கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: எண்ணெய்ச் சிந்து

Page 1
வெளி
மட்டிக்களப்பு இந்துச1
198
 

եւÏ(B:
மய விருத்திச் சங்கம்
BB

Page 2

எண்ணெய்ச் சிந்து
து சிவநாமானவி
டி வெபுராணம்
மட்டக்களப்பு இத்து சமவ விருத்திச் சங்கம்
மட்டக்களப்பு
983 - துத்துயி

Page 3
EN NA SNI
Ratsked by:
BATTICALOA HINDU WELFARE socisTY. вАттcАoА.
Printed by:
CHETTAR PRESS,
JAFFNA
Frie
Rs... 3-COO

அமரர் பொன். சின்னத்துரை
அவர்களுக்கு
இந் நூல் காணிக்கை

Page 4

பதிப்புரை
1958ம் ஆண்டு ஆவணித் திங்கள் 81 ஆம் நாளன்று புளியந்தீவு இந்து சமய விருத்திச் சங்கம் என்ற பெயரில் தோற்றுவிக்கப்பட்ட தும், பின்வு பலரின் வேண்டுதலுக்கு இணங்க மட்டக்களப்பு இந்து சமய விருத்திச் சங்கம் என்ற பெயரில் செயல்பட்டு வருவதுமான எது சங்கத்தின் முதல் பிரசுரமான எண்ணெய்ச் சிந்து மக்களின் மேலான ஆதரவைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாண்டு - 1983 இல் வெள்ளிவிழாக் காணவிருக்கும் எமது சங்கத்தின் இந்த நூல் வெளியீடு முதல் முயற்சியாகும். இந்நூலைத் தொடர்ந்து மேலும் சில நூல்களை வெளியிட் எண்ணியுள்ள எமது சங்கததின் வளர்ச்சிக் காக ஆரம்ப காலந் தொடக்கம் அயராது அரும்பணியாற்றிய முன்னை நான் நிருவாக சபையினருக்கு இத்தருணத்தில் நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
எங்கன் சங்கம் கால் நூற்ருண்டுகால வரலாற்றைக் கொண்டது. கொழும்பு இந்து விவகார ஆலோசனைச் சபையாரால் 3-08-1958 ல் புளியந்தீவுப் பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் கடந்த கால வரலாறு கரடுமுரடானதும் கஷ்டங்கள் நிரம்பியதும்ாகும். பல அல்லக்களுக்கும் தொல்லைகளுக்கும் மத்தியில் சங்கமும் சங்கம் நடாத் தும் ஞாயிறுதின சைவசமய பாட வகுப்பும் இங்கிக் கொண்டு வருவதை இந்துப் பெருமக்கள் நன்கு , அறிவார்கள் இந்த இந்துப் பொதுமக்களின் ஆதரவாலேயே இவ்வியக்கத்தின் நிகழ்ச்சிகள் நிகழ் கின்றதென்பதை நான் நன்றியுணர்வுடன் வெளிப்ப&த்தக் கடமைப் பதின்ளேன்.
எமது சங்க வெளியீடாக இது மலர்ந்து மணம் பரப்புவதற்கு அனுமதி தந்தும், முன்னுரை வழங்கியும் அச்சு பிரதிகளே ப் பார்வை பிட்டும் பேருதவி புரிந்த தமிழறிஞர் வித்துவான் F. X, .ே நடராசா அவர்களுக்கும் மன நிறைவான நன்றியைத் தெரிவித்துக்கொன்கின் றேன்.
இந்நூலே மட்டக்களப்பு இந்து சமய விருத்திச் சங்கம் அச்சிட்டு வெளியிட வேண்டும், மக்கள் மத்தியில் இதன் சீசமையைப் பரப்ப வேண்டும்ென்று கடந்த ஐந்து ஆண்டுகளாக ஞாபகப்படுத்தி ஊக்கு வித்த திரு ந. வேல்முருகு - சித்த ஆயுள்வேத வைத்தியர் அவர்கட்கும் இச் சந்தர்ப்பத்தில் நன்றி சொலல வேண்டிது அவசியமானதே
எம் சங்கக் காப்பாளரும், மேலான வழிகாட்டியுமாக எம்மால் கொள்ளப்பட்டுள்ள யூரீமத் சுவாமி ஜீலஞனந்தஜி அவர்கள் இந்
★

Page 5
நூலுக்கு எனது வேண்டுதலை ஏற்று நல்லதொரு அணிந்துரை நல் கினர்கள். அவர்களுக்கும் நன்றி செலுத்துகின்றேன்.
சிறப்பாக, எழுத்துப் பிழைகள் இல்லாமல் பெரும் முயற்சி எடுத்து இந்நூலைக் குறுகிய காலத்தில் அச்சிட்டுத் தந்துதவிய யாழ்ப்பாணம் செட்டியார் அச்சகத்தாருக்கும் எம் நன்றி.
சைவத் தமிழ் மக்களின் பாரம்பரிய பண்பாட்டுக் கலைப் பொக் கிஷமான எண்ணெய்ச் சிந்து என்னும் இந்நூலின் பின்னிணைப்பாக சிவநாமாவளி, சிவபுராணம் என்பவற்றையும் சேர்த்துள்ளோம். இந்நூல் எமது மக்களின் கைகளில் தினசரி திகழ வேண்டும், - சிவநாமாவளி, சிவபுராணம் என்பவற்றை ஒவ்வொரு நாளும் படித்து மக்கள் நற் பேறடைய வேண்டும் எனற நல்ல எண்ணத்தோடேயே இவை பின் னிணைக்கப்பட்டுள்ளன
இந்தச் சிறு நூலே, அமரத்துவமடைந்த எங்கள் முன்னைய தலை வர் திரு. பொன். சின்னத்துரை - அதி விசேட் அதிபர் அவர்களுக்குக் காணிக்கையாக்தகின்ருேம். அவர் எங்கள் மட்டக்களப்பு இந்து சமய வியூத்திச் சங்கத்தின் தலைவராகப் பல ஆண்டுகளிருந்து பாடுபட்ட தற்கு நாம் செய்யும் நன்றிக் கடன் இதுவாகும். அவரது தலைமைத்துவக் காலம் எங்கள் சங்கத்தின் பொற்காலமெணலாம்.
இந்த நல்ல நூலை வெளியிடுவதற்கு நாம் எண்ணங் கொண்டி ருந்த வேளையில் எமக்கு உதவ முன்வந்தார் அமரர் பொன். சின்னத் துரை அவர்களின் மகன் திரு. சின்னத்துரை சாந்திக்குமார் அவர்கள்." எமக்கு வேண்டிய உதவி ஒத்தாசைகளைத் தந்த திரு. சி. சாந்திக் குமார் அவர்கட்கு எமது நன்றியை இத்தால் தெரிவித்துக் கொள் கின்றேன்.
மட்ட்க்களப்பிலேயே சிறந்த சைவத் தொண்டரும், நூலாசிரியகும், அறிவாளியுமான தேசிகமணி &ா. அருணுசல தேசிகர் காலத்தில் ஆரம் பிக்கப்பட்டு அவர்களின் பணியினுலே வளர்க்கப்பட்ட எமது சங்கம் அவர்களின் உதவிகொண்டு வித்துவான் F. X, C நடராசா அவர்க ளால் மதுரையில் பிரசுரம் செய்த "எண்ணெய்ச் சிந்து” என்னும் இந் நூர்லை மறு பிரசுரம் செய்து வெளிக் கொணர்வதில் எமது சங்கம் மகிழ்ச்சியடைகிறது.
பொதுமக்கள் இந்நூலை வாசித்தும், பின்ளைகள் மத்தியில் நட மாடச் செய்தும் நலமட்ைய வேண்டுகின்றேன்.
4/1, சூரிய ஒழுங்கை, வி. த. குமாரசாமி. மட்டக்களப்பு. செயலாளர், 14-01-1983. மட்டக்களப்பு இந்து சமய விருத்திச் சங்கம்

iii
முகவுரை
மட்டக்களப்பு இந்து சமய விருத்திச் சகிகம், எள்ளுல் முதல் மூதலாகப் பதிப்பிக்கப் வெற்ற எண்ணெய்ச் சிந்து என்ற நூலிவர மறுபிரசுரஞ் செய்ய முன்வந்தமையையிட்தி மட்டற்ற மகிழ்ச்கியடை
கின்றேன்.
இந்நூலினை முதலிம் பதிப்பிக்கக் காரண கருத்தவாக இருந்தவர் தேசிகமணி கா. அருணசலம் அவர்களே. தேசிகமணிதுவரிகள் ஒலைச் சுவடிகளைத் தந்து உதவியதுமன்றி விரிவான முன்னுரையும் எழுதி உதவிஞர்கள்.
இந்த எண்ணெய்ச் சிந்து மட்டக்களப்பு நாட்டின் பாரம்பரியச் சம்பிரதாயங்களை எடுத்துரைக்கும் சிறந்து நூலாக மிளிர்கின்றது.
இந்நூல் புலவர் ஒருவராற் பாடப்பட்ட தன்று. பலரும் பல விதமாகப் பாடிய பாடல்களின் தொகுப்பாகும்: இதனெச் சுருக்கிப் பாடுவாருமுளர். எனினும் பொருளில் மாற்றமில்ஃ.
ஆகவே, இதனை நாட்டுப்பாடல் என்ற வகையில் அரட்க்கலாம். நாட்டுப் பாடலும் தாட்டுப்புறக் கலைகளில் ஒன்று.
நாட்டுப்புறக் கவகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கப்பட்டுவரும் இக்காலத்தில் மட்டக்களப்பு இந்து சமய விருத்திச் சங்கம் இந் நூலின் மறுபதிப்பை வெளிப்படுத்த முயற்சி எடுத்தமை போற்று தற்குரியதே.
பாடசாலைச்சிருரும் மற்றும் பழைமை விரும்பும் பேரறிஞர்களும் தங்கள் பாரம்பரியப் பண்பாடுகளை அறிந்து அவை அழிந்து போகா மற் பாதுகாக்க இந்நூல் பெரிதும் சாதகமாக இருக்குமென்பதிற். சந்தேகமின்று
பண்டைய பழக்க வழக்கங்கள், சொற்பிர:ோகங்கள், ஆசிரியரி களுக்கும் மண்ணுக்கருக்குமுள்ள தொட்ர்புகள், பிள்ளோவில் பிறப்பு வளர்ப்பு என்றின்ஞேரன்ன விடயங்களும் நூலிற்கானப் படுகின்றன.
சமய விருத்தியும் கலாசார விருத்தியும் இணைபிரியாதவை இதற்காக உழைத்துவரும் இந்து சமய விருத்திச் சங்கத்தாரின் பணிமேன்மையடைவதாக, தமிழ் பேசும் மக்கள் இவர்களே ஆதரித்து நூலினேப் பெற்றுப் பூரிப்பார்களாக,
5. மத்திய வீதி, வித்துவான் ரி. XC, நடராசா, மட்ட்கிகளப்பு,
0-01-83

Page 6
ଈ.
அணிந்துரை
கடவுள் பக்தியும் குரு பக்தியும் குறைத்து, பெற்ருேரையும் பெரியோரையும் மதித்து நடக்கும் பண்பு அருகிவரும் இந்தக் கால கட்டத்தில் எண்ணெய்ச்சிந்து என்னும் இந்நூல் வெளியிடப்படுவது மனதுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. காலத்தை சீறிந்து, தேவை பையுணர்ந்து இந்நூற் கருத்துக்களே மக்ஃசு மத்தியில் பரப்டி எண்ணங் கொண்ட மட்டக்களப்பு இத்துசeய விருத்திச் சங்கத்தின ரின் நல்ல முயற்சியைப் பாராட்டுகிஇேலீ. வெள்ளிவிழாக் காண விருக்கும் இச் சங்கம் மேற்கொண்ட நல்லதொரு பண்பாட்டுப் பரப்பல் முயற்சியில் இதுவும் ஒன்ருக *ஓமந்துள்ளது.
உற்றகலை ஒதுவிக்கும் உபாத்தியாவர் தன் கூலி இத்தனை கூலிகளே இல்லேயென்ருல் மாஜாவே மெத்த நரகமதில் வீழ்த்திடுவீர் மாதாவே
என்றுள்ள எண்ணெய்ச்சிந்துப் பாடல் வரிகள், தமிழர் தம்முட்ைது பாரம்பரியத்தைக் கைவிடாது பின்பற்றவேண்டும் என் பதை வலியுறுத்துவதாக அமைந்திருப்பதைக் காணலாம்.
நவீன காலப்போக்கில் மயங்கிக் கிடக்கும் மக்களுக்கு நம் முன்ஞேர் வாழ்வை எடுத்துக்காட்டி, அவ்வழியில் அவர் களைத் திசை திருப்பிவிடும் ஒரு வழிகாட்டியாகத் திகழப்போகும் இந்நூலைப் படித்தவரெவரும்; உயர் குணங்க* யும், கீ ாைதரும சிந்தை யையும், மாதா பிதா குரு தெய்வம் ஆகியவற்றில் பக்தியையும் வெற்றேயாவர். இதை சாதி மத போல் வயது வேறுபாலு இல்லாமல் அனைவளும் பணம் கெFடுத்து வாங்கிப் படித்துப் பயன்பெறவேண்
Ceb •
எத்தனையோ நல்ல பல கருமங்களைக் கடந்த இருபத்துநான்கு ஆண்டுகளாகச் செய்துவரும் இந்த மட்டக்கTப்பு இந்த சமய விருத்திச் சங்கம் மேலும் இதுபோன்ற பணிகளைத் தொடரே ஆண்டுமென்று வாழ்த்தி, இராமகிருஷ்ண பரமஹம்சதேரிேன் அடின் கிட்ட வேண்டு கின்றேன்.
இராம கிருஷ்ண மிஷன், சுவாமி ஜீவனுணந்த கல்லடி - கூப்போடை
LDL diasettl.
01-01-1983.
 

எண்ணெய்ச் சிந்து
காப்பு ஆனை முகனே யரனர் தி டிமகனே கானமதம் பாயுமொரு கையோனே - ஞானமுற வித்தைகற்கும் பிள்ளைகட்கு விக்கினங்கள் வாராமல் நித்தநித்தம் நீ துணையாய் நில். I
பூமாது நாளும் புகழுமெண்ணெய்ச் சிந்துதனைப் பாமாது தன்னருளாற் பாடவே - யாமோது செம்பொற் கதிரைநகர்ச் செல்வனுக்கு முன்பிறந்த கம்பக் கரிமுகத்தோன் காப்பு. 2
செந்திருவைச் சேரலாஞ் செந்தமிழைப் பாடலாம் இந்திரனைப் போல்வாழ்ந் திருக்கலாம்-- சுந்தரஞ்சேர் வெற்பகத்தை யூடிறுத்த வேலவர்க்கு முன்பிறந்த கற்பகத்தைக் கைதொழுதக் கால்.
துதி : கணபதி Fornrrř சனியெண்ணெய்ச் சிந்துதனை யான்பாடக் காரானை மேனிக் கணபதியே முன்னடவாய் அந்தி மதிசூடும் அரனர் திருமகனே கந்தருக்கு முன்பிறந்த கணபதியே காப்பகமே.
சிவன்
முன்னளி லாகமத்தில் மூதுணர்ந்தோர் சொன்னபடி இந்நாளி லெண்ணெய்ச் சிந்துதனை யான்பாட வண்ணத் தமிழ்ப்புலவர் வரைந்து குற்றம் பேசாமல் பெண்ணை யிடம் வைத்த பிஞ்ஞகனர் தாள்துணையே.
பரமேசுவரி
சோதி யெண்ணெய்ச் சிந்துதனைத் தொல்புவியில் யான் பண்ட ஆதிபர மேசுவரி யம்மையிருதாள் துணையே.

Page 7
2
சுப்பிரமணியர்
எத்தி யெருதேறும் ஈசனர்தாம்பயந்த அத்திக் கிளைய அறுமுகவன் தாள் துணையே பற்றி யசுரர் தம்மைப் பணிவாக வேரறுத்து வெற்றி மயிலேறும் வேலவனர் தாள்துணையே.
சரசுவதி சால நமஸ்கரித்தேன் சரசுவதியே யுந்தனையும் வால சரசுவதியே வந்துகவி செய்யுமம்மா பால சரசுவதியே நாவதனில் வந்திரம்மா ஞால சரசுவதியே வாக்கருள வேணுமம்மா வாணி சரசுவதியே வரமருள்வாய் என்தாயே பேணி யுனைநடப்பேன் பெற்றவளே காருமம்மா நாவு தவருமல் நல்லவரந் தந்தருள்வாய் பரவிலே நீயிருந்து பண்பாய் நடத்து மம்மா
நூல் ஏடு தவருமல் எழுத்தாணி சாயாமல் கோடு தவருமல் குற்றமொன்றும் வாராமல் அத்தி முகத்தோனே அரனர் திருமகனே சத்திக் கணபதியே சண்முகனே காத்திடுவீர் எண்ணெய்ச் சிந்துதனை எளியேனுரைத் திடவே அன்னையரே தந்தையரே ஆதரவாய்க் கேட்டிடுவீர் வண்ணத் தமிழ்ப்புலவர் வரைந்துகுற்றம் பேசாமல் இந்நாளில் சிறியேன் எண்ணெய்த் தமிழ்பாடல் பாட வறியேன் பயனறியேன் பாருலகில் நாடி யுரைக்கலுற்றேன் நல்லகவி வாணர் முன்பு இந்த எண்ணெய்ச்சிந்தை எல்லோரும் கேட்டிருந்தால் கன்ம வினையகன்று காசினியில் வாழ்ந்திடுவார் தன்ம மிகப்பெருகும் சந்ததிக *ளிடேறும்

3
பொன்னனைய மாதாவே போதவே கேட்டிடுவீர் அன்னையொடு தந்தை யரிய பிறவிகளே பெற்ற வரலாற்றைப் பெருமையுடன் பேசுகிருேம் சற்று மனதிரங்கித் தயவாக நீர் கேளும் முன்னளிலே பயனும் முக்கணனு முளமகிழ்த்து இன்னளிலே சென்ம மீடேற வேணுமென்று பூமிதனை வகுத்துப் பிறப்பித்தார் சீவசெந்து ஆமிது மெய்யென் றறிந்து நீர்மாதாவே
இந்தப் பிரகாரம் இருக்குமந்த நாளையிலே மைந்த ரில்லையென்று மனதுமிகச் சோர்வடைந்து எத்தனை செல்வ மிருந்தாலு மிப்புவியில் புத்திரச் செல்வம் புவிமீதில் வேணுமென்று எந்தை. பரமேசுவரி யிரக்கம் புரிந்தருளத் தந்தையரும், நீரும் தயவுகொண்ட நாளையிலே மைந்தர்பெற வேண்டுமென்று விரும்பித் தபசுபண்ணி அந்தமுட னெங்களுக்காய் அரிய தபசு பண்ணிச் சிந்தை மகிழ்ந்துபெற்ற செய்திகளைச் சொல்லுகிருேம் நன்மையுள்ள மாதாவே நாடிநீர் கேளுமெல்லாம் தன்மையுட னெங்களை நீர் தயவாய்ப் பெறவேண்டி ஆராயும் வேதமுட னைந்தெழுத்தை யும் நினைத்து நேராத கோயிலெல்லாம் நேர்ந்து தபசுபண்ணிக் கும்பிடாக் கோயிலெல்லாம் கும்பிட்டுத் தெண்டனிட்டு நம்பிடாக் கோயிலெல்லாம் நயந்துமே செப்பனிட்டு அன்னம் வழங்கி யரிய தபசுபண்ணிப் பொன்னுடனே வஸ்திரமும் போதவே தானளித்துச் சோகம் பெரிதாய்த் துயரடைந்தீ ராதலினற் முகமுட னெங்கள் தம்பிரான் கண்டருளிச் சித்த மிரங்கிச் சிவனு முமையாளும் மெத்த மகிழ்ந்து விடையோ னுமக்கருளக் கும்பியினில் வ்ந்துதித்த கொள்கைகேள் மாதாவே

Page 8
,4
அம்புவியின் மீதெழுந்த அறுகுநுனிப் பணிபோலச் சிறந்தைந்தாம் நாளில் சிறுபுன்னைப் பூப்போல நிறைந்தபதி னைந்தாம்நாள் நீர்க்குமிழி போலாகி ஐயாறு முப்பதுநாள் அடைவுடனே சென்றபின்பு பொய்யாமற் கோழிமுட்டை போற்றலையு முண்டாகித் திங்கள் அணிந்த சிவனர் கிருபையினுல் உங்கள் வயிற்றில் உற்பவித்தோம் மாதாவே உற்பவித்த நாள்முதலாய் உங்கள் வருத்தமது கெற்பச் சுழற்சி கிறுகிறுப்பு முண்டாகிப் பித்தமது கக்கிப் பெரிய துயரடைந்து சத்தி யருவருப்புத் தாங்க முடியாமல் புத்தி மயங்கிப் புடவிதனில் வீழ்ந்து நித்திரை கலைந்து நினைவு தடுமாறி வெற்றிலை பாக்கு விரும்பி யருந்தாமல் பற்றிலைய்ோ வென்று பரனேயென வழுதீர் சோறு மறந்தீர் சுகிர்தம் பலமறந்தீர் வேறு வினைகளின்றி மெத்த மனஞ்சலித்தீர் திங்கள் நுதலாளே செப்பரிய மாதாவே சங்கரன் தன்னருளாற் தாரணியோர் தாமறிய மற்ற மாதத்தில் மாதவிடாய் வாராமல் சுற்றமுடன் நீங்கள் சூழ்ந்திருக்கு மந்நாளில் ஆலிலை போலே யமர்ந்த வயிறதுவும் சாலமுட னேங்கித் தளிர்த்து வளர்ச்சியதாய் ஆக வொருமாதம் அனைவோரு மங்கறியப் பேரகமுடன் நீங்கள் புகழ்ந்திருக்கு மந்நாளில் மாத மிரண்டு வளமாய் நிரம்பியபின் வேதனைகளாகி மெத்த வருத்த முற்றீர் மூன்று மாசத்தில் முறைமையுள்ள மாதாவே தோன்றுஞ் சுடர்காய்ந்து சொகுசாய்ப் புளியருந்தி நனலு மாசத்தில் நஞ்சுண்ட கெண்டையைப்போல்

பாலுஞ் சுரக்கப் பகற்பொழுது தூக்கமதாய் அஞ்சு மாசத்தில் அரைவயிறு பிள்ளையதாய் விஞ்சு மு?லகறுத்து விம்மியே பால்சுரக்க ஆறு மாசத்தில் அருமையுள்ள மாதாவே கூறு பிணிகள் கொண்டே மயக்கமுற்றீர் ஏழு மாசத்தில் எங்களுடை மாதாவே தோளும் இடப்புறமும் தொப்பூளுந் தான்வீங்கி எட்டு மாசத்தில் எடுத்தடி வைக்கொணுமற் திட்டிதனிலிடறிச் சிவனேயென வழுதும் ஒன்பதாந் திங்களில் மேலுவமையில் மாதாவே துன்ப மிகவாகித் தூங்கி யெழுந்துநின்றும் வாசற் படிகடக்க மாட்டாமணி ரிருந்தும் பேசப் பெலன்குறைநது பெரிய துயரமுற்று வாயு மிகுத்தே வயிறுநோ வுண்டாகித் தூய வுடம்புதனிற் றுயரடைந்தீ ராதலினல் எண்ணெய் குளிகை இதமான சூரணமும் வெண்ணெயொடு நீங்கள் பரிகாரஞ் செய்தபின்பு பத்து மாதத்திற் பரிவுடைய மாதாவே மெத்த வயிறுநொந்து மெய்யு நடுக்கமுற்றிர் நாதன் அருளாலே நல்லதிரு நாளதனில் வேதன் அருளாலே மேன்மேலும் நோக்காடாய்க் கூடும் புவியுதிக்கக் குறிகண்டு நோகுதென்று ஒடி மருத்துவத்தை யொருநொடியிற் ருவ ழைத்துக் கூடி வருகையிலே கூவென்று தானழுதீா தாயும் தமரும் சகோதரியுந் தற்சூழ ஆயும் மருத்துவிச்சி யஞ்சாதே யென்றுரைக்க காலுக்கு நிற்பாரும் கைதாங்கி நிற் பாரும் மேலுக்கு நிற்பாரும் வேதனையோ வென்பாரும் தேவதைக்கு நேர்வாரும் தெய்வமே யென் பாரும் நோவதைக்கு தென்று நுவன்று சலிப்பாரும்

Page 9
6
மந்திரங்க ளாலே வலாற்காரஞ் செய்வாரும் தந்திரங்க ளாலே தளர்வாற்றி நிற்பாரும் இந்தப் :டியாக இவர்களெல்லாம் நிற்கையிலே அந்தப் பேர்மாயன் மழுவினுற் றள்ளிவிடப் பன்னீர்க் குடமு.ைந்து பாலன் பிறந்திடவே நன்னீர்மை கொண்டு நயந்துநயந் தெல்லோரும் பெண்பிள்ளை யல்லவிது பேருலகில் எங்களுக்கு ஆண்பிள்ளை யென்றே யகமகிழ்ந்து "கூரைதட்டி வாயார வாழ்த்தி வரிசையுடன் *கோலெறிந்து தாயார் மருத்துநங்கை தவிடுகொண்டு தான்புரட்டி மஞ்சன நீராட்டி மணிமூக்குத் தான்பிடித்து அஞ்சனந் தீட்டி அலங்காரப் பொட்டுமிட்டுச் சடுதியுட னெடுத்துத் தாயார் மடியில்வைத்து உடுபுடவை தன்னலே உள்ளிரந் தான் துடைத்துக் காட்டில் மருந்துங் கடைச்சரக்கும் தானெடுத்து ஊட்டிநோய் தீர உவப்பாக வேபருக்கி எங்கெங்கு மோடி இரக்கமுடன் பால்வாங்கிச் சங்குதனில் வார்த்துத் தயவாய்ப் பருக்கியதும் கண்ணுாறு நாவூறு அத்தனையும் வாராமல் வெண்ணிறு கொண்டு மெய்யில் மிகப்பூசி வேப்பிலையி ஞலே மிகுபுகையுந் தான்காட்டிக் காப்பணிந்தே அஞ்சாங் கணக்கில் மருங்கைசெய்து பன்னிருநாட் சென்றே பலபேருந் தான் கூடி இன்னிதமா யெங்களுக் கேற்ற மருங்கை செய்து சாணை யுதறித் தயவாய் மடியில்வைத்துப் பேணி வளர்த்தீரே பிரியமுள்ள மாதாவே முப்பதுநா ளெண்ணி முடிந்தமறு நாளையிலே
* கூரை தட்டுதல்: யாழ்ப்பாணத்திலுள்ள வழக்கு.
கோலெறிதல்: கூரைக்கு மேலால் உலக்கையை எறிதல், மட்டக்களப்பு வழக்கு.

7
செப்பமுட னெங்கள் சிரசின்மயிர் களைந்தும் வெற்றிலை பாக்கும் மிகவருந்தல் தான்மறந்தும் நித்திரையு மற்றே நினைவுந் தடுமர்றி ஒராட்டிச் சீராட்டி யுள்ளம் மிகமகிழ்ந்து தாராட்டுஞ் சொன்னீரே தாயாரே எங்களுக்கு அங்கையி னேந்தி யணைத்து மடியில்வைத்து மங்காமல் முத்தமிட்டு மகனே யெனப்புகழ்ந்து மெச்சி மடியில்வைத்து மேன்மேலும் முத்தமிட்டு உச்சியுல ராமல் உகந்துநீ ரெண்ணெய்தப்பிக் கட்டெறும்பு சிற்றெறும்பு கடியதேள் மூட்டையிவை திட்டமுட னென்றும் தீண்டா தெமைவளர்த்தே குடிவிளங்க வந்த குமாரனென்னத் தாம் மகிழ்ந்து விடிவிளக்கும் வைத்தீரே விளங்கிரண்டு மாதமதாய் உடும்பு பிடிக்குதென்று உகந்துகந்து கொண்டாடிக் குப்புற வீழ்ந்து குலாவித் தவழ்ந்துவந்து செப்பமா யுன்மடியிற் சேருகின்ற வேளையிலே ஏந்தியே தானெடுத்து என்மகனே யென்று சொல்லி பெற்றெடுத்த வுங்கள்மனம் பெருகத் தனிமகிழ்ந்து அன்னமு மூட்டி அரைவய தானபின்பு தன்னை யறிந்து தவழ்ந்து விளையாடிச் சப்பாணி கொட்டுவித்துச் சாஞ்சாடத் தான்பயிற்றி வைப்பாக நாங்கள் வளர்கின்ற நாளையிலே தத்தடி வைத்துத் தடக்கி நடந்தோடி மெத்த விரும்பி விளையாடு மந்நாளில் ஆண்டொன்று சென்று அடியூன்றிக் கால்மிதித்துத் தூண்டி நடைபயிற்றிச் சொற்பழக்கி எங்களையும் சிற்றடை சாத்திச் சிறுசதங்கை தானணிந்து முத்தாரம் பூட்டி முழுவயிரத் தண்டையிட்டுக் காறை யணிந்து கைக்கு வெள்ளிக் காப்புமிட்டு வேறு சிறுவருடன் விளையாட்டுப் பார்த்திருந்து

Page 10
8
மதலை மொழிகேட்டு வாவென்று தானழைத்துக் குதலை மொழிகேட்டுக் கோலமது கண்டிருந்து கண்ணுாறு நாவூறு "காற்றணவு வாராமல் வெண்ணிற் றினலே வினைதீர்த்தாய் மாதாவே ஐஞ்சுவய தானமட்டும் அன்னையரே எங்களை நீர் கொஞ்சி வளர்த்தீரே குறைவொன்றும் வாராமல் கற்ருேர் பெரியோர் கலையறிந்த மாமறையோர் உற்ருரும் மற்ருேரும் உறவுமுறை யானவரும் எல்லாருங் கூடி யெங்களை மூடரென்று சொல்லாமல் நீங்கள் கலைபயிற்றவே நினைந்து பள்ளிக்கு வைக்கும் பருவமிது வென்றறிந்து பிள்ளைக்குக் கல்வி பிரிய முடன்பயிற்ற உள்ள மகிழ்ந்து உவப்பாய் ம ைமகிழ்ந்து வெள்ளிக் கிழமையிலே வேளையுள்ள நாழிகையில் இன்பமதான இரேவதி நட்சத்திரத்தில் ஒன்பது கோளும் உறவுசெய்யும் வேளையிலே தெள்ளுதமி முறிந்த தேசிகரைத் தானழைத்து உள்ள முறையாக உபாத்தியாய ரைத்தொழுது எங்கள் பிள்ளைதனை இணக்கமுடன் நீருகந்து பங்கமில்லாக் கல்வி படிப்பிக்க வேணுமையா நல்லதென் றுபாத்தியாயர் நய ப்புடனே எங்களுக்குத் த்ொல்லையில் லாக்கல்வி தோன்றுவிக்க வேணுமென்று பட்டைப் புனைந்து பரிவாய் அலங்கரித்து சட்டையு மிட்டுத் தலைப்பாவுந் தானணிந்து செம்பொன் னரைஞாண் சிறப்பாய் இடுப்பிலிட்டு அம்பொன் மயிர் கோதி அழகாய் முடித்தபின்பு பத்தி யுடனே பரிவாய்த் தரைமெழுகி சித்திக் கணபதியைச் சரசுபதியையும் நிறுத்தி
* காற்றனவு என்பது பேய் பசாசு பார்வையுறுதலைக்
குறிப்பதற்கு வழங்கும் மட்டக்களப்பு வழக்கு,

نی
பிள்ளையார் செய்து பெரியவிளக் கேற்றிவைத்து வெள்ளித் தயிலாவில் வெற்றிலையும் பொற்பணமும் அள்ளிக் குவியல்செய்து அன்பாயரி செடுத்து பிள்ளையார்க் கென்றே பெருத்த நிறைகுடமும் வெற்றிலையும் பாக்கும் விரும்பிய பூங்கரும்பும் தெள்ளிய மோதகமும் சீனிகண்டு சர்க்கரையும் வாழைப் பழமும் மாங்கனியுந் தீஞ்சுளையும் வேழ முகத்து விநாயகர்க்கு முன்குவித்து ஐங்கரற்குப் பூசை யன்பாய் முடித்தபின்பு அரிச்சுவடி தானெழுதி யரிதமோ வென்றுரைத்து ஒதினர் பாடம் உபாத்தியாய ரெங்களுக்கு நீதி முறையாய் நிலவெழுத்துந் தான்பழக்கி அரிவரி யிலக்கம் ஆனவெழுத் தத்தனையும் பரிவாக நாங்கள் பயின்றுவரு மந்நாளில் சாயும் பொழுது தரையிலே பேரெழுதி நேய முடனே நிதமும் மனமகிழ்ந்து வாயிற் கணக்கும் வகையான பெயர்க்கணக்கும் கேசக் கணக்கும் சிறப்பான நாட்கணக்கும் எண்ணற் கணக்கும் எழுத்துப் பிரிவுகளும் உண்மைப் படியே உபாத்தியாய ரெங்களுக்கு ஆத்திசூடி கொன்றைவேந்தன் அன்பான மூதுரையும் நேத்தியாய் நன்னெறியும் நல்வழியும் நாம்படித்தோம் உரிச்சொல் திவாகரமும் உண்டான நன்னிகண்டும் மாடேறு மீசுரனர் மாலைகளுந் தான்படித்தோய அன்றுதொடுத் தின்றளவும் அன்பாக வெங்களையவர் நேசித் திருந்தே நிதமுமது தொழிலாய் உள்ளபடி யெல்லாம் உவந்துதந்தார் மாதாவே பாடாயிரம் பட்டார் பார்க்கவொண்ணு மாதாவே எங்களுக் காக இப்பாடு பட்டதினல் திட்டமுடன் ஐயர்மனம் தேற்ற வேணுமென்று

Page 11
O
ஆன புதுவருடம் அடுத்த விடுதலைக்கு மானமுள்ள தேசிகர்க்கு வருங்கூலி வாங்கவந்தோம் அரிசியணஞ் சீலை அடை வுடனே தான்வாங்க பரிசினுடன் நீர் வாழும் பதிக்குவந்தோம் மாதாவே வாசித்துத் தந்தகடன் வைத்திருத்த லாகாதே ஒதுவித்தகாசில் ஒருகாசு சிக்கிநின்கு?ல் பாதிவித்தை தானும் பலியாது மாதாவே ஏட்டுச் செலவுதன்னை இல்லையென்ற பிள்ளைகள்தான் மோட்டுத் தனப்படுவார் முறைமையிது மாதாவே மாதப் பணமும் வயிற்றுப் படியரிசும் போதக் கொடுத்தாற் புகழுண்டு மாதாவே ஆன சனிக்கிழமை யரிசியெண்ணெய் தண்டவந்தோம் சனியெண்ணெய்க் கென்றுவந்தோம் தாயே சலியாதே இனியெண்ணெய் இல்லையென் றேதும் உரையாதே வருத்திப் படிப்பித்க வாத்தியார் தன் கூலி பொருத்த முடனளித்தாற் புண்ணியமுண் டுங்களுக்கு செல்வப் பொருள்தான் சிலவேளை யழிந்துவிடும் கல்விக் கிணங்கியதோர் கைப்பொருளு மில்லையம்மா செல்வக் குமாரரெல்லாஞ் சேரவே வந்துநிற்க முத்துக் குமார ரெல்லாம் முத்தத்தே வந்துநிற்க பவளக் குமாரரெல்லாம் பந்தரின்கீழ் வந்துநிற்க அருமைக் குமாரரெல்லாம் அருகிலே வந்துநிற்க பார்த்து மிருக்கிறீரோ பாலகனர் தஞ்சிறப்பை உச்சி துடிக்குதம்மா உள்ளங்கால் வேகுதம்மா பிச்சிகளோ நீங்கள் பின்னிரக்க மில்லையம்மா கால்கை கடுக்குதம்மா கமலமுகம் வாடுதம்மா மேல்கள் வலிக்குதம்மா வெயிலில் உருகுதம்மா மேனி நடுங்குதம்மா வெகுசோக மாகுதம்மா வேர்த்துச் சொரியுதம்மா வெந்நீர் குளித்தாற்போல் பார்த்து நிற்கலாமோ பாலர் படுந்துயரம்

தண்ணிர் விடா யாகுதம்மா தாகமிகத் தோணுதம்மா கண்ணிர் சொரியுதம்மா கரங்கள் கடுக்குதம்மா வயிறு பசிக்குதல் மா வாயாவி கொள்ளுதம்மா தயிரு மிளநீருந் தாருமம்மா தாயாரே ஈஞ மலடிகளோ இரக்கமில்லாப் பாவிகளோ தான யிரங்காமற் தாட்சணிய மற்றீரோ மாணிக்கம் முத்து வைரம்வை டூரியம் காணிக்கை யிட்டுக் கதிரவனைப் போற்றிசெய்து பேணி வளர்த்துப் பேறுபெற வேணுமென்று வாணிபங்கள் செய்து மருங்கு குறையாமல் கூலிக்குச் செய்யாமல் கொள்ளையிட்டுத் தின்னமல் வேலிக்கு முள்ளுவெட்டி வீணனய்ப் பேசகாமல் கள்ளஞய்ப் போகாமல் காவாலி யாகாமல் சுள்ளி விறகெடுத்துச் சுமைதலை மேல் வையாமல் பள்ளிக் கொளித்துப் பரதேசம் போகாமல் உள்ள பொருளழிக்க உகந்து குடியாமல் ஆடுகள் மேய்த்து அலைந்து திரியாமல் மாடுகள் மேய்த்து மடையணுய்ப் போகாமல் கப்பலி லேறிக் கலாசுபற்றி யுண்ணுமல் இப்புவியில் எங்களை யேனையோ ரேசாமல் சூது விளையாடிச் சுகமிழந்து போகாமல் மாதர் பின்னே சென்று மயங்கித் திரியாமல்
ஒடு தனயெடுத்து யாசகியாய்ப் போகாமல் கூடுஞ் சபையைக் குலைக்க நினையாமல் வெய்யிலிலே நின்று வெகுவேலை செய்யாமல் பொய்க ளுரையாமற் பெரியோரை யேசாமல் வம்பனென்று கேளாமல் வகைமோசஞ் செய்யாமல் நம்பின பேருக்கு நான்துரோகஞ் செய்யாமல் அண்டின பேரை யடுத்துக் கெடுக்காமல் என்றுஞ் சபைதனிலே யேமாந்து நில்லாமல்

Page 12
2
சும்மா திரிந்து சுணங்களுய்ப் போகாமல் இம்மாத் திரமு மில்லாமல் எங்களை நீர் பள்ளிக்கு வைத்துப் பலகலைக ளோதுவிக்க அள்ளிக் கொடுத்தோ அநேகஞ் செலவழித்தீர் ஆகையால் நாங்கள் அறிவுநூல் கற்றதனுல் பாகயை தாயாரே பரிவுடைய மாதாவே ஈனமிகப் பேசாமல் எங்களுடை மாதாவே பச்சரிசி தேங்காய் பண மோடு வெள்ளிலையும் இச்சையுடன் நீங்கள் இதமாய் மனமகிழ்ந்து இஞ்சி மிளகுடனே ஈருள்ளி வெங்காயம் மஞ்சளிரு சீரகமும் மணக்கும் பெருங்காயம் பாகற்காய் தேங்காய் பயத்தங்காய் கத்தரிக்காய் ஆக விவை முதலாய் அன்பான பூசணிக்காய் உப்பு மிளகாயும் ஊறுகாய் தன்னுடனே குப்பியில் எண்ணெய் கொடுவந்து வார்த்துவிடீர் வேட்டி சவுக்கம் விதமான வத்திரங்கள் நாட்டமுடன் ஈந்தால் நயமுண்டு மாதாவே நாடி நடந்து நலிந்து துயரமுற்று வாடி மிகநொந்து வருந்துகிருேம் மாதாவே பாலர் படுந்துயரம் பார்க்கிலையோ மாகாவே வரல இளங்குமரர் வருந்துகிறே? ஆச்சியரே பாடம் படித்துப் பழம்பாட மொப்புவிக்க ஓடிவரச் சொன்னர் உபாத்தியாயருக் கென்ன சொல்வோம் பொன்னும் பொருளும் மிகும்போ தலைந்துவிடும் அன்னையரே கல்வி யழியா தொருநாளும் கல்விக் கிணையாகக் கேைதட்ட மில்லையம்மா செல்வமென்னுங் கல்வி மிகச்சேரத் தசருமம்மா வீட்டிலெண்ணெ யில்லாட்டால் விடுகrசு மில்லாட்டால் கேட்டுக் கடன்வாங்கிக் கிருபையுடன் தாருமம்மா வந்தும் வெகுநேரம் வருந்தா தனுப்புமம்மா

13
எங்கள்குரு வானவர்தா னிந்நேரம் பார்த்திருந்து வெங்கண் சிவந்து வெகுகோபம் கொண்டிருப்பார் இன்னுஞ் சற்றுநேரம் இவ்விடத்தில் நின்றுவிட்டால் பழம் பாடம் சொல்கிறதும் பாங்காய் எழுதிறதும் அன்னையரே கல்வி யடைவுடனே சொல்கிறதும் தவறில் எங்களுக்குத் தான்செய்யும் ஆக்கினைகேள் காதிற் பிடித்துக் கடுகெனவே கிள்ளிடுவார் மோதிப் பிடித்து முதுகின்மேல் போட்டிடுவார் கொட்டான் பிரம்பாலே கூப்பிட் டடித்திடுவார் நெடிய பிரம்பாலே நீட்டியடித்திடுவார் கட்டி யுருட்டிக் கடுவெயிலிற் போட்டிடுவார் கட்டி யடித்துக் கனதண்டஞ் செய்திடுவார் கூட்டோடு பொல்லாக் கொடிய முசுறுதனைப் போட்டிடுவா ரெங்கள் பொன்னன மேனியிலே பாட்டைப் படித்துப் பழம்பாடஞ் சொல்லாட்டால் சாட்டை யெடுத்துச் சடசடென வீசிடுவார் பாடங் கொடாதிருந்தால் பாராமல் எங்கள்முகம் வாடசநீ யென்று வலுவாய்ப் பிடித்திழுத்து நெற்றியிலே கல்லுவைத்து நேர்கதிரோன் முன்பாக ஒற்றைக்கால் நில்லென்று உறுக்கி யடித்திடுவார் துரும்பெடுத்து நீங்கள் தொட்டிடா மேனியிலே அறிவைப் புகட்டுதற்கு ஆககினைகள் செய்திடுவார் பள்ளிக் கொளித்தாற் பதறப் பிடித்துவந்து கொல்லுவே னென்று கோபித் தடித்திடுவார் கட்டளை யிட்டபடி கருத்தாய்ச் செய்யாக்கால் திட்டிமுடன் எங்களைச் சினந்துறுக்கி யேயடிப்பார் நேரமது சென்ருக்கால் நெற்றிதனிற் கல்லேற்றி வாரிச் சவுக்கெடுத்து வளமாகத் தான்பிடித்து வீசி யடித்திடுவார் மெய்யுதிரங் கொப்புளிக்க கதி நடுங்கிக் கூவென் றழுதிடுவோம்

Page 13
14
அன்றியே யத்துயரம் ஆற்ருது மாதாவே பன்றிச் சுருக்கிட்டுப் பதைபதைக்கப் போட்டிடுவார் சிரந்தனிலே எண்ணெயிட்டுச் சீவி முடிதரித்து சேறணிந்த கையாற் றிருமுகங்கள் சுத்திபண்ணி நீறணிய வில்லையென்று நிட் டூரம் செய்திடுவார் நாவழித்துப் பல்விளக்கி நாளும் வராதிருந்தால் கூவென்று நாங்கள் கூச்சலிடத் தானடிப்பார் பள்ளியில் நாங்கள் படுந்துயரம் மாதாவே உள்ளபடி யுரைக்க உள்ளம் கரைந்தழுவீர் மாதண்டம் பண்ணி மகா கொடுமை செய்திடுவார் கோதண்டி ந் தன்னில் கொண்டுபோய்த் தூக்கிடுவார் ஆதண்டம் என்னுயிரும ஆகாசம் போயிடுமே ஏதென்று கேட்பவர்யார் எனயீன்ற மாதாவே அல்லும் பகலும் அனுதினமும் நம்வீட்டில் பாடம்படியா திருந்தால் பள்ளிக் கொருநாளும் வரவேண்டா யென்று வசைசொல்வார் மாதாவே படிக்கும் பொழுது பார்வையிட்டு எங்களையும் நடுக்க மெடுக்க நயந்தடிப்பார் மாதாவே கணக்குப் பிழையிருந்தால் கதறவே தானடிப்பார் முற்றும்பொய் தானுரைத்தால் முதுகிற்ருேல் வாங்கிடுவார் உபாத்தியாயர் சற்றே மனமிளகி விட்டாலும் V, சட்டம்பி யென்னும் சண்டாள மாபாவி சற்று மிரக்கமின்றி சாடைகள் சொல்லிடுவான் குற்றங்கள் கூறிக் கொடுமைகள் செய்திடுவான் வழியில் விளையாடில் வகைமோசஞ் செய்திடுவான் பழிகள் மிகக்கூறி பங்கங்கள் செய்திடுவான் தலையிலே குட்டிடுவான் தழும்புபெற நுள்ளிடுவான் அம்மாவே தாயாரே அரிய பிறவிகளே சும்மா நாம்நின்று சுணங்குவது நீதமல்ல மலடி யறிவாளோ மக்கள் அருமைகளை

ஈதல்லா லுங்களுக்கு இன்னமுஞ் சொல்லுவோம்கேள் பூதலத்தை நம்பிப் புகழ்ந்து மனமகிழ்ந்து தீதற்ற செல்வம் சிறப்பாய் மிகப்பெறினும் காதற்ற வூசி கடைவழிக்கு மாகாது வண்ணன் தன்கூலி மருத்துவிச்சி தன்கூலி அண்ணுவியின் கூலி ஆண்பண் டிதன்கூலி உற்றகலை யோதுவிக்கும் உபாத்தியாயர் தன்கூலி நற்றிறமாய் வேலைசெய்யும் நாவிதன் தன்கூலி இத்தனைபேர் கூலிகளை இல்லையென்ருல் மாதாவே மெத்த நரகுதன்னில் வீழ்ந்திடுவார் மாதாவே ஆகாது நீங்கள் அநியாயம் செய்தாக்கால் போகாது தோஷம் பூதலத்தில் மாதாவே ஆகையா லெங்கள் அறிவுடைய மாதாவே இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தார் பட்டாங்கி லுள்ள பழமொழிகாண் மாதாவே வெண்ணிறு மைந்தெழுத்தும் வேதா கமமுறையும் கண்ணிறு மில்லாக் காசினியில் வாழ்ந்திடுவீர் மாரி பொழிந்து மகிதலமுந் தான்வாழி ஊரிலுள்ள பெரியோர்கள் உயர்ந்து நிதம்வாழி அன்னம் பெறுவீ ரரியதவம் பெறுவீர் சொன்னம் பெறுவீர் சுகங்களெல்லாம் நீர்பெறுவீர் இன்னம் பெறுவீர் எங்களைப்போல் மைந்தர்களை எந்தன் குருவாழி ஈன்றெடுத்த தாய்வாழி தந்தை மிகவாழி சான்ருேர் மிகவாழி எந்தை கிளைவாழி ஈன்ருேர் மிகவாழி பாடினுேர் வாழி படித்தோர் மிகவாழி ஏடு பிடித்து எழுதினேர் தான்வாழி மாதமும் மாரி மழைபொழிய மானிலத்தில் ஆல்போற் றழைத்து அறுகதுபோல் வேரூன்றி மூங்கில்நோற் கூட்டிம் முசியாமல் வாழியவே.
எண்ணெய்ச்சித்து முற்றிற்று

Page 14
to
சிவநாமாவளி
உலகெலா முணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதிய னம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.
நேரிசை வெண்பா
முன்னவனே யானை முகத்தவனே முத்திநலஞ் சொன்னவனே தூய்மெய்ச் சுகத்தவனே - மன்னவனே சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே தற்பரனே நின்ருள் சரண்.
(இராகம்: இந்துஸ்தான் பியாக் ஆதிதாளம்)
சிவசிவ கஜமுக கணநாதா
சிவகுண வந்தித குணநீதா
சிவசிவ சிவசிவ தத்துவ போதா
சிவகுருபர சிவசண் முகநாதா
சிவசிவ சிவசிவ சின்மய தேஜா
சிவசுந்தர குஞ்சித நடராஜா.
அம்பலத் தரசே யருமருந்தே
ஆனந்தத் தேனே யருள்விருந்தே பொதுநடத் தரசே புண்ணியனே
புலவரெ லாம்புகழ் கண்ணியனே மலைதரு மகளே மடமயிலே
மதிமுக வமுதே யிளங்குயிலே ஆனந்தக் கொடியே யிளம்பிடியே அற்புதத் தேனே மலைமானே

17
சிவசிவ சிவசிவ சின்மய தேஜா
சிவசுந் தரகுஞ் சிதநட ராஜா படனவி வேக பரம்பர வேதா
நடனசபேச சிதம்பர நாதா அரிபிர மாதியர் தேடிய நாதா
அரகர சிவசிவ ஆடிய பாதா அந்தண வங்கண வம்பர போகா
அம்பல நம்பர அம்பிகை பாதா அம்பர விம்ப சிதம்பர நாதா
அஞ்சித ரஞ்சித குஞ்சித பாதா தந்திர மந்திர யந்திர பாதா
சங்கர சங்கர சங்கர நாதச கனக சிதம்பர கங்கர புரஹர
அனக பரம்பர சங்கர ஹரஹர F&Sons Gjirokov - sffr nTF put grrrp” GOOT
சகுளசி வாண்ட பராபரி பூரண இக்கரை கடந்திடில் அக்கரையே
இருப்பது சிதம்பரச் சர்க்கரையே என்னுயி ருடம்பொடு சித்ததே
இனிப்பது நடராஜ புத்தமுதே ஐயா திருச்சபை யாடகமே
ஆடுத லானந்த நாடகமே உத்தர ஞான சிதம்பரமே
சித்தியெ லாந்தரு மம்பரமே அம்பல வாசிவ மாதேவா
வம்பல வாவிங்கு வாவாவா தடராஜ னெல்லார்க்கு நல்லவனே
நல்லவெ லாஞ்செய வல்லவனே ஆனந்த நாடகங் கண்டோமே பர
மானந்த போனகங் கொண்டோமே

Page 15
8
சகலவு பகள நிட்கள நாதா
உகள சததள மங்கள பாதா சந்தத முஞ்சிவ சங்கர பஜனம்
சங்கித மென்பது சத்சன வசனம் சங்கர சிவசிவ மாதேவா
வெங்களை யாட்கொள வரவாவா அரகர சிவசிவ மாதேவா
அருளமு தநீதர் வாவாவா நடன சிகாமணி நவமணியே
திடனக மாமணி சிவமணியே நடமிடு மம்ப்ல நன்மணியே
புடமிடு செம்பலப் பொன்மணியே உவட்டாது சித்திக்கு முள்ளமுதே
தேவிட்டாது தித்திக்குந் தென்ளமுதே நடராஜ வள்ளலை நாடுதலே
நந்தொழி லாம்விளை யாடுதலே அருட்பொது நடமிடு தாண்டவனே
அருட்பெருஞ் சோதியென் ஞண்டவனே நடராஜ மாணிக்க மொன்றதுவே
நண்ணுத லாணிப்பொன் மன்றதுவே நடராஜ பலமது நம்பலமே
நடமாடு வதுதிரு வம்பலமே நடராஜர் பாட்டே நறும்பாட்டு
ஞாலத்தார் பாட்டெல்லாம் வெறும்பாட்டு சிதம்பரப் பாட்டே திருப்பாட்டு
ஜீவர்கள் பாட்டெல்லாந் தெருப்பாட்டு அம்பலப் பாட்டே யருட்பாட்டு
அல்லாத பாட்டெல்லா மருட்பாட்டு அம்பல வாணன் நாடினனே
அவனடி யாரொடுங் கூடினனே

தம்பத மாம்புகழ் பாடினனே
தந்தன வென்றுகூத் தாடினனே நான் சொன்ன பாடலுங் கேட்டாரே ஞான சிதம்பர நாட்டாரே இனித்துயர் படமாட்டேன் விட்டேனே என்குரு மேலாணை யிட்டேனே இளிப்பாடு படமாட்டேன் விட்டேனே
யென்னப்பன் மேலானை யிட்டேனே சன்மார்க்கம் நன்மார்க்கம் நன்மார்க்கம்
சகமார்க்கந் துன்மார்க்கந் துன்மார்க்கம் நாதாந்த நாட்டு நாயகரே
நடராஜரே சபா நாயகரே நான் சொல்லு மிதுகேளீர் சத்தியமே
நடராஜ ரெனில்வரு நித்தியமே நல்லோரெல் லார்க்குஞ் சபாபதியே
நல்வர மீயுந் தயாநிதியே நடராஜர் தன்னட நன்னடமே
நடம்புரி கின்றது என்னிடமே சிவகாம வல்லிக்கு மரப்பிள்ளையே
திருவாவ ஞனவன் சீர்பிள்ளையே சிவகாம வல்லியைச் சேர்ந்தவனே
சித்தெலாஞ் செய்திடத் தேர்ந்தவனே இரவா வரந்தரு நற்சபையே
யென்மறை புகழ்வது சிற்சபையே என்னிரு கண்ணு விருந்தவனே
இறவா தருள மருந்தவனே சிற்சபை யப்பனை யுற்றவனே
சித்தியெ லாஞ்செயப் பெற்றவனே அம்பல வாணர்தம் அடியவரே
அருளர சானமணி முடியவரே

Page 16
20
அருட்பெருஞ் சோதியைக் கண்டேனே ஆனந்தத் தெள்ளமு துண்டேனே இருட்பெரு மாயையை விண்டேனே
எல்லாஞ்செய் சித்தியைக் கொண்டேனே கருணு நிதியே குணநிதியே
கதிமா நிதியே கலாநிதியே தருளு பதியே சிவபதியே
தனிமா பதியே சபாபதியே கருணு நிதியே சபாபதியே
கதிமா நிதியே பசுபதியே சபாபதி பாதம் தபோ பிரசாதம்
தயாநிதி போதம் சகோதயவேதம் கருணும் பரவர கரசிர பவபர
அருணும் பரதர ஹரஹர சிவசிவ கனகா கரபுர ஹரசிர தரதர
கருண கரபர சுரவர ஹரஹர கனகசபாபதி பசுபதி நவபதி
அனகவு மாபதி யதிபதி சிவபதி வேதாந்த பராம் பரசயசய
நாதாந்த நாடாம் பரசயசய ஏகாந்த சர்வேச சமோ தம
யேகாந்த நடேச நமோ நம ஆதம்பர வாடக வதிசய சய
பதாம்புஜ நாடக சயசயசய போதராத புரேச சிவநாம
நாதாந்த நடேச நமோ நம ஜாலசோ லகன காம்பா சாயக
காலகா ழவள காம்பர சாயக உபல சிரதலசுப கணவங்கண
சுபலதா தலகன பணவங்கண

அபயவர தகயதல புரிகாரண
உபயர தபத பரபரி பூரண அகரவுக ரசுப கரவர சினகர
தகரவ கரநவ புரசிர தினகர வகரசி கரதின கரசசி சரபுர
மகரவ கரவர புரஹர ஹர பரமைந் திரிசக ளாகள சரணு
படணதந் திரநிக மாசம கரணு அனந்தகோ டிகுண சரகர சொலிதா அபண்டவே தசிர சரதர பவிதர பரிபூ ரணஞான சிதம்பர
பதிகா ரணநாத பரம்பர சிவஞான பதாடக நாடக
சிவபோத பரோகள கூடக சகல லோக பரகாரக வாரக
பவளயோ கசரபூ ரக தாரக சத்வபோ தகதா ரணதன்மய
பத்யவே தகபூ ரணசின் மய வரகே சாந்தம சோதய காரிய
பரபா சாந்த சுகோதய சூரிய பளிததீ பகசோ பிதபா தர
லளிதரூ பகஸ்தா பிதபாதர அனுர்தகோ பகருணும் புஜபாதா
அமிர்தரூ பதருணும் புஜபாதா அம்போருக பதஅரஹர சங்கர
சம்போசிவ சிவசிவ சிவசங்கர சிதம்பர காசா பரம்பிர காசா
சிதம்பர ரேசா சுயம்பிர காசா அருட்பிர காசம் பரப்பிர காசம்
அகப்பிர காசம் சிவப்பிர காசம்

Page 17
2 3
டம் பிர காசம் தவப்பிர காசம்
நடப்பிர காசம் சிவப்பிர காசம் நாதபரம் பரனே பரநாத சிதம்பரனே
நாததிகம் பரனே தசநாத சுதந்தரனே ஞான நடத் தவனே பரஞானி யிடத் தவனே ஞானவரத் தவனே சிவஞானபுரத் தவனே E5rtsa & Lir பதியே மறைநாடு சதாகதிபே
தீனதயா நிதியே பரதேவி யுமாபதியே புத்தந்தரும் போதா வித்தந்தருந் தாதா
நித்தந்தரும் போதா சித்தந்தரும் பாதா
திருச்சிற்றம்பலம்

சிவபுராணம்
Gau6ä7 unit.
தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி அல்லறுத்து) ஆநந்தம் ஆக்கியதே-எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர் எம்கோன் திருவா சகம்என்னும் தேன்.
நமச்சிவாய வாஅழ்க நாதன்ருள் வாழ்க இமைப்பொழுது மென்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள் வாழ்க ஏக னநேக விறைவனடி வாழ்க 5 வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்கச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவா ருண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவா ரோங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க 10 ஈச் னடிபோற்றி எந்தை யடிபோற்றி தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி மாயப் பிறப்பறுக்கு மன்ன னடிபோற்றி சீரார் பெருந்துறைநந் தேவ னடிபோற்றி 5 ஆராத இன்பம் அருளு மலைபோற்றி சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனுல் அவனரு ளாலே அவன்ருள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா னந்தன்னை முந்தை வினைமுழுதும் ஒய வுரைப்பனியான் 20 கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லை இலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமா ருென்றறியேன் 25 புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

Page 18
24
வல்ல சுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே னெம் பெருமான் மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யவென் னுள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா வெனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே வெய்யாய் தணியாய் இயமான ளும் விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞான மில்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானந் தன்னை அகல்விக்கு நல்லறிவே ஆக்க மன விறுதி யில்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பா யழிப்பர யருள்தருவாய் போக்குவா யென்னைப் புகுவிப்பாய் நின்றெழும்பின் நாற்றத்தி னேரியாய் சேயாய் நணரியானே மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களோ ரைந்துடையாய் விண்ணுேர்க ளேத்த மறைந்திருந்தா யெம் பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளே அறம்பாவ மென்னும் அருங்கயிற்ருற் கட்டிப் புறந்தோல் போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி மலஞ்சோரு மொன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா வுனக்குக் கலந்தவன் பாகிக் கசிந்துள் ளுருகும் நலந்தா னிலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
30
35
40
45
50
55.
60

25
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேஞ ரமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சங்கெடப் 65 பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா வமுதே அளவிலாப் பெம்மானே ஓராதா ருள்ளத் தொளிக்கும் ஒளியானே நிரா யுருக்கியென் ஞருயிராய் நின்றனே இன்பமுந் துன்பமு மில்லானே யுள்ளானே 70 அன்பருக் கன்பனே யாவையுமா யல்லையுமாம் சோதியனே துன்னிருளே தோன்ருப் பெருமையனே ஆதியனே யந்தம் நடுவாகி யல்லானே ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்தமெய்ஞ்ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75 நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 80 மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையுன் ஊற்ருன வுண்ணு ரமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேனெம் மையா அரனேயோ என்றென்று 85 போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யாளுர் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்ருடும் நாதனே தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90 அல்லற் பிறவி யறுப்பானே ஓவென்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரு மேத்தப் பணிந்து. 95
திருச்சிற்றம்பலம்

Page 19
இந்நூல் கிடை
திரு. ந. வேல்முருகு
(பொருளாளர்) சித்த ஆயுள்வேத வைத்தியா 14. மத்திய வீதி, மட்டக்களப்பு.
செட்டியா அர்

-க்கும் இடங்கள்:
திரு. சி. சிவனேசன்
(தஃலவர்) F, 2 நொத்தாரிஸ் ஒழுங்கை
மட்டக்களப்பு,
|adri, பாழ்ப்பாாம்,