கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாழ்தல் என்பது

Page 1

கோவில் கவிபுவன்

Page 2

வாழ்தல் என்பது. (சிறுகதைத் தொகுதி)
திருக்கோவில் கவியுவன்

Page 3
வாழ்தல் என்பது. (சிறுகதைத் தொகுதி)
திருக்கோவில் கவியுவன் O
இராசையா யுவேந்திரா)
First Edition : September 1996
Printing ; Techno Print
ó, JayauUardena Rve, Dehlulela.
Cover layout ; M.K.M. Shakeeb
Published by : Nanbargal
103, Molpe Road, MoratUua, Sri Lanka,
Pries : Rs, 100.00

மானுடத்தை மதிக்க (க்) கற்றுத் தந்த அப்பாவிற்கும் நிலாக் காட்டி கவளம் பிசைந்தூட்டிய கோகிலாக்காவிற்கும் குட்டிக் குட்டி கணிதத்தையும் குட்டாமலே வாழ்வையும் புரியவைத்த கயண்ணாவிற்கும் மற்றும்
போர் வந்து
புதையுண்டுபோன முகங்களனைத்துக்கும் இந்நூல் சமர்ப்பணம்.

Page 4

முன்னுரை
திருக்கோவில் கவியுவனின் இந்தச் சிறுகதைத் தொகுதி இலக்கிய சிந்தனையுள்ள வாசகர்களுக்கு, குறிப்பாக ஈழத்து தமிழ் இலக்கியத்தின் சமகால செல்நெறிகளின் போக்குகள் பற்றிய சிரத்தையுள்ள வாசகர்கள், விமர்சகர்களுக்கு முக்கியமான ஒன்றாகும்.
பொதுத் தமிழிலக்கிய பரப்பை எடுத்து நோக்கும் பொழுது, எழுபதுகளின் மத்தியிலிருந்துநிச்சயமாக எண்பதுகளிலிருந்து இலங்கை யில் ஏற்பட்ட சமூக அரசியல் அனுபவங்கள் தனித்துவமானவையாகும். தமிழிலக்கியத்தில் இவற்றிற்கு முன்னுதாரணங்கள் காட்டுவது சிரமமாகும்.
இந்த அனுபவத்தின் தன்மையை, இது பற்றி வெளிவந்த முதல் கவிதை தொகுதியான 'மரணத்துள் வாழ்வோம்' (1985) நன்கு சுட்டிற்று. அதனைத் தொடர்ந்து 'உயிர்ப்புக்கள்' போன்ற புனைகதைத் தொகுதிகளில் அது தலைகாட்ட தொடங்கிற்று என்றாலும் புனைகதைத் துறையில் இந்த அனுபவங்களின் கலை நேர்த்தியுள்ள வெளிப்பாடுகள் 1989 முதல் (ரஞ்சகுமாரின் 'மோகவாசல்த் தொகுதி முதல்) வெளிவரத் தொடங்குகின்றன. மல்லிகை, திசை போன்ற இலக்கிய ஏடுகள் இப்படைப்புகளை வெளிக் கொணர்ந்தன. அவைமுலமாக ஒரு புதிய தலைமுறை எமது புனைகதை உலகில் பிரவேசித்தது.
ரஞ்சகுமாருடன் விரியத் தொடங்கும் இப்புனைகதை இலக்கியப் போக்கு இந்தத் தொகுதியில் ஒரு கட்டத்திற்குரிய "முதிர்வினை' பெற்றுள்
6696D 566).
தொகுப்பு நிலையில் பார்க்கும் பொழுது ஒரு முக்கியமான சமூகஆவணப் பண்பு இதனால் வெளிவருகின்றது. கிழக்கு மாகாணத்திலே போராட்டத்தின் தன்மை, அது ஏற்படுத்திய அநுபவங்கள் பற்றிய (தொகுதி நிலை நிற்கும்) ஒரு பதிவாகவும் இது அமைந்து விடுகிறது. போராட்டத்தின் பொதுப்பண்புகள் பலவற்றை இக்கதைகளுடே நாம் கண்டு கொள்ளலாம்.
தொண்ணுறுகளில் மட்டக்களப்பு பகுதி எதிர்நோக்கிய அநுபவங்களை, அந்த அநுபவங்களில் சிசு எனக்குறிப்பிடத்தக்க ஒருவரின் சித்தரிப்பு
மூலம் அறிந்து கொள்ளும் வாய்ப்பை இத்தொகுதி தருகின்றது. இங்கு தமிழ் முஸ்லிம் பரிமாணம் பதிவு செய்யப்படவில்லை.

Page 5
கவியுவனின் படைப்புகளை வாசிக்கும் பொழுது அவை தன்னிலைப் பட்ட அநுபவ உள்வாங்கல்களில் இலக்கிய வெளிப்பாடுகளாக அமையும் தன்மையை அவதானிக்கலாம்.
யாதார்த்தப் பாங்கு (Realist-Mode) மேலோங்கிநின்றநிலையிலிருந்து 'எக்ஸ்பிறஷினிஸம்' (Expressionism) எனப்படும் அகத்திறப்பாங்கு மேலுக்கு வருவதை இந்த சிறுகதைத் தொகுதி நன்கு கோடிற்று காட்டுகின்றது. இந்தப்பாங்கில் உணர்ச்சிகளின் அகநிலைத்தாக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இந்தச் சித்திரிப்பில் இறங்கும் கலைஞர் சமூக அநுபவங்களை தனது ஆளுமையின் தனிநிலை அநுபவங்களாக தரும் போக்கினை கொண்டவராக இருப்பார்.
தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தில் இப்பண்பு கடந்த தசாப்த காலம் முதல் படிப்படியாக வளர்ந்து வருகின்ற ஒன்றாகும். ஜெயமோகன், பிரபஞ்சன் முதலியோர் முதல் ரஞ்சகுமார் உட்பட பலரிடம் இந்தப் பண்பு படிப்படியாக முகிழ்ப்பதை காணலாம்.
இந்தப்பண்பு கதை சொல்லப்படும் முறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. யாதார்த்தப் பாங்கிற்கு உரியதான விளக்க, விபரணப் போக்கு குறைந்து அகநிலைப்பட்ட உள்வாங்குதல்களின் சித்திரிப்பே முக்கியத்துவம் அடையத் தொடங்கியுள்ளது.
இந்தப் போக்கில் படைப்பாளியின் ஆளுமை மிக மிக முக்கியமான இடத்தைப் பெறும். அந்த ஆளுமையின் அநுபவப் பதிவுகளே ஆக்கத்தின் உயிர்ப்பாக அமையும்.
கவியுவனின் படைப்புகளில் இப்பண்பை நன்கு அவதானிக்கலாம். இந்தக்கதைகளில் கவியுவனின் ஆளுமையும் அநுபவ கூறுகளும் முக்கியமாகின்றன. சமூக உறவுகளை ஆள்நிலை உறவுகளாக ஆக்கும், பார்க்கும் பண்பு இந்த கதைகளிலே காணப்படுகிறது.
கவியுவனின் பிள்ளைக்கால அநுபவச் சித்தரிப்புகள், பட்டதாரி மாணவ வாழ்க்கைச் சித்தரிப்புக்கள் மிகுந்த இலக்கிய நேர்மையுடனும் உணர்ச்சி அந்நியோந்நியத்துடனும் சித்தரிக்கப்பட்டுள்ளன.
a
இந்தச் சித்தரிப்பு நமது சமகால அழுத்தங்களின் 'உண்மையான' சித்தரிப்புக்களாகின்றன.
இந்த ஒரு அமிசம் திருக்கோவில் கவியுவனை மற்றைய எழுத்தாளர் களிலிருந்து பிரித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
இந்த அகநிலைச் சித்தரிப்பு கவிதை நிலைக்கு மிக அண்மியது. இதனால்

கவியுவனின் நடையில் ஒரு கவிதைத் தன்மை ஆழமாக இழையோடுகிறது. 'வாழ்தல் என்பது' இதற்கு மிக நல்லதோர் உதாரணமாகும்.
இத்தகைய உணர்ச்சிநிலைப்பட்ட சித்தரிப்பு இலக்கிய கவர்ச்சி உடைய ஒன்றாகும். வாசிப்பவர், கதையின் உணர்வோட்டத்துடன் ஒன்றிப் பதற்கு இச்சித்தரிப்புமுறை நன்கு உதவுகின்றது. யதார்த்தப்பாங்கிற்கு உரியதான எடுத்துக்கூறுகை (Reportage) முறையிலிருந்து வேறுபட்ட இது, வாசகரின் "உணர்ச்சி இனங்காணுகைக்கு'நன்கு உதவுவதாகும்.
அசாதாரணமான இலக்கிய கவர்ச்சியை உடைய இந்தக்கதைப்பாங்கு மிகுந்த ஆழமான உணர்வு சித்தரிப்புகளுக்கே பொருத்தமான ஒன்றாகும். மேலோட்டமான உணர்ச்சிகளை சித்தரிக்கும் போது இந்தப் பாங்கு தன்வலிமையை இழந்துவிடும்.
'உடைந்துப் போட்ட தெருவிளக்கு', 'தொடுவான வெளிகள்', 'காற்றுகனக்கும் தீவு', 'இனியும் ஒரு சாவு', 'வாழ்தல் என்பது', 'திரைகளுக்கு அப்பால்' எனும் கதைகளில் உணர்வாழமும் சித்தரிப்பு நுணுக்கமும் இணைந்து நேர்த்தியான இலக்கிய நிறைவுணர்வை எம்மிடத்தே ஏற்படுத்துகின்றன. இத்தகைய இலக்கிய படைப்புகளிலே படிமங்கள், குறியீடுகள் முக்கியம் பெறுகின்றன. 'தொடுவான வெளிகளில்' வரும் காகங்கள் அத்தகைய படிமங்களாகி விடுகின்றன.
"அதைத் துரத்த வேணாம் நிவேதா. மரம் அதுகளின்ர வாழுமிடம். காலா காலமாய் அதுகள் வசிக்கிற இடத்தில வந்து கொண்டு அதுகளை துரத்துவது நல்லமில்ல. அதுகளாவது சுதந்திரமாய் திரியட்டும் விடுமன்".
என வரும் இடம் ஒரு அரசியற் பிரச்சினையின் படிமக் குறிப்பாகி விடுகின்றது. இது போன்றவையே தெருவிளக்கு, பூனை எலி பற்றிய குறிப்பு ஆகியன.
திருக்கோவில் கவியுவனின் கதைகளில் மக்கள் படும் துன்பங்கள் மிகத்துல்லியமாக வெளிவருகின்றன. மக்களின் வாழ்க்கை உடைந்து போன கண்ணாடித்துண்டுகளாக நிற்கும் ஒரு தன்மை இங்கு உணர்வு நேர்மையுடன் சித்தரிக்கப்படுகின்றது.
இந்தச் சித்தரிப்புக்கள் தம்முள் தாம் முடிந்த முடிவுகளாய் ஆகிவிடக்கூடாது. இவை முழுமையான ஒரு வாழ்க்கை தரிசனத்தை, நோக்கை தரவேண்டும், கலைப்படைப்புகளின் முக்கியத்துவம் அவைதரும் மனித/சமூகதரிசனத்திலேயே தங்கியுள்ளது. வாழ்க்கையை

Page 6
தெரிந்து கொள்வதற்கு மாத்திரமல்லாமல் அதனை விளங்கிக் கொள்வதற்கும் இலக்கியம்/கலைப்படைப்பு உதவவேண்டும்.
இந்த நிலை வரும்பொழுதுதான் 'கருத்துநிலை' (Idealogy) முக்கியமாகின்றது. கருத்துநிலை என்பது வாழ்க்கையை முழுமையாக பார்க்க உதவும் கருத்துக்கோல நிலைப்பாடு ஆகும். ஏற்பட்டுள்ள சிதறல்களுக்கு அப்பாலேயுள்ள, இந்தச் சிதறல்களின் இணைவுகள்/ பிளவுகளினால் ஏற்படப் போகும் ஒரு புதிய முழுமை பற்றிய ஒரு தெளிவும் அவசியம். கவியுவனிடம் நாம் எதிர்பார்ப்பது அந்த கருத்து நிலையின் தெளிவையேயாகும்.
அநுபவங்களை, உணர்ச்சிகளை, உணர்வுகளை இத்துணை ஈடுபாட்டு டனும், கவர்ச்சியுடனும் சித்தரிக்கும் ஆற்றல் நிறைந்த எழுத்தாளன் இவற்றை ஒரு உலக நோக்கின் பாற்படுத்தும் பொழுது அற்புதமான இலக்கியம் வெளிவரும். அந்தப் பார்வை விகசிப்புக்கான அறிவுப் பின்புலமும், சிந்தனைப் போக்கும் கவியுவனிடத்து உள்ளன. அவை பஞ்சாலாத்தி போல மேற்கிளம்ப வேண்டும். அந்த ஒளியின் தரிசனத்தில் நாம் ஒன்றிவிட வேண்டும். கவியுவனின் இந்தப் படைப்புக்கள் அவரின் இளநிலைப்படைப்புக்கள். இந்த இளநிலைப்படைப்புக்களின் இலக்கிய முழுமை, எம்மை மேலும் அவரிடத்தில் இருந்து பெரும் சாதனைகளை எதிர்பார்க்க தூண்டுகிறது.
2/7, 58, 37வது ஒழுங்கை, கார்த்திகேசு சிவத்தம்பி வெள்ளவத்தை,
மிம்ப் பேராசிரியர் கொழும்பு-06. (முதுதமிழ்ப் பேராசிரியர்)

மரணத்தின்தூது
தொடுவான வெளிகள்
உடைத்துப் போட்ட தெருவிளக்கு
மதிப்பீடு
நனைதலும் காய்தலும்
செவ்வந்தி
இனியும் ஒரு சாவு
வாழ்தல் என்பது.
திரைகளுக்கு அப்பால்
காற்று கனக்கும் தீவு
சரிநிகர் - ஏப்ரல் 95
வீரகேசரி - மே 94
சரிநிகர் - ஜுலை 94
சரிநிகர் - செப்டெம்பர்'94
சரிநிகர் - நவம்பர் '94
சரிநிகர் - ஏப்ரல் 95
சரிநிகர் - பெப்ரவரி"95
சரிநிகர் - ஒகஸ்ட் "95
வீரகேசரி
சரிநிகர் -ஜனவரி 96
15
23
3.
40
54
62
75
88

Page 7

மரணத்தின் தூது
இருட்டு கும் மிருட்டு! என்
அடிமனதைப் போல் வெளியில் ஒரேயிருட்டு.
ராத்திரியை சிவராத்திரியாய் மாற் றிக் கொண்டிருக்கும் நான். என் கன்ன மேட்டில் வழிந்து செல்லும் கண்ணீர் நதி. என் பாதம் ஈரப்படுகிறது. சில துளிகள் பாதங் களையும் சந்திக்கதிராணியில்லாமல் நிலத்தை நோக்குகின்றன.
'இது பொய்! நான் நம்பமாட்டன். என் மகன் செத்திருக்கமாட்டான்! நான் நம்பமாட்டன்! நான் நம்ப மாட்டன்'
ஈனஸ்வரத்தில் என் மனைவியின் முனகல் கேட்கிறது. இரவு முழுவ தும் ஒப்பாரி வைத்து இப்போது இயலாமையில் ஒரு முனகல். அவள் நெஞ்சுக் கூட்டுக்குள் கண்டு கொண்டிருந்த கனவுகளும்
நம்பிக்கைகளும் கீழே நீர்த்திவலை களாக சிதறிக் கிடக்கின்றன.
ମୁଁ ଗtଗit கைகள் பரபரக்கிறது, அவளின் தோளைப் பற்றி ஆறுதல் சொல்ல. என்னை எழுப்பவே யாரோ தேவைப்படுகிறது போல் இருக் கிறது. இரங்கிய பார்வையுடன் அவளை ஏறிட்டுப் பார்க்கிறேன்.
என் பார்வையைப் பற்றி அவள் அக்கறை காட்டவில்லை. இன்னும் புலம்புகிறாள். இறக்கும் தறுவாயில்
இருக்கும் குப்பி விளக்கை வெறித்துப் பார்க்கிறாள். வாய் ஏதோவெல்லாம் முணுமுணுக்கிறது.
வாழ்தல் என்பது.

Page 8
எனக்குக் கேட்கவில்லை. கேட்பதையும் நான் விரும்பவில்லை. அவள் கையில் கசக்கப்பட்ட அக் கடிதம் கோபந்தாங்கியாகச் சுருண்டு கிடக்கிறது. அது வெறும் கடிதம் அல்ல. இரண்டு உயிர்களின் இதயத்துடிப்பை ஒரே நேரத்தில் ஒரு நிமிடம் நிறுத்தி வைத்த யமதூதன்! விஷத்தைத் தடவி வந்த வெள்ளைப் பேப்பர் மனிதம் மலிந்திருந்த என் மகனின் முகத்தில் மரணத்தடம் பதித்து உருக்காட்டிய ஒரு விகற்ப ஓவியன். அவளையே பார்த்திருந்த போது என் கால்களை ஏதோ நக்கியது. பாம்போ என்று ஒரு கணம் பயந்து விட்டேன். ஒரு கணம்தான். மறுகணம் பாம்பு கடித்தாவது சாகக் கூடாதா என்று எண்ணம் தோன்றியது. நான் வளர்க்கும் நாய் என் கால்களை நக்கிக் கொண்டிருந்தது. இரவு சாப்பிடவில்லை என்பதை நக்கிச் சொல்கிறது போலும், இனிமேல் எமது சாப்பாடு சாப்பாடாக இருக்க மாட்டாது என்பதை நான் யாரிடம் சொல்வேன். எப்படிச் சொல்வேன்.
என்னையறியாமல் என்கைகள் நாயின் கழுத்தைத் தடவியது. மனம் மனைவியை நினைத்துக் கொண்டது, மகனை நினைத்துக் கொண்டது. என் கைவிரலைப் பிடித்துக் கொண்டு கடைத்தெருவைச் சுற்றிவரும் என்மகனின் பிஞ்சுமுகம் தெரிகிறது. நேற்றையது, நாளையது எல்லாமே நிகழ்வது போல் நினைவுகளில் ஒரு தடம் புரள்தல் நிகழ்ந்து கொண்டிருந்தது, என்மகனின் வெற்றிச்சான்றுகள் இங்கே தாறுமாறாக வீசப்பட்டுக்கிடப்பதைப் போல். என் தோள்கள் வலித்தது - அதில் அவன் சவாரி செய்ததால், என் கண்கள் பனித்தது - அது அவனை அடிக்கடி விழுங்கிக் கொண்டதால், என் மனம் ? அது என்ன செய்து கொண்டிருந்தது என்று எனக்கே தெரியாது. மலேரியாக் குளிசை விழுங்கியவன் போல் நான். நானே இப்படியென்றால் என் மனைவியைக் கேட்கத் தேவையில்லை.
"டொக்.டொக்.டொக்" நாய்களின் குரைப்புகளுக்கு மத்தியிலே ஜீப் ஒன்றின் உறுமல் வீட்டுவாசலில் அடங்கிய சில நிமிடங்களில் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறக்கிறேன். துப்பாக்கியின் வழிகாட்டலில் சிலர் என் வீட்டினுள் பிரவேசித்தார்கள். வேறு சந்தர்ப்பங்களில் என்றால் நான் வெலவலத்துப் போயிருப்பேன். இப்போது எதுவுமே நடக்காதது போல் என்மனம் சுத்தகுன்யமாய் விறைத்துக் கிடந்தது. "எங்கே உனது மகன்'
மனித உருத்துப்பாக்கியொன்று இரைந்தது,
2 வாழ்தல் என்பது.

'நான் பரமசிவம்'. நான் என்ன சொன்னேன் என்று தெரியவில்லை. ஆனால் பதில் சொன்னேன்.
'நான் உன்னைப் பற்றிக் கேட்கவில்லை. உன் மகனை பற்றிக் கேட்கிறேன்' துப்பாக்கியுருவின் இரைச்சலின் கடுமை இமயத்தைத் தொட்டது எங்கோ பரவியிருந்த இன்னும் சில துப்பாக்கிகள் என்னைச் சூழ்ந்து கொண்டன. கண்கள் மிரட்டலில் கைதேர்ந்தவை போல் என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தன. 'நானும் மரணத்தைப் பற்றிக் கதைக்கவில்லை. மனிதத்தைப் புற்றித்தான் கதைக்கிறேன்.' 'ஏய் கிழவா உனக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா? ஏன் சம்பந்தமில்லாமல் பேசுகின்றாய்' என் பதில் என்னைப் பற்றி ஒரு வித்தியாசமான அபிப்பிராயத்தை அவன் மனதில் உருவாக்கியிருக்க வேண்டும். அவனின் பேச்சில் இப்போது கடுமையுடன் ஒருவித இரக்க உணர்வும் இழையோடிக் கிடந்தது. 'நானும் உன்னிடம் கேட்கிறேன் பந்தத்தை அறுத்துவிட்டு சம்புந்தத்தைப் பற்றிக் கேட்கிறாயே உனக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா? : காயம் பட்ட என்மனதில் சிறைபட்டுக் கிடக்கும் என்கவலைகளை இவன் எப்படி அறிந்திருப்பான் என்று சிறிதும் எண்ணாமல் நான் என்பாட் டில் பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். என்னைக் கேள்வி கேட்டவன் என் அருகாமையில் வந்தான். அவன் மூச்சுக்காற்று என்மேனியில் பட்டு ஒருவிதக் கூச்சத்தைக் கொடுத்தது. காற்று இந்தப் பாவப்பட்ட சுவாசங்களையெல்லாம் எப்படித்தான் சமாளிக்கின்றதோ? 'வாயைத் திற'அவன் கட்டளையிட்டான், 'அதிசயமாக இருக்கிறதே எங்கள் வாயைத் திறக்கச் சொல்வது. அடைப்பதுதானே உங்களின் வழக்கம்.' என்பதிலில் இருந்த கேலியும் அதன் ஆழமும் அவனுக்கு விளங்கவில்லையோ இல்லை விளங்காத மாதிரி நடித்தானோ தெரியாது, என் பதிலைப்பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாதவன் போல், 'நீ குடித்திருக்கிறாயா?" என்று கேட்டான். 'குடித்திருந்தால் நிதானமாய்ப் பேசியிருப்பேன்"
அதன் பின் அவன் என்னிடம் எதுவுமே பேசவில்லை. என்னைப் பார்க்க
வாழ்தல் என்பது. 3

Page 9
விரும்பாதவன் போல் என்னுடன் பேசவிரும்பாதவன் போல் என்மனைவியின் பக்கம் சென்றான். இவனின் வரவைப்பற்றி எந்தவொரு உணர்வையும் வெளிக்காட்டாதபடி என் மனைவி புலம்பிக் கொண்டேயிருக்கிறாள்.
"எங்கே உன் மகன்'
என்னிடம் அனுப்பப்பட்ட மிரட்டல் பந்து இப்போது என்மனைவியின் பக்கம் திசைதிருப்பப்பட்டது. இவன் யாரிடமோ கேட்டது போல் அவள் மெளனமாய் இருந்தாள். 'ஏய் கிழவி உன்னிடம்தான் கேட்கிறேன். எங்கே உனது மகன்' துப்பாக்கியுருவின் வார்த்தைகள் இப்போதுதான் என் மனைவியின் காதில் விழுந்திருக்க வேண்டும். நிமிர்ந்து ஒருதரம் அவனைத் தீர்ர்கமாய் பார்த்தாள். பார்வையில் இருந்தது பயமா, கோபமா இல்லை உணர்வுகளைத் தாண்டிப் போன வெறுமையா அது அவளுக்கு மட்டும் தெரிந்த சங்கதி.
'சொல்லு எங்கே உன் மகன்'
'அங்கே இருக்கின்றான்'
என் மனைவியின் விரல் காட்டிய திசையில் என் வீட்டின் பூஜையறையிருந்தது. என்னைச் சூழ்ந்திருந்த துப்பாக்கியுருக்கள் எல்லாம் அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ்சைப் போல் ஒருவித மகிழ்ச்சி கலந்த பரபரப்புடன் என் பூஜையறைக் கதவைத் திறந்தார்கள். உள்ளே இருந்தவையெல்லாம் தெய்வ உருக்களே. என்னை மிரட்டிய துப்பாக்கி முகம் பேயறைந்தது போல் தொங்கிப் போனது. ஓடிவந்து என் மனைவியின் கால்களைப் பிடித்துக் கொண்டான். 'அம்மா என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் மனதைப் புண்படுத்தி விட்டேன்'
எனக்கு ஆச்சரியம். எப்படியிந்த அதிசயம் நடந்தது. திருடன் நெஞ்சிலும் ஈரம் இருப்பதைப் போல் முரடன் நெஞ்சிலும் பாசம் இருப்பதைப் போல் இவர்களுக்கு எப்படி மனிதம் புரிய வைக்கப்பட்டது? யார் புரிய வைத்தார்கள்? நான் ஆச்சரியத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் போதே வெளியே வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒலி மிக அருகில் கேட்டது. என் மனைவியைச் சூழ்ந்திருந்த துப்பாக்கிகள் எல்லாம் ஒவ்வொரு திசையில் பதுங்கிக் கொண்டன. என்னை மிரட்டியவன் என்னிடம் வந்து,
4 வாழ்தல் என்பது.

'பெரியவரே இங்கே நிற்க வேண்டாம் எப்படியாவது நழுவி ஓடிவிடுங்கள்' காதில் குசுகுசுத்து விட்டு ஒரு மூலையாய்ப் பார்த்து ஓடிப் போனான். நான் மனைவியைத் திரும்பிப் பார்க்கிறேன். அவள் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எந்தவொரு முயற்சியும் செய்வதாக தெரியவில்லை என்னைப் பார்த்து மட்டும் ஏதோ கையசைத்தாள். என்னை அழைக்கின்றாளா? இல்லை என்னை ஒடிப் போகச் சொல்கிறாளா? கை அசையும் திசையைப் பார்த்தால் என்னை ஒடிப்போகச் சொல்வது போல தான் இருக்கிறது. 'ஒடுங்கள்! ஒடுங்கள்' என்பது போல் சத்தம் இல்லாத உச்சரிப்புகளின் அசைவு தெரிகிறது. அவள் விழிகளில் ஓர் ஏக்க உணர்வு தெரிகிறது. 'நீங்களாவது தப்புங்களேன்' என்ற கெஞ்சல் தெரிகிறது. அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே என் வீட்டுக் கூரையில் ஒடு ஒன்று உடைந்து துண்டு ஒன்று என் காலடியில் விழுந்தது. வெளியே சத்தங்கள் குறைவது போலவும் பின் திடீரென கூடுவது போலவும் ஒரு பிரமை,
'ஒடு!ஒடு.!"என் உள்மனம் ஓலமிடுகிறது. நான் ஒடத்தான் வேண்டும். ஒடித்தப்பத்தான் வேண்டும். என் மனைவிக்கு ஆறுதல் சொல்ல, அவள் துன்பக் கடலினுள் முழுவதும் மூழ்கிப் போகுமுன்கரை சேர்க்க ஓடத்தான் வேண்டும். ஒடித்தப்பத்தான் வேண்டும். பின்வாசல் கதவைத் திறந்து கொண்டு அசுர வேகத்தில் ஓடுகின்றேன். சாபமிட்டுத் துரத்தும் நாகங்கள் போல் என்னைத் தொடரும் ரவைகள், கை, கால், தலை, முதுகு, முதுகுத்தண்டு எங்கும் ஒரே குறுகுறுப்பு. எதுவும் காயப்படலாம். எந்தவேளையும் காயப்படலாம். வலது காலில் முள்ளோ எதுவோ ஒன்று குத்தியது. வலியைப் பார்க்கும் போது குத்தியது கள்ளி முள்ளாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. இங்கே எப்போது கள்ளி முளைத்தது? அது எப்போதோ முளைத்துத் தான் இருக்கிறது. காலை வைத்தது என் தவறுதான். வலியையும் பொருட்படுத்தாது ஓடுகிறேன். கோழியின் எச்சம் போல் எதோ ஒன்று என்பாதத்தில் அப்பியிருப்பதை உணர்கிறேன். புரிந்து கொண்டேன். என்பாதத்தில் இருந்து குருதி கொட்டப்பட்டிருக்கின்றது. அந்தக் குருதியில் மண் ஒட்டப்பட்டிருக் கின்றது. அது தான் அங்கே கோழியின் எச்சம்போல.
"மாஸ்ரர் மாஸ்ரர்"
மிகவும் குறைந்த ஸ்தாயியில் ஒரு குரல் என்னை அழைப்பது போல் இருக்கிறது. காதலனின் ரகசிய அழைப்பில் மருண்டு போய் வெருண்டு
வாழ்தல் என்பது. 5

Page 10
போய் பார்க்கும் காதலி போல சத்தம் வந்த திசையில் என் பார்வை திரும்பியது. அங்கே தாடியினுள் புதையுண்டு போன ஒரு கறுப்பு உருவம் ஆபிரகாம் லிங்கனை நினைவுபடுத்துவது போல் ஒரு வரட்டுச் சிரிப்புடன் என்னைக் கைகாட்டி அழைத்தது. பற்களை மட்டும் இலக்காகக் கொண்டு நான் நடக்கிறேன். அந்த உரு அணிந்திருக்கும் உடையும் கறுப்பாகத்தான் இருக்க வேண்டும். 'பளிச் செனத் தெரியும் பற்களைப் போல் சில வெள்ளைப் பொத்தான்களும் தெரிகிறது. நான் நெருங்க நெருங்க என்னை அழைத்த உருவத்தின்முகம் கொஞ்சம் கொஞ்சமாய் தெரிகிறது. "எங்கோ பார்த்திருக்கிறாய்! பார்த்திருக்கிறாய்!' மனம் நச்சரித்தது. எங்கேயென்று தெரியவில்லை. முடிந்தவரை உறங்கிக் கிடந்த என் ஞாபகப்படுத்தலைத் தட்டியெழுப்பினேன். என் வாழ்க்கைப் புத்தகத்தை அவசர அவசரமாய்ப் புரட்டிப் பார்த்தேன் தோல்விதான் எஞ்சியது. 'என்ன மாஸ்ரர் என்னைத் தெரியவில்லையா, நான் உங்கட ரமேஷின் சினேகிதன்' மர்ம உரு என்னிடம் நம்பிக்கையை வளர்ப்பதற்காக தன்னை முந்திக் கொண்டே அறிமுகம் செய்தது. நான் எதுவும் பேசவில்லை. எதைப் பேசுவேன்? உன்னைப் பார்த்திருக்கிறேன் எங்கேயென்று தெரியவில்லை என்று என் மறதியை ஒப்புக்கொள்வேனா? அல்லது, என் மகனின் நண்பன் என்கிறாயே, என் மகன் மரணித்தது உனக்குத் தெரியாதா என்று என் துக்கத்திற்கு தூசுதட்டுவேனா? 'நீங்க ஏன் பேசாமல் இருக்கிறியள் என்று தெரியும் மாஸ்ரர் ரமேஷின்ரை மறைவ எங்களாலேயே ஜீரணிக்க முடியல்ல. நீங்க எப்பிடி. ' அவன் சொல்லி முடிக்கவில்லை. மெளனமானான். அந்த மெளனத்தினூடே அவனிடமிருந்து விசும்பல் கேட்டது. அழுகிறானா?இவனுக்காகநாளை யார் அழுவார்களோ? நானே அழக் கூடும். எனக்காகவும் இவன் அழக்கூடும். பாம்பைக் கழுத்தில் சுற்றிநிற்பவன் சின்னக் கரப்பானுக்குப் பயப்படுவதுபோல் இவன் மரணத்திற்காக அழுகிறானா?
'மாஸ்ரர். ' 'அப்படிக் கூப்பிடாத மகன், என்ர மகன் கூப்பிட்ட மாதிரியே நீயும் 'அப்பு' எண்டே கூப்பிடு' ஏதோ சொல்ல எடுத்தவனை நான் தடுத்து விட்டேன்.
'சரி! அப்பு ஒரு இடமும் போயிராதீங்கோ, அங்க ஏதோ பிரச்சினை போலிருக்கு. இங்கஇந்த மரத்துக்கு மறைவில படுத்துக் கொள்ளுங்கோ "
6 வாழ்தல் என்பது.

f
அவன் ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டினான். அங்கே ஒரு தென்னங்கிடுகு பாயாக, மடிக்கப்பட்ட சாக்கு தலையணையாக ஒரு படுக்கை உருவாக்கப்பட்டிருந்தது. இதுவரை அவன் அதில் படுத்திருப்பான் போலும், ஓடிவந்த உடல் சோர்வும் மகனைப் பற்றிய, மனைவியைப் பற்றிய மனச்சோர்வும் எனக்கு ஒரு ஓய்வு தேவையென்பதை நடைமுறையாக்கியது. நான் அந்தப்படுக்கையில் சாய முற்பட்ட போது அந்த மனிதன் சட்டைப்பையினுள் இருந்து எதையோ எடுத்து என்கைகளில் திணித்தான். "அப்பு! இது கவிதை! உங்கள் ரமேஷ் எழுதிய கவிதை என் நண்பன் எழுதிய கடைசிக் கவிதை' தழுதழுத்த குரலினூடு சொல்லிவிட்டு ஒரு சிறிய "ரோச்'சைத் தந்தான் படிப்பதற்காக, நான் படித்தேன், அந்தச் சிறிய வெளிச்சத்திலே, எட்டு வரிகளிலே நிகழ்கால நிஜங்களை கோடு போட்டுக் காட்டியிருந்தான். ஒருதரம், இருதரம், மூன்றுதரம். பலதரம் வாசித்தேன். வாசிக்க வாசிக்க என் மகனைப் பற்றி, என் மகனைப் பெற்றதால் என்னைப் பற்றிநானே பெருமிதம் அடைந்தேன்.
“மனிதம் தேடிய
நான் சோர்ந்துபோய்
எலும்புகளில் தடுக்கி
விழுந்தேன்.
விழித்த போது
என்கையிலும்
6დატ
துப்பாக்கி" நான் கவிதையைக் கையில் வைத்திருந்த போதே அந்த இருட்டு மனிதன் அதை உரக்கச் சொன்னான். படித்துப் படித்து மனப்பாடம் செய்திருப்பான் போலும்,
'படிர் படீர். டொம்'
எங்கோ இருந்து ஏவப்பட்ட ஷெல் ஒன்று எங்களின் அருகாமையில் விழுந்து வெடித்தது. "அப்பு கவனமாய்ப் படுங்கோ' சொல்லி விட்டு இருட்டு உரு எங்கோ ஒடத் தொடங்கியது. காரசாரமான சத்தங்கள் இன்னும் கேட்டுக் கொண்டிருந்தன. குருஷேத்திரம் தொடங்கி விட்டது போலும், ஆம்! அது குருஷேத்திரம் தான். ஷத்திரியர்களே சந்திக்காத குருஷேத்திரம். அப்படியானால் இங்கே காண்டீபன் யார்?
வாழ்தல் என்பது. 7

Page 11
கர்ணன் யார்? துரியோதனன் யார்? என்னை மிரட்டிய உரு துரியோதனனா? இந்த மர்ம உரு காண்டீபனா? என் மகன் தருமனா? இல்லை! இவர்கள் எம்மவர்கள். ஒரே கூட்டினுள் வாழ வேண்டிய பறவைக் குஞ்சுகள். அப்படியானால் ஏன் இவர்கள் கொத்திக் கொள்கிறார்கள். யாரோ கல்லெறிந்து விட்டார்கள், பேதம் பூசிய கல் எறிந்து விட்டார்கள். நான் எல்லோரையும் நேசிக்கிறேன் - என்மகனைப் போல, என்மனம் ஏதோவெல்லாம் எண்ணிக் கொண்டிருக்கும் போதே கண்கள் செருகத் தொடங்குகின்றன. சரிகின்றேன். நான் எவ்வளவு நேரம் உறங்கியிருப்பேனோ தெரியாது. கோழி கூவிய சத்தமும் பறவைகளின் இரைச்சலும் என் தூக்கத்தைக் கெடுத்து விட்டன. இன்னும் இமைகள் திறக்காத நிலையில் அப்படியே படுக்கின்றேன். அருகில் யாரோ மூச்சுவிடும் சத்தம் கேட்கிறது. 'இருட்டு மனிதனாக இருக்குமோ'நினைத்துக் கொண்டே விழிகளைத் திறக்கிறேன். என்பக்கத்தில் என்மகன் ரமேஷ் படுத்திருக்கிறான். நான் என்வீட்டில் படுத்துக் கொண்டிருக்கிறேன். அப்படியென்றால் அந்தக் கடிதம், மிரட்டல் மனிதன், இருட்டு உரு, ஜீப்பின் ஒலி, குருஷேத்திரம், அந்தக் கவிதை, கிடுகுப் படுக்கை, கள்ளிமுள் எல்லாமே கனவுகளா? எனக்கு வியர்த்துக் கொட்டியது. என்னையே நம்பாதவன் போல் என் மனைவியைப் பார்க்கிறேன். அவள் எதுவுமே நடக்காது போல் அமைதியாக சயனித்துக் கொண்டிருந்தாள். இன்னும் குழப்பம் தீராத நிலையில் ஜீப்பின் தடமாவது இருக்கின்றதா என்பதைப் பார்க்க வாசலுக்கு விரைகிறேன். அங்கே எந்த ஜிப்பும் வந்ததற்கான தடயங்கள் இருக்கவில்லை. நிமிர்ந்து வீதியைப் பார்க்கிறேன். எதிரேயுள்ள மதில் சுவரில் அந்த இருட்டு மனிதன் சிரித்துக் கொண்டிருந்தான் சுவரொட்டியாக, 'இவனை எங்கோ பார்த்திருக்கின்றோம் என்றது இங்கேதானா?" உள்ளே வருகின்றேன். என்மகன் தூங்கிக் கொண்டிருக்கின்றான். அவனின் நெஞ்சு அமைதியாக மேலும் கீழும் அசைகிறது. அவனைப் பார்க்கும் போதெல்லாம் அது கனவாகவே இருக்கட்டும் என்று மனம் இரைகிறது.
8 வாழ்தல் என்பது.

தொடுவான
வெளிகள்
னெக்கு இது புது அனுபவம்தான்.
இருப்பிடம் தேடி அலையும்
குரியனிடம் சொல்லுமாப் போல் எக்ஸோராப் பூக்கள் வான் பார்த்து வாடிக் கிடந்தன. அதையும் விட ஒருபடி தாண்டிப்போய் அந்தச் செண்பகப் பூக்கள் யாரையுமே பார்க்க விரும்பாததைப் போல் கழிவு நீர்க்கால் வாயில் கலந்து கொண்டு எங்கோ தொலைந்து போகத் துடித்துக் கொண்டிருந்தன. எது நடந்தாலும் எனக்கென்ன என்ற தோரணையில், முந்திரி மரத்தின் பழுத்த இலைகளை வீழ்த்திய சந்தோஷத்தில் கரைந்து கொண்டிரு
வாழ்தல் என்பது. 9

Page 12
க்கும் காகத்தின் இரைச்சல் மட்டும் எரிச்சலாய் இருந்தது. 'படிச்ச தேற்றத்தை ஞாபகப்படுத்திப் பார்ப்பமெண்டால், இந்தக் காக்கை விடாது போல கிடக்கு. குய். குய்' எழுந்து ஒருதரம் காகத்தைக் கலைத்துப் பார்த்தேன். அது, என்னைத் திட்டிக்கொண்டே எங்கோ புள்ளியாகிப் போனது.
நான் படிப்பதற்கு அமைதியான 'லைப்ரரி இருக்கிறது. அல்லது 'கபிள்ஸ் 'களால் கைப்பற்றப்படாத வகுப்பறைகள் இருக்கலாம். அவற்றையெல்லாம் விட்டுவிட்டு இப்படி மரத்தின் கீழே வந்து நின்று காகத்தைத் துரத்துவது சரியோ’ என்று என்மனச்சாட்சி கேள்விகேட்டது. வெறும் கேள்வி மட்டும்தான். திரும்பவும் ஒரு தரம் தேற்றத்தைச் சொல்லிப் பார்த்தேன். 'ச்சே. என்ன தேற்றங்களும் என்ன சூத்திரங்களுமோ' நான் சலித்துக் கொண்டேன். எதை மறந்து போனேன் என்பதை அறியும் நோக்குடன் 'பைலைத் திறந்தேன். நானே வெறுக்கும் எனது கையெழுத்துக்களின் கட்டுச் சேர்மானம் சிரித்தது. 'முதல் பிடிக்கிற மீன் நாறிப்போகுமே. " சிறு பிள்ளைக் குண்டு விளை யாட்டு ஞாபகம் வந்தது. 'முதல்பிடிக்கிற மீனைப் போல, முதல்படிக்கிற நோட்சும், ஏன் கடைசியில் படிச்ச நோட்சும் மறந்துதான் போகுது' " எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன். தேற்றம் தேடி பக்கங்களைப் புரட்டினேன். நோட்ஸிலிருந்து நழுவி கடிதம் விழுந்தது. இன்று தான் வந்த கடிதம், படித்து விட்டு அப்படியே நோட்ஸினுள் செருகியிருந்தேன். இன்னும் ஒருதரம் படித்துப் பார்ப்போமா என்று யோசித்தேன். பயமாய் இருந்தது. வரிவரியாய் ரசித்து, ரசித்துப் படிப்பதற்கு இதென்ன காதல் கடிதமா? அப்பாவின் கடிதங்கள் படிப்பதற்கு விருப்புடையனவாய் இருந்தாலும் இது மட்டும். ஏலவே சந்தித்த பயங்கரம்தானே என்ற துணிவில் படித்தேன்.
'அன்புள்ள அப்புவுக்கு, உன் நலமறியும் அவாவுடன் தொடங்குகின்றேன். அப்பு, விடுமுறை வருவதாய் எழுதியிரு ந்தாய். முன்னைப்போல் இதையிட்டுச் சந்தோஷப்பட்டுக் கொள்ளக்கூடிய நிலையில் நாங்கள் இல்லையென்பதை நீ அறியும்படி செய்வது என் கடமையாகி விட்டது. “விடுமுறை க்கு வருகிறேன்' என்று எழுதி எங்களின் வயிற்றினில் நெருப்பை அள்ளிக்கொட்டாமல் “விடுமுறை வருகிறது" என்று மட்டும் எழுதியனுப்பியது ஆறுதலடைய வேண்டிய
1 Ο வாழ்தல் என்பது.

விஷயம். என்னதான் படித்துக் கொண்டிருந்தாலும் நீதினசரி பேப்பர் வாசிப்பவன் என்பதால் நான் ஊரைப் பற்றி அதிகம் எழுதவில்லை. நாங்கள் ஒரே நாளில் ஐந்து தரம் மாதா கோயிலுக்குள் போய்ப் போய்த் திரும்பியிருக்கிறோம் 616ன்பதையிட்டு நீ கவலைப்பட வேண்டாம். சிலவேளை நீ இதைப்படிக்கும் போது நாங்கள் மாதா கோயிலுக்குள்ளே நிரந்தரமாயிருக்கலாம். மாதாவோடும் நிரந்தரமாயிருக்கலாம். அப்பு, உன் மூத்தக்காவின் ஆண்டுத் திவசத்தை சுமாராக நடத்தி முடித்தோம். மாமாவையும் சின்னம்மாவையும் தவிர யாரும் வரவில்லை. அதை விட முக்கியமானதொன்று இங்கே அடிக்கடிநிகழ்வதால் இந்தச் சடங்குகளும் சம்பிரதாயங்களும் ஓரங்கப்பட்டது காலத்தின் வெளிப்பாடு. இதைப் பற்றியெல்லாம் யார் மீதும் குற்றம் சொல்வதில் அர்த்த மில்லை. வேறு என்ன? முடிக்கலாம் என நினைக்கின்றேன். முடிக்கு முன் ஒரு விடயம். உன் தாத்தாவின் வியர்வைக் கல்லின் விஸ்வரூபத்தை அடிக்கடி நினைத்துக் கொள். என்னேரமும் அது காணாமல் போகலாம்.
அன்புடன் அப்பா கடிதத்தை மூடி கவரினுள் வைத்த போது, இருநூற்றைம்பது மைல்களைத் தாண்டியிருக்கும் என்னுடைய ஊரில் இருந்தேன். அம்மா பொட்டு வைத்தாள். அப்பா புன்னகை செய்தார். தம்பியை அதட்டினேன். தங்கை செல்லமாய் வந்து மடியினில் அமர்ந்து கொண்டாள். வாணியக்காவோ, சின்னக்காவோ தேநீர் கலக்கும் சத்தம் கேட்டது. நான் போயிருந்தால் வீடு இப்படித்தான் களை கட்டியிருக்கும். சிறகு விரித்து ஒளியின் வேகத்தில் பறக்க வேண்டும் போல் துடிப்பு எழுந்தது. ஆகாயம் வரை எழுப்பியிருக்கும் தடைச்சுவராய் அப்பாவின் கடிதம் தோற்றம் கொடுத்தது. துடிப்புகள் சில கணங்கள் மட்டும்தான் உயிர்த்திருந்தன. அது அப்படித்தான் துடிப்பு என்பதே கணநேர வெளிப்பாடுதான். அது தொடர்ந்தே இருக்குமென்றால் இங்கே எத்தனையோ அற்புதங்கள் நிகழ்ந்திருக்கும். கடிதத்தை மூடி உறையினுள் வைத்தாலும், அதன் வாசகங்கள் என்னுள் விழித்திருந்தன. அப்பாவின் எழுத்தில் மறைமுகமான செய்திகள் நிறையவே பொதிந்து கிடக்கும்.
வாழ்தல் என்பது. 1

Page 13
"தாத்தாவின் வியர்வைக் கல்லின் விஸ்வரூபத்தை அடிக்கடிநினைத்துக் கொள்' என்பதன் அர்த்தம் என்ன?. தாத்தாவின் வியர்வைக் கல்லின் விஸ்வரூபம்.ஓ! என் வீடு. இல்லையில்லை என் தாத்தாவின் வீடு. தாத்தாவின் முறுக்கேறிய உடம்பிலிருந்து வடிந்த வியர்வையால் உருவாக்கிய வீடு. இத்தனை காலமும் எத்தனை மாரிகளையும், கோடைகளையும், சில புயற் காற்றுக்களையும் சந்தித்தும் கூட இன்னும் நிமிர்ந்தபடியே நிற்கும் அதன் தோற்றம் தாத்தாவின் கம்பீரமான நெஞ்சை ஞாபகப்படுத்தும். அதை அடிக்கடி நினைத்துக் கொள்ளும்படி ஏன் எழுதினார்? அது அவருக்கே தெரிந்திருக்கும். சீமெந்துப் பூச்சிகளின் வருகையினால் ஒதுக்கப்பட்ட நீற்றுப் பூச்சுகள் இன்றும் தாத்தாவின் வீட்டைப் பார்த்து ஆறுதலடையும், தாத்தாவின் வீட்டை இடித்து விட்டு அமெரிக்கன் மாதிரியிலோ, அல்லது வேறு புது மாதிரியிலோ கட்டலாம் என்று சொல்லி, அம்மா இடையிடையே அப்பாவிடம் பேச்சு வாங்கிக் கட்டியதுமுண்டுதான். அப்பாவுக்கு அப்பிடி ஒரு பற்றுதல் அந்த வீட்டின் மீது. தன் கடைசிக் காலம். கடைசிக்காலம் மட்டுமென்ன, கடைசி மூச்சும் கூட அங்கேதான் வெளிவிடப்பட வேண்டும் என்பது அப்பாவின் முதுமைப்பட்ட லட்சியம். அப்பாதாத்தா மீது நிரம்பிய மதிப்பும் வெளிக் காட்ட முடியாத பாசமும் வைத்திருந்தார் என்பதை, நான் அவரில் வைத்தி ருக்கும் மதிப்பின் மூலமும், பாசத்தின் மூலமும் புரிந்து கொள்வேன். எதுசரி, எது பிழை என்று சிந்திக்கத் தெரியாத அந்த வயதிலும், தாத்தாவின் பிரேதத்தைப் பார்த்துக் கதறியழுத அப்பாவைப் பார்த்து நான் அழுதது இப்போதும் எனக்கு வியப்பாக இருக்கும். அப்போது ஏன் நான் அழுதுநின்றேன் என்பது இன்று வரை என்னால் விளங்கிக் கொள்ள முடியாத விடயம். தாத்தாவின் பிரேதத்தைப் பார்த்து அப்பா மட்டுமென்ன ஊர் முழுவதுமே கலங்கித்தான் போயிருந்தது. அது அப்படியான காலம். இயல்பான இழப்புகளுக்கும் கூட பெறுமானம் கொடுத்து மனித உயிரின் மகத்துவத்தை வெளிக்காட்டிய காலம். தாத்தாவின் மரணச் சடங்கிற்கும், அக்காவின் மரணச் சடங்கிற்கும் இடையில் புரிந்தும் புரியாததுமாய் நிறையவே வித்தியாசங்களை அவதானித்திருந்தேன்.
* * * மேலே இலைகளின் சல சலப்புக் கேட்டது. தலையை அண்ணாந்து பார்த்தேன். காகம் மீண்டும் வந்திருந்தது. காலில் செத்த எலியோ அல்லது வேறு ஏதும் அழுக்கோ தெரியாது. இடுக்கி வைத்துக்கொண்டு ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. எனக்கு எரிச்சல் எரிச்சலாய் வந்தது. அது சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அழுக்குப் பொருள் என் மீதோ, என் பைல் மீதோ விழுந்தாலும் விழுந்து விடும் என்ற எண்ணத்தில் ஒரு கல்லை
12 வாழ்தல் என்பது.

எடுத்து காகத்தை நோக்கி விட்டெறிந்தேன். அது பறந்து விட்டது. ஆனால் அது இடுக்கி வைத்திருந்த அழுக்கு எனக்கருகில் விழுந்தது. எதைத் தடுப்பதற்காக அப்படிச் செய்தேனோ அதுவே நடந்து விட்டது. அவசரத்தில் எடுக்கப்படும் முடிவுகள் சில வேளை முட்டாள்தனமாய் முடிவதும் உண்டுதான் போலும், 'ச்சே.இந்தக் காகத்தால மனிசன்நிம்மதியாய் ஒரு இடத்திலஇருக்கேலா போல கிடக்கு' காகத்தைத் திட்டிக் கொண்டே கணிசமான தூரம் தள்ளியமர்ந்தேன். ஆரம்பத்தில் என்னைக் குழப்பிய காகம் வேறு, இந்தக் காகம் வேறாகவும் இருந்திருக்கலாம். இந்தக் காகம் தொந்தரவு எதுவுமே செய்யாமல் தன்பாட்டில் தன் வேலையைச் செய்து கொண்டும் இருந்திருக்கலாம். ஆனால், என் பார்வையில், மனக்கணிப்பில் இதுவும் அதுவும் ஒன்று என்றே தோன்றியது. காகம் என்றாலே கரைச்சல் கொடுப்பவை என்றே தோன்றியது. இது பிரித்தறிதலில் உள்ள இயலாமையின் தோற்றங்கள் என் மனக்கிலேசங்களின் பிரதிபலிப்பை யாரிடமாவது செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தின் நிகழ்வுகள் இலை இடுக்குகளினூடாக சின்னச் சின்னச் சூரியக்குஞ்சுகள் என் மேனிeதும், பக்கத்தில் உள்ள புற்றரை மீதும் விழுந்தபோதுதான் பொழுது மதியமாகியது ஞாபகம் வந்தது. கூடவே, இரண்டு மணித்தியாலங்களை வீணடித்திருக்கிறோம் என்ற கவலையும் வந்தது. இதுவரை என்ன செய்தோம்? எதைப்படித்தோம்?. எதுவுமே படிக்க வில்லையென்ற உண்மை கசந்தது. எங்கோ தொடங்கி எங்கோ முடியுமாப்போல சிந்தனைகள் தொடர்பில்லாத தொடர்ச்சிகளாய் நீண்டு போயிருக்கிறது என்பது தெளிவாகியது. ஏன் இப்படி? ஓரிடப்படுத்தி செறிவாக்க முடியாமல் ஏன் இப்படிச் சிந்தனைகள் அடிக்கடி சிதறுண்டு போகின்றன? என்குடும்பத்தை நேசிப்பதாலா? இல்லை, என் சமூகத்தை நேசிப்பதாலா? அல்லது விருப்பமில்லாத சூழ்நிலையின் தாக்கங்கள் என்னுள் பதிவாகிப் போயிருப்பதாலா? ஏன்இப்படி? என்னைநான் எத்தனைதரம் கேட்டாலும் தெளிவில்லாத படிமங்கள்தான் விடையாகியது. பதிலாகத் தோன்றும் காட்சிகளில் ஏராளமான குழப்பங்கள் தெரிகிறது. என் சக மாணவர்களுடனெல்லாம் என்னை ஒப்பிட்டுப் பார்த்தேன். எப்படிப் பார்த்தாலும் நான் வித்தியாசப்பட்டவனாயே தெரிந்தேன். என் மனம் எதையோ தேடி அலைபாய்வது தெரிந்தது. அது என் பட்டப்படிப்பின் முற்றுப்புள்ளியா? என் காதலின் வெற்றிப் புள்ளியா? இல்லை! நிச்சயமாய் இந்தக் குறுகிப் போன எதிர்பார்ப்புகள்
வாழ்தல் என்பது. 13

Page 14
இல்லை. எதுவென்று எனக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இப்படிச் சுயநலப்பட்ட ஏக்கங்கள் இல்லையென்பது தெளிவு. அந்த எண்ணமே இனித்தது. இனம்புரியாத சுகம் கொடுத்தது. 'ஓம்! இப்பிடித்தான் ஒரு முனிவர் மாதிரி, சந்தியாசி மாதிரி மரத்துக்குக் கீழ தனிய வந்து கொண்டு நல்லா யோசிச்சுக் கொண்டிருங்கோ அப்பத்தானே கதைக்கிறவங்கள் இன்னும் கொஞ்சம் சேர்த்துக் கதைக்க வசதியாய் இருக்கும்' தூரத்தில் இருந்து வரும்போதே என்னை விளாசித் தள்ளிக்கொண்டு வந்தாள் நிவேதா என் காதலி. என்னைக் காதலித்ததால் அதிகம் நஷ்டப்பட்டவள்.
'ஏன் அப்படி என்ன கதைக்கினம்' நான் கொஞ்சம் சூடாகவே கேட்டேன்.
'நீங்கள் ஒரு மாதிரியான ஆள் எண்டு சொல்லி என், காதுபடவே கதைக்கினம். நான் ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டு வாழுறன்.' 'அவங்களைவிட நான் வித்தியாசமாய்த் தெரிந்தா, அது என்ரதப்பில்ல. அவங்கட தப்பு' "சேது, எனக்குப் பயமாயிருக்கு சேது. இப்பிடியே போனால் .' அவள் எதையோ சொல்ல முன் மீண்டும் காகம் வந்து கத்தத் தொடங்கி விட்டது. நான் இப்போதுகாகத்தைக் கலைக்கவில்லை. ஆனால் நிவேதா கலைக்க எத்தனித்தாள். தடுத்து விட்டேன். "அதைத் துரத்த வேணாம் நிவேதா. மரம் அதுகளின்ர வாழுமிடம், காலாகாலமாய் அதுகள் வசிக்கிற இடத்தில வந்து கொண்டு, அதுகளைத் துரத்திறது நல் லமில்ல, அதுகளாவது சுதந்திரமாய்த் திரியட்டும் விடுமன்.' 'ம். ஒவ்வொண்டுக்கும், ஒவ்வொரு தத்துவமும், தத்துவத்தை விளக்கி ஒரு பிரசாரமும் செய்யுங்கோ, நாளைக்கு உங்களுக்குத் தட்டிற்று எண்டு வெளிப்படையாயே சொல்லுவாங்கள்'
அது அவளது தேடலின் வெற்றிச் சின்னம். என் தேடல்..? எழுந்தோம். கைகளைக் கோர்த்தபடி நடந்தோம். நிவேதாவின் முகம் மகிழ்ச்சியில் நிறம் மாறிப் போயிருந்தது.
நான்.?
காகம் இன்னும் கரைந்து கொண்டிருந்தது.
14 வாழ்தல் என்பது.

டத்து Ú
போட்ட
தெருவிளக்கு
6 6 o
அந்த கேவில இருந்த
லைற்ற ஆரோ உடைச்சுப் போட்டி 60TLb ''
பல்லு மினுக்க முதல்லேயே இந்தச் செய்திதான் எனக்குப் பற் பொடி யாய் வந்தது. அத உடைக்க வேணும் உடைக்க வேணும் எண்டு நானே எண்ணிக் கொண்டிருந்தனான். ஆரோ உடைச் சுப் போட்டினம்.
பின்ன, அது என்ன சும்மாலைற்றே?
எத்தினைபேர்ர பச்சை ரெத்தம் பார்த்திருக்கும்? எத்தினை பேர்ர ரெத்தத்தால அதுர கட்டைக்குப் பட்டை போட்டிருக்கும். அரசாங்கம் போடேக்கை முப்பதடிக்கும் கறுப்பாத்தான் இருந்தது. இப்ப ஏனோ தெரியா. ஒரு அஞ்சு - ஆறடி உயரத்துக்கு சிவப்பாத்தான் கிடக்கு. அதுகும் முன் பக்கம் கொஞ்சம் கூடுன சிவப்பு. ம்ம்ம். அத உடைக் கத்தான் வேணும். அப்புட சவத்தைக் கொண்டு வந்து கட்டேக்கை பக்குப் பக் கெண்டு முழிச்சுக் கொண்டுதானே இருந்தது. அப்ப இது ஒரு வார்த்தை சொல்லிச்சுதோ 'அப்பு ஒண்டுமே செய்யயில்லையெண்டு. 'ஓ! இதுக் குப் பேசத் தெரியாது போல. பேசத் தெரியாட்டியென்ன ஒருக்காத்தன்ன நூத்துக் கொண்டாச்சிலும் எதிர்ப்பக் காட்டியிருக்கலாம் தானே.
வாழ்தல் என்பது.
15

Page 15
அட அதவிடுவம் இது காட்டியென்ன, காட்டமலென்ன, எதிர்ப்புக் காட்டியிருந்தா அப்பு என்ன பிழைச்சிருப்பாரே? எண்டாலும் இத உடைச்சது மட்டும் எனக்குச் சந்தோசமாத்தான் கிடக்கு. ராத்திரிகள்ல இந்த லைற்றிட வெளிச்சத்தக் காணுற நேரமெல்லாம் செத்துப் போற நான்.
ஓம், அப்புவிட்டப் போறனான். அப்பு செத்துப் போயிற்றாரு, நான் அப்புவிட்டப் போறதெண்டால் நானும் செத்துத்தானே போக வேணும்.
நான் அடிக்கடி கூப்பிடுற நான் 'அப்பு, நான் செத்துச் செத்து பிழைக்கிற மாதிரி, நீங்களும் ஒருக்காப் பிழைச்சுப் பாருங்கோ எண்டு. ' அவர், மாட்டன் எண்டு சொல்லிப் போடுவார். அவருக்கு இந்த ஊரை விட அங்ங்னை எல்லாமே சுகமாகக் கிடக்குதாம் என்னைப்பத்தின கவலையைத் தவிர வேற ஒண்டுமே இல்லேயாம். ம்ம்ம். அன்னேரம் உசிரோடை இருக்கேக்கை எவ்வளவெல்லாம் சொல்லுவாரு. 'இந்த ஊர்தான் எண்ட உயிர் எங்கடை சனத்தின்ர முன்னேற்றம்தான் என்ர சுவாசம், எங்கட சனத்திலயிருந்தும் நாலு எஞ்சினியர், நாலு டொக்டர், நாலு வாத்தி வரோணும். வந்து அவங்க நாற்பது மடங்காப் பெருப்பிச்சுக் காட் டோணும். ' இப்பிடி எவ்வளவோல் லாம் சொல்லுவாரு, எனக்கெண்டால் அப்பு சொல்றதெல்லாம் அவ்வளவாய் பிடிக்கிறயில்ல. எனக்கு, எங்கட ஊரில அப்பு மட்டுமே அரசாங்க உத்தியோகம் பார்க்கிறத நினைச்சுப் பெருமையிலும் பெரும, 'வாத்யார்ர பெடியன், வாத்தியார்ர பெடியன்' எண்டு என்ன மட்டும்தான் கூப்பிட வேணும் எண்டு கொள்ள ஆச, எங்கட பள்ளிக்கூடத்திலை நான் எண்டு சொன்னால் எல்லாப் பெடியன்களும் கொஞ்சம் பயப்பிடுவாங்கள். பள்ளியில மட்டுமென்ன, வெளியிலயுந்தான். பக்கத்து வீட்டுப் பெடியனுகளோட சேர்ந்து மாங்காய் களவெடுக்கப் போற நான். எனக்கு மரத்தில ஏறத் தெரியாது. ஆனா அவங்கள் ஏறி எனக்கும் சேர்த்துப் பிடுங்கித் தருவாங்கள். அதிலயும் நான்தான் முதல்க் கடி கடிக்கவேணும்.
ஆக்களின்ரபல்லுப்பட்டதச்சாப்பிடக் கூடாதெண்டு அப்பு பள்ளியிலயும்
16 வாழ்தல் என்பது.

வீட்டிலயும் வெச்சு, ஒரே சொல்லித் தாறவரு. என்ர கூட்டாளிமாருக்கும் இது தெரியும்தான். ஆனாலும் அவங்க ஒண்டுமே பேசமாட்டாங்கள். அவங்களுக்கு எப்பிடியோ மாங்காய் கிடைச்சால் சரியெண்ட மாதிரித்தான். இல்லாட்டியும் என்ன எதிர்த்துப் பேசேலுமே? அப்புவிட்டச் சொல்லி அடிவேண்டித் தந்திருவனோ எண்டு பயம். அவங்களுக்குத் தெரியாது, நான் மாங்காய் களவெடுக்கப் போறதத் தெரிஞ்சாலே அப்பு என்ர தோலை உரிச்சுப் போடுவாரெண்டு. அப்புவுக்கு கோபம் வந்தால் நான் அவர்ரமுகத்தப் பாக்க மாட்டன். பாக்க ஏலாது. கண்ரெண்டும் வெளியில பிதுங்க, உதடு ரெண்டங்குலம் முன்னுக்கு வரும். அவரு அடிக்கத் தேவையில்ல. இப்படிப் பாத்தாலே போதும். இப்பிடிப் பாத்துப்பாத்தே கனநாள் என்ர காற்சட்டைய ஈரமாக்க வைச்சிருக்காரு. ஆனா, அப்பு ஒரு நாளும் எனக்கு அடிக்கயில்ல. அடிக்காட்டியும் எனக்குப் பயம் போறதில்ல. இப்பிடித்தான் ஒருநாள், நான் அப்புவிட்டச் சொல்லாம பெடியன்களோட இரவில பக்கத்தூர் கோயிலுக்குநாடகம் பாக்கப் போட்டன். (அன்னேரம் நாங்க எந்த நேரத்திலயும் எங்கயும் போகலாம். பேய்க்கு மட்டும்தான் கொஞ்சம் பயம். அதுகும் பெடியனுகளோட சேர்ந்து போகேக்கை பயம் அவ்வளவாய்க் காட்டிறயில்ல.) போனஇடத்தில எனக்குச் சரியான கறள் ஆணி ஒண்டு குத்திப் போட்டுது. என்ர காலெல்லாம் ரெத்தம். எனக்கு வீட்ட போக வேணும் போல கிடந்தது. அவங்கள் நாடகம் பார்க்கிற உஷாரில மாட்டன் எண்டு சொல்லிப் போட்டான்கள். அவங்களுக்கென்ன, அவங்கட கால்லயே குத்தினது. நான் கெந்திக் கெந்தி ஓடி வாறன், கால்ல மண் அப்பிப் பிசுபிசுப்பாய்க் கிடந்திது. ஆச்சி சொல்ற பேய்க்கதையெல்லாம் ஞாபகத்தில வந்து பயம் காட்டிச்சு. ஆச்சி சொல்றவ, வேப்பமரத்தில வைரவன் இருக்காம், வைரவன் இருக்கிற இடத்தில பேய் முடுகாதாம் எண்டு. எனக்கு வைரவெ னெண்டாலும் பயம்தான். ஆனால் பேயெண்டால் இன்னும் பயம். நான் வேப்பமரம் கூட இருக்கிற றோட்டாப் பார்த்து ஓடிவாறன், எப்பிடியோ இளைக்க, இளைக்க வீட்ட வந்து சேந்திட்டன், நான் வரும் வரைக்கும் அப்புநித்திரை கொள்ளாம சிமிலி லாம்ப அரைவாசியாத்தூண்டி விட்டுக் கொண்டு அவர்ர சாய்மானைக் கதிரையில படுத்துக் கிடந்தாரு.
வாழ்தல் என்பது. 17

Page 16
அட அதவிடுவம் இது காட்டியென்ன, காட்டமலென்ன, எதிர்ப்புக் காட்டியிருந்தா அப்பு என்ன பிழைச்சிருப்பாரே? எண்டாலும் இத உடைச்சது மட்டும் எனக்குச் சந்தோசமாத்தான் கிடக்கு. ராத்திரிகள்ல இந்த லைற்றிட வெளிச்சத்தக் காணுற நேரமெல்லாம் செத்துப் போற நான்.
ஓம், அப்புவிட்டப் போறனான். அப்பு செத்துப் போயிற்றாரு, நான் அப்புவிட்டப் போறதெண்டால் நானும் செத்துத்தானே போக வேணும்.
நான் அடிக்கடி கூப்பிடுற நான் 'அப்பு, நான் செத்துச் செத்து பிழைக்கிற மாதிரி, நீங்களும் ஒருக்காப் பிழைச்சுப் பாருங்கோ எண்டு. ' அவர், மாட்டன் எண்டு சொல்லிப் போடுவார். அவருக்கு இந்த ஊரை விட அங்ங்னை எல்லாமே சுகமாகக் கிடக்குதாம். என்னைப்பத்தின கவலையைத் தவிர வேற ஒண்டுமே இல்லேயாம்.
ம்ம்ம். அன்னேரம் உசிரோடை இருக்கேக்கை எவ்வளவெல்லாம் சொல்லுவாரு. 'இந்த ஊர்தான் எண்ட உயிர். எங்கடை சனத்தின்ர முன்னேற்றம்தான் என்ர சுவாசம், எங்கட சனத்திலயிருந்தும் நாலு எஞ்சினியர், நாலு டொக்டர், நாலு வாத்தி வரோணும். வந்து அவங்க நாற்பது மடங்காப் பெருப்பிச்சுக் காட் டோணும். ' இப்பிடி எவ்வளவோல்லாம் சொல்லுவாரு. எனக்கெண்டால் அப்பு சொல்றதெல்லாம் அவ்வளவாய் பிடிக்கிறயில்ல. எனக்கு, எங்கட ஊரில அப்பு மட்டுமே அரசாங்க உத்தியோகம் பார்க்கிறத நினைச்சுப் பெருமையிலும் பெரும, 'வாத்யார்ர பெடியன், வாத்தியார்ர பெடியன்' எண்டு என்ன மட்டும்தான் கூப்பிட வேணும் எண்டு கொள்ள ஆச, எங்கட பள்ளிக்கூடத்திலை நான் எண்டு சொன்னால் எல்லாப் பெடியன்களும் கொஞ்சம் பயப்பிடுவாங்கள். பள்ளியில மட்டுமென்ன, வெளியிலயுந்தான். பக்கத்து வீட்டுப் பெடியனுகளோட சேர்ந்து மாங்காய் களவெடுக்கப் போற நான். எனக்கு மரத்தில ஏறத் தெரியாது. ஆனா அவங்கள் ஏறி எனக்கும் சேர்த்துப் பிடுங்கித் தருவாங்கள், அதிலயும் நான்தான் முதல்க் கடி கடிக்கவேணும்.
ஆக்களின்ரபல்லுப்பட்டதச்சாப்பிடக்கூடாதெண்டு அப்பு பள்ளியிலயும்
16 வாழ்தல் என்பது.

வீட்டிலயும் வெச்சு, ஒரே சொல்லித் தாறவரு. என்ர கூட்டாளிமாருக்கும் இது தெரியும்தான். ஆனாலும் அவங்க ஒண்டுமே பேசமாட்டாங்கள். அவங்களுக்கு எப்பிடியோ மாங்காய் கிடைச்சால் சரியெண்ட மாதிரித்தான். இல்லாட்டியும் என்ன எதிர்த்துப் பேசேலுமே? அப்புவிட்டச் சொல்லி அடிவேண்டித் தந்திருவனோ எண்டு பயம், அவங்களுக்குத் தெரியாது, நான் மாங்காய் களவெடுக்கப் போறதத் தெரிஞ்சாலே அப்பு என்ர தோலை உரிச்சுப் போடுவாரெண்டு. அப்புவுக்கு கோபம் வந்தால் நான் அவர்ரமுகத்தப் பாக்க மாட்டன். பாக்க ஏலாது. கண்ரெண்டும் வெளியில பிதுங்க, உதடு ரெண்டங்குலம் முன்னுக்கு வரும். அவரு அடிக்கத் தேவையில்ல. இப்படிப் பாத்தாலே போதும். இப்பிடிப் பாத்துப் பாத்தே கனநாள் என்ரகாற்சட்டைய ஈரமாக்க வைச்சிருக்காரு. ஆனா, அப்பு ஒரு நாளும் எனக்கு அடிக்கயில்ல. அடிக்காட்டியும் எனக்குப் பயம் போறதில்ல. இப்பிடித்தான் ஒருநாள், நான் அப்புவிட்டச் சொல்லாம பெடியன்களோட இரவில பக்கத்தூர் கோயிலுக்குநாடகம் பாக்கப் போட்டன். (அன்னேரம் நாங்க எந்த நேரத்திலயும் எங்கயும் போகலாம். பேய்க்கு மட்டும்தான் கொஞ்சம் பயம். அதுகும் பெடியனுகளோட சேர்ந்து போகேக்கை பயம் அவ்வளவாய்க் காட்டிறயில்ல.) போனஇடத்தில எனக்குச் சரியான கறள் ஆணி ஒண்டு குத்திப் போட்டுது. என்ர காலெல்லாம் ரெத்தம். எனக்கு வீட்ட போக வேணும் போல கிடந்தது. அவங்கள் நாடகம் பார்க்கிற உஷாரில மாட்டன் எண்டு சொல்லிப் போட்டான்கள். அவங்களுக்கென்ன, அவங்கட கால்லயே குத்தினது. நான் கெந்திக் கெந்தி ஓடி வாறன், கால்ல மண் அப்பிப் பிசுபிசுப்பாய்க் கிடந்திது. ஆச்சி சொல்ற பேய்க்கதையெல்லாம் ஞாபகத்தில வந்து பயம் காட்டிச்சு. ஆச்சி சொல்றவ, வேப்பமரத்தில வைரவன் இருக்காம், வைரவன் இருக்கிற இடத்தில பேய் முடுகாதாம் எண்டு. எனக்கு வைரவெ னெண்டாலும் பயம்தான். ஆனால் பேயெண்டால் இன்னும் பயம். நான் வேப்பமரம் கூட இருக்கிற றோட்டாப் பார்த்து ஓடிவாறன், எப்பிடியோ இளைக்க, இளைக்க வீட்ட வந்து சேந்திட்டன். நான் வரும் வரைக்கும் அப்புநித்திரை கொள்ளாம சிமிலி லாம்ப அரைவாசியாத்தூண்டி விட்டுக் கொண்டு அவர்ர சாய்மானைக் கதிரையில படுத்துக் கிடந்தாரு.
வாழ்தல் என்பது. 17

Page 17
போல், என் ஜானகி போல் எத்தனை பேர் இப்படி.' அப்பு ஒருநாளும் பேசி முடிக்கமாட்டாரு, தொண்டை அடைச்சுப் போயிடும்.
ஒருநாள் அப்பு வரும்போதே சிரிச்சுக் கொண்டு வந்தாரு நேரே அம்மாட போட்டோக்குக் கிட்டப் போனாரு. 'எல்லாம் சரிவரும், இனி எல்லாம் சரிவரும் ஜானகி எங்கட பிள்ளைகள் முழிச்சிற்றான்கள், எழுந்திட்டாங்கள், இனி எல்லாம் சரிவரும்' அப்பு சொல்லேக்கை கண்ணில நீர் முட்டி நீண்டது. அதுக்குப் பிறகு, எங்கட வீட்ட புதுப் புது அண்ணாமார் எல்லாம் வந்தினம். அவங்கள் வந்தால், அப்பு அவங்களைக் கூட்டிக் கொண்டு அவர்ர அறைக்குப் போவாரு. கனநேரத்துக்குக் கதைக் கிற சத்தம் கேட்கும். சிலவேளை அந்த அண்ணாமார் எங்கட மண்டபத்திலேயே படுத்துக் கொள்ளுவினம். இடுப்புல ஏதோ கட்டியிருக்கிறமாதிரி கூட்டிக் கட்டின அவங்கட ஒரு பக்கத்துச் சறம் உப்பித் தெரியும். அதைத் தொட்டுப்பார்க்க எனக்குச் சரியான ஆச, அவங்கள் விடமாட்டாங்கள். அதுக்குள்ள பாம்பிருக்கு எண்டு சொல்லுவாங்கள், அதுக்குப் பிறகு நான் அவங்களுக்குக் கிட்டப் போறயில்ல. சிலநேரம் யோசிக்கிறனான் 'பாம்பு இவங்களக் கடிக்காதோ எண்டு '
கேக்கப்பயம். பாம்ப வெளியில விட்டிற்றா? பாம்புக்கார அண்ணாமார றோட்டிலயும் காணுறநான் ஆக்களும் அவங்களக் கண்டால் தள்ளித்தான் நிப்பாங்கள். உடன உண்மையா நம்பித்தன் இவங்கள் பாம்புக்காரங்கள்தான் கூட்டங்களுக்கும் அப்புவோட அவங்களும் வந்தாங்கள். அப்பு பேசிறது குறைஞ்சு போச்சு. அந்த நெடிய அண்ணாதான் கணக்கப் பேசுவார். நல்லாத்தான் பேசுவார். இப்பயும் ஆக்கள் அசையாமல் ஆடாமல். அப்புவப் பாத்த மாதிரி பாத்துக் கொண்டிருப்பாங்கள். 'பெடியன் நல்லாப் பேசிறான்'
'பாவம் எங்களுக்காக எவ்வளவு கஷ்டப்படுறாங்கள்' பின்னுக்கிருக்கிற ஆக்கள் எல்லாம் இப்படி ஒவ்வொண்டைச் சொன்னாங்கள். எனக்கும் பாம்புக்கார அண்ணாமாரில விருப்பம் வந்திச்சுது. கொஞ்சக்காலத்தில எங்கட ஊரில றோட்டுகள் எல்லாம் திருத்தினாங்கள்.
2O வாழ்தல் என்பது.

சில றோட்டுக்கள்ள கறுப்புக் கறுப்பாக் கட்டையெல்லாம் கொண்டு வந்து போட்டாங்கள். றோட்டோரம் இருந்த மரங்களையெல்லாம் வெட்டி னோங்கள்.
ஆண்டுக்கொருக்கா ஊசி போடுற சோதினகாரய்யா வாறமாதிரி இப்ப ஒவ்வொரு சனியிலயும் ஊசிப் பெட்டியோட அஞ்சாறு பொம்பிளை பளும், ரண்டு மூண்டு ஆம்பிளையஞம் பள்ளிக்கு, வந்து பள்ளிக்கூடம் போகாத ஆக்களுக்கும் ஊசி போட்டாங்க, மருந்து குடுத்தாங்க. பாழடைஞ்ச வளவொன்றில கட்டிடம் ஒண்டு எழும்பிச்சுது. அதுதானாம் ஆஸ்பத்திரியென்டாங்கள். பிறகு கறண்டு வந்தது. லைற்றும் வந்தது. அப்புதான் முதன் முதலாய் லைற்றிட சுவிச்சப் போட்டவரு. அப்புட முகத்தில இப்ப ஒரே செஞ்சலிப்பு. என்னேரமும் சிரிப்பு. கிழமைக்கு ரெண்டு மூணுதரம் பாம்புக்கார அண்ணாமாருக்கு வீட்ட விருந்து நடக்கும். இப்பெல்லாம் இடுப்பிலஇருக்கிற பாம்போட தோள்ள கறுப்புக் குழலும் தொங்கிக் கிடக்கும். இது மாதிரி நீட்டுக் குழல் ஒண்ட எங்களுக்கு மான் இறைச்சிதார நடேசண்ணண்ட கையிலயும் கண்ட்தா எனக்கு ஞாபகம், அதாலதான் அவரு மானைச் சுடுற எண்டு சொல்லுவாங்கள். சுடுறது எண்டால் எனக்கு எப்படியெண்டு தெரியாது. இவங்களும் இதாலதான் பாம்பையும் சுட்டிருப்பாங்கள் எண்டு நினைச்சன். முன்னை மாதிரியில்லாமல் கணக்க அண்ணமார், புதுப்புது அண்ணமார் எல்லாம் வந்தாங்கள்.
好 好 好 ஒருநாள் வரும் போதே அப்புடமுகம் தொங்கிக் கிடந்தது. அண்டைக்கு மாதிரியே நேரே அம்மாட போட்டோக்குக் கிட்டப் போனாரு. 'போச்சு. எல்லாம் போச்சு, ஜானகி, இவங்கள் குடும்பத்திற்குள்ளேயே அடிபடுறாங்கள். போச்சு, என்ர கனவு, உன்ர கனவு, கனவின்ர கனவு எல்லாம் போச்சு",
அண்டைக்கு வீட்ட வந்த பாம்புக்கார அண்ணாமாருக்கும் அப்புவுக்கும் இடையில உரத்த சத்தத்தில வாக்குவாதம் நடந்திச்சுது. கடைசியா இனிமேல் வீட்ட வரவேண்டாம் எண்டு அப்பு சொல்லிப் போட்டாரு. அடுத்த நாள் வேற பாம்புக்கார அண்ணாமார் வந்தாங்கள். அவங்களோடும் அதே மாதிரித்தான். சனங்களைக் கூப்பிட்டு அப்பு எல்லாம் சொன்னாரு, அதுதான் அவர்ர கடைசிக் கூட்டம். அதுக்குப்
வாழ்தல் என்பது. 21

Page 18
பிறகு அவர் கூட்டத்துக்குப் போகயில்ல, போக விரும்பயுமில்ல, போக இருக்கயுமில்ல.
அந்தக் கரண்ட் கட் டையில கட்டையாய்க் கிடந்துதான் கூட்டம் கூட்டினாரு அப்புட சவத்தப் பாக்க கூட்டம் கூட்டமா வந்தினம், பாத்தினம், ஒண்டுமே பேசயில்ல போயினம். ஆச்சிமட்டும் நெஞ்சிலடிச்சி அழுதா, மண்அள்ளித்திட்டினா, ஏனெண்டு விளங்காமலே நானும் அழுதன். அப்புவப் பார்த்து விம்மினன்.
*
எனக்கு இப்ப அந்த கரண்ட் கட்டைய பாக்க வேணும் போல இருக்குது. போறன், ஆ. அந்தா தெரியுது. குலை வெட்டின பனமரம் போல, லைற்ற இழந்து ஒத்தையாய் நிக்குது. கிட்டப் போறன். கீழே கண்ணாடித் துண்டுகள் சிதறிக் கிடக்கு. 'ஊருக்கே வெளிச்சம் குடுக்கிற மாதிரி இருந்தது. ஆரோ கோதாரி பிடிச்சதுகள் உடைச்சுப் போட்டுதுகள்.' ஒருவன் நிண்டு பாத்திற்று இப்பிடிச் சொல்லிப் போட்டுப் போனான். எனக்கு மின்னலடிச்சமாதிரி ஆச்சி திட்டினது ஞாபகம் வந்தது. 'டேய்! உன்ரை கொப்பு, இந்த ஊருக்கே தொண்டு செய்தானேடா பாடையில போறவங்கள் இப்பிடிச் செய்து போட்டாங்களேடா' நான் கட்டையைப் பாக்கிறன். அப்புவ இழந்த என்னப் போல, லைற்றை இழந்து அதுகும் ஒத்தையா. பாவம்! ஒடிப் போய் கட்டிப்பிடிச்சன். முன்னுக்கும் பின்னுக்கும் தடவிக்குடுத்தன். "பூரணைக்கு முத்திட்டுது போல கிடக்கு" ஒருவன் என்னப் பாத்துச் சொல்லிற்றுப் போனான். தோளை ஆரோ தொட்ட மாதிரியிருந்திச்சுது. திரும்பிப் பார்த்தன். ஆச்சி நிண்டா, "ஆச்சி பூரணைக்கு முத்திட்டுது எண்டால் என்ன ஆச்சி' அவ பேசாமல் நிண்டா. நான் உலுக்கிக் கேட்டன், 'வெளிக்கிடு ராசா, நாம எங்கயாச்சும் கண் காணா தேசத்துக்குப் போவம்' எண்டா.
இந்தா, இப்ப ஆச்சிர விரலைப் பிடிச்சுக் கொண்டு பின்னால போறன். கரண்ட் கட்டைய விட்டுக் கணக்கத் தூரம் வந்தாச்சு, திரும்பிப் பாக்கிறன். பாவம் அது ஒத்தையாய் தடவிக் குடுக்க ஆளில்லாம.
22 வாழ்தல் என்பது.

ஏழு மாதங்களுக்குப் பிறகு, அதாவது கிட்டத்தட்ட இருநூறு ாட்களுக்குப் பிறகு இப்போது அவன் நினைவுகள் மீண்டும் < எனக்குள் பலமாக ஆக்கிரமிக் கின்றன. அவனுக்கும் எனக்கும் இனி எந்தத் தொடர்பும் இல்லை என்ற என்னுடைய பிடிவாதம் இப்போது மெதுவாய் ஆட்டங் ாணத் தொடங்கிவிட்டது. இப்போ தெல்லாம் அவனைப் பற்றி நிறை யவே வதந்திகள். மூளை பிசகி முத்தின நிலையில் இருப்பதாய் வெளிப்படையாகவே பிரச்சாரங் ள். அவனுடன் நான் நட்புக் கொண்டிருந்த நாட்களிலும் இப்படி யொரு கதை பொசிந்தது தான். என்றாலும் இப்போது போல் அவ் வளவு வெளிப்படையாக இல்லை. லவேளை அவனுக்கு அப்போது
ான்கு காதுகள் இருந்தன என்பதை மற்றவர்கள் புரிந்திருந்ததால் மெளனமாய் அவனை விட்டிருக் கலாம். எது எப்படியென்றாலும், இப்போது நானும் அவனை வறுத்து விட்டேன் என்பதும் இவர் ளுக்கு ஒரு ஊக்கத்தைக் கொடுக்
வெள்ளைப் பேப்பர்களுடனும் ஒரு பேனையுடனும் அவனைக் காண ாம் என்பது பொதுவான அபிப்பி ாயம். இது அவனைப் பற்றிய இவர்களின் மதிப்பீட்டிற்கு முதலா
வாழ்தல் என்பது.
23

Page 19
வது காரணி அவன் யாருடனும் அதிகமாகக் கதைப்பதில்லையென்பது இரண்டாவது காரணி அத்திபூத்தாற்போல் யாருடனேனும் கதைத்தாலும் மணிக்கணக்காய் சூடாக விவாதித்துக் கதைப்பது மூன்றாவது காரணி இப்படியே அவனுடைய செய்கைகள் ஒவ்வொன்றும் அவனைப்பற்றிய மதிப்பீட்டிற்கு காரணியாய்ப் போனது. அவனின் இந்தச் சுபாவங்களில் பல அவனுடன் இயற்கையாய் இணைந்தது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். சில சுபாவங்கள் மட்டும் இப்போது புதிதாக உருவாகியிருக் கின்றது. உருவாகியிருக்கின்றது என்று திடமாகச் சொல்வதற்கும் இல்லை. அவனே உருவாக்கியதாயும் இருக்கலாம். அவன் வளாகத்தில் நுழைந்த தொடக்க காலத்திலேயே எல்லோருடனும் மனம் விட்டு வளவள என்று பேசுவதைப் பார்த்து அவர்களின் மொழியில் அவனுக்கு வேறுபெயர் வைத்ததாய் எனக்கு ஞாபகம். இனத்திலும் பாலிலும் வேறுபட்ட என்னுடன் அவன் மனம் விட்டுப் பழகுவதைப் பார்த்து, 'ஏன் இவனுக்குக் கதைத்துப் பழகப் பெடியன் ஒருத்தரும் கிடைக்கயில்லையா, சரி பெட்டையோடதான் கதைக்க வேணுமென்டால் தமிழ்ப் பெட்டை ஒருத்தரும் கிடைக்கயில்லையா' என்று பல தொட்டிகளில் அவன் கழுவப் பட்டது உண்மை. இதேபோன்ற விமர்சனங்கள் என் இனத்தவர்களிடம் இருந்து கிளம்பியதும் உண்மை. முன்பெல்லாம் என்னுடைய நண்பிகள் என்னுடன் அவ்வளவு தூரம் முகம் கொடுத்துக் கதைப்பது இல்லை. ஓர் ஆணுடன் அளவுக்கு மீறிக் கதைக்கும் (அவர்களின் அகராதியில் கதைப்பது என்றாலே அது அளவுக்கு மீறியதுதான்.) பெண்ணைப் பற்றி எப்போதும் அவர்களுக்கு நல்லபிப்பிராயம் கிடையாது. ஆனால் அவர்களின் சம்பாஷணை ஆண்களைப் பற்றியதானதன்றி வேறொன்றாய் இருக்காது என்பது வேறுவிஷயம். இருப்பினும் இன்றைய அவனைப்பற்றிய ஒவ்வொரு செய்தியையும் என்னிடம் தான் முதலில் வந்து சொல்வார்கள் அவனைப்பற்றி எதைச் சொல்ல முனைந்தாலும் முதலில் ஒரு கேலிச் சிரிப்புதான் கெக்கலிக்கும். அவன் பெயர் உச்சரிக்கப்பட்டாலே அது இந்த நூற்றாண்டின் சிறந்த பகிடி என்பது போல் சிரிப்பு. என்னதான் அவனை நான் வெறுத்திருந்தாலும் அவனைப்பற்றி இப்படிக் கேலி செய்வது மட்டும் எனக்கு வலியைக் கொடுக்கும். வலித்தாலும் எதுவுமே சொல்லக் கூடிய நிலையில் நான் இல்லை. ஆரம்பத்தில் விறுவிறுவென்று உயர்ந்த நட்பு பற்றியும் பின் திடீரென்று அதல பாதாளத்தில் விழுந்த முறிவு பற்றியும் வளாகம் முழுவதும் பகிரங்கம், அதனால் இப்போது அவனை எனக்காக வெறுக்காவிட்டாலும்
24 வாழ்தல் என்பது.

மற்றவர்களுக்காக வெறுக்க வேண்டிய நிலை எனக்கு. சில சமயங்களில் இந்த நடிப்பு வாழ்க்கையைப் பற்றி நான் கவலைப்பட்டதுமுண்டு தான். அப்படிப்பட்ட சமயங்களிலெல்லாம், ‘வாழ்க்கை' என்னைத்தட்டிக் கொடுக்கும். அவனும் அடிக்கடி என்னிடம் சொல்வான்.
'வாழ்க்கை யென்றால் சில சமயங்களில் நடிக்கவும் தெரிந்திருக்க வேணும்' என்று. அவனோடு பேசிக் கொண்டிருக்கையில் போதி மரத்தின் கீழ் இருப்பது போல் ஒரு பிரமை தோன்றும். அவனில் எனக்கு மிகவும் பிடித்த விடயமே எதையும் வெளிப்படையாகச் சொல்லும் தன்மையும், யாருக்காகவும் தன் கருத்தை மாற்றிக் கொள்ளாத திடமும்தான். எங்கள் இருவருக்குமிடையே பல தடவைகள் கருத்து முரண்பாடு ஏற்பட்ட போதிலும் அதனால் எங்கள் நட்பு காயப்பட என்றும் அவன் விரும்பியதில்லை. நட்பு வேறு, கருத்து வேறு என்பது தான் அவன் கருத்து. என் வரைக்கும் அந்தக் கருத்து கொஞ்சம் ஒதுங்கலாய்த்தான் இருந்தது. என்னுடைய கருத்துக்கு மதிப்பளிக்காதவருடன் எதற்கு நட்பு என்று நான் இடையிடையே யோசிப்பதுமுண்டு தான். நாங்கள் நட்பை முறித்துக் கொண்டதன் காரணமோ அன்றி விதமோ சரியா பிழையா என்பது இன்றுவரை எனக்கு விளங்கவில்லை. அந்த முறிவினால் நான் பெரிதும் கவலைப்பட்டேன் என்று சொல்வதற்கும் இல்லை. அவன் மட்டும் நிறையவே பாதிக்கப்பட்டிருப்பான் என்பது இன்று எனக்குப் புரிகிறது. ஆனால் அவன் பிரியும் நாட்களில் நடந்து கொண்ட விதங்கள் என்னைக் காயப்படுத்துவதாய் இருந்தது. ஏழு மாதங்களுக்கு முன் ஒரு தடவை அவன் கொழும்பில் வைத்து சந்தேகம் என்ற போர்வையில் கைது செய்யப்பட்டான். மறுநாளே அவனை நேரில் பார்த்து வருவதற்காகச் சென்றிருந்தேன். கடமையில் நின்ற பொலிஸார் அவன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டதும், ஒரு குறுகலாய் அடைக்கப்பட்ட இடைவெளிக்குள் சுருண்டு கிடந்தவன் துடித்து எழுந்தான். அவனைப் போலவே இன்னும் பலர் அந்தச் சிறிய அறைக்குள் நெருங்கிக் கிடந்தார்கள், சிறைக் கம்பிகளுக்கு வெளியே அழுத கண்ணிர் காய்ந்த நிலையில் என் வயதையொத்த சில பெண்கள் வெருண்டவாறு அருகில் இருந்த வாங்கில் அமர்ந்திருந்தனர். அவர்களும் கைது செய்யப்பட்டவர்கள் என்பது பின்னர் தெரியவந்தது. என்னைக் கண்டதும் துடிப்பாக எழுந்தவனின் முகத்தில் சடுதியாக பல மாற்றங்கள் தெரிந்தன.
வாழ்தல் என்பது. 25

Page 20
'ஏன் நீங்கள் வந்தீர்கள்?"
'என்ன கேள்வி இது'
'ஏன் வந்தீர்கள் என்று கேட்டேன்' "ஏன் உங்களைப் பார்க்க வரக்கூடாதா' 'வரலாம். நிச்சயமாய் வரலாம். ஒரு ஹொஸ்பிட்டலில் அல்லது என் அறையில் பார்ப்பதற்கு வரலாம். ஆனால் இங்கே வரக்கூடாது. 'ஏன் பயமா? என்னை இவர்கள் பிடித்து வைத்துவிடமாட்டார்கள்' 'எனக்கும் அது தெரியும். நீங்கள் தமிழ் இல்லையென்பதால் உங்களைப் பிடித்து வைக்க மாட்டார்கள் என்று தெரியும், அதனால்தான் ஏன் வந்தீர்கள் என்று கேட்டேன்' அவன் அப்படி உணர்ச்சி வசப்பட்டுப் பேசியதோ அன்றி இப்படிப் பிரித்துப் பிரித்துப் பேசியதோ அதுவரை இல்லை. எனக்கு அது அதிர்ச்சியாயும் ஆச்சரியமாயும் கூடவே சோகமாயும் இருந்தது. உடனே குடான பதில் கொடுக்க வேண்டும் போல் இருந்தது. 'அவர்கள் உங்களைக் கைது செய்ததற்காக என்னில் ஏன் கோபப்படுகிறீர்கள்.' 'நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து விட்டீர்கள் போல் இருக்கின்றது. என்னைக் கைது செய்தவர்கள் உங்கள் இனத்தவர்கள் என்பதற்காக நான் இப்படிச் சொல்லவில்லை. ஏன் வீணே மற்றவர்களுக்கு மனக் கிலேசங்களைக் கொடுக்கின்றீர்கள் என்றுதான் கேட்கிறேன்.' 'எனக்குப் புரியவில்லை" 'இதோ பாருங்கள் இவர்கள் உங்களைப் போன்று அதே பருவப் பெண்கள்தான். தமிழ் என்ற ஒரே காரணத்திற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். வெளியில் நடமாடவே சுதந்திரம் இல்லாமல் இருக்கும் இவர்கள் பொலிஸ் நிலையத்தினுள்ளேயே சுதந்திரமாய் நுழையும் உங்களைப் பார்த்து ஆற்றாமைப்பட மாட்டார்களா?' 'அவர்கள் கைது செய்யப்பட்டதற்கு நீங்கள் சொன்னதுதான் காரணம் என்று இல்லாமலும் இருக்கலாம். அவர்களிடம் அடையாள அட்டை இல்லாமையினாலும் கைது செய்யப்பட்டிருக்கலாம்.' 'எல்லாம் இருக்கிறது. அது இருப்பதால்தான் இவர்களின் வேலை இலகுவாகிறது.' அவன் ஆத்திரப்பட்டான். சின்ன விடயத்தைப் பெரிதுபடுத்தி அவன் கோபப்படுவதாய்ப்பட்டது எனக்கு. மேலும் பிரச்சினையை வளர்த்துக் கொள்ள விரும்பாமல் நான் கொண்டு சென்ற மதிய உணவுப் பார்சலை
26 வாழ்தல் என்பது.

நீட்டினேன்.
'வேண்டாம் இங்கே சாப்பாடு தருகிறார்கள்." 'அது நல்ல சாப்பாடு இல்லைத்தானே. இதைச் சாப்பிடுங்கள்' 'சரி அப்படியென்றால் இன்னும் பன்னிரண்டு பார்சல்கள் கொண்டு வர முடியுமா, என் நண்பர்களுக்கும்" 'நண்பர்கள்'நான் குழப்பமாய் அவனை ஏறிட்டேன். 'ஆம்! என் நண்பர்கள், ஒரு நாளைய நண்பர்கள்' என்று சொல்லிக் கொண்டு சிறைக்கம்பிகளையே ஏக்கமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பரிதாப முகங்களைக் காட்டினான்." நான் இன்னும் பன்னிரண்டு பார்சல்கள் வாங்கி வரத் திரும்பிய போது என்னைத் தடுத்தான். "வேண்டாம், அது உங்களுக்கு வீண் சிரமம். அதுமட்டுமில்லாது நீங்கள் பார்சல் வாங்கி வருவதற்குள் சிலர் இங்கேயிருந்து போயிருக்கலாம் அல்லது இன்னும் சிலர் உள்ளே வந்தும் இருக்கலாம். எனவே எண்ணிக்கை நிலையில்லை' இப்படித்தான் அவன் எதையும் வெளிப்படையாகச் சொல்லும் போதும் சிலவற்றைப் புரிவது சிரமமாயிருக்கும். பார்வையிடும் நேரம் முடிந்ததாய் கடமையில் நின்றவன் அவசரப்படுத்தியதும், 'நான் நாளை வருகிறேன்' என்றேன். ‘'வேண்டாம். நாளை வரவேண்டாம். இன்று நீங்கள் வந்ததற்கு நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன். ஆனால் நாளை நீங்கள் வரவேண்டாம். என்னை விடுதலை செய்தால் நானே வந்து சந்தித்துக் கொள்கிறேன்.' 'சரி உங்கள் விருப்பம். கவலைப்படாதீர்கள், இன்றோ நாளையோ நீங்கள் விடுதலையாகி என்னை வந்து சந்திப்பீர்கள்' என்று சொல்லி விடை பெற்ற போது அவன் இதழோரங்களில் ஒரு வரண்ட புன்னகை தவழ்ந்ததைக் கண்டேன். நான் சொன்னதுபோல் அன்றோ அதற்கடுத்த நாளோ அவன் விடுதலையாகவில்லை. பத்து நாட்கள் உள்ளேயிருந்துதான் வந்தான். அவன் விடுதலையானதிலிருந்து அவனுடைய போக்குகள் எல்லாம் மாற்றமாய்த் தெரிந்தன. ஒரே இடத்தில் தொடர்ந்து இருந்து ஒரே முகங்களைத் திரும்பத் திரும்ப பார்த்ததால் மூளையில் ஏதும் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது என்று காரணம் சொன்னார்கள். எனக்கு மட்டும் அவனுடைய மாற்றம் மிகுந்த கவலையைக் கொடுத்தது. உள்ளே
வாழ்தல் என்பது. 27

Page 21
இருந்து வந்தபின் ஒரேயொரு தரம் மாத்திரம் என்னை வந்து சந்தித்து மீண்டும் ஒருதரம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு சென்றான். அதன்பின் என்னைச் சந்தித்துக் கொள்ளும் சந்தர்ப்பங்களை வேண்டுமென்று அவன் தவிர்த்து வருவதாகவே பட்டது எனக்கு, அவனாக வந்து சந்திப்பான் என்ற என் நம்பிக்கைகள் சுத்தமாய் இற்றுப் போன முடிவில் அவன் ஒதுங்கியிருக்கும் அந்த ஒதுக்குப்புறமான நிழல் வாகை மரத்தின் கீழ் தேடிச் சென்றேன். 'என்ன இப்படியே இருப்பது எண்டு முடிவு செய்து விட்டீர்களா?" என் குரலில் அவன் கலைந்தான். 'நான் ஒன்றும் புதுமாதிரியாய் இருக்கவில்லையே. வழமையைப் போல்தானே இருக்கிறேன்.' 'கவலைப்படுவதுதான் உங்கள் வழமையா?" 'இல்லை! ஆனால் உங்கள் பார்வையில் அப்படித் தெரியலாம்.' 'அப்படித் தெரிந்தால் பிழை உங்களுடையது தான்.' 'உங்கள் இதயத்தையும் கண்ணையும் நான் படைக்கவில்லை." 'படைக்காத உங்களுக்கு அவற்றைக் காயப்படுத்தவும் உரிமையில்லை."
t 'சரி உங்களைக் காயப்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்புக் கோருகின்றேன்' 'நான் உங்களிடம் மன்னிப்பை எதிர்பார்க்கவில்லை, மாற்றத்தை எதிர்பார்க்கிறேன்' சொல்லிக் கொண்டே அவனருகில் அமர்ந்தேன். அவன் என்னைத் திரும்பியும் பார்க்கவில்லை. ஏதாவது அவன் கதைப்பான் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமும் கோபமும்தான் எஞ்சியது. இவன் ஏன் இப்படி? எதற்காக என்னையும் சேர்த்து இப்படி ஒதுக்குகின்றான்? எனக்குள் நிறைய கேள்விகள் எழுந்தன. எல்லாக் கேள்விகளுக்கும் பதிலாகிப் போன அவன் மட்டும் கல்லை விழுங்கியவன் போல் மெளனமாய் இருந்தான். 'அதோ பூத்துக் குலுங்கும் வாகையைப் பார்த்தீர்களா எவ்வளவு அழகாய் இருக்கிறது' என்றேன். அவன் திரும்பவில்லை. நான் இன்னும் ஒரு தரமும் சொல்லிப் பார்த்தேன். அவன் எதுவித சலனமும் இல்லாமல் தூரத்தே இலையான்களின் சுற்றிவளைப்புகளுக்கு மத்தியில் செத்துக் கிடக்கும் எலியைக் காட்டி, 'பார்த்தீர்களா எவ்வளவு அருவருப்பாய் இருக்கிறது' என்றான். 'இதையெல்லாம் ஏன் நீங்கள் பார்க்கின்றீர்கள்?'
'இதைப் பார்ப்பது உங்களுக்கு அவசியம் இல்லாமல் இருக்கலாம்,
28 • வாழ்தல் என்பது.

, ஆனால் எங்களுக்கு அப்படியல்ல." அதன்பின் ஒருநிமிடங்கூட நான் அங்கே நிற்கவில்லை. கோபமாய் 6ாழுந்து வந்துவிட்டேன். அதன்பின் இரண்டு, மூன்று சந்தர்ப்பங்களில் அவன் என்னுடன் பேசமுற்பட்ட போது, 'என்னுடன் கதைக்க வேண்டாம்' என்று முகத்திலறைந்தாற் போல் கூறிவிட்டேன்.
அன்று முதல் எங்களிடையே இடைவெளிநீண்டு போனது. ஆரம்பத்தில் அவனுடைய நட்பு முறிந்தது கொஞ்சம் கவலையைத் தந்தாலும் காலப் போக்கில் அவனைப் பற்றிய ஞாபகங்களே அற்றுப் போகும்படி நானும் மாறி சூழ்நிலையும் என்னை மாற்றிக் கொண்டது. . எனக்கே தெரியாத புதிராய் இப்போது மீண்டும் அவன் நினைவுகள் பழையபடி அரிக்கத் தொடங்கிவிட்டன. நான் நடந்து கொண்ட விதம் சரிதானா என்று எனக்குள் ஒரு சந்தேகம் முளைவிடத் தொடங்கிவிட்டது. நானாக வலிந்து சென்று அவனுடன் கதைத்தாலும் தவறில்லை என்று ஒரு ஞானம் உதித்தது. இதோ அதே நிழல் வாகை மரத்தைத் தேடி நான் நடக்கின்றேன்.
'க்கும், க்கும். நான் உங்களுடன் கொஞ்சம் கதைக்கலாமா?' ஒரு செருமல் செருமி அவன் கவனத்தைத் திருப்பி விட்டுக் கேட்டேன். திரும்பிஎன்னை முழுமையாக ஒருநிமிடம் பார்த்தான். முகத்தில் ஒருவித மாறுதலும் தெரியவில்லை.
"நிச்சயமாக' 'நான் செய்தது பிழைதான். இப்படி அவசரமாய் நட்பை முறித்துக் கொண்டது, பிழைதான். அதற்காக உங்களிடம் மன்னிப்புக் கோருகின்றேன்.' 'என்றாவது நீங்கள் பிழை செய்ததாய் நான் கருதியிருக்கவில்லை' 'இருந்தாலும் உங்களை இப்படி விரக்திக் கோலத்துக்குக் கொண்டு வந்து விட்டேன் என்பதை நினைக்கும் போது என்மனம் உறுத்துகிறது" 'யார் சொன்னது உங்களால்தான் நான் இப்படியானேன் என்று' 'இதைக்கூட யாரும் சொல்லித்தான் அறிய வேண்டும் என்பதில்லை. எனக்கும் இதயம் இருக்கிறது" − 'நீங்கள் இன்னும் என்னைச் சரியாகப் புரியவில்லையென்று நினைக்கின்றேன். வீணே மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.'
'அப்படியென்றால் ஏன் நீங்கள் இப்படியிருக்கின்றீர்கள் என்பதைச்
வாழ்தல் என்பது. 29

Page 22
சொல்லுங்கள்.' 'மன்னிக்க வேண்டும் அதைச் சொன்னால் உங்களுக்குப் புரியாது. புரிய வைக்கும் நிலையிலும் நான் இல்லை. புரியும் பக்குவத்தையடைய இன்னும் நீங்கள் முயற்சிக்கவுமில்லை." அவனிடம் ஒருவாறாக விடைபெற்றுத் திரும்பும் போது மூளைபிசகியது அவனுக்கா? அவனைப்பற்றிக் கதைக்கும் இவர்களுக்கா? அவர்கள் சொன்னதை அப்படியே நம்பிவிட்ட எனக்கா என்று குழப்பமாயிருந்தது. சிலநாட்களின் பின் அவன் காணாமல் போனான் என்ற செய்தி கிடைத்தது. அவன் மீது எனக்கிருந்த அன்பின் காரணமான உந்துதலினால் அவன் அறையில் சென்று விசாரித்து வரப் போயிருந்தேன். அவன் காணாமல் போனதைப் பற்றி அவனின் அறை நண்பன் அதிகம் அலட்டிக் கொண்டதாய்த் தெரியவில்லை. இன்னும் சொன்னால் அவன் அந்த அறையை விட்டு எந்த வகையிலாவது கழன்று கொண்டதில் சந்தோசம் தொனிப்பது போலவும் தென்பட்டது. நான் அவனின் உடமைகளை மேலோட்டமாய் ஆராய்ந்த போது பெரும்பாலானவை கவிதைகளாகவே இருப்பதைக் கண்டேன். அவற்றில் எழுமாற்றாக என் கையில் சிக்கிய சிலதை அவன் நண்பனிடம் கொடுத்து அதன் அர்த்தத்தை கூறும்படி சொன்னேன். அதன் அர்த்தங்கள் தனக்கே விளங்குவதில்லையென்றும், அத்துடன் அவைகளைக் கவிதைகள் என்று சொல்வதற்கில்லையென்றும், 'மனிதம்', ‘சுதந்திரம்'. இப்படியான சில சொற்களை விட்டால் அவனுக்கு வேறு சொற்களே கிடைப்பதில்லையென்றும் சொன்னான். ஒரு மரண வீட்டின் துக்கத்தை மனதில் நிரப்பிக் கொண்டு நான் திரும்பிக் கொண்டிருந்த போது அந்த உண்மை எனக்குப் புரிந்தது. என் நண்பன், நண்பனின் கவிதை, அவன் காணாமல் போன மர்மம். இப்படிநிறையவே புதிர்கள் இங்கே இருக்கத்தான் செய்கிறது. அவற்றை புரியும் பக்குவத்தை அடைவதற்கு இன்னும் நான்தான்முயற்சிக்கவில்லை போலும்.
3O வாழ்தல் என்பது.

நீண்டும். பரந்தும், திறந்தும் அடைத்தும் உள்ளதான அந்தத் தனியார் ஹொஸ்பிட்டலின் குறு கலான ஒரு அறையின் பளிங்குத் தரையில் என் கால்களும், முகட்டைப் பார்ப்பதாயும் பார்க்காத தாயும் மெத்தை மீது கிடக்கும் இன்னொரு மெத்தையான அவன் மீது மனமும் பின்னிக் கிடந்தது.
நனைதலும்
காய்தலும்
சுழன்று கொண்டிருக்கும் 'பே(1) னில் கூந்தல் கலைந்ததுவோ, நனை ந்து முடிந்த கண்களின் வெறிப்பில் நிழல்களின் அசைவுகள் ஓரங்கப் பட்டதுவோ எனக்கு ஞாபகமில்லை. நிசப்தத்தை விழுங்கிக் கொண்டிரு ந்த அவர்களின் இரைச்சலின் ஊடாக, நான் தனிமைக்குள் புகுந்த தும், பின் வெறுமைக்குள் விழுந்த தும் நிசப்தமாய்ப்தான் நடந்தன. அந்த ஈச்சிலம் பற்றைகளும், அது மறைத்திருக்கும் மணற்திட்டும், இன்னும் அப்படியே அருகிலிரு க்கும் நதியின் சத்தமில்லாத ஆவர்த்தனமான அசைவுகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் என்பதை இவன் மறந்திருப்பானா? நான் அளைந்து, பிசைந்து இடையி டையே கையில் கொட்டி விளையா டும் பொருப்பு மணலில் கைகோர்த்த படி நடப்பதை நிரந்தரமாயே தவிர்ப்பதற்காகவா என்னைப் பிரிந்து சென்றான்.
'சுபா எழும்பு மகள் போவம், போயிற்று நாளைக்கு வருவம், அங்க பாரு வானம் என்னமாய்
வாழ்தல் என்பது. 31

Page 23
இருட்டி இருக்குதெண்டு' யன்னலூடே, பளபளப்பான, அவனின் மூக்கில் விழுந்து தெறித்துக் கொண்டிருந்த கதிர்களைத் திருடிய இருட்டு, அம்மாவுக்குச் சாதகமானதாய்ப் போனது. வெளியே சின்னதாய் சிணுங்கும் மழையைக் காட்டி ஒரு புயலையே எழுப்பப் பார்த்த அம்மாவைப் பார்த்து சிரிப்பத இல்லை அழுவதா என்பது முக்கியமில்லையிங்கே. அம்மா, இரண்டாம் பட்சமாகிப் போனது அம்மாவுக்கே தெரியாதிருக்கலாம். எத்தனை தூறல்களில் இதோ இங்கே நிமிர்ந்து கிடக்கும் மெத்தை என்னுடன் நனைந்திருக்கும். அப்போதெல்லாம் அம்மா மழையைப் பற்றியோ ரவலைப் பற்றியோ அதிகம் அலட்டிக் கொண்டதாய் ஞாபகம் இல்லை.
'பிள்ள எழும்பு மகள் நாளைக்கும் வந்து பாக்கலாம்தானே எழும்பு வா' அம்மா என் தோளைத் தொட்டாள். வார்த்தைகளில் வழிக்குள் வராத நிலையில் செய்கை முனைப்பெடுத்தது. அந்த முனைப்பில் முன்பை விட கூடுதலான அழுத்தம். அம்மாவின் கையை ஆதாரமாய்ப்பற்றி எழுந்தேன். என் ஆதாரமும் அவதாரமும் இங்கே அநாதரவாய்க் கிடக்கிறது. 'அம்மா! அவரோட ஒருவரும். 'நான் இழுத்தேன். 'அதெல்லாம், நேர்ஸ் மார் பார்த்துக் கொள்ளுவாங்க' அம்மா மொட்டையாகச் சொன்னாள். வார்த்தைகளுக்குப் பின்னால், விஷம் தடவிய அம்புதுளைத்தது போலவும், முகம் தெரியா ஆசான் போதித்தது போலவும் இருவேறு தோற்றங்கள் பிரசன்னமாகின. 'அதெல்லாம் நேர்ஸ் மார் பார்த்துக் கொள்வாங்கள்' என்பதை விறைப்பாகச் சொல்லிக் காயப்படுத்தியதோடு 'இனிமேல் அவன் யாரோ, நாம் யாரோ அவனை யார் வேண்டுமென்றாலும் பார்த்துக் கொள்வரர்கள் நீ இதில் சிரமப்பட வேண்டாம்' என்று போதிப்பதாயும் இருந்தது. இத்தனை சீக்கிரமாய் அம்மா அவனை மறந்து தான் போனாளா? அவன் சாவுடன் கை குலுக்கப் போவதை அறிந்த கணங்களிலேயே அம்மாவும் அவனுடன் பிரியா விடைக்காய் கைகுலுக்கிக் கொண்டாள் போலும், அம்மா நேர்ஸ்ஸிடம் விடைபெறப் போன அந்தநிமிடங்களில் அவனின் முதல் வருகையை நினைத்துப் பார்த்தேன். இப்போது மூக்கு மட்டுமே பளபளப்பதைப் போலல்லாது அவன் முதன் முதலாய் என் வீடு தேடி வந்த வேளை உடம்பு பூராக ஒரு சதைப்
数
32 வாழ்தல் என்பது.

பிடிப்புடன் மெருகேறித்தான் இருந்தது. தயங்கியபடியே வாசலில் நின்றவனை "வாங்க தம்பி, வாங்க' என்று புளகாங்கிதமாய் முதலில் வரவேற்றது அம்மாதான். முன்பின் அவனைப் பார்த்திராவிட்டாலும் வாசலில் நிறுத்தியிருந்த காரை வைத்தே அம்மா இனம் கண்டு கொண்டாள். என் காதலனுக்குக் கார் இருப்பது என்னை விட அம்மாவுக்குத்தான் அதிகம் பெருமையாய் இருந்தது. அன்றுமட்டுமென்ன பின்னிட்ட காலங்களிலெல்லாம் தம்பிதம்பி என்று அம்மா காட்டிய அக்கறையில் தாயில்லாத தன்னுடைய குறைநீங்கியதாய் இந்த மெத்தை என்னிடம் அடிக்கடி சொல்லும். நான் பூரித்துப் போகும் அந்த நிமிடங்கள், என் உயிர்ப்பின் ஆரம்ப அமைவிடம் பற்றிய என் பெருமிதங்கள் எல்லாமே இப்போது என்னை கூனிக் குறுக வைத்தன. என்முன்னேயே நான் குறுகிறின்றேன். என் பிறத்தலே வெட்கத்துக்குரிய தாகியது. - 'அப்ப, பிள்ள நாங்கள் போயிற்று வாறம், தம்பியக் கொஞ்சம் கவனமாய்ப் பாத்துக் கொள்ளுங்கோ'
அம்மாதான் சொன்னாள். பொய்யின் போர்வையிலிருந்து சடங்காய் சம்பிரதாயமாய் சில நூல்கள் பிரிந்தன; சிதறின. ஒலியாய், குரலாய், மொழியாய் செவிச் சுரங்கத்தினூடு ஒரு கயமை நுழைந்தது. காதைப் பொத்திக் கொள்ளாதது குற்ற உணர்வாய் சுட்டது எனக்கு. அம்மாவைப் பார்த்தலைத் தவிர்த்தலில் சுவர்களையும், கட்டிலின் கால்களையும் மாறி மாறிப் பார்த்தேன்.
'நான் போயிற்று வரட்டா' உதடுகள் மெல்லப் பிரிந்து வார்த்தைகளாவதற்குள் எனக்குள் ஏகப்பட்ட பிரளயங்கள்.
நான் சொன்னது எனக்கே கேட்டிருக்காது. இன்னும் உரத்துச் சொன்னாலும் அவனுக்குக் கேட்காது. ஆனால் இப்படித்தான். அவன் நெஞ்சில் முகம் புதைத்தபடியே விடை பெற இப்படித்தான் கேட்பேன். 'ம்' என்ற ஒற்றைச் சொல்லுடன் என்னை விடுத்து நான் போகையில் இழுத்துப் பிடிக்கும் பூனை எலி விளையாட்டு சில நிமிடங்கள் நீடிக்கும். அங்கே எலி ஒருநfளும் வருத்தப்பட்டதும் கிடையாது. பூனை வருத்தப்படுத்தியதும் கிடையாது. சந்தோஷப்படும் எலிகள், எலிகள்
வாழ்தல் என்பது. 33

Page 24
எலிகள்.
என் பூனையின் கட்டிலருகே சென்றேன். குனிந்து, கைகளை என் நெஞ்சோடு சேர்த்து. 'போயிற்று வரட்டா' என்றேன். கருக்கட்டாத வானமாய் தெளிவான சலனமில்லாத தோற்றம், மரணத்தை எதிர் கொள்ளலில் பயந்து போன நேரங்களை மறந்து ஒரு நிம்மதிச் சுவாசம். "ஓ! என் பூனையே ஒருதரம் கண்ணை விழித்துப் பாரேன். உன்னுடைய எலி விளையாடத்துடிக்கிறது. பாரேன், இதோ உனக்கு அருகிலேயே உன் கைகளைப் பற்றியபடியே உன் எலி. விளையாடுவதற்காய். பாரேன். முடங்கிக் கிடக்கும் விரல்களைநிமிர்த்தி உன் எலியைப் பிடியேன்" மனம் ஓலமிட்டது. "சுபா, கெதியாவா பிள்ள, மழை வந்திட்டுது' வெளியில் இருந்து வந்த அம்மாவின் கட்டளை சுவர்களில் மோதி, என் மனக்கிலேசங்களை வெளிப்படுத்துதலை தடை செய்தது. பார்த்த கணமே அவன் பலத்த நோயாளியென்பதைச் சுட்டுவது போல தலைப்பக்கமாய் குவிந்து கிடக்கும் மருந்துப் போத்தல்களிடமும், ஹோர்லிக்ஸ் போத்தலிடமும் விடை பெற்றுக் கொண்டேன். அவன் விழிக்கும் போது சிலவேளை இவை மட்டும்தான் விழித்திருக்கும் என்ற உண்மையைத் தாங்காமல் தாங்கியவாறே கணணி மனிதனாய் நான்நகரத் தொடங்கினேன். நேர்ஸ் ஸிடம் நான் எதுவுமே சொல்லவில்லை. சொல்வதற்கும் என்ன இருக்கிறது. என் வருகையைப்பற்றி அவனிடம் தெரிவிக்கும்படி சொல்லியிருக்கலாம். அது தெரிந்து, இதற்காக ஒருதரம் அவன் பிரத்யேகமாய்க் கவலைப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. நேர்ஸ் தானாகவே சொல்லி விட்டால்?. 'சிஸ்டர், நான் வந்து போனதைப்பற்றி அவரிடம் சொல்ல வேண்டாம்
6tfah) ''
நான் சொன்னவை அவளுக்குப் வியப்பாயிருந்தது. கண்களில் பின் நோக்கம் அறியும் ஆவல் தெரிந்தும் சாதுரியமாக மறைக்கப்பட்டது, மறைந்து போனது. அம்மா, போர்டிகோவை விட்டு எப்போதோ இறங்கி குடையை விரித்தபடி எனக்காகக் காத்திருந்தாள். ஹொஸ்பிட்டலில் இருந்து ‘பஸ் ஸ்டொப் வரையும், பஸ்ஸிற்காக காத்திருந்த இடைவெளிகளிலும் அம்மா, எதையோ மறைமுகமாய் உணர்த்துவதற்காக எதையெதையோ எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
34 வாழ்தல் என்பது.

அம்மாவைத்தாண்டி, அவனின் கட்டிலிலும், அந்த மருந்துப் போத்தல்களிலும், ஈச்சிலம் பற்றை மணல் மேட்டிலும், பூனை எலி விளையாட்டிலும், மூடிக் கிடக்கும் அவன் இமைகளிலும் மாறி மாறி அலையும் மனம் இடையிடையே அம்மாவிடம் திரும்பும் போதெல்லாம், நான் அவனைப் பார்ப்பதை இனிமேல் குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற கசாயம் மெதுவாய் மிக நிதானமாய் எனக்குப் பருக்கப்பட்டுக் கொண்டிருந்தது. மனதில் அம்மாவைப் பற்றி ஏலவே விழுந்திருந்த வெடிப்பு இழுவிசைக்குட்படும் கொங்கிறீட் போல விரைவாய் மிக விரைவாய் எனக்குள் பரவத் தொடங்கியது. அம்மாவுடன் சேர்ந்தாப் போல், ஒரு குடையின் கீழ் நடந்து கொண்டிருந்தது, நனைதலைத் தவிர்ப்பதற்காக நெருப்பில் நடப்பதாய்ப்பட்டது. அம்மாவின் சுவாசம் படும் மேனியெல்லாம் தொழு நோய்க்காரன் தொட்டதான கூச்சத்தில் நெளிந்து கொண்டிருந்தது. மழையைப் பொருட்படுத்தாத மிருகங்களாய் குடையின்றி நனையும் மனிதர்களாய் நானும் நெருப்பை விடுத்து தனிமையில் நடத்தல்தான் அப்போதைக்கு மிகப் பெரிய சந்தோஷம் போல தோன்றிற்று. வீட்டை அடைந்தபோது, குரியன் கருக்கட்டிக் கறுப்பாய்க் கிடந்த மேகங்களையெல்லாம் இழுத்துக் கொண்டு மேற்கில் சரிந்திருந்தான். சாவுக்கும் வாழ்வுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கும் அவனை பகலுக்கும் இரவுக்கும் இடையிலான அந்தியும், மழைமேகம் கலைந்ததான வானத்தின் வெளிப்பை படுத்துக் கிடக்கும் அவன் முகமும் உருவகப்படுத்தின. 'மகள் அப்படியே போய் போட்டிருக்கிற உடுப்புகளைக் கழுவிப் போட்டு குளிச்சிற்றுக் கெதியா வா மகள், நானும் குளிக்க வேணும்.' உடல் முழுவதையுமே கிருமிகளுக்கு குத்தகைக்கு விட்டிருக்கும் அம்மா நீட்டிய 'டெட்ரோல் சோப் எதையோ நினைத்துச் சிரிப்பதாய்ப்பட்டது எனக்கு கிணற்றடிக்குச் செல்லும்போது வழியில் இருக்கும் வேப்பமர ஊஞ்சலைப் பார்த்தேன். நீண்ட நாட்களாகவே தன்னை ஏறெடுத்துப் பார்க்காத மனிதர்களைப் பற்றி தென்றலிடம் முறையிடுவதாய் மெலிதாய் ஆடிக் கொண்டிருந்தது. அவன் வந்து போன நாட்களிலெல்லாம் இது முறையிட்ட விதமே முரணானது. பின் தன்னை வெறுக்க வைக்க என்னை அவன் வெறுப்பதாய் நடித்துச் சென்ற நாடகத்தைப் புரியாமல் நான் உடைந்து விழுந்த போது என்னையும் என் சோகத்தையும் சுமந்ததும் இந்த ஊஞ்சல்தான்.
வாழ்தல் என்பது. 35

Page 25
'சுபா யாருமே இல்லாத வனாந்திரத்தில நீயும் நானும் மட்டுமே இப்பிடி ஒரு ஊஞ்சல் கட்டி ஜென்ம ஜென்மமாய் ஆடவேணும் சுபா' குளிக்கும் போது தட்டுவேலியின் மேலாகவும் குனிந்து உடுப்புக் கழுவும் போது இடுக்குகளினூடாகவும் ஊஞ்சல் தெரியும் போதெல்லாம் அவனும் என் விம்பமும் அங்கே ஆடிக் கொண்டிருப்பதாய்த் தோன்றியது. சாப்பிடும் போதும் அம்மா இடை விடாது திரும்பத் திரும்ப தொடர் பில்லாமல் நிறையவே சொல்லிக் கொண்டிருந்தாள். கணவன் இறந்து போன ஒரு வருடத்திற்குள்ளாகவே மறுமணம் செய்து கொண்ட பக்கத்து வீட்டுப் பரிமளம் இப்போது சந்தோஷமாய் வாழ்வதைச் சொன்னாள். காதல் முறிந்த பின்னும் எத்தனையோ பேர் கல்யாணம் செய்வதாகச் சொன்னாள். எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாய் புரிந்தது. அவனுடனேயே என் வாழ்க்கையும் முடிய வேண்டியதில்லை என்பதை எடுத்துச் சொல்ல தேவையில்லாமலே பரிமளத்தின் கதை ஒருதரம் புரட்டப்பட்டிருக்கிறது. பரிமளம் மறுமணம் செய்த சிலகாலம் வரைக்கும் அம்மாவும், இந்த அண்டை அயலில் உள்ள சில பெண்களும் பரிமளத்தை வரவேற்ற விதத்தை அம்மா எப்போது மறந்து போனாள்?
உணவைப் பாதியில் முடித்துவிட்டு படுக்கையறையை நோக்கிச் செல்கையில், இரவைப் பற்றிய பயம் கெளவிக் கொண்டது. அம்மாவின் புகை வண்டிக் குறட்டைச்சத்தத்திலும் அயர்ந்து தூங்கும் என்தூக்கத்தின் தன்மை சில நாட்களாகவே காணாமல் போனது. இப்போதெல்லாம் வலைக்கு அப்பால் ஆற்றாமையில் கிணுகினுக்கும் நுளம்புச் சத்தத்திலும் கூட நான் விழித்துக் கொள்வது இயல்பாய்ப் போனது. முன்பும் ஒருமுறை இப்படித்தான் இன்ப அவஸ்தைகளால் என் இரவுகள் பறிக்கப்பட்டன. அது என் காதல் அரும்பத் தொடங்கிய காலம், கனவுகளின் முதுகில் நானும், அவனும் வானத்தில் வலம் வரும் காலம், ஆனந்தங்களை அள்ளி எடுக்க இரவின் வரவிற்காக காத்திருந்த காலம். சாமக் கோழியையும், காக்கை குருவிகளையும் சபித்துக் கொண்டே துயிலெழும் காலம் தனிமையிலும் ஒரு பைத்தியம் போல் சிரித்துக் கொள்ளும் வண்ணம் என்னை சந்தோஷத்தில் திணித்து விட்ட, திணித்துக் கொண்டிருக்கும் அவனின் வருகையைப் பற்றிய எண்ணம் தான் கலைந்து போன என் கனவுகள் பற்றிய கவலையையும் மேவி நிற்கும்.
好 好
மறுநாள் நான் அவனின் அறையை அடைந்த போது விழித்திருந்தான். நீண்ட இடைவெளியின் பின் என்னைக் காணும் அதிர்ச்சி கண்களால் வெளிப்படுத்தப்பட்டது. சிரமப்பட்டுக் கொண்டே எழும்ப
擊
36 வாழ்தல் என்பது.

முனைந்தவன், சிரமங்களே தோற்றுப் போன சலிப்பில் மீண்டும் படுத்தான். முகச் சுழிப்புகளால் வலியையும் காருண்யப் பார்வையில் வேதனைகளையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்த அவனும், அவனின் வேதனைகளை உள்வாங்கிய நானும் மெளனத்தை உடைக்க வார்த்தைகள் தேடுகையில் நேரம் தான் சத்தமில்லாமல் நடந்து போனது. 'இதுக்காகவா என்னிட்ட நடிச்ச நீங்க, இதுக்காகவா நம் காதல் விருட்சத்தின் வேர்களை அறுக்கிற கோடரியாய் உருக்காட்டின நீங்க, இன்பத்தில பங்கு தந்து துன்பத்தத் தனியாய் நீங்களே அனுபவிக்கிறது சுகமெண்டு நினைச்சீங்களா. 'இப்படி நிறையவே அவனிடம் கொட்டி விடுவதற்காக என் குரல்வளை மடை திறக்கத் துடித்தது. என் எந்தவொரு வார்த்தையும் அவனுக்கு வேதனையாகிவிடுமோ என்ற பயத்தில் மெளனம் காத்து நின்றேன்.
4 Ꮫ
st 1 if
சப்தஸ்வரங்களாய், இனிய ராகமாய் நாதமாய் அவன் அழைக்கும் அழைப்புகள் மறைந்து, ஈனஸ்வரத்தில் வெறும் சத்தமாய் என் காதில் விழுந்தது. நான் அருகில் சென்றேன். விம்மிக் கொண்டிருக்கும் இதயம் வெடித்து விடாமல் பார்க்க மிகவும் கஷ்டப்பட்டேன். நான் அழக் கூடாது. அழுகை அவனுக்குப் பிடிக்காத ஒன்று. "அத்தான்' "அப்பிடிக் கூப்பிடாத சுபா, நீவாழ வேணும் சந்தோஷமாய் சிரிச்சபடியே வாழ வேணும்' 'உங்களை விட்டா? இவ்வளவுதானா என்னை நீங்கள் புரிஞ்சு கொண்டது' 'இல்ல சுபா, நீஇருக்கும் வரை உன்னிலநான் வாழ்ந்து கொண்டிருப்பன். உன் சந்தோஷங்கள்ள சந்தோஷித்துக் கொண்டிருப்பன். ப்ளிஸ், இனிமேல் இங்கே வராத சுபா, நீ ஆரையாவது கல். '
அவன் சொல்லி முடிக்குமுன், அவனின் வாயைப் பொத்தினேன். "அத்தான் உங்கள விட்டு, எப்பிடி, எப்பிடியத்தான் நான்.' 'ஏலும், உனக்கு ஏலும் சுபா, மாத்தும், காலம் உன்ன மாத்தும், பழைமைக்குத் திரும்ப ஏலும், உனக்கு ஏலும், ஏலும், உனக்கு ஏலும், மாத்தும், காலம் மாத்தும் ' திரும்பத் திரும்ப சொன்னவைகளையே சொன்னபடி மயங்கிப் போனான்.
வாழ்தல் என்பது. 37

Page 26
முன்தினம் போலவே அந்திவரை அவனுக்குக் காவலாய், ஜடத்தோடு ஜடமாய் நானும் இருந்து விட்டு மருந்துப் போத்தல்களிடம் விடை பெற்றுக் கொண்டு பிரிந்து சென்றேன். அவன் என்னுடன் பேசியவை தான் கடைசி வார்த்தைகள் என்பதைச் சொல்ல விடியலில் ஹொஸ்பிட்டல் பியோன் என் வாசலில் நின்றான். நான் மரமாய் அவனை வெறித்தபடியிருக்க, அவனையும் என்னையும் மாறி மாறிப் பார்த்து எதையோ தமக்குள் சிலாகித்துக் கொண்டிருந்த சனங்களுக்கு மத்தியில் அவன் 'சவம்' என்ற பெயரைச் சூடிக் கொண்டு படுத்திருந்தான், ஊதுவர்த்தியின் நறுமணமும், அவனைப் போர்த்தியிருக்கும் மலர் வளையங்களின் சுகந்தங்களும் யாராலும் பாராட்டுப் பெறாமல் கதவை அடைத்திருக்கும் பெண்கள் கூட்டதினூடு வெளியேறிக் கொண்டிருந்தன என் கனவுகளைப் போல. சடங்குகள் எல்லாம் முற்றப் பெற சுடுகாட்டை நோக்கி அவனின் இறுதி யாத்திரை தொடங்கியது. பந்தல் காலைப் பிடித்தபடியே நான் அசைவின்றிக் கிடந்தேன். பின்வந்த காலங்களில் அவனை நினைத்து நினைத்து தனிமையில் குமுறியழுது, பின்நினைக்கும் போதெல்லாம் கண்ணிர் விட்டு, அதன் பின் அவன் நினைவு வரும் போதெல்லாம் பெருமூச்சுவிட்டு. இப்படியாய் அவனைப்பற்றிய துக்கமும் மெதுவாய், பின் வேகமாய் அதன் பின் இன்னும் வேகமாய் கரைந்து போனது. சில காலங்களின் பின் எனக்குத் திருமணமும் நடந்தது. ஆரம்பத் தாம்பத்தியத்தின் போது முன்பைப் போல் அதிகமாய் அவன் நினைவுகள் என்னை ஆக்கிரமித்தன. குழந்தை பிறந்ததும், குழந்தை குழந்தைகளாய் மாறியதும், அவர்கள் பள்ளிக்கூடம் சென்றதுமாய், குடும்பப் பொறுப்புகளும் கூட, என்னில் இருந்து அவன் கொஞ்சம் கொஞ்சமாய் தூரப் போனான். பனிரெண்டு வருடங்கள் கடந்திருக்கும் ஓர் இரவு, நான்காவது படிக்கும் என் மூத்த மகன் தன் புத்தகத்தை எடுத்து உரத்துப் படித்துக் கொண்டிருந்தான். 'பதினெட்டாம் பாடம் ‘எலிக்கு மரணம் பூனைக்கு விளையாட்டு' கண்ணம்மா ஒரு பூனையை வளர்த்து வந்தாள் அது.' 'கண்ணா, படிச்சது போதும், போய் நித்திரையக் கொள், மிச்சத்த நாளைக்கு ஸ்கூல்ல படிக்கலாம்"
அவனைத் தடுத்து விட்டேன். அவன் சந்தோஷமாய்ச் சென்றான்.
38 வாழ்தல் என்பது.

மறுநாள் பாடசாலை முடிந்ததும் நேரே என்னிடமே வந்தான். 'அம்மா, அம்மா, பாவமம்மா எலி, அந்தப் பூனை எலிய விட்டு விட்டுப் பிடிச்சுதாமம்மா' 'கண்ணா எலியில்லடா கண்ணா, பூனைதான் பாவம்'
''g 607 ubupit’’ 'அந்தப் பூனையை ஒரு நாய் கடிச்சுதெண்டு நாளைக்கு நீ படிப்பேடா Assessi 600TIT ''
சொல்லிய போது குரல் உடைந்து அழுகை வெடித்தது. நான் அழுததையே பார்த்திராத கண்ணன் மலங்க, மலங்க அதிசயமாய்ப் பார்த்தான். 'அம்மா, ஏனம்மா அழுநீங்கள், ஏனம்மா அழுநீங்கள்?" கலங்கியபடியே கண்ணன் கேட்டுக்கொண்டேயிருந்தான். கொஞ்ச நேரம் வரை நான் அழுது கொண்டேயிருந்தேன். எனக்குத் தெரியும் இந்த நனைதலும் கால வெப்பத்தில் காயுமென்று! 'ஏலும் உனக்கு ஏலும் சுபா, காலம் மாத்தும், உன்னைப் பழமைக்குத் திருப்பும், ஏலும் உனக்கு ஏலும், காலம் உன்னை மாத்தும், உனக்கு ஏலும், காலம் மாத்தும், ஏலும்' அவன் திரும்பத் திரும்ப சொன்னவைகளை சொன்னபடியே மயங்கிப் போனான். நான் அவனை நினைத்து வியந்துகொண்டே அம்மாவைப் பார்த்துக் குறுகியதை நினைத்து இப்போது எனக்காகவே குறுகி நின்றேன். 'நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்' என்ற உண்மையின் நெஞ்சில் முகம் புதைத்து என்னைத் தேற்றிக் கொண்டேன். ஊஞ்சலை இழந்த வேப்பமரம் மட்டும் மெதுவாய் அழுது கொண்டிருந்தது.
வாழ்தல் என்பது. 39

Page 27
செவ்வந்தி
மோசம். கொஞ்சமும் இரக்கமில்ல. இண்டைக்கு முழுக்க வீட்டுக்குள் ளேயே இருக்க வச்சுப் போட்டா, எவ்வளவு நேரத்துக்குத்தான் நான் னிய இப்பிடி முழிசி முழிசி இருக்கிற, அந்தக் குருட்டுக் கண் ாக்கை இதோடை ஏழெட்டுத்தரம் முருங்க மரத்துக்கு வந்து வந்து பாயிற்று. அவவத்தான் இன்னமும் ாணல்ல. இன்னா வருவாவு
அன்னா வருவாவு எண்டு பார்த்துப்
ார்த்தே என்ட பாடு போச்சு, எங்க
போனாவோ தெரியா, சேந்தன் கூட இதோட மூண்டு தரம வந்து கூப்பிட்டுப் பாத்துப் போயிற்றான். இண்டைக்கு அவனோட விளையா
ப் போகயில்லயெண்டு அவனுக்கு
சரியான கோபம்,
கடைசியாய் போகக்குள்ள 'இனி
| மேல் உன்னக் கூப்பிட | வரமாட்டண்டி, சத்தியமாய் வரமாட் டண்டி' எண்டு சொல்லிப் போட்டுத் தான் போனவன். அவன் திரும்பி யும் வருவான். எனக்கு நல்லாத் தெரியும் அவன் திரும்பியும் வரு வான். பாவம் சேந்தன். இண்டை க்கு மீன் பட்டம் விடுற எண்டு சொல்லி என்ன ஆசயா காசு சேத்து
ட்டுக் கடதாசி வேண்டி வச்சிருந் தவன். காசு சேக்கிறதுக்கெண்டு
சாமான்ட விலையைக் கூடச்
சொல்லி அவங்கட அம்மாட்ட அடியும் வாங்கியிருக்கான். அதுக்
கிடையில நேற்றுக் கருக்கலுக்குள்ள எனக்கு அப்பிடி நடந்து போச்சு,
4O
வாழ்தல் என்பது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவனுக்கு இதுகளப்பத்தி ஒண்டும் தெரியாதாக்கும். ஆக்களெல்லாம் வந்து என்ட தலையில் தண்ணி ஊத்தி குரவ போட்ட சத்தமும் கேக்கல்ல யாக்கும். இல்லாட்டி ராவு வீட்ட வந்திருப்பான். வந்திருந்தா ரெண்டு மூண்டு வாழைப்பழம் எண்ட்ாலும் குடுத்திருப்பன். நேற்றுக் கருக்கலுக்குள்ள எங்க போனானோ தெரியா, இண்டைக்கு நான் அவனோட விளையாடப் போவன் எண்டு போட்டு விடியத்தோடயே பட்டுக் கடதாசியோட வந்திட்டன். முகத்தத் தொங்கப் போட்டுக்கொண்டு அவன் போனதைப் பாக்கிற நேரம் பாவமா இருந்திச்சி.
ஆனா அதுக்கு நான் என்ன செய்யிற?
இனிமே ஒரு பெடியனுகளோடையும் கதைக்கக் கூடா, விளையாடக் கூடா எண்டு அம்மா சொல்லிப் போட்டா,
அப்பிடி நான் கதைச்சா ராவல படுக்கக்குள்ள மோகினிப் பிசாசு வந்து கனவுல பயமுறுத்துமாம். எனக்கு அம்மாவுக்கும் அவ்வளவு பயமில்ல, இந்தப் பேய் பிசாசுகளுக்கு சரியான பயம். இல்லாட்டில் இன்னேரம் நான் சேந்தனோட சேந்து பட்டம் விட்டுக் கொண்டிருப்பன். சே சனியன் பிடிச்சது என்னத்துக்கு நேத்து அப்பிடி நடந்திச்சோ தெரியா, அது நடந்த பிறகுதானே அம்மா என்ன இப்பிடிப் பூட்டி வச்சிருக்கா, முதலெல்லாம் அம்மா இப்பிடி கடுமையா என்ன விளையாடப் போக வேணாம் எண்டு சொல்லயில்ல.
இப்ப எப்பிடி அவனோட விளையாடப் போறது? அம்மா வந்தோண கேக்கோணும் 'எத்தினை நாளைக்கம்மா மோகினிப் பிசாசு பயமுறுத்தும்' எண்டு. ஆ. அந்தா படலை திறக்கிற சத்தம் கேக்குது. அம்மா தான் வாறாவாக்கும். இல்ல சேந்தனோ தெரியா, இல்ல அம்மாதான். பாவம் அம்மாட முகமெல்லாம் வேர்த்திருக்கு. அப்பா செத்துப் போன பிறகு அம்மாக்கு சரியான கரச்சல், கூப்பன் கடைக்கு போறதெண்டாலும், சந்தைக்குப் போறதெண்டாலும் அம்மாதான் போகோணும். வெங்காயம், கொச்சிக்காய் வாங்கிறதெண்டால் பக்கத்தில செல்லையாட கடைக்கு நான் போய் வருவன். இப்ப அங்கயும் போகக் கூடாதெண்டு அம்மா சொல்லிப் போட்டா. இனி அதுக்கும் அம்மாதான் போவாவாக்கும். பாவம் அம்மா, அப்பா செத்த பிறகு சரியா கரச்சல், நாசமாய் போனவங்கள் அப்பாவச் சுட்டுப் போட்டாங்கள். அப்பா இருந்திருந்தா இன்னேரம் அப்பாட்டக் கெஞ்சி கூத்தாடியெண்டாலும் சேந்தனோட
வாழ்தல் என்பது. 41

Page 28
விளையாடப் போயிருப்பன், மோகினிப் பிசாசுக்கும் எனக்குப் பயம் வந்திருக்காது. அப்பாக்குக் கிட்டப்படுக்கக்குள்ள மோகினிப் பிசாசென்ன கொள்ளியாப் பிசாசு வந்தாலும் பயமில்ல. கனக்க என்னத்துக்கு கரையாக்கன் பேயெண்டாலும் பயமில்ல. அப்பாவோட கோரக்களப்பாத்துக்கு றால் பிடிக்கப் போற நேரம் எல்லாரும் என்னட்டச் சொல்றவங்கள், றால்தின்ன கரையாக்கன் பேய் வருமாம் எண்டு. வீசி வீசிக் கூடைக்குள்ள போட்டாலும் சிலநேரம் றாலெல்லாம் மாயமா மறைஞ்சிடுமாம், அது முழுக்க கரையாக்கன்ர வேலை தானாம் எண்டு எனக்குப் பயம் காட்டுவாங்கள். இப்பிடிக் கணக்கப் பேருக்கு நடந்திருக்காம் எண்டு சொல்லுவாங்கள். ஆனா எனக்கு அப்பாவோட இருக்கக்குள்ள கொஞ்சமும் பயம் வாறயில்ல. நான் இந்தக் கதைகள் ஒண்டையும் கேளாமல் போறனான். அப்பாவோட வீசப் போறதுக்கு எனக்கு நல்ல விருப்பம். ஏனெண்டால் பக்கத்துத் துறைக்கு சேந்தன் அவன்ட அப்பாவோட வாறவன். பகல்ல விளையாடினது காணாதெண்டு ராவிலயும் நல்ல விளையாட்டு. வீசித்திருக்கக்குள்ள அவங்கட அப்பா சுருட்டுப் பத்த சோமண்ணன்ட வாடிக்குப் போனாரெண்டால் சேந்தன் எங்கட துறைக்கு வந்திருவான். அவன் தனியா இருக்கக்குள்ள கரையாக்கன் பேய் வந்திருமோ எண்டு ւմu/ւb.
அப்பா வலைய உதறிக் கூட்டுக்குள்ள றாலெல்லாம் போட்டுப் போட்டு, பாடெடுத்து திரும்பியும வீசப் போகக்குள்ளநாங்களும் பின்னால போய் கையக் கோத்துக் கொண்டு கரையில நிப்பம், ஆத்துக்குள்ள கம்பு நாட்டி அப்பா கொளுத்தி வச்சிருக்கிற லாம்புக் கடியில கெளுத்திக் குஞ்சுகள் கூட்டம் கூட்டமா வந்து வாயத்திறக்கும். "சேந்தா நல்லாப் பாருடா உன்னப் போல அதுகளுக்கும் பெரிய தல' எண்டு சொல்லுவன், கொஞ்ச நேரத்துக்கு என்னோட பேசமாட்டான். அப்பா ஆத்துக்குள்ள வலைய எறிஞ்ச சத்தம் கேட்டாலே அவனுக்குக் கோபமும் முடியும். வலைய எறிஞ்ச உடன றால் தெறிக்கிற சத்தம் எல்லாப் பக்கமும் கேக்கும். நாங்க ஓடி ஓடிப் போய் எல்லாப் பக்கமும் பாப்பம்.
சிலநேரம் பெரிய மீன் என்னெண்டாலும் மாட்டிச்சு தெண்டால் 'சளக் புளக்' எண்டு தண்ணி அடிக்கிற சத்தம் கேக்கும்.
42 வாழ்தல் என்பது.

பிறகு நாங்க பாத்துக் கொண்டிருக்கக்குள்ளேயே வலையைப் பிச்சுக் கொண்டு பாயும். அதிலயும் கயல் மீன் எண்டால் குறஞ்சது அப்பாட உயரத்துக்குப் பாயும். அது பாயுறதப் பாக்கக் குடுத்து வச்சிருக்கோணும். அவ்வளவு வடிவு. லாம்பு வெளிச்சத்தில் பாக்கக்குள்ள இன்னமும் வடிவு. றால் வலய வச்சிக் கொண்டு இந்தப் பெரிய மீனுகளப் பிடிக்கேலாது. அதுக்கு வேற வலையிருக்கும். கொடுவா மீன் எண்டால் அதயும் பிச்சுக் கொண்டு பாஞ்சிரும். அதப் பிடிக்கிறது கடும் கஷ்டம், ஆத்துக்குள்ள இறங்கி 'கட்ட வேணும். கொடுவாய்ப் பிடிக்கிற ஆக்களத்தான் நல்ல வீச்சுக்காரர் எண்டு சொல்லுவாங்க. அப்பாட வலைக்குள்ளறாலும் கெளுத்திசள்ளல், செல்வன் மாதிரிசின்ன மீனுகளும் தான் வரும். மட்டை றால் பட்டுதெண்டா, அது வால அடிக்கிற சத்தத்தைக் கேட்டே அப்பா சொல்லுவாரு கொம்பன் ஒண்டு கொளுவியிருக்குதெண்டு. இதச் சொல்லக்குள்ள அப்பாக்கு சந்தோஷம் வரும். மட்டை றால் விலை கூடினது. முப்பது நாப்பது வெள்ளை றால்ர காசு. அப்பா குனிஞ்சு, குனிஞ்சு, கள்ளன் பதுங்கிறமாதிரி வலையக் கூட்டி எடுக்கிறதப் பாக்கிற நேரம் எங்களுக்குச் சிரிப்பு சிரிப்பா வரும். ஆனாச் சிரிக்கமாட்டம். வலையக் கூட்டக்குள்ள சத்தம் போடக்கூடா எண்டு அப்பா சொல்லியிருக்காரு. சத்தம் கேட்டா பெரிய மீனுகள் பாஞ்சிருமாம். அப்பா பதுங்கிறதப் பாத்துப் போட்டு சேந்தன் என்ட காதுக்குள்ள சொல்லுவான். 'டியேய் உங்கட அப்பா நல்லாக் களவெடுப்பாருடி' எண்டு. உடன அவன்ட இடுப்பில ஒரு கிள்ளு. அடிக்கிறதுக்கு ஓடி வருவான். அவன் ஓடி வாறதப் பாத்தா ஆருக்கெண்டாலும் சிரிப்புதான் வரும், வழுகிற காச்சட்டய இழுத்துப் பிடிச்சுக்கொண்டு ஓடி வருவான். அது குண்டிப் பக்கம் வழுக்கிக் கொண்டு போகும். சேந்தன்ட காச்சட்டையில் ஒரு பொத்தானும் இருக்கா, ரெண்டு பக்கமும் பிடிச்சி இழுத்து முடிஞ்சி வச்சிருப்பான். காத்துப் போறதுக்கோ தெரியா பின்பக்கத்தில அஞ்சாறு ஒட்ட, ஒருநாள் இப்பிடித்தான் என்னத் துரத்திக் கொண்டு வரக்கொள்ள ஆள்ரகாச்சட்ட கழண்டு டக்கெண்டு முழங்காலுக்குக் கிட்ட வந்திட்டுது. 'கூய்ரா, கூய்ரா' எண்டு நான் கூய்ராப் போட்டதால அடுத்த ரெண்டு நாளும் ஆள் என்னப் பாக்கயும் இல்ல. சேந்தன் அடிக்க ஓடி வந்தாநான் வலிப்புக் காட்டிப் போட்டு கூட்டுக்கிட்ட இருக்கிற லாம்புக்குப் பக்கத்தில வந்து அப்பாவோட ஒட்டினமாதிரிநிப்பன். அப்பா வலைய உதறுவாரு எங்கட முகத்தில எல்லாம் ஆத்துத்தண்ணி தெறிக்கும். அது சரியாக்
V
வாழ்தல் என்பது. 43

Page 29
கடிக்கும். வலையிலிருந்து ஒவ்வொண்டா றால் கூட்டுக்குள்ள விழும். கெளுத்தி மீனுகள் மட்டும் வலைக் கண்ணில மாட்டிக் கொண்டு தொங்கும். வலையோட வச்சே அதுகள்ர முள்ள முறிச்சுப் போட்டு கழட்டிச் சட்டுக்குள்ள போடுவாரு. கெளுத்திமுள் குத்தினா கடும் விஷம். அதால அப்பா அதுக்கெண்டே தனியா ஒரு சட்டி வச்சிருப்பாரு. எங்க ரெண்டு பேரையும் அதத்தொட விடமாட்டாரு. கடைசியா அளிக்குள்ள கிடக்கிற மீனுகளக் கழட்டி விடுவாரு நண்டுக் குஞ்சுகளும் சேந்து விழும். நண்டுக் குஞ்சுகள் நடந்து கூட்ட்யும் விட்டு வெளிலவரப்பாக்கும். அதப் பிடிச்சு கூட்டுக்குள்ள போடச் சொல்லி சேந்தன் கெஞ்சுவான். அவனுக்கு நண்டெண்டாலும் சரியான பயம். பேய் நண்டெண்டால் இன்னமும் பயம். எப்பத்தான் இவனுக்கு இந்தப் பயம் தீரப் போகுதோ எண்டு யோசிச்சுப் பாப்பன். இந்தப் பயத்துக்கு என்ணெண்டாலும் செய்ய வேணும் எண்டு யோசின வரும். அதாலதான் ஒருநாள் அந்த வேலையச் செய்த நான். அத இப்ப நினைச்சாலும் சரியான சிரிப்பும் கவலயும். (ஒருநாள் என்ன செய்தனெண்டால்) சேந்தனுக்குத் தெரியாம பின்னால போய் ஒரு சின்னநண்டுக் குஞ்ச அவன்ட சேட்டுக்குள்ள போட்டுத்தன். 'ஆய்' எண்டு அவன் போட்ட கூச்சல்ல பக்கத்துத் துறையள்ள வீசிக் கொண்டிருந்த ஆக்கள் எல்லாம் ஓடி வந்திட்டாங்கள். பிறகு மூணு நாள் சேந்தனுக்குக் கடும் காய்ச்சல், கோயில் ஐயர் வந்து திருநீறு போட்டுத்தான் சுகமாயிருச்சி. விசியத்த கேள்விப்பட்டு வீட்ட எனக்கு நல்ல உரி. அப்பா இல்லாம இருந்திருந்தா அம்மா என்ன அடிச்சே கொண்டிருப்பா, சேந்தன் நல்லவன். அதுக்குப் பிறகும் விளையாட வருவான். பிறகும் ரெண்டு பேரும் ஆத்துக்குப் போவம். கண்ணாப்பத்தைக்குள்ள ஒளிக்கிற மீனுகள அத்தாங்கால பிடிப்பம். அப்பா வீசக்குள்ள ஒரு ஒரமா இருந்து தூண்டில் போடுவம். நண்ட கையால பிடிக்கிறதுக்கும் சேந்தன் கொஞ்சம் கொஞ்சமாய் பழகித்தான் றால் சீஸன் முடிஞ்சா நிலவு காலத்தில் பூக்கனெட்டிய எடுத்துக் கொண்டு நண்டடிக்க கடக்கர நெடுகப் போவம். நண்டடிக்கிறது சரியான முஸ்பாத்தி. அப்பாவும், சேந்தன்ட அப்பாவும் பூக்கெனெட்டியால ஒடித்திரியிற நண்டுகள்ள ஒரு போடு போடுவாங்க, நாங்க ரெண்டு பேரும் பின்னால ஓடி ஒடி நண்டுகளப் புறக்கி
44 வாழ்தல் என்பது.

வேக்குக்குள்ள போடுவம். சேந்தன் நல்லா ஒடி ஒடிப் புறக்குவான். நான் இளைச்சுப் போயிடுவன். பிறகு சேந்தன் என்ட கையையும் சேத்து இழுத்துக் கொண்டு ஒடுவான். வேக்கு நிரம்புறதுக்கு இடயில எப்பிடியும் தோட்டத்துச் சுப்புறிந்தர்ர வங்களாக்குக் கிட்டப் போயிருவம். அங்கால எங்களக் கூட்டிக் கொண்டு போக அப்பாக்கு விருப்பமில்ல. அங்கால ஆக்கள் இருக்கிறதும் இல்ல. வெறும் தென்னந்தோட்டம் தான். அடிச்ச நண்டுகள அம்மா உடன கழுவிப் போட்டு அப்பிடியே போட்டு பால் பொரியல் வெச்சித்தருவா சா, என்ன ருசி. குறுனல்ச் சோறோட அந்த நண்டுக்கறிய சேத்து வாசல்ல நிலவுல சாப்பிடுறது என்ன சந்தோசம், இப்ப அதெல்லாம் இல்லத்துப் போச்சி. அப்பாவச் சுட்டதோட இப்ப ஒருத்தரும் ஆத்துக்கு வீசப்போறயில்ல. ஒருத்தரும் நண்டடிக்கப் போறதுமில்ல. நிலவெண்டாலும் சரி, இருட்டெண்டாலும் சரிசவக்காலைக்கு அங்கால ஒருத்தரும் போறயில்ல. சேந்தன்ட அப்பாவும் இப்ப கடலுக்குத்தான் போறவரு. நேற்றையோட வீட்டில விளையாடிறதும் போச்சி. இனிமே ஒரு நாளும் விளையாட ஏலாதோ தெரியா? அம்மாட்டத்தான் கேக்கோணும் 'இந்தா மகள், இந்த முட்டக் கோப்பியக்குடி' அம்மாநீட்டிறா. எனக்கு அது புதினம் மாதிரி. அப்பா செத்த பிறகு அம்மாஇப்பிடி முட்டக் கோப்பியெல்லாம் தாறதே இல்ல. எப்பெண்டாலும் எனக்கு காய்ச்சல், கீய்ச்சல் எண்டால் தருவா, இப்ப என்னத்துக்குப்தாறா? 'இந்தா மகள், கண்ண மூடிக் கொண்டு மடக் மடக் கெண்டு இதக்குடி பாப்பம்'
வாங்கிக் குடிச்சன், சாடையாக் கச்சுது. முட்டக் கோப்பிக்குள்ள மருந்தும் இருந்ததெண்டு பிறகுதான் சொன்னா, என்னத்துக்கெண்டு கேட்டன், சத்துக்காம் எண்டா, 'அம்மா இண்டைக்கு நான் சேந்தனோட விளையாடப் போகல்லம்மா' 'நல்ல பிள்ள'
'நாளைக்குப் போகலாம்தானே என்னம்மா' 'இஞ்ச பாரு மகள், இனி நீ சின்னப் பிள்ளையில்ல ஒருநாளும் இனி சேந்தனோடயோ வேற பெடியனுகளோடையோ விளையாடப் போகக்கூடா, பள்ளிக்கும் போகத் தேவயில்ல."
வாழ்தல் என்பது. 45

Page 30
அம்மா சொல்லிக் கொண்டிருக்கக்குள்ள படலைச் சத்தம் கேட்டிச்சி. அம்மாக்குத் தெரியாம நைஸா எட்டிப் பாத்தன். சேந்தன். இதோட நாலாம்தரம் வாறான். பின் பக்கமா வரச்சொல்லி கையக் காட்டினன். அம்மா, ஆரெண்டு கேட்டா, 'ஒருத்தரும் இல்லம்மா, காத்துக்குப்படல ஆடிருக்கு' எண்டு சமாளிச்சுப் போட்டன், பிறகு அம்மா குசினிக்குள்ள போனா சேந்தன் யன்னலுக்குப் பக்கத்தில வந்து நிண்டு கொண்டு 'உஸ்'ஸடிச்சான். 'வாடி செவ்வந்தி, நீபட்டம் செய்யயும் தேவையில்லடி சும்மா வந்து நூலைப்பிடிச்சுக் கொண்டு நில்லுடி' 'டேய் போடா, எத்தினதரம் உன்னட்டச் சொல்றது நான் இனி வரமாட்டன் எண்டு ' 'நீ சரியான ஆள்ரி. உனக்காவண்டிதானேடி நான் மோகனோடயும் சாந்தியோடயும் அத்தம் போட்டநான். வாவன்டி' 'எனக்கும் பட்டம் விட விருப்பந்தாண்டா, ஆனா, உன்னோட வந்து விளையாடினா என்னத்தான் மோகினிப் பிசாசு பயமுறுத்துமாம்' 'இல்லடி செவ்வந்தி, அது சும்மா சொல்றவங்கள்ரி, வாவன்டி' 'எனக்கொண்ணாப்பா' 'நீஇண்டைக்கு வராட்டி உனக்குக் கணக்குச் சொல்லித் தரமாட்டன்' 'தேவல்லகா, நான் இனி பள்ளிக்கு வரமாட்டங்கா" 'உன்னக்கூத்துப் பாக்கயும் கூட்டிப் போகமாட்டன்'
'பறவாயில்ல'
"புளியம்பழமும் ஆஞ்சி தரமாட்டன்'
'பறவாயில்ல'
'அப்ப நீவரமாட்டியோ'
f இல்ல
'வரமாட்ட, ஒண்டு'
இல்ல V)
'வரமாட்ட, ரெண்டு'
'இல்ல'
'இன்னும் ஒருக்காத்தான் கூப்பிடுவன்
*
46 வாழ்தல் என்பது.

வரமாட்ட மூ.ண்.டூ" 'இல்ல இல்ல இல்ல' நான் உரத்துக் கத்தினது அம்மாவுக்குக் கேட்டிற்றுப் போல, 'ஆரது' எண்டு கொண்டு வந்தா, யன்னலோராமா சேந்தன் நிக்கிறதக் கண்ட உடன அம்மாக்கு சரியான கோபம் வந்திச்சி. 'டேய் என்னடா அது, பொம்பிளைப் பிள்ள இருக்கிற அறையில வந்து யன்னல் பக்கமாநிண்டு கத. போடா வந்திட்டாரு. அப்பன்காரன் இவள்ர அப்பர இழுத்துக்கொண்டு போய் சாகக்குடுத்துமில்லாம, இப்ப மகன் வந்திற்றாரு' ہنيو சேந்தன்ட முகம் சுருண்டு போச்சி. குளறாத மட்டு குனிஞ்சு கொண்டு போனான். பாக்கப் பாக்க பாவமா இருந்திச்சி. மனசுக்குள்ள அம்மாவ நல்லாத்திட்டினன். சேந்தன்ட அப்பா எங்கட அப்பாவ வேணுமெண்டோ கூட்டிக் கொண்டு போனவரெண்டு யோசிச்சன், அண்டைக்கு ஆத்துக்கு வீசப் போகக்கூடா எண்டு ஊரில ஜீப்பில பீக்கர் கட்டி அவங்க சொன்னது தெரிய முதல் லயே அப்பாவும், சேந்தன்ட அப்பாவும் வீசப் போயித்தாங்கள். அடுத்த நாள் எங்களுக்கு கணக்குச் சோதின இருந்ததால நாங்க போகயில்ல. அவங்க ஒரே இப்பிடித்தான் கொஞ்சம் நேரத்தோடதான் போவாங்க,
பரமன்ட கள்ளுக் கொட்டில்ல கொஞ்சம் சுணங்க வேணுமே. போனவங்கள் இருட்டுக்குள்ளதிரும்பிவரக்கொள்ள சவக்காலையடியில வச்சி வெடிச்சத்தம் கேட்டிச்சுதாம். 'ஐயோ' எண்டு கொண்டு அப்பா விழுந்தாராம், பிறகு எழும்பவேயில்லயாம். அடுத்த நாள் அப்பாட நெஞ்சுப் பக்கத்த ஒரு வெள்ளத் துணியால மூடிக்கொண்டு வந்து கிடத்தினாங்கள். அதுக்குப் பிறகு கொஞ்சநாள் ஒரே குளறுவன். அன்னேரம் சேந்தன்தான் வந்து 'குளறாதடி செவந்தி, வாடி விளையாடுவம்' எண்டு என்ட கண்ணத் துடச்சுப் போட்டுக் கூட்டிப் போவான்.
* * * அம்மா ஏசினதுக்குப் பிறகு சேந்தன் எங்கட வீட்டுப் பக்கமே வாறயில்ல. இங்கால அவ்வளவாப் பாக்கிறதும் இல்ல.
வாழ்தல் என்பது. 47

Page 31
என்னோடயும் கோபிச்சுத்தானோ எண்டு எனக்குச் சரியான கவல. கிணத்தடியில குளிக்கக்குள்ள 'வேலிக்கு மேலாலமச்சான் வெள்ளமுகம் தெரிவதெப்போ' எண்டு சாடமாடயாய் அவனுக்கு விளங்கட்டும் எண்டு கொஞ்சம் உரத்துப் படிப்பன். திரும்பிப் பாப்பான், பிறகு டக்கென ஒரு முறச்ச பார்வ. இதப் பாத்துப் போட்டு அம்மா என்னோட சேந்து கிணத்துக்குத் தட்டி வேலி கட்டிப் போட்டா, அப்பிடி இருந்தும் சேந்தனப் பாக்கவேணும் எண்டிற துடிப்பு மட்டும் எனக்குப் போகயில்ல. சேந்தனில டிக்கெண்டு ஒரு வளத்தி தெரிஞ்சிது. மீசையும் முளைக்கத் தொடங்கிற்றுது. இப்ப அவன் ஒரு விளையாட்டும் விளையாடுற மாதிரியும் காணல்ல. விளையாட்டெல்லாம மறந்து போச்சோ தெரியா, என்னேரமும் கையில புத்தகம் தான் இருக்கும். பாவம் சேந்தன். அவங்கட அப்பாவும் கொஞ்ச நாள்ல இல்லத்துப் போயித்தாரு, அது, கடல்ல பெரிய மீனுகள் பிடிக்கிற சீஸன், பெரிய மீனுகளப் பிடிக்க வேணும் எண்டால் கணக்கத் தூரம் போக வேணும்.
அண்டைக்கு கடும் காத்து. அதால சேந்தன்ட அப்பாவங்கட தோணிப்பாயில நல்லாக் காத்துப் பிடிச்சி எங்கயோ கொண்டு போச்சுதாம்.
மற்றாக்கள் தோணியில இருக்கிற பாய்க்கயித்த டக்கெண்டு வெட்டிப்போட்டு தண்டடிச்சு வந்திற்றாங்கள். -- சேந்தன்ர அப்பாட தோணியில மூணுபேரும் நித்திரையோ தெரியாதாம். ரெண்டு மூணு நாள் கடக்கர நெடுக இந்த இடப்பட்ட இடமெல்லாம் தேடிப் பாத்தாங்கள், தோணி அடஞ்சி கிடக்குதோ எண்டு. இல்ல. ஒரிடமும் தோணியில்ல. பிறகுதான் அவங்க உயிரோட இருப்பாங்களோ எண்டு சந்தேகம் வந்திச்சி. ஆரோ, கோளாவிலுக்குப் போய் குறிபாக்கிறவரக் கூட்டி வந்தாங்கள். அவரு வந்து ஒரு சட்டியில தண்ணி கொஞ்சம் எடுத்து வாய்க்குள்ள முணுமுணுத்தாரு பிறகு மூணு செவ்வரத்தம் பூவ தண்ணிக்குள்ள போட்டாரு. எல்லாரயும் கொஞ்ச நேரத்தில வரச் சொன்னாரு போய்ப் பாத்தம், பூ வாடிக்கிடந்திச்சு, 'அவங்களுக்கு அமைப்பில்ல போல கிடக்கு' எண்டாரு. சேந்தன்ர
48 வாழ்தல் என்பது.

அம்மாவும் மற்ற ரெண்டு பேர்ர பொஞ்சாதிமாரும் ஓவெண்டு கத்தினாங்கள். சேந்தன்ட வீட்ட பெரிய கூட்டமே கூடிச்சி. என்னயும் கூட்டிக்கொண்டு அம்மாவும் போனா, சேந்தனப் பாத்தன். அவன் அந்த அலரி மரத்துக்குக் கீழ நிண்டுகொண்டு விம்மி விம்மிக் குளறிக் கொண்டிருந்தான். ஆக்கள் எல்லாம் அவனத்தான் பாத்தாங்கள். அங்கால வீட்டுக்குள்ள சேந்தன்ட அக்காவயும் தங்கச்சியயும் கட்டிப்பிடிச்சுக் கொண்டு சேந்தன்ட அம்மா சத்தமாக்குளறிக் கொண்டிருந்தா, வெளியில சேந்தன்ட அத்தான் ஆக்களுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தாரு நல்ல வெறி எண்டு பாக்கக்குள்ளேயே தெரிஞ்சிது. நான் திரும்பியம் ஒருக்கா சேந்தனப் பாத்தன். அவன் இன்னமும் விம்மிக் கொண்டிருந்தான. இடைக்கிட கடக் கண்ணால என்னயும் பாக்கிற மாதிரி இருந்திச்சி எனக்கெண்டால் அவன்ட கண்ணத் துடச்சுப் போட்டு குளறாச!. சேந்தன்' எண்டு சொல்ல வேணும் போல கிடந்திச்சி. அம்மா என்னத்தான் பாத்துக் கொண்டிருந்தாவோ தெரியா, பீ' போகட்டாம் எண்டு கண்ணக்காட்டினா, நான் எழும்பித்தன். சேந்தனப் பாத்தன், அவன் இப்பயும் குளறி " மாதிரியே என்னயும் இடக்கிட பாத்தான். போயித்து வாறன் எண்டு கண்ணால சொல்லிப் போட்டு வந்திற்றன்" அதுக்குப் பிறகு கொஞ்சநாள் அவன வெளியில காணுறதே கஸ்டமா இருந்திச்சி. பிறகு கொஞ்சக் காலத்தில ஏ.எல் படிக்கயாம் எண்டு ஊரவிட்டுப் போனான். கத்தோலிக்க பாதர் அவன்ட கெட்டித்தனத்தப் பாத்துப்போட்டு கூட்டிக் கொண்டு படிக்க வச்சாராம். ஒரு ரெண்டு ரெண்டரை வருஷத்தால திரும்பி வந்தான். நல்ல நெடுவல். முடியெல்லாம் சுருண்டு, மீசையெல்லாம் கரும் கருமெண்டு வளந்து பாக்கிறதுக்கு நடிகன் மாதிரி. சின்னப்பிள்ளையாய் இருக்கக்குள்ள என்னேரமும் மூக்கில சளி ஒழுகிற மாதிரி இப்ப ஒண்டும் இல்ல. கொஞ்சமெண்டாலும் அவனோட கதைக்க வேணும் எண்டு எனக்குச் சரியான ஆச. பழயபடி 'வேலிக்கு மேலால மச்சான் வெள்ளமுகம் தெரிவதெப்போ' படிக்கத் தொடங்கித்தன்.
பாட்டுச் சத்தம் கேட்டாதிரும்பிப் பாப்பான்,
வாழ்தல் என்பது. 49

Page 32
சிரிச்சமாதிரியே மெல்லமாநடந்து வருவான். நான் ஒண்டும் கதையாம வீட்டுக்குள்ள ஓடிருவன். 'ஏமாற்றாதே. ஏமாறாதே. ஏமாற்றாதே, ஏமாறாதே' எண்டு வேலிப்பக்கம் பாட்டுக் கேக்கும். எனக்கு நல்ல சந்தோசம். சேந்தனுக்கு இப்ப என்னோட ஒரு கோபமும் இல்ல எண்டு தெரிஞ்சி போச்சி. ஆள்மாறி ஆள் பாட்டுப் படிக்கிறது கொஞ்சக் காலத்துக்த் தொடந்திச்சி. ஏன் எனக்கு சேந்தனோட கதைக்க ஏலாமல் கிடக்கெண்டு யோசிச்சுப் பாத்தன். இதத்தான் வெக்கம் எண்டு சொல்றாங்களோ? ஆருட்டக் கேக்கலாம்?
அம்மாட்டக் கேக்கலாமோ? ச்சீ வேணாம். அம்மாக்கு சேந்தன்ட பேரச் சொன்னாலே கோபம் வரும், வாசல்ல கூப்பிட்டு, என்ர தலைய விரிச்சுப் பேன் பாக்கக்குள்ள ஒரே சொல்றவ சேந்தன்ட வீட்டுப் பக்கம் பாக்கக்கூடா எண்டு. இதால தான் அம்மாட்டப் பேன் பாக்கப் போகயும் எனக்கு விருப்பமில்ல. ஆனா என்ன செய்யிற? வேற ஆருட்டத் தலையை குடுக்கிற? நான்தான் தனிய வந்து பிறந்திருக்கனே. அதுகும் இந்த முடியும் முசுமுசுவெண்டு வளந்து ஒரே பேன்கடி. சின்னப்பிள்ளையா இருக்கக்குள்ள இருந்த மாதிரி கிப்பியும் இல்ல. முடியில மட்டுமில்ல உடம்பிலயும் இப்ப ஒரு வித்தியாசம் தெரியுதுதான். உடம்பில மட்டுமென்ன பழக்கங்களிலயும்தான். இல்லாட்டி சேந்தனோட கதைக்கிறதுக்கும் எனக்கு வெக்கம் வருமோ? மூணாம் வகுப்புப் படிக்கக்குள்ள, 'டேய் சேந்தா என்ன நீகலியாணம் முடிப்பியாடா' எண்டு எத்தினதரம் கேட்டிருப்பன்,
இப்ப கொஞ்சமும் கதைக்க ஏலாமல் கிடக்கு. அவனெண்டாலும் கூப்பிட்டுக் கதைக்கலாம் தானே. இப்ப அவருக்கு கொஞ்சம் திமிரு. இவரு பெரிய படிப் பெல்லாம் படிச்சித்தாரெண்டு திமிரு. இரிக்காதோ பின்ன? ஏ.எல் நல்லாப் பாஸ் பண்ணிப் போட்டானாம், எண்டு ஊரே அவனத் தலையில வச்சிக்
கொண்டாடுது.
5O வாழ்தல் என்பது.

ஊரில இருந்து முதன் முதலா அவன்தான் கெம்பசிக்குப் போகப் போறானாம் எண்டு அண்டைக்கு கோயில் பீக்கரிலேயே சொன்னவங்க,
அதுகுமில்லாம ஊரில ரியூட்டரி போட்டுப் பிள்ளையஞக்குப் படிப்பிக்கிறானாம் எண்டு ஊராக்கள் எல்லாம் அவனக் கண்டா கடும் மரியாதையாம். இனியென்ன, அவரு பெரிய ஆள், கனக்க சம்பளம் எடுக்கிற ஆள். அடுத்த மாசத்தோடதிரும்பியும் ஊரவிட்டுப் போய் கொழும்பு வாழ்க்க. அடுத்த மாசம் சேந்தன் போகப் போறானாம் எண்டு அம்மா சொன்னதக் கேட்டது தொடக்கம் எனக்கு சரியான கவல. போறதிக்கிடயில எப்பிடியும் ஒருக்கா அவனோட கதைக்கோணும்.
* 好 好 ஆ.இண்டைக்குத்தானே சேந்தன் போறவன் எண்டவங்கள். வஸ் பின்னேரமோ காலமயோ தெரியா, வழமயாக் கொழும்புக்குப் போற சிதம்பரம் மாமா பின்னேரமாத்தான் இதால போறவரு. அப்ப பின்னேரமாத்தான் இருக்கோணும்.
ஆ.இந்தா சேந்தன்ட கிணத்தடியில தண்ணி அள்ளுற சத்தம் கேக்குது. சேந்தனோ தெரியா? இப்பவே கதைச்சுப் போடுவம். பிறகு பின்னேரம் கதைக்க ஏலா கட்டாயம் ஆக்கள் வந்திருப்பாங்க.
ஓம், சேந்தன் தான்.
'உஷ் ,یبون26‘‘ திரும்பிப் பாக்கிறான். என்ன செய்வம்? கூப்பிடுவமோ? ஒடுவமோ?
சீ ஓடக்கூடா, ஓடினால் இனிமேல் கதைக்கேலா, அப்ப கூப்பிடுவம். வேலிக்கு மேலால தலைய மெல்லமா நீட்டி கையால கூப்பிடுறன்.
வாறான். இப்ப என்னத்தக் கதைக்கிற, முகத்தப் பாக்கயும் வெக்கமா இரிக்கி. முகத்த வேலியோட சேத்து மறைக்கிறன். என்னத்தக் கதைக்கிற? என்ன கதைக்க வேணும் எண்டு நினைச்சதும் ஞாபகம் வருகுதில்ல.
மூணாம் வகுப்பெண்டாலும் பறவாயில்ல ஆசய அப்பிடியே சொல்லிப் போடலாம்.
இப்ப என்ன சொல்றது? 'கொழும்புக்குப் போய் ஊராக்கல மறந்திராதீங்கோ'
வாழ்தல் என்பது. 51

Page 33
ஒருமாதிரிச் சொல்லிப் போட்டு வீட்டுக்குள்ள ஒடிப் போறன், எப்ப எண்ட கத இப்பிடி மாறிச்சிதெண்டு எனக்கே புதினம் போல, சேந்தன் இன்னமும் வேலியோரத்தில் நிக்கிறானோ தெரியா, ஆ, இந்தா சேந்தன் கொழும்புக்கு போற நேரமும் வந்திற்று. எவ்வளவு சனம், வீட்டயே இவ்வளவு பேரெண்டால் சந்திக்கு எவ்வளவு பேர் வருவாங்களோ தெரியா, சேந்தன் வேக்கத் தூக்கிறான். அவன்ட அம்மாவும் அக்காவும் கண் கலங்கினமாதிரிநிக்காங்க. சிங்கன் சேந்தன்ட காலநக்குது. அதுகும் இப்ப மெலிஞ்சி மேலெல்லாம் புண் விழுந்து நோஞ்சனாப் போயிற்று. அன்னேரம் தளுக்குப் புளுக்கெண்டு என்ன வடிவு. சேந்தன்ட விரலப் பிடிச்சுக் கொண்டு சின்னவளும் போறாள். எங்க மட்டும் போவாளோ? அத்தான்காரனுக்கு இப்பயும் நல்ல வெறி போல. அவருக்கெப்பத்தான் வெறியில்ல. சேந்தன் எங்கட வேலிப்பக்கமாதிரும்பிப் பாக்கிறான். நான் டக்கெண்டு தலையக் குனிஞ்சு கொண்டு இடுக்கால பாக்கிறன். வேலியப் பாத்த மாதிரியே சேந்தன் போறான். எனக்குக் கண்ணில தண்ணிதண்ணியா வருது. சின்னப்பிள்ளையாய் இருக்கக்குள்ளநடந்ததெல்லாம் ஞாபகம் வருகுது. சேந்தன்ட சட்டைக்குள்ள நண்டுக்குஞ்சு போட்டது. காச்சட்ட உரிஞ்சி அவன் அம்மணக் குண்டியா நிண்டது. ஒருதரம் பள்ளியால டூர் போன இடத்தில என்ட புட்டுப் பார்சல களவெடுத்து சாப்பிட்டது. இன்னொருக்கா அவன் என்ட சட்டைக்கு மையடிச்சதால அவனோட ரெண்டு நாள் அத்தம் போட அப்பாட்ட வந்து குளறிச் சொல்லி என்னப் பேசச் சொன்னது. எனக்கு அம்மாள் வந்த ஏழுநாளும் அவனும் பள்ளிக்குப் போகம என்னோடயே கட்டிலுக்குப் பக்கத்தில இருந்தது. அழகு துரையப்பச்சிர வளவுக்குள்ள மாங்காய் களவெடுக்கப் போய் அவரு அவனக் கட்டிப் போடப்பிடிக்க அவர்ர கையில மூத்திரத்தப் பேஞ்சி போட்டு அவன் ஓடி வந்தது. எனக்கு புளியம்பழம் ஆஞ்சி தர மரத்திலேறி சறுக்கி விழுந்து படுக்கைல கிடந்தது. ரெண்டு பேரும் சேந்து வண்ணத்துப் பூச்சி பிடித்தது. வாகை மரத்தில பொன்னி வண்டு பிடிச்சது.
52 வாழ்தல் என்பது.

பிறகு எனக்கு அது நடந்த உடன அம்மாவால நாங்க ரெண்டு பேரும் பேசாமவிட்டது. எல்லாம் ஞாபகம் வருகுது. ச்சே, எனக்கு அது நடக்காமல் இருந்திருந்தால் இன்னேரம் சேந்தன்ட மற்றக்கைவிரலப் பிடிச்சுக் கொண்டு என்ன வடிவா சந்திக்கு மட்டும் போய் அவனுக்கு ரட்டா சொல்லியிருப்பன். ச்சே, பாழாப் போனது வந்ததாலதான் எல்லாம். 'வேலியால புதினம் பார்த்தது ப்ோதும், வா, வந்து அரிசரிச்சி உலையில் போடு'
好 好 每
காதைத் திருகிக் கொண்டு பின்னால் செவ்வந்தியின் அம்மா நிற்கிறாள். அவள் அரிசரிக்கப் போகிறாள். மேற்கில் செவ்வானத்தில் அந்திச்சூரியன் இறங்கிக் கொண்டிருக்கிறது.அது நாளையும் கிழக்குப் பக்கமாய் வரும். வந்து இவள் குளிக்கும் போது இவள் மேனியைத் திருட்டுத் தனமாகத் தொடும், இவள் பூசும் மஞ்சளை உலர வைக்கும். கிழக்கில் மங்கலாய் நிலவு தெரிகிறது. அது இரவை எதிர்பார்த்து தவிக்கிறது போல.
வாழ்தல் என்பது. 53

Page 34
இனியும்
ஒரு சாவு
54
6 6
னி செத்திட வேண்டியது தான்'
யோசித்து யோசித்து கடைசியில் இந்தத் தீர்மானத்திற்குத்தான் வந்துவிட்டேன். வாழ்க்கை சலித்து விட்டது. எதுவும் பிடிப்பில்லாமல் எதன் மீதும் அக்கறை இல்லாமல் எல்லாவற்றிலும் ஒரு வெறுமை கலந்த வாழ்க்கை சலித்துவிட்டது. எத்தனை வேளைச் சாப்பாடுகள் சாப்பிடாதது தெரியாமலே நழுவிப் போயிருக்கிறது.
மாலை நான்கு மணிவரைக்கும் ஆங்கிலப்படம் பார்ப்பது போல் லெக்சரில் ஒன்றும் புரியாத இருக்கை, பிறகு ஐந்தரை மணிக்கு ஆமர்வீதியில் இருக்க வேண்டிய அவசரத்தில் அகப்படும் வாகனத் தில் ஓடி ஒரு மந்தித் தாவல்.
கடைசிப் பீரியட் எப்போது முடிப் பார், பிறக்ரிக்கல் எப்போது முடியும் என்பதிலேயே கரையும் முழு
நாளின் கவனம்.
வரவுப் பதிவேட்டில் பெயர் குறித்துக் கொள்ளாத விரிவுரை யாளர்களின் முகங்களை ஒரே ஒரு தரம் தான் பார்த்ததாய் ஞாபகம் - அவர்களின் முதலாவது லெக்சரில் மட்டும்.
யார் யாரெல்லாம் வரவைப் பற்றி அக கறை ப பட வில்  ைல யோ அவர்களின் பாடத்தைப் பற்றியே
அக்கறை இல்லாமல் போய்விட்டது.
வாழ்தல் என்பது.
 
 
 

லெக்சர் றுமுக்குள் நுழைந்தால் எல்லோரின் முகத்திலும் ஒரு கேலிச்சிரிப்பு. கொஞ்சம் கேலித்தனம் கூடியவர்கள் "ஹலோ சேந்தன், என்ன இங்காலப் பக்கம்' கேட்கிறார்கள். அதை மட்டும் தான் கேட்பார்கள். அதைவிட இன்னும் கொஞ்சம் நெருங்கி 'ஏன் லெக்சருக்கு ஒழுங்கா வாறயில்ல' என்று கேட்கத் தோன்றாது. அவர்களுக்கிருக்கும் புத்தகச்சுமையில் என்னைப் பற்றியெல்லாம் சிந்திக்க நேரம் இருக்குமோ என்னவோ? அவர்கள் கேட்டாலும் என் பிரச்சினைகள் தீர்ந்துவிடப் போகுதா என்ன?
"கடனுக்கு வட்டி ஏறிக்கொண்டு போகுது. ஏலுமெண்டால் ஒரு ஆயிரம் ரூபாய் அனுப்பு' அம்மாவின் கடிதம் முடியும் போது இப்படித்தான் முடியும். நான் படித்துக்கொண்டே படிப்பிப்பது ஊரிலே அம்மாவுக்குத்தான் பெருமை. 'என்ர மகன் கெம்பஸில படிச்சுக் கொண்டே கொழும்பில ரியூசன் குடுக்கிறான்' என்று பக்கத்து வீட்டு மாமியின் நெஞ்சை புழுங்க வைப்பதற்கு நல்லதொரு ஆயுதம், சதை பிழிந்து வியர்வையாய் வடியும் நெரிசல்களில் மூன்று பஸ்கள் மாறி மாறி பயணிப்பதும், மிரண்டு போன கண்களுடன் வீதியைக் கடப்பதும், படிப்பிக்கும் வீடுகளில் ஹோலிங்பெல்லை அழுத்திவிட்டு, அவ்ர்கள் வந்து கதவைத் திறக்கும் வரையில் மோட்டைப் பார்த்துக்கொண்டே, தெருவில் போகிறவர்கள் என்னை வித்தியாசமாய்ப் பார்ப்பதாய் நினைத்துக்கொண்டு குறுகிப் போவதும் அவளுக்கெப்படி தெரியும்? கதவைத்திறந்த உடன் நேரே படிப்பிக்கும் மேசைக்குச் செல்ல வேண்டும். கழுத்தில் வடியும் வியர்வையைத் துடைத்துக் கொள்ளவும் நேரம் இருக்காது. ஏற்கனவே ஐந்து, பத்து நிமிடம் லேட்டாயிருக்கும். படிப்பித்துக் கொண்டிருக்கும் போது முன்னிற்கிருக்கும் பிள்ளை அல்லது பெடியன் எதற்கேனும் மூக்கைத் தொட்டுக் கொண்டால் மனது சங்கடமாயிருக்கும். இரகசியமாய் ஒரு தரம் குனிந்து, மூக்கை உறிஞ்சி ஒரு முகர்தல் -வியர்வை நெடி வீசுகிறதா? ரியூட்டரியில் இந்தப் பிரச்சினை இருக்காது. எனக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் கணிசமான தூரம் இடைவெளி
பிரத்தியேக வகுப்பில் அதற்கிடமில்லை. பக்கத்தில் இருந்துதான்
வாழ்தல் என்பது. 55

Page 35
சொல்லிக் கொடுக்க வேண்டும். அனேகமான இடங்களில் ஞாயிற்றுக் கிழமை பீ(1)ஸ் தர வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் கிளாஸ் முடிந்த பின்பும் இருக்கையை விட்டு எழும்பாமல் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டு அல்லது கழுத்தைத் துடைத்துக் கொண்டு அமர்ந்திருப்பேன். 'பீ(1)ஸ் எடுக்கலாமா?' என்று ஞாபகப்படுத்த விரும்பிநாக்கின்நுனிக்கு வரும் வார்த்தைகள் தயங்கித் தயங்கி பின் ஏலாமல் திரும்பவும் தொண்டைக்குழிக்குள் போய்விடும். நான், படுகின்ற அவஸ்தைகளைப் பார்ப்பதால் எதிரே அமர்ந்திருக்கும் பிள்ளைக்கு அல்லது பெடியனுக்கு பீ(ரிஸ் பற்றி ஞாபகம் வர, 'சேர் பீ(1)ஸ்' என்று சொல்லிவிட்டு எடுத்து வர உள்ளே போவது நெஞ்சில் பால் வார்த்தது போல் இருக்கும். அப்படி ஞாபகம் வரவில்லையெண்டால் பீ(1)ஸைக் கேட்காமலேயே எதையோ இழந்தது போன்ற ஒரு உணர்வுடன் வெறுங்கையுடன் வெளியேறிவிட வேண்டியதுதான். 'விழுந்திட்டன் மீசையில் மண் ஒட்டவில்லை' என்பது போல, 'அடுத்த கிழமை மொத்தமாய் சேர்த்து வாங்கலாம்' என்று மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியது தான். பீ(1)ஸைக் கொடுத்தால் தாங்ஸ் சொல்லி வாங்கி அவசரமாய் சட்டைப்பையுள் வைத்துக் கொள்வேன். கணக்குப் பார்த்து, எண்ணிப் பார்த்து வாங்கும் கறார் பேர்வழியல்ல நான் என்பதைக் காட்டி விட்டது போல் திருப்தியாய் இருக்கும். வெளியே வீதிக்கு வந்தவுடன் காசை எண்ணிப் பார்த்து அந்தக் கிழமைய வகுப்புகளை கணக்குப் பார்ப்பேன். பார்த்தது சரி. பச்சையாய் பசைமுறியாத ஆயிரம் ரூபாய்தாள். படுகின்ற கஷ்டங்கள் எல்லாம் மறைந்து 'நான் சம்பாதிக்கிறேன்' ஆசையாய் அந்தப் பச்சைத் தாளையும் இன்னும் கூடவுள்ள சில மஞ்சள் தாள்களையும் பேர்சினுள் திணிப்பேன். பேர்ஸ் கனப்பது போல் இருக்கும். ரவுசர்ப் பொக்கற்றில் பேர்ஸைத் திணித்து கையை வெளியில் எடுத்தேன், நான் பெறுமானம் மிக்கவன். பொக்கற்றுக்கு மேலால் அடிக்கடி தொட்டுப் பார்ப்பேன். எல்லாம் கொஞ்ச நேரத்திற்குத்தான். பிறகு, பேர்ஸிலிருக்கும் பச்சைத்தாள் அம்மாவுக்காக எழுதப்பட்டிருக்கும் காகித உறைக்குள் இடம் மாறல். புறக்கோட்டை பஸ் நிலையத்துக்கு வந்து ஊருக்குச் செல்லும் பஸ் நிற்குமிடத்தில் நிற்கும் முகங்களை ஒவ்வொன்றாய் பார்த்து மிகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவரைத் தேடும் வேட்டை.
56 வாழ்தல் என்பது.

அம்மாவுக்கு அனுப்பும் பணத்தை ‘மணிஓடர்' பண்ணாமல் இப்பிடி ஆட்களிடம் கொடுத்தனுப்பி விடுவதால் கிட்டத்தட்ட நாற்பது ரூபாய் லாபம்.
இன்னொரு நன்மை மறுநாளே அம்மாவின் கையில் காசு சேர்ந்துவிடும் என்பது. ஆனால், இப்பிடிக் கொடுத்து விடுவதிலும் சில சிக்கல்கள். கடிதத்தை கொடுக்கும் நபரிடம் வெறுமனே கடிதத்தை மட்டும் கொடுத்துவிட்டு உடனே திரும்ப முடியாது. ஏதாவது கதைக்க வேண்டும். அதுதான் சம்பிரதாயமும் கூட. இப்பிடிக் கடமைக்காக அரங்கேறும் சம்பாஷணையில் அதிகமாய் என் வாயிலிருந்து வருவது, "ஊர்நிலமை எப்பிடி?" சிலர் எதுவுமே சொல்லப் பயந்தவர்களாய் ஒரு அசட்டுச் சமாளிப்புடன், 'நோமலாய் இருக்கின்றது', இல்லாவிட்டால் 'ஊரில கடும் மழை, போர்டியார்ர மகள் பெரிய மனுவழி ஆயிட்டாள். கிட்டினன்ட பெடியன் கந்தப்பின்ர பெட்டயைக் கூட்டிக் கொண்டோடிட்டான். ' என்று எதையாவது ஒப்புக்குச் சொல்லி முடிப்பார்கள். துணிந்த சிலரோ ஊரில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் கொஞ்சம் மெருகூட்டலுடன் தள்ளிவிடுவார்கள்.
யாராவது தெரிந்தவர்கள் அகாலமாய் இறந்து போன செய்தி கேள்விப்பட்டால், நெஞ்சு கொஞ்சம் நெரிடும். இரவில் முழிப்புத்தட்டும். இப்படித்தான் போனகிழமை உழவுமெஷினுக்கு சாமான் வாங்க வந்திருந்த சிவத்தாரிடம் விசாரித்த நேரம் நேசன் செத்துப் போனதாய்ச் சொன்னார்.
அதன்பின் மூன்று நாட்கள் நான் நித்திரை கொள்ளவேயில்லை. படுப்பதற்கென்று கண்ணை மூடினால் கண்ணுக்குள் நேசனின் சிரித்த முகம், நேசன் - என்னிடம் குட்டுப்பட்டு, குட்டுப்பட்டு ரியூட்டரியில் கணிதம் படித்தவன். ஓ.எல். எடுப்பதற்கு ரெண்டு கிழமை இருக்கும் போது காணாமல் போனான்.
நேசன், என்னிடம் ‘அண்ணா, அண்ணா' என்று சொல்லி என்னேரமும் கூட வருவான். என் சைக்கிள் வார் நேசன் இருப்பதற்கெண்டுதான் செய்யப்பட்டது போல.
அப்படிப் பழகியவன் என்னிடம் கூட சொல்லாமல் போய்விட்டான்.
வாழ்தல் என்பது. 57

Page 36
நாய்கள் உறுமித் தொடர்ந்த நடுராத்திரியில் கண்ணாப் பற்றைகளைக் கடந்த போது அவனுக்கு வயது 16. ஆண்டுக்கு வயது கி.பி. 1992 நேசன் காணாமல் போய் சில நாட்களின் பின்புதான் அவனைப்பற்றி ஊரே கிசுகிசுத்தது. பிறகு முன்னிருட்டுக் கால கருக்கல்களில் உப்பித் தெரிந்த சாரத் தோடு ஊருக்குள் அவனைப் பலதரம் கண்டதாக பல பேர் சொன்னார்கள். கடைசியில் கோமாரிக் காட்டில் இலை துளிர்க்கும் தேக்கு மரக் கன்றுகளுக்கு அவன் ரத்தமும் சதையும் எலும்பும் உரமாகிப் போய்விட்டது. இது கேட்டது முதல், அவன் மரணம் அர்த்தமுள்ளதாயும் என் இருத்தல் அர்த்தமற்றதாயும் நெஞ்சுக்குள் ஒரே அறுப்பு. ஆட்களிடம் பணம் கொடுத்து அனுப்புவதால் ஏற்படும் சிக்கல்கள் இத்தகையது. இந்த மனச்சுமைகளையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு யாரிடமாவது கடிதத்தைக் கையளிக்கும் போது அம்மாவின் சிரித்த முகம் தெரியும். கூடவே வட்டிக் கடனை கேட்டுக் கேட்டு வாசலில் காலடித்துக் காலடித்துப்புறுபுறுத்தபடிநிற்கும் திரவியம் அன்ரியின் அல்லது பார்வதி அக்காவின் மூஞ்சியில் அம்மா காசை விட்டெறிவது போல் ஒரு காட்சி அல்லது சாராயத்திலேயே முகம் கழுவும் அத்தானைக் கட்டியதால் நீலம் பாய்ச்சுப் போன தொடைகளோடு சோட்டிக்கு மேலால் சேலையைச் சுற்றிக் கொண்டு ரெண்டு பிள்ளைகளையும் இழுத்தபடியே மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு தடவைகள் திடீர் விஜயம் மேற்கொள்ளும் அக்காவின் கையில் அம்மா இருநூறோ முன்னுறோ திணித்து வழியனுப்புவது போல் ஒரு காட்சி அல்லது காதோட்டை தூர்ந்து போய்விடுமோ என்ற பயத்தில் காதில் ஈக்கிலைச் செருகிக் கொண்டு திரியும் சின்னவளின் (என் தங்கை) காதில் தங்க சிமிக்கி பளபளப்பதாய் ஒரு காட்சி. எந்தக் காட்சி விழும் என்பது அம்மா கடைசியாய் அனுப்பியிருக்கும் கடிதத்தில் எழுதியிருக்கும் பிரச்சினையைப் பொறுத்தது. எதை எழுதவேண்டும், எதை எழுதக் கூடாது என்ற பிரித்தறிதல் எல்லாம் அம்மாவிடம் இருந்ததாகத் தெரியவில்லை. ஊரில் எது நடந்தாலும் அப்படியே அதே வேகத்திலேயே எழுதிவிடுவா. (பக்கத்து வீட்டு மாமியுடன் கோழிச்சண்டை பிடித்தது கூட) அம்மாவின் எழுத்தில் அதிகம் சந்தோசப்படும் படியாய் எதுவும் இருக்காது. சந்தோசப்படும்படியாய் எழுத வராதோ? அல்லது அப்பாவின் மரணத்தோடு சந்தோசங்களும் செத்துப் போயிற்றோ என்னவோ?
58 வாழ்தல் என்பது.

நான் படும் கஷ்டங்களைப்பற்றி அக்கறையாய் ஏதும் விசாரிப்புக்கள் இருந்தாலும் கொஞ்சம் இதமாயிருக்கும். அதுவும் இல்லை. அம்மாவுக்கு தெரிந்ததெல்லாம் (எதிர்காலம் பிரகாசமாக) நான் படிக்கவேண்டும். (நிகழ்காலம் தடையின்றிப் போக) -நான் படிப்பிக்க வேண்டும். நான் எதிர்பார்த்திருக்கும் எதுவுமே அம்மாவின் கடிதத்தில் எழுதப்பட்டிருக்காது. இதனால் தானோ தெரியாது, அம்மாவைப்பற்றி நினைக்கும் போதெல்லாம் ஒரு மெல்லிய வெறுப்பு மிதந்து நிற்கிறது. இதனால் வாழ்க்கை கசந்து நிற்கிறது. எதை நினைத்தாலும் கடைசியில் ஒரு விருப்பமில்லாத உணர்வுதான் எஞ்சுகிறது. விரக்தியாக, மெல்லிய சோகமாக, கோபமாக.
கடிதத்தை கையளித்துவிட்டு வந்து பாணந்துறை பஸ்ஸிலோ, மொரட்டுவ பஸ்ஸிலோ ஏறிஜன்னலோரமாய் உட்கார்ந்து கொண்டால் மனது விரியத் தொடங்கும். முகத்தில் அறையும் குளிர்காற்று தலை முடியை கலைக்க உள்ளே மனதில் கவிதை சுரக்கும். கவிதையின் முடிவும் கடைசியில் சோகமாய்ப் போகும். சில கவிதைகள் முடிவதற்கு முன்னமேயே பக்கத்து இருக்கையில் இருப்பவன் ஏதாவது கேட்டுத் தொலைத்திருப்பான். வளாகத்து முகப்பில் சீனித்தொழிற்சாலை இயந்திரங்கள் சப்பித்துப்பும் சக்கையாய் வாகனத்திலிருந்து வெளியே தள்ளப்படுவது அப்பாடா என்றிருக்கும். இறங்கி ஒருநூறு மீற்றர் செக்கெண்ணை மணக்கும் கொத்து ரொட்டியைக் கொறிக்க ஒரு தள்ளாட்ட நடை. எல்லாம் முடிந்து ஸ்ரடி ஹோலுக்குள் நுழைந்தால் ரியூப் லைட்டின் பிரகாசமான வெளிச்சத்தின் கீழ் நண்பர்கள் வலு சீரியஸாய்ப் படித்துக் கொண்டிருப்பார்கள். ஒரு சிலர் கூடியிருந்து பாடத்தில் உள்ள ஏதாவது சிக்கல்களை விவாதிக்குக் கொண்டிருப்பார்கள். அவர்களைப் பார்க்கும் போதுதான் எனக்கு எக்ஸாம் நெருங்குவது ஞாபகம் வரும். மூன்றாம் வருடம் சிலபஸ் கொஞ்சம் இறுக்கம் என்று எல்லோரும் கதைப்பதுதான் பயமுறுத்தும். கையில் ஏ.எல்.நோட்சுடன் வரும் என்னைக் கண்டதும் அவர்கள். 'என்ன சேந்தன் ரியூசனாலயோ அவனுக்கென்ன இப்பவே அந்த மாதிரி உழைப்பு' என்பார்கள்.
வாழ்தல் என்பது. 59

Page 37
நான் எதிரே இருப்பதைப் பற்றி அக்கறைப்படாமல் படிப்பதில் கவனம் போகும். இருக்கப் பிடிக்காமல் எழுந்து விடுதியை நோக்கி நடப்பேன். வழியில் வாகை மரங்களின் கீழ் போடப்பட்டிருக்கும் கல் பெஞ்சுகளில் நிழல் போர்வைக்குள் ஒன்றாய் இறுகிக் கிடக்கும் ஜோடிகள் கறுப்பு உருக்களாய் தெரியும்.
செவ்வந்தியை எண்ணிப் பார்ப்பேன். 'வேலிக்கு மேலால மச்சான் வெள்ளை முகம் தெரிவதெப்போ' என்று நாட்டார் பாடலால் என்னை மறைமுகமாக விளிப்பது ஒலிக்கும். செவ்வந்திக்கு ரெண்டாவது பிள்ளையும் பிறந்து விட்டதாய் யாரோ சொன்னார்கள்.
'அவள் புருஷன் இப்பவும் குடிக்கிறானா?" முதன்முதலாய் வளாகத்திற்கு வருவதற்கு வெளிக்கிட்ட அன்று வேலிக்கு மேலால் எட்டி 'உஸ்' என்று கூப்பிட்டு விட்டு "கொழும்புக்கு போய் ஊராக்கள மறந்திடாதீங்க' என்று சொன்னதுதான் பருவமடைந்த பின் இதுவரை செவ்வந்தி என்னுடன் கதைத்த ஒரேயொரு வசனம், வளாகத்திற்கு வந்த ஆரம்பத்தில் கொஞ்ச நாள் ஏன் அவள் அப்படி என்னிடம் சொன்னாள் என்பதை யோசித்துப் பார்த்திருந்தேன். ஏனென்று விளங்கியிருக்கவில்லை. பின்னொரு நாள் செவ்வந்திக்கு கல்யாணம் முடிந்து விட்டதாக அம்மா எழுதியிருந்ததைப் படித்த போது ஏனோ மனது வலித்ததை உணர்ந்த போதுதான் எதுவோ புரிந்த மாதிரி இருந்தது. காலையில் இருந்தே வேறு விதமான உணர்வுகளில் அலையும் மனதில் விடுதிக் கதவைத் திறக்கும் போது இருக்கும் நினைவு அனேகமாய் செவ்வந்தி பற்றியதாய்த்தான் இருக்கும். கதவைத் திறந்தால் நேரே மாட்டியிருக்கும் கண்ணாடியில் கரி பிடித்த முகத்தின் கன்றாவித் தோற்றம். ஒருக்கால் சிரித்துப் பார்ப்பேன், தலையைத் கோதிப் பார்ப்பேன் -வடிவாய் இருக்கிறதா? யோசிப்பதற்கென்றே கிடப்பது போல் பிரேமை, மனதில் கேள்விகளின் முளைப்பு. பின் கிளையாய் விரிவு. அன்றைய நாளின் நிகழ்வுகளையெல்லாம் கோர்த்துப் பார்க்கும் போது மிஞ்சும் சலிப்பில் மனம் தீர்மானம் நிறைவேற்றும், 'இனி செத்திட வேண்டியதுதான்'
6O வாழ்தல் என்பது.

நள்ளிரவில் பாணந்துறை பக்கம் இருந்து மினிபஸ் வரும். 'பிட்டக் கொட்டுவ, கொட்டுவ கோல் பேஸ், கொள்ளுப்பிட்டிய, பம்பலப்பிட்டிய, வெல்லவத்த, தெகிவல, கல்கிஸ்ஸ், ரத்மலானை, பிட்டக்கொட்டுவ' வாய்ப்பாடமாய் கிளினர் கத்திக்கொண்டிருப்பான். 'நக்கின்ட, பிட்டக்கொட்டுவநக்கின்ட' 'பிட்டக்கொட்டுவ எக்காய்' வாய் புலம்பும். கொஞ்சநேரத்தில் எதிரே வந்த வாகனம் ஒன்றின் முன் என் உடல் சிதறிக் கிடக்கும். சனம் கூடியிருக்கும். 'அனே பவ்னே'இளந்தாரியகனே, லவ் பிரேக் மொகக் கரி வென்ட ஒன னேத?' (ஐயோ பாவம் இள்ந்தாரிப் பொடியன், லவ் பிரேக் ஏதாவது வந்திருக்க வேணும் என்ன) என்று ஆளாளுக்குப் பச்சாதப்படுவார்கள். காலையில் அம்மா அவசர அவசரமாய் என்னை எழுப்பி விடுவது போலிருக்கும். கீழ்வானில் சூரியன் ஏறி வந்து கொண்டிருப்பான். இதயத்திலிருந்து செவ்வந்தியுடன் இரவின் தீர்மானங்களும் இறங்கிக் கொண்டிருக்கும். வெளிக்கிட்டு வளாகத்தினுள் இருக்கும் வீதிகளையே மிகக் கவனமாய் ரெண்டு பக்கமும் பார்த்துக் கடந்து கென்ரீனுக்குச் செல்வேன்.
* *
நாளை விடியலுடன் என் வளாக வாழ்க்கைக்கு மூன்று வயது முடிந்து நான்கு வயது தொடங்குகின்றது.
வாழ்தல் என்பது. 61

Page 38
வாழ்தல் . கிட்டத்தட்ட ஐந்து வருடங் களுக்குப் பின் அண்ணாவைப் என்பது. பார்த்த போது ஒருகணம் மனம் அறுந்து மீண்டது. நிறைய மாறியிரு ந்தான். எப்போதும் சிரித்தபடியே இருக்கும் தன்மையெல்லாம் தொலைந்து. இறப்பதற்கு முன் எலும்பும் தோலு மாய், சொறியும் சிரங்குமாய் அழுந் திக் கிடந்த அவனுடைய பப்பியைப் போல் அவனும், ஒளி மின்னும் கண்ணில் ஒரு சிறு பொறி கூடத் தோன்றியதாய் தெரியவில்லை. அவனைப் பார்த்தகணமே விம்மி வந்த அழுகையை என்னால் கட்டுப் படுத்த முடியவில்லை. 'என்னடா இது சின்னப்பிள்ளை மாதிரி குளறிக்கொண்டு ஏ.எல் படிக்கிற பெடியன் கவிதையெல் லாம் எழுதிற பெடியன், இதுக்குப் போய் குளறிக் கொண்டு.'
அவன் என்னைத் தோளிலிருந்து நிமர்த்திய போது மெதுவாய் நிமிர் ந்து பார்த்தேன். அவனையும் மீறி
கன்னத்தில் கண்ணீரின் ஒழுகல், முது
கைத் தடவிக் கொடுத்தான்.
'அண்ணாச்சி வந்திற்றன்தானே Y 7 ക്നീളൂ. இன்னும் என்னத்துக்குக் குழறுறாய்'
பேச்சும் மிக நிதானமாய், சொற் களை எடுத்துக் கோர்த்தது போல், முன்பெல்லாம் அவன் அப்படி யிருக்கவில்லை. எப்போதும் எதை யாவது பேசிக் கொண்டே இருப் பான். சம்பந்த சம்பந்தமில்லாமல்
62 வாழ்தல் என்பது.
 
 
 
 
 
 
 
 
 

மூத்த அண்ணமாருடன் விவாதிக் கொண்டிருப்பான். தேவையில்லாமல் பேச்சநீண்டு கொண்டே போகும். 'கணக்க அடிச்சவங்களோ'
விம்மி விம்மிக் கேட்டேன்.
'போடா மடயா ஆர்ரா சொன்னது எனக்கடிச்சதெண்டு. எனக்கொரு அடியும் அடிக்கல்ல' அவனையும் அறியாமல் அவன் கைகள் நெஞ்சில் நீண்ட கோடாய்ப் புரையோடிப் போயிருந்த காயத்தை ஒருதரம் தொட்டு மீண்டது. நான் உற்றுப் பார்த்தேன். நெஞ்சில் மட்டுமில்லை, இன்னும் பல இடங்களில் வடுக்கள். ஒருதரம் மிகுந்த கோபத்தில் அவன் ஆலம் விழுதினால் விளாசிய போது என் அடித்தொடையில் ரெத்தம் தெறிக்க தோல் கிழிந்த காயம் போல,
"ஏன் அண்ணாச்சி பொய் சொல்றீங்க. இந்தா காயமெல்லாம் இருக்கு' "சீச்சீ அது அடிச்ச காயம் இல்ல, அங்க இருக்கக்குள்ள வேலை செய்த நேரம் ஒருக்கா இடறி விழுந்திற்றன்' அவன் எதற்காகவோ பொய் சொல்கிறான் என்பது புரிந்தது. அதன் பின் அதைப் பற்றி நான் எதுவும் பேசவில்லை. விம்மலுடன் அவனைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். கருநீலநிறமும், பழுப்புநிறமும் கலந்தது போன்ற ஒரு கலரில் ஒரு படலம் அவன் இடக் கண்ணிலிருந்து விழுந்து விடுவது போல் தொங்கிக் கொண்டிருந்தது. அவன் இடக்கண் பார்வையற்றது என்பதைக் கூட சிலநாட்களுக்கு முன்தான்நான் தெரிந்து கொண்டேன். முன்பெல்லாம் அவன் என்னைக் கண்டிக்கும் போதோ, தண்டிக்கும் போதோ 'குருட்டுக் கண்ணா, குருட்டுக் கண்ணா' என்று மனதிற்குள் திட்டுவதால்தான் என் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்வேன். என்னைப் பக்கத்தில் இருத்தி வைத்து அவன் கணிதம் சொல்லித் தருகையில் மொக்குத்தனமான என் விடைகளுக்கு குட்டு வைக்கும் போது "குருட்டுக் கண்ணன், இடியுழுந்து போவான்' என்று பெரிதாய்க் கத்திவிட்டு ஓடிய நாட்களுமுண்டு. இந்த நேரங்களில் அவன் முகம் எப்படி வாடிப் போயிருக்கும் என்று இப்போதும் என்னால் உருக்கொண்டு வர முடியவில்லை. உண்மையில் அவன் இடக்கண் பார்வையற்றது என்று தெரிந்திருந்தால் , அப்போது அவன் மனதைக் காயப்படுத்தியிருக்கமாட்டேன் என்றே நம்புகிறேன். என்னதான் அவன் எனக்கு எதிரிபோல் தோற்றமளித்து அவனை நான் வாடா, போடா என்று அழைத்தாலும் எல்லோரையும் விட
வாழ்தல் என்பது. 63

Page 39
அவனில் தான் கூடிய பாசம். அவனை "அண்ணாச்சி' என்று மரியாதை கொடுத்துக் கூப்பிட வேண்டும் என்று அப்பா என்னிடம் அடிக்கடி சொல்வார். முக்கியமாய் அவன் கண்ணைப் பற்றி எதுவும் சொல்லக் கூடாது என்று கொஞ்சம் கண்டிப்பாய் சொல்வார். ஆனால் அண்ணா அதுபற்றி என்னிடம் எதுவுமே சொன்னதில்லை. 'நான் உனக்கு அண்ணன்' என்று கூட ஒருதரமும் சொன்னதில்லை. (ஒரு வேளை அப்போது அவனை ஒருதரமாவது அண்ணாச்சியென்று கூப்பிட்டிருந்தால் வலுவாய் சந்தோசப்பட்டிருப்பானோ தெரியாது). என்னைத் தண்டிக்கும் ஒவ்வொரு சமயங்களிலும் மூக்கால் வழிந்தபடியிருக்கும் என்னைக் கூட்டிச் சென்று, குளிக்க வைத்து (குளிக்கும் போது புத்தி சொல்தல் நடக்கும்) துடைத்து, தலை சீவி, பவுடர் போட்டு சைக்கிளில் உட்கார வைத்து (அப்போது அவனிடம் அழகான ஒரு "ஏசியா' சைக்கிள் இருந்தது. நீலக்கலர். அதற்கு என்ன நேர்ந்தது என்பதும் இப்போது சரியாக ஞாபகமில்லை) கோயிலுக்கு அல்லது விளையாட்டுப் பார்க்கக் கூட்டிப் போவான். மழைக்காலமென்றால், தண்ணீர் கரைபுரண்டு ஓடி கடலுடன் கலக்கும் காட்சியைப் பார்க்க முகத்துவாரத்திற்கு கூட்டிப் போவான்.
எனக்கு நேரே மூத்தவனுக்கு இதுபற்றி மிகுந்த பொறாமை, அல்லது வருத்தம், தன்னை ஒருபோதும் சைக்கிளில் ஏற்றுவதில்லை என்றும் தன்னை எல்லோரும் கழித்து நடப்பதாயும் அப்பாவிடம் அடிக்கடி முறைப்பாடு. இந்தச் சிணுங்கல்களெல்லாம் அண்ணாவின் காதில் ஏறுவதில்லை. ஏனோ தெரியவில்லை, அவனுக்கு என்னைத் தவிர வேறு யாரையும் சைக்கிளில் உட்கார வைப்பதில் அதிகம் விருப்பமில்லை. ஆனாலொன்று, அண்ணாவின் சைக்கிளில் நான் ஏறுவதாயிருந்தால் மிகவும் சுத்தமாய் இருக்க வேண்டும். எந்தக் கெட்ட வாடையும் என்னிலிருந்து வீசக் கூடாது. எங்கள் குடும்பத்திலேயே அண்ணாதான் மிகவும் சுத்தமான பேர்வழி, ஊனப்பட்ட தன் கண்ணை மறைப்பதற்காக அநேகமாய் ஒரு கறுப்புக் கண்ணாடியை மாட்டிக் கொள்வான். அவனின் கூர் மூக்கிற்கு அது இன்னும் எடுப்பாயிருக்கும். அண்ணாவைச் சுற்றி எப்போதுமே 'சென்ற் வாசனை.
'மன்மதக்குஞ்சு மன்மதக்குஞ்சு' என்று மூத்தண்ணாமார் இருவரும் அவனைக் கேலி பண்ணுவார்கள், 'அவன்ட வயதில நீங்க இதவிட மோசம்' என்று அப்பா அவர்களின் முகங்களைக் கறுக்க வைப்பார். எப்போதும் எடுப்பாய் இருக்க வேண்டும் என்பதுதான் அண்ணாவின்
64 வாழ்தல் என்பது.

எண்ணம். அவனுடன் சைக்கிளில் போகும் போதே பல தடவைகள் ஒன்றைக் கவனித்திருக்கிறேன். வழியில் யாரேனும் பருவப் பெண்கள் போனால் அண்ணாவின் சைக்கிள் வெட்டி வெட்டிப் போகும். மணி தேவையில்லாமல் ஒலிக்கும். ஜேசுதாஸ் அல்லது எஸ்.பி. அழகாகச் செத்துக் கொண்டிருப்பார். சுஜி மச்சாள் போனால் கேட்கத் தேவையில்லை. சீட்டி வேறு. மச்சாளை இலக்காகக் கொண்டு சைக்கிளை உழக்கிய சமயங்களில் அவனுடன் நானும் இருந்திருக்கிறேன். நெஞ்சில் புத்தகத்தை அணைத்தபடி முகத்தைச் சரித்து அண்ணாவைக் கடைக் கண்ணால் பார்ப்பாள். இதழ்கள் மெல்லப் பிரியும். பிறகு தோழிகளுடன் உரத்துக் கதைத்துச் சிரித்தபடி, சைக்கிள் காற்றில் பறக்கும். "ஹேண்டிலை" நான் கெட்டியாய் பிடிக்க வேண்டி வரும். அவன் முகம் இறுகிப் போன நாள்வரைக்கும் இப்படித்தான் வாழ்க்கை கழிந்து போயிற்று.
好 *
அதன் பின் அப்பா நீங்கலாக அண்ணாவின் போக்கு யாருக்கும் பிடிக்கவில்லை. அண்ணாவை வீட்டில் காண்பதும் அரிதாய்ப் போயிற்று. யாழ்ப்பாணம் சென்று படித்து வந்த 'நோட்ஸெல்லாம் புழுதி படியத் தொடங்கிற்று. அவன் வீட்டுக்கு வரும் போதெல்லாம் அம்மாவின் புறுபுறுப்புகள் அதிகமாயின. அண்ணாவின் நிமிர்த்தம் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் அடிக்கடி சண்டை மூளும். மூத்தண்ணாமார் இருவரும் அம்மாவிற்கு பலத்த பின்னணி தான் மிகக் கஷ்டப்பட்டுச் சேமித்தனுப்பிய பணத்தில் படித்த நோட்சுகளை கறையான் தின்பதில் ரெண்டாவதண்ணாவுக்கு மிகுந்த வருத்தம். 'அவன அங்க படிக்க அனுப்பியிருக்கக் கூடா. அங்க போய்த்தான் அவனிப்பிடிக்கெட்டுப் போய்த்தான்' என்று அடிக்கடி குற்றச்சாட்டு, எனக்கொன்றும் புரிந்திருக்கவில்லை. அண்ணா கெட்டுப் போனான் என்று சொல்லப்பட்டது வியப்பாய் இருந்தது. எப்படிக் கெட்டுப் போனான் என்று யோசித்துப் பார்த்தேன். யோசித்துப் பார்க்கையில் அண்ணாவில் மாற்றங்கள் தான் தெரிந்தன. அவன் என்னைக் கவனிப்பதைக் கூட அடியோடு மறந்திருந்தான். நான் எத்தனைநாள் பள்ளிக்கூடம் போகாவிட்டாலும் அதைப் பற்றியெல்லாம் ஒரு கேள்வியில்லை. என்னை எதற்கும் கண்டிப்பதில்லை, தண்டிப்பதில்லை. எப்போதாவது ஒரு எண்ணம் வந்தால் வீட்டில் சாப்பிடுவான்.
வாழ்தல் என்பது. 65

Page 40
குசினிக்குள் அழைத்துச் சென்று அம்மாபுறுபுறுத்தபடி சோறு போடுவாள். வெளியே சாய்மனக் கதிரையில் படுத்துக் கிடக்கும் அப்பா ஒரு கனைப்பு கனைக்க அம்மாவின் சத்தம் அடங்கிப் போகும். அண்ணா சாப்பிடுகையில், வீட்டில் எல்லோரும் குசினிக் கதவருகில் நின்று கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருப்பார்கள், சின்னக்காவின் சட்டையைப் பிடித்தபடிநானும் போய்நிற்பேன். சின்னக்காவின் கண்கள் கலங்கியது போலிருக்கும். 'என்னடா இது, பால் குடிக்கிற பிள்ள மாதிரி அக்காட சட்டயப் புடிச்சிக் கொண்டு, இஞ்ச வா வா' அண்ணா என்னையழைத்துச் சோற்றைப் பிசைந்து ஊட்டி விடுவான். அது புதுப் பழக்கம், முன்பு எல்லாம் செய்ததுண்டு. சோறு ஊட்டி விடுவதில்லை. எனக்குப் புத்தி தெரியாத வயதில் செய்திருப்பானோ தெரியாது. அண்ணாக்குக் கிட்டே செல்லும் போது ஒரு வாடை வீசும், மூக்கைத் தொடுவேன். அண்ணாவின் முகம் இருண்டு போகும். அண்ணா சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வெளியே ஒழுங்கையில் வினோதமான சில சத்தங்கள் கேட்கும். பரபரப்பாவான். சாப்பாடு அப்படியே இருக்க கையை அவசரமாக அலம்பிக் கொண்டு எழுவான். 'கோதாரி பிடிச்சதுகள், வந்திற்றுதுகள்' அம்மா வாய்க்குள் முணுமுணுப்பாள். திரும்பி அம்மாவை நோக்கி ஒரு தீர்க்கமான பார்வை. வெளியே வந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் அப்பாவின் முன் தயங்கியபடியே நிற்பான். அப்பா, பேப்பரைத் தாழ்த்தி கால்மாட்டில் நிற்கும் அண்ணாவைப் பார்ப்பார் போ என்பது போல கண்கள் சுழலும், அண்ணாஇருளில் பாய்வான். அப்பாவின் கண்கள் பேப்பரில் போகும். உள்ளே ஒரு குட்டி மந்திராலோசனை ரகசியமாய் நடக்கும். 'அப்பாட சப்போட்டாலதான் அவனிப்படி' 'மற்றாக்களுக்கு இல்லாத அக்கறை அவருக்கென்னத்துக்கு" ‘எங்கட வேலையும் போயிடுமோ எண்டு பயமாயிருக்கு'
நான் குசினிக்குள் நுழையும்போது இப்படி ஏதாவது ஒரு வசனம் என் காதில் விழும்.
அம்மா தீராத கோபத்தோடு அண்ணாவின் சாப்பாட்டுக் கோப்பையில் மிச்சமிருப்பதை கொட்டி விட்டு கோப்பையை தண்ணிச் சட்டிக்குள் எறிவாள். மூத்தண்ணாவின் பிள்ளைகள் கொட்டாவி விட்டபடி இருக்கும். அண்ணி யாருக்கும் தெரியாமல் மூத்தண்ணாவை சுரண்டிக்
66 வாழ்தல் என்பது.

கொண்டிருப்பாள். "சரியம்மா அவன்ட கதய விடுவம், அந்தக் கழுத எப்படிப் போனால் தான் என்ன" அம்மாவின் பதிலுக்குக் காத்திராமல் மூத்தண்ணா எழும்ப, அண்ணி மடியில் படுத்துறங்கும் செல்வியைத் தட்டி எழுப்பிக் கொண்டு அவரின் பின்னால் அவர்களின் அறைக்குப் போவாள். அடுத்தண்ணாவை சின்னண்ணி அழைக்கும் சத்தம் அவர்களின் அறையிலிருந்து கேட்கும். அவன் மெதுவாக நழுவிப் போவான். எல்லோரும் கழன்று போக நானும் அம்மாவும் குசினிக்குள் தனித்தபடி, 'டேய் சின்னவா அப்பாவைச் சாப்பிடக் கூப்பிடு' அப்பா பேப்பரை மடித்து வைத்துவிட்டு எழுந்து வருவார். அம்மா அப்பாவிற்குச் சோற்றைப் போட்டபடி எதையேனும் கதைக்கத் தொடங்குவாள். கதையெடுக்க முன் என்னை ஒருதரம் பார்ப்பாள்.
'டேய் சின்னவா நித்திரை வரல்லயோ'
வருது' 'அப்ப இங்க நிண்டு கொண்டென்ன செய்கிறாய், போய் நித்திரையைக் கொள்ளண்'
A. A
'தனியப் படுக்க பயமாயிருக்கம்மா' 'ஏன் சின்னண்ணாச்சோட் போய்ப் படன்'
'அவன் உழத்துவான்' 'அப்ப உன்ர கொண்ணன் போகக்குள்ள இழுத்துப் பிடிச்சிருக்கலாமே' அம்மா எரிந்து விழுவாள். அப்பா முறைத்துப் பார்க்க அந்த இடம் மெளனமாகும். 'இங்கேப்பா, இங்கேப்பா' எச்சரிக்கையாய் அப்பாவை விழிப்பாள். 'என்ன'
'இவள் அண்ணன்ட பெடிச்சிநல்ல குணமாம் எண்டு சொல்லிறாங்கள். ஆள் நல்ல வடிவும் தான்.
'அதுக்கிப்ப என்ன' 'இல்ல இவன் கணேசனுக்கு ஒருக்காக் கேட்டுப் பாத்தமெண்டால்."
'ஏன் அவனுன்னட்டக் கலியாணம் செய்து வைக்கச் சொல்லிக் கேட்டவனோ'
வாழ்தல் என்பது. 67

Page 41
"அதுக்கில்லப்பா அவனுக்கொரு கால்கட்டைப் போட்டமெண்டால் பிறகு மத்த வழிகள்ள போகமாட்டான். அந்தப் பொடிச்சிக்கும் அவனில ஒரு விருப்பம் போலத்தான் கிடக்கு.' 'அவன் எந்த வழியில போகோனுமெண்டு அவனுக்குத் தெரியும். நீ பேசாமல் உன்ர அலுவலப்பாரு' அப்பா கோபமாய் கையை உதறிக் கொண்டு எழுவார். மூச்சு வாங்கும். இருமத் தொடங்குவார். துப்பல் ச் சிரட்டையை எடுத்துக் கொண்டு பிடிப்பேன். 'டேய் சின்னவா நீ ஆம்பிளப் பெடியனெல்லோ, என்ன பயம். போய்த் தனியப் படு பாப்பம், பயமாம் பயம்'
அப்பா என்னைக் கண்டித்ததன் அர்த்தத்தைப் புரிய எனக்கு வெகு காலம் தேவைப்பட்டிருந்தது. V−
*,* *
'இப்பிடித்தான் அண்ணனும் தம்பியும் ஆளையாள் பார்த்துக் கொண்டு குளறிக் கொண்டிருங்கோ, அங்க பாக்க வந்தாக்கள் எல்லாம் வெளியில காத்துக் கொண்டு நிக்கட்டும்' அக்காவின் குரலில் என் நினைவுகள் கலைந்தன. அண்ணாவைப் பார்த்தேன். அவன் பாழ் விழுந்து போய்க்கிடக்கும் எங்கள் பழைய வளவையும் அதற்குள் இடிந்த குறையில் கிடக்கும் எங்கள் பெரிய வீட்டையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். வளவு முழுவதையும் அடம்பன் கொடி ஆக்கிரமித்திருந்தது. அடம்பன் விட்டுக் கொடுத்த இடங்களிலுள்ள புற்களை மேய்ந்தபடி நாலைந்து மாடுகள், நெற்றியில் வெள்ளைப் பொட்டுடன் நின்ற சிவலை எங்களுடையது. இல்லை, எங்களுடையதாய் இருந்தது. அப்பாவின் வருத்தம் சாப்பிட்ட கடைசிச் சொத்து.
'ஆருக்கு சின்னவா வளவ வித்தினிங்க'
'விதானையாரப்பச்சிக்கு' 'அப்பாட சவத்தயும் இந்தக் குடிசையிலதானோ வெச்சிருந்த' 'இல்லண்ணாச்சி, அப்பா செத்த பிறகு தான் இங்க வந்தம். அதுக்குப் பிறகுதான் அண்ணாச்சிமாரும் தனியாப் போய்த்தாங்க, படிக்கிறதுக் காவண்டி நானும் மூத்தண்ணாச்சிட்டப் போயித்தன்'
68 வாழ்தல் என்பது.

'சின்னக்காவுக்கு எப்ப கலியாணம் நடந்தது?" 'அதுகும் அப்பா செத்த பிறகுதான்' 'இப்பிடிக் குடிக்கிற ஆள்தானோ கிடைச்ச' 'ஓ! இஞ்ச உழச்சிக் கொட்டிக் கிடக்கிற சீதனத்துக்கு பெரிய உத்தியோககாரன்தான் வரப் போறான்' உள்ள சலிப்பையெல்லாம் அக்கா கொட்டித் தீர்த்தாள். 'டேய் உன்னப்பாக்கிறதுக்கு ஆக்கள் வந்திருக்கென்னநீஇஞ்சகதைச்சுக் கொண்டிருக்கன்ன' அம்மா பேச்சின் திசையை மாற்றினாள். அண்ணாவும் நானும் அலுப்புடன் எழுந்தோம். வெளியில் ஒரு கூட்டம். இறந்து மீண்டவனைப் பார்க்கும் வியப்பு கண்களில், கிட்டச் செல்ல அண்ணா கூச்சப்பட்டான். தோளில் குழந்தையுடன் சுகி மச்சாளும் நின்றாள். மச்சாளைப் பார்த்து அண்ணா தடுமாறுவது புரிந்தது. 'மச்சான் உன்னப் பாப்பமெண்டு நாங்க கனவிலயும் நினைக்கல்லடா?" அண்ணாவின் பால்ய சிநேகிதன் ஒருத்தன் மனம் கசிந்து சொன்னான். (அவன் தோளிலும் அழகானதோர் குழந்தை) எல்லோர் கண்களும் மெதுவாய்க் கசிந்தபடி,
"எப்பிடி எல்லோரும் சுகழாயிருக்க." சொல்லி முடிக்கு முன் அண்ணா இருமத் தொடங்கினான். கை நெஞ்சை இறுகப் பொத்த அப்படியே சுருண்டு விழுந்தான். ஒவ்வொரு இருமலுக்கும் நெஞ்சு எகிறி எகிறி மீண்டது. வாயில் நுரையும் இரத்தமும், ஒன்றும் தெரியாது கொஞ்ச நேரம் மலைத்து நின்றேன். உணர்வு திரும்ப அண்ணாவை மடியினில் போட்டேன். இருமும் போது அவனை அமுக்கிப் பிடிக்க இயலாது போயிற்று. கொஞ்சம் கொஞ்சமாய் இருமல் அடங்க அண்ணா மெதுவாய்க் கண்களைத் திறந்தான். 'பாடையில போறவங்கள் என்னமாப் போட்டு அடிச்சி வச்சிருக்காங்கள்' முகம் தெரியாத யாரையோ திட்டிக் கொண்டு அக்கா ஓடி வந்தாள். பின்னால் அம்மா. வந்திருந்தவர்களிடையே மெல்லிய சலசலப்பு. ஆளாளுக்கு வாய்த்தபடி அண்ணாவைப் பற்றி வதந்திகள் கிளம்பிற்று.
'காக்கை வலிப்பாம்"
'இல்லயாம் பெடியன் நல்லா அடிபட்டுத்தானாம். அது ஒரு புது
வாழ்தல் என்பது. 69

Page 42
வருத்தமாம். ஆள் இன்னுங்கொஞ்சநாளைக்குத்தானாம்' 'அதெல்லாமில்ல, அது மற்றதிரவேல. கடிச்ச உடனேயே செத்திருக்க வேண்டியது. இப்பத்தான் வேலையக் காட்டுது போல' ஊரில் பொழுது போகாத நேரங்களில் எடுத்துப் போட அண்ணா ஒரு தனிக்கதையானான்.
好 *
உச்சி வெயில், பரந்து விரிந்த மாமரத்துக் கீழே மேசையைப் போட்டுக் கொண்டு படித்துக் கொண்டிருந்தேன். பரீட்சைக்கு இன்னும் ஐந்தே மாதங்கள். (அண்ணா மீண்டு வந்து ஆறுமாதங்கள்) மேசையின் பெரும் பகுதியை நிரப்பியிருந்தது அண்ணாவின் யாழ்ப்பாணத்து நோட்சுகள். யாரோ பின்னால் நிற்கும் அசைவு. 'வாங்கண்ணாச்சி, என்ன படிக்க வருவன் எண்டு சொன்னீங்கள் ரெண்டு மூண்டு நாளா இங்காலப் பக்கமே காணயில்ல? இந்த எறியக் கணக்க எப்பிடிக் செய்யிறதெண்டே தெரியாமல் கிடக்கு. ஒரு ஐடியாவும் வரமாட்டானெண்டுது.' வாங்கிப் பார்த்தான். சில நிமிடங்களில் விடை. எனக்கு வெட்கமாயிருந்தது. 'அப்ப உங்களுக்கு 'ரச் விட்டுப் போகல்லதானே. நீங்களும் வடிவா இந்த முறை எக்ஸாம் எடுக்கலாம்' 'பாப்பம், இருந்தால் எடுப்பம்' வேண்டா வெறுப்பாய் பதில் வந்தது. 'சரி, சரி, படிக்கிற உன்னக் குழப்பல்ல, நான் போறன். பின்னேரம் ஒரிடமும் போகாமல் நில்லு நாம ஒரிடத்த போகோணும்' படலையைச் சத்தமாய் சாத்திவிட்டு விரைந்து சென்றான். சொன்னபடியே கருக்கலுக்குச் சற்றுமுன் வந்தான். யாரோவின் 'லுமாலா' சைக்கிள், அதே நீலக்கலர், ஒடிச்சென்று 'வாரில்' ஏறிக் கொண்டேன். எதுவும் கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை. சைக்கிளை உழக்க மூச்சு வாங்கினான். நான் மாறி உழக்கியிருக்கலாம். எனக்கு சந்தோசமாயிருந்தது. நீண்டகாலத்தின் பின் அண்ணாவின் சைக்கிளில் உட்கார்ந்து சென்றது, என் சின்ன வயதை ஞாபகப்படுத்தியது. அப்பாவை ஞாபகப்படுத்தியது. ஆளுக்கொரு திசையில் பிரிந்து சென்ற எங்கள் முழுக்குடும்பமுமே நிலவில் வாசலில் கூடியிருப்பதும்,
7 Ο வாழ்தல் என்பது.

அம்மம்மா கதை சொல்வதும், ஞாபகம் வந்தது. அண்ணாவின் மடிக்குள் சுருண்டு கிடக்கும் பப்பியைப் பற்றியும் ஞாபகம் வந்தது. அந்த ஞாபகங்கள் என்னைச் சந்தோசப்படுத்தின. என்னை உட்கார வைத்து உழக்குவது அண்ணாவுக்கு அதிகம் கஸ்டமாயிருக்காது என்று எண்ண முயன்றேன். சைக்கிள் அநேகமாக ஊரின் எல்லா வீதிகளினும் சென்றிருக்கும், கடைசியில் கடற்கரைப் பக்கம் வந்தபோது கனமான எதிர்காற்று. என் தலைமுடி கலைந்தது. அண்ணா பெரிதாய் மூச்சு வாங்கினான். என்றுமேயில்லாதபடி அவன் வாயிலிருந்து சாராய நெடி. தலையை நிமிர்த்தி அண்ணாந்து பார்த்தேன். வலக்கண் சிவந்து கிடந்தது. இடக்கண் எப்போதும் போலவே பழுப்பும் கருநீலமும் கலந்த நிறத்தில் விழுந்து விடப் போவது போல் ஒரு படலத்தைக் கொண்டதாய். மீன்வாடிக்கு அருகிலுள்ள மதகில் சைக்கிளைச் சாத்திவிட்டு இருவரும் அதில் குந்திக் கொண்டோம். கடற்கரை மணலில் சிரட்டைகளை அடுக்கி விளையாடிக் கொண்டு கூச்சலிட்டபடி நாலைந்து வாலுகள். புதிதாய்க் கல்யாணமான ஜோடியொன்று, கடல் நுரை கால்கழுவ கை கோர்த்து நடந்தபடி,
அண்ணா எதுவும் பேசவில்லை. நாலைந்து கற்களைப் பொறுக்கியெடுத்துக் கொண்டான். மத கோடு சேர்ந்தாற்போல் இருக்கும் குட்டைக்குள் தண்ணிர் தெறிக்க எறிந்து கொண்டிருந்தான். பின்னால் போடியாரின் தென்னந்தோப்பில் ஓர் ஒலை விழுந்த சத்தம். திரும்பிப் பார்த்தான். ஒரு வகைச் சிரிப்பு. கொஞ்ச தூரத்தில் தோணிகள் பெரிய வலைக்காய் கடலுக்குள் சென்றபடி, மோட்டர்ச் சத்தம் தனியாய்க் கேட்டது. 'அங்க பாருக்கண்ணாச்சி அந்தா, அந்தா, சவக் காலைப் பக்கம் அண்ணாச்சிர தோணி போகுது?' நான் சொன்னது அவன் காதில் விழுந்ததாய் தெரியவில்லை.
'சின்னவா ஒழுங்காய் படிக்கிறாதானே'
'ஓமண்ணாச்சி' 'கவனமாய்படி கட்டாயம் பாஸ் பண்ணி 'கெம்பஸ்' போகவேணும். நான் படிச்சது வீணாகிப் போச்சுதெண்டு எல்லாரும் நினைக்கிறாங்க. நீயாவது ஒழுங்காப்படி' 'ஏன் வீணாப் போக, நீங்களும் இந்தமுறை எக்ஸாம் எடுக்கிறது தானே?"
வாழ்தல் என்பது. 71

Page 43
'இல்லடா சின்னவா, நான் இன்னங் கனநாளைக்கு இருக்கமாட்டான்' இதென்ன பைத்தியக்கத. வருத்தம் எல்லாருக்கும்தானே வாற அது க்கமாகப் போயிரும்' 'இல்லடா வாழ வேணுமெண்டு எனக்குக் கொஞ்சமும் எண்ணமில்ல. இந்தக் கண் மட்டும் ஒழுங்காத் தெரிஞ்சிருந்தால் அண்டைக்கே செத்திருக்கலாம். அவங்கள் வந்தது தெரியாமல் போயித்து. அப்ப செத்திருந்தா இப்ப இப்பிடிக் கவலப்படத் தேவையில்ல. உனக்கொண்டும் தெரியாது சின்னவா. சொன்னாலும் விளங்குமோ எண்டும் தெரியல்ல. எல்லாருக்கும் என்னில நல்லா மனம் விட்டுப் போச்சி. படிக்கக் கொட்டினது காணாதெண்டு இப்ப வருத்தத்திற்கும் கொட்ட வேண்டிக் கிடக்கு தெண்டு அண்ணாச்சி யோசிக்குது. மூத்தண்ணாச்சி வீட்ட போனா ஒரு தொழு நோய்க்காரனப் பாக்கிற மாதிரி எல்லாரும் அருவருத்துப் பாக்கிறாங்க. பிள்ளைகள் கிட்ட வந்தாமச்சாள் உறுக்கிக் கூப்பிடுறா. கடசி, அக்காச்சிக்குக் கூட என்னில சலிப்பு வந்திற்றுது. பாவம் அம்மா அவள்தான் என்ன செய்வாள். அவளே அக்காவோட ஒட்டின மாதிரி, அத்தான்ட குத்தல் கதைகளையும் கேட்டுக் கொண்டு." 'அதுக்கு செத்தா எல்லாம் சரியாப் போயிருமோ, எக்ஸாம் எடுத்துப் போட்டு ஒரு வேலையில கொளுவிற்றால் எல்லாம் சரியா வரும்' 'அது மட்டும் வருத்தம் விட்டு வைக்குதோ தெரியா. நேற்றும் சந்தையடியில றோட்டில விழுந்து கிடந்தனாம். மாமா தூக்கிக் கொண்டோய் அவங்கட வீட்டில போட்டிருக்காரு. சுகி பாத்துப் போட்டு ஒவெண்டு கத்தினாளாம். அவ்வளவு ரெத்தமாம். சரி இதுகள யோசிக்காமல் நீ கவனமாப்படி எடு போவம்' திரும்பி வரும்போது கடற்கரை யாருமில்லாமல் வெறிச்சோடியபடி தோணிகளெல்லாம் தூரத்தே புள்ளிகளாய்த் தெரிந்தன. சிறுவர்கள் விளையாடி சிரட்டைகள் நாலாபக்கமும் சிதறிக் கிடந்தன. பட்ட மரமொன்றிலிருந்து அண்டங்காக்கை ஒன்று இடைவிடாது கத்திக் கொண்டிருந்தது. பொழுது கருக்கலை நோக்கி. முதலும் கடைசியுமாய் அண்ணாவை ஏற்றிசைக்கிளை உழக்கிக் கொண்டு வந்தேன். அண்ணா கனமாய்த் தெரிந்தான். அதைவிட இதயம் கனத்துக் கொண்டிருந்தது, மறுநாளின் துக்கத்தையும் சேர்த்து.
好 好
72 வாழ்தல் என்பது.

பின்வந்த காலங்களில் எப்போதாவது அண்ணா நினைவில் வருவான். யாரேனும் ஒருத்தர் இறக்கும் போது, தூக்கம் வராத நள்ளிரவுகளின் போது, மனதை நெருடும் கவிதையொன்றை படிக்கும் போது. இப்படி எப்போதாவது அண்ணா நினைவில் வருவான். நேற்றிரவு என் சுட்டி
மகளைத் தோளில் போட்டு உலாத்தும் போதும் ஒரு கவிதையாய்
வந்தான்.
“மன்னித்துக்கொள் அண்ணா! உன் போல் வாழ்வின் கனத்தை காற்றில் எரிக்க
இன்னும் நான் கை விரிக்கவில்லை.
என்வீட்டின் ஒலைகள் சடசடத்துக் கிளம்பும் வரை புயலைப் பார்க்கவும் விரும்பவில்லை.
எனக்குத் தெரியுமண்ணா! முகம் இறுகிப் போனநாளிலிருந்து உன் அசைவுகளெல்லாம் அர்த்தம் நிறைந்தவை.
ரெத்த வரிகளிடையே ' பிரிந்து கிடந்த
உன் உதடுகள் கூட
ஒரு கல்வெட்டுப் போன்றது.
இருந்துமென்ன ஒரு கல்லறை கூட உனக்குக் கட்டப்படாமலேயே போயிற்று.
வெட்கமாய்த் தான் இருக்கிறது! மழைகால நாட்களில் பறவைகள் தாழத் தாழத்தாழப்
வாழ்தல் என்பது. 73

Page 44
பறப்பது போல் வாழ்வைக் குறுக்கிக் கொண்டே போவது வெட்கமாய்த்தான் இருக்கிறது. என்ன செய்ய
எனக்கொரு மனைவியும் குழந்தையும் வீடும்."
கவிதையை திரும்பத் திரும்ப படித்துட பார்த்தேன். நன்றாக வந்திருக்கின்றது என்று மனம் சொல்லிக் கொண்டது.
74
வாழ்தல் என்பது.

திரைகளுக்கு
அப்பால்
6 6
1ெழும்புங்களன் போறதுக்கு.
நீங்க போகாட்டி ஆக்கள் என்னத்தக் கதைப்பாங்க" எத்தனையாவது தடவையென்று தெரியவில்லை. மீண்டுமொருதரம் மலர் என்னை நச்சரித்தாள். காலை யில் அம்மா இறந்துபோன செய்தி கேட்டதிலிருந்தே இதே நச்சரிப்பு. அவள் மட்டுமல்ல, இன்னும் பலர் வந்து என்னை அழைத்துத் தோற்றுத் திரும்பிவிட்டார்கள். என்னால் எழும்ப முடியவில்லை. வளவின் மூலையில் 'கக்கூஸ்' கட்டுவதற்காக ஏற்றிப் போட்டிருக்கும் ஆற்று மணலில் கைகளைப் புதைத்தபடியே குந்தியிருக்கின்றேன். பல் விளக்க வில்லை. ஒவ்வொரு விடியலிலும் ஒன்றையொன்று துரத்திக் கொண்டு வந்து தென்னோலைகளில் அமரும்
ஜோடிக்கிளிகளை ரசிக்கவில்லை. (இன்று அவை வந்து விட்டதா என்றும் தெரியவில்லை.)
படுக்கையை விட்டு எழுந்த உடனேயே என் பின்னே வந்து தோளைக் கட்டிப்பிடிக்கும் கண் 1ணனை இழுத்து மடியினில் போட்டு
@あ2%Kg心 うgu26。
கன்னங்களில் மாறி மாறிக் கொஞ்ச வில்லை.
வழக்கம் போலவே, தோளைக் கட்டிப்பிடித்தபடியே அவன் கொஞ்ச நேரம் என்னில் தொங்கி ནི་ னான். பிறகு என்ன நினைத்தானோ தெரியவில்லை, முன்னே வந்து என் மோவாயைப் பிடித்து நிமிர்த்தி னான். மீசை மயிர்களைப் பிடித்
வாழ்தல் என்பது.
75

Page 45
திழுத்தான். எதற்கும் அசையாதிருக்கும் என்னை ஊன்றிப் பார்த்தான். பின், பக்கத்து மல்லிகை மரத்தின் கீழ் கோழிக்குஞ்சு கீச்சிட்ட சத்தம் கேட்க, 'கக்கா அப்பா' என்று சொல்லிவிட்டு அவைகளின் பின் போய் விட்டான்.
குஞ்சுகளைச் செட்டைக்குள் ஒடுக்கியபடி படுத்திருக்கிறது தாய்க் கோழி. குஞ்சுகள் தலையை மட்டும் நீட்டி வெளி உலகைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. அவைகளின் தலையில் அடிக்கடி செல்லமாய்க் கொத்தியபடி கோழி. அம்மாவை நினைக்கிறேன். ஏதோ கசப்பான உணர்வு. எறிய எறிய எங்கோ பட்டுத் திரும்பத் திரும்ப வரும் வெறுப்பான உணர்வு. கூடவே மெல்லிய வலி. மெதுவாய் ஆரம்பித்து இதயம் முழுவதும் வியாபிக்கும் வலி.
இது அம்மாவின் இழப்புக்கானதல்ல. இது வேறுவிதமான வலி. கண்ணில் நீர் முட்டவில்லை. விம்மல் வெடிக்கவில்லை. அம்மாவின் உடலில் பொத்தென்று விழுந்து கதறவேண்டுமென்ற துடிப்பேதும் எழவில்லை. ஆனால் இதயம் வலிக்கிறது. இதுநாள் வரை சிறுகச் சிறுக சுரந்த வலியெல்லாம் திரண்டு நெஞ்சு அடைப்பது போல்.
எல்லாம் யாரால்?
அவளால்தானே? அவளால் தானே, என் இனிய பால்யம் இறந்த பால்யமாய் சிதைந்து போனது. உடம்பில் காயம்படக்கூடாத பருவத்தில் உள்ளம் ஊனப்பட ஊனப்பட வளர்ந்தேனே?
எல்லாம் யாரால்?
அவளால் தானே? இதோ இந்தத் தாய்க் கோழியைப் போல் செட்டைக்குள் ஒடுக்கிச் செல்லமாய் தலையில் கொத்த அம்மா ஏன் மறந்து போனாள் வாழ்க்கை வானில் சிறகடிக்கும் வல்லூறுகளிடை விட்டுவிட்டுத் தனியே தப்பியோட்டம் எதற்கு? அப்பாவை எண்ணும் போதெல்லாம் இப்படியுணர்வுகள் வருவதில்லை. உண்மையில் அம்மா இறந்தது கேட்டதிலிருந்தே அம்மாவைப் பற்றிய நினைவுகளை விட, பதினைந்து வருடங்களின் முன் இறந்து போன அப்பாவின் நினைவுகள்தான் அதிகமாய் வருகின்றன. ஏனென்று தெரியவில்லை. ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாய்.
76 வாழ்தல் என்பது.

எந்தக் கோணத்தில் அம்மாவை நினைத்துப் பார்க்கும் போதும் நினைவு விழுதின் அடியில் அப்பாதான் தொங்குகிறார். சாந்தமான அப்பா. ஆவேசமான அப்பா. தினமும் மூர்க்கமாய் சண்டை போடும் அம்மாவை எதிர்த்து எதுவுமே செய்ய முடியாது கைகளைப் பிசையும் அப்பா. உள்ளே பொதிந்து போன துக்கங்களையும், விசனங்களையும், ஆற்றாமைகளையும் 'குக்குக்' என்று இருமி வெளியேற்றும் அப்பா. எழுந்து கட்டிலைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து மூச்சிழுக்க, மூச்சிழுக்க அம்மாவை வையும் அப்பா. பின் அப்படியே கட்டிலில் சாய்ந்து கொண்டு நாளுக்கு நாள் வீங்கி வரும் தொந்தியைத் தடவிய படியே, முகட்டு வளையையும், மூலையில் ஒடுங்கிப் போயிருக்கும் என்னையும் மாறி மாறி வெறித்துப் பார்க்கும் அப்பா. பிறகு கண்களால் அழைத்து, என்னைப் பக்கத்தில் இருத்தி தலையைக் கோதிவிடும் அப்பா. பாவம் அப்பா. வாழ்வில் என்ன சந்தோசங்களைத்தான் அவர் கண்டிருப்பாரோ? அம்மாவோடு நாட்களைக் கடத்த எப்படிக் கஷ்டப்பட்டாரோ? அப்பாவின் கடைசிக்காலமெல்லாம் அந்தக் கட்டிலோடேயே கழிந்து போயிற்று. முதலில் மருந்தை அவர் சாப்பிட்டு முடிவில் மருந்து அவரைத் தின்று. அந்நாளில் அப்பா மிகப் பெரிய குடிகாரனாய் இருந்ததாகச் சொன்னார்கள், குடித்துக் குடித்தே நோயை வாங்கிக் கொண்டார் போலும். அம்மாவின் போக்குகளால் அப்பா குடிகாரனாய்ப் போனாரோ? அல்லது அப்பா குடிகாரனாய் இருந்ததால் அம்மா அப்படி மாறிப் போனாளோ?
யாருக்கும் தெரியவில்லை. இளமை நாட்களில் அவர்களில் தாம்பத்தியம் எப்படி இருந்ததென்று யாருக்கும் தெரியவில்லை. பன்றிக்குட்டிகளைப் போல் பதினொரு பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளியிருப்பதால் அவர்கள் தாம்பத்தியம் சுமுகமாய் இருந்திருக்க வேண்டுமென்று எண்ணத் தோன்றும். ஆனால் அப்பாவின் கடைசிகால நாட்களில் அவர்களுக்கிடையில் உள்ள விரிசல், குரோதம், வெறுப்பு இவைகளைப் பார்க்கும் போது அவர்களின் அன்னியோன்யம் ஸ்திரமாய் இருந்திருக்குமென்று நம்ப முடியவில்லை.
வாழ்தல் என்பது. 77

Page 46
ஓட்டைத் தோணியை அவ்வப்போது ஒட்டவைத்து பயணப்படுவது போலவே அவர்கள் இல்லறமும் முடித்திருக்க வேண்டும். யாரில் முதலில் ஓட்டை விழுந்திருக்குமென்று தெரியவில்லை. என்னைக்கேட்டால், அது அம்மாவில் தான் முதலில் விழுந்திருக்க வேண்டுமென்று அடித்துச் சொல்வேன். அப்படித்தான் அம்மா என்னில் பதிவாகிப் போனாள். அழகிய ஓவியத்தில் அசிங்கத்தை பரவியவள் போல். இனிய பாடல் ஒன்றை இடையில் நிறுத்தியவள் போல். மென் பூக்களை முள்ளால் கிழித்தவள் போல். ஒரு கொடிய உருவமாய் அம்மா என்னில் பதிவாகிப் போயிருந்தாள். அன்புததும்பும் பார்வையுடன் கடைசியாய் நான் எப்போது அம்மாவைப் பார்த்தேனென்பதே மறந்து போனது.
好 好 好
'இப்ப நீங்கள் வரப்போறியளோ, இல்ல நான் மட்டும் போகட்டோ' மலரின் பொறுமை எல்லையைத் தொட்டுவிட்டது. இனியும் அவள் பொறுக்க மாட்டாள். அம்மா இறந்ததில் அவளுக்கு பெரிய துக்கமென்று எதுவும் இல்லையாயினும் அவள் போக வேண்டியிருந்தது. "எழுப்புங்களன் போறதுக்கு' அருகில் வந்து தோளை உசுப்புகிறாள். என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. வார்த்தைகளெல்லாம் அங்கோ அதல பாதாளத்தில் போய் ஒளிந்து கொண்டது போல. எதற்காகப் போக வேண்டும்? எப்போதோ அறுந்து போன உறவு அது. என் வரைக்கும் அம்மா எப்போதோ செத்துப் போனாள். ஒருத்தருக்கு ஒரு அம்மாதான் இருக்க முடியும். அவள் ஒரு தரம்தான் இறக்க முடியும். இப்போது இறந்து போனது ஓர் உடல். இற்றுப் போன ஓர் உடல், உடலின் இறப்புக்காக எதற்குக் கலங்க வேண்டும். உடலின் இறப்பிற்கு எதற்கு சடங்கும் சம்பிரதாயமும்? உடல் இறந்துபோன வீட்டிற்கு எதற்கு ஊரே போகவேண்டும்? 'எழும்புங்களன் போறதுக்கு, மாமி என்ன ஊரில ஒருத்தரும் செய்யாத பிழையையோ செய்து போட்டாவு. அவ செய்த பிழைய மறந்துபோட்டு உங்கட அக்காமார், அண்ணன்மார் எல்லாம் சாவீட்டுக்குப் போயிருக்காங்கதானே, நீங்களும் எழும்புங்களன் போறதுக்கு?"
78 வாழ்தல் என்பது.

மலர் இப்போது மெதுவான குரலில் அழைக்கிறாள். நான் அசையாது உட்கார்ந்தபடியே இருப்பதை வைத்து அம்மாவின் கவலை என்னை வாட்டுவதாக எண்ணிக் கொண்டாளோ தெரியாது. தலையைக் கோதி விடுகிறாள்.
கனிவாய் ஓர் பார்வை, 'பழசுகளையெல்லாம் மறந்துபோட்டு எழும்புங்கோப்பா போவம்' 'இல்ல மலர், வேணுமெண்டால் நீ மட்டும் போயித்து வா. விரும்புனா கண்ணனையும் கூட்டிற்றுப் போ'
'அப்ப நீங்க வரமாட்டியல்?"
'இல்ல' ம்ம். உங்கட பிடிவாதக் குணம் எப்பதான் மாறப்போகுதோ பிடிச்சா ஒரே பிடிதான். வாமகன் நாம போவம்' கண்ணனின் கைவிரலைப் பிடித்து இழுத்துக் கொண்டு போகிறாள். இன்னும் நான் எழும்ப முடியாமல் அப்படியே மணலில் மல்லாந்து படுத்துக் கிடக்கிறேன்.' உடல் சிறுத்துக் கொண்டே போகிறது. கட்டியிருந்த சாரம் அவிழ்ந்து போய் பொத்தல்களுடனான காற்சட்டை உடலில் ஒட்டிக்கொள்கிறது. எப்போதோஇடிந்து கரைந்துபோன அப்பாகட்டிய பழைய வீட்டில் நான் நிற்கிறேன். வீட்டின் குசினியோரம் கட்டிக் கிடக்கும் சிங்கன் அப்பா வரும் நேரமறிந்து குரைக்கிறது. யாரோ வெட்டிச் சரித்த எங்கள் ஆலமரம் வளவின் மூலையில் மீண்டும் பரந்து உயர்ந்து விழுதிறங்கி நிமிர்ந்து நிற்கிறது. முன் வளவில் உயரமாய் எழும்பியிருக்கும் கட்டடம் தாழ்ந்து தாழ்ந்து மண்ணுக்குள் புதைகிறது. கட்டடம் இருந்த இடத்தில் முன்னெப்போதோ வெட்டி அழிக்கப்பட்ட வாகை மரங்களும் மஞ்சோரைமரங்களும், தகரப் பற்றைகளும் முளைத்துப் பெருத்துச் சடைத்து நிற்கின்றன. வாகை மரங்களிடையே பொன்வண்டு பிடிக்க நானும் சின்னண்ணாவும் அலைந்து திரிகிறோம். கையில் கவணுடனும் பை நிறையப் பளிங்குக் கற்களுடனும் ஊனப்பட்ட கால்களால் விந்தி விந்தி நடக்கிறான் மற்றண்ணா. மஞ்சோரை மரத்திலிருந்து ஆணும் பெண்ணுமாய் ஒரு ஜோடிக் குருவிகள் பயத்துடன் எழும்பிப் பறக்கின்றன. அண்ணா பதுங்குகின்றான். குருவிகள் வாகை மரத்தில் வந்தமரவும் அண்ணாவின் கவனிலிருந்து கல் விர்ரெனப் பறக்கிறது.
வாழ்தல் என்பது. 79

Page 47
பொத் தென்று விழுகிறது ஆண்குருவி. ரெத்தம் சொட்டச் சொட்ட விழுந்து துடிக்கிறது. பின் அசைவுகள் அடங்கிக் கிடக்கிறது. நான் ஓடிச்சென்று அதைப் பொறுக்கி எடுத்துக் கொள்கிறேன். அதை 'ரோஸ் 'பண்ணுவதற்கான ஆயத்தங்கள் சின்னண்ணாவால் செய்யப்படுகின்றன. குருவியின் இறகுகளைப் பிடுங்கி எறிகிறான்.
அது உரித்த கோழியைப் போல உருப்பெறுகிறது. கூடவே கொண்டு சென்ற வாழையிலையில் அதை வைத்து அதனுடன் கொஞ்சம் உப்பும், மஞ்சளும், மிளகாய்த் தூளும் சேர்த்துச் சுற்றுகிறான். காய்ந்து போன சுள்ளி விறகுகளைக் குவித்து, கொண்டு சென்ற தீக்குச்சியைப் பற்றவைத்து நெருப்புண்டாக்கி, குருவி வாட்டப்படுகிறது. குருவியை வாட்டுவதை தூரத்தில் அதன் இணையன் பார்த்துக் கொண்டே இருக்கிறது. பின் எழுந்து எங்கோ பறக்கிறது. பிறகு மீண்டும் அந்த வாகை மரத்தில் வந்தமர்கிறது. இணையன் நெருப்பில் வாடுவதை ஏக்கமாய்ப் பார்க்கிறது. மீண்டும் எழுந்து எங்கோ பறக்கிறது. இப்படி நாலைந்து தடவைகள் ஆண்குருவி வாட்டி முடிந்து அது எங்கள் வயிற்றினுள் போகும்வரை அது வந்துவந்து போகிறது. கடைசியில் அப்பெண்குருவி அண்ணாவின் கையில் இருக்கும் கவணைப் பயத்துடன் பார்த்தபடியே இன்னுமோர் குருவியுடன் இணைந்து கொண்டு எங்கோ பறந்து போகிறது.
திடீரென வாகை மரங்களும், மஞ்சோரை மரங்களும் மறைந்துபோக எங்கள் பழைய வீட்டின் மண்டபத்தின் தோற்றம், மண்டபத்தின் நடுவில் அப்பா மலர் வளையங்களைத் தாங்கிக் கொண்டு படுத்திருக்கிறார். மண்படத்தை நிரப்பியபடி மனித தலைகள். அப்பாவின் உடம்பைக் கட்டிப் பிடித்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறாள் அம்மா அம்மாவின் ஒப்பாரியை விசித்திரமாய்ப் பார்த்தபடியே அப்பாவின் கால் மாட்டில் நின்று கொண்டு விம்மி அழுகிறேன்நான் அப்பாவின் முகத்தில் இலையான்கள் மொய்க்கின்றன. யாரோ ஒரு பெண் அப்பாவின் முகத்திற்கு நேரேகைகளால் விசிறியபடியே இருக்கிறாள். இலையான்கள் எழுந்து பறக்கின்றன. அவள் விசிறிய காற்றில் அப்பாவின் வெள்ளி மயிர்கள் மெதுவாய் சாய்கின்றன. வெளியே பறைச்சத்தம் கேட்கிறது. அப்பாவின் இறுதியாத்திரையின் ஆரம்பம், அம்மா மூலையில் சோர்வுடன் இருக்கிறாள். எங்கிருந்தோ மலர் தூவிய தேரொன்று வானில் மிதந்து வருகிறது.
அதிலிருந்து அடர்ந்த மீசையும் முரட்டுச் சுபாவமுமான யாரோ ஒருத்தர் அம்மாவை நோக்கி கையை நீட்டுகிறார்.
8O வாழ்தல் என்பது.

அழிந்த பொட்டு ஒட்டிக் கொள்கிறது. உதிர்ந்த பூக்கள் குடிக் கொள்கின்றன. வெள்ளைச் சேலையில் பலப்பல வர்ணங்களில் விதம் விதமாய் அலங்காரங்கள் வந்து விழுகின்றன. ஒட்டி உலர்ந்து போன கன்னங்கள் மறுகணமே உப்பி மினுங்குகிறது. மீசைக்காரரின் கையைப் பற்றி அம்மா தேரினுள் ஏறுகிறாள். தேர் மெல்ல மெல்ல மேலெழுகிறது. என்னையும் வருமாறு அம்மா சைகை செய்கிறாள். கையை நீட்டுகிறாள். மீசைக்காரர் தேரை உயர உயரமாய்க்கொண்டு செல்கிறார். என்கைகள் அம்மாவை நோக்கி நீளவில்லை. கால்கள் நிலத்தோடு பிணைந்துநிற்கின்றன. தேர் வெள்ளை மேகங்களிடையே புகுந்து மறைந்து போகிறது. என் கன்னங்களில் கண்ணிர் வடிகிறது. சட்டம் போட்டு மாட்டி மாலை போட்டிருக்கும் அப்பாவின் முகத்தைப் பார்க்கிறேன். அவரும் அழுவது போல தெரிகிறது.
போட்டோவோலிருந்து அப்பா எழுந்து வருகிறார். என் கண்ணை துடைத்துவிடுகிறார். கட்டியணைத்து உச்சந்தலையில் ஆசையாய் முத்தமிடுகிறார். பிறகு விரலைநீட்டி ஒரு திசையைக் காட்டுகிறார். அங்கே முள்ளடர்ந்த புதர்களும் செங்குத்தான பாறைகளும் மலைகளும் தெரிகின்றன. தொலைவில் எங்கோ எதுவோ மின்னித் தெரிகிறது. அது மின்னும் திசையில் ஓர் ஒற்றையடிப் பாதையின் ஆரம்பம், அங்கே போகுமாறு என்னை மெதுவாகத் தள்ளி விடுகிறார். நான் நடக்கிறேன். வழி நெடுகிலும் வெளவால்கள் சடசடத்துப் பறக்கின்றன.
好 * 好”
"ஓ! இப்பிடியே குந்திக் கொண்டிருங்கோ, அங்க ஆக்கள் உங்களப்பத்தி இன்னம் நல்லாக் கதைக்கட்டும்'
மலரின் உரத்தகுரலில் திடுக்கிட்டுத் திரும்புகிறேன். அவள் கண்கள் சிவந்து கிடக்கின்றது. அழுதிருப்பாள் போலும், வெறுப்பாய்ப் பார்க்கிறாள். நான் எதுவும் பேசவில்லை. "பெத்ததாய் செத்துக் கிடக்கக்குள்ள போய்ப் பார்க்காதவனும் ஒரு மனிசனோ எண்டு எல்லோரும் வாய்க்கு வாய் கதைக்கிறாங்க எனக்கெண்டாஅங்க இருக்கக்குள்ள சாகலாம் போல கிடந்திச்சு' 'மலர் கொஞ்சம் பேசாமல் இரு பாப்பம்' 'இந்தக் கோபத்துக்கு மட்டும் குறைச்சலில்ல. அங்கபோய்ச் சனம் கதைக்கிற கதையக் கேட்டால் தெரியும்?" 'போ, நீயும் போ, போய் அவங்களோட சேர்ந்து நீயும் கத, இல்லாட்டி
வாழ்தல் என்பது. 81

Page 48
வந்து எண்ட முகத்தில காறித்துப்பு போ' ஆத்திரத்தின் முடிவில் குரல் தழதழக்கிறது. இதுவரை நான் இப்பிடி ஆத்திரப்பட்டதை கண்டிராத மலர் நடுங்கிப் போகிறாள்.
"அதுக்கில்லப்பா, மாமிசாகக்குள்ளயும் உங்களத்தானாம் கேட்டவவாம். என்ன செய்தாலும் நீங்க கடைசிப் பிள்ளதானே. நீங்களெண்டால் எப்பவும் அவவுக்கு ஒரு தனிப்பாசமாம்.' என்னைச் சமாதானம் செய்வது போல் மலரின் குரல் இறங்கி வருகிறது. இருக்கப் பிடிக்காமல் எழுந்து நடக்கிறேன். எங்கே செல்வதென்று தெரியவில்லை. கால் போன போக்கில் நடை முடிவில் கடற்கரை தெரிகிறது. ஒன்றையொன்று துரத்திக் கொண்டு ஆணலையும் பெண்ணலையும். எப்போதும் ஓயாத விளையாட்டும் சண்டையும், எப்போதும் ஓயாத தழுவலும் உரசலும், உயர எழுகின்ற ஆணலையின் உச்சியில் அப்பா நின்றபடியே மிதந்து வருகிறார். 'எல்லாவற்றையும் மறந்து விடப் போகிறாயா?' என்பது போல் முகத்தில் கேள்வியின் அடையாளம். இல்லை, இல்லையென்பதாய் அவசரமாய்த் தலையசைக்கிறேன். அப்பாவின் முகத்தில் உக்கிரம் தணிந்து புன்னகை தவழ்கிறது. அலையினின்று இறங்கிவந்து என் விரலைப் பற்றி இழுத்துக் செல்கிறார். ஊர்ப்பக்கமிருந்து பறைச்சத்தம் உரத்துக் கேட்கிறது. அப்பா என்னை நேர் வெட்டாய்ப் பார்க்கிறார். முகத்தில் சாந்தமும் அமைதியும் தொலைந்து கடுமை பரவுகிறது. கை நரம்புகள் புடைத்து முறுக்கேறுகின்றன. என் விரலை இறுகப்பற்றிஇழுத்துக்கொண்டு ஓடுகிறார். பறைச்சத்தம் துரத்திக் கொண்டே வருகிறது. அப்பா வேகமாய், இன்னும் வேகமாய் இழுத்துக் கொண்டு ஓடுகிறார். அசுரவேகம், திரும்பிப் பார்க்கிறேன். சுவடுகள் இல்லை. யாரும் தன்னைத் தீண்டாதது போல ஈரமணல் வெளி சுவடுகளின்றி இருக்கிறது. ஒரு கட்டத்தில் பறைச்சத்தம் நின்று விடுகிறது. அப்பாவின் ஒட்டம் திடீரென்று நிற்கிறது. ஆசுவாசமாய் மூச்சுவிடுகிறார். எல்லாவற்றையும் நல்லபடியாய் முடித்து விட்டதுபோல மீண்டும் முகத்தில் அமைதியும் சாந்தமும். என்னை விடுத்துக்கொண்டு அலை மீது ஏறி நடந்து போகிறார். உயர்ந்தும், தாழ்ந்தும் அலையோடு அலையாக அப்பாவின் உருவமும் தூரதூரமாய்ப் போகிறது. எல்லோரும் பிரிந்து போய் நான் மட்டும்
82 வாழ்தல் என்பது.

தனித்து விடப்பட்டது போலொரு உணர்வு. எல்லோரும் கெட்டவர் களாகவும், அவரவர்களுக்கான அவரவர்களாகவும் எனக்கென்று யாரும் இல்லையென்பதாயும் மனது கசக்கிறது.
இரைந்தபடியே பறந்து வந்த கடற்காகக் கூட்டமொன்றில் இருந்து ஒரு காகம் பிரிந்து தனிவழியே பறக்கிறது. பின் ஒவ்வொன்றாய்ப் பிரிந்து அதனதன் பாதையில் நீர்ப்பரப்பைத் துளைத்து அடிப்பரப்பில் இரை தேடும் பார்வையுடன் பறக்கின்றன. கூட்டம் பிரிந்ததற்காய் எதுவும் கவலைப்பட்டதாய்த் தெரியவில்லை. அவை மீண்டும் ஒன்றாய் கூடிவிடக்கூடும். என் குடும்பம்? கூட்டத்தைக் கலைத்துக் கொண்டு அண்ணாமாரும் அக்காமாரும் அவரவர்க்கானதுணையை வரிந்து கொண்டு போனார்கள். அவ்வழியில் கடைசி நபராய் நான். அப்பாவின் ஆளுகை தகர்ந்து போனபோதே குடும்பமும் கலையத் தொடங்கிற்றெனலாம். பறைச்சத்தம் நெடுநேரமாய்க் கேட்கவில்லை. அம்மாவை(உடலை) இப்போ புதைத்திருப்பார்கள், முட்டியை யார் உடைத்திருப்பார்களோ தெரியாது. முறைப்படி உடைக்க வேண்டியவன் நான் அம்மாவைப் பற்றிப் பரிதாபப்பட்டுக் கொண்டோ அல்லது திட்டிக்கொண்டோ அல்லது இரவில் தான் எப்படி நிம்மதியாய் உறங்குவது என்பது பற்றி யோசித்துக் கொண்டோ யாரோ ஒருத்தர் உடைத்திருக்கக் கூடும். அம்மாவை நான்கு தோளில் சுமந்து செல்கையில் மெளனம் காத்துப் போனவர்களெல்லாம், ஒருபிடி மண்ணை அம்மாவின் புதைகுழியில் போடுவதன் மூலம், அவளுக்கும் தமக்குமிருந்த தொடர்பின் கணக்குகள் சரி செய்யப்பட்டுவிட்டது போல திரும்பி வரும்போது வளவளவென்று கதைத்துக் கொண்டிருப்பார்கள். அவரவர் உள்ளுக்கு அனுப்பிக் கொண்டதன் அளவுகளுக்குகேற்ப அவர்கள் பேச்சின் உரப்பு, கூடியும் குறைந்தும் இருக்கும். அனேகரின் வாயில் அனேகமாய் நான் அவலாக அரைப்பட்டுக் கொண்டிருப்பேன். எனக்கு சாதகமாகவோ பாதகமாகவோ பேசிக்கொண்டு செல்வதால் நடைதூரம் தெரியாமல் அவர்களின் வீடு வந்து சேர்ந்துவிடும். ஆனால் அவர்கள் யாரும் அம்மாவைப் பற்றி அதிகம் இனிப் பேசப் போவதில்லை. சூரியன் மட்டும் அம்மாவுக்காகவும், செத்துப்போன அனைவருக்காகவும் தன் அஞ்சலியை ரத்தமாய்க் கக்கி மேல் வானில் சரிந்து கொண்டிருக்கிறான். மரணத்திற்கும், ஜனனத்திற்கும் ஏதோ அர்த்தம் கொடுப்பது போல மாறி மாறி அதன் உதிப்பும் மறைவும். பொழுது
வாழ்தல் என்பது. 83

Page 49
சாயச்சாயப் பயமுறுத்தப் போகும் இரவு பற்றி பயம் வருகிறது. வீட்டில் மலரும் கண்ணனும் பயந்து கொண்டிருப்பார்கள் என்ற எண்ணம் வர கால்கள் வீட்டை நோக்கி நடக்கின்றன.
* * 好
நேரம் நள்ளிரவைத் தாண்டியிருக்க வேண்டும். ஊரே அடங்கிப் போன அமைதியில் எங்கோ ஒரு நாயின் குரைப்பு தனித்துவமாய்க் கேட்கிறது. மலரும் கண்ணனும் அமைதியாய்த் தூங்குகிறார்கள். இன்று மாலைவரை அம்மாவிற்காக வக்காலத்து வாங்கிய மலர் ஒன்பது மணிக்கு முன்பே நித்திரையாகி விட்டாள். மலர் மட்டுமென்ன, அம்மாவைப் புதைப்பதற்காக மயானத்துக்குச் சென்றவர்களும் இன்னேரம் நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பார்கள், விளையாட்டு குடுபிடித்த யாரேனும் மட்டும் இந்த நேரத்திலும் அம்மாவின் செத்த வீட்டில் கடதாசி விளையாடிக் கொண்டிருக்கக்கூடும். இவ்வளவு நேரம் வரை நான் எப்படி உறங்காமல் இருக்கின்றேன் என்பது எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. மூடுவதற்குப் பயந்த கண்கள், சாத்தப்படாது இருந்த யன்னல் வழியே ஊதக்காற்று வந்து நரம்பிடை குத்தும் போதுதான் விழித்திருப்பதே தெரிகிறது. கண்ணை மூடினால் விதம்விதமான கோலத்தில் அம்மா வருகிறாள். முன்பெல்லாம் அவள் நினைவுகள் எதற்கு என்று மிக இலகுவாய் ஒதுக்கிவிடுவேன். இப்போது முடியவில்லை. எழுந்து மங்கலாய் எரிந்து கொண்டிருந்த விளக்கை அணைத்துவிட்டு வந்து கண்களை இறுக்கி மூடியபடியே ஒன்று, ரண்டு எண்ணத் தொடங்குகிறேன். உறக்கம் வராத சமயங்களில் கண்ணை இறுக மூடிக்கொண்டு நூற்றியெட்டு வரை எண்ணினால் உறக்கம் வந்துவிடுமென்று அப்பா எப்போதோ சொல்லித்தந்ததாய் ஞாபகம். ஒன்று, ரண்டு, மூன்று. நாற்பத்தியஞ்சு, நாற்பத்தியாறு. எண்பத்தி யொன்று. எண்பத்திரண்டு. தூரத்தில் வைத்தே அம்மாவின் புதை மேட்டை நாய்களும் நரிகளும், ஒநாய்களும் கிண்டிக்கிளற சூழ்ந்து நிற்பது தெரிகிறது. எனக்குச் சிறிதும் பயம் வரவில்லை. போர்க்கள வீரனின் வீசுநடையில் இருளை வெட்டி வெட்டி விரைந்து போகிறேன். என்னைக் கண்டதும் நாய்களும் நரிகளும் ஒநாய்களும் ஒதுங்கிக் கொள்கின்றன.
புதை மேடுகளில் இருந்து எழும்பி எலும் புக் கூடுகள் ஆட்டம்
84 வாழ்தல் என்பது.

போடுகின்றன. ஒன்று தலையைத் தடவிச் செல்கிறது. இன்னுமொன்று கையைப் பிடித்திழுக்கிறது. முகத்திற்கு நேரே முட்ட வருவது போல் மற்றொன்று, அம்மாவின் புதைமேட்டை உற்றுப் பார்க்கிறேன். அதில் மெதுவாய் வெடிப்பு விழுந்து, விரைவாகப் பரந்து பூமி பிளந்து கிடக்கிறது. இன்னுமொரு எலும்புக்கூட்டை எதிர்பார்த்தபடி நான் உருக்குலையாத, ஊனம் வடிந்து போகாத, தசைகள் சுருங்கிப் போகாத, முடிகள் நரைத்துப் போகாத அம்மா முழுதாய் எழுந்து வருகிறாள். இதுவரை நான் பார்க்காத அம்மா. இளமை பூத்துநிற்கும் அம்மா, வசீகரப் புன்னகையுடன்நிற்கிறாள். வா! வா என்பது போல உதடுகளின் அசைவு. நான் சிறுத்துக் கொண்டே போகிறேன். சிறுத்துச் சிறுத்து கடைசியில் தொப்புள் கொடியுடனான குழந்தையாய் அம்மாவிற்குள் புகுகிறேன். அம்மாவின் வயிறு வீங்கிப் போகிறது. உள்யேயிருந்தபடியே என் சின்னப்பாதங்கள் கொடுக்கும் உதைகளையெல்லாம் சிரித்தபடியே வாங்கிக் கொள்கிறாள். அம்மாவின் வயிற்றுக்குள் எனக்கோர் உலகம். சின்னஞ்சிறு உலகம். நான் மட்டும் கூட கால்களை நீட்டி நிமிர்ந்து படுக்க முடியாமல் சுருண்டு கிடக்கும் உலகம். அம்மாவின் சிறு உலகத்தினுள் படிப்படியாய் வளர்கிறேன். என் சிறு உலகமும் பெருத்துக் கொண்டு போகிறது. ஒருநாள். உயிர்போகும் வலியில் அம்மா துடிக்கிறாள். அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு புலம்புகிறாள். வெதுவெதுப்பான காலநிலை உள்ள அம்மாவின் சிறு உலகத்திலிருந்து வெளியே வந்து விழுகிறேன். அம்மா மயங்கிப் போய் பின் உணர்வுகள் திரும்ப, பக்கத்தில் கிடத்தப்பட்டிருக்கும் என்னை ஆசையாய்ப் பார்க்கிறாள். மிருதுவான என் முடிகளைத் தடவி உச்சந்தலையில் முத்தமிடுகிறாள். பிறகு வருகின்ற நாட்களிலெல்லாம் அம்மாவை நான் உறங்க விடுவதாயில்லை. அம்மா கண்ணயர்ந்து போகும் நேரங்களிலெல்லாம் வீரிட்டு அழுகிறேன். பசித்தாலும், நுளம்பு கடித்தாலும், நித்திரையில் நரிவந்து விரட்டினாலும் வீடே அதிரும் படி வீரிட்டு அழுகிறேன். கொஞ்சமும் முகம் கோணாது அம்மா என்னைத் தூக்கி கைகளில் ஏந்தி மார்பினுள் புதைத்து, பசியைப் போக்கி, தாலாட்டுப் பாடி உறங்கச் செய்கிறாள். என் மலத்தாலும் சலத்தாலும் நிரம்பிய உடைகளோடே என்னை அணைத்துக் கொண்டே படுக்கிறாள். அடுத்த அறையில் அப்பாவின் குறட்டைச் சத்தம்.
வாழ்தல் என்பது. 85

Page 50
இதோ அம்மாவின் கைவிரலைப் பிடித்தபடி நான் நடக்கவும் பழகிவிடுகிறேன். அம்மா என்னை அழைத்துக் கொண்டு எங்கோ போகிறாள். இலுக்குப் புற்கள் நிரம்பிய புல்வெளியினூடாக எங்கள் பயணம் தொடர்கிறது. கால் வலித்துநின்ற என்னையும் தூக்கிக் கொண்டு போகிறாள் அம்மா. புல்வெளி முடிந்து ஒரு மலையடிவாரம் தெரிகிறது. பூமிப் பெண்ணின் மார்பகமாய் குத்திட்டு நிற்கும் மலைகள் வண்ணவண்ண அலங்காரங்களடங்கிய மார்புக்கச்சையாய் மலையைப் போர்த்திருக்கும் காட்டுப்பூக்கள், மஞ்சளிலும். ஊதாவிலும் சிவப்பிலும், வெள்ளையிலும். அழகான காட்டுப்பூக்கள். மூக்குத்துவாரத்திற்கு துரோகம் செய்யாத சுகந்தம். அம்மா ஒவ்வொரு மலையாய் ஏறி இறங்குகிறாள். (என்னையும் தூக்கிக் கொண்டு எப்படித்தான் இவ்வளவு விரைவாய் ஏறி இறங்குகிறாளோ?) எதையோ தேடிப் போவது போல ஒவ்வொரு காட்டுப் பூவையும் உன்னிப்பாய் கவனித்துக் கொண்டு போகிறாள்? நாங்கள் மிகமிக உயரத்திற்கு வந்து விடுகிறோம். மேகங்கள் மேனியைத் தழுவிச் செல்கின்றன. வானத்தில் நிலா இருந்தால் எட்டிப் பிடித்து விடலாம் போல் தோன்றுகிறது. (நிலா தோன்றும் நாட்களில் அம்மாவை இங்கே அழைத்துக் கொண்டு வரவேண்டும். எப்படியும் அம்மா நிலாவைப் பிடித்துத் தருவாள்.) தூரத்தில் எங்கோயிருந்து நீண்டுவரும் கொடியொன்றின் முடிவில் அந்த அழகிய பெரிய சிவப்புப் பூ தெரிகிறது. அதை நோக்கிஅம்மா பாய்ந்து போகிறாள். என்னை இறக்கிவிட்டு அதை எட்டிப் பிடிக்கிறாள். மூக்கருகே கொண்டு சென்றதுதான் தாமதம், அம்மாவின் முகம் மாறிப்போகிறது. கடைவாயிலிருந்து இருபக்கமும் இருகோரப்பற்கள் நீள்கின்றன. கண்கள் பெருத்து, மூக்குப் புடைத்து கன்னம் உப்பி அம்மாவின் முகம் அகோரமாய் மாறுகிறது. காடே அதிரும்படியான சிரிப்பு, பயத்தில் கண்களை மூடிக்கொள்கிறேன். திறந்து பார்க்கும்போது அம்மா தொலைவில் ஓடிக்கொண்டிருக்கிறாள். யாரோ துரத்த யாரோ அழைக்க ஒடுபவள் போல ஒடிக்கொண்டிருக் கிறாள். மலையின் முடிவில் பயங்கரமாய்த் தோன்றும் ஆழமான அந்தப் பள்ளத்தை அண்மித்தும் அவள் ஒட்டம் நிற்கவில்லை. வேகமாய் இன்னும் வேகமாய் ஆழமான பள்ளத்தாக்தை நோக்கி.
'அம்மோ'
யாரோ என்னை உலுக்கி விடுவது போலிருக்கிறது.
விழிக்கிறேன்.
86 வாழ்தல் என்பது.

கலக்கம் நிறைந்த கண்களுடன் மலர். எனக்கு வியர்த்து வழிகிறது.
'மலர் அம்மா செத்துப் போயிற்றா மலர்'
கேவிக் கேவி அழுகிறேன். மிகப் பெரிய அதிசயத்தைப் பார்ப்பது போல்
மலரின் பார்வை.
பெண்குருவி அண்ணாவின் கையில் இருக்கும் கவணைப் பயத்துடன் பார்த்தபடியே இன்னுமோர் குருவியுடன் இணைந்து கொண்டு எங்கோ பறந்து போகிறது.
வாழ்தல் என்பது. 87

Page 51
காற்று
கனக்கும்
தீவு
66
வியர்வை அரும்பிய கன்னங் Ꮿ5 ᎧᏑ0 ᎧᏛᎢ சேலைத்தலைப்பினால் துடைத்தபடி, வெற்றிலைத்தட்டுடன் முற்றத்திற்கு வந்த ராசம் மாவின் முகத்திலறைவது போல் வீசியது காற்று. வெண்மணலில் நிலா காய் ந்து கொண்டிருந்தது. ஏழோ? எட்டோ? எத்தனையாம் பிறை யென்று தெரியவில்லை. அது எத்தனையாய் இருந்தால் அவளுக் கென்ன? நிலா வானில் தோன்றி அவளுக்குச் சந்தோசத்தையா கொடுக்கப் போகிறது. அது ஒரு காலம், எட்டுப்பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் புடைசூழ ‘ணங்கு ணங்கு' என்று வெற்றி லையை இடித்து கணபதியாரின் கையில் கொட்டியபடி நிலவில் இருந்ததெல்லாம் ஒருகாலம். இப்போது நிலவைப் பார்த்து என்ன
ஆகப் போகிறது. வீணே மனதில் வலியை வாங்கிக் கொள்வதுதான் மிச்சம்.
'இப்பிடி ஒரு வளர்பிறையிலதானே சாந்தன் வீட்ட விட்டுப் போனவன். கடசிப் போக்கு. அப்பவும் இப்பிடித் தானே காற்று தாலாட்டுற மாதிரி வீசிக்கொண்டிருந்தது. கடக்குட்டி துடுக்கன். வீம்புக்காரன். எவ்வளவு பேர் சொல்லியும் கேட்டவனோ, கடதாசிப்பைக்குள்ள ரெண்டு சேட்டையும் ரெண்டு சாரத்தையும் சுற்றியெடுத்துக் கொண்டு. '
88
வாழ்தல் என்பது.
 

'கண்ணா, அடிவாங்காமச் சாப்பிடு பாப்பம்' குசினியின் உள்ளிருந்து கமலத்தின் கோபமான குரல் கேட்கிறது. கூடவே கண்ணனின் சிணுங்கல் சத்தம், ராசம்மாவிற்கு புரிந்து விட்டது. கண்ணன் அடம் பிடிக்கத் தொடங்கி விட்டான். இனி அவள் போனால்தான் அவனை அரவணைத்து அழுகையை நிறுத்த முடியும். 'என்ன பிள்ள அது' எழுந்து சேலையில் ஒட்டியிருந்த மணலைத் தட்டிவிட்டு மகளை விளித்தபடியே குசினிக்குள் நுழைகிறாள். 'பாரம்மா, சாப்பிடச் சொன்னா, குட்டிமாமாவக் காட்டு, குட்டிமாமாவாக் காட்டு எண்டு நிக்கிறான். ஒவ்வொரு நாளும் இவனோட இதே கரைச்சலாக்கிடக்கு. இண்டைக்கு அடிவாங்கித்தான் சாப்பிடப் போறான்', கமலத்தின் குரல் கசிந்து போகிறது. நீர்முட்டிய விழிகளுடன் குனிந்தபடியே பதில் சொல்கிறாள். இருக்காதா பின்ன? பிள்ளை மாதிரி வளர்த்தவன் அல்லவா. 'இஞ்செகொண்டா, நான் அவனுக்கு தீத்திவிடுறன். கண்ணா, வாடா குஞ்சு, அம்மம்மாவும் கண்ணாக்குட்டியும் கத சொல்லிச் சொல்லி சாப்பிடுவம் என்ன?" ராசம்மாவிடம் ஓடிவருகிறான் கண்ணன். அழுகை திடீரென நின்றுவிடுகிறது. ராசம்மா கதை சொல்லப் போகிறாள் என்றவுடன் மண்டபத்திற்குள்ளே படித்துக்கொண்டிருந்த பிரியாவும், சாந்தியும், மாறனும் முற்றத்திற்கு வந்துவிட்டார்கள். அவள் இங்கே கதை சொல்லும் போது அவர்கள் அங்கே எதைப்படிப்பது கண்ணனின் அழுகையில் கிடைக்கும் சந்தோசத்தில் அவர்களுக்கும் பங்கு. 'அம்மம்மா, அம்மம்மா பேய்க்கதை சொல்லுங்கோ அம்மம்மா, 'மாறன் அவளின் கையைப் பிடித்துக் கொள்கிறான். அவளுக்கு பேய்க்கதை சொல்வதில் அதிகம் விருப்பமில்லை. ‘பேய்க்கதை வேணாம். சங்கிலியன் கதை சொல்றன் என்ன?" 'அதென்னத்துக்கு, எத்தினிதரம் அதக்கேக்கிறது' குழந்தைகளெல்லாம் ஏகோபித்த குரலில் முணுமுணுத்தன. 'அப்படியெண்டா, குள்ளநரிக்கத சொல்றன் என்ன'
ஐயோ அதுவும் வேணாம் அம்மம்மா'
வாழ்தல் என்பது. 89

Page 52
'அப்ப என்ன கத சொல்ற. ம். ம்..ம் ஒரு கதயும் ஞாபகம் வருகுதில்ல."
'இல்ல.இல்ல இரிக்கிநிறையக் கதயிரிக்கி. நான் உங்களிட்டச் சொல்லாத இன்னம் எத்தினையோ கதயிரிக்கி. நான் இப்ப சொல்லப் போற கதய கவனமாய்க் கேக்கோணும் என்ன? கேட்டுக்கேட்டு கண்ணாக்குட்டி
சாப்பிட்டு முடிக்கோணும் என்ன'
கண்ணனுக்கு உணவை ஊட்டியபடியே அவள் கதை சொல்லத் தொடங்கினாள்.
ܠܳܟ݂ ` ܐ
அந்த வனம் தன் எழில் இழந்து போய் எத்தனையோ வருடங்கள் ஆயிற்று. நாற்புறம் கடல் சூழ தனித்த தீவாய் அழகுற விளங்கிய அவ்வனத்தில் இன்று பச்சைப் பசேலென்று எதுவுமே தெரியவில்லை. சடைத்து விரிந்த மருதமரங்களாலும், பூத்துக் குலுங்கும் கொன்றை மரங்களாலும், குளிர்ந்தபடி சிற்றோடைகள் ஓடிய இடங்களெல்லாம் பாளம் பாளமாய் வெடித்துக்கிடக்கின்றன. குயில்கள் கூவும் சத்தமும் மயில்கள் அகவும் சத்தமும் கோழிக்ள் கீச்சிடும் சத்தமும் கேட்டு எவ்வளவோ காலமாயிற்று. மயானத்தின் அமைதி கொண்ட அக் கொதி மணல் வெளிகளிலே இப்போது கேட்பதெல்லாம் ஓயாது இரையும் சமுத்திரத்தின் இரைச்சல் மட்டுமே, காற்றுக்குக் கூட பெரிய துக்கம் தன்னை உசுப்பிவிட யாருமே இல்லையென்று. அது தன் கடைசிச் சேவையாய், ஒரு நாள் சீற்றம் கொண்டெழுந்து வனம் மழுவதும் பரவிக்கிடந்த இலை சருகுகளையும் உதிர்ந்து கிடந்த சிறகுகளையும் அள்ளிக்கொண்டு எங்கோ எறிந்துவிட்டு, அந்த வனம் முழுவதும் சுழன்று சுழன்று வீசியதுடன் மெளனித்துக் கொண்டது. பின்னெப்போதோவது பெளர்ணமி நாட்களிலோ, அமாவாசை நாட்களிலோ நடந்து முடிந்தவைகள் பற்றிய துக்கம் நெருட எழுந்து, இன்னும் அவ்வனத்தில் குத்திட்டு நிற்கும் பாறைகளிடம் போய் அழுது புலம்பிவிட்டு வருவதுடன் சரி. அவ்வனத்தில் நிகழ்ந்த அத்தனை கொடுமைகளையும் பார்த்து விட்டு இன்னுமுயிரோடிருக்கும் இரண்டாவது நபர் இந்தப் பாறைகள்தான். கொடிய கழுகிற்கு தாம் புகலிடம் வழங்கியமைக்காக அது எப்போதே உருகி உருகிக் கரைந்திருக்க வேண்டும். ஆனால் அது கரையவில்லை. அது இன்னமும் கரையாம்ல் இருப்பதால்தான் காற்று அதனிடம் சென்று குத்திக் காட்டி
9 O வாழ்தல் என்பது.

அழுதுவிட்டு வருகிறதோ தெரியவில்லை. காற்று, பாறை இந்த இரண்டையும் தவிர அங்கே நிகழ்ந்ததையெல்லாம் பார்த்த மூன்றாவது நபர் ஒருத்தர் உள்ளாரெனின், அது ஓயாது இரையும் நமது சமுத்ராதேவிதான். இத்தனை கொடுமைகள் நிகழ்ந்த அவ்வனத்தை இன்னும் ஏன் சமுத்திரம் அடித்துச் செல்லாமல் இருக்கின்றது என்பது தான் இன்னமும் ஆச்சரியமாய் உள்ளது. ஒரு வேளை எப்போதேனும், எதற்கேனும் அத்தீவிற்கு அல்லது வனத்திற்கு வருபவர்கள் அங்கே நிகழ்ந்த கொடுமையினை அறிய வேண்டும் என்பதற்குச் சான்றாய் அதை விட்டு வைத்திருக்கிறதோ? அதுவும் ஒரு வகையில் நல்லதுதான். நாளை, அத்தீவில் அல்லது வனத்தில் ஆராய்ச்சி செய்பவன், எங்கேயாவது பாறை இடுக்குகளில் பொருதிக் கிடக்கும் அக்கொடிய கழுகின் எலும்புக் கூடுகளையாவது எடுத்துக் கொள்ளட்டும்.
1
உச்சி வெயிலுக்கு பாறைச்சூடு கூட்டையும் தாண்டி உடலினில் பரவ சலிப்புடன் எழுந்து கொண்டது கழுகு. வெம்மையைத் தணிக்க காற்று வீசாததால் ஒரே புழுக்கமாயிருந்தது அதற்கு. கொடிய வெயில் பாறையை உருக்கி திரவமாய் வழிய வைப்பதற்கு முயற்சிப்பது போல் கொடிய வெயில். ஊதாப்பூக்கள் கருகிக் கிடந்தன. வரவர தளர்ந்து வரும் தன்னுடலைச் சிலிர்த்தபடி ஒரு தரம் கண்களை சுழல விட்டது கழுகு. இறகுகள் சுற்றிவர இறைந்து கிடந்தன. பசிப்பது போலிருந்தது. இருந்தும் இரை தேடச்செல்வது அலுப்பாக இருந்தது. ஒரு கோழிக் குஞ்சுக்காகவோ அல்லது இரு கோழிக் குஞ்சுக்காவோ அலைந்து திரிவதிலெல்லாம் அதற்கு இப்போது இஷ்டமில்லை. ஒரே தாவலில் ஐம்பது நூறாய் காலில் இடுக்கிக் கொண்டு வருவதென்றால் எவ்வளவு சந்தோஷம். அதைவிட்டு, இப்பிடி ஒன்றாயும், ரெண்டாயும், சமயங்களில் எதுவுமே இல்லாலம களைத்து.க்சே சலிப்பை பசி வென்றுகொள்ள பாறையோடு சேர்ந்திருக்கும் மருத மரத்தின் உச்சாணிக் கொப்பிற்கு சிறகை விரித்தது. மஞ்சள் வெயிலை
வாழ்தல் என்பது. 91

Page 53
சிறகடிப்பதில் சிதறடிப்பதுபோல் வேகம். பூமியில் மட்டுமென்ன வானத்திலேனும் கூட்டம் கூட்டமாய் இரை தென்படுகின்றதா என்பதாய் பார்வை. தூங்கிக் கிடந்த இலைகளெல்லாம் கழுகின் சிறகடிப்பில் காற்றை உசுப்பத் தொடங்கின. ஏதோ ஒரு கோழிக் குஞ்சின் மரணத்திற்காகப் பரிதாபப்பட்டது மரம். தன்னைத் தனக்குள்ளேயே குறுக்கிக் கொள்ளமுடியாது உச்சாணிக் கொப்பு சங்கடமாய் நெளிந்தது. தூரங்களை ஊடறுக்கும் பார்வையுடன் உச்சாணிக் கொப்பில் வந்தமர்ந்தது கழுகு. பழுத்த இலைகள் உதிர்ந்தன. கொப்பு ஒருதரம் குலுங்கி மீண்டது. எழுபத்தியிரு திசைகளிலும் அதன் பார்வை திரும்பிற்று. மரங்களையும், குன்றுகளையும், முள்ளடர்ந்த புதர்களையும் தாண்டி பார்வை விரைந்தது. வெயிலின் எறிப்புக்கு காய்ந்து போன கம்பு செடிகளும், முள்ளுதிர்ந்த மிலாறுகளும் ஒளி தெறித்த பாறைகளுமே தெரிந்தன. ஒரு கோழிதானும் தென்படவில்லை. நேரம் செல்லச் செல்ல கழுகுக்கு பசி அதிகமாகியது. சிறகுடலை பெருங்குடல் விழுங்கிவிடுவது போலான வலி, பசி அதிகமாக அதிகமாக கொழுத்த கோழி இல்லையெனினும் ஒரு கோழிக்குஞ்சாவது கிடைக்காதா என அதன் பார்வை கூர்மையடைந்தது. இப்படிப்பார்ப்பது அதற்கு வெட்கத்திற்குரியது போல் தோன்றியது. வெண்பஞ்சாய் இறகுகள் உதிர உதிர, மழைத்துளியாய் குருதி வடிய வடிய காலிடுக்கில் நிறைய குஞ்சுகளையும் கோழிகளையும் சுமந்து வரும் நாட்கள் ஞாபகத்தில் வந்தன. இந்த ஞாபகங்கள் வரும்போதெல்லாம் கூடவே அந்த வெண்புறாவின் ஞாபகமும் வரும். வெண்புறாவானில் சிறகடிக்குமந்த ஓரிருநாட்களிலும் தான்இரையெதை யும் கெளவிக்கொள்ள முடியா தென்றாலும் வெண்புறா காயம் பட்டுக்கொண்டு வந்த வேகத்திலேயே திரும்பிப் போனபின் தனக்குக் கிடைக்கும் கொழுத்த வேட்டைக்காக அது ஏங்கிக் கிடக்கும். இயல்பில் அது தனக்கு எதிரியென்றாலும் இவ்விடயத்தில் மட்டும் உதவி செய்வ தாகவே தோன்றும். மற்றும்படி வெண்புறா அதற்கு எப்போதும் எதிரி தான். தன்னைத் தடவிப் பறக்க விடும் வனதேவதையின் கைகளே வெண் புறாவையும் தடவிப்பறக்க விடுவதையிட்டு கழுகுக்கு மிகுந்த கோபம்.
92 வாழ்தல் என்பது.

அத்தகைய நாட்களில் தான் இரையெதனையும் கெளவிக் கொள்ள முடியாது கால்கள் கட்டப்படுவதையிட்டும் தீராத எரிச்சல். எனினும் உச்சாணிக் கொப்பிற்கு மட்டும் பறப்பதற்கும் அங்கிருந்தபடியே இரைகளை நோட்டம் விடுவதற்கும் அனுமதித்திருப்பதையிட்டு கொஞ்சம் திருப்தி, கலக்க முகத்துடன் கழுகு வாடிக்கிடக்கையில் திடீரென்று ஒருநள்ளிரவில் அதன் முன் வனதேவதை தோன்றும், கழுகை மடியினுள் போட்டுக்கொண்டு செட்டைகளைதடவியபடி ஆறுதல் கூறும். வெண்புறாவில் தனக்கு அதிகம் விருப்பம் இல்லையென்றும், கழுகில் தான் அதிகம் விருப்பு என்றும், எனினும் களைத்துப் போன கழுகிற்கு ஓய்வு தேவையென்றும் அதனால்தான் வெண்புறாவை பறக்கவிட்டிருக் கிறேன் என்றும் கூறும். வனதேவதையின் மடியில் படுத்தபடியே கழுகு பல சந்தேகங்களை கேட்கும். சிலவற்றை நம்பாது சத்தியம் செய்யும்படி கோரும், கழுகு கேட்ட சத்தியத்தையெல்லாம் கொடுத்துவிட்டு வனதேவதை மறைந்துபோகும். மறையுமுன்தான் வந்தது பற்றி வெளியில் தெரியக்கூடாதென எச்சரித்துச் செல்லும். அதன்பின் தென்றல் வருடும் மாலை நேரங்களிலும், பணிவிழும் இரவுகளிலும் மென்மையாய் தூக்கம் தொடும் போதெல்லாம் கனவில் மிதக்கும் கழுகு, மரண வேதனையில் கோழிகள் அலறுவதாயும், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு புதர்களிடையே அவை ஒடி ஒளிவதாயும், இழந்த கோழிக்காக குஞ்சுகளும், குஞ்சுக்காக கோழிகளும் அழுவதாயும் காட்சிகள். எழுந்து உட்கார்ந்து பாறை வெடிப்பது போல சிரிக்கும். கொப்பிற்கும் கூட்டிற்குமாய் மாறி மாறிபறக்கும். பசியெல்லாம் பறந்து விட்டநிலையில் பாடவும் தொடங்கும். காற்றை வீசியே வெண்புறாவின் சிறகை ஒடிப்பது போல் எண்ணும், வனதேவதை யின் மடியினில் படுக்கும் போது கிடைக்கும் சுகம்பற்றி மீட்டுப் பார்க்கும். எதையெல்லாம் செய்தால் வனதேவதையை இன்னும் குளிரப் பண்ணலாம் என்று தீவிரமாய் சிந்திக்கும். வெண்புறாவைப் பற்றிக் கேலியாய் புன்னகைக்கும். இப்போதும் பசி மயக்கத்துடனே, வெண்புறா இனி எப்போது வரும் என்று கழுகு ஏங்கலாயிற்று.
வாழ்தல் என்பது. 93

Page 54
2
நிலா மெதுவாயெழும் பின்னிரவொன்றில், அதனொளியில் காயப்பட்டுப் போனதன் சிறகுகளைப் பார்த்தபடி நலிந்து கிடந்தது வெண்புறா, சுவரில்லாத பாழ் மண்டபத்தினுள் தடையில்லாது வந்த நிலாக் கிரணங்களில் அதன் தங்கக்கூடு மிக அழகாய் மின்னித் தெறித்தது. புதிதாய் முளைத்த சிறகுகள் கூட அதன் ஒளியில் வெண்மை பரப்பி விரிந்து கிடந்தன. மூடியும் மூடாது கிடந்த சிறகினூடு காற்றுப் புகுந்து உள் நரம்புகளை யெல்லாம் சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தது. இருந்தும் மனதளவில் அது மிகவும் விசனப்பட்டுப் போயிருந்தது. நீண்ட நாட்களாக தான் அந்தக் தங்கக் கூட்டினுள்ளே அடைபட்டுக் கிடப்பது எதற்காக என்று யோசித்துக்கொண்டது. பதில் தெரியாமல் பெருமூச்சு விட்டது.
ஒருவேளை அடிக்கடி ஒடிக்கப்படும் தன் சிறகுகள் முளைக்கும் வரை கூண்டினுள் இருக்கிறோமா? என்று எண்ணிக் கொண்டது. சிறகு ஒடிக்கப்படுவது பற்றியும்,பின் அது மீண்டும் மீண்டும் வளர்வது பற்றியும் நினைக்கும் போதே அதற்கு ஒரு கேலிச்சிரிப்பு பிறந்தது. அதைவிட, தான் வானில் சிறகடிக்கும் போதெல்லாம் ஆனந்தக் கூச்சலிடும் கோழிகளை எண்ணிப் பார்த்துஇன்னும் சிரித்துக் கொண்டது. வெளியே தெரியாத மயிர் போன்ற இழையினால் தன் கால்களைக் கட்டியபடியே பறக்கவிடும் வனதேவதையை வாழ்த்தி கோழிகள் படையல் வைப்பதை எண்ணி இன்னும் இன்னும் சிரித்துக்கொண்டது. சிரிக்கும் போதும் அந்தக் கோழிகளுக்காக அதன் மனமிரக்கப்பட்டது. தனக்காகவும் அதன் மனமிரக்கப்பட்டது. கடைசியாய் தான் பறந்த போது, காலொடிந்த அந்தப் புள்ளிக்கோழி வருத்தத்துடனேயே கூறியவைகளை எண்ணிப் பார்த்தது. 'சே என்ன உருக்கமாய்த்தான் அந்தப் புள்ளிக்கோழி தன் கதையை சொல்லிற்று. ' 'ஓ வெண்புறாவே, என்னால் உன்போல் பறக்க முடியவில்லை. என்னினத்தவரைப் போல் அதிக தூரம் நடக்கவும் முடியவில்லை. தானியங்களைப் பொறுக்குவது கூட மிகச் சிரமமாக இருக்கிறது. என் காலொடிந்த காலத்திலிருந்தே கண்கள் இருண்டுபோனது போல் உணர்கிறேன்.
94 வாழ்தல் என்பது.

என் குஞ்சுகள் இருந்தாலும் பரவாயில்லை. அவையாவது ஏதேனும் தானியங்களை பொறுக்கி வந்து ஊட்டி விடக்கூடும். அவைகூட கொடிய கழுகின் காலிடுக்கில் உயிரை மாய்த்துக் கொண்டன. எஞ்சிய ஒன்றிரண்டும் கழுகிற்கு பயந்து தூர தேசமாய் போய்விட்டன.
அவைபற்றிய கவலை இன்னும் என்னை வாட்டுகிறது. நீ வரும் போதெல்லாம் தூரமாய்ப் போன அவைகள் திரும்பி வருமா என மகிழ்வுறும் போது நீ சொல்லிக் கொள்ளாமலேயே மறைந்து போகின்றாய். எனவே அவைகளை மீண்டும் நான் காண்பேன் எனும் நம்பிக்கை என்னை விட்டுப் போய்விட்டது. இனி நான் வாழ்வதிலும் ஏதும் அர்த்தம் இருப்பதாய்த் தெரிய வில்லை.
எப்போதுமே இந்தப் புதர்களிடையே -வானத்தையும், வெள்ளி களையும் மேகக் காட்டுக்குள் ஒளிந்து விளையாடும் நிலாவையும், கரும் ராட்ஷஷனாய் விரிந்து வரும் கழுகினையும் பார்த்தலில் எனக்கு சலித்து விட்டது. ஆகையினால் என்னை எங்காவது அழைத்துச் செல். அன்றொருநாள் ஒரு கனாக் கண்டேன். இந்தப் பூமிக்குக் கீழே அழகியதோர் உலகமிருப்பது தெரிந்தது. அங்கே கண்ணாடியுடம்பினையுடைய பறவை என்று சொல்லத்தக்க ஓரினம் காற்றுவெளியில் மிதந்து செல்கின்றன. எதுவும் எதன் மீதும் முட்டிக் கொள்ளவில்லை, மோதிக் கொள்ளவில்லை. எதுவும் எதனையும் கட்டிப் போடவில்லை. புன்னகை கூட இதய ஆழத்திலி ருந்து வருவது போல்தான் தோன்றிற்று. அங்கே என்னை அழைத்துச் செல். அது உனக்குச் சிரமமென்றால் வேறோர் நாள் பிறிதோர் கனாக் கண்டேன். அதிலே, இந்தப் பூமியிலே எங்கோ ஓரிடத்தில் அழகியதோர் நந்தவனமிருப்பது தெரிந்தது. அங்கே நறுமணம் கமழும் காட்டுப் பூக்களும், தீங்கற்ற சிறுபிராணிகளும், மென்மையான அலகிற்குரிய சிறு பறவைகளும் மட்டுமே தெரிந்தன. ரத்த வாடைக்காக எச்சில் ஒழுக ஒழுக அலைந்து திரியும் எந்தப் பிராணியும் தென்படவில்லை.
வாழ்தல் என்பது. 95

Page 55
சிறு அட்டை கூட இருக்காதென்றே நம்புகிறேன். அங்கேயாவது என்னை அழைத்துச் செல். எங்கள் வனதேவதை மழையைத் தருவித்து எங்கள் சிறுகுகளிலும் காலிடுக்குகளிலும் புதர்களிலும் ஒட்டியிருக்கும் ரத்தக் கறையைக் கழுவிவிடும் என்று பார்த்துப் பார்த்தே காலம் ஓடிவிட்டது." தொடராய் வரும் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றங்களாகிப் போனதில் நொந்து போன அப்புள்ளிக் கோழியின் வருத்தங்கள் பற்றி மனம் கசிந்து கொண்டது வெண்புறா. இக்கணத்தில் அப்புள்ளிக்கோழி என்ன செய்து கொண்டிருக்கும் என்று யோசித்துக் கொண்டது. இப்போதும் அது கனாக்கண்டு கொண்டிருக்கும். அல்லது விந்தி விந்தி எங்கேயேனும் எதையேனும் கொறிக்கவும் போயிருக்கும். சிவவேளை எதுவுமே செய்யாமல் கழுகின் வயிற்றினுள் ஜீரணமாயு மிருக்கலாம். メ கூண்டை உடைத்துச் சென்று வனதேவதையின் கண்களை கொத்தி விடுவோமா என்றெண்ணியது. எழுந்து சிறகை விரித்து கூண்டுக் கம்பிகளில் மோதி விழுந்தது. பிறகு படுத்துக் கொண்டது. மீண்டும் எழுந்து சிறகை விரித்துக் கூண்டுக் கம்பிகளில் மோதி விழுந்தது. பிறகு நீண்ட பெரிய மேகக் கூட்டமொன்றினள் நிலா புகுந்து கொள்ள வெண்புறாவும் இருட்டில் சோர்வுடன் படுத்துக்கொண்டது.
3
நாளுக்கு ஒன்றாயும் ரெண்டாயும் தம்மைக் கழுகுக்கு அர்ப்பணித்துக் கொண்டு கோழிகள் புதரிடையே பதுங்கியும், வயிறு பசிக்கும் போது வெளிவந்தும் வாழ்வைப் பழக்கிக் கொண்டு வெண்புறாவை மறந்திருந்த நிலையில் திடீரென அவைகளிடையே ஒரு மெல்லிய சலசலப்புக் கிளம்பிற்று. கழுகு கண்ணுறங்கும் இராப்பொழுதுகளிலும், கூதலுக்காக அது கொடுகிப் படுத்திருக்கக் கூடிய மழை நேரங்களிலும் அடர்ந்த மருத மரங்களின் கீழ் அவை கூடிக் கூடிக் கதைத்தன.
96 வாழ்தல் என்பது.

வனத்துக்குப் புதிய வனதேவதை வரப்போவதாயும் அப்படி வந்தால் அன்றுடன் தமதின்னல்களெல்லாம் நீங்கிவிடும் என்றும் புதிதாய் வரப்போகும் வனவேதை இப்போது வெண்புறாவைத் தேடித்தான் போய்க் கொண்டிருப்பதாயும், அதற்கு எப்போதுமே கழுகை பிடிப்பதில்லையென்றும், ஒருசமயம் அதன் சுட்டுவிரலைக் கூட கழுகு கொத்திற்றுப் போயிருக்கிறதென்றும் அதிகமாய் ஊர்மேயும் சிவப்புச் சேவல் சொல்லிற்று. பொழியும் மழையில் தங்கம் விழுவது போல் அனேக கோழிகளின் கண்கள் அகல விரிந்தன. 'வருகிற வனதேவதை சிறிது முன்னமே வந்திருக்கக் கூடாதா என் குஞ்சு பிழைத்திருக்குமே ' என ஆதங்கப்பட்டதொரு கோழி, கன்னம் ஈரலித்தபடியே. 'வருகிற வனதேவதைக்கு இப்போதே படையல் வைப்போம்' என்றதொரு குஞ்சுக்கோழி
'கொஞ்சம் பொறுங்கள். படையலைப் பிறகு பார்ப்போம், முதலில் நமக்கிருக்கும் பாடும் உரிமையைக் கொண்டு பாடி பழைய வன தேவதையை அனுப்பி வைத்து புதிய தேவதையை வரவழைப்போம்' என்றது ஊர்மேயும் சிவப்புச் சேவல், 'ஓம் பாடுவோம், பாடுவோம்' என்று உரக்கக் கத்தின மற்றக் கோழிகள், 'ஏனிப்படி அவசரம், கொஞ்சம் பொறுத்துப் பார்ப்போமே' என்றது காலொடிந்த புள்ளிக்கோழி.
அதன் கண்களில் நம்பிக்கைக்கான எந்த அடையாளமும் தெரியவில்லை. முன்போல், வெண்புறா வரப்போகிறது என்றவுடன் தூரமாய்ப் போன தன் குஞ்சுகள் திரும்பி வருமா என்ற கேள்வியெல்லாம் அதனுள் எழவில்லை. பிறக்காத குழந்தை எப்படியிருக்கும் என்று எங்ங்ணம் சொல்ல முடியாதோ அங்ங்னமே இன்னும் வராத வனதேவதை பற்றி எதுவும் எதிர்பார்க்க அது விரும்பவில்லை. மற்றக்கோழிகளெல்லாம் புள்ளிக்கோழி மீது ஒரு வினோதப் பார்வையை வீசின. சிலவற்றின் பார்வையில் வெறுப்பு மிஞ்சிக் கிடந்தது. அவையெல்லாம், புதிய வனதேவதை பற்றி சிவப்புச் சேவல் சொல்லிய வைகளைக் கேட்டுக் கேட்டு கனவுகளை வளர்த்துக் கொண்டு விட்டன. தம் புதர்களுக்கு ஒளி கொடுக்க நட்சத்திரங்கள் இறங்கிவர
இருப்பதாகவும், மட்டுப்படுத்திய தம் பறத்தல்கள் இனிமேல் கட்டுக்கடங்காது போகுமென்றும், எங்கும் எந்தவேளையிலும் தாம் இனி
வாழ்தல் என்பது. 97

Page 56
இரைதேடப் போக முடியுமென்றும் இரைகிடைக்காது போயின் கூட வனதேவதை தம்புதர்களுக்கு மூடை மூடையாகத் தானியங்களை இறைஞ்சி விடுமென்றும் அவற்றின் கனவுகள் விரிந்தன. ஆதலால் அவைகள் புள்ளிக் கோழியை சத்தமில்லாது வைதன. இன்னும் சில பெரிதாய் கூச்சல் போட்டன. 'சரி சத்தத்தை நிறுத்துங்கள் இங்கே வாதம் செய்து நேரத்தை வீணடிப்பதை விட நாம் பாடிப்பாடி புதிய தேவதையை வரவழைப்போம்' என்று மற்றக்கோழிகளை அடக்கியது சிவப்புச் சேவல், மந்திரத்துக்குக் கண்டுண்ட தாய் அனேக கோழிகள் உடன் மெளனமாகின.
பின் அவையெல்லாம் வனதேவதையை வரவழைக்கும் பாடலை உரத்துப்பாடிக்கொண்டு வனத்தின் மூலை முடுக்கெல்லாம் பவனி வரத் தொடங்கின. ஆங்காங்கு புதர்களில் இருந்து வேறும் பல கோழிகள் இணைந்து பவனி பெருக்கத் தொடங்கிற்று. எங்கும் போகாது இருந்து இடத்தில் உட்கார்ந்தபடியே தன் கனவுகளை மீட்டுக்கொண்டிருந்தது காலொடிந்த புள்ளிக்கோழி,
4
பனிப்பூக்கள் நுனிப்புல்லை மறக்கத் தொடங்கும் காலைப் பொழுது. வசந்தம் பூப்பதற்காக விரிந்து கொண்டிருந்தன காட்டுப்பூக்கள். ஓடிக்கொண்டிருந்த சிற்றோடை அமைதியாய்க் கிடந்தது. எங்கோ மையம் கொண்டு உட்கார்ந்திருந்தது காற்று.
நீண்ட, பரந்த அந்தப் புல் வெளியில் ஏறுவெயிலைத் தாங்கியபடி குழுமியிருந்தன கோழிகளெல்லாம். யாவற்றின் கண்களும் நெடிதுயர்ந்த மரங்களுக்கப்பால் மேகக் கூட்டங்களை கிழித்தபடி பொருதிக் கிடந்தன. எக்கணத்திலும் மேகத்தைக் கிழித்துக்கொண்டு புதிய வனதேவதைகள் தங்கள் முன் தோன்றலாம் என்ற ஆவல் அக்கண்களில் நிரம்பியிருந்தன. அவற்றின் மனங்களோ தம் பாடும் உரிமையைக் கொண்டு பழைய வனதேவதையை அகற்றிவிட்டது பற்றியும், புதிய தேவதையை வரவழைத்துக்கொண்டது பற்றியம் எண்ணி எண்ணி நெகிழ்ந்து கிடந்தன. வனதேவதை வரும் வழியில் பார்வைக்கு குளிர்ச்சியாக தம் இறகுகளை
98 வாழ்தல் என்பது.

பிடுங்கி வண்ணம் தோய்த்து மிதக்க விட்டிருந்தன. காதுக்கு இனிமையாக குயில்களை அழைத்து கச்சேரி வேறு. புல்வெளியின் ஓரத்தில் தேவதைக்கு படையல் வைக்க அவிப்பொருளும் அவிந்து கொண்டிருந்தது. யாவற்றையும் மேற்பார்வை செய்தபடி தலையாரிபோல் வீறுநடை போட்டுக்கொண்டிருந்தது சிவப்புச் சேவல், பசியால் வெகுண்ட குஞ்சுகள் தாய்க்கோழிகளின் செட்டைகளை கொத்தியபடியிருந்தன.
வானம் நிர்மலமாய்க் கிடந்தது. எத்திசையிலும் மேகத்தில் வெடிப்பு விழுவதாகவோ ஒளி வட்டம் தோன்றுவதாகவோ தெரியவில்லை. பசியின் கோரத்தில் குஞ்சுகள் இரையற்ற தரையை கொத்தி கொத்தி தம் அலகுகளைத் தேய்த்துக் கொண்டன. தாய்க்கோழிகள் விம்மின, வெதும்பின, தத்தமக்குள் முனகின. சிறு சிறு குழுக்களாய் சேர்ந்து கொண்டு தம் அங்கலாய்ப்புகளை பங்கிட்டுக் கொண்டன. வனதேவதை தம் முன் தோன்றியவுடன் எல்லாம் சரிவரும் என்று நம்பின. சிவப்புச் சேவல் அண்மித்து வரும் போதெல்லாம் மெளனம் காத்தன. திடீரென்று எங்கும் இருட்டு, சூரியனுக்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லை. கோழிகள் குய்யோ முறையோ என்று கத்தியபடி ஒடித்திரிந்தன. ஒன்றில் ஒன்று முட்டிக் கொண்டன, மோதிக் கொண்டன. முடிவற்ற தூரத்தில் இருந்து ஒரு நீலநிறக்கதிர் நீண்டு வந்தது. நேரே சிவப்புச் சேவலின் மீது விழுந்தது. காந்தம் இரும்பினை அப்பிக்கொள்வது போல், கைசொடுக்கும் நேரத்தில் சிவப்புச் சேவலை அப்பிக்கொண்டு அக்கதிர் மேகத்தினுள் மறைந்து போனது. பிரமிப்பிலிருந்து மீள முடியாமல் கோழிகள் கண்களை அகல விரித்தபடியே வானத்தை வெறித்துக் கொண்டிருந்தன. இருண்ட மேகங்களுக்குப் பின்னே செறிந்த நீலநிற ஒளி தோன்றிப் பூமியை நோக்கி நகரத்தொடங்கியது. "ஆ, எங்கள் வனதேவதை, எங்கள் வனதேவதை அதோ அதோ வந்து கொண்டிருக்கிறது எங்கள் வனதேவதை' என்று சந்தோஷ மிகுதியில் எல்லாக் கோழிகளும் கூச்சலிட்டன.
வாழ்தல் என்பது. 99

Page 57
நீல ஒளிப்பின்னணியில் வெண்தாமரைப்பூவில் அமர்ந்துகொண்டு மெதுவாய். மெதுவாய். இறங்கிவந்து கொண்டிருந்தது வனதேவதை. புன்னகை பூத்த முகம், சாந்தமான பார்வை, இடக்கையிலிருக்கும் வெண்புறாவைத் தடவிக்கொடுத்தபடி வலக்கை, வனதேவதையின் காலைக் கட்டிப்பிடித்துக் கொண்டு சிவப்புச் சேவல், கோழிகள் ஒன்றையொன்று கட்டிப்பிடித்துக் கொண்டன. ஒன்றையொன்று முத்தமிட்டுக் கொண்டன. கச்சேரியைத் தொடங்கும்படி குயில்களுக்கு கட்டளையிட்டன. இருக்கும் தம் சிறகுகளையும் பிடுங்கி வர்ணம் தோய்த்து வானில் பறக்கவிட்டன. எல்லாம் நல்ல விதமாய் நடக்கும் திருப்தி தேவதையின் முகத்தில் பிரதிபலித்தது.திடீரென எங்கோ ஒரு முழக்கம்.
வனதேவதையின் முகம் மாறிப்போனது.
பூமியை நோக்கி இறங்கி வந்துகொண்டிருந்த வனதேவதை அந்தரத்தில் அப்படியே நின்று கொண்டது. வெண்தாமரைப் பூவிற்குள் ஒளித்து வைத்திருந்த கழுகினை வெளியே எடுத்து, கையிலிருந்த வெண்புறாவினை கழுகின் காலடியில் கட்டி விட்டது. பின் கழுகின் செட்டைகளைச் சேர்த்துக் கட்டியிருந்த கட்டுகளை அவிழ்த்து விட்டது.
முன்னொருபோதுமில்லாத வேகத்தில் பறந்து வந்தது கழுகு. மரங்கள் சடசடத்து முறிந்தன. ஓடைகள் பொங்கி எழுந்தன. காற்று சுழன்று சுழன்றடித்தது. கழுகின் கண்களிலிருந்து வெளிப்பட்ட கதிர்களினால் புதர்கள் எரிந்தன. கூடியிருந்த கோழிகளின் மீது அடங்காப் பசியுடன் பாய்ந்தது கழுகு, கோழிகள் நாலாப் பக்கமும் சிதறி ஓடின. மரண ஓலமிட்டன. கழுகின் கோபப்பார்வையில் எரிந்துபோன தம் புதல்வர்களையெல்லாம் ஏக்கமாய்ப் பார்த்தன. கழுகின் காலடியில் கிடந்தவாறே கூடவே இழுபட்டது வெண்புறா, கோழிகள் தம்முயிர்காக்க மறைவிடம் தேடி ஓடிக் கொண்டிருந்தபோது, 'என்னருமைக் கோழிகளே, என் வெண்புறாவைப் பறக்க விடுவதற்கு உங்கள் மரங்களும், புதர்களும் தடையாக இருக்கின்றன. அதனால்தான் நான் கழுகினை அனுப்பி அவைகளை அழிக்கிறேன். எல்லாம் அழிந்தவுடன் என் வெண் புறா தடைகளின்றிப் பறந்து வரும் அஞ்சாதீர்கள்' என்று வனதேவதையின் அசரீரி கேட்டது. ராசம்மா கதை சொல்லி முடித்ததும் மெளனமாகிப் போனாள். குழந்தைகள் முகத்தில் ஒருவித கலவரம் தெரிந்தது. அவளின் மெளனம் அவர்களை என்னமோ செய்தது. அவளிடமிருந்து இலேசாய் விசும்பல்
1 OO வாழ்தல் என்பது.

ஒலி கேட்டது. அவள்தலைகுனிந்திருந்தபடியால் அழுகிறாளா என்பதை அவர்களால் நிச்சயப்படுத்திக் கொள்ள முடியவில்லை. 'அப்ப இனி அங்க கோழிகள் திரும்பியும் போகாதோ அம்மம்மா' 'தெரியல்ல மக்காள்'
'பிறகென்ன நடந்தது அம்மம்மா"
'தெரியல்ல மக்காள்' 'அங்க மரமொன்றும் முளைக்காதோ அம்மம்மா' 'அதுகும் தெரியல்ல மக்காள் எனக்கொண்டும் தெரியல்ல மக்காள்' இனியங்க என்ன நடக்கும் கோழிகள் வருமோ வராதோ, மரம் முளைக்குமோ, முளைக்காதோ, தேவதை எங்க போச்சி, கழுகு எப்படி செத்திச்சி, செத்திச்சுதோ சாகேல்லயோ, எனக்கொண்டுமே தெரியல்ல மக்காள்'
அவள் திரும்பவும் மெளனமாகிப் போனாள். அவளின் முந்தானைத் தலைப்பை இழுத்துக் கொண்டு கண்ணன் இன்னும் அவளின் மடியினுள் கிடந்தான். பிரியாவும், சாந்தியும் எழுந்து திரும்பவும் படிப்பதற்காய் மண்டபத்தினுள் சென்று விட்டார்கள். அவளும் கண்ணனும் மாறனும் மட்டுமே வாசலில் தனித்திருந்தனர். மாறன் எதையோ தீவிரமாய் யோசிப்பவன் போல் காணப்பட்டான். சில கண நேரங்களில் அவளின் தோளை மெதுவாய்த் தொட்டான். என்ன என்பது போல் அவள் நிமிர்ந்து பார்த்தாள். 'கோழிகளுக்கு துவக்கு இருந்திருந்தா அந்த கழுக சுட்டுப் போட்டிருக்கலாம் எலா அம்மம்மா' பத்து வயது மாறனின் கண்களில் தெரிந்த வன்மம் பாட்டியைக் கிலி கொள்ள வைத்தது.
வாழ்தல் என்பது. 1 O1

Page 58
வாழ்க்கை என்பது போராட்டம் வாழ்க்கை என்பது கடல் வாழ்க்கை என்பது வேள்வி காயமில்லாத போராட்டமில்லை குமுறலில்லாத கடலில்லை. தீயில்லாத வேள்வியில்லை.
- காண்டேகர்
1 O2 வாழ்தல் என்பது.

நண்டு வளையும்
நாங்களும்.
ன்ெகதைகளைப்பற்றி அதிகம் நான்
வாழ்வை நகர்த்தும் ஒரு தனி மனிதனின், சுயசரிதையல்ல, அதா வது எல்லாக் கதைகளுமே, எனக்குக் கிடைத்த அனுபவத்தின் நேரடிப் பதிவுகளல்ல. எனக்குக் கிடைத்த பல
வாழ்தல் என்பது.
1 O3

Page 59
அசாதாரண அனுபவங்களை, பொதுமைப் படுத்துவதற்காக நான் என்னிலிருந்து வேறாக மாறவேண்டி வந்தது. சில கதைகளில் நானாக இருத்தலே போதுமானதாகவும் இருந்தது. சுருங்கச் சொல்லின், என் கதைகளின் கதைமாந்தர்கள் நானாய் இருக்கலாம், நானே திரித்த நானாய் இருக்கலாம் அல்லது நான் உள்வாங்கிக் கொண்ட என்னோடு நெருக்கமாயிருக்கும் நபர்களாயிருக்கலாம். எப்படியிருப்பினும் நான் அவர்களை விட்டு தொலைவில் நின்று கதை படைக்கவில்லை என்பதுதான் நான் திருப்தியுறும் விடயம். இந்நூலை வெளியிட ஆர்வமுடன் முனைந்த எனது இலக்கிய நண்பர்கள் சரி, (குறிப்பாக மது, வ.ஐ.ச.ஜெயபாலன், மு. பொ) புகலிட இலக்கிய நபர்கள் சரி (குறிப்பாக அருள் சின்னையா, பார்த்தீபன், செல்வா போன்றோர்.) முன்னுரை எழுதித் தந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி சரி, என் பல்கலைக்கழக நண்பர்கள் சரி, குறுகிய காலத்தினுள் நேர்த்தியாக அச்சிட்டுத்தந்தநண்பர்தியாகராஜா சரி, அட்டையை வடிவமைத்த ஷகீப் சரி அவ்வப்போது கதைகளைப் பிரசுரித்துக் களம் கொடுத்த வீரகேசரி (F ராஜகோபால், ஜோன்சன்) சரிநிகர் (சிவகுமார், அ. ரவி) பத்திரிகைகளும் சரி, நன்றியை எதிர்பார்த்து இதில் முனையவில்லை என்பது எனக்குத் தெளிவாய்ப் புரியினும், சொல்ல வேண்டியிருக் கின்றது. ஏனெனில் ஈழத்து இலக்கியப் பரப்பில் நூல் வெளியிடல் என்பது, காடுகள் தாண்டி, மலைகள் ஏறி, ஆறுகள் அருவிகள் கடந்து, சுடுமணலில் சுடச்சுடநடந்து புதையல் எடுத்து வருதல் போலாகிப் போன சூழ்நிலையில் அவர்களின் முனைப்புக்களை 'நன்றி' என்ற ஒன்றைச் சொல்லுடன் முடித்து, அதன் பெறுமதியை குறைக்க மனது ஏனோ சங்கடப்படுகிறது. வேறு என்ன? என்னுடைய 26வது வயதில் எனது கன்னி நூலை வெளியிடுகின்றேன். காலம் என்முன் நீண்டு கிடப்பதால் இன்னும் பல நூல்களைத் தரலாம் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். ஆனாலும், எனது கன்னி நூலே கடைசி நூலாகவும் இருக்கலாம். ஏனெனில், காலம் என்முன்னை நீண்டு கிடக்கிறது, நிச்சயமற்றதாக. பொருத்தப்பாடு காரணமாக இருவருடங்களின் முன் நான் எழுதிய கவிதையொன்றை திரும்பவும் இங்கே குறிப்பிடுவதுடன் முடிக்கின்றேன்.
syt/L//r! ۔۔۔۔ நீஅப்போதே செத்துப்போனதில் இப்போது, சந்தோசம்.
104 வாழ்தல் என்பது.

நீ
பொறுத்திருக்க மாட்டாய்! சகித்திருக்க மாட்டாய்!
ஒரு பூவின்
கசக்குதலிலும்
காயப்படும் உன் மனது, அகோரங்களில் அழுதுமுடிந்த இந்த தசாப்தத்தின் தலைவிதியை. Ga/airl nail
அது உனக்குத் தெரியவேண்ட7ம்.
நீ
அழைத்துச்செல்லும் ஆற்றோரம் கால் கழுவும் கடல்நுரைகள் மஞ்சோரை மரத்துப் பூக்குடிச்சான் உன் விரல் (5/7Zag. நான் பார்த்ததெல்லாம் இப்படித்தான். எதுவுமே
என் மகளுக்கு சை நீட்டிக் காட்ட முடியாதவனாய் தான். நீட்டினால் இங்கே தெரிவதெல்லாம். Ganeirl/rzó7 அது உனக்குத் தெரிய வேண்டாம். நண்டு ഖഞ്ഞെug
தோண்டிப் பார்க்க
நீஎன்னை அனுமதிக்காதது போல இங்கேயும்.
கவியுவன் கடற்கரை வீதி. திருக்கோவில்
(15.O9.96)
வாழ்தல் என்பது. 105

Page 60
அம்பாறை மாவட்டம் திருக்கோவிலைப் பிறப்பிடமாகக் AG TIL இராசையா யுவேந்திரா என்ற இயற்பெயருடைய திருக்கோவில் கவிபுவனின் முதலாவது சிறுகதைத் தொகுதி இதுவாகும்.
திருக்கோவில்
மெதடிஸ்த மிஷன்
தமிழ்க் கலவன் பாடசாலை தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் கல்முனை கார்மேல்
பாத்திமாக் கல்லு
ஆகியவற்றின் பழைய மாணவரான இவர் தற்போது
பொறியியல் பிட இறுதியாண்டு பட்சை Lor I EU. I எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்
e: