கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: களம் 1996.07

Page 1
T வை
நீண்டும் வருவாயா
FLITL "-5FTEE
கதையின் #5E)
நான்கு ஐரோப்பியப் படங்கள்
கே. எஸ். சிவகுமாரன் 器 en
+ܩ TET ஒ இதனை ஏன் குறிப் : 7గా நினைக்கத் ே (ப்பில் மிகவும் கீழ்ப் இருப்ப ஆ எழுதப்போகும் శ్కీ" சாதிக் கொடு குறத்தி பூ போகும் அந் "ேத பார்கள் என் F: 壹 Gārāsu+ 海 ஈரல் - புனித
* கற்குத்தான் 5ெ இால்லிE STளை. 8 தான் எழு G 5 இலக்கியE போடியா உ(ஆ என்மீது இவர்களி2ே S : "V" 4- "ஆ ,ே சுதான் , TE
| fକୃଷ୍ଣି Ke 중 மிட்ட எாப்பின் இலக்கிய
i މިޗިކޯ ଅଗ୍ନି "அணும் இேதெல்லாம், யார :19ரு ஏரி: E ? 'க 'ஜி களப்பு இலக்கிய
விUேEபர் டிக்காட்டுவது ை
翡
le l'Islige - டுடுேகு 96பாறைக் பாதி
த்ததும் | *cs」のリ』エ cm。エ。 గ> இ =டையாய்ச் சித என்னைப்பற்றி நான்"ஜ ஒரு : ಸಿ."
 
 
 
 
 
 
 
 
 

ד - די ד"ר דירר ==== כ . சிாப்பின் யோகம் கிடை===
=
ஈஸ்வடித்து, சிால்களிலுே --ಹಿತ
- - .크 ולם לח S కో క్రైస్ట్ F 絮 Eլ քlայ 록 --= தோ வழிகா 李 国 । -جي = LJL" சின் கைது -
ーl-G.5cmm品 卡卡 크 تھی۔ پٹی = ئی =
བྱེདྲི་ விதி 鬣°。臀 トリ 雲リー
Y S uS S ii S SSi iS S S S kk SkS 冢 T亨=== 圭。 ä、 、 = :ಸ್ಥ್, ಕ್ಲಿ : : : : :... TT T.
ー 歴 巽 Fiff Färfl: -- - ) தமிழின் 3, 5, 3 : ""
காப்பில் முகம் இஜயமோகனைய དེ་ 출 == = = = म् = माता (': 'S} (वे 镇
உதிர்த்த
5עד שהDבח shill
き 三曼 器 辛 ミ 를
G 5 그 를 |E 를 출
를
● | 출
is El is 도 1 ܓܝܪ 은 "I E C - -
를 크 ||
。リミき茎 그 ج 5 5 - 5 .. 트 품 듣 - - 는 드 ". కై? 출
| 丐|* 岛 、 E 5ܢ- ܣܛ
조 F. is 으 |}||} སྤྱི་ is எழுதி வெளி 굴 ཕྱི་ 는 "பேபு அந்தப்பா ஆ': * ミ 。 으
in Trini 2.২ খ্রিঃ) চৈত্র * திாகும். வெறு 2) می 3- " ريلا يع
நூே ঞ্জি’ স্পর্ক རྗེ་ 5 தீ வைப்பு அது ಛೀ..? «» է5լ է ଶ୍ରେ: : 2. 岛
'*' ' ES : ਹੈ। 穹。 துே 항 %* 3- 크 "கை"ளுக்கும், లై 淤 Xe*Y> இ. 胞 - "..." ETT 3. · හි *్క ■ 前 会/ * T பரிசு 签 '#్య 9ܟ݂ ଦ୍ବନ୍ଧ * ஆ 용 A^ TL * స్టోర్నీ స్త్ర (ఇస్లో " వ్యణి** ஆ°, 'ஆ ? |ITIf £ Š) స్ట్రో డ్రా * 2 أمنية في°్య* /霹 s ாவது வெளியி லி గ్మోక్కో 'వృ్వ్య کلا کې لار” يوه تيره .S. ப் போக்கித் හී . స్ట్ ్స స్కోక్క" 萤”、 "ழக்கம் . بیست - | இ° S" + 19GTJ में YY్నపేల్చి? _{ ` ရွှို၊ ၂/
『』 황 தன் "بيه *
ଗଳ . । *్క "Us'* 苏、氰 *ஓ'தி ...இ ஐ "
னாம் நாங்கள் S. & 3 அஞ்சம் கொடுத்தது: இந்தச் சூரியன் ? 翰 意 辜 லையால் தெறித் சூரியனின்- "'E. 曾 ਨੇ

Page 2
「リエ尋Iエ間I士cm士」 ー間ー間ーIIーIIエ
11, Sel (’empliments Franı
IPIDT,
FTF TLTT - T LA T, , Eli LEH
1 9C, KI
PHON F
*?:?, ? ? ? ? '34', ടൂ, ബ
":"ീ", -15 ബ
를 .5/6/T-55הש リエ -F)5 והן עשויה', '
- ܨ¬ ¬ ̧
+ 'o": !,
போ ட்ே
SL S SLS LSKuSSJSSSKSSS SSSaSSSS
T III ܩ
De), II, Sl ().
T. M. M.
* 1-6, MAIN, S | REE
PhOne:
Dealers in: Medic
SSAAASASA SSASASSSS SSSSSSJSSSSSHKSa SSSSSS

ܡܨܬܐ
|-|-| |=|n-un| = Iリ二"II IDEM) sejumi: ||== ||||
D N.
' 3 T1 FIFE FDF Lis == -
A LIMUNAI.
(), -234
" + ' ' 'ഇ'ഥ ടൂ,േ, 5 ? 5,
. 3, 5; II,
) * +ിന്റെ ? - ടേ ? :
זה דרשו 3 117 (2/57 ו6 3.5- ל- 1
_IT pin^i, sin'
| Iー I IIエII二II it is in III III.
- I - II - - - III || || || ||||||||||||
|
|
Pharmacy
: T. KALM UINAI
D67 - 2329
ine and Groceries
SSLu SSSS S LLSSJSJSSSSSSSS S SSS S SS S SS SS LSu u u KSSJSLS uKKS

Page 3
• • • • • Uy , , , Ū ; , , , , , (J1 , 1 ilusựsui uisuus UI
‘토國國民南部,院g lig트國트gngm·4mang역 Trīsions) ol||I/Q3R95|| IIIII??sui Uısısolo solUlfmoos jūılınggoJŲs ?||??|Oossfiso||iso||1915 @smp.gugg m南道民國憲 m트國 :宮트트&트m트mg황(주)들g 阎19习四目巨国写自nn巨官阎启动
suae iş, og to tira i so gael u, és opo,???-±gogo qvaevoodowo, ...4 golo, toovo onqortodo qofĩae raea
泌
ouvwogaeo issoq, o se yooo
徽
 

'įįRIBITE’ Uıp
‘토9트國mm그효9 國道들國g
@@@o||19Ęs|ss) sin III|30|31)(? Isnings 后u巨hun圈4层己圈司圆信己可巨199m层信园 mu9昌宮 넓 院宮高祖 高野昌 확그들9田國용國南部 홍T同)高)
mR트「m-PT트R 巨与闾阎马可司画@@@n信9信4母国争u己 19國9트「müTU9트長9데 트g크96 mi&g들9國트Q9me m트定昌國 宣皇mg Il트信9트n 토9트昌昌9聖宗)nn트民 己巨层圈后旨器国nn电n圈后阁国层肃司国寸9 Im트(9.8mg토后99$]트n昌mg道 『트mg 젊크 트B6)
[ĴŬsmıs 19ĘDĘ ULIMIĘ 9酮可司n信B güg@昌邑氫m唱T尼垣IT圈 트9南道長9南部:9 m*트트트n황 그활페델 토9름명을il트ng 트民國 國長生縣 原明道토國 토트m토크트國들9m WW Uısmı 909?--109's (999 sssssssssssssss||sos ollulos?|fi] Im트(9.8mg토9ü99편 정919율 증9트그韓 'Q9증9官1편
In Tí smo inn is? —ı-ı ırın fil-ı r-ı r-ı sāro sì r-ı r-ı var una rry -- ro...~~ ~~

Page 4
EÉTTLD
இதழ் ஆறு ஜுலை - 1996
பதிப்பாசிரியர் வா. சிவயோகம்
அட்டையில்: இவ்விதழில் வெளியாகும் திரு. கே. எஸ். சிவகுமாரனின் கட்டுரையில் இடம் பெறும் போர்த்துக்கல் பட மா ன தி கொன்வென்டில் இருந்து,
அட்டை வடிவமைப்பு
உமா வரதராஜன்
அச்சுப் பதிப்பு குட்வின் ஒட்டோ அச்சகம் கல்முனை.
6 கட்டுரைகள்
பக், 3, 5, 11, 13 19, 33
13 கவிதைகள் பக், 2, 4, 10, 12, 22, 23, 24, 25, 26, 27, 29
2 சிறுகதைகள் பக்கம் 28, 30
பிற
Ltd., 1, 34, 36
படைப்புகள் , கடிதங்கள் நன்கொடை அனுப்ப வேண்டிய முகவரி:
கமலகம்
அக்கரைப்பற்று.
ஆனந்தன் பயன்ம்
களத்தின் அக்கறை:
அவனு!ை
art புக்கு அன அமைப்பு
தன்மை ! |ygirଯTଦ୍ଦଣ୍ଡ
இந்த இ வெளிவந் நான்கைந் கவிதைகள் ஓரிரு கட்
ଈU[Tଈ ଘ] ହଁ கொண்ட
பதவி உ pן תraח3gu) -ଞ ଶu ár qu G Jr Dr
ஆனந்த ஒ இரண்டு
சம்பந்தப் சம்பந்தம
பட்டது. பல்வேறு
சார்ந்தது ፵፬j [ !'ዛ ' = மற்று, ! விசிறிகள்
ஆறுதல் போப்
இன்னும்
ஆசிரியர்

ஆனந்தன் சில வரிகள்
இல்லாத களம் இது. நவம்பர் ஐந்தில் அவன் சென்ற பாதியில் முடிந்தது.
முன்னைய இதழ்களின் வருகையில் அவன் காட்டிய ஈயக் கண்ணீர் மல்க நினைத்துப்பார்க்கின்றோம்,
டய தீவிரமான இலக்கிய இயக்கத்திற்கு மட்டக்களப்பு வட்டம் ஓர் எடுத்துக்காட்டு, அவனுடைய சமூகப் பினைப் பன் சேர்ந்து பங்காற்றிய தரிசனம் என்ற விழிப்புலனற்றோர் மிகச் சிறந்த உதாரணம். அவனுடைய வாழ்வில் பல்வேறு கொண்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த மனிதர்களைப் யுடன் எதிர் கொள்ள முடிந்திருக்கிறது.
து பத்தொரு வருடங்களில் அச்சுருவில், ஏன் எழுத்துருவில் த அவனுடைய இலக்கிய முயற்சிகள் வெகு சொற்பந்தான். இது மலையாள மொழி பெயர்ப்புகள், பத்துப் பன்னிரண்டு ள், கை தட்டல் பெற்றுத் தந்த சில கவியரங்குகள் டுரைகள். இவை திருப்தி தரப் போதுமானவையல்லதான்.
வக்க வேண்டிய காலம், கணக்கைத் திடீரென முடித்துக்
தி
பர்வுகள், பணம் சம்பாதித்தல், புகழ் சேர்த்தல் போன்ற ாயைகளின் பின்னால் அலையாத எளிமையான மனிதனாக ாழ்ந்தான் என்பது இன்றைய இவ்வுலகில் மாபெரும் கவே தோன்றுகின்றது.
துடைய படைப்புலகம் அல்லது கலை-இலக்கிய நாட்டங்கள் வகைப்பட்டவை - ஒன்று ஆனந்தனுடைய சிருஷ்டித்துவம் பட்டது. மற்றது அவனுடைய ரசனை, நயப்பு, பிைப்பு
}քT 3.3r all all :
னந்தனுடைய ரசனை முக்கியமானது. அந்த ரசனை பரந்து மோத்த வைரமுத்து, ஆத்மாநாம், சோலைக்கிளி எனப் ரகங்களை ரசிக்கும் தன்மை அது.
னந்தனுடைய சிருஷ்டித்துவம் பெரும்பாலும் கவிதை , ஆனந்தன் என்றால் மேடைகளில் மையம் கொண்டிருந்த ல் என்று அர்த்தம் - சமரசம் எதுவுமற்று, தயவு தாட்சண்ய ரட்டு வார்த்தைகளைப் பயன்படுத்திய அவனுக்குப் பல இருந்தனர். இன்று இந்த மேடைகள் சோபையிழந்து பிட்டன. எதிர்க்குரல் ஒன்று தொலைந்து விட்டது.
தரும் ஒரே அம்சம் இதுதான் காலம் அப்படியே உறைந்து பிடுவதில்லை.
பல ஆனந்தன்கள் வருவார்கள்.
O
z, 2 \ 8

Page 5
களத்தை மீண்டும் வெளிக் கொணர் வ ைத யிட்டு மிகுந்த மகிழ்ச்சி திருகோணமலை, முர்த்தி சங்கமம்.
களம் ஆனந்தனூடாக நன்கு அறிமுகம் மட்டக்களப்பு. செ. யோகராசா
களம் வரட்டும். என் ஆதரவு என்றும் இருக்கும். கல்முனை. சோலைக்கிளி
ஏற்கனவே களம் தரமானதாகவே வெளிவந்தது. களம் மீண்டும் வெளிவருவது குறித்து மகிழ்ச்சி. மட்டக்களப்பு. அன்புமணி
உங்கள் பணி மீண்டும் தொடர எனது நல் வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும் ஒட்டமாவடி எஸ். எல். எம். ஹனிபா
களம் சஞ்சிகையை மீண்டும் கொண்டுவருவது மிகவும் ஆரோக்கியமான ஓர் விடயம். கல்முனை. நற்பிட்டிமுனை பளில்
களம் இதழ் மீண்டும் வெளிவர இருப்பது குறித்து உற்சாகம் பிறக்கிறது. எனது ஆதரவும் ஒத்துழைப்பும் உரித்தாகுக. கொழும்பு - 06. கே. எஸ். சிவகுமாரன்
இலக்கிய தினவு எழுதாமலிருக்க முடி யாத தா ல் எழுவது. அவ்விதத் தினவுதான் களம் என நினைக்கின்றேன். தர்க்காநகர். ஏ. இக்பால்
தங்கள் இலக்கிய முயற்சிகள் வெல் க. என் ஆதரவு என்றும் உண்டு. மூதூர் வ. அ. இராசரத்தினம்
களம் காணப்போகும் களங்கள் இன்றைய கால கட்டத்தில் ஏராளம் உண்டு. உங்கள் முயற்சி வளர, வாழ என் வாழ்த்துக்கள். அக்கரைப்பற்று மணிக்கவிராயர்
களத்தின் முன்னேற்றத்திற்கு என்னால் முடிந்தளவு உதவுவேன். பேராதனை. கலாநிதி க. அருணாசலம் களம் மீண்டும் வெளிவர இருக்கும் செய்தி மிகவும் தித்திப்பானது. மினுவாங்கொடை. (p. Ushiff
மீண்டும் வெளிவர இருக்கும் களத்திற்கு எங்களாலான சகல ஆதரவும் உதவி ஒத்துழைப்பும் தவறாது கிடைக்கும். தரமான இலக்கிய சஞ்சிகையாக வெளிவர எமது வாழ்த்துக்கள். சுவிற்சலாந்து. திரு. திருமதி. சொரூபா விநாயகமூர்த்தி
02

பனிபெய்யு இன்றிரவு றிஸ்வியூமுஹம்மத் நபீல்.
என் வீதி நெடுகிலும் சனங்கள் மாம்பிஞ்சு மாம்பிஞ்சு போல. நடுவில்,
கூய்' என்று கத்திவிட்டுப் போனான் ஒரு சிறுவன்.
மனம் ‘படக்' என்றது அவள் எதிர்ப்பட்டதைக்காண.
மரவள்ளி கிழங்கு வெட்டி பசியாறத் தருவாள் என்னை நோற்றபடி.
நரன் தாளித்து வைத்த வெங்காயச் சொதிக்குள்
அவள் விரல் விட்டு ருசி பார்த்தகாலம்
இன்று தவிர வெறிச் சோடிக் கிடந்த எங்கள் மனப் பூமி மீது பெருமூச்சிரைத்துப் பெய்தது U Gof.
இனி நித்திரையில் என் கிராமம் அவள் மட்டும் விழித்திருப்பாள் யாருடைய மனதுக்குள் சுழியோடலாம் என்ற படி.
சில நாளில் மயானமாகி வெறிச்சோடும் என்விதி. நானும் விழுவேன்
6ვ2ც0) குருவிச்சம் பூப்போல பூப்போல,
1996 யூன் 1ந் திகதியிலிருந்து பிரதிமாதமும் ஈழத் தமிழ் எழுத்தாளர்களின் பிரசுரமாகும் தமிழ் சிறு கதைகளுள் சிறந்த கதைக்கு ரூபா. கொடை வழங்கி கெளரவிக்கப்படும். எழுத்தாளர்கள் வெளியீடுகளிலிருந்து தமது சிறுகதைாளின் பிரதிகளை பிபரத்துடன், அமைப்பாளர், தமிழ் கலை இலக்கிய வட்டம், கமலகம் வீதி, அக்கரைப்பற்று. முகவரிக்கு
அனுப்பி வைக்குமாறு வெண்டுகிறோம்.

Page 6
எழுத்தும் ஆளுமையும்
சண்முகம் சிவலிங்கம்
எழுத்தாளர்களை இரண்டு வகை யா க ப் பிரிக்கலாம். ஆய்வு அறிவார்த்தமாக எழுதுபவர்கள் ஒரு வகை சிருஷ்டிகரமாக அல்லது படைப்பியலாக எழுதுபவர் மற்ற வகை.
ஆய்வறிவு எழுத்த்ாளர்கள் சமூக வாழ்க்கையின் எல்லைக்குள் உட்பட்டு சமூக, அரசியல், கலை இலக்கிய மானுடவியல், சமய, ஆன்மீக, தத்துவார்த்த விஷயங் களை அறிவார்த்தமான முறையில் அல்லது கருத்யல் ரீதியாக எழுதுபவர்கள், கலை இலக்கிய விமர்சகர்களும் பத்திரிகையாளர்களும் கூட இதற்குள் அடங்குவர்.
சிருஷ்டி எழுத்தாளர் அல்லது படைப்பாளிகள் என்போர் சிருஷ்டி இலக்கியத்தில் அல்லது படைப்பில் க்கியத்தில் ஈடுபடுகின்றவர்கள். சிருஷ்ட்டி இலக்கியங்கள் இன்று முக்கியமாக நாவல், சிறுகதை, கவிதை' காவியம், நடைச்சித்திரம், உரைச்சித்திரம், நாடக எழுத்தாக்கம் சிறுவர் இலக்கியம் முதலிய துறைகளாக வளர்ந்துள்ளன. இவைகளில் ஈடுபடுவோர் முறையே நாவலாசிரியர், சிறுகதையாசிரியர், கவிஞர், நாட காசிரியர், சிறுவர் இலக்கிய எழுத்தாளர் என அழைக் கப்படுகின்றனர்.
சிருஷ்டி இலக்கியம் சிக்கலான செயற்பாடுகளை உடையது. சிருஷ்டி கர்த் நா தன்னுடைய சிருஷ்டிப் பொருளை தனது தனிப்பட்ட வாழ்க்கை அணுப வங்களில் இருந்தும் சமூக வாழ்க்கை அனுபவங்களிலி ருந்தும் பெறுகின்றான். இவன் தன் அறிவையும் சிந்தனையையும் மட்டுமல்லாமல், ஆத்மாவையும் உணர்வுகளையும் கலந்து தன் சிருஷ்டிகளைப் படைக்கிறான். தனக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ளவற்றை தனக்குரிய கலைத்திறனைக் கொண்டு தன்மனம் கோலம் கொள்கின்ற முறையில் மறுபடைப் புச் செய்கின்றான். இவன் மற்றுமொரு பிரம்மனே என்பதில் சந்தேகமில்லை. இவனுடைய படைப்பு ரகசியம் பிரம்மனின் அல்லது கர்ப்பியலின் சிவநெறி போல் நுணுக்கமானதும், ஆய்வறிவுக்கு அவ்வளவு எட்டாததுமாகும்.
எழுத்தாளன் ஏன் எழுதுகிறான்? எப்படி எழுது
கிறான்? எந்த வருமானமும் அற்ற, அல்லது சிலவேளை மிகக் குறைந்த அற்ப சன்மானத்தை காட்டாப்புச் செய்யக் கூடிய, பெரும்பாலும் செலவுச் சுமையையும் காலவிரயத்தையும் தரக்கூடிய இந்தக் கலையில் இவர்கள் ஏன் மினக்கெடுகிறார்கள்?

வெறும் புகழுக்காகவா? அல்லது மகோன்னதமான சமூக வட்சிய நோக்கங்களுக்காகவா? சுய ஆன்டி திருப்திக்காகவா? அல்லது வெறும் விளையாட்டுக் காகவா? அல்லது, தன்னில் உள்ள சிருஷ்டித்துவ ஆற்றலின் சுயம்புவான வெளிப்போக்கினாலா? தாங்கள் எழுதுவது இப்படித்தான் இருக்கப் போகிறது என்ற அறுதியான திட்ட வரையறைத் தெளிவுகளுடன்தான் எழுதுகிறார்களா? அல்லது இருட்டில் தடவித் தடவி வெளிச்சத்தை நோக்கித் தள்ளப்படுகிறார்களா? பிள்ளை யார் பிடிக்க குரங்காய் முடிந்த கதையாக எழுதுகி றார்களா? அல்லது குரங்கு பிடிக்க பிள்ளையாரா ப் முடிந்த கதைகளும் உண்டா?
எழுத்தாளர்கள் அற்ப ஜீவிகள், நோஞ்சான் சுபாவம் உடையவர்கள் என்று சிலர் சொல்கிறார்களே அது உண்மையா? பிராய்டு Freud என்ற உளவியலாளர் சொல்வது போல் எழுத்தாளர்கள் தம் குழந்தைப் பருவத்தில்கிடைக்காத இன்பி பலில் சிக்கி அலைபவர்களா பும் Jung என்ற மற்றுமொரு உளவியலாளர் சொல்வது Gusti "creative Writers are not meanly committed to writing, they are addicted to writingo * Li sist" பிலக்கிய வாதிகள் எழுத்துக்கு தம்மை அர்ப்பணித் தவர்கள் என்பதை விட, எழுத்தின் போதைப் பழக் கத்திற்கு தம்மை அடிமைப் படுத்திக் கொண்டவர்கள் என்பது உண்மையா? அரிஸ்ற் ரோட்டல் கூறுவது போல் எழுத்தாளர்கள் பகற்கனவு காணுகின்ற கற்பனா வாதிகளா?
என்னைப் பொறுத்த வரையில், எழுத்து என்ற இந்த மாயமானனதுரத்தி ஒட நான் தொடங்கியிராக் விட்டால் மற்றெல்லா வகையிலும் நான் சிறந்து விளங்கி இருப்பேன். பாரதி சொல்வதைக் கூட தாம் ஞாபகப்
படுத்திக் கொள்ளலாம்.
கதைகள் சொல்லிக் கவிதை யெழுதென்பார்; காவி யம்பல நீண்டன கட்டென்பார் விதவிதப் படு மக்களின் சித்திரம் மேவு நாடகச் செய்யுளை மேவென்பார்: இதயமோ எனிற் காலையும் மாலையும் எந்த நேரமும் வரணியைக் கூவுங்கால், எதையும் வேண்டில பராசக்தி இன்ப மொன்றினைப் பாடுதல் அன்றியே. நாட்டு மக்கள் பிணியும் வருமையும் நையப் பாடென் றொரு தெய்வங் கூறுமே! சுட்டி மானுடச் சாதியை ஒன்றெனக் கொண்டு வையம் முழுதும் பயனுறப்
O3

Page 7
பாட்டி லேயறங் காட்டெனு மோர் தெய்வம்; பண்ணில் இன்பமுங் கற்பனை விந்தையும் பஊட்டி எங்கும் உவகை பெருகிட ஓங்கும் இன்கவி ஒதெனும் வேறொன்றே. நரட்டு மக்கள் நலமுற்று வாழவும் நானிலத்தவர் மேனிலை யெய்தவும் பாட்டிலே தனி யின்பத்தை நாட்டவும், பண்ணிலே களி கூட்டவும் வேண்டி, நான் மூட்டும் அன்புக் கனலோடு வாணியை முன்னு கின்ற பொழுதிலெலாங்குரல் காட்டி அன்னை பராசக்தி எமையேன் கவிதை யாவுந் தனக்கெனக் கேட்கின்றாள்.
பாரதியின் எழுத்தும் ஆளுமையும் இதில் நமக் குத் தெரிகிறது. ஒரு பக்கம் ஆன்மீகம், மறுபக்கம் நர்ட்டு விடுதலை, இன்னொரு பக்கம் பரந்த மானுட நேயம், மற்றொரு பக்கம் நவீன இலக்கியத்தின் பால் உள்ள நாட்டம் இத்தனைக்குமிடையில் இழுபட்டுப் போனதுதான் அவனுடைய ஆளுமை இத்தனையாலும் வ6ளர்ந்து ஆக முப்பத்தேழு வயதுக்குள் மகோன்னதமாய் உருப்பெற்றதுதான் அவனுடைய ஆளுமை. கதை, கவிதை, காவியம், நாடகம். சொற்சித்திரங்கள்: பாட்டிலே அறம், பண்ணிலே இன்பமுமும் கற்பனை விந்தையும், எனப் பரந்து செல்லும் அவனுடைய எழுத்துக்களில் பனிமூட்டமாய்தெரியும் ஓர் ஆளுமை இன்னதுதான் என நமக்கு தெளிவாகக் காட்டுவது மேற்கூறிய அவனுடையவெளிப்படுத்துகை.revealations.
04

வாழாவெட்டிகள்
சபா சபேஷன்
என்னை
விட்டுவிடுங்கள்.
கொஞ்சம், மூச்சு விட்டுக்கொள்கிறேன்; நான் மட்டுமே கிரித்து விட்டுப் போகிறேன்.
புற்கள்
முளைக்க மட்டுமல்ல. பூக்களும் பூக்க மறுதலிக்கும். இங்கிருந்து,
நீங்கள் தலையைச் சொரிந்து கொள்ளுங்கள்.
கூடவே
நம்புங்கள். இன்னொரு தேவகுமாரனும் தேவதைகளும்
வானத்தை கிழித்துக் கொண்டு வந்திறங்குவார்கள்
அல்லது உங்கள் வீட்டு விறாந்தைத் தூண் சிதறி நரசிம்மம் தோன்றும்
அதன் பிறகு சந்திப்போம்.! அதுவரை இப்போது, என்னை மட்டும் விட்டு விடுங்கள் கான் ...!
சட சபேஷன்
வாழாவெட் டிகள்

Page 8
என்னைப்பற்றி நான்.
கே. டானியல்
எழுத்து எனக்கு தொழில் அல்ல; பொழுது போக்கும் அல்ல. நான் எழுதத் தொடங்கி 35 ஆண்டு களாகின்றன. இதில் சுமார் 10 ஆண்டு காலத்தை சிறு சிறு மன அசைவுகள், விளம்பர மோகம் முதலிய காரியங்களுக்காக செலவு செய்தேன். இதைச் சொல் வதில் நான் வெட்கப்படவில்லை.
கிராமத்தில் பிறந்து கிராமத்திலேயே வாழ்ந்த எனக்கு கிராமப்புறங்களையும் கிராமப்புற மக்களையும் சந்தித்துப் பேசிப் பழகிக் கொள்ளும் வாய்ப்புக்கடி அதிகம் கிடைத்தன. அத்துடன் 20 வயதளவில் நான் ஏற்றுக்கொண்ட அரசியல் வேலைகள் என்னைக் கிரா மப்புறத்துக்கு இழுத்துச் சென்று எனது பெரும்பகுதி கவனத்தையெல்லாம் அதில் வைத்திருக்கச் செய்தன. இது கிராமப்புறங்களில் நான் பல நண்பர்களைப் பெறத் துணை புரிந்தது.
கிராமப்புற மக்களிடம் கற்றுக் கொள்வதற்கு எவ்வளவோ இருந்தன. இன்று இருப்பதுபோல் அல் லாமல் அன்று அரசியலை மக்களிடமிருந்தே கற்றுக் கொள்ளவும் அவர்களிடமே அவைகளைப் பரிசோதனை செய்து சரியானவைகளை ஏற்று தவறானவைகளை நிராகரித்துத்தான் அரசியல் அனுபவங்களை பெற வேண்டும்.
தேசிய ரீதியாசவும் சர்வதேச ரீதியாகவும் அர சியல் போதனைகளைப் பெற்றுக் கொள்வதற்கான தமிழ் நூல்கள் அக் காலத்தில் மிகவும் அருந்தலாகவே இருந்தன. நாட்டையும் மக்களையும் கிராமங்களையும் படித்து அதன் மூலம் பெற்றுக் கொண்ட அனுபவங் களையே அரசியல் முதலீடாகக் கொள்ள எனக்கு வாய்ப்பு. நான் மேலும் மேலும் கிராமப்புறங்களை ஊடுருவி, பல்வேறுபட்ட அனுபவங்களை மேலும் மேலும் சம்பாதித்துக் கொள்ள எனக்கு உற்சாகம் தந்தன.
நகர்ப்புற மனிதனின் வாழ்க்கைக்கும் கிராமப் புற மனிதனின் வாழ்க்கைக்கும் இடையில் பல்வகை வேறுபாடுகள் உண்டு. கிராம மனிதரின் வாழ்க்கை பல கோணங்களில் அமைந்தது. மிசவும் சிக்கலானது.
கிராமப்புற மனிதன் அன்றாட வயிற்றுப் பாட் இக்காக வழிமுறைகள் படுத்தெழும்பும் குடிசைக்கி க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவன் படும் அவஸ்தைகள், குந்தியிருக்கும் நிலத்துக் காக அவன் அனுபவிக்கும் வேதனைகள்; அவனுக்கு மேலாக இருக்கும் வழிவழி வந்த ஆதிக்க அடக்கு முறைகளுக்குள் அவன் கிடந்து தவிக்கும் விதங்கள் இவ்வாறாக கிராம மனிதனின் வாழ்க்கை பல்வகை யானது. இவைகளில் ஒவ்வொன்றையும் தனித்தனி யாகவே கிரகித்து, இந்த வாழ்க்கைக்கான காரண காரியங்களைக் காண முயல்வதும், கண்டவற்றை அவர்களிடமே ஒழுங்குபடுத்திக் கூறுவதும் இலேசான காரிமல்ல. இது எனது அனுபவம் காட்டும் உண்மை.
பள்ளிப் படிப்பை 5ம் வகுப்புடன் முடித்துக் கொண்டிருந்த எனக்கு அதற்கு உட்பட்ட அளவுக்கு எழுதவும் பேசவுமே தெரிந்திருந்தது. வேற்று மொழி எதனையும் படிக்கவோ அல்லது பேசிக்கோள்ளவோ எனக்கு அவகாசம் இருக்கவில்லை. ஒரு நேரச் சோற் றுக்கே வழியில்லாத எனது குடும்பத்தின் வறுமை பாலும் சாதி அடக்கு முறைகளுக்கு உட்பட்டு நான் பட்ட அவஸ்தைகளாலும் ஏ ங் கி ஏங்கிச் செத்துக் கொண்டிருந்த எனக்கு வேற்று மொழி கற்பதற் கெல்லாம் நேரமே கிடைக்கவில்லை.
எனது குடும்பத் தொழில் சீலை வெளுப்பு, இதைச் சற்று நேராகச் சொன்னால் சாதியில் நான் வண்ணான். அதாவது கட்டாடி இதனை ஏன் குறிப் பிடுகிறேன் என்றால் சமூக அமைப்பில் மிகவும் கீழ்ப் படியில் இருக்கும் இந்தக் கட்டாடிகள் சாதிக் கொடு மையை எவ்வளவிற்கு அனுபவித்திருப்பார்கள் என் பதை வாசகர்கள் அறியவேண்டும் என்பதற்குத்தான். அத்துடன் "இந்தாள் தெடுகச் சாதியைத்தான் எழு துவது? ஏன் இப்படிச் செய்யுது?" என்று என்மீது கேவிக்கினை தொடுப்பவர்களுக்குப் பதிலாகவுந்தான் நான் எனது சாதியைக் குறிப்பிட்டுள்ளேன்.
ருசிய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கியினுடைய நாவல்கள் பல தமிழில் வந்திருந்தமையால் அவை களில் சிலவற்றை நான் படித்தேன். முதன் முதலில் அவருடைய "தந்தையின் காதலி" என்ற நாவலை யும் "அமெரிக்காவில்" என்ற கட்டுரை நூலையும் படித்தேன். கார்க்கியின் எழுத்து முறையும் எளிமை பும் என்னைக் கவர்ந்தன. "தந்தையின் காதலி"யை வாசித்த உந்துதலில் "வீராங்கனைகளில் ஒருத்தி" என்ற சிறுகதை ஒன்றினை எழுதினேன். இக்கதை இதுவரை நான்கு தடவைகள் மறு பிரசுரம் ஆகி யுள்ளது. என்னுடைய சிறுகதைகளுள் எனக்கு பிடித்த மான முதல் க்தை அது. இக் கதையின் சொற் பிரயோகமும் எடுத்துக் கொள்ளப்பட்ட பொருளின் புலப்பாடும் எனது வேறெந்தக் கதையிலும் இருப்ப தாக நான் கருதவில்லை.
O5

Page 9
மாக்சிம் கார்க்கியின் தாய் நாவலை நான் படித்தேன். நீண்ட காலமாக அது என் மனதில் கிடந்தது. ருசிய நாட்டின் விடுதலைக்கான நடை முறைச் செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அந்தத் தரியைப் போன்று நமது நாட் டினதும் சமூகத்தினதும் விடுதலைக்காக அன்ற ட வாழ்க்கையோடு சேர்ந்து வழி நடத்தக்கூடிய ஒரு பாத்திரம் இங்கு ஏன் பிறக்கக் கூடாது என எண் னினேன்; தேடினேன். சம்பவங்களைச் சே - ரித்தேன். அதே தாய் பேரன்று எனது கண்ணுக்கு முன்னால் நடமாடித் திரிந்த ஒரு மனிதரையும் பிடித்துவிட்டேன். அவரின் நடைமுறை, வாழ்க்கை முறைகளை அவ தானிக்க- அவர் பேசும் சொல் முறைகளைச் சேக ரிக்க- அவரின் நடை, உடை, பாவனைகளை அறிந்து கொள்ள- மொத்தத்தில் அவரைச் சரியானபடி நான் படித்துக்கொள்ள சுமார் மூன்று ஆண்டு காலத்தைக் கழித்தேன். அவருடைய யாழ்ப்பாணத்தை நடைமுறை வாழ்க்கையோடு, மாக்சிம் கார்க்கியின் தாயையும் சேர்த்துக் கணக்கிட்டு, சமப்படுத்தி, நான் கற்ற அனுபவங்களையும் சேர்த்து இராசாண்ணர் எ ன் ற உண்மைப் பாத்திரத்தை " " ஐயா அண்ணர் ' ஆக்கி னேன். 'பஞ்சமர்' நாவல் பிறந்தது.
யாழ்ப்பாணத்து வாழ்க்கை முறை, யாழ்ப் பாணத்துப் பேச்சு வழக்கு, யாழ்ப்பாணத்து சம்பிர தாயங்கள், யாழ்ப்பாணத்து உடை, நடை பாவனை கள், யாழ்ப்பாணத்து வீடு, வாசல் அமைப்பு, யாழ்ப் பாணத்து அரசியல் நடைமுறைகள் யாழ்ப்பாணத்து மண்ணின் எழுச்சிகள்- வீழ்ச்சிகள் - இவற்றில் எத னையுமே பிறநீங்கலாக நிற் க விடாமல் பஞ்சமர் சகலதையுமே உள்ளடக்கியதில் நான் மாக்சிம் கார்க்கி யையே வழி நடத்தல் காரணமாக ஏற்றுக் கொண் டுள்ளேன்.
ஆயினும் "பஞ்சமரில்" என்னால் பிறப்பிக்கப் பட்ட பாத்திரங்களில் யாழ்ப்பாண மண்ணின் இயல்பு களுக்கு மாறாக பல குறைபாடுகள் இருப்பதை உண்ர் கின்றேன். இதற்குப் பின்னாலும் எனக்கு இப்படி ஒரு நாவல் எழுதும் வாய்ப்புக் கிட்டுமோ என்ற ஐயப்பாட்டால் யாழ்ப்பாணத்து மண்ணில் நடந்த நான் பார்த்த - நான் அறிந்த என்னால் அறியப் பட்டவர்கள் அறிந்த பல சம்பவங்களைத் திணித்த தன் மூலம், நாவல் என்ற உருவத்துக்கப்பால் "பஞ்சமர் ஒரு சம்பவக் கோவை என்ற குற்றச் சாட்டை மற்றவர்கள் சுமத்த வாய்ப்பளித்திருக்கிறேன் என்றே கூறவேண்டும். இந்தப் "பஞ்சமர்" நாவலுக் குப் பின்பு, 'உருவம் என்பது எடுத்துக்கொள்ளப் படும் கருப்பொருளாலும், அதை வெளிக் கொணர் வதற்கான ஆள் வினாலும் தன் போக்கிலேயே தான் அமைவதாகும். இவைகள் தன் இச்சையாகவே இந்த உருவம் என்பதனை அமைத்துக் கொள்கின்றன" என்ற கருத்துக்கு நான் வந்துள்ளேன்.
06

பஞ்சமிருக்குப் பின்னால் என்னால் எழுதப்பட்ட கோவிந்தன், அடிமைகள், கானல், பஞ்சகோணங்கள் ஆகியவையும் முருங்கையிலைக் கஞ்சி, மையக் குறி, சொக்கட்டர்ன் ஆகிய தொடர் நாவல்களும் உருவத் தைப் பொறுத்தமட்டில் எனது பஞ்சமரின் பிறப்பி லிருந்து அந்த வழியைப் பின்பற்றியவைகளேயாகும்.
பஞ்சமரில் 35க்கு மேற்பட்ட பாத்திரங்களும், அடிமைகளில் 40 க்கு மேற்பட்ட பாத்திரங்களும், கானலில் 30க்கு மேற்பட்ட பாத்திரங்களும், இப் பொழுது முடிந்திருக்கும் பஞ்ச கோணங்கள் 28க்கு மேற்பட்ட பாத்திரங்களும் வருகின்றன. இவைகளில் உலா விவரும் ஒவ்வொரு பாத்திரத்தினதும் இயல்பான முறைகளைக் கவனிப்பதில் நான் மிகவும் கவனமாகவே இருந்து வந்துள்ளேன். ஆயினும் எனது கவனத்தை யும் மிஞ்சி சில பாத்திரங்கள் சென்றுள்ளன.
கதை என்ற ஒன்றை ஒரு கட்டுக்கோப்புக்குள் அமைப்பது அந் த க் கதைக்கான பாத்திரங்களைச் சிருஷ்டிப்பது, ஆங்காங்கே வாசகரின் கவனத்தையெல் லாம் அந்தக் கதை வட்டத்துக்குள்ளேயே வைத்துக் கொள்வது ஆகியவற்றைத்தான் சிருஷ்டி இலக்கியத்தின் இலக்கணமாக பொதுவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு மர பாகவும் கொள்ளப்படுகின்றது. எனது நாவல்களில் இந்த மரபு மீறப்பட்டேயிருக்கிறது. ஒன்றை எழுத முற்படும்போது அந்த ஒன்றை என்ன என்ற கேள் விக்கு முடிவு கட்டிக் கொள்வதோடு அந்தப் பிரச் சினை பின்பு பெரிதர்க இருப்பதில்லை. நான் எழுத முற்படும் அந்த அதனை அடிக்கரு அல்லது நாதம் முன்முனைப்புப் பெறுவதற்கான பிரதேசங்களையும் பாத்திரங்களையும் அந்த அடிநாதம் மனதுக்குள் வரு வதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகளை உண்டாக்கிய பின்னணியைச் சுற்றிச் சுற்றியே சேகரித்துக் கொள் கிறேன். அத்தோடு அந்தப் பின்னணியில் வதியும் மனிதர்களைப் படி க்க முயல்கிறேன். பெரும் பகுதி நேரத்தை அதிலேயே செலவு செய்கிறேன். இந்த வேளை அந் த ப் பின்னணியில் வசிக்கும் மக்களின் பேச்சு முறைகளைக் கவனிக்கிறேன். அவற்றில் காணப் படும் மிகவும் செறிவான சொற் தொடர்களை உள் வாங்கிக் கொள்கிறேன்.
ஒரு நாவலுக்கு தலைச்சனாகக் கொள்ளப்படும் ஒரு படத்திரம் சகல நிறைவுகளும் கொண்ட அப் பழுக்கற்ற பாத்திரமாக இருக்க வேண்டும் என்பது (சட்டப்டி சொல்லப்படாது விட்டாலும்) இதுகால வரை வழி வழி வந்த ஒன்றாகும் எனது நாவல் கள், சிறுகதைகள் அனைத்திலும் இது மீறப்பட்டுள் ளது. இப்போது நடைமுறையிலுள்ள சமூக அமைப் புக் காரணமாக எல்லோர் மீதும் தன்னாக்கம் செய் யக் கூடிய தீய பழக்க வழக்கங்களிலிருந்து எனது பாத்திரங்களை நான் விடுவிப்பதில்லை. தனியொரு மனிதன்மேல் சகல இலட்சணங்களையும் ஏற்றி "இவர் தான் இந்த நாவலின் கதைத் தலைவன்' என்று

Page 10
யாரையும் தான் குறித்துக் காட்டுவதில்லையாயினும் சில பாத்திரங்கள் இயல்பாகவே அந்தத் தலைச்சன் அந்தஸ்துக்கு உயர்ந்து விடுகின்றன என்பதை வைத் துக்கொண்டு பார்த்தாலும் கூட பஞ்சமரின் ஐயாண் னரும் போராளிகள் காத்திருக்கின்றனரின் சந்தியா வும், கோவிந்தனின் எதிர்மறைக்கதா அந்தஸ்தைப் பெறும் சண்முகம் பிள்ளையும், அடிமைகளின் கந்தனும் கானலின் ஞானமுத்துப் பாதிரியாரும். பஞ்சகோணங் களின் சுப்பையா வாத்தியாரும் பல்வேறு குறைபாடு கள் உடையவர்களாகவே இருக்கின்றனர். இதை நான் வேண்டுமென்றே செய்கிறேன் என்பதுதான் பலரின் குற்றச்சாட்டு. இதற்கு தான் கூறும் பதில் "இந்தச் சமூக அமைப்பில் எந்த ஒரு மனிதனும் நிறை | ன வனாக இருக்க:ே1 முடியாது' என்பதுதான்.
பஞ்சமரின் ஒபாண்ணன் ஒரு கள்ளுக்கடையின் வாடிக்கைக்காரராகவே பிறப்பிக்கப்படுகிறார் ஒரு சந்தர்ப்பத்தில் அவர் சூது விளையாடுகின்றார் : வேறோர் சந்தர்ப்பத்தில் குடிகாரர்களுடன் கூடிக் கூழ் காய்ச்சிக் குடித்து மகிழ்கிறார்; பல சந்தர்ப்பங்களில் அவர் கொச்சைகள் பே சி வம்பளக்கிறார். இவை பலருக்குப் பிடிக்கவில்லை. "ஒரு கதைத் தலைவனை இப்படிச் சீர்கெட்ட நிலைக்கு உட்படுத்தலாமா?" என்று என்னிடம் கேட்டவர்களும் விமர்சனம் எழுதிய வர்களும் உண்டு. எனது ஐயாண்ணர் அப்படிப்பட் டவர் என்பதே எனது பதில்.
இதே போன்ற இன்னொரு கேன்வியையும் பலர் எழுப்பினார்கள். "பஞ்சமரில் வரும் உயர்சாதிப் பெண் கள் எல்லாம் ஒழுக்கம் கெட்டவர்களாகச் சித்சரிக் கப்படுகிறார்களே! ஆனால் அதில் வரும் பஞ்சமப் பெண் ஒருத்தியைத் தன்னும் அப்படிச் சித்தரிக்க வில்லையே ஏன்?" இதுதான் கேள்வி.
"என்னுடைய பஞ்சமரில் வந்த கமலாம்பிகை அம்மாளும் மாம்பழத்தியும் அப்படிப்பட்டவர்களாகப் பிறந்துவிட்டதற்காக நீங்கள் ஏன் இப்படி வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்கிறீர்கள்? நான் படைத் தது சகல வசதிகள் கொண்ட கமலாம்பிகை அம்மா வினதும் மாம்பழத்தியினதும் ஒழுக்கக் கேட்டுக்கான பெருஞ் சுகபோக ஏகபோகத்தை அம்பலப்படுத்து வதற்கே அன்றி கொதிக்கும் வயிற்றுக்காக உட லையே விற்றுக்கொள்ளும் சூழ்நிலைகளிலும் தங்களைத் தாங்களே கட்டிக் காத்துக் கொள்ளும் பஞ்சைப் பெண்களை அம்பலத்தில் கொண்டு வருவதற்காக அல்ல; இதுதான் எனது பதில்.
போராளிகள் காத்திருக்கின்றனர்" என்ற எனது நாவலில் சந்தியா என்ற ஒரு வயோதிபனை நாவல் முடிவுவரை கொண்டுவந்திருக்கிறேன். அந்தச் சந்தியா தான் கதாநாயகன் என்று பல ர் கூறுகிறார்கள். "கோவிந்தன்' நாவலில் கோவிந்தன் என்ற நானய யும், கோவிந்தன் என்ற ஒரு சீவல் தொழிலாளி பையும் கொண்டுவந்திருக்கிறேன். கோவிந்தன் என்ற நாயை நாவலின் கடைசிவரை கொண்டு வந்தமை

பால் அதையே கதாபாத்திரமாகக் கொள்கிறார்கள். சீவல்கார கோவித்தன் இடையில் வந்து இடையில் போய்விடுகிறான்.
ஆனால் இந்த இரு கோவிந்தன்களில் பார் கதைத் தலைவன் என்பதை நான் தீர்மானிக்கவில்லை. வாசகர்களே அதைத் தீர்மானித்தவர்கள். போராளி கள் காத்திருக்கின்றனரில் வரும் சந்தியாவும் சோவித் தனில் வரும் இரண்டு கோவிந்தன்களும் பல குறை பாடுகள் உடையவர்களாகவே இருக்கின்றனர்.
" அடிமைகள் நாவலின் கந்தன் என்ற பாத் திரக்கை மூளைத் தெளிவற்ற வெகுளியாகவே படைத் தேன். ஆனால் அதே வெகுளிக் சுந்தன் அடிமை களில் தலைச்சனாகி விட்டான். அந்தக் கந்தனை போர்த் தேங்காய் அடிகாரனாக, வேலடிகாரனாக இத்தியாதி செயல்களில் ஈடுபடுபவனாகப் படைத் திருக்கிறேன்.
" கானல் " என்ற எனது அடுத்த நாவலில் ஞானமுத்தர் என்ற ஒரு பாதிரியைப் படைத்தேன். கிறிஸ்துவத்தைப் பரப்புவதன் மூலமாக சமூக அமைப்பு முறைகளையே தகர்த்துவிட முடியுமென்று அவர் நம்பினார். ஆனால் அவரால் அதைச் சாதிக்க முடித் ததா? அவரிடம் இருந்த குறைபாடுகளே அவரைச் சமூக அவலங்களுக்கு இட்டுச் சென்றதைக் காட்டிய போது அவரைப் புனிதமானவராகக் காட்ட எனது பேனாவுக்கு முடியவில்லை.
கடைசியாக நான் எழுதிய பஞ்சகோணங்கள் என்ற நாவலில் சுப்பையா வாத்தியார் என்ற ஒரு வரைப் பிறப்பித்தேன். இன்றைய அரசியல் சூழ் நிலையில் சரியானதற்கும் பிழையானதற்கும் இடையே அவர் படும் அவஸ்தையைச் சித்தரித்துள்ளேன். அந்த வாத்திய Tரு க்கூடாக இன்றைய அரசியல் முரண்பாடு களை வெளியே கொண்டுவர நான் எடுத்த முமப்ற் சிபில் சுப்பையா வாத்தியார் அவஸ்தைப்படுகிறார்.
எம்மையும் எம்மைச் சுற்றியும் சதா பல்வேறு பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. சுருங்கச் சொன்னால் நாளாந்த நிகழ்வுகளுக்கூடாக சுழி ஒடிச் செல்வதுவே வாழ்க்கையாகிவிட்டது. பெரு மளவில் இந்தச் சுழி ஒட்டத்தை சரிவரச் செய்து முடிப்பதில் தான் மனிதனின் கவனமெல்லாம். பல காரியங்கள் அவன் கவனத்தை ஈர்ப்பதில்லை. எல்லா வற்றையும் அவன் தேவையெனக் கருதுவது மில்லை.
என்னுடைய நாவல்களைப் படிப்பவர்கள் ஒவ் வொன்றிலும் பல புதிய புதிய நிகழ்ச்சிகளைக் காண் பார்கள். இவைகளைப் படிக்கும்போதுதான் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் உள்ள கனதியை புரிந்து கொன் வ தாகப் பலர் கூறுகின்றனர். இதிலிருந்து ஒரு உண் மையை என்பினால் கற்றுககொள்ள முடிகிறது. அதாவது என்ன -ன் கிரகிக்கப்படும் சம்பவங்கள் உண்மை நிகழ் வுகளாக இருப்பதால்தான், அவற்றை எழுத்தில் படிக்
O7

Page 11
கும்போது அது மற்றவர்களுக்கு கனதியைக் கொடுக் கிறது என்பதாகும்.
சமூகத்தில் பல உண்மைகள் அன்றாடம் நடக் கின்றன. அந்த உண்ம்ைகள் எல்லாவற்றையும் எழுத் தில் கொடுத்துவிட வேண்டுமா? என்ற ஒரு கேள்வி எழுவது இயல்பு. இதற்கு எனது வரையறை வருமாறு: தனி மனிதனதும் அவனுக்கூடாக அவ ன் வாழும் சமூகத்தினதும் அல்லது அதற்கும் மேலாக முழு உலகத் தினதும் பொதுவான மானசீக உணர்வினை இலே சாகவேனும் தட்டிவிடக் கூடிய நாதக் கூர்களைக் கொண்டவைகளாக எவை எனக்கு படுகின்றனவோ அவற்றை மட்டும் எழுத்துருவில் படைப்பது,
20 ஆண்டுகளுக்கு முன் "அசை" என்ற சிறு கதை ஒன்றினை எழுதினேன். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பொன்னம்மாள் என்ற விபச்சாரியின் கதை அது. அவருக்கு நடுவயதாக இருக்கும்போது நான் இப் பெண்ணைக் கண்டிருக்கிறேன்; பேசியிருக்கிறேன்; அ வளி ன் வாழ்க்கை முறைகளை அவதானித்திருக் கிறேன். கதை பிரசுரமாகியதும் அதில் சற்றேனும் பொய்க் கலப்பில்லை என்று அவளுடன் நெருங்கிப் பழகிய பலர் என்னிடம் கூறினர், உண்மையின் படி ஒரு விபசாரியின் வாழ்க்கையை எழுதும்போது எப்படி எல்லாம் எழுதியிருக்க வேண்டும் என்பது உங்களுக் குத் தெரியாததல்ல. ஆனால் இன்றுவரை இந்தக் கதையில் விரசம் இருந்த து என்று யாரும் குறிப் பிட்டுச் சொன்னதாக எனக்கு நினைவில்லை. அந்த விபச்சாரியின் வாழ்க்கையில் எதைச் சொல்வது என் பதில் என்னை வழி நடத்தியது 'எதைச் சொல்வது என் பதில் நா ன் வைத்துள்ள கொள்கையேயாகும். (இந்த அசை " என்ற சிறுகதையை இப்பொழுது * நிழலின் கதிர்கள் " என்ற தலைப்பில் ஒரு குறு நாவலாக எழுதியுள்ளேன்).
எனது சிருஸ்டிகளில் நான் எனக்குத் தெரியாத பாத்திாங்களை நான் உண்டாக்குவதில்லை; கற்பனை யாகப் பாத்திரங்களைப் படைப்பதில்லை. இதனால் பாத்திரப் படைப்பில் எனக்கு அதிகம் சிரமம் ஏற் படுவதில்லை.
எனது பஞ்சமரில் சின்னாச்சி என்ற ஒரு பாத் திரம் வருகிறது. அந்தச் சின்னாச்சி எனது பிறந்த ஊரில் எனது வீட்டுக்குப் பக்கத்தில் குடி இருந்தவள். பஞ்சமர் எழுதத் தொடங்கி அது முடிவுக்கு வந்த காலப் பகுதிக்குள் அந்தச் சின்னாச்சியை நான் பல் வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்துப் பேசியிருக்கிறேன்.
பஞ்சமரில் எந்த இடத்திலும் அந்தச் சின்னாச்சி யின் தோற்றத்தை நான் தனியனாகச் சித் தரிக்க வில்லை. அவளின் வழமையான அன்றாட நிகழ்வு களைப் பிசகின்றிச் சித்தரித்ததன் மூலமே அவளின் தோற்றத்தை வாசகர்கள் மனதில் படி ய வைத்த
08

துடன் அவளின் மேல் ஆசிரியனாகிய எனது எந்தத் தலையீடும் இல்லாமல் பேசவைத்ததன் மூலமே அவ ளைப் பரிபூரணமான ஒரு கிராமத்துச் சின்னாச்சி யாக ஆக்கிவிட்டேன்.
‘என்னடா மோனை, என்னை வைச்சுக் கதை ஒண்டு எழுதியிருக்கியாம். அதிலே என்னை குறு நாட் டுச் சீலைக் கொய்யகத்தைக்கூட அச்சுப் பிசகாமல் எழுதியிருக்கிற யெண்டு பொடியள் கதைக்கிறார்கள்.'" இப்படி அந்தச் சின்னாச்சியே என்னிடம் வாய்விட்டுக் கேட்குமளவிற்கு அவளை நான் வென்றுவிட்டதில் எனக்கு பரம திருப்தி .
எப்போதும் கிராமங்களைப் பற்றியே எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதில் என் மீது பலருக்கு வெறுப்பு 'இதுகளை விட இந்தாளுக்கு வேறை ஒண்டும் எழுதத் தெரியாது’ என்றும் என்மீது குறை கூறியிருக்கிறார்கள். உண்மையாகவே எனக்கு வேறு "துவும் எழுத வராதுதான். கிராமந்தான் எனது *ழுத்தின் உயிர்நாடி,
அண்மைக்கால உதாரணம் ஒன்று:
சமீபத்தில் யாழ்ப்பாண நகரத்து நடுப்பகுதி யால் நான் போய்க்கொண்டிருந்தேன். வீட்டு வாசல் ஒன்றில் சிறியதோர் கூட்டம் கூடி நின்றது. வீட்டின் உட்புறம் இருந்து அழுகுரல் கேட்டபோதுதான் அது ஓர் இழவு வீடு என்று அறிந்துகொண்டேன். சா வீட்டுக்கு மேளம் தட்டும் சாம்பான் கூட்டம் ஒன்று வாயிலை அடைத்துக் கொண்டு நின்றது. உள்ளே போய் இருந்து மேளம் தட்ட இடமில்லாததால் அதிலேயே நின்ற நிலையில் மேளம் தட்டும்படி பலர் வற்புறுத்திக் கொண்டிருந்ததையும், "நம்மனையாக்கும், நான் பச் சைக் கிடுகிடுக்கிலே இருக்காமல் இருட்டிலே நிண்டு தட்ட மாட்டனாக்கும்’ என்று அந்தச் சாம்பான் கூட் டத் தலைவன் மறுத்துக்கொண்டிருந்ததையும் நான் அவதானித்தேன். இது ஒரு விசித்திரமான தர்க்கமாக எனக்குப்பட்டது. ஏறக்குறைய இரண்டு மணி நேரம் வரையில் அங்கேயே நான் நின்றுவிட்டேன். கட்டாடி என்ற வண்ணான் வந்தான். உள்ளே போய் அவன் வெள்ளை கட்ட இடமில்லை. பின்பு பரியாரி என்ற அம்பட்டனும் உள்ளே போய் தனது தொண்டு துரவு களைச் செய்ய முடியவில்லை. பாடை கட்டுபவன் வந்தான். அவன் பாடையை வைத்துக் கட்ட இட மில்லை.
நான் கண்ட இவ்வளவையும் வைத்துக்கொண்டு ** மயான காண்டம்' என்ற நீண்ட சிறுகதை ஒன்றை எழுதினேன். பட்டினத்துச் சூழ்நிலையில் எழுதப்பட்ட இந்தச் சிறுகதை கிராம வாழ்க்கையின் மிச்ச சொச் சங்களின் பாதிப்பு அதில் பிரதிபலித்த படியால் அது

Page 12
ஒரு கிராமியக் கதையாகவே அமைந்துவிட்டது. இக் கதையைப் படித்த ஒரு பிரபல விமர்சகர் "இதுவரை இத்தகைய கிராமியச் சித்தரிப்பு ஒன்றை நான் படித்த தில்லை" என்று என்னிடம் கூறினார்.
கிராமப் புறங்களிலும், விவசாயப் பிரதேசங் களிலும் உள்ள மக்கள் பிரத்தியேக பேச்சு வழக் குடையவர்கள். அவர்கள் தமக்குள்ளே பல சொற் றொடர்களை பாவிக்கின்றார்கள். இதில் எனக்கு எப் பொழுதும் ஒரு ஈடுபாடு இருந்து வந்திருக்கிறது.
ஒரு சுவையான உதாரணம்:
ஒரு தடவை வன்னிப் பிரதேசத்தில் நடந்த பாரதி விழாவில் கலந்து விட்டு ஒரு வீட்டில் இரவு தங்கினேன். என்னோடு அயல் பகுதிகளைச் சேர்ந்த சுமக்காரர்கள் சிலரும் த ங் கி யி ரு ந் தா ர் க ஸ் . அந்தப் பிரதேசத்தில் அரசுக்குத் தெரியாமல் கள்ளக் காடு வெட்டுவது வழக்கத்தில் இருந்திருக்கிறது "மச் சான், பேந்தும் காடு வெட்டினாய் எண்டு கேள்விப் பட்டன், எவ்வளவு மச்சான் வெட்டிப் போட்டாய்" என்று ஒருவன் கேட்க, "கணக்க இல்லை மச்சன் ஒரு குதியன் காடு மட்டிலை தான் வெட்டியிருக் கிறன்' என்று மற்றவன் பதில் சொன்னான். இப் படிப் பதில் சொன்னவன் "நீயும் வெட்டினணி எண்டு கேள்வியாகக் கிடக்கு, கனக்சு வெட்டிப் போட்டியே?" என்று ஒரு கேள்வியையும் கேட்க, "பொடி பெட்டை யளின்ர உதவி இருந்ததாலை ஒரு பிரளி காணி மட் டிலை வெட்டிப் போட்டன் மச்சான்' என்று மற்ற வனும் பதில் சொல்லிவிட்டான். ஒருவன் பிரளி காடு என்கிறான், இந்தக் காணிகளின் அளவை அறிந்து விட நான் அவசரப்பட்டேன். அவர்களிடம் அதைப் பற்றிக் கேட்டேன்.
ஒரு குதியன் கார்டென்றால் ஒரு மானைத் துப்பாக்கியால் சுடும்போது அது ஒரு தடவை குதித் துக் களைத்துத் தான் சாகும். அப்படிக் குதிக்கும் தூரத்தைக் கணக்கிட்டு அதையே சதுரக் கணக்காக்கி இதனைக் குதியன் காடு என்று கூறுவார்கள், இது ஏறக்குறைய அரை ஏக்கர் இருக்கும். ஒரு பிரளி காடென்பது ஒரு ஆண் யானையும், பெண் யானையும் சினைப்படுவதற்காக ஒரு பிரனி செய்து குறிப்பிட்ட அளவு காட்டை அழித்துத்தான் உடல் உறவு செய்யும் இது ஏறக்குறைய ஒரு ஏக்கர்வரை இருக்கும். இவ்வாறு அவர்கள் எனக்கு விளக்கிக் கூறினார்கள்.
சமூக அமைப்பு முறை காரணமாக சிவ சிறு சாதியார்கள் தமக்குள்ளே சில குழுப் பேச்சுக்களை கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
"குட்டி விண்ணச்சியை சுள் குட்டான் கவிய லுக்குள்ளே சாச்சுக் கொண்டு நெடுகியிட்டுதாம். பெரிய
 
 
 
 
 
 
 
 

சுள்ளன் வால் சுள்ளனையும் நீர்க் கர்கங்களையும் சேத்துக் கொண்டு, கோர்வை தள்ளியின்ர படலை யடியாலை நெடுகுதாம். எக்கனம் விண்ணச்சியும், சுள் குட்டானும் சந்திச்சா ரெண்டின்ரை நடையான் களுக்கு கிளை டாச்சுத் தான்"
இது ஒரு குழுப் பேச்சு.
'பறை கு ம சி  ைய வெள்ளாளப் பொடியன் பொழுது படைக்க கூட்டிக்கொண்டு பொட்டு தான். அவன்ர தேப்பன் கோவியரையும் கரையாரையும் கூட்டிக்கொண்டு அம்பட்ட வீட்டடியாலே போகுது. ஆக்களைப் புடிச்சாங்களென் டால் அக்கணம் காலுக்குக் கீழை அடிப்பு முறிப்புத்தான்." இதுதான் இக் குழுப் பேச்சின் அர்த்தம்.
ஏறக்குறைய இப்படிப்பட்ட சொற்றொடர் ஒன் நினைப் பஞ்சமர் நாவலில் ஒரு பாத்திர வாயிலாக நான் வெளிப்படுத்தியபோது அது பற்றிப் பலர் கேள் விகள் பலவற்றை என்னிடம் கேட்டிருக்கிறார்கள். மிகப் பின்தங்கிய கிராமக் குழுக்களிடையே இத்தகைய மொழி வழக்கு இன்னும் இருந்து வருவதைப் பலரால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.
ஒரு நாவலில் காட்டப்படும் "காலம்" அந்தக் காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கை முறை, பேச்சு முறை, பழக்க வழக்கங்கள், நாவலில் கால நகர்ச்சியின் புலப்பாடுகள், இயல்பான நடைமுறை களோடு அந்த நாவலை கனவியலிருந்து இயங்கிய லுக்கு இட்டுச் செல்லுதல், இந்தக் காலத்தில் நடை முறைகளுக்கேற்ப உலகவியாபகமான பரிணாம வளர்ச் சிக்கு அதன் பாத்தி ங்களின் வர்க்க குணாம்சங்களை வெளிக் கொண்டு வருதல் ஆகியவைகளில் நான் தவறி யிருக்கின்றேனா என்பதை நாவல் அச்சுக்குப் போகுமுன் பலரிடம் அதைப் படிக்கக் கொடுத்து அவர்களின் அபிப்பிராயங்களையும் உள்வாங்கிக் கொள்ள நான் தவறுவதில்லை.
75 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் ஒரு குடும்பப் பெண் ஒரு உயர் பள்ளி மாணவன், ஒரு உடல் உழைப்பாளி, வர்க்க சமூக அமைப்பினைத் தெளிவு படுத்த ஒருவர் உட்பட எட்டுப்பேர் அச்சேறுமுன் எனது நாவலைப் படித்திருப்பார்கள். டானியல் எனது படைப்புக்களைப் பொறுத்த வரை இவர்கள் பெரும் பாத்திரம் வகிக்கின்றார்கள்.
நானே முன்னொரு கர்லத்தில் வாலா மணிக் கழுத்து மேலங்கி, கதர் வேஷ்டி நெஞ்சுப் பையில் இரண்டு .ே பன ஷ க்கு க் குறையாது கையில் எந்த வேளையும் ஒரிரு புத்தகங்கள் அல்லது புதினத் தாள்கள் - இப்படியாக எழுத்தாளர் கோலத்தைக் கண்டு 'பேனாவால் சாதிக்க முடியாதது எதுவும்
09

Page 13
இருக்க முடியாது’ என்று முட்டாள் தனமாக கருதி னேன். வளரும் அறிவினாலும் பெரும் அனுபவத் தாலும் இத்தகைய சிறுபிள்ளைத் தனமான சிந்தனை களும் தொடர்பான செயல்களும் இப்பொழுது எனக்கு அருவருப்பையே தருகின்றன.
எனது 35 ஆண்டு கலை, இலக்கிய வாழ்க் கையில் நான் நல்லதும் கெட்டதுமாக பல அனுப வங்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் இவை எல்லா வற்றுக்கும் மேலாக எனது சின்ன வயதில் நடந்த தோர் இலக்கியச் சுவையான சம்பவத்தைக் குறிப்பிT விரும்புகிறேன்.
எனக்கு அப்போ சுமார் 15 வயது இருக்கும். அப்பொழுது எமது குடும்பம் ஒரு நேரச் சோற்றுக்கே ஆலாய்ப் பறக்கும் நிலைமை. காலையில் பழங்கஞ்சி, மதிய வேளையில் கிழங்கு வகைகள், இரவில்தான் "சோறு" என்ற ஒன்று கிடைக்கும். அது வும் நடு நிசியில்தான்.
எனது அப்பன் ஒரு நிரந்தரக் குடிகாரன். அவர் இரவுச் சோற்றுக்கான அரிசியை என் அம்மாவிடம் கொண்டு வந்து வீசி விட்டு ம ண் திண்ணையில் புரண்டு விடுவார். அம்மா சோறு காய்ச்சுவாள். குழந்தை யின் கொதிக்கும் வயிற்றுக்காகக் கஞ்சியை வடித்து முத லில் குடிக்க வைப்பாள். ஒரு நாள் அளவுக்கு அதிகமாக சோறு அவிந்து குழைந்து விட்டது. அப்புவுக்கு அம்மா சோறு பரிமாறிய போது சோறு குழைந்திருந்ததைக் கண்டு அவருக்குக் கோபம் பிறந்து விட்டது. மது வெறியில் அவர் அம்மா மரியாளை நோக்கி ஒரு கவிதையே பாடினார்.
** சுந்தர மரியாள் செய்த
கதை நான் அறியேனோ கஞ்சிக்காக அல்லவோ சோற்றைக் குழையவிட்டாள்"
என் அம்மா மரியாள் செய்த செயலை அவ்
வளவு அற்புதமாக ஒன்றுமறியாத என் அப்பு பாடி யுள்ளார்.
கல்வியிருந்தால் அனுபவத்திலிருந்து பிறப்பது தான் உயிருள்ள இலச் கியமாக முடியும்,

DT 6). U
ஏ. இக்பால்
இல்லாத ஒன்றை எண்ணிக் கொண்டிருப்பதும் இருப்பதைப் பற்றிக் குறைத்துக் கொண்டிருப்பதும் சொல்லாத தெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பதும் இலக்கியச் சொத்து இவர்களின் பற்று,
சருகில் மண்ணெறிந்து சல சலக்கும் சத்தம் தெருவில் கேட்டதெல்லாம் தெரிந்த தெனும் குற்றம் கருவில் களைப்படைந்த கானல் அது வெப்பம் எரிவில் தினவெடுத்து எரிந்து விழும் செப்பம்.
மயக்கப் பார்வையினால் மனவுறுத்தல் நிறையும் தயக்கத் தடங்கலினால் தரித்த செல்வம் குறையும் வியக்க எதுவுமில்லை வீண் விரயம் பாவம் ! பயக்கும் பண்பலைகள் பார் முழுதும் சோகம்; முழு வேகம்!
ஏ. இக்பால்
DT6 U.

Page 14
எனது முதல் கதை
அ. ஸ், அப்துஸ் ஸ்மது
எனது முதல் கதை 1950ம் ஆண்டு ஜூலை மாதம் 03ம் திகதி தினகரனில் வெளியானது, அப்பொழுது நான் எஸ். எஸ். சி. இறுதி ஆண்டு படித்துக்
கொண்டிருந்தேன் கதையின் பெயர் நூர்ஜஹான்.
ஆனால் நான் அதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பே எழுதத் தொடங்கி விட்டேன். 1947 பெப்ரவரி 02ம் திகதி என் முதல் ஆக்கம் தினகரன் "ெ பகுதியில் வெளியாயிற்று. தொடர்ந்து gorみrcm சுதந்திரன் பத்திரிகையில் சிறு சிறு இலக்கி கட்டுரைகள் எழுதி வந்தேன்.
என் முதல் கதையான நூர்ஜஹானை நான் விசேடமாகக் குறிப்பிடுவதற்கு காரணங்கள் உள். எனக்கு முன் பித்தன் ஒன்று இரண்டு கதைகள் எழுதி இருந்தாலும் அவர் ஒரு முஸ்லிம் என்று அறியப் படவில்லை. என் கதையைப் பார்த்ததும் தினகரன் காரியாலயத்தில் ஒரு பரபரப்பு தோன்றியது. முஸ்லிம் பாத்திரங்களை வைத்து கதை எழுதும் இந்த முஸ்லிம் பார் என்பதே அப் பர பரப்புக்கு காரணமாகும், கதை பிரசுரத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.
அப்பொழுது கதைகள் இந்திய பின் புலத்தில் இந்திய தமிழ் மக்களது வாழ்க்கைப் பின்னரிைல் எழுதுவதே வழக்காக இருந்தது. நான் இந்தக் கதை திகழிடங்கள் கல்முனை, திருகோணமலை என்றும் நூர்ஜஹானின் தந்தை போடியார் இப்றாகீம் என்றும் மற்றும் காரியாலயம், விகிதர் மாவட்டம் என்ற சொற்பிரயோகங்களும் கதையில் வந்தன, ஆனால் பிரசுரமான கதையில் கதை நிகழிடங்கள் செங்கத் பட்டு, வித்தியமலை என்றும் மற்றும் ஜமீன்தார் இப்றாகீம் என்றும். ஆபீஸ் குமாஸ்தா, ஜில்லா என்றும் சொற்பிரயோகங்கள் மாற்றப்பட்டன. இலங்கை கதைகளின் தன்மை அப்போது எவ்வாறு இருந்தது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.
1956ம் ஆண்டு இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முன் வைத்த தேசிய இலக்கியம், மண்வளம் இவங்கை மக்களது வாழ்வு முறைகள் நமது பிரச் சினைகள் என்பன முன் வைக்கப்பட்டன. இந்தக் கோஷத்துக்கு சோளப்லிஸ்க் கட்சிகளைச் சார்ந்தவர்கள் தம் இலக்கியக் கோட்பாடுகளை முன் வைத்தன! காரணமாகும். அதற்கு அனுசரணையாக எஸ். டபிள்யு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆர். டி. பண்டாரநாயக்கா அவர்களின் சுதந்திரக் கட்சி ஆட்சியில் எழுத்தாளர்களிடையே ஒரு புத் துணர்வை ஏற்படுத்தின. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கியத்தர்களான கலாநிதி க. கைலாசபதி, கலாநிதி கா. சிவத்தம்பி வைத்தியக் கலாநிதி நந்தி, எழுத்தாளர் எச். எம். பி. முகி தீன், செயலாளர் பிரேம்ஜி ஆகியோர் இங்கு குறிப்பிடத்
தக்காரர்கள்,
இதன் பிறகுதான் இலங்கை எழுத்தாளர்களின் சிறுகதை, நாவல்களில் சோளpலிசக் கருத்துக்களும் பிரதேச பண் வளமும் இலங்கை வாழ்க்கை முறையும் சுய பிரக்ஞையுடன் நோக்கப்பட்டன.
என் கதை ஒரு சாதாரணக் காதல் கதைதான். என் வயதுக்கும் உணர்வுகளுக்கும் ஏற்ப அக்கதை அமைந்திருந்தது.
ஜெமின்தார் இப்றாகிமின் மகள் நூர்ஜஹான். செங்கல் பட்டு ஆபீஸ் ஒன்றில் குமாஸ்தாவாக இருக்கும் றளாக் நூர்ஜஹானை விவாகம் செய்ய விரும்புகிறான். அதற்கு ஜெமின்தார் ஆபீஸ் குமாஸ்தாக்களுக்கெல்லாம் என் மகளைக் கொடுக்க மாட்டேன் என்கிறான். இந்த நிலையில் ஜெமின்தாருடைய மருமகன் ஹமீத் நூர்ஜஹானைக் கேட்கிறான். அதற்கு மறுத்து விடுகிறார் ஜெமின்தார் இதனால் ஆத்திரப்பட்ட ஹமீத் தன் அறையில் படுத்துக் கொண்டிருந்த நூர்ஜஹானை வற்புறுத்தி வித்திய மலைக்குக் கடத்திச் செல்கிறான். இதில் வியப்பு என்ன என்றால் அந்த வாடகைக் காருக்கு சாரதியாக றசாக் வருகிறான். இடைவழியில் காரில் ஒரு பழுது ஏற்பட்டு விட்டது. காரைத் தள்ளுங்கள் என்று ஹமீதையும் உடன் வந்த உதவி யாளனையும் கீழே இறங்கச் சொல்லி நூர்ஜஹானை மற்றோர் கடத்தில் செய்கிறான் றசாக். பின்னர் கோர்ட் வழக்கு என்று வருகிறது. நூர்ஜஹான் நான் றசாக் கோடு வாழ விரும்புகிறேன். என்னை அனுமதியுங்கள் என்று கே ட் கி ற |ா ஸ் - அ வள் ஒரு மேஜரான தால் நீதிபதி அனுமதிக்கிறார். சிறிது காலம் வாழ்ந்த பிறகு நூர்ஜஹான் நோயுற்றுக் காலமாகிறாள். அந்தத் துக்கத்தில் பின்வருமாறு ஒரு தத்துவச் சிந்தனை அவனுக்கு ஏற்படுகிறது. "உலகம் மனிதனை ஏமாற் றுகிறது. அது துன்பமும் துயரமும் நிறைந்தது. இன்பமோ மனிதனுடன் கண்ணாம் பூச்சி விளையாடுகிறது. ஆம் உலகம் மாயை. இப்படி முடிகிறது அந்தக் கதை.
இந்தக் கதையை நான் எழுதி 46 வருடங்கள் ஆகின்றன என்னும் பொழுது வியப்பாக இருக்கிறது. நான் கதை எழுதுவதற்கு யாரையும் ஆதர்ஸ் குருவாக வசிந்து நொண்டதில்லை. நான் அப்பொழுது சுந்தி க:ைகள் போன்ற பத்திரிகைகளில் வரும் கதை களைப் படிப்பேன். கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மீதும், கலைமகள் கி. வா. ஜெகந்நாதன் அவர்கள் மீதும் எனக்கு அபார மதிப்புண்டு. அவர்க

Page 15
ளுடைய கதைகளை மிக விரும்பிப் படிப்பேன். கல்கியில் மலையாளம், ஒரியா, ஹிந்தி மொழிக் கதைகளை மொழி பெயர்த்துப் போடுவார்கள். கே. ஏ. அப்பாஸ் வி. ச. காணடேகர், வைக்கம் முஹம்மத் பவீர் ஆகியோருடைய கதைகளை எல்லாம் ரா. வீழிநாதன் அழகாக மொழி பெயர்த்துத் தருவார். அவைகளில் சில இன்னும் எனது நினைவில் இருக்கின்றன.
நான் இஸ்லாமியக் கதைகள் எழுதுவதற்கு காரணமே கல்கியும், கலை மகளும் தான். கல்கியில் தமிழர் வாழ்வு, நம்பிக்கைகள் சம்பிரதாயங்கள் பற்றிய கதைகளும் கலை மகளில் வெளியான அக்ர காரத்து பிராமணர் வாழ்க்கை பற்றிய கதைகளும் என்னை முஸ்லிம்களின் வாழ்க்கை பற்றியும் நம்பிக்கைகள் சம்பிரதாயங்கள் பற்றியும் நாம் ஏன் கதைகள் எழுதக் கூடாது என்று தோன்ற வைத்தன. இந்த எண்ணத் தின் பயனாக என் முதற் கதையில் முஸ்லிம் பாத்திரங் களை வைத்து எழுதினேன். பிற்காலத்தில் தங்கை' போன்ற ஸரிஆ கதைகளையும் மற்றும் 'ஒளி' ஈர்ப்பு அந்தப் பிரயாணம் போன்ற இஸ்லாமிய மத சார்பான கதைகளையும் எழுதி உள்ளேன்.
நான் இஸ்லாமியக் கதைகள் என்று ஒரு பிரிவை தோற்றுவித்ததில் நண்பர் சண்முகம் சிவலிங்கம் போன்ற விமர்சகர்களுக்கு கருத்து வேறுபாடு உண்டு. தமிழ் கதைகள் என்ற முறையில் முஸ்லிம்களையும் தமிழர்கள் என்று கணித்து ஏன் எழுதக் கூடாது என்று கேட்கிறார் அவர்.அ நுத்தமா, குமுதினி, கரிச்சான் குஞ்க போன் றவர்கள் கலைமகளில் எழுதிய கதைகளை படித்த பின்புதான் நான் இந்த முடிவுக்கு வந்தேன். நான் இஸ்லாமிய பகைப் புலத்தில் கதைகள் எழுதினாலும் உண்மையில் மனித உணர்வுகளின் விய த் த கு பண்புகளை கதைகளாகப் படைப்பதில் எனக்கு விருப்பம் அதிகம். எனது கதைகளில் "வர்ணபேதம்’ ‘நெருஞ்சி முள், அவளுக்கென்ன ராஜாத்தி போன்ற கதைகள் மனித உணர்வுக் கோலங்களைச் சித்தரிப்பனவாகும்.
நான் தமிழ் மொழியில் மிகுதியும் பற்றுடையவன். தமிழ் இலக்கியங்களிலும் ஈடுபாடுள்ளவன். எனது பட்டப்படிப்புக்கு தமிழையே சிறப்புப் பாடமாக எடுத்தேன். என் எழுத்தின் வடிவங்கள் அதனைப் பிரதிபலித்து நிற்பனவாகும். அக நானுாற்றுப் பாடல் கள் சில கதைகள் எழுதுவதற்கு சிறப்பானதாக எனக்குப் பட்டபோது தாய் பரத்தையர் மோகம் என்ற இரண்டு சிறு கதைகளை எழுதினேன். விபுலானந்த அடிகள் மீது அபாரபற்றுடையவன். அவர் கிழக்கின் சொத்து. காரைதீவின் முத்து. அவருடைய நுாற் றாண்டு காலத்தின்போது அடிகளின் வாழ்வை வைத்து "துறவியின் காதலி' என்று ஒரு அருமையான உருவ கக் கதையை எழுதினேன். அது நாடகப் பாங்காக அமைந்ததால் கல்முனை வெஸ்லி ஹை ஸ்கூல் விபு லானந்த நூற்றாண்டு விழா கொண்டாடிய போது இக்கதைதையை நாடகமாக நடித்தனர். இவையெல் லாம் என் எழுத்துத் துறையில் எனக்கு கணிசமான மதிப்பையும் ஆத் மதிருப்தியையும் தந்தன.

ஒரு மரித்துப் போன இலை
கல்லூரன்
நான் ஒரு மரித்துப் போன இலை; உன்னை நோக்கிப் பறந்திருப்பேன் ஒரு துள்ளும் மேகமாக இருந்திருந்தால் சொர்க்கத்தை நோக்கிய எல்லாத் தோழர்களும் வந்து சேரட்டும் பின்பு உன்னை நான் சந்தித்துக் கேட்பேன் அன்பை அன்புக்காக வைத்திருந்தாயா என்று;
நிமிடங்கள் கட்டிகளாகி பாரங்களாகி என்னை சங்கிலியிட்டு விட்டன நான் தலை குனிந்து கொள்கிறேன் என்னை உனது பினத்தில் எரியும் நெருப்பாக்கி வை; எனது இறந்து போன நினைவுகளை இப் பிரசஞ்சத்தை நோக்கி செலுத்திப் பார்
காய்ந்து சருகாகிப்போன இலைகள்; ஒரு புதிய ஜனனத்தை உயிர்ப்பிக்கக் கூடும்
அதுவும் இப்பாடலின் அவதாரத்துடன்; அவிந்து போன அடுப்பிலிருந்து இறக்கி வைக்கப்பட்டவுடன் சாம்பலும் நெருப்புத் தெறிப்புகளும் - ஆயினும் அது ஒரு மனித நேயத்துடன் ஒ என் உயிர்க்காற்றே மழைக்காலம் வந்தால் அவர்களைக் கேளுங்கள் இளவேனில் காலம் இன்னும் தூரத்திலா உள்ளது.
கல்லூரரன் ஒரு மரித்துப் போன இலை

Page 16
எழுத்தும், ஆளுமையும்; எப்படி எழுதினேன்?
உமா வரதராஜன்
ஞானி சென்ற பாதையையும் பறவை சென்ற பாதையையும் எவரால் வரைந்து காட்ட முடியும்? அதே போல உமாவரதராஜன் என்ற இந்த எழுத் தாளனின் பயனப்பாதையையும் எங்ங்ணம் விளக்கிச்
சொல்ல இயலும்?
சிறகு முளைத்த ஒரு பறவை கூட்டில் நிலை கொள்வதில்லை. எழுதுகின்ற இந்த ஆசையும் அதை யொத்த ஒன்றேதான். தாம் கண்டவற்றை மீண்டும் எழுத்துருவில் கொணர்வதில் - இந்த மீளப்படைக்கின்ற வேட்கையில்தான் பல க  ைல ளு ர் க ளி ன் பயணம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
அலைகள் மிகுந்த சாகரத்தில் ஒரு சிறுவன் குளிக்கத் துணிந்ததைப் போலவே நானும் என் முதல் கதையை எழுதினேன். விபரிக்க முடியாத பரவசத்து டன் அலைகளிடம் விடைபெற்றுக் கரையேறிய உணர்ச் சிதான் என்னுடைய முதற்கதை பற்றிய மனப்பதிவாக இன்றும் நிலைத்திருக்கிறது. இதே போல என்னுடைய ஏனைய கதைகளை நானே இப்போது படிக்கும் போது ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு படிமம் எனக்குள் தோன்றுகின்றது: ஒரு பிரமாண்டமான அடுக்கு மாடிக் கட்டிடத்தின் அடியே நின்று உள்ளே நுழைவதா இல்லையா எனத் தடுமாறும் ஒரு மனிதனின் படிமம் சில கதைகளைப் படிக்கும் போதும், குளவிக் கூடொன் றுக்குக் கல்லெறிந்து விட்டு ஓட்டம் பிடிக்கும் ஒரு சிறுவனின் தோற்றம் இன்னும் சில கதைகளிலும் நீர்ப் பரப்பொன்றில் அலைக்கழிந்து கொண்டிருக்கும் ஆட்கள் யாருமற்ற ஒரு படகு சில கதைகளிலும், ஒரு மைதானத்தின் பலத்த ஆரவாரங்களுக்கு மத்தியில் முரட்டுக் கால்களால் அங்குமிங்கும் அலைக்கழிக்கப் படும் ஒரு பத்தின் படம் இன்னும் சில கதைகளிலும் தோற்றமளிக்கின்றன.
1974 ல் எழுதி வெளியான எனது முதற் சிறு கதையின் தலைப்பு அந்தப்பார்வை அப்படித்தான் இருக்கும் என்பதாகும். வெறுமனே ஒரு குறிப்பிட்ட சிறுகதைக்கான தலைப்பு அது என இப்போது நினைக்கத் தோன்றவில்லை. நான் பின்னாட்- எளில் எழுதப்போகும் கதைகளுக்கும், அவை உள்ளடக்கப் போகும் அம்சங்களுக்குமான ஒரு கட்டியகாரனரின் குரல் - புனித யோவானின் பாலைவனக்குரல் போல என்னையறியாமல் அந்தத் தலைப்புக்குப் பின்னால்

ஒளிந்து கொண்டு இருந்திருக்கிறது. ஆனால் அந்த முக்கியமான கதைப் பிரதி முழுமையாய்க் கிடையாத காரணத்தால் என் முதல் தொகுதியில் சேர்க்கப்படா மல் போயிற்று.
அந்தக் கதையிலும் சரி பின்னர் எழுதிய வேறு கதைகளிலும் சரி சூழ உள்ள மனிதர்களோடு, சொத் தங்களோடு, உறவுகளோடு எனக்குள்ள ஓர் ஒவ்வா மையை அல்லது ஒர் உரசல் நிலையை எல்லா வாச கர்களும் ஒ ர ன வ புரிந்து கொண்டிருப்பார்கள். அற்பமான மனிதர்கள் மீது எனக்குள்ள ஓர் அதிருப்தி என் கதைகளின் முக்கிய இயல்பு என்பதை பலரும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.
பாரதியின் ஒரு பாட்டு அடிக்கடி என் ஞாபகத்துக்கு வருவதுண்டு.
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ் சிறு கதைகள் பேசிப் பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவமெய்திப் பின் காலனுக்கிரை யென மாயும் வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்ந்திடுவேன் என்று நினைத்தாயோ?
இந்த சிறிய மனிதர்களைப் பொறுத்தமட்டில் எனக்குப் பொதுவாக ஒர் அதிருப்தி, மனிதர்கள் பலர் தத்தம் அடையாளங்களை இழந்து மந்தைகள் போல் ஆகி விட்டனரே என எண்ணும் போது ஓர் ஆக்ரோஷம். இவைகுழைகளுக்கு இவர்கள் இப்படி அலைகிறார்களே என்பதை எண்ணும் போது ஒர் ஆத்திரம். தன் வீடு பற்றிக் கவனம் கொள்ளாமல் சதா அண்டை வீட்டுக் காரன் மேல் இவர்கள் கொண்டிருக்கும் க ரி சனம் குறித்து ஓர் எரிச்சல் , தகுதியற்றவைகளைத் $ଜ2] କି! மேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்களே என்ப தால் ஏற்பட்ட ஒரு தார்மீகக் கோபம். உறவுகளின் போலித்தனம் தந்த எதிர்ப்புணர்ச்சி. சிறு வயதிலிருந்து எனக்குள் ஏற்பட்டு வளர்ந்து போன இந்த எதிர்ப் புணர்ச்சி அல்லது மனிதர்களைப் பற்றிய எதிர்மறை யான இந்த Negative அணுகுமுறையை ஒப்புக்கொள்ள நான் இங்கு வெட்கப்படவில்லை.
ஒரு மோசமான மனிதனைப் பார்த்ததும் உண்மையில்ேயே அவன் முகத்தில் காறி உமிழ்ந்து விட விரும்புகிறேன். அவனை நடுத்தெருவில் நிறுத்தி சவுக் சால் அடிக்கவும் அசை, முஷ்டியை மடக்கி அவன் முகத்தில் குத்துவதற்கும் ஆவல். ஒரு Superman விஸ்வரூபம் கொண்டு இந்த அற்பமனிதர்களை ஒரே இரவுக்குள் ஒழித்துக் கட்டப் பேராசை, ஆனால் என் நிஜவாழ்வில் அவையெல்லாம் அசாத்தியம் என நான்
3

Page 17
அறிவேன். குற்றம் - சட்டம் - தண்டனை என்ற சமூகக் கட்டுப்பாடுகள் என்னைப் - பயமுறுத்துகின்றன. எத்த னையோ மனிதக் கூடுகளைத் தன்னுள்ளே புதைத்துக் கொண்ட ஒர் இடு காட்டினைப் போல அமுக்கப்பட்ட பல உணர்வுகளுடன் ஸ்ன் மனது அல்லலுறுகிறது - எனினும் சண்முகம் சிவலிங்கம் "விலகிச்செல்லும் மையங் களில் கூறுவது பே ல இந்த இடுகாட்டின் இடையேதான் எனது பட்டிப்பூக்கள், எனது கழனிப்பூக்கள், எனது சிறுகதைகள் மலர்கின்றன. எலும்புக் கூடுகளுக்கிடையே முளைக்கின்ற எனது பட்டிப்பூக்கள் பற்றி அந்தக் கவிஞர் சொல்வது பொருந்திப் போகின்றது - "எச் சிறிய புல்லும் அதளைவில் முழுமை, இடுகாட்டில் முளைக்கின்ற கழனிகளும் அருமை’.
றோஜாச் செடிக்கு வெந்நீர் ஊற்றும் விதத்திலான பலதரப் பட்ட வகைகளுக்கும் என்னுடைய கதைகள் இலக்காகி இருக்கின்றன. மனித வாழ்வின் அடிப் படையே மற்றவருடன் ஆன நெருக்கம் என்ற நியதியை நான் அறியாதவனல்ல. ஆனால் சக மனிதர்களிட மிருந்து நான் சந்தித்தவை எவை? எவை? தொலை பேசியின் எதிர்முனையில் ஒரு குரலை எதிர்பார்த்தால் வெறும் மணி ஒலிப்புடனேயே காலம் விஷமப் புன் னகையுடன் நகர்ந்து செல்கின்றது. அழைப்பு மணியை அழுத்திவிட்டுத் திறபடப்போகும் கதவுக்காகக் காத்து நின்றால் ஜன்னலும் கூட குரூரத்துடன் மூடிக் கொள் கின்றது - ஒடுவதற்குக் காலைத் தூக்கினால் கடற்கரை யில் பரவிப் படர்ந்திருக்கும் கொடியொன்று வஞ்சகத் துடன் தடக்கி வீழ்த்துகின்றது. மூக்கு மண்ணில் முட்ட நான் வீழும் ஒரு சந்தர்ப்பத்துக்காகக் கை தட்டக் காத்திருக்கிறது சூழல்.
சமூகமும் நானும் ஓர் அதிருப்திக்கு மத்தியில் கண்ணா மூச்சி ஆடுவதாகத் தோன்றுகிறது. அதை நான் தேடிச் சென்றபோதெல்லாம் அது என்னை எட்டி உதைத்து விட்டு எங்கோ போய் ஒளிந்து கொள்கிறது. காத தூரம் தன்னைக் கொண்டு போய் வீசி விட்டு வந்தா லும். மறுபடியும் பழைய வீட்டுப் படியைக் தேடி வந்து வாலைக் குழைத்த வாறு தயவுக்குரல் எழுப்பும் பூனைக் குட்டியல்ல நான்.
நான் உலகத்தைப் பார்க்கும் பார்வையில் ஒர் ஏளனமும் நையாண்டியும் கலந்திருப்பதாகப் பலர் கூறுகிறார்கள். இது தவிர்க்க முடியாத ஒரு விஷயம் தான். சமூகம் பற்றிய என்னுடைய பார்வை எனக்கு இந்தப் போ க்  ைக வழங்கியிருக்கிறது. என்னைப் பொறுத்த வரையில் இந்த Satire என்பது இலக்கியமோ இலக்கியமில்லையோ, அதை ஒர் எ ழு த் தா ள னரி ன் பார்வை என க் கொள்வதில் தவறேதும் இல்லை. கட்டியாளத் தெரிந்தவனுக்கு சுகமான சவாரி, தெரியா தவன் குப்புற வீழ்வான் என்ற குதிரைச் சவாரியின் இரு வகைத் தன்  ைம க  ைள க் கொண்டதே இந்த

Satire 2-lb. 676975, Sense of Humour 6T6ir 3 air sp நகைச்சுவையுணர்வை வக்கரிப்பு என்று சிலர் வசை பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் உண்மையைச் சொல்லப்போனால் இந்த நையாண்டிகள்தான் என்னுடைய பலமென்று நான் கருதவில்லை. இந்த நையாண்டி அம்சங்களை என் கதைகளில் த வி ர் த் து விட்டால் தமயந்தியை நடுக் காட்டில் விட்டுப் பிரிந்த நளனைப் போல என்னு டைய வாசகர்களும் சொல்லாமல் கொள்ளாமல் போய் விடுவார்களோ என்றெல்லாம் நான் மனக்கணக்குப் போடுவதில்லை.
என் கதைகளில் இந்த Satire ஐப் படைப்பாளி யாகிய நானே இடையிடையே தோன்றிச் சொட்டுவது பொருத்தமான ஒன்றா எனச் சிலர் கேட்கக் கூடும் - கதாபாத்திரங்களினூடாக இவற்றை வழங்குவதுதான் உயர்ந்த கலைத்தரம் என அவர்கள் எண்ணுகின்றார்
853T ,
என் கதைகளின் பொது அம்சங்களான இந்த நையாண்டிகளையும், ஏளனங்களையும் நான் ஒர் உத்தி யாகவே பயன்படுத்துகின்றேன் - பல விதமான படைப்பு நெறிகள் இன்றைக்குப் பின் பற்பப் பட்டு வருகின்றன. நவீன நாடகங்களில் கட்டிய காரன் இடையிடையே பார்வையாளர் முன் தோன்றி சில சங்கதிகளைச் சொல்லி விட்டு மறைகின்றான் - சில நவீன சினிமாக் களில் இயக்குநரே திரையில் அவ்வப்போது தோன்றி கதைப் போக்கு பற்றிய சில குறிப்புகளை வழங்கி விட்டு அகல்கின்றார். படைப்பாளி என்பவன் படைப் பினுள் அப்படியே மறைந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தை நான் நிராகரிக்கின்றேன்.
நான் மற்றவர்களின் அனுபவங்களைக் கதை யாக்கிய சந்தர்ப்பங்கள் மிகவும் அபூர்வம் என்று இன் னொரு குறைபாடு. இரண்டொரு கதைகளைத் தவிர ஏனையவற்றில் நானே முழுமுதல் பாத்திரமாக அல்லது முக்கிய பாத்திரமாக இடம் பெற்றிருக்கிறேன் என்பது உண்மை. இலங்கைத் தமிழ்ப்படத்தயாரிப்பாளர்களில் சிலர் தாங்கள் எடுக்கும் பாடங்களில் தாங்களே கதா நாயகனாக ந டி த் து விடுகின்ற அந்த ஆசையைப் போன்றதல்ல இது - இந்த உலகத்தில் என்னுடன் அதிகமாகப் பேசிய பேர்வழி நானாகத்தான் இருக்க முடியும். எனவேதான் என்னைச் சிருஷ்டிப்பதில் நான் அதிக அக்கறை காட்டுகின்றேன். -
பாத்திரங்களைச் சித்தரிப்பதில் நான் ஒழுங்கான வெற்றியைப் பெற்றவனா? பா த் தி ர ச் சித்தரிப்பு பற்றிய பிரக்ஞை எனக்கு இருக்கிறதா? என்பவை இத் தருணத்தில் எழுகின்ற முக்கிய கேள்விகளாகும். பாத்
4.

Page 18
திரச் சித்தரிப்புகளில் இயன்றளவு நான் அக்கறை காட்டியிருக்கிறேன் எ ன் று தா ன் சொல்வேன், அசோ க வ ன ம் என்ற என்னுடைய சிறுகதையில் நான் கூடு விட்டுக் கூடுபாய்ந்து பெண் எனும் ஸ்தா" னத்திலிருந்து கதையைக் கூறுகின்றேன். அதற்காக என்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப் புக  ைள அந்தப் பெண்மீது நான் திணித்ததில்லை.
ஜெனி என்ற என்னுடைய மற்றொரு கதையில் ஜெனி ஜெனியின் திகப்பனார் எல்லோருமே துல்லிய மான முறையில் சிருஷ்டிக்கப் பட்டவர்கள் என்பது என் நம்பிக்கை. மாலை சூட்டிகள் கதையில் வரும் செங்காவின் தர்மசங்கடமும் ஒரு விதப் பிடிவாதமும் கணித முழுவதும் ஒழுங்காக வந்து அந்தப் பாத்திரம் கன பரிமாணம் கொண்டிருக்கிறது. எலியத்தில் எலியு டன் மல்லுக் கட்டும் ஒருவனை தொடரும் துன்பங் களால் துவரும் ஒருவனை - மிகக் கச்சிதமாகப் படைத் திருக்கின்றேன்.
சந்தையைப் பற்றி எழுதப்படும் ஒரு கதையில் சந்தையின் அத்தனை மாந்தர்களைப் பற்றியும் விப ரிப்பது அசாத்தியம். அனாவசியம். ஜெனி என்ற என்னுடைய ஒரு க  ைத. நீண்ட நாட்களுக்குப் பின்னர் ரயில் பயணமொன்றில் சந்தித்த பள்ளிக் காலத்து சினேகிதியொருத்தியும், நானும் அந்தக் கதை பின் முக்கிய பாத்திரங்கள். ஆனால் உண்மையில் இக் கதைக்கு ஆதாரமான ரயில் ப யனத் தி ன் போது எங்களிருவருக்கும் நெருக்கமான இன்னொரு பள்ளிக் காலத்து நண்பனும் கூட இருந்தான். ஆனால் அவனது பாத்திரம் அந்தக் கதையில் இடம் பெற வேண்டுமென நான் நினைத்ததில்லை. கதையின் இறுக்கத்தை அது தளர்த்தி விடலாம் என்ற அ பி ப் பி ரா ய ம் எனக்கு இருந்தது. இது ஒரு முக்கியமான விஷயம் என்றே சொல்லத் தோன்றுகிறது. அனுபவத்தின் அத்தனை துளிகளையும் வாசகனுக்கு ஒன்று விடாமல் பருகக் கொடுப்பது ஒரு நல்ல எழுத் தாள னி ன் பணியாக இருக்க முடியாது. சுந்தர ராமசாமி அவர்கள் கூறியது போல அனுபவம் என்பது வெறும் கண்ணாடிச்சில். எழுதுபவனின் திறமைதான் அதற்கு ரஸ்ப்பூச்சைச் G= iisanggil."
என்னுடைய மொழிநடை பற்றிச் சில வார்த் =ஆகள் சொல்ல வேண்டியுள்ளது. என்னுடைய கதை களைப் படி த் த வர் களு க்கு நான் கையாளுகின்ற மொழிநடை குறித்து ஒரு விசேஷ கவனம் இருந்திருக் கவாம். சொல்கிற விஷயத்துக்கு அதி முக்கியத்துவம் கிடைப்பது சொல்கின்ற முறையால்தான் என நான் கருதுகின்றேன். தேய்ந்து போன தமிழ் வார்த்தைகளை தான் தேர்வு செய்வதில்லை - தங்கள் வசமுள்ள எழுத் துக்கள் தேய்ந்து போனவை எனக் கருதும் பட்சத்தில்

அச்சகக்காரர்கள் கூட எழுத்துக்களை மாற்றிப் புதிப் பித்து விடுவதுண்டு. ஆனால் பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் பன்னெடுங்காலமாக சில சொற்களிலே கரங்குப் பிடியுடன் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மொழி என்பது புரிவதற்காக திணறுவதற்காக அல்ல. ஒரு படைப்பை உருவாக்க சொற்கள் தேவைப் படுகின்றன: நமது காலத்தின் புழக்கத்திலிருக்கும் சொற்சளின் மத்தியில் இருந்தேதான் படைப்பானது சொற்களைத் தெரிவு செய்கின்றது - எனினும் இந்தச் சொற்களைக் கொண்டு தனித்துவமான மொழியை உருவி'க்குவது எங்கனம்?.
ஓர் எழுத்தர்ளனின் மொழிநடையினது உள்ளி பல்புகளை நிர்ணயிப்பது அவனுடைய சிந்தனை முறை மாத்திரமல்ல, அவன் ஈடுபடுகின்ற இலக்கிய வடிவமும் ஆகும். கவிதையின் நடையைக் கட்டுரையிலோ, கட்டு ரையின் நடையைக் கதைகளிலோ காண நினைப்பது பொருத்தமற்ற காரியம் மட்டுமல்ல, சிறுகதையின் நடை நாவலுக்கோ, நாவலின் நடை சிறுகதைக்கோ சரி வரப் பொருந்துவதில்லை, ஜெயகாந்தன் நாவல் எழுத ஆரம்பித்த போது அவருடைய சிறுகதையின் டாம்பீக நடை மங்கித்தான் பே ா க வேண்டியேற் பட்டது. இதற்கு வண்ணதாசன் கூடப் பிந்திய உதா ரணமாகிறார். அதுமட்டுமல்ல, ஒரே எழுத்தாளனின் ஒரு சிறுகதையில் உள்ள நடைக்கும் மற்றொரு சிறு கதையில் உள்ள நடைக்கும் வித்தியாசம் இருக்கவே செய்யும் என்பது என் அனுபவம்.
வெவ்வேறு விதமான மொழி நடைகளை என் கதைகளில் நான் கையாண்டதுண்டு. அசோகனவம் என்ற எனது கதையில் அந்த ரிச்சரே கதையைச் சொல்கிறாள். அவர் என்று சங்க காலத்தில் சொல்லப்பட்டதே. அத்தகைய ஊர் வம் புக ளால் அவள் நொந்துபோய் இருப்பவள் - தவிர அவள் ஓர் ஆஸ்த்மா நோயாளி. அந்தக் கதையில் என்னுடைய மொழிநடை எப்படிப் பாய்ச்சல் மிக்கதாய் அமையும்? ஆனால் எனது "சூ ரி ய னி ன் முன் புறம்" கதையில் வருபவன். ஒருவித அலட்சிய மனோபாவங் கொண்ட ஒருவன் அவனுடைய மனநிலைக்கிசைந்த ஒரு வித மொழிநடையை அங்கே நான் தெரிவு செய்தேன்.
எழுத்துலகைச் சார்ந்த இன்னொரு முக்கிய பிரச்சினை என்னுள் இப்போது உறைக்கிறது. சிறுகதை என்ற பெயரை வைத்துக் கொண்டு, கதை என்ற அம்சம் கொஞ்சமும் இல்லாமல் எழுதப்படுகின்றனவ கதைகள் ஆகுமா? இது ஒரு முக்கியமான கேள்வி.

Page 19
வாசகர்களை மனதில் இருத்திக் கொண்டு கதை கள் சொல்ல முனையும் போக்கை நான் எப்போதும் நிராகரித்து வந்திருக்கின்றேன். வாசகர்கள் என்ப வர்கள் என்னுடைய பேரக்குழந்தைகள் அல்ல. திண் ணையில் அவர்களை அ ம ர் த் தி க் கதை சொல்லும் தாத்தாவும் நானல்ல.
கிளைகளை வளைத் துப் பழம் பறிக்கத் தெரி யாத ஒரு சிறுவனைப் போன்றே வாசகர்களுக்காகக் கதை சொல்ல முயலும் ஒரு எழுத்தாளனும் தன் சிந்தனையின் பாஷையைக் கைப்பற்றத் தவறிவிடு கிறான். நெடுஞ்சாலைகளில் பயணம் செய்ய வேண்டிய அவன் சந்து பொந்துகளில் தவழ்ந்து கொண்டிருக் கின்றான். கானகங்களின் பெயர் தெரியாதபட்சிகளின் குரலொலிகளை மொழியாக்க வந்தவன் வழியில் கண்ட வண்ணத்துப்பூச்சிகளின் பின்னால் அலைந்து கொண்டி ருக்கிறான். கடலுக்குச் சென்றவன் அங்கே தலை முழுகிப்பரவசம் கொள்ளாமல் கரையோரம் நடை பயில்கிறான். இருளின் மின் மினி  ைய ஒரு கைப் பொத்தலில் அடக்கத் தவறி விட்டுத் தடுமாறுகிறான். புழுதி கிளப்பி வரும் குதிரையொன்றில் தாவி ஏறத் தயங்கி நிற்கிறான். கொட்டும் மழையை விட்டு விட்டுத் தாழ்வாரத்தின் தூவானத்தில் சுகம் காண்கின்றான்.
வாசகர்களை மனதில் இருத்திவைத்துக் கொண்டு சிறுகதைக்கென பலர் வைத்துக் கொண் டி ரு க் கும் சூத்திரங்களை வீசியெறிந்து விட்டு என் மனதின் மின் னல்களை மொழியால் தரிசிக்க முனைகிறவன் நான்.
ஆனால் சிறுகதையில் கதை அமைப்பு என்ற ஒன்றைப்பற்றி வாசகர் மத்தியில் எதிர்பார்ப்பு இருப் பதை - அந்த எ தி ர் பா ர் ப் பி ன் நியாயத்தை - நான் உணர்கின்றேன். கதை என்பது அதைத் தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஒர் அவசியத்தை - நேர்மை யானதும், உண்மையானதுமான அவசியத்தை கொண் டிருக்க வேண்டும். துப்பறியும் கதை, மர்மக்கதை போல செயற்கையாக அது இருக்க வேண்டும் என்பது இதன் அர்த்தம் அல்ல. ரோல் ஸ்ரோயின் புத்துயிர்ப்பு நாவலில் கடைசிவரையில் அந்தப் பெண்ணின் கதியை நோக்கி நாம் மூச்சுப் படபடக்கப் போய்க் கொண்டி ருக்கிறோம் அல்லவா, தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற அவசியத்தை நேர்மையாகவும் உண்மையாசவும் வாசகரில் தொற்ற வைக்கும் உயர்ந்த கலைத்திறனுக்கு இதுவே சாட்சியாகும்.
இத்தகைய அம்சம் என் கதைகளில் உண்டா என நான் சிந்தித்துப் பார்க்கிறேன். என்னுடைய பல கதைகளின் கதையமைப்பு மிகவும் எளிமையானவை. வெறும் அவதானங்களாகவும், அவதானங்களின் அசை போடல்களாகவும் அவை அ  ைம ந் து விடுகின்றன.
6

வாழ் க் கை எ ன் பது ஒரு தொடர் வளர்ச்சி. தொடர்ந்த ஒரு நீண்டபயணம் அது. ஆனால் நிழல்களில் அவ்வப்போது தங்குகின்றோம். "பீடி புகைத்தார்கள், வெற்றிலையும் போட்டர்கள் - ஏதேதோ பேசிச் சிறிதே இருந்த பின்னர் மீண்டும் எழுந்து நடக்கத் தொடங் கினர்' என்று ஒரு கவிஞர் சொன்னது போல இப் பின் நோக்கல்களும், கதை சொல்லும் எந்த உத்தி களுமற்ற மீள் நினைவுகளும், ம ன நி  ைல க ளு ம் Nostolgia களும் சிறுகதைக்கு உரியனவே என்பதுதான் என் கட்சி,
இலங்கையின் தமிழ்ப் படைப்புகள் பொதுவாக மூன்று வ  ைக க ளி ன் கீழ் வந்து விடுகின்றன.
1. ஜனரஞ்சக எழுத்து, 2. முற்போக்கு எழுத்து, 3, நவீன போக்கு எழுத்து.
ஜனரஞ்சக இலக்கியம் என்பது Carnival போன்ற பிறிதொரு உலகம். வர்த்தகத்துடன் சம்பந்தப்பட்டி ருக்கும் இத்தகைய எழுத்துக்கள் அவற்றின் குறிக் கோள்களை உலகின் பல்வேறு பகுதிகளிலும் அடைந்து வருகின்றன. தமிழுக்கு மாத்திரம் இது விசேஷமாக வாய்க்கப் பெற்றது என நாம் அடிக்கடி மூக்கைச் சிந்தி, ஜலதோஷம் கொள்ளத் தேவையில்லை.
ஜனரஞ்சக இலக்கியத்தில் எனக்கு அக்கறை கிடையாது. லட்சோப லட்சம் தமிழ் வாசகர்களின் மனச் சிம்மாசனங்களில் சாண்டில்யன், மணியன், ரா. கி. ரங்கராஜன், சுஜாதா, புஷ்பா தங்கத்துரை இன்னும் இவர்களின் ஏகப்பட்ட வாரிசுகள் உட்கார்ந் திருக்கிறார்சள். அவர் க ளு  ைடய சிம்மாசனங்களை அபகரித்து விடலாம் என்ற ந ப் பn  ைச எனக்குக் கிடையாது.
வாசகர்களின் பொருட்டு அவர்களுடன் இந்த சங்கீதக் கதிரை விளையாட்டு விளையாடுவதை விட ஏதாவது ஒர் ஆற்றங்கரையின் படித் துறையில் உட் கார்ந்து கொண்டு மீன்களுக்குப் பொரி போட்டுக் கொண்டிருக்கலாம் அல்லது தெருநாய்களுக்கு எலும்புத் துண்டுகள் வீசிக் கொண்டிருக்கலாம். இல்லாவிட்டால் கூடி நிற்கும் காகங்களுக்கு பணிஸ் வாங்கிப் பிய்த்துப் போட்டுக் கொண்டிருக்கலாம். இவை மேலான காரி யங் ஸ் என்று நம்புகின்றேன்.
முற்போக்கு எழுத்தாளர்கள். மு ற் போ க் கு இலக்கியம் என்று ஒரு ரகம் உள்ளது. முற்போக்கு எழுத்தா ளர்கள் எனச் சொல்லப்படுவோர் மீது நான் அதிக நம்பிக்கை கொள்ள முடியவில்லை. அவர்களு டைய எழுத்துக்களின் கலைத் தரம் அவர்களுடைய பிரதான பாத்திரங்களை விட வறு  ைம மிக்கவை.

Page 20
1970 களில் இவ் வகை இலக்கியம் கோலேச்சிக் கொண் டிருந்த காலத்தில் சுவரொட்டிகளின் வாச கங்கள் எல்லாம் கவிதைகளாக அடையாளம் காணப்பட்டன. அரசியல் பி ரச ங் கி சு ஸ் எல்லோரும் கவிஞர்களாக மாற்றுருவம் பெற்றார்கள் - 1978 புயலுக்கும் இந்த இலக்கிய அலைக்கும் அதிக வித்தியாசமில்லை. கம்பீ ரத்துடன் இருந்த பல தென்னை மரங்களை அந்தப் புயல் சாய்த்தது இதுவோ நல்ல எழுத்தாளர்களின் கலைத்திறனை மழுங்கடித்து பிரச்சாரச் சகதியில் வீழ்த்தியது.
இந்தப் புயலிலும் கடுமழையிலும் நானும் என் னைப்போன்ற சிலரும் ஆமை நகர்வுடன் மெதுவாக ஊர்வதைத் தவிர வேறு வழியில்லை. திருவிழா முடிந்த மறுதினத்துக் கடைக்சாரர்களாக இந்த முற்போக்கு வாதிகள் எல்லோரும் இன்றைக்கு அகன்று போய் விட்டார்கள். த ல் ல ன வ தேறும், ஈற்றில் நின்று சிலைக்கும் என்பதற்கு ஓர் வரலாற்று உதாரணம் இது.
அடிப்படையில் என்னை ஒரு நவீன எழுத்தாள எாக அடையாளம் காண்பதில் நான் பெருமையடை கின்றேன்- ஜனானாக்களை முஸ் லி ம் கள் உடனே நல்லடக்கம் பண்ணி விடுகின்றார்கள். தமிழர்களும் அநேகமாக ஒரிரு நா ட் க ரூ க்கு மேல் சடலங்களை வைத்திருப்பதில்லை. ஆனால் நம் தமிழ் இலக்கியமோ செ த் து ப் போனவற்றை, காலாவதியாகிப் போன வற்றைக் கட்டிப் பிடித்த படி நிதமும் அழுது கொண் டிருக்கின்றது. இவற்றுக்கெதிராக இந்த மரபுகளை றுேகின்ற தமிழ்ச் சி ந் த  ைன க  ைள நான் பெரிதும் உவகையுடன் ஏற்றுக் கொண்டேன் - இது நான் கண்டு பிடித்த பாதையல்ல - தமிழில் பாரதி, புதுமைப்பித்தன், மெளனி, கு.ப. ரா. க. நா.சு.சு. ரா. போன்ற முன்னோ டிகள் உருவாக்கிய பாதை அது. அவர்கள் மூட்டிய தியில் குளிர் கா ப் ந் து அவர்களின் நாம பஜனை செய்யும் ஒருத்தனல்ல நான். அவர்கள் ஏந்திய தீப்பந் தத்தின் வெளிச்சத்தில் மென்மேலும் என் காலடிகளை எடுத்து வைக்கிறேன்.
உலகத்தின் இ ன்  ைற ய 100 மீட்டர் ஒட்ட சாதனை 9-82 வினாடிகள், என்பதையும் சென்ற ஒலிம்பிக்வின் 100 மீட்டர் - ஒட்ட சாதனை 10 -08 வினாடிகள் என்பதையும் அறிந்திராத ஒட்டக்காரன் ஒருவன் மைதானத்தில் சாதிக்கப் போவது என்ன? ாக ஆட்டக்காரன் பற்றிய விழிப்புணர்வு இல்லாத ஒரு விளையாட்டு வீரனால் எங்கனம் சோபிக்க இயலும்? விளையாட்டுத் துறையை மட்டும் சுட்டி நிற்கும் உண்மையல்ல இது. இ ல ங்  ைசுத் தமிழ்ப் படைப்புலகுக்கும் இவ் உண்மை பொருந்திப் போகின் தது. தமிழ் இலக்கியந்தின் இன்றைய முக்கிய போக் குகள் எவை, சாதனையாளர்கள் யார், யார் என்ப தையறியாமல் நம்மில் பலர் குண்டு ச் சட்டிக்குள்

குதிரை ஒட்டிக் கொண்டிருக்கின்றோம். கிணற்றுக்குள் விருந்து தவளைக் கூச்சலிடுகின்றோம். தமிழின் இன் றைய முக்கிய படைப்பாளிகளான தோப்பில் முகம்மது மீரானையும், கோணங்கியையும், ஜெயமோகனையும், கோபிகிருஷ்ணனையும், பாவண்ணனையும், இரா. முரு சுனையும், ராமகிருஷ்ணனையும் எத்தனை பேர் தெரிந்து வைத்துள்ளோம்-அதுபோகட்டும்,இலங்கையின் இந்தப்ப குதியில் உள்ள நவீன படைப்பாளிகளான சண்முகம் சிவ லிங்கம் சோலைக்கிளி. எச். எம். பாறுக், றஜனப் இவர் களையெல்லாம் சரியாக அடையாளம் கண்டோமா? இலங்கையின் ஏனைய பகுதிகளில் நவீன இலக்கியத்தின் அ ரு ம் புக ள |ா க நம் பி க்  ைக தரும் ரஞ்சகுமார், தேஷ் விலோமன், ரிஷிப்ரஞ்சன், பிரம்மன் போன்ற வர்களைத் தெரிந்து வைத்திருக்கின்றோமா? தமிழ்நாடு போற்றிப் பரிசுதந்த நண்பர் எஸ்.எல்.எம். ஹனீபாவின் மிக்கத்துச் சால்வைக்கு நாம் தந்த மதிப்பென்ன?
அசமந்தப் போக்கு, தற்பெருமை, தீக்கோழித் அனம். பொறாமை, குத்துவெட்டு இவையே பெரும் 1ாலான தமிழ் எழுத்தாளர்களின் லட்சணங்களாகி விட்ட இன்றைய நிலை யி ல் சக எழுத்தாளர்கள் பற்றிய நேர்மையான மதிப்பீடுகளுடனும், இன்றைய சாதனைகள் பற்றிய விழிப்பு ண ர் வு டனு ம் நான் எழுதிக் கொண்டிருக்கின்றேன்.
சுமார் 22 ஆண்டுகளாக வெ னி ப் படும் என் எழுத்துகளில் காலத்தின் சுவடுகள் ஏதேனும் முதிர்ச்சி யைப் பதித்திருக்கின்றனவா என யோசிக்கின்றேன். காலம் அப்படி யொன்றும் பெரிய சித்து விளையாட்டுக் களை என் எழுத்துகளில் காட்டி விடவில்லை என்றே தோன்றுகிறது. ந  ைரயின் திரை எ ன்  ைன تقسم الات தொடங்கும் இந்தத் தருணத்திலும் எனது மனம் யெளவனமாய் இருப்பது என் கதைகளிலும் பிரதி பலிக்கின்றது.
என்னுடைய பள்ளிப் பருவத்தில் அரைக்காற் சட்டைக் கோலத்தில் எழுதப்பட்ட கதைகள் கொண் டிருந்த முதிர்ச்சியை, கம்பீரத்தை-அவற்றினூடு வெளிப் பட்ட " தாமரை இலைமேல் தண்ணீர்"மனோபாவத்தைஎன் பிந்திய படைப்புகளில் நான் கண்டிருக்கின்றேனா என்பது சந்தே கந்தான். காலநகர்ச்சியும், உலக அனு: பவங்களும் ஒருவனது எழுத்துக்கு வலிமையும், முதிர்ச் சியும் அளிக்கக் கூடும். ஆனால் கூடவே குழப்பங் அனளயும் மயக்கங்களையும், தடுமாற்றங்களையும் அவை தந்து விடத் தவறுவதில்லை. அதிகாலை நகரின் அழகு படிப்படியாக இரைச்சல்களிலும், வெயிலிலும், புழுதியிலும் முகமிழந்து போவதைப் போல இதுவும் நேருகின்றது.

Page 21
நான் எழுதியவற்றுள் எலியம், சூரியனின் முன் புறம், கள்ளிச்சொட்டு போன்றவை என் சிந்தனை முதிர்ச்சியையும், நிதானத்தையும் பிரதிபலித்த படைப் புகள், சாதாரணதரத்துக் கதைகளையும் நான் எழுதி யிருக்கின்றேன். சிந்தனை முதிர்ச்சியும், பின்னணியும் கொண்ட கதைகளை உருவாக்கவே நான் விரும்புகின் றேன். அவற்றினுாடாகப் புலப்படும் உண்மைகளை நுட்பமாகச் சித்தரிக்கவே நான் முயற்சி செய்கின்றேன். ஆனால் நாலில் இரண்டு தேறுகின்றன.
கலையின் வெற்றிக்குப் பெரிதும் உதவுகின்ற வித்தையை அல்லது நுட்பத்தை எவ்விதம் ஒருவன் பெறுகிறான் என்பதும் முக்கிய விஷயந்தான். பாடப் புத்தகங்களிலிருந்தோ அல்லது பயிற்சிப் பட்டறைகளி லிருந்தோ 70 களில் பிரவேசித்த என்னைப் போன்ற எழுத்தாளர்கள் ஏதும் கற்றுக்கொள்ளவில்லை. ஞானப் பால் பருக சம்பந்தருக்குக் கிடைத்த அதிர்ஷ்டமும் எங்களுக்கு இல்லை.
ஆனால் ஓர் உ ண் மை  ையக் கணக்கிலெடுக்க வேண்டியுள்ளது. ஒன்றுமில்லாத இடத்திலிருந்து ஒன் றுமே தோன்றுவதில்லை. இது பெளதிகவியலுக்கும், உயிரி ய லுக் கும் மாத்திரம் பொருந்திப் போகின்ற உண்மையல்ல. கலை நுட்பங்களுக்கும் இது பொருந்தி விடுகின்றது. துரோணர்களிடம் இந்த ஏ க  ைல வ ன் கற்றுக் கொண்ட நுட்பங்கள், அனுபவங்களை இங்கே நான் எண்ணிப்பார்க்கிறேன்.
என்னுடைய எழுத்தின் போக்கு இன்று வெவ் வேறு திசைகளை அடைந்திருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் புதுமைப் பித்தனுடனும், சோ. ராமஸ் வா மியுடனும், ஜெயகாந்தனுடனும், அவர்களின் சாலை களில் பித்துப்பிடித்த பையனாக அலைந்திருக்கின்றேன்.
புதுமைப்பித்தனின் கதைகளில் நான் சந்திக்க நேர்ந்த முக்கிய அம்சங்களான சமூகநியதிகளை அலட் சியம் பண்ணுகின்ற தன்மை, தன் வாழ்க்சைச் சூழலில் அவர் கொண்ட அதிருப்தி, மனித இயல்புகள் மீதான ரசிப்பு, தனிமனிதனை நெருக்கும் கட்டுப்பாடுகளை உதறித்தள்ளும் போர்க்குணம், ஸ்தாபனங்கள் மீது கொண்ட அவநம்பிக்கை என்பவற்றால் நான் கவரப் பட்டவன்.
சோ. ராமஸ்வாமியின்  ைந யா ன் டி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஜெயகாந்தன் பற்றி நினைவு கொள்ளும் போது சிறுவயதில் மிருகக்காட்சிச் சாலை யில் சந்திக்க நேர்ந்த ஒரு சிங்கத்தின் ஞாபகம் மங்க லாகத் தோன்றி மறைந்தாலும் கூட ஒரு காலத்தில் அவர் என் அபிமானத்துக்குரிய எழுத்தாளர்.
8

படைப்புலகில் இந்த 22 வருடங்களில் என்னு டைய சாதனைகள் எவை என ஒருவர் கேட்டால்
என்ன பதிலைச் சொல்லது என இறுதியாக இப்போது யோசிக்கின்றேன்.
பாரதியும், மு. தளையசிங்கமும், புதுமைப்பிதி தனும் என்னுடைய வயதில் எட்டிப்பிடித்த சிகரங்களை மலைப்புடன் அண்ணாந்து பார்க்கின்றேன். மலையடி வாரத்தில் நின்று கொண்டிருக்கும் எனக்கோ பல்வேறு பராக்குகள், இலக்கியம் என்பது ஒரு பகுதி நேர வேலையாகிப் போய்விட்ட வாழ்க்  ைக ச் சூழலில் பெரிதாக எதைச் சாதித்து விடமுடியும்?
இவ் இலக்கிய உலகின் த டி த் தோல் களைச் சொறிந்து கொடுக்கத் தெரியாத குற்றத்திற்காக பொலிஸ் நிலையம் வரை சென்று வந்திருக்கின்றேன்.என் பெயருக்கு மொட்டைக் கடிதங்களைச் சுமந்து வரும் அபாக்கிய நிலைமையை அவ்வப்போது என் தபால் காரருக்கு ஏற்படுத்தி விடுகின்றேன். அவ்வப்போது மேடைகளிலும், சில பத்திரிகைகளின் பக்கங்களிலும் காகங்கள் என் த லை யிலும், தோள் பட்டையிலும் எச்சமிட்டுச் செல்வதைப் பொறுமையுடன் பார்த்து ரசிக்கின்றேன், இவற்றையெல்லாம் சாதனைகள் அல்ல என்று என்னால் ஒதுக்கி விடாமலிருக்க முடிகிறது.
இலக்கியத்துக்கு அப்பால் இன்னொரு உலகம் எனக்குண்டு. பள்ளிக்கூடம் செல்லும் என்னுடைய குழந்தைகள் ஒழுங்காக வீடு வந்து சேர்வதை ஊர்ஜிதம் செய்ய வேண்டியிருக்கின்றது. கவலையுடன் அவ்வப் போது Bank Balance பார்க்க வேண்டியுள்ளது. உலகத் தின் தலைசிறந்த தையல் இயந்திரங்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களைத் திருப்திப் படுத்தவேண் டியிருக்கின்றது. விற்பனையில் மந்தமென்றால் நிறுவ னத்தின் அதிகாரிக்கு விளக்கக் கடிதங்கள் அடிக்கடி சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. பயணங்களின் போது நான் செல்லும் வாகனம் யாராலும் மறிபட்டுவிடக் கூடாதே எனப் பிரார்த்திக்க வேண்டியுள்ளது. இதற்கி டையே என் கனவுகளில் அடிக்கடி தோன்றும் கடவுள் சாபமிட்டு மறைகின்றார். சகுந் தலையின் நினைவுகள் ஒரு காலத்தில் துஷ்யந்தனுக்கு இல்லாமல் போனதைப் போன்று, உனக்கும் உன் பெயர் எதுவென்ற ஞாபகம் மறைந்து போகக்கடவது, இன்று முதல் 563243120 V என்ற உனது அடையாள அட்டை இலக்கத்தாலேயே பூலோகத்தில் அழைக்கப்படுவாய்
இவ்வளவு அமர்க் களங்களுக்கும் மத்தியில். நான் ஏதோ எழுதிக் கொண்டிருப்பது பெரிய சா த  ைன என்றே சொல்வேன் - இறுதியில் ஜெயிக்கப் போவது நானா? அல்லது கால மா என்ற குழப்பங்களுக்கு நடுவே, பனிமூட்டத்தினிடையே என் பயணம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

Page 22
மட்டக்களப்பின் இலக்கிய வளர்ச்சி
அன்புமணி
மட்டக்களப்பின் இலக்கிய வளர்ச்சி முனைப்புக் காணும் போதெல்லாம், யாராவது வெளியிலிருந்து வந்து மட்டக்களப்பு இலக்கியப் போக்கின் மந்த நிலையைச் சுட்டிக்காட்டுவது ளழக்கம்.
அறுபதுகளில், இவ்வாறு ஒரு எழுச்சி ஏற்பட்டு ஆ. பொன்னுத்துரை. தங்கம், திமிலைத்துமிலன் ஆகியோர் எழுத்துலகில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி பிரபலம் பெற்றபோது மட்டு நகருக்கு வந்து சேர்ந்த ஒரு குழுவினர் கண்டனக் கணைகளைத் தொடுத்தும், வெள்ளங்காடு வியாகேசதேசிகர் என்ற பெயருக்குள் மறைந்து கொண்டு, பல "விமர்சனக்" கட்டுரைகளை எழுதியதும் யாவரும் அறிந்ததே. சிறிது காலத்தின் பின் நிலைமை சுமுகமாகிவிட்டது.
தற்போது பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சிலர் மடடக்களப்பில் இலக்கிய வளர்ச்சி ஏற்படவில்லை என்ற வகையில் பேசியும் எழுதியும் வருகின்றனர். உயர்ந்த ரசனை உள்ள சர்வகலாசாலை விரிவுரையா ளர்கள் இவ்வாறு எழுதுவது இயல்புதான். ஆனால் இலக்கியத் தரம் என்று அவர்கள் குறிப்பிடுவது எது என்று தெரியாமல் மட்டக்களப்பு எழுத்தாளர்கள் குழப்பமடைகிறார்கள். விடிவானம் இதழ் 10 கட்டு ரையில், செ.யோகராசா பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
.எழுத்தின் தரம் பற்றி எண்ணும் போது கூடவே மட்டக்களப்பின் விமர்சனப் பாரம்பரியம் நினைவுக்கு வருகிறது. மட்டக்களப்பு விமர்சன அரங்குகள் பலவற்றில் பாராட்டுரைகளே விமர்சனங் களாக விளங்குகின்றன. இப்போக்கினை ஒரளவு மாற்றி பமைத்த பெருமை அமரர் ஆனந்தனுக்கு உண்டு.
இக் கூற்றையிட்டுப் பின்வரும் ஐயங்க ள் எழுகின்றன. (1) நூல் வெளியீட்டு விழாக்களில் நூல்களைப் பற்றிய நயவுரைகளே இடம் பெறுகின்றன. அவற்றில் விமர்சனம் இடம் பெறவே இல்லை என்று கூறமுடியுமா? (3) ஆனந்தன் சிறந்த விமர்சகர் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவருக்கு முன் மட்டக்களப்பில் விமர்சனம் இருக்கவில்லை எனக் கூறுவது சரியானதா?
இந்தப் பின்னணியில் யதார்த்த நிலை பற்றியும் சிறிது சிந்திக்க வேண்டும். மட்டக்களப்பில் பலர் மண்வாசனை வீசும் கதைகளை எழுதுகின்றனர். தங்கன். ஆ. பொன்னுத்துரை, செ. குணரத்தினம்

மண்டூர் அசோகா, ஜோன்ராஜன், முத்த ழ கு, எஸ். எல். எம். ஹனீபா (ஒட்டமாவடி) அவர்களுட் சிலர். அவர்கள் தமது சிறுகதை, குறுநாவல்களுக்காகப் பல பரிசுகளையும் பெற்றுள்ளனர். பரிசு பெறுபவை யெல்லாம் தரமான படைப்புகள் என்று பொருள் அல்ல. ஆனால் பரிசு பெறும் தரத்தில் அவர்கள் படைப்புகள் அமைகின்றன என்பதையாவது ஏற்றுக்கொள்ளலாம் அல்லவா? இன்னும் ஒரு விடயம். ஜனாப் எஸ். எல். எம் ஹனீபா சிறந்த எழுத்தாளராகவும், சிறந்த விமர்சகராகவும் இருக்கிறார். ஆக்க இலக்கிய எழுத்தா ளர்களாக இல்லாத விமர்சகர்கள் இதைக் கருத்தில் கொள்ளுதல் தகும்.
திரு. செ. குணரத்தினம் எழுதிய "துன்ப அலைகள்" குறுநாவல், முற்போக்கு இதழான சுப மங்களா நடாத்திய போட்டியில் முதற்பரிசு பெற்றது
மண்டூர் அசோகாவின் சிறகொடிந்த பறவைகள்" முழுக்க முழுக்க மண்வாசனை வீசும், கலையம்சம் நிறைந்த நாவல். அடியேனது "ஒரு தந்தையின் கதை" பும் அவ்வாறான ஒரு நாவல் (திரு. ஆனந்தனே அதைப் பாராட்டினார் என்பது வேறு விடயம்). திரு. யோக ராசாவின் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடப்
படுகிறது (விடிவானம் - இதழ் 10)
1. மட்டக்களப்பு பிரதேசத்தில் எண்ணிக்கை ரீதியில் பல எழுத்தாளர்களும் கலைஞர்களும் இருக் கிறார்கள் என்பது உண்மை. ஆயினும் எழுத்தாளர் கலைஞர்களுடன் ஒப்பிடும்போது இவர்களின் தகுதிப் பாடு எத்தகையது? கவலைக்கிடமானது என்பதே கசப்பான உண்மையாகும்."
இக்கூற்றும் சர்ச்சைக்குரியது.
(1) ஒப்பீடு செய்யும் போது ஒரு பிரதேசத்தின் தரம் குறைந்த படைப்புகளையும் இன்னொரு பிரதே சத்தின் தரம் உயர்ந்த படைப்புக்களையும் ஒப்பீடு செய்வதில்லை. எல்லா பிரதேசங்களிலும் எல்லா மொழிகளிலும் தரம் உயர்ந்த படைப்புக்கள் சொற் பமாகவும் தரம் குறைந்த படைப்புகள் அதிகமாகவும் இருப்பது கண்கூடு.
(2) ஈழத்தின் தலைசிறந்த விமர்சகர்கள் எந்த ஒரு படைப்பு சம்பந்தமாகவும் ஒத்துப்போவ தில்லை. ஒருவருக்கு சிறப்பாக இருப்பது இன்னொரு வருக்கு மட்டமாக இருக்கிறது.
(3) சிறந்த விமர்சகர்களாக இருப்பவர்கள் சிறந்த படைப்பாளிகளாக இருப்பதில்லை.

Page 23
(4) விமர்சனம் என்பது ஒரு தனி நபர் விருப்பு வெறுப்புக்களையே பிரதிபலிக்கிறது. அவை ஆயிரக் கணக்கான வாசகர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு எதிராகப் பிரயோகமாகிறது.
(5) விமர்சகர்கள் தமக்கு வேண்டியவர்களை (தமது குழுவைச் சேர்ந்தவர்களை) தூக்கியும், தமக்கு வேண்டாதவர்களை (தமது குழுவைச் சேராதவர்களை) தாக்கியும் விமர்சனம் எழுதுவதும் நிதர்சன உண்மை.
சிறுகதை நாவல்களை மதிப்பீடு செய்யும் போது மண்வரசனைக் கதைகள் தான் சிறந்தவை என்றோ, மார்க்ஸிஸ்க் கதைகள் தான் சிறந்தவை என்றோ ஒரு கருத்தை வரித்துக் கொண்டவர்கள் எப்படி நடுநிலை விமர்சகர்களாக முடியும்?
இலக்கிய வாழ்க்கையைப் பிரதிபலிக்க வேண்டும் என்ற கோட்பாடுடையவர்கள் மார்க்ஸிஸ்த்துக்கு அப்பாலும் வாழ்க்கை விரிவடைந்துள்ளது என்பதை உணராது மார்க்ஸிஸ்க் கதைகள் (தொழிலாளி கதைகள்) மட்டுமே சிறந்த கதைகள் எனக் கூறுவது எவ்வாறு பொருத்தமாகும்?
மண்வாசனைக் கதைகள் - யதார்த்தக் கதைகள் மட்டுமே சிறந்த கதைகள் என்ற கோட்பாட்டை வரித்துக் கொண்டவர்கள், அதற்கு அப்பாலும் பல்வேறு வார்ப்புகளில் - யதார்த்தம் இல்லாத , மண்வாசனை இல்லாத படைப்புகள் சிறப்புப் பெற்றிருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளாது, சிறந்த படைப் புக்களை எடை போட முன்வருவது எவ்வாறு பொருத் தமாகும.
கதைகளில் பல்வேறு வார்ப்புகள் உள்ளன.
(1) அகவயமான சிந்தனைகள், உணர்வோட்டங்கள் கொண்ட கதைகள்
(மெளனி, லா, ச. ராமாமிர்தம், கு. ப. ராஜகோபாலன்)
(2) கவிதை வார்ப்புகள் கொண்ட கதைகள் (வி. ஸ. காண்டேகர், சோழன்)
(3) லட்சியப் போக்குள்ள கதைகள்
(கல்கி, அகிலன், நா. பார்த்தசாரதி)
(4) யதார்த்த ரீதியான கதைகள் (ஜெயகாந்தன், ஜானகிராமன், ரரஜநாராயணன்)
(5) மண் வாசனைக் கதைகள்
(ராஜநாராயணன், புதுமைப்பித்தன், சுந்தரராமசாமி)
20

இவ்வாறு பல்வேறு வார்ப்புகளில் வெளிவரும் கதைகள் கலையழகும், செய்நேர்த்தியும் சேர்ந்த சிறந்த படைப்புகளாக லட்சோபலட்சம் வாசகர்களை ஈர்க்கும் போது, மண்வாசனைக் கதைகள், யதார்த்தக் கதைகள் மட்டும் தான் சிறந்த இலக்கியங்கள் என்று கூறுவது எப்படிப் பொருந்தும்?
உலக இலக்கியங்களை நோக்கும் போது அவை மனித விழுமியங்களையே தொனிப் பொருளாகக் கொண்டுள்ளன. அவை இன்றும் அமரத்துவம் பெற்ற இலக்கியங்களாக மிளிர்கின்றன. யதார்த்தம் என்ற கோட்பாடு இலக்கியத்திற் புகுத்தப்பட்டது ஒரு நூறு ஆண்டுகளுக்குள் தான். இன்னும் சரியாகச் சொல் வதானால் மார்க்ஸிஸ அறிமுகத்தின் பின்தான் அக் G335 si i "Lu TG வலுப்பெற்றது. அது மட்டும்தான் இலக்கியம் என்று கூறுவதை விட, அதுவும் இலக்கியம் என்று கூறுவதே பொருத்தமானது, நேர்மையானது.
மட்டக்களப்பு, எழுத்தாளர்கள் முன்பு குறிப்பிட்ட எல்லா வகையான வார்ப்புகளிலும் எழுதுகிறார்கள் லட்சியப் போக்குள்ள கதைகளை எழுதும் நவம், அன்புமணி(அடியேன்), மண்டூர் அசோகா போன்றோர் மண்வாசனைக் கதைகளையும் யதார்த்தக் கதிை களையும் எழுதியுள்ளார்கள். ஜோ ன் ரா ஜ ன் செ. குணரத்தினம், தங்கன், ஆ. பொன்னுத்துறை போன்றவர்கள் முழுக்க முழுக்க மண்வாசனை வீசும் யதார்த்தக் க  ைத க  ைள எழுதி யு ள் ளார். எஸ். எல். எம். ஹனீபா , வை, அகமது பித்தன் (ஷா) முதலியோரும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த வர்களே. எடுத்த எடுப்பில் இந்திய எழுத்தாளர் களுடனும், உலக எழுத்தாளர்களுடனும் மட்டக்களப்பு எழுத்தாளர்களை ஒப்பீடு செய்து மட்டக்களப்பு எழுத்தாளர்களின் படைப்புகள் தரமாக இல்லை என்பது சரியான அணுகுமுறை அல்ல.
மார்க்ஸிஸ்க் கோட்பாடுகளை வரித்துக் கொண்டு அதற்கேற்ப எழுதினால் தான் சிறந்த இலக்கியம், அவ்வாறு யாரும் மட்டக்களப்பில் எழுதுவதில்லை. ஆகவே மட்டக்களப்பு எழுத்தாளர்களின் படைப்புகள் தரம் இல்லை என்று தீர்ப்புக் கூறுவது பாரபட்சமானது.
மண்வாசனை வீசும் யதார்த்தம் என்பது, கிராமப் புறத்தையும், சேரிப் புறங்களையும் பற்றி பேச்சுத் தமிழில் எழுதுவதுதான் என்ற கோட்பாட்டை வரித்துக் கொண்டு, மட்டக்களப்பு எழுத்தாளர்கள் அவ்வாறு எழுதுவதில்லை என்று குறைப்படுவதும் பொருத்த மற்றது.
சமகாலப் பிரச்சினைகள் பற்றி மட்டும்தான் எழுத வேண்டும் என்ற கோட்பாட்டை வரித்துக் கொண்டு மட்டக்களப்பு எழுத்தாளர்கள் அவ்வாறு எழுதுவதில்லை என்று குறைப்படுவதும் ஏற்புடை யதல்ல.

Page 24
மட்டக்களப்பு எழுத்தாளர்களின் எழுத்தாற்றலை வளர்ப்பதற்குச் சரியான அணுகுமுறை என்னவென் நால். எழுத்தாளர்கள் நிறைய எழுதவேண்டும். அவர் களுக்கு நிறைய பிரசுரகளம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
இவர்களது நூல்கள் வெளிவரும்போது கோஷ்டி மனப்பான்மையுடன் விமர்சன வாளைத் தூக்கிக் கொண்டு அட்டகாசம் செய்யாது பாராட்டத்தக்க அம்சங்களை மனம் திறந்து பாராட்ட வேண்டும்.
* விமர்சனப்புலிகள்" என்று பெயர் எடுத்த வர்கள் மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மனம் வீகம்" என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
வளரும் எழுத்தாளர்களை தமது சுய ஆற்ற லுடன் வளரவிடாது, பிரம்பைத் தூக்கிக் கொண்டு சட்டாம்பிள்ளை" வேலைபார்த்து அவர்கள்ை மூளைச் சலவை' செய்யக்கூடாது.
மட்டக்களப்பு எழுத்தாளர்கள் தாமாகவே தோன்றினார்கள், தாமாகவே வளர்ந்தார்கள். தாமா கவே இலக்கிய உலகில் முத்திரை பதித்தார்கள் தாமாகவே இலக்கியப் போட்டிகளில் பரிசு பெறுகி நார்கள். வெளியிலிருந்து வருபவர்கள் யாரும் இவர் =ளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கவில்லை.
அந்த அணுகு முறையே மட்டக்களப்பின் இலக் 2ய வளர்ச்சிக்கு ஏற்றது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் பயனாகவே செ. குனரத்தினம், மண்டூர்
அசோகா, எஸ். எ. எல். எம். ஹனீபா பித்தன். ஆ. பொன்னுத்துரை, முத்தழகு, அன்பும E முதவி போர் இங்கு உருவானார்கள் "மலர்' போன்ற
இலக்கிய சஞ்சிகை இங்கு மலர்ந்தது.
வெளியிலிருந்து வரும் விமர்சனப் புலிகள்' ால்லாப் பிரதேசங்களையும் விட்டு விட்டு மட்டக் களப்பு இலக்கியத்தின் "மந்த நிலையைச் சாடுவதும், தமக்குரிய பிறவேலைகளை யெல்லாம் ஒதுக்கிவிட்டு, மட்டக்களப்பு எழுத்தாளர்களைத் திருத்துவதே தமது த ன வ ய T ய க ட  ைம என்ற வகையில் நடந்து கொள்வதும் புதிராக உள்ளது.
மட்டக்களப்பில் "முற்போக்கு" எழுத்தாளர் =ளும் இருக்கிறார்கள். "பிற்போக்கு எழுத்தாளர் களும் இருக்கிறார்கள். அவர்களை அப்படியே விட்டு விடுங்கள். அவர்கள் த த் தம் பாதையில் நடை போடட்டும். தற்போது பல இளம் எழுத்தாளர்கள் தோன்றியுள்ளனர். அவர்களும் த த் தம் பானியில் எழுதிக்கொண்டு முன்னேறுகிறார்கள். அவர்கள்ை அப் படியே விடுங்கள். அதுவே ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
 
 
 
 
 
 
 

அதை விடுத்து, இவர்களெல்லாம் பிற்போக்கு எழுத்தாளர்களாக இருக்கிறார்கள். அவர்களை எல் லாம் முற்போக்கு எழுத்தாளர்களாக மாற்ற வேண்டும் என்ற தொனியில் பேசினால் அது வெறும் பேய்க் காட்டலே" யன்றி நடைமுறை சாத் தி ய மா ன காரியம் இல்லை,
உண்பையில் மட்டக்களப்பின் இலக்கிய வளர்ச்சி தரமானதா இல்லையா என்ற தீர்ப்பைக் காலம்தான் வழங்க வேண்டும். (காலம் அதைச் செய்து கொண்டு தான் இருக்கிறது). அந்த வேலையைச் செய்ய மற்ற வர்களுக்கு எவ்வித அருகதையும் இல்லை - எவ்வித உரிமையும் இல்லை.
கடந்த 50 ஆண்டுகளில் மட்டக்களப்பில் இலக் கிய வளர்ச்சி (மெதுவாகவேனும்) ஏற்பட்டுள்ளது. இலங்கையின் ஏனைய பிரதேசங்களோடு ஒ ப் பி டு ம் போது, பிரமாதமாகக் கூறுவதற்கு எதுவும் இல்லா விட்டாலும், திருப்திப்படும் அளவிற்காவது இலக்கிய வளர்ச்சி ஏற்பட்டுத்தான் உள்ளது. இது தானாகக் கணிய வேண்டிய கனி, தட்டிக்கனிய வைக்கமுடியாது.
சில வேண்டுகேரள்கள்:
அவரைப் போல் எழுதுவார் இல்லை; இவரை ப்போல் எழுதுவார் இல்லை என்று அங்கலாய்க் காதீர்கள். அது உங்கள் சுய விரு ப் புக ளே ய ன் றி பொதுவான விமர்சனக் குறிப்புக்கள் அல்ல.
மார்க்விஸ் எழுத்தாளர்களைச் சுட்டிக் காட்டி இவர்தான் சிறந்த எழுத்தாளர். இவருக்குப் liit தான் மட்டக்களப்பில் தரமான படைப்புக்கள் பற்றிய பிாக்ஞை ஏற்பட்டது என்றெல்லாம் கூறT தீர்கள். அது உங்கள் கோஷ்டி விசுவாசத்தை எடுத் துக் காட்டுமேயல்லாது, நேர்மையான விமர்சனத் தையல்ல.
மட்டக்களப்பின் F էn all எழுத்தாளர்களின் படைப்புகளையும் தேடிப்படியுங்கள், எழுதியவர் களைப் பார்க்காது எழுத்தை மட்டும் பாருங்கள். மு. போ. வட்டத்தைச் சேராதவர்களின் ஆக்கங்க ளையும் படியுங்கள். இவருடைய கதைகள் எல்லாம் இப்படித்தான் என்று கூறாமல், இன்ன இன்ன கதை கள் இப்படியானவை என்று கூறுங்கள்.
கோ ஷ் டி மனப்பான்மையோடு விமர்சனம் செய்ய முன்வராதீர்கள். பாதிப்புற்ற மனநிலையில் நேர்மையான நடுநிலை விமர்சனம் தோன்றாது. பதார்த்தப்படைப்போ , லட்சியப் படைப்போ கவிதை வார்ப்போ, நனவோடையோ, எதுவாக இருந்தாலும் அதில் படைப்பாற்றலையும் செய் நேர் த் தி யையும் நோக்குங்கள். மார்க்ளிலத்தை மட்டும் அளவு கோலா கக் கொள்ளாதீர்கள். வாழ்க்கை ஒரு சமுத்திரம் மார்க்ஸிஸம் அதில் ஒரு துளி மட்டுமே.
교||

Page 25
போடியார் பரிசு’
"மணிக்கவிராயர்"
கணபதி யண்னே! கொஞ்சம் காலத்தை யுணர்ந்து பாரு...! எனக்காக உழைத் துழைத்து என்னதான் லாபம் கண்டாய்? வயலிலே வேலை செய்யும் வயற்காரத் தொழிலாளிங்கே கொடி கட்டிப் பறக்க லாமா? நான் தரும் கூலி உந்தன் குடும்பத்தைக் காக்குமா - சொல்! நீ படும் இன்னல் - இடர்கள். கொஞ்சமா..? எனினும் உன்னால் என்குடி உயர்ந்த தண்ணே! நீ தந்த உழைப்பா லென்றன் வயல் பூத்துக் குலுங்கு தண்ணே!
நெஞ்சார உன்னைப் போற்றும் நானொரு போடியார் தான்! வயல் தந்த செல்வத்தா லென் பயல்களும் படித்துப் பட்டம் பெற்றுநற் பதவி தேடி. பெருமை போடிருக்கின் றார்கள்! புதல்விய ரெல்லாம் நல்ல பொன் புகழ் வரன்களோடு. பூரித்து வாழ் கின்றார்கள். யாவும் நீ வயலில் விட்ட வியர்வையின் மகிமையண்னே! சக்தியை சகதிக் குள்ளே. செலவிட்டு செல் வஞ் சேர்த்து பக்குவமாக எங்கள் பரம்பரை வாழச் செய்தாய்...! பக்தியும் பயமும் கொண்டு பகலெல்லாம் பாடுபட்டும்
பலன் என்ன கண்டா யண்ணே?
அயலவர் உயர்ச்சிக் காக அயராது உழைத்துக் கொட்டும் வயற்கார அண்ணே! கேளு!
22

கவிதைகள்
வியர்வையைத் துடைத்துப்போட துண்டொன்று தோளில் உண்டா? ஒடியலாய்த் தோன்றுமுந்தன் உடல் புது ஆடை கண்டு எத்தனை காலம் அண்ணே? குமர்களும் களிமண் வீடும் கல்யாணக் கோலம் காண காலம்தர்ன் போதுமா சொல்? பெறுகின்ற கூலி யுந்தன் நிலைமையை மாற்றுமா. சொல்?
ஆதலால். ஒன்று சொல்வேன் கணபதியண்ணே! கேளு! உனக்கொரு ஏக்கர் காணி இனாமாகத் தருதல் என்ற தீர்வுக்கு வந்து விட்டேன்! உயர்வுக்கு ஒன்று போதும் ஒன்பதாய்ப் பெருகும் நாளை.! ஒ மண்ணே! நீயும் ஒர்நாள் ஊருக்குள் போடியாராய் உள்ளவர் இல்லாதார்க்கு. உதவிடல் வேண்டு மின்றேல். கள் வரும் - இவரும் ஒன்றே! என்றொரு நூலிற் கண்டேன். ஏழ்மையின் உழைப்பில் சொர்க்கம் காணுவோர் நரகம் செல்வார்...! என்றொரு பக்கம் கண்டேன். நூலோர்கள் பொய்கள் Girit 63. Tii... ஆதலால் மெய்மை நெஞ்சில் மேலிட, உனக்கு இந்த பரிசினைத் தருகின்றேன் நான்! உள்ளவர் என்போ லுணர்ந்து இவ்விதம் செய்து நின்றால். உண்மையில் ஏழ்மை நீங்கும்.
உயர்ந்திடும் உழவர் வாழ்வே!

Page 26
இரும்பு ஆமை இட்ட மு
சோலைக்கிளி
முக்கி முக்கி இட்டது
என்னை,
நெரிச்சலென்றால் கடும் நெரிச்சல் புழு நெரிச்சல்: ஒருவருக்குள் ஒருவரி புகுந்து உடல் பொறுத்து பின் பிரிந்து கொள்ளும் இந்த நெடு நானும் இன்று ஒரு புழு
என் கண்ணுக்குள் ஒருத்தி குடியிருந் கால் நீட்டிப் போட்டபடி இடைக்கிடை நெஞ்சைச் சுரண்டினா? ஆத்மாவைத் தொட்டுச் சிரித்தாள்:
என் ஆத்மாவைத் தெர்ட்டவனின் g நல்ல தேனான இனிப்பு வாகனம் ஓடியது நீல வான்பாதை வழியே! முகிற் கிழவி ஒருத்தி அந்தப் பெண் இளமைக் காலத்தை நினைத்தாளோ துக்கம் மேலிட்டு கடுப்பு நீர் சுரந்தாள். மழையில்லை! சும்மா சின்னத் தூற்றல்.
எங்கிருந்து இந்தப் பூமி தட்டியது, வழியில்! வான் பாதை வழியாகப் போனாலு சேறும் சதுப்புமான ஊர் வந்தே சேர்ந்திடுமா? ஈ. சனியன், என்னை, இரும்பு ஆ
முட்டை
முக்கி முக்கி இட்டது, வாகனம்தான். அவள் உடைந்து பறந்திருப்பாள். கடும் நெரிச்சல், நான் இறங்கியது அருந் தப்பு ஆனால், நெஞ்சில்லை!
 

) 60 L
ம் பயண் வாகனத்தில்
து கெர்ண்டாள்
சிரிப்பு
பார்த்து தனது
ம், இந்த
ஆமை இடுவதைப்போல்
B

Page 27
ஆவி மனிதன் வி. சுதாகர்
மலைமுகட்டில் முட்டிவந்த காற்றின் இடுவலுக்குளின்னும் மனித இனத்தின் இரத்தப் பிசுபிசுப்பு
வறண்டதாகத் தெரியவில்லை! OO
பிணக்குவியலுக்குள் அரைகுறைக்காயங்களுடன் இரத்தமுதறி எழுந்த நான்ஒர் ஆவி மனிதனர் ய் நடக்கிறேன்:
OO
முற்றத்து வானில் ஷெல்லடிபட்டு விழுந்த ஒரு நிலாத் துண்டு என் கண்ணெதிரே நிலத்தில் துடிதுடித்துச் செத்துப் போனது! OO
வேப்பமரத்தடி ஆந்தை எலும்புத் துண்டைக். கொத்தி ருசிக்க
மற்றகழுகுக் கூட்டத்துடன் சேர்ந்து சண்டை பிடித்திழுத்த .
அருகிலொரு சிலந்தி வலை! O O
என்ன செய்வதென்றே தெரியாத சில நாய்களும், நரிகளும் பூனைகளும், பறவைகளும் மனித ஊனத்தைக் குடித்து
மண்டையோட்டு ரத்தத்தை ருசித்தது! OO
24

புதை குழிக்கு அருகில் மறைந்திருந்த நான்
T6 போர் வையையிழுத்துப் போர்த்தி நடக்கிறேன்
ஆவி மனிதனாய்.
Ο Ο
புல்வெளிப் பற்றைக்குள் கிடந்தஎலும்பும் மண்டையோடும் என்னைப்பார்த்துச் சிரித்தது மனிதா !
இந்த பூமிமரத்தின் ஆணிவேரை எந்த பிணந்தின்னிக் கூட்டம் சாய்த்ததென்று?
சாவதே வாழ்வ ானால்
அ. குமணன்
நர்ங்கள்
மரணத்துள் வாழ்கிறோம்: யுத்த விமானங்கள் அலறி திரிகின்றன. ஷெல்களும், குண்டுகளும் விழுந்து வெடிக்கின்றன: வீடுகள், தெருக்கள் இராணுவ முகாம்கள் சுடுகாடுகளாய் விரிந்து கிடக்கின்றன.
உரிமை, சனநாயகம், சட்டம் நீதி, இறைமை எல்லாவற்றையும் துப்பாக்கி முனையில் எங்களிடையே திணித்துவிட்டு அராஜக ஆட்சி பீடங்கள் அரசோச்சும் துர்ப்பாக்கியம்!

Page 28
எதை கேட்க? எப்படி கேட்க? இன வெறியில் தலைகீழாய் கட்டிதூக்கி இரும்புக் கம்பிகளால் எங்கள் தேகத்தை சிதைக்கலாம் ! கனரக வாகன சக்கரங்களின் கீழ்வைத்து தலைகளை உடைக்கலாம்! காணாமல் போன
பட்டியலிட்டு பிணங்களாய் குவித்து டயர்களை போட்டு எரிக்கலாம்! இன்னும். இன்னும் எங்களை வேரோடழிக்கும் கொடுமைகள்.
இருளில் வந்து கதவை தட்டி எழுப்பி மண்டையில் போட்டுவிட்டு போகும் மிருகப் பிறவிகளுக்கு இதெல்லாம் இயல்பாய் பழகிப் போன செயல்கள்!
எல்லாவற்றையும் அழித்து முடித்த பின் எத்தனை தலைகள், பயங்கரவாதப் பலிகள்-என எண்ணித் தரும் ஆயிரங்கள் யாருக்குத் தேவை? ஷெல்லடித்தும் குண்டு வெடித்தும் சிதறிப்போ ன சொந்தங்களை கொண்டு வந்து தருவார்களா கொடூர ஜென்மங்கள்!
கனரக ஆயுதங்களாலும் கவச வாகனங்களாலும் வீடுகளை இடித்தும், குடிசைகளை எரித்தும், உயிரை குடிக்கும் இராணுவ நடவடிக்கைகள் பேரினவாதிகளுக்கு தெற்கில் தேசம் மீட்கும் பிரச்சாரமாகலாம்! அதையே திரித்தும் மறுத்தும் வெளியுலக மேற்குகளை விரட்ட இருட்டடிப்பும் செய்யலாம்!
என்னவாயினும் என்ன? மிருகப் பிறவிகள் அறியார்.
of E56 இரத்தக் கறைபடிவுகளும் அழிவுகளும் இந்த மண்ணின் விடுதலை விருட்சத்தின்
உரம்!

பேய்ச் சமூகம் (LD, Osid5T
கடிகாரத்தின் முள்ளை கடுகதியில் திருப்பிக் கொண்டு இரவு நடுச்சாமம் 12 மணிக்குப் பின் அந்த சம்பவம் தொடங்கும் பெரும்பாலும் அவர்கள் படம் கலைந்து வருவார்கள் அல்லது பிரயாணத்தில் பஸ் இல்லாமல் பிந்தி வீடு வருவார்கள் வீதிக்கு குறுக்கே மரம் விழுந்து கிடக்கும் பிணவாடை அடிக்கும் சலங்கைச் சத்தம் ஒலிக்கும் இத்தனையும் தாண்டி தைரியமாக வருவார்கள் அழகான பெண்ணொருத்தி தன் கக்கத்தில் பிள்ளையொன்றை இடுக்கிக் கொண்டு நிற்பாள்
மந்திரம் தெரிந்தவர்கள் முணுமுணுத்து வருவார்கள் தெரியாத சில பேர்கள் சாறனை கழற்றி கையிலெடுத்துக் கொண்டு அரைஞானுடன் வருவார்கள்
நாய் குரைத்து இயலாமல் ஊளையிட்டு வருமாம் பேய் தாக்குப் பிடிக்காமல் மண்ணெறிந்து வருமாம்
சந்திக்கு வந்து சேர ஆள் ஒன்று குறுக் கறுக்கும் கவுட்டுக்குள்ளால் குனிந்து பார்த்தால் கால் நிலத்தில் படமாட்டா
கத்திக் கொண்டு வீட்டு வேலிக்கு மேலால் பாய்வார்கள் சத்தமாக வேலிக் கேற்றில் அடி ஒன்று போட்டு
பின் 'தப்பிற்றாய் போ' என்று எச்சரித்து பேய் போகும்
கடிகாரத்தின் முள்ளை கடுகதியில் திருப்பிக் கொண்டு
இரவு நடுச்சாமம் 12 மணிக்குப் பின் அந்த சம்பவம் தொடங்கும்.
S

Page 29
26
மீண்டும் வருவாய
மு. சடாட்சரம்
அருமை மகனே! என்பாதி உ பூகம்பம் வெடித்ததும் சில்லாங் கொட்டையாய்ச் சித உறவினர் வீடு, ஒரு சில நா. நிம்மதி தேய்பிறையாகி, அங்கும் பிரளயம் வந்ததே!
நீ உயிரைக் கையில் பிடித்தா என் கண்கள் மாரிக்குளமாக இரவில் உறங்கச் சென்றாய்
பின்னிரவில் சுற்றிவளைத்த சு வீதி அருகே வெயில் குளிக்கி என்ற செய்தி நெஞ்சில் நெரு சுவாலை பொங்க, இறைவர்க ஓடிவந்தேன் உனை மீட்க.
வேலி போட்டது பேய்க்காற்று வெடித்தது என் மனக்கோட்லி தலையில் விழுந்த அடி கொ(
உனது கருந்தாடி முகமும் இளம் பனைமரம் நடப்பது ( தினமும் என்கண்ணிர் மழைக் உன்னிரு தங்கைகளின் பெருமூ அதன் ஈரம் உடன் காயும்!
முப்பது மாதமாய் உன்னை
மதி நிறைந்த மகனே!
சிறு வயதில் தந்தையை இழ சீர்கெட்டுப் போகாமல்,
மாவிடித்தும் பிட்டவித்தும் ப உன் நிழல் எனக்குத் தஞ்செ
சர்வகலாசாலை விடுதலைக்கு சரியாக உண்ணவில்லை! அச்சுழிக்காற்றில் நீ சிக்காதிரு வீக்கம் இலாத பீக்கொம் (B( மங்கா விளக் கேற்றி மகிழன அன்பு மகனே;
இன்றும் அறுகைப் பிய்த்தெடு உலையில் வைத்தேன் உன்
பளிச்செனச் சிரித்தாய் பச்சை காணாமற் போனவர் பட்டிய கலங்கிக் கலங்கித் துடிக்கின்ே கண்ணிர் மழையைச் சொரிகி மீண்டும் வருவாயா என் மக

uGBT !
1றினோம் நாங்கள்! ள் தஞ்சம் கொடுத்தது!
rtfj !
அடுத்த ஊர்
ழிக்காற்றில் அள்ளுண்டு ன்றாய்}ப்பு மூட்டியது. ளைக் கெஞ்சித்தொழுது
.
D L... - ழம்புக்கும் கேட்டிருக்கும்
போல் நடையும் குள் நிழலாட மச்சில்
நம்பியே வாழ்கிறேன்
ந்த நீ,
டிப்பித்தேன்! மன்று.
வீடுவந்தாய்;
iந்தால்
om) -g,5 வத்திருப்பாய்!
த்து
நினைவாய்! 'ப் புல்லில்! லில் உனைச் சேர்த்து றன்!
ன்றேன்!
னே!

Page 30
வண்ணங்கள் மருதூர்க் கொத்தன்
பேயாப்" பெருமழை. கொல் விலங்குகள், கும் மிருட்டு, பேயும் உலாவும் இரவில் வழி போகின்றோம். பார்வைப் புலனும் பறிபோன கார6 பார்த்து வழிகாணுகின்ற பாக்கியமும் இழந்து விட்டோம்.
இடியோசை மோதி மூர்க்கத் தனம் புரியக் காதும் பிளந்ததனால் கேட்காச் செவிடானோம் . கல்லடித்து, முள் கிழித்து, கட்டைகளி கால்களிலே ஒன்றிரண்டா காயங்கள்:
நடைமெலிது.
தொட்டு வழிகாணத் தோதான கைகளையும் பட்டதெலாம் புண்ணாக்கப் பயன்பாடும் குறைந்துளது. ஊர்தல், தவழ்தல், அரைதல், உடல் முற்றாய்ச் சோர்தல்; தொல்லைகளோ சொல்லில் அடங்கா
எங்கேர தொலைவில், அடர்ந்த பெரும் கானகத்தில் கங்குல் குலவும் பாழ்மனையின் பொ கன்னங்கரிய மண் பூனைகள் உள்ளனவ அவற்றை, முண்டிப் பிடிக்கும் முனைவர் நாம்! பூனை எதற்கா? புரியவில்லை? மட்டி பூனையில் கொள்ளை மயிர்கள்; புரிய பூனை இறைச்சிப் ‘புரியாணி புசித்
கூனல் நிமிரும் இளமையும் குதிரும். சல்லாப சாகரத்தில் தமுக்கடிக்க வழி பிறக்கும்.
"என்ன பிசத்தலிது’ என்றெண்ண ே வீண் விண்ணாணம் பேசா தீர்; நேரங்கள் செலவாகும்.
இன்றைய யதார்த்தத்தின்
அச்சொட்டாம் வார்ப்புகளின் வண்ணங்கள் தாம் நாங்கள்! வாய்க்குள் ஏன் சிரிக்கின்றீர்?

ணத்தால்
ல் பட்டிடறி
து
ந்துகளில்
frr:Lð .
கள் நீர்! புமிப்போ. தீரேல் ;
வண்டTங்கரண் !
27

Page 31
மலையாளம் மூலம் கிறேசி
நான் எல்ஷேபா. பீற்றரின் மகள். பேதுரு என்னும் கல்லின் மேல் என் திருச்சபையைக் கட்டி எழுப்புவேன்’ என்று கிறீஸ்து நாதர் திருவாய் மலர்ந் தருளிய பீற்றர் அல்ல என்பிதா . ஆனாலும் என் தந்தையார் தன் மூத்த மகள் டீனம்மாவைத் திருச் சபைக்குக் கையளித்து அச்சபையைக் கட்டியெழுப்பத் தன்னாலான டாணி புரிந்துள்ளார். என் தாய் " " குதிராக வளர்ந்து விட்ட மூத்த பெண்ணுக்கு கல்யாணங்கட்டி வைப்பதைப் பற்றிக் கவலைப் படாமல் இருக்கிறீர்களே என்று அப்பாவைத் தினமும் நச்சரிப்பாள். அவள் நச்சரிப்புத்தாங்க முடியாமல் அவளைக் கடவுளுக்குக் கையளித்தார். கையளித்த அன்று வானத்தை நோக்கித் தன்கரங்களை உயர்த்தி அம்மாவைப் பார்த்து ஏளனித் துச் சிரித்தார். பின்னர் தன் வெற்றியைக் கொண் டா டச் சாராயத் தவறனைக்குச் செல்கையில், என் தாய் நீயெல்லாம் பிள்ளைகளைப் பெறுகிறாயே’’ என்று முனிந்து பற்களை நறநற வென்று கடித்துக் கொண்டாள்.
மூன்றாவது பெண் தன் வயிற்றிற் செத்துப் பிறந்த போது தன் தலையிலும் மார்பிலும் அடித்துப் புலம்பிய அம்மா நாட்டுப் பரியாரி திருச் சூரணத்தை முயல் ரத்தத்தோடு குழைத்து மருந்து கொடுத்த போது, அந்த ஒளஷதத்தினால் தனக்கு இனிப் பிள்ளையே பிறக்காது என்ற நம்பிக்கையிற் சமாதான மடைந்தாள்.
அப்பாவும் அம்மாவும் ஆளுக்காள் வசைமாரி பொழிந்து கொண்டு வாழ்க்கையை நடத்தினர். ஆனால் அவர்களின் சொற்கள் அல்ல; ரைப்பிஸ்ற் கிளாக் என்ற உத்தியோகம் என்னைக் காப்பாற்றியது. அந்த உத்தி யோகம் கிடைத்ததும் அச்செய்தியை டீனாட்சிக்குத் தெரிவிப்பதற்காகக் கன்னியர் மடத்தின் பென்னம் பெரிய சுவர்களூடாக அவளைக் காணச் சென்றேன். வெள்ளையுடைய ரிேந்த அக்கா வெளிறி மெலிந் திருந்தாள். அவள் கனவுகள் எல்லாம் மனதில் அமிழ்த்தி கன்னங்கரிய விழிகளில் மிதப்பது போல எனக்குத் தோன்றியது. என்னைவிட அழகியாக - பேரழகியாக இருந்த அக்காவின் தலை விதியை எண்ணி என் கண்களும் கலங்கின. டீனாட்சி கலங்கிய கண்களோடு என்னைத் தீண்டிய போது அவள் கரங்கள் இறந்த வர்களின் கரம் போலக் குளிர்வதை நான் உணர்ந்தேன். இளமை நினைவுகள் மீண்டும் மனதில் எழுகையில் ** அக்கா எனக்கு வேலை கிடைத்து விட்டது' என்ற வார்த்தைகளை என் உதடுகள் தட்டுத் தடுமாறி உதிர்த்தன.
28

9
ாறை
ஆங்கிலத்திலிருந்து தமிழில் வ. அ. இராசரத்தினம்
டீனாட்சி சிரித்தாள். அவள் சோகச் சிரிப்பு என்னுட் பனிக் கத்தியாய் இறங்கிற்று. நீண்ட பெரு மூச்சு விட்டபடி **நீ தப்பிவிட்டாய். நான் பைத்தியக் காரியாகி விட்டேன்' என்று சொல்லி மீண்டும் பெரு மூச்சு விட்டாள். எனக்குப் பைத்தியமே பிடித்து விட்டது போல இருந்தது கதவைத் திறந்து தள்ளிக் கொண்டு தெருவிலிறங்கினேன். மீண்டும் திரும்பிப் பார்த்தேன். அக்கா மடத்திலே உப்புத் தூணாய் உறைந்து நின்றாள்.
வீட்டிலே தூசு படிந்து கிடந்த என் கைப்பையை எடுத்தேன். தூசுதட்டிக் கொண்டிருக்கையில் என்பாதை எனக்குண்டு என்று மனத்துட் பிரகடனம் பண்ணிக் கொண்டேன். அப்பா நடுங்கும் விரல்களாற் தன் பணப்பையைத் திறந்தார். அவர் விரல்கள் நடுங்கி நடுங்கிக் கடைசியாய் அசமந்துவிட்டன. அம்மாவின் புகைபூத்த கண்களிற் தான் தனித்து விடப்பட்ட ஏக்கம் தெரிந்தது. ஆனாலும் நான் என் கைப்பையை வீசியபடி வீட்டை விட்டு வெளியேறினேன்.
காரியாலயச் சகபாடி ஒருத்தி மிருதுளா என்று தன்னைத்தானே எனக்கு அறிமுக ப் படுத் தி க் கொண்டாள். அவள் கழுத்துத் தாயத்தைத் தடவிக் கொண்டே என் இதயம் அத்தனை மென்மையாக இருப்பதாற்தான் எனக்கு என் தந்தை யார் மிருதுளT எனப் பெயர் சூட்டியதாகச் சொன்னபோது எனக்குக் கோபமும் ஆத்திரமுந்தான் வந்தது. அவள், தன் தந்தையார் அன்பும் ஆதரவும் கொண்ட அருமையான மனிதர் என்றபோது என் மனம் காய்ம காரத்தாற் புளுங்கியது. தன் இளமைக் கர லத்திற் தன் தந்தையார் ‘ரஸ்னாதி சூரணத்தை"த் தன் தலயிைற் தப்பித் தேய்த்துத் தன்னைக் குளிப்பாட்டித் தலைவரரிப் பின்னு வார் என்றாள் அவள். தான் மீண்டும் தன்னு டைய இளமைக் காலத்திற்கே திரும்பிவிட ஆசைப் படுகிறேன் என்று அவள் மகிழ்ச்சியோடு சொன்னது என் இளமைப் பருவத்து நினைவுகளைக் குடைந்து துன்புறுத்தியது.
இளம் பிராயத்திலே நான் எனக்கு முன்னால் நடப்பவர்களின் அடிமேல் அடிவைத்துப் பாய்ந்து பாய்ந்து நடப்பேன். டீனாச்சியும் நானும் எங்கள் குடிசைக் கருகில் கொல்லங்கல்லும் கிளித்தட்டும்’ விளையாடுவோம். அக்கா தன் பாவாடையை முழங் கால் வரை தூக்கிக் கொண்டு அதிலே பற்றிக் கொண்ட நாயுருவி விதைகளைப் பிடுங்குவாள். நான் முண்டு உடுத்தி சின்னத் தேங்காய்க் குழந்தையை' இடுப்பில்

Page 32
வைத்துக் கொண்டு அம்மா விளையாட்டு விளையா டுவேன். வானத்திற் தொங்கிய எங்கள் குழந்தை இல்லத்தில் மண்ணிற் காணப்படாத அத்தனை சுகங்களும் விரிந்து கிடந்தன.
ஆனால் மிருதுளாவைச் சந்தித்த பின்னர் நான் என் விடுதியிலிருந்து காரியாலயம் வரும்வரை எந்த மனிதரதும் பாதச் சுவடுகளைப் பின்பற்ற விரும்ப வில்லை. நான் தீர்மானத்தோடு விரைந்து நடந்தேன். காரியாலயத்தை அடைந்ததும் என் இருக்கையிலமர்ந்து கொண்டு என்னுள் எரிவேன். என் மன எரிவில் மாற்றத் தின் இடிமுழக்கங்கள் கேட்டன. பிடிவாதத்தோடும், திமி ரோடும் தட்டச்சு யந்திரத்துடன் ஒன்றித்து விடுவேன்.
திடீரென மிருதுளாவிற்குத் திருமணம் ஆயிற்று. ஒரு மாத விடுமுறையின் பின்னர் அவள் மீண்டும் காரியாலயம் திரும்பிய போது அவள் கண்களில் நித்திரையற்ற இரவுகளைக் காணமுடிந்தது. அவள் உதடுகளிற் களிப்புத்துள்ளிற்று. அவள் நெளிவு சுளிவு களில் ஒரு அடக்கம் தோன்றிற்று. ஆயினும் முந்தானை யை மீறிக் கொண்டு அவள் மார்பு திமிர்க்கையில் அதன் பொலிவில் ஆண்கள் ஏன் பெண்களும் கூட மயங்கினர். நான் என் ஒட்டிய மார்புக்காக வெட்கி னேன். பருத்திச் சேலைக்குள் என் ஒட்டிய மார்பை மறைக்க முயன்றேன்"
இப்போது மிருதுளா எவரோடும் அதிகம் பேசு வதில்லை. நாலைந்து நாட்களின் பின்னர் மீண்டும் மேடையிற் தோன்றும் புது நடிகனைப் போல அவள் வாயிலிருந்து வார்த்தைகள் கும்மாளத்தோடு வெளி வந்தன. அவள் வார்த்தைகள் என்னைக் கீறிக்கிழித்தன . அவள் தன் இதயக் கொலுவில் ஏற்றிய அன்பு பாராட் டியதன் தந்தையை இறக்கிவிட்டு அங்கே தன் கணவனை ஏற்றி வைத்திருந்தாள். அதைக் கண்டு நான் கசந்து சிரித்தேன். அவளதும் கணவனதும் படுக்கை இரகசி பங்கள் என்னை இம்சித்தன. என் இரவுகளின் வசந்தத் துயில்கள் எங்கோ பாதாளத்தை நோக்கிப் போய் விட்டன. என் கண்களை மூடினால் சிவந்த கண்களை u65) Ltil குடிகாரக் கணவன் கொடூரமான வார்த்தை களால் என்னைத் தூவிப்பது போன்ற எதிர்காலம் என் கண்களில் நிழலரடிற்று. ஒவ்வொரு நாட்காலை யிலும் துயிலெழுந்த போது என் நெஞ்சின் பாரமும் அதன் அழுத்தமும் அதிகரித்தன. கடைசியாய் நான் ஒரு டாக்டரை அல்லது ஒரு ஸ்பெஷலிஸ்றைக் கலந்தா லோசிக்க வேண்டும் என முடிவு கட்டினேன்.
குழுமா டாய்க் கறுத்த அந்த டாக்டரின் உருவமும், அவனுடைய பெரிய வட்டக் கண்களும், குறுகிய நெற் றியும் ' புதராய்ச் செறிந்த தலைமுடியும் எனக்கு ஒரு ராட்சசனையே நினைவூட்டின. அவனுடைய பரிசோத னைக்கு உள் ளானேன். அவன் தன் தஸ்கோப்பை என் மார்பில் அழுத்தினான். மூச்சு விடச் சொன்னான். பரிசோதனை முடிந்ததும் அவன் தலை பென்டுலம்

போல் ஆடியது. பின்னர் இருமிக்களைத்துப் பறவையின் கீச்சுக் குரலில் 'இருதயம் இருக்க வேண்டிய இடத்திலே உன்னுள் ஒரு பாறைதான் இருக்கிறது. அது இன்னமும் கடினமாக வளர்ந்து கொண்டிருக்கிறது' என்றான்.
நான் அதிர்ச்சியடையவில்லை. அதிர்ச்சியடை வதையே மறந்து விட்டிருந்தேன்.
அவன் மீண்டும் என் காய்ந்து உலர்ந்த நெஞ்சைக் காட்டி ** கடைசிச் சொட்டு இளமையும் மிருதுவும் உன்னுள் வரண்டு கொண்டிருக்கிறது’ என்றான்.
நான் கிளினிக்கை விட்டு வெளியே வந்தேன். இது மறைநூலின் அனுபந்தம் என்ற முடிவு என்னுள் முகிழ்கத்து கொதிக்கும் வெயிலில் வா ன த்  ைத அண்ணாந்து பார்ததேன். இந்தப் பாறையின் மேல் எதைக் கட்டப் போகிறாய்? என்ற வினாவிற்கு விடையாக இருள் என் கண்களை நிறைத்தது.
சுடப்பட்ட சூரியன் முகமட் அபார்
/ட்டரிப் பழம் போல வெடித்துக் கிடக்கிறது துரியன். நேற்றுத்தான் வானத்தை முத்தமிட்டு, முத்தமிட்டு அது - ஆசை தீர்த்து விளையாடியதை நான் பார்த்தேன். இன்றுவயிறையும் காணவில்லை வாயையும் காணவில்லை எல்லாம் செடி நாற்றம் நாங்கள்
பிடிபடும் போதும் துப்பாக்கியால் சுடுபடும் போதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததுதான் இந்தச் சூரியன்,
தரியனின்ஒவ்வொரு கதிர்களும் தலையால் தெறித்து பூமியில் தலைமாறி கிடக்கிறது. Uff (), d!
வாய் பேசத் தெரியாத அப்பாவி சூரியன் வெள்ளைப் புடவைகட்டி விதவையாய் திரியும் எங்கள் தாய்மாரோடு இனி வானமும் சேரட்டும்
சூரியன்தான் இல்லை!
29

Page 33
எனது வியட் ஆங்கில மூலம்: ஹீயிங் தங் நுவங்
எண்பது வயதிலும் எனது பாட்டி உடற் பலத் துடனேயே இருந்தாள். அவளது சொந்தப் பற்களால் சோளக் கதிரை மென்று சாப் பி டவும், கரும்பைக் கடித்து சக்கையைத் துப்பவும் முடிந்தன. இரு நாட் களுக்கொரு தடவை உணவுப் பொருட்கள் நிறைந்த பாரமான கூடையைச் சுமந்து கொண்டு ஒரு மணித்தி யாலம் நடந்து சந்தைக்குச் செல்வாள். பின்னர் அதே அளவு நேரம் நடந்து திரும்பி வருவாள். மிகவும் வய தாகி விட்ட போதிலும் அழகின் அடையாளங்கள் அவளில் மறைந்து போகவில்லை. அவளின் கைகள், கால்கள், முகம் எல்லாம் ஒரு காலத்தில் கவர்ச்சி சரமான இளம் பெண்ணாக அவள் இருந்திருக்கிறாள் என்பதை வெளிப்படுத்தின. காலத்தால் அவளின் இளமைத் தன் மையை முற்றிலும் வழித்தெறிய முடியவில்லை.
நாடகம் அ வளி ன் விருப்பமான விசயங்களில் ஒன்று. இந்த ஈடுபாடு வயதானதால் ஒன்றும் குறைந்து விடவில்லை. பட்டணத்துக்கு யாராவது நாடகக் குழு வினர் வந்து நிற்கும் போது அவள் எவ்வளவு முக்கிய வேலையில் ஈடுபட்டிருந்த போதிலும் ஒரு காட்சியை யாவது தவற விடமாட்டாள். அப்படி பல நாட்கள் யாரும் வராவிட்டால் தனது சொந்த நாடகம் ஒன் றுக்கான ஒழுங்குகளைச் செய்ய முனைந்து விடுவாள். ஒரே நேரத்தில் அதன் மனேஜராகவும், தயாரிப்பாள ராகவும் அவளே தொழிற்படுவாள். பெரும்பாலும் எனது பாட்டியின் நாடகங்கள் மெல்லிசை விரவியும் 3 (plgG) கொண்டனவாகவும் காணப்படும். கதா நாயகன் கடைசியில் கதாநாயகியைத் திருமணம் செய்து இனிதே வாழ்ந்திருப்பதாகவே எ ப் போது ம் அவை முடிவுறும் கதாநாயகனாக பேரப்பிள்ளைகளில் தனக்கு மிக விருப்பமான ஒருவனையே அவள் தேர்ந்தெடுப் பாள். கிழட்டு வயதில் கதாநாயகி வேஷமா என்று எனது சகோதரிகள் கேட்பார்கள். 'மனதில் இளமை யைக் கொண்டிருக்கும் எ வரும் இப்பாத்திரமேற்று நடிக்க முடியும்' என்று பாட்டி அவர்களுக்கு சொல் லுவாள்.
தான் மனசார விரும்பிக் காதலித்த ஒருவரையே பாட்டி ம ண ந் தி ரு ந் தாள். ஆனால் அவர் முற்று முழுதாக அவளிலிருந்து வேறுபட்டவர். மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவர். சத்தம் போட்டு சிரிக்கவே மாட் டார். மெதுவாகத் தான் பேசுவார். பாட்டியைப்போல உடல் வலுவுள்ளவருமல்ல. தான் ஒரு "கல்விமான்’ ஆக இருப்பதால்தான் நோஞ்சானாக இருக்கின்றேன் என்று சாட்டு சொல்வார். கல்யாணம் முடித்த புதிதில் எனது பாட்டனாரும் பாட்டியாரும் ஒரு ஹோட்டலுக் குப் போயிருந்தார்கள். ஒரு நோஞ்சான் பயல் அழகான
30

நாமிய பாட்டி
தமிழில்: சங்கமம்
இளம் பெண்ணை மனைவியாகக் கொண்டிருப்பதைக் கண்ட ரவுடி ஒருவன் பாட்டனாரை நையாண்டி பண்ணத் தொடங்கினான்.
'ஏய் சூம்பல் கோழி, இதெல்லாம் உனக்குரிய இடமில்லை’ என்றவாறான கேலிப் பேச்சுக்களுடன் ஆரம்பித்தான். வெலவெலத்துப்போன பாட்டனார் சாப்பிட்டது பாதி சாப்பிடாதது பாதியாக ஹோட் டலை விட்டு வெளி யேற ஆயத்தமானார். பாட்டி அவரின் சேட்டைப் பிடித்து இழுத்து இருக்கையில் அமரும்படி சாடை காட்டினாள். ஒன்றும் நடக்காத மாதிரி தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
தனது நையாண்டிப் பேச்சுக்களால் ஒரு விளை வும் ஏற்படாதது கண்டு சலிப்படைந்த ரவுடி இருக் கையை விட்டு எழுந்து அவர்கள் சாப்பிட்டுக் கொண் டிருந்த மேசைக்கு வந்தான். பாட்டனாரின் சாப்பாட் டுக் குச்சிகளைப் பறித்தான். பாட்டி பாய்ந்து அவனி டமிருந்த குச் சி க  ைள ப் பிடுங்கிக் கொண்டு அவன் கன்ன எலும் பில் தனது முழங் கையினால் அடியொன்று விட்டாள். அவ்வடி மிகவும் பலமானதாகவும் விரை வானதாகவும் இருந்ததால் நிலைதடுமாறி நிலத்தில் விழுந்தான். தெருவோரக் கா  ைடயர்கள் செய்வது போல் மேலும் அவனைத் தாக்கி எழும்பாமல் பண் ணுவதற்கு பதிலாக பாட்டி ஆளை எழும்ப விட்டாள். அவன் எழும்பிய உடன் இடையிலிருந்த மேசைக்கு உதைத்தாள். அதிலிருந்த உணவுகளும், பானங்களும் எங்கும் சிதறின. இனிமேலும் அவன் ஏதும் செய்வதற் கிடையில் அவனது மோவாயில் பாட்டி ஒரு உதை விட்டாள். அப்படி ஒரு விரைவான அடியை பாட்ட னார் ஒருபோதும் கண்டதே இல்லையாம். தடாரென்று ஒரு சத்தம் மாத்திரமே அவருக்கு கேட்டதாம். பின்னர் அவர் கண்டது அவன் கரணமடித்து நிலத்தில் மயங்கிக் கிடப்பதை.
இதைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் ஆச்சரிய மும் மகிழ்ச்சியுமடைந்தனர். அந்த ஹோட்டல் முத லாளிக்கு இனி இல்லை என்ற சந்தோஷம். ஏனெனில் இந்த ரவுடி ஒவ்வொரு நாளும் வந்து வயிறுபுடைக்க உண்டு குடித்து விட்டு காசு கொடுக்காமல் போய் விடுவான். அந்தப் பகுதியில் பெரிய கராட்டிக் கார னாக அவன் இருந்தமையால் ஹோட்டல் முதலாளி அவனை எதிர்க்கப் பயப்பட்டார். ரவுடியின் கூட்டா ளிகள் அவனை ஆசுவாசப் படுத்திக் கொண்டிருக்க மற்ற யாவரும் பாட்டியைச் சூழ்ந்து கொண்டனர். யார் அவளுக்கு கராட்டி  ெசா ல் லி க் கொடுத்த து என்று எல்லோரும் வினவினர்.
* வேறு யார்? எனது புருசன் தான்' என்று பாட்டி பதிலளித்தாள்.

Page 34
ஹோட்டலில் நடந்த இந்த சண்டைக்கு பின்னர் பாட்டனார் கராட்டியில் பெரிய பயில் வான் என்று மக்கள் எண்ணத் தொடங்கினர். தனது கராட்டி அடி ஆட்களைக் கொன்று விடக் கூடும் என்ற பயத்தினால் தான் அதை அவர் பாவியாமல் இருக்கிறார், என்று அவர்கள் நினைத்தனர். எட்டு வயதில் பாட்டி கராட் டியை தனது மாமாவிடமிருந்து கற்றுக்கொண்டாளாம்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு பாட்டனார் எந்த தொந்தரவுக்கும் உட்பட்டதில்லை. அலுவலக நிமித்தம் பட்டணப் பக்கம் போனால் மதிப்புடன் நடாத்தப் பட்டார். வீதியில் எதிர்ப்படுபவர்கள் மரியாதையாக தலையசைத்துச் சென்றனர்.
ஒருநாட்காலை எ ன்  ைன கூட்டிக் கொண்டு பாட்டி வெளியே புறப்பட்டாள். நாங்கள் அப்பகுதி யின் முழுத் தோற்றத்தையும் பார்க்கக் கூடியதான ஒறு குன்று ஒன்றில் ஏறினோம். உச்சியை அடைந்த போது கீழே தெரிந்த நெல் வயல்களையும், அடி வர்னத்து ம  ைல  ைய யு ம் அதில் வளைந்து ஓடிய ஆற்றையும் பார்த்தாள். சிறுமியாக இருந்த போது எருமை மாட்டுப் பட்டியை மேய்த்துக் கொண்டு இந்த ஆற்றுக்கு சென்று வந்திருக்கிறாள். கிராமத்தின் மற்ற ஒறார்களுடன் சேர்ந்து இதில் இறங்கி நீந்தி விளை யாடி இருக்கிறாள்.
பின்னர் நாங்கள் அவளுடைய புரு ச  ைன யு ம் செத்துப்போன பிள்ளைகளையும் அடக்கம் செய் திருந்த இட த் து க் குச் சென்றோம். அங்கு தனது கணவனின் கல்லறையை தடவியவாறு பாட்டி சொன் னாள்.
அன்பே விரைவில் நானும் உன்னிடம் வந்து விடுவேன்’
அதன் பின்னர் நாங்கள் தோட்டத்துக்குச் சென் றோம். அங்கு தனது புருசன் நாட்டியிருந்த பழ மரங் களைப் பாட்டி உற்று நோ க் கி னா ள். அவர் தனக்கு புதிய குழந்தை ஒன்று பிறக்கும் போது புதி தாக ஒரு பழ மரக் கன்றை நாட்டுவது வழக்கம். கடைசியாக நாங்கள் தோட்டத்திலிருந்து வெளியேறும் போது எனது தங்கையும் வந்து எங்களுடன் இணைந்து கொண்டாள். வழியில் குளத்தில் நீந்திக் கொண்டிருந்த வாத்துகளுக்கு நானும் எனது தங்கையும் உணவுத் துணுக்குகளை எறிந்து விளையாடியவாறு வீடு திரும் பினோம்.
அன்று இரவு எனது பாட்டி சரியாக சாப்பிட வில்லை. தலையை வாரி நல்ல ஆடைகளிலொன்றை

அணிந்து கொண்டாள். அவள் எங்கோ திரும்பவும் வெளியே போகப் போகிறாள் என்று நாங்கள் நினைத் தோம் அவ்வாறில்லாமல் அவள் நேரே படுக்கைக்குச் சென்றாள். தன்னை ஒருவரும் தொந்தரவு பண்ணக் கூடாது என்று வேண்டிக் கொண்டாள்.
வீட்டு நாய் ஏதோ அபகாரியம் நிகழப்போவதை மோப்பம் பிடித்துக் கொண்டதுபோல் நிலை கொள் ளாமல் தவித்தது. வீட்டார் ஒவ்வொரு வரை யு பி பரபரப்பாக ஏறிட்டுப்பார்த்தது. சற்றைக் கொருதரம் மெல்லிய குரலில் ஊளையும் விட்டது. நள்ளிரவில் அம்மா எழுந்து பாட்டி படுத்திருந்த அறைக்கு சென்ற போது அவளின் உடலில் உயிர் இரு க் க வில்  ைல. வழமையாக நித்திரை கொள்வது போல் கண்களை மூடி அவள் படுத்திருந்தாள். எனது பாட்டி இறந்து விட்டாள் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள எனக்கு வெகு நேரம் பிடித்தது. நான் எப்போதாவது வீட்டில் தோட்டத்தில் அல்லது வயல் வெளியில் இருக்கும் போது அவள் முகம் என் முன்னே தெளிவாக தோன் றுவதுபோல் இருக்கும். பல வருடங்கள் கடந்தபின்னர் இன்றும் கூட அவளோடு கடைசியாக கதைத்தது சில நாட்களுக்கு முன்னர் தான் நடந்தது டோல் தோன்றுகிறது.
குறிப்பு:- ஆயிரக் கணக்கான வியட்நாமியர்கள் அமெரிக் காவில் வாழ்கிறார்கள். இவர்கள் பல்வேறு நிர்ப்பந்தங்களால் தமது தாய் நாட்டை விட்டு வெளி யேறி ய வ ர் கள். தமது நாட்டின் நினைவுகளை நெஞ்சில் நிறுத்தி ஏங்குப வர்கள் அவர்களின் பலர். அவர்களில் ஒருவர் ஹபயிங் கங் நுவங், அவர் தனது நாட்டு நினைவுகளில் தோ ய் ந் து எழுதிய நூல் நான் இழந்த நாடு” என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது அதிலிருந்து ஒரு பகுதி.
கவிஞர் ஆனந்தன் நினைவாக, நன்றி கடனாக
சம்மாந்துறை மக்கள் ஒரு குறிப்பு இதழ் வெளிட்டுள் ளார்கள். கடுகு சிறிதாயினும் காரமாக உள்ளது. தென் கிழக்கு பல்கலைக் கழக தமிழ் விரிவுரையாளர் சம்மாந்துறை றமீஸ் அப்துல்லாஹ் சம் மா ந் துறை மக்களுக்காக இதை தொகுத்துள்ளார். ஆனந்தனின் வாழ்க்கை சுருக்கம் த த்ரூபமாக சித்தரிக்கப்பட் டுள்ளது பல்வேறுபட்ட மக்கள் மத்தியில் ஆனந்தனின் செயற்ப ட்டை, அவனுக்கிருந்த  ெக ள ர வ த்  ைத வெளிக் கொணர்வதில் ற மீ ஸி ன் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது.
3.

Page 35
நான்கு ஐரோப்பியப் படங்கள்
கே. எஸ். சிவகுமாரன்
புது தில்லித் திரைப்பட விழாவிற்கு பிரான்சிலி ருந்து வந்த படங்களில் குறிப்பிடத்தக்கதொன்று லியோன் - புரொபெஷனல் என்பது. செய்தொழில் நேர்த் தியாளன் லியோன் என்பது இதன் பொருள். இப்படம் கலைத்தரமாக அமைந்த பொழுதும், இதில் வன்செயல் கள், அர்த்த மற்ற கொலைகள், கொலைக்காகக் கொலைகள் (மோற்ஸாட்டின் "சிம்பனி இசையொழுங் குக்குக்கேற்ப ஒருவன் ஆட்களைச் சுட்டுக் கொல்கிறான்) போன்றவை இருந்தமையினால், தார்மீக ரீதியில் இப்படத்தை என்னால் ரசிக்க முடியவில்லை.
இந்தப் படத்தின் திரை நாடகத்தை எழுதி நெறிப்படுத்தியவர் இன்று பிரான்சில் பெயர் பெற்ற நெறியாளர் நடிகராக விளங்கும் லுக் பெஸோன். இவ ருடைய தபிக் ப்ளூ, நிக்கிட்டா போன்றவை குறிப்பிடத் தக்கவை.
லியோன் படத்தில் கரி ஒல்ட்மன் என்ற மகத்தான நடிகர் நடிக்கிறார். இவர் நடித்த மற்றொரு படமான த ஸ்கார்லட் லெட்டர் என்ற படமும் புது தில்லித் திரைப் படவிழாவில் காண்பிக்கப்பட்டது.
லியோன் படக்கதை மீமாநகரமாகிய நியூ யோர்க்கில் இடம் பெறுகிறது. இங்கு ஒரு பகுதியிலே மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த மக்கள் வசிக் கிறார்கள். இவர்களில் கூலிக்குக் கொலை செய்யும் ஒருவனும் அப்பார்ட் மென்ட் ஒன்றில் தனியறையில் வசித்து வருகிறான். அதே விடுதியில் தனது பெற்றோ ருடன் மட்டில்டா என்ற 13 வயதுச் சிறுமியும் வசித்து வருகிறாள்.
ஒரு நாள் அவள் விடுதி திரும்பும் போது, தனது குடும்பத்தினர் அனைவரும் கொல்லப்பட்டிருப்பதைக் ண்டு அதிர்ச்சியும் அச்சமும் கொள்கிறாள். இந்தக் கொலைகளைச் செய்தவன் ஸ்டன்ஸ்பீல்ட் என்ற பொலிஸ் ஏவலாளி. இந்தப் பாத்திரத்தைத் தான் கரி ஒல்ட்மன் ஏற்று நடிக்கிறார். கூலிக்குக் கொலை செய்பவனாக நடிப்பவன் ஜ்ஷோன் ரெனோ. இவன் கொலையை ஒரு தொழிலகச் செய்பவன். என்றாலும் இளகிய மனது டையவன். அனாதை யாய் போன இச் சிறுமி மீது கழிவிரக்கங் கொண்டு அவளைத்தன் அறையில் தங்க வைத்துப் பாதுகாப்பு அளிக்கிறான். தனது குடும்பத்தைப் பலி கொண்டவர்களைப் பலியெடுப்பதற்காக அவள் லியோன் என்ற கொலையாளியிடம் துப்பாக்கிப் பிரயோ கத்தைக் கற்றுக் கொள்கிறாள்.
32

இதற்கிடையில் ஸ்டான்ஸ்பீல்ட் என்ற பொலிஸ் உளவாளி மீண்டும் லியோன் இருப்பிடம் வந்து பல கொலைகளைச் செய்கிறான். ஆபத்தான, அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தினிடையே, விறுவிறுப்பான முறையில் ஸ்டான்ஸ் பீல்ட்டும், லியோனும் மோதிக் கொள்கிறார்கள். இருவருமே ப லி யா கி ன் றனர். மெட்டில்டா தப்பிவிடுகிறாள்.
இந்தப் படத்தில் என்னைக் கவர்ந்த அம்சங்கள் நடிப்பு, எரிக்ஸோரா அமைத்துள்ள இசை, இசையை அதன் தொழிற்பாட்டுத் தேவை குறித்துப் பிரயோகிக்கும் பண்பை தரமான மேலை நாட்டுப் படங்களில் கேட்டு மகிழலாம்.
கிரீஸ் - கிரேக்கம் - நாட்டில் இன்று தலை சிறந்த நெறியாளராக விளங்குபவர் தியோ அஞ்சலோ பெளலஸ். இவருடைய நெறியாள்கையில் யூலிஸவலின் கூர்நோக்கு (Usses gaze) என்ற படம் காட்டப்பட்டது. யூலிஸிஸஸ் என்பது ஒரு கிரேக்க காவிய நாயகனது பெயர். இந்தப் பெயர் ஒரு குறியீடு, பண்பாட்டுத் தொகுதியைத் தொக்கி நிற்கிறது. இப்படம். மூன்று மணித்தியாலங்கள் ஒடும் இந்தப்படம் திரைப்பட விமர்சகர்களையும், திரைப்படத் துறையில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்களையும் மாத்திரம் தி ரு ப் தி ப் படுத்தக் கூடியது.
கதையின் பேர்க்கு இதுதான்.
அமெரிக்காவில் அஞ்ஞாதவாசம் செய்துவிட்டு கிரேக்க திரைப்பட நெறியாளரான A தனது கிரேக்க கிராமமாகிய டொலமெசியாவுக்குத் திரும்புகிறான். மனக்கியாய் சகோதரர்கள் பற்றிய ஆவணச் சித்திரம் ஒன்றை அவன் தயாரிக்க விரும்புகிறான். யார் இந்தச் சகோதரர்கள்? இவர்கள் இந் நூ ற் ற ர ண் டி ன் ஆரம்பத்தில் திருப்பு முனை நெறியாளர்களாக விளங் கியவர்கள். இவர்கள் போல்கன் (Balkan) வளைகுடா மக்களின் சாதார ண வாழ்க்கையை படம் பிடிப்பதற்காக சென்ற பொழுது இனவெறிப் போராட்டங்களின் மத் தியில் கஷ்டப்பட்டவர்கள். இந்த நெறியாளர்களின் படம் ஒன்றின் மூன்று சுருள்களை கிரேக்க நெறியாளன் Aயினால் கண்டு பிடிக்க முடியவில்லை. இவை சரயேவோ திரைப்படச் சுவடி நிலையத்தில் இருப்பதாக அறிந்து அப்பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஊடாக சரயேவோ வுக்குப் பயணம் செய்கிறான். அவனுடைய இந்த நீண்ட பயணத்தின் போது அவன் தனது சொந்த வரலாற்றையும். தனது விருப்பு வெறுப்புக்களையும் அறிந்து முதிர்ச்சி பெறுகிறான்.
இந்தியாவின் 27 ஆவது அனைத்துலகத் திரைப் படவிழ வின் இறுதிப்படமாகக் காட்டப்பட்டது, வாழும் இத்தாலிய நெறியாளரான மைக்கல் அஞ்சலோ அன்டோனியோனியின் படம். படத் தின் பெயர்

Page 36
பியோண்ட் த க்ளவுட்ஸ் (முகில்களுக்கு அப்பால்) அன் டோனியின் உத வி யா ள ராக வின் வெண்டர்ஸ் செயற்பட்டிருக்கிறார்.
தொண்ணுாறு வயதுக்கு மேற்பட்ட அந்தோணி யோனி இரண்டு ஆண்டுகளுக்கு முன் கல்கத்தா திரைப் படவிழாவுக்கு வந்திருந்தார். இத்தாலியரான இவர் உலகின் தலைசிறந்த நெறியாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார் இவர் நெறிப்படுத்தியBlow up (த கர்த் துவிடு/பெரிதாக்கு) Zabrieski Point (ஸப்ரீஸ்கி முனை) The Passenger (பயணி) ஆகியன பல வருடங்களுக்கு முன் இலங்கையில் காட்டப்பட்டன.
வின் உவெண்டர்ஸ், லிஸ்பன் ஸ்டோரியை நெறிப் படுத்திய அதே நெறியாளர் தான்.
முகில்களுக்கு அப்பால் படத்தில் நான்கு கதைகள் காட்டப்படுகின்றன. இவை காதல் கதைகள், எதிர் பாராத திருப்பங்கள் இந்தக் காதற் கதைகளில் ஏற் படுகின்றன. முதலாவது கதையில், ஒருவன் காதலின் பத்தை விட வெறும் காமத்தை நாடுகிறான். இரண்டாவது கதையில், தனது தந்தையைத் தானே கொன்றான் என்று ஒத்துக் கொள்ளும் ஒருத்தி மீது ஒருத்தன் மையல் கொள்கிறான். மூன்றாவது கதையில் தோல்வி கண்ட வெவ்வேறு இருவர் சந்தித்து இணை கிறார்கள். நான்காவது கதையில் ஒரு பெண் காதல னையும் கடவுளையும் ஒரே சமயத்தில் காதலிக்கிறாள். நான்கு வெவ்வேறு கதைகள் அடங்கிய இந்தப்படத்தில் சினிமா என்ற ஊடகம் எவ்வாறு நேர்த்தியாகப் பயன் படுகிறது என்பதை உயர்மட்ட ரசிகர்கள் அறிந்து பயன் பெற்றிருப்பார்கள்.
போர்த்துக்கல் நெறி யா ள ர் மனோவெல்டி ஒலிவியேரா நெறிப்படுத்திய சுவாரஸ்யமான படம் த கொன்வென்ட் (கன் னியா ஸ் தி ரி மடம்). மைக்கல் படோவிச் ஒர் அமெரிக்கப் பேராசிரியர். இவருடைய ஆராய்ச்சியின் படி சேக்ஸ்ர்பியர் ஒர் ஆங்கிலேயரல்லர். மாறாக ஒரு ஸ்பானியர். இதனை நிரூபிக்க இவர்; தமது துணை வி யா ர் ஹெலென் சகிதம் புராதன அஞ்ஞாபித்த கன்னியாஸ்த்ரி மடத்துக்குச் செல்கிறார் இந்தக் கொன்வென்ட்டின் பாது காவ ல ர் பெயர் பல்டார். பின்னையவருக்கு பேராசிரியரின் மனைவியின் மேலே ஒரு கண், பேராசிரியரின் ஆராய்ச்சிக்கு உதவ, கொன்வென்டின் சுவடி நிலையப் புதுப் பொறுப்பா ளரான பியடேட்டிடம் பேராசிரியர் அனுப்பப்படுகிறார். கத்தரீன் டெணியீவ் இந்தச் சுவடிகள் காப்பாளராகப் பணிபுரிகிறார் பேராசிரியர் காப்பாளர் மீது மையல் கொள்கிறார். சாதாரண நபர்களிடம் காணக் கூடிய விசித்திரமான மனிதப் பண்புகள் இந்தப் படத்தில் காட்டப்படுகின்றன.

சொல்லத் துடிக்கிறது.
எஸ். எஸ். ரர் ஜன்.
உயிரிழந்த சடலங்க(ள்)ளை ஆள்வதற்காகவா ஆட்சியில் ஏறியது?
கட்டம் கட்டமாய் நடாத்தும் பேச்சு வார்த்தைகளால் சமாதானம் எப்போது சந்திக்கு வருவது?
வாழைமரத்தில் ஊஞ்சல் கட்டவா தேர்தல்கள் வைப்பது? இருட்டுக்கு வெள்ளையடிக்கவா இவர்களைச் சொன்னது?
சொன்னதைப் புதைக்கவா தேர்தல் விஞ்ஞாபனங்களை அள்ளி வீசியது?
குருதியின் வெள்ளத்தில் தமிழர்கள் மட்டுந்தானா காலம் முழுதும் நீச்சலடிப்பது?
கழுகுகளின் சுதந்திரம் வேண்டியா புறாக்களைத் தூதுவிடுவது?
ஓரினத்தை அழிப்பதற்காகவா ஒடேந்தி
உலகெலாம் கடன்வாங்குவது?
சுதந்திரக் காற்றை கனவுகளிலா நாம் சுவாசித்து மகிழ்வது?
புழுக்களாய் நெளியும் எம்மை குளவியாக்கவா தொடர்ந்தும் நசிப்பது?
அடம்பன் கொடிகள் திரண்டால். நடப்பதை.. எப்போது நீங்கள் உணர்வது?
33

Page 37
கிறுக்கல் அன்ரனி பால்ராஜ்
இந்தியன் பார்த்தீர்களா? தமிழ்த் திரையுலகின் தொழில் நுட்பக் கலை வளர்ச்சிக்கு இந்தியன் இன்னுமோர் உதாரணம். காலத்துக்குக் காலம் ஏதேனும் ஒரு கொப்பில் தொங்கும் தமிழ்த் திரையுலகின் சமீபத்திய நோய், சுதந்திரப் போராட்டம் , ரயில் பெட்டிகளாய் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்திமந்தாரை, சிறைச்சாலை, இந்தியன். சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜி ஆதரவாளனாக இயங்கிய சேனாபதிக்கு இன்றைய இந்தியாவின் லஞ்ச மனோபாவம் அதிர்ச்சியை அளிக்கிறது. வர் மக்கலை தெரிந்த அவன் கத்தியை எடுத்து ஒவ்வொருவராக - மகன் உட்பட தீர்த்துக் கட்டுகிறான். பலவீனமான தளத்தில் கட்டியெழுப்பப் படுகின்ற இத்திரைப்படத்தில் லஞ்ச மூலங்களான அரசியல் வாதிகளை இந்தியன் கண்டு கொள்வதில் லை. அவர்களைத் தெலுங்குப் படவுலகும், கண்சிவந்த தமிழ்த்திரைக் கதாநாயகர்களும் கவனித்துக் கொள் வார்கள் என்பது இந்தியனின் எண் ணம் போலும். எனினும் இத்திரைப்படத்தில் கிலாசித்துப் பேசக் கூடிய அம்சங்கள் இல்லாமலில்லை. கமல இற ச ல் , ஷங்கர் , சுஜாதா, ஏ ஆர் ரஹ்மான், ஜீவா, லெனின் போன்ற இன்றைய தேதி வியாபாரத்துக்கு உத்தரவாதமளிக்கக் கூடிய புத்திசாலித்தனமான மூளைகள் இந்தியனின் பின்னணியில் உள்ளன. வர்த்தக நோக்கங்களை நிறை வேற்ற வரும் திரைப்படங்கள் பாமரத்தனமாகவும், கொச்சைத் தன்மையுடனுந்தான் வரும் என்றில்லை. இந்தியன் போன்று மாறுவேஷத்திலும் வரும்.
திருமணத்திற்குப் பின்னர் ஒரு போதும் நான் நடிக்க மாட்டேன் என்று கூறும் நடிகைகளைப் போல மசா லாப் படங்களை ஒரு போதும் நான் எடுக்க மாட்டேன் என்று சத்தியம் பண்ணும் இயக்குநர்களின் பேட்டிகளை அவ்வப்போது பார்த்திருக்கின்றேன். வெற்றிகரமான
LD FIT Glit Li படங்களை உருவாக்குவது, பப்படம் பொரிப்பது போல் அப்படியொன்றும் எளிதான காரி யமில்லை. வெற்றிகரமான மசாலாப் படங்களை
உருவாக்குவது எப்படி என்ற கேள்விக்கு அழுத்தந் திருத்தமான பதில் தெரிந்திருந்தால் ஏ. வி. எம். இன்றைக்கும் முரட்டுக் காளை, முரட்டுப்பூனை, பாt:ம் புலி, பறக்கும் கரடி என்று மாறிமாறிப் படங்கள் எடுத்துக் கொண்டிருக்கக் கூடும். யானையை வைத்து இன்னும் அரை டசின் படங்களைத் தேவர் பிலிம்ஸ் தயாரித்திருக்க முடியும். மோசமான தரத்துக்கு இறங் காதவர்கள் எனப் பெயர் பெற்ற தமிழ் இயக்குநர்கள் கூட பொழுது போக்குப் படங்கள் என்ற பெயரில் செய்து பார்த்த முயற்சிகள் தோல்விகளையே தழுவின. பாலு மகேந்திராவின் நீங்கள் கேட்டவை, உன் கண்ணில் நீர் வழிந்தால், மகேந்திரனின் அழகிய சண்ணே, கண்ணுக்கு மை எழுது, ஊ ர் ப் ப ஞ் சா ய த், து பாலச்சந்தரின் டூயட், பாரதிராஜாவின் கொடி பறக்குது.
 

கெப்டன் மகள் போன்றவை உதாா னங்கள். காலத் துக்குத் தகுந்த மசாலா என்ற கணக்கை சிறப்பாகப் போட்டு முடிக்கக் கூடிய இயக்குநர்களே வர்த்தக சினிமாவுலகில் தாக்குப் பிடிக்கக் கூடியவர்கள்.
இதை எழுதும் போது பு தி ய வ ர் க ள |ா ன ஆர். கே. செல்வமணி, மணிரத்தினம், ஷங்கர் போன்ற வர்கள் நினைவுக்கு வருகின்றார்கள். தமிழ் நாட்டுப் பத்திரிகைகளில் முன்பக்கத்தில் இடம் பிடித்த பிரசித்தி பெற்ற தலைப்புகள் இவர்களுடைய திரைப் படங்களுக் குப் போதுமானவையாக அமைந்து விடுகின்றன. ஆட் டோ சங்கர் கைது, சந்தனக் கடத்தல் வீரப்பன், கிட்னி திருட்டு, சந்திரலேகா மீதான அசிட் வீச்சு, ராஜீவ் படுகொலை, சிதம்பரம் காவல் நிலையக் கற்பழிப்பு, பம்பாய் இந்து-முஸ்லிம் கலவரம், பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுப் போராட்டம் போன்ற ஒற்றை வரிகள் இவர்களுக்கு போதுமானவை. மாயைகளை நிஜத் தோற்றங்களாகக் காண்பிப்பதில் இவர்கள் குறளி வித்தைக் காரர்களுக்கு சளைத்தவர்களல்ல. உண்மை யின் உருவம் சிதைக்கப்பட்டு திரையை மாயத் தோற் றங்கள் கைப்பற்றுகின்றன, பிரமாண்டமான படங்களில் பங்கு கொள்ளும் ஷங்கர் பொழுது போக்கு அம்சங் களைத் தி கட்டாத முறையில் வழங்குவதில் முன்ன னியில் இருக்கிறார். வெகுஜன ரசனைக்குரிய படங் களுக்கும்கலைப்படைப்புகளுக்குமிடையேயான தொங்கு பாலத்தில் மணிரத்தினம் நின்று கொண்டிருக்கிறார். மெளனராகம், நாயகன், அஞ்சலி போன்ற மனதை நெகிழ வைக்கும் படங்கள் மணிரத்தினத்தின் அந்தஸ்த்தை உயர்த்துகின்றன. பல சரிவுகள், தடு மாற்றங்கள், சமரசங்கள் இருந்த போ தி லும் ஆர். கே. செல்வமணியும் பந்தயத்தில் இன்றைக்கும் இருக்கின்றார். அண்மையில் வெளிவந்த அவருடைய மக்களாட்சி தமிழ் நாட்டு அரசியல் பற்றிய மிகச் சிறந்த கிண்டல். புலன் விசாரணையின் முற்பகுதியும் சிறப்பாக அமைந்தது. இம் மூன்று பேரிடமும் நான் காணும் ஒற்றுமை அம்சங்கள் இரண்டு, ஒன்று. மசாலாப் படங்களுக்குரிய புளித்துப் போன காட்சிகளை துரக்கி எறிந்து விட்டு நவீன யுகத்துக்கேற்ப இவர்கள் சிந்திக்க முனைவது. மற்றது ஊன்றுகோலாக விளங்கக் கூடிய வெறும் தெரழில் நுட்பங்களையே இவர்கள் மூவரும் கலை எனக் கருதுவது. ஆபத்தானவர்களின் கைகளி லுள்ள ஊன்றுகோல் ஆயுதம் போன்ற தல்லவா?
நான் கவிஞனுமில்லை. நல்ல ரசிகனுமில்லை. ஆனால் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. எல்லோரும் இந்நாட்டின் மன்னர்கள் என்டது போய் எல்லோரும் இந்நாட்டின் கவிஞர்களாகி, இன்று வாரப்பத்திரிகை களின் பக்க மூலைகளில் குந்திக் கொண்டிருக்கிறார்கள். ராமன் வரதட்சணை வில்லை எப்போது உடைப்பான் என்பது போன்ற வினாக்கள், ஸ்னேகிதி, ஸ்னேகிதி, ஸ்வப்னம், ஸ்யம்வரம் போன்ற ஏராளமான ஸ்ஸ்களைக் கொண்ட பாம்புச் சீறல்கள், உன் கூந்தலில் பூவாகவா
34

Page 38
உன் காலில் கொலுசாகவா என்ற சரணங்கள், சூரியக் கோழி முட்டை போட்டு, சந்திர ஆடு குட்டி ஈன்று, அமில மழையில் தெருவைப் புணர்ந்து கரியமுகிலில் குறியைக் கழுவும் கஞ்சா மயக்கங்கள், போபால் விஷ வாயு, பொஸ்னியா, ஓஸோன் படலம், நெல்சன் மண்டேலா என சர்வதேசக் கரடி விடுதல், அய்யாத் துரை அபூபக்கர், ஆரியபாலா, அல்பேட் ஆகிய நால்வரும் கைகோர்த்து வெண்புறா மேலே பறக்க, அடிக்கும் சமாதானக் கும்மி. இவற்றுக்கு வெகுஜனப் பத்திரிகைகளில் கவிதைகள் என்று செல்லப் பெயர். சீரியஸாக எழுதக் கூடிய சிலரும் ஞானப்பழத்துக்காக ஞாலம் சுற்றிய முருகனைப் போல் சுற்றோ சுற்றென்று சுற்றுகிறார்கள். காதுகளிலுந்தான், கஞ்சாப்பழக்கம் எனக்கு இல்லாததால் பல கவிதைகளின் அர்த்தங்களைப் புரிந்து கொள்ளும் பாக்கியத்தை இழந்து விட்டேன். இன்னும் சில கவிதைகள் தமிழில் எழுதி, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, மறுபடியும் தமிழ் சப் டைட்டிலுடன் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. “மதுரைக்கு வந்த இந்த சோதனையை எண்ணி ஏங்கிக் கொண்டிருந்த வேளையில் அண்மையில் வெளி பான சரிநிகர் 99வது இதழில் இளவாலை விஜயேந்திரனின் படையினர் இறந்து போவதெப்படி?’ என்ற கவிதையைப் படித் அலட்டலில்லாமல், சொல்ல வந்ததைச் சுருக்கமாகத் தேன். தெளிவாக எட்டுகிறார் அவர்.
*ராஜாதிராஜ ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர என்ற முன்னுரையாளர்களின் கட்டியங்கள் எவையு மில்லாமலே எஸ். வாசு தேவ ன், நட்சத் தி ர ன், செவ்விந்தியன் ஆகியோரும் மனதில் பதியும் வண்ணம் அமைதியாக எழுதுகின்றனர். நாட்டில் அவ்வப்போது இவர்களால் மழையும் பெய்கிறது.
சுமார் இருபது வருட ஏகபோக ஆட்சிக்குப் பின்னர் ராஜாவின் கொடி தமிழ்த்திரையுலகில் சற்றுத் தாழப் பறக்கின்றது. ஏ. ஆர். ரஹ்மான் இன்றைய சினிமா ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் முதன்மை இசை யமைப்பாளர் ஆகி விட்டார். சுப்பையா நாயுடு, கே. வி. மகாதேவன், ஜி. ராமநாதன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, இளையராஜா வரிசையில் ரஹ்மானும் ஒரு புதிய பாணியாளராக விளங்குகிறார். அவருடைய நிழலில் ஒளி ந் து , நகலெடுக்க ஆகக்குறைந்தது ஆறு இசையமைப்பாளர்களாவது இருக்கின்றார்க . . நரம்புகளை முறுக்கேற்றும் தாளக் கட்டுக்கள் கொண்ட அதிரடி இசை என்றவுடன் ரஹ்மானின் ஞாபகம் வருவது உண்மை. ஆனால் அது மட்டும் ரஹ்மான் ஆகாது. எழுபதுகளின் பிற்பகுதியிலிருந்து எண்பதுகளின் முற்பகுதி வரை இளையராஜாவிடம் காணப்பட்ட அந்தப் புதுமை வேகம், பரீட்சார்த்த முனைப்பு, எள்ளி நகையாடல்கள் மீதான அலட்சியம் போன்ற உண்மைக் கலைஞனின் தீவிர மனோபாவம் ரஹ் மானிடமும் அமைந்துள்ளன. ஒரு காலத்தில் மனதை வ ரு டி ப், பரவசம் த ந் த இ  ைள ய ர T ஜா வி ன்

ஒரு வானவில் போல, தல சட்டுதே வானம், ஒரு ராகம் பாடலே டு, வான் மேகங்களே, என் இரிைய பொன் நிலா வே அள்ளித் தந்த வசனம், பொன் மாலைப் பொழுது, அநீதிமழை விழியில் விழுந்து, பூவில் வண்டு கூடும். வா வா வசந்தமே நீதனே என் பொன் வசந்தம், கண்டேன் எங்கும். ஏதேதோ எண்ணம் வளர்த்தேன், நிலாவே வட, அடி ஆத்தடி பேச குதே போ குதே, கங்கையாற்றில் நின்று கொண்டு, காலைத் தென்றல் பாடி வரும், பருவமே புதிய பாடல் பாடு போன்ற பாடல்களுக்கு நிகரானவை ரஹ்மானிடமும் இல்லாமலில்லை. நிலாக் கசய்கிறது, மார்கழிப் பூவே, என்ன வளே, உயிரே உயிரே, ஆத்தங்கரை மரமே, அஞ்சலி அஞ்சலி, சித்திரை நிலவு, கண்ணுக் தி மையழகு, கண்ணா வரே ..இப்படிப் பல. மேற்கத்திய இசை, மெல்லிசை ததும்பும் சாஸ்த்ரீயம், நாட்டுப்புற இசை, ரொக், பொப், ரெகே,கானா, கஸல், கவாலி, இந்துஸ்தானி GT6 நானாவித ரசனைகளுக்கும் தீனி போடும் ரஹ்மானின் இன்னொரு சிறப்பம்சம், பிரபல பாடகர்களின் குத்த கையை ஒழித்துக் கட்டியது. சுரேஷ் பீட்டர், சாகுல் ஹமீது, ஸ்வர்ணலதா, சுஜாதா, அனுபமா ,கெரோலின், உன்னி கிருஷ்ணன், உதித்நாராயண், ஹரிகரன், மாஸ்டர் பிரகாஷ் , றோய் ஜேம்ஸ், மின்மினி, சுபா போன்ற பல ரகமான குரல்களையும் இவர் பயன்படுத்துகின்றார். இசை அதிகாரம் செலுத்தும் இன்றைய குழலில் அக்கடா துக்கடா, முக்காப்புலா போன்ற, தவமிருந்து பெற்ற சொற்கள் பாடலொன்றுக்குப் போதுமானவையாகி விட்டன. பட்டினியுடன் வரும் பாடகர்களும் தங்கள் பங்குக்குத் தமிழ்ச் சொற்களை மென்று, கடித்து, துப்பி விடுகின்றார்கள். மெல்ல அல்ல, தமிழ் கொஞ்சம் வேகமாகவே செத்துக் கொண்டிருக்கிறது. ரஹ்மானின் பங்கு அதில் கணிசம்.
ஏற்கனவே சொந்தச் சுமைகள் என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்ட நவதர்சிகளின் கவனமும் அக்கறையும் இப் பிரதேச ஓவியக்கலையின் பக்கமாக வந்திருக்கின்றது. கோடி புண்ணியம் கிட்டி, சொர்க் கத்தில் அவர்களுக்கு இடம் கிடைப்பதாக, தமது ஒவியம் எனப் பெருமையுடன் சுட்டிக்காட்ட எதுவும் இல்லாத பூஜ்யநிலையில், ஓவியம் என்பது ஒவியனின் தீவிர மொழி என்பதை உணராமல், காலத்தையும் உணர்வு களையும் பிரதி பலிக்காமல் சில நகலெடுப்புகளையும், சில அட்டைப்டடப் பாசாங்குகளையும் ஆலையில்லா ஊரில் இலுப்பை பூக்களாக்கிக் காட்டுகின்றோம்.
வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைகள் தமிழ் நாட்டின் வீர - சந்தானம் என்ற ஒவியனை அதிர வைத்து, "முகில்களின் மீது நெருப்பாக எழ, நமது தூரிகைகளோ நுனிப்புல் மேய்கின்றன. ஒவியக் கலை அதை அ ர் த் தம் புரி யா ம ல் கிறுக்கி விட்டு அட்டை ஓவியம் என்று சொல்லும் ஒருவரின் தலை முடியையும், அதை விளக்கம் கே ட் கா ம லே யே அட்டையில் பிரசுரிக்கும் நூலாசிரியரின் ஒரு பக்க மீசையையும், இறக்கிவிடல் ஓவியக் கலை வளரப் பெரிதும் உதவும்.
35

Page 39
எனது பக்கம்
சர்வதேச மகளிக் தினம் கொண்டாட பாதிப் புற்ற பெண்கள் அரங்கம் அடுக்கெடுத்தது. அதில், அகில இலங்கை சிறுகதை போட்டியும் ஒரு அம்சமாக் கப்பட்டிருந்தது. போட்டிக்கதை பரிசீலனைக்கு ஒரு தசாப்தத்தின் பின்பு திரு. உமா வரதராஜன் அவர் களை சந்தித்து கதைத்துக்கொண்டிருந்தபோது, கதை யோடு கதையாக, களத்தை மீண்டும் ' கொண்டுவர அவர் ஊக்க விதை தூவினார்.
இது 24.02.96 ல் நடைபெற்றது. அன்றிலிருந்து களத்தின் மீள் வருகைக்கான சிந்தனை நெஞ்சில் சூல் கொண்டு வளரலாயிற்று.
1984, 85 களில் க ள ம் வெளிவந்த போது ஞானரதன், மகாதேவா, முனைவன், அமரர் ஆனந்தன் டி. சிவராம் இன்னும் பலர் ஒன்று சேர்ந்து உழைத் தனர்; ஊக்கம் தந்தனர்; உற்சாகமூட்டினர்; பங்கு பணி பல ஆற்றினர்.
அன்றும் சரி, இன்றும் சரி ஏன் நாளையும் கூட கனமும் காத்திரமுமாக தமிழில் இலக்கிய சஞ்சிகை ஒன்று தொடர்ச்சியாக உரிய காலத்தில் பொலிவுடன் வெளியிடுவதற்கு தட்டுப்பாடாகவும் இடைஞ்சலாக வும் இருப்பது படைப்புகளே. தரமான படைப்புகளை எமது படைப்பாளிகளிடமிருந்து பெறுவதிலும் கல்லில் நார் உரித்து விடலாம். இதற்கு பல காரணிகள் உண்டு. இவைகளை வென்று களம் சாதனை படைக் குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இலக்கியத்தினூடாக. சமூக சிந்தனைகளை மேம்படச் செய்தல் களத்தின் நோக்கமாக இருக்கும்.
O
80 களின் பின்பு ஈழத்து இலக்கியப் பரப்பில் புதியவர்க்ள் பலர் ஆரோக்கியமான வளர்ச்சியுடன் காலூன்றி தடம் பதித்து நீண்ட பயணம் தொடர் கின்றனர். களம் அவர்களை அறிந்து கொள்வதற்கும் அவர்களின் ஆக்கங்களை தாங்கி வெளிவருவதற்கும் விருப்பம் கொண்டுள்ளது. மேலும் புதியவர்களை கணம் பண்ணுவதற்கும். களம் அமைத்து கொடுப்பதற்கும் தயாராக உள்ளது. இச் செய்தி எங்கும் பரவுவதாக.
36

பெண் படைப்பாளிகள் மு ன் னு க் கு வருதல் வேண்டும். படைப்பிலக்கியத்தில் ஆர்வமும் அக்கறையும் ஈடுபாடும் முயற்சியும் கொள்ளுதல் வேண்டும், படைப் பிலக்கியத்தில் சாதனைகள் படைத்தல் வேண்டும். இது 'பெண்களுக்கான அறைகூவல்.
களம் மூத்த த லை முறை யி னருக் கும் புதிய தலைமுறையினருக்கும் இடைத் தலைமுறையினருக்கும் உறவுப் பாலமாக விளங்கும்.
O
களத்திற்கு ஆண்டுச் ச ந் தா வே ரா மாதாந்த சந்தாவோ இல்லை. களம் நேரடியாகப் பெற விரும் புவோர் தமது பெயர் முகவரிகளை நிர்வாகி, களம், கமலகம் வீதி, அக்கரைப்பற்று - 07 என்ற முகவரிக்கு அனுப்பி வைத்தால் களம் தபால் செலவின்றி அனுப்பி வைக்கப்படும். களம் கிடைத்தவுடன் அ த ற் கா ன பணத்தை காசோலையாகவோ, காசுக் க ட் ட  ைள யா க வோ தபாலில் தாமதமின்றி அனுப்பி வைத் துதவுதல் வேண்டும்.
O
களம் வளர்ச்சி நிதிக்கு இ ைல க் கி ய ம ணி அ. இக்பால் அவர்கள் ரூபா. 250/- கு கசோலை அனுப்பி வைத்துள்ளார். களம் வளர்எசிக்கு பரோ பகாரிகளின் உ த வி க  ைள எதிர்பார்க்கின்றோம். உங்களின் உதவி எவ்வளவு சிறியதாக இருப்பினும் அது களத்தின் நீடித்த நிலைப்பிற்கு உதவுவதாக அமையும் .
O
களம் பல்வேறு பட்ட இலக்கிய சிந்தனைகளின் தளம். எதையும், எவரையும் சாராமல் அறிவுபூர்வ மான சர்ச்சைகளுக்கும், தரமான இலக்கியப் படைப்பு களுக்கும் மரியாதை செய்கின்ற இடம் இது. இவ் இதழில் அதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். பழைய எழுத்தாளர்கள் - புதிய எழுத்தாளர்கள், மரபுக் கவிதை - புதுக்கவிதை, மார் க் ஸியப் பார்  ைவ - அழகியல் பார்வை எனப் பல்வேறு தன்மைகள் இந்த 40 பக்கங்களில் படிந்து கிடப்பதை அறிவீர்கள்.
திரு. அந்தனி ஜீவா அவர்கள் அனுப்பி வைத்த குன்றின் குரல் சஞ்சிகை கிடைக்கப் பெற்றோ ம். அடுத்து வரும் இதழ்களில் சஞ்சிகைகள், நூல்கள் பற்றிய விமர்சனங்கள் இடம் பெறும். தமது வெளி யீடுகள் பற்றி மதிப்புரை வே ண் டு வோ ர் எமது முகவரிக்கு பிரதியொன்றை அனுப்பி வைக்குமாறு வேண்டுகின்றோம்.
ஆசிரியர்

Page 40
இன்றைய
1ெi ),
ــــــــ
* p =іп 1 т, 1 fн,
வத" பு
தோடர்பு +ே
இனப்புச்.
Clear Com
No: 27 D, Main Street, KALMUNA I.
1 I II) u, r
li:
சேவையின் அவசியத்தை உங்களுக்காக நாம் கீழ்வரும் ே
"இளரியர்
T. P. O 65 - 4737
O67-243 O.
ь т ы 1. біт
வெளிநாடுகளி லு
MSAMqALLMLSSSMMS MS MTSMS S SSMMeAS SLLLS S
"கிளியர் கொம்' -
يا
കത്ത് തൈ'ഥധഥ7ങ്ങ്
டு i அ1 - த்திற் , 31 நே ܕܩܨ ܨ * ܒܩܨ ,二* ܒܦܚ ويعي
Ħi' l | T | | | நபு ரீத விடை 114. 1.1ா
uS S S S SS t L S CCOS SSS STT T C C L S S S SS
ாள்வதற்கு
வளி, | | 1 || 4 |
திருப்தி பெ
LSLSASSLLL LSS SSJSSJSLL LSSYSL LLSSLL SSSSeeSeSYJSLLSSSLS LSLS LSLS
ஆொம்'
பிரதான விதி கல்முனை,
O67 243C) O65, 4.737
LL SL ASY Se eSJSLL SSSSLSLSJSLLSSSYSLezSJSLLSSSL SS LLLLLS
உங்கள் விட்டில் நடைபெறும் பிரச்சிபா 11 வெளி பிடங்களிi பு வ நந்து 31 த நாங்கள் அறிவேப்
பல 3 எட்சா இ | ரு விட பாங் , ஈகடழந்து 1ே எாதபும் நாங்கள் அறிவே
தேவை L13 ,ே 1ங்களில் புவி "சுங் , எகு
புவி" 11
வெளிட பார் 11 டிந்த
எ1 வருப 1ே1 து ந 1ங்கள் உங்11
ܨ=ܨ
தெ ஈ
O65-4725
йј яъ l I It i "is" i II i
<
Marutha
S. M. Buildir Main Street. MAR UTHA
CLEAR
Tillstånd: Re:4 r. () L.) W1B (
LLLLLS TLTMMLLSMMMMS LLLMMMLSMLMLSSSLL SSSLLMSSSLSSSMA

LLSL LL SLSSaMSSS SSMMM SMMMSMaS SL MLMLLTLLLLSSS
CLEAR COW
உலகில் தொலைத் தொடர்புச் நாங்கள் அறிந்ததனால்தான் சவைகளை வழங்குகின்றோம்.
I, нът , in 1ா , 1, I IL ii l நீர்
+11H, түн., III
StT tLL SS SS SSLL tt tt SS S Ct t L S TS tt C S S S tT
| | 1 = 1,1°7 L 1+, sit" (le le sa v) 4 ன் நர், !
sig -
т) нь I h h! Ч. 5і і
SkkKSJJSkS LLLSJJLLLL SJSLLLJSYSLLLLL SJSKLLSSJJJSLSk SekSKL L0SL LLS
ருதமுனை கொமியுனிகேஸன்
பிரதான விதி, மருத முனை. T, P. Օ65-4725 ()6 7-2082 - 1. ()67 2082 065-ዖ725
SYkSJSLLSJJSKKSYYSSLSLSJSLLLSJSYSSLL LLJSYSueSYSJSLL LLSSLLLSJJSeeS LL
ы 1 551
ம் 1ங் . எடோ துக்க: ம 15 நிகழக ஈஎாடோ
. وې - و يعطي * 1 : 1 т, 1ң i =11 | 1 +, т., н, ң з'+, тsїт 11 1p14 t:1п 1і ї һы +*11
எ.கா " தோ புகா பெற பு + பாத்தால், HITT I i I
III
$1 தாடர்புகள் - 1 Іл) 111 ч. IIш чї Hங்கள் 11 டிந்து
"ே பிங், நாங்கள் சிறு வரும் 5.
1க்கங் bғын, 1 + 11 விடு எருக்கும், வியாபார நி1% பங்களுக்கும்
= "i = "" = = = = ''; (T11 (41%) பெற்றுத்தருகின்நோய்
O65-4737
munai Gommunication
1g
MUNA KA LMUNAI.
COM
- 9 T. I'll n 581.D1.3 է Գ8032
ൈീ|ീ| *";
thin
Egri
རྒྱ་ཚོli་
ginklu
I
嵩
الأقلية
豐

Page 41
நல்வாழ்த்துக்கள்
இப்பிதழின் ப எண் முகம் 3 , . 1 п
எ1 ப்
உமா 1
1. i 3
| இ |
F li, I, II, III
| 1 , .
1. |
I. i ii
III 1 - .
கi y வி, சுத
ம
1), т.
Ti, n.,
L | H, L i ii
11 L1, 1 +, 11
hill, it ishes frcini:
| H---- B'" I IE

குட்வின் ஒட்டோ அச்சகம்
T__
வடிவிங்கம்
துன்பது
I, Till, it
வரும 11
,சின
| III.
)
F ||
| || || || II"
11n
நாகர்
-лы з51
II,
i 1 ILI I
미 || || 1
III i II i
SINGER
: '', IT- "TI | TITEL. 133{,}1}