கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நவீன பஸ்மாசுரன்

Page 1
ர்ல எழுத்துரு ஆக்கம் ம. நிலாந்தன்
மொழிபெயர்ப்பு
莒
■ :
Transcreation
Third Eye Local Knowledg
24.10.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

úSUDsrGirgai
EN TOUCH
மீளுருவாக்கம் சி. ஜெயசங்கர்
T
தெ. கிருபாகரன் T. Kirupakaran
sed E9ܪ
glish Forum e & Skills Activists Group

Page 2

முன்னுரை
எல்லா உயிர்களதும் சுவர்க்கமாகும் பூமி
மூன்றாவது கண் ஆங்கில மன்றமும், மூன்றாவது கண் உள்ளூர் அறிவு திறன் செயற்பாட்டுக் குழுவும் இரு வேறு தளங்களில் முன்னெடுத்து வருகின்ற பல்வேறு செயற்பாடுகளில் நாடக அரங்கச் செயற்பாடும் ஒன்றாகும்.
மூன்றாவது கண் ஆங்கில மன்றம் சமகாலத்திற்குப் பொருந்தும் வகையில் ஆங்கிலத்தில் தொல்சீர் நாடகங்களையும், நவீன நாடகங்களையும் மேடையேற்றி வருகின்றது. இதில் தமிழில் இருந்து நாடகங்களை ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தும், தழுவியும் மேடையேற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் அமையும் நாடக எழுத்துருதான் திரு. தெ. கிருபாகரனால் மொழிபெயர்க்கப்பட்ட “THE ASHEN TOUCH”
நாடகமாகும்.
மனித முயற்சியின் கனியையும், அக்கனியை நச்சுக்கனியாக்கும் மனித இயல்பையும், அணு ஆற்றலுடன் தொடர்பு படுத்திச் சித்தரிக்கும் இந் நாடகம் இந்தப் பூமியில் வாழச் சந்தர்ப்பம் கிடைத்த மனிதர்கள், மனிதர்களது மட்டமல்லாது, எல்லா உயிர்களதும் சுடலையாக பூமியை
ஆக்காது, சுவர்க்கமாக்கும் வாழ்தலுக்கு அழைப்பு விடுக்கின்றது.
இந்த எண்ண ஓட்டத்தை ஆங்கிலம் வழி பூமியில் படரச் செய்வதில் கிருபாகரனதும் கலைத்துவ மொழியாக்கச் செயல் அற்புதமானது, மதிப்பிற்குரியது.
சி. ஜெயசங்கர் இணைப்பாளர், மூன்றாவது கண் ஆங்கில மன்றம் மூன்றாவது கண், உள்ளூர் அறிவு திறன் செயற்பாட்டுக் குழு
-01

Page 3
இயக்குனர் குறிப்பு
20ம் நூற்றாண்டின் இறுதி இரு தசாப்தங்களிலும் குண்டு வீச்சுகளுள்ளும் வெடிகுண்டுகளுடனும் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டவர்கள் நாங்கள். எங்கும் எப்பொழுதும், ஏதோ ஒரு கணத்தில் விபத்தாக அல்லது யுத்தத்தில் உலகின் முடிவை ராட்சதக் குடைக்காளான்கள் போலெழும் புகைகளால், எழுதிவிடக் கூடிய அணுகுண்டு பற்றி பேச விளைகின்றோம்.
உலகின் தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமையை மனிதனின் அதிகார வேட்கை அபகரித்துக் கொண்டிருக்கிறது. உலகம் மனிதனுக்காக படைக்கப்பட்டிருக்கிறது என்ற சிந்தனை அபத்தமானது. உலகம் அனைத்து உயிர்களுக்கும் உரிய அழகிய இல்லம். இந்த அழகிய பூமியை பல தடவைகள் சாம்பலாக்கிவிடக் கூடிய அளவு அணுகுண்டுகளை வல்லரசுகள் பூமியின் மடியில் திணித்துவிட்டு மக்களின் பாதுகாவலர்களாக முகங்காட்டி நிற்கின்றன.
20ம் நுாற்றாண்டின் இறுதியில் ஈழத்தின் தலைவாசல் வரைக்கும் வந்து, உபகண்டங்களிலும் அணுகுண்டுகள் தயார் நிலையில்.
அனைத்து உயிர்களது வாழ்வையும் அபகரித்து விடுவதில் கொள்ளப்படும் முனைப்புக்கள் பற்றிய விழிப்புணர்வு அவற்றை எதிர்கொள்வதில் ஆரம்பமாகின்றன. நவீன பஸ்மாசுரன் நாடகம் அதனைச்செய்கின்றது. அனைத்து மக்களுடனும் எத்தகைய ஆற்றுகை வெளிகளிலும் உரையாடல்களை நிகழ்த்தும் வகையில் பாரம்பரிய அரங்க அம்சங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முனைகிறது நவீன பஸ்மாசுரன்.
முன் செல்வோம் நாங்கள் முன்செல்வோம் - நாங்கள் அனுவாயுதத் தளை நீங்கி முன்செல்வோம் - நாங்கள் அதிகார வெறிநீங்கி முன்செல்வோம் - நாங்கள் பல்லுயிரும் வாழ முன்செல்வோம் - நாங்கள் உலகெல்லாம் தழைத்தோங்க முன்செல்வோம் - நாங்கள்.
சி.ஜெயசங்கர்.
-02

நவீன பல்மாசுரன்.
வாழ்த்து
உண்டென்ற வாசலுக்கு ஒளிவிளக்கே உள்ளகக் கோயிலின் உயிர் விளக்கே எங்கெங்கும் ஒளிர்கின்ற அழகிருப்பே -2 இன்பமே தேடிடும் வாழ்விலக்கே என்னிருப்பே உன்னிருப்பே இனிதிருப்பே வாழ்கவே -2 வாழ்கவே வாழ்கவே.
அறிமுகம்
தீ எரிக அதனிடத்தே தசை பொழிகின்றோம் தீ எரிக அதற்கு வேள்வி செய்கின்றோம் தீ எரிக அறத் தீ/அறிவுத் தீ/உயிர்த் தீ விரதத் தீ வேள்வித் தீ/ சினத் தீ பகைமைத் தீ கொடுமைத் தீ/ இவையனைத்தையும் தொழுகின்றோம் இவற்றைக் காக்கின்றோம் இவற்றை ஆளுகின்றோம் தீயே நீ எமது உயிரின் தோழன் உன்னை வாழ்த்துகின்றோம் நின்னைப்போல் எமதுயிர் நூற்றாண்டு வெம்மையும் சுடரும் தருக தீயே நின்னைப்போல் எமதுள்ளம் சுடர் விடுக தீயே நின்னைப்போல் எமதறிவு கனலுக ஞாயிற்றுனிடத்தே தீயே நின்னைத்தான் போற்றுகின்றோம் ஞயிற்றுத் தெய்வமே நின்னைப் புகழ்கின்றோம். நினதொளி நன்று நின் செயல் நன்று நீ நன்று.
(பாரதியாரின் வசன கவிதை.)
-03

Page 4
(ஹோ. 69). BT......... ஹோ. என்னும் உச்சாடனம் ஓங்காரமாக எழுந்து கொண்டிருக்கின்றது. மேடையின் மத்தியில் ஒற்றைக்காலில் நின்று தவமியற்றும் நவீன பஸ்மாசுரன், மனிதநேயர் தியான நிலையிலும் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நிலையிலும் காணப்படுகிறார்கள்) மனிதநேயர்
9. . . . . . . . .
மலைகளின் அமைதியே
நதிகளின் தனிமையே விஞ்ஞானிகள்
காற்றே ஒசையே
கடலே தொன்மையே
நெருப்பே நீதிமான்களின் இருப்பே விஞ்.
ஹோ.
யுறேனியம்
புளுரோனியம்
டியுற்றிறியம்
ாே. (திடீரென மனிதநேயர் பார்வையாளரை நோக்கியும் எல்லாத் திசைகளை நோக்கியும் அந்தரித்து ஓடியபடி. )
-04

1 பஸ்மாகரன் தவம் செய்கிறான். 2 பஸ்மாசுரன் கடுந்தவம் செய்கிறான். 3 முட்களின் மீது படுக்கிறான். 4 கைகளை உயரத் துாக்கியபடி ஒற்றைக்காலில் நிற்கிறான். 5 விழிகளை மூடாது சூரியனை உற்றுப்பார்க்கிறான். 6 அவனது தவவலிமையால் இந்திரனுலகு பொலிவிழந்து விட்டது. 7 தேவர்கள் பயந்து பாதாளக் குகைகளில் ஒழிந்துகொண்டு விட்டார்கள். 8 அவன் காற்றைக் கட்டிவிட்டான். 9 திசைகளின் காவலர் அவனிடம் சரணடைந்து விட்டார்கள் 10 சமுத்திரங்களின் அரசி சிறைப்பட்டு விட்டாள். 11 அவனது தவவலிமையால் நட்சத்திரங்கள் குருடாயின. 12 மலைகளின் குமாரர் அவனிடம் தோற்றுப்போயினர்.
ஆபத்து ஆபத்து
மக்களே ஆபத்து ஆபத்து விஞ்ஞானி
அதிபர் றுாஸ்வெல்ற் அவர்களுக்கு,
அல்பேட் ஐன்ஸ்ரீன் எழுதுவது
3uJIT, அண்மைய ஆராய்ச்சிகளின்படி யுறேனியத்தை மிக
முக்கியமான சக்தி மூலகமாக மாற்றமுடியும், அதுவும் கூடிய விரைவிலேயே அதனைச் சாத்தியமாக்க முடியுமென்பதை என்னால் எதிர்வு கூறக்கூடியதாக இருக்கிறது.
இதன் மூலம் மிகப் பெருமளவிலான சக்தியைப் பிறப்பித்துக் கொள்ளலாம். மற்றும் றேடியம் போன்ற மூலக்கூறுகளையும் உருவாக்கிக் கொள்ளலாம்.
இந்த வகையிலான ஒரு குண்டு கப்பல் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு துறைமுகம் ஒன்றில் வெடிக்கவைக்கப்படும் போது துறைமுகம் முழுவதும், சுற்றி இருக்கும் பகுதிகளும் முற்றுமுழுதாக அழிந்து போகும் என்பதையும் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
நன்றி.
மணி.நே.குழு
மக்களே ஆபத்து ஆபத்து
மக்களே ஆபத்து ஆபத்து
-05

Page 5
(விஞ்ஞானிகளில் ஒருவர் திடீரென “றொக்கெற்” தளமென்றின்
அறிவிப்பாளருடைய தொனியில்.)
ரெடி
ஸ்ரெடி
Ten
Nine
Eight
Seven
Six
Five
Four
Three
Two
One
Zero
(றொக்கெற் புறப்படுவது போன்ற வெடியோசை)
விஞ்ஞானிகள்
யுரேக்கா யுரேக்கா யுரேக்கா
(சிவன் தோன்றுகிறார்.)
சிவன்
மகிழ்ந்தேன் பக்தனே மகிழ்ந்தேன் மூவுலகையும் உலுப்பும் தவம் உன்னுடையது. என்ன வரம் வேண்டும், என்ன வரம் வேண்டும் கேட்டவரம் தருவேன் கேட்டவரம் தருவேன்.
(Lu61)LDIT & JG LTL6).)
岭 வரம் தர வந்தீரோ - சுவாமி நீர்
வரம் தர வந்திரோ. என்தவம் கண்டு மகிழ்ந்து - சுவாமி நீர் வரம் தர வந்திரோ. ஒரு வரம் தர வேண்டும் - சுவாமி நீர் ஒரு வரம் தர வேண்டும். உலகைச் சுருட்டி என் கரத்தினில் வைத்திருக்க ஒரு வரம் தர வேண்டும் - சுவாமி நீர் ஒரு வரம் தர வேண்டும்.
விஞ்ஞானிகள் பாடல்
சந்திரனில் நான் நடக்க வேண்டும் - சுவாமி சந்திரனில் நான் நடக்கவேண்டும்.

நிலவின் முகத்தில் என் காலடையாளம் பதிக்க வேண்டும் - சுவாமி
/ காற்றை விட வேகமாகப் பறக்கும் விமானம் தரவேண்டும்
பூமிக்கு மேல் சுற்றிவரும் பூமியை உளவறியும் கண்களுள்ள கிரகங்கள் எனக்கு நீர் தரவேண்டும்
J கண்டம் விட்டு கண்டம் பாயும்
ஏவுகணை நீரெனக்குத் தரவேண்டும்
ஏவுகணை மூக்கிலொரு அணுகுண்டிருக்கவேண்டும் அணுகுண்டிருக்கவேண்டும் அணுகுண்டிருக்கவேண்டும் தந்தனானே தந்தனானே தந்தனானே தந்தனானே சிவன்
வரம்பல கேட்டென்னைக் குழப்பாதிர் ஒரு வரம் கேளும், ஒரேயொரு வரம் கேளும் வரங்கெளுக்கெல்லாம் தாயாக அமையும் ஒரேயொரு வரம் கேளும். பஸ் மாசுரன்
தொட்டதெல்லாம் சாம்பலாகும் வரந்தருவீர் சுவாமி வரந்தருவீர். சிவன் s
இந்தாபிடி வரம், உன் கைபட்டதெல்லாம் நீறாகிப்போகும் நீறாகிப்போகும். (E=mc E=mc உச்சாடனமாக ஓங்கரித்து எழுகின்றது) பாட்ல்
பஸ்மாசுர ராஜன் வாறான் வரங்கள் பெற்ற பஸ்மாசுர ராஜன் வாறான்
பஸ்மாசுரன் எங்கள் ராஜா
தவங்கள் செய்து வரங்கள் பெற்றான் கர்வமிகக்கொண்டு வரத்தைச் சாபமாக்கி அழிந்துபோனான்
-07

Page 6
பஸ்மாசுர ராஜன் வாறான் வரங்கள் பெற்ற பஸ்மாசுர ராஜன் வாறான்
விஞ்ஞானி மகாஞானி தவங்கள் செய்து பெற்றவரம் அணுச்சக்தி விஞ்ஞானம் தந்த அணுச்சக்தி ஆக்க சக்தி - ஆனால் யுத்தத்தில் அது மிக நாசசக்தி
பஸ்மாசுர ராஜன் வாறான் வரங்கள் பெற்ற பஸ்மாசுர ராஜன் வாறான்
ஒரு வெடி அதிர உயிர்நிலை பதற குழந்தைகள் குருவிகள் கதறிட கருகிட 16th LDITS; J65 LTL6)
உலகை அழிக்கும் வரம் பெற்றேன் உன்னதங்களின் அரசன் நானே எல் அரசன் நீரே அரசன் நீரே பஸ் என்னை எதிர்ப்பவர் உண்டோ எல் இல்லை இல்லை இல்லவே இல்லை பஸ் வரம் பெற்ற கரம் கொண்ட எல் தலைவன் இனி நீரே தலைவன் இனி நீரே U6)LDITSiyGir
எல்லோரும் அருகில் வாருங்கள் எல்லோரும்
வருகிறோம் பிரபு வருகிறோம் சரணம் பிரபு சரணம் u6)LDITSiy 6ir
உலகில் இனி ஒரு போதும் இருளே இராது எல்லோரும்
ஏன் பிரபு? ஏன் பிரபு?! u61)LDITSiy 6,
இந்தாபிடி மின்சாரம் எல்லோரும்
ஆஹா மின்சாரம் மின்சாரம் இருளில்லை, இனி இருளில்லை!!
-08

பளல் மாசுரன்
ஏய், நிலவின் முகத்தில் இருப்பது யாருடைய காலடையாளம்?
எல்லோரும் (குசுகுசுப்பாக)
யாருடையது? யாருடையது?
பஸ்மாசுரன்
யாருடையது? எல்லோரும்
பிரபுவினுடையது, பிரபுவினுடையது! பஸ் மாசுரன்
வீராதி வீரன் நானே சூரனும் நானே
விண்ணன் விஞ்ஞானி நானே எல்லோரும் உச்சாடனமாக
நா சா சா சா سمبر
நாசகாரி வா வா வா |5ा &ा ऊा फा நாசகாரி வா வா வா
L61) DITBig6dr
தொட்டதெல்லாம் சாம்பலாகும் வரம் பெற்றவன் நான் விஞ்ஞானி 1
அணுவுலை ரகசியம் எனக்குத் தெரியும் விஞ்ஞானி 2
மனிதர்கள் அற்ற உலகைப்படைக்கும் மந்திரம் எனக்குத் தெரியும் மனித நேயர் 1
கட்டடங்கள் மட்டும் மிஞ்சும் மனித நேயர் 2
மரம், செடி, கொடி, புல், பூண்டு, மணிசர் மனிதநேயர் 3
சகலதும் அழியும் சகலதும் அழியும் விஞ்ஞானி 1
ஒரு நொடியில் ஒரே நொடியில் விஞ்ஞானி 3
ஒரு குண்டு போதும் ஒரே ஒரு குண்டு போதும் மனிதநேயர் 1
எங்கள் சூரியன் இறந்து போய்விடுவான்
-09

Page 7
மனிதநேயர் 2
மரண இருள் எங்களை நிரந்தரமாக மூடிக்கவியும் மனிதநேயர் 3
எங்கள் விண்மீன்கள் கருகி வீழும் மனிதநேயர் 1
எங்கள் நதிகள் நஞ்சாகிவிடும் மனிதநேயர் 2
எங்கள் கடலோ உறைந்துபோகும்
பஸ் மாசுரன்
ராட்சதக் குடைக்காளான் போல் புகை எழும் அதன் கீழ் எனது அரசிருக்கும்
வீராதி வீரன் நானே சூரனும் நானே விண்ணன் விஞ்ஞானி நானே போய்ச் சொல்லுங்கள் உலகம் முழுவதும் எல்லோரும்
சொல்கிறோம் பிரபு சொல்கிறோம் (எட்டுத்திக்கும் சிதறி ஓடிச்செல்லுதல் பின் யோசித்துவிட்டு)
என்ன சொல்வது? (திரும்பி ஓடிவந்து)
என்ன சொல்வது பிரபு? பஸ் மாசுரன்
பலவான் பாக்கியவான் தக்கன பிழைக்கும் தகாதன அழியும் பலவான் பாக்கியவான் எல்லோரும் (உச்சாடனமாக)
பலவான் பாக்கியவான் பலவான் பாக்கியவான் அணுவுலைச் சொந்தக்காரன் உலகத்தின் ராசராசன் E=mc2 E=mc2 E=mc2 Esmc.
-10

LJ6rðuDMöj6ö
வீராதி வீரன் நானே
சூரனும் நானே எல் விண்ணன் விஞ்ஞானி நீரே பஸ் மாசுரன்
ஏய் போய்ச்சொல்லு சந்திரனிடம் என்னைக் கேட்காமல் ஒருபயலும் சூரியனை மறைக்கக் கூடாது எல்லோரும்
உத்தரவு பிரபு பஸ் மாசுரன்
நான் சொன்னால்தான் இனிமேல் சூரிய கிரகணம் எல்லோரும்
உத்தரவுபிரபு பஸ் மாசுரன்
யாரங்கே அழையுங்கள் கங்கையை பூமிக்கு ஒருவர்
வரமறுத்தால்? பஸ் மாசுரன்
அனுப்புங்கள் ஏவுகணைகளை மற்றவர்
பிரபு, கங்கை சிவனாரின் முடியில் இருக்கிறது பஸ் மாசுரன்
அப்படியென்றால் அழையுங்கள் சிவனை. மற்றவர்
பிரபு, தங்களுக்கு வரம் தந்தவரல்லவா சிவன். பஸ் மாசுரன்
அது அப்போது, இப்பொழுது என்னிடம் அணுகுண்டு மந்திரம் உண்டு. பஸ்மாசுரன் பாடல்
மந்திரக்கோல் என்கரத்தில் அற்புதங்கள் நான்புரிவேன் தந்தந்னானே தந்தந்னானே தந்தந்னானே தந்தந்னானே யுத்தங்களின் அரசன் நானே - நானே யுத்தங்களின் அரசன் தானே
-11

Page 8
பஸ் மாசுரன்
உலகத்தை அழிக்கும் காலன் நான் உலகத்தை சங்கரிக்கத் தலைப்பட்டிருக்கிறேன். E=mc E=mc?
மனிதநேயர் 2
அணுவாயுதம் மீதான அதீத நம்பிக்கை, அரசியல், பண்பாடு, தொழில்நுட்பம், பொருளாதாரம் ஆகியவற்றின் பலத்தின் மீதான நம்பிக்கையினத்தில் முளை கொள்கிறது.
மனிதநேயர் 1
அதிகார வெறிகொண்ட அரசியல்வாதிகளையும் அறிஞர்களையும் அரசாங்கக் குடுவையுள் ஒன்று சேர்த்துக் கலக்கும் போது ராட்சதக் குடைக்காளான் போல் புகை எழும், அதன் கீழ் சாம்பல் படிந்திருக்கும்.
விஞ்ஞானி 1
அப்படியல்ல, அணுவாயுதத் தயாரிப்பு எங்களது தற்காப்பிற்கானது. அத்துடன் அது எங்களது தாய்மார்களை சகோதரிமார்களை கெளரவிப்பதற்கு ஒப்பானது. அந்த கெளரவத்தை எந்த விலை கொடுத்தாவது தற்காத்துக் கொள்ள அர்ப்பணம் செய்துள்ளோம்.
மனிதநேயர் 3
பாதுகாப்பு என்ற பெயரிலும்; பெண்களைக் கெளரவப்படுத்தல் என்ற பெயரிலும் அதிகார வேட்கைக்கு முலாம் பூசிக் கொள்வதை இனிமேல் நிறுத்திக் கொள்ளுங்கள்.
மனிதநேயர் 1
எவ்வளவுதான் பயன்கள் இருப்பினும், மீளமுடியா அழிவுகளைக் கொண்டு வரும் அணுஆயுதங்களை முற்றுமுழுதாக இல்லாமல் செய்வதிலேயே இந்தப் பூமியின் பாதுகாப்புத் தங்கியிருக்கிறது. நாங்கள் இதனை மிகத் தெளிவாக விளங்கிக் கொண்டிருக்கிறோம்.
பஸ் மாசுரன்
மந்திரக்கோல் என்கரத்தில் அற்புதங்கள் நான்புரிவேன் யுத்தங்களின் அரசன் நானே - நானே யுத்தங்களின் அரசன் தானே
அணுவுலைச் சொந்தக்காரன் உலகத்தின் ராசராசன் எல்லோரும் உச்சாடனமாக
E=mc2 E=mc2
E=mc2 E=mc2
பலவான் பாக்கியவான்
-12

பலவான் பாக்கியவான் அணுவுலைச் சொந்தக்காரன் உலகத்தின் ராசராசன் பஸ் மாசுரன்
அணுகுண்டு என்னிடம் உண்டு கூப்பிடு சிவனை சிவன்
வந்தேன் பஸ்மாசுரா வந்தேன் நான் எப்போதும் எங்கும் இருப்பவன் பஸ் மாசுரன்
அருகில் வாரும் சிவனாரே உமது வரத்தை உம்மிடமே பரிசோதிப்போம் சிவன்
பொறு பஸ்மாசுரா பொறு வரத்தைச் சாபமாக்காதே அவசரப்படாதே கர்வமடையாதே. பஸ் மாசுரன்
வரத்தைச் சாதகமாக்குகிறேன் (பஸ்மாசுரன் சிவன் மீது பாய்கிறான் சிவன் விலகி ஓடுகிறார் துரத்தல் தொடர்கிறது பின்னணியில் வசனங்கள் உச்சாடனமாக எழுகிறது.) எல்லோரும்
ஹிரோசிமா நாகசாகி, நாகசாகி ஹிரோசிமா அமிலமழை அமிலமழை அமிலமழை அமிலமழை ஹிரோசிமா நாகசாகி, நாகசாகி ஹிரோசிமா செர்னோபில்லில் அணுவுலைக்கசிவு வடகறோலினாவில் அணு குண்டு விபத்து அண்டவெளியிலும் அணுயுகப்பரவல் உப கண்டங்களிலும் அணு வெடிச்சோதனை உலகம் முழுவதும் அணுக்கதிர்க் கசிவு உயிர்கள் முழுவதும் அவலத்தின் படிவு ஹிரோசிமா நாகசாகி, நாகசாகி ஹிரோசிமா கறுப்புமழை கறுப்புமழை கறுப்புமழை கறுப்புமழை சிவன்
கலியுகம் கலியுகம் வரங்கள் சாபமாகும் காலம் வரங்கள் சாபமாகும் காலம் தர்மம் குன்றிவிட்டது தர்மம் குன்றிவிட்டது
- 13

Page 9
எல்லோரும்
ஹிரோசிமா நாகசாகி, நாகசாகி ஹிரோசிமா அமிலமழை அமிலமழை அமிலமழை அமிலமழை
(திடீரென எல்லாம் நின்றுபோகிறது. குண்டு வீச்சு விமானச் சத்தம்
கேட்கிறது. சிவனும் பஸ்மாசுரனும் மேடையின் பின்மத்தியில் ஒய்வெடுத்துக்
கொள்கின்றார்கள்.)
மனிதநேயர் 2
1945ஆம் ஆண்டு யூலை 16ஆம் திகதி நியூ மெக்சிக்கோவில் அமைதியாகப் பரந்துகிடந்த அலமோகோடோ பாலைவனத்தில் அணுயுகம் ஆரம்பமாயிற்று.
Lu TL6ld
உலகை அழிக்கும் வரம்பெற்றேன் உன்னதங்களின் அரசன் நானே
மனிதநேயர் 1
முதலாவது அணுகுண்டுப் பரிசோதனை முடிந்து மூன்றே மூன்று வாரங்களில் ஹிரோசிமாவில் அணுகுண்டு போடப்பட்டது.
பாடல்
உலகை அழிக்கும் வரம்பெற்றேன் உன்னதங்களின் அரசன் நானே என்னை எதிர்ப்பவர் உண்டோ வரம்பெற்ற கரம்கொண்ட தலைவன் இனினானே
ரிபெற்ஸ்
எனோலாக்கேய்டுnேolaGay)B29 விமானத் தலைமை விமானி கேணல் ரிபெற்ஸ் பேசுகின்றேன். Little Boy விமானத்திலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டான்.
லுாயிஸ்
அங்கே பார் அங்கே பார், அணுகுண்டுவெடிப்பின் சுவையை என்னால் உணரக் கூடியதாக உள்ளது. அது ஈயத்தின் சுவையைப் போலுள்ளது.
ரிபெற்ஸ்
கடவுளே நாங்கள் என்ன செய்து விட்டோம்.
மனிதநேயர் 2
1945ஆம் ஆண்டு ஓகஸ்ட் 6ம் திகதி ஹிரோசிமா மரணித்தது.
-14

ust L6)
உலகை அழிக்கும் வரம்பெற்றேன் உன்னதங்களின் அரசன் நானே
மனிதநேயர் 1
மூன்று நாட்களின் பின்பு 1945ஆம் ஆண்டு ஓகஸ்ற் 9ஆம் திகதி நாகசாகி மரணித்தது.
Lu TL6ld
உலகை அழிக்கும் வரம்பெற்றேன்
உன்னதங்களின் அரசன் நானே
என்னை எதிர்ப்பவர் உண்டோ
வரம்பெற்ற கரம்கொண்ட
தலைவன் இனினானே
குரொவ்
ஹலோ, லெஸ்லி குரொவ் பேசுகிறேன்.
ஒப்பன்கேயப்மர்
ஹலோ ஒப்பன்ஹேய்மர் ஹியர்
குரொவ்
டொக்டர்! உங்களதும், உங்களது சகபாடிகளாலும் பெருமை அடைகின்றோம்.
ஒப்பன்ஹேய்மர்
நல்லது, நுட்பரீதியாக இனிதான படைப்பு எங்களுடையது. எல்லாம் நல்லபடியாக முடிந்ததா?
குரொவ்
தெட்டத் தெளிவாக மிகப் பெரும் இரச்சலுடன் வெடித்தது.
ஒப்பன்ஹேய்மர்
சரி எல்லோரும் தாராளமாகத் திருப்தி அடைந்துள்ளார்களா?
குரொவ்
ம். திருப்தி அடைந்துள்ளார்கள்!
Luft L6)
ஒரு வெடியதிர உயிர்நிலை பதற குழந்தைகள் குருவிகள் கதறிடக் கருகிட
நிருபர் −
மதிப்புக்குரிய அதிபர் திரு.ட்ரூமன் அவர்களே, அணுகுண்டு அனர்த்தம் நிகழ்த்தியதன் பின்னர் நேற்றைய இரவு நீங்கள் நன்றாகத் துாங்கினீர்களா?
-15

Page 10
ட்ரூமன்
ஆமாம் எப்போதையும் விட நேற்று நான் அமைதியாகத் துாங்கினேன். ஏனெனில் எங்களது பரிசோதனை வெற்றி பெற்று விட்டது. இந்த உலகில் நாங்கள் தான் இப்போது அதிக பலம் வாய்ந்தவர்கள்.
பஸ்மாகிரன் பாடல்
வீராதி வீரன் நானே சுரனும் நானே விண்ணன் விஞ்ஞானி நானே (2) சந்திரனில் ஒருதளம் சூரியனில் ஒருதளம் (2) விண்முழுதும் என்படைகள் வேவு செய்யும் செய்மதிகள் தந்தன்னானே தந்தன்னானே தந்தன்னானே தந்தன்னானே விண்முழுதும் என் படைகள் வேவு செய்யும் செய்மதிகள் நட்சத்திரப்போர் வீரன்நானே நானே நட்சத்திரப்போர் வீரன்
(ஹிரோசிமாவில் அணுகுண்டு வெடித்தபோது அந்த இடத்தில்
நின்றிருந்தவரின் அனுபவக் குறிப்புக்கள்)
நிருபர்
இவரது பெயர் மிச்சிக்கோ ஜமோக்கா ஹிரோசிமாவில் போடப்பட்ட அணுகுண்டு விளைவித்த அனர்த்தங்களின் சாட்சியாய் இருப்பவர். இனி ஒருபோதும் அணுகுண்டின் அனர்த்தங்கள் பூமியில் விளையாதிருக்க தமது அனுபவங்களை ஆயுதமாக்கி இருப்பவர்.
அணுகுண்டு போட்டபோது நீங்கள் எங்கிருந்தீர்கள்? மிச்சிக்கோ ஜமேக்கா
அணுகுண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து அரை மைல் துாரத்தில் தான் நின்று கொண்டிருந்தேன். நிருபர்
அணுகுண்டு வெடித்தபோது உங்களுக்கு என்ன நடந்தது? மிச்சிக்கோ ஜமோக்கா
வானத்தில் மற்றுமொரு சூரியனைக்கண்டேன். கண்ணைப்பறிக்கும் மிகவும் பிரகாசமான கடும் வெளிச்சத்தை நான்கண்டேன். என்னை அறியாமலேயே கைகளால் முகத்தை மூடிக் கொண்டேன். அந்தக்கணத்திலேயே எனது முகம் ஊதிப் பருத்திருப்பதை உணர்ந்தேன். நேரடியாக குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி இறந்துகொண்டிருப்பதாகவே நினைத்தேன்.
-16

Lu TL6ð
ஒரு வெடியதிர உயிர்நிலை பதற குழந்தைகள் குருவிகள் கதறிடக் கதறிட
நிருபர்
அதற்குப் பிறகு என்ன நடந்தது?
மிச்சிக்கோ ஜமேக்கா
நான் காப்பாற்றப்பட்டபோது எனது கூந்தல் எரிந்திருந்தது. எனது முகம் பலுானைப்போல ஊதிப் பருத்திருந்தது. அம்மா அதனைச் சொல்லாமல் இருந்தபோதும் எனக்கு அது தெரிந்திருந்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனது சேட் கிழிந்து ஏன் எனது தோள்களில் தொங்கிக் கொண்டிருக்கிறது என்று, ஆனால் சற்று நேரத்தில் தான் உணர்ந்தேன் அவை எரிந்துதொங்கும் எனது தோல்கள் என்று. அது நரக அனுபவம்.
UTL6)
ஒரு வெடியதிர உயிர்நிலை பதற குழந்தைகள் குருவிகள் கதறிட கருகிட
பஸ் மாசுரன்
சமாதானத்தை நேசிப்பவன் நான். பயங்கரவாதத்துக்கு எதிரானவன் நான். பூக்களாகவும் புறாக்களாகவும் சமாதானச் சின்னங்களாக: ஆயுதங்களை, அணுவாயுதங்களை வைத்திருப்பவன் நான்.
எல்லோரும்
gg(3u JT !!!
(எல்லோரும் நிலத்தில் விழ, மீண்டும் பஸ்மாசுரன் சிவனைத் துரத்தத்
தொடங்குகிறான்.)
சிவன்
கலியுகம் கலியுகம் வரங்கள் சாபமாகும் காலம்
ஒருவர்
மேதகு ஐன்ஸ்ரீன் அவர்களே, மூன்றாம் உலக யுத்தம் வந்தால் என்ன நடக்கும் என்று தங்களால் ஏதாவது கூற முடியுமா?
ஐன்ஸ்ரீன்
என்னை மன்னித்துவிடுங்கள் என்னால் மூன்றாம் உலக யுத்தத்தைப் பற்றி எதுவும் கூறமுடியாது ஆனால் நான்காவது உலக யுத்தத்தைப் பற்றி சில விஷயங்களைக் கூறமுடியும்.
- 17

Page 11
ஒருவர்
மூன்றாவது உலகயுத்தத்தைப் பற்றி உங்களால் ஒன்றும் கூறமுடியாது ஏனெனில் அது மிகவும் சிக்கலானது. ஆனால் அதைவிட மிகவும் சிக்கலான நான்காவது உலக யுத்தத்தைப் பற்றிக் கூறமுடியும் என்கிறீர்களே?
ஐன்ஸ்ரீன்
நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. என்னால் நான்காவது உலக யுத்தம் பற்றி நிச்சயமாகத் தீர்மானமாகக் கூறமுடியும்; அது என்னவெனில் நான்காவது உலக யுத்தம் என்று ஒன்று நடக்காது. ஏனென்றால் மூன்றாவது உலக யுத்தம் எல்லா உயிர்களையும் அழித்துவிடும். மனித உயிர்களை மட்டுமல்ல: ரோஜாக்களையும் கூட அழித்துவிடும். இந்தப் பூமியில் வாழ்பவை எல்லாம் அழிந்து போகும்.
எடுத்துரைஞர்
அணுவின் அழிப்புச்சிக்தியை அறிவித்தவரும் நீரே அது விழைவிக்கும் அழிவுகளை விளக்குபவரும் நீரே அறிவின் இருமுகம் கொண்ட திருமாமுகரும் நீரே
எடுத்துரைஞர்
செய்திகள் தெரிவிப்பதும் நாங்கள் தீர்மானிப்பதும் நாங்கள்
பஸ்மாசுரான் விஞ்ஞானிகள் பாடல்
வீராதி வீரர் நாமே சூரரும் நாமே விண்ணர் விஞ்ஞானி நாமே மந்திரக்கோல் எம்கரத்தில் அற்புதங்கள் நாம்புரிவோம்
எடுத்துரைஞர்
கடந்த காலத்தில் கொம் யுனிஸ்ற்றுக்களுடன் தொடர்பு வைத்திருந்தம்ை சோவியத் உளவாளிகளை அடையாளம்காட்ட காலம் தாழ்த்தியமை ஐதரசன் குண்டுத் தயாரிப்பை எதிர்த்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பதுடன் ஒப்பன்ஹைமர் அணுச்சக்தி ஆணையத்தின் ஆலோசகர் பதவியிலிருந்தும் அகற்றப்பட்டிருக்கிறார்.
பஸ்மாகரான் பாடல்
மந்திரக்கோல் என்கரத்தில் அற்புதங்கள் நான்புரிவேன்
-18

தந்தந்னானே தந்தந்னானே தந்தந்னானே தந்தந்னானே எந்தன் சொல்லு எங்கும் செல்லும் எதிர்த்து நிற்க எவருக்கேலும்?! தந்தந்னானே தந்தந்னானே தந்தந்னானே தந்தந்னானே யுத்தங்களின் அரசன் நானே - நானே யுத்தங்களின் அரசன் தானே
மனிதநேயர் 2
அதிகமாகப் படிச்சுப்படிச்சு மூளை கலங்கிப் போச்சு அணுகுண்டத்தான் போட்டுக்கிட்டு அழிஞ்சுபோகலாச்சு அறிவில்லாமல் படைச்சுப்புட்டா மிருகம் என்னு சொல்லும் அந்த மிருகம் எல்லாம் நம்மைப்பாத்து சிரிக்குதென்ன செய்வோம் டிங்கிரி டிங்காலே மீனாச்சி டிங்கிரி டிங்காலே உலகம் போற போக்கப் பாரு தங்கமத்தில்லாலே
(அன்பு எங்கே, திரைப்படப்பாடல்)
கலியுகம் கலியுகம் வரங்கள் சாபமாகும் காலம் தர்மம் குன்றிவிட்டது அழையுங்கள் மனிதநேயத்தை எழுப்புங்கள் எதிர்ப்புக்குரல்களை அழையுங்கள் மனிதநேயத்தை.
பரித்ராணாய ஸாதுனாம் வினாசாய ச துஷ்க்ருதாம் தர்மஸம்ஸ்த் தாபனார்த்தாய ஸம்பவாமி யுகேயுகே
தர்மம் நலிந்து அதர்மம் தழைக்குங்கால் வருவோம் நாம் யுகம்தோறும் யுகம்தோறும்
ஒரு புதிய உலகம் எழுந்து வரட்டும் வேறொரு உலகம் பிறக்கட்டும்
(வீழ்ந்து கிடந்தவர்கள் எழுந்து வருகிறார்கள்.)
-19

Page 12
இனியொரு உலக மகாயுத்தத்தில் அணுகுண்டு வெடிப்பால் அழிந்து போபவர்களுக்காக,
இரங்கற்பா பாடுவதற்கும் துாபிகளை எழுப்பி நினைவூட்டுவதற்கும் எதிராக குரலெடுத்து விழிப்புணர்வை அழைப்பதற்கும் யாருமே இருக்கமாட்டார்கள் யாருமே இருக்கமாட்டார்கள்
ஒரு புதிய உலகம் எழுந்து வரட்டும் வேறொரு உலகம் பிறக்கட்டும்
இந்தப் பூகோளத்தின் உயிரிருப்பு சில பொத்தான்களில் உலகத்தின் தலைவிதி ஒரு சிலரின் கைகளில் எப்படி முடியும்? எப்படி முடியும்? எப்படி முடியும்?
தீ எரிக அதனிடத்தே மனிதநேயத்தை எழுப்புகின்றோம் மனிதநேயத்தை எழுப்புகிறோம் அதனிடத்தே விடுதலை பெற்று உய்ய விடுதலையை எழுப்பிவைப்போம் விண்ணும் மண்ணும் வளம் பெறும் பொருட்டாக,
LJITL-6d
முன்செல்வோம் நாங்கள் முன்செல்வோம் நாங்கள் அணுவாயுதத் தளைநீங்கி முன்செல்வோம் நாங்கள் அதிகார வெறிநீங்கி முன்செல்வோம் நாங்கள் பல்லுயிரும் வாழ முன்செல்வோம் நாங்கள் உலகெலாம் தழைத்தோங்க முன்செல்வோம் நாங்கள்
முற்றும்.
-20

இந் நாடகம்.
வடக்கில் முதலாவது ஆற்றுகை வட இலங்கை சங்கீத சபை ஆசிரியர் தரப் பரீட்சைக்கான ஆற்றுகையாக யாழ்/இணுவில் மத்திய கல்லுாரியில் 1993ம் ஆண்டு ைேடயேறியது.
இரண்டாவது ஆற்றுகை அதேஅபூண்டில் யாழ்/இந்து மகளிர் கல்லூரி உயர்தர மாணவியரினால் தமிழ் விழாவிற்காக மேற்படி கல்லுாரி மண்டபத்தில் மேடையேறியது.
முன்றாவது ஆற்றுகை பலாலி ஆசிரிய பயிற்சிக் கல்லூரி மாணவர்களால் 1994ம் ஆண்டு கல்லூரியின் வருடாந்த நாடக விழாவிற்காக திருநெல்வேலி சைவப்பிரகாச வித்தியாசாலையில் மேடையேற்றப்பட்டது.
யாழ்பாபாணத்தில் நிகழ்ந்த ஆற்றுகைகளுக்கான இசையமைப்பினை கோபாலகிருஷ்ணன் சத்தியனும், அனுசரணையாக கோ.நுஷாங்கனும், ஞா.நந்தகுமாரும் பணிபுரிந்தனர். உடை,ஒப்பனையை ம.நிலாந்தனும், வாசுகி ஜெயசங்கரும் செய்திருந்தனர்.
கிழக்கில் முதலாவது ஆற்றுகை கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தயாரிப்பாக உலக நாடகதின விழா 2000த்திற்காக கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 07.04.2000 அன்று கி.ப.க பிரதான மண்டபத்தில் மேடையேற்றப்பட்டது.
இரண்டாவது, மூன்றாவது ஆற்றுகைகள் களுதாவளை மகாவித்தியாலய பழையமாணவர்சங்க நிதிக்காக களுதாவளை மகாவித்தியாலையத்தில் 16.06.2000 அன்று மேடையேற்றப்பட்டது.
நான்காவது ஆற்றுகை வடக்கு கிழக்கு மாகாணசபை இலக்கிய விழா 2000த்திற்காக 18.11.2000 அன்று திருகோணமலை புனித மரியாள் கல்லுாரியில் மேடையேற்றப்பட்டது.
ஐந்தாவது ஆற்றுகை கொழும்பு லயனல் வென்ட் அரங்கில் மூன்றாவது கண் உள்ளுள் அறிவு திறன் செயற்பாட்டுக் குழுவினால் 2003.11.22 அன்று இரு மொழி ஆற்றுகையாக அளிக்க செய்யப்பட்டது.
20A

Page 13
அமரர் தெய்வநாயகம் கிருபாகரனின் முதலாம் வருட நினைவாக.
காலம் 24.10.2004 - ஞாயிற்றுக்கிழமை
நேரம் மு.ப 10.00 - 12.00 வரை
இடம்
மட் / மகாஜனக் கல்லுாரி கலையரங்கம்
முன்றாவது கண் ஆங்கில மன்றம்
முன்றாவது கண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டுக் குழு
-21
 

வரவேற்புரை ரா. வினோஜா
தலைமையுரை சு. கலைமதி
நினைவுரை - வி. கெளரிபாலன்
ச. சசிதரன்
குழுப் பாடல் (தமிழிலும் ஆங்கிலத்திலும்) - பாடினிகள் கலாசாரக் குழுவினர்
“நவீன பஸ்மாசுரன்’ நாடக எழுத்துரு வெளியீடு -
வெளியீட்டுரை சி.ஜெயசங்கள்
நாடக எழுத்துரு மதிப்பீடு - L.A. லியோன்
நவீன பஸ்மாசுரன் தேர்ந்தெடுத்த பாடல்கள் (தமிழிலும், ஆங்கிலத்திலும) மூன்றாவது கண் உள்ளூர் அறிவு திறன் செயற்பாட்டுக் குழுவினர்
நினைவுரை றியாஸ் அகமட்
கே. லுார்து ஜீவகா
து. கெளரீஸ்வரன்
நன்றியுரை சுபா. மகாலிங்கம்

Page 14
Director's Note:
We are the people who were forced to live amidst bombing and with bombs during the latter two decades of the 20 century.
We would like to speak about the nuclearbomb which at anytime anywhere in a split moment can come as a disaster or write out the end of this world by the gigantic mushroomingofits deadly smokes.
Man's powerhunger is now stealing away his right of determining the fate of the world. It is absurd to construe that the world has been created for mankind only. Converselyitisabeautiful home for all living beings.
having stuffed the lap of the earth with nuclearbombs fittoburn this beautiful earth several times to ashes, the superpowers pretend to be the protectors of people.
In the latterpart of the 20th century, coming up to the threshold of Eelam the nuclear bombs waitin a ready state in the Subcontinents too.
The awareness about the efforts made to annihilate the entire earth becomes the begiming to face them.
The drama"Naveena Pasmasuran” does that artistically.
"Naveena Pasmasuran” tries to speak to the audience through the traditional creative features in aflexible manner so as to communicate With all people in
whichever space of performance available.
S. Jeyasankar
22A

Naveena Pasmasuran
O The Ashen Touch
Long live! Oh! the lampoflight! Ofthe gatewayoffaith Oh! the lampoflight Of theinmost shrine. Oh! the source ofbeauty That glows everywhere, Oh! the goal of life! That pleasure seeks, Oh! the source of you, the source of me! The source of sweetness Long live thee!
Introduction:
Let the fire flare up We pour outmeatintoit, Let the fire flare up We give offering to it. The fire of virtue, wisdom and life Fire ofpenance and sacrifice Fire of wrath, hostility and Treachery We worship all the above We protect and governthem Oh fire you are ourbosomfriend we praise you Like you, let our lives give outheat and light Ofhundred years, Ohfire Like you, let our souls give outlus ohfire Like you, let our wisdom radiate, Oh Sun Godoh fire! we praise you
-23

Page 15
Oh! Sun God! we glorify you. Good is your light. Good is your work and good are you. (The chanting ofho!horises high up in the air. At the centerstage stand Pasmasuran on one footin penanceful deep concentration).
(Humanitarians):
Ho! ho! ................ Oh! the peacefulness of the mountains, the loneliness of the rivers (Group of Scientists)
Ho!Alfa......... Ho Beta......... Ho! Gama....... Ho! Neutron ....... Ho! ................
(Humanitarians)
Ho! .............. Oh the wind, the sound...... The ocean of antiquity......... Oh! fire the symbol ofjustice
(Scientists)
Ho! ......Uranium......... Hol..... plutonium......
Ho! ..... Deuterium....... Ho! ..... ho!..... ho!.......
(Allofa sudden characters run aboutin excitement. Some run towards the audience and others towards other directions).
(Humanitarians):
Pasmasuran is doing penance Pasmasuran is doing severe penance
He is lying on hedges. He is standing on one foot with the arms stretched out. He stares at the Sun with his naked eyes. By the power of his penance the world of Indra has lost its pomp. Devasin fear have hidden in dark dungeons. He has chained the wind.
-24

9. The guards ofthe eight directions have surrendered to him. 10. The queen of the oceans was incarcerated. 11. The stars have lost their sight by the power of his penance. 12. The sons of the mountains have lost themselves to him.
Danger...... Danger......... Oh! people of the earth....... danger....... (ho.....ho....... ho...... ) From Albert Einstein to President Roosevelt.
Sir, According to some recent work the element Uranium could be turned into a new and very important source of energy. I can also predict that it is probable in the immediate future. By this we can produce vast amount ofpower and large quantities ofradium-like elements. I would also like to bring to your attention that if such a bomb is dropped on a portit might very well destroy the whole port together with some of the surrounding territory.
Danger..... oh people of the earth..... danger......
(Ho... ho..... ho.....)
(One characterimitates the announcementata rocket base). Ready..... steady....
Ten, nine, eight, seven, six. five, four, three, two,...one, zero.
(noise like a bomb blastas ifa rocket is launched is heard.
God Shiva appears).
(Scientists):
Eureka... Eureka.... Eureka...
God Shiva:
I’m pleased with your power of penance.
God Shiva:
I'm so pleased with yourpenance. It's fit to shatter the three worlds. (Pasmasuranbows to God Shiva).
-25

Page 16
God Shiva:
What boon do you want What boon do you want Tell me! It shall be given. Tell me! It shall be given.
(Pasmasuran sings)
Came you forme my Lord To give me a boon? Came you forme my Lord Pleased by my penance Cameyou forme mylord. To give me a boon. Came you forme my Lord
Bless me with a boon mylord-oh lord Bless me with one my Lord To swoop the world and Keepin my hand Bless me with a boon my lord Bless me with one my Lord
God S:
what boondo you want? Ask, it shall be given.
Song: Scientists):
Ishould walk on the Moon my Lord-I should Walk on the Moon my Lord -2 Stamping my footprints on the face of the moon my Lord. Should walk on the moon my Lord-I should
Walk on the Moon my Lord I want anaeroplane which can fly Faster than the wind -2 Givemeplanets
With eyes to
Spy the Earth From the space above
-26

Byhoveringin the sky. Give memissiles which can fly from Continent to continent. Carryingnuclearbombs On their noses’ end.
Gods:
Confuse not me by asking for too many a boon. ask for one and only one. the one that amounts to be the motherofall.
Pasma:
All that Itouch should become ashes my lord. I want that ashen touch my Lord.
God S:
Here, have it. whateveryoutouchshall become ashes (the chanting of Ermcrises up high in the air)
Song:
Here comes the King Pasmasuran
Here comes the one blessed with the boon. Pasmasuranis our great King He did great penance and got many boons In arrogance he changed the boon to curse And did perishin the end.
Scientists the greatest scholars Through penance got the boon ofnuclear power The nuclear power of Science is creative But in the war it's immensely destructive.
Here comes the King Pasmasuran Here comes the one blessed with the boon.
Pasmasuranis our great King He did great penance and got manyboons Inarrogance he changed the boons into curse
-27

Page 17
And did perishin the end.
With one big bang Came the holocaust Babes and birds Wailed and wept.
Pasma:
Got the boon to raze the world I'm the King of Kingsunrivalled Is there anyone to challenge me? (no, no, no.....never...) I'm the leader blessed ever to be. (yes, yes, yes, ..... for ever)
Pass: Al:
Pass:
A: Pass:
Al:
Pas: Al:
Come!all ofyou tomy side! Coming my lord coming my Lord surrendered mylord surrendered Hereafter there will be no darkness in the world. Why? Mylord?
Here, get this, electricity Ah! electricity electricity electricity no more darkness no more darkness Whose footprintis that which is on the surface of the moon? (whisper) whose? whose? .
One of them: mm... yours my Lord.
All: yes my Lord, It's yours my Lord.
Pass: Ha! the hero of heroes I am!
The almighty King The all powerful scientist Iam.
A:
(Chant) : NA....... SA....... SA........ SA......
Eseence of nasty war... war... war... war. Pass:
I am the one who got the boon of"Ashentouch” Scientists 1:
I know all the secrets of the nuclear power.
-28

Sc. 2: ܗܝ
Iknow how to create a world without human beings. Person 1:
Onlybuildings will remain. Person 2:
trees, bushes, creepers, grass, animals human beings everything will perish.
Everything will perish, Sc.3:
Withinamoment... withinamoment. Sc. 4:
One and only one bomb would do. person3:
Our Sunwill be dead. Perso 4:
Darkness ofdeath will shroud and devourus all. Person 5:
All our stars will fall downburnt. Person 6:
Allourriver will be poisoned. Person 7:
Ourseas will freezeto immobility. Pass:
Smoke will rise up like a giant mushroom under which will existmy rule. (song)
The hero of heroes I am The almighty King The all powerful scientist Iam. Pass:
Go! proclaim it to the whole world All: Done my Lord (characters run aimlessly to various
directions and return) what is to proclaimmy Lords
Pasma:
Mightiest the most fortunate
-29

Page 18
Mightiest the most fortunate The fittest survive The non-fits perish Mightiest the most fortunate
(other characters begin chanting the lines)
Mightiest the most fortunate Mightiest the most fortunate He who owns the nuclear power Rules the world for ever. Eeqauals mc.... E equals mc'....
Pas:
The hero of heroes I am The almighty King. The allpowerful scientistyou are? (all)
Pasma:
Hey go and tell this to the moon. No one shall hide the Sun without asking me.
Al:
Let it be so my Lord.
Pas:
No more Solar eclipse till I order.
All:
Letit be So my Lord.
Pasma:
who is there? summon river, "Ganga' to the Earth.
One man:
Suppose she denies?
Pasma:
send the missiles.
Another man:
My lord Gangais worn on the topknot of the head of Lord Shiva.
Pasma:
If so, summon God Shiva.
Anotherman:
Lord is he not the one who blessed you with the boon?
Pasma:
-30

That's past Now Ihave the charm of atomic bomb. Song:
In my handis the magic wand
Wonders many I will do
None can hold me in the world
(Ho. Ho.... chanting rises up) Iam the king of wars And the king of wars I am.
Pasma: Iam death personified
I'm determined to annihilate the world (E=MC2, E=MC2) Hum2:
The utmost reliance on nuclear weapons, sprouts from the disbeliefin culture, politic and technico-Economic power. Hum 1:
When the power-hungry politicians and the intellectuals are mixed
togetherinthe flask of Government like a giant mushroom smoke will rise up and
beneath which will deposit the ashes. Hum3:
Hereafter stopglossing the craze for power in the name of protection
and in the name of honouring women. Hum :
No matter what we gain, the protection of this earth depends on the
complete eradication of the nuclear weapons which can cause irreparable
destruction to the earth. Pass (Song):
In my handis the magic wand Wonders many I will do None can hold me in the world (Ho. Ho.... chantingrises up)
-31

Page 19
Iam the king of wars And the king of wars I am.
Pass:
He who owns the nuclear power Rules the whole world for ever. E equals mc.... E equals mc’..... Eequals mc’...... E equals mc'....
Mightiest the most fortunate Mightiest the most fortunate He who owns the atomic power Rules the whole world forever. Pasma:
There is atomic bomb in my possession. Summon God Shiva. I’m here Pasmasura. Iam present everywhere at anytime. Pas:
Come near me. Let me test the boon first on you.
God S:
Wait Pasmasura..... wait' Don't make the boon a
CSC. Don’t beina hurry Don't become arrogant. Pasma:
Nay, I take it to my advantage. E equals mc'..... E equals mc'.... (Pasmasuran leaps at God Shiva god Shivaruns away. The chase continue.) Chanting of the lines is heard in the background. A:
HiroshimaNagasaki Nagasaki Hiroshima Acid Rain Acid Rain Acid Rain Acid Rain Hiroshima Nagasaki Nagasaki Hiroshima
-32

Nuclear leak of Chernobyl Atomic disasterin North Carolina Even in the space the menace spreads Subcontinents too face the threats. All over the space the missileshover Impactofradioactivity the world over HiroshimaNagasaki.... Nagasaki Hiroshima...... Hiroshima.... Nagasaki..... Hiroshima.... Nagasaki..... Black Rain... Black Rain.... BlackRain... Black Rain...
God S:
Kali Yugam... Kali Yugam. The time when boons become curse... The time when boons become curse.... World full of vices
All:
HiroshimaNagasaki....
Nagasaki Hiroshima....
Acid rain acid rain
Acid rainacid rain...
(an abrupt silence. The noise of abomberisheard. the characters of God Shiva and Pasmasuran retire at the back-center of the stage.) Humanitarian:
(reads a letter) Onthe 16th of July 1945 atomic age began in the peaceful;
desert of"Alomogardo' in New Mexico.
Got the boon to raze the world I'm the King of Kingsunrivalled Is there anyone to challenge me? (no, no, no.....never...)
-33

Page 20
I'm the leaderblessed ever to be. (yes, yes, yes, .....)
Humanitarians:
Within only three weeks of 15 nuclear disaster an atom bomb was
dropped on Hiroshima.
Got the boon to raze the world lamtheking of kingsunrivalled
(Imitates the telephone conversation)
Tibbets:
Commander-in-chiefofEnola GayB-29, Colonel Tibbets speaking.
Little Boy” was released from the bomber. (In the background unfolds the scenes of the bomb blast) Lewis-the Co-pilot:
Look there Look there I cantaste the nuclear fission It tastes like lead Tibbets:
Oh Godoh God what have we done Humanitarians: One man:
On 6th August 1945 Hiroshima died. Another man:
After three days on 9th of August 1945 Nagasaki too died. (Imitatesatelephone conversation)
L: Hullo! Lesly Grove speaking
O:Hullo! Oppenheimer here.
L. : Doctor! I am very proud of you and all of your people.
O: Well, technically sweet production is ours.
Itwentalright?
-34

L: Apparently. The explosion went with tremendous bang. O: Right, are they all reasonably satisfied? L:Mm. highly satisfied.
With one big bang Came the holocaust Babes and birds Wailed and wept
Press reporter:
Your Excellency PresidentHarry Truman did you sleep well last night
after you had successfully accomplished the nuclear explosion?
Truman:
Yes, Islept soundly thaneverbefore because our effort was successful.
Now we are the most powerful in the world. Pass:
The hero of heroes I am The almighty King. The allpowerful scientistyou are? (all)
(The remarksofan on-looker ofhis experienceduringtheatomic bomb
blastathiroshima)
Reporter:
His name is Mexico Jamaka, a living evidence oftheholocaust by the
atomic
explosion of Hiroshima. Where were you at the time of the explosion?
Mexico Jamaica:
I was standing only halfamile away from the place of the explosion.
R: What happened to you?
M: Isawanother Suninthesky. It was a very strong light. a flash. I put my arms overmy face unconsciously and almost instantly I felt my face was inflating. Ithought I was directly hit by the bomb and was dying.
-35

Page 21
(Theme song)
With Onebigbang
Came the holocaust
Babes and birds
Wailed and wept
What happened after that? When I was rescued my hair was found burned. My face was inflated like a balloon. Although my mother didn't say anything I knew it very well. I wondered why my shirt had been burnt and hanging around my arms. Isoon realized that they are the pieces of my skin. It was ahell.
(Theme song)
Pas:
Al:
With One big bang
Came the holocaust
Babes and birds
Wailed and wept (Theremarksofanonlooker ofhis experienceduringtrheatomicbomb blast at Hiroshima).
I am a lover ofpeace. I am deadly against terrorism. For bouquets and
white
pigeons Ihave atomic weapons as emblems of peace.
Alas (All fall down on the ground. Again pasmasuran starts to chase
after God Shiva).
Kali Yugam... Kali Yugam... Time that boons become curse...
One person: Your honour Dr. Einstein, canyou possibly foretell what will happen if the
third world war breaks out?
Einstein: I'm sorry, I can't say anything about the third world war. But I can say
something about the fourth world war.
One man:
-36

MM.....You are unable to say anything about third world war because it's much complicated. But, how could it be possible to say about the fourth world war...er.... which is even more complicated than the former? Eienstien: You didn't understand. I can say about the fourth world war definitely and deliberately. That is to say that there will be no war as such. because the third world war will destroy all lives on the earth. Not only human lives but also the tenderest offlower will be destroyed. Everything that breatheson the earth will perish. Humanitarians: It's you who announced the destructive power of atom, It's you who explained about it's destruction It's you who bear the great graceful face of double-faced wisdom Narrator:
The News. We reportand we decide. The hero of heroes I am
The almighty King The all powerful scientist I am.
In my handis the magic wand
Wonders many I will do None can hold me in the world
Narrator:
In addition to the chargesofhaving connection with the communists in the
past, delaying in identifying the agents from the Soviet Union and opposing the production of hydrogen bombs Dr. Oppenheimer has also been dismissed from his office of the advisor of the Atomic Energy Commission.
Pass(song)
In my handis the magic wand Wonders many I will do None can hold me in the world
-37

Page 22
Iam the king of wars And the king of wars I am.
In every corner my word has a say Togo againstit who will dare.
Hum2:
Too much of learning of Sinful purpose has made the brain illucid, Nuclear bombs of ruinous nature has doomed the world to its end, Devoid ofknowledge we are all animals in the world, Those animals all laughatus who is to be blamed. Dingiri dingale Meenadshi, dingiridingale. See the madness of the world mydear dillale.
(“Where's love”, part ofcinemasong)
God S:
Boons turn out to be curse
Boons turn out to be curse W
(In the backstage Pasmasuran mimes chasing God Shiva) God Shiva:
Kali Yugam... Kali Yugam.
Boons have become curse
Boons have become curse
Virtue has declined
Virtue has declined
Wisdom has deteriorated
Vision has dimmed
Voice your protests
Call for humanism,
Are we going to bear the unbearable
Or to avoid it?
Lend your ears
To the call of intellect
Raise your protests
Call for benevolence.
To safeguard the good
-38

To destroy the evil To re-establish virtue and righteousness I will be born age after age. (The chanting of Sanskrit Sloganisheard in the background. The characters recover and rise up.)
Letanew worldblossom up Let anotherworldburgeon. (The characters recover and rise up) Z: Like this
If another world war breaks out Therewill beno onein this earth To sing Elegy To erectmonumentsin memory To raise protests Orto wake up the awareness.
Letanew world blossom up Let another worldburgeon.
The survival of the Earthis At the mercy of a few buttons...
The fate of this world is
In the hands of a few people.
Let the fire flare up Weinvokebenevolence init Weinvoke freedominit For the Earth and Sky to Flourish and prosper
(Song):
March forward will we March forward willwe Gettingrid of the nuclear arms March forward will we Devoid of power hunger
-39

Page 23
March forward will we For all lives to live in peace March forward will we
For the whole world to flourish
March forward will we.
Too much of learning of Sinful purpose has made the brain illucid Nuclear weapon of ruinous nature has doomed the world to its end Devoid of knowledge we are all animals in the world Those animals all laughatus who is to be blamed Dingiri dingalemeenadhi dingiri dingale See the madness of this world my deardillale
END.
Note:
God Shiva: The supreme God of Hindu Trinity of deities. Pasmasuran:The demon king who got the boon of"ashen touch” from God Shiva.
Devas: Elevated celestial beings of good. Indran: King ofDevas
-40

-41

Page 24
霄 was with greatsadness that mycoil S.Jeyasa Inkarinformed me thathis.fi collaborator and colleague Kirupakaran had past away. Ionly him through his work with Third Ey. particularlyhistranslation ofthem play Naveena Pasmasuran. This demonstrated both his technical sk
adapting the play into English but al. the language. Translation has this great technician, and a great poet, both of these. It there is stile the people in Third Eye seeking to local knowledge is not about cutting but showing that the skills, intellige is litured in areas such as Batti
LL LL a LL LL a LLLLLaLa S S S aLaLSLLHHLHH InteTatica affairsi Solediarea caused by War. This play is very no lived in a country that has built, sold Witha huge nuclear arsenal. There these weapons of mass destructio poetry far from mycountry-urging from Krupakaran's translation-thi and life. His work acts as a beacon using the lastline of the play, to "see
Te with you on this occasion.
best Wis Profanies Thompson
Centre for Applied Theatre Resea DramaDepartment, University of Manchester. United Kindon.
 

Schisgrasp of the poetic possibilities of eculiardouble denland-yournustbea And believe that T. Kirpakaran was ing very impressive by the enterprise of publish this work. It demonstrates that yourself off from the rest of the World,
ce and deep appreciation of the arts that
caloa call speak to and about Iajor Edge ensures that this contribution to appreciation of the particular problems ving to measan English reader. I have ard thTeaterled Other Areas GFihe World are Illany people in the UK opposed to and it is heartening to hear this clear us to beware of their power. To quote sworklights the fire of virtue, Wisdom [ohelpi Lisunderstandalittle more - and
he Imadness of this World', 'Mythoughts
hes. Ja Illes
rch,