கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இரசிகமணி மலர்மாலை

Page 1

|-No-

Page 2

இரசிகமணி மலர் மாலை
தொகுப்பாசிரியர் . சி. செல்லத்துரை
வெளியீடு இரசிகமணியின் இலக்கிய அன்பர்கள்

Page 3
வெளியீடு : 24 - 10 - 67
அச்சுப்பதிவு : ஈழநாடு அச்சகம்
யாழ்ப்பாணம்
கிடைக்குமிடம்:
1 யாழ்வாணன், மாநகரசபை அலுவலகம்
யாழ்ப்பாணம்
2. தனலக்குமி புத்தகசாலை,
சுன்னுகம்.
விலை: ரூபா 1-00

என்னுரை
இரசிகமணி கனக. செந்திநாதனது ஐம்பதாவது வயதுப் பூர்த்தியைக் கொண்டாடும் முகமாக, அவரது நெருங்கிய இலக்கிய நண்பர்களிற் சிலர் நாமும் ஏதா வது செய்யவேண்டும் என்று யோசித்தோம். பொற் கிழி - பணமுடிப்பு என்றெல்லாம் பேசினுேம். இலக்கிய சேவைக்காக, பணம் பெறக்கூடியவர் அ ல் ல இரசிக மணி என்று பலர் அபிப்பிராயப்பட்டார்கள். எனவே நண்பர்களாகிய நாம் அவரது வாழ்வுபற்றிப் பத்திரி கைகளிலும், வெளியீட்டு விழாக்களிலும் வெளி வந்த வற்றைத் தொகுத்து வெளியிட எண்ணினுேம். ஒரு சங் கற்பம் செய்து கொண்டோம். 'இந்தத் தொகுப்பு நூலுக்காகப் புதிதாகக் கட்டுரைகள் எழுதுவிப்பதில்லை. அதில் எவ்வளவோ சங்க.ம். காலம் போதாது' என் பதுதான் அது
இத்தொகுப்பின் பொறுப்பை என்னிடம் சுமத்தி ஞர்கள். நானும் சந்தோஷத்தோடு ஒப்புக்கொண் டேன். "ஈழகேசரி’ வாழ்க்கையிலிருந்து அ வ  ைர ப் பரந்த இலக்கிய உலகத்துக்கு வீரகேசரி மூலம் கொண்டு வந்தவன் நான் என்று இர சி க ம ண் யே பெருமை யோடு சொல்லிக்கொள்வார். "மத்தாப்பு' என்ற குறு நாவல் முகவுரையில் இரசிகமணி அதை மூடி ம  ைற க் காமல் வெளிப்படையாக எழுதியுள்ளார். அவருடைய எழுத்துலக வாழ்க்கையில், மத்தாப்பு, மணிமகுடம், இலக்கிய சர்ச்சை, பழையபுத்தகங்களின் அறி மு கம், கொய்த மலர் என்ற படைப்புக்களுக்கு இடமளித்தது வீரகேசரி. அதன் நிருபர் எ ன் ற முறையிலும் அவர் மீதுள்ள பாசத்தாலும் இந்த ம ல ர் மா லை யி ன் பொறுப்பை ஏற்றுக் கொண்டதில் பெருமையடைகி றேன். பத்திரிகையில், நூல்களில், பேச்சில் கையெ ழுத்தில் வெளிவந்தவற்றைச் சேகரிப்பதில் என்னுடன்

Page 4
பல நண்பர்கள் ஒத்துழைத்தார்கள், முக்கியமாக இரசி கமணியின் ஊரில் பிற ந் த வ ரு ம், யாழ் - இலக்கிய வட்டத் த லை வ ரு ம் சிறந்த நாடக இயக்கு நருமாகிய ஏ. ரி. பொன்னுத்துரை, இந்நூலை வெளி யிடுவதில் அதிக அக்கறை காட்டி உழைத்தவரும் யாழ்இலக்கிய வட்ட இணைச்செயலாளரிலொருவருமாகிய திரு. நா. சண்முகநாதன் ஆகிய இருவரும் குறிப்பிடப் படவேண்டியவர்கள்.
இம் மலர்மாலையில் ஒரே விடயத்தையே திருப் பித்திருப்பிச் சொல்லாமல் இரசிகமணியின் பல வேறு பட்ட இலக்கியத் தொண்டை எடுத்துக்காட்ட முயன்றி ருக்கிருேம். முக்கியமாக, பண்டிதமணி சி. க. அவர் கள் இரசிகமணியின் ஆசிரியகலாசாலை வாழ்க்கையைப் பற்றிக் கூறி, அக்காலத்திலேயே அவர் விமர்சகர் ஆவதற்குரிய "அறிகுறி களுடன் காணப்பட்டார் எள எழுதியுள்ளமை நோக்கத்தக்கது சிந்தாமணி ஆசிரி யர் இராஜ. அரியரத்தினம், ஈழகேசரிப் பத்திரிக்கை யோடு செந்திநாதனுக்குள்ள தொடர்பையும், "மறு மலர்ச்சி” வரதர், மறுமலர்ச்சிக் காலந்தொடங்கி இன்று வரை தமக்குள்ள தொடர்  ைப யும் இரசிகமணியின் இலக்கிய வாழ்வையும் சுவைபட எழுதியுள்ளார்கள்.
பிரபல எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை இலக் கிய வளர்ச்சி பற்றி எழுதவேண்டும் என்று தூண்டிய வேண்டுகோளும், நாடக ஆசிரியர் தேவன் ‘மூன்ருவது கண்‘ என்பது பற்றி எழுதிய விமர்சனக் குறிப்பும், பிரபல சிறுகதை எழுத்தாளர், மூதூர் வ. அ. இராச ரத்தினம் ‘கவிதை வாளில் ஒருவளர்பிறை" பற்றி எழு திய கடிதமும் இம்மாலைக்கு நறுமணமூட்டுகின்றன.
s இரசிகமணியுடன் நெருங்கிய தொடர்புடையவர் களும் இலக்கிய உலகில் பிரசித்தி பெற்றவர்களுமான திரு. சு. வே. திரு. க.சி. குலரத்தினம், யாழ்வாணன் ஆகி யோரது கட்டுரைகள் இம்மலரை நறுமணமூட்டுகின்றன. சன்மார்க்க சபையின் காரியதரிசியாகியதிரு ஏ. ரி. பொன் னுத்துரை இரசிகமணியின் கிராமத் தொண்டுபற்றி

யும் தலைமையாசிரியர் பரஞ்சோதி அவர்கள் செந்தி நாதனது ஆசிரியக் கடமைகள் பற்றியும் செல்வி இருதய ருே சா, அவரது படிப்பித்தல் திறமைபற்றியும் கூறி யுள்ளமை நோக்கத்தக்கது. பேராசிரியர் சாலை இளந் திரையன் கடிதம், மதிப்புக்குரிய ‘தீபம் " ஆசிரியர் நா. பார்த்தசாரதியின் ஆசிரியத் தலையங்கம், * சரஸ்வதி ' ஆசிரியரது அறிமுகம் எல்லாமே இரசிக மணியின் இலக்கியத் தொண்டுக்கு நற்சான்றிதழ்கள்.
தகுதியுள்ள ஒருவருக்கு " வழங்கக்கூடிய " பட் டத்தை அளித்துப் பெருமைப்படுத்திய திரு. எப்.எக்ஸ். சி. நடராசா அவர்களது கட்டுரையும், இரசிகமணியினது மனைவி பற்றிச் " குறமகள் பேசிய குறிப்பும் இம் மாலையின் மூக்கிய அம்சங்கள். கவிஞர் இ. நாகரா ஜன் கட்டுரை இரசிகமணியின் வாழ்வைத் தொகுத் துக் காட்டுகிறது. இன்னும் சிறந்த நட்பாளரும் மல்லிகை ஆசிரியருமாகிய ஜீவா ? வின் சுருக்கமான படப் பிடிப்பும், இம் மாலையைப் பூரணப்படுத்துகின் றன.
கவிஞர்களின் கவிதை, பிற நறுக்குக் குறிப்புகள் எல்லாம் இரசிகமணியை அறிய உதவும், பக்கத்தை நீட்டாமல் அளவானதாக இம்மாலையைக் கொண்டுவரு தல் வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தால் எத்த னையோ குறிப்புக்களை விட்டுவிட வேண்டி ஏற்பட்டது. அரசியல் தலைவர்கள், பிற பொதுநல ஊழியர்கள், இலக்கியச் செல்வர்கள் என்போரது தொகுப்பு நூல் கள் தமிழ் நாட்டில் ஏராளமாக வெளி வந்து உலாவு கின்றன ஈழ நாட்டில் இலக்கிய வாழ்வு வாழ்ந்தோ ரைச் செத்ததற்குப் பின்தான் வாழ்த்துகிருர்கள் என்ற பழிமொழி உண்டு. அதை உடைத்தெறிய இந்த மலர் மாலையைக்கொண்டு வந்ததில் நாம் பெருமைப்படுகி ருேம்.
தனது பிள்ளைகளுச் சீதனமாக அவர் பொருள் சேர்க்கவில்லை. காணி, விளை நிலம் தோட்டம் வாங்க வில்லை. ஒய்வு நேர வேலையாக "டியூசன் கொடுக்கவில்லை.

Page 5
தானுண்டு தன் குடும்பமுண்டு எ ன் று வாழவில்லை. சென்ற முப்பது வருடமாக அவர் இந்த நாடு, அத ன் எழுத்தாளர், அவர் படைப்புக்கள் என்றே சிந்தித்தார். நூல்களை வாங்கினர். நல்லவற்றை அறிமுகம் செய்தார். ஒரு தமிழ் ஆசிரியரின் வாழ்வு எப்படிப் பட்டது என்று எமக்கெல்லாம் தெரியும். அவர் அப்படி வாழவில்லை. தான் இலக்கிய வாழ்வு வாழ்ந்ததோடு எத்தனையோ எழுத்தாளரை அறிமுகம் செய்து வைத்தார் பிற ர் எழுதிய நூல்களை வெளியிட்டார் அவரால் ஈ ழ ம் பெருமைப்படலாம். எழுத்தாளர் தலை நிமர்ந்து நடக்க லாம் அவரைப் பற்றி அறிய எவ்வளவோ உண்டு அதில் இது ஒரு துளி. பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூ வைத்திருக்கிருேம் ஆன ல் மன நிறைவோடு அதனை நுகர்ந்து இன் புங்கள்,
இந்த மலரை துரிதகதியில் அழகுற அச்சிட்டுத் தந்த “ ஈழநாடு ** அச்சகத்தாருக்கும் மேலட்டையைச் சிறப்புற உருவாக்கியுதவிய சுன்னகம் திருமகள் அழுத் தகத்துக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
நாவற்காடு, சி. செல்லத்துரை அச்சுவேலி, 23-10-67.

என் வாழ்த் துக் கள்
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
னேக. செந்திநாதன் சைவாசிரிய கலாசாலையில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் இலக்கிய L1 1TL —ĝ5 திட்டம்பற்றி ஒரு பிரச்சனை வந்தது. இப்பொ ழுது இந்து சமய பாடத்திட்டப் பிரச்சனை வந்ததுபோல. அப்போது தேம்பாவணியில் ஒரு பகுதி ஆசிரிய மாண வர்தளின் இலக்கிய பாடத்திட்டத்தில் ஒன்ரு ய் வந் தது அது சைவாசிரிய மாணவர்க்கு வேண்டியதொன்று அன்று என்று அதனை நான் எதிர்த்தேன். இலக்கி யகப் போர் ஒன்று மூண்டது, அச் சந்தர்ப்பத்தில்.
பரமேசுரப் பண்டித ஆசிரிய பயிற்சிக் கலாசாலை யாருக்கு திருநெல்வேலி சைவர சிரிய பயிற்சிக் கலா சாலையார் இலக்கிய பாடம் ஒன்று முன்மாதிரிகையாக படிப்பித்துக் காட்ட வேண்டிய ஒரு தருணம் கிடைத்
• انتظ
ஒசை பெற்றுயர் பாற்கடலுற்றெரு பூசை முற்றவும் நக்குபு புக்கென
என்ற கம்பராமாயண அவையடக்கச் செய்யுளை பும் -அதனை அப்படியே படி எடுத் துரைக்க முயன்றது தேம்பாவணி அவையடக்கச் செய்யுள் ,- அதனையும் சேர்த்து இரு செய்யுள்களையும் படிப்பித்துக் காட்டு ம்படி ஆசிரிய மாணவர் ஒரு வருக்கு ஆயத்தம் செய்து வைத்தேன். அவர் இரு செய்யுள்களின் பொழிப்பு, பதவுரை, விளக்கம் என்றி வைகளை நடத்திப் பின் 'நன்கவி’ ‘புன்கவி* இயல்புகளைக் கம்பரில் எடுத் துக்காட்டி, அதன் மேல் மேற்காட்டிய செய்யுள்கள் எவ்வகையைச் சேர்ந்தவை என்று வினவி விரும்பிய

Page 6
வாறு விடைபெற்றுக் கொண்டு, பிறகு அச் செய்யுள் கள் எங்கே உள்ள  ைவகள்? ஆக்சியோர் யாவர்? என வினவித் தெளிவித்தார் பாடம் முடிந்தது. மறை முகமாகப் பாடபுத்தகம் விதிப்பவர்களை தொட்டுக் காட்டுவதாய் இருந்தது
பாடம் முடிந்த பின் குறிப்புரை தொடங்கியது. ஆசிரிய மாணவர்கள் குறிப்புரை கூறினர்கள். அவர் களுள் ஒருவர் கனக. செந்திநாதன்,
செந்திநாதன் கூறிய குறிப்புரை நுட்பமும், விவே கமும் படைத்ததாக இருந்தது. அக் குறிப்புரைய்ை டாக்டர் சிவப்பிரகாசம் (பண்டித பயிற்சிக் கலாசாலை அதிபர்) பெரிதும் பாராட்டினர் அன்று தொடக்கம் செந்திநாதன்மேல் எனக்கு ஒரு கண் இருந்தது. அத ஞல் பயிற்சி முடிந்த பிறகும் செந்திநாதனின் தொட ர்பு இன்று வரை வளர்ந்துகொண்டே இருந்து வருகி நிறது.
நான் நவீன இலக்கிய உலகத்தையோ, ஜனநாயக உலகத்தையோ தீண்டாத மிக மிகப் பழமையான பிற் போக்காளர்களோடு தொடர்பும், மதிப்பும் உள்ள வன். செந்திநாதன் அதற்கு எதிரானவர் இக்கால இலக்கிய உலகில் மு மு கித் திளைத்தவர். அப்படி யிருந்தும் எ ங் க ள து  ெத ர ட ர் பு of 6f ர்ந்து கொண்டே இருக்கிறது. அவர் என்னிடம் என்ன பெற்றரோ நானறியேன். அவரிடம் நான் பெற்றவையதிகம். செந்திநாதனைச் சந்திக்குந்தோறும் நவீன உலகைப் பற்றி விசாரிப்பேன். அவர் கணக குப் போட்டு இந்த ஆண்டு வெளிவந்த கதைகள் இத்தனை, நாவல் இத்தனை, நாடகம் இத்தனை, கவிதை இத்தனை. அவற்றுள் உயர்தரமானவை இவை என்று சொல்லுவார். நான் கேட்டுக் கொண்டிருப்பேன். நான் அவற்றை வாசித்துப்பார்க்க விரும்புகிறேன் என்று பெரும்பாலும் அவருக்குச் சொல்லுவதில்லை,
2

சொன்னுல் அவற்றை யெல்ல7 ம் கட்டிச் சுமந்து கொண்டு வந்துவிடுவார் . என்ற பயத்தினலேதான் நான் சொல்வதில்லை.
செந்திநாதன் நவீன இலக்கிய உலகைத் தரிசிப் பதற்கு ஒரு தூரதிருஷ்டிக் கண்ணுடியாய் எனக்கு அமைந்திருந்தார். இப்போது அவர் வெளியிட்ட ஈழத்து இலக்கிய வளர்ச்சி பழமை க்கும், புதுமைக்கும் பாலமாய் அமைந்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைந் தேன். அதன் தலையங்கங்களைக் கண்ட மாத்திரத்தி லேயே புத்தகத்தையும், செந்திநாதனையும் என்மனம் வாழ்த்தத் தொடங்கி விட்டது.
குறித்த புத்தகம் உயர்தர வகுப்பு மாணவர்க ளுக்கும், ஆசிரியர்களுக்கும், கல்விமான்களுக்கும் அரி பதொரு விருந்தாயமைந்து பெருமதிப்பைப் பெறு ம்ெ ன்டது எனது நம்பிக்கை,
அன்றி இப்புத்தகத்தின் தொடர்பாக இன்னும் பல புத்தகங்கள் அவர் வாயிலாக வெளிவரலாம்.
கடவுள் திரு. கனக செந்திநாதனுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அருள்வாராக!
V/*MYMM//M/''." - Aov-/*A NA NA" AN A NA"./"JoJo-A"Jov-A"V-A "\ /ov/o-o-
'நமது பழைய எழுத்தாளர் பரம்பரையை ஒதுக்க முயல்பவர்களும், ஈழத்து எழுத்தாளரின் இலக்கியத் தரம் போதாது என்று அங்கலாய்ப் பவர்களும் எங்கள் ‘நடமாடும் வாசிக சாலை'யுடன்
சற்று உரையாடவேண்டும்.
- கலைச்செல்வி ஆண்டுமலர்.

Page 7
எழுத்துத்துறையில்
எல்லாந் தெரிந்தவர்
இராஜ அரியரத்தினம்
சிந்தனைக்கு இடந்தராது இரவல் சர்க்கை வைத்துக்கொண்டே கதை பண்ணும் எழுத்தாளர்கள் தாம் உலகில் பெரும்பாலாராக இருந்துவருகிருர்கள். அவர்கள் ஆட்சிதான், பத்திரிகைகளில் பெரும்பாலும் இருந்து வருகிறது. புகழ், பொருள், மரியாதையெல்லாம் இத் திருக்கூட்டத்தாருக்குத் தான் கிடைத்தும் வருகி றது. சுயமாகக் கற்பனை செய்து எழுதும் எழுத்தா ளர்களுக்கும் மனித வாழ்க்கையைப் பல கோணங்க ளிலே பார்த்துக் கற்பனை மெருகு கொடுத்து அழகு றச் சித்தரித்துக்காட்டும் எழுத்தாளர்களுக்கும் போதிய ஆதரவு இல்லாமலிருந்து வருவது நம் நாட்டில் நிக ழும் பல விந்தையான நிகழ்ச்சிகளில் ஒன்ரு கும்’ என, எனது நண்பர் திரு. நாரண-துரைக் கண்ணன் 1948 ஆம் ஆண்டில் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு அவர் கருத்துரை கூறிப் பதினுறு ஆண் டுகள் உருண்டு ஓடிவிட்டபோதிலும், தமிழ் எழுத்தா ளர்களை ப்பற்றிய அவருடைய மதிப்புரையில் அவ்வ ளவு மாற்றம் ஏற்படவில்லை எ ன் றே பலர் இந்த 1964 ஆம் ஆண்டிலும் கூறுவர்.
சுய சிந்தனையுடன் தமிழ் இலக்கியத்தைக் காலத் துக்கு ஏற்ற வகையில் மரபுவழிநின்று வளமுறச் செய்து வருபவர்களில் அன்பர் கனக. செந்திநாதன் மிக முக்கிய மானவர் என்பதை எவரும் மறுக்க முன்வரார்.
4.

ப்த்திரிகைத் துறையிலும் இலக்கியத் துறையிலும் எனது கவனத்தைக் கவர்ந்து வருபவர் அவர். அன் பரின் எழுத்துக்களைக் கடந்த இருபத்தினன்கு ஆண்டு களாக நான் கவனித்து, எடைபோட்டு வருகின்றேன்.
ஈழகேசரியில் அதன் தலைவர் திரு. நா. பொன்னையா அவர்களுடன் நான் பணியாற்றிய ‘இலக்கியப் பொற் காலத்தில் திரு. பொன்னையா அவர்கள் திரு. செந்தி நாதனின் எழுத்துக்களில் மிளிரும் அழகுகளை நன்கு இரசித்து வந்தார்கள். இப் பெரியாரின் பெரும் பிரிவு எனக்கும் திரு. கனக. செந்திநாதன் போன்றவர்களுக் கும் ஈடுசெய்யமுடியாத நஷ்டமாகும்.
யாழ்ப்பாணத்திலே ஈழகேசரிப் பொன்னையா அவர் களின் தலைமையில் திரு. செந்திநாதனின் இலக்கியப் பணிகளைப் பாராட்டி ஒருவிழா நடைபெற்ருலோ என்று நான் ஆசைப்படுவதுண்டு. இந்த அற்புதம் நிகழ்ந்தால் ஈழகேசரியும் இன்று செந்திநாதன் மலர் ஒன்றினை இலக் கிய அன்பர்களின் கரங்களில்தவழச்செய்திருக்கு மன்ருே!
மட்டக்களப்புத் தமிழகம் இலக்கிய நண்பர் செந்தி நாதனே வாழ்த்தி அவரை ‘இ ர சி க ம ணி யெனக் கெளரவித்திருப்பது அனைவருக்கும் மிகுந்த பெருமை தி டுவது.
தங்கத்தாத்தா சோமசுந்தரப் புலவர், முதல் தமிழ்ப் பேராசிரியர் விபுலானந்த அடிகளார், புலவர்ம பெரியதம் பிப்பிள்ளை ஆகிய பெரும் புலவர்களின் பாடல் களை நாடு நயக்கச் செய்தவர் செந்திநாதன் அவரே கர வைக் கவியாகத் தோன்றி ஈழத்துப் பேணு மன்னர் களைத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகம் செய்து வைத் தார். ஈழகேசரி வெள்ளிவிழா ம ல ரு க் கு ஒளி யூட்டும் வகையில் ஈழத்து ஒளிவிளக்குகளை மணி மண்ட பத்தில் ஏற்றி வைத்தார்.
சிறு கதைகளும் நாவல்களும் எழுதிய செந்திந்ாதன் நல்ல கவிதைகளையும் நயந்து அவற்றின் சுவையை வாச கர்களுக்கும் நல்கிவருகின்றர். இவற்றினுக்கும் மேலாக அவருடைய புத் த க விமர்சனங்கள் தமிழகத்திலும் அவருக்குப் புகழீட்டித் தந்தன.
இப்பெருஞ் சிறப்பை நன்குணர்ந்து தமிழ் இலக்கிய நண்பர்கள் அன்னரைக் கெளரவிப்பது தமிழ் அன்னை யைக் கெளரவிப்பதாகும்.

Page 8
கைகொடுத்து உதவியவர்
தி. ச. வரதராசன்
99
'', என்று ஊதினல் விழுந்துவிடக்கூடிய ஒரு வரை யாழ்ப்பாண நகர வீதிகளிலும், பத்திரிகைபுத்தகக் கடைகளிலும், சினிமாத் தியேட்டர்களிலும், கூட்டங்கள், விளையாட்டுக்கள் நடைபெறும் இடங்களி லும் அ டி. க் க டி சந்திப்பீர்களானல், அவர் தான் திரு. கனக செந்திநாதன் அவர்கள். ஊதினுல் விழுந்து விடக்கூடிய அவ்வளவு மெலிந்த மனிதராயினும், இலக் கிய உலகில் எதிர் நோக்கி வீசிய கடும் புயல்களையும் எதிர்த்து முன்னேறிய வலிமை இவருடையது.
ஈழகேசரி இளைஞர் சங்ககாலத்திலிருந்தே நண்பர் செந்திநாதனேடு எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. இப் போதெல்லாம் இடறி விழுந்தால் ஒரு எழுத்தாளர் மீதுதான் விழவேண்டும். தவறி வேறிடத்தில் விழுந் தால் அங்கே எம்மீது மோதுவதற்கு ஒரு விமர்சகர் காத்துக்கொண்டிருப்பார்! ஆணுல், அந்தக் காலத்தில்சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னல் நிலைமை வேறு. ஒரு எழுத்தாளனையோ அல்லது இரசிக்னேயோ கண்டு விட்டால், ஏதோ ஒரு புதையலைக் கண்டது மாதிரி. நாலு எழுத்தாளர்கள் கூடிவிட்டால் நேரம் போவதே தெரியாது. நாலு பேருக்கும் நாலு கொள் கைகள் இருக்கக் கூடும். ஆனலும் அ ங் கே நாலு கட்சிகள் உண்டாவதில்லை. என்னதான் இலக்கியச் சண்டைகள் பிடித்தாலும், அவர்களுக்குள் அறுக்க முடியாத ஒரு பிணைப்பு இரு க் கும். அந்தக்காலம் அந்தக்காலம் தான்.
6

இப்படியான "அந்தக் கா லத் தி லே, எனக்குப் பழக்கம் ஏற்பட்ட நண்பர் செந்திநாதன் இன்று வரை யும் விட்டுவிலக முடியாத ஒரு நண்பராக இருந்து வருவது ஆச்சரியமல்ல.
ஈழகேசரி இளைஞர் சங்கத்தின் மூலம் அறிமுகமான சில நண்பர்கள் ஒன்று கூடி "தமிழிலக்கிய மறுமலர்ச் சிச் சங்கத்தை ஆரம்பித்தோம். அதில் குறிப்பிடத் தக்க ஒருவர் நண்பர் செந்திநாதன் மறுமலர்ச்சிச் சங்கத்தின் பின்னணியில் 'மறுமலர்ச்சி என்ற ஒரு பரிசோதனையை - பத்திரிகையை - நடாத்திக் கொண் டிருக்கும் போது, சங்கம் மெ ல் ல மெல்ல ஓய்ந்து போய்விட்டது. ஆனலும், ஆர்வம் குன்ருத பத்துப் பன்னிரண்டு இளைஞர்கள் மறுமலர்ச்சியோடு இணைந்து, * எழுத்தாளர்களாக உருவாகிக் கொண்டிருந்தோம். அந்த எழுத்தாளர்களில், ந ண் பர் செந்திநாதனும் தோளோடு தோள் நின்று முன்னேறிக்கொண்டிருந்தார். இந்தப் பத்துப் பன்னிரண்டு பேரோடு நாட்டிலே பல பாகங்களிலுமுள்ள வேறுசிலரையும், ‘எழுத்தா ளர்கள்’ என்ற அந்தஸ்துக்கு உயர்த்தி வைத்ததோடு, புதிய தமிழ் இலக்கியம்பற்றி ஈழத்தமிழகத்தில் ஒரு விழிப்பையும் நம்பிக்கையையும், ஏற்படுத்தி வைத்து விட்டு மறுமலர்ச்சி புகழுடம்பு எய்திவிட்டது.
இதன் பின்னல் என்னுடைய போக்குக்கும் நண்பர் செந்திநாதனுடைய போக்குக் குமிடையே ஒரு வித்தி யாசம் ஏற்பட்டது.
மறுமலர்ச்சி அநுபவத்தை வைத்துக்கொண்டு நான்  ெக |ா ஞ் ச ம் கொஞ்சமாக "பிஸ்னெஸ் ஸை ஆரம்பித்தேன். போதாதற்கு, ‘ஒருவன யிருந்தவன் என்னை இரண்டாக்கி வா ழ் க்  ைக  ைய இரசிக்கத் தொடங்கிவிட்டேன். இலக்கியம் என்னைவிட்டுத்தூரப் போய்க்கொண்டிருந்தது ஆணுல், நண்பர் செந்திநாதன் இதற்கு நேர்மாறு. ஈழகேசரி இளைஞர் சங்க காலத்தி
7

Page 9
லும், மறுமலர்ச்சி காலத்திலும் எப்படி அவர் இலக் கியமே மூச்சாக இருந்தாரோ, அதே நிலையில்தான் இன்றைக்கும் இருக்கிருர், அவருக்குத் தோதான பTட சாலை. ஆசிரிய உத்தியோகம். பிற் ப க ல் இரண்டு மணிக்குப் பள்ளிக்கூடம் விட்டதும் அவர் வீட்டுக்கு ஒடிப்போய் விடுவதில்லை நேரே யாழ்ப்பாண நகருக் குத் தான் வருவார், பத்திரிகை-புத்தகக் கடைக ளில் ஆராய்தல், கூ ட் ட ங்க ள் விளையாட்டுக்குப் போதல், சினிமாப் பார்த்தல், இலக்கிய நண்பர்க ளைச் சந்தித்தல் இவைகளில் சில வாவது தினந்தே றும் அவருக்கு இருந்துகொண்டிருக்கும். இதீதனைக் கும் பிறகு அவர் வீட்டுக்குப்போனலும் வீ ட்  ைட வீடாக வைத்திருக்க அவருக்கு நல்லதொரு நாகம்மை வாய்த்திருக்கிருர், அதை அவரே மிகப்பெருமையுட:ே தெரிவித்து தமது ஈழக் து இலக்கிய வளர்ச்சி என்னும் ಸ್ಥಿತಿ! அந்த அம்மை யாருக்குச் சமர்ப்பணம் செய்திருக்
(ηγ. Π.
நான் இலக்கியத்தை விட்டுத் தூர விலகினலும், அது என்னே விடாமல் தொடர்ந்துகொண்டுதா னிருக் கிறது. இளம் வயதில் மனத்தில் விதைத்த எண்ணங் கள் அடிக்கடி குமுறி எழுவதுண்டு. அப்படி பான சந்தர்ப்பங்களில் ஏதாவது செய்யத் துடிக்கும்போது ஓடிவந்து கைகொடுப்பவர் நண்பர் செந்திநாதன்.
பண்டிதமணியின் க ட் டு  ைர க ள் சிலவற்றைத் தொகுத்து வெளியிடவேண்டுமென்று எனக்கு ஒரு ஆசை எழந்தது. எங்கள் ஈழநாட்டு வாசகர்களுக்காக மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து அடிக்கடி வரும் அறி ஞர்களுக்குக் கூட எங்கள் ‘பண்டிதமணி யைப் பற்றிப் புழுகும்போது அவர்கள் கேட்பார்கள், ‘அவர் எழுதிய எதையாவது பார்க்கலாமா?’’ என்று-அந்த வேளையில் தலை கு னி வதை த் தவிர வேறு வழியில்லாதிருந்தது பண்டிதமணியின் கட்டுரைகள் வெளிவந்த பழைய பத்திரிகைப் பிரதிகளைச் தேர்ந்தெடுத்து, அவர்கள்
8

டம் கொண்டுபோய் 'படித்துப் பாருங்கள்’’ என்று கொடுக்க முடியுமா? இந்தக் குறையைப்போக்கவேண்டு மென்று எனக்கு ஒரு “வெறியே ஏற்பட்டது. ஆனல், பண்டிதமணியின் கட்டுரைகள் அவரிடமே இருக்கா தென்பது எனக்குத் தெரியும். அவற்றை எங்கெங்கே போய்த்தேடிச் சேர்ப்பது? அவற்றுள்ளும் ஒருமுகப்
பட்ட சிலவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டுமே!--இந் தக் கவலையெல்லாம் எனக்கு இருக்கவில்லை. நண்பர் செந்திநாதனிடம் இந்த எண்ணத்தைத் தெரிவித்ததும், அவர் மிகுந்த உற்சாகத்துடன் நான் எதிர்பார்த்ததை விட மிக விரைவாகவே தம்முடைய பொக்கிஷ சாலை யிலிருந்து தேவையான கட்டுரைகளைத் தெரிந்தெடுத்து அருமையான ஒரு தொகுப்பை என் கையில் தந்தார்.
அந்தத் தொகுப்பைத் தான் ‘இலக்கிய வழி' என்ற
பெயரில் நீங்கள் படித்திருக்கிறீர்கள். இந்த நூலின்
புறவிதழில் பண்டிதமணியவர்களே, இதன் நற்ருய் திரு. கனகசெந்திநாதன்' என்று குறிப்பிட்டுள்ளார்,
அதிக சலசலப்பில்லாம் ல் எழுத்துத்துறையில் ஈடு பட்டிருந்த செந்திநாதன் அவர்களை, ஈழகேசரியில் அவர் எழுதிய ஒரு கட்டுரைத் தொடர் வெளிச்சம் போட்டுக்காட்ட ஆரம்பித்தது. 'கர வைக் கவி கந்தப்ப னர்’ என்ற புனைபெயரில் “ ஈழத்துப் பேணு மன்னர்கள்’ என்ற கட்டுரைத் தொடரை அவர் எழுதிக்கொண் டிருந்தபோது எழுத்தாளர்களும், இலக்கிய ரசிகர் களும் இந்தக் கந்தப்பனர் யாரென்பதை அறிவதில் மிகுந்த அக்கறை செலுத்தினர்கள். ‘ஈழத்துப் பேணு மன்னர்கள்’ என்ற சங்கப் பலகையிலே இடம் கிடைத்த எழுத்தாளர்கள் அதைத் தங்களுக்கு ஒரு கெளரவ DIT 5 நினைத்தார்கள். திரு. கனக. செந்திநாதனுக்கு எழுத்துலகிலே ஏற்பட்டிருக்கும் அதி முக்கியத்துவத் துக்கு அவர் எழுதிய ஈழத்துப் பேணு மன்னர் வரிசை தான் காரணமென்று நான் நினைக்கிறேன்.

Page 10
இலக்கிய வழிக்குப் பிறகு அ ல் வா ய் க் கவிஞர் திரு மு. செல்லையாவின் கவிதைகளை விமர்சிக்கும் * கவிதை வானில் ஒருவளர்பிறை என்ற விமர்சனப் பிரசுரமொன்றும், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களைப்பற்றிய ‘மூன்ருவது கண்‘ என்ற நூலும் நண்பர் செந்திநாதன் எழுதி, வ ர த ர் வெளியீடாக வெளிவந்துள்ளன. -
அன்று தொட்டு இன்றுவரை அவர் என்னுடைய நல்ல நண்பனுக இருந்து வருவதை நான் ஒரு பெருமை யாகவே கருதுகிறேன் இலக்கிய ரசிகர்கள் அவரது பெருமையை அறிந்து 'இரசிகமணி' யாக்கியிருக்கி ருர்கள். நண்பர் கனக செந்திநாதனுக்கு ‘இரசிகமணி' என்ற பட்டம் நல்ல பொருத்தம் மிகதல்ல பொருத்தம். 11 - 5 - 64 .
இரசிகமணி கனக செந்திநாதனுக்கு அறிமுகம் தேவையில்லை. ஈழத்து இலக்கிய வளர்ச்சி, ஈழத் துக் கவிமலர்கள், மூ ன் ரு வது க ன், கவிதை வானில் ஒரு வளர்பிறை, கலை மடந்தையின் தவப் புதல்வன் என்ற நூல்களின் ஆசிரியர். மத்தாப்பு ஒவியக் கலை, சிறுவர் சித்திரம், சைவநற்சிந்தனை கள் என்ற நூல்களின் பதிப்பாசிரியர் ஈழத்து விமர்சகர்களில் ஒருவர். சிறுகதை, நாவல், நாட கம் என்ற துறைகளில் கை தேர்ந்தவர்.
'தரமான படைப்புகளின் அறிமுகம் இதுவே. இதுவே என் மூச்சு' என்ற கட்டுரைக்கு ஆசிரியர்
எழுதிய அறிமுகம்.
- சுதந்திரன்
10

உங்களைப்போல
நாலுபேரிருந்தால்.
தேவன் - யாழ்ப்பாணம்
திங்கள் * கவிதை வானில் ஒரு வளர்பிறை வெளி யானபோது மகிழ்ந்தவர்களில் ஒருவன் நான். ஆனல் எனக்கு அப்பாற்பட்ட விஷயத்தைப்பற்றி என்ன எழுது வது என்று அப்போது மெளனமாய் இருந்துவிட்டேன். இப்போது அழகான அமைப்புடன் வெளியாகியிருக்கும் “மூன்ருவது கண்ணைப் பற்றி யாவது ஒரு வா ரீர் த் தை எழுதாவிட்டால் அப்புறம் ஏதுக்கு என் பேணு என்று தோன்றுகிறது.
வரலாற்றுநூல் எழுதுவது மகா சி ர ம ம். ஆனல் தாங்களோ எடுத்த எடுப்பிலேயே அம் முயற்சியில் பெரு வெற்றியடைந்துவிட்டீர்கள். இலட்சியம், இலக் கணம், நடையலங்காரம் என்று எத்தனையைச் சொல் லட்டும்.--இந்த அவசரயுகத்தில் நூல் நீளமாக இருக் கக் கூடாது. அதற்காக விஷயத்தையும் தியாகம் செய்யக்கூடாது. இந்த வரம்புக்குள் நின்றுகொண்டே நீங்கள் பண்டிதமணியை அழகுபடக் கண்மு ன் நிறுத்தி விட்டீர்கள்.
நடுவில் சொ ல் ல வே ண் டி ய சம்பவத்துடன் தொடங்கி முற்பகுதியை யெல்லாம் மேய்ந்து பின்னர்
11

Page 11
பின்னர், பிற்பகுதியைத் தொடரும் முறை வரலாற்று நூல்களில் மேலை நாடுகளில் அதிகமாகக் கையாளப்படு கின்றது. பண்டிதமணியின் பால்யம், நாவலர் பாடசாலை யில் , , , , ஆகிய இரு பகுதிகளும் தொடக்கத்தின் மூச்
சில்லே சரித்திரமாணவரின் குறிப்புப்போல அமைந்து
விட்டது. இடையே சில துணு க் கு களை விதைத்து சுவாரஸ்யமூட்டியிருக்கலாம்.
முடிவுரை அகற்றப்படவேண்டிய பகுதி. ஒருவரு டைய வரலாற்றின் முடிவுரை அவருடைய வாழ்க்கை, சேவை, தோற்றம் எதையோ பற்றிய முத்தாய்ப்பாக அமையவேண்டும். ஒரு வேண்டுகோளாகவோ அல்லது இன்னுெரு வரைப் பற்றியதாகவோ இருக்கவே கூடாது. நூல் முழுவதும் ஏறிக்கொண்டே வந்த விறுவிறுப்புக்கு இது ஒரு விழுக்காடு. 'டண்’ என்று முடிவு இரு க் க வேண்டும். R
பண்டிதமணியின் பே ச் சைக் கேட்டிருக்கிறேன். உங்கள் நூலைப் படித்ததும் எனக்கு அவர் பேரில் ஒருவகைக் காதலே பிறந்துவிட்டது. உதட்டுச் சேவை செய்பவர்களிலும் பார்க்க நீங்கள் உருப்படியான கா ரி ய த் தை ச் சாதித்திருக்கிறீர்கள் எந்த எந்த ஊரிலோவெல்லா மிருக்கும் தமிழறிஞர்களைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிருேம் நம்மவர்களைப்பற்றித் தெரிந்துகொள்ள முனைவதில்லை முடிவதுமில்லை. நல்ல வேளை! உங்களைப்போல நாலு பேரிருந்தால் எங்கள் மத்தியில் மிளிருங் "கண்"களும் மங்கமாட்டர. வாழ்க உங்கள் பேணு! வளர்க உங்கள் பணி!
(**மூன்ருவது கண் வெளியானபோது GT ழு தி ய பாராட்டுக் கடிதம்:- 19-12-59, 1
12

பிறந்த ஊருக்குப் பெருமை தேடித்தந்த பெருமகன்
6. 命. பொன்னுத்துரை
திமிழ் இலக்கியப் பூங்காவின் இதந்தரு மலர்களை இளமைமுதல் நுகர்ந்து, சிறுகதை, நாவல், நாடகம் போன்ற பல்வேறு துறைகளில் தரமான சிருஷ்டிகளை தந்து, விமர்சனத்துறையில் வி ய த் த கு முன்னேற்றம் அடைந்து, எ முத்து ல கி ல் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை ஸ்திரமாக்கிக்கொண்ட கனக. செந்திநாதன் அவர்களை "ஒரு நடமாடும் வாசிக சாலை’ என்கிருர் ஓர் அறிஞர். "பழமை க்கும் புதுமைக்கும் பாலமாக அமைந் கவர்” என்று இறும் பூதெய்து கிருர் இன்னெரு இலக் கியப் பிரமுகர்.
பண்டிதமணி முதல் இளம் எழுத்தாளர்வரை அனை வரையும் நேசித்து, தமிழணங்கு தன்னிகரற்ற படைப் 11க்களுடன் இலங்கவேண்டும் என்ற இதயமுடையவர் பன்ருர் ஒரு வளரும் எழுத்தாளர். யானைதடவிய குருடர்களின் போக்கில் இவரைப் பார்க்காது நடுநிலை யில் நின்று நோக்கின் ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் இவர் ஒர் மைல்கல் என்ரு ல் மிகையாகாது. இலக் கியப் ப  ைட ப் புக ள் மூ ல ம் மட் டு ம் தமிழ் சேவை புரியாது. சங்கங்கள் சபைகள் மூலம் கிராமங் களிலும் இலக்கியத் தொண்டை சமூக சேவையை புரிய முடியுமென்ற அசையாத நம்பிக்கை கொண்ட வர் இவர். அதனல் வள்ளல் ஈழகேசரி பொன்னையா வால் குரும்பசிட்டியில் நிறுவ ப் பட்ட சன்மார்க்க * பையின் முக்கிய அங்கத்தவராய், உப தலைவராய்
13

Page 12
திகழ்கிருர். பொன்னையா அவர்கள் தலைவராய் இருந்த காலத்திலும் அவருக்குப் பின்னும் இச்சபையின் வேலை களில் இணைந்து பிணேந்து பல சாதனைகளைச் செய் தார். தெருக்கள் அகல்வித்தல், புதிய வீதிகளை திருத் தல், சுடலை, சந்தை போன்ற இடங்களை திருத்துதல் வைத்தியசாலை, மத்திய கல்லூரி அமைத்தல் போன்ற தொண்டுகளில்-சபை ஈடுபட்ட வேலைகளில்-எல்லாம் பாட்டாளி மகன்போல இவர் ஒத்துழைத்தார். எந்த வேலையையும் செய்ய தயங்கியது கிடையாது. தனது இன்பமூட்டும் சம்பாஷனைக் கலையால், நகைச்சுவைத் துணுக்கால் வேலை செய்யும் மற்றவர்களையும் அலுக்கா மல் ஊக்கி தொண்டுபுரிய உதவியவர். மயிலிட்டிக் கிராமசபை அங்கத்தவராய்ச் சிலகாலம் இவர் பணி ஆற்றினர் என்ரு ல் அதற்குக் கூட காரணம் இவரது அயராத கிராமசேவையும் ஏழை களையும் மற்றையோரை யும் ஒரே நோக்கில் பா ர் க் கு ம் தாரதம்மியமற்ற பண்புமே ஆகும்.
பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களின் 'சைவ நற் சிந்தனைகள்’ என்ற அரிய நூலை சன்மார்க்க சபை வெளியிடவேண்டுமென்பதில் ஊக்கம் காட்டி உற்சாக மாய் வேலைசெய்து வெற்றிகண்டவர் இவர். “ Lp i தாப்பு’, ‘சித்திரக்கலை", "சிறுவர் சித்திரம்’ ஆகிய நூல்களை சன்மார்க்க சபையில் மிகச் சிறந்த முறையில் வெளியிட்ட பெருமையும் இவருக்குத்தான் உண்டு. கல்விப் பகுதியினரால் அங்கீகாரம் பெற்று பல கல்விச் கூடங்களிலும் உபயோகிக்கப்பட்டுவரும் "சைவசமய போதினி” என்ற சன்மார்க்க சபையின் புத்தக வரிசை கள் உயர்ந்த முறையில் வெளிவர பல வழிகளிலு! உதவியவர்களில் இவரும் குறிப்பிடப்பட வேண்டி வர். புராண படன, சமயப் பிரசங்கங்கள் என் வற்றை வருடாவருடம் த வருது தெய்வ ஸ்தலங் ளில் செய்து அதன் மூலம் சமயபக்தியையும், கல இலக்கிய ரசனையையும் கிராம மக்களிடையே வளர் தவர். பத்திரிகைக் காட்சி, புத்தகக் காட்சி என்
14

வற்றை நடாத்தி இ ள ம் உள்ளங்களை இலக்கியத் துறைக்கு திசைதிருப்பியவர் நாடகக் கலையை வளர்க்க ஆக்கமும் ஊக்கமும் தந்தவர் *தாகம்’, ‘மன்னிப்பு", 'ஒளி பிறந்தது" என்ற நாடகங்களை எழுதி சன்மார்க்க நாடகமன்றத்து இளம் உறுப்பினர்க்கு கொ டு த் து நடிக்கும் படி தூண்டியவர். "தானுண்டு தன் வீடுண்டு’ என்று வாழாது மக்கள் மத்தியில் உழைத்து பேச்சால், எ முத் தா ல், கிராமசேவையால் அரும்பணியாற்றிய கனக. செந்திநாதன் "பிறந்த ஊ ரு க் கு பெருமை
தேடித்தந்த பெருமகன்'. t
அவரது இலக்கியப் பணி யை க் கெளரவிக்கும் இந்நாளில் சன்மார்க்கசபையும் தனது வாழ்த்துதலைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. வாழ்க அவரது கிராமத் தொண்டு! வளர்க அவரது இலக்கியப்பணி!! வீரகேசரி-1964.
இர ட் டி ப் பு ம கி ழ் ச் சி சி. சுவாமிநாதன்
ஐ. நா. கல்விச் சபைக் குச் சமர்ப்பிப்பதற்காக பேராசிரியர் திரு தெ, பொ. மீ ஞ கூதி சு ந் த ர ம் 'இலங்கையும் தமிழும்" என்ற தலைப்பில் ஆங்கி லத்தில் தயாரித்துவரும் ஆராய்ச்சிக் கட்டுரையில் ஈழத்துப் பூதந்தேவனுர் தொடக்கம் விபுலானந்தர் வரை ஈழத்துப் பழைய புலவர்களின் வாழ்க்கை யும், தொண்டும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. இன்று நம்மிடையில் வாழ்ந்து வரும் இருவர் இந் கக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளார்களென்பதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு வ ர் எனது உடனுசிரியராகக் கடமையாற்றிய பண்டித மணி கணபதிப்பிள்ளை, மற்றவர் எனது பழைய மாணவர் கனக. செந்திதாதன். இருவரும் என் னேடு நெருங்கிய தொடர்புகொண்டவர்கள் என் பதால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
(சுன்னகத்தில் நடந்த ‘இலக்கியவழி' வெளி யீட்டு விழாவில் நிகழ்த்திய தலைமையுரையின் ஒருபகுதி.)
15

Page 13
கா ல் நூற் ற னண் டு இலக்கியப் பணிபுரிந்தவர்
இ. நாகராஜன்
?-ண்மையான கலைஞன் கலையோடு ஒன்றிவிடுதிறன்
கலை அவனது வாழ்வுடன் பின்னிப் பிணைந்ததாக அமைய
வேண்டும். கலையே மூச்சாக-அதன் பண்பே கொள்கை யாக வாழ்பவனே கலைஞன்.
இந்த உண்மைக் கலைக்கோர் உதாரண புருடனக திரு. கனக, செந்திநாதனைக் காண்கின்ருேம். இலக்கி யம் என்பதன் மூச்சாக-சதா அதனைக் கனவாக்கிவாழ்வின் பிடிப்போடு அதனை இணைய வைத்துள்ள இலக்கிய உருவமே என்ருல் அது மி  ைக ப் ப ட் ட வார்த்தை யாகாது.
சொந்த நாட்டின் எண்ணங்களை-மரமைப்பேணி இலக்கியம் படைக்க வேண்டுமென்ற கோட்பாட்டைக் தொண்டிருந்தவர் கனக. செந் தி நா த ன். ஆங்கில மொழி போன்ற பிறமொழிப் பயிற்சியில்லாத இவர் தனித் தமிழ் ஆசிரியராக இருந்து கொண்டே கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இலக்கிய முயற்சி செய்து அத்துறையில் தனக்கெனத், த னி யிட ம் வகுத்துக் G) 5rt 6ötusst si.
* கலைப்பயிற்சிகளில் சிறந்தவர்கள் வெளிநாட்டார் கள் தாம். இலங்கை மண்ணில் பிறந்தவர்கள் திறமை யற்றவர்கள்’ என்ற தாழ்வு மனப்பான்மை ஊடுருவி இருந்த காலகட்டத்தில் நம்நாட்டு மக்களும் கலைக ளில் மேம்பாடுடையார் என்பதை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டியவர்.
16

1938-ம் ஆண்டு தொடங்கி ஈழகேசரிப் பத்திரிகை யில் நாவல், சிறுகதை, நாடகம், இலக்கிய விமர்சனம் ஆகிய பல துறைகளில் ஈடுபட்டுச் சிருஷ்டி கர்த்தா வாக விளங்கினும் கன க. செந்திநாதன் இலக்கிய விமர் சனத்துறையிலேலே சிறந்துவிளங்கினர். ஈழநாட்டின் கடந்த இருபத்தைத்து ஆண்டுகளுக்குள் நடைபெற்ற இலக்கிய முயற்சிகளையும். இலக்கியப் போக்கையும் விரிவாகச் சொல்லக்கூடியவருள் முன்ன்னியில் நிற்கிரு ர். தனிப்பட்ட வாழ்க்கையில் மருவாத கர்மயோகி இவர் என்பதை நெருங்கியவர்கள் அனுபவ சாத்திய மாக அறியலாம். பு க  ைழ யோ, வெறுப்பையோ, போலிக் கெள் ரவத்தையோ அக்கறைப்படுத்தாதவர்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இலக்கி யமே மூச்சாகக் கொண்டு வாழும் இவரைப் பல தடவைகள் சொந்த வாழ்வின் சோகங்கள் சிறைப் பிடித்திருக்கின்றன. அந்த வேளையிலெல்லாம் அவரின் இலக்கியப்பற்றே மிகுந்து நின்றிருக்கின்றது. 19-6-62ல் பிரேஷ்ட புத்திரி செல்வி பராசக்தி தனது 20-வது வயதில் அகால மரணமடைய நேரிட்டது. அந்த வேதனையை-த ந் தை யி ன் மனநிலையை-தகப்பணுக இருப்பவர்களால் தான் புரிந்துகொள்ளமுடியும் பாசத் தைக் கொட்டி, தோள்மீதும், மார்மீதும் தூக்கித் திரிந்த முதற் பு த ல் வி யி னை ப் பிரிந்த வேதனை (8வளையது. மரணச் சடங்கில் கலந்தவர்களிடம் கூட
அந்த வேதனையிலும் இலக்கியம் பற்றிப் பேசி-தனது
துன்பத்தை மறக்க முற்பட்டவர் இவர். மகளின் அந்தியேஷ்டியின்போது புதுமையான முறையில், தனது இலக்கிய உள்ளத்தை வெளியிட்டு - "ஈழத்துக் கவி
மலர்கள்" என்னும் கவிதைத் தொகுதியை வெளி பிட்டார். வாழ்விலும் தாழ்விலும் இலக்கியம் பற்றியே எண்ணுகின்ற இவரது கலகலப்பான பேச்சும், வஞ்சக மற்ற சிரிப்பும் இவரிருக்குமிடத்தை மற்றவர்களுக் குச் சுட்டிக் காட்டிவிடும்.
17

Page 14
1938-ம் ஆண்டிலிருந்து உபகுப்தன், பரிதி, செவ் வேல், வேல், பரதன் ஆகிய புனைப்பெயர்களுக்குள் சிருஷ்டி இ லக் கிய ங் களை ச் செய்து வந்தபோதிலும், 1955-ம் ஆண்டு ஈழத்துப் பேணு மன்னர்கள் என்னும் எழுத்தாளர்களின் அறிமுகக் கட்டுரைத் தொடரைக் கரவைக் கந்தப்பணுர் என்ற புனைபெயரில் வெளியிட்ட பின்னரே கனக. செந்திநாதனுக்கு உரிய பிரபலம் கிடைத்தது.
அவர் புகழ் வளர்ந்து இப்போது "இரசிகமணி’’ யாகியிருக்கிருர், இ ன் னு ம் நீண்டகாலம் வாழ்ந்து மென்மேலும் இலக்கியப்பணி செய்யவேண்டுமென இறைவனை இறைஞ்சுவோமாக.
ரஷ்ய மொழியில் ஈழத்துச் சிறுகதைகள் சென்ற ஆண்டில் பிரபல சோவியத் பிரசுரா லயமொன்ரு ல் வெளியிடப்பட்ட ஈழத்துச் சிங்கள தமிழ் எழுத்தா ளர்களின் சிறுகதைகளடங்கிய “வண்ணத் தேயிலை' என்ற நூல் சோவியத் வாச கர்களையும் இலக்கிய வட்டங்களையும் பெருமகிழ்ச் சியில் ஆழ்த்தியது. சாதாரண மக்களின் வாழ்க்கை யைச் சித்தரிக்கும் இக்கதைகளில் குணதாஸ அமர சேகரா, மார்ட்டின் விக்கிரமசிங்கா, செ. கணேசலிங்கன், கனக. செந்திநாதன் ஒரு பிடிசோறு கே. டானியல், என். ரத்னபாலா, சி. பி. சேன நாயக்கா, கே. எம். சிறிசேன ஆகியோருடைய 18 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தை ஆசிரியரின் தீட்சண்ய பார்வையில் சிறைபிடித்துச் செதுக்கப்பட்ட ஒவியமாகத் திகழ்கிறது.
- “செய்தி’ 7-11-65.
iSqSLALSLSLSLSLLLLLAALSALSLSLALLA LAqASAALSLALLSALSLSLLLLLSLLLMLSSSMLMLTL LSLTLSSq LALSLSLSLALSLSLSLSLSLSALSMLSqAAA SLLLLSAAALLSLLLLSLLLLLSLLLLS
18

நீங்கள் இரசிக மணிதான்
டெல் கி பல்கலைக் கழகம்,
23-9-65.
அன்பு நண்பர் அவர்கட்கு,
வணக்கம், நலம். எனது கவிதை நூல் "சிலம் பின் சிறுகதை’ கிடைத்திருக்குமென்று நம்புகிறேன். நீங் கள் அவ்வப்போது அனுப்பிவரும் ஈழத்தமிழ் வெளி யீடுகள் கிடைத்துவருகின்றன. ஈழத்தின் த ர மா ன. வெளியீடுகளோடு எனக்கு உறவு ஏற்படுத்திவரும் தங்கள் பேரன்பு மறக்கற்பாலதன்று.
நிற்க,
இளம்பிறை - விபுலானந்த மலரில் "அன்னை நீ ஆ. வேண்டும்’ என்னும் எனது புத்தகத்துக்கு நீங்கள் எழுதிய விமர்சனக் குறிப்புப் பார்த்தேன், - பார்த் தோம்! இது என்னுடைய புத்தகத்தைப் பற்றியது ஆன் பதால் இதுபற்றி விரிவாக எழுதக் கூச்சமாக இருக் கிறது. மற்றப்படி இந்த அறிமுகக் கட்டுரையின் அழ கமைப்புக்காக உங்களை எ வ் 'வ ள வு பாராட்டினுலும் ககும். இலக்கியத்தில் உருவம் - உள்ளடக்கம் என் றெல்லாம். சொல்லுகிருேமே புத்தக மதிப்புரைக் கட் (நி ையின் உருவமைதிக்கும் உள்ளடக்கத் தேர்ந்தெடுப் புக்கும் இக்கட்டுரையை எல்லாருமே முன்மாதிரிகையா சிக் கொள்ளலாம். நீங்கள் இரசிகமணிதான், சந்தே கம் இல்லை.
என்மீதும் உயர்ந்த இலக்கியத்தின் மீதும் கொண் (டுள்ள ஈடுபாட்டிற்கு என் மனமுவந்த நன்றி என்னும் சொல்லுக்குள் நமது உள்ளத்தில் பரவிய உணர்ச்சிகளை
19

Page 15
அடக்கிப் பார்ப்பதும் ஒருவகையில் சுவையாகத்தான் இருக்கிறது.
இறுதியில் புத்தகத்தின் அச்சமைப்புப்பற்றி நீங்கள் குறிப்பிட்டிருந்தது எனது கன க ச வு ந் த ரி க்கு மன நிறைவு தந்தது. காரணம், இப்புத்தகத்தின் அச்சமைட் புத் துறைக்கு அவளே முழுப் பொறுப்பு. அவளுடைய ஆலோசனைப்படியே அது நடைபெற்றது. ... அனைவருக்கும் எங்கள் அன்பு.
மிக்க அன்புள்ள,
சாலை, இளந்திரையன்.
எதிலும் புதுமையைக் காண்பவர்
பாடல்களை அறிமுகஞ் செய்து கட்டுரை எழுது பவர்கள் பழந்தமிழ் இலக்கியங்களின் துணையையே பெரிதும் நாடிவந்துள்ளார்கள். இன்றைய கவிஞர் களின் பாடல்களை அறிமுகஞ்செய்து கட்டுரையெழு துவது தரக்குறைவானது என்றும் சிலர் கருதுகி ருர்கள். ஆன ல் இக்கட்டுரையாசிரியர் இ ன் று வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ்நாட்டுக் கவிஞரின் (வாணிதாசன்) பொங்கற்கவிதை யொன்றை அறி முகஞ்செய்து மதிப்பிட்டிருப்பது ஒரு புதுமையே. பண்டைய கவிதைகள் போன்று இன்றைய கவிதை கள் மக்கள் உள்ளங்களில் நிலைபெறவில்லையென்றல் காரணம், இன்றைய கவிதைகளை ஒருமுறைக்குமேல் படிப்பதற்குச் சந்தர்ப்பமின்மையே. இத்தகைய மதிப்பீட்டுக் கட்டுரைகள் அத்தகைய குறையைப் போக்கப் பெரிதும் உதவும். கனக. செந்திநாதன் எதிலும் புதுமையைக் காணவிளைபவர். இதிலும் அதையே செய்திருக்கிருர்.
- சுதந்திரன் பொங்கல் மலர் 13-1-65
a/NYNN/
20

போற்றுகின்றேம் 'வித்துவான் F. X, C. நடராசா தலைவர், கிழக்கிலங்கைத் த்மிழ் எழுத்தாளர் சங்கம்)
இருபத்தைந்து ஆண்டுகளாகத் தமிழ்த் தொண்டு புரிந்தவர். எழுதிச் சேவை புரிந்தவர். எழுத்துத்துறை யிற் போர் மலைத்தவர். செந்தமிழ் மரபினை நிலைநாட்டி புழுதிப் பேரும் புகழும் பெற்றவர் கதையினுஞ் சரி 'விதையினுஞ்சரி செந்தமிழ் மரபினைக் காத்த பெருமக (எ) ச், நல்லாசிரியர். ஆகவே அவரை போற்றத் துணிந் தோம். துணிந்தோம் என்று தான் சொல்லவேண்டி யிருக்கின்றது. இருக்கும் பொழுது தூற்றி இறந்தவுடன் போற்றும் சமூகத்தில் வாழ்கின்ருேமாதலின் என்க.
நல்ல ஆசிரியர்களிடத்துப்பயின்று நற்றமிழ் ஆசிரிய ராகக் கடமையாற்றுகின்ற இவர் தமிழ்மொழித்தொண் டு இரு செய்து வந்துள்ளார். ஈழகேசரியின் தொடர்பால் பேரெழுத்தாளருமானர். மற்றும் எழுத்தாளர் பலரை பும் உருவாக்கியுமுள்ளார்.
இன்று ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் எழுத் நாளரைக் கணக்குப்போட்டு வைத்திருக்கின்ருர், தர (t iள எழுத்தாளரோடு பழகி மேலும் எழுத்துத் து புறையிற் பெரிதும் உழைத்து வருகின்றர்.
எழுத்தாளர்களைப் பற்றி இவர்போட்ட கணக்குத் "hப்புக் தவறின்றித் தமிழுலகத்திற்கு ஒப்படைக்கப்பட் X:? ஈழத்து இ ல க் கி ய வளர்ச்சி இதனை வெளிப்படுத்துகின்றது.
எழுத்தாளரை உரைத்துப் பார்த்த செம்மையைப் ($1 | ற்றுகின்ருேம். அவரவர்க்கு உரியவற்றை அவர வர் க்கு நடுநிலைமை நின்று கொடுத்துள்ளார். ஆகவே இவரை எழுத்து வீரன் என்று போற்றுகின்றே ம்.
போற்றுதலைச் சொல்லினுற் சொன்னுற் போதாது. செயலிலும் செய்து காட்ட விரும்புகின்ருேம். ஆகவே
21

Page 16
பொன்னடை போர்த்துப் பொற்பதக்கமுஞ் சூட்டிச் செயலிலும் நமது உள்ளப்பெருக்கை எடுத்துக்காட்டு கின்ருேம்.
பட்டமும் வழங்குகின்ருேம். இரசிகமணி என்றே இவரை அழைக்க விரும்புகின்ருேம். இலக்கிய இரசி கர் என்பதனலென் க.
போற்றப்பட்டார் ஒருசிலர், பொன்னடைபோர்க் கப் பட்டார் இன்னுேர் சிலர், பொற்பதக்கஞ் சூட்டப் பட்டார் மற்ருேர் சிலர். பட்டம் வழங்கப்பட்டார் வேருேர் சிலர். ܫ
இவர் எல்லார்க்கும் நல்லவரானர். எல்லோர்க்கும் எல்லாஞ் செய்தார் எல்லார்க்கும் எல்லாமாய் நின்ற இவருக்கு ஒன்றுக்கு நான் கா க ப் போற்றுகின்றே ம். போர்க்கின்ருேம், குட்டுகின்ருேம், வழங்குகின்ருேம்.
கனக. செந்திநாதன் வாழ்க-அவரின் புனிதத் தமிழ்ப்பணி யென்றும் வளர்க.
இரசிகமணி கனக. செந்திநாதன் ஈழத்தின் தலை சிறந்த எழுத்தாளரும், பேச்சாளருமாவர்: ஈழத்து எழுத்தாளர்களை ஈழநாட்டு வாசகர்களுக்குழ், தமிழ் நாட்டு எழுத்தாளர்களுக்கும் அறிமுகஞ் செ ய் து வைத்துள்ளார்.  ெச ன் ற ஆ ண் டு ஆரம்பத்தில் இவர் எழுதி வெளியிட்ட ஈ ழ த் து இ லக் கிய வளர்ச்சி என்னும் நூல் ஈழத்தில் முதல் எழுந்த தமிழிலக்கிய வரலாற்று நூலாகவும் இரசிகமணி யின் ஆய்வுத் திறனுக்கும், நேரிய விமர்சனத்துக் கும், தமிழ்ப்புலமைக்கும் சான்ரு கவுந்திகழ்கின் நிறது.
இரசிகமணி அருமையான சிறு கதைகளும் எழுதி யுள்ளார். ஒருபிடி சோறு என்ற இ வ ர து சிறு கதை ‘ஈழத்துச் சிறுகதைகள் முதலாவது தொகு யில் இடம்  ெப ற் று ஸ் ள து. "செம்மண்” என்ற கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுப் பிர சுரமாகியுள்ளது.
எம். ஏ. ரகுமான் இளம்பிறை
22

தமிழக எழுத்தாளருக்கு.
நா. பார்த்தசாரதி
இலங்கையர் கோன், சி. வைத்திலிங்கம் போன்ற சில ஈழநாட்டு எழுத்தாளர்களின் பெயர்களையே இங்கு தமிழ கத்திலுள்ள பழைய தலைமுறையினர் அறிவர். ஆனல் இன்ருே ஈழநாட்டுத் தமிழிலக்கியம் சகல துறைகளா லும் நிரம்பிக் கொண்டிருக்கும் வளர்ச்சிப் பாதையில் இருக்கிறது. சிறுகதை, நாவல், தொடர்கதை, உரு வகக்கதை, நடைச்சித்திரம், விமர்சனம், குறும்பா போன்ற புதுப்பாடல் உத்திகள் - எல்லாமே ஈழத்தில் செழித்து வளரும் காலம் இது. இந் த க் காலத்தில் தமிழக எழுத்தாளர்களிற் பலர் ஈழநாட்டு இலக்கிய வளர்ச்சியின் படிப்படியான நிலையையாவது தெளிவாக முதலில் அறிய வேண்டும். பின்பு அ ந் த முறைப் படியே ஈழத்து இலக்கியப் படைப்புகளைப் படி த் து இரசிக்கவும் வேண்டும். இதற்கு நடு நிலையான் - நியா யமானதுணை ஒன்று இப் போது கிடைத்திருக்கிறது. ஈழநாட்டு இலக்கிய உலகில் கால் நூற்றண்டுக் காலத் துக்கு மேல் பரிச்சயமுள்ளவரும் பண்பாளருமாகிய இரசிகமணி கனக. செந்திநாதன் அவர்கள் எழுதிய “ஈழத்து இலக்கிய வளர்ச்சி" என்ற நூலைப் படித் தால் மேலே நான் கூறிய வளர்ச்சியை நன்ற க விளங்கிக் கொள்ள முடியும். மாதா மா த ம் இவ் வளவு தொகைக்குப் பத்திரிகைகளும் புத்தகங்களும், விலைக்கு வாங்கிப் படிக்க வேண்டு மென்பதோடு அவற் றில் நல்லவற்றைப் பாதுகாத்து வைக்கவும் வேண்டு மென்ற ஆர்வமுள்ள இரசிகமணி அவர்கள் மட்டக்களப்
23

Page 17
புத் தமிழ் மகாநாட்டில் சிறந்த எழுத் தாள у п 55т எஸ். பொன்னுத்துரை வி டு த் த வேண்டுகோளுக் ங்ெகித் தம்மாலியன்றவரை இந்நூலே நடு நிலை யோடு எழுதியிருக்கிறர்கள். உலகின் எந்தப் பகுதி யிலிருந்தாலும் தமிழில் இரசனையுள்ள ஒவ்வொருவரும் கொழும்பு - அரசுப் பதிப்பக ഖങിt്.ങ്ങ് @ 西点 நூலைப் படித்து ஒரு சகோதரி நாட்டின் இ லக் கிய வளர்ச்சியைத் தெரிந்து கொள்ளமுடியும்" இரசிகமணி அவர்களுக்குத் தமிழ் நாட்டின் சார்பிலும் தீபம் இலக் கிய நண்பர்கள் சார்பிலும் நமது பாராட்டுதல்கள்.
"ஒருபிடி சோறு” “கனக. செந்திநாதன் - அலட்சி யமாகவும் - இணையில்லாத தைரியத் துடனும் g(5 கதையை எடுப்பாகத் தொ ட ங் கு ம் முறை எனக்கு மிகவும் பிடிக்கும். அவ ரு  ைட ய pigs I Audacityl போற்றத் தகுந்த முரட்டுத் தனத்தை நா மி க வு ம் இரசித்துப் படிப்பேன். புதுமைப்பித்தன், அழகிரி σπιδί இரகுநாதன், ஜெயகாந்தன் போன்ற தமிழ கத்து எழுத்தாளர்களிடம் இந்த (Audacity) எப்படி இலக்கியத்துக்கு வலுவளிக்கிற அநுகுணமாக இருக் கிறதோ eng3u 565. செந்திநாதனிடமும் வாய்த் திருக்கிறது. 'g பிடி G3gFrt. gpʼ - GʻT 6öTAD . . g5 P து சிறு கதையை அவர் தொடங்குகிற அழகைப்பாருங்கள்.
*யாழ்ப்பாண மாதா மலடியென்று பெயர் கேளா மல் - சத்திர ஒதிச்சையோடு " பெற்றெடுத்த நொண் டிக் குழந்தை தொண்டைமானறு. கடலிலே இருத்து வெட்டப்பட்ட- உப்பங்கழிக்கு 'ஆறு என்று பெயரிட் _தே விசித்திரம். அத விலும் விசித்திரம் அந்தச் கழிக்கரையில்முருகப் பெருமான் எண்ணங்கொண்டது. என்று கதையைத் தொடங்குகிருர் ஆசிரியர். * தொண் டைமான் ஆற்றைப் பற்றி வர்ணிக்கும் இடத் தி 8
24

ஆசிரியரது குத்தலும் குறும்புத்தனமும், நகைச் சுவை யும் துணிவும் மிகவும் ந ன் ரு க வாய்த்திருக்கிறன. கதை முடிவில் சீமாட்டியின் ஆட்களும், அ வ ர் க ள் சென்ற வண்டியும் போன பின். . . . “ புண்ணியம் சம்பா திச்சியா?. போ, போ.. என்று அவள் பல்லை நெருடி ஞள்’ என்கிறபோது சமூகப் பிரச்சினையின் மேல் பல மான சவுக்கடி கடுமையான பதங்களால் விழுகிறது.
{*தமிழக எழுத்தாளருக்கு...!! தீபம் தீபாவளி மலர் 1965. "ஒருபிடிசோறு’’ வீரகேசரி 25-8-63 )
هم به هه متهم ه ه همه
*Paoloasaeoot***
- „А-А"-A-A,A-A,A-A,A o-o-A-A. கனக. செந்திநாதன் (இக்குறுநாவலில்] இரண் டாவது வர்ணத்தை எழுதியுள்ளார். இ. நாகராஜன் விட்ட இடத்திலிருந்து “ஊர்வலம் முன்னேறியது" போல கனக. செந்திநாதன் விறுவிறுப்பை ஊட்டி இக்கதை வேகமாக முன்னேற உதவுகிருர், சவாரி வண்டிப் பந்தயம் தத்ரூபம். அத்துடன் ‘அடிசக்கை” சிவகுருவைத் தங்கமான நண்பன் என்று பெயர் வாங்குவதற்குரிய வனகப் படைத்து இ லே சா ன சிரிப்புச் சுவைக்கும் இடந்தந்திருக்கிருர். இவரு டைய எழுத்துக்கள் அழகும் இனிமையும் கலந்த வார்ப்புக்கள். நடையிலே ஜதி கெடாத ஒருவே கம். இது கதையின் ஒட்டத்திற்கு உத வு கி ன் ற து. பொதுவில் இவரது சரளமான நடைபடிப்பவர் கவ. னத்தை எழுத்து ஜாலத்தில் நிறுத்தாமல் கதை யின் கவனத்திற்கேற்றபடி சுருதி சுத்த 1ாய் இசைக் கிறது.
திரு. வி. லோகநாதன்-வீரகேசரி.
25

Page 18
வே ண் டு கோ ள் எஸ். பொன்னுத்துரை
*னக. செந்திநாதன் அவர்கள் தமிழ்ச் சட்டம்பி யார். ஆனலும் தமிழாசிரியர்களிலும் பார்க்க அவர் வேறு ஒர் இனம் - வர்க்கம். ஒரு பெண்ணிற்குச் சீத னமாகக் கொடுக்கக் கூடிய செல்வத்தைத் தமிழ்ப் புத் தகங்களும் பத்திரிகைகளும் வாங்குவதிற் செலவு செய் தவர், ஆங்கிலம் கற்ருே ர் தாம் த மி பூழி ல் இலக்கிய விமர்சனஞ்செய்யலாம் என்று சில புதுமை விமர்சகர் கள் சொல்லிவரும் இந்நாளில், மரபிலே தி ளை த் து, தமிழிலே தோய்ந்து, ஈழத்துத் தமிழ் இலக்கிய வி ம ர் சனத்துறையைச் செப்பனிடுபவர். சந்தனக் க் ட்  ைட தன்னைத்தானே தேய்த்து மணக் குழம்பு தருவதுபோல, தானே சிறுகதை - நாவல் - நாடகம் ஆகிய சிருட்டி இலக்கியங்கள் செய்திருந்தாலும் தன்னை அதிகம் பிர பலப்படுத்தாமல், பழம் பத் தி ரி  ைக ப் பரவையுள் மறைந்து கிடக்கும் எழுத்தாளர்களை வாசகர்கவனத் திற்குக் கொண்டுவந்தவர். அவர் எழுதியுள்ள கட்டு ரைத் தொடர்களும் வெளியிட்டுள்ள நூல்களும் இதற் குச் சான்று பகரும். அல்வாயூர்க் கவிஞர் மு. செல் லையாவின் கவிதைத் தொகு தி யி ன் விமர்சனமாக கவிதை வானில் ஒரு வளர்பிறை எ ன் ற விமர்சன நூலையும், தமது மதிப்பு மிக்க ஆசானகிய பண் டி த மணி திரு. சி. கணபதிப்பிள்ளை அவர்களின் வரலாறும் வண்டமிழ் வள ர் ச் சி  ைய யு ங் கொண்ட மூன்றவது கண் ணையும், அகால மர ண மெய் தி ய தமது மகள் பராசக்தி யின் நினைவாக ஈழத்துக் கவிஞர் மு ப் பத் தைந்து பேரது கவிதைகளடங்கிய ஈழத்துக் கவிதை
26

மலர் களையும் அவர் வெளியிட்டுள்ளார். அவர் தமது பணத்தில் மற்றைய எழுத்தாளர்களைப் போலத்தாம் எழுதிய சிறுகதைகளை ‘ஒரு பிடி சோறு முதலியன) விதியின் கை, வெறும்பானை முதலிய நாவல்களை, தாகம், மன்னிப்பு, ஒளி பிறந்தது நாடகங்களை வெளியிட்டிருக் கலாம். ஆனல் ஈழம் - அதன் எழுத்தாளர்கள் - அவர் கள் படைப்புக்கள் என்றே ச த ர எண்ணமிடும் அவ ரால் விரிந்த மனப்பான்மையில் அப்படித்தான் வெளி யிட முடிந்தது.
இன்று நான் அவரிடம் விடுக்கும் வேண்டுகோள் ஒன்றுண்டு. உங்கள் பாதையை நாங்கள் வாழ்த்தி வர வேற்கின்ருேம். மற்றையோர் சிறுகதைகளையும் நாவல் களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கட்டும். நீங்கள் ஈழத்துப் பேணுமன்னர்களை ஈ ழ த் து ஒளிவிளக்கு களை, கவிதைக் கடலில் கதைமுத்துக்களை, ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்னும் விமர்சன நூல் ஒன்றைத் தாருங்கள். விமர்சனம் என்னும் பெயரால் வட்டார நலன்கள் மட்டுமே பேணப்பட்டு உண்மை வரலாறு மறைக்கப்பட்டு வருகின்றது. கலாசாலைகளிலும் சருவ கலாசாலையிலும் கற்கும் மா ஞக் க ர் அவற்றையே உண்மையென நம்பி ஏமாந்து போகிறர்கள். ஆகை யால் தான் உங்கள் நூல் உடனடியாகத் தேவையாக இருக்கின்றது. இங்கே, இப்போதே அதற்கான சப தம் எடுத்துக் கொள்ளுங்கள். இ ஃ து எனது வேண்டு கோள்மாத்திரமன்று. ஈ ழ த் த மி ழ் த் தாயின் வேண்டு கோளுமாகும்.
27

Page 19
விமர்சனநூலுக்கு
விமர்சனம்
வ. அ. இராசரத்தினம்
திங்கள் * கவிதை வானில் ஒரு வளர்பிறை" என்ற சொற்பொழிவு நூல் கிடைத்தது. அதற்காக என் நன்றி. அபிப்பிராயம் கூறுவதற்காகவல்ல, நன்ரு பிருக்கின்றது என்பதற்காகத் தங்கள் சொற்பொழிவைத் திருப்பித் திருப்பிப்படித்தேன். வாசித்து முடிந்ததும் என் மனத் திலே ஆதங்கம். இருபத்தைந்து வருடங்களாகப் பாடி வரும் அருமையான கவிஞரை நாடு எவ்வளவுதூரம் அறிந்திருக்கிறது? அது இருக்கட்டும் இப்போதைக்கு.
பன்னிரண்டு பாடல்களைத் தொட்டுக்காட்டியிருக் கிறீர்கள். இலக்கிய கர்த்தாவுக்கும் இ ர சி க லு க் கு மிடையே முட்டுக்கட்டையாக விமர்சகன் நெடுநேரம் தாமதிக்க வேண்டியதில்லை என்ற தங்கள் முடிவுரை யைப் படித்துப்பார்த்தபோது ஆஹா, இவ்வளவு அரு மையான கவிஞரின் பாடல்கள் எல்லாவற்றையும் படிக் கக் கூடியதாக அவருடைய கவிதைத் தொகுதியோ பத்திரிகை நறுக்குகளோ என்னிடம் இல்லையே என்று வருத்தமாயிருக்கிறது. அத்துணை நளினத்தோடு வாச கனை ஒரு அற்புதமான கவிதா உலகத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறீர்கள்.
கதையோ, நாவலோ ஏன்? கவிதையோ எழுதுவதை விட விமர்சிப்பதும் இரசனை எழுதுவதும் கஸ்டமானமிகக்கஸ்டமான காரியங்கள். எழுதிப்பார்த்தவர்களுக் குத் தான் அது தெரியும். பரந்த நூ ல றி வும் கவிதா
28

உள்ள மும் அதற்கு வேண்டும். இந்த இரண்டுமே தங்க ளிடம் இருப்பதைச் சொற்பொழிவு முழுவதும் பரக் கக் காணலாம் அதுமட்டுமல்ல, விமர்சனமோ கவிதை விளக்கமோ எழுத வந்துவிட்டால் தமிழ் எழுத்தாளர் கள் அந்த இரண்டும் தமிழில் இல்லாத சரக்கு, இய லாத சரக்கு என்று சொல்லிக்கொண்டு - வெளிப்ப டையாகச் சொல்லிக்கொண்டு ஆங்கிலச் சொற் பிரயோ கங்களை அடைப்புக்குறிகளில் அடைத்து மேல்நாட்டு விமர்சகர்களின் விதிகளுக்கு அமையத் தங்கள் மேதா விலாசத்தைக் காட்டத்தொடங்கிவிடுகிருர்கள். அந்தக் கண்ணுடிச் சட்டத்தில்  ைவ த் து ப் பூட்டினல் தான் தமிழ்க் கவிதை, காட்சிப்பெட்டிப் பொம்மை அழகாக இருக்கிறது என்று வாசகர்களுக்குக் காட்ட அவர்க ளுக்கு முடியும் புோலும், அந்தப் பித்தலாட்டம் எதுவு மின்றித் தமிழ்க் கவிதையை அதன் இயல்போடும் தனித் தன்மையோடும் வெளிக்கொணர்ந்து காட்டியிருப்பதும், புதுமைப் பித்தன் சொன்னதுபோல் நாயர் கடை இட் டலியை 'ஹண்ட்லி அன்பாமர்ஸ்" விஸ்கோத்தோடு ஒப்பிடாமல் நமது தமிழ்ப் புலவரோடு கவிஞர் செல்லை யாவை ஒப்பு நோ க் கி யிருப்பது ம் பழைமையைத் தெரிந்து புதுமையைச் சிருஷ்டிக்கத் துடிக்கும் யாழ்ப் பாணத்து எழுத்தாளன் இல்லை, ஈழத்துத் தமிழ் ள் முத் தாளனின் வெற்றி என்பதை நாவலித்துச்சொல்கிறேன்.
தினகரன்)
29

Page 20
ஆற்றல் மிக்க விமரிசகர்
விஜயபாஸ்கரன்
6 சி, ஆண்டுகளுக்கு முன்பு "ஈழகேசரி’ப் பத்திரி கையில் 'கர வைக்கவி கந்தப்பஞர்’ என்ற பெயரில் ஒளிந்துகொண்டு ஒருவர் ஈழத்துப் பேணு மன்னர்கள் என்ற தலைப்பின்கீழ் வாரந்தோறும் ஈழத்துத்துத் தமிழ் எழுத்தாளர்களை அறிமுகப் படுத்திவந்தார். சுருக்கமாக வும் அதே சமயத்தில் தெளிவாகவும் நுணுக்கமாகவும் வெளியான இ ந் த க் கட்டுரைத் தொடர் வாசகர்கள் ஈழத்து எழுத்தாளர் மத்தியிலும் பரபரப்பை ஏற்ப டுத்தியது. கர வைக் கவி கந்தப்பனர் யார் என்று புரி யாமல் குழப்பிக்கொண்டிருந்தனர். ஏ ற க் கு  ைற ய கடந்த இருபது ஆண்டுகளாக பல புனைபெயர்களில் நாடகம், சிறுகதை, நவீனம், கட்டுரைகள் எழுதி வந்த கனக. செந்திநாதன் என்பது கடைசியில்தான் தெரிய வந்தது. இவரது சிருஷ்டிகளில் பிற ந் த மண்ணின் வாசனை வீசுவதுடன் கிராமாந்தர வாழ்க்கையைப் பார்க்கலாம். இவர் எழுதிய "விதியின் கை வெறும் பானை, என்ற இரண்டு நாவல்களும் ஈழத்து எழுத்தா ளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டவை. சில நாட கங்கள் இவர் எழுதியிருக்கிருர். இவற்றில் ", தாகம்’ ** மன்னிப்பு’’ என்ற நாடகங்கள் மேடையில் நடிக்கப் பெற்றிருக்கின்றன.
யாழ்ப்பாணம், திருநெல்வேலி, சைவ ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் தேறி ஆசிரியப்பணி புரியும் இவர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களின்
மாணவருமாவார். இன்று ஈழத்து இலக்கியப் பரம்ப
30

ரையை திறம்பட விமர்சனம் செய்யும் ஆற்றல் படை த்த ஒரு சில விமர்சகர்களில் குறிப்பிடத்தகுந்தவர். இவர் ஈழத்தில் இதுவரை வெளியான நூல்கள் அத்த னையும் பற்றியும் . ஈழத்து எழுத்தாளர்களின் படைப்பு புகள் எல்லாவற்றையும் பற்றியும் தெளிந்த கண்ணுே ட்டத்தோடு விமர்சனம் செய்யும் திறமை படைத்த வர். நண்பர் கனக. செந்திநாதன் ஈழத்து எழுத்தாளர் களை தமிழ் நாட்டிற்கு அறிமுகப்படுத்த முற்றிலும் தகுதியானவர். இப் பகுதியில் அவர் ஈழத்து தமிழ் இலக்கியத்தை அதன் பாரம்பரியத்தைக் கட்டி வளர் க்கும் அந்நாட்டு எழுத்தாளர்களை இதழ்தோறும் அறி முகப்படுத்துவார். (சரஸ்வதி 1961)
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தால் கூட்டப்பெற்ற அகில இலங்கைத் தமிழ் எழுத்தா ளரின் முதற்பேரவை 1962 ஏப்ரல் 28, 29ந் திகதி களில் கொழும்பிலுள்ள ஸ்கிராக் கல்லூரி மண்ட பத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
முதலாம் நாள் விழாவின் முக்கிய அம்சமாக விளங்கியது மூதறிஞர் பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை அவர்களையும், சிங்கள-தமிழ் அறிஞர் வண ஹில் லெஸ்லே தர்மரத்தினதேரர் அவர் களையும் மகாநாடு பரிசளித்துக் கெளரவித்தமை шIT Gö LD.
இப்பெரியார்களுக்குரிய பரிசுகளை முறையே கலா நிதி கே. கணபதிப்பிள்ளை அவர்களும் பண்டிதர் க. பொ. இரத்தினம் அவர்களும் வழங்கினர்கள். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் தேக நலனின்மையால் மகாநாட்டிற்குச் சமுகமளிக்க வில்லையாயினும், தமது நன்மாணுக்கர் திரு. கனக செந்திநாதன அவர்களைத் தமது பிரதிநிதியாக அனுப்பியிருந்தார். அத்துடன் மகாநாட்டுக்கு ஒரு அரிய செய்தியையும் பண்டிதமணி திரு. செந்தி நாதன் மூலமாக அனுப்பியிருந்தார். பண்டிதமணி க்கு அளிக்கப்பட்ட பரிசை திரு. செந்திநாதனே அன்னவர் சார்பில் கை ஏற்ருர்,
பூரீ லங்கா மே 1962.
31

Page 21
கடமை தவறதவர் சி. ஞா. பரஞ்சோதி
(தலைமையாசிரியர் ருே. க. பாடசாலை, குளமங்கால்)
திரு. கனக. செந்திநாதன் பத்திரிகைகளில் எழுதி வருவதைப் பலமுறை வாசித்திருக்கிறேன். அவரின் பெயரும், அவரின் எழுத்தும் எனக்குப் பரிச்சயமா னது. ஆயின் அவரை எனக்குத் தெரியாது. அவர் எமது" பாடசாலைக்கு நியமிக்கப்பட்டிருக்கருர் என வித்தியா பகுதியில் இருந்து அறிவித்தல் வந்தது. இதில் ஒரு புதுமை. அவருடைய பிறப்புச்சாட்சிப் பத்திரத் தில் உள்ள பெயர் (இடாப்புப் பெயர்} திருச்செவ் வேல். இந்தத் திருச்செவ்வேல் யார்? என்பதை அவர் எமது பாடசாலைக்கு வருமுன்னமே சிலரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவர் தமது பாடசாலைக்கு 1963, வைகாசி மாதம் முதல் தேதியில் வந்தார்.
அவரின் மெலிந்த தோற்றத்தைக் கண்டு இவர் எழுத்தாளராக மாத்திரந்தான் இருப்பார் என்றுஎண் னினேன். அந்த எண்ணத்தை ஒரிரு மாதங்களுக்கி டையில் மாற்றிக்கொண்டேன். அவர் ஒர் இலக்கிய இரசிகர். அவை மாத்திரமன்று. ஒரு நல்ல ஆசிரி க்கு வேண்டிய எல்லா அம்சங்களும் உ  ைடய வர் 60 தவறதவர். பணிவு, அடக்கம் கொண்டவா விளையாட்டு இரசிகர். ஏழைகளின் அனுதாபி.
இவர் எமது பாடசாலைக்கு வந்த பின்னரே இந் சமயக்கல்வி மலரத் தொடங்கியது. சமய அறிவு சிறி
32

மற்ற இந்துசமய மாணவர்க்குத் தேவார , திருவா சக நறுமணமூட்டியது மன்றி, க. பொ த. மாணவரை ஊக்குவித்து வகுப்பில் நன்ரு கப் படிப்பித்தார். கத் தோலிக்க மத சூழ்நிலையில் உள்ள பாடசாலையில் ம்ாணவனைப் படிப்பித்து அச்சமயபாடத்தில் விசேட சித்தி பெறச் செய்வதென்பது மிகச் சிரமமான காரி யம் அச்சிரமமான காரியத்தைக் கையேற்றுச் சமய, பாடத்திற்கூட விஷேட் சித்திபெறச் செய்த பெருமை இவருக்குண்டு. .
இவர் இப்பாடசாலைக்கு வந்ததுமே உயர்தர வகுப்புக்களுக்குரிய இலக்கியம், பாஷை ஆகிய பாடங் களை அவரையே படிப்பிக்கும்படி பணித்தேன். அவ ரும் நான் எதிர்பார்த்தபடியே அப்பாடங்களில் மாணவரை ஆர்வமுறச் செய்து அவர்களையே இரசிகர் களாக்கிவிட்டார். இலக்கிய பாட நேரத்தில் அவர் படிப்பித்த வகுப்பு எப்போதும் கலகலப்பாகவே இருக் கும். இவர் ‘ஒரு பரீட்சை எடாத பண்டிதர் எங்கள் பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் அவரைப் பண்டிதர் என்றே அழைக்கின்றனர்.
கிழக்கிலங்கை எழுத்தாளர் சங்கம் எங்கள் "பண் டிதருக்கு இரசிகமணி என்ற பட்டத்தை அளித்துக் கெளரவித்திருக்கிறது. அந்தக் கெளரவம் எங்கள் பாட சாலைக்கும் உரியதே. அன்னரை நாமும் போற்றிக் கெளரவிக்கவேண்டியது எங்கள் கடமை.
. அவரது தன்னலங் கருதாத இலக்கியத் தொண்டும் இரசிகமணி” ப் பட்டமும், கல்விச்சேவையும் நீடுழி வாழ்க என வாழ்த்துவோமாக!
"இரசிகமணி" படிப்பிக்கும் குளமங்கால் ருே. க. 1ாடசாலையில் நடைபெற்ற விழாவில் “ அவருக்கு வெள்ளுடை’ போர்த்தி அப்பாடசாலைத் தலைமையாசி சியர் பேசிய பேச்சின் சுருக்கம் இது.
33

Page 22
எங்கள் ஆசிரியர்
செல்வி ஏ. இருதயறேசா
மெலிந்த நெடிய உருவம். நெற்றியிலே அழுத்திப் பூசப்பட்ட திருநீறு. நெற்றியின் நடுவிலே சந்தனப் பொட்டு. நரையில்லாத தலை, கையிலே ஒரு பை. கக் கத்திலே ஒரு குடை. இப்படியான ஒரு தோற்றத் தோடு எங்கள் பாடசாலைக்கு 1963ம் ஆண்டு வைகாசி மாதத்தில் ஒரு புது ஆசிரியர் வந்து சேர்ந் தா ர். யார் இந்த ஆசிரியர்? எங்களுக்கு என்ன பாடம் படிப் பிக்கப் போகிருரோ? எங்களோடு எப்படி நடந்து கொள்வாரோ? என்றெல்லாம் நா ங் க ள் ப ய ந் து கொண்டிருந்தோம்,
முதல் நாளே இலக்கிய பாடம் படிப்பிக்க எங்கள் வகுப்புக்கு வந்தார். மாணவர்களோடு சரளமாகப் பேசி, சில நகைச்சுவைக் கதைகளைச் சொல்லி ஒரு பாட நேரம் முழுவதும் ஒரேயொரு பாட்டை நன்கு விளக்கிப் படிப்பித்தார். எங்கள் மனப்பயம் போய் விட்டது. பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண் டோம், அவர்தான் கனக. செந்திநாதன்.
அன்று தொட்டு நான்காண்டுகள் அவரிடம் படிக் கும் பாக்கியத்தைப் பெற்றேன். அவர் வகுப்புக்கு வரும்போது மலர்ந்த முகத்துடன்தான் வருவார் அவர் முகத்தில் துக்கத்தின் சாயல் படிந்திருந்ததை நான் ஒருநாளும் கண்டதில்லை. அவர் வகுப் பிற் ( வந்துவிட்டால் மாணவர்களுக்கு ஒரே கு துர க ல ம் பேச்சாலேயே எல்லோரையும் தம் பக்கம் கவர்ந்தி(
34

ப் பார். நகைச்சுவைக் கதைகள், நல்ல பாடல்கள், ஈழத்துப் புலவர் பற்றிய செய்திகள் என்பவற்றை அவர் வகுப்பிலே அடிக்கடி கூறி எங்கள் இலக்கிய ரசனையை வளர்த்தார்.
சிறிது காலம் அவர் பாடப்புத்தகம் எழுதுவதற்கா கப் போய்விட்டார். அவர் இல்லாததினுல் பாடசா லையே பொலிவிழந்து காணப்பட்டது. மாணவர்களா கிய எங்களுக்கோ ஒரே கவலை. என் செய்வோம் எனத் துக்கப்பட்டோம் எங்கள் நல்ல காலம்! சி ல மாதங்களின் பின் மறுபடியும் பாடசாலைக்கு வந்துவிட் டார். எங்கள் மகிழ்ச்சிக்கோ அளவில்லை.
எங்கள் ஆசிரியராகிய கனக. செந்திநாதன் மாண வர்களைத் தம் மக்கள் போலவும், சக ஆசிரியர்களை உடன்பிறந்த சகோதரர் போலவும் நேசிப்பவர் மாண வர்கள் எவ்வகையான உதவிகளைக் கேட்டாலும் அவர் மனமுவந்து செய்பவர்.
இவ்வாசிரியருக்குக் கிடைக்கும் ஊதியம், இ வ ர் வாங்கும் புத்தகங்கள், பத்திரிகைகளுக்கே போதாது போலிருக்கிறது. சிறிது ஓய்வு நேரம் கிடைத்தா லும் புத்தகத்தை வாசிப்பதிலேதான் நேரத்தைச் செலவிடுவார். இவ்வாசிரியர் எங்கள் பாடசாலைக்கு வந்து கடமையாற்றத் தொடங்கியது முதல், அவர் பேரில் பத்திரிகைகளில் வரும் கதை, கட்டுரை, வானெலிப்பேச்சு. நாடகம் ஆகியவற்றை மாணவர் களாகிய நாம் வாசித்தும் கேட்டும் ரசித்து வருகி ன்ருேம்.
இரசிகமணி கனக. செந்திநாதன் எங்கள் ஆசி ரியர் என்று சொல்வதில் நாங்கள் பெருமை கொள் கிருேம், அவரிடம் சில காலமாவது, படித்ததைப் பெருமையாகக் கருதுகிருேம் இம் ‘மணி” இன்னும் பல்லாண்டு வாழ்ந்து இலக்கியத் தொண்டு செய்ய வேண்டுமென்று எமது பிரார்த்தனையில் இவரை நினைவு கூருவோமாக! வாழ்க இரசிகமணி! வாழ்க அவர் தொண்டு.
*eaaaaaaaa oo°

Page 23
இலக்கியம் அவரது மூச்சு
டொமினிக் ஜீவா
செந்தி மாஸ்டருக்கும் எனக்கும் பல விஷயங் களில் பலவித அபிப்பிராய வித்தியாசங்களுண்டு. முரண்பாடுகளுமுண்டு. ஆனல் இலக்கியம் அவருக் குப் பொழுதுபோக்கல்ல. மாருக அதுவே அவரது உயிர்மூச்சு என்பதில் அபிப்பிராய பேதம் இருந்த தில்லை எனக்கு. இலக்கியக் கீருத்தோட்டங் களி ல் நேர் எதிர் அபிப்பிராயம் உள்ள ஈழத்து எழுத்தா ளனை மதிப்பதில் அவர் யாருக்குமே பின் நிற்பவரு மல்ல. நமக்குள் மோதப்பட்டாலும் வெளியார் ஈழத்து எழுத்தாளர்களைச் சாடினல் விட்டுக் கொடாமல் போராடும் பெருங்குணங் கொண்டவர் இரசிகமணி அவர்கள் . ·
இதற்கு இரண்டு உதாரணங்கள்: வட மாகாணத்தில் பெரும்புயலடித்த மாலை முன்அறிவித் த லி ன் ட டி அன்று மாலை இலக்கியக் கூட்டம் நடைபெற இருந் தது. மழை, புயல் காரணமாக ஒருவருமே வரமாட் டார்கள் என்பது எனக்குத் தெரியும். இலக்கியக் கூட் டத்தை ஒழுங்கு செய்தவன் என்ற முறையில் நான் அங்கு நிற்க வேண்டும். போகவும் மனமில்லை. இரு ந் தாலும் கடமை உணர்ச்சி விடவில்லை, கூட்டம் ஆரம் பிக்கும் நேரத்திற்கு அரைமணி நேரம் தாமதித்தே மத்திய கல்லூரி மண்டபத்தை அடைந்தேன், அங்கு வெளியே கிடந்த வாங்கில் மழைக்கு ஒதுங்கிய வண் னம் தாவடிப் புகையிலைச் சுருட்டைப் புகைத்துக் கொண்டு ஒதுக்கமாக உட்கார்ந்திருந்தார். செந்தி மாஸ்டர்! என் தேகமே புல்லரித்தது. "
36

என்னுல் ஒழுங்கு செய்த இன்னுமோர் இலக்கியக் கூட்டம் சில்லையூர் செல்வராசன் பிரதம பேச்சாளன். கனக. செந்திநாதனைத் தாக்கு தாக்கென்று தாக்கிப் பேசினர் சில்லையூர், இடையிடையே செந்திக்கும், சில்லையூருக்கும் சற்றுக் காரசாரமான தர்க்கப்போரும் மூண்டது. மோதிக் கொண்டார்கள் இருவரும். ஏற் பாடு செய்த எனக்கு தர்மசங்கடம்ான நிலை. சில வாரங்களுக்குப்பின் சில்லையூருக்குக் கலியாணம், கார் பிடித்துத் திருமணத்திற்கு நேரில் வருகைதந்த செந்தி
மாஸ்டர், மணமகனே வாழ்த்தும்போது சொன்ன வாழ்த்துரைகள் இன்னமும் எனது நெஞ்சில் நிறைந் திருக்கின்றன. அவ்வார்த்தைகள் நாவிலிருந்தல்ல.
இதயத்திலிருந்தே வெளிவந்திருக்க வேண்டும். நான் பிரமித்துப் போய்விட்டேன்!
இந்த ரசிகமணிக்கு இந்த நவம்பர் மாதத்துடன் 50 வயதாகின்றது. முன்னேடியாக மனமார அவரை மல்லிகை வாழ்த்துகின்றது அவரைக் கெளரவிக்கும் முகமாக அன்னு ரது படத்தை அட்டைப்படமாக வெளியிடுவதில் தனிப்பட்ட முறையிலே பெருமைப் படுகின்றேன் நான்.
மல்லிகை-ஆவணி 1967.
தேன் சிந்தும் மலர்
அருமையான சில தவிழிப்பிரிட்ல்ள்ெ மறைந்து அழிந்து போய்க் கொண்டிருக்கின்றன. இவற்றைப் பேண வேண்டும். காப்பாற்ற வேண்டும். நாட்டுப் பாடல்களேத் தொகுக்க எவ்வளவு முயற்சி எடுக் கப்படுகிறதோ, அதனிலும் பார்க்க இலக்கியத் தரம் மிக்க தனிப் பாடல்களைத் தொகுக்க முயற்சி எடுக்க வேண்டும். -
ஈழத்துப் புலவர் பெருமக்கள் சிலர் பாடிய பாடல்களை மிகச் சுருக்கமாக அறிமுகஞ் செய்ய முன்வந்துள்ளார் இரசிகமணி கனக. செந்திநாதன். ஒரு புலவரின் ஒரு பாடலையே அவர் தொட்டுக் காட்டி, அதன் சுவையை ஏனையோருக்கும் வழங்கு கின்றர். தேன் சிந்தும் மலர் நல்விருந்தாக அமையு மென நம்புகின் ருேம்.
சிந்தாமணி 29-7.67
M*NWTA-1-NAMN*WAMRNA-W*Woo' YuY
37
MLMMMAASLSL MSLLMMLSBeA AAAAASASL AeLMAMeSLJSLMM LAeSAeL

Page 24
நாடறிந்த எழுத்தாளர்
தசரதன்
66ற_ங்கள் சிறுகதைகளைக் கொண்ட சிறுகதைத்
தொகுதியொன்றை வெளியிடுங்களேன்' என்று திரு. சி. வைத்திலிங்கத்திடம் நான் கூறியபோது, "எல்லாச் இறுகதைகளும் என்னிடமில்லை. கனக. செந்திநாதனி Lமே அவைகளை நான் பெற வேண்டும்' என்று பதி லிறுத்தார் அவர் இலங்கை எழுத்தாளர்களுடைய படைப்புக்களையெல்லாம் சேகரித்து வைக்கும் சிறந்த தொண்டைச் செய்யும் ஒருவர் உண்டென்ரு ல் அவர் * ஈழகேசரி’ப் பொன்னையா பிறந்த குரும்பசிட்டியில் பிறந்து, நாற்பத்தைந்து வயதையுடைய தமிழாசிரிய ரான திரு. கனக. செந்திநாதன்தான்.
திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையிற் கல்வி கற்கும் போதே எழுத்தார்வம் கொண்டு எழுதத் தொடங்கிய இவர், சிந்தனைச் செல்வரான பொ.  ைகலாசபதியிடம் படிக்கும்போதே பத்திரிகைத் துறைக்குத் தேவையானவற்றைப் பழகிக் கொண்டார். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் மாணவனன இவர் ' பண்டிதமணியைத் தூரத்தே இருந்து பூசிக்கும் பக்தன் நான்’ என்று மிகவும் அடக்கமாகச் சொல்ப வர். பண்டிதமணியிடம் பொது இலக்கண, இலக்கிய அறிவைச் சென்ற இருபத்தைந்து வருடமாக வாரா
வாரம் சம்பாஷணைமூலம் பெற்றவர்.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தொடர் பாக இலக்கிய சேவை செய்து வரும் கன க. செந்தி நாதன், ஈழத்து எழுத்தாளர்களும் அவர் தம்படைப்பு களும் தமிழ்நாட்டிலும் ஈழநாட்டிலும் உரிய மதிப் பைப் பெற வேண்டும் என்பதைத் தன்னுடைய குறிக் கோளாகக் கொண்டவர். இந்த இலட்சிய வேட்கை
38

யின் விளைவாகவே "கர வைக்கவி கந்தப்பனர்" என்ற புனே பெயரில் ஈழகேசரியில் 6 ft Trtr @ TT tið நாற்பது எழுத்தாளர்களை அறிமுகஞ் செய்து வைத்தார். அதன் தொடர்பாக மறைந்துபோன ஈழத்து ஒளி விளக்குகள் பதினன்குபேரை ஈழகேசரி வெள்ளிவிழா மலரில் அரங்கேற்றி வைத்தார். அத்துடன் நில்லாது ஈழத்து இலக்கிய வளர்ச்சியைத் தினகரனில் வெளி வந்த கட்டுரைகள்மூலம் ஆராய்ந்தார். இலக்கிய சரச்ன்ச மூலம் ஈழத்தில் இதுவரை வெளிவந்த நல்ல கதைகள், நல்ல கவிதைகள், படிக்க வேண்டிய நூல்கள் என்பவற்றைத் தொகுத்துக் கொடுத்தார். பல பேர் பல காலம் செய்து முடிக்க வேண்டியவைகளைத் திட்ட மிட்டுச் செய்து பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்த இவர், ஒரு பிடி சோறு, செம்மண், சமர்ப் பணம் , ஒல்லிமரம் போன்ற நல்ல சிறுகதைகளை எழுதியுள்ளார். இவற்றுள் செம்மண் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. சோமசுந்தரப் புலவ ரின் பாடல்களுக்கு விமர்சனமும் வீரசிங்கன் கதை, விஜயசீலம் என்ற நூல்களுக்கு அறிமுகமும் எழுதி யுள்ள இவர் மூன்றுவதுகண், கவிதைவானில் ஒரு பிறை என்ற விமர்சன நூலையும் விதியின்கை, வெறும் u(125or என்ற நாவல்களையும் தாகம், மன்னிப்பு என்ற மேடை நாடகங்களையும் எழுதியுள்ளார். ஐந்து எழுத்தாளர் எழுதிய மத்தாப்பு என்ற குறுநாவலையும், ஆ. தம்பித்துரை எழுதிய ஓவியக்கலையையும், பண்டித மணி சி. க. அவர்களின் சைவ நற்சிந்தனைகள் என்ற நூலையும் பதிப்பித்துள்ளார்.
"வரதருடன் கூடி "மறுமலர்ச்சியை ஆரம்பித்த இவர், தி. ஐ. ர , வெ சாமிநாத சர்மா, பண்டிதமணி சி. க சு. வே. ’ என்போரின் எழுத்தைப் பாராட்டுப வர். எழுத்தாளர் பலரை உலகுக்கு அறிமுகஞ்செய்து வைத்துவிட்டுத் திரைமறைவில் மறைந்து கொள்ளும் இவரை அறிமுகம் செய்து வைப்பதில் நாம் பெருமை யடையலாமல்லவா?
தினகரன் 12-5-62
39

Page 25
செந்திநாதன் பெற்ற பேறு
க. சி. குலரத்தினம்
இரண்டு தலைமுறைக் காலத்துக்கு முன் பிறந்து பழைய தமிழாசிரியரிடம் பழைய கல்வி கற்று, சைவ முந் தமிழும் குடி போகாமற் பாதுகாத்த சைவாசிரிய கலாசாலையின் மகோன்னதக் காலத்திலே ஆசிரியப் பயிற்சி பெற்று, பண்டி த ம னி ய வ ர் களு  ைட ய காவியரசனை பருகி, இயற்கை விவேகி கைலாயமா முனிவருடைய கருத்துக்களை முகந்து, மயிலிட்டி சுவாமிநாதப் பெரியாரின் பீடுநடைப் பெருமிதப் போக்குப் பழகித்தானும் ஒரு மனிதன் எனத் தலை நிமிர்ந்து உலாவும் வாய்ப்பு எல்லோருக்கும் வாய்க்க
மாட்டாது.
தாம் செல்லுமிடமெல்லாம் மாணவர் பின்தொட ரப் பழைய காலத்திலே கல்விப் பயிரை வேளாண்மை செய்த விற்பத்திமான்கள் யாழ்ப்பாணத்திலே இருந் தார்கள். ஆறுமுகநாவலர், வித்துவ சிரோமணி பொன்னம்பலம்பிள்ளை, சுன்னுகம்குமார சுவாமிப்புலவர் வட்டுக்கோட்டை வேளாளன் முத்துக்குமாரு சிதம் பரப்பிள்ளை சென்றவிடமெல்லாம் பிரிவரிய ஊசிவழி பின் தொடரும் நூல்போற் பின்தொடர்ந்தவர் பலர். தெருவோரம் பாடம் நடந்தது அக்காலத்தில். இந் நாளில், இந்நேரத்தில். இந்த இடத்தில் ஆசானேக் காணலாம் எனக் கட்டிக் கொண்டு காவல்நின்று மாண வர் கல்விகற்றர்கள்.
40

இன்று எழுத்தாளர் பேச்சாளர் எங்கும் எல்லா இடங்களிலும் இருக்கிரு ர்கள். எழுத்தாளனைப்பற்றி மகாகவி தாகூர் பாடிய பாடல் ஒன்றைப் பேராசிரியர் சீனிவாசராகவன் "எத்தனையோ புத்தகம் அப்பா எழு துகிருர்’ என்ற கதையாக அற்புதமாக மொழிபெயர்த் துள்ளார். மேலே சொல்லப்பட்ட பெரிய வ ர் க ள் சென்ற வழியில் தானும் ஒரளவு தூரமாவது சென்று தனக்குத் தெரிந்தவற்றைத் தன்னலியன்றளவு தானஞ் செய்து வருபவர் ஒருவர் நம் மத்தியில் உலாவுதல் நமக் கெல்லாம் பெருமை. அதனிலும் பெருமை அவர் பிற ரைக் கண்டு பெருமைப்படாமல் அவர்களையெல்லாம் ஊக்குவித்தல்,
தாகூர் கண்ட எழுத்தாளன் ஒட்டியுலர்ந்த மனி தன்தானே என்பது எனக்கேற்பட்ட சந்தேகங்களில் ஒன்று. செந்தி வாத்தியார் எனப் பல்லாயிரவர் செல்ல மாக அழைக்கும் இவர் தாகூர் கண்ட இலட்சிய எழுத் தாளன் என்பது இவர், தம் மனைவி, தம்மை எழுத வைத்தமைக்கு நன்றி தெரிவிக்குமுகமாகப் புனைந்த கவி யிலிருந்து புலப்படுகிறது. அவள்.
பொன்னைப் பொருளைக் கேட்காமல் புத்தகமாகிய செல்வ மதை கண்ணிற் கருமணிபோல, பல காலங் காத்து வருபவளும். . . ஆகிய ந்ா கம்மை என்னும் நாமத்தாள் என்பர்.
யாழ். இலக்கியவட்டக் கதையரங்கல் நிகழ்த்திய அறிமுகவுரையின் ஒரு பகுதி-1966.
~ംnട്രേം്
4.

Page 26
A Bridge between the older Pundits and the Moderns
Kanaga Senthinathan who is in his late forties is a teacher in Jaffna. He has made a namé as an ardent student of contemporary Tamil writing, having turned out many essays on the development of modern poetry) in Tamil. Senthinathan master - as he is popularly called by the younger writers in Jaffna, is often a bridge between the Older Pundis and the Moderns. He is an admirer of Pundit Kanapathipillai the doyen of Tamil Pundits in Ceylon. and in many ways reflects and echoes the Pundits' views on literary issues.
But he is also a creative writer, and this has brought him close to the new writers. Being free from Western influences his writings shows a native depth and traditional strength which are all his own. He has written a large number of short stories and poems,
One of his stories A morsel of Rice' has been included in an authology of Tamil stories from Ceylon. His collection of short stories is about to be published
Sunday Observer (2-6-61
Rich Harvest:
There is a book on the recent Literary development in Ceylon by Kanaga Centinatan which gives a picture of this new movement and the rich harvest it has yielded,
Prof. T. P. Meemakshisunderan
(Ceylon and Tamil - An address delivered by Professor T. P. Meenakshisunderan at Annamalai University during the Orient - Occident Week, oct. 1963.

ஆதார சுருதி யாழ்வாணன் (இணைச்செயலாளர், யாழ். இலக்கிய வட்டம்
கடந்த சில ஆண்டுகளாக ஈழத்து இலக்கியவட் டாரம் அவ்வவ்வூர்களில் ஒருசில எழுத்தாளர் சங்கங் களாக இயங்கி இலக்கிய சேவை செய்து வந்தமை நாட றிந்த விடயமாகும். -
அகில இலங்கைரீதியாக நம்மிடையே தோற்றுவிக் கப்பட்ட எழுத்தாளர்சங்கம் ஒருசில ஆக்கபூர்வமான செயல்களைச் செய்தபோதிலும், பரந்துகிடக்கும் இலக் கிய சக்திகளை ஒன்று சேர்ப்பதில் "குறிப்பிட்ட முன் னேற்றம் கண்டது என்று நாம் கூறமுடியாது. இந்நிலை யில் யாழ்ப்பாணத்திலுள்ள எழுத்தாளர்கள் இயக்க ரீதியாக ஒன்றுபடுகின்ற வாய்ப்புக்குன்றியது.
அவ்வேளையில்., இலக்கிய ஆர்வமும், ஆக்கசக்தி யும் கொண்ட எழுத்தாளர்களையும், இலக்கிய இரசிகர் களையும் ஒன்றுபடுத்தி அவர் தம்மை ஊக்குவிக்கின்ற ஒர் இயக்கமாக யாழ். இலக்கியவட்டம் இரசிகமணி கனக. செந்திநாதன் அவர்களின் பே ரா த ர வுட ன் தோற்றுவிக்கப்பட்டது.
திரு. கனக. செந்திநாதன் கடந்த முப்பது ஆண்டு களுக்கு மேலாக இலக்கிய உலகில் பல துறைகளிலும் சேவை செய்துள்ளார். ஆயினும் எச்சங்கங்களிலும் தலைமைப் பொறுப்பேற்று முன்னணியில் நின்று உழைத் தார் என்று கூறுவதற்கில்லை. பிறசங்கங்களை ஊக்கு வித்து வளர்த்தபோதிலும் அவற்றுடன் அவர் நேரடி யாகச் செயல்படவில்லை.
43.

Page 27
எமது யாழ். இலக்கியவட்டம் அமைக்கப்பட்ட போது அதன் தலைமைப் பதவியை ஏற்று அதன் வளர்சசி யொன்றையே கருத்திற் கொண்டு செயலாற்றினர் அரசியல் ரீதியாகவோ, கொள்கை ரீதியாகவோ அவர்
யாருடனும் விரோதம்பாராட்டியதில்ஃ), இலக்கிய
மொன்றினையே மூச்சாகக் கொண்டவர். இவரது தன்
னலமற்ற சேவை யாழ். இலக்கிய வட். விண் செழிப்
A
புக்கு அடிகோலியது.
பழமையைப் பேணி அதற்குரிய மதிப்பை வழங்கிச் சிறப்பிக்கின்ற சீரியகுணம் இவரிடம் உண்டு. ஆயினும் காலதேசவர்த்தமானத்திற்கமைய எழுந்த புதுமையை அவர் புறக்கணிக்கவில்லை. புதுமை 11 க்தாளர்களை தட்டிக் கொடுப்பதோடு அவர்களது . ஆக, சிருஷ்டிகளை இரசித்து ஊக்குவிக்கின்ற பண்பும் இவரிடம் உண்டு.
நல்ல இலக்கியங்களை நயந்து அவற்றை எழுத்தெண் ணிப் படிக்கின்ற இவர் அவற்றின் சிறப்புக்களை மேடை களில் எடுத்துக் கூறி இரசிகர்கள் கவனத்தை அவ் வவ் இலக்கியங்களின் மேல் திருப்பிவிடும் ஆற்றல் மிகுந்தவர்.
இரசிகமணி கனக. செந்திநாதன் யாழ். இலக்கிய வட்டத்தின் ‘அடிக் கல்லா வர் கடந்த ஆண்டு நாம் பல கருத்தரங்குகளை நடாத்தவும், பல நூல்களை வெளி "யிடவும் அவரது உழைப்புத் திறனே கா ர ண மா க அமைந்தது அவரது பொன்விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் யாழ். இலக்கிய வட்டம் அவரின் சேவை யைப் பாராட்டுவதோடு தொடர்ந்தும் எமது ஆக்க பூர்வமான செயல்களுக்கு அவரின் சக்தி பயனளிக்க வேண்டும் என விரும்புகிறது.
همه به همه دهه ۰ مهم
* د نه ۰۰هه همeeه ۰**
44

நாயகியாகிய நாகம்மை வள்ளிநாய்கி இராமலிங்கம் பி. ஏ.
ஈழத்து இலக்கிய வளர்ச்சியைப் பற்றிப் பேசத் தொடங்குமுன் அதன் ஆசிரியராகிய கனக, செந்திM நாதன் எழுதியுள்ள சமர்ப்பணத்தைப் பற்றி இரண் டொரு வார்த்தைகள் கூறலாமென்று நினைக்கிறேன். அவர் இந்த நூலை, தமது மனைவியாகியநாகம்மைக்குச்
சமர்ப்பணம் செய்து ள் ளா ர். "சமர்ப்பணம் - என் அருமை மனைவிக்கு' என்று எழுதாமல் கவிதையிலே சமர்ப்பித்திருப்பதை நீங்க ள் காணலாம். உயிர்த்
துடிப்புள்ள கவிதை அது.
**இல்வாழ்வென்னும் சகடத்தை
இருபத்து நான்கு ஆண்டுகளாய் நல்லார்வத்தோடி ழுத்து வந்த
நவை தீர் மனைவி ஆனவளும் பொன்னைப் பொருளைக் கேளாமல்
புத்தகமாகிய செல்வத்தை கண்ணிற் கரு மணி போலப் பல
காலங்காத்து வருபவளும் பிள்ளை குடும்பம் சுற்றமெனும்
பெரியமலையைத் தான் சுமந்து என்னைத் தனியாய் இலக்கியத்தில்
இனிதே உலவ விட்டவளும் நல்ல குணங்கள் பல கொண்ட நாயகியாகிய நாகம்மைக் கென்ன உண்டு கொடுப்பதற்கு
இதையே சமர்ப்பித்திடலானேன்."
45

Page 28
செந்திநாதனது வாழ்க்கையைப் பற்றித் தெரித்த வர்களுக்கு அவரது மனைவி நாகம்மையின் தொண்டு தியாகம் - எவ்வளவு என்று தெரியும். .கால எட்டு மணிக்கு வீட்டை விட்டுப் போய் இரவு எட்டு மணிக்கு வீட்டுக்கு வருபவர் அவர். இலக்கியத் தொண்டு அவ ருடையது. வீட்டு வேலை - விரு ந் தி ன ர் சாரம் - பிள்ளைகள் க ல, வி எ ல் லா ம் நாகம்மையி :டையது. இதை ஆசிரியர் மறக்கவில்லே தன்னுடைய தொண்டி னும் சிறிதாய் மதிக்கவில்லை. அதனல் தான் 'பிள்ளை குடும்பம் சுற்றமெனும் பெரிய மலையைத் தான் சுமந்து' என்று அழகாகக் குறிப்பிட்டிருக்கிருர்,
இப்புத்தகத்தால் வ ரு ம் பேரும் புகழும் பெரு வாழ்வும் ஒரு பெண்ணுக்கு - நாகீம்மைக்கு அளிக்கப் பட்டதைக் கண்டு. பெண்ணென்ற வட்டத் ரீள் நின்று
என்மனம் கும்மாளமிடுகின்றது. ஆனலும் , ரிப்பட்ட் முறையில் இப்பெருமைக்குரிய பெண்ணேப் பார்த்துப் பொருமை கொள்ளவும் செய்கிறது. 'நல்ல குணங்கள்
பல கொண்ட நாயகியாகிய நாகம் மைக் கென்ன உண்டு கொடுப்பதற்கு?’’ என்ற கேள்வியில் அதைப் படிக்கும். போது ஏற்படும் துன்பம், எத்தகைய ஆற்ரு மை, துய ரம் - ஏக்கம் எல்லாம் தொனித்து நிற்கிறது. ஆளுனல் அதைத் திருப்பித் தி ரு ப் பிப் படிக்கையில் எவ்வளவுக் கெவ்வளவு ஆற்ருமை தொக்கி நிற் கிற தோ அவ்வளவுக் கவ்வளவு ‘தற்காத்துத் தற்கொண்டாற். பேணி, தகை சான்ற சொற் காத்துச் சே tர் வி லா ள் பெண்’ என்ற வள்ளுவன் இலக்கணத்திற் கமைய ஒரு பெண் தனக்கு வாய்த்திருக்கிருள் என்பதை உலகுக்குக் காட்டும் மட்டற்ற பெருமையையும் விளங்கா நிற்கி றது. எத்தனையோ ஆண்டுகளாகக் கருத்தை வளர்த்து வளப்படுத்தி விதைத்து அறுவடை செய்து எடுத்த இணையற்ற விளைச்சலை விட மே லான து உலகத்தில் என்ன இருக்கிறது? அந்த விளைச்சலை எக் கணவர்களா லும் கொடுக்க முடியாத, மதிப்பற்ற ஒன்றைச் சமர்ப் பித்து விட்டோமென்ற தன்னடக் கத்தோடு கூடிய தற். பெருமையும் பிரதிபலிக்கின்றது. நாகம்மைக் கி  ைத விட வேறென்ன வேண்டும்.?
ஈழத்து இலக்கிய வளர்ச்சி எ ன்ற நூலே க் குரும்ப சிட்டி சன்மார்க்க சபையில் வெளியிட்ட போது நிகழ்த் திய உரையின் ஒரு பகுதி.
46

கவிநயம் காணும் கலைஞன்
இனிய தமிழின் இலக்கியங்கள்
என்றும் நுகரும் இரசிகமணி கனக செந்தி நாசு னென்றே
கற்ரூேர் புகழுங் கலைச் செல்வ! கனியும் அன்பால் எனப் போற்றிக்
கவிஞன் என்றே பாராட்டும் புனித உள்ளத் தாய்; நின்புலமை
பொலிக பொலிக பல்லாண்டு,
* காலைத் தூக்கி கண்ணிலொற்றி
என்று தொடங்கும் என் கவிதை ** சாலச் சிறந்த தென்றெங்கும்
சாற்றி உள்ளந் தழைத்திடுவோய்! காலங் கடந்து வாழ்கவியின்
கருத்தைக் காணும் திறனுய்வுக் கோலின் செம்மை கோடாநின்
குடைக்கீழ்க் கவிஞர் குலம் வாழ்க.
5-10. 64 வித்துவான் க. வேந்தனுர்,
கருத்தூட்டும் பண்பாளர்
பாட்டுப் படைக்கும் பெரியோரை மக்களுக்குக் காட்டி யவர்தம் கருத்துக்களை-ஊட்டும் பணியில் மகிழ்வெய்தும் பண்பாளர்க் கெங்கே யிணை சொல்ல ஏலும் எனக்கு.
9. 12-58. மஹாகவி.
Mama,
47

Page 29
போற்றிப் புரிந்தான் பணி
செந்தமிழ்ச் சோலை தெளிதேனைச் சேர்க்கின்ற சிந்தனையின் றேனை கன கசெந்தி எந்தமிழ் நூலைச் சுவைத் தெமக்கு நுண்பொருளைத் தேனக்கும் வேலை அவர்க்கே விருப்பு.
மணிக்கொடியைத் தொட்டு கூடிணமினிக்குங்
கல் கண்டுந் தனித்தனியே பார்த்துத் தரங்கண்டு-இரசிக்கின்ற எல்லா இலக்கியமும் ஈர்பத்து ஐயாண்டு சொல்லாமற் றந்தான்றுனிந்து"
கைப்பொருளைத் தேடாது கலைப் பொருளைச்
சேர்த்து வந்த மெய்ப்பொருளான் செந்தி மிகப் பெரியோன்
துய்ப்போர்க்கு இந்தா வென வினிக்கும் இன்சுவையாம் கட்டுரைகள் தந்தான் தமிழிற் றணித்து.
ஈழத் தெழுந்த இலக்கியத்தின் தோற்றத்தை ஆழப்படித்து அதை நூலில்-காலத்துக் கேற்ற வகை யிலியலமைத்து இஸ்லாத்தைப் போற்றிப் புரிந்தான் பணி.
வெள்ளி விழா வெடுக்க வேண்டும் ஒருங்குபல உள்ளி உழைக்குங் கிழக்கிலங்கைத்-தெள்ளுதமிழ் சங்கத்தை வாழ்த்திச் சளையா துழைத்தவனைச் செங்கரத்தாற் சொன்னேன் துதி,
வீரக்ேசரி 1964 அண்ணல்
48

ஊன்பாடுபட உழைத்தாய்!
வெண்பா
செந் தமிழ்போல் எம்.கனக-செந்திநா தன் பெருஞ்சீர் எந்த நா ஞம்பெறுக வென்றேத்தி-நந்து லவுஞ் செந்திலமர் கந்தனருட் சேயமலர்த் தாளிணைகள் வந்தித்து வாழ்த் துரை செய் வாம். ஆசிரிய விருத்தம் கரும்பிணிக்கும் மொழித்தமிழின் எழுத்துருவத்
தழகுணர்த்துங் கலையில் வல்ல குரும்பசி. டி முது பதியிற் கனகசபை
எனும் பெயரிற் குலவு கோமான் தரும்புதல்வ னுகியருங் குனம் நிரம்பி 7 ஆசிரியத் தகுதி தாங்கி விரும்புசெந்தி நாதனென விளம்பு பெயர்
தொண்டு புகழ் விளங்க வாழ்வோய். கலைத் தமிழ்நூ லுளவெல்லாம் கருத் தழுந்தக்
கற்றுணர்தல் அாத லோடு விலைக்குறக் கொண் . வையழியா நிலை பேணிக்
காத்திருத்தல் விரும்பி வந்தோர் நிலைத்த தமி ழுணர்ச்சிபெறப் புதுமைபல
உரைத்தல் என்றிந் நீர்மை யால் நீ அலைப்புறு நந் தமிழனையை ஆதரிக்கும் ஆண்மைநிலை அமைந்தாய் ஐயா. தேன்பாடும் இசையிலுயர் தீந்தமிழ்க்கு
நீபுரிந்து சேவை நோக்கி ஏன்பாடு படல் வேண்டு மென்றிருப்பார்க்
கிடித்துாைத்தார் என்ன ஈங்கு மீன்பாடுந் தமிழகத்தார் ரசிகமணி
விருதீந்தார் மேன்மையுற்ருய் ஊன்பாடு படவுழைத்தார் உயர்நிலைபெற்
ருேங்கிடுதல் உண்மையன் ருே.
செ. கதிரேசர்பிள்ளை
அகில இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 5-6-64ல் வாசித்தளித்தது)
49

Page 30
சிங்கநாதஞ் செய்யும் செந்திநாதன்
இங்கு தோன்று மிந்தக் கால
இலக்கி யத்தைக் கற்று ஏற்ற பேரின் ஆற்றல் கூறி
இரசனை கட்டி வளர்த்து எங்கள் நாடு எங்கள் அறிஞர்
எங்கள் நூல்கள் பாரீர் என்று சென்ற இடங்கள் தோறும்
எழுந்து சான்று காட்டிச் சிங்க நாதஞ் செய்யுங் கண்க செந்தி நாநன் ஈழ நங்கை நோன்பு செய்து பெற்ற
நல்ல மேதை மாண்பைப் பொங்கிக் கட்ட விழ்க்கும் பூக்கள் போற்றி நாளும் விரிக்கும் போய்மு கந்து நீசிறந்து
பொலிந்து வீசு காற்றே.
: - - வி. கந்தவனம்
(தெல்லிப்பளை யூனியன் கல்லூரி. நவர்ாத்திரிக் கவியரங்கில் பாடியது
நடமாடும் நூல் நிலையம் வடிகின்ற தமிழுற்று வளமாய் இன்பம்
வளர்கின்ற சிந்தை தமிழ் இலக்கி யங்கள் எடைபோடும் அரிய தமிழ் ஆசான் என்றும் எழுகின்ற பயிர்பேணி எடுக்கு மன்பன் ஒடிகின்ற உடலோடும் உறுதி கொண்டே
ஒண்டமிழுக் குயர்சேவை உயிராய்க் கொண்டு நடமாடும் நூல்நிலைய மென்றே போற்றும் நவரசிக மணித்தலைவ நமதன் பேற்பீர்.
· · · அம்பி
(பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற
. . கவியரங்கிற் பாடியது
50

மரபினிற் சிறந்து வாழி!
பண்டிதர் தமக்கு மேலாம்
மணியெனப் பகர நின்ற கொண்டலாம் கணபதிப் பேர்ப்
பிள்ளையைக் குருவாய்க் கொண்டு கண்டென நிகர்க்கும். பேச்சும்
கவின் பெறு எழுத்துங் கொண்டாய் மண்டலப் புகழும் பெற்ருய்
மரபினிற் சிறந்து வாழி.
சீரார்ந்த பொன்னையா சேவை செப்பித்
திருமலியும் ஈழத்தில் இலங்கி நின்ற நேரார்ந்த ‘ஈழகேசரி’’யோ டன்று
நின்சேவை தொடங்கிற்று, அவரின்மேலாம் பேரார்ந்து நிற்கின்ற பதிப்பு கத்தும்
பெரும்பணியே ஆற்றிநின்ரு ய் இன்று
. உன்றன் கூரார்ந்த மதிகொண்ட சேவை யாலே
கொள்கின்ற கீர்த்தியிலே, பெருமை
கொண்டோம்.
"இரசிகமணி" பட்டம் வழங்கியதைப் பாராட்டி அ. இ த. எ. சங்கம் 5-4-64-ல் ந டா த் திய விழாவில் சுன்னகம். வட இலங்கை தமிழ் நூற் பதிப்பகத்தின் ரால் வாசித்தளிக்கப்பட்டது) *.
51

Page 31
வெள்ளி விழாவில்
பெற்ற விருது
கிழக்கிலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அனு சரனையுடன் வந்தாறு மூலை மத்திய மகாவித்தியாலய உயர்மன்றம் 1964-ம் ஆண்டு வைகாசித் திங்கள் 9-ம் 10-ம் நாட்களில் (22, 23-5-64] மே ற் ப டி கல்லூரி மண்டபத்தில் காப்பியப் பெருவிழா வொன்றினை நடாத் தியது. அவ்விழாவில் ஒர் அங்கமாக கனக. செந்தி நாதனின் எழுத்துத்துறை வெள்ளிவிழா வைபவத்தை ஈழகேசரிப் பொன்னையா அரங்கத்தில் கிழக்கிலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சிறப்பான முறையில் நடத் தியது. இவ்விழாவிற்கு தமிழறிஞராகிய F. X, C, நடராசா அவர்கள் தலைமை தாங்கினர்கள். கிழக்கிலங் கையின் முது பெரும் அறிஞரும் சைவப்புலவருமாகிய தேசிகமணி கா. அருணுசலத் தேசிகர் பொ ன் ஞ டை போர்த்து கனக செந்திநாதனை வாழ்த்தினர் அதி னைத் தொடர்ந்து, ஈழத்துப் புலவர்களுக்குள் தலைசிறந்த வராகிய புலவர் மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் கனக. செந்திநாதனின் இ ல க் கி ய த் தொண்டைப் பாராட்டி இரசிகமணியென்ற விருதை வழங்கிக் கெளர வித்தார். இலங்கை வானுெலி தமிழ் நிகழ்ச்சி அதிகா ரியாகிய நாவற்குழியூர் நடராசன் அவர்கள் தமக்கும் கனக. செந்திநாதனுக்கும் ம று ம ல ர் ச் சிக் காலந் தொடங்கி ஏற்பட்டுள்ள இலக்கிய நட்பையும் அவரது இலக்கிய சேவையையும் வியந்து இரசிகமணி அவர்க ளுக்குப் பொற்பதக்கஞ் சூட்டினர். அரசு வெளியீட் ட திபர் எம். ஏ. ரகுமான், வித்தியா தரிசி திரு. பொ. சின்னத்துரை, பிரபல எழுத்தாளர் எஸ். பொன்னுத் துரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்கள்.
52

சண் பக மலர்
சு. வே.
கருப்பக் கிருகத்திலே தேவி வீற்றிருக்கிருள். மு. னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம் பொருளாய், பின்னைப் புதுமைக்கும் பெரும் புதுமையாய் அவள் விளங்குகிருள்.
அவள் தான் வகுத்துவிட்ட காலக் கணிதத்துக்கு உட்பட்டு, வளமான வளர்ச்சி, வளர்ச்சியில் மலர்ந்த மாற்றம் என்பனவற்றுக்கு ஆட்பட்டு, எழிற்கோலங் காட்டியும் நிற்பாள், கலாதீதப் பொருளாய், நிறை காட்டியும் நிற்பாள்.
அவளுக்கென உலகெங்கினும் ஒரு கற்றளிதானு மில்லை. ஆயின், பன்னூற்றுக் கோடி மனத்தளிகள் - மனமெனுங் கோயில்கள் - உண்டு.
அங்கெல்லாம் அவள் பாதச் சிலம்பு பல இசை பாடும். நுண்ணிரி மேகலை யாழிசை கூட்டும். சங்கத் திணியன்ற மணித்தொகை யாரங்களும் திருமுருக தரளவடத் தாமங்களும் அவள் ம ணிக் கழுத்தில் இள வெயில் எறிக்கும்; மார்பிலே மதாணிகள் பல, பல பல வடிவிற் பல பல பெயரிற் கிடந்து பகலைப் பகல் செய்யும். பத்தர் ஒருவர் செய்தளித்த மாக் கதைக் குழை யொன்றும் பத்தர் நால்வர் முறை பெற அணி செய்த பொன்னெடுங் குழை யொன்றும் அவள் திருச் செவிகளிலே பண்பாடும், கள்ளுறும் கம்பச்சுட்டி யென் னும் வம்பச் சுட்டி அவள் நெற்றிச் சுட்டியாய் நில வெறிக்கும்.
53

Page 32
கருமை யுண்டு நெளியும் அவள் கூந்தலின் குழைவு -
கலைக்கூறுகள் அனைத்தினுக்கும் இலக்கணம் வகுக் கும் அவள் திரு நுத லின் தனி அழகு -
பஞ்ச பூதத்தின் நுண்மைகளைத் தன்வயமாக்கி விளங்கும் திருநயனத்தின் பேரொளி --
குமிழ மலர்த் திருநாசியிற் குடியிருக்கும் தனித் துவம் - e A.
செந்து வர்த்திருவாயிலே படிந்துள்ள காவியத் தம் பலத்தின் செம்மை -
முகமதியில் நிலவெறிக்கும் தாய்மை - கன தன பாரங்களிலே தேங்கும் கன்னிமை - ஐயையோ ! அவள் முழுப் பண்பையும் சொல்ல- வாய் ஏது ?
அவள் திருவுருவின் மறுபெயர் அன்பு. அவள் தாய்; கன்னி; குமரி. ஒராயிரம் பேர் சொல்லி அவள் சீர் பரவுவர்.
அவளே இனிமைக்கு இலக்கணம்; அவள் இனியள். அவள் திரு மனத்தின் மலர்ச்சி இலட்சணப்படி அமைந்த இலட்சியம். அஃதே அவள் பாலிக்கும் திரு வருள்.
அந்தத் தெய்வத் திருத்தாயின் மதம் தமிழ் மதம். பல பல மலர்கள் அவள் பாத கமலங்களின் அய லிலே கிடக்கின்றன. பத்தர்கள் மனத்தை மெத்தக் கவர்ந்த மலர்கள் அவை.
மலர்களெல்லாம் நாண் மலர்கள். அவை பல பல வண்ணத்தன; பல பல வடிவின.
அவற்றில், தீஞ்கவைத் தேன் பிலிற்றுவன சில: வற்றியன பல. நிகழ்கால நாகரிகம் போலே கண்ணை மாத்திரம் மயக்கிக் கருத்தை மயக்காதன பல; தவம் போலே கண்ணைக் கவராது, நெஞ்சக் கனகல்லை நெகிழ் விப்பன “சில. பொரு ஸ்  ெபா தி ந் த கவி  ைத
54

போலே, உயிர்ப்புள்ள ஒவியம் போலே மணங் கமழ் வன சில; கடதாசிப் பூக்களாய் யாதொரு நாற்றமு மின்றிச் சல சலப்பன பல.
எல்லா மலர்களும் தாயின் திருவடியைத் தீண்டத் தவஞ் செய்கின்றன.
சிலவற்றின் தவம் அவமாகிறது. உள்ளீடும் அதிற் பிறந்த உறுதியும் அவற்றிலே விளைந்த தனித்தன்மையும் அற்றன, துடிதுடிக்கின்றன.
அந்தத் துடிப்பு ஆணவத்தின் அருமந்த மகவு, அதன் பெயர் பொருமை.
அது ஒரு செவ்வரத்தம் பூ. பலராலும் அறியப் பட்டு, சனநாயக மதிப்புப் பெற்றது. அது பேசிற்று,
** நான் எல்லாராலும் அறியப்பட்டவன், மலர் களிலே என்னைப் போலே யார் ஆய்வுக்குப் பயன் பட்டார்கள் நான் அறிவுலகத் தியாகி. என்னைப் போன்ற கண்ணைக் கவரும் நிறம் யாருக்குண்டு. இரத்தத்தின் நிறம் யான் தாயின் பாதங்களைத் தீண்டுந் தகுதி எனக்கே எண்டு.”* வாடா மல்லிகை சிரித்தது, தன் தோழனை ஏளன மாக நோக்கியது.
* ஐயா, நானும் சிவப்பு நிறத்தவன்; உம்மு டைய தோழன். ஆனல், யாருக்கும் போட்டி யென்று வந்து விட்டால் சுயநலந்தான் தலையெடுக் கும். நான் நித்தியன், வாடாமலர் மலரன்று, மலர்க்கொத்து, நான் ஒருவனே பன்னிரு சந்ததி களைத் தோற்றுவிப்பேன். தோழரே, உம்மால் முடியுமா ? இப்போது தகுதி எங்கிருக்கிறது தெரி கிறதா ? '
ருே சா மலர் கம்பீரமாக, கர்வத்துடன் இருவரை யும் பார்த்தது. அதன் இதழ்க் கடையில் ஏளனப் புன் முறுவல் நெளிந்தது.
55

Page 33
** ஒகோ, என்னிடமுள்ள செம்மையின் சிறப்பு உங்களுக்குண்டோ? எனக்கு மிக மெல்லிய மணம் உண்டு பொலிவு உண்டு. மலர்க்குலத்திலே நான் தானே பரிசுப் பொருள், மருந்துப் பொருள். அத னல் என்னைப் போற்ருதவர் யாருளர்? தேவியின் திருவடி எனக்கே.”* செவ்வந்தி சிறுநகை செய்தது :
* சரிதான், மங்கல நிறமுள்ளவன் நான். உங்களைப் போலன்றி இலக்கிய பீடம் ஏறியவன் நான்; தெய்வத் திருவடிக்கு ஏற்றவன் நான், யாருக்குமில்லாத மனேகர மணங் கொண்டவன் நான், எத்தனை எத்தனை தலங்களிலே தவஞ்செய்து இப்பேறு பெற்றேன். தேவி என்னைத்தான் தீண்டு gift 6t. மல்லிகை மெல்லச் சிரித்தது; ' கம் ' என்று நறு மணம் எங்கும் பரந்தது, அங்கே வெள்ளையுள்ள மும் பொருள் விலாசமும் ஒருங்கே தோன்றின.
"இப்போதுள்ள இந்த நிலைதான் என் தவநிலை. தவம் பயன் செய்வதும் செய்யாததும் தேவியின திருவுளம், என் கடன் தேவியின் பணி செய்து கிடப்பதே ' என்று கூறி அடங்கியது. முல்லை மெல்ல முறுவலித்தது, ஒரு கணம் முல்லையின் நறுமணம் மிதந்தது.
" தேவீ, பிறர் இழிவையோ, என்னுயர் வையோ கூறிப் பயனென்ன ? நீ அறியாத தொன் றுண்டோ ? நானும் நானுய் இருக்கிறேன், கடைக் கணித்தருள்வாய்', சண்பக மலர் ஒன்று எல்லார் பேச்சையும் கேட் டது, பேச்சின் பொருள் வெறுமையையும் உணர்ந் தது. அதற்கு ஆணவம் தலையெடுக்கவில்லை, அதனல், அருள் பொழிய அவற்றினை நோக்கியது.
மற்ற மலர்கனைப்போன்று வனப்பும் வடிவு மின்றிக் கிடந்தது அது. எந்தச் சூரு வளிகளுக்கும் அசைந்து
56

கொடுக்காத இதழ் வலிமையும் உள்ள உறுதியும் அதற் குண்டு. அதன் தடித்த இதழ்களில் ஒன்றின் ஒரு சிறு பகுதியை பொல்லாத வண்டொன்று சுவைத்துவிட்
--gi அந்த மறு தியாகத் தழும்பு,
அது நறுமணத்தின் மாமன்னன். காலக்கணக்கைக் கடந்து வாழும் மணம் அது, தெவிட்டுந் தன்மை அதற் கில்லை. அந்தத் தெய்வீக மணத்தினுள். எல்லாவற் றின் மணமும் சங்கமமாகிவிட்டது, பேராற்றுட்கலக் கும் சிற்ருறுகள் போலே.
அது தனது நறுமணத்தை அந்தச் சூழலெங்கும் பரப்பி, மற்றெல்லாவற்றினுக்கும் தன் மணத்தை நல்கி, து வையே தானப், தானே அவையாய் அமைந்து சிரித் தது. சிரிப்பிலே பொருள் சிந்திற்று.
** முதிர்விலே தளர்வு ஏற்படினும் தேவி பூசையை என் நெஞ்சு மறவாது. நான், என்ன றிவு, என்னுணர்வு முதலிய எல்லாமே அவள் தந் தவை. இம் மலர்க்குலங்கள் என்னைத் தூற்றினும் போற்றினும் நான் அவற்றின் அடிமை’. தேன் துளி ஒன்று சிந்திற்று. அது ஆனந்தக் கண் gsi ri,
எங்கும் ஒரு கன மெளனம் நிலவியது. எல்லா மலர்களும் தேவியின்திருமுகத்தை நோக்கின பொருமை நீறுபூத்த நெருப்பாய்க் கிடந்து உளைந்தது, அடக்கம் பளிங்காய்க் கிடந்து ஒளிர்ந்தது.
தேவி அருள் நகை பூத்தாள். அடுத்த கணம் . . . தேவியின் பாத பங்கயங்கள் சண்பக மலரை மெல் லத் தீண்டின.
அந்தச் சண்பக மலர், கனக. செந்திநாதன்
“ ஈழத்து இலக்கிய வளர்ச்சி ' குரும்பசிட்டி சன் மார்க்சபையால் வெளியிடப்பட்ட சமயம் அந்த வெளி பீட்டு விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் ஒரு பகுதி.
57

Page 34
திறமையாளன்
திமிழ் இலக்கியத்துறையில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்திய இரசிகமணி கனக செந்திநாதன் கட்டுரை, கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் ஆகியவற்றில் மட்டுமல்ல சமய நூல்கள், சிறுவர் நூல்கள் ஆகியவற்றிலும் தமது திறமையைக் காட்டியுள்ளார். இவர் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து தமிழ்கூறும் நல்லுலகத்திற்குத் தொடர்ந் தும் பணியாற்ற வேண்டுமென வாழ்த்துகிறேன்.
மு. திருச்செல்வம்
உள்ளூராட்சி அமைச்சர்


Page 35
.
இரசிகமணி எ
கவிதைவானில் ;
(வரதர் ( (கவிஞர் மு. செல்லேயா
மூன்றுவது கண்
(பண்டிதமணி சி. க. அ
ஈழத்துக் கவிமல (நவாலியூர் க. சோமசு 35 கவிஞர்களின் கவிை
ஈழத்து இலக்கிய ( 391 JF G
(ஈழத்து இலக்கிய வரலா
கலேமடந்தையின்
(சன்மார்க்க ச (திருநெல்வேலி சிற்பாச அவர்களது கலேத்தெ
வெண்சங்கு (யாழ்
(பத்துச் சிறுகதைகளேக்
பிரபந்தப் பூங்கா
(பரணி, பள்ளு, கலம்ப சொற்பொழிவுகள்)
#ட்டை கன்ஜகம், திருமகள் .
 

ழுதிய நூல்கள்
青
ஒரு வளர்பிறை வெளியீடு)
அவர்களின் கவிதை விமரிசனம்)
(வரதர் வெளியீடு)
வர்களின் வாழ்வும் தொண்டும்)
ர்கள்
ந்தரப்புலவரின் பின் இருந்த தத் தொகுப்பு)
வளர்ச்சி வெளியீடு) ற்றைத் தொகுத்துக்கூறும் நூல்)
தவப்புதல்வன் பை வெளியீடு)
ாரியார் வி. ஆறுமுகம் Töı Gır: வரலாறு ம்)
இலக்கியவட்ட வெளியீடு) கொண்ட தொகுதி)
(வரதர் வெளியீடு) கம் பற்றிய எட்டு வானுெவிச்
அழுத்தகத்தில் அச்சிடப்பேற்றது.