கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யுகங்கள் கணக்கல்ல

Page 1


Page 2

யுகங்கள் கணக்கல்ல

Page 3

யுகங்கள் கணக்கல்ல
கவிதா
தமிழியல்

Page 4
கவிதா
ஈழத்துச் சிறுகதை உலகில் குறிப்பிடத்தகுந்த பெண் எழுத் தாளர், கவிதா. இவர் ஒரு பெண் எழுத்தாளர் என்பதை இவர் கதைகளினூடாகவும் உணர முடிவது, இவர் கதை களின் தனித் தன்மை.
‘வாழ்க்கையின் ரஹசியம்' என்ற இவரின் முதல் சிறுகதை 1963இல் ‘கலைச் செல்வி'யில் பிரசுரமானது. இருப்பினும், 1969-73 வரையான ஐந்தாண்டுக் காலமே இவர் எழுத் துலகில் தீவிரமாகச் செயல்பட்ட காலம். 1969இல் "இனிய பாடல் சோகமுடையது' என்ற சிறுகதை “வீர கேசரி'யில் பிரசுரமானதைத் தொடர்ந்து இந்தக் காலத்தில் இவர் எழுதிய பெரும்பான்மையான கதைகள் ‘வீரகேசரி' யிலும், 'மலர்' இதழிலும், இலங்கை வானுெலியில் ஒலி பரப்பப்பட்டு 'வானுெலி மஞ்சரி'யிலும் பிரசுரமாயின.
தற்போது 42 வயதாகும் கவிதாவின் இயற்பெயர், நாகேஸ்வரி கணபதிப்பிள்ளை. இலங்கையின் வட பகுதியான !!ாழ்ப்பாணத் திலுள்ள நயினு தீவைச் சேர்ந்தவர். கல்வி:5ாணி பட்டதாரியான (Bachelor of Education)gai, -95560psiusbf6) géfé0). யாகப் பணி புரிகிருர், வேதாந்தி என்ற பெயரில் ஈழ எழுத்துலகில் பிரபல்யமான ஜனுப் சேகு இஸ்ஸதீன், இவர் கணவர்.
கவிதை, நாடகம், கட்டுரை சிலவும் இவர் எழுதியுள்ளார். பிரபல்யத்தில் சற்றும் நாட்டமில்லாத இவரை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள்: இலங்கை வாஞெலி செல்வி. சற்சொரூபவதி நாதன், ‘வீரகேசரி’ திரு. ராஜகோபால், 'மலர்' ஆசிரியர் திரு. அன்புமணி ஆவர். இவரின் படைப்புத் திறனை ஆரம்ப காலத்திலேயே இனம் கண்டு ஊக்குவித்த பெருமை இவரின் தமிழாசிரியரான வித்வான் திரு. சி. குமாரசாமியைச் சாரும.
இந்நூல், இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு.

இனிய பாடல் சோகமுடையது வீரகேசரி, டிசம்பர் 1969 யுகங்கள் கணக்கல்ல மலர், ஜனவரி 1970 மானிடவர்க்கென்று பேச்சுப்படின் 6fy(GSFf, dir iš 1971 மன்மதனும் மலரம்பும்
வீரகேசரி
நேர்கோடு இலங்கை வானுெலி; வாகுெலி மஞ்சரி தாழ்வு பெற்ற புவித்தலக் கோலங்கள் வீரகேசரி, மே 1910
நுகம்
6ssy (ggf, GSüLüduff 1970
ஜனனி
6fy Gassif, DITřš 1970 ஒரு தனி நெஞ்சம் மலர், ஜான் 1970
ஒரே ஜன்னலூடே. இலங்கை வானுெலி; வானுெலி மஞ்சரி பவள மல்லிகை இலங்கை வானுெலி; வானுெலி மஞ்சரி ஜாலம்
மல்லிகை, செப்டம்பர் 1972
ஒரு தேவதைக் கதை பிரசுரமாகதது
22
3.
46
58
76
92
07
123
47
63
177
187

Page 5

இனிய பாடல் சோகமுடையது!
அவள் வெளியே பார்த்தாள். பெண்ணின் சுருண்ட கூந்தலாய் இருண்ட முகிற் கூட்டங்கள் இன்னும் சற்று நேரத்தில் மழை வரலாம் என்று கூருமல் கூறின. கதவைத் திறந்ததும் குளிர் காற்று அவசர அவசரமாய் உள்ளே நுழைந்தது. உடலைச் சிலிர்த்தபடி மீண்டும் கதவடைத்து உள்ளே வந்து உட்கார்ந்தாள். ஏக்கம் நிறைந்த பெருமூச்சு அவளைக் கேட்காமலே வெளி வந்தது. துன்பச் சிலையாய் பிரமை பிடித்தாற்போல் அவள் இருந்தாள். கண்கள் மட்டும் வாசலை நோக்கியே இருந்தன.
இன்று அவன் வருவானுே, வராமலே போய்விடுவானே சொல்வதற்கில்லை. என்றலும் அவள் எதிர்பார்க்கிருள். எதிர்பார்த்து எதிர்பார்த்து அந்த முயற்சியிலேயே செத்து விடவும் அவள் தயார். ஆனல் எதிர்பார்க்காமல் மட்டும் அவளால் இருக்க முடியாது.
இதுபோலத்தான் முன்னும் ஒரு காலம் அவள் அவன் வரவை எதிர்பார்த்திருக்கிருள். அது பெரும்பாலும் மாலைக்காலமாக இருக்கும். வெளியே இருந்து அவன் வருவது தெரியும். வருவான். வந்து சொல்லிவைத்தாற் போல் முற்றத்து முல்லைக்கொடிக்குக் கீழ் நின்றபடி
இனிய பாடல் சோகமுடையது ( 9

Page 6
கொஞ்சம் நிதானித்து அவளை ஒரு முறை பார்ப்பான். அவள் சிலிர்ப்பாள். அடுத்துச் சிரிப்பாள். அதன் பிறகு அவனுக்கு அவள் அப்பாவுடன்தான் கதை. ஆனல் அதற்காக எல்லாம் அவள் கொஞ்சமும் கவலைப் படமாட்டாள். அவளுக்கு அந்தப் பார்வை ஒன்றே போதும். ஆனல் அது, அவனுக்கும் அவள் சிரிப்பு மட்டுமே போதுமானதாக இருந்த காலமாக இருந்தது. இப்போது எதை எதை எல்லாம் அவளிடம் எதிர்பார்க் கிருனுே, எதை எதையெல்லாம் எதிர்பார்த்து ஏமாந்து விட்ட அதிருப்தியில் அவளை முழு மூச்சாய் வெறுக் கிருனே- அவளுக்குப் புரியவில்லை. காலம் எப்படியோ மாறிவிட்டது தெரிகிறது. ஏன்தான் இந்தக் காலம் மாறுகிறதோ? நிற்காமல் தயங்காமல் ஒடிக்கொண்ே இருப்பதில் அதற்கு என்ன இன்பம்? தான் ஒடும் ஒட்டத்தில் எத்தனை எத்தனை இன்ப நினைவுகளை அடித்துச் செல்ல நேர்கிறது என்று அதற்குத் தெரிந்தா ஒரு கணமாவது நிதானிக்குமா?
அது என்ன செய்தாலும் அவளைப் பொறுத்தமட்டில் வாழ்வில் வசந்தம் மட்டுமே நிலவும் என்று நினைத் இறுமாந்திருந்த காலத்தில், அவள் உள்ளம் புகுந்து உணர்வில் நிறைந்த அவனே நெடிய கோடையாய், கொடிய குருவளியாய் மாறிவிட்டானே. என் (.) தவறு செய்தாள் அவள்? புரியவில்லையே!
'கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி நோதர், 1. செய்யும் சிறுபட்டி' என்று குரலைக் குழைத்து தலையை" சாய்த்து அவன் விளக்கம் கொடுக்கின்ற அழ4. தன்னையே இழந்தவள்தான் அவள். ஆனல் அ'ை நோதக்க செய்யும் சிறுபட்டியாய் மாறுவான் . . ) அவள் எண்ணிப் பார்க்கவும் இல்லையே.
10 () கவிதா

அவனுடைய அழகிலும் விரிவுரையாற்றும் திறமையிலும் மயங்கி இருந்த எத்தனையோ பெண்கள் இருக்க அவளை மட்டும் அவன் ஏன் தேர்ந்தெடுத்தான்? புரியவில்லை, அப்படியே ஏன் இப்போது புறக்கணிக்கிறன் என்பதும் புரியவில்லை. அவன் புறக்கணிக்கிறன் என்பதற்காக அவளால் அவனைப் புறக்கணிக்க முடியுமா? பார்த்துப் பார்த்து அவன் விருப்பங்களுக்கேற்பத் தன் இயல்பையே மாற்றிக்கொண்டவளாயிற்றே அவள். அவன் உள்ளம் மாறிலுைம் அவனுல் உருவாக்கப்பட்ட அவள் உள்ளம் என்றென்றும் மாறது. அதில் அவனே நிறைந்து வாழ்வான்; அவன் வாழ்வில் ஏற்பட்ட அலங்கோலத் திருப்பங்கள் அவள் உள்ளத்தில் பதியா. அவள் உள்ளத்தில் வாழும் அவன், முற்றத்து முல்லைக் கொடிக்குக் கீழ் நின்று நிதானித்து ஒரு பார்வை, ஒரு சிரிப்புத் தரும் அவளுடைய அவனேதான்.
சுவர்க் கடிகாரம் 'டிங்' என்று ஒரு முறை அடித்து நிறுத்தியது. அவள் திரும்பிப் பார்க்கவில்லை. அவளுக்குத் தெரியும்; இதற்கு முன் அது பதினுெரு தடவைகள் அடித்தபோது அவள் கவனித்திருந்தாள். பதினென்றரை.
அவள் கண்கள் கொஞ்சமும் மூடமாட்டேன் என்றன. அவன் வரும்வரை காத்திருந்து அவனுக்காகக் கதவைத் திறந்துவிடுவதில் பெறுகின்ற சொற்ப மகிழ்வையும்கூட இழந்துவிடப்போகிருயா என்று முரண்டு பிடித்தாற் போல கொட்டக் கொட்ட விழித்திருந்தன.
கைகளை நீட்டி மேசைமேல் இருந்த புத்தகம் ஒன்றை எடுத்து விரித்தாள். அது 'நெடுந்தொகை. அவள் இதழ் பிரித்து பக்கத்தில் இருந்த பாட்டில் மனதைச் செலுத்தினுள். பார்த்துக் கொண்டேயிருக்கையில்
இனிய பாடல் சோகமுடையது ( 11

Page 7
கண்கள் நிறைந்து வழிய ஆரம்பித்தன. அவள் அப் பாட்டின் கடைசிச் சில வரிகளை வாய்விட்டே படித்தாள்.
"செந்தார்ப்பைங்கிளி முன்கை ஏந்தி இன்றுவரல் உரைமோ என்றிசினுேர் திறத்தென, இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென மழலை இன்சொல் பயிற்றும் நாணுடை அரிவை"
"அந்தத் தலைவனின் தலைவி கிளியிடம் கேட்டாள். இந்தத் தலைவனின் தலைவி யாரிடம் கேட்பாள்?’ என அன்று அந்தப் பாட்டுக்கு விளக்கம் கொடுத்தபோது, அவன் அவளிடம் கேட்டதுண்டு. "என் தலைவன்தான் என்னுடனேயே இருக்கிருரே. தூது எதற்கு?" என்று அவள் மறுமொழி தந்ததும் உண்டு. இருவரும் தனிமை யில் இருக்கும்போது அந்தரங்கமாகவும் ஆசையாகவும் பரிமாறிக்கொண்ட வார்த்தைகளுக்கு மெளன சாட்சி யாய் இருந்த அந்தப் புத்தகம் இப்போது பேசாமல் பேசி ஞாபகமூட்டுகிறது. இப்போது இவள் தலைவன் பிரிந்துவிட்டான். இவள் யாரிடம் கேட்பாள்? யாரைத் தூதுவிடுவாள்? இந்தத் தலைவனுக்கு இப்படியும் வருத்தத் தெரியும் என்று அவள் கண்டாளா என்ன?
அவன் ஏன் அவளைப் பிரிந்தான்? பிரிந்தானுவது? ஒாே வீட்டில்தான் இருந்தான். பேச்சு வார்த்தை இல்லை. அப்படியானுல் அது பிரிவில்லை என்று உலகம் கூறலாம். அவள் ஒப்புக்கொள்வாளா? அவனும் அவளும் ஒரே வீட்டில் இருந்தாலும் அவன் அவளிடமிருந்து எவ்வளவு விலகி நின்றன் என்பதை அவள் அறியாதவள் அல்லவே. ஏன் இந்தப் பிரிவு?
அவள் நினைவுக்கு எட்டியவரை அவனுக்கு வெறுப் பூட்டும் வகையில் அவள் நடந்துகொண்டதே இல்லை.
12 D கவிதா

தன்னைக் கைப்பிடித்த தெய்வத்துக்கு எந்த ஒரு வகை யிலும் தன் மனைவியிடம் அதிருப்தி வரக்கூடாது என்று அவள் எவ்வளவு கவனத்துடன் நடந்துகொண்டிருக் கிருள். அவளிடம் பேசாமல் ஒதுங்கியிருக்க முற்பட்ட போதுகூட அதன் மூலம் அவனுக்குத் திருப்தி ஏற்படு கின்றதானுல் சரியே என்று ஒருவித கற்பனையில் அவனது மெளனத்தைத் தன் மனதுக்குள்ளாகவே ஆமோதித்துக் கொண்டவள் அவள். ஆனல் ஒரே ஒரு விதத்தில் அவளால் அவனைத் திருப்திப்படுத்த முடிய வில்லை என்பதை அவளால் மறக்க முடியவில்லை. மூக்கில் சளி வடிந்துகொண்டு நிற்கிற குழந்தையே யானுலும் தூக்கி வைத்து விளையாடும் அவனுக்கு இன்னும் தன்னுல் ஒரு குழந்தையைப் பரிசளிக்க முபி' வில்லையே என்பது அவளுக்குப் பெரிய குறைதான் ஆல்ை அவளுக்கு இருக்கக்கூடிய மனக் குறையை, அது குறையே இல்லை என்று ஒப்புக்காயினும் மறுக்க வேண்டிய அவனுக்கு அது குறைவாகத் தோன்றலாமா? அதுதான் அவளிடம் இருந்து அவனைப் பறித்துவிட்ட காரணமா? தன் துன்பத்தை மறைப்பதற்காகவே அவளை விட்டு அவன் விலகிச் செல்கிருன?
ஒரு நாள் அவன் வீட்டுக்கு வந்தபோது அவள் அவனிடம் கேட்டேவிட்டாள். 'அத்தான் உங்களுக்கு என் குறை முன்பே தெரிந்திருந்தால் என்னைத் திருமணமே செய்திருக்கமாட்டீர்களா?" என்று அவள் கேட்டபோது, அவளுடைய ஆறுதலுக்காகவாவது தன் இதழ் பிரித்து ஏதாவது பேசியிருக்கலாம். அவன் பேச வில்லை. இதழ் பிரியாமலே சிரித்தான். ஒரு முறை அவளை ஏறிட்டுப் பார்த்தான். பின் தலையைத் தாழ்த்திக் கொண்டு போய்விட்டான். அவள் விக்கித்துப்போய் நின்றுவிட்டாள்.
இனிய பாடல் சோகமுடையது () 13

Page 8
அவன் நினைவில் என்னதான் இருக்கிறது? அவளை எப்படி அவமானப்படுத்தினுலும் புண்படுத்திலுைம்கூட அவளுக்கு வேறு போக்கில்லை என்று கருதிவிட்டான? அவள் தானகவே தனக்குள் ஏற்படுத்திக்கொண்டி ருக்கும் கட்டுப்பாட்டின் உறுதியால் யாரிடமும் எதையும் வாயைத் திறந்து கூறமாட்டாள். அது அவனுக்கு நன்றகத் தெரியும். இப்போதுகூட அவனுக்கும் அவளுக்கும் இடையே உள்ள பிளவை அவனையும் அவளையும் தவிர யாரும் அறியமாட்டார்கள். பிறர் கண்களுக்கு அவர்கள், காதல் திருமணத்துக்கே எடுத்துக் காட்டாகத் திகழ்பவர்கள். அன்பான ஒரு பார்வைப் பரிமாறல்கூட இல்லாத விசித்திரமான காதல் வாழ்வு அவர்களுடையது என்று அறிய நேரும்போது அதிசயப் படுவார்களோ, திருப்திப்படுவார்களோ? அவளுக்கு அதுபற்றி அக்கறையில்லை. அவளைப் பொறுத்தவரை அவன் இதயமும் அதில் உருவாகும் எண்ணங்களும் தான் முக்கியம். அவனைப் பிடித்து நிறுத்திவைத்து "அத்தான் என்னைக் கொல்லுகிறீர்களே ஏன் அத்தான்” என்று கதற வேண்டும் போல ஒரு துடிப்பு அவளுக் கேற்பட்டதுண்டு. ஆனல் அவளுக்கு அது முடியாது. முன்பெல்லாம் சகஜமாகப் பழகிய காலம் மலையேறி இப்போது அவன் எதிரில் நிற்பதற்குக்கூட அவளால் முடியவில்லை. இன்றுபோல் எத்தனையோ நாட்கள் அவன் வரவுக்காகக் காத்திருந்து கதவைத் திறந்து விடுவதுண்டு. அப்போதெல்லாம் அவன் பார்வையில் படாமல் மறைந்து நிற்பதற்குப் பெருமுயற்சி எடுத்துக் கொள்வாள். ஆனல் அவனும் ஏறிட்டுப் பார்ப்பதில்லை என்பது உண்மைதான். அவள் தோற்றுவிட்டாள். கசப்பானதாக இருந்தாலும் உண்மை. அவளால் அவனைக் கவர முடியவில்லை. வாழ்க்கையில் எல்லா வசதிகளும் இருந்தபோதிலும் வாழ்வைச் சிரித்தபடி கழிக்க துணைவர மறுக்கிருனே. இந்த நிலையைச் சகிக்க
14 ( ) கவிதா

மாட்டாமல் தற்கொலை செய்யவும் முடியவில்லையே. அப்படிச் செய்துகொண்டால் அவள் காதல் கதையின் சோக முடிவு அவள் வாழ்க்கையின் விரிசலை உலகுக்குப் பறைசாற்றிவிடுமல்லவா?
இப்போது அவள் எதிர்பார்க்கிருள். வரவர அவன் போக்கு தீவிரமடைகிறது. வாழ்வில் தோல்வியடைந் தவன்போல் இயங்குகிறன். ஏன்? எதற்காக? வாழ்வில் எல்லாமே குழந்தைக்காகத்தான? அன்பும் பாசமும் பரிவும் இரக்கமும் குழந்தையை நோக்கியேதான. இவ்வளவு அன்பும் பண்பும் அறிவும் தெளிவும் கொண்ட அவன் இந்தச் சாதாரண குறைக்காக அவளை வருத்து வதன் மூலம் தன் வருத்தத்தைத் தீர்த்துக்கொள்ள முயற்சிக்கிறன? அப்படியானல் அவனிடம் இருந்த அன்பு, பண்பு, காதல், பாசம் இவ்வளவும், வேண்டாம், மனிதத்தன்மை, அதுகூட அர்த்தமில்லாத வெறும் பொய் யான நடிப்புத்தான? அவள் மனம் தாங்கவில்லை. என்னதான் அவன் வெறுத்து ஒதுக்கினலும் அவனைப் பற்றி அவ்வளவு கேவலமாக நினைப்பதையே அவள் வெறுத்தாள். இல்லை, இதைவிட வேறு காரணம் இருக்க வேண்டும் என்று அவள் எண்ணினுள். அவன் இதயமே இல்லாதவன் என்று நிரூபிக்கிற இந்தக் காரணத்தை விட வேறு ஏதாவது ஒரு காரணம் இருந்துவிட்டால் எவ்வளவு நன்ருக இருக்கும்!
மறுபடியும் படுக்கை அறைக்குள் அவள் நுழைந்த போது மணி விடிகாலை இரண்டு மணிக்கு மேலாகி விட்டிருந்தது. படுக்கையில் உட்கார்ந்தவள் மனதில் முதல் முதல் அந்தக் கட்டிலில் அமர்ந்த நாள் நினைவுக்கு வந்தது.
இனிய பாடல் சோகமுடையது ( 15

Page 9
அன்று அவன் அவளைப் பிடித்து தன் பக்கத்தில் இருத்தினன். என்ன என்னமோ கதைகள். கடைசியில் அவன் கேட்டான்
"எல்லாப் பெண்களையும் போல நீயும் கணவனுக்கு முன் சாக வேண்டும் என்றுதான் விரும்புகிருய் இல்லையா?”
**ஏன் அதிலென்ன தவறு?”
'தவறு, சரி என்பதைப் பற்றிப் பேச்சில்லை. நீயும் அப்படித்தான் விரும்புகிருயா?”
"பூவும் பொட்டுமாய் போய்விட வேண்டும் என்று யார்தான் விரும்பமாட்டார்கள்? நானும் அப்படித் தான். ' அவன் குறுக்கிட்டான்.
"போடி கள்ளி, என்னை இங்கே தவிக்க விட்டுவிட்டு நீ மட்டும் போய்ச் சேர வேண்டும் என்று நினைக்கிருய் இல்லையா? கணவனை இங்கே மற்றவர்களிடம் ஏழ்மைப் பட வைத்துவிட்டு நீங்களெல்லாம் சொர்க்கத்துக்குப் போய் என்ன சாதிக்கப் போகிறீர்கள்?"
"அதுதான் உங்களுக்கு எல்லாம், சமுதாயம் இன்னுெரு பெண்ணைத் திருமணம் செய்ய அனுமதி தருகிறதே!"
"யாருக்கு வேண்டும் அந்த அனுமதி? பெண்களுக் கெல்லாம் அந்த அனுமதி மறுத்து, கெளரவம் கொடுத்து விட்டு ஆண்களையெல்லாம் அவமதித்துவிட்டார்கள். ஒருத்தி போனுல் இன்னுெருத்தி என்று வாழ நாங்கள் என்ன விலங்குகளா?”
"ஜயய்யோ போதும்" அவள் இடைமறித்தாள். "நீங்கள் செய்வீர்கள் பத்து கல்யாணம். 5/T0O! கல்யாணம்.”
16 கவிதா

அவள் பகிடியாய்த்தான் கூறினள். அவன் முகம் என்னவோபோல் ஆகிவிட்டது. அதன் பிறகு அவன் பேசவில்லை. பேச்சு அத்துடன் நின்றது. அந்த முடிவு இருவருக்குமே பிடிக்கவில்லை. அடுத்து பேச்சை யார் தொடங்குவதென்பது தெரியவில்லை. பேச்சின்றிப் படுத்துக்கொண்டனர். இரண்டு நிமிடம் ஆகியிருக்காது. அவள் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தாள். அவன் விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தான். தலையணை முழுவதும் நனைந்துவிட்டிருந்தது. அவள் எழுந்து உட்கார்ந்தது தெரிந்ததும் அவன் விருட்டென்று எழுந்து அவள் தோளைப்பற்றி ஆவேசமாக உலுப்பினுன்.
"நான்.நான்.உன்னைக் காதலிக்கவில்லை. அதற்கும் மேலே. அதற்கும் மேலே." அவன் வார்த்தை வராமல் திணறினன். பிறகு குழந்தை மாதிரி அவள் முகத்தை நோக்கி அவன் கூறினன்- N
"நான் உயிர் வாழும் வரை குழந்தையைக் காக்கும் அன்னையாய், உன் நிழல் என்மீது கவிந்துகொண்டே இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன் - நீ.நீ. என்னை விட்டிட்டுப் போயிடாதே." அவள் மடியில் முகம் புதைத்து பச்சைக் குழந்தை மாதிரி அவன் அழுவதைப் பார்க்க அவளுக்கும் கண்ணில் நீர் வழிய ஆரம்பித்தது. "சும்மா கதைக்காகச் சொன்ன இப்படியா அழுவார்
56t?' இன்றைக்கு அந்தச் சம்பவம் ஏன் அவள் நினைவுக்கு வந்தது? அவனுடனன அவள் தாம்பத்திய வாழ்வில் இப்படி எத்தனையோ சம்பவங்கள் நடக்கவில்லையா? இந்தச் சம்பவம் ஏன் இப்போது நினைவில் இடறுகிறது? "என்னை அன்னையாய்க் காப்பாற்று" என்று அவன் வேண்டிக்கொண்டபோது நீ உயிர் வாழ்ந்தாய். அதற்கு
இனிய பாடல் சோகமுடையது ( ) 17

Page 10
அர்த்தமிருந்தது. இப்போது உன்னைத் தேவையில்லை என்று ஒதுக்குகிறனே"- "ஏன் இன்னும் உன் உயிர் போகவில்லை?" என்று கேட்பதன் துசகமா இது?
அவள் தன்னைச் சுற்றிப் பார்த்தாள். அவள் கண்ணில் வியப்பு படர்ந்தது. என்றோ - எங்கோ - எப் பொழுதோ.ஒ.அவளுக்கு ஞாபகம் வந்துவிட்டது.
அவன் அன்று முகத்தைப் புதைத்து அழுதானே அதே தலையணை உறை. அவன் கண்ணிரில் நனைந்து, அவள் மாற்றினளே அதே தலையணை உறை மூலையில் இரண்டு மான்கள் தைத்து 'இன்பக் கனவுகள்' என்று ஆங்கிலத்தில் எழுதி இவளே தைத்த தலையணையுறை. தன் அசட்டுத்தனத்துக்கு மன்னிப்புக் கோரும் விதத்தில்
"அசடுகள் மாதிரி அழுகிறேமே, இந்த மான்கள் எவ்வளவு சந்தோஷமாய் நிற்கின்றன பார்" என்று அவன் கேட்டதும், "இன்பமாக இருக்கவேண்டிய இந்த இரவில் அசடுகள் மாதிரி அழுகிறீர்களே என்று அவை கேட்பதுபோல் இல்லையா?” என்று அவள் கேட்டதும் நினைவிற்கு வந்தது. அவன் குறும்பாகச் சிரித்தபடியே கூறினன், "இனிய பாடல் சோகமுடையது” என்று.
அவளால் அதற்குமேல் நினைக்க முடியவில்லை. தலை யணையில் முகத்தைப் புதைத்து வேண்டியமட்டும் அழுதாள்.
"இனிய பாடலாகவா நம் வாழ்வை மதித்தீர்கள்? அப்படியானல் ஏன் அதில் அபஸ்வரம் விழும்படி விட்டுவிட்டீர்கள்." 'ஓ'வென்று அவள் இதயம் வெடிக்குமாப் போலக் கதறினுள். வாழ்ந்த வாழ்வெல் லாம் பொய். அவன், அவன் காட்டிய அன்பு அனைத்தும்
18 ( ) கவிதா

பொய் என்ற நினைவு அவள் இதயத்தைச் சுட்டது. இதோ உயிரை விட்டுவிடப்போகிருளே, பாவம். பூரணமான வாழ்க்கைதான் கிடைக்கவில்லை. வாழ்ந்த சிறு பகுதியாவது சத்தியமானது என்ற நம்பிக்கை யிருக்குமானல் அவள் இன்னும் கோடானுகோடி காலம் உயிர் வாழ அந்த நம்பிக்கை வலுவளித்திருக்கும்" இப்போது அர்த்தமற்ற வெறும் வாழ்க்கை அளித்த அலுப்பில் கண்ணை மூடிக்கொண்டுவிடுவாளோ என்று பார்ப்பது போல ‘பெட்றும் லைட் அவள் முகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது.
イト
அப்படியே அவள் படுத்திருந்தபோது வெளியே கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. எழுந்து சென்று திறக்க வேண்டுமென்ற நினைவுடன் கூடவே இதயத்தில் ஒரு வலி. மெல்ல மெல்லத் தொடங்கி.
"அப்பா அப்பா' என்று அப்படியே உட்கார்ந்து விடுகிறள். நினைவு சிறிது சிறிதாக மங்கிக்கொண்டே போகின்றது. ஓ. இது.ஒரு முடிவு என்று நினைத்தவள் மனம், திரும்பத் திரும்ப ஒரு பிரார்த்தனையில் சுழல்கிறது. இப்படியே நான் செத்துப்போய்விட வேண்டும். நான் இப்படியே செத்துப்போய்விட வேண்டும். நான் செத்து.
ஆ. அது யாருடைய குரல், "சுடர்த்தொடீஇ கேளாய்" என்று கம்பீரமாய் ஒலித்து அவள் இதயத்தை ஆட் கொண்ட குரலல்லவா அது? முற்றத்து முல்லைக் கொடிக்குக் கீழ் நின்று அவளை நோக்கி ஒரு பார்வை, ஒரு சிரிப்புத் தரும் அவளுடைய அவனல்லவா பேசுவது? இதயத்தில் வலி இருந்தால் என்ன? இதயமே அற்று விழுந்துவிட்டாலும் அவளுடைய உடம்பின் ஒவ்வோர் அணுவாலும் உணரமுடியுமே அவனது குரலை. எத்தனை நாட்களாகின்றன, அந்தக் குரலை அவள் கேட்டு..?
இனிய பாடல் சோகமுடையது () 19

Page 11
அவள் வலிக்கும் இதயத்தையும் பொருட்படுத்தாது புலம்புவதுபோல் ஒலிக்கும் அந்தக் குரலுக்கு செவி சாய்த்தாள்.
"டாக்டர் உங்கள் லியூகேமியாவுக்கு என்னைக் கொண்டு போக இன்னும் மனமில்லை. நான் செத்துப் போகப் போகிறேன் என்பதைக் கேட்டால் இவள் செத்துப் போவாளே என்று இவளுக்கு மறைத்தேன்; நான் செத்த பின்னும் இவள் வாழ வேண்டுமே என்பதற்காக என்னை வெறுக்க வைக்க முயன்றேன். டாக்டர், அவள் செத்துப் போனல் ஒரு நாளேயாயினும் நான் உயிர் வாழ என்னைத் தயார் செய்துகொண்டேனு? போகப் போகிருளே டாக்டர். என்னை விட்டுப் போகப் போகிருளே."
'உமா,. போகாதே.உமா என்னை விட்டுப் போய் விடாதே. உமா, கண்ணைத் திற. என் செல்வமே கண்ணைத் திற. உன் மலரிதயத்தைக் கரியாக்கின ஒரு பாவம் போதும். உன் மலருடலைக் கரியாக்க என்னுல் முடியுமா உமா. உமா."
அவளுக்குப் புல்லரித்தது. ஐயோ. நீங்கள் இப்படி யொரு வியாதியால் நாளுக்கு நாள் செத்துக்கொண்டா இருக்கிறீர்கள். இப்படி ஒரு கொடிய நோயையும் தாங்கிக்கொண்டு எனக்காகவா வாழ்க்கையையும் நரக மாக்கிக்கொண்டீர்கள். கடவுளே நான் பிழைக்க வேண்டும். பச்சைக் குழந்தை - என் தெய்வம் - அவரைப் பரிதவிக்க விட்டுவிடாதே. வலிக்கின்ற இதயமே இன்னும் சில காலம் உனது துடிப்பை நிறுத்தி விடாதே. இதோ தன்னுடைய ஈரமான கன்னத்தை என் முகத்தில் வைத்துக்கொண்டு என்னை இழக்கமாட்டாமல் துடிக்கிறரே என் தெய்வம். இந்த
20 கவிதா

ஒரு விடிையில் வாழ்வின் பூரணத்துவம் எனக்குப் புரிகிறது. அர்த்தமற்ற வாழ்க்கை என்று அலுத்துக் கொண்ட நெஞ்சமே, கொஞ்சம் கவனி! எங்கள் வாழ்க்கையை விடவும் இனிய பாடலை நீ கேட்டிருக் கிருயா? இதனை நான் அரைகுறையாக விடலாமா? பாடி முடிக்க வேண்டும். முடிவு சோகமானதாக இருக்கலாம். பரவாயில்லை - "இனிய பாடல் சோக முடையது'தானே!
வலிக்கும் இதயத்தையும் பொருட்படுத்தாது, அவள்
கண்ணைத் திறக்க முயல்கிருள். அவன் புலம்பல் இன்னும் ஓயவில்லை.
இனிய பாடல் சோகமுடையது 72

Page 12
யுகங்கள் கணக்கல்ல
கதவு சிறிது திறந்திருக்கிறது. அதன் வழியே மீரா கட்டிலில் குப்புறப் படுத்திருப்பது நன்றகத் தெரிகிறது. அவளை அந்த நிலையில்தான் பார்ப்போம் என்று நான் எதிர்பார்க்காமல் இல்லை. ஆனுலும் ஆத்திரம் பற்றிக் கொண்டு வரத்தான் செய்தது. கீழுதட்டைப் பற்களின் இடையே கடித்துக்கொண்டு 'firit...' என்று கூப்பிட்டேன். எவ்வளவோ முயன்றும் அந்தக் குரலில் இருந்த தேவையில்லாத பதட்டத்தை மறைக்க முடிய
பரபரவென்று வெள்ளைப் பேப்பர்களையும் பேணுவையும் தலையணைக்கடியில் திணித்துவிட்டு 'ஏனம்மா?." என்று கேட்டபடி அவள் எழுந்து வந்தாள். அவள் குரலிலும் அதே பதட்டம் தொனித்ததை நான் கவனிக்காமல் இல்லை.
'தம்பி அப்படியே சிமெண்டில் சாய்ந்து நித்திரையாய்ப் போயிருக்கிறன். சுவாமி அறைக்கு விளக்கேற்றச் சொல்லி எத்தனை நேரமாய்ப்போயிற்று? ஒன்றையும் கவனிக்காமல் அங்கே என்ன பண்ணிக்கொண்டிருக் கிருய்?" என்று கேட்டேன். ஏதோ கேட்டேனே ஒழிய, கேட்டுவிட்ட பின்தான் மீரா உண்மையை என் முகத்துக்கு நேரேயே கூறிவிடுவாளோ என்ற பயமும்,
22 D கவிதா

அப்படிக் கூறிவிடக் கூடாதே என்ற தவிப்பும் ஏற்பட்டன.
'மத்ஸில் ஒரு பிராப்ளம் அம்மா, நாளைக்குச் செய்து வரும்படி ஒரு ஸ்ரூடன்ற தந்தாள் - அதுதான்.” என்று இழுத்தபடி மீரா நிற்காமல் நகர்ந்தாள்.
நான் அதிலேயே விறைத்து நிற்கையில் மீரா தோளில் துவளும் குழந்தையைத் தூக்கியபடி படுக்கையறைக்குப் போவது தெரிகிறது. நான் விரும்பினுல் ஒரு நொடியில் அவள் அறைக்குப் போய் அவள் செய்துகொண்டிருந்த *மத்ஸ் ப்ராப்ளத்தின் சிக்கலை விடுவித்துவிட முடியும். ஆனல் அதன் பின்..? இவ்வளவு நாளும் என் அந்தரங்கத்துக்குள்ளேயே புதைத்துவிட விரும்பிய உண்மையை, எனக்குத் தெரியும் என்று அவளுக்கு முன்னுல் நிரூபித்துக்கொண்டு, அதன்மூலம் அவளை இந்தச் சிக்கலில் இருந்து மீட்டுக்கொள்ளும் ஒரே வழியை அடைத்துவிட நேருமா? இவ்வளவு இங்கித மில்லாதவளாக நடந்துகொண்டுவிட்ட பிறகு எந்த முறையில் என்னுல் அவளைத் திருத்திவிட முடியப் போகிறது?
பின்னேரம் கிணற்றடிக்குச் சென்றபோது மீரா கிணற்றுக் கட்டின்மீது படுத்திருப்பது தெரிந்தது. அவள் இதழ் களில் இலேசான புன்னகை, ஒரு கையைத் தலைக்கடி யில் வைத்து, மறு கையைக் கிணற்றினுள் விட்டபடி படுத்திருந்த அந்த நிலையிலும், சுற்றிலும் இருண்டு கொண்டு வருகின்ற அந்தச் சூழலிலும் அவள் நினைவு கள் இல்லை! கிணற்றினுள் நெளியும் வட்ட வட்டமான அலைகளில் யார் முகத்தைக் கண்டு அவள் அப்படிச் சிரித்துக்கொண்டிருக்கிறளோ? யார் முகமோ? எனக்குத் தெரியாதா? மீரா! உன் சாதி என்ன? குலமென்ன?
யுகங்கள் கணக்கல்ல () 23

Page 13
அவன்..? உன் மாமாவோ தாத்தாவோ எப்படியடி இதற்குச் சம்மதிப்பார்கள்? அவர்கள் வேண்டாமே, நான்தான் எப்படிச் சம்மதிப்பேன்? சம்மதித்துவிட்டு மற்ற பெண்ணை எங்கே கொண்டுபோய்த் தள்ளுவேன்? வேண்டாம் மீரா, மறந்துவிடு! நீ. நீயாகவே உணர்ந்து அவனை மறந்துவிடு. நான் உன்னைப் பழைய மீரா வாகவே நினைக்கிறமாதிரி நடித்துக்கொண்டிருக்கிறேன்" நீயும் உன் மனதில் இடையே முளைத்த இந்தச் சலனத்தை இடையிலேயே மறந்துவிட்டு பழைய மீரா வாக மாறிவிடு!
மனதுக்குள்ளாகவே பேசிக்கொண்டு மெதுவாகப் பின்வாங்கினேன். இருட்டி வெகு நேரமான பின்தான் மீரா வீட்டுக்குள் வந்தாள்.
ஒரு நாள் - வெள்ளிக்கிழமை - நான் கோயிலுக்குப் போய்விட்டு வந்தேன். மீராவைக் கண்ணில் காண வில்லை. சின்னப் பெண்ணிடம் "அக்கா எங்கே".? என்று கேட்டேன். 'மாட்டுக்கு வைக்கோல் போடப் போனுள்" என்று கூறினுள். வீட்டுக்குள் எல்லாப் பொருட்களும் போட்டது போட்டபடியே கிடந்தன. எனக்கு ஆத்திரமாய் வந்தது. நான் வெளியே போன நேரம் தொடக்கம் மீரா உள்ளே இல்லை என்பதுதான் அதற்கு அர்த்தம். வெளியே இவ்வளவு நேரம் என்ன லயிப்பு வேண்டிக்கிடக்கிறது? எங்காவது தனியாக உட்கார்ந்து கொண்டிருப்பாள் என்று தெரியாதா எனக்கு? காதல், கண்மூடிக் காதல்! டாக்டரின் மனைவி யாகிவிடலாம் என்ற நினைவில் சாதிவிட்டுச் சாதி போய்த் திருமணம் செய்துகொண்டு அம்மா, தம்பி, தங்கை, சுற்றம் எல்லாம் மறந்து தனக்காக மட்டும் மகிழ்ச்சியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற கேவலமான வளாக நான் பெற்ற மகளைப்பற்றி நினைப்பது என்
24 கவிதா

மனதுக்கே என்னவோ போல்தான் இருந்தது. தற் ’செயலாக ஜன்னலடிக்குச் சென்றபோது மாட்டுக் கொட்டகை தெளிவாகத் தெரிந்தது. கட்டைத் தென்னங் கன்றின் ஒலையைப் பிடித்தபடி வானத்து நிலவையே பார்த்தபடி மீரா நின்றுகொண்டிருந்ததும் தெரிந்தது. என் மனதில் எழுந்த கணநேர குருட்டு வெறியின் ஆக்ரோஷத்தில் அவளை அப்படியே இழுத்து வந்து அறையலாமா? என்று தோன்றியது. உள்ளே வருகிற நேரம் வரட்டும் என்று காரியங்களைக் கவனிக்கத் தொடங்கினேன்.
சின்ன மகளும் மகனும் எட்டு மணிக்கு வந்தார்கள். ** அக்கா எங்கே?" என்று சின்னப் பெண்ணிடம் மறு படியும் கேட்டேன். "அறையில் இருக்கிற" என்ருள் அவள். வழக்கத்தில் இவர்களுடனேயே சாப்பிட வந்து விடும் அவள், வராதது என் மனதுக்கு நெருடலாகவே இருந்தது. ஒரு நிமிடம் அவள் தென்னங்கீற்றைப் பிடித்தபடி ஏக்கத்துடன் நின்ற காட்சி நினைவுக்கு வந்தது. மனம் வக்கரித்துக்கொண்டது. ஏன் இவளுக்கு இந்த வேண்டாத காதலும் ஏக்கமும்? . இவளுக்குக் காதலைப்பற்றி என்ன தெரியும்? வெறும் மனமயக்கத்தைக் காதல் என்று எண்ணிக்கொண்டு பாழாப் போகத்தான்' என்று மனதோடேயே எண்ணிக் கொண்டு நேரே அவள் அறைக்குச் சென்றேன்.
நினைத்தபடி அவள் குப்புறப் படுத்து எழுதிக்கொண்டு தான் இருந்தாள். பக்கம் பக்கமாக எழுதிக் குவிப்ப தற்கும் தனித்தனியாகப் பிரிந்துபோய் யோசித்துக் கொண்டு நிற்பதற்கும் அவளுள்தான் எத்தனை அந்தரங்கமோ?
“மீரா” என்று குரல் கொடுத்தேன். அவள் பதறித் துடித்து எழவில்லை. என்னை " ஒருமுறை ஏறிட்டுப்
&5 •----- யுகங்கள் கணக்கல்ல () 25

Page 14
பார்த்துவிட்டு மறுபடியும் எழுதத் தொடங்கினள். இரண்டு மூன்று வரிகள் எழுதியதும் கடிதம் முடிந்திருக்க வேண்டும். ‘என்றும் உங்கள் மீரா” என்று கையெழுத்திட்டதை நான் பார்த்துக்கொண்டுதான் நின்றேன். அவள், தாள்களை ஒன்ருக்கி நிதானமாக மடித்தாள். பொங்கிவந்த ஆத்திரத்துக்கு அணையிட்ட வாறு நின்றேன் நான். மடித்த கடிதத்தை ஒரு கவரில் செருகினள். 'முடிவில் எல்லாம் முடிஞ்சு போச்சும்மா" என்ருள் பெருமூச்சுடன்.
எனக்கு ஆத்திரம் மாறி அந்த இடத்தைக் குழப்பம் எடுத்துக்கொண்டது. வார்த்தை எழும்பாமல் ஆயிரம் கேள்விகளைக் கண்களிலேயே வைத்து அவளைப் பார்த்தேன்.
'உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று எனக்குத் தெரியும் அம்மா. இனி எதுவும் இல்லை. எல்லாம் முடிஞ்சு போச்சு.” மீராவே பேசினுள்.
"தெய்வமே என் பிரார்த்தனைக்குச் செவி சாய்த்தாயே" என்று கடவுளுக்கு நன்றி செலுத்தலானேன் நான். மீரா தொடர்ந்து பேசினுள்.
'நீங்களும், ஏன் அவரும்கூட நினைப்பதுபோல சாதி என்ற அர்த்தமற்ற சம்பிரதாயத்துக்காக நான் இந்த முடிவுக்கு வரவில்லை. காதல் என்பது ஒருவனுடையதும்
ஒருத்தியுடையதுமான இதயங்கள் சம்பந்தப்பட்ட விஷயந்தான். ஆனல், அந்த இரண்டு இதயங்களின் மலர்ச்சிக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் கடமையைப்
புறக்கணிக்கும்போது காதல் காமமாகிவிடுகிறது. அம்மா, அம்மா நான் அவரைத் திருமணம் செய்வது
Wa
26 ) கவிதா

எவருக்குமே விருப்பமில்லை; ஐயாவும் இல்லாமல் இவ்வளவு காலமும் கஷ்டப்பட்டு என்னை ஆளாக்கி யிருக்கிறீர்கள். இவ்வளவு காலமும் திரும்பிப் பார்க்காமல் இருக்கிற உறவுக்காரர்களை நம்பி உங்களையும் தம்பி தங்கைகளையும் நிர்க்கதியாக்கிவிட்டு, அவருக்குப் பின்னுல் நான் போயிடமாட்டன்.”
நான் அவசரமாக ஏதோ கூற வாயெடுத்ததும் அவள் ஒரு உயிரற்ற சிரிப்புச் சிரித்தாள்.
"தெரியும் அம்மா; எந்த விதத்திலும் என் வாழ்வை நீங்கள் பலி கேட்கமாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும் பிரச்சினை இங்கே மட்டுமல்ல; என்னைக் 356) D அழைப்பதுபோல அவரையும் 55 . 60) f) அழைக்கிறது. உயர்ந்த சாதியைச் சேர்ந்த பெண் என்பதைத் தவிர, என்கூட ஒரு சதத்தையும் சீதன மாகக் கொண்டுசெல்ல என்னுல் முடியாது. அவருக்கு நான்கு தங்கைகள். தங்கள் சொத்தை எல்லாம் அண்ணன் படிப்பதற்காக விட்டுக்கொடுத்துவிட்டு வாழ்வுக்காக அண்ணனையே எதிர்பார்த்துக்கொண்டு நிற்கிறர்கள். இப்போது அவர் காதலுக்காக அவரையும் தியாகம் செய்துவிட முடியுமா அம்மா? முடிந்தாலும் அப்படிப் போவது சரியா அம்மா? அவருக்கு இது புரியவில்லை. இதில் அதைத்தான் புரியவைத்திருக்கிறேன். இனிக் குழப்பமில்லை."
இவ்வளவையும் ஒரே மூச்சில் கூறிவிட்டு “வாருங்கள் சாப்பிட" என்ருள் மீரா. இதை அவள் எத்தனை துக் கத்தோடு கூறினுளோ அத்தனைக்கு நான் அதை உணரவில்லை! இது ஒரு இளமைக் கனவே என்றும் காலப் போக்கில் மறந்துவிடுவாள் என்றும் எண்ணிய வளாக அவளுக்குச் சாப்பாடு, போட அழைத்துச் சென்றேன்.
யுகங்கள் கணக்கல்ல D 27

Page 15
அதன் பிறகு ஒருநாள் என் மாமனுர் எங்கள் வீட்டுக்கு வந்தபோது மீராவுக்கு ஏற்ற மாப்பிள்ளை ஒருவன். இருக்கிருன் என்றும், பார்க்கலாமா என்றும் கேட்டார். நான் “மீராவிடம் கேளுங்கள்” என்று தூண்டினேன் என்ன சொல்லிவிடுவாளோ என்று உள்ளூர எனக்குப் பயம்தான். மாமா சொல்லச் சொல்ல மீரா பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். எதிர்த்து எதுவும் சொல்ல வில்லை. அந்தத் தைரியத்தில் நாலு வார்த்தை மாமா வுக்கு அனுசரணையாகப் பேசினேன். மாமா போய் விட்டார்.
அன்று மீரா மீண்டும் குப்புறப் படுத்துக்கொண்டு விட்டாள். F6) TES விம்மிக்கொண்டிருக்க வேண்டும். நான் போய் oußum" என்று கூப்பிட்டதும் ஹோ என்று அழ ஆரம்பித்துவிட்டாள்.
tu60) pull ஞாபகம் மறக்கவில்லை என்று தெரிந்தது. என் கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு அழுகையும் விம்மலுமாக வெடித்தாள்.
"அம்மா அவர் தாழ்ந்த சாதிக்காரர் என்பதால் என் கைபிடிக்கத்தான் மறுத்தீர்கள். ஆளு,ை அதே காரணத்துக்காக என் இதயத்தில் வாழுகிற தகுதிகூட அவருக்கு இல்லை என்று நினைக்காதீங்க அம்மா. அவரை மறந்துவிட்டு இன்னெருத்தரைக் கல்யாணம் செய்து கொள்வது இந்த ஜன்மத்தில் என்னுல் முடியாது.' பெரிய விம்மல் ஒன்றைச் சமாளித்துக்கொண்டு பேசினுள்.
"கிரிதரனையே நினைத்துக்கொண்டிருந்த மீராவை ராணு வுக்குக் கட்டி வைத்தாங்களே, என்னத்தைக் கண்டாங்க? அவளைச் சாகடிக்கத்தான் முடிந்ததே தவிர அவளே விட்டு அவன் நினைவைப் பிடுங்கிவிட முடிந்ததா,
28 565.5 st

அம்மா?" சிறிது நேரம் என் கைகளைப் பிடித்தபடி விம்மினுள். பின் சிறிது சிறிதாக விம்மல் தணிந்தது. என் கைகளை விடுவித்துவிட்டு அழுகைக் கலப்பற்ற குரலில் எங்கேயோ பார்த்துக்கொண்டு பேசினுள்.
நான் பச்சைக் குழந்தையில்லையம்மா, கிட்டத்தட்ட என் வயதில்தான் திலகவதியார் கலிப்பகையாரை இழந்தி ருக்கலாம். அவருக்கிருந்த மன உறுதியையும் நியமத் தையும் அந்த யுகத்துக்கே சாசனமெழுதியாச்சாம்மா? வழிகாட்டிகள் என்று அவர்களையெல்லாம் உயர்த்தி வைத்துவிட்டு கண் மறைவில் நின்றுகொண்டு தவறு செய்யும்படி கேட்பது நியாயமாகுமா அம்மா?”
எனக்கு மீராவின் முகத்தைப் பார்க்கத் தைரியமில்லை. இவள் எவ்வளவு தெளிவாகச் சிந்தித்திருக்கிருள்? இத்தனை பெரிய மனப்பக்குவம் இத்தனை சிறிய மீரா விடம் வாய்த்திருக்கிறதை வியந்த அதே சமயம், வாழ்க்கையின் மிச்சமிருக்கிற பகுதியின் மேடு பள்ளங்களி ளெல்லாம் தன்னந்தனியவளாக மீராவை எண்ணிய போது எனக்கே மிரட்சியாய் இருந்தது. திலகவதியார் வாழ்ந்த யுகமா இது? "உன் உள்ளத்திலிருக்கிற உன்னதத்தைச் சமுதாயம் புரிந்துகொள்ளாதே மீரா. பழி சுமத்தி வீழ்த்திவிடுமே" என்று மட்டும் சொன்னேன்.
அவள் சிரித்தாள்.
“என் மனதில் இருக்கிற உன்னதத்தைச் சமுதாயம் உதாசீனம் செய்யும் என்பதற்காக அது திரைபோட்டு மூடிவைக்கிற பலவீனங்களுக்கு நான் தோற்றுவிட வேண்டுமா அம்மா? ஆயிரம் இதயங்களின் பலவீனங் களுக்கு வக் காலத்து வாங்குகிற விதத்தில்தான் இந்தக் காலத்துச் சமுதாயம் இருக்கிறதே ஒழிய, ஒரு சில இதயங் களின் பலத்துக்கு மதிப்புக் கொடுக்கிற விதத்தில்
யுகங்கள் கணக்கல்ல 29

Page 16
இல்லையே! எல்லாச் சராசரி இதயங்களினுடையவும் பலவீனங்களுக்குப் போடப்படுகின்ற திரை எனக்குத் தேவையில்லையம்மா. என் மனதுக்கும் ஆத்மாவுக்கும் சரி என்று படுகின்ற இந்த வழியில் வாழ்ந்து, கடைசிக் கட்டத்தில் ஆண்டவன் முகத்தைத் தைரியமாக என்னுல் பார்க்க முடியும் என்ருல் உங்களுக்கோ சமுதாயத் துக்கோ என் ஆத்மாவை விற்றுவிடுவதில் எந்தவித நியாயமுமே இல்லையம்மா!"
நான் மீராவைப் பார்த்தேன். "ஆண்டவன் சந்நிதியில் யுகங்கள் கணக்கல்ல அம்மா; மனங்கள்தான் கணக்கு" என்று சொல்கிற திலகவதியாராக அவளை உணர்ந்தேன். ஆசையுடன் வளர்த்த பெண் சந்நியாசினிபோல் போகிருளே என்ற துயரத்தையும் மீறி, இந்தத் தலைமுறை யிலும் மென்மையான பெண்மை தனக்கே உரிய பலத் தோடு வாழ்கிறது என்று உணர்ந்த திருப்தி அலையாக எழுந்தது.
30 ( கவிதா

மானிடவர்க்கென்று பேச்சுப்படின்
"கிறில்"களுக்கிடையே இருக்கிற சிறிய இடைவெளி களில் கை விரல்களைக் கோத்துத் தொற்றிக்கொண் டிருக்கிருள் இந்த நாலரை வயதுக் குழந்தை. அவளைக் கடிந்துகொள்ள எனக்கு மனம் வரவில்லை. பதிலாக, *விழுந்துவிடாமல் இருக்க வேண்டுமே” என்று பிரார்த் தித்துக்கொண்டிருக்கிறேன்.
இவளைப் பார்க்கையில், தோளால் வழிகிற “பெட்டி கோட்ரேப்பை, கையை உயர்த்தி உயர்த்திச் சரிசெய்து கொண்டு கிழுவை வேலிகளில் பொன் வண்டு தேடித் திரிகிற ராஜியை அப்படியே நினைவுக்குக் கொண்டுவர முடிகிறது. மூக்கால் எட்டிப் பார்க்கிற சளியை உறிஞ்சி உறிஞ்சி உள்ளே இழுத்துக்கொண்டு, "டீயேய் மழைத் தூற்றலில் நனையாதேயடி’ என்று அக்கா அதட்டினுல் சிணுங்கிக்கொண்டு ஓடுகிற அவளை இப்பொதும்கூட
கண்முன்னுல் நிற்பதுபோலக் கற்பனை செய்ய முடிகிறது
‘குஞ்சியம்மா’ என்றுதான் அக்காவின் எல்லாக் குழந்தை களும் என்னை அழைப்பார்கள். அவள் மட்டும் ‘குஞ்சம்மா’ என்பாள். நெற்றியிலும் கைகளிலும் ஒடுகிற பச்சை நரம்புகளை எல்லாம் பார்க்க முடிகிறமாதிரி, வருத்தம் வந்து வெளுத்துப்போனதுபோல ஒரு வெண்மையான நிறம். எலும்புகள் அனைத்தும் வெளியே தெரிகிற மாதிரி ஒட்டலாய் இருப்பாள். நீண்ட நாட் களுக்குக் கட்டை விரலை வாய்க்குள் போட்டுச் சப்பிக்

Page 17
கொண்டிருந்தாள். ஆதலால் முன்பற்கள் இரண்டும் சற்றுத் தூக்கலாய்த் தெரியும். வளர்ந்த பின்னும்கூட, இந்தக் கட்டை விரல் சப்பும் வழக்கமே, கூச்சப்படும் போதும், வெட்கப்படும்போதும், பொதுவாக உணர்ச்சி வசப்படும்போதும் கட்டை விரல் நகத்தைக் கடிக்கிற பழக்கமாய் மாறிவிட்டிருந்தது.
அவளுடைய ஏழு அல்லது எட்டாவது வயதுக்குப் பிறகு சில வருடங்கள் நான் அவளைக் காணவில்லை. ஏனென்றல் அப்பாவுக்கு வேலைமாற்றம் வெளியூருக்குக் கிடைக்க, என்னை ஒரு பள்ளிக்கூட விடுதியில் சேர்த்தார்கள். விடுமுறைகளுக்கெல்லாம் அப்பா அம்மாவிடமே போய்க்கொண்டிருந்தேன். ஊருக்குப் போக வாய்க்க வில்லை.
ராஜியின் பன்னிரண்டாவது வயதில், அவள் பெரியவ ளானபோது ஊருக்கெல்லாம் சொல்லித் தண்ணிர் வார்த்தார்கள். எங்களுக்கும் அழைப்பு வந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பே வந்துவிடும்படி பெரியம்மாவும் அக்காவும் சேர்ந்து வருந்தி வருந்தி அழைத்திருந்தார்கள். அப்பா, என்னையும் அம்மாவை யும் அவர்கள் கேட்டபடி முன்பாகவே அனுப்பச் சம்மதித்தார். அவருக்கு விடுமுறை கிடைக்கவில்லை. எனக்கு ஒரே உற்சாகம். நீண்ட நாட்களுக்குப் பிறகு உவருக்குப் போகப் போகிறேனே! உயரமான வேப்ப மரத்தில் கட்டியிருக்கும் ஊஞ்சலும், பால்போன்ற நிலவும், மெலிந்த பெண்ணுன ராஜியும்தான் ஊரை நினைக்கும்போது என் ஞாபகப் பின்னணிக்கு வருபவை. "ராஜி எப்படி வளர்ந்திருப்பாள்?’ என்று கற்பனை பண்ணிக்கொண்டே போனேன்.
ராஜியைப் பார்த்தபோது எனக்கு அதிசயமான அதிசயம். இப்படி ஒரு வளர்த்தியா, நான்கு வருடங்களுக்குள்?
32 0 கவிதா

அந்தத் தூக்கலான முன்பற்களைக்கூடக் காணவில்லை. நன்றக வளர்ந்து வாளிப்பாக இருந்ததில் பற்கள் உள்ள டங்கியது மாதிரித் தோன்றியது என்று உணர்ந்தேன்.
*ராஜி! பொன்வண்டு பிடிப்பதில்லையா நீ இப்போ? என்று கேட்டேன். சிரித்தாள். கன்னம் குழிந்தது. கட்டைவிரல் வாய்க்குப் போயிற்று.
"டீ! இப்பவும் விரல் சப்புவாயா?" என்று நான் அதிசயத் துடன் கேட்கவும் எல்லோரும் சிரித்துவிட்டார்கள். அவள் நகத்தைக் கடித்தாள்.
அன்று ராத்திரி, அவள் என் அம்மாவிடம் அழுதபோது தான் அவள் கூச்ச சுபாவம் எனக்குத் தெரியவந்தது.
*சின்னப் பாட்டீ, எனக்குச் சரியான வெக்கமாய் இருக்கு; ஊருக்குச் சொல்ல வேண்டாம் என்று கெஞ்சக் கெஞ்சக் கேட்கிறர்கள் இல்லையே..பிறகு நான் எப்படிப் பள்ளிக்கூடம் போவது, வகுப்புப் பொடியன்கள் எல்லாம் பகிடி பண்ணுவான்களே” என்று தவித்தாள். ‘எப்படி யாவது, அம்மா இந்த ஏற்பாட்டை நிறுத்திவிட மாட்டாளா? என்ற ஆதங்கம் அவள் குரலில் தொனித்தது.
அந்த ஊரிலேயே இருந்த கலவன் பாடசாலையில் அப் போது அவள் படித்துக்கொண்டிருந்தாள். நாளைக்குப் பள்ளிக்கூடப் பையன்கள் எல்லாம் வித்தியாசமாய்ப் பார்ப்பார்கள்தானே' என்று நான் நினைத்தேன்.
"அதுதானே அம்மா,'இதோ எங்கள் வீட்டில் ஒரு பெண் திருமணத்திற்குத் தயார்’ என்கிறமாதிரி இதென்ன விசர்,
வேலை?” என்று வெளிப்படையாய் அவளுக்கு நான்
மானிடவர்க்கென்று பேச்சுப்படின் () 33

Page 18
வக்காலத்து வாங்கியபோது அம்மா கண்ணுலேயே என்னைத் தடுத்துவிட்டாள்.
"ராஜி, உன்னைப்போலத்தான் சில பெண்கள் இப்படிக் கூச்சப்பட்டுக் கூச்சப்பட்டு பெண்மையையே ஏதோ அவமானகரமான விஷயமாக நினைத்துக் குழம்பிப் போகிறர்கள். நீ பெரிய மனுவழியானுல் பெரிய மனுவழி யாக நினைத்துத்தான் உன்னைச் சுற்றியிருக்கிறவர்கள் எல்லாம் பழகவேண்டும். உனக்கும்கூட நீ பெரியவளாk விட்டதாய் உள்ளுணர்வு ஏற்பட வேண்டும். இல்லா விட்டால் குழப்பம்தான் ஏற்படும். என்றைக்கிருந்தாலும் வெளிப்படவேண்டிய உண்மைதானே ராஜி, கவலைப் படாதே."
அம்மா ஆயிரம் சொன்னுள். ராஜி அழுவதை நிறுத்த வில்லை. பெரியம்மாவும் அக்காவும் கெஞ்சினர்கள். அத்தான் அவளை அந்தப் பாடசாலையில் இருந்து விலக்கி நகரத்தில் ஒரு பெண்கள் பாடசாலையில் சேர்த்து விடுவதாக உறுதி கூறினர். அவர்களுடைய நோக்கம், அவர்களுடைய ஒரே ஒரு பெண்ணுன அவளுக்கு செய்யவேண்டிய சிறப்பெல்லாம் செய்துபார்த்து மகிழ வேண்டும் என்பதுதான்.
ராஜி இதை உணரவில்லை. கடைசிவரை அழுதாள். கொண்டாட்டத்தன்றும் அவள் முகம் வாடியே இருந்தது. புகைப்படங்களில் எல்லாம் பேயறைந்தாற்போல இருந்தாள். அதற்காக அக்கா, பிறகும் வெகுநாட் களுக்கு அவளை ஏசிக்கொண்டிருந்தாள்.
எங்கள் குடும்பத்தில் அம்மா, பெரியம்மா, மாமாமார் எல்லாருடைய குடும்பத்தினரும் ஒன்ருகக் கூடுவது ஏதாவது நல்லது கெட்டது நடந்தால்தான்.
34 () கவிதா

மறுபடியும், ராஜியின் கல்யாணத்துக்கு எல்லாரும் கூடி ஞர்கள். இப்படியான வேளைகளில் உற்சாகத்துக்கும் கலகலப்புக்கும் குறைவிராது. சின்னவர்களுக்கெல்லாம் ஒரே குவழிதான். சாப்பாட்டு நேரம்தான் அம்மாக்களின் கண்களில் தென்படுவார்கள். எங்கே புழுதி அளைகிறர் களோ என்று அம்மாக்களும் கவலைப்படமாட்டார்கள். உடுப்பு மாற்றுகிற நேரம், அதிகம் அழுக்காய் இருந்தால் ஒரு "குட்டு கிடைக்கும். மற்றபடி, பூரண சுதந்திரமாக விளையாடுவார்கள்.
அம்மாக்களும் ஊர் வம்பெல்லாம் அலசி ஆராய்வார்கள். தங்கள் குடும்ப விஷயங்களைப் பேசுவார்கள். யார் யார் புதிதாக நகை வாங்கியிருக்கிறர்கள், எந்தெந்த நகைகளை மாற்றிச் செய்திருக்கிருர்கள் என்று பார்ப்பார் கள். 'கொண்டை ரகங்களைப்பற்றியும், குழந்தைகளின் சட்டைப் *பற்றேன்"களைப்பற்றியும் பேசுவார்கள். கணவர்களுடைய உத்தியோக உயர்வைப்பற்றி, சிங்களத் தேர்ச்சி பெருமையால் "இன்கிறமென்ற் கிடைக்காததைப் பற்றிப் பேசுவார்கள். குடும்பம் என்றல் பேசவா விஷயம் கிடைக்காது? நாளாந்த வாய்ப்பாட்டு ரீதியான, “ரூட்டீன்" முறையிலிருந்து ஒரு மாற்றமாகக் கிடைக்கிற சந்தர்ப்பத்தைச் சரியாகவே பயன்படுத்திக்கொள்வார் கள்.
அத்தான் பெரிய கவர்ன்மெண்ட் உத்தியோகத்தர். ராஜியின் கல்யாணத்தைப் பிரமாதமாக ஏற்பாடு செய் திருந்தார். சாஸ்திரப் பற்று அதிகம். நல்ல நாளை வெகு கவனமாகத் தேர்ந்தெடுத்து இரவில் முகூர்த்தம் வரும்படி பார்த்துக்கொண்டார். பகல் முகூர்த்தம் சிறக்காதாம்.
ஊருக்கெல்லாம் அழைப்பு கொடுத்தார் - 'தயவுசெய்து அன்பளிப்புகளைத் தவிருங்கள்" என்ற குறிப்புடன்,
மானிடவர்க்கென்று பேச்சுப்படின் () 35

Page 19
சங்கீதக் கச்சேரி - நாதஸ்வரக் கச்சேரி எல்லாம் ஏற்பாடு செய்திருந்தார்.
மாப்பிள்ளை இங்கிலாந்தில் டாக்டராய் இருந்தார். இனி இங்கேயே வந்துவிடப் போவதாய்ச் சொன்னர்கள்.
ஒரே பெண் குழந்தை அல்லவா ராஜி. எப்படி விட்டுப் பிரிவார்கள்?
எல்லோரும் சந்தோஷமாய் இருந்தார்கள் - ராஜியைத் தவிர. அழுது <9@@ மாய்ந்துபோனுள் அவள். தனக்குக் கல்யாணமே வேண்டாம் என்று ஒற்றைக் காலில் நின்ருள்.
ஏதாவது காதல் விவகாரமோ என்று யாராவது கேட்டால் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். ராஜியாவது காதலிப்பதாவது? அவளுடைய உறவினர், அப்பா, சித்தப்பா, மாமா, அண்ணன்மாரைத் தவிர வேறு ஆண் பிள்ளைகளின் முகத்தையாவது பார்த்திருப்பாளா என்பதே சந்தேகம்தான். காதல் என்ற சொல்லே அவளுக்கு அலர்ஜி” என்பது எல்லோருக்கும் தெரியும்.
"கல்யாணம் வேண்டாம்" என்று அவள் சொன்ன போது அவளை ஒரு மனுசியாக நினைத்து அவளுடைய அபிப்பிராயங்களுக்கு மதிப்புக் கொடுத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று யாரும் நினைக்கவில்லை. எல்லாருக்கும் பச்சைக் குழந்தையாகத்தான் அவள் தென்பட்டாள். கல்யாணம் வேண்டாம் என்று அறியாமையால் கூறு கிருள் என்று நினைத்தார்கள். நல்ல நிலையில் வசதியாக இருக்கிறபோது பொருந்திவருகிற திருமணத்தைச் செய் யாமல் விடுகிற மடத்தனத்தை எந்தப் பெண்ணைப் பெற்றவர்களுமே செய்யமாட்டார்கள். "ராஜிக்கு என்ன தெரியும்? குழந்தை" என்றே எண்ணிக்கொண்டு ஏற்பாடு
36 ) கவிதா

செய்தார்கள். பையன் அவளுக்கு அத்தான் முறையான வன். நல்லவன். ராஜி போகப் போகச் சரியாகி விடுவாள் என்ற நம்பிக்கை.
ராஜியின் பிடிவாதம் எடுபடவில்லை. அழுகையில் பிராணனை விட இருந்தாள். 'ஊரெல்லாம் இந்தச் சம்பந்தத்தைப் பார்த்துப் பெருமைப்படுகுது. இவள் என்னடீ பெரிய கரைச்சல்" என்று அக்கா என்னிடம் குறைப்பட்டுக் கொண்டாள். புத்தி சொல்லும்படி மறுபடியும் அம்மாவையே நியமித்தார்கள்.
அம்மா சொன்ன எதுவும் அவள் காதில் ஏறவில்லை. முன்பு தண்ணிர் வார்க்கும்போது நடந்த நாடகம் முழு வதும் மறுபடியும் நடந்தது.
*சும்மா இரம்மா, மாப்பிள்ளையைப் பார். எப்படி கம்பீரமாய் ராஜா மாதிரி இருக்கிருர். இப்படி ஒருத்தரைப் பிறகு எங்கேயும் தேடமுடியுமா? ராஜாத்தியல்லவா, குழந்தை மாதிரிப் பிடிவாதம் பிடிக்கிறயே. அம்மாவும் அப்பாவும் எவ்வளவு கவலைப்படுகிறர்கள் பார்" என்று அம்மா முத்தாய்ப்பு வைத்தபிறகு அவள் என்னைப் பிடித்துக்கொண்டு கதறினள், ‘குஞ்சம்மா! பயமா யிருக்கே" என்று. அவள் உடலெல்லாம் நடுங்கியது! அதன் பிறகுதான் இதில் ஒரு சிக்கல் இருப்பதாக நான் நினைக்க ஆரம்பித்தேன்.
ராஜி ஒரே ஒரு பெண். இன்னும் பதினெட்டு வயது நிரம்பவில்லை. ஆண்களுடனேயே பழகியறியாதவள். தாம்பத்தியத்தின் தாத்பரியத்தையோ இல்லறத்தின் அந்தரங்கத்தையோ சரியானபடி அவள் புரிந்துகொண் டிருட்பாளா? என்று என்னுள் கேள்வி ஒன்று எழுந்தது. அவள் இன்னும் செம்மையாக வளர்ச்சியுறவில்லை என்றே தோன்றிற்று. சரியாகச் சொல்லப்போனல்,
மானிடவர்க்கென்று பேச்சுப்படின் ( ) 37

Page 20
பெண்மை அவளுள் தூங்கிக்கொண்டிருந்தது. பூஜை அறைக்கு விளக்கேற்றம்மா, ஸ்வாமிக்குப் பூக்கட்டு அம்மா; பஜனைப் பாடல்கள் பாடு அம்மா' என்று அத்தான் அவள் கவனத்தைத் தெய்வீக விஷயங்களில் தான் திருப்பிவிட்டிருந்தார். வயதுவந்த பின்னர் நகரத்தில் ஒரு கட்டுப்படான பெண்கள் கல்லூரியில் சேர்த்தார். பதினெட்டு நிரம்புவதற்கு முன்னர் திருமணம் செய்து வைக்கப்போகிறர். அவளோ, "மானிடவர்க்கென்று பேச்சுப்படின் வாழ்கிலேன்” என்று தவிக்கிருள். இப்படி ஒரு சிக்கல்தான் ஆண்டாளுக்கும் இருந்திருக்குே அவளும் கண்ணன் என்ற கற்பிதக் காதலுடன் ஒன் றித்துக்கொண்டு மானுடரிடமிருந்து தப்பித்துக்கொண்டு போகத்தான் துடித்தாளோ?
அவள் எப்படியோ, ராஜியின் பிரச்சினை இதுதான். மானுடத்தின் இச்சைகள் எதுவும் அவளை அண்டவில்லை. "செக்ஸ்’ என்பதே ஒருவித நியாயம் இல்லாத பாவம் என்பதாக ஒரு நினைவு அவளுள் ஊறிப்போய், உடலெல் லாம் கூச்சமாக வியாபித்திருந்தது. ஒரே பெண் என்று அக்காவும் அத்தானும் அவளுக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு எல்லாவற்றையும் செய்துவந்ததில் ராஜி, உலக அனுபவங்கள் எதுவுமே இல்லாதவளாக வளர்ந்துவிட்டி ருந்தாள். ஒவர் புரொட்டெக்ஷன்' என்பதன் முழுத் தன்மையும் ராஜியின் வாழ்வில் சூழ்ந்துகொண்டி ருக்கிறது!
இப்போது நான் "செக்ஸ் எஜூகேஷன்' நம் நாட்டில் இல்லாமையை ஒரு பெரிய குறையாக உணர ஆரம் பித்தேன். அரிஸ்டாட்டில் காலம் தொடக்கம் உலகம் பெற்றுவந்திருக்கிற அறிவை எல்லாம் ஒருவனின் மூளைக்குள் திணிப்பதுடன் கல்வியின் வேலை முடிந்து விடுகிறதா? இந்தச் சிக்கலான சமுதாயத்தில் தன்னைப்
38 கவிதா

பொருத்தப்பாடுள்ளவகை ஆக்கிக்கொண்டு வாழ வழி வகுப்பது அதன் வேலை இல்லையோ? எனக்குப் புரிய வில்லை.
ஆதாம் ஏவாள் காலம் தொட்டு, நாடுகளின் மிகையான குடிசனப் பெருக்கம் வரை, உலகின் பாரம்பரிய வளர்ச்சி பாவமானதா என்று எண்ணிப் பார்க்கிற அளவுக்கு ராஜிக்குத் தீட்சண்யம் போதாது. தனக்குக் கணவனுக வரப்போகிற ஒரு அந்நியனை எப்படி நேருக்கு நேர் சந்திப்பது என்பதையே ஒரு பெரிய பிரச்சினையாகக் கருதிக்கொண்டு அவஸ்தைப்படுகிறள் என்பது எனக்கு தசகமாகத் தெரிந்தது.
அவள் விஷயத்தில் அக்காவும் அத்தானும் கொஞ்சம் பொறுமையுடன் இருந்திருக்கலாம் என்று பட்டது. முதலில் அந்த மாப்பிள்ளைக்கே “றெஜிஸ்றேஷன்" செய்து, அவளுடன் பழகவைத்து அவள் மனதை மாற்ற முயற்சி எடுத்திருந்தால் நன்றக இருந்திருக்கும் என்று எண்ணினேன். உடனடியாகத் திருமணத்தையும் நிறை வேற்றி வைப்பதில் இத்தனை பிடிவாதம் செய்வது இந்த உலகத்துக்கும் அதன் நியதிகளுக்கும் எதிரான மன நிலைக்கு அவளைத் திருப்பிவிடலாம் என்று பயந்தேன். மூலைக்குள் அகப்பட்டுக்கொண்டுவிட்டால், எலிகூடத் தன்னை எதிர்ப்பவனைத் திருப்பித் தாக்கத் தயாராகி விடுகிறதே-அதைப்போல. மனம் நிறைய வெறுப்பை வளர்த்துக்கொண்ட நிலையில் அன்பு வளர இடமேது? மாப்பிள்ளை இவளைப் புரிந்துகொள்வாரோ, மாட்டாரோ!
எனக்குள்ளே குழப்பமாக இருந்த இந்த நினைவுகளை நான் வாய் திறந்து யாருக்கும் கூறவில்லை. என்னிலும் பார்க்க வயதால், அனுபவத்தால் பெரியவர்கள் நிச்சயித் திருக்கிறர்கள். நான் சொல்வதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; கேலிதான் செய்வார்கள்-பெரிய சைக் காலஜிஸ்ட்" என்று.
மானிடவர்க்கென்று பேச்சுப்படின் 39

Page 21
வாயைத் திறப்பேன நான்? கல்யாணம் வைபோகமாக நடந்தது.
நான்கு நாட்கள் இருந்துவிட்டு எல்லோரும் விடை பெற்ருேம்.
பிறகு, எத்தனையோ நாளாந்த வேலைகள், சிரமங்களுக் கிடையே சில சமயங்களில் ராஜியைப் பற்றிய நினைவும் வரும். கடிதம் எழுதி அவள் தாம்பத்தியம்' பற்றி அறிய வேண்டும் என்று தீவிரமாய் நினைத்துக்கொள்வேன்-- பிறகு மறந்துபோய்விடுவேன். ராஜியிடமிருந்து கடிதம் வருவதில்லை.
ஒருமுறை ஊரிலிருந்து அத்தானின் உறவுக்காரர் ஒருவர் வந்திருந்தபோது ஒரு மகிழ்ச்சியான விஷயத்தைச் சொன்னுர்-ராஜி கர்ப்பமாய் இருப்பதாக.
எனக்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. ‘ஒரு வழி யாக, முரட்டுக்காளை மாதிரி நின்றிருந்த ராஜியின் சுபாவம் படிந்துவிட்டதே' என்று திருப்திப்பட்டேன். "உண்மைதானு? உண்மைதானு?" என்று பலமுறை கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டேன்.
அவளுடைய கல்யாண சமயம் என்னுள் எழுந்த அசட்டுக் கற்பனைகளுக்காக வெட்கினேன். நல்ல வேளை யாருக்கும் சொல்லாமல் இருந்தோமே என்று என்னையே பாராட்டிக்கொண்டேன். r
மினக்கெட்டு" உட்கார்ந்து ராஜிக்கு ஒரு கடிதம் எழுதினேன்-என் முந்திய நினைவுகளுக்குப் பிராயச்சித்த மாகவும், என் அளவற்ற மகிழ்ச்சியைப் பிரதிபலிப்பதாக வும். ராஜியின் மண வாழ்க்கை வெற்றியாகுமா என்று நான் எவ்வளவு மறுகிக்கொண்டிருந்தேன் என்பது எனக் கல்லவா தெரியும்?
40 () கவிதா

அந்தக் கடிதத்துக்கு ராஜியிடமிருந்து வந்த பதிலைப் ஜார்த்தபோது, ‘ஏண்டா எழுதினுேம் என்றிருந்தது.
ராஜி இன்னமும் அப்படியேதான் இருக்கிருள் என்று அந்தக் கடிதம் புலப்படுத்தியது. அவள் பழைய பல்லவியையே பாடியிருந்தாள் - புதுவிதத்தில். *.குழந்தைப் பேற்றை வீட்டிலேயே வைத்துக்கொள்ளப் போகிருேம். அந்தக் காலத்தில் எல்லாம் ஆஸ்பத்தி ரிக்கா போனர்கள்?’ என்று எழுதியிருந்தாள்.
இதைப்பற்றி நான் அவ்வளவு கவலைப்பட்டிருக்க மாட்டேன். மானுடத்துக்கும் அவளுக்குமான போராட் டம் இன்னமும் ஓயவில்லை என்றுதான் அந்த வரிகள் எனக்கு உணர்த்தின. "இப்படியும் ஆகலாம்" என்று நான் நினைத்தபடியே ஆகிவிட்டிருக்கிருளே என்று வருந்தினேன். இத்தனை நாள் விட்டுக்கொடுத்தது போல இனியும் விட்டுக்கொடுக்கமாட்டாள்; இது திருப்பித் தாக்குகிற கட்டம் என்று உணர்ந்தேன். இது தலைப்பிரசவம். மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் கேள்விப்பட்டிருந்தேன். அசட்டுத்தனமாகப் பிடி வாதம் பிடித்துக்கொண்டிருக்கப்போகிறளே என்று கவலையாக இருந்தது.
சில நாள் கழித்து, நான் ஊருக்குப் போயிருந்தபோது ராஜியைக் கண்டேன். சற்று வாடினுற்போல இருந் தாலும் நல்ல அழகாக இருந்தாள்.
அவள் என்னைப் பார்க்க எங்கள் வீட்டுக்கு வந்திருந்த போது மழை பெய்து ஓய்ந்திருந்தது. தலையில் தண்ணிர் விழாமலிருக்க, தோள் சேலையை எடுத்து முக்காடாய்ப் போட்டுக்கொண்டு, காலடிச் சேலை தரையில் தோயாமல் சற்றே உயர்த்திப் பிடித்தபடி எங்கள் வீட்டு வாசலில்
க.-3 மானிடவர்க்கென்று பேச்சுப்படின் L 41

Page 22
அவள் வந்து ஏறிய கோலம் கனுதேசாய் வரைந்த ராதையின் சித்திரத்தை நினைவூட்டியது. ஒரு பெண்ணின் செளந்தர்யம் என்பதின் முழு அர்த்தத்தையும் அப்போது தான் நான் கண் முன்னுல் தரிசித்தேன்.
அந்தக் குளிர்ந்த வேளையிலும் அவளின் வெண்மையான நெற்றியில் முத்து முத்தாய் வியர்த்திருந்தது. அரைவாசி பின்னிய "லேஸைக் கையிலே வைத்துக்கொண்டு நான் பிரமிப்புடன் அவளையே பார்த்துக்கொண்டிருந் தேன். "குஞ்சம்மா" என்று குழந்தைத்தனமாகக் கூவிய படியே வந்து என்னருகில் அமர்ந்துகொண்டாள். 'தஸ்புஸ் ஸென்று மூச்சிரைத்தது அவளுக்கு.
'நீ நல்ல வடிவாய் இருக்கிருய் ராஜி” என்று என்னை மறந்து நான் விமரிசித்துவிட்டேன்.
அவள் முகம் வாடிவிட்டது. அவள் மறக்க வேண்டும் என்றிருந்த விஷயத்தை அசந்தர்ப்பமாக நினைவூட்டி விட்டேனுே என்று சங்கடப்பட்டேன் நான்.
அவள் கொஞ்சம் யோசித்தாற்போல் இருந்துவிட்டு "இந்தப் பிள்ளையோட நான் செத்துப்போய்விடுவேன் குஞ்சம்மா' என்ருள்.
"சீ கழுதை" என்று அவள் வாயைப் பொத்தினேன்.
அவள் கண்களில் நீர் துளித்திருந்தது.
"இம்மாதிரி சந்தர்ப்பத்தில் இப்படி எல்லாம் பேசக் கூடாது" என்று என் அறிவுக்கெட்டியவரையில் புத்திமதி
சொன்னேன். மறந்துபோய்விடாமல், "பிரசவ சமயம் ஹொஸ்பிடலுக்குப் போய்விடு" என்றும் சொன்னேன்.
42 O 5655 IT

"இந்த விடயத்தை விட்டுவிடுங்கள் குஞ்சம்மா’ என்பது, போல அவள் அசுவாரஸ்யமாக, ‘இவர் கூட ஒரு டாக்டர்தானே" என்ருள்- கட்டை விரலைக் கடித்துக் கொண்டே.
எனக்குக் கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது. அந்த விஷயத்தையே நான் மறந்துபோய் இருந்தேனே இதுவரை!
நிம்மதியாய்த் திரும்பினேன் ஊரிலிருந்து.
மலைகளின் மடிப்புகளுள் மறைந்துகொண்டு, இருக்கு மிடமே பிறருக்குத் தெரியாதது போல் நான் வாழ்ந்து கொண்டிருந்த ஊருக்கு 'இராமபாணம் மாதிரி இலக்குத் தவருமல் ஒரு தந்தி வந்தது ஒருநாள்.
*ராஜி எக்ஸ்பயர்ட்” என்று அத்தான் அடித்திருந்தார். ஐயோ இது உண்மையாய் இருக்கக்கூடாதே என்று பிரார்த்தித்துக்கொண்டு அந்தத் தந்தியின் வாசகத்தை ஒவ்வொரு எழுத்தாகத் திருப்பித் திருப்பி வாசித்தேன். அதனுல் உறுதிப்பட்டுவிட்ட உண்மையைச் சந்திக்க -வும், அவளைக் கடைசி முறையாகக் காணவுமாய் பாதாதிகேசம் பரவிவிட்ட வெறுமை உணர்வோடு ரயிலேறினேன்.
நான் போனபோது, ரோஜாவாக இருந்த ராஜியை, நாராகக் கிழித்துப்போட்டிருந்தார்கள். ஆமாம், நாராகத் தான். எப்படியும் பிழைக்க வைக்கவேண்டும் என்ற ஆவேசத்தில் கடைசி முயற்சியாக "ஆபரேஷனும்" செய்து பார்த்திருந்தார்கள்.
வீட்டில் பிரசவம் பார்ப்பது என்பது அத்தனை கஷ்ட மான காரியமில்லைதான். ஆனல் ராஜியின் கேஸ்
மானிடவர்க்கென்று பேச்சுப்படின் () 43

Page 23
"கொம்பிளிகேடட் ஆகிப்போயிற்று. ஒரு குழந்தை யைப் பிரசவித்த கையோடு நிறைய இரத்தத்தை இழந்துவிட்டாள். ஆபரேஷனும் செய்து இரத் தமும் ஏற்றவிட்டால் பிழைக்கமாட்டாள் என்ற நிலை ஆகி விட்டது. ஹொஸ்பிடலுக்குக் கொண்டுபோக ஆயத் தங்கள் செய்தபோதே அவள் கெஞ்சியிருக்கிருள். “என்ன செய்தாலும் நான் பிழைக்கமாட்ட்ேன் அம்மா - இங்கேயே சாகவிடுங்கள்" என்று. யார் அந்தச் சமயத்தில் அதை எல்லாம் கேட்டுக்கொண்டிருக்கப் போகிறர்கள்? வழக்கம்போல அவள் வேண்டுகோளைத் தட்டிவிட்டார்கள்.
ஆஸ்பத்திரியில் ஆறு சர்ஜன்களும் மூன்று டாக்டர் களும் மாப்பிள்ளையுமாய் நின்று கவனித்துக்கொண்டும் அவளைக் காப்பாற்ற முடியவில்லை என்று பிறகு அறிந்தேன். அத்தனை ஆண்களுக்கு முன்னுல் இப்படி ஒரு "கேஸ் 0க்காக வந்திருப்பதை எண்ணிக் கட்டை விரலைக் கடித்துக்கொள்ளக்கூட முடியாமல் அவள் என்னமாய்த் தவித்திருப்பாள் என்றே என் மனம் எண்ணிப் பார்த்தது. மாப்பிள்ளை யாருக்கோ சொல்லிக்கொண்டிருந்தார். "இரத்தம் நான்கு போத்தல் ஏற்றினுேம். நின்றவர்கள் அத்தனை பேரும் 'ஸ்பெஷலிஸ்டுகள். வைத்தியத்தில் ஒரு குறையுமே இல்லை. அவளுக்கு வாழவேண்டுமென்ற ஆசையே இல்லை - போய்விட்டாள்.'
நான் ராஜியைப் பார்த்தேன். புதுக் கருக்கு அழியாத சிவப்பு நிறக் கூறைப்புடவை யைப் போர்த்திக்கொண்டு தீபமாய்ச் சுடர்விட்டாள். "குஞ்சம்மா, மானுடத்தின் ஆசைகள் எவையும்
அண்டாத மனமாக என்னுடைய மனம் இருந்தது. பல
44 ( ) கவிதா

வந்தமாக அவை என்னை நெருங்கியபோது, வெருண்டு போய், வாய்விட்டுச் சொல்லத் தெரியாமல், ஒவ்வொரு கட்டத்திலும் என்னுல் இயன்றவரை போராடிப் போராடித் தோற்றுப்போனேன்! வாழ வேண்டும் என்ற ஆசை எப்படி எனக்கு வரும்?” என்று அவள் சொல்கிருள் போல் இருந்தது எனக்கு.
அவளைப் பொறுத்தவரை இது ஒரு விடுதலையே!
அக்காவும் பெரியம்மாவும்தான் "பரதேசித் தெய்வங்கள் என்று தெய்வங்களை எல்லாம் அர்ச்சித்துக்கொண்டிருந் தார்கள்.
* கிறில்'களுக்கிடையே கைவிரல்களைக் கோத்துக்கொண்டு தொற்றிக்கொண்டிருக்கிற இந்தச் சின்னப் பெண்ணும் அவளைப் போலவே என்னைக் குஞ்சம்மா என்றுதான் கூப்பிடுகிருள்.
பாரம்பரியப் பண்புகள் எவ்வளவு தூரம் தலைமுறை களுக்கிடையே ஊடுருவுகின்றன என்று பரீட்சித்துக் கொண்டிருக்க எங்களுக்குத் திராணி இல்லை. இவளும் மற்றெரு ராஜியாகாமல் இருக்கவேண்டும் என்று ஜாக்கிரதையாகக் கவனித்துக்கொள்கிருேம்.
இவள் ராஜியின் பெண்:
மானிடவர்க்கென்று பேச்சுப்படின் () 45

Page 24
மன்மதனும் மலரம்பும்
ஆமைபோல, பருத்த உடம்புக்குள் இருந்து தலையை நீட்டி நீட்டி அடித்துக்கொண்டிருந்த தவில்காரரின் தடி யைப் பறித்து அவர் முதுகிலே இரண்டு வைக்கலாமா என்றிருந்தது கிருஷ்ணனுக்கு. காலையிலிருந்து ஒரே தலைவலி,
யாரோ எதையோ கேட்டார்கள்; எழுந்து போனுன் ஸ்டோர் ரூமுக்கு.
"ஸ்டோர் ரூம் பொறுப்பு அவனிடம் விடப்பட்டிருந்தது" நாளைக்காகத் தயாராக வாழைப்பழக் குலைகளும், அரிசி மூட்டைகளும் இன்னும் என்னவெல்லாமோ!
ஒரு அரிசி மூட்டைக்கு மேல் உட்கார்ந்து கொஞ்ச நேரம் அண்ணுர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். ரொம்ப நேரம் முடியவில்லை. எழுந்து பந்தலுக்குள் வந்தான்.
கண்ணையா மாஸ்டர் வந்தார். ஒரு பவ்யச் சிரிப்பு
*கிருஷ்ணன் உமாவின் கல்யாணத்துக்கு வந்ததோ?”
'ஓம்’ மீண்டும் அதே சிரிப்பு. அவர் உள்ளே போனுர். காலில் ஏதோ குளிர்கிறது. வேஷ்டி நுனி எங்கோ தண்ணிரைத் தொட்டுக்கொண்டிருந்ததுபிடித்து உதறியாயிற்று.
குமரன் வந்தான்.

'குமரா!'
"என்ன அண்ணே?”
"கொஞ்சம் ஸ்டோர் ரூமைப் பார்த்துக்கொள்ளுகிருயா, வீட்டுக்குப் போய்விட்டு கெதியா வந்திடறன்."
'ஓ' (வாழைப்பழம் அலுத்துப் போயிற்று; கஸ்கொட்டை இன்னும் எதையாவது தேடிப் பார்க்கலாம்.)
கிருஷ்ணன் நடந்தான்.
“உமா உமா” என்று கூப்பிடும்போது திரும்பிப் பார்க்காமல் இருந்தால் 'உம்மா’ என்று கூப்பிடுவான்;
கட்டாயம் திரும்பிப் பார்ப்பாள்; கோபித்துக்கொள்வதற் Ց5 IT Ց5 •
''g. Lof
வீட்டுக்குப் போக என்று நினைத்திருக்கவில்லை அவன். கடற்கரைப் பக்கம் போகலாம் என்று மெயின் ரோட்டோடு நடந்தான். இந்தக் கிராமம், சின்ன கிருஷ்ணனும் சின்ன உமாவும் தங்கள் சிறிய பாதங் களால் அளந்து முடித்த கிராமம். இதை அவன் வெகு வாக நேசித்தான். அதன் மண்ணும், கடலும், வானும் அவனுக்குச் சிநேகிதம். அவனுக்கு மட்டுமல்ல; உமா வுக்கும். ஊருக்குள் நுழைய முன் கடற்கரைக் கழிகள்; நுழைந்த பின் வயல்கள்.
சில காலங்களில் பச்சையாய் இருக்கும்; சில காலங்களில் அறுவடை முடிந்த பின் எல்லைக்காக நட்டிருக்கும் பட்ட கட்டையில் பருந்து இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் காய்ந்துபோய்க்கொண்டிருக்கும் குளத்தின் கரையில் கொக்கு நின்று தவம் செய்யும். கடற்கழிகளுக்கும்
மன்மதனும் மலரம்பும் O 47

Page 25
வயல்களுக்குமிடையே வெட்டை வெளியில் பசுக்கள் மேயும்; கன்றுகள் துள்ளித் திரியும். கொஞ்சம் மெயின் ரோட்டோடேயே உள்ளே போனுல் வலது கைப்பக்கம் மண்ணில் முளைத்தாற்போல் சிலுவை கள். இடது கைப்பக்கம் விண்ணில் முளைத்தாற்போன்ற சிலுவை. இது மயானம். அது மாதா கோவில்.
மாதா கோவிலுக்கு வடக்கே இப்போ காய்ந்துபோய்க் கிடக்கிற குளத்துக்கு இந்தப் பக்கம் ஏழெட்டு வயல் கள். அந்தப் பக்கம் அதே அளவு உமாவின் தந்தை யின் உரிமைக்குரியவை. கிருஷ்ணனின் தந்தையின் உழைப்புக்குரியவை.
செல்வவிநாயகம் விதானையார் "கிராம சேவகர்" திட்டத் தோடு ரிடையர் ஆனவர். அதற்குப் பின்னும் சரி? முன்னும் சரி ஒரே மாதிரியான அதிகாரம். D - LDT 60) 6 i அவருடைய மகள் என்று சொல்லலாம்; சுபாவத்தில் ஒரு துணிவும் மிடுக்கும்.
'டேய் என்னையும் அந்தக் கட்டுமரத்திலே ஏற்றிக் கொள்ள டா!" (விதானையாருக்காக வயலிலும், வீட்டுத் தேவைக்காகக் கடலிலும் வேலை இருந்தது தந்தைக் கு). "போ, போ. அப்பா அடிப்பார்." (அவளுடைய அப்பாவிலும் பார்க்க அவனுடைய அப்பாவுக்குத்தான் அவளுக்குப் பயம். குழந்தைவேலு-அவன் தந்தைஒரு விசுவாசமிக்க வேலையாள்.)
'அப்படியா? நாளைக்கு கணக்குப் பாடத்துக்கு அடி வாங்கு. நான் வீட்டுக் கணக்கு செய்து தரமாட்டன்."
கிருஷ்ணன் கணக்கில் கொஞ்சம் மக்கு. வீட்டில் வேலை களும் அதிகம். உட்கார்ந்து படிப்பதற்கு, எழுதுவதற்கு அதிக நேரம் கிடைப்பதில்லை.
48 5655 IT

உமாவை ஏற்றிக்கொள்வான். கட்டுமரம் அலைகளில் ஆடும்போது அவள் குதி குதி என்று குதிப்பாள். என்ன பிசாசுத்தனம் கொஞ்சம்கூடப் பயமில்லாமல்? என்று நினைப்பான். கிருஷ்ணன். கடலோடு பழகிப் போன அவனுக்கே அது அதிசயம்தான்.
எல்லாக் குழந்தைகளும் ஒளித்து விளையாடுவார்கள். உமாவை எங்கும் கண்டுபிடிக்க முடியாது. கட்டைத் தென்ன மரங்களின் வட்டுக்குள், வேலிப் பூவரச மரங் களின் உச்சியில் இப்படி எங்காவது இருந்து இறங்கி வரும்போதுதான் கண்டுகொள்ளலாம்.
பெரியவளாகும் வரை, வயல்களிலும், கடற்கரைகளிலும் கட்டற்றுத் திரிந்தாள் அவள். விதாரனையாரின் அதிகாரங் கள் ஒன்றும் உமாவிடம் செல்லாது. அவளை "ஃபிரீ"யாக வளரவிட்டார் அவர், மனைவியோ நேர்மாறு. அவளுக்குச் செல்லப்பிள்ளை குமரன். உமாவின் குழப்படிகளுக்கு அவளிடம் அங்கீகாரம் கிடையாது. குழந்தைகள் சேரும்போது கூச்சலுக்குக் கேட்கவா வேண்டும்? பகல் தூக்கம் கலைந்துபோகும் விதானையார் மனைவிக்கு. அடிக்க என்று பிடித்தால் ஒன்று மேலில் விழ முன்னரே ‘ஓ’ என்று கத்தத் தொடங்கிவிடுவார்கள் மற்றவர்கள். இவள் "ஜம்"மென்று நிற்பாள். இரண்டு கூடவே கிடைக்கும். அடுத்த வேளைச் சாப்பாடு அவ்வளவுதான். படுத்துக்கொண்டுவிடுவாள். கூப்பிட் டால் ஏனென்று கேட்கமாட்டாள். அழுகிருள் என்று அர்த்தம்.
விதானையார் ஊரில் இல்லாவிட்டால் கிருஷ்ணனிடம் மட்டும்தான் பேசுவாள். கிருஷ்ணன் கேட்டால்தான் தண்ணிராவது குடிப்பாள். இல்லாவிட்டால் அதுவும் இல்லை. எத்தனையோ நாள் தூக்கத்திலும் விக்கியபடி
மன்மதனும் மலரம்பும 49

Page 26
படுத்திருக்கும்போது, அவள் அம்மாவும் சேர்ந்து அழு திருக்கிருள். பொல்லாத வீம்பு. நாலுபுறமும் கருங் கல்லாய் இருக்கிற சுனைக்குள் இனிமையான நீரூற்று இருக்கிறதில்லையா? அதைப்போல் இவளுள்ளும் ஒரு அலாதியான அன்பின் ஊற்று. மனிதர்களிடம் மட்டும் என்றில்லை. "அம்மா! எங்கே என்ர ஆட்டுக்குட்டி?” என்று அவள் கர்ஜித்தபோது விதானையார் மனைவி நடுங்கிப்போனள். "நிற்குது” என்று ஈனஸ்வரத்தில் முனகினுள்.
“பொய்! அதை வித்துப் போட்டீங்க” என்று அவள். மறுபடி கத்தியபோது 'ஓம். பின்னே கிடாய் ஆட்டை விற்காமல் என்ன செய்கிறது?’ என்று எதிர்த்துக் கேட்டாள்.
அவள் திருப்பிக்கொண்டாள்.
யாரிடமாவது கோபமானல் தன்னையே வருத்திக்கொள் வதுதான் அவள் வழக்கம். மத்தியானம் சாப்பிடாமல், இரவும் சாப்பிடாமல், மறுநாள் காலையும் சாப்பிடாமல் முரண்டு பிடித்தபோது அவள் அம்மாவுக்குத் தாங்க
* காசை நீயே வைத்துக்கொள் உமா!" என்றுசமாதானத் துக்குப் போனுள். “காசுக்கு உயிர் இருக்கா?" என்று சீறி விழுந்தாள் அவள். 'இப்போ என் ஆட்டுக்குட்டியை வெட்டியிருப்பாங் களாடா கிருஷ்ணு? இப்போ சாப்பிட்டிருப்பாங்களாடா கிருஷ்ணு?" என்று கிருஷ்ணனை அரித்து எடுத்து விட்டாள்.
அதற்குப் பிறகு அவர்கள் வீட்டில் ஆடே வளர்ப் பதில்லை.
50 0 கவிதா

குழப்படியும் பிடிவாதமும் தாங்காமல் அவளை ஹொஸ் டலில் சேர்த்துவிடும்படி வேண்டினுள் விதானையாரின் மனைவி. உமாவுக்கு இஷ்டமில்லையானுல் அது நடந்திருக் காது. உமாவே விடுதியில் இருந்து படிக்க விரும்பினுள். அதனுல் சகல சீர்வரிசைகளோடும் விடுதிக்குப் போய்ச் சேர்ந்தாள் உமா.
கிருஷ்ணன் தகப்பனை அரித்தான். தானும் விடுதிப் பாட சாலைக்குப் போகவேண்டும் என்று. ஒரே ஒரு பிள்ளை தான் கிருஷ்ணன், குழந்தைவேலுவுக்கு. அவனை நன்ருகப் படிக்கவைக்க வேண்டும் என்பதுதான் தன் கனவு என்று விண்ணப்பித்துக்கொண்டான் குழந்தை வேலு விதானையாரிடம்.
விதானையார் கொஞ்சம் பழமையும் கொஞ்சம் புதுமையும் கலந்த ஒரு கலவை. சாதி வித்தியாசம், வேலைக்காரன் போன்ற விஷயங்களை எல்லாம் வாசற்படிக்கு வெளியே பாராட்டிக்கொண்டிருக்கமாட்டார். கிருஷ்ணன் அவர் குடும்பத்திலேயே ஒருத்தன்போல ஆகிவிட்டதால் அது நியாயமான வேண்டுகோளாகப் பட்டது. மேலும் நகரத்தில் உமாவுக்கு ஏதாவது வேண்டியதைச் செய்து கொடுக்க ஒரு ஆள் எப்போதும் இருந்தால் நல்லது தானே. கிருஷ்ணனை அதற்கு ஏற்பாடு செய்தார்.
படிப்பதற்கு கிருஷ்ணனுக்கு நிறைய நேரம் கிடைத்ததும் உமா பின்தங்கிப்போனுள். விடுமுறைகளுக்கு ஊருக்குப் போனுல் உமாவுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பான் கிருஷ்ணன். "இதற்காக இதைச் செய்" என்று பேரம் பேசாமலேயே.
ஒவ்வொரு கிழமை முடிவிலும் உமாவுக்காகவே ஊருக்குப் போய்விட்டு விதானையார் வீட்டிலிருந்து பெரிய பித்தளைக்கரியர் நிறையத் தின்பண்டங்கள் கொண்டு வந்து கொடுப்பான் கிருஷ்ணன்.
மன்மதனும் மலரம்பும் ( ) 51

Page 27
* கரியர் வந்தாச்சா?” என்று கேட்பார்கள் உமாவின் தோழிகள். குறிப்பிடுவது தூக்கை அல்ல! கிருஷ்ணனை.
கிருஷ்ணினுக்குச் சொன்னுல் சிரிப்பான். ஆணுல் லஜ்ஜைப் பட்டுக்கொண்டு மறுமுறை கொண்டு வராமல் விடுவது என்று இல்லை.
ஜீ.சீ.ஈ. பாஸ் செய்ததோடு நிறுத்திக்கொண்டாள் உமா. .கிருஷ்ணனை மேலும் படிக்கவைக்க வேண்டும் என்று குழந்தைவேல் விரும்பினுன். சாமர்த்தியமாக வாழ்ந்து கொஞ்சக் காசு சேர்த்திருந்தான். ஆதலால் விதானை யாரின் உதவியோடு இந்தியாவுக்குப் போனுன் கிருஷ்ணன். ஒவ்வொரு முறை அங்கிருந்து வரும்போதும் குஞ்சம், ரிப்பன், சாறி என்று எதையாவது வாங்கி வருவான்
கிருஷ்ணன், உமாவுக்கு.
ஒரு முறை உமாவே கேட்டாள்.'சிறிய தாஜ்மஹால் பொம்மை வாங்கி வருகிருயா கிருஷ்ணு?’ என்று.
*அது வேண்டாம் உமா, அதைப் பரிசாகத் தரக்கூடாது என்று அங்கே சொல்வார்கள்,” என்ருன் கிருஷ்ணன்.
பரிசாகத் தானே தரக்கூடாது. நான் உன்னிடம் காசு தருகிறேனே அதற்காக” என்று சொன்னுள் உமா.
*சொன்னபடி காசைக் கொடுத்தாள்.
மறுமுறை தாஜ்மஹால் கிடைத்தது.
மூன்றம் வருடத்து முடிவில் உமாவுக்குத் திருமணம் என்று விதானையார் எழுதியிருந்தார்,
வந்தான்.
感á

இரண்டு நாள் கழித்து இந்தியாவுக்குப் போகப் புறப் பட்டபோது உமாவிடம் சொல்லிக்கொள்ளப்போனுன் கிருஷ்ணன்.
பூஜை அறைக்குக் கொண்டுபோவதற்காய் சாம்பிராணித் தட்டில் எடுத்து வைத்துக்கொண்டிருந்த தணலுடன் நின்றுகொண்டு அவள் பேசினுள்.
'இன்னும் ஒரு வருடம்தானே. பிறகு வந்திடுவாய். நான் தான் இருக்கமாட்டன்."
"ஏன் அப்படிச் சொல்லுகிருய் உமா?” என்று கடிந்தான் கிருஷ்ணன். அவள் சிரித்து 'நான் அதைச் சொல்ல வில்லை. அவரோடு இங்கிலாந்தில் இருப்பேன்" என்று சொன்னுள். தொடர்ந்து, 'அம்மா, அப்பா, குமரன் எல்லாரும் இங்கே இருப்பார்கள்தானே. அடிக்கடி வந்து போய்க்கொண்டிரு கிருஷ்ணு. இவர்களுக்கு ஆறுதலாய் இருக்கும்.’’ என்று வேகமாய்ச் சொன்னுள்.
தட்டிலிருந்த தணலிலிருந்து புகை வருகிறதா என்று பார்த்தான் கிருஷ்ணன். உமாவின் கண்கள் கலங்கி யிருந்தன. அவள் அங்கே இருந்து போனுள்.
O O O
ஆனல் கிருஷ்ணன் படிப்பை முடித்து வந்தபோது உமா அங்கேதான் இருந்தாள். அங்கே என்ருல் வீட்டில் அல்ல. ஹொஸ்பிடலில். வந்திறங்கினதும் யாரோ சொல்லக் கேட்டு ஹொஸ்பிடலுக்கே நேரே போனுன்.
இரண்டு பின்னல் போட்டுக்கொண்டு கட்டிலில் சாய்ந்து தோடம்பழம் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் 2 tf}f
மன்மதனும் மலாம்பும் ( ) 53

Page 28
அவளுடைய ஒற்றை நாடியான உடல் இன்னும் மெலிந்து கண்கள் பெரிய வட்டங்களாகி இருந்தன.
“என்ன வருத்தம் உனக்கு உமா?” என்று கேட்டான் கிருஷ்ணன். 'மனவருத்தம்" என்று சிரித்துக்கொண்டே சொன்னுள் உமா. கிருஷ்ணன் இருண்டுபோனன்.
அவள் மறுபடியும் சிரித்து, 'நம்பிவிட்டாயா? அதில்லை. எனக்கு கான்சராம்" என்ருள்.
கிருஷ்ணன் அதிர்ந்து முகமெல்லாம் என்னவோ போலாகிக் குழம்பினன். "இதுவும் இல்லை" என்று சொல்லமாட்டாளா என்பதுபோல அவளைப் பார்த்தான்
விதானையார் அவள் கூறியதைக் கேட்டுக்கொண்டே வந்தார். "உண்மைதான்' என்பது போல அவர் முக பாவம் இருந்தது. "அங்கே இல்லாத வைத்தியமா? இவள்தான் இங்கே வந்துவிட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்திருக்கிறள். மாப்பிள்ளை கொண்டு வந்து விட்டுவிட்டுப் போனர். மறுபடியும் நாளைக்கு வாருர்.'
*ஏன் நீங்கள் யாரும் எனக்கு இதை முதலில் அறிவிக்க வில்லை?"என்று கேட்டான் கிருஷ்ணன்.
"உன் படிப்பு குழம்பிப் போகும் என்று இவள்தான் தடுத்துப் போட்டாள்" என்ருர் விதானையார்.
"மண்ணுங்கட்டி" என்று கடித்த பற்களுக்கிடையே சொல்லிக்கொண்டு உமாவைப் பார்த்தான் கிருஷ்ணன்.
உமா, 'அதனல் என்ன கிருஷ்ணு? நான் செத்தா போ னேன்? நீ வந்துவிட்டாய்தானே" என்ருள்.
54 ( ) கவிதா

பிறகு ஆயாசத்தோடு கட்டிலில் சாய்ந்து படுத்துக் கொண்டு கண்ணை மூடியபடியே, 'சின்ன வயசோ டேயே அப்படியே வளராமல் நின்றுவிட்டிருந்தால் நல்லாய் இருந்திருக்கும் என்று நான் நினைப்பேன். சில நேரங்களிலே, யாராவது கெட்டிக்கார ஹிப்னுடிஸ்க் காரர்களைக் கூட்டி வந்து ஆழமான தூக்கத்திலே ஆழ்ந்து போய் கொஞ்சக் காலத்தைப் பின்னுேக்கிப் பார்க்கிற மாதிரி செய்துகொள்ளலாமா என்றும் ஆசையாக இருக்கும்.” அவள் இரண்டு பேருக்கும் பொதுவாய்ச் சொல்வது போலச் சொன்னுள். “ஹிப்னுடிஸம் இல்லாமலே என்னுல் அப்படிப் பார்க்க முடிகிறது உமா' என்ருன் கிருஷ்ணன்.
உமா கண்ணைத் திறந்து அவனைப் பார்த்துச் சிரித்தாள். ‘சாவின் நிழல் மேலே வந்து கவிகிறபோது உன்னுலேயும் அப்படிப் பார்க்க முடியாது கிருஷ்ணு' என்ருள்.
கிருஷ்ணன் மர்மமாய்த் தாக்கப்பட்டு நெளிந்தான். "இருக்கட்டும்; இப்போ எனக்குச் சரியாய்ப் பசிக்குது அப்பா வெறுங் கையோட வந்திருக்கிறர். நீ போய் அம்மாவிடம் கொஞ்சம் சாப்பாடு வாங்கிக்கொண்டு அடுத்த பஸ்ஸிலே வந்துவிடுகிருயா கிருஷ்ணு?" என்று கேட்டாள் உமா. * உனக்குப் பசிக்குதா உமா?" என்று பரிதாபமாகக் கேட்டான் அவன். 'ஒ சரியாய்-அந்தப் பித்தளைக் கரியரிலேயே வாங்கிக் கொண்டு வா கிருஷ்ணு."
‘எந்த?" என்று அவன் கேட்கவில்லை. அவனுக்கு எதுவும் மறந்துபோகவில்லை.
மன்மதனும் மலரம்பும் 55

Page 29
பித்தளைக் கரியரில் சாப்பாடு வாங்கிக்கொண்டு கிருஷ்ணன் திரும்பி வரும்போது உமாவின் உடல் வேடிக்கையாக முறுக்கிக்கொண்டிருந்தது. விதானையார் அமுக்கிப் பிடித்துக்கொண்டிருந்தார். ஒரு டாக்டர் அருகில் நின்றுகொண்டிருந்தார்.
மூடிய கண்கள்; மடித்த உதடுகள்; முறுகிய உடல். *கிருஷ்ணு" என்று அவள் அழைத்தது எல்லோருக்கும் தெளிவாகக் கேட்டது. விதானையார் திரும்பிப் பார்த்து விட்டு "சாப்பாடு வந்தாச்சு உமா’ என்று சொன்னவர் 'உமா” என்று அசாதாரணமாய் வீரிட்டார்.
கிருஷ்ணன் விறைத்து நின்றன். யாரும் அவனைப் பார்க்கவில்லை.
‘கரியரை "ணங்" என்று தரையில் வைத்தான். “கிருஷ்ணு" என்று அழைத்தபடியே நின்றுவிட்டிருந்த அந்த அழைப் புக்குப் பதில்போல "உ.மா' என்று ஆறுதலாக நிறுத்தி உச்சரித்தான் கிருஷ்ணன்.
அவனுக்குப் பழக்கம், அவனுக்குச் சிநேகம், அவனுக்கு அந்தரங்கம் எல்லாம் உமா என்றிருந்த அந்த 'இயக்கம்" இப்போது அங்கே இல்லை என்பது அவனுக்குப் பிரக்ஞையாயிற்று.
அவன் உள்ளம், ரிஷிகேசத்துக்கு அல்லது இமயமலையின் அடிவாரத்தில் எங்காவது ஒரு இடத்துக்குப் போய், அருவிக் கரையில், பாறை மேல் குப்புறப் படுத்து அப்படியே பட்டினியாய்க் கிடந்து செத்துப்போக வேண் டும் போல ஏங்குகிறது. V−
எல்லாவற்றுக்கும் முன், சின்ன உமாவும், சின்ன கிருஷ்ண *னும் தங்கள் சிறிய கால்களால் அளந்து முடித்த அந்தக்
56 () கவிதா

கிராமத்துக்குப் போய் அவர்களுக்குச் சிநேகமான அதன் மண்ணிடமும் கடலிடமும் வானத்திடமும் அந்தரங்க மாய் உமாவைப்பற்றிக் கேட்க வேண்டும்: 'உங்களிடம் ஒப்படைத்த உமாவை என்ன செய்தீர்கள்?"
"அவர்கள் எல்லாம் வர நேரமாகும் அவன் இப்பொழுதே போகிருன்."
田。一4 மன்மதனும் மலரம்பும் ( 57

Page 30
நேர்கோடு
அவளை எப்போது பார்த்தாலும் எனக்கு கீட்ஸின் கவிதை ஒன்று ஞாபகம் வருவதுண்டு. அதில் அழகாகத் தலைசாய்த்து நிற்கும் அரும்பு ஒன்றை "ஸ்வீட் பட் வித் எ மொடஸ்ற் பிறைட்" என்று வர்ணித்து இருக்கிறன் அந்தக் கவிஞன். இவள் சிறு குழந்தையாக அன்னையின் கரங்களில் இருந்து தலையைத் தூக்க முடியாமல் தூக்கி என்னைப் பார்த்துச் சிரித்த முதல் நாளிலேதான் எனக்கு முதன் முதலாக கீட்ஸின் "ஸ்வீட் பட்" ஞாபகம் வந்தது. இப்போது நிச்சலனமாகத் தூங்குகின்ற இந்த நிலையில் அவளைக் காண்கையில் அவளுக்குத் "தூங்கும் அழகி"யின் கதை சொன்ன ஞாபகம் வந்தது.
அவள் கையில் அந்தப் புத்தகம்.
டிக்கன்ஸின் "த டேல் ஒவ் டு சிற்றிஸ்’. வலது கையின் ஆள்காட்டி விரல் குறிப்பிட்ட ஒரு பக்கத்தினுள் அடையாளமாகப் புதைந்திருந்தது. வாசித்துக் கொண்டே இருக்கையில் தூங்கிப்போயிருக்க வேண்டும். மெதுவாக அவள் விரல் இருந்த பக்கத்தினுள் என் விரலை நுழைத்து, புத்தகத்தை எடுத்துக்கொண்டு விரித்தேன்.
சரிதான் நான் நினைத்தது. "பதின்மூன்றவது சப்டர்ஃபெல்லோ ஒவ் நோ டெலிகளிலி.
58 ) கவிதா

*தன் வாழ்வில் பெண்களைப்பற்றியே சிந்தித்திராத சிட்ஸி கார்டன் என்ற வாலிபன் லூசி என்ற பெண்ணைச் சந்திக்கிறன். அவளை உயிருக்கும் மேலாகக் காதலிக்கிறன். திடீரென்று ஒருநாள் அவள் வீட்டிற்கு வருகிறன். தன் காதலை லூசியிடம் வெளியிடுகிறன். ஆனல், தான் அவளுக்கு ஏற்றவன் அல்லன் என்பதை யும் தானே கூறி, தன்னைக் காதலிக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறன். 'இந்த இங்கிதமில்லாதவனை, டிக்கன்ஸ் வெகு இரக்கத்துக்குரிய, உயர்வான பாத்திர மாகச் சித்திரித்திருக்கிற, கதைக்கு உயிரான அத்தியாயம் தான் அது. அதன் பிறகு, கதை முடிவில், கார்ட்டன் லூசிக்காகத் தன் உயிரையே தியாகம் செய்கிருன்."
சட்டென்று அவள் முகத்தைப் பார்த்தேன். என் கண்மணியின் இரு கண்களிலும் இருந்து ஊற்றெடுத்து வற்றிய கண்ணிரின் கறை நன்கு தெரிந்தது.
மெல்லக் குனிந்து, அவள் தலைமயிரை வருடி, "டெய்ஸி" என்றேன். அவள் திடுக்கிட்டு விழித்தாள். அதன் பிறகு, என் கையில் அந்தப் புத்தகம் இருந்ததைக் கண்டதும் மெல்ல மெல்ல ஒரு அசட்டுப் புன்னகை தோன்றலாயிற்று. இது மன்னிப்புக் கோரும் பாவனை.
“எத்தனை தரம் உனக்கு இப்படி அழக்கூடாது என்று சொல்லி இருக்கிறேன். ஏன் திருப்பித் திருப்பிப் படித்து அழவேண்டும்? வெறும் கதைதானே?"
*வெறும் கதையா அப்பா? வாசிக்கேக்க நானே கார்ட்ட ணுக மாறிவிடுகிறேனே அப்பா? அழாமல் என்ன செய்யிறது?’ என்று தூக்கக் கலக்கத்தோடே தலையைச் சாய்த்துக்கொண்டு கேட்டாள். எனக்கு மறுபடியும் "ஸ்வீற் பட்டின் ஞாபகம் வந்தது.
நேர்கோடு ( ) 59

Page 31
"சரிதான்; போய் பெட்ரூமில் படுத்துக்கொள்” என்றேன். விடுதலை பெற்றற் போன்ற மகிழ்வுடன் "குட்நைட்" என்று கூறியவள் என் வலக் கையைச் சட்டென எடுத்து முத்தமிட்டுவிட்டு வளைந்துகொண்டு சோபாவைத் தாண்டி நடந்தாள்.
இது அவள் அன்னை வலிந்து வலிந்து புகுத்திய மேல் நாட்டுப் பழக்கங்களில் இவள் விடாமல் வைத்துக் கொண்டிருப்பதில் ஒன்று.
நான் என் அறையை நோக்கி நடந்தேன். உள்ளே என் மனைவி உட்கார்ந்திருந்தது தெரிந்தது. குனிந்து ஏதோ படித்துக்கொண்டு இருந்தவள் என் வரவைக் காலடி ஒசையால் புரிந்துகொண்டு நிமிர்ந்தாள். கண் களில் இருந்த கண்ணுடியைக் கழற்றிக்கொண்டே அவள் என்னைப் பார்த்த பார்வையில் எதையோ சொல்லக் காத்திருக்கிருள் என்பது புரிந்தது.
நானும் "என்ன?’ என்று பார்வையாலேயே கேட்டேன். *பீட்டர் வந்திருந்தான்" என்ருள் அவள்.
og fl.''
“ “ T6T 6Tr Fff?”
'பீட்டர் வந்திருந்தான் என்ருய் சரி என்றேன், என்றேன் நானும் விடாமல்,
'நீங்கள் கொடுக்கிற இடம்தான் டெய்ஸி ஒன்றுக்கும். உதவாமல் போய்க்கொண்டிருக்கிருள். பட்டிக்காட்டுப் பழக்கங்களில் பழக்கிவிட்டீர்கள். இப்ப பிடிவாதமும் அதிகமாய்ப் போச்சு' என்று சீறினுள் அவள்.
60 56ís T

* ஒ! இதற்கு நான் என்ன செய்ய முடியும்? டெய்ஸி வளர்ந்த பெண் இல்லையா? அவளுக்குப் பிடித்தமான பழக்க வழக்கங்களை ஏற்றுக்கொள்கிருள். மேலைத்தேச நாகரிகம்தான் நாகரிகம் என்று நீ நினைக்கிருய். கீழைத் தேச நாகரிகம் எந்த விதத்தில் தாழ்ந்தது என்று அவள் நினைக்கிருள். இதில் என்னை ஏன் இழுக்கிருய்?" என்று நான் சிரித்தபடி கேட்டேன்.
அந்தச் சிரிப்பே அவளுக்கு ஆத்திரத்தை மூட்டிவிட்டி ருக்கவேண்டும். ஏனென்றல் அவள் பிறந்தவீட்டுச் சொத்தான மேல்நாட்டு நாகரிகத்தை டெய்ஸி துச்ச மாக மதிக்கிருள். டெய்ஸி மதிக்கிற கீழ்நாட்டு நாகரிகமோ என்னுடையதாக அல்லவா இருக்கிறது? *நீங்கள் அவளை உதவாக்கரையாக்கிவிட்டு, வேண்டும் என்றே என்னைச் சண்டைக்கிழுக்கிறீங்கள்” என்று கத்தினுள்.
"உஷ்.உஷ்." என்றேன் நான். "இது பாதி ராத்திரி; சண்டையையோ, விவாதத்தையோ நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம். இப்போ நீ சொல்ல வந்ததைச் சொல்லு” என்றேன்.
அவள் முணுமுணுப்புடன் தணிந்தாள்.
"பீட்டர், டெய்ஸியைப் படம் பார்க்க வரும்படி அழைத்தான்.”
நான் ஏதும் கூறுவேன் என்று எதிர்பார்ப்பதுபோல் சிறிது தாமதித்தாள், அவள். நான் பேசாமலே இருந்தேன். அவளே மீண்டும் பேசினுள்.
"த.தனக்கு நிறையப் படிக்க இருக்கிறதென்று பொய் சொல்லி அனுப்பிவிட்டாள்.”
நேர்கோடு () 61

Page 32
'பொய் என்று உனக்கு எப்படித் தெரியும்? அவள் படிக்கவேண்டியே இருந்திருக்கலாம்.”
"ஓஹோ, பேர்ள் பக்கும், பார்பரா கார்லட்ன்டும்தான் இப்போது பாடப் புத்தகம் எழுதுகிறர்களா?” என்று ஆத்திரத்துடன் உதட்டைக் கடித்தாள் அவள்.
"கதைப் புத்தகம் வாசித்தாள் என்கிறயா? அதிலிருந்து என்ன தெரிகிறது? பீட்டருடன் வெளியே போவதில் அவளுக்கு விருப்பமில்லை என்று தெரியவில்லையா? நீ வலிந்து சோடி சேர்க்க விரும்புகிருய். அது ஆண்டவன் வேலை" என்றேன், நான் விடாமல்.
"ஓ! எனக்குத் தெரியாதா? உங்களுடைய அனுசரணை இல்லாமல் அவள் இவ்வளவு தூரம் போகமாட்டாள். பார்ப்பம். அதையும்தான் பார்ப்பம். பீட்டர்தான் அவளைக் கல்யாணம் செய்துகொள்ளப்போகிருன். இல்லாட்டா டெய்ஸிக்குக் கல்யாணமே இல்லை" என்று எழுந்து நின்று கண்ணுடியை மறுபடியும் கண்ணில் மாட்டிக்கொண்டே என்னை வெறுப்புடன் ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போனுள்.
மனுேரியை நான் திருமணம் செய்தபோது இப்படி ஒரு பிரச்சினை வரும் என்று எதிர்பார்க்கவில்லைதான். அவளும் நானும், சாதியால், சமயத்தால், இனத்தால் வேறுபட்டிருந்தபோதும் காதலால் ஒன்றுபட்டவர்கள் நாங்கள் இருவரும் எங்களுக்கிடையே தோன்றிய வேறுபாடுகளை ஒருவாறு சமாளித்துக்கொண்டோம். ஆனல், இந்த வாழ்க்கைக்கு எங்களுக்கு முந்திய தலைமுறையினரும் இலேசில் பழக்கப்பட்டுவிடவில்லை. பிந்திய தலைமுறையினரும் இலேசில் பழக்கப்பட்டுவிட வில்லை. என் அம்மா, "கண்டறியாத பறங்கிச்சியைக் கட்டிக்கொண்டான் - குசினி வரைக்கும் சப்பாத்தோட
62 ) கவிதா

வருவாள்' என்று வெறுத்து ஊருக்குப் போனள். மனேரியின் நல்ல குணங்கள் எதையும் கண்டு உணராமலே அவளை வெறுக்கத் தொடங்கிவிட்ட பின் அவளுடைய பலவீனங்களை மன்னிப்பதேது? அப்படியே தந்தையும், சகோதரங்களும் ஒட்டாமல் நின்றர்கள். அதாவது பரவாயில்லை. இது..?
டெய்ஸி எங்கள் ஒரே மகள். மனேரியைத் திருப்தி செய்வதா, என்னைத் திருப்தி செய்வதா என்று தத்தளிக் கிருளே! தன்னை மம்ம என்று அழைக்கவேண்டும் என்பது அவள் கட்டளை. என்னை அப்பா என்றே அழைக்கவேண்டும் என்பது என் விருப்பம். அவள், பியானே கற்பிக்க வேண்டும் என்ருள். நானே வீணையும் கற்பித்தால் நன்றயிருக்கும் என்று நினைப் பவன். அவளுடன் ஆங்கிலத்திலேயே உரையாட வேண்டும் என்பது அவள் எதிர்பார்ப்பு. நானே அவளைத் தமிழிலும் வல்லவளாக்க வேண்டும் என்று நினைப்பவன். மொத்தத்தில் மேலைத்தேசப் பண்பாட்டை டெய்ஸியிடம் புகுத்திவிட வேண்டும் என்று நினைப்பவள் மனேரி. நானே, தமிழ் மகளாக அவளைப் பார்ப்பதற்கு ஆத்மார்த்தமான ஆசையைச் சுமந்து நிற்பவன்.
மனுேரிக்கு ஆத்திரத்தைக் கூட்டவென்றே ஏற்பட்டாற் போல், டெய்ஸி எண்ணப் பாங்குகளிலும், விருப்பங் களிலும் தன் தாயாரைக் கொண்டு பிறக்காமல், என்னைக் கொண்டே பிறந்திருந்தாள். இவ்வளவு சின்னப் பெண்ணுன டெய்ஸி எவ்வளவு திறமையாகத் தன் தனியான விருப்பங்களுக்கு ஏற்றபடியெல்லாம் தன் அன்னையிலிருந்து தன்னை மாற்றிக்கொள்கிருள் என்பதை நான் மனங்கொள்ளா வியப்புடன் கவனித்து வந்தேன். இதில் வேடிக்கை என்னவென்றல், டெய்ஸி தன் மனப் போக்குப்படி செய்வதை எல்லாம் என் தூண்டுதலா
நேர்கோடு () 63

Page 33
லேயே செய்கிறள் என்று மனேரி எண்ணியதுதான். அதனுல்தான் டெய்ஸியிடம் தான் காணும் குறைகளுக் காக எல்லாம் என்னைச் சாடும் வழக்கம் ஏற்பட்டிருந்தது. அன்ருெரு நாள் அப்படித்தான் டெய்ஸி, "மம்மி, நான் சாறி கட்டப் போறேன்" என்ருள். 'ஃபோர் ஏ சேஞ்ச்" என்று நினைத்துக்கொண்டாளோ என்னவோ, மனேரி ஒப்புதலளித்துவிட்டாள். அதையே அவள் வழக்க மாக மாற்றிக்கொண்டுவிட்டாள் என்று தெரிந்ததும் சீறினுள். 'டாடி சொன்னுரா?” என்று பாய்ந்தாள். "ஓ!அவர்தான் உன்னைக் கிழவியாட்டம் பட்டிக்காடாக்கி வைத்திருக்கிருர்" என்று வீணுகக் கத்தினுள். "அட்லீஸ்ட் பிளெவ்சையாவது ஸ்லிவ்லெஸ்ஸா’கப் போடுமாறு ஆலோசனை சொன்னுள்.
டெய்ஸி புன்சிரிப்பால் மறுத்தாள். எனக்கு ஆச்சரிய
மாக இருந்தது. "பரவாயில்லை மம்மி; ஆண்கள் கவனத்தைக் கவரவேண்டுமென்பதற்காகவா ஆடை? கவரக் கூடாது என்பதற்காக அல்லவா?" என்று கேட்டாள்.
அதன் பிறகு நான் டெய்ஸியிடம் தனியாக இதுபற்றிக் கேடடேன். 'அப்பா, "மினிஸ்கேட்டும், “டிரான்ஸ் போன்ற பிளவுஸ0ம் போட்டுக்கொண்டு வருபவர்களைப் பார்க்கும்போது மனசெல்லாம் வலிக்குதப்பா. அப்படி நான் உடுத்திக்கொண்டு போறபோது நான் பார்க்கிற எல்லோருக்கும் முன்னல நானே புழு மாதிரித் தெரிவதாக உணர்கிறேனப்பா, ' என்றஸ் அவள். நான் அவளை அணைத்துக்கொண்டேன்.
"பெண்ணே, உன் எடுத்துக் காட்டுகள் சீதையும்
கண்ணகியும், தமயந்தியுமாகத்தான் இருக்கிறர்கள். உன்னைக் கிளியோபட்ராவாக ஆக்கவேண்டுமென
64 ) கவிதா

நினைக்கிருளே அவள்!” என்று மனதோடேயே சொல்லிக்கொண்டேன்.
பீட்டர் வந்து டோனதிலிருந்து, தினமும், டெய்ஸிக்கும் தாய்க்கும் வாக்குவாதம் ஏற்படத் தொடங்கின. டெய்ஸியிடம் தோல்வி காணும்போதெல்லாம் மனுேரி என்னைத் தாக்கினுள். இதுபற்றி எனக்கு அக்கறை இல்லை. ஆனல், டெய்ஸி என்ன நினைக்கிருள் என்பதை அறியவேண்டுமென்ற எண்ணம் என்னுள் வலுக்க லாயிற்று. டெய்ஸி இன்னுரைத்தான் மணக்கவேண்டும் என்பதில் எனக்கு எந்தவிதமான அபிப்பிராயமூம் இல்லை. டெய்ஸிக்கும் அப்படி ஒரு எண்ணம் இல்லா திருக்கும் பட்சத்தில், மனுேரியின் எண்ணமாவது நிறைவேறட்டுமே!
ஒருநாள் டெய்ஸியைக் கல்லூரியிலிருந்து அழைத்துவரும் போது அதற்கான சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. காரில் நானும் அவளும்தான். புத்தகங்களை மடியில் வைத்துக்கொண்டு பேசாமலே உட்கார்ந்திருந்தாள் அவள். நான் மெதுவாகப் பேச்சைத் தொடங்கினேன்.
"அன்றைக்கு பிட்டர் வெளியே போக அழைத்தானு, (o)L-ugró'?”
"ஒமப்பா. ஆனலும், மம்மி சுத்த மோசம். நான் மாட்டேன் என்றதுக்காக, மூஞ்சியை நீட்டிக்கொண்டி ருந்தா."
'நீ பீட்டரைத் திருமணம் செய்யவேண்டுமென்று மம்மி விரும்புகிருள். இது உனக்குத் தெரியவில்லையா?” என்று கேட்டேன்.
நேர்கோடு 65

Page 34
*தெரியாமல் என்னப்பா, எனக்குப் பீட்டரைப் பிடிக்க
'66ir?'
"ஏன?.ம்.வந்து .என் மனதில் இருக்கிற கற்பனைக் கணவர் பீட்டரைப் போல இருக்கவில்லையே!...” என்று வெடுக்கென்று சொன்னவளுக்கு, ஐயோ இப்படிச் சொல்லிவிட்டோமே என்று பின்னர்தான் வெட்கமாக ஆகி இருக்கவேண்டும். சட்டென்று மடியில் வைத்திருந்த புத்தகங்களை வாரித் தூக்கி முகத்தை மறைத்துக் கொண்டுவிட்டாள்.
டெய்ஸி பிறந்தது முதல் அவள் வளர்ச்சியில் ஒவ்வொரு கட்டத்தையும் கண்ணெதிரே கண்டுவருபவன்தான் நான். ஆணுல் இப்படி ஒரு எண்ணம் அவளுள் மடல் அவிழ்ந்திருப்பதை இன்றுதான் அறிகிறேன்.
"டெய்ஸி" என்று கண்டிப்பும், கனிவுமாக அவளை அழைத்தேன்.
"புத்தகங்களை எடு. இந்த நேரம் இப்படி வெட்கப்பட்டுக் கொண்டு உன் உள்ளத்தை மறைத்தாயானுல், பின்னுல் உன் வாழ்வு கெட்டுவிடும். விஷயங்கள் பாரதூரமாய்ப் போவதற்கு முன் உன் மனதில் இருப்பதைச் சொல்லி விடுவது நல்லது. அல்லவா?. சொல்லு. உன் மனதில் இருக்கிற கணவன் எப்படி இருக்கிருன்?"
கேலிசெய்வதுபோல் கேட்டாலும் அவள் எண்ணத்தை அறியவேண்டும் என்ற தீவிரம் இருந்ததை என்னல் மறைக்கமுடியவில்லை.
66 () கவிதா

அவள் புத்தகங்களை மறுபடியும் மடியில் போட்டுக் கொண்டு, 'சொல்வதுதான் நல்லது அப்பா. கேலிசெய்ய மாட்டீங்களே?" என்ருள்.
*Lost Gl 6ðr.”
"பூரீராமபிரான் மாதிரி" "சந்திரவதனமும், தாழ்ந்த கைகளும் சுந்தர மணிவரைத் தோளுமாகவா?”
இல்லையப்பா"
966rGoT...'
'ஏகபத்தினி விரதனுக." நான் துணுக்குற்று அவளைத் திரும்பிப் பார்த்தேன்.
**Loto-Lfi...?**
"நல்லவரல்ல."
"நன்ருய்த் தெரியுமா?”
'நன்ருய்த் தெரியும்.”
"மம்மிக்குத் தெரியுமா?"
“ஓ. தெரியும். மணமானல் சரியாகிவிடுவார் என் கிருள்." நான் சிந்தனை வசப்பட்டேன். இப்படிச் சில: நிமிடங்கள் கழிந்தன. "அப்பா” என்று டெய்ஸி அழைத்தாள்.
"எண்ணரும் நலத்தினுள் என்று சீதா தேவியைச் சொன்னுங்க. அவ தன்னை அப்படிப் பார்த்துப் பார்த்து உருவாக்கி ராமனுக்கு அர்ப்பணிப்பதற்கு ஆவலும் ஆசையுமாகத் தவமிருந்தபோது ராவணனைக் கொண்டு வந்து நிறுத்தியிருந்தால்?” என்று கூறி வந்தவள்,
நேர்கோடு ( ) 67

Page 35
கண்களில் 8ř தழும்ப அத்துடன் நிறுத்திக் கொண்டாள்.
என் உள்ளம் துடித்தது. என் அன்புக் கண்மணி டெய்ஸி யிடம் இருக்கக்கூடிய மனக்குறை ஒன்றை முதல் முறை யாகச் சந்திக்கிறேன்.
மனேரிக்குப் பீட்டரின் குறை பெரிதில்லைதான். அவள் மேனுட்டுப் பண்பில் ஊறியவள். தானும் தன் சந்ததியின ரும் எங்கே தன் குலத்திலிருந்து பிரிக்கப்பட்டு விடுவோமோ என்று பயந்துகொண்டு தன் இனத்தவனுன பீட்டருக்கு டெய்ஸியை மணம் செய்துவைத்து மறுபடி யும் தன் இனத்துள் போய்விடவேண்டும் என்று பிடிவாத மாக நிற்கிருள். இப்படி மென்மையும் மேன்மையுமாக டெய்ஸி தன்னிலிருந்து முற்றிலும் புதிதாக உருவாகியிருப் பதை அவள் உணரவில்லை; உணர முயன்றதும் இல்லை. தமிழ்ப் பண்பாட்டைப்பற்றி அவள் எண்ணமெல்லாம் சுத்தக் கர்நாடகம் என்பதுதான். அதனுள்ளே, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் போற்றிப் பாதுகாக்கப்பட்ட ஆத்மார்த்தமான தூய்மையும், மென்மையும் பொதிந்தி ருப்பதை அவள் உணரவில்லை. ஆனல் நேற்றுப் பிறந்த டெய்ஸி உணர்கிருள் - தமிழனுன என் ரத்தம் கலந்திருப் பதாலா? டெய்ஸியை உதவாக்கரையாக்கிவிட்டேன் என்று அவள் என்னைக் குற்றம் சாட்டுகிருளே. உண்மை யில் டெய்ஸி எப்படி ஒரு இதமான இல்லாளாக இருப்பாள் என்பதை நினைக்கும்போதே எனக்கு நெஞ்ச "மெல்லாம் இனித்தது. பீட்டர்.அவன் டெய்ஸிக்கு எந்த விதத்தில் ஏற்றவன்? அவள் சொன்னதுபோல் சீதைக்கு இராவணனு? ஒரு நாளும் இல்லை என்று என் மனம் முடிவு கூறியது. ஆணுல், மனுேரி? என்னைத் திருமணம் செய்ததையே வாழ்வில் பெரிய தவறே என்று நினைத்து மயங்கிக்கொண்டிருக்கிருளே?"
68 ( ) கவிதா

சில மாதங்கள் உருண்டன. டெய்ஸி ஒருநாள் என்னிடம் வந்தாள். "அப்பா, இன்றைக்கு சரஸ்வதி ஹாலில் சத்தியசாயி பாபா "பிரேயர்ஸ்’ நடக்குதப்பா, என்னை கூட்டிப் போறிங்களாப்பா?” என்று கேட்டாள்.
"என்ன கேட்கிருய் டெய்ஸி? மம்மிக்குத் தெரிந்தால் என்ன செய்வாள் தெரியுமா?’ என்றேன்.
"மம்மிக்குப் பீச்சுக்குப் போவதாகச் சொல்லுவோமே!” அங்கே போவதில் அவளுக்கிருந்த அளவற்ற ஆசையை என்னுல் உணரமுடிந்தது. “சரி” என்றேன்.
அன்று பிரார்த்தனை எல்லாம் முடிந்து எனக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது. எங்களை நோக்கிச் சிரித்தபடி, ஒரு இளைஞன் வந்தான். அவனைப் பார்த்த உடனேயே "சந்திர வதனமும் தாழ்ந் கைகளும் சுந்தர மணி வரைத் தோளும்” என்ற டி என் முயற்சியில்லாமலே நினைவுக்கு வந்தது. நஷனலும், வேட்டியும் அணிந்து, நெற்றியில் சந்தனமிட்டிருந்தான். அவன் மிக அருகில் வந்துநின்றபோது டெய்ஸி, "அப்பா இவர் மிஸ்டர் இராமச்சந்திரன்; மெடிகல் ஸ்ரூடன்ஹ்” என்று அறிமுகம் செய்துவைத்தாள். அந்தப் பெயர்ப் பொருத்தம் என்னை அயரவைத்தது. ‘இராமச்சந்திரன்!”
அந்த அறிமுகத்துக்குப் பின்னர் நான் டெய்ஸியிடம் பல மாறுதல்களை அவதானித்தேன். 'கண்ணன் மனநிலையை" என்ற பாட்டை ‘ரெக்கார்ட் பிளேயரில் அடிக்கடி போட்டுக் கேட்டாள். அதனுல் மனுேரியின் ஏச்சுக்களை யும் வாங்கிக் கட்டிக்கொண்டாள். என்னிடம் வந்து, “எய்யான் ஒருவன் கை ஓயான் - உயிரும் ஒன்றே இனி இல்லை" என்ற அடிக்கு விளக்கம் கேட்டாள். விளக்கம் கொடுத்துவிட்டு, “ஏன் டெய்ஸி" என்று மட்டும் கேட்டேன். அவள் முகம் குங்குமமாகியது.
நேர்கோடு ( ) 69

Page 36
என் மனதில் சதா சுழன்றுகொண்டிருந்த அவனுடைய பெயர் வாயில் வந்தது. 'இராமச்சந்திரன்..ம்..?” என்று கேட்டேன். அவள் மிரண்டு என் கைகள் இரண்டையும் பற்றிக்கொண்டுவிட்டாள். "அப்பா, மம்மிக்குக் கேட்கக் கூடாதே" என்று தவித்தாள்.
எனக்கு இரக்கமாக இருந்தது. "கதைகளில் வரும் நாயக நாயகியரின் துன்பங்களுக்காக எல்லாம் கண்ணிர்விடும் இந்த மென்மையான இதயத்தில் காதல் ஜனித்திருக்கி றதே, சோதனைகளைத் தாங்கமுடியுமா இதனுல்?’ என்று எண்ணினேன். இதற்கு முடிவு தேடவேண்டிய பொறுப்பும் என்னிடமிருப்பதை உணர்ந்தேன்.
"டெய்ஸி, இப்போ நீ படிக்கிருய். அவனுக்கும் படிப்பு முடிய இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கின்றன அல்லவா? மனேரிக்குத் திடீரென இப்படி ஒரு செய்தி யைக் கேட்பது அதிர்ச்சியாக இருக்கும். மெதுவாகத்தான் இந்த விஷயத்திற்கு வரவேண்டும். புத்தியாய் நடந்து கொள் டெய்ஸி. நீ சந்தோஷமாய் இருக்கவேண்டும் என்பதுதான் என் விருப்பம். நான் பார்த்துக்கொள் கிறேன்.’’ என்றேன் நான்.
ஆனல், அவள் என்னைப்போல் நாற்பத்தைந்து வருட நிதானத்துடன் இருக்க வேண்டும் என்று எப்படி நான் எதிர்பார்க்கலாம்? பதினெட்டே வயதான டெய்ஸியின் உள்ளம், அவள் உள்ளத்தில் மலர்ந்திருந்த புதிய உறவால், வானத்தில் பறந்துகொண்டிருந்தது என்பதை உணர மறுநாளே எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது.
வழக்கம்போல அன்றும் ரேடியோ வைத்துவிட்டு சோபாவில் படுத்து உறங்கிப்போயிருந்தாள் டெய்ஸி. கையில் ஒரு நோட் புத்தகம் இருந்தது. எழுப்பிப்
70 () கவிதா

படுக்கை அறைக்கு அனுப்பவேண்டும் என்று எண்ணிக் கொண்டே அவள் கையிலிருந்து நோட் புத்தகத்தை எடுத்தேன். தானுகவே, ஒருபக்கம் விரிந்துகொண்டது. “றினெளன்ஸ்மென்ற்’ என்று தலையங்கமிட்டுச் சில வரிகள் எழுதியிருந்தாள். ஒரு ஆங்கிலக் கவிதைஎங்கேயோ இருந்து ‘காப்பி பண்ணிவைத்துக்கொண்டி ருக்கிருள். சிரித்தவாறே, கண்ணைச் செலுத்தியவன் சிந்திக்கலானேன்.
"தன்சீனச் சூழ்ந்திருக்கிற தளைகள் எல்லாவற்றையும் சட்டைகளைக் கழற்றுவது போலக் கழற்றி வீசிவிட்டு தன் காதலனுடன் சேர்ந்துவிடக் கனவு காணும் நங்கை ஒருத்தியின் ஆசை" அதில் பிரதிபலித்தது. அந்தப் பாடலைப் பாடும் பெண்ணுக டெய்ஸியே என் கண்ணில் தெரிந்தாள். அவளைப் பார்த்தேன். திடீரென்று நன்றக இளைத்துப்போனுற்போல இருந்தது. மன வருத்தத்துடன் அந்தக் கவிதையையும் கையில் எடுத்துக்கொண்டு மனுேரியின் அறைக்குப் போனேன். இப்போதே எல்லாவற்றுக்கும் முடிவு கட்டிவிடவேண்டும் என்ற வெறி என்னுள் மூண்டிருந்தது.
அவள் இல்லை. எங்கோ வெளியில் சென்றிருந்தாள். இனி நாளை இரவுதான் இதுபற்றிப் பேசமுடியப்போகிறது. கொஞ்சம் ஏமாற்றத்தோடு என் அறைக்கு வந்து 65 GL66T.
மறுநாள் மாலையிலேயே மனேரி டெய்ஸியையும் அழைத்துக்கொண்டு ஒரு பார்டிக்குப் போவதாகக் கூறிச் சென்றள். டெய்ஸிக்குப் பார்டிகளுக்குப் போவது அவ்வளவாகப் பிடிப்பதில்லை. ஆனலும், மனுேரி வற்புறுத்தி அழைத்துச் சென்றிருக்க வேண்டும். எனக்கு ஒரே ஒரு மனக்குறை. டெய்ஸியின் படிப்பு ஓரளவுக்கு
நேர்கோடு ( ) 71

Page 37
வரும் வரையிலாவது அவளின் திருமணத்தைத் தள்ளிப் போட வேண்டும் என்று நினைத்தது சரிவராது என்று பட்டது. மனேரி அவசரப்படுகிருள்; அவளுடைய அவசரம் டெய்ஸியையும்கூட அவசரப்பட வைக்கிறது. யோசனையுடன் படுத்துக்கொண்டேன்.
விடிகாலை நான்கு மணியளவில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு எழுந்து சென்று திறந்தேன். எனக்குத் "திக்’ என்றது. நன்ருகப் போன டெய்ஸியை மனேரி கைத்தாங்கலாக அழைத்து வருகிருள்.
"டெய்ஸி!” என்று பாய்ந்து அவளை அணைத்துக் கொண்டேன். 'அப்.பா." என்று ஒரு அவலக்குரல் அவள் கண்டத்திலிருந்து எழுந்தது. அவ்வளவுதான், அவள் மூர்ச்சையாய்ப் போனுள்.
எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஏதோ விபரீதம் நிகழ்ந்திருக்கிறது. டெய்ஸியைத் தூக்கிச் சென்று அவள் வழக்கமாகப் படுத்துத் தூங்கிவிடும் சோபாவிலேயே கிடத்தினேன். அதன் பிறகுதான் பயத்துடன் கையைப் பிசைந்துகொண்டிருந்த மனுேரியைப் பார்த்தேன். - "வாட் ஹப்பன்ட் மனுேரி? என்ன இது?"
'ம். ஒரு சின்னத் தவறு நடந்துபோச்சு."
"தவரு.?" என்று நெற்றியைச் சுருக்கினேன் நான். "எனக்கு விளங்கத்தான் இல்லை.
"ஆமாம்.பீட்டர்." என்று இழுத்தாள்.
"பீட்டர்.?” என்று இரைந்தேன் நான். எனக்குள் சந்தேகம் தலைதுாக்கத் தொடங்கியது. 'நல்லவரல்ல என்ருளே டெய்ஸி?
72 ) கவிதா

மனேரி தைரியமடைந்தவளாக, "அதில் என்ன-நாளைக்கு அவனைத்தானே அவள் மணம் செய்யப் போகிறள்?" என்ருள்.
எனக்கு விளங்கிவிட்டது.
சின்னத் தவரு இது? "யூ.டெவில்..' என்று கத்திக்கொண்டே மனேரி மீது பாய்ந்தேன். 'நாயே, நீதான் இப்படிப் பிளான் பண்ணி யிருக்கிருய். இல்லையா?" என்று கேட்டவாறே, அவளை மூர்ச்சித்து விழும்வரை அறைந்தேன். அதன் பிறகு எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை; காலின் கீழ் பூமி நழுவி நழுவிப் போகிறமாதிரி இருந்தது. சத்தியம், அறம், தர்மம், நீதி போன்ற சொற்கள் எல்லாம் அர்த்தமற்றவைகளாகத் தோன்றலாயின.
என்னுடைய ஞாபகத்தின் "ஸ்வீற் பட்’ என் கண்ணெதி ரிலேயே கருகிப்போய்க் கிடக்கிறது. காவியங்களில் துன்பப்படும் காதலர்களுக்காக எல்லாம் கண்ணிர் சிந்திய மென்மையான உள்ளம்; தான் கனவுகள் கண்ட அதே சோபாவில் தன் காதலின் முடிவைத் தாங்காது மூர்ச்சையுற்றுக் கிடக்கிறது.
மனதில் அலை அலையாகத் துக்கம் பொங்கியது. இருந் தாற்போலிருந்து டாக்டருக்குப் போன் பண்ண வேண்டும் என்று தோன்றிற்று. போன் செய்துவிட்டு மறுபடியும் அவளருகிலேயே உட்கார்ந்தேன். டாக்டர் வந்து என்ன? அவளைத் தீண்டிய தீ அவளை எரித்து முடிக்காமல் அணையப் போவதில்லை. டெய்ஸி. டெய்ஸி என்று புலம்பினேன். அவள் முகத்தை என் கைகளுக்குள் எடுத்துக்கொண்டு கதறினேன்.
அவள் விழிகள் சிறிது திறந்தன. அவள் விழிக்கடை யிலும் கண்ணிர் முத்துக்கள்! சிரமத்துடன் பேசினுள்.
5・ー5 நேர்கோடு ( 73

Page 38
அப்பா, கார்டன் துரதிர்ஷ்டசாலி என்று ரகசியம் ரகசிய மாகக் கண்ணீர் வடித்தேன். இப்ப நானே கார்டனுகிப் போனேன் அப்பா.கார்டனுக்காவது தான் நேசித்த லூசிக்காகத் தன் உயிரை அர்ப்பணிக்க முடிந்தது. ஆன, என் உயிர் அவருக்கு அர்ப்பணிக்கப்படத் தகுதியில்லாததாய்ப் போச்சே அப்பா.வாடிக் கருகிப் போன பூவைக் குப்பைக் கூடையில் விட்டெறிவதற்குப் பெயர் அர்ப்பணமாகுமா? இப்ப இந்தக் கடைசி நிமிசத்தில் நான் கார்டனைப் பார்த்தே பொருமைப் படுகிறேன் அப்பா!”
அவள் என் கையைப் பிடித்தாள். வலிமையற்ற மெத் தென்ற கை என்றுதான் நான் எண்ணியிருந்தேன். ஆணுல், அவள் பிடியின் இறுக்கத்திலிருந்து, அவள் துன் பத்தின் எல்லை தெரிந்தது. என் கண்களையே உற்றுப் பார்த்துப் பேசினுள் அவள்.
"கிழக்காவது மேற்காவது அப்பா. சிட்னி கார்டனும் லூசியை மட்டுமே நேசித்து அவளுக்காகத் தன் உயிரை அர்ப்பணிக்கவில்லையா? தர்மம் எங்கேயும் ஒன்றுதான்; அவரவர் மனப்போக்குப்படி அதை வளைக்கும்போது தான் பிரச்சினை எழுகிறது."
அவள் நெடுமூச்செறிந்தாள்.
அப்புறம்.? அப்புறமென்ன? அவளுடைய அழகான விழிகள் நிரந்தர மாக மூடிக்கொண்டபோது நான் அருகில்தான் இருந்
தேன். என் இரு கைகளின் பெருவிரல்களினுலும், நடுவிரல்களினுலும் அவள் இமைகளை மூடவிடாமல்
74 ) கவிதா

அப்படியே தடுத்துப் பிடித்துக்கொள்ளலாமா என்று தவித்தேன். ஆனல் என்ன? அதன் பிறகு அவற்றில் அந்த அசாதாரண ஒளியை நான் காணமுடிந்திருக்கவா போகிறது? 'த்.சொ.கிழக்கே ஒரு புள்ளி; மேற்கே ஒரு புள்ளி; நானும் மனுேரியும்தான். எங்களை இணைக் கும் நேர்கோடாக டெய்ஸி இருந்தாள். இரண்டு புள்ளி களும் நெருக்கிய நெரிசலில் முறிந்துபோனது நேர் கோடு. அவ்வளவுதான்.
ம். அவ்வளவுதான்!
நேர்கோடு ( ) 75

Page 39
தாழ்வு பெற்ற புவித்தலக் கோலங்கள்
யாரோ என் முதுகைத் தொட்டு ஆறுதல் கூறுகிறர்கள், ஆறுதல் என்ற பெயரில் என்னுள் அடங்கிக் கிடக்கும் துயரத்தைப் பீறிடச் செய்கிறர்கள் என்றல் இன்னும் நன்ற கப் பொருந்தும்.
தங்கச்சி தொண்டைத் தண்ணிர் எல்லாம் வற்றும்வரை கத்தி அழுது இப்போது அழவும் ஜீவனற்று வெறுமனே விம்மிக்கொண்டிருக்கிருள். நாலு தம்பிகளையும் நாலு பேர் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறர்கள்; நேற்றி லிருந்து பச்சைப் பட்டினி அவர்கள்.
அம்மா! அவளைப் பார்க்கும்போது அழுவதற்கும் பலம் வேண்டும் என்று யாரோ சொல்லியிருப்பதுதான் என் நினைவுக்கு வருகிறது. பிரமை பிடித்தாற்போல அங்கே அமர்ந்திருக்கிருள் நேற்றிலிருந்து.
அவனுக்கு அழகான பெயர்தான். சரத் சந்திரன்ஆனுலும் என்ன? இப்போது "பிணம்" என்று பெயரிட்டு விட்டுச் சுற்றிலும் உட்கார்ந்து அழுதுகொண்டிருக் கிறர்கள்!
'தம்பி!” என்று எனக்கு இதயம் பொங்கிக்கொண்டு வருகிறது. இத்தனைக்கும் அவன் உயிருடன் இருந்த
76 () கவிதா

போது அவனைத் தம்பி என்று அழைத்தவனல்ல நான் எல்லாருக்கும் அவன் சந்திரன்தான். பெயருக்கு ஏற்றற் போல சரத்காலச் சந்திரன்தான் அவன். என் தந்தைக்கு சரத்சந்திரா நாவல்களில் இருந்த பித்து அவனுக்கு அவர் பெயரை வைக்குமளவுக்கு இருந்தது. அதில் ஒன்றும் பொருத்தமில்லாமலும் இல்லை; எப்படி சரத்சந்திரரிடம் இளமையிலேயே ஒரு "அசாமானியமான மேதை" தெரிந்ததோ அது இவனிடமும் தெரிந்தது. 'நாடே புகழ, கழுத்தில் மாலைகள் புரள, ஊர்வலம் வருவான் ஒருகாலத்தில், என்று நாங்கள் மட்டுமல்ல; இந்த ஊரே எண்ணியது. எல்லாவற்றையும் பொய்யாக்கிவிட்டு இப்படி, ஒரு வாழை இலைமேல் நீட்டிப் படுத்துக் கொண்டான்; தலைமாட்டில் pct குத்துவிளக்கு எரிகிறது!
மறுபடியும் யாரோ என் முதுகில் கை வைத்து *ராஜா” என்கிறர்கள்; நான் திரும்பிப் பார்த்தேன். செல்லத்துரை மாமாதான் நின்றுகொண்டிருக்கிறர்.
“என்ன ராஜா, அந்தப் பிள்ளைகள் இரண்டு நாளாய்ப் பச்சைத் தண்ணிர்கூடக் குடிக்கவில்லை; இனிமேல் ஆகவேண்டியதைப் பார்க்க வேண்டாமா?"
*நான் என்ன செய்வேன் மாமா” என் இயலாமையைக் கண்களிலேயே காட்டிவிட முயன்றேன். 'கஷ்ட காலம்" என்று முணுமுணுத்தபடியே அவர் என்னை விட்டுப் போனுர்.
கஷ்டம்! அது எப்போதும்தான் இருக்கிறது. அப்பாவின் நுரையீரலுக்குள் எப்படியோ காசநோய்க்கிருமி நுழைந்து கொண்டுவிட்ட பின் அது ஒரு நடுத்தரக் குடும்பத்தை ஒட்டாண்டிக் குடும்பமாக்கும்வரை, கிளைத்துச் செழித்துக் குடித்தனம் பண்ணியது. பிறகு அப்பாவுடன் சேர்ந்து
தாழ்வு பெற்ற புவித்தலக் கோலங்கள் D 71

Page 40
தானும் எரிந்துபோயிற்று. அம்மா பதினெட்டு வயதில் என்னையும், எனக்குக் கீழே ஆறு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு கண்ணிராய்ப் பெருக்கினுள். அன்றே நான் மனதுள் ‘இனி இந்தக் குழந்தைகளுக்குத் தகப்பன் நானே' என்று சொல்லிக்கொண்டேன். எப்படியோ ஒரு கிளார்க் வேலையைத் தேடிக்கொண்டு இன்றுவரை அந்தப் போட்டியில்லாத பதவியை நானே நிர்வகித்துக் கொண்டு வருகிறேன். அதில் எனக்குள்ளாகவே ஒரு பெருமை.
சந்திரன் படித்துக்கொண்டிருந்தான். அவன் அறிவு எங்கள் ஏழைக் குடும்பத்தில் வழிதவறி வந்துவிட்டதைப் போல இருந்தது. அவனும் "எல்லாச் சாமானியர்களையும் போல, இருந்து வாழ்ந்து செத்துப் போவதற்காக அல்ல’ என்று நான் நினைத்தேன். ஆனல் அவனை ஒரு நல்ல நகரத்துக் கல்லூரி ஒன்றில் சேர்த்துப் படிப்பிக்க என்னுல் முடியவில்லை. இந்தப் போட்டி யுகத்தில் கிராமத்துப் பள்ளி ஒன்றில் ஆயிரம் "இல்லாமை” களுக்கு நடுவில் அவன் படித்துக்கொண்டிருந்தான். என்னதான் நியூடனய், ஈன்ஸ்டீனுய் இருந்தாலும் மற்றவர்கள் எழுதி வைத்திருப்பதைப் படித்தால்தானே புரிந்துகொள்ள முடியும்? அவனுக்கு ஒன்றையும் தெரிந்துகொள்ள முடியாத வசதியீனங்கள். எனினும், கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக்கொண்டு நன்றகவே படித்தான். பல்கலைக்கழகத்துக்குப் போனன். எனக்கு மகிழ்ச்சி தலைகால் தெரியவில்லை. அவன் படித்து முன்னேறி நல்ல நிலைக்கு வந்தால் எனக்கு, நான எனக்குள்ளாகவே ஏற்றுக்கொண்டிருக்கிற தந்தை என்ற ஸ்தானத்துக்குப் பெருமையாக இருக்காதா என்று எண்ணினேன்.
ஒரு விடுமுறைக்கு அவன் வீட்டுக்கு வந்தபோது அவனுடன் மத்தியானச் சாப்பாட்டுக்கு அமர் ந்
78 ( ) கவிதா

திருந்தேன். தங்கை லட்சுமி ஒரே உற்சாகமயமாய் இருந்தாள். எடுத்ததற்கெல்லாம் சிரித்துக்கொண்டிருந் தாள். கறி பரிமாறியபோது, 'நண்டா, மீனு” என்று கேலியாகக் கேட்டாள். சந்திரனைப் பார்த்தேன். இதழ் களுக்குள்ளேயே சிரித்துக்கொண்டிருந்தான். நான் அவனைப்போல ஜீனியஸ் என்றில்லாவிட்டாலும் மரமண்டை இல்லை. எனக்கு விளங்கிவிட்டது. தங்கச்சியைக் கூப்பிட்டு விசாரித்ததில் எல்லாம் தெளிவா கியது. மீனு என்று ஒரு பெண்ணை அவன் காதலிக் கிறனும். எதற்கும் கோபம் வராத எனக்குச் சரியான கோபம் அன்றைக்கு. எப்படி இவன் இவ்வளவு பொறுப்பற்ற வணுக நடந்துகொள்ளலாம்? தங்கை லட்சுமியை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க அவனுடைய மேதையை முதலீடாக்க நினைத்தது தவருக இருக்கலாம் ஆனல் அப்படி எத்தனை இடங்களில் நடக்கவில்லை? அவனிடம் நேரில் இதுபற்றிக் கதைக்க என்னுல் முடியாது. தங்கச்சியைக் கூப்பிட்டு நன்றக ஏசி விடலாமா என்று நினைத்தேன். பின்னர் யோசித்துப் பார்த்ததில் அவன் மனதைப் புண்படுத்த வேண்டாம் என்று தோன்றியது. நான் எதுவும் பேசவில்லை.
அந்த விடுமுறை முடிந்து அவன் போனன். மறு விடுமுறைக்கு முன்னர் தீபாவளி வந்தது. ஒருநாளும் இப்படி சிறிய விடுமுறைகளுக்கெல்லாம் வீட்டுக்கு வராதவன் வந்திருந்தான். கைக்கும்கணக்குக்கும் சரியாகப் போய்க்கொண்டிருக்கிற நம்முடைய குடும்பம் போன்ற குடும்பங்களில் இத்தகைய சம்பிரதாயக் கொண்டாட்டங் கள் அநாவசியமானவை என்று சொல்கிற சந்திரன் வந்திருந்தான். அவன் வந்திருக்கிருன் என்று அம்மா சொன்னதும் பார்ப்பதற்காகச் சென்றவன் திடுக்கிட்டு நின்றேன்.
தாழ்வு பெற்ற புவித்தலக் கோலங்கள் () 19

Page 41
ஆறடி ஆஜானுபாகுவான அவன் வெறும் பாயில் குப்புறப்படுத்து விம்மிக்கொண்டிருந்தான்.
வந்த சுவடு தெரியாமல் பின்வாங்கினேன். இதயத்தில் திகில். ஆண்பிள்ளை அழுகிருன் என்றல் காரணம் சாதாரணமாக இராதே.
தங்கச்சிக்கு அவனிடம் என்னவோ ஒரு விசேட ஒட்டுதல். அவளுக்குத் தெரியாத ரகசியம் எதுவும் சந்திரனிடம் கிடையாது. அவளைக் கூப்பிட்டு விசாரித் தேன். மீனுவுக்கும் வேறு ஒருவருக்கும் திருமணம் நிச்சயமாகிவிட்டதாம், சந்திரனுக்கு "ஸ்டேட்டஸ்" சரி யில்லை என்று உதறிவிட்டாளாம்.
இருந்தாற் போலிருந்து லட்சுமி கிறீச்சிட்டுக் கத்தினுள். தம்பிகளின் கூவல் தொடர்ந்து அழுகை கூடிற்று. முழங் காலில் நட்டு வைத்திருந்த தலையை நிமிர்த்திப் பார்த்தேன். சந்திரனுடைய அகன்ற தோள்களைச் சவப்பெட்டிக்குள் அடக்கச் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார்கள் சிலர். அவன் தலைமாட்டிலிருந்து பார்த்த எனக்கு அவனுடைய நீண்ட நாசியும் வடிவான இதழ்களும் தெரிந்தன. "அண்ணு ஒரு கை கொடேன்” என்று அவன் கேட்பதுபோல இருந்தது. ஒடிச் சென்று அவனைச் செளகரியமாக வளர்த் தினேன். அவனுடைய கம்பீரம் முழுவதும் யாரோ ஒரு தச்சன் செய்த மரப்பெட்டிக்குள் அடங்கிவிட்டது.
கழுத்திலிருந்து பாதங்களின் நுனிவரை பெரிய ரோஜா மாலை அணிவித்திருந்தார்கள். தங்கச்சி தன் சின்ன அண்ணுவுக்குக் கடைசியாகச் செய்து பார்க்க விரும்பிய அலங்காரம்
80 () கவிதா

மாலை அணிந்து மணமேடை நோக்கிச் செல்ல வேண்டி யவன், ஓ! அது எப்படி? அவன்தான் தனக்குத் திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டானே. "ஒருவனுடைய வாழ்வின் கணிசமான பகுதி ஒரு ஸ்திரியுடனுன வாழ்க்கைதான் என்ருல், என்னைப் பொறுத்தவரை அதை முடிந்துபோனதாகவே வைத்துக் கொள்ளுங்கள் அண்ணு' என்று அவன் சொன்னுன். லட்சுமி தன் ஆற்றமையால் அழுதேவிட்டாள். 'இவர் ரிஷ்யசிருங்கர் மாதிரி இருந்தார் இங்கே, அவள் மேலே விழாத குறையாய் பழகிவிட்டு ஏமாற்றிவிட்டாள்" என்று தன் ஆத்திரத்தைக் கொட்டினுள். எனக்கு சமுதாயத்தின்மேல், அது அர்த்தமற்றுச் சமைத்து வைத் திருக்கிற ஏற்றத்தாழ்வுகள் மேல் "ஸ்டேட்டஸ்", *பொஸிஷன்" போன்ற வார்த்தைகளின் மேல் அதன் காரணமாக மீனுமேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. பயன் என்ன? அவன் மன ஒடிவுக்கு என்னுல் மருந்து போடமுடியவில்லை.
அந்தத் தீபாவளி லீவு, அவனுக்குச் சிறிது நீண்ட தாகவே இருந்தது. அதைப்பற்றி நான் ஏதும் பிரஸ்தாபிக்கவில்லை. படிப்பு கெட்டுப் போகிறதைப் பற்றி நான் சொல்லியா அவன் தெரிந்துகொள்ள, வேண்டும்?
எண்ணி மூன்று நாட்கள் அவன் மேலதிகமாகத் தங்கின்ை. அந்த மூன்று நாட்களும் லட்சுமி ஓயாமல் அவனுடன் பேச்சுத் தொடர்ந்தபடி இருந்தாள். தனியாக விட்டால் எதையாவது யோசித்துக் கலங்கிப் போய்விடுவானே என்று பயம்.
அன்று தற்செயலாகச் சமையலறைக்கு நீரருந்தச் சென்ற போது ஒரு சிறிய சம்பாஷணைத் துணுக்கு என் காதில்
தாழ்வு பெற்ற புவித்தலக் கோலங்கள் () 81

Page 42
விழுந்தது. நான் என் இச்சையின்றியே சில விநாடிகள் தயங்கி நின்றேன். கதவின் பொருத்தில் கோடாய்த் தெரிந்த இடைவெளியில் சந்திரனின் முகம் எனக்குத் தெரிந்தது.
'உலகத்தின் ஒரு சின்னஞ் சிறிய மூலையாய் இருக்கிறது அந்த யூனிவர்சிற்றி. அங்கேயே இத்தனை பெரிய தீமை களைவாரற்று விளைந்து கிடக்கிறபோது இத்தனை பெரிய உலகத்தில் எத்தனை பெரிய தீமைகள் மலிந்து கிடக்கும் என்று நினைக்கையிலேயே, எனக்கு வாழ்க்கையைப் பற்றி நினைக்கப் பயமா இருக்கு இப்படியே இருந்து படித்துக்கொண்டே இருந்தால் நல்லதுபோல் இருக்கு. எதற்காக தேர்வு என்று ஒன்றை வைக்கவேண்டும்?"
"ஏன் இப்படி நடக்குது?” லட்சுமி கேட்டாள்.
"எங்கேயோ ஒரு பிழை இருக்கிறது. குறிப்பாக யார்மேல் பிழை என்பதும் தெரியவில்லை. எப்படித் திருத்துகிறது என்றும் தெரியவில்லை. பொதுவாக அந்த அமைப்பே பிழைபோலத் தெரியுது."
"அது எப்படி இருந்தாலும் நாமதான் அதோட ஒரு மாதிரி அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு போகவேண்டும் அண்ணு'
"ஏன் அப்படி? நம்மட மனதுக்கே சரி எண்டும், நியாயமெண்டும் படுகிறவை எல்லாம் சரியில்லாமலும் நியாயமில்லாமலும் போய்விடுகிற ஒரு விதி இருக்கு தெண்டா அந்த விதியோட நாம் எதுக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு போக வேண்டும்? அங்கே திறமை போற்றப்பட வேண்டும் என்ற எண்ணம் இல்லையானுல் இந்தக் குறை வாழ்க்கையின் மற்றக் கட்டங்களுக்கும்
82 ( ) கவிதா

பரவிக்கொண்டே போகுமே! எதிர்நீச்சல் போட்டுக் கை சலிக்க வேண்டியதுதான்!"
"ஏன் இப்படி அலுத்துக்கொள்கிறீர்கள்? எல்லாருக்கும் அதுதானே நியதியாய் இருக்கிறது.”
"அதுதானே இல்லை என்கிறேன். தான் பணம் கட்டிய குதிரை முதலாவதாக வரவேண்டும் என்று நினைக்கிற வர்கள் மாதிரி ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவர்கள் நன்றயப் இருக்க வேண்டுமென்றே நினைக்கிறர்கள் உலகம் கெட்டுப் போச்சு." w
"ஐயோ நீங்கள் உங்களுக்காகக்கண்ணிர் விடவில்லையா? உலகத்துக்காகவா கண்ணிர் விடுகிறீர்கள்’ என்று லட்சுமி கேலி செய்யப் பார்த்தாள். அவன் முகபாவம் மாறவே இல்லை.
எனக்கு எதுவும் புரியவில்லை. சந்திரன் மனம் நொந்து போய் இருப்பதன் காரண்ம் மீனுவா, வேறு ஏதோ ஒன்ரு என்று என்னுல் அப்போது தீர்மானிக்க முடிய வில்லை.
பிறகு ஒருவழியாய் அதுவும் புரிந்தது. சந்திரனுடன் சேர்ந்து நானும் வாழ்க்கைச் சாட்டையால் நன்கு விளாசப்பட்டேன். நானும் மற்றவர்களும் எதிர்பார்த்தது போல சந்திரன் தன் மேதை"க்கு உரிய பட்டத்தோடு வெளிவரவில்லை. மற்றெல்லாச் சாமானியர்களையும் போல அவனும் சித்தியெய்தின்ை. அவ்வளவுதான்.
முடிவுகள் வெளியான அன்று சந்திரன் ஒரு ஜீவனற்ற சிரிப்புடன் 'வன்குயிஷ்ட் விக்ரறி" என்று என்னிடம்
சொன்னுன். லட்சுமியிடமோ 'பார்த்தாயா" என்று
தாழ்வு பெற்ற புவித்தலக் கோலங்கள் ( ) 83

Page 43
சொன்னன். அதிலிருந்து சந்திரன் முடிவை எதிர் பாராமல் இல்லை என்று தெரிந்தது. நான் தற்செயலாக ஒட்டுக் கேட்ட சம்பவம் என் நினைவுக்கு வந்தது. மீனுவை இழந்துவிடவும் இதுதான் காரணமா?
இருக்கலாம், அவனைப் பொறுத்தவரை "கிளாஸ்" இல்லா விட்டால் ஸ்டேட்டஸ் இல்லை. ஸ்டேட்டஸ் இல்லா விட்டால் மீனு இல்லை!
எனக்கு மயக்கம் வரும்போல இருந்தது. வயிற்றிலிருந்து நெருப்பு பற்றி எரிந்து, தொண்டை நீரெல்லாம் வற்றி விட்டதுபோல ஒரு உணர்வு. யார் யாரோ எல்லாம் வந்து என்னிடம் என்னவெல்லாமோ கேட்கிருர்கள். என் கையில் எது எது எல்லாமோ தருகிறர்கள். யந்திரமாய் எங்கெங்கோ நடத்தி செல்கிறர்கள்.
இதோ சந்திரன் நாலுபேர் தோளில் ஏறித் தன் வாழ்வில் கண்டிராத சமரசம் உலாவும் இடத்துக்கு ஊர்கோலம் போகக் கிளம்புகிருன். நாலு பேரில் ஒருவராக. சுப்பையா அம்மானு? "ஐயா! யாரும் வாங்குங்களேன், அவரிடமிருந்து அவனை. சந்திரனை அவர் சுமக்க வேண்டாம்” என்று கத்த முயன்றேன். முடியவில்லை. உடம்பு இயக்கத்தையே நிறுத்திவிட்டதோ என்று சந்தேகமாய் இருக்கிறது. ஆனல் புத்தியோ என் சுவாதீனத்தில் இருக்கிறது. நினைவுகள் தாளலயம் தவருமல் மூளைக்குள் குதிபோடுகின்றன.
எல்லாருக்கும் இருக்கிற வேலையில்லாத் திண்டாட்டம் அவனுக்கும்தான் இருந்தது. சிபாரிசு பெற வாய்ப்பு இல்லாத காரணத்தால் அவன் வீட்டினுள்ளேயே அடைந்து கிடந்தான். அவ்வப்போது நேர்முகத்
84 ) கவிதா

தேர்வுகளுக்குப் போய் பண விரயம் செய்ததுதான் கண்ட பலன். வேலையோ "கிடைப்பேனு” என்று கேட்டுக்கொண்டு ஏய்த்தது.
லட்சுமி, எனக்குக் கல்யாணம் செய்கிற உத்தேசமே இல்லையா என்கிறமாதிரி, ‘வெடவெட" என்று வளர்ந்து நின்றள். திருமணம் பேசச் செய்வதற்கும் ஏதாவது ஒரு நம்பிக்கை வேண்டாமா? பத்தாயிரம் கொண்டு வா இருபதாயிரம் கொண்டு வா என்று கேட்பவர்களிடம் வெறுங்கையணுகப் போய் நின்றுகொண்டு என்னவென்று பேசுவேன்? உழைத்ததெல்லாவற்றையும் வீட்டுச் செலவுக்கும் சந்திரனினதும் மற்றத் தம்பிகளதும் படிப்புக்குமாகச் செலவிட்டேன். இருந்தும்கூடச் சமாளிக்க முடியவில்லை. ஆங்காங்கே கடன் இன்னும் இருக்கிறது. உண்மையை வாய்விட்டுச் சொல்வதானுல் நான் சந்திரனை நம்பினேன். சந்திரன் ஒரு நல்லநிலைக்கு வருவான் என்றும் தங்கச்சியை ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்துவைக்க அவனுடைய 'கியாதி உதவும் என்றும் நம்பினேன். இப்போது ஒரு சாதாரண இடத்துக்கும்கூடத் திண்டாடும் நிலை வந்திருக்கிறது.
என்றலும் நான் தளரவில்லை. ஏதாவது ஒரு வழி பிறக் காமலா போய்விடும் என்ற நம்பிக்கை.
சந்திரன்தான் மாய்ந்துபோனன். வேளைக்குச் சாப்பிடு வதைக்கூட எத்தனை மன உறுத்தலோடு செய்கிறன் என்பதை அறிய நேர்ந்தபோது இன்னதென்று சொல்ல முடியாத ஏதோ ஒன்றின் மேல் எனக்குக் கோபம் கோபமாக வந்தது. எதற்காக இன்னும் அந்தப் பல்கலைக் கழகங்களை உடைத்து எறியாமல் காப்பாற்றி வைத்திருக் கிருர்கள்? அறிவு அறிவுக்காக என்ருல் தேர்வு என்ற ஒன்றை வைப்பானேன்? எத்தனை பேர் சறுக்கி விழுகிறர்
தாழ்வு பெற்ற புவித்தலக் கோலங்கள் ( ) 85

Page 44
கள் என்று பார்க்கவா? இவன் மட்டுமா? இன்னும் எத்தனை எத்தனை இளம் மனங்களோ இந்த நாட்டில்?
லட்சுமி ஒருநாள் அவனைச் சாப்பிட அழைத்தபோது அவன் சொன்னது எனக்கும் கேட்டது. "நான் உழைக்க வேண்டிய வயது, லட்சுமி. உழைக்காமல் தடிமாடு மாதிரி இருந்து சாப்பிட என்னவோ போல இருக்கு. எல்லாத் துன்பத்திலும் பெரிய துன்பம் படித்து வேலையற்றிருப்பதுதான் லட்சுமி. படிப்புடன்கூட அறிவு வளர்ச்சியும், உணர்வு வளர்ச்சியும் பெற்று, "எனக்குப் பசிக்கிறதம்மா" என்றுகூட உரிமையுடன் வாய்விட்டுக் கேட்கக் கூசுகிற அவலம் அது, தெரியுமா?"
நான் நேரிலும், லட்சுமி மூலமாகவும், அம்மா மூலமாகவும் எவ்வளவோ சொல்லித் தேற்றினேன். அவன் வேலையற்றிருப்பது எனக்குப் பெரிதாகப் படவில்லை. அதனுல் அவன் அடைந்த கவலையே எனக்குப் பெரிய கவலையைத் தந்தது. லட்சுமியைப்பற்றிச் சிந்திப்பது போய் இவனைப்பற்றிச் சிந்திக்க வேண்டி ஏற்பட்டது. விரக்தியடைந்துபோய் ஏதேனும் செய்துகொண்டால், என்று சர்வ ஜாக்கிரதையுடனேயே இருக்கலானேன்.
என்ன புண்ணியம்? கண்ணுக்குப் புலனுகாத சக்தியான கடவுள்தான் மனிதன் நினைப்பதை மாற்றுபவன் என்று படித்தும் கேட்டும் இருக்கிறேன். ஒரு மனிதன் நினைப் பதை இன்னுெரு மனிதனே நடக்கவொட்டாமல் செய்து விடுகிற அநியாயத்தை என்ன சொல்லுவது?
இப்போது நல்லவராக அவனை மயானத்துக்கு வழி நடத்திக்கொண்டிருக்கிற சுப்பையா அம்மான் அல்லவா அவன் இதயத்தில் அந்த மரண அடியை அடித்தவர்? பக்கத்து வீட்டில் இருக்கிற அவருக்கு சந்திரனுக்குள்ளே
86 D கவிதா

ஒரு நொந்துபோன இதயம் இருப்பதைப்பற்றித் தெரியாதா என்ன? சந்திரன் வயதொத்த அவருடைய மகன் நகரத்துக் கல்லூரி ஒன்றில் பண விரயம் செய்து படித்து, மூன்று முறையும் புதுமுகத் தேர்வில் தவறி ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறன் என்ருல் அதற்குச் சந்திரனு பொறுப்பு? சந்திரன் மனம் புண்படக் கூடாதே என்று அவனுக்காகக் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிற நான் நினைத்தேன். அவனைப் பத்து மாதம் சுமந்து நோய்களுடன் போராடி அவனை வளர்த்தெடுத்த அம்மா நினைத்தாள். இளைய சகோதரர்களும், சகோதரியும் இதையே எண்ணி, தாங்கள் சாப்பிடவும் உடுக்கவுமாய் மனத்தினுள் எழும் ஆசைகளை அவன் அறியாமல் விழுங்கிக்கொள்கிறர்கள். எவ்விதக் காரணமும் இல்லாமல் வார்த்தை ஈட்டியைக் குறி பார்த்து சர்வ அலட்சியமாய் அவன் இதயத்தில் எய்யும் உரிமையை யார் அவருக்குக் கொடுத்தார்கள்? சொல்லுவது எல்லார்க்கும் சுலபம். எந்த வேலையானுலும் செய்ய வேண்டியதுதானே என்பார்கள். அவரவர் தங்கள் தங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போனுல் போதாதா? அன்று என் சைக்கிளில் ஏதோ கோளாறு. அவன் முற்றத்தில் வைத்துச் சரிபார்த்துக்கொண்டிருந்தான். சுப்பையா அம்மான் எங்கேயோ போய்க்கொண்டி ருந்தவர் கர்ம சிரத்தையாய் அவனிடம் பேச்சுக் கொடுத்தார். ‘என்ன தம்பி! கிராஜூவேட் பண்ணினது சைக்கிள் திருத்தத்தானே” என்று குத்தலாய்க் கேட்டார். அவர் குரல் கேட்டதுமே நானும் வாசலுக்கு வந்துவிட்டேன். சந்திரன், "அதில் என்ன? காந்திஜி பெரிய பாரிஸ்டர். ராட்டையில் நூல் சுற்றவில்லையா? படிப்புக்கும் இதுக்கும் என்ன-படிக்கிறது அறிவுக்காக" என்றன்.
தாழ்வு பெற்ற புவித்தலக் கோலங்கள் D 87

Page 45
'கையாலாகதவன்களெல்லாம் காந்தியை இழுக்கிருன் கள்” என்று கூறிவிட்டுப் பெரிய ஹாஷ்யத்தைக் கண்ட வர் போல் சிரித்தார் அவர். நான் தவித்தேன். அவர் மேலும் ஏதாவது கூறிவிடக் கூடாதே என்று. அவர் விடவில்லை. என்னைப் பார்த்தே, "இந்த ஜீனியஸ"oக்கே ஒரு பெரிய குறை. அறிவு அறிவுக்காக என்று ஒரு எண்ணம். அரைகுறை கெட்டிக்காரனெல்லாம் எப்படிப் பணம் பண்ணுவது என்று நினைக்கிறன். கெட்டிக்காரன் என்று பெயரெடுத்து வாழ்க்கையில் முன்னேறுகிறன். இவர்களோ பைத்தியங்கள் என்று பெயரெடுத்து வாழ்க்கையை விட்டே போய்விடுகிறர் கள்” என்று கூறி உதட்டைப் பிதுக்கிவிட்டுப் போய் விட்டார்.
சந்திரன் முகம் இருண்டுவிட்டது. "கையாலாகாதவன்" என்ற சொல் அவன் தன்மானத்தில் தைத்திருக்க வேண்டும். தன்னுடைய மனத்தின் வக்கிரங்களையும் விரக்திகளையும், மற்றவர் மனத்தைப் புண்படுத்திச் சமநிலைப்படுத்திக்கொள்கிற அவருக்கு, சந்திரன் மனத்தைப்பற்றியோ, அதற்குக் காவல் இருக்கிற எங்கள் மனங்களைப்பற்றியோ என்ன கவலை?
மறுநாள், அண்ணனுகவும், தந்தையாகவும் இருந்த என்னை விட்டு, அவன்மீது உயிரையே வைத்திருந்த அம்மாவை விட்டு, தங்கையாக மட்டுமின்றித் தோழி யாகவும் இருந்த லட்சுமியை விட்டு, அவனை வழி காட்டியாக நம்பிக்கொண்டிருந்த தம்பிமாரை விட்டு அவன் எங்கேயோ போய்விட்டான். நல்ல வேளையாக போகும்போது ஒரு குறிப்பு எழுதி வைத்துவிட்டுப் போயிருந்தான். “தெரிந்தவர்களுக்கு முன்னுல்தான் பட்டதாரி. தெரியாதவர்களுக்கு முன்னுல் வெறும் கூலி, யாரும் கேட்டால் வேலை கிடைத்துப் போய்விட்டதாகச் சொல்லுங்கள். விரைவில் திரும்பி வருவேன்."
88 ) கவித்ா

அவன் திரும்பி வரும்போது மூன்று வருடங்கள் சென்று விட்டிருந்தன. 'லட்சுமி, சின்ன அண்ணு வந்தால்தான் திருமணம்’ என்று காத்திருந்தாள். சின்னண்ணு அவளுக்காகப் பணம் சேர்த்துக்கொண்டு வந்திருந்தான். எங்கே போனுய், என்ன கஷ்டப்பட்டாய் என்று நான் கேட்கவில்லை. லட்சுமி கேட்டிருக்கிருள். "டியூஷன் தொடக்கம், பட்டரையில் இரும்பு அடிப்பதுவரை பலரகமான வேலைகள். ஆனுல் திருடவில்லை, நியாய மில்லாமல் சேர்க்கவில்லை" என்ருனும். எப்படியோ அவன் திரும்பிவந்தானே என்பதே எங்கள் எல்லோர்க் கும் மகிழ்ச்சி தரும் விஷயமாய் இருந்தது. லட்சுமிக்கு விரைவில் திருமணம் செய்ய வேண்டும் என்பதில் சந்திரன் ஒரே அவசரமாய் இருந்தான். சக்திக்கு ஏற்ற படி ஒரு இடத்தில் அவள் திருமணத்தை நிச்சயம் செய்தோம். லட்சுமியைக் கேலி செய்தோம். லட்சுமி யைக் கேலி செய்வதிலும், கிண்டல் செய்வதிலும் அவன் குழந்தையாகவே மாறிப்போனன் சில நாட்கள்.
பிறகு ஒருநாள், ஏதோ செய்வதாகக் கூறிப் படுத்தான். டாக்டரிடம் காட்டியபோது விடே அதிர்ந்துபோயிற்று. *டி. பி. நன்றக முற்றிவிட்டது” என்றர் அவர்.
அப்பாவை அரித்துக் கொன்றவை காசக் கிருமிகளாக இருக்கலாம். இவனைக் கவலைக் கிருமிகளே அரித்துக் கொன்றுவிட்டிருந்தன! வைத்திய வசதி அதிகம் கிடைக் காததால் அப்பா செத்துப்போனர். இவன் கிடைத்தும் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் செத்துப்போனன். 视号
b o O
திடீரென்று அண்ணு என்று அலறிக்கொண்டே இரண்டு ஜில்லிட்டுப்போன கைகள் என்னைக் கட்டிக்கொண்டன.
க.-6 தாழ்வு பெற்ற புவித்தலக் கோலங்கள் D 89

Page 46
நானும் திடுக்கிட்டுப் போனேன். கிட்டத்தட்ட அவன் சாயலில், என்னை என் இரண்டாவது தம்பி கட்டிக் கொண்டிருக்கிருன். இவனைப் போலவே சாயலுள்ள, இவனிலும் பெரியவனுக நான் வளர்த்து வைத்திருந்த “என் முதல் தம்பி, ஹோவென்று பயங்கரமாய் அலைகளைக் கரையில் கொண்டு வந்து மோதும் கடற்கரையில் அலரி மரங்களுக்கு நடுவே அடுக்கப்பட்ட சிதையில் எரிந்துபோவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறன்.
நான் அலரி மரங்களைப் பார்த்தேன். அந்தப் பச்சை இலைகளுடனும், சிவப்பு மலர்களுடனும் எனக்குச் சில வார்த்தைகள் பேசவேண்டி இருந்தன.
நீங்கள் எல்லாம் மனிதர் உழாவிடினும், பாத்தி கட்டா விடினும், நீர் பாய்ச்சாவிடினும் எப்படியோ வளர்ந்து செழித்துவிடுகிறீர்கள். ஆனல் இந்த மண்ணில் முளைக்கும் மனிதச் செடிகளோ, மற்ற மனிதரின் மனிதாபி மானம் என்ற ஏர் உழாவிட்டால், ஆதரவு என்ற பாத்தி கட்டாவிட்டால், அன்பு என்ற நீர் பாய்ச்சாவிட்டால் செழிக்கமுடியாமல் கருகிப்போய்விடுகின்றன. அதற்குச் சிறந்த உதாரணம், இதோ உன் காலடியில் என் தம்பி.
ஏதோ ஒருவிதத்தில் அவனை வஞ்சித்தும் துன்புறுத்தியும் வந்த மனிதகுலம் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க அவன் சிதைக்கு நான் தீ மூட்டினேன். அவன் உடலையும் நுரையீரலையும் நெருப்புக்கும் கிருமிகளுக்கு மாய் இரையாக்கிவிட்டேன் என்று நான் நினைக்கவில்லை. இந்த உலகம், இதன் தாழ்ந்த சுபாவங்கள், மனுேபாவங் கள், இவற்றுக்கு அவனைப் பறிகொடுத்துவிட்டு நான் நிற்கிறேன். சந்திரனையா வீழ்த்திவிட்டார்கள்? ஒரு ஏழைக் குடும்பத்தின் நம்பிக்கையையே அல்லவா வீழ்த்திவிட்டார்கள்.
90 ( ) கவிதா

பொய்யாக நடித்துத் துன்பப்படுகின்ற இத்தனை உறவு களுக்கிடையே துன்பத்தால் எரிகின்ற என் உயிருக்கு அனுசரணையாக என் கால்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிற ஒரு பிஞ்சு உயிர்மட்டும்!
குனிந்து அவனைத் தூக்கி நிறுத்தினேன். 'நம்பிக்கை வேண்டியதுதான். ஆணுல் இத்தனை பொய்களும் இல்லையென்று நினைக்கிற வீண் பிரமை நம்பிக்கை யாகாது. இந்த உலகத்தில் நீ வாழ வேண்டுமானல் முதலில் பொய்களைப் புரிந்துகொள். நல்லவனுக இருக்க வேண்டாமடா, வல்லவனுக இரு.”
தம்பியின் முதுகில் பலம் கொண்ட மட்டும் ஓங்கி பேயாய் ஒரு அறை அறைந்தேன். அது முதல் பாடம்.
"டேய் ராஜா விசரா உனக்கு?” என்று சுப்பையா அம்மான் கேட்பது காதில் விழுகிறது. நான் விடு விடென்று நடந்துகொண்டிருக்கிறேன். "எங்கே போய் விட்டது அறம், அன்பிலதனைக் காயவேண்டிய கடமை யைக் கைவிட்டு?’ என்று யோசித்தவாறே நடந்து கொண்டிருக்கிறேன்!
தாழ்வு பெற்ற புவித்தலக் கோலங்கள் L3 91

Page 47
நுகம்
கைகளால் முழங்கால்கள் இரண்டையும் வளைத்துப் பிடித்து நாடியை அவற்றின் மேல் வைத்துக்கொண்டு அவள் அமர்ந்திருக்கிருள். எதிரே அடுப்பு எரிந்து கொண்டிருக்கிறது. அடுப்பில் அவிந்துகொண்டிருந்த, எதனையோ கவிழ்த்து மூடிவைத்திருந்த பாத்திரத்தில், ஆவியான நீர் சேர்ந்து மறுபடியும் நீராகி துளித்துளியாக அடுப்பில் வழிந்துகொண்டிருக்கிறது.
அவள் கண்களை மூடியிருந்த இமைகளினூடாகவும் நீர் வழிந்து பாதங்களில் சொட்டிக்கொண்டிருந்தது.
குறிப்பாக இன்ன துன்பம்தான் என்று சொல்லத் தெரியாத எத்தனையோ துன்பங்களைத் தாங்கத் தெரியாத தவிப்பில் இருதயம் கனிந்துகொண்டிருக்கிறது. விம்மல்களை அடக்கி அடக்கி நெஞ்சினுள்ளே ஒரு இனம் புரியாத வேதனை.
இப்படி, ரகசியம் ரகசியமாக அழுது அழுது வாழ்க்கை யையே கழித்து முடித்துவிட வேண்டியதுதான் தன் தலை விதியா என்று அவள் எண்ணினுள். இடையே ஏதாவது அதிசயம் நடந்தால் ஒழிய இதிலிருந்து மாறிவிட்ட பாதை ஒன்று உன் வாழ்க்கையில் இல்லை என்று அவளுள்ளே என்னவோ ஒன்று மெதுவாகக் கூறிக் கொண்டுதான் இருந்தது.
92 D கவிதா.

*இதற்கு மாற்று கிடைக்காவிட்டால் அவள் ஏன் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்? அவள் இப்படி நினைத்தாள்.
விரும்பிய எதுவும் கிடைக்காமல் மறுக்கப்படும்போது, வலிந்து விரும்புபவைகூட முரண்டிக்கொண்டு திரும்பி விடும்போது, வாழ்க்கையில் எதன்மீது கொண்ட பற்று காரணமாக அவள் இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்? தொட்டிலில் கட்டப்பட்டுச் சுழல்கிற நிறநிறமான பூக்களைப் பார்த்து அழ மறந்து போய்விடுகிற குழந்தை மாதிரி, மனிதர்களுக்கும் அழ மறந்துபோவதற்கு ஏதாவது கவர்ச்சிகரமாய் வேண்டாமா? 'இறைவா, எதைத்தான் நீ இந்த உலகில் கவர்ச்சிகர மாய் படைத்து வைத்திருக்கிருய். நான் பார்த்துக் கொண்டு உயிர்வாழ?” என்று பெருமூச்சுடன் முணுமுணுத் தன அவள் உதடுகள். அவள் விரும்பிய எல்லாம் மறுக் கப்பட்டுவிட்ட பிறகு தாமாக வலிய வந்து அவளை அடைகிறவையெல்லாம் கவர்ச்சியற்றுப்போய்த் தெரி வதில் என்ன அதிசயம்?
கசந்துபோன மனதோடு அவள் அடுப்பையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். விறகுகள் எரிந்தபோது, அவள் தன் மனதில் விசித்திரமான கற்பனை ஒன்றை வலிந்து கற்பித்துப் பார்த்தாள்.
அவள் இறந்துபோய்விடுகிறள். பச்சைப் பூவரச மரங் களை வெட்டி அடுக்கிச் சிதைசெய்து வைப்பார்கள். அவள் உடலில் இருக்கின்ற தசையெல்லாம் உருகி, நெய்யாகி அந்தப் பூவரச மரங்கள் கொழுந்துவிட்டு எரி கின்றபோது எப்படியிருக்கும்? யார் யார் அழுவார்கள்?
குரூரமாய் ஒரு கணத்தில் அவள் மனதில் எழுந்த கற்பனையை அவளாலேயே சகிக்க முடியவில்லை. அவள் கண்ணில் அதிகப்படியான நீர் வழிய ஆரம்பித்ததுதான்
gjasib O 93

Page 48
மிச்சம். அந்த ஒரு கணக் கற்பனையில், அவள் தனக் காக மனம் கசிந்து அழுவதற்கு யாருமே இல்லை என்ப தாக உணர்ந்தாள். இந்தத் தன்னுடைய பரிதாபமான நிலையின் விசுவரூப தரிசனத்தில் அவள் தனக்காக அழ யாருமே இல்லையென்ற நினைப்பைத் தாங்க முடியாது அழுதாள். விம்மல்கள் இதழ்களைத் தாண்ட அவள் என்றுமே அனுமதித்தது இல்லை. அவன் காதுகளில் பட்டால் திட்டுவான். 'தரித்திரமே ஏன் இப்படி அழுகிறய விடியாமூஞ்சி - எந்நேரமும் அழுகைதான்’ என்று கசப்பைக் கக்குவான்.
தன் மனைவிக்கு அழவேண்டியதற்கான எந்தப் பிரமேய முமே இல்லை என்பது அவனுடைய எண்ணமாக இருக்க லாம். அவளும் அவனுடன் ஒத்துப்போய்விட்டால் பிரச்சினையே இல்லை. ஆனல் அவளோ, அவனுடைய தடித்த மயிரடர்ந்த கையில், ஒரு கொள்ளியைக் கற்பனை செய்து பார்த்தபோது, சாவைப்பற்றிய எந்தவிதமான பயமும் இன்றி அவனுடன் வாழாமல் இருப்பதற்காகவே செத்துப் போகலாமே என்று எண்ணிக்கொண்டிருந்தாள்.
தற்கொலை செய்துகொள்வதைப்பற்றி அவள் பல தடவை எண்ணிப் பார்த்திருக்கிருள். தற்கொலை செய்துகொள்வது என்பது கோழைகளின் செயலென்றே அது பாவ மென்றே அவள் எண்ணிப் பார்த்து பயந்தது கிடையாது. அதற்கு மிகுந்த மனத் திடம் வேண்டுமென்று நினைத்தாள். அப்படிச் செத்துப்போகிறவர்களின் ஆவி அந்தரத்தில் நடமாடுமென்றே, அதன் பின்னர் நரகத்துக்குப்போய் சொல்லமுடியாத அவஸ்தைகளை அனுபவிக்கவேண்டி நேரும் என்றே அவள் பயப்படவில்லை. இந்தப் பூமியை விடவும் மோசமான நரகம் வேறெங்காவது இருக்கும் என்று அவள் நம்ப மறுத்ததால் அந்தச் சிந்தனைக்கே அவளிடம் இடமில்லை. பிறர் தன்னைப்பற்றி
94 ) கவிதா

கேவலமாகப் பேச இடமாகிவிடுமே என்று எண்ணிப் பார்த்தாள். உயிர் வாழ்ந்தவரை மனதைக் கீறித் துன்பப் படுத்தியது போதாதென்று செத்துப்போன பிறகு, பிணந் தின்னிக் காக்கைகளாக உடலைக் கீறிக் கேவலப்படுத்து வார்களே என்று எண்ணிப் பயந்தாள். இறுதியாக, "கசந்து போய்விடுபவர்களுக்குச் சாவு தானகவே வந்து சேர்ந் தால் என்ன” என்று எண்ணிக்கொண்டாள்.
எப்படியானுலும் அவள் செத்துப்போய்விட வேண்டும் என்று முடிவாய் எண்ணினுள். இது அந்தக் கணத்தில் அவளுள் எழுந்த ஆவேசமல்ல. சாவைத் தவிர வேறு எதனுலும் முடிவுகட்ட முடியாத பிரச்சினை தன்னுடைய வாழ்வு என்று அவள் நினைத்ததால் அந்த முடிவு விரைவில் வர வேண்டும் என்று விரும்பினுள். "உடல். உடல். இந்த உடல் அழிந்துபோய்விட்டால் 6T66T60T'
வாழ்க்கையில் "செக்ஸ்" இருக்கிறதைப்பற்றி அவள் திருமணத்துக்கு முன் ஆழ்ந்து உணர்ந்தவள் அல்ல. இதற்காக அவள் ஆடவர்களைப்பற்றியும், பெண்களைப் பற்றியும், காதலைப்பற்றியும் கூட ஏதும் அறியாதவளாய் இருத்தாள் என்று கூறிவிட முடியுமா? புத்தகங்களிடம் அவளுக்கு அளவற்ற பிரீதி. காவியங்களையும் கதைகளை யும் வாசித்து வாசித்தே எஸ். எஸ். சி. தேர்வை நான்கு முறை முயன்றும் பூர்த்தி பண்ண முடியாதவளானுள், அவள் வாசித்திருக்கிற கதைகளிலும், காவியங்களிலும் வருகிற காதலைப்பற்றிய மென்மையான வர்ணனைகளில் மனமுருகி ஈடுபட்டவள்தான் அவள். என்றலும் உடலைப் பற்றிய எந்த எண்ணத்தையுமே அவை அவளுள் எழுப்பியிருக்கவில்லை. எப்போதோ, ஒரு எழுத்தாளன் என்று தன்னைத் தானே கூறிக்கொண்ட எழுத்தாளர் ஒருவரின் கதை ஒன்றைப் படிக்க நேர்ந்தபோது அவள்
þjälð [ ] 95

Page 49
மிகவும் கூசிப்போனள். வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட வற்றைப் பச்சை பச்சையாக எழுதி வைத்திருப்பதாக தனக்குள்ளேயே விமரிசித்துக்கொண்டு தூக்கி எறிந்து விட்டிருக்கிருள். அவள் மனதில் காதல், உடலுடன் எந்த வகையிலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. அதை தெய்வீகம் என்று போற்றினுள். காதலன் என்பவன் மற்ற சாதாரண மனிதர்களிலும் பார்க்க ஏதோ ஒருவகை யில் உயர்ந்து வித்தியாசமாய்த் தெரிந்தான். அவளுடைய இளம் மனதில்கூட ஏதோ ஒரு உந்தலில், சத்திய மானதாய் நித்தியமானதாய் காதலன் என்ற ஒரு உருவம் எழுதப்பட்டுத்தான் இருந்தது. அவள் விரும்பி அடைய முடியாமல் போய்விட்ட முதலாவது செளந்தர்யம் هلت الوعي
அவர்களுடைய ஊர்க்கோவிலில் நடந்த ஏதோவொரு உற்சவத்தில் நாதஸ்வரம் வாசிக்க வந்தான் அவன். இவளுடைய அண்ணனுடைய தேநீர்க்கடையில் அவனுடைய குழுவினர் எல்லோரும் வந்து தேநீர் குடித்து விட்டுப் போகையில் அவள் தட்டி மறைவில் நின்று கவனித்துக்கொண்டிருந்தாள். அன்று மாலை அவனுடைய கச்சேரி கோயில் வீதியில் நடந்தது. இவளும் போய் இருந்தாள்.
அவளுக்கு நாட்டையைப் பற்றியோ, தர்பாரைப் பற்றியோ, கானடாவைப் பற்றியோ விசேஷமாக எதுவும் தெரியாதுதான். ஆனல் அவை அனைத்தும் அவள் மனதை மயக்கியாளும் சக்தியை எவ்வாறே பெற்று விட்டிருந்ததை அவள் அறிவாள். சுருதி பேதத்தையோ, லயப் பிறழ்வையோ தாளக் கலைவையோ சாஸ்திர ரீதியாகக் கண்டுபிடித்துக் கூறத் தெரியாவிட்டாலும் அப்படி ஏதாவது நேரும்போது அவள் புருவம் தானகவே நெரிந்துபோய்விடுகின்ற அளவுக்கு சங்கீத ஞானம் அவளுக்கிருந்தது.
96 கவிதா

அவன் வாசிப்பில் அன்று அவளுடைய புருவம் நெரியவே இல்லை; அவன் தன்னுடைய உதட்டில் சீவாளியைப் பொருத்திக்கொண்டபோது அந்தச் சீவாளியாகத் தான் ஆகமாட்டோமா என்று எண்ணி ஏங்குகிற அளவுக்கு அவனுடைய வாசிப்பில் அவள் தன்னை இழந்தாள்.
கலைஞர்களுக்கே எப்போதும் ஒரு ஆகர்ஷண சக்தி இருந்துகொண்டிருக்கிறது. அதிலும் நடனக் கலைக்கும் ஓவியக் கலைக்கும் இல்லாத சக்தி, இசைக் கலைக்கும் இலக்கியக் கலைக்கும் வாய்த்திருக்கிறது. இசையும் இலக்கியமும்தான் உடம்பை மறந்து, தன்னை மறக்கிற லயத்திற்கு இட்டுச் செல்கிற வல்லமையைப் பெற்றிருக் கின்றன. எப்போதும் கற்பனைகளில் ஆழ்ந்து தன்னை மறந்துவிடுகின்ற அவள், இசையில் மயங்கினுளா அவனிடம் மயங்கினுளா என்று தெரியாமல் அவனுக்கு அடிமையானுள். நாதஸ்வரத்தின் கறுத்த முதுகில் படிந்து எழும்பி விதவிதமான ராகக் குழைவுகளை சிருஷ்டிக்கின்ற அவனுடைய விரல்களில் ஒன்றை மட்டும் அசைத்தி ருந்தானுணுல், அவள் சகாராப் பாலைவனத்தின் சுடு மணலுக்கூடாகக்கூட அவனுடன் போய்விடத் தயாராக குருந்தாள். பிறகு ஒருநாள், அந்த இளம் நாதஸ்வரக் கலைஞன் அவளைக் கண்ணிரில் ஆழ்த்திவிட்டு பிரிந்து போயே தீரவேண்டி நேர்ந்தது. அவன்தான் என்ன செய்வான்? இவள் யாரிடமும் வெளியிடத் தைரிய மின்றித் தன் மனதுடனேயே வளர்த்துக்கொண்ட காதலைப்பற்றி அவனே அறியமாட்டானே!
அதன் பிறகு வானெலியிலும் சரி, வேறெங்கிலும் சரி, சீவாளியைப் பொருத்தி "பீ.பீ என்று சரி பார்க்கின்ற எந்த நாதஸ்வரத்தின் நாதமும் அவள் முதுகெலும் பினுடாக ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தி, அந்த இனிய
நுகம் ロ 97

Page 50
சோகமயமான இவளுடைய காதலை நினைவூட்டவே செய்கிறது.
அவள் மானஸபீகமாக அவனைப்பற்றிய எண்ணங்களில் மிதந்துகொண்டிருந்தபோது, திடீரென்று அவள் நினைவில் அவள் கணவனுடைய மயிரடர்ந்த கட்டை குட்டையான முன்கையைப் பற்றிய எண்ணம் எழுந்து அவள் உடலைச் சிலிர்க்கச் செய்தது. அவனைப் பற்றிய நினைப்பிலேயே அவள் பயந்துபோனுள். அவனுடைய கை, அணைப்பதையும் மிருகத்தனமாகவே செய்கிறது அடிப்பதையும் மிருகத்தனமாகவே செய்கிறது. பயப்படக் கேட்பானேன்?
லட்சுமணன் என்பது அவனுடைய பெயர். அந்தப் பெயரில் தன் கணவனைச் சந்திப்பதற்கு முன்பே, அவளுக்கு ஒரு லட்சமணன் அறிமுகமாகியிருந்தான். இளம் மனைவியான ஊர்மிளையைத் துறந்து காட்டில் போய் பதினுன்கு வருடங்கள் வாழ்ந்திருந்த அவனுடைய பெயர், மனைவி இறந்து ஆறுமாதங்கள் கூட ஆகுமுன்னர் உடலின் இச்சைக்காக இவளைக் கைபிடிக்க வந்து விட்ட இவனுக்கும் வாய்த்திருப்பதை எண்ணிப் பொரு மினுள்.
அவளைத் திருமணம் செய்ய, அவள் அண்ணனிடம் அனுமதி வேண்டிக் கெஞ்சிய நாட்களில் அவள் அவனை ஒரு கனவானுக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒரு கணவனுக இருக்கத் தகுதியானவனுகவே உணர்ந்தாள்,
அண்ணனின் பொருளாதாரக் கஷ்டம் - அது உண்மையோ அல்லது அண்ணியின் ரஸவாத வித்தையோ, அண்ணன் நிறையச் சம்பாதித்தும்
இவளுக்குச் சீதனம் கொடுக்கவேண்டி வந்துவிடு மென்றே, என்னவோ கையில் ஒரு சதமும் இல்லாமல்
98 () கவிதா

செலவழித்தாள் அண்ணி. ம். இப்போது இதை எல்லாம் எண்ணி என்ன. அவள் பருவம் தாண்டிய வயதும், ஏழ்மையும் ஒன்று சேர சடுதியில் ஒரு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்தே ஆகவேண்டிய நிர்ப்பந் தத்தில் நின்றபோது அவள் வாழ்வில் ஒரு விபத்தாகச் சம்பவித்தான் லட்சுமணன்.
தான் பஸ் கண்டக்டராக வேலை பார்ப்பதாகக் கூறினுன். குடும்பத்தைத் தளப்பமில்லாமல் நடத்திக்கொண்டு போவதற்கு வேண்டிய வருவாய் தனக்கு வருவதாகக் கூறினன். அவளைப் பொன்னிலும் பட்டிலுமாய்ப் புரட்டி எடுக்க முடியாவிட்டாலும் கண் கலங்காமல் பார்த்துக் கொள்வதாகக் கூறினன். அவள் அண்ணனுக்கு "அது போதும்" என்று திருப்தியாயும் இருந்தது. அழகான, அறிவான, அந்தஸ்துள்ள வாலிபன் ஒருவனுடைய மனதில் மகாராணியாகப் பட்டம் கட்டிக்கொள்ளக்கூடிய தகுதி வாய்ந்த அவள், அப்படி ஒருவனுக்குக் கப்பம் கட்டக்கூடிய அளவு பணம் இல்லாததால் குடிகாரனுன ஒழுக்கம் கெட்டவனுன இவனுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படவேண்டி நேர்ந்தது.
அவனை மணஞ்செய்துகொள்ளச் சம்மதம் கொடுத்து விட்டு அவனுடன் அவள் பேசிய முதலாவது சந்தர்ப் பத்தில் அவள் கேட்டாள், “எனக்கு நகை, புடவை' என்று எதன் மேலும் ஆசையில்லை. புத்தகங்கள் மேல் தான் எனக்கு உயிர்; நான் விரும்புகிற புத்தகங்களை மட்டும் எனக்கு வாங்கித் தர வேண்டும். தருவீர் 56nt It?'
அவன் அவளுடைய காவியக் கண்களையும், அவற்றில் துள்ளிய ஆணவப் பளபளப்பையும் கண்டு கவர்ச்சி
கொண்டவனுக, அந்தக் கணத்தில் அவள் வேண்டு
b&ið [ ] 99

Page 51
கோளுக்கு மனப்பூர்வமாக இணங்கினன். அந்தக் கணத்தில் இந்த உலகத்தையே அவளுக்காக வென்று வரத் தயாரானவனைப் போல, அவன்ஏதேதோ பேசிய போது அவள் மனதில் அவனைப்பற்றி நம்பிக்கையும் திருப்தியும் எழுந்தன.
ஆணுல் காலம் அவள் நம்பிக்கையைச் சிதற அடித்தது. லட்சுமணனைக் கைப்பிடித்து, உன்னதமான காதல் வாழ்க்கை நடத்த முடியாமல் போய்விட்டதற்குப் பல காரணங்கள் இருந்தன. அவளைக் கைப்பிடிப்பதற்கு முன்பே ஒரு தடவை லட்சுமணன் மணம் புரிந்திருந் தான் என்ற விஷயம் அவளுக்குத் தெரிந்திருந்தது. அத்துடன் வீட்டில் பணமுடையைப்பற்றியே அதிகம் பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்ததால், நாம் பொருளாதாரக் காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்படுகிருேம் என்ற எண்ணமே அவள் மனதில் உறுதிப்பட்டுவிட்டிருந்தது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக அவள் அடிமனதில், உறைந்துபோய்க் கிடக்கின்ற காதல் நினைவின் அடிச்சுவட்டை அழித்து விடுகின்ற அவ்வளவு திறமை லட்சுமணனிடம் இருக்க வில்லை. அவள் லட்சுமணனிடம் எதிர்பார்த்த தெல்லாம், அவளை ஒரு குழந்தை போலக் கருதி எதையும் பொறுத்துக்கொண்டு போகிற பண்பு ஒன்றையே. கணவனைத் தெய்வமாகப் போற்றி நடக்க வேண்டும் என்று அவளும் அறிந்திருந்தாள்தான். அவனுக்கு அவள் மனதிலும் பார்க்க அவள் உடலில் ஏற்பட்டுவிட்டிருந்த அபரிதமான காதலை அவள் எதிர் பார்த்திருக்காததால் அவள் மிகவும் கசந்துபோனுள். அவன் தெய்வமாகவே எட்ட நின்றுவிட்டிருந்தால் சில வேளை அவள் சந்தோஷப்பட்டிருப்பாள். திருமணமான அன்று வைகறையில் அவனுடைய கால்மாட்டில் அவள் எழுந்து அமர்ந்தபோது இனம் தெரியாத
100 () கவிதா

சோகம் ஒன்று அவள் மனதை வாட்டி எடுப்பதை உணர்ந்தாள். திறவாத உதடுகளுக்குள்ளேயே, "மிருகம், நான் உன்னை வெறுக்கிறேன்" என்று சொல்லிப் பார்த்துக்கொண்டாள். 'கணவன் தெய்வம்” என்ற கற்பிதம் எல்லாம் அதன் பின் அவளுக்கு மறந்து போயிற்று.
இல்லறம் இப்படியான ஒரு சோகமாக மாறிவிட்டதால் அவள் தன்னுடைய பழக்கப்பட்ட ஸ்வர்க்கத்திலேயே நிரந்தரமாகத் தங்கி வாழ ஆசைப்பட்டாள். எப்போதும் சங்கீதத்தில் ஆழ்ந்துவிடவும் எப்போதும் புதிது புதிதாக எதையாவது வாசித்துக்கொண்டேயிருக்கவும் விரும்பி ணுள். இளம் வயது முதலே அவள் குடும்பத்தில் நிலவிய அவலமான பொருளாதார நிலையாலோ என்னவோ அவள் எப்போதும் தன்னை மறந்து வாழவே விருப்ப முடையவளாய் இருந்தாள். இசையில் அவளுக்கு இருந்த ஆழ்ந்த பக்திமயமான பிரேமையின் காரணமாக அவள் ஒரு ரேடியோ வைத்திருக்க விரும்பினுள். தமையன் அவளை அவனுக்குத் தாரை வார்த்தபோது, அவளிடம் இரகசியமாக ஒரு ஐந்நூறு ரூபாய் கொடுத்து வைத்தான். ஏதாவது விருப்பமானதை வாங்கிக்கொள்ளட்டுமே என்று அவனுடைய உடன்பிறந்த பாசம் நினைத்திருக்க வேண்டும். அவளிடம் அந்தக் காசு இருப்பதை அறிந்துகொண்ட லட்சுமணன், தனக்கு ஏதோ அவசரத் தேவை என்று பொய் சொல்லி அதை வாங்கிக் குடித்துத் தீர்த்துவிட்டான். அதன் பிறகு அவள் ரேடியோவைப்பற்றிய நினைப்பையே மறந்துபோக வேண்டியவளாணுள்.
இதைவிட அவள் மனதில் உறுத்திக்கொண்டிருந்த
எண்ணம், முதல் நாளில் முதல் முதலாக அவனிடம் கேட்ட வாக்குறுதியையே காற்றில் பறக்கவிட்டானே
blesh ( 10.

Page 52
என்பதுதான். அவனுக்கு மகஸின்களுக்கும் புத்தகங் களுக்கும் காசு செலவிடுவது சுத்த முட்டாள்தனமான
காரியமாகப் பட்டது. அத்துடன் அமைதியாக உட்கார்ந்து புத்தகங்களில் ஆழ்ந்துவிடுவது சுத்த சோம்பேறித்தனம் என்றும் al எண்ணினுன்.
குடிப்பதும், வீட்டுக்கு அகாலத்தில் வந்து அவளை வதைப்பதும் அவனுக்கு விருப்பமான பொழுதுபோக்கு களாக ஆனபோது, அவளுடைய அந்தரங்க ஆசை களுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் போனதுடன், பொருளாதாரச் சீர்கேடுகளும் தோன்றலாயின.
ஆனல் அவள் தவித்தாள். அவனுக்குக் குடியின் போதை தேவைப்பட்டது போலவே அவளுக்கு வாசிப் பின் போதை தேவைப்பட்டது. அது இல்லை என்றுகி விட்ட பின் அவளுக்கு வாழ்க்கை திடீரெனச் சாரமற்ற தாகத் தோன்றலாயிற்று.
அந்தப் போதையில் ஆழ முடிந்திருந்தபோது, மற்றெல்லாக் கவலைகளையும் கஷ்டங்களையும் சிரமங் களையும் அவளால் பொருட்படுத்தாதிருக்க முடிந்தது. போதை முறிந்ததும் நிஜம் புரிந்து பச்சாதாபத்தால் உருகுகிற சில குடிகாரர்களைப் போல, இந்த இடைக் காலத்தில் அவளும் நிஜம் புரிந்ததும் பச்சாதாபத்தில் உருகினுள். தனக்கு இத்தனை உணர்வுக் கூர்மையைத் தந்தவை அந்தப் புத்தகங்களே என்று அவற்றின்மேல் அசாத்திய கோபம் சமயங்களில் எழும்போதும் அவற்றை அவள் உள்மனம் வெறுத்து ஒதுக்கியதில்லை. ‘ஓ’ என்னமாய் எழுதுகிறர்கள்? காதலில் பிரிவு ஒன்றை வைத்தே காளிதாஸன் "மேக சந்தேசம்" படைத்தான். அவள் கணவனுக்கோ குறைந்தது ஒரு வருடத்துக்காவது இறந்துபோன தன் மனைவியின்
102 ( ) கவிதா

நினைப்பை கெளரவிக்கத் தோன்றவில்லையே - இது அவளுடைய மனதின் அங்கலாய்ப்பு.
அவளுடைய மனதில் அவனைப்பற்றிய திருப்தியீனம் இருந்தது போலவே அவனுடைய மனதிலும் அவளைப் பற்றிய திருப்தியினம் எழத்தான் செய்தது. அவளுடைய நளினமான உணர்வுகளை எல்லாம் அவன் குரல்வளைப் பிடியில் கொன்றுகொண்டிருந்தான். அவளோ அவனுடைய மிருகத்தனமான ஆசைகளிலிருந்தும் உணர்வுகளிலிருந்தும் தப்பித்துக்கொண்டு G3 lurral5 முயற்சி எடுத்துக்கொண்டாள். எனக்கென்று வந்து வாய்த்திருக்கிறதே ஒரு "அசமந்தம்" என்று அவன் ஊரெல்லாம் கேட்கக் கத்துவான். அவள் மெளனமாய் வெதும்புவாள். பாலைவனத்து மணலில் காசித் தும்பை செழிக்க முடியுமா என்ன? கொஞ்சமேனும் ஒத்துப் போகத் தெரியாத கணவனின் விமர்சிப்பில் அவளும் ஏதோ ஒரு உளத்தாக்கம் ஏற்பட்டு நிஜமாகவே அசடாகி, தன் பலவீனங்களை வெளியே காட்டாது மறைக்கத் தெரியாதவளாணுள்.
யாராவது ஒரு புத்தகத்தை அவளுக்கு முன்பாக நீட்டும்பட்சத்தில், அதற்கு ஈடாகத் தன்னிடமிருந்த எந்த விலைமதிப்புள்ள பொருளையும் கொடுத்துவிட அவள் தயாராக இருந்தாள். அவளிடம் இருக்குமானல், எந்தப் பொருளையும் எந்த நேரமும் முதலில் கை மாற்ருகப் பெற்றுக்கொண்டு பிறகு திருப்பிக் கொடுக் காமலே இனுமாக்கிக் கொள்ளலாம் என்று அண்டை அயலில் உள்ள பெண்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். இவர்களால் லட்சுமணனிடம் அவள் அசடு, ஏமாளி என்று தினமும் ஏச்சுக் கேட்கவேண்டி நேர்ந்தது. மிளகாய்த்தூள், கோப்பித்துTள் என்றிப்படியாகச் சில்லறைச் சாமான்களில் தொடங்கி, கத்தி, அலவாங்கு,
basib 103

Page 53
மண்வெட்டி என்று அவள் ஏமாந்து நிற்கத் தொடங்கிய போது லட்சுமணன் வெகுண்டெழுந்தான். அப்போது அவனுக்கு அவளுடைய கவிதைக் கண்களில் எந்த விதமான கவர்ச்சியும் தெரியாது. அந்தக் கண்கள் கண்ணிரைப் பொழிந்து ரத்தமாய்ச் சிவக்கும்வரை தன் கைவரிசையைக் காட்டுவான். ஆணுல் அவள் அப்படியேதான் இருந்தாள்.
அவளுக்கு யாருடைய முகத்தையும் முறித்துக் கதை பேசத் தெரியாது. உட்புறம் ஒழித்துவைத்துவிட்டு இல்லையே என்று நடிக்க அவள் கற்று வைத்திருக்க வில்லை. கொடுத்ததைக் கண்டிப்பாய்க் கேட்டுத் திரும்ப வாங்கிக்கொள்ளவும் அவளுக்குச் சாமர்த்தியம் இருக்கவில்லை. நல்ல பெண், நல்ல பெண் என்று அவளுடைய முகத்துக்கு நேரே வர்ணித்துவிட்டு அவளை ஏமாற்றிக்கொண்டிருந்தார்கள், அயல்வீட்டுப் பெண்கள். "ஐயோ! நீயும் ஒரு பெண்ணு?’ என்று லட்சுமணன் அவளைக் கோபித்து ருத்ர மூர்த்தியாய் மாறும் வேளைகளில், அவள் கண்ணிரில் மூழ்குவது என்னவோ உண்மை. ஆனல் ஒழிந்த வேளைகளில் வேலை இருப்பதைக்கூட மறந்து, சிலவேளைகளில் புறக்கணித்து, அவர்கள் கொடுத்த புத்தகங்களில் ஆழ்ந்து தன்னையே மறந்து சுகமான, இனிமையான, கற்பனைமயமான ஒரு உலகில் சஞ்சரிப்பதே அவளுக்கு இஷ்டமான இன்பநிலை.
"புத்தகங்களே வாசிக்கக் கூடாது. இந்த வீட்டுக்கு ஒரு புத்தகமும் வரக்கூடாது" என்று கர்ஜிப்பான் லட்சுமணன். அவன் தன் மனைவியிடம் எதிர்பார்த்த தெல்லாம் ஒரு பெண்ணின் உடலும் ஆணின் வலிமையும் சமத்காரமும். ஒரு சராசரி பெண்ணிலும் பார்க்க தன் மனதை மென்மையாக ஆக்கிக்கொண்டுவிட்ட அவளிடமிருந்த கலைத்திறனுே, அன்பு LD60TGBLDI"
104 ( ) கவிதா

அவனுக்குத் தேவையாக இருக்கவில்லை. இசையோ, ஒவியமோ, வேறு எந்தக் கலையோ எல்லாமே வெறும் மண், உப்புக்கு உதவாதது என்ற மாதிரியான லட்சுமணனுக்கு, காவியத்தின் ஒரு பாடல் நயத்திலேயே உலகை மறக்கிற மாதிரியான மனைவி வாய்த்திருந்தாள். ஒருவகையில் அவனும்கூடப் பரிதாபத்துக்குரியவன் தான். இப்படி இரண்டு தனிமனிதர்களை இல்லறத்தில் மாட்டிவிடுவதால் திருமணமே அர்த்தமற்றுப் போய் விடுகிறதை யார் உணர்கிறர்கள்? இரண்டு மாடுகளை நுகத்தால் இணைத்து ஒரே திசையில் செலுத்த
முற்படுவதை அவள் பார்த்திருக்கிருள். மனப் பொருத்தம் இல்லாதவர்களுக்குத் திருமணமும் ஒரு ar:60) Lou ЈП 60T, விரும்பத்தகாத, நிர்ப்பந்தத்துக்குள்
ளாக்குகிற நுகத்தடிதானு?
இன்று மத்தியானம் பக்கத்து வீட்டுக்காரியிடமிருந்து "இல்லறமும் பிரமச்சரியமும்’ என்ற காந்திஜியின் புத்தகத்தை வாங்கி வாசித்தாள். அவள் அதைக் கொடுத்துவிட்டு கொஞ்சம் அரிசிமா-"பிறகு தருவதாகச் சொல்லி'-வாங்கிக்கொண்டுபோயிருக்கிருள்.
காந்திஜியின் இந்தப் புத்தகத்தை தன் கணவன் ஒருமுறை வாசித்துப் பார்க்கமாட்டானு என்று அவள் ஏங்கினுள். அந்த அளவு மனப் பக்குவம் அவருக்கு எங்கே இருக்கிறது என்று வெறுப்புடன் புத்தகத்தைத் "தொப்' பென்று வைத்துவிட்டுத்தான் இரவுக்கு உணவு
சமைக்க இங்கே உட்கார்ந்து இருக்கிருள்.
தனக்கு வாழ்க்கை ஏமாற்றமாகப் போய்விட்ட துன்பம் அந்த நூலைப் படித்த பிறகு அவளுக்கு அதிகமாகத் தோன்றுகின்றது. உடல். உடல். இந்த உடல் அழிந்து போய்விடக்கூடுமானல் அவள் எவ்வளவு சந்தோஷப்படுவாள். அவனுடைய மயிரடர்ந்த தடித்த
க.-7 ' Basi ( 105 .

Page 54
கை, ஒரு நெருப்புக் கொள்ளியை எடுத்து, அவளுடைய உடலை எரிப்பதற்காகப் போடுமானல் அவள் எவ்வளவு நிம்மதி அடைவாள்! "ஒ சாவே! நீ கொடுக்கிற விடுதலைதான் எத்தனை மகத்தானது' என்று அவள் நினைத்து முடித்த வேளையில் -
'ஏய்.ய்” என்று நீட்டி முழக்கிய குழறிய அவன் குரல் அவள் காதுகளில் வந்து மோதியது. திடுக்கிட்டு எழுந்து நின்று மிரண்ட அவள், சட்டென்று வெளிப்பக்கம் போவதற்காய் வைத்திருந்த பனை மட்டைப் படலையைத் திறந்துகொண்டு இருட்டில் பாய்ந்தாள். வந்த சுவட்டில் அவன் கண்ணில் படுவது போன்ற சித்திரவதை வேறில்லை!
இருட்டில் காலடி வைப்பதற்கே குழந்தையிலிருந்து பயந்து பழகிவிட்ட அவள் இருட்டாய்ப்போய்விட்ட வாழ்க்கைக்குப் பயந்து அந்த இருட்டையே துணை யாக்கித் தன்னை மறைத்துக்கொண்டு நின்றள், அவசரத்தில் அந்தப் புத்தகத்தை அங்கே வைத்துவிட்டு வந்துவிட்டதைப்பற்றி நினைவு வந்தது. 'இல்லறம். உம்.உடம்புக்குச் சாப்பாடு போட்டுக் காப்பாற்றுவதற் காக ஒருவனைச் சார்ந்து இருப்பதும். உடம்பின் இச்சைகளைப் பூர்த்தி செய்யவேண்டிச் சில நிர்ப்பந்தங் களுக்குள்ளாக மனப்பூர்வமாகச் சம்மதிக்க வேண்டு வதும்தான் இல்லறமா’ என்று அவள் நினைத்தாள். உள்ளேயிருந்து அவன் உறுமி உறுமி அந்தப் புத்தகத்தைத் தாள் தாளாகக் கிழிக்கிற சத்தம் அவள் காதுகளில் வந்து விழுந்தது. பயத்தாலும் துக்கத்தாலும் படபடத்த இதயத்தைக் கையால் அமுக்கிப் பிடித்துக் கொண்டு வானத்தைப் பார்த்து நின்றுகொண்டு அவள் பிரார்த்தித்தாள்.
"தெய்வமே, நானகச் சாக முடியாத கோழை நான். நீயாக என்னைச் சாகவைத்துவிட மாட்டாயா?

ஜனனி
அந்த நீலச் சேலையின் முந்தானை காற்றுக்கு அசைந்த போதெல்லாம் என் மனதை மயக்குவதற்கான மாய மருந்தொன்றைக் காற்றில் கலந்துகொண்டிருந்ததோ என்று நான் நினைத்தேன். அந்த நாற்காலியில் அவள் அமர்ந்திருந்த நிலையில், அவள் போட்டிருந்த நவீனக் கொண்டையிலிருந்து பாதம் வரையிலான அவள் ஒயில் தோற்றத்தின் லளிதத்தில், குனிந்த தலை நிமிராமல் எதையோ படித்துக்கொண்டிருக்கும்போது புருவத்தின் கீழ் கவிழ்த்தாற் போன்று படிந்திருக்கும் இமைகளின் நீண்ட உரோமங்களின் ரஞ்சகமான வளைவில்...ம் . ஹம்ெ. இவை எதிலுமே இல்லை; கண்களை நன்றகத் திறந்து எதிரே இருக்கிற முகத்தை நேருக்கு நேர் பார்க்கும்போது தெரிகின்ற தாய்மைக் கனிவு இருக்கே அங்கேதான் என் மனம் சிக்கிக்கொண்டு தவிக்கின்றது.
அழகுக்கோ பொருளுக்கோ அடிமைப்பட்டுப்போகாமல், அன்புக்கு அடிமைப்பட்டுப்போனேன் என்று சொல்லிக் கொள்வதில் ஏதாவது பெருமை இருக்குமானுல் அதற்கு நான் தகுதியானவனே இல்லை. ஏனென்றல் அப்படி அடிமைப்பட்டுப்போய், அதனுல் கிடைத்த தட்டில் வெம்பிக் கிடைக்காத இதத்தை எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தபோதுதான் நான் இவளைச் சந்தித்தேன்.
gaTsof 107

Page 55
இவள். ஜனனி, ஜனனி என்றல் என்ன கருத்து தெரியுமோ? தாய் சிறு குழந்தையாய் இருந்தபோதே தாய் என்று பெயர் வைத்திருக்கிறர்களே என்று யாரோ சொன்னர்கள். எனக்கு திடீரென்று தாகூரின் கவிதை ஒன்று ஞாபகம் வந்தது. குழந்தை ஒன்று தன் தாயிடம், 'அம்மா நான் எங்கே இருந்து வந்தேன்’ என்று கேட்கிறது; அதற்குப் பதிலளித்த தாய், 'தான் சிறு குழந்தையாக மணல் வீடு கட்டி விளையாடிய நாளி லிருந்து தன் குழந்தை தன்னுடனேயே இருந்ததாக ஞாபகம்’ என்கிறர். இந்தக் கருத்து எனக்கு அப்போது வேடிக்கையாக இருந்தது. ஆனுல் இவளைப் பார்த்த பிறகு, பெண், தன் வித்திலிருந்து விருட்ஷம் வரை தாய்தான் என்ற கருத்து என்னுள் நிரூபணமாகிறது. முதலில் இவளுடைய பெயரை உச்சரிக்கிறபோது இருக்கிற இனிமைக்காக நன்றயிருக்கிறது என்று நினைத்தவன், பிறகு, அதனுடைய கருத்துக்காக நன்ற யிருப்பதாக நினைத்தேன். அது பொருத்தமான நபருக்குச் சூட்டப்பட்டிருந்ததுதான் அதனிலும் நன்ருய் இருந்தது என்பது என் முடிவான அபிப்பிராயம்.
ஓ! நான் ஏன் இவ்வளவு தூரம் பிற பெண்ணைப்பற்றி நினைத்துச் சிலாக்கியம் பண்ண வேண்டும்? அது துரோகமல்லவா?
துரோகமா? யாருக்கு? என் குழந்தையின் அன்னைக்கா? நான் என் குழந்தையின் மலர்களைப் போன்ற கண்களை நினைத்துக்கொள்கிறேன். பூப்போன்ற அவள் வாயிதழ் களையும், பட்டுப் போன்ற கன்னங்களையும் நினைத்துக் கொள்கிறேன். பிறகு அவளுடைய சுருட்டை முடி. மெத்தென்ற கை கால்கள். த். சொ.என்ன முயன்று என்ன, என் சிந்தனைகள் அனைத்தும் மீண்டும் இவளிடமே ஓடி வருகின்றனவே!
108 口 கவிதா

என்னைப்பற்றி அப்படி ஒன்றும் உயர்வாகச் சொல்லிக் கொள்ள முடியாவிட்டாலும் எனக்கு நிச்சயமாய்த் தெரிகிறது - இது வெறும் உடற் கவர்ச்சி அல்ல. மணமாகிச் சில காலம் - மனமாகுமுன் பல காலம் - மனதில் நினைத்து நினைத்து ஏங்கிய உள்ளத்துச் சின்னஞ் சிறு தேவைகளின் நிரம்பாத வெறுமை - அதுதான் என்னைத் தளும்ப வைக்கிறதா? ஒத்துக்கொள்ளும் போது என்னைக் கொஞ்சம் சரியாகக் கூறிவிட்டாற் போலத்தான் இருக்கிறது. சிறு வயதிலேயே அன்னையை இழந்துவிட்டு, தந்தையினதும், அண்ணன்மாரினதும் அன்பில் வளர்ந்தவன் நான். தாய்மையின் அன்பைப் பற்றி ஒன்றுமே தெரியாத நிலையில், பெண்மையைப் பற்றி உயர்வாக மதித்து எழுந்த கற்பனைகளில் மட்டும் முழுகி, சிறுகச் சிறுக விட்ட பெருமூச்சுகள் எல்லாம் ஒரே கும்பலாகி என்மீது கவிந்துகொண்டாற் போலத் தான் இருக்கிறது. நாளும் பொழுதும் என் கண்ணுக்கு முன்னலேயே எதிர்ப்படுகின்ற ஆயிரம் பத்தாயிரம் காதலர்களின் தம்பதிகளின் தரிசனங்கள்; ஒவ்வொரு ஆடவனதும் வாழ்வில் துணையாக நேர்ந்த பெண்மையின் போதை தரும் அன்பு; அது வெளிப்படும் லாவகம் எல்லாம் என் மனதிலும் தோற்றுவித்த "எனக்கும் கிடைக்கும்’ என்ற எதிர்பார்ப்பு யாவும் நிராசையாகிப் போனதன் விளைவாக நான் சலனப்பட்டுப் போய்க் கொண்டிருக்கிறேன் என்பது சரியான காரணம்தான். தாயின் அன்பை இழந்து, அந்த வயதிலேயே பச்சைக் குழந்தையாகத் தேங்கிப் போன என் இதயத்துக்கு, அன்பு, மழையாகத்தான் தேவைப்பட்டது. ஆனல் உள்ளங்கையில் ஊற்றி உச்சியில் தேய்த்துக்கொள்கிற எண்ணையளவுகூட எனக்குக் கிடைக்காத ஏமாற்றத்தை யாரிடம் போய் என்னவென்று கூறுவேன். ஆறுதலா கவும் ஆசுவாசமாகவும் அமையவேண்டிய மனைவி என்னைப் பொறுத்தவரையில் ஒரு விசேடக் களைப்பாக
ஜனனி 109

Page 56
இருக்கிருளே. காற்று, ஜீவனுக்கு மிகவும் வேண்டப் பட்டதுதான். நாமே உணராமல் மூச்சாகும் காற்று, புழுங்கினல் சற்று வெளிப்படையான ஸ்பரிசத்தைத் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிருேம். வேகமாகக் காரில் போகிறபோது கண் காது மூக்கெல்லாம் அடைக்க அடைக்க வீசினுல் வரவேற்கிருேமா? என் மனைவி இந்த மூன்றம் வகைக் காற்ருகத்தான் இருந்தாள். அதனுல் என்ன பயன்? புழுங்கும்போது இதமாக வீசும் காற்ருக அவள் இல்லையே!
எனக்கு மனைவியாக வரவேண்டியவள் எப்படி எப்படி இருப்பாள் என்று திருமணத்துக்கு முன்னரே கற்பனை பண்ணியவனல்லதான் நான். ஆனல், "கைன்ட்னஸ் இன் விமின் நொட் தெயர் பியூட்டியஸ் லுக்ஸ் ஷால் வின் மை லவ்” என்று ஷேக்ஸ்பியரின் அடியைத் திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டு அன்பை மட்டுமே தேடினேன். என் கருத்தில், எனக்கு அதிகம் பரிச்சய மில்லாத பெண்பை, மென்மையும் அன்பும் பரிவும் இரக்கமுமாக ஒரே விதமாகவே தெரிந்தது. பெண்கள் எல்லோரையுமே காவியங்களிலும் கவிதைகளிலும் வருகிற பெண்களைப் போலக் கற்பனை செய்துகொண்டு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கிற விஷயத்தில் தவறு செய்தவன் நான். என் மனைவியைத் தேர்ந் தெடுத்தபோது நான் என்ன மாதிரியான நினைவில் இருந்தேன் என்பதைச் சொன்னல் வேடிக்கையாகத் தான் இருக்கும். ஐம்பதினுயிரத்துடன் ஒரு சீதை, முப்பதினுயிரத்துடன் ஒரு சீதை, இரண்டு பேரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று பிரச்சினை வந்தால் ஐம்பதி ணுயிரத்தையே நியாய புத்தியுள்ள எவனும் தேர்ந் தெடுப்பான் என்று எண்ணிக்கொண்டேன். அதனல் இவளை - இந்த ஜனனியை - உதறிவிட்டு என் மனைவி யைத் தேர்ந்தெடுத்தேன். அதன் பிறகுதான் தெரிகிறது, சீதை மட்டுமல்ல, சூர்ப்பனகைகூடப் பெண்தானே
O கவிதா

என்பது . வாழ்க்கைத்துணை என்று நான் தேர்ந்தெடுத்துப் பிரதானம் கொடுத்தது பெண்ணுக்கல்ல; பணத்துக்குத் தான். எனவே, அனுபவிக்க வேண்டியதுதான் என்றலும் என் மனைவியின் போக்கை நியாயம் என்று அனுமதிக்க முடியுமா? நான் தப்பிக்கொண்டிருந்தாலும் என்னிடத் தில் வேறு ஒருவன் அகப்பட்டுத்தானே இருப்பான். யார் கண்டது? சிலவேளை அவன் இவளுக்கு ஏற்றவனுக, சுருங்கச் சொன்னல் ஒரு ஜடமாக இருந்திருந்தால் சமாளித்துக்கொண்டிருப்பான் அல்லவா? என்னைப் போல, அவள் கதவை அறைந்து சாத்துவது, நிலமதிர நடப்பது, உரத்த குரலில் பேசுவது போன்ற சின்னஞ் சிறு விஷயங்களில் கூடத் தன் கற்பனை மனைவியைப் பறி கொடுக்கமாட்டான் அல்லவா?
என் மனைவியைப் பிழை சொல்லி என்ன? இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு அப்படி இருக்கவில்லை அவள். அதுதான் அவள் இயல்பு. கணவன் என்று ஒருத்தன் இருப்பான்; உழைத்து மாதாமாதம் சம்பளம் கொண்டு வந்து தருவான்; வீட்டை நிர்வகிப்பதுதான் தன் வேலை - இப்படி ரைம்ரேபிள்' போட்டுக்கொண்டது போலத்தான் அவள் இயக்கம். வீட்டு நிர்வாகத்தைப் பொறுத்தவரை அவளைக் குற்றம் சொல்ல முடியாது. மேஜை விரிப்புகள், திரைச் சேலைகள், எல்லாம் புதிதாகப் போடப்பட்டது போல ஒவ்வொரு நாளும் காட்சியளிப்பது ஒரு தனிக் கெட்டித் தனம்தான். ஆனல் விரிப்பு ஒழுங்காக சுத்தமாக இருக்கிறதா என்பதில் அவள் எடுக்கும் அக்கறைகூட நான் ஒழுங்காகச சாப்பிட்டேன உறங்கினேன என்பதில் இல்லையே! 'ஷேட்டுக்காகத் திரும்பினுல் ‘ஷேட்"டாகவும் "பூட்சுக்காகத் திரும்பினுல் “பூட்சாகவும், “டைக்காகத் திரும்பினுல் *டை'யாகவும் நிற்கிற மனைவியைப் பெற்றிருப்பவர்களுக்கு இதை விளங்கிக்கொள்வது
ஜனனி 111

Page 57
கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனல் என்ன செய்வது, இதுதான் என் வாழ்க்கை; என் வேதனை எல்லாம்! எங்களுக்குக் கிடைக்க இருந்த மகத்துவமானதை மறுபடி சந்திக்காதவரை எங்களுக்குக் கிடைக்காததைக் கிடைக்காததாகவே ஏற்றுக்கொண்டு வாழ்க்கையைக் கழித்துவிடுவது சுலபம்தான். எங்கோ போய்க்கொண் டிருந்த இரண்டு பிரயாணிகளான நானும் ஜனனியும் ஒன்றகச் சந்தித்துக்கொண்ட பிறகு நான் இழந்துவிட்ட இழப்புகள் புது சக்தியோடு என்னை வருத்தலாயின. திருமணமாகியும் காதலை உணராதிருந்த நான், விசேட மான மனப்பயிற்சியும் பக்குவமும் இல்லாத இளைஞனுகிய நான், சதாகாலமும் அன்பென்ற பெருநெருப்பை நாடிப் பறந்த விட்டிலாகிய நான், இவள் காலடியில் சுலபமாக விழத் தயாரானேன்! எப்போதோ ஒரு நாள் அப்பா வுடன் மிக நெருக்கத்தில் அம்மன் சந்நிதியில் நின்றது நினைவு வந்தது. அவள் உலக மாதா! எனக்கு அன்னை யின் அன்பை உணரத் தரவில்லை; அந்த அன்பு எனக்கும் இந்த ஜென்மத்தில் வேண்டும். தாயில்லா விட்டால் அந்த அன்பைத் தருபவள் யார்? தாரம்தானே? என் வாய் ஜனனி, ஜனனி என்றுதான் முணுமுணுத்தது. சென்ற வாரம் என் விரலில் காயம் பட்டு இரத்தம் கசிந்த போது அவள் கண்களில் தெரிந்த கனிவுதான் நினைவுக்கு வந்தது. அவள்தான் எவ்வளவு பதறினுள்! நான் அதிசயமாய்க் கவனித்தேன். இந்தக் காயம் இன்னும் சில தினங்களில் ஆறிவிடும் என்பது இவளுக்குத் தெரியாதா என்ன? அப்படித் தெரிந்தும் தெரியாமல் போய்விடுகிற அன்பைத்தான் பேதமை என்கிறர்களோ. சமயத்தில் இந்தப் பேதமை அளிக்கிற இன்பமும் வேண்டித்தான் இருக்கிறது. அறியாமலா அதை மாதர்க் கணிகலம் என்றர்கள்.மாது.என் மனைவியும்கூட ஒரு மாதுதானே!
112x () கவிதய

ஒரு முறை எனக்கு காய்ச்சல் வந்திருந்தது. அதி லிருந்துதான் என் மனைவியின் இதயத்தின் மலட்டுத் தன்மை என்னை வெகுவாகப் பாதித்து வருகிறது. ஃபுளு காய்ச்சல் சாதாரணமாக எல்லோருக்கும் வருவதுதான். அதற்காக காய்ச்சல் வந்தவனும் சாதாரணமாக இருக்க முடியுமா? பொதுவாக வருத்தம் வந்தால் அது சாதாரண தலையிடியாக இருந்தாலும்கூட அதிகப்படியான சலுகை -யையும் பரிவையும் எதிர்பார்ப்பது என் மனம், பதிலாக, தீராத தொற்றுநோய் வந்தவன் மாதிரி அந்தக் காய்ச்சல் வந்திருந்த மூன்று நாட்களும் என் அறையில் தனிமை யில் தவிக்க விடப்பட்டேன். இப்படியும் ஒரு பெண் இருக்க முடியுமா? நொடிக்கு ஒரு தடவை உங்களுக்கு என்ன செய்கிறது என்று கேட்க வேண்டாம்; மூன்று நாளில் ஒரு தடவை கேட்டிருக்கக் கூடாதா? காய்ச்சல் என்னவோ வந்துவிட்டது; மூன்று நாளில் போய்விடப் போவதும் நிச்சயம். இதைப் போய்ப் பெரிதுபடுத்து வார்களா என்ற மாதிரி இருந்தது அவள் போக்கு. என் அருகில் வந்து ஒரு நிமிஷம் நிற்கமாட்டாளா என்று ஏங்கிய ஏக்கம், அப்புறம் அவள் அவன்ஸ் கிளாஸில் மருந்தை மனத்தின் உடன்பாடில்லாத யந்திரகதியில் ஊற்றிக்கொண்டு வந்த சமயம், என்னுள் சட்டென ஒரு மாபெரும் உந்தலாகி உணர்ச்சிவசமாய் அவள் கையை எட்டிப் பிடித்துவிட்டேன். அவ்வளவுதான் அவள், மயிர்க்குட்டியை உதறுவதுபோல என் கையை உதறினுள். அவுன்ஸ் கிளாஸ் விழுந்து நொறுங்கியது. கண்ணில் நெருப்பைக் கக்குகிறமாதிரி ஒரு பார்வைஉலகத்தின் மகா கேவலமானவனுகிப் போய்விட்ட அவமானத்தில் கூசிப்போனேன் நான். அதன் பிறகு எனக்கு வருத்தமே வரவில்லை! அன்பைக் கொடுப்ப தற்கும் பெறுவதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஏன் எனக்கு-எனக்கு மட்டும்-இப்படி ஒரு வாழ்க்கை அமையவேண்டும்? வேறு
g60TGof. O 113

Page 58
யாரும் இப்படிக் கஷ்டப்படுவதாகத் தெரியவில்லையே? அன்றைக்கு என் கீழ் வேலை பார்க்கும் ஜோன்ஸ்க்கும் அவன் மனைவிக்கும் லிஃப்ட் கொடுத்தேன்-சந்தோஷ மாக இருந்தார்கள் அவர்கள், காரின் கதவை அவன் சாத்தியபோது அவள் விரல் கதவிடுக்கில் நசிந்து போயிற்று. தனக்குப் பட்டாற்போல அவன் துடித்துப் போனுன். அவள் "ஆ" வென்று கத்தியதுதான் தெரியும். அவள் விரலை அவன் தன் வாயினுள் விட்டுக் கொண்டான். நான் ஒருத்தன் அங்கே இருப்பது இரண்டு பேருக்குமே நினைவில்லை. அவளுடைய துன்பம் தவிர மற்றதெல்லாம் அவனுக்கு மறந்துபோய்விட்டது; அவனுடைய பரிவு தவிர மற்றதெல்லாம் அவளுக்கும் மறந்துபோய்விட்டது. ஒரு கணம்தான். மறு கணம் என்னை மருண்டு பார்த்துவிட்டு “போதும் விடுங்கள்" என்ருள், போலிக் கோபத்துடன். அதில் ஸ்பஷ்டமாகத் தெரிந்தது பெருமைதான். எனக்கு ஏக்கமாக இருந்தது. சாதாரண விஷயம்தான். எனக்கல்ல அவனுக்கு. என் மனைவியை அந்த இடத்தில் கற்பனை செய்து பார்த்தேன். ஆ1. ஒரு அயலவனுக்கு முன்னுல் ஒரு விசரன் செய்யாத காரியத்தைச் செய்துவிட்டாற் போன்ற கூச்சத்தில் உயிரை விட்டிருக்க வேண்டுமே நான்! பரிவைக் கொடுப் பதிலும் பெறுவதிலும் இவர்கள் பெறுகின்ற சுகம் எனக்குக் கிடைக்கவே முடியாதது; எந்தவிதமான நுண்ணிய உணர்ச்சிகளுக்கும் இடமற்றுத் தன்னுள் தானுகக் குறுகிக்கொண்டுவிடுகிற இவளைத் துணை சேர்த்துக்கொண்டு மிச்சமிருக்கிற வாழ்க்கையை நினைக் கையில் கல்லைக் கட்டிக்கொண்டு கடலில் இறங்குவது போல இருக்கிறது. இந்த நிலையில்தான் ஜனனி என் வாழ்வில் புகுந்திருக்கிருள்!
அதல்ை, என் மனைவி என்னை விட்டுத் துர நிற்கிறள் என்ற உணர்வு என்னுள் வலுக்கலாயிற்று. என்னை
114 & கவிதா

அறியாமலே நான் ஜனனிக்குக் கிட்ட நெருங்குவது மாதிரித் தெரிகிறது. நடக்கிற ஒவ்வொரு சம்பவமும் என் மனைவியிலிருந்து ஜனனியை உயர்த்தி வேறுபடுத்தி மனதில் சலனத்தை எழுப்புகின்றது. ஏதோ ஒரு சந்தர்ப்பம் எனக்குப் பொருத்தமில்லாதவளை மனைவி யாக்கிற்று என்றல், இப்போது இவளை அறிமுகப்படுத்து வதன் மூலம் சந்தர்ப்பங்கள் பிராயச்சித்தம் செய்து கொள்கின்றனவோ என்று யோசித்தேன். நேற்று மாலை ஜனனி அந்த ஜன்னல் ஒரம் நின்றிருந்தாள். ஏதோ காரணமாய் அந்தப் பக்கம் போனவன் என்னத்தை அப்படிப் பார்த்துக்கொண்டு நிற்கிறீர்கள் என்று கேட்டேன். "ஒன்றுமில்லை; வானவில்” என்ருள். அவள் முகத்தில் தெரிந்த பரவசம் என்னைக் கவர்ந்தது. நானும் அவளருகில் சென்று பார்த்தேன். மழை இலேசாகத் துாறிக்கொண்டிருந்தது. பொன்னிறத்து வெய்யிலில் மரங்கள் நீர்த்துளிகளுடன் பளபளத்து நின்றன. வானத்தில் வட்டத்தின் பாதியாய் ஒரு வானவில்!
அந்தக் காட்சி என் மனதில் அறைந்து வீழ்த்துவதாய்" இருந்தது. என் மண வாழ்க்கை தொடங்கிய புதிதில் இதே மாதிரி ஒரு மாலை வேளையை நான் சந்தித்திருக்கிறேன். இதோ, இவள் நிற்பது போலப் பரவசமாய் நானும் நின்றிருக்கிறேன். அதன் அழகை ரசிப்பதற்கு ஆசை ஆசையாய் மனைவியை அழைத்தபோதுதான் எனக்கு. அந்த அதிர்ச்சி. "இன்றைக்குத்தான் இவர் வானவில்லைப் பார்க்கிருர்’ என்று பதில் வந்தது; அவள் வரவில்லை! ஒரு யுகமல்ல ஒரு கோடி யுகங்கள் நான் அந்த யன்னலடி யிருந்து அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந் தாலும் "இதோ பார் நான் இதை எடுத்துக்கொண்டேன்" என்று எதையாவது காட்ட முடியுமா என்று வாதம் *செய்கிற மரக்கட்டை இதயத்தை வைத்துக்கொண்டு,
இவள் அனுபவிக்கக் காத்திருக்கிற இன்பம்தான் என்ன்"
ஜனனி () 115

Page 59
என்று என்னுள் ஆத்திரமாய் வந்தது. என் கூடவே நின்று அந்தக் காட்சியை ரசிக்கும் மனப் பக்குவம் அவளிடம் இருந்திருக்குமானுல் நானும் அவளும் கோடானு கோடி காலம் உயிர் வாழ்ந்தாலும் பெற்றிருக்க முடியாத ஆனந்தத்தை அந்த ஒரு கணத்தில் பெற்றிருக்க முடியாதா?
நான் ஜனனியைத் திரும்பிப் பார்த்தேன். கவிஞன் ஒருவன் தன்னுள் எழுந்த கற்பனையின் தன்னை மறந்த லயத்தில், உள்நோக்குகையாய்த் தன் இதயத்தில் தானே ஆழ்ந்து நிற்பது போல அவள் நின்றிருந்தாள்! “நீ உன் வாழ்க்கைத் துணையைத் தவறுகத் தேர்ந்தெடுத்து விட்டாய்" என்று யாரோ சொல்வது போல இருந்தது.
சந்தர்ப்பம் செய்த சதியால் வரவிருந்த வாழ்க்கை தட்டிப் போயிற்று அதனுல் ஏற்பட்ட விளைவை நிரந்தரமாக்கத் துணைநிற்கிறது சதிகாரச் சமுதாயம். இரண்டையும் மனமாரச் சபித்தேன். ஆற்றமையால், சந்தர்ப்பமாவது மண்ணுங் கட்டியாவது, எனக்குப் பிடிக்காத வாழ்க்கையை நான் மாற்றியமைக்கத்தான் போகிறேன் என்று அந்தக் கணத்தில் ஆவேசமாய் நினைத்தேன். என் மனைவிக்குத் தன் மனத்தில் என்ன நினைப்பு? நானும் தன்னைப் போல் மரக்கட்டை என்று எண்ணிக் கொண்டாளா? அல்லது தான் என்ன செய்தாலும் நான் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டிய அளவுக்குப் பணம் கொடுத்து என்னை வாங்கியாகிவிட்டது என்று நினைப்பா? இப்போதுதான் முப்பது வயது எனக்குஇன்னும் எத்தனை காலமோ. வேண்டாம் இந்த நரக வாழ்க்கை எனக்கு. அவளுடனுன பந்தங்கள் அனைத்தை யும் ரத்துச் செய்துகொண்டு, இவளை...!
நினைவுகளின் அழுத்தத்தால் முகமெல்லாம் வியர்த்தது. இந்த நினைவுகளாலேயே என் மனைவி எனக்குத் தந்த
1 1 6 % ] sofagsr

நிராசைகளுக்கு அவளைப் பழிவாங்கிவிட்ட திருப்தி மனதில் எழுந்தது. திருட்டுத்தனமாய் ஜனனியை ஒரு முறை பார்த்தேன். திருமணம் செய்யாவிட்டால் போகிறது; கடற்கரையில் போய் நின்றல் காற்று நம்மைக் கேட்காமலே இதம் தருவதில்லையா? அது போல இவள் அருகே ஒரு நண்பன் என்ற முறையில் நின்றலும், எல்லோரிடமும் பிரவகிக்கிற அன்பு என் மேலும் படாமல் போய்விடுமா?
இந்த நினைப்பு எழுந்த பிறகு நான் அவளுடன் நெருங்கிப் பழகச் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொண்டேன். அவளுடன் நெருங்கிப் பழகப் பழகத்தான் எனக்கும் என் மனைவிக்கும் இடையே இருந்த உறவின் அர்த்தம் தெளிவாய்ப் புரியலாயிற்று. திருமணம் என்று புனிதப் பெயரிட்டு அட்சதைகளைத் தூவி மலர் மாலைகளாற். பிணித்துவிட்ட வெறும் "செக்ஸ10வல் கொம்பனியன் வழிப்' தான் அது. உடம்பைக் கடந்த உன்னதமான ஒரு. உறவைத்தான், உடம்பைப் பற்றிய வாழ்வையும்விட திருமணங்கள் ஏற்படுத்த வேண்டியது என்று தீர்மான மாக நினைக்கலானேன். இவள் மட்டும் என் வாழ்க்கைத் துணையானுல் என்ற எண்ணம் அடிக்கடி எழலாயிற்று. இவளே என் வாழ்க்கைத் துணையாக வாய்த்திருந்தால் என் திருமணம் நிச்சயம் ஸ்வர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட தாகத்தான் இருந்திருக்கும். இப்போதோ நரகத்திலும் விட மோசமான ஏதோ ஒரு இடத்தில் நிச்சயிக்கப்பட்டு: விட்டது போன்ற என் வாழ்க்கை, சந்தர்ப்பங்கள் எப்படி ஒரு மனிதனின் வாழ்வை எடுக்கவோ, கெடுக்கவோ செய்கின்றன என்று உணர்த்துகிறது. மீண்டும் ஒரு முறை, சந்தர்ப்பங்களையும், அவற்றல் ஏற்படும் விளைவு களை நிரந்தரமாக்கிவிடத் துணை நிற்கும் சமுதாயத்தையும் வெறுத்தேன். முன்பு போலச் செயலற்று, அந்த நினைப்பே பாவம் என்பது போன்ற உறுத்தலுடன்
egarrañ [0, 117

Page 60
வெறுக்கவில்லை; எதையாவது செய்து இழந்த வாழ்வை மீட்டுக்கொண்டுவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் வெறுத்தேன். என் மனதில் இன்னும் கொஞ்சம் நிமிர்ந்து
நிற்கத் தைரியம் இருக்குமானுல் சமுதாயத்தைத் துச்ச
மாக மதித்து உதறிவிட முடியாமல் போய்விடுமா?
இந்த நினைவுகள் என்னை ஜனணியுடன் மேலும் இறுக்க மாகப் பிணைத்தன. என் மனத்துள் நானகவே நினைத்துக் கொண்ட நினைப்புகளால் என்னை ஜனனிக்கு நெருங்கிய, மிக நெருங்கிய உறவினனுகக் கருதிக்கொண்டேன். அவள் முகத்தில் தோன்றக்கூடிய சோகங்களையும், சோர்வுகளையும் என் கையினுல் துடைத்துவிட வேண்டும் என்ற துடிப்பு என்னுள் ஏற்படலாயிற்று. அப்படி ஒரு துடிப்பு, அவளிடம் ஏற்பட்டதா என்பதை ஆராய்ந்து கொண்டிருக்க எனக்குப் பொறுமை இல்லை. என்னுடைய அளந்தறியும் பார்வை அவளை நான் பார்க்கத் துடித்த லட்சியப் பெண்ணுகக் கண்டு வணங்கி அடிமையாய்ப் போகப் போதுமானதாய் இருந்ததே ஒழிய, அவள் இதயத்தில் என்பால் ஏற்பட்டிருக்கக்கூடிய நெகிழ்ச்சியின் அளவை, அல்லது தன்மையை அறியப் போதுமானதாக இருக்கவில்லை. ஆனல் அப்படி ஒரு நெகிழ்ச்சி அவளிடம் ஏற்பட்டு எனக்காகக் காத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவும் இல்லை. சில வேளை அப்படி ஒரு நெகிழ்ச்சி அவளிடம் ஏற்பட்டுக்கூட இருக்கலாம். என்னிடமிருந்த கயமைத்தனமான சுயநலத்தின் உந்தலால் அவளுக்கு நான் திருமணமானவன் என்பதையே தெரிவிக்காமல் இருந்து வந்திருக்கிறேன். அப்படியில்லாவிட்டாலும்கூட என்னுடைய பரிதாபகர மான சோகக் கதையை, குழந்தையாக இருந்து பையனுக மாறி காளையாக வளர்ந்துவிட்டது வரை எனக்குக் கிடைக்காத அன்பைப் பற்றிய ஏக்கத்தை அறிய வைத்த பின்னரும், அவளுடைய இதயத்தில் அப்படி ஒரு
118 கவிதா ,

நெகிழ்ச்சி ஏற்படாமல் போய்விடும் என்று நான் எண்ணி வில்லை. அS ஞடைய நல்ல சுபாவத்தை, பிறர் மனம் புண்படச் சகிக்காத இரக்க குணத்தை என் சுய நலத்துக் கான கருவியாகக் கொள்ளக் கருதுவது தவருக இருக் கலாம். ஆனல் ஒன்று நிச்சயம். அதாவது அவளுடைய அன்பு என் கைத்துப்போன இதயத்தைப் புரிந்து கொள்ளாமல் போகாது! இந்த ஒரு ஆதாரத்தின் துணை கொண்டு என்னுடைய இந்த வெறும் வாழ்க்கைக்கு அர்த்தம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை நினைக்கத் தயக்கமாகத்தான் இருந்தது. ஆனுலும் ‘நான் ஒரு வாலிபன், வாழ்க்கைப் பாதையிலே கடந்த தூரம் கொஞ்சம்; இன்னும் கடக்க வேண்டிய தூரம் நீண்டு தெரிகிறது. மனம் திறந்து கதறினுல் அவள் உள்ளம் உருகாமல் போய்விடுமா என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன். விவாகரத்தும் மறுவிவாகமும் அப்படி
ஒன்றும் அதிசயமுமல்லவே!
அன்று மாலையே அவளுடைய சந்நிதானத்தில் என்னுடைய இதயக் கதவும் திறந்து கொண்டது. பாதிரியாரிடம் பாவ மன்னிப்புக் கேட்பவன் மாதிரி என்னிடம் உறுத்திக்கொண்டிருந்த நினைவுகள் அத்தனையையும் கொட்டித் தீர்த்தேன். பயனற்ற காலக் கருவியாக என் வாழ்க்கை கழிவதிலிருந்து என்னைக் காப்பாற்றி மீதமிருக்கிற வாழ்நாளை இன்பமாய் வாழத் துணை செய்யுமாறு மண்டியிடாத குறையாகக் கேட்டுக் கொண்டேன்.
அவள் என்னை அமைதியாகப் பார்த்தாள். அதில் தாய்மைக் கனிவு இப்போதும் தெரிந்தது. அதனுல் என் நம்பிக்கை வலுத்தது. கொஞ்ச நேரம் தன் கைவிரல் நகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு என் முகத்தைப் ப்ார்த்து, "பாத்ரூம் கழுவுவதற்காக எங்கள் வீட்டுக்கு ஒரு பெண் வருவாள்; அவளுடைய வேலை
ஜனனி () 19

Page 61
சரியாயில்லை என்பதற்காக வேறு ஒருத்தியை வரும்படி கேட்டாள் என் அம்மா. அவள் மறுத்துவிட்டாள் என்ருள்.
தொடர்பற்றுப் பேச இது சந்தர்ப்பமல்ல என்று எனக்குத் தெரிந்தது. அதற்கும் இதற்கும் தொடர்பைக் காண முயன்றேன், நான். சட்டென்று பிடிபடவில்லை. அவள் தொடர்ந்து பேசினுள்.
"அவ்வளவுக்குப் போவானேன்? பிச்சைக்காரர்களில்கூட ஒருவனுடைய வாடிக்கையான இடத்தை இன்னுெருவன் பிடித்துக்கொள்ளமாட்டான். அப்படி ஒரு விளக்கம், ஒரு ‘அண்ஸ்ராண்டிங்' அவர்களுக்குள்ளேயே. வெறும் வயிறுகள் சம்பந்தப்பட்ட விஷயம்தான் இது. இதயங்கள் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் ஒரு பெண்ணுக்கு இன்னெரு பெண் என்ன செய்தால் அவளுடைய பெண்மை அர்த்தமானதாகும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?’ என்று நேரடியாக விஷயத் துக்கு வந்தாள்.
நான் வெலவெலத்துப் போனேன். இவ்வளவு அமைதி யாக இவள் கூறத் தொடங்கிய பதில் இதுவாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. உரத்துச் சத்தம் போடாமல் கண்ணை உருட்டி விழிக்காமல் ஆழமாகவும் அர்த்த மாகவும் என் இதயத்தில் அறைவிழும் முதல் சந்தர்ப்பம் இது. நான் அலமந்து எழுந்து நின்றேன். அவளும் எழுந்து நின்றபடி "போய்விடாதீர்கள்! எனக்குச் சம்மதம் இல்லை என்றல் என் மனம் இரும்பு என்று ஆகாதா. எனக்குச் சம்மதம்தான். உங்கள் குழந்தையை என்ன செய்வதாக உத்தேசம்?” என்று தொடர்ந்து கேட்டாள்.
'ப்பா" என்று கீழ்வாயில் முத்தாகத் தேங்கிய உமிழ் நீர் தாடையில் பட்டுத் தெறிக்க இரு காதுகளையும் தன்
120 கவிதா

கைகளால் பிடித்துக்கொண்டு என் முகத்தில் எதையோ தேடுவதுபோல என் குழந்தையின் முகம் என் கண்ணெதிரில் தோன்றிற்று. ஒ! குழந்தை! ஏன் நான் அவளைப்பற்றி இதுவரை எண்ணவில்லை? இந்த உலகத் தில் எதை ஈடாகத் தந்தாலும் அந்த வாத்ஸல்யத்தை என்னுல் இழந்துவிட முடியுமா?
என் முகத்திலிருந்து எதையோ படித்துத் தெரிந்து கொண்டாற்போல அவள் முகம் வெற்றியாய்ச் சிரித்தது.
'இப்போ நீங்கள் ஒரு வகையான அன்புக்கு ஏங்குவது போல நாளைக்கு அவளும் ஒரு வகையான அன்புக்கு ஏங்கவேண்டுமா? ஒருவர் பொறை இருவர் நட்பு என்பார் கள். வெறும் நட்புக்கே அப்படியானல் தாம்பத்தியத் துக்கு எத்தனை பொறுமை வேண்டும்? உங்கள் குழந்தை நீங்கள் எவ்வளவு வேண்டுமானுலும் பொறுத்துப் போகப் போதிய காரணமாக ஆகமாட்டாளா? சரியோ பிழையோ நமது சமுதாயம் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கிற விஷயத்தில் பெண்ணிலும்விட ஆணுக்கே அதிக சந்தர்ப்பம் கொடுக்கிறது. அதைச் சரியாகப் பயன்படுத்தாமல் பிழை செய்தது நீங்கள். தண்டனை மட்டும் அவளுக்கா?” என்று சிரிப்பு மாருமலே கேட்டாள்.
நான் அவளை நிமிர்ந்து பார்த்தேன். சிரிப்பில் கலக்காமல் கலங்கிய கண்ணில் இரண்டு நீர் முத்துக்கள்!
எனக்கு எல்லாம் விளங்குகிறது. நான் சுயநலமாய் அவளுள் மூட்டிவிட நினைத்த கனல் மூண்டுதான் விட்டிருக்கிறது. அனைத்தும் அ2ணந்து தனக்குத் தானே ஆறுதலடைந்து நிமிரும் வரை அந்த முத்துக்கள் அவள்
க.- 8 garafi O 121

Page 62
கன்னங்களில் மாலை கோத்துக்கொண்டே இருக்கப் போகின்றன. அவளும் சுயநலமாய்த் தன்னைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தால் ஒரு நொடியில் சீரழிந்து போயிருக்கவேண்டியதுதானே என் குடும்பம்! நான் தலையிலிருந்து கால்வரை தூக்கிப்போட்டாற்போல் சிலிர்த்தேன். எப்போதோ ஒருநாள் அம்மன் சந்நிதியில் நெருக்கத்தில் நின்றது நினைவுக்கு வந்தது.
ஜனனி-அவள் தாய்-அப்படி நினைக்கவில்லை. அவள் கண்ணில் என் குழந்தை நாளைக்குப் படப்போகிற அவல மல்லவா முதலில் பட்டது? பேராசையாய் அந்த அன்புக்கு நானே வாரிசாக வேண்டும் என்று நினைத்தேன். அவளோ, எனக்கு, என் மனைவிக்கு, என் குழந்தைக்கு, எல்லோருக்குமே அன்னையாகத் தன்னைக் கற்பித்துக்கொண்டிருக்கிறள்!
வாய்விட்டுச் சொல்ல முடியாத நன்றியுணர்வுடன் அவளைப் பார்த்தேன். அவள் கண்ணில் அந்தத் தாய்மைக் கனிவு தனியாகத் தெரிந்தது. நான் இப்போது பித்தனய்ச் சுழலவில்லை. அதை வணங்கி விடைபெறுகிற பாவனையாய் நேரே அவள் கண்ணிலேயே பார்த்தேன்.
1220 கவிதா

ஒரு தனி நெஞ்சம்
திருவாசகத்தை யாரோ "போண் மெல்டிங் ஸோங்ஸ்" என்று கூறியிருக்கிறர்கள் என்று நான் கேள்விப்பட்டி ருந்தேன். "வேனில் வெள்மலர்க் கணைக்கும்" என்று அந்த மதுரமான குரல் பாடத் தொடங்குகையில் அது என் அனுபவமாகிக்கொண்டிருந்தது. *ஊனெலாம் நின்றுருகப் புகுந்தாண்டான் இன்றுபோய் வானுளான்" என்று அந்தக் குரல் குழைகையில் என் ஊனும் உருக நான் உணர்ச்சி வசப்பட்டுக் கவிழ்ந்து படுத்துத் தலையணையை இறுகப் பிடித்துக்கொண்டேன்.
எங்கிருந்து வருகிறது அந்தக் குரல்? அந்தச் சன்னமான பெண் குரலில் ஏன் இத்தனை சோகம்? இந்தச் சோக மயமான இசையின் ஊடாக அவள் இறைவனிடம் எதைக் கோரித்தான் இப்படி உருகுகிறளோ! எனக்குள் நானே இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொண்டேன். பதில் தரப் பக்கத்தில் யாரும் இல்லை!
அந்தக் குரலைக் கேட்கும் அனுபவம் எனக்கு என்னுடைய சிறுவயதை நினைவூட்டுகிறது. என்னையும், தம்பிகளையும் சுற்றி உட்கார வைத்துத் தேவார, திருவாசகப் பாடல்களைச் சொல்லித் தருவார் அப்பா, என்னுடைய பத்தாவது வயதில் அப்பா செத்துப்போக, அந்த வாழ்க்கையும் மாறிப்போயிற்று.
ஒரு தனி நெஞ்சம் () 123

Page 63
மங்கலாக என்னுள் எழுந்த இந்த நினைவுகள், அந்த அதிகாலைப் போது, உருக்கமான கீதம் எல்லாமாகச் சேர, நான் மயங்கிப்போய் கிடந்தேன்.
முதல் நாள் மாலை இந்த வீட்டின் ஒரு அறைக்கு நான் குடிவந்தபோது இப்படி ஒரு தெய்வீக அனுபவத்தை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. ஏனெனில் வீட்டுத் தலைவி என்று எனக்கு அறிமுகமான ஒரு பருமனுன அம்மையாரின் குரல் டிரங்குப் பெட்டியைத் தரையில் வைத்து இழுப்பது போல இருந்தது. அவர்களுக்குப் பிள்ளைகள் இரண்டுபேர் - சிறுவர்கள். வேறு குடித்தனங் கள் வைத்திருப்பார்களோ என்று எண்ணவும் இடமில்லை. எனக்குக்கூட இல்லை" என்று சொல்லமுடியாமல்தான் இடம் தந்திருக்கிறர்கள். அப்பாவின் தூரத்து உறவுக் காரர் திரு. சாம்பசிவம். இத்தனை சுதந்திரமாக இங்கே பாடுவது, நிச்சயம் அவருக்கு உறவுக்காரியாகத்தான் இருக்கவேண்டும். யார்? என்ன உறவு?
அரை மணித்தியாலம்வரை பொங்கிப் பிரவகித்த இசை வெள்ளம் வடிந்துவிட்டது. வேறெங்குமல்ல; என் இதயத்துக்குள்ளே தான். அதனல், இந்தக் காலை வேளையில் என் மனம் தெளிவாக, அமைதியாக இருக்கிறது. என்னல் ஒழுங்காகச் சிந்திக்கவும் செயல் படவும் முடிகிறது. இங்கே நலமாக வந்து சேர்ந்திருப் பதைப்பற்றியும் உத்தியோகம் மனதுக்குப் பிடித்திருக் கிறதா என்பதைப்பற்றியும் அம்மாவுக்கு எழுத வேண்டும் என்பது நினைவுக்கு வந்தது. என்னைச் சுற்றி என் அறை ஒரே அலங்கோலமாய் இருப்பது கருத்தில் உறைக்கிறது. பரபரவென்று எல்லாப் பொருட்களையும் ஒழுங்காக அடுக்கி வைத்தேன். ஒரு நாளுமில்லாதபடி அம்மாவுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதிக் கவரில் வைத்து ஒட்டினேன். புதிய வேலையில் தெரிந்த சிக்கல்கள் எல்லாம் இன்று தூசாகத் தெரிகின்றன. அந்தக்
1240 கவிதா

கானத்துக்கு இத்தனை வலுவா? என்னல் நம்ப முடிகிறது" ஏனென்றல் இசைக்கு என்னை மயக்கி ஆளும் சக்தி எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. எல்விஸ் பிரெஸ்லியும் ஜிம் றிங்ஸ"oம் தோற்க, இன்று இவள் வென்றிருக்கிருள்.
கைகளைத் தலைக்கடியில் கொடுத்து மல்லாந்து படுத்தவாறே யோசித்துக்கொண்டிருந்தேன், நான். தினமும் அதிகாலையில் என்னைத் துயில் எழுப்பும்
கானம் தேவகான மா? மானிடருடையதானுல், கண்ணிலே தென்படாமல் அந்த வீட்டில் அப்படி அடைந்துகொண்டு வாழும்படியான துர்பாக்கியம்
என்ன நேர்ந்துவிட்டது அந்தக் குரலுக்குரியவளுக்கு? திரு. சாம்பசிவத்தின் திரண்ட செல்வத்தால் ஈடு கொடுத்துச் சரிக்கட்ட முடியாத என்ன துன்பம் அந்தத் தனிமனத்தின் மூலையில் உறைந்து கிடக்கும்?
நான் இவை ஒன்றையும் அவரிடம் வாய்விட்டுக் கேட்க வில்லை. இவை எனக்கு அநாவசியம் என்று அவர் நினைக்கலாம். ஆணுல், என்னை அறியாமலே என்னுள் புகுந்து நல்லனவும், தீயனவும் காட்டுகின்ற அந்தக் குரலுக்குரியவரைப்பற்றி அறிந்துகொள்ளத் துடிப்பது அநாவசியமானதாக எனக்குப் படவில்லை. எல்லா வற்றுக்கும் மேலாக, அந்தக் குரலில் தெரியும் இனந் தெரியாத வேகம் என் இதயத்தைப் பிழிவதை என்னுல் அலட்சியம் செய்துவிட முடியவில்லை. யாரிடம் போய்க் கேட்பது?
கதவு மெதுவாகத் தள்ளப்பட்டது. தயங்கித் தயங்கி ஒரு பிஞ்சுப்பாதம் என் அறைக்குள் அடியெடுத்து வைத்தது. **வாம்மா மஞ்சு, என்ன வேண்டும்?” என்று நான் உற்சாகப்படுத்தியதும் அவள் அறைக்குள்ளே வந்தாள்சாம்பசிவத்தின் சின்ன மகள்!
ஒரு தனி நெஞ்சம் ) 125

Page 64
"மாமா இது ஒடஞ்சு போச்சு. ஒட்டிக் குடுக்கறிங்களா?” என்று,ஒரு சின்ன ஒட்டகச் சிவிங்கியின் தலையை வேறக வும், உடம்பை வேருகவும் என்னிடம் ஒப்படைத் தாள் அவள். ஒரு சிறிய பென்சில் சீவும் கட்டர். என்னிடம் வந்தால் காரியம் சாத்தியமாகும் என்று நம்பி வந்திருக்கின்ற அந்தக் குழந்தை உள்ளத்தை ஏமாற்றி வெளியே அனுப்பிவிட எனக்கு மனம் வரவில்லை. டிராயரைத் திறந்து 'யூஹ"0" டியூப்பை எடுத்தபோது பளிச்சென ஒரு எண்ணம். இவளிடம் கேட்கலாமே. ஒட்டிக் கொடுக்கையில் "தாங்ஸ் மாமா' என்று ஒட இருந்தவளைப் பிடித்துவைத்து அந்தக் கேள்வியைக் கேட்டேன். அவசரத்தில் அவள் கூறிவிட்டு ஓடியதிலி ருந்து நான் தெரிந்துகொண்டது, அவள் சாம்பசிவத்தின் விதவைச் சகோதரி என்பதுதான்.
தினமும் அதிகாலையில் என்னைத் துயிலெழுப்பி, அந்த நாளைய போராட்டத்துக்கு வேண்டிய தைரியத்தையும், சாந்தியையும் என்னுள் நிறைத்து அன்னையாய், வழி காட்டியாய் என்னை இயக்கிக்கொண்டிருந்த அந்தத் தெய்வீகக் குரலுக்குரியவள் ஒரு விதவை. "ஊன் எல்லாம் நின்றுருகப் புகுந்தாண் டான் இன்றுபோய் வானுளான்” என்று உருகுவதன் அர்த்தம் எனக்கு இப்போதுதான் முழுமையாகத் தெரிகிறது. எங்கேயோ பாய்ந்திருக்க வேண்டிய இத்தனை உணர்ச்சிமயமான பிரேமை, அது பறிக்கப்பட்ட துயரத்தில், இத்தனை Gølgs udmes ஆண்டவனிடம் பிரவகிக்கிறதோ?
எப்படி இருந்தாலும் எனக்கு அந்த அம்மையாரிடம் மிகுந்த பக்தி ஏற்பட்டுவிட்டது. ஏதாவது ஒரு நல்ல நாளில் அந்த அம்மையாரின் கால்களில் வீழ்ந்து வணங்கி ஆசீர்வாதம் பெறவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
126 x கவிதா

ஒவ்வொரு நாளும் அவள் பாடுகின்ற திருப்பள்ளி எழுச்சி யுடன் எனக்கு காலை விடிகிறது. அந்த ஒவ்வொரு காலையிலும் அவள் பால் என் இரக்கம் மலையாகத்தான் குவிகிறது. அத்தனை உருக்கமாக அவள் பிரார்த்திக் கிருள். இந்த நகரின் வேகத்துக்கும் நாகரிகத்துக்கும் அடிமைப்பட்டுப் போய்விடாது என்னை மனிதனுக வாழ வைத்துக்கொண்டிருந்த அவளிடம் நன்றியும்கூட நாளுக்கு நாள் வளரத்தான் செய்தது. அம்மாவுக்கு எழுதும் கடிதங்களில் எல்லாம் அந்தச் செயலைப்பற்றி நான் குறிப்பிடாமல் இருந்ததில்லை. அம்மா எழுதி யிருந்ததுபோல அப்பாவின் அசீர்வாதம்தான் இப்படிக் கண்ணுக்குப் புலனுகாத கீதமாக என்னைச் சூழ்ந்து காப்பாற்றுகிறதோ! இளம் வயதும், கைநிறையச் சம்பளம் தரும் உத்தியோகமுமாக நான் இங்கே வந்த போது, போகாத பொழுதைக் கழிக்க எத்தனையோ வழிகள் என் மனதில் இருந்தன. ஆணுல் தாய்மையான அந்தக் குரலின் சக்திக்குக் கட்டுப்பட்டு, சிகரெட் குடிக்கிற ஒரே ஒரு கெட்ட பழக்கமும் என்னை விட்டுத் தயங்கித் தயங்கிப் பிரிந்துபோயிற்று. இங்கிருந்து புறப் படுகின்ற காலை வேளைகளில் மனம் நிறைய அமைதியை எடுத்துச் சென்று நாளாந்தப் போராட்டங்களுக்கு விலை யாகக் கொடுத்துவிட்டு வருகிறேன். ஆனலும்கூட எதையும் இழந்த உணர்வு தெரிவதில்லை. நான் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன். மன நிறைவு என்பது இலேசில் கிடைக்கக்கூடியதா என்ன?
குழந்தை மஞ்சுளா எனக்குத் தோழி. நான் அவளுக்குத் தோழன். இரண்டு பேருக்குமிடையில் அபூர்வமான ஒரு பிணைப்பு இருந்தது. கசியக் கசிய உள்ளங்கையில் தின் பண்டம் எதையாவது பொத்தி எடுத்துவந்து அவள் நீட்டும்போது மறுப்பதற்கு எனக்கு மனம் வருவதில்லை. இதுவும்கூட என்னிடம் ஒரு மாறுதல்தான். நான் ஒவ்
ஒரு தனி நெஞ்சம் () 127

Page 65
வொரு சின்ன இதயத்தையும்கூட மதிப்பதற்குக் கற்று வைத்திருக்கிறேன். ஜூடோ பழக வேண்டாம் என்று அன்னை வேண்டி வேண்டிக் கெஞ்சியபோது விட்டுக் கொடுக்காத நான், என்னுடைய கிரிக்கெட் பட்டைத் தொட வேண்டாம் என்று தம்பியைக் குட்டி அழவிடுகிற நான், இப்படி மாறிப்போய் இருக்கிறேன். இந்த வீட்டில் ஒவ்வொருவருடையதுமான செயல்களும், மனமும் எனக்குப் புரிகிற விதத்தில் நானும் மாறிக் கொண்டிருக்கிறேன் என்பது பிரமையா?
பிரமையாக எப்படி இருக்கமுடியும்? அன்று நான் விவேகானந்தரின் வாழ்க்கையைப் பற்றிய நூலொன்று வாங்கி வந்தேன். அதை ஷெல்பில் வைக்கப்போன போது, என்னுடைய பழைய மனம் என்னைப் பார்த்துச் சிரித்தது. அகாதா கிறிஸ்டியையும், ஏர்ல் ஸ்டான்லி கார்டனரையும், படிந்திருந்த தூசியைத் தட்டிவிட்டு ஜன்னலில் எடுத்து வைத்தேன். கூடவே பொப்புல மம்பேவரிட்ஸ் பாட்டுப் புத்தகங்களில் சிலவற்றையும் தூக்கி வைத்தேன். பழைய புத்தகங்கள் வாங்குபவர் களிடம் கொடுத்துவிடலாம். சதா சீட்டியும் பாட்டுமாக அமர்க்களப்படுகிற எனது உதடுகள் எப்படித்தான் அவற்றை மறந்துவிட்டனவோ. மனிதன் துழிநிலைக் கேற்ப மாறுகிறன் அல்லது மாற்றப்படுகிறன் என்பது உண்மையா? உண்மையானுல் இன்று இருக்கிற நான் இனி வரப்போகிற ஏதோ ஒரு தழ்நிலையில் மாறி விடுவேனு? இப்படியே மாறி மாறிக்கொண்டிருந்தால் உண்மையான நான் என்பது யார்? சிலவேளை, மனதில் அதிக பாதிப்பையும், பிடிப்பையும் ஏற்படுத்துகின்ற ஒருவிதச் சூழலுக்கு ஒரு மனதை உருவாக்குகின்ற சந்தர்ப்பம் அதிகம் கிடைக்கிறதோ?
எனக்குச் சிரிக்க வேண்டும் என்று தோன்றியது. நான் ஏன் இப்படித் தத்துவ விசாரணையில் இறங்க வேண்டும்?
128 () கவிதா

அத்வைதம், துவைதம் என்றெல்லாம் திரு. சாம்பசிவம் அடிக்கடி என்னிடம் கதைக்கிறர். ஆத்மீகத்தைப்பற்றி அவரிடம் நிறைய விசாரம் இருக்கிறது. அவரிடம் இருந்து என்னிடம் தொற்றிக்கொண்ட விசாரமோ இது? இந்த இடத்தில், அவர் ஒருநாள் என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னதை நினைத்துப் பார்க் கிறேன்.
'தம்பீ, இன்றைக்கு உலகம் போகிற வேகத்திலும், பரபரப்பிலும் உள்ளம் என்ற ஒன்றே, ஆத்மா என்ற ஒன்றே இருக்கிறது என்பதைப்பற்றி அதிகமானேருக்குப் பிரக்ஞையே இல்லை. கல்வி, அதுகூடப் போகிறபோக்கில் டாக்டர்கள், என்ஜினியர்கள் என்று புதிய காட்டு மிராண்டிகளைத்தான் உருவாக்குகிறது என்று ஏதோ ஒரு அறநெறிக்கல்வி பற்றிய நூலில் வாசித்திருக்கிறேன். இதில் உண்மை இல்லாமல் போய்விடவில்லை. முன் பெல்லாம் கல்விதான் ஆத்மீகத்தை வளர்த்தது. அந்தக் காலத்தில் கல்வியாளர்களை எல்லாம் 'சான்றேர்கள்’ என்றும் குறிப்பிடுவார்கள். இன்றைக்கு “எஜ-oகேடட்" என்று குறிப்பிடப்படுபவர்களில் எத்தனை பேர் சான்றேர் களாக இருக்கிறர்கள்? பொதுவாகப் பார்த்தால், அடுத் தவனும் வாழவேண்டும் என்ற நல்ல எண்ணம் பரவலாக அழிந்துபோய், தான் மட்டும், தனக்காக எல்லாம் என்று நினைக்கிறதைச் செயல்படுத்தத்தான் இன்றைய கல்வி அதிகமாக உதவுகிறது.” இப்படி அவர் சொன்னபோது அவருடைய சிவந்த உப்பலான முகம் மேலும் சிவந்து உப்பலாகக் காணப் பட்டது. உணர்ச்சிவசப்பட்டிருந்தார்.
"இன்றைய கல்வியைப்பற்றி உங்களுக்குத் திருப்திஇல்லை என்று தெரிகிறதே. சந்திர மண்டலத்துக்கே போய் வந்துவிட்டானே மனிதன். கல்வி வளர்ச்சி இல்லையா இது?’ என்று நான் கேட்டு வைத்தேன்.
ஒரு தனி கெஞ்சம் T 129

Page 66
"ஓ! நீங்கள் சொல்லுவது அறிவு வளர்ச்சி. நான் சொல்வது ஆத்ம வளர்ச்சி. இரண்டும் கல்வியால் ஏற்படவேண்டியதுதான். அறிவு வளர்ச்சியில் சந்திர மண்டலத்தைத் தொட்டு உயர்ந்து நிற்கிற நூற்றண்டில் ஆத்ம வளர்ச்சியைப் பொறுத்தமட்டில் அநேகமாக ஒவ்வொரு மனிதனும் அனுதையாக நிற்கிறன். அறிவின் வளர்ச்சியால் பூமியைத் தோண்டிப் புதையல் எடுத்துச் செல்வந்தனுகிற மனிதன் ஆத்ம வளர்ச்சியில்லாததால் பரஸ்பர அன்பும், நம்பிக்கையும் குறைந்துபோய் ஏழை யாகி நிற்கிறன். மனைவியைத் தவிக்கவிடுகிற கணவன், கணவனைத் தவிக்கவிடுகிற மனைவி, இளம் பிள்ளைகளைத் தவிக்கவிடுகிற பெற்றேர், முதிய பெற்ருேரைத் தவிக்க விடுகிற பிள்ளைகள். இப்படிக் குடும்பம்தோறும் காணுகிற காட்சிகள் எல்லாம் மனித மனத்தின் பரிணும வளர்ச்சிக்குச் சாட்சியங்களாகவா இருக்கின்றன? இந்த நிலை நீடித்தால் 'கணிபல்ஸ்’ மாதிரி மனிதனை மனிதனே இரக்கமற்றுக் கொன்று சாப்பிடும் நாள் விரைவிலேயே வந்துவிடுமே. அறிவின் வளர்ச்சியிலும், உடம்பின் வளர்ச்சியிலும் முன்னேறிக்கொண்டே போகின்ற மனித வர்க்கம், ஆத்ம வளர்ச்சியில் பின்வாங்கிக்கொண்டே போகிறதே - இதுதான் என்னுடைய வருத்தம்" என்றர்"
அவர் இப்படி எல்லாம் பேசுவது எனக்குப் புதிதல்ல. ராமகிருஷ்ண மிஷனுடன் அதிகம் தொடர்பு கொண்டவர். ராமகிருஷ்ணர், ஆதிசங்கரர் என்று நான் கேள்விப்பட்டுப் பரிச்சயமில்லாத பலரைப்பற்றியே எப்போதும் பேசுபவர். அதனுல் அவர் நோக்குகிற கோணம் எனக்கு விளங்குகிறது. நானும் சிறிது சிறிதாக அந்தக் கோணத் திற்குத் திரும்பிக்கொண்டிருக்கிறேன் என்ற உணர்வு ஏற்படுகிறதே - இதுதான் எனக்குப் புதிது.
“ u Trif...,”
30 கவிதா

என் சிந்தனை திடும்மென்று கலைந்தது. திரும்பிப் பார்த் தால் எனக்கு இதயமே உறைந்துவிட்டது. மஞ்சு எப்போது இங்கு வந்தாள்? எப்போது அந்த உயரமான ஸ்டூலில் ஏறினுள்? ஸ்டுல் கவிழ்ந்து குழந்தை விழுந்து விட்டாள். பிரக்ஞை தப்பிப் போயிற்று. பேச்சு மூச்சில்லை.
என் மனதில் ஏற்பட்ட பதைப்பில் சட்டென அவளை வாரித் தூக்கிக்கொண்டு ஒடினேன். 'LS6fulfi சாம்பசிவம்" என்று இரைந்தேன். பதில் இல்லை. குழந்தையைத் தனியாக விட்டுவிட்டு எல்லோரும் வெளியே போயிருக்கமாட்டார்களே!
எனக்கு இப்போது, இதுவரை என் கண்ணிலே பட்டிராத அந்தப் பெண்ணின் ஞாபகம் வந்தது. எந்த மூலையில் தன்னை மறந்து உட்கார்ந்திருக்கிருளோ, நிச்சயம் இங்கே தான் இருப்பாள்.
ஏதோ ஒரு தீர்மானத்தில், தினம் தினம் அந்தக் குரலைக் கேட்டுப் பழகிய திக்கில் நடந்தேன். தோளில் குழந்தை. மனதில் பதட்டம். கதவு திறந்துதான் இருந்தது. "அம்மா." என்று தொடங்கியவன் ஆச்சரியப்பட்டுப் போனேன். குழந்தையை நழுவவிடாதது ஆச்சரியம் தான.
சுமார் இருபது அல்லது இருபத்திரண்டு வயது மதிக்கக் கூடிய, வெள்ளைச் சேலை அணிந்திருந்த அந்தத் தபஸ்வினி, ஏற்கனவே கண்ணில் வாழ்ந்த சோகத் துடனும், புதிதாகக் குடியேறிய அதிர்ச்சியுடனும் எழுந்து நின்று என்னைப் பார்த்தாள். அந்தக் காட்சி, குளத்தின் நடுவே அல்லி மலர் பூத்துத் தலையை நீட்டுவதுபோல இருந்தது.
ஒரு தனி நெஞ்சம் 13i

Page 67
1 ஐயோ, மஞ்சுவுக்கு என்ன?’ என்று அவள் அலறிய பிறகு, நான் சுய உணர்வு பெற்றேன். பிறகு மஞ்சுளா வுக்கு சிகிச்சை அளித்ததும், இன்று அவள் ஓடோடித் திரிகிருள் என்பதும் இங்கே விரிவாக விவரிக்கத் தேவை யில்லாதவை. என் மனதில் அன்றைக்கு ஏற்பட்ட அதிர்ச்சி இருக்கிறதே அதுதான் இங்கே பிரதானம்.
“அம்மையாராவது மண்ணுங்கட்டியாவது. சாம்பசிவத் தின் மூத்த சகோதரியாக இருப்பாள் என்று எண்ணி யிருந்தேன். இவள் - இளைய சகோதரி. இந்தப் பச்சைப் பாலகியிடம் இருந்து அவள் கணவனைக் கவர்ந்துகொண்ட காலனைப் பார்த்தால் ஒரு உதை விடலாம் என்று தோன்றிற்று. நளினமான உணர்ச்சி களுடைய, செளந்தர்யவதியான அவள், வாழ்வதற்குத் துடிக்கிற வயதில், வாழமுடியாமல் உருகி உருகிச் செத்துக்கொண்டிருக்கிருள்.
திரு. சாம்பசிவத்தின் மேல் இருந்தாற் போலிருந்து எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. மணிக் கணக்கில் உட்கார்ந்து தத்துவம் பேசத் தெரிந்திருக்கிற அவருக்கு, மலைபோலச் செல்வம் சேர்த்துக் குவித்து வைக்கத் தெரிந்த அவருக்கு, இந்தச் சகோதரி படுகிற துன்பம் தெரியவில்லையா? தெரிந்தும் வேண்டுமென்றே அந்த வீட்டில் ஒரு மூலைக்குள் அவளை அடைத்து வைத்து ஆத்மீகத்துக்கு பலம் சேர்க்கிருரா? நான் அவரிடம் கண்ட பக்தி, நியமம், தொண்டு மனம் இவை எல்லாம் பொய்யாக உணர்ந்தேன். g
இவ்வளவு சிறிய வயதில் அவள் தனக்குத் தானுகப் பட்டு அனுபவிக்கிற துன்பம் அவர் இதயத்தில் கொஞ்சமாவது தைத்திருந்தால் இதற்குப் பரிகாரம் தேட முயற்சிக்க மாட்டாரா? முயற்சிப்பதாகத் தெரியவில்லையே. எனக்கு
132 ) கவிதா

அவருடைய மனிதத் தன்மையைப்பற்றியே சந்தேக மாய் இருந்தது. குழந்தை மஞ்சு விழுந்த அன்று, அவரும் மனைவியுமாக சினிமாவுக்கல்லவா போயிருந் தார்கள். எப்படி முடிந்தது அவளுடைய அண்ணனுக்கு? அவளுக்கு யாரோவான நான் இந்தச் சில நாட்களில் அவளைத் தவிர, அவள் படுகின்ற துன்பத்தைத் தவிர வேறு நினைப்பின்றித் தவிக்கிறேன். தன்னுடைய சோகம் கலந்த அமிருத கானத்தால் ஏற்கெனவே அவள் என்னுள் நிரப்பிவிட்டிருந்த இரக்கம் இப்போது பன்மடங்காகி எனக்கு அவளைத் தவிர வேறு நினைப்பு களே இல்லாமல் செய்துவிட்டிருந்தது. மல்லிகைப் பூவும், சாம்பிராணியும், சந்தனமுமாக மணந்துகொண்டி ருந்த அந்த அறையின் நடுவே, உடலில் வெள்ளைப் புடவையும் கண்ணில் சோகமுமாக "வாழ்க்கையின் மணத்தை எல்லாம் நான் இழந்துவிட்டேன்’ என்பது போல அவள் எழுந்து நின்ற அந்தக் கணம் என்னுள் நிரந்தர ஞாபகமாகிவிட்டது. ஆளைத் தெரியாமல் அடிமையாக்கிக்கொண்ட கீதம், ஆளைத் தெரிந்த பின் அம்பாகித் தைக்கிறது. "புக்கு நிற்பதென்று கொல்லோ என் பொல்லாமணியைப் புணர்ந்தே" என்று அவள் பாடும்போது, அந்தத் தவிக்கவிடப்பட்ட தனிமனதின் துயரம் என் மனதை முழுவேகத்துடனும் தாக்குவதால் ஒருநாளும் அழு தறியாத நான், அழுவதே ஆண் பிள்ளைக்கு அவமானம் என்று நினைக்கிற நான், மெளனமாக தலையணையில் முகம் புதைத்து அழுகிறேன்.
நான் கஷ்டம் தெரியாமல், கவலைகள் அறியாமல் வளர்ந்துவிட்டவன். பாடசாலை நாட்களிலும், கலாசாலை நாட்களிலும் பெண்களைக் கேலி செய்து அழவைப்பதில் பேர் பெற்றவன். இன்று இளைஞனுகி, உத்தியோகமும் பெற்றுப் பல காலம் சென்றுவிட்டது. இதுவரை என் மனதில் மென்மையான எந்த உணர்வுகளையும் எந்தப்
ஒரு தனி நெஞ்சம் () 133

Page 68
பெண்ணுமே எழுப்பியதில்லை. இவளோ, தானே மெளனமாகத் துடிக்கிற துடிப்பால் என் இதயத்தில் இரக்கத்தை எல்லாம் குவித்துக்கொண்டாள். இரக்கத்தை விடவும் மென்மையான உணர்வு எதுவும் இருக்க முடியுமா? அன்பென்ற அடிப்படை அல்லாமல், இத்தகைய பேரிரக்கம் என் மனதில் தோன்றுவதற்குக் காரணம்தான் என்ன? கேள்விக்குப் பதில் எனக்குத்
தெரியவில்லை!
கடற்கரையில், பூங்காக்களில், தெருவீதிகளில், தியேட்டர் களில் கணவன்மாரோடு உல்லாசமாக உலாவுகின்ற பெண்களைப் பார்க்கும்போதெல்லாம் அவள்தான் என் ஞாபகத்துக்கு வருகிருள். கோவில்களுக்கு முன்னுல் பூக்கடையில் சரம் சரமாய்த் தொங்குகிற மலர்களைப் பார்க்கும்போதும், போத்தல்களில் அடைத்து வைத்தி ருக்கிற குங்குமத்தின் வகைகளைப் பார்க்கும்போதும் என் ஞாபகத்துக்கு அவள் வந்துகொண்டிருந்தாள். என்னை அறியாமலே என் நினைவுகளில் அவளுக்கு இந்த முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. புற உலகில் இது நாள்வரை எனக்கு இருந்துவந்த கவர்ச்சிகள் எல்லாம் அற்றுப்போய், என் நினைவுகளில் ஒரே ஒரு கவர்ச்சியாய் அவள் மட்டுமே தெரிகிருள். -
இது - இதற்குப் பெயர் - இதற்குப் பெயர்தான். வேண்டாம் என்னுள்ளே அவளுக்காக எழுகின்ற இந்த உணர்வுகளுக்கு எனக்குத் தெரிகின்ற அந்தப் பெயரைச் தட்டிவிட்டு, வெளியுலகத்தின் முன்னுல் வாயைத் திறந்து கூற எனக்குத் தைரியம் வேண்டாமா? சாம்பசிவம் கழுத்தை நெரித்துப் போட்டுவிடமாட்டாரா? அம்மா தான் சும்மா இருப்பாளா? அவள், ஓ! அவள். அவளுள்ளும் ஒரு இதயம் இருப்பதை மறந்துவிடலாமா நான். பாரதியார் பாடியது போல "கைக்கும் வேம்பு
134 ) கவிதா

கசந்திடு செய்யாமல் - காட்சியற்ற கவினுறு நீர் விழி" என்ற வகையாகப் போய்விட்டால் - அது எத்தகைய பெருந்துயர்!
'தம்பீ, இந்தப் படத்தில் இருக்கிற பெண்ணை உனக்குப் பிடித்திருக்கிறதா என்று எழுது" என்று அம்மாவிடம் இருந்து கடிதம் வந்திருக்கிறது. இந்தப் படத்தில் இருக்கிற பெண் அழகாய் இருக்கிறளா என்று நான் எழுத வேண்டியது; மிகுதியை அம்மா பார்த்துக்கொள்ளு வாள்.
என் மனதில் நிழலாக ஒரு உருவம் எழுகிறது. அவள் பதுமையாய் மெல்ல அசைந்து நடக்கும் அழகு பார்த்து, அவள் கால்விரலுக்கு மெட்டியணிவித்து அழகு பார்க்க விரும்பியவன் நான். மெளனமாய்த் தன் இழப்புகளைத் தாங்கி நிற்கும் அவள் இதயத்தின் அழகு பார்த்து அதற்கு முழு மகிழ்ச்சியையும் மீட்டுக் கொடுத்து அழகு பார்க்க விரும்பியவன் நான். படத்திலிருக்கிற இந்தப் பெண்ணின் அழகு பார்த்து எழுத வேண்டுமாம். "இல்லையம்மா என்னுல் முடியாது. என் வாழ்வில் மங்களகரமான நிகழ்ச்சி ஒன்று நடைபெறத்தான் வேண்டுமென்றல் என் மனம் நிறைந்த மங்களகரமான பெண்ணுக எழுபவள், தன் வாழ்வின் மங்கலங்களை எல்லாம் இழந்த இவள்தான். இவளைத் தவிர வேறு எந்தப் பெண்ணுடைய அழகும் என்னைக் கவர முடியாது."
என் நினைவுகள் சாம்பசிவத்தைப் பற்றிப் படர்ந்தன. அவளைச் சிறை வைத்திருக்கிற மாதிரி அல்லவா அவர் வைத்திருக்கிறர்? ஆத்மீகம் ஆத்மீகம் என்று கூறிக் கொண்டு இப்படி ஒரு தனிமனத்தின் ஏக்கங்களுக்கும், அபிலாஷைகளுக்கும் சாகும்வரை தீர்ப்பு கொடுக்காமல்
ஒரு தனி நெஞ்சம் 0 135

Page 69
தர்மத்தைப்பற்றியும் அறத்தைப்பற்றியும் பேசுகிருரே. இது ஏற்றுக்கொள்ளத் தக்கதாகப் படவில்லை, எனக்கு. செத்துப் போனவனை உயிருள்ள ஒருவனுக நினைத்து பிரமையில் உணர்ச்சிகளைக் கொன்று கொண்டு வாழ் என்பது எந்தவித தர்மமாகவும் எனக்குத் தெரியவில்லை. ஒருநாள் சாம்பசிவத்திடமே இதுபற்றிக் கேட்டு விட்டேன். அவர் சொன்ன பதில் எனக்குத் திகைப் பைக் கொடுத்தது.
"நீங்கள் ஒரு தனிமனத்தின் பலவீனத்தைக் காட்டி வாதிடுகிறீர்கள். ஆனல் அவளும்கூட ஒரு தனிமனத் தின் உறுதியைக் காரணம் காட்டித்தான் தன்னை மற்றெரு விவாகத்திலிருந்து விலக்கிக்கொள்கிருள். அவள் திருமணம் செய்துகொள்ளச் சம்மதித்தால் அதை விட மகிழ்ச்சி எனக்கு வேறு கிடையாது."
அவர் உண்மைதான் பேசுகிருரா என்று நான் சந்தேகப் பட்டேன். ஏனெனில் தானகவே தெரிந்து எடுத்துக் கொண்ட வாழ்க்கை அவளுக்கு அத்தனை துன்பத்தைக் கொடுக்குமா என்ன? எப்படியிருந்தாலும் அவர் அதை என்னிடம் சொன்னுர் என்பதில் ஒரு முக்கியத்துவம் இருக்கத்தான் செய்தது. சீக்கிரமே அவர் சொற்களை அவரிடம் திருப்பிச் சொல்லவேண்டிய சந்தர்ப்பம் வரலாம் அல்லவா..?
கொஞ்ச நாட்களாகவே என் மனதில் அமைதி இல்லை. அம்மாவிடமிருந்து நான்கு கடிதங்கள் வந்துவிட்டன. ஒன்றுக்கும் பதில் போடவில்லை. இனி நான் செய்ய வேண்டியது என்ன என்பதுபற்றி ஒரு முடிவுக்கும் என்னுல் வர முடியவில்லை. ஆனல் விரைவிலேயே நான் ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டும் என்பது தெரிகிறது. மனதில் குழப்பங்கள் ஆழ, குழம்பியவனுகவே குமார வேலுக்கு முன்னுல் போய் நின்றேன்.
136 இ கவிதா

குமாரவேல் என்னுடைய நல்ல நண்பன். வேடிக்கை யாகப் பேசுவான். ஆனுலும் தெளிவான சிந்தனை யுடையவன். என் குழப்பத்தில் ஒரு சிறு அளவை யாவது தீர்த்துவைப்பான் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது. அவன் 'என்னடா?” என்று கேட்டபோது நான் சுற்றி வளைக்கவில்லை. நேரடியாகவே கேட்டேன். “விதவா விவாகத்தைப்பற்றி நீ என்ன நினைக்கிருய்?"
“பாரதிதாசனை எனக்கு நிறையப் பிடிக்கும்" என்று கையில் வைத்திருந்த சிகரெட்டின் சாம்பலைத் தட்டினன் அவன்.
எனக்கு ஆத்திரம் வந்தது.
“எப்போதும் தங்களைத் தீண்டாத துன்பம் மனிதருக்கு வேடிக்கையாகத்தான் இருக்கும் போலிருக்கிறது."
“டேய், இலக்கிய ஞான துனியம், பாரதிதாசன் கவிதை களைக் கையாலே தொட்டதுசுடட இல்லையா நீ? பாரதிதாசன் விதவா விவாகத்தைப்பற்றிக் கூறியிருப் பதைப் படித்தால் நீ அப்படியே நெகிழ்ந்துவிடுவாய். நீ மட்டுமென்ன நானும்தான். ஆனல் அதற்காக அவர் கருத்தை முற்ருக ஆதரிக்கிறேன் என்றும் சொல்ல முடியாது. நான் விதவா விவாகத்தை ஆதரிக்கிறேன்; ஆதரிக்கவில்லை; இரண்டும்தான். இந்த விஷயம் தனி. மனங்கள் சம்பந்தப்பட்டது. மாடு ஆடுகளைப்போல ஒரே விதமாக எண்ணிக்கொண்டு சட்டங்கள் வகுப்பது மனித மனங்களுக்குப் பொருந்திவராத விஷயம் என்பது என்னுடைய கருத்து. ஒரு பெண் செத்துப்போன வனையே நினைத்துக்கொண்டு தன் வாழ்க்கையைக் கருக்கி முடிக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மறுபடியும் விவாகம் செய்ய விரும்புகிறவர்கள் தாராள மாகச் செய்துகொள்ளலாம். ஆனல் எங்கேயாவது சில மனங்கள் மறுபடி திருமணத்தை நினைக்காமல் வாழ்ந்
ஒரு தனி நெஞ்சம் ( ) f37 9--ه 55

Page 70
தால் அவற்றைத் தேடிப்பிடித்து வணங்க நான் தயாராய் இருக்கிறேன். அவர்களுக்கு வைதஷ்யம் என்பது தண்டனை அல்ல; தவம். உடம்பைப்பற்றி மட்டுமல்ல, உள்ளத்தைப் பற்றிய வாழ்க்கையும் ஒன்று உண்டு என்று நிரூபிக்கிற அறம். அது இரக்கத்துக்குரியதல்ல; ஆராதனைக்குரியது.”
'உள்ளத்தைப் பற்றிய வாழ்க்கை" என்று அவன் சொன்னபோது சாம்பசிவத்தின் நினைவு வந்தது. அவரும்
கூட இதைத்தானே சொல்லிக்கொண்டு, தன் தங்கை யிடம் இதை எதிர்பார்க்கிருர்?
"ஆனல் குமாரவேல், உன்னுடைய கொள்கைகளுக்காக இன்னுெரு பெண்ணை அடைத்து வைத்து வருத்த மாட்டாயே நீ’ என்று நான் கேட்டேன்.
"நிச்சயமாய் இல்லை” என்ற அவன் என்னைக் கூர்ந்து பார்த்து "உனக்கேன் திடீரென்று இந்த ஆராய்ச்சி?” என்று கேட்டான்.
சமயம் வரும்போது சொல்கிறேன் என்று எழுந்து வந்து விட்டேன் நான்.
சாம்பசிவத்தின் மனைவி,மகப்பேற்றுக்காக மருத்துவமனை சென்றிருந்தாள். இரண்டு நாட்களாக வீட்டு வேலைகள் எல்லாம் சாம்பசிவத்தின் தங்கைதான் செய்கிருள். தனக் காக இரக்கப்படுகிற எனக்காகவும் சேர்த்து அவள் சில வேஜலகளைச் செய்ய நேர்ந்தது. ஏனென்றல் நான் அங்கு தான் சாப்பாட்டையும் வைத்துக்கொண்டிருந்தேன். அவள் எனக்காகவும் சேர்த்துச் சிரமப்படுகிறள் என்பது எனக்கு என்னவோ போல் இருந்தது. ஆனல அதறகு மாற்று எதுவும் புலப்படவில்லை. DIT DOJ இருந்தும் அதில் நான் அக்கறை செலுத்தவில்லையோ என்றும் தெரிய
138e as 65

வில்லை. இத்தனை நாள் தயங்கித் தயங்கி நடமாடிய அவள், இப்போது தாராளமாக நடமாடுகிறள். அவளு டைய தரிசனம், என் குழப்பங்கள் எல்லாவற்றையும்" நீக்கி, என்னுள் தைரியத்தை வளர்க்கிறது. அதை நான் இழந்துவிட விரும்பவில்லை. இப்படியே நாட்கள் சில சென்றன.
ஒருநாள் நானும் சாம்பசிவமும் சாப்பிட்டுக்கொண்டிருந்த வேளை, அவளை நான் தற்செயலாகக் காண நேர்ந்தது. திடுக்கிட்டுவிட்டேன் நான். சோகப் பதுமையாகத் தான் அவளைக் கண்டு பழக்கம் என்ருலும் கண்ணில் நீருடன் அல்ல. எதற்காகவோ கண்ணும் முகமும் சிவக்க அவள் அழுதிருக்கிருள். எனக்கு ஒன்றுமே ஒடவில்லை. சாம்பசிவத்தின் முகத்தைப் பார்த்தேன்.
“மூன்று வருடங்களுக்கு முன்னுல், இதே நாளில்தான் அவள் கணவர் விபத்தில் சிக்கினர். மறுநாளே இறந்து
போய்விட்டார்’ என்று அவர் கையை உதறிக் கொண்டு எழுந்துவிட்டார். நானும் எழுந்து கொண்டேன்.
சாம்பசிவத்தின் உணர்ச்சியை வெறும் பாசாங்கு என்று சொல்ல வரவில்லை நான். "அவர் நினைத்து முயன்றி ருந்தால் - இன்னெரு புது வாழ்வில் - இந்த நாளின் முக்கியத்துவத்தையே மறந்து சிரித்திருக்கச் செய் திருக்கலாமே அவளை’ என்று மட்டும் எண்ணிக் கொண்டேன்.
அன்று இரவெல்லாம் அவள் படுக்கையில் படுத்திருந்து அழுதுகொண்டிருப்பாளோ என்பது போன்ற நினைவு களால் நான் நிம்மதியில்லாமல் தவித்தேன். விடிகாலை யிலும் நான் தூக்கமின்றிப் புரண்டுகொண்டிருந்தபோது அவளுடைய மதுரமான குரல் என்னை உருக்கி அலைக்
ஒரு தனி நெஞ்சம் () 139

Page 71
கழிக்க எழுந்தது. கொஞ்ச நேரம்தான் அது இசையாக இருந்தது. அப்புறம் அது விம்மல்களாகக் குலைந்து கொண்டிருந்தது. அந்த விம்மல்கள் என் இதயத்தைப் பிளந்தன. என்னையறியாமலே எழுந்து அந்தப் பூஜை யறை வாசலுக்குச் சென்றுவிட்டேன் நான்.
அவள் கிறிஸ்தவர்கள் வணங்குவதுபோல முழந்தாளிட்டு அமர்ந்து கைகளைக் கூப்பியிருந்தாள். நான் வாயில் நிலையிலேயே சாய்ந்து நின்றவாறு அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் உணர்ச்சிப் பிழம்பாய் இருந்ததாலும் வாயில் பக்கம் முதுகைக் காட்டியவாறு இருந்ததாலும் என்னைக் கவனிக்க நேரமில்லை.
"தேன் பழச் சோலை பயிலும் சிறு குயிலே’ என்று விம்மல் களுக்கிடையே அவள் பாடத் தொடங்கியபோது நான் சும்மாதான் நின்றுகொண்டிருந்தேன். 'ஊன் பழித்தென் உளம் புகுந்து உணர்வது ஆய ஒருத்தன்' என்ற அடி வருகையில் நான் உணர்ச்சி வசப்பட்டு கதவு நிலையில் கையால் அடித்துவிட்டேன். அவள் திடுக்குற்றுத் திரும்பிப் பார்த்தாள்.
அவள் பேசத் தொடங்கு முன்னரே அவசரமாய் நானே பேசத் தொடங்கினேன். "நீங்கள். தயவுசெய்து, அழுவதை நிறுத்துங்கள். உங்கள் துன்பம் எதுவானுலும் தீர்த்துவைக்க நான் தயாராய் இருக்கிறேன்."
என் மனதின் பலத்தையோ பலவீனத்தையோ இந்தச் சில வார்த்தைகளில் கொட்டிவிட்ட பிறகு நான் அற்பணுகிப்போய்விட்டேனே என்ற நினைவு என்னைத் துன்புறுத்தலாயிற்று. ஏனெனில் அவள் எதுவும் பேச வில்லை. ஏதோ ஒரு மோகனமான ஸ்வர்க்கத்திலிருந்து பலவந்தமாக இழுத்து வரப்பட்டதைப் போல நின்று: கொண்டு என்னைப் பார்த்தாள்.
14ரி () கவிதா

இரண்டு அல்லது மூன்று நீண்ட வினுடிகளுக்குப் பிறகு "அழுகை என்பது இரண்டு மாறுபட்ட உணர்ச்சிகளின் வெளிப்பாடாய் இருக்கையில்.’ என்று வாய் திறந்தாள்
நான் அவளை முடிக்க விடவில்லை. 'பேரின்பம் பெருந் துன்பம் இரண்டுக்கும் உரிய உணர்ச்சி வெளிப்பாடு அழுகையாக இருக்கலாம். ஆனல் ஒருவர் இருக்கிற நிலையில் இருந்து அவரை உலுக்குவது என்ன உணர்ச்சி என்று புரிந்துகொள்ள முடியாதா?’ என்று நான் கேட்டேன்.
அவள் திரும்பி அறைக்குள்ளிருந்த நடராஜர் சிலையைப் பார்த்தாள். இதற்கு நீண்ட பதில் சொல்ல வேண்டும் என்பதுபோல "நான் பிரார்த்தனையை முடித்துக்கொண்டு வந்து உங்களுக்குப் பதில் சொல்கிறேனே" என்று சொன்னுள்.
நான் அறைக்குத் திரும்பினேன். விரைவில் உடுப்பு மாற்றி வெளியே எங்காவது ஓடிவிடலாம் என்று நினைத் தேன். நான் துடித்துத் தவிக்கிறேன் அவளுக்காக. அவள் சாவதானமாக வந்து என்னுடன் கதைக்கிருளாம். இதன் கருத்து நான் எவ்வளவு தலைபோகிற பிரச்சினையாக இதைக் கருதுகிறேனே அந்த அளவுக்கு அவள் நினைக்க வில்லை என்பது அல்லவா?
அவமானப்பட்டுவிட்ட துன்பம் என்னைச் சித்திரவதை செய்தது!
நான் ஏன் பிறர் விஷயத்தில் தலையிட்டு அவமானப்பட வேண்டும் என்று ஒரு கணம் நினைத்தேன். இந்த நினைவு வந்ததும் எனக்கு ஒரு பெரிய உண்மை புரிந்தது. நான் அவளுக்காக இரக்கப்படப்போய் அவள் எனக்காக
ஒரு தனி நெஞ்சம் ロ 4

Page 72
இரக்கப்படுகிற நிலைக்கு வந்திருக்கிறேன்! "பிறர் என்று ஒரு கணத்திலும் குறைந்த நேரத்தில் என்னுல் நினைத்து விட முடிந்ததுபோல பிறரில் ஒருத்தியாக நினைத்து அவளை ஒதுக்கிவிட யுகமானுலும் என்னுல் முடியுமா?
"பெண்ணே - உனக்கு என் மனதில் கிடைத்திருக்கிற உன்னத ஸ்தானத்தைப்பற்றி நீ அறியமாட்டாய். உன் பாட்டால் நீ என்னுள் எழுதிய ஓவியத்தை உன் சொற் களால் அழிப்பதற்காக இன்று எழுந்து நிற்கிருய். நீ வரைந்திருக்கிற அந்த அழகான ஒவியத்தை என் இதயச் சதையைப் பிருண்டாமல் உன்னுல் அழித்துவிட முடியாது. ஆனலும் எனக்கு நிச்சயமாய்த் தெரிகிறது. நீ அழிக்கத்தான் புறப்பட்டிருக்கிருய். நான் உன்னைச் சந்திப்பதா? என்னுல் எப்படி முடியும்?”
நான் அவளைச் சந்திக்க விரும்பவில்லை.
கால் போனபடியெல்லாம் சுற்றினேன். தெரிந்தவர்கள் யாரையாவது காணுமலா போயிருப்பேன்? யாரையும் பார்த்துச் சிரித்த ஞாபகம் இல்லை. என்ன எண்ணிக் கொண்டார்களோ குமாரவேலைச் சந்தித்த ஞாபகம் மட்டும் இருக்கிறது. கண்ணும் மனமும் கலங்கிப்போய் அத்தனை மோசமான நிலையில் என்னை அவன் அதற்கு முன் ஒரு நாளும் சந்தித்திருக்கமாட்டான். 'என்ன” என்று கேட்கக்கூடத் தோன்ருமல் என்னை அவன் அணைத்துக்கொண்டதிலிருந்து அது தெரிந்தது.
"சாம்பசிவத்தின் சகோதரி.." என்று நான் பேசத் தொடங்கியபோது என் மனதின் துயரம் அத்தனையையும் கொட்டிவிட வேண்டும் என்று நினைத்தேன். ஆனல் என் வாழ்வில் முதல் முதலாக நான் சந்தித்திருக்கிற தோல்வி என்னை அந்த இரண்டு வார்த்தைகளுக்கு மேல்
142 ) கவிதா

பேசவிடவில்லை. என் பேசாத பேச்சு நண்பனுக்கு நன்றக விளங்கியிருக்க வேண்டும். "தியாகு" என்று ன்னைத் திடுக்கிட்டாற்போல உலுப்பினன். 'உன்னை அவள் பார்த்தாளா? உன்னிடம் பேசினுளா?” என்று அவசரப்பட்டுக் கேட்டான்.
அந்தக் கேள்வியில், அவள் என்னைப் பார்த்திருக்க மாட்டாள், பேசியிருக்கமாட்டாள் என்ற நம்பிக்கை தொனித்ததை உணர்ந்தேன். "இது என்னுள் நானக எழுதிக்கொண்ட உணர்ச்சிக்கோலம்" என்று நினைத் தேன். இப்படி இத்தனை தீர்க்கமாய் நிச்சயம் செய்ய இங்கு முடிந்தது.
அன்று இல்லத்தில் அவளைப் பார்த்ததில் இருந்து நான் நிலை குலையத் தொடங்கி இன்று காலை அவளுடன் பேசியதிலிருந்து ஒரேயடியாகக் குலைந்துபோய் அவனுக்கு முன்னுல் வந்து நிற்கிறேன் என்று அவனிடம் கூறவா.நான் பேசவில்லை.
"சாம்பசிவத்தையும் அவர் சகோதரியையும்பற்றி நான் நன்கு அறிவேன். தங்கைக்கு நேர்ந்த துன்பத்தில் கலங்கிப்போன பிறகுதான் அவர் அத்தனை ஆத்திக ரானுர், முன்பெல்லாம் அவர்கூடத்தான் ஒன்றும் இது பற்றிக் கவலைப்படுவதில்லை. மறுபடியும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவளைக் கெஞ்சு கெஞ்சென்று கெஞ்சினர். இப்ப வேண்டாம். உன் மனம் நன்றகத் தேறிய பிறகு என்று வேண்டினர். அவள் எப்பவுமே இல்லை என்று கூறிவிட்டாளாம். "அண்ணு நான் துணையிழந்து தவிக்கிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். என்னுள்ளே வாழ்கின்ற துணையைப் பற்றி நீங்கள் அறியமாட்டீர்கள். என்னுடைய சோகத்தில் அவர் நிரந்தரமாக வாழுகிறர் என்றே, அவரைச் சந்திப்பதற்காகத்தான் நான் தினமும் அழ விரும்பு
ஒரு தனி நெஞ்சம் 0 143

Page 73
கிறேன் என்றே நீங்கள் புரிந்துகொள்ளமாட்டீர்கள். பரவாயில்லை. ஒருநாள் என்றலும் உண்மையா அன்பைத் தந்ததற்காக, அதனைப் பெற்றுக்கொண்டவள் நன்றி செலுத்துகிருள் என்றவது புரிந்துகொள்ளுங்கள் அண்ணு. அது போதும்." என்று தீர்மானமாகச் சொல்லி விட்டாள். அதற்காக சாம்பசிவம் வருந்திய வருத்தம் எனக்குத் தெரியும். பிறகுதான் அவர் மிஷனுடன் தொடர்பு வைத்தார். கொஞ்சம் கொஞ்சமாய் ஆறியும் 6θι πή.
"அவர் சொன்ன தெல்லாம் எனக்குப் புதிதாய் இருந்தது. மனிதர்கள்தான் எத்தனை புதிராய் இருக்கிறர்கள். நீண்ட நாட்களாக என் மனதில் இடைவிடாமல் நிறைந்து கொண்டிருந்த இந்த இரண்டு பேரைப்பற்றியுமே என் கணிப்பு பிழையாகப் போய்விட்டது. திரு. சாம்பசிவம் ஆத்மீகத்துக்குப் பலம் சேர்ப்பதற்காகத் தங்கையை வருத்தவில்லை. தங்கை வருந்துவதால் ஆத்மீகராய் மாறிப்போனுர்! அவளும்கூட, துன்பத்தைத் தாங்க முடியாமல் அழவில்லை; அழவேண்டும் என்பதற்காக துன்பத்தை விரும்பி ஏற்கிருள். திருவாசகத்தில் தோய்ந்தவள் அல்லவா. *அழுதால் உன்னைப் பெறலாமே" என்ற வழி போலும்!
குமாரவேல் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறன் . எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாயிற்று. மிச்சம் எல்லாம் எனக்கு ஆறுதல் என்ற பெயரில் உபதேசம்தான்!
"கும்பலுக்குப் பிரதிநிதித்துவம் வகிப்பது பெரிதில்லையடா. கும்பலுக்கிடையே தனித்துவம் வகிப்பதுதான் பெரிது. தனி மனங்களில் நிலைக்கிற உயர்ந்த நோக்கங்களும் உறுதிப்பாடுகளும்தான் மனிதனை மற்ற சராசரி மனிதர்
144 L கவிதா

களிடமிருந்து உயர்த்தித் தெய்வமாக்குகிறது விவேகானந்தரையோ காந்தியடிகளையோ எண்ணிப் பார். அவர்கள் செத்துப்போன பிறகும் வாழ்ந்து கொண்டிருப்பது அவர்களுடைய தனித்துவம் அல்லவா? அவர்கள் எல்லாம் பெரிய பெரிய மின் விளக்குகளைப் போலப் பிரகாசிக்கிறர்கள் என்றல் ஆங்காங்கே இருண்ட மூலைகளில் மண் அகல்களாகச் சாம்பசிவத்தின் சகோதரியைப் போன்றவர்களும் தேவைதானே. தனி மனங்களில் இப்படி அபூர்வமாக நிலைக்கிற உறுதிகளும் கொள்கைகளும் இல்லை என்றல் இந்த நூற்றண்டில் மனிதனுக்குள்ளே மனம் இருக்கிறதா என்று இருட்டில் துழாவ வேண்டி நேரிட்டுவிடும். நீ அவளுக்காக இரக்கப்பட்டால், நான் உனக்காக இரக்கப்படுகிறேன்."
நீண்ட நாட்களுக்குப் பிறகு அம்மாவின் நான்கு கடிதங் களுக்கும் சேர்த்துப் பதில் எழுதினேன்.
“...எந்தப் பெண்ணுலுமே என் மனதைக் கவர முடிய வில்லையம்மா. என் மனதைக் கவர்ந்து நிற்கிற ஒரே ஒரு விஷயம் மிஷன்தான். உங்கள் மகனும் விவேகானந்த ரைப்போல வெளிநாடுகளில் எல்லாம் இந்து தர்மத்தையும் ஆத்மீகத்தையும் பரப்ப வேண்டுமென ஆசைப்படுகிறன். அவர்கள் எல்லாம் பெரிய பெரிய மின் விளக்குகளாகப் பிரகாசிக்கிறர்கள் என்றல் உங்கள் மகன் ஒரு மண் அகலாகவாவது பிரகாசிக்க விரும்புகிருன். உங்கள் ஆசிகளை எனக்கு வழங்க வேண்டும் அம்மா."
நாளைக் காலை என்னுடைய முடிவை, அவளிடமும் தெரிவித்து இந்த வீட்டைவிட்டுப் போய்விடப் போகிறேன். இந்த வீட்டில் இன்னும் ஒரே ஒரு காலை. நாளைக் காலையிலும் அந்தக் கானம் என்னைத் துயிலெழுப்புமா? எழுப்பினுலும் என்னை உருக்கி அலைக்
கழிக்காது. நான் சலனங்களைக் கடந்துவிட்டேன்.
ஒரு தனி நெஞ்சம் ( ) 145

Page 74
என் இதயத்தின் சுவர்கள் ஒவியத்துடன் கிழிக்கப்பட்டு இரத்தம் கசிகிறதுதான். இரத்தம் எனக்குப் போர்க் களங்களை நினைவூட்டவில்லை. யேசுநாதரை நினைவூட்டு கிறது. யேசுநாதர் இரத்தம் சிந்தினர்-பாவிகளுக்காக. அது தியாகம். நான் செய்யப்போவது தியாகம் அல்ல; என்னுள் ஏற்பட்ட மன முறிவைச் சீராக்குகின்ற ஒரு வகை அட்ஜஸ்ட்மென்ட் மெக்கானிசம்"தான் என்பது தெரிகிறது. என்றலும் என்ன, என்னுடைய முடிவு, ஒரு தனி மனத்தின் உயர்வு நோக்கத்திலும் உறுதிப் பாட்டிலும்தானே நிலைக்கப்போகிறது.
146 கவிதா

ஒரே ஜன்ன்லூடே.
அவனுக்குச் சாதாரணமாகத் தொடங்கிய ஒரு செருமல் பலமான இருமலில் முடிந்தது.
அவள் தலையை நிமிர்த்தி அவனை ஒரு முறை பார்த்தாள். அவனுக்கு அந்த இருமல் தொடராது என்று தோன்றியது. இது எப்போது வந்தது? என்ற கேள்வி அவளுள் எழுந்தது - அதிலேயே ஆழ நேரமில்லை. தூரிகையில் வர்ணம் காய்கிறது.
மறுபடியும் குனிந்துகொண்டு வர்ணம் தீட்ட ஆரம்பிக் கிருள். ஜன்னல் வழியாகக் குளிர் காற்று உள்ளே வருகிறது. அவன் எழுந்துபோய் ஜன்னலைச் சாத்திவிட்டு வருகிறன்" அவளருகே குனிந்து ஆதரவாக முதுகைத் தொட்டு "போதும் பிரியா, முதுகு வலிக்கப்போகிறது. எவ்வளவு நேரம்தான் இப்படித் தவழ்வாய்?" என்றன்.
அவளுக்கு ஆத்திரத்தில் கண்ணில் நீரே வந்துவிடுகிறது. "நீங்கள் தயவு செய்து போய்ப் படுங்கள் - போங்கள் என்ருல் போங்கள்.” அதற்கு மேல் தூரிகையே நடுங்கத் தொடங்கிவிட்டது.
அவன் இதழ்க் கடையில் பரிவான ஒரு புன்முறுவல் தோன்றி தலைக் குலுக்கலில் அஸ்தமனமாகியது.
ஒரே ஜன்னலூடே. ( ) 141

Page 75
"பரவாயில்லை பிரியா, நான் படுக்கத்தான் போறேன். நீ கன நேரம் இருக்காதே. இப்போதே மணி பதினுென் ருகிறதே. சரியா?”
"சரிதான் போங்கள்" என்ற வார்த்தை பலமாக வெடித்து, 'ஒருவிதமான கலாரசனையுமே இல்லையாம் - பேச வந்துவிட்டார் பேச" என்ற முணுமுணுப்பில் முடிந்தது.
அவன் போய்ப் படுத்துவிட்டான். அவளுக்குத் தூரிகையில் என்ன வர்ணம் இருக்கிறது என்பதே மறந்து போயிற்று! அவ்வளவு மனக் கொந்தளிப்பு.
லேசாகத் தலையை உயர்த்திக் கடைக்கண்ணுல் கணவனைப் பார்த்தாள். போர்வையை நன்ற கப் போர்த்திக்கொண்டுவிட்டான். இன்னும் இரண்டு நிமிடங்கள் அதிகம். அவன் தூங்கிவிடுவான்.
அவள் பார்த்துக்கொண்டேயிருந்தாள். திடீரென்று போர்வையை உதைத்துக்கொண்டு அவன் எழுந்து உட்கார்ந்தான். மறுபடியும் அந்த இருமல்.
அவளுக்குத் 'திக்கென்றிருந்தது. ஆயினும் அத்தனை சுலபத்தில் தன்னை விட்டுக் கொடுக்கவும் மனமில்லை. கவனிக்காத மாதிரி தூரிகையைப் பார்த்தாள். அவன் படுத்துக்கொண்டுவிட்டான் என்று தெரிந்ததும் தூரிகையை ஏதோ ஒரு வர்ணத்தில் தோய்த்து இழுத் தாள். பச்சை வர்ணம் பூசவேண்டிய இடத்தில் பழுப்பு வர்ணம் கலந்து அலங்கோலமாயிற்று!
வரைந்த தாளை அப்படியே பிறண்டிக் கசக்கிவிட்டு எழுந்தாள். நேரே அவனருகில் போய் 'இங்கே பாருங்கோ' என்றஸ்.
148 ) கவிதா

“ob... Lb...”
"என்ன இருமல்? எங்கேயும் மழையில் நனைந்தீர்களா?"
"ஒன்றுமில்லை பிரியா, சும்மா தொண்டை அரிக்கிறது. நீ படுத்துக்கொள்."
"சும்மா ஏன் தொண்டை அரிக்கிறது? குழந்தைப் பிள்ளைகள் மாதிரி சொல்வது கேட்பதில்லை. மழையில் தான் நனைந்திருக்கிறீர்கள்.”
"சும்மா இரு பிரியா, மழையில் நனையவில்லை.”
"பின்னே..? உடம்பைக் கவனிக்கிறதும் இல்லை. பழங்கள் வேண் டாம். பலகாரங்கள் வேண்டாம். சோற்றையும் கறியையும் தவிர எதுவும் வேண்டாம். இது என்ன பிடிவாதம். உடம்பு வெறும் தண்ணிராய்ப் போச்சு."
'வீணுகக் கவலைப்படாதே பிரியா. என் உடம்புக்கு ஒன்றுமே இல்லை. "பசியாற உணவு, அதற்கு மேலே உண்பவன் திருடி உண்கிருன்’ என்று காந்திஜி சொல்லி யிருக்கிறர்." அவன் போர்வையை விலக்கிக்கொண்டு
சிரித்தபடி கூறினன்.
"உங்களுக்காக நானும் தின்பதில்லை."
"அதுதான் நல்லது; நல்ல மனைவிக்கு அடையாளம்."
அவள் ஆத்திரத்துடன் போர்வைக்குள் புகுந்துகொண்டு அழ ஆரம்பித்தாள். எப்போதும் இந்தப் போராட்டத் தின் முடிவு அதுதான்!
மறுநாள் விடிந்தது.
ஒரே ஜன்னலூடே. ( ) 149

Page 76
"இன்றைக்கு உங்களை விடப் போவதில்லை. இதெல்லா வற்றையும் சாப்பிட்டால் ஒழிய நான் இங்கிருந்து நகர மாட்டேன். ஒன்றும் சாப்பிடவும் மாட்டேன்."
"இதென்ன வீண் பிடிவாதம் பிரியா. என்னை என் போக்கில் விட்டுவிடு. நான் குழந்தையல்ல."
"உங்கள் விருப்பப்படி விட்டு விட்டுத்தான் இப்படி ஆகிவிட்டீர்கள். இருமல் வேறு சம்பாதித்தாயிற்று.
எனக்குப் பயமாயிருக்கு."
“என்ன பிரியா, நீ அறியாக் குழந்தையா? படித்த பெண் பேசுகிற பேச்சா இது. இன்றையுடன் பத்து
நாட்களாகின்றதே. எல்லோரும் ஏழைகள். கால் வயிறு 960), வயிறுதான். நான் எப்படிச் சாப்பிடுவேன்?” -
*சரி, அவர்கள்தான் சம்பள உயர்வு தேவை என்று வேலை நிறுத்தம் செய்கிறர்கள். உங்களுக்கு என்ன? வீட்டில் இருக்கிற சொத்தைச் சும்மா இருந்து சாப்பிடு வதற்கென்ன?”
"அதுதான் என்னுல் முடியவில்லை. உழைக்காமல் என்ன சாப்பாடு? அவர்கள் கஷ்டப்படும்போது, நானும் ஒத்துழைக்காவிடில் நான் மனிதன் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது? பிரியா, தயவு செய்து என்னைப் புரிந்துகொள் - இல்லாவிட்டால் என்னைத் தொந்தரவு செய்யாமலாவது இரேன்."
அவளுக்கு ஆற்றமையால் அழுகையாகத்தான் வந்தது. அவள் கற்பனை செய்த வாழ்க்கை ஒன்றக இருக்க இவர் வேறென்றைத் திணிக்கின்றரே. இவர்
150 as 65 It

என்ன, நான் அவரைப் புரியவில்லை என்கிருரே. என்னை அவர் புரிந்துகொள்கிறரா?
அவன் சாப்பாட்டை முடித்துக்கொண்டு எழப் போனன். சட்டென்று அவனது கைகளைக் கெட்டியாகப் பற்றி உட்கார்த்தினுள் - "இதோ பாருங்கள். இதை நீங்கள் என் கழுத்தில் கட்டி ஆறுமாதம்கூட ஆகவில்லை. ஏன் இப்படி எல்லாம் என்னை வதைக்கிறீர்கள். வாழ்வே அலுத்துப் போச்சே' என்ருள். அது அவளது கடைசி அஸ்திரம்.
அவனுக்குத் தாங்கவில்லை. இவ்வளவு கதறுகிருளே. அவனுக்குத் தன் மேல் பிரியமில்லை என்று கூறிவிடு வாளோ? அந்த விஷயத்தில் அவளுக்கு மேல் அதிர்ஷ்ட சாலிகள் இந்த உலகிலேயே கிடையாதுதான்.
பரிதாபமாக அவன் கூறினன்.
"நான்தான் நேரத்தோடேயே என்னைத் திருமணம் செய்ய வேண்டாம் என்றேனே. ஏன் பிடிவாதம் பிடித்தாய்?”
"அதற்கு இப்போது அனுபவி என்கிறீர்களா?" அவன் சிரித்து மழுப்பிவிட்டுப் போய்விட்டான்.
O O. O.
பகல் மூன்று மணியளவில் அவளது சிநேகிதி வசந்தா வந்தாள். பிரியாவுக்கு இருந்த மனநிலையில் அவளை
எப்படி வரவேற்பது என்பதே பெரிய பிரச்சினையாக இருந்தது.
"இரு வசந்தா இதோ வருகிறேன். பகல் தூக்கம் தூங்கி கண்ணெல்லாம் வீங்கிப்போச்சு; முகம் கழுவிக்கொண்டு
ஒரே ஜன்னலூடே. 151

Page 77
வருகிறேன்." என்று உள்ளே போய், ஒரு மாதிரியாக வசந்தாவிற்கு வீட்டுப் பிரச்சினையை மறைத்தாயிற்று.
"அவளுக்கென்ன, சகலகலாவல்லி, கண் நிறைந்த கணவன்; வீடு நிறைந்த செல்வம்." என்ற அவர்கள் நினைப்பில் இன்பமும் பெருமையும் காண்பவளாயிற்றே அவள். கணவனின் கோணங்கித்தனத்தை அவர்கள் அறிந்தால். போச்சே அவள் சொர்க்க நிலை! பூ இவ்வளவுதானு என்று ஏளனம் செய்யமாட்டார்களா!
நேரம் செல்லச் செல்ல வசந்தாவுடன் கதைத்துக் கொண்டிருந்ததில் மனம் இலேசாகிவிட்டாற்போல் இருந்தது பிரியாவுக்கு.
"பிரியா, ஒருக்கா வீணையை எடுத்து இரண்டு பாட்டு வாசிக்கிருயா. கேட்டுக் கன நாளாயிற்று. இப்போ தெல்லாம் உன் கணவருக்கே அதை ஏகபோக உரிமை யாக்கிவிட்டாயே" என்று வசந்தா கேட்டபோது பிரியா வுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. "அதை ஏன் கேட்கிரய். அவர் நெஞ்சம் கலையறியா நெஞ்சம், மண் நெஞ்சம், மர நெஞ்சம் - வசந்தா” என்று கதற வேண்டும் போல் இருந்ததை எப்படியோ அடக்கிக் கொண்டாள். அவளுக்கும் இப்போது வீணையுடன் ஒன்றிப்போவதில் இலேசான நிம்மதி இருக்கும்போல் இருந்தது.
சஹானுவுடன் சேர்ந்து இரு தோழிகளும் உருகி, வீடே ஒரு மோகனச் சூழ்நிலையில் ஆழ்ந்துகொண்டிருந்தபோது அவன் வந்தான். அவர்கள் இருவரையும் கண்டுவிட்டு, மெளனமாக ஒதுங்கிச் சென்ற அவனைக் கண்டதும் வசந்தா வீட்டுக்குப் போக எழுந்துகொண்டாள்.
152 ) கவிதா

"இப்போது உன் மனம் அங்கே இருக்கும்; அவர் மனம் இங்கே இருக்கும். இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினர்” என்று கேலி செய்துவிட்டு அவள் போய் விட்டாள்.
பிரியா பேசாமல் சமையல் அறைக்குச் சென்று காப்பி தயாரித்து எடுத்துக்கொண்டு வந்து அங்கிருந்த
டீபோயின் மீது வைத்தாள். அவன் ஜன்னலோரம் நின்றுகொண்டு வானத்தை வெறிக்கப் பார்த்துக் கொண்டு நின்றன். அறைக்குள் காலடியோசை
கேட்டுத் திரும்பியவன், "பிரியா’ என்று கூப்பிட்டான்.
அவள் ஆச்சரியத்துடன் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். இத்தனை நாள் இல்லாத ஏதோ ஒருவித உணர்வு அவன் குரலில் தெரிவதுபோல் இருக்கிறதே!
*அந்தக் காப்பியை உன் கையால் எடுத்துத் தர மாட்டாயா?" என்று அவன் கேட்டான்.
ஏதோ ஒருவித உள்ளக் குளிர்வுடன் அவனிடம் காப்பியை எடுத்து நீட்டினுள் அவள். கடவுளே இவர் மனம் மாறிவிட்டதா?
காப்பிக் கோப்பையுடன் அவள் கைகளையும் பற்றி தன்னருகில் இழுத்துக்கொண்ட அவன் தொடர்ந்து பேசினுன்.
'சிலவேளை இதுவே நீ உன் கையால் எனக்குத் தருகின்ற கடைசிக் காப்பியாகலாம் பிரியா.”
அவள் திடுக்கிட்டாள். சட்டென்று அவள் வாயைப் பொத்தி, "ஏன் இன்றைக்கு இப்படியெல்லாம் பேசுகிறீர்
கள்?' அழாக் குறையாகக் கேட்டாள்.
க.-10 ஒரே ஜன்னலூடே. ( 183

Page 78
அவள் கையை விலக்கிக்கொண்டு அவன் பேசினன். "ஏழைப் பையனுன என்னை உன் வாழ்க்கைத் துணை வனுக்க வேண்டும் என்று ஏன் விரும்பினுய்? என்ருவது ஒரு நாள் அந்த ஏழ்மை வாழ்வை நீ ஏற்றுக்கொள்ளத் தயாராய் இருந்தாயா?”
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏழ்மை வாழ்வு ஏன்? அப்பாவின் செல்வமெல்லாம் யாருக்கு? என்று ஒடிய சிந்தனை சட்டென்று தடைப்பட்டது. "சே. கம்பனியை அழித்துவிட்டார்களா உங்கள் தொழிலாளி கள்?" என்று ஆத்திரம் கனிய அவள் கத்தியபோது அவன் 'ஹ.ஹ.” என்று சிரிக்க ஆரம்பித்தான்.
அவளுக்கு இப்போது நிலைமை என்ன என்று விளங்கத் தொடங்கிவிட்டது. இவன் மனம் மாறவில்லை. அவளு டைய அபிப்பிராயத்தில் அவனுடைய கோணங்கித் தனத்தின் உச்சக் கட்டம்தான் இது!
சிரிப்பு ஒய்ந்து அவன் மென்மையானன். நிதானமான குரலில் அவன் பேசினன்.
"தொழிற்சாலையை அழிக்குமளவுக்கு அவர்கள் கொடு மைக்காரர்கள் அல்ல, பிரியா, அவர்கள் வாழ்க்கை யையே அழிக்குமளவுக்கு உன் அப்பாவிடம்தான் கொடுமை இருக்கிறது. என்னுல் இனியும் தாங்க முடியாது. இப்போது நீ அப்பாவா, கணவன என்ற கட்டத்துக்கு வந்துவிட்டாய். இதில் பாதிக்கப்படுவது நானல்ல. நீ தான் பிரியா - யோசித்து."
அவன் முடிக்கு முன்னரே பிரியா குறுக்கிட்டாள். "என்ன சொல்லுகிறீர்கள். எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே."
184 ) கவிதா

*விளக்கமாகச் சொல்கிறேன். என்னை, என்ன வேலை என்று நிச்சயமில்லாத - உண்மையில், ஒரு வேலையுமே இல்லாத - ஒரு வேலையில் நியமித்து ஏராளமான பணத்தைச் சம்பளம் என்று தருகிறரே உன் அப்பா, அது எனக்குப் பிச்சையாகவே படுகிறது. நான் உழைக்கத் தயாராய் இருக்கிறேன்; உன் அப்பா அது எனக்குத் தெரியாது என்று மறுக்கிறர். பார்க்கப் போனுல் மூடுமந்திரமாக அவர் செய்வதெல்லாம்." அவன் சிறிது நிறுத்தினுன்.
அவள் ஊக்கினுள். “செய்வதெல்லாம்."
'பித்தலாட்டம். தொழிலாளர்கள் எல்லாரும் வேலை நிறுத்தம் செய்கிறர்களே - நியாயம் அவர்கள் பக்கம் இருக்கிறது. நான் அதர்மத்துக்குத் துணைபோக விரும்ப வில்லை. உன் அப்பாவிடம் பேசினேன்.” என்று கூறி வந்த அவன் முகம் சட்டென்று சோர்ந்தது. அத்துடன் நிறுத்திக்கொண்டு சாளரத்தினூடே வானத்தைப் பார்த் தான். அவன் வேதனைப்பட்டு நலிகிருன் என்பது அவளுக்கு நிதரிசனமாகத் தெரிந்தது. மேலே கேட்க வேண்டும் என்று ஆவலாகவும் இருந்தது. பயமாகவும் இருந்தது. தானுகக் கூறட்டும் என்று பார்த்திருந்தாள்.
அவன் தலையைக் குலுக்கிவிட்டுக்கொண்டு அவள் பக்கம் திரும்பினன். "உன் அப்பாவிடம் பேசினேன், என்று மறுபடியும் கூறினுன்.
*ம்." என்றஸ் அவள். அதில் பயம் கலந்திருந்தது அவன் கண்கள் சிறிது சிவந்தன. “குப்பைமேட்டு நாயைக் குளிப்பாட்டிக் கோபுரத்தில் வைத்தாராம். நாய், நாய்ப் புத்தியைத்தான் காட்டுகிறதாம். கேட்டாயா பிரியா! நானும்தான் கேட்டுவிட்டேன். "நாய்க்கு கோபுரத்துக்குள் என்ன வேலை. நாய்க்கு
ஒரே ஜன்னலூடே. ( 55

Page 79
நாய்க்குரிய வேலையைக் கொடுங்கள்” என்று. அவர் சொன்னுர், வேலை செய்யாமல் இருப்பதற்குத்தான் எனக்குச் சம்பளமாம்!"
அவன் நெடுமூச்செறிந்தான்.
'பிரியா, வேலையற்றுச் சம்பளம் வாங்க நான் ஒன்றும் அங்கஹீனமானவன் இல்லை; கஷ்டங்களைக் கண்டு பயப்பட நான் சொர்க்கலோகத்தில் வாழ்ந்தவன் அல்ல; பிச்சை எடுத்துச் சாப்பிட நான் மானம் கெட்டவன் அல்ல; வேலையை ராஜினுமா செய்து விட்டேன்."
அவன் யோசனையுடன் நிறுத்தினன். அவள் அப்பாடா என்று பெருமூச்செறிந்தாள். கடைசியில் விஷயம் இவ்வளவுதானு என்று ஒருவகை நிம்மதி ஏற்பட்டாற் போல் இருந்தது. எப்படியும் இவரை இப்போதைக்கு ஆசுவாசப்படுத்தினுல் பின்னல் ஆறி விடுவார் என்று எண்ணியவளாக, "நீங்கள் ராஜினுமா கொடுத்தாலும் அப்பா அதை ஏற்க வேண்டுமே. ஏற்றலும் கூடப் பரவாயில்லை; இருக்கிற சொத்து ஏழு தலைமுறைக்குக் காணுமே."
அவன் ஐயோ என்று தலையில் அடித்துக்கொண்டான், "நீ இவ்வளவு அசடாகவா இருப்பாய் பிரியா. உன்னைச் சொல்லி என்ன? நீ அப்படியான மனுேபாவனை யில் வளர்ந்துவிட்டாய். என்னுடைய உணர்ச்சிகளை உன்னுல் புரிந்துகொள்ள முடியவில்லை. பிரியா, நான் முரட்டு லட்சியவாதி. நீ மென்மையான மலர், காட்டிலும் மேட்டிலும் கல்லிலும் முள்ளிலும் அடிபட என்னல் முடியும். ஓவியம் என்றும், இசையென்றும், கோவில் என்றும், பக்தி என்றும் உன்னைச் சுற்றி நீ படைத்து வைத்திருக்கின்ற கனவு மயமான சொர்க்கத்தில்
156 0 ) கவிதா

நின்று என்னேடு வர உன்னல் முடியாது. 西 என்னைப் புரிந்துகொள்ளாத வரையில் என்னேடு வர உன்னை நான் அனுமதிக்கப் போவதும் இல்லை!"
அவளுக்குத் தலையைச் சுற்றியது. ஏன் இவர் இப்படி யெல்லாம் கதைக்கிறர். அவளுடைய கலைத்திறமையை ரசிக்காமல், அவள் அழகை ரசிக்காமல், அவள் அனுபவிக்க விரும்பிய இன்பங்கள் எதையுமே ரசிக்க அனுமதிக்காமல். இவ்வளவு காலம் அவளை ஒரு துறவி போல வாழ வைத்தானே-அதற்கெல்லாம் இது சிகரமா? அவளை அவன் புரிந்துகொள்ளவில்லையா? அவனை அவள் புரிந்துகொள்ளவில்லையா? ஏன் இந்தக் குற்றச்சாட்டு?
அவள் விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள். அவனுக்குப் பரிதாபமாக இருந்தது. ஆயினும், கோழையாகித் தன்னை விட்டுக்கொடுத்துவிட நேருமோ என்ற பயம் அவனை உந்தியது.
"இதோ பாரம்மா, நான் இந்த ஆறுமாத வாழ்வில் என் வாழ்க்கை முறையால் உன்னைப் பயப்படுத்திவைத்திருக் கிறேனே ஒழிய என்னுடன் எந்த நரகத்துக்கும் வரக் கூடிய தைரியத்தை உனக்குத் தரவில்லை என்றுதான் தோன்றுகிறது. நான் கிராமத்துக்குப் போய் அண்ணு வுடன் சேர்ந்து விவசாயம் செய்ய யோசித்துவிட்டேன். நீ என்னுடன் வரவேண்டாம். அப்பாவுடனேயே இரு உன்னை வசதியாக வாழவைக்கக்கூடிய பணம் சேர்த்துக்கொண்ட பின் உன்னை நான் அழைத்துக் கொள்கிறேன்,” என்று கூறிவிட்டு அவன் நகர்ந்தான்.
அவளும் சட்டென்று எழுந்தாள். என்னதான் கணவனின் கொள்கைகள் பிடிக்காதபோதும், வழி
வழியே வந்த தமிழ்ப் பண்பு அவள் இரத்தத்தில்
ஒரே ஜன்னலூடே. 0 151

Page 80
ஊறிக் கிடந்தது. என்னதான் செல்வத்தில் வளர்ந்தவ ளானுலும், கணவனின் அன்பு என்பது எல்லாவற்றை யும்விட உயர்ந்தது என்ற எண்ணம் அவளை உந்தியது. "இருங்கள், நானும் உங்களுடன் வருகிறேன். இதோ இந்த வீணையை மட்டும் என்னுடன் எடுத்து வர அனுமதிக்க வேண்டும்" என்று அவன் பதிலுக்குக் காத்திராமலே அதை வாரி அனைததுக்கொண்டாள்! அவள் வருவாள் என்பதை எதிர்பார்த்தவன் போல சாவதானமாக இயங்கினுன் அவன். கணவர் இப்படி நடப்பார் என்றே, மனைவி இப்படி நடப்பாள் என்றே ஒரு விளக்கம் பரஸ்பரம் இருவருக்கும் இல்லாவிட்டால் தாம்பத்தியம் என்பதற்குத்தான் என்ன அர்த்தம் இருக்க முடியும்?
ரயிலில் மூன்றம் வகுப்புப் பெட்டியில் பிரயாணம் செய்வது, அவளுக்கு இதுவே முதல் தடவை. இன்னமும் அவள் குழம்பித்தான் இருந்தாள். இது வரை பழகியறியாத இடத்தில், பழகியறியாத மனிதச் க்களுக்கு நடுவே பழகியறியாத வாழ்க்கையில் நுழையப் போகிறதில் தயக்கமாய்த்தான் இருந்ததாயினும், எந்த நிலையிலும் நெகிழவிடாமல் தன் கையைக் கணவன் கை பற்றியிருக்கும் என்ற தைரியம் அவளுக்கு நம்பிக்கை பூட்டிக் கொண்டேயிருந்தது. சிறுவயதிலேயே தாயை iஇழந்துவிட்ட தன்னை கவலையே தெரியாமல் வளர்த்து க்விட்ட அப்பா, இப்போது எப்படிக் கலங்குவார் என்ற நினைப்பு கண்ணில் நீரை வரவழைத்தது. அவள் கலக்கம் அவள் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது.
அவள் நிலையறிந்த அவன் அவளுடன் ஏதுமே பேச வில்லை. ஏதோ காரணத்தால் ரயில் நின்றுவிட்டிருக்
158 () கவிதா

கிறது. சன நெரிசலில் அவளுக்கு வியர்த்துக் கொட்டியது. தன் கையில் வைத்துக்கொண்டிருந்த பத்திரிகையை மடித்து "விசிறிக் கொள்" என்ற பாவனையில் அவள் கையில் வைத்தான் அவன். அவளுக்கு அவனுடன் நேசபாவம் இன்னும் வந்த பாடில்லை! கவனிக்காத மாதிரி வெளியே பார்த்தாள். வெளியே வானம், கொள்ளை அழகாய்க் கிடந்தது. நீலம் சிவப்பு மஞ்சள் என்று. "பாரடியோ வானத்தின் புதுமையெல்லாம்" என்ற பாரதி பாடல் அடிகள் நினைவுக்கு வர அவள் ஒவிய உள்ளம் தன்னை மறந்து வானே நோக்கிப் பறந்தது. தான் இருக்கும் சந்தர்ப்பத்தை மறந்தவளாய் எதிர்சீட்டில் அமர்ந்திருந்த கணவனின் கையைப் பற்றினுள். இலேசாக அழுத்தி அங்கே பாருங்களேன்! என்று பரவசம் மேலிடக் கூறினுள்.
அவன் அசையவில்லை. கீழே எதையோ ஆழ்ந்து கவனித்துக்கொண்டிருந்தான். இறக்கை வெட்டப் பட்ட வானம்பாடியாய், ஆர்வம் எல்லாம் குலைய அவளும் கீழே பார்த்தாள்.
ஏதோ கட்டிட வேலை நடந்துகொண்டிருந்தது. ஆண்களும் பெண்களுமாய்ப் பலர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஆண்கள் மண்ணைக் கூடை களில் வாரி பெண்களின் தலையில் சுமத்திக்கொண்டிருந் தார்கள். பெண்கள் தலையில் கூடையுடன் அழகாக நடந்து சென்றர்கள். அவர்கள் உடல் அசைவைத் தன்னை மறந்து பார்த்துக்கொண்டிருந்த பிரியா ரயில் நகரத் தொடங்கி அக்காட்சி கண்ணுக்கு மறைந்ததும் அவன் முகத்தை நோக்கினுள். சொல்லி வைத்தாற் போல் அவனும் அவள் முகத்தை நோக்கினன்.
"ஒரே ஜன்ன்ல்தான் பிரியா. நீ அதனூடாக வானத்தை நோக்குகிருய். நான் மண்ணை நோக்குகிறேன். தொட
ஒரே ஜன்னலூடே. T 159

Page 81
முடியாத அந்தத் தொடுவானத்தைப்பற்றி நீ கனவு காண்கிருய், நானே தொட்டு நிற்கின்ற இந்த மண்ணைப்பற்றிக் கனவு காண்கிறேன். நீ வானத்தை யும் கடந்து அதற்கப்பால் இருக்கிறதென்று கருதுகின்ற சொர்க்கத்துக்குப் பறந்து போய்விட ஆசைப்படுகிருய் நானே, இந்த மண்ணின் தீங்குகளைக் களைந்து மாண்பு களை உயர்த்தி, இங்கேயே சொர்க்கத்தை அமைத்து விட ஆசைப்படுகிறேன். இப்போது நீ பார்த்தாயே, அது மண்ணின் மாண்புகளில் ஒன்று பிரியா. அதைப் போன்ற அழகான ஒவியத்தை இதுவரை உன் கரம் தீட்டியதாக ஞாபகம் இருக்கிறதா, உனக்கு?”
பிரியா, இந்த ஒரே ஜன்னலூடாக நீயும் நானும் ஒரே காட்சியையே பார்க்க வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். நீ இனியவளாக இருக்கிருய்; நல்ல வளாக இருக்கிருய். என்னை, என் மனத்தை, உள்ளபடி சரியாக உன்னுல் புரிந்துகொள்ள முடியுமானுல் நான் எவ்வளவு பாக்கியசாலியாக இருப்பேன் தெரியுமா?’
அவன் அடங்கிய குரலில் கூறிய இவை எல்லாம் அவளுக்குப் புரிந்த மாதிரியும் இருந்தது; புரியாத மாதிரி யும் இருந்தது. அவன் வானத்தைப்பற்றியும் மண்ணைப் பற்றியும் பேசிய அவை எல்லாம் அவளுக்குப் புரிய வில்லை. அவள் இன்னும் பச்சைக் குழந்தைதான். ஆனல், அவன் ஏன் ஓவியத்தைப்பற்றிப் Gudeo)6ör? என்று மட்டும் அவள் நினைத்தாள். எனக்கு ஆறுதலாக இருக்கட்டும் என்றுதான் இப்படிக் கூறுகிருரா, இவர்? என்ற ரீதியில்தான் அவள் சிந்தனை ஓடியது. அவனுக் காகப் பரிதாபப்படத்தான் அவளால் முடிந்தது.
அடுத்த சில மாதங்கள் எப்படிப் போயின என்றே தெரியாது போயின. அவன் நாள் முழுவதும் வயலில்
1 60, ( கவிதா

வேலை செய்தான்; அவள் நாள் முழுவதும் வீட்டில் வேலை செய்தாள். ஆடம்பரமற்ற எளிய சிறிய வீட்டில், வளைய வந்துகொண்டிருந்த அவளுக்கு தனக்கு வேலை மிகுதி என்று எண்ணிப் பார்க்கவே நேரம் இருக்கவில்லை. சுறுசுறுப்பு நிறைந்த அந்த நாட்களில், இலேசாக மழைத் தூறல் விழுந்துகொண்டிருந்த ஒரு நாள் மாலையில், அவன் தனக்கு தலையிடிப்பதாகக் கூறிக் கொண்டு வீட்டுக்கு வந்தான். அவள் பதைத்துப் போனள். அவன் உடம்பைத் தொட்டுப் பார்த்தவள் பதறினுள்.
சும்மா வீம்புக்காக உழைக்கிறேன் என்று கிளம்பி விட்டீர்கள்; டிராக்டர் ஒட்டுவதென்றல் சாதாரண வேலையா. இப்போ காய்ச்சல் வந்து போச்சே, நான் என்ன செய்வேன்" என்று அரற்றத் தொடங்கிள்ை.
எனக்கு ஒரு கேடும் இல்லை பிரியா, ஏன் வீணுகக் கவலைப்படுகிருய்? பழக்கமில்லாத வேலை, அதல்ை இப்போ சிறிது கஷ்டமாக இருக்கிறது. கொஞ்சம் ஒய்வெடுத்துக்கொண்டால் போதும், " என்று கூறிய அவனை அழைத்துச் சென்று படுக்கவைத்த வள் உடனேயே தனக்குத் தெரிந்த வரையில் ஏதோ கசாயம் காய்ச்சி எடுத்துக்கொண்டு வந்துவிட்டாள். அவனுக்குச் சிரிப்பாக வந்தது. அவள் மனம் புண்படுமே என்பதால் அடக்கிக்கொண்டான்.
*ஏ.பிரியா, ... என் பிரியே ... உனக்குப் பரவாயில்லை என்றல் உன் வீணையை எடுத்து எனக்காக ஒரு பாட்டு பாடுகிறயா, " என்று உல்லாசமான குரலில் அவன் கூறினன்.
அவளுக்கு உடலெல்லாம் புல்லரிப்பதுபோல இருந்தது. அவன் அப்படிக் கேட்டது அவளுக்கு ஆச்சரியமாகவும்
ஒரே ஜன்னலூடே... ( 161

Page 82
மகிழ்ச்சியாகவும் இருந்தது. வந்ததில் இருந்து அந்த வீணையைத் தொடவே இல்லை; தன்னிடம் இருந்த கலையறிவு அத்தனையும் வீணனது; ஒரு கலையிலும் இவருக்கு நாட்டமில்லை என்று எண்ணிய எண்ணம் எல்லாம் வீணனதுதான; அல்லது எனக்கு நிம்மதியாக இருக்கும் என்றே, இப்படிச் செய்தால் நான் சந்தோஷப் படுவேன் என்றே நினைத்துத்தான் இப்போது இப்படிக் கேட்கிறரா? எப்படியாயினும் தெய்வமே, அவரிடம் அருமையாக எழுந்திருக்கின்ற இந்த ரசனையுணர்வை யாவது அவரிடம் நிரந்தரமாக்கிவிட அருள் புரி என்றவாறு அவள் சிந்தனைகள் ஓடின. அடுத்த சில நிமிடங்களில் வீணையுடன் அவள் ஒன்றிப்போனள். உருகியோடிய அந்த இசை வெள்ளத்திலிருந்து அவள் மீண்டபோது அவன், 'மோகனம் மோகனம்தான் பிரியா" என்றன்.
அவளுக்கு வியப்பான வியப்பு. ராகம் என்ன என்று 'கண்டுகொள்ளும் அளவு அவன் சங்கீத ரசிகன? “உங்களுக்கு எப்படித் தெரியும்?’ என்று கூவினுள் அவள். தெரியாமல் என்ன பிரியா, கலைகள் மனிதனை ஆசுவாசப்படுத்த எழுந்தவை. மனிதனைத் திருத்தி உயர்த்த எழுந்தவை. உழைப்பே இல்லாதபோது ஆசுவாசம் ஏன்? ஊழல் சேற்றில் அழுந்தி வாழும்போது என்னவாய்க் கலையை ரசிக்கவோ உணரவோ என்னுல் முடிந்திருக்கப் போகிறது?" என்று அவன் அலட்சிய மாகப் பதிலளித்தான். அவளுக்குப் புரியாத புதிர் எல்லாம் விடுபட்டாற்போல் இருந்தது. முரண்டு பிடித்தாற்போல் நின்றிருந்த அவள் மனத்தில் தெளிவு பிறந்தது. சட்டென்று அவள் நிமிர்ந்து நோக்கினுள். எதிரே இருந்த ஜன்னல் வழியே அடுத்த அறைச் சுவர் தெரிந்தது. அங்கே அவள் வரைந்த உழைப்பாளிகளின் படம் தொங்கித்கொண்டிருந்தது. அவன் பார்வையும் கூட அதே ஜன்னலூடே சென்று அந்த ஒவியத்தில் பதிந்திருந்தது.

பவள மல்லிகை
பனித்துளிகளை ஏந்திக்கொண்டிருந்த பச்சைப் புற்களிடையே சிவப்பும் வெளுப்புமாய்த் தெரிந்த பவள மல்லிகை மலர்களில் சிலவற்றைக் கையில் எடுத்துக் கொண்டு நிமிர்ந்தாள் அவள்.
"குட்மோர்ணிங் உமா. விரிவுரைக்கு நேரமாகவில்லையா? பூப் பொறுக்கிறீர்களே."
"ஓ! கொம்ரேட், குட்மோர்னிங். இன்றைக்கு விரிவுரை ஒன்பது மணிக்குத்தான். இந்த மலர்களைப் பொறுக்கு வதற்காகவே நான் தினமும் அதிகாலையில் புறப்பட்டு விடுகிறேன். இன்றைக்கு கொஞ்சம் லேட்."
*பவள மல்லிகையில் உங்களுக்கு அவ்வளவு ஆசையா?”
*ஆசையும்தான் பரிதாபமும்தான். இவ்வளவு அழகாய் இருக்கின்ற இந்த மலர்கள் எல்லாம் இன்னும் சிறிது நேரத்தில் வாடிச் சுருங்கி மண்ணில் மறைந்துவிடப் போகின்றன. இந்தப் பணி பிரியாக் காலையில் இவற்றைப் பார்த்தால்தான் உண்டு." அவள் முடிக்கு முன்னரே அவன் தொடர்ந்தான்.
பவள மல்லிகை ( ) 163

Page 83
'இரவோடு பூத்து, இரவோடேயே மண்ணில் உதிர்ந்து விடுகின்றன இந்த மலர்கள். பகல் முழுவதும், பூவும் இல்லாமல் சாம்பல் பூத்த இலைகளுடன் பிரகாசமற்று நிற்கிறதால் இந்த மரத்தை சோக மரம் என்றும் சொல்வார்களாம்."
அவள் அந்த மரத்தை அப்போதுதான் புதிதாகப் பார்ப்பது போல் ஏறிட்டுப் பார்த்துவிட்டு, ‘சோக மரம்தான் சரியாகச் சொன்னிர்கள்?’ என்று அவன் கூறியதை ஆமோதிப்பது போலக் கூறினுள்.
"நான் சொல்லவில்லை, கலைக் களஞ்சியம் சொல்கிறது"
"ஓ! நீங்கள் கார்ல் மாக்ஸைத்தான் படிப்பீர்கள் என்று நினைத்தேன்; கலைக் களஞ்சியம்கூடப் படிக்கிறீர்களா?”
“அதுமட்டுமா? திருவெம்பாவை விரதம் ஏன் பிடிக், கிறர்கள் என்றுகூடப் படித்துவைத்திருக்கிறேன் *உன்னடியார் தாள் பணிவோம்; அங்கவர்க்கே பாங்காவோம்; அன்னவரே எம் கணவர் ஆவார்." அவன் குறும்பாகச் சிரித்தான்.
ஓ! அவள் விரதம் பிடிப்பதைத் தெரிந்துவைத்துக் கொண்டு கேலி செய்கிறன்.
அவள் முகம் சட்டென்று குங்குமமாய்ச் சிவந்தது அவன் சிரித்துக்கொண்டே தன் நடையைத் தொடர்ந் தான். அவளும் ஒருவிதப் பிகுவுடன் தன் வழியில் நடந்தாள். கையில் வைத்திருந்த மலர்களை மறுபடி ஒரு முறை பார்த்தாள்; மனதில் ஏற்பட்ட கிளர்ச்சி இன்னும் அடங்கவில்லை.
164 0 கவிதா

"இவ்வளவு கெட்டிக்காரரான குமார் ஏன் தான் கொம்யூனிஸ்ட்டாய் இருக்க வேண்டுமோ?"
சேலைக் கரையைப் பர்ர்த்துக்கொண்டே யோசனையாய் நடந்து செல்கையில் சட்டென்று ஒரு எண்ணம். அவள் மனதில் இடறிற்று.
'ஏ பெண்ணே நீ திருவெம்பாவை விரதம் பிடிக்கிருய். நானே அசல் கொம்யூனிஸ்ட்-உனக்கும் எனக்குமா? .ஹ"oம்.’’ என்ற விதத்தில்தான் அவன் அப்படிக் கூறினுனுே?
அவள் மனம் குழம்பியது. யந்திரம் மாதிரி நடந்து சென்று, நூல் நிலையத்தின் படிகளில் ஏறி, இரண்டாவது மாடியில் இருந்த அந்தக் குறிப்பிட்ட ஜன்னலோரம் சென்று அமர்ந்ததும் ஒரு நிம்மதி. அது அவளுடைய வழக்கமான இடம். விடிய விடிய எழுந்து ஓடி வருவது பவள மல்லிகைக்காக் மட்டுமல்ல; இந்த இடத்துக்காக வும்தான்.
அவள் அந்த ஜன்னலூடாக வெளியே பார்த்தாள். நீலவானப் பின்னணியில், எலும்புருக்கி மரம் ஒன்றின் ஒரே ஒரு கிளை மட்டும் நிறையப் பூத்த சிவப்பு மலர் களுடன் காட்சியளித்துக்கொண்டிருந்தது. அந்தச் சிவப்பு மலர்களைப் பார்த்ததும் அவளுக்கு மறுபடியும் குமாரின் நினைவு வந்தது. பவள மல்லிகை மலர்களின் மருதாணி பூசியது போன்ற செங்காம்புகளைப்பற்றியும், வெண்மையான அதன் இதழ்களைப்பற்றியும் கூடவே நினைவு வந்தது. வெண்மைக்கும் செம்மைக்கும் பொருத்தமில்லை என்றல், எப்படி பவள மல்லிகை மலர்கள் அத்தனை அழகாய் இருக்க முடியும்?
பவள மல்லிகை () 165

Page 84
இந்த எண்ணம் எழுந்ததும், தனியே இருந்தும் அவளுக்கு வெட்கமாய் இருந்தது; கீழுதட்டைப் பற்களால் அழுத்தி அடக்கிக்கொண்டு, தங்கள் முதல் சந்திப்பை எண்ணிப் பார்த்தாள்.
அவள் தங்கியிருந்த விடுதியின் "பார்ட்டி ஒன்றில் அவனை அவளுக்கு யாரோ அறிமுகம் செய்துவைத்தார்
கள். அவன் மாணவ மன்றத் தலைவனும். அவள் அவனைப் பார்த்தபோது அவன் சிரித்துக்கொண்டே கைகூப்பி "வணக்கம்" என்றன். அந்தச் சிரிப்பு
மோகனமாய் இருந்தது.
பதிலுக்கு "வணக்கம்” என்ருள் அவள். அவன் பேசத் தொடங்கினன். "நீங்கள் நல்ல கெட்டிக்காரி என்று கேள்விப்படுகிறேன். பரம்பரையாகப் பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் கேள்விப்படுகிறேன். உங்கள் வர்க்கத்தினருக்கிடையே எங்களுக்கு ஒரு சேவகியைத் தேடிக்கொள்ள, நானே உங்களுடன் பேச விரும்பினேன்."
சவர்க்கம்’ என்ற ஒரு சொற்பிரயோகத்திலேயே அவனை அவள் கண்களை இடுக்கிக்கொண்டு பார்த்தாள். "நீங்கள் ஒரு கொம்யூனிஸ்ட் என்று நினைக்கிறேன்;
Fffuust?”
அவன் சிரித்தான். "பொருள் இல்லாதவனெல்லாம் கொம்யூனிஸ்ட்தான் என்று எங்கேயோ வாசித்தேன்; அப்படிப் பார்த்தால் நானும் கொம்யூனிஸ்ட்தான்; ஆனல் அதற்காக நீங்கள் தயவுசெய்து இங்கிருந்து எழுந்து போய்விடாதீர்கள்; இந்தப் பல்கலைக் கழகத்தில் படிக்கிற எல்லாப் பெண்களையும் நான் பார்க்கிறேன்; எதற்கோ பயந்து பயந்து சாகிறர்கள்,
166 கவிதா

முக்கால் வாசிப்பேர்; துணிச்சலாக முன்வருகின்ற பெண்களிடம் கொள்கை என்று எதுவுமே கிடையாது. இந்த யுகத்தில், இந்தச் சமுதாயத்திலே, ஆண்கள் மட்டும் முயன்று எதையும் சாதித்துவிட முடியும் என்று
நான் நம்பவில்லை. சமுதாயத்தில் புரட்சி வேண்டும் என்ற எண்ணம் ஆண் பெண் இருபாலாரிடமும் பரவ லாக ஏற்பட வேண்டும். அதற்கு முதல்படி, படிக்கிற பெண்களிடையே சிந்தனையைத் தூண்ட வேண்டும்."
அவள் கலீரென்று சிரித்தாள். சிரிப்பின் முடிவில் *கன்வஸ்" செய்கிறீர்களா?" என்று கேட்டாள்.
"ஆம் என்று சொல்வதற்கு நான் வெட்கப்படமாட்டேன். இது ஒரு புனிதமான பணி என்றே நான் நினைக்கிறேன், உங்களைப் போன்ற இரண்டொருவரைச் சிந்திக்க வைத்தாலே என் முயற்சி வெற்றிபெற்ற மாதிரிதான்."
"ஒரு நாளும் நடக்காது."
"ஏன் நடக்காது? இப்போதில்லாவிட்டாலும், இன்னும் ஒரு ஐந்து வருடங்களில்." அவன் முடிக்குமுன் அவள் குறுக்கிட்டாள், "நீங்கள் சிவ சிவா என்று கிளம்பிவிடு வீர்கள்.”
இப்போது அவளுடன் சேர்ந்து அவனும் சிரித்தான்.
இப்போதும், ஜன்னலூடாக அந்தச் சிவப்பு நிற எலும்புருக்கி மலர்களைப் பார்த்துக்கொண்டிருக்கையில் அவள் இதழ்கள் புன்னகைக்கத் துடித்தன. அடக்கிக் கொண்டு திரும்பிய வேளை, "யாருடைய முறுவல் உங்கள் உயிரை உண்டதோ - நான் அறியலாமா?” என்று கேட்டுக்கொண்டு அவனே நின்றன்.
பவள மல்லிகை D 167

Page 85
"முறுவலா?" என்று அவள் புரியாத திகைப்புடன் வினவினுள்.
"தயவுசெய்து நீங்கள் விரித்துக்கொண்டிருக்கிற பக்கத்தைப் பாருங்கள்; ஏதோ பலமாக யோசித்து சிரித்துக்கொண்டிருந்தீர்கள்; புத்தகம் காரணமாய் இருக்கலாமோ என்று பார்த்தேன்’ என்றவன், "மன்னிக்க வேண்டும்; உங்கள் பிரைவளியிக்குள் நுழைந்துவிட்டேனுே?’ என்றும் கேட்டான்.
அவளுடைய அந்தரங்கத்துள் இப்போதல்ல, எப்போதோ நுழைந்துகொண்டிருப்பவனே எதிரே வந்து நின்றுகொண்டு, உங்கள் அந்தரங்கத்தில் நுழைந்து விட்டேன என்று கேட்டுக்கொண்டு நிற்கிற வேடிக்கையை நினைத்து ஒருமுறை வாய்விட்டுச் சிரிக்க வேண்டும் போல் தோன்றியது; அடக்கிக்கொண்டாள்.
தன் எதிரே விரிந்து கிடந்த புத்தகத்தை நோக்கினுள் தடித்த கறுப்பு எழுத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் அந்தப் பக்கத்தில் இருந்தது. அதன் கடைசி அடியைப் படித்ததும் அவன் கேள்வியின் அர்த்தம் அவளுக்குப் புரிந்தது. 'முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே." அவள் சிரித்துக்கொண்டே, "இது கம்பராமாயணம். என்ருள்.
"நல்ல வேளை, நான் சீதாதேவி என்று சொல்லாமல் விட்டீர்களே" என்று அவனும் சிரித்தான். "ஐயையோ, நான் வெறும் உமாதேவிதான். 9{قJ கிடக் கட்டும்; என் அந்தரங்கத்தில் நுழைந்தீர்களே, உங்கள் அந்தரங்கத்தில் இருப்பவர்களைப்பற்றி நான் அறியலாமா?” கிடைத்த சந்தர்ப்பத்தில் அவன் மனதி
168 () கவிதா

லிருப்பதை அறிந்துவிட வேண்டும் என்ற ஆவல் அவளுக்கு.
பட்டென்று பதில் வந்தது. "உங்கா என்று ஒருத்தி இருக்கிருள். இன்னும் நான் பார்க்கிற எல்லாச் சமுதாயச் சீர்கேடுகளும் என் அந்தரங்கத்தில் இருக்கின்றன." உமாவின் உள்ளம் வாடிச் சோர்ந்தது, அவள் முகத்தில் நிதரிசனமாகத் தெரிந்தது. "உங்காவா - யாரது" என்று உயிரற்ற குரலில் கேட்டாள்.
அவன் அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. தன் உள்மனத்தில் உறங்கிய நினைவுகளில் யாரோ பலமாக அறைந்துவிட்டதைப் போல அவன் முகபாவம் இருந்தது.
*இது என்ன பெயர் என்று நீங்கள் யோசிக்கலாம். இதை விடவும் அர்த்தமில்லாத பெயர்கள் அவர் களிடையே இன்னும் இருக்கின்றன. வளமான மலை யகத்தில் வாழ்கிறர்கள்; கருத்து வளமோ, உடல் வளமோ, பொருளாதார வளமோ அவர்களிடமில்லை; பெற்ற குழந்தையின் கல்லறை மீதே ஏறி நின்று தன் வயிறை வளர்ப்பதற்காகத் தேயிலை பறிக்கும் எந்தத் தாயையும் நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள். உணர்வு வளம்கூட இல்லையா என்று அதிசயப்படுகிறீர்களா? ஏழ்மை உமா, ஏழ்மை இந்த நிலையில் நின்று பார்க்கும் போது, மிஸ் உமா, எனக்குப் புரட்சியைவிட வேறு எதுவுமே கருத்தில் உறைப்பதில்லை."
ஆவேசம் வந்தவன் போல் பேசத் தொடங்கிய அவன், உமாவின் கருத்தை அறியும் நோக்கமோ விழைவோ இல்லாமல், ள்ங்கோ பார்த்தபடி சிறிது நேரம் நின்றன். ஒன்றுடன் ஒன்று மோதிக் குழம்புகின்ற கருத்துகள்
க-11 பவள மல்லிகை () 169

Page 86
எல்லாவற்றையும், அன்றே, அங்கே, அப்பொழுதே கொட்டிவிடுவதற்காகத் தயாரானவனைப் போல அவன் தோற்றம் இருந்தது.
"சின்னவளாக எங்கள் வீட்டில் வேலைக்கு வந்தாள் உங்கா. பெரியவளான பிறகு தோட்டத்திலே வேலை செய்தாள். படிப்பதற்கு அவளுக்குக் கொள்ளை ஆசை இருந்தது. முடியவில்லை. முடியாமல் போய்விட்ட அந்த அளவிலேயே சமுதாயம் அவளிடம் இரக்கம் காட்டியிருக்க வேண்டும். ஆனல் படிப்பறிவில்லாத அவளுடைய பலவீனத்தைக் கொண்டே அவளை வஞ்சித்துவிட்டது. முடிவில், அவள் உயிரையே விட்டு விட்ட பிறகு, இன்னும்கூட, அந்தச் சமுதாயம் அப்படியே இருக்கிறது."
இப்படிக் கூறி வந்தவன் அடித்தொண்டையில், "இது ஒரு பெண்ணின் கதை மட்டுமல்ல உமா; ஆயிரம் ஆயிரம் பெண்களின் கதை’ என்றன். அப்போது அவன் கண்கள் சிறிது சிவப்பேறி இருந்தன. கண்ணிரை அடக்கச் சிரமப்படுகிறன் என்பது தெரிந்தது. அவள் கண்களும் கலங்கியதைக் கண்டு அவன் சிரித்தான்.
*உங்களைக் குழப்புகிறேன் உமா மன்னிக்க வேண்டும். நீங்கள் கவலையற்று, வானம்பாடியாய்ச் சுற்றுகிறீர்கள். அழகாக உடுப்பது, கோவிலுக்குப் போவது, சினிமா வுக்குப் போவது, மாலை நேரங்களில் பூம்பந்தாடுவது, இவை எதுவுமே இல்லாத நேரங்களில் இப்படி ஒரு காவியத்தை விரித்து வைத்துக்கொண்டு அதன் ரசனையில் மூழ்கிவிடுவது. ஓ. எவ்வளவு சுலபமாக இருக்கிறது உங்களுக்கு வாழ்க்கை படிக்கிற பெண்கள் சிந்திக்க வேண்டாமா உமா? "அவர்களைத்தான்”
170 0 கவிதா

விட்டுத் தள்ளுங்கள். இங்கே உங்களைச் சுற்றி வாழுகின்ற படித்த பெண்களையே பாருங்களேன். ஏதோ ஒரு நச்சு நாகரிகத்துக்கு அடிமையாகி, தங்களுக்குத் தாங்களே வலை விரித்து, அதிலேயே மாட்டிக்கொண்டு அழிந்துபோகிறர்களே. இந்த நச்சு நாகரிகத்துக்குத் தீயிட்டு அழித்துவிட்டு பெண்கள் வெறும் அலங்காரப் பொம்மைகளாக மட்டும் வலம் வராமல் உண்மையிலேயே சமுதாயத்தின் கண்களாக விளங்கச் செய்ய வேண்டும் என்பதற்காகப் புரட்சியைப் பற்றி நினைப்பவன் நான். அதற்காக என்னை கொம்யூனிஸ்ட் என்கிறீர்கள். இதோ பாருங்கள் உமா, நீங்கள் விவேகானந்தரின் கருத்துகளைப் படித்த தில்லையா?” என்று கேட்டவாறு தன் மார்புடன் அணைத்துப் பிடித்திருந்த புத்தகங்களிலிருந்து நாட் குறிப்பை மட்டும் வெளியே எடுத்து, அதில் ஒரு குறிப்பிட்ட பக்கத்தைப் பிரித்து அவள் வாசிக்கக்கூடிய விதத்தில் மேசை மேல் வைத்தான் அவன்.
"தான் கொம்யூனிஸ்ட் இல்லை என்பது போலப் பேசுகிருரே. நான் போட்ட கணக்குத் தவற?" என்று ஒருவகை மகிழ்ச்சியும் சந்தேகமும் கலந்து அவசரத் துடன் அவன் காட்டிய பக்கத்தை வாசித்தாள் உமா. "வேதாந்தம் படிப்பதும் தியானம் பயில்வதும் இன்னுேரன்ன பிறவும் அடுத்த ஜென்மத்தில் வைத்துக் கொள்ளக்கூடாதா? பிறருக்குச் சேவை செய்வதிலேயே இந்த உடல் அழியட்டும்; அப்படியானுல் நீங்கள் என்னிடம் வந்தது வீண் போகவில்லை என்று நான் மகிழ்ச்சிகொள்வேன்.”
வாசித்துவிட்டு, அவனை நிமிர்ந்து பார்க்கையில், அதற்காகவே காத்திருந்ததுபோல அவன் மறுபடியும் பேசலானன். 'ஏதோ ஒரு கோணத்திலிருந்து என்னைப்
பவள மல்லிகை () 171

Page 87
பார்த்துவிட்டு கொம்யூனிஸ்ட் என்கிறீர்கள். அதே கோணத்திலிருந்து நீங்கள் வணங்குகின்ற பூரீராமனைப் பாருங்கள்; விவேகானந்தரைப் பாருங்கள்; அவர்களும் கூடக் கொம்யூனிஸ்டுகளாகத் தெரிவார்கள்! நான் மார்க்ஸைப் படிக்கிறேன். உண்மை. ஆனல் எனக்கு வழிகாட்டி மார்க்ஸ் அல்ல, விவேகானந்தர் ! இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றுதான் விரும்பு கிறேன். ஏனெனில் உங்கள் பாதை வேறு, என் பாதை வேறு என்று நீங்கள் நினைக்கிறதால் சமுதாயம் ஒரு நல்ல சேவகியை இழந்துவிடக் கூடாதே என்று அஞ்சுகிறேன்.'
அவன் பேசியானதும், 'விவேகானந்தர் புரட்சிபற்றிக் கூறியிருப்பதாகத் தெரியவில்லையே' என்ருள்.
"இருக்கலாம். ஆனல் சேவையைப்பற்றிச் சொல் கிருரே. என்னைப் பொறுத்தவரை இன்றைய சமுதாயத் துக்குத் தேவையான சேவை, புரட்சி என்றே நினைக் கிறேன். தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழிக்க வேண்டும் என்றரே பாரதியார். அவருக்கும் முன்னேயே திருவள்ளுவர், "இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் உலகியற்றியானே பரந்து கெட வேண்டும்" என்ருரே. இவர்கள் எல்லாருக்கும் பின் தானே, நான் புரட்சியைப்பற்றி எண்ணுகிறேன். என்னை மட்டும் ஏன் நீங்கள் கொம்யூனிஸ்ட் என்று கூறவேண்டும்?' அவன் சிரித்துக்கொண்டே கூறினுன் உமாவுக்குச் சிரிக்க வேண்டும் போல் இல்லை. "நன்றக வாதாடுகிறீர்கள்’ என்று அவள் சொல்லிக்கொண்டி ருக்கும்போதே வெளியில் பலத்த ஆரவாரம் கேட்டது. இடையிடையே "ஜயவேவா" என்று கேட்பது போல் பட்டதால் கலவரத்துடன் "என்ன அது சத்தம், ஸ்டிரைக்கா?” என்று அவனிடமே கேட்டாள்.
*t72 ) கவிதா

"ஸ்டிரைக்தான். வெளியே பல்கலைக்கழகமே திரண்டிருக் கிறது; நீங்கள் எதுவும் அறியாமல் 'கம்பரச'த்தில் மூழ்கியிருக்கிறீர்களே” என்று அவன் குற்றம் சாட்டும் தொனியில் கூறினன்.
"தலைவன் இங்கே நிற்கும்போது ஸ்டிரைக் என்ன?”
"பதினைந்து டிமாண்ட்ஸ்; பதினைந்தில் ஒன்றுகூட நியாயமானதாகப் படவில்லை எனக்கு. தலைமை தாங்க முடியாது என்று கூறிவிட்டேன். கமிட்டியிலை இருந்து விலக்கிட்டாங்க. ஆளுபவர்களுக்கெதிராகப் G_T fG பவன் அல்ல நான்; அநியாயத்துக்கெதிராகப் போரிடு Lugh joir.'
“ஓ, அப்ப இனி உங்களுக்கு நல்ல காலம் எண்டு சொல்லுங்க."
“என்ன நல்ல காலம் உமா. எங்களுக்கெல்லாம் நல்ல காலம் கல்லறைக்குப் போறபோதுதான்' என்று சிரித்துக்கொண்டே கூறினுன். கூறிக்கொண்டே நடந்தான். அதுவே அவன் பாணி! போகிறபோக்கில் "போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன்" என்ருன். நிசப்தமான அந்த மாடியில் அவன் காலடி ஓசை தேய்ந்து மறைந்தது. அவள் விழிகளைத் திருப்பி மேசையைப் பார்த்தாள். இன்னும் இராமாயணம் விரித்தபடி இருந்தது.
பூரீராமன் என்று மனதில் சொல்லிப் பார்த்தாள்.
சிவகுமார் என்று வாய்விட்டே சொல்லிப் பார்த்தாள்.
பரிசலோட்டியான குகனை என் தம்பி என்று அணைத்துக் கொண்டதால் பூரீராமன் கொம்யூனிஸ்டா? என்று தன்னையே கேட்டுக்கொண்டாள் !
பவள மல்லிகை ( 173

Page 88
மறுநாள் விடியற்காலையில் அந்தப் பவள மல்லிகை மலர்களைக் கையில் எடுத்தபோது அவளுள் மணம் மலர்ந்து பரப்பியது ஒரே ஒரு நினைவு. அந்த நினைவு அவள் இதயத்தையே பூவாய் மலரச் செய்துகொண்டி ருந்தது. நேற்றுப் பேச்சுவாக்கில் குமார் தன்னிடம் சொன்னதை எல்லாம் விஜயாவுக்குச் சொன்னபோது அவளே சொப்ற்கோர்னர்’ என்று கேலி செய்ய ஆரம்பித்துவிட்டாள் ! மனதில் நினைவுகள் சுழியோடியபோதும் பழக்கமான வேகத்தில், பழக்கமான பாதையில் நடையைத் தொடர்ந்த அவளை அதிசயத்துடன் விழித்த குரல் ஒன்று எதிர்கொண்டது. "என்ன உமா. ஆடிப்பாடி வருகிறயே. உனக்கு விஷயம் தெரியாது போலிருக்கு." "என்ன விஷயம் விஜயா?” "ஐயோ என்ன விஷயமா? உண்மையாகவே உனக்கு இன்னும் தெரியாதா? குமாருக்குத் தலையில சரியான s29 to . ஹொஸ்பிடலில் சேர்த்திருக்கிறங்க. நாங்க இப்பவே பார்க்கப் போருேம். நீயும் வருகிருய் அல்லவா?* உமாவுக்கு என்ன சொல்வது, என்ன செய்வது என்று ஒன்றுமே தெரியவில்லை! 'போலீஸ் தடியடியா” என்று மட்டும் கேட்டாள். “ஓம் உமா, ஓம். பிரசிடெண்டானபடியா அகப்பட்டுக் கொண்டார்." "ஐயோ, விஜயா! 'அவர் பிரசிடெண்டே இல்லையடி. அநியாயமா பழிவாங்கிட்டாங்களே" என்று அடிவயிற்றி லிருந்து கூவினுள் உமா.
74 assist

அதற்கும் அடுத்த நாள் விடியற்காலையில் அவள் அந்தப் பவளமல்லிகை மரத்தின் அடியில் வந்து நின்றபோது, கண்ணில் ததும்பிய நீரின் ஊடாக அந்தப் பிரதேசமே பவள மல்லிகையாய்ப் பூத்தது போன்றதோர் பிரமையாய் இருந்தது. கை நிறைய மலர்களை அள்ளிக்கொண்டு முகத்தை அவற்றி னிடையே பதித்துக்கொண்டு விம்மினுள் அவள்.
முதல் நாள் குமாரை ஆஸ்பத்திரியில் பார்த்தது பயங்கரமாய் நினைவில் இடறிற்று.
சுருண்டு சுருண்டு நெற்றியோடு கொஞ்சும் அழகான கிராப்பை மொட்டையடித்திருந்தார்கள். தலையைச் சுற்றிக் கட்டு. ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டிருக்கும் போது நெற்றியில் புடைத்து நிற்கின்ற ஒரே ஒரு நரம்பு இப்போதும் புடைத்துக்கொண்டு நிற்கிறது.
காலையிலிருந்து இரவு வரை அவனருகிலேயே தவமிருந்த தற்குப் பிரதியாய் ஒரே ஒருமுறை கண்களை விழித்து, கூரை விட்டத்தையோ, கதவுக் குமிழையோ, கட்டில் சட்டத்தையோ பார்ப்பதுபோல உணர்ச்சியற்று அவள் முகத்தையும் பார்த்தான். மலங்க மலங்க விழித்த அந்த லட்சியவாதியின் கண்கள் இனிமேல் நான் ஒரு பைத்தியக்காரன் என்று அவள் கண்களில் எழுதிக் காட்டின.
பலமான கேவலில் அவளுடைய இதயமே தொண்டைக் குழிக்குள் வந்து சிக்கிக்கொண்டதுபோல் இருந்தது தான் தெரியும். இன்று அதிகாலையில் மறுபடியும் விழிப்பு.
அவள் கையில் இருந்த மலர்களிடையே பாலைவனத்து ஊற்றென மறையும் கண்ணிர்த் துளிகள், மெளன
பவள மல்லிகை - 175

Page 89
பாஷையில் அவள் இதயத்து எண்ணங்களை அந்த மலர்களையே ஏடாக்கி எழுதிக்கொண்டிருந்தன. அந்த மலர்களுக்கு மட்டும் வாயிருக்குமானுல் அவை கூறி யிருக்கக்கூடிய வாசகங்கள் இவைதாம்!
"என்னுள் அதிசயமாய் அழகாய் மலர்ந்தது ஒரு மலர். அது காதல் என்ற மலர். அவருள் அதைவிடவும் அழகாய் மலர்ந்தது ஒரு மலர். அது லட்சியம் என்ற மலர். ஆனல் அந்த இரண்டு மலர்களுமே, யாருக்கும் தெரியாமல் இரவோடு பூத்து இரவோடேயே மண்ணில் உதிர்ந்து கருகிப் போய்விட்டன. ஆமாம் - நாங்களும் இனிமேல் சோக மரங்கள்தாம்.”
476 () கவி.

ஜாலம்
முரளி 'விசுக்" என உள்ளே நுழைந்தான். LD uu göğ56, 6,2500T வாசித்துக்கொண்டிருந்தாள். பார்க்கையில், நவீன மகஸின் ஒன்றில் வந்த "மொடேர்ண் ஆர்ட் அட்டைபோல் இருக்கிறதே என எண்ணிக்கொண்டு ஹாலைக் கடந்தான்.
காலடி ஒசையிலிருந்து அவன் வருகையைத் தெரிந்து கொண்ட பிரபா அறைக்குள் இருந்தபடியே கேட்டாள் "அண்ணு நேற்று என்ர பிளவுஸ் டெயிலரிடம் வாங்கி வந்தீங்களோ?”
s ஓஹோ மறந்துபோய்விட்டது; இவளுக்குப் பதில் சொல்லி மாளாது.
நேரே சமையல் அறையை நோக்கி விரைந்து போனன். அம்மா அங்கே இல்லை. அப்படியே பின் புறக் கதவால் வெளியே போய், கராஜைச் சுற்றிக் கொண்டு மறுபடி முன்புறம் வந்து, "கேட்டைத் தாண்டி வெளியேறினன்.
வாய்க்குள்ளே யாரையோ சபித்துக்கொண்டே போனுன். பிரபாவை இல்லை. யாரை என்று அவனுக்கே தெரியவில்லை.
ஜாலம் D 177

Page 90
இன்று காரியாலயத்துக்கு இல்லை. ஆயினும், அதே வழி. அதே நேரம்.
சந்தியைத் தாண்டி நேரே நடக்கையில், "பிறிஸ்டல் சிகரெட் வான்' அவனைத் தாண்டிச் சென்றது; இறைச்சிக் கடைக்கு, கொன்ற உடலைச் சுமந்து செல்கிற "லாரி" முன்னே போய்க்கொண்டிருக்கிறது. அதிலிருந்து சொட்டுச் சொட்டாய் இரத்தம் வீதியில் ஒழுகுகிறது. மூலையில் இருக்கிற "ஃபாக்டரி'யில் வேலை செய்கிற இளம் பெண்கள் இரைந்துகொண்டே விரைந்து நடக்கிறர்கள்.
அவன் சலிப்புற்றன்.
பாதையை மாற்றிக்கொள்ளலாமா என்று நினைக்கையில், ஒரு பிரேத ஊர்வலம் எதிரே வந்துகொண்டிருப்பது தெரிகிறது.
நேரே நடந்தான்.
போதை ஏறிய ஒருவர் "நாமார்க்கும் குடியல்லேம்" என்று உரக்கப் பிரகடனம் செய்துகொண்டு வந்தார். வேஷ்டியின் கீழ்க்கரை நுனி வலது கையில்; இடது கை வீசி வருகிறது; நிமிர்ந்த நன்னடை
அவர் பின்னே இன்னுெருவர். இவர் குரலுக்கிடையில் அவரும் சில சமயம் சேர்ந்துகொள்கிறர்.
'றேமண்ட்" கறுப்புக் கார் ஒன்று ஊர்ந்து வருகிறது? காரின் பின்னல் ஒருவர் உறி மாதிரி சிறிய ஊஞ்சலில் ஒரு சட்டியில் எதையோ எடுத்துப் போனர். அதை அவர் "ஹாண்ட் பாக் மாதிரி ஆட்டிக்கொண்டே போனுர்.
178, 0 கவிதா

"இறந்து போனவருக்குத் தருமக் கொள்ளி" முரளியின் வியப்புற்ற முகத்தைப் பார்த்து ஒருவர் தலையாட்டிக் கொண்டே சொல்லிப் போனுர்.
ஒஹோ! ஆஸ்பத்திரியில் உயிரைவிட்ட அநாதைப் பிணம்.
ஆணு? பெண்ணு?
என்ன வருத்தம்? உற்றர் உறவினர் யாருமே கிடையாதா? அருகே வந்து, காரைக் கடக்கையில் உள்ளே பார்த்தான். மூடப்பட்ட பிரேதப் பெட்டி! மனதில் அநுதாபம் எதுவும் சுரக்கிற மாதிரி இல்லை. பரவாயில்லை; வாழ்கிறதுக்குச் சாவது எவ்வளவோ மேல்தான்! திடீரென்று பெரிது பெரிதாய் மழைத்தூறல் விழ ஆரம்பிக்கிறது.
காசுக்குத் தேவாரம் பாடியவர்கள் நடையைத் துரிதப்படுத்துகிறர்கள். கொஞ்ச நேரத்தில் மறுபடி வெயில். என்ன மழை இது? டெய்லரின் கடைக்குப் போகிற உத்தேசம் எதுவும் இல்லை. சேரும் இடம் குறிப்பாய் எது என்றும் இல்லை.
b60).
தந்திக் கம்பத்தின் ஒடுங்கிய நீண்ட நிழலில் இரண்டு பறவைகள் ஒன்றன் பின் ஒன்ருய் உட்கார்ந் திருக்கின்றன.
ஜாலம் ) 179

Page 91
என்ன பறவைகள் இவை, பிறவுண் நிறத்தில்? முன்னே இருப்பது மற்றதைத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. எதற்கோ காத்திருக்கிற மாதிரி.
நான் போன பிறகு அவை முத்தமிட்டுக்கொள்ளப் போகின்றன.
ஒ. அவைதான் பறவைகள் ஆச்சே!
.பிறீ லவ் காத்திருப்பானேன்? இப்போ என் எதிரிலேகூட. ‘த்சொ இந்த மனிதர்கள்தான். சுஜி என் அருகே அவ்வளவு நெருக்கத்தில் இருந்தாள். படம் பார்க்க வேண்டும் என்று யாருக்கு இருந்தது? சத்தியமாய் திரை ஒரே வெள்ளை!
சுஜி கன்னத்தோடு கொஞ்சும் ரோஜாவும் அதுவுமாய். எனக்குக் கதைக்கிற 'மூடே இல்லை.
அவ தன் பாட்டுக்குச் சொல்லிக்கொண்டிருந்தா.
இருவருமாக நோர்த் இண்டியாவுக்குப் போக வேண்டுமாம்; தாஜ்மகால் பார்க்க வேண்டுமாம்; குதுப்மினுர் உச்சிக்கு ஏற வேண்டுமாம்; யமுனைக் கரையில் உலாவ வேண்டுமாம்; காஷ்மீர் ஏரியில் படகு வீட்டில்.
*ச்சை! நீ தனியாய்ப் போய்ப் பார்த்துக்கொள்' என்று எரிச்சலோடு சொன்னேன்.
அவள் அதன் பிறகு பேச்சை நிறுத்திவிட்டாள்.
189 கவிதா

மனம் நொந்துபோய் இருப்பாளாய் இருக்கும்.
ஆனல் காட்டிக்கொள்ளமாட்டாள்.
கண்ணில் துளிநீர் தேங்கிப் பார்த்ததில்லை.
சரியான மண்டைக் கர்வம்.
பொம்மைபோல் இருந்தாள்.
கொஞ்சம் இருந்துவிட்டு, கோபத்தின் சாயலே இல்லாமல் பேசுவாள் - ஏதோ உலகத்தையே உத்தாரணம் செய்யப் பிறந்தவ மாதிரித்தான்!
இந்தக் கர்வம் என் காலடியில் கிடக்குமானுல் எவ்வளவு இன்றஸ்டிங்?
காமெலாவைப்பற்றி இவளுக்குத் தெரியாது. சில சமயங்களில் அவளைப்பற்றி இவளுக்குச் சொல்லி இவள் சரிந்து விழுவதைப் பார்க்க வேண்டும் என்று இருக்கும்.
சுஜிக்கு முன்னே அவள்தான்.
அவளை விட்டுவிட வேண்டும் என்று எனக்குத் தோன்றிப் போனதற்குக் காரணமே அவள் எனக்கு மிக நெருங்கி வந்துவிட்டதுதான்.
என் “பெர்சனுலிட்டி'யே அப்படி 'வெரி கலன்ற்’
சுஜியோ எனக்கொரு சவால்.
சுஜியை இந்த அளவுக்குக் கொண்டுவர நான் நிறைய வாக்குறுதிகள் கொடுக்க வேண்டியிருந்தது. நான் யாருக்கும் வாக்குறுதிகள் கொடுத்ததில்லை. காமெலா, அவளுக்கு முன்னே ராணி, அவளுக்கு முன்னே.
ஜாலம் ( 181

Page 92
வாக்குறுதி கொடுத்தால் கட்டாயம் காப்பாற்ற வேண்டும் - வாக்குறுதி கொடுக்காமலே வெல்லத் தெரியாமைக்குத் தண்டனையாக,
எத்தனையோ கெட்ட பழக்கங்கள் என்னிடமிருப்பதை இவள் அறிவாள்; ஆயினும் நான் பொய் சொல்ல மாட்டேன் என்பதை நம்பினுள்.
இது உண்மைதான்.
சில உண்மைகளைச் சொல்லாமல் - சொல்ல நேராமல் - பார்த்துக் கொண்டதுண்டு. பொய் சொன்னதில்லை.
ஏன் சொல்ல வேண்டும்?
சுஜி வெறுத்துவிட்டால் பெண்களா இல்லை?
புது டைப்பிஸ்ட் "விலானி ஜோராய் இருக்கிறள். "இருக்கட்டுமே" என்கிறது ஒரு மனம்.
உண்மையில், இவளோடு பழகத் தொடங்கி மூன்று வருடங்கள் ஆகின்றன. யாரும் இவ்வளவு காலம் நிலைத்ததில்லை.
இன்னும், இவளைப் பெறமுடியவில்லை என்பதால்தானுே என்னவோ, இழக்கவும் முடியவில்லை!
சுஜி என்னைக் காதலிக்கிருள்தானு என்று இருந்திருந்தாற் போல் சந்தேகம் எழும்.
ஒரு நாள் சுஜி கேட்டாள் - 'பாரதியார் எழுதிய பாம்பு களின் கதை தெரியுமோ," என்று.
பிறகு தானே சொன்னுள் 'இரண்டு பாம்புகளும் சண்டை யிட்டுக்கொண்டன - ஆண் பாம்பும், பெண் பாம்பும்.
182 ஆ0 ) கவிதா

நான் உன்னை வெறுக்கிறேன்!
நான் உன்னைப் பகைக்கிறேன்! நான் உன்னைக் கொல்லப்போகிறேன்.
நான் உன்னைக் கொல்லப்போகிறேன்!
இரண்டும் ஒன்றை ஒன்று கடித்துக்கொண்டு இறந்து விட்டன."
"சரி; தெரிகிறது. விஷயத்துக்கு வா." "இரண்டு அறிவு ஜீவிகள் தாம்பத்தியத்தில் ஒன்று சேர்ந்தால் இவற்றைப் போலத்தானே..?”
6; A 5 9
“ஒரு அனுபவத்துக்காகவே குடிப்பதாய் நீங்கள்சொல்லு கிறீர்கள். பிறகு விட்டுவிடுவீர்கள். ஒரு அனுபவத்துக் காகவே நானும் காதலிக்கிறேன். பிறகு விட்டுவிடுவேன். உங்கள் வாக்குறுதிகளைக் காப்பாற்றுங்கள் என்று நான் கேட்கவில்லை. மறந்துவிடுங்கள். அதுவே உங்களுக்கும் செளகரியம்."
நான் நிமிர்ந்து பார்க்கையில், கண்ணைச் சிமிட்டிக் கொண்டு சிரிக்கிருள்!
பழிகாரி பகிடிபோல் சொல்வதெல்லாம் நிஜங்கள்தானே?
எனக்கு அவள் குரல்வளையை நெரித்துக் கொன்று விடலாம் என்றிருந்தது.
பதிலாய், என் கைகளை அவள் தோளுக்கு மேலாய்ச் சேர்த்து அவளை என்னுடன் அணைத்துக்கொண்டேன்.
அவள் திணறினுள்.
gTGob O 183

Page 93
என் கைகளைத் தளர்த்திவிட்டு அவள் சொன்னுள். 'எனக்குள்ளே ஒரு தபஸ்வினி இருக்கிருள். எதன் மீதும் பற்றில்லை. பொருட்கள் விஷயங்கள் எல்லாம் விரைவாகச் சலித்துவிடுகின்றன. எனக்கு என்மீதே பயமாய் இருக்கு-பைத்தியமாய்ப் போய்விடுவேனே என்று. எதையாவது தீவிரமாக விரும்பி, ஆசைப்பட்டு, இந்த உலகத்தோடு ஒட்டிக்கொள்ள வேண்டும்போலத் தவிக்கிறேன். உங்களுக்கு விளங்குதா?”
நான் சுஜியை உற்றுப் பார்த்தேன்.
இவை சுஜி சொல்கிற வார்த்தைகளா? -
எனக்குள்ளே இருப்பவை.
இவள் எனக்குள்ளேயே புகுந்திருக்கிருளா? நேற்று ஒரு கால் வினுடியிலும் பாதி வினுடியில், உணர்ச்சி வசமாய் நான் அந்தக் கேள்வியைக் கேட்டேன்.
'சுஜி, நானேதான் நீயா? நீயே நானே?’ என்னுடைய உணர்ச்சிப் போதை சிதற அவள் என்னிலிருந்து பிரிந்தாள். * Č
சிரித்துக்கொண்டே "நீங்கள், நீங்கள்தான். நான், நான் தான். இதோ, இந்தக் குறிப்பிட்ட பாட்டைக் கேட்கிற போது எனக்கு ஒரு ஸ்போர்ட்ஸ் மீட், கிறீன் கலர் மாஷ்மெலோஸ், கைமுறிந்த பத்து வயசுப் பையன் எல்லாம் ஞாபகத்திற்கு வருகின்றன. உங்களுக்கும் அப்படியா? எவ்வளவுதான் காதலித்தாலும் இணைந்துவிட வேண்டுமாய்த் தவியாய்த் தவித்தாலும், இந்த உலகில், தனியாய்ப் பிறப்பிக்கப்படுகிற ஜீவன் ஒன்று, எப்பவும் தனியே தனிதான். இல்லையா?”
ஆமோதிப்பு வேரு?
184 ( ) கவிதா

எனக்குத் தாங்கவில்லை. 'சுஜி, நீ என்னை நேசிக்கவில்லை." வெறியோடு கத்தினேன். "என்ன விரும்புகிறீர்கள்? நேசிக்க வேண்டுமா?" 'இது ஒரு பெண் கேட்கிற கேள்வியா?”
"ஓ! என்ன கேட்பார்கள் பெண்கள்? கடைசிவரை கைவிட்டுவிடாதீர்கள் என்று கேட்பார்கள். அதுவும் கடைசியில்தான் கேட்பார்கள். கைவிட்டுவிடுவீர்கள். நிஜமாய்ச் சொல்லுங்கள் - மது, எல். எஸ்டி, மாத்திரை,
மாரிஜூவானு, பெண், எல்லாவற்றுக்குமே ஒரே அர்த்தம் தானு உங்கள் அகராதியில்?"
"ஓ! திஸ் இஸ் டூ மச் சுஜி விலகுகிருள்!" உணர்ச்சியில் என் முழு மேனியும் ஆடுகிறது. இவள்.இவளை அப்படியே..!
அவள் பட்டுப்போன்ற உச்சியில் என் அதரங்கள் அழுந்தின.
சுஜி உதறினுள். என்னையும் ஒருத்தி உதறுகிறள்.! எனக்கு ஆவேசம் உண்டாயிற்று.
அவள் உச்சியில் சற்றுப் பலமாகவே அடித்தேன்.
'சுஜி! என்னை நம்பு. அப்பா இறந்துபோய் இன்னும் ஒரு வருடம் ஆகவில்லை. ஆன மறுநாளே நம் கல்யாணம் நடக்கும். இது சத்தியம்.”
இதுவரை யாருக்கும் செய்யாதது -
க.-12 gir 6db ) 85 له

Page 94
சுஜிக்கும் கூட.
அவள் இமைகளை மலர்த்தி மெதுவாகப் புன்னகைத்தாள். அதில், ஆயிரம் மலர்களின் விஹஸிதம்.
நான்நடுங்கினேன்!
106 () கவிதா

ஒரு தேவதைக் கதை
நிஷ்டையில் ஆழ்ந்திருந்த ரோஜாவிடம் தென்றலாக நீ வந்தாய்
பிறகு,
புயலாக மாறி, தரையோடு அறைந்துவிட்டுப் பிரிந்து டோனுய்.
நிஜத்தில், நான் தேவதையாய் அல்ல, வெறும் கல்லாய் இருந்தபோதுதான், ஒரு புதிய இராமனுக
நீ வந்தாய்.
உன் காலடி பட்டபின், மானுடம் வென்று, மனுவழியாக நான் மாறிப் போனபின் நீ என்னைத்
தேவதை என்று பூஜிக்கத் தொடங்கினுய்உன் மேலான சொற்களில் 'வித்வம் இல்லாதவர்களிடம் வாத்யம்” என்ருய்.
நீயா வித்வம் இல்லாதவன்? வித்தை உன்னிடம் வணங்கி நிற்கிறதே!
ஒரு தேவதைக் கதை () 187

Page 95
சகல ஜீவன்களின் ஜீவிதமும் ஸ்தம்பித்து நிற்க, உன்னுல் குழலிசைக்க முடியும். விதம் விதமாய் வாழ்வு எழுதுகிற பிரம்மதேவன் கூட அதிசயிக்க உன்னல் கதை எழுத முடியும். யுகங்களின் முடிவில், பொங்கி எழுகிற அலை, தன் முடியில் தடி வருகிற காவியம், உன்னதாய்த்தான் இருக்கும்.
ஹே! மடையா!
நான் உன்னில் எந்த விதத்தில் உசத்தி? உன்னைக் கேட்க எனக்கு ஆயிரம் இருந்தன. அதற்கு எனக்குத் தனிமை வேண்டியிருந்தது. தனிமைஐரோப்பியப் பணக்காரர்கள் மத்திய தரைக் கடலுள் தமக்கெனக் கொண்ட தீவுகளில் பெறுவது போன்ற தனிமை. அதுவும் போதாது- ኧ ஏவலாளர்கள் எங்கே போனுர்கள்?, ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கிடைத்திருந்ததேஅதுபோலத் தனிமை.
“ஊழி முடிவில், இறுதியாக அழிகிற இரு
உயிர்கள் நாமாக இருந்தாலன்றி இது முடியுமா?" -உன்னிடம் நான் பேசவில்லை.
18 ( ) கவிதா

ஆனல், ‘ரயில்வே கேட்டுகள் ரயில்களைத் தடை
செய்வதில்லையே!
--நீ பேசினுய். உன் கண்களுக்கு நான் தேவதை போல, அதி அமானுஷ்பமாய்த் தோன்றுவதை, மிக உன்னதமான வாழ்வு வாழவே நான் பிறந்திருப்பதை"உன்னதமான வாழ்வு, உன்னுல் எனக்குத்
தரமுடியாதது என நீ நம்பியதைகாதல் பிரிவிலேயே சாகாவரம் பெறுவதைஉண்மையான காதல், திருமணத்தை லவழியம்
செய்யாததை
இன்னும் எவற்றை எல்லாமோபேசினுய்.
ஏனே,
என்னை நீ எந்த அளவு பீடித்திருக்கிருய் என்பதை என் கண்ணிலிருந்து படித்துத் தெரிந்துகொண்டவாே சொல்லப் பயந்து
உன் இதயச் சுவரில்
செதுக்கினய்,
'நீ இச்சிப்பதெல்லாம் உன் நன்மை குறித்தனவே” என நான் மயங்கினேன்என் அறியுாமையால்; நீ உன்னை அழித்துக் கொள்ளவே என்னைப் பிரிவதன் மூலம் வழி தேடுகிருய்
ஒரு தேவதைக் கதை () 189

Page 96
என்பதை நான் அறியாமல் போனேன்என் அன்பால்.
"உன் காதல் வறண்ட
பூ விரல்களால்
என் இதய வீணையின்
சோக நரம்புகளைச்
சீண்டாதே"
என்ருய்என்னைக் குறித்து நான் சொல்ல வரும்போது. -ിക്ടേ ?!
இந்த ஸெளந்தர்ய ஸாகரம் என்னை மூழ்கடிக்கவே சிருஷ்டியானதாய் நீ உணர்த்த வந்த போதும், அதில் மூழ்கி
என் மூச்சைத் தவறவிட, நான் நானுகவே ஸம்மதமாய் இருப்பதையே உனக்குச் சொல்ல வந்தேன்; -முடியவில்லை!
ᏰᏣu 1fᎢ , அறிவுபூர்வமாய்ச் சிந்தித்து, உனக்கும், எனக்கும், சமுதாயத்துக்கும்
வாகான, ஏதோ ஒரு ஜென்மத்தில் முகூர்த்தத்துக்கு நாள் பார்த்தாய்.
பிரிவு நிச்சயமாயிற்று. அங்கே நீ
190 () கவிதா

இங்கே நான். இருவரின் ஜீவிதமும் இழுபறியாயிற்று.
நீ என்னைப் பலவந்தமாய்ப் பிரிந்துபோய், மதுக்கிண்ணம் நாடினுய்.
உமர் கய்யாம் உன் கிண்ணங்களை நிரப்பினன். முதலில் நீ மதுவைக் குடித்தாய்
பிறகு,
மது உன்னைக் குடிக்கலாயிற்று. உன் சர்வ வல்லமை வாய்ந்த தீவிரம் ஒரு கிண்ணத்துள்
அடங்கலாயிற்று.
காலத்தின் கரைவோடு காதல் என் நெஞ்சுள் ஒரு கவிதையாயிற்றுபார்க்கவும் பேசவும் நீயின்றி என் நெஞ்சுள் ஒரு வதையாயிற்று.
ஆற்றமை மிக்க பகல்களும், தாபமிக்க இரவுகளும், நான் பகைத்துக்கொண்ட தேவதைகளின் சபிக்கப்பட்ட ஆக்ஞையாய் என்னை வந்து அடைகையில், இன்று அல்லது நாளை
அல்லது,
என்றே ஒரு நாள் - ‘என் மரணத்துக்கான சமிக்ஞை உன் பிரிவே என்று பிரக்ஞையாகிறது.
ஒரு தேவதைக் கதை ( 191

Page 97
எப்போதாவது, சில தனித்த இரவுகளில் நானே கொலுவிருக்கும் உன் இதயத்தைக் கையால்
பிடித்தபடி நீ இருமுகையிலோ, அன்றி, கடந்த காலத்தின் ஏதாவது ஒரு இனிய நாளைப்பற்றி நினைத்துப் பார்த்தபடி படுத்திருக்கையிலோ, இதோ இங்கே و-وا لا تg L பிரமை பிடித்தாற்போல நான் உட்கார்ந்திருப்பதை நீ அறியக் கூடுமா?
நீ அறிய வேண்டும் என்பதற்காகவும் நான் உட்கார்ந்
திருக்கவில்லை.
அதற்காக என்றே விதிக்கப்பட்டதற்காய்த்தானுய்
இருக்க வேண்டும்.
நீ விதித்தாய்
இல்லை;
உன் மூலம் விதி விதித்தது
நிசி.
படுத்திருந்து ஏதோ படித்துக்கொண்டிருக்கிருய் நீ; உன் கையைப் பற்றி, எனக்கு இஷ்டமான இடத்துக்கு அழைத்து வந்துவிடுகிறேன் நான். தென்றல் வருகின்ற
(5
ஜன்னலடி.
நீ திடுக்குற்ருய்
192 ) கவிதா

அணைப்பில் சறுகி மேல் கீழாய்த் தலைகள்,
"எத்தனை நாளாய் இந்தத் தவிப்பு?" நீ கேட்டாய்-கேட்டு
அழுதாய். உன் தெய்வம் கீழிறங்கி உன்னை விடத் தாழ்ந்து மிகத் தாழ்ந்து பாதாளம் செல்லுவதைத் தாளாது நீ அழுதாய்
ஏங்கி அழுதாய்.
மனம்தான் இச்சையால் எத்தனை விதமாய்க் கனவுகளை வகிர்கிறது? கனவுதானே, ஏன் நீயெல்லாம் புதிய விசித்திரமாய் நடக்கக் கூடாது? உன் சொந்த விசித்திரத்தை மறக்கக் கூடாது? நானெல்லாம்,
உன்னைக் கடிந்து பேசி ஏன் வெளியே அனுப்பக் கூடாது?
ஓ!
நீ தேட நான் மறைவதும் x நான் தேட நீ பிரிவதும் இந்தத் திக்குத் தெரியாத காட்டில், இந்தக் கண்ணுமூச்சி விளையாட்டில் என் கால்கள் களைத்துவிட்டன.
என்றவது ஒரு நாள்,
களைப்புத் தாங்காது, இந்த மண்ணில் தலைவைத்து நான் உறங்கும்போது என்னை எரிப்பார்கள்.
ஒரு தேவதைக் கதை () 193

Page 98
நீ தழுவத் துடித்து, தகுதி இல்லை என்று நடித்து, பாதுகாத்துவிட்டதாய்த் திருப்திப்பட்ட ஸெளந்தர்யத்தை
தீ தழுவும்.
காற்றேடு கலந்து,
உன் கையில்,
உன் தோளில்,
உன் மார்பில்,
உன் இதழில், சந்தனமாய்த் தேய்ந்து போவதற்காய்நான் சாகவேண்டுமென ஆசைப்படுகிறேன்.
அப்போதாவது, உன் தேவியும், "வஸந்தன் என்ற தேவனின் மாணவர்கள் பயிலுகிற ஒரு பரிசோதனைச் சாலையே’ எனத தெரிந்துகொள்வாயா?
194 () கவிதா


Page 99


Page 100
---- |-