கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2004.01

Page 1
ERFTLILII : Gille
ஒலை 22 22 கொழும்புத் தமி
திருவள்ளுவர் ஆண்டு திபி 2035T
கொழும்புத் த 7, 57 வது ஒழுங்கை (உருத்திர தொலைபேசி : வெப் முகவரி WWWW இணைய தபால் முகவரி : ctsடு
 
 

Hங்ககுரோவர்
ழ்ச்சங்க மாதாந்த மாசிகை
நறவம் (தை) ফুল্লাভীষ্টি 2004
ialaissana Giméiseach aussia:
jag angalana amatandainiatu மல்யர்வையநிலத்திவில் சிந்தியர் Gagu Ell|pl|rl|si 2 |paleslista EllyÚLenu (sh) திய மனிதர்கள் GlaslyLg Lugh 2 LEADaisleaidd
கொள்கையிவர்தம் கொடுங்கோல்ஆட்சியும்
ஒருநாள் சரிந்திடும் அத்தினம் சரிநிகர்சாய்ச்சகலரும் வாங்குவோம்
ܶ
மிழ்ச் சங்கம்
மாவத்தை), கொழும்பு - 08,
D11379 F. Colombo, tam ilSENTIgal III. Org
ReLITek.Ik
atau 2B -

Page 2

இதயம் திறந்து.
அன்புடையீர்,
22.03.2001 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் ஐம்பத்தியொன்பதாவது ஸ்தாபகதின விழாவில் தன் கன்னி இதழினை விரித்துக் கொண்ட 'ஒலை, டிசம்பர் 2003 வரை இருபத்தியொரு இதழ்களைத் தந்துள்ளது. எழுத்தாளர், கலைஞர், ஊடகவியலாளர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் கொழும்புத் தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கும் அவர்களிடமிருந்து இயன்ற அன்பளிப்புக்களைப் பெற்றுக் கொண்டு இது வரை (இருபத்தியோராவது இதழ் வரை) இலவசமாகவே அனுப்பி வந்தோம்.
ஈழத்துத் தமிழ்ச் சூழலில் இலக்கியச் சிற்றிதழ் ஒன்றினைக் கிரமமாகவும், இலவசமாகவும் வெளியிடுவதில் உள்ள இடர்ப்பாடுகளை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். இந்த இதழிலிருந்து (ஒலை -22 ஜனவரி 2004) 'ஒலையை விலை குறித்து விநியோகிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தயவு செய்து இந்த இதழுடன் இறுதிப்பக்கத்தில் இணைத்து அனுப்பப்படும் 'ஒலை சந்தாப்படிவத்தைப் பூரணப்படுத்தி 2004ம் ஆண்டுக்குரிய சந்தாப்பணம் ரூபா 300/= யும் சேர்த்து அனுப்பி உதவுங்கள். ஏற்கனவே அன்பளிப்புக்களை வழங்கியவர்களுக்கு 2004ம் ஆண்டு முழுவதும் 'ஒலை வழமைபோல் இலவசமாக அனுப்பி வைக்கப்படும். அத்தகையோர் இத்துடன் இறுதிப் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ள சந்தாப்படிவத்தைப் பயன்படுத்தித் தங்களுக்குத் தெரிந்த மற்றுமொரு புதியவரைச் சந்தாதாரராக்கி உதவுங்கள். கொழும்புத் தமிழ்ச்சங்கம் ஆற்றிவரும் தமிழ்மொழி, இலக்கிய, பண்பாட்டு வளர்ச்சிப் பணியில் தங்கள் பங்களிப்பினையும் இதன் மூலம் வழங்குங்கள்.
நன்றி. மீண்டும் மறுமடலில்.
- ஆசிரியர்
பக்கம் 1 "ஓலை" - 22 (ஜனவரி 2004)

Page 3
செங்கதிரோன் எழுதும்
]]']TEFEF)
(கவிஞர் நீலாவணனின் வேளாண்மைக் காவியத்தின் தொடர்ச்சி) 77
சந்தோஷத்தில் சாமி கூச்சலிட்டான்
பந்திவைத் தோய்ந்த பின்னர் பார்வதிப் பெத்தா ஓடி வந்தனள், வாய்க்குப் போட வட்டாவைக் கொண்டுவைத்துக் குந்தினள், பெண்கள் சுற்றிக் கூடினர். கும்மாளம்தான்! சந்திக்குப் போன சாமி சாராய வெறியில் மீண்டான்!
மாப்பிள்ளை செல்லன் வெட்கி மாமர மறைவில் நிற்க, "ஏற்பாட்டைப் பண்ணுங்க போய் இனியென்ன கலியாணம்தான்!" கூப்பாடு போட்டான் சாமி குடிவெறியில் கூச்சலிட்டான். "காப்பாற்ற வேணுமிவனைக் கடவுள்தான்" என்றார் கந்தர்
பெண்வீட்டார் விடை பெற்றார்கள்
வாய்க்குந்தான் போட்டவாறே வந்தவர் அழகிப் போடி "போய்க்கொண்டு வாறம்" என்றார். "பொடிச்சியும் தனிய வீட்டில், ஏய் மச்சாள் வரட்டா நாங்கள்"
'ஒலை" - 22 (ஜனவரி 2004) பக்கம் 2
 

என்றுபின் கன்க்ம் கூறப்பு "ஒய்! இந்தா. ஒடி வாறன். -உமல் ஒன்றைப் பொன்னுதந்தாள்.
"என்ன மச்சாள்! இதுகள் எல்லாம் இருக்கிற சோலிக்குள்ள." "அன்னத்திற் கென்று சொல்லி
ஆசையாய் மனதும் வைச்சு பண்ணிய பணியாரம் கா.1 பையிலே பணம் கிழங்கும்.' "என்ன .இது. மருமகளில் இப்போதே..!" என்றார் கந்தர்.
கடப்படி வரைக்கும் வந்து கந்தரும் பொன்னம்மாவும்: விடப்பிரியமில்லாமல்தான் : விழியோரம் நீர் ததும்ப் "நடப்பெல்லாம் நன்றாகத்தான் நடக்குங்கா!" - பொன்னு சொல்ல விடப் பெற்றார் விருந்தினர்தம் வீட்டுக்கு நடை போட்டார்.
- இன்னும் விளையும்
பக்கம் 3 ஒலை - 22 (ஜனவரி 2004)

Page 4
1959 ottiä மாதம் இலங்கை வானொலி நிலையம் சென்று வந்தபின், அடிக்கடி கொழும்பு செல்வது அதிகரித்தது. அ.ந.கந்தசாமி அவர்கள் கொழும்பு விவேகானந்தா வித்தியாலயத்தில் சனி அல்லது ஞாயிறுகளில் மார்க்ஸிய வகுப்பொன்று நடத்தினார். எல்லோரும் கொழும்புக்கு மேற்படிப்பு நோக்கி வரும் காலம், நான் இந்த மார்க்ஸிய வகுப்புக்கு வந்து கொண்டிருந்தேன்.
1955களில் நான் ஜி.ஸி.ஈ.இறுதி வகுப்பிலிருக்கும் போது, அக்கரைப்பற்று பொத்துவில் வீதி அருகில், பிரதான சந்தைக்கு அடுத்து என்.சண்முகதாசனுடைய நீண்ட பேச்சுடன் கூடிய பெருங்கூட்டம் நடைபெற்றது. அன்று பாடசாலையின் காலைக் கூட்டத்தில் எங்கள் பாடசாலை முகாமைத்துவரான பாதர் குக் - இவர் அமெரிக்காவில் வாழ்ந்த ஒரு ஜேர்மனியர் - வந்து "இன்று பிற்பகல் நடக்கவிருக்கும் இலங்கைப் பொதுவுடமைக் கட்சியின் பகிரங்கக் கூட்டத்திற்கு எவரும் போகக் கூடாது. அப்படிச் சென்றால், அவர்களைப் பாடசாலையிலிருந்து நீக்கிவிடுவோம் எனக்கட்டளையிட்டார். இக்கூற்றே அக்கூட்டத்திற்குச் செல்ல வேண்டுமென்ற முடிவைத் தந்தது. அக்கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர் டாக்டர் ஏ.எல்.எம்.இஸ்மாயில், பேச்சாளர்களில் ஒருவர் எச்செம்பி முஹிதீன். எனவே, பாதர்குக் அவர்களின் கம்யூனிசம் பற்றிய பயமுறுத்தலுக்கு பயமே வரவேயில்லை. பிற்பகல் தனக்கூட்டத்திற்கிடையே எவரது கண்களிலும் படாமல்நாங்கள் அருகிருந்து சண்முகதாசனுடைய பேச்சை முழுமையாகக் கேட்டு ஆகர்சிக்கப்பட்டோம். அதன் விளைவுதான், என்னை அ.ந.கந்தசாமியின் மார்க்ஸிய வகுப்புக்குச் செல்ல உத்துதல் அளித்தது.
முதல்பாடத்திலேயே கம்யூனிஸச் சமுதாயத்தின் கோட்பாடெனத் தகுதிக்குத் தகுந்தஉழைப்பு,தேவைக்குகந்த ஊதியம் பற்றிவிபரிக்கப்பட்டன. 1பொதுச் சொத்துரிமை Common Ownership . 2. சமத்துவ விநியோகம் -Conson distribution 3. FLDggj6 (36urIu D fold - Commn use profit 4. gorybrusagld Democratic control 5.2 60giu6)goj60Luigid-Workகrule என்பன புற்றி அ.ந.க.அதிகமாக விபரித்த போது, இவ்வகுப்பில் மிக ஆர்வம் ஏற்பட்டது.
re
ஓண" - 2 (ஜனவரி 2004) பக்கம் 4
 

இவ்வகுப்பு முடிந்ததும் வெள்ளவத்தை இராம கிருஷ்ண ஒழுங்கையிலுள்ள சில்லையூர் செல்வராசன் வீடே தஞ்சமாகியது. மறுநாள் ஞாயிறு பிற்பகல், அங்கே தினகரன் ஆசிரியர் க.கைலாசபதி, முகம்மது சமீம், அ.முத்துலிங்கம், இளங்கீரன், எச்செம்பி. அ.ந.க., செ.கணேசலிங்கம், எஸ்.பொன்னுத்துரை இன்னும் சிலர் அங்கு தொடர்ந்து வந்தனர். எல்லோரும் வெளியேறி கொழும்பு வடக்கை நோக்கி நடந்தோம். இடையிடையே உலக இலக்கியம், தமிழ் இலக்கியம், இவை தொடர்பான ஏராளமான தகவல்களைக் கதைத்துக் கதைத்து வந்தனர் அவர்களது கதைகள் எனக்கு அதிகமாக விளங்கவேயில்லை. எனது இலக்கிய வளர்ச்சி அப்போது அப்படியிருந்தது. பம்பலப்பிட்டி நடுவில் எல்லோரும் பிளேன்டி குடித்தோம். மீண்டும் கதையும் நடையும் தொடர்ந்தது. கொள்ளுப்பிட்டி அல்ஹாரியா ஹோட்டலில் மீண்டும் பிளேன்ரி குடித்தோம். மீண்டும் நடையும் கதையும் தொடர்ந்து காலிமுகத்திடலில் ஓரிடத்தில் வட்டமாகக் கூடிக் கதைத்தோம். அப்போதுதான், தினகரனில் "நான் விரும்பும் நாவலாசிரியர்" தொடரை எழுதும் திட்டத்தைக் க.கைலாசபதி முன்வைத்துக் கதைத்தார்.
எம்.சமீம் அவர்களைப் பார்த்து கைலாஸ், "யாரைப்பற்றி எழுதப் போகிறீர்கள்?" என்றதும், அவர், "சார்ள்ஸ்டிக்கன்ஸ்" என்றார். இளங்கிரனை தகழி பற்றி எழுதுங்கள் என்று கைலாஸே சொன்னார். காண்டேகர் பற்றி எழுதுவதாகக் கணேசலிங்கம் ஏற்றார். "பொன்னுத்துரையாரைப்பற்றி எழுதப் போகிறீர்கள்?" என்றதும், "நான் யாரை எழுதுவது?" என்று தன்னைத்தானே கேட்டு நின்ற வேளை, சில்லையூர் செல்வராசன் "உனக்குரிய ஆள் அல்பிரட் முஹாவியாதான்" என்றதும், "அவர் பற்றி எனக்கொன்றும் தெரியாதே!" எஸ்.பொ.துடித்தபோது, "அத்தகவல் யாவும் நான் தருகிறேன்" என்று சில்லையூரான் சொன்னதும், "அதைத்தான் எழுதப்போகிறேன்" என ஒத்துக் கொண்டார். இவ்விதம் யார் யாரை எழுதுவது என்பதை அவ்விடத்திலேயே கைலாஸ் கூறித்தீர்த்தார். உண்மையில் அக்காலம் தினகரன் வாரமஞ்சரியில் வந்த இத்தொடர் இலக்கிய ஆர்வலருக்கும் சாதாரண வாசகருக்கும், பெரும் விருந்தாகவேயிருந்தது.
இக்கூட்டம் கலைய எத்தனித்தபோது, எனது டயறிக்குள்ளிருந்த கவிதை ஒன்றைக் கைலாஸிடம் கொடுத்தேன். அவர், அதை மடித்துக் கால்சட்டைப் பொக்கட்டுக்குள் திணித்துக் கொண்டார். எனக்கு வலு சந்தோசம். இரண்டு வாரங்கள் கடந்தும் அது பிரசுரமாகவேயில்லை. அவர்மீது எனக்கு அதிகமாகக் கோபம் எற்பட்டது. அடுத்த சந்திப்பில் அவர் அதை எடுத்து வந்து, "உனது கவிதை மூன்று பத்திகள். நீ எடுத்துக் கொண்ட பொருள் ஒரு பத்தியில் இறுக்கமாக முடிவுறுகின்றது. அப்படியானால், மற்ற இரண்டு பத்தியையும் ஏன்சளப்பியிருக்கிறாய்?மீண்டும் இதைச் சிந்தித்தெழுதி அனுப்பு" என்று கூறினார். அவ்விதம் அனுப்பியபின், அது பிரசுரமானது. இவ்விதம் எனது இலக்கிய எழுத்துக்களுக்கு வழியைத் திருத்திக் காட்டிய மனிதன்தான் க.கைலாசபதி, பிறகுதான் கேள்விப்பட்டேன்
பக்கம் 5 ஒலை" - 22 (ஜனவரி 2004)

Page 5
எனக்குமட்டமல்ல, எவருக்கும் வழிகாட்டுவதில் வலுவான திருப்தியுள்ளவர். உண்மையில் இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் அவரது காலம் பொற்காலமே ! கைலாசபதியின் எழுத்துக்கள் மட்டுமல்ல, அவர் வழிகாட்டிக் கொடுத்தவர்களின் துலக்கமும் அதில் அடங்கும். எடுத்த எடுப்பில் கொண்டுவரும் எழுத்துக்களைப் பிரசுரித்தால் நம்பிக்கையுடன் அவர்கள் வெளியாக்கிய நூல்கள் இலக்கிய உலகிலிருந்து காணாமற் போன கதைகள் அதிகம்.
நான்விரும்பும்நாவலாசிரியர் வரிசையில், அந.கந்தசாமிஎமிலிசோலாவைப் பற்றிஎழுதினார். அதுவெளிவந்த ஞாயிறன்றுமார்க்ஸியவகுப்பொன்றுநடந்தது. அன்று அவர் இந்நாவலாசிரியர்பற்றியும் "சுதந்திரன்" தினத்தாளாக வந்த காலம் அதில்தொடர்ந்துஎமிலிசோலாவின்"நாநா"நாவலைத்தமிழ்மொழியில்பெயர்த்தெழுதி வந்த கதையையும்கூறினார். மறுமலர்ச்சிக்காலத்தவரான அந.வின்சிறுகதைகள், கவிதைகள்,நாடகங்கள், இலக்கிய விமர்சனங்கள் உயர்ந்த இலக்கியத்தரம் வாய்ந்தவைகள். "மதமாற்றம்" எனும் அவரது நாடகம் அதிகமாக அவரது இளமைக்காலம் தொட்டு முதுமை வரை மேடையேறி, இலக்கிய அடையாளத்தை காட்டிநின்ற ஒன்று. இறுதியாக "தன்னைத்தானே மேனோக்கியவனாக"எழுதிய "வெற்றியின்இரகசியம்" எனும்வாழ்க்கைவழிகாட்டிய நூல், இறுதியாகத்தினகரன் வாரமஞ்சரியில்தொடர்ந்து66,67களில்தொடர்கதையாகவந்த 'மனக்கண்"எனும் நாவல். அதை ஆதியோடந்தமாக ஒருவரலாறுஉயர்ந்துஏற்றிநிற்கும் மனக்கண் நாவல்ஒருநவினநாவல் அதை ஆதியோடந்தமாக ஒருவாசகன்வாசிக்கும்போது நிறையத்தகவல்களை அறியலாம் கிரேக்கநாடகாசிரியரான"செபாக்களிஸ்"எழுதிய "ஈடிய்யஸ்ரெக்ஸ்"நாடகம், துஸ்யந்தன்சகுந்தலைகாதல் துட்டகைமுனுவின்மகன் சாலிய குமாரனுக்கும் பஞ்சகுலப்பெண் அசோகமாலாவுக்கும் ஏற்பட்ட காதல், அரிச்சந்திரபுராணம் காந்திமகான்வாழ்க்கையைமாற்றியநிகழ்வு.இளவரசர்அலிகான் றிட்டாஹேவோர்த்அந்யோன்யம் ஷேக்ஸ்பியரின்றோமியோஜுலியத் அரபுத்கதை லைலாமஜ்னு, பெர்னாட்ஷாவின் கூற்றுக்கள்.புறநானுற்றுச்செய்யுள்.இராமாயணக் கதை.நளன்தமயந்திதுது சிலப்பதிகாரஇந்திரத்திருவிழா, அலெக்ஷாந்தர்கோடியில் சந்திப்புசுவாமிவிபுலானந்தரதுசெய்யுள்வள்ளுவர்குறள்கள்,பழமொழிகள் வழக்குச் சொற்றொடர்கள்.நீட்சேயின்தத்துவவிளக்கம்சத்தியவான்சாவித்திரிகதை ஆங்கிலக் கவிஞன்மில்டனின் கவிதைகள், பிரசித்திபெற்ற குருடர்களான திருதராட்டினன், மாளவதேசத்து சத்தியவானின் தந்தை, தேபஸ் மன்னன்ஈடிப்பஸ், யாழ்ப்பாடி, ஆங்கிலக்கவிஞன் மில்டன் ஆகியோர், இளவரசி மாக்கிரட் காதல், சிந்தாமணியென்னும் தாசியின் தொடர்பால் தன் கண்ணைத் தானே குத்திக் கொண்ட வைணவ பக்தன் பில்வமங்கனின் கதை, சிந்தகன் என்னும் மேலைத்தேயச் சிற்பத் தோற்றம், பட்டினத்தார் பாடல்கள் என்னும் தகவல்கள் நிறைந்தநாவல் உலகச்சிறந்தஎழுத்தாளரானஸமர்ஸெட்மாம்எழுதியநூல்ஒன்றைய் படிப்பவர்பெறும்உலகத்தகவல்கள்போல்அந.கவின்நாவலிலும்தகவல்கள்நிறையப் பெறமுடியும் ஆழ்ந்த இலக்கியவாசகர்கள்இவற்றைநிறைய அறிவர்.
தேசாபிமானிசுதந்திரன்,வீரகேசரியூரீலங்காறிபியூன்ஆகியபத்திரிகைஆசிரிய
"ஒலை" - 22 (ஜனவரி 2004) பக்கம் 8

பீடங்களில் இருந்த அ.ந.கந்தசாமியின் தொடர்பு எனது இளமைக்காலத்தில் நீண்டது. கும்பனித் தெருவில் மலே வீதியில் Island Lodge-ஐலண்ட் லொட்ஜ் மலையாள ஹோட்டல் ஒன்றிலுள்ள அறையில்தான் அந்திம காலத்தில் அவர் வாழ்ந்தார்.
வைசூரியால் தாக்கப்பட்டு ஐடிஎச்சுக்கு அவரை எடுத்துச் சென்றுவிட்டார்கள். நானும் எம்.எஸ்.எம்.இக்பாலும் பார்க்கச் சென்றோம். தொற்று வியாதி என இடைமறித்தார்கள். எங்களைத் தொற்றாது எனப்பிடிவாதம் பிடித்தோம். தொற்றாமலிருக்கலாம். ஆனால், காவிச் சென்று யாருக்கும் கொடுத்துவிடுவீர்கள் எனக்கடுமையாகத் தடுத்தனார்.நாங்கள் அடம்பிடித்தோம். வெளியில் சென்றதும் உடைகளை டிட்ரோலில் கழுவுதல் அவசியம் எனும் ஒப்பந்தத்துடன் அனுமதித்தார்கள். அறிஞர் ஏ.எம்.ஏ.அஸிஸ் கண்டியில் அரசாங்க அதிபராக இருந்த காலம், சுவாமி விபுலானந்தர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகக் கடமை புரிகிறார். சுவாமிக்கு அம்மை நோய் கண்ட போது, அறிஞர் அஸிஸ் அவரை அழைத்து வந்து தனது வீட்டில் ஓர் அறையில் பூட்டி வைத்துக் கவனித்தார். இச்சம்பவம் எங்களிடம் உறைத்து நின்றது. நாங்கள் அ.ந.க.வுக்கேற்பட்ட கொடுரமான சூடான நோய்க்குரிய சூடான உணவு சமைத்துக்கொடுத்துவந்தோம். அவர் தேறிவிட்டார். ஆனால், அவரது அழகிய முகமெல்லாம் அடையாளமிருந்தது. அவர் மிகக் கவலை அடைந்தார். ஒலிவ் ஒயில் மாற்றிவிடும் என மன ஆறுதல் சொன்னோம். அவரை மீண்டும் அந்த மலையாள ஹோட்டலுக்குக்கு கொண்டு வந்தோம். அங்கு தங்கியிருந்தவர்கள் இவரைக் கண்டதும் அவர்களது இடத்தைக் காலி செய்து, அகன்றுவிட எத்தனித்தனர். வைசூரியின் பயம் அவர்களை வாட்டிற்று.
இதையறிந்த அ.ந.க., முதலாளியிடம் சென்று, "எனக்குக் குசினிக்குப் பக்கத்தில் ஓர் அறை தந்துவிடு" என்றார். அந்த முதலாளி சொன்னார். "அபய்படித்தர முடியாது.நீர் மேலேதான் உனது அறையில் தங்க வேண்டும். மற்றெவரும் இங்கே தேவையில்லை. அவர்கள் காலி செய்து வேறிடம் பார்க்கலாம். நீ சாகும் வரை இங்கேதான் இருக்க வேண்டும்" என்றதும், நானும் எம்.எஸ்.எம்மும் அழுதேவிட்டோம். ஒரு காலத்தில் சோறு கொடுத்த ஓர் ஏழைக்குடும்பத்துக்கு கொள்ளுப்பிட்டியில் இருந்த சொந்த வீட்டைத்
தானம் செய்த அந.க.வின் அறக்குணம் யாருக்குத் தெரியும்?
- தொடரும்
CD
பக்கம் 7 "ஓலை" - 22 (ஜனவரி 2004)

Page 6
இலங்கை' என்றிடும் இரத்தினத் தீவினுள் இனங்கள் தம்மிடை இணங்கலும், பிணங்கலும் இடைக்கிடை நிகழ்வதும், இடரினில் ஆழ்வதும் இதன்பின் அரசியல் வாதிகள் கூடியும், இன, மதத் தலைமைகள் பரஸ்பரம் சாடியும், இறுதியில் சமரசம் பேணிடக் கூறியும், பொறுமையாய் வாழ்ந்திடப் பொதுப்படச் சொல்லியும் அமைதியைநாட்டினில் அரங்கேற்றிடுவர்!
s
சிறிதுநாள் தீவினில் சாந்தி சிரித்தபின், சிதைந்து வெடிப்பதும்
சக்கரச் சுழற்சி போல் துக்கமுள்ளுறைவுகள்!
t
மாங்கனித் தீவினில் மனிதர்கள் ஒற்றுமை தேங்கனிச் சுவையுடன்
'ஒலை" - 22 (ஜனவரி 2004)
San GasTaTSR a
ஓங்கலை வெறுப்பதா? மதம், மொழிப் பெயர்களால் மதம்கொண்டழிவதா? சிந்தையில் இழிவினைச் சந்தையாய்க் கொள்வதா? மந்தையை முந்துமிவ் விந்தையை வளர்ப்பதா?
s
இலங்கையில் தோன்றிய சமயமொன்றுள்ளதா? இலங்கையில் தொடங்கிய மொழி, இனம் உள்ளதா? எல்லா மதங்களும், எல்லா இனங்களும் இந்தியா, அரேபியா, பலஸ்தீன நாடுகள் இதமுடன் தந்தவை என்பதை மறப்பதா? முந்தியும், பிந்தியும் வந்து இம்மண்ணிலே குந்தியோர் தாமெனச் சிந்தையிற் கொள்; விழி!
峰
ஆகம நெறிகளும், ஆன்றோர் உரைகளும் ஆளையாள் அழிக்கவா
பக்கம் 8
 

ஆழமாய் உரைப்பன? பழகிய உறவினை
புத்தரும், யேசுவும், பகைமையில் தோய்த்துநாழ் சித்தரும், நபிகளும் பழி, துயர் மிகைத்துநம்
நித்தமும் சொன்னவை பண்பினை மாய்ப்பதா?
யுத்தமா? கூறுக! இழிவழி எம்மதம்
அரசியல் செய்பவர் இதுவரை சொன்னது?
வலையினுள் சிக்கிநாம், விழி, எழு, மடமையை அழகிய தீவினை அழி, களி கொண்டுவாழ்! அழிவினில் தீய்ப்பதா?
- ஏறாவூர் தாஹிர்
ஈழத்தில் வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ்களின் வரிசையில்.
கடந்த காலங்களில் ஈழத்தில் வெளிவந்துநின்று போய்விட்ட ஈழத்து இலக்கியச் சிற்றிதழ்கள் பற்றிய விபரங்களை 'ஒலை' இதழ்களில் தர எண்ணியுள்ளோம். அவ்வாறான சிற்றிதழ்கள் வெளிவரத் தொடங்கிய காலம்- வெளியீட்டாளர். அதன் ஆசிரியர் - எப்பிரதேசத்திலிருந்து வெளிவந்தது. எத்தனை இதழ்கள் வெளிவந்தன - எப்போதுநிறுத்தப்பட்டது - நின்றுபோன காரணம், அவ்விதழ்களில் எழுதிய எழுத்தாளர்கள். - அவ்விதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள். அவ்விதழ்களின் அளவு, பக்கங்கள் பற்றிய விபரம் மற்றும் ஈழத்து இலக்கிய உலகில் அவ்விதழ்கள் ஏற்படுத்திய தாக்கங்கள், பங்களிப்புகள் முதலிய விபரங்களை உள்ளடக்கியதான கட்டுரை ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம். 'ஒலையின் ஒவ்வொரு இதழிலும் அவ்வாறான சிற்றிதழ்கள் ஒவ்வொன்றின் விபரமும் தனித்தனியே வெளியிடப்படும். எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் உங்களுக்குத் தெரிந்த 'சிற்றிதழ் பற்றி எழுதி அனுப்புங்கள். அத்துடன் அவ்வாறான சிற்றிதழ்களின் பழைய பிரதிகளை ஆவணப்படுத்துமுகமாக விலைகொடுத்து வாங்கவும் தயாராயுள்ளோம். அவ்வாறான பிரதிகள் கைவசமுள்ளவர்கள் 'ஒலையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
-ஆசிரியர்
Luišsió 9 , 'ஒலை" - 22 (ஜனவரி 2004)

Page 7
பன்மொழிப்புலவர்.த.கனகரத்தினம்
மொழியைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள் பல உள. அவற்றின் அடிப்படையில் "இலக்கண உலகிலேயே ஒரு மறுமலர்ச்சி ஏற்படல் வேண்டும்; புதிய புதிய கொள்கைகள் தோன்றல் வேண்டும்; இன்றைய தேவைக்கேற்ப ஒரு முழுமையான சிறந்த இலக்கணமும் தோன்றல் வேண்டும்; மொழியியல் நோக்கில் இலக்கண உலகில் மறுமலர்ச்சி தோன்றல் வேண்டும்" என்றே இன்றைய மொழியியலாளர் கருதுகின்றனர். இவர்கள் கூற்றுக்கும், மறுமலர்ச்சிக்கும் இன்று இருக்கிற இலக்கணங்களைச் சரியாக விளங்கிக் கொள்ளல் வேண்டும். இன்றைய வழக்கிலுள்ள செந்தமிழில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உற்று நோக்குதல் வேண்டும். அதன் பின்னரே, தேவையான சீர்திருத்தங்கள் பற்றிச் சிந்தித்தல் வேண்டும். தொல்காப்பியர் காலத்தில் இல்லாத இலக்கண வழக்குகள் இக்காலத்தில் உண்டு. தொல்காப்பியர் காலத்தில் நிகழ்காலத்துக்கென ஒரு தனியான இடைநிலை இல்லை. நன்னூலார் காலத்தில் (12ஆம் நூற்றாண்டில்) கிறு. கின்று என்ற நிகழ்கால இடைநிலைகள் மொழியில் இடம் பெற்றுவிட்டன. நன்னூலார் தான் இதற்குத் தம் இலக்கணத்தில் இடமளித்தார். அந்த இடைநிலைகளுக்கு நிலையேறும் தந்தார். வருகின்றார், படிக்கின்றார். நடக்கின்றார். பேசுகின்றார் வருகிறார். படிக்கிறார். நடக்கிறார். பேசுகிறார் என்றவாறு சொற்களை நிகழ்காலத்தில் உபயோகிக்கின்றோம்.
இன்றைய வழக்கிலுள்ள செந்தமிழில் வந்திருந்தார் வந்திருக்கிறார். வந்திருப்பார் எனவும் வந்துவிட்டார், வந்து விடுகிறார் வந்துவிடுவார் எனவும் வாங்கிக் கொண்டார். வங்கிக் கொள்கிறார். வாங்கிக் கொள்வார் எனவும் வரக்கூடும் வரவேண்டும். வரலாம் எனவும் பல்வேறு வினை வடிவங்கள் தோன்றியுள்ளன. இவை இலக்கண வழக்கில் ஏற்பட்ட புதியவளர்ச்சி. இவற்றிற்கு இலக்கண உலகம் நிலை பேறளித்தல் வேண்டும். அப்போதுதான் மொழியில் புதிய வளர்ச்சிக்கு இடம் ஏற்படும்'என்பது மொழியியலாளர் கருத்தாகும். தமிழில்வினைச்சொற்கள், பெயர்ச்சொற்கள். இடைச்சொற்கள், உரிச்சொற்கள் என நாலுவகை உண்டு. ஒரு பொருளின் செயலை உணர்த்துவது வினைச்சொல். காலம் உணர்த்துவது வினைச்சொல்லின் சிறப்பியல்பாகும்.
காலம் வெளிப்படையாகவும், குறிப்பாகவும் உணர்த்தப்படும். உதாரணமாக
ஓலை" - 2 (ஜனவரி 2004) Aiakui 10
 

உண்டான் என்பது இறந்தகாலம். உண்கிறான் என்பது நிகழ்காலம். உண்பான் என்பது எதிர்காலம். காலம் வெளிப்படையாகக் காட்டுவது தெரிநிலைவினை. காலம் குறிப்பாகக் காட்டுவது குறிப்புவினை. இதற்கு உதாரணம்: உடையான், உண்டு. இல்லை. இவை காலத்தைக் குறிப்பாகக் காட்டுவதால் குறிப்புவினை எனப்படும்.
தெரிநிலை வினைகள் யாவும் திணை, பால்களிலே முக்காலங்களிலும் அடையும் வேறுபாடுகள்வினைத்திரிபு எனப்படும். வினைத்திரிபு அடிப்படையிலே தமிழ்வினையடிகள் எல்லாவற்றையும் 12 வகையுள் அடக்கலாம். (செய், ஆள், கொல், அறி, அஞ்சு, நகு, உண், தின், கேள், கல், பார், நட) அப்பன்னிரு வகைக்கும் பன்னிருவாய்பாடுகள் காட்டப்பட்டுள்ளன.
நன்னூலாசிரியர் வினையடிகளின் ஈறுபற்றி,
நடவா மடிசீ விடு கூவே வை நீொ. பொ, வெள உரிஞ், உணர், பொருந், திரும், தின் தேய். பார். செல், வவ் வாழ், கேள். அஷகென் றெய்திய விருபான் மூன்றா, மீற்றவுஞ் செய்ய னேவல் வினைப் பகாப்பதமே" எனக்கூறியுள்ளார்.
இவ்வினையடிகளில் 350 ற்கு மேற்பட்ட வினையடிகளை, சுன்னாகம் குமாரசாமிப்புலவர் வினைப்பகுபதம்’ எனும் நூலில் விளக்கியுள்ளார். சொல்வளம் பெருக்கற்கு இவை பற்றிய அறிவு அவசியமாகும்.
வினையடிகளைப் பற்றிய அறிவின்மையால் பிழையான முறையில் சொற்கள் உபயோகிக்கப்படுகின்றன. பத்திரிகைகளிலும், பிரசுரங்களிலும் அப் பிழையான சொற்கள் வெளிவருகின்றன.
முயற்சி செய்தான், முயற்சி பண்ணினான், முயற்சி செய்கிறான் முயற்சி பண்ணுகிறான்; முயற்சி செய்வான், முயற்சி பண்ணுவான் என்று கூறுவது பிழையான வழக்கு. அத்துடன் நீண்ட தொடர். முயற்சி என்பது தொழிற்பெயர். அதனுடன் செய்தான் என்ற தெரிநிலை வினைமுற்று உபயோகிக்கப்படுகிறது. முயற்சி என்பதன் வினை அடி முயல் என்பதாகும்.
எனவே, முயன்றான். முயல்கிறான். முயல்வான் எனக் கூறுவதே சரி.
அவ்வாறே பயிற்சி செய்தான், பயிற்சி செய்கிறான், பயிற்சி செய்வான் என்பனவற்றை விடுத்து, பயின்றான் பயில்கிறான், பயில்வான் என வழங்குவதே சரியாகும்.
&
பக்கம் 11 "ஒலை" - 22 (ஜனவரி 2004)

Page 8
O O O O காசி ஆனந்தன் நறுக்குகள்
முன்னுரையிலிருந்து.
புதிய உரை இலக்கியம், ஆங்கிலத்திலும், பிரெஞ்சிலும் இருந்தே தமிழில் புகுந்ததென்பார் கூற்றுப் பச்சைப் பொய்யாகும்.
சிறுகதைகளும், புதினங்களும் ஆங்கில பிரெஞ்சு இலக்கியங்களாய் மலர்வதற்கு முன்பே - தமிழ் மண்ணில் பல்லாயிரம் ஆண்டுகளாய் கதை சொல்லிகளின் வாயில் சிறுகதைகளும் புதினங்களும் சிலிர்த்துக் கிடந்ததை - இன்றும் வாய் மொழி இலக்கியங்களாய் அவை சிற்றுார் மக்களிடையே நின்று நிலவுதல் அறிவோம்.
உருவகக் கதை தமிழுக்கு மேனாடு தந்த கொடை இல்லையா? எனக் கேட்பார் உளர்.
'காக்கை உட்காரப்பனம்பழம் விழுந்த கதை' போன்ற தமிழ்ப்பழமொழிகள் பல ஒற்றைவரி உருவகக் கதைகளாய் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நம் காதுகளில் நிறைந்து கிடப்பவை.
இந்நூலின் நறுக்கு இலக்கியமும் இத்தகையதே. உரை இலக்கியமான நறுக்கின் வேரும் முளையும் கூட பண்டைத் தமிழ் இலக்கியமான பழமொழிகளில் உயிர் கொண்டவை என்பதே உண்மை.
பதினெண்கீழ்க் கணக்கில் முன்றுறையரையனார் பாடிய பழமொழிநானூறு' எனும் நூலில் இடம் பெற்றுள்ள, அவர் காலத்துக்கும் பல்லாயிரம் ஆண்டுகள் முந்திய பழமொழிகள் இவை: r
"முள்ளை எடு
முள்ளால்
இப்பழமொழிகள் நறுக்குகளா இல்லையா?
தறுக்கென நாலு சொல் கூறிவிட்டுப் போகிறான்' என்பார்களே - அதனால் இவ்வகை உரை இலக்கியத்தை நறுக்கு' என்கிறேன் நான்.
முன்றுறையரையனார் மேலே உள்ள இரு பழமொழிகளையும் பதிவு செய்த காலம் கி.பி.5ஆம் நூற்றாண்டு.
வியப்பு என்ன தெரியுமா?
op
ஒலை" - 2 (ஜனவரி 284) பக்கம் 12
 

இதே நூற்றாண்டில்தான் ஆங்கில மொழியே தோன்றிற்று. இதற்கும் பிந்தியதாய் கி.பி.7ஆம் நூற்றாண்டில்தான் பிரெஞ்சு மொழி பிறக்கிறது.
புதுப்பா (புதுக்கவிதை) எனப்படும் இலக்கியத்தைத் தொடக்கியவர் புலவர் வால்ட் விட்மன் என்கிறார்கள்.
இவர் பைபிளின் பழைய ஏற்பாடு, பகவத் கீதை ஆகிய நூல்களின் மொழிபெயர்ப்பைப் படித்திருக்க வேண்டும். இவர் படைப்பின் நடை பழைய ஏற்பாட்டையும் கீதையையும் ஒத்ததாகவே இருக்கிறது"
61601 2 6Uæ5ór Glerilsi) á56IIGheflu Júb(The world Book of Encyclopedia) Gngjaflog.
Tley my teaching drop as the rain, my speech distill as the dew, as rain drops on the tender herb, and as showers on the grass." -பைபிள்
"I give heat, I hold back and send forth rain, I am the immortality as well as death, existence and non – existence' - கீதை
"I Saw in Louisiana a live - oak growing. All alone stood it and the moss hung down from the branches. Without any companion it grew there uttering joyous leaves of dark green' - - வால்ட் விட்மன்
பாக்களா? இவை உரைகளா?
உரை இலக்கியமே இவை என ஆங்கில இலக்கிய ஆய்வுகள் உறுதிபட மொழிகின்றன.
பொங்கிப் பாயும் நறுக்கு' இலக்கியத்தைப்போல் விறைப்பாகவும் வீச்சாகவும் அல்ல - பூக்களை அள்ளித் தெளித்தது போன்ற ஒர் உரைக் கோலமே பைபிளும் கீதையும் விட்மனின் புதுப்பா (புதுக்கவிதை) எனப்படும் பொழிவுகளும் என்பேன்.
சிதறிய சொற்களாய்க் கிடக்கும் இவ்வகை உரை இலக்கியத்தை நான் சிந்தல்' இலக்கியம் (உரைச் சிந்தல்) "Prose Sprinkle என்கிறேன்.
அல்லது -
தன்பாட்டில் ஓர் இலக்கியன் கிறுக்கித் தள்ளும் எழுத்துக்களாய்த் தோன்றுவதால் இதனைக் கிறுக்கல்' இலக்கியம் (உரைக் கிறுக்கல்) "Prose Scribble 616ógé(3p6ó.
வால்ட் விட்மன் (1819 - 1892) ஆங்கிலத்திலும், அவர் காலத்திலேயே வாழ்ந்தவர்களான ஆர்தர் ரிம்போ (1854 - 1891) பிரெஞ்சிலும், கலீல் கிப்ரான் (1883 - 1931) அரபிக்கிலும், பாரதி (1882 - 1921) தமிழிலும் 'சிந்தல் (அல்லது "கிறுக்கல்) இலக்கியத்தை வாரிப் பொழிந்தார்கள்.
பாரதி, தான் எழுதிய 'காட்சி உரைக் கிறுக்கலை 'பா'(வசன கவிதை) என என்றுமே சொன்னதில்லை.
பழைய ஏற்பாடும் கீதையும் எபிரேய - சமற்கிருத இலக்கணங்களுக்கு அமையப் பிறந்த பாக்களாகக் கூட இருக்கலாம். ஆனால், அவற்றின் மொழிபெயர்ப்புபாக்களாக இல்லை. அம் மொழிபெயர்ப்பின்நடை ஒட்டிப்பிறந்த விட்மனின் படைப்பாக்களும் பாக்களாக இல்லை.
விட்மனின் புதுப்பா (புதுக்கவிதை) எனப்படும் இலக்கியம் பற்றி விளக்க வந்த பாரதி, தளையும் சந்தமும் இல்லாத கவிதை வழக்கமில்லை' என்கிறார்.
பாரதி வழிவந்த புரட்சிப் பாவலர் பாரதிதாசனாரும் உரை இலக்கியம்
பக்கம் 13 'ஒலை" - 22 (ஜனவரி 2004)

Page 9
ஒன்றினைப் புதுப்பா (புதுக்கவிதை) என மொழிவார் மீது சினங்கொண்டு பாய்ந்தவரே.
சிந்தல்' இலக்கியர் வால்ட் விட்மனின் இலக்கிய வரலாற்றில் இன்னொரு செய்தி
விட்மன் ஆங்கிலத்தில் 'புல்லின் இலைகளை எழுதிய அதே காலத்தில்தான் ரிம்போ பிரெஞ்சில் வெளிச்சங்களை எழுதினார்.
ஆனால் - இலக்கியர் விட்மனின் அறிமுகம் (தாக்கம்) இல்லாமலே ரிம்போ இதை எழுதினார் என்கிறது இலக்கிய வரலாறு.
பாரதியின் காட்சியும் இத்தகையதே. விட்மனின் தாக்கத்தால் பாரதி 'சிந்தல்' (அல்லது "கிறுக்கல்) இலக்கியம் படைத்திருந்தால் விருப்போடு அச்செய்தியை அவன் பதிவு செய்திருப்பான்.
எதிலும் புதுமை காண விழைந்த பாரதியின் உரை இலக்கியப் புரட்சியே காட்சி' என்பேன்.
இம் முன்னுரையில் நான் சொல்லவிரும்புவது இதுதான்:
புதுப்பா (புதுக்கவிதை) என இன்று அழைக்கப்படுவது 'பா'அல்ல உர்ை இலக்கியமே.
புதுப்பா' எனும் பேரில் படைக்கப்படும் இலக்கியம் இரு வகையானது. ஒன்று 'பளிச்சென வீச்சாகப் பாயும் நறுக்கு'. இன்னொன்று, சிதறிய சொற்களாகச் சொரியும் சிந்தல்' அல்லது "கிறுக்கல்'
நறுக்கு, பல்லாயிரம் ஆண்டு காலத் தமிழ்ப் பழமொழிகளில் முளை கொண்டு தழை கொண்டு பயிரானது. 'சிந்தல்' அல்லது. "கிறுக்கல்' விட்மனின் தாக்கமின்றிப் பாரதி சிறப்பிலக்கியமாய்த் தமிழுக்குத் தந்து போனது.
இந்நூலில் நான் படைத்திருப்பது நறுக்கு இலக்கியமே.
- காசி ஆனந்தன் இலக்கியம்
களத்தில் தோரணம் நிற்கிறேன். கட்டும் என் தொழிலோ
-、 ѣ(з5? இலக்கியத்தில் எனககு வாளில்
கூர்மை பார்.
-இன்னும் நறுக்குகள் வரும்
భ#
நன்றி: "காசி ஆனந்தன் நறுக்குகள் வெளியீடு:காசி ஆனந்தன் குடில், சென்னை
'ஒலை" - 22 (ஜனவரி 2004) பக்கம் 14
 

திருவள்ளுவர் திருநாள் 16.01.2004
திருவள்ளுவர் திருக்குறளில் காட்டிய புதுமைகளும் புரட்சிக் கருத்துக்களும்
திருக்குறள் சிந்தனையாளர் இ.சிறிஸ்கந்தராஜா
இறைவன் பூமியில் மக்களைப் படைத்ததே. சான்றோனாக வாழவும், சாதனைகள் படைக்கவும் வாழ்க்கையில் வெற்றி பெறவுமே. இவைகளை அடையக் கலங்கரை விளக்கமாக இருப்பது திருக்குறளே. வாழ்க்கையை உயர்த்தும் ஏணி திருக்குறள். தமிழ் மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட பெரும் வற்றாத செல்வம் திருக்குறள் என்றால் பிழையாகாது. திருக்குறளில் வள்ளுவப் பெருந்தகை செய்த புதுமைகளையும் புரட்சிகளையும் பார்ப்போம்.
சங்க காலத்தில் ஆண்டி முதல் அரசன் வரை மதுஅருந்தும் பழக்கமும், சூது, விலைமகளிடம்செல்லும்பழக்கமும்சாதாரணம் இதை அக்காலப்புலவர்கள்ஆதரித்துய் பாடியதைபழையஇலக்கியநூல்கள்மூலம் அறியக்கூடியதாகயிருக்கின்றது.வள்ளுவர் மட்டுமே இவற்றைக்கண்டித்துஇவ்வழக்கங்கள்வாழ்க்கையைக்குட்டிச்சுவராக்கும், வறுமையை உண்டாக்கும் என் உலகுக்கு எடுத்துக் கர்ட்டியவராவார். அறியாமை இருளில் மூழ்கிவாழ்க்கையை அறியாது இருந்த மக்களுக்கு தீமை பயக்கும் என்று எடுத்துக்காட்டிச்சிந்தன்ைய்புரட்சியைஏற்படுத்தியதுமட்டுமன்றிதிருக்குறளில்தனித்தனி அதிகாரம் வைத்தும்கண்டிக்கின்றார். வரைவின்மகளிர்கள்ளுண்ணாமை சூதுஎன்ற அதிகாரங்களை வைத்துதீமையை அழகாக எடுத்துக்காட்டுகிறார்.தீமைபயக்கும் மூன்றையும் ஒரு குறளிலே வலியுறுத்திசுவைபடக்கூறுகிறார்.
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திரு நீக்கப்பட்டார் தொடர்பு (குறள் 920) பொதுவுடமைக் கோள்கை உடைய அடிப்படைக் கருத்துக்களை 2000
வருடங்களுக்கு முன்னரே வலியுற்த்தியது வியக்கக் கூடியது அல்லவா?அதை அறத்தின் அடிப்படையில் கூறி குறளில் வலியுறுத்துவதைக் காணலாம்.
பகுத்து உண்டு பல் உயிர் ஒம்புதல் நூலோர்
தொகுத்த வற்றுள் எல்லாம் தலை (322 குறள்) W ○
இக்குறள் மூலம் நாட்டினுடைய செல்வம் மிதமிஞ்சிய அளவுக்கு மேல் ஒரு சிலரிடம் தங்காமல் எல்லாக் குடிமக்களுக்கும் பகிர்ந்து அளித்துதானும் உண்டு பயன் பெறச் செய்ய வேண்டும் என்று கூறியதை வியந்து பாராட்டாமலிருக்க முடியாது. மேலைநாடுகளிடையே சிந்தனைச் சிற்பி கார்ல் மார்க்ஸ் போன்ற அறிஞர்கள் பொதுவுடமைக் கருத்துக்களைப் பரப்ப முன்னரே குறளில் அதன் அடிப்படைத் தத்துவத்தைக் கூறியிருக்கிறார் வள்ளுவர். புரட்சிகரமான எண்ணங்களும் சிந்தனையுடையவர் என்பது புலனாகின்றது.
ஆராய்ச்சிசெய்கிறவர் ம்வழிகாட்டியாக பச்சிசெய்யத்துண்
பக்கம் 15 "ஒலை" - 22 (ஜனவரி 2004)

Page 10
வள்ளுவரே. யார் எதைக் கூறினாலும் ஆராய்ந்து அதன் உண்மைப் பொருள் மெய்ப் பொருளைக் கண்டறிய வேண்டும் என்று புரட்சி செய்தவர் வள்ளுவர். கடவுளுடைய வேத வாக்குகள் இவை, இவைமுனிவருடைய கூற்றுக்கள். எனவே ஆராயப்படாது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். ஆராய முற்பட்டால் பொருத்தமற்றது என்று கூறின் கடவுளின் சாபத்திற்கு ஆளாவீர்கள். நரகத்தில் உழல்வீர்கள் என்று நூல்கள் முழங்கிய காலத்தில் யார் எவற்றைக் கூறினும் உண்மை கண்டறியப்பட வேண்டும். ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று சிந்தனைப் புரட்சி செய்தவர் வள்ளுவரே. இவை குறளி மூலம் வலியுறுத்தப்படுவதைக் காணலாம்.
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் எத் மெய்ப்பொருள் காண்பது அறிவு (குறள் 423)
எப்பொருள் தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு (குறள் 355)
உலக வரலாற்றில் முடி சார்ந்த மன்னர்களை மக்கள் கொதித்து எழுந்து எதிர்த்துப் புரட்சி செய்ததை நாம் அறிவோம். ஆனால் வள்ளுவரோ முடிசார்ந்த மன்னரை மட்டும் அல்ல கடவுளையே எதிர்த்து அவர் கெட்டழிந்து போகட்டும் என்கிறார். உலகில் சிலர் இருந்து பிச்சை எடுத்துத்தான் வாழவேண்டுமென்று கடவுள் படைத்திருந்தால் அத்தகையோரைப்படைத்த கடவுளும் அவர்களைப் போல் அலைந்து திரிந்து அல்லற்பட்டு கெட்டு அழிய வேண்டும் என்று குமுறி எழுதியிருக்கிறார்.
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகஇயற்றி யான் (குறள் 1062)
(இக்குறளுக்குப் பலவிதமான மாற்றுக் கருத்துக்களும் உண்டு)
திருக்குறளில் வள்ளுவர் செய்த புதுமைகளைப் பார்ப்போமானால் சொற்களில், எழுத்துக்களில், குறள்களை அமைத்த விதம் எல்லாமே புதுமையாகவும் வியப்பாகவும் உளது. இச்சிறு கட்டுரையில் மேலோட்டமாக சில புதுமைகளைத் தொட்டுக் காட்ட விரும்புகிறேன்.
பதினாறு செல்வங்கள் எவையென வரையறுத்து நூல்களில் கூறப்பட்டுள்ளது.நாம் ஒருவரை வாழ்த்தும் பொழுது பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துவோம். ஆனால் குறிப்பிடாத செவிச் செல்வத்தைச் செல்வத்துள் செல்வம் என்று குறளில் சொல்வது புதுமையாகவும் வியப்பாகவும் இருக்கின்றது. (குறள் 411)
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் -அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.
குவளை நீரில் மலரும் மலராகும். இப்பூவை உவமையாகக் கையாளும் போது இம் மலர் தலைவியைக் கண்டவுடன் அவளுடைய ஒளி வீசும் அழகிய கண்களைத் தான் ஒத்திருக்கவில்லை என்று வெட்கி நாணத்துடன் அவள் தரையில் நிற்பதால் நிலத்தையே நோக்குவதாகப் புதுமையாக குறளில்
"ஒலை" - 22 (ஜனவரி 2004) பக்கம் 18

நீரில் மலரும் பூ நீரைக் கவிழ்ந்து நோக்காது நில்த்தைக் கவிழ்ந்து நோக்கிறதுஎன்று குறளில் கூறுவது வள்ளுவரது புலமைக்கு மேலும் பெருமையும் புதுமையும் சேர்க்கிறது. (குறள் 1114)
காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும் மாணிஇழை கண் ஒவ்வேம் என்று
1330 குறள்களிலும் இருகுறள்களில்தான் கா, நா என்று எழுத்துக்களை ஐந்து முறையும் ஒரு சொல்லை ஐந்துமுறை வைத்து இரு குறள்களை கையாளுவதும் புதுமையாக வருவதைக்காணலாம்.
127வது குறளில் ஐந்துமுறை கா, கா, கா, கா, காவலியுறுத்திசுவையாகத் தருகிறார். நா காக்கா என்று *V.
கொலை வாளிலும் கொடியதுநாக்கு. வாள் கண்டவனை மட்டும் கொல்லும், நாக்கு காணாதவரையும் கொன்றுவிடும் . எனவே வாளிலும் வலிமையுடையது நாக்குஎன்றும்நாகாக்கவேண்டுமென்பதை வலியுறுத்திசுவையாகக்கூற
யாகாவார் ஆயினும் நாகாக்க, காவாக்கால்
சோகாப்பர் சொல் இழுக்குப்பட்டு
ஐந்து முறை சொல் என்று வரும் குறள் நாம் வாழ்க்கையில் சிறந்த நிலையை எய்த வேண்டுமானால் பயனில்லாதவற்றைக் கூறிக் காலத்தையும் ஆற்றலையும் வீணாக்கக் கூடாது. ஆனால் இன்னாத கூறல், பொய் கூறல், புறங்கூறல் என்பன போன்ற குற்றங்களைப் புரிந்து விடுகிறோம். எனவே பயனுள்ளவற்றைப் பேசி ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும் என்பதைச் சொல்ல இக்குறளில் சொல் என்ற பதம் ஐந்து முறை வருகிறது.
சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல் (குறள் 200)
குறளில் ஒன்று இரண்டு, மூன்று என்று முறையே நான்கு, ஐந்து, ஆறு, ஏழு எட்டு எண்களை வலியுறுத்துவதைக் காணலாம். இவை மட்டுமல்லாது பத்துநூறு ஆயிரம், ஒரு கோடி எழுபது கோடி, அடுக்கிய கோடி என பல எண்களைக் குறளில் சொன்னவர் ஒரு இடத்திலாவது ஒன்பது என்ற எண்ணைக் குறிப்பிடாதது புதுமையும் விந்தையுமாகும்.
1330 குறள்களையும் கற்கும் போது சில எழுத்துக்களிலிருந்து குறள்கள் ஆரம்பிக்கப்படாததை அவதானிக்கலாம். பின்வரும் எழுத்துக்களிலிருந்து கி. கீ, சே, சோ, சை, நே, நொ, பூ, மீ மூ எந்தக் குறளும் ஆரம்பமாகவில்லை. பின்வரும் எழுத்துக்களில் இருந்து ஒரு குறள் மட்டும் வருவன. குறள், 484, ஞாலம், குறள் 236 தோன்றிப் புகழோாடு குறள் 683 நூலாருள், குறள் 475 பீலி பெய் சாகாடும் குறள் 693 போற்றின் குறள் 838 மையல் ஒருவன் குறள் 90 மோப்பக் குழையும் என்பனவாகும்.
112ஆம்அதிகாரத்தில் 1113ஆவதுகுறளில் ஐந்துஉவமைகளைச்சித்திரித்துக் w a மகர்போர்மனச் க்கொள் கொள்ளப்
அமைத்தது. அவரது கவிபுனையும் ஆற்றலை வகுத்து இயம்புகிறது. குறள் 1113
பக்கம் 17 "ஒலை" - 22 (ஜனவரி 2004)

Page 11
முறிமேனி முத்தம் முறுவல் வெறி நாற்றம்
வேல் உணர் கண் வேய்த்தோளவட்கு
இக்குறளில் வரும் ஐந்து உவமைகளாவன (1) மூங்கில் போன்ற தோளை யுடைவர் (2) மேனியோ மாந்தளிர் நிறம் (3) வெண் முத்து போன்ற பற்கள் (4) வேல் போன்ற கூரிய கருவிழியுடையவள் (5) இயற்கையாக நறுமணம் வீசும் உடல் என்பனவாகும்.
ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள்களையும் முடிக்கும் போது இறுதியில் சொற்களை வைத்து முடித்தவர் ஒரே ஒரு குறளை மட்டும் இறுதியில் ஒரு எழுத்தை வைத்து முடிப்பதும் அவருக்கு வெண்பா புனைவதில் உள்ள புலமைகசூச் சான்று பகருகின்றது. குறள் 1159
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற் சுடல் ஆற்றுமோ தீ
சங்க காலப் புலவர்கள் பெரும்பாலும் ஆசிரியப் பாவிலும் வஞ்சிப்பா, கலிப்பாவிலும் பாக்கள் இயற்ற வள்ளுவப் பெருந்தகையோ, குறள் வெண்பாக்களால் முழு நூலினையும் யாத்தது செய்யும் யாப்பிலும் பெரும் புரட்சியை எற்படுத்தினார். தமிழ் இலக்கிய உலகில் ஏழு சீர்களில் வெண்பா பாடி புரட்சி செய்த பெருமை வள்ளுவருக்கே உண்டு. நாடு, இன, மத மொழி பேதங்களைக் கடந்து திருக்குறளை இயற்றியதால் உலகில் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் தங்கள் நூல் எனச் சொந்தங் கொண்டாடுவதே வள்ளுவப் பெருந்தகையின் புகழையும் நூலின் சிறப்பையும் எழுத்தியம்புகின்றது.
பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை கற்பிப்பக்கப்படும் நூல் என்ற பெருமை திருக்குறளுக்கு உண்டு. கற்றறிந்த அறிஞர் பெருமக்களும் பல்வேறு துறையைச் சார்ந்தவர்கள் தாம் நோக்கும் விதமாக திருக்குறள் அமைந்திருப்பது நூலின் சிறப்பு அம்சமாகும். பொருளாதாரம் கற்போருக்கு பொருளாதார நூலாகவும் சட்டத்துறையில் ஈடுபடுவோருக்குச் சட்ட நூலாகவும், இலக்கியத் துறைளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இலக்கிய நூலாகவும் அறநூலாகவும் திருக்குறன் அமைந்திருப்பது நூலின் சிறப்பாகும். உலகில் வேறு ஒரு நூலிற்கு இத்தகைய சிறப்பும் புதுமையும் கிடையாது.
திருக்குறளில் வரைவின் மகளிர் என்ற புதிய சொல்லைப் படைத்து தனி அதிகாரமாக அமைத்து அவ்வதிகாரத்தைக் காமத்துப் பாலில் வையாது பொருட்பாலில் அமைத்தது புதுமையாகவும் வியக்கத்தக்கதாகவம் இருக்கின்றது. சங்ககால இலக்கிய நூல்களில் விலை மகளிர், பொதுமகளிர் பரத்தையர், வேசிப் பரத்தையர் காமக்கிழத்தி, கணிகை மகளிர் என்னும் சொற்பதங்களை கற்பு நெறியை போற்றாமல் பொருளாசை கொண்டு ஆடவரை நாடி வாழும் மகளிரைக் குறித்தன. இச்சொற்களை குறளில் கையாளாது வரைவின் மகளிர் என்ற சொல்லை வள்ளுவர் கையாண்டுள்ளார். வரைவின் மகளிர் என்ற சொற்பதம் திருக்குறளுக்கு முற்பட்ட இலக்கிய நூல்களில் ஆளப்படவோ போற்றப்படவோ இல்லை. இவை வள்ளுவர் செய்த புதுமையும் புரட்சியுமாகும்.
"ஓலை" - 22 (ஜனவரி 2004) பக்கம் 18

உலகின் பல பாகங்களில் கண் முன்னே நடந்த நடக்கின்ற நிகழ்ச்சிகளும் குறளும் ஒத்துப் போவதைக் காணவியப்பாகவும் புதுமையாகவும் இருக்கின்றது. எக்காலமும் பொருந்தக் கூடியதாகக் குறளை அமைத்தது போற்றுதற்குரியதாகும். சில சம்பவங்களை நோக்கின் இது சரியெனப் புலனாகும். 1948ம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ம்திகதி பிற்பகல் மகாத்மா காந்தி பிரார்த்தனை மேடையை நோக்கிக் கொண்டிருந்த போது கூட்டத்தினரோடு வீழ்ந்து வண்ங்குவது போல பாசாங்கு செய்த கொட்சே என்பவன் கையில் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் காந்தியைச் சுட்டான். இதை வள்ளுவர் 2000 வருடங்களுக்கு முன்னரே குறளில் சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார். தொழுத கையுள்ளும் படையொடுங்கும் என்பது அவர் எழுதி வைத்த குறள். (குறள் 828)
தொழுதகை உள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார் அழுத கண்ணிரும் அனைத்து
எயிட்ஸ் நோய் இன்று உலகை ஆட்டிப்படைப்பதுடன் மருத்துவ உலகமும் விஞ்ஞான உலகமும் இதற்குச் சரியான மருந்தைக் கண்டுபிடிப்பதில் குழம்பிப் போயிருக்கின்றன. வள்ளுவரோ 2000 வருடங்களுக்கு முன்னரே எயிட்சுக்கு மருந்தைக் கண்டு அதைக் குறளில் வலியுறுத்தி இருக்கின்றார். ஒழுக்கம் தான் சிறந்த மருந்து என்றும் ஒழுக்கம் உடையவர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் மறைமுகமாகவும் நேரடியாகவும் வலியுறுத்தியது புதுமையாக இருக்கிறது.
திருக்குறள் நூலின் புதுமை என்னவென்றால் திருவள்ளுவர் தமிழ்நாட்டில் பிறந்தவராக இருந்தாலும் தனது ஊரின் பெயரையோ அல்லது தனது பெயரையோ குறளில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. இதே போன்று பல அதிகாரங்களில் மன்னன், மன்னவன், வேந்தன், வேந்தர் என்று நாடாளுபவர்களைக் குறிப்பிட்டிருக்கிறாரே தவிர எந்த ஒரு மன்னரின் பெயரையும் குறிப்பிடவில்லை. நாடு என்ற அதிகாரத்தில் நாட்டைப்பற்றிச் சுவைபடக்கூறியவர். நாட்டின் பெயரையோ ஊரின் பெயரையோ குறிப்பிடவில்லை. மருந்து என்ற அதிகாரத்தில் மக்கள் நலமாக வாழ அரிய பல தகவல்களை வலியுறுத்தியவர் குறளில் ஒரு இடத்திலாவது மருந்தின் பெயரையோ அல்லது மூலிகை செடியின் பெயரையோ குறிப்பிடவில்லை. குறள்கள் முழுவதிலும் எந்தப் பெயர்களையும் குறிப்பிடாது நாடு, இன மொழி சமயம் எல்லாவற்றையும் கடந்து உலகை நோக்காகக் கொண்டு இயற்றியதாலேயே இச்சிறப்பு என்று நாம் கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும் இது அவரது கவிபுனையும் ஆற்றலுக்கும் திறமைக்கும் சான்று பகருகின்றது. உலகில் உள்ள மக்கள் எல்லாம் நாடு சாதி சமய மொழி பேதங்களை மறந்து தங்கள் நூல் திருக்குறள் என்று சொந்தங் கொண்டாடுவது ஒன்றே காரணமாய் அவரது பெருமையையும் புகழையும் எடுத்து இயம்புகின்றது.
திருக்குறள் பெரும் சமுத்திரம். இதில் எடுத்த சில முத்துக்களைப் புதுமையாகவும் புரட்சியாகவும், இச்சிறு கட்டுரையில் மேலோட்டமாகத் தொட்டுக் காட்டியுள்ளேன்.
CD
பக்கம் 19 'ஒலை" - 22 (ஜன்வரி 2004)

Page 12
உருவகம்
புரிந்ததும் புரியாததும்
~கறவாக்கேணி முத்தமாதவன்
கோயிலுக்குப் பக்கத்தில் நின்றிருந்த நாவல் மரத்தின் கீழ், ஒரு கிழட்டுச் சொறிநாய். உடலெங்கும் இரத்தம் வடிய. அனுங்கியபடி சுருண்டு கிடந்தது. சற்றுத் தூரத்தே. ஊர் நாய்கள் பல, பெரிய யுத்தமொன்றை நடாத்திக் கொண்டிருந்தன. ஒரு நாயின் வாயில் ஒரு எலும்புத் துண்டொன்று இருக்க, ஏனைய நாய்கள் அதனைப் பறிக்க. கோரமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தன.
எல்லா நாய்களின் உடலிலிருந்தும் செங்குருதி வழிந்தது. அதனைப்
பொருட்படுத்தாது பயங்கரமாகக் குரைத்து, சத்தமிட்டு ஒன்றை ஒன்று கடித்துக் குதறி, துரத்தி, விழுந்து, புரண்டு. புழுதிப்படலம் கிளம்பி. அப்பகுதியை மறைத்தது.
"அண்ணே. அண்ணே நாவல் மரத்துக்குக் கீழ் கடிபட்டு காயத்தோடு கிடந்த கிழட்டுநாய் சத்தம் கேட்டு தலையை கிளப்பிப்பார்த்தது.மிக அழகாக உயரமாக, மொழு மொழுவென வளர்ந்திருந்த வெளியூர் நாயொன்று நாக்கை நீட்டியபடி தனதருகில் குந்தியிருப்பதைக் கண்டு, முனகிய படி. எழுந்து குந்தியது. "அண்ணே! இதென்ன காயம் அட டா இரத்தம் வடிகிறது. அங்கே பெரிய சண்டை நடக்குது. என்னண்ணே விசயம்." வெளியூர் நாய், மிக அனுதாபமாகவும், அன்பாகவும் கேட்டது.
தலைக்காயத்திலிருந்து வடிந்து கண்ணை மறைத்த இரத்தத்துளிகளை, முன் கால் ஒன்றினால் துடைத்தபடி பெருமூச்சு விட்ட கிழநாய், வெளியூர்நாயை மேலும் கீழுமாகப் பார்த்து, "தம்பி! அதை ஏன்? பேசுவான். " மூன்று நாள் ஒழுங்கான சாய்பாடுமில்லாம, காடு வெளிய திரிந்து ஒரு எலும்புத்துண்டைப் பொறுக்கி வந்தன், அதைக்கண்ட என்ட மாமன், மச்சான், மச்சாள், அண்ணன், தம்பிஎல்லாருமாகச்சேர்ந்துஎன்னைக்கடிச்சி.குதறிப்போட்டு.பறிச்சிட்டுஓடிட்டாங்க. "கிழநாய் சண்டை நடக்கும் இடத்தை பரிதாபமாகவும், ஏக்கமாகவும் பார்த்தது. "ஆளுக்காள், அதைப்பறிச்சிச்சாய்பிடத்தான்.அங்கசண்டைநடக்குது."மிக கவலை யோடு சொன்னது கிழநாய்."சத்தம் போட்டுச் சிரித்ததுவெளியூர் நாய், "சே என்ன? முட்டாள்தனமான சண்டை ஒரு எலும்புக்கு இப்படியா நடந்துகொள்வது. அண்ணே என்னதான் பஞ்சமென்றாலும்,இதுதவறான வேலை, இஞ்சபாருங்க.நான் அடுத்த ஊர்க்காரன்."எங்கட ஊரிலநிறையச்சாய்பாடு இருக்கு.நான் சாய்பாடு எல்லார்க்கும் போடுறன், அந்த எலும்புத்துண்டை வீசிட்டு. எல்லாரையும் வரச்சொல்லுங்க.."என வெளியூர்நாய்சொல்ல, "ஐயோ" தம்பி.நான் சொன்னா கேட்கமாட்டாதுகள்.நீதான் சொல்லு" என்றகிழட்டுநாய் வயிறாரச்சாய்பிடலாம்என்றளண்ணத்தோடுநாக்கில்நீர்
"ஒலை" - 22 (ஜனவரி 2004) பக்கம் 20

வடிய வலியையும் பொருட்படுத்தாமல் உஷாராக எழுந்து நின்றது.
சண்டையிடும் பகுதிக்கு மிக மெதுவாக சென்ற வெளியூர் நாய், ஒரு கணம் கூர்ந்துபார்த்துவிட்டு "நண்பர்களே!.நண்பர்களே. சண்டையை நிறுத்துங்கள். ஒன்றுக்கும் உதவாத எலும்புத்துண்டை வீசிவிட்டு, எல்லோரும் வாருங்கள். இறைச்சிக் கறியோடு புரியாணிச் சாப்பாடு தாரன்." எனப் பலமுறை மிகப் பலமாகச் சத்தமிட்டது.
சண்டை பிடித்துக் கொண்டிருந்த நாய்களுக்கு. சாப்பாடு. இறைச்சிக்கறி! புரியாணி! என்ற வார்த்தைகள் தேனாக இனித்தன. ஒரு கணம் சண்டைநின்றது. முன்பு கூறியதுபோலவே வெளியூர்நாய் மிக அனுதாபத்தோடு சொல்ல, வெளியூர் நாயின் கம்பீரத்திலும்! அழகிலும், வார்த்தைகளைத் திடமாக நம்பிய உள்ளுர் நாய்கள் எலும்பைப் போட்டுவிட்டு. மகிழ்ச்சி ஆரவாரத்தோடு வெளியூர் நாயை நோக்கி ஓடிவந்தன.
அவ்வளவுதான். மின்னல் வேகத்தில் எழுந்து பாய்ந்த வெளியூர் நாய், உள்ளுர் நாய்கள் வீசிய எலும்புத்துண்டை ஒரு நொடியில் கெளவிக்கொண்டு ' காற்றாய்ப் பறந்தது.!
ஏமாந்து போன உள்ளுர் நாய்கள் இரத்தம் வடிய வடிய ஆளையாள் பரிதாபமாகக் பார்த்தபடி நின்று கொண்டிருந்தன.
ਉਏ
தமிழை மறப்பதா?
ஆங்கிலமும், சிங்களமும் அலைந்து தினம் படிக்கினும் ஓங்கி வரும் மொழி மதிப்பால் உயர்புகழ் தான் கிடைக்கினும் தாங்கி நிற்கும் தூணாக தமிழுக்கு வழி செய்குவோம்.
- செம்மன்னார் ஞானராசா
கீரிசுட்டான் மடுக்கோவில்
பக்கம் 21 ஒலை" - 22 (ஜனவரி 2004)

Page 13
ஈழத்தின் நவீன இலக்கிய உருவாக்கத்தில் தமிழ் நாட்டின் செல்வாக்கு
-கலாநிதி.செ.யோகராசா
முன்னுரை
ஈழத்தின் நவீன இலக்கிய உருவாக்கம் பற்றி ஆராய்வோர் அதற்குக் காரணமாக ஈழத்தில் ஆங்கிலேயர்ஆட்சி, மேனாட்டுச் செல்வாக்கு என்பன பற்றியே வற்புறுத்திக் கூறுவது வழக்கமாகும். எனினும் அதற்குச் சமமான நிலையில் காணப்பட்ட தமிழ் நாட்டுச் செல்வாக்கைப் பற்றி எடுத்துரைப்பது அரிதாகும். அதுபற்றிச் சுருக்கமாகக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அணுகுமுறை
தமிழ்நாட்டில் நிலவிய பின்வரும் இயக்கங்களின் அடிப்படையில் மேற்கூறிய விடயம் பற்றிக் கவனிப்பது பொருத்தமானதாகும். அவை:
(1) இந்திய, தமிழ்நாட்டு விடுதலை இயக்கம்
(2) மணிக்கொடிக் குழு (3) திராவிட முன்னேற்றக்கழகம்
(4) முற்போக்கு இயக்கம்
(5) எழுத்து, வானம்பாடிக் குழு இந்திய, தமிழ் நாட்டு விடுதலை இயக்கம்
w இவ் இயக்கம் சார்ந்த கருத்துக்கள் நேரடியாக ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியில் செல்வாக்குச் செலுத்தியிருப்பதைவிட இவ் இயக்கத்தோடு தொடர்புபட்ட மகாத்மாகாந்தி, பாரதியார் ஆகியோரது கருத்துக்களே செல்வாக்குப் பெற்றிருந்தன என்று கூறுவது பொருத்தமானது. இவ்வாறு சிந்திக்கும் போது 1930 களில் ஈழகேசரிக் குழுவினரது இலங்கையின் சுதந்திரம் பற்றிய பாடல்களில் (எ-டு: அகிலேஸ்வரசர்மா) பாரதியாரது செல்வாக்கு கணிசமாக இருப்பது கண்கூடு. சமூகச் சீர்திருத்தம் பற்றிய பாடல்களில் (எ-டு:- குடி, உயிர்ப்பலி, சுதேசக் கைத்தொழில்) காந்தியக் கருத்துக்களின் செல்வாக்கு கணிசமாகக் காணப்படுகின்றது.
ஈழகேசரி காலச் சிறுகதைகளிலும் காந்தியச் செல்வாக்கு ஓரளவு இடம்பெற்றுள்ளது. (எ-டு: சம்பந்தன் கதைகள்)
பாரதியாரைப் பொறுத்தவரையில் அவர் மேற்கூறிய விதத்தில் அன்றி
"ஒலை" - 22 (ஜனவரி 2004) பக்கம் 22

தனிப்பட்ட முறையிலும் ஈழத்து நவீன இலக்கிய உருவாக்கத்தில் செல்வாக்குச் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1940 அளவில் தோன்றிய மறுமலர்ச்சிக் குழுவினரதும் "பாரதி" (சஞ்சிகை) குழுவினரதும் நவீன இலக்கியம் பற்றிய பிரக்ஞையில் பாரதியார் ஏற்படுத்திய செல்வாக்கு மிக முக்கியமானது. (கே.கணேஸ், கே.ராமநாதன் நடாத்திய சஞ்சிகையின் பெயரும் பாரதியே)
திராவிட முன்னேற்றக் கழகம்
1950 அளவில் ஈழத்து எழுத்தாளர்கள் கவிஞர்கள் முதலானோரிடம் மொழி உணர்ச்சி, இன உணர்ச்சி ஏற்படுவதற்கும் வாசிப்பு நாட்டம், எழுத்துலக நாட்டம் என்பன பரவலாக ஏற்படுவதற்கும் திராவிடக்கழகச் செல்வாக்கு பேருதவி புரிந்தது. குறிப்பாக, 1950 களில் ஈழத்தில் உருவான தமிழ்த் தேசிய உணர்வுபற்றிப் பாடிய கவிஞர்களுள் கணிசமானோர் பாரதிதாசனின் பெரும் செல்வாக்குப்பட்டிருந்தமை வரலாற்றுண்மை. (காசி ஆனந்தன் பாரதிதாசனின் மாணாக்கர் ஆவர்) பாரதிதாசனின் கவிதை வடிவங்களும் கூட 1950 அளவில் ஈழத்துக் கவிஞர்களிடம் செல்வாக்குச் செலுத்தியிருந்தன என்பதில் தவறில்லை.
மணிக்கொடிக் குழுவினர்
மணிக்கொடிக் குழுவினர் ஈழத்து எழுத்தாளர் மத்தியில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறமுடியாது. எனினும், தனிப்பட்ட ரீதியில் சில எழுத்தாளர்கள் மீது இவர்களது செல்வாக்கு பதிந்துள்ளது. இலங்கையர்கோனின் கதைகளில் ஒரளவு புதுமைப்பித்தனின் செல்வாக்கும் கு.ப.ராவின் செல்வாக்கும் இடம்பெற்றுள்ளன. சி.வைத்திலிங்கத்தின் கதைகளிலும் அவ்வாறுண்டு. எனினும் 1950 அளவில் உருவான பித்தனிடம் புதுமைப்பித்தனின் செல்வாக்கும் கு.ப.ராவின் செல்வாக்கும் கணிசமான அளவு காணப்படுகின்றது. புதுமைப்பித்தன் மீதுள்ள பிடிப்பே 'ஷா என்பவர் தனது பெயரினை பித்தன் என்று வரித்துக் கொண்டதற்கும் காரணமாகும். 1950 அளவில் எழுத்துலகிற்கு வந்த வ.அ.இராசரெத்தினத்தின் எழுத்துலகப் பிரவேசத்திற்கு புதுமைப்பித்தன் காரணமாக இருப்பதையும் அறிய முடிகின்றது.
மணிக்கொடிக் குழுவினரின் வசன கவிதை முயற்சி ஈழத்தில் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் 1940 களில் வரதர், சோதி முதலானோர் வசனக் கவிதைப் பரிசோதனையில் ஈடுபடுவதற்கு மணிக்கொடி சார்ந்த ந.பிச்சமூர்த்தியின் கவிதைகள் ஒரளவு உத்வேகம் அளித்திருந்தமை கவனத்திற்குரியது.
முற்போக்கு இயக்கம்
ஈழத்தைப் பொறுத்தவரை இந்திய, தமிழ்நாட்டு முற்போக்கு இயக்கத்தின் செல்வாக்கு 1940 அளவில் மலையகம் சார்ந்த கே.கணேஷ் முதலானோர்.
பக்கம் 23 "ஒலை" - 22 (ஜனவரி 2004)

Page 14
மத்தியில் கணிசமான அளவிற்குக் காணப்பட்டது. உதாரணமாக கே. கணேஷ் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றிவித்ததில் இந்திய முற்போக்கு எழுத்தாளர்களுக்குக் கணிசமான பங்குண்டு. 'பாரதி சஞ்சிகையில் இந்திய எழுத்தாளரின் ஆக்கங்களும் அதிக அளவில் வெளிவந்திருந்தமை நாம் அறிந்ததே. ஈழத்தில் குறிப்பிடத்தக்க முற்போக்கு நாவலாசிரியரென்று கருதப்படுகின்ற இளங்கீரனின் ஆரம்பகால நாவல்கள் தி.மு.க.நாவல்களின் மறுபதிப்புகளென்றே கூறவேண்டும். எனினும் காலவோட்டத்தில் குறிப்பாக 1960 அளவில் ஈழத்து முற்போக்கு அணியினர் தமிழ்நாட்டு முற்போக்கு அணியினருக்கு வழிகாட்டத் தொடங்கியமை நாமறிந்ததே. (இது பற்றி விரித்துரைக்க இது ஏற்ற இடமன்று)
எழுத்து / வானம்பாடி குழுவினர்
"எழுத்து' குழுவினர் 1960களில் ஈழத்தில் புதுக் கவிதை முயற்சி கால்கொள்வதற்கு மறைமுகமாக உந்துசக்தியாக விளங்கியிருந்தனர். எனினும் இவர்களை விட 'வானம்பாடி' குழுவினரே ஈழத்துப் புதுக்கவிதை வளர்ச்சியில் கணிசமான செல்வாக்கைத் தோற்றுவித்தனர். குறிப்பாக வானம்பாடி குழுசார்ந்த மேத்தா, வைரமுத்துவின் புதுக்கவிதைச் செல்வாக்கிலிருந்து இன்றுவரை ஈழத்துக் கவிஞர் பலர் விடுபடாதுள்ளமை அழுத்தியுரைக்கப்பட வேண்டியதொன்றாகும்.
தனிப்பட்ட படைப்பாளிகள்
மேற்கூறியு குழுவினரை விட, தமிழ்நாடு சார்ந்த குறிப்பிடத்தக்க கவிஞர்கள் எழுத்தாளர்கள் சிலர் தனிப்பட்ட ரீதியில் ஈழத்து நவீன எழுத்துக்களில் செல்வாக்குச் செலுத்தியுள்ளமையும் விதந்துரைக்கத்தக்கதே.
ஈழத்து நவீன கவிதை முன்னோடிகளுள் முக்கியமான மஹாகவி முதலானோர்கள் ஈழத்திற்கென தனித்துவமான நவீன கவிதை வளாச்சிக்கு தடம் அமைத்தபோது தமிழ்நாடு சார்ந்த கலைவாணன், தமிழ் ஒளி (ஓரளவிற்கு பாரதிதாசன்) முதலானோரின் கவிதையில் காணப்பட்ட (தமிழ்நாட்டு கவிஞர்கள் கவனிக்க தவறிய) சில நல்ல அம்சங்கள் மறைமுகமாக செல்வாக்கை ஏற்படுத்தியிருந்தன என்று அறியப்படுகின்றது. (இது பற்றிய விரிவான ஆய்வு அவசியமானது)
ஈழத்தின் சிறுகதை ஆசிரியருள் கணிசமானோர் 1950 தொடக்கம் - இன்று வரை கூட எழுத்தாளர் கல்கியின் ஆதிக்கத்திற்குட்பட்டவராக - அதிலிருந்து விடுபட விரும்பாதவராக - காணப்படுவது குறிப்பிடத்தக்கது. 'கல்கியளவிற்கு என்று கூறமுடியாதுவிடினும் மு.வ. அகிலன் ஆகியோரின் செல்வாக்கும் ஈழத்து எழுத்தாளரிடம் இன்றுவரை காணப்படுகின்றது.
மராட்டிய நாவலாசிரியரான காண்டேகரின் எழுத்துக்களும் 1950 களில் எமது எழுத்தாளர்களை வெகுவாக ஆகர்ஷித்திருந்தன.
"ஓலை" - 22 (ஜனவரி 2004) பக்கம் 24

முற்குறிப்பிட்ட மு.வ. அகிலன், காண்டேகர் ஆகியோரின் வெவ்வேறு பட்ட, எழுத்தாக்கப் பண்புகளின் ஒன்றுதிரண்ட வடிவத்தினை செ.கணேச. லிங்கனின் எழுத்துக்களில் காணமுடிகின்றமை மனங்கொள்ளத்தக்கது. கோகிலா மகேந்திரனின் படைப்பாற்றல் சிறப்படையாது காணப்படுவதில் மு.வ. போன்றோருக்குக் கணிசமான பங்குண்டு.
1950 தொடக்கம் இன்று வரையான ஈழத்துப் பெண் எழுத்தாளர் பலரிடம் லஷ்சுமி முதலானோர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
ஈழத்து நவீன இலக்கியமானது மண்வாசனையைக் கொண்டதாக மாறுவதற்கும் ஈழத்து எழுத்தாளர் பலர் உத்வேகம் பெறுவதற்கும் தமிழ்நாடு சார்ந்த பகிரதன் 1960 களில் ஈழத்து இலக்கியம் தொடர்பாக உதிர்த்த கருத்துக்கள் காரணமாகவிருந்தமை ஈழத்து இலக்கிய ஆர்வலர் நன்கறிந்த விடயமே.
சுருங்கக் கூறின் இதுவரை கூறப்பட்ட விடயங்கள் விரிவான ஆய்வை அவாவிநிற்பது மட்டுமன்றி அத்தகைய ஆய்வின் முடிவில் சரியான மதிப்பீடு ஒன்றினை எதிர்பார்த்துமுள்ளன. அதே வேளையில் மேற்குறித்த ஓட்டத்தின் ஊடே ஈழத்தின் தனித்துவம் வாய்ந்த நவீன இலக்கிய வளர்ச்சியின் உருவாக்கம் எவ்வாறு மேற்கிளம்பி வந்துள்ளது என்பது பற்றிக் கவனிப்பதும்
அவசியமானதொன்றாகின்றது.
২১
வாழ்த்துக்கள் திரு.மா.கணபதிப்பிள்ளை
தமிழ்ச்சங்கத்தின் புதிய ஆட்சிக்குழு உறுப்பினரும் கொழும்பு றோயல் கல்லூரியின் தமிழ்ப்பிரிவின் தலைவருமான திரு.மா.கணபதிப்பிள்ளை அவர்கள் அரசறிவியல் துறையில் முதுகலைமாணிப்பட்டத்தினைப் பேராதனைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 17.12.2003 அன்று பெற்றார். இவர் பொருளியல் துறையில் இளம் கலைமாணிப் ப்ட்டத்தினைக் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு எமது பாராட்டுக்கள்.
பக்கம் 25 'ஒலை" - 22 (ஜனவரி 2004)

Page 15
தனிநபர் அரங்கு (சிறப்பு நிகழ்ச்சி)
20.12.2003 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்குக் கொழும்புத் தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர் திரு.ஆ.இரகுபதிபாலழறீதரன் அவர்கள் தலைமையில் 'வாத்தியார் தனிநபர் அரங்கு (நகைச்சுவை நாடகம்) நிகழ்ச்சி அவுஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்த நாடகக் கலைஞர் திரு.காந்தி (மகின்ரயர்) மாணிக்கசிங்கம் அவர்களால் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நிகழ்த்தப்பட்டது.
ஒலை" - 22 (ஜனவரி 2004) பக்கம் 28
 

சிறப்புச் சொற்பொழிவு
24.12.2003 புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச்சங்கச் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் சங்கத் துணைத் தலைவர் செல்வி சற்சொரூபவதி நாதன் அவர்கள் தலைமையில் திரு.வி.விவேகானந்த சர்மா (இளைப்பாறிய இலங்கை வங்கி முகாமையாளர்) அவர்களால் "பொஸ்வானாவில் தமிழர்கள்" என்ற பொருளில் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் திரு.மா.கணபதிப்பிள்ளை (கல்விக்குழு உறுப்பினர்) அவர்களால் வரவேற்புரையும் திருமதி.அ.புவனேஸ்வரி (துணைப் பொதுச் செயலாளர்) அவர்களால் நன்றியுரையும் நிகழ்த்தப்பட்டன.
திகதி விடயம் g560)660)LD நிகழ்த்தியவர்
03.12.2003|கண்ணகி எரியூட்டிய|பெ.விஜயரத்தினம் புராணவித்தகர் (232) மதுரை மு.தியாகராசா
10.12.2003 சிலப்பதிகாரத்தில் த.இராஜரட்ணம் புராணவித்தகர்
(233) குன்றக்குரவை மு.தியாகராசா
17.12.2003 சிலப்பதிகாரத்தில் த.இராஜரட்ணம் புராணவித்தகர் (234) காட்சிக்காதை" மு.தியாகராசா
24.12.2003 |பொஸ்வானாவில் செல்விசற்சொ திரு.வி.விவேகா (235) தமிழர்கள் ரூபவதிநாதன் னந்த சர்மா
Luissió 27 'ஒலை" - 22 (ஜனவரி 2004)

Page 16
நால்நயம் காண்போம். 05.05.2000இல் ஆரம்பித்து பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மாலை 5.30மணிக்கு நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில் இலங்கை எழுத்தாளர்களது நூல்கள் நயம் காணலுக்காக எடுத்தாளப்படுகின்றன.
திகதி விடயம் தலைமை சொற்பொழிவாளர்
5.12. இலங்கை சிறுவர் O (i. ಙ್ಗಂ இலக்கியம் சில கதிர்காமநாதன் திரு.வ.இராசையா
குறிப்புகள் 12.12.2003 பாரதி மகாகவி | தஇராஜரட்ணம் திரு.சு.சண்முகநாதன்
(120) வரலாறு 19.12.2003 திருக்குறள் ஓர்
(121) மீள்பார்வை த.இராஜரட்னம் திரு.சு.சண்முகநாதன்
கட்டுரை
26122003 அன்னை சாரதா
(122) தேவியின் சமூக ஆ.குகழுர்த்தி திருமதி.பத்மா மேம்பாட்டிற்கான சோமகாந்தன்
சிந்தனைகள்
சங்கப்பலகை தயாரிப்பு : சி.சரவணபவன் (துணை நிதிச் செயலாளர்)
RN ஈழத்து எழுத்தாளர்களே! ஈழத்து எழுத்தாளர்களின் நூல் வெளியீடுகளை ஆவணப்படுத்தும் பொருட்டு பின்வரும் விவரங்களை 'ஒலைக்கு அறியத்தருமாறுதயவாய்க் கேட்டுக் கொள்கிறோம். முடியுமானால் அவற்றின் ஐந்து பிரதிகளை அனு ப்பி வைத்தால் நூல் நயம் காண்போம்' நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்ளப்படும். அதில் இரு பிரதிகளைத் தமிழ்ச்சங்க நூல் நிலையத்திற்குப் பெற்றுக் கொண்டு அதற்கான கொடுப்பனவும் வழங்கப்படும்.
நூலின் பெயர் நூலின் வகை நூலாசிரியர் பெயர் : நூலாசிரியர் முகவரி: • தொலைபேசி
நூல் வெளியீடு நடந்த இடமும் திகதியும்: வெளியீட்டாளர் / பதிப்பகத்தின் பெயர்: வெளியீட்டாளர் / பதிப்பகத்தின் முகவரி:
2 நூலின் விலை : W -ܓܠܠ
"ஓலை" - 22 (ஜனவரி 2004) பக்கம் 28

தமிழ்ப் பதிப்புத்துறையின் எதிர்காலம்
- மறவன்புலவு க.சச்சிதானந்தன் (கார்த்திகை 9, 2034 (25112003) -சென்னை வைஎம்சிஏ பட்டிமன்ற உரை)
1.அறிமுகம்
எழுதுகிறார்கள் என்பதால் வாசிக்கிறார்கள். இந்த எழுத்தாளருக்கும் (1) வாசகருக்கும் (2) பாலமாகப் பதிப்பாளர் (3), விற்பனையாளர் (4), நூலகர் (5) ஆகிய இந்த ஐவருமே தமிழ் நூல் என்ற கூரையைத் தாங்கும் தூண்கள்.
மக்கள் தொகை பெருகப் பெருக, எழுத்தாளர், வாசகர் தொகையும் பெருகும். 1901 இல் 1.5 கோடி, 1951இல் 3.5 கோடி, 2001 இல் 7 கோடி, 2020 இல் 9கோடி, 2050இல் 11 கோடி எனத் தமிழர் தொகை (ஆதாரம் ஐ.நா.உலக வங்கி மற்றும் இந்திய அரசு வெளியீடுகள்) பெருகி வருகிறது.
1901இல் இலங்கை. இறியூனியன். கயானா, சுரினாம். தமிழகம், தென் ஆபிரிக்கா, பர்மா, பிஜி, மலாயா, மொரிசியசு ஆகிய 10 நாடுகளில் தமிழர் தொகை இலட்சக்கணக்கிலும், கம்போடியா, சீசெல்சு, சுமத்திரா, தாய்லாந்து, ரினிடாட், வியற்நாம், ஜமைக்கா ஆகிய 6 நாடுகளில் தமிழர் தொகை ஆயிரக்கணக்கிலுமாக இருந்து வந்து, 1951 வரை இந்த நிலை நீடித்தது.
அதன் பின்னர் படிப்படியாக, ஆஸ்திரேலியா - பசிபிக், இந்திய மாநிலங்கள், ஐரோப்பா, கிழக்கு ஆசியா, வட அமெரிக்கா, ஆகிய பகுதிகளுக்குத் தமிழர் பரவினர். இன்று தமிழரின் வாழ்விடப் பரப்பு உலகெங்குமுள்ள 40க்குச் சற்றே அதிகமான நாடுகளாகும். ஐ.நா.அமைப்பின் உறுப்புரிமை பெற்ற 193 நாடுகள், விடுதலை பெறாத 40 நிலப்பகுதிகள், இவை ஒவ்வொன்றிலும் வாழும் தமிழரின் தோராயத் தொகை அறிய, உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டு மலர் (2002ம் பக்.56) பார்க்க.
தமிழரிடையே எழுத்தறிவு 1901ல'5%க்கும் குறைவு. 1951இல் 15% 2001 73%, 2020 இல் 99% 2050 இல் 99% எனப் படிப்படியாக வளர்கின்றது.
தமிழரின் மக்கள் தொகை, வாழ்விடப் பரம்பல், எழுத்தறிவு யாவும் பெருக்க ஏற்றமாக வளர்ந்துள்ளமையால், எழுத்தாளர், வாசகர் தொகையையும் அதே விகிதத்தில் பெருகி உள்ளமை கண்கூடு. பாலமாக அமையும் பதிப்பாளர், விற்பனையாளர், நூலகர் எண்ணிக்கை 1901 - 2000 காலப்பகுதியில் அதே வேகத்தில் வளரவில்லை என்பதும் கண்கூடு.
2.பதிப்பு முயற்சி
1557 இல் தம்பிரான் வணக்கம் பதிப்புடன் தொடங்கிய அச்சு, தாள்
பக்கம் 29 ஒலை" - 22 (ஜனவரி 2004)

Page 17
சார்ந்த பதிப்புத் துறை, சமய, இலக்கிய, புனைகதை நூல்களாக 1901 வரை பல தலைப்புக்களைக் கண்டது. பல சிறந்த பதிப்பாளர்களையும் கண்டது. சிறந்த அடித்தளமாக இப்பதிப்பாளர் (திரு.விவிலியச் சங்கம், ஆறுமுக நாவலர் வித்தியாதுபாலன யந்திரசாலை, கிறித்துவ இலக்கியக் கழகம், யாழ்ப்பாணம் சைவப்பிரகாச யந்திரசாலை போன்ற அமைப்புக்களும் தனியார் பலருமாக) முயற்சிகள் அமைந்தன. 5% எழுத்தறிவுள்ளோர் வாழ்ந்த அந்தக் காலத்திலேயே தலைப்புக்கு 1,000 படிகள் அச்சாகிய வரலாறும் உண்டு. ஒரே தலைப்பு மறுபதிப்புகளைக் கண்ட வரலாறும் உண்டு.
1901 -2000 காலப்பகுதியில் பதிப்பாளர் தொகை வளர்ச்சி கணிசமாகியது. 2,100பதிப்பாளர்இன்று(மதிப்பீடு:காந்தளகம், சென்னை)உலகெங்கும் 10நாடுகளில் உள்ள்பதிப்பாளர், தமிழ்த்தலைப்புகளைப்பதிப்பிக்கின்றனர்.இவர்களுள் 70ற்கும் ( சற்றேஅதிகமான எண்ணிக்கையினர் முன்னணியில்உள்ளனர்.
3. விற்பனை
தமிழில்பாடநூல்தலைப்புகளை வாங்கிவிற்பனை செய்வோர் எண்ணிக்கை தமிழகம் ஈழம் மலேசியா,சிங்கப்பூர் ஆகியநாடுகளில்அதிகம் எழுத்தறிவுபெற்றோர் வளர்ந்தஅதேவேகத்தில்பாடநூல்விற்பனையாலும்வளர்ந்தனர்என்றேசொல்லலாம் பாடநூல் அல்லாத தமிழ்த் தலைப்புகளை வாங்கி விற்பனை செய்ய முழுமுயற்சியில் (100) நூறு விற்பனை நிலையங்கள் வரை தமிழகத்தில் இருக்கலாம் என அகிலன் கண்ணன் (பதிப்பும் படிப்பும் (2002), பக். 97) மதிப்பிடுகிறார். அனைத்துத்தமிழ்த்தலைப்புகளையும்ஒரே கூரையின்கீழ்விற்கும் விற்பனையாளர் 1999 வரை எவரும் இருக்கவில்லை. எனினும், கும்பகோணம், கொழும்பு, கோயமுத்துர், கோலாலம்பூர், சிங்கப்பூர், சென்னை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, திருவாரூர்,மதுரை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் உள்ள சில தமிழ்நூல்விற்பனையாளர்அதிகவிற்பனையிலிலுள்ளஅனைத்துத்தலைப்புகளையும் காட்சியில்வைத்திருந்தமையே வாசகருக்குப்பெரும்பேறாக இருந்தது.
4.நூலகம்
1901-2000காலப்பகுதியில்தமிழகத்திலும் ஈழத்திலும் நூலகங்கள்அரும்பணி செய்துவந்துள்ளன. சிறப்பாக 1950களுக்குப்பின்னர், தமிழகத்தில்நூலகங்களின் எண்ணிக்கைதாவிவளர்ந்தது. ஈழத்திலும் அதே வேகத்துடன் அவைவளர்ந்தன. தமிழகத்தில்2457அரசு நூலகங்கள்உள்ளதாக அகிலன்கண்ணன்(பதிப்பும் படிப்பும்(2002), பக்95)மதிப்பிடுகிறார். 12,400க்கும் அதிக எண்ணிக்கையில்ஊராட்சி அமைப்புக்ள்உள்ளதமிழகத்தில்2457என்றளண்ணிக்கைபோதுமானதல்ல.இதைக் கருத்தில்கொண்ட தமிழக அரசு,2000ஆம் ஆண்டில் 12.300 அளவில்திருவள்ளுவர்
1980க்குப்பின்னர்,ஈழத்தில் போரால்நூலகங்கள்(யாழ்ப்பாணநூலகம்உள்ளிட்ட)
"ஒலை" - 22 (ஜனவரி 2004) Lidst 30

பல அழிந்தன. எனினும், நூலகங்களுக்கான தமிழ்த் தலைப்புகளின் கொள்வனவுக்கு அரசின் நிதி ஒதுக்கீடுகள் குறையவில்லை.
சிங்கப்பூர் நூலகங்கள், தமிழ்த் தலைப்புகளை 1968 தொடக்கம் வாங்கத் தொடங்கின. தமிழ்த் தலைப்புகளை 1985 - 2000 காலப்பகுதியில் ஐரோப்பிய, வடஅமெரிக்க, ஆஸ்திரேலிய நூலகங்கள் அங்கு புலம் பெயர்ந்த தமிழருக்காக வாங்கத் தொடங்கிவிட்டன.
கல்வி நிலைய நூலகங்கள் தமிழகம், ஈழம், சிங்கப்பூர், மலேசியா, மொரிசியசு ஆகியநாடுகளில் தமிழ்த் தலைப்புகளை வாங்கிக் கொண்டிருக்கின்றன. ஆங்கில மற்றும் பிறமொழித் தலைப்புகளுக்காக ஒதுக்கும் நிதி அளவே அனைத்துக் கல்வி நிலைய நூலகங்களிலும் அதிகம்.
5. வாசகர்
தமிழ்த் தலைப்புகளை விலைகொடுத்து வாங்குவதில் தமிழ் வாசகர் ஆர்வம் காட்டுவதில்லை என்ற கருத்தைத் தமிழ் நூல் பதிப்பாளரும் விற்பனையாளரும் சொல்வதுண்டு. தமிழ் வாசகருக்கு வாசிப்புநாட்டமில்லை என்றோ, விலை கொடுத்து வாங்கும் ஆர்வம் இல்லை என்றோ சொல்வது தவறு. 1951க்குப் பின் நிகழ்ந்த தமிழிதழ் விற்பனைச் சாதனைகளும், சிற்றுரர்கள் தோறும் ஊடுருவி விற்பனையைப் போட்டி போட்டுப் பெருக்கிய தமிழிதழ் வெளியீட்டாளர்களும், வாங்கித் தமிழிதழ்த் துறையை ஊக்குவித்த உலகெங்கும் வாழ் தமிழரும் இக்கூற்றைப் பொய்யாக்குவர்.
இந்தப்பின்னணியில், தமிழ்ப்பதிப்புத்துறையின் எதிர்காலத்தை நோக்க விழைகின்றேன்.
6.நுகர்ச்சிப் பொருணர்மியம்
தமிழ்த் தலைப்புகளை வாங்குவோர் தரும வலையே தமிழ்ப் பதிப்புத் தொழிலின் பொருண்மிய அடித்தளம். 2001க்குப்பின் உலகெங்கும் நுகர்ச்சிப் பொருளாதாரத்தை நோக்கியே திட்டமிடப்படுகிறது. தொழில் நுட்ப உள்ளிட்டையும், பெறுபேறான உற்பத்தி வளர்ச்சியையும் தாங்குவோர் நுகர். வோரே. எனவே நுகர்வோரிடம் வாங்கும் சக்தி இருக்குமாறு பொருண்மிய விற்பன்னர்கள் திட்டமிடுகிறார்கள்.
சஹாராவுக்குத் தெற்கேயுள்ள ஆபிரிக்காவில் தென் ஆபிரிக்கா தவிர்ந்த ஏனைய நாடுகளில் மட்டும் மந்த கதி வளர்ச்சி இருக்கும். ஏனைய நாடுகள் அனைத்தில் வாழும் மக்கள் இன்னும் 20 ஆண்டுகளுள் எல்லாரும் எல்லாமும் பெற்றுவாழ்வர் என்பதே கணிப்பு இன்று உலக மக்களுள்56% மட்டுமே உயர் வருவாய் உள்ளராயுளர். இந்தநிலை மாறி உலகின் 70% மக்கள் 2020இல் எல்லாரும் எல்லாமும் பெற்றுவாழ்வர் என்பதே கணிப்பு (உலக வங்கிநிலவரை, 2003)
பக்கம் 31 "ஓலை" - 22 (ஜனவரி 2004)

Page 18
வருவாயைச் சொத்துக்காக (1), சேமிப்புக்காக (2), நுகர்ச்சிக்காக (3) என மக்கள் ஒதுக்குவர். நுகர்ச்சிக்காக ஒதுக்கும் தொகையில், தமிழர் தம் தாய் மொழியில் நூல்களை வாங்க எவ்வளவு ஒதுக்கப் போகிறார்கள் என்பதைக் கொண்டே பாடநூல் தவிர்ந்த தமிழ் நூல் பதிப்புத் தொழிலின் வளர்ச்சியைக் கணிக்கலாம்.
9. விற்பனைத் திறன்
தமிழ்த் தலைப்புகள் நுகர்வோரைத் தேடிப் போகாவிடின், தமிழர் நூல்களை வாங்குகிறார்களில்லையே எனக் குறை கூறமுடியாது. கையில் பணம் இருக்கும் வேளையில் தமிழ் நூல் விற்பனைக்கு இருக்கிறது என்ற கவனம் நுகர்வோருக்கு வரவேண்டும். அவரிடமுள்ள அப்பணத்தைத் தம் வசமாக்கப் போட்டி போடும் பல நுகர்ச்சிப் பொருள்களிடமிருந்து அவரை விடுவித்து, தமிழ்நூல் பால் ஈர்த்து தமிழ் நூலை அவர் கைகளுள் திணிக்கக் கூடிய விற்பனைத் திறனும் சாதுரியமும் தமிழ் நூல் விற்பனையாளருக்கு இருந்தால்தான் தமிழ்ப் பதிப்புத் துறைக்கு எதிர்காலமேயுண்டு.
தமிழ் நூல் என்ற கூரையைத் தாங்கும் ஐந்து தூண்களுள், வாசகர் தவிர்ந்த நான்கு தூண்களும் எவ்வாறு தத்தம் பங்களிப்பை நல்கலாமெனப் பார்ப்போம்.
10. படைப்பாளி
படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுமாறு எழுத்தாளர் எழுதுவதே அவரது எழுத்தைப் பெறுமதியுள்ளதாக்கும். சொல்லும் பொருளும் வாசகருக்குப் பயன்(?) தரவேண்டும். வாசகர் கொடுக்கும் விலைக்குப் பெறுமதியாக மட்டுமல்ல அவரை வளமான உறுதியான எதிர்காலத்துக்கு அழைக்கவும் வேண்டும்.
எழுத்துக்களை மலிவான எழுத்து, தரமான எழுத்து என வகைப்படுத்தும் விமர்சகர்களின் பார்வை வேறு. தமிழ் நூல்களை விற்பனையாக்கவேண்டும் என்ற விற்பனையாளரின் பார்வை வேறு. சுவைத்துப் பயன்பெறும் வாசகனின் பார்வை வேறு. இந்த மூன்று பார்வைகளையும் உளத்திருத்தா எழுத்தாளனால் விற்பனைக்கு வளம் சேர்க்க முடியாது. எழுதுவதைப் படித்துத்தான் ஆகவேண்டும். வேறு வழியில்லை என எவரும் சொல்லாதவாறு எழுத்தின் ஒவ்வொரு துறையிலும் கடும் போட்டி வளர்ந்துள்ளது. எளிமை, சுருக்கம், செய்தி. சுவை, மொழித்திறன் - இவை இன்றி எழுதுவன விற்பனைக்காக அல்ல.
இரண்டு விரல்களால் பேனாவில் எழுதிய காலம் மலையேறிவிட்டது. கணிப்பொறியில் பத்து விரல்களால் தட்டச்சுச் செய்து கொடுக்கும் காலம் வந்ததால் மெய்ப்புப் பார்க்கும் இடைவெளியும் நீங்கி விடும். படைப்பாளிகள் யாவரும் கணிப்பொறி அறிவும் தமிழ்த் தட்டச்சுத் திறனும் உள்ளவராக மாற
'ஒலை" - 22 (ஜனவரி 2004) பக்கம் 32

வேண்டும்.
அடிப்படை மொழி அறிவு குறைந்த அல்லது இல்லாத படைப்பாளிகள், மொழி அறிஞர்களை நாடித் தத்தம் திறனை வளர்த்து, மொழித்திறன் சிந்தாது. வாசகரின் தாகத்தை நிறைவு செய்ய வேண்டும். அடிப்படை மொழி அறிவே வாசகருக்கும் படைப்பாளிக்கும் இடையேயான தொப்புள் கொடி.
11. பதிப்பாளர்
பதிப்பாளர் பங்களிப்பே முக்கியமானது. ஆள் பாதி ஆடை பாதி என்பது. நல்ல எழுத்தை நல்ல பதிப்பாக மாற்றும் தொழில்திறன் பதிப்பாளருக்கு வேண்டும். தாளும் அச்சும், கட்டமைப்பும் புத்தம் புதுத் தொழில்நுட்பங்களைக் குவித்துக் கொண்டு வருகின்றன. இவற்றை உடனுக்குடன் உள்வாங்காவிடின் வாசகரின் விடாய் வேறுபக்கம் திரும்பிவிடும். பதிப்புத் தரமில்லாத தமிழ் நூலுக்கு விற்பனை வாய்ப்பிருக்காது.
தமிழ்த் தலைப்புகளின் மூலங்கள் எழுத்தாளரை விட்டு வெளியேறியதும் பதிப்பாசிரியர் குழுவிடம் போகாவிடில் அந்த நூல் முழுமை பெறாது. தமிழ்ப் பதிப்பகங்கள் தனியாகப் பதிப்பாசிரியரைப்பணிகொள்வதில்லை. இது பெரும் குறையாகும். எழுத்தாளரின் எண்ண ஓட்டங்களை வாசகரின் எண்ண ஓட்டங்களுடன் இணைப்பவரே பதிப்பாசிரியர், பதிப்பாளரே பதிப்பாசிரியரானால் அந்த நூலில் பதிப்புத் தேவைப் பாதிப்புகளேயிருக்குமன்றி வாசகர் தேவைப் பாதிப்புகளிருக்காது.
2011-205 காலப்பகுதியில் தமிழ்ப் பதிப்பாளரின் மொத்த எண்ணிக்கை பெருக வேண்டும். எழுத்தாளர் தனக்கேற்ற பதிப்பாளரைத் தேர்வு செய்ய இப்பெருக்கம் உதவும். எழுத்தாளரே பதிப்பாளராவதை மாற்றும். எழுத்தாளருக்கு அண்மித்தவராகப் பதிப்பாளர் இருப்பது போல், விற்பனையாளருக்கு அண்மித்தவராகவும் பதிப்பாளர் இருப்பார். இப்பொழுது 2,100 அளவாக இருக்கும் எண்ணிக்கை, மூன்று அல்லதுநான்கு மடங்காகக் பெருகினால் அடுத்த 2050ஆண்டுகளின்தமிழ்நூல்பதிப்புத்தேவைகளைநிறைவுசெய்யலாம்.
தொழிலாக வளர்ந்த பின்பும், பயிற்சிபெற்றவரின்முகாமையில் தமிழ்ப்பதிப்பு முயற்சிகள் இல்லாதமை பெரும்குறை. பதிப்புத் தொழில் கல்வி தமிழகப் பல்கலைக்கழகங்களில்இல்லை. முன்பு ஒருமுறைபட்டப்படிப்புத்தொடங்கிப்பின் முடங்கியது. தொடர்ச்சியான மாற்றங்களை உள்வாங்கி பதிப்புத் துறையின் எதிர்காலத்தை வளர்க்கப்பதிப்புத்துறையில்புலமைமற்றும்மேலாண்மைப்பயிற்சி பெற்றவரின்முகாமை உள்ளிடுவேண்டும்.
12. விற்பனையாளர்
40க்கும்அதிகமானநாடுகளில்1 கோடித்தமிழர்வாழப்போகும்எதிர்காலத்துக்கு, தமிழ்நூல் விற்பனையாளர் தொகை மிகக் குறைவே. மின்னம்பலம் வழிவிற்பனை
பக்கம் 33 'ஒலை" - 22 (ஜனவரி 2004)

Page 19
செய்யும் வாய்ப்புகள் அதிகரித்தாலும், புத்தகக் கடையில் நேரில் ஒரு நூலைப் பார்த்து வாங்கும் மனநிறைவே வாசகரின் இயல்பு.
பூமியின் ஒவ்வொரு கண்டத்திலும் எத்தனை நாடுகளில் இருந்து காந்தளக மின்னம்பலத் தளமான தமிழ்நூல்.கொம்.தளத்துக்குள் வாடிக்கையாளர் வருகின்றனர் என்பதைக் கீழேயுள்ள முதலாவது வரைபடத்தில் காணலாம். தமிழ்நூல்.கொம். மூலம் ஒவ்வொரு கண்டத்திலும் எவ்வெவ்வளவு விற்பனையாகின்ற தென்பதை இரண்டாவர் வரைபடத்தில் காணலாம்.
இத்துணை எண்ணிக்கையுள்ளநாடுகள், இத்துணை எண்ணிக்கையுள்ள நுகர்ச்சிப் பரப்பு - இதுதான் தமிழ்ப்பதிப்புத் துறைக்குரிய வளமான எதிர்காலம், இத்தனை வாடிக்கையாளரையும் சென்றடையக் கூடியதாக, விற்பனை வலைப்பின்னல் (பருவ இதழ் வெளியீட்டாளர் தமிழகமெங்கும் உருவாக்கியதுபோல்) ஒன்றை உருவாக்காவிடின் தமிழ்ப்பதிப்புத் துறைக்கு எதிர்காலம் என்று ஒன்றைக் கனவு காணலாமா?
மின்வணிகம் தமிழ்நூல் விற்பனையைப் பெருக்குமா?அமெரிக்காவின்புத்தக மின்வணிக முன்னோடியான அமேசன்.கொம்தளத்தினர் தொடங்கிய நாளில் இருந்து இன்று வரை இழப்பிலேயே இயங்கி வருகின்றனர். இதனால் புத்தகம் தவிர்ந்த வேறு பொருள்களையும் தம் தளத்துக்குள் சேர்த்துள்ளனர்.
தமிழ் நூல்களை மின்வணிகத்தில் விற்பனை செய்யச் சில தளங்களே உள. 31, 400 தலைப்புகளை 40 பாட வகைகளாக்கி, 1999 ஆம் ஆண்டு முதலாக மின்னம்பலத்தளத்தின் மூலம் காந்தளகத்தினர் விற்பனை செய்து வருகின்றனர். இன்தாம்.கொம், தம்பிபுக்ஸ், கொம். தமிழ்புக்ஸ்.கொம் எனப் பிற மின்னம்பலத் தளங்களும் உள. ஒவ்வொரு பதிப்பாளரும் தத்தம் வெளியீட்டுப்பட்டியலையும்விளக்கங்களையும்தத்தமக்கானமின்னம்பலத்தளத்துள் அமைத்தால்விற்பனை பெருகும்.
சந்தை என்றால், தமிழக அரசின்நூலகத்துறைஒன்றேன்ன்றமனப்பாங்குட ன்
"ஒலை" - 22 (ஜனவரி 2004) பக்கம் 34
 

செயல்படும் பதிப்பாளர், பதிப்புத் தொழிலை வளர்ப்பவரல்லர் என்ற கருத்தை 1966இல் வலியுறுத்தியவர் கண.முத்தையா. தமிழ்நூல் பதிப்பு / விற்பனைத் தொழிலின் எதிர்கால வளர்ச்சிக்கு என்னென்ன செய்யவேண்டும் என்பதை விரிவாக எழுதியுள்ள அவரின் கருத்துகள் (பதிப்பும் படிப்பும் 2002, பக்.53, 54) பல இன்றும் பொருந்துவன.
தமிழ் நூலின் விற்பனை விலை குறைவாக இருக்கவேண்டுமென்பது எதிர்காலத்துக்குப் பொருந்தாது. அடக்க விலைப் பதிப்புகளும் மலிவுப் பதிப்புகளும் பொருண்மிய வளர்ச்சியற்ற சூழ்நிலைக்குரியவை. 2020ஆம் ஆண்டில் தமிழர் யாவரும் வருவாய்ப் பெருக்கம் உள்ள சூழலில் வாழ்வர் என்பதை உளத்திருத்தி, விலை ஏற்றத்தையும் தர ஏற்றத்தையும் தவிர்க்க முடியாத நடவடிக்கையாகப் பதிப்பாளர்/ விற்பனையாளர் கருத வேண்டும்.
விற்பனையாளர் வலைப்பின்னல் பெருக, பல்மட்ட விற்பனைத் தட்டில் உள்ள ஒவ்வொருவரும் விலையின் ஒரு பங்கைப் பெற வேண்டியவராவர். மொத்த விற்பனைக் கழிவு ஒருநூலின் 80% வரை இருக்கும் காலம் தமிழ் நூலுக்கு வந்தால், விற்பனை அளவும் பல்கிப் பெருகும். அபரிதமாக விற்பனையாகும் பிற மொழி நூல்களுக்கு மொத்த விற்பனைக் கழிவுகள் விலையின் பாதிக்கு மேல் இருப்பது வழமை. விலையை அதிகரித்தலே ஒரே வழி. வாங்கும் சக்தி பெருகி வருவதால் விலை அதிகரிப்பை நுகர்வோர் தாங்கிக் கொள்வர்.
13நூலகங்கள்
நூலகங்களே தமிழ்ப் பதிப்புத் துறையின் ஆவணக் காப்பகங்கள், வாசகர்களைச் சென்றடையாவிடினும் நூல்கள் பல, நூலகங்களைச் சென்றடைகின்றன. அங்கே பாதுகாப்பாக இருக்கின்றன.
தமிழில் வெளியாகும் ஒவ்வொரு நூலும் தமிழ்நாட்டில் கன்னிமரா நூலகத்துக்கு மட்டுமே சென்றடைகின்றது. இந்தியாவில் வேறு நான்கு நூலகங்களுக்குச் செல்கின்றது. இது போதுமானதல்ல, தமிழ்நாட்டில் ஆகக் குறைந்தது பத்து நூலகங்களை அவை கட்டாயமாகச் சென்றடைவதுடன், மலேசியா, சிங்கப்பூர், ஈழம் ஆகிய நாடுகளின் தலை நூலகம் ஒன்றுக்கும் அனுப்புவது கட்டாயமாக வேண்டும். ஆவணப் பாதுகாப்புக் கண்ணோட்டம் மட்டுமல்ல, விற்பனைப் பெருக்கத்துக்கும் மாதிரி நூல்களாக இவை அமையும்.
தமிழர் வாழும் நாடுகளில் தமிழக அரசின் தகவல் - பண்பாட்டு நடுவங்கள் அமைந்து, அந்நடுவங்களின் பகுதியாக நூலகம் ஒன்றும் அமையுமாயின், தமிழ் நூல் வணிகம் பெருகும். பிரிட்டிஷ் கவுன்சில், அல்லயன்ஸ் பிரன்சைஸ், அமெரிக்கத் தகவல்நிலையம் போன்ற அமைப்புகள் உலகெங்கும்தத்தம்நாட்டுநூல்களைப்பரப்பித்தத்தம்பதிப்புத்துறைக்குவளர்ச்சி வேகத்தை ஊட்டுகின்றமைநல்லனடுத்துக்காட்டு
பக்கம் 35 "ஒலை" - 22 (ஜனவரி 2004)

Page 20
14. பயிற்சி
எழுத்தாளருக்கு எழுத்துப் பட்டறைகள், மொழிப் பயிற்சி, கணிப்பொறி மற்றும் தட்டச்சுப் பயிற்சி கொடுத்தல் வேண்டும். மெய்ப்புப் பார்ப்பவர், பதிப்பாசிரியர், பதிப்பாளர், விற்பனையாளர், நூலகர் யாவருக்கும் உயர் கல்வி நிலையங்களில் பட்டய, பட்ட வகுப்புகள் நடாத்திட வேண்டும். இந்தப் பயிற்சிக்கான பாடத்திட்டங்கள் புதியனவற்றை உள்வாங்கி, தொடர்ச்சியான மாற்றத்துக்குள்ளாக வேண்டும்.
தமிழ் மாணவர் எந்த நாட்டில் இருந்தாலும், பயின்றாலும், அவர்களுக்குப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் இருந்தே நூலகப் பயிற்சியும் பாடமும் கட்டாயமாகவேண்டும். நூலகத்துள் மாணவர் சென்று தமிழ்நூல்களைப் பயின்று வருகிறார்கள் என்பதற்கான தேர்வுநிலையும் கட்டாயமாக வேண்டும்.
மின் வணிகம், குறுந்தட்டு என தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நுழைந்தாலும் அச்சிட்ட நூல்களுக்கு அடுத்த 20-50 ஆண்டுகளுக்கு வளமான சந்தை உண்டு. இருப்பில் வைத்திராமல், தேவைக்கு மட்டும் அவ்வப்பொழுதே நூல்களை அச்சிடும் முறை விரைவில் தமிழ் நூல் பதிப்பாளரை ஆட்கொள்ளும். இத்தொழில் நுட்பம் பதிப்பாளர், விற்பனையாளர் இருவருக்கும் அருந்துணையாகும்
எழுத்தாளர் பங்களிப்பு, பதிப்பாளர் பங்களிப்பு, விற்பனை வலைப்பின்னல் உருவாக்கம், நூலகர் பங்களிப்பு யாவும் சேர்ந்தால் தான், விலைகொடுத்து வாங்க ஆர்வத்துடன் காத்திருக்கும் வாசகரைத் தமிழ் நூல்கள் சென்றடையும். அடுத்த 50 ஆண்டுகளில் 45 நாடுகளில் பரவும், 99% எழுத்தறிவும், படிப்பறிவும் பெற்ற 11 கோடித் தமிழர் தொகையை நோக்கி நடைபோடும் தமிழ்ப்பதிப்புத் துறையின் எதிர்காலம், படைப்பாளி, பதிப்பாளர், விற்பனையாளர், நூலகர் ஆகியோரின் இணைந்த கடுமையான உழைப்பிலும் முயற்சியிலுமே தங்கியுள்ளது.
CID
அஞ்சலி சங்கத்தின் முன்னாள் நிதிச்செயலாளர் திரு.இ.விக்னராஜா அவர்களின் தாயார் திருமதி இளையதம்பி தங்கம்மா அவர்கள் 12.12.2003 வெள்ளிக்கிழமையன்று கொழும்பில் வெள்ளவத்தையில் ( 33, E.S.பெர்ணான்டோ மாவத்தை, கொழும்பு -06 ) காலமானார். அன்னாருக்கு 'ஒலை'யின் அஞ்சலிகள்.
"ஒலை" - 22 (ஜனவரி 2004) பக்கம் 38

உழவர் ஒருவரைப்பார்த்து, இந்த அறுவடையில் உங்களுக்கு எவ்வளவு நெல் கிடைத்தது என்று கேட்கிறோம். அதற்கு அவர் நூறு மூட்டை என்கிறார். இந்த நூறு முட்டை நெல்லிற்கு அவர் எத்தனை மூட்டை நெல்லை மூலமாகக் கொண்டு நாற்று விட்டிருப்பார். மிஞ்சிப் போனால் இரண்டு மூட்டைக்கு மேல் இருக்காது. இந்த நெல் விளைச்சலில் நாம் தெரிந்து கொண்டது என்ன? இரண்டு முட்டை நெல்தான் நூறு முட்டை நெல் விளையக் காரணம் என்பதுதானே.
முப்பது கோடியும் வாழ்வோம்' என்றார் பாரதியார். இந்தியநாட்டு மக்கள் தொகை அவர் வாழ்ந்த காலத்தில் முப்பது கோடிப் பேர். இன்று நூறு கோடியைத் தாண்டிவிட்டோம். இடையில் இந்த எழுபது கோடிப் பெருக்கம் எங்கிருந்து வந்தது? அன்றைய முப்பது கோடிதானே இன்றைய நூறு கோடியாக விரிந்தது.
எண்பது அகவைத் தாத்தாவும் எழுபத்தைந்து அகவைப்பாட்டியும் குடும்பப்படம் எடுத்துக் கொள்கின்றனர். மகன்கள். மகள்கள், மருமகன்கள், மருமகள்கள், பேரன்கள், பெயர்த்திகள் என ஒரு சிற்றுரே அவர்களோடு சூழ்ந்து நிற்கிறது. கூட்டிப்பார்த்தால், இருபத்தைந்து முப்பதுபேர் தேறும். தாத்தாவும், பாட்டியும் திருமணம் செய்து கொண்டு ஐம்பத்தைந்து ஆண்டுகளாகின்றன. அப்படியென்றால் இவர்களைச் சூழ்ந்து நிற்கும் இந்த இருபத்தைந்து முப்பது பேரும் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இல்லவே இல்லைத்தானே.
நாம் பேசும் மொழியில் இன்று இலக்கக் கணக்கில் சொற்கள் உள்ளன. இந்தச் சொல் எண்ணிக்கையைப் பின்னோக்கிப் பார்த்துக்கொண்டே சென்றால், குறைந்து கொண்டே போகும். பின்னோக்கிப் போய்க்கொண்டே இருந்தால் கடைசியில் சிலநூறு சொற்கள் தாம் இறுதியில் அடியாக நிற்கும். அந்தச் சொற்களே உழவன் நாற்றங்காலுக்குப் பயன்படுத்திய விதைநெல் போன்ற சொற்கள். அந்தச் சொற்களே அந்த மொழிக்கு மூலச் சொற்கள். அந்தச் சொற்கள் தாம் பலப்பல சொற்கள் விளையக் காரணமான அந்த மொழியின் வேர்ச்சொற்கள். மொழியைப் பற்றி நாம் சொல்வது அறிவியல் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மை உரைகளே.
'கல்' என்பது ஒரு கருமைக் கருத்துவேர். இக் கருமைக் கல், கல்
பக்கம்.37 'ஒலை" - 2 (ஜனவரி 2004)

Page 21
(கரியமலை), கல் - கலை (கரியமுகக் குரங்கு), கல் - கற் -கறு-கறுமை; கல் -கற் -கறு - கறை, கல் -கற் -கறு - கறி (கரிய மிளகு), கல் - கற் - கர் - கருகருப்பு கல் - கற் - கர் - கரு - கரும்பு கல் - கற் - கர்-கரி (கரியானை, எரிந்த சரி), கல் - கற் - கர் - கரவு (உள்ளம் மறைத்தல்), கல் - கல்வு - கவ்வு. கவ்வை (குற்றம், எள்), கல் - கல்கு - கன்கு - கங்கு (கருந்தினை), கல் - கல்கு - கன்கு - கங்கு - கங்குல் (கரிய முகில், கரிய இருள்), கல் - கய்- கயம் (கரிக்குருவி, கரிய யானை), கல் - கய் -கய- கயமை (கரிய கசடு போன்ற பண்பு), கல் - கய் - கய-கயடு- கசடு (குற்றம்); கல் - கள் - களா (கரிய கனி), கல் - கள் - கள்ளம் (மறைந்தொழுகும் இருட்பண்பு), கல் -க்ள் - களர் (கரிய நிலம்); கல் -கள் - கண் (கரிய பகுதியை மிகுதியாகக் கொண்ட பார்வை உறுப்பு) இவ்வாறாகச் சிலநூறு கருமைப் பொருட் சொற்களை ஈன்றளிக்கும்.
மேற்கூறிய கல், கலை, கறுமை, கறை, கறி, கருப்பு, கரும்பு, கரி, கரவு, கவ்வை, கங்கு, கங்குல், கயம், கயமை, கசடு, களா, கள்ளம், களர், கண் ஆகிய பத்தொன்பது சொற்களும் 'கல்' என்னும் ஒரு வேர்ச்சொல் இல்லாமல் இல்லை. ஒன்று பலவாதல் உலகப் பொதுநெறி. அது வேர்ச்சொல்லாய்விற்கும் உரியதே.
-இன்னும் அறிவோம்
நன்றி : தமிழறிவோம் - முனைவர் கு.அரசேந்திரன்
நூல் தமிழறிவோம்
ஆசிரியர் முனைவர் கு.அரசேந்திரன் முதற்பதிப்பு திசம்பர் 2001
வெளியீடு ஒன்றியத் தமிழர் தோழமை ஆத்திரேலியா
விலை ரூ. 9000 (இந்திய)
"ஒலை" - 22 (ஜனவரி 2004) பக்கம் 38
 

சிறுகதை
BetiILII Dub
-ஹகுதார்க் கொத்தன்
தியெழச் செறுவர் போலும் கற்றவர் பரவியேத்தக் கலந்துலந்தலந்து பாடும் அற்றவர்க் கன்பர் போலும் ஆவடுதுறையினாரே!"
"தாயினும் நல்ல தலைவரென்றடியார் தம்மடி போற்றிசைப் பார்கள் வாயினும் மனத்தும் மருவிநின்றகலா
incii a
நுழைதரு நூலினர் ஞாலம் கோயிலுஞ் சுனையும் கடலுடன் குழ்த்த கோணமா மலையமர்ந்தாரே!"
பூஜைஅறையினுள், காலைநேரப்பூஜையைப் பக்திசிரத்தையோடுசெய்து, தேவாரப் பாசுரங்களைப் பன்னோடு பாடி, இறுதியாக திருதாவுக்கரசரின் திருவாவடுதுறைப் பதிகச் செய்யுள் ஒன்றையும், திருஞானசம்பந்தரின் திருக்கோணமலைப் பதிகப் பாட்டொன்றையும் பாடி முடித்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்தார் சாரதா அம்மாள். குளிர் நீரில் குளித்துச் சிலிர்த்த தேகமும் நீறணிந்த நெற்றியுமாக வரவேற்பறைக்கு வந்து மெதுமெதுப்பான சாய்வு ஆசனத்தில் அமர்ந்தார்.
திறந்தஜன்னல்கள்ஊடாக,பூஞ்செடிகளும் குறோட்டன்களும்முழுமையாக வளர்ந்திருக்கும் முற்றத்தைக் கண்கொள்ள நோக்கினர். வனவின் ஒரு மூலை யில் பொற்சரம் தொங்கவிட்டதுபோல் பூக்கொன்னைகள் குலுங்கித் தொங்கும் கொன்றை மரம் 'என்னைப் பார் என் அழகைப் பார்" என்பது போல உணர்வு தட்டியது. மரத்தின் உச்சிக்குமேல் உயர்ந்து நிற்கும் பட்டுப் போன கிளையில் அந்தத் தோகை மயில் ஒய்யாரமாக அமர்ந்திருந்தது. கோணேசப் பெருமான் கோயில் கொண்டிருக்கும் கோட்டை வளாகத்து மயில்களில் ஒன்று அது
பக்கம் ம ga - 2 (arafi 2)

Page 22
திருகோணமலை நகருக்கு வந்த புதிதில், காளி கோயிலுக்குவீழிப்ட்ச்" சென்ற முதல்நாள் காலை வேளையில் கோபுர உச்சியில், உயிர்க்களை ததும்பும் மயில் சிற்பத்ன்தப் பார்த்தபோது சாரதாவின் மனம் ஆகா! என்று அங்கலாய்த்தது. இப்படியும் ஒரு சிற்ப அற்புதமா? என்று ஆச்சரியம் சிறகு கட்டியது. பின் சிந்தை விழித்துக் கொள்ள 'ஏனிந்தப்புதுமை கோபுர உச்சியில் கலசங்களுக்கு மேலாகச் சிற்பம் செதுக்கச் சாத்திர சம்மதமில்லையோ? என்று மனந்தவிக்கையில். சில கணங்கள் தான். வினாக்களுக்குச் சட்டென்று விடை தெளிந்தது. கோபுர உச்சியில் நெடுங்கழுத்தசைத்து வலப்பக்கந் திருப்பி சிறகு கோதிய மயில், தான் சிற்ப மயிலல்ல, ஜீவனுள்ள அசல் மயில்" என்று மெளன மொழி பேசியது. மனமும் ஆறுதலடைந்தது. அந்த அழகில் மனம் கலந்து நிறைந்தது. ~. -י
மயில் சாரதா அம்மாளின் வீடு இருக்கும் வளவுக்கும் ஓர் எண்ணம் பிடித்தால் பறந்து வரும். வீட்டு முகட்டிலோ, நீர்த்தாங்கியிலோ கொன்றை மரத்தில் உயர நிற்கும்பட்ட கிளையிலோதான் தரித்திருக்கும். 'உயரமும், அலம்பல் சிலும்பலற்ற ஏகாந்த இருக்கையும் தான் அதற்கு வேண்டும் போலும், தன்னைப் போல' என்று சாரதா அம்மாள்நினைத்துக் கொள்வார். கிளையில் அமர்ந்திருக்கையில் நீண்டு தொங்கும் புள்ளிகளால் புணியிழைத்த தோகையும் கழுத்தின் நெளிவும் துவள்வும், உச்சிக் கொண்டையின் எடுப்பும், அவற்றில் பச்சையும் நிலமும் பொன்வண்ணப் பரப்பையும் மறுகி மறுகிக் குழையும் வர்ண ஜாலவித்தாரமும், முத்தாமணக்கம் விதை நிரைத்தது போன்ற இறக்கையும் மது மயக்க விழியும் பொழுதெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாமே என்றிருக்கும். குளித்துக் கூந்தலைத் தழைய விட்டு ஆல்வாட உலாவுகையில், கூந்தல் கெண்டைகளைத் தொட்டுத் தடவுகையில் 'மயில் நமக்குச் சரியான போட்டிதான் என எண்ணுகையில் பெருமிதம் சாரதாவை எங்கேயோ எடுத்துச் செல்லும்.
திருகோணமலையில் பிடிமானங்கள் பலவும் கொள்ளை அழகும் கொட்டிக் கிடந்தாலும்,நகர்வலம் வரும் மயில்களும், காட்டில்-மனித வாடை முகர்ந்தாலே மறுகிப்பாயும் மான்கள், முற்றவெளியில் சுதந்திரமாக மேய்ந்து திரிவதும் சாரதா அம்மாவை மிகவும் கவர்ந்த சங்கதிகள். இப்பொழுதெல்லாம் அந்தத் தோகை மயிலைக் கண்டால் மனம் குமுறுகிறது. ஏன் இங்கு வந்து உளைச்சலைப் பீச்சியடிக்கிறது என்று குமைகிறது.
கலாபத்தை வெறுத்துத் தலை குனிய, டீய்போவில் கிடக்கும் அன்றைய ஆங்கில தமிழ்த் தினசரிகள் கண்ணில் பட்டன. ஒன்றை எடுத்து வாசிக்கத் தொடங்கினார். பதுளை இந்து மகளிர் கல்லூரி மாணவிகளின் வகுப்புப் பகிஷ்கரிப்புத் தொடர்கிறது. முஸ்லிம் ஆசிரியைகள் இருவரும் பர்தாவைக் களையும் வரை போராட்டம் தொடரும். முன்பக்கச் செய்தியின் தலைப்புகளைப் படித்ததுமே மனம் வெறுத்துப் போனது. ஜன்னலினூடாகக் கிழக்கு வெளியை வாஞ்சையுடன் நோக்கினார். பசுமை படர்ந்து கிடக்கும் புல்பூத்த முற்றவெளி, மெல்லென ஒசை கொடுக்கும் நாயகியாய் கடல்பரப்பு, கவிந்து விரிந்து தெரியும்
ஒலை" - 22 (ஜனவரி 2004) பக்கம் 40

வானம், பிரடரிக் கோட்டையும் திருக்கோணேஸ்வரர் ஆலய கோபுர உச்சியும் என்று பரந்த, விரிந்த உயர்ந்த பெளதீகப் பரிமாணங்கள் அவர் மனதை ஆறுதல் படுத்தின.
தென்னாபிரிக்காவின் நெட்டால் நகர நீதிமன்றத்தில் பரிஸ்டர் எம்.கே. காந்தி நடாத்திய தலைப்பாகைப் போராட்டமும், இலங்கை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அய்துல்காதிர் நடாத்திய துருக்கித் தொப்பிப் போராட்டமும் அவர் நினைவுத் தடத்தில் தேரோடின. "இரு சமூகங்களின் அடிப்படை உரிமையையும் கலாசார விழுமியங்களையும் வென்றெடுக்க நடந்த போராட்டங்கள் அவை. இன்று இங்கு நதி பின்னோக்கிப் பாய முயல்கிறது" இவ்வாறு சாரதா மனதுள் மொழிந்து கொண்டார். பத்திரிகை படிக்கும் எண்ணத்தைக் கடாவி விட்டு சாப்பாட்டறைக்குத் திரும்பினார்.
சுவரில் அவர் விரும்பித் தொங்க விட்டிருக்கும் புகைப்படங்கள் அவர் பார்வைக்கு வழக்கம் போல விருந்து படைத்தன. பரமஹம்சரின் வாழ்க்கைத் துணைவியார் அன்னை சாரதா தேவியின் உருவப்படம் - ஒரு பக்கத்துக் கன்னத்தில் மாத்திரம் சற்றே முடிதெரிய முக்காடிட்டிருந்த அந்தத்தவக்கோலம் மனோகரமாய் இருந்தது. இல்லறம் இருந்து கொண்டே கணவன் வழியில் துறவற நோன்பு நோற்ற அந்த வீரத்தாயை எண்ணிப் பெருமிதமுற்றார். நெற்றியை ஒட்டி இளநரை சிரிக்கும் முன்மயிர் தெரிய முக்காடிட்ட கோலம். அந்தக் கண்களில் தெறித்துப் பாயும் அறிவின் வீச்சுமாக அடுத்த படத்தில் இந்திராக் காந்தி புன்னகைத்தார். "பெண்ணுக்குப் பெண்ணாகவும் வேண்டியபோது ஆணாகவும்" வாழ்ந்து வரலாறு படைத்த வீரமகள். நேருவின் தவப்புதல்வி என மனமொழி பேசிக் கொண்டார் சாரதா அம்மையார். அடுத்து முக்காடிட்ட முழுமையாய் கஸ்தூரி பாயின் கருணை முகம். இல்லறமும் பிரும்ம சரியமும்' எனத் தத்துவம் வகுத்துக் கொண்ட கணவனுக்குக் காரியம் யாவிலும் கை கொடுத்த முதுமகள். முக்காட்டுக் கோலம் தாங்கிய அந்த மாது சிரோன்மணிகளின் முகார விந்தங்களில் பொலியும் அழகில் சாரதாவின் மனம் நிரம்பியது.
உடனே அவர் சிந்தையில் ஒரு சிறு பொறி தட்டியது. புத்தக அறைக்குள் சென்றுறாக்கையில் அடுக்கியிருந்த சஞ்சிகைகளில் ஒன்றைத் தேடியெடுத்துப் பக்கங்களைப் புரட்டினார். இஸ்லாத்துக்கு மதம் மாறிய அந்தக் கேரளத்துப்புகழ் பூத்த பெண்மணியின் பேட்டியும் படங்களும் பிரசுரமாகியிருந்த பக்கங்களில் பார்வையை மேயவிட்டார். முக்காடில்லாமல் அழகாயிருந்த அப்பெண்மணி-மீரா நாயர் முக்காட்டுக் கோலத்திலும் அழகுடன் தான் இருந்தார். "பார்க்கின்ற பார்வையின் கோணத்தில் தான் எதற்கும் பொருள் புலனாகும்" என்று மனதால் வசனித்த சாரதாவின் வதனம் பூவாய் மலர்ந்தது.
"அம்மா! சாப்பிட வாங்க"
சமையல்காரி காலை உணவுக்காக அழைத்தாள். சாப்பிட்டு முடிந்ததும்
வரவேற்பறைக்கு வந்து சாய்வு நாற்காலிக்கு உடற்சுமையை மாற்றினார்.
பக்கம் 41 ஒலை" - 22 (ஜனவரி 2004)

Page 23
வேலைக்காரி மாத்திரைகளும் தண்ணிரும் கொண்டு வந்தாள். அதுவும் முடிந்தது. உடல் சற்று வேர்க்கத் தொடங்கியது. சற்றைக்கு முன்தான் குளித்த உடம்பு. குமையும் மனம். உடலின் இணக்கப்பாடு. வேலைக்காரி சமயோசிதை புத்திசாலியுங் கூட மின் விசிறியைச் சுழல விட்டாள். மனமும் சுழல, கடந்த கால நிகழ்வுகளும் சுழன்றன.
a
இழப்புகளின் தொகுப்புத்தான் வாழ்க்கை என்றாகிவிட்டது. இழந்தவை பல. இழக்காதது தைரியம் ஒன்றுதான். ஆரம்பத்தில் அம்மாவை - படித்துத் தேறி உயர்ந்தநிலைக்கு வந்தபோது அப்பாவை இழக்க நேர்ந்தது. பின் பனை வைரம் படைத்த இரும்பு நெஞ்சக்காரி என்று கரித்துக் கொட்டிய உறவினர்களை இழக்க நேர்ந்தது. தவிர்க்க முடியாத நியதியின் பாற்பட்ட இழப்புகள் அவை,
'பல்கலைக் கழகத்தில் கூடப் படித்தவன் அறிவுஜீவிகளாய், கலா ரசிகர்களாய், ஆய்த நண்பர்களாய், மாவலி அணைந்தோடி வளஞ் செய்யும் சோலையிடை, கலையும் எழிலும் கவி மொழியும் பல்கலைக்கழக வளாகத்துள் அமர்ந்து - நடந்து - கதைத்து - மகிழ்ந்து - சிரித்து நிறைந்த இனிமைக்குப் பங்காளியான அவனை இழந்தது தவிர்க்க முடியாத நியதியா?அவன் மாத்திரம் துணிந்திருந்தால் தவிர்த்திருக்கலாமே!
"மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றுத முத்துடைத் தாம நிரை தாழ்ந்த பந்தர்க்கீழ் மைத்துடனன் நம்பி மதுசூதனன் நீவந்தென் கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழாநான்'
என்று தான் கண்ட கனவை, நாச்சியார் திருமொழி வாயிலாக - சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் பாடலாக தோதான சொற்கள் மாற்றிக் கதைத்திருந்த பொழுதுகள் மங்கள செளந்தர்யம்மிக்கவை. அவன் பெயர் கிருஷ்ண குமார் - மதுசூதனனுக்கு மறுபெயர்.
படிப்பும் முடிந்து பட்டமும் பதவியும் பெற்று, பின் தங்கைகளைக் கரை சேர்க்க என்று காரணமும் சொல்லி பெற்றார் நிர்ப்பந்தத்தில் பெருந்தன சம்பந்தத்தில் கன்னியொருத்தியைக் கைத்தலம் பற்றினான் என்றறிந்த போது ஏற்பட்ட இழப்போ வாழ்க்கையைச் சூனியமாக்கியது.
அவனது சுமைகளின் பங்காளியாகக் கூடியவன் தானே நான்?என்ன புரிதல் அவனுக்கு?
"கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ? திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ? மருப்பொசித்த மாயவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்"
என்றுபாடும் சந்தர்ப்பம் அமையாது தற்காத்தபோது, அவனுக்காய் மனதுள்
ஒலை" - 22 (ஜனவரி 2004) பக்கம் 42

உருவாக்கி வைத்திருந்த படிமம் அசையாது இறுகிக் கிடக்கின்ற போது - மனதைப்பலாமுள்ளாய்த் தடவிக் கொண்டிருக்கின்ற போது, புதியதொரு படிமம் பற்றி நினைக்கவே முடியவில்லை. உறவுகளும் சுற்றமும் எவ்வளவு வற்புறுத்தியும் இசைந்துபோக முடியவில்லை. அப்புவும் ஆச்சியும் எவ்வளவுதிர்க்கமாய்ப் பெயர்வைத்து விட்டனர். சாரதா தேவி என்று. அவன் பரிசளித்த இட்டு நிரப்ப முடியாத அந்த இழப்பு தாங்க முடியாதது தான்.
பிள்ளைகளோடும், பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர். களோடும், பிள்ளைகளையும் ஆசிரியர்களையும் தாவரிக்கும் ஊழியர்கள் அதிகாரிகளோடும் இணைந்துபோன வாழ்க்கையில் அந்த இழப்பையும் ஆற்றிக் கொள்ள முடிந்தது.
ஆனால் இன்று ஏற்பட்டிருக்கின்ற இழப்பு ஒரு பெண்ணுக்கு நேரக்கூடாதது. இந்த இழப்போடு வாழ்வதை விட, நீங்காத நினைவுகள், துயரங்கள், வடுக்கள், உணர்வுகள் முதலாக எல்லாமே மண்ணுக்கு ஊனாகி, அல்லது நெருப்புக்கு விருந்தாகிப் போயிருக்கலாம். அப்படியும் நிகழவில்லை. ஏனிந்தத் தீர்ப்பும் அடுக்கடுக்கான சோதனைகளும்
மின்விசிறி இயக்கத்தை நிறுத்திக் கொண்டுவிட்டது. பகல்நேர மின்வெட்டின் பரிபாலனம் என்பதன் அறிகுறி அது. சாரதா அம்மாள் ஆசுவாசத்தோடு தலைநிமிர்ந்து, ஜன்னலூடாகச் சரக் கொன்றை மரத்தைப் பார்த்தார். நெடிதுயர்ந்த அந்தப்பட்ட கிளையில் தோகை மயில் இல்லை. பண்ணிய குசும்பு போது மென்ற பொன்மனங்கொண்டு பறந்து விட்டது போலும்.
வாசல் கேற்றடியில் வந்து தரித்த முச்சக்கர வண்டியிலிருந்து இறங்கிய பெண் கேற்றைத் திறந்து சார்த்திவிட்டு உள்நோக்கி வந்தாள். சாரதாதேவியும் போட்டிக்கோவில் இறங்கி எதிர் கொண்டு வரவேற்றார்.
"ஜெஸ்மின் ரீச்சர் வாங்கோ நினைக்கேக்க வந்திற்றியள். எனக்கிப். பெல்லாம் புத்தி தடுமாறுது பாருங்கோ. வருவியளோ வரமாட்டியளோ எண்டு ஜமிச்சப்பட்டிட்டன். வெளி சொறி, மிக்க நன்றி"
"அம்மா இதென்ன பேச்சு? எதுக்கு இந்த மன்னிப்பும் நன்றியும். உங்கட சின்னவிருப்பம். அதை நிறைவேற்ற எனக்குக் கிடைச்சதோ பெரிய பாக்கியம்"
"இல்லரீச்சர். பாம்பின் காலப்பாம்பறிய வேணும்.நான் ஐமிச்சப்பட்டிருக்கக் கூடாது."
"விடுங்கம்மா. உங்கட நிலைமையில உள்ள எல்லாருக்கும் பதட்டமும் சமுசியமும் வரத்தான் செய்யும்"
இருவரும் உள்ளே வந்தனர். ஜெஸ்மின் ரீச்சர், தான் கொண்டு வந்த பொட்டலத்தை பரிவு கலந்த பணிவோடு சாரதா அம்மாளிடம் கொடுத்தார்.
பக்கம் 43 'ஒலை" - 22 (ஜனவரி 2004)

Page 24
"ரீச்சர் இருங்கோ. நீங்கள் பாத்துச் சரிசொன்னால்தான் நான் விழாவுக்குப் போவன்!"
சாரதா பொட்டலத்துடன் தன் படுக்கை அறைக்குச் சென்றார். உடனே உடை மாற்றினார். பொட்டலத்தைப்பிரித்து ஒவ்வொன்றாக எடுத்துப்பார்த்தார். அவை, வெள்ளை, இள்மஞ்சள், சந்தனம், தவிட்டு நிறம், கறுப்பு வண்ண ஹிஜாய் துண்டுகள். இன்று உயர் நிலைக் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவியரும், உத்தியோகம் பார்க்கும் முஸ்லிம் பெண்களும் பெருவழக்காக அணியும் முக்கோண முக்காட்டுத் துண்டுகள். ஓரங்களில் சிறுமலர் அரும்புகள் என்ன சிறுகுஞ்ச முடிச்சுகளும், தையல் அலங்காரங்களும் கொண்டவை.
சாரதா நிலைக்கண்ணாடி முன்நின்று, ஒவ்வொன்றாக மாற்றி மாற்றி அணிந்து பார்த்தார். ஒவ்வொன்றுமே தன் முகத்துக்கும் நிறத்துக்கும் பொருத்தமாகவும் அழகாகவும் இருப்பதாக எண்ணினார். இவ்வேளையிலும் அந்தச் சண்டாளனின் ஞாபகம் வரவே சந்தன வர்ணத்தைத் தெரிந்து கொண்டார். சந்தனம் மங்கலமானது. அணிந்திருக்கும் கடுகு வண்ணச் சேலைக்கும் கன கச்சிதமாகப் பொருந்துகிறது. என்கினும் அவர் மனங்கவர்ந்த அந்த மதுசூதனன் சந்தன வர்ணப்பிரியன் என்பது ஆழ்மன உணர்வாக ஆதிக்கம் செலுத்தியது. அவனுடைய பிறந்தநாள் பரிசாக, கண்டியின் ஆடம்பரமான ஜவுளிக் கடையொன்றில் வாங்கிக் கொடுத்த சட்டையைப் பெற்றுக் கொண்டு அவனடைந்த குதூகலம் இருக்கிறதே - வார்த்தைகளில் சிறைப்பிடிக்க முடியாதது. "சாரதா! உனது செலக்ஷன் பிரமாதம்! சந்தனக்கலர்தான் எனக்குப் பிடிக்கும்" என்றான் அற்றைப் பொழுதில்,
நெஞ்சில் நெருஞ்சி நெருக்கெனப் பாய்ந்தது. கண்கள் வெட்டிய வாழைத் தண்டாகின. சில கணங்கள் கனத்துக் கழிந்தாலும் சுதாரித்துக் கொண்டார். கண்களைக் கைக்குட்டையால் ஒற்றித் துடைத்துக் கொண்டார். மற்ற ஹிஜாய்களை மடித்து பத்திரப்படுத்திவிட்டு வெளியே வந்தார்.
"அம்மாடியோய்! வலு அழகாய் இருக்கிறீங்கம்மா! எண்ட கண்ணே பட்டிடும் போலிருக்கு!" என்றாள் வேலைக்காரி.
"ஒமோடி என்ரை அஞ்ஞாத வாசத்துக்கு ஒரு முடிவு கிடைத்துவிட்டது. எத்தனைக்கு வீட்டிலேயே அடைஞ்சு கிடப்பன். சாகும் வரை என் பணிகளைச் செய்துதான் தீருவேன். ஒமோம்! நான் தைரியசாலி!"
மண்டபத்துக்கு வந்து சோபாவில் அமர்ந்தார். தயாராயிருந்த ஹோர்லிக்ஸ்' பானக் கோப்பைகளை இருவரும் காலி செய்தனர். சாரதா மெல்லக் கதைக்கத் தொடங்கினார்.
"இதப்பாருங்க ஜெஸ்மின். தமிழ் மொழி அமுலாக்கம் தொடர்பான மாநாடும் கருத்தரங்கும். இந்த நகரத்தில் நடக்கின்றது. ஏற்பாட்டாளியாகவோ, பேச்சாளியாகவோ கலந்துகொள்ள ஏலாமல் விதியமைந்து விட்டது. பார்வை
"ஒலை" - 22 (ஜனவரி 2004) பக்கம் 44

யாளியாகவாவது கலந்துகொள்வதுதெப்படி என்று மனம் மாரடித்தது. கடவுள் வழியொன்றைக் காட்டிவிட்டார்"
சற்று ஆசுவாசத்தின் பின் அவரே பேசினார்.
"ஜெஸ்மின்! இது எனக்கு நாலாவது சேவை நீடிப்பு என்பது தெரியுந்தானே! நரை என்னை நெருங்கப் பயந்து கிடந்தது. ஆனால். இந்த நோயென்ற அறக்கொட்டி வந்து அறக்கொட்டி விட்டுட்டடி.."
என கையில் கண்ணிர் வார. விம்மி அழத் தொடங்கினார். வேலைக்காரியும் அழுதாள்.ரிச்சரும் கண் கலங்கினார். ஜெஸ்மின்ரீச்சர் கண்களைத் துடைத்துக் கொண்டு ஆறுதல் சொல்லத் தொடங்கினார்.
"மேடம்! நீங்கள் மன உறுதியுள்ளவர்கள்.நீங்கள் இப்படி அழலாமா. கடவுள் உங்களைக் கைவிடமாட்டார். கலங்காதங்கோ" என்றாள்.
"ஏலி. ஏலி. லாமா சபக்தானி என் இறைவா என் இறைவா! ஏன் என்னைக்
கைவிட்டாய் என்று ரட்சிக்க வந்த கர்த்தர் சிலுவையில் அறையப்பட்ட பின்னர் இவ்வாறு கதறினார். அப்படியிருக்க நான் எம்மாத்திரம்"
என்று கூறிய சாரதாதேவி மனதைத் திடப்படுத்திக் கொண்டு ஒருவாறு அழுகையை நிறுத்தினார்.
"மேடம் இதப் பாருங்க. புதிய வசந்தத்துக்காக மரங்கள் இலை உதிர்ப்பதில்லையா?நீங்க பட்ட மரமே இல்ல.இலை உதிர்மரம் அவ்வளவுதான். வெளிக்கிடுங்க போவம்" என்று ஜெஸ்மின் கூறிய கையோடு சாரதா கம்பீரமாக எழுந்தார்.
"ரீச்சர்! பெண்ணின் அழகு பிற ஆடவருக்கு விருந்தாகக் கூடாது என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு என்றுதான் இதுவரை நான்அறிந்திருந்தேன். ஆனால் அதற்கு அப்பாலும் அர்த்தங்கள் உண்டு என்பதை இப்பொழுது உணர்ந்து கொண்டேன்!"
சாரதா படியிறங்கிக் காரை நோக்கி நடந்தார். ஜெஸ்மின் ரீச்சர் தொடர்ந்தார்.
"டான். டான். டான்."
காளி கோயில் மணியோசை ஒலித்தது.
பக்கம் 45 gamaw" — 22 (gaugiausim 2004)

Page 25
உதவும் கரங்கள் ஒலை ஓங்கி வளர்வதற்காக உதவிக் கரங்கள் வழங்கிய
- இவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்
திரு.எஸ்.ழரீஸ்கந்தராஜா, அவுஸ்திரேலியா 5000.00, திரு.இசர்வானந்தன், லண்டன் 5000.00 திரு.பி.சிவலிங்கம், லண்டன் 5000.00 திரு.செ.பாலகிருஷ்ணன், ஜேர்மனி 3270.00 திரு.சிறீமோகன், ஜேர்மனி 2725.00 ஓர் அன்பர், ஜேர்மனி 2725.00 திருமதிசிவாஜினி குகதாஸ், திருகோணமலை 2000.00. திரு.N.பத்மநாதன், தெகிவளை 2000.00 திரு.சிசற்குணநாதன், ஜேர்மனி 2000.00 கல்லாறு சதீஸ் , சுவிஸ் 2000.00 திரு.சு.சந்திரகாந்தன், ஜேர்மனி 635.00 திரு.க.சிவதாஸன், ஜேர்மனி 1635.00 திரு.கதிருநாவுக்கரசு, லண்டன் 1590.00 ஓர் அன்பர், லண்டன் 1590.00 திரு.அ.சுதர்ஸன், லண்டன் 500.00 சீகோபாலசிங்கம் (வெல்லவூர்க் கோபால்) மட்டக்களப்பு 1000.00 S.T.S.Əgə{{[56m/T6ÖıJi5ğ5üb, கொழும்பு 1000.00 ந.கண்ணதாசன், கொழும்பு 1000.00 இ.சுந்தரலிங்கம், தெகிவளை 500.00 இரா.நடராசா, கொழும்பு 500.00 ம.தியாகராஜா, கொழும்பு 50000 ஆ.இராஜகோபால் (செம்பியன் செல்வன்), யாழ்ப்பாணம் 500.00 திருமதி.ரூபி.வெலன்ரீனா பிரான்சிஸ், மட்டக்களப்பு 500.00 எம்.பி.செல்வவேல், கொழும்பு 500.00 வி.இராஜேந்திரம், கொழும்பு 500.00
"ஓலை’ tே22:(ஜனவரி 2004) பக்கம்4ல்ே

9 ஒலை 17வது இதழ் மகாகவி சிறப்பு மலராக வெளிவந்துள்ளது. மகாகவியோடு நெருங்கிய தொடர்புடைய இலக்கியவாதிகளான எம்.ஏ.நு.மான், சண்முகம் சிவலிங்கம், முருகையன் முதலியோருடைய ஆக்கங்கள் இடம் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது.
நீலாவணன் சிறப்பு மலரைத் தொடர்ந்து 'மகாகவி சிறப்பு மலர் வெளிவந்திருப்பது மிகவும் பொருத்தம். இந் நடைமுறை ஏனைய இலக்கியவாதிகள் சார்பாகவும் தொடருதல் நன்று. 'ஒலை தரமான இலக்கிய ஏடாக வெளிவருவது குறித்து மீண்டும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
18. நல்லையா வீதி, இரா.நாகலிங்கம் (அன்புமணி) மட்டக்களப்பு. 4.12.2003
தாங்கள் அனுப்பிவைத்த ஒலை 17 இன்று கிடைத்து பெருமகிழ் வெய்தினேன்.
மிகத் தூரத்தில் இருந்தாலும் தமிழ்ச் சங்கத்தின் பணியையும், மகத்தான சாதனைகளையும் தொடர்பு சாதனங்கள் மூலம் அறிந்து பெருமைப்படுகின்றேன்.
வாழ்க நும் தமிழ்ப்பணி.
89, S.M.Road, Maruthamunai- 02 A.H.M.Majeed JP Tel.067-20876 05.12.2003
ஒவ்வொரு மாதமும் தவறாமல் என் வீடு தேடி வருகின்ற ஒலைக்கு மனமார்ந்த நன்றிகள். இதுவரை ஒலைக்கு உதவாமையையிட்டு மனம்
வருந்துகின்றேன்மிகவிரைவில்என்உதவிநிச்சயமாகஒலைக்குக்கிடைக்கும்
தற்கால இலக்கிய உலகிற்கு தமிழ்ச் சங்கம் ஆற்றும் சேவை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. சிதறிக் கிடக்கும் இலக்கிய முத்துக்களைத் தேடித் தொகுத்துச் சேர்த்து எழில் மாலையாகக் கொடுக்கும் தமிழ் சங்கத்துக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள். இலக்கியஆர்வலர்மட்டுமல்லாதுதமிழுலகம்இந்தநூலைப்படித்துப்பயன்தர
பக்கம் 47 "ஒலை" - 22 (ஜனவரி 2004)

Page 26
வேண்டுமென்று அன்புடன் வேண்டுகின்றேன். மேலும் இது போன்ற இனிய நூல்களைதமிழிலக்கியஉலகிற்கு அளித்துபெருமை சேர்க்கவேண்டுமென
பழனியாணர்டி வசி வடக்கு மடக்கும்புர மேல்பிரிவு வட்டகொடை 05.12.2003
தாங்கள் பத்தாவது இதழில் இருந்து எனது நாமத்திற்கு சேர்ப்பிக்கும் ஒலை இதழ்கள் ஒழுங்காக என் கரம் கிட்டுகின்றன. நன்றி.
கவிஞர் நீலாவணனின் "ஒட்டுறவு" நூல் வெளியீட்டு வைபவத்திற்கு அடியேன் வருகை தந்தபோதுதான் தமிழ்ச் சங்கம் எவ்வாறான சேவைகளை தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் ஆற்றி வருகிறதென்பதை அறிந்து கொள்ள முடிந்தது. தமிழ்ச்சங்கத்தின் இந்த தன்னலமற்ற சேவைகள் பாராட்டப்பட வேண்டியவை. அத்தோடு அந்த நேரிய சேவைகள் தாய் மொழியாம். தமிழுக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் கிடைக்க எனது பங்களிப்பை இத்தால் காசோலையாக அனுப்பியுள்ளேன்.
எதிர்வரும் வருடத்திலிருந்து மாத வருமானத்தில் ஒரு சிறு பகுதியை ஒதுக்கி வருட இறுதியில் வருடந்தோறும் தமிழ்ச் சங்கத்திற்கு அனுப்பி வைக்க அடியேன் தீர்மானித்துள்ளேன் என்பதையும் அறியத் தருகிறேன்.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சேவைகள் இந்த நாட்டின் ஏனைய நகரங்களிலும் விரிக்கப்பட்டு அன்னை மொழியாம் தமிழுக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் கிடைக்க இலக்கிய கர்த்தாக்கள் பங்களிப்பு செய்யின் அது வரவேற்கப்படக் கூடிய செயலாக அமையும் என்பதில் கிஞ்சித்தும் ஐயம் இல்லை.
20, தனியார் பேருந்துநிலையம், சிபக்தசீலன்
அவிசாவளை 12.12.2003
"ஒலை" - 22 (ஜனவரி 2004) பக்கம் 48

区。 W
S) Aa 魏
தமிழ்ச் சங்கத்தின் குரலாய் தரணி எங்கும் ஒலிக்க
ஓலை ஒயாமல் வர
வளர எம் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் !
ܠܓܘ
a
சங்கம் கல்வி நிலையம் உருத்திரா மாவத்தை வெள்ளவத்தை GlgiTOGGulf : 23638
కెL പ്
v
དབྱེ་

Page 27
நித்தியகல்யாணி
அப்பழுக்க
பெல்ஜிய
சர்வதேச இரத்தி (International G உறுதிப்படுத்தப்பட் உத்தரவாதமளிக்கப்ப பைகளில் மூடி
bllIüssi
jutu 230 காலி வீதி தொலைபேசி
தொலை
மின்னஞ்சல்
MIN_–
 
 
 
 

ாவத்தை
நகை மாளிகையில்
கற்ற வைரம்
LÈS (Belgium) எக்கல்லியல் நிறுவனத்தினால் em mological Institute) டு - பரிசோதிக்கப்பட்டு
|ட்டு - மாற்றமுடியாதபடி த் தாளிடப்பட்டது.
ாவத்தை
IMIGOuf egluGJIMI
கொழும்பு - 0[5. :2363392,2362427
BJ,5ủ + 2504933
itās,