கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கற்பின் கொழுந்து

Page 1
கற்பின் கொ Ավ,

ଗାଁt?ର୩
lî
$ଗ]]III}}

Page 2

கற்பின் கொழுந்து
(ஒரங்க அவலச்சுவை நாடகம் 1
லோறன்சு பினியன் என்னும் ஆங்கிலக் கவிஞனின் படைப்பினைத் தழுவி எழுதப்பெற்றது.
க. கணபதிப்பிள்ளை B. A., F. R. G. S.
கத்தோலிக்க அச்சகம், 18, மத்திய வீதி,
மட்டக்களப்பு

Page 3

முகவுரை
நாடக ஒழுங்கில் கிரேக்க நாடகப் படைப்பு அமைப்பின்படி மூன்று பிரதான அம்சங்கள் இடம் பெறவேண்டியனவாயிருக்கின்றன. அவை காலம், இடம், செயல் என்பனவாம்.
காலம் என்பது : ஒரு நாடகம் நடிப்பதற்காக எடுக் கப்படும் நேரமும், அதிலுள்ள நிகழ்ச்சிகளின் நிகழ்வு நேரமும் ஒரே அளவினவாயிருத்தல் வேண்டும்.
இடம் என்பது : நாடக நிகழ்ச்சிகள் இடம்பெறும் இடங்கள், குறித்த கால எல்லைக்குள் பாத்திரங்க ளால் அடையக்கூடியனவாயிருத்தல் வேண்டும்.
செயல் (வினை) என்பது : நாடகத்தில் இடம்பெறும் பாத்திரங்களனைத்தும் அந்நாடகத்திற்கு இன்றிமை யாதனவாயிருத்தல் வேண்டும்.
இனி ஒரு நா. கத்தில் முப்பெரும் பிரிவுகள் உள 'வினையின் வந்தது வினைக்கு விளைவாயது." நாடகத்தின் வினையைப் பொறுத்தமட்டில் அதில் மூன்று பாகங்கள் உள. அவையாவன : விதைப்பு, விளைவு, அறுவடை என்பனவாம்.
விதைக்கப்பட்ட ஒரு வினையானது, காலப் போக்கில் முளை கொண்டு செயற்பெருக்கம் பெற்று விடுகின்றது. இஃது விளைவாகும். செயல்கள் முதிர்வு பெற்று வினைக்கு விளைவாகி முதிரும்பொழுது அவ் வினை முற்றுப்பெறுகின்றது. முடிவு : இன்ப முடிவா யிருக்கலம் அன்றேல் துன்பு முடிவாயிருக்கலாம். இன்பந் தருவது : 'கொமெடி (Comedy) எனப்படும். துன் பந் தருவது "திறஜடி (Tragedy) எனப்படும்.

Page 4
"கற்பின் கொழுந்து' என்னும் தலைப்பினைப் பெற்றுள்ள இந்நாடகம் அவலச்சுவை ஓரங்க நாடக மாகும். அஃது நாடக அமைப்பு விதிகளுக்கு வழு வின்றி அமைக்கப்பெற்றிருப்பது ஆய்ந்துணர்ந்து கொள்வதற்குரியது.
இதை ஏற்பீர்கள் என்ற நம்பிக்கையினை உடை யேன்.
க. கணபதிப்பிள்ளை
52, நல்லையா வீதி, மட்டக்களப்பு. 14, மாசி-1985,

கற்பின் கொழுந்து
ஓரங்க அவலச்சுவை நாடகம்
இடம் : ஈடாவத மலையின் மருங்கு - வானுற ஓங்கிவளர்ந்த தருக்கள் சில காணப்படுகின்றன - கரடு முரடான சக்கி முக்கிப் பரல்களும், முட்புதர்களும் அடர்ந்துள்ள அம்மலைச் சரிவின் வலதுபுத்றதிலே ஒரு வழி - அவ்வழியே இரு இடைச் சேரிச் சிறுமிகள் - மெலிசாவும், அயாந்தேயும் - மெல்லென ஏறிவருகின்றனர் - பெருமூச்செறிந்து, வெயர்வை அரும்பிய முகத்துடன் அடிமேல் அடிவைத்து அரங்கில் தோன்றுகின் றனர்.
காலம் : மாளேவேன - இள இருள் கவிந்திருக்கின்றது.
மெலிசா : சற்றுப் பொறு, அயாந்தே. கால்கள் சோர்வடைந்து விட்டன. அசதி மேலிட்டுவிட்டது. இவ்வளவு உயரத்துக்கு ஏறிவந்துவிட்டோமே ! இது எவ்விடமாயிருக்கலாம் ?
அயாந்தே இதுதான் ஈடாவதத்தின் மிகவும் உயரமான சரிவு. நம் இடைச்சேரிச் சிறுவர் இங்குதான் தமது செம் மறி மந்தைகளை மேய்க்கின்றனர். நம்மவர் தங்களுக்குத் தேவையான விறகினையும் இங்கேதான் வெட்டி எடுக்கின்றனர்
மெலிசா : அப்படியா ? அப்படியாகில், இங்குதான நமது இடைச்சேரி இராணிபோன்றவளும், அழகுவாய்ந்தவளுமாகிய ஈனேணி வதிந்துவருகின்ருள் ?
அயாந்தே ஆம். ஈனேணியைப்பற்றியும் அவளது ஒப்பற்ற காதல் வாழ்வினைப்பற்றியும் அறியாதார் நம்மாயர்பாடியில் எவருமிலர்.
மெலிசா : தெரியும், தெரியும். அவளது காதல் சாதாரண காதலன்று. அது ஒவ்வாக் காதலாயிற்றே ! எனினும் அஃது ஒரு தெய்வீகக் காதல் அல்லவா ? அவள் தாரகாபுரி மாவேந்தணுகிய பிறயம் மாவேந்தனின் மைந்தணுகிய எழில்
- -

Page 5
மிகு இளவல் பாரீசன் "மேல் காதல் கொண்டாளே! அது எத்துணைத் துணிச்சலான செயல் !
அயாந்தே அவளைக் குறைகூறுவதிற் பயனில்லை. எல்லாம் பாரிசனின் பகட்டான நடத்தையிஞல் அல்லவா நிகழ்ந்தது ?
மெலிசா : சரிதான். கட்டவிழாக் கமலம்போன்ற ஈனேணியின் பிஞ்சு உள்ளத்தினை கட்டவிழச் செய்து, அதன் தேனமுதி மாகிய புனிதக் காதலைப் பிலிற்றியவன் பாரீசனல்லவா ? அச்செயலினை வேறு எந்த இளங்காளையும் செய்திருக்க இயலாது. பாரீசனைக் கண்ணுற்ற கன்னியர்கள் அவனது இளங்காளை நடையிலும், சிங்கம்போன்ற கர்ச்சனையிலும் தேவதரு போன்ற மாண்புமிக்க தோற்றத்திலும் மயங்கி விடுதல் இயல்புதானே !
அபாந்தே எல்லா விழுமிய குணங்களும், உலகளாவிய புகழும், வீரமும் தீரமும், பராக்கிரமும் அவ்வண்ணலிடத் துள்ளனதான்! ஆயினும் அவன் தனது ஆருயிர்க் காதலி யாகிய ஈனுேணியைத் துஞ்சற மறந்துவிட்டனனே! ஏன் அவர்களின் காதற் சந்திரன் தேய்வுறு திசையினே அடைந்து விட்டனணு ?
மெலிசா : அவன்தான் என்செய்வான்? விலக்கவொண்ணு விதிவசத்தினுல் தெறிதவறிப்போய்விட்டான். "மெனிலோசு" மாவேந்தனின் மகாராணியாகிய எலன்”மேல் அவன் வைத் துள்ள காதல் அளப்பரியது. தடங்கரை பேர்த்துப் பெருக் கெடுக்கும் வெள்ளப் பிரவாகமென அது வந்து மோதிய தால், அவன் அதில் மூழ்கிப்போயினன். ததிகெட்டுவிட்ட னன். ஐயகோ பாவி! நாம் அவ்விளவல்மாட்டு இரக்கம் காட்டவேண்டாமா ?
அயாந்தே ! எலன் மகாராணியின்மேற் கொண்டுள்ள காதலின் மிகுதியாற்ருன் பாரீசன் அவ்வழகியை நம் தலைநகராகிய நாரகாபுரிக்குக் கடத்திவந்துவிட்டான்.
மெலிசா : ஆம், ஆம்; அவனது அடாத நடத்தையின் sirrigéoor மாகவன்ருே தாரகாபுரி சென்று போன பத்து வருடங்க ளாக மெனிலோசு மாவேந்தனின் கிரேக்க சைனியங்களால் முற்றுகையிடப்பட்டிருக்கிறது.
ཐབས་དཔག 2 གང་ཡང་མ་

அயாந்தே இன்று அதிகாலையிற்கூட அந்நீண்டகால முற்றுகை யில் ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளதுபோலப் டேரிடி இடித்ததே ! என்ன நிகழ்ந்திருக்கலாம் ?
மெலிசா : தாரகாபுரியின் முற்றுகை முடிவடைந்துவிட்டதாமே! கோர யுத்தம் மூண்டதாம். கிரேக்க சைன்னியங்களுக்கும் தாரகாபுரிச் சைன்னியங்களுக்குமிடையில் கொடிய கைகலத் தல் நிகழ்ந்தது.
அயாந்தே : ஆம்; மிகவும் கோரயுத்தம் நிகழ்ந்ததாம்.
மெலிசா : ஆமடி, அயாந்தே ! அந்த யுத்தத்தில் கிரேக்கர்கள் தாரகாபுரியைக் கைப்பற்றிக்கொண்டனராம். பாரீசனின் அருமைச் சகோதரணுகிய “எக்ரர்"கூடப் படுகாயப்பட்டு மாண்டுவிட்டாணும். நமது அரசிளங்காளையிருக்கின்ருனே, பாரீசன், அவனுக்கு என்ன நேர்ந்ததோ ? தெரிந்திலது. பாரீசனின் காதலியாகிய எலன் மகாராணி மீட்கப்பட் டாளோ, என்னவோ ? தெரியவில்லையே! ஐயோ, பாவம் : அவர்களின் காதல் இன்ருேடு முற்றுப்புள்ளி இடப்பட்டு விட்டதாகத்தானிருத்தல்கூடும்.
ஏண்டீ, அயாந்தே ! காதலும் கத்தரிக்காயும் ! காத
லென்று சொல்வதெல்லாம் வீண் விழல் பேச்சல்லவா ?
அயtந்தே சா சா சா ! புனிதக் காதலின் விழுமிய மாண்
பினை எடைபோட்டுப் பார்க்க எவரால்தானியலும் ?
மெலிசா : போடீ, போடீ ! இதெல்லாம் வீண் பிதற்றல்தானே!
அயா ந்தே அப்படி நினைக்காதே! உன்னதக் காதலுக்கு அழி வில்லை; அது நீரில் அமிழ்ந்திப்போவதுமில்லை; அக்கினியில் எரிந்து சாம்பலாகிவிடுவதுமில்லை! அது சதாகாலமும் நிலை நின்று மிளிரும் அழியாச் செல்வமல்லவா ? பொன்னும் மணியும் அதற்கீடில்லை.
மெலிசா : அது ஒரு காலம் 1 இக்காலத்தில் அது கடுஞ் சுரத்
தில் மடிந்து மாந்தி மறைந்துவிட்ட பயிர்போல்ாயிற்றே !
(வலதுபுறத்திலிருந்து மரக்கிளைகள் ஒடிவது போலவும், மரங்கள் சரிந்து விழுவதுபோலவும் சத்தம் கேட்கின்றது)
- 3 -

Page 6
அயாந்தே அதோ, பார்த்தாயா? மரம் வெட்டுவோர் வானுற ஓங்கி வளர்ந்த இராட்சத தேவதருக்களை வெட்டி வீழ்த்துகின்றனர். ஐயையோ பாரும் அங்கே பாரும் ! அவை அசைகின்றனவே. அம்மரம் வான்முகட்டில் ஊச லாடுகின்றதே! மட மடவென்று முறிகின்றதே! அதோ பார். மெலிசா, அதோ, அதோ ! ஐயகோ அப் பெரு விருட்சம் சரிந்து விழுகின்றதே !
மெலிசா : ஆமடீ விழுகிறது. விதிவசத்தால் விழுகிறது. அதோ விழுகிறது! அதோ ! அதோ விழுந்துவிட்டது !
அயாந்தே ஆகா வீரிட்டு விழுந்ததே ! நமது அரசிளங் காளையாகிய பாரீசனும் அதேபோல வீரிட்டு விழுந்தானே ? என்ன நிகழ்ந்ததோ, போர்க்களத்தில் ?
மெலிசா : ஏண்டீ ஏன் அப்படிச் சொல்லுகிருய்? அதோ பார் மரம் வெட்டுவோர் மரங்களைத் துண்டுகளாக அரிந்து அடுக்கிவைத்திருக்கின்றனர்.
அயாந்தே ஆமடீ ஏதோ கொடிய உற்பாதம்போலத் தோன்றுகிறது. ஈமக் குவியல்களைப்போல அவற்றினைக் குவித்து வைத்திருக்கின்றனர். என்னுளத்தில் அச்ச இருள் நிரம்பிவிட்டது. துக்கம் நடமாடுகின்றது-குடிபுகுந்துவிட்டது.
(யாரோ பேசும் சத்தம் கேட்கிறது - வலது புறமாக யாரோ ஒருவர் அடிமேலடி வைத்து ஏறிவருவதுபோல அரவம் கேட்கிறது)
மெலிசா : அதோ அங்கே பார் ! யாதோ ஒர் உருவம் தோன்றுகின்றது ? அது பெண்ணெருத்தியினுருவம்போ விருக்கின்றது.
அயாந்தே (கண்புருவத்தின்மேல் கைவைத்துப் பார்க்கின்ருள்)
அடீ, மெலிசா அது ஈனுேணிபோலத் தெரிகிறது.
மெலிசா : அவள்தானே இங்கு மாலைவேளையில் வந்து தீபம் மூட்டிக்கொண்டுவருகின்ருள். அவள் நம் ஆயர்பாடி அழகு ராணியல்லவா ? பாவம் மெலிவடைந்துவிட்டாள். அவளது
- 4 -

நடையும் தளர்ந்துவிட்டது; கட்டழகு நெகிழ்ந்துவிட்டது; தகர்ந்துவிட்டது:
அயாந்தே அவள் பாவி! பெரும்பாவி! நிச்சயமாகவே அவள்
பாவிதான் தன் காதலனை இழந்துவிட்டு பத்து நீண்ட
ஆண்டுகளாகப் பதிவிரதா நோன்பு நோற்றுவருகின்ருளெனக் கேள்வியுற்றிருக்கின்றேன்.
மெலிசா : ஆம், தினமும் அவள் செக்கலில் இவ்வீடாமலைச் சரிவில் தனது மென்பாதங்கள் கொப்புளம் முகிழ்க்க, உளம் நெக்குருகி, ஆவியுருகி, ஏறி ஏறிச் செல்வதுண்டாமே !
அயாந்தே : வா, வா, மெலிசா போய்விடுவோம். இவ்விட்ம் நோக்கித்தான் வருகின்றள். அவள் ஒரு மாந்திரீக மாது என யாவரும் கருதுகின்றனரன்ருே !
மெலிசா : விரைந்துவா. நம்மைக் கண்டால் அவள் சபித்து விடுவாள். நமது செம்மறிகளின் மடிகளை வறளச்செய்வாள்.
அயாந்தே : விலை மதிக்கொணு மூலிகைகளின் திறத்தினைப் பற்றி அவளுக்குத் தெரியும். சர்ப்பம் தீண்டினரைக் குணப் படுத்த அவளாலியலும் காதலரை இழந்துவிட்டவர்க்குக் கூட அவர்களின் துணைவர்களை மீட்டுக்கொடுக்க வல்லவள் அவள்.
மெலிசா : தெரியும் தெரியும் ! நம் இடைச்சேரிச் சிறுவஞகிய மாஒலன் கொடிய கரும் நாகத்தினுல் தீண்டப்பட்டு உயிர் நீங்கும் தறுவாயிலிருந்தபொழுது அவனுக்குச் சிகிச்சை செய்து உயிரீந்தவள் ஈஞேணியல்லவா ?
அயாந்தே இத்திறத்த நலன்களையெல்லாம் ஏனையோர்க்கு இழைக்கவல்லவள்தான். எனினும் தனது ஆருயிர்க் காதல ஞகிய பாரீசனை மாத்திரம் தன்மாட்டு ஈர்த்திழுக்கும் ஆற் றல் அவளுக்கில்லையே!
மெலிசா : நீவிர், சொல்வது சரி. அதற்கு வேண்டிய வல்லமை மாத்திரம் அவள் வசமில்லை. அதோ. சமீபித்துவிட்டாள். வாடீ, போய்விடுவோம்.
-.... 5 م-م

Page 7
இருவரும் இடதுபுறமாக இறங்கிச்செல்ல, வலதுபுறமாக ஈனுேணி தோன்றுகின்ருள். கை யில் சிறு தூறுகளைக் கொண்டுவந்து குவித்து விட்டுத் தீமூட்டுகின்ருள் - பெருமூச்செறிகின் ருள் - தாமதிக்கின்ருள் தயங்குகின்ருள் - கல் லொன்றின்மேல் சரிந்துவிழுவதுபோல மெல் லென உட்காருகின்ருள்]
ஈனேணி ! (பெருமூச்சுடன் ஆகா! பத்து ஆண்டுகள் ! பத்து நீண்ட ஆண்டுகள் வறண்ட மாதிரத்தில் எடுபட்ட எருக் கிலம் பஞ்செனப் பறந்துவிட்டனவே! எனது ஆருயிர் நண்பனுகிய பாரீசனை இழந்து பத்து நீண்ட கொடிய வறிய வருடங்களாகிவிடடன. காலவெள்ளம் நெகிழ்ந்துவிட்டது; நகர்ந்துவிட்டது. எனது கட்டழகு நிரம்பிய இளமை நழுவி விட்டது. பத்து நீடித்த ஆண்டுகளாக அவ்வண்ணலின் எண்ணங்களும் பராக்கிரமச் செயல்களும் வேறு திசையில் திரும்பிவிட்டனவே 1 சுழற்காற்றில் எடுபட்ட மரக்கலம் போலானேன். எனது திடமான சிந்தை கலங்கிவிட்டது. எனது உளம் பதைபதைக்கின்றது. எனதாவி அக்கினிச் சுவாலை என கொழுந்துவிட்டெரிகின்றது. உள்ளம் உருகி உருகி உலர்ந்துவிட்டதே ! ஆ ! என் ஆருயிரே ! பாரீசா ! நான் உன்னை நினைந்து நி%னந்து, உளம் நெகிழ்ந்து இப் பாழ்பட்ட ஈடாவதத்தின் கரட்டுக் கற்சரிவில் தினமும் மாலைப்பொழுதில் கடுந்தழல் மூட்டி உன்னை இவ்வண் அழைக்கும்முகமாக, பத்தாண்டு பதிவிரதா நோன்பு நோற்று வருகின்றேன். என் நோன்பிற்கு முற்றென்றுமில்லையா ? தீர்வில்லையா ? பலனில்லையா ? விலக்கில்லையா ?.
மதன ! காதற் தெய்வமே ! ஏன், ஏழையாகிய என் மேல் இத்தனை வன்மம் சாதிக்கின்றன ? ஏழையாகிய என்னைச் சோதிப்பதற்கு ஒரளவில்லையா ?
என் கற்புநிலை திறம்பிவிட்டதா? ஆ1 ஆ! இத்தனை துயரும் என்மேல் குவிக்கப்பட்டிருக்க, என் ஆருயிர் அண் ணலே ! பாரீசா ! நீ மாத்திரம் தாரகாபுரியில் உனது காமக் கிழத்தியுடன் உறவாடி சல்லாபம் செய்துகொண்டிருக்கின் றனையே! இது தகுமா ? இது தர்மமா ?
(அக்கினியை விளித்துப் புலம்புகின்ருள் ஆ ! ஆற்ருெ ணுத் துயரில் அமிழ்ந்துவிட்டேனே! அக்கினியே 1 மண்டிக்
线
- 6 -

கொழுந்துவிட்டு எரிவாயாக. உனது நீண்ட புயங்களை வான்முகடு நோக்கி வீசிச் சுழற்றி எறிவாயாக. உன்னைக் கண்ணுற்ற எனது ஆசைத் துணைவர் எனது நினைவு ஊட் டப்பெற்றுள்ளவராய், வாய் கதறி, மெய்விதிர்த்து ஒரே ஒட்டமாய் என்னைத் தேடி ஓடிவரட்டும்.
(தாமதம் - தடுமாற்றம் - படர்ந்து புதுமொட் டுக்கள் நிரம்பியதாயிருக்கும் திராட்சைக் கொடி யின் அரும்புகளை, கையில் பற்றி, அவற்றினை வருடி, உற்றுநோக்கிப் புலம்புகின்ருள்)
திராட்சை வல்லியில் புன்முறுவல் பூக்கும் அன்றலர்ந்த அரும்புகாள் ! எத்தகைய உளத் திடத்துடன் நீங்கள் புன் முறுவல் பூக்கின்றீர்கள்! ஏழை இடையர்பாடிப் பெண் ணுகிய எனது அவல நிலையினை உணர்ந்து, நீங்கள் மனங் கசிந்து, வாடிவதங்கி உதிர்ந்துவிடவில்லையே! நீங்கள் கட்ட விழ்ந்து, முகம் மலர்ந்து தீம் தேன் துளிகளைப் பிலிற்றுங் கால், உங்களை எத்தனை தேனீக்கள்தான் வந்து உந்தும் ? உங்கள் காதில் அவை காதற்கணிவெய்திய ரீங்காரப் பாட லைப் பாடும். பின் நீங்கள் வாடிவிடுவீர்கள். உளம் குழைந்து வதங்கிவிடுவீர்கள். ஆயினும், சில வேளை களி லெ ல் லா ம் உருண்டு திரண்டு, தீம்சாறு நிரம்பிய கணிகளாகப் பரிண լճlւյլ grid Gir.
அத்தகைய நிலையில், குறும்பு நிரம்பிய எம் சிறுவர்கள் உங்களின் இரசம் நிரம்பப்பெற்ற, பூழ்திமூழ்கிய கனிகளை முதுவேனிற் பொழுதுபோக்கிற்காகத் தமது கொடிய முரட் டுக் கைவிரல்களாற் பற்றிப்பறித்து, கசக்கிப்பிழிந்து உங்கள் தீஞ்சாற்றினை உறுஞ்சிக் குடிப்பதை. நீங்கள் எதிர்நோக்கிச் சிந்தித்துணரும் உணர்ச்சியற்றவர்களாயிருக்கின்றீர்களே ! ஆகா! எத்துணைத் திடம் ! எத்துணை மெளட்டியம் ! உங்க ளது உளம் கல் நெஞ்சமாயிற்றே ! (தாமதம்)
எனது நிலையும் உங்களது நிலையினை ஒத்துள்ளதுதான். புதுக் காமமெனும் வேட்கைச் சாறு நிரம்பியுள்ள எனது காதலுள்ளமும் எனது காதலனின் கொடிய நினைவுகளால் கசக்கிப் பிழியப்படுகின்றது. ஆ 1. ஆ.
காதல் ! காதல் ! காதல் 1 காதல் இன்றேல், சாதல் சாதல்! சாதல் 1 (அமைதி)
سنہ 7 -~~~۔ .

Page 8
ஒருகால் தெவிட்டாத இன்பமளித்த காதல் எனும் பதங்கூடக் கசப்பாகிவிட்டதே ! எனது காதலனின் வீரச் செயல்களின் காதல் நாடக நினைவுகள் பழுக்கக் காய்ச்சிய நாராசம்போல என் நெஞ்சினைத் துளைக்கின்றனவே!
(தான் உட்கார்ந்திருக்கும் கருங்கற் பாறை யினை விளித்துப் புலம்புகின்ருள்)
ஓ ! கரும் உளத்தினையுடைய கசிவில்லாத முரட்டுப் பாறையே எத்திறத்த எஃகுத் திணிவுடன், நீ, என் பரிதாப நிலைகண்டு, உளங்குழையாதிருக்கின்றன ! உருகா உள்ளம் நீ! அத்துணைத் திடம் என்மாட்டில்லையே! எனி னும் உன்னைக் கெஞ்சிக் கேட்கின்றேன். இது எனது வேண்டு கோள். சற்றுச் சிந்தித்துப்பார். உன் சிந்தையினையாவது தெளிவுபடுத்திக்கொள் ! (தாமதம் - நிசிக் குருவியின் இன் னிசைக் குரல் கேட்கிறது. அதனை விளிக்கின்ருள்)
நிசிக்குயிலே ! நிசிக்குயிலே! நேயமுறப் பாடுகின்ருய் ! ஊனை உருக்சி, காம உளம் கசிய ஊட்டுகின்ருய் ! தேனிற் குழைத்தெடுத்த தெவிட்டாதமுதம் உன் சொல் வேனிற் பொழுதின் விளம்பரிய காட்சிகளின் காதற் கிளவியம்மா ! எனினும்,
తీll,
என் காதைத் துளைக்குதம்மா ! காய்ச்சிய வெங் கம்பியென ! உன் பாட்டுச் சுடுகுதம்மா ! என் நெஞ்சம் பிளக்குதம்மா. நினைந்து நினைந்தென் அண்ணலை : கண், நீர் நிரம்பப் பணிக்குதம்மா இவ்வவல வேளையிலே - ஏன் ? கள்ளுக் குடித்தனையோ ? காமவெறி கொண்டனையோ ! எள்ளி உரையாட, என் அகந்தான் தொட்டனையோ ? வெள்ளி நிலவெனவே - உயர் விசும்பின் ஒளியெனவே,
அள்ளி அள்ளிப் பருகும்
அமுதின் பெருக்கெனவே
உன் உள்ளக்கிடக்கை என் உள்ளத்தைக் குழைக்குதம்மா !
~س۔ 8 سیس۔

...உனது ஒப்பரிய காதற் காவியம் என் எண்ணச் செறிவினை எனது காதலன்மாட்டு ஏந்திச்செல்லமாட்டாதா?
(தாமதம்)
தினமும் காரிருள் கவிந்துள்ள இக்கானகத்தில் உன் இன்னிசையைக் கேட்டுக் கேட்டு நான் காதற் பரவசம் அடைந்துவந்தேனே!
எனது பிரேமையின் விழுமிய இலக்கினை என்னை அடை யச்செய்ய உன்னுல் இயலாதா ? ?
இருளின் மடந்தாய் - இனிய குரலின் குவிவே ! நீ எத்தனை மென்மையான இசையினை மீட்டு வழங்கியுள்ள போதிலும், எனது உளத்தினை இரு கூறுகளாகப் பிளந்து விட்டனையே! அதில் நிரம்பியிருந்த காதல் தேறலைச் சிந்தி விட்டனையே ! அஃது வறண்ட பாத்திரமாயிற்றே ! அவலம்! அவலம் தொலைக்கொணு அவலம் ! (தயக்கம்
எனது பதிவிரதா தர்மம் அவலமென உருவெடுத்துவிட்டதே ! எனினும், என் பாழ்பட்ட மனமே! சிந்தனை செய்.
(தாமதம்} நான் யார் ? நான் ஆட்டிடையர் குலத்துதித்த் ஒரு கன்னிதானே! பாரீசனே பிறையம் மாவேந்தனின் மங்காப் புகழ்படைத்த அரசிளங் காளை, வீரபராக்கிரமம் நிரம்பிய எக்ரரின் இளவல். அவ்விளங்காளைக்கும் எனக்குமிடையில் ஒத்த காதல் எங்ங்ணம் அரும்புதல்கூடும்?. (தாமதம்)
ஆயினும், காதலுக்கு வரம்பு ஏது? அதற்கு அரண் எதற்கு ? வேலி எதற்கு ? அளக்கொணு ஆனந்தக் கடலில் அமிழ்ந்திப்போனவர்ச்கு ஆழம் ஏது? கரை ஏது? அன்பிற் கும் உண்டோ அணை ?
(நெஞ்சொடு புகல்கின்ருள்)
எனவே, மண்ணக மடந்தாய், ஈனேணி அழாதே ! அல்லலுருதே 1 அலமந்துபோகாதே! உன் நிலைகண்டு, பொங்காதே ! பாரீசனுக்கு எவ்வாறு ஒரு புத்துலகம் தோன்றியுள்ளதோ உனக்கும் உன் வாழ்வில் ஒரு புதிய திருப்பம் தோன்றுந்தானே ! hW
-س 9 --س

Page 9
எனது காதலர் என்னை மறந்துவிட்டு தமது வாழ்க்கைப் படகினை புதியதொரு துறைமுகம் நோக்கித் திருப்பிவிட்ட னரே ! நானும் எனது படகினை வேருெரு திக்கில் திருப்பிச் செலுத்த ஏன் தயங்குதல்வேண்டும்? நானும் ஒரு கானுறை அணங்கன்ருே ? நானும் ஒரு ராணிதானே !.
எனினும் 1. உன் உள்ளம் அத்தகைய அடாத்தான மாற்றத்தினைச் செய்ய மறுத்துவிடுகின்றதே !
பாரீசா ! எனது நாவிலும் நீ! எனது ஊனிலும் நீ! எனது உளத்திலும் நீ! இவ்வையகம் முழுதுமே உனது மயமாகிவிட்டதே ! நான் காண்பதெல்லாம், என் கண்ணே, நீயடா! நான் கேட்கும் ஒலியிலெல்லாம் நீ! நான் உயிர்க் கும் உயிர்ப்பில்கூட நீ கலந்துவிட்டனேயே 1 ஆகா !
கொடிது ! கொடிது யாரை நோவேன்? யார்க் கெடுத்துரைப்பேன் ? இவ்வகிலமே எனது காதலின் உளச் சலனத்தினுல் தாண்டவமாடுகின்றதே !
பாரீசா ! என் கண்ணின் மணியே ! நீமாத்திரம் காதல் தாண்டவத்திலிருந்து தப்பிப் பிழைத்திருப்பது எத்தனை விந்தை ? உனக்கோ உள உணர்வும் அதிர்ச்சியுமில்லை ! எனக்குமாத்திரம் அவ்வாட்டம் எதற்கு ? விந்தையிலும் விந்தையல்லவா ?
தெய்வீகம் கலந்துள்ள எனது அன்பின் வலையில் நீ சிக்கிக்கொள்ளாமல் இருக்கின்றனயே எத்துணை விநோத மடா, இக்காதற் கசிவு ? (தாமதம்)
எனது வாழ்வின் நினைவுகளனைத்தும் ஒருங்குசேர்ந்து உருவெடுத்து கனவாக மாறிவிட்டனவே!
நேற்றிரவில்கூட எனது ஆருயிர் அண்ணலைக் கனவி னிலே கண்டேனே! அவ்விளவலின் வதனத்தில் அவல இருள் மண்டியிருந்தது. வெம்பி வெதும்பிய முகத்துடன் அவர் என்முன் தோன்றினர். சிறு நேரத்திலெல்லாம் தமது வாடி வதங்கிய வாயினைத் திறந்து ஏதோ வார்த்தைகளைக் கூற எத்தனிப்பதுபோலச் சாயை காட்டினர். அவரது பவள இதழ்களில் மறக்கொணு மந்தகாசம் அரும்பியது. ஆயினும் அஃது ஒருகணத்தில் தோன்றி மறுகணத்தில் மறைந்து
--سس۔ k0 --م۔

விட்டது. அவரது தாமரைக் கண்கள் பனித்தன. இமைகள் விம்மி மதர்த்தன. பின் மயங்கி, மாலையிற் கூம்பும் மந்தாரை மலரெனச் சோர்ந்துவிட்டன. அவரது திண்ணிய திரண்ட தோள்களும் பரந்த மார்பும் துடித்தன. மெய் மயிர் பொடித் தது. பொன்னிகர் மேனியில் வெயர்வைத் துளிகள் முத் தரும்பி முகிழ்த்தன. இத்தனை மெய்ப்பாடும் அவரது உளத் தில், ஏதோ துயர் நிரம்பிய எண்ணங்கள் அலைமேல் அலை யாகத் தோன்றி அதனை அதிரச்செய்ததற்கு அறிகுறியாகு 4p6ზrGწლფ !
அண்ணலே ! எனதாருயிர் அண்ணலே ! உமக்கு தாரகா புரியின் சஞ்சலம் நிறைந்த அமர்க்களத்தில் நினைக்கொணுச் செயலேதும் நிகழ்ந்திருக்கும் என்பதற்கு இக்கொடிய கனவு உற்பாதமாயிருக்கின்றதே !
(பாரீசன் இடதுபுற வழியில் தோன்றுகின்ருன்: வாடிய வதனம் - சோர்வுற்ற நடை - அவலக் கண்ணிர் பெருக்கும் கண்கள்-போர்க்கள உடை
ஆகா! நான் காண்பது கனவா ? அன்றேல் நனவா ? அயர்ந்துவிட்டேன ? நிசமாகவே நான் விழிப்போடுதானே இருக்கின்றேன். அப்படியாயின் எனது கண்முன் தோன்று வது மெய்யாகவே எனது ஆருயிர் காதலனுகிய பாரீசன்தானு?
(நெஞ்சோடு புல்ம்பல்)
நெஞ்சே பொறு பொறு ! கற்பனேக் கடலில் நீ இன்னும் நீந்திக்கொண்டுதான் இருக்கின்றன. சஞ்சலம் நிறைந்த பாராயிற்றே ! எனது கண்களை என்னல் நம்ப முடியவில்லையே! (தாமதம் : பாரீசனை ஏற இறங்கப் பார்க் கின்ருள்)
இல்லை, இல்லை ! இது கனவில்லை. மெய்யாகவே இது கனவில்லை. என்முன் நிற்பது எனது பாரீசனே !
அதோ! அவரது கண்களிலிருந்து நீர் தாரை தாரை யாகக் கொட்டுகிறது. வாயிதழ்கள் துடிக்கின்றன.
(மூழந்தாளிட்டு நின்று பாரீசனின் அடிகளை
வருடுகின்றள்]
- -

Page 10
பாரீசா ! என் பொன்னே 1 என தள்புக் கடலே ! நீள் நில விளக்கே ! ஏன் வந்தனை ? இக்காரிருள் கவிந்துள்ள நள்ளிரவில் என்னைத் தேடிவந்தனையோ ? ஆ ! ஆ! என் இறையே! இது கனவா? நனவா ? அறியேனே! ஆ.ஆ.
பாரீசன் : (அஞ்சவேண்டாம் எனச் சாயை காட்டுகின்றன்) அஞ்சாதே, என் ஆருயிர்ப் பாவாய் ! ஈனேணி என்னல் வாயெடுத்து இயம்ப இயலவில்லை. நான் வெஞ்சமரில் புண் பட்டுவிட்டேன். "பிலாத்தொக்கீசனின் நஞ்சூட்டப்பெற்ற ஈட்டியினலே காயமடைந்தேன். இதோ பார் ! எனது இடது தோளில் அக்கொடிய ஈட்டி துளைத்த காயத்திலிருந்து குருதி கொட்டுகிறது. சிறுகாயந்தான். ஆணுல் அது எனது ஆவி யினை வருத்துகின்றது. உயிரினச் சிதைத்துவிடும்போலிருக் கின்றது. உடலினத் துளைத்துத் துளைத்துத் துன்புறுத்து கின்றது. (தாமதம்.)
ஈனேணி 1 என்னுல் தாங்கமுடியவில்லை ! சகிக்கவொண் ஞத் துன்ப சாகரத்தினுள் நான் அமிழ்ந்திக்கொண்டே யிருக்கின்றேன் !
ஈனேணி என்ன! விந்தையாகவல்லவா இருக்கின்றது ? பாரி சன? உயிரும் உடலும் ஆவியும் ஒன்றித் தோன்றும் தோற் றம் இதுவா? சற்றே நில்; தாமதம் செய்; உன்னை நான் tufléflé55G3626ix L-IT Lorr ?
(பாரீசன் பாதங்களைக் கையினல் வருடுகிருள் - திடுக்கிட்டு எழுகின்ருள்; தலைநிமிர்ந்து பாரீசனை நோக்குகின்ருள் - திடம்பெற்றுவிடுகின்ருள்
பாரீசன் ஆம் 1 ஆம்! இது பாரீசன்தான். நிசமாகவே உனது அருமைக் காதலன் பாரீசன்தான். உன்னிடம் உயிர்ப்பிச்சை விழைந்து நிற்கின்றன் ! உளங்குழையமாட்டாயா ஈனேணி?
ஈனுேணி என்ன? என்ன கேட்கின்ருய்? உயிர்ப்பிச்சையா?
பாரீசன் ஆம், என் கண்ணே ! உன்னை இரந்து, கெஞ்சிக் கேட்கின்றேன். எனக்கு விரைவில் உயிர்ப்பிச்சை வழங்குவா யாக. தாமதிப்பாயாகில் நான் உயிர்நீத்துவிடுவேன். நஞ்சு என் உடலை ஊடுருவித் துளைக்கின்றது. அதனைச் செல்லரிப்பது
سس۔ 12 --س۔

போல அரிக்கின்றது. ஆ1. ஆ. தாங்க ஒண்ணுக் காங்கை யினுல் வெந்து வெந்து, விடமேறி என்னுடலம் வேகுகின் றது. இம்மண்ணை இழந்தேன்! விண்ணக மடந்தையாகிய உன்னே இழந்தேன்! இவ்வவலமுற்ற நிலையில் எனக்கு ஆதரவு கொடுக்கவல்லவர், உன்னைவிட வேறு யார்தான் உளர்?
ஈனேணி (கண்ணீர் விட்டழுகின்ருள்) பாரிசா ! என்னை ஏன் நின் நினைவிற்கொண்டனை? பத்து பர்ரித்த வருடங்கள் பஞ் செனப் பறந்துவிட்டனவே! இக்காலகட்டத்தில் நான் உனது உளமாகிய விண்ணிலிருந்து மறைந்துவிட்ட தாரகைபோலா னேன். இத்தனை காலமும் உனது உள்ளத்தினை ஆட்சிபண் ணிய மதர்விழி நங்கையாகிய எலன் மகாராணி எங்கே போய் ஒழித்தனள் ? அவளிடத்துச் சென்று நீ உன் உயிர்ப் பிச்சையினை ஏன் கெஞ்சிப் பெற்றுக்கொள்ள இயலாது?
பRரீசன் ஆ! கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி என் கண்ணின் மணிபோல்வாய் ! எனது இள உள்ளத்தில் ஊறித் திரண்ட முதற் தனி முத்தமே : இளவேனிற் பொழுதில் மெல்லிய தூற்றலின்பின் இளந்தளிரில் தெறித்த ஒளிக் கற்றையல்லவா நீ !
உன்னை நான் எவ்வாறு மறந்திருப்பேன் ? நீயே என் தேவி! நீயொருத்தியே என் தெய்வம் ! எனது ஆருயிர்க் காதற் கணியமுதம் நீ! எலனைப்பற்றிய பிதற்றல் எதற்கு? இத்துன்பம் பெருக்கெடுக்கும் வேளையில் அவளைப்பற்றிய நினைவே வேண்டாம். அப்பேச்சு எதற்கு ?
ஈனேணி (நெஞ்சொடு புலம்புகின்ருள். மறுபக்கம் நோக்கி நின்று பேசுகின்றனள் ஆ! என் செய்வேன்! நெஞ்சு பொறுக்குதில்லையே! எனது பழைய நினைவுகள் என் கல் நெஞ்சத்தை குமுறும் கடலலைகளென வந்து வந்து உந்து கின்றனவே !
(பாரிசனை நோக்குகின்ருள்)
பாரீசன் ஈஞேணி! எனது துன்புற்ற நிலையினைக் கண்டு இன்னும் உனது கன்னெஞ்சு நெகிழவில்லையா? அதில் ஈரக் கசிவில்லையா ? காதற் பசண்டை இல்லையா ? நம் இருவரின் காலங்கடந்த இன்ப நிலையினை நினைவுகூரமாட்டாயா ?
يصيب 3 مسسب

Page 11
ஈனேணி ஆ1 ஆ! அவ்வளப்பரிய வேளைகளெல்லாம், எனது இன்ப நினைவுகளெல்லாம், எனதுளத்தில் விலைமதிக்கொணு விழுமியி மணியாய்த் திரட்டி உருட்டிப் பொதிந்து வைத் திருக்கின்றேன்தானே. அவ்வரிய வேளைகளில் நாமிருவரும் ஈடாவதத்தின் சரிவில், எத்தனை எத்தனை இன்பங்கலந்த எண்ணங்களுடன் காதற் கவிதை புனைந்துவந்துள்ளோம் !
அப்பொழுதெல்லாம், ஆ ! என் கண்ணே பாரிசா, உனது காளைப்பருவ வீரச்செயல்களைப்பற்றி நீ என்னிடம் எடுத்தியம்ப, நான் அவற்றினை விம்மிதத்துடன் கேட்டு, மகிழ்ந்து, உளம் பூரித்து அவற்றின் தேனமுதம் நீவிய நினைவுகளைத் தேன் துளிகளெனத் திரட்டிக்கொண்டிருந்தே னல்லவா ?
நீ சிங்கக்குட்டிகளை வேட்டையாடிப், பிடித்து கூண்டு களிலிட்டுக் கொணர்ந்து நம் ஆயர்பாடிக் கா%ளயர்க்குக் காண்பித்தமையும்; கரைபுரண்டோடும் கான்யாறுகளை, பெரு மழை பொழியுங்கால் நீந்திக் கடந்துசென்று காணுமற்போன மந்தைகளைத் திரட்டிவந்தமையும்; ஆயர்பாடிக் காளையர் களுடன் மல்யுத்தம் புரிந்தும், ஒலிம்பிக் ஒட்டங்களில் கலந்து பலப்பல பரிசில்களைப் பெற்றமையும்; வான்வெளி நோக்கி உயர்ந்து வளர்ந்து நிற்கும் ஈடாவதச் சாரலிலுள்ள சீடர்த் தருக்களை வெட்டி வீழ்த்தியமையும்; வேகம் விம்மிய குதிரை களிலேறிச் சவாரிசெய்து பந்தய ஓட்டங்களில் முதலிடம் பெற்றமையும் ஈட்டிப்போர், வாட்போர், கேடயந் தாங்கல்க ளாகிய பயிற்சிகளில் திறமை எய்தி முதலிடம்பெற்று வெற் றிக்கேடயம் ஈட்டி அதனை ஏந்திச்சென்றமையும் ; எனது மனக்கண்முண் துடைக்கவொன அருமை பெருமைமிக்க காட்சிகளாக இன்னும் நிலைபெற்றிருக்கின்றனவே அவற் றினை என்னல் எனது மனக்கண்களைவிட்டு துடைத்துவிட்டு வாழமுடியுமா ?
பாரீசன் எனது பராக்கிரமங்களனைத்தினையும் பற்றி விரித்து வித்தரித்துவிட்டன ! ஆனல் இவ்வீடாவதத்தின் சாரலில் மந்தமாரு தம் வந்து வந்து உந்துந் தேவதருக்களின் குளிர் மிகுந்த நிழலில் நாமிருவரும் நடித்த காதற் களியாட்ட நாடகங்களை நினைவுகூர்ந்து அவற்றின் அளக்கொணுத் திறத் தினைப் பாராட்டமாட்டாயா, ஈனுேணி?
- 14

ஈஞேணி (ஈடாவதத்தினை நோக்கிப் புலம்புகின்ருள்) ஈடா வதமே ! ஈடாவதமே ! நீ என் நோவறிந்திலை. எனது மன வேட்கையின் வேகம் எத்திறத்தினதென்பதை நீ உணரமாட் டாய். நீ பரற்பகையடர்ந்த பாறையாயிற்றே ! எனினும் எங்களிருவரினதும் காதற் களியாட்டங்களுக்கு ஆடரங்காக அமைந்துள்ள நீ, எங்கள் காதலின் மாண்பினை உணர்ந்து அதற்குச் சான்று பகரக்கூடுந்தானே !
பாரீசா, நீ இப்பர்வதத்தின் பரல் நிறைந்த சரிவில் எத்தனை தினங்களைத்தான் நம்மிருவரின் காதல் நாடகத்தின் முகப்பில் களிப்புடன் கழித்திருக்கின்றன ! அந்நாடகத்தின் பொருளையும் விளைவையும் இதே மலைச்சரிவில் தடித்துக் காட்டி முடிக்க உன் மனம் ஒருப்படவில்லையா ? அன்றைய நாள் நீ இன்னிசை யாழில் இசைமீட்டி என்னை எத்திறத் துடன் மகிழ்வித்தனை அவ்வினிய வேளைகளில் உனது யாழோ சையில் அவகுரல் தவழ்ந்ததில்லையே!
பாரீசன் : எனது யாழில் முரணேசை இசைக்காதுவிட்டாலும், என் ஆருயிர் மருந்தே ! எனதுளத்தில் நெகிழ்வு நேர்ந்தது. பிறர்மனை வேட்கை என்னைத் துன்புறுத்தியது. எக்காலும் தழப்பமுருத என் திடநெஞ்சம் தன்னிறை தவறியது. உன்னை மறந்தேன் 1 புன்னெறிப் படர்ந்தேன் 1 அக்காலகட்டிலிருந்தே என்னை நாசம் தொட்டுவிட்டது. நீருள் நிழல்போல நெழிந்து நுடங்கிய உன் மின்னிடையை மறந்தேன். எலன் மகாராணி எனது பிஞ்சு உள்ளத்தினுள் உறைவிடங் கொண்டனள். தனது மதர்த்த விழிகளால் என்னை மயக்கிவிட்டனள், ஆயிரம் ஆயிரம் கோபுரங்களை அதிரச்செய்த அழகில்லவா அவள் எழில்
ஆ! அந் நீண்ட கொடிய கடற்பிரயாணத்தில் நான் செல்லாதிருந்திருந்தால் இக்கேடு எனக்கு நேர்ந்திருக்க மாட்டாதே! அப்பயணத்தின்போது எனது நாவாய் குழு வளியிலெடுபட்டு திரைகடலில் மூழ்கிவிட்டமையால் நான் மாண்டு மடிந்திருப்பேணுக !
ஆனல் நான் இழைத்ததெல்லாம் மகா பாதகம் என் பதை உள்ளுறையாக உணர்ந்தேன் ! நலம் திகழ் நங்காய்
ஈனேணி; அக்கால நிலை, வீர நிலை !
--س l5 ------

Page 12
இற்றைநாள் நிலை உளங்குழைந்து, நொந்து, ஆற்ற மாட்டாது பரிதவிக்கும் இன்னல் நிரம்பிய நிலையாயிருக் கின்றத்ே ! அது ஈனநிலை !
ஈனேணி உனது வாழ்வின் கட்டிளமையின் பெரும்பாகத்தினை போலிக் காதலிலும், வெஞ்சமரிலுமல்லவா கழித்து வீணுக்கி விட்டனே ? ஆகா! அஃது எத்துணை வேடிக்கையுள்ளதாயிருக் கின்றது ! உனது உளத்தில் மாத்திரம் மாற்றமும், வேட்கை யும் ! ஏழையாகிய எனக்கோவெனில் அச்சுதந்திரமில்லையா? இது என்ன நீதி ? மனுநீதி மாறிவிட்டதா ? ஆடவருக்குப் பூரண சுதந்திரம்; பெண்டிருக்கு அடி:ைத்தளை ! நீதியானது அநீதியாகப் பரிணமித்துவிட்டதே ! இவ்விகற்பம் எதற்கு ?
பாரீசன் கண்ணே, ஈனேணி ! இதெல்லாம் வீண் பிதற்றல் அல்லவா ? என்னைக் கொஞ்சம் பார். எனது துயரத்தினை கருணைக் கண்கொண்டு நோக்கு எனது உடல் எரிகின்றது. தீயிலிட்ட மெழுகென வெந்து உருகுகின்றது; தழல்கின்றது! ஆ! ஆ! நான் என் செய்வேன்! வானங் குழைகின்றதே ! வையகம் தாழ்கின்றதே ! ஆற்முெணுத் துன்ப அலைகள் வந்து என்னை மோதி மோதி அதிரச்செய்கின்றனவே !
ஈனுேணி ஆம், ஆம் இன்பமும் துன்பமும், களிப்பும், கிலேசமும், செருக்கும் சோர்வும், ஒரே கயிற்றிலிணைந்த இரு புரிகள் ஒத் தனதான். அவை உன்னுளத்தினை மாத்திர மன்றி, என்னுளத்தினையும் மாறி மாறி மோதித் தாக்கு கின்றன. இதற்குத் தீர்வு எங்கே காணலாம்?
பாரீசன் ஈனேணி! மயக்கம் என்னைப் பீடிக்கின்றது. கண்கள் இருளடைகின்றன. நான் விரைவில் இப்பூவுலக வாழ்க்கை யினை நீத்துவிடுவேன். ஆ! என்னருமைக் காதற்கனியே கணி யமுதே 1 என் பொன்னே 1 மணியே புனை பூங்கோதாய் எனக்கு - உன்னுருயிர்க் காதலனுக்கு - உயிரியமாட்டாயா ?
ஈனுேணி ! (தன்னெடு புகல்கின்ருள் ஐயையோ அவரது வதனம் வாட்டமுற்றுவிட்டது : கண்ணிமைகள் கூம்புகின் றன. அவர் உயிர்நீங்கும் தருவாயில் இருக்கின்றனர்.
ஆ! என் பொன்னே ! பாரீசா நான் உனக்கு உயிர்ப் பிச்சை ஈயத் துணிந்துவிட்டேன். இவ்விடம்நோக்கி வரும்

பொழுதுகூட அப்பூண்டு மந்தகாசத்துடன் முகையவிழ்ந்திருப் பதைக் கண்ணுற்றேன். அஃது பாரீசா! உனது துன்பத்தினைத் துடைத்துவிடும் திறத்தினது, சற்றுப் பொறுத்திரு. இதோ ஓடோடிச்சென்று அதை வேரோடு பிடுங்கிவருகின்றேன். அதைக் கசக்கி உனது காயத்தில் அதன் சாற்றினைப் பிழிந்து விட்டவுடன் உன்னத் துன்புறுத்தும் விடம் அற்றுப்போம்.
(வெளியே செல்ல எத்தனிக்கின்ருள் - பாரீசன் அவளைத் திரும்பிப்பார்க்கிருன் - அவளும் அவ னைப் பார்க்கிருள் - அவன் புன்முறுவல் பூத்தபடி)
பாரீசன் ஆ ஆகா! நான் வாழ்வேன் ! நான் நிச்சயமாகவே
உயிர் வாழ்வேன்
(தனது வலது புயத்தினை நிலத்திலூன்றியபடி உடலைத் தாங்கி ஒருக்கணித்து எழுகின்ருன்
ஆயிரம் தாரகைகளினல் அலங்கரிக்கப்பெற்ற அந்திமாலைப் டொழுதிலும் பன்மடங்கு அழகினையுடைய எனது பெண் ணரசியே எலன் ! என் ஆசை எலன் ! உன்னுெடுவதிவேன் !
ஈனுேணி (கோபாக்கினிப் பொறிதெறிக்கம் பார்வையுடன்
ஆகா ! என்ன? என்ன ! ஏமாந்துபோனேன? எலனையா அழைக்கின்ருய்? உனது சல்லாபப் பேச்செல்லாம் பொல்லா மொழி என்பது எனக்கு தெள்ளிதிற் புலப்படுகின்றதன்ருே ! என்ன ! !
பாரீசன் ஈனேணி ! ஈனேணி !
(கெஞ்சிக் கேட்கின்றன்
ஈனேணி என்ன ! என்னை ஏமாற்றச் சித்தங்கொண்டனை போலும் ! என்னிடமிருந்து உயிர் பெற்றபின் நீ மீண்டும் எலன் மகாராணியின் மார்பிலணைவதற்கு வஞ்சக எண்ணம் கொண்டுள்ளாய்.
பாரீசன் இல்லை, இல்லை என்னை நம்பு, ஈனேணி ! உன்னை விட இப்பாழிபட்ட உலகில் எனக்கு வேறு துணையில்லையே! ஈனேணி! விரைந்துசெல்.
- 7 -

Page 13
ஈனுேளு : ஆ என்ன செய்வதென்று தெரியவில்லையே! எனது சித்தம் கலங்கிவிட்டது. எனினும், அவ்வண்ணல் உயிரோ டிருப்பதையே நான் அவாவுகின்றேன்.
(இடப்புறமாக இறங்கிச்செல்லுகின்றள்)
பாரீசன் ஆ! என்னருமைத் தோழர்களே! பிரீயஸ்! திசியஸ்! வாருங்கள்! வாருங்கள் ! எனக்கு மயக்கமாயிருக்கின்றது. எனது கண்கள் இருளடைகின்றன. விரைவில் உயிரிழந்து விடுவேன்போலத் தோன்றுகின்றதே !
(பிரீயஸ் திசீயஸ் என்னும் இரு இனைஞர்கள் போர்க்களத்து உடையுடன் தோன்றுகின்றனர். கையில் ஈட்டி ஏந்தியிருக்கின்றனர்)
பிரீயஸ் - திசீயஸ் : ஆ! எங்கள் அருமை இளவரசே என்ன கொடிய வார்த்தைகளை இயம்பினீர்கள். அவை எங்கள் உளங்களை காய்ச்சிய கம்பியெனத் துளைக்கின்றனவே!
திசீயஸ் : அரசே! ஆ! என்னருமை அரசே !
பாரீசன் என்னைப் பிடியுங்கள். என்னை ஏந்தி உங்கள் மார் புடன் அணைத்துக்கொள்ளுங்கள். வருகின்றது ஆ ! கொடுங்கூற்றம் வருகின்றது! அது அமர்க்களத்தில் வந்திருந் தால் எனக்கு எத்துணைச் சாந்தியை நல்கியிருக்கும் ! ஆ ! என் அருமைப் பிதாவே ! உனக்கும் உன் சுற்றத்தாருக்கும் உனது அருமை நகரமாகிய தாரகாபுரிக்கும், நமது நாட்டிற் கும், என்னருமை ஈனேணிக்கும் எம்மாத்திரம் இடர்களைத் தான் இழைத்துள்ளேன்! மெனிலோசு மாவேந்தனுக்கும் பெருங்கேடு விளைத்தேன். நம்பிக்கைத்துரோகம் செய்தேன். அன்னமிட்ட இல்லத்துக்குக் கன்னக்கோலிட்டேன்! நான் இழைத்துள்ள அடாவந்தி செயலுக்காகப் பரிகாரம் தேடும் முயற்கியில் கீடுபட்டு எத்தனை வீரர்கள்தான் இரு பகுதி களிலும் மாண்டனர் 1 என் அருமைச் சகோதரன் எக்ரர் கூடப் போர்க்கணத்தில் இஸ்கமாண்டர் நதிக்கரையில் "அக்கி லீசால்" கொலையுண்டானே ! இத்துணை துயர்களையும் இழைத் தவன் யானே !
எனக்கு இனி ஈடேற்றம் ஏது? நான் மறையும் காலர் கிட்டிவிட்டது. என் அருமைத் தோழர்காள்! நான் உயிர
مس۔ 18 -سی

நீத்தபின் எனது சடலத்தினை கிரேக்கரது கையில் கொடுத்து விடாதீர்கள். எனது சகோதரனின் சடலத்துக்கு இழைத்த அவகிர்த்தியனைத்தையும் எனது சடலத்துக்கும் அன்ஞர் இழைப்பர். அதைத் தமது தேர்க்காலிற் கட்டி பூழ்தியில் புரளும்படி வீதிகளில் இழுத்துச்செல்வர்.
எனவே பிரியமுள்ள நண்பர்காள்! அதோ பணிய விருக்கும் விறகுக் குவியலை ஈமமாக்கி, அதன்மேல் என் சடலத்தினை ஏற்றி, தீமூட்டி எரித்துவிடுங்கள். ஆ1. என் ஆருயிர் அன்பே. எலன் .எ.லன்! (உயிர் துறக்கின்ருன்
(பிரீயசும் திசியசும் பாரீசனின் சடலத்தினை ஏந்தி வலதுபுறமாகச் செல்ல, ஈனேணி தலைவிரி கோலத் துடன் கண்ணிரும் கம்பலையுமாய்க் கையில் ஒரு பூண்டினை ஏந்தியபடி இடதுபுறத்தே தோன்று கின்ருள்)
ஈனேணி : (உரத்த குரலில் பாரீசா ! பாரீசா ! எனது தங்கப் பாரிசா ! எங்கே சென்றனை ? (தேடுகிருள்) உன்னைக் காண வில்லையே! பாரீசா! பாரீசா! எங்கே ஒடி ஒழித்தனை? (அங்கு மிங்கும் பல பக்கமும் ஓடி ஒடி அடவியினுள் தேடுகிருள்) ,
பாரீசா ! என் கண்ணே இதோ எனது கரத்தில் உனக்கு உயிர்க்கொடை ஈயவல்ல மூலிகை இருக்கின்றது.
பாரீசா ! எனது கூப்பிடுகை கேட்கவில்லையா ?
ஆ1. எங்குதான் சென்று மறைந்தனை ? இவ்விடத்தில் தானே, இவ்வுணர்வற்ற வறண்ட கரும் பாறையினண்டை யில் உன்னை விட்டுச்சேன்றேன் ! பாரீசா ! பாரீசா
(வலது பக்கத்தில் பெருவெளிச்சமும், மண்டிய புகையும் தெரிகின்றன
அதோ! அது என்ன? அவ்விறகுக் குவியல் எரிந்து கொண்டிருக்கின்றதே! யாரோ சிலர் அக்கட்டைகளைத் தீ மூட்டி எரிக்கின்றனர். ஈமத்தீபோல எரிகின்றதே! ஆம்.
ஆம். அது ஒரீமத்தீதான். யாருடையவோ சடலம் அதில் தகனம் செய்யப்படுகின்றது.
LITrifornr . Luftrifornt !
۔۔۔۔۔ :9} سمت۔

Page 14
(பிரீயசும் திசீயசும் தோன்றுகின்றனர்1
என்னருமை இளவல்காள் ! எனது பாரீசனை எங்கே யாவது கண்டீர்களா ?
பிரீயஸ், திசீயஸ் ஆம், அம்மணி. பாரீசன் உயிர் நீத்து விட்டனர். அதோ, அந்த ஈமத்தில் ஏற்றப்பட்டு அவரது சடலம் எரிந்துகொண்டிருக்கின்றது.
ஈனேணி ஆ! என்ன கொடிய வார்த்தைகளை இயம்பினீர்கள்! எனது கன்னம் வெடிக்கின்றதே ! வானகமும மண்ணகமும் சுழல்கின்றனவே! ஆ! என் கண்ணின்மணியே, பாரீசா ! நான் நின்னை இனி எங்கு காண்பேன் ? அலைகடற் காக்கை போல் அவலமுற்றேனே! எனது வாழ்வு மண்ணுேடு மண் ணுய்ப் பூழ்தியினுள் பூழ்த்தியாய் புதைந்துவிட்டதுவே ! Lunt féFIT !... untrfs fir !
(இடதுசார் வழியாக எலன் மகாராணி துக்கம் நிறைந்த கோலத்துடன் தோன்றுகின்ருள்)
6rgod : Limrfssr ! Litirfæsr |
ஈனுேணி ' என்ன ! இதுவென்ன விந்தை ? எனது அழுகைக் குரலின் எதிரொலி என் காதிற் படுகின்றதா ? அன்றேல் வேறு யாரோ என்னைப்போலவே புண்பட்ட நெஞ்சுடன் பாரீசனை இவ்வருஞ்சுரத்தில் தேடுகின்றனரா ?
[எலனைக்கண்டு திகிலடைந்து நிற்கின்ருள்]
ஆ1 ஆ | இதென்ன தோற்றம் ? என் கண்முன் தோன்று வது எலன்தானு ?
எலன் ஆம்; நானே அவ்வுபத்திரவப் பெயரினைத் தாங்கி
நிற்கும் கொடிய பாவி.
ஈனேணி ஆ! எத்திக்கை நோக்கினும் சகிக்கொணு அவல்க் காட்சியே தென்படுகிறது. இப்பாரே பகைமலிந்த, பாழ் பட்ட, இடமாயிற்றே ! இனி நான் எங்கு செல்வேன்? எனக்கு உறுதுனை எவருமில்லையே (கையறுநிலை
--۔ 20 حس۔

எலன் ! நீயொரு ராணிதான் ! நீயொரு மகாராணி ! ஆயிரம் நாவாய்களைக் கடலினுட் செலுத்தி தாரகாபுரியின் வானளாவிய கோபுரங்களை எரியூட்டிய வெம்மதி முகம் இது தானு? எனது கண்முன் நில்லாதே; போய்விடு. உன்னை நான் நிந்திக்கின்றேன். எனது உளம் உன்னை வெறுக்கின்றது.
எலன் ஈனேணி நீதான ?
ஈனுேணி ஆம், ஆம் ! நானே அக்கொடிய பெயரினை இப்
புவியில் தாங்கி நிற்கும் மாபாவி !
எலன் : ஆ! நீயா ? பாரீசனின் காதலியா ? ஈஞேணி, அப் படியாகில், என்னை மன்னித்துவிடு. உனது இள உளத்தினை துக்கசாகரத்தினுள் புகுத்திவிட்டவள் நானே, என் ஆவி ஆற்றெணுத் துயரால் அலமத்து அரற்றுகின்றது. என்ன மன்னி ! என்னை மன்னித்துவிடுவாய்; ஈஞேணி! பாரீசன்
எங்கே?
ஈனேணி பாரீசனு? அங்கே பார். அவ்விமத்தீயில் எரிந்து
கொண்டிருப்பது அவ்வண்ணலின் சடலம்.
எலன் ஆ1 ஆ என் அன்பே ! என் ஆருயிர் அன்பே, பாரீசா!
ஈனேணி ஏன் திக்கற்ருரைப்போலத் திகிலடைந்து நிற்கின் றனை ? ஏ. எலன் மகாராணியே ! புவியினை ஆண்டுவரும்
நாயகி நீ!. உனது காதலையும் எனது காதலையும் பரீட் சிக்கும். எடைபோட்டுப் பார்க்கும். வேளையல்லவா இது ?
(அழுகிருள்
பாரீசன் உயிரோடிருக்குங்கால் நீ எத்துணைக் காதல் வேட்கையுடன் அவ்விளங்காளையினைக் கட்டி முத்தங் கொடுத் தனையோ, அதே வரிசையில்; அதே உணர்ச்சிவேகத்துடனும் உளவேட்கையுடனும் அவரது இவ்விறுதி நிலையிலும் அவ ரைக் கட்டியணைக்கமாட்டாயா ?
எலன் ஆ1 ஆ! (கண்களைத் தனது கைகளில் புதைத்துக் கொள்ளுகின்ருள். குனிந்து, சரிந்து, வாடித் துவண்ட மேனியுடன் செயலற்று நிற்கிருள். அவளது தோற்றம் கருவுருவென வானவெளிக்கு நேரே ஈமத்தீயின் ஒளிப்பிர காசத்தில் துவண்டு தோன்றுகிறது)
- 21 -

Page 15
ஈனேணி எலன் மகாராணியே ! பாரீச இளவேந்தனின் காமக் கிழத்தியே ! என்னை, அக்காளை கட்டி மூத்தமிட்ட அளப் பரிய வேளைகளின் நினைவுகள் மீண்டும் என் உள்ளத்திலே புது ஊற்றெடுக்கின்றன. எனது தலையினை அவரது தடந் தோளில் சாய்த்து, எனது கன்னங்கரிய நீண்ட கூந்தல் மந்தமாருதத்தில் அலைக்கப்பெற்று, அவ்வண்ணலினது வத னத்தினை மறைத்தபொழுது, அவர் தனது சுகந்த சுவாசத் திண் எனது சுவாசத்துடன் கலக்கச்செய்து, என்னை இறுகக் கட்டி அனைத்து முத்தமிட்டாரே! எம்முறு வேட்கை எம தண்ணல்முன் கிளத்தல் தகாத செயலன்ருே அந்நினைவு எனக்கு மீண்டும் அரும்புகிறது. ஆ ! பாரீசா ! என் ஒப் பற்ற இளவலே ! உன்னை நான் மீண்டும் ஒருமுறை வாரி, அணைத்து முத்தமிடத் துணிந்துவிட்டேன். இவ்வீன உடலினை அக்கினிக்கு இரையாக்கத் துணிந்துவிட்டேன். ஆதலினல், செந்தழலே மண்டி எரிவாயாக முன்னையிலும் பார்க்கப் பன்மட்ங்கு கொழுந்துவிட்டு எரிவாயாக! ஆ! என் கண்ணே! என் கண்ணின் மணியே ! எனது ஒருதனி மாணிக்கிமே ! நான் முன்னுெருகால் உன்னை உயிருடன் அணைத்தேன். இன்று நான் கரிந்து குறைந்துகொண்டேயிருக்கும் உனது பூத உடலினையும் கட்டி அணைக்கின்றேன். ஆ ! பாரீசா ! வருகின்றேன் ! வருகின்றேன் ! உன்னேடு வருகின்றேன் !
(ஈமத்தீயினை நோக்கிச்சென்று அதனுட் குதிக் கின்ருள். தீ, மண்டி எரிகின்றது)
எலன் ஆ1 ஆ11 (அவலகீதம் ஒலிக்கின்றது)
- திரை -
*சங்கிலி அறுந்தது
இன்னிசை குழைந்தது காலம் நகர்ந்தது - சதிஉளமே 1 நொய்ய சங்கிலியே!
இசை இழந்த யாழே !”
– sat så பிரபு. “'The chain is broke, the music mute,
“Tis past -
False heart, frail chain, and silent lute'
- lord Byron.
--سے 22 سس۔


Page 16
இந்து
கிடைக்கும்
பூரீ ராமகிருஷ்ண
ஆனட்
மட்டக்க
6)රිකා !
கத்தோலிக்க அச்சக

நூல் b இடம் :
மகளிர் இல்லம், ப்பந்தி, களப்பு.
$ம், மட்டக்களப்பு.