கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தந்தையின் பரிசு

Page 1

·-
|-

Page 2

தந்தையின் பரிசு
கலாநிதி ஆ. கந்தையா எம்.ஏ. (சென்னை) பி.எச்.டி.(இலண்டன்)
சிரேட்டவிரிவுரையாளர் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
கல்விச் சேவைக் குழு உறுப்பினர், கல்வி அமைச்சு
1986

Page 3
பதிப்புரிமை பெற்றது. முதற் பதிப்பு: ஒக்ரோபர், 1986.
விற்பனை உரிமை ஆசிரியருக்குரியது.
බෝරිණි) ரூபாய் 30/-
Copyright reserved
First Edition: October 1986 Printed at STARLINE PRINTERS, Colombo-14.

முன்னுரை
*தொலைக் கல்வி முறை பற்றிப் படிப்பதற்குப் பொதுநல வரசுப் பல்கலைக்கழகங்களின் ஆணைக்குழு, 1984ஆம் ஆண்டு புலமைப்பரிசில் ஒன்றை எனக்கு வழங்கியது. 1984 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் தொடக்கம் பத்து மாதங்களுக்கு, பிரித்தானியாவிலுள்ள திறந்த பல்கலைக்கழகத்திற் படிப்ப தற்கு இப்புலமைப்பரிசில் இடமளித்தது. புதுமையான பல்கலைக்கழகம் ஒன்றிற் புதிய ஒரு கல்வி முறைபற்றிப் படிப்பதற்கு வாய்ப்பளித்த பொதுநலவரசுப் பல்கலைக்கழகங் களின் ஆணைக்குழுவிற்கு முதலில் நன்றி கூறிக்கொள்ள வேண்டியது எனது கடமையாகும்.
புலமைப்பரிசிலை ஏற்று எனது மனைவி மக்களுடன் பிரித் தானியாவிற்குப் புறப்படுவதற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்தேன். இலங்கையை விட்டுப் புறப்படு வதற்கு இரண்டு வாரங்கள் மட்டும் இருந்தன. ஒரு நாள் அதிகாலை 5.00 மணியளவிலே தொலைபேசி மணி ஒலித்தது. படுக்கையிலிருந்து எழுந்துசென்று, * யார் பேசுவது?’’ என்று கேட்டேன். * மலேசியாவிலிருந்து சுவாமி சாந்தா னந்தா பேசுகின்றேன்' என்ற அருள்வாக்கு என்னை வியப் படைய வைத்தது. திருவருளின் செவ்வியைப் போற்றித் துதித்துக்கொண்டு, **வணக்கம் சுவாமி!' என்றேன்.
**நீ பிரித்தானியாவிற்குப் போவதாக அறிந்தேன். இலங் கையிலுள்ள இனப் பிரச்சினை தீர்வதற்குச் சில ஆண்டுகளா வது ஆகும். ஆகவே, நீ பிரித்தானியாவுக்குப் போய்விட்டுச் சிங்கப்பூருக்கு வந்துவிடு, மனைவியையும் குழந்தைகளையும் இப்போதே சிங்கப்பூருக்கு அனுப்பி வை. ஜெயலட்சுமி கொழும்பிலே மேற்கொண்ட பணியைச் சிங்கப்பூரிலே செய் யட்டும். அங்குள்ள கலாலயத்திற் பரத நாட்டியம் படிப்பிக் கலாம். குழந்தைகளும் அங்கே படிக்கலாம். எல்லா வசதி களும் செய்து கொடுக்கப்படும். கவலைப்படாதே!’ என்று சுவாமிகளின் அருள்வாக்குப் பணித்தது.

Page 4
"சுவாமிகளின் அருள்வாக்கின்படியே அமையட்டும்" என்று கூறி இறைவனின் திவ்விய திருவருளை வியந்து நின் றேன். அதன்படி 1984 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 23ஆம் தேதி மனைவியும் மக்களும் சிங்கப்பூருக்குச் சென் றனர். அவர்களை வழியனுப்பிவிட்டு, 24ஆம் தேதி நான் பிரித்தானியாவுக்குப் பயணமானேன்.
மனைவியையும் மக்களையும் பிரிந்து பத்து மாதங்கள் பிரித் தானியாவிலுள்ள மில்றன் கீன்ஸ் (Milton keynes) என்ற நகரத்திலே தங்கியிருந்தேன். புதிய நகரம். தனிமையை விரும்புவோர்க்கு அமைதியைக் கொடுக்கும். தனிமையை விரும்பாதார்க்கு நரகம் போன்றது. எனவே, மில்றன் கீன்ஸில் வாழ்ந்த பத்து மாதங்கள், பத்து ஆண்டுகள் போல எனக்குத் தோன்றின. அந்த நீண்ட காலப் பகுதியில் ("குடை யின் கதை' என்ற கடிதத்தைத் தவிர்த்து) அவ்வப்போதுஎ(புதியவையே இக்கடிதங்கள். இவற்றுள் சில திறந்த பல்கலைக்கழகத்திலிருந்து எழுதப்பட்டவை; பல மில்றன் கீன்ஸ் பொது நூலகத்திலிருந்து வரையப்பட்டவை. வேறு சில மில்றன் கீன்ஸ் சந்தை நிலையத்துக்கு அண்மையில் நான் தங்கியிருந்த வீட்டிலிருந்து தீட்டப்பட்டவை. இறுதியாக வுள்ள கடிதம் கொழும்பிலிருந்து எழுதப்பட்டது. ஒவ்வொரு கடிதத்துக்கும் பொருத்தமான ஒவ்வொரு தலைப்புக் க்ொடுக் கப்பட்டுள்ளது.
இக்கடிதங்கள் பற்றவர்களுக்கும்-சிறப்பாக மேல் வகுப் பிற் கல்வி கற்கும் மாணவர்களுக்கும்-பயனுள்ளவையாக அமையும் போலத் தோன்றின. எனவே, அவற்றை விரித்தும் விளக்கியும் எழுதி நூல் வடிவில் வெளியிட எண்ணினேன்.
இக்கடிதங்களிலே இடம்பெறுபவை எனது சொந்தக் கருத்துக்கள். எனக்கு உண்மைகள் போலவும் சரியானவை போலவும் தோன்றியவற்றை எழுதியுள்ளேன்; கண்டவற்றை /ம் கேட்டவற்றையும் கடிதங்களாகத் தந்துள்ளேன். அவை 'க் (க எற்புடையனவாக இருக்கலாம்; வேறு சிலருக்கு

ஒவ்வாதனவாகத் தோன்றலாம். எப்போதும் எவையும் எவ ருக்கும் ஏற்புடையனவாக இருப்பதில்லையே! எனவே, குறை களை விட்டு நிறைகளைக் காணுமாறு வேண்டுகின்றேன்.
இந்நூலிலே இடம்பெறும் கடிதங்களின் கையெழுத்துப் பிரதிகளை வாசித்தும் ஒப்புநோக்கியும் உதவிபுரிந்த கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தைச் சேர்ந்த பதிப்பாசிரியர் திரு. ந. வாகீசமூர்த்தி அவர்களுக்கு எனது நெஞ்சு நிறை ந்த நன்றி.
கையெழுத்துப் பிரதிகளை வாசித்துத் தமது கருத்துக் களைக் கூறி ஊக்குவித்ததோடு, "தந்தையின் பரிசு" என்ற பெயரையும் சூட்டிய தினபதி ஆசிரியர், அன்புக்குரிய நண்பர் திரு. எஸ். ரி. சிவந்ாயகம் அவர்களுக்கும் என் உளங்கனிந்த நன்றி.
ஆ. கந்தையா
திறந்த பல்கலைக்கழகம், நாவலை,
நுகேகொடை, 1903. 1986.

Page 5
உள்ளே.
I 0.
Il Il .
12.
l3.
14.
15.
16.
7.
18.
19.
20.
அறிமுகம் புதிய நகர் பிரித்தாளும் பிரித்தானியர் இலையுதிர் காலம் நேர்மையும் உண்மையும் தொழில் மகத்துவம் கடுங்குளிர் காலம் வரிசை முறைமையும்
வீதியொழுங்குகளும் கட்சி ஆட்சி முறை தலை அலங்காரம் சாதி முறைமை இலண்டன் தமிழர் கிராம வாழ்க்கை மொட்டைக் கடிதம் இலைதுளிர் பருவம் மொழிப் பற்று அன்பளிப்பு பேச்சாளர் மூலை அழையா விருந்து குடையின் கதை
O
O
பக்கம்
H 2
18
23
30
37
43
50
57
63
69
76 .
84
90
96
... 102
108
14
120

அறிமுகம்
இலண்டன், பிரித்தானியா, 26. 09. 1984.
அன்புள்ள சுதர்சன்,
அம்மாவும் தங்கையும் நீயும் நலனே சென்று, சிங்கப்பூரை அடைந்திருப்பீர்களென நம்புகின்றேன்.
நேற்றுக் காலை இலண்டன் வந்து சேர்ந்தேன். இலண்டன் விமான நிலையத்தில் நண்பர் ஒருவர் என்னை வரவேற்ருர். அங்கிருந்து விக்ரோறியா ரெயில் நிலையத்துக்குச் சென்ருேம். அங்குள்ள பிரித்தானிய சங்க (British Council) அலுவலகத் தில் எனது வருகையைப் பதிவுசெய்து கொண்டேன். மில்றன் கீன்ஸ் ( Milton Keynes) நகரத்துக்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுள் போக வேண்டும். அதுவரை இலண்டனிலேயே தங்குவதற்குப் பிரித்தானிய சங்கம் ஒழுங்குகளைச் செய்துள்ளது.
பிரித்தானிய திறந்த பல்கலைக்கழகம் மில்றன் கீன்ஸ் நகரத்திலே இருக்கிறது. அப்பல்கலைக்கழகத்திலேதான் நான் பத்து மாதங்கள் ஆராய்ச்சி செய்யவுள்ளேன். அங்கு போவ தற்கு இங்கிருந்து 50 மைல் தூரம் பயணஞ் செய்ய வேண்

Page 6
டும். ரெயிலிற் போகலாம்; அல்லது பஸ் வண்டியிற் செல்ல லாம். மில்றன் கீன்ஸ் புதிதாக அமைக்கப்பட்ட ஒரு நகரம். அங்கு எனக்கு எவரையுமே தெரியாது. பல்கலைக்கழகத்திலே தங்குவதற்கு விடுதி எதுவும் இல்லையெனக் கூறுகின்றனர். எனவே, பல்கலைக்கழகத்துக்கு வெளியேதான் தங்கவேண்டும்.
இன்று பகல் இலண்டன் மாநகரிலுள்ள சில இடங் களைச் சென்று பார்த்தேன். 1970-74 ஆம் ஆண்டு களிலே காணப்பட்டது போலவே இப்போதும் இலண்டன் மாநகரம் இருக்கின்றது. சென்ற இடங்களிற் புதிதாக எவற்றையும் நான் கண்டு கொள்ளவில்லை. ஆனல், பழைய நினைவுகள் மனத்திரையிலே தோன்றி மறைந்து கொண் டிருந்தன. இன்று நான் சென்று வந்த இடங்களுக்கு 1970-74 ஆம் ஆண்டுகளில் உன்னையும் அழைத்துச் சென்றிருக்கின்றேன். அப்போது நீ சிறிய குழந்தையாக இருந்தாய்; எனவே, உனக்கு இலண்டன் மாநகரத்தைப் பற்றி எதுவுமே நினைவிருக்காது. ஆனல், இப்போது நீ வளர்ந்து விட்டாய். என்னுடன் நீயும் வந்திருந்தால் இங்கு பலவற்றைப் பார்த்து மகிழ்ந்திருக்க முடியும். அதே போலத் தங்கையும் மகிழ்ந்திருப்பாள். எனினும், நீங்கள் இங்கு விடுமுறைக்கு வரும்போது இலண்டன் மாநகரைப் பார்க்கக் கூடியதாக இருக்கும்.
இலண்டனைப் போலவே சிங்கப்பூரும் சிறந்த ஒரு நகரம்; எழிலும் ஏற்றமும் உடையது. சிறிய நகரமாக இருந்தாலும் பல சிறப்புக்களைத் தன்னகத்துக் கொண்டது. ஆகவே, சிங்கப்பூரிலே நீங்கள் தங்கியிருக்கும்போது அவற்றையெல் லாம் கண்டுகளிக்கக் கூடியதாக இருக்கும்.
இன்று, காலை உணவை முடித்துக் கொண்டு இலண்டன் பல்கலைக்கழகத்துக்குச் சென்றேன். 1970-74 ஆம் ஆண்டு களில் இப்பல்கலைக்கழகத்தில் கீழைத்தேய, ஆபிரிக்க நாடு களுக்கான கற்கைப் பிரிவிலே நான் ஆராய்ச்சி மாணவனுக வும் ஆராய்ச்சி உதவியாளனுகவும் இருந்தேன். விடுமுறைக்
2

காலமாக இருந்தமையால் நான் அங்கு சென்றபோது பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் இருக்கவில்லை. வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் சிலரை மட்டும் காண முடிந்தது. அவர்களுள்ளே எனக்குத் தெரிந்தவர்களாக எவருமிலர். மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுள் இவர் களும் தத்தம் படிப்பை முடித்துக் கொண்டு தத்தம் நாடு களுக்குச் சென்றுவிடுவர். அதன் பின்னர் புதிய மாணவர் கள் வந்து சேர்வர். இவ்வாறு இங்கு படித்துப் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கைக்கு அளவேயில்லை!
கீழைத்தேய, ஆபிரிக்க நாடுகளுக்கான கற்கைப் பிரிவி லுள்ள நூலகத்துக்குச் சென்றேன். அங்கு எனக்குத் தெரிந்த பலர் இப்போதும் வேலை செய்கின்றனர். அவர்க ளோடு பேசிப் பழைய தொடர்பை நினைவுபடுத்திக் கொண் டேன். இந்த நூலகத்திலே பெருந்தொகையான பெறுதற் கரிய நூல்கள் இருக்கின்றன. கீழைத்தேய மொழிகளிலும் ஆபிரிக்க மொழிகளிலும் எழுதப்பட்ட நூல்களை இங்கு பெற்று வாசிக்க வாய்ப்புண்டு. இலக்கியம், இலக்கணம், சமயம், சமூகம், சட்டம் போன்ற துறைகளைச் சார்ந்த நூல்களே இந்நூலகத்திற் பெருந்தொகையாக இருக்கின்றன.
ஆசியாவிலும் ஆபிரிக்காவிலுமுள்ள பல நாடுகளை ஆங்கிலேயர் ஆட்சி செய்தனர் என்பதை நீ அறிவாய். அவ்வாறு அவர்கள் ஆட்சி செய்த காலத்திலே அந்த நாடு களிலுள்ள பழைமையான நூல்களையும் ஏட்டுச் சுவடிகளையும் இங்கு கொண்டுவந்து சேர்த்துள்ளனர். தமிழ் நூல்களும் பெருந்தொகையாக இருக்கின்றன. தமிழகத்திற் பெற்றுக் கொள்ள முடியாத நூல்களைக்கூட இங்கு பார்க்கக் கூடிய தாக இருக்கிறது. ஆக்கியோர் பெயரும் அச்சிட்டோர் பெயருமில்லாத நூல்களும் உண்டு. பழைய பதிப்புக்களும் புதிய பதிப்புக்களும் பலவுள. புதிதாக வெளிவரும் நூல் களையும் வரவழைக்கின்றனர். எனவே, தமிழ் இலக்கியத்தில் ஆராய்ச்சி செய்வோருக்குச் சுரங்கமாக இந்நூலகம் விளங்கு கின்றது.

Page 7
மத்தியான உணவை முடித்துக் கொண்டு வெளியே வந் தேன். இலண்டன் மாநகரில் இன்னும் சில இடங்களைப் பார்த்துவிட்டு விடுதிக்குத் திரும்பலாமென எண்ணினேன். சிலர் தனியாகவே பயணஞ் செய்து இடங்களைப் பார்க்க விரும்புகின்றனர். என்னுல் தனியே சென்று எதையும் பார்த்து அனுபவிக்க முடியாது. இன்னும் ஒருவர் என் னுடன் வந்திருந்தால் மன மகிழ்ச்சியோடு பல்வேறு இடங் களையும் பார்த்து மகிழக் கூடியதாய் இருந்திருக்கும். எனக்குத் தெரிந்த இடங்களாக இருந்தபோதிலும் தெரிந்த வர்கள் எவரும் இல்லையே! எனினும், தனியே சென்று முக்கியமான இடங்களைப் பார்க்க எண்ணினேன்.
முதலிலே இலண்டன் பாலத்தைப் பார்க்கச் சென்றேன். அங்கிருந்து தேம்ஸ் நதிக் கரையோரமாக நடந்தேன். வெளி நாடுகளைச் சேர்ந்த உல்லாசப் பயணிகள் பலர் அங்கே உலா வந்தனர். தேம்ஸ் நதியின் தோற்றமும், அங்கே மிதந்து செல்லும் சிறிய கப்பல்களும், இரு பக்கங்களிலும் வான ளாவி நிற்கும் கட்டடங்களும் கண்கொள்ளாக் காட்சி களாகும். அங்கு வந்தோரிற் சிலர் இக்காட்சிகளைப் படம் பிடித்துக் கொண்டனர்; நதிக் கரையோரமாகக் காதலர் கை கோத்து உலா வந்தனர். அமைதியான இடத்திலே அமர்ந்திருந்து வேறு சிலர் தேம்ஸ் நதிக் காட்சிகளை ஒவியங்களாகத் தீட்டினர்.
பஸ் வண்டியில் ஏறி அங்கிருந்து பிரித்தானிய பாராளு மன்றத்துக்குச் சென்றேன். அங்கிருந்து பக்கிங்காம் மாளி கைக்கு நடந்து போனேன்.போகும் வழியில் நீரோடைகளை யும் பூமரக் காடுகளையும் கண்டு களித்தேன். இவற்றை எல் லாம் கண்டு மகிழ்வதற்கு அம்மாவும் நீயும் தங்கையும் இங்கு என்னுடன் வரவில்லையே என்று கவலை கொண்டேன்.
வீதியில் நடந்து சென்றபோதும் பூமரக் காடுகளினூடே போனபோதும் நான் கண்டவற்றையெல்லாம் கடிதங்களாக
'4.

உனக்கு எழுத வேண்டும் போலத் தோன்றியது. இன்னும் பருவ காலங்கள், மக்களின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் என்பன குறித்தும், அரசியல் நிலைபற்றியும் எழுத வேண்டுமென என் மனம் விழைந்தது. ஆகவே, இங்கு தங்கி இருக்கும் பத்துமாத காலத்திற் பல கடிதங்களை உனக்கு எழுத எண்ணியுள்ளேன். அக்கடிதங்களை நீ வாசிப் பதோடு தங்கையும் அறிந்துகொள்ள உதவுவாயென எதிர்பார்க்கின்றேன்.
அன்புள்ள, அப்பா.

Page 8
2
புதிய நகர்
சந்தை நிலையம்,
மில்றன் கீன்ஸ்,
பிரித்தானியா, 14. 1 0.1984.
அன்புள்ள சுதர்சன்,
மில்றன் கீன்ஸ் நகருக்கு வந்து இரண்டு வார காலமா கிறது. இப்போதும் இலங்கை நண்பரின் வீட்டிலேயே தங்கி யிருக்கின்றேன். வெள்ளைக்காரர்களின் வீடுகளில் வாடகைக்கு அறை எடுப்பது மிகவும் கடினம். கறுப்பு நிறமுடையவர் களுக்கு அறையையோ வீட்டையோ வாடகைக்குக் கொடுக்க மாட்டார்கள். நீங்கள் இங்கு வருவதாக இருந்தால் முன் கூட்டியே எனக்கு எழுத வேண்டும். ஏனெனில், இங்கு வாடகைக்கு வீடு பெற்றுக்கொள்வது கல்லிலே நார் உரிப் பது போலத்தான் இருக்கும்.
இலண்டன் மாநகரத்திலிருந்து 50 மைல் தூரத்தில் மில்றன் கீன்ஸ் இருக்கிறது. எம்1 என்ற மோட் டார் வழி (MotorWay) மில்றன் கீன்ஸ் பக்கமாக வடக்கு நோக்கிச் செல்கின்றது. வடக்கு நோக்கிச் செல் கின்ற ரெயில் பாதையும் இந்நகரத்திற்கு ஊடாகவே போகின்றது. ஆகவே, இங்கிருந்து இலண்டனுக்குப் பஸ் வண்டியிலும் போகலாம்; ரெயில் வண்டியிலும்
6.

செல்லலாம். கடுகதி ரெயிலிற் பயணஞ் செய்தால், அரை மணி நேரமாகும்; பஸ் வண்டியிற் சென்றல் ஒன்றரை மணி நேரஞ் செல்லும்.
பிரித்தானியாவிற் பல மோட்டார்வழிகள் இருக்கின்றன. இவற்றுள் எம்1 மோட்டார்வழிதான் முதன்முதல் அமைக் கப்பட்டதாகும். போவதற்கு ஒன்று, வருவதற்கு இன்னென் ருக இரண்டு பாதைகள் பக்கம் பக்கமாக இருக்கின்றன. ஒரு பாதையில் மூன்று வரிசையாக வாகனங்களை ஒட்ட முடியும். வாகனங்களை வெவ்வேறு வேகத்திலும் வெவ்வேறு வரிசையிலும் செலுத்தலாம். 75 மைல் வேகத்துக்குக் குறை யாமல் வாகனங்களை ஒட்டுவதற்கென ஒரு வரிசை ஒதுக்கப் பட்டுள்ளது. சாரதிகள் வீதி ஒழுங்குகளை நன்கு கடைப் பிடிக்கின்றனர். ஒழுங்குகளை மீறுவோர் தண்டிக்கப்படுவர். அரச குடும்பத்தினரும் தண்டனைக்குள்ளானது உண்டு. மோட்டார்வழி செவ்வனே அமைக்கப்பட்டு, கட்டுப்பாடும் ஒழுங்கும் பேணப்படுவதால் வேகமாகக் கார்களை ஒட்டி விரைவிற் பயணஞ் செய்யக் கூடியதாக இருக்கிறது.
மில்றன் கீன்ஸ் புதிய ஒரு நகரம். இலண்டனிலுள்ள நெருக்கடியைக் குறைப்பதற்காக இந்த நகரம் 1976 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இலண்டனிலுள்ளது போன்ற பெரிய மாடிக் கட்டடங்கள் இங்கே கிடையா. வாகன நெருக்கடியுமில்லை; சனக்கூட்டமும் குறைவு. இந்த நகரம் இப்போது அமைந்துள்ள பிரதேசம், முன்னர் பெரிய, பரந்த விளைநிலமாக இருந்தது; ஆங்காங்கே சில கிராமங்கள் மட்டும் இருந்தன. அக்கிராமங்கள் இப்போதும் இருக்கின் றன.
மில்றன் கீன்ஸ் நகரம் பல குடியிருப்புக்களைக் கொண்டது. அக்குடியிருப்புக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர் கொடுத்துள்ளனர். ஒவ்வொரு குடியிருப்பிலும் நூற்றுக்கணக் கான வீடுகள் உள. சிங்கப்பூரில் இட நெருக்கடி காரண
7

Page 9
மாகப் பல மாடிகளைக் கொண்ட வானளாவிய வதிவிடங் கள் கட்டப்பட்டிருப்பதாக எழுதியுள்ளாய். ஆணுல், இங்கு அப்படியான வதிவிடங்கள் இல்லை. ஒரு மாடி கொண்ட தொடர் வீடுகளாக வதிவிடங்கள் கட்டப்பட்டுள்ளன. தனித்தனி வீடுகளும் பல உள. புதிதாகவும் வீடுகள் கட்டப் படுகின்றன. குடியிருப்புப் பகுதிகள் ஒவ்வொன்றுக்கும் பல வசதிகள் செய்து கொடுத்துள்ளனர். பாடசாலை, பொது விளையாட்டு மைதானம், சமூக நிலையம், வயோதிபர் விடுதி, நூல்நிலையம், கடைகள் என்பன ஒவ்வொரு குடி யிருப்பிலும் உண்டு.
குடியிருப்புக்களை இணைத்துத் தெருக்களும் நடைபாதை களும் அமைக்கப்பட்டுள்ளன. பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்து அதிகம். அதனுல் நடந்து செல்வோருக்குப் புறம்பான நடைபாதைகளும் உண்டு. சைக்கிள் வண்டியிற் சவாரி செய்பவர்களுக்கும் தனியான பாதைகள் இருக்கின் றன. இக்காரணங்களால் விபத்துக்கள் ஏற்படுவது குறைவு. நகரத்தை அழகு செய்யப் பெருந்தொகையாக மரங்களை நாட்டியுள்ளனர். அவைகளும் வீடுகளைப் போலச் சிறியன வாகவே காணப்படுகின்றன. அவை பெரிய மரங்களாவதற்கு இன்னும் பத்து ஆண்டுகளாவது செல்லுமென எண்ணுகின் றேன். நகரத்தின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு எல்லாவற்றையும் திட்டமிட்டு ஒழுங்கான முறையிற் செய்து வருகின்றனர். ஆகவே, எதிர்காலத்தில் இந்நகரம் சிறந்த முறையில் வளர்ச்சியடையுமென்று துணிந்து கூறலாம்.
வீதிகளும் தெருக்களும் அமைக்கப்பட்டுள்ள முறையினல் திசைகளையும் வழிகளையும் சரியாகக் கண்டுகொள்ள முடியா திருக்கிறது. அதனுல் எங்கு பார்த்தாலும் திசைகாட்டிகளும் வழிகாட்டிகளுமாகவே காணப்படுகின்றன. இன்னுெரு வகையாகக் கூறின், இடப் பெயர்கள், ஊர்ப் பெயர்கள் பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகைகள் வீதிகளிலும் சந்தி களிலும் இருப்பதைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.
8

வீதிகளையும் தெருக்களையும் நன்கு பேணுகின்றனர்; துப்புர வாகவும் வைத்திருக்கின்றனர். ஆனல், நீ எழுதியதைப் போன்று சிங்கப்பூரிற் காணப்படும் அமைப்பும் அழகும் இங்கில்லை என்றே சொல்ல வேண்டும்.
மில்றன் கீன்ஸ் நகரிலே பெரிய ஒரு சந்தை நிலையம் ( Shopping Centre) இருக்கிறது. மில்றன் கீன்ஸ் நகரில் இருக்கும் மக்கள் யாவருக்கும் இதுவே மத்திய சந்தை. வெள்ளி, சனி ஆகிய நாட்களிற் பெருங் கூட்டமாக இருக்கும். இதனைப்பற்றிப் பின்னர் விரிவாக உனக்கு எழுத லாமென எண்ணுகின்றேன். இந்த இடத்தை "நகர் நிலையம்’ ( City Centre) என்றும் சொல்லுவர். சந்தை நிலையத்துக்குப் பக்கத்திலேதான் நான் தங்கியிருக்கும் வீடு இருக்கிறது. தபால் நிலையம், நூலகம், மருத்துவ நிலையம், வங்கிகள், தகவல் நிலையம், காவலர் நிலையம் ஆகியன எல்லாம் இங்கேதான் உள்ளன. ரெயில் நிலையமும் பஸ் நிலைய மும் இங்கிருந்து அரை மைல் தூரத்தில் இருக்கின்றன. பஸ் நிலையத்தை, ரெயில் நிலையத்துக்கு அண்மையில் அமைத் திருப்பது போக்குவரத்துக்கு வசதியாக இருக்கிறது. எனது வீட்டிலிருந்து நடந்து போகக்கூடிய தூரத்தில் இவை யாவும் உளதால், அன்ருட வேலைகளைச் செய்வதற்கு மிகவும் வசதி யாக் இருக்கிறது.
மில்றன் கீன்ஸ் புதிதாக அமைக்கப்பட்ட ஒரு நகரம் என்று கூறினேன். ஆகவே, இங்கொன்று அங்கொன்ருக இருந்த கிராமங்களிலுள்ள மக்களைத் தவிர, ஏனையோர் பிரித்தானி யாவின் மற்றைய பகுதிகளிலிருந்து இங்கு வந்து குடியேறிய வர்களாவர். பெரும்பான்மையோர் வெள்ளைக்காரர். ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த கறுப்பர், மேற்கு இந்தியர், இந்தியர், பாகிஸ்தானியர் என்போரும் உளர். விரல்விட்டு எண்ணக் கூடிய தொகையான இலங்கையரும் இருக்கின் றனர்.
இங்கு, உள்ளூர் ஆட்சியாளர் வீடுகளைக் கட்டி விற்கின்
றனர்; வாடகைக்கும் கொடுக்கின்றனர். ஆகவே, எளிதாக
9

Page 10
வீடுகளைப்பெற முடிகிறது. (என்னைப் போன்று ஒர் ஆண்டுக் காலத்திற்குப் படிக்க வருபவர்களுக்கு இந்த வாய்ப்பு இல்லை). இந்த வாய்ப்புக்களைப் பயன்படுத்திப் பலர் இங்கு வந்து குடியேறியுள்ளனர். இவர்களிற் கணிசமான எண்ணிக் கையானேர் இலண்டன் மாநகரத்தில் வேலை செய்கின்றனர். இவர்கள் ரெயிலால் அல்லது தெருவாற் பயணஞ் செய் வோராவர். சொந்தக் கார்களிற் பயணஞ் செய்வோர் ஆயிரக் கணக்காக உளர். எம்1 என்ற பாதை மில்றன் கீன்ஸ் நகரத் திற்கு ஊடாகச் செல்கின்றது என்று கூறினேன். எனவே, இலண்டனுக்குச் சொந்தக் கார்களிற் பயணஞ் செய்வது வசதியாக இருக்கிறது. அரை மணி நேரத்தில் இலண்டனைச் சென்று சேர்ந்துவிடலாம்.
உலகிற் பல நாடுகளிற் புதிய நகரங்கள் அமைக்கப்பட்டுள் ளன; இப்போதும் அமைக்கப்படுகின்றன. இலங்கையிற் புதிதாக அமைக்கப்படும் பூரீ ஜயவர்தனபுரம் பற்றி உனக்குத் தெரியும். இந்தியாவிலே புது டில்லி புதிய ஒரு நகரம். பாகிஸ்தானில் இஸ்லாமாபாத்து புதிய ஒரு நகரம். இவை யாவும் திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரங்கள். ஆகவே இந்தப் புதிய நகரங்களிலே அழகான நவீன கட்டடங்கள் இருக்கின்றன; சிறந்த வீதிகளும் தெருக்களும் இருக் கின்றன; பூங்காக்கள், நடைபாதைகள், உல்லாச விடுதிகள், போக்குவரத்து வசதிகள் என்பனவற்றைக் கொண்டுள்ளன. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலுள்ள மேலே கூறிய புதிய நகரங்கள் அந்தந்த நாட்டின் தலைநகர் களாகும். ஆனல், மில்றன் கீன்ஸ் அப்படியன்று. இலண்டனே பிரித்தானியாவின் தலைநகரம். இலண்டன் மாநகரின் நெருக் கடியைக் குறைப்பதற்காகக் கட்டப்பட்ட புதிய ஒரு நகரம் மில்றன் கீன்ஸ்.
மில்றன் கீன்ஸ் என்றதும், அங்குள்ள திறந்த பல்கலைக் கழகந்தான் எவருக்கும் நினைவுக்கு வரும். நகர மத்தியி
லிருந்து 5 மைல் தூரத்திலே திறந்த பல்கலைக்கழகம் அமைந் துள்ளது. இப்பல்கலைக்கழகம் மில்றன் கீன்ஸ் நகரம் கட்டப்
O

படுவதற்கு முன்பாகவே தாபிக்கப்பட்டது. அதாவது 1969 ஆம் ஆண்டு திறந்த பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது; மில்றன் கீன்ஸ் நகரம் ஏழு ஆண்டுகளின் பின்தான் கட்டப் பட்டது. உலகத்திலேயே முதன்முதல் தாபிக்கப்பட்ட திறந்த பல்கலைக்கழகம் இதுவாகும். இது தாபிக்கப்பட்ட பின்னரே பல திறந்த பல்கலைக்கழகங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் நிறுவப்பட்டன.
இலங்கையிலுள்ள திறந்த பல்கலைக்கழகத்தைப் பற்றி உனக்குத் தெரியும். பிரித்தானிய திறந்த பல்கலைக்கழகத்தின் மாதிரியைப் போன்றதே இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகம், பாரம்பரிய பல்கலைக்கழகத்தைப் போன்றதன்று. மாணவர் இல்லாத ஒரு பல்கலைக்கழகம். வீட்டிலிருந்து கொண்டே மேற்படிப்பை மேற்கொள்வதற்கு இப்பல்கலைக்கழகம் வாய்ப்பளிக்கின்றது. தொழில் செய்கிற வர்களும் ஒய்வு பெற்றவர்களும் இப்பல்கலைக்கழகத்திற் படிக் கின்றனர். வேலையில்லாத இளைஞர்கள் குறைவு. ஆனல், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தில், பாரம்பரிய பல் கலைக்கழகத்துக்கு அனுமதி பெறத் தவறியவர்களே அதிகம்
SGT .
பிரித்தானிய திறந்த பல்கலைக்கழகத்திற் பத்து மாத காலம் ஆய்வு மேற்கொள்வேன். எனக்கு ஒர் அறையும் தொலைபேசியும் கொடுத்திருக்கின்றனர். பெரிய நூலகம் ஒன்றும் இருக்கிறது. ஆனல் இங்கு மாணவர்கள் இல்லாத படியால் உற்சாகமும் உவப்பும் இல்லாதிருக்கின்றது. பஸ் வண்டியிற்றன் போய் வருகிறேன். நான் இருக்கும் வீட்டி லிருந்து 10 நிமிடங்களில் அங்கு போய்ச் சேர்ந்துவிடலாம். பஸ் வண்டியில் நின்று கொண்டு பயணஞ் செய்ய வேண்டிய தில்லை. அமர்ந்து அமைதியாகப் பயணஞ் செய்யப் போதிய வெற்று ஆசனங்கள் இருக்கும். இவை புதிய பஸ் வண்டி கள்; துப்புரவாகவும் இருக்கின்றன.
அன்புள்ள
அப்பா.

Page 11
3
பிரித்தாளும் பிரித்தானியர்
பொது நூலகம், மில்றன் கீன்ஸ், பிரித்தானியா, 06. 1, 1984.
அன்புள்ள சுதர்சன்,
கடந்த சில நாட்களாக இங்கு நடந்துவரும் முக்கிய மான ஒரு விடயம்பற்றி இக்கடிதத்திற் குறிப்பிட்டு எழுத எண்ணினேன். சென்ற 31 ஆந் தேதி புதன்கிழமை, பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி படுகொலை செய்யப் பட்டார். இச்செய்தியை நீயும் தெரிந்திருப்பாய். திருமதி இந்திரா காந்தியின் படுகொலை பற்றிய செய்தி உலகமெல் லாம் காட்டுத் தீ போலப் பரவியது. பாரத மக்கள் திகிலடைந்தனர்; கவலைக் கடலில் மூழ்கினர்; கண்ணிர் விட்டுக் கலங்கினர். அதே போலக் கடல் கடந்து பல நாடுகளில் வாழ்கின்ற இந்தியர்களும் துன்பமும் துயரும்
கொண்டனர்.
திருமதி இந்திரா காந்தியின் படுகொலை பற்றிய செய்தி களப் பிரித்தானிய வானெலி ஒலிபரப்பியது. தொலைக் காட்சியும் செய்திகளை ஒளிபரப்பியது. இதே போன்று
2

சிங்கப்பூர் வானெலியும் தொலைக்காட்சியும் பல செய்திகளை வெளியிட்டிருக்குமென எண்ணுகின்றேன். இங்கிலாந்து தேசத்தில் வாழ்கின்ற பாரத நாட்டு மக்கள் திருமதி இந்திரா காந்தியின் கொலை பற்றிய செய்திகளை வானெலியிற் கேட் டும் தொலைக்காட்சியிற் பார்த்தும் சொல்லொணுத் துன்பம் அடைந்தனர். அதேபோலவே சிங்கப்பூரில் வாழ்கின்ற இந்திய மக்களும் கண்ணிரும் கம்பலையுமாய்க் காணப் பட்டிருப்பரென எண்ணுகின்றேன். இந்திய மக்களின் இந்த நிலையை நீ நேரிலேயே அங்கு பார்த்திருக்கக்கூடும்.
மெய்க்காப்பாளரான சீக்கியரே இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைச் சுட்டுக் கொலை செய்தனரெனச் செய்திகள் கூறின. இந்திய நாட்டைச் சேர்ந்த சீக்கியர்கள் பிரித்தானியாவிலும் வாழ்கின்றனர்; இவர்களின் எண்ணிக் கை பெருமளவினது. இவர்களை இங்கிலாந்தின் மூலைமுடுக்கு களில் எல்லாம் காணலாம். இவர்களிற் பலர் வியாபாரஞ் செய்கின்றனர்; மற்றும் பலர் வெவ்வேறு தொழில்களைச் செய்கின்றனர். தலையில் அணிந்திருக்கும் தலைப்பாகையைக் கொண்டு (தலைப்பாகை அணிந்தோர் எல்லோரும் சீக்கியர் அல்லர்) இவர்களை ஒரளவிற்கு அடையாளங் கண்டு கொள்ளலாம்.
திருமதி இந்திரா காந்தியின் படுகொலைபற்றிய செய்தி வெளிவந்ததும் சீக்கிய இனத்தவர்கள் வீதிகளிற் கூட்டங் கூட்டமாகக் கூடினர். இவர்களில் ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் இருந்தனர். இவர்கள் இந்தியப் பிரதமரின் படுகொலையைக் கொண்டாடி மகிழ்ந்தனர். இனிப்புப் பண் டங்களைப் பரிமாறி உண்டனர்; வெடி கொளுத்தி ஆரவாரஞ் செய்தனர்; ஆடியும் பாடியும் ஊர்வலம் வந்தனர். பிரித் தானியாவில் இந்திய நாட்டு மக்கள், தம் நாட்டுப் பிரதமரின் படுகொலைக்காகக் கவலை கொண்டு கண்ணிர் விட்டு நிற்க, அதே நாட்டைச் சேர்ந்த சீக்கிய மக்கள் ஆனந்தக் கண்ணிர் பெருக்கிக் கொண்டாடியமை வெட்கத்துக்குரியது.
13

Page 12
திருமதி இந்திரா காந்தியின் படுகொலையைப்பற்றிய செய்திகளைப் பரபரப்பாக வெளியிட்ட பிரித்தானிய வெகு சனத் தொடர்புச் சாதனங்கள், சீக்கிய மக்களின் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தையும் உலகிற்குக் காண்பிக்க எல்லை மீறித் தொழிற்படத் தொடங்கின. சீக்கியரின் கொண்டாட்டத்தை வானெலி பறை சாற்றியது; தொலைக்காட்சி ஒளிபரப்பியது. செய்தித் தாள்கள் படங்களை வெளியிட்டன; இன்னும், கொட்டை எழுத்துக்களிற் செய்திகளையும் வெளியிட்டன, இவற்றைக் கண்டு இந்திய மக்களிற் சிலர் சீறியெழுந்தனர்; வேறு பலர் தலை குனிந்தனர். இவ்விடத்திற் சீக்கியரின் செயலைக் கண்ட பிரித்தானிய மக்களின் மனநிலை எவ்வா றிருந்தது என்ற விஞவை நீ என்னிடம் கேட்கலாம். ಘ್ವಿ.ಅ ஏற்ற பதிலை என்னுல் இங்கு எழுத முடியாதிருக்
D35|-
பிரித்தானிய தொலைக்காட்சி செய்த இன்னெரு சாதனை யையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். இங்கிலாந்தில் வாழும் சீக்கிய இனத்தவர்களின் தலைவர் டாக்டர் செளஹான். இவர் பஞ்சாப் பிரதேசத்தின் தீவிரவாதிகளை ஊக்குவிப்பவர்; இன்னெரு வகையாகக் கூறின், பஞ்சாப் பிரிவினையை ஆதரிப்பவர். தமது இலண்டன் இல்லத்திற்கு 'காலிஸ்தான்’ என்று பெயர் சூட்டியுள்ளார். இவரைப் பிரித்தானிய தொலைக்காட்சி நன்கு பயன்படுத்திக் கொண் டது. சீக்கியத் தலைவரைப் பேட்டி கண்டு, அப்பேட்டியைத் தொலைக்காட்சியிலே ஒளிபரப்பியது. அத்தொலைக்காட்சி ஒளிபரப்பில், 'இந்திரா காந்தியைப் போலவே ரஜீவ் காந்தியையும் கொலை செய்வோம்' என்று சீக்கியத் தலைவர் சவால் விட்டார். அத்தொலைக்காட்சிச் சவால் பிரித்தானி யாவில் மட்டுமன்று உலகம் முழுவதுமே ஒளிபரப்பப் ull-gil.
சீக்கியத் தீவிரவாதிகளைச் சீக்கியர்களின் பொற்கோயிலி லேயே வைத்து இந்திய இராணுவம் கொலை செய்ததை நீ அறிவாய். இராணுவத் தாக்குதலின்போது பொற்கோயி
14

லும் பாதிப்படைந்தது. அதனுற் சீக்கியர் சினங்கொண்ட னர்; இராணுவத் தாக்குதலுக்குக் காரணமாயிருந்த இந்தி யப் பிரதமரைப் பழிவாங்குவோமெனச் சூழுரை செய்தனர். அச்சூழுரைக்குப் பின்னர், திருமதி இந்திரா காந்தியை இராணுவத்திலுள்ள சீக்கியரே படுகொலை செய்தனர். இப்படு கொலை பிரித்தானியாவில் வாழ்கின்ற சீக்கியர்களிற் பெரும் பான்மையோருக்குப் பெருமகிழ்ச்சியைக் கொடுத்தது.
துன்பத்திற் பங்குகொண்டு வாழப் பழக வேண்டும். துன்பத்திற் பங்குகொள்ள முடியாவிட்டால், துன்பப்படு வார் மத்தியிலே, இன்பங்கொள்வதைக் காட்டிக்கொள்ளா திருப்பது நன்று. அதுவே மனிதப் பண்பு. தம் நாட்டுப் பிரதமரின் ம்றைவுத் துன்பத்திற் பிரித்தானியாவில் வாழ் கின்ற சீக்கியராற் பங்குகொள்ள முடிய வில்லையெனில் படுகொலையைப் பறை சாற்றிக் கொண்டாடி மகிழ்ந்ததைத் தவிர்த்திருக்கலாம் அல்லவா? அப்படி அவர்கள் செய்திருந் தால், தாம் பிறந்த பாரதத்தின் பண்பைப் பேணிக் காத் திருக்கலாம்; தம்மினத்தின் சிறப்பையும் உலகறியச் செய் திருக்கலாம்.
சீக்கிய மக்களின் சீற்றத்தைப் பறை சாற்றுவதிற் பிரித் தானிய வெகுசனத் தொடர்புச் சாதனங்கள் ஏன் இவ்வளவு அக்கறை கொண்டன? சீக்கியரின் மகிழ்ச்சிக் கொண்டாட் டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தொலைக்காட்சியிற் காட்டியதன் நோக்கம் என்ன? சீக்கியத் தலைவரைத் தொலைக் காட்சியிலே தோன்ற வைத்து, அவரின் சூழுரையை உலகத்தாருக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதன் அவசியம் என்ன? இவற்றை நாம் ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
இங்கிலாந்து தேசத்திற் பெருந் தொகையான இந்திய மக்கள் வாழ்கின்றனர். தமிழகத்தவர், ஆந்திரப் பிரதேசத்
தவர், பஞ்சாப் பிரதேசத்தவர், மலையாளத்தவர், காஷ்மீர்ப்
15

Page 13
பிரதேசத்தவர் என இந்தியாவின் பல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் இங்குளர். இவர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுபவர்கள். ஆனல், தம்மை இந்தியர்கள் என்று கூறுவ திற் பெருமைப்படுபவர்கள். இங்கிலாந்து தேசத்திலே ஒற்றுமையும் உறவும் உள்ளவர்களாகவே இவர்கள் காணப் படுகின்றனர். ஆனல், பிரித்தானிய வெகுசனத் தொடர்புச் சாதனங்கள், இந்திய மக்களிலிருந்து பஞ்சாப் பிரதேசத் தைச் சேர்ந்த சீக்கியர்களைப் பிரித்துப் பகைமையை ஏற் படுத்திவிட்டன.
பிரித்தானிய வெகுசனத் தொடர்புச் சாதனங்களை நடாத்துவோர் பிரித்தானியர்களே! வானெலி, தொலைக் காட்சி, பத்திரிகைகள்-யாவும் பிரித்தானியர் கையிலேயே உள. ஆகவே, இந்திய மக்களிடையே பிரித்தானிய தொடர்புச் சாதனங்கள் பிளவையும் பகைமையையும் ஏற்படுத்தின என்ருல், பிரித்தானிய வெகுசனத் தொடர்புச் சாதனங்களை நடாத்தும் பிரித்தானியர்களையே அக்குற்றம் சாரும்.
பாரதப் பிரதமரின் படுகொலை, சீக்கியர்களுக்குப் பெரு மகிழ்ச்சியைக் கொடுத்தது. இதனையே பிரித்தானிய வெகு சனத் தொடர்புச் சாதனங்கள் உலகிற்கு வலியுறுத்த முனைந்தன. அவ்வாறு வலியுறுத்த வெகுசனத் தொடர் புச் சாதனங்கள் வரம்பு மீறியும் தொழிற்பட்டன. இதனைக் கொண்டு ஒர் உண்மையை மறைமுகமாக அவை வெளிப் படுத்திவிட்டன அல்லவா? சீக்கியர்களின் மன மகிழ்ச்சியை உலகிற்குக் காட்டியதன் வாயிலாகப் பிரித்தானியர் தமது உள உவப்பினையும் மறைமுகமாக உலகிற்குக் காட்டிவிட்ட னர். இன்னெரு வகையாகக் கூறின், பிரித்தானியர் தமது மகிழ்ச்சியை வெளிக்காட்டுவதற்குச் சீக்கிய மக்களைப் பயன் படுத்தினர் என்று கூறலாம்!
இவற்றைக் கொண்டு குறிப்பாக ஒன்றை இங்கு சொல்லி வைக்க விரும்புகின்றேன். பிரித்தானியர் எம்மைக் கட்டி
16

ஆண்டனர். பல ஆண்டுகள் எம்மை அடிமைகளாக வைத் இபரந்தனர். அவ்வாறு எம்மைப் பல்லாண்டு ஆட்சிசெய்ததை இன்றும் அவர்கள் மறக்கவில்லை. அதே போல, அவர்களுக்கு அடிமைகளாக வாழ்ந்தோம் என்பதை நாமும் இன்னும் மறக்கவில்லை. அதனலேயே பிரித்தானியர் இன்றும் எம்மைப் பிரித்து வைக்க முயல்கின்றனர். அதில் அவர்கள் வெற்றியும் காண்கின்றனர். அவர்களின் சூழ்ச்சியை அறியாது நாமும் பலியாகிவிடுகின்ருேம்.
பல துறைகளில் இந்தியா இன்று முன்னேறி வருகின்றது. பலமுள்ள ஒரு நாடாகவும் மாறுகின்றது. கீழைத்தேய நாடு களில் ஒன்ருன சிங்கப்பூர், மேற்கு நாடுகளுக்கு ஒர் எடுத்துக் காட்டாக விளங்குகின்றது. இலங்கை, யப்பான் போன்ற நாடுகளும் மக்களாட்சி மிளிரும் நாடுகளாகத் திகழ்கின்றன. இவ்வாறு நாம் முன்னேறுவதைப் பிரித்தானியர் வரவேற் கின்றர்கள் என்ரு நினைக்கின்ருய்? இல்லை என்றே எனக்குத் தோன்றுகின்றது.
இந்தியப் பிரதமரின் படுகொலையைப் பிரித்தானிய வெகு சனத் தொடர்புச் சாதனங்கள் எவ்வாறு விமர்சித்தன என் பதை முன்னர் கூறினேன். சிங்கப்பூரின் பொருளாதார வீழ்ச்சியை இவை எவ்வாறு பிரபல்லியமாக்குகின்றன என் பதையும் இனிது காணக் கூடியதாக இருக்கிறது. இதே போலவே தம் ஆட்சியில் இருந்த ஏனைய நாடுகளின் விடயங் களிலும் இவை நடந்துகொள்கின்றன. ஆகவே, எம்மைப் பிடித்தாண்ட பிரித்தானியர் இன்றும் எம்மைப் பிரித்துப் பூசலையும் புரட்சியையும் ஏற்படுத்த விரும்புகின்றனர் போல எனக்குத் தோன்றுகின்றது! மக்களாட்சி, பத்திரிகைச் சுதந்திரம் என்ற போர்வையில் இவர்கள் இவ்வாறு செய்து கொள்வது வியப்புக்குரியது! இவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு நாமும் உடந்தையாகி ஏமாந்து விடுகின்ருேம்.
அன்புள்ள,
அப்பா.
17

Page 14
4
இலையுதிர் காலம்
சந்தை நிலையம், மில்றன் கீன்ஸ், பிரித்தானியா, 25.1 I. 1984.
அன்புள்ள சுதர்சன்,
அம்மாவும், நீயும், தங்கையும் எழுதிய கடிதங்கள் கிடைத் தன; வாசித்து மகிழ்ந்தேன்.
இங்கு இப்போது இலையுதிர் காலம். அதிகமாக ஒவ் வொரு நாளும் மழை பெய்கின்றது. ஆனல், இலங்கை யிற் பெய்யும் மழையைப் போல, இங்கே பெய்யும் மழை கடுமையாக இருப்பதில்லை. ஆனல், குளிராக இருக்கும். சில வேளைகளிலே காற்று வேகமாக வீசும்; அப்போது கடுங் குளிராக இருக்கும்.
இலண்டன் மாநகரத்திலுள்ளது போல மில்றன் கீன்ஸ் நகரில் வானளாவிய கட்டடங்களுமில்லை; பெரிய மரங்களு மில்லை. 1976ஆம் ஆண்டிலே திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரம் தானே! இப்போதுதான் இங்கொன்று அங்கொன் ருகப் பெரிய மாடிக் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. புதிதாக நாட்டப்பட்ட மரங்களும் வளர்ந்து கொண்டு
8

வருகின்றன. கட்டடங்கள் நெருக்கமில்லாமலும் மரங்கள் பெரிதாய் வளராமலும் இருப்பதால், காற்று வேகமாய் வீசுவதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனல், இலண்டன் மாநகரத்தில் வானளாவிய கட்டடங்களும் பெரிய மரங் களும் உள. அதனல் இலண்டன் மாநகரத்திற் காற்று வேகமாக வீசுவது அவ்வளவாகத் தெரிவதில்லை.
இலையுதிர் காலம் அல்லவா? கதிரவனை ஒவ்வொரு நாளும் காணமுடியாது. இலங்கையைப் போலக் கதிரவன் கிழக்கிலே உதயமாகி மேற்கிலே மறைவதில்லை. கிழக்கிலே உதயமாகித் தென்மேற்கிலே மறைவது போலத் தோன்றுகின்ருன்; உச்சிக்கு வராமல் கிழக்கு வானத்திலே தோன்றி நீண்ட நேரத்தின் பின்னர் மறைந்து விடுகின்றன். வெயில் நேரத் திலும் இங்கு குளிராகவே இருக்கிறது. இங்குள்ளவர்கள் வெயிலைப் பெரிதும் விரும்புகின்றனர்; கதிரவனைக் கண்டதும் குளிரில்லாத போது வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்து வெயிற் காய்வதைக் காணலாம்.
வீடு, போக்குவரத்து வாகனங்கள், அலுவலகங்கள், தொழில் நிலையங்கள் என்பன வெப்பம் ஊட்டப்பட்டிருக் கும். அவ்வாறு செய்யாவிட்டால் இங்கு வாழ்வது கடினம். வெப்பமூட்டிகள் ஒவ்வோர் அறையிலும் இருக்கின்றன. இந்த நவீன விஞ்ஞான வசதிகள் இல்லாத காலத்திலும் இங்கு மக்கள் வாழ்ந்தனர். கொடிய குளிரில் அவர்கள் எப்படித்தான் வாழ்ந்தார்களோ தெரியவில்லை!
எனது அறையிலிருந்து சாளரத்தின் வழியாக வெளியே பார்க்கக் கூடியதாக இருக்கிறது. சில மரங்கள் முற்ருகவே இலைகளை உதிர்த்திவிட்டன. அம்மரங்களில் ஒரு தளிர்தானும் இல்லை. அவை பட்ட மரங்களைப் போலக் காட்சி கொடுக் கின்றன. வேறு சில மரங்கள், இலைகளை முற்முக உதிர்க்க வில்லை. ஆனல், இலைகள் உதிர்ந்து விழுந்து கொண்டிருக் கின்றன. இன்னும் சில வாரங்களில் எல்லா இலைகளுமே
19

Page 15
உதிர்ந்து விழுந்துவிடும் போலத் தெரிகிறது. அப்போது எல்லா மரங்களுமே பட்ட மரங்கள் போலக் காட்சி கொடுக்கும். கடுங்குளிர் காலம் முழுவதும் இலைகள் இல்லாமற் பட்ட மரங்களைப் போல அவை காட்சி தரும்.
வீதிகளிலே மரங்கள் உதிர்க்கும் இலைகளை ஒவ்வொரு நாளும் அகற்றி விடுகின்றனர். அவ்வாறு உதிர்ந்த இலை களையும் குப்பைகளையும் அகற்றுவதற்கு எந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். அதிகாலையிலேயே எந்திரங்களைக் கொண்டு வீதிகளைத் துப்புரவாக்குகின்றனர். அதனல் வீதிகளும் அலுவலகங்களைச் சுற்றியுள்ள இடங்களும் துப்புர வாக இருப்பதைக் காண முடிகின்றது.
சிங்கப்பூர் மிகவும் துப்புரவான நகரம் என்றும், அசுத்தப் படுத்துவோர் தண்டனைக்குள்ளாவர் என்றும் எழுதியிருக் கின்ருய். சிங்கப்பூர் சிறிய நகரம். ஆனல் இலண்டன் பெரிய நகரம். தொழிற்சாலைகள், கைத்தொழில் நிலையங்கள் என்பன அநேகம். தொழில் செய்வோர் தொகையும் அதிகம்; உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை எண்ணிலடங்காது. வெளிநாடுகளிலிருந்து தொழில் காரணமாக வந்து செல் வோரும் பெருந் தொகையினர். எனினும், இலண்டன் மாநகரத்தைத் துப்புரவாக வைத்திருக்கின்றனர். அது போலவே மில்றன் கீன்ஸ் நகரும் துப்புரவாக இருக்கிறது. குப்பைகளைப் போடுவதற்குக் குப்பைத் தாங்கிகளை ஆங் காங்கே வைத்திருக்கின்றனர். அவற்றுள்ளேயே குப்பைகளை எல்லோரும் போடுவர். சிறிய கடதாசித் துண்டுகளைத்தானும் அவற்றுள்ளேயே போடுகின்றனர். கண்ட இடங்களிற் குப் பைகளைப் போடுவதைக் காண்பது அரிது. அப்படிப் போடு பவர்களையும் சிங்கப்பூரிலே தண்டிப்பது போல இங்கே தண்டிப்பதில்லை. இங்கே உள்ளவர்கள் நன்கு பழக்கப்பட் டுள்ளனர். புதிதாக இங்கே வருகின்றவர்களும் அவர்களைப் பின்பற்றி நடந்துகொள்கின்றனர்.
20

எனினும், இலண்டன் மாநகரத்துடன் ஒப்பிட்டு நோக்கும் போது, மில்றன் கீன்ஸ் நகரத்தில் நாச வேலைகள் அதிகம் என்றே சொல்லவேண்டும். பொதுத் தொலைபேசிகள் அடிக் கடி உடைக்கப்படுகின்றன. மின் விளக்குகள் சேதமாக்கப் படுகின்றன. குப்பைத் தொட்டிகள் சிதைக்கப்படுகின்றன சுவர்களிற் சுலோகங்கள் எழுதப்படுகின்றன. இவ்வகை நாச வேலைகள் அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளன எனப் பலர் அபிப்பிராயப்படுகின்றனர்.
இங்கு காலநிலை எப்படி மாறும் என்று சொல்ல முடியாது. நேற்று மழையும் கடுங்குளிருமாக இருந்தது. இன்று காலையில் வெயிலும் குளிருமாக இருக்கிறது. இன்று மாலை மழை பெய்யக்கூடும். மழையுடன் கடுங்குளிரும் இருக்கலாம். காலை நேரத்திலே சில வேளைகளிற் பணிப்புகார் மூடிக்கொள்கின் றது. சில வேளைகளிற் பகல் முழுவதுமே பணிப் புகாரால் மூடப்பட்டிருக்கும். இவ்வாறு காலநிலை அடிக்கடி மாறு வதுபோல, இங்குள்ளோரது மனநிலையும் அடிக்கடி மாறும் இயல்பினது என்று கூறுவர். காலநிலைக்கேற்ப உடலமைப்பும் உள நிலையும் அமைவது இயற்கைதானே!
குளிர் கடுமையாக இருக்கும்போது ஆட்கள் வெளியே நடமாடுவது குறைவாக இருக்கும். வேலைக்குப் போகாத வர்கள் வீட்டுக்குள்ளேயே இருந்துவிடுவர். அலுவலகங்களில் வேலை செய்வோர் வெளியே வருவது குறைவு. தொழில் நிலையங்களிலுள்ளோரும் உள்ளேயே இருப்பர். பாடசாலை களில் மாணவர் உள்ளேயே இருந்து படிப்பர். விளையாடு வதற்கு வெளியே வருவது குறைவாகவே இருக்கும். உள்ளே அதிக நேரம் தங்கவேண்டியிருப்பதால் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் தமது வேலையை ஒழுங்காகச் செய்கின்ற னர். அலுவலகங்களில் உள்ளோரும் தமது கடமையை நன்கு செய்கின்றனர். மாணவர்களும் நன்கு படிக்கின்றனர். ஆகவே, இங்கேயுள்ள காலநிலை மனிதனின் உழைப்புக்கு உதவியாக இருக்கிறது என்று கூறின், அது சாலப் பொருந் ՖlւD.
2.

Page 16
வீட்டினுள்ளே அடைபட்டிருப்பவர்களுக்கு நேரத்தைப் போக்கத் தொலைக்காட்சியும் வானெலியும் இருக்கின்றன. தொலைக்காட்சியிற் பகல் முழுவதும் நிகழ்ச்சிகள் உண்டு. இங்கு நான்கு ஒளிபரப்பு அலைகள் இருக்கின்றன. ஆகவே, சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்குமான நிகழ்ச்சிகளை மாறி மாறி ஒளிபரப்ப வசதியாக இருக்கிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை. வெளியே ஆட்களின் நட மாட்டம் குறைவு. அநேகமாக ஒவ்வொரு வீட்டுக்காரரும் மோட்டார் வாகனம் வைத்திருக்கின்றனர். ஒவ்வொரு வீட்டின் முன்பும் மோட்டார் வாகனம் நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதை இங்கு பார்க்கலாம். வீதியில் மோட்டார் வாகனங்கள் போகும்போது எவரும் "ஹோண்’ அடிப் பதில்லை. சாரதிகள் மோட்டார் வண்டிகளைப் பிழையாகச் செலுத்தினுல் மட்டும், பிழையைச் சுட்டிக்காட்ட "ஹோண்’ அடிப்பர்.
அன்புள்ள, அப்பா.
22

5
நேர்மையும் உண்மையும்
பொது நூலகம் மில்றன் கீன்ஸ், பிரித்தானியா, 2. l. 2. 1984.
அன்புள்ள சுதர்சன்,
எனது முன்னைய கடிதம் கிடைத்திருக்குமென நம்புகின் றேன். அம்மா எழுதிய கடிதங்கள் கிடைத்தன. உங்களுடைய நலன் அறிந்து மகிழ்ச்சி அடைகின்றேன்.
இங்கிலாந்திலுள்ள இந்தியத் தூதுவர் சென்ற வாரம் தமது பதவியை இராசினமாச் செய்த செய்தியை அறிந்திருப் பாயென எண்ணுகின்றேன். சென்ற வாரம் இங்குள்ள செய்தித் தாள்களில் வெளிவந்த முக்கியமான செய்திகளுள் இந்தியத் தூதுவரின் இராசினுமாவும் ஒன்றெனக் கூறலாம். இந்தியத் தூதுவரின் மகனுடைய பெயர் ரவி. இவர் இலண் டனிலுள்ள விற்பனை நிலையம் ஒன்றிற் சாமான் அபகரித்து (Shop lifting) அகப்பட்டுக் கொண்டார். அது காரண மாக இந்தியத் தூதுவர் தமது பதவியைத் துறந்து இந்தியா விற்குத் திரும்ப வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டது.
"மகன் செய்த களவுக்குத் தந்தை தமது பதவியைத் துறந்தார் ' என்று செய்தித்தாள்கள் முதற் பக்கத்திற்
23

Page 17
கொட்டை எழுத்துகளிலே இச்செய்தியை வெளியிட்டன. அரசாங்கப் பதவிகளில் உள்ளோர் மட்டுமன்றிப் பொது மக்களும் நேர்மையும் உண்மையும் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றே இங்கு எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். பெரும் பதவியிலுள்ளோர் நேர்மையற்றவர்களெனத் தெரிய வந்ததும், அவர்களாகவே தமது பதவியிலிருந்து விலகிக் கொள்வதை இங்கு காணலாம். பெரும் பதவியிலுள்ளோ ரின் குடும்பத்தார் தவறிழைப்பதையும் சமூகம் பாரதூர மாகக் கணிக்கின்றது. எனவே, அரசாங்கப் பதவியிலுள்ள வர்களும் பொதுநல ஊழியர்களாக இருப்பவர்களும் ஏனைய வர்களும் நேர்மையைக் கடைப்பிடித்து வாழ வேண்டும் என்பது வார்த்தையளவிலன்றிச் செயலளவில் இங்கு இருப் பதைக் காணலாம். இங்கு வாழ்வோர் எல்லோருமே நேர் மையும் உண்மையும் உள்ளவர்கள் என்று நான் கூறவில்லை. பெருமளவிற்கு மக்கள் நேர்மையுள்ளவர்களாக வாழ்கின் றனர்; உண்மை உள்ளவர்களாகக் காணப்படுகின்றனர்.
பொருளை அபகரித்து ரவி அகப்பட்டுக் கொண்டதற்கு இங்குள்ள சூழ்நிலையை ஒரு காரணமாகக் கூறலாம். இந்தியா விலுள்ள விற்பனை நிலையங்களின் அமைப்பும் ஒழுங்கும் ஒரு வகை: இங்குள்ள விற்பனை நிலையங்களின் அமைப்பும் ஒழுங் கும் இன்னுெரு வகை. இந்தியாவிலுள்ள விற்பனை நிலையங் களின் அமைப்பையும் விற்பனை முறையையும் அங்கு நீ சென்றிருந்தபோது பார்த்திருக்கின்ருய். இலங்கையிலுள்ள முறையும் உனக்குத் தெரியும். இங்குள்ள விற்பனை நிலையங் களின் அமைப்பையும் ஒழுங்கையும் யூன் மாதத்தில் விடு முறைக்கு நீ இங்கு வரும்போது நேரிலேயே பார்க்கக் கூடிய தாக இருக்கும்.
இங்குள்ள தனியார் நிறுவனங்கள் நகரங்களிலும் பட்டி னங்களிலும் விற்பனை நிலையங்களை நிறுவி நடத்துகின்றன. LDITrifi6iv s 9jøör Giv'Go IGör Fri (Marks and Spencer), 6G3aAugë (Wool worth), Garail 9 góljF6ív (Selfridges), GgnoITLb GivG|TT6ív
24

(Home Stores), Syair gy (C&A), Gu Tait gyTuSah) (John Lewis) என்பவற்றை முக்கிய தாபனங்களாகக் குறிப்பிட லாம்.
இந்தத் தாபனங்கள் நடாத்தும் விற்பனை நிலையங் களுக்குச் சென்று எமக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொள்ளலாம். உணவுப் பண்டங்கள் அங்கு உண்டு; உடை வகைகள் விற்பனைக்கு உண்டு; காய்கறி வகைகள் உண்டு. ஏன்? வீட்டுக்கு வேண்டிய பொருள்கள் எல்லாவற்றையுமே அங்கு வாங்க முடியும். இந்த நிறுவனங்களின் உள்ளே சென்று சாமான்களை வாங்குவோர், தாம் வாங்குவதற் குத் தெரிந்துகொண்ட பொருள்களுக்கான பணத்தைக் காசு பெறுநரிடம் கொடுத்த பின்னரே அவற்றை வெளியே எடுத்துச் செல்லல் வேண்டும். நிறுவனங்களின் உள்ளே சாமான்கள் வைக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் அவற்றை மேற்பார்வை செய்வதற்கு எவரும் இருக்கமாட்டார்கள். சாமான்களைக் கொண்டு வெளியே செல்லும் இடங்களிற் (உள்ளேயும் சில இடங்களில்) காசு பெறுநர் இருப்பர். அவர்கள் வாடிக்கைக்காரர்கள் கொண்டுவரும் பொருள்களை ஒவ்வொன்ருக எடுப்பர். அவை ஒவ்வொன்றிலும் விலை பொறிக்கப்பட்டிருக்கும். அந்த விலையின்படியே எந்திரக் கணனி வாயிலாகக் கணக்கிட்டுப் பணத்தைப் பெற்றுக் கொண்டு அதற்கான பற்றுச்சீட்டுக்களை வழங்குவர்.
இந்த விற்பனை நிலையங்களின் உள்ளே சாமான்களை எடுத்துச் செல்வதற்குத் தள்ளு வண்டிகள் பல உள. தேவை யான சாமான்களை ஒவ்வொரு பகுதியிலும் தெரிந்தெடுத்து வண்டியிற் போட்டுத் தள்ளிக்கொண்டு போக முடியும். சில தாய்மார் தம் குழந்தைகளையும் அவற்றிலே உட்கார வைத் துத் தள்ளிக்கொண்டு போவதைக் காணலாம்.
இங்கு இன்னெரு சிறப்பையும் பார்க்கக்கூடியதாக இருக் கிறது. அதாவது, குறிக்கப்பட்ட விலைக்கே சாமான்கள்
25

Page 18
விற்கப்படுகின்றன. பேரம்பேசிச் சாமான் வாங்கும் வழக்கு இங்கே கிடையாது. சாமான்கள் ஒவ்வொன்றிலும் அவ்வவற் றிற்கான விலை பொறிக்கப்பட்டிருக்கும். பொறிக்கப்பட் டிருக்கும் விலைக்கே அவை விற்பனை செய்யப்படும். நேரத் துக்கு ஏற்ப அல்லது ஆட்களுக்குத் தக, சாமான்களின் விலைகளைக் கூட்டி விற்பதுமில்லை; குறைத்து விற்பதுமில்லை. இந்த விற்பனை முறையினல் விற்பனை செய்வோருக்கும் சிரமம் ஏற்படுவதில்லை; சாமான்களை வாங்குவோருக்கும் விலைபற்றிய மயக்கம் உண்டாவதில்லை.
ஒவ்வொரு வாரமும் சாமான்களை வாங்குவதற்கு விற்பனை நிலையங்களுக்கு மக்கள் திரண்டு வருகின்றனர். வார இறுதி யில் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை விற்பனை நிலையங்களுக்குச் சாமான்களை வாங்கப் போவதே பெருவழக் காக உளது. விற்பனை நிலையங்களுக்குப் போகாமல் தாம் வாழ்கின்ற வீதிகளிலுள்ள கடைகளிற் சாமான்களை வாங்குவோரும் உளர். சாமான்களை வாங்குவதற்குத் திரும்பத் திரும்பக் கடைகளுக்குப் போவோர் சிலரே! ஞாயிற்றுக்கிழமைகளிற் கடைகள் திறந்திருக்கமாட்டா. எங்கேயாவது ஒரிடத்திற் செய்தித்தாள்கள் விற்கும் மூலைக் கடைகள் (Corner shop) திறந்திருக்கும். அங்கே இனிப்புப் பண்டங்களும் சுருட்டு வகைகளும் விற்பனைக்குக் கிடைக்கும்.
சாமான்களை வாங்குவதற்கு விற்பனை நிலையங்களுக்குப் பலர் போவதைப்போன்று, சாமான்களைப் பார்ப்பதற்கும் சிலர் போகின்றனர். முன்னையோர் சாமான்களை வாங்கு வதால் மகிழ்ச்சி அடைவோர்; பின்னையோர் சாமான்களைப் பார்ப்பதனுல் மட்டும் களிப்படைவோர். இவர்கள் தம்மு டன் தம் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு விற் பனை நிலையங்களுக்குப் போவதுண்டு. விற்பனை நிலையங் களிற் சாமான்கள் வைக்கப்பட்டிருக்கும் பகுதிகளை மேற் பார்வை செய்வதற்கு எவரும் இருக்கமாட்டாரென முன்னரே கூறினேன். ஆகவே, வாங்கப் போவோருக்கும் பார்க்கப் போவோருக்கும் அவர்கள் அழைத்துப் போகும்
26

சிறுவர்களுக்கும், விற்பனை நிலையங்களில் வைக்கப்பட்டிருக் கும் சாமான்கள் ஒரு வகை மனவுந்தலை ஏற்படுத்துகின்றன என்று கூறின் அது மிகையாகாது. பொருள்களைக் காண் கின்றபோது அவற்றைச் சட்டைப் பையுள் போட்டுக் கொண்டாலென்ன என்ற மனச் சலனம் ஏற்படத்தான் செய்யும். அவ்வாறன மனத்தூண்டலுக்கு அடிமையாகி அகப்பட்டோரும் உளர்.
விற்பனை நிலையங்களிற் சாமான்களை அபகரிப்போர் மிகச் சிலர் என்றே கூறலாம். அச்சிறு எண்ணிக்கையினர் வாங்கு வோராகவும் இருக்கலாம்; பார்க்கப் போவோராகவும் இருக்கலாம். பெற்றேருடன் செல்லும் குழந்தைகளைப் பொறுத்தமட்டில், அவர்கள் பொருள்களை அபகரிக்க எண்ணுவதில்லை. பொருள்களை அபகரிக்கக் கூடாது; பணங் கொடுத்துத்தான் வாங்க வேண்டும் என்பதைச் சிறுவர்க ளாக இருக்கும்போதே அவர்கள் இவ்விற்பனை நிலையங்களிற் கற்றுக்கொள்கின்றனர். எனவே, சிறுவர்களுக்கு நேர்மை யைக் கற்றுக் கொடுக்கும் காட்சிச் சாலைகளென இந்த விற்பனை நிலையங்களை வருணிக்கலாம். い
பொருள்களை அபகரிப்போரைக் கண்டுபிடிப்பதற்குத் "தொலைக்காட்சிக் கண்காணிப்பு ஒவ்வொரு விற்பனை நிலையத்திலும் உண்டு. அவ்வகைக் கண்காணிப்பு முறையாற் பொருள்களை அபகரிப்போரை எளிதிற் கண்டுபிடித்து விடுகின்றனர். அவன்மையில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பு ஒன்றின்படி, சிறுவர்களே பெரும்பாலும் விற்பனை நிலையங் களிற் சாமான்களை அபகரிக்கின்றனர் என்று தெரிய வந் துள்ளது. இந்தக் கணிப்புப் பற்றிய செய்தியும் சென்ற வாரம் இங்குள்ள பத்திரிகைகளில் வெளிவந்தது.
‘சிறு கன்று பயம் அறியாது’ என்று கூறுவர். சிறுவர் களும் அப்படியானெவர்களே அவர்கள் பின்வரப்போவதைச் சிந்தித்துப் பாராமலே செயலாற்றும் இயல்புடையவர். செய்கின்ற செயலால் உண்டாகக்கூடிய விளைவை அவர்கள்
27

Page 19
எண்ணிப் பார்ப்பதில்லை. சிறுவர்கள்தானே! எது நன்மை? எது தீமை? என்று அவர்கள் பகுத்துக் கண்டு செயலாற்று வதில்லை. அவ்வாறு பகுத்துக் காண்கின்ற ஆற்றல் அவர்க ளுக்கு இருக்குமேயானல் அவர்கள் நல்லனவற்றையே செய் வர்; தீயனவற்றைச் செய்யார். பொருள்களை அபகரித்தல் தண்டனைக்குரியது; அவ்வாறு செய்தல் எதிர்கால வாழ் வை பாழ்படுத்துவதற்குக் காரணமாய் அமையுமென்று சிறுவர்கள் சிந்திப்பார்களேயானல், அவர்கள் விற்பனை நிலையங்களிற் பொருள்களை அபகரிக்கவேமாட்டார்கள்.
பொருளை அபகரிக்காத ஒருவரை, பொருள் அபகரித்தார் என்று சந்தேகப்பட்டு விசாரணை செய்வதும் குற்றமாகும். இரண்டு வாரங்களுக்கு முன்னர் பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி ஒன்றை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்; சாமான் களை வாங்கிக்கொண்டு விற்பனை நிலையத்துக்கு வெளியே வந்த ஓர் அம்மையாரைப் பாதுகாப்பாளர் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தார். அந்த அம்மையார் தாம் வாங்கிய பொருள்களைக் காட்டி, அவற்றுக்கான பற்றுச்சீட்டுக்களையும் சமர்ப்பித்தார். பாதுகாப்பாளர் அம்மையாரிடம் மன்னிப் புக் கேட்டு வழியனுப்ப முயன்ருர். ஆனல், அம்மையார் பாதுகாப்பாளரைச் சும்மா விட்டு விடவில்லை. பாதுகாப் பாளர் தம்மைப் பலர் முன் அவமானப்படுத்தித் தலைகுனிய வைத்தார் என்றும், அதனுல் தமது மனம் பெரிதும் பாதிப் படைந்தது என்றும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து மான நட்டம் கோரினர். விற்பனை நிலையம் அம்மையாருக்கு 1,500 பவுண் நட்டஈடு வழங்க வேண்டுமென விசாரணை முடிவில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இங்கு ஒருவரின் பொருளை இன்னெருவர் அபகரிக்கக் கருது வது குறைவு. இலவசமாகக் கொடுப்பனவற்றையும் சிலர் வாங்கிக்கொள்ள விரும்பார். உதாரணமாக, சென்ற வாரம் ஒரு விற்பனை நிலையத்தின் முன் நடந்த ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகிறது. விற்பனை நிலையம் ஒன்றின் நுழைவாயி லில் அங்கே வந்த வாடிக்கையாளருக்குச் சோலர் (Solar)
28

என்ற பெயருடைய இனிப்புப் பண்டத்தை இலவசமாகக் கொடுத்தனர். அங்கே வந்த பெரியவர்களுக்கும் சிறியவர் களுக்கும் இலவசமாக அந்த இனிப்புப்பண்டத்தை வழங்கக் கண்டேன். ஆனல், சிலர் அதனை வாங்காமலே சென்றனர். வாங்கியவர்களுள் எவரும் அப்பண்டம் இலவசமாக இருந்த போதிலும், இன்னென்று தருமாறு கேட்கவில்லை. சிறுவர் களிற் சிலர் மட்டும் இரண்டாம் முறையும் சென்று அதனைப் பெற்றுச் சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது.
ரவி பொருள் அபகரித்தமைபற்றி எழுதத் தொடங்கி அதோடு தொடர்பான பலவற்றை விரிவாக எழுதி விட் டேன். கடிதம் நீண்டு விட்டது. எனினும், இறுதியாக ஒன் றைக் கூறி வைக்க விரும்புகின்றேன். இங்குள்ள விற்பனை நிலையங்களின் அமைப்பும் விற்பனை முறையும் இந்த நாட்டுக் குப் புதிதாக வருபவர்களின் மனத்தைச் சஞ்சலத்துக்குள் ளாக்கும் என்றே சொல்ல வேண்டும். ஆகவே, இந்திய தூது வரின் மகன், ரவி பொருளை அபகரித்து அகப்பட்டமை வியப் புக்குரியதன்று. ஆனல் வேதனைக்குரியது. எனினும், தனயனின் குற்றத்திற்காகத் தந்தையார் தமது வெளிநாட் டுத் தூதுவர் பதவியையே துறந்து நீதியை நிலைநாட்டினர். தனயன் செய்த தவறுக்குச் சோழ மன்னன் ஒருவன் தனயனையே தேர்க்காலிலிட்டு நீதியை நிலைநாட்டி, மனுநீதி கண்ட சோழனெனப் பெயர் பெற்ற வரலாறு உனக்குத் தெரியுமென எண்ணுகின்றேன். ரவி செய்த குற்றமும் அதற்கு அவனின் தந்தையார் மேற்கொண்ட செயலும் மனு நீதிச் சோழனின் செயலைவிட ஒரு படி உயர்ந்து நிற்கிறது அல்லவா? அங்கு குற்றம் இழைத்த மகன் தண்டனைக்கு உள்ளாஞன். இங்கு குற்றம் செய்த மகனுக்காகத் தந்தை தமது பதவியைத் துறந்ததன் மூலம் தனக்குத் தானே ஒரு தண்டனையையும் விதித்துக் கொண்டார்.
முன்னையது மனு நீதியானல் பின்னையதைச் சுய நீதி என்று கூடச் சொல்லலாமெனத் தோன்றுகிறது.
அன்புள்ள,
அப்பா.
29

Page 20
6
தொழில் மகத்துவம்
பொது நூலகம், மில்றன் கீன்ஸ், பிரித்தானியா,
15. 12. 1984.
அன்புள்ள சுதர்சன்,
உனது கடிதத்தை இரண்டு வாரங்களாக எதிர்பார்த் தேன். இன்றுவரை கடிதங் கிடைக்கவில்லை. ஒவ்வொரு வாரமும் கடிதம் எழுத வேண்டுமெனத் தொடக்கத்திலிருந்து கூறி வந்துள்ளேன். இக்கடிதம் பெற்றுக் கொண்டதும் தவருமற் பதில் எழுதுவாயென எதிர்பார்க்கிறேன்.
இக்கடிதத்திலே இந்த நாட்டில் நிலவுகின்ற தொழில் LD55576 lb (dignity of labour) Lufbsij GTOp.5GTOLD607 எண்ணினேன். இஃது எமது இலங்கையிலே இல்லாதொன்று; எமது நாட்டு மக்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது.
செய்கின்ற தொழில்களைக் கொண்டு மனிதர்களை மதிப் பிடலாமா? கூலி வேலை செய்கின்றவர்களைத் தாழ்ந்தவர்கள்
என்றும், உத்தியோகம் பார்க்கின்றவர்களை உயர்ந்தவர்கள்
30

என்றும் கருதலாமா? இவ்வாறு தாழ்ந்தவர்கள் என்றும், உயர்ந்தவர்கள் என்றும் மக்களை வேறுபடுத்திக் காண்பது அறமாகுமா?
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்.
என்று வள்ளுவன் கூறிப் போந்தான். வள்ளுவன் கூறிய இக்கருத்து எமது நாட்டிற்கு மிகப் பொருந்தும்; இங்கிலாந்து தேசத்துக்கு அவ்வளவு பொருந்தாது. இங்கிலாந்து தேசத் திற் செய்கின்ற தொழிலைக் கொண்டு மக்களை வேறுபடுத்திக் காண்பது குறைவாகவே உளது.
மலசல கூடத்தைத் துப்புரவு செய்பவர்களும் மனிதர்கள், வீதிகளைக் கூட்டுவோரும் மனிதர்கள், அலுவலகங்களில் வேலை செய்வோரும் மனிதர்கள். இன்னெரு வகையாகக் கூறின், மனிதர்கள் வெவ்வேறு தொழில்களைச் செய்கின் றனர். அதனைக் கொண்டு அவர்களைத் தாழ்ந்தவர்கள் என்றும் உயர்ந்தவர்கள் என்றும் வகைப்படுத்தி நோக்குவது பொருந்தாது. நிறத்தைக் கொண்டு மனிதர்களை வேறு படுத்திக் காணக்கூடாது என்று சொல்கின்ருேம். அதே போலவே செய்கின்ற தொழிலைக் கொண்டும் மனிதர்களை வேறுபடுத்திப் பார்த்தலாகாது.
மில்றன் கீன்ஸ் நகரிலுள்ள சந்தை நிலையத்திலே தொழில் செய்யும் பலரைத் தினமும் பார்க்கின்றேன். மலசல கூடத் திற் சிலர் வேலை செய்கின்றனர். வேறு சிலர் வீதிகளைத் துப்புரவு செய்கின்றனர். அதே நேரத்தில் அஞ்சல் அலுவ லகத்திலும் நூலகத்திலும் பலர் வேலை செய்கின்றனர். விற்பனை நிலையங்களில் விற்பனையாளர், கணக்காளர், மேற்பார்வையாளர், கூலி வேலை செய்வோர் என்று பலர் காணப்படுகின்றனர். இவர்களிடையே எவ்வகையான, உயர்வு தாழ்வும் இல்லை. ஒவ்வொருவரும் தத்தமக்கான
31.

Page 21
வேலைகளைத் தாமே செய்கின்றனர்; செய்கின்ற தொழிலாற் பெறுகின்ற ஊதியத்தைக் கொண்டு வாழ்கின்றனர்.
மலசல கூடத்தில் வேலை செய்பவருக்கும் நூலகத்தில் வேலை செய்பவருக்கும் உறைவதற்குப் பல வசதிகளையும் கொண்ட வீடுகள் இருக்கின்றன. மலசல கூடத்தில் வேலை செய்பவரின் வீடு குடிசையாகவும், அஞ்சல் அலுவலகத்தில் வேலை செய்பவரின் வீடு மாடி வீடாகவும் இல்லை. இருவரின் வீடுகளும் நவீன வசதிகளைக் கொண்டவை. மின் விளக்கு, குளிரூட்டி, மின் அடுப்பு, தொலைக்காட்சி, வானெலி என்பன இருவரின் வீட்டிலும் இருக்கின்றன.
மலசல கூடத்தில் வேலை செய்பவரும் மோட்டார் கார் வைத்திருக்கின்ருர், அஞ்சல் அலுவலகத்தில் வேலை செய்ப வரும் மோட்டார்க் கார் வைத்திருக்கின்றர். இருவரும் வேலைக்கு வரும்போது மோட்டார்க் காரில் வந்து வீட்டிற். குத் திரும்பும்போது, காரிலே போகின்றனர். இங்குள்ள எல்லோருமே மோட்டார்க் கார் வைத்திருக்கின்றனர் என்று நான் கூறவில்லை. அநேகமானேர் மோட்டார் கார் வைத் திருக்கின்றனர். (இங்கு மோட்டார் கார் ஒரு செல்வப் பொருளன்று). மோட்டார் கார் இல்லாதவர்கள் பஸ் வண்டி யில் அல்லது ரெயிலிற் பயணஞ் செய்கின்றனர்.
அணிகின்ற ஆடையைக் கொண்டும், ஒருவர் செய்கின்ற தொழிலைக் கண்டுகொள்ளமுடியாது. மலசல கூடத்தில் வேலை செய்கின்றவர்களும் காற்சட்டை, மேற்சட்டை, சப்பாத்து அணிந்து கொள்கின்றனர். அஞ்சல் அலுவலகத் தில் வேலை செய்கின்றவர்களும் அதே உடையை அணிந்து கொள்கின்றனர். ஆனல், வேலைத்தலங்களில் செய்கின்ற தொழிலுக்கேற்ற ஆடைகளை மாற்றி அணிந்துகொள்வர். இந்நாட்டுச் சுவாத்தியத்துக்கு ஏற்ப வசதியுள்ள வீடுகள் அவசியம். அணிகின்ற உடைகளும் குளிரைத் தாங்கத் தக் கனவாக இருக்க வேண்டும்.
32

இனி, வார இறுதியில் இருவரும் பெறுகின்ற சம் பளத்தை ஒப்பிட்டுப் பார்ப்போம். (இங்கு ஒவ்வொரு வாரமும் பலருக்குச் சம்பளம் வழங்கப்படுகிறது.) இருவர் பெறுகின்ற சம்பளத் தொகையிலும் அதிக உயர்வு தாழ்வு இல்லை. கூலி வேலை செய்கின்ற ஒருவர் கூடுதலான சம் பளத்தைப் பெற்றுக்கொள்வதும் உண்டு. சவக்குழி தோண் டும் ஒருவரின் கூலி, ஏனைய தொழில் செய்வாரிலும் கூடுதலாக இருக்கும். பாதுகாப்பாளராக இராக் காலங் களில் வேலை செய்பவர்களும் கூடுதலான சம்பளத்தைப் பெறுகின்றனர். உல்லாசப் பயணிகள் விடுதிகளில் வேலை செய்வோர், சம்பளத்துடன் சந்தோசப் பணமும் பெறு கின்றனர். இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கு வரும் இளைஞர்கள் பலர் கூலி வேலை செய்கின்றனர்; உல்லாசப் பயணிகள் விடுதியில் உணவு பரிமாறுவோராக வேலை செய் கின்றனர்; பெற்றேல் குதங்களில் இராக் காலத்தில் வேலை செய்கின்றனர். இவ்வாறு இவர்கள் உழைக்கும் பணம் அதிகம். இவ்வாறு உழைக்கும் பணத்துக்கு வருமான வரி செலுத்துவதும் இல்லை.
கூலி வேலை செய்வோர், துப்புரவு செய்வோர், மலசல கூடங்களில் வேலை செய்வோர் என்போர் வெளிநாடுகளி லிருந்து வந்தவர்களேயென நண்பர் ஒருவர் என்னிடம் கூறினர். இக்கூற்றுத் தவருனதாகும். இலண்டன் மாநக ரத்திலேயே வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் இவ்வகை யான வேலைகளைச் செய்கின்றனர் என்பது உண்மைதான். ஆனல், ஏனைய பல நகரங்களிலும் பட்டினங்களிலும் வெள் ளைக்காரர்களே இத்தொழில்களைச் செய்கின்றனர். சந்தை நிலையத்தில் வேலை செய்பவர்களிற் சிலரைத் தவிர ஏனைய எல்லோருமே இந்த நாட்டைச் சேர்ந்தவர்களாவர். ....
மேலும், மிகப் பெரிய செல்வந்தர்களைத் தவிர்த்து, ஏனை யோர், வீடுகளிலே தாமே தத்தம் வேலைகளைச் செய்து கொள்கின்றனர். வேலைக்கு ஆட்களை அமர்த்துவது இல்லை. பல குடும்பங்களிற் கணவனும் மனைவியும் வெளியே
33

Page 22
சென்று வேலை செய்கின்றனர். அதனல் வீட்டு வேலைகளை இருவருமே செய்ய வேண்டியுள்ளது. ஆண்களும் சமைக்கத் தெரிந்தவர்களாக இருக்கின்றனர். எனக்கு வேண்டிய உணவை நானே சமைத்துக் கொள்கின்றேன். வெளியே ஹோட்டல்களிற் சாப்பிடுவதற்கு அதிகஞ் செலவாகும்.
சென்ற வாரம் எனது வீட்டில் நிகழ்ந்ததை இங்கு குறிப் பிடுவது பொருத்தமாகுமென எண்ணுகின்றேன்.
நான் இருக்கும் வீட்டில் மலசல கூடம் பழுதடைந்து விட்டது. உடனே திருத்த வேண்டியிருந்தது. மலசல கூடம் திருத்தும் கம்பனிக்குத் தொலைபேசி மூலம் அறிவித்தேன். அர்ை மணி நேரம் கழித்து வீட்டுக் கதவை யாரோ தட்டி னர். விரைந்து சென்று கதவைத் திறந்தேன். காற்சட்டை, மேற்சட்டை, சப்பாத்து அணிந்த ஒருவர் அங்கு நின்று கொண்டிருந்தார். கையிலே ஒரு பெட்டியைத் தூக்கியபடி அவர் நின்ருர், என்னைப் பார்த்து, 'இது 47 ஆம் இலக்கந் தானே? மலசல கூடம் திருத்த வந்துள்ளேன்' என்று ஆங்கிலத்திற் கூறினர். “உள்ளே வாருங்கள்’’ என்று அழைத்தேன். உள்ளே வந்த அவர் தமது உடைகளை மாற்றி வேருேர் உடையை அணிந்துகொண்டார். அரை மணி நேரத்தில் மலசல கூடத்தைத் திருத்திவிட்டு வெளியே வந்தார். முன்னர் அணிந்திருந்த உடையைத் திரும்பவும் அணிந்து கொண்டார்.
இந்த நாட்டில், வேலை செய்ய வீட்டிற்கு வருகின்றவர் களுக்குக் குடிப்பதற்குத் தண்ணிர்தானுங் கொடுப்பதில்லை. வேலை செய்ய வருபவர்களும் எதனையும் எதிர்பார்ப்பதில்லை. இவ்வழக்கம் எனக்கு நன்கு தெரியும். எனினும், எமது நாட்டுப் பண்பாட்டுக்கு அமைய, "தேநீர் அருந்திவிட்டுப் போங்கள் 'என்றேன். நன்றி என்ருர். ‘இல்லை அருந்துங் கள்" என்றேன். உடன்பட்டுக் கொண்டார். அவர் முகத்தில் மகிழ்ச்சிக் குறி தோன்றியது. தேநீர் அருந்திய பின்னர், அவர் புறப்பட்டபோது சந்தோசமாகச் சில பவுண் நோட்டுக்
34

களை நீட்டினேன். வாங்க மறுத்துவிட்டார். போகும்போது 'மிக மிக நன்றி’’ என்ருர், செய்த வேலைக்குரிய செலவுத் தொகைக்கான சிட்டையைக் கம்பனி அனுப்பும் என்று சொல்லிவிட்டுத் தமது மோட்டார் காரில் ஏறிச் சென்று விட்டார்.
எமது நாட்டிலுள்ள மலசல கூடம் திருத்துபவர்களோடு இங்குள்ள மலசல கூடம் திருத்துவோரை ஒப்பிட்டு நோக்கி ணுல் மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடாகத் தோன்றும்; வாழ்க்கைத் தரமும் அப்படியே!
இலங்கையிற் கூலி வேலை செய்கின்றவர்களையும் மலசல கூடம் திருத்துபவர்களையும் தாழ்ந்தோராகவே சமூகம் மதிப் பிடுகின்றது. ஆனல், இலண்டனிலே கூலி வேலை செய்பவர் இலங்கைக்கு விடுமுறைக்கு வரும்போது அவருக்குப் பெருந் தொகைச் சீதனத்தோடு பெண்ணைத் திருமணஞ் செய்து கொடுப்பதைச் சமூகம் பெரிதாக மதிக்கின்றது. இதுவே இலண்டன் மாப்பிள்ளைக்குள்ள மதிப்பு! இன்னும், உத்தி யோகம் பார்ப்பவர்களையே இலங்கையில் உயர்ந்தவர்களாகக் கருதுகின்ருேம். கூலி வேலை செய்பவனதும் உத்தியோகம் பார்ப்பவனதும் உறைவிடங்களும் இவ்வேற்றத் தாழ்வைப் பிரதிபலிப்பனவாகக் காணப்படுகின்றன. கூலி வேலை செய் பவன் குடிசையில் வாழ்கின்ருன்; உத்தியோகம் பார்ப்பவன் மாடி வீட்டில் வாழ்கின்றன். உடுக்கின்ற உடைகளைக் கொண்டும் இவ்விருவரையும் இனங்கண்டு கொள்ள லாம். இவர்கள் ஊதியமாகப் பெற்றுக் கொள்கின்ற சம்ப ளத்திலுள்ள உயர்வு தாழ்வே இதற்குக் காரணம் ஆகும். எனினும், கூலி வேலை செய்பவர்கள் கணிசமான அளவு கூடிய வருவாயைப் பெறக்கூடிய சூழ்நிலை இலங்கையிலே அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ளது!
பிரித்தானியாவிலுள்ள இந்த நிலையை எமது நாட்டில் உட னடியாக ஏற்படுத்த முடியாது. பிரித்தானியா வளர்ச்சி யடைந்த ஒரு நாடு. எமது நாடு வளர்ச்சி அடைந்துவரும்
:35

Page 23
நாடு. பிரித்தானியா செல்வம் மிக்க நாடு; இலங்கை வளம் கொழிக்கும் நாடன்று. ஆகவே, தொழிலுக்கேற்ற சம்பள மும் சம்பளத்திற்கேற்ற வாழ்க்கைத் தரமும் இலங்கையில் வேறுபட்டனவாக இருக்கின்றன. ஆனல், செய்கின்ற தொழிலைக் கொண்டு உயர்வு தாழ்வு கருதுவது பொருந் தாது. எந்தத் தொழிலையும் உயர்ந்ததாக மதிக்க வேண் டும். எந்தத் தொழிலைச் செய்கின்றவரையும் போற்ற வேண் டும். “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்று பாரதியார் கூறியதை வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொள்வதே சாலப் பொருந்தும்!
உனது பதிலை எதிர்ப்பார்க்கிறேன்.
அன்புள்ள, அப்பா.
a6

7
கடுங்குளிர் காலம்
சந்தை நிலையம், மில்றன் கீன்ஸ், பிரித்தானியா,
25, 12, 1984.
அன்புள்ள சுதர்சன்,
நான் முன்னர் எழுதிய கடிதத்துக்கு உனது பதிலை எதிர் பார்த்தேன், ஆனல் இன்றுவரை உனது பதில் கிடைக்க வில்லை. படிப்பிற் கவனஞ் செலுத்துவதாற் பதில் வரைய மறந்தாய் போலும்!
பிரித்தானியாவின் இலையுதிர் காலம் பற்றி முன்னைய ஒரு கடிதத்திற் குறிப்பிட்டிருந்தேன். இப்போது இங்கு மாரி (winter) காலம். மாரி காலம் என்று கூறுவதிலும், இப் பருவத்தைக் கடுங்குளிர் காலம்’ என்று குறிப்பிடுவதே பொருத்தமெனத் தோன்றுகிறது. கார் காலம் என்றும், கூதிர் காலம் என்றும் எமது நாட்டிற் குறிப்பிடப்படும் பருவப் பெயர்கள் பிரித்தானியாவின் கடுங்குளிர் காலத்திற் குப் பொருந்தாதவை.
எமது நாட்டின் மாரி காலம் ஒரு வகைத்து. இங்குள்ள கடுங்குளிர் காலம் இன்னெரு தன்மைத்து. எமது நாட்டில்
37

Page 24
மாரி காலத்திற் கரு முகில்கள் சூழும்; குளிர் காற்று வீசும்; மயில் ஆடும்; குயில் கூவும். மழை 'சோ' எனப் பொழியும். அப்போது வெள்ளம் பெருகி ஒடும். தவளைகள் கத்தும்; பல்லினப் பூச்சிகள் ஒலியெழுப்பும். பெருமழைக் காலத்தில் எங்கும் வெள்ளக் காடாகவே காணப்படும். இவற்றையெல்லாம் இலங்கையில் நேரிலேயே நீ பார்த்திருக் கிருய்.
திசெம்பர், சனவரி, பெப்ருவரி, மார்ச்சு மாதங்களே பிரித்தானியாவிற் கடுங்குளிர் மாதங்களாகும். இப்பருவத் திற் பகற் காலத்திலும் இராக் காலம் நீண்டதாய் இருக்கும். சனவரி மாதத்திற் கதிரவன் மாலை 5.00 மணிக்கே மறைந்து விடுகின்றன். இன்னெரு வகையாகக் கூறின், மாலை 5.00 மணிக்கே இருள் குடிகொண்டு விடுகின்றது. சில நாட்களிற் கதிரவனைக் காணவே முடியாது. கரு முகில்கள் அவனை மூடிக்கொள்கின்றன. கடுங்குளிரையும் பொறுத்துக் கொள்ள லாம்; ஆனல் இருள் சூழ்ந்த பகற் காலத்தை எவ்வாறு சகித்துக் கொள்ள முடியும்?
மழை பொழிவதை நீ பார்த்திருக்கின்ருய் அல்லவா ? அவ்வாறு மழை இங்கு கொட்டுவதில்லை; துமித்துக்கொண்டே இருக்கும். மாரி காலத்தில் ஏற்படும் இடி முழக்கத்தையும் கேட்டிருக்கின்ருய். மின்னுவதும் அதைத் தொடர்ந்து இடிமுழக்கம் ஏற்படுவதும் எமது நாட்டில் மாரி காலத்திற் குரியவை. இங்கு மின்னல் தோன்றி மறைவதும் இடிமுழக்கம் எழுவதும் மிக அரிதாகும்.
சில நாட்களில் மூடுபனி சூழ்ந்து கொள்கின்றது. வீதி களில் மூடுபனி சூழ்ந்து கொள்ளும்போது போக்குவரத்துத் தடைப்படும். மோட்டார் வழிகளிற் பெரிய விபத்துக்களும் ஏற்படுவதுண்டு. கடந்த இரண்டு மாதங்களில் வீதி விபத் துக்கள் பல இங்கு ஏற்பட்டுள்ளன. அவ்விபத்துக்களில் நூற்றுக்கும் அதிகமான வாகனங்கள் சேதமடைந்தன. விபத்
38

தின்போது உயிர் இழந்தோர் பலர்; காயமடைந்தோர் இன்னும் பலர். இந்த வாரம் ஜேர்மனியிற் பெரிய வீதி விபத்து ஒன்று ஏற்பட்டது. அந்த விபத்தில் நூற்றுக்கும் அதிகமான வாகனங்கள் சேதமடைந்தன. பலர் காயமடைந் தனர்; சிலர் உயிர் இழந்தனர். மூடுபனி காரணமாக விமானப் போக்குவரத்துக்கள் தடைப்படுதலும் உண்டு. விமானத் தளங்களை மூடுபனி மூடிக் கொண்டால் விமானங் கள் இறங்கவும் முடியாது; ஏறவும் முடியாது. மூடுபனி நீங்கும்வரை விமானங்கள் வேறு விமானத் தளங்களிற் பல மணி நேரம் காத்து நிற்க வேண்டியிருக்கும்.
இப்போது இங்கு இடைக்கிடைபனி பெய்கின்றது. மழைத் துளிகள் வானத்திலிருந்து விழுவதைப் பார்த்திருக்கின்ருய் அல்லவா? அதே போலவே வானிலிருந்து பனித் துளிகள் (snow) மழைத் துமிகள்போல் விழுவதை இங்கு காணமுடி கின்றது. பனித் துளிகள் மல்லிகை மலர் இதழ்களைப் போல இருக்கும். பணித் துளிகள் வானிலிருந்து விழுவது மல்லிகை மலர் இதழ்கள் வானிலிருந்து விழுவது போலத் தோன்றும். இதனை "மலர் மழை" என்று வருணிக்கலாம். இக்காட்சி கண்களுக்கு நல்விருந்தாகும்!
மழையிற் சென்ருல் உடலும் உடையும் நனைந்துவிடும். பனி பெய்யும்போது வெளியே சென்ருல் நாம் நனைந்துவிட மாட்டோம். பனித் துளிகள் உடலிலும் உடையிலும் விழுந்து சிறிது நேரத்திற் கொஞ்சங் கொஞ்சமாக மறைந்து விடும். சிலவேளைகளிற் பணி தொடர்ந்து பெய்வதுண்டு. அவ்வாறு பெய்யும்போது பனித் துளிகள் நிலத்திலும் நீரிலும் படிந்து கொள்ளும்; வீடுகளின் மேலும் மரங்களின் மேலும் அவை நிறைந்திருக்கும்; மோட்டார் வண்டிகளை மூடிக் கொள்ளும்; குளங்களும் குன்றுகளும் பணியால் மூடுண்டு கிடக்கும்.
இரண்டு வாரங்களுக்கு முன், மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து பனி மழை பொழிந்தது. அதனல் வீதிகள்
39

Page 25
பணியால் மூடுண்டன; வயல்களும் வளவுகளும் பணியால் நிறைந்தன; குளங்கள் மீதும் ஆறுகள் மீதும் பனி மலர்கள் படிந்து நிறைந்தன. வீடுகளும் வாகனங்களும் பணியில் மூழ்கின. சுருக்கமாகக் கூறின், எல்லா இடங்களையுமே பணி மூடிக்கொண்டது. ஐந்து அல்லது ஆறு அங்குல உயரத்துக் குப் பணி படிந்திருந்தது. சில இடங்சளில் ஓர் அடி உயரத் துக்கும் மேலாகப் பணி நிறைந்து மூடிக் கொண்டது. பார்க் கும் இடமெல்லாம் வெண்மையான தோற்றம். அத்தோற்றம் வணுந்தரம் ஒன்றின் வெண்மணற் பரப்புப்போற் காணப் பட்டது. இலைகளை உதிர்த்து நின்ற மரங்கள் வனந்தரத்தி லுள்ள வற்றி வரண்ட மரங்களைப் போலக் காட்சி கொடுத் தன. பனி மூடிக் கிடந்த தோற்றம் வனந்தரத்தில் மணல் நிறைந்து கிடந்தது போல இருந்தது. ஆனல், ஒரேயொரு வேறுபாடு. பனி மூடிய இடம் கொடிய குளிரைக் கொண் டிருந்தது. மணல் நிறைந்த வனந்தரமோ கொடிய வெப் பத்தைக் கொண்டிருக்கும்.
இரவு 9.00 மணி இருக்கும். மாடி அறையிலிருந்து சாளரத்தினூடே வெளியே நோக்கினேன். மின் விளக்குகள் ஒளிவிட்டு எரிந்துகொண்டிருந்தன. எங்கும் நிசப்தம் நிலவி யது. மக்களின் நடமாட்டமே இல்லை; வாகனங்களின் போக்குவரத்தும் இல்லை. கண்ணுக்குத் தெரியக்கூடியவரை நோக்கினேன். எங்கும் பனிப் படலம். மின் விளக்குகளின் ஒளியில், படிந்திருந்த பனிப் படலங்களை நன்கு காண முடிந் தது. அவை மின் விளக்குகளின் ஒளியில் வெண்மையாகப் பிரகாசித்தன. எங்கும் வெண்மையான தோற்றம். அத் தோற்றத்தை எவ்வாறு இங்கு வருணிப்பதென எனக்குத் தோன்றவில்லை. அத்தோற்றம் அழியாத ஒவியமாக என் மனத் திரையிற் படிந்துள்ளது.
இவ்வாறு படிந்திருந்த பனிப் படலம் ஒரு வாரத்திற்கும் மேலாக அப்படியே கிடந்தது. படர்ந்திருந்த பனி உறைந்து பனிப் படலமாக மாறியது. பனி மழை பொழியும்போது குளிர் குறைவாக இருக்கும். ஆனல், பனி உறைந்து கிடக்
40

கும் போதும், உறைந்து கிடந்த பனி உருகும்போதும் குளிர் கொடுமையாக இருக்கும். இதனுற் கடந்த இரண்டு வாரங்களும் இங்கு கடும் குளிராகவே இருந்தது.
எமது நாட்டிற் குருவளியினலும் வெள்ளப் பெருக்கி ணு,லும் அழிவுகள் ஏற்பட்டதை நீ அறிவாய். 1979 ஆம் ஆண்டு மட்டக்களப்பைக் கொடிய குருவளி தாக்கியது. மரங்கள் முறிந்து விழுந்தன; வீடுகள் அழிந்தன; கட்ட டங்கள் தகர்ந்தன; விளை நிலங்கள் வெள்ளக் காடாயின. மக்கள், தங்குமிடந் தேடி அகதிகளாய் அலைந்தனர். அது போலவே இங்கும் பணி பொழிந்து, பெருஞ் சேதம் ஏற் பட்டது. வெள்ளப் பெருக்காற் கிராமங்கள் துண்டிக்கப் படுவது போன்று, பணி பொழிந்து பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. வீடுகளை விட்டு மக்கள் வெளியேற முடியாத அளவுக்குப் பணி மூடிக்கொண்டது. அதனல் வெளித் தொடர்புகள் எவையுமின்றி மக்கள் பாதிக்கப்பட்டனர். தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டன; மின் விநி யோகம் தடைப்பட்டது; போக்குவரத்து வசதிகள் இல்லா தொழிந்தன; பயிர் வகைகள் அழிந்தன; மக்கள் வீடுகளை இழந்தனர்; உடைமைகளையும் இழந்தனர்; அகதிகளாகக் கோயில்களிலும் பாடசாலைகளிலும் தஞ்சம் புகுந்தனர். வயது முதிர்ந்தோர் கடுங்குளிரால் இறந்தனர். வெப்ப மூட்டிகள் உடைந்து வீடுகள் நாசமாயின. இச்சேதங்களை எல்லாம் இங்கு தொலைக்காட்சியிற் காண்பித்தனர்.
பனி உறைந்து கிடந்த காலத்திலும் பல சேதங்கள் ஏற்பட் டன. குழாய்களிலுள்ள நீர் உறைந்து வெப்பமூட்டிகள் வெடித்து உடைந்தன. அதனுல் வீடுகள் தகர்ந்தன; உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டன. உறைந்த பனியிற் சறுக்குண்டு விழுந்து காயமுற்றேர் பலர் கை கால்களை முறித்துக்கொண் டோர் இன்னும் பலர். வயது முதிர்ந்தோரே கூடுதலாகப் பாதிக்கப்பட்டனர். வீதி விபத்துக்கள் பல ஏற்பட்டன வென முன்னர் கூறினேன். உறைந்த பணியிற் புதை
41

Page 26
யுண்ட வாகனங்களையும் கண்டேன்; சறுக்குண்டு புதைந்து கிடந்த மோட்டார் வண்டிகளையும் பார்த்தேன். ஆறுகளி லும் குளங்களிலும் உறைந்து கிடந்த பனிமேல் விளையா டிப் புதையுண்டு உயிர் இழந்த சிறுவர்கள் பலர். புதை யுண்டோரைக் காப்பாற்றத் துணிந்தோர் இறந்ததும்
உண்டு.
குளிர் காலத்தில் அணிந்து கொள்வதற்கென்றே தனி யான உடைகள் இங்குண்டு. அவை உடலுக்கு வெப்ப மூட்டக்கூடிய கம்பளி ஆடைகளாகும். உடம்பை மூடிக் கொள்ளப் போர்வைகள் உண்டு; கைகளுக்கு மாட்டி மூடிக் கொள்ளக் கையணிகளும் உண்டு; தலைக்கு அணிவதற்குப் பல வகைத் தொப்பிகளும் உண்டு. கடுங்குளிர் நெஞ்சைத் தாக்கிக் கொள்ளாதிருக்கக் கழுத்துப் பட்டிகளும் (ties) பலவகை வடிவிலும் வகையிலும் உள. இவை யாவும் இந்த நாட்டிற்கு அவசியம் வேண்டியன. வெப்பமுள்ள எமது நாட்டிற்கு அவசியமற்றவை.
கடுங்குளிரைக் கண்டு இந்த நாட்டிற் பிறந்தவர்களே பயப்படுகின்றனர். கடுங்குளிர் காலத்துக்குப் பயந்து வேறு நாடுகளுக்கு ஒடுகின்றவர்களும் உளர். கடுங்குளிரிலிருந்து தம்மைப் பாதுகாக்க வெப்பமூட்டப்பட்ட வீடுகளில் மக்கள் வாழ்கின்றனர்; வெப்பமூட்டப்பட்ட வாகனங்களிற் பயணஞ் செய்கின்றனர்; வெப்பமூட்டப்பட்ட அலுவலகங்களில் வேலை செய்கின்றனர்.
அன்புள்ள, அப்பா.
42

8
வரிசை முறைமையும்
வீதியொழுங்குகளும்
சந்தை நிலையம், மில்றன் கீன்ஸ், பிரித்தானியா, 05.0 l. 1985.
அன்புள்ள சுதர்சன்,
22 ஆம் தேதியிட்டு எழுதிய உனது கடிதம் இன்றுதான் எனக்குக் கிடைத்தது. சிங்கப்பூரிலே தபாலிற் சேர்க்கப்படும் கடிதங்கள் ஒரு வாரத்தில் இங்கு வந்து சேர்ந்துவிடும். ஆனல், இக்கடிதம் இங்கு வந்து சேர்வதற்கு இரண்டு வாரங் கள் சென்றுள்ளன. கிறிஸ்மஸ் விடுமுறை காரணமாகவே கடிதம் ஒரு வாரம்வரை பிந்தி வந்துள்ளது. அதனுல் 4.6னது கடிதத்துக்குப் பதில் வரையத் தாமதமாயிற்று.
இங்கு கடந்த இரண்டு நாட்களாகப் பணி பெய்து கொண்டிருக்கிறது. அத்துடன் குளிராகவும் இருக்கிறது. பகலிலும் பார்க்க, இரவு கூடிய கடுங்குளிராக உள்ளது. "இக்கடுங்குளிரை எவ்வாறு பொறுத்துக்கொள்வது ? 'இலை துளிர் காலம் எப்போதுதான் வரப் போகின்றதோ?’’ என்று நினைந்து நாட்களை எண்ணியவாறு காலத்தைப் போக்க வேண்டியதாய் இருக்கிறது.
43

Page 27
சிங்கப்பூரில், ஒழுங்கு விதிகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் மக்கள் அமைந்து வாழ்கின்றனர் என்று எழுதியுள்ளாய். ஒவ்வொரு நாட்டிலும் ஒழுங்கு விதிகளும் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன. சில நாடுகளில் அவை நடைமுறையிலுள்ளன. ஆளுல், சில நாடுகளில் அவை நன்கு நடைமுறைப்படுத்தப் படுவதில்லை. சிங்கப்பூரில் ஒழுங்கு விதிகளும் கட்டுப்பாடுகளும் நன்கு நடைமுறைப் படுத்தப்படுவதினலேயே அந்த நாடு மேற்கு நாடுகளுக்கு ஒப்பானதாகத் திகழ்கின்றது. பிரித் தானியாவில் நடைமுறையிலுள்ள ஒழுங்குகளிலும், கட்டுப் பாடுகளிலும் சிலவற்றை இக்கடிதத்திற் குறிப்பிடலாமென எண்ணினேன். சிங்கப்பூரில் எந்தளவிற்கு அவை நடை முறையிலுள்ளன என்பதை ஒப்பிட்டுப் பார்க்க உனக்கு உதவியாகும்.
இன்று காலை 9 மணிக்குப் பல்கலைக்கழகத்துக்குப் போவதற் காகப் பஸ் நிறுத்தும் இடத்தில் நின்றுகொண்டிருந்தேன். பஸ் வருவதற்கு 5 நிமிடங்கள் இருந்தன. அங்கு நான் மட்டுமே நின்றேன். கடுங்குளிராக இருந்தது. அப்போது திறந்த பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவனுக இருக்கும் திரு. தோமஸ் வருவதைக் கண்டேன். திரு. தோமஸ் அவர்கள் வேல்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்.
“வணக்கம்! கடுங்குளிர் அல்லவா?' என்று ஆங்கிலத்திற் கூறிக்கொண்டே நான் நிற்கும் இடத்துக்கு அவர் வந்து சேர்ந்தார். பஸ் வண்டியும் வந்து சேர்ந்தது. பஸ் வண்டி யிலே ஏறிக்கொள்வதற்கு திரு. தோமஸ் அவர்களுக்கு வழி விட்டுக் கொடுத்தேன். ஆனல், பஸ் வண்டியில் ஏற மறுத்து, என்னையே முதலில் ஏறிக்கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார். எனவே, நான் முதலில் ஏறினேன்; அதன் பின்னர் அவர் ஏறினர். இருவரும் ஒருவர் பக்கத்தில் ஒரு வராக அமர்ந்து கொண்டோம். பஸ் புறப்பட்டது. *
“பஸ் நிறுத்தும் இடத்துக்கு நீங்களே முதலில் வந்தீர்கள். நீங்கள் வந்த பின்னரே நான் அங்கு வந்து சேர்ந்தேன்.
44

ஆகவே, பஸ் வண்டியில் முதலில் ஏற வேண்டியவர் நீங்களே! அதன் பின்னரே நான் ஏற வேண்டும். அதற்காகவே உங்களை முதலில் பஸ் வண்டியில் ஏறுமாறு சொன்னேன்’’ என்று தோமஸ் புன்முறுவலோடு கூறினர். "நன்றி' என்று கூறித் தலையை அசைத்தேன்.
பஸ் நிறுத்தும் இடத்தில் நின்றவர்கள் இருவர் மட்டுமே. எனினும், முதலில் அங்கே வந்தவரே முதற்கண் பஸ் வண்டி யிலே ஏறிக்கொள்ள வேண்டும். அதன் பின்னரே இரண் டாவதாக வந்தவர் ஏற வேண்டும். இந்த வரிசை முறைமை இங்கு நன்கு கடைப்பிடிக்கப்படுகிறது. பஸ் நிற்கும் இடத் தில் மட்டுமன்று, எல்லா இடங்களிலும் இவ்வரிசை முறைமை நடைமுறையிலுள்ளது.
இனி, இன்று மத்தியானப் போசனத்தின்போது நடந்த தையும் இங்கு எழுதுவது பொருத்தமாகுமென எண்ணுகின் றேன். மத்தியானம் 12.30 மணிக்குப் பல்கலைக்கழகத்தி லுள்ள போசனசாலைக்குச் சாப்பிடுவதற்காகப் போனேன். அங்கே ஒருவர்பின் ஒருவராக இருபது பேர்வரை வரிசையில் நின்றனர். அவர்களுள் பேராசிரியர்கள், துணைப் பேராசிரி யர்கள், விரிவுரையாளர்கள், நிருவாகத் தலைவர்கள், எழுது வினைஞர்கள் என்போர் இருந்தனர். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் நின்றர். இவர்கள் எல்லோரும் ஒருவருக்குப் பின் ஒருவராக வரிசையில் நின்றனர். இவ்வரிசையில் துணை வேந்தருக்கோ பேராசிரியர்களுக்கோ முதலிடங் கொடுக் கப்பட வில்லை. அங்கு முதலிலே வந்து சேர்ந்த பரீட்சைக் கிளையில் வேலை செய்யும் எழுதுவினைஞரே முன்னே நின்றர். அவரின் பின்னேயே ஏனையோர் நின்றனர். எவரும் வரி சையை முறித்து முன்னே செல்ல வேண்டுமென்று எண்ணவே இல்லை. அங்கு வந்தவர்கள் எல்லோரும் முறைப்படி வரி சையில் நின்று தத்தமக்கு வேண்டிய உணவைப் பெற்று, உணவருந்தும் மேசைகளுக்குச் சென்று அமர்ந்து கொண் டனர். இந்த ஒழுங்குமுறை பல்கலைக்கழகம் தாபிக்கப்பட்ட காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ளதென அறிந்தேன்.
45

Page 28
அலுவலகம் ஒன்றில் நடைமுறையிலுள்ள வரிசை முறை மையையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
பிற்பகல் பல்கலைக்கழகத்திலிருந்து புறப்பட்டுச் சந்தை நிலையத்துக்கு வந்தேன். அப்போது நேரம் பிற்பகல் 2 மணி யிருக்கும். வான் கடிதம் ஒன்றை வாங்குவதற்கு அஞ்சல் அலுவலகத்துக்குச் சென்றேன். அங்கு நீண்ட வரிசை ஒன்று இருந்தது. ஏறக்குறைய ஐம்பது பேர்வரை அந்த வரிசை யில் நின்றனர். நானும் அங்கு சென்று வரிசை இறுதியில் சேர்ந்து கொண்டேன். ‘வான் கடிதம் ஒன்றை வாங்கு வதற்கு இந்த நீண்ட வரிசையில் எவ்வளவு நேரத்துக்குத் தான் நிற்பது' என்று எண்ணிக்கொண்டே வரிசையில் நின்றேன். அந்த அஞ்சல் அலுவலகத்திலே பத்து அலுவலர் கள் வரிசையாக அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தனர். வரிசையில் நின்றவர்கள் தத்தம் முறைப்படி அவ்வவ் அலு வலர்களை அணுகித் தத்தங் காரியங்களை முடித்துக் கொண்டு வெளியே சென்றனர். பத்து நிமிடங்களில் எனது முறை வந் தது. எனது முறைக்குரிய அலுவலரிடம் சென்று பணத்தைக் கொடுத்து வான் கடிதத்தை வாங்கிக்கொண்டு திரும்பிப் பார்த்தேன். வரிசையின் நீளம் அப்படியே இருந்தது. ஐம்பது பேர்வர்ை வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். ஐம்பது பேர் வரிசையில் நின்ருலும் ஒருவர் செலவிட்ட நேரம் 10 நிமிடங்களே! அதாவது பத்து நிமிடங்களில் நமக்கு வேண்டியவற்றைச் செய்து முடித்துக்கொண்டு அஞ்சல் அலுவலகத்தைவிட்டு வெளியேறக் கூடியதாக வரிசை முறைமை நடைமுறையில் உள்ளது.
எல்லா இடங்களிலும் ஒழுங்கும் கட்டுப்பாடும் மக்களி டையே நிலவ இந்த வரிசை முறைமை பெருமளவிற்கு உதவி செய்கின்றது. ܗܝ
இந்த வரிசை முறைமை எல்லா இடங்களிலும் பின் பற்றப்படுகின்றது என்று கூறினேன். சந்தையிலும் உண்டு;
46

சவக்காலையிலும் உண்டு. ஒருவரையொருவர் முந்தவேண்டு மென்று எவருமே எண்ணுவதில்லை. உயர்ந்தோர், தாழ்ந் தோர் என்ற வேறுபாடுமில்லை; சிறியோர் பெரியோர் என்ற பேதமும் இல்லை. ஒழுங்கும் கட்டுப்பாடும் மக்க ளிடையே நிலவ இந்த வரிசை முறைமை பெருமளவிற்கு உதவி செய்கின்றது. இன்னும், விரைவாகவும் செப்ப மாகவும் மக்கள் தத்தம் வேலைகளை முடித்துக்கொள்ளவும் வசதி அளிக்கின்றது.
சிங்கப்பூரில் வீதி ஒழுங்கு விதிகளைச் சாரதிகள் நன்கு கடைப்பிடிப்பதாக உனது கடிதத்திற் குறிப்பிட்டு எழுதி யுள்ளாய். இங்கும் அவ்வொழுங்கு முறை உண்டு. முன்னே செல்கின்ற ஒரு வாகனத்தைப் பின்னே வருகின்ற வாகனம், வீதி ஒழுங்கு விதிகளை மீறி, முந்திச் செல்வதில்லை. முன்னே போகும் வாகனத்தைச் செலுத்துகின்றவரும், பின்னே வரும் வாகனங்களுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதில்லை. சந்திகளிலும் சுற்று வழிகளிலும் (round about) ஒழுங்கு விதி களை நன்கு கடைப்பிடித்துச் சாரதிகள் தமது வாகனங்களை ஒட்டிச் செல்வதை இங்கு நன்கு அவதானிக்க முடிகின்றது. அதாவது, சந்திகளிலும் சுற்று வழிகளிலும் தமது வாக னத்தை நிறுத்தி, சரியான வழியில் வருகின்ற வாகனத்தைப் போகவிட்டு, அதன் பின்னரே தமது வாகனத்தைச் செலுத்துகின்றனர். வீதி ஒழுங்கை மீறுபவர்கள் தண்டனைக் குள்ளாவர். ஒழுங்கை மீறுகின்ற அந்த இடத்திலேயே தண்டனை வழங்குவதற்கு அதிகாரங்கள் கொடுக்கப்பட் டுள்ளன. இவ்வதிகாரங்களை அதிகாரிகள் துர்ப்பிரயோகம் செய்வதுமில்லை; கைக்கூலி வாங்கிக்கொண்டு தவறிழைத் தாரைத் தப்பிப் போக விடுவதுமில்லை.
வீதி ஒழுங்கு விதிகளைச் சாரதிகள் கடைப்பிடிப்பதாற் பல நன்மைகள் ஏற்படுகின்றன. அவற்றுள் இரண்டினை முக்கியமாகக் குறிப்பிடலாம். ஒன்று, விரைவாக வாகனங் களை ஒட்ட முடிகின்றது; இன்னென்று, விபத்துக்களுக்கு இடமில்லாமற் போகின்றது. வீதி ஒழுங்கு விதிகளைக்
47

Page 29
கடைப்பிடிக்க முடியாதவர்கள் வீட்டில் எவ்வாறு ஒழுங்கை நிலை நாட்ட முடியும்? வீட்டில் ஒழுங்கு இல்லாதுவிட்டால் நாட்டில் எவ்வாறு ஒழுங்கு நிலவ முடியும்?.
நடப்போர் கடப்புக்கும் (pedestrian Crossing) சாரதிகள் மதிப்புக் கொடுக்கின்றனர். நடப்போர் கடப்பினுற் போவ தற்கு வீதியில் மக்கள் நின்றுகொண்டிருந்தால்-தனி ஒருவ ராக இருப்பினும்-தமது வண்டியை நிறுத்தி வீதியிற் காத்து நின்றவர்களைக் கடந்து போகவிட்டு, அதன் பின்னரே சாரதிகள் வண்டிகளை ஒட்டிச் செல்வர். இன்னும் வீதிகளிலும் சந்திகளிலும் சுற்று வழிகளிலும் நடந்து செல்வோருக்கு மதிப்பளிக்கின்ற முறை பாராட்டுதற் குரியதாகும்!
சிவப்பு விளக்கு எரியும்போது, நடப்போர் கடப்புக் களிற் சென்ருல் சிங்கப்பூரிலே தண்டனை வழங்கப்படும் என்று உனது கடிதத்திற் குறிப்பிட்டுள்ளாய். சிவப்பு வெளிச்சமுள்ளபோது, நடப்போர் கடப்புக்களிற் செல் வோர் இங்கு மிகச் சிலரே; அவ்வாறு மீறுவோரை இங்கு தண்டிப்பதுமில்லை. ஆனல் நடப்போர் கடப்புக்களிற் பச்சை நிற வெளிச்சம் உள்ள நேரத்தில் நடந்து செல்வோர் விபத்துக்குள்ளானற் சாரதிகள் தண்டிக்கப்படுவர். விபத் துக்குள்ளானவர் விபத்துக்குக் காரணமாக இருந்தவரிடம் நஷ்டஈடு கோருவதற்கும் சட்டம் இடமளிக்கின்றது. இவ் வகைத் தண்டனைகளாலேயே ஒழுங்கையும் கட்டுப்பாட்டை யும் வீதிகளிலே ஏற்படுத்த முடியும். வீதியில் ஒழுங்கு நிலவும் போது நாட்டிலும் ஒழுங்கு நிலவும் என்று துணிந்து கூறலாம்.
இலங்கையில் வரிசை முறைமையும் வீதியொழுங்கும் எந்தளவிற்கு நடைமுறையிலுள்ளன என்பதை நீ அறி வாய். வரிசை முறைமையைப் பின்பற்றுவோர் மிகச் சிலரே! முன்னே வந்தவர் வரிசையில் நிற்க, பின்னே வந்த
48

வர் முந்திச் செல்வது வழக்கமாகிவிட்டது. வீதிகளிலும் ஒழுங்கு விதிகள் நன்கு கடைப்பிடிக்கப்படுவதில்லை. முன்னே செல்கின்ற வண்டியைப் பின்னே வந்த வண்டி, வீதி ஒழுங்கு விதிகளை மீறி, முந்திப் போவதைப் பார்க்க லாம். நடப்போர் கடப்புக்களுக்குச் சாரதிகள் மதிப்புக் கொடுப்பதில்லை. நடந்துபோவோரும் வீதியிற் கண்ட இடங் களில் எல்லாம் கடந்து செல்வதைக் காணலாம். அவ்வாறு கடந்து செல்வோர் தாம் கடப்பதற்கு வசதியாக, வீதி யில் வருகின்ற வாகனங்களை நிறுத்துமாறு ՖւD5] கைகளைக் காட்டுவதும் உண்டு.
வீதி ஒழுங்கை மீறும் ஒருவர், வாழ்க்கைப் பாதையிலும் ஒழுங்கை ஏன் மீறமாட்டார்? முன்னே போகின்ற வாக னத்தை வீதி ஒழுங்கை மீறி முந்துகின்ற சாரதி ஒருவர், வாழ்க்கைப் பாதையிலும் இன்னெருவரைத் தகாத முறை யில் முந்திச் செல்ல எத்தனிப்பார் என்று கூறலாம். வீதி யில் நடந்துகொள்கின்ற முறையைப் போலவே, வாழ்க் கைப் பாதையிலும் ஒருவர் நடந்துகொள்ள முனைவார். வீதியில் ஒழுங்காக நடந்துகொள்வோமானுல் வாழ்க்கைப் பாதையிலும் ஒழுங்காக நடந்துகொள்வோம் அல்லவா?
அன்புள்ள, அப்பா.
49

Page 30
9
கட்சி ஆட்சி முறை
திறந்த பல்கலைக்கழகம், மில்றன் கீன்ஸ், பிரித்தானியா, 1 0.01 .. 85.
அன்புள்ள சுதர்சன்,
24. 12.84 ஆம் தேதியிட்டு எழுதிய உனது கடிதம் கிடைத்தது. அதில் திசெம்பர் 22 ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்ற பொதுத் தேர்தலைப் பற்றிக் குறிப்பிட்டு எழு தியவற்றை வாசித்து மகிழ்ந்தேன். மாணவனுக இருக்கும் போது அரசியலில் ஈடுபடக் கூடாது. மாணவர்களை அரசிய லுக்குள் இழுப்பதும் முற்ருகத் தவிர்க்கப்பட வேண்டும். ஆனல், உயர் வகுப்புக்களிற் படிக்கின்ற மாணவர்கள் அரசியல் அறிவு உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
திசெம்பர் 22 ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் செயற்பாட்டுக் கட்சி 32 ஆசனங்களையும், சிங்கப்பூர் சனநாயகக் கட்சியும் சிங்கப்பூர் தொழிலாளர் கட்சியும் ஒவ்வோர் ஆசனத்தையும் பெற் றுள்ளதாக எழுதியுள்ளாய். இத்தேர்தல் முடிவுகளை இங் குள்ள செய்தித் தாள்களும் வெளியிட்டிருந்தன. சிங்கப் பூரில் நடந்த பொதுத் தேர்தல் முடிவுகள் இங்குள்
5)

ளோர் பலருக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளன போலத் தோன்றுகின்றது! சிங்கப்பூர் மக்களாட்சியில் எதிர்க் கட்சி பலமில்லாதிருப்பது பற்றி இங்கு பலர் குறை காண்கின் றனர். இவர்களின் இந்தக் கவலை மக்களாட்சியில் இவர்கள் கொண்டுள்ள அக்கறையா, சிங்கப்பூரின் அபிவிருத்தியில் கொண்டுள்ள பொருமையா என்பதை என்னுற் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஒரு மாத காலத்துக்கு மேலாகச் சிங்கப்பூர்ப் பொதுத் தேர்தலைப்பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருந்ததை இங்கு அவதானிக்க முடிந்தது. சிங்கப் பூரின் பொருளாதார நிலையையும் பொதுத் தேர்தலையும் இணைத்து ஆளுங் கட்சிக்குப் பொதுத் தேர்தலிற் கடும் எதிர்ப்பு ஏற்பட்டு வருவதாகச் செய்திகள் வெளிவந்தன. இன்னும், எதிர்க் கட்சிகளுக்கு மக்களின் ஆதரவு பெருகி வருவதாகவும் அச்செய்திகள் குறிப்பிட்டிருந்தன. ஆனல் பொதுத் தேர்தலிலே ஆளுங் கட்சி, ஓர் ஆசனத்தை மட்டும் இழந்து 32 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. எதிர்க் கட்சி க்கு ஒன்ருக இருந்த ஆசனம் இரண்டாகக் கூடியுள்ளது. இங்குள்ள அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்த்தது போலப் பொதுத் தேர்தல் முடிவுகளில் மாற்றம் எதுவும் ஏற்பட வில்லை. அதனுலேயே சிங்கப்பூர்ப் பொதுத் தேர்தல் இங்குள் ளோர் பலருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாகக் குறிப்பிடு கின்றேன்.
சிங்கப்பூர் தனி நாடான பின்னர், மக்கள் செயற்பாட்டுக் கட்சியே ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றியீட்டி ஆட்சியை நடாத்தி வந்துள்ளதாக எழுதியுள்ளாய். ஆனல், இதற்கும் மேலாகப் பலமுள்ள எதிர்க் கட்சி இல்லாத மக்களாட்சியாக மக்கள் செயற்பாட்டுக் கட்சி, ஆட்சியை நடாத்தி வந்துள் ளதை நீ குறிப்பிட மறந்து விட்டாய். இந்தத் தனிக் கட்சி ஆட்சி முறையினலேயே சிங்கப்பூர் அபிவிருத்தி அடைந்து மேற்கு நாடுகளுக்கு ஒப்பான ஒரு நாடாகத் திகழ்கின்றது.
51

Page 31
"சிங்கப்பூர் எழில் மிக்க ஒரு நாடு. இங்கு ஒழுங்கும் கட் டுப்பாடும் நன்கு பேணப்படுகின்றன. மக்கள் சுறுசுறுப்பாக வேலை செய்கின்றனர். நாட்டைத் துப்புரவாக வைத்துக் கொள்ள ஆட்சியாளர் சட்டங்களை இயற்றியுள்ளனர். இங்கு போக்குவரத்து ஒழுங்கு விதிகள் நன்கு கடைப்பிடிக்கப்படு கின்றன. ஒழுங்கு விதிகளை மீறுவோர் அந்தந்த இடங் களிலேயே தண்டிக்கப்படுகின்றனர். ஊழல்கள் இல்லாத ஆட்சியாகவும் அமைந்துள்ளது. உல்லாசப் பயணத் துறை பெருமளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளது. இன்னும், பல துறைகளிற் சிங்கப்பூர் முன்னேறியுள்ளது. இவ்வளர்ச்சி கள் காரணமாகச் சிங்கப்பூர் மக்கள் வளமாக வாழ்கின்ற னர்' என்று உனது கடிதத்திற் குறிப்பிட்டிருந்தாய். ஆம். அவ்வாறு சிங்கப்பூர் அபிவிருத்தி அடைந்துள்ளமைக்கு அங்கு நிலவுகின்ற ஆட்சி முறையே அடிப்படைக் காரணம் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
இந்த இடத்தில் முக்கியமாக ஒன்றைக் குறிப்பிட விரும்பு கின்றேன். அதாவது, வளர்ச்சி அடைந்து வரும் நாடுக ளுக்குப் பிரித்தானிய மக்களாட்சி முறைமை ஏற்றதன்று. மக்களாட்சி முறைமைக்குப் பலமுள்ள எதிர்க் கட்சி அவசிய மெனக் கூறுகின்றனர். நாட்டின் நலத்துக்கு நன்மையானவை எவை, தீமையானவை எவை என்று ஆராய்ந்து சுயநலங் கருதாது நாட்டின் நலன் கருதிச் செயற்படுகின்ற எதிர்க் கட்சிகளினலேயே மக்களாட்சி சிறப்புறும். அதேபோல ஆட்சியாளர்களும் நாட்டின் வளர்ச்சியை நோக்கமாக வைத்துத் தொழிற்படுதல் வேண்டும். ஆக்கபூர்வமான கட்சிக் கொள்கைகளை முன்வைத்து அரசியற் கட்சிகள் போட்டியிடல் வேண்டும். ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகச் "செய்ய முடியாதனவற்றைச் செய்து கொடுப்போம்" என்று வாக்காளர்களைத் தப்பான வழியிலே இட்டுச் செல்லக் கூடிய எதிர்க் கட்சிகள் பலமுள்ளவையாக இருப்பதனுற் பயன் யாது? அதனல் மக்களாட்சி தோல்வியையே காணும்!
52

சிங்கப்பூரில் நிலவி வந்துள்ள மக்களாட்சியிற் பலமில் லாத எதிர்க் கட்சியே இருந்து வந்துள்ளது. மக்கள் செயற் பாட்டுக் கட்சியே தொடர்ந்து 25 ஆண்டுகள்வரை தனிக் கட்சியாகப் பதவியிலிருந்து ஆட்சியை மேற்கொண்டுள்ளது. மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றக்கூடிய எதிர்க் கட்சி இல்லாதிருந்தது. அதன் காரணமாகவே மக்கள் செயற்பாட்டுக் கட்சி, நாட்டை அபி விருத்திப் பாதையிற் கொண்டு சென்று முன்னேற்ற முடிந் தது. வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலே ஆட்சி முறையை நடாத்தாமல், நாட்டின் வளர்ச்சியையே நோக்கமாகக் கொண்டு மக்கள் செயற்பாட்டுக் கட்சி தொழிற்பட்டுள்ளமை பாராட்டப்பட வேண்டியது. எதிர்க் கட்சியிலிருந்த தனி ஒருவராற் பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்து ஆட்சியைக் கைப்பற்ற முடியாத நிலை இன்றுவரை நிலவி வந்துள்ளதை நான் வரவேற்கின் றேன். இவற்றுக்கும் மேலாக, ஆளும் கட்சியாக இருந்த மக்கள் செயற்பாட்டுக் கட்சி ஊழல்கள் இல்லாமல் நேர் மையான முறையிற் கட்டுப்பாடும் ஒழுங்கும் நிலவ ஆட் சியை மேற்கொண்டு வந்துள்ளது. இதனை உணர்ந்த சிங் கப்பூர் மக்கள், மக்கள் செயற்பாட்டுக் கட்சியில் அசையாத நம்பிக்கை வைத்தனர். ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் அக்கட்சிக்கு ஆதரவளித்து ஆட்சிப் பொறுப்பையும் கொடுத்து வந்துள்ளனர்.
சுதந்திரம் பெற்ற ஏனைய கீழ் நாடுகளிற் பிரித்தானிய மக்களாட்சி முறைமை எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை அளிக்கவில்லை. இந்நாடுகளிலே எதிர்க் கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றுவதையே நோக்கமாகக் கொண்டு செயற்படுகின் றன. அதனல் மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களைத் தவருன வழியிலே இட்டுச் செல்கின்றன. எனவே ஆளுங் கட்சிகளும் நாட்டின் நலனை மறந்து ஆட் சிப் பீடத்திலிருத்தற்காக மக்களைத் திருத்திப்படுத்த வேண் டிய நிலையிலுள்ளன. இந்த நிலைமை இன்றும் பல நாடுகளில் இருந்து வருவதை நாம் காணக்கூடியதாய் இருக்கின்றது.
53

Page 32
சிங்கப்பூரில் மக்கள் செயற்பாட்டுக் கட்சி இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருப்பதாக உனது கடிதம் குறிப்பிடுகின்றது. ஒரே கட்சி தொடர்ந்து 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தமையாலேயே சிங்கப்பூரில் மக்கள் ஆட்சி வெற்றி பெற்றதெனலாம். ஆளும் கட்சி-அதாவது மக்கள் செயற்பாட்டுக் கட்சி-நாட்டின் நலனையே கருத்திற் கொண்டு தொழிற்பட்டது. ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி யீட்டிய அக்கட்சி தனது செயற்றிட்டங்களைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்தது. இடை யில் எதிர்க் கட்சிக்கு வாய்ப்பு அளித்திருந்தால் நிலைமை வேறுபட்டதாக அமைந்திருக்கும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. எதிர்க் கட்சி பதவிக்கு வந்திருந்தால், பதவியிலிருந்த கட்சி மேற்கொண்டுவந்த அபிவிருத்தி வேலை களைத் தொடராமல், தனது கட்சியின் புதிய கொள்கைகளை நடைமுறைப்படுத்த முனைந்திருக்கும். அப்போது நாட்டின் அபிவிருத்தி முன்னேற முடியாது தடைப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். கொள்கை மாற்றங்கள் நாட்டிற் குழப்பத்தையும் குளறுபடியையுமே ஏற்படுத்தியிருக்கும் என்பது திண்ணம்! I
இந்தியாவில் நிலவி வரும் ஆட்சி முறைமை, மக்களாட் சிக்கு நல்லதோர் எடுத்துக் காட்டாகும். சுதந்திரம் பெற்ற காலந் தொடக்கம் குறுகிய சில ஆண்டுகளைத் தவிர்த்து, ஒரே கட்சி ஆட்சியில் இருந்து வந்துள்ளது. அதனுலே தொடர்ச்சியாக ஆட்சியிலிருந்த கட்சி, தனது கட்சிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி, அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்டு பாரத தேசத்தை முன்னேற்ற முடிந்தது. எதிர்க் கட்சிகள் பலமுள்ளவையாக இருந்தும் அவை நல்லன வற்றைச் செய்யவில்லை. அதாவது ஆட்சியைக் கைப்பற்றும் ஒரே நோக்கத்தோடு எதிர்க் கட்சிகள் தொழிற்பட்டன; தொழிற்படுகின்றன. நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு அவை தம் கொள்கைகளை முன்வைக்கவுமில்லை; தொழிற்படவுமில்லை. ஆளும் கட்சியின் ஆக்கபூர்வமான தொழிற்பாடுகளுக்குத் தடையாக இருந்து, தலையிடியைக்
54

கொடுக்கின்ற சுயநலமுள்ள எதிர்க் கட்சிகளாக அவை இருந்து வருகின்றன. ஆகவே, சிங்கப்பூரிலுள்ள தனிக் கட்சி மக்களாட்சி இந்தியாவில் இருந்திருந்தால், இந்தியா இன் னும் கூடிய அபிவிருத்தியைப் பெற்று முன்னேறியிருக்கும் என்பது எனது எண்ணம்.
பிரித்தானிய மக்களாட்சி முறைமை பல நாடுகளிலே தோல்வி கண்டுள்ளதாகக் கூறினேன். பாகிஸ்தானில் இரா ணுவ ஆட்சி ஏற்பட்டது. வங்காள தேசத்தின் சுதந்திரத் துக்கு அடிகோலியவரும் அவரின் குடும்பத்தாரும் படு கொலை செய்யப்பட்டனர். இன்னும், பல ஆபிரிக்க நாடு களிற் கட்சி ஆட்சி முறை தோல்வி கண்டுள்ளது. நைஜீரியா, கான, உகண்டா என்பன போன்ற ஆபிரிக்க நாடுகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இரவிரவாகப் பல நாடு களில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்வதை இன்றுங் காணமுடிகின்றது.
கட்சிகளாலான மக்களாட்சிக்குப் பிரித்தானியா சிறந்த எடுத்துக் காட்டாகுமெனக் கூறுவர். உண்மைதான். இயற்கை வளங்களும் செல்வமும் பிரித்தானியாவின் கட்சி ஆட்சி முறையின் வெற்றிக்கு அடிப்படைக் காரணங்க ளாகும். பொருளாதாரப் பிரச்சினை ஏற்படுமானல் கட்சி ஆட்சி முறை இங்கும் தோல்வி காணும் என்பது திண்ணம். கட்சிகளாலான மக்களாட்சிக்கு இங்கு ஈடாட்டம் கண்டு வருவதை நேரிலேயே இன்று காணக்கூடியதாக இருக்கிறது. ஆட்சியைக் கைப்பற்றும் ஒரே நோக்கத்தோடுதான் இங் குளள் கட்சிகள் இன்று செயற்படுகின்றன. நாட்டின் நலனைக்கருதி அவை செயற்பட மறந்து விடுகின்றன.
சென்ற வாரத்தில் ஒரு நாள் பிரித்தானிய பாராளு மன்றத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொண்ட முறையைக் கண்டு கவலை கொண்டேன். எதிர்க் கட்சித் தலைவரின் பேச்சை ஆளுங்
55

Page 33
கட்சியினர் கூக்குரலிட்டு இடையூறு செய்தனர். பிரதமரின் பேச்சைக் கேட்க முடியாதவாறு கூச்சலிட்டு எதிர்க் கட்சி யினர் குரலெழுப்பினர். பாராளுமன்றமா? படியாதோர் கூடமா? என்ற வினவையே கேட்க வேண்டும் போல எனக்குத் தோன்றிற்று!.
நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்ந்து நடைபெறுகிறது. அவ்வேலைநிறுத்தம் தொடர் பாகத் தொழிற் கட்சி நடந்து கொள்ளும் முறையை மக்களே ஏற்றுக்கொண்டிலர். நாட்டின் பொருளாதாரம் பாழடைகின்றது என்பதை அறிந்துகொண்டும் சுரங்கத் தொழிலாளரின் ஏற்றுக் கொள்ள முடியாத கோரிக்கைகளுக் குத் தொழிற் கட்சி ஆதரவளிக்கிறது. ஆட்சியைக் கைப் பற்றும் நோக்கமே தொழிற் கட்சியின் குறிக்கோளாக இருக்கிறது. மறுபுறத்தில் தொழிலாளர் கோரிக்கைகளுக்கு எள்ளளவும் விட்டுக்கொடுக்காத கொள்கையைக் கடைப் பிடித்துக் கன்சவேட்டிக் கட்சியினர் நடந்துகொள்கின்றனர். இறுதியில் வேலைநிறுத்தம் தோல்வி அடையும்; நாட்டின் பொருளாதாரமும் பாழடையும். இத்தகைய நிலை தொடரு மானுல் பிரித்தானியாவிலும் கட்சி ஆட்சி முறை தோல்வி யடையும் போல் தோன்றுகின்றது.
ஆகவே, சிங்கப்பூரில் உள்ளது போன்ற தனிக் கட்சி யைக் கொண்ட மக்கள் ஆட்சியே வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளுக்கு ஏற்புடையதாகும். எனினும், மக்களாட்சியின் பண்புகளுக்குப் பணிந்து ஆட்சியை மேற்கொள்ள வேண் டும். மக்களினல், மக்களுக்கு, மக்கள் நடாத்துகின்ற ஆட்சியாக அஃது அமைய வேண்டும்.
அன்புள்ள, அப்பா,
56

10
தலை அலங்காரம்
பொது நூலகம், மில்றன் கீன்ஸ், பிரித்தானியா,
28, 0, 1985.
அன்புள்ள சுதர்சன்,
உனது கடிதம் கிடைத்தது. சிங்கப்பூரிலுள்ள மிகச் சிறந்த பாடசாலை ஒன்றிலே அனுமதி பெற்றுள்ளதாயும், தமிழ் மொழியை ஒரு பாடமாக அங்கே கற்றுக்கொள்வ தாயும் எழுதியுள்ளாய். சிங்கப்பூரிலே இப்படியான ஒரு நல்வாய்ப்பு உனக்குக் கிடைத்துள்ளதை அறிந்து பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். ஆனல், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சிறந்த பாடசாலையிற் படிப் பதற்குக் கிடைத்த அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தியுங் கொள்ள வேண்டும். சிறந்த பாடசாலையாக இருந்தாலும் முயற்சியெடுத்துப் படிக்காவிட்டால் முன்னேறவே முடி யாது. கிராமங்களிலுள்ள பாடசாலைகளிற் படித்து, பலர் பல்கலைக்கழகங்களிலே அனுமதி பெற்று அறிஞர்களாக வந்துள்ளனர். அதே நேரத்திற் பேரும் புகழும் நிறைந்த கல்லூரிகளிற் கற்றவர்கள், பல்கலைக்கழகத்தை எட்டிப் பார்க்க முடியாமற் போனதும் உண்டு. ஆகவே, ‘முயற்சி
57

Page 34
உடையார் இகழ்ச்சியடையார்' என்ற உண்மையை உணர்ந்து படிப்பிற் கவனஞ் செலுத்துவாயென நம்புகின் றேன்.
உனது பாடசாலையிலுள்ள மாணவர், தலை மயிரை நீள மாக வளர்ப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாய் உனது கடி தத்திற் குறிப்பிட்டுள்ளாய். உனது பாடசாலையிலுள்ள இந்தக் கட்டுப்பாடு வரவேற்கப்பட வேண்டியது. மாணவர் களுக்கு மட்டுமல்ல, ஏனையவர்களுக்கும் இக்கட்டுப்பாடு அவசியமாகுமெனக் கருதுகின்றேன். ஒழுங்கும் கட்டுப்பாடும் அங்கேதான் ஆரம்பமாகின்றன. ஒருவரின் ஒழுங்கை அவர் தலைவாரிக் கொள்கின்ற முறையாற் காணலாம்; உடையை அணிந்து கொள்ளும் திறத்தால் தெரிந்து கொள்ளலாம்; உரையாடும் வகையால் உணர்ந்து கொள்ளலாம்!
பிரித்தானியாவில் இளைஞர்கள் சிலர் தலை மயிரை அநாகரிக மான முறையில் வளர்த்திருப்பதைப் பார்க்கக் கூடியதாய் இருக்கிறது. இங்கே முடிவெட்டும் இடங்களிலே தலை மயிர் வெட்டுவதற்கு அதிக பணம் அறவிடுகின்றனர். அதனுற் சிலர் தலை மயிரை அடிக்கடி வெட்டிக்கொள்வதில்லை. இரண்டு மூன்று மாதங்களுக்குத் தலை மயிரை வெட்டாமல் வளர்க்கின்றவர்களும் உளர். சிலர் தாங்களே தங்கள் தலை மயிரை வெட்டிக் கொள்வதும் உண்டு. வேறு சிலர் நீளமாகத் தலை மயிரை வளர்க்கின்றனர். வான்கோழியின் கொண்டை போலவும், கொன்றை மரக் காய்கள் போலவும் தலை மயிரை அலங்கரித்துக் கொள்கின்ற இளைஞர்களும் யுவதிகளும் இங் குளர். அவ்வாறு சடையை அலங்கரித்துப் பல நிற வருணங் களைப் பூசி அலங்கோலமான தோற்றத்துடன் வீதிவலம் வருகின்ற இவர்களைக் காண்கின்றபோது, "எதிர்காலச் சந்ததியினரே இதுதான் உங்கள் உலகமா?’ என்று
வினவத் தோன்றுகிறது.
சென்ற வாரம் சந்தை நிலையத்திலே இரு இளைஞர் களைக் கண்டேன். அவர்களில் ஒருவர் தலை மயிரைக் குருவிக்
V
58

கொண்டை மாதிரி அமைத்திருந்தார்; மற்றையவர் மயிலின் செண்டையைப் போலக் கட்டியிருந்தார். அவற்றைச் சிவப்புக் கலந்த பச்சை நிறத்தால் அலங்கரித்திருந்தனர். அவர்களின் தலை அலங்காரத்தைப் படம் பிடித்துக் கொள்ள வேண்டும் போலத் தோன்றியது. ஆனல், அந்த நேரம் ஒளிப்படக் கருவி என் கையில் இல்லாமற் போய்விட்டது!
குருவியின் கொண்டையையும் மயிலின் செண்டையும் நீ பார்த்திருக்கிருய் அல்லவா? அவை இயற்கையானவை; எழில் மிக்கவை; காண்பவரின் கண்களைக் கொள்ளைகொள் பவை. ஆனல், இந்த இளைஞரின் தலை அலங்காரத்தை எங்ங்ணம் வருணிப்பது? அலங்கோலமான அந்த முடியமைப் பைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா என்று எனக்குத் தோன்றவில்லை. ஆபிரிக்க நாடுகளில் வாழ்கின்றவர்களை அநாகரிகமானவர்கள் என்று நகையாடியவர்களின் வழி வந்தவர்கள், இன்று அநாகரிகமான முறையில் தலை மயிரை அலங்கரித்துக் கொள்வது எள்ளிநகையாடுதற்குரியது.
கடந்த மாதம் கொண்டை அழகு" என்று ஒரு நிகழ்ச்சி யைத் தயாரித்துத் தொலைக்காட்சியிற் காண்பித்தனர். ஏறக்குறையப் பத்து இளைஞர்களின் கொண்டை அமைப் பையும் உடை அலங்காரத்தையும் படம் பிடித்துக் காட்டி னர். ஒவ்வோர் இளைஞரின் கொண்டையும் ஒவ்வோர் அமைப்புடையதாக இருந்தது. அக்கொண்டைகளின் அமைப்பை இங்கு பேணுவாற் சித்திரிக்க முடியாதிருக்கிறது. கொண்டைகளின் வடிவமும் வண்ணமும், உடைகளின் அமைப்பும் அலங்காரமும் எள்ளி நகையாடுதற்குரியன. இவற்றை இவ்விளைஞர்கள் நவநாகரிகமாகக் கருதுகின் றனர். இவ்வாறு தம்மை அழகுபடுத்தச் சிகை அலங்காரக் கடைக்குப் பெருந் தொகைப் பணத்தையுஞ் செலவிடுகின் றனர். இவர்களின் இந்தத் தோற்றத்தை அழகு என்று சொல்வதா? அலங்கோலம் என்று கூறுவதா? இந்தத் தலை அலங்காரத்துடன் இவ்விளைஞர்கள் எப்படித்தான் இரவில் உறங்குகின்றனரோ?
59

Page 35
தமிழ் மக்களைப் பொறுத்தவரை தலை அலங்காரம் என் பது நங்கையருக்கே உரியது. தமிழ் இலக்கியங்களும் பெண் களின் தலை அலங்காரத்தையே வருணித்துக் கூறுகின்றன.
வெளிநாடுகளில் இருந்து உல்லாசப் பயணிகளாக வரும் நாடோடிகளைக் கொழும்பு மாநகரத்தின் வீதிகளிற் பார்த் திருக்கின்ருய் அல்லவா? அவர்கள் தலை மயிரை நீளமாக வளர்த்து, அழுக்க்ான உடைகளை அணிந்து, காலணிகள் இல்லாமல் நடந்து திரிவர். அவர்கள் நம் நாட்டு இளைஞர் களையும் தப்பான வழிகளிலே இட்டுச் செல்லக் கூடியவர்கள். அவர்களைப் போன்றவர்கள் பிரித்தானியாவிலும் இருக்கின் றனர். அவர்களைச் சமூக விரோதிகள் என்றே கூறவேண்டும்.
இத்தகையோர் சமூகத்திலே தோன்றக் காரணம் என்ன வென்று நீ கேட்கலாம். பிரித்தானியாவில் நடைமுறையி லுள்ள சமூகப் பாதுகாப்பு (social security) உதவு தொகை முறைமையே இதற்கான காரணம் என்று எண்ணுகிறேன். அதாவது அரசாங்கம் வேலையில்லாத 18 வயதுக்கு மேற் பட்ட இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் வாராவாரம் ஒரளவு தொகைப் பணத்தைச் சமூகப் பாதுகாப்புப் பணமாக வழங்குகின்றது. இப்பணத்தை அரசாங்கத்திடம் பெறு கின்றவர்களிற் சிலர் வேலை செய்து உழைக்க வேண்டு மென எண்ணுவதில்லை. பெற்றேர்களின் கட்டுப்பாட்டிற்கு அடங்குவதுமில்லை. இவர்கள் தினமும் மதுவருந்துவர்; புகைபிடிப்பர்; போதைப் பொருள்களை உண்பர். சமூகப் பாதுகாப்புப் பணத்தைக் கொண்டு உலகத்தைச் சுற்றிவரும் புல்லுருவிகளாக இவர்கள் வாழ்கின்றனர்.
இவர்களைத் தவிர்ந்த இன்னுெரு வகையினரையும் நீ தெரிந்திருப்பது அவசியமாகும். இவர்கள் தலை மயிரை வளர்ப்பதில்லை; தலையை மொட்டையாக வழித்துக் கொள் கின்றனர். இவர்களை ஆங்கிலத்தில் ஸ்கின் ஹெட்ஸ் (skin heads) என்று அழைப்பர். மொட்டைத் தலை என்பது ஒரு வகை, வழுக்கைத் தலை என்பது இன்னெரு வகை.
60

தலை மயிரை முற்ருக வழித்து விடுவதால் ஏற்படுவது மொட்டைத் தலை; தலையிலுள்ள மயிர் விழுவதால் ஏற் படுவது வழுக்கைத் தலை, முன்னையது ஆக்கப்படுவது; பின்னையது இயற்கையாய் உண்டாவது.
பிரித்தானியாவிலுள்ள இந்த மொட்டைத் தலையர்கள் தேசிய இயக்கத்தைச் (Nationalist Movement) சேர்ந்தவர்கள். பிரித்தானியாவிற் குடியேறியுள்ள வெளிநாட்டாரை வெளி யேற்ற வேண்டும் என்ற கொள்கையினர். இந்தியா, பாகிஸ் தான், வங்காள தேசம், இலங்கை போன்ற நாடுகளிலிருந்து வந்துள்ள யாவரையும் இங்கு கறுப்பர்கள் என்றே கூறுவர். வெள்ளை நிறத் தோலுடையார் தவிர்ந்த ஏனைய எல்லோரும் கறுப்பர்களே! மொட்டைத் தலையர்கள் தீவிரவாத இயக்கத் தினர். மனிதர்களை மனிதர்களாக இவர்கள் மதிப்பதில்லை. இவர்களை ஈவிரக்கமற்ற கொடிய மனம் படைத்தவர்கள் என்று கூறலாம். கறுப்பு நிறத்தவர்களைத் தனிமையாகக் காணும் இடங்களில் அவர்களைத் தாக்கி ஊறு செய்துவிடு கின்றனர்; கொலை செய்தும் விடுகின்றனர்.
உழைத்து வாழத் தெரியாத இனவெறி கொண்டவர்க ளாக இவர்கள் காணப்படுகின்றனர். வெளிநாட்டவர்கள் செல்வம் படைத்தவர்களாக வாழ்வதைக் கண்டு அழுக் காறும் பொருமையும் கொள்கின்றனர். இரண்டாவது உலகப் போரின் பின்னர், சீரழிந்திருந்த பிரித்தானிய தேசத்தைக் கட்டியெழுப்ப இவ்வெளிநாட்டார் முதுகெலும் பாக இருந்தனரே என்பதை இம்மொட்டைத் தலையர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை! y
இந்த மொட்டைத் தலையர்களை மில்றன் கீன்ஸ் சந்தை நிலை யத்திற் பலமுறை பார்த்திருக்கின்றேன். இவர்கள் வெளி யிடங்களிலிருந்து சந்தை நிலையத்திற்கு வந்து போகின்ற னர். மில்றன் கீன்ஸ் நகரில் வாழ்கின்ற வெளிநாட்டார் எவரும் இவர்களால் தாக்குண்டதாக நான் கேள்விப்பட்ட
61

Page 36
தில்லை. எனினும், மொட்டைத் தலையர்களின் வெறியாட்டத் துக்குத் தாம் இலக்காகக்கூடும் என்ற பயம் பல வெளி நாட்டவர்களுக்கு உண்டு.
நான் இப்போது தங்கியிருக்கும் வீடு சந்தை நிலையத் திலிருந்து ஒரு மைல் தூரத்தில் இருக்கிறது. குடிசனமற்ற வழியால் நடந்து வீட்டிற்குப் போக வேண்டும். இவ்வழியில் மின் விளக்குகள் உண்டு. இப்பாதையால் இரவு நேரத்தில் சில நாட்களில் இரவு 11 மணிக்கும் நடந்து போயிருக் கின்றேன். ரெயில் நிலையத்துக்கும் இராக் காலத்தில்-சில நாட்களில் அதிகாலை 5 மணியளவில் நடந்து போயிருக்கின் றேன். ஆனல், இந்த மொட்டையர்களுக்கு நான் ஒருபோதும் இலக்கானதில்லை!
அன்புள்ள
அப்பா.
62

11
சாதி முறைமை
திறந்த பல்கலைக்கழகம், மில்றன் கீன்ஸ், பிரித்தானியா, 15.02.85.
அன்புள்ள சுதர்சன்,
பிரித்தானியாவில் நிலவும் “தொழில் மகத்துவம் பற்றி எழுதி விட்டு, சாதி வேறுபாடுகள் பற்றி விவரமாகக் குறிப் பிடவில்லையே என்று வினவியுள்ளாய். ாழில் மகத்துவம் பற்றிய எனது கடிதம் நீண்டு விட்டது. షిప్ சாதிகள் பற்றிய விவரத்தை அக்கடிதத்தில் விளக்கமாக எழுதவில்லை. இக்கடிதத்திற் சாதி வேறுபாடுகள் பற்றி எழுதலாமென எண்ணினேன். நான் எழுத எண்ணி இருந்ததையே நீயும் கேட்டு எழுதியுள்ளாய்.
செய்கின்ற தொழிலுக்கும் சாதி வேறுபாட்டிற்கும் எமது நாட்டில் நெருங்கிய தொடர்புண்டு. செய்கின்ற தொழிலைக் கொண்டே மக்களை உயர்ந்த சாதியினர் என் றும், தாழ்ந்த சாதியினர் என்றும் வேறுபடுத்தி மதிப்பிடு கின்ருேம். தொழிலின் மகத்துவத்தை அறிந்து கொள்ளாத காரணத்தினலேயே இம்மனநிலை ஏற்பட்டது. இங்கு சாதி கள் என்று எவையும் கிடையா; சாதிபற்றிப் பேசுவாரும்
63

Page 37
இல்லை. ஒருவரைத் தாழ்ந்த குலத்தவர் என்றும், இன்னெரு வரை உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர் என்றும் வேறுபடுத்திக் காண்பதில்லை. ஆனல், செய்கின்ற தொழிலைக் கொண்டு மக்களைப் பெயரிட்டு அழைக்கின்றனர்.
நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்வோர் சுரங்கத் தொழிலாளர் (miners) எனப்படுகின்றனர். மீன் பிடிப் போர் மீனவர் (fishermen) என்ற பெயரைப் பெறுகின் றனர். உருக்குத் தொழிற்சாலையில் வேலை செய்வோர் உருக் குத் தொழில் செய்வோர் (steel workers) எனக் கூறப் படுகின்றனர். விளைநிலங்களில் வேலை செய்வோர் விவசாயி கள் (agriculturists) என்று அழைக்கப்படுகின்றனர். தொழிற்சாலைகளில் வேலை செய்வோர் தொழிற்சாலை வேலை யாளர் (factory workers) என்று சொல்லப்படுகின்றனர். இவை யாவும் காரணப் பெயர்கள்; செய்கின்ற தொழில் காரணமாக ஏற்பட்ட பெயர்களேயன்றிச் சாதியைக் குறிப் பிடுவன அல்ல. இத்தொழில்களில் ஒன்றைத் தாழ்ந்தது என்றும் இன்னென்றை உயர்ந்தது என்றும் எவரும் எண்ணுவதில்லை. m
எமது நாட்டில் வண்ணுர் என்று ஒரு சாதியினர் இருப் பதை நீ அறிவாய். அப்படி ஒரு சாதியினர் இங்கில்லை. நமது உடைகளை நாமே கழுவிக் கொள்ள வேண்டும். அப்படி உடைகளைக் கழுவுவதற்கு வீடுகளிலும் பொது இடங்களிலும் துணி கழுவும் எந்திரங்கள் (washing machines) இருக்கின்றன. அம்பட்டர் என்று இன்னுெரு சாதியினரை எமது நாட் டிற் காண்கின்ருேம். தலை அலங்காரஞ் செய்வோர் (hair dressers) என்று அவர்கள் இங்கு அழைக்கப்படுகின்றனர். தலை அலங்காரஞ் செய்யும் நிலையங்களில் ஆண்களும் பெண்க ளும் வேலை செய்கின்றனர்.
மேலும், எந்தத் தொழிலைச் செய்வோரும் அந்தத் தொழிலை உயர்ந்த தொழிலாகவே கருதுகின்றனர். உதாரண
64

மாக நிலக்கரிச் சுரங்கங்களில் வேலைசெய்வோர் அத்தொழிலை மேம்பட்ட ஒரு தொழிலாக மதிக்கின்றனர். தலைமுறை தலைமுறையாக அத்தொழிலையே செய்து வருகின்றனர்; அதனையே செய்யவும் விரும்புகின்றனர். அத்தொழிலைப் பேணிக் காத்து வருவதில் அவர்களுக்குள்ள அக்கறை அளவு கடந்ததாகும். பிரித்தானிய பாராளுமன்றத்தின் தற்போ தைய எதிர்க் கட்சித் தலைவர், நிலக்கரிச் சுரங்கத் தொழி லாளர் குடும்பத்திற் பிறந்தவர்.
இதுவரை பிரித்தானியாவிலுள்ள முக்கியமான சில தொழில்களைப் பற்றிக் குறிப்பிட்டேன். இத்தொழில்களைச் செய்வோர் மத்தியில் செய்கின்ற தொழில் காரணமாகச் சமூகக் கட்டுப்பாடுகள் அல்லது நியதிகள் எவையும் வலி யுறுத்தப்படுவதில்லை. அதாவது அந்தந்தத் தொழிலைச் செய் பவர்களுக்குள்ளேயே திருமணஞ் செய்துகொள்ள வேண்டு மென்ற கட்டுப்பாடு இல்லை. சுரங்க வேலை செய்பவர் சுரங்க வேலை செய்பவருக்குள்ளேயே திருமணஞ் செய்து கொள்ள வேண்டும் என்றும், மீனவர் மீனவருக்குள் ளேயே திருமணஞ் செய்துகொள்ள வேண்டும் என்றும் நியதியில்லை. செய்கின்ற தொழிலைக் கருத்திற் கொள் ளாமல் ஒருவரை ஒருவர் விரும்பித் திருமணஞ் செய்து கொள்கின்ற வழக்கமே இங்கு உண்டு. பிள்ளைகளின் திருமண விடயத்திற் பெற்ருேர் முட்டுக்கட்டையாக இருப்பதில்லை. திருமணஞ் செய்துகொள்வதற்குப் பெற்றேரின் அனுமதி யைக் கட்டாயமாகப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற கட்டுப்பாடும் இங்கில்லை. சீதனங் கொடுக் வேண்டுமே என்ற கவலையும் பெற்றேருக்கு இருப்பதில்
18 வயது வந்ததும் இளைஞர்களும் யுவதிகளும் பெற் ருேரின் வீட்டில் முடங்கிக்கிடப்பதை விரும்புவதில்லை. உதவு தொகையாக அரசு கொடுக்கும் பணத்தைக் கொண்டு வாழ விரும்புகின்றனர்; அல்லது ஏற்ற ஒரு தொழிலைச் செய்து தம்மைத் தாமே பேணிக் கொள் கின்றனர்.
65

Page 38
எமது நாட்டில் பெற்ருேருக்குப் பிள்ளைகள் சுமையாக இருப்பது உண்டு. மூப்படைந்த நிலையிற் பெற்ருேரைப் பேண வேண்டிய பொறுப்பு, பிள்ளைகளைச் சார்ந்ததாகும். ஆனல் பிரித்தானியாவில் முட்டைக்கும் குஞ்சுக்கும் உள்ள தொடர்பு போன்றது பெற்றேருக்கும் பிள்ளைகளுக்குமுள்ள தொடர்பு.
பெற்ருேரைப் பிரிந்து வாழ்கின்ற காலத்தில் இளைஞரும் யுவதிகளும் ஒருவரோடு ஒருவர் நன்கு பழகுகின்றனர். இளைஞன் ஒருவனுடன் யுவதி ஒருத்தி பேசிக்கொள்வதை அல்லது சேர்ந்து பழகுவதை எவரும் சந்தேகக் கண் கொண்டு நோக்குவதில்லை. நீண்ட காலம் பழகிய பின் னர் இளைஞர்களும் யுவதிகளும் தத்தமக்கு உகந்த ஒரு வரைத் திருமணஞ் செய்து கொள்கின்றனர். தாம் விரும் பித் திருமணஞ் செய்துகொண்டவர் உகந்தவராக இல்லாத போது மணமுறிவு செய்துவிட்டு இன்னுெருவரைத் திரு மணஞ் செய்துகொள்வதும் இங்கு பெருவழக்காக உளது. இதனைப் பெற்றேர் கண்டிப்பதுமில்லை; இதற்காக அவர்கள் கவலைப்படுவதுமில்லை.
இவ்வாறு செய்துகொள்ளும் திருமணங்களை ‘விரும்பிச் செய்யும் திருமணங்கள்’ என்று குறிப்பிட்டேன்; ‘காதல் திருமணங்கள்’ என்று கூறவில்லை. தமிழ் மரபுப்படி, காதல் திருமணம் புனிதமானது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டது. உண்மை யான ‘காதல் திருமணத்தில் மணமுறிவுக்கே இடமிருக் காது. காதலர்களை ஈருடலும் ஒருயிரும்’ என்று கூறு வர். "ஒராவிற்கு இரு கோடு பூத்தாற் போல’ என்று இரு வரையும் ஒப்பிட்டுரைப்பர் 'அன்றில் போல ஒன்றி வாழ்வோர்’ என்று வருணிப்பர். உள்ளத்தால் இணைந்த இருவர், ஒருவரை ஒருவர் பிரியாமல் இறக்கும்வரை இணைந்து வாழ்கின்ற வாழ்க்கையே இக்காதல் வாழ்க்கை. பிரித்தானியாவிலே விரும்பித் திருமணஞ் செய்துகொண்ட
66

ஒருவரை மணமுறிவு செய்துவிட்டு இன்னுெருவரைச் சேர்ந்து வாழ்கின்ற வழக்கு உண்டு. ஆகவே, தாம் விரும் பித் திருமணஞ் செய்துகொண்டவரைக் கைவிட்டு, இன் ஞெருவரைத் திருமணஞ் செய்துகொள்வதை எவ்வாறு ‘காதல் திருமணம்” என்று கூறலாம்? அதனுலேயே ‘விரும்பிச் செய்யும் திருமணம்’ என்று குறிப்பிட்டேன்.
இங்கு சாதிகள் இல்லை என்று கூறினேன். ஆனல், இனவேறுபாடு உண்டு. இந்நாட்டு மக்களான ஆங்கிலேய ரோடு ஆபிரிக்கர், பாக்கிஸ்தானியர், இந்தியர், வங்காள தேசத்தவர், இலங்கையர் என்று பல நாட்டைச் சேர்ந்த மக்கள் இங்கு வாழ்கின்றனர். வெள்ளைத் தோல் படைத் தோர், வெளிநாட்டு மக்களைத் தாழ்ந்தவர்களாகக் கருது கின்றனர். வெள்ளைத் தோலுடைய தம்மை உயர்ந்த வர்கள் என்றும் கறுப்பு நிறமுடைய வெளிநாட்டாரைத் தாழ்ந்தவர்கள் என்றும் கருதுகின்ற இம்மனப்பான்மை வெறுக்கத்தக்கது. இதனைச் சாதிக் கொடுமையிலும் பார்க் கக் கொடிய கொடுமை என்றுதான் கூறவேண்டும்!
இனவேறுபாடு பார்க்கும் வெள்ளைத் தோல் படைத் தோரிடையேயும் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின் றன. "ஆங்கிலேயர்’ என்றும் “வேல்ஸ் மக்கள்’ என்றும் “ஸ்கொத்திலாந்தினர்' என்றும் "ஐரிஸ் மக்கள்" என்றும் வேறுபடுத்திக் காண்கின்ற வெட்கக்கேடான நிலை இங் குண்டு. இவ்வாறு வேறுபடுத்தி மக்களைப் பாகுபாடு செய்வதை வெளிப்படையாகக் கண்டுகொள்ள முடியாது. ஆனல், இங்குள்ள வெள்ளைத் தோல் படைத்தவர்கள் மத்தியில் இவ்வேறுபாடு உண்டு என்பதை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.
எமது நாட்டில்-சிறப்பாக யாழ்ப்பாணத்தில்-உள்ள சாதி வேறுபாடுகள்பற்றி உனக்கு ஓரளவு தெரியுமென எண்ணுகின்றேன். உலகிலே எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்குச் சாதி வேறுபாடு யாழ்ப்பாணத்தில் வேரூன்றி
67

Page 39
யுள்ளது. சாதி வேறுபாடு ஆழமாகப் பரந்தளவில் நிலவு வது வேதனைக்குரியது. எடுத்ததற்கெல்லாம் சாதி பேசுகின்ற பெருமக்கள் பலரை யாழ்ப்பாணத்திற் பார்க்கலாம். திரு மணத்திலும் சாதிப் பேச்சு மரணச் சடங்கிலும் சாதி வேறு பாடு; கோயில் வழிபாட்டின்போது சாதி; குளிக்கின்ற குளத்திலே சாதி; பந்தியிலும் சாதி, பனந்தோப்பிலும் சாதி!
வேளாளர், பள்ளர், கரையார், முக்குவர், பறையர், தீவார் என்று எத்தனையோ சாதிகள் யாழ்ப்பாணத்தில் உண்டு. அவை யாவும் காரணப் பெயர்கள் என்பதை அவர்கள் அறிவதில்லை. வேளாண்மை செய்வோர் “வேளாளர்" எனப்பட்டனர். பள்ள நிலங்களில் வாழ்வோர் “பள்ளர்" என்று அழைக்கப்பட்டனர். கடற்கரைகளில் வாழ்வோர் கரையார்’ என்ற பெயரைப் பெற்றனர். மீன் பிடிக்கும்போது வலைகளை முக்கி இழுப்பதனுல் ‘முக்குவார்" என்பது திரிந்து "முக்கியர்" என்றும் "முக்குவர்" என்றும் ஆயிற்று. பறை என்ற தோல் வாத்தியத்தை வாசிப்போர் "பறையர்" என்று அழைக்கப்பட்டனர். தீவுகளில் வாழ் வோர், "தீவார்’ என்று சொல்லப்பட்டனர். இவர்களை உயர்ந்தவர் என்றும் தாழ்ந்தவர் என்றும் வேறுபடுத்துவது எவ்வாறு ?
சாதிகள் இல்லையடி பாப்பா-குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
-பாரதியார்.
அன்புள்ள, együur.
68

2 இலண்டன் தமிழர்
பொது நூலகம், மில்றன் கீன்ஸ், பிரித்தானியா, 20.3,85。
அன்புள்ள சுதர்சன்,
சிங்கப்பூரில் வாழ்கின்ற தமிழர்களைப் பற்றிப் பாராட்டி எழுதியிருக்கின்ருய். உனது நீண்ட கடிதத்தைப் படித்த பின்பு, பிரித்தானியாவிலுள்ள தமிழர்களைப் பற்றி உனக்கு எழுதுவது பொருத்தமாகுமென எண்ணினேன். இங்குள்ள தமிழர்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கு நீ ஆவலுள்ள வணுய் இருப்பாயெனவும் கருதுகின்றேன். இன்னும், கடல் கடந்து வாழ்கின்ற தமிழர்களைப்பற்றி ஒப்பிட்டு நோக்கவும் உனக்கு வாய்ப்பாக இருக்கும் அல்லவா?
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பு ஒன்றின்படி, முப்பத்தையாயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் பிரித் தானியாவில் வாழ்வதாகத் தெரியவந்துள்ளது. இந்த எண் ணிைக்கையில் இலங்கைத் தமிழரும் இந்தியத் தமிழரும் அடங்குவர். இலங்கைத் தமிழர்களே பெரும்பான்மை யினர். பெருந் தொகையான தமிழர்கள் இலண்டன் மாநகரத்திலும் சுற்றியுள்ள நகரங்களிலும் வாழ்கின்றனர்.
69

Page 40
கடந்த இருபத்தைந்து ஆண்டுக் காலப் பகுதியில் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக இவர்கள் இங்கு வந்து குடியேறினர். அண்மையிலே இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரங்கள் காரணமாக அகதிகளாகவும் பலர் இங்கு வந்துள்ளனர்.
"சீனம், மலாய், ஆங்கிலம் ஆகிய மொழிகளைப் பேசும்
மக்கள் சிங்கப்பூரில் இருக்கின்றனர். இவர்கள் மத்தியில் வாழ்கின்ற தமிழர்கள் ஒருவரோடு ஒருவர் தமிழிலேயே பேசிக்கொள்கின்றனர்" என்று உனது கடிதத்திற் குறிப் பிட்டுள்ளாய். அது வரவேற்கப்பட வேண்டியதொன்று. சிங்கப்பூரிலே தமிழ் மொழியும் ஒர் ஆட்சி மொழியாகும். ஆகவே, தமிழைப் பேணிக் காக்க வேண்டியது அங்கு வாழ்கின்ற தமிழர்களின் முக்கிய பொறுப்பாகும். தமிழர் கள் தமக்குள்ளே தமிழிலேயே பேச வேண்டும். கடிதத் தொடர்புகளையும் தமிழிலேயே வைத்துக்கொள்ளல் அவ. சியம். தமிழை ஒரு பாடமாகக் கற்பதற்குச் சிங்கப்பூர் அரசு அளித்துள்ள வாய்ப்பையும் தமிழர்கள் நன்கு பயன் படுத்த வேண்டும்.
'பிரித்தானியாவிலுள்ள தமிழர்களின் பேச்சு மொழி என்ன? " என்று கேட்டு எழுதியுள்ளாய். நல்லது. இங் குள்ள தமிழர்கள் ஒருவரோடு ஒருவர் ஆங்கிலத்திலேயே பெரும்பாலும் பேசிக்கொள்கின்றனர். சிலர் தமிழிலே பேசிக்கொள்ள விரும்புகின்றனர்; ஆணுல் நடைமுறையில் அவ்வாறில்லை. இங்கிலாந்து ஆங்கிலேயரது நாடு; ஆங் கிலமே ஆட்சி மொழி. இங்குள்ள மக்கள் எல்லோருமே ஆங்கிலத்திற் பேசக்கூடியவர்கள். அது காரணமாக ஆங்கிலத்திலேயே எப்போதும் பேசிக்கொள்ளும் சில தமிழர் களுக்கு வாயில் தமிழே வராது! வேறு சிலர் தமிழோடு ஆங்கிலத்தையும் கலந்து கதம்பமாகப் பேசுகின்றனர்.
வீடுகளிலே தமிழ் மக்கள் என்ன மொழியிற் பேசிக் கொள்கின்றனர் என்று நீ கேட்கலாம்! சில தமிழர், வீடு
70

களிலே தமிழிற் பேசிக்கொள்கின்றனர். வேறு சிலர் ஆங் கிலம், தமிழ் ஆகிய இரண்டையும் கலந்து பேசுகின் றனர்; இன்னும் சிலர் ஆங்கிலத்தில் மட்டுமே பேசிக் கொள்கின்றனர். இவர்களின் வீட்டு மொழி ஆங்கிலமாகி விட்டது. குழந்தைகள் தம் தந்தையை "அப்பா' என் றும், தாயை "அம்மா’ என்றும் அழைப்பதை நான் கேட்டதேயில்லை. "டடி' என்றும், 'மமி’ என்றும் அழைப் பதையே கேட்க முடிகின்றது.
சில பெற்ருர் தமிழிலே பேசிக்கொள்கின்றனர் என்று கூறினேன். ஆனல் அவர்கள் தம் குழந்தைகளுடன் ஆங் கிலத்திலேயே உரையாடுகின்றனர். அது காரணமாகக் குழந்தைகள் தமிழிலே பேசிக்கொள்ளும் வாய்ப்பை இழந்துவிடுகின்றனர். இன்னுெரு வகையாகக் கூறின், இங்குள்ள தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழிலே பேச வராது. தமிழிலே பேசிக்கொள்வதைப் புரிந்துகொள்ள வும் அவர்களால் முடிவதில்லை. தமிழ்க் குழந்தைகள் ஆங்கிலத்தில் சிந்தித்து ஆங்கிலத்திலேயே பேசுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதனல், ஆங்கிலம் பேசும் தமிழ்க் குழந்தைகளா இவர்கள் வளர்ந்து வருகின்றனர். இப்படித் தம் குழந்தைகள் வளர்ந்து வருவதை இங்குள்ள தமிழ்ப் பெற்றேர் பெருமையாகவே கருதுகின்றனர்.
சிங்கப்பூரில் தமிழ்க் குழந்தைகள் பாடசாலைகளிலே தமிழை ஒரு பாடமாகப் படிக்கின்றனர் என்று எழுதியுள் ளாய். அது விரும்பத்தக்கது. பிரித்தானியாவிலே தமிழை ஒரு பாடமாகப் பாடசாலைகளிற் படிப்பதற்கு வாய்ப்பு இல்லை. எனினும், தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழைக் கற்றுக் கொடுக்கத் தனிப்பட்ட முறையில் வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன. ஆனல், தமிழ்க் குழந்தைகள் எல்லோருமே இவ்வகுப்புக்களுக்குச் சென்று படிக்க வாய்ப்பு இல்லை. சிலருக்கே இவ்வகுப்புக்கள் பயன்கொடுக்கக் கூடியனவாக இருக்கின்றன. இன்னும், ஒரு மொழியை எப்படிக் கற்றுக்கொடுப்பது என்பதை அறியாதோரே இந்த வகுப்புக்களை நடாத்துகின்றனர்!
71.

Page 41
உனது கடிதத்திற் குறிப்பிட்டுள்ள இன்னெரு முக்கிய விடயம் இந்துக் கோயில்களைப் பற்றியது. ‘சிங்கப்பூரிற் பல இந்து ஆலயங்கள் உள; அங்கே நித்திய, நைமித்தியப் பூசைகள் ஒழுங்காக நடைபெறுகின்றன’’ என்று எழுதியுள் ளாய். பிரித்தானியாவிலும் பல இந்துக் கோயில்கள் இருக் கின்றன. வேல்ஸ் நாட்டில் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஒன்று இருக்கிறது. மலைக்குன்று ஒன்றில் அக்கோயில் அமைந்துள்ளது. கடந்த நவெம்பர் மாதத்தில் தரிசனத் துக்காக அங்கே சென்றிருந்தேன். அக்கோயிலிற் பூசைகளை நடாத்துபவர் ஒரு சிங்களவர். சுப்பிரமணிய சுவாமிகள் என்பது அவரின் பெயர். தமிழர், சிங்களவர், வேறு பல இனத்தவர்கள் அங்கே தரிசனத்துக்கு வந்ததைக் கண் டேன். அங்கே நடந்த கூட்டுப் பிரார்த்தனையிற் சில வெள்ளைக்காரர்களும் கலந்துகொண்டனர். முருகன் புகழை அவர்களும் பாடியதைக் கேட்டேன்.
சுப்பிரமணிய சுவாமிகளின் இல்லம் கோயிலுக்கு அண் மையிலுள்ள குன்று ஒன்றிலே இருக்கிறது. அங்கே யானைக் கன்று ஒன்றை அவர் வளர்க்கிருர், தோகையுள்ள மயில் களையுங் கண்டேன். சுப்பிரமணிய சுவாமிகளின் இல்லத்தில் முருகப் பெருமானின் திருவுருவச் சிலை ஒன்று இருக்கிறது. அது வெண்கலத்தில் வார்த்த சிலை; தெய்வக் களை நிறைந்த திருவுருவம், அதனை இலங்கையிலிருந்து பெற்று வந்ததாக அவர் கூறினர். கணுவிலே அந்தத் திருவுருவம் பற்றிய செய்தியைத் தெரிந்துகொண்டதாயும், அதனை அற்புதமான முறையிலே தாம் பெற்றுக்கொண்டதாயும் சொன்னர். வேல்ஸ் நாட்டிலே குன்று ஒன்றில் அமர்ந்துள்ள பெரு மான், குன்றுதோருடும் குமரப் பெருமானுகக் காட்சி கொடுக்கின்றன்!
விம்பிள்டனில் கணபதி ஆலயம் ஒன்று இருக்கிறது. திசெம்பர் மாதத்தில் அங்கு சென்று வழிபட்டேன். கிறித்தவ ஆலயம் ஒன்றை வாங்கிக் கணபதி ஆலயமாகக் கட்டியுள் ளனர். அந்நியர் ஆட்சிக் காலத்தில் இலங்கையிலே இந்து
72

ஆலயங்கள் இடிக்கப்பட்டுக் கிறித்தவ ஆலயங்களாகக் கட் டப்பட்டதை நீ அறிவாய். இப்போது இங்கிலாந்து தேசத் திலே இந்துக்கள், கிறித்தவ ஆலயங்களை வாங்கி இந்துக் கோயில்களாக மாற்றி அமைத்துள்ளனர். கணபதி ஆலயத் தில் நித்திய பூசைகள் ஒழுங்காக நடைபெறுகின்றன. நூற் றுக் கணக்கான அன்பர்கள் தரிசனத்துக்காக அங்கே வருகின் றனர். ஆலயத்தோடு சேர்ந்து சாயி பாபா பிரார்த்தனை மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கே சாயி பாபா பத்தர்கள் கூடிப் பிரார்த்தனை நடாத்தி வருகின்றனர்.
கணபதி ஆலயத்தின் முகாமையாளரை உனக்குத் தெரி யும். அவரைக் கண்டு கலந்துரையாடினேன். ஆலயங் கட்டி முடிந்து, குடமுழுக்கு நடைபெறவிருந்த காலத்தில் ஆலயத் துக்கு எதிராக மொட்டைக் கடிதங்கள் எழுதப்பட்டதாக அவர் எனக்குக் கூறினர். மொட்டைக் கடிதங்கள் எழுது வதற்குச் சைவப் பெரியார்கள் காரணமாய் இருந்ததாகவும் அவர் கூறிக் கவலைப்பட்டார். இறுதியில் அந்த இடத் திலே விநாயகப் பெருமான் கோயில் கொள்வதற்கு நீதி மன்றம் உத்தரவை வழங்கியதாகவும் சொன்னர். ܫ
தனிப்பட்ட ஒருவரின் முயற்சியால் அமைந்தது கணபதி ஆலயம். அதனல் அவ்வாலயம் பிரச்சினைகள் எவையுமின்றி நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. முகாமையாளரின் முயற்சி பாராட்டுதற்குரியது!
இலண்டன் மாநகரத்தில் இரண்டு முருகன் ஆலயங்கள் இருக்கின்றன. ஒன்றின் திருப்பணி வேலைகள் முடிவடைந் துள்ளன. அங்கே, நித்திய பூசைகள் நடைபெறுகின்றன. மற்றையது கட்டி முடியவில்லை. திருப்பணி வேலைகளுக்காகப் பணஞ் சேர்க்கின்றனர். இங்குள்ளவரிடையே உள்ள ஒரு குறையை நீ அறிந்திருப்பது நல்லதென எண்ணுகிறேன். அதாவது கோயில் கட்டுவாரிடையே போட்டியும் பொருமை யும் நிலவுகின்றன. பிரித்தானியாவிலுள்ள இந்து சமயத்தவர்.
73

Page 42
களின் தொகைக்கு ஒன்றல்ல, பத்துக் கோயில்களாவது கட்டப்பட வேண்டும். போட்டியும் பொருமையும் நிலவு மானல் இறைவனுக்கு ஆலயம் அமைப்பதிற் பயன் யாது ? 'படிப்பது சிவபுராணம், இடிப்பது சிவன் கோயில்’ என்ற கதையாகவே முடிந்துவிடும்.
மேலும், சைவக் கோயில்கள் ஆகம முறைப்படி அமைக் கப்படல் வேண்டும். அவ்வாறு அமையும்போதுதான் சைவாலயங்களின் தத்துவக் கருத்தை வெளிநாட்டாரும் அறிந்து போற்றக்கூடியதாக இருக்கும். பல கோயில்களை அமைப்போர், ஒரு கோயிலையாவது ஆகம முறைப்படி கட்ட முடியாதா? இந்த முயற்சியில் தமிழன்பர்கள் ஏன் சிரத்தை காட்டக் கூடாது கொழும்பில் பொன்னம்பலவாணேசர் ஆலயத்தை ஆகம முறைப்படி சேர் பொன். இராமநாதன் அவர்கள் அமைத்தார். அதேபோல இலண்டன் மாநகரில் ஆலயம் ஒன்றை ஆகம முறைப்படி அமைக்கத் தமிழ்ப் பெருமக்கள் முன்வர வேண்டும்.
சிங்கப்பூரிலே தமிழ் வளர்க்கும் சங்கங்கள் பற்றியும், கலை வளர்க்கும் மன்றங்கள் பற்றியும் குறிப்பிட்டு எழுதியு ள்ளாய். ஆனல், தமிழ் வளர்க்கும் சங்கங்கள் எந்த அளவிற்கு ஒற்றுமையுடன் இயங்குகின்றன என்பதையும், கலை வளர்க் கும் மன்றங்கள் எந்த அளவிற்குக் கலையின் தூய்மையைப் பேணிக் காக்கின்றன என்பதையும் எழுதத் தவறிவிட்டாய். இலண்டனில் ஒரு தமிழ்ச் சங்கம் இருந்தது. 1972 ஆம் ஆண்டில் அஃது இரண்டாகப் பிளவுபட்டது. ஒன்றை இந்தியத் தமிழர் நடாத்தினர்; மற்றையதை இலங்கைத் தமிழர் நடாத்தினர். இந்த நிலை வேதனைக்குரியது!
நடனக் கலையை வளர்ப்பதற்கும் மன்றங்கள் இங்கு இருக்கின்றன. தனிப்பட்டவர்களும் இசை, நடன வகுப் புக்களை நடாத்துகின்றனர். எனினும், 1970-1974 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட எழுச்சி தொடர்ந்து வளரவில்லை என்று நண்பர் ஒருவர் என்னிடம் சொன்னர், கலை கலைக்
74

காகவே என்ற உண்மையை உணர்ந்து மன்றங்கள் தொழிற்படுவது அவசியம் என்று எண்ணுகின்றேன்.
இறுதியாக ஒன்றை இங்கு குறிப்பிட்டுக் கடிதத்தை முடிக்கிறேன். வளம் பெருக்கக் கடல் கடந்து தமிழர்கள் பிரித்தானியாவில் வாழ்கின்றனர். இன்றைய தலைமுறையி னர் தமிழைப் பேசுகின்றனர்; நடனம், இசை என்பவற்றில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆலயம் அமைத்து வழிபடுகின் றனர். ஆனல், அவர்களின் குழந்தைகள் தமிழ் பேச முடியாத தமிழ்க் குழந்தைகளாக வளர்கின்றனர். நங் கையர் பூவும் பொட்டும் இல்லாதவர்களாகக் காணப்படு கின்றனர். சில நங்கையர் சேலை அணிவதை விடுத்து முழங் காலுக்குமேல் சட்டை போட்டுக்கொள்கின்றனர். சிலர் பிற நாட்டாரைத் திருமணஞ் செய்துகொண்டுள்ளனர். இந்த நிலை தொடருமானுல் அடுத்த தலைமுறையில் இங்கு வாழும் தமிழர்கள் ஆங்கிலம் பேசும் தமிழர்களாக மாறி, அடுத்தடுத்த தலைமுறைகளிலே தமிழ்ப் பறங்கியராக மாறி விடுவரோ என்ற ஐயம் எழுகின்றது!
அன்புள்ள,
அப்பா.
75

Page 43
13
கிராம வாழ்க்கை
பொதுநூலகம், மில்றன் கீன்ஸ், பிரித்தானியா, 25.4.I.9& 5.
அன்புள்ள சுதர்சன்,
அம்மாவும் நீயும் எழுதிய கடிதங்கள் கிடைத்தன. ஆனல் உங்கள் கடிதங்களுடன் தங்கையின் கடிதம் வராதமை எனக்கு ஏமாற்றத்தை அளித்தது. மில்றன் கீன்ஸ் நகரிலுள்ள கிராமம் ஒன்றிற் கடந்த வாரம் தங்கியிருந்த பின்னர், நேற்று மாலையிற்ருன் எனது அறைக்குத் திரும்பினேன். அதஞலேயே உங்கள் கடிதங்களுக்கு உடனடியாகப் பதில் வரைய முடியவில்லை. உங்கள் நலனறிந்து மகிழ்ச்சியடை கின்றேன்.
படிப்பிற் கவனஞ் செலுத்திவருவாயென நம்புகின் றேன். கல்விச் செல்வமே மேலானது. கற்ருேனுக்குரிய சிறப்பு அரசனுக்குங் கிட்டுவதில்லை. அரசனுக்குத் தன் நாட்டிலேதான் சிறப்புண்டு. கற்றேனுக்குச் சென்றவிட மெல்லாம் சிறப்புண்டு. ஆனல், அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரை இது வேறுபட்டுத் தோன்றலாம். அரசியல் தலைவர்கள் தொடர்ந்து எப்போதும் ஆட்சியில் இருப்ப
76

தில்லை. ஆட்சியிலுள்ளவரையிலேயே அவர்களுக்குச் சிறப்பும் புகழும் உண்டு. ஆட்சியுரிமையை இழந்ததும், சிறப்பும் புகழும் அவர்களைவிட்டு நீங்கிவிடுகின்றன. ஆனல், கற் ருேணின் சிறப்பு அப்படியானதன்று; அவன் புகழ் மங்கு வதுமில்லை; மறைவதுமில்லை.
மேலும், பொருட் செல்வம் படைத்த ஒருவனிலும் கல்விச் செல்வமுடையோன் உயர்ந்தவனுவான். பொருட் செல்வம் கள்வராற் கவரப்படும்; வெள்ளத்தால் அழிந் தொழியும்; நெருப்பினுல் எரிந்து சாம்பராகும்; பிற ருக்குக் கொடுக்குந்தோறும் குறைந்துகொண்டே போகும். கல்விச் செல்வம் அப்படியானதன்று. நெருப்பினுல் எரியாது; வெள்ளத்தால் அழியாது; கள்வர் கைக்கு எட் டாது. பிறருக்குக் கொடுக்குந்தோறுங் கூடிக்கொண்டே போகும். ஆகவே, பாடங்களை நன்கு படிக்க வேண்டும்; வகுப் பிலே முதல் மாணவனுக வருவதற்கு முயலல் வேண்டும்.
சென்ற ஒரு வாரமாக மில்றன் கீன்ஸ் நகரிலுள்ள ஒரு கிராமத்திலே தங்கியிருந்ததாகக் கூறினேன். அக் கிராமத்துக்கு மில்றன் கீன்ஸ் கிராமம்’ (Milton Keynes Village) என்று பெயரிட்டுள்ளனர். திறந்த பல்கலைக் கழகத்திற் பேராசிரியராக இருக்கும் கலாநிதி டேவிட் அவர்களின் வீடு அக்கிராமத்திலேயே இருக்கிறது. அவரு டைய பாரியாரும் திறந்த பல்கலைக்கழகத்தில் வேலை செய் கின்ருர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். ஒன்று ஆண்; மற்றையது பெண். 'இப்போது இலைதுளிர் காலம். விடுமுறைக்கு நாங்கள் எங்கேயும் போகவில்லை. எங்கள் வீட்டிற்கு வந்து ஒரு வாரம் தங்கவேண்டும்' என்று என்னைப் பேராசிரியர் டேவிட் கேட்டார்.
இங்கிலிஸ் கிராமம் ஒன்றைப் பார்க்க வேண்டுமெனப் பல நாட்களாக எண்ணியிருந்தேன். அதுவும், கிராமத்திலே சில நாட்கள் தங்கியிருந்து கிராம மக்களின் வாழ்க்
77

Page 44
கையை அறிந்து கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆகவே, பேராசிரியர் டேவிட் அவர்களின் அழைப்பு எனக்குப் பெருமகிழ்ச்சியைக் கொடுத்தது. அவரின் அழைப்பை ஏற்றுக் கடந்த ஒரு வாரமாக மில்றன் கீன்ஸ் கிராமத்திலுள்ள அவருடைய வீட்டிலே தங்கி யிருந்தேன்.
முன்னர் உனக்கு எழுதிய கடிதம் ஒன்றில், மில்றன் கீன்ஸ் நகரம் கட்டப்படுவதற்கு முன்னரே, அங்கு பல கிராமங்கள் இருந்தனவெனக் குறிப்பிட்டிருந்தேன். அந்தக் கிராமங்கள் இப்போதும் இருக்கின்றன. ஆனல், மில்றன் கீன்ஸ் நகரமாக்கப்படுவதற்கு முன்னர் இருந்தவை போல அவை இப்போது இல்லை. அசல் கிராமங்களுக்குரிய பல இயல்புகளை அவை இழந்துவிட்டன. நகரத்துக்குரிய பல இயல்புகளைப் பெற்று நவீன கிராமங்களாகக் காணப்படு கின்றன. இன்னுெரு வகையாகக் கூறின், நவீன வீடு களுக்கு மத்தியில் அவை ‘கிராமம்’ என்ற பெயரோடு இப் போதும் இருக்கின்றன. அக்கிராமங்களுள் ஒன்றுதான் மில்றன் கீன்ஸ் கிராமம்; நகர மத்தியிலிருந்து 5 மைல் தூரத்தில் அக்கிராமம் இருக்கின்றது.
அக்கிராமத்திலே தங்கியிருந்தபோது, நான் பிறந்து வளர்ந்த கிராமத்தைப் பற்றிய நினைவுகள் என் மனத்திரை யிலே தோன்றி மறைந்தன. நான் பிறந்த மறவன்புலம் என்ற கிராமத்தை நீ பார்த்திருக்கிருய். ஆனல், அக்கிரா மத்தைப்பற்றி உனக்கு அதிகம் தெரியாதென்றே எண்ணு கின்றேன். சிறிய வீடுகள்; ஒலை வேலிகள்; பூவரச மரங் கள், பனந் தோப்புகள், நெல் வயல்கள், சைவாலயங் கள், தாமரைக் குளங்கள்-இவற்றைத் தன்னகத்துக் கொண்டது அக்கிராமம். அங்கே பலவினப் பறவைகள் பறந்து திரியும்; உழவர்கள் எருதுகளைப் பூட்டி உழுவர்; பசுவினங்கள் தம் கன்றுகளை ‘அம்மா’ என்று அழைத்து மாலையில் வீடு திரும்பும்; மல்லிகை மலரும். இவை
78

யாவும் கண்கொள்ளாக் காட்சிகளாகும். முழு மதியின் நிலாவும், வெண் மணலின் அழகும், சிறுவனக இருந்த போது அங்கே விளையாடி மகிழ்ந்த காலமும் மறக்க முடி யாதவை. இயற்கையோடு இணைந்த அந்த வாழ்க்கையைப் பட்டினங்களிலும் நகரங்களிலும் பெற்றுக்கொள்ளவே முடி யாது!
மில்றன் கீன்ஸ் கிராமம் எப்படியானதென நீ கேட்க லாம். அக்கிராமத்தில் 35 வீடுகள் வரை இருக்கின்றன. அவற்றுள் சில, நவீன வீடுகள் பல, இங்கிலீஸ் கிராமங் களிலுள்ள வீடுகளைப் போன்றவை. சிறிய வீடுகள்; தனித் தனியாக அவை கட்டப்பட்டுள்ளன. அவ்வீடுகள் கட்டப் பட்டு ஏறக்குறைய நூறு ஆண்டுகளாவது இருக்குமெனக் கூறினர். மின் விளக்குகள், தொலைபேசி, மின் அடுப்பு, குளிரூட்டி, குழாய் நீர் ஆகிய நவீன வசதிகளைக் கொண்ட வீடுகளாக அவை காணப்படுகின்றன. வீட்டின் தோற்றத் திலும் அமைப்பிலும் பழைமையையே காணக்கூடியதாக இருக்கிறது. கிராமத்தைச் சுற்றிக் கோதுமை விளையும் நிலங்கள், உயர்ந்து வளர்ந்த மரங்கள், அங்கே பறந்து திரியும் பறவைகள், இடையிடையே நீர் நிறைந்த சுனைகள், சுனைகளில் இதழ்களை விரித்து நிற்கும் அல்லிப் பூக்கள்இவை மில்றன் கீன்ஸ் கிராமத்திற்குரிய தனி இயல்பு களாகும்.
மதுச்சாலை, சமூக நிலையம், தபாற் கந்தோர், விளை யாட்டு மைதானம், கிறித்தவ கோயில், பொதுத் தொலை, பேசி நிலையம் என்பனவும் அக்கிராமத்தில் இருக்கின்றன. அதிகமானவர்கள் மோட்டார் கார் வைத்திருக்கின்ற னர். தெருக்கள் நல்ல முறையிற் பேணப்படுகின்றன. பஸ் >வண்டிப் போக்குவரத்து வசதியும் உண்டு. சிலர் குதிரை களை வளர்க்கின்றனர். மாலை நேரங்களிற் குதிரைச் சவாரி செய்வோரை அங்கு பார்க்கலாம். வீதிகளும் தெருக்களும் துப்புரவாக உள்ளன. இலைதுளிர் காலம் அல்லவா? பசுமை யான தோற்றம். வீடுகளிலும் வீதிகளிலுமுள்ள பல வரு
79

Page 45
ணப் பூக்கள் கண்களுக்கு நல்விருந்தாகும்! வீடுகளின் முன் பக்கத்திற் பூ மரங்களும், பின் பக்கத்திற் பழ மரங்களும் நிறைந்துள்ளன. எனவே, அக்கிராமத்தில் இருந்த ஒரு வார காலம், எனது கிராமத்தையும் அங்கு நான் வாழ்ந்த காலத்தையுமே நினைவுபடுத்தின.
மில்றன் கீன்ஸ் கிராமத்திலுள்ள மதுச்சாலை, முக்கியமான ஓர் இடமாகும். மாலையானதும் மதுவருந்த மக்கள் பலர் அங்கே வருவர். ஆண்களும் பெண்களும் மதுவருந்துவர். மதுவருந்தாதோரைக் காண்பது அரிது. ஆனல், சிறுவர்கள் மதுச்சாலைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இரவு 11 மணிவரை மதுச்சாலையில் அமர்ந்திருந்து பலர் மதுவருந்து வதைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. ஆனல், மதுவருந் தியபின் மதுமயக்கத்திற் பிதற்றியவர்களையோ, வீதியில் விழுந்து கிடந்தவர்களையோ, சண்டையிட்டுக் கொண்டவர் களையோ நான் காணவில்லை.
ஞாயிற்றுக்கிழமை காலை பேராசிரியர் டேவிட் என்னைக் கிறித்தவ ஆலயத்துக்கு வருமாறு அழைத்தார். அவருடன் சென்று அங்கு நடந்த ஆராதனையிற் கலந்துகொண் டேன். கிராமத்திலிருந்து பலர் அங்கு வந்திருந்தனர். வந்திருந்தவர்களிற் பலர் வயது முதிர்ந்தோர். இளைஞர்கள் எவரையும் காணவில்லை. சிலர் தம் பிள்ளைகளை அழைத்து வந்திருந்தனர். மிகவும் அமைதியான முறையிற் குறிப் பிட்ட நேரத்துக்கு ஆராதனை நடைபெற்றது. கிராமங் களிலுள்ள ஆலயங்களுக்குப் பலர் சென்று வணங்குகின்ற னர். ஆனல், பட்டினங்களில் அவ்வாறில்லை. மிகச் சிலரே ஆலயங்களுக்குச் செல்கின்றனர். அதுவும் வயது முதிர்ந்தவர்களே ஆலயங்களுக்கு ஒழுங்காகச் செல்கின்ற னர். இளைஞர்கள் ஆலயங்களுக்குப் போவது மிக மிகக் குறைவென்றே சொல்ல வேண்டும்.
பட்டினங்களிலுள்ள கிறித்தவ ஆலயங்கள் நல்ல முறையிற் பேணப்படுவதில்லை. சில ஆலயங்கள் கவனிப்
80

பாரற்றுக் கிடக்கின்றன. கிறித்தவக் கோயில்கள் இருந்த இடங்களிலேயே இப்போது, இலண்டனிலுள்ள சைவாலயங் கள் கட்டப்பட்டுள்ளன என்று முன்னர் எழுதிய கடிதம் ஒன்றிற் குறிப்பிட்டிருந்தேன். அடுத்த மாதம் விடுமுறைக்கு நீ இங்கு வரும்போது இதனை நேரிலேயே பார்க்கக்கூடியதாக இருக்கும். இங்கு ஆன்மீகம் பற்றிச் சிந்திப்பார் சிலரே! எமது நாட்டிற் போல அடிக்கடி கோயிலுக்குப் போவாரும், FE அநுட்டானங்களிற் கலந்து கொள்வாரும் மிகச் சிலரே! சென்ற திசெம்பர் மாதத்திலே கென்ற் என்ற பட்டினத்தி லுள்ள கத்தோலிக்க ஆலயம் ஒன்றுக்கு நண்பர் ஒருவர் என்னை அழைத்துச் சென்றிருந்தார். அங்கு வந்திருந்தவர் களில் அநேகர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். ஆங்கிலேயர்
கள் மிகக் குறைவாகவே காணப்பட்டனர்.
மில்றன் கீன்ஸ் கிராமத்தில் வாழ்கின்ற மக்களிடம் முக்கியமான ஒரு சிறப்பினைக் கண்டுகொள்ளக்கூடியதாக இருந்தது. பட்டினங்களில் வாழ்கின்றவர்கள் தம் அயலா ரைப்பற்றி அதிகம் அறிந்துகொள்ள எண்ணுவதுமில்லை; - அறிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புவதுமில்லை. ஆனல், மில்றன் கீன்ஸ் கிராமத்தில் வாழ்வோர் அப்படியானவர்கள் அல்லர். அயலாரை நேசிக்கும் பண்புடையவர்கள். காண் கின்றபோது இன்முகம் காட்டிப் புன்முறுவல் செய்கின்றனர். கலந்து பேசி மகிழ விரும்புகின்றனர். புதிதாகக் கிராமத் துக்கு வருபவர்களை வெறுப்போடு நோக்குவதில்லை. அன் போடு\பழகித் தம்மை அறிமுகஞ் செய்துகொள்ள விழை கின்றனர். ஒருவர் விடயத்தில் மற்றவர் தலையிடுவதில்லை. அழுக்காறு பொருமை என்பன அவர்கள் மத்தியிற் குறைவு என்றே கூறலாம். அதனுல் மொட்டைக் கடிதங்கள் எழுது வாரும் இல்லை!
8.

Page 46
உத்தியோகங்களிலிருந்து ஓய்வுபெற்ற பலர், அக்கிராமத் தில் வாழ்கின்றனர். அவர்கள் அமைதியையும் ஆறுதலையும் விரும்புகின்றனர். பட்டின வாழ்க்கையை வெறுத்துக் கிராம வாழ்க்கையை விரும்பி வந்தவர்களாவர். மாலை நேரங்களில் அவர்களிற் பலரைக் கண்டு பேசக்கூடிய வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. நான் இலங்கையைச் சேர்ந்தவன் என்பதை அறிந்ததும் இலங்கையின் இனப் பிரச்சினை பற்றி உசாவினர். தொலைக்காட்சி பார்ப்பதிலும் செய்தித் தாள்களை வாசிப் பதிலுமே தம் நேரத்தைப் போக்குகின்றனர். கதைப்பதற்கு எவராவது கிடைத்துவிட்டால், நீண்ட நேரம் பேசிக்கொண் டிருப்பதிற் பெருவிருப்புடையராகக் காணப்படுகின்றனர்.
சிறு பிள்ளையாக இருந்தபோது ‘நாய் வீட்டைக் காக்கும்’ என்று படித்திருக்கின்ருய். அக்கிராமத்திற் பல வீடுகளில் நாயை வளர்க்கின்றனர். பல வடிவத்திற் பலவின நாய்களைக் கண்டேன். நாய்மேல் அவர்கள் வைத்திருக்கும் அன்பு அதி கம். மனிதரிலும் மேலாக நாயை மதிக்கின்றனர். நாயைப் பேணுவதற்குப் பெருந்தொகைப் பணத்தையும் செலவிடு கின்றனர். வீட்டுக்குள்ளேயே நாய்கள் வளர்கின்றன; வாழ் கின்றன. கடுங்குளிர் காலத்தில் அவை 'வீட்டை விட்டு வெளியே வருவது மிக மிகக் குறைவு. மனிதருக்குக் கிடைக் காத சலுகைகள் அந்த நாய்களுக்குக் கிடைப்பது வியப்புக் குரியது!
மில்றன் கீன்ஸ் கிராமத்திலே தங்கியிருந்த நாட்களில் பேராசிரியர் டேவிட் அவர்களுடன் நீண்ட நேரம் பேசு வதற்கு வாய்ப்புக் கிடைத்தது. அவருடைய உரையினில் அறிவும் அனுபவமும் கலந்திருக்கக் கண்டேன். "இக்கிராமம் 15 ஆண்டுகளுக்கு முன்னர் அசல் கிராமமாக இருந்தது.
82

இப்போது கிராமத்துக்குரிய இயல்புகள் பலவற்றை இழந்து விட்டது. கிராமத்தில் வாழ்கின்ற மக்களும் கிராம மக்களுக் கான நற்பண்புகள் பலவற்றை இழந்துவிட்டனர்' என்று பேராசிரியர் டேவிட் கூறியவை என் செவிகளிலே ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
அன்புள்ள, அப்பா.
83

Page 47
14
மொட்டைக் கடிதம்
திறந்த பல்கலைக்கழகம், மில்றன் கீன்ஸ், பிரித்தானியா, 25、05.85.
அன்புள்ள சுதர்சன்,
உனது கடிதம் கிடைத்தது. அம்மாவின் நலனும் தங்கை யின் கல்விச் சிறப்பும் அறிந்து பெரிதும் மகிழ்ச்சியடைகின் றேன். தங்கை வகுப்பிலே தமிழ்ப் பாடத்தில் முதற் புள்ளி பெற்றது போன்று, நீயும் அடுத்த பருவத்தில் முதற் புள்ளி பெறுவாயென எதிர்பார்க்கின்றேன்.
சீனர், மலேசியர், தமிழர் ஆகிய இனத்தவர்கள் வேறுபாடின்றி ஒற்றுமையுடன் சிங்கப்பூரில் வாழ்வதாகக் குறிப்பிட்டுள்ளாய். பிரித்தானியாவிலும் பலவின மக்கள் வாழ்கின்றனர். சிங்கப்பூரைப் பொறுத்தவரை, மூன்று முக்கியமான இனத்தவர்களையே குறிப்பிட்டுச் சொல்லலாம்; ஆனல், பிரித்தானியாவிற் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பலவின மக்கள் வாழ்கின்றனர். ஆங்கிலேயரே பெரும் பான்மையினர். இம்மக்கள் மத்தியில் நல்லெண்ணமும் நல்லுறவும் நிலவுகின்றன. எனினும், காலத்துக்குக் காலம் ஆங்காங்கே இனப் பூசல்கள் இடம்பெறத்தான் செய்கின் றன. காலம் போகப் போக இனப் பூசலும் கூடிக்கொண்டே
84

போகும் போலத் தோன்றுகின்றது. நாட்டின் வளம் பெருகும்போது இனப் பூசல்களுக்கு இடமிருக்காது. நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து, வேலையில்லாப் பிரச்சினை அதிகரிக்கும்போது இனப் பூசல்களும் ஏற்படு கின்றன.
சிங்கப்பூர் மக்களின் சிறந்த பண்புகளைப் பாராட்டி எழுதியிருக்கின்ருய். அவை வரவேற்கப்பட வேண்டியன: பின்பற்றப்பட வேண்டியன. பிரித்தானியாவிலுள்ள மக்கள் மத்தியில் நிலவுகின்ற சில நற்பண்புகளை இங்கு குறிப்பிடலா மென எண்ணுகிறேன். சிங்கப்பூர் மக்கள் மத்தியில் இப்பண் புகள் எவ்வளவிற்கு உள்ளன என்பதை ஒப்பிட்டு நோக்க இவை உனக்கு உதவியாகுமென நம்புகின்றேன்.
இங்குள்ள மக்கள் தம் அயலவர்களின் தனிப்பட்ட விடயங்களிலே தலையிடுவதில்லை. அடுத்த வீட்டில் வாழ் கின்றவர்கள் யார்? அங்கே எத்தனை பேர் உளர்? அவர்களுக்கு எத்தனை குழந்தைகள்? அவர்களின் வருமானம் என்ன? எவ்வளவு மிச்சம் பிடிக்கிருர்கள்? அவர்களின் வீட்டுக்கு வந்து போவார் யார் யார்? என்ற விவரங்களை அறிய வேண்டுமென இவர்கள் கருதுவதில்லை; விரும்புவதுமில்லை. எனினும், அயலாரின் சுக துக்கங்களிலும், நன்மை தீமை களிலும் இவர்கள் பங்குகொள்கின்ற பண்பினைப் பார்க்க முடிகின்றது. சுருக்கமாகக் கூறின், இங்குள்ளோர் அயலவர் களுக்கு அதிகம் உதவி செய்வதில்லை; அதே நேரத்தில் உபத்திரவங் கொடுப்பதுமில்லை. இங்கு வாழ்கின்றவர்கள் எல்லோருமே இத்தகைய பண்பினைக் கொண்டவர்கள் என்று நான்" வில்லை; பெரும்பான்மையினர் இவ்வியல்புடை யார் என்றே கூறுகின்றேன்!
இலங்கையைப் பொறுத்தவரை, இந்நிலைமை எப்படி யானது என்பதை நீ ஓரளவு அறிவாய். தங்கள் சொந்த விடயங்களைச் சிந்தியாது அயலவர்களின் விடயங்களிலே தலையிடுவோர் பலர் உளர். அடுத்த வீட்டில் வாழ்பவர்
85

Page 48
கள் என்ன செய்கின்றனர்? அங்கே யார் யார் வந்து போகின் றனர்? அவர்களின் வருமானம் என்ன? அவ்வருமானத்தில் எவ்வளவு செலவாகும்? எவ்வளவு மிச்சம் பிடிக்கின்றனர்? என்பன போன்ற விவரங்களை அறிவதிலேயே அயலார் அதிகம் அக்கறை காட்டுகின்றனர். இப்படியான மனப்போக் கிற்குப் பொருளாதாரப் பிரச்சினையே காரணம் என்று கூற வேண்டும். பொருளாதாரப் பிரச்சினையே ஒருவர்மேல் மற்றவர் பொருமை கொள்ளக் காரணமாகின்றது. அதனல், தமது பிரச்சினையை மறந்து, அயலாரின் வாழ்க்கையில் தலையிட்டு உபத்திரவங் கொடுத்து மகிழ மனிதன் விழை கின்றன். எனவே உதவி செய்பவன் போன்று நடித்து உபத்திரவங் கொடுப்பவனக வாழ்வதைக் காணமுடிகின்றது.
பிரித்தானியாவிலே தம் அயலாரைப் பற்றி அதிகம் கவ லைப்படுவார் இல்லையெனக் கூறினேன். அது காரணமாக மொட்டைக் கடிதங்கள் எழுதுவாருமில்லை; மொட்டைக் கடிதங்களுக்கு அரசு அக்கறை காட்டுவதுமில்லை. இலங்கை யில் அப்படியன்று. அயலாரின் நல்வாழ்க்கையைக் கண்டு பொருமை கொண்டு மொட்டைக் கடிதங்களை எழுதி, இன்பம் பெறுகின்றவர்களைக் காண்கின்ருேம். மொட்டைக் கடிதம் எழுதுவது கைவந்த கலையாகிவிட்டது. பல்கலைக் கழகக் கல்வியாளர், ஏன் பேராசிரியர் சிலரிடையேயும் இக்கைவண்ணம் உண்டு என்று கூறின் அஃது உனக்கு வியப் பாக இருக்கும்!
இக்கைவந்த கலை இலங்கையை விட்டுக் கடல் கடந்தும் சென்றுள்ளமை வேதனைக்குரியது. அண்மையில் இலண்ட னுக்கு அகதிகளாக வந்த தமிழர்கள் விம்பிள்டன் கணபதி ஆலயத்தில் தஞ்சம் புகுந்திருந்தனர். அவர்களுக்கு எதிராக அரசுக்கு மொட்டைக் கடிதங்கள் எழுதப்பட்டதாக அறிந் தேன். அகதிகளாக வந்தவர்களும் தமிழர் மொட்டைக் கடிதங்கள் எழுதியவர்களும் தமிழர்களே! நுழைவு அனுமதி பெறமுடியாதவர்களுக்கு எதிராகவும் அநாமதேயக் கடிதங்
sé

கள் எழுதப்படுவதாகக் கேள்விப்பட்டேன். நைஜீரியாவில் ஆசிரியத் தொழில் செய்து உழைக்கப் போனவர்கள் ஒரு வருக்கொருவர் எதிராக மொட்டைக் கடிதங்கள் எழுதுவ தாக அங்கிருந்து வந்த நண்பர் ஒருவர் என்னிடம் சொல்லி வேதனைப்பட்டார்.
மொட்டைக் கடிதங்கள் எழுதித் தமிழர்களே தமிழர் களைக் காட்டிக் கொடுக்கின்றமை நகைப்புக்கிடமானது. நீ சிறியவன். மொட்டைக் கடிதங்கள் எழுதுவதுபற்றி உனக்கு அதிகம் தெரியாது. இங்கிலாந்தில் நாம் தங்கியிருந்தபோது (1970-1974 ஆம் ஆண்டுகளில்) அங்கே எமக்கு எதிராக மொட்டைக் கடிதம் ஒன்று எழுதப்பட்டது. அப்போது உனக்கு வயது ஐந்து ஆகும். அந்த மொட்டைக் கடிதம் எமக்குத் தீமை செய்யவில்லை; நன்மையையே விளைவித்தது. 1977 ஆம் ஆண்டு இனக் கலவரத்தின்போது, கொழும்பில் எங்கள் வீட்டில் அடைக்கலம் புகுந்த ஒரு குடும்பத்தார், மூன்று மாதம் எங்களுடன் தங்கி இருந்தமை உனக்கு ஞாபகம் இருக்குமென எண்ணுகின்றேன். உன் அம்மா சனமத்துப் போட்டாள். அவர்களைப் பண்போடு ஆதரித் தோம். இக்கட்டான காலத்தில் உதவி செய்தோம். ஆனல் அவர்கள் இறுதியில் எமக்குச் செய்தது உனக்குத் தெரியுமா? எமக்கு எதிராக இறைவரித் திணைக்களத்துக்குத் தமது கை யெழுத்துக்களை இட்டுப் பெட்டீசம் எழுதித் தொல்லைகள் பல கொடுத்தனர். இனக் கலவரத்தின்போது களனி (பல்கலைக்கழக) வளாகத் தலைவர் ஐம்பது பட்டதாரி மாணவர்களை எமது வீட்டிற் கொண்டுவந்து விட்டார். அவர்களை இரண்டு வாரம் பேணிக் காத்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தோம். அவர்கள் இன்னும் அந்த நன்றியை மறவாதவர்களாக இருக்கின்றனர்.
இன்னெரு நண்பர், வீட்டிற்கு வந்து காப்பி சாப்பிட்டு இனிமையான வார்த்தைகளைப் பேசினர். எமக்கு இரங்கு வார் போல நடித்தார். மறுநாள் அவர் என்ன செய்தார் தெரியுமா? எமக்கு எதிராக அநாமதேயக் கடிதம் ஒன்றை
87

Page 49
எழுதிவிட்டார். இவை உனக்குப் புரியாதவை; இப்போது நீ சிறியவன். வளர்ந்து பெரியவனுகி வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும்போது, இப்படியான பலரை நீ சந்திக்க முடியும். இவர்கள் உதவி செய்தவர்களுக்கே உபத்திரவங் கொடுப்போர். வாய்ப்புக் கிடைக்குமானுல் உணவிலேயே நஞ்சைக் கலந்து விருந்தாகக் கொடுக்கக் கூடியவர்கள், தமக்கு எவ்வகையான நன்மை கிடைக்கா விட்டாலும், மற்றவர்களுக்குத் தீமையாக முடியட்டும் என்று செயற்படுவோர். அடுத்த வீட்டில் ஆண் குழந்தை பிறந்து விட்டதேயென்று கவலைப்பட்டுத் தமது அடிவயிற் றில் அம்மிக் குழவியால் குத்திக்கொள்வாரைப் போன்ற வர்கள். இவர்களோடு பழகுவது பாம்போடு பழகுவதைப் போன்றது. இத்தகையர் உறவை ஒதுக்க வேண்டுமென உன் அம்மாவிற்குப் பலமுறை கூறியிருக்கின்றேன். சிங்கப் பூரிலாவது நல்லவர்களின் தொடர்பு உங்களுக்குக் கிடைக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றேன்.
பலரின் தொடர்பானது தொல்லைகளை அதிகரிக்கச் செய் யும். தொடர்புகளைக் குறைக்கின்றபோது தொல்லைகளும் குறையும். சமூகத்திற் கலைப்பணி செய்வோர் தனித்து வாழ முடியாது. அவர்களுக்குப் பலருடன் தொடர்பு கொண்டு வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. அதனுலே தொல்லைகளுக்கிடையே வாழவேண்டிய நிலையும் உண்டாகின்றது. இதற்காக உலகத்தில் ஒதுங்கி வாழ்ந்துவிட முடியாது. ஆணுல், ஒரளவு நல்லவர்களே இனங்கண்டு தொடர்பு வைத்துக்கொள்வதே நன்று. அதனுல் மனத்துக்கு ஆறுதலும் அமைதியும் உண்டாகும். பிரச்சினைகள் ஏற்படா மல் எம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்.
மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற குறிக் கோளை உடையவர்களாக நாம் வாழ்ந்தாற் போதும். அவ் வாறு மற்றவர்களுக்கு நன்மை செய்யாவிட்டால் தீமை
88

யாவது செய்யாமல் வாழ்வோம். உள்ளத்தாலும் தீமை நினைக்காத வாழ்வு ஏற்படுமானல், அதுவே எம்மை நன் னெறியிற் செலுத்தி நல்வாழ்வுக்கு வழிசெய்யும்.
"பிறருக்கு நன்மை செய்யப் பிறந்த நீ,
நன்மை செய்யாவிட்டால் தீமையாவது செய்யாதிரு'
--விவேகாநந்தர்.
அன்புள்ள, அப்பா,
89

Page 50
1s
இலதுளிர் பருவம்
பொது நூலகம், மில்றன் கீன்ஸ், பிரித்தானியா, I 5.05. 35。
அன்புள்ள சுதர்சன்,
இலைதுளிர் பருவம் பற்றி எழுத வேண்டுமெனக் கடந்த இரண்டு திங்களாக எண்ணியிருந்தேன். பூரணமான இலை துளிர் காலம் வந்ததும், விவரமாக விவரித்துக் கடிதம் ஒன்றை எழுதலாமென எண்ணியே இன்றுவரை பின்போட்டு வைத்தேன். ஏப்ரில், மே, யூன் மாதங்களை இலைதுளிர் கால மெனக் கூறுவர். ஏப்ரில் மாதத்தில் இலைதுளிர் காலத்தின் முழுமையான எழிலை எழுத முடியாது. மே, யூன் மாதங் களிலேயே இப்பருவத்தின் சிறப்பையும் செம்மையையும் நல்ல முறையில் விவரிக்க முடியும். விடுமுறைக்கு அடுத்த மாதத்தில் இங்கு நீ வந்து சேர்வதற்கு முன்பாகவே, இலை துளிர் காலம்பற்றி அறிந்துகொள்வதற்கு இக்கடிதம் உதவி யாக இருக்குமென நம்புகின்றேன்.
திசெம்பர் 25 ஆம் தேதியிட்டு எழுதிய எனது கடிதம் கடுங்குளிர் காலம் பற்றியது. இவ்வாண்டு கொடுமையான
கடுங்குளிர் காலமாக இருந்ததென அக்கடிதத்திற் குறிப்பிட்
90

டிருந்தேன். அக்கொடிய பருவம் எப்போதுதான் கழியு மோவென நாட்களை விரல்விட்டு எண்ணிக்கொண்டே இருந் தேன் என்றும் எழுதியிருந்தேன். எமது நாட்டில், "தை பிறக்க வழி பிறக்கும்’ எனக் கூறுவர். இந்நாட்டில், ‘ஏப்ரில் பிறக்க எழில் பிறக்கும்’ என்று கூறலாம். ஆனல், இவ்வாண்டு ஏப்ரில் பிறந்தும் மில்றன் கீன்ஸ் நகரத்தில் எழில் பிறக்கவில்லை. மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பதுபோல ஏப்ரில் மாதமும் கடுங்குளிராகவே இருந்தது. ஆனல், மே மாதம் பிறந்ததும் கடுங்குளிர் குறைந்துள்ளது. கதிரவன் தன் ஒளிக் கதிர்களைப் பரப்பி வானத்திலே தோன்றுகின்றன். பல நாட்கள் வெயிலும் சில நாட்கள் மழையும் குளிருமாக மாறிமாறி இருக்கின்றன.
ஏப்ரில் மாதத்திற் பருவ மாற்றம் சிறிதளவு மாற்றங் களையே ஏற்படுத்தியது. இலைகளை உதிர்த்து நின்ற மரங்களில் முகைகள் முகிழ்த்தன; அரும்புகள் அரும்பின. பணியால் மூடுண்டு கிடந்த விளைநிலங்கள் கொஞ்சங் கொஞ்சமாகப் பசுமை நிறம் பெறத் தொடங்கின. செடிகளும் கொடிகளும் உயிர் பெற்று எழுவது போலத் தலை நிமிர்ந்து நின்றன. நடைபாதைப் புறங்களிலும் வீதி ஓரங்களிலும் இங் கொன்றும் அங்கொன்றுமாகப் பல நிற மலர்கள் இதழ்களை விரித்து நின்றன. அங்கே வண்டுகள் தேனை அருந்தி மதி மயங்கி இன்னிசை பாடித் திரிந்தன. குளங்களும் கால் வாய்களும் புதிய தோற்றத்தைப் பெறத் தொடங்கின. அங்கே பல்லினப் பறவைகள் புதிய பருவத்தை, வருக! வருக! என வரவேற்பது போலக் குரலெழுப்பிப் பறந்தன.
பருவ மாற்றம்`இவ்வாறு ஏற்படுத்தி வந்த மாற்றங் களைக் கடந்த இரண்டு மாதங்களாக அவதானித்து வருகின் றேன். தொட்டிலில் / வளர்கின்ற குழந்தை தவழ்கின்றது; சப்பாணி கொட்டி மகிழ்கின்றது; குறுகுறுவென நடந்தும் விழுந்தும் எழுந்தும் ஓடுகின்றது! பின்னர் வீறுநடை போட்டு
9.

Page 51
நடக்கின்றது. குழந்தையின் இந்தப் படிமுறையான வளர்ச்சிகளை நீ பார்த்திருக்கின்ருய். அதுபோலவே இலை துளிர் பருவமும் இயற்கை அமைப்பிற் படிப்படியாகப் பல மாற்றங்களை ஏற்படுத்தியது.
கடந்த இரண்டு வார காலத்தில் முகைகள் வளர்ந்து இளந் தளிர்களாகி இலைகளாக மாறியுள்ளன. பூவரும்புகள் மொட்டுக்களாகி மெல்ல மெல்ல இதழ்களை விரித்து எழி லுடன் விளங்குகின்றன. செடிகளும் கொடிகளும் பல்வேறு வகைப் பூக்களையும் பல நிற இலைகளையும் தாங்கித் தலை நிமிர்ந்து நிற்கின்றன. விளைநிலங்களிற் பயிர்கள் சிறிது சிறிதாக வளர்ந்து பச்சைப்பசேல் என்று காட்சி கொடுக் கின்றன. ஆங்காங்கே உள்ள குளங்களிலும் நீர் ஓடைகளி லும் தாமரை மலர்களும் அல்லிப் பூக்களும் இதழ்களை விரித் துக் கதிரவனை வரவேற்பன போன்று தோற்றம் அளிக் கின்றன. இலைதுளிர் பருவத்தின் இவ்வகை இயற்கை எழில் களை எவ்வாறு எழுத்துக்களால் தீட்டுவதென்றே எனக்குத் தெரியவில்லை!
இக்காட்சிகளைக் காண்கின்றபோது ஒவியணுக ஏன் நான் பிறந்திருக்கக்கூடாது என்று என் மனம் எண்ணுகின்றது. அவ்வாறு ஓவியணுகப் பிறந்திருந்தால் இக்காட்சிகள் எல் லாவற்றையும் அழகான ஒவியங்களாகத் தீட்டி மகிழலாம் அல்லவா? கவிஞணுகப் பிறந்திருந்தால் இக்காட்சிகளைக் கவின்மிக்க கவிதைகளாகப் புனைந்து உலகுக்கு அளிக்கலாம் அல்லவா ?
சென்ற வாரம் திறந்த பல்கலைக்கழகத்திலிருந்து வீடு திரும்பிய போது கண்டவற்றை இங்கு எழுதுவது பொருத்த மாகுமெனத் தோன்றுகின்றது. சென்ற வியாழக்கிழமை பிற்பகல் 4 மணி இருக்கும். நல்ல வெயிலாக இருந்தது. பல்கலைக்கழகத்திலிருந்து வீட்டிற்கு நடந்து போக எண்ணி னேன். வாகனத்திற் போனுல் 5 மைல் தூரம்; நடந்து போனல் 3 மைல் தூரந்தான் இருக்கும். நடந்து போனல்
92

வழியிற் பல இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிக்கலாம். நடந்து போவதற்கு நடைபாதைகள் உண்டு; நடைபாதை நெடுகிலும் வழிகாட்டிகளும் இருக்கின்றன.
திறந்த பல்கலைக்கழகத்திலிருந்து புறப்பட்டுக் கால்வாய் ஒரமாக நடைபாதை வழியே சென்றேன். கால்வாயில் நீர் நிறைந்திருந்தது. கால்வாயின் இருமருங்கும் மரங்கள் வரிசை வரிசையாக நின்றன. அங்கே செடிகளும் கொடிகளும் நிறைந் திருந்தன. அவைகளில் இருந்த பல்வகைப் பூக்கள் கண்க ளுக்கு நல்விருந்தாக அமைந்தன. பறவைகள் இங்கும் அங் கும் பறந்து திரிந்தன. கால்வாயிற் சிறிய ஒடம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. கால்வாய் ஒரத்திற் சிலர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். பல நிறச் சாந்துகளைக் கொண்டு இயற்கைக் காட்சிகளை ஓவியங்களாக ஒருவர் தீட்டிக் கொண்டிருந்தார். தூண்டிலை நீரிலே இட்டுச் சிலர் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
சிறிது தூரம் நடந்து சென்றேன். பரந்து கிடந்த விளை நிலம் வந்தது. பசுமையான தோற்றம். அங்கே சில குதிரை கள் புல் மேய்ந்துகொண்டிருந்தன. சிறிது தூரத்துக்கு அப்பால் ஆடுகள் கூட்டமாகச் சென்றுகொண்டிருந்தன. வெள்ளை நிறக் கொக்குகள் இங்கொன்று அங்கொன்ருகக் காணப்பட்டன. அந்த விளைநிலத்தினுாடாக நடந்து சென் றேன். அப்போது நான் பிறந்த கிராமத்திலுள்ள வயல் நிலங்களின் ஊடாக இளமைப் பருவத்தில் நடந்து சென்ற காலங்களிற் கண்ட இயற்கைக் காட்சிகள் என் மனத் திரையில் ஒன்றன்பின் ஒன்ருகத் தோன்றி மறைந்தன!
இன்னும் சிறிது தூரம் நடந்து, ஒரு குடியிருப்பைச் சென்று சேர்ந்தேன். `கடுங்குளிர் காலத்தில் மக்களின் நடமாட்டத்தைக் காண்டிது அரிது; வீட்டிற்குள்ளேயே அடைபட்டுக் கிடப்பர். இலைதுளிர் காலத்தில் வீட் டிற்கு வெளியே அமர்ந்து பேசி மகிழ்வர் என்று முன்னர் உனக்கு எழுதியிருந்தேன். இக்குடியிருப்பிலும் பலர் வெளி யான இடங்களில் அமர்ந்திருப்பதைக் காண முடிந்தது.
93

Page 52
சிறுவர்கள் குடியிருப்பின் மத்தியிலுள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர். காதலர்கள் கைகோத்து உலா வந்தனர். வீடுகளின் முன்னுள்ள மரங் கள் பூக்களால் நிறைந்து காணப்பட்டன. ருேசா மலர்களிற் பல வகை; பல நிறம். அவைகளிலிருந்து நறுமணம் வீசிக் கொண்டிருந்தது.
குடியிருப்பைக் கடந்து நகர நிலையத்தை நோக்கி நடந் தேன். அப்பாதையில் தடாகம் ஒன்று இருக்கிறது. அத்தடா கம் இயற்கையாய் அமைந்ததன்று; மனிதராலே கட்டப் பட்டது. அதனைச் சுற்றி உயர்ந்த மேட்டு நிலம் அமைந் துள்ளது. ஒரு பக்கத்தில் இளமரக்காவும் மறுபக்கத்திலே பூமரக்காவும் அமைந்துள்ளன. தடாகத்தின் மத்தியிலிருந்து அருவி போல நீர் மேலெழுந்து கீழே விழுந்துகொண்டிருப்பது அங்கே வருவோருக்குக் கவர்ச்சியை அளிப்பதாகும். மாலை நேரத்திற் பலர் அங்கே வந்து அக்காட்சிகளைக் கண்டு களிப் பர். தடாகத்துக்குப் பக்கத்திலுள்ள ஆசனம் ஒன்றிற் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். கதிரவன் மேற்குத் திசையில் மறைந்து கொண்டிருந்தான். கதிரவனின் ஒளியினல் மேலெழுந்து கீழே விழுந்துகொண்டிருந்த அருவியிற் பல வர் ணங்களைக் காணமுடிந்தது.
எமது நாட்டில் எறும்புகளின் கொடுமையைப் பார்த் திருக்கின்ருய். நுளம்புகளின் தொல்லையும் உனக்கு நன்கு தெரியும். ஈக்களின் உபத்திரவத்தையும் அனுபவித்திருக் கின்ருய். ஆனல், இந்த நாட்டில் எறும்புகளின் கொடுமை யுமில்லை; நுளம்புகளின் தொல்லையுமில்லை; ஈக்களின் உபத் திரவமுமில்லை. கடுங்குளிர் காலத்தில் மட்டுமன்று, ஏனைய பருவங்களிலும் இவற்றைக் காணமுடியாது. அத்தடாகமும் அதன் சூழலும் நன்கு பேணப்படுகின்றன. மிகவும் துப்புர வாகவும் இருக்கின்றன. எறும்பு, ஈ, நுளம்பு என்பனவற் றைக் காணவே முடியாது.
94.

இதுவரை, மில்றன் கீன்ஸ் நகரத்தில் நான் கண்டு அனுப வித்த இலைதுளிர் காலக் காட்சிகள் சிலவற்றை மட்டும் குறிப்பிட்டேன். இன்னும் இரண்டு வாரங்களில் நீ இங்கு வந்துவிடுவாய். அப்போது இலைதுளிர் கால எழிலையும் சிறப்பையும் நீ நேரிலேயே பார்க்கக்கூடியதாக இருக்கும். இன்னும், இலண்டன் மாநகரத்தின் சிறப்பையும் தேம்ஸ் நதிக் கரையோரத்தின் எழிலையும் வேறு பல முக்கிய பூங்காக் களின் அழகையும் நேரிற் பார்ப்பதற்கு உனக்கு நல்ல வாய்ப்புண்டு.
அன்புள்ள,
அப்பா.
9
5

Page 53
16
மொழிப் பற்று
காடிவ்,
வேல்ஸ்,
பிரித்தானியா,
09.07. 85. அன்புள்ள சுதர்சன்,
நீயும் தங்கையும் நலனே சிங்கப்பூரைச் சென்று சேர்ந் திருப்பீர்களென எண்ணுகின்றேன். உங்களுக்கு முன்பாகவே புறப்பட்டுக் கொழும்பு மார்க்கமாக வந்த அம்மா, சிங்கப் பூர் விமான நிலையத்தில் உங்களை வரவேற்று மகிழ்ந்திருப்
பாள்.
இங்கிலாந்து தேசத்தில் ஒரு மாதம்வரை என்னுடன் நீங்கள் தங்கியிருந்தீர்கள். அக்காலத்திற் பல இடங்களுக்குச் சென்ருேம். தேம்ஸ் நதியில் பயணஞ் செய்தோம்; கேம் பிரிஜ், ஒக்ஸ்போட் முதலிய புகழ்மிக்க பல்கலைக்கழகங்களைச் சென்று பார்வையிட்டோம். இலண்டன் பாலம், நூதன சாலை, பக்கிங்ஹாம் மாளிகை, ஹைட் பாக் (Hyde Park) என்பன உங்கள் உள்ளங்களை மிகவும் கவர்ந்தன. இங்கே நீங்கள் கண்டு மகிழ்ந்தவை உங்கள் உள்ளத்தில் அழியாத ஓவியங்களாக நிலைத்திருக்குமென நம்புகின்றேன்.
96

இந்த மாதத்தில் காடிவ்வில் உள்ள திறந்த பல்கலைக் கழகத்தின் பிராந்திய அலுவலகத்துக்குச் செல்வதாகக் கூறியிருந்தேன். அதன்படி நேற்று மாலை காடிவ் (Cordiff) வந்து சேர்ந்தேன்; வேல்ஸ் (Wales) நாட்டின் தலைநகரம் காடிவ். பிரித்தானியாவின் மேற்குப் பகுதியில் இப்பிர தேசம் அமைந்துள்ளது. அதாவது வேல்ஸ் பிரித்தானியா வின் ஒரு பகுதி. வேல்ஸின் நிலப்பரப்பு ஏறக்குறைய 8,000 சதுர மைல்கள் ஆகும். இதன் சனத்தொகை 27. 6 இலட்சம் ஆகும். எழில் நிறைந்த கடற்கரைகளும் வள முள்ள விளைநிலங்களும் செழிப்பான குன்றுகளும் நிறைந் தது வேல்ஸ் நாடு. இங்கு ஒரு வாரம் தங்க எண்ணி
யுள்ளேன்.
பிரித்தானியாவிற்கு மேற்கே குன்றுகள் நிறைந்த இந்த நிலப்பரப்பைச் சென்றடையும் ஒருவர், அங்கே எவற்றைக் காண்கின்ருர்? பழைமையான மொழியையும், வளமான இலக்கியத்தையும், பழைமையையும் பெருமையையும் உடைய மக்களையும் பார்க்கின்ருர், இன்னெரு வகையாகக் கூறின், தனக்கென ஒரு தனிப் பண்பையும், மொழியையும், மரபையும் வேல்ஸ் நாடு பேணி வளர்த்து வருகின்றது.
வேல்ஸ் நாட்டின் எல்லைக்குள் நான் சென்றபோது மாலை 5 மணியிருக்கும். விளம்பரங்கள், ஊர்ப் பெயர்கள், திசை காட்டிகள் யாவும் இரண்டு மொழிகளில் எழுதப்பட்டிருப் பதைக் கண்டேன். ஒன்று வேல்ஸ் மொழி; மற்றையது ஆங் கிலம். பிரித்தானியாவிற் பல இடங்களுக்குச் சென்றிருக்கின் றேன். சென்ற இடமெல்லாம் ஆங்கிலமே! ஆனல், வேல்ஸ் நாட்டில் மட்டும் ஆங்கிலத்தோடு வேல்ஸ் மொழியும் இடம் பெற்றிருக்கக் கண்டேன். அதிலும் வேல்ஸ் மொழிக்கு முத லிடம் கொடுக்கப்பட்டிருந்தது.
வேல்ஸ் மொழி, வேல்ஸ் நாட்டு மக்களின் தாய் மொழியா கும். வேல்ஸ் மொழி பழ்ைை யான ஒரு மொழியெனக்
97

Page 54
கூறினேன். வேல்ஸ் மக்கள் தம் தாய் மொழியில் ஆழ்ந்த பற்றும் நிறைந்த ஆர்வமும் உடையவர்கள். அவர்கள் தம் தாய் மொழியை ஆட்சி மொழியாகக் கொள்ள விழைந் தனர். 1974 ஆம் ஆண்டு வேல்ஸ் மொழியை அந்த நாட்டின் ஆட்சி மொழியாகப் பிரகடனப்படுத்தி, பிரித்தானிய அரசு வேல்ஸ் நாட்டு மக்களின் அபிலாசையை நிறைவு செய்தது. ஆங்கிலம் உலக மொழியாக விளங்குகின்றது; இலக்கிய வளம் நிறைந்த மொழியாகத் திகழ்கின்றது, விஞ்ஞானம், தொழினுட்பம், மருத்துவம் ஆகிய துறைகளைக் கற்பதற்கு ஆங்கில அறிவு பெருந் துணையாகும். இவற்றை உணர்ந்த வேல்ஸ் மக்கள் ஆங்கிலத்தையும் ஆட்சி மொழியாகக் கொண்டனர். ஆகவே, வேல்ஸ் மொழி, ஆங்கில மொழி ஆகிய இரண்டு மொழிகளும் அந்த நாட்டின் ஆட்சி மொழி களாக உள்ளன.
வேல்ஸ் நாட்டின் ஆட்சி மொழிகள் பற்றித் தெரிந்து கொண்டபோது, சிங்கப்பூரின் ஆட்சி மொழி பற்றி நீ முன்னர் எனக்கு எழுதியவை நினைவுக்கு வந்தன. சீனம், மலாய், தமிழ், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகள் சிங்கப் பூரின் ஆட்சி மொழிகளாக உள்ளன என்றும், தமிழ் மொழி யும் அரச பீடத்தில் அமர்ந்திருப்பது உனக்குப் பெருமையைத் தருகின்றது என்றும் எழுதியிருந்தாய். மொழிப் பற்று என் பது இயற்கையானது. எந்த இனமும் தனது தாய் மொழி யைப் பேணிக் காக்கவே விரும்புகிறது. தாய்மேல் வைக் கின்ற அன்புக்கு நிகரானது, தாய் மொழிமேற் கொள்கின்ற பற்று. இதன் காரணமாகவே உலக மொழியான ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருந்த வேல்ஸ் நாட்டிலும், வேல்ஸ் மொழியை ஆட்சி மொழியாகப் பிரகடனப்படுத்த வேண் டியதாயிற்று.
இலங்கையில் மொழிப் பிரச்சினை இருந்து வருவதை நீ அறிவாய். 1958 ஆம் ஆண்டிலே சிங்களம் மட்டும் ஆட்சி மொழியாக ஆக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இப்பிரச்
98

வினை வளரத் தொடங்கியது. தமிழ் மொழி பழைமையானது; இலக்கிய வளம் நிறைந்தது. அம்மொழியைப் பேசுகின்ற மக்கள் தம்மொழியிற் பற்றும் ஆர்வமும் உடையவர்கள். எனவே, அதனை உணர்ந்த இன்றைய அரசு, தமிழை இலங்கையின் தேசிய மொழியாகப் பிரகடனப்படுத்தியது. அதாவது, சிங்களத்தை அரசகரும மொழியாகவும், சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளைத் தேசிய மொழிகளாகவும் ஆக்கி. யது. அத்துடன் தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே தமிழ் மொழி வாயிலாக அரச கருமங்களை மேற்கொள்ளவும் இடமளித்தது.
இன்னும், தமிழ் மொழியைத் தேசிய மொழியாக அரசி யல் யாப்பில் இடம்பெறச்செய்த அரசு, அதனை நட்ை முறைப்படுத்தத் தமிழ் மொழி அலுவல்கள் அமைச்சு ஒன்றை யும் நிறுவியது. எனினும், தமிழ் அமுலாக்கம் உரிய முறை யில் மேற்கொள்ளப்படவில்லை எனக் குறை கூறப்படுவது உனக்குத் தெரியும். அவ்வாறு மேற்கொள்ளப்பட்டிருப்பின், இன்றைய பிரச்சினைக்கு இடமில்லாமற் போயிருக்குமெனப் பாராளுமன்றத்திலும் பலர் எடுத்துரைத்துள்ளனர்.
சிங்கப்பூரில் நான்கு மொழிகள் ஆட்சி மொழிகளாக உள் ளன. இலங்கையிலே சிங்களம், தமிழ் ஆகிய மொழிகள் தேசிய மொழிகளாக ஆக்கப்பட்டுள்ளன. சிங்கள மக்கள் சிங்கள மொழியிற் கற்கவும், தமிழ் மக்கள் தமிழ் மொழியிற் கற்கவும் இந்த அமைப்பு முறை வாய்ப்பளிக்கின்றது. அத்து டன் ஆங்கிலம் இணைப்பு மொழியாக-ஒரு பாலம் போலஇரண்டு இன மக்களுக்குமிடையே அமைய அரசியல் யாப்பு வழிசெய்கின்றது. இன்னும், உலக மொழியான ஆங்கிலத்தை இரண்டு இன மக்களும் கற்றுப் பயனடையவும் இந்த மொழிக் கொள்கை வாய்ப்பை அளிக்கும் என்று கூறலாம்.
வேல்ஸ் மொழி, வேல்ஸ் நாட்டில் மட்டும் ஆட்சி மொழி யாக உள்ளது. பிரித்தானியாவின் ஏனைய பகுதிகளில் வேல்ஸ் மொழிக்கு இடமில்லை. இன்றைய இலங்கை அரசு, அரசியல்
99.

Page 55
யாப்பில் இடம்பெறச் செய்ததை ஒழுங்கான முறையில் அமுலாக்கஞ் செய்யுமானல், வடக்கு, கிழக்கு ஆகிய மாகா ணங்களில் தமிழ் மொழி ஆட்சி மொழியாக அமைவதோடு, இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் இடம்பெறும் ஒரு மொழியாக அமைவதற்கு இடமுண்டு.
சிங்கப்பூர் டொலரில் ‘சிங்கப்பூர்’ என்று தமிழிலும் அச் சிடப்பெற்றிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளாய். அதே போல இலங்கை ரூபாய் நோட்டுக்களில் "இலங்கை மத்திய வங்கி’ என்பதுடன், ரூபாய் நோட்டின் பெறுமதியும் தமி ழிலே கொடுக்கப்பட்டுள்ளது. படிவங்கள் மூன்று மொழி களிலும் அச்சிடப்படுகின்றன. محبر விளம்பரங்கள், ஊர்ப் பெயர்கள், திசை காட்டிகள் போன்றவற்றிலும் சிங்களமும் தமிழும் இடம்பெறுகின்றன. இன்னும், தமிழ் மக்களுக்கு எழுதப்படும் அரச கடிதங்களுடன் தமிழ், மொழிபெயர்ப்பு இடம்பெறவேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட தொன்று. ஆனல், அது பூரணமாக நடைமுறைப்படுத்தப் படவில்லை. வேல்ஸ் நாட்டில் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட நோட்டுக்களே புழக்கத்தில் உள்ளன. நோட்டுக்களில் வேல்ஸ் மொழிக்கு இடமளிக்கப்படவில்லை.
வேல்ஸ் நாட்டிற்குரிய சிறப்புக்களுள் ஒன்று அதன் மொழியாகும். ஐரோப்பிய நாகரிகத்தின் ஆரம்பத்திலிருந்து வேல்ஸ் மொழி சிறப்பான இடத்தைப் பெற்று வந்துள்ளது. வேல்ஸ் மொழி வீட்டு மொழியாக விளங்குகின்றது. பல் கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும், பாடசாலைகளிலும் போதனை மொழியாகவும் அமைந்துள்ளது, (கல்லூரிகளி அலும், பல்கலைக்கழகங்களிலும் ஆங்கிலமும் போதனை மொழியாகும்.) வானெலியிலும் தொலைக்காட்சியிலும் புறம்பான அலைவரிசைகள் வேல்ஸ் மொழிக்குக் கொடுக்கப் பட்டுள்ளன. வேல்ஸ் மொழிக்கென ஒரு பல்கலைக்கழகத்தை யும், தேசிய நூலகத்தையும், தேசிய நூதனசாலையையும் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
100

ஆகவே, வேல்ஸ் மக்கள் தமது தாய் மொழியைப் பேணிக் காக்கின்றதோடு ஆங்கில மொழியின் அவசியத்தையும் அறிந்து வாழ்கின்றனர்.
சிங்கப்பூரிலும் தமிழ் மொழிக்கு வானெலியிலும் தொலைக்காட்சியிலும் இடமளிக்கப்பட்டுள்ளதாய் எழுதி யிருக்கின்ருய். இலங்கையிலும் அரசு இவற்றைச் செய்கின் றது. வானெலியில் தனியான அலை வரிசை ஒன்று தமிழுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சியிலே தமிழ்ச் செய்தி, தமிழ் நிகழ்ச்சிகள் என்பன இடம்பெறுகின்றன. ஆனல் தமிழ் ஒளிபரப்புக்குக் கூடுதலான நேரம் ஒதுக்கப்பட வேண்டும். தமிழ் மொழி தமிழ் மக்களின் வீட்டு மொழி யாகும். பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றிலும் தமிழுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. தமிழ்க் குழந்தைகள் தமிழ் மொழி வாயிலாகப் படிப்பதற்கு அர சியல் யாப்பு இடமளிக்கின்றது. எனினும், இலங்கையின் மொழிப் பிரச்சினை தீரவில்லை!
இலங்கை அரசு, தமிழ் மொழிப் பிரயோகத்தை வரை யறை செய்து, அரசியல் யாப்பில் உள்ளதை நடைமுறைப் படுத்துமானல் இலங்கையில் மொழிப் பிரச்சினைக்கு இட மிருக்காதெனத் துணிந்து கூறலாம். வேல்ஸ் நாட்டில் வேல்ஸ் மொழிக்கு அளிக்கப்பட்டுள்ள அந்தஸ்திலும் பார்க்க, இலங்கையில் தமிழ் மொழிக்கு அளிக்கப்படும் அந்தஸ்துக் கூடியதாக அமையும் என்று துணிந்து சொல்லலாம்.
அன்புள்ள,
9.Louil ultr.
10

Page 56
17
அன்பளிப்பு
திறந்த பல்கலைக்கழகம், மில்றன் கீன்ஸ், பிரித்தானியா, 20.07。 S 5.
அன்புள்ள சுதர்சன்,
கடிதம் கிடைத்தது. உனது பாடசாலையின் கிறிக்கற் குழு விற்குத் தலைவனுக நீ நியமனம் பெற்றுள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகின்றேன். கட்டுப்பாடு, ஒழுங்கு என்பவற் றுக்கு விளையாட்டு" வழிசெய்யும். விளையாட்டின்போது வெற்றி, தோல்வி ஆகிய இரண்டிலும் ஒரே மனநிலையைப் பெறுவதற்குப் பழகிக்கொள்வது அவசியம். வெற்றியில் வீறுகொள்வதும் தோல்வியில் மனச் சோர்வு கொள்வதும் கூடாது. வெற்றி, தோல்வி ஆகிய இரண்டையும் ஒரே மனநிலையில் வரவேற்பதே உண்மையான விளையாட்டு வீர
ருக்கான பண்பாகும்.
இன்னென்றையும் இவ்விடத்திற் கூறிவைக்க விரும்புகின் றேன். விளையாட்டிலே கூடுதலான அக்கறைகொள்வோர் தம் படிப்பிற் கவனம் செலுத்தாது அலட்சியம் செய்துவிடு கின்றனர். விளையாட்டில் முன்னுக்கு நிற்பர்; ஆனல் கல்வியிற் கடை மாணுக்கராகக் காணப்படுவர். அதனுற்
102

பரீட்சைகளிலும் அவர்கள் தோல்வி காண்பர். ஆகவே, விஃாயாட்டிற் கலந்து கொண்டாலும் படிப்பதிற் கவனஞ் செலுத்துவாயென நம்புகின்றேன். சிறப்பாக இந்த ஆண் டில், நீ கல்விப் பொதுத் தராதரப் பத்திரப் பரீட்சைக்குத் தோற்றப் போகின்ருய். எனவே, படிப்பிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது உன் பொறுப்பாகும்.
இரண்டு முக்கியமான சம்பவங்களை இக்கடிதத்திற் குறிப் பிட்டு எழுத எண்ணினேன். ஒன்று எட்டு மாதங்களுக்கு முன்னர் நடந்தது; மற்றையது இரண்டு வாரங்களுக்கு முன் னர் நிகழ்ந்தது. இச்சம்பவங்கள் பிரித்தானியர்களின் சில பழக்க வழக்கங்கள், எவ்வகையில் எமது பழக்க வழக்கங் களிலிருந்து வேறுபட்டவை என்பதை நீ அறிந்துகொள்வ தற்கு உதவியாக இருக்கும்.
எட்டு மாதங்களுக்கு முன்னர் நடந்த சம்பவத்தைப் பற்றி முதலிற் குறிப்பிடுகின்றேன். திறந்த பல்கலைக்கழகத் தில் நிருவாகப் பகுதியில் வேலை செய்த பணிப்பாளர் ஒருவர் தமது பதவியிலிருந்து விலகினர். அவரின் பிரிவைக் குறிக்கு முகமாக ஒரு வைபவம் ஒழுங்கு செய்யப்பட்டது. அவ்வைப வத்திலே என்னையும் கலந்துகொள்ளுமாறு ஒர் அழைப் பிதழை அப்பணிப்பாளர் என்னிடம் கொடுத்தார். அந்த அழைப்பிதழில்,
"எனது விலகலைக் குறிக்குமுகமாக நவம்பர் 22 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு விமானச் சாலையில் (Airpartwing) நடைபெறவுள்ள வைபவத்திலே தங்களையும் கலந்துகொள்ளு மாறு அன்புடன் அழைக்கின்றேன்" என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
வைபவ தினத்தை ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன்; வைபவ நாளும் வந்தது. மாலை 6.30 மணிக்கே பல்கலைக் கழகத்திலுள்ள விமானச் சாலைக்கு (மதுவருந்தும் சாலைக்கு)ச் சென்றேன். பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் M
103

Page 57
நிருவாகத்தினரும் அங்கு வந்திருந்தனர். வைபவத்திற் சிற்றுண்டியும் குடிவகையும் பரிமாறப்படுமென எதிர் " பார்த்தேன். பணிப்பாளர் என்னைக் கண்டதும் வருக! வருக! என வரவேற்ருர், ஆனல், அங்கே வந்தவர்கள் எல்லோரும் தத்தம் பணத்தைக் கொடுத்துத் தத்தமக்கு வேண்டிய மதுவை வாங்கிக்கொள்வதைக் கண்டேன். அவர்களைப் போலவே நானும் நடந்துகொள்ள வேண்டும் அல்லவா?
மதுச்சாலைப் பொறுப்பாளரை அணுகி, 'மென் பானம் எதுவும் இருக்குமா?’ எனக் கேட்டேன். **ஆம். தோடம் பழப் பானம் இருக்கிறது' என்றர். எனது பணத்தைக் கொடுத்துத் தோடம்பழப் பானத்தை வாங்கிக் கொண் டேன். அங்கு வந்தவர்கள் எல்லோரும் மதுபானத்தையே அருந்தினர். நான் ஒருவன் மட்டுமே தோடம்பழப் பானம் அருந்தினேன். எல்லோரும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டே மதுபானத்தை அருந்தினர். இரவு 8.30 மணி வரை மதுவருந்தும் வைபவம் நீடித்தது.
எமது நாட்டிற் பிரியாவிடைகள் எவ்வாறு ஒழுங்கு செய்யப்படுகின்றன என்பதை நீ அறிவாய். பிரியாவிடை வைபவத்தை நடாத்துவதற்குப் பணஞ் சேர்க்கப்படும். வருவாய்க்கு ஏற்ப ஒவ்வொருவரும் பணங் கொடுப்பர். சிலர் கூடுதலாகக் கொடுப்பர்; வேறு சிலர் குறைவாகக் கொடுப்பர். இவ்வாறு பணத்தைச் சேர்ப்பதற்குப் பொறுப் பாய் இருப்பவர், சேர்த்த பணத்தை ஒழுங்காகச் செலவு செய்யாது விடுதலுமுண்டு. கூடக் கொடுத்தவர்களும் குறையக் கொடுத்தவர்களும் வைபவத்தின்போது ஒரே உணவையே உண்பர்; ஒரே வகைப் பானத்தையே அருந் துவர். சிலவேளை குறையக் கொடுத்தவர் கூடுதலாக வயிற்றை நிரப்பிக்கொள்வதும் உண்டு. எனவே, எமது நாட்டிற் பிரியாவிடையில் ஊழல், சமத்துவமின்மை என்பவற்றையே பார்க்கக் கூடியதாக இருக்கிறது.
104

ஆனல், இங்கு அவ்வாறில்லை, பிரியாவிடைக்கு வந்த வர்கள் ஒவ்வொருவரும் தத்தம் பணத்தையே செலவு செய்தனர். தத்தமக்கு வேண்டிய சிற்றுண்டிகளையே வாங்கி உண்டனர். தத்தமக்கு விருப்பமான மதுபானத்தையே தெரிவுசெய்து அருந்தினர். ஒருவர் கூடுதலாகச் செலவு செய்தார்; இன்னுெருவர் மட்டாக மதுவருந்தினர். சுருக் கமாகக் கூறின் ஒவ்வொருவரும் தத்தம் விருப்புக்கேற்ப உண்டும் அருந்தியும் கொண்டாடினர். ஊழலுமில்லை; உபத் திரவமுமில்லை.
இனி, இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடந்த சம்பவத் தைப்பற்றிக் குறிப்பிடுகின்றேன். திறந்த பல்கலைக்கழகத்திற் பேராசிரியராக இருக்கும் ஒருவர் என்னைத் தேநீர் அருந்த அழைத்தார். அவரின் அழைப்பை ஏற்று அவருடன் சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றேன். தேநீர் பெறுமிடத்தில் அவர் தேநீரைப் பெற்று, அதிலே தமக்கு வேண்டிய பாலையும் சீனியையும் இட்டுக்கொண்டார். எனது முறை வந்தது. நானும் அவ்வாறே தேநீரைத் தயாரித்துக்கொண் டேன். ጳ
தேநீருக்கான பணத்தைக் கொடுப்பதற்குப் பணம் பெறு நரிடம் சென்ருேம். பேராசிரியர் முதலிலும் அவரின் பின்னே நானுமாக வரிசையிற் சென்ருேம். தமது தேநீருக்கான பணத்தைப் பேராசிரியர் பணம் பெறுநரிடம் கொடுத்து விட்டு, அப்பாற் சென்று ஆசனத்தில் அமர்ந்துகொண்டார். பின்னர், எனது தேநீருக்கான பணத்தை நானே கொடுத்து விட்டு அப்பாற் சென்று பேராசிரியருக்கு எதிரே இருந்த ஆசனத்தில் அமர்ந்துகொண்டேன். இருவரும் தேநீரை அருந்தினுேம்; இலங்கையின் இனப் பிரச்சினைபற்றி இருவரும் நீண்ட நேரமாகப் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர், பேராசிரியர் தம் அறைக்குச் சென்ருர்; நான் எனது அறை க்குச் சென்றேன்.
ஒரு வாரத்தின் பின்னர், ஒரு நாள் அப்பேராசிரியரைப் பல்கலைக்கழக நூலகத்திற் சந்திக்க நேர்ந்தது. வணக்கம்
105

Page 58
கூறிப் புன்முறுவல் செய்தேன். அவரும் வணக்கம் கூறி வரவேற்ருர், அவரைத் தேநீர் அருந்த வருமாறு அழைத் தேன். உடன்பட்டுக் கொண்டார். இருவரும் சிற்றுண்டிச் சாலைக்குச் சென்ருேம். அவரைத் தேநீர் அருந்த நானே அழைத்தபடியால் நான் முன்னே சென்றேன்; பேராசிரியர் எனக்குப் பின்னே வந்தார்.
இருவரும் தேநீரைத் தயாரித்துக்கொண்டோம். பின்னர் காசு பெறுநரிடம் சென்று இருவரின் தேநீருக்குமான பணத் தை நானே கொடுத்தேன். பேராசிரியர் வியப்போடு என் னைப் பார்த்தார். "தேநீர் அருந்துவதற்கு நானே உங்களை அழைத்தேன். ஆகவே, உங்களின் தேநீருக்கான பணத்தை யும் நானே கொடுக்க வேண்டும்' என்றேன். பின்னர், இருவரும் அமர்ந்து தேநீர் அருந்தினேம். அப்போது நமது நாட்டுப் பண்பாட்டைப்பற்றிப் பேராசிரியருக்கு எடுத்துச் சொன்னேன்.
"தேநீர் அருந்துவதற்கு அல்லது உணவு உண்பதற்கு ஒருவர் இன்னுெருவரை அழைத்தால், அழைத்தவரே அதற் கான பணத்தைக் கொடுப்பர். அழைக்கப்பட்டவர் பணங் கொடுப்பதை அழைத்தவர் அனுமதிக்கமாட்டார். இதுவே நம் நாட்டிலுள்ள வழக்கமாகும்; இதுவே நம் பண்பாடு மாகும். வீட்டிற்கு ஒருவர் வந்தால், அவரை வரவேற்று உபசரிப்போம். உணவு அருந்தும் நேரமாக இருந்தால், வீட்டுக்கு வந்தவரையும் எம்முடன் அமரவைத்து அவருடன் சேர்ந்து உண்டு மகிழ்வோம். இதுவே எமது நாட்டு வழக் கம்' என்று பேராசிரியருக்குக் கூறினேன்.
“முன்கூட்டியே உங்களுக்கு அறிவிக்காமற் சாப்பாட்டு நேரத்தில் உங்கள் வீட்டிற்கு யாராவது வருவது வழக்க மா?’ என்று பேராசிரியர் என்னைக் கேட்டார். "ஆமாம், உங்கள் நாட்டிற் போல நேரங் குறித்து வீட்டிற்கு வரு கின்ற வழக்கம் எமது நாட்டிற் கிடையாது. எந்த நேரத்
106

திலும் எவரும் வரக்கூடும். அதற்குக் கட்டுப்பாடே கிடை யாது. வருகின்ற அந்த விருந்தினரை வரவேற்று உபசரிப்பது எமது கடமை. அதற்கு நாம் எப்போதும் தயாராகவே இருப்போம். அவ்வாறு வீட்டிற்கு வருபவர்களை வரவேற்று உபசரியாவிட்டால் எம்மை அவர்கள் தப்பாகப் புரிந்து கொள்வர். மனக் கசப்புக்கு இடமளிப்பதாகவும் முடியும். எமது வெறுப்பை முகத்தாலும் காட்டிக்கொள்ளக் கூடாது. இதுவே நாம் பின்பற்றும் வாழ்க்கை முறை' என்றேன்.
பின்னர்,
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்குக் குழையும் விருந்து.
என்ற வள்ளுவன் குறளை எடுத்துக்கூறி, அதன் பொருளை விளக்கினேன். அதன்பின்னர், கையில் இருந்த போப் அவர்
களின் ஆங்கில மொழிபெயர்ப்போடு கூடிய திருக்குறளைப் பேராசிரியருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தேன்.
அன்புள்ள அப்பா.
07

Page 59
18
பேச்சாளர் மூலே
பொது நூலகம், மில்றன்கீன்ஸ், பிரித்தானியா, 23.07. 85.
அன்புள்ள சுதர்சன்,
இன்னும் ஒரு வாரத்தில் இங்கிருந்து இலங்கைக்குப் புறப்படுவேன். திறந்த பல்கலைக்கழகங்கள் மூன்றை நேரிற் சென்று பார்ப்பதற்கு யுனெஸ்கோ நிறுவனம் புலமைப் பரிசில் ஒன்றை எனக்கு வழங்கியுள்ளது. இந்தியாவிலுள்ள ஆந்திரப் பிரதேசத் திறந்த பல்கலைக்கழகத்துக்கு முதலி லும், பின்னர் பாகிஸ்தானிலுள்ள அல்லமா இக்பால் திறந்த பல்கலைக்கழகத்துக்கும், அதன்பின்னர் தாய்லாந்தி லுள்ள சுகொத்தாய் தம்மதிரத் திறந்த பல்கலைக்கழகம், இராம்காம்ஹங் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கும் செல்லவுள் ளேன். கொழும்பிலிருந்து ஆகத்து 2 ஆம் தேதி இந்தியா விற்குப் புறப்படுவேன். எனது சுற்றுப் பயணத்தின் விவரங் களை அடுத்த எனது கடிதத்தில் விவரமாக எழுதுவேன்.
எனது சுற்றுப் பயண ஒழுங்குகளைச் செய்வதற்குக் கடந்த இரண்டு நாட்களாக இலண்டன் மாநகரத்திலே தங்கியிருக்க வேண்டியிருந்தது. பயணத்துக்கு வேண்டிய எல்லா ஒழுங்கு
108

களையும் செய்து முடித்த பின்னர், நேற்று மாலை ஹைட் irri i 66@y Girar (Hyde Park) G3Luj FT GITri epi&svägáë GF6ör gp அங்கு நடைபெறுவனவற்றை நேரிலேயே கண்டுகொள்ள எண்ணினேன். மாலை 5 மணி இருக்கும். பஸ் வண்டியிலிருந்து ஒக்ஸ்போட் வீதியில் இறங்கிப் பேச்சாளர் மூலையை (Sncakers Corner) நோக்கி நடந்தேன். வழமைக்கு மாருகக் கதிரவனும் தன் ஒளிக் கதிர்களைப் பரப்பி மேற்குத் திசையிற் சென்று கொண்டிருந்தான். பேச்சாளர் மூலையிற் பெருந் தொகையானுேர் கூட்டங் கூட்டமாக நின்றனர். அங்கு நிகழ்வதை அறிந்துகொள்வதற்காக விரைந்து நடந்து அவ் விடத்தை அடைந்தேன்.
உயரமான பெட்டி ஒன்றின்மேல் நின்று ஒருவர் உரையாற் றிக் கொண்டிருந்தார். அவரின் பேச்சை நூறு பேர்வரை கூட்டமாக நின்று கேட்டுக்கொண்டிருந்தனர். மறு பக்கத் தைப் பார்த்தேன். அங்கேயும் பெரிய கூட்டம் ஒன்று நின் றது. அங்கே மரக் குற்றி ஒன்றின்மேல் ஏறி நின்று ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். அதற்கும் அப்பால் இன்னுெரு கூட்டம் காணப்பட்டது. அக்கூட்டத்தின் மத்தியிலும் ஒருவர் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார்.
முதலிற் பெட்டிமேல் நின்று பேசிக்கொண்டிருந்தவரின் பேச்சைக் கேட்க எண்ணினேன். அவரைச் சுற்றி நின்றவர் களோடு நானும் சேர்ந்துகொண்டேன். பேசிக்கொண்டிருந் தவர் ஆபிரிக்க நாடொன்றைச் சேர்ந்தவர். உயரமான தோற்றம் உடையவராக இருந்தார். பருத்த உடலும் பயங் கரமான தோற்றமும் உடையவர். அவருடைய வாயிலிருந்து சொற்கள் சரளமாக வெளிவந்து கொண்டிருந்தன. உணர்ச்சி நிறைந்த பேச்சு; விறுவிறுப்பாக இருந்தது. உணர்ச்சியின் வேகத்தைக் கைகளாற் புலப்படுத்திய அவர், அஞ்சா நெஞ் சம் படைத்த ஒருவராகத் தோற்றம் அளித்தார்.
毒
என்ன விடயம்பற்றி உரையாற்றினர் என்று அறிவதற்கு நீ விரும்புவாயென எண்ணுகின்றேன். 'நிற வேறுபாட்டுக்
09

Page 60
கொடுமை" என்பது அவர் வலியுறுத்த விரும்பிய விடயம். கறுப்பு நிறமுடைய அவர், வெள்ளை நிறமுடையவர்களைக் காரசாரமாகச் சாடினர். அங்கு கூடி நின்றவர்களிற் பெரும்பான்மையினர், வெள்ளை நிறமுடையவர்கள், 'நிறத் தைக் கொண்டு மனிதனை மதிப்பிடுவது முறையா?’ என்று கேட்டார். “வெள்ளை நிறமுடைய நீங்கள் எந்த வகை யில் உயர்ந்தோர்?' என்று உணர்ச்சியோடு உசாவினர். *மனிதனை மனிதனுக மதியுங்கள்; மனிதனை மிருகமாக நடாத்தி நீங்களும் மிருகங்களாக நடந்து கொள்ளாதீர்கள்’’ என்று வேண்டி நின்ருர். எனினும், கறுப்பரின் அந்தக் கடுஞ் சொற்கள் வெள்ளையர்களை எந்த வகையிலும் கலங்க வைக்கவில்லை! தலையை அசைத்துக் கண்ணியமான முறையிற் செவிசாய்த்து நின்றனர்.
மறுபுறத்தில் நின்ற கூட்டத்தை நோக்கிச் சென்றேன். குற்றிமேல் நின்று குரல் கொடுத்துக்கொண்டிருந்தவர், ஒரு வெள்ளையர். அவர் தாடியும் மீசையும் உடையவராய்க் காணப்பட்டார். அவரின் கொண்டை வளர்ந்து நீளமாகத் தொங்கியது. பழைய காற்சட்டையும் கசங்கிய சேட்டையும் அணிந்திருந்தார். அவரின் பேச்சு அரச குடும்பத்தாரைப் பற்றியது. அரச குடும்பத்தினரை அவதூருகப் பேசினர், ‘மக்கள் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் மன்னர்கள்' என்று அவர்களை வருணித்தார். ஏழைகளின் எதிரிகள் என் றும் மக்களின் துரோகிகள் என்றும் குற்றஞ் சுமத்தினர். சுருங்கக் கூறின், அரச குடும்பத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்ற பொருள்பட அவரின் பேச்சு அமைந்திருந் தது.
அங்கே கூடி நின்றவர்களிற் பலர் ஆங்கிலேயர். அப்பேச்சு அவர்களின் உள்ளத்தைப் புண்படுத்தி விட்டது. அகத்தில் எழுந்த வெறுப்பை, அவர்கள் தம் முகத்திலே காட்டி நின்றனர். ஆங்கிலேயர் அரச குடும்பத்தார்மேல் அளவு கடந்த அன்புள்ளவர்கள். அரச குடும்பத்தாரின் அழ கைப் போற்றுபவர்கள். அரச குடும்பத்தினரைக் காண்ப
110

தில் அலாதியான பிரியம் உடையவர்கள். அதஞலேயே பிரித்தானியாவிலுள்ள பெரிய அரசியற் கட்சிகள் மூன்றும் அரச குடும்பத்தினரை இன்றும் ஆதரிக்கும் கொள்கை உடையனவாக இருக்கின்றன. எனவே, குற்றிமேல் நின்று உளறியவர் ஓர் இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது.
மூன்ருவது கூட்டத்தில் நிகழ்ந்த சொற்பொழிவையும் கேட்டறிய எண்ணி அங்கே சென்றேன். வர்க்கப் போராட் டம்பற்றி விறுவிறுப்பாக ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். அவர் ஆசிய நாடொன்றைச் சேர்ந்தவர். அழகான உடையை அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த சப்பாத்து மினுங்கிக்கொண்டிருந்தது. விலை உயர்ந்த கைக் கடிகாரம் அவரின் மணிக்கட்டை அணி செய்தது. அவர் ஒரு பணக் காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை அவரின் தோற் றம் நன்கு தெளிவுபடுத்தியது. அவரின் உடையும் அணி கலன்களும் அதனை மேலும் வலியுறுத்தின. ஆனல், அவரின் பேச்சுச் செல்வந்தர்களைச் சாடுவதாக அமைந்திருந்தது. முதலாளி வர்க்கத்தவர் சமூகத் துரோகிகள் என்று அவர் அழகாக வருணித்தார். செல்வந்தரின் சொத்துக்களை ஏழை களுக்குப் பகிர்ந்தளிக்கச் சட்டம் இயற்றப்பட வேண்டு மென அவர் உரத்த குரலில் வீறுகொண்டு பேசினர். அங்கு கூடி நின்றவர்கள் அவரின் பேச்சைக் கைதட்டி வரவேற் பார்களென அவர் எதிர்பார்த்தார். ஆனல், எவரும் கைதட்டி அவரின் பேச்சை வரவேற்றதாகத் தெரியவில்லை.
இதுவரை, பேச்சாளர் மூலையில் மூவர் நிகழ்த்திய பேச்சுக் களைக் குறிப்பிட்டேன். பெட்டிமேல் நின்று உரையாற்றியவர் சொல்லியவற்றிலே உண்மை உண்டு. வெள்ளை நிறம் உடைய வர்கள் ஏனையவர்களைக் குறைவாக மதிப்பிடுகின்ற மனப் பான்மை வெறுக்கத்தக்கது. நிற வேறுபாடு காரணமாக இங்கு அடிக்கடி பல அசம்பாவிதங்கள் இன்றும் நடந்து கொண்டிருப்பதை நீ செய்தித் தாள்களிற் படித்திருக்க முடி
li

Page 61
யும். எனினும், நிறங் கொண்டு மக்களை வேறுபடுத்துவதை வெள்ளை நிறம் உடைய பலர் எதிர்க்கின்றனர். அதனலேயே பெட்டிமேல் நின்று பேசியவரின் பேச்சை அங்கு கூடி நின்ருேர் வரவேற்று ஆர்வத்தோடு செவிமடுத்தனர். உண் மையை வரவேற்கின்ற பிரித்தானியரின் மனப்பான்மை பெரி தும் பாராட்டுதற்குரியது.
குற்றிமேல் நின்று பேசியவர் ஒர் இடதுசாரி அரசியற் கட்சியைச் சேர்ந்தவர் என்று கூறினேன். அரச குடும்பத் தினரை இன்றும் பிரித்தானியர் போற்றி வாழ்கின்றனர். விக்ருேறியா மகாராணி போன்றேரின் ஆட்சிக் காலத்தை அவர்களால் என்றும் மறந்துவிட முடியாது. பிரித்தானிய சாம்ராச்சியத்தைக் கட்டியெழுப்பிய அரச குடும்பத்தினரை அவர்களால் எப்படி மறந்துவிட முடியும், மக்களின் இந்த மனநிலையை நன்கு அறிந்த அரசியற் கட்சிகளும் அதற் கேற்பவே செயற்படுகின்றன. அரச குடும்பத்தாருக்கு எதி ராக அரசியற் கட்சிகள் எதையும் அதிகமாகப் பேசுவது மில்லை; பாதிப்பு ஏற்படக்கூடியதாக எதனையும் மேற் கொள்ளுவதுமில்லை. அப்படித் தொழிற்பட்டால் அவ்வர சியற் கட்சிகள் மக்களின் ஆதரவை இழக்கவேண்டி வரும். எனவே, குற்றிமேல் நின்று பேசியவரின் பேச்சுப் புறக் குடத்து நீர் போலாயிற்று.
வர்க்கப் போராட்டம்பற்றி எமது நாட்டிற் பேசலாம். அதற்கு நம் நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புங் கிடைக்கலாம். வர்க்கப் போராட்டம்பற்றிப் பிரித்தானியர் களுக்குப் பேசுவதால் என்ன பயன்? ஏகாதிபத்திய மனப் பான்மையில் வளர்ந்தவர்களுக்கா வர்க்கப் போராட்டம் பற்றி வருணிப்பது? இதனை உணராதவர்தான் மூன்ருவது கூட்டத்திற் பேசியவர். பிரித்தானியாவிலுள்ள கன்ச வேட்டிவ் கட்சி, தொழிற் கட்சி, லிபறல் கட்சி ஆகிய மூன்று அரசியற் கட்சிகளும் முதலாளித்துவக் கொள்கைகளைக் கடைப் பிடிப்பனவே. பிரித்தானிய மக்களை இடதுசாரி
12

களாக ஆக்குவது இப்போதைக்கு இயலாததொன்று. ஆகவே, வர்க்கப் போராட்டப் பேச்சாளர், பேச்சாளர் மூலையைப் பயன்படுத்த முயன்று தோல்வியே கண்டார்.
பிரித்தானியாவிற் பேச்சுச் சுதந்திரத்தின் இருப்பிடமாக -ஒரு சின்னமாக-பேச்சாளர் மூலை விளங்குகிறது. அங்கே எவரும் பேசலாம்; எதனையும் பேசலாம். பேச்சுச் சுதந் திரம் இல்லாத நாட்டைச் சேர்ந்தவர்கள் சிலர் பிரித் தானியாவிலுள்ள பேச்சாளர் மூலையைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
கைக் கடிகாரத்தைப் பார்த்தேன். இரவு 8 மணியாக இருந்தது. நேரம் அவ்வளவு விரைந்து சென்றதை என்னுல் நம்ப முடியாதிருந்தது. விரைந்து நடந்து பஸ் வண்டி யில் ஏறினேன். ரெயில் நிலையத்தைச் சென்றடைந்தேன். ரெயிலில் ஏறித் தனியாக ஒர் ஆசனத்தில் அமர்ந்துகொண் டேன். அப்போது பேச்சாளர் மூலையிற் கண்டவையும் கேட்டவையும் என் மனத் திரையில் ஒன்றன்பின் ஒன்ருகத் தோன்றி மறைந்தன.
அன்புள்ள, அப்பா,
13

Page 62
19
அழையா விருந்து
பொது நூலகம், மில்றன் கீன்ஸ், பிரித்தானியா, 30,07. 85.
அன்புள்ள சுதர்சன்,
இன்று மாலை இலங்கைக்குப் புறப்படவுள்ளேன். இலங் கைத் திறந்த பல்கலைக்கழகத்திற் பணிப்பாளராக இருக்கும் கலாநிதி கொத்தலாவல அவர்கள் என்னைக் கொழும்பு விமான நிலையத்திற் சந்திப்பார். அவருடன் இரண்டு நாட்கள் தங்குவேன். அங்கிருந்து 2 ஆம் தேதி பம்பாய்க்குப் புறப்படுவேன். பிரித்தானியாவிலிருந்து எழுதும் எனது இறுதிக் கடிதம் இதுவாகும்.
பிரித்தானிய திறந்த பல்கலைக்கழகத்தின் நிருவாகப் பகுதி யில் வேலைசெய்யும் திரு. யோன் என்பவர் எனக்கு நன்கு பழக்கமானவர். கடந்த பத்து மாதங்களாக அவருடன் நெருங்கிப் பழகியுள்ளேன். நேற்றுக் காலை அவரைப் பல் கலைக்கழகத்தின் சிற்றுண்டிச்சாலையிற் சந்திக்க நேர்ந்தது. அப்போது நான் இலங்கைக்குப் பயணமாவதைப்பற்றி அவ ருக்குக் கூறினேன். கை குலுக்கி, எனது பிரிவுக்காகக் கவலைப்பட்டார். அதன் பின்னர், 'நாளை மாலை வீட்டிற்கு
LL4

வர முடியுமா?’ என்று கேட்டார். ‘நாளை மத்தியான உணவிற்குப் பின்னர் விமான நிலையத்துக்குப் புறப்படவுள் ளேன்' என்றேன். 'அப்படியானல் இன்று மாலை என் னுடன் வீட்டிற்கு வர வேண்டும்' என்று வேண்டினர். திடீரென அவர் விடுத்த அழைப்பு எனக்கு வியப்பைக் கொடுத்தது.
இந்த நாட்டிலே எவரும் திடீரென வீட்டுக்கு வருமாறு எவரையும் அழைப்பதில்லை. மனைவியின் அனுமதி பெற்றும் நாட் குறித்தும் நேரங் குறித்துந்தான் அழைப்பு விடுப்பது வழக்கம். அதனுலேயே திரு. யோன் அவர்களின் அழைப்பு எனக்கு வியப்பை அளித்தது என்று கூறினேன். அழைப்பை ஏற்று பிற்பகல் 4.30 மணிக்கு அவரின் வீட்டிற்குச் செல்வ தற்கு உடன்பட்டேன்.
திரு. யோன் அவர்களின் வீடு பல்கலைக்கழகத்திலிருந்து நாலு மைல் தூரத்தில் இருக்கிறது. பஸ் வண்டியிற்ருன் போக வேண்டும். ஆகவே, இருவரும் பிற்பகல் 4.30 மணிக்கே பல்கலைக்கழக வளவிற்குள் இருக்கும் பஸ் நிறுத்தும் இடத் துக்குச் சென்ருேம். (ஊழியர்களின் போக்குவரத்து வசதி நோக்கிப் பல்கலைக்கழக வளவிற்கு ஊடாக பஸ் போய், வருவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.) சரியாக 4.30 மணிக்கு பஸ் அங்கு வந்து சேர்ந்தது. முதலில் திரு. யோன் ஏறினர். அவரைத் தொடர்ந்து நானும் ஏறிக் கொண்டேன். திரு. யோன் தமக்குரிய டிக்கற்றை வாங்கிக் கொண்டு உள்ளே சென்று அமர்ந்து கொண்டார். எனக்கு வேண்டிய டிக்கற்றை வாங்கிக்கொண்டு நானும் உள்ளே சென்று அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டேன். பஸ் புறப்பட்டது.
இதுவரை நான் எழுதியவற்றைக் கொண்டு முக்கியமான மூன்று பழக்க வழக்கங்களை நீ அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். முன்கூட்டியே நாளும் நேரமும் குறித்துத்தான் ஒருவரைப் பார்க்கப் போக வேண்டும். அவ்வாறு நேர்ங்
15.

Page 63
குறியாது போவோரை எவரும் வரவேற்கவே மாட்டார். "நேரங் குறித்து வந்தீர்களா? மன்னிக்க வேண்டும். இன்று சந்திக்க முடியாது' என்று கூறிக் கதவைத் தாளிட்டுக் கொள்வர். பிள்ளைகள் தம் பெற்ருேரைப் பார்க்கப் போவதற் கும் நேரங்குறித்துப் போவதுதான் இந்நாட்டு வழக்கம்.
இன்னென்று, நண்பர்களாக இருந்தாலும் பயணஞ் செய் யும்போது ஒவ்வொருவரும் தத்தமக்குரிய டிக்கற்றைத் தாமே வாங்கிக் கொள்கின்றனர். ஒருவர் மற்றவருக் காகப் பணங் கொடுத்து டிக்கற் வாங்கிக் கொள்வதில்லை. திரு. யோன் என்னைத் தம் வீட்டிற்கு வருமாறு அழைத்தார். நான் அவருடைய அழைப்பை ஏற்று அவருடன் சென்றேன். எனினும், பஸ் வண்டியில் ஏறிக்கொண்ட போது, தமக்குரிய டிக்கற்றை மட்டும் அவர் வாங்கிக் கொண்டார். விருந் தாளிக்கு இன்னெரு டிக்கற்றை வாங்க வேண்டுமென அவர் கருதவில்லை. எனக்கு வேண்டிய டிக்கற்றை நானே வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். இந் நாட்டில் இவ்வழக்கு நடைமுறையில் வந்துவிட்டது. எனவே, எவரும் இதனைத் தப்பாகக் கருதுவதில்லை. எமது நாட்டில் இவ்வாறு செய்தால், அதனைப் பண்பற்ற செயலாகக் கருது கின்ருேம்.
மற்ருென்று, நேரந் தவருமை. பஸ் குறிப்பிட்ட நேரத் துக்கே நிறுத்தும் இடத்துக்கு வந்துவிட்டதெனக் கூறினேன். அதேபோல பஸ் வண்டிகள் குறிப்பிட்ட நேரத்துக்கே புறப்பட்டு விடும். ரெயில் வண்டிகளும் அப்படியே. வேலைத் தலங்களிலும் குறிப்பிட்ட நேரத்துக்கே வேலை தொடங்கும். எவரும் அலுவலகங்களுக்குப் பிந்தி வருவதுமில்லை; முந்தி வீட்டிற்குப் போவதுமில்லை. குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து, குறிப்பிட்ட நேரத்துக்கே வெளியேறுவர். வைபவங்களும் நிகழ்ச்சிகளும் குறிப்பிட்ட நேரத்துக்கு ஆரம்பமாகும். தவிர்க்கமுடியாத காரணங்களால் மட்டும் தாமதமாவ துண்டு. அப்படித் தாமதமானல் அதற்காக மன்னிப்புக்
116

கேட்டுக்கொள்கின்ற வழக்கம் பாராட்டற்குரியது. பஸ் அல் லது ரெயில் தாமதமாகிவிட்டாற் பகிரங்கமாகவே பயணி களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றனர்.
பஸ் நிறுத்தும் இடங்களைத் தவிர்த்து ஏனைய இடங்களில் வண்டிகளை நிறுத்திப் பயணிகளை ஏற்றுவதுமில்லை; இறக்கு வதுமில்லை. பஸ் வண்டியிலே பயணஞ் செய்வோர் வீண் வார்த்தைகளைப் பேசி மற்றவர்களுக்குத் தொல்லை கொடுப் பதும் மிகக் குறைவு. அமைதியையே எல்லோரும் விரும்பு கின்றனர். மற்றவர்களுக்குத் தொல்லையாக அமைவன வற்றைத் தவிர்த்துக்கொள்ளும் குறிக்கோள் போற்றுதற் குரிய பண்பாகும்.
பதினைந்து நிமிடங்களில் திரு. யோன் அவர்களின் வீட் டிற்கு முன்னே பஸ் வந்து நின்றது. இருவரும் பஸ் வண்டி யிலிருந்து இறங்கினுேம். திரு. யோன் எனக்கு முன்னே சென்று தமது வீட்டுக் கதவிலே தட்டினர். அப்போது அவரின் பாரியார் கதவைத் திறந்தார். கணவரோடு இன் னுெருவர் அங்கு நின்றமை அவருக்கு வியப்பைக் கொடுத் தது. அவரின் வியப்பை அவரின் முகக் குறிகள் இனிது புலப்படுத்தின. 'இவர் கலாநிதி கந்தையா, இலங்கையைச் சேர்ந்தவர். திறந்த பல்கலைக்கழகத்தில் என்னுடன் வேலை செய்பவர். இவரைப்பற்றி உனக்குப் பலமுறை சொல்லி இருக்கின்றேன். நாளை பிற்பகல் இலங்கைக்குப் போகவுள் ளார். ஆகவே, முன்கூட்டி அறிவிக்காமலே இவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளேன். மன்னிக்க வேண்டும்' என்று தம் பாரியாருக்கு என்னைத் திரு. யோன் அறிமுகம் செய்து வைத்தார்.
ஒரு மணி நேரம்வரை அவர்களோடு பேசிக்கொண்டிருந் தேன். சிற்றுண்டியும் தோடம்பழப் பானமும் கொடுத்தனர். அவர்களின் பெற்றேர்களைப்பற்றி விசாரித்தேன். இருவரின் பெற்றேர்களும் வட இலண்டனில் இருப்பதாகவும் மாதம் ஒருமுறை அங்கு சென்று அவர்களைப் பார்த்து வருவதாகவும் கூறினர்.
117

Page 64
"பெற்றேர், பிள்ளைகளுடன் இருப்பதை விரும்புவ தில்லையா?" என்று கேட்டேன். 'இல்லை. இங்கு திருமணஞ் செய்துகொண்ட பின்னர், பிள்ளைகள் பெற்றேருடன் இருப் பதை விரும்புவதில்லை; பெற்றேரும் பிள்ளைகளுடன் வாழ வேண்டும் என எதிர்பார்ப்பதில்லை' என்று திரு. யோனும் அவரின் பாரியாரும் கூறினர்.
"எமது நாட்டின் நிலைமை வேறுபட்டது. பெற்றேர்களைப் பேணுவது பிள்ளைகளின் கடமையாகும். வயது முதிர்ந்த பெற்றேர், தம்மைப் பேணிக் காப்பது தம் பிள்ளைகளின் பொறுப்பாகும் என்றே எதிர்பார்க்கின்றனர்" என்று எமது நாட்டிற் பெற்றேருக்கும் பிள்ளைகளுக்குமிடையிலான உறவை எடுத்து விளக்கினேன்.
'வயோதிபர்களான காலத்திலும் பெற்றேர் தனிமை யான வாழ்க்கையையே விரும்புகின்றனர். கணவன் இறந்த பின்னர், மனைவி தனிமையாக வாழ்வதும், மனைவியின் மறைவுக்குப் பின்னர், கணவன் தனிமையாக வாழ்வதும் இங்கு பெருவழக்காகும். வேலையாட்களின் உதவி இல்லா மலே இவர்கள் வாழ்க்கையை நடாத்துகின்றனர். ஒவ் வொருவருக்கும் ஓய்வூதியம் கிடைக்கிறது. அப்பணத்தைக் கொண்டு வாழ்க்கையைச் சீராக நடத்த முடியும். ஆகவே, எவரின் உதவியையும் இவர்கள் நாடவேண்டியதில்லை. பிள்ளை களுக்குச் சுமையாகப் பெற்றேர் இருப்பதில்லை” என்று திரு. யோன் விளக்கமாக எடுத்துக் கூறினர்.
"நோய்வாய்ப்படுங் காலங்களில் இவர்களின் நிலை என்ன" என்று கேட்டேன்.
'நோய்வாய்ப்படுங் காலங்களில் இவர்களைப் பார்ப்பதற் கெனப் பொதுநல ஊழியர்களை அரசு நியமித்திருக்கிறது. அவர்கள் வயோதிபர்கள் வாழ்கின்ற வீடுகளுக்குச் சென்று உதவிகளைச் செய்துவருவர்' என்று திரு. யோன் பதிலளித்
118

கார். மேலும், வயது முதிர்ந்தோர் வாழ்விடங்களை அரசு றுவியுள்ளதாயும் அங்கு வாழ்கின்ற வயோதிபர்கள் நல்ல முறையிம் பேணப்படுகின்றனர் என்றும் விவரமாகக் கூறினர்.
'நல்லது தனிமையாக வாழ்கின்ற வயோதிபர் ஒருவர் நிதி ைெக இறந்துவிட்டால் என்ன நடக்கும்?" என்று விருறவினேன். s
'நல்ல விஞவைக் கேட்டீர்கள். அப்படி நடந்துவிட்டாற் வில நாட்களுக்கு அவரின் மரணம் எவருக்கும் தெரியாமலே இருக்கும். இறந்தவரின் உடலின் துர் நாற்றம், அவரின் மறைவை மற்றவர்களுக்குக் காட்டிக்கொடுக்கும்வரை, அவ ரின் மறைவு மறைவாகவே இருக்கும்' என்று திருமதி யோன் நகைச் சுவையோடு எடுத்துரைத்தார்.
கைக் கடிகாரத்தைப் பார்த்தேன். 6.00 மணியாக இருந் தது. "நேரமாகிவிட்டது. இலங்கைக்கு நீங்கள் இருவரும் வரவேண்டும். உங்களை அங்கு வரவேற்று உபசரிப்பேன்’ என்று கூறி வணக்கத்தோடு விடைபெற்று வீடு திரும்பினேன்.
அன்புள்ள, அப்பா,
19

Page 65
20
குடையின் கதை
திறந்த பல்கலைக்கழகம், கொழும்பு,
இலங்கை,
15, 01, 86.
அன்புள்ள சுதர்சன்,
ஆசிரிய நியமனத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட கலைப் பட்டதாரிகளுக்கு ஆசிரிய சேவைமுன் பயிற்சி கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்றது. கண்டி, மகரகம, கொழும்பு, அளுத்கம ஆகிய இடங்களிலுள்ள கல்வி நிலையங்களிலே தமிழ் மொழிமூல ஆசிரிய மாணவர்கள் பயிற்சி பெற்றனர், இப்பயிற்சி நிலையங்களுக்குச் சென்று ஆசிரிய மாணவர்களைக் கண்டு பேசினேன். ஒரு பயிற்சி நிலையத்தில் ஏற்பட்ட சம்ப வம் மற்க்க முடியாதது. அச்சம்பவத்தையே இக்கடிதத்திற் குறிப்பிட்டு எழுத எண்ணினேன்.
தமிழ் மொழி மூல ஆண் கலைப் பட்டதாரிகளுக்குப் பம் பலப்பிட்டியிலுள்ள இந்துக் கல்லூரியிலே ஆசிரிய பயிற்சி இடம் பெற்றது. இந்த நிலையத்திற் பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென முடிவுசெய்தனர். அவ்விழாவிற்குக் கல்வி அமைச்சரையும் கல்வி அமைச்சி லுள்ள முக்கியமான அதிகாரிகளையும் அழைப்பதெனவும்
120

முடிவு செய்யப்பட்டது. இது காரணமாக இப்பயிற்சி நிலை யத்துக்கு நான் பலமுறை போய்வர வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
தினமும் மாலையில் மழை பெய்தது. குடையில்லாமல் வெளியிற் போகவே முடியாது. நான் தங்கியிருக்கும் விடுதி யிலிருந்து பஸ் வண்டியிற்ருன் பயிற்சி நிலையத்துக்குப் போக வேண்டும். எனவே, அங்கு போகும்போது குடையை எடுத்துச் செல்ல நான் மறந்துவிடுவதில்லை. பயிற்சி நிலையத் திற்குப் போனல் அதிகமான நேரம் அதிபருடைய அலுவ லகத்திற்ருன் அமர்ந்திருப்பேன். குடையை அதிபரின் அலுவ லகத்துக்குப் பக்கத்திலுள்ள அறையில் வைத்துவிடுவது வழக்கம்.
ஒரு நாள் இரவு, அலுவலகக் காரிலே எனது அறைக்குத் திரும்பியபோது குடையை எடுத்துவர மறந்துவிட்டேன். மறுநாள் மாலை பெருமழை பெய்தது. பயிற்சி நிலையத் துக்கு எப்படிப் போவதென்றே எனக்குத் தெரியவில்லை. தொடர்ந்து பெய்த மழை திடீரென நின்றது. விரைந்து நடந்து பஸ் நிற்கும் இடத்துக்குப் போனேன். பஸ் வண்டி யில் ஏறி மழையில் நனையாமற் கல்லூரியைச் சென்றடைந் தேன். அங்கு சென்றதும் குடையைப்பற்றி விசாரித்தேன்.
“எப்படியான குடை?' என்று ஆசிரியர் ஒருவர் என்னைக் கேட்டார். "மகளிர்க்கான குடை, மிகவும் சிறியது. மங்கிய செந்நிறமுடையது. மதிப்பற்ற தோற்றமுள்ளது. கவர்ச்சி அற்றது. ஆனல் உலகத்தையே சுற்றி வந்த பெருமை அதற்குண்டு' என்று சுருக்கமாகக் கூறினேன்.
"ஆமாம். இங்கேதான் அந்தக் குடை இருந்தது. அதை எடுத்து உள்ளே வைத்தோம். எவரும் அதை எடுத்துக் கொண்டு போயிருக்க முடியாது. அறைக்குள் இருக்கும் பொருள்களுக்குள் மறைந்து கிடக்கும். தேடி எடுத்துத் தரு
121

Page 66
வோம்' என்று கூறினர். மறு நாள் மாலை அங்கு சென் றதும் "குடை கிடைத்ததா?’ என்று கேட்டேன். 'இல்லை. இன்னும் தேடிப் பார்க்கவில்லை. உள்ளேதான் இருக்கிறது. கவலைப்படாதீர்கள் கட்டாயமாக எடுத்துத் தருவோம்' என்று கடந்த ஆண்டிற் புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர் ஒருவர் சொன்னுர். குடை காணுமற் போய்விட்டதே என்று அவர் கவலைப்பட்டதை அவரின் முகத்திற் காணக்கூடிய தாயிருந்தது.
ஆசிரியர் பயிற்சியின் இறுதி நாள்வரை, மறைந்த அந்தக் குடையைப்பற்றி விசாரணை செய்ய நான் மறந்ததில்லை. ஆனல் குடை மாயமாய் மறைந்துவிட்டது. எனது கைக்குக் கிட்டவில்லை; வேருெருவர் கைக்குடையாய்விட்டது. காணு மற்போன அந்தக் குடைக்காகக் கவலைப்பட்டேன். அவ் வாறு கவலைப்பட்டதற்குக் காரணமுண்டு!
மறதியால் நான் தொலைத்த குடைகள் பல. உன் அம்மா வின் குடைகளையும் தொலைத்திருக்கின்றேன். அதனுலேயே குடைக்கும் எனக்கும் எட்டாப் பொருத்தம் என்று உன் அம்மா அடிக்கடி சொல்லுவாள். அவ்வாறு தொலைத்த அந்தக் குடைகளுக்காக நான் அதிகம் கவலைப்பட்டதில்லை. ஆனல், இந்துக் கல்லூரியிலிருந்து மறைந்த அந்தக் குடைக் காக என் மனம் மிகவும் வேதனைப்பட்டது. ஏனெனில், அந்தக் குடைக்கும் எனக்கும் நெருங்கிய உறவுண்டு.
உங்களைப் பிரிந்து மில்றன் கீன்ஸ் நகரத்தில் வாழ்ந்த போது, அந்தக் குடையை வாங்கினேன். அதன் விலை ஒரு பவுண்; அதாவது இலங்கை நாணயத்தில் கிட்டத்தட்ட முப்பத்தைந்து ரூபாய்; சிறிய தொகை. ஆனல், என்னைப் பொறுத்தவரை பெறுமதி மிக்கது. அந்தக் குடையை இலங்கைக்குத் திரும்பும்வரை நான் இழக்கவில்லை. இலங்கை யிலும் மூன்று மாதங்கள்வரை என்னைவிட்டு அது பிரிய வில்லை.
22.

அந்தக் குடையின் கதையைப் பக்கம் பக்கமாக என்னல் எழுத முடியும். ஆனல் கடிதம் நீண்டுவிடும். சுருக்கமாகக் கூறுகின்றேன்; பிரித்தானியாவிலுள்ள கேம்பிரிஜ், ஒக்ஸ் போட், பாத், யோக், கீல், மான்செஸ்றர், பர்மிங்காம், இலண்டன், றெடிங் முதலிய பல்கலைக்கழகங்களை அக்குடை பார்த்துள்ளது. இந்தியாவில் பம்பாய், ஐதராபாத்து, டெல்கி ஆகிய நகரங்களுக்குச் சென்றுள்ளது. பாகிஸ்தானி லுள்ள லாகூர், இஸ்லாமாபாத்து, ராவல்பின்டி, கராச்சி ஆகிய நகரங்களையும் சுற்றிப் பார்த்துள்ளது. சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் விஜயம் செய்துள்ளது. பஸ் வண்டியிலே பயணஞ் செய்துள்ளது; விமானத்திற் பல முறை பறந்துள்ளது; பாங்கொக்கிலிருந்து சிங்கப்பூருக்கு ரெயிலிலே இரண்டு இரவும் இரண்டு பகலும் பயணஞ். செய்த அனுபவமும் அதற்குண்டு.
ஆகவே, குடையை இழந்து அறைக்குத் திரும்பிய எனக் குப் பெருந்துன்பமாகவே இருந்தது. ஒருபுறம் உங்களைப் பிரிந்து வாழ்கின்ற துன்பம்; மறுபுறம் குடையை இழந்த கவலை. ஓராண்டு காலம் என்னுடன் வாழ்ந்ததல்லவா? என் இன்ப துன்பங்களிற் பங்குகொண்டதல்லவா? ஆகவே, அதனை எப்படி மறக்க முடியும்? மழை நாட்களில் அதன் பிரிவு என்னை மேலும் துன்பத்துக்குள் விழுந்து அழுந்தச் செய்தது. உடைந்த உள்ளத்தோடு படுக்கைக்குச் சென்றேன். அப் போது என் மனக்கண் முன்னே அக்குடை தோன்றியது. எட்டு மாதங்களுக்குமுன் மில்றன் கீன்ஸ் நகரத்தில் அதனைப் பிரிந்து கூடிய சம்பவம் ஒன்று என் நினைவுக்கு வந்தது.
பிற்பகல் 4 மணியிருக்கும். பல்கலைக்கழகத்திலிருந்து வீட் டிற்குத் திரும்பினேன். வீட்டிற்குப் போகுமுன் சந்தை நிலையத்திலே சிறிது நேரம் தங்கி ஒய்வெடுக்க வேண்டும் போலத் தோன்றியது. அங்கு வெற்றிடமாக இருந்த ஆசனம் ஒன்றிற் குடையை வைத்துவிட்டு அமர்ந்தேன். அன்று வெள்ளிக்கிழமை. சந்தை நிலையத்திலே ஆயிரக்கணக்கான
123 .

Page 67
மக்கள் கூடியிருந்தனர். அவர்களைப் பார்க்க வேண்டும் என்று என் மனம் விரும்பவில்லை; சந்தை நிலையத்தை விட்டு என் மனம் கற்பனை உலகிற்குச் சென்றது!
'மனைவி மக்களைப் பிரிந்து எவ்வளவு காலத்துக்கு இப்படி வாழ்வது? அவர்கள் சிங்கப்பூரில் எப்படி வாழ்கின்ருர்களோ இலங்கையில் இருந்த வாய்ப்புகளும் வசதிகளும் அவர்களுக் குச் சிங்கப்பூரிற் கிடைக்குமா?’ என்று எண்ணி எண்ணி என் மனம் ஏங்கியது; கொழும்புக்கும் சிங்கப்பூருக்கும் மாறி மாறிச் சென்றது. என்னுடைய துன்பமான அந்த மன நிலையை எவரும் அறியமாட்டார். எனக்குப் பக்கத்திலே கிடந்த குடை எனது துன்பத்தை உணர்ந்திருக்குமென எண்ணுகின்றேன். அதற்கு வாய் இருக்குமானுல் என் துன்ப நிலையை அது விவரமாக உங்களுக்கு எடுத்துக் கூறுமல்லவா? ஆணுல் அதற்குத்தான் வாயில்லையே!
அரைமணி நேரம் கழிந்தது. உண்மை உலகிற்குத் திரும்பி னேன். வீட்டிற்குப் போய்ச் சமைக்க வேண்டுமே என்று எண்ணினேன். என்னை மறந்தேன். வீட்டை நோக்கி விரை ந்து நடந்தேன். வீட்டுக்குப் போனதும் குடையை மறந்து விட்டேனே என்று தவித்தேன். எனது மறதியைக் கடிந்து சினந்தேன். சந்தை நிலையத்தை நோக்கி ஓடினேன். அங்கு போய்ச் சேர்வதற்குப் பத்து நிமிடங்கள்வரை சென்றது. அமர்ந்து ஒய்வெடுத்த ஆசனத்தை அணுகினேன். அங்கு என் குடை கிடக்கக் கண்டேன். அப்போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
சந்தை நிலையத்திலே ஆயிரக்கணக்கானேர் கூடியிருந்தனர் என்று கூறினேன். அவர்களில் எவராவது அந்தக் குடையை எடுத்தார்களா? இல்லை; எவரையும் கவரக்கூடிய சக்தி அந் தக் குடைக்கு இருக்கவில்லையே! எனவே எவர்தான் அதனை எடுத்துச் செல்ல விரும்புவர்? அதன்மேல் எனக்குள்ள அக்
24.

கறை வேறு யாருக்குண்டு? ஆசனத்திற் கிடந்த குடையை உற்றுநோக்கினேன். என்னைக் கண்ட களிப்பாற் குடை கண்ணிர் விட்டு நிற்பது போலத் தோன்றியது. அதனைத் தூக்கி என் மார்போடு அணைத்துக்கொண்டேன்.
இந்துக் கல்லூரியிற் குடையை இழந்த பின்னர், இன்று வரை இன்னுெரு குடையை வாங்க வேண்டும் என நான் நினைக்கவேயில்லை. வெயிலிலும் மழையிலும் குடையில்லா மலே சென்று வருகிறேன்.
எனது குடையைக் கவர்ந்தவருக்கு என் நல் வாழ்த் துக்கள்!
அன்புள்ள,
அப்பா.
125

Page 68
............ - ހު"
இந்நூலாசிரியர் கலாநி
* பச்சையப்பன் கல்லூரி பேசும்" எனப் புகழ்ந்து பார தில் டாக்டர் மு. வ. அவர் அவர்களின் பண்புப் பான என்ற நூலே ஆக்கி அளித் * இலண்டன் பல்கலைக்கழக மார் அவர்களின் வழிகாட்ட ஆய்வு மேற்கொண்டு கல அத்துடன் இலண்டன் பல் யில் ஆராய்ச்சி உதவியாள பைப் பெற்றவர்.
轟 இவர் ஆக்கிய "மலரும் L டேஸ்வரப் பல்கலேக்கழகத் பாடநூலாகப் புகழ் பெற்ற வளம், கற்பஃன வளம், Q-FairCal air, Cult and W. கேதீஸ்வரம், இந்து சம ஆசிரியரும் ஆவர். * 1978 - 1980 ஆம் ஆ கழகத்தில் தமிழ்த் துறைத் இரார்.
* 1984 - 1985 ஆம் ஆண் நல நாடுகளின் பல்கலைக்க தானிய திறந்த பல்கலைக்க வதற்குப் புலமைப்பரிசில் ஒ பாகிஸ்தான், இந்தியா, ! லுள்ள திறந்த பல்கலேக் தற்கு யுனெஸ்கோ நிறுவன வழங்கியது.
கல்விச் சேவைக் குழுவி கைத் திறந்த பல்கலேக்கழ யாளராகவும் பணிபுரியும் கல்வி" பற்றிய நூல் ஒ4 டுள்ளார்.

தி ஆ. கந்தையா ப் படிக்கட்டும் பைந்தமிழ் ாட்டப்படும் கல்விக் கழகத் ர்களிடம் படித்தவர். மு.வ. தயில் "தந்தையின் பரிசு" துள்ளார். த்தில் பேராசிரியர் யோன் டலில் பத்தி இலக்கியம் பற்றி ாநிதிப் பட்டம் பெற்றவர். கலேக்கழகத் தமிழ்த் துறை ஞகவும் பணிபுரியும் வாய்ப்
மணமும்" என்ற நூல் வெங்க தில் முதனிலே வகுப்புக்குப் து. இலக்கிய வளம், சிந்தனை உள்ளத்தனேயது உயர்வு, irship of Murukan, 5).ják யம் என்னும் நூல்களின்
ண்டுகளில் களனிப் பல்கஃக் தலைவராகப் பணிபுரிந்துள்
எடுகளில் இவருக்குப் பொது ழகங்கள் ஆஃணக்குழு, பிரித் ழகத்தில் ஆய்வு மேற்கொள் ஒன்றை வழங்கியது. மேலும் தாய்லாந்து ஆகிய நாடுகளி கழகங்களைப் பார்வையிடுவ னம் புலமைப்பரிசில் ஒன்றை
ல் உறுப்பினராகவும் இலங் கத்தில் சிரேட்ட விரிவுரை இவர், இப்போது தொலக் ன்றை ஆக்குவதில் ஈடுபட்