கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான் கண்டபாரதி

Page 1

வேப்பண்ணே வெளியீடு

Page 2

நான் கண்ட பாரதி
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
ஆக்கியோன் :
நீ. வஸ்தியான் நீக்கொலாஸ் தலைமை ஆசிரியர், மூதூர்.
கம்பன் கலைப்பண்ணை வெளியீடு
மூதுரிா.

Page 3
கம்பன் கலைப்பண்ணை வெளியீடு
முதற் பதிப்பு: செப்டெம்பர், 1965. உரிமை ஆக்கியோனுக்கே.
விலை ரூ. 3-75
NAAN KANDA BHAARATHI (Research Articles on Bhaarathi)
By N. BASTIAN NICHOLAS Head Master MUTUR - 3 (Ceylon) First Edition: 1 lth September o 65. PRICE: Rs. 3-75.
அச்சுப் பதிவு ரெயின்போ பிரிண்டர்ஸ், 231, ஆதிருப்பள்ளித் தெரு, .13 - கொழும்பு ܝ

சமர்ப்பணம்
சீர்பரவு பாரதியின் சிறப்புறுநற் போதகத்தை பேர்காத லோடெழுதி பெருமகிழ்வுற் றிந்நூலை ஏர்மருவு தந்தையர்க்கா ஏதமிளாத் தாயருக்கா பேர் பரவு மெந்தன் பெறற்கரிய சோதரற்கா மைந்தருக்கா மகளிருக்கா யாருக்கர்ப் பணிப்பதென்று சிந்தனையி லே யாழ்ந்து செயல்மறந் திருந்துவிட்டேன். கண்மூடி னேனே யான் கடுவுறக்கங் கொண்டேனே மண்ணறிவு மோ வெந்தன் மாசில் தரிசனத்தை விண்ணி லிருந்து இழிந்துவந்த பூங்கொடியாள் அன்ன நடைநடந்தாள் அருகில் வந் தமர்ந்துவிட்டாள். வன்ன இடையை வணிதை முகமதியை கருங்குவளை வாள் விழியைக் கவுள்மாவின் நன்கணியை இன்னமுதத் தாலாய இன் பத் திருவுருவை இன்னளென் றேயறியா தேங்கிநின் றே யானும் பொன்னனையாள் தனை நோக்கிப் பொன்னே நீர்
யாரென்றேன் முத்து நகை த வள முகமலரைச் சற்றுயர்த்தி தத்துவரிச் சேல்விழியைச் சற்றே யுருட்டியுங்கள் நெஞ்சச் சுனையதனில் நின்றலர்ந்த தாமரையில் என்று மிருக்கின்றேன் எனையேன் மறந்தீர்கள். என்றவுரை யென்றன் இருசெவியி லேறுமுன்னே கண்டுமொழிக் காரிகையைக் கண்டுகொண் டே யானும் துள்ளி யெழுந்தேனத் துடியிடையைத் தானெடுத்தேன் பதினே ரியாண்டின் முன் பறந்துசென்ற பைங்கிளியே மதிவதன மானே யென் மாசில் மனுேன்மணியே என்னுடலி லென்னவி யுள்ளளவும் நான் மறவேன் என்வேண்டு மானுலும் ஏந்திழைகே ளென்றேற்கு பொன்வேண்டாம் புவனப் பொருளொன்று
மேவேண்டாம் என்று மிறவாத இன்புகழே வேண்டுமென்று இன்முகத்தை யேகாட்டி இணைமலர்க்கை நீட்டிநின்ருள். நன்றே நீர் கேட்டீர் நவையிலா நாயகியே இன்றே தருகின்றேன் இன்பப் பெயர் வாழ என்றளித் தேனவட் கிப்புதுப் பனுவலை. உவப்புடன் அளித் திட்ட இன்பப் பனுவல் பூவில வட் கரிய சமர்ப் பணம்,

Page 4

பதிப்புரை
ஈழமண்டலத் தமிழ்பேசும் மக்களிடத்தில் தாய்மொழிப் பற்று மிக்குத்தோன்று மிக்காலத்தில் நாட்டின் நாலாபக்கங்களிலுமிருந்து அனுதினமும் கதைவடிவிலும் கவிதை வடிவிலும் நாடகவுருவிலும் வரலாற்று வகையிலும் ஆய்வுத் துறையிலும் பற்பல நூல்கள் வெளிவந்துகொண்டிருக்கும் இவ்வேளையில், நாமும் இந்நற்பணியில் பங்குபற்றி நம் தமிழ்த் தாயை மகிமைப் படுத்தவேண்டுமென்ற பேரார் வத்தால் மூதூர் அருந்தமிழ் ஆசான் திரு. என். வஸ்தியான் நீக்கொலாஸ் என்பவரால் எழுதப்பட்ட *நான் கண்ட பாரதி” என்ற அறிவுசான்ற ஆய்வு நூலை எமது கலைப்பண்ணை முதல் வெளியீடாக வெளியிடுவது குறித்துப் பெருமகிழ்ச்சியடைகின் ருேம். இவ்வாராய்ச்சி நூலில் ஆசிரியர் மரபின் சிகரத்தில் நின்று பாரதியை மிகநுணுக்கமாகநோக்கி அவனது கவிதைகளில் இருந்து பல ஆழ்ந்த அற் புதக்கருத்துக்களைக் கண்டு வெளியிட்டிருக்கிரு ர். இலக்கிய வானில் வள்ளுவனும் பாரதியும் இரு பெருஞ்ஜோதிகள். ஏனெனில், இவ்விருவருமே வாழப்பிறந்த மக்களுக்கு வாழ வழிவகுத்துத் தந்து சென்ற வண்மைக் கவிஞர்கள். பாரதியின் கொள் கைகளை வெளிப்படுத்திக்காட்டும் போதெல்லாம் இந்நூலாசிரியர் தம் கருத்தை வள்ளுவனைக் கொண்டு உறுதிப்படுத்திச் சென்றிருப்பதில் இருந்து வள்ளுவன் மாட்டு இவருக்குள்ள பெருவேட்கை புலப்படுகின்றது.
தமிழ்கூறு நல்லுலகனைத்திலும் பாரதியைப் போற்றும் மக்கள் அவனின் உண்மை வடிவினைக் கண்டு தெளிய தங்கள் தங்கள் வீடுகளில் நான் கண்ட பாரதி என்னும் இந்நூலை வைத்து, பல முறைபடித்துப் பாராயணம் பண்ணி வருவார்களே யானுல் பாரதியின் கனவுகள் யாவும் வெகுவிரை வில் நனவாகிவிடும்.
வணக்கம்.
கம்பன் கலைப்பண்ணை வெளியீடு epgI ri, 11-9-65.

Page 5
அணிந்துரை
புலவர்மணி உயர் திரு ஏ. பெரியதம்பிப்பிள்ளை
அவர்கள் எழுதியது.
இரட்டை ஆசிரிய விருத்தங்கள்
வீர நடையுங் கருணையுடன்
வேகக் கனல் பொங் கிடுவிழியும்
வேகுந் துயரிற் புன்னகையும்
மேவார் செருக்கைப் பொடிபடச்செய் பார வொலிசேர் வெடிசிரிப்பும்
பாங்காய்த் தோன்று மலர்வாயும்
பார தத்தாய் மேலன்பும்
பகட்டு வாய்ச்சொல் வீரமுடன் சோர நடையோர் மீதேவுஞ்
சொல்லம் புங்கொண் டமர்முனையிற்
சோரா நெஞ்சத் திண்மையுமாய்த்
தோன்று மினிய வடிவுடைய தீர சாந்த பாரதியாம்
கவியின் திருவே வருகவே
தெய்வத் தமிழ்நிக் கலசுகண்ட செல்வா வருக வருகவே.
சமய நெறியிற் சமரசமும்
சமூக வாழ்விற் சமநிலையும்
தமிழின் நடையும் புதுவிரைவும்
தழைக்கப் புரட்சிக் கவிமழையாய் இமயந் தொடக்கந் தமிழ் வாழ்வில் இனிய மலர்ச்சி பொலிந்திடவே
எங்குந் தொழிலில் விஞ்ஞான
இயக்கம் புகுமா றுணர்வூட்டி

VII
எமதென் றுமதென் றிடும்பூசல்
எளிதிற் றீர்க்கும் மருந்தேயாய்
எல்லா வகுப்பும் விடுதலைபெற்
றின்ப வொளியின் மயமாகி அமைதி நிலவப் பாடுமெங்கள் )
அமர கவியே வருகவே
அறிவன் சீர்ங்க் கலசுகண்ட ஐயா வருக வருகவே.
பெண்மைக் குலத்துக் குயர்வளித்த
பேறே விரைந்து வருகவே
பிள்ளைக் குலத்தை உருவாக்கும்
பெரிய வாழ்வே வருகவே திண்மைச் செல்வம் இளைஞர்மனம் சேர்த்த உரவோய் வருகவே
தீர்க்க தரிசி காந்தீயத்
திருவின் வள்ளல் வருகவே ஒண்மைக் கதையாம் பாரதத்தின்
ஒளியை விரித்தோய் வருகவே
உரிய கடமை தனையுணர்த்தும் உணர்ச்சி வடிவே வருகவே உண்மைக் கவியே பாரதியே
கவிக்கோர் உயிரே வருகவே
உள்ள முணர்ங்க் கலசுகண்ட
உருவே வருக வருகவே!

Page 6
முன்னுரை
modem
சென்ற புரட்டாதி மாதம் பன்னிரண்டாந் திகதி தி/சேனையூர் அரசினர் தமிழ்க் கலவன் வித்தி யாலயத்தில் சேனையூர்க் கலாமன்றத்தினரின் ஆதர வில் நடந்த பாரதி விழாவுக்கு நானும் ஒரு பேச் சாளஞக அழைக்கப் பட்டிருந்தேன். என்னுடன் பல பண்டிதர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும் கூட வந்திருந்தார்கள் விழாவைச் சிறப்பிப்பதற்
f
விழா ஆரம்பிக்கப்பட்டபொழுது என் பேச்சுக் குரிய இடம் வரவே நான் கொடுத்த தலையங்கத் கத்தின் கீழ் மிக நீண்டதோர் சொற்பெருக்காற்றி னேன். எனினும், என்பேச்சுக்கு நேரம் போதவில்லை. மறுபேச்சாளர்களுக்கும் இடங்கொடுக்க வேண்டும். கதம்ப நிகழ்ச்சிகளும் இருக்கின்றன. அவைகளுக் கும் இடங்கொடுக்கவேண்டும் என்ற காரணத்தால் என் பேச்சைச் சுருக்கிக்கொண்டேன். விழாவும் வெகு விமரிசையாக நடந்து முடிந்தது.
மறுநாள் எனது இல்லத்திற்கு சில அன்பர்கள் வந்தார்கள். அவர்களுட் சிலர் முதல்நாள் பாரதி விழாவில் நான் பேசியபேச்சை விதந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவ்வமயம் எனது அருகில் இருந்த மூதூரின் முதிர்தமிழ் அறிஞரும், சிறந்த இரசிகரும், பாடசாலைத் தலைமை ஆசிரியருமான திருவாளர் அ. சவரிமுத்து என்பவர் என்னைப் பார்த்து, நீர் பேசிய தலையங்கம் என்ன என்று அமைதியுடன் கேட்டார். நான் அதற்கு நான் கண்ட பாரதி என்று பதிலளித்தேன். என்ன என்ன தலைப் புகளின் கீழ் உரையாற்றினீர் என்று மீண்டுமென்

IX
னைக்கேட்டார். நானும் உடனே பதில் கூறினேன். என் பதிலைக்கேட்ட அவ்விர சிகர் ‘தம்பி! தமிழ்த் தாயின் அபிமான புத்திரன் பாரதி, அவன் கொள் கைகளை நற்றமிழ்த்தேன் விட்டரைத்து நம் தமிழ்த் தாயின் நன்னுதவிற் தி லதமிட்டு அவளைத் தன் மானத்துடன் தலை நிமிர்ந்து நடக்கச் செய்தல் உம் தலையாய கடன். நீர் பேசிய ஒவ்வொரு தலைப் புகளும் அதியுன்னத திரவியங்கள். ஆகையால், உடனே அவைகளைத் தொகுத்தெழுதி ஒரு ஆராய்ச் சிக்கட்டுரையாக வெளிவிடும். அதனல் தமிழ் உல கம் பலனடையும்' என்று கூறி என்னை ஊக்குவித் தாா.
அந்த இரசிகரின் ஊக்குதலால் உந்தப்பட்ட நான் மார்கழி விடுதலையில் மிகக் குறுகிய காலத்தில் இவ்வாராய்ச்சிக் கட்டுரைகள் அனைத்தையும் எழுதி, என்னை ஊக்குவித்த இரசிகரை வரவழைத்து அவரி டம் காட்டினேன். இக்கட்டுரைகளை முற்ற முடிய வாசித்த அவ்விர சிகர், *அறம் பொருளின் பம் வீடடைதல் நூற்பயன்’ என்பதற் கமைய உமது கட்டுரைகள் மிக நன்ருய் அமைந்து இருக்கின்றன. ஆனல், உள்ளக் குமுறலுட ன் கவிபுனைந்த List put தியை உணர்ச்சி வசப்பட்டு எழுதிச் சென்ற உமது பேனை, தற்கால எழுத்தாளர்களின் வசன நடை களினின்றும் முற்றும் விலகி, பண்டைப் பேரறி ஞர்களாகிய நாவலர் பெருமான், வித்துவான் தாண்டவராய முதலியார், கல்யாண சுந்தரஞர் போன்ற மேதாவிலாசங்களின் வசன நடையைத் தழுவி மிக நீண்ட வசனங்களாய் அமைந்து விட் டன என்று முக மலர்ச்சியுடன் கூறினார்.
அவர் கூற்றைச் செவிமடுத்த நான் இன்றுள்ள சிறு வசன நடைகள் யாவும் பாடசாலைகளில் தற் சமயம் சிறுவர் சிற்றிலக்கணங்களுக்குக் கூட இட

Page 7
Χ
மில்லாமற்போன காரணத்தால் அடைந்த அறிவின் மாற்ற மன்றி, காலத்தின் மாற்ற மல்ல என்ற உண் மையைச் சற்றுச் சிந்திப்பவர்கள் இலகுவிற் புரிந்து கொள்வார்கள் என்று இலளிதமாகப் பதிலளித்த பொழுது, அவ்விர சிகரும் புன்னகையுடன் என் கூற்றையேற்றுக்கொண்டார்.
நீண்ட நாட்களாகப் பாடசாலைகளில் என் உடல் பொருளாவி அனைத்தையும் அர்ப்பணித்துப் பொறுப் புணர்ச்சியுடன் மெய்ப்பணி புரிந்து வந்த என்னை, சில அன்பர்களும், எனது மாணவர்களும் பல முறைகளிற் கண்டு நீங்கள் ஏதாவது ஒன்று எழுதவேண்டும், எழுதவேண்டுமென்று கேட்டு வந் தார்கள். எனவே, யாவரையும் திருப்திப்படுத்த எண்ணி கான் கண்ட பாரதி என்ற இவ்வாராய்ச்சிக் கட்டுரைகளடங்கிய நூலை என் முதல் நூலாக வெளி யிடுகின்றேன். இவ்வாராய்ச்சிக் கட்டுரைகளில் பாரதியின் பரந்து கிடந்த கொள்கைகளைப் பிரித் துத் திரட்டி வேறுபடுத்தி உரிய தலையங்கங்களின் கீழ் எழுதும் பொழுது சிற் சில இடங்களில் ஒரே மேற்கோள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் காட்டப்படவேண்டியிருந்ததால் கவிதாசிரியரை அடியொற்றி நானும் காட்டிச் சென்றிருக்கின்றேன். எனினும், என் மேற்கோள்கள் அவ்வவ்விடத்திற்குப் புதுமையளித்து நிற்பதை வாசகர்கள் நன்கு அவ தானிக்கலாம். அத்தோடு அமரகவியின் கவிப்போக் கில் அனேகானேக வடமொழி பிரயோகங்கள் எடுத்தாளப்பட்டிருப்பதால் நூலின் சுவை கெடா திருக்க நானும் ஆங்காங்கே சேர்த்து, வசனங் களில் மிடுக்கையும், வீரத்தையும், உதாரத்தையும் , விறுவிறுப்பையும் ஏற்றிச் சென்றிருக்கின்றேன் என் பதையும் வாசகர்களுக்குக் கூறிக் கொள்ள விரும்பு கின்றேன்.

X
எனது ஆராய்ச்சித்தொகுப்பில் பாரதியின் கண் ண ன் கவிதைகளையும், குயிற்பாட்டுக்களையும், ஏன் சேர்த்துக்கொள்ளவில்லை யென்று சில அன்பர்கள் என்னைக் கேட்டபோது, இந்த இரண்டு விடயங்களை யும் உள்ளடக்கி, பல அறிஞர்கள் தேன் சொட்டும் வகையில் ஆராய்ச்சி பண்ணிப் பல நூல்களை வெளி யிட்டிருப்பதாலும், குயிற்பாட்டு என்பது பலரும் கருதுவதுபோல காதற் கருத்தையணுகாது முற்றும் ஞானக் கருத்தையே கொண்டிருப்பதாலும், அவ் வாறே கண்ணன் கவிதைகளும் மக்களைப் பரவசப் படுத்தும் பக்திரசம் நிறைந்து மிளிர்வதாலும் இவ் விரண்டு பகுதிகளையும் இரண்டு தலையங்கங்களாகக் கொண்டு இரண்டு கட்டுரைகள் எழுதமுற்பட்டால் அக்கட்டுரைகளில் ஒலிக்கும் தெய்வீகஞானகானத் தில், சீரழிந்த பாரதத்தின் சிறுமைகண்டு பொங் கிய சீற்றங்கொண்டு சீறியெழுந்த பாரதியைப் பட்டவர்த்தனமாகக் காட்டும் பான்மையில் அமைந் துள்ள கட்டுரைகள் அனைத்தும் கருத்தழிந்து, ஆவே சங் குன்றி, அடங்கியவிந்து, அவன் லட்சியங் களனைத்தும் நிறைவேற வேண்டுமென்று வேண வாக்கொண்டு எழுதிய எனக்குப் பெரும் ஏமாற் றத்தையளித்துவிடும் என்ற காரணத்தாலும், நான் கண்ட பாரதி, வண்ணத் தலைப்பாகை யும் வடிவான பொட்டும் வாகாக முறுக்கிய வீசையையும் உடை யவனுகவல்லாமல் அட்டைப்படத்தில் காட்டப்பட் டிருப்பது போல ஆழ்ந்த துயரில் அமிழ்ந்திருந்து அறிவுபுகட்டிய பாரதியேயாக லானும், அவ்வின் பப் பகுதி என் காட்சிக்கு அப்பாட்பட்ட பகுதியாத லானும், நான் குயிற்பாட்டையும் கண்ணன் கவிதை களையும் இங்கு எடுத்தாய இச்சந்தர்ப்பத்தில் விரும்ப வில்லை என்று கூறிய பொழுது, விஞப்பொறித்த அன்பர்கள் என்பேச்சை ஏற்றுக்கொண்டார்கள்.
எந்தச் சாகியத்தையோ சமயத்தையோ தொழி

Page 8
XII
லாள வருக்கத்தையோ பாரதி என்றுங் கண்டித்த வனல்ல. அதே ரீதியில் அவன் உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டும் பான்மையில் அமைந்துள்ள எனது இச்சிறு நூலுக்கு அன்பர்கள் அனைவரினதும் பேரா தரவு இருக்குமென்று நான் உறுதியாக நம்புகின் றேன். இன்னும் இச்சிறு நூலைத் தொடர்ந்து கம்பன் கட்டிய இராமாயணத் திருக்கோயிலில் கான் கண்ட அற் புத சிகரங்கள் என்ற ஒரு நூலையும் எழுதிக் கொண்டி ருக்கிறேன். ஆயினும், அச்சிறு பனுவல் அச்சக மேறிப் பிரசவ மாவது, எனது முதற் புத்தகமாகிய ‘நான் கண்ட பாரதி”யைச் சமுகம் ஆதரிப்பதைப்
பொறுத்தேயிருக்கும்,
எனது இவ் வாராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுதிஒரு சிறு புத்தக உருவில் அமைவதென்றல், அதற்கு சேனையூர்க் கலாமன்றத்தினரும், மூதூர் நற் றமிழ் இரசிகர் அ. சவரிமுத்து ஆசிரியர் அவர்களுமே காரண ராவர். ஆகவே என் மன மார்ந்த நன்றியறி தலை முந்த முந்த அவர்களுக்குக் கூறிக் கொள்ளுகின் றேன். அத்தோடு எனது நூலுக்கு மதிப்புரை தந் து தவிய அருங் கலைவாணரும் எனது ஆசிரியருமாகிய புலவர் மணி திரு. ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்களுக் கும் எனது வணக்கத்தையும் நன்றியறிதலையுங்கூறிக் கொள்ளுகின்றேன்.
வணக்கம்.
வ. நீக்கொலாஸ்
மூதூர்- 3, Il-9, 65.

ill,
12.
உள்ளுறை
-so
பக்கம்
நான் கண்ட பாரதி . . . . . . I கடவுட் கொள்கையில் நான் கண்ட பாரதி ... .. 8 நான் கண்ட தமிழும் நான் கண்ட பாரதியும் ... ... 19
காந்தீயமும் நான் கண்ட
பாரதீயமும் . 30 நான் கண்ட புதுமைக்கவி 41 நான் கண்ட புரட்சிக்கவி . . 52 (அ) கலைப்புரட்சி (ஆ) சமுதாயச் சீர்திருத்தப்புரட்சி (இ) மாதர் விடுதலைப்புரட்சி (ஈ) விவசாயப் புரட்சி (உ) தொழிற் புரட்சி (ஊ) சுதந்திர உரிமைப் புரட்சி பாப்பாவும் நான் கண்ட
பாரதியும் - 95 நடிப்புச் சுதேசிகள் மத்தியிலே நான் கண்ட பாரதி ... 107 நான் கண்ட தீர்க்கதரிசி 116 மகா பாரதக் கதைகளும் நான் கண்ட பாரதியும் w x w 130 நான் கண்ட பாரதியின் புதிய ஆத்திசூடி 140
நமது கடமைகள் 151

Page 9

நூல்
*பெற்ற தாயும் பிறந்த பொன்னுடும்
நற்றவ வானினும் நனிசிறந் தனவே”

Page 10

நான் கண்ட பாரதி
பிரித்தானியரின் சக்திவாய்ந்த படைப்பலத் தால் பாரதமாதா அடிமையாக்கப்பட்டாள். அவள் கைகளிலும், கால்களிலும் விலங்குகள் பூட்டப் பட்டன. அவள் தேஜசைச் சோபை செய்து நின்ற அருங்க லாபரணங்கள் யாவும் இயற்கை ஏதுக்களின லும், அன்னியர்களின் ஆசங்கைகளினலும் அழிந் தொழிந்தன.
இடையன் பிடிபடக் கிடையாடுகள் எல்லாம் சிதறுண்டுபோகும்’ என்ற யேசுபெருமானின் திருவாய் மொழிக்கு ஒப்பாக, பாரத மாதா சிறைப்படுத்தப் படவே, பாரத சமுதாயம் அன்பு குன்றி, அறங் குன்றி, அடல் குன்றி தங்களின் பண்டைய நிலைகள் அனைத்தையும் மறந்து, உட்பகைகளும், விபரீதங் களும், சண்டைகளும், சச்சரவுகளும், வாக்கு வாதங் களும் பூண்டு சின்னபின்னப்பட்டுச் சிதறுண்டு கிடந் தது, பிரித்தானியரின் ஆயுத பலம் ,அவமான நிலையில் தலைகவிழ்ந்து நிற்கும் தங்கள் பாரத மாதாவைத் தலை நிமிர்ந்து பார்க்கத்தானும் சக்தியில்லா மற் செய்து விட்டது.
அன்னியர் பிடித்து இழுத்து அலங்கோலப்படுத் திய சிகையைச் சீவி முடிய, அவர்களால் வலிந்து இழுத்து உரித்தெறியப்பட்ட அற்புதக் கலையை மீண்டும் எடுத்து உடுத்த, அவர்களால் ஆசங்கைப் படுத்தப் பட்ட கலையாபரணங்களை மீண்டும் அணிய,
W-1

Page 11
2 கான் கண்ட பாரதி
அவர்களாற் பூட்டப்பட்ட கைவிலங்கு கால் விலங் குகளை உடைத்தெறிந்து, அவள் நெற்றியில் திலக மிட்டு, அவளைத் தன் மானத்துடன் தலைநிமிர்ந்து நிற்கச் செய்ய, ஒரு பிள்ளை துணிந்து முன் வராக் காரணத்தால் ஆகுலமடைந்த பாரத மாதா, ஊணற்று, உணவற்று, உறக்கமற்று, உடலை வாட்டி, உயிரை வருத்தி, உயர் தவஞ் செய்தாள், தன் துயர் துடைக்க வல்ல ஒரு தனிப் பெருமகன் - ஒரு வீரத் திருமகன் பிறக்க வேண்டு மென்ற பேரார் வ மேலீட்டால் உந்தப்பட்டு.
அன்னையின் அருந்த வம் அவம் போகவில்லை. அவளது எண்ணக் கோட்டை மண்ணுகவில்லை. அவள் அனுபவித்த அருஞ்சிறை ஆயுட் சிறையாக அமையவில்லை. அருளுருவான ஈசன் அவள் வேண்டு கோளை அநாதரவு பண்ணவில்லை. எனவே 1882-ம் ஆண்டு மார்கழி மாதம் 11ந் திகதி எட்டய புரத் தில் சின்னச்சாமி ஐயரகத்தில், லெட்சுமியம்மாள் வயிற்றில் நின்றும் இருளகற்றப் பிறந்த இளவள ஞாயிறுபோல இளவலாகப் பிறந்தான் பாரதி.
பாலணுகப் பிறந்த பாரதியைப் பஞ்சபூதங்களும் பரிவின்றித் தாக்கிப் பாரதத் தாயின் பரிதாப நிலையைப் பட்டவர்த்தனப்படுத்தின. பிருதுவி, அவள் உடலை உப த்திரவப் படுத்தும் பசியை, பஞ் சத்தை, தாகத்தை முன்வைத்து, “பாலகா ! இதோ பார் உன் தாய் படுந் துயரத்தை’ என்று அவனுக்கு உணர்த்திக் காட்டியது. அப்பு, அன்னையின் குள மாக்கப்பட்ட கண்களை அவனுக்குத் தோன்றச் செய் தது. தேயு, மூண்டெரியும் எரிமலைக் கொப்பாகிய அவள் உள்ளத்தை அவன் கண் முன்னே காட்டி நின்றது. வாயு, உகாந்த காலத்து உருத்திர மூர்த் தியைப் போலச் சீறிவரும் அன்னையின் பெரு மூச்சை அவனுக்கு உணர்த்தி விட்டது. ஆகாயம்,

ாகான் கண்ட பாரதி 3
அவமான நிலையில் தலையைத் தானும் நிறுத்த முடி யாமல் பரிதபித்து நின்றதாயின் அருவுருவத்தை அவனுக்கு அம்பலப்படுத்தியது. இந்த அசங்கத நிலையைக் கண்ட பாலகன், தாங்க முடியாத மன வேதனை கொண்டு கதறிப் பதறிச் சீறிச் சீறி அழு தான.
தாய் மானங் காக்கத் தரணியில் வந்த தனயன் பிள்ளைப்பிறைபோல் வளர்ந்தான். உயரிய சிந்தனை களால் உயர்ந்தான். உள்ளக் குமுறலுடன் உலா வினன், வெள்ளை யுள்ளத்தைக் கள்ளமற கடவுட் கொள்கையால் நிறைத்தான். ஓடினன், ஒடிஞன், வாழ்வின் ஓரங்கட்கெல்லாம் ஓடினன், ஒப்பரிய பாரத மாதா படும் ஒவ்வொரு துன்ப துரித உபாதை களையும் கண்களாற் காணவேண்டும்; பரிகாரந்தேட வேண்டும்; தாய் துயர் துடைக்க வேண்டுமென்ற பேரார்வமிகுதியால் தூண்டப்பட்டு. தாய்படுந் துயரங்கள் அனைத்தையும் கண்ணுரக் கண்ட பாரதி, கொதித்தெழுந்து உணர்ச்சிபொங்கப் பாடினன். அவன் பண்பு நிறைந்த பாடல்களை, பண்ணமைந்த கீதங்களை, கருத்துச் செறிந்த கவிதைகளை, அவன் வாயாரப்புகழ்ந்த அந்தக் கம்பனும், வள்ளுவனும், இளங்கோவும் முன் னின்று கேட்டிருப்பார்களே யானல், அவன் கூற்றை முற்றும் மறுத்து,
'யாமறிந்த புலவரிலே பாரதிபோல் பூமிதனில்
யாங்கணுமே பிறந்ததில்லை உண்மை வெறும் புகழ்ச்சியில்லே”
என்று அவனை வானளவாகப் புகழ்ந்து பாடி யிருப்பார்கள். ஆனல், பாரதி தன்னையொரு கலைஞ னென்ருே கவிஞனென்ருே புலவனென்ருே உலகம் ஏற்றிப் போற்றவேண்டுமென்ற எண்ணங்கொண்டு கவிபாடவில்லை. அந்த வெறும் புகழ்ச்சியைக் குறிக்

Page 12
4. கான் கண்ட பாரதி
கோளாகக்கொண்டு அவன் கவி புனையவில்லை. அவன் ஆசைகளனைத்தும் சிறைப்பட்டுக் கிடக்கும் பாரத மாதாவைச் சிறைமீட்க வேண்டும், அவள் சிறுமை யகற்றவேண்டும், சீர்பெற வாழவைக்கவேண்டும் என்ற பரந்தநோக்கங்களையே மையமாகக் கொண்டு நின்றன.
பாரதத் தாய்மீது வைத்த பாசப்பெருக்கத்தால் அவன் அரசாங்கத்தாரைச் சாடிக் கவிதைகளைப் பாடி பிரசாரங்களைச் செய்து வரும் பொழுதும், ஆங்கிலே பரின் கழுகுக் கண்களுக்கு அவன் ஒதுங்கி ந - க்க வில்லை. அவர்களின் ஆயுத பலங்கண்டு அஞ்சி அடங்கி விடவில்லை. சிறைக்கூடங்களைக் கண்டு சிந்தை கலங்க வில்லை. தூக்கு மரங்களைக் கண்டு திடுக்கிட்டு நிற்க வில்லை.
*பிறந்தவர் யாவரும் இறப்பது றுதியென்னும்
பெற்றியை அறிந்தாரேல் - மானம்
துறந்தறம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது
சுகமென்று மதிப்பாரோ"
என்ற அவனது பண்பு நிறைந்த கவிதைக்கு அவனே எடுத்துக்காட்டாக விளங்கினன். அன்னை மீதுவைத்த ஆராவேட்கையால் தன்னையே மறந்து அவன் பாடிய கவிதைகளின் ஒலி, காற்றுடன் கலந்து வான முகடு மட்டாகச் சென்று வானத்தில் முட்டி எதிரொலித் துத் தெய்வலோகத்தையே திடுக்கிடச் செய்தது. மேகத்திடைப் புகுந்து, மழைக்கால் வழியாகப் பாத லம் மட்டும் பாய்ந்து பாதாள உலகையே அதிர ச் செய்தது. கடலிடைப் படிந்து, அண்ட சாகரங்கள னைத்திலும் பேரமலையை உண்டாக்கி விட்டது. சூரிய கிரணங்களிற் கலந்து, மடமை இருளகற்றி அவன் காட்டிய பாதைகளைக் கட்புலனுக்கிஅப்பாதை களால் அவர்களைத் தவக்கமின்றி நடக்கச் செய்தது.

கான் கண்ட பாரதி 5
இந்த நிலையில் கடல்கள் பொங்கின; சண்ட மாருதம் உறுமியது; மரங்கள் ஆடி அசைந்தன: மலைகள் தகர்ந்தன. இப்படியாகச் சர்வமும் மாறு படவே சீவ ராசிகளைப்பற்றிப் பேசுவானேன். சீவ ராசிகளுள்ளும் அதியுன்னத மனிதர்களின் நிலை களப்பற்றிப் பேசவேண்டுமா? அந்த அருளொலிஇல்லை, சக்திமிக்க புரட்சியொலி - மக்களின் செவித் துளைகளுட் புகுந்து, நரம்பு மண்டலங்களிடைப் பாய்ந்து, உதிரத்துடன் சேர்ந்து, உயிருடன் கலந்து விடவே அகில பாரதமும் பதைபதைத் தெழுந்தது, பாரதத் தாயைப் படு சிறையில் இருந்து மீட்டுப் பண்டைய நிலையிற்கொண்டு சேர்ப்பதற்காக!
பஞ்சத்திற் பிறந்து, மிடியின் மடியிற்றவழ்ந்த பாரதி, தன் மனைவி மக்களின் பசித் துயரத்தைக் கண்டு பலமுறை துடித்து அழு திருக்கின்றன். அவ னும் ஒருநாள் இரு நாட்களல்ல, பற்பல நாட்களாக கூழுக்கு, கஞ்சிக்கு, ஊணுக்கு, உணவுக்கு, கரைந்து, கசிந்து, கண்ணிர் சிந்திப் புலம்பியிருக்கின்றன். இன் பங் கொழிக்கும் இளந் தென்றலை அவன் உடலும் ஸ்பரிசிக்கவில்லை. பஞ்சணை மெத்தையையோ படாடோப வாழ்க்கையையோ அவன் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. இத்தனைக்கும் பதிலாக வாழ்வில் வெவ்விய பாலைவனங்களையும், பயங்கர எரிமலைகளை யும் அவன் தாண்டிச் சென்றிருக்கின் முன். எனவே, அவனை இவ்வித துன் ச் சூழலின் மத்தியிலே படைத்து வழிநடக் கவிட்ட கடவுளை நான் முதற் கண் வணங்குகின்றேன். ஏனெனில் கருணையங்கட வுள் அவனை ஒர் ஐசுவரியவானின் வயிற்றில் உற் பத்தியாக்கியிருந்தால், அவன் மாடிவீட்டிற் பிறந் திருப்பான்; உன்னத உப்பரிகையில் உலாவியிருப் பான்; பஞ்சணை மெத்தையிற் படுத்திருப்பான்; இன்ப சுகத்தில் அமிழ்ந்தியிருப்பான்; பாட்டாளி வருக்கத்தினரின் கண்ணிரை, கம்பலையை, விம்மலை,

Page 13
6 கான் கண்ட பாரதி
பொருமலை, கஷ்டத்தை, கவலையை அவன் காண் பதற்கோ, நுகர்வதற்கோ, அவனுக்கு எவ்வித சந் தர்ப்பமும் சூழ்நிலையும் ஏற்பட்டிருக்க முடியாது. அந்நிலையில் அடிமைத் தளையை அறுத்தெறியக் கூடிய, பாட்டாளிகளுக்கு வாழ்வளிக்கக்கூடிய, உறங் கிக் கிடந்த பாரதத்தை அருட்டிவிடக்கூடிய, மங்கை யருக்கு விமோசனம் அளிக்கக்கூடிய, அதியுன்னதக் கற்பகப்பூங் கொத்துக்கள், அபூர்வமுத்துக் குவை கள், அவன் வாயிலிருந்து உதிர்ந்திருக்கவும் மாட் டாது. எனவே தான் அவனை வறுமையில் வாழ வழி வகுத்த கடவுளுக்கு நான் முதற்கண் வணக்கஞ் செலுத்தினேன்.
உலக நிலையிற் பற்பல உண்மைச் சித்தாந்தங் களையும் விஞ்ஞான சாதனங்களையும் அரசியல் தத்து வார்த்தங்களையும் கண்டு வெளியிட்ட மேதைகள் ஒவ்வொருவரும் விதனத்தின் மத்தியிலே, வேதனை யின் பிடியிலே, வாழ்வின் ஒரத்திலே வாழ்ந்தார்கள் என்பது சரித்திரம் பகரும் உண்மைகளாகும். அப் படிப்பட்ட மேதைகளுக்கு அக்காலத்தில் அடி, உதை, ஆக்கினை, தூக்குமேடை, விஷக்கிண்ணம் சிறைக்கூடம், நாடு கடத்தல் என்பவைகளே பரிசில் களாகக் கிடைத்தன.
அவ்வுத்தமர்களின், அதியுன்னத சிந்தனையாளர் களின் வாழ்க்கை வரலாறுகளைத்தானும் வெளியிட அன்றைய அரசாங்கங்கள் யாவும் மறுத்துவிட்டன. அஃதல்லாமலும் வெளியிடவுங் கூடாதென்று சட் டங்களைக் கொண்டு அடக்கு முறைகளும் செய்துவந் தன். ஆனல், இன்றைய அரசாங்கம், பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில் முதலாய் அவர்கள் வரலாறு களைப் பிரசுரிக்க அனுமதியளித்தமை குறித்து மகிழ்ச்சியடைகின்றேன். இதன் பலனய் இன்று, அவர்கள் கண்ட காட்சிகளும், கொண்ட முடிபு

கான் கண்ட பாரதி /
களும், பயனுள்ள விஞ்ஞான சாதனங்களாகவும் பலனுள்ள அரசியற் றத்துவார்த்தங்களாகவும் அனு தினமும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆகவே, நாம் கண்ணெடுத்துப் பார்க்கக்கூடிய, கையெடுத் துக் கும்பிடக்கூடிய, மாபெருந் தெய்வங்கள் இத் தகைய அற்புதக் கலைஞர்களே என்பதை மன எழுச்சியுடன் கூறுகின்றேன்.
兴

Page 14
கடவுட் கொள்கையில் நான் கண்ட பாரதி
கில சக்கரம் வேகமாகச் சுழன்று கொண்டிருக் கின்றது. உலகு எங்கணும் பகையும், பழியும், பாவ மும், பசியும் பரவிக் கொண்டு வருகின்றன. அறிவு மிகுந்து, விஞ்ஞானம் உயர்ந்து விளங்கும் இக்காலத் தில், பாமர மக்களின் உள்ளங்களில் மட்டு மல்லா மல், படித்து அறிவு ஞானத்தாற் கதித்த மேதைகளின் உள்ளங்களில் இருந்து முதலாய், இறைவனைப் பற்றிய அறிவு குறைந்து வருவதைக் கண்டு வருந்துகின் றேன்.
உலகையும், அதில் அமைந்துள்ள சீவராசிகளை யும், உலகைச் சூழ்ந்துள்ள கோள்களையும், அவைக ளின் அசைவாட்டங்களையும் நோக்குந்தோறும் இறைவனைப் பற்றிய எண்ணம் தோன்ரு திருக்கவே முடியாது. தினமுந் தோன்றி மறைவதாகக் காணப் படும் சூரியன், நிலையாமையை நமக்கு நிமிடத்துக்கு நிமிடம் படிப்பிக்கவில்லையா? அதாவது காலையில் ஒரு பால சூரியனுகப் பிறந்து, பின்பு படிக்கிரமமாய் வளர்ச்சி யடைந்து, தோற்றப் பொலிவாலும், பிர காச ஜோதியாலும், வெம்மையாலும், பூரணத்து வம் பெற்று, மத்தியானம் பன்னிரண்டு மணிக்கு ஒரு முழு வாலிபனகக் காட்சியளிக்கின்றன். பின்பு மதி யத்தாற் சாய்ந்து, சாய்ந்து, செல்லச் செல்ல, ஒளி குன்றி, ஜோதி குன்றி, சோபை குன்றி, வெம்மை குன்றிமாலையில் ஒரு முழு வயோதிபனுகி மறைபவனு கக் காணப்படுகின்றன் .

கடவுட் கொள்கையில் நான் கண்ட பாரதி 9
பணம் படைத்த சிலர் பணப் பெருமையால் கடவுள் ஞானத்திற் சூனியராகின்றனர். சிலர் வறுமைத் துயரத்தால் இறைவனை மறக்கின்றனர். பரம ஏழையாகப் பிறந்து, மிடியின் மடியிற் கிடந்து, இருந்து, நின்று, நடந்து, மடிந்த கார்ல் மாக்ஸ் கூட வெவ்விய வறுமைத் துயரத்தால் இறைவனையே மறந்து “மதம் மக்களுக்கோர் அபினி மருந்து’ என்று கூசாது கூறினன் என்பதை வெகு வேதனையுடன் கூறுகின்றேன்.
ஆனல், நான் கண்ட பாரதி, கடவுட்கொள்கை யில் மேலே காட்டிய தன்மை படைத்தோர் அனை வரிலும் மாறுபட்டவணுகவே காணப் பட்டான். இஃது எவ்வாறென்பதை ஈண்டு ஆராய்வாம்.
பாரதி கடவுளிடத்தில் ஆரா அன்பு பூண்டவன். துன்ப துரித உபாதைகள் அவனைப் புடம் பண்ணித் தூய்மைப் படுத்த உதவினவே யன்றி, எவ்வித உடத் திரவங்களும் அவனை எட்டுணையும் அசுத்தப்படுத்த வில்லை. ஆன்ற அறிவு நிறைந்த சான்றேர்கள், மிகுந்த கடவுள் ஞானம் உடையவர்களாகவே காணப் படுகிறர்கள். W
இக்காலத் தமிழ் காக்கும் இரட்சகர்கள் சிலர் கதை எழுதுகின்ருேம்; கவிதை எழுதுகின்ருேம்; என்று கூறி, கருத்துச்செறி வற்ற, ஒழுக்கக் கேடான பல பல கதைகளையும், கவிதைகளையும், திவ்விய மொழியான தமிழ்மொழியிற் படைத்து, அந்தோ! தமிழ்த் தாய்க்குப் பெருங்குந்தம் விளைவித்து, அவளை அலங்காரஞ் செய்வதற்குப் பதிலாக, அலங்கோலப் படுத்தி, மானபங்கப் படுத்திவருகின்ருர்கள். உண்ண உண்ணத் தெவிட்டாத இன்பம் பயக்கக் கூடிய, உண்டால் உயிரையே வாழ்விக்கக் கூடிய எத்தனை
W-2

Page 15
O கான் கண்ட பாரதி
எத்தனையோ கனிவர்க்கங்கள் இருக்கவும், அவற் றைப் பறித்துப் படையாது, வெறும் காய்களை , நச் சுக் காய்களை, கைச்சற்காய்களைப் பறித்துப் படைத்து, உலகத்தைப் பாழ்படுத்துகின்ரு ர்கள். இக் காரணத்தினலேயே இவர்களின் படைப்புகள் மிகக் குறுகிய கால எல்லையிலேயே இயற்கை ஏதுக்களின் தாக்குதல்கள் எவைகளுமின்றி அழிந்துபட, பண் டைப் பனுவல்கள் அனைத்தும், காற்ரு ல் , கன லால், ஏன்? கடலாற் கூடச் சூறையாடப்பட்டும் அழிந் தொழியாது, புதுப்பொலிவுடன் இன்றும் நின்று நிலவி வருகின்றன.
ஒரு காமுகனை எடுத்துக்கொண்டால், அவன் பார்க்கும் பார்வைகளில் எல்லாம் மங்கையர்களே தென்படுவார்கள். தோன்றும் ஒவ்வொரு இயற் கைப் பொருள்களிலும் அவர்களின் அங்கங்களே காட்சியளிக்கும் அவனுக்கு. இப்படிப்பட்ட காமாந்த காரர்களை, ஆன்ற அறிவு படைத்த சான்றேர்கள், கீழோர் என்று இழித்துப் பழித்துக் கூறியிருக்கின் ருர்கள். உலக மகா கவியாகிய கம்பன், விளை நிலத் திற் களை பிடுங்கச் சென்ற மள்ளர்களின் மன நிலை களைக் கவிதை வடிவிற் பின் வருமாறு சித்திரித்துக் காட்டியிருக்கின்ருன் ,
பண்கள்வாய் மிழற்று மின்சொற்
கடைசியர் பரந்து நீண்ட கண் கைகால் முகம் வாயொக்கும்
களையலாற் களையி லாமை உண்கள்வார் கடைவாய் மள்ளர்
களைகலா துலாவி நிற்பார் பெண்கள்பால் வைத்த நேயம்
பிழைப்பரோ சிறியோர் பெற்றல்

கடவுட் கொள்கையில் கான் கண்ட பாரதி
என்று இவ்வாரு கப் பெண்களில் எல்லையின்றி இச்சை வைக்கும் கா மாந்தகாரர்களைக் கீழோர் என்றும், சிறியோர் என்றும் கூறி, இகழ்ந்து தள்ளுகின்றன் ; தெள்ளுதமிழ்க் கம்பன்.
அறிவு ஞானத்தாற் கதித்த மேதைகளின் தன்மை இதற்கு முற்றும் மாரு னது. அவர்கள் கல் லிலும், புல்லிலும், காற்றிலும், கனவிலும் மாத்திர மல்ல; பெண்களின் அங்கங்களில் முதலாக இறை வனைக் கண்டார்கள் என்று கூறப்பட்டிருக்கின்றது.
ஒரு சில ஞான பாவலர்கள், வேல், வாள், ஆலம் நஞ்சு என்று, கண்டித்து, நிந்தித்து, வசையாகக் கவி தைகள் பாடிய அதே பெண்களின் கண்களிலேயே, திருஞான சம்பந்த மூர்த்தி நாயனுர், இறைவனைக் கண்டதாகக் கூறப்பட்டிருக்கின்றது. அதாவது, ஒரு பெண்மணியின் கண்ணை ஏறெடுத்துப் பார்த்த நாய ஞர், “பெண்ணே! எங்கும் பரந்து எவ்விடத்தும், செறிந்திருக்கின்ற அமலனைப்போல உன் கண்ணுனது முகமடங்களும் பரந்து, அவன் தன் திருமேனியிற் பூசி யிருக்கின்ற திருநீற்றைப் போல உன் வெள் விழியா னது வெளுத்து, அவன் தன் அருள் நோக்கால் என் இதயத்தை நோக்கும் பொழுது என் அகவிருளானது ஒடி ஒதுங்கிக் குவிந்ததுபோல உன் கருவிழியானது குவிந்து காட்சியளிக்கின்றது என்று கூறினர். இப் படிக் கூறிய நாயனரின் கூற்றில், அவரின் ஆன்ம சுத்தி பிரதிபதிப்பதை உற்றுணர்வார் அனைவரும் தெற்றெனப் புரிந்து கொள்வார்சள்,
இந்த நிலையில் நான் கண்ட பாரதியும் ஓர் உயர்ந்த தெய்வ பக்தனுகவே காணப்பட்டான். அவன் கவிதைகளை முற்றமுடியப் படிக்கும்பொழுது அவன் அச்சப்படுங் கட்டம் கடவுள் ஒருவருக்கே என்பது நன்கு புலப்படும். கடவுள் தூணிலும் இருப்

Page 16
2 கான் கண்ட பாரதி
பார்; துரும்பிலும் இருப்பார் என்கின்ற நாடோடிப் பழமொழிகளையும் மீறி, அருவருக்கத்தக்க பண்டங் டங்களைத் தானும் உண்டு மகிழும் காக்கையிலும் மரங்களிலும் ஒலிகளிலும்கூட, இறைவா! உன் திரு வுருவத்தை நான் கண்டேன் என்று கவிகூறும் கூற்றில் இருந்து, அவன் இறைவனிடத் கிற் கொண்டுள்ள ஆரா அன்பின் மிகுதி புலப்படுகின்றது.
“கடிக்கைச் சிறகினிலே கந்தலாலா-நின்றன்
கரியநிறங் தோணுதையே கந்தலாலா" ஆம். காக்கை ஒரு சுகுண பறவை, அது உள்ளே நறு விஷம் பொதிந்து, புறத்தே அழகு நிறைந்த காஞ் சூரங்கனியைப் போன்றல்லாமல், புறத்தே பல முட் களைக் கொண ட, பார்வைக்கு அவலக்கண தோற்றத் தைக் கொண்ட, ஆனல் உள்ளே உயிரையே வாழ் விக்கக்கூடிய தீஞ் சுளைகள் நிறைந்த பலாக்கனி போன்றவோர் பண்புடைப் பறவை. அதனிடத்தில் இருந்து நாம் படிக்கவேண்டிய பாடங்கள் பல இருக் கின்றன.
காலை எழுந்திருத்தல் காணும லின்புறுதல் மாலை குளித்து மனபுகுதல்-சால உற்ருரோ டுண்ணல் உறவாடல் இவ்வைந்தும் கற்ருயே காக்கைக் குணம்.
என்று காக்கைபாடினி யார் கூறியிருக்கின்ரு ர். இப்படிப்பட்ட புனிதப் பற வையின் சிறகில் அமைந்த அற்புத வருணத்தில், அவன் உள்ளங் கவர்ந்த கள்வணுகிய கண்ணனின் திவ்விய நிறத்தைக் கண்டேன் என்று கவி கூறியதில் எவ்வித குறைபாடு மில்லை. பின்பு,
பார்க்கு மரங்களெல்லாம் கந்தலாலா-நின்றன் பச்சை நிறங் தோணுதையே-ாநந்தலாலா
என்று பாடிப் பரவசப்படுகின்ருன்.

கடவுட் கொள்கையில் கான் கண்ட பாரதி 3
இக் கவிதையைச் சிந்திக்கும் பொழுது, மரங்களின் தண்ணளி பொருந்திய பசிய நிறத்தில், திருமாலின் பச்சை நிறத்தை, மரகத வருணத்தைக் கண்டேன் என்று கவி கூறிக் குதூகலித்து நிற்பது, நம்மனக் கண் முன் தோன்றி, நம்மையும் பரவசப் படுத்துவதை நாம் உணராதிருக்க முடியாது.
மரங்கள் இறைவனின் படைப்புகளுள் ஒர் அபூர் வப் பொருள்கள். அவை மனிதனுக்காகவே படைக் கப் பட்டவை. இயற்கை ஏதுக்களைத் தமக்கு ஆதார மாகக் கொண்டு மரங்கள் முளைத்து வளருகின்றன. அவ்வாறு வளருங்காலத்தில், பகல் வேலைகளில் மணி தன் வெளியில் உலா விவர வேண்டியவனப் இருப்ப தால், அவனுக்கு அநுகூலமான பிராண வாயுவை வெளிவிட்டுப் பிரதிகூலமாகிய கரியாமில வாயுவை உட்கொள்ளுகின்றன . அப்படி வளர்ந்து வரும் பொ ழுது, நறு நிழலைக் கொடுத்துதவுவதோடு, சுகந்த மலர்களையும் அவிழ்த்து, தூய காற்றைக் கொடுத்து தவுவதுடன், நற்காய்களுடன் கனிகளையும் கொடுத்து மனிதனைத் தாபரிக்கின்றன. பின்பு இறந்தும் விற காகி, விறகெரிந்த கரியும் பயனுடைப் பொருளாகி, கரி எரிந்த சாம்பலும் மனிதனுக்கு உபயோகப் பொருளாகவே உதவுகின்றது இப்படியாக
'அன்பிலார் எல்லாங் தமக்குரியர் அன்புடையார்
என்பு முரியர் பிறர்க்கு” என்ற தேவர் குறளுக்குப் பூரண எடுத்துக்காட்டாக விளங்கும் மரங்களின் பசியதோற்றங்களில், திருமாலின் மர கத நிறத்தைக் கண்டேன் என்று கவி கூறிய தன்மை யில் பெருமையே அன்றிச் சிறுமைக்கு எள்ளளவும் இடமேயில்லை. பின்பு
*கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா-நின்றன்
கீதமிசைக்குதடா நந்தலாலா’

Page 17
4. ாகான் கண்ட பாரதி
என்று கூறிக் கசிந்து உருகிநிற்கின்றன். என்னை; அஃறிணைப் பொருள்களாகிய, இயங்குந் தன்மை பொருந்திய பூச்சியினங்கள், புள்ளினங்கள், விலங் கினங்களின் ஒலிகளில் மட்டுமல்லாமல், மனித னுடைய மகிமை ஒலியிலும், மோதியடிக்கும் கட லொலியிலும், மின்னியிடிக்கும் இடியொலியிலும், குமுறியடிக்கும் காற்ருெ லியிலும் ஈருக, அவன் அன் புக் கண்ணனின் அற்புதப் புல் லாங் குழலின் கீத ஒலியைக் கேட்டேன் என்று கூறியதில் ஆச்சரியத் திற்கு அற்பமும் இடமில்லை.
இப்படியாக மகிமை பொருந்திய, மகா வல்ல பம் படைத்த தெய்வத்தின் பிரதாபத்தை, காணும் பொருள்கள் அனைத்திலும் கண்டு களிக்கும் பாரதி யின் கடவுள் பக்தியை நாம் போற்ரு திருக்கவே முடியாது. இன்னும், பாப்பாவுக்குப் புத்திபு கட்டும் பொழுதும்,
"உயிர்கள் இடத்தில் அன்பு வேணும் - தெய்வம்
உண்மை யென்று தானறிதல் வேணும்” என்று அஹிம்சை என்கின்ற உறுதிப் பொருளை இறை ஞானத்தோடு சேர்த்துப் பாப்பாவுக்கு ஊட்டிப் பர வசப் படுகின்றன். அப்பால் ,
துன்பம் கெருங்கி வந்த போதும் - நீ
சோர்ந்து விட லாகாது பாப்பா அன்பு மிகுந்த தெய்வம் உண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பஈ. என்னும் இக்கவிதையில் கடவுள் ஞானத்தைப் பால பரு வத்திலேயே ஊக்கம், உற்சாகம், விடாமுயற்சி, சுறு சுறுப்பு ஆகிய உயரிய குணங்களுடன் சேர்த்துக் கொடுத்து ஆனந்திக்கின்ருன். அஃது எவ்வாறெனில் பாப்பா! உன்னை எவ்வித துன்பங்கள் வந்தடைந்த பொழுதிலும், நீ கொஞ்சமேனும் சோர்வடைய

கடவுட் கொள்கையில் கான் கண்ட பாரதி 5
வேண்டியதில்லை. அன்பு மிகுந்த தெய்வம் ஒன்று இருக்கின்றது. அத் தெய்வத்தை நீ சரணடை. அத் தெய்வம் சகல கேடுகளிலும், துன்பங்களிலும் இருந்து உன்னைப் பாதுகாத்து இரட்சிக்கும் என்று கூறியிருக்கின்றன்.
இவ்வாரு கப் பாரதி கூறிய இக்கூற்று யேசு
பெருமான்
"எவனும் சிறுவர்களைப் போல் ஆகாவிடில் மோட்ச இராச்சியத்துக்குள் பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குக் கூறுகின்றேன்” என்று பகர்ந்த அதியுன்னத வாக்கியத்தின் உட்பொருளைத் தாங்கி நிற்கின்றது. அஃது எப்படியெனில் குழந்தைகளுக் குத் தங்களில், தங்களின் தேக பலங்களில், தங்க ளின் அசைவாட்டங்களில், கடுகளவும் நம்பிக்கை இல்லை. நாய் குலைத் தாலும், மாடு கதறினுலும், பூனை சீறினலும், அம்மா! அம்மா !! அம்மா!!! என்று அழுது, அழுது, தங்கள் தங்கள் தாய் மார் களையே தாவித் தாவிப் பிடிப்பார்கள் சரணடை வார்கள். பயம் மறந்து, அழுகை தணிந்து ஆறுதல் பெறுவார்கள். அவ்வாறே நீங்களும் உங்கள் சக்தி யில், உங்கள் வல்லமையில், எள்ளளவும் நம்பிக்கை வையாது, யாவற்றிற்கும் நம்மைச் சரணடையுங் கள். நாம் உங்களுக்கு ஆறுதல் அளிப்போம் என்று கூறிய கூற்றைத் தழுவி நிற்கின்றது.
இப்படியாகப் பாரதி தடித்த கடவுள் பக்த ஞகக் காணப்பட்டான். தான் வழிபடு கடவுளாகச் சிவ பெருமானைக் கைக்கொண்ட போதிலும் ஏற் புடைக் கடவுளாகத் திருமாலையே அரிச்சித்து வந் தான். திரு மாலில் அவன் வைத்திருந்த ஆழ்ந்த அன்புக்கு அவன் கவிதைகளே அணையாத் தீபங்கள்

Page 18
6 நான் கண்ட பாரதி
போல் நின்று கரிகூறுகின்றன. அவன் தன் கவிதை களில் கண்ணன் என் தந்தை என்றும், தோழ னென்றும், தாய் என்றும், சேவகனென்றும், அரச னென்றும், சீடன் என்றும், குரு என்றும், குழந்தை என்றும், விளையாட்டுப் பிள்ளையென்றும், காதலன் என்றும், காதலியென்றும், கண்ணம்மா என்றும், அன்பு ததும்ப, என்பு முருகப் பாடிப் பாடிப் பரவசப் படுகின்றன். அத்துடன் சத்தியையும், வினயகரை யும், முருகனையும், துற்கையையும், இலட்சுமியையும், சரசுவதியையும் அவ ன் ஆரா அன்புடன் ஆராதிக் கின்றன்.
இவ்வாறு அவன் சைவ சமயக் கொள்கைகளில், கோட்பாடுகளில், அழுந்திக்கிடந்த பொழுதிலும், மற்றும் சமயவாதிகளைப்போல ஏனைய சமயங் களையோ அவைகளின் தத்துவார்த்தங்களையோ என்றும் கண்டித்தவன் அல்லன் எச்சமயமும் பாவத் தைச் செய்; புண்ணியத்தை விலக்கு என்று கூறி யதேயில்லை. சகல சமயங்களும் பாவத்தை விலக் குங்கள் புண்ணியத்தைச் செய்யுங்கள் என்றே போதிக்கின்றன. இவ்வுண்மையைப் பரிபூரணமாகத் தெரிந்துகொண்டவன் பாரதி.
யேசுக் கிறிஸ்துவைப்பற்றி அவன் கூறும் பொழுது:
ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்
எழுந் துயிர்த்தனன் நாளொரு மூன்றில் கேசமா மரியா மக்த லேணு
கேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள் தேசத்தீர் இதன் உட்பொருள் கேளிர்
தேவர் வந்து கமக்குட் புகுந்தே காசமின்றி கமை நித்தங் காப்பார்.
கம்ம கக்தையை காம்கொன்று விட்டால்.

கடவுட் கொள்கையில் கான் கண்ட பாரதி 7
அன்புகாண் மரிய மக்த லேணு
ஆவி காணுதிர் யேசுக் கிறீஸ்து முன்புதீமை வடிவினைக் கொன்ருல்
மூன்று காளினில் கல்லுயிர் தோன்றும் உண்மை என்ற சிலுவையிற் கட்டி
உணர்வை ஆணித் தவங்கொண்டடித்தால் வண்மைப் பேருயிர் யேசுக்கி றிஸ்து
வான மேனியில் அங்கு விளங்கும்
என்றெல்லாம் இப்படியாக மன்னுயிரை மீட் கத் தன்னுயிரைப் பரித்தியாகஞ் செய்த கத் தரை, அவரின் மகிமைப் பிரதாபங்களை விளக்கி, அவரை அடையும் வழிவகைகளையும் கவி கூறிய பான்மையில் அவன் ஒகு கத்தோலிக்கக் கவிஞணு? என்று கூட ஐயுறவேற்படுகின்றது. அத்துடன் அவன் நின்று விடாது இஸ்லாமிய மதத்தை எடுத்து
அல்லா அல்லா அல்லா பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி அண்டங்கள் எல்லாத் திசையிலுமோர் எல்லையில்லா
வெளி வானிலே நில்லாது சுழன்ருேட நியமஞ் செய்தருள் நாயகன் சொல்லாலும் மனத்தாலும் தொடரொணுத
பெருஞ்சோதி அல்லா அல்லா அல்லா கல்லாதவ ராயினும் உண்மை சொல்லாத
வராயினும் பொல்லாதவ ராயினும் தவ மில்லாத வராயினும் நல்லாரு ரை நீதியின் படி நில்லாதவ ராயினும் எல்லாரும் வந்தேத்தும் அளவில் யமப யங்
கெடச்செய்பவன் அல்லா அல்லா அல்லா

Page 19
8 கான் கண்ட பாரதி
என்று இவ்வாருக இஸ்லாமிய மதத்தின் மகி
மைத் தத்துவங்களை, மகத்தான பெருமைகளை, மாநில மக்கட்கு எடுத்தோதிய தன்மையில், இவன்
ஒர் இஸ்லாமிய பக்தனே? என்றுகூட ஐயப்பட
வேண்டியிருக்கிறது. எனினும்,
பூமியிலே கண் டமைந்து மதங்கள் கோடி
புத்த மதம் சமண மதம் பார்ஸி மார்க்கம் சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்
ஸநாதனமாம் ஹிந்து மதம் இஸ்லாம் யூதம் நாமமுயர் சீனத்துத் தாவு மார்க்கம்
நல்ல கண் பூசிமதம் முதலாம் பார்மேல் யாமறிந்த மதங்கள் பல வுளவாம் அன்றே
யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே
என்ற அவன் கவிதையில் இருந்து, இறைவன் என்பவன் ஆழங்காண முடியாத ஒரு பேராழி. ஒவ்வொரு சமயங்களும் அவ்வாழியில் வந்து கலக் கும் நதிகள். நதிகள் சமுத்திரத்தில் இரண்டறக் கலத்தல் போல, நாமும் ஒவ்வொரு சமய வழியாலும் சென்று இறைவனெடு ஒன்றித்து இரண்டறக் கலக்க வேண்டும். இதுவே அவன் போதனை. இவைகளைக் கொண்டு பார்க்கும் பொழுது, இம்மகான் கடவுட் கொள்கையில், சர்வமத சமரசம் படைத்தவன் என்
பது இனிது விளங்குகின்றது. 次

நான் கண்ட தமிழும்
நான் கண்ட பாரதியும்
திமிழ், ஈடு இணையற்ற ஒரு திவ்விய மொழி. அதன் ஆசிரியர்கள் ஈசனும் அவன் மகன் முருகனுமே என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றர்கள். இவ் வரலாறு,
* 'இரு மொழிக்கும் கண்ணுதலார் முதற் குரவர்'
(காஞ்சிப்புராணம்) என்பதனுலும் *ஆதியிற்றமிழ் நூல் அகத்தியற் குணர்த்திய
மாதொரு பாகனை வழுத்து தும்" (பழம்பாடல்)
என்பதனலும் “குறுமு னிக்கும் தமிழுரைக்கும் குமரன்” *அகத்தியனர் க்குத் தமிழை அறிவுறுத்த
செந்தமிழ்ப் பரமாசாரியணுகிய ஆறுமுகக்
கடவுள்' (தொல்காப்பியப் பாயிரவிருத்தி. சிவஞா.) என்பவைகளாலும் அறியக் கிடக்கின்றது. இன்னும் ஒரு கவிஞன் புல வர் புராணத்தில், **கண்ணிகர் மெய்யுஞ் சென்னிக் கணமுற
ழினத்தின் கூறும் திண்ணிய புயங்க ளே போற் றிகழ்தரு
முயிரும் வேறென் றெண்ணிடற் கரியதாகும் எஃகமு மியலிற் காட்டும் புண்ணிய முனிக்கோன் செவ்வேள் பொற்பதத்
தடிமைதானே’

Page 20
20 கான் கண்ட பாரதி
என்று செப்பிய கவிதை மிக மிக அற்புதம் பொதிந்ததாகக் காணப்படுகின்றது. அஃது எவ்வா றெனில், முருகனுக்குப் பதினெட்டுக் கண்கள் இருக் கின்றன. அதேபோல தமிழ் நெடுங் கணக்கிலும் பதினெட்டு மெய்யெழுத்துக்கள் இருக்கின்றன. முருகனுக்குச் சென்னிக் கணங்கள் ஆறு இருக்கின் றன. அதேபோல தமிழ் நெடுங்கணக்கில் உள்ள எழுத்துக்கள், வ ைகணம் ஆறு, மென்கணம் ஆறு, இடைக்கணம் ஆறு என்று பாகுபாடு செய்யப்பட் டிருக்கின்றன. முருகனுக்கு திண்ணிய புயங்கள் பன்னிரண்டு இருக்கின்றன. அதே போல தமிழ் நெடுங்கணக்கிலும் திகழ்தரும் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு இருக்கின்றன. முருகனுக்கு பராக் கிரம விருதாகிய வெற்றிவேலாயுதம் ஒன்று இருப் பதுபோல தமிழ் நெடுங்கணக்கிலும் ஓர் ஆய்த எழுத்து இருக்கின்றது. எனவே முருகு என்ருல் அழகு. முருகன் என்ருல் அழகன். அதே பான்மை யில் தமிழ் என்ரு ல், இனிமை; அழகு அமிழ்து. ஆகவே முருகனே தமிழைப் படைத்து, தமிழாய் இருந்து, தமிழிைக் காத்து வருகின்றன் என்று மேலே காட்டிய கவிதை பறையறைகின்றது.
நான் ஒரு நாள் ஒரு தமிழ் அறிஞருடன் இருந்து உரையாடிக்கொண்டு இருந்தபொழுது, தமிழ் இனத் திற்கு ஒரு காலத்திலாவது விமோசனம் என்பது ஏற்படா கா ? விடிவென்பது வராதா? ஏற்றமென் பது இராதா? உயர்வு என்பது கிடையாதா? இவர் களுக்கும் ஒற்றுமைக்கும் வெகுதூரமா? எப்படி இத் தமிழ் இனம் உய்யமுடியும் என்று கூறியபொழுது, அத் தமிழ் அறிஞர் என்னைப் பார்த்து ‘நீர் என்ன கூறுகின்றீர்? தமிழருள் பிளவும் பிரிவும் பகைமை உணர்ச்சியும் உயர்வும் தாழ்வும் இன்று நேற்றுத் தோன்றியவையா? இப்பொல்லாத குணங்கள் தமிழ னுக்குப் பிறப்புரிமையான சொத்துக்கள் அல்லவா?

நான் கண்ட தமிழும் நான் கண்ட பாரதியும் 2
முடியுடை மூவேந்தர்கள் என்று நாம் பெருமையா கப் பேசும் சேர சோழ பாண்டியர் என்ற மூவரசர் களும் என்ரு வது ஒற்றுமையாக வாழ்ந்தார்களா? அன்றியும் தமிழிலேயே தமிழ் இலக்கணத்திலேயே உயர்திணை, அஃறிணை யென்றும், வல்லினம், மெல்லி னம், இடையினம் என்றும், இனப் பாகுபாடுகள், சாதிப் பிரிவுகள் உருவாகி இருக்கின்றனவே. எனவே, இப்பகைமை உணர்ச்சி, இச்சாதிப் பிரிவு, உடலோ டல்ல, உயிரோடு சேர்ந்த வியா தியல்லவா? இதை எப்படி நீக்கமுடியும்? பிறப்பிலே உண்டானற் பேய்க்கிட்டுத் தீருமா?’ என்றிப்படிச் சரளமாகப் பேசி முடித்தார்.
அப்பெரியாரின் பேச்சுக்களை அமைதியுடன் கேட்டுக் கொண்டிருந்த நான், அவரைப் பார்த்து ஐயா! நீங்கள் கூறுவது சரிதான். ஆனல் தமிழ் என்ற பதத்தைச் சற்றுப் பரிசீலனை பண்ணிப் பார்த் தீர்களா என்று மிகுந்த பணிவுடன் கேட்டேன். அப் பொழுது அப்பெரியார் ஆச்சரியத்துடன் என்னை நோக்கினர். உடனே நான் சிங்களம், சிங்களம், சிங் களம் என்று அடுக் கடுக்காகவும், சற்று விரைவாக வும், பல முறை கூறிப் பாருங்கள். அப்பொழுது இரண்டாம் மூன்ரும் முறை உச்சரிப்பின் பின், சிங் களம் சிங்களம் என்ற தொனி முற்றும் மாறி, களஞ்சி, களஞ்சி என்ற தொனி பிறக்கின்றதல் லவா? அவ்வாறே இங்கிலிஸ், இங்கிலிஸ் என்று உச்ச ரிக்கும்பொழுது, இங்கிலிஸ் என்ற பதம் அடியோடு மாறி, சிங்கிலி, சிங்கிலி என்ற தொனி பிறக்கின்ற தல்லவா? அதேபோல் தமிழ் தமிழ் என்று அடுக்கடுக் காய் உச்சரிக்கும் பொழுது, இரண்டாம் மூன்ரும் முறை உச்சரிப்பின் பின், தமிழ் என்ற ஒலி அறவே மாறி, அமிழ்து அமிழ்து என்ற அற்புத ஒலி தோன்ற வில்லையா? ஆகலின் இத் தமிழ் என்று சொல்லப்பட்ட திவ்விய அமிழ்து சாவா மருந்து என்ன என்ன

Page 21
22 நான் கண்ட பாரதி
எழுத்துக்களின் கலப்பால் உண்டாக்கப்பட்டது என் பதை உன்னிப் பாருங்கள். 'த' என்ற வல்லின எழுத் தும், “மி” என்ற மெல்லின எழுத்தும், ‘ழ்‘ என்ற இடையின எழுத்தும் சரி சமனகக்கொண்டு, கலந்து உருவாக்கிய பதம் அல்லவா தமிழ். அவ்வாறே உயர் திணை, அஃறிணை என்ற சாதிப் பிரிவுகளும், மக்களை யும், தேவரையும், நர கரையும் ஒரு நிரையிலும், ஏனைய உயிருள் ள, உயிரற்ற, நிலையியல், இயங்கியற் பொருள்கள் அனைத்தையும், பிறிதொரு நிரையிலும் வைத்து, வகுக்கப்பட்ட பிரிவுகளன்றி, மற்றப்படிக் கல்ல. இவைகளில் இருந்து நாம் கருதவேண்டியது என்னையெனில், தமிழுக்குக் குரவன் இறைவன் அவன் சமுகத்தில் சாதிப்பிரிவுக்கு, உயர்வுக்கு, தாழ் வுக்கு இடம் ஏது? ஆகையால் அருள் வடிவான இறைவன் யாவரையும் சமப்படுத்தவே, மூவின எழுத்துக்களையும் சமனுகக் கொண்டு, தமிழென்னும் திவ்விய அமிழ்தைப் படைத்து, தமிழ் வடிவாய்க் காட்சியளிக்கின்றன். ஆகையால் நாமும் இனப் பூசல்களைக் குழிதோண்டிப் புதைத்து, தொழில் வாரி யாக மக்களைப் பிரித்துப் பிளவுபடுத்தும் கீழ்த்தர மனப்பான்மையைச் சிதறடித்து, யாவரும் ஒரு குலம்; ஒரு இனம்; ஒரு தாய் பிள்ளைகள்; என்ற அடிப்படை யில் செயல் புரிந்தால் அன்றி, நம் இனம் ஒரு பொழு தும் முன்னேற முடியாது என்று நான் கூறியபொ ழுது, அப்பெரியார் பதிலொன்றும் கூரு மல் மெளன மாய் இருந்தார்.
ஆனல் நான் கண்ட பாரதி, அடிமை விலங்கு பூட் டப்பட்டு, அவலக்கண நிலையிற் கிடந்த பாரதத்தை அவதானமாகப் பார்த்தான். அப்பப்பா! தீண்டாச் சாதி, அணுகாச் சாதி, தொடாச் சாதி, நெருங்காச் சாதி என்ற, எண்ணற்ற சாதிப் பிரிவுகளால் நாடு பிளவுபட்டுக் கிடந்ததைக் கண்டான்.

கான் கண்ட தமிழும் கான் கண்ட பாரதியும் 23
'ஆயிரம் உண்டிங்கு ஜாதி" என்று அவன் எடுக்கும் கவிதையடியில் இருந்து, அன்று பாரதத் தில் இருந்த சாதிப் பெருக்கம் புலப்படுகின்றது.
இக்கோரக் காட்சிகளைக் காணப் பொறுக்க வில்லை அவனுக்கு. எப்படி இக் கொடும்பிணியில் இருந்து நாட்டை விடுவித்து, ஒன்றுபட்ட ஒரு இனத்தை , ஒப்பற்ற ஒரு சமுதாயத்தை உண்டாக்கு வேன் என்று சிந்தித்தான். அவன் சிந்தனையில் எண் ணற்ற எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்ருக வந்து கொண்டிருந்தன. தேசம் அப்பொழுது இருந்த நிலை யில் எதையும் சாவதானமாகவே கூறவேண்டி இருந் தது. திடீரென்று ஒன்றைக் கூறிவிட்டால், தலையே பறந்துவிடக் கூடிய சூழ்நிலையது. மன்னணு ய் இருந் தாலும்சரி; மகிபனுய் இருந்தாலும் சரி; குபேரனுக அல்லது அமரனக இருந்தாலும் சரி, அவர்களைத் தங் கள் தங்கள் குலங்களிற் சேர்த்துக் கொள்ளவோ களியாட்டு வைபவங்களிற் கலக்கச் செய்யவோ கலப்பு மணங்களுக்கு இடங் கொடுக்கவோ ஒரு வேடன், ஒரு காடன், ஒரு தோடன், ஒரு புலையன் தானும் சம்மதங் கொடுக்கவே மாட்டான் அப்பொ ழுது இருந்த சூழ்நிலையில்.
ஒவ்வொரு தொழிலாலும் பிரிந்து வாழ்ந்து வந்த மக்கள், தத்த மக்கு தொழில் வாரியான ஒவ்வொரு பெயரைச் சூடிக்கொண்டு, அப்பிரிவுகளுக்கு குலங் கள் என்ற பெயர்களையும் இட்டு, வேறுபட்டு ஒழுகி வந்தனர். இவைகளை விளக்கப் பண்டைத் தமிழர் வரலாறுகளில் அநேகாயிரங் கதைகள் இருந்த பொழுதிலும் அறிவு ஞானத்தாற் கதித்த இக்காலத் திற்கூட, இத் தொழில் வாரியான இனப்பிரிவு உட லோடு சேர்ந்த வியாதியைப் போல ஒட்டிக் கொண்டே வருகின்றது. இதை விளக்க மிகச் சமீப

Page 22
24 கான் கண்ட பாரதி
காலத்தில் நடந்த ஒரு வரலாற்றை ஈண்டு குறிப்பிடு கின்றேன்.
ஒர் ஊரில் வேளிர் குல மக்களும், மீனவர் மக்க ளும், மலிந்து வாழ்ந்து வந்தார்கள்; இவ்விரு குலத் தவரும், சகலத்திலும் உயர்ந்து விளங்கிய இருபெருந் தலைவர்களின் அதிகாரங்களுக்கு அடங்கி நடந்து வந் தார்கள். வேளிர் மக்கள் தாங்களே பெரியவர்க என்றும், மீனவர்கள் அப்படியல்ல, பெரியவர்கள் தாங்களே என்றும் பெருமைப்படப் பேசி வந்தார் கள். இப்படியாக இரு சமூகத்தாரும் தாம் தாமே பெரியவர்கள், மேலானவர்கள், உயர்ந்தவர்கள் என்று வயிரம் பிறக்கப் பேசிவரும் பொழுது, இரு சமூகத்தாரிடத்திலும் பெரிய பெரிய சண்டைகளும், சச்சரவுகளும், சதா உண்டுபட்டுக் கொண்டே வந் தன. இப்படியாக நடந்துவரும் நாளில், ஒருநாள் வேளிர் குலத் தலைவன், மீனவர் தலைவனைத் தன் வீட் டில் நடந்த திருமணம் ஒன்றுக்கு விருந்தினணுய் வரும்படி மண ஒலையனுப்பி வரவழைத் திருந்தான். திருமண அழைப்பை அன்புடன் ஏற்றுக்கொண்ட மீனவர் தலைவன், இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு குதிரை வண்டியில் வரிசை வழுவாது விமரிசை யாகச் சென்று, மணமண்டபத்தை அடைந்தான். அங்கே சிறிது நேரம் சல்லாபஞ் செய்ததன் பின், வேளிர் குலாதிபதி மீனவர் தலைவனைப் பார்த்து, நாம் இனி ஐக்கியமாய் வாழவேண்டும். நமக்குள்ளே பகைமை என்பது இனியிருக்கக் கூடாது. வாரும் உணவருந்துவோம் என்று கூறி அவர் கையைப் பற்றி ஈர்க்க, மீனவர் தலைவன் புன்னகை புரிந்துகொண்டு அன்பரே! நாம் இருவரும் பகைத்தோ பிரிந்தோ ஒரு பொழுதும் வாழவே முடியாது. நாம் இரு வரும் என் றென்றும் ஒன்றித்து வாழவேண்டியவர்களே! என்று கூறியபடியே வேளிர் தலைவனின் பின் சென்று ஒர் இடத்தில் இருவருமாக அமர்ந்திருந்தார்கள்.

கான் கண்ட தமிழும் கான் கண்ட பாரதியும் 2S
அவ்வேளையில் உணவு உண்பதற்கு தலைவாழை இலைகள் சம்பிரதாயப்படி போடப்பட்டுக் கொண்டி ருந்தன. பின் வாழையிலைகளிற் சோறும் போடப் பட்டது. அதைக் கண்ட வேளிர் குலா திபன் மீனவர் தலைவனைப் பார்த்து, அன்பரே! பார்த்தீரா இந்த வேளாளனின் பெருமையை? இவ்வளவு அழகாகக் கட்டப்பட்ட கலியான மண்டபத்தில், இவ்வளவு விமரிசையாகக் கட்டப்பட்ட வெள்ளையின் கீழ், வரிசை தவருது விரிக்கப்பட்டிருந்த பாயின்மேல், விரிக்கப்பட்டிருந்த வெள்ளையின் மேல் போடப் பட்ட இலையின் மேல் வந்து குந் திவிட்டானே இந்த வெள்ளாளன்! என்று பெருமிதமாய்ப் பேசிய பொழுது, மீனவர் தலைவன் புன்முறுவல் பூத்து, அவர் வார்த்தைகளை ஏற்ற பாவனையில் தலையை அசைத்தார். பின்பு பொரித்த இரு லை உணவு பரி மாறும் ஒருவன் கொணர்ந்து உச்சிச் சோற்றின் மேல் வைத்தான். அதைக் கண்ட மீனவர் தலைவன், வேளிர் குலாதிபதியைப் பார்த்து, அன்பரே! பார்த் தீரா இந்த மீனவனின் மமதையை? இவ்வளவு அழ காகக் கட்டப்பட்ட கலியாண மண்டபத்தில், இவ்வ ளவு விமரிசையாகக் கட்டப்பட்ட வெள்ளையின் கீழ், வரிசை வழுவாது விரிக்கப்பட்டிருந்த பாயின் மேற் போடப்பட்டிருந்த இலையின் மேல், வந்திருந்த வேளாள னின் தலையின் மேல், வந்து குந்திவிட்டானே இந்த மீனவன்! என்று திருப்பி படித்தபொழுது, வேளிர் குலாதிபதி வெட்கித் தலைகுனிந்தார்.
ஆகையால், ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு வரின் உதவியும் தேவை. இவ்வையகத்தில் எலனும், என்றும், பிறைெருவனின் உதவியெதுவும் இன்றித் தானக ஒரு பொழுதும் வாழமுடியாது என்ற உண் மையை, இந்த அதியற்புத அணுயுகத்திற் கூட, மக்
W-4.

Page 23
26 நான் கண்ட பாரதி
கள் தெரிந்து கொள்ளவில்லையென் ருல், பண்டைக் காலத்தைப் பற்றிப் பேசுவானேன்?
இவ்வாரு க மக்கள் வருணுச்சிர மக் கட்டுப்பாட் டில் வலுவுற்றிருந்த வேளையில், அவர்களைப் பண் படுத்தி, அவர்கள் இதயங்களை உருக்கி, அவர்களைச் சீராக்கி, ஒரு நேரான பாதையில் வழிநடத்துவதென் முல், பாரத நாடு அப்பொழுது இருந்த நிலையில், இவ் வேலே மிக மிகக் கடினமான ஒரு கருமமாகவே இருந்து வந்தது. ஆனல் இரும்பு மனம் படைத்த பாரதி, தன் கொள்கைகளைக் கூறுவதற்கு என்றும் பின்னின்றவனல்லன். எனினும் அவன் கூறும் சமூ கம் யார்? தன் தாயகத்தான்; தன் சகோதரன் அதி லும் பாமரன் அவனைச் சாவதானமாகத் தானே திருத்தவேண்டும். அதற்காக முரசு என்ற பகுதி யில் முரசை முழக்கி, தன் கொள்கைகளை விளக்கி யாவருக்கும் அறிவு புகட்டி வைக்கின்றன்.
காலு வகுப்பும் இங்கு ஒன்றே-இந்த
கான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே-செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி.
ஒற்றைக் குடும்பங் தனிலே-பொருள்
ஓங்க வளர்ப்பவன் தந்தை
மற்றைக் கருமங்கள் செய்தே-மனை
வாழ்ந்திடச் செய்பவள் அன்னை.
ஏவல்கள் செய்பவர் மக்கள்-இவர்
யாவரும் ஓர்குலம் அன்றே
மேவி அனைவரும் ஒன்ருய்-கல்ல
வீடு கடத்துதல் கண்டோம்:
ஒரு உடலின் உள்ளுறுப்புக்களையோ அன்றி வெளியுறுப்புக்களையோ எடுத்துக் கொண்டால்,

கான் கண்ட தமிழும் கான் கண்ட பாரதியும் 27
அவைகளில் எந்த ஒரு சிறிய உறுப்பையும் அநா தரவு பண்ணினல், உடல் வளம் பெருததுடன் உயிர் வாழவும் முடியாமற் போகவும் கூடும். மூளையில் ஒரு நரம்பு வெடித்தாற்போதும், வாழ்வே முடிந்துவிடும். அவ்வாறே உலகில் எல்லாருக்கும் எல்லாருடைய வும் உதவி ஒத்தாசைகளுந் தேவை. ஒரே குடும்பத் தில நாற் சாகியத் தாருடையவும் தொழில் வாரி யான ஒழுக்க முறைகள் நடைபெறுவதையே மேலே காட்டிய கவிதைகள் கூறி நிற்கின்றன. இவைகளைக் கொண்டு தந்தையை ஆண்டான் என்றும், தாயை, மக்களை, அடிமைகள் என்றும், இழிதொழில் புரிபவர் கள் என்றும் கூறமுடியுமா என்று அன்பு ததும் பக் கேட்கின் முன்?
எங்கள் வீட்டில் ஒரு வெள்ளைப் பூனை இருந்தது. அருமையான அழகான வருணங்களைக் கொண்ட பல குட்டிகளை அப்பூனை ஈன்றது. அக்குட்டிகள் யாவும் அப்படிப் பல வருணங்களைக் கொண்டிருந்தாலும், அவை எல்லாம் ஓர் இனம்; ஒரு குலம்; ஒரு தாயின் குட்டிகள் என்பதை மட்டும் எவரும் மறுக்க முடி யாது என்கின்ரு ன்.
வண்ணங்கள் வேறு பட்டாலும்-அதில்
மானிடர் வேற்றுமை இல்லை.
எண்ணங்கள் செய்கைகள் எல்லாம்-இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணிர்.
மக்களுக்குள்ளே தொழில் வாரியான பல வரு ணங்கள் இருந்தபோதிலும், மனித உடலுறுப்புக் களில், அவர்கள் சிந்தனைகளில், செயல் முறைகளில், எள்ளளவும் வித்தியாசங்கள் இல்லை என்று, இப்படி யான அரிய பெரிய உதாரணங்களினல் முரசொலி எழுப்பி, இடி முழக்கம் செய்து, அறிவொளி பரப்பி நின்றன்.

Page 24
23 கான் கண்ட பாரதி
அதனுேடு அவன் அறவொலி அடங்கிவிடவில்லை. தன் கொள்கைக்கு அநுசரணையாக, துணையாக,உதவி யாக, தமிழ் மூதாட்டியாகிய ஒளவைப் பிராட்டியை யும் எடுத்து, அவரின் போதகங்களையும் மேற்கோள் காட்ட நினைந்தான். ஏனெனில்,
“கல்லானே யானுலும் கைப்பொருளொன்றுண்டாயி னெல்லாருஞ் சென்றங் கெதிர்கொள்வார்-இல்லானை இல்லாளும் வேண்டாள் மற் றீன்றெடுத்த
தாய்வேண்டாள்
செல்லா த வன்வாயிற் சொல்’’
என்றபடி பாரதியின் அன்றைய ஏழைமை நிலையில் உலகம் அவன் பேச் சைக் கேட்கத் தயாராய் இருக்கவில்லை. எனவே, தமிழ்நாடு போற்றும் தமிழ் அன்னையை, அருமூதாட் டியை, ஒளவைப் பிராட்டியை முன்வைத்து,
சாதியிரண் டொழிய வேறில்லை யென்றே
தமிழ் மகள் சொல்லிய சொல் அமுத மென்போம் நீதிநெறியி னின்று பிறர்க் குதவும்
நீர்மையர் மேலவர் கீழவர் மற்ருேர் என்ற அற்புத அன்னையின் அரு மருந்தன்ன அருள்மொழியை நாம் சிரமேற்கொண்டால், நாம் சாவா மருந்துண்ட தேவர்கள் போல, இளமையும் வளமையுங் குன்றது புதுப் பொலிவுடன் வாழ்வோம் என்றும் கூறி, அத் துடன் நில்லாது, நாட்டின் ஐக்கிய முன்னேற்றத் திற்கு இன்னும் என்ன என்ன செய்யலாம் என்று சிந்தித் தான். அவன் சிந்தனையில் புரட்சிகரமான ஓர் எண்ணம் தோன்றியது. கூசிஞன் இல்லை கூறுவ தற்கு.
சிந்து நதியின்மிசை நிலவினிலே
சேராகங் காட்டினிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிகள் ஒட்டிவிளை யாடிவருவோம்

கான் கண்ட தமிழும் கான் கண்ட பாரதியும் 29
என்று அழகிய ஒரு திட்டத்தை நிறைந்த கருத்துடன் கூறியிருக்கின்றன். அதாவது சிந்துநதி நாட்டு ஆண் கள், சேரநாட்டு இளம் பெண்களை மணந்து, தெலுங்கு நாட்டா னின் பண்களைப் பாடி, சிந்து நதி யிலே,இளவெண்ணிலவிலே, தோணிகள் ஒட்டி, விளை யாடி, இட, இன, மொழி, வேறுபாடுகள் எவையு மின்றி, ஐக்கிய செளஜன்னியத்துடன் ஒன்றித்து வாழ்வோம் என்று துணிவுடன் கூறியிருக்கின்றன்.
ஆகையால் மூவின எழுத்துக்களாலும் பிறந்து, முத்தமிழ்களாய் வளர்ந்து, முச்சங்கமிருந்து, முழு உலகிலும் புகழ் பரப்பிய தமிழேபோல, பாரதமாதா வின் ஒரே வயிற்றிற் பிறந்த பிள்ளைகளாகிய நாமும், வேற்றுமைகள் இன்றி இருப்போம்; ஒன்றுபட்டு உழைப்போம்; ஒற்றுமையாய் வாழ்வோம்; அன்பு பூண்டு ஒழுகுவோம் என்று கூறிய அற்புதக் கவிஞன, உலகம் என்றும் போற்றக் கடமைப்பட்டுள்ளது.

Page 25
காந்தீயமும்
நான் கண்ட பாரதீயமும்
. கிந்தியம் என்பது சாத்வீகப் போராட்டம் ܀ 7 சாத்வீகம் என்பது முக்குணங்களுள் ஒன்று. அஃது அருள், ஐம்பொறியடக்கம், ஞானம், தவம்,பொறை, மேன்மை, மோனம், வாய்மை என்றும் பொருள் படும். இத் தருமப் போராட்டத்திற்கு அஹிம்சை, சத்தியாக்கிரகம் என்பன ஆயுதங்களாகும்.
இப்புனித தத்துவம் எந்த நூலில் முந்த முந்த எடுத்தாளப்பட்டது? அதை முதலில் எடுத்து மொழிந்த புண்ணிய புருஷன் யார்? என்பன பற் றிச் சிறிது ஆராயுமிடத்து, இத் தத்துவம் கம்ப இராமாயணத்திலே இராமனுலேயே முதன் முதலாக எடுத்து மொழியப் பட்டிருக்கின்ற தென்பதை, யுத்த காண்டம் பார்த்த யாவரும் நன்கறிவர். யுத்த காண்டம் பாராதவர்கள், இலட்சாதி இலட்சம் மக்களை உயிர்ப்பலி கொண்ட இராமாயணத்திலா? அதிலும் உயிர்க்கொலை புரிந்த இராமனுலேயா? இப்புனித அறம் பேசப்பட்டது என்று கேட்டு ஆச்சரியப் படுவார்கள். ஆகவே இச்சந்தர்ப்பத்தை ஆராய வேண்டியது மிக மிக இன்றியமையாததே.
யுத்த காண்டத்தில் இராமனுற் கொல்லப் பட்டு, இராவணன் மும்மடங்கு பொலிந்த முகங் களுடன் தரையில் முகங்குப்புற விழுந்து கிடக்கின் ரூன். அவ்வமையம் இராமன் அவனை அணுகி, அவன் உடலை உற்று நோக்குகின் ருன். அங்கே இராவண

காந்தீயமும் கான் கண்ட பாரதீயமும் 3
னின் புறமுதுகில் முனைத்திருந்த தழும்புகளைக் கண்டு, ஐயையோ! இவன் யாரோடோ பொருது, புறமுது கிட்டு ஒடிய வணுய் அன்றே காணப்படுகின்ரு ன். போரில் வெந்நிட்டோ டி ப் புறமுதுகிற் காயப்பட்ட இவனைக் கொல்லவா இத்தனை நாட்களாக இவ்வளவு அரிய பிரயத்தனங்களைச் செய்து வந்தேன்? இவனை ஒரு காலத்தில் கார்த்த வீரியார்ச்சுனன் கட்டிவைத் திருந்தானமே. அப்படிக் கார்த்த வீரியார்ச்சுனன் கட்டிவைத் திருந்த வனை நானேன் கட்டிவைத்திருக் கக்கூடாது. நான் இவனைப் பிடித்துக் கட்டிச் சிறை யில் அடைத்து, இவனுக்குத் தருணுதருணங்களில் இதமான பல புத்திகளை எடுத்துப் புகட்டி, நாளடை வில் இவனை ஒரு சீலனுகக் கூட ஆக்கியிருக்கலாமே, அப்படி இவனைச் சீலனுக்க முடியாதிருந்தால், பல நாட்களாக உண்ணு நோன்பு நோற்று, என் உயி ரையே மாய்த்திருக்கலாமே. அவ்வாறு உயிரை மாய்த்திருந்தால், அதனல் வருகின்ற ஒரு மெய்ப் புகழ், போர் முனையில் வெந்நிட்டோடிய ஒரு பேடி யைக் கொன்றதனுல் வந்த இழிவைவிட, எவ் வளவோ மேலானதாய் இருந்திருக்குமே என்று கூறி அங்க லாய்த்தான்.
இவ்வார்த்தைகளை அவனருகிருந்து கேட்ட விபூ ஷணன், இராமனைப் பார்த்துச் சுவாமி! எனது அண் ணனைச் சருவ சாதாரணமான ஒருவீரனென்று தாங் கள் கருதக்கூடாது. அவன் ஒரு மான வீரன். பரம யோக்கியன். குலக் கிரிகளைத் தன் புஜபலத்தால் தகர்த்த வன், அட்ட கஜங்களை வலியழித்தவன், இந்திராதி தேவர்களைச் சிறையில் வைத்த பராக் கிராம புருடன். அவன் முதுகில் தாங்கள் கண்ட தழும்புகள் அவன் வெந்நிட்டோடியமையால் ஏற்பட் டவையன்று. அவன் மார்பில் முறிந்திருந்த திக்கு யானைகளின் கொம்புகள், அனுமானுடன் செய்த மற் போரில், அனுமான் மார்பில் ஓங்கிக் குத்தியதால் பின்

Page 26
32 நான் கண்ட பாரதி
நோக்கிப் பாய்ந்து, அவன் முதுகில் முனைத்திருந்த னவேயன்றி, மற்றப்படி அவன் புறங்கண் டமையி னல் அல்ல என்று கூறித் தேற்றத் தேறின ன் இரா மன். இவ்வரலாற்றை நாமக்கல் கவிஞர் இராம லிங்கம் பிள்ளையவர்களும் தமது இலக்கிய இன் பத் தில் மிக அழகாக விமர்சனஞ் செய்துள்ளார் என்ப தும் ஈண்டு குறிப்பிடத்தக்கது.
எனவே, ஒரு இலட்சியத்தை அடைவதற்கு, பழி கிடந்து உண்ணு நோன்பு நோற்று, குறித்த அவ்வி லட்சியத்தை அடைதல், அல்லது உயிரையே விடு தல் என்ற சாத்வீக தத்து வார்த்தம், முந்த முந்த இராமனலேயே எடுத்தாளப்பட்டிருக்கின்றது. ஆகை யால் அதை 'இராமணியம்” என்று கூறுவதே சால வும் பொருத்தமானது. இப்புனித கைங்கரியம், இரா மனுக்குப் பின் எவராலாவது பேசப்படாமலும் அனுட்டிக்கப்படாமலும் இலைமறை காய்போல் மறைந்திருந்தது. பின் எத்தனையோ நூற்றண்டு களுக்குப் பிறகு, இந்திய விடுதலைப் போராட்டத்தில் மகாத்துமா காந்தியடிகள் இக்கொள்கையை விளக்கி மக்களுக்குப் பிரசங்கித்து வந்தார். அப்பிரசங்கங் களில் சாத்வீக யுத்தங்களினலேயே நாம் ஆயுத பல ங் கொண்ட பராக்கிரம வைரிகளாகிய ஆங்கிலேயரை அடிபணியச் செய்யவேண்டும். அவர்களை நாட்டில் நின்றும் விரட்டியடிக்க வேண்டும் என்று போதித்து வந்தார். அன்றையில் இருந்து இக்கொள்கை, “காந் தீயம்' என்று அழைக்கப்பட்டு வருகின்றது. இஃது அனைவரும் அறிந்த வரலாறகும்.
இனி சாத்வீக போராட்டத்தின் உள்ளுறுப்புக் களுள் ஒன்ருகிய சத்தியாக்கிரகத்தை இக்கட்டு ரையை வெற்றிகரமாய் முடிப்பதற்காகச் சிறிது ஆராய் வாம்.

காந்தீயமும் கான் கண்ட பாரதீயமும் 33
சத்தியாக்கிரகம் என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். இதைச் சத்திய அக்கிரகம் எனப் பாகுபாடு செய்து “உண்மைத் தொழுகை” எனப் பொருள் கொள் ளலாம். பொதுவாக இக் கைங்கர் யம், இறைவழிபாட் டிற்கே உகந்தது. அல்லது ஒரு பராக்கிரமசாலி, தன்னிலும் ஆற்றல் குறைந்த ஒருவனை, நோப்பாடு கோட்பாடு முதலாம் உபாதைகள் ஒன்று மின்றித் தன் வழிக்கு எடுத்துக் கொள்ளவும் இவ்வியக்கம் நடைபெறுகின்றது. இதுவே இராமன் செய்யத் துணிந்ததும், பேசியதும். இது போற்றுதற்கும் உரி யது. மற்றது, பராக்கிரமங் குறைந்தவர்கள் தங்க ஸ்ரிலும் பார்க்கப் பராக்கிரமங் கூடியவர்களை, அன் பால் இழுத்துத் தம் வயப்படுத்துவதற்காகவும் இக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. உதா ரணமாக சில பக்தர்கள், தங்கள் இலட்சியம் கைகூடு வதற்காக இறைவனைக் குறித்து உண்ணு நோன்பு நோற்றுத் தவங் கிடக்கின்றர்கள். இதுவும் ஒரு வகைச் சத்தியாக்கிரகமேயாகும்.
மனிதனின் முன் இப்புனித தத்துவத்தைக் கடைப்பிடிக்க வேண்டியவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விடயமொன்றுண்டு. அஃது என்னையெனில், தாங்கள் யார் யாரை நோக்கிச் சத்தியாக்கிரகம் இருக்கின்றர்களோ அவ்வவர்களுக்கு ஆன்ம நேயம் இதயநேயம் இருக்கின்றதா? என்பதையே முதலிற் கவனிக்கவேண்டும். உதாரணமாக, ஒரு வீட்டில் ஒரு மனைவி தன் கணவனின் தகாத பழக்கங்களில் இருந்து அவனைத்திருத்தும் நோக்கமாக வீட்டிலேயே உண்ணு நோன்பு நோற்றுச் சத்தியாக்கிரகம் அனுட் டிக்கின்ருள்.
மனைவியின் உண்ணுவிரதத்தையும், முரட்டுப் பிடிவாதத்தையும் கண்கூடாகக் கண்ட கணவன்; W-S

Page 27
34 கான் கண்ட பாரதி
முதலாம் நாள் அதைச் சட்டைபண்ணுது போய் விட்டான். இரண்டாம் நாளும், அதை அநாதரவு பண்ணியே நடந்தான். மூன்ரும் நாள், அவளது உடல் வாட்டத்தையும் ஆயாசத்தையும், சோர்வை யும், இளைப்பையும் கண்டு துணுக்குற்றன். அவன் மனதில் திடீரென்று ஒரு மாற்றம் ஏற்பட்டது. உயர்ந்த சிந்தனையொன்று உதயமாகியது. ஐயோ! இவள் இறந்துபட்டால், என் கதி என் பிள்ளைகளின் கதி என்னுகும் என்று பயந்தான். மனைவியைப் பரி வுடன் பார்த்தான். அவள் துயர் நிலைகண்டு துடித் தான். அவளைப் பெண்ணே! என் கண்ணே! என்று அன்பு ததும்ப அழைத்தான். அம் மணி! என் போக்கை முற்றும் மாற்றி, நான் இப்பொழுதே ஒரு புது ஆளாக மாறிவிட்டேன். உன் விரதத்தை முடி யென்றன். அவளும் ஆனந்தங் கொண்டாள். தனக்கு வெற்றியளித்த இறைவனுக்குத் துதி செய்தாள். விர தத்தை முடித்தாள். வாழ்வில் ஒருமித்து இன்பங்
5 6óøT Ln 6ît .
அப்பெண்மணி, இவ்வளவு துணிச்சலாகச் சத்தி யாக்கிரகம் அனுட்டித்த காரணம் அவள் நன்கு அறி வாள் தன் கணவன் தன்னிடம் ஆரா அன்பு பூண்டி ருக்கின்ருன் என்று. தன் துன்ப துரிதத்தையோ, வேதனையையோ, பிரிவையோ தன் கணவன் சகியான் என்பதை அவள் நன்கு அறிவாள். அதனுலேயே அவள் அவனைத் திருத்த விரதம் இருந்தாள். வெற்றி யுங் கண்டாள்.
இந்திய விடுதலை இயக்கத்தை நடத்திய மகான் காந்தியடிகள், ஆங்கில ஆட்சியாளரை எதிர்த்துச் சத்தியாக்கிரகம் இருந்தார்கள். இதய நேயம் படைத்த ஆங்கிலேயர் திடுக்கிட்டார்கள். ஒரு கிழப் பழம், ஒரு எலும்புக் கூடு, அநியாயமாய் மாண்டு மடி யப் போகின்றதே! உலக வசைக்கு நாம் ஆளாகப்

காந்தீயமும் நான் கண்ட பாரதீயமும் 35
போகின்ருேமே! என்று பயந்தார்கள், ஆனல் நம்மி லங்கையைப் பொறுத்த மட்டில், இப்புனித இயக்கத் திற்கு இங்கு இடம் கிடையாது. ஏனெனில் சிங்கள மக்களின் மனநிலை, அரசியல் வரலாறுகளுக்கு, சிங் கள இராஜாவலீயம், மகாவம்சம் என்னும் நூல்கள், நிலை நின்று சாட்சி பகருகின்றன. ஈண்டு அதனை விரித்துரைத்தல் பொருந்தாது என்பதினல், அதை விடுத்து நான் கண்ட பாரதீயத்திற்கு வருகின்றேன்.
தமிழனின் வரலாற்றினை ஆராய்ச்சி பண்ணிய பலப் பல ஆராய்ச்சியாளர்கள், அவன் எப்போ, எங்கே தோன்றினன்? என்பதைக் கணிக்க முடியா திருக்கின்றனர். அவன் நாகரீகத்தில் மூத்தவன், பராக்கிரமத்தில் உயர்ந்தவன். தமிழ்க் கடவுள் முரு கன், பராக்கிரமச் சின்னமாகிய வேலுடன் காட்சி யளிக்கின்றன். “தமிழ்" என்ற ஆரா அமிழ்து, பராக்கிரமமே தன் ஏகபோக உரிமை - பிறப்புரிமை என்பதைக் காட்ட, "த" என்ற வல்லெழுத்தை முத லிற்கொண்டு இலங்குகிறது. அரசியல் அறங்கூறவந்த வள்ளுவன்,
“படைகுடி கூழமைச்சு கட்பா னறும்
உடையானும் வேந்தர்க் கொளி’ என்று கூறும் பொழுது, படி புரக்கும் அரசன், மறங்கடிந்து அறமோம்ப, படைப்பலம் படைத்தவனுக இருக்க வேண்டுமென்று, படைக்கு முதலிடங்கொடுத்திருக் கிருன். அல்லாமலும்,
*அஞ்சாமை ஈகை அறிவுடைமை இம்மூன்றும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு'
என்று கூறும் பொழுது, அரசுபுரியும் அரசனுக்கு, அச்சமென்ற சொல் லுக்கே இடமிருக்கக் கூடாதென்று, வேந்தனின் மனத்தின் தன்மையைப் பட்டவர்த்தனமாகக் கூறி

Page 28
36 நான் கண்ட பாரதி
யிருக்கின்ருன் புலமை மிக்க வள்ளுவன். இஃது அவன் கூற்று மட்டுமல்ல, தமிழனின் சம் பிரதாயமே இப்படிப்பட்டது தான்.
தமிழன் அறிவு ஞானத்திற் சிறந்தவன். ஆற்ற லில் உயர்ந்தவன் உயிரினும் பெரிதாக மான மொன்றையே மதித்து நடந்தவன். கவரிமான் ஒரு மயிர் நீங்கின் உயிர் வாழாது. அதுபோலவே தமிழனும் அவமானத்தின் பின் வாழ்ந்தவனல்லன் .
இமயமலை வரையிலும் சென்று புலிக்கொடி பொறித்தவன் தமிழன். கனக விஜயர்களை வீற ழித்து, அன்னவர் தலைகளிற் கற்கொண்டு வந்து, பத்தினி யம்மனுக்கு கோயில் எழுப்பியவன் தமி ழன். பழந் தமிழர்களின் வீர, தீர, பராக்கிரம , பிரதாபங்களுக்கு, பண்டைத் தமிழ் இலக்கியங் களில், ஆயிரம், ஆயிரம், வரலாறுகள் உண்டு ஆயினும் பண்டைக் காலத் தமிழர், இவ்வித கைங் கரியங்களை, சத்தியாக்கிரகஞ் செய்தோ, சாத்வீகப் போர் புரிந்தோ, சாதித்தவர்கள் அல்லர். வாள் முனையில், வேல் முனையில், ஈட்டி முனையிற் சென்று, போர் முனையிலேயே சாதித்தார்கள்.
ஆண்கள் மாத்திரம் அல்ல, பெண்களும் ஆண் களுடன் சரிசம நிலையிற்றிகழ்ந்தார்கள்.
''நரம்பெழுந் துலறிய நிரம்பா மென்ருேள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன் படையழிந்து மாறினன் என்று பலர் கூற மண்டமர்க் குடைந்தன னயி னுண்ட வென் முலையறுத் திடுவன் யானெனச் சினையிக் கொண்ட வாளொடு படுபிணம் பெயராச் செங்கள ந் துளவுவோள் சிதைந்துவே ருகிய படு மகன் கிடக்கை காணுஉ ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தணளே’

காந்தீயமும் கான் கண்ட பாரதீயமும் 37
தன் மகன் போர்முனையில் வெந்நிட்டோடி, முதுகிற் காயப்பட்டு இறந்தான் என்ற செய்தியைக் கேள்விப்பட்டாள் ஒரு நரை முது மறவாட்டி. சகிக்க முடியவில்லை அவளால் . ஆ! என் மகஞ வெந்நிட்டோடினன்? என் மகனு புறமுகி ற் காயப் பட்டு இறந்தான்? அப்படி அவன் செய்திருப்பானய் இருந்தால், அவனுக்கு அமுது கொடுத்த இந்த இரு தனங்களையும், இன்றே அறுத்தெறிவேன் என்று, வஞ் சினங் கூறி, உடைவாள் ஏந்திய கையளாய் அமர்க் களஞ் சென்ருள்.
அமர்க்களஞ் சென்றவள், களத்தில் மாண்டு மடிந்து கிடந்த பிணங்களைப் புரட்டிப் பார்த்தபொ ழுது, தன் மகன், வீரப் போராட்டத்தால், மார்பில் அம்பேறுண்டு, வீரமரணம் அடைந்ததைக் கண்டு, அவனை ஈன்ற பொழுதிலும் பெரிதுவந்தாள் என்று மேலே காட்டிய பாவால் அறியக் கிடக்கின்றது.
இப்படிப்பட்ட பராக்கிரம வரலாறுகளைப் பழந் தமிழர் நாகரீகங்களிற் பரக்கக் காணலாம். எனவே, பண்டு தொட்டு வரன் முறையே வந்த வரலாறு களைப் பரிசீலனை பண்ணிப் பார்க்கும்பொழுது, முழந் தாளில் மண்டியிட்டுக் கிடந்து மடிப் பிச்சை கேட்ட வன் தமிழனல்ல. எவனும் இரங்கிக் கொடுக்க, அவற்றை ஏற்று உவந்து வாழ்ந்தவன் தமிழனல்ல. மிஞ்சிப் பேசினல், அஞ்சி அடங்கியவன் தமிழன் அல்ல. கெஞ்சி நின்றவனைத் துஞ்சச் சாடுவது, அவன் மரபுமல்ல. தேவ வள்ளுவன் கூறுகின்றன்,
*இன்னுசெய் தாரை ஒறுத்த லவர்ாகாண
கன்னயஞ் செய்து விடல்’ என்று. அவர் ஒரு நாயனர் ஆன காரணத்தினலேயே இப் படிக் கூறினர். யேசுபெருமானுர்,

Page 29
38 கான் கண்ட பாரதி
*ஒருவன் உனக்கு ஒரு கன்னத்தில் அறைந்தால்
அவனுக்கு உன் மறுகன்னத்தையும் கொடு’ என்று கூறியதனேடமையாது, சிலுவையில் மரணித் துத் தொங்கிக் கொண்டிருந்த வேளையிலும், தமது திருவிலாவை ஈட்டியாற் குத்தி, ஊறு செய்த குருட் டுச் சேவகனின் குருட்டுக் கண்ணில், ஒரு துளி நீர் தெறிக்கச் செய்து, அவன் குருட்டுத் தன்மையை நீக் கிக் கண்ஜோதியைத் கொடுத்தருளினர் அவர் இறை வன் என்ற காரணத்தால், ஆளுனல் நான் கண்ட பாரதியின் பாரதீயம், இவை எல்லாவற்றுக்கும் அப் பாற்பட்டது.
பாரதி தமிழனின் தொன்மைகளையும், தன்மை களையும், அவனின் பாரம்பரிய மேன்மைகளையும், பரிபூரணமாய் அறிந்தவன். அட்ங்கி நடத்தல், பொறுத்துக் கொள்ளுதல், தாங்கி நடத்தல், சகித் துக் கொள்ளுதல், வணங்கிப் பேசுதல் என்ற பதங் களுக்கு அவன் ஏட்டில் பொருள் கிடையாது.
இறைவன் ஒருவனுக்கேயன்றி, மற்று எவனுக் கும் தலைவணங்காத மானத்தமிழர் பரம்பரையை, மறத் தமிழர் பரம்பரை யை, மரபுவழுவாமற் பாது காத்துப் பழைய படிகளில் அவனை ஏற்றிப் பெரு மைப்படுத்தப் பெரிதும் விழைந்தான். அதற்காக உள்ளத்தில் வயிரம் பிறக்க, வீரம் பிறக்க, மானமும் உரோசமும் பிறக்க. அச்சமில்லை அச்சமில்லை அச்ச மில்லை என்றும், நச்சை வாயிலே கொணர்ந்து நண்ப ரூட்டு போதிலும், பிச்சை வாங்கி உண்ணும் வாழ் வைப் பெற்றுவிட்ட போதிலும், பச்சை ஊன் இயைந்தவேற் படைகள் வந்தபோதிலும், உச்சிமீது வானிடிந்து வீழுகின்றபோதிலும், இச்சைகொண்ட பொருளெல்லாம் இழந்துவிட்ட போதிலும், அச்ச மில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே! என்று வீர கர்ச்சனைசெய்து உறங்கிக் கிடந்த சமுதாயத்

காந்தீயமும் கான் கண்ட பாரதீயமும் 39
தின் நரம்புகளில் உணர்ச்சிப் பெருக்கை ஏற்றிவிட் டான். அத்துடன் அவனுள்ளம் திருத்திப்படவில்லை. உரிமை கெட்டு உணர்ச்சியற்றுக் கிடந்த சமுதாயத் திற்கு உயிரூட்டவேண்டிய ஒரு பெரும் பொறுப்பு அவனைச் சார்ந்து நிற்க, அப்படிப்பட்ட வீர பரம் பரையைச் சிறுவயதில் இருந்தே உற்பத்தியாக்க விரும்பினன். அதற்காக, குழந்தைகளைப் பார்த்து, எனது அன்புக் கண்மணிகளே! அணையா விளக்கு களே! வருங்கால மன்னர்களே! மகிமைப் பாப்பாக் களே!! உங்களுக்கு நான் ஒன்று கூற ஆசைப்படுகின் றேன். உற்றுக் கேளுங்கள்,
உங்களின் பூர்வீகச் சொத்து, உங்களின் பிறப் புரிமை , உங்களின் பழமைபட்ட சம்பிரதாயம், ** மான வீரம்" ஒன்றேயாம். அந்த வீரத்தை, உங் களின் உயிரினும் மேலாக மதித்துக்கொள்ளுங்கள். வாழ்ந்தால் வீர வாழ்வு மடிந்தால் வீரமடிவு.
உங்களின் சந்ததி, ஒரு காலத்தில் சகலத்திலும் உயர்ந்து, இமயத்திலும் மேலான பெருமை பெற் றுத் துலங்கியது. உங்கள் இனத்தின் பெயர் கூறி ஞல், உலகமே நடுங்கும். அப்படிப்பட்ட பிரதாப மேம்பாடான உங்கள் இனம், இன்று உள்ள இழி நிலையை உற்றுப் பாருங்கள். கேவலம்; மானமற்று, மதியற்று, உரிமையற்று, உணர்ச்சியற்று, வாழ வழியற்றுக் கதியற்றுத் தவிக்கின்றது. எனவே தான் நான் உங்களுக்கு ஒன்று கூறுகின்றேன்.
பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நீ
பயங் கொள்ள லாகாது பாப்பா மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா. இதுவே உங்களின் சம்பிரதாயம். அதாவது உங்களி டத்தில் யாராவது எதையும் இரந்து கேட்டால்

Page 30
40 நான் கண்ட பாரதி
கொடுத்து விடுங்கள். உயிரைக் கேட்டாற் கூட, கொடுத்துவிடுங்கள். ஆனல் உங்களுக்கு யாராவது பாதகச் செயல்களைப் புரிந்தால், நீங்கள் கிஞ்சித் தும் பயங்கொள்ளக் கூடாது. உடனே மோதுங் கள். மோதி மிதித்து விடுங்கள். அத்தோடு நின்று விடாதேயுங்கள். அவன் முகத்திற் கூட உமிழ்ந்து விடுங்கள். ஏனெனில் நீங்கள் மறக் குடியிற் பிறந்த மறவர்கள். மானமே உங்களின் மேனிமறைக்கும் வஸ்திரம். அப்படிப்பட்ட மாணம் அழியவரின் , அதற்குமுன் நீங்கள் அழிந்தொழிய வேண்டும் என்ற அதி உன்னத தத்து வார்த்தத்தை, தமிழ னின் பாரம்பரிய பராக்கிரமத்தை முன் வைத்து, வீர விருது தாங்கி, வெற்றி முழக்கஞ் செய்து, சமுதாயத்தை அதன் பண்டைய சம்பிரதாயப்படி வழிநடத்தத் தூண்டும் பாரதீயம், தமிழினத்திற்கு ஒரு அணையா விளக்கைப் போலத் தமிழ் கூறும் நல்லுலகெங்கணும் என்றும் நின்று நிலவும் என் பது எனது திடமான நம்பிக்கை, வாழ்க பாரதீயம்.
冰

நான் கண்ட புதுமைக் கவி
1ண்டைக் காலத்தில் தமிழ் நாடு, வடக்கே வேங்கட மலையையும், தெற்கே குமரி மலையையும், குணக்கிலும், குடக்கிலும், கடல்களையும், எல்லை களாகக் கொண்டு, புகழ்மண்டிக் கிடந்தது. இவ் வுண்மை,
“வட வேங்கடங் தென் குமரி ஆயிடைத்
தமிழ்கூறு கல்லுலகம்” என்ற தொல்காப் பியப் பாயிர அடிகளாலும்,
'நீலத்திரைக்கட லோரத்தி லேங்ண்று
நித்தந் தவஞ்செய் குமரியெல்லை-வட மாலவன் குன்றமி வற்றிடை யேபுகழ்
மண்டிக்கி டக்குந்த மிழ் நாடு.” என்ற பாரதியின் கவிதையாலும் அறியக் கிடக்கின்றது.
கல்வியில், செல்வத்தில், நாகரீகத்தில் கதித் தோங்கி, அகில உலகத்திற்கே ஒரு மணிமுடியெனக் காட்சிதந்து மிளிர்ந்தது தமிழ் நாடு. முடியுடை மூவேந்தர்களின் ஆட்சியின் மாட்சியில், அமிழ்ந்திக் கிடந்தது நம் தமிழ் நாடு. அவர்களின் ஆட்சிக் காலத்தை, தமிழ்த் தாயின் சிறப்புக்காலம்; மகிமைக் காலம்; மகிழ்ச்சிக்காலம் ஏன்? பொற்காலம் என்று கூடக் கூறிவிடலாம்.
மாநிலங்காத்த மன்னர்கள், மன்னுயிர்களை ஆன பயமைந்துந் தீர்த்து, அறங்காத்து வந்தார்கள்.
W-6

Page 31
42 கான் கண்ட பாரதி
அட்ட ஐசுவரியத்தில் நாடு அமிழ்ந்திக் கிடந்தது. எனினும், அன்றையத் தமிழ்த் திரு நாட்டில், ஒரே யொரு பெருங்குறை என்னையெனில், ஈவோருக்கு இரப்பாரில்லாத குறையேயாகும். அன்றையத் தமி ழகத்தில், தமிழறிவு வளம்பெற்றிருந்தது. அரசர் களும், நிலம் படைத்த பிரபுக்களும், இன்னும் பலப் பல தனவந்கர்களும், நாடடங்கலும் பரவிக் கிடந் தார்கள்.
வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு அமைந்திருந்த திண்ணைப் பள்ளிக்கூடங்கள் மட்டுமல்ல; அந்நாளில், கல்விக்கு உறைவிடங்கள் என்று சரித்திர ஏடுகளிற் போற்றப்பட்ட மிலான், கொன்ஸ்தாந்திநோப்பிள், எதன்ஸ் முதலாம் இடங்களில் அமைந்திருந்த சர்வ கலாசாலைகள் போல, நாலந்தா, காசி, மதுரை முத லான இடங்களிலும், மாபெருங் கலைக்கூடங்கள் இருந்து, கலையை வளர்த்து வந்தன.
இவ்வித கலாசாலைகளில், நான் மறை, ஆறங்கம், நீதிசாஸ்திரங்களை முற்ற அறிந்த சான்ருேர்கள், சாலை நிறைந்த மாணுக்கர்களுக்கு, தருக்கம், இலக் கணம், நிகண்டு முதலாம் கருவி நூல்களையும், சங்க இலக்கியங்களையும், புராண காப்பிய இதிகாசங்களை யும் ஐயந்திரிபறக் கற்பித்து வந்தார்கள்.
பண்டை நாளில், பன்னிரண்டு வயதுக்குள், ஆத்திசூடி, வெற்றிவேற்கை, கொன்றை வேந்தன், நீதி மஞ்சரி, ஒளவை குறள், வாக்குண்டாம், நல் வழி, நன்னெறி முதலாம் சிறுவர் சிற்றிலக்கியங்களை மாணவர் கற்றுத் தேறினர். பின் பதினைந்து வய துக்குள் சூடாமணி நிகண்டு அவர்கள் நுனி நாவில் நிர்த்தனம் செய்ய, பதினறு வயதில் போதிய சொல் லாட்சி மிகுந்தவர்களாய், கலைஞர்களாய், கவிஞர் களாய் புலவர்களாய்கூட மாறிவிட்டார்கள்.

நான் கண்ட புதுமைக் கவி 43
இப்படியாக நாடடங்கலும், கவிபுனையும் புலவர் களும், கவிஞர்களும் மலிந்து, கல்வித் தரம் மிக மிக உயர்ந்திருந்த நாளில், புலவர்கள் கல்விச் செருக்குற் றுத் தத்தம் கவித் திறத்தைக் காட்டித் தாம் தாம் முன்வர விழைந்தார்கள், சந்த வசன கவிதைகள் பாடும் கவிஞர்கள் மலிந்த இந்தக் காலம் போல இருக்கவில்லை அந்தக் காலம். தமிழறிவு தமிழ்கூறும் நல்லுலகெங்கணும் உச்சப்படியில் இருந்த காலம். தமிழை வளர்க்கத் திடசங்கற்பஞ் செய்துகொண்டு, பொன்னையும், மணியையும், பரியையும், கரியையும் உவந்து கொடுத்துத் தமிழை வளர்த்துவந்த பொழு திலும், தமிழ்த்தாயின் சிறுமை யகற்றும் நோக்க மாக, ஆற்றற் குறைவுடன், அறிவுக் குறைவுடன் முன் வர விரும்பும் கவிஞர்களுக்கு, பயங்கரத் தண் டணைகளைக் கொடுத்துக் கூட, தமிழைத் தூய்மை செய்தார்கள்.
எவ்வளவோ ஆற்றல் வாய்ந்த கவிஞனும், தன்னை ஒரு கவிஞனென்று கூற அஞ்சினன். ஏனெ னில் தமிழின் இழிநிலை உயர் நிலைகளைக் காட்டும் துலாப்போல, மதுரையில் சங்க மண்டபத்தில், அதி யற்புதத் தெய்வப் பலகையிருந்தது. அல்லாமலும், அரசர்கள் அருந்தமிழ் வாணர்களாய் இருந்ததோ டமையாது, ஆற்றல் வாய்ந்த, அறிவு நிறைந்த அறிஞர்களைத் தங்கள் தங்கள் சமஸ்தானங்களில் வைத்துத் தாபரித்தும் வந்தார்கள். இந்த நிலை யில் அரை குறை ஞானம்படைத்த கவிஞர்கள், தாங் களும் கவிஞர்களென்று அரண்மனையடையவோ, பாடவோ, பரிசு பெறவோ பெரிதும் துன்பப்பட் டார்கள். பிழையாகத் தமிழைப் பேசிப் பாடி எழுதி தமிழ்த் தாயை அவசங்கைப் படுத்தும் கவிஞர்கள், பயங்கர முறைகளில் தண்டிக்கப் பட்டார்கள். இந்த உண்மை,

Page 32
44 நான் கண்ட பாரதி
குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டியன் இங்கில்லை
குறும்பியள வாய்க்காதைக் குடைந்து தோண்டி எட்டினமட் டறுப்பதற்கோ வில் வி யில்லை
இரண்டுதலை முடித்தொன்ரு ய் இரங்கப் போட்டு வெட்டுதற்கோ கவியொட்டக் கூத்த னில்லை
விளையாட்டாய்க் கவிதைதனை விரைந்து பாடித் தெட்டுதற்கோ அறிவில் லாத் துரைகளுண்டு
தேசமெங்கும் புலவரெனத் திரிய லாமே.
(படிக்காசுப்புலவர்)
என்ற கவிதையால் விளங்கக் கிடக்கின்றது. அதா வது, பிள்ளைப் பாண்டியன் என்ற அரசன், தமிழை யாரும் பிழையாகப் பாடினுல், பேசினல், உடனே மிகக் கடுமையாகக் குட்டிவிடுவாணும். மகாகவி வில்லிபுத்தூராழ்வான், பிழையான கவிதைகளைப் பாடிச் செல்லும் கவிஞர்களின் காதுகளைக் குறுமி யளவாகக் குடைந்து, தோண்டி, எட்டின மட்டில் வெட்டிவிடுவாளும். கவி ஒட்டக்கூத்தன், பிழை யாகக் கவி பாடுவோரைச் சிறையில் அடைத்து, இரண்டு இரண்டு தலைகளாகப் பிடித்து, அவர்கள் குடுமிகளை முடிந்து, ஒரே வெட்டாக வெட்டி, இரண்டு தலைகளையும் துண்டித்து விடுவாஞம். எனவே, விளையாட்டாய்க் கவிதைதனை விரைந்து பாடும் கவிஞர்கள் மலிந்த இக்காலம் போல, அக்காலம் இருக்கவில்லை.
ஆகையால் தமிழை ஆரம்ப முதற்கொண்டு அமைதியாக, முறையாகக் கற்கவேண்டிய பொறுப்பு யாவருக்கும் ஏற்பட்டது. அந்நிலையில், ஆர்வமுடன் கற்ற சகலரும் மரபுவழுவாமல் மகிமையுடன் கற் றர்கள். மதிப்பிற்குரிய படைப்புக்களைப் படைத் தார்கள். அவர்களுக்கு மன்னரும், மாநிலக்கிழவரும் பொருள்களை அள்ளியள்ளிக் கொடுத்தார்கள். சுதந் திர உலகில் கவலையற்ற வாழ்வு வாழ்ந்த கலைஞர்

ாகான் கண்ட புதுமைக் கவி 45
களும், கவிஞர்களும், இன்பப் போதையில் மூழ்கிக் கிடந்தார்கள்.
ஆகலின் அவர்களின் படைப்புக்கள் நாட்டின் அன்றைய நிலையைப் படம் பிடித்துக்காட்டும் ஒரு அற்புதப் போக்கில் போய்க்கொண்டிருந்தன. அவர் கள் படைப்புக்களில் சந்திரோத யத்தின் தண்ணிய நிலவைக் காணலாம். ஒடையில் ஊறும் தீஞ்சுவை நீரைப் பருகலாம். மேடையில் வீசும் மெல்லிய பூங்காற்றை நுகர லாம். எங்கும் இன்பப் பொய் கைகள், ஓடி ஆடி அசைந்து வரும் ஜீவநதிகளின் ஜிவிதத் தோற்றங்கள்; அவைகளில் விளையாடும் அன்னங்கள்; இனிய கீதங்களை மிழற்றும் குயிலி னங்கள்; கிளியினங்கள் அளியினங்களின் தேனுமிர்த கானங்கள்; ஒவா தொலித்தன.
ஈவோருக்கு இரப்பார் இல்லாத திரு நாட்டில் வாழ்ந்த கவிஞர்களுக்கு துன்பத்திற்கு, துயரத் திற்கு, வேதனைக்கு, உபாதைக்கு இடமேது? அவர் கள் வாழ்ந்த காலம், தமிழன் தமிழனய் வாழ்ந்த காலம் . அடிமையற்ற உலகில் கவலையற்ற வாழ்வு வாழ்ந்த புலவர்களின் செல்வச் சிறப் பிற்கும், கல்வி மேம்பாட்டிற்கும், அவர்களின் அரும்பெரும் படைப்புக்களான பண்டைப் பனுவல் கள், உலகம் உள்ளளவும் நிலைநின்று கரிகூறும். அக்கவிஞர்கள், தமிழ்த் தாயை, அற்புதக் காப்பியங் களால் அமிர் த இலக்கணங்களால் அலங்கரித்தார் கள். அவளின் ஒவ்வொரு அங்கங்களையும், விலை மதிக்கரிய அபூர்வக் காப்பிய அணிகள், அலங்கரித் துக்கொண்டிருந்தன.
தண்டியலங்காரம், மாறனலங்காரம், என்ற
மகிமை அலங்காரங்கள் மட்டுமல்ல அவளுக்கு. நடையலங்காரங்கள் எத்தனை? உடையலங்காரங்

Page 33
46 கான் கண்ட பாரதி
கள் எத்தனை? இடையலங்காரங்கள் எத்தனை? சிகை யலங்காரங்கள் எத்தனை? குண்டலங்கள் எத்தனை? சிலம்புகள் எத்தனை? வளைகள் எத்தனை? மே கலைகள் எத்தனை? மாலைகள் எத்தனை? குடைகள் எத்தனை? முடிகள் எத்தனை? எத்தனை எத்தனை வேண்டுமோ அத்தனை அத்தனையும் அமைத்துக் கொடுத்து அலங்கரித்தனர் நம் அற்புதக் கவிஞர்கள். எனவே சிறிது கண்களை மூடி, பண்டைக்காலத்தில் இருந்த தமிழ்த் தாயை ஏறெடுத்து உங்களின் மனக் கண் முன்னே கற்பனை பண்ணிப் பாருங்கள். அங்கே இளமையும், வளமையும் பொங்க, அரும்பும் புன் னகையுடன், ஆடை அலங்கிர்த சோபையுடன், அற்புதக் காட்சியளிக்கும் தமிழ்த்தாயின் பண்டைப் பெருமையைப் பாருங்கள்! பாருங்கள்!! என்னே! என்னே!! அவளின் பெருமை!! அவளின் பண்டைப் பெருமைதான் என்னே !!
இனி நான் கண்ட பாரதியின் கவிதைப் பண்பைச் சற்றுக் கவனிப்போம்.
பண்டைப் புலவர்களின் பரிமளிப்புக்குரிய கால மல்ல, பாரதியின் காலம். அவர்களின் காலம் முடி யுடை மூவேந்தர்களின் ஆட்சிக் காலம். முத்தமிழ் சங்கமிருந்து, அரசோச்சிய காலம். தமிழன் தமிழ ஞக, தன்மானத் தமிழனுக, சுதந்திரத் தமிழனுக , உல்லாசத் தமிழனுக வளமுடன் வாழ்ந்த காலம். ஆனல், நான் கண்ட பாரதியின் வாழ்க்கைக் காலம், அடிமை ஆட்சியின் பிடியில், மிடியின் மடியில், அறியாமையின் மத்தியில் மழுங்கிக் கிடந்த காலம்.
தன் கண்களை உயர்த்தி ஏறெடுத்துப் பார்த் தான் பாரதி, பரந்த பாரதத்தை. முடியுடை மூவேந் தர்களை, அவர்களின் மனுநீதிகண்ட ஆட்சிகளை அவன் காணமுடியவில்லை. முச்சங்கம் எங்கே எங்கே

கான் கண்ட புதுமைக் கவி 47
என்று ஆவலுடன் பார்த்தான். சங்க மென்பது, சங்க மண்டபமென்பது, இருந்ததற்குரிய அடை யாளமே காணப்படவில்லை. சுற்றிப் பார்த்தான். அவன் கண்களில், பண்டைத் தமிழனின் சோபிதமே தென்படவில்லை. உற்றுப் பார்த்தான். எங்கும் பசி, பஞ்சம், பட்டினி; எங்கும் அடிமை வாழ்வு; எங்கும் அலங்கோலக் காட்சி. இக்காட்சிகளைக் காணப் பொறுக்கவில்லை அவனுக்கு.
"கஞ்சி குடிப்பதற் கிலார்-அதன்
காரணங்கள் இவையெனு மறிவுமிலார் பஞ்சமோ பஞ்ச மென்றே-நிதம்
பரிதபித்தே உயிர் துடிதுடித்து துஞ்சி மடிகின் ருரே-இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியில்லையே’
என்றும் ,
*நண்ணிய பெருங்கலைகள்-பத்து
நாலா யிரங்கோடி நயந்து நின்று புண்ணிய நாட்டினிலே-இவர்
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்" என்றும் கூறிக் கண்ணிர் சிந்தியே அழுதுவிட்டான்; மானத் தமிழா! இதுவாடா உனக்கு வந்த கதி என்று கூறி அலறிவிட்டான்.
'நெஞ்சு பொறுக்கு தில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால் அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த
மரத்தில் என்பார் அந்தக் குளத்திலென்பார் துஞ்சுது முகட்டில் என் பார் - மிகத்
துயர்ப்படு வார்எண்ணிப் பயப்படுவார்-நெஞ்சு’
என்றும்
9

Page 34
48 கான் கண்ட பாரதி
“சிப்பாயைக் கண்டஞ்சு வார் - ஊர்ச்
, சேவகன் வருதல் கண்டு மனம் பதைப் பார்.
துப்பாக்கி கொண்டொருவன் - வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டி லொழிப்பார்
அப்பால் எவனே செல்வான் - அவன்
ஆடையைக் கண்டு பயத் தெ ழுந்து நிற்பார் எப்போதுங் கைகட்டுவார் - இவர் r- யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கி
நடப்பார்-நெஞ்சு” என்றும்
* கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு
கோடியென் ரு லது பெரிதாகுமோ” என்றும்
“சாத்திரங்கள் ஒன்றுங் காணுர் - பொய்ச்
சாத்திரப் பேய்கள் சொல்லும்
வார்த்தை நம்பியே கோத்திரம் ஒன்ரு ய் இருந்தாலும் - ஒரு V−
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத் திகழ்வார் தோத்திரங்கள் சொல்லியவர் தாம் - த மைச் குதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார்’ என்றுங் கூறி அலறி அலறி அழுகின்றன் நாட்டின், சமூகத்தின் சீர்கெட்ட நிலைகளைக்கண்டு.
ஒளவை, ஆதிமந்தி நற்செள்ளை, காக்கை பாடினி ஆதியாம் கவிதா மணி வனிதையர் இருந்து, ஆண் களுடன் பைந்தமிழை ஆராய்ச்சி பண்ணி, எந்த அளவிலும் நாங்கள், ஆண்களிலும் சளைத்தவர்கள் அல்ல என்று ஒரு காலத்திற் சொற்போர் புரிந்து வந்த தமிழகத்தில்,
*ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே சான்ருே ஞக்குதல் தந்தைக்குக் கடனே நந்நடை நல்கல் வேந்தற்குக் கடனே வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே

கான் கண்ட புதுமைக் கவி 49
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே"
என்று தன் ஏகமைந்தனைப் போர்க்கோலஞ் செய்து, ‘தேசத்தைப் பாதுகாத்தல் உன் தலையாய கடன்" என்ற தாரக மந் திரத்தைச் செபித்துப் போர்க்களம் புகவிட்ட மறத் தாயார் வாழ்ந்த தமிழகத்தில், பெண்கள் அடுப் படிப் பொம்மைகளாக, அந்தப்புரப் பதுமைகளாக, அடிமைச் சின்னங்களாக, கையடங்கி, மெய்யடங்கி, வாயடங்கி, மூச்சடங்கிக் கிடந்த கோரக் காட்சியை உற்றுப் பார்த்தால், பொறுக்குமா அவனுக்கு? இன் னெரு பக்கம் திருப்பினுன் தன் பார்வையை, அம் மம்மா! ஈடுசெய்ய முடியாத, எண்ணிலடங்காத சாதிப்பிரிவு. என்ன செய்வதென்றே தெரியவில்லை அவனுக்கு எப்படி இச்சமுதாயத்தை ஒன்று படுத்து வேன்? வீட்டுமாடங்களில் வாழும் புருக்களும், கூட் டில் வாழும் கிள்ளைகளும், இங்கிதமான மைன; நாகண வாய்களும் ஒன்று கூடியிருந்து, ஒரு காலத் தில் வேதபாராயணஞ் செய்த தமிழகத்தில் அறிவு மறைந்து அஞ்ஞானம் மிகுந்து அந்த காரம் கவிந் திருந்த கோரக் காட்சிகளைக் காணுந் தோறும், காணுந்தோறும், வருணனைக்கு, கற்பனைக்கு, உவ மைக்கு, உருவகத்திற்கு, சித்திரிப்புக்கு, சோடினைக்கு இடம் எப்படி வரும்?
எனவே, அவனுக்குப் பொறுப்பு அதிகரித்தது. தன் சமுகம் சீர்ப்பட, அதன் பெருமை பிறங்க, அதைப் புதிய பாதையில் வழி நடத்தவேண்டிய பொறுப்பு அவனுக்கு ஏற்பட்டது. நாட்டில் எழுத் தறிவில்லா மக்கள் கோடிக்கணக்கில் நிறைந்திருந் தார்கள். அதற்காக, எளிய நடையில், இனிய தமி ழில், தன் கவிதைகளைப் புதுமையாகப் படைக்க
W-7

Page 35
50 நான் கண்ட பாரதி
வேண்டிய மாபெரும் பொறுப்பு அவனுக்கு ஏற்பட் டது. ஆகையால் குழந்தைகளையும், ஆடவர்களை யும் உணர்ச்சி கெட்ட வெளி வேடதாரிகளையும், கைத் தொழிலாளர்களையும், கமத் தொழிலாளர்களை யும், தனித்தனி அழைத்து, அவர்களின் குறைகளைக் காட்டிப் பெருமைகளை விளக்கி, அவர்களின் கடமை களையும் அறிமுகப்படுத்தி வைக்கின்றன். பாப்பா வுக்குப் பாடத் திட்டம்; தொழிலாளருக்கு வேலைத் திட்டம்; பெண்களுக்கு உரிமைச் சட்டம்; விடுத லைக்கு வீரமுழக்கம்; இவைகளே அவன் கவிதையின் அற்புத தத்துவங்கள்.
அவன் கவிதையில் உக்கிர சண்டமாருதம் ஓங்கி யடிக்கும். பயங்கர எரிமலைகள் வெடித்துப் பிளந்து நெருப்பைக் கக்கும், கொண்டல்கள் குமுறிக் கோடையிடி யிடிக்கும். வெயில் எரிக்கும். இவைக ளுக்கு எதிர்மாருக, பனிகாலாது. மழை பொழி யாது. தென்றல் வீசாது. குயில் கூவாது. மயில் ஆடாது, வண்டு ரீங்காரஞ் செய்யாது. நாடாண்ட இனம் ஓடேந்தி,உடுக்க உடையற்று, இருக்கவீடற்று, நடக்க உரிமையற்று, கைவிலக்கு கால் விலங்கு பூட் டப்பட்டு, முடங்கிக் கிடந்த கோரக் காட்சியைக் கண்ட பின்பும், கற்பனையா பிறக்கும்? வருணனையா வரும் அவனுக்கு?
எனவே, உணர்ச்சி பொங்க உரிமை முழக்கஞ் செய்தான். அவன் சங்கதாதத்தைக் கேட்டதும், குறவனின் மகுடி இசைகேட்ட நாகம்போல, மக்கள் அருண்டெழுந்தார்கள்; தங்கள் இழிநிலை கண்டு ஏங் கித் தவித்தார்கள். அவன் காட்டிய புதிய பாதை களில் பீடுநடை போட ஒருப்பட்டார்கள். இப்படி யாகத் தமிழினத்தின் பழமைபட்ட, பண்பு நிறைந்த மகிமை வாழ்க்கைகளையும், அவர்கள் மானத்துடன்

கான் கண்ட புதுமைக் கவி x S.
வாழ்ந்த வாலாறுகளையும் மாண்புடன் எடுத்துக் காட்டி, இன்று நாம் இருக்கும் இழிநிலைகண்டு சீற் றங்கொண்டு சீறி எழுந்து, நம் உரிமைகளையும், கட மைகளையும் முறை முறையே விளக்கி, புதுப்பாதை கள் வகுத்து, புது உலகிற்கு நம்மை வழி நடத்தத் தூண்டும் புதுமைக் கவியை, நாடு ஒருபொழுதும் மற வாதென்பதே என் மணமுடிபு.

Page 36
நான் கண்ட புரட்சிக் கவி
நின் கண்ட புரட்சிக் கவிஞணுகிய சுப்பிர மணிய பாரதி ஒரு பெருங் கவிஞன் மட்டுமல்ல; பழுத்த அரசியல் வாதி; உன்னதத் தீர்க்கதரிசி; தலைசிறந்த சிந்தனையாளன் ; ஈடிணையற்ற ஒரு சீர் திருத்தச் செம்மல்; ஒப்புயர்வற்ற ஒரு பொருளா தார நிபுணன் ஆற்றல்மிகுந்த ஒரு கல்வியமைச் சன்; திறமை படைத்தவோர் தொழில் வழிகாட்டி.
அவன் அறிவுப் பாதையில் அடியெடுத்து வைக் கும் ஒவ்வொரு அடியிலும் அற்புதந் தொனிக்கும்; அந்தகாரமகலும் அறியாமை ஓடி ஒதுங்கும்; அடி மைத்தனம் அத்தமிக்கும்; வீரம் மானம் உற்சாக ந் துள்ளி நடக்க, பசியும் பிணியும் மிடியும் மறைய, வசியும் வளனும் பெருக, அதியுன்னதத் தெய்வ லோகங் காட்சியளிக்கும்.
அவன் தன் சிந்தனையை உயர்த்தி முடியுடை மூவேந்தர்காலத் தமிழுலகைக் கற்பனை பண்ணிப் பார்த்தான். மறுகணம் தன் பார்வையைத் திருப்பி, அடிமை இந்தியாவைக் கண்ணுேக்கிப் பார்த்தான். பார்க்க முடிந்ததா அவனுக்கு? அவ்வளவில் தாம திக்க முடியவில்லை அவனுல். ஆகையால் மிக மிக வேதனையுடன் சாவதானமாகவும், சாதுரியமாகவும், ஆத்திர ஆவேசத்துடனும் மிதமிஞ்சிய ஒரு தேசாபி மானத்தை ஏற்படுத்திப் புதிய உலகத்திற்குப் புதுப் பாதை போட்டுச் சமுதாயத்தை அப்பாதையால் வழி நடத்தி, இழந்துபோன உரிமைகளையும் மகிமை களையும் பெற்றுக் கொடுக்க ஒருப்பட்டான்.

நான் கண்ட புரட்சிக் கவி 53
இராமாயணத் தீஞ்சுவை தந்த மகாகவி கம் பனைப் போலவோ, அதியற் புதப் பாரதம் படைத்த வில்லிபுத்துரராழ்வானைப் போலவோ, உன்னத கந்த புராணத்தைத் தந்த ஒப்பரிய கச்சியப்பசிவாசாரி யாரைப் போலவோ இவன் கவிதைப் போக்கு அமையவில்லை. இப்பாவலர்கள் ஒரு நாட்டுச் சரித் திரத்தை, மக்கள் வாழ்க்கையை, ஆட்சி முறை களைச் செவியறிவுறுத்திச் சென்ருர்களேயன்றித் தமிழ்ப் பெருமக்களின் தனிப்பெருங் கடமைகளை யும், அவர்களின் உரிமைகளையும் அறிமுகப்படுத்திச் செல்லவில்லை. அப்படி அவர்கள் செய்யாததற்கு அவர்கள் குற்றவாளர்களுமல்ல. ஏனெனில் அன்ன வர் காலத் தமிழர், வாழ்க்கையின் உன்னதத்திலே, உலகத்தின் உச்சப்படியிலே வீற்றிருந்தார்கள். ஆக லின், அவர்களுக்கு இம் மகத்தான பொறுப்பு ஏற் படவில்லை.
ஆனல் நம்புரட்சிக் கவிஞன் காலம், தமிழன் தன் குலப்பெருமை குன்றி, குடிப்பெருமை இழந்து, மாற்ருனின் காலில் மண்டியிட்டுக் கிடந்து, மடிப் பிச்சை கேட்டு, அவமான சாகரத்தில் அமிழ்ந்தி அரசியல் அந்த கார இருளில் மூழ்கிக்கிடந்த காலம் . ஆகையால் அவன் தன்போக்கில் மிகமிக வேகமாகச் செல்லவேண்டிய அவசிய கட்டம் அவனுக்கு ஏற் பட்டது. அவன் போதனைகள் அனைத்தும் புரட்சி கரமாகவே இருந்தன. அவை; கலைப்புரட் சமு தாயச் சீர்திருத்தப் புரட்சி, மாதர் விடுதலைப் புரட்சி, கமத் தொழிற் புரட்சி, கைத்தொழிற் புரட்சி, சுதந்திர உரிமைப் புரட்சி என்ற ரீதியில் அமைந் திருந்தன. ஆகலின் அவன் அறிவொளி பரப்பும் மறுமலர்ச்சிப் புரட்சிகள் ஒவ்வொன்றையும் தனித் தனியே வைத்து ஆராய ஆசைப்படுகின்றேன்.

Page 37
54 நான் கண்ட பாரதி (9) கலப் புரட்சி
அடிமை பாரதத்தின் அலங்கோல நிலையை அவதானித்துப் பார்த்தான் பாரதி. ஆங்கில ஆட் சிப் போதையில் மதிமயங்கிக் கிடந்தது நாடு. அரசகருமமொழியான ஆங்கிலமொழி அரசோச்ச, அரசோச்சிய அன்னைத் தமிழ் அரியணையிழிந்து, இழிநிலைமிகுந்து, பூவுதிர்த்ததோர் கொம்பெனப் புவி மிசைக் கிடந்தது. தமிழறிவாளர்களையும், தூய தமிழ் பேசுபவர்களையும், நற்றமிழில் எழுதவாசிக் கக் கூடியவர்களையும், கோடிக்கணக்கான மக்கள் வதியும் திரு நாட்டில், தேடித் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் நாடு இருந்தது. நாடடங்கலும் கொச்சைத் தமிழ் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. அதிலும் ஆங்கிலம் முதலிய பரபாஷைச் சொற்கள் கலந்து பேசப்பட்டு வந்தன. இந்த மகோன்னத இழி நிலை பாரதியைப் பதைபதைக்கச் செய்து விட் டது. ஐயையோ! பரிதாப ஜென்மங்களே! உங்கள் தமிழ்மொழி, உலகின் முதல்மொழி! வளமொழி! அம்மொழிக்கு இணையாக உலகில் வேறு எம்மொழி யும் இல்லை! அத்தே னுமிர்தத் திருமொழியையா நீங்கள் அநாதரவு பண்ணினிர்கள்? அலட்சியம் செய்தீர்கள்! உங்களுக்கு நான் ஒன்று கூறுகின்றேன் கேளுங்கள்.
யாமறிந்த மொழிகளிலே
தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங்காணுேம் பாமரராய் விலங்குகளாய்
உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மைகெட்டு காமமது தமிழரெனக்
கொண்டிங்கு வாழ்ந்திடுதல் கன்ருேசொல்லீர் தேமதுரத் தமிழோசை
உலகமெலாம் பரவும்வகை செய்தல்வேண்டும்.

கான் கண்ட புரட்சிக் கவி 55
பெயரளவில் மாத்திரமே நாங்கள் தமிழரென்ற பெயரைச் சூடிக்கொண்டு, நாம் நடைப்பிணங்களாக உலாவி வருகின்றுேம், இன்றமிழின் இதமறியாது மிலேச்சர்களாய், மிருகங்களாய், உலகமெல்லாம் நம்மை இகழ்ந்து தள்ள, நம் பாரம்பரிய பெருமை கள் அனைத்தையும் இழந்து, இழிநிலையில் இருந்து வருகின்ருேம். எனவேதான் நான் உங்களுக்குக் கூறு கின்றேன், நீங்கள் உண்மைத் தமிழரானல், இனி மைத் தமிழின் இனிய ஓசை உலக மெல்லாம் பரவ வகை செய்தல் வேண்டும். இதுவே உங்களின் தலையாய கடமை.
அப்படியாக உலகமெல்லாம் தமிழோசை அலை யலையாகச் சென்று பாய்ந்து பரவும் பொழுது, அந்த ஓசைகளில் எல்லாம் அறிவுச் சுடர் பரந்து இருளைக் கெடுக்க வேண்டும். அர்த்தமற்ற வெற்று ஓசையால் உலகு உய்யாது; உயராது; பரிமளியாது; பலன் பெருது. அதற்காக அறிவிற்சிறந்த சான் ருேரை வரிசைப் படுத்தி, அவர்களின் இன் பகானத் தில், அறிவுப் பெருக்கத்தில், உலகை உயர்நிலைப் படுத்த விழைந்து,
யாமறிந்த புலவரிலே
கம்பனைப்போல் வள்ளுவைப்போல்
இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை உண்மை வெறும்புகழ்ச்சி இல்லை என்று கம்பன் வள்ளுவன் இளங்கோ என்போரின் மாபெரும்பெருமைகளை எடுத்துக் காட்டி, அவர்களின் பனுவல்களை ஆவலுடன் படிக்கத் தூண்டுகின்றன். ஆம். கம்பன் கட்டிய இராமாயணத் திருக்கோயி லுட் புகுந்து, அதன் கண்ணமைந்துள்ள ஒவ்வொரு அற்புதக் கோபுரங்களையும் துருவித் துருவி ஆராயும் பொழுது,

Page 38
56 கான் கண்ட பாரதி
கொலையிற் கொடியாரை வேக்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதணுெடு கேர்’
என்ற தேவர் குறளுக்கியைய, துஷ்டர்களை நிக்கிரகித்துச் சிஷ் டர்களைப் பரிபாலிக்கும் உன்னத தத்து வார்த்தத் தின் கீழ், பிள்ளை ஒழுக்கம், பெற்ற ரைப் பேணல், தாய் தந்தையர் கடமை, நட்பின் பெருமை, மாண் புடை மனை மாட்சி, மனு தர்ம சாத்திரத்தின் மகிமை சகோதரத்துவம், சமத்துவம், இராஜரீகம், மானம், வீரம், வைராக்கியம் என்பவைகளின் மகிமைப் பிர தாபங்களால், பனுவல் அலங்கரிக்கப்பட்டிருப்பது தெரியாமற் போகாது.
அப்பால் வள்ளுவன் தந்த திருமறை, மனிதனை மகிமைப் படுத்தி, மனிதனுக வாழ வைத்து, ஈற்றில் தேவலோகஞ் சேர்ப்பிக்கும் ஒரு தனிப்பெருமறை, அதிற் பேசப்படும் அறம் பொருள் இன்பமென்ற முப்பெரும் புருடார்த்தங்களும், கற்பகதரு, சூடா மணி, காமதேனுவை நிகர்க்கும் அதியுன்னத தத்து வங்கள். எனவே தமிழுக்குக் கதியான கம்பனையும், திருவள்ளுவனேயும், கசடறக் கற்ற பின், சேர முனி வன் செய்து தந்த முத் தமிழ்க்காப்பியமாகிய சிலம் பின் மகிமையை நுகர்ந்து, இயலிசை நாடகங்களின் சீரிய தன்மைகளைச் சுவைத்து, நீங்கள் பண்டைப் பெருமைகளுடன் உல்லாசமாய் வாழுங்கள் என்று கூறி, முப்பெரும் புலவர்களையும் அறிமுகப்படுத்தி, சமுதாயச் சீர் கேட்டின் அறியாமையென்னும் அந்த கார இருளின் கொடூரங்கண்டு, கொதித்தெழுந்து, சமுதாயத்தை விழித்து,
“ஊமையராய்ச் செவிடர்களாய் குருடர்களாய் வாழ்கின்றுேம் ஒரு சொற் கேளிர்
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்”

ாகான் கண்ட புரட்சிக் கவி 57
என்று ஆக்குரோசத்துடன் கூறுகின்றன். ஆம். எங்களுக்கு இறைவனற் படைக்கப்பட்ட இரண்டு ஊனக் கண்கள் இருக்கின்றன தான். ஆனல், அறிவு நிறைந்த ஞானக் கண்கள் இன்மையால், நாங்கள் கம்பன், வள்ளுவன், இளங்கோ ஆகியோரின் அரு மைக் காப்பியங்களை வாசிக்க, பேச, இயலாத ஊமையர்களாகவும், இக் காப்பியங்களைப் u ft fyr fr யணஞ் செய்யும் மேடைகளை நாடி, அவைகளின் இன்சுவைகளை நுகரச் சக்தியற்றவர்களாய் இருப்ப தால், செவிடர்களாகவும், இக் காப்பியங்களைக் கைகளில் எடுத்துக் கண் களாற் பார்த்துப் பாட, பரிமளிக்க, பயன்பெற, மொழியறிவு அற்றவர் களாய் இருப்பதால் குருடர்களாகவும் இருக்கின் ருேம். ஆசையால் நாம் தன் மானத் தமிழராய்த் தலை நிமிர்ந்து வாழ, மேன் மை பெற்று உய்ய, உயர் வடைய, தெருவெல் லாம் தமிழ் முழக்கஞ் செழிக் கச் செய்வீர் என்று சங்கநாதஞ் செய்கின்றன்.
அவ்வளவுடன் அவன் தன் போதகத்தை முடித் துக்கொள்ளவில்லை. தன் சிந்தனையைச் சற்றே உயர்த்தி வெளிநாடுகளை அவதானித்து,
பிறங்ாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் மறைவாக கமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை. திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும் என்று நாக்கடிப்பாக வாய்ப்பறையறைகின்றன். என்ன! பிற நாட்டுப் பேரறிஞர்களின் கணித, விஞ் ஞான, பெளதீக, வைத்திய, இரசாயன நூல்களை யெல்லாம், தமிழில் மொழி பெயர்க்கவேண்டும். W-8

Page 39
58 கான் கண்ட பாரதி
முந்தை நாட் பெய்த மழைக்கு நேற்று முளைத்த காளான் களைப் போன்ற அழி படைப்புக்களைப் படையாது, இற வாத புகழ் படைத்த புதுப்புது நூல்களைத் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் என்று செவியறிவுறுத் தி, மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை என் பதை வலியுறுத்தி, வெளி நாட்டோர் வணங்கும் வண்ணம் அதியற் புதப்படைப்புக்களைப் படைக்க வேண்டும் என்று வெகு ஆவேசமாகக் கூறுகின் முன் .
இவ்வாருக அன்பைப் பெருக்கி அறிவைப் பரப்பி வரும்பொழுது மடமை அகல அறிவொளி பரக்கும். அப்பொழுது, நாட்டை நன்னிலைப்படுத்தி ஏற்றம் பெற வைக்கலாம் என்பதில் அவனுக்கு ஒரு திருப்தி.
உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி உண்டாகும் வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின் பள்ளத்தில் விழுந்திருக்கும் குருடரெலாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார் தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார். என்று கூறிப் பரவசப் படுகின்றன். அதாவது புற விருளகற்றும் சூரிய சந்திரர்களால் அகவிருளகற்ற முடியாது. அதற்கு அறிவுக் கிரணங்களே வேண் டும். ஆகையால் முன்பு தான் காட்டியபடி அறிவு பரப்பப்படும் பொழுது உள்ளத்தில் மெய்யறிவு சுடர்விட்டுப் பிரகாசிக்கும். அப்பொழுது வாக்கு வன்மையிலும் அவ்வொளி பிறக்கும். வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப் பெருக்கும் கவிப்பெருக்கும் பாய்ந்து பரவ, அறியாமையாகிய பள்ளத்தில் விழுந் திருக்கும் அறிவு ஞான மற்ற குருடர்கள் எல்லா ரும் விழிபெற்றுப் படியுயர்வார்கள். தேனமிர்தத்

கான் கண்ட புரட்சிக் கவி 59
தமிழின் இன் சுவை கண்டவர்கள் சாவா மருந் துண்ட அமரர் சிறப்பைக் கண்டவர் 8 ளல்லவா என்று அன்பும, பண்பும் மிகுந்த அரிய போதகத் தால், கலை விளக்கேற்றி, சமுக மடமை இருளகல வழிவகுத்துத்தந்த புரட்சிக் கவியை பாரத நாடு என்றும் மறவாது.
“வீடுதோறும் கலையின் விளக்கம்
வீதிதோறும் இரண்டொரு பள்ளி காடு முற்றிலும் உள்ளன ஊர்கள்
ாககர்களெங்கும் பலப்பல பள்ளி தேடு கல்வியி லாததொ ரூரைத்
தீயினுக் கிரை யாக மடுத்தல் கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்"
(ஆ) சமுதாயச் சீர்திருத்தப் புரட்சி
“வகுப்புப் பகைமையைத் தூண்டிவிடுவதினுல் உயிருள்ள மனித சகோதரத்துவத்தைத் தோற்று விக்க முடியாது’ என்பது அடிமைத் தளையை அறுத் தெறிந்த ஆபிரகாம் லிங்கனின் அருள்வாக்கு.
அடிமைப் பாரதத்தை அவதானமாகப் பார்த் தான் பாரதி. நிலவாரியாகவும், மொழிவாரியாக வும், தொழில் வாரியாகவும் நாடு கோடானுகோடிப் பிரிவுகளுக்கு உள்ளாக்கப் பட்டிருப்பதைக் கண் டான். இந்த இழிநிலை அவனை மிக மிக வேதனைக் குட்படுத்தியது. பாரத சமுதாயம் ஒரு மனப்பட்டு ஒன்றுபட்ட சமுதாய மாய் வாழ்ந்தால் அன்றிப் பாரதநாடு அதன் பழம்பெரு நிலையை அடைய முடி யாது என்ற கொள்கையை மனதில் வைத்து,

Page 40
60 கான் கண்ட பாரதி
“பாரத சமுதாயம் வாழ்கவே! வாழ்க!! வாழ்க!!! − பாரத சமுதாயம் வாழ்கவே! ஐய! ஜய ஜய!” என்று ஜயபேரிகை முழக்கி,
'முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொதுவுடைமை ஒப்பில்லாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை" என்ற பொதுவுடைமைத் தத்துவத்தால் யாவரும் ஒரு குலம்; ஒர் இனம்; யாவரும் முதலாளிகள், யா வ ரும் தொழிலாளிகளே! என்று அனைவரையும் சமப் படுத்துகின்ரு ன்.
ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்ம மித்தேசத்தில் எய்தின ராயின் வேதிய ராயினும் ஒன்றே - அன்று
வேறு குலத்தின ராயினு மொன்றே ஈனப் பறையர்க ளேனும் - அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்ருே சீனத்த ராய்விடு வாரோ - பிற
தேசத்தார் போற்பல தீங்கிழைப் பாரோ
என்றும், "ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
அன்னியர் வந்து புகனன்ன நீதி - ஒரு தாயின் வயிற்றிற் பிறந்தோர் - தம்முள்
சண்டை செய்தாலும் சகோதரர் அன்ருே” என்றும் அன்புப் பிணைப்புப் பிணைக்கின்றன்.
ஒரு கையில் உள்ள ஐந்து விரல்களும் உருவில் மாறுபட்ட அளவு பிரமாணங்களைக் கொண்டிருக் கின்றன. எனினும் அவை ஒவ்வொன்றும் அப்படி அமைந்திருக்க வேண்டியது மிக மிக இன்றியமை யாததாய் இருக்கின்றது. ஏனெனில், அவை யாவும் தம்முள் சகலத்திலும் ஒத்த அளவு பிரமாணங்களைக் கொண்டவையாய் இருப்பின், அக்கையால் எப்

நான் கண்ட புரட்சிக் கவி 6
பொருளையும் எடுக்க முடியாது; எத்தொழிலையுஞ் செய்யமுடியாது. எனினும், வேறுபட்ட உருவஅளவு களைக் கொண்ட ஒரு கையில் அமைந்துள்ள ஐந்து விரல்களும் ஒருங்கு சேர்ந்து ஒருமுகமாய்ச் செயல் புரிய இயைந்தாலன்றி, அக்கையால் எச்செயலையும் செய்ய முடியாது.
உருவிற் சிறிய அச்சாணி, உருள் பெருந்தேருக்கு உயிராணியன் ருே ! “அச்சாணியற்ற தேர் முச்சா ணும் ஓடா”தென்பது பழமொழி, உருவிற் சிறிய தாகிய காரணத்தால், அச்சாணியைக் குறைவாக மதித்து, அலட்சியம் செய்து, தள்ளிவிட முடியுமா? ஒரு பொழுதும் முடியாது. அதுபோலவே உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவரின் உழைப்பும், உதவியும், ஒத்தாசையுந் தேவை. மனித உதவியின்றி எந்த ஒரு மனிதனும் உலகில் உயிர் வாழ முடியாது.
நம்மை வாழ வைத்து, வாழ வழிவகுத்து, வாழ் வில் இன் பங்காண ந மக்கு உதவிய காரணத்தினுலா நம் ஊரவனை, நம் அயலவனை, நம் சுற்றத் தவனை, நம் சகோதரனை, சகலத்திலும் நம் உருவை ஒத்த வனை, நீசன், ஈனன், கீழ்சாதி, எளிய சாதி என்று நிந் திக்கவேண்டும். மேல் நாடுகளில் தொழில் வாரியாக மக்களைப் பிரிக்கும் கீழ்த் தர மனப்பான்மைக்கு இட மில்லாக் காரணத்தினுலேயே அவை கல்வி, கலை, கலாசார, பொருளாதார, நாகரீக வளத்தில் உல கத்தின் உச்சப்படியில் நிற்கின்றன . இதை விளக்க ஈண்டு சீமை மா நகரமென்று பல்லோராலும் புகழப் படும் இலண்டன் மாநகரில் நடந்த ஒரு வரலாற் றைக் கூற ஆசைப்படுகின்றேன்.
இங்கிலாந்தில் இலண்டன் நகரத்தில் "ஒக் ஸ்வேட் சர்வகலாசாலையில் எம். ஏ. வகுப்பில்

Page 41
62 நான் கண்ட பாரதி
கலை பயின்ற வாலிபரில் இருவர் நண்பர்கள். அவ் விருவரும் ஒருங்கிருந்து, ஒன்ரு கக் கலை பயின்று, எம். ஏ. பரீட்சையில் விசேட திறமையுடள் சித்தி பெற்றவர்கள். சித்தியின் பின்பு ஒருவர் இலங்கைக்கு கல்வியதிபதியாய் அழைக்கப்பட்டு வேலைக் கமர்த் தப்பட்டார். அவர் நண்பர் பலவாறு சிந்தித்தார்.
சிந்தனை, தொழில் செய்வதா? உத்தியோகம் பார்ப்பதா? என்ற இவ்விரு பிரச்சனைகளையும் எடை போட்டு நின்றது. ஈற்றில் மனம் உத்தியோகத்தில் நாட்டங்கொள்ளாது, தொழில் செய்வதிலேயே ஈடு பட்டு நின்றது. தொழிலிலும் எத்தொழில் செய்வ தென்று ஆராய்ந்த பொழுது, சவரத்தொழிலிலேயே அவன் மனம் படிந்து நின்றது. உடனே நீண்ட தோர் கட்டடத்தை வாடகைக்கு எடுத்து, அதைச் சவரத்தொழிலுக்குரிய உபகரணங்களால் நிறைத் து பதினைந்து இருபது தொழிலாளர்களை வேலைக்க மர்த்தி தான் எல்லாருக்கும் எஜமானனக இருந்து பணிபுரிந்து வரும்பொழுது, வருடங்கள் மூன்று உருண்டோ டி மறைந்தன.
அவ்வமயம் இலங்கைக் கல்வியதிபதியாய் இருந்த ஆங்கிலத்துரை, விடுதலை காலத்தைக் கழிக்கத் தன் தாயகமாகிய இலண்டன் நகரத்திற்குச் சென்றிருந் தார். அங்கே முகச்ச வரஞ் செய்ய ஒரு சவரகூடத் திற்குச் சென்ருர், அக்கூடத்தில் இவருடன் ஒன் முகப் படித்துச் சருவ கலாசாலையில் இருந்து எம். ஏ. பட்டதாரியாய் வெளிப்பட்ட அதே ஆங்கில நண்பனே, இவருக்கு முகச்சவரஞ் செய்யச் சித் தங் கொண்டான். உத்தியோக உயர் பதவியில் வித்தி யாதிபதியாய் இருந்த அவர் நண்பர், தமது பெருமை மிக்க வாழ்வில் தம் நண்பனை மறந்த போதிலும் * உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம்’ என்று பல வருஷங்களின் முன் நம்

கான் கண்ட புரட்சிக் கவி 3ں
புரட்சிக் கவிஞன் கூறிய கூற்றிற்கு உதாரண புரு டனய் அமைந்து, உலகில் உள்ள சகலருடனும் சமதர்மத்துடன் வாழ்ந்துவரச் சவரத்தொழிற் கூடமே மிகமிக உயர்ந்த தொழிலகம் என்று, சவ ரத் தொழிலைச் சிரமேற்கொண்டு, மனப்பொலிவுடன் செயல் புரியும் ஆங்கில நண்பன், கல்வியதிபதியாய் இருந்து தாயகந் திரும்பிய தன் நண்பனை மதிக்கத் தவறவில்லை.
முகச்சவரஞ் செய்ய ஆசனத்த மர்ந்த தன் நண் பனைப் பார்த்துப் புன்னகை பூத்த முகத்துடன் சவர்க்காரம் பூசுகின் முன் சவரத்தொழில் செய்யும் நண்பன். அவன் முகத்தையும் முகபாவத்தையும் நன்கு அவதானித்த உத்தியோக நண்பன் அவனைப் பார்த்து, என்ன சிரிக்கின்றீர்? என்னை உமக்குத் தெரியுமா? என்று கேட்டார். அதைக் கேட்ட சவரத் தொழில் நண்பன் வெண்ணகை செய்து, என்ன, என்னை நீர் மதிக்கவில்லையா? நாம் இருபேரும் நண்பர்கள் என்பதை நீர் மறந்துபோனுலும், சருவ கலாசாலையில் ஒன்ரு ய் இருந்தோம், படித்தோம், எம். ஏ. பரீட்சையில் தேறி, இருவரும் பட்டதாரி களாய் வெளிப்பட்டோம் என்பதைக்கூட மறந்து விட்டீரே! என்று அன்புகனியக் கூறினன்.
இவ்வார்த்தைகளைக் கேட்டதும் உத்தியோக அன்பர் திடீரென்றெழுந்து, அவனைத் தழுவி நண்பா ! நண்பா!! நீர் எதற்காக? எதற்காக இத்தொழிலைத் தெரிந்தீர்? என்று வெகுமன மடிவுடன் கேட்டார். அதைக் கேட்ட சவரத்தொழில் நண்பர், பொறும், நான் ஏன் இத் தொழிலைத் தெரிந்தேன் என்பதற்கு நியாயங் கூறுகின்றேன். தயவு செய்து உமது வருட வருமானம் என்ன என்பதைச் சொல்லும் பார்க்க லாம்? என்று அமைதியாகக் கேட்டார். அதற்கு உத்தியோக நண்பர் (இலங்கையில் 1934-ம் ஆண்

Page 42
64 ாநான் கண்ட பாரதி
டின் முன்னிருந்த சம்பளத்திட்டப்படி) எனக்கு இரு பதினயிரம் ரூபாய் வருட வருமானம் என்று பெருமையாகக் கூறினர். அவர் வார்த்தைகளைக் கேட்ட சவரத்தொழில் நண்பர் ஏளனச் சிரிப்புச் சிரித்து, இக் கட்டிடத்திற்கு வாடகை கொடுத்து, இதில் வேலைசெய்யும் அத்தனை தொழிலாளர்களுக் கும் வேதனங்கொடுத்து, தளபாட உபகரணப் பொருள்கள் அத்தனைக்கும் பணங்கொடுத்து. வாங்கி யும், எனக்கு வருட மிச்சம் ரூபாய் நாற்பத்தி மூவாயிரம் என்று கூறிய பொழுது உத்தியோக உயர் பதவியில் பெருமிதங்கொண்டிருந்த நண்பர், வெட்கித் தலை குனிந்தார்.
இவ்வரலாற்றில் இருந்து ஒருவனின் பிறப்போ தொழிலோ ஒருவனை உயர்ந்த வனகவோ தாழ்ந்த வணுகவோ ஆக்கிவிடாது என்பதும், அவனின் குண நடை, சன்மார்க்க பழக்க வழக்க ஒழுக்கங்களே அவனை உயர்வு படுத்திக் காட்டும் துலா என்பதும், விளங்கக் கிடக்கின்றது.
'தக்க வின்ன தகாத ன வின்னவென்
ருெக்க வுன்னல ராயி னுயர்ந்துள
மக்க ளும் விலங் கே மனு வின் நெறி
புக்க வேலவ் விலங்கும் புத் தேளிரே' என்ற நீதிக் கவிதை மேற்படி கூற்றிற்குப் பொருத்த மானவோர் எடுத்துக் காட்டாகும். எனவே மக்கள் யாவரும் இன் சொல்லை விளைநிலமாகவும், ஈதலை வித் தாகவும் கொண்டு, வன்சொல்லாகிய களைகளைப் பிடுங்கி எறிந்து, உண்மை என்ற உரத்தை இட்டு, அன்பு என்னும் நீரை ப் பாய்ச்சி, தருமமென்கின்ற கதிர்களைக் காணக் கூடிய சீரிய ஒரு கமத்தை, தங்கள் குறுகிய வாழ்நாட்களிற் செய்ய முற்படுவார்களேயா ணுல், நாட்டில் இனப் பிரிவினைகளுக்கு, சண்டை சச் சரவு கோப தாப பாவங்களுக்கு இடம் ஏது?

நான் கண்ட புரட்சிக் கவி 65
இப்படிப்பட்ட பரந்த உள்ளம் படைத்த ஓர் ஒப் பரிய சமுதாயத்தை உண்டாக்கச் சதா கனவு கண்டு கொண்டிருந்த பாரதி,
* எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்
யாவர்க்கும் அந்த நிலை பொது வாகும் முப்பது கோடியும் வாழ்வோம் - வீழின்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்' என்று இப்படி அவன் கூறிய கூற்று, நம் மனைவரை யும் அதிர்ச்சியடையச் செய்கின்றது.
நீரற்ற குளத்தில் அறுநீர்ப் பறவை போன்றவர் களே! நம்மைச் சுரண்டவந்த அன்னியர்கள், நீர் வற்றியதும் மறுகுளம் தேரும் பறவைகளைப்போல அவர்களும் நம்மை ஒட்டாண்டிகள் ஆக்கிவிட்டு ஓடிப் போய் விடுவார்கள் தங்கள் தங்கள் தாயகங்கட்கு. ஆனல், இனத்தால் வேறுபட்ட தாமரை, ஆம்பல், கொட்டி, அல்லி முதலாம் குளத் தாவரங்கள், குளத் தைப் பிறப்பிடமாகக் கொண்ட காரணத்தால் அன்றே குளம் வற்றினலும் குளத்தோடு காய்ந்து, கரிந்து, தீந்து, மழைபெய்து குளமும் நீரால் நிரம்ப அவைகளும் புதுப் பொலிவுடன் விளங்கி, குளத் தோடு ஒன்றித்து அகமகிழுகின்றன. அவ்வாறே நம் நாட்டில் வாழும் கோடானுகோடி மக்களும் எந்த வேதனைகளையுஞ் சமனுக அனுபவிப்போம் என்பதை விளக்கவே, முப்பது கோடியும் வாழ்வோம்; வீழின் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் என்று அரிய வோர் போதகத்தைப் போதிக்கின்றன்.
ஏழை என்றும் அடிமை என்றும் எவனு மில்லை ஜாதியில்
இழிவு கொண்ட மனித ரென்ப திந்தி யாவி லில்லையே

Page 43
66 கான் கண்ட பாரதி
வாழி கல்வி செல்வ மெய்தி
மன மகிழ்ந்து கூடியே
மனிதர் யாரு மொருங் கர்ச
மானமாக வாழ்வ "மே
இத் திருநாட்டில் ஏழை என்றும் அடிமை என் றும் எவனும் இல்லை. ஜாதியில் இழிவுபட்டவர்கள் என்ற ஒரு இனம் இந்த இந்தியாவில் இல்லை. ஆகை யால் கல்வி செல்வம் கதித் தோங்க, யாவரும் சரி நிகர் சமானமாக ஒன்று கூடி வாழ்வோம் என்ற பொதுவுடைமைத் தத்துவார்த்தத்தை- சமதரு மக் கொள்கையை அன்பு ததும்பக் கூறியிருக்கின்றன். ஈற்றில்,
‘எல்லாரும் ஒர் குலம் எல்லாரும் ஓர் இனம்
எல்லாரும் இந்தியா மக்கள் எல்லாரும் ஒர்நிறை எல்லாரும் ஒர்விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர்’ என்று புரட்சிகரமான ஒரு சீர்திருத்தப் போதகத் தைத் தந்து, அப்புனித போதகப்படி யாவரையும் சமநிலையில் வழிநடத்திச் செல்லும் சீர்திருத்தச் செம் மலை உலகம் என்றும் போற்றக் கடமைப்பட்டுள்
வாது. f
(இ) மாதர் விடுதலைப் புரட்சி
பெண்கள் எனப்படுவோர், ஆடவர்களின் இச் சைகளைத் தீர்க்கும் காம பீடங்களாகவும், மடைப் பள்ளிகளில் அடுக்களைகளில் மடைப்பணி புரியும் மடைப் பெண்களாகவுமே செயற்படப் பிறந்தவர் கள் என்ற தப்பிதமான ஒரு மனப்பான்மை பாரதி யின் காலத்தில் பாரத தேசமெங்கணும் பரவிக் கிடந் 25.

கான் கண்ட புரட்சிக் கவி 67
கணவன் இறக்க உயிரோடிருக்கும் அவன் மனை வியை, அவள் விருப்பத்திற்கு முற்றிலும் மாருக, அவள் அழுது புலம்பித் துடித்துப் ப ைதத்து ஓடின லும் கூட, அவளை ஒடவிடாது பலாத்காரமாகப் பிடித்து, கணவனின் பிணத்தோடு பிணித்து, தீயி லிட்டு உயிரோடு த கன ஞ் செய்து, உடன் கட்டை யேறுதல் என்ற உன்னதப் பெயரும் சூட்டப்பட்டு வந்த அநியாயச் செயல்களுக்குப் பிரித்தானியரின் ஆட்சியில் சா வுமனியடிக்கப்பட்டு விட்டது. தங்கள் பருவத் துடிப்பால் தவறிழைத்த இளம் பெண்களை ஆற்றில் எறிந்தும், பாலரை உருளையால் நெரித்தும், வதைத்து வந்த அக்கிரமச் செயல்கள் யாவும், அன்ன வர் ஆட்சியில் நிக்கிரகஞ் செய்யப்பட்டு விட்டன. இவைகளை வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு என்ற பகுதியில் வெகு உருக்கமாக எடுத்துக் காட்டி உள் ளம் உருகி நிற்கின்றன் பாரதி.
யாற்றினிற் பெண்களை எறிவதூஉம் இரதத் துருலையிற் பாலரை உயிருடன் மாய்த்ததுஉம் பெண்டிரைக் கணவன் பிணத்துடன் எரித்தலும் எனப்பல தீமைகள் ஒழிந்துபட் டனவால் என்று அவன் பாடியதில் இருந்து அவ்வட்டூழியச் செயல்களை நாம் அறியக் கிடக்கின்றது.
பெண்ணினம் ஒரு புனித இனம், அதைப் புனி தப்படுத்தவேண்டியது ஆடவர் அனைவரினதும் கடமை, அவர்களை அடிமைகள் என்று கொள்வது மடமை. அவ்வபூர்வ இனம் இல்லையேல் உலகமே இல்லை.
* தாயோ டறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம் சேயோடு தான் பெற்ற செல்வம்போம் - மாய வாழ்வு உற்ற ருடன்போம் உடன்பிறப்பாற் ருேள் வலிபோம் பொற்ருலி யோ டிவையெல் லாம்போம்”

Page 44
68 நான் கண்ட பாரதி
என்ற ஆன்ருேர் வாக்கு இதை உறுதிப்படுத்துகின் றது. எனவே, மங்கல ம%ன விளக்குகளாகிய மங்கை யரை இழிவுபடுத்தி, அவர்களை அடிமைகொண்டு, அவர்களை நாயினுங் கடைப்பட்டவர்களாகக் கரு திய கருத்தைப் புதை குழியிற் றள்ளி, வீட்டில் பெண்களை விடுதலை செய்யவேண்டிய பொறுப்பு முந்த முந்தப் பாரதிக்கு ஏற்பட்டது.
**பெண் டாட்டி தனையடிமைப் படுத்தவேண்டி
பெண் குலத்தை முழு தடிமைப் படுத்தலாமோ கண்டார்க்கு நகைப்பென்னும் உலகவாழ்க்கை
காதலெனும் கதையினுடைக் குழப்பமன் ருே” **தாய்க்குமேல் இங்கேயோர் தெய்வமுண்டோ
தாய்பெண்ணே யல்லளோ தமக்கை தங்கை வாய்க்கும்பெண் மகவெல்லாம் பெண்ணேயன் ருே மனேவியொருத்தியையடிமைப் படுத்த வேண்டித் தாய்க்குலத்தை முழுதடிமைப் படுத்தலாமோ”
என்று வெகு மனக்கொதிப்புடன் கேட்கின்றன் . ஏனெனில் வீடுகள் தோறும் பெண்ணினம் அடிமை யாக்கப்பட்டு, விட்டுச் சிறையில் அடைபட்டுக் கிடக்க, அச்சிறைக் கூடங்களை உடைத்து அவர்களை விடுதலை செய்யாது அன்னியர் பிடியில் இருந்து நாட்டை விடுவிக்க முயல்வது, மடமை எனப்பட்டது அவனுக்கு. அதற்காகப் புதுமைப் பெண்ணைத் தெய் வக் கோலத்திற் படைத்து, அவள் வாயிற் புகுந்து, அவள் வாயிலாக அபூர்வ போதனைகளை உலகத்திற் குப் படிப்பிக்கின்ரு ன்.
அறிவு கொண்ட மனித உயிர்களை அடிமையாக்க முயல் பவர் பித்தர். எல்லா நெறிகளிலும் மேம்பட்டு மனிதர் நேர்மை கொண்டு உயர்ந்து, தேவர்களா வதற்குச் சிறிய தொண்டுகளைத் தீர்த்துக் கட்டி அடி மைச் சுருள்களைத் தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டும்.

ாகான் கண்ட புரட்சிக் கவி 69
ஆண்களும் பெண்களும் சரிசமனென்று ஏற்றுக் கொள்வதால், அறிவு பெருகி உலகம் செழிக்கும். நல்ல தருமமே உருவாகக் கொண்டு இங்கே பெண் வடிவாய் வந்திருப்பது, அன்னை பராசக்தியே!
"நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்
ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற் குடிப் பெண்ணின் குணங்களாம்’
இக்கூற்றினல் மற்றக் கவிஞர்களைப் பழிக்கின்றன். ஏனெனில் அவர்கள் பெண்களுக்கு இயல்பாகவே இருக்கவேண்டியவைகள், நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்ற நாற்குணங்களுமே என்கின்றனர். ஆனல் இவன், அக்குணங்களைப் புதுமைப் பெண் வாயிலாக, நாய்க் குணங்கள் என்று கண்டித்து, அவைகளுக்குப் பதிலாக, ஞானம், நல்லறம், வீரம், சுதந்திரம் ஆகிய நான்குமே வீரப்பெண்களுக்கு இருக்க வேண்டிய நாற்குணங்களாம் என்று புரட்சி கரமான ஒரு போதனையைத் தருகின்ரு ன்.
**தாயைப்போ லேபிள்ளை யென்று முன்னேர்
வாக்குளதன் ருேபெண்மை அடிமையுற்ருல் மக்களெலாம் அடிமையுறல் வியப் பொன் ருமோ”
நிலத்தின் தன்மை பயிருக்குச் சாதக பாதகமாய் இருப்பதுபோல, ஈன அடிமைத் தொண்டு புரிந்து அறியாமையில் முழுகிக் கிடக்கும் தாய், உலகில் மாண் புடைய மக்களைப் பெறுவது அரிதினும் அரிது.
குலப்பெண்களுக்குக் கற்பு இயல்பாகும். ஆகை யால் அக்கற்பைக் காக்க வேலியோ காவலோ போட வேண்டிய அவசியம் இல்லை.
*சிறைகாக்கும் காப்பெவன் செய்யு மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை"

Page 45
70 கான் கண்ட பாரதி
என்ற வள்ளுவர் வாக்கும் இக்கூற்றை உறுதிப் படுத்து கின்றது. ஆகையால் நிறைக்காவல் இல்லையெனில் சிறைக்காவலாற் பயனில்லை. w
நிமிர்ந்த நன் ன டை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையே
அறியாமையிற் புதைந்து, அவல மெய்தி, கல்வி அறிவின்றி வாழ்வதை, உமிழ்ந்து தள்ளுதல் பெண் ணறமாகும். அத்துடன் கிணற்றுத் தவளை போல் ஒரு வீட்டில், ஒரு நாட்டில், முடங்கிக் கிடவாது, உலகின் எல்லாத் திசைகளுக்குஞ் சென்று, அவ்வவ் விடத்துக் கல்வி, கலாசார, கைத்தொழில் நுட் பங்களைத் தானும் கற்றுவந்து, திலக வாணுத லார் கங்கள் பாரத தேசம் ஓங்க உழைத்திட வேண்டும். இதை விடுத்து வீடுகளில், பொந்துகளில், பதுங்கிக் கொண்டிருப்பதை வீரப் பெண்கள் உதறித் தள்ள வேண்டும்.
பலப்பல சாத்திரங்களைக் கற்று, அளப்பரிய சவுரிய வேலைகளைச் செய்து, பழைய பொய்யான மூடக்கதைகளை அழித்து, மூடக் கட்டுப்பாட்டுகளை உடைத்தெறிந்து, நிறை காத்து, தம் செய்கைகள் அனைத்தையும் கடவுளருக்கு அர்ப்பணித்து, ஆண் கள் ஏற்றிப் போற்றிப் புகழ்ந்திட வாழவேண்டி யது, பெண்களாகிய உங்கள் அனைவரினதும் கட மையாகும் என்று, புதுமைப் பெண் வாயிலாகப் பெண்ணினத்தின் உரிமைகளையும், கடமைகளையும் அறிவுறுத்தி வைக்கின் முன்.
அத்துடன் அவன் கூற்று நின்று விடவில்லை. உலகம் உயர்ந்து ஓங்கி நடக்க, நிலைக்க, உய்ய

கான் கண்ட புரட்சிக் கவி 7
உறுதுணையாய் இருக்கும் பெண்களை, அவர்களின் பெருமை மிக்க பெண்மையைப் பாராட்டிச் சீராட்டி வாயாரப் புகழ்ந்து வாழ்த்துகின்றன் .
*பெண் மை வாழ்க என்று கூத்தாடுவோமடா' என்று அவன் எடுக்கும் எடுப்பிலே பெண்கள் பால் அவன் வைத்துள்ள அபார மதிப்பும், அவர்களிடத் தில் அவன் கொண்டுள்ள ஆரா அன்பும், அவர்கள் விடுதலையில் அவனுக்கு இருந்த பெருவேட்கையும், அலைமோதி, ஒன்றை முந்தி ஒன்று வருவதை அவன் கவிதைகளில் நன்கு அவதானிக்கலாம்.
‘அன்பு வாழ்க என்று அமைதியில் ஆடுவோம்’ என்று கூறிப் பின் பண்டு தொட்டுப் போற்றப் பட்டு வந்த ஐந்திணை என்னும் அன்புடைக்காம மாகிய ஆசைக் காதலைக் கை கொட்டி வாழ்த்து வோம் என்று வா யார வாழ்த்துகின்ருன்.
*" துன் பந் தீர்வது பெண்மையினுல், வலிமை சேர்ப்பது தாய் முலைப் பால், கலியழிப்பது பெண் களறம், உயிரைக் காக்கும் உயிரினைச் சேர்த்திடும், உயிரினுக்குயிராய் இன்பமாகிடும், உயிரினும் இந் தப் பெண்மை இனி தடா" என்று அவன் கூறு முகத்தால் பெண்களின் பெருமையைப் பிறங்க வைக்கின்றன்.
'போற்றி தாயென்று தோள் கொட்டி யாடுவீர்
புகழ்ச்சி கூறுவீர் காதற் கிளிகட்கே நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம்
நுண்ணி டைப்பெண் ஞெருத்தி பணியிலே’ “போற்றி தாயென்று தாளங்கள் கொட்டடா
போற்றி தாயென்று பொற்குழ லூதடா காற்றி லேறியவ் விண்ணையுஞ் சா டுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே'

Page 46
72 ாகான் கண்ட பாரதி
'அன்ன மூட்டிய தெய்வ மணிக் கையின்
ஆணை காட்டில் அனலை விழுங்குவோம் கன்னத் தேமுத்தங் கொண்டு களிப்பினும் கையைத் தள்ளும் பொற் கைகளைப்
பாடுவோம்”
என்றிவ்வாருக பெண்மையை, தாய்மையை, அன்பை, பண்பை, வீரத்தை , தியாகத்தை வாயார வாழ்த் திய பின், பெண்கள் விடுதலை பெற்று விட்ட தாகக் கற்பனை பண்ணி ஆனந்தக்கும்மியடிக்கின்ரு ன்.
கும்மியடி தமிழ் நாடு முழுவதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மி யடி
நம்மைப் பிடித்த பசாசுகள் போயின
நன்மை கண் டோ மென்று கும்மி யடி
பெண் மணிகளே ! உங்கள் விடுதலை கண்டு, நீங் கள் குதூகலித் தாடும் ஆர்ப்பாட்டங் கேட்டுத் தமிழ் நாடு முழுவதும் குலுங்கிட வேண்டும். பெண் னினம் கற்கக் கூடாது, அவர்களுக்குச் சமஉரிமை இருக்கக் கூடாது, அவர்களுக்கு வீட்டை விட்டு வெளிப்பட உரிமையிருக்கக் கூடாது என்று கூறி, அவர்களைக் கட்டி யொடுக்கி அடக்கி அடைத்து வைத்த மூடக் கொள்கைகளைப் போதிக்கின்ற பசா சுகள் எல்லாம் பறந்து போயின என்பதினுல், நன் மை பெற்று விட்டோம் என்று ஆனந்தித்துக் கும் மியடியுங்கடி என்று ஆவேசம் பொங்கக் கூறுகின் ரு ன.
ஏட்டையும் பெண்கள் தொடுவதும் தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டுக்குள் ளேபெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விக்தை மனிதர் தலை கவிழ்ந்தார். கற்பு நிலைபற்றிப் பேசுவார்களேயானல், அஃது
இருபாலாருக்கும் வேண்டியதே. ஆயினும் பலாத்

நான் கண்ட புரட்சிக் கவி 73
காரமாக ஒரு பெண்ணை ஒருவனுக்கு வற்புறுத்திக் கட்டிக் கொடுக்கும் வழக்கத்தைக் காலால் உதைத் துத் தள்ளிவிட வேண்டும். படித்துப் பட்டங்களைப் பெற்றுச் சட்டங்களியற்றல் ஆதியனவற்றைப் பெண்களே செய்ய வந்திருக்கின்றர்கள். கல்வியில் ஆண்களிலும் பெண்கள் சளைத்தவர்களல்ல.
‘வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந் தோமென்று கும்மியடி
சாதம் படைக்கவும் செய்திடுவோம்-தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம்
காதலொ ருவனைக் கைப்பிடித் தேயவன்
காரியம் யாவினும் கைகொடுத்து
மாதர றங்கள்ப ழமையைக் காட்டிலும்
மாட்சிபெறச்செய்து வாழ்வோ மடி’
பொங்கும் அன்புருவாகி அருள் வடிவு கொண்டு வேதங்களைப் படைப்போம். உயர்ந்த நீதி சாத்தி ரங்களையும் படைப்போம். அத்துடன் எமது பெண் ணினத்திற்கே சிறப்பாக உரிய சாதம் படைப்ப துடன், மங்கல மனே மாட்சியின் நன்கலன்களாகிய, தெய்வச் சாதியென்று போற்றும் பெருமை வாய்ந்த அறிவறிந்த நன்மக்கட் சாதியையும் படைப்போம். அன்புள்ள ஒருவனை மணப்போம். ஓரகத்திருப் போம். அவன் கருமங்கள் யாவற்றிலும் கைகொ டுத்துத் தருமங்களைப் பேணி பழமையிலும் பன் மடங்கு புகழ் பரப்பி வாழ்வோ மென்று, பெண்ணி னத்தைப் பெண்களின் வாயிலாகவே வாழ்த்திக் குதூகலித்துக் கும் மியடித்து, பின் பெண்கள் விடு தலையில் அழுங்குப்பிடியாய் நின்று, மங்கையர் வாயிலாகவே கொம்பெடுத்துக் குழலூதி வெற்றி முரசு கொட்டுகின்ருன்.
W-10

Page 47
74 கான் கண்ட பாரதி
விடுதலைக்கு மகளிர்கள் எல்லோரும் திரண்டு விட்டோம். இனி எந்த ஒரு மனித சக்தியினலும் எங்களை அடக்கி ஒடுக்கி விட முடியாது. ஆண் பெண் இருவரையும் அன்னை பராசக்தியே படைத் தவள். அப்படைப்பில் எவரையும் ஏற்றி இறக்கிய வள் படைக்கவில்லை. ஆண்களுக்குப் பெண்கள் எப்படியோ, அப்படியே பெண்களுக்கு ஆண்களும். ஆண்கள் இல்லையேல் பெண்கள் இல்லை. பெண்கள் இல்லையேல் ஆண்கள் இல்லை. இருவரும் இல்லை யேல் மனித சமுதாயமேயில்லை. எனவே, எங்களைக் கீழோர் என்றும், எங்களை அடிமைகள் என்றும், எங் களை நசுக்கி ஆள்வதை எங்கள் சமுகம் இனி ஒரு பொழுதும் பொறுக்காது.
*திறமை யாலிங்கு மேனிலை சேர்வோம்
தீய பண்டையி கழ்ச்சிகள் தேய்ப்போம் குறைவி லாதுமு முநிகர் நம்மைக்
கொள்வ ராண்களெ னரிலவ ரோடும் சிறுமை தீரநந் தாய்த் திரு நாட்டை
திரும்ப வெல்வதிற் சேர்ந்திங் குழைப்போம் அறவி ழுந்தது பண்டைவ ழக்கம்
ஆணுக் குப் பெண் விலங்கெனு மஃதே”
விடியு நல்லொளி காணுதி நின்றே
மேவு நாகரீ கம்புதி தொன்றே
கொடியர் நம்மைய டிமைக ளென்றே
கொண்டு தாமுத லென்றன ரன்றே
கடமை செய்வீர்நம் தேசத்து வீரக்
காரிகைக் கணத் தீர்துணி வுற்றே”
பெண்களாகிய நாமனைவரும் நம் திறமையால் மேனிலையடைவோம். பண்டைய பழைய மூடவழக் கங்களை அழித்து, ஆண்கள் எங்களைச் சமனகச் சகலத்

நான் கண்ட புரட்சிக் கவி 75
திலும் கொண்டால், நாமும் சகல துறைகளிலும் தோளோடு தோள் நின்று, நம்தாய்த்திரு நாட்டைத் திரும்பிப் பெறுவதில் சேர்ந்து உழைப்போ ம . கடந்த காலங்களில் ஆண்கள் உல்லாசமாய் ஏறியிருக்கப் பெண்ணினம் அவர்களை வைத்து வண்டி இழுக்கப் பிறந்த விலங்கினங்கள் என்ற தப்பித மனப்பான் மைகள் யாவும் மண் கெள விவிட்டன. இரவும் பகலும் ஒருவழி நில்லாதென்ற படி இரவு முடிந்து, பொழுது விடிந்துவிட்டது.
நாங்கள் இன்று இப்பொழுது அடைந்துள்ள நாகரீக நிலை, எங்கள் இனத்திற்குப் புதிதல்ல. பழமை பட்ட எங்கள் சம்பிரதாயமே இப்படிப்பட்டதுதான்; எங்கள் இனத்தை எந்த ஒரு ஆடவனும் இனியும் அடிமை கொள்ளமுடியாது என்று பெண்களின் வாயி லாக அவர்கள் உரிமைகளையும், கடமைகளையும், அவர்களின் மகிமைகளையும், மாண்புகளையும், பிர பல்லியப் படுத்திச் சென்ற புரட்சிக் கவிஞனை, பெண் ணுலகம் என்றென்றும் ஏற்றிப் போற்றக் கடமைப் பட்டுள்ளது.
(ஈ) விவசாயப் புரட்சி
உலக அரசியற் பீடங்கள் அனைத்தும் ஒருகாலத் தில் எண்ணிக் கொண்டிருந்தன; காற்சட்டை, மேற் சட்டை, தொப்பி, சப்பாத்துக்களைப் போட்டுக் கொண்டு தெருக்களில் உல்லாசப் பவனி வருகின்ருர் களே ஒரு சாரார், அவர்கள்தான் உலக அரங்கில், அதியுன்னத அரசியல் தேர்களை உருட்டுகின்றவர்கள் என்று. ஆணுல் இரண்டாவது உலக மகா யுத்தம் பிறந்ததும், உலகின் பல பாகங்களிலும் குண்டுகள் விழுந்தன. அப்பொழுது அன்னிய நாடுகளின் இறக்கு

Page 48
76 நான் கண்ட பாரதி
மதிகள் யாவும் தடைப்படவே, உள்ளூர் உற்பத்தி களைப் பங்கீடு பண்ணி, ஒவ்வொரு நாட்டு மக்களும், சகோதர பாவத்துடன் யாவற்றையும் பகிர்ந்து, உண்டு, உயிர் வாழவேண்டிய பயங்கர நிலையில் உல கம் உருண்டோடிக் கொண்டிருந்தது. அவ்வேளை யிலேதான்,
உழவுக்குக் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று எத்தனையோ ஆண்டுகளுக்கு முன், நம் மகிமை பொருந்திய புரட்சிக் கவிஞன் சங்கநாதஞ் செய்த சங்க நாதத்தின் இங்கித ஒலி, அரசியற் பீடங்களில் அமர்ந்திருந்தவர்களின் செவித் துளைகளிற் பாய்ந்து பரவ, அவர்களின் நோக்கு இன்னுேர் சாரார்மேற் படிந்தது. அவர்கள் யாவர்?
ஒரு கையிற் கடகம், மறு கையில் மண்வெட்டி தாங்கிக்கொண்டு, கெளட்பீன தாரிகளாக, அரை நிரு வாண கோலத்துடன் பகலிர வைப் பாராது, வெயில் மழையை ஓராது,
மண்டினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற மணிமேகலை மணிமொழிகளின்படி உலகத் திற்கு உயிர் கொடுக்க தங்கள் உடல்களை, தங்கள் உயிர்களைப் பணயம் வைத்துப் படாப் பாடுபட்டு உழைக்கின்ருர்களே உழவர்கள்; அவர்கள்தான் அகி லத்திலும் அரசியற் தேர்களை உருட்டுகின்றவர்க ளன்றி, இக் காற்சட்டைகள் அல்ல; என்ற உண்மைச் சித்தாந்தத்தை அரசாங்கம் உணர்ந்து, விவசாயிக ளுக்கு ஆக்கமும், ஊக்கமுங் கொடுக்க முன்வந்தது குறித்து விவசாயிகள் சார்பில் மகிழ்ச்சியடைகின் றேன்.
மக்கள் யாக்கை உணவின் பிண்டம் என்ற மணிமேகலைக் கூற்றின் படி உடலில் உயிர்வாழ உணவு வேண்டும். 'ஊணற்ற போதே உடலற்றுப்

கான் கண்ட புரட்சிக் கவி 77
போம்” என்ற பொன் மொழியும், இக்கூற்றை மெய்ப் பிக்கின்றது. இவைகளில் இருந்து, உழவுத்தொழில் உசிதமானது என்பதும், உயர்ந்தது என்பதும், இன்றி யமையாத தென்பதும், உலகத்திற்கு உயிரை அளிப் பது என்பதும் பிரத்தியட்சமாகின்றது. ஒளவைப் பிராட்டியும்,
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாங் தொழுதுண்டு பின்செல் பவர் என்றும்
தொழுதுரண் சுவையின் உழுதுரண் இனிது என்றும் கூறுமுகத்தால் உழவின் மகிமையை உல கிற்கு எடுத்துக் காட்டியுள்ளார்.
கல்வியிற் பெரியராகிய கம்பரும், ஏர் எழுபது என்னும் அரிய நூலில்,
** அலகிலா மறைவிளங்கும் அந்தணரா
குதிவிளங்கும் பலகலையாந் தொகைவிளங்கும்
பாவலர்தம் பாவிளங்கும் மலர்குலாந் திருவிளங்கும் மழைவிளங்கும்
மறைவிளங்கும் مஉலகெலா மொள்விளங்கும் உழவருழு
முழவாலே" என்றும்
*கார்நடக்கும் படி நடக்கும் காராளர்
தம்முடைய ஏர் நடக்கு மெனிற் புகழ்சா லியலிசைநா
டகநடக்கும் சீர்நடக்குந் திறை நடக்கும் திருவறத்தின்
செயல் நடக்கும்
பார் நடக்கும் படைநடக்கும் பசிநடக்க
மாட்டாதே"

Page 49
78 ாகான் கண்ட பாரதி
என்றும் கூறி, உலகப் பெருஞ் சிறப்புக்கள் அனைத் திற்கும் உறுதுணையாய் இருக்கின்ற உழவுத் தொழி லின் மகிமையைப் பிரபல்யப்படுத்திச் சென்றுள் οιτ π ή .
நம் புரட்சிக் கவி பாரதியும் பாரத சமுதாயத் தைத் தலை நிமிர்ந்து பார்த் தான். கோடானு கோடி மக்கள் கூடிவாழும் திருநாடு, வறுமையில், பசியில், பஞ்சத்தில், மிடியில் சிக்கி அல்லோல கல்லோலப்பட் டுக்கொண்டிருந்த துயரக் காட்சியைக் கண்ணுரக் கண்டான். அக்காட்சி அவனை வெகு வேதனைக்குள் ளாக்கி விட்டது.
ஒரு காலத்தில் ஈவோருக்கு இரப்பாரே இல்லா திருந்த திருநாட்டில், மக்கள் இரந்து உண்டு உயிர் வாழும் இழிநிலை, அவனைத் துரக்கி வாரிப் போட்டு விட்டது. அவ்வளவில்,
இாந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்
என்று கூறிய தெய்வீக வள்ளுவன் அவள் சிந்தனை யிற் ருேன்றலும், மாபெருஞ் சிந்தனையாளனுகிய பாரதி, அவ்வள்ளுவன் வாய்மொழியைச் சிறிது சிந் திக்கலாஞன்.
என்னை? பசு மாடு சாகும்பொழுது தன் கன் றுக்குப் புல்லுப்போட்டுச் சாகுவதில்லையே! அப்படி யிருந்தும் அக்கன்று, தான் கிடக்கும் இடத்திலேயே முளைத் திருக்கும் இளம் புற்களைக் கறித்து, உண்டு உயிர் வாழவில்லையா? அவ்வாறே உலக சீவராசிகள் அனைத்தும், உலக சூழ்நிலைகளைத் தத்த மக்கு உரிமை யாக்கிக்கொண்டு உவப்புடன் வாழ்ந்து வருகின் றனவே!

நான் கண்ட புரட்சிக் கவி 79
சருவ வல்லடம் படைத்த கடவுள், மனிதனைத் தமது சாயலாகப் படைத்து, அவன் மகிமையுடன் வாழ, அவனுக்காக உலகில் உள்ள அனைத்தையும் படைத் திருக்கின்றர். ஒன்று மறியாத இளங்கன்று, தன் தாய் இறந்துங் கூட, பக்கத்துப் புல்லினங்களைத் தின்று உயிர் வாழ்ந்தால் பகுத்தறிவு படைத்த மணி தன் ஏன் இரந்துண்டு வாழவேண்டும்.
இயற்கை அதன் மகிமைகள் அனைத்தையும் அள் ளிக் கொடுத்து அவனை மகிமைப்படுத்த இருக்கவும், பகுத்தறிவு படைத்த மனிதன், அவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு, தேம்பியிருந்து, சோம்பி யிருந்து ஏன் இறைவனைக் குறை கூறவேண்டும்.
இறைவன் யாவரையும் படைத்து யாவருக்கும் ஒரு தன்மைய அறிவைத் தந்திருக்கின்ரு ன். அந்த அறிவின் வழிநடந்து உயர்நிலை அடையவேண்டியது அவரவர் கடமை. அந்த அறிவைப் பிரயோகியாது, சுணங்கனைப்போற் சுருண்டு கிடப்பதற்கு அவன் குற்றவாளியன்று. அப்படி அக் கடவுள் ஒரு சிலருக்கு வாழ்வளித்து, ஒரு சிலருக்கு வாழ்வழித் திருப்பானே யானல், சருவ மகிமை படைத்த தேவன்; ஒரன். அநீதன். நடுநிலைமை யற்றவன். அவனுக்கு உலகத் தைப் புரக்க, காக்க, வழிநடத்த எள்ளளவும் யோக் கியதை இல்லை. ஆகையால் அப்படிப்பட்ட கடவுள், நடுநிலைமையற்ற கடவுள், நிச்சயம் அழிந்தொழிய வேண்டும் என்று தேவ வள்ளுவன் ஆவேசமாகக் கூறிய கூற்றைப் பரிசீலனை பண்ணி, மெய்ப்பொருள்
கண் டான் பாரதி.
உடனே மக்களைப் பார்த்து எனது அன்புச் சகோ தரர்களே! நம் நில மடந்தை நமக்கு அளவிறந்த மூல வளங்களை அள்ளித் தந்திருக்கின்ருள். அவை களைக் கொண்டு உயர்வடைவது நமது கடமை. நாம்

Page 50
80 கான் கண்ட பாரதி
அவ்வளங்கள் அனைத்தையும் பயன்படுத்திப் பலன் பெருது சும்மா இருந்துகொண்டு, படைத்தவன் படி யளப்பான்; படைத்தவன் படியளப்பான் என்று கூறிக்கொண்டு வாழா விருப்பதால் நமக்கு ஒரு போதும் பயன் கிடைக்காது. ஆகையால் நான் கூறுவதைச் சற்றுக் கவனித்துக் கேளுங்கள்.
மனிதர் உணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனி யுண்டோ
மனிதர் கோக மனிதர் பார்க்கும்
வழக்கம் இனி யுண்டோ
இனியொரு விதி செய்வோம் - அதை
எந்த காளும் காப்போம் தனி யொருவனுக்கு உணவில்லை யெனில்
ஜகத்தினை அழித் திடுவோம் என்று அவன் கூறிய கூற்று நம்மனைவரையும் பெரும் அதிர்ச்சியடையச் செய்கின்றது. ஆனல் பாடலின் புதை பொருள் தெரிந்தால், அதிர்ச்சியடைவதற்கோ ஆச்சரியப்படுவதற்கோ எள்ளளவும் இடம் இராது.
பாரதியின் மேலே காட்டிய கவிதை யடி, பெரிய தோர் பொருளைத் தெரிவித்துக்கொண்டு நிற்கின் றது. இல்லை; பெரும் போதகத்தை நமக்குப் போதித் துக்கொண்டு நிற்கின்றது. அஃது என்னையெனில், இந்தத் திருநாட்டில் ஒரு மனிதனுக்கு உரிய உணவை, இன்னும் ஒரு மனிதன் பறித்து உண்ணும் வழக்கம் இனியொரு பொழுதும் இராது.ஒரு சிலரை வருத்தி, வ தக்கி, அவர்கள் உதிரத்தைச் சாருகப் பிழிந்து, குடித்து, ஒரு சிலர் உடலை வளர்த்து உல்லாசமாய் வாழும் வழக்கம் இனி ஒரு பொழுதும் இத் திருநாட் டில் இராது. எனவே அவ்வாறெல்லாம் நடவாதி ருப்பதற்காக, அதற்கு இனியொரு வழிவகுப்போம். அதை எந்த நாளும் காப்போம். இந்த உலகத்திற்

கான் கண்ட புரட்சிக் கவி 8
பிறந்த ஒரு தனி மனிதனுக்கு உண்ண உணவில்லை யெனில், “ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று ஒரு அரிய பெரிய போதகத்தைத் தந்துள்ளான்.
ஆம். ஜகத்தினை அழித்திடுவோம் என்று அவன் ஆர்வமுடன் கூறிய கூற்றைப் பரிசீலனை பண்ணும் பொழுது, பூமியை அழிப்போம்; காடுகளை அழிப் போம்; களனிகள் அமைப்போம்; கரடி வனங்களைக் கதலிவனங்கள் ஆக்குவோம். கன்னல் நிலங்களாக்கு வோம்; செந்நெல் வயல்களாக்குவோம் என்று, இப் படிப்பட்ட உயரிய செயல்களால் ஒருவனுக்கே உண்ண உணவில்லை என்று இருந்த இடத்தில், ஜகத் தினை அழித்து, ஜகத்தையே வாழவழி வகுக்கும் பார தியின் உழுபடைத் திட்டம், உயர்ந்ததோர் உணவ பி விருத்தித் திட்டமென்பதை உலகம் ஒருபொழுதும் மறவாது.
(உ) தொழிற் புரட்சி
நிரிகளுக்கும், ஆகாயப் பறவைகளுக்கும், ஏன்? எலிகளுக்கும் முதலாய் குகைகளும், கூடுகளும், வளைகளும் இருக்க, பகுத்தறிவு படைத்த மனிதன், அறிவுக் களஞ்சியமாகிய மனிதன், உண்ண உண வற்று, உடுக்க உடையற்று, இருக்க இடமற்று ஏன் தவிக்கவேண்டும்?
உலகமும், அதில் அடங்கிய சகலமும், அதனைச் சூழ்ந்துள்ள அனைத்தும், பஞ்ச பூதங்களாலேயே ஆனவை. பஞ்ச பூதங்களின் சேர்க்கையாலேயே உலகில் அனைத்தும் உண்டாகின்றன. பஞ்ச பூதங் களின்றேல், உலகமும் அவைகளில் அடங்கிய சகல மும் ஆகிய அனைத்துமே இல்லை.
W-11

Page 51
82 ாகான் கண்ட பாரதி
விஞ்ஞானத்தில் மேலோங்கி விட்டோம் ; விண் வெளிகளிலே உயரப் பறக்கத் தொடங்கிவிட்டோம்; பூமியையே புகழுடன் வலம் வருகின் ருேம்; சந்திர சூரியர்களின் இயல்புகளையுங் கூட, ஆய்வுக் கண் கொண்டு சுற்றிச் சுழன்று ஆராயத் தலைப்பட்டுவிட் டோம்; இறந்தவனின் அங்கங்களைப் பிடுங்கி, உயி ருள்ளவனுக்குப் பொருத்தி, உயிருள்ளவனின் உட லில் அவை செயற்படவும் செய்துவிட்டோம் என்று, பெருமையாகக் கூறி நெஞ்சு தட்டும் அதியற்புதக் கலைஞர்களுங்கூட, இறைவனுல் நமக்கு அருளப்பட்ட, நமக்காக வியாபித்திருக்கின்ற பஞ்ச பூதங்களின் உதவியினலேயே, உலகில் பல அரிய பெரிய சாதனை களையெல்லாம் சாதித்து வருகின்ருர்களேயன்றி, மற் றப்படிக்கல்ல. இப்பூதங்களை அவமதித்துத் தள்ளி விட்டு, அவர்களால் எவ்வித சாதனைகளையும் சாதிக்க முடியாது என்பதை, எவருமே மறுக்கமாட்டார்கள்.
ஐம்பூதங்களின் அற்புத சேர்க் கையாலேயே உல கில் அனைத்தும் தோன்றுகின்றன. அப்பூதங்களைத் தத்த மக்கு ஆதாரமாக்கிக்கொண்டு, ஒரறிவு, ஈரறிவு, மூவறிவு படைத்த சீவராசிகள் முதல7 ய் உல்லாச மாய் வாழும்பொழுது, ஆறறிவு படைத்த மனிதன், அங்க அசைவாட்டங்களின் அற்புதத் துணை கொண்ட மனிதன் இறைவனற் சகல சராசரங்களிலும் அதி உன்னதமாகப் படைக்கப்பட்ட மனிதன், கீழ்த் தரச் சீவராசிகளிலும் வெகு கீழான நிலையில், கதிகலங்கி, வாழ வழியற்று, ஊணுக்கு, உணவுக்கு, இரந்துநின்ற இழிநிலை, பாரதியைத் திடுக்கிடச் செய்துவிட்டது.
நாட்டில் அடிமை ஆட்சியிற் சிக்கி எல்லையற்ற கோடானு கோடிமக்கள், தொழிற் றுறையற்றுத் தேம்பிக் கிடந்தார்கள். அவர்கள் துன்பங்களைத் துயரங்களைப் பார்த்து, ஆத்திரப்படவில்லை; ஆவே சங் கொண்டான். உறங்கிக் கிடந்த மக்கட்டொகு

நான் கண்ட புரட்சிக் கவி 83
தியைப் பார்த்தான். ஆர்ப்பரித்தான். மக்களே! நீங்கள் வசிக்கும் பூவுலகம் உங்களுடையது. அஃது உங்களுக்காகவே படைக்கப்பட்டது. அது உங்களுக் காகவே உருண்டோடிக் கொண்டிருக்கின்றது. அஃது உருளவில்லையேல் மாறி மாறி வந்து கொண்டிருக் கும் இரவும் பகலும் இராது. காற்று வீசாது. கனல் எரியாது. உயிர் வாழாது. அஃதல்லாமலும் உல கமே அந்தகாரத்திற் கவிந்திருக்கும்.
நம் நில மடந்தை, உலகைப் புரக்க என்றென் றுந் தயாராகவே இருக்கின்ருள். உங்களின் ஏழை மையைக் கண்டு, வறுமையைக் கண்டு, உங்களின் துன்ப வேதனைகளைக் கண்டு, அவள் துடியாய்த் துடிக் கின்ருள். தவியாய்த் தவிக்கின்றள்; சிரிப்பாய்ச் சிரிக்கின் முள். м
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் கல்லாள் நகும் என்ற தேவர் குறளுக்கு இயைய அச்சிரிப்பு ஆரா அன்பின் முகிழ்த்த சிரிப்பன்று, துன்பச் சிரிப்பு. துய ரச் சிரிப்பு, வேதனை கலந்த விதனச் சிரிப்பு.
ஐயோ, பரிதாப ஜென்மங்களே! நீங்களா இப் படி ஊணுக்கு, உடைக்கு, கூழுக்கு, கஞ்சிக்கு இரந்து நிற்பது? உங்களின் இழிநிலை கண்டு, இன்னும் நான் உங்களைத் தூக்கித் தாங்கிச் சுமந்து நிற்கவேண்டுமா? கடல் கொண்ட என் கணவன் குமரியைப் போல நானும் ஏன் கடலுள் மூழ்கி மறையக் கூடாது ஆ1 இழிவுக்குரிய சமுதாயமே! கொடிய பாலைவனத் தான் தொடங்கி, பனிவலையத்தான் ஈருக வாழக் கூடிய சுவாத்திய நிலையை நான் கொண்டிருக்கவில் லையா? என்னுள் மண்ணும், மணியும், மின்னும், பொன்னும், நெய்யும், கரியும், இரும்பும், உருக்கும், தாராளமாய் இருக்க, என்மேல் வளமான வயிர மரச்

Page 52
84 கான் கண்ட பாரதி
சோலைகளும், வாகான நாணல், பன், மூங்கில், பிரம்பு முதலாம் புல்லினங்களும், அமோகமாய் இருக்க, வானளாவிய வண்மை பொருந்திய மங்குல்படியும் மலைவளங்கள் எங்கும் பரந்திருக்க, ஒடியாடி அசைந்து வரும் ஜீவநதிகளின் செல்வப் பெருக்கி ருக்க, முழங்கு கடற் கொடையிருக்க, என்னைக் கொத்திப் பண்படுத்திப் பயிரிட, நான் ஒன்றுக்கு, இருபது, முப்பது, ஐம்பது, நூறுமடங்கு பலன்தர என்றென்றுந் தயாராய் இருக்க, இவ்வளங்களனைத் தையும் வகைப்படுத்தி, வழிப்படுத்தி, தொழிற் படுத்தி வாழ வழிபலவிருக்க, அவையொன்றையும் புரியாது சும்மா இருந்துகொண்டு, இல்லை, இல்லை, என்று ஏங்கித் தவிக்கின்றீர்களே! சோம்பேறி விக்கி ரகங்களே! என்று கதறிப் பதறி ஓலமிடுகின் ருள் நம் பாரத மாதா என்று எக்காள முழக்கஞ் செய்தான் பாரதி!
அந்த உன்னத ஆர்ப்பரிப்பில், அப்பேர் அமலை யில் உலகமே அருண்டெழுந்தது. அப்படி அருண் டெழுந்த மக்கட்டொகுதியைப் பாரதி பார்த்து, மக் களே! உலகின் ஜீவநாடி நீங்களே! உங்களின் அசை வாட்டங்களாலேயே உலகம் உருள உயிர்கள் வாழு கின்றன. உங்களின் உழைப்பில்லையேல் உலகமே உருளாது. எனவே தான் உங்களுக்குக் கூறுகின்றேன் நீங்களே உலகின் கண் கண்ட தெய்வங்கள்.
அரசன் முதற்கொண்டு ஆண்டியீருக உள்ள அனைவரும் உங்களைப் போற்றவேண்டும். புகழவேண் டும். வாழ்த்தவேண்டும். வணங்கவேண்டும். உங் களைத் தாழ்ந்தவன், ஈனன், நீசன்,கீழானவன் என்று கருதுபவன் எவனே, எள்ளி நகையாடுபவன் எவனே அவன் அழியவேண்டும். சாகவேண்டும். செத்து மடியவேண்டும். இமயமலையே வீழ்ந்துவிட்டதைப் போல, சகல பிரதாபங்களின் சிகரத்தில் இருந்தும்

ாகான் கண்ட புரட்சிக் கவி 85
சாய்ந்து, சரிந்து, வீழ்ந்துபட்டானே ஜார், அம்மன் னனைப்போல அவனும் வீழ்ந்துபடவேண்டும்.
உங்களைச் சுரண்டி, உங்களின் உதிரங்களைக் குடித்து, உல்லாச புரிகளில் வாழ்பவர்கள், தங்க ளுக்கு வாழ்வளித்த ஏக காரணத்திற்காகவா உங் களை இகழவேண்டும்? அதற்காகவே உங்களுக்கு ஒன்று கூறுகின்றேன். வெறும் வீணருக்கு, உடம்பொடிய உழைத்து, அடிமைத் தொண்டு புரிந்த காலம் மலே யேறிவிட்டது. நம் நிலச்செல்வி நமக்கு அள்ளித்தர அளவிறந்த மூலவளங்களை, நிதிக் குவைகளைத் தன் னுள் வைத்துக் கொண்டிருக்கின் ருள். நாம் அவை களனைத்தையும் உறுதுணையாகக் கொண்டு,ஓய்வின்றி உழைப்போம். ஊதியம் பெறுவோம். ஒருமித்து வாழ்வோம். இன் பங் காண்போம். உயர்வடைவோம் என்று, வறுமைப் பிணியிற் சிக்கிக் கிடந்த சமுதா யத்தைப் புதுப் பாதைக்கு அழைக்கின்ருன் புதுமை உலகம் காண்பிக்க,
இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே! இயந்தி ரங்கள் வகுத்திடு வீரே! கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே!
கடலில் மூழ்கிநன் முத்தெடுப் பீரே! அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயிரந் தொழில் செய்திடு வீரே! பெரும் புகழ் நுமக்கே இசைக்கின்றேன் பிரம தேவன் கலையிங்கு நீரே! மண்ணெ டுத்துக்கு டங்கள் செய் வீரே!
மரத்தை வெட்டி மனை செய்கு வீரே! உண்ணக் காய்கனி தந்திடு வீரே!
உழுது நன்செய் பயிரிடு வீரே! எண்ணெய் பால் நெய் கொணர்ந்திடு வீரே! இழையை நூற்றுநல் லாடைசெய் வீரே! விண்ணில் நின்றெமை வானவர் காப்பார்
மேவிப் பார்மிசை காப்பவர் நீரே!

Page 53
86 ாகான் கண்ட பாரதி
உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம் என்று சமுதாயத்தைச் சீர்ப்படுத்திய பாரதி, நீங் களே படைப்புப் பிரமன் கள், உங்கள் உடம்புகளில் உள்ள துர் நீர் எல்லாம் வியர்வையாகப் பூமியில் உதிர, நல்ல திடகாத்திர புருஷராக விளங்கி, அதி யற்புதப் படைப்புக்களைப் படை யுங்கள், உங்கள் படைப் பின் பயனுல் நீங்கள் உயர்வடைவதோடு உங் கள் பாரத நாடும் பரிமளிக்கும் என்று தொழில் வழி காட்டிய பாரதி, தன் போதகத்தை மறுகோணத்தில் சற்றுத் திருப்பி,
‘பாட்டுஞ் செய்யுளுங் கோத்திடு வீரே! பரத நாட்டியக் கூத்திடு வீரே! காட்டும் வையப் பொருள்களின் உண்மை
கண்டு சாத்திரம் சேர்த்திடு வீரே! நாட்டிலே யறம் கூட்டிவைப் பீரே!
நாடும் இன்பங்கள் ஊட்டிவைப் பீரே! தேட்டம் இன்றி விழியெதிர் காணும் தெய்வ மாகவி ளங்குவிர் நீரே'
என்று பாடியுள்ளான். ஆம். நீங்கள் பலவகை நுட் பத் தொழில்களையும் புரிந்து உயர் நிலை அடைவ தோடு உங்கள் பணி, உங்கள் கடமை முடிந்துவிடக் கூடாது. வருங்காலச் சந்ததி நல்ல சீலர்களாக வாழ, அறிவு நிறைந்த பல பாடல்களையும், செய்யுள் களையுஞ் செய்து கோவைப்படுத்தி வையுங்கள். இன் பப் பொழுது போக்குக்குரிய பரத நாட்டியத்துடன், வடமோடி, தென்மோடி முதலான கூத்து வகை களுக்குமுரிய கலையனத்தையும், நடை முறையிற் கொண்டு நடத்துங்கள். உலகத்திற் காணப்படு கின்ற இயற்கைப் பொருள்களில் அமைந்துள்ள இயல்பான தன்மைகளைப் பரிசீலனை பண்ணி, மக்க ளுக்கு அனுகூலமான அதியற்புத விஞ்ஞான நூல் களைத்தானும் படையுங்கள். நம் பாரத நாடு,

கான் கண்ட புரட்சிக் கவி 87
மகிமை பொருந்திய நாடு. மனுநீதி கண்ட நாடு. ஆகையால் நம் பாரத நாட்டிலே தரும நெறியை வளர்த்துப் பாதுகாத்து வையுங்கள். ஈற்றில் மக்கள் விரும்புகின்ற, மக்களுக்குத் தேவைப்படுகின்ற, சகல. இன்ப நுகர் பொருள்களையும், பாரத மக்கள் முட் டின் றிப் பெறச் செய்து வையுங்கள்.
இவ்வண்ணமாக நீங்கள் சகல தொழிற் றுறை களிலும் ஈடுபட்டு, கடல் அலேயே போல ஓயாது உழைத்து வருவீர்களேயானுல், கஷ்டப்பட்டுத் தேடு தலில்லாமல், கண் முன்னே காட்சியளிக்கும், கண் ணெடுத்துப் பார்க்கக் கூடிய, கையெடுத்துக் கும்பி டக்கூடிய, மாபெரும் தெய்வங்கள் நீங்களே என்று தொழிலை, தொழிலாளரைப் பெருமைப்படுத்தி, அவர்கள் உழைப்புகளை, அவைகளின் அவசியங்களை, மகத்துவங்களை, உலகிற்கு விளக்கிவைத்த புரட்சிக் கவிஞனை, தொழிலாள உலகம் ஒரு பொழுதும் மற வாதென்பதே என் மன முடிபு.
(ஊ) சுதந்திர உரிமைப் புரட்சி
'பெற்ற தாயும் பிறந்தபொன்னுடும்
நற்றவ வானிலும் கனிசிறக் தனவே.” உலகில் மிகமிகப் பெருமை வாய்ந்த மதிப்புக்குரிய பொருள்கள், பெற்றதாய், பிறந்த பொன்னுடு, வானம் ஆகிய மூன்றுமே! ஆனல் முன்னிரண்டு பொருள்களுடனும் வைத்து ஒப்புநோக்கும்பொழுது, தாயும் நாடும் வானத்திலும் மிகமிகச் சிறந்தன என்பது ஆன்ருே ர் வாக்கு.
“செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினி லேயொரு
சக்திபி றக்குது மூச்சினிலே’

Page 54
88 ாகான் கண்ட பாரதி
என்று நம் புரட்சிக் கவி கூறிய கூற்று, நம் செவிகளிற் புகாமுன்னமே, நம் முள்ளங் களிக்கின் றது. உடலம் தடிக்கின்றது. உரோமங்கள் சிலிர்க் கின்றன. நரம்புகள் வீறு கொண்டு விம்மிப் புடைக் கின்றன. இந்த நிலையில் எந்த மதுபானத்தாலும் ஏற்பட முடியாத ஒரு பெரும் வெறி, அலைமோதிக் கொண்டு பீறிட்டுப் பாய்கின்றது.
உலக அரங்கை நோக்கும் பொழுது உலகின் பல்வேறு பாகங்களிலும், புராண இதிகாச கால முதற்கொண்டு, சரித்திர காலம் ஈருக நடந்து முடிந்த யுத்தங்களில், தங்கள் தங்கள் தாய்நாடு களே ப் பாதுகாக்க, மாண்டு மடிந்த வீரர்களின் எண்ணிக்கை, மண்ணிலும் கோடியென்று வரலாறு களில் இருந்து மதிப்பிடப் படுகின்றது.
நாட்டின் நலவுரிமையைப் பாதுகாக்க, உரிமையைப் பாதுகாக்க, தங்களின் பொன்ஞன உயிரையே பணயம் வைத்துப் போர்க்களம் புகுந்த வீரர்கள், வாழ்ந்தால் மான வாழ்வு, மடிந்தால் மானமடிவு என்ற வைராக்கியம் படைத்த மான இலட்சியத்துடனேயே அமர் புரிந்தார்கள். தங்கள் தாய் நாட்டைத் தாய் என மதித்தார்கள். நாட் டுக்கு வந்த கேட்டைத் தாய்க்கு வந்த கேடாகக் கருதினர்கள். ஆகலின், உயிர்களைப் பலிகொடுத் தும் தங்கள் தாய் நாட்டைக் காப்பதனையே கடப் பாடாகக் கொண்டார்கள்.
அவர்கள் தங்கள் மரணங்களைக் கருதாது புரி யும் சமரில், தங்களின் வீர தீரப்பிரதாபப் பெயர் கள், தங்களால் நாட்டு நலனுக்காகச் சாதிக்கப் பட்ட அரும் பெருஞ் சாதனைகள், சரித்திர ஏடுகளில் இடம்பெற வேண்டும், தாங்கள் என்றென்றும்

நான் கண்ட புரட்சிக் கவி 89
புகழுடன் நடுகல் லாய் நிலைநிற்கவேண்டும் என்ற மான உணர்ச்சியுடனேயே போர்புரிந்தார்கள்.
போரில் வெந்நிடல், சரணடைதல், கப்பங்கட் டல், ஒப்பந்தம் பண்ணல், சூழ்ச்சிகள் செய்தல் முதலான கைங்கரியங்கள் அவமானச் செயல்களாகக் கருதப்பட்டு வந்தன. இப்படிப்பட்ட பிரதாப மேம் பாட்டில், மானத்தின் சின்னமாய், மகிமையின் சிகர மாய், வீரத்தின் இருப்பிடமாய், நேர்மையின் உறை விடமாய், அதிகார ஆணையுடன் அவனியெல்லாம் புகழ் பரப்பி வாழ்ந்த இனம், வாழ்ந்த நாட்டின் கோரக் காட்சியைக் கண் திறந்து பார்த்தான் பாரதி. ஆ! பார்க்க முடிந்ததா அவனுக்கு? அவன் உள்ளம் குமுறியது. உரோமக் கண்களால் உதிரம் பீறிட்டுப் பாய்ந்தது. கண்களில் இருந்து தீப்பொறி கள் பறந்தன.
மறுகணம் சற்று உயர்த்தினன் தன் பார் வையை, ஒரு மலர் மரத்தில் இன்பகரமாகப் பறந்து மலர்களில் உள்ள நறவை மனமார உண்டுகளிக் கும் மது கரங்களும், மரக்கொம்பர்களில் தங்கள் தங்கள் பெடைகளுடன் கூடிக்குலாவி மகிழும் கிள்ளை களின் கூட்டங்களும் அவன் கண்களிற் பட்டு, அவன் சிந்தனையை அதிகரிக்கச் செய்து விட்டன. உடனே அவன் உள்ளத்தில் ஒரு பெருங்குமுறல் ஏற்பட்டு விடவே, அவன் வானத்தை அண்ணுர்ந்து பார்த்து, ஐயோ! தெய்வமே!! இதுவோ உன் நீதி? என் பெருமைமிக்க தாயகமே! உன்னை இந்த இழிநில்ை யிற் காணவா நான் பிறந்தேன். இந்தத் தேன் வண்டுகளுக்கு, இந்தக் கிள்ளைகளின் கூட்டங்களுக்கு, உள்ள இன்பங்களும், உரிமைகளுங்கூட, உன் பிள்ளை களுக்கு இல்லையே! என்று வாய்விட்டழுதபொழுது, அவன் அழுகுரலில் கம்மல் ஏற்படவில்லை. சோகந்
W-12

Page 55
90 கான் கண்ட பாரதி
தொனிக்கவில்லை. புரட்சிப் பொறிகளே வெடித்துப் பறந்தன.
அவன் கர்ச்சனை ஒலி கேட்டதும் ஆங்கில ஆட்சி யின் போதையில் மதிமயங்கி, நிலை திரிந்து, தலை கவிழ்ந்து, தங்கள் பழம் பெருமைகள் அனைத்தை யும் மறந்து, வழி நடந்து சென்றுகொண்டிருந்த மக்கட் சமுதாயம் திடுக்கிட்டுத் திரும்பியதைக் கண் ணிற் கண்டான் பாரதி. உடனே,
வீரசுதந்திரம் வேண்டி நின்ருர் பின்னர்
வேறென்று கொள்வா ரோ-என்றும் ஆரமு துண்ணுதற் காசைவைத்தார் கள்ளில்
அறிவைச் செலுத்துவா ரோ என்று வீரமுழக்கம் செய்தான். ஆம்; உலகத்தில் மனிதராகப் பிறவியெடுக்கும் ஒவ்வொருவரும், சுதந் திர முள்ளவர்களாகவே பிறவியெடுக்கின்றனர். எனவே அவர்களைக் கட்டி, ஒடுக்கி, அடக்கி ஆள எந்த மனித சக்திக்கும் அதிகாரமில்லை. அப்படி ஒரு வல்லரசு தன் படைப்பலத்தால் ஒரு நாட்டை அடிமை கொண்ட போதிலும், அந்நாட்டார் தமக்கே உரிய சுதந்திரத்தை அடையும் பரியந்தம், ஒரு பொழுதும் ஓய்வு கொள்ள மாட்டார்கள். அந்த வீர சுதந்திரத்திற்கு ஈடாக வேறு எதையும், எவ் வித உயரிய தானங்களையும் உயர் பீட பதவிகளையும் பரிசாகப் பெற்றுத் திருப்தியடையமாட்டார்கள். அவர்கள் என்ன அழுகின்ற குழந்தைகளா? பால் பால் மிட்டாய்களையும், பம்பாய் மிட்டாய்களையும் பெற்றுத் திருப்திகொள்வதற்கு.
"ஆரமு துண்ணுதற் காசைவைத் தார்கள்ளில்
அறிவைச் செலுத்துவா ரோ?” அவர்கள் உண்ணப் பிரியப்பட்ட பொருள் ஆரமுதமே! சகல சுகபோகங்களையும் சுதந்திரமாய் அனுபவித்து, என்

நான் கண்ட புரட்சிக் கவி 9
றென்றும் இளமையும், வளமையுங் குன்றது, சிரஞ் சீவியாய் வாழவிரும்பி, சாவா மருந்தாகிய தேவா மிர்தத்தை உண்ண இச்சித்தவன், மதியைக்கெடுக் கும் மதுவில் கண்செலுத்தவே மாட்டான் என் பதைப் பட்டவர்த்தனமாகக் கூறியிருக்கின்றன் பாரதி.
உலகத்தில் பெறுவதற்கரியது மானிடப் பிறவி. அம்மகத்தான மானிடப் பிறவியின் குறுகியகால எல்லையுள், அவன் புகழை நிலைநிறுத்த வேண்டும். அறத்தைக் காக்கவேண்டும். இவ் இரண்டு கைங்கரி யங்களுமே மெய்யானவை. இந்த இரண்டினுள் முன்னையது, உலகம் உள்ளளவும் அவனை இறவா மல் வைத்துப் பாதுகாக்கும். பின்னையது, வானுல கம் சேர்ப்பிக்கும். இந்த உண்மையைப் பரிபூரண மாய் உணர்ந்தவர்கள் இகழ்ச்சிக்குரிய இழிதொழில் களைப் புரிந்து உயிர் வாழ்தலைச் சுகமென்று ஒரு பொழுதும் கருதமாட்டார்கள்.
ஈன்றள் பசிகாண்பா னுயினுஞ் செய்யற்க
சான்ருேர் பழிக்கும் வினை என்று தமிழ்வேதம் கூறுகின்றது. உலகத்தில் தோன்றிய அனைத்தும் அழியவேண்டும். எனவே பிறந்தோர் அனைவரும் இறந்தேயாகவேண்டும். இவ்வுண்மையை எவரும் மறுப்பதற்கில்லை. இவ்வழகில் மானங்கெட்டு, தரு மத்தை மறந்து, அடிமைத் தொண்டு புரிந்து உயிர் வாழ எவனும் விரும்பமாட்டான் என்பதை விளக்க,
பிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியென்னும்
வாய்மையை உணர்ந்தாரேல்-மானங் துறந்தறம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது
சுகமென்று மதிப்பா ரோ? என்று குமுறுமுள்ளத்துடன் கேட்கின்றன். இத் துடன் அவன் நின்றுவிடவில்லை. அளப்பரிய ஆகா

Page 56
92 கான் கண்ட பாரதி
யத்தை விளக்குவது சூரியன். அச்சூரியனைத் தோற் கடிக்கக் கூடிய ஒளிப்பிழம்பான ஒரு கோள், ககோள வெளியிலேயே இல்லை. அப்படியிருக்க, அந்த உன் னதகோளை விலை கூறி விற்று விட்டு, அந்த இடத்தில் மின்மினிப் பூச்சியை எடுத்து வைக்க எந்த அறி வீனனும் கருதமாட்டான்.
உடலுறுப்புக்களுட் சிறந்தது தலை. அதிலுள்ள அவயவங்களுட் சிறந்தது கண். ஆனல் சுதந்திரம் அக்கண்ணினும் இனியது. கண்களை இழந் கவன் அந்த கன். அவன் தட்டித்த டவித் திரிவான். அந்தகனுக்கு அதற்குமேல் ஒன்றுஞ் செய்வதற்கில்லை.
அந்தகனிலும் பிறவியிலே அந்த கணுய்ப் பிறந்த வனுக்கும், இடையிலே அத்தகஞய் மாறியவனுக் கும் இன்பநிலை வேறு. பிறவியிலே அந்த கஞனவன் உலக இன்பக் காட்சிகளை என்றுமே காணுதவன். உணராதவன். நுகராதவன். ஆணுல் இடையிலே அந்த கணனவன், முழு இன்பங்களையும் கண்கூடாகக் கண்டவன். அனுபவித்தவன். கண் பெற்ற பயனனைத் தையும் பரி பூரணமாய்ப் பெற்றவன். அவன் தன் னந்தகத்தனத்தை எதுவிதமும் அகற்றி, மீண்டும் ஒளியைப்பெற, பார்வையைப்பெறத் தன்னல் ஆன மட்டும் முயற்சிப்பான். அந்த கனக இருப்பதை, குருடனுக வாழ்வதை, அவன் அரு வருத்தே தள்ளு வான். அவ்வாறே வாழ்நாள் முழுவதும் முழு உரிமை யுடன் சுதந்திரமாய் வாழ்ந்து வந்த மனிதன் தன் உரிமைகள் அனைத்தையும் இன்னுெருவன் அபகரிக்க, அவைகளை அவனுக்கு அர்ப்பணித்துவிட்டு, உலகில் உயிர்வாழ ஒரு பொழுதும் ஒருப்படமாட்டான். இவ்வுண்மையை,
விண்ணிலி ரவிதனை விற்றுவிட் டெவரும்போய்
மின்மினி கொள்வாரோ கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின்
கைகட்டிப் பிழைப்பாரோ

நான் கண்ட புரட்சிக் கவி 93
என்ற உணர்ச்சிக் கவிதையால் அறுதியிட்டுக் கூறி யிருக்கின்ருன். இக் கூற்றேடு அவன் மனம் பூரணப் படவில்லை. நிமிர்த்தினன் தன் தலையை. ஒரு அழ கான கூட்டில், ஒரு வடிவான மருதங்கிளி அடை பட்டிருப்பதைக் கண்டான். அக் கிளிக்கு குளிப் பதற்கு மஞ்சள் நீரும், உண்பதற்கு வாழைக் கனியும் தயாராய் இருந்தன. எனினும் அதன் இன மான மற்றக்கிளிகள், பக்கத்தில் இருந்த தென்னை மரத் தோப்பில், கூடிக்குலாவிப் பேசிப் பயின்று இன்புற்றிருக்கும் நிலையையும் நன்கு அவதானித்தான். இத்தோப்புக் கிளியினங்களுக்கு, ஒரு நாளுமே கிடைத்திராத மஞ்சள் நீரும், வாழைக்கனியும் கிடைத்தும் கூட, அக்கிளியினங்களுக்கு உள்ள உரி மையும், மகிமையும், இக்கிளிக்கு இருக்கின்றதா என்று சிந்தித்தான். உள்ளம் கூறியது இல்லை; அதை வளர்ப்பவன் அதற்கு எவ்வளவு கொடுத்தாலும், அதை எப்படி நேசித்தாலும், அது கூண்டுக்கிளி தானே என்று. உடனே,
*மண்ணிலின் பங்களை விரும்பிச்சு தந்திரத்தின்
மாண்பினை இழப்பாரோ கண்ணிரண் டும்விற்று சித்திரம் வாங்கினுல்
கை கொட்டிச் சிரியாரோ” என்ற அறிவு நிறைந்த கவிதையைக் கருத்துச் செறிவுடன் கூறி யிருக்கின்ருன்.
மண்ணிலுள்ள சிறிய இன்பங்களுக்காக, உரிமை களை ஈடாகக் கொடுக்க ஒருவனும் விரும்பமாட் டான். அருமைச் சித்திரம் என்றதற்காக, கண்களை விற்று அச்சித்திரத்தை வாங்கினல், இத்தலை கெட்ட வடிகட்டிய முட்டாள்த்தனமான செயலைக் கண் டோர், கைகொட்டி வயிறு குலுங்கச் சிரிக்கமாட் டார்களா என்று மனக் கொதிப்புடன் கேட்கின்றன்.
பாரத மக்களின் உயிர் உடலிற் றங்கியிருப்ப

Page 57
94 கான் கண்ட பாரதி
தற்கு ஆதாரமாகவுள்ள தாரக மந்திரம் "வங்தே மாதரம்' என்பதேயாகும்.
‘ஒப்பற்ற தியாகமே, தேசத்தின் மரணமே
உண்மைத் தியாகம்’
ஆதலால் சுதந்திர வீரர்களே! உங்களின் தாய்; தாய்நாடு. உங்களின் தாயை, உங்களின் தாய்நாட் டைக் காத்தல், உங்கள் தலையாய கடன். புகழ்பரப்பி அவனியெல்லாம் அரசு செய்த நம் பாரத அன்னை, இன்று நாணம் மீக் கூரத் தலை கவிழ்ந்து நிற்கின்ருள். தாய்க்குற்ற துன்டந் துடைக்கத் தனையரனை வீருங் கடமைப்பட்டுள்ளீர்கள். எனவேதான் உங்களுக்குக் கூறுகின்றேன், உங்கள் தாய்த்திரு நாட்டை மீட்டு இரட்சிக்க இன்றே புறப்படுங்கள், போர்க்களத் துக்கு. மங்காப் புகழ்பரப்பிச் சிங்கேறுபோற் செல் லுங்கள். உங்கள் கர்ச்சனை ஒலி வானைப் பிளக்கட் டும். உங்கள் உடல்களில் இருந்து புவியில் விழும் ஒவ்வொரு துளி இரத்தமும், கோடானுகோடிச் சுதந் திர வீரர்களைப் பிறப்பிக்கும் வித்தாக மாறட்டும். உங்கள் புனித இரத்தம் நம் பாரதத் தாயைத் தூய் மைப்படுத்தட்டும். பொங்கியெழும் வீரர்களின் உள்ளத் துடிப்புக்களையும், உணர்வுப் பெருக்கங்களை யும், கண்ணுரக் காணும் பாரத மாதா, அன்பு பொங்க, உள்ளம் புளகாங்கித மெய்தி அகமிக மகிழ் வாள். உங்களின் இறுதி மூச்சு,
வக்தே மாதரம் என்ற தாரக மந்திரத்துட னேயே நிற்கட்டும் என்று, ஊது கொம்பெடுத்து எக் காளமூதி, வீரபேரிகை முழக்கிப் பாரத மக்களின் நரம்புகளில் உணர்ச்சிப் பெருக்கை ஏற்றிச் சென்ற வீரக் கவிஞனை, வீர பாரதம் என்றென்றும் போற் றக் கடமைப்பட்டுள்ளது.

பாப்பாவும் நான் கண்ட பாரதியும்
குழந்தைகள் உருகிய மெழுகு போன்றவர்கள். அவர்களை இளமையிலேயே நம் விருப்பத்திற்கேற்ா) உருவங்களாகப் படைத்துவிடக்கூடிய சாத்தியக்கூறு கள் அனைத்தும் அவர்களிடத்தில் நிரம் பவுண்டு. அப் பருவத்தில் அவர்கள் உடல்களை மாத்திரமல்ல, அவர்கள் உள்ளங்களையும் நல்ல பண்பாடுகள் உடை. பனவாகப் படைத்துவிடவேண்டிய பொறுப்பு, பெற் ருேர், குரு, பெரியோர் அனைவரினதும் தலையாய கட. மையாகும்.
இப்பருவத்தை அநாதரவு பண்ணும் பெற்ருர், தங்கள் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்குப் பெருந் தீங்கு புரிந்தவர்களாவார்கள். பிள்ளைகளின் குழந் தைப் பருவத்தில் கடுங்கண்வைத்து, அவர்களின் உடல் உள வளர்ச்சிகளில் ஊன்றிக் கவனஞ் செலுத் தும் பெற்ருர், தங்களிள் குழந்தைகளுக்கு, அவர் களின் வருங்கால முன்னேற்றத்திற்கு, பெருந்துணை புரிந்தவர்களாக விளங்குவார்கள்.
ஒரு ஆங்கில பாலர் பிரிவு ஆசிரியர் தாம் எழுதிய ஒரு நூலில், ஒரு பிள்ளை தான் பெற்றுக் கொள்ள வேண்டிய பத்துத் தண்டனைகளில் ஒன்பது தண்டனை களை வீட்டில் தன் பெற்றரிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டுமென்று எழுதியிருக்கிருர். எனவே பத்துக்கு ஒன்பது தண்டனைகளுக்குப் பெற்ருர் பொறுப்பாளராகும் பொழுது, பிள்ளைகளுடைய

Page 58
96 ாகான் கண்ட பாரதி
சன்மார்க்க, பழக்க, வழக்க, ஒழுக்கங்களில் பத்தில் ஒன்பது பங்குகளுக்குப் பெற்ருர் பொறுப்பாளர் என் பதும், இப்படிப்பட்ட பெற்ருர், பிள்ளைகளுடைய கலையபிவிருத்தியில், பத்தில் ஒன்பது பங்குகளை இலகு வாக்கியே பிள்ளைகளை ஆசிரியரிடத்தில் ஒப்படைக் கின்ருர்கள் என்பதும், பட்டவர்த்தனமான உண்மை யாகும்.
இச்சீரிய தன்மைகளுடன் பாடசாலைகளில் அடி யெடுத்து வைக்கும் பிள்ளைகளே, முதன் மாணுக்கர் என்ற வரிசையில் இடம்பெற்று, உலகின் உச்சப்படி யில், அணையா விளக்குகளாக, மலைமேற் றீபங்களா கப் பிரதாபத்துடன் பிரகாசிப்பவர்கள். “தொட்டிற் பழக்கம் சுடுகாடுமட்டும்” *சிறுமையிற் கல்வி சிலையில் எழுத்து” “ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளை யாது’ 'பிறப்பிலே உண்டானுற் பேய்க்கிட்டுத்தீருமா" என்பனபோன்ற இன்னுேரன்ன பழமொழிகள், இள மையின் முக்கியத்துவத்தைக் குறித்துக்காட்டும் உறு திப் பொருள்களாகத் தமிழ் கூறும் நல்லுலகெங்கும் என்றும் நின்று நிலவி வருகின்றன.
ஆகையால் நாட்டின் முன்னேற்றத்தைத் தொலை நோக்குக் கண்கொண்டு பார்க்கும் எந்தப் பெற்ருே ரும், வீட்டில் தங்கள் தங்கள் குழந்தைகளின் உடல் உளவளர்ச்சிகளில் கூர்ந்து கவனஞ் செலுத்தவேண் டியது இன்றியமையாததாய் இருக்கின்றது.
இந்த உயரிய தத்துவத்தின் உண்மை, உயர்ந்த சிந்தனையாளனுகிய பாரதியின் உள்ளத்தில் உதயமா கியது, ஆகவே, காலத்தை முன்வைத்து, அதற்குரிய நற்பிரஜைகளைப் படைக்க ஒருப்பட்டான். உடனே

பாப்பாவும் நான் கண்ட பாரதியும் 97
பாப்பாவின் முன் தோன்றி, அப்பாப்பாவைப் பார்த்து,
ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா என்று அன்பு ததும்பக் கூறுகின்றன்.
"இன் சொலால் அன்றி இருநீர் வியனுலகம்
வன் சொலால் என்றும் மகிழாது’ அதிலும் இளங் குழந்தைகளுக்கு அன்னையின் அன்பு கனிந்த அமுத மொழியிலும் மேம்பட்ட உணவு பிறிதொன் றில்லையல்லவா! அதற்காகவே பாரதி, அன்னை வடி விற் சென்று, அன்புகனிந்த இதமொழிகளால் பாப் பாவின் உள்ளத்தை, உயரிய உறுதிப் பொருள்களால் நிறைவுபடுத்துகின்றன்.
பாப்பா! வருங்கால உலகம் உன்னுடையது. அந்த உலகத்தில் நீ உன்னதப் பிரதாபத்துடன் விளங்க, முந்த முந்த உன்னை நீ அதற்குத் தயார்ப் படுத்தவேண்டும்.
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.” ஆகையால் என்றென்றும் நீ சுகதேகியாய் மிளிர வேண்டியது மிக மிக இன்றியமையாததாய் இருக்கி றது. எனவே உன் சுகநிலையைக் கருதி உனக்கு ஒன்று கூறுகின்றேன்.
**நீ ஓடிவிளையாடு பாப்பா.' நீ ஓடிவிளையா டும் பொழுது உன் உடலசைய, உன் உடம்பிலுள்ள துர்நீர் எல்லாம் வியர்வையாகக் கழிந்துபோக, நரம் புகள் அசைவு கொள்ள, அப்பொழுது நல்ல உதிரப்
W-3

Page 59
98 கான் கண்ட பாரதி
பெருக்கு உண்டாகும். பின் நல்ல பசியும், நித்திரை யும் உனக்கு வர, நீ உடல் உறுதி படைத்த, நாட் டுக்கு அனுகூலமான நற் பிரஜையாகத் திகழ்வாய். அப்பால் நீ,
""ஒய்ந்திருக்க லாகாது பாப்பா"
சிற்றறிவு படைத்த எறும்பைப் பார். அஃது ஒர் இடத்தில் அசைவற்றுச் செயலற்று நின்றதை நீ என் ருவது கண்டாயா? அங்கே கரையில் வந்து மோதி யடிக்கும் கடலலைகளைப் பார். அவ்வலைகள் ஒரு கணம் அசைவின்றி இருக்கின்றனவா என்பதை உற்றுப் பார். காணவே மாட்டாய். அவ்வாறே நீயும் ஓயாது உழைக்கவேண்டும். உன் உழைப்பின் பயனை நாடு அனுபவிக்கவேண்டும். அப்பயனைக் கொண்டு நாடு பரிமளிக்கவேண்டும். h−
"சோம்பர் என்பவர் தேம்பித் திரிபவர்" ஆகையால் நீ சோம்பரின்றி நல்ல உற்சாகத்துடன் என்றென்றும் வாழ்ந்து வரவேண்டும் என்பதை ஒரு பொழுதும் மறக்கக் கூடாது.
உடலுறுதியுடன் சுறுசுறுப்பாகச் செயல்புரிந்து வரும்பொழுது, நாட்டு நலனுக்கு இன்றியமையாத ஒரு அரிய பழக்கத்தை நீ இளமையிலேயே பழக வேண்டும். அஃது என்ன என்பதை அறிய ஆசைப் படுகின்ரு ய் அல்லவா? கூறுகின்றேன்.
“ “fuq o??bit uLurGB Lumru unt” என் அன்புப் பாப்பா குளவி, கறையான், தேனீ, எறும்பு, முதலான பூச்சியினங்கள் கூட, பாந்தவ் விய முறையில் எவ்வளவு அன்னியோன் னியமாய்க் கூடிக் குலா விக் கூட்டுறவாக வாழ்க்கை நடத்துகின் றன என்பதை அவதானித்துப் பார். இந்தப் பூச்சி யினங்களைவிட, நீ எவ்வளவோ உயர்ந்தவனுகவும்:

பாப்பாவும் கான் கண்ட பாரதியும் 99
மகிமை படைத்தவனுகவும், பெரியவனுகவும் இருக் கின்ற ய். அப்படிப்பட்ட நீ, தனித்துவ வாழ்க்கை நடத்த ஒரு பொழுதும் கருதாதே. மனிதனகப் பிறந் தவன் எவனே அவன் மனித கூட்டுறவின்றித்தனித்து வாழ முடியாது. அப்படித் தனித்து வாழ விரும்பு பவன் ஞானியாக, அன்றேல் விலங்கின் பாற்பட்ட வனுக இருக்கவேண்டுமென்று, பழைய கிரேக்க அறி ஞர்கள் கூட அபிப்பிராயங் கூறியிருக்கின்ருர்கள். ஆகையால் கூட்டுறவின் மகத்துவத்தை உனக்கு நன்கு உணர்த்தும் சாதனசாலை, 'விளையாட்டரங்கு” என் பதை மட்டும் நீ மறவாதே! அவ்வுன்னத அரங்கத் தில் அன்பு, ஐக்கியம், சமத்துவம், சகோதரத்துவம், பொறுமை, ஊக்கம், கீழ்ப்படிவு, கண்ணியம், கடமை, கட்டுப்பாடு, மானம், ரோசம், வெட்கம், உற்சாகம் ஆகிய அரிய பெரிய சுகுணங்களை, விளை யாட்டு முறையில் நன்கு பயின்றுகொள். இன்னும் கேள்.
“ஒரு குழந்தையை வையாதே பாப்பா'
உன்னுடன் கூடிக் குலாவி அன்பு பூண்டு, உன் வாழ்வில் பங்குபற்றிவரும் குழந்தைகள் அனைவரும் உன்னைப்போன்றவர்களே! அக் குழந்தைகள் உன் சகோதரங்களாக, அல்லது உன் அயலவர்களாக, அல்லது உன் சாகியத்தவர்களாக , அல்லது உன் சமுகத்தவர்களாக, அல்லது உன் உறவினர்களாக அவர்கள் யாராகத் தானும் இருக்கலாம். எனி னும் அவர்கள் அனைவரும் குழந்தைகள் என்பதை மட்டும் நீ மறக்கக்கூடாது. உன்னை ஒருவன் ஏசி னல் நீ எவ்வளவோ வேதனைப்படுகின்ருய். அதைப் போலவே அவர்களும் நீ வைது ஏசும்பொழுது வேதனைப்படுவார்கள் என்பதை நீ மனதில் வைத் துக்கொள். அத்தோடு பாப்பா,
*சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா."

Page 60
00 கான் கண்ட பாரதி
ஆம். வருங்கால உலகில் ஒரு இருண்ட கூடத்தில் தூங்குவதற்கு நீ வெளவால் அல்ல. வானேறி உயரப் பறந்து வட்டமிடும் வண்ணப் பருந்தைப் பார். அதைப்போல நீயும் வருங்காலத்தில் கிணற் றுத் தவளையைப்போல் உன் வீட்டில் உன் சிறு நாட்டில், செயலற்றிருக்கக் கூடாது.
*" திரை கடலோடியுந் திரவியந் தேடு”
என்றபடி நீயும் நாட்டின் சகல கோடிகளுக்குஞ் சென்று ஒரு காலத்தில் திரவியம் சம்பாதிக்கவேண் டிய வனப் இருக்கின்ரு ய், எனினும், நீ இப்பொழுது சிறு குழந்தையாய் இருப்பதால் கூட்டை விட்டுக் கிளம்பி, பகல் முழுவதும் வாழ்வுக்கு உழைத்து, பொழுதுபட கூட்டை நாடும் சின்னஞ் சிறு பறவை யினங்களைப் போல, நீயும் உன்னையொத்த சிறுவர் களுடன் கூடிக் குலாவி விளையாடி, யதேச்சையாய் இன்பப் பொழுது போக்கி, உன் வீட்டை வந்து அடையும் பழக்கத்தைப் பழகிக்கொள். இன்னும் நான் உனக்குக் கூறவேண்டிய போதகங்கள் பல இருக்கின்றன.
'வன்னப் பறவைகளைக் கண்டு-நீ
மனத்தில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா" unri until எப்பொழுதும் மன நிறைவோடும், மன மகிழ்வோ டும் வாழப் பழகிக்கொள். அதற்காக அழகிய பறவை இனங்களையும், இனிய காட்சிகளையும், சதா கண்டு களிக்கும் பழக்கத்தை உன் இன்பப் பொழுது போக்காக வைத்துக்கொள்.
இன்னும் மனிதன் மனிதனுய் வாழ்வதற்குப் பணம் வேண்டும். பணம் இல்லாதவன் பிணம் எனினும் அப்பணத்தை ஈட்ட இப்பொழுது உனக்கு உடல் வலிமை இல்லை. அதற்காக உன் தற்

பாப்பாவும் கான் கண்ட பாரதியும் O
போதைய உடல் நிலைக்கேற்ப அதிக ஊதியந்தரும் ஒரு தொழிலை உனக்குக் கூறப்போகின்றேன் கேள். அத்தொழில் எதுவித சிரமமுமின்றி உனக்கு மிகக் கூடிய வருமானத்தைத் தரவல்லது. அத்தொழில் என்ன என்பதை அறிய ஆசைப்படுகின்ரு யா? கூறு கின்றேன்.
'கொத்தித் திரியு மந்தக் கோழி-அதைக்
கூட்டி விளையாடு பாப்பா"
பாப்பா! இரையைக் கொத்திப் பொறுக்கித் தின்று திரியும் கோழியினத்தைக் கூட்டி, அதாவது, ஒன் றைப் பத்தாகவும், பத்தை நூருகவும் , நூறை இருநூருகவும், இரு நூறை ஐஞ்ஞாறு ஆயிரமாகவு மாக கோழியினத்தைக் கூட்டி, அதன் எண்ணிக்கை யைப் பெருக்கி விளையாட்டு முறையில் ஒரு தொழி லாகச் செய்; அது மிக மிக உயர்ந்த வருமானத்தை எவ்வித உடலுழைப்புமின்றி உனக்குத் தரும்.
** எத்தித் திருடு மந்தக் காகம் - அதற்கு
இரக்கப்பட வேணுமடி பாப்பா”
எனது அருமைப்பாப்பா! உன்னை அன்புடன் நேசிக் கும், உனக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே உபகாரி யான அபூர்வப் பறவை காகம் அல்லவா? அதன் மின்னெளி வீசும் கருநீலச் செட்டையில் திருமாலின் நிறம் தோன்றுகின்றதல்லவா? ஆம். அஃது ஒரு புனிதப் பறவை. அதனிடத்தில் இருந்து நீ ஒழுக் கம் முதற்கொண்டு, கூட்டுறவு ஈருகப் படிக்கவேண் டிய வனப் இருக்கின்ரு ய்,
இத்தனை உன்னதப் பிறவியாகப் பிறந்த நீ அய லவர்களுக்குக் கொடுப்பதை விட, உன் சகோதர னுக்கே உன் உணவில் ஒரு பாகத்தைக் கொடுத்து உண்ணப் பிரியப்படுகின் ருய் இல்லை. உன் உணவில்

Page 61
O2 கான் கண்ட பாரதி
ஒரு சிறு பாகத்தை அள்ளி வீசிப்பார், அப்பொழுது தான் அதன் அரிய பெரிய பண்பாட்டைக் கண்டு, நீ வெட்கித் தலை குனிவாய். உன்னல் எறியப்படும் அவ்வுணவை, எந்த ஒரு காகமும் தனித்திருந்து ஒரு பொழுதும் உண்ணுது. கா கா என்று கரைந்து, அன்புக் குரலெழுப்பி, தன் இனத்தவர் சகலரையும் அழைத்து, யாவும் ஒருங்கு கூடியே அவ்வுணவை உண்டு மகிழும்.
இப்படிப்பட்ட அருமையான பறவை, உலகி லுள்ள அசுசிகள் அனைத்தையும் உண்டு 3. al) 6ð) G5 மட்டுமல்ல, ஆகாயத்தையும் பரிசுத்தப்படுத்துகின் றது. இப்பறவை இனத்திற்குக் கூலிகொடுப்பதாய் இருந்தால், எந்தப் பணவீக்கம் படைத்த அரசாங் கத்தாலும் முடியாது. எனினும் அதன் அரியசேவை யைப் பாராட்டி, உன் உணவிலாவது ஒரு பிடி அள்ளி எறிந்து உண்ண நீ பிரியப்படாத காரணத்தினலேயே அது உன் கையில் உள்ள உணவை எத்தித் திருடு கின்றது. ஆகையால் அதன் செயல் கண்டு நீ ஆத் திரப்படக்கூடாது. அதற்கு நீ இரக்கப்பட்டு, அதன் அரிய பெரிய சேவைக்குச் சம்பாவனையாக உன் உணவில் ஒரு சிறு பாகத்தையாவது கொடுத்து உண் ணப் பழகிக்கொள்.
*வண்டி யிழுக்கும் நல்ல குதிரை - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு - அதை
ஆதரிக்க வேணுமடி பாப்பா'
வயிரமனம் படைத்த குடியை, மாட்சிமை மிக்க சமுதாயத்தைக் கனவு கண்டுகொண்டிருந்த பாரதி, சதுரங்கப் படைகளுள் ஒரு பிரிவாகிய குதிரை இனத்தின் அருமையையும், பெருமையையும், அறி முகப்படுத்த எண்ணி, பாப்பாவைப் பார்த்து, பாப்பா! நல்ல இனக்குதிரைகளை நீ நன்கு பேணி

பாப்பாவும் கான் கண்ட பாரதியும் 03
ஆதரிக்கவேண்டும். அத்தோடு விண்ண வரை ஆல கால விஷத்தில் நின்றும் காத்து இரட்சித்த கறை மிடற்றுக் கண்ணுதற் கடவுளே போல, மண்ண வரை அமுதூட்டி வானூர்வரையும் காப்பாற்றிச் செல்லும் கறைக் கழுத்து எருத்தின் இனங்களையும் நீ காப்பாற்றவேண்டும். அத்தோடு ஆடும் ஒரு அருமையான வளர்ப்பு மிருகம். 'கெட்ட குடிக்கு எட்டாடு" என்பது ஒரு நாடோடிப் பழமொழி. ஆகையால் அந்த ஆட்டின் இனங்களையும் நீ நன்கு பேணி ஆதரிக்க வேண்டும். அது உனக்கு மிகுந்த ஊதியத்தைத் தர வல்லது.
இன்னும், உன் தினந்த கடமைகளை நேர அட் டவணைப்படி செய்து வர நீ இளமையில் இருந்தே பழகிக்கொள்ள வேண்டும். திட்டம் எதுவுமின்றிச் செயற்பட முனைவது, சுக்கானின்றி மரக்கலத்தை ஆழ்கடலுட் செலுத்துவதை நிகர்க்கும். ஆகையால் உன் தற்போதைய உடல் உள வளர்ச்சிகளுக்கு இயைய, உனக்கு ஒரு கால சூசிகையைத் தயாரித் துத் தருகின்றேன். அதைக் கருத்திற்கொண்டு கடமை செய்யும் ஒழுங்கு முறையைப் பயின்று கொள்.
காலை எழுந்த வுடன் படிப்பு - பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பர்ட்டு மாலை முழுதும் விளையாட்டு - என்று வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா, எனது அருமைப் பாப்பா! தினமும் அதிகாலையில் நித்திரை விட்டு எழுந்திருக்கும் பழக்கத்தைப் பழ கிக்கொள். அவ்வாறு நித்திரை விட்டு எழுந்தவுடன், கை வாய் கால் முகங்களைக் கழுவிக் கடவுளை வணங் கிக்கொண்டு உன் பாடங்களைக் கிரமமாய்ப்படி. ஏனெனில் 'காலையிற் கற்ற பாடம் போகாது' என் பது ஆன்ருேர் வாக்கு. பின்பு இனிய பாடல்களைப்

Page 62
04 நான் கண்ட பாரதி
பாடி, உன் நாவை நன்கு திருத்தி, மனப்பொலி வுடன் வாழ். அப்பால் மாலை நேரம் முழுவதும் ஒடி ஆடி விளையாடி, உறுதி படைத்த உடலைப் பெற்றுத் தேகாரோக்கியத்துடன் வாழ்ந்து கொள்.
இன்னும் நீ பயின்று கொள்ள வேண்டிய சுகுண் பழக்கங்கள் அனந்தம் இருக்கின்றன. ஒரு பொழு தும் நீ பொய்பேசக் கூடாது. ஏனெனில் பொய் பேசுவதை ஒருவன் விட்டு விட்டுச் சதா மெய்யையே பேசிவருவாணுயின் அவன் பிற அறங்கள் எவைகளை யும் செய்யவேண்டிய அவசியமேற்படாது. ஆகை யால் உண்மையை உயிரினும் மேலாக மதித்து நட. அல்லாமலும் "புறங்கூரு தே" எதை எதைப் பேசு வதாய் இருந்தாலும் முன் முன்னகப் பேச வேண் டும். பின் நின்று பேசுதல் கடியப்படவேண்டும். ஆன்ருேரும் “போக விட்டுப் புறங்கூறித் திரியவேண் டாம்” என்று அறிவுறுத்தியிருக்கிரு ர்கள். பெருந் த கை வள்ளுவரும்,
**கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்ல ற்க
முன்நின்று பின்நோக்காச் சொல்”
என்று கூறியிருக்கின்ருர்,
இப்படியாக ஏற்ற நற்பழக்கங்களில் உறுதி பெற்று வரும் பொழுதே நாட்டுப் பற்றிலும் ஊறி உரம் பெற்று வரவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு பாப்பாவைப் பார்த்து,
தமிழ்த்திரு நாடுதனைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும் பிடடி பாப்பா அமிழ்தின் இனியதடி பாப்பா-நம்
ஆன்ருே ர்கள் தேச மடி பாப்பா. என்று பண்ணிசைக்கின்றன்.

பாப்பாவும் கான் கண்ட பாரதியும் 05
ஒரு தாயானவளுக்குப் பல பிள்ளைகள் இருந்த போதிலும், கல்வியால், செல்வத்தால், பிரதாபத் தால் மேம்பட்ட பிள்ளையையே, தன் குலப் பெரு மையை விளக்க அத் தாய் முதலில் எடுத்து மொழி வாள். அவ்வாறே பாரத மாதாவின் ஈடு இணையற்ற பிள்ளை தமிழ்த் திரு நாடு. இப்படிப்பட்ட மகிமை படைத்த ஒரு பிள்ளையைப் பெற்றுவிட்டதால் பாரத மாதா அளவற்ற பிரதாபத்தாற் பிரகாசிக்கின்ருள். எனவே, அப்படியான மகிமை படைத்த தாயை நாம் கும் பிடக் கடமைப்பட்டுள்ளோம். ஏனெனில் நம் தாயும், தாய் நாடும், நனி சிறந்த பொருள்க ளல்லவா? இவ்வரிய நாடு, சாவா மருந்தாகிய அமிழ்தத்தை விட மேலான இனிமையானது. அத் தோடு நம் பிதாமக்கள் வசித்ததால் பெருமைப் பட்டது. இன்னும் கேள்:
சொல்லின் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா செல்வம் நிறைந்த ஹிந்துஸ் தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா என்று பாடிப் பாப்பாவைப் பரவசப்படுத்துகின் ருன் பாரதி, ஆம்:
* இருந் தமிழே உன்னல் இருந்தேன் தேவ
மருந்தெனினும் வேண்டேன் இனி” என்றும் ஒரு கவிஞன் கூறிய கூற்று பாரதியின் கவி தைப் பொருளை மேலும் மேலும் உயர்வடையச் செய்கின்றது. அதற்காக, தமிழின் மகிமையை இளம் பாப்பாவுக்கு அறிவுறுத்த வேண்டி, சொல் லின் உயர்வு தமிழ்ச் சொல்லே என்றும், கலைக்கு வணக்கஞ் செலுத்துதல் தமிழன் மரபாகலின் அதைத் தொழுது படித்திடடி பாப்பா என்றும்
W-14

Page 63
O6 கான் கண்ட பாரதி
கூறி, பின் செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம் ஆகையால், அதையும் தினமும் புகழ்ந்து நட என் றும் போதிக்கின்றன்.
இப்படியான அபூர்வமான கருத்துச்செறிந்த கவிதைகளால் வருங்காலத்தில் வீரமும், தீரமும், மன வைராக்கியமும், ஊக்கமும், உற்சாகமும் நிறைந்த ஒரு அரிய பெரிய சமுதாயத்தைப் படைக் கத் திட்டம் வகுத்துப் பாலர்களை வழி நடத்திய பாரதியை, மகிமை படைத்த பாப்பா இனம் ஒரு
பொழுதும் மறவாது.

நடிப்புச் சுதேசிகள் மத்தியிலே
நான் கண்ட பாரதி!
Dரங்களிலும் சருகுகள் உண்டு. நெல்லிலும் பதர்கள் உண்டு. நீரிலும் நுரைகளும், குமிழிகளு முண்டு. அவ்வாறே மனிதருள்ளும் பகடைகள் பல ருண்டு. ஒரு தேசத்தின் பிற்போக்கிற்கும், அடிமைத் தனத்திற்கும், இகழ்ச்சிக்கும், தாழ்ச்சிக்கும், தேர்குதிரை-யானை-காலாட்கள் அல்ல காரணம்; அவ்வத் தேசங்களில் வதியும் அடி வருடிகளான நயவஞ்ச கர்களே காரணராவர்.
இந்த நயவஞ்சகர்களே, இந்த வெளிவேடக் காரர்களே, இவ்வித நடிப்புச் சுதேசிகளே பல்லைக் காட்டிப் பரிசுபெறுபவர்கள். பதுங்கிப் பதுங்கிப் பதவிபெறுபவர்கள். எல்லையில்லாத் துன்பந்தருப வர்கள். சொல் லரிய துயரம் இழைப்பவர்கள்.
ஒரு நாடு, ஒரு அரசு அஞ்சவேண்டியது இப் படிப்பட்ட புல்லுருவிகளுக்கே! ஏனெனில் இவர்கள் உடன் பிறந்தே கொல்லும் வியாதிபோன்றவர்கள். தோலிருக்கச் சுளை வாங்குபவர்கள். உள்ளிருந்து உயிரை எடுப்பவர்கள். உறுதிப் பொருள்களை அறுதி யிட்டுக் கூறிய குறளாசிரியனும்,
"வாள் போற் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போற் பகைவர் தொடர்பு”
என்று கண்ணுக்குத் தென்படாது உள்மறைந்திருந்து கொல்லும் உடல் நோய்களைப் போன்ற நயவஞ்ச

Page 64
08 கான் கணட பாரதி
கர் மட்டில் மிகவும் அச்சந் தெரிவித்தது ஈண்டு கருத்திற்கொள்ள வேண்டியதே.
பரந்த பாரத கண்டம் ஆயுத பலங்கொண்ட பிரித்தானியரின் ஆட்சியின் பிடியில் சிக்கிக்கொண் டிருந்தது. நாட்டில் இருந்த பழம் பெருமைகள் அனைத்தும் மறைந்து போயின. அழகிய பிர்தேசம் எங்கணும், பரந்து கிடந்த ஐசுவரியங்கள் அனைத் தும், ஆங்கிலேயரால் உறிஞ்சப்பட்டன. நாடு இயம்பமுடியாத இன்னலுள் இடருற்றுக் கிடந்தது. இந்த இழி நிலையிலேயே, பாத வருடிகளான பகடை கள் பிரித்தானியரின் கைப் பொம்மைகளாகி, அவர்கள் தயவில் தங்கி, அவர்களுக்கு அடுத்தது புரிந்து, அவர்கள் கொடுத்ததை வாங்கிக் காலங் கடத்தி வந்தார்கள்.
இந்தப் பயங்கர பரிதாபநிலை பாரதியைப் பெரிய வேதனைக்குள்ளாக்கியது. எப்படி இவ்வாசாட பூதி களைக் கண்டிக்கலாம். எவ்வாறு இவர்களை உணர வைக்கலாம். நல்வழிப் படுத்தலாம். என்றெல்லாம் பலவாறு சிந்தித்த பொழுது, அவன் சிந்தனையில் ஒரு புதுமை ஒளி பிறந்தது. நடிப்புச் சுதேசிகளைப் பின்னிலைப் படுத்தி, ஒரு பெண்ணை முன்னிலைப் படுத்தி, அவளுக்கு உபதேசிப்பது போலவும், பின்ன வர்களுக்கு அறிவுபுகட்டுவது போலவும், மகடூஉ முன்னிலையில் ஒப்பரிய அமிர்த போதகத்தைச் செய்கின்றன். அவன் போதகங்கள் ஒர் அம்பினல் இரண்டு புட்களை வீழ்த்தியதற்கு ஒப்பான் வை. அஃது எவ்வாறென்பதை ஈண்டு ஆராய்வாம்.
எனது அன்புக் கிளியே! மனத்தில் வல்லமை யில்லாது, நடையில் நேர்மையில்லாது வஞ்சகச் சூழ்ச்சிகளையே சதா செய்துகொண்டிருக்கும் வஞ்ச கர்மட்டில் நீ ஜாக்கிரதையாய் இரு. இப்படிப்பட்ட

நடிப்புச் சுதேசிகள் மத்தியிலே நான் கண்ட பாரதி 109
வில்லர்கள், பெரிய சண்டப்பிரசண்ட வாய்ச்சாலக சம்பிரதாய கதாப்பிரசங்கிகளாகவே இருப்பார்கள். இவர்கள் வாய்ப்பேச்சில் நீ மயங்கி விடாதே.
பெரிய மேடைகளில், பெரிய சனசமுத்திரத் தின் மத்தியில், தங்கள் வாய் வல்ல பத்தால் வாயில் வந்தவைகளை யெல்லாம் வாரி வீசிப் பேசுவார்கள். ஆனல் ஒன்றையும் கருத்தில் வைத்து நடக்க மாட் டார்கள். தாங்கள் இப்படியெல்லாம் பேசினுேமே என்று கூட நினைவிருக்காது அவர்களுக்கு.
*சொந்த அரசும் புவிச்
சு கங்களும் மாண்புகளும் அந்தகர்க் குண்டாகுமோ - கிளியே
அலிகளுக் கின்பமுண்டோ' எங்களின் பழமையென்ன? பெருமைதான் என்ன? ஒரு காலத்தில் எங்கள் சொந்த இனம் இருந்த நாட்டை ஆண்ட நாட்டை, இன்று மாற்ருன் அப கரித்துக் கொண்டு விட்டானே! இந்த அவமானத் தைச் சகிக்க முடியுமா? இதைப் பார்த்துப் பொறுத் துக்கொண்டிருக்க முடியுமா? என்ற உணர்வு இவர் களுக்கு ஒருபொழுதும் இருக்காது. ஆங்கில போதை யில் அந்த கரான இவர்களுக்கு நாடு இன்றிருக்கும் அலங்கோலக் காட்சியை எப்படிக் காண முடியும்? அலிகளுக்கு எப்படி இன்பங்கிட்டும்?
பார்வைக்கு அழகான இரண்டு கண்கள் இருந்த போதிலும், பாவை இல்லையேல் பார்வை கிடைக் குமா? இவ்வழகில் ஆடி அசைந்து திரியும் பெண் களின் கூட்டமல்லாமல், இவர்களையும் ஆடவர்கள், புருஷர்கள், ஆண் பிள்ளைகள் என்று சொல்ல முடி யுமா?
என் கொஞ்சு மொழிக்கிஞ்சுகமே! இவ்வபூர்வ ஜென்மங்கள் இயந்திரச் சாலையென்பார்கள். எங்

Page 65
f 0 நான் கண்ட பாரதி
கள் துணிகள் என்றெல்லாம் கூறுவார்கள். 2-й பென் பார்கள், சீனியென் பார்கள். பட்டென் பார் கள். பகட்டென் பார்கள். உள்நாட்டுச் சேலையென் பார்கள். எல்லாம் வெறுஞ் சொல்வடிவிலே முடிவ தல்லாது செயல்முறையில் எதையும் செய்யமாட் டார்கள். மந்திரத்தாலே மாங்காய் பறிக்க முடி யுமா? அதையும் எறிந்து தானே, அல்லது ஏறித் தானே, அல்லது தட்டித்தானே பறிக்கவேண்டும்.
*தேவியர் மான மென்றும்
தெய்வத்தின் பக்தியென்றும் நாவினுற் சொல்வதல்லால் - கிளியே
நம்புத லற்ருர டி’’
பெண்களை மகிமைப் படுத்தவேண்டும். அவர் கள் பெருமை மிக்க பெண்மையை மாண்புமிக்க மானத்தைக் காப்பாற்றவேண்டும். தெய்வம் ஒன் றுண்டு. அதனிடத்தில் பக்திவைக்க வேண்டும் என்றெல்லாம் நாவினுலே சொல்வதல்லாதே எள் ளளவேனும் தெய்வத்தினிடத்தில் நம்பிக்கை வைக்க மாட்டார்கள். பெண்களைக் கண்ணுேட்ட மற்ற கய வர்கள் கற்பழித்துப் பெரும் பாதகச் செயல்களைப் புரியவும், இவ்வக்கிரமச் செயல்களைக் கண்களாற் கண்டிருந்துங்கூட, கேவலம், பெண்களைப்போலத் தங்கள் உயிர்களை மட்டும் பாதுகாத்து, தங்கள் தலை தப்பியது தம்பிரான் செயல் என்று வாழா விருப்பார்கள்.
எனது அன்புத் தந்தையே! இறைவியினுடைய கோயிலினுட் புகுந்து, தீயசெயல்களை பிற நாட் டார்கள் செய்யவும், அவர்களைக் கண்டிப்போம், கடிவோம், தண்டிப்போம் என்ற நினைவுகூட இல்லா மல், தங்கள் உயிர் ஒன்றே பெரிதென்ற ஏக எண்ணத்தோடு பயந்து நடு நடுங்கி இருப்பார்கள்.

கடிப்புச் சுதேசிகள் மத்தியிலே நான் கண்ட பாரதி!
அச்சமும் பேடிமையும்
அடிமைச் சிறுமதியும்
துச்சத்திற் கொண்டாரடி - கிளியே
ஊமைச் சனங்கள டி.
கண்கூடாக இவ்வக்கிரமச் செயல்களையெல்லாம் கண்டும், வாயால் இவைகளைக் கண்டித்துப்பேச வல்லமையற்ற பயங்கொள்ளிகள், ஊமைச் சனங் களே! அச்சத்திற்கு இருப்பிடமாகவும், ஆண் மைக்கு மறைவிடமாகவும், பெண் மைக்கு உறைவிடமாகவும், அடிமைத் தொண்டிற்கு நிலைக்களமாகவும் இருந்து, உலகில் அவமானச் சின்னங்களாக உயிர்வாழ்ந்து வரும் இவர்களுக்கு, வாயசைக்க, நாவசைக்க, எப் படி வல்லமை வரும், ஊக்கமும் மனவலியும் வாய் மையில் விருப்பும் இல்லாத ஐயறிவு படைத்த மக்களுக்கு, மானத்தைச் சிறிதாகவும் வாழ்வைப் பெரிதாகவும் கருதும் ஈனர்களுக்கு, இந்த உலகில் உயிர்வாழ எள்ளளவும் அருகதையில்லை; யோக் கியதையில்லை; உரிமையில்லை.
பழமை பழமை யென்று பாவனை பேசலன்றிப்
பழமை இருந்தநிலை - கிளியே
பாமரர் ஏதறிவார்.
என் குதலைமொழிக் கிள்ளையே! பழமை பழமை யென்று பழமையை இழிவுபடுத்துவார்கள். ஆனல் அப்பழமையின், பெருமையை அவர்கள் அறியமாட் டார்கள். பழமைபொருந்திய நம்மினம், உலகில் மிக மிகப் பிரதாபத்துடன் பிரகாசித்தது. யதேச் சையாய் வாழ்ந்தது. பழைய நம் முன்னுேர் ஒழுக் கத்தில், விழுப்பத்தில், நாகரீகத்தில், கல்வியில், செல்வத்தில், கதித்து ஓங்கி நின்றர்கள். கை படச் சுவராய்த்தோன்றச் சித்திரம் கவினச் செய்தார் கள். கைபட்டபோதுதான் அது சுவரில் எழுதப்

Page 66
2 நான் கண்ட பாரதி
பட்டிருக்கும் சித்திரம் என்பதை அறிய முடியுமே யன்றி, மற்றப்படிக்கு அஃது உயிரோவியமாகவே, பேசுமோ வியமாகவே காட்சியளித்தது. விண்பொர நிவந்த வே யா மாடங்களை யமைத்தார்கள். இயந் திரக் கிணறுகளைச் சமைத்தார்கள். இரவில் மாட் டிய அவிரில் விளக்கங்கள் தானும் அக் காலத்தில் இடம்பெற்றே இருந்தன. இவைகளில் இருந்து, பழைய காலம் ,நாகரீககாலம், கல்வியின் காலம், செல் வத்தின் காலம், விஞ்ஞான காலம், நீதியின் காலம் என்பதை நாம் அறியக்கிடக்கின்றது. ஆனல் இம் மகத்தான உண்மை அறிவற்ற பாமர மக்களுக்கு எப்படித்தெரியவரும் என்று ஆத்திரமாகக் கேட்கின் ரு ன.
பெற்ற தாயின் பெரும் பசித்துயரத்தைக் கண் களாற் கண்டிருந்த பொழுதிலும், அறிவாற்றல் மிகுந்த சான்றேர்கள் அரு வருத்துத் தள்ளிய இழி வுக்குரிய பழிப்புக்குரிய தொழில்களைச் செப்து, அத் தாயின் பசித் துயரத்தைத் தீர்க்க முற்படாத மானத் தமிழினம், இன்று மாற்றனை வழிபட்டு ஈனத் தொண்டு புரிந்து வயிறு வளர்க்கும் இழிநிலை கண்டு பாரதியின் வயிறே கொதித்துவிட்டது. அக்கொதிப் பின் வேதனேயால் உந்தப்பட்டே,
“நாட்டின் அவமதிப்பும்
நாணின்றி இழிசெல்வத் தேட்டில் விருப்பும் கொண்டே-கிளியே
சிறுமை அடைவாரடி" என்று மனவேதனையுடன் கூறுகின்றன். நாட்டின் நடைப் பிணங்களாக, நடமாடும் விக்கிரகங்களாக, நடந்து திரியும் நடிப்புச் சுதேசிகள், வெட்கமில்லா மல் ஈன அடிமைத் தொண்டு புரிந்து, இழிந்த முறை களில் செல்வத்தைச் சம்பாதிப்பதில் விருப்பங் கொண்டு சிறுமையடையலானர்கள். தாம் பிறந்த

நடிப்புச் சுதேசிகள் மத்தியிலே நான் கண்ட பாரதி!
திரு நாட்டில் தம் தாயகத்தார்கள் படுந் துன்பங் களைக் கண் டல்ல; தன் சகோதரன் படுந்துன்பங்களைக் கண்டுங்கூட, அவர்களுக்கு எவ்வித உதவி ஒத்தாசை களையும் செய்வோம் என்று நினையாதிருப்பதுடன், அவர்கள் துன் பத்திற் கிடந்து, உழன்று, உருக் குலைந்து கிடக்கும் கேவல நிலையில் அவர்களைச் சகோ தரன் என்று கூறமுதலாகக் கூசுவார்கள்.
பஞ்சத்தும் நோய்களிலும்
பாரதப் புழுக்கள்போல் துஞ்சத்தம் கண்ணுற்கண்டும்-கிளியே
சோம்பிக் கிடப்பாரடி . ஆ, பரிதாபமே! பஞ்சத்தின் மிகுதியினலேயும், நோய்களின் கொடுமைகளினலேயும், பாரத தேச மக்கள், புழுக்களைப் போலத் துடிதுடித்துச் செத்து மடிய, இக்கொடிய காட்சிகளைக் கண்களாற் கண்டி ருந்தும் இந்த வேடதாரிகள் கோடிக் கணக்கில் வாழ்ந்துவரும் பாரத நாட்டிற்கு, ஏன் தங்கள் உட லுழைப்புகளைக் கொடுத்துதவக் கூடாது? தங்கள் உழைப்புகளால் ஏன், இந்த நாட்டை திருநாடாக உயர்வடையச் செய்யமுடியாதென்பதே அவன் கேள்வி. சோம்பராய் இத்தனை கோடானுகோடி மக் களும் தேம்பி இருந்தால், சுகம் எப்படிக் கிடைக் கும்? விமோசனம் எப்படி வரும்? மிடி எப்படி ஒழி யும்? வறுமை எப்படி அகலும்? எனவேதான் நாடு முன்னேற அனைவரின் உடலுழைப்பும் நாட்டுக்குத் தேவையென்று சொல்லாமலே சொல்லி விடு கின்றன். .
ஈற்றில்,
தாயைக் கொல்லும் பஞ்சத்தைத்
தடுக்க முயற்சியுருர் வாயைத் திறந்து சும்மா-கிளியே
வந்தே மாதரமென்பார். W-15

Page 67
4 நான் கண்ட பாரதி
கிளியே! மனத்திலே நிறைந்த கள் வேட்கைகொண்ட கட்குடியர்கள், வாயினுற் சும்மா சிவசிவா என்று கூறுவார்கள். இக்குடியர் கூற்று, பயனுடைய, பல னுடைய, பகவானே ஒப்புக்கொள்ளக்கூடிய, கேட் கக்கூடிய கூற்ரு குமா? இக் கட்குடியர்களின் வாயிலி ருந்து களிபோதையில் வெளிவரும் கடவுள் நாமம், இறைவன் செவித் துளைகளைச் சென்றடையுமா? ஒரு பொழுதும் அடையவே மாட்டாது. அவ்வாறே இதய சுத்தியற்ற இவ்வாய் வேதாந்திகள் கூறும் 'வந்தே மாதரம்”என்ற தாரக மந்திரமும் இருக்கும்.
* உடுக்கை இழந்தவன் கைபோல வாங்கே
இடுக்கண் கழைவதாம் நட்பு'
அஃதாவது ஒரு நண்பன், தன்னுயிர் நண்பன் ஒரு துன்பத்தில் மாட்டப்பட்டு விட்டான் என்பதை அறிந்தால், உயிரினும் மேலாக மதிக்கப்படும் மானத் தைக் காக்க, அதி வேகமாகச் சென்று உடையைத் தழுவும் கரத்தைப்போல ஒடுவாஞய் இருந்தால், உலகத்தில் ஒப்பானதும், மிக்கானதும், பிறிதொன்று இல்லாததுமான தாயின் பசித்துயரத்தைக் கொல்ல, எவ்வளவு வேகமாகத் தான் ஓடி உழைக்க வேண்டும். அப்படியெல்லாம் ஓடாது, ஆடாது, அசையாது, உழையாது, சும்மா இருந்து கொண்டு, வந்தே மாத ரம் என்று கூறுவதினுல் மட்டும், தாய்க்குற்ற குறை தீர்ந்துவிடுமா? என்று மனக் குமுறலுடன் கேட் கின் முன்,
இவ்வாரு கப் பாரத நாட்டில் வாழும் முப்பது கோடி மக்களும் ஒன்று திரண்டால், ஒற்றுமைப்பட் டால், பசியிருக்குமா? மிடி நிற்கு மா? அடிமைத் தனம் நிலைக்குமா? என்ற அடிப்படைச் சித்தாந்தத் தின்கீழ், மூடத்தனங்களைப் பழித்தும், மூடக் கொள் கைகளைக் கண்டித்தும், அடிமைத் தொண்டைப் பரி

கடிப்புச் சுதேசிகள் மத்தியிலே நான் கண்ட பாரதி! 15
கசித்தும், உரிமைக் குரல் எழுப்பி மக்கள் கடமை களைக் காட்டிச் சென்ற கவிஞன், பாரத நாட்டுக்கு மட்டும் சொந்தமானவன் அல்ல. அவன் உலக மகா கவிஞன். அவன் சித்தாந்தங்கள் அகில உலகத்திற் கும் பொருந்தும். ஆகலின், அவன் முழு உலகத்திற் கும் சொந்தமான வன். இப்படிப்பட்ட உலக மகா கவியை, இப்பரந்த உலகம் என்றும் ஏற்றிப் போற் றக் கடமைப்பட்டுள்ளது,
宽

Page 68
நான் கண்ட தீர்க்கதரிசி
உலகத்தில் காலத்திற்குக்காலம் அபூர்வமான கலைஞர்களும், மாபெரும் அறிஞர்களும், அதியுன் னத சிந்தனையாளர்களும் தோன்றி வந்துகொண்டே இருக்கின்ரு ர்கள் என்பதற்குச் சரித்திர ஏடுகள் சாட்சி கூறிக் கொண்டிருக்கின்றன. உலகத்தில் தோன்றியவர்கள் அனைவரையும், உலகம் பேசுவது மில்லை. போற்றுவதுமில்லை. புகழ்வது மில்லை. செயற் கரிய செயல்களைப் புரிந்தவர்களையே ஏடுகளில் முத லாக உலகம் போற்றிப் புகழுகின்றது. இப்படிப் பட்ட மேதைகளே பிறந்தும் இறவாதவர்களாகவும், இறந்தும் இறவாதவர்களாகவும் உலகம் உள்ளளவும் நிலை நின்று வாழ்பவர்கள். இவர்களே உலகத்தாரின் உள்ளத்திரைகளில் என்றென்றும் இடம் பெற்றுத் திகழ்பவர்கள்.
அறிஞர்களும் கலைஞர்களும் அடிக்கடி தோன்றி ஞலும்கூட, காலா காலங்களில் கடந்த காலத்தைக் கருத்திற்கொண்டு, வருங்கால உலகத்தைத் தொலை நோக்குடன் நோக்கி, எதிர் வருங்காலத்தில் உல கம் இவ்வாருக உருளும் பொழுது, இன்ன இன்ன அதியற்புதச் சாதனைகளைத் தானும் மனிதன் சாதிக் கக் கூடியவனுய் இருப்பான் என்று கூறவல்லவர் களே தீர்க்கதரிசிகள் எனப்படுபவர்கள்.
இப்படிப்பட்ட மேதைகள் நூற்றண்டுக்கு ஒரு வர் அல்லது இருவரே தோன்றியுள்ளார்கள். ஆயி ரம் இடம் புரிகள் சூழ நடுவிற் சஞ்சரிப்பது வலம் புரிச் சங்கு. ஆயிரம் வலம்புரிகளாற் சூழப்பட்டது பாஞ்சசந்நியம். அறிஞர்களை இடம் புரிச் சங்குகளா

நான் கண்ட தீர்க்கதரிசி 7
கவும், நுண் கலைஞர்களை வலம் புரிச் சங்குகளாகவும் கொள்ளுமிடத்து, பாஞ்சசந்நியமாகக் கொள்ளப் படவேண்டியவர்கள் தீர்க்கதரிசிகளே! இப்படிப் பட்ட உன்னத இடத்தில் வைத்து எண்ணப்பட வேண்டிய மாபெருந் தீர்க்கதரிசியே நான் கண்ட பாரதி !
விலைமதிக்கரிய மூலவளங்களால் நிறைந்து, வற் ருத ஜீவ நதிகளின் செல்வப் பெருக்கைப் பெற்று, அலை வளமும் மலைவளமும் மிகுந்து, மகிமையின் சிகரத்தில் மிளிர்ந்துகொண்டிருந்த பாரத கண்டம், பாரதியின் காலத்தில் அதன் பழம் பெருமைகள் அனைத்தையும் இழந்து அடிமைப்பட்டுக்கிடந்தது . அவ்வலங்கோலக் காட்சி பாரதியை மிகுந்த சிந் தனக்குள்ளாக்கியது.
அவன் சிந்தனையில் அதியுன்னத எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்ருக வந்துகொண்டிருந்தன. இப் புனித கண்டத்தை விடுதலை செய்யவேண்டும். ஒற்றுமையை வளர்க்கவேண்டும். கல்வியறிவைப் பெருக்கவேண்டும். சாதிப்பிரிவைப் புதைக்கவேண் டும். விவசாயத்தை உயர்த்தவேண்டும். தொழிற் கலையை விருத்திசெய்யவேண்டும். வர்த்தகத்தை வியாபிக்கச் செய்தல் வேண்டும். பெண்ணினத்தை விடுதலையாக்கவேண்டும். விஞ்ஞானத்தில் மேலோங்க வேண்டும். ஈற்றில் யாவரும் சுதந்திர பிரஜை களாக, ஒன்றுபட்ட பாரத சமுதாயம் என்ற அடிப் படையில், சாதி சமய வேறுபாடுகள் எவையுமின்றி, சரிநிகர் சமானமாக மகிமையுடன் வாழவேண்டும் என்ற உன்னத எண்ணங்கள் அவன் உள்ளத்தில் கோபுரம் போலக் காட்சிகொண்டெழுந்தன.
இத்தனை உயர்ந்த சிந்தனைச் செல்வங்களையே கருக்கொண்டு, ஒப்பரிய மெய்த்தீபம் போற் காட்சி

Page 69
8 கான் கண்ட பாரதி
யளித்து நின்ற பாரதி, அவ்வெண்ணங்கள் ஒவ் வொன்றும் வெற்றிகரமாய் நிறைவேறுவதற்கு ஏற்ற வழிவகைகளை யெல்லாம் வகுத்துத் திட்டங் கள் தீட்டி, அவை செயற்படக் கூடிய வகையில் கருவுயிர்த்துக் கொடுத்ததன் பின், சகல துறைகளி லும் வெற்றிகண்டு விட்டதாகக் கற்பனை பண்ணிக் கொண்டு, அலங்கோல நிலையிற் கிடந்த அடிமைப் பாரதத்தில் இருந்து, சகல சம்பூரண சவுந்த ரியமும் நிறைந்த சுதந்திர பாரதத்திற்கு மக்களை வழி நடத்திச் செல்கின் முன். தான் காட்டிய பாதையால் மக்கள் தயக்க மின்றிப் பீடுநடை போட்டுச் செல் லும் பொழுது, அடிமைப் பாரதம் அதியற்புதப் பாரத மாய் மாறிப்பொன்னுலகப் பாரதமாகத் திகழும் என்பதற்குத் தீர்க்கதரிசனங் கூறியிருக்கின் ரு ன .
பாரத தேசமென்று பெயர்சொல்லுவார் - மிடி
பயங் கொல்லுவார் துயர்ப் பகைவெல்லுவார். எங்கள் விரிந்து பரந்த பாரததேசம் (பாரதியின் காலத்தில்) முப்பது கோடி மக்களின் தாயகமாக விளங்குகின்றது. இந்த முப்பதுகோடி மக்களும் ஒன்று திரண்டு, ஒரு குரலெடுத்து, எங்கள் தாய்த் திருநாட்டின் பெயரைப் பாரததேசம் என்று சொல் லும் அளவிலே, அந்த ஒற்றுமை ஒலியிலே, நம் தாட்டை இன்று வாட்டி வருத்தும் மிடிப்பயம் இறந்துபடும். துயர்ப்பகை மாண்டுமடியும்.
முப்பதுகோடி மக்களின் உடலுழைப்புக்கும் பாரதம் உள்ளாகும் பொழுது, உயிரை வாட்டும் மிடிக்கு, உள்ளத்தை வருத்தும் பகைக்கு இடம் ஏது? எனவே நாடு அளவிறந்த ஐசுவரியத்தால் நிறைந்து, மலைமேற்றிபம் போற் காட்சியளிக்கும். அப்பொழுது எங்கள் நாட்டுக்கு எந்தநாடும் ஈடா காது. அப்பால் எங்கள் நாட்டு மக்கள் பாரத

நான் கண்ட தீர்க்கதரிசி 9
நாட்டு வெறும் மண்ணில் மட்டும் வாழ்பவர்களாக இருக்கமாட்டார்கள். பின்னை எங்கெங்கெல்லாம் வாழ்வார்கள் என்பதை விளக்க,
* வெள்ளிப் பனிமலையின் மீது லவுவோம்” என்று உயரியவோர்தீர்க்கதரிசனத்தைக் கூறியிருக்கின்றன். அதாவது எம் பாரத நாட்டு மக்கள், வெள்ளிப்பணி மலையில் முதலாகக் குடிபுகுந்து, அம்மலைச் சாரல் களின் உன்னத சிகரங்களில், இங்கிதமான சிங்காரத் தோட்டங்களை அமைத்து, பெரும் மச்சு மாளிகை களைத் தானும் நிரு மாணித்து, தேவமக்களைப்போல ஒரு காலத்தில் உலாவி வருவார்கள் என்று கூறி யிருக்கின் ருன் . ஆனல் எத்தனையோ ஆண்டுகளுக் குப் பிறகு, மேலைத்தேச மலையேறும் ஆராய்ச்சி யாளர், எவறஸ்ற் சிகரத்திற்கு முதலாய் வெற்றி கரமாய் ஏறி, ஒரு அரிய பெரிய சாதனையைச் சாதித் ததில் இருந்து, அவன் தீர்க்க தரிசனம் முற்றுப் பெறும் நாள் அதிக தொலைவில் இல்லை என்பதை நாம் அறியக்கிடக்கின்றது. அப்பால்,
*" மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்’ என்று கூறியிருக்கின் முன். அவன் கூற்றின்படி பாரத நாட்டு மக்கள் எதிர் வருங்காலத்தில் இந்த வங் காள விரிகுடாவிலே, இப் பார்சியாக் குடாவிலே, இச்சின்னஞ் சிறிய இந்து சமுத்திரத்திலே மட்டும் கப்பல்களை ஒட்டுபவர்களாக இருக்கமாட்டார்கள். இச் சிறு நீர்ப்பரப்புக்களெல்லாம் அவர்கள் இன்ப மாக நீந்தி விளையாடுந் தெற்பக் குளங்களே! எனவே எங்கள் நாட்டுப் பாரத மக்கள் மேற்குப் பிராந்திய பரந்த அத்திலாந்திக் சமுத்திரத்தில் முதலாய் தங் களின் பராக்கிரமம் பொருந்திய கப்பல்களை வெற் றிகரமாகச் செல்லவிட்டு, மேலை நாட்டவருடன் உறவாடி ஐக்கியத்தையும், ஐசுவரியத்தையும் அபி விருத்தியடையச் செய்வார்கள் என்று கூறிய பின்,

Page 70
20 நான் கிண்ட பாரதி
“பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்” என்று மிக மேலான ஒரு தீர்க்கதரிசனத்தைக் கூறி யிருக்கின்றன். இத்தீர்க்க தரிசனத்தை மிகமிகக் கூர்ந்து கவனிக்கவேண்டியது ஆவசியமாக லின் இத னைச் சற்று ஆராய்வாம்.
இறைவனின் பிரதாபத்தை,கடவுள் ஞானத்தை, பாப்பாவுக்கும், விருத்தாப்பியருக்கும், தொழிலாள னுக்கும், மங்கையர்களுக்கும் வேண்டிய வேண்டிய இடங்களில் எல்லாம் ஒவ்வொரு உன்னத போதகங் களுடனும் கூட்டிச் சேர்த்து, உருட்டிப் பருக்கி, அவர்கள் உள்ளங்களையெல்லாம் உன்னத தேவனின் உயரிய ஆலயங்களாக்கிவிட்ட பாரதி, பாடசாலை களிலும் இறை வழிபாட்டுக்குரிய கோயில்களை நிரு மாணிக்க வேண்டுமென்று ஒருபொழுதும் கூறியிருக் கவே மாட்டான். ஏனெனில் கலைக்கூடங்கள் ஒவ் வொன்றும் இன்று மட்டுமல்ல, என்றும் இறை வழி பாட்டுடனேயே ஆரம்பிக்கப்பட்டு வந்திருக்கின் றன. இவ்வுண் மைக்கு பண்டைப் பனுவல்க ளின் கடவுள் வணக்கங்கள் தலைநின்று சாட்சி பகரு கின்றன.
எனவே, வழி வழியாக அனுட்டிக்கப்பட்டு வரும் ஒரு சம்பிரதாயத்தை, மீண்டும், மீண்டும் எடுத்து மொழிய வேண்டியது ஒரு மேதைக்கு ஒவ்வாது. ஆகலின் 'பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்கு வோம்’ என்று அவன் எதைக் குறித்துப் பேசியுள்ளான் என்பதே ஈண்டு ஆராய்வுக்குரிய விடயமாகும்.
நிறை கருத்தற்ற அணுவசியமான வெற்றுப் பேச் சுக்கும் பாரதிக்கும் வெகு விரோதம். அவன் வாயி லிருந்து பிறந்த ஒவ்வொரு அட்சரமும் அதியற்புதக் கருவூலங்களை உள்ளடக்கிய அபூர்வ வித்துக்கள். அவைகளிலிருந்து பிறக்கக் கூடியவை, உன்னத

நான் கண்ட தீர்க்கதரிசி 2
விருட்சங்களன்றி, வெறும் முட்செடிகளோ புற் பூண்டுகளோ அல்ல.
சிற்சில இடங்களில் நடைபெறுங் கல்வித் திட் டங்களே அவ்வவ் இடங்களின் வறுமை நிலைகட்கும் பொருளாதார நெருக்கடிகட்கும் காரணம் என்று நான் கூறுகின்றேன். ஏனெனில் அவ்வக் கல்வித் திட் டங்கள் நாட்டுக்கு நாடு, இடத்துக்கு இடம், சொற்ப சொற்ப அறிவாளரைத் தோற்றச் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டன. அதே வேளையில் பல் லாயிரக்கணக்கான மாணுக்கரை நிற்கதியாக்கிச் செல்லுகின்றன. வருடா வருடம் ஒன்பதாம் டத் தாந்தரப் பரீட்சைகளில் பல லட்சக்கணக்கானுேர் பரீட்சை எழுதும்பொழுது அவர்களில் பல்லாயிரக் கணக்கானேர் தேர்ச்சிபெற்ருலுங்கூட அத்தனை பேர் களையும் கதிகலங்கச் செய்து விடுகின்றன அக்கல்வித் திட்டங்கள். பரீட்சையில் தேறியவர்கள் அத்தனை பேரும் பிடித்தாற் பேனை ; பார்த்தால் உத்தியோகம் . அல்லையேல் வீடுகளிற் பெற்ருேருக்குப் பெருஞ் சுமை களே. அகற்குமேல் அவர்கள் வழிநடக்க அக்கல் வித் திட்டங்கள் வகுக்கப்படவில்லை.
படித்துத் தேறிய மாணவர் கதி இவ்வாருயின் படித்துத் தவறிய மாணவர் கதி அதோ கதியாகத் தான் இருக்கின்றது. ஆனல் பாரதியின் கல்வித்திட் டம் இப்படிப்பட்டதன்று.
“உழவுக்குந் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்றும், தொழிலாளர்களே தேடுதலில்லாமல் கண் முன்னே காட்சியளிக்குந் தெய்வங்கள் என்றும், தொழிற்கலைக்கு முதலிடங் கொடுத்த பாரதி, பள் ளிக் கூடங்கள் வெறும் பாட கூடங்களாய் மட்டும் இருந்தால் அதனுல் நாடு பரிமளியாது, மிடி தீராது.
W-16

Page 71
22 கான் கண்ட பாரதி
என்பதை நன்குணர்ந்து ஒவ்வொரு பள்ளிக்கூடங் களுடனும், தொழிற் கலைக் கூடங்களையும் இணைத்து, அறிவொளியோடு, அருந்தொழிற் கலையறிவுகளையும் நாட்டில் பரப்பவேண்டும் என்ற அடிப்படையிலேயே பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்று கூறுயிருக்கின் முன்.
ஏனெனில் தொழிற் கலையை அடிப்படையாகக் கொள்ளாத எந்தக் கல்வித்திட்டமும் நாட்டின் நலா பிவிருத்திக்கு எட்டுணையும் பொருந்தாது என் பதே அவன் கருத்து. இத்தகைய கலைக்கோயில்களில் அறிவு வளர்ச்சியுடன் நூல் முறுக்கல், ஆடை நெசவு செய்தல், குடைகள் செய்தல், உழு படை கள் செய்தல், கோணிகள் செய்தல், இருப்பாணிகள் செய்தல், தச் சுவேலை செய்தல், பன்னவேலை செய் தல், பின்னவேலை செய்தல், வலைமுடித்தல், ஆடை நெசவு செய்தல், கயிறு திரித்தல், பெட்டி பாய்கள் செய்தல், கற்சிப்பவேலை, இரும்புவேலை, பொற் கொல்லவேலை, கிருஷிகம், விவசாயம் முதலாம் வாழ்க்கைக்கு இன்றியமையாத சகல தொழிற்கலை களையும் குறைவறப் பயின்று வரும்பொழுது, பதி னெட்டுப் பத்தொன்பது வயதின் எல்லையை அடைந்து பாடசாலையை விட்டு வெளியேறும் மாணக்கருள் கூடிய விவேகம் படைத்தவர்கள் அறி வுத் துறையில் முன்னேற, விவேகம் குறைந்தவர்கள் உலகில் எப்படி வாழ்க்கையை நடத்தப்போகின் ருேம் என்று ஏங்கித் தவியாது, அனுதினமும் ஐந்து, பத்து, இருபது, முப்பது ரூபாய்களை உழைக் கும் ஆற்றலுடனேயே பாடசாலைகளில் இருந்தும் வெளியேறுவர். இப்படியாக பாரதி கூறிய தீர்க்க தரிசனத்தை ஆதாரபூர்வமாகக் கொண்டே, மகாத்மா காந்தியடிகள் தொழிற் கல்வியை அடிப் படையாகக் கொண்ட ‘வார்தா’ கல்வித் திட் டத்தை வகுத்துச் செயற்படுத்தி வெற்றியுங் கண்

கான் கண்ட தீர்க்கதரிசி 23
டார்கள் என்பதும் ஈண்டு கருதற் பாலது. அப்பால்,
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் சேதுவை மேடுறுத்தி வீதிசமைப்போம் வங்கத்தி லோடிவரும் நீரின் மிகையால்
மையத்து காடுகளிற் பயிர்செய்குவோம் என்று மகிமை பொருந்திய ஒரு தீர்க்கதரிசனத்தைக் கூறியிருக்கின் முன் , அதாவது தாயை விட்டுச் சேயைப் பிரிக்க முடியாது. எனினும் இயற்கை இரு வரையும் பிரித்தாலும் கூட அறிவியற் கலை கொண்டு ஒரு காலத்தில் இருநாடுகளையும் பிணைத்தே தீரு வோம் என்பதை விளக்கச் சிங்கள மக்கள் அதிக மாய் வாழும் இலங்கைக்கு, இந்தியக் கரையில் இருந்து ஒரு பாலம் அமைப்போம் என்றும், இராமர் கட்டிய சேதுவை மேடாக்கி, வாகனங்கள் செல்லக் கூடிய வகையில் வீதி சமைப்போம் என்றும் மகத் தான ஒரு தீர்க்கதரிசனத்தைக் கூறியிருக்கின் முன். அத்தோடு வங்க நாட்டில் இருந்து வரும் நீர்ப் பெருக்கை மறித்துத் தேக்கி, மத்திய பாரத பிரதேச மெங்கும் விவசாயத்தைப் பெருக்கிப் பஞ்சத்தைப் பறக்கடிப்போம் என்றும் கூறியிருக்கின்றன். அஃ தன்றியும் அளவிறந்த கணிப் பொருள்களை எடுப் போம் என்றும், அவைகளை அகிலமெங்கும் கொண்டு விற்று நம் நாட்டுக்கு வேண்டிய பண்டங்களைப் பெற் றுக்கொள்ளுவோம் என்றும் கூறி, பின்னும்,
முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே
மொய்த்து வணிகர்பல நாட்டினர் வந்தே கத்தி கமக்கினிய பொருள் கொணர்ந்து
கம்மருள் வேண்டுவது மேற்கரையிலே என்று பெருமிதத்துடன் கூறியிருக்கின்ருன். ஏனெ னில் பாரத நாட்டுப் பொற்கொடி நல்லார், ஒரு காலத்தில் நெற்பாயில் வந்து நெல்மணிகளைப் பொறுக்கிய கோழியினங்களைத் தங்களின் முத்து

Page 72
24 நான் கண்ட பாரதி
மணிகள் பதிக்கப்பட்ட குண்டலங்களைக் கழற்றி எறிந்து துரத்தினர்கள் என்றும், அவர்களின் இளஞ் சிருர்கள் நடை பயில உருட்டி விளையாடிய மூன்று சக்கர வண்டிகளை, முற்றும் நிறையச் சிதறிக்கிடந்த முத்து மணித் தோடுகள் செயற்பட வொட்டாது தடைப்படுத்திய பொழுது, அச்சிரு ர்கள் திகைப் படைந்து அழுது புலம்பித் தத்தம் தாயாரைத் தழு விக்கொண்டார்கள் என்றும் வரலாறுகள் கூறுகின் றன. எனவே இப்படிப்பட்ட இறுமாப்புடன் விளங் கிய பாரதத்தை மீண்டும் அதே நிலைக்குக் கொண்டு வந்து முன்னையிலும் பன்மடங்கு பிரகாசிக்கச் செய்ய வேண்டும் என்பதே பாரதியின் குறிக்கோள். மனி தன் முயன்ருல் எதைத்தான் சாதிக்கமுடியாது.
** முயன்ருல் நன்னக மணியும் பெறலாமித்
தரணியிலே** என்ற கோவைத் தொடரும் முயற்சியின் வெற்றிக்கு முதலிடம் கொடுக்கின்றது.
ஆகவே தான் பாரத நாட்டு மக்கள் மிகக் குறு கிய காலத்துள் உலகப் பிரசித்திபெற்ற முத்துக் களைத் தென்கடலிற் குளித்து எடுப்பார்கள் என்றும், அவ்வரிய முத்துக்களைப் பெற உரோமர், கிரேக்கர், முதலாம் நாகரீக நாட்டார் மொய்த்து நெருங்கி ஒரு வரை ஒருவர் முந்திக்கொண்டு, நம்மை நத்தி, நமக்கு இனிய பல பொருள்களையும் கொணர்ந்து, நம்மருளை வேண்டி, நம் தயவை நாடி நிற்பது மேற் குப் பக்கக் கடற்கரையிலே என்றும் கூறியிருக்கின் முன். இக்கவிதையிற் பொதிந்துள்ள மொய்த்து வணிகர்’, ‘கத்தி’, ‘நம்மருள் வேண்டுவது என்னும் சொற்கள் எதிர்காலத்தில் பாரதம் எப்படிப்பட்ட உயர்நிலையில் இருக்கும் என்பதை விளக்கும் விளக்கு கள்போல விளங்குகின்றன என்பதைச் சிந்திப்போர் புரிந்து கொள்ளுவார்கள்.

கான் கண்ட தீர்க்கதரிசி 2S
இனி, விஞ்ஞானத்தைப் பொறுத்த வரையில் அவனது தீர்க்கதரிசனம் எத்தகையது என்பதை யும் சிறிது ஆராய்வாம்.
*காசி நகர்ப்புலவர் பேசுமுரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய்வோம்” அதாவது காசிநகர்ப்புலவர்கள் பேசுகின்ற பேச்சுக் களையெல்லாம் காஞ்சியில் உள்ளவர்கள் காஞ்சியில் இருந்த படியே கேட்டு அறியக்கூடியதான ஒரு அற்புதக் கருவியைத் தானும் நாங்கள் எங்கள் மதி நுட்பத்தாற் செய்து விடுவோமென்று வானெலிப் பெட்டி யைப் பற்றி, பாரதத்தின் எக்கோடியிலும் வாழ்ந்த எக்கலைஞனும் சிந்திக்கக்கூட இல்லாதிருந்த வேளையில் இப்படிப்பட்ட ஓர் அபூர்வ தீர்க்க தரி சனத்தைக் கூறியிருக்கின்றன். இற்ற லிய இளைஞன் மாக்கொணி 1893ல் கம்பியில்லாத் தந்தியைக் கண்டு பிடித்தான் என்பது சரித்திரம் பகரும் உண்மை. ஆஞல் அவ னிலுமிளைஞனுண பாரதி கிழக்குப் பிராந் தியத்தில் வானெலிபற்றி முதற்குரலெழுப்பினன் என்பதே என் வாதம் என் க!
மக்திரங் கற்போம் வினைத் தந்திரங் கற்போம்
வானையளப்போம் கடல் மீனையளப்போம் சந்திர மண்டலத் தியல் கண்டு தெளிவோம்
சந்தி தெருப் பெருக்குஞ் சாத்திரங் கற்போம் என்று அவன் கூறிய அற்புதக் கவிதை, அவனது விஞ்ஞானக் கலையின் ஆழத்திற்கு ஒரு அளவுகோ லெனத் திகழ்கின்றது.
எங்கள் நாட்டு மக்கள் ஒரு காலத்தில் நுண் கலைகள், பொறியியற் கலைகள் முதலான யாவற்றை யும் கற்று, விஞ்ஞான வளர்ச்சியில் மேலோங்கி நிற்பார்கள். அவர்கள் தங்கள் அறிவின் வல்லமை யால் ஆராய்ச்சித் திறமையால் இடமகன்ற வானை யும், ஆழமான கடல்களையும் அளந்தறியக் கூடி

Page 73
26 கான் கண்ட பாரதி
யவர்களாய் இருப்பார்கள். அத்தோடு ஆகாயத் தில் பிரகாசிக்கும் மீனினங்களையும் அளந்தறிவார் கள். அவர்கள் ஆய்வு அவ்வளவோடு நின்று விடாது. சந்திர மண்டலத்தை முதலாய் ஆராய்ந்து, அதன் இயல்புகளைத் தானும் கண்டு தெளியக் கூடியவர் களாய் இருப்பார்கள் என்று அவன் கூறி எத் தனையோ எத்தனையோ வருடங்களின் பின்பே மேலைத் தேசங்கள் இவ்வாராய்ச்சித் துறையில் ஈடு பட்டன. இவ்வித ஆய்வின் பயனுய் றஸ்ஸியா, அமெரிக்கா முதலான மேற்கத்திய வல்லரசுகள் செயற்கைக் கிரகங்களை அனுப்பியும், எறியாயுதங் களில் அபூர்வமான நுண்கருவிகளை இணைத்தும், சந்திர மண்டலம், செவ்வாய், சுக்கிரன் முதலாம் பல கிரகங்களையும் ஆராயத்தலைப்பட்டன. அவை களைத் தொடர்ந்து, வான் வெளியில் இவ்வித செயற்கைக் கிரகங்களில் குரங்கு, நாய் முதலான சீவபிராணிகளையனுப்பி, வாயு மண்டலத்தை முத லாக வெற்றிகொண்டும் விட்டன. தொடர்ந்து விண் வெளிக் கப்பல்களில் மனிதரையே அனுப்பி, ககோள வெளியில் சுற்றிச் சுழன்று பூமியைப் பல தடவை களில் வட்ட மிட்டு எவ்வித இடர்ப்பாடுகளுமின்றி மீண்டும் பூமியையே வந்தடைந்து விட்ட அரிய பெரிய சாதனைகளைச் சாதித்ததில் இருந்து, நாம் இச்சாதனைகளையல்ல, பல்லாண்டுகளுக்கு முன்ன தாகவே இச்சாதனைகளை எடுத்து மொழிந்த தீர்க்க தரிசனத்தையே போற்றிப் புகழ வேண்டியவர் களாய் இருக்கின் ருேம். அப்பால்,
'சந்தி தெருப் பெருக்குஞ் சாத்திரங் கற்போம்" என்று அவன் கூறிய கூற்றும் உன்னதம் நிறைந் ததாகவே காணப்படுகின்றது. ஒரு சிலர் சந்தி களையும் தெரு வீதிகளையும் கூட்டிப் பெருக்கித் துப் பரவு செய்தலாகிய கலையையே பாரதி இக்கவிதை யடியிற் கூறியுள்ளான் என்கின்றர்கள். ஆம் . நானும்

நான் கண்ட தீர்க்கதரிசி 27
அதை ஒப்புக் கொண்ட போதிலும், சந்திகளை யும் தெருக்களையும் கூட்டிப் பெருக்கித் துப்பரவு செய்ய வேண்டுமென்று ஒரு கலையை மட்டுமல்ல, பல கலை களைக் குறித்துக் கூறியுள்ளான் என்று கூறுகின் றேன்.
ஏனெனில் தெருக் கூட்டும் தோட்டித் தொழில், ஒரு தலை சிறந்த சாத்திர மாகாது. கண்ட பாவனை யிற் கொண்டை முடியுமாப்போல, சிறுமிகள் முத லாய் வீடு வாசல் களைப் பெருக்கிச் சுத்திசெய்யும் தம் தாய் சகோதரிகளைக் கண்டு, தாங்களும் அவ் வண்ணமே கூட்டிப் பெருக்கத் தலைப்பட்டு விடுகின் ரு ர்கள். ஆனல் பாரதி பல வருடங்களின் முன் பகர்ந்து சென்ற இத்தீர்க்க தரிசனம் “பாதை புன ரமைப்புத் திட்டம்’ எனப்படும் வீதி விஸ்தரிப்புத் திட்டமாகும். அதாவது பகிரங்க வீதிகளையும், சந்தி களையும், தெருக்களையும் கூட்டிப் பெருக்கி விசா லிக்கச் செய்து விரிவடையச் செய்து, வருவதி ஞல் வீதிய பாயத்தை எவ்வாறு குறைக்கலாம், மக் கள் போக்குவரத்திற்கு, வாகன நடமாட்டங்களுக்கு எவ்வாறு வசதி செய்து கொடுக்கலாம் என்பதற்கே திட்டம் தீட்டிக் காட்டியிருக்கின்ரு ன். ஆயினும் மிகச் சமீபகாலத்தில் இருந்தே இவன் திட்டங்களை மேற்கத்திய நாகரீக நாடுகள் விரிவான முறையில் கடைப்பிடிக்கத் தலைப்பட்டன என்பதும், நம் ஈழத் திலும் பட்டினப் பாக்கங்களில் இத்திட்டங்கள் படிக் கிரமமாய் வளர்ச்சியடைந்து வருகின்றன என்பதும் ஈண்டு கருதற்பாலது. இன்னும் இதைத்தொடர்ந்து,
'கடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்
என்று கூறிய தீர்க்கதரிசனமும் சிந்திக் கற்பாலதே!
ஏனெனில், பாரதநாட்டு மக்கள் அன்பு, பண்பு, ஒற்றுமை என்னும் சுகுண அடிப்படையில் முன்னேறி

Page 74
28 கான் கண்ட பாரதி
ஒப்புயர்வற்றுத் திகழும்பொழுது, அவர்கள் தங் சளின் பண்டைய வீர பிரதாபங்களை யும் பேணிக் காப்பாற்றவேண்டியது மிகமிக இன்றியமையாததே.
எதிர் வருங்காலம் வில்லம்பு, ஈட்டி, வாள், கேடயங்களுக்கு அப்பாற்பட்ட காலமாகவே இருக் கும். கற்காலம், செம்புக்காலம், வெண்கலக்காலம், இரும்புக் காலங்களில் இருந்து, மனிதன் விஞ்ஞான காலத்தை நோக்கி மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றன். ஆகையால் நாமும் இக்கா லத்தை நோக்கி வெற்றிகரமாகவே செல்லவேண் டியவர்களாய் இருக்கின்ருேம். ஏனெனில் நம்மை இன்று அடிமைகொண்ட ஆங்கிலேயர் எண்ணிக்கை யில் நம்மைவிட எத்தனையோ எத்தனையோ மடங்கு சுருங்கியவர்களாக இருந்தும் கூட, தங்களின் நவீன ஆயுத பலத்தால் அல்லவா நம்மையும் அடிமை கொண்டு ‘எங்களுடைய உலகத்தில் சூரியனே அத்த மிப்பதில்லை’ என்று வீர கர்ச்சனையும் செய்கின்றர்கள். நாங்களும் அதே ரீதியில் முன்னேறினல் எங்களை அடிமைகொண்ட இந்த ஆயுத பராக்கிரமம் படைத்த பிரித்தானியர், செண்டாலடித்து இமயத்தையே பணியவைத்த தென்னட்டரிகளுக்கு, மராட்டியச் சிங்கங்களுக்கு, பஞ்சாப் புலிகளுக்கு, இராஜபுத்தான வேங்கைகளுக்கு எதிர் நிற்க முடியுமா?
எனவே, நாம் நமது பழமை பட்ட படைக் கருவி களாகிய வில் வாள் வேல் கோல் முதலான போர்க் கருவிகளை உதறித் தள்ளிவிட்டு, நவீன ஆயுதபலத் துடன் மிளிரவேண்டும். நாம் புனர்நிரு மாணஞ் செய்த விசாலமான வீதிகளிலும், சந்திகளிலும், உருண்டு செல்லக் கூடிய மோட்டார்ப் படைகள், கவசப் படைகள், டாங்கிப் படைகள் ஆதியாம் இயந்திர சாதனப்படைகள் தவக்க மின்றிச் செல்ல வேண்டும். இவைகளோடு பறந்துசெல்லக்கூடிய

கான் கண்ட தீர்க்கதரிசி 29
போர் விமானப்படையும், பூமியையே நடு நடுங்க வைக்கக் கூடிய கப்பற்படையும் இடம்பெற்று நம் வீர தீர பராக்கிரம பிரதாபங்களுக்கு, அறிகுறி யாக வெற்றி விருது தாங்கி, உலகத்தின் எத்திசை களுக்கும் யதேச்சையாகச் சென்று வரவேண்டும் என்ற அடிப்படைக்கொள்கைகள் அனைத்தையும் குறித்தே, நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய் வோம் என்றும் , ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் என்றும், உயர்வான ஒரு தீர்க்கதரி சனத்தைக் கூறியிருக்கின்றன். .
அவன் தீர்க்க தரிசனங்களில் அனந்தம் da Seir பல பாகங்களிலும் முற்றுப் பெற்றுவரும் இக்காலத் தில், நாமும் அவனைப்போற்றிப் புகழ்ந்து அவனுக்கு விழாவெடுப்பதை மட்டும் நோக்கமாகக் கொள் ளாது, நமது நுண்ணறிவின் திறங்கொண்டு, அவன் தீர்க்கதரிசனங்கள் அனைத்தையும் மெய்ப்பித்து, நடைமுறைக்குக் கொண்டு வருவதினுல் மட்டுமே, நாட்டுக்கும் நன்மை செய்து அவன் ஆன்மாவுக்கும் சாந்தியளிக்க முடியும் என்று கூறி, இக்கட்டுரையை முடிக்கின்றேன். 事

Page 75
மகாபாரதக் கதைகளும் நான் கண்ட பாரதியும்
நிTடு பலவிருந்தால் நாப்பலவிருக்கும் என்பது ஒரு நாடோடிப் பழமொழி. ஒரு நாட்டில் ஏன்? ஒரு வீட்டில் உள்ள ஒரு குடும்பத்தில் உள்ள அனை வரும் சகலத்திலும் ஒன்றித்து ஒரு மனப்பட்டிருக்க வில்லை என்பது உலகங் கண்ட உண்மை. மனிதப் பிறவியெடுத்த ஒவ்வொருவருக்கும் அன்பு, அருள், வாய்மை, பொறுமை, பொருமை. பொய்மை, ஈகை, வீரம், மானம், அச்சம், வஞ்சனை, கபடம், குது, சூழ்ச்சி என்பன உடன் பிறந்த குணங்களா (5D.
இறைவனல் ஆதிமுதலிற் படைக்கப்பட்ட ஆதி மனிதன் ஆதாமுக்கும், ஆதி மனுஷி ஏவாளுக்கும் பிறந்த காயீன் ஆபேல் என்ற இரு பிள்ளைகளும் ஒற்றுமையாய் இருக்கவில்லை. காய்மகாரம் பொருமை என்ற இழிகுணங்கள் அவர்களைத் தானும் விட்டுவிட வில்லை. இறைவனின் நல்லன்புக்குப் பாத்திரமான ஏக காரணத்தால், காய் மகாரங் கொண்ட காயீன், தன் உடன் பிறந்த சகோதரனன ஆபேலை வெட்டிக் கொன்று விட்டானென்று ஆதியாகமம் கூறும்பொ ழுது ஏனைய மக்கட் சமுதாயங்களைப் பற்றிப் பேசு வானேன்?
அன்பிலே, பண்பிலே, நீதியிலே, நேர்மையிலே, வன்மையிலே, வாய்மையிலே, தூய்மையிலே ஒன்று பட்ட ஒரு இனம் எந்த மண்ணகத்திலும் வாழ்ந்தார்

மகா பாரதக் கதைகளும் கான் கண்ட பாரதியும் 3.
கள் என்பதற்குச் சரித்திர ஏடுகளில் முதலாகச் சான்றுகள் இல்லை. அப்படிப்பட்ட ஒரு தூய இனம் இருக்க வேண்டுமேயான ல், அவர்களுக்கு உரிய இடம் விண்ணக மன்றி மண்ணக மன்று.
மனிதராகப் பிறந்தோருள்ளும் தனிமையை நாடி, ஒதுக்கிடங்களைத் தேடி , தவ வாழ்க்கையை மேற்கொண்ட ஞானிகளையும், தபோதனர்களையும், முனியுங்கவர்களையுந் தவிர்ந்த, ஏனைய மக்கட் சமு தாயத்தினர் அனைவரும் நவரசங்களுக்கு ஆட்பட்ட வர்களே! இன்ப துன்ப உபாதைகள் அவர்களை விட் டிருந்த போதிலும் அவர்களால் அவ்வுபாதைகளை விட்டிருக்க முடியவில்லை. மனித இயல்பும் அப்படிப் பட்டதே.
* ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல் லாங்கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆணை செல வேநினைவர் அளகேசன் நிகராக அம்பொன்மிக
வைத்த பேரும்”
என்ற தாயுமானவ சுவாமிகளின் கவிதையடியும் மனிதனின் மன இயல்பைப் படம் பிடித்துக் காட் டும் பான்மையில் அமைந்திருக்கின்றது.
பழந் தமிழர் வரலாறுகளில் மட்டுமல்ல, உல கின் பல்வேறு சாகியத் தாரிடையிலேயும், நீதியை, வாய்மையை, காதலை, வீரத்தை, மானத்தை, தரு மத்தை, அதர்மத்தை, குதை, வாதை, கற்பை, பொற்பை விளக்கப் பலப்பல கதைகள் உண்டு. ஆயினும், உள்ளத்தைப் பண்படுத்தாத எந்தக் கதைகளும் உலகில் நீடுவாழ்ந்தது கிடையாதென் பது வரலாறுகள் தரும் உண்மையாகும்.
விண் பொழுது போக்கல், காலங்கழித்தல், பயனில சொல்லுதல் முதலாம் அருத்தமற்ற

Page 76
32 ாகான் கண்ட பாரதி
செயல்களில் ஈடுபடாது, ஓய்வின்றி, உறக்கமின்றி, ஒரு ஒப்பரிய பாரத சமுதாயத்திற்குத் தீர்க்காலோ சனையுடன் திட்டங்கள் பல தீட்டித் திறமை கண்ட பாரதி, தன்னுடைய உயரிய போதனைகளை இலகு வான முறையில் மக்கள் கைக்கொள்ள வேண்டும். அதன்படி அவர்கள் ஒழுகிட வேண்டும். வாழ்க்கை யில் வெற்றி பெற்று சுதந்திர பிரஜைகளாக வாழ வேண்டும் என்ற அடிப்படையில், மனிதக் குணங் கள் அத்தனையும் சம்பூரணமாய் நிறைந்த, ஒரு கதையை எடுத்து மக்களுக்குப் படிப்பிக்கச் சித்தங் கொண்டான்.
நளன் தமயந்தி கதை, அரிச்சந்திர மகா இரா சன் கதை, இராம கதை, கந்த புராணக் கதைகள் என்ற என்ணிறந்த கதைகள் இருந்தபோதிலும், பாரதி மகாபாரதக் கதைகளைத் தன்பாடற் ருெகுதி யில் ஏன் தெரிந்து தொகுத்தான் என்பதை ஆராய் வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நளன் தமயந்தி கதை வேதனை தரும் சூதை மையமாகக் கொண்டு நின்றதால், அக்கதையைத் தெரிவு செய்ய அவன் மனம் விரும்பவில்லை. அரிச் சந்திர மகாஇராசனின் கதை, அளப்பரிய இன்னல் களின் மத்தியிலும் சத்தியத்தை மட்டும் மகிமைப் படுத்தி நின்றதால், அதை எடுத்தாள அவன் மனம் நாடவில்லை. இராம கதை, பரத கண்டத்தைக் கடந்து சென்றபடியாலும், மும்மூர்த்திகளுள் ஒருவராகிய திருமாலே இராமாவதாரம் எடுத்து, பல துன்ப துரித உபாதைகளினிடையில், இலங்கைப் போரை முடித்து வெற்றிகொண்டார். எனவே, ஈசன் மனி தரோடு பொருது வெற்றிகொண்ட கதையாக லின், வயிரமணம் படைத்த பாரதிக்கு அக்கதையும் உகந்த தாகத் தெரியவில்லை. கந்தபுராணக் கதைகளும், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் ஆரம்

மகா பாரதக் கதைகளும் கான் கண்ட பாரதியும் 33
பிக்கப்பட்ட போர், ஈற்றில் சுப்பிரமணியக் கடவுள் தோன்றிச் சூரபத்மனை வதைத்து வெற்றி கொண்ட வரலாற்றைக் கூறுகின்றது. அல்லாமலும், அக்கதை யில் பல அபூதக் கற்பனைகள் இடம்பெற்றிருந்தபடி யாலும், அக்கதையைத் தானும் தெரிந்து கொள்ள அவன் மனம் பிரியப்படவில்லை. ஆணுல் மகா பார தக்கதைகள், பரந்த பரத கண்டத்தைத் தழுவி நின்ற படியாலும், மனித சமுதாயத்தின் இயல்பான மன நாட்டங்கள் அத்தனைக்கும் பிறப்பிடமாய் இருந்த படியாலும், என்ன தான் துன்பங்கள் வந்திட்ட பொழுதிலும், இறைவனின் கருணையில், அவன் அன் புப் பிணைப்பில், நம்பிக்கை வைத்து, தருமவழி நடப்போர் நிச்சயங்காப்பாற்றப்படுவார்கள் என்ற உண்மைச் சித்தாந்தங்களுக்கு இக்கதை உறைவிட மாய் இருந்த படியாலேயும், தருமத்தைப் LT gil காக்கச் சித்தங்கொண்ட திருமாலாகிய இறைவன், போர் முனையில் ஆயுதந் தாங்கிச் சமர்புரிய முன் வரா திருந்தமையினலேயும், மனிதன் அறவழி நின்று மறவழி கடிந்து, மனிதஞக வாழ்ந்து உய்ய, மகிமை வழிபகரும் பகவத்கீதையை இக்கதை பொதிந்துள்ள காரணத்தினலேயும், பாரதி மகாபாரதக்கதைகளைத் தன் பண்பு நிறைந்த தமிழுடன் சேர்த்துக்கவிதை வடிவில் வார்த்துத் தரலாஞன்.
இத்திவ்விய கதைகளில் பஞ்சசீலக் கொள் கைக்கு எடுத்துக்காட்டாய் நின்ற பஞ்சபாண்டவர் களின் பிரதாபங்கள் பிரபல்லியப் படுத்தப்பட்டு, அவர்களின் நிறை குணமாண்புகள் பறையறையப் பட்டிருக்கின்றன. பொறுமைக்கு மண்ணிலும் மேம் பட்ட தருமனும், ஆண்மைக்கு உறைவிடமான வீமனும், வில்லுக்கே உரித்தான விஜயனும், இன் னும் பலப்பல சுகுணங்களும் ஒருங்கு திரண்டு உருவ மைந்த நகுலனும், சகாதேவனும், போற்றிப் புக, ழப்பட்ட பொழுதிலும், பாரதி தான்படைத்து

Page 77
34 கான் கண்ட பாரதி
விட்ட புதுமைப் பெண்ணை துரோபதை வடிவில் தத்ரூபமாகக் கண்டுகளிக்கின்றன். அவளது பெண் மையை, மாண்பு நிறைந்த மானத்தை, வீரம் நிறைந்த வைராக்கியத்தை, சீலத்தை, உதாரத்தை, பிடிவாதத்தை, சத்தியத்தை, சபதத்தை கண்குளி ரக் கண்டு களிக்கின்றன்.
எப்படிப்பட்ட பிழைகளைச் செய்திட்ட பொழு திலும், தத்தம் பிள்ளைகள் உய்யவேண்டும், உயர வேண்டும், பிரகாசிக்க வேண்டும், வாழவேண்டும் என்று வேணவாக் கொள்ளல், மனித இயல்பின்படி ஒவ்வொரு தந்தைக் கும் உண்டு. அதே ரீதியில் ஒரு குடும்பத்திற் பிறந்த சகோதரர்களுள், நியாயத்தைப் பரிசீலனை பண்ணி, நேர்மைக்குத் தீர்ப்பளித்தல், அக்குடும் பத்தில் விவாக மாகாத, அல்லது புத்திர சந் தானம் இல்லாத, அல்லது பிரமச்சாரியாய் இருந்த ஒருவருக்கே உண்டு. இந்த உண்மையை அந்த கஞன திருதராட்டினனிடத்திலும், ஆற்றல் படைத்த விதுர னிடத்திலும் கண்கூடாகக் கண்டு களிக்கின்றன்.
அத்துடன் தன் கவிதைத் தொகுப்பில் மானத் திற்கும், ஆண்மைக்கும் முதலிடங் கொடுத்து, அச் சம் என்ற பதத்திற்கே அர்த்தம் தெரியாமல் வாழ்ந்து வந்த பாரதி, உலகத்தின் எக்கோடியிலும் இன்றுவரையிற் ருேன்றியிராத தன்னிகரில்லாத் தனு அதிபதியும், கூற்றுவனுக்கே ஒரு கூற்றுவனும், விற்படை கொண்டோர் கைகளில் நின்றும் வில்லும் வாளியும் தாமாகவே நழுவி விழ நாணுேதை செய்ப வனும் யமதக்கினி முனிவனின் அருந்தவப் புதல்வ னும், தன்னெப்பரிய குருவுமாய் விளங்கிய பர்சுரா மனையே அம்பாலிகை சுயம்வரத்தில் வென்று துரத் திய துரியோதனின் தானத் தலைவனகிய பீஷ் மாச் சாரியினதும், மறலியும் மறங்கண்டு மறுகிடும் துரோ ணுச்சாரி, கிருபாச்சாரி, கன்னன், சல்லியன், அசு

மகா பாரதக் கதைகளும் நான் கண்ட பாரதியும் 35
வத்தாமன், திட்டத்தூய்மன் முதலான எண்ணி றந்த படையதிபதிகளின் அரிய பெரிய வில்லாண்மை கண்டு விண்ணளவாக விம்மிப் புடைக்கின்றன்.
உண்மையே உருவான குருவை, ப்க்தியே வடி வான சீஷனை, நஞ்சினும் விஞ்சிய வஞ்சனையே உரு வெடுத்த சகுனியை, தலைபோவதாய் இருந்தாலும் கால் மாட்டில் இரேன் என்று தலைக் கனம் பிடித்து, சதா சூதும், வாதும், சூழ்ச்சிகளுமே செய்து வாழ்ந்து வந்த வணங்காமுடி இராயணுகிய துரியோதனனே, அவமானத்திற்கஞ்சி அன்னையால் ஆற்றில் வீசி எறி யப்பட்டும், தெய்வாதீனமாய் உயிர் பிழைத்து, தேர்ப் பாகனல் எடுத்து வளர்க்கப்பட்டு, வேத்தவை யில், கிருபன் முதலாம் பெரியோர்களால் அவன் திறமை கண்டு, மனம் வெதும்பி, ஊர் பேர் தெரியா தவன் என்று இகழ்ந்துரைக்கப் பட்டபோது, கை கொடுத்து, நாடு கொடுத்து, அரசு கொடுத்து, ஆட் படுத்திவிட்ட அத் துரியோதனனுக்கன்றி, வேறு யாருக்காகத் தாயே, என்னுயிரைக் கொடுப்பேன்! என்று செய்நன்றி மறவாது செஞ்சோற்றுக் கடன் கழித்தும், இறுதி மூச்சு வரையிலும் கொடையையே மேற் கொண்டு வள்ளன்மையோடு மாண்டு மடிந்த கன்னனை, உடல் வலியும் உள்ளத் தெழுச்சியும் கணக்கிலாற்றலு மடங்காக் காண்டீபனை, இவற்றிற் கெல்லாம் மேலாக 'புலனந்தும் பொறிகலங்கி நிலை மழுங்கி அறிவழிந்திட்டமை மேலுந்தி அலமந்த போதாக அஞ்சேல்' என்று அருள் செய்து, சிஷ்டர் களைப் பரிபாலிக்கப் பிறந்த அன்புருவாகிய, அருள் வடிவு கொண்ட கண்ணனை, மகா பாரதத்தைத் தவிர்ந்த வேறு எக்காதையிற்ருன் அவன் கண்டு களிக்க முடியும்?
ஒரு சில அறிஞர்கள் இப்பாரதியே தாம் பாடிய பாடலில் “யாமறித்த புலவரிலே கம்பனைப்போல்

Page 78
36 ܫ ாகான் கண்ட பாரதி
வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் பூமி தனில் யாங்கணுமே பிறந்ததில்லை” என்று கம்பனை பன் ருே முன் வைத்துப் பாடியிருக்கின்றன். அப்படி யானுல், அவன் தன் கவிதையில் இராமாயணக் கதை களையல்லவா தொகுத் திருக்க வேண்டும்? அவ்வா றன்றி அவன் பாரதக் கதையைத் தொகுத்தது அவன் பேச்சுக்கு முரணுய் இருக்கின்றதல்லவா என்று கேட்கின்றனர். அப்படிப்பட்ட கேள்வி பொறிப்போருக்கு நான் கூறக் கூடியது என்னையெ னில், உலக மகா கவிஞர்களை ஒரு நிரைப்படுத்தி வைத்துப் பார்க்கும்பொழுது, அவ்வணி வகுப்பில் முன் நிற்கக் கூடியவனும், முன்வைக்கப் படவேண் டியவனும், மகா மகா கவிஞனும் கம்பனே! கற்ப னைச் செறிவில், உவமைத் திறத்தில், உவமானத் தொடர்பில், கவித்துவப் பண்பில், கவிதா சித்திரத் தில், கவிச் சூத்திரத்தில், பாவின விருத்தத்தில், நவச் சுவை இரசத்தில், அலங்கார வண்ணத்தில், மணி முடி சூட்டப்பட வேண்டியவனும் கம்பனே! இந்த உண்மையைப் பாரதி பட்டும் ஏன்? தமிழ்கூறும் நல் லுலகில் எந்தக் கோடியிலும் உள்ள எக்கலைஞனும், எவ்வறிஞனும், எப்புலவனும், மறுக்கவோ அன்றி மறைக்கவோ முன்வர மாட்டான் என்பதே என் மன முடிபு. ஆனல் இங்கே பாரதி தேடியது கலைஞனையு மல்ல; கவிஞனையுமல்ல, புலவனையும் அல்ல; எனி னும் மனித மனநாட்டங்கள் அத்தனைக்கும் இலக் கணமாய் அமைந்த ஓர் இலக்கியக் கதைத் தொகுப் பையே என்பதை யாவரும் கருத்திற் கொள்ள வேண்டும். இவைகளை விரிக்கப் புகின் விடயம் மிக மிக விரியுமென்றஞ்சி, சிந்திக்கும் பொறுப்பை உங் கள் அனைவரிடமும் விட்டு எனது விடயத்திற்கு வரு கின்றேன்.
ஆழ்ந்த அறிவும், உயர்ந்த அரசியல் ஞானமும், பரந்த நோக்கும் படைத்த பாரதி, தன் பாடற்

மகா பாரதக் கதைகளும் கான் கண்ட பாரதியும் 37
ருெ குதியில் பாரதக் கதைகளைத் தொகுத்ததற் குரிய காரணங்களை ஒரளவிற் புரிந்துகொண்டோம். இனி இக்கதையில் இருந்து நாம் படிக்க வேண்டிய பாடங்கள் எவை எவை என்பவைகளையும் ஈண்டு சுருக்கமாய்க் கூறி இக்கட்டுரையை முடிக்க ஆசைப் படுகின்றேன்.
“கற்போன் அறிவைப் பெற்ருல் அவனதை வாழ்க்கையில் உபயோகிக்க வேண்டும்”
என்பது கல்வி பயிற்றலின் மூலாதார விதிகளுள் ஒன்று. மேலே காட்டப்பட்ட மகாபாரதக் கதை கள், தருமத்திற்கும், அதருமத்திற்கும், நீதிக்கும், அநீதிக்கும், அறத்திற்கும், மறத்திற்கும், மெய்மைக் கும், பொய்மைக்கும் இடையில் நடந்த சம்பவங் களே உள்ளடக்கிய ஒரு கதைத் தொகுப்பாகும். இக்கதைகளில், கடவுளின் கடாட்சம் தருமத்தின் பக்கமே என்பதைக் காட்டவே, கருணை வடிவா கிய கண்ணன், தருமன் பக்கமாய் நின்று தருமத் தைப் பாதுகாக்கச் சித்தங்கொண்டான்.
பொய்யும், குதும், வாதும், வஞ்சனையும், கபட மும், சூழ்ச்சிகளும் ஒரு பொழுதும் வெற்றி பெற் றது கிடையாது. "தன்வினை தன்னைச் சுடும் ஒட்டப் பம் வீட்டைச் சுடும் 'கெடுவான் கேடு சூழ்வான் தானே வருங்கேடு" * பிறர்க்கிடு பள்ளம் தான் விழும் பள்ளம்" என்ற பழமொழிகளை விளக்க, வஞ்சகச் சுயோதனன் பக்கலில் விஞ்சிய வரலாறு கள் நிறையவுண்டு. அவனின் சூழ்ச்சிகளிற் சில வற்றை வில்லிபாரதத்தில், கடோற்கஜன் துரதில், கடோற்கஜன் வாய்மொழியாகவே இரண்டு கவி தைகள் வாயிலாக காண்பிக்க ஆசைப்படுகின் றேன்.
W-18

Page 79
38 நான் கண்ட பாரதி
பார்த்தன் பசுபதியைப் பணிந்து உரமும் வர மும் நிறைந்த உன்னத திவ்விய அஷ்திரம் ஒன்றைப் பெற்றுவரச் சென்றுவிட்டான். இவ்விடயத்தைத் தருமப்போர் புரியுந் தருமன், துரியோதனனதி யோர்கட்கு அறிவித்து வரும்படி கடோற்கஜனைத் தூதனுப்பினன். தூதுவஞகச்சென்ற கடோற்கஜனை ஒரு கட்டத்தில் துரியோதனன், அவைப்பழக்கந் தெரியாத அரக்கி மகனென்று இகழ்ந்துரைத்த பொழுதே சீற்றங்கொண்ட கடோற்கஜன், சீறிச் சினந்து கூறிய கூற்றை, வில்லிபாரதம் பின்வரும் கவிதைகளினல் எடுத்துக் காட்டுகின்றது.
"அந்தவுரை மீண்டவன்கேட் டாங்கவனை
ககைத்துரைப்பான் அரக்க ரேனும் சிங்தைதனில் விரகெண்ணுர் செருமுகத்தில் வஞ்சனையும்
செய்யார் ஐயா! வெந்திறல்கூர் துணைவருக்கும் விடமருத்தார்
நிரைக்கழுவில் வீழச் செய்யார் உந்துபுல லிடைப்புதையார் ஒருரில் இருப்பகற்ருர்
உரையுந் தப்பார்.”
*செழுந்தழல்வாழ் மனக்கொழாஅர் செய்ாகன்றி
கொன்றறியார்
தீங்கு பூணுர்
அழுந்துமணத் தழுக்குருஅர் அச்சமுமற் றருளின்றிப்
பொய்ச்சூ தாடார்.
கொழுந்தியரைத் துகிலுரியார் கொடுங்கான மடைவித்துக்
கொல்ல எண்ணுர்,
எழுந்தமரில் முதுகிடார் இவையெல்லா மடிகளுக்கே
ஏற்ப தென்ருன்”
இக்கவிதைகளில் இருந்து துரியோதனன் தன் வாழ்நாட்களில் செய்துவந்த நயவஞ்சகச் சூழ்ச்சிகள்

மகா பாரதக் கதைகளும் கான் கண்ட பாரதியும் 39
சிலவற்றை நாம் கண்டு ஆத்திரப்பட வேண்டிய நிலை ஏற்படுகின்றது. ஆகையால் நாமும் இப்பார தக் கதைகள் அனைத்தையும் மனிதாபிமானத்துடன் பலமுறை பார்த்துப் படித்துப் பாராயணம் பண்ணி, அதன் கண்ணமைந்த பண்பு நிறைந்த கதைகளுக்கு இலக்கியமாகி, வீரமும், தீரமும், நீதியும், நேர்மை யும், மானமும், மகிமையும் படைத்த மனித மாணிக்கங்களாய் மிளிரும் நாளே, பாரதியின் பார
தக் கதை பயன் தந்த நாளாகும்.
并

Page 80
நான் கண்ட பாரதியின்
புதிய ஆத்திசூடி
உலகத்தில் ஆதிப்பழங் குடிகள் யார்? அவர் கள் எங்கே தோன்றினர்கள்? எப்படிப் புலம் பெயர்ந்தார்கள்? ஆரம்பத்தில் அவர்களாற் பேசப் பட்ட மொழிதான் என்ன? என்பனபோன்ற இன் னுேரன்ன விடயங்கள் பற்றி உலக இனமொழி ஆராய்ச்சியாளர்கள் திட்டவட்டமாக ஒன்றையும் அறுதியிட்டுக்கூற இயலாதவர்களாய் பெரிதும் இட றற்பட்டுக் கொண்டிருக்கின்றர்கள். எனினும்,
மறைமொழி வாயினன் மலிதவத் திறைவன்
நிறைசொற் கலைஞன் நிகரில் கேள்வியன் என்று கற்ருேரால் ஏற்றிப் போற்றப்பட்டவரும், ஈழத்துத் தமிழ்ப் புலவர் மன்றத்தாரால் சொற் கலைப் புலவர் என்ற ஒப்பற்ற பட்டத்தைப் பெற் றுக்கொண்டவருமான, நல்லூர் ஞானப்பிரகாச அடிகள், தமது மொழியாராய்ச்சியின் பயனுய், உல கில் வழங்கி வந்த பல மொழிகளையும் ஒப்பு நோக்கிப் பார்த்து, தமிழ் மொழியே உலகின் மற்றைய மொழிகளுக்கு முதன்மையானது என்று போதிய ஆதாரங்களுடன் நிரூபித்த பொழுது, ஜேர்மனியில் அவ்வமயம் இருந்த உலகமொழி ஆராய்ச்சி மன்றத்தினர், அவர் நிரூபணத்தை மறுப் பின்றி அப்படியே ஏற்றுக்கொண்டது குறித்துத் தமிழராகிய நாமனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டி யவர்களாய் இருக்கின்ருேம். எனவே, உலக மொழி ளுகள் தமிழே முதன் மொழியாகும் பொழுது, உலக

கான் கண்ட பாரதியின் புதிய ஆத்திசூடி 14
மனுக்குலத்திற்கும் தமிழனே பிதாமகன் என்பது, ஆராய்வுக்கு இடமின்றியே ஒப்புக்கொள்ளக் கூடி ய தாய் இருக்கின்றது,
*கற்ருேன்றி மட்டோன்ரு க் காலத்தே வாளோடு முற்றேன்றி மூத்த குடி’
தமிழன் நாகரீகத்தில் முற்பட்டவன். வீரத்தின் சிகரத்தில் சம்பூரண சுதந்திரத்துடன் கொலுவீற் றிருந்தவன். கற்ருேன்றி விட்டது. மண் தோன்ற வில்லை. கல் பிளந்து பாறைகளாகி, பாறைகள் சிதைந்து பரற்கற்களாகி, அவை திரிந்து பருமணல் களாகி, பருமணல்கள் மண்ணுக, பல்லாயிர வரு டங்கள் தானும் சென்றிருக்கவேண்டும். ஆனல் கல்தோன்றிய பொழுதே, மண்தோன்று முன்பே, வாளோடு முன்தோன்றிய மூத்த குடிமகன் என்று கூறப்பட்டிருப்பதால், அவன் காலத்தின் முதிர்வும். வீரத்தின் சிறப்பும், இனிது விளக்கப்பட்டிருக்கின் றன.
பண்டைப் பனுவல்களாகிய அகப்பொருள், புறப்பொருள் என்ற இலக்கண நூல்கள் முதற் கொண்டு, காப்பிய இலக்கியங்களில் ஈருக,
ஒன்றி லிரண்டாய்ந்து மூன்றடக்கி நான்கினல் வென்று களங்கொண்ட வேல்வேந்தே சென்றுலா மாழ்கடல்சூழ் வையகத்து ளைந்துவென் ருறகற்றி யேழகடிந் திற்புற் றிரு. (புறப்பொருள் வெ. மா.)
"கறைவேற் காளையும் கன்னியுங் காண்ப*
(நம்பியகப்பொருள்) *கண்ணிலான் பெற்றிழந்தான் எனவுழந்தான்
கடுந்துயராற் காலவேலான்"
(கம்ப இராமாயணம்)

Page 81
42 நான் கண்ட பாரதி
*புலவுவேலோய்” (கம்ப இராமாயணம்) என்றெல்லாம் வரும் செய்யுள் அடிகளிற் காணப் படும் “வேல் வேந்தே கறைவேற்காளை "கால வே லான்’ ‘புலவு வேலோய்” என்ற சொற்ருெடர் கள் யாவும், மானத் தமிழனின் வீரத்தின் மகிமையை விளக்கும் மெய்த்தீபங்கள் போற் காட்சியளிக்கின் றன. அல்லாமலும் பண்டைத் தமிழர் காலத்தில் ஆட்சிப்பீடங்களில் அமர்ந்திருந்து நாடு புரந்த மறமன்னர்கள் யாவரும், நாட்டின் பாதுகாப்பைக் கண்ணென க் கருதிப் பாதுகாத்தனர். இக்கைங் கரியங்கட்கு ஆடவரோடு பெண்களும் ஒன்று பட் டுழைத்தனர். அரண்மனை நிலத்தில் ஆயுதச் சாலை களுக்கு முக்கிய இடங்கள் அளிக்கப்பட்டிருந்தன.
முரசவாத்தியங்களும் மண முரசு, கொடை முரசு, போர்முரசு, வீர முரசு, வெற்றி முரசு என்ற பல படிவங்களைக் கொண்டு மிளிர்ந்தன. போர்க் கோலஞ் செய்யும் வீரர்களுக்கு, அவர்களின் போரின் தன்மைக்கேற்க மலர் மாலைகள் தானும் சூட்டப் பட்டன. இவ்வரலாற்றை,
‘வெட்சி நிரைகவர்தன் மீட்டல் கரந்தையாம் வட்கார்மேற் செல்வது வஞ்சியா - முட்கா தெயிரூன்றல் காஞ்சி யயில் காத்த ஞெச்சி அதுவளைத்த லாகு முழிஞை - அதிரப் பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர் செருவென் றதுவாகை யாம்" (ப. செய்.)
என்ற பாவால் அறிகின்ருேம்.
இவ்வாரு காக அரசனும் குடிகளும், "அரச னெவ்வழி குடிகளுமல்வழி” என்ற முதுமொழிக்கு உதாரணப் பொருள்களாய்த் திகழ்ந்து, சதா ஆயு தந் தாங்கி, எந்த நேரமும் நாட்டைக் காக்கச் சதுரங்கப் படைகளுடன் யுத்த சன்னத்தராய் நின்

கான் கண்ட பாரதியின் புதிய ஆத்திசூடி 43
ரு ர்கள். இப்படியாக நாடடங்கலும் வேல், வாள். கோல், ஈட்டி, கேடயம், வில்லம்பு, சூலம், கதை, சக்கரம் தாங்கிய கையர்களாய், வீரர்கள் சுற்றிச் சுழன்று, ஆர்ப்பரித்து, இரைவேட்ட பெரும் புலி கள் போல், போர் வேட்டு, தின வெடுத்த தோள் புடைத்து, பாரடங்கலும் பாய்ந்து, பரந்து, திரிந்து வரு நாளில், அவர்களைக் குணப்படுத்திச் சீர்ப் படுத்தி, அவர்களுக்கு மனிதாபிமானத்தை ஏற் படுத்தி, அவர்களை அறவழியில் நடத்த வேண்டிய பொறுப்பு அன்றையப் பெருந் தமிழ் வாணர் களுக்குப் பெருங்கடப்பாடாகத் தோன்றிற்று.
இந்த நிலையிலேயே வாக்குண்டாம், கொன்றை வேந்தன், நல்வழி, நன்நெறி, வெற்றி வேற்கை முதலான சிறுவர் இலக்கியங்கள் தோன்றி, இளமை யில் இருந்தே அன்பையும், பண்பையும், அறத்தை யும், திறத்தையும், வளர்ப்பனவாயின. இத்தன் மைத் தான நீதிநூல்களுள் ஒன்றே, அருந்தமிழ் வாணியாம் ஒளவைப் பிராட்டியாரால் நவிலப் பட்ட ஆத்திசூடி என்பது ஈண்டு கருதற்பாலது.
அவ்வாத்திசூடியிற் பிராட்டியார் கூறிய முத லாவது அறவுரை
"அறஞ்செய விரும்பு" என்பதே!
அதாவது மக்களே! உங்களுக்கு இந்த உலகம் சொந்தமல்ல. நாம் மரணத்தின் வழியாய் இவ் வுலகை விட்டகன்று இறைவனுடன் ஒன்றித்த ஒரு இன்ப உலகை அடைய வேண்டியவர்களாய் இருக் கின்ருேம். அந்த உலகை மறவழி நடந்து நாம் ஒரு பொழுதும் அடையவே முடியாது. ஆகையால் நீங் கள் உலகில் வாழும் குறுகிய காலத்திலேயே செயற் கரிய நற் செய்கைகளைச் செய்து, தரும வழி நடந்து அந்த இன்ப உலகிற்கு உங்களைத் தயார்ப்படுத்திக்

Page 82
44 கான் கண்ட பாரதி
கொள்ளுங்கள் என்று கூறுமுகத்தால் 'அறஞ்செய விரும்பு" என்றருளிச் செய்தார். பின்பு,
"ஆறுவது சினம்’ என்ருர் .
அதாவது, மக்காள்! கோபம் மிக மிகக் கொடியது. பல பாதகச் செயல்களுக்குக் காரணமானது. அதன் வழி நீங்கள் நடப்பீர்களானல் அஃது அளவிறந்த துன்பங்களுக்கு உங்களை ஆட்படுத்தி, ஈற்றில் மீளா நரகத்திற்கும் உங்களை ஆளாக்கி விடும். எனவே தான் முந்த முந்த அச்சினத்தை ஆற்றிக் கொள் ளும் உன்னதப் பழக்கத்தைப் பழகிக்கொள்ளுங் கள். அஃது உங்களுக்கு அளப்பரிய இன்பங்களை அள்ளித்தரவல்லது என்று இப்படியான அமிர்த போதகங்களைப் போதித்தார். இதே ரீதியிலேயே ஏனைய சிறுவர் இலக்கியங்களும் அரும்பணி புரிந்து, இளமை முதற்கொண்டே பழம் பெருந் தமிழர் களின் தினவெடுத்த தோள் வெறிக்கு, அரிய பெரிய ஒளடதங்களாகி, அவர்களைத் தரும வழிகளில் நடக் கச் செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனல் நான் கண்ட பாரதியின் புதிய ஆத்தி சூடி, ஒளவைப் பிராட்டியின் ஆத்தி சூடிக்கு முற் றும் முரணுனது. ஏனெனில் பாரதியின் காலம், தமிழினம் பற்கள் பிடுங்கப் பட்ட நாகங்கள் போல வும், நகங்கள் நறுக்கப்பட்ட வேங்கைகள் போல வும், நயனங்கள் அழிக்கப்பட்ட அடலேறுகள் போல வும், நாயினுங் கடைப்பட்டு, தங்களின் பழமை பட்ட பெருமிதங்கள் அனைத்தையும் பறி கொடுத்து, உணர்ச்சி நரம்புகள் அறுந்து, இரத்தோட்டங்களும் தடைப்பட்டு, உள்ளத் துடிப்புக்களும் நின்று, ஊனற்று, உடலற்று, உயிரற்று, அடிமைப்பட்டு அடங்கிக் கிடந்த காலம். சுருங்கச் சொல்லுங்கால் ஆங்கிலேயரின் முடியாட்சி, பரந்த பாரத சமுதா யத்தின் வீர தீரங்களையும், செல்வச் சிறப்புக்களை

கான் கண்ட பாரதியின் புதிய ஆத்திசூடி 145
யும், கால வெள்ளம் போல் அள்ளி அபகரித்துச் சென்று விடவே, செல்வப் பாரதம் சீரழிந்த பாரத மாக மாறி, ஆசியாவின் நோயாளனுகத் துன்புற்ற காலமே பாரதி வாழ்ந்த பாரத காலமாகும்.
கண்ணெடுத்துப் பார்க்க முடியாத ஒரு பயங்கர தொழுநோயாளனுக் கொப்பாகச் சகல துறைகளி லும் சிறுமையுற்றுக் கிடந்த பாரதத்தைச் சிறந்த சீர்திருத்தச் செம்மலா கிய பாரதி, கண்ணெடுத்துப் பார்த்தான். அகோர எரிமலைக் கொப்பாகக் குமுறி எரிந்தது அவன் உள்ளம். மிதமிஞ்சிய உள்ளக் குமு றல்களினிடையே சீரழிந்த பாரதத்தை, அடி அத்தி பாரத்திலிருந்தே சீர்ப்படுத்த நினைத்தான். பண் டைக் காலச் சுதந்திர பாரதத்தில் மக்கள் தினவெ டுத்து, மதம் பிடித்துத் திரிந்தகாலை, அன்னவர்களின் மத மடங்கி, மறமடங்கி, அறவழி நடக்க, அந்த ஒளவை அருளிய ஆத்திசூடி முதலாம் அரிய இலக்கி யங்கள் தோன்றினவே! ஆணுல் இப்போது, அடிமை ஆட்சியில் செத்துக் கிடந்த பாரதத்திற்கு, உயிர் கொடுத்து, உணர்வு கொடுத்து, உறுதிகொடுத்து, தலையெடுத்து, தமிழன் மறவன் என்ற மான உணர்ச்சி யுடன் அவன் மரபு வழுவாது அவனை விழிப்புணர்ச்சி யோடு வழிநடத்திப் பண்டைய நிலையிற் கொண்டு சேர்க்கவேண்டிய மாபெரும் பொறுப்பு பாரதிக்கு ஏற்பட்டது. -
ஆகையால், பூரண நோயாளரால் எழும்ப, இருக்க, நிற்க, நடக்க, உண்ண, உறங்கச் சக்தி யற்றுக் கிடந்த பாரத சமுதாயம், நோயகன்று, திடம் பெற்று, வீறுகொண்டு துள்ளி எழுந்து, பீடு நடைபோட்டு, சிங்கேறுகள் போலச் சங்கநாதங்கள் செய்து, உக்கிர சண்டைமாரு தம்போல ஓங்கியடிக்க வேண்டும். அவர்களின் ஆற்றல்கண்டு, ஒன்னர் கதி W.19

Page 83
46 நான் கண்ட பாரதி
கலங்கி ஓடவேண்டும் என்ற ஏக அடிப்படையில், எலும்பை, நரம்பை, உதிரத்தை, உற்சாகத்தை, அறிவை, ஆற்றலை, ஆண்மையை, மானத்தை, வீரத்தை யாவற்றையும் ஏக காலத்தில் வளர்க்கக் கூடிய, அபூர்வ சீவசத்துக்களை உள்ளடக்கி, அற்புத வில்லைகளாக்கி உண்ணக் கொடுக்கின்றன்.
அன்னை ஒளவைப் பிராட்டியின் ஆத்திசூடி அன்பை, பண்பை, சாந்தத்தை, தாழ்ச்சியை அறத்தை, அருளை, ஈகையை, ஊக்கத்தைப் போதிப் பதையே அடிப்படையாகக் கொண்டு நின்றது. அன்றையச் சூழ்நிலையின் படி அதன் படிப்பினை அவ் வாரு கத்தான் இருக்கவேண்டும் என்பதை முன் னமே விளக்கிவிட்டேன். ஆனல், பாரதியின் புதிய ஆத்திசூடி, இதற்கு முற்றும் மறுதலையான குணங் களை உண்டாக்க வேண்டுமென்ற மான அடிப்படை யில், வீரத்தின் அடிப்படையில், ஊக்கத்தின் அடிப் படையில், முயற்சியின் அடிப்படையில் உருவாக் கப்பட்டது.
ஆகலின் அவன் இலட்சியம் நிறைவேற வேண்டு மென்ற ஏக அடிப்படையில், அவன் சக்திவாய்ந்த சஞ்சீவி வில்லைகளை உடைத்தால், சிதைத்தால், கரைத்தால், அவைகளின் ஜீவ சத்துக் கெட்டுவிடும். மாற்றுக் குறைந்துவிடும் மகிமை குன்றிவிடும் என்ற காரணத்தால், அவைகளை உருக்குலையாது அப்படியே தருகின்றேன். யாவரும் உண்டு, குணம் பெயர்ந்து, கோழையகன்று, தன்மானமும், வீரமும் உள்ள பிரஜைகளாகி, அவன் இலட்சியத்தை நிறை வேற்றி வைப்பார்கள் என்ற ஏக நம்பிக்கையால் உந்தப்பட்டு. எனவே, இத்திவ்விய ஒளடதத்தை உண்டு குணம் பெறுதல் அனைவருக்கும் கடனகும்.

கான் கண்ட பாரதியின் புதிய ஆத்திசூடி 47
புதிய ஆத்திசூடி
அச்சந் தவிர். ஆண்மை தவறேல் இளைத்தல் இகழ்ச்சி. ஈகை திறன். உடலினை உறுதிசெய். ஊண் மிக விரும்பு. எண்ணுவதுயர்வு. ஏறுபோல் நட
ஐம்பொறி ஆட்சி கொள். 10. ஒற்றுமை வலிமையாம். 11. ஒய்தல் ஒழி. 12. ஒளடதம் குறை. 13. கற்றது ஒழுகு. 14. காலம் அழியேல். 15. கிளைபல தாங்கேல். 16. கீழோர்க்கு அஞ்சேல். 17. குன்றென நிமிர்ந்து நில். 18. கூடித் தொழில் செய். 19. கெடுப்பது சோர்வு. 20. கேட்டிலும் துணிந்து நில், 21. கைத்தொழில் போற்று. 22. கொடுமையை எதிர்த்து நில் 23. கோல் கைக் கொண்டு வாழ். 24. கெளவியதை விடேல். 25. சரித்திரத் தேர்ச்சி கொள். 26. சாவதற்கு அஞ்சேல். 27. ஒதையா நெஞ்சு கொள். 28. சிறுவோர்ச் சீறு. 29. சுமையினுக் கிளைத்திடேல். 30. சூரரைப் போற்று. 31. செய்வது துணிந்து செய்,

Page 84
48
32.
33.
34.
35.
36.
57.
38.
39.
40。
4 Il .
42.
43.
44.
45。
46.
47.
48。
49,
50.
5.
52。
53.
54.
55。 56.
57.
58.
5 ●。
SO
6.
62.
63.
64。
65。
நான் கண்ட பாரதி
சேர்க்கை அழியேல். சைகையில் பொருளுணர். சொல்வது தெளிந்து சொல். சோதிடந் தனையிகழ். செளரியந் தவறேல், ஞமலிபோல் வாழேல். ஞாயிறு போற்று. ஞமிறென இன்புறு. ஞெகிழ்வது அருளின், ஞேயம் காத்தல் செய்.
தன்மை இழவேல்.
தாழ்ந்து நடவேல். திருவினை வென்று வாழ். தீயோர்க்கு அஞ்சேல். துன்பம் மறந்திடு. துாற்றுதல் ஒழி. தெய்வம் நீ என்றுணர். தேசத்தைக் காத்தல் செய். தையலை உயர்வு செய். தொன் மைக்கு அஞ்சேல். தோல்வியில் கலங்கேல். தவத்தினை நிதம் புரி. நன்று கருது. நாளெலாம் வினை செய். நினைப்பது முடியும். நீதி நூல் பயில், நுணியளவு செல். நூலினைப் பகுத்துணர். நெற்றி சுருக்கிடேல். நேர் படப் பேசு. நையப் புடை. நொந்தது சாகும். நோற்பது கை விடேல். பணத்தினைப் பெருக்கு.

கான் கண்ட பாரதியின் புதிய ஆத்தித்டி 49
66. பாட்டினில் அன்பு செய். 67. பிணத்தினைப் போற்றேல். 68. பீழைக்கு இடங்கொடேல். 69. புதியன விரும்பு. 70. பூமி இழந்திடேல். 71. பெரிதினும் பெரிது கேள். 72. பேய்களுக்கு அஞ்சேல், 73. பொய்மை இகழ். 74. போர்த் தொழில் பழகு. 75. மந்திரம் வலிமை. 76. மானம் போற்று. 77. மிடிமையில் அழிந்திடேல். 78. மீளுமாறு உணர்ந்து கொள். 79. முனையிலே முகத்து நில். 80. மூப்பினுக்கு இடங் கொடேல். 81. மெல்லத் தெரிந்து சொல். 82. மேழி போற்று. 83. மொய்ம் புறத் தவஞ்செய். 84. மோனம் போற்று. 85. மெளட்டியம் தனைக் கொல். 86. யவனர்போல் முயற்சி கொள். 87. யாரையும் மதித்து வாழ். 88. யெளவனங் காத்தல் செய். 89. ரஸத்திலே தேர்ச்சி கொள். 90. ராஜஸம் பயில், 91. ரீதி தவறேல். 92. ருசி பல வென்றுணர். 93. ரூபம் செம்மை செய். 94. ரேகையில் கனி கொள். 95. ரோதனந் தவிர். 96. ரெளத்திரம் பழகு. 97. லவம் பல வெள்ளமாம். 98. லாகவம் பயிற்சி செய்.

Page 85
50 ாகான் கண்ட பாரதி
99. லீலை இவ்வுலகு. 100. (உ)லுத்தரை இகழ். 101. (உ)லோக நூல் கற்றுணர். 102. லெளகிகம் ஆற்று. 103. வருவதை மகிழ்ந்துண். 104. வான நூற் பயிற்சி கொள். 105. விதையினைத் தெரிந்திடு. 106. வீரியம் பெருக்கு. 107. வெடிப்புறப் பேசு. 108. வேதம் புதுமை செய், 109. வையத் தலைமை கொள். 110. வெளவுதல் நீக்கு.
பழந்தமிழர் நாகரீகமும் அவர்களின் பண்பாடு களும் வீரப் பிரதாபங்களும் இப்படிப்பட்டதே என்று படம் பிடித்துக் காட்டும் பான்மையில் அமைந்துள்ள இப்புதிய ஆத்திசூடியில் இடம்பெற்றுள்ள நூற்றிப் பத்துச் சூத்திரங்களுக் கொப்பான் செய்யுளடிகளை, நம்மிளஞ் சிறர்களுக்கு உணர்வுடன் புகட்டி, உட் பொருளுணர்த்தி, பண்டைய மரபின் வழியே அவர் களை ஒழுகச் செய்யவேண்டியது, பண்புடைத் தமிழர்
அனைவரதுங் கடமையாகும்.

நமது கடமைகள்
வ்ெவளவோ முயன்றும் தன் பிள்ளைகளுக்கு கலை புகட்டுவதில் தோல்வி கண்ட அரசன் பலவாரு கப் பிரலாபித்துக் கலங்கிக் கசிந்து உருகிய பொழுது அவன் அருகிருந்த சோமசன்மா என்ற அருங்கலை ஆசான் தீடீரென்றெழுந்து அரசனைப் பார்த்து “அரசே! கலங்கற்க!! உங்கள் பிள்ளைகளுக்குக் கல்வி யறிவில் ஒப்பானவர்களும் மிக்கானவர்களும் இல்லை யென்று உலகமே கூறுமளவிற்கு நான் ஆறு மாதங் களுட் செய்யமாட்டுவேன்,” என்று பகர்ந்து மித் திரபேதம், சுகிர் லாபம், சந்திவிக்கிரம், அர்த்த நாசம், அசம் பிரட்சகாரித்துவம் என்கின்ற பஞ்ச தந்திரக் கதைகள் மூலம் அரசகுமாரர்களை அறிவுக் குமாரர்களாக்கியவாறு போல, நம் அருட்கவிஞ னும் அற்புதக்கதைகளாலும் அடிமைப் பாரதத்தை அருண்டெழும்பச் செய்தான்.
நம் தமிழ்நாடெங்கணும் இன்று உலவும் பிஞ் சுத்தமிழ் வாணர்களிற் சிலர் தமிழிற் சிறு கதை களில்லை சிறு கதைகளில்லை என்று தமிழ் மேடை கள் தோறும் பேசிப்பேசி முதலைக்கண்ணிர் வடித்து வருவதை நாம் புதினத்தாள்கள் வாயிலாக அறிந்து வருகின் ருேம். இப்படிப்பட்ட வாய்வேதாந்திகளை நோக்கி நான் கேட்கின்றேன் தமிழிலா சிறுகதை களில்லை யென்று? உதாரணத்திற்காகக் கற்றறிந் தார் ஏற்றும் கலியில் இருந்து ஒரு சின்னஞ்சிறிய கதைப்பாவத்தை மட்டும் எடுத்துக்காட்ட ஆசைப் படுகின்றேன்.

Page 86
52 நான் கண்ட பாரதி
ஒரு கன்னியின் வீட்டு வாசலில் நின்று கொண்டு ஒரு காளை குடிப்பதற்குத் தண்ணிர் கேட்கின் முன். அவ்வமயம் அவ்வீட்டில் இருந்த அவன் உள்ளங் கவர்ந்த கன்னி தன் நற்ருயின் சொற்படி தண்ணிர் எடுத்துக்கொண்டு ஆவலுடன் வருகின்ருள் வாயி லில் நிற்கும் காளைக் குத் தண்ணிர் கொடுத்து, அவ னுக்குத் தாகசாந்தி அளிப்பதற்காக,
தண்ணிரைக் கொண்டுவந்த கன்னி, தன் கையை நீட்டிக் காளைக்குத் தண்ணிர்ப்பாத்திரத்தைக் கொடுக்க, வாயிலில் அவள் வருகையைப் பார்த் திருந்த காளை பாத்திரத்தைப் பற்றும் urtoinuak 237 யில் கையை நீட்டிப் பாத்திரத்தைப் பற்ருது கன் னியின் கரத்தையே பற்றிப் பிடித்துவிடுகின்ரு ன். காளையின் எதிர் பாராத இச்செயலால் மனம் பேத லித்த கன்னி தன்னையே மறந்து அன்னய்! இவ னுெருவன் செயலைப் பாருங்கள் என்று உரத்த குரலில் வாய்விட்டலறி விடுகின்ருள். அவ்வமயம் வீட்டுள்ளிருந்த தாய் திடுக்கிட்டு என்ன மகளே! என்று கேட்டபடி வெகு பரபரப்புடன் எழுந்தோடி வருகின்ருள். இதற்கிடையில் கன்னி காளையை மட் டிட்டுக்கொண்டு நிலைமையைச் சமாளிக்க நினைந்து தன் தாயைப் பார்த்து ஒன்றுமில்லையம்மா இவ னுக்குத் தண்ணிர் விக்கிவிட்டது. அதனுல் வாய் விட்டலறிவிட்டேன் என்று வெகு சாதுரியமாக விடை கூறிவிடுகின்ருள். மகளின் வார்த்தையைக் கேட்டதாய் புறம் பழித்துப் போய் விடுகின்ருள். அப்பொழுது காளை அக்கன்னியைக் கொல் வான் போற் பார்த்துக் குறுநகை செய்து அகன்றுவிடு கின்றன். இவ்வரலாறு தலைவி தோழிக்குக் கூறிய கூற்ருக,
“சுடர்த்தொடீஇ கேளாய் தெருவினு மாடும் மணற்சிற்றில் காலில் சிதையா வடைச்சிய

கமது கடமைகள் 53
கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி நோதக்க செய்யுஞ் சிறிபட்டி மேலோர் நாள் அன்னையும் யானு மிருந்தேமா வில்லீரே உண்ணுநீர் வேட்டே னென வந்தாற் கன்னை அடற்பொற் சிரகத்தால் வாக்கிச் சுடரிழாய் உண்ணுநீர் ஊட்டிவா வென்ரு ளெனயானும் தன்னை யறியாது சென்றேன்மற் றென்னை வளை முன்கை பற்றி நலியத் தெருமந்திட் டன்ன யிவனெருவன் செய்ததுகா ணென்றேன அன்னை அலறிப் படர்தரத் தன் னையான் உண்ணுநீர் விக்கின னென்றேணு வன்னையுந் தன்னைப் புறம் பழித்து நீவமற் றென்னைக் கடைக்கண்ணுற் கொல்வான்போல் நோக்கி
நகைக்கூட்டஞ் செய்தானக் கள் வன் மகன்’ என்ற கலிவெண்பாவால் கலித் தொகையுள் வெகு அழகாக உயரிய பண்புடன் கூறப்பட்டிருப் பதை நற்றமிழ்வாணர்கள் யாவரும் நன்கறிவார்கள்.
இப்படியாகக் கலித்தொகைக் கதைகள், கந்த புராணக்கதைகள், விக்கிர மாதித்தன் கதைகள், சீர் காளத்திப் புராணக் கதைகள், பெரியபுராணக் கதைகள், திருவிளையாடற் புராணக்கதைகள், மணி மேகலைக்கதைகள், மகாபாரதக் கதைகள், சிலப்பதி காரக் கதைகள், பழைய பாட்டிக் கதைகள், சீருப் புராணக் கதைகள், தேம்பாவணிக்கதைகள், அம் மம்மா லட்சமென்ருலும் போதுமா? ஏன்? உலகத் தில் எந்தக்கதாசிரியனும், மன்னனும், வேந்தனுந் தானும் எழுதியிராத அன்பும், பண்பும், அறனுந் திறனுஞ் சேர்ந்த அதி உன்னத கதைகள் சுமார் ஆயிரத்தெண்ணுாறைத் தன்னெப்பரிய தண்டமிழ்க் காப்பியமாகிய கம்பஇராமாயணத்தில் அள்ளி யெறிந்து வாகை புனைந்தவன் கவிச்சக்கரவர்த்தி,
W-20 .

Page 87
54 கான் கண்ட பாரதி
இல்லை; கதைச்சக்கரவர்த்தி கம்பனல்லவா? இந்த உண்மையை எந்தக்கதாசிரியனும் மறுக்க முடியுமா? ஆனலும் தமிழில் உள்ள மேற்கூறிய கதைகளனைத் தும் அநேகமாகக் கவிதை வடிவிலேயே இருக்கின் றன என்ற உண்மையையும் மறுக்கவோ அன்றி மறைக்கவோ நான் முன்வரவில்லை. எனினும் இப் படிப்பட்ட கதைகள் பொதிந்த காப்பியங்களை இப்பெரிய புலவீதிலகங்கள் ஏன் செய்யுள் வடிவில் யாத்தார்கள் என்பதையும் சிறிது ஆராயவேண்டி யது ஆவசியகமே.
இப்பண்பு மிக்க, பெருமை நிறைந்த, அறிவு படைத்த தமிழ் வாணர்கள் வாழ்ந்த காலம் காகி தங்களற்ற காலமென்பதை நாமறிவோம். இந்த நிலையில் ஒலைகளையும் எழுத்தாணிகளையும் உறுதுணை களாகக்கொண்டே இத்திவ்விய காப்பியங்களனைத் தையும் படைத்தார்கள் நம் மருந்தமிழ்வாணர்கள். காப்பிய வரலாறுகளை வசன நடையில் எழுது வதற்கு அவர்களுக்கு ஆற்றல் இல்லை என்று கூறு வது தவறு. எழுதுசாதனங்கள் இல்லை என்று கொள் ளுவதே நியாயமானது.
ஒரு வரலாற்றை வசன நடையில் ஏடுகளில் எழுதப்புகின் நீண்ட காலமும் கூடிய சிரமமும் ஏற்படுவதோடு ஒரு தனி வீடு வேண்டும் ஏட்டுப் பிரதியில் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுத்தொகுப்பை வைப்பதற்கு. இச்சிரம கருமங்களுக்கு அஞ்சியே அன்றிருந்த அறிவுநிறைந்த பழந் தமிழ் வாணர்கள் சகல வரலாறுகளையும் சூத்திரத்தன்மையில் கவிதை வடிவில் யாத்துக் காப்பிய உருவில் தந்து சென் றுள்ளார்கள்.
இந்த நிலையில் தமிழராகிய நம் 56) D களென்னவெனில், அற்புதமும் நற்பண்பும் நன்

கமது கடமைகள் 55
னெறியுங் காட்டவல்ல தண்டமிழ்க் காப்பியங் களிற் பொதிந்துள்ள கருத்துச்செறிந்த கதைகளைச் செய்யுள் வடிவில் இருந்து கருத்தை உருக்குலையாது வசனவடிவில் உருவாக்கித் தமிழ்த் தாய்க்குச் சமர்ப் பணஞ் செய்வதின் மூலம் தமிழிற் சிறுகதைகளில்லை யென்ற வசையை அழிப்பதோடு, நல்ல பண்பு நிறைந்த கதைகள் தமிழ்கூறும் நல்லுலகெங்கணும் வெள்ளத்தின் பெருக்கைப்போல் பெருகிப் பரவி நம் வருங்காலச் சிருர்கள் நற்பாதைகளிற் செல்ல வழிவகுத்து வைப்பதுமே யென்க!
இவைகளை விடுத்து உப்புச்சப்பற்ற அநாகரீகத் தன்மை வாய்ந்த பித்தலாட்டக்கதைகளினல் உல கங்கண்டடையும் பயனென்ன? மகிமைதான் என்ன? ஒன்றுமேயில்லை. ஒரு கதையால், ஒரு பேச்சால், ஒரு விழாவால், ஒரு கண்காட்சியால் உலகந் திருந்த வேண்டும், ஒரு நற்படிப்பினையைப் படிக்கவேண்டும். இதை விளக்கவே நம் கதாநாயகனகிய பாரதி * மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதி லோர் மகிமையில்லை’ என்று கூறுமுகத்தால் எக் கதையால் மகிமை வரும் என்பதையும் உய்த்துணர வைத்துள்ளான். அல்லாமலும் தன் கவிதைத் தொகுப் பில் மகாபாரதக் கதைகளையுந் தொகுத்துச் செயல் முறையிலுங் காட்டிச் சென்றுள்ளான்.
ஆகவே
நாம் இற்றைவரையில் ஆராய்ச்சிபண்ணி வந்த ஆராய்ச்சிகளின் படி நம் அன்புக்கவிஞனின் உண்மை வடிவினைக் கண்டு கொண்டோம். அவன் கருத்து நிறைந்த போதகங்களையும், அப்போதகங்களின் உண்மைத் தத்துவங்களையும் தெரிந்து கொண்டோம். இந்த நிலையில் வருடாவருடம் புரட்டாதிமாதம் பதினுேராந்திகதி ஊர்கள் தோறும், சந்திகள்

Page 88
56 கான் கண்ட பாரத
தோறும் சதுக்கங்கள் தோறும் , அம்பலங்கள் தோறும், ஆலயங்கள் தோறும், வீதிகள் தோறும், வீடுகள் தோறும், கலைக்கூடங்கள் தோறும், கலாமன் றங்கள் தோறும் பாரதிக்கு விழாக்களெடுத்து அழ ஆணித் தரமாகச் சொற்பொழிவுகள் செய்வதி ஞல் மட்டும் நம் கடமை முடிந்து விடாது. இவ் வித செயல்களை நடிப்புச் சுதேசிகள் செயல்கள் என்று அவனே இழித்துப் பழித்துப் பரிகசித்திருக் கின் முன்.
கூட்டத்திற் கூடி நின்று கூடிப்பி தற்றலன்றி காட்டத்திற் கொள்ளாரடி-கிளியே
காளில்ம றப்பாரடி என்று. ஆகையால் நாமும் அவன் போதகங்களைச் சிரமேற் கொண்டு, சாதி வேற்றுமைகளை வேர நூறுத்து, உலகத் தொழில்சள் அனைத்தையும் உவந்து செய்து, சகோ தர பாவத்துடன் ஒற்றுமையாய் வாழ்வோம். சகல துறைகளிலும் முன்னேறி, ஏற்றமுந் தோற்றமும் வாய்ந்த ஒரு ஒப்பரிய சமுதாயமாய்த் திகழ்வோம். இப்படியாக நாம் அவன் வகுத்துத் தந்த உயரிய சீர் திருத்தப் பாதைகளால் நடந்து சென்று, ஒரு நவீன பாரத சமுதாயமாய் விளங்கி நம் பண்டைய உன் னத நிலைகளின் வாழ்வில் உச்சப்படியில் நின்று விழா வெடுக்கும் நாளே, பாரதி மனப் பொலிவு கொண்டு நம் விழாவையேற்று ஆன்ம சாந்தி பெறும் நன்ஞளா கும்.

நமது கடமைகள் 57
போகின்ற பாரதத்தைச் சபித்தல்
1. வலிமை யற்ற தோளினய் போபோபோ
மார்பி லேஓ டுங்கினய் போபோபோ
பொலிவி லாமு கத்தினய் போபோபோ
பொறி யிழந்த விழியினய் போபோபோ
ஒலியி ழந்த குரலினுய் போபோபோ
ஒளியி ழந்த மேனியாய் போபோபோ
கிலிபி டித்த நெஞ்சினய் போபோபோ
கீழ்மை யென்றும் வேண்டுவாய் போபோபோ
2. இன்று பார தத்திடை நாய்போலே
ஏற்ற மின்றி வாழுவாய் போபோபோ
நன்று கூறி லஞ்சு வாய் போபோபோ
நாணி லாது கெஞ்சுவாய் போபோபோ
சென்று போன பொய்யெலாம் மெய்யாகச்
சிந்தை கொண்டு போற்றுவாய் போபோபோ
வென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக
விழிம யங்கி நோக்குவாய் போபோபோ
3. வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போபோபோ
நூறு நூல்கள் போற்றுவாய் மெய்கூறும்
நூலி லொத்தி யல்கிலாய் போபோபோ
மாறு பட்ட வாதமே ஐந்நூறு
வாயில் நீள ஓதுவாய் போபோபோ
சேறு பட்ட நாற்றமும் தூறுஞ்சேர்
சிறிய வீடு கட்டுவாய் போபோபோ
4. ஜாதி நூறு சொல்லுவாய் போபோபோ
தரும மொன்றி யற்றிலாய் போபோபோ நீதி நூறு சொல்லுவாய் காசொன்று
நீட்டி ஞல்வ ணங்குவாய் போபோபோ

Page 89
58 கான் கண்ட பாரதி
தீது சொல்வ தஞ்சிலாய் நின்முன்னே
தீமை நிற்கி லோடுவாய் போபோபோ
சோதி மிக்க மணியிலே காலத்தால்
சூழ்ந்த மாசு போன்றனை போபோபோ.
வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்
5. ஒளிப டைத்த கண்ணினுய் வாவாவா
உறுதி கொண்ட நெஞ்சினய் வாவாவா களிப டைத்த மொழியினுய் வாவாவா
கடுமை கொண்ட தோளினுய் வாவாவா தெளிவு பெற்ற மதியினய் வாவாவா
சிறுமை கண்டு பொங்குவாய் வாவாவா எளிமை கண்டு இரங்குவாய் வாவாவா
ஏறு போல்ந டையினுய் வாவாவா
8. மெய்மை கொண்ட நூலையே அன்போடு
வேத மென்று போற்றுவாய் வாவாவா
பொய்மை கூற லஞ்சுவாய் வாவாவா
பொய்மை நூல்க ளெற்றுவாய் வாவாவா
நொய்மை யற்ற சிந்தையாய் வாவாவா
நோய்க ளற்ற உடலினுய் வாவாவா
தெய்வ சாபம் நீங்கவே நங்கள்சிர்த்
தேச மீது தோன்றுவாய் வாவாவா
7. இளைய பார தத்தினுய் வாவாவா
எதிரி லாவ லத்தினுய் வாவாவா
ஒளியி ழந்த நாட்டிலே நின்றேறும்
உதய ஞாயி ருெப்பவே வாவாவா
களையி ழந்த நாட்டிலே முன்போலே
களைசி றக்க வந்தனை வாவாவா
விளையு மாண்பு யாவையும் பார்த்தன்போல் விழியி னல்வி ளக்குவாய் வாவாவா

ாகமது கடமைகள் 59
8. வெற்றி கொண்ட கையினுய் வாவாவா
விநய நின்ற நாவினய் வாவாவா
முற்றி நின்ற வடிவினய் வாவாவா
முழுமை சேர்மு கத்தினுய் வாவாவா
கற்ற லொன்று பொய்க்கிலாய் வாவாவா
கருதிய தியற்றுவாய் வாவாவா
ஒற்று மைக்கு ஞய்யவே நாடெல்லாம்
ஒரு பெ ருஞ்செ யல்செய்வாய் வாவாவா
வாழ்க பாரதி நாமம்!
வெல்க அவன் கவிதைத் தத்துவங்கள்.
assassio

Page 90
இந்நூலாசிரியர் பற்றி . . .
ைேலஞர்களிற் சிலர் கதையோடு பிறக்கின்ருர் கள். சிலர் கவிதையோ டு பிறக்கின்ருர்கள். சிலர் இசையோடு பிறக்கின் ருர்கள். சிலர் சிற்பத்தோடு பிறக்கின்றர்கள். சிலர் சித்திரத்தோடு பிறக்கின் முர்கள். இன்னுஞ் சிலர் இலக்கியத்தோடும் இலக்க ணத்தோடும் பிறக்கின்றர்கள். சிலர் கற்பனையோ டும் ஆராய்ச்சியோடும் பிறக்கின் ருர்கள். ஆனல் இந்நூலாசிரியராகிய திரு. வ. நீக்கொலஸ் என்ப வர் இவை எல்லாவற்றேடும் பிறந்த ஓர் அபூர்வ அறிஞர் என்பதைப் பெரும்பாலான மக்கள் அறி யவே மாட்டார்கள்.
இவர், “ஓர் ஏழைக்கு எழுத்தறிவிப்பதனல் வரும் பலன், எண்ணிறந்த அன்ன தானங்களினுல் வரும் அரும் பலனைவிட எவ்வளவோ மேல்” என்ற போதகத்திற்கமைய இருபத்தைந்து வருடங்களாக ஆசிரியராக அமர்ந்து அருங்கலை புகட்டி வருகின் ருர், இவருடைய சேவையைப் போற்ருத நாடுகளோ கலைப்பீடங்களோ இல்லை என்றே கூறிவிடலாம். ஆங்கில பட்டதாரியான ஒரு பேராசிரியர் இவரு டைய திறமைகளைக் குறித்து சில அறிஞர்களோடு ஒரு சமயம் பேசியபொழுது, "ஒருவர் பிறந்து ஆசி ரியராகின்ருர். ஆனல் இவர் ஆசிரியராகவே பிறந் தவர். இவருக்குப் போகாத ஒரு பாடம் பாடவிதா
 

6
னத்திலேயே இல்லை" என்று கூறிய கூற்று எனது முதற்பந்தியை இன்னும் வலுவடையச் செய்கின் f5).
கலை புகட்டுவதில் தனிப்பெருந்திறமை படைத்த இவர் பயிற்றப்பட்ட முதலாந்தரத் தமிழாசிரியர், யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபி விருத்திச் சங்க பிரவேசபண்டிதம், பாலபண்டிதம் முதலாம் பரீட்சைகளைப் படிக்கிரமமாய்க் கற்றுத்தேறி மது ரைத் தமிழ்ச்சங்க பண்டித பரீட்சைக்காய் இரண்டு வருடங்களாகப் பாடாயத்தஞ் செய்தும், அப்பரீட் சை துர் அதிஷ்ட வசமாய் நிறுத்தப்பட்டதால் பரீட் சை எழுதத் தவறினரெனினும் பேரறிவு பெற்ற வர். அல்லாமலும் தமிழ் ஆசிரிய வரைதற் றரா தர பத்திரப் பரீட்சையிலும் முதற்றரமாய்த் தேறி சகல வித சித்திர சிற்பக் கலைகளிலும் பேராற்றல் பெற்றவர். அத்தோடு பற்பல தொழிற் கலைகளி லும் தலைசிறந்த அனுபவசாலி. இவருடைய திற மைகளைக் குறித்து விமரிசனஞ் செய்வது, துரய வெண்கமலத்தை இது வெண் கமலம் நாற்ற முடை யது என்று விளம்பரஞ் செய்வதை நிகர்க்கும். வெள்ளைக்கு விளம்பரம் எதற்கு?
கதையோ கவிதையோ நாடகமோ காவியமோ ஓவியமோ எதெது வேண்டுமோ அததை உடனடி யாகப் படைக்கும் ஆற்றல் படைத்த இவ்வறிஞர் எழுத்துலகத்திற் பிரவேசிக்கும் தமது முதற் பிர வேசத்திலேயே உலகத்திற்குப் பயனுள்ள பண்பு நிறைந்த கான் கண்ட பாரதி என்ற ஒரு ஆராய்ச்சி நூலுடனேயே பிரவேசிக்கின்றர். இவ்வாராய்ச்சி நூலில் பாரதியின் கொள்கைகளைக் கடந்த காலத் தில் எந்த ஆராய்ச்சி யாளனும் அணுகாத முறை யில் புதியதொரு கோணத்தில் ஆராய்ச்சி பண்ணிச் சென்றிருக்கின் ருர். இவ்வரிய நூலைக்கற்கும் கலைஞர்

Page 91
62
கள் தங்களுடன் தருக்க வாதஞ் செய்யும் பாரதி யைக் காண்பர். தோகையர் தங்கள் விடுதலை குறித்து அவன் கொட்டும் முரசு முழக்கத்தைக் கேட்டுக் களி நடம் புரிவர். வாலர்கள் விம்மிய தோள்களைப் புடைத்து வீரகர்ச்சனை செய்வர். தொழிலாளர் தலை நிமிர்ந்து நடப்பர். பாலர் பாடி யாடிப் பரவசப்படுவர். வெளி வேடதாரிகள் வெட் கித் தலைகவிழ்வர். தமிழ் மேடைகளில் சோனுவாரி யாகத் தமிழ் மழைவருவிக்கும் இக்கலைஞர் ஓர் ஆசிரியர் என்று கூறும் பொழுது ஆசிரிய உலக மும், திருமலை மாவட்டத்தை யடுத்து வற்ருவளங் கொழிக்கும் ஜீவ நதியாகிய மாவலியின் சங்க மத் தில், அமைந்த பழம் பெருமை படைத்த மூதூரிற் பிறந்தவர் என்று கூறும் பொழுது மூதூருடன் திருமலை மாவட்டமுமே பெருமை கொள்ளும்.
இவரிடமாக நாட்டுக்கு அனுகூலமான பல அரிய நூல்கள் இன்னும் பிறக்க விருப்பதால் இப் புது எழுத்தாளருக்கு ஆதரவளிப்பதன் மூலம் இவ ருடைய புது எழுச்சிக்கு ஊக்க மளிக்கும் படி வாச கர்களை அன்புடன் வேண்டுகின்றேன்.
இரசிகர்,
அ. ச. முத்து.
மூதூர் - 3 . 5 6--9-سTll

பக்கம் பக்தி
III
li 13
12 37 50 53 64 80
101 9
120
2. 130 35 135
145 I 54
Ι
பிழை திருத்தம்
ബf
4
16
22
பிழை மண்ணறிவு முகமடங்களும் பழமொழி
களையும் காஞ்சூரங்கனி
புறமுகிற்
கைவிலக்கு கலைப்புரட் நாற்பத்தி வாழாவிருப்
பதால் இரு நூறை தெற்பக்
குளங்களே தொழிலாள
னுக்கும் நிற்கதியாக்கி வன்மையிலே செய்நன்றி அறிவழிந்திட்
டமை மேலுந்தி
நோயாளரால் புலவ
திலகங்கள்
திருத்தம் மண்ணறியு முகமடங்கலும் பழமொழி
யையும் காஞ்சிரங்கனி
புறமுதுகிற் கைவிலங்கு கலைப்புரட்சி நாற்பத்து வாளா விருப்
பதால் இரு நாற்றை தெப்பக்
குளங்களே தொழிலாள
ருக்கும் நிர்க்க தியாக்கி வண்மையிலே செய்ந்நன்றி அறிவழிந்திட்
டைமேலுந்தி நோயாளராய் புலவர்
திலகங்கள்

Page 92
64
நன்றி
ബn
6னது இந்நூல் அச்சேறி வெளிவர உறு துணையாய் இருந்துதவிய பூரீலங்கா சாகித் திய மண்டலப் பரிசும், கெளரவப் பட் டமும் பெற்றவரும் எனது ஆசானு மாகிய வித்துவான் F. K. C. நடராசா அவர்க ளுக்கு எனது வணக்கத்தையும் நன்றியறி தலையும் கூறுவதோடு, நூல்ை இவ்வளவு
சிறந்த முறையில் உருவாக்கித் தந்த
கொழும்பு, ரெயின்போ பிரிண்டர்ஸ் அச் சகத்தார் சகலருக்கும் என் மனங்கனிந்த நன்றியறிதலைக் கூறிக் கொள்ளுகின்றேன்.
வணக்கம்.


Page 93
X-ra-o-o-o-o-o-o-o-o-o-one
※
Пътят 5, 6:
DTவவியின் இரு வஃணக்கப்பட்டு அதன் முக மேடென மிளிர்வது கொ
அகத்தியர் தாபனம் லாவை, வெரு கலம் பதி, இ புளியை, கோட்டையாற்று மெல் கல்லறை முதலான லாறுகளே க் கொண்டு புரா களில் இடம் பெற்றுத் நிலவளத்தின் மிக்கது. 6 யாற் சுவின் மிகக் குறைந் நிறைந்த பரந்த பதியின்
இம்மூதூரிலும் ஒர4 இருக்கத்தான் செய்கிரு நாடு ஏற்குமளவிற்கு சிறுக எழுதி மெய்ப்பித்தவர் தினம். இவரைத் தொட உமறுதெயினு என்பவர் சீரு மெய்யுரை கண்டார். இவ பணிபுரிவான் கருதி ஆசிரி என்பவர் தீமது முதல் வெளியிடுகின் ருர்,
SeSeLSLSL0eLSL0LLLeLSeLLLLLLLSLLLLLL
Printed at the Rainbow Printers, 23
ܨܬܐ

o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-K
ட பாரதி
கிளேக்கரங்களாலும் அர வனேயில் ஓர் ஆற்றிடை ாட்டியா புரப்பற்று.
சேர்வாவலே, திருமங்க லங்கைத் துறை, நொக் ஸ் த்துறை, வன : மிக்கேல் பல இட தல பெயர் வர ாண இதிகாச சரித்திரங் திகழுமித் நற்பதி நீர்வள எனினும் கலேவள மின்மை திதி இப்பழம் பெருமை முகநகரே மூதூர்,
ளவிலாவது கற்றவர்கள் ர்கள் என்பதைத் தமிழ் தை நாவல் என்பவைகளே திரு. வ. அ. இராசரெத் ர்ந்து புலவர் ஜனுப். எம். வின் சில படலங்களுக்கு சர்கள் பாதையில் தமிழ்ப் 'யர் திரு. வ, நீக்கொலாஸ் நூலாக இவ்வாய்வு நூலே
"zParaParaParaPararaparas
R
8
i
l, Wolfendhal Street, Colombo-13.