கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பகவத் கீதை வெண்பா ஞானயோகம்

Page 1
பெரியதம்பிப்பிள்ளை
பகவத்கீதை ஞான யே
பதிப்பு 6ெ சுன்னுகம், தனல
97

GalatioTurt
LTJGLAD
வளியீடு :
க்குமி புத்தகசாலை
6

Page 2

பகவத்கீதை வெண்பா
ஞான யோகம்
ஏ. பெரியதம்பிப்பிள்ளை

Page 3

ஒம் பகவத்கீதை வெண்பா முன்கும் பாகம் ஞான யோகம்
அத்தியாயம் 13 - 18
விளக்கக் குறிப்புடன்
ஆக்கியோன் : இலங்கை-மட்டக்களப்பு
புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை
பதிப்பு வெளியீடு: சுன்னுகம், தனலக்குமி புத்தகசாலை
1976

Page 4
முதற் பதிப்பு நவம்பர் - 1976
உரிமை ஆக்கியோனுக்கே.
a&u : «sur 7-00
சுன்றகம் திருமகள் அழுத்தகத்தில் குரும்பசிட்டி, திரு. முத்தையா சபாரத்தினம் அவர்களால் அச்சிடப்பெற்று மட்டக்களப்பு புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்களால் வெளியிடப்பெற்றது. 976
总

6.
JFlniůu63Th
அடிச்சிறியேன் கண்ணன் அணிதுளவத் தண்தார் முடிக்கோர் பணிபுனைந்து முற்ற - முடிக்கும்பேர் ஆற்றலிலே னேனும் அவனடிக்கண் வைத்திந்நூல் போற்றுமென துள்ளமன்பு பூத்து.

Page 5
என் இருகண்கள்
வினயகப் பெருமான்
செந்நாப் புலமைவந்து சேர்வதுமாம் நற்ககூ தன்னுற் சிவன்சரணஞ் சார்வதுமாம் - பொன்ஞரு வாழவசு ரேசனமர் மாளவடு மாகருணை
ஆழமத வேழதினைத் தால்.
முருகப் பெருமான்
அருளா தொழியினெனக் கார்துணைநீ சொல்லாய் குருவா யமர்ந்ததிருக் கோவே - பொருளாக நந்தியைழு ணுண்டுகதி நல்குபர ஞனசிவன் தந்தமுரு காகிருபை தந்து.
இவ்விரு நேரிசை வெண்பாக்களும் யாப்பிலக்கணம் படித்து முதல்முதல் பாடியவை. (1918).

பதிப்புரை
பகவத்கீதை உலகப் பிரசித்திபெற்ற ஒரு அறிவுக் களஞ்சியமாகும். பாரத நன்னடு உலகுக்கு உபகரித்த ஓர் அருட்செல்வ மென்றும் அதைக் கூறுதல் பொருந் தும். ப க வா னி ன் திருவாய் மொழிகளாலான இந்நூல் இவ்வுலக வாழ்வினையும், மறு உலக வாழ் வினையும் ஒருங்கே அமைத்துக்கொள்வதற்கு ஏற்ற வழியினை வகுத்துக் கூறுவதால் சர்வதேச அரங்கிலே ஒரு தனி மதிப்பைப் பெற்றுள்ளது. -
சமய, சமூக, பொருளாதார, அரசியற் கோட்பாடு களை நேர்மையான முறையிற் கையாண்டு இவ் வுலகையே ஒரு சாந்தி நிலையமாக்கி மனிதன் நிம்மதி யாக வாழ்தற்கு உறுதுணை செய்கின்ற இந் நூல் வடமொழியில் எழுதப்பட்டுள்ளதேனும், அதன் பொருளமைதியானது உலக மொழிகள் பலவற்றைத் தனது செல்வாக்கினுக்கு உட்படுத்திவரும் அற்புத சக்தி வாய்ந்தது.
வடமொழிக்கும் தமிழ் மொழிக்கு மிடையேயுள்ள நெருங்கிய உறவினல் பகவத்கீதையைத் தமிழன்னை தன்பால் தழுவிக் கொண்ட சந்தர்ப்பங்கள் மிகப் பலவுள்ளன. ஈழமணித் திருநாட்டின் மாபெருங் கிழவராகிய சைவப் பெரியார் சேர் பொன். இராம நாத வள்ளலார் கீதையைத் தமிழில் வசனநடையில் மொழிபெயர்த்து விரிவுரையும் எழுதி வெளியிட் டுள்ளார். இந்த அளப்பரிய சேவையைத் தமக்குமுன் மாதிரியாகக் கொண்டு மட்டக்களப்புப் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் கீதையைத் தமிழிலே வெண்பாவாகப் பாடி உரையுமெழுதி வெளியிடுவதில் ஒரு மரபுக்கிழமை யிருப்பதாக யாம் உணருகின்ருேம்.

Page 6
Χ
இராமநாத வள்ளல் கீதையைத் தமிழ் செய்தது சுன்னகத்தில். புலவர்மணி, சுன்னகம் அ. குமார சுவாமிப் புலவரின் மாணுக்கர்; புலவரின் அன்புக்குப் பா த் தி ர மா ன வ ர். புலவர்மணி, பகவத்கீதை வெண்பாவை அரங்கேற்றியது யாழ்ப்பாணம் வண்ணுர் பண்ணை வைத்தீசுவர வித்தியாலயத்தில் இராமநாத வள்ளலாரின் மருகர் உயர்திரு. சு. நடேசபிள்ளை அவர்கள் தலைமையில். இத்தகைய தொடர்பு காரண மான அன்பின் பிணிப்பினுற் போலும் புலவர்மணியின் பகவத்கீதை வெண்பா ஞானயோகப் பகுதி சுன்னகம் திருமகள் அழுத்தகத்தில் அச்சிடப்பெற்று நிறை வுறுகின்றது.
2-9-76 பதிப்பகம்

6.
முனனுரை “என் வாழ்முதலாகிய பொருள்' பகவத்கீதை. இன மொழி மத பேதமின்றி, கால தேசம் கடந்து வழங்கும் இந்நூல் பழைமையிற் பழைமையும் புதுமையிற் புதுமையும் வாய்ந்தது; அனைத்துலகும் முதல் வரிசையில் வைத்துப் படிக்கும் அற்புத சத்தி வடிவானது. கீதை மனித சமூகத்தின் மூலதனம். அதன் சிறப்புக்கும் புனிதத்தன்மைக்கும் பல காரணங்கள் உள்ளன. அது மனிதனையும் மனிதனையும் மனத்தால் இணைத்து வைக்கின் றது; அனைத்துலக நாடுகளையும் இயந்திர சாதனங்களாலல்ல ஆத்மீக ஒருமைப்பாட்டினல் ஐக்கியப்படுத்துகின்றது.
கீதை முற்போக்குக் கருத்துக் கள் பல நிறைந்த ஒரு கருவூலம் அது மனிதனை மனிதனுக வாழச்செய்து, மனிதனுக் காக வாழச் செய்து, மனிதனைத் தெய்வமாக்குவது மாத்திர மல்ல; மனிதனை மனித குலத்துக்கும், தெய்வ குலத்துக்கும் அப்பால் உயர்த்தி இறைவனுடன் பிரிப்பின்றி இணைத்து வைக்கின்றது.
தன் மதம், என் மதம்; தன் தெய்வம், என் தெய்வம் என்று எதிர்வழக்கிடும் சிக்கலை எளிதாகத் தீர்த்து, "ஒன்றே குலமும்; ஒருவனே தேவனும் என்னும் உண்மையினை நடுநிலை யில் நின்று தெளிவாகப் போதிக்கின்றது கீதை. அதே நேரத் தில் உலகிலுள்ள தெய்வ நம்பிக்கை படைத்த மக்களை யெல்லாம் அவரவர் சமய வணக்க முறைகளிலே உறுதி செய்கின்ற கீதை யின் புனிதமான கொள்கை விண்வெளியிலும் விசாலமானது. மனிதகுல உயிர்கள் மாத்திரமல்ல; தாவர சங்கமமாகிய எல்லா உயிர்க்குலங்களும் இறைவனின் சீவசமுதாயமே என்று கீதை கூறுகின்ற சமுதாய உரிமையின் ஒருமைப்பாடு உலகம் முழுவதும் உய்தற்கு வழிகாட்டுகின்ற உயர்சிறப்பமைந்தது. அத். 15: 7.
உடல், பொறிபுலன்கள், மனம், புத்தி, ஆன்மா, பரப் பிரமம் என்னும் பொருள்களின் சிறப்பியல்புகளை ஒன்றின் மேல் ஒன்ருக உயர்த்திக் கூறி, ஈற்றில் எல்லாம் பரிபூரணப் பொருளாகிய பரப்பிரமத்தில் ஒடுங்கிவிடுகின்ற அமைதி

Page 7
xii
நிலையினைப் பகவத்கீதை கூறுகின்ற அழகு படிக்கும்போது நம்மை இன்பத்தில் ஆழ்த்திவிடுகின்றது.
நம்பிக்கை யென்னும் கற்பாறையின்மீது, பக்தியென்னும் வெண்சாந்து தீற்றி, உருவ வழிபாடென்னும் அத்திவாரமிட்டு, உத்தேச ஞானமாகிய சுவரெடுத்து, ரூபம், ரூபாரூபம் என்னும் கருமேக வெண்மேக மண்டலங்கள் இரண்டையும் கடந்து அருவ வழிபாடென்னும் ஒளிமுகடெழுப்பி, இராப்பகலற்ற பரஞ் சோதியென்னும் பேரொளி பரம்பும் மேல்மாடி சமைத்து, பரஞ் சோதியின் பெரும் பயனுகிய பேரானந்தம் துய்க்கின்ற நிலா முற்றம் அமைத்து, கரும்ம், பக்தி, ஞானம் ஆகிய மூன்று மின்தூக்கிகள் மூலமாகத் தூக்கி ஏற்றி, ஆன்மகோடிகளை வீட் டுலகில் செலுத்தி வாழ்விக்கின்ற இறைவனின் கருணையே உருவானது கீதை. இகபரம் இரண்டிலும் ஒருமையுணர் வூட்டுவது கீதைநெறி.
பகவத்கீதை ஒரு பகுத்தறிவுக் களஞ்சியம். பதின்மூன்ரும் அத்தியாயம் முமுவதும் பகுத்தறிவென்னும் ஆரம்ப ஞானத் தையே பொருளாகக் கொண்டது. பகுத்தறிவென்பது யாது? பகுத்தறிவாளன் யார்? இவ் வினக்களுக்கு அழகாக, இனிதாக, தெளிவாக, திடமாக விடைதகுகின்றது கீதை. எவன் சடம், சித்து என இரண்டு பொருள்கள் உண்டென உணர்கின்ருனே; எவன் சடம் அழிவது, சித்து அழியாதது என அறிகின்றனே; எவன் சடம் குணவடிவானது, சித்து ஆனந்தம்யமானது எனத் தெளிகின் ருனே; எவன் நான் உடலல்லன், உடலின் வேருன நித்தியன் எனத் தேர்கின்ருனே; எவன் சடம் தன்னிலே தானே இயங்காது, சித்து தன்னிலே தானே இயங்கிச் சடத்தை யும் இயக்கிநிற்கின்றது எனக் காண்கின்ருனுே; எவன் இவ்வுடல் வாழ்வுக்கும் அப்பால் வாழ்வு உள்ளது எனக் கொள்கின்ருணுே அவனே பகுத்தறிவாளன்; அவனது அறிவே பகுத்தறிவு எனப் பகர்கின்றது பகவத்கீதை.
பகுத்தறிவு என்னும் ஆரம்ப ஞானம் பெற்றவன் இறைவ னுடன் ஒன்ருகும் தகுதியை அடைகின்றன். பகுத்தறிவு விஞ் ஞானத்திலிருந்து பிறந்தது; மெய்ஞ்ஞானத்துக்கு வழி செய்வது. சேத்திர சேத்திரஞ்ஞ ஞானம் என இது இந்நூலுள் வழங்கப் பெறுகின்றது. சேத்திரம் உடம்பு. சேத்திரஞ்ஞன் உடல் வேறு; தான் வேறு என்று உணர்ந்த சீவாத்துமா.

xiii
பகுத்தறிவுப் பாதைவழியே சீவாத்துமா மெய்ஞ்ஞானத்தை நோக்கிச் செல்லும்போது இடையிலே மூன்று கவர் வழிகள் தோன்றுகின்றன. அவை குணவடிவம். தாமதம், இராசதம், சாத்துவிகம் என்னும் இக்கவர் வழிகள் சாதகனை மயக்கத்தில் ஆழ்த்தித் திசைமாறச் செய்கின்றன. சாதகன் குணமயக்கிற் சிக்குண்டு திசைமாறிச் செல்லாமல் குணங்களைக் கீழ்ப்படுத்திச் சரியான திசைதிரும்பி நேர்வழியை நோக்கிச் செல்லும் உபாயங் களைப் பதினன்காம் அத்தியாயத்திலே பாங்காகப் பகர்கின்றது பகவத்கீதை. இந்த உபாயங்களைக் கையாளுகின்ற சாதகன் குணங்கடந்த நிலையினை அடைந்து சின்மயனுகின்றன்.
பகுத்தறிவு பெற்றவன் பக்தனுகின்றன். கருமயோகம், இராசயோகம், பக்தியோகம், ஞானயோகம் என்னும் நான்கு
நெறிகளுக்கும் பக்தியே ஆதாரம்.
முக்குணம் பிரகிருதி சம்பந்தம். பிரபஞ்சமும் பிரகிருதியில் நின்று தோன்றியதே. பிரபஞ்ச வாழ்க்கை சஞ்சாரமென வழங்கப்பெறும். சஞ்சாரமென்பது தலைகீழாய் நிற்கும் ஓர் ஆலமரம் போன்றது. இதன் மூலவேர் பரப்பிரமமாகிய புருஷோத்தமனிடத்தே உள்ளது. இந்த உண்மையை அனுபவ வாயிலாக அறிந்தவனே பகுத்தறிவின் அடுத்த படியைக் கடந்த வன். அவனே ஞானி. அவன் சஞ்சாரமென்னும் குணபந்தத்தி லிருந்து விடுபட்டுத் தன்னையும் கண்டு தன் தந்தையாகிய புருஷோத்தமனையும் தரிசிக்கின்றன். v
இலௌகிக சாதனங்களால் மாத்திரம் சஞ்சாரத்தைக் கடத்தல் கடினம். சுயபுத்தியை மாத்திரம் கொண்டும் அதைக் கடத்தல் அரிது. அணுவாயுதங்களைக் கொண்டும் அதைத் தாண்ட முடியாது. புருஷோத்தமனைப் பக்திசெய்து சரணுகதி யடைந்து கருமம், ஞானம் என்கின்ற தெப்பங்களால் மாத் திரமே சஞ்சார சாகரத்தைத் தாண்டிக் கரைகாண முடியும்.
சஞ்சாரமென்பது வல்லமை பெற்றதோர் பெரிய இயக்கம். உலகில் எல்லா இயக்கங்களுக்கும் அது மூலம். சஞ்சார இயக்கத்துக்கு வல்லமை இறைவனிடத்திலிருந்து வருகின்றது. இந்த இரகசியத்தை அறிந்தவன் சஞ்சார சாகரத்திற் கவலை யின்றி நீந்தி விளையாடுகிறன். சஞ்சார சாகரத்தின் கரை அவனுக்கு அண்மையில் உள்ளது. பதினைந்தாம் அத்தியாயம் இதனைத் தெளிவாகப் பகர்கின்றது.

Page 8
xiv
சஞ்சார சாகரத்தில் திளைக்கின்ற உலக மக்கள் இருவகை நீச்சல் கருவிகளை இடுப்பிலே கட்டிக்கொண்டு அங்கே நீந்தி விளையாடுகிருர்கள். ஒன்று தெய்வ சக்தி அல்லது தெய்வ சம்பத்து; மற்றது அசுர சக்தி அல்லது அசுர சம்பத்து. மிகப் பலருடைய இடுப்பிலே கட்டியிருப்பது அசுர சக்தியாகிய நீச்சற் கருவிதான். இவர்கள் மார்க்கம் பேசுகிருர்கள்; அன்பென்றும், கருணையென்றும், சீவகாருண்ணியமென்றும் அதிகம் சொல்லு கிருர்கள்; சர்வதே சீயம் என்கிருர்கள்; சர்வ லோக சகோதரத்துவம் என்கிருர்கள் ; சமாதா னம் , சகவாழ்வு என்கிருர்கள். கண்ட பயனென்ன? இவர்களுக்கே நிம்மதியற்ற சஞ்சார வாழ்வுதான். இவர்கள் அசுரசக்தியென்னும் நீச்சற் கருவியை அவிழ்த்தெறியட்டும்; தெய்வசக்தியென்னும் நீச்சற் கருவியைக் கட்டிக்கொள்ளட்டும். தாமும் நிம்மதி காண்பார்; பிறர்க்கும் நிம்மதி கிடைக்கும்; உலக சமாதானமும் கைகூடும். பதினரும் அத்தியாயம் இதனைப் பசுமரத்தாணி போற் பதிய வைக்கின்றது.
கருமம், பக்தி, ஞானம் என்னும் மூன்று சாதனங்களும் சிரத்தையால் நிறைவுறுகின்றன. சிரத்தையின்றித் தனிமனித னுக்கும் உயர்ச்சியில்லை. சமுதாயமும் உருப்படாது. சிரத்தை சாத்திர விதிக்கு உட்பட்ட சிரத்தை, சாத்திர விதிக்கு உட் படாத சிரத்தை என இருவகைப்படும். கரும சாதனைக்குச் சாத்திர விதியே பிரமாணம். சாத்திர விதி மனிதனுக்காக ஏற்பட்டது. எனினும், மனிதனைச் சாத்திர விதிக்குப் பலியிடுதல் தகாது. இதனல், சாத்திர விதிக்கு உட்பட்டதாயினும் சிரத்தை யில்லாத கருமம் தள்ளத்தக்கது. சாத்திர விதிக்கு உட்படா தாயினும், சிரத்தையுள்ள கருமம் கொள்ளத்தக்கது எனப் பதினேழாம் அத்தியாயம் பகர்கின்றது. சாத்திரவிதி தெரியாத காரணத்துக்காக ஒருவன் சிரத்தையுடன் செய்யும் சற்கருமத்தை நாம் குறைவாக மதித்தல் ஆகாது. அவனையும் குறைவாக மதித்தல் கடவுளுக்கு ஏற்காது. மனித வாழ்க்கை முறைக்கும் பொருந்தாது. சிரத்தையுடன் செய்யும் சற்காரியங்களின் குறை பாடுகள் மந்திரங்களால் நிவிர்த்தியாகின்றன.
சன்னியாசம் என்பது தீரத்துறத்தல். இது தியாகம் எனவும் வழங்கும். இதை விளக்குகின்ற பதினெட்டாம் அத்தியாயம் கீதையின் சிகரம் போன்றது. தியாகம் என்பது கருமத்தின் பலனைப் பரமாத்துமாவுக்கு உள்ளன்புடன் அர்ப்பணம் செய்து

xv
கருமம் புரிதல்; கருமத்தையும் அதன் பலனையும் அவ்வாறே அர்ப்பணம் செய்து கருமம் புரிதல் என இருவகை. இதனல் மனிதனுக்குப் பற்றற்ற அனுபவமும், அனுபவத் துறவும் கைகூடுகின்றன. ஆத்மீக விடுதலையும் கிட்டுகின்றது.
உடற்பற்றுடைய தியாகிகளால் கருமத்தை முற்ருக விடுதல் இயலாது. பற்றின்றிச் செய்துகொண்டிருப்பர். உடற்பற்று அற்ற தியாகிகள் தாமும் கருமத்தை அறவே விடுவதில்லை. அவசிய கருமங்கள் உடல் இருக்கும்வரையும் நடந்துகொண்டே யிருக்கும். கருமம் ஞானத்தை முன்னிட்டுச் செய்வது. கருமம் ஞானத்துள் சமாப்தியாய்விடுகின்றது. ஞானி பரமாத்துமாவுள் சமாப்தியாய்விடுகின்றன்.
சீவாத்துமா பல படிகளைத் தாண்டி இந்த நிலைக்குள்ளா கின்றது. மனிதன் தானென ஒருவனல்லாத தன்மை அடையும் போது; தனக்கென ஒன்று செய்யாத தன்மை அடையும்போது; தனக்கென ஓர் உடைமையும் இல்லாத தன்மை அடையும் போது; தான் பரமாத்துமாவின் உடைமை என்கின்ற தற் கிழமை யுணர்வு அடையும்போது பரமாத்துமாவிடம் அன்பு கனிந்த பூரண சரணுகதியடைந்து பரமாத்துமாவுடன் ஒன்முகி விடுகின் முன். இந்த உயர்வற உயர்நிலையே பகவத்கீதையின் முடிந்த பொருளாகும். இத்துடன் முன்னுரைப் பொருள் நிறைவுறுகின்றது.
இந்தச் சந்தர்ப்பத்திலே என் அன்புருவான இரு முதுகுரவ ரையும், என்னை உருவாக்கிய அருளுருவான நல்லாசிரியர்களை யும் பக்திசிரத்தையுடன் நினைவுகூருகின்றேன். ரமணபக்தரும், உலகம் போற்றும் இந்துசமயப் பெரியாரும், அனுபூதிச் செல்வரு மாகிய உயர்திரு. க. இராமச்சந்திர ஐயா அவர்களை அன்புடன் என் உள்ளத்திருத்தி அஞ்சலி செலுத்துகின்றேன். இந்நூலின் கையெழுத்துப் பிரதியைக் கூர்மையாக முற்றமுடியப் படித்து அருமையான ஆராய்ச்சி மு ன் னுரை யொன்று எழுதிச் சிறியேனப் பாராட்டியுள்ள அன்னரின் பெருந்தகைமையின் முன் நான் எம்மாத்திரம்! இவ்வுலக வாழ்வை நீத்தும் நீடுவாழ் இராமச்சந்திரர்க்கு என்மனம் நிறைந்த நன்றி உரித்தாகுக.
இலங்கைப் பல்கலைக் கழகத்துப் பேராதனை வளாகத்தின் தமிழ்த்துறைத் தலைவர், அறிவுசால் பண்பாளர் பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானந்தன், M. A., Ph.D. அவர்கள் இந்

Page 9
xvi
நூலுக்குச் சுருக்கமும், விளக்கமும், தெளிவும் வாய்ப்ப உளம் விரும்பி எழுதிய மதிப்புரையால், நூல் ஒளிபெறலாயிற்று. அன்னர்க்கு என் அன்புசால் நன்றி.
மட்டக்களப்பு மாநாட்டின் தலைசிறந்த தமிழ்ப்புலவர்களுள் ஒருவரும், பட்டிருப்பு மகாவித்தியாலய அதிபருமாகிய வித்து வான், பண்டிதர் வி. சீ. கந்தையா, B.O.L. அவர்கள் அன்புப் பணிவுடன் கருத்தாழம் மிக்கதோர் அணிந்துரையால் இந் நூலை அழகுசெய்துள்ளார். அன்னர்க்கு என் உளம் கனிந்த நன்றி.
இந்நூல் வெளியீட்டுக்குத் தாராளமாகப் பொருளுதவி செய்த மெய்யன்பர்களின் தமிழ்ப் பற்றுக்கும், என்மீது அவர்கள் வைத்திருக்கும் நன்மதிப்புக்கும் நான் என்றும் நன்றியுடையேன். உள்ளழகும் புறவழகும் வாய்ப்ப இந்நூலை அச்சிட்டு வெளிப் படுத்திய சுன்னகம், திருமகள் அழுத்தகத்து அன்பர்களின் செயல் திறமைக்கு எனது பாராட்டு.
எல்லாப் புகழும் கண்ணபிரான் திருவடிகளுக்கே.
"புலவரகம்", ஏ. பெரியதம்பிப்பிள்ளை குருக்கள் மடம், மட்டக்களப்பு, இலங்கை,
و 76 9 1 سم 09 - -

ஆராய்ச்சி முன்னுரை
உலகப் பிரசித்தி பெற்ற இந்து சமயப் பெரியார், அனுபூதிச் செல்வர், இல்லற ஞானி உயர்திரு. க. இராமச்சந்திரா அவர்கள்
அமரகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள் தாம் இயற் றிய "பாஞ்சாலி சபதம்" என்னும் நூலின் முதற் பாகத்தை 1912ஆம் ஆண்டிற் பிரசுரித்தபோது, அதன் முகவுரையைப் பின்வருமாறு முடித்துள்ளார்:-
"தமிழ்ச் சாதிக்குப் புதிய வாழ்வு தரவேண்டுமென்று கங்கணங்கட்டி நிற்கும் பரா சக்தியே என்னை இத் தொழிலிலே தூண்டுகின்ரு ளாதலின், இதன் நடை நம்ம வர்க்குப் பிரியந் தருவதாகும் என்றே நம்புகிறேன். ஓம் வந்தேமாதரம்."
இதேவித நம்பிக்கையுடன் கண்ண பரமாத்மாவின் திருவருட் சித்தப்படி தோன்றியதே புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் இயற்றிய பகவத்கீதை வெண்பா". அதுமாத்திரமல்ல; பாரதியார் தமது நூலைச் சமர்ப்பணஞ் செய்யும்போது, 'தமிழ் மொழிக்கு அழியாத உயிரும் ஒளியும் இயலுமாறு காவியங்கள் செய்யப்போகிற வரகவிகளுக்கு இந்நூலைப் பாத காணிக்கை யாகச் செலுத்துகிறேன்" எனவும் குறிப்பிடும் நேரத்தில் அந்தத் தமிழ்ப் பெருமகளுரின் ஆழ்ந்த உள் ளு னர் வில் (Intuition) எங்கள் புலவர்மணி அவர்களின் கவித்துவமும், கவியோகி சுத்தானந்த பாரதியார் செய்யப்போகும் தமிழ்ப் பணியும் ஐயமறத் தோன்றியிருக்குமெனத் தயங்காமற்கூறலாம்.
1942ஆம் ஆண்டில் சுத்தானந்தர் பகவத்கீதையை மூன்று பாகமாகப் பிரித்துக் "கீதா யோ கம்" என்னும் பேர் புனைந்து பிரசுரித்தார். அவரது நோக்கம், உலக மக்கள் சகலரும் பின் பற்றக் கூடிய, பாரதநாட்டின் இந்த இணையற்ற வேதமணியை வடமொழி மூலத்துடன் தமிழரும் பாராயணம் பண்ண வழி செய்யவேண்டும் என்பதாம். எனவே, ஒவ்வொரு சுலோகத் தையும் தமிழெழுத்தில் எழுதித் தமிழில் உரத்த ஓசைகள் இல்லாத க, ச, ட, த முதலிய வடமொழி எழுத்துகளுக்கு உச்சாரண பேதம் காட்டப் புள்ளியும் கோடும் இட்டு விளக்க

Page 10
xviii
மும் கொடுத்தனர். இந்த உதவிகொண்டு, வடமொழி தெரி யாத தமிழர்களும் அம்மொழியில் கீதையைப் பாராயணஞ் செய்யும் வாய்ப்பைப் பெற்றனர்.
சுத்தானந்தர் விரும்பியபடி கீதாயோகம் இரண்டாம் மூன் மும் பாகம் உருவாகும் முன்னரே புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை அவர்களுக்கு, 1943ஆம் ஆண்டில் பகவத் கீதையைத் தமிழில் வெண்பா யாப்பில் இயற்றவேண்டு மென்னும் ஆர்வம் தற்செயலாகப் பிறந்தது. முதல் ஆறு அத்தியாயங்களையும் "கருமயோகம்" என்னும் நாமம் சூட்டி, ஒவ்வொரு வெண்பாவுக் கும் விளக்கக் குறிப்புடன் ஆரம்பித்தனர்.
இந்தத் தொண்டு தோன்றிய அற்புத வரலாறு அம் முதலாம் பாகத்தின் முகவுரையில் அழகாக அமைந்துள்ளது. அதுவும் இரண்டாம் பாகமான 'பக்தியோகத்துக்கு வரையப்பட்ட முக வுரையும் தனித்தனியே குறுஞ்சுவடியாக அச்சேறி நாடெங்கும் பரவவேண்டிய தகுதியுடையன. மூன்ரும் பாகம் மேலும் சிறப்புற் றுள்ளது. இவ்விதம் மூன்று பகுதிகளும் ஒன்றைவிட ஒன்று உயர்ந்த நடையில் அமைந்திருப்பது ஆக்கியோனின் சாதன முதிர்ச்சியை நமக்கு விளக்குகின்றது.
உலகிலே பல மொழிகளில் வெளிவந்துள்ள சமய சாத் திரங்கள், தோத்திரங்கள், தத்துவ விளக்கங்கள், நீதி நூல்கள் கணக்கில. அவற்றுள் மிகச் சிலவே, தாம் தோன்றிய காலம் எவ்வளவு முற்பட்டதாயினும், அதை விட்டு விலகித் தம்மைக் கற்போரின் காலத்துக்குப் பொருந்தக்கூடிய கருத்துக்களை விளக்கி நல்வாழ்வுக்கு வழிகாட்டிகளாக அமைந்துள்ளன. இவற்றுள் உலகமக்கள் யாவர்க்கும் எக்காலத்தும், எந்நிலை யினும் பயன்படும் முறையில் தலைசிறந்து விளங்குவன இரண்டு. ஒன்று தமிழ்த்தாய் அருளிய திருக்குறள் மற்றது ஆரியத் தந்தை அருளிய பகவத்கீதை. -
பாரத நாட்டின் பழம் பெருமை அன்றுபோல் இன்றும் உலகளாவி நிற்பதற்கு முக்கிய காரணம் இவ்விரண்டு நூல்களே யாம். இக்கூற்று இந்துக்கள் தாமே சொல்லும் தற்புகழ்ச்சி யல்ல; மேல்நாட்டு அறிஞர்கள், மேதாவிகள், இருபதாம் நூற்றண்டில், இரண்டு அகோர உலக யுத்தங்களின் நாச வேலை களின் பின் வற்புறுத்தும் பேருண்மையாகும்.
எவ்விதத்தில் திருவள்ளுவ நாயனரால் ஈரடியால் இயற்றப் பெற்ற திருக்குறளானது தமிழ் நாகரிகத்தின் உரைகல்லாகித் தமிழர்களின் அகப்புற வாழ்வின் விளக்கமாய், இம்மையி லேயே மறுமைப் பயனைத் தந்துதவும் இன்ப ஊற்றயமைந்து, தமிழின் முதுமைக்கும் இளமைக்கும் ஒப்பற்ற சான்ருய் விளங்கு

xix
கின்றதோ அதேவிதத்தில் ஈரடியால் அமைந்துள்ள பகவத் கீதையும் வேத உபநிடதங்களின் சாரமாய், மண்ணுலக வாழ்வை விண்ணுலக வாழ்வுடன் பிணைக்கும் பெற்றிதாய் உள்ளது. உலகின் பரிணும நிலைக்கும், மாந்தரின் மனப் பக்குவத்துக்கும், அவர்களின் சூழ்நிலைக்கும் பொருத்தமாகத் தோன்றிப் பல்வேறு சமயங்கள் போதிக்கும் பக்தி, சேவை, தியானம், ஞானம் ஆகிய மார்க்கங்களின் தொகுப்பாயும், அவைகளுக்கு அருளூற்ரு யும் அமைந்திருப்பது கீதை.
சென்ற கால்நூற்றண்டு எல்லைக்குள், உலக மொழியாகிய ஆங்கிலத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட விரிவுரைகள் அதற்கு வரையப்பட்டிருக்கும் உண்மையொன்றே போதும், உலகம் அதின் தனிப்பெருஞ் சிறப்பை ஏற்றுக்கொண்டுவிட்டதென்பதை நாம் உணர்ந்து உளம் பூரிக்க.
அது மனித சமுதாயம் முழுவதுக்குமே உரித்தான சமரச யோக சாத்திரக் களஞ்சியம் என்பதை வலியுறுத்தப்போலும் அதில் அடங்கியுள்ள எழுநூற்ருெரு சுலோகங்களில் ஒன்றி லாவது "இந்து"; "சைவம்', 'வைணவம்”; ‘சாத்தம்" ஆகிய பதங்களில் எதுவாவது உபயோகிக்கப்படவில்லை.
*பகவத்கீதை வெண்பா'வைப் பற்றிய விபரமான ஆராய்ச் சியை ஆரம்பிக்குமுன், கீதையைத் தனது இருதயமாகக் கொண்டுள்ள மகாபாரதத்தைப் பற்றிச் சிறிது கூறவேண்டியது அவசியமாகும். முதல் முதலாக இந்நூலைக் கையிலெடுக்கும் நவீன இளைஞர் உலகுக்கு, "தருமம் தலைகாக்கும்; "நீதி நிலை நிற்கும்'; 'சத்தியம் வெல்லும் என்ற அரிய படிப்பினைகளை நமது மூதாதையர்க்குப் புகட்டியது "மகாபாரதமே யென்ற உண்மையை நினைவூட்டுதல் நமது முக்கிய கடமை யன்ருே?
வியாசரால் இயற்றப்பெற்ற வடமொழி மகாபாரதத்தின் தமிழ் மொழிபெயர்ப்புகளுள் வில் லிபுத்தூரார் பாரத மே சிறப்புடையதாகக் கருதப்படுகின்றது. இந்த இதிகாசத்தில் இல்லாத நீதியையோ, புத்திமதியையோ, இன்றைய மக்களை வாட்டும் பிரச்சினைகளைத் திருப்திகரமாகத் தீர்க்கக்கூடிய உபா யங்களையோ, வேறு எந்த நூலிலும் காணமுடியாது. அது காலத்தை வென்றுநிற்கும் தனிச்சிறப்பை ராஜாஜி தமிழ் மக்களுக்கு உவந்தளித்த "வியாசர் விருந்தில் கீழ்வரும் ஒரு வசனமூலம் விளக்கியுள்ளார் :-
"ஒருவர் தோள்மேல் ஒருவர் கைவைத்து ஊன்றிக் கொண்டு அந்த மூன்று விருத்தர்களும் (திருதராஷ்டிரன், காந்தாரி, குந்தி) வனம்போன இந்தச் சித்திரம் நேற்று நம் வீட்டில் நடந்த ஒரு சோக நிகழ்ச்சிபோல் இருக்கிறது."

Page 11
XX
மகாபாரதத்தின் சிறப்பையும், அதன் இருதயம்போல அமைந்த பகவத்கீதையின் மகிமையையும் பிணைத்துக் கூறும் அழகான வடமொழிச் சுலோகம் ஒன்றுண்டு. அதன் சாரம் பின்வருமாறு:-
"வியாசர் அருளிய நூல்களின் தொகுதி ஒரு தடாகம் போன்றது. அதில் பாரதம் ஒரு தாமரை போல் மலர்ந்துள்ளது. அது கலியின் பாவங்களைப் போக்கி நமக்கு அளவற்ற நன்மையைப் பயப்பதாகும். உலகில் நல்லோராகிய வண்டுகள் அதன் தேனை அருந்துகின்றன. இத்தகைய தாமரைக்குக் கீதார்த்தமே நறுமணமாகும்.'
மாணுக்களுக இலக்கண இலக்கியங்களைப் பயிலும்போது, அந்தத் தாமரைப் பூவின் தேனைப் பருகிய பழக்கமுடைய புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்களுக்கு அதனுள் அடங்கி யிருந்த நறுமணத்தையும் நுகரும் பேறு எப்படிக் கிடைத்த தென்பதை முதலாம் பாகத்து முகவுரையில் விபரமாக விளக்கி யுள்ளார். அது ஒர் அற்புத வரலாறு என்று யாமும் மேலே குறிப்பிட்டுள்ளோம். எனினும், அதைக் கட்டாயமாகப் படிக் கும்படி வாசகர்களின் கவனத்தைத் தூண்டும் பொருட்டு அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பை இங்கே சேர்க்க விரும்புகின்ருேம்.
புலவர்மணிக்கு நாற்பத்து நான்காம் வயசு நடக்கும்போது அவரது மனைவியாருக்குக் கடுமையான நோயுண்டாயிற்று, மூன்று மாச காலம் கையாண்ட சுதேச வைத்தியமும் ஆங்கில வைத்தியமும் பயனளிக்கவில்லை. இரு வைத்திய நிபுணர்களின் ஆலோசனைப்படி கொழும்பு பெரிய வைத்தியசாலைக்குப் பெரிய சத்திர சிகிச்சைக்காக் நோயாளி எடுத்துச் செல்லப்பட்டார். மனைவியார் வைத்தியசாலையில்; புலவர்மணி அவரின் அன்பர் திரு. க. ஞானசெல்வம் வீட்டில். அங்கு "மனச்சாந்திக்காகப் படிப்பதற்கு ஒரு புத்தகத்தைத் தேடினர் புலவர்மணி. அப் போது அவர் கைக்கு எட்டியது அமரகவி பாரதியாரின் பகவத் கீதைத் தமிழ் மொழிபெயர்ப்பு. அந்த நேரத்தில் அவர் உள்ளத்தை வாட்டிய துன்பத்தை அந்த மெய்ஞ்ஞானச் செல்வம் இன்பமாக மாற்றிவிட்டது. மனைவியாரின் உடலை வருத்திய பிணியும் திடீரெனக் குணமாகிவிட்டது. சத்திர வைத்தியம் தேவைப்படவில்லை.
எனினும், சிலநாள் வைத்தியசாலையிலே தங்கியிருந்து அவதானித்துப் பார்த்தல் உசிதமென வைத்திய நிபுணர்கள் கூறினர். இதனல் இருபத்தெட்டு நாள் இருவரும் கொழும்பில் இருக்க நேர்ந்தது. இருபத்தெட்டு நாளும் புலவர் மணிக்குக்

ΧΧι
கீதாயோக சாதனையிற் கழிந்தன. கீதா சுலோகங்கள் ஒவ் வொன்றையும் தமிழில் ஒவ்வொரு வெண்பாவாகப் பாடிப் படித்தால் உள்ளத்தில் நன்கு பதிந்துவிடுமே யென்ற எண்ணம் புலவர்மணிக்கு உதித்தது. செய்யுள்கள் ஆறு மடைதிறந்தாற் போல் வரலாயின. உடனுக்குடன் அவற்றை எழுதிக்கொண் டார். குறித்த நான்கு வார எல்லைக்குள் கீதையின் முதல் ஆறு அத்தியாயங்களும் வெண்பா உருப்பெற்றன. கீதையை அவர் படித்ததும் தமது சொந்த அமைதிக்காக வெண்பாவாகப் பாடியதும் சொந்த அமைதிக்காகவே. அவை அச்சுவாகன மேறி நூல்வடிவில் ஊர்வலம் வருமென அவர் கருதவுமில்லை; விரும்பவுமில்லை.
"அவனன்றி ஓரணுவும் அசையாது" என்ற ஆப்தர் மொழிக்கு இது ஒர் இணையற்ற உதாரணமாகும். தெய்வத் திருவருள் என்பது ஒரு சாதகன் எந்தப் பக்குவ நிலையில் இருக் கின்றனே, அந்த நிலைக்குப் பொருந்த வந்து அமைவதாகும். துன்பப் போர்வையில் வந்து இன்பமளிப்பது அருள்; ஒர் ஆசானிடமிருந்து சுடுமொழியாக வந்து பொல்லாக் குணங் களைப் பொடிபடுத்துவது அருள்; தனிமோனத் தவத்திலிருக்கத் தூண்டிச் சித்த விருத்திகளை அடக்கச்செய்வது அருள்: நனவு நிலையில் நீடித்த காலம் வாழ்ந்து அனுபவித்துக் கழிக்க வேண்டிய கரும பலனை ஐந்து நிமிடம் கனவில் கஷ்டப்பட்டுத் தீர்க்கச்செய்வதும் திருவருளே. புலவர்மணி அடைந்த இன்ப அனுபவம் துன்பப் போர்வையில் வந்தது.
உலகின் நல்ல தீய பல்வேறு நிகழ்ச்சிகளைத் தங்கள் புத்திக் கூர்மை மாத்திரம் கொண்டு நிர்ணயஞ் செய்யத் துணியும் பகுத்தறிவாளர்கள் என்போர் இந்தக் கொள்கையை மறுக்க லாம். இவர்களுக்கு வேண்டிய உபதேசத்தை இரண்டு நூற் முண்டுகளுக்கு முன் தாயுமான சுவாமிகள் அருமையாக அருளிப் போயுள்ளார்:
'அருளால் எவையும்பார் என்றன் - அத்தை
அறியாதே சுட்டியென் அறிவாலே பார்த்தேன் இருளான பொருள்கண்ட தல்லால்- கண்ட
என்னையும் கண்டிலேன் என்னேடி தோழி சங்கர சங்கர சம்பு".
புலவர்மணியின் மனைவியாரின் உடல்நிலை சத்திர சிகிச்சை யின்றி எப்படி இயல்பாகவே சமநிலை அடைந்ததோ, அதே போல், அவர் இயல்பாகவே பாரதியார் நூலைக் கண்டெடுத்து,

Page 12
XXii .
இயல்பாகப் படித்து, இயல்பாகப் பாடிய கீதை வெண்பாக் களால் அவரது மனமும் இயல்பாகவே சாந்தியடைந்து விட்டது. அதன்மேல் "பகவத்கீதை அவருக்குச் சாதன நூலாய்விட்டது.
ஆறு அத்தியாயங்களை இயல்பாகவே பாடிமுடித்த புலவர்க்கு ஏனைய அத்தியாயங்களையும் பாடவேண்டுமென்ற அவசரம் உண்டாகவில்லை. பக்தி ஞான சாதனை மேலும் வேண்டுமென உணர்ந்தார். இதுவும் திருவருட் கட்டளையாகும். திருவருள் இன்னுமோர் விளையாட்டும் செய்தது. ‘வீரகேசரிப்பத்திரிகைக்கு ஆசிரியராக ஒரு பக்தனைச் சென்னையிலிருந்து கொழும்புக்குக் கொண்டுவந்து சேர்த்தது. அவர் பெயர் கே. பி. ஹரன். அந்த அன்பர் ஞாயிற்றுக்கிழமை ‘வீரகேசரி"யில் சமய சமரச ஞான விடயங்களை எழுதக்கூடியவர்களைத் தேடிப்பிடித்தார். இந்தச் சந்தர்ப்பத்திலேதான் புலவர்மணியின் கீதை வெண் பாக்கள் அவரது கவனத்துக்கு வந்தன. 1944ஆம் ஆண்டிலேயே ஞாயிறு தோறும் ‘வீரகேசரி"யில் அந்த வெண்பாக்கள் சிறப்பிடம் பெற்றன. அதே காலத்தில் அறிஞர் ஹரன் அவர்களின் அன்புக் கட்டளையை மறுக்க முடியாமல் சமய சம்பந்தமான எமது கட்டுரைகளும் ஞாயிறு ‘வீரகேசரி"யில் ஒழுங்காக வந்துகொண் டிருந்தமையால், அந்த வெண்பாக்களைத் தவருமற் படிக்கும் இன்ப பாக்கியம் எமக்குக் கிடைத்தது. எம்மைப் போலவே கீதை அபிமானிகள் வேறு பலரும் படித்தனர். அவர்களுள் முக்கியஸ்தர் தவத்திரு விபுலாநந்த அடிகளார். அன்னரின் அழைப்புச்கிணங்கி நூலாசிரியர் கொழும்பு வந்து அடிகளார் தலைமையிலேயே கீதை வெண்பாக்களை விரித்துரைத்தனர். இது நடந்தது பூரீ ராமகிருஷ்ண சங்கத் திருமடத்தில்,
பின்னர், அடிகளார் சிவபதமடைந்து நான்கு ஆண்டுகள் கழிந்ததும், மட்டக்களப்பிலே பெரும்பாக வித்தியாதரிசியாக இருந்தவரும், புலவர்மணியின் நண்பருமாகிய மல்லாகம் திரு. அ. சரவணமுத்து அவர்களின் நன்முயற்சியால், யாழ்ப் பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தின் ஆதர வுடன் சைவப்பெரியார் திரு. சு. நடேசபிள்ளை அவர்களின் தலைமையிலே வண்ணுர்பண்ணை வைத்தீசுவர வித்தியாலய மண்டபத்தில் கீதை வெண்பாவின் முதற்பகுதியான கரும யோகம் அரங்கேற்றப்பெற்றது. அரங்கேற்று விழா வில் நூலாசிரியரைப் பாராட்டிப் பேசியவர்களுள் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களையும், பண்டிதர் வ. மு. இரத்தி னேசுவர ஐயர் அவர்களையும் இங்கே குறிப்பிட வேண்டும். முந்தியவர் தமது பாராட்டில் "ஒரு காலத்தில் வெண்பாவிற் புகழேந்தி என்றிருந்தது. இக்காலத்தில் வெண்பாவிற் பெரிய தம்பி என்று வழங்குவதைக் கவிதையுலகம் நன்கு அறியும்" எனக் கூறியுள்ளார். இதில் அடங்கியுள்ள உண்மையைத் தமிழ் பேசும் நல்லுலகு அவரது இரண்டாம் மூன்ரும் பாகங்களாகிய "பக்தியோகம்", "ஞானயோகம் இரண்டையும் படித்ததும் பூரண

xxiii
மாய் ஏற்றுக்கொள்ளு மென்பது திண்ணம். முதலாம் பாகம் அச்சேறியது 1962இல் இரண்டாம் பாகம் 1974இல்; மூன்ரும் பாகமான இந்நூல் இப்போதுதான் அச்சேறுகின்றது.
கவிதையென்ருலும் சரி; வசனமென்ருலும் சரி; எங்கே எளிமையும் இனிமையும் இயைகின்றனவோ, அங்கே தெளிவும் வலியவந்து சேர்ந்துவிடும். இந்தத் தனிச் சிறப்பைப் புலவர் மணியின் கவிதையிற் காண்கின்ருேம், அதுமாத்திரமல்ல; அவர் ஒவ்வொரு வெண்பாவிற்கும் வரைந்துள்ள விளக்க வுரையின் அருஞ் சிறப்பு எம்மால் எடுத்து விளக்கும் தரத்ததல்ல. சங்க காலத்திலிருந்து இருபதாம் நூற்ருண்டின் மத்தியகாலம் வரை யில் தமிழ்மொழியிலே தோன்றியுள்ள நூல்கள் அனந்தம். அவை ஒரு பெருஞ் சமுத்திரம். அவற்றுள் ஆழ்ந்து கிடக்கும் முத்துக்கள் பலவற்றைத் தேர்ந்தெடுத்து வாசகர்முன் சமர்ப் பிக்கின்ற அருஞ்செயல் பெரும்பயன் தருவதாகும்.
முக்குணப் போர்க்களமாகிய இந்த மண்ணுலகில் மக்கள் செய்யும் வேள்வி, தானம், தவமெல்லாம் சாத்துவிகம், இராசதம், தாமதம் ஆகிய தன்மையுடையனவாய் நன்மையும் தீமையும் பயக்கின்றன என்பதை 17ஆம், 18ஆம் அத்தியாயங் களில் ஆசிரியர் விளக்கியுள்ள விதம் யாம் இதுவரையில் கண்டும் கேட்டுமிராத அற்புத முறையிலாகும். இப் பகுதியில் ஆசிரியர் மேற்கோளாக எடுத்தாண்டிருப்பது நாவலர் காலத்தில் வாழ்ந்து போன நீதிபதியும் புலவருமான வேதநாயகம்பிள்ளை பாடலில் வரும் கீழ்க்கண்ட வரிகள்:-
* புண்ணியம்போற் பாவம் - மனமே புரிந்தாய் நீ தினமே
திண்ணமாகக் குளிக்கப் - போயுந்தன் மேலே சேற்றைப் பூசிக்கொண்டு திரும்புதல் போலே புண்ணியம்’
இது தவத்தைப் பற்றிய விளக்கத்தில் வருவது. அடுத்த வெண்பா தானத்தைப் பற்றியது. அதற்குத் தாம் கொடுக்கும் விளக்கத்துக்குச் சாட்சியாக வள்ளுவரையும், கம்பரையும், விபுலாநந்தரையும் நம்முன் அழைத்துப் பேசச் செய்கின்றர் ஆசிரியர்.
கந்தபுராணத்தில் வரும்,
"அவனியி லறமெல்லாம் அடிதலை தடுமாறிப்
பவவினை யறமென்றே பற்பல ருஞ்செய்ய”
என்னும் அருள் வாக்கில் கீதை 18ஆம் அத்தியாயத்தின் 32ஆம் சுலோகக் கருத்தின் எதிரொலியைக் கேட்கின்ருேம். எங்கள் புலவர்மணி அதே சுலோகத்தைத் தமிழில் வெண்பாவாகத்

Page 13
Xxivo
தரும் அழகையும், அருமையையும் பாருங்கள் :- ** அறியாமை யாமிருளில் ஆழ்ந்ததர்மம் தன்னைக் குறியாமே தர்மமெனக் கொண்டு - நெறிமாறி எல்லாம் தலைகீழ் எதிர்மாறக் காணுமே பொல்லாத தாமதபுத் தி.” இப்படி உதாரணங்கள் எடுத்தாளப் போனல் இம் முன் இறுரையே ஒரு தனி நூலாக உருவெடுத்துவிடும். ஆகையால், புலவர்மணியின் கவிதைகள் கற்போர் உள்ளங்களைக் கவர்ந்து, பக்திமூலம் பரவசப்படுத்தி, இறுதியில் ஞானத்தைக் கூட்டி வைக்கும் தன்மையன என்று கூறி மேற்செல்வோம்.
கீதை ஒரு போர்நூல் : அதைத் தீண்டுவதே பாவம் : வைணவ மதச் சார்புடைய அதைப் படிப்பது சிவத்துரோகம் என்னும் கொள்கை யுடையோரும் தப்பித் தவறி நம்முள்ளே இருக்கின்றர்கள். இவர்கள் சமய ஞானத்திற் பாலகர்கள். வீண் பாவம் தேடும் இவர்கள் விசாலபுத்தி பெறவேண்டும். கீதை போர்நூலாக இருப்பின் அது 2ஆம் அத்தியாயம் 37ஆம் சுலோ கத்தின் மேல் வளர்ந்திராது. ஈழநாட்டுச் சைவப்பெரியார் இராமநாத வள்ளலார் அதற்கு மொழிபெயர்ப்பும் விருத்தி யுரையும் செய்து வெளியிட்டிருக்கமாட்டார். கண்ணன் அடிக்கடி *" தருமம் ', ' கருமம் " என்ற இரு பதங்களையும் ஒரே கருத்தில் அருச்சுனனுக்கு வற்புறுத்திப் பேசவேண்டிய தேவையும் ஏற்பட்டிராது.
இன்று உலக அறிஞர்கள்; ஏனைய சமய சாத்திரங்களி லிருந்து பிரித்தெடுத்து, அதற்குத் தனிப்பெருமை யளித்துப் புத்தம் புதிய நூல்களை ஆங்கிலத்திலும், தமிழிலும், பிற மொழி களிலும் வரைவதற்குக் காரணம் அதில் அடங்கியுள்ள சர்வ சமய சமரச ஞானமேயாகும். 4ஆம் அத்தியாயம் 11ஆம் சுலோக மானது இந்த உண்மையை நமக்கு அருமையாக விளக்குகின்றது. அக்கருத்தைப் புலவர்மணியின் வெண்பாவிலே கீழே தருகின் Guib:- .
* யார்யார் எனயெங்கெங் கெவ்வாறு வேண்டுவரோ சேர்வே னவர்க்கருளைச் செய்தங்கே - ஒர்வாய்நீ என்னெறிநிற் பாரேயிங் கெல்லோரும் ஆங்கவரை நன்னெறியிற் சேர்ப்போனும் யான்,? ஓர் அபூர்வ மேதை; பெளதிக சாத்திர விற்பன்னர்; விஞ்ஞான கலாநிதி; தத்துவ சாத்திர கலாநிதி. இவர் தத்துவாதீதமான நிலைகுறித்துப் பல நூல்கள் வரைந்துள்ளார். அவற்றுள் இவருக்கு உலகப் பிரசித்தியைத் தேடிக்கொடுத்தது IMPRIsoNED SPLENDOUR என்னும் நூல். அதனைச் 'சிறை யிடப்பட்டுள்ள பிரபை" எனலாம். இந்த ஆண்டில் வெளிவந்த

KRy
இவரது கடைசி நூலில் கீதை க்கு இரு அத்தியாயங்கள் கொடுத்துள்ளார். உலகிலே தோன்றியுள்ள வெவ்வேறு மார்க் கங்கள் எவ்விதம் பிரிக்கமுடியாத முறையில் கீதையிற் பிணைக்கப் பட்டுள்ளன என்ற உண்மையை விளக்கி, அது இறுதியில் வற் புறுத்தும் சரணுக திக்குச் சென்ற நூற்றண்டில் பூரீராமகிருஷ்ண பரமஹம்ச தேவர் ஒர் ஒப்பற்ற உதாரணமாக வாழ்ந்தார் என்று கூறியுள்ளார். அத்தோடு அவரின் அமிர்த மொழிகள் சில வற்றையும் சேர்த்துள்ளார். இந்த மேதையின் பெயர் Raymor C. Johnson-றேய்னர் ஜோண்சன். இடம் இலண்டன்நகர்.
தமது இன்பமயமான இல்லற வாழ்வின் பொன்விழா மல ராக இக்கடைசி நூலை வரைந்து இதனைத் தமது வாழ்வு சிறக்கச் செய்த அருந் துணைவியார்க்கே சமர்ப்பணஞ் செய்துள் ளார் இப்பெருந்தகை. எனவே இப்பெரியார் நவீன ஐரோப்பா கண்ட ஓர் இணையற்ற இல்லற ஞானியுமாவார்.
கலாநிதி ஜோண்சனைப் போலவே உபநிடத சாத்திரங்களி லும், கீதா யோக சாரத்திலும் தோய்ந்த உள்ளம் படைத்த பிறிதோர் ஐரோப்பிய மேதை ஒரே காலத்தில் வாழ்ந்து இற் றைக்குப் பதினன்கு ஆண்டுகளுக்குமுன் பரமபதம் அடைந்தனர். அவர் பெயர் கலாநிதி காள் ஜி யுங் (Dr. Carl G. Jung). உலகப் பிரசித் திபெற்ற உளநூல் நிபுணரும், வைத்திய கலாநிதியுமான இப்பேரறிஞர் கருமத்தை உயிராகவும், பக்தியை இருதயமாக வும் கொண்டுள்ள பகவத்கீதைக்குச் சிரசாக விளங்குவதும், நவீன விஞ்ஞான உலகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மைகளை அடக்கியதும் ஞானயோகமே என்பதை நன்குணர்ந்து அதை ஜேர்மன் மொழியில் விளக்கியுள்ளார். இந்த ஞானத்தின் பூரண சொரூபமாக இருபதாம் நூற்றண்டில் இந்தியாவில் வாழ்ந்தவர் பகவான் பூரீரமண மகரிஷிகள் என்பது அவர் வாக்கு.
பரமஹம்ச தேவர் கீதைக்குத் 'தி யாகம் ' என்று ஒரு சொல்லில் உரையருளி யிருப்பதை எல்லோரும் நன்கு அறிவர். இன்னுமோர் அனுபூதிச் செல்வர் கருமம், பக்தி, ஞானம் ஆகிய மூன்றின் தொகுதியான கீதை ‘தத்வமஸி’ என்னும் மகா வாக்கியத்தின் மந்திர வடிவு என விளக்கம் தந்துள்ளார். தத்=அது+ த்வம் = நீ+அஸி = இருக்கிருய் என்பதாம். 'அது' கருமயோகத்தால் வழிபடும் கடவுளைக் குறிக்கிறது. "நீ" எல்லாம் நீயேயென்னும் பக்தியோகத்தை விளக்குகிறது. அளி' = "இருக்கிருய்' உயிர்களெல்லாம் அதுவேயாக இருக் கின்றன என்னும் ஞானத்தைக் குறிக்கிறது.
இவ்விதம் ஒரு சொல்லிலும், மூன்று சொல்லிலும் உரை
விளக்கக் கூடிய கீதைக்கு ஏன் நூற்றுக்கணக்கான விரிவுரைகள் ? ஆயிரக்கணக்கான சுலோகங்கள் ? பாடல்கள் ? என்று வினவு

Page 14
xxvir
வாரும் உளர். இவ் வினக்கள் குறுகிய புத்தியில் நின்றும் தோன்றியவை.
இன்றைய அபாயகரமான நிலையிலிருந்து மனிதகுலம் காப் பாற்றப்படவேண்டின் கீதை காட்டும் பாதையில் மனித சமு. தாயம் செல்லவேண்டும். இன்றைய சூழ்நிலையை மாற்றி யமைக்கும் முறையில் கீதா சாதகர்கள் வழிவகுக்க வேண்டும். புலவர்மணி கீதையைக் கையாண்டு காலத்துக்கேற்ற ஒரு புது வழியை வகுத்திருக்கின்றர். இந்தக் கீதை வெண்பாப் போன்ற நூல்கள் ஒவ்வொரு வீட்டிலும், பள்ளிக்கூடத்திலும், வாசிக சாலைகளிலும் இடம்பெறவேண்டும்.
புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை காலதேவி வேண்டி நிற்கும் ஓர் அரும் பணியைச் சிறந்த முற்ையிற் செய்து முடிக்கக் கண்ணனின் கருவியாக வந்துள்ளார் என்பதே எமது அசை யாத நம்பிக்கை. அவர் பிறக்கும்போதே கவித்துவமும் அவ ருடன் பிறந்ததெனக் கூறுதல் மிகையாகாது. அத்தோடு அவர் அன்பையும், அமைதியையும், அடக்கத்தையும், பணிவையும், பண்பையும் ஆபரணமாகப் பூண்டுள்ளார்.
அவர் இயற்றியுள்ள மூன்று நூல்களையும் தமிழ்ப் பேசும் சமுதாயம் இன்று ஆர்வத்துடன் ஏற்றுப் போற்றத் தவறினலும், இருபதாம் நூற்றண்டின் இறுதியில் பல பதிப்புகளை வெளி யிட்டுப் பரவச் செய்யப்போவது நிச்சயம். அந்தக் காட்சியைக் காண்பதற்கு இந்த உடல் இல்லாது மறைந்த போதிலும், எமது பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் அவர்களது சந்ததி யைச் சேர்ந்தவர்களும் அதைக் காணும் பாக்கியம் பெறுவார்க ளென்ற பூரண நம்பிக்கையுடன் இந்த முன்னுரையை முடிக் கின்றேம்.
பயன்கருதாப் பணியாகும் கரும யோகம்
பயில்பயனல் பல்லுயிரில் தனயே பார்த்து வியன்பெற்ற பக்திநெறி பன்னி ராண்டு
விவேகமுடன் சாதித்து முதிர்ச்சி பெற்று உயர்வுற்ற ஞானமதை அனுப வத்தால்
உணர்புலவர் மணிபெரிய தம்பிப் பிள்ளை அயராத முயற்சியினுல் கீதா யோகம்
அருளினுன் அவன் நாமம் என்றும் வாழ்க,
க. இராமச்சந்திரா தலங்கம, 22-12-75.

6. இலங்கைப் பல்கலைக் கழகத்துப் பேராதனை வளாகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி Gr, வித்தியானந்தன், M. A. PH. D. 9 Guri 5 Gir
மதிப்புரை
* நின்னை நம்பி நிலத்திடை என்றுமே
மன்னு பாரத மாண்குலம் யாவிற்கும் உன்னுங் காலை உயர்துணை யாகவே சொன்ன சொல்."
இது கண்ணனை விழித்து, அவனருளிய பகவத்கீதையினைப் பற்றி மகாகவி பாரதி கூறியதாகும். பகவத்கீதை பாரத மாண்குலத்துக்குக் கூறப்பட்டதாயினும், கருமத்துக்கும் ஞானத் துக்கும் இடையிலான இணைப்பாகவும், வேத உபநிடதங்களின் சாரமாகவும், போர்க்களத்திற் பிறந்த கருத்தாழம் மிகுந்த தாகவும், கால தேச வர்த்தமானங்களைக் கடந்து பூமியெங்க ணும் புகழ்பரப்பி நிற்கின்றது.
மனிதனின் இயல்புகளையும் தேவ்ைகளையும் உணர்ந்து கொண்டு அவற்றை நிறைவாக்க விழைந்த அக்கருவூலம், சான்றேர் உள்ளங்களைத் தொட்டமையினல், அது உலகில் பல்வேறு மொழிகளிற் பெயர்க்கப்பட்டுள்ளது. இந்திய விடு தலைப் பேரியக்கத்தை வழிநடத்திய மகாத்மா காந்தி தமக்கு ஆத்மீக உணவளிக்கும் தாயாகவே அதனைக் கருதியமையும், அதன் சுலோகங்களை நாளும் படித்துப் பலம்பெற்றமையும் உலகறிந்தவையே.
பாரதப் போர்க்களத்திலே கண்ணனிடம் கீதோபதேசம் கேட்ட அருச்சுனனைத் தம் அண்ணனகவே வரித்துக்கொண்ட மகாகவி பாரதியார் கீதையைத் தமிழிலே தந்தார். பாரதி யின் அம் மொழிபெயர்ப்பே புலவர்மணியின் உள்ளத்தை முதன் முதல் தொட்டது. அதன் விளைவாக 1943இல் கீதையைத் தமிழ் வெண்பாவிற் புலவர்மணி இயற்ற விழைந்தபோது, பாரதி புகழைத் தக்க வகையிலே தமிழுலகிற் பரப்பிய விபுலாநந்த அடிகளாரின் ஆசீர்வாதம் வாய்த்தது. விபுலாநந்த அடிகள் புலவர்மணியின் ஆசிரியருமாவார். இத்தகையதோர் அன்புத் தொடர்பு அமைந்தமையினுற் போலும் புலவர்மணியின் தமிழ்ப் பகவத்கீதை வெண்பா ஒளிபெற்று விளங்குகின்றது. 1962இல் கருமயோகமும், 1974இல் பக்தியோகமும் வெளிவந்துள்ளன. 1976இல் ஞானயோகம் வெளிவருகிறது.

Page 15
XXviii
தமிழை முறையாகக் கற்றவரும், கவியாற்றலும், பேச்சாற்ற லும், கட்டுரையாற்றலும் மிக்கவருமான புலவர்மணியை "வெண் பாவிற் புலவர்மணி" எனப் பாராட்டுதல் பொருத்தமானதே என்பதற்குச் சான்ருக விளங்குகின்றது அவரது "பகவத்கீதை வெண்பா' வடமொழிப் புலமையின்றியே கீதையின் ஆழ்ந்த பொருளை வெண்பாவில் இனிதாயும், எளிதாயும், தெளிவாயும் வசப்படுத்திய அவரது அறிவாற்றலின் சிறப்பு மெச்சப்படத் தக்கதேயாம். கீதா சுலோகக் கருத்துக்களை உணர்ந்து வெண்பாக் களிலே தந்ததோடமையாது, எல்லோரும் எளிதில் விளங்கிக் கொள்வதற் கேதுவாக விளக்கக் குறிப்புக்களையும் தந்துள்ளார். சமயத்தையும் சமூகத்தையும் இணைத்துவைக்கும் நோக்கமைந்த இவ்விளக்கக் குறிப்புக்கள் இன்றைய காலச் சூழ்நிலையை மனத் திற்கொண்டு எழுதப்பட்டுள்ளன. சமுதாய விழிப்புணர்ச்சியும், மறுமலர்ச்சியும் ஏற்படுவதற்கு ஏற்ற விளக்கங்கள்.
பகவத்கீதையைச் சேர் சாள்ஸ் வில்கின்ஸ் என்பார் (Sir Charles Wilkins) ஆங்கிலத்தில் முதன்முதலாக மொழிபெயர்த்த போது அது குறித்து வாரென் ஹேஸ்ரிங்ஸ் (Warren Hastings) மேல்வருமாறு கூறினர் : “ ‘பிரிட்டிஷ் சாம்ராச்சியம் இருளில் இழக்கப்படும்போது, அதன் செல்வத்துக்கும் செழிப்புக்குமான மூலங்கள் நினைவுகூரப்படாதபோது, இந்நூலும் அது கொண் டுள்ள பாடங்களும் கோடிக் கணக்கான இவ்வுலக மக்களின் உள்ளங்களைத் தொடர்ந்து தூண்டிக்கொண்டிருக்கும்.”*
புலவர்மணி அரிதில் முயன்று முடித்துள்ள இந்நூலும் கோடிக்கணக்கான தமிழ் பேசும் மக்களின் உள்ளங்களைத் தொடர்ந்து தூண்டிக்கொண்டிருக்கும் என்று நம்புகிருேம். கீதாச்சாரியனுன கண்ணனின் உபதேசத்தால் அருச்சுனன் உண்மை ஒளியோடு மனவுறுதி பெற்றுத் தன் கடமையை நடு நின்று முடித்து இழந்த உரிமையைப் பெற்றன். தமிழ்மக்களும் சமநிலைநின்று தம் கருமங்களை உறுதியோடு நிறைவேற்றி இருக்கும் உரிமையையும் காத்து இழந்த உரிமையையும் பெற்று இனிது வாழ இந்நூல் உறுதுணையாவதாக.
22/1, பழைய கலகா வீதி, சு. வித்தியானந்தன் பல்கலைக் கழகப் பூங்கா, பேராதனை, 18-05-76.

e
பட்டிருப்பு மகாவித்தியாலய அதிபர் வித்துவான், பண்டிதர்,
வி. சீ. கந்தையா, B, o. L. அவர்கள் அணிந்துரை
உலகிலுள்ள சமய சாத்திரங்களுள், திருக்குறள், பகவத் கீதை, விவிலிய வேதநூல் ஆகிய மூன்றும் பல்வேறு மொழி களிற் பெயர்ப்புற்று விளங்கும் சிறப்புவாய்ந்திருப்பன. இவற் றுள் இந்துசமய சாத்திரங்கள் அனைத்தினதும் கருப்பொருள் தொகுப்புநூல் போன்று மதிக்கப்படுகின்ற பெருமையுடையதும், வடமொழியில் அமைவுற்றதுமான பகவத்கீதையானது, தான் பெயர்ந்து வழங்குறும் மொழி ஒவ்வொன்றிலும்கூடத் தனித் தனி பல்வேறு அறிஞர்களால், வேறுவேழுன விளக்கங்களோடு வெளிவந்து உலகை ஒளியுறுத்தும் ஒன்ருயுள்ளது. இந்தவகை யிலே தமிழில் மட்டும் பத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்களால் மொழிபெயர்க்கப்பெற்ற வெளியீடுகளையும், விளக்கங்களையும் பகவத்கீதையில் நாம் காணலாகும்.
கருகலான சமய சாத்திரமாகிய கீதையினை, இனிய இலக் கிய மெருகூட்டிச் சொல்வளமும் பொருள்வளமும் கனிந்த வெண்பாக்களாகப் படைத்து, முறையே கருமயோகம், பக்தி யோகம் என்ற இரு பாகங்களையும் அச்சேற்றி வெளியீடு செய்து ஞானயோகம் என்ற மூன்ரும் பாகமாக இதனை வெளிக் கொணருகின்ருர் "வெண்பாப் புலி யான ஏ. பெரியதம்பிப் பிள்ளை அவர்கள்.
கீதையின் பெருமையும் ; அதனை இவ்வாறு கவிதையும், விளக்கமுமாக யாத்து வெளியிடுதற்குரிய அவரது மேலான தகுதி, சீர்சால் சமத்துவநிலை, கீதையின் ஆழ்ந்தகன்ற நுண் பொருளை நன்கு விளங்கவும், விளக்கவும் வல்ல இணையற்ற பேராற்றல் முதலியவற்றில் ஒப்புயர்வற்று விளங்கும் புலவர். மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்களின் சிறப்பும் ; விளக்கம் வேண்டாத மலைவிளக்கனையவை. எனினும், புலவர்மணி அவர்க ளுடைய "ஞான யோகமாகிய இத் திருநூலுக்குச் சிறப்புரை யொன்று எழுதக் கிடைத்தமை எனது பெரும்பேறு என்று மட்டும் கருதியே சிறிது கூற முற்பட்டேன்.

Page 16
XXX
'தன்னுசிரியன், தன்னெடு கற்ருேன், தன்மாணக்கன்' முதலானேர் பேராசான் ஒருவருடைய நூலுக்கு உரைவளமோ, அணிவளமோ வழங்கத் தகுதியுடையவர்கள் என்பர். தொல் காப்பியத்து எழுத்தும், சொல்லும், பொருளும் கற்பித்து எனக்கு இலக்கண விளக்கஞ்செய்த பேராசான் கீதாஞானியாகிய இப் பெருமகனுர்.
கீதையிலுள்ள பதினெட்டு அத்தியாயங்களும் முறையே பதினெட்டு யோகங்கள் என்று மூலநூலுள் பெயர்பெறுவ. அவற்றை நான்கு யோசங்களாக அடக்கியும் கூறுவர். அவை கருமயோகம், இராஜயோகம், பக்தியோகம், ஞானயோகம் எனப்படும். ஆரம்பப் பகுதியாகிய கரும யோகத்தின் பரிணமமே இராஜயோகமாதலால் அவை இரண்டும் ஒன்றினுள் அடங்கப் பெறுதலே பெருவழக்காகும். இந்த நான்கு யோகங்களும் வளர்ச்சிக் கிரமத்தில் அரும்பு, மலர், காய், கனி போன்றன என்பர்.
* விரும்பும் சரியைமுதல் மெய்ஞ்ஞானம் நான்கும் அரும்புமலர் காய்கனிகள் அன்றே பராபரமே.”*
என்ற தாயுமான அடிகளாரின் வாக்கு இங்கே கருதத்தக்கது. கருமயோகமானது இராஜயோக முட்பட, பக்திக்கும் ஞானத் துக்கும் முறையே வழிசெய்வது.
இந்த இடத்தில், வேதாந்திகளுடைய அத்துவைத ஞான மார்க்கக் கொள்கையையும், சைவ நாயன்மார் காட்டிச் சென்ற சித்தாந்தச் சிவநெறி வளர்த்த பக்திவழியாற் பிறக்கும் துவைத ஞான மார்க்கக் கொள்கையையும் நாம் சிறிது சிந்தித்துப் பார்த்தல் நல்லதாகும். பக்தி மார்க்கத்தின் மிக உயர்ந்த நிலையிலே சீவான்மாவானது பரமான்மாவுடன் ஐக்கியமுற்றுப் பேரின்பத்தில் ஆழ்வுறும் இரண்டறக் கலக்கும் நிலையைச் சித்தாந்தச் சிவநெறி விளக்குகின்றதென்றும்; தியானத்தின் அதீத நிலையிலே இதே ஐக்கியத்தில் திளைக்கும் நிருவிகற்ப சமாதி நிலைக்கு வேதாந்த நெறி வழிப்படுத்துகிறதென்றும் கூறப்படுகின்றது.
இரண்டும் அனுபவம். இரண்டன்மை சித்தாந்தம், இரண் டின்மை வேதாந்தம். இவ்விரண்டு நிலையினையும் தனித்தனியே துய்த்து அண்மைக் காலத்தில் உலகுக்கு விளக்கிக் காட்டியவர் பூரீராம கிருஷ்ண பரமஹம்ச தேவர்.
"ஞானமார்க்கம் என்பது பிரமத்தைப் பற்றி வெறுமனே ஆராய்ச்சி செய்வதன்று; பரம்பொருள் உண்டென்னும் உத்தேச

xxxi
உணர்வோடு அன்புபூண்டு அறிவாராய்ச்சி செய்வதே ஞானி மார்க்கம். அவ்வாறயின், பக்திமார்க்கமும், ஞானமார்க்கமும் ஒன்றுக்கொன்று முரணுனவையே யல்ல" என்பது அம்மகா னுடைய கருத்து என்பதை நாம் அறிந்து பயன்கொள்ளுதல் கூடும். எவ்வாறயினும், ஞான நிலையே அதி உயர்ந்த சாதனை யாற் பெறப்படும் இறுதிநிலை யென்பது முடிபு. இதனை முறையே ஆதார பூர்வமாக விளக்குவது கீதையின் ஞானயோகப் பகுதி. பற்றற்ற கடமையைச் செய்வதன் வழியாக ஜீவாத்மா பர மாத்மாவுடன் ஐக்கியப்படுவதாகிய உயர்ந்த நிலையின் படி முறையான விளக்கம் அது.
ஆதிசங்கரரின் தோற்றத்துக்கு முன்னர், வேதத்தைப் பிர மாணமாகக் கொண்டவையும், கொள்ளாதவையுமாக எழுபத் திரண்டு மதங்கள் இந்தியாவில் மட்டும் நிலவின. அவற்றுட் சில, மன்னர்களின் செல்வாக்குக் கேற்ப வளர்ந்து மறைவன வாய் இருந்தவை. வேதகாலத்தில் அதிகம் பிரபலமடையாத தாய், ஆயினும், வாதராயணர் முதலிய மகரிஷிகள் பலராலும் போற்றப்பட்டதாய் விளங்கிய அத்துவைத வேதமார்க்கம் சங்கராச்சாரியருடைய தோற்றத்தோடு நிலைப்படுத்தப்பெற லாயிற்று. அதன் பின்னரே விசிட்டாத்துவைதமும், துவைத மும் இந்திய நாட்டிலே தோன்றி வளர்ந்தன எனலாம். எனி னும், இவை மூன்றும் ஞான நிலைக்கு வழிப்படுத்தும் வகையில் வேறுபாடற்றவையே என்பதைத் தெள்ளத் தெளியக் காட்டி வைத்தது பகவத்கீதை என்றே சொல்லல்வேண்டும்.
இத்தகைய கீதைச் செல்வத்தைத் தமிழ்மணம் கமழத் தக்கதாக நமக்குத் தந்துள்ள புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்களைப் பெற்றெடுத்தற்குத் தமிழினம் பெருந்தவம் செய் திருத்தல் வேண்டும். பகவத்கீதை வெண்பாக்களை மற்றை யோர்க்குத் தாம் படித்து விளக்கம் சொல்லும்போதும், அவ. ருடைய பிரதிகளிலிருந்து பாடல்களையும், அரிய விளக்கக் குறிப்புக்களையும் அவருக்கு நாம் படித்துக் காட்டும்போதும், தம்மை மறந்த ஆனந்த நிலையினை எய்தி, தாமே கீதாசிரிய ஞகப் பொலிந்து தோன்றும் ஒளிவளத்தைப் புலவர்மணியவர்க ளிடம் நான் பல சந்தர்ப்பங்களிற் கண்டுள்ளேன்.
**பகவத்கீதை என்னைத் தேடி வலியவந்த செல்வம்" என்று புலவர்மணியார் தமது பக்தியோக முகவுரையிற் கூறியிருப்பது முற்றும் பொருந்தும். இந்நாட்டில் விலைமதிப்பரிய வெண்பா யாப்பில் வெளிவரும் காலம் பகவத்கீதைக்கு வந்தபோது, யார் யாரையோ எல்லாம் அது தேடிப் பார்த்திருக்க வேண்டும்,

Page 17
xxxii
அல்லது புலவர்மணி அவர்களையே அது நோக்கிக் காத்திருந் திருக்கவேண்டும். காலம், நியதி முதலிய யாவும் பொருந்தி வந்ததும் கீதாசாரியனல், கீதா ஞானியிடம் கீதைச் செல்வம் இப்படிக் கவிதை செய்யுமாறு வலிய ஒப்படைக்கப்பட்டு விட்ட தென்றே யான் துணிந்து கூறுவேன்.
"வேறுவேருக வுள்ள பூதங்களில், வேறுபடாத அழியாத ஏக வஸ்துவை எதனுல் பார்க்கின்ருயோ அந்த ஞானமே சாத்வீகமானதென்று அறிக' என்ற கீதைப் பொருளானது இக் கவிஞர் மூலம் வெளிப்படும் அழகைப் பாருங்கள்.
" வேறுவே றய்ப்பிரிந்த வெவ்வே றுடல்தோறும்
வேறுபா டற்றவொரே மெய்ப்பொருளை - வேறின்றி ஒன்ருகக் கண்டே உணர்ந்தா னவனறிவே நன்றகும் சாத்விகஞா னம்’ (அத். 18. வெண்பா 20)
ஞானயோகப் பகுதியில் நிறைந்து காணப்படும் இவ்வாருன வெண்பாக்களைப் படிக்கும்போது சிறந்த இலக்கிய நூல் ஒன்றி னுள் திளைப்பதாக நம்மை எண்ணச் செய்கின்றது. இலக்கியப் புலவர்க்கு இலக்கியமாகவும், சமயவாணர்க்கு ஒரு சமய நூலாக வும், தத்துவ ஞானியர்க்கு ஒரு தத்துவக் கருவூலமாகவும் மிளிரும் இப் பெருநிதியத்தை நமக்குத் தந்து அழியாத பெரும் புகழ் கொண்டுள்ளனர் புல வர் மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்கள். தமிழன்னையின் பொன்முடிமீது சிறந்ததோர் ஞான மணியினைப் பதித்து வைத்தமை போன்ற இந்த அரிய செயலுக் காகத் தமிழுலகு இன்னருக்கு என்றும் நன்றிக்கடன் பூண் டுள்ளது.
புலவர்மணி அவர்கள் நிறைந்த சுகபெலத்துடன் நீண்ட காலம் வாழ்ந்து இன்னும் பல அரிய பெரிய நூல்களைத் தமிழ் அன்னையின் திருவடிகளிற் சமர்ப்பிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல திருவருளை வாழ்த்தி வணங்குகின்றேன்.
'Ji,L-di)', வி. சீ. கந்தையா 15, மாடி வீதி,
மட்டக்களப்பு
6 - 3 - 1976.

பதின்மூன்றம் அத்தியாயம் சேத்திர சேத்திரஞ்ஞ விபாக யோகம்
பொருட் சுருக்கம்
குணமயமாம் தேகமதைக் கூடியதன் சார்பால் குணமயமாய் ஆடிகின்ற கூத்தன் - குணங்கடந்து தன்மயனுய்த் தான்வேறு தன்னுடல்வே றென்றுணர்ந்தால் சின்மயத் துள் ஒன்றவான் சேர்ந்து,
உருவம், அருவுருவம், அருவம் என்னும் மூன்று நிலையில் வைத்து அன்பர்கள் எம்பெருமானைத் தியானிக்கின்ருர்கள். உடற்பற்று உடையவர்களுக்கு உருவமும் அருவுருவமும் தகுதிக் கேற்ற வணக்கமுறையாகும். ஆலயங்களும், இலிங்கங்களும், பலபேதமான மூர்த்தி வடிவங்களும், இயற்கைத் தோற்றங்களு மாகிய தெய்வீக அமைப்புகள் இவ்வணக்க முறைக்கு ஆதார மாகும். இது சகுண வழிபாடு. பெரும்பாலும் மக்களிடையே பிரபலம் பெற்றுள்ளது இவ் வழிபாட்டு முறையே. சிற்பம், ஒவியம், நடனம் என்னும் எல்லாக் கலைகளும் சகுன வழி பாட்டில் நின்றே தோன்றியனவாகும்.
சகுண வழிபாடு தனு கரண புவன போகங்களுக்கு உட்பட்டு நின்று செய்வது. நிர்க்குண வழிபாடு இவற்றுக்கு அப்பாற்பட்டது. நிர்க்குணப் பிரமம் தனது சீவ சத்தியின் அம்சமாகிய சீவாத்துமாவைக் குணபந்தத்திலிருந்து விடுவித்துத் தன்னேடு ஐக்கியப்படுத்துவதற்காகவே சகுணப் பிரம நிலையினை அடைகின்றது. இதனல், படைத்தல் முதலிய ஐந்தொழில் களும் நிகழ்கின்றன. சகுணப் பிரமம் அண்ட சராசர மெங்கும் கலந்து நிற்கின்றது. இது ஐசுவர யோகம் எனப்பெறும்.
இந்நிலையினை அறிந்து வணங்குதற்குப் பிரகிருதி, புருஷன், சேத்திரம், சேத்திரஞ்ஞன் என்பவற்றின் இயல்புகளை மக்கள் பகுத்தறிதல் அவசியமாகும். இதுவே விஞ்ஞானம் என்பது. பிரகிருதி யென்பது மாயை. இது இயற்கை யெனவும் பெயர் பெறும். சடதத்துவங்கள் இருபத்து நான்கும் பிரகிருதியி லிருந்து உண்டாகின்றன. பிரகிருதி தத்துவங்களிலும் மேலானது

Page 18
2 பகவத்கீதை வெண்பா
புருடதத்துவம் என்னும் சீவன். சேத்திரம் என்பது உடல் . இது சடதத்துவத் தொகுதியால் உண்டாவது. பரப்பிரமத்தின் சீவசத்தியின் அம்சமான சீவன் உடலாகிய சேத்திரத்தினுள்ளே குணபந்தப்பட்டு நிற்கும் நிலையிலே சீவாத்துமா எனப்படும்.
சகுண வழிபாடு செய்வோர் கருமயோகம், பக்தியோகம் என்னும் நெறிகளில் நின்று தியானத்தால் குணபந்தம் தீர்ந்து சீவாத்தும தரிசனம் என்னும் தன்னிலையைக் காண்கின்றர்கள். தன்னிலையை அடைந்தவர்கள் சீவன்முத்தர்கள்.
சகுணப் பிரம ஐக்கியம் பெற்ற சீவன்முத்தர்கள் நிர்க்குண வழிபாடாகிய வேதாந்த விசாரத்தில் நிலைபெற்றுக் குளுதீதர்க ளாகின்றனர். இவர்கள் ஆன்மாவால் ஆன்மாவைத் தரிசிக் கின்ருர்கள்.

பதின்மூன்றம் அத்தியாயம் சேத்திர சேத்திரஞ்ஞ விபாக யோகம்
அருச்சுனன் : கேசவா ஈதருள்வாய் கேட்கும் விருப்புடையேன் யாது பிரகிருதி யார்புருடன்-தேசிகா சேத்திரம்யா தார்சேத் திரஞ்ஞன் மெய்ஞ் ஞானமெது ஏத்துமுயர் ஞேய மெது?
கேசவ மூர்த்தியே, எனது ஞானகுருவே, பிரகிருதி யாது? புருடன் யார்? சேத்திரம் யாது? சேத்திரஞ்ஞன் யார்? உண்மை யறிவு எது? மெய்ப்பொருள் யாது? இவற்றைக் கேட்கும் விருப் புடையேன். உரைத்தருள்க.
விபாகம் என்பது சேத்திரம், சேத்திரஞ்ஞன் என்னும் இரு பொருள்களையும் வெவ்வேறு பகுத்தறிதல். யோகம் என்பது பேறு; பகுத்தறிவு கைகூடுதல். வி- வெவ்வேறு. பாகம்-பகுத் தறிதல்,
கேசவன் - கதிர் மதிகளின் ஒளியைக் கேசமாகக் கொண்ட வன் ; ஒளிக்கு ஒளியான பரஞ்சோதி. கேசம் - சிகை, கூந்தல். தேசிகன் - ஞானகுரு. அத். 2 7.
க்ஷேத்திரம் என்னும் சம்ஸ்கிருத பதம் கேத்திரம், சேத்திரம் எனத் தமிழில் வழங்கும். பகவானின் சொற்கள் அழகு, இனிமை, தெளிவு, உண்மை என்பன அமைந்த திருவாய் மொழிகள். அச் சொற்களைக் கேட்டுக்கொண்டிருக்கும் செவ்வி பெற்ற பார்த்தனின் உள்ளமும் செம்மைபெற்றுவிட்டது திருவின் கேள்வனகிய தன் குருவின் வாசகத்தினைக் கேட்பதில் அவனுக்கு ஆர்வம் பொங்குகிறது. பார்த்தனின் பல கவர்பட்ட மனம் கேள்வியறிவால் ஒருமுகப்படும் நிலையினைப் படிப்படியாக அடைகின்றது. அத். 10 : 14, 18 . அத். 18 : 72, 73.
ஞேயமென்பது ஞானத்தால் அறியப்படும் பொருள்; நிர்க் குணப் பிரமம். நிர்க்குணப் பிரமத்தில் நின்றும் தோன்றியது சகுணப் பிரமம். தனு கரண புவன போகங்களையும் சைவம் முதலாய அளவில்லாத சமயங்களையும்; மூர்த்தி தலம் தீர்த்தம் முதலிய சமய சாதனங்களையும் தந்து நிற்பது சகுணப் பிரமம். நிர்க்குணப் பிரமம் சமயங் கடந்த ஞான சமரசப் பொருள்.

Page 19
4 பகவத்கீதை வெண்பா
கண்ணபிரான் :
தேவிகுந்தி மைந்தாகேள் சேத்திரந்தான் இத்தேகம் யாவன் இதனை இனிதுணர்ந்தான் - பூவுலகில் சேத்திரஞ்ஞனென்றவனைச் செப்புவார் தேர்ந்ததனுட் சூத்திரத்தைக் கண்டார் தொகுத்து. 2 குந்திதேவியின் மைந்த, இதனேக் கேள். சேத்திரம் என்பது இத்தேகம். எவன் இதனை நன்முக உணர்ந்தவனே அவனைச் சேத்திரஞ்ஞன் என்று கூறுவ்ர் அதன் கூறுபாடுகளை மாறுபா டின்றிக் கண்ட மெய்ஞ்ஞானிகள்,
சேத்திரம் என்பது நிலம். இங்கே நிலம்போன்ற உடலுக் காயிற்று. உவமை ஆகுபெயர். நிலம் பொன்னும் பொருளும் விளைவது; உடல் வினை விளைவது; நிலம் முயற்சி செய்து பாதுகாக்கப் பயன்தருவது; உடலும் பேணி வளர்த்துப் பாது காக்கப் பயன்த்ருவது.
குந்திமைந்தா என்பது பயன்கருதிய விளி. அது நிலநலம்
குறித்து நின்றது. நிலம் நன்ருயின் அதிலிட்ட வித்து அதிகம் பயன்தரும்; நிலம் தீதாயின் வித்து நல்ல பயன்தராது. நிலம் விலைமதித்தற்கு அரியது. வித்து விலைமதித்தற்கு எளியது. குந்திதேவியென்னும் சேத்திரத்தில் இந்திரன் இட்ட வித்து வீரப் புதல்வனகிய வில்விசயன இம் மேதினிக்கு ஈந்த அருமை நோக்கி எம்பெருமான் குந்திமைந்தா எனத் தாய்க்கு முதன்மை தந்து கூறுகின்றர். கர்ப்பாதானம் வேள்விக்கு நிகரானது,
மட்டக்களப்பு மாநாட்டிலே தாய்வயிற்றுக்கு முதல் மதிப்புக் கொடுப்பது பெருவழக்கில் உள்ளது. அது விதியுமாகக் கொள்ளப் படுகின்றது. வயிற்றுவார் என்னுஞ் சொல்லால் இம் மதிப்பு அறிதற்குரியது. வயிற்றுவார் என்பது தாய்வழி. ஒருவரது குடியுரிமை தாய்வழி கொண்டு வழங்கப்படுவது இந்தாட்டு மரபாகும். இது ஒரு சிறந்த வழக்காறு.
'தாயிற் சிறந்தொரு கோயிலு மில்லே' என்னும் பழமொழி இதற்குச் சான்ருகின்றது. கோயில் என்பது சேத்திரம், தலம், நிலம். தாயின் அம்சம் சேத்திரம் அல்லது உடல், தந்தை யின் அம்சம் சேத்திரஞ்ஞன் அல்லது சீவன், சேத்திரமும் சேத்திரஞ்ஞனும் சேர்ந்த கூட்டமே பிறப்பாகும். அத். 13:27, அத், 14 : 3-4.

ஞான யோகக் 5
இறைவன் நன்ருகப் படைத்த உடம்பை இனிதென உணர்தல் வேண்டும்; அதை நன்ருக வளர்க்கவேண்டும்; நல்ல நோக்கத்துடன் வளர்க்கவேண்டும்; உணவு செயல்களால் உபாய மாக வளர்க்கவேண்டும். நல்ல வழிகளிற் செலுத்தவேண்டும். தனு கரண புவன போகங்கள் ஆன்மாக்களுக்கு இறைவன் அருளிய அருட்கொடையாகும். இந் நான்கையும் நன்கு பயன் செய்தால் வாழ்வு செழிக்கும். அறியாமை யிருள் விடியும்; ஆன்ம விடுதலை கைகூடும். உடம்பு ஒரு தரும சாதனம். தருமம் கருமம். உடம்பை இழிவாகக் கருதற்க.
* உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.”
" உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டானென்று உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.” (திருமந்திரம்)
சேத்திரங்க ளெங்குமெனைச் சேத்திரஞ்ஞ னென்றுஞ்சீ வாத்துமன மென்றும் அறிவாய்நீ-பார்த்தா
உடல்வேறுயிர்வே றெனுமுணர்வே ஞானம் திடமாமென் கொள்கையிது தேர். 3.
அருச்சுன, எல்லா உடல்களிலும் என்னையே சேத்திரஞ்ஞ னென்றும் சீவாத்துமாவென்றும் அறிந்துகொள். உடல் வேறு: உயிர் வேறு என்று உணரும் உணர்வே உண்மை அறிவாகும். இது எனது திடமான கொள்கை,
குணங்கடந்த பரமாத்துமாவின் அம்சமே சேத்திரஞ்ஞன். குணமயக்கிற் சிக்குண்டு சரீரத்திற் கிடக்கும் நிலையிலே அது சீவாத்துமா எனப்படும். குணமயக்கில் நின்றும் விடுபட்ட நிலையிலே அது சீவாத்தும பேதம் நீங்கி தனது முதற்பொரு ளாகிய பரமாத்துமாவுடன் அபேதமாக ஒன்றிவிடுகின்றது. நித்தியமான சீவாத்துமா நித்தியமான பரமாத்துமாவின் வேருயிருக்கமுடியாது. வேருயிருந்தால் அது நித்தியமாகாது. அத். 15 : 7, ܖ - ܗܝ
சீவாத்துமாவின் உள்நாடு சின்மயமான பரமாத்மபதம். அதன் வெளிநாடு குணமயமான பிரகிருதி காரியமாகிய வானுலகம், மண்ணுலகம் முதலியன. சீவாத்துமா சகுணப் பிரம மாகிய குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டு அதிபரிடம் "பாஸ்

Page 20
6 பகவத்கீதை வெண்பா
போட்டும், "விசா”வும் பெற்றுப் பிரபஞ்சமாகிய வெளி நாட்டுக்கு அறிவுச் சுற்றுலாவின் பொருட்டு வந்துள்ளது. "பாஸ்போட் சரீரம். "விசா ஆயுள்.
"விசா" முடிந்ததும் "பாஸ்போட்' வெளிநாட்டிற் செல்லாது போய்விடும். உடனே சீவாத்துமா தனது உள்நாடாகிய பரமாத்ம பதத்துக்கு மீள்கின்றது. விட்டகுறை தொட்ட குறை இருந்தால் மீண்டும் குடியகல்வுச் சுற்றுலாத் தொடங்கும். இதற்கு முடிவு காண்பது எல்லார்க்கும் எளிதன்று. அத். 15: 3:
இனியருட் கடலே ஏழையேன் என்னுல் இங்கொரு செயலிலை; பயண அனுமதிச் சீட்டும் செலாதினி, ‘விசாவும்
முடிந்ததென் றறிவிலேன் இருந்தேன்; புனிதனே எனது ‘விசா"வினை நீட்டிப் புதுப்புது வினைசெயப் பணிப்பாய் உனதுபே ரறிவின் முன்புசூ னியம்யான்;
உணர்கிலேன் உன்விளை யாட்டே. (ஏ. பெ.) உடல் வேறு; உயிர் வேறு என்பது திடமான பகுத்தறிவுக் கொள்கை; எப்போதோ நிரூபித்து முடிந்தது. அத். 13: 5.
சேத்திரம்யா தெவ்வகைத்து சென்றுதிரிந்தஃதடையும் மாற்றமெவை தோற்றும் வரிசையெது-மாற்றமிலாச் சேத்திரஞ்ஞன் யாரெத் திறத்தினனென்றேதொகுத்துச் சாற்றுவன் யான் கேட்கசெவி சாய்த்து. 4 பார்த்தா, சேத்திரம் என்பது யாது? அது எவ்வகைப் பட்டது? அது சென்றடையும் வேறுபாடுகள் எவை? அவை தோற்றும் வரிசைக் கிரமம் எது? மாறுபாடற்ற சேத்திரஞ்ஞன் என்பான் யாவன்? அவன் எத்திறத்தினன் ? என்று எல்லா வற்றையும் சுருக்கமாகச் சொல்கின்றேன்; கேள்.
இச் செய்யுளின் பொருட் பகுதிகளை 6ஆம், 7ஆம் செய்யுள்
களிற் காண்க. நீண்ட பொருளாதலின் காலமும், இடமும், கேட்போனது நிலைமையும் நோக்கிச் சுருக்கமாக உரைக்கின்ருர்,
ஞான முனிவோரால் நான்மறையால் வெவ்வேழுய் ஏனைப் பலவாய் இனிதிசைத்த-ஞானமிது ஏதுக்க ளாற்பிரமம் ஈதென்னும் சொற்பதத்தால் சாதிக்கப் பட்டுள்ள தால். 5

ஞான யோகம் 7
பரமாத்தும தரிசனம் பெற்ற முனிவர்களாலும், நான்கு வேதங்களாலும், வெவ்வேருகவும், பலவிதமாகவும், இனிதாக இசைக்கப்பட்டுள்ள இவ்வுண்மை, பிரமாணங்களாலும் பிரமத் தைச் சுட்டிக்காட்டுகின்ற சொற்களாலும் முன்பே நிலைநாட்டப் பெற்றுள்ளது.
சேத்திரம், சேத்திரஞ்ஞன் என்னும் பொருள்பற்றிய இந்த ஞானம் அனுபவ சாதனம். இதனை உணர்தற்கு உலகம், உயிர், இறைவன் என்னும் முப்பொருள்களையும் அனுபவ வாயிலாய் உணர்ந்த சத்தியஞான தரிசனிகளின் திருவாக்குகள் உள்ளன: மனித குலத்தின் வெவ்வேறு மனப்பாங்குகளுக்கு ஏற்றனவாக அருளாளர்கள் கூறிவைத்த அருமறைகள் உள்ளன; இவற்றைத் தடைவிடைகளாற் சாதித்து நிலைநாட்டிக் காட்டிய ஆன்ருேர் வாக்குகள் உள்ளன. இச் சாதனங்க ளெல்லாம் ஆதியும் அந்தமும் பொருள் ஒன்றே சொற்பிரயோக வேறுபாடுகளால் இடையிலே பலவேறு விதமாகத் தோன்றுகின்றன. சொற்க ளால் நாம் குழம்புதல் தகாது; நடுநிலையில் நின்று பொருள் கண்டு தெளிதலே தகுதி. அத். 2 : 52-53.
இசைத்தல் என்பது ஒலியை இசையோடு சேர்த்துச் சொல்லு தல். அதுதான் இயலிசைப் பாட்டுக்களால் உபதேசித்தல், பாட்டு நிலையானது; நினைவிற் பதியத்தக்க அமைப்புள்ளது: இனியது; அறிவும் உணர்ச்சியும் ஒருங்கே ஊட்டுவது. கவி நுட்பம் கண்ட நம் முன்னேர் நிலையான உண்மைகளை அழியாத அழகுள்ள பாட்டுக்களில் நேரிய கூரிய சீரிய நோக்குடன் பாடி வைத்தார்கள். பாட்டுக்கள் நமது நிலையான சொத்து. சொத்து சொந்தம்.
மழலை பேசும் அழகு மறைந்திடும்
வளரும் பிள்ளை அழகு மறைந்திடும் பழகுங் காளை அழகு மறைந்திடும்
பருவக் கன்னி அழகு மறைந்திடும் சுழலுங் காலச் சுழியில் அகப்படாச்
சுவைகொள் இன்பக் கவியழ கென்றுமே அழிவி லாத அழகெனும் உண்மையை
அறிதல் யார்க்கும் அழகென லாகுமே. (ஏ. பெ.) வேதம் ஆகமம் முதலியன எல்லாம் கேள்வி முறையாக நிலைபெற்றுள்ள செய்யுள் தொகுப்புகளே. செய்யுள்களை மனனம் பண்ணி ஒப்புவித்தல் கிழக்குலகக் கல்விமுறையின் உயிர் போன்றது. இம் முறையினல் வாழையடி வாழையாக வந்து நிலைபெற்றுள்ள உண்மைக் கவிதைகளே இன்று உலகப் பொது நிதியாகப் பயன்படுகின்றன.

Page 21
8. பகவத்கீதை வெண்பா
செய்யுள்களை மனனம் பண்ணுதல் வீண் காலக் கழிவாம் என்போர் சற்றே பொறுத்துச் செய்யுள் அமைப்பினை நன்ருக அறிந்துகொள்வாராயின் அவ்வாறு சொல்லார். ஒருவருக்கு எவ்வளவு செய்யுள் மனப்பாடமோ அவ்வளவுக்கு அவரது உரை நடை அழகாக வந்தமையும் என்பது கீழைத்தேச இலக்கியங் களிலும் மேலைத்தேச இலக்கியங்களிலும் நன்கு பழகிய விபு லாநந்த அடிகளார் போன்ற நல்லறிவாளர் கண்ட முடிபாகும். வாக்கிய அமைப்புக்களெல்லாம் செய்யுள்களிலேதான் நன்ருக அமைந்துகிடக்கின்றன.
கீதையைச் செய்யுள் நடையிற் படித்தால் அது தமிழ் மக்களின் நாவிலும் மனத்திலும் எளிதாக நன்கு நிலைபெற்று விடும்.
மெய்ப்பொருளின் இயல்பினை மேலோர் இரண்டு நிலையில் வைத்து விளக்குகின்றர்கள். ஒன்று தடத்த நிலை; மற்றது சொரூப நிலை. இவை முறையே தடத்த லட்சணமென்றுஞ் சொரூப லட்சணமென்றுஞ் சொல்லப்படும். தடத்த லட்சணம் சகுணப் பிரம நிலையினைக் கூறுவது. அது ஒரு காலத்தில் உள்ளதும் ஒரு காலத்தில் இல்லாததுமாய் நிற்கும் நிலையாம். பரப்பிரமம் கருணையே உருவமாகப் பல்வேறு பேதங்களாகத் தோன்றி நின்று அருளுகின்ற சகுணப்பிரம நிலையினை உள்ளது என்னும் சொல் குறிக்கும். சகுணப் பிரமம் நிர்க்குணப் பிரமத்துட் கலந்து மறையும் நிலையினை இல்லது என்னும் சொல் குறிக்கும். அத். 13 14-18.
சொரூப லட்சணம் சுவரூப லட்சணம்; பிரமம் மாற்றமின்றி ஒன்றேயாய் நிற்கும் நிர்க்குணப் பிரம நிலையினைக் கூறுவது. இது உள்ளது இல்லது என்னும் சொற்களாற் சொல்லமுடியாத நிலை. "கற்பனை கடந்த சோதி ". அத். 13:13.
'ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க " (திருவாசகம்)
ஐந்துபெரும் பூதம் அகங்காரம் புத்தியிவை முந்தும் பிரகிருதி மூலமுடன்-இந்திரியம் பன்னென்றும் ஐம்புலனும் பார்த்தா உடலமைப்பில் இன்னுமுள சொல்வே னெடுத்து. 6 பார்த்தா, பஞ்சமகா பூதங்கள், அகங்காரம், புத்தி, மூலப் பிரகிருதி, பதினெரு இந்திரியங்கள், ஐம்புலன்கள் என்னும் இவற்றுடன் உடலமைப்பில் இன்னும் சில உள்ளன. அவற் றையும் சொல்கின்றேன்.
ஐந்து பெரும் பூதங்கள் சப்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்பன. சப்தம் குக்கும ஆகாயம் ஒசை. பரிசம்

ஞான யோகம் 9.
சூக்கும வாயு ஊறு. ரூபம் சூக்கும தேயு; ஒளி. ரசம் குக்கும அப்பு: சுவை. கந்தம் சூக்கும பிருதுவி; நாற்றம். இவை பஞ்ச தன்மாத்திரைகள் எனவும் பெயர் பெறும்.
அகங்காரம் யான் எனது என்னும் எண்ணத்துக்குக் காரண மான தத்துவம். இது செயல்வடிவானது. புத்திதத்துவம் நிச்சயரூபமானது. இது மகத்தத்துவம் எனவும் சமட்டிபுத்தி எனவும் வழங்கும். பிரகிருதி மூலம் மூலப்பிரகிருதி. இரு சொற்கள் முன்பின்னக மாறித் தொடர்ந்து நின்றன. இலக் கணப் போலி. பிரகிருதி, இயற்கை, தோன்ரு நிலை, மாயை என்பன ஒருபொருட் சொற்கள். மண், நீர், அனல், காற்று, வான், மனம், புத்தி, அகங்காரம் என்னும் எட்டும் அபரப் பிரகிருதி எனப்பெறும். இவற்றை எனது இயற்கையெனப் பகவான் கூறுகின்ற இயைபும் அறிதற்குரியது. அத். 7: 4, 14.
இந்திரியம் பதினென்று ! மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஞானேந்திரியங்கள் ஐந்து; வாக்கு, பாணி (கை), பாதம், பாயுரு (ஆசனத்துவாரம்), உபத்தம் (குறி) என்னும் கன்மேந்திரியங்கள் ஐந்து; மனம் என்னும் ஒன்று.
மூலப் பிரகிருதியில் நின்று புத்தியும், புத்தியில் நின்று அகங்காரமும், அகங்காரத்தில் நின்று மனமும், இந்திரியம் பத்தும், பஞ்சமகா பூதங்களும் முறையே தோன்றும்,
புலன்கள் ஐந்து சப்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்பன. இவை இந்திரிய விடயங்கள். எல்லாமாக இருபத்து நான்கு தத்துவங்கள் காண்க. புருடதத்துவம் இவற்றுக்கு அப்பாற்பட்டது. புருடதத்துவ மின்றித் தனுகரணங்களுக்குப் புவனபோகங்கள் இல்லை. அத், 13 : 20-21. அத். 7 : 5-6.
மூலப்பிரகிருதி (சித்தம்) (1) மகத் (புத்தி) (1)
அகங்காரம் (1)
தைசதம் 60panu9irrifle75ub பூதாதி
கன்மேந்திரியம் (5) மனம் (1) ஞானேந்திரியம் (5)
(தன்மாத்தினர) ಆತ್ಯಹರು ಎಗ್ಗಿಸಿ ரூபம் ரசம் கந்தம் (5) w | (தூலபூதம்) ஆகாயம் வாயு தேயு அப்பு பிருதுவி (ச)

Page 22
10 பகவத்கீதை வெண்பா
மூலப் பிரகிருதி முதல் பிருதுவி ஈருகவுள்ள இருபத்துநான்கு தத்துவங்களும் தோற்றும் வரிசைக் கிரமத்தை மேற்கண்டவாறு அறிக.
பூதங்களின் பெயர் முதலியன பெயர்: பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம். குணம் : கடினம், குளிர்ச்சி, சூடு, சலிப்பு, அகற்சி. தொழில்: உரம் தரல், பதஞ்செய்தல், ஒன்றுவித்தல், திரட்டல்
இடந்தரல். வடிவம்: நாற்கோணம், இருகோணம், முக்கோணம், அறு
கோணம், வட்டம்.
நிறம்: பொன்மை, வெண்மை, செம்ம்ை, கருமை, புகைநிறம்.
உன்னும் விருப்புவெறுப் புள்ளஞ்சே ரின்பதுன்பம் துன்னுமெழு தாதின் தொகையுடனே-மன்னும் உணர்வோ டுடலுறுதி ஒன்றியைந்த கூட்டம் தனுவாகும் சேத்திரமஃ தாம். 7
விருப்பு வெறுப்பு, இன்ப துன்பம், சப்த தாதுக்களின் தொகுதி, மனவுணர்வு, உடலுறுதி என்பன ஒன்று சேர்ந்த கூட்டமே உடம்பாகும். அதுவே சேத்திரம்.
சப்ததாதுக்கள் : இரத்தம், மாமிசம், மேதை (கொழுப்பு), அஸ்தி (எலும்பு), மச்சை (பித்தநீர்), சுக்கிலம், தோல். ஆண் களின் உடலிலுள்ளது சுக்கிலம், பெண்களின் உடலிலுள்ளது சுரோணிதம். சுக்கிலம் சீவ வடிவம். சுரோணிதம் பிரகிருதி வடிவம்.
உணர்வு மன இந்திரிய உணர்வு; மனேவிருத்தி, உடம்பி னுள்ளே அதனின் வேருக ஆன்மாவென ஒரு பொருள் உள்ள தென்னும் அறிவுக்கு மன இந்திரிய உணர்வுகள் காரண மாகின்றன. அத். 13: 15. சிவஞானபோதம் சூத்திரம் 3.
அவயவக் கூட்டத்தால் உடம்பு நன்ருக அமைந்தாலும் மன உணர்வும் உடலுறுதியுமின்றி அது ஒழுங்காக இயங்காது; பயன் தராது.
6ஆம், 7ஆம் செய்யுள்களால் உடலின் அமைப்புக் கூறப் பட்டுள்ளது. அடுத்து வரும் ஐந்து செய்யுள்களால் சேத்திர சேத்திரஞ்ஞ ஞான சாதகன் சாதனையின்போது கடைப்பிடித்தற் குரிய நெறிமுறைகள் கூறப்படுகின்றன.

ஞான யோகம் • , 11
தன்னைத்தன் செய்கையினைத் தான் புகழாத் தன்மைபிறர்க் கின்னசெய் யாமையெங்குந் தன்னடக்கம்-நன்னேர்மை சற்குருவைச் சேவித்தல் சாந்திமனத் தூய்மைதிட
புத்தியுடன் நிற்கை பொருள். 8
தன்னையும் தன் செய்கையினையும் தானே புகழ்ந்து பேசாத தன்மை, பிற உயிர்களுக்குத் துன்பஞ் செய்யாமை, எவ்விடத் தும் தன்னடக்கம், மனநேர்மை, குருசேவை, பொறுமை, அகத் தூய்மை, திடபுத்தி ஆகிய இவற்றில் நிலைநிற்றல்.
தற்புகழ்ச்சி என்னைத் தெரியுமா? நான் சாது; யோகி; தியாகி; வள்ளல் என்பன போன்ற தன் மேம்பாட்டுரை. தன் செய்கையினைத் தானே புகழ்தல் "நான் அது செய்தேன்; இது செய்தேன்; பல செய்தேன்’ என்னும் சுயவிளம்பரம். அத். 16:15திடபுத்தி துன்பம் வரும்போது துளங்காத புத்தி பலரும் பலவாருகச் சொல்லும் சொற்களாற் குழம்பாத புத்தி அத். 2; 53. எங்கும் தன்னடக்கம் தனிமையிலும் மக்கள் மத்தியிலும்; உபசார அபசாரங்களிலும் எங்கும் மனம் வாக்குக் காயம் அடங்கியிருத்தல். குருசேவை செய்யும் சீடன் குருவைப் போல் தன்னை ஆக்கிக்கொள்கின்றன். w
ஐந்துசுக போகம் அகத்தொழிதல் நானென்றே முந்து மகந்தைவிடல் முன்வினையால்-வந்த பிறப்பிறப்பு மூப்புப் பிணிதுன்ப மூலம் மறப்பின்றிச் சிந்தித்தல் மற்று. 9 ஐம்புல நுகர்ச்சிகளில் மனம் விரும்பாதொழிதல், அகந் தையை விடுதல், முன்வினையால் வந்த பிறப்பு, மூப்பு, பிணி, துன்பம், இறப்பு என்பவற்றின் மூல காரணத்தை மறவாமல் நினைத்தல்
நுகர்ச்சிகளை விடுதல் மாத்திரம் போதாது; அவற்றின்மீது செல்லும் விருப்பத்தையும், முன்னனுபவச் சுவையையும் படிப் படியாக மறக்கவேண்டும். அத். 2: 59. அத். 3 8. புல நுகர்ச்சிகளின் மயக்கத்துக்கு மூலகாரணம் குணச்சார்பே, ஆணவச் சார்பு என்பதும் இதுபோன்றதே. இச்சார்புக்குப் பக்கச்சார்பாக அகந்தையும் முன்னின்று தூண்டிவிடுகின்றது.
குணமயக்கம் ஒரு வெறிபோன்றது. வெறி நீங்கினல் மதி தெளியும்; நெறி தெரியும். மது வெறியில் இருப்பவனை மது செயற்படுத்துகின்றது. மதுமயக்கம் நீங்க மதிமயக்கமும் உடன் நீங்குகின்றது. மதுமயக்கம் நீங்கிய பின்பு ஒருவன் தான்

Page 23
2. பகவத்கீதை வெண்பா
பட்டதும் கெட்டதும் பத்தெட்டு இறுத்ததும் தன்னலன்று: மதுவாலென்று அறிகின்ருன், இந்த அறிவு நிலைபெற்ருல் மதுவின் பிடியிலிருந்து அவன் முற்ருக விடுபட்டு மனித ஞகின்றன்.
குணமயக்கில் இருப்பவனைக் குணம் தொழிற்படுத்துகின்றது. குணமயக்கம் நீங்கும் வரையும் குணம் செய்யும் தொழிலைத் தன் செயலென்று எண்ணுகின்றது சீவாத்துமா. குணமயக்கம் நீங்கியபின் செய்செயல்கள் யாவும் குணச்செயலே யென்று தெளிந்து அத் தெளிவிலே திடம்பெற்று நிற்கின்றது. இந்த அசையா நிலையால் குணபந்தம் தீரச் செயற்பந்தமும் உடன் தீர்கின்றது. அத். 3 : 27-28. அத். 14 : 23.
பற்று நெகிழ்தல்மனைப் பாசபந்தம் தீர்ந்திருத்தல் உற்ற வெறுப்போ டுவப்பிவற்ருல்-பெற்ற விளைவி லொருபக்கம் வீழா தவற்றில் தளர்வின்றி நிற்றல் சம முற்று. 10 பற்றுள்ளம் படிப்படியாக மறைதல், மனைவிமக்கள், வாழும் மனை என்கின்ற அபிமானத் தொடர்பு அற்று உடனுறைந் திருத்தல், விருப்பு வெறுப்புக்களின் மாருன விளைவுகளில் எடு படாமல் தளர்வின்றிச் சமநிலையில் நிற்றல்,
துறவுள்ளத்துடன் மனைவிமக்கள் மத்தியில் வாழ்க்கை நடத்தும் நிலையினை அடைதல்; விருப்பமுள்ளது கிடையாத போதும், விருப்பமில்லாதது கிடைத்தபோதும் மனச் சமா தானமாயிருக்கப் பழகுதல் ஆகிய நல்லியல்புகளிலே சாதகன் இடையருது முயலுதல் வேண்டும். அத். 5 ; 20.
மனை வாழ்க்கையிலே பிறர் பொருட்டுத் தாம் செய்யவேண் டிய கடமைகள் ஒருவருக்கு இருக்கையில் அக்கடமைகளை அவர் கைவிடுதல் தருமமன்று. பற்றற்ற நிலையில் நின்றுகொண்டு அவைகளை நிறைவேற்றுவதுடன் சேத்திர சேத்திரஞ்ஞ ஞான சாதனையிலும் ஈடுபடுதலே நல்லது. கடமையைக் கைவிடுதல் துறவாகாது. அத். 18 7.
எல்லாரும் வீட்டைவிட்டு வெளியேறித்தான் துறவிகளாக வேண்டு மென்பது எம்பெருமான் கருத்தன்று. பகவானின் வாழ்க்கையே இதற்கு உதாரணம். மகரிஷிகள் பலர் தம் தரும பத்தினிகளுடன் வாழ்ந்துகொண்டே ஞான வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர். சனகர் அரசரா யிருந்துகொண்டே அதிதீவிர ஞானியாகவும் வாழ்ந்துவந்தார். பரமாத்துமாவே கீதையில் இதை உதாரணமாகக் காட்டுகின் ருர். அத். 3: 20.

ஞான யோகம் l حه
வேத உபநிடதம் முதலியன தோன்றுதற்கு ரிஷிபத்தினிகள் ஆற்றிய புனிதமான சேவையை நம்மால் மறக்கமுடியுமா? தியாகமே துறவு. சேவையே தியாகம்.
பிரமம் சமமானது. அது எங்கும் சமமாகக் கலந்துநிற்றல் போல் சமநிலையாகிய தருமமும் கீதாசாத்திரம் முழுவதிலும் பிரதம தருமமாகக் கலந்து பரந்து நிற்கின்றது. சமய வாழ்வில் மாத்திரமல்ல; சமூக பொருளாதார அரசியல் வாழ்விலும் சமநோக்கமே பிரதம தருமமாக இடம்பெறவேண்டும் என்பதே கீதையின் குறிக்கோளாகும். அத். 9 : 29. சமதர்மத்துக்குச் சமய நம்பிக்கையே ஆதாரம். சமய நம்பிக்கையில்லாத சம தர்மம் நிலைபெறது. அது ஆணிவே ரில்லாத மரம் போன்றது.
என்னைவிட வேறென்றை எண்ணுத யோகத்தாற் பின்னமிலாப் பக்தி பெரிதுடைமை - தன்னந் தனியாய நல்லிடத்தைச் சார்தல் நெருக்கும் சனசந் தடிவெறுத்தல் சார்பு. 11
என்னைவிட வேறென்றையும் நினையாத யோகநெறியாற் பெற்ற பின்னமில்லாத பக்தியுடைமை, தன்னந்தனியான நல் லிடத்தில் இருத்தல் சனசந்தடியை வெறுத்தல்.
பின்னமில்லாத பக்தி வியபிசாரமற்ற அன்பு. வியபிசாரம் குறித்த பொருளைவிட வேறு பொருள்களின்மேலும் மனஞ் செல்லுதல்.மனைவிமக்கள் மத்தியிலும், சணம் நடமாடும் இடத்தி லும் இருந்து மன அமைதி பெறமுடியாத சாதகர்க்கு ஏகாந்தம் இனிது. அத். 6: 10, 11. மக்கள் மத்தியிலிருந்து பெறும் மன அமைதி வல்லமை பெற்றது; உறுதியானது.
தன்னை யறியுநிலை சாரும் விடாமுயற்சி உண்மை விசார முடனிவைகள் - நன்னலஞ்சேர் ஞான நடை சாதகற்கு நண்ணும் பிறநடையஞ் ஞானநடை யென்றுளத்தே நாடு. 12
தன்னையறியும் நிலையை அடைதற்குத் தொடர்ந்து மூடிற் சித்தல், தந்தையை அடைதற்குரிய வேதாந்த விசாரம் என்னும் இவையெல்லாம் சேத்திர சேத்திரஞ்ஞ ஞான சாதகனுக்குரிய நன்னடைகளாகும். பிறநடைகள் அஞ்ஞான நடைகளென்று அறிக.
தன்னையறியும் நிலை ஆத்தும விசாரம் பரமாத்துமாவின் சீவ சத்தியின் அம்சமே சீவாத்துமாவஈய்ச் சரீரத்துட் புகுந்து நிற்கின்றது என்னும் அத்தியாத்தும நிலையினை ஆராய்தல். விசாரம் - ஆராய்ச்சி. அத். 8 : 3, 15 7.

Page 24
14 பகவத்கீதை வெண்பா
உண்மை விசாரம் உண்மைப் பொருள் ஒன்றே என்றே அறிகின்ற வேதாந்த ஆராய்ச்சி; தந்தையின் சீவசத்தியின் அம்சமே மைந்தனணுற்போல, பரமாத்துமாவின் சீவசத்தியின் அம்சமே சீவாத்துமாக்களாக எல்லா உடல்களிலும் வாழ் கின்றது என்னும் சீவ சமுதாய ஒருமைப்பாட்டுணர்வு. தந்தை யின் சீவாம்சம் மைந்தனுனலும் தந்தை முழுமையாகவே இருக்கின்றர். இதுபோல் பரமாத்துமாவின் சீவாம்சம் சீவாத் துமாவானுலும், பரமாத்துமா இருந்தபடியே இருக்கின்றர். அத். 14 : 3-4.
'பல்லுலகும் பலவுயிரும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்”
V− (மனுேன்மணியம்)
நன்னலம் உயர்வற உயர்நலம். உயர்வு என்னும் பண்புக்கு எவ்வளவு உயர்வு உள்ளதோ அவ்வுயர்வையும் கடந்து அப்பால் உயர்ந்தோங்கும் அந்தமில் பேரின்பம். அயோத்திமா நகரத்துக் கோட்டை மதிலின் உயர்வை வருணிக்கின்ற கம்பர் 'உயர்வினுே டுயர்ந்த தென்னலாம் பொன்மதில் நிலையே' என்று பாடு கின்ருர், உயர்ச்சியென்னும் பண்புக்கு எவ்வளவு உயர்வு கற் பிக்கலாமோ அவ்வளவு உயர்வுள்ளது அம்மதில் என்பது பொருள். மதிலின் உயர்நிலை பண்புக்குள் அடங்கி உயர்ந்தது. பரமாத்துமாவின் உயர்நிலையோ பண்புகடந்து உயர்ந்தது; நிர்க்குணநிலை. இதனை அடுத்த செய்யுளிற் காண்க.
சேத்திர சேத்திரஞ்ஞ ஞான சாதனையில் ஈடுபடுவோர் பல்வேறு சூழ்நிலைகளில் இருப்பர். இயற்கை செயற்கையாகிய வாய்ப்புகளும் அளவாகவும் குறைவாகவும் இருக்கும். ஆதலின், 8ஆம் செய்யுள் தொடக்கம் 12ஆம் செய்யுள் முடியவுள்ள பகுதி யிற் கூறிய நடைமுறைகளைப் பயன்படும் வண்ணம் ஏற்றபடி கடைப்பிடித்து ஒழுகுக. எல்லா நடைமுறைகளையும் எல்லாரும் கடைப்பிடித்து ஒழுகுதல் இயலாது.
அறிதக்க தேதோ எதையறிந்தோன் சாகா நெறிபுக்கு நிற்பானே அஃதே-குறிகுணங்கட் கப்பால் உயர்ந்தோங் கணுதி உளதிலதாம் அப்பதங்க டந்தபிர மம். 13
அறியத் தக்கது எதுவோ, எதையறிந்தோன் அழிவில்லாத முத்திநெறியிற் புகுந்து நிற்பானே, அதுவே குணங்குறிகளுக்கு அப்பாற்பட்டு உயர்ந்தோங்கி நிற்கின்ற அணுதியான பரப் பிரம்மம் உளது இலது என்னும் சொற்பதம் கடந்த பொருள்.

ஞான யோகம் 15
அறிதக்கது ஞேயம் அறிவால் அனுபவத்தால் அறியப்படும் பொருள். அத். 13 : 1. சாகா நெறி அமிர்தநிலை; முத்திநிலை; நிர்க்குணப் பிரமநிலை.
நிர்க்குண்ப் பிரமம் கற்பனை கடந்த சோதி; உளது இலது என்னும் சொற்பதங்களாற் சொல்லமுடியாதது. அது காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டது. அடுத்த ஐந்து செய்யுள்களாற் சகுணப் பிரம நிலை கூறப்படும்.
எங்குங்கை கால்களுடைத் தெங்குந் தலைகளுடைத் தெங்குங்கண் வாய்களுடைத் தேயதுதான்-எங்கும்பல் காதுமுடைத் தெங்குங் கலந்தென்றும் நீக்கமற யாதுநிறைந் தோங்கிநிற்கும் அஃது. 4
அது எங்கும் கைகால்கள் உடையது; எங்கும் தலைகள் உடையது; எங்கும் கண்கள் உடையது; எங்கும் வாய்கள் உடையது; எங்கும் காதுகள் உடையது. எங்கும் எல்லாம் நீக்கமற நிறைந்து உயர்ந்து நிற்கும் அது.
சகுணப் பிரமம் பிரகிருதியுட் கலந்துநின்று அதை விகாரப் படுத்திப் பலவித நாம ரூப பேதங்களாகத் தோற்றுவித்து எங்கும் நீக்கமற நிறைந்து உறைவதை இச்செய்யுள் குறிப்பிடு கின்றது. அத், 15 13. அத். 11 : 18, 23.
சகுணப் பிரமம் எங்கும் எல்லாம் கலந்து நின்ருலும் அது அப்பொருள்களன்று. எனினும், அப் பொருள்களுள் ஒன்றேனும் அதுவின்றி நிலைநிற்பது மில்லை; இயங்குவது மில்லை. நிர்க் குணப் பிரமம் சகுண நிலையை அடையாவிடின் தோற்றமு மில்லை; நிலைபேறு மில்லை; ஒடுக்கமு மில்லை. பல்வேறு சமயங் களும் இல்லை; பல்வேறு மூர்த்திகளும் இல்லை; பல்வேறு வழிபாடுகளும் இல்லை; பல்வேறு இனம், மொழி, ஆசாரம் என்பன உடையோர் ஈடேறும் வழியும் இல்லை; சீவாத்துமா தன்னை அறியும் மார்க்கமும் இல்லை. சகுணப் பிரம வழிபாட்டின் மூலமே சீவாத்துமா தன்னை அறிகின்றது. அதில் நின்றும் நிர்க்குணப் பிரம உபாசனைக்குச் சென்று தன் தந்தையைக் கூடுகின்றது. அத். 12: 5.
* கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம்
எல்லையில் மறைகளாலும் இயம்பரும் பொருளி தென்னத் தொல்லையில் ஒன்றே யாகித் துறைதொறும் பரந்த சூழ்ச்சிப் பல்பெருஞ் சமயஞ் சொல்லும் பொருளும்போற் பரந்த தன்றே.”
(கம்பர்)

Page 25
i6 பகவத்கீதை வெண்பா
நதியின் உற்பத்தி ஒன்றே. இடையில் அதிலிருந்து உப நதிகள் பல பிரிகின்றன. நதி கடலிற் கலந்த பின்பு எல்லாம் ஒன்றே. நதிநீரும் கடல் நீரே. கடலினுள்ளே நதிநீர் எனப் புறம்பாக வேறென்று இல்லை. உண்மை ஒன்றே. சகுண நிலையிலே சமயங்கள் பல நடைமுறைகளும் பல. ஆன்மா பிரமத்துட் கலந்தபின் எல்லாம் ஒன்றே. ஆன்மா என ஒரு தனிப்பொருளைக் காண்பதற்கில்லை. சமயப் பகுப்புகளும் அங் கில்லை,
பொறிகரண மற்ற பொருளேனும் அஃது நெறியே அவைவிளங்க நிற்கும்-செறிகுணஞ்சஈர் பற்ற தெனினும் அனைத்துக்குஞ் சார்பாகி உற்ற குணங்கள்சுகிக் கும். . ' ᏗᎯ
அது பொறி கரணங்கள் இல்லாத பொருளாயினும் அவற்றை நெறிப்படுத்தி விளக்கி நிற்கும். குணமும் சார்பும் இல்லாததேனும் எல்லாவற்றுக்கும் சார்பாகிக் குண அனுப வங்களை அடைந்து நிற்கும்.
ஆன்மாவின் சார்பின்றிப் பொறி கரணங்கள் விளங்குவ தில்லை. பொறி கரணங்களின் விளக்கத்தால் உடலின்கண் ஆன்மாவென ஒரு பொருள் உளது என்னும் உண்மை குறிப்பாகப் புலப்படுகின்றது. ஆன்மாவின் சத்தியால் சத்திபெற்ற பொறி கரணங்கள் அச்சத்தியால் ஆன்மாவைத் திருப்பித் தாக்குவ தையும் நாம் உணர வேண்டும். குண அனுபவங்களுக்கு ஆன்மா சாட்சியளவாய் மாத்திரம் நிற்கும் தொடர்பு இங்கே கூறப்பட்டுள்ளது.
பொருட்கெல்லாம் உள்ளும் புறம்பும் உளதாய்ப் பொருட்களெலாம் தானுய்ப் பொலிந்தே-தெரித்துணர ஒண்ணுத நுண்மை யுடைத்தாகிச் சேய்மையினும் அண்மையினும் நிற்கும் அது. 6 அது எல்லாப் பொருள்களுக்கும் உள்ளும் புறத்தும் உள்ள தாய், சரமும் அசரமும் ஆகிய எல்லாப் பொருள்களுமாகப் பொலிந்து, தெரித்துணர்தற்கு ஒண்ணுத நுண்பொருளாகித் தூரத்திலும் சமீபத்திலும் நிற்கும்.
சகுணப் பிரமம் சரம் அசரமாகிய எல்லாப் பொருள்களின் அகத்தும் புறத்தும் உள்ளது. ** என் ஊனே, ஊனின் உள்ளமே, உள்ளத்தின் உள்ளே நின்ற கருவே " என்பர் அப்பர்சுவாமிகள், * ஊணுகி உயிராகி" என்பர் மணிவாசகப் பெருமான். 'வானின்

ஞான யோகம் 7
றிழிந்து வரம்பிகந்த மாபூ தத்தின் வைப்பெங்கும், ஊனும் உயிரும் உணர்வும்போல் உள்ளும் புறத்தும் உளனென்ப" என்பர் கம்பர்பெருமான்.
எல்லாத் திரவியங்களின் குணங்களையும் சகுணப் பிரமம்' வளர்த்துக் காத்து நிற்கின்றது. இதனைக் குறித்தற்குப் பொருட்களெலாம் தானப்ப் பொலிந்து எனக் கூறப்பட்டது.
* பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றயத் திகழ்ந்தாய் போற்றி வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வானிடை ஒன்ருய் வளர்ந்தாய் போற்றி? (திருவாசகம்)
** புறத்தார்க்குச் சேயோன் "" ஆதலால் தெரித்துணர ஒண்ணுத நுண்மை யுடைத்து எனப்பட்டது. புறத்தார் அன் புக்குப் புறம்பானேர் ; புறவுலகை மாத்திரம் சார்ந்து வாழ்வோர். அன்பர்க்கு எளியணுய் அகத்தும் புறத்தும் நிற்ப தால் அண்மையினும் நிற்கும் எனப்பட்டது. புறத்தே நிற்றல் திருக்குருகாவூர் செல்லும் வழியில் சுந்தரர்க்குத் தண்ணீரும் பொதிசோறும் கொண்டுவந்து கொடுத்துப் பசிதீர்த்தமை போன்ற செயல்கள். அத். 9 : 29,
ஒன்றேயாய் வெவ்வே றுடற்கண் பலவேபோல் நின்றெல்லாம் தாங்கி நிறுத்தியே - என்றும்.
துடைப்பதுமா யெல்லாம் துடைத்தேபின் மீளப் படைப்பதுமா யுள்ளதது பார். 17
அது பிளவுபடாத ஒரே முழுமுதற் பொருளாய் இருந்து கொண்டே வெவ்வேறு உடல்கள் தோறும் பிளவுபட்டதுபோல் நின்று எல்லாப் பொருள்களையும் தாங்கி நிறுத்தி அவற்றைத் துடைப்பதுமாய் மீளப் படைப்பதுமாயுள்ளது.
வெவ்வேறு வடிவமும் பெயரும் பெற்றுத் தோன்றுகின்ற உடல்களிலே பரமாத்துமாவின் சீவசமுதாயமே சீவாத்துமா வாகக் கலந்து நிற்கின்றது. பிரவிருத்தி நிலையிலே பலவே போல் தோன்றுகின்ற ஒரே பொருள் நிவிர்த்தி நிலையில் ஒன்ருகவே காட்சிதரும். பிரவிருத்தி புலச் செயல்களின் விருத்தி. நிவிர்த்தி புலச் செயல்களின் ஒழிவு.
Lu - 2

Page 26
፲8 பகவத்கீதை வெண்பா
* ஒன்றே யென்னின் ஒன்றேயாம்
பலவென் றுரைக்கிற் பலவேயாம் நன்றே நம்பி குடிவாழ்க்கை நமக்கிங் கென்னே பிழைப்பம்மா." (கம்பர்)
தாங்குதல் - காத்தல், துடைத்தல் - அழித்தல், அயனப் நின்று படைத்தும், அரியாய் நின்று காத்தும், அரணுய் நின்று அழித்தும் அனவரத தாண்டவம் புரிவது சகுணப் பிரம்மமே யென அறிக. மூன்றும் ஒன்றன பரம்பொருளே மீளப் படைப்ப தெனத் தெளிக.
" ஆக்கு மாறய னம்அயன் ஆக்கிய உலகம்
காக்கு மாறுசெங் கண்ணிறை கருணையங் கடலாம் வீக்கு மாறா னும் அவை வீந்தபின் மீள்ப் பூக்கு மாமுத லெவன் அவன் பொன்னடி போற்றி ”
(கந்தபுராணம்) ஒன்ற்ே எல்லாமாய் நிற்கின்றது எனக் கொள்க : எல்லாம் ஒன்றேயெனக் கொள்ளற்க.
ஒளிக்கொளியாய் உத்தமமாய் ஒங்குமறி வாகி விளக்கவறி தக்கதாய் மேவிக் - களக்கமறும் உள்ளொளியினலுணரும் ஒண்பொருளாய் அஃதெல்லார் உள்ளகத்தும் நின்றுவிளங் கும். 18
அது எல்லா ஒளிக்கும் ஒளியாய், இருளைக் கடந்ததாய், பேரறிவாய், அறிவிக்க அறியப்படுவதாய், மெய்யுணர்வால் உணரும் அனுபவப்பொருளாய், எல்லாரின் இதயத்துள்ளும் நின்று விளங்கும்.
ஒளிக்கொளி அகவொளி புறவொளிகளுக்கு ஒளிதந்து நிற்கும் பேரொளி பரஞ்சோதி, உத்தமம் இருளைக் கடந்தது. உத்- கடத்தல். தமம் - இருள். ஓங்குமறிவு சுட்டியறியும் அறி வுக்கு எட்டாதது. விளக்க அறிதல் காண்டல், கருதல், உரை என்னும் மூன்று அளவைகளாலும் விளக்க உண்டென்று அறிதல். காண்டல் பிரத்தியட்சம், கண்கூடு. கருதல் அனுமானம், குறிப் பறிவு, உரை ஆன்ருேர் வாக்கு. உள்ளொளி அனுபவ ஞானம்; உண்டென்பதைக் கண்டறியும் உண்மையறிவு : ஞானக்கண். அத், 13 : 35

ஞான யோகம் 19
" உள்ளமெனும் கூடத்தே உணர்ச்சியெனும்
குண்டமதில் உண்மை அன்பாம்
அள்ளுநறு கெய்பெய்து தவவிரத
அனல்மூட்டி ஆசை யென்னும்
துள்ளுமறி பலிசெய்து தூய்மைபெறு
தியாகமெனும் வேள்வி வேட்டுத்
தெள்ளுமனச் சாந்தியெனும் திருவமுதின்
சுவைகண்ட தெய்வ யோகி.” (ஏ. பெ.)
உடலியல்பும் ஞானத்தின் உண்மை இயல்பும் திடமுளஞா னத்தினல் தேடப் - படுபொருளும் இன்னே தொகுத்துரைத்தேன் ஈதுணரு மென்பக்தன் என்னையடை தற்குரியான் இங்கு. 19
சேத்திரத்தின் இயல்பினையும், சேத்திரஞ்ஞ ஞானத்தின் உண்மை இயல்பினையும், திடமான ஞானத்தால் தேடி அடையப் படும் மெய்ப்பொருளின் இயல்பினையும் இவ்வண்ணம் சுருக்க மாகக் கூறினேன். இதை உணருகின்ற என் பக்தன் என்னை அடைதற்கு உரியவனுகின்றன்.
உடலியல்பு பிரகிருதி, பிரகிருதி காரியமாகிய சேத்திரம் என்பவற்றின் இலட்சணம். ஞானத்தின் உண்மை இயல்பு நிர்க் குணப் பிரமம், சகுணப் பிரமம், புருடன் என்னும் சீவாத்துமா என்பவற்றின் இலட்சணம். திடமுள ஞானத்தினுல் தேடப்படு பொருள் சேத்திரம், சேத்திரஞ்ஞன் என்பன பற்றிய திடமான ஞானத்தினுல் தேடிக் காண்பதற்குரிய சீவாத்தும தரிசனமும், பரமாத்தும தரிசனமும். சேத்திரஞ்ஞ ஞானம் பெற்ற பரம பக்தன் மேல் அனுபவ ஞானம் அடையும் தகுதிக்கு உரியவ ஞகின்றன். அத் 13 : 1.
ஒதும் பிரகிருதி யும்புருட தத்துவமும் ஆதியந்த மற்றபொரு ளாகுமே - பேதமாம் தோற்றமொடு முக்குணத்தின் தோற்றம் பிரகிருதித் தோற்றமெனத் தேர்வாய் துணிந்து, 20
பிரகிருதியும் புருடனுமாகிய இரண்டு தத்துவங்களும் ஆதி யந்த மில்லாத பொருள்களாகும். வெவ்வேருண தோற்றங் களும் குணங்களும் பிரகிருதியில் நின்றும் பிறந்தவையென அறிவாய்.

Page 27
20. பகவத்கீதை வெண்பா
பிரகிருதி அல்லது மாயை இரண்டு வகைப்படும். அவை அபரப் பிரகிருதி அல்லது சடப் பிரகிருதி யெனவும்; பரப் பிரகிருதி அல்லது சீவப் பிரகிருதி யெனவும் பெயர் பெறும். அத். 7 : 4 - 5.
பிரகிருதி இயற்கை. அது தன்னிலையில் நிற்பது ; நிலை யானது. பிரகிருதி காரியமான வடிவ பேதங்கள் நிலை யில்லாதன. சீவாத்துமா சமத்துவ நிலையை அல்லது இருவினை யொப்பு நிலையை அடையும்போது குணங்கள் செயலற்றுக் கிடக்கும். இது குனதித நிலையெனப்படும். குணம் அழிவதில்லை. அது இயற்கை ஆணவ மலம்போல.
மாயை ஈசுவரனுக்கு அபரப் பிரகிருதி. சீவன் பரப் பிர கிருதி, மாயை பிரகிருதி அல்லது சேத்திரம், சீவன் புருடன் அல்லது சேத்திரஞ்ஞன். பிரகிருதியையும் புருடனையும் உடை யவர் ஈசுவரன். மாயையினை என் இயற்கையென இறைவனே கூறுதல் காண்க. அபரம் பரம் என்னும் இரு பிரகிருதியும் இறை வனுக்குச் சரீரமாகுமென அறிக. அத். 4: 6. அத். ? : 4 - 5.
காரிய தத்துவமீ ரெட்டுக்குங் காண்டீவா காரண தத்துவமோர் ஏழுக்கும் - காரணங்காண் ஒதும் பிரகிருதி உற்றின்ப துன்பமுறற் கேது. புருடனென எண்ணு. 2I
அருச்சுணு, காரிய தத்துவங்கள் பதினறுக்கும், காரண தத்து வங்கள் ஏழுக்கும் பிரகிருதியே மூலகாரணமாகும். இன்ப துன்ப அனுபவங்களுக்குப் புருடனே காரணமென்று அறி. இயற்கையானது இறைவன் திருமுன்னிலையில் அவனது திருக்குறிப்பினுல் தொழிற்படுகின்றது. அத். 9 10. அதில் நின்றும் காரண தத்துவங்கள் ஏழும், காரிய தத்துவங்கள் பதி ஞறும் தோன்றுகின்றன.
காரண தத்துவங்கள் ஏழு : மகத் தத்துவம் அல்லது சமட்டி புத்தி, அகங்காரம், குக்கும ஆகாயம், சூக்கும வாயு, குக்குடி தேயு, சூக்கும அப்பு, சூக்கும பிருதுவி.
காரிய தத்துவங்கள் பதினறு: மெய், வாய், கண், மூக்கு, செவி யென்னும் ஞானேந்திரியங்கள் ஐந்து; வாக்கு, பாணி (கை), பாதம், பாயுரு (ஆசனத் துவாரம்), உபத்தம் (குறி) என்னும் கன்மேந்திரியங்கள் ஐந்து மனம் ஒன்று, சப்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் விடயங்கள் ஐந்து.

ஞான யோகம் 21
காரண தத்துவங்கள் ஏழும் பிரகிருதியின் காரியமாயினும், காரியதத்துவங்கள் பதினறையும் தோற்றுவிக்கும் செய்கையால் காரணதத்துவங்கள் எனப் பெயர்பெற்றன. அத், 13 .ே
புருடனுகிய ஆன்மா சின்மயன். எனினும், குணகாரியங்க ளாகிய இன்ப துன்பங்களைச் சாட்சியளவே நின்று உணரும் பங்கு அதற்கு உண்டு. இதனுல், இன்ப துன்ப நிகழ்ச்சிக்குப் புருடனே காரணம் எனக் கூறப்பட்டது. புருடனின்றி மனம் முதலியவற்றுக்கு அனுபவமில்லையென அறிக. சூத்திரனின்றி உலகம் நடைபெருது; ஆன்மாவாகிய கூத்தனின்றி உடம்பு இயங்காது.
மூலத்தில் நின்றும் முளைக்குமுடல் புக்குயிரம் மூலத்தி லேதோன்றும் முக்குணத்தைச் - சாலச் சுகித்ததன்சார் பாலுயர்வு தாழ்வாகும் தோற்றம் இகத்தி லெடுத்துழலு மே. 22
சீவாத்துமா பிரகிருதியில் நின்றும் தோன்றிய உடலில் இருந்துகொண்டு பிரகிருதி குணங்களை அனுபவித்து அக்குணச் சார்பினுல் உயர்வு தாழ்வான பிறப்புகளை எடுக்கின்றது.
குணம் பிரகிருதியின் அம்சம்; அது இயற்கை; ஆணவ மலம் போன்றது. சீவாத்துமா பரமாத்துமாவின் அம்சம். அனுதியான சீவாத்துமா அனுதியான குணச்சார்பினுல் பந்த மடைகின்றது. சார்ந்ததன் வண்ணமாய் நின்று குண அனுப வங்களை நன்றென்றும் தீதென்றும் கருதுவதால் அதற்கு மனம் போன்ற வாழ்வு கிடைக்கின்றது. இதனல், உயர்வு தாழ்வான பிறப்புகளுக்கு உட்பட்டு அது உழல்கின்றது. வினைவிளைவென்பது இதுவே. பாவனை போன்றது பேறு. பாவனை நல்லதாயின் நற்பேறு கிடைக்கின்றது; தீயதாயின் தீப்பேறு கிடைக்கின்றது. பாவனையென்பது சிந்தனை, தியானம். அத். 8 :16,
சாட்சியாய்ச் சிந்தனையாய்த் தாங்குவோனயெவையும் காட்சிமுதல் ஐம்புலனும் காண்போனுய்-ஆட்சிசெயும் ஈசற்கும் ஈசனம் இவ்வுடற்கண் வாழ்புருடன் பேசற்கு நின்ருன் பிறிது. 23
சாட்சியாய், நினைப்பவனுய், தாங்குவோணுய், அனுபவிப்
போனப், ஈசனுக்கும் ஈசனயுள்ள பரமாத்துமாவே இவ் வுடலின்கண் வாழ்கின்ற புருடன். அவன் உடலின் வேருனவன்.

Page 28
22 பகவத்கீதை வெண்பா
ஒன்றை நாம் பார்க்கும்போது மகேசுவரன் நமக்கு முன் னின்று அதைப் பார்க்கின்ருர் ஒன்றை நாம் நினைக்கும்போது முன்னின்று நினைக்கின் ருர் தோன்ருத்துணையாய் நின்றும், தோன்றி நின்றும் நம்மைத் தாங்குகின்ருர் ; எல்லா அனுபவங் களையும் நமக்கு ஊட்டி நிற்கின்றர். இவற்றையெல்லாம் செய்வது எங்கேயோ வெளியிலிருந்துகொண்டல்ல ; நமக்குள் ளேயே உயிராய் இருந்துகொண்டு செய்கின்றர். அத். 9 : 18. இதை அறிவதே சேத்திர சேத்திரஞ்ஞ ஞானம்.
குணங்கடந்தோன் இவ்வுடலிற் கூடும் புருடன் குணங்கலந்த திவ்வுடலின் கூட்டம்-உணர்ந்திவ் விரண்டு மறிந்தணைந்தோன் எந்நெறிநின் ருலும்
மருண்ட பிறப்படையான் வந்து. 24
இவ்வுடலின் கண் வாழ்கின்ற சீவாத்துமா குணங்கடந்தவன். இவ்வுடல் குணங்கலந்தது. இவ்விரண்டையும் உணர்ந்து என்னை அணைந்த சீவன்முத்தன் எந்நெறியில் வாழ்ந்தாலும் உடலை விட்டபின்பு பிறப்பதில்லை.
பரமாத்தும தரிசனம் பெற்றவன் கரும சக்கரத்தைக் கடந்தவன். கருமங்களைச் செய்தாலும், செய்யாதிருந்தாலும் அவற்றின் பயனல் அல்லது பயனின்மையால் அவன் தாக்கப் படுவதில்லை. நன்மை தீமை யறியும் விருட்சத்தின் கனியை அவன் புசிப்பதில்லை. இந்நிலையில் கருமங்கள் யாவும் ஞானத் தீயால் தகன பொரி யாவதால் சீவன்முத்தனுக்கு இனிப் பிறப் பில்லை. அத். 3 18. அத். 4 : 37.
ஈங்குதியா னத்தால் இதயத்துள் ஆன்மாவைத் தாங்காண்பார் சில்லோர் சிலர்ஞான- சாங்கியத்தால் தாங்காண்பார் சில்லோர் தகுகரும யோகத்தால் தாங்காண்பார் தம்நிலைபோற் சார்ந்து. 25
சிலர் தியான யோகத்தால் உள்ளத்தினுள் ஆன்மாவைத் தரிசிக்கின்றனர். சிலர் ஞான யோகத்தால் தரிசிக்கின்றனர். சிலர் கருமயோகத்தால் தரிசிக்கின்றனர்.
தியானயோக மென்பது சாங்கிய கருமயோகம். அகத்திலே கருமப்பற்று முற்ருக நீங்கிய நிலையில் புறத்தொழில் மாத்திரம் நிகழ்வது சாங்கிய கருமயோக மென்பர். இதனல் சகுணப் பிரம தரிசனம் கைகூடுகின்றது. அகத்தும் புறத்தும் கருமப் பற்று ஒழிந்த நிலை சாங்கிய ஞானயோக மென்பர். இந்நிலையில் நிர்க்

ஞான யோகம் 23
குணப் பிரம தரிசனம் கைகூடுகின்றது. கருமங்களையும் கரும பலனையும் ஈசுரனுக்கு அர்ப்பணஞ்செய்து நிற்கும் நிலை நிஷ்காம கரும யோகம் எனப்படும். இந்நிலையில் நிற்போர் ஈசுவரனேடு சம்பந்தப்பட்டு நிற்கின்றனர். இதுவும் பரமாத்தும தரிசனத் துக்கு நிகரானதே. அத். 3 : 19. *
மனமானது புத்தியினுல் ஆன்மாவைக் காண்பது சகுணப் பிரம தரிசனம். இது தன்னையறிதல். ஆன்மா ஆன்மாவால் பரப்பிரமத்தைக் காண்பது நிர்க்குணப் பிரமதரிசனம். இது மனம் கடந்த நிலை. இவை முறையே இராச யோகம், ஞான யோகம் எனப்பெறும்.
* மனமற்ற பரிசுத்த நிலையை அருள்வாய்?
-தாயுமானவர்.
இந்நெறியாற் காண்டற் கியலாதோர் ஆன்மாவைச் செந்நெறிச் செல்வருப தேசத்தால்-அந்நெறியில் நின்று பிறப்பிறப்பாம் நீள்கடலைத் தாண்டியே சென்றுகரை சேர்கின்ருர் தேர்ந்து. 26
இந் நெறிகளுள் ஒன்ருல் ஆன்ம தரிசனம் பெறுதற்கு இயலாதோர் அந்த யோகத்திரு உடையோரின் உபதேச நெறியில் நிலைத்து நின்று பிறப்பிறப்பென்னும் பெருங்கடலைத் தாண்டிக் கரை சேர்கின்ருர்கள்.
இது பக்திநெறி படிப்படியாய் முத்திநிலை சேர்க்கும். இராசயோகம், ஞானயோகம் என்பவற்றைக் கைக்கொண்டு ஆன்மதரிசனம் பெறும் தகுதியில்லாதோர்க்கு ஏற்ற நெறி பக்தி நெறியே. இவர்கள் பக்திநெறியில் மனம் பதிந்து கரும யோகத்தைக் கடைப்பிடித்துச் சமபுத்தியில் நிலைநின்று இராச யோகம், ஞானயோகம் என்பன படிப்படியாகக் கைவரப்பெற்று முத்திநிலை சேர்கின்றர்கள்.
உபதேச முறையால் வந்த இந்த நெறியுணர்வைப் பரோட்ச ஞான மென்பர். பிறர் காட்டக் காண்பது இது. பரஅட்சம் பிறர் கண். தன்னல் தான் காண்பது அபரோட்ச ஞானம். அபர அட்சம் தன் கண்.
"முத்திநெறி யறியாத மூர்க்கரொடு முயல்வேனப்
பத்திநெறி யறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தனெனக் கருளியவா ருர்பெறுவார் அச்சோவே.”
(திருவாசகம்)

Page 29
24 பகவத்கீதை வெண்பா
தாவர சங்கமமாய்ச் சாற்றுகின்ற உள்பொருள்கள் யாவுமெடுக் குந்தோற்றம் ஏதேதோ - மேவியே சேத்திரமும் சேத்திரஞ்ஞ னுஞ்சேர்கூட் டத்தினல் தோற்றுமவை யென்றே துணி. 27
சரமும் அசரமுமாக உள்ள பொருள்கள் யாவும் எவ்வெத் தோற்றம் எடுக்கின்றனவோ அவையெல்லாம் அருச்சுளு சேத்திரமும் சேத்திரஞ்ஞனும் கூடிய கூட்டத்தினல் தோற்று கின்றன. வென்று அறிவாய். .
உள்ளது தோற்றும் என்பது நியதி. இதனல் உள் பொருள்கள் தோற்றுகின்றன எனக் கூறப்பட்ட்து. கூட்ட மென்பது மாறிக் கூடுதல். சேத்திரத்தின் இயல்பு சேத்திரஞ் ஞனிலும், சேத்திரஞ்ஞனின் இயல்பு சேத்திரத்திலும் மாறிக் கலத்தல். இதனைச் சையோகமென்பர். இந்தச் சையோக மின்றித் தோற்றமில்லை. பிரகிருதி குணசம்பந்தம் சீவான்மா விலும், சீவாத்தும சம்பந்தம் பிரகிருதியிலும் சேர்தலே பிறப் புக்குக் காரணம். அத். 7 4-6. அத். 14 : 3-4.
எப்பொருளி னுஞ்சமமாய் எங்குநிலை பெற்றேனுய்ப் பொய்ப்பொருள்கள் போயழியும் போதழியா-மெய்ப்பொருளாய் எப்போது முள்ளபர மேசனையெங் கும்பார்ப்பான் அப்பா அவனேபார்ப் பான், 28
எல்லாப் பொருள்களிலும் எங்கும் சமமாய் நிற்பவனப், பொய்ப்பொருள்கள் அழியும்போது அழியாமல் எஞ்சிநிற்பவனுய், எப்போதுமுள்ள பரமேசுரனை எவன் எங்கும் காண்கின்றனே அவனே உண்மை கண்டவன்.
சரம் அசரமாகிய எல்லாப் பொருள்களிலும் சகுணப்பிரமம் சமமாகக் கலந்து நிற்கின்றது. அது அணுவினும் உள்ளது: அணுவைப் பிளந்த நுண் கூற்றினும் உள்ளது; உயிரினும் உள்ளது : உயிராயும் உள்ளது; அத். 8:22, அத். 9: 4.
இறைவன் எங்கும் சமமாகக் கலந்து நின்ருலும், வினைக்கு ஈடான உடல்களின் தரத்துக்கு ஏற்ப உயிர்களின் அறிவு விளக்கம் கூடியும் குறைந்தும் காணப்படும். இவற்றின் மத்தியில் எல்லா உடல்களிலும் சமமாகக் கலந்து நிற்கின்ற சகுணப் பிரமத்தை எங்கும் எவன் சமமாகக் காண்கின்றனே அவனே கண்டவன் ; ஏனையோர் கண்டும் காணுதவரே. பிரமம் சமம். சமபுத்தி கண்டவன் அதை எங்கும் சமமாகக் காண்கின்றன். அத். 5 ; 19. அத். 9 : 29,

ஞான யோகம் 25
மெய்யே அவன் சமமாய் எங்கும் வியாபித்தே பொய்யாது நிற்கும் பரம்பொருளை-மெய்யுடற்கண் தான் கண்டோன் தன்னல் தனையழிவு பண்ணுதோன் தான்கண்டான் மோட்ச பதம். 29
எங்கும் சமமாகக் கலந்து நிற்கின்ற சகுணப் பிரம்மத்தை உண்மையாகவே தன் சரீரத்தின் கண் தானகக் கண்டவன் தன்னல் தன்னை வருத்தாதவன். அவன் மோட்சம் அடை கின்றன்.
உண்மையாகவே தன்னுடலுள் தன்னைக் கண்டவன் பிற உடல்களிலுள்ள உயிர்களையும் தானகவே காண்கின்றன். பிற உயிர்களை வருத்துவது தன்னையே வருத்துவதாகும் என்னும் ஒருமைப்பாட்டு உணர்ச்சி கைவந்தவன் அவன். பிறர் தன்னை வருத்தும்போதும் அவன் வருந்துவதில்லை; அவரை வருத்து வதுமில்லை. அவரை மன்னிப்பதுடன் அவரின் நல்லாக்கத்துக் காக இறைவனை வேண்டியும் நிற்பான். தன்னையும் பிற உயிர் களையும் தானுகக் கண்டவன் இறைவனையும் தானுகக் கண்டு சாந்தியடைகின்றன். இறைவனைத் தானுகக் காணுதல் இறைவன் தன் தந்தை; தான் இறைவனுக்கு மைந்தன் இறைவனின் அம்சம் என்னும் உண்மையினை அறிதல். அத். 14 : 3-4 அத். 15 : 7.
இயற்கை தரும்குணத்தால் எல்லாச் செயலும் செயப்படுவ என்றெவன் தேர்வானே -இயற்றும் செயலற்ற தான்மா எனத்தெளிந்தான் அன்னுேன் மயலற்ற காட்சியுடை யான். 30
பிரகிருதி குணத்தினலேயே எல்லாச் செயல்களும் நிகழ் கின்றன என்று எவன் அறிவானே, அவன் ஆன்மா கருத்தா வல்ல எனத் தெளிந்தவன்; பரமாத்தும தரிசனம் பெற்றவன்
குணங்கள் குணப் பொருள்களில் இயங்குகின்றன என்று தேர்ந்து தெளிந்தவன் குணம் செயல் என்பவற்றில் நின்றும் விடுதலை பெறுகின்றன். அத். 3:28.
ஒன்றே பலவாம் உடலுயிர்கள் யாவுமொன்ருய் ஒன்ரும் பிரமத் தொடுங்குவதும்-நின்றதன் கண் ஒன்று பலவாய் உதிப்பதுவும் உற்றுணர்ந்தோன் ஒன்றுமப்போ தேபிரமத் துள். 31

Page 30
26 பகவத்கீதை Go)6).u 6öorL unt
ஒன்றே பலவாய்த் தோன்றிய உடல்களெல்லாம் ஒரே மூலப் பிரகிருதியுள் சென்று ஒடுங்குவதையும்; மூலப் பிரகிருதி பரமாணுவிற் சென்று ஒடுங்குவதையும் ; ஒன்றே பலவாகத் தோன்றிய உயிர்களெல்லாம் ஒரே பரப்பிரமத்துள் சென்று ஒடுங்குவதையும்; ஒடுங்குவனவெல்லாம் மீண்டும் பரப்பிரமத்தில் நின்றே தோன்றி விரிவதையும் உள்ளுணர்வால் உணர்ந்தவன் அங்கேயே அப்போதே பிரமத்தை அடைகின்றன். அத். 2:28, 7 : 4-7.
ஆதியில தாய்க்குணங்கள் அற்றதாய்ப் பார்த்தாகேள் ஏதுமழி வில்லாப் பரமாத்மா-போதுமுடல்
சேர்ந்தாலும் ஒர்செயலும் செய்வதிலை ஒன்றினுமோர் பாந்தமுமில் லாததது பார். 32
அருச்சுன, 'ஆதியில்லாததாய்க் குணங்கள் அற்றதாய் அழி வில்லாத பரமாத்துமா சரீரத்தில் இருந்தாலும் அது ஒரு கருமமும் செய்வதில்லை; ஒன்றிலும் பற்றுவதுமில்லை.
உடல் அணுக்களால் உண்டாயது. உயிர் அணுக்கள் தோறும் நின்று அவற்றை இயக்குவது. “அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்" (கம்பர்). பரமாணு பிளக்க முடியாதது.
விரிந்துவியா பித்தோங்கும் விண்வெளிகண் காணு அருஞ்குக் குமமாம் அதனை - வருங்களங்கம் பற்றலிலை ஆன்மா பரந்தணுக்கள் தோறுமுடல் உற்றும் களங்க முரு. 33
எங்கும் விரிந்து வியாபித்து உயர்ந்தோங்கும் விண்வெளி கண் ணு ற் காணமுடியாத நுண் பொருளாகும். 935 பொருள்களாற் களங்கமடைவதில்லை. அதுபோல ஆன்மா சரீரங்களெங்கும் அணுக்கள் தோறும் கலந்து நின்ருலும் அது அச்சரீரங்களாற் களங்கமடைவதில்லை.
சரீரம் நீளம் அகலம் கனமுள்ள பருப்பொருள். அதைக் களங்கம் பற்றும். ஆன்மா நீளம் அகலம் கனமில்லாத நுண்பொருள். அதைக் களங்கம் பற்றது. அத். 2 : 23-24. அத். 9 : 6.
' வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த
திருமேனி மேலும் கீழும் எள்ளிருக்க இடமின்றி உயிரிருக்கும்
இடம்:5ாடி இழைத்த வாபோல்

ஞான யோகம் ፰7
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை
மனக்கதவிற் கரந்த காதல் உள்ளிருக்கும் எனத்தேடி உடலமெலாம்
தடவியதோ ஒருவன் வாளி.* (கம்பர்) இச் செய்யுள் ஆன்மா உடலின்கண் அணுக்கள் தோறும் கலந்து நிற்கும் என்னும் நுட்பத்தினை விளக்குகின்றது. " திரு மேனி மேலும் கீழும் - எள்ளிருக்க இடமின்றி உயிர் இருக்கும் இடம் நாடி இழைத்தவாபோல்" என்னும் பகுதி இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.
பார்த்தா பரிதியொன்றே பல்லுலக மெங்குமொளி சேர்த்தேவிரித்திலங்கும்செய்கைபோல்-பார்க்குமுடல் எங்கும் சரீரியொன்றே எல்லாம் பலவேபோல்
தங்கும் அறிவொளியைத் தந்து. 34
ஒரே சூரியனே எல்லா உலகங்களையும் தன்னெளியால் விளங்கச்செய்து தானும் விளங்கி நிற்பதுபோல, எல்லாச் சரீரங்
களிலும் ஒரே சரீரியே பலவேபோல் தங்கி நின்று அவற்றுக்கு
அறிவொளியைத் தந்து தானும் விளங்குகின்றது.
சூரியன் ஒன்றே. அது பலபெயர் பெற்று நின்று அகில உலகங்களையும் ஒளிமயமாக்கித் தானும் விளங்குகின்றது. இது போல ஒரே ஆன்மாவே மக்கள், தேவர், மிருகம், பறவை ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்னும் பலவேறு சரீரங் களிலும் நின்று அவற்றின் தரத்துக்கு ஏற்ப அறிவு விளக்கம் தந்து தானும் விளங்குகின்றது. சரீரி ஆன்மா. உடல் பலவேனும் அவை ஒரே பிருகிருதியின் அம்சமே. உயிர் பலவேனும் அவை ஒரே சீவசக்தியின் அம்சமே. இந்த ஒருமைப்பாட்டினை மறவற்க. அத். 15 : 7. மனித உடலில் மாத்திரமே ஆன்மா உளது எனச் சொல்லற்க. அது நிரம்பாத கொள்கை; அகிம்சைக்கு மாருனது.
சூரியன் உலகங்களைக் கலந்து நின்ருலும் அது அவற்றல் மலினமடைவதில்லை. ஆன்மாவும் உடல்களைக் கலந்து நின்ரு லும் அது அவற்ருல் மலினமடைவதில்லை. அத். 13 : 32-33.
கூறு படுமுடலிற் கூத்தனிடை வேற்றுமையை வேறு படுமுடலம் வீழவெளி-யேறியுயிர் நீங்குவதை மெய்ஞ்ஞான நேத்திரத்தாற் காண்பார்போய் ஓங்குபிர மத்துளொன்ரு வார். 35

Page 31
28 பகவத்கீதை வெண்பா
பல கூறுபாடுகளையுடைய உடல், கூறுபாடில்லாத உயிர் என்பவற்றின் இடையேயுள்ள வேறுபாடுகளையும்; வேறுபாடடை யும் உடல்கள் நழுவ உயிர் வெளியேறிச் செல்வதையும் மெய்ஞ் ஞானக் கண்ணுற் காண்போர் பிரமத்துடன் ஒன்ருவார்கள்.
கூறுபடும் உடல் அத். 13 : 6-7. கூத்தன் ஆன்மா. அத். 13 : 21, 23. உடல் விழுதல் வினைப்போகம் ஒழிய உடல் செயலற்றுக் கிடத்தல். உயிர் வெளியேறுதல் மனகாசத்தி னின்றும் புறப்பட்டுச் சிதாகாசத்துட் புகுதல் அல்லது வேறு நுண்ணுடம்புட் புகுதல். அத். 15:7-10.
ஞான நேத்திரம் சேத்திரத்தையும் சேத்திரஞ்ஞனையும் பகுத்துக்காணும் மெய்யறிவுக் கண் . ஞானக்கண்ணுல் இவ் விரண்டையும் பகுத்தறிந்து மக்கள் தேவர் முதலிய வடிவங் களாய் விகாரப்பட்டுத் தோன்றும் பிரகிருதி சம்பந்தத்தில் நின்றும் விடுபடும் உபாயங்களைக் கடைப்பிடிக்கும் மெய்ஞ் ஞானிகள் தேக பந்தம் நீங்கிச் சகுன நிலையைக் கடந்து நிர்க்குண நிலையை அடைகின்றர்கள். உபாயங்கள் அத். 13 : 8-12,
* வாடிநொந் தேனே மெய்ஞ்ஞானக் கண்
மூடிருைந் தேனே பாடும்வேத நாயகன் பருகுஞ்செந் தேன்ே.?
பதின்மூன்ரும் அத்தியாயம் சேத்திர சேத்திரஞ்ஞ வியாக யோகம்
நிறைவுற்றது.
செய்யுள் 35. சேத்திர சேத்திரஞ்ஞ ஞானமே பகுத்தறிவு,

பதினன்காம் அத்தியாயம் குணத்திரய விபாக யோகம் பொருட் சுருக்கம் தந்தை பரமாத்மா தாயோ பிரகிருதி மைந்தனவன் அம்சம் மறந்திதனை - முந்துகுணம் சார்ந்துமய லுற்றேன் சமபுத்தி வாய்ந்துகுணம் தீர்ந்தடையும் தந்தை சிறப்பு. சேத்திர சேத்திரஞ்ஞ ஞானம் பரமாத்தும தரிசனத்துக்கு வழியாகும். இந்த ஞானம் பெற்ருேர் இனிப் பிறவார்; மரணத் துக்கும் அஞ்சார். மூலப்பிரகிருதி இறைவனின் சேத்திரம். சீவசமுதாயத் தோற்றத்துக்குத் தந்தை பரமாத்மா தாய் பிரகிருதி.
பிரகிருதி முக்குண வடிவானது. உடலெடுக்கும் சீவாத்து மாக்கள் குணபந்தத்தால் மயக்கமடைகின்றன. சத்துவகுண மயக்கம் இலேசானது. இராசதகுண மயக்கம் தடித்தது. தாமதகுண மயக்கம் மிகத் தடித்தது. குணத்தால் மயக்கம் ஒருபுறம் மறுபுறம் குணங்களே ஒன்ருேடொன்று மயங்கு கின்றன. இதனுல் மனிதனும் நிலையில்லாத செயல்களுக்கு ஆளாகின்றன்.
சாத்துவிகம் நல்வழியிற் செலுத்தும். இராசதம் சுயநலத் தால் நல்வழியிலும் தீவழியிலும் செலுத்தும். தாமதம் கீழ் நிலைக்குத் தள்ளும்.
சாத்துவிகர் செயல்களுக்குக் குணங்கள்ே கருத்தா ஆன்மா வல்ல; ஆன்மா சாட்சி மாத்திரமே யென்று அறிந்து குணுதீத நிலையை அடைகின்றர்கள். இராசதரோ தாமே செயல்களுக்குக் கருத்தா தம்மாலேதான் எல்லாம் நடக்கின்றன என்று இறு மாந்திருப்பர். தாமதர் ஏனேதானே என்ற மனப்பான்மை யுடன் சோம்பிக் கிடப்பர்.
குளுதீத நிலையை நோக்குவோர் குணச் செயல்களிலே சம நிலையில் நின்று கருமயோகம், ஞானயோகம் என்பவற்றுள் தமது தகுதிக்கேற்ற ஒரு நெறியைக் கடைப்பிடித்து ஒழுகிப் பிரமத்தை அடைகின்றர்கள். சமநிலையில் நிற்குந் தகுதி பெரு தவர்க்குப் பக்தி நெறியே பரம நெறியாகும். பக்திமான்கள் படிப்படியாகச் சமபுத்தி பெற்றுக் குணங்களைக் கடக்கின்ருர்கள். பரமாத்மா பக்தர்களைக் கைதூக்கி ஆளுகின்றர்.
பக்திக்கும், யோகத்துக்கும், ஞானத்துக்கும், பேரின்பத் துக்கும் உறைவிடம் பரமாத்துமாவே என்னும் நம்பிக்கை யுள்ளவன் தனக்குத் தகுதியான ஒருவழியில் நின்று உயர்கதி அடைகின்றன்.

Page 32
பதினுன்காம் அத்தியாயம் குணத்திரய விபாக யோகம்
கண்ணபிரான் : இப்பே ரறிவினல் எல்லா முனிவோரும் அப்பா தெரிந்துபர மாத்மாவை - அப்பாற்போய் மேலாய சித்திபெற்ற மெய்ஞ்ஞான சாதனையைக் கேளாய்மீண் டுஞ்சொல்லு கேன்.
அருச்சுணு, சேத்திர சேத்திரஞ்ஞ ஞானமென்கின்ற இந்தப் பேரறிவினுல் எல்லா முனிவர்களும் பரமாத்துமாவை அறிந்து; உடம்பை விட்டபின்னர் மோட்சசித்தியைப் பெற்ற மெய்ஞ் ஞான சாதனையை மீண்டும் சொல்லுகின்றேன் கேள்.
குணத் திரயம் சாத்துவிகம், இராசதம், தாமதம் என்னும் முக்குணங்களின் கூட்டம். விபாகம் முக்குணங்களையும் வெவ் வேறு பகுத்தறிதல். யோகம் முக்குணங்களையும் பற்றிய பகுத் தறிவு கைகூடுதல்.
அப்பா என்பது சித்தர் வழக்கு. மெய்ஞ்ஞான சாதனை சுவானுபவப் பேறு.
நல்லாயிஞ் ஞானமதை நன்கு கடைப்பிடித்த வல்லாரென் சாசு வதநிலையைச் - செல்வமாப் பெற்ருர் படைப்பிற் பிறவார் பிரளயத்தும் அற்றர் துயர மவர். 2
நல்லவனே, இந்த ஞானத்தை நன்ருகக் கடைப்பிடித்த வல்லவர்கள் எனது அழிவில்லாத சுவரூப நிலையினைச் செல்வ மாகப் பெற்றவர்கள். சிருட்டிக் காலத்தில் அவர்கள் பிறப்பது மில்லை ; சங்கார காலத்தில் இறப்பதுமில்லை; துன்பப்படுவது மில்லை. w
அனுபவ ஞானம் பெற்றவர்கள் பிரகிருதி குணங்களைக் கடந்தவர்கள் ; பரப்பிரம்ம சுவரூப நிலையினைப் பெற்றவர்கள் ; பிரகிருதி சம்பந்தமான பிறப்பு இறப்புகளுக்கும் அவற்ருல் வரும் இன்ப துன்பங்களுக்கும் அப்பாற்பட்டவர்கள். இன்ப துன்பம் இன்பமாகிய துன்பம்.

ஞான யோகம் 31
இவர்கள் நிற்கும் நிலையினைச் சாதான்மிய நிலை என்பர். பரம்பொருளின் தன்ம நிலையினைப் பெற்றவர்கள் இவர்கள். ச தன்மம் சாதான்மியம் என வந்தது. இது தத்திதாந்தம். இவர்களுக்கு எந்நாளும் இன்பமே ; துன்பமில்லை. அணுக் குண்டை எறிந்தாலும் புன்னகையுடன் அதைக் கைநீட்டி ஏந்திக்கொண்டு அமைதியாய் இருப்பர். வசிட்ட முனிவரை இவர்களுக்கு உதாரணம் கூறலாம். கோசிகமன்னன் பேராசை யால் ஏவிய பயங்கரமான படைக்கலங்களை உண்டு ஏப்ப மிட்டவர் அவர். அவரின் சந்ததி நாம். சுவரூபநிலை மாறு பாடின்றி என்றும் ஒரே தன்மைத்தாய் நிற்கும்நிலை. பிரளயம் ஒடுக்கம். பிர + லயம்.
பெரிதாயெல் லாம்தாங்கும் மூலப் பகுதி தெரிவாயஃ தென்சேத் திரமாம் - கருவாகச் சீவசமு தாயமதிற் சேர்க்கின்றேன் யானுயிர்கள் யாவுமதில் நின்றுதிக்கு மே. 3.
பார்த்தா, பெரிதாய் எல்லாவற்றையும் தாங்குகின்ற மூலப் பிரகிருதி எனது சேத்திரம் என அறிவாய். அதிலே எனது சீவ சமுதாயத்தைக் கருவாக யான் வைக்கின்றேன். அதில் நின்று எல்லா உயிர்த்தொகைகளும் உதிக்கின்றன.
பிரகிருதி பகுதியெனத் தமிழ்வடிவம் பெற்று நின்றது. மூலப்பிரகிருதி மிக விரிவுபெற்றது ; சகல லோகங்களுக்கும் பிறப்பூவிடமானது. இது அபரப் பிரகிருதி யெனப்படும். அத். 7; 4-5. சீவப் பிரகிருதி இதனினும் வேருனது ; சின்மயமானது. பரப்பிரகிருதியென இது பெயர்பெறும். அத். 7 : 5. சீவப் பிர கிருதி எல்லா உயிர்களுக்கும் விதைமுதலானது. இதைச் சீவ சமுதாயமென இச்செய்யுளில் வழங்கலாயிற்று. மூலப் பிரகிருதி சித்தத்தின் வடிவம்.
இவ்விரு பிரகிருதிகளும் படைத்தற் தொழிலுக்கு உபகாரமாய் நிற்பதால் எனது பிரகிருதியெனப் பகவான் இயம்புகின்ருர், அத். 7 : 5. குணமயக்கிலே தன்னை அறியாமற் கிடந்த சேத் திரஞ்ஞனைக் குணுதீத ஞக்குதற்குச் சேத்திரத்தோடு சேர்ப்பதே படைத்தற் தொழிலாகும். இந்தச் சேர்க்கையினல் தாவர சங்கமமாகிய எல்லா உயிர்த் தொகைகளும் பிறக்கின்றன. அத். 13 : 27.
அபரப் பிரகிருதி சடசக்தி, பரப் பிரகிருதி சீவ சக்தி.
சடசக்தி சீவனிலும் சீவசக்தி சடத்திலும் மாறிக் கலப்பதே பிறவி மயக்கம். சட சக்தி யுடன் சீவசக்தி சேராவிடின்

Page 33
32 பகவத்கீதை வெண்பா
சடசக்திக்கு இயக்கமில்லை ; சடமின்றிச் சீவனென ஒன்று உளது என அறியுமாறுமில்லை. அடுத்த செய்யுளில் இது இன்னும் விளக்கமாகக் கூறப்படுகின்றது.
கருப்பைகளில் எங்கெங்கும் காண்டீவா வெவ்வே றுருப்பெற் றுதிப்பவைகட் கெல்லாம்-இருப்பாம் பிரகிருதி யொன்றே பிறப்பிடமாம் தாய்காண் தருபவன்யான் கர்ப்பாதா னம்.
எல்லாக் கருப்பைகளிலும் எங்கெங்கும் வெவ்வேறு உருப் பெற்றுப் பிறப்பவைகளுக் கெல்லாம் அபரப் பிரகிருதியே பிறப் பிடமாகிய தாய். பரப்பிரகிருதியாகிய நானே கருப்பாதானம் செய்யும் தந்தை.
மூலப் பிரகிருதி தாய், பரமாத்துமா தந்தை. பிரகிருதி காரியமாகிய தனித்தனி உடல்கள் தோறும் பரமாத்துமாவாகிய தந்தை தமது அம்சமாகிய சீவனென்னும் கருவினை வைக் கின்றர். அது தந்தை போன்ற உருவினை எடுக்கின்றது.
சிவசக்தியின் அம்சமாகிய ஆறு பொறிகள் சரவணப் பொய்கையாகிய சேத்திரத்தை அடைந்து ஆறு தெய்வக் குழந்தைகளாக உருவெடுத்து ஆறும் ஒன்ருகிக் கந்தனென அவதரித்த கந்தபுராணச் செய்தியும் இங்கே ஒப்புநோக்கத் தக்கது. கந்தன் என்னும் திருநாமம் சிவசக்தியின் சீவ சமுதாயத் தைக் குறிக்கின்றது.
" ஆதலின் நமது சத்தி அறுமுகன் அவனும் யாமும்
பேதக மின்றம்”, (கந்தபுராணம்) இது சிவவாக்கு.
பெரும்புயத்தாய் மூலப் பிரகிருதி நின்றும் வருங்குணங்கள் மூன்றுமுடல் வாழ்வு - தருந்தொடர்பால் அந்தமிலான் செய்கையிலா னகிநின்ற ஆன்மாவைப் பந்தமுறச் செய்திடுமப் பா. 5 ܗܝ
பெருந்தோளாய், மூலப் பிரகிருதியில் நின்றும் தோன்றிய முக்குணங்களும், அழிவில்லாதவனும் செயலில்லாதவனுமாகிய தேகியைத் தேகசம்பந்தத்தால் கட்டுப்படுத்துகின்றன.
கட்டற்ற பொருளாகிய ஆன்மா சின்மயமானது. பிர கிருதியோ குணமயமானது. சின்மயமான ஆன்மா பிரகிருதி

ஞான யோகம் 33
காரியமாய்த் தோன்றியதும் குணமயமாயுள்ளதுமாகிய உடலின் சார்பினல் சார்ந்ததன் வண்ணமாகத் தோன்றுகின்றதேயன்றி வேறன்று.
வெண்பளிங்குப் புட்டிலில் நிறைந்துள்ள கரிய மையின் சேர்க்கையால் புட்டில் கருமை நிறமாகக் காட்சியளிக்கின்றது. எழுத்தாளன் எழுத எழுதக் கரிய மை குறைந்து போகப் போகப் பளிங்கின் தன்னுெளி சிறிது சிறிதாக வெளிப்பட்டு விளங்கி, மை முற்ருக ஒழிந்த நிலையிற் பளிங்குப் புட்டில் தன்னெளியில் முழுதாக விளங்கித் தோன்றுகின்றது.
இதேபோல் சீவாத்துமா தான் சார்ந்து நின்ற தாமதம் இராசதமாய், இராசதம் சாத்துவிகமாய்க் குணத் தடிப்புப் படிப்படியாய் நீங்கும் நிலையில் தன் சுயவொளி படிப்படியாக விளங்கித் தோன்றிக் குணுதீத நிலையை அடையும் செவ்வியில் தன்னெளியிலே பூரணமாக வெளிப்பட்டு விளங்கித் தோன்று கின்றது.
மை எழுத்தாளனுக்கு உபகாரம். முக்குணங்களும் சீவாத்து மாவுக்கு உபகாரம். தனு, கரண, புவன போகங்களாகப் பரிண மிக்கின்ற பிரகிருதி சீவாத்துமாவின் பெரிய உபகாரி. இவற் றைத் தந்து ஊட்டி நிற்கின்ற அருளாளனுகிய இறைவன் மிகப் பெரிய உபகாரி. நடுநிலையில் நின்று தனு கரணங்களால் புவன போகங்களைப் பயன்செய்து அனுபவித்தால் இந்த உபகாரச் செயல்கள் இனிது விளங்கும். அத். 5 16. அத். 13 : 8-12.
பாவமற்ற பார்த்தா பரிசுத்தம் வாய்ந்தொளியின் சார்வுபெற்றுத் தீமைசெய்யாத் தன்மைத்தாய் - மேவுமுயர் சத்துவமான் மாவைச் சரீரசுகம் நுண்ணறிவாம் பற்றதனற் பந்தமுறுத் தும். 6
பாவமற்ற பார்த்தா, பரிசுத்தம் வாய்ந்து ஒளியின் சார்வு பெற்றுத் தீமை செய்யாத தன்மையுடையதாய் அமைந்த மேலான சாத்துவிக குணம் சரீரசுகப் பற்று நுண்ணறிவுப் பற்று என்பவற்ருல் ஆன்மாவைக் கட்டுப்படுத்தும்.
சத்துவ குணம் படைத்தோர் உலகில் நல்ல சுகம், நல்ல அறிவு, நல்ல கூட்டுறவு, நல்ல அனுபவம் என்பவற்றையே விரும்பி வாழ்வர் ; நல்ல நோக்கத்தோடு வாழ்வர். அனுப வங்களில் மனம் அழுந்தார் : மாருன அனுபவங்கள் கிடைத் தாலும் மயங்கி வருந்தார். அனுபவங்களை எளிதாகத் தாண்டும் மனப்பண்பு இவர்களுக்கு உண்டு.
Lu - 3

Page 34
34 பகவத்கீதை வெண்பா
* கல்வி யென்னும் பல்கடற் பிழைத்தும்
செல்வ மென்னும் அல்லலிற் பிழைத்தும்
நல்குர வென்னும் தொல்விடம் பிழைத்தும்" (திருவாசகம்) சாத்துவிகர் மனம் அடங்கக் கற்பர். இவர் கல்வியாற் பிறரை வெருட்டுவதில்லை. செல்வச்செருக்கை வென்று வாழ்வர். வறுமையிற் செம்மை உடைய வ ரா வர். இவர்களின் உள்ளத்தே உதித்த தெய்வமென்பதோர் சித்தம் ஒளிவிட்டு நிலைபெறும். சாத்துவிக குணபந்தம் இலேசானது. அத். 14:11. சாத்துவிக குணம் நிலைபெற்ருல் குளுதீத நிலை கைகூடும்.
ஆசை வடிவினதாய் ஆங்கதன லேவிருப்பும் பாசமெனும் பற்றும் பயப்பதாய்-ராசதந்தான் தேகியினைச்செய்கையிலே சேர்ப்பித்துச்செய்செயலால் மோகமடை விக்கும் முனைந்து. 7
இராசத குணமானது ஆசையின் வடிவமாய், விருப்பமும் பற்றும் உண்டாக்குவதாய் முன்னின்று ஆன்மாவைச் செயலிற் புகுத்திச் செய்கின்ற செயல்களாற் பந்தப்படுத்தும்.
ஆசை இராசத குணத்தின் பிள்ளை. கண்டது நின்றது கேட்டது எல்லாவற்றையும் பெற விரும்புமாறு அது மனத்தைத் தூண்டிநிற்கும். பெற்றதை இறுக்ப் பிடித்துக்கொள்ளும். ஆசைக்கோர் அளவில்லை. அது அகிலமெல்லாம் கட்டியாள நினைக்கும் ; வெட்டியாள நினைக்கும். அதன்மேல் கடலிலும் ஆணை செலுத்த அவாவும் அதுவும் போதாதென்று ஆகாயத்தி லும் பாதாளத்திலும் கூட ஆதிக்கம் தேடி அலையும் அமைதி யாய் வாழும் நாடுகளிடையே குழப்பத்தை மூட்டிவிட்டுச் சமாதானப் போர்வையுள் மறைந்துநின்று சதிசெய்யும்,
குபேரச் செல்வம் படைத்தவர்களையும் ஏழைகளைச் சுறண்டு மாறு ஏவிநிற்கும் ; கோடீசுவரர்களையும் இலட்சாதிபதிகளையும் இலஞ்சம், நாணய மோசடி முதலிய குற்றங்களில் இறக்கிவிடும். இராசத குணம் தான்மாத்திரம் வாழ நினைக்கும் ; மற்றவனை எழும்பவிடாது அதிகாரத்தால் தடைவிதிக்கும். இது ஆதிக்க மயமானது. அத். 3 37, 40.
இராசத குணத்தில் நின்றும் தோன்றிய ஆசைவீக்கம் என்னும் எதிர்காற்றின் அலைகளால் மனமென்னும் தோணி திசை தெரியாமல் அலைந்து சுயநலமாகிய பாறையில் மோதுண்டு சிதறிவிடப் புத்தியென்கின்ற மாலுமியும் சித்தமென்னும் சுக்கா

ஞான யோகம் 35
னுடன் கைநெகிழ்ந்து கலங்குகின்றன். இந்நிலையிலே, இராசதன் தான் செய்கின்ற செயல்களால் ஈட்டுகின்ற செல்வக் குவியல் கள் அவனுக்கு மன அமைதி தருவதில்லை.
நிலையில்லாத இவ்வுலகில் நிலையில்லாத பொருள்களைக் கொண்டும் நிலையான சாந்தியைப் பெறலாம் என்னும் நினைவு இராசதனுக்கு உதிப்பதில்லை. அத். 9 : 33. வினைசெய்து ஆறுதல் அடைதற்குப் பதிலாக வினையால் அவன் மேலும் கட்டுண்ணு கின்றன். இராசதனின் மனம் புலன்களுக்கு அடிமைப்பட்டுக் கிடப்பதால் அவனுக்கு ஆறுதலில்லை. அத். 2 : 8.
இராசதம் தாமதக் கலப்பில் நின்றும் நீங்கிச் சாத்துவிகக் கலப்புப் பெற்றுச் சுத்த சாத்துவிகமாக மாறவேண்டும். அத். 6 : 27. இராசத பந்தம் இரும்பு விலங்கு போன்றது.
பார்த்தா அறியாமைப் பால்நின்று தோன்றியே ஆழ்த்தி மனமயக்கில் ஆன்மாவை-வீழ்த்தியே புந்திமயக் கஞ்சோம்பல் போகாத் துயிலிவற்றைத் தந்துபந்திக் குந்தாம தம். 8
அருச்சுன, தாமத குணம் அஞ்ஞானத்தில் நின்றும் தோன்றி ஆன்மாவை மனமயக்கில் வீழ்த் தி ஆழ்த்தி மதிமயக்கம் சோம்பல் ஒரே நித்திரை என்பவற்றைத் தந்து பந்தப்படுத்தும்,
அஞ்ஞானம் காரண காரியமாய் வரும். அஞ்ஞானத்தால் தாமதம் ; தாமதத்தால் அஞ்ஞானம். தாமத குணமுள்ளவன் மனமயக்கம், மதிமயக்கம், சோம்பல், மடிதுயில் என்பவற்றற் கடமையிலே சோர்வுபடுதலால் அவனை அறியாமை மேலும் சூழ்ந்துகொள்கின்றது. பயம் பற்றிக்கொள்கின்றது. தாமத பந்தம் இரும்பு விலங்கும் துலங்கும் போன்றது. துலங்கு-கால் விலங்கு.
தாமத குணம் இராசத குணம் கலக்கப்பெற்றுச் சுத்த இராசதமாகி இராசதம் சாத்துவிக குணம் கலக்கப்பெற்றுச் சுத்த சாத்துவிகமாகப் படிப்படியாய் உயர்தல் வேண்டும். சுத்த சாத்துவிகநிலை குணுதீத நிலைக்கு வழிசெய்யும்.
இனியசுகம் சேர்க்குஞ்சாத் வீகம் செயலில் முனைவித் திராசதம்முன் நிற்கும் -தனுவுடையாய் பொய்யறிவால் ஞானத்தைப் போய்மறைத்தே புந்திமயல் செய்யுமே தாமதம்நீ தேர். 9

Page 35
36 பகவத்கீதை வெண்பா
விசயா, சத்துவ குணம் இனிய சுகத்தைத் தரும். இராசத குணம் செயலில் முனைவித்து முன்னிற்கும். தாமதகுணம் அறியாமையால் அறிவை மறைத்து மனமயக்கஞ் செய்யு மெனத் தெரிந்துகொள்.
சாத்துவிகம் இன்பமே சூழ்க; எல்லாரும் வாழ்க என நினைக் கும். இராசதம் செயலில் மேன்மேல் முயலும். தாமதம் செய லில் ஊக்கமின்றிக் கிடக்கும். சாத்துவிகர் மனத் தெளிவுடன் செயல்புரிவர். தாமதர் நாளைக்கு நாளைக்கு என்று கருமங்களைப் பின்போட்டுக் கிடப்பர். சாத்துவிகம் சாந்தமே வடிவானது. இராசதம் வேகமே வடிவானது. தாமதம் கலக்கமே வடிவா னது.
சத்துவமி ராசதத்தைத் தாமதத்தைத் தாண்டுமே சத்துவத்தைத் தாமதத்தைத் தானடக்கி - நித்தமும்போய்த் தாண்டு மிராசதந்தான் சத்துவத்தை ராசதத்தைத் தாண்டுமே போய்த்தாம தம். 10
சாத்துவிக குணம் இராசத குணத்தையுந் தாமத குணத் தையும் அடக்கித் தான் மேற்பட்டு நிற்கும். இராசத குணம் சாத்துவிக குணத்தையுந் தாமத குணத்தையும் அடக்கித் தான் மேற்பட்டு நிற்கும். தாமத குணம் சாத்துவிக குணத் தையும் இராசத குணத்தையும் அடக்கித் தான் மேற்பட்டு நிற்கும். ×
முக்குணங்கள் ஒவ்வொன்றிலும் ஏனைய குணங்கள் இரண் டும் மாறிமாறிக் கலந்து மேலாடி நிற்பதால் மனிதர் காலையில் ஒன்ருவர்; கடும்பகலில் ஒன்ருவர்; மாலையில் ஒன்ருவர். இக் குணக் கலப்பிலே சாதகர் விழிப்பாயிருத்தல் வேண்டும். விழிப்பு.
T60)
சாத்துவிகர் இடையிடையே இராசதராகின்ருர்; தாமதரு மாகின்றர். தாமதராதல் குறைவு. இராசதர் இடையிடையே சாத்துவிகராகின்றர். தாமதருமாகின்றர். தா ம த ரா த ல் குறைவு. தாமதர் இடையிடையே இராசதராகின்றர்: சாத்து விகருமாகின்ருர். சாத்துவிகராதல் குறைவு.
இக் குணக்கலப்பு தாமதர்க்கு நல்லது. இராசதர்க்குச் சாத்துவிகக் கலப்பு நல்லது; தாமதக் கலப்புக் கூடாது. அதைக் கட்டுப்படுத்தல்வேண்டும். சாத்துவிக குணத்தில் நன்கு பழக வேண்டும். தாமதர் இராசத சாத்துவிகக் கலப்பில் நன்கு பழக வேண்டும். சாத்துவிகர்க்கு இக் குணக் கலப்பு ஒன்றும் நல்ல

ஞான யோகம் 37
தல்ல. இவர் கலப்பில்லாத சுத்த சாத்துவிக குணத்தில் நன்கு பழகி நிலைநின்று குணங்கடந்த நிலையினை நோக்கி மேலே செல்லுந் தகுதிக்கு உரியவராதல் வேண்டும். உணவு முறை யாலும் தியானப் பழக்கத்தாலும், நல்லோர் சேர்க்கையாலும் இது கைகூடும்.
* சிற்கு ணத்தர் தெரிவரு நன்னிலை
எற்கு ணர்த்தரி தெண்ணிய மூன்றனுள் முற்கு ணத்தவ ரேமுத லோரவர் நற்கு ணக்கட லாடுதல் நன்றரோ" (கம்பர்)
ஐந்து பொறிகரண மாம்வழியே மெய்ஞ்ஞானச்
சொந்தவொளி வந்தெப்போ தோன்றுமோ-மைந்தநீ உற்றுணர்வாய் தேகத்தினுள்ளுயர்ந்த சாத்விகமாம் சிற்குணம்மே லிட்டதெனத் தேர்ந்து. 11
அருச்சுன, ஐம்பொறிகளிலும், அந்தக்கரணங்களிலும் மெய்ஞ்ஞானமாகிய சுயவொளி எப்போது தோன்றுகின்றதோ, அப்போது சரீரத்தினுள்ளே சாத்துவிக குணம் மேலிட்டுள்ள தெனத் தெரிந்துகொள்வாய்.
ஐம்பொறிகளுக்கும் கண் நடுநாயகம். கண்ணிற் சிறந்த உறுப்பில்லை. கண்வழியேதான் கருத்துச் செல்லும். 'கண்ணே கருத்தே' என்பர் தாயுமானசுவாமிகள். 'கைவழி நயனம் செல்லக் கண்வழி மனமும் செல்ல" என்பர் கம்பர் பெருமான். *"ஐந்துபேரறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும் - சிந்தையே யாகக் குணமொரு மூன்றும் திருந்து சாத் துவிகமே யாக ' என அழகாகவும், தெளிவாகவும், நுட்ப மாகவும் கூறுகின்ருர் சேக்கிழார் சுவாமிகள். கண்ணும் கருத்தும் என்பது உலக வழக்கு. இதனல் பொறிவழியே யென்பதற்குக் கண் முதலிய ஐம்பொறிகளின் வழியேயெனப் பொருள் கொள்க. கரணங்களின் வழியே என்பதற்கு மனத்தை முத லாகக் கொள்க
வெள்ளம்போல் ஆசையினுல் வேண்டும்புறப்பொருட்கண் உள்ளம் கிளர்தல்செயல் மேலூக்கம்-கொள்ளல் அமைதியின்மை யாமிவைகள் ராசதம்மே லிட்ட சமயமதில் தோன்றுமெனச் சாற்று. 3

Page 36
38 பகவத்கீதை வெண்பா
பேராசையினல் விரும்புகின்ற பொருள்களைப் பெறுதற்கு உள்ளம் கிளர்தல், செயல்களில் ஊக்கம் கொள்ளல், அமைதி யின்மை யென்னும் இவைகள் இராசத குணம் மேலிடும்போது தோன்றும்.
* போர்படைத்த ஊதியத்தால் போர்க்கருவி
வல்லமையால் போரே காணு ஊர்படைத்த மக்கள்சிந்தும் உதிரத்தால்
உண்டாய அரசை ஓம்பிப் பார்படைத்த செல்வமெலாம் படைத்துவிட்டோம்
பாரின்முதல் தலைவ னென்ற பேர்படைப்போம் இனியென்னும் பேராசை
நாடுகளைப் பின்செல்லேம் யாம்.” (ஏ. பெ.) புறப்பொருள்களில் மாத்திரம் தன்னிறைவு பெறும் முயற்சி மனநிறைவு தராது. அங்கு உலோபமும், கெடுபிடியுமே மேலாடி நிற்கும். உலோபம் களவின் வேருெரு வடிவம். அத். 3 - 12 இதனல் எல்லாம் கெடும். உள்ளதுபோலக் கெடும். "பேராசை பெருந் தரித்திரம் ".
* ஆன கிடக்கவோர் ஆள்கிடக்கத் தன்னுணவாய் ஏனை அராக்கிடக்க ஏற்றுநாண் - தோல்நுனியை மெள்ளக் கடித்தெல்லாம் வீணுகத் தான்மடிந்த • குள்ளநரிக் கிக்கதியேன் கூறு.” (ஏ. பெ.)
மந்த மதிமுயற்சி யின்மை மறதியுடன் புந்தி மயக்கம் புகுந்தொன்ருய் - வந்தியைந்து தாமடையும் போதுடலில் தாமதம்மே லிட்டதென நீமனதிற் கொள்வாய் நிசம். 13
மந்தமதி, முயற்சியின்மை, மறதி, மதிமயக்கம் என்னும் இவைகள் உண்டாகும்போது உடலின் கண்ணே தாமதகுணம் மேற்பட்டுள்ளதென நீ நிச்சயமாக நினைந்துகொள்.
மந்த மதி மழுங்கிய விவேகம், புந்தி மயக்கம் ஒன்றை மற்முென்முக விளங்குதல். தாமதர் முதலில் உணவிலே மாற்றம் செய்யவேண்டும். நல்லோருடன் கூடவேண்டும். வைகறையில் துயிலெழவேண்டும். அதிகாலையில் நீராடவேண்டும். சிறிது நேரமாவது தியானஞ் செய்யவேண்டும். தியானம் இருவகை; தெய்வத் தியானம்; கடமையிலே தியானம், இந்தப் பழக்கத் தால் தாமதத் தடிப்புப் படிப்படியாக நீங்கும்.

ஞான யோகம் 39
* சோம்பலுடன் இவன்பிறந்த தொருநாளில்; இவனைச்
சூழ்ந்துநிற்கும் வறுமையுடன் சிறுமைசுற்ற மெனவே தேம்பிகிற்கும் இவன்தந்தை பெயர்நாளைச் செய்வார்;
திருத்தாயின் பெயர்கேட்பின் தேவையம்மாள் அறிவீர்; போம்பொழுதோர் அலுவலுக்கே, அதனைமுடி யாமற்
போவதுடன் முடிப்பவரைப் பழிப்புரையும் சொல்வான்; "ஆம்பிளைபேர் தாமதம்; பின் தங்கியிவன் மனைவி, ۔۔۔۔
அனுதினம்நித் திராதேவி ஆசியிவர்க் குண்டே'.
(ஏ. பெ.)
மெய்யொளிசேர் சாத்துவிகம் மேலிட் டிருக்கையிலே பொய்யுடலை விட்டொருவன் போவானேல் - ஐயமிலை அத்தகைய மேலோன் அடைகின்றன் மெய்ஞ்ஞான வித்தகர்செல் நல்லுலக மே, 14
உண்மையொளி வாய்ந்த சாத்துவிக குணம் மேலிட்டிருக்கும் போது உடலைவிட்டு ஒருவன் போவானேல் அத்தகைய மேலோன் மெய்ஞ்ஞானச் செல்வர்கள் செல்கின்ற நல்லுல கங்களை அடைகின்றன்.
மெய்ஞ்ஞான வித்தகர் நல்லறிவாளர்; சத்துவகுண சம்பன்னர்; குளுதீதராதற்கு முன்பு உடலை விட்ட சாத்துவிகர். நல்லுலகம் அமலலோகம், குணதீத நிலையினை அடைதற்குரிய சூழ்நிலைகள் அமைந்த உலகம். அவ்வுலகங்களில் வாழ்ந்து அனுபவம் முடிந்தபின்னர், சாத்துவிக பாவனையில் இறந்தோ னதலால் அப்பாவனைக் கேற்ப மீண்டும் சாத்துவிக சம்பன்னணுக மண்ணுலகிற் பிறக்கின்றன். பாவனை போன்றது பேறு. அத், 8 : 5-6.
இறப்போன் இராசதத்தில் ஈங்குசெயற் பற்றிற் பிறப்போ ரிடையே பெயர்த்தும் - பிறப்பான் இறப்போன் தமத்திற் பகுத்தறிவில் லாத பிறப்பாய்ப் பிறந்துழலும் பின்பு. 15
இராசதகுணம் மேலிட்டிருக்கையில் இறப்பவன் கருமப் பற் றுடையோர் மத்தியில் மீண்டும் பிறப்பான். தாமத குணம் மேலிட்டிருக்கையில் இறப்பவன் பகுத்தறிவில்லாத பிறப்பாகப் பிறந்து உழல்வான்.
பகுத்தறிவு உடல்வேறு உயிர்வேறு என்று பகுத்து அறி கின்ற அறிவு.

Page 37
40 பகவத்கீதை வெண்பா
சத்துவத்தாற் சார்பயன்தான் சற்கரும மோடுபரி சுத்த மெனவே துணிவாய்நீ - புத்தியுளோய் துன்ப மிராசதத்தால் தோன்றுபயன் தாமதத்தால் அன்பபயன் அஞ்ஞான மாம். - 6
சத்துவ குணத்தால் வரும் பயன் நற்செயலும் பரிசுத்தமு மாம் என நிச்சயிப்பாய். புத்தியுள்ளவனே, இராசத குணத் தால் வரும் பயன் துன்பமாம். அன்புடையாய், தாமத குணத் தால் வரும் பயன் அஞ்ஞானமாம்.
சத்துவ குணத்தால் நற்செயலும் பரிசுத்தமும் வளர் கின்றன. நற்செயலாலும் பரிசுத்தத்தாலும் சத்துவகுணம் நிலைபெற்று வளர்கின்றது. இராசத குணத்தால் துன்பம் வளர் கின்றது; துன்பத்தால் இராசதகுணம் நிலைத்து வளர்கின்றது. தாமத குணத்தால் அஞ்ஞானம் வளர்கின்றது; அஞ்ஞானத்தால் தாமத குணம் நிலைத்து வளர்கின்றது. இவை காரண காரிய மாக வருகின்றன.
குணத்தாற் செயல் பிறக்கின்றது; செயலாற் குணம் வளர் கின்றது. குணத்தால் குலம் தோன்றி வளர்கின்றது; குலத் தால் குணம் நிலைத்து வளர்கின்றது. அத். 4:13. அத். 18:41.
"மணத்தளவே யாகும் மலர்மாட்சி மாந்தர்
குணத்தளவே யாகும் குலம்’ (ஏ. பெ.)
"குலத்தளவே யாகும் குணம்.” (ஒளவையார்)
சத்துவத்தால் நல்லறிவு தான்பிறக்கும் பேராசை பற்றும் இராசதம்மேற் பட்டுநிற்பின்-உத்தமா தாமதத்தால் அஞ்ஞானம் சாருமவ தானமின்மை ஆமடுத்து மோகமுமுண் டாம். 7
உத்தமா, சத்துவ குணத்திலிருந்து நல்ல்றிவு பிறக்கின்றது. இராசத குணத்தால் பேராசை பற்றுகின்றது. தாமத குணத்தி லிருந்து அஞ்ஞானமும், மறதியும், மதிமயக்கமும் உண்டா கின்றன.
சத் நல்லது. சத்திலிருந்து சித் பிறக்கிறது. சித் அறிவு.
இரசம் ஆசை. இரசத்திலிருந்து இராசதம் தோன்றுகின்றது. தமம் இருள். தமத்திலிருந்து தாமதம் உண்டாகின்றது.

ஞான யோகம் A.
சாத்துவிகர் மேல்நிலையைச் சார்வார் இராசதர்தாம் ஆர்த்தே இடைநிலையில் ஆங்குநிற்பார் - பார்த்தா கடைப்பட்ட தாமசரோ காணுர் உயர்ச்சி
இடர்ப்பட்டுக் கீழிறங்கு வார். 18
பார்த்தா, சாத்துவிகர் மேல்நிலையைச் சார்கின்ருர், இராசதர் இடைநிலையில் நிற்கின் ருர், தாமதரோ உயர்ச்சி காணுமற் கீழே இறங்குகின்ருர்.
சாத்துவிகர் சாதுத் தன்மையில் நிலைநின்று குணுதீத நிலைக்கு உயர்கின்ருர். இராசதர் இறுமாப்பில் தலை நிமிர்ந்து நின்று ஆரவாரஞ் செய்துகொண்டு இவ்வுலக அனுபவத்தோடு மறைந்துவிடுகிருர், தாமதர்க்குத் தூக்கமேயன்றி ஊக்கமில்லை; கீழ்நிலைக்குச் செல்கின்ருர். தாமதர்க்கு ஆக்கம் உண்டாகாது.
சாத்துவிகர் இன்பமே காண்கின்ருர். இராசதர் இன்பமும் துன்பமும் காண்கின்ருர், தாமதர் துன்பமே காண்கின்ருர், இவை பிறர் தர வருவனவல்ல; தாம் வளர்த்த குணங்களால் தாமே தர வருவன.
தன்னைக் கருத்தாவாத் தான்காணுன் சார்ந்தகுணம் தன்னைக் கருத்தாவாத் தான்காண்பான்- அன்னுேன் குணங்கடந்த மெய்ப்பொருளைக் கூடி யுணர்ந்தே
அணைந்தான் எனதுநிலை யை. 19.
சாட்சியளவாய் நிற்கின்ற சீவாத்துமாவானது தன்னைக் கருத்தாவாகக் காணுணுயின், தான் சார்ந்து நிற்கின்ற குணத்தையே கருத்தாவாகக் காண்பானுயின்; அன்னேன் குணங்களுக்கு அப்பாற்பட்ட பரம்பொருளை யோகத்தில் நிலைத்து நின்று உணர்ந்து அதன் சுவரூபத்தை அடைகின்றன்.
பரம்பொருளின் சுவரூப நிலையில் நின்றும் தோன்றியதே பகவானின் அவதார மென அறிக. அத். 49.
உடற்கட்டிம் முக்குணத்தால் உண்டான தென்றே கடப்பா னிவைபிறப்பாற் காணும் - அடற்பிணிகள் ஒதாத மூப்பிறப்பில் உள்ளம் சமன்செய்தான்
சாவாத தன்மையடைந் தான். 20

Page 38
42 பகவத்கீதை வெண்பா
தேகபந்தம் இம் முக்குணங்களால் தமக்கு உண்டான தென்று எண்ணி இக் குணங்களைக் கடந்த சீவாத்துமா பிறப் பால் வருகின்ற பிணி மூப்புச் சாக்காடு என்பவற்றில் மனச் சமாதானம் உடையவனுய்ச் சாவாத தன்மையை அடை கின்றன்.
உடல்வேறு : உயிர்வேறு ; உடல் குணவடிவம் : உயிர் ஞானசொரூபம் ; உடல் முக்குணச் சார்பால் வந்தது ; ஆன்மா வாகிய தனக்கு உபகாரமானது. எனினும், பெற்ற உபகாரத் துக்காக அதன் குணங்களின் பின்னே அலைவது அறியாமை யாகும் ; குணங்களை வெல்வதே அறிவாகும். 'காமமாதியாம் உள்ளுறு பகைவருக்கு ஒதுங்கி வாழ்வனே" என மன உறுதி கொண்டு நடுநிலையில் நின்று சத்துவகுண விருத்திபெற்றுச் சத்துவ குணத்தின் உபகாரத்தையும் விட்டு அக்குணத்தையும் கடந்துசென்று அனுபவ ஞானம் அடைந்த பிரம ஞானிக்கு இனிப் பிறப்பில்லை. அத். 2 : 14-15.
மண்ணுலகிலும் விண்ணுலகிலும் காண்பதற்கு அரிய பொரு ளாகிய ஒரு மகான்; அந்த அருள் வள்ளலின் முதுகிலே பெரிய பிளவைநோய்; சத்திர சிகிச்சை செய்ய வைத்திய நிபுணர் இருவர் வந்திருக்கிருர்கள் ; அவ்விருவரையும் உற்று நோக்கிய அம்மகான், நீங்கள் உங்கள் சேவையைச் செய்யுங்கள் என அமைதியாகச் சொல்லிக்கொண்டே சமாதி கூடுகின்ருர் : மயக்க மருந்துமில்லை; திமிர்க்கும் மருந்துமில்லை. மணித்தியாலக் கணக்கில் சத்திர சிகிச்சை நடக்கிறது; உடற்பற்றை விட்டுக் குணுதீதரான அம்மகான் அசையவுமில்லை ; வசையவுமில்லை.
அவர்தம் சமநிலையைக் கண்டு அதிசயமடைந்த அவ் வைத்திய நிபுணர் இருவரும் மகானின் திருவடிகளை வணங்கி யெழுந்து ஆசிபெற்றுச் செல்கின்றர்கள். தெய்வீக சக்தியை இவ்விஞ்ஞான யுகத்தில் விஞ்ஞானிகளும் கண்டு தெளியும் வண்ணம் திருவருள் நோக்கத்தால் இத்தகைய நோய்கள் மகான்களுக்கு வருவதை யாரறிவார் ! குணுதீதரின் நிலைக்கு மகான் ரமண மகா ரிஷிகள் கண் கண்ட உதாரணமாக விளங்கு கின்ருர்கள். பூரீ ராமகிருஷ்ண பரமஹம்ச தேவருக்கு வந்த பிளவை நோயும் திருவருட் குறிப்பால் வந்ததே. உடல்வேறு : உயிர்வேறு என்ற உண்மையை அனுபவத்திற் கண்ட மகான்கள் மூலம் உலகம் மீட்சி பெறுகின்றது. அத். 2 : 71.

ஞான யோகம் 43
அருச்சுனன் : கண்ணபெரு மானே கடந்தோனிம் முக்குணங்கள் என்னவியல் பாற்கடந்தான் எவ்வண்ணம்-அன்னேனின் ஆசார மெல்வா றமையும் உரைத்தருளென் ஆசா னெனுமுரிமை யால். 21
கண்ணபெருமானே, இம் முக்குணங்களையும் கடந்த சீவன் முத்தன் இவற்றை என்ன இயல்பினுற் கடந்தான்? எவ்வண்ணம் கடந்தான்? அன்னேனின் ஒழுக்கநெறி எவ்வாறு அமைந்திருக் கும்? தேவரீர் என் குருமூர்த்தியென்னும் உரிமையால் கேட் கின்றேன். உரைத்தருள்க.
கண்ணபிரான் : பாண்டவா சத்துவத்தின் பண்பாகும் உள்ளொளியோ பூண்ட ரசத்தின் புலச்செயலோ - ஈண்டும் தமத்தின் கலக்கமோ தான் மே லிடுங்கால் சமத்துவமாய் நிற்குமவன் தான். 22
பாண்டவா, சத்துவகுணத்தின் இயல்பான உள்ளொளியோ, இராசத குணத்தின் இயல்பான புலச்செயல்களோ, தாமத குணத்தின் இயல்பான கலக்கமோ மேலிட்டுத் தோன்றும் போது குளுதீதன் சமநிலையில் நிற்பான். அத். 2 : 55 - 57, கீழ்ப்பட்டு மறையும்போதும் சமநிலையில் நிற்பான். வருவ தும் போவதும் குணச்செயல்கள். வருவது வரும் ; நிற்பது நிற்கும்; போவது போகும். என்செயல் என்பது ஒன்றில்லை என இயல்பாகக் கண்டிருப்பான் சீவன்முத்தன்.
சாட்சி யளவாயே தானிருந்து கொண்டுகுண ஆட்சி வசப்பட் டலையாமல் - மீட்சியுற்றே செய்செயல்க ளெல்லாம் குணச்செயலென் முன்மாவில் ஐயமற நிற்குமசை யாது. 23
தான் சாட்சியளவாயே இருந்துகொண்டு, குணங்களின் ஆட்சிக்கு அடிமைப்பட்டு அலையாமல், மீட்சியுற்று, செய்கின்ற செயல்களொன்றும் தன்செயலன்று ; குணங்களின் செயல்களே யென்று சந்தேகமின்றி ஆன்மாவில் அசையாது நிற்பான்.

Page 39
44 பகவத்கீதை வெண்பா
குணங்கள் உடல்களிலேயே உள்ளன ; ஆன்மாவில் உள்ளன வல்ல என்னும் உண்மையினை அனுபவத்திற் கண்டிருப்பர் சீவன்முத்தர். அத். 3:28,
சார்ந்ததுன்ப மின்பம் தனிற்சமமாய்த் தன்னிலே சார்ந்து நிலைபெற்ற தன்மையணுய் - வீழ்ந்துடைந்த மண்ணுே டுடனே மணிபொன் எனுமிவற்றின் கண்ணே சமநோக்கம் காண்போனப் -எண்ணும் விருப்பு வெறுப்பிவைகள் மேவிற் சமமாய் இருக்கும் மனநிலையிங் கெய்தி - வருத்தமுறத் தூற்றும் இகழ்ச்சியிலும் சொல்லும் புகழ்ச்சியிலும் மாற்றமிலான் நிற்பான் மனம். 24
வலியவந்து சார்ந்த துன்பத்திலும் இன்பத்திலும் சமமாய்; ஆன்மாவிலே சார்ந்து நிலைபெற்ற தன்மை வாய்ந்தவனுய் கலவோடு, மணி, பொன் என்பவற்றிலே சமநோக்கம் காண் பவனுய்; விருப்பு வெறுப்பு என்னும் விரோத இரட்டைகளிற் சமமாய்; அசைவின்றியிருக்கும் மனநிலை பெற்று; தூற்றுகின்ற இகழ்ச்சியிலும், போற்றுகின்ற புகழ்ச்சியிலும் நெஞ்சம் சோர்ந்து ஒருபால் ஓடாத நடுநிலையில் நிற்பான்.
மானமவ மானம் வரிற்சமமாய் நண்பரிடம் ஏனிைப் பகைவ ரிடம்சமமாய்த் - தானின்றே ஆசைவாய்ப் பட்டெதுவும் ஆற்ரு தவன்கண்டாய் பேசுகுணு தீதப் பிறப்பு. 25
மானம் அவமானம் வருமிடத்துச் சமமாய் ; நண்பரிடத்தும் ஏனைப் பகைவரிடத்தும் சமமாய்; ஆசைவாய்ப்பட்டு எச் செயலையும் செய்யாதவன் குனதிதன் என்னும் மறுபிறப்பு அடைந்தவன்.
குனதிதப் பிறப்பு இவ்வுடலில் இருக்கும்போதே இங்கேயே அடைந்த மறுபிறப்பு. அத், 2 : 55. அத். 5:18, 28.
இந்நிலைக்க ணன்றிமா றில்லாத பக்தியால் என்னைப் பணியும் இனியோனும் - பின்னஞ்செய் முக்குணங்கள் தம்மை முறையே கடந்தென்னில் ஐக்கியமா தற்குரியோ ஞம். 26

ஞான யோகம் 45
இதுவரையும் கூறிய கர்மயோகம், இராசயோகம், ஞான யோகம் என்னும் நிலைகளில் நிற்போர் மாத்திரமன்று முறை தவருத பக்தியில் நிலைத்துநின்று என்னைப் பணிகின்ற எனக்கு இனியோணுகிய என் பக்தனும், பின்னஞ்செய்கின்ற முக்குணங் களையும் படிமுறையாகக் கடந்து என்னில் ஐக்கியமாதற்கு உரியவனுகின்றன். இது சகுணப் பிரம தரிசனம். அத். 7 : 14. பின்னம்-பிரிவு. அபின்னம்-பிரிவின் மை. மாறில்லாத பக்திமாறுபடாத பக்தி; வியபிசாரமில்லாத பக்தி, உடல் உயிர் என்பவற்றின் இடையேயுள்ள வேறுபாட்டினை மாறுபாடின்றிச் சமய சாத்திரங்களால் அறிந்தாலும், பக்தி கனிந்த கருமத் தாலும், பக்தி கனிந்த ஞானத்தாலுமே குணக்கடலை நேரே கடத்தல் முடியும். கருமம், ஞானம் என்பன கைவரப்பெருதவர் களும் நிலையான பக்தியினல் படிமுறையாகக் குணக்கடலைத் தாண்டுதல் கூடும்.
பக்தியோகத்தில் நிலைத்து நின்று கருமயோகத்திற் கால் வைக்கலாம். கருமயோகத்திற் காலூன்றி நின்று ஞானயோகத் தைக் கைப்பற்றலாம்.
குணம் அணுதி ஆணவம் போல. குணம் நீங்கிய பின்பும் குணவாசனை ஆன்மாவைப் பற்றிக் கிடக்கும் ஆணவம் நீங்கிய பின்பும் அதன் வாசனை கிடப்பதுபோல, வாசனையும் அற வேண்டும். வாசனை நீங்குதற்குப் பக்தியுடன் கூடிய மெய் யுணர்வுக் கலவையே கைகண்ட மருந்து. வாசனையும் நீங்கினல் மனம் பரிசுத்தமாகும். பின்னர் மனமற்ற பரிசுத்த நிலை வாய்க்கும். அத். 2 : 59.
கருமயோகம், சாங்கிய கருமயோகம், சாங்கிய ஞான யோகம், பக்தியோகம் என்னும் நான்கிற்கும் பக்தியே நிலைக் களமாகும். சாங்கிய கருமயோக மென்பது தியான யோகம் அல்லது இராச யோகம் எனப்படும். அத். 12:2, 17.
அழியாத முத்திநிலை யாம்பிரம வாழ்வும் அழியாத நல்லறமும் ஆங்கே-அழியாத ஒப்பில் சுகமும் உறைவிடம்யா னேகுணங்கட் கப்பால்நின் றென்னையடை வாய். 27
அழிவில்லாத முத்திநிலையாகிய பிரம வாழ்வும், அழிவில் லாத கருமமாகிய தருமமும், அழிவில்லாத ஒப்புயர்வற்ற சுகமும் உறையுமிடம் யானே. குணம் கடந்த நிலையில் நின்று என்னை அடைவாய்.

Page 40
46 பகவத்கீதை வெண்பா
எல்லார்க்கும் இறைவழிபாட்டிற் சமசந்தர்ப்பம் அளிப்பதே கீதையின் குறிக்கோள். இந்தக் குறிக்கோள் பகவத்கீதா சாத்திரம் முழுவதிலும் பரந்து கிடக்கின்றது. அனுபூதிச் செல்வராகிய சங்கராச்சாரிய சுவாமிகள் போன்ற அதிதீவிர புத்திமான்கள், காந்தியடிகள் போன்ற சாத்துவிக சத்திய சாதன சீலர்கள், வினுேபாஜி போன்ற கருமதரும வீரத் தியாகிகள், கலாநிதி சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் போன்ற தத்துவ மேதைகள், சைவப்பெரியார் பொன். இராமநாத வள்ளல் போன்ற அரசியல் ஞானிகள், சேர் எட்வின் ஆணல்ட் போன்ற மேல்நாட்டு விற்பன்னர்கள் முதலிய நல்லோர்களை யெல்லாம் கவர்ந்து நிற்கின்ற புனித சனதன தருமப் பொக்கிஷ மாகிய கீதைப் பனுவல் சாத்திர விதிகளை அறியாத பக்திமான் களுக்கும் பெரிதும் இடம்தந்து நிற்கின்றது. எல்லாரும் மீட்சி பெறும் புகுமுக வாயிலாய் அது அமைந்துள்ளது. இந்த அத்தி யாயத்தின் இறுதியிலும் இக் குறிக்கோள் விளங்கி நிற்பதை 26ஆம், 27ஆம் செய்யுள்களிற் காண்க.
பக்தியோகத்தாற் பெறும் சகுணப் பிரம தரிசன நிலை 26ஆம் செய்யுளிலும், சாங்கிய ஞானத்தாற் பெறும் நிர்க்குணப் பிரம தரிசன நிலை 27ஆம் செய்யுள் முதலாம் அடியிலும், இறைவனுடன் பிரிப்பின்றிச் சார்ந்துநிற்கும் தருமநிலையாகிய நிஷ்காம கரும யோகப்பேறு இரண்டாம் அடியிலும் சாங்கிய கரும யோகத்தால் அடையும் ஒப்புயர்வில்லாத இன்பநிலை மூன்றம் அடியிலும் தொகுத்துக் கூறப்படுவதுடன் அத்தியாயப் பொருள் நிறைவுறுகின்றது.
பதினன்காம் அத்தியாயம்
குணத்திரய விபாக யோகம் நிறைவுற்றது.
செய்யுள் 62.
குணம் கடந்த நிலையே பின்னமிலாக் கூட்டம்.

பதினைந்தாம் அத்தியாயம் புருஷோத்தம யோகம் பொருட் சுருக்கம்
சஞ்சார மென்னும் தருவைப்பற் றின்மையெனும் அஞ்சாத வாளால் அறவெறிந்தே - நெஞ்சாரச் சார்வாய் சரனட் சரனிவர்க்கும் மேலாய சார்வாம் பிரமமெனும் சார்பு.
உலகமென்னும் பிரபஞ்சம் தலைகீழாய் நிற்கும் ஓர் ஆல மரம் போன்றது. இந்தச் சஞ்சார தருவின் ஆணிவேர் நிர்க் குணப் பிரமத்தின் கண் உள்ளது. இது தோன்றி வளர்தற்கும் தேய்தற்கும் மாய்தற்கும் இடமாயுள்ளது சகுணப்பிரமம். இது நிலைமாறுவது ஆதியந்தம் அறியவொண்ணுதது. பற்றின்மை யென்னும் வாளால் மனவுறுதியுடன் இதை வெட்டி வீழ்த்து வோர் ஆன்ம தரிசனம் பெற்று ஆன்மாவால் பரமாத்தும தரிசனம் பெறுகின்றர்கள்.
உலகங்கள் பிரகிருதியின் அம்சம். உயிர்களெல்லாம் பரப் பிரமத்தின் சீவ சமுதாயத்தின் அம்சம். மனித சமுதாயத்தை இந்த ஒருமைப்பாட்டுக் கண்ணுல் நோக்க வேண்டும். ஆன்மா உடலினுள் புகும்போதும், உடலை விடும்போதும் பிரகிருதி குண சம்பந்தமான மனத்தையும், பொறிகளையும், தசவாயுக் களையும் சூக்கும வடிவாக இழுத்துச் செல்கின்றது. உடலின் இன்பதுன்ப நிகழ்ச்சிகளுக்கு இது காரணமாகும். இந்த நிகழ்ச்சிகளில் ஆன்மா சாட்சியளவாயே நிற்கின்றது என்னும் உண்மையை அறிவதே அனுபவ ஞானம்.
உயிர் உடலில் இருக்கும்போதும் உடலை விடும்போதும் ஞானக்கண் பெற்றேர் அதைக் காண்கின்ருர்கள். ஏனையோர் உத்தேசக் கண்கொண்டு பார்க்கின்றர்கள். பகுத்தறிவில்லாத மூடர்களோ உயிரைப்பற்றிய எண்ணமே இல்லாமல் உடலை மாத்திரமே நினைந்துகொண்டு திரிகின்ருர்கள்.
புருஷோத்தமனகிய நிர்க்குணப் பிரமம் சகுன நிலையிலே நின்று சகல உயிர்களையும் படைத்துக் காத்துச் சத்தூட்டி வளர்க்கின்றது. உண்ட உணவைப் பிராணன் அபானணுல் சமிக்கச் செய்கின்றது; பசியை உண்டுபண்ணுகின்றது; ஞாப கத்தையும் மறதியையும் தருகின்றது.
குணபந்தனகிய சரபுருஷனுக்கும், குணதீதனகிய அட்சர புருஷனுக்கும் அப்பால் நிற்கும் பரமாத்துமாவே புருஷோத் தமன். அவனே நிர்க்குணப் பிரமம் என அறிக.

Page 41
பதினைந்தாம் அத்தியாயம் புருஷோத்தம யோகம்
கண்ணபிரான் :
மூலமே லாகி முடிவிலதாய்ப் போய்க்கிளைகள் சாலவே கீழாய்த் தழைத்துவளர் - ஆலமரம் அன்னதுசஞ் சாரம் அதற்கிலைகள் வேதமாம் இன்னதறிந் தோன்வேதாந் தி.
ஆணிவேர் மேலேயுள்ளதாய், அழிவில்லாததாய் கிளைகள் கீழ்நோக்கிச் சென்று நன்ருகத் தழைத்து வளருகின்றதோர் ஆலமரம் போன்றது பிரபஞ்சம். அதற்கு வேதங்களே இலைகள். இந்தப் பிரபஞ்ச விருட்சத்தை அனுபவ வாயிலாக உள்ள வாறு அறிந்தவனே வேதமறிந்தவன்.
நிர்க்குணப் பிரமத்தில் நின்றும் தோன்றியது சகுணப் பிரமம். சகுணப் பிரமத்தில் நின்றும் முளைத்தது பிரபஞ்ச மென்னும் சஞ்சார தரு. இதன் ஆணிவேர் மேலே பரப்பிரமத் தில் உள்ளது. ஆணிவேரிலிருந்து பிரமா ; பிரமாவிலிருந்து விண்மண் முதலிய உலகங்கள் தோன்றின.
நிர்க்குணப் பிரமம் சகுணப் பிரம நிலையை அடையா விடின் ஆக்கமுமில்லை ; நீக்கமுமில்லை. பிரபஞ்ச விருட்சம் மூன்று கூறுகள் உடையது ; சீவன், உலகம், ஈசுவரன் என. சஞ்சார தரு முக்குண வடிவானது. அது தொடர்ந்து செயற் பட்டுக் கொண்டே நிற்கின்றது.
பரமாத்துமா என்னும் புருஷோத்தமன் சகுணப்பிரம நிலை யில் நின்று படைத்தல் முதலிய ஐந்தொழில்களையும் நித்தியம் நிகழ்த்திக் கொண்டிருப்பதால் ச ஞ் சா ரமும் தொடர்ந்து கொண்டே போகிறது. அத். 3 22, அத். 9 : 7.
சஞ்சாரதரு பரப்பிரமத்தில் நின்றும் தோன்றுவதால் அது மேலே வேருள்ளதாகக் கூறப்பட்டது. அது விண் மண் முதலிய உலகங்களுக்கு அனுபவங்களைக் கொடுப்பதால் அதன் கிளைகள் கீழேயுள்ளதாகக் கூறப்பட்டது. பரம பதத்தை நோக்கப் பிரமபதமும் கீழேயுள்ளதென அறிக.
சஞ்சார தருவுக்கு வேதங்களே இலைகள். வேதம் பொது நூல். எல்லா வேதங்களையும் அடக்கும். இலைகள் மரங்களை வளர்க்கின்றன. இதுபோல எல்லாச் சமய வேதங்களும்

ஞான யோகம் 49
சஞ்சார தருவை வளர்க்கின்றன. சஞ்சார தரு இன மொழி மத பேதமின்றி விண் மண்ணிடை ஓங்கி எல்லா நாடுகளிலும் கிளை பரப்பி நிற்பதால் எல்லாச் சமய வேதங்களும் அதற்கு இலைகளாமெனக் கொள்க.
சஞ்சாரம் குணசம்பந்தம். அதை வளர்த்தல் குண அனு பவங்களை ஊட்டுதல். இதை அனுபவ வாயிலாக அறிந்தவனே வேதாந்தியாவான். சகுண நிலையினை அனுபவத்திற் கண்டவன் நிர்க்குண நிலையினைக் காணும் தகுதி பெறுகின்றன்.
சேர்ந்த குணத்தாற் செழித்தே யதன்கிளைகள் சார்ந்த விடயத் தளிர்விட்டுப் - போந்துகீழ் மேலாய்ப் படருமதன் வேர்கள் வினைவிளைத்துக் கீழாய்ப் பரக்குமிது கேள். 2
சஞ்சார தருவின் கிளைகள் தாம் சேர்த்துநிற்கும் குணங் களாற் செழித்துக் குணங்களைச் சார்ந்துள்ள விடயங்களாகிய தளிர்விட்டுக் கீழும் மேலுமாய்ப் படரும். அதன் வேர்கள் வினை விளைப்பனவாய்க் கீழ் நோக்கிப் பரக்கும்.
கிளைகள் இருபத்து நான்கு தத்துவ்ங்கள். விடயத்தளிர் சப்தம், பரிசம், ரூபம், ரசம், கநதம் . என்பன. விடயம் கோசரம் எனவும் வழங்கும். கிளைகள் கீழ் மேலாய்ப் படரு மென்பது பிரபஞ்சம் அண்டம் பிண்டம் என விரிந்து மேலும் கீழுமாகத் தோன்றுவதைக் குறிக்கும். மேலே செல்லும் கிளைகள் தெய்வலோக அனுபவ விளைவுகள். கீழே செல்லும் கிளைகள் மனிதலோக அனுபவ விளைவுகள்.
" அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
நூற்றெரு கோடியின் மேற்பட விரிந்தன?
* மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க’ (திருவாசகம்)
சகுணப் பிரமம் தேவர் முதலியோர் வாழும் மேலுலகங் களையும், மனிதர் முதலியோர் வாழும் கீழுலகங்களையும் தோற்று விப்பதை இவ்வடிகள் விளக்குகின்றன.
ஆணிவேர் மேலேயுள்ளதேனும் அதன் பக்கவேர்கள் வினை விளைத்துக் கீழே பரக்கின்றன. தெய்வ லோகங்களிலும் மனித லோகங்களிலும் தேவர்களும் மனிதர்களும் செய்யும் வினைப் பகுதிகளை இவ்வேர்கள் குறிக்கும். ஆலமரத்தின் சத்தை
Lu -4

Page 42
50 பகவத்கீதை வெண்பா
வாங்கிக்கொண்டு அதன் மேல்வேர்களாகிய விழுதுகள் நிலத்தில் வேரூன்றுகின்றன. இதனல் ஆலமரம் புத்துயிர் பெற்றுப் புதுப் பயன் தருகின்றது. அடியற்ற ஆலமரம் விழுதுகளால் நிலை பெறுதல்போல வினைகள் ஓய்ந்தாலும் வினைப் பயன்கள் புது வினைகளாகிச் சஞ்சார தருவைச் செழிக்கச் செய்கின்றன. இதனல், மீண்டும் வினை விளைகின்றது.
" சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீழுன்றி யாங்குக் குதலைமை தந்தைகண் தோன்றின் தான் பெற்ற புதல்வன் மறைப்பக் கெடும்.” (நாலடி)
"தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன
ஓங்குகுலம் நையவத னுட்பிறந்த வீரர் தாங்கல் கடன்.”* (சீவகசிந்தாமணி)
நிர்க்குணப் பிரமத்திலிருந்து சகுணப் பிரமத்துக்குச் சத்து வருகின்றது. சகுணப் பிரமத்திலிருந்து சஞ்சார தருவுக்குச் சத்து வருகின்றது. சஞ்சார தருவில் நின்றும் தேவர் மனிதர் முதல் தாவர மீருகவுள்ள எல்லாப் பொருள்களுக்கும் சத்து வருகின்றது. இந்தத் தொடர்பினை உணராத மக்கள் குண போகங்களுக்கு மாத்திரம் அடிமையாகி அப்பால் நோக்க முடியாமல் மயங்கிக் கிடக்கின்றர்கள். ஆணிவேர் இல்லாமல் பக்கவேர்களால் மாத்திரம் மரம் உயிர்வாழுமா ? அது தானும் உயிர் வாழாமல் பிறபொருள்களுக்கும் ஊருய் முடிகின்றது. மின்சார ஒளியமைப்பின் தாய்ப் பொத்தானை இயங்காமல் நிறுத்திவிட்டு அதன் தொடர்பான ஏனைய பொத்தான்களை அழுத்தினுல் மின்குமிழ்களினுள்ளே ஒளிவருமா ? தொடர் புணர்ந்து தொடர்புகொண்டு சுகம்பெறவேண்டும்.
மரமிதற்கோர் சொந்த வடிவும் இருப்பும் வருமாதி யந்தமுமற் றில்லை-திரமாய்வேர் விட்டுநிற்கும் இம்மரத்தைப் பற்றின்மை யாம்வாளால் வெட்டி யுறுதியுடன் வீழ்த்து. 3
இந்தப் பிரபஞ்ச விருட்சத்துக்கு நிலையான ஒரு வடிவம் இல்லை நிலையான இருப்பில்லை ; ஆதியுமில்லை; அந்தமுமில்லை. திடமாக வேரூன்றி நிற்கும் இம்மரத்தைப் பற்றின்மை யென்னும் வாளால் மனவுறுதியுடன் வெட்டி விழுத்து.

ஞான யோகம் 51
சஞ்சார விருட்சத்தின் தோற்றம் கணந்தோறும் மாறிக் கொண்டே யிருப்பதால் இதற்கு ஒரு நிலையான வடிவமில்லை : நிலையான இருப்பும் இல்லை. பிரமாவின் பகல் இரவிலும், கற்பத் தொடக்கத்திலும் முடிவிலும் இதன் தோற்றமும் ஒடுக்கமும் மாறிக்கொண்டே போவதால் இதற்கு ஆதியும் அந்தமும் கணக்கிட முடியாது.
இத்தருவை அழிக்கும் வல்லமை அணுவாயுதங்களுக்கும் கிடையாது. எத்தனை நாடுகளை அணுக்குண்டுகளாற் சலவாயுக் குண்டுகளால் அழித்தாலும் சஞ்சாரதரு நின்றுகொண்டே யிருக்கும். ஞானவாள் ஒன்றே இதை வெட்டி விழுத்தும் வல்லமை பெற்றது. குணசங்கத்தைக் கடந்த மகானின் கையில் ஞானவாள் இருக்கும்.
சூரபன்மஞகிய மாமரம் தலைகீழாய் நின்றதும், ஞான வேலால் அது வெட்டுண்டு வீழ்ந்ததும் சஞ்சாரதருவின் தோற் றத்தையும் நிலையையும் மாற்றத்தையும் குறிக்கும்.
"உட்பகை கடி ஞானப் பொன் வாளான்.”
(விபுலானந்தர் மீட்சிப் பத்து - ஏ. பெ.)
உன்னுற்பின் தேடற் குரியதுமீ ளாப்பதமாம் தொன்மைச்சஞ் சாரதருத் தோன்றியே-மன்னிவளர் சார்வாம் புருஷோத் தமனச் சரணுகச் சேர்வே னெனவுறுதி செய்து. 4
பிரபஞ்ச விருட்சத்தை ஞானமாகிய வாளால் வெட்டி வீழ்த்திய பின்னர், பழைமையாகிய அச் சஞ்சாரதருத் தோன்றி நின்று வளர்தற்குரிய சார்வாகிய புருஷோத்தமனைச் சரண் புகுந்து உன்னல் தேடி அடைதற்குரியது மீளாப் பதமாகிய மோட்சமேயாகும்.
குணவடிவான சஞ்சாரம் புருஷோத்தமனிடத்தில் நின்றும் தோற்றியது; கரைகாண முடியாதது. அவனைச் சரண்புகுந்து கருமம், பக்தி, ஞானம் என்பவற்றுள் ஒன்ருல் மாத்திரமே அதைக் கடக்கமுடியும். கடந்தால் மீளாப் பதமாகிய அப் புருஷோத்தமனை அடைதல் கைகூடும். ஆன்மாவின் ஆயுள் காலச் சிறைவாசம் ஒத்திவைக்கப்பட்ட சிறையாகவல்ல; நிபந்தனைக்குள்ளான விடுதலையாகவல்ல; நிபந்தனையற்ற பூரண விடுதலையாகி அது நிலைபெற்ற சாந்தியும் இன்பமும் தரும்,

Page 43
52 பகவத்கீதை வெண்பா
" உள்ள மென்னும் குரவன்சொல் ஆணையில்
ஒன்று பட்டைம் பொறியெனும் மாணவர்
கள்ள மின்றி அமைந்து பணிசெய்தால்
காணும் புத்தி உறுதி பெறும்கண்டீர்
தள்ளரும் புத்தி தான்திடம் பெற்றிடில்
சாரும் ஆன்ம விடுதலை அந்நிலை
தெள்ளு நன்மனச் சாந்தி நிறைவிலே
சேரும் பேரின்பம் இன்பத்துள் இன்பமே.” (ஏ. பெ.)
செருக்கு மயல்பற்றுத் தீர்ந்தான்ம நிட்டை இருக்குமவர் இன்பதுன்ப மென்னும்- மருட்கைதரும் இச்சை வெறுப்பற் றிலங்குமறி வோர்சேர்வார் சச்சிதா னந்தமெனும் சார்பு. 5
செருக்கு, மதிமயக்கம், பற்று என்பன நீங்கி ஆன்மாவில் நிலைத்திருப்போர் ; இன்ப துன்பமென்னும் மயக்கினைத் தரு கின்ற விருப்பு வெறுப்பென்னும் விரோத இரட்டைகளைக் கடந்து அறிவொளி விளங்கப்பெற்றேர் : சச்சிதானந்த நிலையை அடைகின்றர்கள்.
மீளாப் பதமெனது மேலாம் பதமதற்கே ஆளாவார் இன்பம் அடைகின்(?ர்-கேளாய்நீ செங்கதிரும் வெண்மதியும் தீயுமொளி செய்வதிலை அங்குபரஞ் சோதி அது. 6 -ر
சென்றவர் திரும்பிவராத பதம் எனது பரமபதம். அங்கு செல்வோர் இன்பமே அன்டகின்றர். சூரியனே சந்திரனே அக்கினியோ அங்கே ஒளிசெய்வதில்லை. அது பரஞ்சோதி.
பரமபதம் இராப்பகலற்ற இடம். அங்கு வாழும் உள் ளொளி பெற்றேர்க்குக் கதிர், மதி, தீ இவற்றின் ஒளி மிகை. உள்ளொளி பரஞ்சோதியின் அம்சம் ; சின்மயம். சின்மயமான முத்தர்களுக்குப் புறவொளிகள் ஏவல் செய்யும். அத். 7: 8-9. அத். 10 : 21. அத். 15 12.
நித்தியமாம் என்சீவ சத்தியினேர் அம்சமே உற்றுலக மெங்கும் உயிர்பலவாய் - மற்றியற்கை தந்தகுணத் தன்மைபோற் சார்மனத்தை ஐம்பொறியை வந்திழுக்கு மேதன் வசம். v 7

ஞான யோகம் 5g
நித்தியமான என் சீவசத்தியின் ஓர் அம்சமே உலகமெங்கும் பல உயிர்களாகத் தோன்றிப் பிரகிருதி குணத்தின் தன்மை போல் சார்ந்து நிற்கின்ற மனத்தையும், ஐம்பொறிகளையும் தன்வசமாய் இழுக்கின்றது.
ஆன்மா தனுகரணங்களைப் புவனபோகங்களில் இழுக் கின்றது. இதனல் மனமும் இந்திரியங்களும் இரண்டு மார்க்கங் களில் எடுபடுகின்றன. ஒன்று பிரவிருத்தி மார்க்கம் ; மற்றது நிவிர்த்தி மார்க்கம். பிரவிருத்தி ஜம்புல நுகர்ச்சிகளின் பெருக்கம். நிவிர்த்தி நுகர்ச்சிகளில் நின்றும் விடுபடுதல். பிரவிருத்தி மார்க்கத்தில் ஐம்பொறிகளின் பின்னே அலைந்து திரிந்த மனம் பொறிகளின் மோசடியை உணர்ந்து மெய் யுணர்வு மீண்டுவரப்பெற்று ஐம்பொறிகளையும் தான் இழுத்துத் தன்வசம் செய்யும். மனம் ஒருநிலைப்பட்டு நிற்கும் செவ்வியிலே புத்தி உறுதிபெறும். உறுதிபெற்ற புத்தி ஆன்மாவைக் குண பந்தத்தில் நின்றும் விடுவிக்கும். அத், 2 : 64 - 68.
நித்தியமான சீவசத்தியின் அம்சம் ஒளிமயமானது. அது குணபந்தத்தால் தன்னெளி மறைந்திருப்பதேயன்றி ஒளியிழந் திருப்பதில்லை. அது சதா சோதி; அஸ்தமனமில்லாத சர்வோ தயம். குணபந்தம் நீங்க அது தன்னுெளியில் வெளிப்பட்டுத் தோன்றும். பந்த நிலையிலும் நிவாரண நிலையிலும் சீவாத்துமா பரமாத்துமாவின் அம்சமே. பந்தம் நீங்க அது முழுப்பொரு ளோடு ஒன்ருய் விடுகின்றது. இது பின்னமில்லாத கூட்டு. அத். 18 55.
சூரியன் சுயவொளியுள்ளது. கிரகண பந்தத்தின்போது அது ஒளியிழந்திருப்பதில்லை : ஒளி மறைந்திருக்கின்றது. கிரகண விமோசனத்தில் அல்லது கிரகண மோட்சத்தில் அது சுய வொளியில் வெளிப்பட்டுத் தோன்றுகின்றது. குணபந்தத்தின் போதும், குணபந்த நிவாரணத்தின்போதும் சீவாத்துமாவின் நிலை இதுபோன்றதே.
உடலைக்கூத் தாட்டியே உள்நிற்கும் கூத்தன் உடலெடுக்கும் போதும் உடலை - விடுபோதும் காற்று மணத்தைக் கவர்தல்போல் ஆறினையும் ஏற்றபடி செல்லும் எடுத்து. 8
உடலைக் கூத்தாட்டி அதனுள்ளே நிற்கும் ஆடலாசிரிய ஞகிய ஆன்மா உடலுட் புகும்போதும் உடலை விடும்போதும்,

Page 44
54 பகவத்கீதை வெண்பா
காற்ருனது வாசனையைக் கவர்ந்து செல்லுதல்போல மனத்தை யும் ஐம்பொறிகளையும் ஏற்றபடி எடுத்துச் செல்கின்றது.
சீவாத்துமா தூல சரீரத்தை விட்டுப் பிரியும்போது சூக்கும சரீரத்தோடு செல்கின்றது. ஞானேந்திரியம், கன்மேந்திரியம், அந்தக்கரணம், தசவாயுக்கள் என்பவற்றின் குணபாகங்கள் ஒன்றுசேர்ந்த கூட்டமே சீவாத்துமாவுக்குச் சூக்கும சரீரமாகும். இவை மனத்தின் கண்ணே வாசன ரூபமாக அமைந்து கிடக்கும். இவ் வாசனஞபமான வித்தில் நின்றும் ஞானேந்திரியம் முதலிய வைகள் தோன்றி விரியும்.
சுகந்த வஸ்துக்களின் வாசனையோடு ஞானேந்திரியம் முதலியவற்றின் குணபாகங்களையும் சூக்குமமான வாசனுரூபம் என்னும் சொல்லால் வழங்கியிருக்கும் ஒற்றுமை அறிதற்குரியது. பருவுடலை விட்டு உயிர் பிரியும்போது அது மேற்கூறிய வாசனை யைக் கவர்ந்துகொண்டு இருவகை நுண்ணுடல்களுள் ஒன்றினுட் புகும். ஒன்று யாதன சரீரம்; இது துன்ப அனுபவத்துக்கு இலக்கானது. மற்றது போதன சரீரம்; இது இன்ப சுகத்துக்கு ஏற்றது. இவ்வனுபவங்கள் ஒழிந்தபின்னர் பிறப்பெடுக்கும் போது ஆன்மா பருவுடலுட் புகும். நுண்ணுடலுட் புகும் போது வாசனையை ஒடுக்கிக்கொண்டு புகும். பருவுடலுட் புகும்போது வாசனையை விரித்துக்கொண்டு புகும்.
தசவாயுக்கள் பிராணன், அபாணன், உதாணன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ் சயன் என்பன.
மெய்வாய்கண் மூக்குச் செவியென்று பேர்பெற்ற ஐவாய்ப் பொறியை மனமதனை - மெய்யுயிர்தான் என்றும் வசமாக்கி ஏவி விடயசுகம் ஒன்றி யனுபவிக் கும். 9
மெய்யின்கண் உள்ள உயிரானது மெய், வாய், கண், மூக்கு, செவி யென்னும் ஐம்பொறிகளையும், மனத்தையும் என்றும் தன்வசமாக்கி விடயசுகங்களில் ஏவி அனுபவிக்கும்.
ஆன்மா விடயங்களை ஏவுதலன்றி விடய சுகங்களை அனு பவிக்கும் இயல்பு அதற்கில்லை. குணமயக்கில்ை தான் அனு பவிப்பதாகக் கருதுகின்றது. அறியாமை நீங்கும்வரையிலும் இந்த நிலை நீடித்திருக்கும்.

ஞான யோகம் 55
கூடுவிட்டுச் செல்போதும் கூட்டிலிருக் கும்போதும் கூடிக் குணத்தொடர்பு கொள்போதும் - கூடி அனுபவிக்கும் போதுமறி யாரிவனை மூடர் மனவிளக்கால் ஞானியறி வான். 10
உடலைவிட்டுச் செல்லும்போதும், உடலினுள் இருக்கும் போதும்; குணங்களோடு கூடியிருக்கும்போதும், குணங்களுடன் கூடி அனுபவிக்கும்போதும் சீவாத்துமாவை மூடர் அறியார். ஞானி ஞானக்கண்ணுற் காண்கின்றன்.
உடல் வேறு உயிர் வேறு என்னும் பகுத்தறிவு இல்லாத மூடர்கள் வெளியுலகத்தையே பார்க்கின்றர்கள், தூலவடிவங் களின் சூக்கும ரூபங்களை அவர்கள் காண்பதில்லை. தூல வடிவங் களை ஊடுருவ நோக்கி இயற்கைச் சக்தியின் ஆதார சக்தியை இவர்கள் உணர்வதில்லை. காற்று, மழை, மின், இடி முதலிய வற்றின் இயக்கங்களையும் தெய்வீக சக்தியின் இயக்கமாக இவர்கள் மதிப்பதில்லை. நிரீச்சுர வாதத்தையே பகுத்தறிவு என்று சொல்லும் இடத்தில் நிற்கின்றது இவர்களின் அறிவு. மூடர்கள் அறிவு நூல்களைக் கற்பதுமில்லை அனுபவம் பெற்ற ந ல் லோ ரை மதிப்பதுமில்லை; அவர்தம் சொற் செயல்களை மதிப்பதுமில்லை. இவர்கள் தம்மைத் துரல வடிவத்திலே காண்பது மாத்திரமா? ஆலயங்களையும், மூர்த்தி களையும், அனுபூதிமான்களையும், மனித சமூகத்தையுங்கூடத் தூலப்பொருள்களாகவே நினைக்கின்ருர்கள். விக்கிரகங்களை உடைக்கின்றர்கள். அறிவுநூல்களைக் கொளுத்துகின்றர்கள். உடம்பினுள்ளே சூக்கும ரூபமாய் அமைந்துள்ள பிரகிருதி குணங்களையும், குணகாரியங்களையும், அறிந்துகொள்ள முடி யாத இவர்கள் சேத்திரஞ்ஞனகிய சீவான்மாவை அறிதல் எவ்வாறு கூடும்.
பிரகிருதியும் பிரகிருதி காரியங்களும் சேத்திரம் எனப் படும். குக்கும சரீரங்களும், தூல சரீரங்களும் அபரப்பிரகிருதி சேத்திரம் எனப்படும். குணவசப்பட்ட சீவாத்துமா பரப்பிர கிருதி சேத்திரம் எனப்படும்.
உயிர்கள் உடலெடுப்பதையும், உடலை விடுவதையும் ஞானிகள் காண்கின்றர்கள். இது உள்ளம் கடந்த காட்சி. கட உள் என்பர் ஞானிகள். குண அனுபவங்களுக்கு ஆன்மா சாட்சியளவாயே நிற்கின்றது என்பதை அனுபவத்திற் கண்ட ஞானிகளின் நிலையை அனுபவசாதனம் பெருத வறண்ட அறிவைக்கொண்டு அளத்தல் ஆகாது,

Page 45
56 பகவத்கீதை வெண்பா
நன்றுமுயல் யோகியர் தாம் நாடியிவ னைத்தம்முள் கண்டு மனச்சாந்தி காண்கின்ருர் - என்றும் வருந்தியுழைத் தாலும் மனம்திருந்தா மூடர் தெரிந்திவனைக் காண்ப திலை. ر
நன்முக முயல்கின்ற யோகியர் இவனைத் தம்முள்ளே தேடித் தம்முள்ளே கண்டு மனச்சாந்தி காண்கின்ருர்கள். முயற்சி யுடையவர்களாயினும் மனம் திருந்தாத மூடர் இவனை அறிந்து காண்பதில்லை. '
யோகியர் யோகப் பயிற்சியைத் தொடர்ந்து செய்வதால் மனம் திருந்துகின்றது. தம்முள்ளே சீவாத்துமாவைக் காண் கின்ருர்கள். பயிற்சியை இடையிலே கைவிட்டோர் இப்பிறப்பிற் காண்பதில்லை. மறுபிறப்பிற் காண்பர். அத். 6 :37, 43.
தியானத்தாலும் யோகத்தாலும் மனம் பண்பட்டுப் புனித நிலையினை அடையாதோர் எவ்வளவு முயன்ருலும் சீவாத்துமா வைக் காண்பதில்லை. மனம் திருந்தாதோரின் முயற்சி ஒழுங்கு பட்டிராது; ஒருமுகப்பட்டிராது. வீண் பிரயாசம்; கருமமும் சிதையும். இவர்களுக்கு இவ்வுலக சுகமுமில்லை; மறு உலக சுகமும் இல்லை. அத். 2 : 66.
உலகனைத்து மோங்கி ஒளிர்செங் கதிரோ கலைசேர் மதியொளியோ காணும் - பலபயன்செய் தீயொளியோ எல்லாமென் தேசோ மயமென்றே நீதெளிவாய் ஈதென் நிலை. 12
உலகம் முழுவதிலும் ஓங்கிநின்று ஒளிவிரிக்கின்ற சூரியனின் ஒளியோ; பதினறு கலைகளையுடைய சந்திரனின் ஒளியோ பல பயன்களைச் செய்கின்ற தீயின் ஒளியோ; எல்லாம் என் தேசோ மயத்தின் அம்சமென்றே அறிவாய்.
சூரியனிடத்துள்ள நீலநிற ஒளியும், சந்திரனிடத்துள்ள வெண்மைநிற ஒளியும், அக்கினியிடத்துள்ள செம்மைநிற ஒளியும் இறைவனின் பேரொளியாற் பெற்ற ஒளிகளே. அத். 7 - 8-9. அத். 10 : 21.
சூரிய நமஸ்காரம், பிறைதொழுதல், தீயைக் கும்பிடல் என்பவற்றிலுள்ள தெய்வ சம்பந்தம் அதற்குரியது.

ஞான யோகம் 57
என்வல் லமையால் இருநிலத்தி னுட்புகுந்து மன்னுயிர்கள் தாங்கி வளர்க்கின்றேன் - இன்னிரச சந்திரனய் நின்று சகலபயி ருஞ்செழிக்கத் தந்தூட்டு கின்றேன்யான் சத்து. 13
நான் என் சக்தியினல் பூமியினுட் புகுந்து உயிர்களைத் தாங்கி வளர்க்கின்றேன். இனிய சலவடிவான சந்திரனுய் நின்று சகல பயிர்களும் செழிக்குமாறு அவற்றுக்குச் சத்தூட்டு கின்றேன்.
மாயா உயிர்த்தொகைகள் வாழுமுடற் கண்வயிற்றுத் தீயாய்ப் பிராணன் அபானனல் - ஓயாமல்
நான்கு வகையுணவும் நான்சமிக்கச் செய்கின்றேன். பாங்குடனே பாகுபடுத் து. 14.
எல்லா உயிர்த்தொகைகளின் உடல்களுள்ளும் நான் வயிற்றுத் தீயாய் இருந்துகொண்டு பிராணன் அபானனுடன் கூடி நால்வகை உணவுகளையும் முறையாகப் பாகுபடுத்திச் சமிக்கச் செய்கின்றேன்.
வயிற்றுத் தீ உதராக்கினி. இது சீரண சக்தி வடிவானது. பித்தத்தின் கூருயுள்ளது. இது வயிற்றிலே சமநிலையில் நின்றல் உணவில் விருப்பம் உண்டாகும்; உண்ட உணவு சமிக்கும். வயிற்றுத்தீ அதிகமானல் உண்ண உண்ணத் தீராத கடும் பசி உண்டாகும். இதற்கு யானைத் தீயென்று பெயர். வயிற்றுத் தீ அளவிற் குறைந்தால் பித்தம் தலைக்கேறும்; பசி குறையும்; உண்ட உணவு சீரணிக்காது. சீரணமானுல் உணவு அமிர்தமாம்; அசீரணமானல் நஞ்சாம். அத். 3 : 14.
வயிற்றுத் தீ சமனுக இருந்தாலும் அளவாக உண்ண வேண்டும்; சரியான நேரத்தில் உண்ணவேண்டும். ஒன்றுக் கொன்று ஒவ்வாத உணவுகளை உண்ணல் ஆகாது. இம்முறை தவறினல் நோயுண்டாகும். சேத்திரம் பழுதுபடும். சேத்தி ரஞ்ஞன் வெளியேறவேண்டி வரும். அத். 6 16-17. ஒருநாளும் இறக்குமதி செய்யாமல் ஏற்றுமதி செய்யற்க.
பிராணனும் அபானனும் வயிற்றுத் தீக்குச் சகாயமாய் நின்று உண்ட உணவின் சத்தை உள்ளே செலுத்தியும் சக்கையை வெளியே தள்ளியும் உடலைச் சமநிலையில் வைத்துக் கரும தரும நிகழ்ச்சிகளுக்கு உபகாரமாகின்றன. தேவாத்தும சக்தியால் உடல் சக்தி பெறுகின்றது. தேவாத்தும சக்தியின்றிச் சீவன சக்தியும் தீபனசக்தியும் இல்லை; பிராணன் அபானனின் இயக்கமு மில்லை; மனிதன் வாழ்வாங்கு வாழ்வதுமில்லை. பிராணனின் வேருெரு வடிவமே அபானன் என்றுணர்க.

Page 46
பகவத்கீதை வெண்பா 58 י
எல்லா ரிதயத்தும் யானிருப்பேன் ஞாபகமும் எல்லா ரறிவும் மறப்புமியான் - நல்லாய்கேள் வேத மறிபொருள்யான் வேதாந்த மீந்தோன்யான் வேதமறிந் தோனும்யா னே. V, 15
எல்லாரின் இதயத்துள்ளும் யானிருப்பேன். எல்லாரின் அறிவும், ஞாபகமும், மறப்பும் யானே. நல்லாய், வேதங்க ளால் அறியப்படும் பொருளும் யான். வேதாந்தத்தை ஈந் தோனும் யான், வேதங்களை அறிந்தவனும் யானே.
எண்ணங்கள் விரிவதற்கும் குவிவதற்கும் இடம் இருதயத் தானமாகும். உயிர்விளக்கம் அங்கே பலதரப்பட்டிருக்கும்* அவரவர் நிலை விளங்குதற்கு உபகாரமாக இறைவன் தோன்ருத் துணையாக உயிருக்கு உயிராய் இதயத்துள்ளே இருக்கின்றன். இறைவனின் அருளால் மனிதனுக்கு இரண்டு மனம் உண்டா கின்றது. ஒன்று நினைந்து வாழும் மனம். மற்றது மறந்து வாழும் மனம். ஒருவன் அறிந்தவற்றுள் வேண்டுவன ஞாபகத்துக்கு வருவதும், வேண்டாதன ஞாபகத்துக்கு வராமற் போவதும் ” இறைவன்சித்தமே. இதனல் மனிதனுக்கு எவ்வளவோ நன்மை உண்டாகின்றது.
சரபுருஷன் மற்றட் சரபுருஷ னென்ன இருபுருஷ ரேயுளார் இங்கே-உருவம் தரித்த அனைத்தும் சரமாம்கூ டஸ்தன் ஒருத்தனே அட்சரனென் ருேது, 16 உலகிலே சரபுருஷனென்றும் அட்சர புருஷனென்றும் இரண்டு புருஷர்களே உளர். உருவம் படைத்தனவெல்லாம் சரபுருஷனுள் அடங்கும். கூடஸ்தன் ஒருத்தனே அட்சர புருஷன்.
மக்கள் தேவர்முதல் புல்லீருகவுள்ள உயிர்க்கூட்டங்கள் யாவும் சரபுருஷனுள் அடங்கும். இவை குணபந்தம் உடையன; பிறப்பும் அடைவன.
* புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமரன்?

ஞான யோகம் 59
இத்திருவாசக அடிகள் சரபுருஷ நிலையினைக் குறிக்கின்றன. அட்சர புருஷன் குளுதீதன் சீவன்முத்தன்; பிறப்பு இறப்பு அற்ற நிலையினை அடைந்தவன். சீவன்முத்தர்கள் யாவரும் அட்சர புருஷனுள் அடங்குவர்.
*மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்” என்பது குணதீத நிலைய்ைக் குறிக்கும். குணதீதன் கூடஸ்தன். பட்டடைக்கல் போன்றவன். கொல்லனுடைய உலைமுகத்துப் பட்டடைக்கல் தான் அசையாமலிருந்துகொண்டு தன்மீது வைத்து அடிக்கப்படும் எல்லாப் பொருள்களுக்கும் இடம் கொடுத்து அவற்றைப் பதஞ்செய்து உருவாக்க உதவுவது போன்று சீவன் முத்தனும் என்னவந்தாலும் அவற்றை ஏற்றுத் தாங்கி அசையாதிருப்பான்; நிலை குலையமாட்டான். அத். 2 55 - 57, 70.
இப்புருடர்க் கப்பால்நின் றெள்வுலகுந் தாங்கியருள் செப்புமழி வில்லாத செம்பொருளே - ஒப்பில் பரமாத்து மாவென்று பாடும் மறைகள் புருஷோத் தமனவனே போற்று. 17
சரபுருஷன் அட்சரபுருஷன் என்னும் இருவர்க்கும் அப்பால் நிர்க்குண நிலையில் நின்று எல்லா உலகங்களையும் தாங்குகின்ற அழிவில்லாத மெய்ப்பொருளே ஒப்புயர்வில்லாத பரமாத்துமா வென்று வேதங்கள் பாடுகின்றன. அவனே புருஷோத்தமன் அவனையே நீ போற்று.
குணபந்தன், குணுதீதன், சகுணப்பிரமம் இம்மூன்றுக்கும் அப்பால் நின்று எல்லா உலகங்களுக்கும் ஆதாரமானது நிர்க் குணப் பிரமம். சரபுருஷன், அட்சரபுருஷன் என்னும் இருவர்க் கும் மேலானவன் ஆதலின் புருஷோத்தமன் என்பது நிர்க்குணப் பிரமத்துக்குப் பெயராயிற்று.
ஓங்கிச் சரத்தி னுயர்ந்தட் சரத்துக்கும் ஆங்கப்பா லாகிநிற்ப தாலுலகில் - பாங்கான வேதத்துள் மேலாம் புருஷோத் தமனெணயான் ஒதப்பெற் றுள்ளேன் உணர். 18 சரபுருஷனிலும் உயர்ந்து, அட்சர புருஷனிலும் உயர்ந்து அப்பாலுக்கப்பாலாய் நிற்பதால், உலகிலும், படிமுறையா யமைந்த வேதங்களிலும் யான் மேலான புருஷோத்தமன் என ஒதப்பெற்றுள்ளேன் என்று அறிக.

Page 47
60 பகவத்கீதை வெண்பா
ஈங்குரைத்த வண்ணமுளத் தெண்ணிமயக் கின்றியெலாம் தாங்கும் புருஷோத் தமனெனவே - ஓங்கியுயர்
என்னையறிந் தோனறிந்தோ னெல்லாம் அவனெங்கும் என்னையே கண்டுதொழு மே. 19
இதுவரையும் கூறியவாறு எல்லாவற்றையும் தாங்கி ஓங்கி உயர்ந்து நிற்கின்ற புருஷோத்தமனென்று மயக்கமின்றி என்னை அறிந்தவன் எல்லாம் அறிந்தவன். அவன் எங்கும் என்னையே கண்டு வணங்குகின்றன்.
பிரகிருதி குணமயமானது. ஆன்மா சின்மயமானது. அது பரமாத்துமாவின் சீவசமுதாயத்தின் அம்சம்; குணவசப்பட்ட நிலையில் அது சீவாத்துமா குணபந்தம் நீங்கிய நிலையிலே குளுதீதன். குனதிதன் சகுணப் பிரமத்துள் கலந்துவிடு கின்றன். சகுணப் பிரமம் நிர்க்குணப் பிரமத்துள் ஒன்ருய் விடு கின்றது. இந்த நிலைகளை அனுபவத்தில் அறிந்தவன் பிரமஞானி. அவன் எங்கும் எப்போதும் பிரமத்தைத் தரிசிக்கின்றன். எல்லாம் பிரமமென அவன் காணுன்; பிரமமே எல்லாம் எனக் காண்கின்ருன் என அறிக.
மறைக்குள் மறையாமிம் மாமறைநின் உள்ளம் உறப்புகன்றேன் பாவம் ஒழிந்தோய் - குறித்திதனைத் தேர்ந்தான் அவன் ஞானி செய்செயல்கள் சாதுரியம் வாய்ந்தே முடித்தோன வான். 20 பாவமற்றவனே, இரகசியங்களுள்ளே உள்ளிரகசியமான இக்கீதா சாத்திரத்தை உள்ளம் கொள்ள உனக்கு உரைத்தேன். இதை மனத்திலே தியானித்துத் தெளிந்தவன் ஞானியாகின் முன். செய்தற்குரிய செயல்களையெல்லாம் அவன் சாதுரிய மாக முடித்துக்கொண்டவணுகின்றன்.
சாதுரியன் செயல்களைச் செய்துகொண்டே செயற்பற் ருெழிந்தவன். ஞானி சர்வ கர்மங்களிலும் பலன்களிலும் அபிமானமற்றவன்; சர்வதேக திரவியங்களிலும் அபிமான மற்றவன் ஒழிவில் ஒடுக்கம் பெற்றவன்; அகத்தும் புறத்தும் செயலொழிந்தவன்.
பதினைந்தாம் அத்தியாயம் புருஷோத்தம யோகம் நிறைவுற்றது. செய்யுள் 82. சஞ்சார தருவைத் தடிந்து புருஷோத்தமனைச் சரண்புகு.

பதினரும் அத்தியாயம் தைவாசுர சம்பத் விபாக யோகம்
பொருட் சுருக்கம்
சாதியொன்றே எங்குமது சார்பால் இரண்டுகுல மாத லறிந்துதெய்வம் ஆகுவீர் - தீதில்லாச்
செம்மை கடையினுல் தேவகுலம் தீநடையால்
அம்ம அசுரகுல மாம். *
இவ்வுலகில் தெய்வ சம்பத்து அசுரசம்பத்து என இரண்டு சம்பத்துகள் உள்ளன. தெய்வ சம்பத்து நன்மை வடிவானது. அசுர சம்பத்து தீமையே உருவானது. தெய்வ சம்பத்து பந்தம் தீர்க்கும். அசுர சம்பத்து பந்தம் சேர்க்கும். இரண்டும் பிறக்கும்போது கொண்டுவந்தது. மனச்செல்வம்.
உலகில் சாதி இரண்டே. தெய்வசாதி ஒன்று. மற்றது அசுரசாதி: தெய்வசாதி தெய்வசம்பத்தில் நின்றும் பிறந்தது. அசுரசாதி அசுரசம்பத்தில் நின்றும் பிறந்தது. அசுரசாதி பகுத்தறிவில்லாதது; தெய்வ நம்பிக்கையைப் பிழையான வழியிற் செயற்படுத்துவது; ஆன்மார்த்த நெறியிலும் முறை தவறிச் செல்வது; புனிதமற்ற தவவிரதங்களை அனுட்டிப்பது: ஆணவ ஆட்சி நடத்துவது: உலகுக்கு அழிவுதேடுவது.
அசுர சம்பத்து உடையோர் எல்லாச் சுகபோகங்களையும் தாமே அனுபவிக்க ஆசைப்படுவர். காம சுகத்தையே மேலான தென்பர். இவர்களுக்கு வெல்வதே கருமம் தீய வழியாற் பொருளிட்டுவதே குறிக்கோள்; தம்மை விளம்பரப்படுத்துவதே தருமம். அசுரப் பிறவிகள் நல்லோரை இகழ்வர்; தீயோரைத் தட்டிக் கொடுப்பர். எல்லா உயிரும் ஒன்றேயென்னும் சீவ சமுதாய ஒருமைப்பாட்டுணர்ச்சி இவர்களுக்கில்லை. இதனல், பிறர்க்குத் துன்பம் செய்வதில் நன்கு பழகியவர்கள்.
இறந்தபின் இவர்களுக்கு அடுத்த அனுபவம் துன்பமே. அதற்கேற்ற இழிந்த பிறப்புகள் வினையால் இவர்களுக்கு வரு

Page 48
62 பகவத்கீதை வெண்பா
கின்றன. நரக வாசலின் வழிகளாகிய காமம், கோபம், உலோபம் என்னும் மூன்றிலும் செல்வது இவர்களின் நாளாந்த வேலை. வேத விதிகளை இவர்கள் நோக்குவதில்லை.
தெய்வ சம்பத்து உடையோர் சுவர்க்க மோட்ச வாயில் களின் வழிகளாகிய கருமம், பக்தி, ஞானம் என்பவற்றில் ஏற்றபடி இனிதாகச் செல்வர். வேத விதிகளை மதித்து நடப்பர்.
பகவான் இவ்வத்தியாயத்தில் அசுர சம்பத்தை அதிகம் விரித்துரைக்கின்றர். உலகில் அசுர சுபாவம் தலைதுாக்கி நின்ற காலச் சூழ்நிலையிலே அதனை ஒழிப்பதற்காகவே எம்பெருமான் அவதார புருஷராகத் தோன்றினர். மக்களின் மனம் அதிகம் அசுர வழியிலேயே போய்க்கொண்டிருந்தமையால் அதைத் திசைதிருப்பித் தெய்வசம்பத்தை நோக்கி வழி நடத்துதற் காகவே பகவான் அசுரசம்பத்தை விரித்துரைத்தார். காலச் சூழ்நிலைக்கு இது அவசியமே.

பதினரும் அத்தியாயம் தைவாசுர சம்பத் விபாக யோகம்
கண்ணபிரான் :
அஞ்சாமை நேர்மை அகந்தூய்மை யோகத்தில் எஞ்சாத ஞானத்தி லேநிலைத்தல்-அஞ்சடக்கல் தானமுடன் வேள்விதவம் சாத்திரநூல் கற்ருேதல் ஆனவிவை காத்தல் அமைந்து.
அஞ்சாமை, நேர்மை, சித்தசுத்தி, யோகத்தில் அல்லது
ஞானத்தில் நிலைத் திருத்தல், ஐம்பொறியடக்கம், வேள்வி
தவம், கொடை, சமயநூல்களைக் கற்று ஒதுதல் என்பவற்றை மன அமைதியுடன் அனுசரித்தல்.
அஞ்சாமை கடமைகளுக்கு இடையீடு அல்லது இடையூறு வருமிடத்து அஞ்சாதிருத்தல். நேர்மை மனத்திலும் சொல் லிலும் செயலிலும் அறநெறி தவருமல் நிமிர்ந்து நிற்றல். யோகத்தில் ஞானத்தில் நிலைத்தல் தகுதிக்கேற்பக் கரும் யோகம், ஞானயோகம் என்பவற்றுள் ஒன்றைத் தெரிந்து கொண்டு அதைக் கடைப்பிடித்தல். அஞ்சடக்கல் ஐம்பொறி களை மனத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், தானம் தக்கார்க்கு ஒன்றைக் கொடுத்தல்.
இது கடனுகக் கொடுத்தல், பதிலுபகாரம் கருதி உபகார மாகக் கொடுத்தல், முன்னுதவி நோக்காமற் கொடுத்தல், தருணமறிந்து பதிலுபகாரம் கருதாமற் கொடுத்தல், சன்மான மாகக் கொடுத்தல், தன் உடலைக் கொடுத்தல், உயிரைக் கொடுத்தல், புண்ணியத்தைக் கொடுத்தல் முதலாகப் பல வகைப்படும். கொடுப்போரின் தகுதிக்கேற்ப இவை நிகழும். நன்மனத்தோடு கொடுத்தால் இவை ஒவ்வொன்றும் அற மாகவே கொள்ளப்படும். நன்மனம் என்பது கொடுப்போன் கொள்வோரைத் தனது அம்சமாக அல்லது தன்னைக் கொள் வோரின் அம்சமாக நினைக்கும் மனம்,
வேள்வி விருப்பத்தோடு செய்யும் தேவகாரியம் மனித காரியம் முதலியன. மிருகம், பறவை, தாவரம் முதலியவற் றின் பொருட்டுச் செய்யும் கருமங்களையும் வேள்விக்கு நிக ராகவே கொள்க. வேள் விருப்பம். நாளாந்த சமையற்பாகமும் தெய்வத்துக்கு அர்ப்பணமாகச் செய்யப்படுமானல் அதுவும் வேள்வியின் வேரு னதன்று. அத். 3 12 - 13,

Page 49
64 பகவத்கீதை வெண்பா
தவம் தத்தம் கடமை வடிவான செயல்; கடமையே தெய்வம். தெய்வநம்பிக்கை யில்லாதவன் ஆணிவேரில்லாத மரம் போன்றவன். ஆணிவேர் இருந்தால்தான் சல்லிவேர்கள் மரத்துக்குப் பக்கபலமாய் இருக்கும். தெய்வ நம்பிக்கை இருந்தால்தான் ஒருவனுக்குக் காணிபூமி, பணம்பண்டம், மன்றுமனை, நகைநட்டு முதலிய எல்லாம் வாழ்க்கைக்குப் பக்கபலமாயிருக்கும். சாத்திரம், தோத்திரம், புராணம் முதலிய சமய நூல்களைக் கற்றல் மாத்திரம் போத்ாது. அவற்றை மனம் கசிந்து ஒதுதலும் வேண்டும்.
இனிமைசெயல் உண்மைசின மின்மை தியாகம் மனவமைதி ஈவிரக்கம் வைத்தல் - மனவுறுதி மென்மைவசை சொல்லாமை வெஃகாமை நாணமுடன் இன்னநடை நிற்றல் இயைந்து. 2
உயிர்களுக்கு இனிமைசெய்தல், உண்மைபேசுதல், சின மின்மை, தியாகம், மனவமைதி, இரக்கம், மனவுறுதி, எளிமை, பிறரை வசை சொல்லாமை, பிறர் பொருளை அபகரிக்க விரும் பாமை, பழிபாவங்களுக்கு அஞ்சுதல் ஆகிய இத்தகைய ஒழுக்கங் களிலே இயைந்து நிற்றல்.
ஈவிரக்கம் இளகிய மனவிரக்கம். மென்மை காண்பதற்கு எளிமையும் கடுஞ்சொல் இன்மையும். இது மிருதுத்தன்மை எனப்படும். சினம் 2 : 62 - 63. தியாகம் 18 11.
தீரத் தனம்பிறர்செய் தீமை பொறுத்தல்மனம் நேரற்ற வஞ்சம் நினையாமை - பாரத்தால் செய்கைதள ராமை செருக்கின்மை சுத்தமிவை தெய்வசம்பத் தோடுதித்தார் சீர். 3.
தெளிந்த புத்தி, பிறர் குற்றம் பொறுத்தல், ஒரவஞ்சம் நினையாமை, செயற்பொறுப்பில் மனம் தளராமை, செருக் கின்மை, உடற்சுத்தம் என்னும் இவைகள் பிறக்கும்போது தெய்வ சம்பத்துடன் கூடப் பிறந்தவர்களின் இயல்பாகும்.
தெய்வ சம்பத்து சத்துவகுணச் செல்வம்; பிறக்கும்போது கொண்டுவந்தது : ஒளிவடிவானது. இது அருட்கொ டைட் . தெய்வசம்பத்து மூன்று பாடல்களால் தொகுத்துக் கூறப்பட்டது அத். 9:13, அசுர சம்பத்து 4ஆம் செய்யுளிற் தொகுத்துக் கூறப்பட்டது. 7ஆம் செய்யுள் முதலாகப் பதினன்கு செய்யுள்

ஞான யோகம் 65
களால் விரித்துரைக்கப்படுகின்றது. பகவானின் அவதாரம் உலகில் அசுரசம்பத்தை ஒழித்துத் தெய்வசம்பத்தை நிலை நாட்டும் திருக்குறிப்புக் கொண்டது. இதனுல், அசுரசம்பத்தின் இயல்பையும் அதன் தீமைகளையும் உலகுக்கு எடுத்து விளக்கு வது இங்கே அவசியமாயிற்று.
பார்த்தாகே ளாடம் பரஞ்செருக்குத் தற்புகழ்ச்சி வேர்த்தல் கடுஞ்சொல் விளம்பிடுதல்-கூர்த்த மதியின்மை இங்கசுர சம்பத்தால் வந்தோர் இதயமமைந்துள்ள இயல்பு. 4
பார்த்தா, இதனைக் கேள். ஆடம்பரம், செருக்கு, தற் புகழ்ச்சி, கோபம், கடுஞ்சொல், மந்த புத் தி என்னும் இவைகள் அசுரசம்பத்தைப் பெற்றுப் பிறந்தோரின் மனவியல் turf (5th.
ஆடம்பரம் தன்செயல்களைத் தானே விளம்பரம் பண்ணுதல். செருக்கு கண் தலை தெரியாது இறுமாந்து நடத்தல். தற்புகழ்ச்சி தன்னைத் தானே விளம்பரம் பண்ணுதல். வேர்த்தல் கோபித்தல்; மனப்புழுக்கம். கூர்த்த மதியின்மை மழுங்கிய விவேகம். அத். \9 12.
அசுரசம்பத்து முன்வினையால் வந்தது; வினையின் விளைவு: கருவில் அமைந்தது; தேடிவைத்த செல்வம் போன்றது. தேடி வைத்த செல்வம் அனுபவத்துக்கு வரும்போது ஆடம்பரம் முதலிய மனக் கோளாறுகள் ஒருவனுக்கு உண்டாகின்றன.
பந்தம்தீர்க் குஞ்சுரசம் பத்ததற்கு நேர்மாருய்ப் பந்தம்சேர்க் கும்மசுர சம்பத்துப்-பந்தமுற்று நீவருந்தேல் பார்த்தாகேள் நின்பிறப்புக் கேற்பவே தேவசம்பத் தாள்வாய் தெளிந்து. 5
பார்த்தா, தேவ சம்பத்துப் பந்தம் தீர்க்கும். அசுர சம் பத்துப் பந்தம் சேர்க்கும். குணபந்தமுற்று வருந்தாதே. நீ தேவசம்பத்தை ஆளப் பிறந்திருக்கின்முய். நின் பிறப்புக் கேற்பத் தெளிவடைந்து தேவசம்பத்தை அனுபவிப்பாய்.
தேவ சம்பத்து உனது மனச் செல்வம். நீ அதை ஆளப் பிறந்தவன். உன் பிறப்புரிமையை மறந்து ஏன் கலக்கமுறு கின்ருய்? தெளிவுகொள். பிறப்புரிமையை அனுபவி.
ւմ - 5

Page 50
66 பகவத்கீதை வெண்பா
தெய்வப் பிறப்பும் அசுரப் பிறப்புமென இவ்வுலகிற் சாதி இரண்டேகாண் - தெய்வ இயல்பை விரித்துரைத்தேன் இங்கசுர சாதி இயல்பை விரிப்பேன் இனி. 6
இவ்வுலகிலே தெய்வப் பிறப்பும் அசுரப் பிறப்புமென இரண்டு சாதிகளே யுண்டு. இதுவரையும் தெய்வ இயல்பை விரித்துக் கூறினேன். இனி அசுர சாதியின் இயல்பை விரித்துக் கூறுகின்றேன்.
"ஒன்றே குலமும், ஒருவனே தேவனும் " என்பதே நம் முன்னேர் கண்ட இறுதி முடிவு. எனினும், உலகிலே குணநடை யால் பலசாதிகள் இடையிலே தோன்றி நின்று மறைகின்றன. ஆண் பெண் இரண்டுசாதி. இவற்றுள்ளே கற்றவர், கல்லாதவர்; இட்டார், இடாதார்; பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர்; பிரபுக்கள், பொதுமக்கள்; செல்வர், ஏழைகள்; முதலாளி, பாட்டாளி; வெள்ளை, கறுப்பு: இவ்வாருகப் பல சாதிகள், பாகுபாடுகள் உலகில் உள்ளன. சாதியென்னும் சொல் இல்லாமலே உயர்வு தாழ்வு காட்டும் நடைமுறைப் பகுப்புகள் எல்லா நாடுகளிலும் இயங்கி வருகின்றன. எல்லாம் சொல் வேறு; பொருள் ஒன்றுதான். எல்லாம் நாராயணனின் அம்சமே என்னும் ஒருமையுணர்வு உதித்தாற் பாகுபாடுகள் அவித்த நெல்போலாகிவிடும். நான் என்னும் முளை தோன்றது. உயர்வு தாழ்வு என்னும் மனக்கோளாறுகள் மறைந்துபோகும். சமபுத்தி நிலைபெறும்.
பகவத்கீதை கூறுகின்ற சாதிப் பகுப்பு இயற்கையானது; குணநடையையும், குணநடைக்கேற்ற செயல்முறையையும் அடிப்படையாகக் கொண்டது. இது சனநாயக அரசியலிலுள்ள வகுப்புப் பெரும்பான்மை, சிறுபான்மை போன்று நிரந்தர மானதன்று கட்சிப் பெரும்பான்மை, சிறுபான்மை போன்று மாற்றமடையக்கூடிய அமைப்புள்ளது; எல்லார்க்கும் சம சந்தர்ப்பம் வழங்குவது. அத். 4:13. அத். 18: 41.
தேவசாதி சத்துவகுணப் பிறப்பு. அசுரசாதி இராசத தாமதகுணப் பிறப்பு. நல்ல குணநடை யுள்ளவன் உயர்ந்த சாதி, தீய குணநடை யுள்ளவன் தாழ்ந்த சாதி. குணநடை கெட்டால் தெய்வ குலமும் அசுர குலமாகும். குணநடை திருந்தி உயர்ந்தால் அசுர குலமும் தெய்வ குலமாகும். மனித சமுதாயம் முழுதும் தெய்வ சாதியாக உயர்ந்து உயர்நலம் அடையவேண்டும் என்பதே பகவானின் திருவுள்ளமாகும்.

ஞான யோகம் 67
அசுர சம்மாரங்களெல்லாம் இதையே குறிக்கின்றன. தீபா வளி, கந்தசட்டி, விஜயதசமி முதலிய திருநாள்களெல்லாம்
உலகில் அசுர சம்பத்துத் தெய்வ சம்பத்தாக உயர்ந்து நலம் பெற்ற தரும வெற்றியைக் குறிக்கும் பெருநாள்களேயாம். அத். 18 : 45 - 47.
* பாரதனிற் கல்விசெல்வம் பதவி இன்ப
பாக்கியங்கள் படைத்தும்உன தருள்ம றந்த
தாரகனச் சிங்கனை ஆ யிரத்தெட் டண்டம்
தனியாண்ட சூரபன்மன் தனை அகந்தை
மாரகஞ்செய் தவர்க்கருளும் வண்மை கண்டுன்
மலரடிகள் வந்தடைந்தேன் சிறியேன் எந்தன்
பேரகங்தை திருமுன்வைத் துருகி நிற்கும்
பேறருளெம் சிற்றண்டிப் பெரிய வாழ்வே.?
( சிற்ருண்டிப் பதிகம்-ஏ. பெ.)
நல்லனவும் தீயனவும் நாடியுண ராரசுரர் இல்லைபரி சுத்தமவர்க் கில்லையே - நல்ல ஒழுக்கமதில் உண்மை உரைப்பதனில் நின்றும் இழுக்கல் அசுரர் இயல்பு. 7
அசுரர் நல்வினைகளையும் தீவினைகளையும் பகுத்துணர மாட் டார். பரிசுத்த மென்பது அவர்க்கு அறவேயில்லை. நல் லொழுக்கத்தில் நின்றும் உண்மை பேசுவதில் நின்றும் தவறுதல் அசுரர் இயல்பாகும்.
* ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.” (திருக்குறள்) * தக்க இன்ன தகாதன இன்னவென் ருெக்க உன்னல ராயின் உயர்ந்துள மக்க ளும்விலங் காம்மனு வின்னெறி புக்க வேலவ் விலங்கும்புத் தேளிரே." (கம்பர் )
உலகொருபொய்த் தோற்றம் தருமமென்ருென் றில்லை இலைபடைப்போன் ஆண்பெண் இருவர்-கலவியினல் உண்டா னதுகாமம் ஒன்றே இலட்சியம்வே றின்ருமென் பார்காண் இவர். 8

Page 51
68 பகவத்கீதை வெண்பா,
உலகம் ஒரு பொய்த் தோற்றம். தருமமென்று ஒன்றில்லை. படைப்பவன் ஒருவன் இலன். ஆண் பெண் இருவரின் சேர்க்கை யால் உலகம் உண்டானது. உலகின் இலட்சியம் காமமே. இதற்குமேல் ஒன்றுமில்லை யென்பர் அசுர சாதியினர்.
உலகமென்பது ஒரு பொருளன்று. அது கானல்நீர் போல ஒரு பொய்த் தோற்றம். கடவுள் என ஒருவர் இல்லை. மர ணத்துக்கு அப்பால் ஓர் அனுபவமும் இல்லை. புண்ணிய பாவ மும் சுவர்க்க நரகமும் மோட்சமும் உண்டென்ப தெல்லாம் பரம்பரை பரம்பரையாக வழங்கிவரும் வீண்பேச்சு. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என வெளிற்றுரை பேசிப் பெரும்பாலும் மயங்கிக் கிடக்கும் அசுரசாதி.
" தருமமென் றெருபொருள் உளது தாவிலா
இருமையின் இன்பமும் இனிதின் ஆக்குமால்?
என்னும் பாடத்தை அசுர சம்பத்துடையோர் மாற்றிப் படிப்பர். தெய்வ சம்பத்து அசுர சம்பத்து என்பவற்றின் விரிவுரையே கந்தபுராணம்.
வாழ்க்கைப் போராட்டத்திலே தெய்வ சுபாவத்தை அசுர சுபாவம் இடையிடையே சிலகாலம் வெற்றிகொள்ளும். இது நிலையான வெற்றியன்று. அசுர சுபாவத்தைத் தெய்வ சுபாவமே இறுதியில் வெற்றிகொள்ளும். இதுவே நிலையான சமாதானத் தைத் தரும் தரும வெற்றியாகும். சாசுவதமான இவ்வாத்மீக வெற்றியை விரித்து விளக்கும் கந்தபுராணம் மனிதகுலத்தின் நிலையான அருட்செல்வம்.
தருமத்தைச் சூது வெல்லும்; இது அந்தரமானது. தருமம்
சூதை வெல்லும்; இது நிரந்தரமானது. பாரதம் போதிக்கும்
தரும போதனை இதுவே. பாரதம் மனிதகுலத்தின் நிலையான தருமச் சொத்து.
அறத்தின் ஆணையே இராமாயணம். அறத்தினும் வலியது எவ்வுலகத்தினும் இல்லை என்னும் துணிபே இராமாயணம் காட்டும் உண்மையாகும். இராமாயணம் மனித குலத்தின் தருமசாதனம். இம்மூன்று பெரும் பனுவல்களும் பொருளால் ஒருமை பெற்றுக் கீதா போதனையாகிய தேவாசுர யுத்தத்தின் விமரிசனமாக விளங்குகின்றன. ܟ
உலகில் மக்களிடையே வீரமும் செல்வமும் கல்வியும் வெவ் வேறு அளவிற் கூடியும் குறைந்தும் சேர்ந்திருத்தல் போல, முக்குணமும், தெய்வ சம்பத்தும், அசுர சம்பத்தும் வெவ்வேறு அளவில் அமைந்து கிடக்கின்றன. அசுர சம்பத்து உடையவர்க

ஞான யோகம் 69
ளுள்ளும் தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் இருக்கின்றர்கள். சூரபன்மன் முதலியோரை நாம் மறப்பதற்கில்லை. சிங்கமுகா சூரனின் சமயஞானம் சாதாரணமன்று. அவன் சுப்பிரமணிய பராக்கிரமத்தை நன்கு அறிந்தவன். எல்லாம் அசுர சுபா வத்துள் மூழ்கிவிட்டன.
அற்ப மதியுடைய ராமிவர்கள் இந்நோக்கில் நிற்பரான் மார்த்த நெறியிழந்தே-அற்பமோ தீய கொடுமைபல செய்வார் இவர்பிறந்தார் நாசப் பகையாய்ஞா லத்து.
சிற்றறிவுடைய இவர்கள் ஆன்மார்த்த நெறியை இழந்த வர்களாய் இந்நோக்கிலேயே நிற்பர். கொஞ்சமல்ல, தீய கொடுமைகள் பலவற்றைச் செய்வார்கள். உலகுக்கு நாசப் பகையாக இவர்கள் வந்து பிறந்தார்கள். -
தெய்வமென்னும் பெயரை முன்வைத்துத் தீயவழிகளிற் சென்று தீய செயல்களைச் செய்கின்ற இவர்கள் தாமும் கெட்டு உலகத்தையும் கெடுக்கப் பார்க்கின்ருர்கள்.
நிரம்பாத ஆசைவழி நின்றுபே ராடம் பரம்தற் புகழ்ச்சிவசப் பட்டே - பெருஞ்செருக்கால் புத்திமயக் கத்தால்வீண் புன்மைநினை வாற்புனித மற்றவிர தந்தொழில்செய் வார். 10
அளவுபடாத ஆசைகளின் வழியே நின்று ஆடம்பரம், தற் புகழ்ச்சி என்பவற்றின் வசப்பட்டுச் செருக்காலும், புத்திமயக் கத்தாலும், தீய எண்ணங்களாலும், புனிதமற்ற விரதங்களையும் அவற்றை நிறைவேற்றுதற்கு ஏற்ற செயல்களையும் செய்வார்கள்.
எல்லையிலா எண்ணம் கவலை யடைந்திறக்கும் எல்லை வரைமுயன்றே இங்கிவர்கள்-எல்லாச் சுகத்தினிலும் காம சுகம்சிறந்த தென்றே அகத்தினினை வாத்துணிந்தார் அஃது. II.
எல்லையில்லாத எண்ணங்களும், அவற்றைப் பற்றிய கவலை களும் உடையவர்களாய்ச் சாகும்வரையும் பாடுபட்டு உழைத்து, எல்லாச் சுகபோகங்களிலும் காமசுக போகமே சிறந்ததென்று அதையே மன நினைவாகக்கொண்டு அது அப்படித்தான் என்று முடிவுகட்டி யிருப்பார்கள்.

Page 52
70 பகவத்கீதை வெண்பா
சிறந்த சிவபக்தன்; திருப்பணிப் புரவலன்; வீணையின் செல்வன்; வீரருள் வீரன்; இலங்கை காவலன் இராவணப் பெருந்தகை எல்லாவற்றையும் போட்டடித்தது ஒரு பெலவீனத் தினுல்தானே. அதுதான் காமம்; பெலவீனங்களுட் பெரிய பெலவீனம்.
* கள்ளிருக்கும் மலர்க்கூந்தற் சானகியை
மனக்கதவிற் கரந்த காதல் ?? என்று அதை அழுத்தமாகக் கூறுகின்ருர் பஞ்சகன்னியருள் ஒருவரும், இலங்கை அழகுராணியும், இராவணன் தேவியு மாகிய மண்டோதரியார்.
*ஆர்கலி சூழ் தென்னிலங்கை அழகமர்மண் டோதரி? என்பது தேவாரம்.
"தூம கேது புவிக்கெனத் தோற்றிய வாம மேகலை மங்கைய ரால்வரும் காம மில்லை யெனிற்கடுங் கேடெனும் நாம மில்லை நரகமும் இல்லையே" ( கம்பர் )
கணக்கில்லா ஆசைக் கயிற்ருல் இவர்கள் பிணிப்புற்றே காமப்பித் தேறித்-தணிக்கொண்ணுக் கோபங்கொள் வார்கள் குவிப்பார் பணங்காம போகம் சுகித்தற் பொருட்டு. 12
எண்ணற்ற ஆசாபாசங்களால் இவர்கள் கட்டுண்டு காமப் பித்துத் தலைக்கேறி அடங்காத கோபம் கொள்வார்கள். காம சுக போகத்துக்கென்று பணத்தைக் குவிப்பார்கள்.
ஆசையே கோபம். அதாவது ஆசையின் வேருெரு வடிவமே கோபம். அத். 2 : 62-63. அத். 3 : 37.
நினைத்ததடைந் தேனின்று நில்லேன்வே ருென்றை நினைத்தடைவே னின்னும் நிசம்காண்-எனக்கோ அதுவுண் டிதுவுண் டெதுபெரிதெங் குண்டோ அதுவுமெனக் கேயுடைமை யாம். Ι και
நான் நினைத்த தொன்றை இன்று அடைந்துவிட்டேன் இவ்வளவில் நில்லேன். இன்னும் வேருென்றை விரும்பிப் பெறு வேன். இது நிசம். எனக்கோ அது இருக்கிறது; இது இருக் கிறது; எந்தப் பெரிய பொருள் எங்கே இருக்கின்றதோ அதுவும் எனக்கே உடைமையாகிவிடும்.

ஞான யோகம் 7.
ஒருபகைவன் போய்விட்டான் ஒயேன்மற் றின்னும் வருபகைவர் யாவரையும் மாய்ப்பேன்-சருவாதி காரியான் போகி கருமவீரன்பலவான் பாரிலென்போர் யார்சுகந்துய்ப் பார். 14
ஒரு பகைவனை ஒழித்துக் கட்டிவிட்டேன். ஓய்ந்திருக்க மாட்டேன். மேல் வருகின்ற பகைவர்கள் எல்லாரையும் கொல் வேன். நான் சருவாதிகாரி. சுகபோகி. கருமவீரன். பலவான் இவ்வுலகில் என்போற் சுகமனுபவிப்பவன் எவன் இருக்கின்றன்.
ஒருவனுக்கு அதிட்டமடிக்கிற தென்பது வீண்பேச்சு. இதெல் லாம் என் கெட்டித்தனம்; நான் எல்லாரையும் ஆட்டிப் படைப் பேன் என்று கனகுரலெடுத்து மார்பு தட்டி மீசை முறுக்கிய அசுர சுபாவம் படைத்தோர் பலர் நம் கண்முன்னே தலைகீழான சம்பவங்கள் எத்தனையோ உண்டு. வரலாற்றிலும் இவற்றைப் பலதரம் படித்தும் கேட்டும் அறிந்திருக்கிருேம். அறிந்தறிந்தும் உலகிலே பலர் இன்னும் அசுர வழியிலேயே போய்க்கொண் டிருக்கிருர்கள். ' கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல் ' என் னும் பழைய பல்லவியையே இவர்கள் பாடுகின்ருர்கள்.
கோடீஸ் வரன்யான் குலமகன்யான் என்போல்வான் ஏடா எவனுெருவன் இங்குளான்-ஈடாகா வேள்விசெய்வேன் ஈவேன் மிகமகிழ்வேன் என்றுமயல் ஆழ்வரிவர் அஞ்ஞானத் தால், t 15 நான் கோடீசுவரன். குலமகன். என்போன்றவன் ஒருவன் எவனடா இங்கிருக்கின்றன்? ஈடு இணையற்ற வேள்விகள் செய் வேன். தானம் கொடுப்பேன். மகிழ்வேன் என்று சொல்லிக் கொண்டு தமது அறியாமையால் இவர்கள் மயக்கத்தில் ஆழ்ந்து கிடப்பார்கள்.
எண்ணம் பலமனத்தில் என்றும் ஒரேகுழப்பம் மண்ணில் மயக்க வலைப்பட்டே-கண்தெரியார் ஆழ்வரிவர் காம அனுபவத்திற் சிக்குண்பார் பாழ்நரக மேசம் பளம். 16 மனத்திற் பலபல எண்ணங்கள். என்றும் புத்தி தடுமாற்றம். இவர்கள் மண்ணுலகில் மயக்கமாகிய வலையிற் பட்டுக் கண் தெரியாது காம அனுபவத்திற் சிக்குண்டு அதிலே ஆழ்ந்து கிடப்பர். இவர்கள் அடையும் பயன் பாழும் நரகமே.

Page 53
72 பகவத்கீதை வெண்பா
நல்லோர் தமைமதியார் நாளும் தமைப்புகழ்வார் செல்வச் செருக்கிலிறு மாந்திருப்பார்-சொல்லும் விதிதவறிப் பேரளவில் வேள்விசெய்தே தம்பேர் அதிவிமர்சனம்பண்ணு வார். 17
நல்லோரை மதியார். எப்போதும் தம்மையே புகழ்வார். செல்வச் செருக்கில் இறுமாந்திருப்பார். விதிமுறை தவறிப் பேரளவில் வேள்விகளைச் செய்து தமது பெயரைத் தாமே விமரிசனம் பண்ணுவார்.
அகந்தை மிருகபலம் ஆசைகெறு மட்டோ மிகுங்கோபங் கொண்டுமே லோரைப்-புகுந்தொன்முய்த் தம்முடலில் ஏனையோர் தம்முடலில் வாழுமென அம்மபழிப் பாரழுக்காற் றல். 18
அகங்காரம், மிருகபலம், ஆசை, மதியாத்தனம் மட்டுமா? கடுங் கோபங்கொண்டு நல்லவர்களையும், தம்முடலினுள்ளும் மற்றவர்களின் உடலினுள்ளும் உறையும் என்னையும் பொருமை யினுல் நிந்திக்கின்றர்கள்.
குணமயக்கில் இப்படியெல்லாம் செய்கின் ருர்கள். வழக் கொன்றிலே சாட்சியாய் வந்த ஒருவர் மதுமயக்கிலே மதிமயங்கி நீதிபதியின் முன்னே நின்று நான்தான் எதிரியெனச் சொல்வது போன்ற மாருட்டம் இது. எல்லா உடல்களிலும் ஒரே சீவ சக்தியின் அம்சமே வாழ்கின்றது என்னும் ஒருமைப்பாட்டுண்மை அசுர சுபாவத்துக்கு விளங்குவதில்லை. இதனல், பிறரை வருத் துவது தம்மையே வருத்துவதாகும் என்னும் நல்லறிவும் அசுரப் பிறவிகளுக்கு உதிப்பதில்லை. அத். 15 : 7. இதுமட்டுமா? அசுர சுபாவிகள் தமக்கு நன்மை செய்தவர்களுக்கும் தீமை செய்கிருர்கள்: தீமை செய்யும் நோக்கத்தோடு நல்லவர்போல் நடித்து உள்விழுகின்றர்கள்.
அபிமன்னனைச் சூழ்ச்சியினுற் கொன்றது அசுர சுபாவம் . அக்கொலையைப் புன்னகையுடன் ஏற்று நின்றது அபிமன்ன னின் தெய்வ சுபாவம். கருணை கலந்த வீரத்தின் சிகரம் இளைஞன் அபிமன்னன்: சைவத்தின் மணிமுடி; இளைஞரின் வழிகாட்டி.
"இன்றமரில் என்றனுயிர் பொன்றிடினும் ஈசன
கொன்றைகட வேனெனமுன் நின்றனன் நராதிபனே”
(வில்லிபாரதம்)

ஞான யோகம் 79
பார்த்தா மனிதப் பதரைப் பகைகொடுமை சேர்த்தே வளர்த்திடுமித் தீயோரைத்-தூர்த்தநடை வல்லவசு ரப்பிறப்பாய் மாறிமா றிப்படைப்பேன் அல்லலுல கங்களிலங் கங்கு. 9
பார்த்தா, இந்த மனிதப் பதர்களை பகை பாவங்களை அணைத்து வளர்க்கின்ற தீயோரை; ஒழுக்கங் கெட்ட நடையில் வல்ல அசுரப் பிறவிகளாய்த் துன்ப உலகங்களிலே மாறிமாறிப் படைக்கின்றேன்.
மனிதப் பதர் அன்பும், பண்பும், அறிவுமாகிய உள்ளீடு இல்லாத மாக்கள். பகை பகுத்தல் பிரித்தல்; தேடித்தேடி ஒற்றுமையுள்ள இடங்களிலே பிரிவினையை உண்டாக்குதல். அணைத்து வளர்த்தல் பகை, பாவம், பழி என்பவற்றுக்குப் புகலிடம் கொடுத்து விருத்திசெய்தல். தீயோர் தவறணைகள் மாறி மாறிப் படைத்தல் படிப்படியாகத் திருத்துதல்.
இத்தகவில் மூடர் எடுத்தே பலபிறப்பு மற்றசுர ராயிந்த மாநிலத்தில்-பத்தியிலார் என்னைநா டாமல் இழிந்தநிலை சேர்கின்ருர் முன்னையினும் தாழ்ந்த முடிவு. 20 தகுதியில்லாத இம்மூடர்கள் பல பிறவிகளில் அசுரர்க ளாகப் பிறந்து என்னை நாடாமல் இழிந்த நிலையினை அடைகின் ருர்கள். இவர்களுக்கு முன்னையினும் தாழ்ந்த முடிவு வந்து சேர்கின்றது.
பாவனை போன்றது பிறப்பு. மனம் போன்றது வாழ்வு. பக்திசெய்து பகவானை நாடிப் படிப்படியாய் மேலே ஏறுவதற் குப் பதிலாகக் கீழே இறங்குகின்ருர்கள். கிடைத்ததைப் ப்யன் செய்து அதன் மூலம் நிவாரணம் பெற வழிகாண்பவனே மேற்செல்லுகின்றன். கிடைத்ததைக் குறைவாக எண்ணிக் கொண்டு அதைப் பயன் செய்யாதவன் இன்னும் கீழ்நிலை அடை கின்றன். '' ,
நல்லுயிரை நாச நரகத்தி லேதள்ளும் அல்லல் வழிமூன் றவைகாமம்-தொல்லைதரும் கோபம் உலோபமென்ப கொன்றே இவற்றையணு தாபமின்றி நீயொழித்துத் தள்ளு. 21

Page 54
74 பகவத்கீதை வெண்பா
நல்ல ஆன்மாவைத் தீய நரகத்திலே தள்ளுகின்ற துன்ப வழிகள் மூன்று உள்ளன. அவை தொல்லை தருகின்ற ஆசை, கோபம், உலோபம் என்பன. இம் மூன்றையும் அனுதாபம் காட்டாமல் அழித்து ஒழித்துத் தள்ளிவிடு.
ஆசை, கோபம், உலோபம் மூன்றும் உன்னைத் தள்ளமுன்பு நீ அவற்றைத் தள்ளிவிடு. பழகிய அருமைபற்றி அவற்றுக்கு அனுதாபம் காட்டாதே. "" பேயோடு பழகிடினும் பிரிவது அரிது அரிது.”* படிப்படியாகச் சோரவிட்டுத் தூரவிட்டுப் பிரிதல் வேண்டும். உள்ளத்திற் பிறந்து ஆன்மாவைப் பிணிக் கின்ற இம்முப்பிணிகளும் உடற்பிணியிலும் கொடியவை. அரை குறையாக விட்டுவையாமல் இவற்றை முற்ருகப் பரிகரிக்க வேண்டும். வினை, பகை, பிணி, தீ இவற்றை அரைகுறையாக விட்டால் சமாளிக்க முடியாதபடி அவை மீண்டும் வளர்ந்து விடும். அரைவெட்டாக வெட்டிச் சாய்த்துவிட்ட மரக்கிளை மீண்டும் தளிர்க்கும்.
இருள்வழியாம் மூன்றும் இவைகடந்த மேலோன் திருவளரும் நன்னலமே தேடிப்-பெருவாழ்வு சேர்ந்தா னவன்பார்த்தா தெய்வசம்பத் தாலிதனைச் சார்ந்தா னெனவேரீ சாற்று. 22
அருச்சுணு, இந்த மூன்று இருள்வழிகளையும் கடந்த மேலோன் தெய்வத்திரு வளர்கின்ற உயர்நலத்தைத் தேடிப் பேரின்ப வாழ்வினை அடைகின்றன். இதனைத் தெய்வ சம்பத்தாற் பெற்ற னெனச் சொல்வாய்.
ஆசை, கோபம், உலோபம் மூன்றையும் விட்டவனுக்கு நரக வாயில் அடைக்கின்றது; சுவர்க்கவாயில் திறந்து அழைக் கின்றது. அங்கும் அவனுக்கு நாட்டமில்லை. இன்னும் மேலே செல்கின்றன். மோட்ச வாயில் முந்தியே அவனுக்காகத் திறந்து காத்திருக்கிறது. அவன் அதனுள்ளே புகுந்து சாந்திமய மாகின்றன். தெய்வசம்பத்தால் இந்நிலை கிட்டியது என அறிக.
அசுரசம்பத்தோடு பிறந்தவனும் படிப்படியாக மனமாற்றம் பெற்றுத் தெய்வசம்பத்துக்கு உரியவனுகும் தகுதியை அடைய வேண்டும் என்பதே பகவானின் திருவுள்ளம். ஒருவன் தன் அங்கங்களை அறுத்துத் தீயிலிட்டு வேள்விசெய்தாலும்; ஆசை, கோபம், உலோபம் மூன்றையும் களைந்து அவற்றேடுகூடப் பலியிடாவிடின் அவனுக்கு என்ன பயன்? அவன் தெய்வ சம்பத்தை அடைய முடியாது. மனமாற்றம் பெற்றுத் தெய்வ சம்பத்தைத் தேடிக்கொண்ட நல்லோனும் அவ்வளவில் நின்று விடாது அதைத் துணையாகக் கொண்டு மேலும் உயர்ந்து சென்று பெருவாழ்வைப் பெற முயலவேண்டும்.

ஞான யோகம் 75
மின்விளக்குப் பூட்டியிருக்கும் வீட்டின் சுவரிலே பொருத்தி யுள்ள மின் பொத்தானை அழுத்தினுல்தான் பாயும் கம்பி பாய்ச்சும் கம்பி இரண்டின் வழியாக மின் குமிழ்களினுள்ளே மின்னெளிக் கதிர்கள் வந்து தோன்றும். வீடு ஒளிமயமாகும். ஒளியின் உதவியால் பொருள்களைக் கண்டு உள்ளம் உவகை கொள்ளும். இதேபோல், உடம்பினுள்ளே உதித்த தெய்வ சம்பத்தாகிய சத்துவகுண ஒளிப்பொத்தானை அழுத்தினுல் தான் பக்திசிரத்தை யென்னும் இரு கம்பிகளின் வழியாக இருதயமாகிய மெய்யொளிக் குமிழினுள்ளே ஞானப் பேரொளி வந்து தோன்றும்.
ஞானப் பேரொளியைத் தன்னுள்ளே கண்ட நல்லோன் அங்கேயே அப்போதே மெய்ப்பொருளைக் காண்கின்றன். இந்த மகாத்துமா புத்திதத்துவமாகிய பெளத்த நிலையினையும் கடந்து, ஆன்மதத்துவமாகிய சகுணப்பிரம நிலையினையும் கடந்து அப்பாலுக்கப்பாலாம் நிர்க்குணப்பிரம நிலையினை அடைகின்றன். அத். 3 : 42 - 43.
"பேரா தரிக்கும் அடியவர்தம்
பிறப்பை யொழித்துப் பெருவாழ்வும் பேறுங் கொடுக்க வரும்பிள்ளைப்
பெருமா னென்னும் பேராளா தேரா நிருதர் குலகலகா
சேவற் கொடியா திருச்செந்தூர்த் தேவா தேவர் சிறைமீட்ட
செல்வா ** (திருச்செந்துர்ப் பிள்ளைத்தமிழ் )
வேத விதிவிட்டே வீணசைப் பட்டொருவன் ஏது தொழில்செய் திருந்தாலும்-நீதியுளோய் அன்னன் போய்ச் சித்தி யடையான் சுகங்காணுன் என்னும் உயர்கதியும் இல். 23
ஒருவன் வேதவிதிகளைக் கைவிட்டு வீணு சைகளுட்பட்டு எத்தொழிலைச் செய்துகொண் டிருந்தாலும் அவன் அவ்வழியே போய்க் கருமசித்தி அடையமாட்டான். சுகமுமடையமாட் டான். அவனுக்கு மோட்சமும் இல்லை.
சித்தி நிஷ்காம கரும யோக சித்தி. சுகம் சாத்துவிக குண ஒளியாற் பெறும் இவ்வுலக சுகம். மனிதன் விதிப்படி நடக்க வேண்டும். விதி அவரவர் சமயவேத விதி; சட்டதிட்டங்கள். விதிப்படி நடப்பது தன்னடக்கம் தரும். தன்னடக்கத்தால்

Page 55
76 பகவத்கீதை வெண்பா
ஒருவன் மனிதனுகின்றன். மனிதனுக மனிதனுக்காக நடக்கும் மனிதன் தெய்வமாகின்றன். தெய்வமானவன் தெய்வத்துடன் ஒன்று சேர்கின்றன். பின்னர் விதிக்கும் விதியாகின்றன். அத். 3 : 21.
உடல்நலம் பேணுதவனை மருந்துப் புட்டில்கள் சூழ்ந்து கொள்ளும். விதிப்படி நடவாதவனை விதிகள் வளைந்துகொள்ளும். விதிப்படி நடவாதவன் உருப்படான். அவனுக்கு இவ்வுலக சுகமுமில்லை. மறுஉலக சுகமுமில்லை. மோட்ச சுகத்தைப் பற்றிப் பேசுவானேன். ' வேதமதிற் செய்கை பிறக்கும்." அத். 3 15. விதிப்படி நடப்பது எல்லார்க்கும் நல்லது. விதி கருமசக்கரம். பகவானின் திருக்கரத்திலுள்ள சக்கரம் கரும தரும வடிவானது.
* மெய்ய நின்னுரை வேத மெனக்கொடு
செய்கை யன்றே அறம்செய்யு மாறென்றன்.”
* விதிக்கும் விதியாகுமென் விற்றெழில் காண்டி’
(இராமாயணம் )
தக்கதெது செய்யத் தகாத தெதுவென்றே ஒக்க உணர்தற் கொரேவழிதான்-மிக்குயர்ந்த வேத விதியில் விதியறிந்து செய்தற்கே ஒது முரிமையுனக் குண்டு. 24
இங்கே செய்யத் தக்கது எது? செய்யத் தகாதது எது வென்று பொருத்தமாக அறிந்துகொள்வதற்கு ஒரேவழி மிகவும் உயர்ந்த வேதவிதியாகும். இவ்விதியினை அறிந்து செய்தற்கே உனக்கு உரிமை யுண்டு. V−
சகுணவழிபாடு செய்யும் ஒவ்வொரு சமயத்தவர்க்கும் அவ ரவர் சமய வேதவிதியே பிரமாணமாகக் கொள்ளத்தக்கது. உனக்கும் இதுவே விதி. விதியறிந்து செய்யென்று பகவான் பார்த்தனுக்கு உபதேசிக்கின்றர். நமக்கும் இதுவே வழி. விதி வேண்டாவெறுப்பாகவல்ல பக்தி சிரத்தையுடன் கைக் கொள்ளத் தக்கது.
பதினரும் அத்தியாயம் தைவாசுர சம்பத் விபாக யோகம்
நிறைவுற்றது. செய்யுள் 106.
அசுர வாழ்வு வீழ்க, தெய்வ வாழ்வு வாழ்க.

பதினேழாம் அத்தியாயம் சிரத்தாத் திரய விபாக யோகம்
பொருட் சுருக்கம்
மனம்போற் சிரத்தை வளர்குணத்தால் மூன்றம் குணம்போல் உணவுமனம் கொள்ளும்-வணங்குவோர் ஓம்தத்சத் என்ருேதி ஓங்குபிர மத்தையன்பால் தாம் துதிப்பார் செய்குறைதீர் தற்கு. சிரத்தை விசுவாச ரூபமானது. செய்யும் நற்செயல்களில் நம்பிக்கை, அன்பு, விருப்பம், மனக்கவர்ச்சி என்பன கொண்டு செய்வதே சிரத்தை அல்லது விசுவாசம் எனப்படும். வேதவிதி அறிந்தவர்களுள்ளும் சிரத்தையுடையோர் இருப்பர்; அறியாத வர்களுள்ளும் இருப்பர். எவரிடத்தில் இருந்தாலும் சிரத்தை இறைவனுக்கு ஏற்றதே.
சிரத்தை மனம் போன்றது. அது குணத்தால் மூன்ருகும். சிரத்தை மயமானவன் அச்சிரத்தைபோல் ஆகின்றன். குணச் சார்பினல் சிரத்தைவேறுபட்டிருக்கும். சிரத்தை வேறுபாட்டால் வணக்க முறைகளும் பலபேதமாய் நிகழும். குணம் இயற்கை. அது பிறக்கும்போது உடன் பிறந்தது. குணம் வளர்வதற்கும், சிரத்தை நிகழ்வதற்கும் உணவும் துணைக்காரணமாகின்றது. சாத்துவிகர் இனிய சாரமான உணவுகளை உண்பர். இராசதர் காரசார மான உணவுகளை உண்பர். தாமதர் பழைய உணவுகளை உண்பர். சாத்துவிக சிரத்தை வேள்வி, தவம், தானம் என்பவை களைப் பயன் கருதாது நடுநிலையில் நின்று செய்யும், இராசத சிரத்தை பயன்கருதி இடம்பமாகச் செய்யும், தாமத சிரத்தை அரைகுறையாகச் செய்யும். V
சிரத்தையுடன் செய்யும் சற்காரியங்களில் குறைகள் நிகழா மலும், நிகழும் குறைகளுக்கு நிவாரணமாகவும் பிரமத்தைக் குறிக்கின்ற ஒம்தத்சத் என்னும் நாம மந்திரங்களை உச்சரிப்பர். ஓம் என்கின்ற நாதப்பிரம மந்திரம் உலகத் தோற்றத்துக்குக் காரணமான மூலமந்திரம். உலக இன்பம் கருதி ஓதத்தக்கது. தத் என்னும் மந்திரம் அது என்னும் பொருளுடையது. பிரமம் ஞானிகளால் அறியத் தக்கது என்பதை இது குறிக்கும். சத் என்னும் மந்திரம் உள்ளது நல்லது எனப் பொருள்தரும். சற் காரியங்கள் யாவும் சத் என்றே கொள்க. உலக இன்பமும் முத்தி இன்பமும் தரும் அமைப்புள்ள மந்திரம் இது.
சிரத்தை யில்லாத வேள்வி தவம் தானம் என்பன விதிப் படி செய்யப்படினும் அவை அசத் என்றே கொள்க. சிரத்தை யுடன் செய்யும் நற்செயல்கள் விதிக்குள் வராவிடினும் அவை சத்தேயாம் எனவே கொள்க.

Page 56
பதினேழாம் அத்தியாயம் சிரத்தாத் திரய விபாக யோகம்
அருச்சுனன் :
வேத விதியறியார் மேவும் சிரத்தையுடன் மாதவா நின்னை வணங்குவோர்-யாதுநிலை தன்னில்நிற்பார் சாத்விகமா ராசதமா தாமதமா இன்னதென எற்கருள் வாய் ஈது.
மாதவா வேதவிதியை அறியாமல் மனம் விரும்பிய சிரத்தை யுடன் தேவரீரை வணங்குவோர் எந்நிலையில் நிற்பார்? அது சாத்துவிகமா? இராசதமா? தாமதமா? இதனை இன்னதென அடியேற்கு உரைத்தருள்வீராக.
சிரத்தை விசுவாச ரூபமானது. ஒருவன் தான் செய்யும் நற்செயல்களிலே நிச்சய புத்தி, அன்பு, விருப்பம், மனக்கவர்ச்சி என்பன கொண்டுநிற்கும் நிலை விசுவாசம் எனப்படும். சிரத்திை யோடு செய்வது சிராத்தம்.
16ஆம் அத்தியாயம் 24ஆம் செய்யுளில், தக்கது எது? தகாதது எது? என்று தீர்மானித்தற்கு வேதவிதியே ஆதார மாகும் எனப் பகவான் கூறியதைக் கேட்ட பார்த்தனுக்கு ஒரு சந்தேகம் உண்டாயிற்று. உலகத்தில் எல்லாரும் சாத்திரவிதி அறிந்தவர்கள் அல்லர். வேதவிதி தெரியாதவர்களுள்ளும் பக்தி மான்கள் பலர் இருக்கின்றர்கள். அவர்களும் நம்மைப்போல் மனிதர்கள்தானே. அவர்களுக்கும் மன உணர்ச்சிகள் உண்டு தானே. வேதவிதி தெரியாத குற்றத்துக்காக இவர்களின் பக்திசிரத்தை வீணய்ப் போவதா? இதுதான் பார்த்தனின் சந்தேகம். மனிதாபிமானம் பற்றிய இச்சந்தேகத்தை நீக்குதற் காகவே பகவான் இவ்வத்தியாயத்தை உபதேசிக்கின்றர். சிரத்தாத் திரயம் - மூவகைச் சிரத்தை.
கண்ணபிரான் : வேத விதியதனை மேவா தியற்கையினல் சாதகர்க்குண் டாகும் தனிச்சிரத்தை-ஒதக்கேள் சாத்விகமாய் ராசதமாய்த் தாமதமாய் மூன்ருகும் பார்த்தா அதனுட் பகுப்பு. 2

ஞான யோகம் 7g
பார்த்தா, வேதவிதியோடு பொருந்த்ாமல் இயல்பான குணத்தினலே சாதகர்க்கு உண்டாகின்ற சிரத்தையானது சாத்துவிகம், இராசதம், தாமதம் என மூன்று பகுப்பாகும்.
உள்ளம்போ லாகுமே ஒவ்வொருவர்க் குஞ்சிரத்தை
உள்ளத்தெழுங்குணத்தால் உண்டாகித்-தள்ளரிதாய் ஆண்ட சிரத்தைமய மானேன கின்ருன்தான் பூண்ட சிரத்தையினைப் போல். 3.
ஒவ்வொருவர்க்கும் அவரவர் மனம் போன்றது சிரத்தை. உள்ளத்திலே தலைகாட்டுகின்ற குணத்தால் உண்டாகித் தன்னை ஆட்கொண்ட சிரத்தைமயமானவன் தான் கொண்ட சிரத்தை யைப்போல ஆகின்றன்.
பிறக்கும்போது உள்ளம் பண்பட்டிருந்தால் அங்கே சத்துவ குணம் மேற்படும். சிரத்தை ஒளிமயமாயிருக்கும். பரம்பரை பரம்பரையாகப் பண்படும் சந்தர்ப்பம் பெருத உள்ளத்தில் இராசதம் அல்லது தாமதம் மேற்படும். இராசதகுண சிரத்தை சுயநலம் கலந்ததாயிருக்கும். தாமதகுண சிரத்தை மிகவும் பின்தங்கிக் கிடக்கும். ஒரு சிரத்தையும் இல்லாதவனைப் பார்க் கிலும் தாமத சிரத்தையேனும் உள்ளவர் நல்லவர். இவரை ஆளாக்க முடியும்.
இயல்பான குணமும் சிரத்தையும் சார்பினல் உயர்வும் தாழ்வும் அடைகின்றன. சாத்துவிக சிரத்தை குணுதீத சிரத் தைக்கு உயரலாம்; அல்லது இராசத சிரத்தையும் ஆகலாம்; அல்லது தாமத சிரத்தையாகவும் மாறலாம். இராசத சிரத்தை சாத்துவிக சிரத்தையாகிக் குணு தீத சிரத்தையாக உயரலாம்; தாமத சிரத்தையாகவும் மாறலாம். தாமத சிரத்தை இராசத சிரத்தையாய் சாத்துவிக சிரத்தையாய் ; குணதீத சிரத்தை யாய் உயரலாம் ; சிரத்தையற்ற நிலைக்கும் கீழிறங்கலாம். தியானம், பயிற்சி, முயற்சி என்பவற்ருல் சிரத்தை படிப்படி யாய் உயர்ந்து நிலைபெறுகின்றது. சிரத்தையின்றிச் செயல்கள் உருப்படமாட்டா. மனிதனும் உருப்படான்.
சிரத்தையினுற் சாத்துவிகர் தேவரைப்பூ சிப்பர் அரக்க ரியக்கரையா வேசித் - துருப்பண்ணிப் போற்றுவரி ராசதர்தாம் பூதம்பேய் பைசாசம் ஏத்துவர்காண் தாமதர்போ யிங்கு. 4.

Page 57
80 பகவத்கீதை வெண்பா
சாத்துவிகர் சிரத்தையில்ை தேவரைப் பூசிப்பர். இரா சதர் அரக்கர் இயக்கர்களைப் பூசிப்பர். தாமதர் பூதம் பேய் பசாசு என்பவற்றைப் பூசிப்பர்.
சாத்துவிக சிரத்தை சாந்த தேவர்களை வணங்கும். இராசத சிரத்தை அகோர தேவதைகளை வணங்கும். தாமத சிரத்தை குட்டித் தேவதைகளை வணங்கும்.
சாத்துவிக சிரத்தை தெய்வங்களை முன்னிட்டு எல்லார்க்கும் நலமே வேண்டிநிற்கும். இராசத சிரத்தையும் தாமத சிரத்தை யும் தமக்கு வாழ்வும் பிறர்க்குத் தாழ்வும் வேண்டிநிற்கும்.
உலகிலே சாத்துவிகரும், இராசதரும் பலர். தாமதர் சிலர். இவர்களிடம் குணநடையில் ஏற்றத் தாழ்வு இருந்தாலும், தெய்வ மென்பதோர் சித்தம் உண்டாகி அதை முன்னிட்டு இவர்கள் வாழ்கின்றர்கள். வேதவிதி தெரியாதிருந்தாலும் இவர்களின் நம்பிக்கை படிப்படியாக வளர்தற்கு வழியுண் டாகும். இவர்கள் பூதம் முதலியவற்றுக்குச் செய்யும் பூசனையி லிருந்து விடுபட்டு; அகோர தேவதைகளுக்குச் செய்யும் பூசனையி லிருந்தும் விடுபட்டு, சாந்த தேவதைகளுக்குச் செய்யும் பூசனையி லிருந்தும் விடுபட்டு, நேரே இறைவனுக்குச் செய்யும் பூசனையில் நிலைபெறவேண்டும்.
இடம்பம் அகந்தை இவைமிக்கே காமம் அடங்காத பற்றில்மனம் ஆழ்ந்து - மடங்கொண்ட மாந்தர் பொறியுடனுன் மா வினையும் வாட்டியே ஆய்ந்தமைந்து நூல்விதி நோக் காமலே-சாந்தமின்றிச் செய்வார் கொடுந்தவங்கள் இன்னுர் செலத்துணிந்தார் மைய லசுர வழி. 5 - 6
இடம்பமும் அகந்தையும் மிகுந்து அடங்காத காமப்பற்றில் மனம் ஆழ்ந்து மதிமயக்கங் கொண்ட மாந்தர் ஐம்பொறி களையும் ஆன்மாவையும் வருத்தி இவற்றுக்கு வேதவிதி உண்டா இல்லையா என்பதை ஆய்ந்தோய்ந்து பாராமல் சாந்தமின்றிக் கொடுந் தவங்களைச் செய்வார்கள். இவர்கள் மயக்கந்தரும் அசுர வழியிலே செல்லத் துணிந்தார்கள்.
பொறிகளை வருத்துதல், கார் கூதிர்ப் பருவ காலங்களிலே நள்ளிரவில் நீரில் நிற்றல், முதுவேனிற் காலத்திலே நண்பகலில் கண்ணை விழித்துக்கொண்டு சூரியனை நோக்கிய வண்ணம் சுடு மணலின்மீது கெளட்பீனதாரியாகக் கிடத்தல், நெருப்பின்மீது ஊஞ்சலாடுதல், நரசிங்க பார்வையால் மக்களை அச்சுறுத்தல்

ஞான யோகம் 81
போன்ற கடுஞ் செயல்களால் உடலுறுப்புக்களை வருத்துகல்.
வேதவிதி யறியாத சிரத்தை அறியாமையால் அசுரவழியில் விரிவுபெறுகின்றது.
உண்ணு முணவும் சிரத்தைபோல் ஒர்மூன்ரும் பண்ணுதவம் வேள்வி கொடைப்பாங்கும்-அன்னவாம் பேதமுடைத் தவ்வவர்தாம் பேணுகுணச் சார்பினல் ஒதுமவை கேட்பாய் உணர்ந்து. 7
மூவகைச் சிரத்தைகள் போல அவரவர் உண்ணும் உணவும் மூவகைப்படும். செய்கின்ற தவமும் வேள்வியும் தானமும் அவ்வாறே குணச்சார்பினல் மூவகைப்படும். அவற்றைச் சொல் " கின்றேன் கேள்.
உணவுச்சுத்தம் உடற்சுத்தம் தரும் உடற் சுத்தம் உளச் சுத்தம் தரும்; உளச்சுத்தம் தியானத்துக்கு உறுதுணையாகும்; தியானத்தாற் பொருள் தெளிவடையும். துயில் நிலையில் ஒருவர் பெறுகின்ற அமைதி, விழிப்பு நிலையில் தியானத்தாற் கைகூடு கின்றது.
ஆயுள் பலம்புத்தி ஆரோக் கியம்திருத்தி ஏயும் விருப்பம் இவைவளர்க்கும்-தூய இனிமை பசைவலிமை வாய்ந்தின்ப மீயும் உணவுசாத் வீகர்க் குவப்பு. 8
நீண்ட ஆயுள், பலம், புத்தி, சுகம், மனநிறைவு, பசி இவற்றை வளர்க்கின்ற சுத்தமான இனிய குழைவுள்ள நின்று பிடிக்கக்கூடிய இன்பமளிக்கும் உணவு சாத்துவிகர்க்கு உவப் பாகும். f
பலம் - உடல் வலிமை. விருப்பம் - பசி. வலிமை - நின்று பிடிக்கக்கூடிய தன்மை. இன்பம்- மனமலர்ச்சி. இது சாரமான இனிய உணவு. சாந்த புத்தியை வளர்க்கும்.
கைப்புப் புளிப்புக் கடுஞ்சூ ட்திகாரம் உப்புத் துவர்ப்புள் ளெரிவூட்டித்-துய்த்தக்கால் துன்பம் துயர்பிணிகள் தோற்றும் உணவுவகை உண்பர் இரசகுணத் தோர். 9
ս - 6

Page 58
82 பகவத்கீதை வெண்பா
கைப்பு, புளிப்பு, கடுஞ்சூடு, கடுங்காரம், உப்பு, துவர்ப்பு உடையனவாய் உள்ளெரிவு தருவனவாய்; உண்டால் துன்பம், துயர், பிணி உண்டாக்குவனவாய் உள்ள உணவுவகைகளை இராசத குணத்தோர் உண்பர்.
இது காரசாரமான உணவு. ஆத்திர புத்தியை வளர்ப்பது. நாவைத் திருப்தி செய்வதையே நோக்கமாகக் கொண்டு உடல் நலத்தைக் கெடுப்பது.
ஆறிச் சுவைகெட் டழிந்துபதம் போய்ப்புளித்தே ஊறிப் பழைதான துண்டமிச்சில்-மாறியே தூய்மை யிழந்தெவரும் துய்க்கத் தகாஉணவைத் தாமதர்போ யுண்கைசக சம். 0
ஆறிப்போய்ச் சுவைகெட்டுப் பதனழிந்து, புளித்து ஊறிப் பழைதானது; பிறர் உண்டு மடைக்கலங்களில் மிஞ்சிக்கிடப் பது; சுத்தமில்லாதது; உண்ணத் தகாதது. இப்படியான உணவைத் தாமதகுண முடையோர் விரும்பியுண்பது இயற்கை
மிச்சில் எச்சிலன்று; உண்டபின் ஒழிந்து கிடப்பது. சகசம் - இயற்கை; கூடப்பிறந்த குணம். சக - கூட. சம் - பிறந்தது. இது மந்தபுத்தியை வளர்ப்பது. தூய்மை இழத்தல் ஈசுரார்ப்பணம் பண்ணுதற்கும், நல்லோரை உண்பித்தற்கும், உடல்நலம் பேணு தற்கும் தகுதியற்றிருத்தல்.
கடமைநமக் கென்றே பயன்கருதா ரெங்கும் நடுநின்று செய்வதையே நாடித்-திடமனத்தால் வேத விதிப்படிசெய் வேள்வியெது வோஅதுவே ஒதுசாத் வீகம் உணர். 1.
இது நமக்குக் கடமையென்று நினைந்து பயன் கருதாமல் எங்கும் நடுநிலையில் நின்று செய்வதையே விரும்பித் திடமனத் துடன் வேதவிதிப்படி செய்கின்ற வேள்வி எதுவோ அதுவே சாத்துவிக குண சிரத்தையாற் செய்யும் வேள்வியென்று உணர்க.
எங்கும் நடுநிலையில் நிற்றல். அத். 6 9.
பார்த்தா பயன்விரும்பிப் பாரிலிடம் பத்துக்காய் ஆர்த்தே புரிவேள்வி யாமதுதான்-சீர்த்தியுளோய் தேர்வாய் ரசோகுணத்தாற் சேர்சிரத்தை யாமிதையே பார்மேற்செய் வார்போய்ப் பலர். 12

ஞான யோகம் 8ፅ
பார்த்தா, மிக்க புகழுடையாய், உலகிலே பயனை விரும்பித் தம் செயலை விளம்பரம் பண்ணுவதற்காக ஆரவாரத்துடன் புரிகின்ற வேள்வியானது இராசதகுண சிரத்தையாற் செய்வ தாகும். உலகில் இதையே பலர் விரும்பிச் செய்கின்றர்கள்
இவர்களை அறவிலை வாணிகர் என்பர் அறிஞர்.
* இம்மைச் செய்தன மறுமைக் காமெனும்
அறவிலை வாணிகன் ஆஅய் அல்லன்.? (புறநானூறு)
ஆர்த்தல் - ஆரவாரித்தல். இராசதகுண சிரத்தை தன்னை விளம்பரம் பண்ணுவதையே முன்வைத்து எதையும் செய்யும்:
அப்பா விதிபிழைப்பார் அன்னதானம்பண்ணுர் செப்பிக் குறைமந் திரஞ்செபிப்பார்-ஒப்பில் குருதட் சிணைகொடார் கொள்சிரத்தை யில்லார் புரிவேள்வி தாமதத்தின் போக்கு. I 3
அருச்சுணு, விதிமுறை தவறுவார்; அன்னதானம் பண்ணுர்; குறைமந்திரங்களை உச்சரித்துச் செபிப்பார்; குருதட்சிணை கொடார்; சிரத்தையில்லார். இவர்கள் செய்கின்ற வேள்வி தாமத குணத்தின் போக்காகும்.
ஏனுேதானே என்ற மனப்பான்மையுடன் பயத்தினல் உலகொப்பினைக்குச் செய்வது வேள்வியாகாது. அன்னதான மில்லாத பூசை பயனற்றது. அன்னதானத்தால் தரித்திர நாராயணர்களுக்கு வயிறு குளிர்கின்றது.
* சாதமில் லாதபூசை தந்தியில் லாதவீணை
நாதமில் லாதசங்கேன் ராசகோ பாலமாலே.”
(இராசகோபால் மாலை)
சுரரந் தணர்குரவர் சொல்லறிவின் மிக்க பெரியோ ரிவரைநன்கு பேணல் -பரிசுத்தம் நேர்மைபிர மச்சரியம் நிற்றல் இனிமைசெயல் சார்காயத் தாற்செய் தவம். 14
அமரர். அந்தணர், ஆசாரியர், அறிவோர் என்னும் இவர் களை நன்கு மதித்தல், பரிசுத்தம், நேர்மை, பிரமசரியம் இனிமை செய்தல் என்பன சரீரத்தாற் செய்யும் தவமாகும்.

Page 59
84 பகவத்கீதை வெண்பா
எல்லாச் செயல்களும் மனத்தின் செயல்களே யாயினும் புறத்தே வெளிப்பட்டு நிகழும் நிலைபற்றி வாக்கினலும் காய்த்தி ஞலும் செய்யும் செயல்களென வகுத்துரைக்கப்பட்டன. தவம் என்பது தத்தம் கரும வடிவானது. ' தவம் செய்வார் தம் கருமம் செய்வார்." கருமம் கடமை.
தபம் தபித்தல், சுடுதல் என்னும் பொருளுடையது; தியா கத்தின் வடிவானது. தியாகம் தனக்கும் பிறர்க்கும் மீட்சி தரும். முன்னேர் செய்த தியாக தவத்தின் பயனே இன்று நமக்கு ஆக்கமாகக் கிடைத்துள்ளது. நமது தியாக தவத்தின் பயன் எதிர்காலச் சந்ததிக்கு ஆக்கமாகின்றது. இவற்றை உணர்ந்து கடமையைச் செய்க.
* சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.” (திருக்குறள்)
சுரர் சுகரூபமானவர். அந்தணர் - அழகிய தண்ணளியுடை யவர்; வேதாந்தத்தை அண்ணியவர்கள். ஆசாரியர் - சூழ்ந்த பார்வை உடையவர். அறிவோர் - விஞ்ஞான மெய்ஞ்ஞானப் பேறுபெற்றேர்.
கடுமையிலா துண்மைக் கருத்தமைந்து நல்ல தொடையிசைந்து நன்மைதரும் சொல்லும்-திடமுடனே கேட்குமுயர் வேதநூற் கேள்விபயின் ருேதுதலும் வாக்கினுற் செய்தவத்தின் மாண்பு. 15
கடுமையில்லாததாய், உண்மைக் கருத்துள்ளதாய், நல்ல தொடையுடையதாய், நன்மையே தருகின்ற சொல்லைச் சொல்லு தலும்; உறுதியுடன் கேட்கின்ற வேதசாத்திர உபதேசத்தைப் பயின்று ஒதுதலும் வாக்கினற் செய்கின்ற தவத்தின் மாண் பாகும்.
கடுமை - வன்மை. இனிமை - மென்மை. உண்மையும், மென் மையும், நன்மையும் அமைந்த சொற்களைக் கடுமையின்றிப் பேசல் வேண்டும். திடமனத்துடன் வேதப் பொருள்களைக் கேட்டல் வேண்டும். அடிக்கடி அவற்றில் ஈடுபட்டு ஒதுதல் வேண்டும். அப்பியாசம் செய்யாத வித்தை நஞ்சுக்குச் சரி. அதனல், மறதியும், விபரீத விளக்கமும், கெடுதியும் உண்டாகும்.
உண்மைப் பொருளைக் கூறும்போது விரையாமல் வெகு ளாமல் விரும்பி முகம் மலர்ந்து கூறுதல் வேண்டும். கடுகடுத்துக் கூறினல் கேட்பவன் தடதடத்துப் போவான். பொருள் மனத்தில்

ஞான யோகம் s
நிலைபெருது. கடுமுடுக்குள்ள ஆசிரியன் தன்னையும் கெடுத்துக் கொள்கின்ருன். எனவே வாக்கினற் செய்யும் தவத்தை அமை வுடையதாகச் செய்க. செவியினுற் செய்யும் கேள்வியாகிய தவத்தையும் அவதானத்துடன் செய்க.
உள்ளத் தெளிவன் புடைமை மவுனமுடன் தள்ளற் கரிதாய தன்னடக்கம்-கொள்ளும் பரிசுத்த நோக்கமிவை பார்த்தா மனத்தாற் புரிதற் குரியதவ மாம்.
உள்ளத் தெளிவு, அன்புடைமை, மவுனம், தன்னடக்கம், பரிசுத்த நோக்கம் என்பன மனத்தாற் செய்தற்குரிய தவமாகும். மவுனம் வாயும் மனமும் செயலும் கூட்டாக அட்ங்குதல். அத். 3 : 6. இந்திரியங்களின் எசமான் மனம். அத். 3 : 7. தன்னடக்கம் அகப்புறக் கரணங்கள் அடங்குதல்; தன்னைப் பற்றியும், தன் செயல்களைப் பற்றியும் தானே புகழாமல் அடக்கிக் காள்ளுதல். நோக்கம் மனநோக்கமும் கண் நோக்கமும். தன்னடக்கம் பெற்றவர்முன் பிறர் தாமே அடங்கி நிற்பர்.
பயன்விரும்பார் நன்கு பயில்யோகத் துள்ளம் இயைந்துறுதி பெற்றிங் கிருப்போர்-முயன்ருற்றும் மூன்று தவமுமிவை முந்துசாத் வீகமென ஆன்ருேர் உரைத்தார் அறிந்து. 17
பயனை விரும்பாராய், யோகப் பயிற்சியால் மனவுறுதி பெற் றிருப்போர் சிரத்தையினற் செய்கின்ற மூன்று தவமும் முதன்மை பெற்ற சாத்துவிக குணத் தவமாமென அறிவோர் அறிந்து கூறியிருக்கின்றர்கள்.
மூன்று தவம் மனம் வாக்குக் காயத்தாற் செய்யும் தவம், அல்லது கடமை. யோகம் கருமயோகம், ஞானயோகம்.
காயத்தால் வாக்கால் கருத்தால் இடம்பமாய் ஆயவுப சாரம்பா ராட்டுடனே- மேயமரி யாதையிவை யேவிரும்பி ஆற்றுதவம் ராசதமாம் ஏதுநிலைக் காதிதுநீ டித்து. 18
உபசாரமும், பாராட்டும், மரியாதையும் ஆகிய இவற்றையே விரும்பிச் செயலாலும், சொல்லாலும், மனத்தாலும் ஆடம்பர மாகச் செய்கின்ற தவம் இராசத குணத்தாற் செய்கின்ற தவ மாம். இந்தத் தவம் நீடித்து நிலைக்காது.

Page 60
86 பகவத்கீதை வெண்பா
உபசாரம் உபசரிப்பு, தமது வருகையை முன்னிட்டு விருந் தளித்தல், அன்னதானம் கொடுத்தல், தருமம் செய்தல், பாத காணிக்கை வைத்தல் முதலியன. பாராட்டு தம்மையும் தமது கடமையையும் பலபடப் புகழ்ந்துரைத்தல், வாழ்த்துமடல் வழங்குதல் முதலியன. மரியாதை மாலை, மேளம், வணக்கம் முதலியன.
தவத்திரு, தியாகசேவை என்பன உடைய நல்லோர்க்கு அன்பர் கூட்டத்தினரால் இம்மூன்று மதிப்பும் செய்யப்படுதல் கடமையாகும். சாத்துவிககுண சம்பன்னர்களுக்கு இம் மதிப் பினைச் செய்யும்போது விருப்பு வெறுப்பின்றிச் சமநிலையில் நின்று எல்லா மதிப்புகளையும் எம்பெருமான் திருவடிகளுக்கே அர்ப்பணம் செய்துவிட்டுச் சலனமற்றிருப்பர். . .
இராசதகுண சிரத்தையுடையோர் மதிப்புக்களைத் தமக் கென்றே ஏற்றுத் தருக்கியிருப்பர். மதிப்புக் கிடையாவிடின் தவத்தையே கைவிட்டும் விடுவர். அவத்தொழில் செய்யும் மறுதலைப் போக்கிலும் செல்வர். சுண்ணும்பை வெண்ணெய் என்று சொல்வதுபோல அவர்தம் வாய்ச்சொல்லும் மாறிவிடும்.
பிடித்த பிடியாய்ப் பிறர்நாச மெண்ணி எடுத்தஉடற் கின்னல் இழைத்தே - முடிக்கும் தவமெதுவோ ஆங்கதுதான் தாமசம்நீ கண்டாய் அவமதனை மேற்கொள் வது. 19
விடாப்பிடியாய் நின்றுகொண்டு பிறரைக் கெடுக்கும் எண்ணத்துடன் தன்னுடம்பை வருத்தி ஒருவன் செய்யும் தவம் தாமதகுண தவமாகும். இதைச் செய்வது வீண் காரியமாம்.
பிறரைக் கெடுத்தற்கு நேர்த்திக்கடன் செய்தல், முடிச்சுக் கட்டுதல், கோயில்களிற் பழிபடுத்தல், உண்ணுவிரத மிருத்தல், பேய்பசாசுகளுக்கு வேள்விபோடுதல், தன் மனத்தையும் உடம் பையும் வருத்துதல் இவையெல்லாம் தாமதகுண சிரத்தையாற் செய்யும் தவமாம். தெய்வத்தை வணங்கும் நற்செயலில் தன் கேடும், பிறர் நாசமும் இங்கே இடம்பெறுதல் காண்க.
* புண்ணியம்போற் பாவம் - மனமே
புரிந்தாய்நீ தினமே திண்ணமாகக் குளிக்கப் போயுந்தன் மேலே சேற்றைப் பூசிக்கொண்டு திரும்புதல் போலே?
(வேதநாயகம்பிள்ளை) தாமதகுண சிரத்தை எல்லாவற்றையும் திரித்துச் செய்யும். அத். 18 : 32.

ஞான யோகம் 87
தகுமிடத்தில் தக்க தருணத்தில் கொள்வார் தகுதியறிந் தன்பு தளிர்த்துத் - தகவுடனே முன்னுதவி நோக்கார் முறையென்று செய்தானம் அன்னதுசாத் வீகம் அறி. 20 தகுதியான இடத்தில், தகுதியான் காலத்தில், கொள் வோரின் தகுதியறிந்து, அன்பு தளிர்த்து, முன்னுதவியை நோக்காமல், இது செய்வது தகுதியாகுமென நினைந்து, தகுதி யுடன் கொடுக்கும் தானம் சாத்துவிககுண சிரத்தையாற் கொடுக்கும் தானமாகும்.
தகுமிடம் பயன்படத்தக்க இடம்; தக்க தருணம் பயன் படத்தக்க காலம். கொள்வார் தகுதி பெற்றதைப் பயன். செய்யும் தகுதி. முன்னுதவி நோக்காமை கொள்வார் கொடுப் பார்க்குச் செய்யாமற் செய்யும் உதவி.
தக்கார்க்கு ஒன்றைக் கொடுப்பது புண்ணிய கருமங்களுக்குப் பயன்படும். கொடுப்பார்க்கும், கொள்வார்க்கும், உலகுக்கும் இதனுல் நன்மை விளையும். கொடையின் பெறுமதியும் கூடும்.
* உதவி வரைத்தன் றுதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.? (திருக்குறள்) ' உயர்ந்தவர்க் குதவிய உதவி யொப்பவே ” (கம்பர்) ' கொள்வார்தம் பெறுமதி யெம்கவி மதிப்பே * (விபுலானந்தர்) * நல்லதுகண் டாற்பெரியோர் நாயகனுக் கென்றதனை
நல்கு வாரே.”* (படிக்காசுப் புலவர்)
பதிலுபகா ரத்தைப் பயனை விரும்பி மதிமயங்கி உள்ளம் வருந்தி - மதியாமல் ஈயுங் கொடைதான் இராசதமாம் இங்கதனை ஆயுங்கால் தற்பெருமை யாம். 2.
பதிலுபகாரத்தையோ, பயனையோ விரும்பி மதிமயங்கி மனவருத்தத்துடன் மதிப்பில்லாமற் கொடுக்குங் கொடை இராசத குணத்தைப் பற்றியதாகும். இது தற்பெருமையாம்.
மதிமயக்கம் புத்தித் தடுமாற்றம்; கொள்பவரைத் தமது அம்சமாகக் கருதாமல் அன்னியணுகக் கருதுதல். உள்ளம் வருந்துதல் ஒவ்வொரு சதமாகச் சேர்த்துக் கண்ட ஒரு ரூபா போகுதேயெனத் துயர்ப்படுதல். மதிப்பின்மை புறக்கடையில் நிறுத்திக் காக்கவைத்தல், இழிசொற் சொல்லல், இனிமேல் வராதே என்று கடிதல் போன்ற தரக்குறைவான செயல்களைச் செய்தல்.

Page 61
88 பகவத்கீதை வெண்பா
கொடுப்பவரும் நன்மனதாகக் கெடுக்கவேண்டும்; கொள்ப வரும் நன்மனதாகக் கொள்ளவேண்டும். நல்லதைக் கொடுக்க வேண்டும். சமயக் கிரியைகளில் ஏற்போர் ஈவோரிலும் மன நிறைவு உள்ளவராய் இருத்தல் வேண்டும். இதனுல் ஈவோர் நல்ல பயன் பெற்று வாழ்வர். ஏற்போர் பேராசையுள்ளவ ராணுல் இருவர்க்கும் கேடுவரும்.
தகாத விடத்தில் தகாதகா லத்தில் தகாதார்க் கெனினும்செய் தானம் - தகாததுதான் வந்தனை யின்றியவ மானமடை விக்குமவர் தந்த கொடைதாம தம். 22
தகுதியில்லாதவர்க் கெனினும், தகுதியில்லாத இடத்தில் தகுதியில்லாத காலத்தில் கொடுக்கும் தானம் தகுதியில்லாத தாகும். அது மரியாதையின்றி அவமானம் தரும். இது தாமத குண சிரத்தையாற் கொடுக்கும் கொடையாகும்.
தகாத இடம் புறக்கடை வாயில். தகாத காலம் குறித்த தேவைக்குப் பயன்படாத காலம்; ஐந்து நிமிஷம் ஐம்பது நிமிஷமாக நீடித்த காலம். தகுதியில்லாதவர்க்கேனும் ஒன்றைக் கொடுக்கும்போது மனிதாபிமானத்துடன் கொடுக்கவேண்டும். மனிதாபிமான மென்பது கொடுப்போனும் கொள்வோனும் ஒரே அம்சம் என்னும் ஒருமையுணர்வு.
ஒம்தத்சத் என்றே உயர்பிரமத் தைக்குறிக்கும் நாமத்தை மூன்ருய் நவில்வார்கள் - தோமற்ற அந்தணரும் நான்மறையும் ஆற்றுதவம் வேள்விகளும் வந்துநிலை நிற்பதித ஞல். 23
ஓம் தத் சத் என்று மூன்று குறிப்புச் சொற்களால், உயர்ந்த பிரமத்தை அறிஞர்கள் சொல்வார்கள். அந்தணரும், நான் மறையும், வேள்வி தவங்களும் தோன்றி நிலைநிற்பது இந்த மந்திரங்களாலாகும்.
உயர்பிரமம் மனவாசகம் கடந்து நிற்கும் பரம்பொருள். அத். 13 13.
நாதமறை யாய்ப்பிரம நாமமாய் நிற்பதஞல் வேதியரால் வேத விதிப்படிசெய் - மாதவமும் ஏமமுறும் வேள்வியும்நல் ஈகையுமெ லாந்தொடங்கும் ஓம்எனவே முன்னுச் சரித்து. 24

ஞான யோகம் 8)
ஒலிவடிவான மந்திரமாய்ப் பிரமத்தைக் குறிக்கும் நாம மாய் நிற்பதனல், வேதியரால் வேதவிதிப்படி செய்கின்ற வேள்வி தவம் தானம் எல்லாம் ஓம் என்றே முன்னுச்சரித்துத் தொடங்கப்படும்.
ஒம் என்னும் ஒலி எல்லா ஒலிகளுக்கும் மூல ஒலி; உலகத் தோற்றத்துக்குக் காரணமானது; கரும வடிவானது உலக இன்பங்களை விரும்பிச் செய்யும் செயல்களுக்கு உறுதுணையாய் முன்னிற்பது. அத். 9 : 27. பிரணவப் பொருளின் வடிவான வர்தான் யானைமுகப் பிள்ளையார். யானைமுகம் ஓங்கார வடிவா யிருத்தலை அவதானித்தறிக. சகுணப் பிரம வழிபாடுகள் யாவும் விஞயகரை முன்னிறுத்தியே செய்யப்படுதல் நியமமாகும்.
பார்த்தாதத் என்னும் பரம்பொருளை முன்னிறுத்தி ஏத்திப் பயன் கருதார் இங்குயர்வாம்- மோட்சமே
வேண்டிநிற்போர் வேள்விதவம் தானமிவை மெய்யன்பு பூண்டுசெய்வார் ஈது பொருள். 25
பார்த்தா, பயன் கருதாமல் உயர்ந்த மோட்சத்தையே விரும்பிநிற்போர், தத் என்னும் பரம்பொருளை முன்னிறுத்தி மெய்யன்பு பூண்டு வேள்வி தவம் தானம் என்பவற்றைச் செய் கின்ருர்கள். மோட்சம் இவர்களுக்குக் கிடைக்கின்றது.
தத் என்பதற்கு அது என்பது பொருள். ஞானிகளால் அறியப்படுவது. முத்தியின்பம் கருதுவோர் ஓதுவது. தற் செயல் என்னும் வழக்கும் இங்கே நோக்கத்தக்கது. தன்செயல் என்னும் பொருள் தராமல் அதன் செயல் எனப் பொருள் தந்து நிற்பதை உணர்க. தற்செயல் - பரம்பொருளின் செயல்.
உள்ளதென நல்லதென ஒங்குதியா னப்பொருளாக் கொள்வருயர் சத்தாம் குறியீட்டைத்-தள்ளரிய நல்லசெயல் யாவினு முன் நாடியே சத்என்னும் சொல்லையுச்ச ரிப்பார் தொழுது. 26
சத் என்னும் மந்திரம் உள்ளது நல்லது என்னும் பொரு ளுடையது. காமிய கருமங்களிலும், நிஷ் காமிய கருமங்களிலும் சத் என்னும் மந்திரம் தியானிக்கப்படுகின்றது. எல்லா நற் செயல்களிலும் சத் என்னும் மந்திரத்தை வணங்கி உச்சரிப்
isg W

Page 62
90 பகவத்கீதை வெண்பா
ஓம் தத் சத் என்னும் மூன்று மந்திரங்களும் வெவ்வேறு பாவனைகளுக்கு உரியனவாய்த் தனித்தனியே நின்ருலும், எல்லா நற்காரியங்களிலும் கூட்டாகவே உச்சரிக்கப்படும். வேத விதியை அறிந்தோ அறியாமலோ பக்தி சிரத்தையுடன் செய் யப்படும் எல்லாத் தருமங்களையும் ஓம் தத் சத் என்னும் மந்திரம் குறை தீர்த்துப் புனிதஞ்செய்கின்றது. மனமார அதை உச்சரிக்க வேண்டும். மந்திரம் என்னும் சொல்லின் பொருள் நினைப் பவனைக் காப்பது அல்லவா ? மந்-நினைத்தல். திரம்-காத்தல்
சற்கரும மாம்வேள்வி தானம் தவத்தில் நிலை நிற்பதுசத் என்றே நிகழ்த்துவார் - தற்பரனைப் பக்தி சிரத்தையினற் பாவிக்கும் எச்செயலும் உத்தமமாம் சத்என்பார் ஒர்ந்து. 27
நற்கருமங்களாகிய வேள்வி தவம் தானம் என்பவற்றில் நிலைபெறுவது சத் என்று கூறுவர். இறைவனைப் பக்தி சிரத்தை யினுற் பாவித்துச் செய்கின்ற எல்லாச் செயலும் சத் என்றே சொல்வர் நல்லோர்.
சமயக் கிரியைகளை மாத்திரமல்ல ; நாளாந்தக் கடமை களையும், சமூக சேவைகளையும் தொடங்கும் போதும் முடிக்கும் போதும் ஒம் தத் சத் என உச்சரித்துத் தியானித்துச் செய்க. செய்தால் நன்மையே வரும். தெய்வத் தியானமில்லாத செயல்
பார்த்தா சிரத்தையின்றிப்பார்மேற்செய்வேள்விதவம் ஏற்பார்க்கன் பின்றி இடுந்தானம் - பார்க்குங்கால் எல்லாம் அசத்தாகும் இம்மைமறு மைக்கவற்ருல்
இல்லைபய னேதுமென்றே எண்ணு. 28
பார்த்தா, உலகத்திலே சிரத்தையில்லாமற் செய்கின்ற வேள்வியும் தவமும், ஏற்பார்க்கு அன்பின்றி ஈகின்ற கொடையும் பார்க்குமிடத்து எல்லாம் அசத்தாகும். அவற்றல் இம்மைக்கும் பயனில்லை; மறுமைக்கும் பயனில்லை யென்றே எண்ணுவாய்.
மூவகைச் சிரத்தையுள்ளும் தாமத சிரத்தையேனும் ஒரு வர்க்கு இருத்தல் நல்லது. தாமத சிரத்தை இராசத சிரத்தை யாகலாம். இராசத சிரத்தை சாத்துவிக சிரத்தை யாகலாம். சாத்துவிக சிரத்தை குணதீத சிரத்தை யாகலாம். ஒருவித

ஞான யோகம்
சிரத்தையும் இல்லாதவனைத் திருத்த முடியாது. பத்துவருட காலம் ஒரு பல்கலைக் கழகத்தில் ஒரு கல்லைக் கொண்டுபோய் வைத்தாலும் அதில் ஏதும் மாற்றம் காணலாம். சிரத்தை யில்லாத ஒருவனை எத்தனை வருடம் அங்கே வைத்தாலும் அவனில் ஒரு மாற்றமும் காணமுடியாது.
அன்பின்றி ஈகின்ற கொடையால் என்பும் பற்றி எரியும்.
* என்பெலாம் பற்றி எரியுதே ஐயையோ
அன்பிலாள் இட்ட அமுது.* (ஒளவையார்) பக்தி சிரத்தையிலே எல்லாச் சமயங்களும் சாதிகளும் நிலைபெறுக. சமூகம் ஒளிபெறுக. உலகெங்கும் சாந்தியும் இன்பமும் தங்குக.
பதினேழாம் அத்தியாயம் சிரத்தாத் திரய விபாக யோகம் நிறைவுற்றது.
செய்யுள் 134. சிரத்தையுடன் கருமம் புரிந்து சிறப்படை க.

Page 63
பதினெட்டாம் அத்தியாயம் மோட்ச சன்னியாச யோகம்
பொருட் சுருக்கம்
சரணு கதியேநற் சார்வாம் அதுவே அரணுமென் றுன்னையுன தன்பைப் - புரியும் கருமமதைச் சேர்பயனக் கண்ணனடிக் கென்றும் உரிமைசெய்வாய் சாந்தியுனக் குண்டு.
துறவும் தியாகமும் ஒன்றே. தியாகம் என்னும் சொல்லையே பகவான் இங்கு எடுத்தாளுகின்றர். குண வேறுபாட்டால் தியாகம் மூன்றுவகைப்படும்.
நாளாந்தக் கடமைகள் எல்லார்க்கும் கட்டாயம். அவற் றைப் பற்றின்றிச் செய்தல் மேலானது. கருமங்களுள்ளே பற்றற்ற கருமமே மிகவும் உயர்ந்தது; நிச்சயமானது. இது பகவானின் கொள்கை. நாளாந்தக் கடமைகளைக் கைவிடுதல் தாமத தியாகம். செய்யப் பயந்து விடுதல் இராசத தியாகம். கடமையை நடுநின்று செய்துகொண்டு பயனைத் துறப்பது சாத்துவிக தியா கம்.
உடற்பற்றுடையோர் எவராலும் கருமங்களை முற்ருக விட முடியாது. கருமங்களைக் கைவிடுதல் என்பது நடவாத காரியம். கருமபலனைத் தியாகஞ் செய்யாதோர் இறந்தபின்பு இன்பமோ துன்பமோ; இன்பதுன்பமோ அனுபவிப்பர். கருமபலத் தியாகிகள் இறந்தபின்பு சாந்தியுலகடைகின்றனர். கருமத்தின் மூல காரணங்கள் ஐந்து. அவை உடல், உயிர், பதினெரு இந்திரி யங்கள், செயல்கள், தெய்வம் என்பன. இவற்ருல் கருமங்கள் நிகழ்கின்றன. இதை அறியாதவன் தானே கருத்தா எனக் கருதுகின்ருன். தான் கருத்தா என்று எண்ணத அறிஞன் கரும பந்தம் அடைவதில்லை.
கருமத்தில் மூட்டிவிடும் ஞான காரணங்கள் மூன்று உள்ளன. அவை அறிவு, பொருள், அறிபவன் என்பன. கருமத்திற் கூட்டிவிடும் காரணங்கள் மூன்று உள்ளன. அவை கருவி, கருமம், கருத்தா என்பன. குண வேறுபாட்டால் இவை தனித்தனியே மூவகைப்படும். இவ்வாறே புத்தியும், திடசித்தமும் குணம் பற்றி மூன்றகும். சுகமும் குணத்தால் மூவகைப்படும். குணம் கடந்த மகான்கள் மண்ணுலகில் இருந்தாலும், விண்ணுலகில் இருந்தாலும் மனிதரிலும் தேவரிலும் மேலானவர்களே.
குணங்களால் குலங்கள் பிறக்கின்றன. குலங்களால் குணங்கள் வளருகின்றன. கடமையால் குலங்கள் நடைபெறு

ஞான யோகம் Ꮽ Ꮽ
கின்றன. நடுநிலை தவருமற் கடமையைச் செய்வதால் குலங்கள் உயர்கின்றன. கடமை தவறுதலால் உயர்குலமும் இழிகுல மாகின்றது. கரும சித்தியால் ஞானசித்தி. ஞான சித்தியால் முத்திப்பேறு. இது பிரம நிருவாணம் எனப்படும்.
கடமை செய்ய மறுக்காதே. மறுத்தால் உனது உடன் பிறந்த குணத்தால் கட்டுண்டு நீ அதைச் செய்யவேண்டி வரும். கடமையைக் குறைவாக மதியாதே. நீ உன்பாட்டில் ஆடுவதில்லை. பரமாத்துமா உள் நின்று ஆட்ட நீ ஆடுகின்ருய். பகவானைச் சரண்புகு, சாந்தியும் மோட்சமும் அடைவாய். பகவானின் ஆணைவழி நில். கருமம், பக்தி, ஞானம் மூன்றில் ஒன்றை உன் விருப்பம்போல் தெரிந்து செய். உனக்கென ஒன்றில்லை. எல்லாப் பணிகளையும் பகவானுக்கு அர்ப்பண மாக்கிவிடு. நீயும் உன் உடைமைகளோடு பகவானைச் சரண் புகு. ஒரு பொல்லாப்பும் வராது. கலங்காதிரு.
கீதாசாத்திரம் உண்மை முழுதும் உண்மை ; பரமரகசியம். கீதைப் பொருளைப் பகவத் பக்தர்களுக்கு உபதேசிப்பவன் பகவானுக்கு அன்பன் ; பகவானின் பணி செய்பவன். பகவத் கீதா பாராயணம் அனுபவ ஞானப் பயன்தரும். பகவத் கீதை யைப் பக்தியுடன் கேட்பவன் புண்ணியவான்.
பகவான் கேட்கின்ருர் : பார்த்தா, இந்தக் கீதாரகசியம் உன் உள்ளத்திற் பதிந்ததா? மனமயல் தீர்ந்ததா ? புத்தி தெளிந்ததா ?
அருச்சுனன் சொல்கின்றன் : அச்சுதா, தேவரீரின் அருளால் எனது மதிமயக்கம் அடியோடு தொலைந்துவிட்டது. மெய் யுணர்வு மீண்டுவிட்டது. உறுதியுடன் எழுந்து நிற்கின்றேன். தேவரீர் சொல்வதையே தொடுத்து முடிக்கின்றேன்.
கீதா சாத்திரத்தை நேரே கேட்கும் பேறுபெற்ற நல் லறிஞர் சஞ்சயர் திருதராட்டிரனுக்கு நயப்பும் வியப்பும் தோன்றச் சொல்கின்ருர் : அரசர் பெருமானே, கிருஷ்ண பரமாத்துமாவுக்கும், ம காத்து மா வா கி ய அருச்சுனனுக்கு மிடையே நடந்த இந்தச் சம்பாஷணையை நான் மெய்விதிர்க்க ஆனந்தம் மேலிட்டுக் கேட்டேன். இது பெரிய அதிசயம். எனது மனமகிழ்ச்சிக்கு அளவில்லை. கண்ணனது வடிவழகின் கரைகாண என்னுல் முடியவில்லை.
எங்கே கண்ணபிரான் எழுந்தருளி யிருக்கின்ருரோ ; எங்கே வில்லாளியான அருச்சுனன் வீற்றிருக்கின்றனே ; அங்கேதான் மங்களமும், வெற்றியும், நல்லாக்கமும், நன்னிதியும் நிலைத் திருக்குமென்பது எனது கொள்கை. w
குரு நிலத்திற் போரேறி நின்ற என் மக்களும், பாண்டு புத்திரரும் அங்கே என்ன செய்தார்கள் ? என்று திருதராட் டிரன் வினவிய விஞரவுக்கு இறுதி விடையாக இதனைக் கூறிக் கீதா சாத்திரத்தைத் தலைக்கட்டுகின்ருர் சஞ்சயர். அத். 1 : 1. அத். 18 78.

Page 64
பதினெட்டாம் அத்தியாயம்
மோட்ச சன்னியாச யோகம்
அருச்சுனன் : கண்ணு கரணங் களுக்கிறைவா கேசிக்கு விண்ணு டளித்த வியன்தோளா - தண்ணுர் s துறவு தியாகமெனச் சொல்பொருள்வெவ் வேருய் அறியவிழை வேண்டிய னேன்.
கண்ணு, அகப் புறக் கரணங்களுக்கு இறைவா! கேசி யென்னும் அசுரனுக்கு விண்ணுடனித்த விசாலமான தோள்களை உடையாய்! செந்தண்மை யுடைய துறவு, தியாகம் எனச் சொல்கின்ற பொருள்களைத் தனித்தனியே அறிதற்கு அடியேன் விரும்புகின்றேன்.
கரணங்களுக்கு இறைவன் அகப்புறக் கரணங்களை ஒளி பெறச் செய்கின்றவன்; இருஷிகேசன். அகப்புறக் கரணங்கள் ஒளிபெருமல் இருண்டுகிடந்த கேசி யென்னும் அசுரனின் அசுர சம்பத்தைப் பறிமுதல் செய்து தெய்வ சம்பத்து நல்கிய அருளா ளர் எம்பெருமான். கேசியென்பவன் சரீரபலத்தை மாத்திரம் கொண்டு எம் பெருமானை எதிர்த்தான். எம்பெருமானே தேவான்ம சக்தியையும் புயவலியையும் கொண்டு அசுர சக்தியை வென் ருர், அசுரன் அமரனஞன். அசுர சம்பத்து அத். 16 : 4 - 18. தெய்வ சம்பத்து அத். 16 : 1-3.
கரண மடக்கலால் மனவலிமை மாத்திரமன்று ; உடல் வலிமையும் உடன் விருத்தியாகின்றது. இது நம்நாட்டு யோகப் பயிற்சியின் ஒரு தனிச் சிறப்பாகும். உணவுவகைகளால் உடல் வலியை மாத்திரம் வளர்த்து இராட்சதர் போன்று தோற்றம் எடுக்கின்ற உடற்பயிற்சி முறைகளை நம் முன்னுேர் கைக் கொண்டவர்கள் அல்லர். முன்னேர் கைக்கொண்ட முறை. களுக்கு நம் இளஞ் சந்ததி திரும்பிச் செல்லவேண்டும்.
சமர்க்களத்திலே அம்புப் படுக்கையின் மீது சாந்தமாகப் படுத்திருந்த வீட்டுமாச்சாரியாரும் ; வாவி நீரின் கீழ் யோகா சனத்தில் அமர்ந்திருந்த துரியோதனனும் ; ஆவி நிலைகலங்கிய சமயத்திலும் புன்னகையுடன் தன் புண்ணியங்களைத் தானஞ் செய்து அமைதி கூடிய கன்னனும் ; நம் கண்காணச் சாத்து விகப் போரினல் ஏகாதிபத்தியத்தை வெற்றி கொண்ட காந்தி

ஞான யோகம் 96
மகானும்; இன்னும் எத்தனையோ பலரும்; நம் முன்னேர் வளர்த்த யோகசக்திக்கு உதாரணமாய் உள்ளனர்.
கேசிக்கு விண்ணுடOத்த வி ய ன் தோ ளா என்னும் பிரயோகம் பகவானின் அவதாரத் திருக்குறிப்பும் தோன்ற நின்றது. அத். 487-8.
மோட்சம் அடைதற்குச் சன்னியாசம் வழியாகும் என்பது இவ்வத்தியாயப் பொருள். சன்னியாசம் - தீரத்துறத்தல். சம் - நன்ருக. நியாசம் - விடுதல்.
கண்ணபிரான் : பார்த்தா பய்ன்விரும்பிப் பண்ணுஞ் செயலொழிவைத் தீர்த்தார் துறவெனமெய் தேர்ந்தோர்தாம்-கூர்த்தம பெற்றேர் கருமபலப் பேறு துறப்பதனைச் சொற்ருர் தியாகமெனச் சூழ்ந்து. 2
அருச்சுணு, பயன் விரும்பிச் செய்யும் செயல்களின் ஒழிவே துறவாகுமென ஞானிகள் கூறினர். எல்லாக் கருமங்களின் பயனையும் விட்டொழிப்பதே தியாகம் எனக் கூறினர் கூரிய அறிவுடையோர்.
இங்கு ஒரே பொருள் இரண்டு விதமாகக் கூறப்படு கின்றது. காமிய கருமங்களை விடுவது துறவாகும் என்பது ஒன்று. மற்றது கருமபலனைத் துறப்பது தியாகமாம் என்பது. கருமத்திற் பற்றின்றி அதைச் செய்வ்து துறவு. பற்று-அபி மானம். பலனிற் பற்றின்றிக் கருமம் புரிவது தியாகம். இரண்டு நிலையிலும் பற்றின்மையே உறுதிபெற்று நிற்கின்றது. பற்ருெழி வில்லாத துறவுமில்லை. பற்ருெழிவில்லாத தியாகமுமில்லை. ஆதலின், துறவும் தியாகமும் ஒன்றேயெனக் கொள்க. துறவின் தாய் தியாக புத்தி. தியாக புத்தியால் தியாக சேவை. தியாக சேவையே துறவு. அத். 5 ; 2. அத். 6:1-2. அத். 12:12.
தீரபுத்தி மான்கள்சிலர் தீமைபோ லேகருமம் தீரத் தகுவதெனச் செப்பினர் - பாரதா வேள்விதவம் தானம் விடற்குரிய அல்லஅவை ஆள்வினையா மென்பர்சிலர் ஆய்ந்து. 3
திடயுத்தி படைத்தோர் சிலர் கருமமானது தீமையைப் போல் விடுதற்குரியதெனக் கூறினர். பாரதா, வேள்வி, தவம், தானம் என்பன விடுதற்கு உரியனவல்ல. அவற்றைச் செய்தல் வேண்டு மென்பர் சிலர்.

Page 65
96 பகவத்கீதை வெண்பா
கருமங்களைத் தொடங்குவதும் துன்பம்; நடத்துவதும்
துன்பம்; முடிப்பதும் துன்பம். ஆதலின், வேள்வி முதலிய வற்றையும் தொடங்காமல் விடுவதே நல்லதாம் என்பது சிலர் கருத்து. அத். 18 ; 8, 48. ஸ்திர-திரம்-தீரம்.
எந்த நற்கருமத்தையேனும் தொடங்காமலிருப்பதனல் ஒருவன் தியாகியாய்விட முடியாது. அத். 3 : 4. அத். 18 - 7. கருமம் செய்யாதிருக்க ஒருவராலும் முடியாது. அத், 3 - 5.
குணவசப்பட்டவன் மனிதன். கருமம் குணத்தின் செயல். குணபந்தம் நீங்காத நிலையில் ஒருவன் புறத்தே தொழில் செய்யா திருந்தாலும் மனம் கணந்தோறும் அலைந்து கொண்டே யிருக்கும். தொழில் செய்துகொண்டிருந்தால் மனம் அலையாது. அத், 3 : 5.
செப்புமிரண் டுள்ளும் தியாகத்தை நிச்சயித்தே ஒப்ப உரைப்பேன்கேள் உத்தமா - தப்பின்றிச் செய்யும் தியாகமது சேர்குணத்தால் மூன்ருகும் வையமிசை வைத்தார் வகுத்து. 4. துறவு, தியாகம் என்னும் இரண்டுள்ளும் தியாகத்தை நிச்சயித்துச் சொல்கின்றேன். கேள். ஒருவன் செய்கின்ற தியாகம் மனத்தைப் பற்றிய குணத்தால் மூன்றுவகைப்படும். உலகில் இவ்வாறு வகுத்துள்ளனர் அறிஞர்.
துறவு தியாகம் என்பன சொல்லளவால் இரண்டு; பொரு ளளவால் ஒன்றே. தியாகம் என்னும் சொல்லையே பகவான் இங்கே எடுத்தாளுகின் ருர், கருமயோகிகள் கருமத் தொடக் கத்தில் முக்குண வசப்பட்டு நின்றே செய்கின்றர்கள். இதனல், அவர்களின் கருமங்கள் அவற்றைச் செய்யும்போது மேற்பட்டு நிற்கும் குணச்சார்புபோல் நிகழ்கின்றன. குணச்சாயல் கருமங் களிற் படிகின்றது. மனம் திருந்தும்போது செயல்கள் படிப் படியாகச் சாத்துவிக குணச் சார்பினை அடைகின்றன. பின்னர், குணச்சார்பு கெட்ட நிலையிலே, நான் வேறு; உடல் வேறு; உள்ளம் வேறு; குணம் வேறு செயல் வேறு என்னும் உள் ளுணர்வு உதிக்கின்றது. அத். 3 27 - 28.
செய்வேள்வி தானமுடன் சேர்ந்த த்வமிவைகள் கைவிடுத லாகாக் கருமங்காண் - மெய்யேகேள் புத்தியுளோர்க் கென்றும் புனித மளிக்குமிவை நித்தமுஞ்செய் தற்குரிய நேர்ந்து. 5

ஞான யோகம் v. 7
செய்தற்குரிய வேள்வி தவம் தானம் என்பன கைவிடத் தகாத கருமங்களாகும். இவை புத்திமான்களுக்கு என்றும் புனித மளிப்பன. நித்தமும் விரும்பிச் செய்தற் குரியன. அத். 3 9-13,
புண்ணிய கருமங்களை நாள் தோறும் செய்வதால் மனம் புனித மடைகின்றது. மனம் புனித மடையப் புண்ணிய கரு மங்கள் வளர்கின்றன. மனம் செம்மையானல் மந்திரம் வேண்டியதில்லை என்பர். மனம் செம்மையாதற்கு மந்திரம் வேண்டும். நித்திய கருமங்களும் வேண்டும்.
சாற்றுகட னம்வேள்வி தானம் தவமிவைகள் ஆற்றுகையி னும்பற் றடையாமல் - போற்றிநிதம் எய்து பயன்துறந்தே இங்குசெயல் மேல்இதுவென் ஐயமிலாக் கொள்கை அறி. 6
வேள்வி தவம் தானம் என்னும் நாளாந்தக் கடமைகளைச் செய்யும்போதும் அபிமானமின்றிப் பலனில் ஆசையின்றிச் செய்தல் மேலாகும். இது எனது தெளிவான உயர்ந்த கொள்கை.
நாளாந்தக் கடமைகள் செய்தற்கு உரியனவேனும், நான் செய்கின்றேன்; எனது கடமை; நான் அதிகாரி; நான் பல னடைவேன் என்னும் எண்ணமின்றித் தியாக சிந்தையுடன் செய்தல் மேலானது.
தேவ காரியங்களைச் செய்தல்போல மக்கள் சேவை, மிருகம், பறவை, தாவரம், முதலியவற்றுக்குச் செய்யும் சேவைகளையும் வேள்வியாகப் பாவித்துச் செய்தல் வேண்டும். பயன் கருதாமற் செய்தல் உத்தமம். நற்செயல்களை ஆரம்பித்துச் செய்யும்போது செயற் பற்றும், பலனில் விருப்பமும் தொடக்கத்தில் இருக்கவே செய்யும். காலப்போக்கிலே பற்றும் விருப்பமும் படிப்படியாகக் குறையவேண்டும். செயல்களைப் பகவானுக்கு அர்ப்பணமாகச் செய்து பழகினல் இந்த நிலைமை கைகூடும். பற்றற்ற கருமம் ஞானத்தைப் பொருளாகக் கொண்டது. அத். 4 : 33.
திடமின்றி இங்கொருவன் செய்யும்நா ளாந்தக்
கடமை துறத்தல்கட னன் ரும் - மடமையால்
ஏற்ற கடமை எவன்துறப்பான் அத்துறவு
சாற்றுங்கால் தாமதத்தின் சார்பு. 7
u - 7

Page 66
98. பகவத்கீதை வெண்பா
மன உறுதியுடன் இங்கே ஒருவன் செய்தற்குரிய நாளாந்தக் கடமைகளைத் துறத்தல் முறையாகாது. தனக்கு ஏற்ற கடமையை மடமையால் எவன் கைவிடுவானே அத்துறவு தாமதகுணச் சார்பானது.
கடமையே தெய்வம். கடமை செய்தற்குரிய காலமும் தெய்வமே. இரண்டையும் புனிதமாகக் கருதவேண்டும். கடமை மீட்சிதரும். தனக்குரிய கடமையை அறியாமையால் ஏற்கா தவனும், உரிமையில்லாத கடமையை ஏற்றவனும், ஏற்ற கடமையைக் கைவிட்டவனும் உருப்படார். தமது உடம்பைக் கொண்டு நடத்தவும் இவர்களுக்கு இயலாமற் போய்விடும். உடம்பையே கொண்டு நடத்த இயலாதவர்களுக்கு ஆத்தும
விசாரம் உண்டாவது எப்படி? அத். 3 : 8.
மெய்வருத்த மஞ்சியோ மேவும் துயர்நினைந்தோ செய்கருமம் விட்டமனத் திண்மையிலான்-ஐயஅவன் செய்த தியாகம் இராசதமாம் தேரிதனல் எய்தான் தியாகபலன் இங்கு 8
மெய்வருத்தத்திற்கு அஞ்சியோ, துன்பத்தை நினைந்தோ, தான் செய்தற்குரிய கடமையைக் கைவிட்ட மனத்திடம் இல்லா தவன் செய்த தியாகம் இராசதகுணச் சார்பானது. அவன் தியாக பலனைப் பெறமாட்டான் எனத் தெரிந்துகொள்வாய்.
ஒவ்வொருவரின் நிலைக்கும் ஏற்றபடி கடமைகள் உண்டு. தத்தம் நிலையில் தாமே பெரியர். கடமையிலே கண்ணும் கருத்துமாய் இருப்பவர் மெய்வருத்தம் பசி முதலியவற்றை மறந்து கடமையைச் செய்வார். கடமையை முடித்த பின்பு அனுபவித்தற்கு உரியது சுகம். தொடக்கத்திலேயே அதை அனுபவிக்க விரும்பினுல் கடமை தவறும். சுகத்துக்குப் பதில் துக்கமே வரும். வருந்தி உழைத்தால் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும்.
கடமை மனிதனின் மீட்சிக்கே ஏற்பட்டது. கடமையே உடைமை. கடமையைக் கைவிடுதல் வீழ்ச்சிக்கு வழியாகும். ஞானியுமே கருமத்தைக் கைவிடுவதில்லை. சிறிய உலகத் துன்பத்துக்கு அஞ்சிக் கடமையைக் கைவிட்டுப் பெரிய நரகத் துன்பத்தைத் தேடிக்கொள்வதா? அத். 3 : 33. கடமையைக் கைவிட்டால் வாழ்நாள் முழுவதும் துன்பமாகிவிடும்.

ஞான யோகம் 99.
பார்த்தாபற் றின்றிப் பயன்துறந்தே இங்கொருவன் ஏற்ற கடமை இனிதியற்றல் - சாற்றுங்கால் தேர்வாய்சாத் வீக தியாகமிது சீர்தூக்கி ஒர்வாய்மூன் றுள்ளும் உயர்வு. 9
பார்த்தா, பற்றில்லாமல் பலனைத் துறந்து இங்கே ஒருவன் தான் ஏற்ற கடமையினை மனம் விரும்பிச் செய்தல் சாத்துவிக தியாகமென அறிவாய். மூன்று தியாகங்களுள்ளும் இது உயர்ந்ததென உணர்வாய். ་་་་་་་་
நான் செய்கின்றேன்; எனது கருமம் என்னும் அபிமான மின்றி மனம் வைத்துக் கடமையைச் செய்வோர் கடமையால் உயர்நிலை அடைகின்றர்கள். கடமையை நடுநிலையில் நின்று செய்தால்; திறமையாகச் செய்தால் சேவை நீட்டிப்பும் பதவி உயர்வும் தேடிவந்து சேரும். அத். 12 : 12. அத். 18 : 45.
சத்துவ குணம்நிறைந்த சாதுரியன் சந்தேகம் அற்ற தியா கிஅபி மானமிலான் - எற்றும்செய் தானம் தவம்வேள்வி தம்மில்; வெறுப்பதிலை y ஏனைச் செயலுமவன் இங்கு. I 0
சத்துவ குணம் நிறைந்த சாதுரியன் சந்தேகம் தெளிந்த தியாகி. வேள்வி தவம் தானம் என்பவற்றில் அவன் அபிமானம் கொள்வதில்லை. ஏனைய நற்செயல்களையும் வெறுப்பதில்லை.
சாதுரியன் கரு மம் புரிந்துகொண்டே கருமபந்தத்திற் சிக்குண்ணுதிருக்கும் விவேகி. அத். 2 : 50. சந்தேகம் தெளிந் தவன் சேத்திர சேத்திரஞ்ஞ ஞானத்திற் சிறிதும் ஐயமில்லா தவன். தேவ காரியங்களைப் பற்றின்றிச் செய்தல்போலக் குடும்ப காரியங்களையும், பொதுச் சேவைகளையும் பற்றின்றிச் செய்து கொண்டு அவன் மன அமைதியுடன் இருப்பான். மத சேவையும் மக்கள் சேவையும் இணைந்ததே உண்மையான மனித வாழ்க்கை: அத். 2 : 70. −
உடற்பற் றுடையோன் உறுகருமம் முற்ருய் விடற்கொண்ணு தாயினும்செய் வேள்வி-கொடைத்தவத்தால் எய்துபயன் முற்றும் எவன் துறப்பான் இங்கவனே செய்ய தியாகியெனச் செப்பு. 11

Page 67
100 பகவத்கீதை வெண்பா
உடற் பற்று உடையவனுல் கருமங்களை முற்ருக விடமுடி யாது. எனினும், வேள்வி தவம் தானம் என்பவற்ருல் எய்தும் பயன்களை எவன் தீரத் துறப்பானே அவனே சிறந்த தியாகி.
உடற்பற்று எனது உடல் என்னும் அபிமானம். இந்த எண்ணம் இருக்கும் வரையும் அவசிய கருமம் முதலாக வேண் டிய கருமங்கள் நடந்துகொண்டே யிருக்கும். அத். 3 : 5. உடலுக்கு நோய் பிணிகளும் வரக்கூடும். இவற்றின் மத்தி யிலே தான் செயற்பற்றின்றி இருப்பதுடன், தன் உடலுக்குப் பிறர் செய்யும் நற்செயல்களிலும் தீச்செயல்களிலும் பற்றின்றி யிருப்பவனே சிறந்த தியாகி. மாலை சூட்டிப் பன்னீர் தெளித் தாலும், நகத்திலே குண்டூசி ஏற்றினலும், கல்லெறி, பொல் லடி, துப்பாக்கிச் சூடு கிடைத்தாலும் மன அமைதி குழம்பா திருப்பவனே உண்மைத் தியாகி. அத். 2 : 48. கொடைத் தவம் என வல்லினம் மிக்கு நின்றது. செய்யுள் விகாரம்.
பற்றுங் கரும பலனைவிடா தோருடலை மற்றிங்கு விட்டு மறைந்ததன்பின் - உற்றங்கே இன்பமோ துன்பமோ இன்பதுன்ப மோதுய்ப்பார் அன்பதியா கர்க்கில்லை அஃது. 12
மனத்தைப் பற்றுகின்ற கருமபலனை விடாதவர்கள் உடலை விட்டு மறைந்த பின்பு இன்பமோ, துன்பமோ, இன்பதுன்பமோ அனுபவிப்பார்கள். அன்புடையாய், தியாகிகளுக்கு அந்த அனுபவங்கள் இல்லை.
இன்பம் சுவர்க்கப் பேறு. துன்பம் நரக வேதனை. இன்ப துன்பம் பூவுலக அனுபவம். இம் மூன்றும் பலனில் அபேட்சை யுள்ளவர்களுக்கு இறந்த பின்பு அவர்கள் எடுக்கும் சூக்கும தூல சரீரங்களுக்கு ஏற்றபடி அனுபவத்துக்கு வருகின்றன. அத். 15 : 7 - 8. நன்மை அல்லது தீமை அதிதீவிரமானல் இறக்க முன்பும் இன்பதுன்பங்களின் ஒருபகுதி இங்கேயே கைமேற் பலனக உடனுக்குடன் அனுபவத்துக்கு வருகின்றது; தீயினற் சுட்ட சூடு புண்ணுக முன்பு எரிவுசெய்து கொப்புளம் கொள் ளுதல் போல.
சாத்துவிக ராசத தாமத் குணங்களுக் கேற்பக் கருமங்கள் நிகழ்கின்றன. இவற்றின் கலப்பு நிலையிலும் கருமங்கள் நிகழ் கின்றன. இதனல், புண்ணியமும், புண் ணியம்போற் பாவமும், புண்ணியத்திற் பாவமும்; பாவமும், பாவம்போற் புண்ணியமும், பாவத்திற் புண்ணியமும் மாறிமாறி வருகின்றன. இதனல்,

ஞான யோகம் Ol
அனுபவங்களும் இன்பமாக; துன்பமாக இன்பதுன்பமாக மனத் தைப் பற்றுகின்றன. மனிதன் இந்த அனுபவங்களை யெல்லாம் கடந்து புண்ணியத்திற் புண்ணியம் கலக்கும் புனித நிலையை அடையும்போது தெய்வமாகின்றன். கருமபலத் தியாகம் இந்தப் புனித நிலைக்கு மனிதனை உயர்த்துகின்றது. மனிதன் சாந்திமயமாகின்றன். அத். 3 : 19. அத். 4 : 20. மனக் கோள் நீங்கினல் எல்லாம் சரிவரும்.
செயலொழிவு பெற்றநிலை தேர்ந்துசொல்வே தாந்தம் செயல்நிகழ்வு சித்திபெறச் செப்பும் - இயைவான ஏதுக்கள் ஐந்துண் டிசைப்பேன் உயர்தோளாய் மாதுக்கம் தீர்க்கும் மருந்து. 13
உயர்தோளா, கருமங்களின் பூரண முடிவினை ஆராய்ந்து சொல்கின்ற வேதாந்த சாத்திரத்தில் சர்வகர்ம சித்திகளின் பொருட்டுக் கூறப்பட்ட கரும காரணங்கள் ஐந்து உள்ளன. அவை பிறவிப்பிணி தீர்க்கும் மருந்தாகும். சொல்கின்றேன்; கேள்.
மெய்யறிவு வேதாந்த மென்றும் சாங்கிய மென்றும் சொல்லப் படும். செயலொழிவு பெற்ற நிலை ஆத்தும ஞானம். அத். 2 : 39,
இடனம் உடம்பும் இயற்றும்கர்த் தாவும் உடனுகும் இந்தியம்பன் னென்றும் - கடனுகிப் பல்விதமாய் வெவ்வேறு பட்ட செயற்பரப்பும் தொல்விதியும் ஐந்தாம் தொடர்ந்து. 14
செயல் நிகழ்ச்சிக்குரிய இடமாகிய சரீரமும் செயல்புரியும் கருத்தாவாகிய சீவான்மாவும், பதினெரு இந்திரியங்களும், பல விதமாய் வெவ்வேருண செயல்களும், தெய்வமாகிய ஊழ் வினையும் எனச் செயல் நிகழ்ச்சிக்குரிய காரணங்கள் ஐந்தாகும்.
சீவாத்துமா கருத்தாவன்று. உடம்பை இயக்கிக்கொண்டு கருமங்களுக்குச் சாட்சியாய் நிற்கின்றது. கரும காரணமாகிய முக்குணங்களுக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கும் சம்பந்தம்பற்றி அது கருத்தாவென உபசரிக்கப்பெற்றது. அத். 13 : 21. இந்திரியங்கள் ஒத்தாசைக் கருவிகள். தெய்வம் வினைவிளைவு, தெய்வமே காட்டியும் ஊட்டியும் நிற்பதால் வினைவிளைவு தெய்வம் எனப்பட்டது.

Page 68
102 பகவத்கீதை வெண்பா
மண்மேல் மனிதன் மனம்வாக்குக் காயத்தால் எண்மேற்கொண் டிங்கே இயற்றுகின்ற-கண்போலும் நீதி அநீதி நிகழ்செயல்கள் யாவுக்கும் ஏதுவாம் இவ்வைந்து மே. 15
உலகத்தில் மனிதன் மனம் வாக்குக் காயங்களால் எண்ணுக் கடங்காமல் இயற்றுகின்ற நீதி அநீதியாகிய எல்லாச் செயல் களுக்கும் இவ்வைந்துமே காரணம். மனம் முதலியன குணத் தில் நின்றும் தோன்றுவன. ஆன்மாவி லன்று.
இவ்வண்ண மாக இயற்றும் செயற்கண்ணே பொய்வண்ணப் புத்தி பொருந்தியே-மெய்வண்ணம் காணுமல் ஆன்மாவைக் கர்த்தாவாக் காணுமே மாணத மந்த மதி. 16
இஃது இவ்வண்ண மிருக்க, திருந்தாத மூடாத்துமா தெளி வில்லாத புத்தியால், உண்மை உணராமற் செயல்களிலே ஆன் மாவைக் கருத்தாவாகக் காண்கின்றன்.
மனத்துக்கும், இந்திரியங்களுக்கும் ஒளியைக் கொடுத்து அவற்றை விளங்கச் செய்வது சீவாத்துமா. செயல்களுக்குச் சீவாத்துமா காட்சிமாத்திரமே. அத். 13 : 23. குணமயக்கிற் சிக்குண்டு கிடக்கும் சீவாத்துமா அக்குண மயக்கிலே குணங் களின் செயல்களைத் தன்செயலாகக் கருதுகின்றது.
அறிவே வடிவான சீவாத்துமா குணமயக்கில் நின்றும் படிப் படியாக விடுதலை பெறுதற்குப் பிரகிருதி தனு கரண புவன போகங்களாக உபகாரப்படுகின்றது. பிரகிருதியின் உபகாரத் தால் அது தன்னெளியிலே சிறிது சிறிதாக விளங்கித் தோன் றும்போது செயல்கள் யாவும் குணச்செயல்களே; தன் செயல்க ளல்ல என்று படிப்படியாக அறிந்து குணங்களில் நின்றும் பூரண மாக விடுபட்டுக் குணுதீத நிலையினை அடைந்து, கிரகண மோட்சம் பெற்ற சூரியன் போன்று தன் ஞெளியில் விளங்கித் தோன்றி ஞானகாசத்துப் பேரொளியுடன் ஒன்ருகிவிடுகின்றது. அத். 3 : 27 - 28.
செய்பவன்யா னென்றெண்ணும் சிந்தையற்றேன் புந்திபோய் மையல்வசப் பட்டு மயங்காதோன்-ஐயஅவன்
கொன்ருலும் ஒருயிரைக் கொல்லாத வன்செயலுள் ஒன்ருலும் பந்த முருன். 17

ஞான யோகம் 103
தான் செய்பவன் என்னும் எண்ணம் அற்றவன், செயலிலும் பயனிலும் அபிமான புத்தி இல்லாதவன் எவனே, அவன் ஒர் உயிரைக் கொன்ருலும் கொல்லாதவனே. செயல்களுள் ஒன் ருலும் அவன் பந்தமடையான். அத். 4 : 18, கொன்ருலும் என்பதில் உம்மை எதிர்மறை.
செயலிலும் பயனிலும் பற்றில்லாதவனுக்குப் பாரமில்லை. பாரத்தைப் பரமாத்துமா எடுத்துச் சுமக்கின்ருர். பசுகரணங்கள் பதிகரணங்களாக வசப்பட்ட பக்தர்களுக்குச் செயற்பந்த மில்லை. தந்தையைத் தாளற எறிந்த சண்டேசுர நாயனர்: செல்வப் புதல்வன் சீராளனக் கொன்று கறிசமைத்த சிறுத் தொண்ட நாயனர் ; மகனைத் தேர்க்காலின்கீழ்க் கிடத்திக் கொன்ற மனுச்சோழன் போன்றவர்கள் வீடும் வேண்டா விறலினர்.
** நரகம் புகினும் - எள்ளேன் திருவருளாலே இருக்கப் பெறின் இறைவா" எனத் தலைநிமிர்ந்து நின்று திருவருளை நம்பி வாழ்வோர்; ' இனிநமக் குளதென நினைக்கும் - கதி யிழக்கினும் கட்டுரை இழக்கிலோம்" எனக் கூறிக்கொண்டே சத்தியத்தைக் கடைப்பிடித்துச் சமபுத்தியுடன் நின்ற தருமத் தியாகிகள்; இவர்களெல்லாம் செயற்பந்தம் தீர்ந்த தியாகிகள். அத். 6 : 4. அத். 9 22. வினையையும் வினைப்பயனையும் தம் மோடு கூடத் தியாகஞ் செய்தவர்கள்.
காட்டு மறிவுபொருள் காண்போன் எனச்செயலில் மூட்டிவிடுங் காரணமோர் மூன்ருகும் - கூட்டும்
கருவி கருமம் கருத்தாமூன் றுஞ்செய் கருமத்துக் காதாரம் காண். 18
பொருள்களைக் காட்டுகின்ற அறிவும், பொருளும், பொரு ளைக் காண்பவனும் எனச் செயலில் மூட்டிவிடும் ஞான கார ணங்கள் மூன்ருகும். கருவி, கருமம், கருத்தா எனச் செயலிற் கூட்டிவைக்கும் செயல்படு காரணங்கள் மூன்ருகும்.
ஞான காரணங்கள் கரும உபதேச காரணங்கள் எனவும் பெயர்பெறும். செயல்படு காரணங்கள் ஆதார காரணங்கள் எனப்படும். மூலகாரணங்களும், ஞான காரணங்களும், ஆதார காரணங்களும் ஒன்று சேர்ந்த முக்கூட்டு இணைப்புக் குழுவே செயல் நிகழ்ச்சிக்குத் துணையாகின்றது. இதன் துணைகொண்டு செயல்கள் நிகழ்கின்றன.

Page 69
104 பகவத்கீதை வெண்பா
ஞானம் கருமம் நடத்துகருத் தாமூன்றும் ஆண்குணத் தால்மும்மூன் ருகுமே - காணுகுண சாங்கியத்தில் வெவ்வேருச் சாற்றினர்காண் ஆங்கவற்றின் பாங்குரைப்பேன் உள்ள படி. 19
ஞானம், கருமம், கருத்தா என்னும் மூன்று காரணங்களும் குணவேறுபாட்டால் தனித்தனியே மூன்ருகும். குணங்களின் வேறுபாடு கூறும் சாங்கிய நூலில் அங்கே உரைத்தபடி அவற் றின் பாகுபாட்டைக் கூறுகின்றேன் கேள்.
அவை சாத்துவிக ஞானம், இராசத ஞானம், தாமத ஞானம்; சாத்துவிக கருமம், இராசத கருமம், தாமத கருமம்; சாத்துவிக கருத்தா, இராசத கருத்தா, தாமத கருத்தா என் பன. அவை முறையே 20 - 22; 23 - 25; 26 - 28 ஆகிய செய்யுள்களால் தனித்தனியாகக் கூறப்படுகின்றன.
வேறுவே முய்ப்பிரிந்த வெவ்வே றுடல்தோறும் வேறுபா டற்றவொரே மெய்ப்பொருளை - வேறின்றி ஒன்ருகக் கண்டே உணர்ந்தா னவனறிவே நன்ருகுஞ் சாத்விகஞா னம். 20
பிரகிருதியில் நின்றும் வெவ்வேழுப்ப் பிரிந்த உடல்கள் தோறும் வேறுபாடில்லாததும் அழிவற்றதுமாகிய ஒரே பொருளை வேறுவேருகக் காணுமல் ஒன்ருகவே கண்டு உணர்ந்தவனின் ஞானம் சாத்துவிக ஞானம் எனப்படும்.
வெவ்வேறு உடல்கள் உயர்திணைப் பொருள்களும், அஃ றிணைப் பொருள்களுமாகிய எல்லாத் தோற்றங்களையும் குறிக் கும். உடல்கள் வெவ்வேழுயினும் மூலம் ஒன்றே யென்றே அறிக. உயிர்கள் வெவ்வேறு உடல்களில் இருந்தாலும் எல்லாம் ஒரே சீவசக்தியின் அம்சமேயெனத் தெளிக. எல்லா உயிர் களையும் ஒன்றெனக் காண்பது சாத்துவிக ஞானம்
எல்லா உயிர்களையும் தம்முயிரிலும், தம்முயிரை எல்லா உயிர்களிலும் காண்கின்ற மகாத்துமாக்கள் சாத்துவிக ஞானம் பெற்றவர்கள். இந்த ஆத்மீக ஒருமைப்பாடு சமூக ஒருமைப் பாட்டுக்கும் தேசீய ஒருமைப்பாட்டுக்கும் வழிகாட்டி நிற்கின் றது. இச்செய்யுள் உலகப் பொதுநிதி. அத். 15 7.

ஞான யோகம் 105
வெவ்வே றுடல்களிலே வெவ்வே றியல்படைந்து வெவ்வேரு ய் நிற்குமொரே மெய்ப்பொருளை-வெவ்வேருய்க் கூறிட்டான் மாக்கள் பலவென்றே கொள்ளுமது மாறுற்ற ராசதஞா னம். 2.
வேறுவேருண எல்லா உடல்களிலும் வேறுவேறு குணச் சார்பால் வேறுவேருய் நிற்கின்ற ஒரே மெய்ப்பொருளைக் கூறு செய்து ஆன்மாக்கள் பலவென்றே கொள்ளும் ஞானம் இராசத ஞானமாகும்.
பிரகிருதி கூறுபாடடைவது; கண்டம் கண்டமாகப் பிரிக்கக் கூடியது. இது சடவியல்பு. ஆன்மா கூறுபடமுடியாதது. அது அகண்டம்; சின்மயம். இவ் விரண்டு இயல்பினையும் பகுத்தறி யாத இராசத ஞானம் ஆன்மா பலவெனக் காண்கின்றது. எனி னும், ஆத்மீக உணர்வினைப் பிரதிபலிப்பதால் இராசத ஞான மும் எம்பிரானுக்கு ஏற்றதே. சாத்துவிக ஞானத்துக்கு இது படியாய் அமைகின்றது.
கைபுனைந்து செய்தமைத்த காரியமாம் ஒர்வடிவே தெய்வமென்றும் தேகமேயான் மாவென்றும்-மையலுற்றே ஒவ்வாமற் புத்திக்கும் உண்மைக்கும் மாருக்கொள் அவ்வறிவு தாமதஞா னம். 22
கையினற் புனைந்து செய்யப்பட்ட காரியமாகிய ஒரு வடிவமே தெய்வமென்றும், தேகமே ஆன்மாவென்றும் மயங்கிப் பொருத்த மில்லாமல் புத்திக்கும் உண்மைக்கும் மாருகக் கொள்ளுகின்ற ஞானம் தாமத ஞானமாகும். வடிவம் முழுப் பொருளின் ஒரு கூறேயன்றி முழுப்பொருளன்று என்பது பொருள்.
இங்கேயும் தெய்வம் உண்டு என்பதோர் சித்தமும், ஆன்மா உண்டு என்பதோர் மன உணர்வும் பிறந்திருப்பதால் இது ஞானம் அன்று எனக் கூறுவதற்கில்லை. ஆதலின், இது தாமத ஞானம் எனக் கூறப்பட்டது. இந்த ஞானம், வடிவமே தெய்வம்; தேகமே ஆன்மா என்னும் அளவில் நில்லாமல், மேலும் வளர்ந்து வடி வத்துக்கு அப்பாலுள்ளது தெய்வம்; தேகத்தின் வேருனது ஆன்மா என்னும் நிலைக்கு உயரவேண்டும்.
வடிவம் தெய்வமெனச் சொல்லுக வடிவமே தெய்வம் எனச் சொல்லற்க . ஆன்மா தேகத்தில் உள்ளது எனச் சொல் லுக; தேகமே ஆன்மா எனச் சொல்லற்க. தாமத ஞானம் வளர்ச்சியின்றித் தாமத ஞானமாகவே யிருப்பது யுக்திக்கும்

Page 70
106 பகவத்கீதை வெண்பா
புத்திக்கும் பொருந்தாது. உண்மை விசாரத்துக்கும் உதவாது. தெய்வம் ஆன்மா என்னும் அடிப்படை அறிவு பெற்றிருப்பதால் தாமத ஞானமும் எம்பிரானுக்கு ஏற்றதே. அத். 7 : 21.
எற்றும் பயனில்விருப் பின்றியபி மானமின்றி அற்று விருப்புவெறுப் பாமவைகள் - கற்றேர் விதித்துநிய மித்ததுசெய் மேலோன் செயலே கதித்துயர்ந்த சாத்விககர் மம். 23
பலனிற் சிறிதும் விருப்பமின்றி அபிமானமின்றி விருப்பு வெறுப்பின்றி அறிஞர் விதித்து நியமித்ததைச் செய்கின்ற நல்லோனின் செயல் சாத்துவிக கர்மம் எனப்படும்.
கருமம் என்பது மனம் வாக்குக் காயம் மூன்ருலும் செய்யும் கருமங்கள். அத். 17 : 17. அத். 18 - 9.
மற்றுப் பயன்விரும்பி மாரும் அகந்தைகொண்டு முற்றும் வருந்தி முயன்ருெருவன் - பற்றுடனே எக்கருமம் செய்வானே எண்ணுங்கால் பார்த்தாகேள் அக்கருமம் ராசதகர் மம். w 24
பயனை விரும்பி அகந்தைகொண்டு முழுமூச்சாக வருந்தி முயன்று ஒருவன் பற்றுடன் எக்கருமத்தைச் செய்வானே அக் கருமம் இராசத கருமம்.
நானே இதைச் செய்யவேண்டும்; பிறரைக் கூட்டுச் சேர்த் தல் கூடாது; சேர்த்தாற் பலனிற் பங்கு கொடுக்கவேண்டி வரும்; நானே முழுப்பலனையும் பெறவேண்டும் என்றெண்ணிக் கருமத்தைச் சுயநல வேட்கை மிஞ்சித் தனித்து நின்று செய் பவன் அளவுக்கு மேல் முயல்கின்றன் உடம்பையும் அதிகம் வருத்துகின்றன். இந்த நிலை ஒருவனைப் பேராசை அல்லது உலோபம் உள்ளவனக மாற்றிவிடும். இவன் கூட்டுணர்ச்சி யில்லாதவன்; குறுகிய புத்தி யுள்ளவன். வருமானத்திலும் மேலாகச் செலவு செய்யும் நிலைக்கும் இவன் ஆளாகலாம். அத். 14 : 7.
செய்கருமத் தால்விளையும் தீப்பயனை நற்பயனை
எய்து மிழப்பைமற்றேர் இன்னலுற்று-நைவதனைத் தன்னிலையை நோக்காமற் சார்மயக்காற் செய்கருமம் தன்னையறி வாய்தாம தம். 25

ஞான யோகம் 107
தான் செய்கின்ற செயலால் தீமை வருமோ? நன்மை லருமோ? என்பதையும், தனக்கு வருகின்ற நட்டத்தையும், மற்றேர் இன்னலுற்று வருந்துவதையும், தன் நிலையையும் நோக்காமல், மதிமயக்கத்தால் ஒருவன் செய்யும் கருமம் தாமத கருமமென்று அறிவாய். "
இது நல்ல செயலா? தீய செயலா? இதைச் செய்வதால் நன்மை விளையுமா? தீமை விளையுமா? இதனுல் நன்மை வந்தாலும் ஒன்றெப்தி நூறிழக்கவேண்டி வராதா? பிறருக்கு இதனல் துன்பம் உண்டாகாதா? இச்செயலில் நான் நின்று பிடிப்பேன? என ஒன்றையும் விசாரிக்காமல் வீணுகப்போய்த் தம்மை மாட்டிக்கொள்வர் தாமத குணம் உடையோர். அத். 14 8.
அற்றே செயற்பற் றகங்காரம் விட்டுறுதி
உற்றேயுள் ளுக்கம் உடையோனப் - வெற்றியினும் தோல்வியினும் நெஞ்சம் துளங்காணுய்ச் செய்செயலின் மேல்முயல்வோன் சாத்து விகன். 26
செயலிற் பற்று நீங்கி அகங்காரமற்று உறுதியும் உள்ளுக் கமும் உடையவனுய், வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலையில் நிற்பவனுய்ச் செய்தற்குரிய செயல்களைச் செய்கின்றவன் சாத்துவிககுண கர்த்தா.
செயற்பற்று என்செயல் என்னும் அபிமானம். அகங்காரம் நான் செய்கின்றேன் என்னும் தன்முனைப்பு. உறுதி இடையூற் றில் நின்று பிடித்தல். உள்ளுக்கம் மனவெழுச்சி. துளங்காமை மனம் கலங்காமை. செய்செயல் விதிக்கு உட்பட்ட தன் கடமை. அத். 2 : 64. அத். 3 19. அத். 4 : 20. V
ஆசாபா சம்பலனில் ஆர்வமுலோ பம்பிறர்க்குக் கூசான் துயர்செய் குறிப்புடைமை-ஆசாரம் இன்மையின்ப துன்பத்தி லேயொருபால் ஒடுமனத் தன்மையினன் ராசதகர்த் தா. 27
ஆசைக் கயிறுகளாற் கட்டுண்ணல், பலனில் ஆர்வம், உலோபம், பிறர்க்குத் துன்பம் செய்யும் மன நோக்கம், ஒழுக்க மின்மை, இன்ப துன்பங்களிலே ஒருபால் சாய்கின்ற மன நிலைமை, இவைகளை யுடையவன் இராசத கர்த்தா, அத். 16:10.

Page 71
08 பகவத்கீதை வெண்பா
அலைகின்ற நெஞ்சன் அறிவுவள ராதோன் தலைவணங்கான் செய்காலம் தாழ்ப்போன்-பழிகாரன் வஞ்சன் மடியென்றும் வாடி மனந்தளர்வோன் தஞ்சன் அவன்தாம தன். 28
அலைகின்ற மனமுடையவன், அறிவுவளர்ச்சி பெருதவன், தலைவணங்காதவன், செயல்புரிவதிலே காலம் கடத்துவோன், பழிகாரன், வஞ்சகன், சோம்பன், என்றும் மனம் வருந்துவோன் எவனே அவன் யரர்க்கும் எளியனன தாமத கர்த்தா.
தஞ்சன் - எளியன். திருக்குறள் : செய்யுள் 863,
செப்பமுள புத்தி திடசித்த மாமிரண்டும் முப்பகுப்பாம் வெவ்வேருய் முக்குணம்போல்-அப்பகுப்பை ஒன்று மொழியா துனக்குரைப்பன் பார்த்தாகேள் நன்று தெரிவாய் நயந்து. 29
பார்த்தா, செம்மையான புத்தியும், திடசித்தமுமாகிய இரண்டும் முக்குணம் போன்று தனித்தனியே மூன்று பகுப்பாகும். அவற்றை ஒன்றும் விடாமல் உரைக்கின்றேன். விரும்பிக் கேள்.
செப்பம் நேர்மை. புத்தி நேர்மையானது; நிலையுள்ளது. தந்திரம் கோணலானது; நிலையில்லாதது. புத்தியால் வரும் வெற்றி தோல்விகள் மன அமைதி தருவன. தந்திரத்தால் வரும் வெற்றி தோல்விகள் பயங்கரமானவை; மனக்கலக்கம் தருபவை. தந்திரத்தால் அடைந்த வெற்றி தோல்விகளால் இன்று அகில உலகமும் அமைதியிழந்து அவலப்படுவது காண்க. தந்திரத்தைக் கைவிட்டுப் புத்தியைக் கைக்கொள்க. புத்தியும் குணச்சார்பால் உயர்வு தாழ்வு அடையும்.
செயலிற் புகுமுறையும் தீர்முறையும் தக்க செயலும் தகாச்செயலும் தேர்ந்தே-பயமபயம் பந்தமுடன் மோட்ச பதவியல்பும் ஆய்ந்துணர்ந்து சிந்தைசெயும் சாத்விகடத் தி. 30
சாத்துவிக புத்தியானது செயலிற் புகும் முறையையும், செயலில் நின்றும் விலகும் முறையையும், தக்கசெயல் எது? தகாத செயல் எது? என்பதையும் தேர்ந்து: பயத்தையும், பயமின்மையையும், பந்தம், மோட்சம் என்பவற்றின் இயல்பை யும் ஆராய்ந்தறிந்து சிந்தித்துக்கொண்டிருக்கும்.

ஞான யோகம் 109
புத்தியானது தான் சார்ந்து நிற்கும் குணத்தால் தெளிவோ கலக்கமோ அடைகின்றது. சாத்துவிக குணத்தைச் சார்ந்து நிற்கும் புத்தியின் நிலை இச் செய்யுளாற் கூறப்படுகின்றது. சாத்துவிக புத்தி பகுத்தறிவு பெற்றது. செயலிற் புகுதல் விடய சுக அனுபவங்களிற் பிரவேசித்தல். இது பிரவிருத்தி மார்க்கம் எனப்படும். தீர்தல் விடயசுக அனுபவங்களில் நின்றும் விடுபடுதல். இது நிவிர்த்தி மார்க்கம் எனப்படும். இரண்டும் அவரவர் தகுதிக்கேற்ப வேண்டியனவே.
தக்க செயல் பிரவிருத்தி மார்க்கம், நிவிர்த்தி மார்க்கம் என்பன நடைபெறுவதற்கு ஏற்ற செயல்கள். தகாச் செயல் இவ் விரண்டுக்கும் பயன்படாத செயல்கள். பயம் அஞ்சவேண்டிய தற்கு அஞ்சுதல். அபயம் பயமின்மை ; அஞ்சவேண்டாததற்கு அஞ்சாமை, பந்தம் குணபந்தம். மோட்சம் குணபந்த நிவாரணம்.
'அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்.’ (திருக்குறள்)
செய்யும் தருமம் செயாது தவிர்அதர்மம் செய்தக்க செய்கை செயலாகாச் - செய்கையிவை தேர்ந்தறியா தெல்லாம் திரித்தறியும் புத்திதான் ஆய்ந்தறிவாய் ராசதமாம் அஃது. 31
தருமம், அதர்மம், செய்யத்தக்க செயல், செய்யத்தகாத செயல் என்பவைகளைத் தேர்ந்து தெளியாமல், எல்லாவற்றை யும் விபரீதமாக அறியும் புத்தி இராசத புத்தியாகும்.
இராசத புத்தி சுயநலமும் தன்ணுதிக்கமும் கொண்டது. இவ்விரண்டும் விடயங்களிற் பிரதிபலிக்க, இராசத புத்திக்கு விடயங்கள் யாவும் விபரீதமாகத் தோன்றும். விபரீதம் - திரிபு. *" வசை இசையாகக் கொள்வான் ”*
"இரும்புமண் வெட்டிதனை இங்கொருவன் தங்கக்
கரண்டியெனச் சொல்வானைக் கண்டால் - விரைந்தன்ப கங்தோர்க் கனுப்பவனைக் காலியிட மொன்றிருக்கு வந்தால் அவனெனக்கு வாய்ப்பு.” - (ஏ. பெ.)
அறியாமை யாமிருளில் ஆழ்ந்த தர்மம் தன்னைக் குறியாமே தர்மமெனக் கொண்டு- நெறிமாறி எல்லாம் தலைகீழ் எதிர்மாருக் காணுமே பொல்லாத தாமதபுத் தி. - 32

Page 72
10 பகவத்கீதை வெண்பா
அறியாமை யென்னும் இருளில் மூழ்கி யோசனை யின்றி அதர்மத்தைத் தருமமெனக் கொண்டு, அறியும்நெறி காணுமல் எல்லாவற்றையும் தலைகீழாய் எதிர்மாருகக் காணும் தாமத புத்தி. W
இராசதரைப் பிடித்திருப்பது விபரீத ஞானம். தாமதரைப் பிடித்திருப்பது அஞ்ஞானம். விபரீத ஞானத்திலே சொல்வதற்கு ஒரு சாட்டிருக்கும். அஞ்ஞானத் தில் ஒரு சாட்டுமில்லை. சுண்ணும்பை வெண்ணெய் என்பது விபரீத ஞானம். சாட்டுக்கு வெண்மைநிறம் இருக்கிறது. இருட்டறையில் இல்லாத கறுத்தப் பூனையைப் பிடிக்க விரும்புதல் போன்றது அஞ்ஞானம்.
பார்த்தாகேள் யோகப் பயனும் சமபுத்தி
வாய்த்தோன் உயிர்ப்பால் மனம்பொறியால்-பூர்த்தியுறப் போற்றி அயற்பொருளிற் போகாமற் செய்செயல்கள் ஆற்றுதிடம் சாத்துவிக மாம். 33
பார்த்தா, யோகசித்தியாகிய சமபுத்தி வாய்க்கப்பெற்ற வன் பிராணன் அபானனலும், மனம் பொறிகளாலும் செய் கின்ற செயல்களைப் பிறநாட்டமின்றிப் பரம்பொருளிலேயே நாட்டம் வைத்துப் பூரணமாகப் பாதுகாத்துச் செய்கின்ற திடசித்தமே சாத்துவிக திடமாகும்.
உயிர்ப்பு பிராண வாயு, அபான வாயு என்பன. யோகப் பயிற்சியால் சம புத்திப் பேறு சித்திக்கின்றது. சமபுத்தி இரு வினை யொப்பு. சமபுத்தி நிலைத்தால் அகமும் சமமாம்; புறமும் சமமாம். பிராணன் அபானன் மனம் பொறி முதலியவற்றின் இயக்கங்கள் சமநிலைப்பட்டால் புறப்பொருள்களின் தோற்றத் திலும் ஏற்றத்தாழ்வு தோன்றது. சமபுத்தி திடம்பெற்றல் சமநிலை பூரணமடையும். திடபுத்தியைத் திடசித்தம் நிலைப் படுத்துகின்றது. திடபுத்தி திடமனத்தை நிலைப்படுத்துகின்றது. இதனுல் பிறநாட்ட மென்னும் புறநாட்ட மெல்லாம் அறவே ஒழிந்து உள்நாட்டம் நிலைபெறுகின்றது. அத். 4 : 26, 27, 29.
சாத்துவிக குணம், சாத்துவிக உணவு, சாத்துவிக சிரத்தை, சாத்துவிக புத்தி, சாத்துவிக திடம், சாத்துவிக கர்மம், சாத்து விக சுகம் என்பன நமது நாளாந்த வாழ்க்கையிலே நிலைபெற வேண்டும். சாத்துவிக வாழ்க்கையில் நிலைபெற்ற நல்லோனின் உள்ளம் ஒளிமயமாகின்றது. குணதீத நிலை அம்மகானுக்கு அண்மையில் உள்ளது. அத். 4 : 38. மனிதன் செய்யும் தீர், மானங்கள் குணச்சார்பால் நன்மையும் தீமையும் தருகின்றன.

ஞான யோகம் 11
அறம்பொருளின் பம்மூன்றின் ஆசைவழிப் பட்டே உறும்பயனிற் பற்றுள்ளம் உண்டாய்ப்-பெறுங்கருமம் செய்யும் திடசித்தம் செப்புவேன் பார்த்தாகேள் ஐய இராசதமாம் அஃது. 34
பார்த்தா, அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றின் மேற் செல்லும் ஆசைவசப்பட்டு, பயணிலே பற்றுள்ளம் கொண்டு, பெற்ற கருமத்தைச் செய்கின்ற திடசித்தம் இராசதமாகும்.
நான்காவது பயனில் இது நாட்டங்கொள்வதில்லை. நான் காவது பயன் மூன்றில் நின்றும் விடுபடுதல்; மோட்சம்.
மைந்த பயத்தை மடிதுயிலைத் துக்கத்தைச் சிந்தை கலங்கித் திகைப்புறலை-முந்தும் செருக்கை விடாமூடன் கொண்ட திடந்தான் மருட்கை வளர்தா மதம். 35
அருச்சுணு, பயத்தையும், மிகுதுயிலையும், துக்கத்தையும், செருக்கையும் விடாத மூடனின் திடசித்தம் தெளிவில்லாத தாமத திடமாகும். மனிதனின் சுகானுபவமும் குணச்சார் பால் இன்பதுன்பம் ஆகின்றன.
பாரதா இங்குசுகப் பாங்குமொரு மூன்ருகும் பாரிலெதைக் கூடிப் பழகுதொறும் - ஆருமின்பம் மென்மேல் மிகுமோ விடுமோ துயரதுவே சொன்னேன்சாத் வீக சுகம். 36
பாரதா, இவ்வுலகிலே மனிதன் அனுபவிக்கும் சுகமும் குணச் சார்பால் மூன்று வகைப்படும். எந்தச் சுகத்தை அனுபவித்துப் பழகப் பழக இன்பம் மேன்மேலும் மிகுமோ மனத்துயர் நீங்குமோ அதுவே சாத்துவிக குண சுகம் எனப்படும்.
மனத்தின் குணம் சுகம். ஆயினும், பலர் அதைச் சுகமாகக் காண்பதில்லை. அத். 2 : 8. மனத்தையும் அதன் சேவையையும் அதன் மேலதிகாரி தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தவறு வதுதான் இதற்குக் காரணம். இதனல், மனமென்னும் சேவை யாளன் தான் கெடுவது மாத்திரமன்றித் தனது மேலதிகாரி யாகிய புத்தியையும் கெடுத்து விடுகின்றன். சேவையின்பம் துன்பமாக மாறி விடுகின்றது. அத். 2 : 67. இராசத குணமும் தாமத குணமும் அடையும் அனுபவம் கட்டுப்பாடில்லாத

Page 73
112 பகவத்கீதை வெண்பா
மனத்தை நிலைக்களஞகக் கொண்டது. கட்டுப்பாடில்லாத மனம் ஒருபோதும் சுகம் தராது. இதனல், நிதிவசதி படைத்தவர்க ளுள்ளும் பலர் நிம்மதி காண்பதில்லை. அத். 6 : 5 - 6. அத். 2: 8.
சாத்துவிக குணம் மனத்தைக் கட்டுப்படுத்திப் புத்தியை நேர்வழியிலே செலுத்தி ஆன்மாவுக்கு உதவுகின்றது. இதனல், மனத்தின் குணமாகிய சுகம் சாத்வீக குணச் செல்வர்களிடம் சரியான முறையிற் பிரதிபலிக்கின்றது. அவர்கள் அகத்தும் புறத்தும் ஒளி காண்கின்றர்கள். துன்ப இருள் அங்கே சூழ்வ தில்லை. இதனல், சாத்துவிகர் எங்கும் இன்பமே காண்கின்றர். அது சதோதய சர்வோதய இன்பம் உதய அஸ்தமன இன்ப மன்று. அத். 2 : 61, 64. அத். 5 ; 24. அத். 6: 7.
தொடக்கத்தில் நஞ்சுபோல் தோன்றி முடிவில் அடுக்குமமிர் தாகியான் மாவில் - திடப்பட்ட
புத்தித் தெளிவிலுண்டாய்ப் பூரிக்கும் இன்பமே சுத்தசாத் வீக சுகம். 37
தொடக்கத்தில் நஞ்சுபோலத் தோன்றி முடிவில் அமிர்த மாகி ஆன்மாவில் நிலைத்த புத்தித் தெளிவில் உண்டாகிப் பொங்கும் இன்பமே சுத்த சாத்துவிக சுகமாகும்.
பொறிகள் மனத்தின்வழி நிற்க; மனம் புத்தியின் வழி நிற்க; புத்தி ஆன்மாவுக்கு அரண் செய்து அதில் நிலைபெற்று நிற்க; அதனல், புத்தி தெளிவுபெற்று ஒளிமயமாகின்றது. இந்தப் புத்தித் தெளிவிலே பூரித்துத் தோன்றும் இன்பமே நிலையான சாத்துவிக சுகமாகும். அத். 2 : 53.
பொறிபுலன்சேர் கூட்டத்திற் பொங்கி இனிமை நிறையமிர்தம் போற்காட்டி நின்று - வெறிதாகிப் போய்ப்போய் முடிவில்நஞ்சாய்ப் போகுஞ் சுகமதுவே ஏய்க்கும் இராசதமென் றெண்ணு. 38
பொறி புலன்கள் கூடிய கூட்டத்திலே இனிமை நிறைந்து தோன்றி அமிர்தம்போல் வெளிக்குக் காட்டிநின்று, போகப் போக இனிமை குறைந்து வெறிச்சென்று, இறுதியில் நஞ்சாகிப் போய்க் கழியும் இன்பமே மனிதரை ஏய்க்கின்ற இராசத சுக மென எண்ணு.

ஞான யோகம் 113
இராசத சுகம் பெரிய ஏமாற்றம் தருவது. போர் வீரனுக்கு ஆயுதம் ஏந்துவது இன்பம். சண்டியனுக்கு உடல் வலியைக் கொண்டு பிறரை வருத்துவது இன்பம். உடல் தளர்ந்தபோது போர் வீரனுக்குத் தான் ஏந்திய ஆயுதமும் பாரமாகிறது; நாணம் தருகிறது. சண்டியனுக்குத் தனது சண்டித்தனம் நாணம் தருகிறது. இதுபோல, இராசத குண சுகம் உடல் தளர்ந்தபோது துன்பமாகின்றது. தன் முன்னனுபவச் சுவையை நினைக்க இராசதன் நாணமடைகின்றன்.
உலகம் குணவடிவமாலுல் ; உலகத்து மக்களின் உடலும் குணவடிவமானுல் உலகம் உள்ளளவும் குணச் செயல்களும், குண அனுபவங்களும் இருந்தே தீரும். இவற்றின் மத்தியில் மனிதன் ஓர் வரம்புக்குள் நின்று தன்னைக் கட்டுப்படுத்தி, மனித நம்பிக்கை தெய்வ நம்பிக்கை என்னும் இரண்டு புணை களின் துணையினுல் சஞ்சார சாகரத்தை நீந்திக் கடத்தல் வேண்டும்.
இராசத குணம் செயல்வடிவானது. உலக அனுபவ விருத்தி செயல் நிகழ்ச்சியிலேயே தங்கியுள்ளது. செயல் நிகழ்ச்சி உலக அனுபவ விருத்திக்கு மாத்திரமன்று ; அதன் நிவிர்த்திக்கும் அது உபகாரமயுள்ளது. செயல்கள் மூலம் அனுபவங்களில் நின்றும் படிப்படியாக நெகிழ்ந்து நிவிர்த்தி மார்க்கத்தை நோக்கி முன் னேறுவதே வாழ்க்கையின் குறிக்கோளாகும். இதை விடுத்து ஐம்புல விடய சுகமே விரும்பி அதிலே அழுந்திக் கிடந்தால் புறவாழ்வும் சிறக்காது ; அகவாழ்வும் சிறக்காது. இராசத குண சுகத்திலே நிலைநில்லாமல் வயது செல்லச் செல்லச் சாத்து விக குணச் செல்வர்களைச் சார்ந்து அச்சார்பினுல் சாத்துவிக குணத்திற் பழகுவதே இராசதர் செய்தற்குரியதாகும்.
என்றும் தொடக்கத்தில் ஈற்றிற் சுயவறிவை நின்று மயக்கஞ்செய் நீர்மைத்தாய் - ஒன்றும் மடிதுயிலிற் சோம்பில் மறதியிலே தோன்றும்
கடையாய தாமதசு கம். 39
கடைப்பட்ட தாமத சுகமானது எங்கும் தொடக்கத்திலும் முடிவிலும் ஆன்மாவின் சுய அறிவை மயக்கும் தன்மையுடைய தாய், நீண்ட நித்திரையிலும், சோம்பலிலும், மறதியிலும் நின்று பிறக்கும்.
தாமதன் இருண்டதும் விடிந்ததும் தெரியாதவன்; தனது உடல், ஐம்பொறிகள், மனம், புத்தி என்பவற்றின் அருமை அறியாதவன் தன்னை மறந்தவன்.
u - 8

Page 74
14 பகவத்கீதை வெண்பா
சாத்துவிக சுகம் சுகமாகவே நிலைநிற்கும். இராசத சுகம் சுகம் போலக் காட்டிநின்று துன்பமாக நிலைமாறும். தாமத சுகமோ துன்பமாகவே நிலைநிற்கும். தாமதத்திற் சிறிதேனும் இராசதம் கலந்தால்தான் தாமதன் ஒருவாறு கண்விழித்துப் | ||T||T|| 11. f fT Göl”,
இயற்கையியல் பாய்த்தோன்றும் இம்முக் குணஞ்செய் மயக்ககன்று தன்வசமாய் வாழும் - உயர்ச்சிகண்ட நல்லோனிந் நானிலத்தும் வானிலத்தே தேவருளும் இல்லையப்பா லானுன் இவன். 40 ی பிர்கிருதியின் இயல்பாய்த் தோன்றிய இம் முக்குணங்களும் செய்கின்ற மயக்கத்தில் நின்றும் விடுபட்டுத் தன்வசமாய் வாழும் உயர்நிலையை அடைந்த நல்லோன் இம் மண்ணுலகில் மனித ருள்ளும் இல்லை. தேவலோகத்தில் தேவர்களுள்ளும் இல்லை.
மண்ணுலகில் வாழ்ந்தால் அம்மகாத்துமாவை மனிதனென்று சொல்லல் ஆகாது. விண்ணுலகில் வாழ்ந்தால் தேவனென்று சொல்லல் ஆகாது. சீவாத்துமா குணம் கடந்து பிரமமயமான பின்பு அதை மனிதனென்ருே தேவனென்றே சொல்வது பொருத்தமில்லை. மனிதரும் தேவரும் குணவசப்பட்டவர்களே,
'சிவமாக்கி எனையாண்ட அத்தன் '
* தானே யாக்கிய தன்மை யாளன் ? .
வாட்டிப் பகையை வதைப்போனே இவ்வுலகில் நாட்டி நடக்கின்ற நாற்குலங்கள் - தேட்டமெனும் உட்குணத்தால் உண்டாய் உரிய கடமையெனும் கட்டுக்கோப் புள்வளர்வ காண். 41 பகைவரை எரிப்பவனே, இவ்வுலகில் உண்டாகி நடை முறையில் இருக்கின்ற நான்கு குலங்களும் அவரவரின் தேட்ட மாகிய உட்குணச் சார்பினல் உண்டாகி, அவரவர் குணத்துக் கேற்ற கடமைகள் என்கின்ற கட்டுக்கோப்புக்கு உட்பட்டு வளருமென்க. அத். 4; 13.
தேட்டம்-1 போனநாள் செய்தஅவை,
மண்ணிற் பிறந்தார்க்கு வைத்த பொருள் ? வளர்தல் - குணநலத்துக் கேற்பக் குலம் உயர்தல். அத். 18:45-46. கட்டுக்கோப்பு, அத். 3 : 24,
குணங்கள் நிலையில்லாதன. குணச்சார்பால் பிறந்த குலங் களும் நிலையில்லாதன. ஒரு குணத்தில் ஏனைய குணங்களும்

ஞான யோகம் 15
கலக்கின்றன. சாத்துவிகத்தில் இராசதம் : சாத்துவிகத்தில் தாமதம். இராசதத்தில் சாத்துவிகம் : இராசதத்தில் தாமதம் தாமதத்தில் இராசதம் ; தாமதத்தில் சாத்துவிகம். இக் கலப் பினல் மனிதரும் காலையில் ஒன்ருவர் ; கடும்பகலில் ஒன்ருவர் ; மாலையில் ஒன்ருவர். இதனல், நால்வகைச் சாதிகள் தாமும் சுத்தமாயிராமல் ஒவ்வொரு சாதியிலும் ஏனைய மூன்று சாதி களும் கலக்கின்ற நுட்பம் நம்மால் அறிதற்குரியது.
தாமதம் இராசதமாய் இராசதம் சாத்துவிகமாய் சாத்து விகம் குணுதீதமாய் உயரவேண்டும் என்பதே இக்குணக் கலப் பால் நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மையாகும். குணக் கலப்பால் சூத்திரன் வைசியணுகின்றன். வைசியன் சத்திரிய னகின்றன். சத்திரியன் பிராமணனுகின் முன், பிராமணன் குளுதீதணுகின்றன். குலதருமத்தைக் கடைப்பிடித்தலால் இவ் வுயர்ச்சி கைகூடுகின்றது.
பிராமணன் சத்திரியணுய், வைசியணுய், குத்திரனய்க் கீழே போதலும் உண்டு. கடமையைக் கைவிடுதலால் இந்நிலை எய்து ன்றது. எல்லாரும் பிராமணராதல் வேண்டும். பிராமண ஞகாதவனுக்கு விடுதலை யின்பம் இல்லை. விடுதலை யின்பம் பிரமத்தை அண்ணுதலால் வருவது. பிரமத்தை அண்ணியவன் பிராமணன். எல்லாக் குணநிலையில் உள்ளவர்களுக்கும் சம சந்தர்ப்பம் கொடுப்பது கீதையின் முடிந்த பொருளாகும்.
கரணம் பொறியடக்கம் காத்தலுடற் சுத்தம் புரிதவம்நன் னேர்மை பொறுமை-தருதெய்வ நம்பிக்கை ஞானம்விஞ் ஞானமிவை அந்தணர்க்குத் தம்குணத்தா லாம்குலதர் மம். 42
அகப்புறக் கரணங்களை அடக்கிக் காத்தல், உடற்சுத்தம், தவம், நேர்மை, பொறுமை, தெய்வ நம்பிக்கை, ஞானம், விஞ்ஞானம் என்பன அந்தணர்க்கு அவர்தம் இயற்கைக் குணத்தால் ஏற்பட்ட குலதருமமாகும். தவம் - கடமை. விஞ்ஞானம் அத். 7 : 4 - 5.
சூரத் தனமுள் ளொளிதுணிவு சாதுரியம் போரிற் புறங்காட்டாப் பூட்கையுடன் - நேரும் கொடையரசாள் உட்கோள் குணவியல்பால் வந்த நடையரச தர்மமென நாடு. 43
சூரத்தனம், உள்ளொளி, சாதுரியம், மேற்கோள், கொடை, அரசாண்மை என்பன குணவியல்பால் வந்த அரச நடைக்குரிய குலதருமமாகும்.

Page 75
116 பகவத்கீதை வெண்பா
சூரத்தனம் - செளரியம்; பகைவர் கேட்டும், கண்டும் அஞ் சும் தீவிரநிலை, சூர் - அச்சம். உள்ளொளி தான் ஓரிடத்தில் இருந்தாலும் எங்கும் செல்லும் அதிகார மதிப்பு.
" உறங்கு மாயினும் மன்னவன் தன்னுெளி
கறங்கு தெண்டிரை வையகம் காக்குமால்' (சீவகசிந்தாமணி)
துணிவு-மனத்திடம்; தீரம். சாதுரியம் - பலவற்றை ஒரே நேரத்திற் கேட்பதால் குழம்பாத புத்தி. பூட்கை - மேற்கோள் உடலுக்கு வரும் ஊறு முதலியவற்றைப் பொருட்படுத்தாமல் பகைவர்மேற் பாய்ந்து செல்லும் வேகம். கொடையென்பது படை, குடி முதலியவற்றின் ஆக்கத்துக்குச் செய்யும் செலவு.
* பொன்னி னுகும் பொருபடை அப்படை
தன்னி னுகும் தரணி தரணியிற் பின்னை யாகும் பெரும்பொருள் அப்பொருள் துன்னும் காலைத்துன் னதன வில்லையே.” (சீவகசிந்தாமணி)
உட்கோள் - மன மேம்பாடு; ஆளுந் திறம்.
உயிர்போல் உழவுநிரை ஓம்பல் வணிகம் செயிர்தீர் வணிகர்குணச் செய்கை-பயில் சேவை செய்துலக மெல்லாம் செழிக்குமுய காரகுணம் கைவந்தோன் சூத்திரனும் காண். 44
உயிர் போன்ற உழவுத்தொழில், பசுக்காத்தல், வாணிகம் என்பன குற்றமற்ற வணிகர்க்குக் குணவியல்பால் வந்த குல தருமமாகும். பயில்கின்ற சேவையினைச் செய்து உலகமெல்லாம் செழிக்கப்பண்ணுகின்ற உபகார குணத்திற் கைதேர்ந்தவன் சூத்திரனுவான்.
* உழுவான் உலகுக் குயிர்' (புறப்பொருள் வெண்பா)
எல்லாருடைய சூத்திரமும் எவன்கையில் உள்ளதோ அவன் சூத்திரன். பிராமணர், சத்திரியர், வைசியர், மூவர்க்கும் அவர்களின் குலதருமங்கள் நிறைவு பெறுதற்குச் சூத்திர னுடைய சேவையே துணையாகின்றது. சூத்திரனுடைய சேவை யின்றி உலகில் ஒன்றுமே நடக்காது. சூத்திரன் சேவைமய மாணவன் சூத்திரன், தொழிலாளி, பாட்டாளி என்பன ஒரு பொருட் சொற்கள். பாட்டாளி - பாடு + ஆளி. உலகுக்காகப் பாடுபடுகின்றவன்.

ஞான யோகம் 1 7
* உழவால் உயரும் உலகம் உழவும்
உழைப்பால் உயரும் உழைப்பும் - தொழிலுணர்ச்சி பெற்றல் உயருமெனும் பேருண்மை நம்இளைஞர் கற்றல் வருமின்பம் காண்.’ (ஏ. பெ.)
'நாலு வகுப்புமிங் கொன்றே - இந்த
நாலினில் ஒன்று குறைந்தால் வேலை தவறிச் சிதைந்தே - கெட்டு வீழ்ந்திடும் மானிடச் சாதி.??
6 நிகரென்று கொட்டு முரசே-இந்த
நீள்நிலத் துள்ளவ ரெல்லாம் தகரென்று கொட்டு முரசே-பொய்ம்மைச்
சாதி வகுப்பின யெல்லாம்.” (பாரதியார்)
குலதருமந் தன்னைக் குறிக்கோளாக் கொண்டோன் நிலைபெறுமெய்ஞ் ஞான நெறிக்கே - செலுமுரிமை
சேர்வான் கடமையினைச் செய்தொருவன் மேற்கதியிற் போமாறு கேட்பாயிப் போது. 45
தனது குலதருமத்தைக் குறிக்கோளாகக் கொண்டவன் ஞானத்தில் நிலைபெறும் தகுதியை அடைகின்றன். கடமையைச் செய்து ஒருவன் மேல்நிலைக்குச் செல்லும் முறையினை இப்பொழுது கேள். بر--
எல்லா உயிர்க்கும் இனிய பிறப்பிடமாய் எல்லாமாய் நிற்கும் இறையோனை-எல்லாரும் தத்தம் கடமையினல் தாம்பூசித் தேயுலகில் உத்தமரா கின்ருர் உயர்ந்து. 46 எல்லா உயிர்க்கும் இனிய பிறப்பிடமாய், எல்லாப் பொருள் களிலும் கலந்து நிற்கின்ற இறைவனை, எல்லாரும் தங்கள் தங்கள் கடமையினல் வழிபட்டு உயர்க தி யடைகின்றர்கள்.
இறைவனே எல்லா உயிர்களுக்கும் பிறப்பிடமானவன். அத். 15 7. அத். 14:3-4. கடமையிலே கண்ணும் கருத்துமா யிருப்பவன் நடுநிலை தவருமல் இறைவனுக்கு அர்ப்பணமாக அதைச் செய்தால் மன நிம்மதி அடைவான். மன நிம்மதி நிலையான சாந்திக்கு வழியாகும். இவன் காரியாலயத்திலோ, தொழில் நிலையத்திலோ, வீட்டிலோ, ஆலயத்திலோ கடவுளைக் காண்கின்றன். கடமையை நடுநிலையில் நின்று செய்பவன் கடவுளைத் தேடி எங்கும் அலையவேண்டியதில்லை.
9 - נL

Page 76
18 பகவத்கீதை வெண்பா
நடுநிலையில் நின்று ஈசுரார்ப்பணமாகக் கடமையைச் செய்யா தவன் ஆன்மதரிசனம் பெறுதல் இல்லை. கடமைகளை இறைவ னுக்கு அர்ப்பணஞ் செய்து மக்களுக்குச் சமர்ப்பணம் பண்ணு வோம். அத். 9 : 26 - 28.
நன்ருய்ச் செயும்பிறர்தம் நற்செயலில் தன் செயலே நன்ரும் தரம்குறைந்த தென்ருலும் - ஒன்றுகேள்
சார்குணத்தால் வந்தமைந்த தன்கருமம் செய்தலால் சேர்வதிலை இங்கொருவன் தீது. 47
பிறர் நன்ருகச் செய்து முடிக்கின்ற அவரது கடமையை மற்ருெருவன் தான் செய்யப் போவதினும் பார்க்கத் தன் கடமை தரத்திற் குறைந்ததாயினும் தன் கடமையைச் செய்வதே அவனுக்கு நன்ருகும். தன் குணத்துக்கேற்ப அமைந்துள்ள தன் சொந்தக் கடமையைச் செய்வதால் ஒருவன் தீமையை அடை
தன் கடமை குறைந்தது; மற்றவர் கடமை சிறந்தது. சிறந்ததை விடுத்து நான் ஏன் குறைந்ததைச் செய்ய வேண்டும்? சிறந்ததையே செய்வேனென்று ஒருவன் பிறர் கடமையைச் செய்யப்போதல் தகாது. தன் கடமையைச் செய்வதே தருமம். செய்வதும் எளிது. தன் கடமை அல்லாததைச் செய்வது குற்றம். செய்வதும் கடினம். இடையிற் கைவிடவேண்டி வரும். கருமமும் பழுதுபடும். பயமும் தரும். தண்டனைக்கும் ஆளாக்கும். தன் கருமமே தனக்கு மீட்சிதரும் என உணர்க. தத்தம் நிலையிற் தாமே பெரியர். அத். 3 35. அத். 4 17.
குணம்போல் அமைந்தசெயல் குற்றமுடைத் தேனும் இணங்காதென் றெண்ணியிக ழற்க-முனைந்து தொடங்கும் செயலெல்லாம் தூமம்குழ் தீப்போல் படுங்குணகுற் றத்துளியல் பாய். 48 ஒருவன் எவனேனும் தனது இயற்கைக் குணம்போல் தனக்குப் பொருத்தமாய் வந்த கடமை தரம் குறைந்ததேனும் அது இணங்காதென்று எண்ணி இகழற்க. முற்பட்டுச் செய் கின்ற எல்லாச் செயல்களும் புகையாற் சூழப்பட்ட தீயைப் போன்று குணசம்பந்தமான குற்றங்களால் இயல்பாகவே பற்றப்பட்டுள்ளன.
குணம் பிரகிருதி சம்பந்தம். செயல் குணத்தின் காரியம் இதனல் செயல்களிலே குணசம்பந்தமான குற்றம் வெவ்வேறு

ஞான யோகம் 119
அளவாகப் பற்றியிருப்பது இயல்பு. குணதோஷம் இல்லாத செயல் இல்லையென உணர்க. ஒருவனின் குணம் ஒன்ருயிருக்கச் செயல் வேருென்ரு யிருப்பதில்லை. குணம்போற் கிடைத்த செயலை நடுநிலையில் நின்று செய்து அதில் நின்றும் மேலே செல்லவேண்டும். அத். 4 13.
பற்றற்ற புத்தி படைத்தோன் மனமடங்கப் பெற்ருேன்தீ யாசைப் பெருக்கெல்லாம்-முற்ருய்ப்போய் அற்றேன் துறவால் அதியுயர்நிஷ் காமகர்ம சித்தியடை கின்றன் தெளிந்து. 49 பற்றற்ற புத்தி படைத்தவன், மனமடங்கப் பெற்றவன், தீய ஆசை வீக்கங்களை யெல்லாம் முற்ருக விட்டவன், துறவு நிலையினல் தெளிவடைந்து மிகவும் உயர்ந்த நிஷ்காம கர்ம சித்தியினை அடைகின்றன்.
பற்றற்ற புத்தி சமபுத்தி; நடுநிலையில் நின்று கடமையைச் செய்யும் புத்தி. இது மனத்தை ஒருபால் ஓடவிடாது நிறுத்தும். மனம் புத்திக்கு வசப்பட்டால் ஆசைப் பெருக்கம் குறைந்து முற்ருக நீங்கும். இந்நிலையில் உள்ளத் துறவு உண்டாகும் உள்ளத் துறவால் பற்றற்ற செய்கை பலிக்கும்.
பற்றற்ற செய்கை பலித்தோன் போய் அப்பயணுல் மற்றுயர்மெய்ஞ் ஞான வரம்பாகும் - சுத்தப் பிரமநிலை சேர்முறையைப் பேசுவன்கேள் குந்தி அருமைமக னேசுருக்க மாய். 50 குந்தி புதல்வ, நிஷ்காம கர்ம சித்தி பெற்ருேன் அதன் பின்னர், உயர்ந்த ஞான வரம்பாகிய முத்தி நிலையினை அடையும் முறையைச் சுருக்கமாகச் சொல்கின்றேன் கேள்.
உலகிலே மனிதன் செய்யும் ஒவ்வொரு கருமமும் ஒவ் வொன்றை முன்னிட்டுச் செய்யப்படும். நல்லதை முன்னிட்டு நல்லதைச் செய்க. யோக சித்தியினல் ஞானசித்தி உண்டாகும். ஞானசித்தியினுல் அடைவது வீடுபேறு. அத். 5 : 16
தூயபுத்தி யாலே துணிந்துடலை உள்ளத்தை ஒய அடக்கி ஒடுக்கியே - வாயென்னும் ஐந்து புலனுகர்ச்சி ஆங்கடைவே விட்டொழிவான் புந்தி விருப்புவெறுப் பு. 5.

Page 77
120 பகவத்கீதை வெண்பா
ஒளிபெற்ற புத்தியால் உறுதியுடன் மனத்தை அலையாமல் அடக்கி ஒருநிலைப்படுத்தி ஐம்புல நுகர்ச்சிகளை முறையே விட்டு, மனத்தே தோன்றுகின்ற விருப்பு வெறுப்புக்களைச் சமன் செய்து கொண்டு இருப்பான்.
ஒளிபெற்ற புத்தி மனத்தைக் கட்டுப்படுத்திய புத்தி. தியானம், வைராக்கியம் என்பவற்ருல் மனம் கட்டுப்படும். அத். 6:35. ஐம்புல நுகர்ச்சிகளை' முறையாக விடுதல் என்பது கண்ணுணர்வை முதற் கட்டி ஏனைய புலன்களை வசமாக்குதல்.
' கண்வழி மனமும் செல்ல ? (கம்பர்)
தனியிடத்தை நாடித் தரித்தூண் சுருக்கி மனம்சொல் செயலைவச மாக்கித் - தினந்தினமும் ஆழ்ந்ததியா னத்தில் அமர்ந்துவயி ராக்கியமே வாய்ந்துறுதி கொள்வான் மனம். 52
தனியிடத்தை விரும்பித் தரித்திருந்து, உணவைச் சுருக்கி மவுனம் பூண்டு தியானத்தில் அமர்ந்து வயிராக்கியம் கொண்டு மனத்திடம் பெற்றிருப்பான்.
தனித்திரு பசித்திரு; விழித்திரு என்பர். இனிது இனிது ஏகாந்தம் இனிது. பசித்திருத்தல் அளவாக உண்ணுதல். விழித்திருத்தல் கூர்மையாய் இருத்தல். அத். 6:10-17.
விட்டகந்தை காமம் வெகுளிமதம் யோகத்தால் எட்டுவன்மை செல்வத்தி லேமமதை - விட்டிங்கே சாந்திமய மானேன்மேற் சார்வாம் உயர்பிரம மாந்தகுதி வாய்ந்தோன வான். 53
அகந்தையையும், காமம் வெகுளி மயக்கத்தையும் விட்டு யோகப் பயிற்சியாற் பெற்ற வல்லமையாலும் செல்வத்தாலும் எழுகின்ற மமதையையும் விட்டு; இங்கே சாந்திமயமானவன், இனிமேற் சார்தற்கு நின்ற பிரம மயமாகும் தகுதியைப் பெறுகின்றன். 民
அகந்தை நான் கருமயோகி, இராசயோகி என்னும் பெரு மிதம்: எட்டு வன்மை யோகப் பயிற்சியால் அடைந்த மன வலிமை ; அட்டமா சித்தி. மமதை அட்டமாசித்திப் பேறு, செல்வம் முதலியவற்றில் அபிமானம் கொள்ளல்; எனது எனச் செருக்கியிருத்தல். யான், எனது என்னும் செருக்கற்றுப் பரம பாவனையே தியானமாகக் கொண்டவன் மனச்சாந்தி அடை கின்றன். அத். 4:21,

ஞான யோகம் 21
ஒன்றிப் பிரமத்தின் உள்ளம் தெளிந்தோன்போய் ஒன்றினும் துன்பம் உருனுலகில் - ஒன்றினுமோர் ஆசைபெருன் அன்னேற் கனைத்துயிரும் ஒன்றென்மேல் பேசருமெய் அன்போ பெரிது. 54
பிரமத்தில் நிலைத்துநின்று உள்ளம் தெளிந்தவன் ஒன்றினும் துன்பப்படுவதில்லை. ஒன்றினும் ஆசைப்படுவதில்லை. அவனுக்கு எல்லா உயிரும் சமமே. அவனுக்கு என்மீதுள்ள பத்தியோ ஒப்புயர்வில்லாதது.
இறைவன் எங்கும் சமமாகக் கலந்து நிற்பவன். அவனுக்கு எல்லா உயிரும் சமம். நல்லாரென்றும் பொல்லாரென்றும் ஒருவரும் இறைவனுக்கில்லை. அத். 9 29. சமநிலையில் நின்று இறைவனைச் சார்ந்து மனச்சாந்தி பெற்ற மகானுக்கும் எல்லாரும் சமமே நல்லார் பொல்லார் அவனுக்கில்லை. சமபுத்தி வாய்ந்த சாந்தனைப் பண்டிதன் எனப் பகவான் கூறுகின்றர். அத். 5 17 - 18. அத். 6 31 - 32.
அன்பு மன அனுபவம். அதை வாயாற் சொல்லி விளங்க வைக்க முடியாது. இதனுல் பேசரும் அன்பு எனப்பட்டது. வியபிசார மற்று நிலைநின்ற நல்லன்பு மெய்யன்பு எனப்பட்டது; வியபிசாரம் குறித்த பொருளை விட்டு வேறு பொருள்களிலும் செல்வது. அன்பு எல்லாப் பொருள்களிலும் பெரிதாதலின் பெரிது எனக் கூறப்பட்டது.
* நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனெடு 15ட்பே.?
"செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா அம்மலம் கழிஇ அன்பரொடு மரீஇ மாலற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயம் தானும் அரனெனத் தொழுமே.”*
(சிவஞானபோதம்)
கைவந்த பக்தியினுற் கண்டென் நிலையன்னேன் ஐயமறத் தேர்ந்தோணுய் ஆங்கதன்பின்-மெய்யறிவால் நாடியெனை நன்குணர்ந்து நன்றுவிரைந் தென்னுடனே கூடுகின்றன் பின்னமிலாக் கூட்டு. 55 அன்னேன் நிலைபெற்ற பக்தியால் எனது நிலையினைத் தீரத் தெளிந்து, அதன்பின்னர் மெய்யறிவால் என்னை நாடி நன்

Page 78
H 22 பகவத்கீதை வெண்பா
குணர்ந்து மிக விரைவாக என்னுடனே பின்னமில்லாத கூட்டம்
கூடுகின்றன். அத். 4 : 39.
இது இரண்டின்மையாகிய அனுபவம். அம்சம் அதன் முழுப்
பொருளோடு ஒன்ருய் விடுகின்றது. 15 7.
எச்செயலைச் செய்போதும் என்னைச் சரண்புகுந்தே நிச்சயமாய் என்னில் நிலைத்திருக்கும் - பத்திமான் அன்னவன்மா றின்றி அழிவற்ற முத்திநிலை என்னருளாற் சேரும் இனிது. 56
எச்செயலைச் செய்யும் போதும் என்னைச் சரண் புகுந்து என் னில் உறுதிபெற்று நிற்கும் பக்திமான் மாறில்லாததும், அழி வற்றதுமாகிய முத்திநிலையை என்னருளால் இனிது சேர்கின்ருன்.
நால்வகை அன்பர்களுள்ளும் ஞானி சிறந்தவன். மூவரின் பத்தியும் பயன் கருதியது. ஞானியின் பக்தி பயன் கருதாதது. தியானம் செய்யாதிருக்கையிலும் ஞானி இறைவனைப் பிரிந் திருப்பதில்லை. அத். 7 :16.
பண்ணுசெய லெல்லாம் பகுத்தறிவி ஞலெனக்கே திண்ணமுட னுரிமை செய்துளத்தில் - என்னைவிட மற்றென்றை மேற்பொருளாய் வையாமே யோகத்தால் சித்தமென்பாற் சேர்ப்பாய் தெளிந்து. 57 நீ செய்கின்ற எல்லாச் செயல்களையும் பகுத்தறிவால் உறுதி யுடன் எனக்கே உரிமைசெய்து, என்னைவிட வேருென்றை உயர் பொருளாய் உள்ளத்தே கொள்ளாமல் புத்தியோகத்தால் தெளி வடைந்து சித்தத்தை என்பால் சேர்ப்பாயாக. அத். 9 27, - பகுத்தறிவு விஞ்ஞானம்; சடமும் சித்தும் ஒன்றென்று மயங்காத உண்மை அறிவு; சேத்திர சேத்திரஞ்ஞ ஞானம். அத் 7 : 4 - 12. அத். 13. ---
சித்தமதை என்பால் திடம்பெறவைத் திவ்வண்ணம் எத்தடையும் தாண்டி எழுவாய்நீ - மெத்தவே தூண்டும் அகந்தையினல் சொல்வழிகே ளாவிட்டால் மாண்டொழிவாய் பார்த்தா மதி. ・ 58 பார்த்தா, சித்தத்தை என்பால் திடமாக வைத்து என் னருளால் எல்லாத் தடைகளையும் தாண்டி மேற் செல்வாய். சொல்வழி கேளாவிடில் மதிகெட்டு வருந்துவாய்.

ஞான யோகப 123
தடை கடமை செய்வதிலே குறுக்கிடும் இடையீடும் இடை யூறும். அத். 2 : 4 - 6. அகந்தையால் நான் செய்கின்றேன்; நானே கருமநாயகன் என்று நீ நினைத்தால் தடைமேல் தடைகள் உண்டாகுமேயன்றித் தடைகள் தீரமாட்டா. அத். 3 : 27 "அகந்தையே எங்கு ளாயெவ் வளவுநீ உயர்ந்து நிற்பாய்
அகந்தையே அறத்தின் ஆணைக் கட்க்கம்இேறங்கி வாராய் அகந்தையே மேலோர் கீழோ ராவதும் கீழோர் மேலாய் அகந்தையே ஆட்சி பீடத் தமர்வதும் அறியா யோ.ே’ (ஏ. பெ.)
புல்லும் அகந்தையால் போர்புரியே னென்றுமணம் சொல்லுமெனில் உன் தன் துணிவுபொய்யே-வல்லவனே உன்னே டுடன்பிறந்த உன்னியல்பே இப்போரில் உன்னைவசம் செய்துமுன்னிற் கும். 59 அகங்காரத்தால் போர்புரியமாட்டேன் என்று உன் மனம் சொல்லுமானல் உன் துணிவு சரியன்று. வல்லவனே, உன் னேடு உடன்பிறந்த உன் சத்திரிய குணமே இப்போரில் உன்னை வசமாக்கி ஏவிநிற்கும். அத் 18 : 43. திருக்குறள் அதி, 38 : 3,
புந்தி மயக்கத்தாற் போர்புரிய நீமறுப்பின் குந்திமைந்தா உன்தன் குணவியல்பாய் - வந்த சுவதருமத் தால்நீ தொடக்குண்டு நின்றே அவசமாய்ச் செய்வாய் அமர். 60
குந்திபுதல்வ, புத்திக் குழப்பத்தால் நீ போர்புரிய மறுத் தாலும் குணவியல்பாக உனக்கு வந்தமைந்த சத்திரிய தருமத் தாற் கட்டுண்டவனுய் உன்னை மறந்துநின்று நீ போர்செய்வாய்.
தற்பாதுகாப்புக் காகவேனும் யுத்தம் செய்யவேண்டிய நிர்ப்பந்த நிலை உனக்கு வரும். நீ சத்திரிய தருமத்துக்கு உட் பட்டவன். அது கட்டாயம் உன்னை ஆட்கொள்ளும்.
பார்த்தா உடற்ப்ொறியிற் பண்ணும் பதுமைகள்போல் ஏற்றிவைத்தே எல்லா உயிர்களையும் - மாற்றியே ஆள்மாயா சத்தியினல் ஆட்டிநின்றே ஈசுவரன் வாழ்வானுள் ளுள்ளே மறைந்து. 61 பார்த்தா, உடல்களாகிய இயந்திரங்களிலே எல்லா உயிர் களையும் பதுமைகளைப்போல் ஏற்றிவைத்துத் தனது மாயா சத்தியினல் மாற்றிமாற்றி ஆட்டுவித்துக்கொண்டு இறைவன் உயிருக்கு உயிராய் உள்ளே மறைந்துநிற்கின்றன்.

Page 79
124 பகவத்கீதை வெண்பா
உடல்கள் இயந்திரங்களாகவும், உயிர்கள் பதுமைகள் போலவும் வருணிக்கப்பட்டுள்ளன. பதுமை பிரதிமை. பொம்மை, பாவை எனவும் இவை வ்ழங்கும். இறைவன் தனது சீவசக்தி யின் ஓர் அம்சத்தையே பல உயிர்களாகப் படைத்து உடல்கள் தோறும் புகுத்தி ஆட்டுவிக்கின்ற செயலைப் பதுமை என்னும் சொல் விளக்குகின்றது. பதுமை - சாயல். ஆன்மா இறைவ னின் சாயல் என அறிக. அத். 15 : 7.
பொம்மை அல்லது பாவை தானே ஆடாது. ஆட்டுவிக்க ஆடும். பாவைக் கூத்து, பொம்மலாட்டம், பொம்மையாட்சி என்பன இதற்கு உதாரணம். -
உடல்; உடலுள் மனம்; மனத்தினுள் இருதயம்; இருத யத்துள் சீவாத்துமா சீவாத்துமாவுள் பரமாத்துமா.
* மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா? (சிவஞானபோதம்)
பாரதா எல்லாப் படியாலும் ஈசனையே நேரிற் சரண் புகுந்து நில்லவன்தன் - பேரருளால் தன்னிகரில் சாந்தியுடன் சாசுவத மாம்மோட்ச நன்னிலையிற் சேர்வாய் நலம். 62 பாரதா, எல்லாப் படியாலும் நீ ஈசனையே நேராகச் சரண் புகுந்து நில். அவனது பேரருளால் ஒப்புயர்வில்லாத சாந்தியைப் பெறுவதுடன் அழிவில்லாத மோட்ச நிலையிற் புகுந்து பேரின்ப மும் அடைவாய். சாசுவதம் - நிலையானது. அத். 9 : 27-28.
சிறப்புடைய மெய்ஞ்ஞானச் செல்வமிது பார்த்தா மறைக்குள் உயர்ந்த மறை யாகும் - மறப்பரிதாய் நன்குரைத்தேன் முற்றுமிதை நாடித் தெளிந்துநீ உன்விருப்பம் போற்செய் உணர்ந்து. 63
பார்த்தா, உயர்ந்த மெய்ஞ்ஞானச் செல்வமாகிய இது இரகசியங்களுள் இரகசியம். நன்கு பதியுமாறு இதை உனக்கு முற்ருகச் சொன்னேன். ஆராய்ந்து தெளிந்துணர்ந்து உன் விருப்பம்போற் செய்க.
இது உள்ளிரகசியம்; ஐசுவர யோகம்; நிர்க்குணப் பிரமம் சகுண நிலையில் நின்று, சீவன், ஈசுவரன், உலகம் எனத் தோற்ற மளித்து, அண்ட சராசரங்க ளெங்கும் நீக்கமற நிறைந்து, அவற்றைப் பற்றியும் பற்ருதும் இயக்குகின்ற இரகசியம். இந்த இரகசியத்தைச் சீவான்மா நான்கு நிலைகளால் அறிந்து அணு பவத்திற் கண்டுணரும். அவை கருமயோகம், இராச யோகம், பக்தி யோகம், ஞான யோகம் என்பன. இராச யோகம் கரும யோகத்துள் அடங்கும்.

ஞான யோகம் I 25
இறைவனைச் சரணுகதி யடைந்து அவரவர் தகுதிக்கு இணங்க ஒன்றைக் கடைப்பிடித்து அன்பர்கள் இன்பம் பெறுவர். இந் நான்கு நிலைகளையும் பக்தி கனிந்த பார்த்தனுக்குப் பதினெட்டு அத்தியாயங்களால் பாங்காகப் பகர்ந்துவிட்டுக் கடைசியில் உன்விருப்பம்போல் உணர்ந்து செய்க என்கின்றர் பரமாத்துமா.
இது குறிப்பிடத்தக்க வாக்கியம். நீ என்னைச் சரணடைந்து என்னில் நிலைத்துநிற்க வேண்டும் என்பது என் விருப்பம். என்னில் நிலைத்து நின்று மூன்றில் ஒன்றைத் தெரிந்துகொள்வது உன் விருப் பம். தனக்குப் பொருத்தமானதை அருச்சுனன் தெரிந்து கொள் வான் என்பதும் அதைத் தவருமல் அனுசரிப்பான் என்பதும் பகவானுக்குத் தெரியும். ஆசிரியரின் தலைமைப்பாடும் மாணுக் கனின் உரிமைப்பாடும் விளங்குமாறு இவ்வண்ணம் கூறினர்.
மிக்குயர்ந்து மாமறைக்குள் மேலாமென் வார்த்தையினத் தக்காய்கேள் மற்றின்னும் சாற்றுகேன்-மக்களுளென் உண்மைநண்பனென்னும் உரிமையாற் சொல்கின்றேன் நன்மையுனக் குண்டாம்நீ நம்பு. . 64 தகுதியுடையாய், மிகவும் உயர்ந்து இரகசியங்களுள் மேலான இரகசியமா கி ய எனது வார்த்தையை மீண்டும் சொல்லுகின்றேன் கேள். மக்களுள்ளே நீ என் உண்மை நண்பன் என்னும் உரிமையால் உனக்குச் சொல்கின்றேன். இதை நம்பு, உனக்கு நன்மை யுண்டு.
என்பால் மனத்தினை வைத் தென்னநிதம் பூசித்தே அன்பால் வணங்கி எனையடைவாய் - முன்பே எனக்கினியா னென்னும் இயைபினுற் பார்த்தா உனக்குறுதி சொன்னேன் உணர். 65
பார்த்தா, என்பால் மனத்தை வைத்து என்னை அனுதின மும் அன்புசெய்து பூசித்து வணங்கி என்னை வந்தடைவாய். முந்தியே நீ எனக்கு இனியவன் என்னும் இயைபினுல் உனக்கு நன்மையைச் சொன்னேன். உணர்ந்துகொள்.
பரமாத்துமாவே பார்த்தனை நோக்கி நீ என் பழைய நண்பன்; எனக்கு இனியவன் என்று சொன்னல், பதினெட்டு அத்தியாயமும் இவ்விரண்டு சொல்லினுள்ளும் அடங்கிவிட்டது போல் தோன்றுகின்றது. ‘என்னுயிரனையாய் நீ** என்று இராம பிரான் குகன் என்னும் உத்தம பக்தனை நோக்கி உள்ளம் உருகிக் கூறியதோடு அமையாமல், 'யாதினும் இனிய நண்ப இருத்தியிங் கெம்மொடு" என்று சொல்லிய சொற்களுக்கு இணையான சொல் இராமாயணத்தில் வேறெங்கேனும் உண்டாமோ ?

Page 80
126 பகவத்கீதை வெண்பா
* எம்முளை அன்பின்வந்த அகனமர் காதலோய்' என்று விபீஷணனை நோக்கி அப் பிரான் கூறிய அன்புரையும் அரசியல் கலந்ததாதலின் அதற்கு இரண்டாம் பட்சமானதே.
" நில்லு கண்ணப்ப நில்லு கண்ணப்ப
என்அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப?
என்று காளத்தியப்பர் திண்ணனரின் கையைப் பிடித்துக்கொண்டு கூறிய அருளுருவாகிய அமிழ்தவாசகத்துக்கு இணையான சொல் திருத்தொண்டர் புராணத்தில் வேறெங்கேனும் உண்டென்று சொல்லலாமோ ? ---
"இவர் என்னுடைய நேச குமாரன் ; இவரிற் பிரியமா யிருக்கிறேன்" என்று ஏகபரன் கிறிஸ்து பெருமானைக் குறிப் பிட்டுக் கூறிய அன்பின் வாக்குக்கு இணையான வாக்குத் திரு வாக்கில் வேறெங்கும் உளதாமோ ?
எல்லாம் அன்புமயம். அருச்சுனனின் மீட்சிக்கு இனி இதிலும் பார்க்க வேறு உபதேசமும் வேண்டுவதாமோ? அத். 12:13-20.
எல்லாப் பணியும் எனக்குரிமை செய்துனையும் எல்லாம் எனக்கேயா ளாக்கியிரு - நல்லாய்செய் பாவமெலாம் வந்துன்னைப் பற்ரு தொழிப்பன்யான் நீவருந்தேல் ஒன்றும் நினைந்து. 66
எல்லாப் பணிகளையும் எனக்கு ஒப்படைத்து 'உன்னையும் எல்லாம்.எனக்கே உரிமையாக்கிவிட்டு நீசும்மா இரு. நல்லவனே, நீ செய்த, செய்கின்ற, செய்யும் எல்லாப் பாவங்களும் உன்னை வந்து பற்ருமல் நான் ஒழித்துவிடுவேன். நீ ஒன்றும் நினைந்து வருந்தாதே.
மனம் வாக்குக் காயங்களாற் செய்கின்ற எல்லாப் பணிக ளையும் மாத்திரம் இறைவ்னுக்கு அர்ப்பணம் செய்தல் போதாது; உன் உடல் பொருள் ஆவி மூன்றையுமே இவற்றேடு கூட இறைவனுக்கு உரிமையாக்கிவிட்டு மனச் சமாதானமாய் இருக்க வேண்டும். இதுவே சரணுகதி நிலை. இந்நிலையை அடைந்தவர்க ளுக்குப் பாரம் இராது; பாரம் அவனுக்கே.
தானென்னும் தன்மை அற்றவனை; தனக்கென்று ஒன்றும் செய்யாதவனைப் பாவமும் பற்றது; புண்ணியமும் பற்றது. 'நன்றே செய்வாய்; பிழை செய்வாய்; நானே இதற்கு நாயகமே "" என்று தியானித்துக்கொண்டு அசையாமல் இருக்கும் இம் மகான்களின் பாவங்கள் இறைவனின் திருப்பார்வையாற்

ஞான யோகம் 127
பொடிபட்டுப் போகின்றன. அத். 2 1. அத். 4 : 36-37. அத், 11 33.
இச்செய்யுள் கீதையின் திறவுகோல்.
உண்மைப் பொருளி துனக்குரைத்தேன் பார்த்தாகேள் கண் போற் கடமையினைக் கைவிட்டோர்-பண்ணுகுரு பத்தியிலார் தெய்வம் பழிப்பார்க் கொருசிறிதும் இத்தருமம் சொல்லேல் இழுக்கு. - இந்த உண்மைப் பொருளை உனக்கு உபதேசித்தேன். பார்த்தா கேள். கண் போன்ற கடமையினைக் கைவிட்டோர், தெய்வநிந்தனை செய்வோர், குருபத்தி இல்லாதோர் என்னும் இவர்களுக்கு ஒருசிறிதேனும் இத்தருமத்தைச் சொல்லற்க. சொல்வது குற்றமாகும்.
சிந்தனையற்றிருப்பதால் வளர்ச்சியும் தெளிவும் உண்டாக மாட்டா. நிந்தனை செய்வதால் ஒருவன் தன்னையே கெடுத்துக் கொள்ளுகின்றன். குருபக்தி, குருசேவை இரண்டாலும் ஒருவன் தன்னை ஆக்கிக்கொள்கின்றன். 4:34,
யாரிப் பரம ரகசியத்தை என்னன்பர் தேரத் தெளியநன்கு செப்புவான் - பாரதா அன்னன் உயர்பக்தி யாலைய மேதுமின்றி என்னேடொன் ருவான் இயைந்து. 68
பார்த்தா, இந்தப் பரம ரகசியத்தை எவன் என் பக்தர் களுக்குத் தேரத் தெளிய நன்கு செப்புவானே, அவன் சிறந்த பக்தியினல் சிறிதும் சந்தேகமின்றி என்னை அணைந்து என்னேடு ஒன்ருவான்.
புத்திபண்ணிக் கீதைப் பொருளுரைக்கும் புண்ணியன்போல் பத்தியுட னென்தன் பணிசெய்வோன்-இத்தரையில் யாருமிலை அன்னன்போல் எங்கும் எனக்கினியான்
யாருமிலை நீயொருவ னே. 69
அருச்சுன, கீதைப் பொருளை என் பக்தர்களுக்குப் புத்தி பூர்வமாக உரைக்கின்ற புண்ணியவானைப் போல என் பணியைப் பக்தியுடன் செய்வோன் இவ்வுலகில் வேருெருவனு மில்லை. அவனைப்போல் எனக்கு இனியவன் எவனுமில்லை. நீ ஒருவனே. அத். 18 : 64 - 65. நேரே கேட்கப் பெற்றமை யால் பார்த்தன் இனியவர்க்குள் இனியவன்.

Page 81
128 பகவத்கீதை வெண்பா
இங்கே இருவேமும் எம்முட் கலந்துரைத்த மங்களஞ்சேர் கீதை மறைப்பொருளைப்-பொங்குமன்பால் பாரா யணஞ்செய் பயன்ஞான வேள்வியெனை ஆரா தனைசெயற்கொப் பாம். 70
இங்கே யாம் இருவரும் எம்முள்ளே கலந்து உரையாடிய புண்ணியப் பொருளாகிய கீதா ரகசியத்தை அன்பு சுரந்து பாராயணம் செய்வதனல் வரும் பயன் ஞான வேள்வியில் என்னை ஆராதனை செய்வதனல் வரும் பயனுக்கு ஒப்பாகும்.
ஞான வேள்வி அனுபவ ஞானம், ஞான வேள்விக்குப் பயன் எம்பெருமானே. பக்தியுடன் பகவத்கீதா பாராயணம் பண்ணுவதற்கும் பயன் பரமாத்துமா வே யென உணர்க.
பத்தி சிரத்தையுடன் பாரா முகமின்றிப் புத்திபண்ணிக் கீதைப் பொருள்கேட்கப்-பெற்றேனும் துன்பம் துறந்து சுகபோக பூமிகளில் இன்பம் சுகிப்பான் இனிது. 71
ஏனேதானே என்னும் எண்ணமின்றிப் பத்திசிரத்தையுடன் புத்தி பூர்வமாகக் கீதைப் பொருளைக் கேட்கும் பேறு பெற்ற வனும் துன்பம் நீங்கியவனுய்ப் புண்ணியஞ் செய்தோர் வாழ் கின்ற போக பூமிகளிற் பிறந்து இனிதாக இன்பம் அனுபவிப்பான்.
போகபூமி யோகப் பயிற்சியை முற்ற முடிக்க முன்பு இறந் தோர் வாழ்கின்ற புண்ணிய உலகங்கள். காமிய கரும யோகி களும் இறந்த பின்பு இவ்வுலகங்களையே சேர்கின்றனர். பக்தி சிரத்தையுடன் ஒரேமுகமாகப் புத்தி பூர்வமாய்க் கீதைப் பொரு ளைக் கேட்கப் பெற்றவனும் இப்பேற்றினையே பெறுகின்ருன். இங்கே அனுபவிக்கும் இன்பம் நிலையானதன்று; திரும்பவும் பூவுலகுக்கு வருகின்றர்கள் இங்கு செல்வோர். அத். 6:40-42.
பகவத் கீதையைப் பிறர் பாராயணஞ் செய்யக் கேட்பவன் புண்ணியவான்; பாராயணஞ் செய்பவன் ஞானவான்; விரித் துரைப்பவன் தேவகாரியம் செய்பவன்; உபதேசிப்பவன் பர மாத்துமாவுடன் இருப்பவன்; பகவான் திருவாயால் நேரே கேட்கப்பெற்ற பார்த்தன் பகவானுடன் ஐக்கியமானவன்; பார்த்தன் கேட்டதைப் பக்கத்தே இருந்து கேட்ட சஞ்சயர் பகவானுடன் ஐக்கியமாதற்கு உரியவர்.
பார்த்தா மனவொருமைப்பாட்டுடனே இப்பொருள்சேர் வார்த்தைகேட் டாயோ மறப்பின்றிப்-போர்த்தமயல் புந்தி யறியாமை போய்த்தொலைந்த தோவுனக்குச்
சிந்தை தெளிந்ததோ செப்பு. 72

ஞான யோகம் 129
பார்த்தா, உண்மைப் பொருளமைந்த இந்த எனது வார்த் தையை மன ஒருமைப்பாட்டுடன் மறப்பின்றிக் கேட்டாயோ? அறியாமை யென்னும் மயக்கம் தொலைந்துபோய் விட்டதோ? சிந்தை தெளிவடைந்ததோ? சொல்.
அருச்சுனன் : அச்சுதா மோகம் அழிந்ததெனக் குன்னருளால் மிச்சமிலை மெய்யுணர்வு மீண்டுவரப்-பெற்றேனய் நல்லுறுதி கொண்டிங்கு நிற்கின்றேன் நாதாநீ சொல்வதையே செய்வேன் தொடுத்து. 73 அச்சுதா, தேவரீரின் திருவருளால் எனக்கு மதிமயக்கம் நீங்கிவிட்டது; மிச்சமில்லை. மெய்யுணர்வு மீண்டுவரப்பெற்று அசையாத உறுதியுடன் இங்கு நிற்கின்றேன். குருநாதா? தேவரீர் சொல்வதையே தொடுத்து முடிக்கின்றேன்.
மோகம் மதிமயக்கம். அத். 1 : 47. மெய்யுணர்வு மீண்டு வரப் பெறுதல் போர்க்களத்தில் இழந்துவிட்ட அரச தருமம் பற்றிய சுயநினைவு மீண்டுவருதல். அத். 2 : 3 - 6. நல்லுறுதி கொண்டு நிற்றல் யுத்தமுனையில் நெகிழ்ந்துவிட்ட மனத்திடம் மீண்டும் தோன்றி உறுதியடைதல். அத். 2: 7. இங்கு நிற் கின்றேன் என்ற வார்த்தை மனம் திகைத்துத் தேர்த்தட்டில் இருந்தவன், "எழுந்திராய்; கடமையைச் செய்வாய்" என்று பகவான் கூறிய உபதேச மொழிகளால் மெய்யுணர்வு பெற்றுக் கடமையைச் செய்தற்கு உடன்பட்டமையைக் குறிக்கும். அத், 3 : 30. ܂- -
நாதா நீ சொல்வதையே செய்வேன் தொடுத்து என்பது அருச்சுனனின் அறுதியுரை. கடமை செய்வதில் வரும் இடை யூறுகளையெல்லாம் தேவரீரின் ஆணைவழி நின்று மேற்கொண்டு தொடுத்து முடிப்பேன் என்னும் பொருளுடையது. தொடுத்து என்னும் சொல், இடையிற் கைவிடாமல் என்னும் பொரு ளுடன், அம்பு தொடுத்து என்னும் பொருளையும் தந்து, வெறு நிலத்தில் எறிந்துவிட்ட கூரம்பையும் வில்லையும் மீண்டும் கையி லெடுத்துக்கொண்டு நிற்பதையும் குறிக்கின்ற பிரயோகம் உடையதாகும். எல்லாம் கண்ணனின் மாயாசத்தியின் ஆட்டமே. கீதையுபதேசம் பார்த்தனுக்கு அனுபவ ஞானப் பயனுயிற்று. ர& ه 4 3 - س2 3 : ll ۰ ژانویه
2ஆம் அத்தியாயம் 2ஆம் செய்யுளிலே ' காரியத்தே கைகலக்கும் காலைக் கலங்குவைநீ; இக்கலக்கம் எங்கிருந்து உன்பால் எய்தியது? " என்று தொடங்கிய வின, 18ஆம் அத்தி

Page 82
30 பகவத்கீதை வெண்பா
யாயம் 72ஆம் செய்யுளிலே "உன் அறியாமை தொலைந்ததோ ? சிந்தை தெளிந்ததோ?’ என்னும் விஞவரையும் கலந்துரையாட லாக விரிவுபெற்று, 73ஆம் செய்யுளிலே மோகம் ஒழிந்தது என்னும் தெளிவான விடையுடன் நிறைவுறுகின்றது. மோகம் ஒழிதலே கீதைப்பயன் என உணர்க.
சஞ்சயர் : மன்னவா வாசவற்கும் வாழிமகான் பார்த்தனுக்கும் இன்னே நிகழ்ந்த இனியவுரை - என்பயன்செய் மெய்விதிர்க்க ஆனந்தம் மேலிட்டுக் கேட்டேன்யான் ஐயஇது பேரதிச யம். 74
அரசே, அவதார புருஷராகிய கண்ணபிரானுக்கும், மகாத்துமாவாகிய அருச்சுனனுக்கு மிடையே இவ்வாறு நிகழ்ந்த இனிய உரையாடலை எனது புண்ணியம் செய்த உடல் புளகங் கொள்ள ஆனந்தம் மேலிட்டுக் கேட்டேன். ஐயனே, இது பெரிய அதிசயம்.
வாசவன்-அண்ட சராசரங்களெங்கும் வாசமாயிருப்பவன். கண்ணனை அவதார புருஷராகக் கண் டமையால் வாசுதேவன் என்னும் திருநாமத்தை உச்சரிக்கின்ருர் சஞ்சயர். விசுவரூப தரிசனப் பேறுபெற்ற மேன்மையுடையவன் ஆதலால் அருச் சுனனை மகாத்துமா என உயர்த்திச் சொல்லுகின்றர். மகான் என்பதைக் கண்ணபிரானுக்கு அடையாக்குவது அவரது அவ தார மகிமைக்கும் பரத்துவத்துக்கும் பொருந்தாது. வாழி அசைச்சொல்,
மெய்விதிர்த்தல் மெய்ப்பாடு உண்டாதல். இரண்டு பொருள் களின் சம்பந்தத்தால் மூன்ரும் ஆளிடத்தில் உண்டாவதே மெய்ப்பாடு. மெய்-உடம்பு. பாடு-உண்டாதல். இங்கே கிருஷ்ண பரமாத்துமாவும் அருச்சுன மகாத்துமாவும் கூடிய கூட்டத்திற் பிறந்த அதிசயத்தைக் கண்டதால் மூன்றம் ஆளாகிய சஞ்சய ரிடத்தில் மெய்ப்பாடு தோன்றியமை காண்க. தாம் செய்த புண்ணியத்தைத் தமது உடல் செய்த புண்ணியம் என்றர். இது 2 ша, трић.
வித்தகராம் மேலோர் வியாசரரு ளால்யானும் உத்தமமாம் தெய்வீக யோகமிதைப்-பத்தியால் உண்மகிழ்ந்து யோகே சுரன் கண்ணன் வாய்க்கேட்டேன் கண்செய்த புண்ணியத்தாற் கண்டு. 75 வேத வித்தகரும் மேலோருமாகிய வியாசரின் அருளால் சிறியேனும், மிக மேலான இந்தத் தெய்வீக யோகத்தை

ஞான யோகம் 131
யோகேசுரனகிய கண்ணபிரானின் திருவாயிலிருந்து, என் கண்கள் செய்த புண்ணியத்தால் நேரே கண்டு மனம் மகிழ்ந்து கேட்கும் பேறு பெறலானேன்.
தாம் செய்த புண்ணியத்தைத் தம் கண்கள் செய்த புண்ணிய மென்றர். இதுவும் உபசாரம், யோகேசுரன்-அறிதுயில் செய் பவன்.
'சந்திரன் ஒடுங்கி நிற்பத் தபனனே சரிக்கு மாறு
பந்தனை யிலாதான் யோகத் துயில்வரப் பள்ளி கொண்டான் ?
(வில்லிபாரதம்)
அரசபெரு மானே அருளாளன் கண்ணன் திருவுடைய பார்த்தனென்று சேர்ந்தே-உரையாடும் புண்ணியஞ்சேர் அற்புதமாம் பொன்மொழியால் உள்மகிழும் எண்ணுதொறும் மென்மேல் எனக்கு. 76
அரச பெருமானே, அருளாளராகிய கண்ணபிரானும், திருவாளனுகிய அருச்சுனனும் ஒன்றுகூடியிருந்து உரையாடிய புண்ணியம் வாய்ந்த அற்புதமான பொன்மொழிகளைக் கேட்ட எனக்கு அவற்றை நினைக்க நினைக்க மனமகிழ்ச்சி மேன்மேல் வளருகின்றது.
பூமி புரவலனே புண்ணியனம் கண்ணபிரான் வாமன் வடிவழகை மாந்தியே - நாமம் நினைந்து நினைந்தட்ங்கா நீள்வியப்புக் கொண்டேன் மனமகிழ்ச்சிக் கில்லை வரம்பு. 77 அரசே, புண்ணியராகிய கண்ணபிரானின் வடிவே அழகு; அழகே வடிவு என்னும் திருவுருவைக் கண்ணுற் பருகி, அப் பெருமானின் திருநாமத்தை நினைந்து நினைந்து அடங்காத பெருவியப்புக் கொண்டேன். எனது மனமகிழ்ச்சிக்கு எல்லையில்லை.
எங்கிருப்பான் யோகே சுரன் கண்ணன் எம்பெருமான் எங்கிருப்பான் வில்விசயன் எம்மரசே-அங்குதான் மங்களம் வெற்றி வளர்செல்வம் நன்னிதி தங்குமென்ப தென்சித்தாந் தம். 78 எம் அரசே, யோகேசுரணுகிய எம்பெருமான் கண்ணபிரான் எங்கே எழுந்தருளி யிருப்பாரோ வில்லாளியாகிய அருச்சுனன் எங்கே வீற்றிருப்பானுே; அங்குதான் மங்களமும், வெற்றியும் வளர்கின்ற செல்வமும், நல்ல நீதியும் நிலைத்திருக்கு மென்பது எனது முடிபான கொள்கையாகும்.

Page 83
132 பகவத்கீதை வெண்பா
கருமயோகம், பக்தியோகம், ஞானயோகம் என்னும் மூன் றுக்கும் ஈசுவரன் கண்ணபிரானே. இம்மூன்றையும் அப்பெருமா னிடம் நேர்முக உபதேசமாகப் பெற்று யோகசித்தி கண்டவன் அருச்சுனன். இம்மூன்று யோகமும் பிரவிருத்தி மார்க்கம் நிவிர்த்தி மார்க்கம் என்னும் இரண்டுக்கும் ஏற்ற எல்லா நற் பேறுகளையும் தருவன. gy
யோகேசுரனன கண்ணபிரானே, மகாத்துமாவான அருச் சுனனே மக்களின் மனத்த கத்தே அல்லது மனையகத்தே அல்லது அலுவலகத்தே எங்கேயிருந்தாலும் அங்கே நல்ல யோக மடிக்கும். இது நம்பிக்கை.
மங்களம் வீரத்திரு, செல்வத்திரு, கல்வித்திரு இவற்றின் அதிதேவதைகளின் அருள் நோக்கம். வெற்றி காரிய சித்தி; இகபரசுகப் பேறு. வளர்செல்வம் ஆக்கப் பேறு; வீரம், கல்வி, செல்வம், சுகானுபவம் பல்கிப் பெருகி நிலைத்தல். நன்னீதி சமாதானம் தந்து நிலைக்கின்ற சமநீதி. அங்கு எல்லாரும் இன்புற்று வாழ்வர்; எல்லாமும் இன்புற்று வாழும்.
இத்துடன் 701 செய்யுள்களால் பகவத்கீதா சாத்திரம் இனிது நிறைவுறுகின்றது. இத்தொகையெண்ணும் ஒரு சிறப்புத் தோன்ற நிற்கின்றது. செய்யுள்கள் ஒற்றைப்பட முடிந்து நிற்பது எழு-எழுந்து நில் நூறு-அகப்புறப் பகைவர்களைக் கொல்; ஒன்று-பரமாத்துமாவுடன் ஒன்ருகிவிடு என்னும் இந் நூற்பொருள் முழுதும் ஈற்றிலே குறிப்பாகப் புலப்படும்வண்ணம் எழுநூற்றென்று என்னும் செய்யுள் தொகை அமைந்துநிற்ப தாக என் மனவுணர்வுக்குத் தோன்றுகின்றது. பகவத்கீதை திருவருட் பிரசாதம்.
பதினெட்டாம் அத்தியாயம் மோட்ச சன்னியாச யோகம் நிறைவுற்றது. செய்யுள் 212. ஞானயோகப் பகுதி முற்றிற்று. பகவத்கீதா சாத்திரம் சம்பூரணம். செய்யுள் 701. உன் கடமையையும் உடைமையையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்து அன்புடன் அவனைச் சரண் புகுந்து அசையாது நில், ஆறுதலடைவாய்.


Page 84
ஆசிரியர் இயற்றிய
பிற நூல்கள்
பகவத்கீதை வெண்பா-கரு பகவத்கீதை வெண்பா-பக் சீவகசிந்தாமணி-பாலசரிை விபுலாநந்தர் மீட்சிப்பத்து மண்டுர்ப் பதிகம் கொக்கட்டிச்சோல் தான்தே சிற்ருண்டிப் பதிகம் மாமாங்கப் பதிகம் சர்வ சமய சமரசப் பதிகம்
திருமகள் அழுத்தகம், சுன்னுகம்

மயோகம் தியோகம் த நாடகம்
ன்றிசுரர் பதிகம்
விலை: ரூபா/உ00
976
.17