத்தியாயத்தில் திருகோண மலையின் இயற்கை அழகு, தரைத்தோற்றம், காலநிலை, நோய் என்பவற்றுடன் சுதேசிய மக்களின் வாழ்க்கை, பண்பாடு, எதிர்ப்பு என்பன உயிரோட்டமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறலாம். ஏனைய அத்தியாயங்கள் பெரும் பாலும் அதிகார மாற்றங்களும் அதற்கான யுத்த மும் பற்றியே பேசுகின்றன. ஆனால் இவற்றுள் சுதேசிய மக்களின் நொருங்குண்ட குரல்களும், எதிர்ப்புக் குரல்களும் ஒலிக்கத் தவறவில்லை. கண்டியரசனின் எதிர்த்தாக்குதல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஆக்கிரமிப்பாளர் எதிர் கொண்ட யப்பானிய தாக்குதல்கள், இழப்புக்கள், அவர்களைத் தாக்கிய நோய்கள், யுத்த நிலவரங் கள் என்பவை நீண்ட கால இடை வெளியில் சில இடங்களில் கணத்துக்கு கணம் எனவும் பதிவு செய்திருக்கின்றது காலணித்துவ திருகோண மலை.
"நவீனத்துவம் என்பது உன்னதமானது எம்மை இரட்சிக்கவல்லது என்ற மாயை எமக்கு கற்றுத்தரப்பட்டு, இன்றும் கற்றுத் தரப்பட்டு தொடர்ச்சியாக நம்ப வைக்கப்பட்டிருக்கின்றது" என்ற ஆசிரியரின் கூற்று இந்நூலில் பல இடங் களில் பதிவாகின்றது. எமது பாரம்பரிய வைத்திய முறைகள் சில சூனியக்காரர்கள், பில்லி சூனியம் செய்பவர்கள் என்று அவர்கள் அழித்தொழிக்கப்
68 / கீவநதி - இதழ்

பட்டார்கள். இன்று நவீன உளவியல் வைத்திய முறை என்று சொல்லப்படுகின்ற வைத்திய முறையில் ஒரு நோயாளியின் வருத்தம் அவரது உடலுக்கு வெளியே இருக்கிறது என்று நம்ப வைத்து, அவருக்கு வைத்தியம் செய்வது அவருக்கு அவசியம் என வலியுறுத்துகின்றது. இது எமது மரபுரீதியாகவிருந்தவைத்திய சிந்தனை மரபு , பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதாகும்.
போர்த்துக்கீசர் வருகைக்கு முன்னான திருகோணமலை பற்றிய அத்தியாயம் இரண்டி லும் இப்படிக் குறிப்பிடப்படுகிறது. "நண்பர்களா கவோ அல்லது எதிரிகளாகவோ திருகோண மலை மீது படையெடுத்தவர்கள் தென்னிந்திய இந்துத் தமிழ் மன்னர்களே. எனவே தென்னிந் திய ஆட்சியாளரின் கீழ் திருகோணமலை மக்கள் பண்பாட்டு முரண்பாட்டைச் சந்தித் திருக்கச் சாத்தியமில்லாமல் இருந்தது” என் கிறார் ஆசிரியர்.
திராவிடர்கள் மீது என்று ஆரியப் படை யெடுப்பு நிகழ்த்தப்பட்டதோ அன்றே எம் மீதான காலனித்துவம் தொடங்கிவிட்டது என்று கூறுகிறார்கள் சமகால ஆய்வாளர்கள். எமது பந்தல்களும், மடாலயங்களும், மடைகளும், தோரணங்களும், கிராமிய வழிபாடுகளும் சிதைக்கப்பட்டு, ஆகம வழிபாடுகள் எம்மீதான பண்பாட்டுச் சிதைவே எனலாம். திருகோண மலையை எப்படி ஐரோப்பியர்கள் தமது உபரி உற்பத்திக்கும், வணிக நோக்கிற்கும் கைப்பற்றி
னார்களோ, அதே போன்று குளக்கோட்டன் என்னும் சோழ மன்னனும், ஆசியக் கடல் பரப்பை தமது வணிகக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததுடன் (சோழர் ஆட்சியில் தென்னாசியக் கடற்பிராந்தியம் சோழரின் நீச்சற் தடாகம் போன்றே காட்சியளித்தது. இந்து சமுத்திரத்தின் வலிமைமிக்க கடலாதிக்க சக்திகளாக.... அது சீன தேசத்து வணிக நடவடிக்கைகளை முடக்கும் அளவிற்கு (பக். - 17) உபரி உற்றத்திக்காகவும் தான் திருகோண மலையை கைப்பற்றினான். தனது உபரி உற்பத்திக்காகவே இயற்கையின் அமைப்பை மீறி கந்தளாய்க்குளத்தை அமைத்தான். குளக் கோட்டு மன்னனுடன் வந்ததே ஆகம் வழிபாடும், வன்னிமையும்.
அத்தியாயம் - 4 இல், ஒல்லாந்து ஆளுநரின் அறிக்கையின் ஒரு பகுதி "கந்தளாய்க் குள் மதகில் மீன் ஒன்று சிக்கிக் கொண்டதால் அக்குளம் உடைப்பெடுக்கும் அபாயம் எற்பட்ட போது தன் சமூகத்தைக் காப்பாற்ற அம் மீனை வெட்டி அகற்றி பீறி வந்த நீரில் தூக்கி வீசப்பட்டு கல்லில் மோதிச் சிதறிப்
66 / பங்குனி 2004

Page 71
போனான் ஒரு வண்ணான்" ஆனால் அவன் பெயர் எவருக்கும் தெரியவில்லை என்கிறார் ஆளுநர். ஆளுநரின் அறிக்கையின் இன்னு மொரு பகுதி முக்கியமானது. "விந்தாரசலம் குளத்தில் வாய்க்காலுக்குப் போனோம். அருகே உள்ள விந்தராசலம் குளத்தில் இருந்து ஓடும் ஓடைக்கு சென்றேன். இங்கு விந்தராசலம் குளத்தில் எனக் குறிப்பிடப்படுவது இன்றும் கந்தளாய்க்குளத்துக்கு அண்மையில் காணப் படும் ஒரு குளமாகும். இன்று பெயர் திரிபுபட்ட வெண்டர்சன் குளம் என அழைக்கப்படுகிறது.
இங்கு வாழ்கின்ற சில மக்கள் குழுமங் களில் உள்ள வாய் மொழிக் கதையின்படி "விந்த ராசன்" (வெண்டரசன்) என்பவர் குளக்கோட்டன் திருகோணமலையின் கரையோரப் பகுதிக்கு வந்த போது திருகோணமலையின் கரையோரப் பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னனாவான். அம்மன்னன் கந்தளாய்க் குள் அமைப்பை எதிர்த்தான். இது மக்களுக்கு" என்றும் ஆபத் தானது என வற்புறுத்தினான். உபரி உற்பத்தியை மறுத்தான். எனக் கூறுகிறார்கள். "விந்தராசன்" ஆட்சியில் இருந்த மக்களை பணயமாக வைத்து, அச்சுறுத்தியே கந்தளாய்க்குளத்தை குளக் கோட்டு மன்னன் கட்டுவித்தான் என்றும் அதற்கு இம்மன்னனைப் பயன்படுத்தியே உன்னச்சா கிரியை ஆட்சி செய்த மும்முலை ஆடக சவுந்தரியின் உதவியைப் பெற்று (யானைகள் மற்றும் தொழில் நுட்பம். உதாரணம் - வெப்பக் காற்றுகளை உண்டு பண்ணி கொட்டுகள் மூலம் மணல் புயலை செயற்கையாக உண்டு பண்ணி மணலை ஒரு இடத்திலிருந்து வேறோர் இடத்துக்கு நகர்த்தல் - பஞ்சபூதங்கள் - பூதங் கள் குளம் கட்டின என்பதை கவனிக்கலாம்). குளக்கோட்டு மன்னன் "விந்தராசனைக் கொண்டே கந்தளாய்க்குளத்தைக் கட்டினான் என்றும், அதே காலப்பகுதியில் தனது நீர்ப் பாசன அறிவைக் கொண்டு மக்களுக்கு ஆபத் தற்ற வகையில் அதே நேரம் விவசாயம் செய்யக் கூடிய, நீரைக் கொள்ளக்கூடிய தட்டையான "விந்தராசலம்”(வெண்டரசன் குளம்) குளத்தை கந்தளாய்க்குளத்துக்கு அண்மையில் விந்த ராசன் அமைத்தார் என்றும் கூறுகிறார்கள். இதை அறிந்த குளக்கோட்ட மன்னன் இச்சிற்றர சனைக் கொன்று விட்டு காட்டு மிருகங்கள் தாக்கி அச்சிற்றரசன் இறந்து விட்டான் என மக்களை நம்ப வைத்தான் என்றும், பின்னர் சோழர்களின் புலமைத்துவ மரபைப் பயன்படுத்தி கல்வெட்டுக்களும் பிரபந்தங்களும் இயற்றி தன் புகழைதக்கவைத்துக் கொண்டான் என்பது சில மூதாதைகளின் கதையாக உள்ளது. பின்னர் 1986களில் கந்தளாய்க்குளம் உடைப்பெடுத்த போது பல்லாயிரம் உயிர்களைப் பலி கொண்ட
69 கீவநதி - இத

தும் இக்குளம் இம்மன்னனின் அழிவின் அடை யாளமாகக் காணப்படுகின்றது. நண்பர்களாக எம்மைப் பாதுகாக்க வந்தவர்களின் அழித் தொழிப்பும் அதிகார துஷ்பிரயோகமும், மாகாணசபைக் கட்டமைப்பும் நம் காலத்து அனுபவமாகும். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இப்பிரதேசத்தின் புதிய பின்னனி எத்தகையது என்பது பற்றி புரிதல் இல்லாமலேயே வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். புறத்திலிருந்து தமது
நோக்கத்தை நிறைவு செய்ய நினைக்கின்ற ஒவ்வொரு ஏகாதிபத்திய சக்திகளினதும் பார்வை திருகோணமலை என்ற பிரதேசத்தின் நில அமைவும் தோற்றப்பாடுமேயாகும். இதை காலனித்துவ திருகோணமலை நூல் இப்படிப் பதிவு செய்கின்றது. இரண்டாம் உலகப்போர் முடிந்த பின் அப்போதைய பிரித்தானிய பிரதமர் வின்சன் சேர்ச்சில் அவர்களிடம் ஒருவர் வினவு கின்றார். இரண்டாம் உலகப் போரில் மிக ஆபத் தான தருணமாக எதை நினைக்கின்றீர்கள் என கேட்ட போது, அவர் நீண்ட அமைத்திக்கு பின் "இலங்கையில் உள்ள திருகோணமலைக் கடற் படைத்தளத்தை தாக்குவதற்கு யப்பான் போர்க் கப்பல் சென்று கொண்டிருக்கின்றது என்ற செய்தி கிடைத்த தருணம் தான்" (பக்கம் - 334) என்று கூறுகின்றார். இது திருகோணமலையின் புவியியல் பின்னணியின் தார்ப்பரியமே.
நம் மூதாதையர்களும் சரி நமக்கு சற்று முற்பட்ட காலமாயினும் சரி இத்திருகோண மலை மண்ணில் வாழ்ந்த மக்கள் உன்னதமான வாழ்வை வாழ்ந்து விடவில்லை. தொடர்ச்சியான நோய், பல உயிரிழப்புகள், யுத்தம், வஞ்சிப்புகள் என்பவற்றினூடு தான் வாழ்ந்திருக்கிறார்கள். இருப்பினும் அம்மக்கள் இலகுவில் எதுவித விட்டுக்கொடுப்போ, சமரசமோ அற்று தமக் கான இருப்புக்கும், எதிர் கால சந்ததியின் இருப்புக்கு மான வெளிகளை தம்மிடையே விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்பது இந்நூலின் ஊடான வெளிப்பாடு ஆகும்.
இந்நூல் ஒரு பன்முக வாசிப்பிற் கானது. வரலாற்று நோக்கிலும் சரி, புவியியல் அமைப்பு சார்ந்த நோக்கிலும் சரி, மானிட வாழ்வியல் அசைவியக்கம் என்ற நோக்கிலும் சரி அரச அறிவியல் என எத்தகைய நோக்கிலும் வாசிப்புக்கு உட்படுத்தக் கூடிய வெளிகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
திரு.கனகசபாபதி சரவணபவன் அவர் களது காலனித்துவ திருகோணமலை நூல் ஒரு மொழி பெயர்ப்பு என்ற எல்லையை மட்டும் தன்னகத்தே கொண்ட நூல் அல்ல. இது எமது இருப்புக்கும், அடையாளத்துக்குமான தேடலாக பார்க்கப்பட வேண்டியது அவசியம். ழ 66 / பங்குனி 2014
வைன்

Page 72
தடலோடு போ
வடிவேல் ஐயா அதிகாலை நாலுமணிக்கு முன்னமே எழுந்து விட்டார்! அன்றாட பழக்கத்தின் நிமித்தம், தொழிலுக்குப் போக வேண்டுமே என்கின்ற பரிதவிப்பின் நிமித்தம் எழுந்தாரே அல்லாமல், இன்றைக்குத் தொழிலுக்குப் போகவேண்டும் என்பதற்காக அல்ல! இருட்டில் வெளியே வந்து மணலில் கால் புதைத்து நின்று கடலை நோட்டமிட்டார்! கடல் இரைந்து அலையடிக்கும் பேரிரைச்சல் அவர் செவிப்பறையை முட்டிமோதியது! கடல் ஊழிக்கூத்து ஆடுவது தெரிந்தது! வந்தால் உன்னை உயிர்ப்பலி எடுப்பேன் என்று அபாய அறிவிப்புச் செய்வது போலிருந்தது! வடிவேல் ஐயாவின் இதயமும் குமுறி அலை அடித்தது!
இன்று எத்தனை நாளாகக் கடலுக்குப் போகவில்லை! தொழில் பட்டது! குடும்பம் பட்டினியை எதிர் நோக்குகிறது! இத்தனை நாளும் சேர்த்து வைத்திருந்ததும் சிக்கன மாக செலவு செய்தும் அருகிக் கொண்டு போயிற்று! அருகில் இருப்பார் ஆரிடமும் கடன்கேட்க முடியாது! நம் கஸ்டம்தான் எல்லோருக்கும்! இவர்கள் மீனவ சங்கத்தால் கஸ்ட நிவாரணமாக ஐயாயிரம் கொடுப்பார்கள்! கடனாக பத்தாயிரம் கொடுப்பார்கள்! இப்பணத்தை மீனோடு வள்ளம் கரைக்கு வரும்போதுகளில் பெறும் பங்குப்பணத்தில் இருந்து கழிப்பார்கள்!
இயற்கை வடக்கு ! கடல்சா இருக்கும் திருக்கட இருப்பல் பெரிய பு வைத்து தொழில் பேர் அக பதமும்
கிட்டுக் . இவரோ வீட்ட்டிக் பரல் என் போயிடு போதே, மொய்த்த
70/ ஜீவநதி - இதழ்

சூசை எட்வேட்.
ராடுபவர்கள்...!
திருகோணமலை கடலாலும் மலையாலும் 5 அழகாலும் சூழப்பட்ட எழில்மிக்க பிரதேசம்! வடகிழக்கு வடமேற்கு பகுதிகளில், கடலும் ர்ந்த குடியிருப்புக்களுமே பெருவாரியாக ம்! வடக்குப்பக்கமாக இருக்கும் ஊர்களில் ஒன்று . லூர் ! இதன் பழையபேர் படுக்கை! அங்கே பர்தான் வடிவேல்ஐயா! ஐயா என்றால் அவர் மதலாளி (சம்மாட்டி) இல்லை! நாலுபேரை தானும் கூடமாடப்போய் தொழில் செய்யும் சுய Tளி. நீதிநியாயமாக நடப்பதால் அயலில் நல்ல
ருக்கு! ஆகையால் ஐயா என்ற மரியாதைப் அவர் பெயரோடு ஒட்டிக்கொண்டுவிட்டது! வழமையாக அதிகாலைக்கு முன்னம் வெளிக் காண்டு தனது படகடிக்கு வரு முன்னமே,
தொழிலுக்கு வருபவர்கள் நான்கு பேரும் இவர் கு வந்துவிடுவர்! என்ஜின், வலை, எண்ணெய் று காவிக்கொண்டு படகுத்துறைக்குப் பர்! ஐந்துபேரும் படகில் போய்க் கொண்டிருக்கும் பத்து கண்களும் படகின் வெளிச்சத்தில் கடலை
படி நன்றாக மேயும்! கடலின் மேல் முதுகின்
66 / பங்குனி 2014

Page 73
அசைவைப் பார்த்தே எந்தமீன் எங்கே அடைந்து கிடக்கிறது; துடிக்கிறது என்று அவர் களுக்குத் தெரியும்! ஒவ்வொரு மீனுக்கென்று வலை உள்ளது. சின்ன மீன்களுக்கு சின்னக் கண்ணுள்ள வலையைத்தான் பாவிக்க வேண்டும்! திருகோணமலைக் கடலில் சூரமீன்கள் பெருவாரியாக இருக்கிறது! அதற் கேற்ற பெரிய கண்வலையைப் பாவிப்பார்கள்! ஊசிக்கண்வாய் முட்டைக்கணவாய்க்கும் பேர் போன இடம்! அதற்கான வலையும் உண்டு!
முன்னர் போல் பெருவாரியாக மீன் பிடிக்க முடியாமல் இருப்பதாக கடல்த் தொழிலாளிகள் வாய் புலம்புவார்கள்! கடல் . வளத்தை அழித்துக்கொண்டு வருகிறார்களாம்! தடைசெய்யப்பட்ட வலைகளைப் பாவிக்கிறார் | களாம்! பாரிய “றோலர்” படகுகளில் வருவார் கள்! அதைப்பார்த்தால் ஒரு கப்பலைப் பார்ப்பது போலவே தோற்றம் காட்டும்! ஒருவிதமான பிரகாசமுள்ள வெளிச்சத்தை (சேச் லைற்) பாய்ச்சுவார்கள். அந்த வெளிச்சத்தை நோக்கி எங்கேயோ இருந்த பலவின மீன்களும் ஈர்ப்பு சக்தியால் இழுபட்டு வரும்! அங்கே எல்லாம் ஒன்று கூடிவிடும்! அவ்வளவு மீன்களையும் வாரி அள்ளக்கூடிய வகையாக பாரிய சின்னக் கண் வலையை போட்டு அவ்வளவையும் கொண்டுபோய் விடுவார்கள்! குஞ்சு குருமானி லிருந்து பெரிய சுறாமீன் வரையில் ஒன்றுமே தப்பமுடியாது! முட்டைகள் குஞ்சுகள் கூட மிஞ்சாது! கடல்வளம் அழிந்து கொண்டு வருவதற்கும், அலைகடலில் அலைய வேண்டி யிருப்பதற்கும் இது முக்கிய காரணியாகிறது!
இந்த அநியாயத்தை தெற்கில் இருந்து வருபவர்களும் வடக்கில் இருந்து வருபவர் களும், ஏன் உள்ளூர் பேரினத்தாரும் கூடுதலாக செய்கிறார்கள்! வடக்கிலிருந்து அத்துமீறி வருபவர்களுக்குத் தண்டனை உண்டு! படகு களையும் பறித்து ஆக்களையும் மறியல் வைக்கிறார்கள்! ஆனால் மற்றப்பகுதியினருக்கு எந்தக்கட்டுப்பாடும் விதிப்பதாகத் தெரிய வில்லை! காசைக் கொடுத்து பங்கமில்லாமல் வேலையைக் கொண்டு போவதாகச் கேள்வி!
எப்படியோ வடிவேல் குழுவினர் அலைந்து உலைந்து எட்டோ ஒன்பதோ மணிக்கும் இல்லை அதற்கு மேலோ கரைவந்து சேர்வர்! இவர்கள் வரும்போது, சில படகுகள் வந்து சேர்ந்துவிடும். பங்கு பிரிப்பு; விற்பனவு என்று நடக்கும்! வியாபாரிகளும், ஈருருளியும், உந்துருளியும், வாகனங்களிலும் வந்து
71 கீவநதி - இதழ்

காத்திருப்பர்! பத்து இருபதுபேர் நின்று கரை வலை இழுத்துக்கொண்டிருப்பர்! இந்த இடத்தில் திட்டும் அதட்டலும் சத்தமும் பெரிதாக இருக்கும்! கரையில் மேட்டில் பாறை களில் நின்று தூண்டில் போடுவாரும் உண்டு! இந்தத் தூண்டில்களை நீளக்கயிற்றில் கோர்த்துக்கட்டி இரைகளையும் கொளுவிக் கொண்டு கிட்டிய தூரத்துக்கு சிறுபடகில் போய் மீன்பிடிப்பாரும் உண்டு! மொத்தத்தில் கொஞ்ச நேரம் அந்த இடம் திமிலோகப்படும்!
ஆரவார ஒலியில் கடல் அலையோடு போட்டிபோடும்!
வடிவேலரும் பங்காளர்கள் நான்கு பேரும் கரைக்கு வந்து சேர்ந்தனர்! கரைக்கு வந்ததும் படகை இழுத்துவிட நிலை நிறுத்தி விட உள்ளே இருப்பதை வெளிக் கொண்டு வர, உதவியாளர்கள் வலிந்து வந்து உதவி கொடுத்துக்கொண்டிருப்பர்! இவர்களுக்கும் கிள்ளியேனுத் தானம் வழங்கவே வேண்டும்! படகில் இருந்து, வலைகளில் இருந்தும் மீன் . இனங்களை வேறுபடுத்தி கரையில் குவியல் குவியலாக குவித்திருப்பர்! அதை பங்கு புறிப்பர். ஏழு பங்காக பிரிப்பர். வடிவேலரையும் சேர்த்து ஐந்து பங்கு. படகுக்கு ஒருபங்கு (அதுவும் வடிவேலருடைமைதான்) சங்கத்துக்கு ஒரு பங்கு என்று ஏழாகப்பிரிப்பர்! மீன் பங்காகவும் பிரிப்பர். மொத்தமாக விற்று பணமாகவும் பகிர்வர்!
வள்ளம் கொள்ளாத அளவு மீன்படும் காலங்களில்! முதலாளியென்ன தொழிலாளி யென்ன எல்லோருக்கும் குருச்சந்திர யோகம்தான்! அதேபோல், மீன்பாடு அருந்தலாயிருந்தால் கஸ்ட நஷ்டத்தை எல்லோரும் பகிர வேண்டியது தான்! கடின மாக வேலை செய்தாலும் வரையறுக்கப் பட்ட சம்பளம் பெற்றுவந்து, அவலகாலங்களில் வேலையும் இல்லை; ஒரு சதம்கூட தருவாரும் இல்லை என்ற நிர்கதி நிலையில் வாழும் கூலித் தொழிலாளிகளோடு ஒப்பிடுகையில் இவர்கள் பாடுவரவாயில்லை! கடலை நம்பியவனுக்கு கவலையே இல்லை என்பது சரிதான்! ஆனால் வேறுவகைக் கவலைகள் இருக்கவே செய்கின்றன! மிக முக்கியமான ஒன்று : இது ஒரு ஆபத்தான தொழில்! சிலவேளைகளில் உயிரைப் பணயம் வைக்கவும் வேண்டும்!
சிலநாட்களாக காலநிலை மிகமோச மாகவே இருக்கிறது! வானம் கறுத்து உருண்டு திரண்டு பயங்கரக்கோலம் கொண்டு நிற்கிறது!
66 பங்குனி 2014

Page 74
மின்னலடிக்கிறது; இடிமுழங்குகிறது; இருட்டு கிறது; வெருட்டுகிறது; தாங்கமுடியாத கடுங்குளிராயிருக்கிறது!.. ஆனால் மழை வெகு குறைவாகவே பெய்கிறது. பனித்துளி போல் துமிக்கிறது! மழையில்லாமல் நெற்பயிர் அழிவதாக விவசாயிகள் அழுகின்றனர்! ஆனால் எல்லாவகைத் தொழிலாளிகளும் கோவிலிலே எண்சாண் கிடையாகக் கிடந்து ஆண்டவனிடம் மன்றாடி பிரலாபிக்கின்றனர்! ஆண்டவன் என்ன நினைத்தானோ, இவர்கள் எவர் கவலையும் தீர்வதாய் இல்லை! இந்த அவலநிலைக்கு யார் காரணம்? அவர்கள் செய்த குற்றம் என்ன?
வானம் இருட்டி வெருட்டிக் கொண்டுதானிருந்தது! சமுத்திரமும் குமுறிக் கொந்தளித்துக் கொண்டே இருந்தது வான் நிலை அவதான நிலையம் அபாய அறிவிப்புச் செய்துகொண்டே இருந்தது! “கடலுக்குச் செல்லவேண்டாம்" என ஊடகங்கள் மூலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டும் வந்தது!... “இப்படியே பயந்து பயந்து தொழிலுக்குப் போகாமல் கிடந்து இன்னும் எவ்வளவு காலத்தை கடத்திக் கொண்டிருப்பது! கையிருப்புகளும் முடிந்து விட்டது! சங்கத்தின் நிவாரணம் கடனுதவிகளும் தீர்ந்து போயிற்று! இனி உயிர் வாழ்வதென்றால் இரண்டு குமரிகள் இருக்கிறார்கள் அவர்களின் நகை நட்டுக்களில் தான் கை வைக்க வேண்டும்! கலியாணத்தை எதிர் நோக்கியிருக்கும் அவர்கள் கழுத்தில் கையை வைக்கலாமா!.... இனி உயிர் போனாலும் பரவாயில்லை! கடலுக்குப் போய்த்தான் தீரவேண்டும்!என்று உறுதியெடுத்துக் கொண்ட வடிவேலர், நாளை கடலுக்குப் போயே தீரவேண்டும் என்னும் தன் தீர்மானத்தை தன் பங்காளர்களுக்கும் அறிவித்தார்! இவர் பங்காளித் தொழிலாளிகளுக்கு அவ்வளவாக கஷ்டமில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த வேலை இல்லாவிட்டால் வேறு வேலை களுக்குப் போய்வயிறு கழுவிக் கொள்வார்கள்!
ஆனாலும் எப்போதும் கைகொடுக்கும் தெய்வம் சமுத்திராதேவிதான்! அதிலும் மதிப்புக்குரிய ஐயா, வடிவேல்ஐயா அழைத்தால் மறுபேச்சின்றி போயே விடுவர்! அதிலும் நேற்றிலிருந்து அவதானித்ததில் கடலின் ஆக்கிரோசம் சற்று குறைவடைந்திருந்தது!
வழமை போல் நான்கு மணிக்கு முன்னம் தன் சக தொழிலாளிகளோடு கடலில்
72 கீவநதி - இதழ்

படகோடு ஓடத் தொடங்கினார் வடிவேலர்! அவர் மனைவி வடிவுக்கரசி வழக்கத்தை விடக் - கூடுதலாக இன்று சாமியறையில் நின்று மன்றாடிக் கொண்டிருந்தாள்! கணவன் பத்திரமாக வீடு திரும்பும் வரையும் சாப்பிடுவ தில்லை என்று அன்ன ஆகாரத்தைத் தவிர்த்தாள்! அப்போதும் அவளுக்குத் திருப்தி யில்லை! தங்கள் குலதெய்வமான பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு! பூந்தட்டு தேங்காய் சகிதம் போய்க்கொண்டிருந்தாள்!
இந்தக்கோவில் அருகில் உள்ளதுதான். அவர்கள் சமூகத்தால் கட்டி நிர்மாணிக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் ஆலயம்! கடற்கரையின் வெண்மணற் பரப்பில் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது! இந்தியா வில் இருந்து சிற்பக் கலைஞர்களை வர வழைத்து அழகுற வடிவமைத்து கலைக் கோயில் ஆக்கியிருக்கிறார்கள்! கோயில் கோபுரத்தைப் பார்த்தாலே கோணேசர் கோயிலை விஞ்சுவது போலிருக்கும்! இங்கே வருடா வருடம் திருவிழா நடக்கும் கோணமா மலையில் கோயில் கொண்டிருக்கும் திருக்கோணேசரைப் பார்த்தபடி கொலு வீற்றிருக்கும், பெரிய பத்திரகாளி அம்மன் திருவிழா முடிந்த மறுவாரத்தில், இவ்வாலயத் தில் திருவிழா தொடங்கிவிடும்! மணல் தெரியாதபடி சனம் கூடிவிடும்! இடைவெளி இல்லாமல் மிக அடர்த்தியாக குடியிருப்புகள் இருப்பதால், சனநெரிசலும் அதிகரித்தே இருக்கும்!
அதிலும் ஆபத்தான தங்கள் ஜீவனோபாய தொழிலுக்கு பேரிடி வராமல் காப்பாற்றி வருவது தங்கள் குலதெய்வமான பத்திரகாளி அம்மாளாச்சிதான் என்று திடமாக நம்புகிறார்கள்! ஆகையால் இத்தலத்துக்கு
அடிக்கடி வந்து கொண்டிருப்பர் ஆபத்துதவி வேண்டி! வடிவுக்கரசியும் பக்தி சிரத்தையோடு இக்கோவிலுக்கு வந்தது ஆபத்துதவி வேண்டித்தான்! கோயில் ஐயரிடம் கணவனின் நட்சத்திரத்தைச் சொல்லி பூசையொன்றும் வைத்தாள்! அம்மாளிடம் மெத்த உருக்கமாக வெகுநேரம் மன்றாடினான்!... அப்போதும் மனம் அமைதி காணவில்லை திருப்தியுற வில்லை! அங்கேயே படிகிடந்தாள்!
இவளைப் பார்த்து ஐயரும் பரிதாபப்பட்டார்! தன் பரிகாரப்பணிகளை முடித்துக் கொண்டு அவளிடம் சொன்னார். “அம்மாளாச்சியிற்ற பாரத்தப் போட்டிட்டாய்
56 பங்குனி 2014

Page 75
தானே , இனி அவளே எல்லாத்தையும் பார்த்துக் கொள்ளுவாள்! கடவுளை நம்பினோர் கைவிடப் படார்! அவாவில நம்பிக்கை வைச்சி கவலைப் படாம போய்வா அம்மா! உன் புருசனுக்கு ஒன்றும் ஆகாது!”
இந்த ஐயர் இக்கோயிலிலேயே குடியிருப்பவர்! வீட்டுக்குப் போகமாட்டார்! அவர் வீட்டிலிருந்து சாப்பாடுவரும். மனைவி கொண்டு வருவாள்! சிலபோது நைவேத்தியங்கள் கூடி விட்டால் கைபேசியில் அறிவித்து விடுவார் “இண்டைக்கு கொண்டுவர வேண்டாம்” என்று! இவருக்கு மாதச்சம்பளமும் கொடுத்து கோயில் நிர்வாகத்தைக் கவனித்து பரிபாலிப்பது, பத்திர காளி அம்மன் பரிபாலன சபை'! இந்த பரிபாலனசபைக்கு நிதி உதவி வருவது “மீனவர் சங்கம்” : மீனவர்கள் மூலம் அன்றாடம் கிடைக்கும் பங்குபணத்தில் அரைவாசியை இந்தக்கோயில் சபைக்கே கொடுத்து வருகிறார்கள்!
வடிவேலர் கடலிடை படகோடு வெளிக்கிடுக்கையில் கடல்படுக்கை ஓரளவு அமைதியாகவே இருந்தது. ஆனால் அந்த அமைதி நீடிக்கவில்லை!... திடீரென்று பேய்க் காற்று வீசியது புயல் வந்துவிட்டது போலி ருந்தது! ஒருதடவை திருகோணமலையில் புயல் அடித்து நகரத்தை சின்னாபின்னமாக்கி, மக்களை எல்லாம் அவலக்குரல் எழுப்பி அகதியாக்கிவிட்டதுதான் இப்போது ஞாபகம் வந்தது! கடல் கொந்தளித்து குடியிருப்புகளை யும் வாரிக்கொண்டு போனது!... அப்போது வடிவேல் மீசை அரும்புப்பருவம்! அப்போது புத்தகக்கட்டோடு இருந்தான். இப்போது, படகோடு போராடுகிறார்!
சூறாவளி படுபயங்கரமாக வீசிக் கொண்டிருந்தது, கடல் குமுறிக் கொண்டி ருந்தது அலைகள் அரைப்பனை உயரத்துக்கு எம்பி எம்பிக் குதித்தாடியது! இது “சுனாமி”யை
ஞாபகப்படுத்தியது ! கரையில் ஆங்காங்கே தெரியும் தென்னைகள் தலைவிரித்து பேயாட்டம் ஆடிக்கொண்டிருந்தது! அந்தக் குடியிருப்பில் எவர் இதயத்திலும் அமைதியே இல்லை! எல்லா உள்ளங்களும் கலங்கலாயின!
கையெடுத்து அம்மாளாச்சியின் நாமத்தை உச்சரிப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை!
வழமையாக காலை எட்டுமணியி லிருந்து பத்து மணிக்குள் படகுகள் யாவும் வருவதுதான் வழமை! ஆனால் வடிவுக்கரசி குடும்பம் உட்பட பல குடும்பங்கள் எட்டுமணிக்கு
73/கீவநதி - இத

முன்னமே திரண்டு வரத்தொடங்கிவிட்டன! கடல் அடிப்பது அவர்களை எல்லாம் விழுங்கி விடுவது போலிருந்தது! ஆனாலும் ஒருவரும் அசையவில்லை! ஏனெனில் நேரம் போய்க் கொண்டே இருந்தது... பத்தையும் தாண்டி விட்டது! இன்னும் ஒரு படகுகூட கரைசேர வில்லை!
கரையில் பரபரப்பு அதிகரித்தது! முணுமுணுப்பு அபயகுரலாகியது !.. நேரம் பன்னிரெண்டையும் தாண்டிப்போய்க் கொண்டிருந்தது..... பெண்கள் தலைவிரி கோலமாகினர்!தலையிலும் மார்பிலும் அடித்துக் கதறினர்! சிறுவர் நின்ற இடத்தி லிருந்து துள்ளித் துள்ளி விழுந்தனர்! இப்போது சங்கக்காரர் வந்தனர்! அவர்களுக்கு உரித்தான பெரிய " என்ஜின் " பூட்டிய படகுகள் புயல் வேகத்தில் அலைகளைக் கிழித்துக் கொண்டு போய்க்கொண்டிருந்தன!
சிலர் ஆறுதல் வார்த்தை பகர்ந்தனர் : "சங்கத்தின்ர போட்டுகள்ள போய்க் கொண்டி ருக்கிறாங்கள் அவங்கள் போனால் கட்டாயம் ஆக்கள் எங்க கிடந்தாலும் தேடிக்கண்டுபிடிச்சி கூட்டிக்கொண்டு வந்து போடுவாங்கள்! இதுக்கு முதல் எத்தினதரம் இப்பிடி நடந் திருக்கு!... எல்லாரும் சத்தம் போடாமல் அமைதியா இருங்கோ பார்ப்பம்!” இப்போது அவலசத்தம் வெகுவாய்க் குறைந்தாலும், "பத்திரகாளி அம்மா, எங்கள் கைவிட்டுராத அம்மா” ! என்ற சுலோகம் ஒலிப்பது மட்டும் ஓயவே இல்லை!
பின்னேரச் சரிவின்போதுதான் சங்கத்தார் படகுகள் வரத்தொடங்கின! கரையில் படகுகள் நெருங்க நெருங்க பரபரப்பு
அதிகமாகிக் கொண்டே வந்தது! சங்கப் படகுகளில் காணாமல் போனோரின் படகு களும் கட்டியிழுத்து வரப்பட்டன! அதில் தவறிப்போனவர்களும் களைத்து விழுந்து கிடந்தனர்! சிலர் குற்றுயிராய்க் கிடந்தனர்! கரைக்கு அவர்களை மீட்டு மணலிலே கிடத்தினர்! முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப் பட்டன! ஆசுவாசப்படுத்தினர்! சிலர் ஆறுதலும் தேறுதலும் சொல்லிக்கொண்டிருந்தனர்! பலரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும்போது, வேறோர் புறத்தில் இருந்து குய்யோ முறையோ என்று அவலக் குரல்கள் எழுந்தவாறு இருந்தது! வடிவேலு ஐயாவையும் அவரோடு போனவர்களையும் காணவில்லையாம்! மீண்டும் பரபரக்கத்
ழு 66 பங்குனி 2014

Page 76
தொடங்கிவிட்டது! -
சங்கப்படகில் தேடிப்போனவர்கள் சொன்னார்கள்: "நாங்கள் போகக்கூடிய இடமெல்லாம் ஓடி, தேடவேண்டிய இட மெல்லாம் தேடியாச்சி!.... இனி தேடித்திரிய எங்களால் ஏலாது!” என்றனர். வடிவுக்கரசி யின் நிலைமைதான் மோசமாகிவிட்டது! அவள் மணலிலே புரண்டு அரற்றிக் கொண்டிருந்தாள்! ஆறுதல் சொல்ல பலபேர் மொய்த்தனர்! ஆனால் கணவனை கண்டால் அல்லாது அவளை ஆறுதல் படுத்தமுடியாது!
இப்போது சங்கக் காரியாலயத்தில் இருந்து தலைவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் கடற்படைத்தளத்துக்கு! படகில் போன ஐந்து பேரைக் காணவில்லை! உதவி வழங்குமாறு கேட்டிருந்தார்! சற்றுநேரத்தில் கடற்படையினர் நவீன வசதிகளுடன் கூடிய படகில் அங்கே காட்சியளித்தனர்! உலங்கு வானூர்தி ஒன்றும் அவ்விடத்தில் தாழப்பறந்து வட்டமடித்துக் கொண்டிருந்தது!.... வானூர்தி முன்னே போக படகுகள் பின்னால் போய்க் கொண்டிருந்தன!
இப்போது கரையில் இருப்போர் சற்று நிம்மதிப் பெருமூச்சை விட்டனர்!... ஆனால் அதுவும் அதிக நேரம் நீடிக்கவில்லை! சல்லி அம்மன் கடற்கரையில் ஒருபடகு கரை ஒதுங்கிய தாகவும், ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் கதை வந்தது! அவலச்சத்தங்கள் கொந் தளிக்கத் தொடங்கின! வடிவுக்கரசி கத்தவும் இசக்கமின்றி அரற்றிக்கொண்டிருந்தாள்! திருக்கடலூரில் இருந்து சல்லி அம்மன், கடல் வழியாகப் பார்த்தால் மூன்று மைலும் வராது. விரைந்தேபோய் அங்கு பார்த்தனர். ஆனால் அது வடிவேல் ஐயாவின் சடலமல்ல; படகும் அல்ல! அன்று இரவு பூராவும் அந்த வெண் மணற்பரப்பில் வெண்ணிலா தண்ணொளி வீசிக்கொண்டிருந்தது! ஆனால், யாரும் கண்ணயர்ந்ததாகத் தெரியவில்லை! இதயக் குமுறல்கள்தான் இருந்தது! வடிவேல் ஐயா பலபேரின் இதயத்தில் வாழும் மனிதர்! விடியுமுன்னமே “கெலியின்” விசிறிச்சத்தம் எல்லோரையும் கிலி கொள்ளச் செய்தது! பரக்கப் பரக்க விழித்துக்கொண்டு, ஊரே திரண்டு கடற்கரைக்கு வந்துவிட்டது! கடற் படையினர் வடிவேலரின் படகை கட்டியிழுத்துக் கொண்டு கரைக்கு வந்துவிட்டனர்! ஐந்து பேருக்கும் படகினுள்ளேயே இருந்து முதலுதவிச் சிகிச்சை அளித்துக் கொண்டி
74/ ஜீவநதி - இதழ் 6

ருந்தனர் சீருடையினர்! சங்கத்தலைவர் கடற்படை பெரியவருக்கு கைலாகு கொடுத்து தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்! உலங்கு வானூர்தி திருக்கடலூரை வட்ட மடித்துப் பறந்தது! எல்லோரும் கரங்களை உயர்த்தி அசைத்துக்காட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்!
சங்கத்தலைவருக்கு கடற்படைத் தளத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது! இந்தத்தேடுதல் வேட்டைக்கான எரிபொருள் செலவை அறிவித்தார்! சங்கத் தலைவர் காசோடு கடற்படைத்தளம் நோக்கி போய்க்கொண்டிருந்தார்! வடிவேல் ஐயாவும் மனைவியும் குடும்ப சமேதரராக பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு பக்தி சிரத்தையோடு போய்க்கொண்டிருந்தனர்!
வெளிச்ச முழக்கம்
இருட்டு முற்று முழுதாக ஆக்கிரமித்த அந்த அறைக்குள் நாமிருந்த போது,
விடியல்கள் பற்றிய வெளிச்சமுழக்கங்கள் தருகிறார்கள் நீ வெளியில் இருந்தபடி...
தப்பிவிட இருந்த கதவுகளையும் யன்னல்களையும் மட்டுமல்ல எம் மனங்களுக்கும் சேர்த்து பெரிய பூட்டுகளாய் பூட்டிய படியும் வெளிச்ச முழக்கங்கள் தருகிறார்கள் வெளியில் இருந்தபடியே!
- சோ.மீரா
5/பங்குனி 2014

Page 77
கொடுங்காற்றுக்கடந்த நிலத்தில் கலைத்துவிடப்பட்ட கூந்தலை
முடிந்தவாறே உன் பாதங்கள் கடந்த வழி விழியூன்றி நிற்கின்றேன்.
விழி நீண்டதூரம் கடந்து போன - நீ பிறகும் கடந்து விடாதபடி மிகு தொலைவில் - நான்
நீ தேடிச் சென்ற தேசம் அங்கிருக்க 4 துளிதானும் வாய்ப்பில்லை இடிபாடுகளிலிருந்து புழுக்களை பொறுக்கும்
மரங்கொத்தியாய் சிறகுகள் அற்று மீண்டு வருவாய்
பொல்பிடிக்கப்ப்"
இவ்வாறு தான் உன்போலவே போன ஆயிரம் பேர் இன்னும் ஆயிரம் பேர் ஆயிரமாயிரமாய் போனவர்கள்
காதுகளின்றி கண்களின்றி நாவுகளின்றி மெளனிகளாய் மீண்டது பற்றி வராலற்றுரைக்கும்
இனம் கடந்த விடாத சேதி
வேண்டாம் வேண்டாம் புரிந்து கொள் இங்கு இன்னும் சீஸரின் முதுகுகள் வலித்தபடிதான் இருக்கின்றது. இன்னும் யூதாஸின் எச்சில்கள் தேவனின் கன்னங்களில் காய்ந்து விடவில்லை
இனி நீயுமா?
-தி.பவித்ரன்
75/ ஜீவநதி - இதழ்

ஜீவநதியின் அஞ்சலிகள்
ந. பாலேஸ்வரி ஈழத்து மூத்த பெண்படைப்பாளியும் 20 இற்கு மேற்பட்ட நாவல்களையும், பல சிறந்த சிறுகதைகளையும் படைத்த
திருகோணமலையை சேர்ந்த எழுத்தாளர் ந.பாலேஸ்வரி அவர்களுக்கு ஜீவநதி தன் கண்ணீர் அஞ்சலிகளைத்
தெரிவிப்பதோடு, அவரது ஆத்மா ..
சாந்தியடைய பிரார்த்திப்பதோடு குடும்பத்தாருக்கு எம் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பிரேம்ஜி ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவரும் முற்போக்கு இயக்கத்தின் பிரதான விசையாகச் செயற்பட்டு வந்த ஞானசுந்தரன் (பிரேம்ஜி) அவர்கள் கனடாவில் காலமாகியிருந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு குடும்பத்தாருக்கு எம்
இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். சித்தாந்த தெளிவுடனும் எதிர்காலவியல் . நோக்குடனும் செயற்பட்டு வந்தவர் அமரர் பிரேம்ஜி என்பதை யாவரும்
அறிவர்.
பாலு மகேந்திரா மட்டக்களப்பை பிறப்பிடமாகக்
கொண்டவரும் இந்தியாவை வாழ்விடமாகவும் கொண்ட குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய திரைப்பட இயக்குநர் பாலு மகேந்திரா அவர்களின் இழப்பு தமிழ்ச்சினிமா உலகிற்கு பேரிழப்பாகும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு அன்னார் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், ரசிகர்கள்
அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங் களைத் தெரிவித்துக்
கொள்கின்றோம்.
66 / பங்குனி 2004

Page 78
"தா தா”வென்று கேட்டவண்ணமே இருந்தாள் மகள் மைமூனா. அவள் கேட்கும் போதெல்லாங் கொடுத்துக் கை சிவந்தாள் ஆமினா. ஆனால், அவள் கற்பகத் தருவுமல்ல! காசு மரமுமல்ல! கையிற் கிடந்த காப்பாக - கழுத்திற் கிடந்த சங்கிலியாக - சீட்டுப் பிடித்த காசாக - ஆமினா கொடுத்தாள். மைமூனா எடுத்தாள்.
வார்த்தைகளால் உம்மாவை வருடிக் கொடுப்பாள். அவ்வருடுதலினூடே வரும் நெகிழ்வில் ஆமினா அசந்து போய் விடுவாள். அப்புறம் கொடுப்பனவு! மைமூனா மகிழ்ச்சியில் ஆழ்ந்து போவாள்!
மைமூனா ஆமினாவின் மூத்த புத்திரி. வேளாவேளைக்குப் பணங் கேட்டு உம்மாவின் உள்ளத்தில் பதற்றத்தை ஒளிர விடும் நெய்த் திரி! அவள் ஆடம்பரக்காரி! இடாம்பீகப் பிரியை! அவளது கொழுநனை யுத்த கால் வெடிகுண்டு பலி கொண்ட போதிலும் அவனது பெயரில் அரசு வழங்கி வருகின்ற பென்ஷனும் சம்பளமும் அவளைப் பென்னம் பெரிய இடாம்பீகப் பிரியை ஆக்கி விட்டன. பணத்தைத் தன் மூப்பிற் பரிகரணம் செய்து பழக்கப்பட்டுப் போனாள்.
பிறு இலட்
கணவன் இல்லாத குறை ஒரு தசாப்த காலம் வரை நீடித்தது. ஆயினும் அவனது சம்பளமும் பென்ஷனும் அவளைச் சோடித்தன ! பத்தாண்டு கால நகர்வுக்குப் பின்னர் அவளுக்கொரு சோடியைத் தேடிக் கொடுத்தன அதே பென்ஷனும் சம்பளமும்!
நெள் n இஸ் கெட்டிங் ஆல் மோஸ்ட் போர்ட்டி தெளசண்ட் எவ்ரிமன்த், பட்,n நீட்ஸ் மோ தேன் தட்-இதனால் மைமூனா தாயைக் குடைவாள்! தாயோ கொடுப்பாள்! அவளோ எடுப்பாள்! மைமூனாவின் ஆடம்பரப் பரி அவளது வாழ்க்கை ரேஸ் கோர்சில் வாயுவாகப் பறந்தது ! புதிய கொழுநனும் அவளது போக்குக்கு உடன்பாடுடையவர் தாம். இதனால் மரித்த மணவாளனின் வன் கொலையின் பெயரில் கிடைக்கும் மாதாந்த வேதனமும் பென்ஷனும் போதாதபடியாலும் புதிய
76 கீவநதி - இதழ்

atஅ.டி+11)
கணவனையும் அவர் தம் பிள்ளைகளையும் போஷிக்க வேண்டிய கடப்பாடும் பொறுப்பும் தன் வசம் வந்ததாலும் தாயிடமிருந்தும் "காசு,
பணம், துட்டு, மணி” என்று
கறக்கத் தொடங்கினாள்.
ஆனால், அவள் இன்னுஞ் சிறக்கத் தொடங்க வில்லையே! தொலைக் காட்சிப் பெட்டிகளை ஆக்கிர மித்துக் கொண்ட நாடகத்
தொடர்கள் அவளுக்கு நவீன வாழ்க்கை மோஸ்தர்கள் இவை தாம் என்று முன்வைத்தன. அத்துடன் கிறிமினற்றனமாகச் சிந்திப்பதற்கும் சொல்லிக் கொடுத்தன. அவளது வீணான ஆடம்பரச் செயற்பாடு களுக்கு உதாரணமாக உடுப்புக்கு மேல் உடுப்பு வாங்கி அடுக்குதலைச் சொல்லலாம். பாதணிகளை வாங்கிக் குவிப்பதைச் சொல்ல லாம். மிதமிஞ்சி வரும் மின்கட்டணங்களைச் சொல்லலாம். அடுக்களையில் அளவுக்கு மீறிக் கிடக்கும் தட்டுமுட்டுச் சாமான்களைச் சொல்ல லாம். மேலுஞ் சொல்வதானால் நகைநட்டு களை வங்கியில் அடகு வைப்பதையும் பின்னர் அவற்றை மீட்டெடுக்காது விட்டு விடுவதையும் சொல்லலாம்.
 ைம மூ னர் மாதாந்தம் பெற்றுக்
'ஏ.எம்.எம்.அலி
இ667 பங்குனி 2014

Page 79
கொள்ளுந் துட்டு இடாம்பீகச் செலவுக்குப் போதாதபோது தாயை நச்சரிப்பாள். தாய் தன் இயலாமையைச் சொன்னால் வீட்டை விட்டு வெளியேற்றுவேன் என்றுதாயை எச்சரிப்பாள்!
அன்னை ஆமினாவும் மைமூனாவின் நச்சரிப்பையும் எச்சரிப்பையும் கேட்க வொண்ணாது, காப்பு, சங்கிலி, சிறுகச் சிறுகச் சேர்த்த சீட்டுக் காசு, பிட்டு அவித்துக் கடை களுக்குக் கொடுத்துப் பெற்று வருங் காசு - இப்படி எல்லாவற்றையும் தாரை வார்த்து வார்த்து தற்போது ஐந்து இலட்சங்களைத் தாண்டி விட்டது தந்த தொகை!
ஐந்து இலட்சங்களோடு நின்று. விட்டால் பரவாயில்லை. இந்த ஐந்து இலட்சங் களும் அவளுக்கு ஐயாயிரம் ரூபாய் போல! "உம்மா இவ்வளவு தந்திருக்காங்களே. இனியும் கேட்டுத் தொந்தரவு செய்வது சரியல்ல" என்று நினைக்கவே மாட்டாள் த் தேவையற்ற அனாவசியச் செலவு தொல்லை தரும், கடன் வந்து மூளும், கவலை வந்து சேரும் என்று ஒரு போதும் கவலைப்பட்டதுமில்லை. வீண் செலவு கூடி விட்டதே, சிக்கனத்தைப் பேணிச் சேமிக்க முடியாது போய் விட்டதே என்று வருத்தப்படவு மில்லை.
தான் இறந்து போன பிரிட்டிஷ் இளவரசி டயானா என்ற நினைப்பு! இதனால் தனக்குக் கிடைத்து வரும் பென்ஷனும் சம்பளமும் தாயின் தாட்சண்யத்தில் கிடைக்கும் பணமும் அவளது இடாம்பீகக் குதிரைக்கு இலாடம் அடித்தன.
இடாம்பீகக் குதிரை இது வரையும் ஓடியது! இன்னமும் ஓடிக் கொண்டிருக்கின்றது!
ஆனால், அக்குதிரைக்குக் கொள்ளுப் போடுவதற்கும் இலாடங் கட்டுவதற்கும் உம்மா தான் காசு கொடுக்க வேண்டும். காசுக்கு மட்டுமே உம்மா! அப்புறம் ஆமினா சும்மா! தன் தாய் பசிக்கு உண்டாளா, நோய்க்கு மருந் துண்டாளா என்று விசாரிப்பதை விட "உம்மா, ஓங்கட காப்பைத் தாறீங்களா? கஷ்டமாக் கெடக்கு, ஈடு வைப்போம்” என்று காப்பைப் பறிப்பதில் தான் கரிசனையாக இருப்பாள். காசு கொடுபட்டாச்சு, அவ்வளவு தான்! சங்கிலி கொடுபட்டாச்சு, அவ்வளவு தான்! மீண்டும் அவை பற்றி வினவினால் தாயும் மகளும் நாயும் பூனையும் போலாவர். தாய்க்கு அத்தன்மையை அடைவதற்கு விருப்பமில்லை. ஆனால், புத்திரி முரண்படுவாள். அவள் நெய்த் திரி போல் நின்று எரிவாள்! கடுஞ்சொற் கற்களைத் தாய் மீது எறிவாள்!
ml கீவநதி - இதழ்

காப்புக் கதை அத்தோடு முடியும்!
காப்பை நீ அட கெடுத்துத் தரத்தான் வேண்டும், என்ட சங்கிலியை நீ தரத் தான் வேண்டும், நான் தந்த காசை நீ தரத் தான் வேண்டும் என்றெல்லாம் கேட்கமுடியாது.
கேட்டாற் சண்டை!
பத்திரி குடித்த பேய் போலப் புத்திரி ஆடத் தொடங்குவாள்! கொஞ்ச நாட்களுக்கு ஆளையாள் முகத்தைப் பார்க்கமாட்டார்கள். நீ தாயுமில்லை, நான் பிள்ளையுமில்லை என்ற அளவுக்கு மைமூனா வந்து விடுவாள்! ஆமினா நொந்து விடுவாள்!
ஐந்து இலட்சத்திற்கு மேலே ஆமினா அள்ளிக் கொடுத்தாலும் மைமூனா மாதா மீது காட்டும் அன்பு கம்மி தான்! ஆமினா அரை(டிபடும் அம்மிதான்! ஏனெனில், கேட்கும் போதெல்லாம் கொடுக்க வேண் டும். கொடுத்ததைக் கேட்கக்கூடாது. மைமூனா விடம் இருப்பது துட்டுக்கான பாசமே தவிரத் தூய்மையான பாசமன்று. இதனை அவள், பல பொழுதுகளில் நிதர்சனப்படுத்திவிட்டாள்.
ஆமினா சீனி நோய்க்காரி. உடல் வற்றி உருவம் மாறிப் போய் விட்டது. வதனஞ் சுருங்கி வாடிப் போய் விட்டது. உம்மாவின் நோய் நொடியை விசாரிப்பதற்கு மைமூனாவுக்கு நேரமில்லை! தாய் மீதான பாசப் பாரமில்லை! மூத்த மருமகனின் பென்ஷனையும் சம்பளத்தை யும் பெற்று அனுபவிக்கின்றாள்.
இரண்டுஞ் சேர்ந்து நாற்பதாயிரம் ரூபா அவளது கரத்திற் கிடைக்கின்றது. அப்பணத் தில் இற்றை வரை தன் தாய்க்கோ தந்தைக்கோ ஓர் ஆயிரம் ரூபா கொடுத்திருப்பாளா? புதிய மணவாளனோடு போகமும் புளுகமும் காணு தற்கு வழிசமைத்துவைத்தவர்கள் யாவர்?
இது எல்லாம் மறந்து விட்டு வாய்க்கு வந்தபடி தாய்க்குத் திட்டுகிறாள்! தந்தைக்குத் திட்டுகிறாள்! அள்ளிக் கொட்டுவதற்கு ஆமினாவும் புருஷனும் காசுமரமா?
"பாவம் பத்து வருடங்கள் விதவையாக இருந்தவள், அவளது மறுமண வாழ்க்கை யாவது செழிக்கட்டும்" என்று எப்போதும் பிரார்த்திக்கும் தாய்க்குச் சில வேளை பேய்க்குப் போல் பேசுவாள். அந்தச் சில வேளை என்பது கேட்கும்போதெல்லாங் காசு கொடுக்கத் தவறும் சந்தர்ப்பங்கள் தாம்.
அன்றும் காசு கேட்டாள் மைமூனா - அது சிறு தொகையன்று. பெருந்தொகை, ஆறு இலட்சம்! அதனைத் தருவதற்கு ஆரால்
66/பங்குனி 2014

Page 80
முடியும்? ஆமினாவால் முடியுமா? அல்லது அவளது கணவனால் முடியுமா?
ஆமினா தன் புருஷனை அணுகினாள். "என்னங்க, ஒங்கட மகளுக்கு ஆறு இலட்சம் ரூபாக் காசு தரட்டாம். அவட புள்ளட கலியாணம் வருவுதாம்”
"என்னா ஆறு இலட்சமா? நானென்ன பில் கேட்சா ? காசு, காப்பு, சங்கிலி என்டு இது வரைக்கும் ஐந்து இலட்சம் குடுத்திரிக்கிறோம். இன்னமும் ஆறு இலட்சம் ரூபாவா? என்னத்த மனசில வெச்சிக்கிட்டுக் கேட்கிறா ஓன்ட புள்ள?” |
"நான் சொல்லிட்டன் பாருங்க, எங்களுக்கிட்ட அவ்வளவு காசில்ல. பாத்துக் கீத்து ஒரு ஐம்பதாயிரம் தாறோம் என்றேன். அவக்கு ஆறு இலட்சந் தான் வேணுமாம் என்டு கேக்கிறா”
- "அவளுக்குச் சரியான வெசர். இல்லாட்டி எனக்கிட்ட இவ்வளவு காசு கேட்பாளா? என்ட "ஈ.பீ. எப்". காசு கிடைச்ச மூட்டத்தில் அதிலே கொஞ்சக் காசை இஸ்லாமிய வங்கியில் போட்டு வெச்சோமே. அது அவங்களுக்கு எப்படியோ தெரிஞ்சி போச்சி. அதைத் தான் ஒன்ட மகள் கேட்கிறா. அத எடுத்துக் குடுத்திட்டு நாங்க பிச்சைக்குப் போறதா? நரிக்கிட்ட குடல் கழுவக் குடுத்த மாதிரித்தான் கடைசியில் எல்லாம் முடியும்! புரிந் துணர்வு, பொறுப்புணர்வு என்பதே இல்லாத புள்ளைகள்"
"எங்களில் நம்பிக்கை இல்லையா?” என்றாள் மைமூனா. " நம்பிக்கை இல்லை தான்” என்றாள் ஆமினா.
"நான் எப்படி ஆறு இலட்சம் ரூபாவைத் தருவேன்? அது தான் எங்களுடைய உயிர் நாடி. நீ மகளேயானாலும் அவ்வளவு தொகைப் பணத்தை என்னால் தர முடியாது. உன்னிடம் நாணயம் இல்லை. உங்களால் அப்பணத்தைத் திரும்பத் தரவே இயலாது! ஆகவே, அதனை என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம்" மைமூனா வின் தந்தையும் தன் இறுதி முடிவைச் சொன்னார்.
"தரத் தான் வேண்டுமென' நின்று கொதித்தாள்மைமூனா.
"தர முடியாது, தயவு செய்து கேளாதே” என்று நிதானித்துரைத்தார் வாப்பா.
இந்தப் பணம் கையை விட்டுப் போனால் மீண்டும் தன் கைக்கு வராது என்று அவருக்குத் தெரியும். ஆதலால், ஏகமனமாக இருவரும்
76/ கீவநதி - இதழ்

வானவன்
அப்பணத்தைக் கொடுப்பதில் விருப்பற்றனர். ஆனால், அந்த - ஆறு இலட்சத்தையும் கைப்பற்றிக் கொள்வோம் என்பதிற் கருத்தூன்றி நின்றாள் மகள்.
"தரத் தான் வேண்டும். இல்லை, தரவே முடியாது" என்னும் ஜெயகோஷம் அதரத்திலிருந்து எழுந்து வர - ஆறு இலட்சத் திற்கான சண்டை மூண்டது.
"நீ ஒன்ட புருஷனைக் கூட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே போ” உம் மாவை நோக்கித் தனது கடைசி அஸ்திரத்தை எறிந்தாள் மைமூனா . ஆனால், ஆமினா அசையவில்லை. வீடென்பது இவ்வுல் கிற்கும் மிகத் தேவையானது! அவ்வுலகிற்கும் மிகத் தேவையானது என்று மைமூனாவுக்குத் தெரியுமோ? என்னவோ? அவள் அந்த வீட்டைத் தான், கடைசி அஸ்திரமாகப் பாவித் தாள். வீட்டை விட்டு வெளியே போவேன விரட்டியதாலுண்டான வலி அவளது வேண்டு கோள் நிறைவேற அனுகூலமாய் அமையும் என்றுமைமூனா நம்பினாள்.
"அடியேய், இது என் ட வாப்பா எனக்குத் தந்த சொத்து. எனக்கு உரியது! ஒனக்கு நான் எழுதித் தந்திட்டேன் என்டாப் போல் என்னை நீ வெரட்டியா போட்றுவா ? ஒனக்கு யோக்கியம் இருந்த நாங்கள் தந்த ஐஞ்சிலட்சத்தையும் இப்ப வையடி! அடுத்த நிமிஷம் நான் போறேனா, இல்லையா என்டு பார்" ஆமினாவின் ரோஷமும் துள்ளி எழுந்தது.
சண்டை சூடு பிடித்தது!
வாய்க்கு வந்தவாறு வசை பொழிந் தாள் மகள். தாய்க்கும் தந்தைக்கும் தரக்கூடிய கெளரவத்தைக் களைந்தெறிந்து விட்டு உண்ணத் தந்ததை, பருகத் தந்ததை எல்லாம் நாறிய வார்த்தைகளால் ஞாபகமூட்டிக் கொத்தித்தாள், மைமூனா.
மகளின் சொற் சாட்டை தந்த சுளீர் சுளீரென்ற அடிகளை வாங்கிக் கொண்டு கெளரவங் கருதி அமைதியானாள் ஆமினா. ஆனாலும் கண்ணீர் கன்னக் குழிகளில் வீழ்ந்து நிரம்பியது. காசு, பணம், துட்டு, மணி லேசுபட்டதா?
அவ்வப்போது ஐந்து இலட்சம் வரை பெற்றும் அடங்காத மகளுக்கும் ஐந்து இலட்சம் வரை கொடுத்து விட்டு அமைதியாக இருந்த பெற்றோருக்குமிடையே - தாய், தந்தை, புதல்வி என்னும் உறவைப் பிரித்துப் பொல்லாத மனக் கசப்பை ஏற்படுத்தி விட்டதே இந்தக் காசு,
66/பங்குனி 2014

Page 81
பணம், துட்டு, மணி!
"வாங்க, இனி இங்கே இருக்கத் தேவல. போவோம்"
"எங்கே போறதென்டாலும் என்ட காசு ஐந்து இலட்சத்தையும் இப்பவே வைக்கச் சொல்லு. அடுத்த நிமிஷமே நான் என்ட சாமான் கட்டோடு வெளியேறுறேன்டீ! தலைக்கு மேலே வெள்ளம் போன பிறகு சாண் என்ன? முழம் என்ன? மகள் என்ன? மாதா என்ன? பிள்ளை என்ன? பிதா என்ன? அடி” சினம் மீதூரப் பெற்றாலும் அடக்கிக் கொண்டு கூறினார் ஆமினாவின் கணவர்.
"இன்று வரைக்கும் ஒன்ட மகள் எம்மை எத்தனை தடவை வீட்டை விட்டு வெளியேறு என்று விரட்டி இருக்கிறாள். குடியிருக்கும் இந்த வீடு, காணி, அனுபவிக்கும் சம்பளம், பென்ஷன் எல்லாம் எப்படிக் கிடைத்தது என்பது பற்றி யோசித்தாளா? யோக்கியமற்றுப் பேசுகின்றாள். நான் உழைத்தது தான் அவளுக்குக் கொடுத்த காசு. இன்னும் ஆறு இலட்சமாம்! காசுமரத்திலே காய்ப்பது என்றாற் கூடக் காலத்திற்குக் காலந் தான் அது காய்க்கும். அனந்தரமும் அது காய்க்காது. அதரங்கள் இரண்டும் மிகவும் அருகருகே இருந்தபடியால் மிக இலகுவாகக் கேட்டு விட்டாள் ஆறு இலட்சம்!”
ஆமினாவும் அவரது கணவரும் அப்பணத்தைத் தருவதால் தாம் அடையப் போகும் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் எடுத்துச் சொன்னார்கள். தமது கையறுந்து போகும் நிலைமையைக் காட்டினார்கள். மைமூனாவும் அவளது கணவனும் புறாவுக்குக் குறி வைத்த வேடன் போல மாறினார்கள். ஆனால், அவர் களின் குறி தவறிய து! ஆறு இலட்சத்தையுங்கைப்பற்றும் வெறி சிதறியது!
உம்மா- வாப்பா - மகள் - மருமகன் - ஆறு இலட்சத்தால் உறவு கூறுபட்டது. கோபக் கனல் எரிந்தது! மைமூனா கத்தினாள். "ஒன் ட புருஷனையும் கூட்டிக் கொண்டு என்ட வீட்டை
விட்டு வெளியே போ”
"வீட்டை விட்டுத் தானே வெளியேறச் செல்றா. அப்படி நீ சென்ன மாத்திரத்தில் வெளியேற முடியாது. நான் தந்த ஐந்து இலட்சத்தையும் வை, போகிறோம். நீ காசு தரும் வரைக்கும் நான் வாழ்ந்த வீட்டறை எனக்கு உரியதே! அதன் கதவு எப்போதும் பூட்டியே கிடக்கும்” ஆமினா வார்த்தைகளை அடுக்கியபடி தனது உடுப்புகளைத் திணித்துக் கொண்ட கைப்பையைத் தூக்கினாள். தனது சீனி
79/ ஜீவநதி - இதழ்

நோய்க்கான குளிசைகளைத் தேடி எடுத்துக் கொண்டாள். கதவைப் பூட்டிச் சாவியையும் எடுத்துக் கொண்டாள்.
பெற்றாலும் இவள் போன்றவர்கள் பிள்ளைகளா என்னும் வேதனை தரும் வினாவோடு அந்த வயோதிபத் தம்பதியர். வெளியேறி நடந்தனர்.
அவர்களுக்கருகில் ஆட்டோ ஒன்று வந்து நின்றது.
எங்களூர் மூதூர்!
முத்து விளைந்த மூதூர் மூவினர் வாழும் மூதூர் வித்தகர் கவிஞரறிஞர் வதிவிடம் கொண்ட மூதூர் சத்துறைத் தானியங்கள் சரளமாய் நிறைந்த மூதூர் இத்துணைச் செல்வம் சூழ்ந்த எங்களூர்த்தாயே மூதூர்!
திருமலை மாவட்டத்தில் தேன் தமிழ் மொழிகள் பேசும் பெருமக்கள் நிறைந்த மூதூர். பெருமைக்கு நிகரே இல்லை அரும் பெரும் கல்விக்கூடம் ஆன்றோனை வணங்கும் கோயில் திரிபடும் பள்ளித் தலங்கள் தாங்கிடும் பதியே மூதூர்!
கடல்நதி கங்கை சார்ந்த கமம் செய்யும் பூமியிறாய் தடம் பதி மலைகள் நிகர்த்த தங்கமாம் எங்கள் மூதூர் கடைகளும் கட்டிடங்கள் கற்பாதை வீதிகளும் கடை இல்லாப் பாலம் சகிதம் தாங்கிடும் அன்னை மூதூர்!
வந்தோரை வாழ வைக்கும் வளம் நிறை செல்வம் மூதூர் தந்திடும் தொன்மை பாட தாளாத இந்த ஏடு
அந்திமக் காலம் தொட்டு ஆண்டாண்டு பேர் துலங்கும் சந்தனப்பேளை மூதூர் சரித்திரச் சான்றோ கோடி!
மூதூர் கலைமேகம்
66 பங்குனி 2014

Page 82
பேசும் &
1. ஆங்கில வருடத்தின் முதலாவது இத ழாக ஜீவநதியின் 64வது இதழ் வெளிவந்திருக் கின்றது. புது வருட சங்கற்பமாக ஆசிரியர் க. பரணி தரன் அவர்கள் “இந்த வருடத்திலிருந்தாவது இலக்கிய விழாக்களிலும் நூல் வெளியீட்டு வைபவங்களிலும் நேர முகாமைத் துவம் பேண வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார். உண்மையில் குறிப்பிட்ட நிகழ்வுகள் குறிப்பிட்ட நேரத்திற்கு நிகழ்வதாயிருந்தால் எவரும் சிரமத்துக் குள்ளாகமாட்டார்கள் என்பது தான் உண்மை.
இதழில் பல்சுவை நிரம்பிய எழுத் தாக்கங்கள் இடம்பெற்றிருந்தாலும் குறிப்பாக நான்கு சிறுகதைகள் ஒன்றுக்கு ஒன்று ஒற்றுமையுடையதாகக் காணப்படு வதைச் சொல்லாமல் இருக்க முடியாது. முருகேசு ரவீந்திரனின் "தொண்ணூறுகளின் தொடக்கம்” என்ற சிறுகதை ஆயதப் போராட்டத்தின் பின் யாழ்ப்பாணம் அடைந் துள்ள நிலையினை விளக்குகிறது. கொழும்பில் வேலை செய்யும் சத்தியன் விடுமுறையில் ஊருக்குப் புறப்பட்ட போது சோதனைக் கெடுபிடி களுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டதையும் யாழ்ப்பாணத்தில் படித்த இளைஞர்கள் தொழில் இன்றி எவ்வாறு கஷ்டப்படுகிறார்கள் என்பதையும் விளக்குகிறது.
இ.சு.முரளிதரனின் “டுள்ளா” என்ற சிறுகதை மூலமாக இந்திய அமைதிப்படை இங்கிருந்த காலத்தில் நடந்த சம்பவங்களை நினைவுக்கு கொண்டு வருகிறார். இந்நிலையில் ஒரு வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்டிருந்த மூன்று எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதையும், டுள்ளாவின் மகள் கீர்த்தனா கடத்தப்பட்டு என்ன என்ன செய்யப்பட்டாளோ எங்கு கொல்லப்பட்டு புதைக்கப் பட்டிருக்கிறாளோ என்பதையும் அறிய அவகாசம் இன்றி ஆறு வருடங்களுக்கு முன்னே இறந்து விடுகிறான் டுள்ளா. யுத்தகாலக் கொடுமை களுள் இதுவும் ஒன்று என்பதை கதைக்குள் கையாண்டிருக்கிறார்.
மூதூர் மொகமட் ராபியின் “காதலெனும் தேர் வெழுதி" என்ற சிறுகதையும் யுத்தகாலச் சம்பவங் களைப் பற்றிப் பேசுவதைக் குறிப்பிட வேண்டும். இராணுவம் கிளிநொச்சியிலிருந்த தென் கிழக்கு நோக்கி துருப்புகளை நகர்த்தப் போவதாக எட்டிய செய்தியால் வயோதிபர், கர்ப்பிணி தாய்மார்கள், உட்பட குட்டி குறுமான் களோடு இடம் பெயர்ந்தவர்களைத் தடுக்க முடியவில்லை. புதுக்குடியிருப்பில் வைத்துத்தான் விதி முடிய வேண்டும் என்றிருந்தால் எவர் தான் நம்புவார்கள்? முடிவில் ஆளில்லா விமானத் தாக்கு தலால் உடல் சிதறிப்போனவர்களும் சன நெரிசலில் சிக்குண்டு இறந்தவர்களும் எண்ணில் அடங்காது. கோகிலாவும், அவள் கணவர், பிள்ளைகளும் திக்குக்கு ஒருவராய் சிதறிப் போனாலும் முடிவில் கோகிலாவைத்தவிர அனை வரும் இருக்க கோகிலா செத்ததாகவே முடி வெடுத்த பின்னர் சனக்கூட்டத்தின் மத்தியில் தாயைக் கையில் பிடித்துக் கொண்டு மகன் வருவதைக் கண்ட போது தான் மாண்டவர் மீண்ட மகிழ்ச்சியைக் கொண்டாடினான் கணவன். பல்கலைக்கழக் காதல் கெட்டியானது.
அதேபோன்று ச.முருகானந்தனின் "சோகங்
80/ ஜீவநதி - இதழ்

இதயங்கள்
களும் சுமைகளும்” என்ற கதையும் யுத்த காலத்தில் நடந்த அவலங்களையும் அநியாயங் களையும் பற்றிப் பேசுகிறது. யுத்த காலத்தில் கொல்லப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு முகாம்களுக்குள் தடுத்து வைக்கப் பட்டவர்கள், காணாமல் போனோர் என யுத்தம் முடிந்த தன் பின்னர் மரணச் சான்றிதழ் வழங்கும் நடைமுறை வந்ததும் அநாதைகள், விதவைகள் என்போருக்கு பென்ஷன் பெறும் நிலை ஒன்று உருவாகியிருக்கிறது. உண்மையில் கைது செய்யப் பட்டவர்கள் எங்கோ உயி ரோடு இருப்பார்கள் என்றாலும் அவர்களும் இறந்தவர் கள் என முத்திரை குத்தப் பட்டு பட்டியலிடப்பட்டு இருக்கும் போது உண்மைக்குப் புறம்பாக சாந்தனி டீச்சர் தனது கணவர் இறந்தவர் என்று பொய் சொல்ல விரும்பவில்லை. தனது கணவர் ஆமியால் கைது செய்யப்பட்டார் என்ற உண்மையை உரக்கக்கூறி விட்டு கச்சேரியில் இருந்து வெளியேறிய துணிச்சலை பாராட்ட வேண்டும்
- எம்.எம்.மன்ஸுர் (மாவனல்லை)
2014 தை மாத ஜீவநதி படிக்கக் கிடைத்தது. 64 இதழின் அட்டைப்படத்தினை ஓவியர் தேவராஜா பவிராஜ் அச்சாக வரைந் திருந்தார். ஐரோப்பிய திரைப்பட விழா - 2013, இலங்கை உருவகக் கதைத்துறையின் படைப்பாளி முத்துமீரானின் பங்களிப்பு பற்றி நந்தர்சா சொல்லிய விடயமும், 1950 வரையான கால கட்டத்து நவீன தமிழ்க்கவிதை பற்றிய அம்மன்கிளி முருகதாஸ் அவர்கள் எழுதிய விடயமும் சாகாப்புகழ் பெற்ற கவியரசர் கண்ணதாசனின் திருவுருவப்படமும் பதிவாகியிருந்தது. மற்றும் கட்டுரைகள், சிறுகதை கள், குறுங்கதை , நூல் விமர்சனம், உள் ஓவியங்கள், பேசும் இதயங்கள், விவாத மேடை அவற் றோடு பதின்மூன்று கவிஞர்களின் கவிதைகளும் சிந்தைக்கு விருந் தளித்தன. ஒட்டுமொத்தமாக ஜீவநதி பெயருக்கேற்ற வாறு “ஜீவநதியாகவே” காண்கிறேன். க.பரணீதரனின். ஆக்கத் தேர்வுகள் அக்கறையோடு நன்கு பரிசீலிக்கப் பட்டு, பிரசுரம் பெற்றுள்ளமையினை மன நிறைவோடு பாராட்டுகிறேன்
- அ.கௌரிதாசன் (ஆலங்கேணி கிழக்கு)
ஜீவநதி மலையகச் சிறப்பிதழ் வாசித்தேன். “பதினெட்டாம் நூற்றாண்டின் மனிதர்கள்” மலையக அரசியலில் இடம்பெறும் அரசியல் கூத்தாடிகளின் கோமாளித்தனத்தை வெளிக் கொணர்ந்துள்ளது எனலாம். பதுளை சேனாதிராஜாவின் இக்கதைக்கரு பாராட்டத் தக்கதே. ஏ.இளஞ்செழியன் தொடர்பான லெனின் மதிவானம் அவர்களின் குறிப்புகள், மு.சிவலிங்கத்தின் “மேற்கில் தோன்றிய உதயம் - சிறு கதை, காமன் கூத்து பன்முக நோக்கில் ஓர் ஆய்வு போன்ற விடயங்கள், குறிப் பிடத்தக்கவை. சுதர்மமகாராஜனின் மலரன்பன் தொடர்பான செவ்வி கவிதைகள் இப்படிப்பல மலரை அலங்கரிக்கின்றன.
- மொழி வரதன் (கொட்டகலை)
66/பங்குனி 2014

Page 83


Page 84
இது இலங்கைத்தீவில் தனி
எவரும் எண்ணாத அதிர முன்மாதிரியான எடுத்துக் மிருக்கான கைங்கரியம்
திசைகாட்டியின் துன்
இலவச நன்நெறி
உதயம் 03.03.2014 d >இதுவரை காலமும் இந்துமத நெறிகளை
மாற்றம் காண்கின்றது புறஜெக்ரர் மூலம் 1 கற்றல் கற்பித்தல் நிதி ஊக்குவிப்பு
பங்குபெறும் மாணவர்களுக்கு நிதியூட்டல் >ரூபா 50,000/= (ஐம்பதாயிரம் பரிசில்)
மறக்கப்பட்டு வரும் இந்து மதக்கிரியைகள், சடா திருப்புராணங்கள், நடைமுறைகள், அர்த்தமுள் நடைமுறை அறிவு காணும் போட்டிகளில் வெற்றி > பங்குபற்றும் இளையோருக்கு இலங்கை 0
இடங்களுக்கான இலவச சுற்றுலா > இசையோடு இறைதுதிக்க விசேடகற்பித்த மிகவும் வலுவான உறுதியான அடி
ஆரம்பிக்கின்றோம் கைகொd
அனாதி 3 துன்னாலை வடக்கு J/417 துன்னாலை கிழக்கு ) தரம் 11 இற்கு உட்பட்ட மாணவர்கள் பின்வரும் 6 தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். திருமதி.குமுதினி தர்மராஜா (தலைவர் துன்னாலைப் பிரதேச கல்வி, சமய அபிவிருத்தி மன்றம் ) Ms.ஆனந்தராஜா சோபனா(முகாமையாளர்) வாடிக்கையாளர் தொடர்பாடல் திசைகாட்டி (இறை) லிமிறி 021 568
இவ்விளம்பரம் திசைகாட்டி ஆஸ்திரேலியாக்கிளை பணியாளர்களின் 4 மேலும் 03.03.2014 நிகழ்வில் பணியாளர்கள் கலந்து கொள்ள உள்ளம் கொழும்பு அலுவலகம் என்பன அன்றைய தினம் மட்டும் மூடப்பட்டிருக்
MS.V.இந்த பொதுமுகாமையாளர் (கெளரவ இய திசைகாட்டி (பிறை) லிமிற் 175, பருத்தித்துறை வீதி,
இச் சஞ்சிகை அலீவாய் கலையகம் வெளியீட்டு உரிமையாளர் கலாநிதி த. கலாமன

த்துவமான
டியான காட்டான் கும்
னாலை பிரதேச
பாடசாலை பி.ப 03.00 மணி
மனனம் செய்துப்புவித்த நிலை சைவநெறிபோதிப்புகவர்ச்சியான
ங்குகள், நன்னெறிக்கருத்துகள், தேவார ா இந்து மதத்தத்துவங்கள் என்பனவற்றில்
பெற்றால் 50,000/= பரிசில் முழுவதும் மத வழிபாட்டு
ல்
த்தளமிட்டு எங்கள் பணியை
த்து வழி நடத்தவாரீர்
"37 கிராம சேவைபிரிவைச் சேர்ந்த தொலைபேசி இலக்கங்களோடு
அ7702041
2008
பனுசரணையில் வெளியாகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மையால் எமது யாழ்ப்பாண தலைமை அலுவலகம், தம் என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம்.
வா க்குநர் சபைக்கட்டளைப்படி)
ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம். 021221906
7 அவர்களால் மதி கலர்ஸ் நிறுவனத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.