கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: களம் 1996.12/1997.01

Page 1
\30 டிசம்பர் 96 ட
 


Page 2
7
PooBLASING
Book - Sellers, Station Importe
Trus
340
CO T'Phone:

HAM BOOK DEPOT
ers, News Agents, Publishers rs & Exporters
st Complex, Sea Street,
lombo - 1 1
422321, 337313
༽།

Page 3
இணை ஆசிரியர்கள்
பரராஸ் வாரித்தம்பி
அன்ரனி பால்ராஜ்
முகப்போவியம்
நெஞ்சத்தீ:
வாசுகி ஜெய்சங்கர்
ஓவியங்கள்
கே. மனோகரன்
சிவ. வரதராஜன் gig. LD5ife
G6)I6flui LII 6NIsi
களம் ஃபவுண்டேஷன்
g TfL Tagh,
திருமதி வி. சிவயோகம்
அக்கரைப்பற்று - 07
 

ரஷ்மி, எம். கே. எம். ஷகீப் வ. ஐ. ச ஜெயபாலன், சோலைக்கிளி, எஸ். ஜெய்சங்கர், எச். எம். பாறுாக் திருக்கோவில் கவியுவன், சிவ வரதராஜன், என். சண்முகலிங்கன், நட்சத்திரன், செவ்விந்தியன், வாசுதேவன், சண்முகம் சிவலிங்கம், சு. வில்வரெத்தினம், கவிரன்,
வாகரை வாணன்
மற்றும் சி. சிவசேகரம், ஷகீப் ஆகியோரின் மொழி
பெயர்ப்புக்கள்
பீஷாம் ஸஹானி - தமிழில் சோ. பத்மநாதன் வ. அ. இராசரெத்தினம் நடின் கோடிமர் - தமிழில் சங்கமம்
எஸ். எம். ஜே. பைஸ்தீன், சி. சிவசேகரம் கொ றோ, கொன்ஸ்ரன்ரைன் வீ. ஆனந்தன், மு. பொன்னம்பலம்
கே. எஸ். சிவகுமாரன், ஏ. இக்பால்
கடிதங்களும் கருத்துக்களும், எனது பக்கம், கிறுக்கல்

Page 4


Page 5
கடிதங்களும் கருத்து
களம் வழமை போலவே காத்திரமான விடயதானங்களுடன் கனதியாகவே வந்துள்ளது. அட்சரப்பிழைகளின் மீது கூடிய கவனம் செலுத்தவும். மட்டக்களப்பு கண. மகேஸ்வரன்
களம் கிடைத்தது. களத்தில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் கனதியானவை. ஒரு சிறுகதை மட்டும் அமைந்திருந்தால். கதையே வேறு, என்ன செய்ய, எனது சோம்பல், உங்களுக்கு வேதனைதான். ஒட்டமாவடி ஸ். எல். எம். ஹனிபா
- - - - உமா வரதராஜனால் வடிவமைக்கப்பட்ட அட்டை நன்றாகவிருக்கிறது. ‘எழுத்தும் ஆளுமையும்' என்ற தலைப்பில் முறையே சண்முகம் சிவலிங்கம், உமாவரதராஜன் ஆகியோர் எழுதியவற்றைப் படித்தேன். கே. டானியலின் சுயதரிசனம் இளந்தலைமுறைக்கு பயன்மிக்கது. மூத்த எழுத்தாளர் அ. ஸ. அப்துஸ் ஸமதுவின் முதற் கதை அனுபவம் அவர் காலத்து தகவல்களை அறிந்து கொள்ள உதவுகிறது. அன்புமணியின் கட்டுரைக்கு "மட்டக்களப்பின் இலக்கிய வளர்ச்சி” என்பதற்கு பதிலாக மட்டக்களப்பின் இலக்கிய வளர்ச்சியினை மட்டந்தட்டும் முயற்சிகள்’ என்ற தலைப்பு பொருத்தமானது. அன்புமணியின் ஆத்மார்த்த வேதனை நெஞ்சை நோக வைக்கிறது. ஒன்றை உறுதியாகச் சொல்லுகிறேன்"கிழக்கிலுதிக்கும் சூரியனின் கதிர்களைக் கரங்களால் பொத்திவிட முடியாது”. எனது வியட்நாமிய பாட்டி நல்லதொரு தெரிவு கவிதைகளில் மருதூர்க் கொத்தனின் "வண்ணங்கள்” எனக்கு மிகவும் பிடித்துள்ளது. கொழும்பு 13. ராஜபூரீகாந்தன்
அக்கரைப்பற்று-கல்முனை பிரதேச மண், தமிழ் முஸ்லிம் கலாசார உறவுகளின் நாற்றங்காலான மண்ணாகவே என்றும் இருந்திருக்கிறது. களம் அதனைச் செம்மைப்படுத்தி வளமுள்ள விதைப்பண்ணையாக்க வேண்டும். பெரியவர் அ. ஸ. அப்துஸ்ஸமது அவர்கள் விபுலானந்தரைப்பற்றி எழுதிய சித்திரத்தை வெஸ்லி கல்லூரி நாடகமாக மேடையேற்றியதாக வாசித்தபோது உள்ளம் நெகிழ்ந்தது. இதுதான் உங்கள் மண். இதுதான் உங்கள் களம். அப்துஸ் ஸமது அவர்கள் தனது நினைவுக் குறிப்புகளை எழுத வேண்டும்.
 

எனக்கென்னவோ இப்போது தமிழ் முஸ்லிம் மக்களது நல்லுறவுக்கான போராட்டம் பின்னர் தமிழ் முஸ்லிம் மக்கள் ஆட்சி வடகிழக்கில் ஏற்பட்ட பிறகு வடகிழக்கு சிங்கள மக்களுக்காகவும் ஆதிவாசிகளான வேடர்களுக்காகவும், சிற்றினக் குழுக்களான குறவர்கள், பறங்கியர்கள் போன்றவர்களுக்காகவும் தமிழ் முஸ்லிம் தலைமைகளுடன் போராடுதல் என எனது வாழ்வு கழிந்து போனால் போதுமென்றாகிவிட்டது.
கொழும்பு. வ. ஐ. ச ஜெயபாலன்
அட்டை அமைப்பு உமாவரதராஜனின் வடிவமைப்பில் நுட்பங்கள் நன்கு வெளிப்பட்டுள்ளன. களத்தின் விலை சராசரி வாசகன் சக்திக்கு எட்டாதது. கவிதைகள் மு. சடாச்சரனின் கவிதை ஒன்றைத் தவிர ஏனையவை வழக்கமான பல்லவிதான். மேல்நாட்டு திரைப்படங்கள் கட்டுரை எந்த வாசகர்களுக்கு? தமிழ் சினிமா பற்றியே ஒழுங்காக அறிந்து கொள்ளாதவர்கள் ஆங்கில ஜேர்மன் பிரெஞ்ச் படங்களைப் பற்றிய விமர்சனங்களால் பெறும் பயன் யாது? அட்டைப்படம் ? ஏதோ உயர்ந்த கலாவடிவம் என்ற தோரணையில் இதை வெளியிட்டுள்ளீர்கள். இந்த மாயையிலிருந்து விடுபட்டு நாம் எமது மண்ணுக்குத் திரும்ப வேண்டும். Այլ լd,456ոմւյ அன்புமணி
களத்தில் வீ ஆனந்தனின் புகைப்படத்தை கண்டு கண்களில் கண்ணிர் பெருகியது. ஆரையம்பதி (f.e. Ga, Gaar
உங்கள் பிடிவாதம் தொடர காலம் துணை இருக்க வேண்டுகிறேன். மட்டக்களப்பு வாசுதேவன்
களத்தின் உருவ அளவு கைக்கு அடக்கமாகவும் இல்லை, கவர்ச்சியாகவும் இல்லை. இப்போதைய களத்தை இரண்டாக மடித்து வரக்கூடிய அளவுக்கு கொண்டு வாருங்கள், அல்லது கணையாழி அளவுக்கு வரலாம். வெள்ளவத்தை Gj. garangua

Page 6
களம் 6வதை விட 7வது காத்திரமாக வரவேண்டும். கொழும்பு -9/aჩ4,6თf aჯზიJa
கோஷ்டிகளாகி தமது கோஷ்டி நலன்களுக்காக சிறுபத்திரிகைக3 வெளிவரும் இன்றைய அவலம் மிக்க தமிழ்ச் சூழலில் பல்வேறுபட் கருத்துடையவர்களுக்கும் களம் அமைத்து, களம் வந்தது (அன்புமணியிலிருந்து உமாவரதராஜன் வரை) மெச்சத்தக்கது. இனி வரும் இதழ்களி: அன்புமணியிலிருந்து உமாவரதராஜன் வரையானவர்களின் கட்டுரைகளுக்கு வருகின்ற எதிர்வினைகளையும் பிரசுரிப்பீர்கள் என்று நம்புகின்றேன் இவ்வாறாக தமிழ் சூழலில் ஒரு காத்திரமான பத்திரிகை சூழல் உருவா வேண்டும்.
பிரதேசவாத துவேஷத்தைத் தூண்டி அன்புமணி காத்திரமான விமர்சனங்களை மழுங்கடிக்கப் பார்க்கிறார். அண்மைக் காலமாக சி ஆரோக்கியமானதும் தீவிரமானதுமான விமர்சனங்களை முன் வைத்து வரு செ. யோகராசாவை நோக்கில் கொண்டு இவர் கட்டுரை எழுதியிருப்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒரு காலத்தில் இவ்வாறுதான் கஜரகே கோவில் ஒவிய சிற்பங்கள் மற்றும் காமசூத்திரத்தின் பிரெஞ்ச் மொழிபெயர்ப் என்பவற்றின் மூலம் மறைந்து கிடந்த செழுமையான இந்து மதப்புதையல்க6ை உலகத்திற்கு காட்டிய அலெய்ன் டானிலோ என்ற இந்து மதத்தை தழுவி பிரெஞ்ச் அறிஞரை அவர் ஒரு அந்நியர் என்பதற்காக காந்தியும் நேருவும் சேர்ந்து நாடுகடத்தினார்கள். திருகோணமலை நட்சத்திரன் செவ்விந்தியன்
காத்திரமான சிருஷ்டிகளை உள்ளடக்கி இலக்கிய அடர்த்தியைதக் வைத்துக் கொண்ட உள்ளுணர்வை படித்து முடிக்கையில் களம் ஏற்படுத்திற்று கே. டானியல், உமா வரதராஜன் ஆகியோரின் உயிர் ததும்பும் படையல்கள் அற்புதம். அன்புமணி மட்டக்களப்பின் இலக்கிய வளர்ச்சி எனத் தொடங்கி வெறும் சாடலில் முடித்திருக்கின்றார். இந்த சளப்பல்கள் இனி வரும் களத்தை களங்கப்படுத்தாமல் இருக்கட்டும். ஒரு நல்ல விமர்சனத்தை படித்துணரவு கிரகித்து அதன் ஆழ அகலங்களை தூர நோக்குடன் சிந்திப்பதையும் நமது பிரதேச எழுத்தாளர்கள் இனியாவது படிப்பது நன்று. ஹறல் எலிய எஸ். எச். அறபாத்
எழுதத் துடிக்கும், எழுதிக் கொண்டிருக்கும் எழுதி முடித் எழுத்தாளர்களை வெளி உலகிற்கு கொண்டுவந்த களம் தொடர்ந்து வெளிவ என்றென்றும் வாழ்த்துக்கள். காத்தான்குடி றபாய்தி
களம் கெதியில் மலர்ந்து நொடியில் உதிரும் சருகுபோல் ஆகாம என்றும் மணம் பரப்பிக் கொண்டிருக்கும் குறிஞ்சி மலர் போல் நினைவி பதியட்டும்.
மட்டக்களப்பு ஆ. தங்கராக
ஆனந்தனின் சாந்தமான முகத்துடன் மனதை நெருடுகின்றது ஆசிரியர் ஆனந்தனை வரவேற்பாளனாக்கி உள்ளே அழைத்து செல்கிறா அன்புமணியின் மட்டக்களப்பின் இலக்கிய வளர்ச்சி காத்திரமான தார்மீ குமுறல், தனியே நூல் கல்வியை மட்டும் வைத்துக் கொண்டு மக்க இலக்கியங்களுக்கு சிவப்பு பேனையால் சரி, பிழை சிவப்பு கோட்டால் வெட் புள்ளிகள் போட நினைக்கும் தம்மை விமர்சகர்கள் என்று மார்தட்டிக் கொள் நினைப்பவர்களுக்கு நல்ல சொற் சாடல். கிறுக்கல் அன்ரனி பால்ராஜி: பல்வேறு வடிவங்களுடனான ஊடாடல்.அதில் சில விடயங்கள் பட்டும்படாமலு சொல்லப்படுவது இலஷ்மணனின் புன்னகைபோல. சில விடயங்கை இன்னதென்று தெளிவாக சுட்டிக் காட்டியிருக்கலாம். ஆங்காங்கே அச்ச பிழைகள். கிருலப்பனை மாவை வரோதய

களம் உயிர்ப்பான தேடலில் இறங்க வேண்டும். இறங்கும் என்பதும் நம்பிக்கை. வடிவமைப்பில் இன்னுமின்னும் அதிகம் கவனம் செலுத்தலாம் என்பது என் அவதானம். ຫຼືbt?T) 45ດບuUTU எம். கே. எம். ஷகீப்
களத்தின் முதற் பக்கமே, மனித நேயப் படைப்பாளி வீ ஆனந்தனின் அழகிய படம் நெஞ்சை நெகிழ வைத்தது. அடுத்து அவர் பற்றிய வாழ்க்கை குறிப்புகள் அவரது மறைவு பற்றிய செய்தி. ஆசிரியர் விதந்துரைத்துள்ளார். அவரது திடீர் மறைவு கலை இலக்கிய நெஞ்சங்களுக்குப் பெருந் துயர் தரக்கூடியது. கணையாழியில் எப்போதோ ஒரு கவிதை படித்த ஞாபகம் - எஸ். வைத்தீஸ்வரன் எழுதியது. நீ நாடாரா? இல்லை கிறிஸ்தவனா - இல்லை முஸ்லிமா -இல்லை இந்துவாஇல்லை அப்போநீயார் சீக்கிரம் சொல், பொறுங்கள் - நான் இவர்கள் யாருமல்லன் நான் மனிதன் என்ற பொருள் பட அக் கவிதை இருந்தது. இக் கவிதை யாரையும் அன்பொழுக நேசிக்கத் தெரிந்த மனிதநேயக் கலைஞன் ஆனந்தனுக்குச் சாலமும் பொருந்தும். அமரர் கே. டானியல் அவர்களுடைய என்னைப் பற்றி நான் கட்டுரையில் அவரது ஆன்மாவையே வெளிப்படுத்தியிருந்தார். சிறுகதை ஆக்கங்களுக்கு அடுத்தடுத்த இதழ்களில் போதிய இடம் கொடுங்கள். உறல்ஒலுவ typ. Uonýri
இவ்விதழ் பல்வேறுபட்ட தரமான எழுத்தாளர்களின் படைப்புகளைக் கொண்டு கனதியாக திகழ்கிறது. கருத்துவேறுபட்ட படைப்புகள் நிச்சயம் தேவை. அன்ரனி பால்ராஜின் கிறுக்கல் நடை எனக்கு பிடிக்கிறது. அன்புமணி அத்தனை பக்கங்களை எடுத்திருக்கத் தேவையில்லை. தற்கால வாசகர்கள் விமர்சகர்களை வென்றவர்கள். திருகோணமலை கா. சிவபாலன்
அன்புமணியின் கட்டுரை ஒரு மூர்க்கத்தனமான புலம்பல். அவதூறு யாவும் கலந்தது. தவறியும் அவர் உமாவரதராஜன் போன்ற தரமான கிழக்கின் படைப்பாளிகள் குறித்து வாய்திறக்கவில்லை. பட்டங்களில் சுகமாகத் தூங்கிக் கொண்டிராமல் துடிப்போடு ஆய்வு முயற்சிகளில் பிரதேசவாதங்களைத் தாண்டி ஈடுபடுவர் அன்பர் யோகராசா என்பதை நானறிவேன். எழுத்துகள் எந்தத் திக்கின் அறுவடைகளாயினும் அவற்றைப் பதர் நீக்கித் தெளிதல்தான் விமர்சகன் பணி கொழித்தல், புடைத்தல் இதிலும் உண்டு.
அன்புமணி போன்றோருக்கு பொன்னாடை, ஆலவட்டம், புனைந்து தருகின்ற தமிழ்மணிப்பட்டங்கள் இத்யாதிகளோடு நிற்பவர்களை வரவேற்பு வாசல்களில் கண்டால் திருப்தி தரும். ஏனையோர் கத்தி, பொல்லுகளோடு காத்திருக்கும் கொலைகாரர்களாய்த்தான் தென்படும். இலக்கியத்தில் பிரதேச வழக்கு பற்றித் தெரியும். இயலாமைகள் பதுங்கிக் கொள்வதற்கான பிரதேச வாதங்களும் இருப்பது இவரில் தெரிகிறது. இயலாமைகள், போலிமைகள் எப்போதும் தூக்கும் கவசங்கள் இவை. எவரெவர்க்கோ எடுபிடிகளாகும் அரசியற்பதர்களுக்கு ஒத்தூம் இலக்கியப் பதாகை தூக்கிகளுக்கும் வேண்டியதேதான்.
செ. யோகராசாவை முற்போக்கு வட்டத்துள் சேர்த்து, எவருக்கோ தாக்குதல் போய்ச்சேர இடம்மாறிக் குத்துகிறார். செ. யோகராசா மு. போ. வட்டத்தையும் தாண்டிச் சிந்திப்பவர். விமர்சகர் வழிபாடுகளை மேவியும் சிந்திப்பவர் என்பது அண்மையில் அவர் கவிதை பற்றிய ( 80க்குப் பிறகு கவிதைகள் - மு. போ. எழுத்தாளர் இலக்கியப் பேரரங்கு) கண்ணோட்டத்தில் தென்பட்டது.
செ. யோகராசா இத்தகைய அம்புகளுக்கு சோர்ந்து விடாமல் அவர்களைக் காற்றுடன் யுத்தம் செய்யவிட்டுவிட்டு காத்திரமாகவும், தவறுகள்
நேராத தகவல்களின் தரவுகளோடும் தனது பணியைத் தொடரட்டும்.
சு. வில்வரத்தினம்

Page 7
கண் எனத்தகும் எண் எழுத்துத் திரட்சியில் நிழற்படம் சகிதம் களத்தின் தொடர்ச்சி ஒரு புதிய பொலிவைப் பெற்றது. அட்டை மட்டுமே புதிய தோற்றமாகக் கூடாது. தொழில் நுட்பத்தாற் கூட இது ஒன்றும் புதுமை அன்று. தொழில் நுட்பத்தால் நாம் இன்னும் பத்து வருடம் பின்னே தான் நிற்க நேரும். தொடர்புத்துறை வளர்ச்சி அந்த அளவுக்கு முன் செல்கிறது. மின் கருவிகள் இருந்தால் இன்னும் எத்தனையோ பேர் ஏ. ஆர். ரஹ்மானைப் போல இசையை வடிக்கலாம்தான். இந்நிலையில் களத்தைப் புரட்டிய போது ஏமாற்றம் ஏற்படவில்லை. முதற் பக்கத்திலேயே முழுக்களமும் பரப்பப்பட்டிருந்தது. வேண்டியதைப் பொறுக்க வசதியுமானது.
எண்களுக்கும் எழுத்துக்களுக்கும், படத்துக்கும் பொருள் கூட்டிக் கொண்டிருந்த போது விலைச் சுட்டில் பார்வை நிலை குத்தியது. நான் அறிந்த களம் நூலின் நான்கு ரூபாவிலிருந்து நாற்பது எவ்வகையால் எவ்வளவால் பெருக்கம். களம் கையில் எட்டிய போதே பொலிவுடைய ஒரு இலங்கை மாதாந்தரியைப் பதினைந்து ரூபாயிலும், மற்றொன்றை விலை சுட்டாமலும் கண்டேன். குமுதம் , விகடன்களுக்காக மாதம் ஐம்பதுக்கு மேல் கொட்டுகிறோம்தான். அதைக் களத்துக்குக் கொடுக்கச் சொல்வதானால், வாசகர்களின் எதிர்பார்ப்பு மட்டமும் உண்டல்லவா. அதே சமயம் "இந்தியா டுடே' போன்ற ஒரு மாதஇதழை ரூபா ஐந்தில் வாசிக்கும் பேறு ஒர் இந்திய வாசகருக்கு எட்டுகிறதே. எனது பக்கத்தில் ஆசிரியர் இந்த அம்சத்தை உணர்ந்துள்ளமையும் விளங்குகிறது. அது போலவே கிறுக்கலில் அன்ரனி பால்ராஜூம் ரசனை மட்டத்தைச் சரியாக அளந்துள்ளார். "வர்த்தக நோக்கங்களை நிறைவேற்ற வரும் திரைப்படங்கள். இந்தியன் போன்று மாறுவேஷத்திலும் வரும்! மாயைகளை நிஜத்தோற்றங்களாகக் காண்பிப்பதில் இவர்கள் குறளி வித்தைக்காரர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்ற வரிகள் அருமை. எனவே சரியான நெறியில் செல்ல களம் வழிநடத்தப்படும் என்ற நம்பிக்கை தோன்றுகிறது.
நாற்பது ரூபாய் ஒரு நூல் வெளியீட்டுச் செலவாகும். ஒரு சஞ்சிகைக்காக இவ்வளவு செலவிட வேண்டுமா என்ற கேள்வியும் எழும். நுஃமானே கவிதை இதழ்களுடன், பல நூல்களை அப்போது வெளியிட்டார். இதனையும் கருத்திற் கொள்ளலாம். கிழக்கினின்று ஒரு சஞ்கிகைப் பதிவும் காலத்தின் கட்டாயமே என்பதையும் இம்முறை பல ஆக்கங்கள் நிறுவின.
களம் நான்கில் ஆனந்தன் முகப்பிலேயே உயிர்ப்புடன் விளங்கினார். களம் 6 ஆனந்தன் இல்லாத களமாகக் காண மனம் மிகவும் சங்கடப்படுகிறது. ஆனந்தனை எண்ணும்போது ஆத்மாநாம் நினைவுக்கு வருகிறார். பிறிதோர் உயிரைக் காப்பதற்காய்த் தன்னுயிரைத் துறந்த ஆனந்தனை ஆத்மாநாமின் முடிவுடன் சேர்த்து எண்ணமுடியாதுதான். எனினும் இருவரையும் பற்றி அவர்களது ஆக்கங்களால் ஒரு விரிவான ஒப்பீடு பயன் தரும். ஆனந்தன்
தோன்றாத் துணையாகக் களத்தை ஆள்வார்.
எஸ். எம். எஸ். பைஸ்தீன்
உண்மையில் எமது கலை இலக்கியப் பரப்பை ஆழ்ந்து நோக்கி வருகின்றேன். அதோடு மட்டுமல்ல, எமது சமூகம் குறித்தும் சிந்திக்க வேண்டிய கடப்பாடு. பொதுவில் எமது இதுகாறுமான சிந்தனைகள் அதனது வெளிப்பாடுகள் யாவுமே மறு வாசிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டியவையே.
அதோடு, இன்றைய தமிழ் சூழலில் எமது கலை இலக்கியத்தின் பிரச்சினை மையங்கள் யாவை என்பது குறித்து பன்முகப் பாங்கிலான உரையாடல்களை மேற்கொள்ள வேண்டியவர்களாகவே உள்ளோம். இப்பின்னணியிலேயே களத் தின் வாயில்களைத் திறக்க வேண்டும். பன்முகப்பாங்கிலான சிந்தனை வெளிப்பாடுகள் எமது ஆரோக்கியமான கலை இலக்கிய உருவாக்கத்திற்கு வளம் சேர்ப்பனவையாக அமைய வேண்டும்.

வெறும் கோஷ்டி மனப்பான்மையிலான அபிப்பிராயங்கள்ருத்துக்கள்-விவாதங்கள் மட்டும் எமது பிரச்சனைகளை இனங் காட்டிவிடா.
பொதுவில் அறிவுபூர்வமான அணுகுமுறைகளும் பார்வைகளும் வளிப்படுத்தப்பட வேண்டும். இவற்றை வெறுமனே கட்டுரைகளாக மட்டும் ழுதி விடலாமென்று நினைக்க தோன்றவில்லை. இவற்றிற்கும் அப்பால் எமது சிந்தனைகளை ஆழப்படுத்தும் வகையிலும் வெளிப்பாட்டு முறைமைகளிலும் திய வகையிலான முயற்சிகளிலும் ஈடுபட வேண்டியவர்களாகவே உள்ளோம்.
கடந்த காலத்தில் எமது வரலாற்றில் சிறு பத்திரிகைகள் அளப்பரிய ங்களிப்பினை நல்கியுள்ளன என்று கூறிவிட முடியாது. ஆனாலும் எந்தவொரு சிறு பங்களிப்பும் செய்யவில்லை என்றும் ஒரேயடியாக தட்டிக்கழித்துவிடவும் pடியாது. ஆனால். குறிப்பிடும் வகையில் அமையவில்லை.
உண்மையில் 50, 60 களில் திட்டவட்டமான இலக்கிய இயக்கச் செயற்பாடுகள் நடைபெற்றன. அவற்றின் இலக்கிய ஜனநாயகமயப்பாடும் அளப்பரியது. குறிப்பிடும் வகையில் பணிகள் அமைந்திருந்தன என்று சொல்ல முடியும். ஆனால் . 60 ற்கு பிற்பாடு குறிப்பாக 70 ற்கு பின் நமது இலக்கிய இயக்க செயற்பாடுகள் குறித்து இவர்கள் சுயபரிசீலனை ஒன்றை முன் வைக்கவில்லை. எத்தகைய நிலைப்பாடுகள் கண்ணோட்டங்களை கொண்டிருந்தனரோ, அவையே 70 ற்கு பின்னும், ஏன் 90 களிலும் அவையே ான்று அப்பாவித்தனமாகக் கூறி வருவதுதான் மிகுந்த வேதனை தரும் விடயம்.
தெளிவாகக் கூறுவதாயின் 70 களில் இருந்து எமது வரலாற்றை மீள் பாசிப்பிற்கு உள்ளாக்க வேண்டும்.
விமர்சனத் துறையில் நாம் பாரிய சாதனைகள் செய்தவர்கள் போல் ஒரு ஐதீகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது சற்று உடைத்துப் பார்க்கப்பட வேண்டியதொன்றே.
மு. த. ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' குறித்து தனது கருத்து நிலைத்தளத்திலிருந்து பல்வேறு விமர்சனங்களை முன் வைத்திருந்தார். அதற்கு அன்றைய கலை இலக்கிய பரப்பில் குறிப்பிடும் வகையில் கவனத்தில் rடுத்ததாகத் தெரியவில்லை. இப்படி பல்வேறுபட்ட பொறுப்பான வெளிப்பாடுகளைக் காட்ட முடியும். இது போன்ற விடயங்களில் களம் தனது கவனத்தை குவிப்பது நல்லது. சில அடிப்படையிலான விடயங்கள் குறித்து சில திவுகளை முன் வைப்பதே நல்லது. கொள்ளுப்பிட்டி சி. மதுசூதனன்
56th 56,or GL6T. காத்திரமாக இருக்கின்றது. மூத்த டைப்பாளிகளுக்கு களம் இடம் கொடுப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் மிழ் எழுத்துக்களில் தேய்ந்த எழுத்துக்களை வைத்து தற்போதும் இலக்கியம் டைத்து வரும் மூத்த படைப்பாளிகளுக்கு களம் இடம் கொடுப்பது அவ்வளவு ல்லதல்ல. உதாரணம்,நண்பர் அ. ஸ. அப்துஸ் ஸமது. அப்துஸ் ஸமது அவர்கள் தாடர்ந்து நண்பர் சண்முகம் சிவலிங்கம் அவர்களையே சாடி எழுதி பருகின்றார். இது எனது பூவிழி இதழிலும் பிரசுரமானது. ல்முனை முகமட் அபார்
ஒரே இதழில் 4 பேரது எழுத்துப் பற்றிய கட்டுரைகள் சற்றுக் கூடுதல் ன்பது எனது அபிப்பிராயம். மாதம் ஒன்றாக வெளியிட்டிருக்கலாம். மற்றும்படி ண்டநாட்களுக்குப்பின்னர் ஒரு மனநிறைவைத் தந்தது களம். இன்னும் சிறக்க ன் வாழ்த்துக்கள். ன்றி.
கொழும்பு முகில்வண்ணன்

Page 8
சூரியனாய்க் கூர்ப்பெய்தி இவனுமினி வான்நோக்கித் தாவவென்றே
எம்பேன்.
எம்பாது,
எகிறிச் சாக்குழி தாண்டியெழும் என் சீவன் அடங்கித் தணிந்து அழுந்தியே சாகட்டும் என்னுள்ளே.
தாழாது அழுது நிதங் கண்கலங்கி அது மறைக்க தாசியிலும் அப்பாவிப் பூச்சியிலும் பழிபோடல் தேவையிரா
எவர்க்கும்.
உங்கள் கனவெல்லாங் கைகூட
நானாக நலமடித்து என் உள்ளை,
உங்கள் முன்
உங்களில் ஒருவனாய்ச் சமைந்துள்ளேன் காண்க.
இனியென்ன,
பூப்பூத்த வானும்
நிறைமாத நிலவும் காமங்கிளப்பிப் போய்ப் புனரெனக் கிளர்த்தரமிம் மாரித் துகளின் இதமும், வாழ்வும் உங்களுக்கேயன்றி எனக்கில்லை - வீண்.
உங்களில் யாருணர்வர்? நொடிக்கு நூறு முறை அறுபட்டு ஒரு கோழி பதறித்
துடித்து,
துடிதுடித்துச் செத்தே பின் மீளவும் உயிர்ப்பதைச் - சாகவென்றே.
றஷ்மி
 
 

நிலவொழுகிப் படிந்த மொட்டை மாடி, “போத்தல் நீர்" நிறைத்து, புகை தரப்பிய நண்பர் சூழ் இரவு - நான் மட்டும் தகித்திருக்க நேற்றுக் கிடைத்தது. இது - நீயற்றுக்கிடந்த இன்னோரிரவு!
நீரேறிச் சுதிமாறிப் போன பாட்டிலும் நீ வந்தாய் நெருப்பள்ளி என்னெஞ்சருகே.
தனித்துத் துயரேறி நான் அலைய; நீயுமங்கே.! யாரோடு நோவேன்? நம் வாழ்வின் விதிப்பென்றாயிற்றா இதுவென நினைந்தழுது நாள் நகரும்.
சிலபோது, புலன்வழி உள்ளூர்ந்து சூடு கிளப்பும் எல்லாமும்; நான் பார்க்கும்
நகரத்து நரகங்களிங்கே!
உனை அடியில் போட்டு
நான் தலை கீழாய்ப் போவேன்!
ஆயிரங்கரங்கொண்டு உசுப்பின ஆசையவஸ்தைகளில் சருகாய் உதிர்ந்து, காற்று வெளியெங்கும் சுழல்வேன் நான்; "மேலால் முளைப்பவை” மட்டும்
ஈரமாய்ப் பட்டுப் போகும்!
இது போக,
பின்னுமோரிரவு. காற்றொட்டும் சட்டை காட்டிய யாரோ அவள் மார்பு (பஸ்ஸில்) பார்த்துப் போன நள்ளிரவில் நண்பனும் நாடேகினான் கரு சுமந்த அவளையும், என்னையும்
தவிக்க விட்டே..!
எம். கே. எம். ஷகீப்

Page 9
இலங்கையின் முதலாவது தொலைக்காட்சி நாடகம் 04.01.1984 இல் ஒளிபரப்பப்பட்டது. டெலிசினி நிறுவனம் இதனைத் தயாரித்தமையும், அதன் ஸ்தாபக இயக்குநரான பீ. நிஹால்சிங்ஹ நெறிப்படுத்தியமையும் கவனத்துக்குரியவை. தேசிய சினிமாவின் முன்னேற்றத்தைக் கருதி அரச ஆதரவில் அரசதிரைப்படக் கூட்டுத்தாபனம் உருவாக உழைத்த முன்னோடிகளுள் நிஹால்சிங்ஹவும் ஒருவர். அதன் முதற் தலைவரும் அவரே. தமது ஆற்றலை அங்கு தொடர்ச்சியாகச் சேவைப்படுத்த முடியாத சூழ்நிலையில்தான் விலகி டெலிசினி
தோன்றக் கால்கோளிட்டார்.
சராசரியான தொலைக்காட்சிப் பெட்டிகளின் திரைகள் சினிமா அரங்குத் திரைகளை விடச் சிறியவை. இதனால் தொலைக்காட்சி சிறியதிரையாகக் கொள்ளப்படுகிறது. தொலைக்காட்சித் திரையைத் தேவையான அளவுக்குப் பெருப்பித்துக் கொள்ள முடியுமேயாயினும், சிறிய திரையென்பதே வழக்கமாகிவிட்டது.
தொலைக்காட்சியில் மேடை நாடகங்களும், சினிமாக்களும் ஒளிபரப்பாவதுண்டு. எனினும் தொலைக்காட்சி நாடகம் என்பது தனித்துவமான ஒரு கலைவடிவமாகும். அது தொலைநாடகம் என்றும் தொலைச்சினிமா என்றும் கூறப்பெறுவதால் மட்டும் நாம் மயங்கலாகாது. எனவே டெலிசினி என்பது தொலைக்காட்சியும் சினிமாவும் சார்ந்த ஒரு நிறுவனமா? தொலைக்காட்சியை மட்டும் சார்ந்த ஒரு
நிறுவனமா என்பதை நிச்சயிப்பது சற்றுச் சிரமமே.
ஏனெனில் நிஹால்சிங்ஹ சினிமாவிலிருந்துதான் தொலைக்காட்சிக்கு வந்தார். டெலிசினியும் தொலைக்காட்சியுடனேயே கூடுதலாகத் தொடர்புபட்டுள்ளது. தொலைக்காட்சிக்காகக் கடந்த 15 ஆண்டுகளில்
மூவாயிரத்துக்கு மேற்பட்ட விளம்பரப்படங்கள், 290 செய்திச்
 
 
 

எஸ். எம். ஜே. பைஸ்தீன்
சுருள்கள், 105 வாரங்களுக்குரிய தொலைநாடக அங்கங்களைத் தயாரித்துள்ளது. விநோதரங்க போன்ற நகைச்சுவை நிகழ்ச்சிகளையும், பிரிஸ்டல் விளையாட்டுச் செய்திமடல் போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகளையும், கீத்தாவலி போன்ற இசை நிகழ்ச்சிகளையும் கூடத் தயாரித்தது. இவ்வாறு தேசிய சினிமாவின் இழப்பு தொலைக்காட்சியின் போஷிப்பாக அமைந்தது.
திமுத்து முத்துவுக்குப் பின் ரூபவாஹினி கூட்டுத்தாபனம் 1990 வரை சுமார் 80 நாடகங்களை ஒளிபரப்பியது. ஒளிபரப்புக்கு விளம்பரதாரர்களது ஆதரவு ஒரு முக்கிய தேவையாக மாறியுள்ளது. இதனால் வியாபாரப் பண்டங்களை விற்பதற்கான ஊக்குவிப்பாகத் தொலை நாடகம் உள்ளது. அது பார்ப்போரைக் கவர வேண்டிய கட்டாயத்தன்மையுடன் விளம்பரதாரரின் வியாபாரப்பாங்குக்கு
இசைவாகக் கதையை நகர்த்தும் நிலைகூட ஏற்படுகின்றது.
இன்று லட்சக்கணக்கானோர் தொலை நாடகங்களை
விரும்பிப் பார்க்கின்றனர். இவர்கள் காட்சிப் பெட்டிகளற்றோர்.

Page 10
நுழைவுக்கட்டணம் செலுத்தவும் இவர்களுக்கு அவசியமில்6ை இலங்கையின் மத்தியதரத்துக் குடும்ப மக்களே இவர்கள் எனவே இவர்களை முதன்மையாகக் கொண்டு தயாரிக்கப்படு தொலை நாடகங்களும் மத்தியதரக் குடும்பங்களின் கதைகளாகவே உள்ளன. ரசிகர்கள் இவற்றிற் தம்மை இன காணுகின்றனர். இவர்களது உள்மன ஆசைகளையே இை சித்தரிக்கின்றன. கீழ் மத்தியதரத்தினதும், உய மத்தியதரத்தினதும் குடும்பங்களுக்கிடையிலான ஊடாடலாக அதிலும் குறிப்பாக, இளையதரப்பினரது காதல் கனவுகளாக:ே இவை அமைந்து விடுகின்றன. இதனாலேயே தொை நாடகங்களை மத்திய தரக் குடும்பச் சக்தியிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற குரல் ஒங்கி ஒலிக்கிறது.
தொகையான சிங்கள நாவல்க தொலைநாடகவடிவம் பெறுகின்றமை திருப்திகரமானதே அவை தொலைநாடகங்களைச் செழுமைப்படுத்துகின்றன ஆனால் அநேகமான சிங்கள நாவல்கள் தாமும் மேற்கூறியது போல மத்தியவர்க்க அடித்தளத்திற் தான் அமைகின்றன திமுத்து முத்துவைத் தொடர்ந்து ஆரம்பமாகி இணைவரையாகச் சென்ற "லாஹிரு தஹசக்” (இளங்கதி ஆயிரம்) தொலை நாடக வடிவத்தை மேலு அர்த்தப்படுத்தியது.
தொலைக்காட்சியில் ஆயிரம் இளங்கதிர்களை தெறிக்க வைத்த பராக்கிரம நிரியெல்லதான் மத்தியதரத்தினரது உண்மை நிலையை இறுக்கமாக கட்டியெழுப்பிய சோமவீர சேனாநாயக்கவின
 
 
 

த்
订
யசோராவையையும் கொண்டு வந்தார். லாஹிரு தஹஸக், யசோராவயவுடன், சுதத் சேனாரத்னவின்மவக்ககே கீத்தயவும்
தொலை நாடகவடிவத்தைப் புரிந்து கொள்ள உதவின.
அக்கரைச் சீமையின் வருவாய் வளத்தை லாஹிரு தஹசக் தொட்டுக் காட்டியது. மேற்கு நாடுகளில் அதன் எல்லையைக் கோடிட்டது யசோராவய. தொலைக்காட்சி முன்னோடிகளுள் ஒருவரான லூஷன் புலத்சிங்ஹளவின் எக்கமவக்ககே தருவோவை அடுத்து நான்காவது தொலை நாடகமாக ஒளிபரப்பப் பெற்றது. ரட்ட கிய எத்தோ (வெளிநாடு சென்றோர்) லண்டனில் குடியேறிவிட்ட ஜி.டீ.எல். பெரேராவுக்குத் தமது குடும்பத்தாரதும், நண்பர்களதும் ஒத்துழைப்புடன் தமது கலைமுயற்சியை வெளிப்படுத்த இது வாய்ப்பளித்தது. வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு இது ஒரு நல்ல முன் மாதிரியாகும். எனினும் இந்நாடகம் வெளிநாட்டில் வாழும் இலங்கையரது இயல்பான வாழ்வுக்கன்றிப் பிறழ்ச்சிகளுக்கே முதன்மையளித்தது. இவ்வாறு தொலைநாடகங்களின் ஆரம்பம் ஆரோக்கியமானதாக இருந்தபோதிலும் இன்று தருக்க ரீதியான வளர்ச்சிப் பாதையிற் செல்லவில்லை.
தர்மசேன பத்திராஜ தமது கடுல்லவை (நுழைவழி) 50 இலட்சம் பேர் பார்த்ததாகக் கூறுவார். 160 லட்சம் பேர் வாழும் ஒரு நாட்டில் அவருள் மூன்றில் ஒரு பங்குக்கும் மேற்பட்டோர் நாடளாவி ஒரே நேரத்தில் ஒரு படைப்பைப் பார்க்க வைப்பது தொலைக்காட்சி ஊடகத்தின் வல்லமையைக் காட்டுகிறது. ஆனால் தொலைக்காட்சியின் அலைவரிசைகளில் அவர்களது உணர்வுகள் முழுமையாக மதிக்கப் பெறுவதில்லை. சத்திய ஆவேசத்துடன் எப்போதும் உரக்கவே பேசுகின்ற தர்மசேனபத்திராஜவுக்கு இவ்வாறு ரசிகபலம் இருந்தது. தயாரிப்புக்கு அனுக்கிரகதாரரது பூரண சுதந்திரம் கிடைத்தது. எனினும் கடுல்ல எச்சந்தர்ப்பத்தில் இடை நிறுத்தப்படுமோ என்ற பரபரப்புடனேயே ஒளிபரப்பானது. தர்மசேன பத்திராஜவைப் போலவே போராட்ட உணர்வுடைய மற்றுமொரு படைப்பாளியான சோமரத்ன திசாநாயக்கவின் அவசந்த (குறைநிலா) வோ அரைகுறையாகவே நிறுத்தப்பெற்றது. திசாநாயக்கவுக்கும் இத்தகைய தடை புதிதன்று. இதனாலேயே பலர் தொலைக்காட்சிக்காகத் துணிச்சலான படைப்புகளைப்
போன்று தொலை நாடகங்கள் நெறிப்படுகின்றன.

Page 11
இங்கு பிரதிகளின் ஆழத்தையும், தரத்தையும் விட எண்ணிக்கை கூடப் பெருமை பெறுகின்றது. ஒரு மணித்தியாலத்துக்குள் நிறைவுபெற்ற ஓரங்கத் தொலை நாடகங்கள் பல உள்ளன. அவற்றுள் பராக்கிரம நிரியெல்லவின் கடஇட (தடை) போன்றவை சர்வதேசவிருதுகளையும் பெற்றன. பத்திராஜவின் கடுல்ல 21 அங்கங்களிற் தன்னளவில் நிறைவான ஒரு சிருஷ்டியாகும். பெருந் தோட்டச் செய்கையால் உருவாகி அதனால் லாபம் அடைந்த ஒரு பரம்பரை, அதனை அடுத்த தேசிய வியாபாரப் பிரிவு, இவற்றின் அடியாக எழுந்த மத்தியதரப் புத்தி ஜீவிகளும், வெஸ்ட்மினிஸ்டர் ஆட்சி முறையிற் கவனஞ் செலுத்தியோரும் ஆகிய மூன்று பரம்பரைகளை அளாவி நின்றது. நிரியெல்லவின் லாஹிருதகஸக் தான் முதன் முதலாகத் தனது ஆரம்ப அங்கங்களுடன் நிறைவு பெற முடியாமற் போனது: யசோராவையும் தான். கோப்பிக்கடை
300 அங்கங்களையும் தாண்டி ஒளிபரப்பாகின்றது.
பிரதான கதாபாத்திரங்கள் பத்துடனும், அங்கங்கள் பதினாறுடனும் கூடிய தூதருவோ (புத்திரபுத்திரியர்) வின் எட்டு அங்கங்கள் 27.12.90 முதல் ஒளிபரப்பாகின. 16 அங்கங்கள் 38 வரை தொடர்ந்து எழுதப்பட்டது. அவை 81 ஆகி 16 வரை தொடர்ந்து அலைவரிசையில் 16.06.93 அன்று 100வது அங்கத்தை எட்டியமை ஒர் உலக சாதனையாகத் தம்பட்டம் அடிக்கப்படுகிறது. சர்வதேசப் புகழ் பெற்ற அமெரிக்க, அவுஸ்திரேலியப் படைப்புக்களான டைனாஸ்டி, கொரோனேஷன் ஸ்ட்ரீட், சாந்த பார்பரா, நேய்பர்ஸ் போன்றவற்றையும் மிஞ்சிய சாதனையாகவும் அது ஏத்தப்படுகிறது. ஒரே பிரதியாசிரியர், நடிகர்கள், தொழில் நுட்பக் குழுவைக் கொண்டு நூறு அங்கங்கள் நிறைந்தமைதான் அச்சாதனையாம். உலகளாவிய முறையில் பல்வேறு நாட்டுக்களங்களில் பிரமாண்டமான முறையில் தயாரிக்கப் பெற்ற டைனாஸ்டியின் தெரிங்டன் குடும்பத்து உறுப்பினர்கள் மரணத்தின் விளிம்பினின்று மீண்டு மீண்டு வந்த போதிலும் ஒரு மகிழ்ச்சியான குடும்ப ஒன்றுகூடலுடன் நிறைவைநாடி நெருங்கி விட்டனர். தூதருவோவில் மேலும் 10 துணைச்சரிதங்கள் சேர்ந்தன. அவற்றோடு அவ்வப்போது புதுப்புதுச் சரிதங்களைச் சேர்க்க நேர்ந்தது. இவை சுதந்திரமாக இயங்குவதற்காக 1000 பிரதிகள் வரை ஆதரவு

வழங்கக்கூட விளம்பரதாரர் தயாராக இருப்பதால் தூதருவோவின் நிறைவு எட்டத்தில் இல்லையென்றே தோன்றுகின்றது.
இதனூடேதான் ஆங்கிலசோப் ஒப்பேராக்களால் பிரபலமடைந்த தொலை நாடக வடிவம் ஒரு கலைச்சிருஷ்டியாக இடம்பிடிக்குமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. முன்னர் எடுத்துக்காட்டிய ஒரிரு படைப்புக்கள் இதற்குப் பதிலிறுக்கும்.
சிங்களத் தொலை நாடகங்களைத் தமிழ் பேசும் கணிசமான தொகையினர் பார்க்கின்றனர். சிங்கள சினிமாவிற் போலவே இத்துறையிலும் மொழிபேதங் கடந்த ஒத்துழைப்பைக் கலைஞர்கள் வழங்குவது ஒரு குறிப்பிடத்தக்க பண்பாகும். நடராஜசிவம், ஜோர்ஜ்சந்திர சேகரன், சில்லையூர் செல்வராசன் போன்றோர் அங்கு கெளரவம் பெற்றுள்ளனர். தமிழ் பேசும் மக்களது வாழ்க்கையின் பக்கங்களும் தொலை நாடகங்களிற் புரட்டப்படுகின்றன. சுர, அசுர, கடுல்ல போன்றவற்றில் தமிழ் மக்களது உணர்வுகள் புண்படுத்தப்பட்ட போதிலும் அவர்களது வாழ்வுக்கு முக்கிய இடமளிக்கப்பட்டிருந்தது. விரல் விட்டு எண்ணக்கூடிய இலங்கைத் தமிழ்த் தொலை நாடகங்களில் உயர்வான இடத்தை வகிக்கின்ற காலங்கள் சாவதில்லையை ஒரு சிங்களக் கலைஞரே படைத்தார். சிங்களக் கலைஞர்கள் தமது அறிவையும், சுவையையும், வளர்ப்பதற்கு ஒலிமாற்றம், தழுவல் முதலியவற்றையும் தயங்காது மேற்கொள்கின்றனர். அன்னா குரீனினா போன்ற ஒர் உன்னத சிருஷ்டியைச் சிங்களத்திற் தயாரிப்பது அரிதாதலால் ஒலிமாற்றுகின்றனர். சார்ல்ஸ் டிக்கன் சின் த கிரேட் எக்ஸ்பெடே ஷன்சைத் தழுவிச் சிங்களத்தில் ஒளிபரப்பவும் செய்கின்றனர். தமிழ் ரசிகர்கள் இவற்றைத் தமிழில் எண்ணிப் பார்க்கவும் முடியாது. அவர்களுக்கும் இவை பெரு விருந்தாகும். இந் நிலையில் சுஹாசினியின் பெண் தொலை நாடகத்தொடர் சிங்களத்தில்
ஒலிமாற்றப்படுவது வியப்புக்குரியதன்று.
1992.

Page 12
šīs
வ. ஐ. ச ஜெயபாலன்
நான் கவிதை பாடும் எறும்பு தேன் சிந்திடும் எம் சந்தனக்காட்டில் கிளையோடிருந்து நம்பிக்கைக் கூத்து ஆடிய எறும்பு
வசந்தத்தில் பூவும் மதுவும் பகிர்ந்து வழிதெருவெல்லாம் களித்துத் திரிவதும் கோடையெல்லாம் இறைவனின் வயல்களை அறுவடை செய்தெம் பண்டசாலை யாவும் நிறைப்பதும் வாடை வீச வீச மனைகளில் புணர்ந்து எமது உயிர்ப்பின் வெண்கனிகளை இடுவதும் மாரி முழுதும் எம் கனிகளின் போர்வையாய் முத்தமிட்டு அணைந்து கிடப்பதும் பனிகாலத்தில் குஞ்சுகளோடு குலவி மீண்டும் மதுமணக்கும் தென்றலை சன்னல்கள் தோறும் காத்துக் கிடப்பதும் அல்லது வேறெது புரிந்தோம் அல்லாவே அல்லது வேறெது புரிந்தோம் யேசுவே அல்லது வேறெது புரிந்தோம் சிவனே அல்லது வேறெது புரிந்தோம் புத்தனே
தேவனே தேவனே
ஏன் எமது பாடல்கள் பறித்தீர் ஏன் எம்மீது ஒப்பாரிகள் நிறைத்தீர் அடைமழை என்றால் எமது முட்டைகளை மேட்டில் சேர்த்து விழித்திருந்திடலாம் ஏன் எம்மீது தீ மழை பொழிந்தீர் ஏன் எம்மீது குருதி பெருக்கினீர் வேட்டை நாய்கள் மொய்த்த தெருக்களில் א"

குட்டியோடலையும் பெட்டைப் பூனையாய் காடு மேடு கடல் வயல் என்றெமை முட்டைகள் காவி ஏன் ஒட அலைக்கிறீர். ஏன் ஏன் எம்ம்ை முடிபுனைந்து கொடுங்கோலோச்சும் யுத்தக்குற்ற வாளிகள் காலில் அனாதரவான குடிகளாய் வீழ்த்தினிர் ஏன் எமை அவர்களின் அலுமினிய வேட்டைக்கழுகுகளின் தீனியாய் கைவிட்டீர் ஏன் எமை உலகின் தெருக்களில் எல்லாம் புழுதியாகப் பறந்திடச் சிதறினீர் போதாக் குறைக்கு
நம்மில் நாமே இடறி விழவும் நம்மை நாமே கடித்துக் குதறவும் ஏன் எம் தெருக்களை இருளில் மூடினீர்
இறைவா இறைவா உனக்கு வேண்டில் எம்மைப் பலிகொள் எம் முட்டைகளைக் காப்பாற்று எம் குஞ்சுகளை வாழவிடு "களபலியாக கால இருளை துடைத்து எறிவோம்” என்றெம் குஞ்சுகள் விழுவதைக் காணவா எமை வைத்திருந்தாய் இதற்காகவா நாம் இன்னமும் இருந்தோம்
"தர்மமே வெல்லும் வெல்லும்” என்று பலிகள் பெறுகிற தெய்வமே எத்தனை எத்தனை நாள் இக் கொடுமைகள் எத்தனை எத்தனை நாள் இக் குடிமைகள் எத்தனை நாட்கள் இந்த இருட்டு இன்னும் எத்தனை நாட்கள் தொலைவில் வாக்களிக்கப்பட்ட எம் சுதந்திர பூமி.

Page 13
மைம்மலானது எனது திரும்புகை விம்மலும் அற்றது இருபுறமும் அடர்ந்த காட்டு வீதி இந்த வழியில் திரும்பிக் கொண்டிருக்கிறேன்.
இப்போது நான் என்ன செய்ய முடியும் ஒரு சுருக்கு போட்டு கழுத்து முறிக்க முடியாது எப்போதுமே பிளந்திருக்கிற மனம் என்னுடையது சுருக்கு வரையுமான சுவடுகள் ஏறுகிறபோது பின்வாங்கிவிடும்.
சவக்காட்டை நோக்கிய நாட்களில் வெண்தாடி முதியவனின் அந்திம காலத்து மரண எக்கமாயிருக்கிறது தை, மாசி, பங்குனி, சித்திரை மாதங்களும் பருவகாலங்களும் முனைப்புடன் தட்டி இடித்துக்கொண்டு போய்விட்டன.
இந்த மனிதர்களுடன் ஒன்றுவது ஒரு போதுமே ஆகாது
கடந்த காலத்தில் எனது நண்பர்கள் காத்திருக்கிறார்கள் இந்தப் பையன்களின் அப்பன்களின் நீரோட்டம் வெகுவிரைவில் ஒடும் அதன்பின் கடலுக்குப் போவர் 5T 6). D 35 Tg) Dr Tags.
நட்சத்திரன் செவ்விந்தியன்
S. ஜெயசங்கர்
 

யன்களின் அப்பன்களின் (5G-T/7tt to
சூரியனும் எழும்பாத அதிகாலை மட்டு நகரின் இருளை கரைத்துக் கொண்டிருந்தன காகங்கள்
தூரத்தில் இரையும் பேருந்திலிருந்து முகம் தெரியாத மனிதர்கள் நெஞ்சுள் இறங்கினர்
கழுவுதல் ஒவியம் செய்யும் மனைவி நீர்வர்ணந் தீட்டிய ஒவியத்தாளை கழுவி விட கடுமை இழந்து போகும் ஒவியமாய் தெளிந்து கொண்டிருந்தது வானம்
அமைதியான காலையைக் குலைத்தபடி வானொலிச்செய்தி இசை வேண்டாத மனிதரின் சிரிப்பாய் காதில் வீழ்ந்து நெஞ்சை அரிக்க
எழுந்தேன் புனைகதைகளில் இருந்து என்னை விடுவிக்க சிம்பனி இசையாக இருந்த காகங்களின் கரைதல் கொடுவாள்களின் அரிவுச் சத்தமாயிற்று.

Page 14

நான் வடிச்சச் சேன வயல் வரம்பில நிக்கிறன். ஆவணி மாசம். கச்சான் காத்துச் சீறியடிக்கிது. காத்தில வேளாமையெல்லாம் நிலத்தோட விழுந்து படுக்கிது. எல்லாக் கதிரிலயும் தலப்பு நெல் பழுத்திட்டு. இனி எல்லாம் பழுத்திரும். அப்ப காத்தும் விழுந்திரும். மதியமானா இலையே அசையாது. மதியத்திரும்பினா வடக்க மேகம் கறுக்கும். சாய் பொழுதில வாடக்காத்தில மழையும் வரும். அந்த மழைக்கு முன்ன வயல வெட்டணும்.
ஆனா எப்படி வெட்றது ? கையில ஒரு சதமில்ல .
இருபத்தைஞ்சி முப்பது வருசங்களுக்கு முன்னால பெருவெளி வயல் விளைஞ்சிற்றெண்டதும் கிண்ணியாவிலிருந்தும் மட்டக்களப்பிலிருந்தும் வெட்டுக்காரர் வருவாங்க. கோடப் போகத்தில பத்துக்கட்டு வெட்டினா பதினோராங்கட்டு வெட்டுக்காரனுக்கு மத்தியானச் சோத்துக்கு மட்டுந்தான் வயல்க்காரன் வழிசெய்ய வேணும். அதவிட்டா வேற செலவில்ல. வெட்றவங்க கட்டுக் கட்டித் தூக்கிக் கொண்டு வந்து திடலில சூடு வைப்பாங்க. அட்டமி நவமி கழிச்ச நல்ல நாளாப் பாத்து சூடடிப்பம்.
ஆனா இப்ப அந்த வழக்கம் இல்ல. காலம் மாறிப்போச்சு. கட்டுக்கணக்கில எவரும் வெட்றல்ல. அசலூரில இருந்து வெட்டுக்காறர் வாறதுமில்ல. அதனால ஊரவனுக்குக் கிராக்கி. கட்டுக்கணக்கில கூலி கேக்கிறான். ஏக்கருக்கு ரெண்டாயிரம் ரூபாய். மூணு ஏக்கர் வயலபும் வெட்றதுக்கு ஆறாயிரம் வேணும். மத்தியானச் சோத்துச் செலவு வேற. என்ன செய்றது?
வெட்டுக்காறன் காசைச்சுளையா வாங்கீருவான். ஆனா வயலத்துப்பரவா வெட்டுறானா, தெண்டைக்குத் தேவையா வெட்டுவான். வெட்டு வெட்டிக் கொண்டு போகக் கொள பின்னால பறிகதிர் தல நிமிந்து நிக்கும். துப்பரவாக வெட்ட இந்தக் காலத்தில எவனுக்குமே தெரியாது.
அந்தக் காலத்தில நாங்க வெள்ளாம வெட்டினா பறிகதிரே இராது. இப்ப ஆமிக்காரனுக்குப்பயத்தில பிள்ளகளும்

Page 15
கதிர் புறக்க வாறல்ல. அதுகளாவது வந்தா பறிகதிரப் பிச்செடுக்கும். ஆனா இப்ப தாக்கத்திக்குத் தப்புற பறிகதிரயும் பிச்செடுக்க மணிசரில்ல. வெளஞ்சது எவருக்கு மில்லாமக் கந்தில பாதி களத்தில பாதியா அலக் கழியும்.
அதான் போகட்டுமே. கட்டுக்கள தூக்கியாந்து திடலிலயாவது சூடு வைப்பானுகளா ? அதெல்லாம் இந்த நாளயில நடக்காது. திடல் தூரமாம். அதுக்குத் தூக்கினாக் கழுத்து முறிஞ்சிடுமாம். அதனால வெட்டின வயலுக்குள்ளேயே சூட்டையும் வைப்பாங்க. சூடு வெச்ச கையோட டெக்டர விட்டுச்
சூடடிக்கோணும்.
டெக்டர்காரங்க பலர் பயத்தில வயல் பக்கமே வாறல்ல. வரக்கூடிய சிலரக் கெஞ்சோணும். அவன் வாறதுக்கிடயில மழ பிடிச்சாலும் பிடிக்கும். மழ வந்தா களங்காயப் பத்துநாள் பிடிக்கும்.
திடலில இந்தக் கரச்சலெல்லாமில்ல.
சூடடிக்கிற வேலயும் ராவில செய்யேலா. சூரியன் மேக்கில வெல்லம்பத்தைக்குள்ள மறைய முதல் எல்லோரும் வயல விட்டுப் போயிடணும். அதுக்குப் பிறகு நிண்டா ஆமிக்காரன்
சுடுவான்.
குழப்பத்துக்கு முன்ன இந்தக் கரச்சல் இல்ல. அப்ப பத்து பனிரெண்டு ஏக்கரெண்டு வெள்ளாமச் செய்தன். விளைஞ்சதும் வெட்டுக்காரங்க வந்திடுவாங்க. வெட்டிக் கட்டிக் களந்துரமெண்டு முணுமுணுக்காம திடலுக்குத் தூக்கிக் கொண்டு போய் சூடு வைச்சித் தருவாங்க. அங்க சூட்டவைச்சா மழையிர கவனமில்ல. அப்பிடித்தான் மழை பெய்தாலும் ஒரு சொட்டுத் தண்ணி சூட்டுக்குள்ள இறங்காது.
அத்தின படினமாகச் சூடு வைச்சி - சிக்காரா மேய்ஞ்சிருவாங்க.
இப்பெல்லாம் சூடாவைக்கிறான்கள் ?
இப்படி அடிக்கத்தான் போறிங்களெண்டு வயலுக்குள்ளேயே கட்டுக் கட்டாக் குமிச்சு வைக்கிறான்கள். தச்செயலா மழை வந்தா வயல்காரன் தலயில கைய
வச்சிக்கதறுவான்.

அப்ப திடலில சூடு ஏறிய பின்ன சூடடிக்க நாள் பாப்பன். சாத்திரியார் சொல்ற நல்ல நாளில, நடுக்களத்தில பொங்கிப் படைச்சி களத்தின் நடுச் சென்ரறில அரக்கைத்தாட்ட புறகு சூட்டில ஏறி வேலக்காரன் கம்பால குத்தி எறிஞ்சி பரப்புவான். பொழுது பத்தைக்க போற நேரத்தில கிடாக்கள் கதிரில வளையும். ரெண்டு தொடுவக் கிடாக்களும் ஓகோ கோ. என்னம்மா --- தாயே. என்ற குரக்காட்டலுக்கு காது குடுத்து வளையும். சூடடிக்கக் கொள்ள நடுவில நிக்கிற அரக்கன் கிடாய்க்குத்தான்
கஸ்ரம்.
கிடாக்கள் குனிஞ்சி வைக் கலைச் சப்பிக் கிட்டே
மெதுவாக் கதிர்களில வளையும். சூடு வளைக்கிறவங்க -
இந்த நடைநடந்து - செல்லா, நாம எப்ப கர சேரு வோண்டா . ஆ.
என்ற பாட்டோட அதட்டி விரட்டுவாங்க.
அப்பநான் வலய எடுத்துக்கிட்டு வீச்சி மடுவுக்குப் போவன். நாலைஞ்சி பாட்டில, ரெண்டு மூணு விராலும் இருவது முப்பது சாவானும் படும்.
துடிக்கத் துடிக்க அறுத்துக்களுவி விராலத் தூள் போட்டு ஒரு குழம்பும், சாவான விலிம்பிக்காய் போட்டு ஒரு புளியாணமும் வைச்சிச் சோத்தையும் ஆக்கி இறக்கினாச் சூடடிக்கிறவங்க ஒரு தரம் குத்திப் புரட்டி - வைக்கல வாட்டி எடுத்து எறிஞ்சிற்று மிச்சத்தக் கூட்டியிருப்பாங்க. அந்த மட்டில விட்டிட்டுச் சோத்தைச் சாப்பிடுவம், பிறகு ஒரு வாய் வெத்தில போட்டிட்டு ஆசறுதியாக மறுபடியும் ரெண்டு வாட்டி வளைக்க மணியெல்லாம் பூப்போல சொரிஞ்சிடும். மாடுகள ஓடடியில மேயவிட்டிட்டு, வேலக்காரன் கம்பால வைக்கல வாட்டி எறிஞ்சிட்டு, பொலியைக் கூட்டி நடுக்களத்தில குவிச்சி முடிக்கக் கொள்ள நடுச்சாமம் தாண்டிரும். அப்பிடியே படுத்திருவம். சாக்கு விரிப்பும் வைக்கல் சூடும் சோக்காரிக்கும்.
சுடுவான்லகலங்கல்எப்பவும் காஞ்சிக் கிட்டே கிடக்கும். சுடச்சுடத் தெயில போட்டுக் குடிச்சிற்றுத்தான் படுப்பம். விடிஞ் செழும்பினாக் கச்சான் புசு புசு வென்று வீசும் அந்தக் காத்தில பொலி தூத்துவம். பொலி தூத்திமுடியக் கொள்ள பொழுதும் உச்சிக்கு வந்திரும். சாப்பிட்டு கண்ணயந்து. பொழுது பத்தைக்க போகக் கொள்ள மறுபடியும் சூட்டத்தள்ளுவம்
11

Page 16
இப்படி பத்துப் பனிரெண்டு சூட்டயும் அடிச்சி முடிக்க - பதினைஞ்சி பதினாறு நாள் புடிக்கும். சூடடிச்சி முடியும் கட்டிலும் ஆருமே வீட்ட போறல்ல. சூட்டுக்களத்தில துடக்கு ஆகாது களத்தச் சுத்தி வைக்கல் பிரி கட்டிக் காவல் போட்டிருப்பம்
துடக்குக்காரன்கள் களத்துக்கு வரமாட்டான்கள்.
சூட்டுக்களத்திலதான் என்ன சாப்பாடு ! பெண்டுகள் அப்பங் கொண்டு வருவாங்க பாலப்பம். நடுவில தேங்காப்பால் தளும்பி மினுமினுக்கும். சில தில நடுவில தேங்காய்ப் பூவும் பனங்கட்டியும் சேத்துப்பினைஞ்சி போட்டிருக்குங்கள்.
அப்பம் மட்டுமா ? களத்துக்குத் தொதல் வரும் கொளக்கட்டை வரும். தயிர் வரும். மீன்வரும். இறைச்சி எடுக்க
மாட்டம் அது வராது.
சூடடிக்கிறவங்க வயித்துக்கு வஞ்சகம் பண்ணாமச் சாப்பிடுவாங்க. சூட்டுக் களம் முடிஞ்சி ஒழிவு களத்தில அவங்க கணக்கில வாங்கிச் சாப்பிட்டதுக் கெல்லாம் நெல் அளப்பாங்க அப்பிடிக்குடுத்தாலும் சூடடிக்கிறவங்களுக்குத் தலைக்கு ரெண்டு மூணு சாக்கு நெல்லு மிஞ்சும்.
அந்தக்காலம் இனி எங்கெ வரப் போகுது ? இப்ட அதெல்லாம் நினைச்சா இனிப்பாய்த் தானிருக்கு. ஆனா இப்ட வெள்ளரும வெட்ட வெட்டுக் கூலிய நினைக்கொள்ள தலையைக்
- கிறுக்குது.
குழப்பத்தில உள்ளது உடையதெல்லாம் பெய்த்து அகதிமுகாமிலதான் மூணுவரிச மிரிந்தன். இந்த வரிசந்தான் ஊருக்கு வந்து வெள்ளாமச் செய்யிறன். அதுவும் அந்த நல்லாயிருப்பார் விதை நெல்லும் ஏக்கருக்கு ஆயிரம் ரூபாக்காசுப் கடனாத் தந்ததால.
போன வரிசம் ஆடி மாசத்தில எங்கட ஊர் வாத்திய பொடியன் ‘சாமி விபுலானந்தருக்கு நூற்றாண்டு விழா எடுக்கிறம் அதுக்குக் காசு சேக்க வந்தன்' என்று லிஸ்ர நீட்டினான். அப்ட எனக்கு கண்ணில தண்ணிதான் தளும்பிச்சு. நாங்க அகதியாயில்லாம வெள்ளாமச் செய்திருந்தா களத்துக்குக் களப் ஆளுக்கொரு சாக்கு நெல்லக் குடுத்திருப்பம். இப்பண்டாப் பொலி என்ன? ஆண்டவனும் ஆமிக்காரனும் ரெண்டு பூ முறைக்கு விட்டாங்கெண்டா நாங்களும் எழும்பிக் குந்திடுவம்.
12

மனிசன் நரகத்துக்குப் போனாலும் அகதிமுகாமுக்குப் போப்படாது.
கடசியில அந்த நல்லாயிருப்பார் - அந்தச் சங்கத்துக்கு என்னவோ இஸ்கிலீசிப் பேர். வாயில வருகுதில்ல - தந்த மூவாயிரமும் மூணு ஏக்கருக்கு எந்த மூலைக்கு ?
இந்தக் காலத்தில வயலடிப்பவனுக்கு நாட்கூலி நூத்தம்பது. அதோட காலச் சாப்பாடும் மத்தியானச் சாப்பாடும்! பெண்டாட்டிர கழுத்திலயும் காதிலயும் கிடந்த அடவு வெச்சித்தான் வயலை விதைச்சி ஒப்பத்தினன்.
ஆனா விதைச்சதிக்குப் புறகு காவல் காக்கமுடிஞ்சிதா?
விடியக்குள்ளயும் பொழுது படக்குள்ளயும் சில்லித்தாரா பாட்டம் பாட்டமா வந்து முளையக் குடிக்கும். இப்ப அதுகள்ற வரக் கொள நமக்கு வயலுக்க நிக்க முடியாது. காலையில ஆடமிக்காரன் ‘றோட்டக் கிளியர் பண்ணின புறகுதான். எட்டு மணிமட்டில வயலுக்க போகலாம். அப்படிப் போய் பொழுது பத்தைக்குள்ள போகமுந்தி றோட்டுக்கு கரையேறிரணும்.
ஆத்தாத வெள்ளாமச் செய்ரது. இதத் தெரிஞ்சிதான் முளய வயலில கொஞ்சம் உண்டன அள்ளி எறிஞ்சன். நாலு மூணு நாளைக்குப் புறகுமுளை விடக் கொள பாத்தா பயிர் ஐதாத்தான் தோணிச்சி. ஆனா ஒரு கிழமைக்குப் பிறகு கங்களவு தண்ணி கட்டி ரெண்டு எண்ணெயும் அடிச்ச பிறகு பார்த்தா பயிர் வயலடங்கிலுந்தான் இருந்திச்சி.
குடல முத்தி கதிர் வரக்கொள பன்றிக் காவலுக்குப் போகணும்.
வயல் காரனிட்டத் துவக்கில்ல. வயல்காரண்ட துவக்கெல்லாம் பறிபோய் பத்துவரிசமாகிது. பண்டிக் காலிறபாடு கொண்டாட்டந்தான். ஒவ்வொண்டும் ஒரு கிடாமாடு போல. ஒரு கிள வயலில இறங்கினா எல்லாத்தையும் கிண்டி எறிஞ்சிரும். இப்ப சீனவெடி கூடச் சுடேலாது. ஆமிக்காரன் விட மாட்டான்.
கடையிலயுமில்ல. ஆனா ஆள் கறுப்பக்கண்டாப் பண்டிவராது.
நான் ஆமிக்கேம்புக்குப் போய் கொமாண்டரிட்டச் சொன்னேன். கொமாண்டர் இரவில வயல காவல் பாக்கிறதுக்குக் கடிதம் தந்தார். கடிதம் சிங்களத்தில். சென்றிப் பொயின்றில

Page 17
தெருவில நிக்கிற ஆமிக்காரனிட்டக் காட்டினன். அவன் அடையாள அட்டய வாங்கி வைச்சிக்கிட்டு வயலுக்க போக விட்டான். இப்பிடி ரெண்டு கிழமையா ராநித்திரை முழிச்சிம்
பண்டிக்காவல் பாத்தன்!
ஒவ்வொரு நாளும் பின்னேரத்தில சென்றி பொயின்ரில அடையாள அட்டையைக் கொடுக்கக்க ஆமிக்காரன் செல்வான்.
"அங்கிள் புலிவந்தா நமக்குச் செல்லுங்க”
புலி இரவில வயலுக்க ஏன் வருகுது ?
எப்பிடியோ காலம் பெய்த்து. இப்பெ விளஞ்ச வயல வெட்டணும்.
குழப்பம் தொடங்கினதிலிருந்து அரசாங்கம் கமக்காரரிட்ட நெல்ல வாங்கிதுமில்ல முதலாளிமாருக்குத்தான் நல்ல வேட்டை. அவனுகளுக்கிட்ட வெட்டுக்காசு கடன்வாங்கலாந்தான். தவிச்சமுசல அடிப்பான். அறாவில தருவான்.
மூத்தமகள்ற கழுத்தில கிடக்கும்ரெண்டு பவுண் சங்கிலி மனதிலே மின்னுது. அதக் கேட்டா "நான் தான் மூளியா நிக்கிறன். வாழும் வளரும் குமருமா அப்பிடி நிக்க வேணும் ?” என்று அவள் நெருப்பெடுப்பாள்.
இத எண்ணிக்கிட்டே வயல் வரம்பு வழியாவாறன் பொழுது உச்சியயிரிக்கி. வாய்க்காலத்தாண்டி - றோட்டில ஏறி ஊருக்க வந்திட்டன். தென்னமர நிழல் மதிய நேரத்தில BñGSLOTurfėjéß.
வயல் விதைப்புக்குக் காசு கடன் தந்த சங்கத்தில வெட்டுக்கடன் கேக்கவும் வெக்கமாயிரிக்கி. அவங்களாத் தந்தாத்தரட்டும். ஆனா அந்த அசுப்பு அங்கில்ல. நல்ல காலமா அந்தச் சங்கத்திலடெக்டர்யிரிக்கி. அந்தச் சங்கத்துப் பெரியவர் சொன்னார். நீங்க எல்லாம் வலய வெட்டிச் சூடு வையுங்க. ஒரு நாளில வந்து நாலஞ்சு பேர்ர சூட்ட அடிக்கலாம். சூடடிக்கிற காசை நீங்க விதப்புக் கடனோட சேத்துத் தரலாம்.
அந்தப் பெரியையா எப்பிடிச் சொன்னாலும் டெக்டர் றைவர் மனம் வைக்கோணும். புதன்கிழமை நவமி. அது கழிஞ்சா வெள்ளிக் கிழம வயலை விட்டலாம். வெட்ட வேணும். அதுக்கு முதல் றைவரைப் பாக்கணும். அவன் இப்ப மத்தியானச்

சாப்பாட்டிக்கு வீட்ட வந்திருப்பான். நான் அவன் வீட்டப் பாத்து
நடக்கிறன். கச்சான் காத்தடிச்சாலும் வேர்த்துப் புழுங்குது.
வெட்டுக் காசுக்கு மகள்றகழுத்தில கிடக்கிற
சங்கிலியிரிக்கி. நான் என்ன விக்கவா போறன். அடவு தானே
வைப்பன். வெள்ளாம வெட்டினா எல்லா நகையையும் மூண்டு கொள்ளலாம்.
அவள் புறுபுறுப்பாள்தான். அதவிட வேற வழியுமில்ல.
நான் டெக்டர் றைவர்ர வீட்டுக்கு நடக்கிறன்.
Ž227
குரியனைச்
சுட்டுப்
G8 UTC LC ularié956ň
சூரியனையும் சுட்டுப் போட்டார்கள் இரவுக்குத் துக்கம் அதனால் அவன் 96)6(5) 60
இரத்தம் ஓடிவந்து அது கக்கியபடி அனைத்துக்
மாலையில் கொண்டது
இறந்து கிடந்தான் କର୍ଲା
དད་དོན་དུ་དཔེ་ زالاتباع آن
13

Page 18
14
 

/ിU
V
தவிர
乡
இன்னுமொரு கொடை
ஒரு வெங்காயத் துர்நாற்றத்தைப் போல்தான் என் இறந்த காலமும், சிதைந்தழுகி கெட்டு நாற்றமெடுத்தது.
வேர்களின் மூலத்தில் குவிவாய் முளைத்திருக்கிறது வெங்காயம். நானும் கூடத்தான் தாயின் கருப்பைக்குள் தூவப்பட்ட விதையாகி, வேர்கொண்டு முளைத்திருந்தேன். அதற்கிருப்பது போன்றே என் உள்மையங்களும் சற்று கடினமானதே.
வெங்காயத்தை உணவிலும், என்னைத் தவறான பழிசுமத்தல்களிலும் நன்றே பயன்படுத்தினர்.
இருந்தும் நாம் கடினமான மையங்கள் கொண்டவர்கள். இன்னுமொன்றும் கூடவே ஒரு கொடையாக, மக்களில் அநேகர் என்றுமே கண்டு கொள்ளாத அழகினையும் நாம் கொண்டவர்கள்
தமிழ் வடிவம்: எம். கே. எம். ஷகீப்.

Page 19
மொழிெ
அவர்கள் அறிவார்கள்
என் நாட்டை ஆயிரம் பேர் கைப்பற்றினரென அவர்கள் அறிவார்கள், ஆயினும் அந்த ஆயிரம் பேருமே புயற்காற்றிற் பணிபோன்று கரைந்தழிந்தனரெனவும் அவர்கள் அறிவார்கள்.
தெளஃபிக் ஸய்யாட்
எனக்கு இடங் கொடுத்தவன்
எனக்கு இடங் கொடுத்தவன் தனது வீட்டை இழந்தான் எனக்காக இசை மீட்டியவன் தனது வாத்தியத்தை இழந்தான்
g. T65) 6) Jaj, (o)45T 600 TITLJoJGöT 6 Т60T என்னை அவன் சொல்வானா அல்லது தன் உடைமை அத்தனையும் பறித்தவரைச் சொல்வானா ?
- பேட்டோல்ற் ப்றெஷ்ற்
கவச வாகனங்கட்கு முன்னம்
என் பன்னல் விளிம்பின் மேல் ரோஜா இதழ்கள் மலர்ந்தன முந்திரிகைக் கொடியினின்று ஒரு பசு நிழல்,
ஒரு பச்சை ஏணி எழுந்தது
என் வீடு ஒரு கற்றை சூரியக் கதிர்கள் மேற் சாய்ந்து குளித்தது
இதெல்லாம் அவர்களது கவச வாகனங்கள் வருமுன்னம்.
தெஃபிக் ஸய்யாட்

O O
வாய் திறக்கும் சுதந்திரம்
"அவர்கள் வாயை மூடச் செய்கின்றனர்” என்று சிலர் சொன்னாலும் வாயைத் திறக்கும் சுதந்திரம் இருக்கவே இருக்கிறது.
அவர்கள் சொல்வதற்கு மாறாக மூடித் தெரிகின்ற வாய்களால் வருபவற்றின் பட்டியல் ஒன்றைப் போட்டுப் பாருங்கள்
முதலாவதாக ஒலங்கள் இரண்டாவதாகத் தொடக்கத்திலும் சிலவேளை முடிவிலும் இன்னமும் வரும் எதிர்ப்புக்கள்
மூன்றாவதாகப் பற்கள், நான்காவதாக ரத்தம் ஐந்தாவதாக வாந்தி, ஆறாவதாகப் பெரும் பாலும் குழாய்களுடும் தலையை அமிழ்த்தியும் புகுத்தப்பட்ட திரவங்கள். - குறுகிய மனமுடையோராய் இராதீர்கள், எனெனில் வாய்திறக்கும் சுதந்திரம் எல்லோருக்கும் ஒரே விதமானதல்ல சிறைக்காவலர்கள் .95)חDJ 600TLD חלש, כ4 ஒரு கைதியின் பிடிவாதமான வாயைத் திறப்பது. அதற்குள் என்ன போகிறது ? நிறைய எண்ணெய் அல்லது நிறையைத் தண்ணிர் அல்லது ஒரு சப்பாத்தின் குதிப்பாகம் அல்லது மூத்திரம் அல்லது ரத்தமூறிய துணி அல்லது மலம் அல்லது மரத்துரள் அல்லது மண் எல்லாமே ஒழுங்காகப் போனால் வெளியே வருவது சுயமாகவே தந்த ஒப்புதல் வாக்கு மூலம்
எரிஷ் ஃப்றீட்
விதைகள்
15

Page 20
16
மொழி
கைவிடல்
நான் அவளைக் கண்டேன் நான் அவளைச் சதுக்கத்திற் கண்டேன் நான் அவளைச் சதுக்கத்திற் குருதிசொட் கண்டேன் நான் சதுக்கத்திற் கொலையுண்ணக் கண்டேன் நான் அவளைக் கண்டேன் - நான் அவை கண்டேன்
இவளது பாதுகாவலன் யாரென்று அவன் கத்தியபோது நான் அவளை அறிவேன் என்பதை மறுத்தேன் நான் அவளைச் சதுக்கத்தில் விட்டுச் சென்றேன்
நான் அவளைச் சதுக்கத்திற் குருதிவழிய விட்டுச்
சென்றேன்
நான் அவளைச் சதுக்கத்திற் தடுமாற விட் சென்றேன் நான் அவளைச் சதுக்கத்திற் சாக விட்டுச் சென்ே நான் அவளை விட்டு .
ஸமி அல் க
O
மேலுள்ள ஐந்து கவிதைகளி தமிழாக்கம் சி. சிவசேகரம்
eup6ublib : Rayisa Akhmatova செச்னியாவின் ஒரு பெண்கவிஞ ybı966)) ep6bLö: Ravil Kukharaev தமிழில்: எம். கே. எம். ஷகீப்

டுச்
றன்
lன்
O O
என் இதயம் பெரியது: என் மேசையும் கூட அகன்றது. சிலவேளை, என் தாய்க்குத்தான் அனேக விடயங்கள் தெரியாதிருந்திருக்கும் இருந்தும், இன்றவள் தோள்களில் முகம் புதைத்து அழும் தருணம் கிடைக்கின் உயிர்புறும் என் எல்லாமும், நானும் எந்த ஆதாரங்களும், விளக்கங்களுமின்றி அனைத்தையும் புரிந்து கொள்ள முடியுமானவள் நீதான் தாயே இலட்சியங்களுக்கான போர்களின் பாதையில் பொய்கள் தரும் வேதனைகளும், காயங்களும் எவ்வளவு தான் ! ? மாணித்துப் போகிற இரவுகளில் வார்த்தைகள் இன்றிய உன்னுடனான உரையாடல் நேரின் என் வேதனைகள் அகன்றோடிவிடும் கனவுகள் தான் இது எனினும்: அழகியதும், மனதை வருடிச் செல்கிறதுமான இவைகளை, என் கவலைகள் விரட்டியடித்துச் சென்றுவிடாது
புதிதாகச் சுடப்பட்ட ரொட்டிபோல் வெதுவெதுப்பான எம் கையுறைகள் மழைகளுக்கப்பால் பறந்து சென்று எமக்கு மினுப்புக்காட்டுகின்றது. மலையுச்சிகளில் மலர்ந்திருக்கும் பொப்பி மலரினைப்போல் எம் பதாகையும் அங்கே பறந்து கொண்டிருக்கின்றது
米米》
விலக்கமுடியா விதிகளில் உன் ஆரம்பங்களில் என்ன சொல்லி நானுனை வாழ்த்தி நானுனக்கும், நீ அதையே உன் குழந்தைக்கும் சொல்லப்போகிற ஒரே வார்த்தைகளைத் தானே ?
சிக்கல் மிகு பாதைகளில் நீ தொடங்கும் பயணங்களில் எதை நானுனக்கு அன்பளிக்க ? உன் குழந்தைக்கு நீயும் திரும்பக் கொடுக்க வேண்டியிருப்பதைத்தான் தருவேன் நான் உனக்கு
தாயாக இருக்கிற நான் தந்தையும்தான் வழிகாட்ட வாழ்த்த, வரவேற்க. அந்தோ என்ன இது (ஆச்சரியம்) முன்னமேயே நீ மனிதனாய் மாறி விட்டாயே!

Page 21
எந்தவொரு எழுத்தாளனுக்கும், கலைஞனுக்கும் ஒரு தத்துவத் தளம் இருத்தல் அவசியம். அது எதுவாயுமிருக்கலாம். அந்தத் தத்துவத் தளத்தை அடிப்படையாகக் கொண்டு அவன் தனது கலை இலக்கியக் கொள்கையை வகுத்துக் கொள்கிறான். அவனையறியாமலே இந்தப் பின்னணியின் போக்கில் அவன் உலக நோக்கு அமைகிறது. உலகை அவன் பொருள் கொண்டு விளங்கும் விதம் அவன் தரிசன நோக்கில் அமைகிறது.
இலங்கையில் உள்ள பெரும்பாலான எழுத்தாளர்கள் மனிதனை அல்லது மனுவியை அடிப்படையாகக் கொண்டே எழுதுகிறார்கள். சிலர் அப்படியே நடைமுறை வாழ்க்கையைச் சித்தரிக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பத்திரிகைச் செய்திப் பாங்கில் எழுதுகிறார்கள். இதனை Naturalism இயற் பண்புவாதம் என்பார்கள். (வேறு சிலர் அவ்வாழ்க்கையில் முன்னேற்றம் காண மாற்றம் தேவை என்பதை அடித்துக் கூறுகிறார்கள். இவர்கள் Realism யதார்த்தவாதம் என்ற பண்பைப் பிரதிபலிப்பவர்கள் வெறும் நடப்புகளுக்கும் அப்பால் ஒரு பின்னணி காரண காரியத் தொடர்பு - இருப்பதைக் கூறுபவர்கள். பெரும்பாலும் முற்போக்கு எண்ணங் கொண்டவர்கள். முற்போக்கு என்ற பதம் கால தேவையை ஒட்டி வசதிக்காக எடுத்தாளப்பட்ட ஒரு பண்பு நலன் தாங்கிய பதம். நல்ல எழுத்தாளர்கள், சமூக நீதியை விரும்புபவர்கள் எல்லோருமே முற்போக்காளர் தான். வரவேற்கத்தக்க மாற்றத்துக்கு எதிர்ப்புக் காட்டுபவர்கள் தமது சொந்த நலனுக்காக மாத்திரம் விரும்பத்தகாத பழைய எச்ச சொச்சங்களை அழுங்குப் பிடியாகக் கொண்ட Reactioners எதிர்வினை காட்டுபவர்கள்தான்'முற்போக்காளர் அல்லர் இன்னும் சில எழுத்தாளர் தாம் விரும்பும் மாற்றத்தையும் சொல்லாமற் சொல்லிக்களிப்பூட்டலுடன் கலை நயத்தையும் கொண்டு வருகிறார்கள். அவர்களுடைய படைப்புத்தான் எப்பொழுதுமே படிக்க இன்பந் தருவன.
கலை இலக்கியங்களை நாம் அணுகுவதற்கான முதற் காரணம் அவற்றினின்று நாம் இன்பம் துய்ப்பதற்காகவே. அதாவது களிப்பூட்டல் என்ற பண்பு இக்கலை, இலக்கியங்களில் விரவி நிற்கும். களிப்பூட்டல் என்பது ஏளனமான பண்பு அல்ல. நேரத்தை வீணடிப்பதற்காக கனநேரங்களில் நின்று தப்பியோடுவதற்காக பொழுதைப் பயனுள்ள முறையில் கழிக்க முடியாதவற்றைக் குறிக்கும் பொழுது போக்கு அம்சங்களினின்றும் வேறுபட்டது * களிப்பூட்டல். எனவே பொழுது போக்கல் என்பது இழிவாக்கிய சொல் என்றால், களிப்பூட்டல் ஆக்க பூர்வமான S)éFff60.
உலகின் தலை சிறந்த கலை இலக்கியப் படைப்புகள் எல்லாம், களிப்பூட்டல் அம்சங்களையும் உள்ளடக்கியவை. ஆயினும் களிப்பூட்டலுடன் அவை நமது அறிவையும், அனுபவத்தையும் விசாலமாக்குகின்றன. அறநெறிகளோ, அரசியற் கருத்துக்களோ, சமுதாயச் சித்தரிப்புக்களோ, உளவியற் பண்புகளோ எதனையும் யாவற்றையும் சொல்லாமற் சொல்லி 6fth 60) sp பரவசப்படுத்துகின்றன. நல்ல கலை இலக்கியங்களில் இவை துருத்திக்கொண்டு நிற்பதில்லை. அதாவது 606,65) "L 60 (UT5 இந்தப் பண்புகள் அதிகம் தென்படுவதில்லை. நவிலவும், நவிலவும், அனுபவிக்கவும்,

கே. எஸ். சிவகுமாரன்
அனுபவிக்கவும், புதுப்புதுப் பரிமாணங்களை எமக்கு அளித்து எம்மை வியப்பிலும், ஆனந்தத்திலும் ஆழ்த்துகின்றன. இவற்றைப் படித்து அல்லது பார்த்து அனுபவித்த பின்னரும் நீண்ட நேரத்துக்கு எம்மை ஆட்கொண்டு எம்மைச் சிந்திக்க வைக்கின்றன. செயல் மாற்றத்தைத் தூண்டுவன இதனாலேயே உயர்ந்த மட்டத்திலுள்ள கலை இலக்கியங்கள் எம்மைத் திரும்பத் திரும்பச் சுவையளித்துத் திருப்திப்படுத்துகின்றன.
அகநானூறிலிருந்து ஒரு தன்னுணர்ச்சிப் பாடல், புறநானூற்றிலிருந்து வீர உணர்வைப் பரிமாற்றஞ் செய்யும் ஒரு பாடல். திருக்குறளிலிருந்து ஒரு கவித்துவமான அறநெறிச் செய்தி, சிலப்பதிகாரத்திலிருந்து நாடகத்தன்மையை ஏற்படுத்தும் ஒரு காட்சி, நாயன்மாரின் படிமங்கள், கம்ப ராமாயணத்திலிருந்து மனிதம் வெளிப்படும் ஒரு பாடற் காட்சி. திருப்புகழிலிருந்து ஒசையின் பத்துடன் கூடிய பக்திச் செய்தி, பாரதியின் மனித நேயக் கவிதைகள் மற்றும் புதிய இலக்கியங்களில் சில போன்றவை எல்லாம், களிப்பூட்டல் என்ற பண்பைக் கொண்ட மனித மன உள அறிவு விரிவாக்கலுக்கு உதவும் ஒப்பற்ற கலைப் படைப்புக்கள் என நாம் இன்றும் போற்றுகின்றோம்.
எனவே களிப்பூட்டல் என்பது அருவருக்கத்தக்க ஒன்றல்ல. நல்ல கலை நமக்குக் களிப்பூட்டி உன்னத நிலைக்கு நம்முணர்வுகளையும், சுவையையும் உயர்த்த உதவுகின்றது.
17

Page 22
Z 隣の2%
凸’
22
17
多 222
ク 23
グ、
§§ O ※
目容澎% Re:Nor:NoKo 怒参多姿 %였×&兹多落汲 *くシTMNA! !!! 参密
E袭&%绥 戮袭澎袭 XXX)
�
Q容
参rae...· %W参见(XX)密密器"... -- s',/////\\\\\\\\密XXXX家交%密soos o 、逐溶密變
()
/·----- _ÇK KỲx)ĶĒS, %沁z多尋者
எந்த வேசைக்குப் பிறந்தது காலை
2
எழுந்திருக்க
இடுப்பில்லை,
எனக்குத்தான்
GU 研|- G组 历羽 《创GE 心, 列 历UC5 能、心,或 e, 5Gö ** 邻娜丽卿 D 她遇 * ...」 환)随. 即非 阳剑3口鱷爬 曲加藤,必圈 阳舞海湾 战山 & @3e儒)
*
노麵
잃
55)
o_o历
SUC넨
·니D
口9用
R9低)----
9----匈 —
編 圖珊鄭腳顫 航空
·T)历-- 珊珊 **鱷
·_]历岛,3,慨
鹰熊猫御品。
艦
庄b.斑“
劑
劉師娜娜娜5珊
○・
知 邱腾 圖驅 5 仙 鱷 * 홀 EG 姆 部 额岛 新渝 幻腰 丽历 《两 心磷 侧)雅
CO -
 
 
 
 
 
 
 
 
 

நுனியால் 1 உன் தொப்புளுக்குள் அழுக்கு. அதை எடுக்கும் கவிக்குயில்தான் ! و آلات /
A பீ நாற்றப் பாப்பா,
நீ தேவையில்லை போ, போ, போ ஒரு மூக்கோடிக் காலையிலா நாங்கள் எழுதுவது புனிதமாய் எங்கள் வாழ்க்கையின் ஒரு அத்தியாயத்தின் தலைப்பை.
மலர்களுக்கு உன் மூச்சு பட்டு, கூசியதால் அவை மூக்கைப் பொத்த வண்டு ஏமாந்து மின் கம்பி ஒன்றில் கறள் அப்ப நிற்கிறது. நான்தான் சோகத்தில் அழுகின்றேன், இம் மண்ணில் \ எப்போதும் புறா
பாம்புப் பெட்டிக்குள் அடைபடும் துயர் பெருகி. உனக்கு என்னவாம் குறை ? . கடல் பாட்டுப் பாடும் ! J சூரியன் தலைவாரும் !
போதாக்குறைக்கு உன்னைத் தூக்கிக் குதித்து பறக்கின்ற கிளிப்பிள்ளை உஷாராக்கும். , அடியேய்; " அ " , , எங்கேயடி, உன்னுடைய அலமடி ?
நேற்றுவந்த காக்கா சுகமா !
w کله چه چی
NA VA - சோலைக்கிளி -
w ܠ ܢ
V ܠܵ ܐ
VO ܗ
w w Ve w
viq w w e ܦܠ VO VN VO
V
ASA
ARASYS ప్స

Page 23
பீஷாம் ஸஹானி
ஜாஹர் பக்ஷ பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும். அந்தப் பேர் உடையோர் நூற்றுக் கணக்கில் இருக்கிறார்களாதலால் எந்த ஜாஹூர் பக்ஷ ?’ என நீங்கள் கேட்பது இயல்பே இல்லை. பெயரினால் மட்டும் அறியப்படும் ஒரு மனிதனை நான் குறிப்பிடவில்லை. நேர்ந்த அவலத்தினால் அறியப்படும் ஒரு மனிதரைப் பற்றிச் சொல்லுகின்றேன். அவருக்கு என்ன நடந்தது என்பது தெரிந்த பின் ஜாஹர் பக்ஷஐ உங்களாலும் மறக்க முடியாது. பிறகு ஆட்டுக் கடாத் தாடியோடு தெருவால் போகும் ஒவ்வொருவரும் உங்களுக்கு ஜாஹர் பக்ஷஆக தோன்ற, அவர் ஞாபகம் வரும். ஒவ்வொரு முறையும் - என்னைப் போலவே நீங்களும் சஞ்சலம் அடைவீர்கள்.
அதிசயம் என்ன வென்றால், முதல் முறை என் பார்வையில் பட்ட பொழுது அவர் எவ்வித மனப்பதிவையும் ஏற்படுத்தவில்லை. அழுக்கேறிய, தோளருகே கிழிந்த பழைய சேட் அணிந்திருந்த அவர் எல்லா நடுத்தர வயது மனிதரையும் போலத்தான் இருந்தார். வெறுங்கால்களுடன் வாரிவிடப்படாத தலையுடனும் சுவரொன்றில் முதுகைச் சாய்ந்த படி அவர் நின்று கொண்டிருந்தார். அவர் சாதாரண மனிதராகவே தென்பட்டார். அவர் ஒன்றும் பேசவுமில்லை. எதையும் கவனிக்கவும் இல்லை. சும்மா நின்றார். சிலையாகிய மனிதனைப் போல்.
அவர் வீட்டின் முன்னே ஒரு பெரிய முற்றம். அந்நேரம்அது நிறைய சனக்கூட்டம். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும், தூர இருந்து பார்த்தால் முற்றம்முழுதும் கந்தைத் துணிகள் நிரம்பியது போல் காட்சி தரும்.
வீடிழந்தவர்கள் கந்தைகள் போலத்தான் தென்பட்டார்கள். அரைகுறையாக எரிந்த தொட்டில்கள், பானை சட்டிகள்,
துணிமூட்டைகள் என்றெல்லாவற்றையும் இம் மக்கள் தம் வீடுகளிலிருந்து வாரிக் கொண்டு வந்திருந்தனர். அவை தாம் முற்றமெங்கும் சிந்திக் கிடந்தன.
சுவரோடு சேர்த்து ஆணியடிக்கப்பட்டவர் போல ஜாஹர் பக்ஷ நின்றார். அவர் கண்கள் எதையாவது
 
 

சாகித்திய அகாதெமிப் பரிசுப் பெற்ற நாவலாசிரியர் பீஷாம் ஸஹானி புகழ் பெற்ற நடிகர் பால்ராஜ் ஸஹானியின் Fகோதரர்.
நாட்டுப் பிரிவினையோடு வந்த இனக்கலவரத்தின் கொடுமையைச் சித்தரிக்கும் இச் சிறுகதை அவரால் ஹிந்தியில் ாழுதப்பட்டு பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
11lustrated Weekly இல் வெளிவந்த ஊழியைத்
பார்த்தனவோ, அறியேன். அதிர்ச்சியினால் சிலையான மனிதனால் எதைத்தான் காணமுடியும். அவர் சாய்ந்திருந்தது எரிந்து போன அவருடைய வீட்டுச் சுவரோடு. அவரது வீட்டுச் சாமான்கள் முற்றத்தில் சிந்திக் கிடந்தன. அரை குறையாக எரிந்த தாள்கள் காற்றில் பறந்தன. அவை சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புக்கள், கையெழுத்துப் பிரதிகள். அரைகுறையாக எரிந்த எந்தத் தாளை எடுத்தாலும் அதில் ஜாஹர் பக்ஷ இன் கையெழுத்தைக் காண்பீர்கள். அவர் எழுத்து முத்து கோத்தாற் போல இருக்கும். ஓர் எழுத்தாளனுடைய கையெழுத்துப் பிரதி அவர் இதயத்துக் குருதியால் எழுதப்படுகிறது. அவன் வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்டுப் படைக்கப்படுவது.
கிடந்தன. பட்டினத்தில் ஒரு கலவரம் நடைபெற்றிருந்தது. அத்தகைய சந்தர்ப்பங்களில் வழமையாக நடைபெறுவது போலவே வீடுகள் தீயிடப்பட்டன. பொருள்கள் சூறையாடப்பட்டன. பலர் கொலை செய்யப்பட்டனர். இதையெல்லாம் நினைவுகூர்ந்து பயனென்ன? தத்தம் எரியுண்ட வீடுகளின் முன் பேயறைந்தவர்கள் போல நிற்கும் ஆண்களையும், பெண்களையும் கண்ட எவருக்குமே கலவரம் என்றால் என்ன என்பது நன்றாகவே தெரியும்.
19

Page 24
அவருடைய வீட்டை எரிக்கு முன் காடையர்கள் வீட்டுச் சாமான்களுக்காகத் தான் தமக்குள் ஒரு போராட்டம் நடத்தினார்கள். ஆனால் யாருமே அவருடைய புத்தகங்களைத் தீண்டவில்லை. பிறகு நீண்ட நெருப்பே அந்தப் பணியைச் செய்தது. கொள்ளையர்கள் திருப்திப்படும் அளவுக்கு ஜாஹர் பக்ஷ வீட்டில் ஆடை, அணிகலன்கள் இருக்கவில்லை. அப்படியிருந்தும் அவர் கண்முன்னே கைக்கெட்டியவை எல்லாம் எடுத்துச் சென்றார்கள். எங்கு கொண்டு போனார்களோ கடவுளுக்குத்தான் வெளிச்சம். ஆனால் புத்தகங்கள் அப்படியே இருந்தன. வீட்டுக்கு நெருப்பு வைக்கப்பட்டதும், அவர் அவற்றைத் தம் கைகளிலே ஏந்திச் சென்றார். ஏதோ மனித உயிர்களைக் காப்பாற்றுபவர் போல அவரால் அதிக நூல்களைக் காப்பாற்ற முடியவில்லை. அவர் கைகளும் - ஏன், தாடியும் கூடத்தான் பொசுங்கத் தொடங்கின. மூச்சு வாங்கியது. கால்கள் தள்ளாடின. பாடுபட்டு வெளியே கொண்டு வந்த சில புத்தகங்களும் அங்கும் இங்கும் ஒடுபவர்களால் மிதிக்கப்பட்டன. காளிதாஸனுடைய சாகுந்தலம் எற்றுண்டு எங்கோ போய் விழுந்தது. கையெழுத்துப் பிரதிகள் கிழிந்தும் சிந்தியும் உருக்குலைந்தன.
நா வறள, கண்கள் மிரள, சுவரில் சாய்ந்தபடி நின்ற ஜாஹர் பக்ஷ தம் சொந்த மரணத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். பிரளய காலத்தில் பேய்கள் ஆடும் கூத்துத் தானோ இது. விரைவில் எல்லாம் அடங்கின. முப்பது வருட முயற்சி, தவம் பிடி சாம்பராய் வெந்து காற்றில் பறந்து கொண்டிருந்தது. நூல்களை அவர் நெஞ்சோடு வைத்து அன்போடு வாசிப்பது வழக்கம். அவையும் யார் யாரோ தந்த கடின உழைப்பின் பயன்கள் அல்லவா ?
பக்கத்து வீடுகள் 6T66urth எரிந்து கொண்டிருக்கையில்,காடையர்கள் இவருடைய கதவை உடைத்து நுழைந்தார்கள். ஈட்டி, பொல்லுகளுடன், சத்தமிட்டபடி, எத்தனை பேர், இவருடைய மனைவியும் சத்தமிட்டாள். “நான் யாருக்கு என்ன தீங்கு செய்தேன்? ஏன் வந்தீர்கள்? என்ன வேண்டும் உங்களுக்கு?”இவர் சத்தமிடத் தொடங்கினார்.
அத்துமீறி நுழைந்தவர்களுக்கு இது அதிக பிரசங்கித்தனமாகப்பட்டது. இவருடைய மனைவியின் கூக்குரல் ஒய்ந்து விட்டதோ, மகளுடைய குரல் அடங்கியதோ இவருக்குத் தெரியாது. திகைப்பில் அவரால் சிந்திக்க முடியவில்லை. தம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று பார்க்க முடியவில்லை. 'எதை வேண்டுமானாலும் எடுத்துச் செல்லுங்கள். ஆனால் தயவு செய்து இந்தப் புத்தகங்களையும்
20

தாள்களையும் விட்டு விடுங்கள். உங்கள் கால்களில் விழுந்து கேட்கிறேன்.” கைகூப்பிக் கெஞ்சினார் அவர்.
ஆனால் அவர் வீட்டுக்கு வெளியே இழுத்து வீசப்பட்டார். ஒரே ஊழிக் கூத்து. பிறகு அவர்கள் வீட்டுக்குத் தீ வைத்தார்கள்.
ஜாஹர் பக்ஷ ஐப் பார்த்தேன். முன்போலத்தான் ஒரு புரியாத புதிர் போல நின்று கொண்டிருந்தார். குறுந்தாடி, பெரிய அகன்ற கண்கள், மெலிந்த உடம்பு, அவருள்ளே கனன்ற ஏதோ ஒரு நெருப்பு அவரை அரைவாசி தகித்து விட்டது, போல நின்றார். அவ்வேளை தான் அவர் பெயர் எம் மனத்திரையில் பளிச்சிட்டது. இந்த ஜாஹர் பக்ஷ இன் சிறுகதைகளை நான் படித்திருக்கிறேன். அவருடைய மொழி பெயர்ப்புக்களைக் கூட படித்திருக்கிறேன். அவர் தானா இவர்? சப்பாத்தில்லாமல், ஆடைகுலைந்த படி சுவரோடு சேர்த்து ஆணியடித்தாற்போல
?
அன்று, ஜாஹர் பக்ஷ சில பக்கங்கள் எழுதி ஒரு புறம் வைத்துவிட்டு, ஒரு பீடியைப் பற்ற வைத்தார். கைகால்களை நீட்டினார். இருக்கையிலிருந்து எழுந்தார். அவர் நரம்புகளூடு திருப்தியுணர்வு ஓடியது. நல்ல எழுத்தோட்டம் உள்ளத்துணர்ச்சிகளை ஒரு லயத்தோடு கொட்டியிருந்தார் அவர் உள்ளூர ஒரு நிறைவு. வானத்தில் மிதப்பது போன்ற அவ்வுணர்ச்சியிலிருந்து அவர்விடுபடு முன்னே வெளியே - முற்றத்தில் காலடியோசை, கூச்சல், வசவு, கோஷம், கடந்த சில நாள்களாகக் கவிந்து கொண்டிருந்த மூட்டத்தினூடு வந்த முதல் வெடிப்பு - ஏதோ ஒர் அணை தகர்ந்து, குரோதம் என்ற பெருவெள்ளம் எல்லாப் பக்கமும் பாய்வது போல,

Page 25
ஜாஹர் பக்ஷ அவ்வொலிகளுக்குச் செவிகொடுத்த போதும் அவற்றால் அவர் கலவரமடையவில்லை. என்ன சங்கதி என்று பார்க்க அவர் எழுந்தார். திடீரென்று அவர் மனைவி கூச்சலிட்டாள்.'கதவைத் திறக்காதீர்கள், புண்ணியம் கிடைக்கும், வெளியே போக வேண்டாம்"
“ஒன்றும் ஆகாது. கவலைப்படாதே. இங்கே ஒன்றும் ஆகாது"
'கும்பிட்டன். கதவைத் திறக்காதையுங்கோ, உங்களுக்கு அறிவு கெட்டு போச்சுதா ?”
"இங்கே என்னை அறியாதார் யார்?’ ஜாஹூர் பக்ஷ சிரித்தார். கதவை நோக்கி அடியெடுத்து வைத்தார்.
அந்த வேளைதான் வெடிச்சத்தம் போல ஏதோ பெரிதாகக் கேட்டது. யாராவது அவர் கதவின் மீது எதையோ எறிந்து விட்டார்களா ? இல்லை. அவர் கதவைக் கோடரி கொண்டு தாக்கிய சத்தம் ஒருமுறையல்ல. இரு முறையல்ல, மும்முறை மூன்றாம் முறையோடு கதவு பிளந்தது.
எங்கோ ஏதோ தவறு நடந்து விட்டதென்று தான் ஜாஹர் பக்ஷ இன்னமும் நம்பினார். இவர்களால் ஒரு முறை தன்னைப் பார்த்தாலே தம் தவறை உணர்ந்து திரும்பி விடுவர். ஆனால் அவர்கள் கூட்டமாக உள்ளே வந்தார்கள். ஈட்டி வேல், குத்துவாள் எல்லாம் ஏந்தியபடி எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்டன.
'அம்மா’ மூத்த மகள் கீச்சிட்ட படி ஒடிப்போய்த் தாயைக் கட்டிக் கொண்டாள். புத்தக அலுமாரிக்குப் பக்கத்தில் சிலையாக நின்றாள் இளையவள். கண்களை அகலவிரித்து முகம் வெளிறி, மருண்டதொரு மானைப்போல தம் மகள் பேயறைந்தவள் போல நின்ற அக்காட்சி ஜாஹர்ே பக்ஷ நினைவில் நின்றது. அதன்பின் அவளுக்கோ தம் மனைவிக்கோ என்ன நடந்தது என்று அவருக்குத் தெரியாது.
உள்ளே புகுந்த கூட்டத்துக்குள் அவர் விஸ்வேஸ்வரனை ? அடையாளங்கண்டு கொண்டார். அது அவர் நடுங்கும் கால்களுக்கு சற்றுவலுவைத்தந்தது. விஸ்வேஸ்வரன் பக்கத்துத் தெருவில் வசிப்பவன். ஒரு ஹிந்திசஞ்சிகையின் காரியாலயத்தில் வேலை பார்த்து வந்தான். அவருடைய எழுத்தைப் போற்றி புகழ்வான். "நீங்கள் முஸ்லிமாயிருந்தாலும் ஹிந்தி இலக்கியத்திற்கு வளம் சேர்ப்பீர்கள்" தன் சஞ்சிகையில் ஜாஹப் பக்ஷ இன் கட்டுரைகள் இரண்டொன்றை வெளியிட்டுள்ளான்

அவன். அது சரி, விஸ்வேஸ்வரன் இங்கே என்ன செய்கிறான்? இவர்களை ஏன் அவன் தடுக்கவில்லை. தான் நின்ற இடத்திலிருந்தே அவர் சத்தமிட்டார். 'தம்பி விஸ்வேஸ்வரா, என்னை உனக்குத் தெரியும் அல்லவா ?”
ஆனால் விஸ்வேஸ்வரனைக் காணவில்லை. அவன் மாயமாய் மறைந்து விட்டான். கூட்டத்தில் கரைந்து விட்டான்.
காடையர்கள் இன்னும் சத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள். ஜஹர்பக்ஷஇன் கால்கள் நடுங்கின. அவர் உடல் வியர்வையால் நனைந்து விட்டது. "இஞ்சை பாருங்கோ நீங்கள் விரும்பும் எதையும் எடுத்துச் செல்லலாம். ஆனால் ஒரு சிறியவேண்டுகோள்" கைகூப்பியவண்ணம்தழுதழுத்த குரலில் கெஞ்சினார் அவர்
சிலர் அமைதியானார்கள், வேறுசிலர் இன்னும் உரத்துச் சத்தமிட்டனர். சுமுகமாக மெல்லப் பேசினால் தாம் சொல்வது கேட்கப்படும். நியாயம் உணரப்படும் என்று எழுத்தில் படிப்பில் ஈடுபடுபவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இங்கோ ரத்ததாகம் கொண்ட மக்கள்.
“பெரியோர்களே, எல்லாவற்றையும் எடுங்கோ, கையெழுத்துப் பிரதிகளையும் புத்தகங்களையும் விட்டிடுங்கோ, வாழ்நாள் முழுவதும் நான் உழைத்த உழைப்பு அவை எறும்புபோல ஒவ்வொன்றாகச் சேர்த்த புத்தகங்கள்"
அதன் பின் ? அவருக்கு என்ன நடந்தது என்று கடவுளுக்குத் தான் தெரியும். பைத்தியக்காரன் போல உச்ச ஸ்தாயியில்கத்தத் தொடங்கினார். "பாருங்கோ, இவை கவிதைத் தொகுதிகள் நிராலா பந்த், மகாதேவி. இவை பிரேம்சந்த் எழுதிய நாவல்கள். கஷ்டப்பட்டு உழைத்த பணத்தினில் வாங்கிய நூல்கள், விட்டுடுங்கோ, இவை கையெழுத்துப் பிரதிகள், மொழிபெயர்ப்பு"
பளார் என்று முகத்தில் விழுந்த அறை அவரை அடக்கியது. அவர் முனகினார். உதடுகள் துடித்தன. அவரை நோக்கிக் கைகள் நீண்டன. “எளிய முஸ்லீம், ஹிந்தியில் எழுதுறானாம் இச் சொற்கள் காதில் விழுந்ததும் ஜாஹர் பக்ஷ இன் சிந்தனை முடங்கிவிட்டது. பிறகு கொள்ளை தொடங்கியது. ட்ரங் பெட்டிகள் படுக்கை விரிப்புகள், தொட்டில்கள் கைக்கெட்டும் எதுவாயினும் திடீரென்று மனைவி மக்களை நினைத்துக் கொண்டார். நெஞ்சைப் பிழியும் ஒர் ஒலம் அவர் தொண்டையிலிருந்து கிளம்பியது. யாரோ அவரைப் பலமாகத் தள்ளவே அவர் முற்றத்தில் முகங்குப்புற வீழ்ந்தார். அவருடைய வீட்டுக்கு நெருப்புவைக்கப்பட்டது. தீநாக்குகள் அவரை நக்கின.
21

Page 26
உடைந்த கதவூடாகவும் யன்னல்கள் ஊடாகவும் புகை குபு குபு என்று வரத் தொடங்கியது. "எளிய முஸ்லிம் உயிர் தப்பினதே புண்ணியம் என்று விளங்கிக் கொள்"
கோஷமிட்டு கொண்டும் தூஷண வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டும் அட்டகாசமாகச் சிரித்துக் கொண்டும் கூட்டம் அடுத்த வேட்டைக்குக் கிளம்பியது. அங்கமெல்லாம் நடுங்க, தம் வீடும் சொந்த நூலகமும் பற்றி எரிவதைப் பார்த்து நின்றார் ஜஹபர் பக்ஷ ஆற்றாமையால் வீட்டுக்கு முதுகு காட்டி நின்றார் அவர் வாழ் நாள் முழுவதும் அவர் பேணிய நம்பிக்கை ஊனமுற்றுவிட்டது. சாகவில்லை. பேய்பிடித்தவர் போல் திரும்பி வீட்டுக்குள் பாய்ந்தார். நூல்களையும் கையெழுத்துப் பிரதிகளையும் இழுத்தெடுக்கத் தொடங்கினார். எம் கண்முன்னே இவை எரிவதை எப்படி அனுமதிப்பது ? இயன்றதைப் பாதுகாப்போம் என எண்ணினார். நெடுநேரமாக நூல்களையும்கையெழுத்துப் பிரதிகளையும் சுமந்து களைத்துப் போனார். கைகள் கொப்புளித்தன. நுரையீரலுக்குள் புகை நிரம்பியது. மூச்சு வாங்க, தலையை இருகைகளாலும் பிடித்த படி நிலத்தில் வீழ்ந்தார்.
இப்பொழுது, ஜாஹர் பக்ஷ அரைகுறையாக எரிந்த வீட்டுச் சுவரில் சாய்ந்த படி நிற்கிறார். அவர் எதிரில் முற்றத்தில் தகரங்கள், சட்டி பானைகள், கடதாசி, தூசி, குப்பை இவற்றின் நடுவே வீடற்ற குடும்பங்கள் சில இருப்பிட வசதிகள் செய்திருந்தன. ஜாஹர் பக்ஷ இன் அகல விரிந்த திகைத்த
கண்கள் குழம்பி பார்த்தன. எதையும் காணாமலே,
மதச் சார்பின்மையைக் கோபுரத்தில் ஏற்றி வைத்துக் கொண்டாடும் பத்திரிகைக்கார்கள் அகதிகள் பால் தமக்குள்ள அக்கறையையும் அனுதாபத்தையும் தெரிவிக்க அவர்களுக்கு ஆதரவு தருவோரைத் தட்டிக் கொடுக்க இங்கு வந்த போது ஜாஹர் பக்ஷ தன்வீட்டுச் சுவரில் சாய்ந்து வெறித்துப் பார்த்த படிநின்றுகொண்டிருந்தார். அப்பொழுதுதான் நான் திடீரென்று அவரை அடையாளங்கண்டேன். அணுகினேன். (என் குறிப்புப் புத்தகம் பென்சிலுடன்).
"நீங்கள் ஒர் எழுத்தாளர் அல்லவா ? ஹிந்தில கதை எழுதுகிறவர் இல்லையா? ஷேக் ஸாதியின் கவிதையை ஹிந்தியில் மொழிபெயர்த்தவர் அல்லவா நீங்கள்"
அவர் என்னை ஏறெடுத்துப் பார்த்தார். பிறகு முகத்தைத் திருப்பிக் கொண்டார். ஏதோ என் முகத்தில் விஸ்வேஸ்வனைக் கண்டவர் போல உதடுகளில் ஒரு மெலிந்த புன்னகை எழுதவேண்டியதெல்லாம் எழுதியாயிற்று. இதுதான் கடைசிக் கதை"முணுமுணுத்தார் அவர்.
22

எழுத்தாளர் எழுதுவது ஒரு சிறுகதை. அவர் வாழ்வது உத்தரிப்பது இன்னொரு விதமான சிறுகதை. இவர் சொல்வது எந்த ரகம் ?
வெளியே முற்றத்தில், எரிந்த தாள்கள் காற்றில் பறந்தன. சேறும் அழுக்கும் பட்ட புத்தகங்கள் அங்கும் இங்கும் சிந்திக் கிடந்தன. மதச் சார்பின்மையின் தூண் என்று சொல்லத்தக்க ஒருவர் குனிந்து ஒரு நூலை எடுத்தார். அதில் சேறு அப்பிக் கிடந்தது. எத்தனை பேரால் அது மிதிபட்டிருந்தது என்று சொல்வது கடினம். அது துளசி ராமாயணம் - ராம சரித மானஸ், பல பக்கங்கங்கள் அடையாளமிடப்பட்டிருந்தன. பல செய்யுள்கள் கீழ்க் கோடிடப்பட்டிருந்தன. 9|g]] வாசிக்கப்படவில்லை. பாராயணம் செய்யப்பட்டது என்பது தெரிந்தது.
தீ தணிந்த பிறகும் நகரம் முனங்கிக் கொண்டிருந்தது. தன் காயங்களை நக்கியவாறே வீட்டுக் கதவுகள் மெல்லத் திறக்கத் தொடங்கின. வயிற்றைக் குடையும் பசியினால் மக்கள் வெளியே வந்தனர். கடைகள் திறந்தன. மக்கள் சூழ்நிலையை எதிர் கொள்ளலாயினர். இது அவர்கள் தாய்நாடு. அவர்கள் இங்கு வாழ வேண்டியவர்கள். எவ்வளவு காலந்தான் அழுது புலம்பிக் கொண்டிருப்பது? இடிபாடுகள் அகற்றப்பட்டன. வீடுகள் திருத்தப்பட்டன. ஐந்து நாளாக நடந்த கலவரம் தூக்கத்தைக் கெடுத்த ஒரு பயங்கரக் கனவு போலவும் இப்பொழுது அவர்கள் உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டது போலவும் தோன்றியது.
பிள்ளைகள் விளையாட வீதிக்கு வந்தார்கள். அவர்கள் சிரிப்பு காற்றில் நிரம்பியது. மீண்டும் வாழ வேண்டும் என்று மனித நெஞ்சங்கள் துடிக்கத் தொடங்கின. நம்பிக்கை மீண்டும் தளிர்விடத் தொடங்கியது. தலைக்கு மேலே திரண்டகரிய மேகங்கள் கலையத் தொடங்கின. மக்களுடைய மனங்களில் பெரிய மாற்றம் ஏற்பட்டிரா விட்டாலும், இந்துக்களும் முஸ்லிம்களும் எல்லாம் சரிவரும் என நம்ப விரும்பினர். இல்லை, இல்லை, இது போன்ற ஏதும் மீண்டும் நடக்காது என்று தமக்குத் தானே சொல்லிக் கொண்டார்.
இரண்டு வருடங்கள் உருண்டோடி விட்டன. எங்கள் கார் மீண்டும் நகர வீதிகளில் ஒடிக் கொண்டிருந்தது. வகுப்பு வாதம் பற்றிய மாநாடு ஒன்றில் கலந்து கொள்ளச் சென்றிருந்தோம். எனக்கு ஒரு சொற்பொழிவு கடந்த சில ஆண்டுகளாக வகுப்புக் கலவரம் நடந்த ஒவ்வொரு இடத்துக்கும் போய், கலவரத்துக்கான காரணம் அதன் விளைவு என்பன பற்றித் துருவித் துருவி ஆராய்ந்து வந்துள்ளேன். வகுப்புவாதம் பற்றி அதிகாரப்பூர்வமாகப் பேசும் அளவுக்கு என்னிடம் தகவல்கள் உள. என்னோடு சில பிரமுகர்களும் இருந்தனர். கார் ஓரிடத்தில் நின்றது. கொஞ்ச

Page 27
நேரத்தில் சிறு கூட்டமே கூடிவிட்டது. சிலர் புதினம் பார்க்க வந்திருந்தனர். வேறு சிலர் தங்கள் மனக்குறைகளை வெளியிட விரும்பினர். நானும் என் சகாக்களும் அவர்களுடைய ஐயப்பாடுகளைப் போக்கினோம். அரசாங்கம் அவர்களுடைய குறைகளைப் பரிசீலித்து ஆவன செய்யும் என்று தேற்றினோம். மதச்சார்பின்மை என்ற லட்சியத்தை உள்வாங்கிக் கொள்ளும் படி அறிவுரை கூறினோம்.
கார் நகரத் தொடங்கியதும், ஒரு மனிதன் அதன் பொனற் ஐப் பற்றிக் கொண்டு நடக்கத் தொடங்கினான். காரின் முன் பாய முயல்கிறான் என்று கருதி அவனை அப்பால் தள்ளினார்கள்.
அது வேறு யாரும் இல்லை. ஜாஹர் பக்ஷ. அவரை அடையாளங்காண எனக்கு அதிகநேரம் பிடிக்கவில்லை. அவருடைய ஆட்டுக் கடாத்தாடி வெள்ளையாக மாறியிருந்தது. கண்களில் அதே வெறித்த பார்வை, கலைந்த கேசம். காரை நிறுத்தி அவரைப் பேட்டி காண ஆசை, அன்று அவர் வாய் திறந்து ஒரு சொல் கூடப் பேசவில்லை. இப்பொழுது அவர்
தம்மைச் சுதாரித்துக் கொண்டிருப்பார், அவருக்குப்
r
அக்கரை
இக்கரைப்பற்றுடன் இன்று இதயங் கவர்ந்தவர் இல்ை சர்க்கரை வாழ்வு சப்பென்ற அக்கரைப்பற்று என்னைப்
இக்கரைக்கு அக்கரை பச்6 இக்கரையே பச்சையாய் இ அக்கறையின்றி அவர் விட் அக்கரை தான் பச்சை என்
தக்கவர் இல்லையென் வாழ்வதனில்
அக்கரைப்பற்று வரக் கார இக்கரையில் இன்னல்கள் அக்கரையோ பச்சை என்ற
எக்கரை சென்றாலும் ஏங்கு இக்கரை அக்கரை என்று ஏ சிக்கலைத் தவிர்ப்பதான செய்பணியில்
அக்கறை காட்டுவதே என்

புனர்வாழ்வளிக்க முயற்சிகள் நடைபெறுவதாகக் கேள்வியுற்றிருந்தேன்.
ஆனால் அவரை நோக்கித் திரும்பிய நான் திகைத்து விட்டேன். வழி தவறியவர் போல அவர் வீதியின் நடுவில் தள்ளாடிய படி நின்றார்.
"அவர் தான் ஜாஹூர் பக்ஷ”என்று விளக்கினார் எனக்குப் பக்கத்தில் இருந்த உள்ளுர் வாசி. அவருக்குப் புத்தி கலங்கி விட்டது. பைத்தியமாகிக் கொண்டிருக்கிறார்”
ஜாஹபர் பக்ஷ எனக்கு ஏதாவது சொல்ல விரும்பினாரா? என்னை அடையாளங் கண்டு கொண்டாரா ? அவர் முகம் எங்கள் காரின் பக்கம் திரும்பிய படி சலனமின்றி இருந்தது. அவருடைய கலைந்த கேசமும் குலைந்த ஆடையும் அவர் கதையை அவர் கடைசிக் கதையைச் சொல்லின.
அதுவே நான் அவரைக் கண்ட கட்ைசிச் சந்தர்ப்பம். சில நாள் கழித்து அவர் இவ்வுலகை நீத்து விட்டார் என்று யாரோ சொன்னார்கள்.
N
ப் பற்ற
5ayer.
வரை இருந்த எந்தன்
லயென்றானபின்
றானது - அதனால்
பீடித்ததுவே.
சை என்பர் - ஆனால் ருந்த என் வாழ்வில் டுச் சென்ற பின்னர் று ஆனதுவே.
று தவித்திருப்போர்
IITud GTGöTGOT ?
இழப்புக்கள் ঢ্যে্যTিGITub அறிவீனமோ ?
தல் தவிர்க்கலாமோ ங்குமனம் பரிதவிக்கும்
TIT GU U GJ GöT U Tftë, 5, Të
றறிந்தேன்.
23

Page 28
24
கிளை பெயர்ந்தோம் திசையறியாப் பெயர்வில் பின்னொரு நாள்
சந்தித்தோம் புறக்கோட்டை அஞ்சலாம்படிச் சந்தியில்.
வியர்வைப் பொருக்கெனப் பெயர்வின் உலர்வு எம்மில் ஒட்டியிருந்தது விழுதெனக் கைகள் நீட்டி தழுவிய போதில்
வேர்களின் ஈரம் சுவறியது.
எனினும் அடிவயிற்றை எதுவோ பற்றிப் பிறாண்டுவதைப் போலவும்.
எது ?
செவிப் பிடியில் வேலிக்கப்பால் விட்டெறிந்த கண்விடுக்காத பூனைக்குட்டியா ? தழுவி நிமிர்கையில் அவனின் விழியோரம் விளிம்பு கட்டியிருந்தது அதன் முனகல் ?

வெறும் முனகல்தானா? விழிவழி உடைப்பெடுத்துப் பாய்கிற கிளைநதிகளின் கூட்டுக் கதறல் இல்லையா ? கழுவித் துடைக்கப்படாத பாவத்தின் சம்பளத்தை கண்ணிரால் அளந்தபடி பெயர்கின்ற பெருவெளிப் புலம்பலாய் ஒலிக்கவில்லையா ?
விழியோர முனகலின் வெடிப்பெடுத்த பேரோசை எனைப் பெருஞ்சூறையாய் எழுந்து தாக்க வீதியில் நான் விறைத்தபடி தாக்கியமைக்கான எந்தத் தடயமும் இன்றி விடைபெற்றுச் செல்கிறான் இவன் இடறிய 'சாறணை மெல்லச் சரி செய்த படி,
யாழ்ப்பாணம் அப்துல் காதரிலிருந்து வசூலிப்பிற்காய் வந்து போகும் இவனுக்கான 'பாக்கி எதுவும் இல்லையாயினும் ஏனோ அழுத்தமாய் உணர்கிறேன் செலுத்துதற்கான நிலுவை மிகவும் கனதியாய் உள்ளதாக.

Page 29
%eagööy良良e了ae
1997họ0)o(o)so
syvájuĝ919 výộ lọ9șę@ố ở độ 100909 loĝ99 y válạ919 wmno(89490,90 (999-ą %90 ış9ý @ ₪ 099 @& qongoạ sĩų9ố
1997.goog) lạ976,99f@ @ų919 ogysyl9 sự99~909ố |0900|09ჭ2 Uიg) $g)ry L9
日法 盟
D9
'* + ' 'qv', 'w *~~~~ qvƯ ~ ~ ~u7 * '(ĝájų9ồę tová svo @@@rto q 0 volg9.g) onmỗ(290 @@logog) ழ90ஐழ919 டுே ம9ழ99 ტიფიმჩ)|9
199.9% %%499@
sự9@%10999 (No modo lợ99 porto 0ĝo ----------©ộg£4.949/19694)ღჭ ~209 loĝ9@ra odorą (jų9ý quạ999 @& syyn (ĵų9ố
叫
k)
 

sự9ệg)$/myo șáhọ@ ņ9,99%), o odmộộyn(9 ņo(29@%(9
oy válạ919 yvn Qm090909199)
ņvog) 4/9 499 'q' vog)ņyyn vo)??@rto(9 @@goods) !pg.ooo (Ĵộgmyng) ņs@ệ,Îo
șņváų9% q^9 vo
'dჩ)ცეgo> ყUL09||09v4269 ფირზთg)
'q' volfmylo son (ĝĶyog) șQyűlạ9& @ệ@to,96)(f) @& @%$@!? ??(2909-ą
(19ცდ9-ნიdf) (9956%- ი’. ი"p a
@y@@%-7% groov? Q& ņvog) og)?Orto @@@) 09(9@g) q999 vág)Ộn(9
y válạ919 vmao(29ņ9,9009 vo (25/noɑ65@,$,? o cos coHan@47/o (€)&&
Ο Π
£IIŪırı : ‘quo +19
PEP? D9
·ų99ĝộ vlogo sợ919 wo(29ų9,9(9 qvasq919 ggg 99996
(Ĵų9độ-------@492画“sự9& googoșof Qĝệ vlogo logorto moș vog) o(29ș~~9
'nosoņ9ố (tog)oșQy0(9 qoyooĝộ@nqo(9 (1909ņ9ổ (tog)???) vợ (9 ņ9,999ę5 499@@
---------0(29ĝộwm (99.9% van o 6% số 99)(y19 sog)?--Norto (ĝ%@ @o@@@(9
ovom Jogos@ 4209@ 4,99&#f Qĝ% vlogo logoto wo(29ų9,9(9
'q',$$@n(9 @@@@@ į99ņwory:wo mgogo% (Norto
·loĝĝaş șĝộynoɑ wɔɑ9oryloo vện(9090) lạ9%
sự99ęs į99@@ qoaerő) vo(9 synv% %%ụon qooo wong) @@%-ig ș@ệymoso
at?,,,,,,,,-, o maa , , , , , ......--~~~~
25

Page 30
26
 


Page 31
இந்த நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் மட்டக்களப்பின் நவீன சிந்தனையுடைய மரபு வழிக் கவிஞர்.
பழைய மரபிற்கும் நவீன மரபிற்கும் இடைப்பட்டவர். இந்த நூற்றாண்டின் ஆரம்ப கால சிந்தனைப் போக்குகளான சமூகம் தேசியம் போன்ற இவருடைய பேராசை வேண்டாம் பெரும்பான்மை வகுப்பாட்சியும் மதச் சார்பும் போன்ற கவிதைகளில் காணப்படுகின்றன. எனினும் இன்றைய அர்த்தத்தில் இவரை மட்டக்களப்பின் நவீன கவிதையின் முன்னோடி என்று கருத முடியாது.
புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளைக்கு அடுத்த தலைமுறையை சேர்ந்தவர்கள் மூலம் முற்றிலும் நவீனத்துவம் உடைய கவிதை மரபு ஒன்று தோன்றி வளர்ந்தது.
இந்த தலைமுறையினர் அன்றாட வாழ்க்கையில் நாம் எதிர் கொள்ளும் சமூக அரசியல் பிரச்சனைகள் தனி மனித உணர்வுகள் ஆசாபாசங்கள் அனுபவங்கள் போன்றவற்றைப் பாடு பொருளாகக் கொண்ட கவிதைகளை எழுதினார்கள்.
இந்த தலைமுறையைச் சேர்ந்தவரும் ஈழத்து நவீன கவிதை முன்னோடிகளில் முக்கியமாவருமான புரட்சிக் கமாலே மட்டக்களப்பின் முதலாவது நவீன கவிஞர் ஆவார்.
இவர் (புரட்சிக்கமால்) “பெயருக்கேற்ற புதுமைக் கருத்துக்கள் உடையவர். அரசியல், சமூக பொருளாதார அழுக்குகளை நீக்கி புது வாழ்வும் பொதுமை வாழ்வும் தேடிச் சமைப்தே இந்த யுகத்தின் இலட்சியம் எனக் கொண்டவர்” என்று பேராசிரியர் க. கைலாசபதி கூறுகிறார்.
இவர் பின் நாளில் இஸ்லாமிய மரபுணர்ச்சி கவிஞராக மாறிய போதும் இவரது ஆரம்ப காலக் கவிதைகளில் யாவருக்கும் பொதுவான இலட்சியங்களை எடுத்தாளுகிறார். "அணுக்குண்டு தனியுரிமை பிணக்காடு செய் பகைமை துணுக்குற்று நீசமென கொட்டு முரசே” என்ற கவிதையும் இவருடைய பிரபலமான கவிதைகள்.
1956 ம் ஆண்டின் இலங்கை அரசியல் நிகழ்வுகள் ஈழத் தமிழ் இலக்கியத்தில் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியது. அதுமட்டக்களப்பில் மொழி வழி இன உணர்ச்சிக் கவிதைகள் தோன்ற காரணமாய் அமைந்தது.
இராஜபாரதி, காசி ஆனந்தன் ஆகியோர் மொழிவழி இன உணர்ச்சி கவிஞர்களக்கு உதாணர புருஷர்கள்.
இவர்களைப் போலவே சுபத்திரனும், சி. மெளனகுருவும் வர்க்க உணர்ச்சிக் கவிதைகளை பாடினார்கள். சுபத்திரனின் ஆரம்ப கால கவிதைகள் பிரச்சாரப்பாங்கான அரசியல் கவிதையாக இருந்தன.
சங்கானைக்கென் வணக்கம் சரித்திரத்தில் உன் நாமம் மங்காமல் நிலைத்திருக்கும் என்று பாடிய சுபத்திரனின் நாமமும் ஈழத்து வர்க்க போராட்ட வரலாற்றில் நிலைத்திருக்கும்.
இவரைப் போலவே முற்போக்கு சிந்தனையை பிரதிபலித்தவர் சி. மெளனகுரு. நிலவே உனைப் பாட நேரமில்லை' எனப் பாடிய

இவருக்கு நல்ல கவிதைகளைப் பாடவும் நேரமில்லாமல் போனது துரதிஷ்டமே.
(இராஜபாரதி, காசி ஆனந்தன் சுபத்திரன், சி. மெளனகுரு ஆகிய) இவர்களைப் போல் அரசியல் ரீதியாக தம்மை இனம் காட்டிக் கொள்ளாமல் காதல், இயற்கை போன்றவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு கவிதை எழுதியவர்களாக திமிலைத் துமிலன், திமிலைகண்ணன், வெல்லவூர் கோபால், சி. கனகசூரியம், ஜிவாஜீவரத்தினம், செ. குணரத்தினம் ஆகியோரைக் குறிப்பிடலாம்.
இவர்களுள் அதிகமான கவிதைகளை தொடர்ந்து எழுதி வருபவர் செ. குணரத்தினம் ஆயிரம் தலை வாங்கியே தீருவேன் என்று அடம் பிடித்த அபூர்வ சிந்தாமணி போல இவரும், பத்தாயிரம் கவிதைகளை பாடியே தீருவேன் என சபதம் எடுத்திருப்பதால் தொகையில் செலுத்தும் கவனத்தை தரத்தில் செலுத்தவில்லை.
இவருடைய விண்ணில் இருந்து ஒரு வாழ்த்து என்ற கவிதையில் விபுலானந்தர் இவரை நோக்கி "உனக்கு தெரிந்தபடி / ஓயாமல் எழுதுகிறாய்/ கணக்க எழுதினாலும்/ கனமாக எழுது”என்று கூறுவதையே நாமும் கூற வேண்டியுள்ளது.
மொழி உணர்ச்சிக் கவிஞர்களும் சரி முற்போக்குக் கவிஞர்களும் சரி காதல் இயற்கை கவிஞர்களும் சரி இவர்களின் உள்ளடக்கம் மாறுபட்டாலும் செய்யுள் ஊடகத்திலேயே எழுதினார்கள்.
1970 ம் ஆண்டுக்குப் பின் இலங்கை தமிழ் கவிதையில் தோன்றி புதிய வீச்சு மட்டக்களப்பிலும் பிரதிபலித்தது.
நவீன தமிழ் கவிதையின் ஒரு பிரிவான புதுக்கவிதை இங்கு அறிமுகமாயிற்று. கவிதை, செய்யுள் ஊடகத்திலிருந்து வசன ஊடகத்திற்கு கூடுவிட்டு கூடு பாய்ந்தது.
செப்பல், துள்ளல், துலங்கல், ஆகிய ஓசைகளின் இடத்தை பேச்சோசை கைப்பற்றியது. இந்தக் கட்டத்தில்தான் சாருமதி புரட்சிகர உள்ளடக்கத்தையும் வசன ஊடகத்தையும் கொண்ட புதுக்கவிதையை மட்டக்களப்பிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.
“எமது கவிதைகள் முதன்மையாக புதிய வடிவத்தில் எழுதப்பட வேண்டும். சில கவிதைகளை நாம் மரபு வழிப்பட தொல் வடிவங்களிலும் எழுதலாம். ஆனால் அவ்வாறு செய்யுமாறு இளைஞர்களை ஊக்குவிப்பது முறையற்றது. ஏனெனில் இப் பழைய வடிவங்கள் இவர்களது சிந்தனையை கட்டுப்படுத்தும், மேலும் அவைகளைக் கற்றுத் தேறுவதும் கடினம் என்று மா ஒ கூறியது சீனக் கவிதைக்கு மாத்திரமல்ல தமிழ் கவிதைக்கும் பொருந்தும்.
புதுக் கவிதை வடிவத்தையும் புரட்சிகர உள்ளடக்கத்தையும் மட்டக்களப்புக்கு அறிமுகப்படுத்திய சாருமதி புரட்சிகர உள்ளடக்கத்திற்கு கலைவடிவம் கொடுக்கத் தவறிவிட்டார்.
கலை மூலப் பிரமாணமும், அரசியல் மூலப் பிரமாணமும் ஒரு படைபுக்கு அவசியம். இது அவர் அறியாததல்ல. அண்மைக்கால கவிதைகளில் கலை மூலப் பிரமாணத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.
27

Page 32
மலரும் நி
ஈழத்தின் கிழக்கினிலே வங்கக் குடா ஈன்றிருக்கும் சிறப்புமிகு கருங்கொடியூர் சீலத்தால் சிந்தனையால் அருகிலுள்ள சிற்றுார்கள் பத்தினையே சேர்த்ததாலே ஆழமெனக் கலை பலவும் அறிந்திருக்கும் அக்கரைப்பற்றுார் எனது தாயகமே காலத்தின் மாற்றத்தால் புக்ககமாய்க் கண்ணியமாம் தர்கா நகரிலுள்ளேன்.
கலை இலக்கிய அறிவை அறிந்த ஊர்தான் அக்கரைப்பற்று. அந்த அறிவின் தன்மையினால் கலை இலக்கியம் இங்கு வளர்ந்ததா? இல்லையா ? என்ற கணக்கெடுப்பது அவசியம். ஒலிகள் சொற்கள் கொண்டு பழைய நிலையை ஆய்ந்தறிந்து முடிவு செய்யக்கூடிய சிறந்த இலக்கிய ஆவணமான கிராமியக் கவிதை பிறந்த ஊர் அக்கரைப்பற்று. கிழக்கில் பொத்துவில், அக்கரைப்பற்று, கருவாடடுக்கல் என்னும் மூன்று நிலப்பரப்புகளுமே இயற்கையாக இலக்கிய எழுச்சிக்குரிய நிலங்கள். இந்நிலங்களில் ஒன்றான அக்கரைப்பற்று ஆழமெனக் கலை பலவும் இயற்கையாகக் கண்ட இடம்.
இலக்கிய எழுச்சிக்காலம் என வகுக்கக் காலம், பின்னணி, மக்கள் வாழ்க்கை முறை, வாழ்க்கைக்கு முரண்படும் சிக்கல்கள் என்பன முக்கியம். நிலவுடைமைப் பகுதி இது. நிலவு டைமையர்களின் ஏகபோகம், ஏய்த்து நிலங்களைச் சூறையாடும் நிலைமை பற்றி இலக்கியங்கள் இங்கு எழவில்லை. பத்திரிகை, வாசிப்பு, எழுதியது பிரசுரமானது இவைதான் இலக்கியங்கள் எழுச்சிக்கு இங்கு காரணங்களாகின. ஆனால், கீழ்வரும் கிராமியக் கவிதைகளை நோக்கினால் நிலவுடைமையின் ஆதிக்க அமுக்கம் வெட்ட வெளிச்சத்துக்கு வரும்.
சொந்தமெண்டு சொல்லிச் சொச்ச நெல்லுத் தந்தாங்க அந்தக் கூலிதான் அவிய அளந்தெதையும் கொடடயில்ல.
28
 

னைவுகள். (
ஏ. இக்பால்
விளைச்சலுக்கக் காசி வீசி எறிந்தவர் தான் புறவளவச் சேர்த்து புதுக்கணக்குப் போடடழிச்சார்.
நெல்லுக்குக் காசெடுத்து நெலத்திலதான் போடடிருந்தோம் அல்லாவின் பக்கல் அழிஞ்சதுதான் மிச்சமில்லை. சோத்து நெல்லுத் தந்தார் சொச்சமிச்சம் வேல தந்தார் வேர்த்து விடாச்சது தான் வெளச்சலில ஒண்டுமில்ல.
இப்பாடல்கள் நிலத்துடன் சம்பந்தப்படடவை. 'அவிய என்ற சொல் வருவதால் அக்கரைப்பற்று நிலத்துக்குரிய பாடல்கள் தான் இவை. நான்புத்தி தெரிந்த காலத்தில் கூடக் கிராமியக் கவிதை தவிர்ந்த நிலத்தோடு சம்பந்தமான இலக்கியத்தைக் காணவில்லை.
பாடசாலைக் கல்வி, பாடசாலையில் எழுந்த கையெழுத்துப் பத்திரிகை “கலாவல்லி க்கு ஆசிரியரானதால் வாசிக்கும் ஊக்கம் நிரம்பி வழிந்தது. 'தினமணிக்கதிர் நான் வாங்கி வாசிப்பேன், என்னுடன் கற்ற அபுலசன் கல்கி வாங்குவார். இருவரும் மாறி இரண்டையும் வாசிப்போம். ஐம்பத்து மூன்று, ஐம்பத்து நான்குகளில் நடந்த விவகாரமிது.
இலங்கைப் பொதுவுடைமைக் கடசியின் கூடடம் ஒன்று அக்கரைப்பற்றுச் சந்தைக்கருகே நடந்தது. டாக்டர் ஏ. எல். எம். இஸ்மாயில் தலைமை வகித்தார். சண்முகநாதன், எச்.எம். பி. முஹிதீன் பேசினார்கள். நான் ஆர். ஸி. எம்மில் படித்துக்கொண்டிருக்கின்றேன். இக்கூடடம் நடைபெறுவது பற்றி எங்களுக்குத் தெரியாது. ஆனால், மனேஜர் பாதர் குக் அவர்கள் ஒரு நாள் காலைக் கூடடத்தில் கம்யுனிஸத்தின் அபாயத்தை எடுத்துக்கூறி, அக்கூடடத்திற்கு யாரும் போகக் கூடாது. போனால், பாடசாலையை விடடுப் போக வேண்டி வரும் என்றார். இதுதான் ஆர்வத்தைத் தூண்டியது. கூடடத்தை ஒளிந்திருந்து கேட்டடு இரசித்தோம்.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கிளை ஒன்றை நிறுவ எச்செம்பி முஹிதீன் அக்கரைப்பற்றுக்கு அடிக்கடி வந்தார். மடடக்களப்புத் தெற்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இங்கே உதயமாகியது. அதன் செயலாளராக நான் தெரியப்படடேன். ஆண்டு விழாக்களை

Page 33
மிக விமர்சையாகக் கொண்டாடுவோம். சொக்கன், சில்லையூர் செல்வராசன், இ. முருகையன் மூவராலும் நடித்துக் காடடிய ‘இழிசனர் வழக்கு கவிதா நாடகம் அக்கரைப்பற்றில் நடந்தது. இலக்கியம் தெரியாதவர்களைக்கூட, இலக்கியத்துடன் ஒன்றிக்க இந்நாடகக் கவர்ச்சி ஒரு காரணம்.
கவிதை, சிறுகதை, உருவக் கதை, விமர்சனம் என்பன வாசித்த திறத்தினால் மிகவும் அத்திவாரமாகின. எம். வை. எம். முஸ்லிம், அ. ஸ. அப்துஸ்ஸமது என்போர் இலக்கிய ஆர்வத்திற்கு வழி காடடினர். ஆனால், இவர்களை நான் ஆதாரமாகக் கொள்ளவில்லை. மிகவும் சளைக்காமல் எழுதுவதிலும் கதைப்பதிலும் சோடை போகாத கவிஞர் யுவன், எம். ஏ. கபூர் அக்கரைப்பற்றில் ஆங்கில ஆசிரியராகக் கடமை புரிந்தார். அவரது சந்திப்பும் கூடடும் இலக்கிய முயற்சிகளுக்கு உந்துதல் அளித்தன. கவிஞர்கள் கம்பதாசன், இ. முருகையன், யுவன், பஸில் காரியப்பர் ஆகிய கவிஞர்கள் கவிதைப் புலமையும் கவிதா வேகமுமுடையவர்கள். தமது கவிதைகளைத் தாமே இரசிப்பதில் விண்ணர்கள். இவர்களில், பஸில் காரியப்பர் தவிர்ந்த ஏனையோர் பைத்தியக்கார வைத்தியசாலை சென்றவர்கள். காரணம்: கவிதைகளில் சிக்குண்டு இரசனையில் மேலோங்கி ஒதுங்கித் தனித்து நின்ற மனப்போக்காக இருக்கலாம். இது மனோ தத்துவத்தின் ஓர் உயர் நிலை. இந்நிலை மற்றவர்களுக்கு மனோவியாதியாகத் தென்படும்.
அக்கரைப்பற்று LD go) mDrT வித்தியாலயத்தில் சாந்தலிங்கம் எனுமோர் ஆசிரியர் கற்பித்தார். அவரும் கவிதை எழுதுவதில் வல்லுனர். மிகச் சொற்ப காலம் வாழ்ந்த இவரது கவிதைகள் நூலுருப் பெறவில்லை. ஏழை ஆசிரியர் சீமான் குணமுள்ளவர். இவர்களது உறவும் ஊடாடலும் இலக்கியத்தைப் படிக்கவும் படைக்கவும் வழி செய்தன. 'அக்கரை மாணிக்கன், தெய்வானைப் பிள்ளை இவர்களும்
க்கூடடுக்குள் நின்ெ னார்கள். எழும்பவில்லை.
கு s)(U (Ա)
Gা নোh). பொன்னுத்துரையின் எழுத்துக்கள் 'கலைமகளில் வெளி வந்தன. அநேகமானவை உருவகக் கதைகள். எஸ். பொன்னுத்துரையின் எழுத்து, நடை, பார்வை, நுணுக்கம் என்னை மிகவும் கவர்ந்தன. மட்டடக்களப்பு மத்திய கல்லூரியில் கற்ற அக்கரைப்பற்று எம். எஸ். கால்தீன், எஸ். பொன்னுத்துரையின் ஆக்கங்களைப் பிரதிபண்ணுபவர். இவர் மூலம் எஸ். பொன்னுத்துரையின் எழுத்தறிந்து பொன்னுத்துரையின் தாஸனாகவே ஆகி விடடேன். மட்டடக்களப்புக்குச் சென்றால், எஸ்.பொ. வை. அவர் வீடடில் சந்திப்பதில், கதைப்பதில் எனக்கோர் அலாதி பிரியம். இதனால், எனது எழுத்துக்களும் கடுமையான வடசொற்களின் கலப்பை ஏந்தி வந்ததெனலாம். இதனால், கே. எம். நஜிமுதீன் எனது எழுத்துக்களின் தாசனும் வாசகனுமானார். இவர் ஒரு இராடசச வாசகன். இலக்கியம் கதைக்கும் இளையவர். அப்போது இவர் ஒருவர் தான்.

கொஞ்சம் பொடுபோக்கானவர். அதனால்தான், அவர் ஓர் எழுத்தாளராகப் பரிணமிக்கவில்லை. எழுதியிருக்கிறார். இப்பொழுது அக்கரைப்பற்றுக் கல்விக் கந்தோரில் முறைசாராக் கல்விப் பக்கம் சார்ந்திருக்கிறார்.
முறைசாராக் கல்வியில் படடதாரியான ஓர் ஆசிரியர், கற்பிக்கும்போது மாணவர்களைக் கூடடிக்கொண்டு பாடசாலையின் ஓர் ஒதுக்குப்புறத்தை நாடுவாராம். அவர் கற்பிப்பதை யாரும் பார்க்கக்கூடாது. ஒருநாள் முறைசார்ந்த கல்வி பெற்ற ஆசிரியர் ஒருவர் ஒளித்திருந்து இவரது படிப்பித்தலை நோக்கியிருக்கிறார். தென்கிழக்காசியாவைப் படத்தில் காடடும் போது, ஆசியாவின் தெற்கையும் கிழக்கையும் இணைத்த முழுப்பகுதியே தென்கிழக்காசியா என்று மாணவர்களுக்குக் காடடியிருக்கின்றார். முறைசாராக்கல்வி இப்படி முறைசாராமல் ஒதுங்குவதுண்டு. இப்படியான ஒதுங்கு மனப்பான்மைவ ஒதுக்கி ஒழுங்குபடுத்தும் சக்தியுள்ளவர் நண்பர் நஜிமுதீன்.
கலை இலக்கியத் தாகம் கொண்ட ஒரு கூடடம் அக்கரைப்பற்றிலிருந்தது. “வீரன் நாதிர்ஷா நாடகமொன்றை மேடையேற்றிப் பிரபல்யப்படுத்தியது. டாக்டர் ஏ. எல். எம். இஸ்மாயில், பி. எஸ். மீரா, எம். ஏ. முஹிதீன்பாவா, வை. பி. அகமது லெவ்வை, எம். எஸ். அபுல் ஹஸன், எம். ஏ. 些步 லெவ்வை, ஏ. ஆர். எம். பிஸ்றுல் ஹாபி இக்காலத்தில் எழுதத்துணிந்தனர். ஆனால், எழுத்தாளர்களாகவில்லை. இலக்கிய ஆர்வம் இவர்களிடமிருந்தது. எழுத்துப் பயிற்சி கிடைக்கவில்லை. இவர்கள் எல்லாம் நிறைந்த வாசகர்கள். இவர்களின் வழிகாடடல் அதிக இரசனையுள்ள வாசர்களை உருவாக்கியிருக்கின்றது.
1957 களில் நான் ஒரு தமிழாசிரியனானேன். 'ஹாலி எல' யில் படிப்பிக்கும் போது, எழுதுவதில் சுறுசுறுப்பாய் இருந்தேன். விமர்சனக்கட்டடுரைகள், கதைகள், உருவகக்கதைகள் இக்காலம் அநேகம் வெளிவந்தன. 1958இல் தினகரன் புதன் மலர் நடத்திய படத்துக்குச் சிறு கதை எழுதும் போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. இன்றும் அக்கதை யதார்த்தபூர்வமாக இருப்பது வியப்பே. 1959 என்று நினைக்கின்றேன். இக்காலம் இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் முதன் முதலாக "சீறா பற்றி ஒரு பேச்செழுதி அனுப்பினேன். பேசும் வாய்ப்புக் கிடைத்தது. தனிமையில் கொழும்புக்குச் செல்லும் முதற் பயணம் அன்று தான் ஏற்படடது. பேச்சுக்குரிய காலம் நிர்ணயிக்கப்படடதைத் தெரிவித்தார்கள். அங்கு செல்வதற்குரிய பயணச் சீட்டடு வரவில்லை. முதல் நாளிரவுநிகழ்ச்சிநிரல் கேட்டட நான், அன்று காலை கொழும்புக்குப் பிரயாணமானேன். வானொலி நிலையம் சென்று பார்த்தபோது, பேச்சுப் பிரதி மேசையிலிருந்தது. என்னை அறிமுகப்படுத்தியதும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் பயணச்சீடடு அனுப்பாத தவறை உணர்ந்தவர் போல் நடித்தார். அன்று அவர் பற்றி என் மனதில் பதிந்த கறுப்புப் புள்ளி இன்றும் அகல்வதாயில்லை. பொதுசனத்
29

Page 34
தொடர்பு சாதனமொன்றுள் காலடி வைத்தபோது, ஏற்படட கரடுமுரடிது. பின்பு தான் அறிந்தேன், ஆள் வராவிடடால், தமது ஆள் கொண்டு வாசித்துச் சன்மானத்தை அபேஸ் செய்து விடுவார்களாம் என்பதை.
இளமை, வேகம், இலக்கியப் பார்வை என்பவற்றால் நெற்றிக்கண் நோக்கு நிறைய இருந்தது. உண்மை சொல்வதால் இடர்படவேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்படடன. இப்பொழுது கொழும்பு செல்லும் வாய்ப்பு அதிகமேற்படடது. முற்போக்கு எழுத்தாளர் சங்க நிர்வாகக் கூடடம் நடைபெறும் நாடகளில் கொழும்பிலிருப்பேன்.
அ. ந. கந்தசாமி மார்க்ஸிய வகுப்பொன்று வைத்தார். அதில் கற்கும் வாய்ப்பும் ஏற்படடது. கவிதையின் மேற்கொண்ட அபார மோகம் சில்லையூர் செல்வராசனின் தொடர்பை ஏற்படுத்தியது. வெள்ளவத்தையிலிருந்து காலிமுகத்திடல் வரை இலக்கியக்காரர்களுடன் நடந்து வரும் சிறுவன் போல் தோற்றமளித்தேன். சில்லையூர் செல்வராசன், காவலூர் ராசதுரை, முகம்மது சமீம், எச்செம்பி முஹிதீன், கைலாசபதி, அ. முத்துலிங்கம் இன்னும் பலர் இப்பவனியில் இருந்தனர். நடந்து வரும் போது இடைக்கிடை நின்று பிளேன்ரிகுடித்துக் கொண்டு வருவோம். நான் மடடும் தான் சிறுவன். நான் என்ட்ைபற்றி மிகவும் உயர்வாக, இலக்கியம் தெரிந்தவனாக எண்ணிக்கொண்டிருந்தகாலமிது. காலிமுகத்திடலில் வளைத்திருந்து இவர்கள் கதைத்துக்கொள்ளும் அநேக இலக்கிய விடயங்கள் எதுவும் நான் படித்ததுமில்லை. கேள்விப்படடதுமில்லை. அப்போது நான் இலக்கியம் கற்கும் மாணவனானேன். கொழும்பு வரும்போது, ஒரு கவிதை அல்லது ஒரு உருவகக் கதை, ஏதாவதொன்றை எழுதிக் கொண்டு வருவேன். மிகவும் குறுகி கைலாசபதியிடம் கொடுப்பேன். அவர் அதை மடித்துக் கால்சடடைப் பைக்குள் புகுத்திவிடுவார். அந்த வாரம் முழுதும் தினகரனில் எதிர்ப்பார்ப்பேன். எதுவும் பிரசுரமாகி இருக்காது. அடுத்த வாரம் கொழும்பு சென்று இச்சந்திப்பு ஏற்படும் போது, நான் கொடுத்த விடயத்தைத் திருப்பி தருவார். அதை எப்படி எழுதலாம் எனப் பொறுப்புடன் கூறுவார். பதுளை வந்ததும் மீண்டும் எழுதித் தபாலில் இடுவேன். தினகரனில் அது வெளி வரும். அந்தக் காலம் கொடுத்த விடயம் வெளிவரவில்லையே என்ற கொதிப்பேன். பின்பு தான் அதன் தாத்பரியம் அறிந்தேன். இந்த வளர்ச்சி இளமையில் இலக்கியத்தை நுணுகிப் பார்க்க இடம் தந்தது. கைலாசபதி பிற்காலத்தில் அவர் நடத்திய கலைக் கோலத்தில் என்னை இணைத்துக் கொள்ள இந்த வளர்ச்சிதான் உதவியதெனலாம்.
ஆசிரிய பயிற்சிக் கலாசாலை வந்து விடடேன். துடிதுடிப்பான இலக்கியப் பரம்பரையின் தோற்றுவாய்கள் அங்கும் மின்னின. பாவலர் பஸில் காரியப்பர், மணிப்புலவர் மாஸ்டர் மஜித், யூ எல். ஏ. மஜித், கல்ஹின்ன மாமா, திக்வெல்ல ஷம்ஸ், எஸ். ஏ. ஸெய்யத் ஹஸன் மெளலானா, எம். எஸ். ஏ. றசாக் இலக்கிய இரசனையில் ஊறித்திளைத்தவர்கள் அங்கு என்னுடன் பயின்றனர். இவர்களின்மானுடப்பார்வையில் நுணுகி நின்றவர்
30

பாவலர் பஸில் காரியப்பர் தான். ஒரு மாதச் சம்பளத்தில் முப்பத்தைந்து ரூபாவுக்குப் புத்தகங்கள் வாங்கிப் படிப்பேன். சம்பளம் ஏற ஏற இத் தொகை கூடி, இன்று என்னுடைய வீடடு வாசகசாலையில் பதியப்படட நூல்கள் மூவாயிரத்தைந்நூறு இருக்கின்றன. பதியப்படாமல் பழம் பொக்கிசங்களுமுண்டு. தேடிக்கிடைக்காத நூல்களும் உண்டு.
நான் வாங்கும் நூல்கள் இலக்கியத் தரமுள்ளவை. பஸில்காரியப்பரும் நிறைய வாசிப்பார். வாசிப்பதிலும் கருத்து ஒற்றுமை வேற்றுமையிலும் நாங்கள் இருவரும் மிக நெருங்கி இருந்தோம். இந்த நெருக்கத்தின் விளைவாக ஒரு விடயத்தை இரு பார்வையில் நோக்கி எழுதுவோம். அப்படி எழுதிய கவிதைகள் தினகரனின் வந்தன. 1963 களில் “கலைச் செல்வி”யில் அ. ஸ. அப்துஸ்ஸமது ஈழத்து இலக்கிய வானிலே என்றொரு தொடர் எழுதினார். ஐந்து கடடுரைகள் வந்தன. (க) இறைவனருட பிரசங்கக் கடாடசக்கவி, மீ. முஹம்மது ஷரீட், (உ) பாடடுக்கு இருவர், எம். ஸி. எம் ஹுபைர், எம். ஏ. கபூர் (ங்) தனிவழிக் கவிஞர் புரடசிக்கமால், (ச) காதலுக்கோர் அண்ணல், (ரு) சோடடுக்கவிஞர்கள் ஏ. இக்பால், பஸில் காரியப்பர். இவரது கருத்து; வெறுப்பு, விரக்தி உடைமை இவர்களது கவிதைகளின் உடபொருள் என்றும், வளர்ந்து வருகிறார்கள் என்றும் எங்களைத் தடடித்தான் வைத்துள்ளார். வளர்ந்து வருவோரைத் தடடி விடும் போக்கு அக்காலம் எம். எம். உவைஸிலிருந்து அ. ஸ. வரையும் கேன்ஸர் மாதிரி இருந்தது. அதில் பெருமை, அவர்கள் பயப்படும் அளவுக்கு நாங்களிருந்தோம்.
பிரபல நாவலாசிரியர் இளங்கீரன் “மரகதம்’ மாத இதழைத் தொடங்கினார். நாடளாவிய விதத்தில் அப்பத்திரிகைக்குச் சந்தாதாரர் கூடினர். அவர்களில் அநேகர் அவரது வாசகர்கள். நாங்களும் செருகிக் கட்டடிக் கொண்டு சந்தா சேர்த்தோம். நாடடின் முன்னணி முற்போக்கு எழுத்தாளர்களின் ஆக்கங்கள் அதில் வெளியாகின. “தேசிய இலக்கியம்’ என்னும் சிந்தனைத் தெளிவும் விரிவும் இப்பத்திரிகையில் பரந்து வந்தன. ஒபடடி பிறவாத இரடடையர்கள் எனும் மகுடத்தில் “ராம்ரஹீம்” அவரது பங்களிப்பைச் செய்தார். இப்பத்திரிகை ஆதிராம் பள்ளித் தெருவிலுள்ள ‘றெயின்போ பிரஸில்'தான் அச்சடிக்கப்படடது. இதற்கு முற்று முழுதான பக்க பலம் பி. இராமநாதன். பி. இராமநாதன் இந்நாடடு முன்னணி எழுத்தாளர்களுக்குப் பலமான ஏணியாக இருந்தவர். “தேசாபிமானி’ இதழின் உதவியாசிரியராகவும், ஆசிரியராகவும் இருந்தவர். “தேசாபிமானி'யில் 'லட்கி’, "அபூஜாவித்” என்ற பெயர்களில் நான் நிறைய எழுதினேன். அவரது வேண்டுகோளின் படி, சித்திலெவ்வை, அநாகரிக தர்மபால, ஆறுமுக நாவலர் மூவரையும் ஒப்பு நோக்கி எழுதினேன். அது, “தேசாபிமானி’ ஆண்டு மலரொன்றில் பிரசுரமானது. இக்காலத்தே தான் - அறுபதுகளில் சித்தி லெவ்வை பற்றி ஒரு நூல் எழுதும்படி என்னைத் தூண்டினார். நான் அதற்குரிய சம்பவக் குறிப்புகள், உண்மையான

Page 35
தகவல்கள் இல்லையே என அங்கலாய்த்தேன். பயப்பட வேண்டாம், நான் தேடித் தருகின்றேன் என்றார். அன்றிலிருந்து குறிபெடுக்கத் தொடங்கி எழுதிய நூல் 1971 இல் வெளி வந்தது. பத்து வருட முயற்சிக்குப் பக்கபலம் தந்தவர் பி. இராமநாதன் தான். அது மடடுமல்ல, இந்நூலுக்கு சாஹித்திய மண்டலப் பரிசு கிடைக்க வேண்டும். அதற்குத் திடடமிட வேண்டும் என புத்தகம் அச்சடிக்கும் போதே பி. இராமநாதனும், எம். எஸ். எம். இக்பாலும் உறைக்கக் கூறினார்கள். திடடமிடுவதா ? அது எப்படி? இக்காலம் 71 வரை எழுதிவிடடு அந்த இடத்திற்கு வரும்போது, அதை விரிவாக எழுதுவேன்.
பி. இராமநாதனின் உதவியால் “மரகதம்” மிகப்பிரபல்யமான இலக்கிய சஞ்சிகையாக வெளி வந்து கொண்டிருந்தது. இக்காலம், எஸ். பொன்னுத்துரை மரகதத் தொடர்பால் றெயின்போ பிரஸ்ஹக்குப் போய் வருவதால், அதன் பொறுப்பாளர் எம். ஏ. றஹற்மானின் தொடர்பு அவருக்கேற்படடது. சாதாரண "இளம்பருவத்திலே’ என்ற தலைப்பில் வீரகேசரி சிறுவர் மலர் கடடுரையை எழுதிய எம். ஏ. றஹற்மான், எஸ். பொன்னுத்துரையின் தயவினால், தானத்தால் எழுத்தாளராகினார். பேச்சாளராக்க முயன்றார். அவர் தானே பேச வேண்டும். அதனால், முடியவில்லை. மரகதத்தில் கழிவு இல்லை' என்றொரு உருவகக் கதையும், "சந்தர்ப்பம்’ எனும் ஒரு சிறு கதையும் எழுதினேன். "சந்தர்ப்பம்” தைக்காவடிக் கந்தூரியைப் பகைப்புலமாகக் கொண்டது. யதார்த்தவாதியானதினால், பெரும் சங்கடப்படடேன். சிறுகதை எழுதுவதையே விடடுவிட வேண்டிய நிலை.
கொழும்பு ஸாஹிராவில் மு. போ. எ. ச. மகாநாடு நடந்தது. நாவல் பற்றிய கருத்தரங்கிற்கு அ. ந. கந்தசாமி தலைமை வகித்தார். ஈழத்து இரத்தினம் நாவல் பற்றிக் கருத்து வழங்கும் போது பொன்னுத்துரையின் “தீ’ பற்றிக் காரசாரமாக விளாசினார். அவரது விளாசல் நாவல் பற்றிய இலக்கிய அறிவின்மையே காடடியது. அ. ந. நாவல் இலக்கியம் பற்றி உயர்ந்த சிறந்த விமர்சனம், விளக்கம் கொடுத்தார். அவரது உலக நாவல்கள் பற்றிய ஒப்புவமைக் கருத்துக்கள் அவரது அறிவு மேதாவிலாசத்தை எடுத்துக்காடடின. இவ்வளவுக்கும், எஸ். பொ. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை முறித்துக் கொண்டார். “தீ” ஒரு நாவல் தான் என்பதை நிறுவிய மேதைமை என்னை மிகவும் அவர் பால் கவரச் செய்தது. இதனால், அ. ந. வின் “மதமாற்றம்’, மனக்கண் நாவல், எமிலிஜோலாவின் நாநா மொழி பெயர்ப்பு அவரது அநேக கவிதைகளைப் படிப்பதில் ஊறினேன்.
எஸ்.பொ. வின் கூடடில் இணைந்த எம்.ஏ. றஹற்மான் இளங்கீரன், மரகதத்தைப் புதைத்து அதன் மேடடில் நின்று. அரசு வெளியீடடில் அநந்தரக் காரரானார். எஸ். பொ. வின் திறமைகள் இருபடடடிப்புக்குள்ளாகின்றன என்பதைப் பறைசாற்றினார்கள். நானும் அதில் மயங்கினேன். இப்பொழுதெல்லாம் எம். ஏ. றஹற்மான் மடடக்களப்புக்கு அடிக்கடி விஜயம் செய்யலானார். நீலாவணனையும்

இணைத்துக் கொண்டனர். நீலாவணனின் கவிதை இரசிகன் நான். ஆனால், நீலாவணனைத் தெரியாது. அவர், 1962 ஆரம்பத்தில் அக்கரைப்பற்று வந்து என்னைச் சந்தித்தார். சமஷ்டிக் கடசியில் இணைந்த அநேக தமிழ் மொழி வெறி பிடித்த எழுத்தாளர்களுக்கு உலக இலக்கியங்கள் பற்றித் தெரியாது. அதில், நீலாவணனும் ஒருவர். புதுமைப் பித்தன் நூல்கள் "செட’ டாக நான்தான் அவருக்கு முதன்முதலில் வாசிக்கக் கொடுத்தேன். புத்தகப் பரிவர்த்தனைகூட எங்களை மிக இறுக்கியது.
அவர் என்னைத் தேடி வந்த நோக்கம்: பொன்னுத்துரையை இலங்கை இலக்கியக் காரர்கள் இருபடடடிப்புச் செய்கின்றனர். நாம் அவரைப் பாராடடித் தங்கப் பதக்கம் சூடடிக் கெளரவிக்க வேண்டும் என்பதை விளங்க வைப்பதற்கே. நான் மிகவும் ஒத்துழைப்புக் கொடுத்தேன். 1962 பெப்ருவரி 4 ஆந் திகதி சுதந்திர தினத்தன்று, சம்மாந்துறை, சாய்ந்த மருது, கல்முனை, நற்பிடடிமுனை, நீலாவனை, மருதமுனை எங்கும் சென்று இலக்கிய ஆர்வலர்களைச் சந்தித்து இவ்விடயத்தைக் கூறினேன். அதாவது, எழுத்தாளர் கூடடமைப்பொன்றை ஏற்படுத்துவது என்பது மடடுமே பிரஸ்தாபிக்கப்படடது. அதன் பயனாக 1962.02.07 ஆந் திகதி நீலாவணனின் வீடடில் “கல்முனை எழுத்தாளர் சங்கம்’ அங்குரார்ப்பனம் செய்யப்படடது. அச் சங்கத்தில் "உத்திகளும் சிறுகதைகளும்” என்னும் தலைப்பில் நான் பேசினேன். எடுத்துக் கொண்ட உத்திகள்: பிரக்ஞை ஒடடம், இதற்கு 'சைவர் பூஜ்யமல்ல' எனும் பொன்னுத்துரையின் கதையையே உதாரணமாக்கினேன். இவ்விதம், “ றிங் லாடன்” உப பாத்திரம் மேலெழும் உத்திக்குப் பொன்னுத்துரையின் இரத்தம் சிவப்பல்ல' என்பதையும், பின்னோக்கலுக்கு மேடை' , 'வீழ்ச்சி கதைகளையும், நினைவுக்குதிர் என்று பொன்னுத்துரையால் கண்டு பிடிக்கப்படட உத்தியெனக் கூறி, அவரது 'குமிழ் கதையையும் எடுத்துக்காடடினேன். அவ்விதம் பொன்னுத்துரை மயமாகப் பேசுவதில் கூட ஒரு இலயிப்பு இருந்தது. இச்சங்கம் உதயமானதின் நோக்கம் எஸ். பொ. வைப் பாராடடுவதற்காகவே என்னும் விடயம் வந்தவர்களுக்குத் தெரியாது. உள்விவகாரமாக நாங்களே மனதில் வைத்துக்கொண்டோம். வந்தவர்கள் மிகப் பிந்தித்தான் அறிந்தார்கள். பகலுணவு நீலாவணனின் வீடடில் உண்டோம். சாப்பாடடிற்கு முன் சாராயம் குடித்தனர். எஸ். பொ. வுக்குச் சாராயம் கிரியா ஊக்கி. உள்ளங்கையில் ஊற்றி அதன் சுவையைப் பார்த்தேன். அவர்களின் கூடடில் நான் விழுந்திருந்தால், குடிகாரனாகவே மாறியிருக்கலாம். பின்னேரம் கலைந்தோம். எம். ஏ. நுஃமானின் சைக்கிளில் நான் கல்முனை வரை வந்தேன். 21.01.62 ஞாயிறு வீரகேசரியில் “அறியாமை” எனும் எனது உருவகக் கதை வெளிவந்திருந்தது. அதைப் பற்றி மிகவும் சிலாகித்துக் கொண்டு நுஃமான் வந்தார். இன்றைய இலக்கிய முதிர்ச்சியுடைய நுஃமான் அப்போது இலக்கிய அறியாமையில்தான் இருந்தார். இன்றைய அவரது வளர்ச்சி வியப்புக்குரிய பிரதானமான வளர்ச்சியே. அவரது சாதனைகளும் மிகப் பெரியன.
31

Page 36
15/1607
செத்துப் பிழைத்தேன்
வேலிப்பருத்தி வெடித்துச் சிதறிய கணக்காய் நாங்களெல்லாம் வீதிகளில் பரந்தோம் எல்லோர் முகமும் கொதிகாற்றுச் சுட்டு கறுத்து களைப்படைந்த ஊத்தை முகங்கள்.
உச்சிமண்டைக்கு மேலே உயரத்தில் நச்சுச் ရှိနံပြိုဂြိုါရှိ சூரியன். காற்றுப்போன வயிற்றுக்குள் கணகணப்பு நேற்றுப்போல் இன்றும் நீண்ட நடை தெருவில்.
குறுக்கே ஒரு குமர் நிலவு. என்னைக் கிள்ளி வாய்க்குள் போட்டு சுவைத்துப் பார்த்தாள் கல்லில் உரசி எந்தன் தரத்தை மதிப்பிட்டும் பார்த்தாள். பின் சிவப்புச் சொண்டை நளினமாக்கி சிரித்துப் பறந்தாள்.
நான் தேரில் ஏறி பவனி வந்தேன், தெருக்கள் நெடுகிலும் சனங்கள் நின்று வாழ்த்துக் கூறினர். இரண்டு தினங்கள் விடுமுறை இடையில், துருவங்களாய்க் கருதி முகம் சுளித்தேன். விடுமுறையும் போயின நான் கல்விக்கூடம் போகாத படிக்கு
என்னைச் சுற்றி காக்கி உடைகளும் கறுத்தச் சப்பாத்துக்களும் வேலியாயின.
அவள் நொந்து போனாளோ என்னவோ நான் செத்துப் பிழைத்தேன்.
32
 

sligana)
மனிதர்கள் கையில்
பறவைகள் படும் பாடு.
உயிருடன் பிடித்து கூண்டினுள் அடைத்தல்
உயிரையே வதைத்து
உணவாய்ப் புசித்தல்
இடையிடையே.
தேசியப் பறவை
சமாதானச் சின்னம் என குறியீடுகளாயும்
பாவி மனிதன் கை
கூசுதல் அறியாது
பாவம் பறவை
பேசுதல் அறியாது
கொடிய மனிதர் கரங்களிலிருந்து
பறவைகளுக்கு
வேண்டும் விடுதலை
போலி மனிதர்
போஸ்டர் களிலிருந்தும்.
- என். சண்முகலிங்கன்

Page 37
மெது J6D – re மேலைத்துவத்த
மேலைத்தேயத்தினரது வருகை எமது கலை இலக்கிய வெளிப்பாட்டில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியது. இந்த பாதிப்பின் தன்மைகளை நாம் அடிப்படையில் மூன்று தளங்களில்
நோக்கலாம்.
ஒரு சாராரில் இது மரபின் முக்கியத்துவத்தையும் அவற்றின் சிறப்பினையும் உணர்ந்து கொள்ள உதவியது. இன்னொரு பிரிவினால் மேலைத்தேய கலை இலக்கியப் போக்குகளை உள்வாங்கி அவற்றை மரபு வடிவங்களுடன் இணைத்து ஒரு சமரசப் பாணியை உருவாக்க உந்தியது.
பிறிதொரு பிரிவினரில் இந்த மேலைத்துவ போக்குகள் ஒரு கவர்ச்சிகர செல்வாக்கினைக் கொண்டிருந்தது. இந்த மேலைத்துவ பாதிப்பின் விளைவுகள் நன்மையானவையா, தீங்கானவையா என்பது ஒரு முக்கிய பிரச்சினையல்ல. இந்த வித பாதிப்பு ஒரு வரலாற்று நியதி. இந்த பாதிப்புக்களை எவ்வாறு பயன்படுத்தி எமது முயற்சிகளை துலங்கச் செய்யலாம் என்பதுதான் சிந்திக்கப்பட வேண்டிய விடயம்.
மரபின் தேய்வைக் கண்டவர்கள் அதன் சிறப்புக்களையும் அதன் முக்கியத்துவத்தையும் மீட்க மரபின் அடையாளங்களை நிலை நிறுத்தத் தலைப்பட்டனர். இது ஒரு வகையில் மரபின் புத்துயிர்ப்பு என்ற ஒரு போக்கினையே உருவாக்கியது.
இந்த வகையான கருத்தாக்கத் தளத்தின் முக்கியஸ்தராகக் கருதப்பட வேண்டியவர் ஆனந்த குமாரசாமி ஆவார். இதன் செயற்பாட்டுத் தளத்தில் இயங்கியவர்கள் ஜெமினிராய், மஞ்சுசிறி போன்றோராவர். இருந்தாலும் எதிரிவீரசரத்சந்திரா, வித்தியானந்தன் போன்றோரது முயற்சிகளும் பெருமளவுக்கு இவ்வகையினதே. இவர்களது முயற்சிகள் வெவ்வேறு காலகட்டத்திற்குரியதாக இருந்தாலும் ஒரே அடிப்படைகளைக் கொண்டே எழுந்தன.

Aŵr
ன் செல்வாக்கு
கொ றோ கொன்ஸ்ரன்ரைன்,
இவர்களது முயற்சிகள் மரபின் தேடலையும் முக்கியத்துவத்தினையும் எடுத்தியம்பின. இவர்கள் மரபினை புதுக்கி புதிய தளத்திற்கு கொண்டு வர முயற்சித்தார்கள். வித்தியானந்தன் நாட்டுக் கூத்தை நகர்மயப்பபட்டவர்களுக்கு ஏற்ற விதத்தில் பழமை செறிவு குன்றாது வழங்க முயற்சித்தார். ஜெமினி ராய் ராஜபுத்திர கால ஓவியப் பாணியினை புத்துயிர்ப்பு செய்ய முயற்சித்தார்.
இவர்களது அடிப்படையான முயற்சிகள் தமது பாரம்பரிய அடையாளங்களின் தேடல்தான்; தமது சுயத்தைப் பற்றிய தேடல் தான். தமது சமூகம் மறந்து விட்ட சில மரபுகளை ஞாபகப்படுத்தும் முயற்சிதான். உண்மையில் இவர்களது முயற்சிகள் நகரமயப்படுத்தப்பட்ட மக்களுக்கு மரபை நினைவு படுத்த உதவின.
மரபு வடிவங்கள் அவற்றிற்கேயுரிய தளத்தில் மிகவும் வீரியம் குறைந்த நிலையில் கிராமப் புறங்களில் கையாளப்பட்டு வந்தனவேயன்றி முற்றாக அழிந்து விடவில்லை. மரபின் புத்துயிர்ப்பு வாதிகள் மரபு வடிவங்களை அவற்றின் உரிய தளத்திலிருந்து பிரித்து பிறிதொரு தளத்திற்கு மாற்றுவதற்கு முயற்சி செய்தனர்.
மரபின் புத்துயிர்ப்பு என்ற செயற்பாடு பல கேள்விகளை எழுப்பவே செய்கிறது. மேலைத்தேயரின் வருகையினால் எமது கலை இலக்கிய பாரம்பரியத்தின் சுயவளர்ச்சியில் பாதிப்பேற்பட்டது. இப் பாதிப்பிலிருந்து மீள்வதற்காக செயற்கையாக மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பின் முயற்சியாகவே இப் புத்துயிர்ப்பு முயற்சிகள் கருதப்படலாம்.
புத்துயிர்ப்பு முயற்சிகள் சுயமான வளர்ச்சியாக அமையாது வலிந்து கொணரப்பட்ட ஒரு முயற்சியாகவே அமைந்தன. இதனால் இப்போக்கினை சுயமாகத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு அல்லது இப்போக்கு ஒரு தொடரப்படக் கூடிய செல்நெறியாக அமைவதற்கு ஏற்ற ஒரு சூழ்நிலை இருக்கவில்லை.

Page 38
இதனால் இம்முயற்சிகள் தம்முள்ளேயே ஒரு தேக்க நிலையினைக் கொண்டிருந்தன. இதனை நாம் வித்தியானந்தனது முயற்சியிலும் சரி எதிரிவீரசரத்சந்திரா, ஜெமினிராய் போன்றவர்களது முயற்சிகளிலும் காணலாம். இவர்களது முயற்சிகள் ஒரு கட்டத்தில் கவர்ச்சிகர முன்னெடுப்புகளாகத் தென்பட்டாலும் பிரக்ஞை பூர்வமாக தொடர்ந்து வேறு ஒருவராலும் மேற்கொள்ளப்படவில்லை.
இப்படிக் கூறுவது இவர்களது முக்கியத்துவத்தை குறைமதிப்பீடு செய்வதாகாது. காரணம் இவர்கள் ஒரு சிந்தனைப் போக்கினை பிரதிநிதித்துவம் செய்தவர்கள். இவர்களது சிந்தனைகள் செயற்பாடுகள் வாயிலாக புதிய தரிசன வீச்சுடைய ஒரு புதிய சந்ததி உருவாகவே செய்தது.
மரபின் புத்துயிர்ப்பு ஒரு தளத்தில் ஏற்பட்ட விளைவாக அமைந்த வேளை பிறிதொரு பிரிவினர் நவீன மேலைத்தேய போக்குகளையும் மரபையும் இணைக்கும் முயற்சிகளைச் செய்தனர்.
இந்த இணைப்புமுயற்சிகள் உருவ உள்ளடக்கத்தளங்களில் ஏற்பட்டது.
இந்தப் பிரிவில் அம்ரித் சேகில், ரிச்சார்ட் கேப்ரியல், மெளனகுரு குழந்தை சண்முகலிங்கம் போன்றோரைக் குறிப்பிடலாம். இவர்களுக்கு மேலைத்தேய கலைப்பரிச்சயமும் மரபின் பரிச்சயமும் இருந்ததனால் அவற்றை அவர்கள் லாவகமாக கையாளக்கூடியதாய் இருந்தது.
இந்தப் பிரிவினர் பெருமளவில் மக்களும் சமூகமும் எதிர்பார்க்கும் வடிவங்களை கையாளுவதாகவே தோன்றுகிறது. நவீனம் என்ற போர்வைக்குள் சமூகத்திலிருந்து அந்நியப்பட்டு நிற்பவர்களது அனுபவங்களைக் கலாபூர்வமாக மரபின் சாயல்பட வெளிப்படுத்துகிறார்கள். தாஸிசிய சினது முயற்சிகள் கூட இந்த வகையினைச் சார்ந்ததே.
இந்த வகைப் பிரிவிற்குள் அடக்கப்படக்கூடிய எம். எப். ஹாசைன், ஜோர்ஜ் கீட், போன்றோரது படைப்புக்கள் சர்வதேச
மட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளன.
மேலைத்தேயக் கல்வி முறைமையும், அணுகு முறைகளும் கலை இலக்கியத்தின் தளத்தில் பல மாற்றங்களை விளைவித்துள்ளன. இரசனை அடிப்படையில் அணுகப்பட்ட கலை, விஞ்ஞான தத்துவார்த்த அணுகுமுறைகளின் அறிமுகத்துடன் புதிய பரவலாக்கப்பட்ட நுகர்ச்சிக்கு உட்படத் தொடங்கியது.
இரசனை அடிப்படையிலான அணுகுமுறை பெருமளவில் ஒரு அகவயப்பட்ட செயற்பாடே. ஆனால் விஞ்ஞான தர்க்கவியல் ரீதியான அணுகுமுறை பெருமளவில் ஒரு புறவயப்பட்ட ஒர் அணுகுமுறை.
956 JULUL DIT 5 அணுகப்பட்டு சூத்திரங்களாகவும், சாஸ்திரங்களாகவும் பேணப்பட்ட கலை புறவய அணுகுமுறைகளினால் தனது பாரம்பரிய கட்டுக்களை இழந்தது. இந்த மாற்றம் ஒரு புறத்தில் பல நன்மையான விளைவுகளை ஏற்படுத்திய அதேவேளை மறுபுறத்தில் சில சிக்கலான கேள்விகளையும் எழுப்பவே செய்கிறது.

இந்த மாற்றத்துடன் மேலைத்தேய கலை இலக்கிய கோட்பாடுகளுக்கிடையே பல பரிசோதனை முயற்சியான படைப்புக்களில் பலரும் இறங்கினர். எந்த ஒரு கலைஞனும் தனது வளர்ச்சிப் போக்கில் பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடுவது முக்கியமானது. இந்தவித கலையாக்க முயற்சியினைப் பரிசோதனை முயற்சிகள் என இனங்காண்பது அதை விட முக்கியமானது.
தொடர்ந்த கலையீடு பாட்டின் மூலமும் தொடர்ந்த பரிசோதனை முயற்சிகள் மூலமும் தான் கலைஞன் கலைத்துவ முதிர்ச்சியைப் பெறுகிறான்.
இவ்வித முயற்சிகள் வாயிலாகத்தான் கலைஞரினது கலையாளுமை முழுமை பெறுகிறது. பின்னர் தான் அவனால் தான்

Page 39
நாம் நாமாக நமது சுயத்தில் நின்று பிறரிடமிருந்து பெற்றாலும் நம்முடையதை வலுப்படுத்தி சீராக்கி சர்வதேச தரத்திற்கு எமது பங்களிப்பினைச் செய்வதே இன்று எம்முன் நிற்கும் முக்கிய பணி
கைக்கொண்ட கலைப்புலத்தில் தனது ஆளுமையை சரிவரப் பிரயோகிக்க முடிகிறது.
இந்த படிகளுக்கூடான வளர்ச்சியின் பின்தான் கலைஞன் தனக்கென ஒரு தத்துவார்த்த பார்வையையும் ஒரு வெளிப்பாட்டு வடிவினையும் வரித்துக்கொண்டு அதை ஒரு மொழியைப் போல கையாள முடிகிறது. இப்படியான ஒரு வளர்ச்சியை வெளிப்படுத்திய ஒருவராக நாம் ஜோர்ஜ் கீட்டைக் கருதலாம்.
இத்தகைய முதிர்வினை அடையும் கலைஞன் தான் கலைத்துவ பரிபாஷையில் தான் எண்ணியதை எண்ணியபடியே பதிக்கிறான். இத்தளத்தினை அடையும் கலைஞனே உன்னத படைப்புக்களை பிரசவிக்கிறான்.
இந்த கலைத்துவ முதிர்வினை வெளிக்காட்டுபவர்கள் எம் மத்தியில் மிகக்குறைவு. இப்படியான கலைஞர்கள் பொதுவாக மரபினையும் மேலைத்துவப் போக்குகளையும் தக்க விதத்தில் பிரயோகிக்கின்றவர்களாகவே காணப்படுகின்றனர்.
மேலைத்துவ அணுகுமுறைகளினால் பரவலாக்கப்பட்ட கலை பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடும் பிறிதொரு சாராரும் உள்ளனர். இவர்கள் பெருமளவில் மேலைத்துவ கலைப்போக்குகளின் கவர்ச்சியால் கவரப்பட்டு பரிசோதனை முயற்சிகளைப் பெரும் சாதனைகளாகக் கருதும் துரதிர்ஷ்ட நிலை நிலவிவருகிறது.
மேலைத்தேய கலை இலக்கியப் போக்குகளின் அறிமுகம் ஏற்படுத்திய ஒரு பெரிய சிக்கல் இது. இது ஒரு குழப்ப நிலை. இந்த வகை போக்குகளை நாம் ஒவியத்திலும் நாடகத்திலும் அனேகம் காணலாம். மேலைத்தேய கலை வடிவங்களையும் செல்நெறிகளையும் அப்படியே பின்பற்ற முயற்சிப்பது ஒரு பரிசோதனை முயற்சிதான்.
மேலைத்தேய கலை இலக்கிய வடிவங்கள் எமது சூழ்நிலைக்கு எந்தவித உபயோகமும் அற்றவை என நாம் கருதிவிட முடியாது. உதாரணமாக பாலேந்திராவின் மொழி பெயர்ப்புநாடகங்கள் பலவற்றில் சம்பவ ஒருமையினால் நாம் அவற்றுடன் இனங்காணக் கூடியதாக உள்ளது. அதே போல தாஸிசியஸ் கையாளும் "கள அரங்கம் (Forum Theatre) என்ற வடிவம் லண்டன் வாழ்நிலை சூழலுக்கு ஏற்ற ஒரு 6) Ily6).JLD.
ஒரு சமூகத்தில் ஒரு காலத்தில் கையாளப்பட்ட கலைவடிவம் இன்னொரு சமூகத்தில் பிறிதொரு காலகட்டத்திற்கு ஏற்றதாக அமையலாம். கள 9|Trilö5th (Forum Theatre) 6T66TD STL3, 6) is 6th 20 ம் நூற்றாண்டின் ஆரம்பங்களில் ரஷ்யாவில் பயன்பட்ட வடிவத்தை ஒத்த ஒரு நாடக வடிவம் இன்று யாழ்ப்பாணத்தில் சிதம்பரநாதனால் கையாளப்படுகிறது.
எமது இன்றைய கலை இலக்கிய வளர்ச்சியின் செல் நெறிகளை மேலைத்தேய இன்றைய வடிவங்களுடன் ஒப்பிட்டு எமது வளர்ச்சி பின்னடைவானது எனக் கருதும் நிலை இன்று பரவலாக நிலவிவருகிறது. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று மேலைத்தேய கலை இலக்கிய வடிவங்களையும் கோட்பாடுகளையும் பரிசோதனை ரீதியாக கையாள்பவர்களும் அவற்றைப் பற்றி

பேசுபவர்களும் அத்தகைய போக்குகளை சர்வதேச நியமமாகக் கொண்டு தர நிர்ணயிப்பில் ஈடுபடுவதாகும்.
இன்று நாட்டுக்கு நாடு தொடர்புகள் அதிகரித்து மனிதரிடையில் நிலவிவந்த இடைவெளி குறைந்துள்ளது. இதனால் உலகம் ஒரு பொது கலாசாரத்தை நோக்கி நகர்வதாகவும் உலகமே ஒரு சர்வதேச கிராமம்' (Global Village) என்ற நிலையை அடைந்து விட்டதாகவும் கருதப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு யதார்த்தமானது என்பது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று.
தொடர்புகள் அதிகரிக்க அதிகரிக்க மனிதன் புதிய புதிய சவால்களை எதிர்கொள்கிறான். தனது தனித்துவத்தை ஒவ்வொரு கணமும் நிச்சயித்து ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை அவனுக்கேற்படுகிறது.
தான், தனது இருப்பு, தனது வாழிடம், தனது வாழ்முறை இப்படியான சுயநல அடிப்படைகளிலிருந்து முகிழ்வது தான் மனித செயற்பாடுகள். இது மனித நியதி.
தான் சார்ந்த விடயங்களை ஸ்திரப்படுத்தி தன் தனித்துவத்தை நிலைநிறுத்த மனிதன் பெரும் பிரயத்தனம் செய்கிறான். இவ்வித முயற்சிகளின் வெளிப்பாடுதான் தற்போதுவிஸ்வரூபமெடுத்து வரும் தேசியவாத இனத்தேசிய வாத அரசியல் இயக்கங்களும் அவற்றின் செயற்பாடுகளும். இது ஒரு சமூக அரசியல் யதார்த்தம்.
இப்படியான பின்னணியில் கலை மட்டும் சர்வதேச பொதுமை நிலையை அடையும் என கருதுவது கலையை சமூகத்தளத்திலிருந்து பிரித்துக் காட்டும் முயற்சியாகும். கலை சமூகத்தினது குணாதிசயங்களையும் எதிர்பார்ப்புகளையும் தன்னகத்தே கொண்டிருப்பது தவிர்க்கப்பட முடியாதது.
மேலைத்தேயரிடமிருந்து பெற்றதை நமதாக்கிக் கொள்ள நாம் பெரும் பிரயத்தனம் செய்கிறோம். அதனால் தான் ஒன்றை உள்வாங்கி சரிவரப் புரிந்து கையாளுமுன் உலகம் எம்மை விட எங்கோ தொலைவிற்குப் போய்விட்டதாக ஒரு அங்கலாய்ப்பு ஏற்படுகிறது.
3
5

Page 40
Diqdor65bTqDï
சாராவின் கால்கள் மிகவும் மோசமாவதற்கு முன் அவள் எங்களிடம் வேலை செய்தாள். அவள் ஒரு பருத்த பெண். கபில நிறமான பலூனில் காற்றுதினால் எப்படியிருக்குமோ அப்படி இருந்தது அவளின் நிறம். தோலுக்கடியில் படிப்படியாக படிந்து வந்த கொழுப்பு தோலின் நிறத்தை மெலிதாகக் காட்டியது.
பளபளப்பான எனாமல் பூசப்பட்ட, மெல்லிய பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடி அணிந்திருப்பாள். வெண்ணெயை மிதமிஞ்சிப் பயன்படுத்தினாலும் அவள் நல்ல சமையல்காரி
இவைகள் தான் அவள் தோற்றம்
சேர்ச்சில்முறைப்படி விவாகமாகி அவளுக்கு ஒரு கணவனும் றொபர்ட், ஜேனெட், பெலிசியா என்ற பெயரில் மூன்று பிள்ளைகளும் இருந்தனர். இவர்களை வளர்த்தெடுப்பதே அவளுடைய ஒரே நோக்கம் சமையல் பாத்திரங்களை கழுவ குனிந்தெழும்பும் போதெல்லாம் அவளிடமிருந்து, எல்லா பருத்த மனிதர்களுக்கும் வருவது போல ஒரு மூச்சொன்று வெளிப்படும். அது பிள்ளைகளின் கவலையால் வந்தது போலவே தோன்றும்.
நான் ஒரு பாவி, அற்ப விசயத்துக்கெல்லாம் இந்த பைபிள் " வசனமே அவள் வாயிலிருந்து வெளிப்படும். வாடிக்கைக் கடைக்காரன் சமான்கள் அனுப்பாது விட்டாலோ, உடுப்புகள் வெயிலில் காயும் போது மழைபிடித்துவிட்டாலோ, தனது வாழ்க்கையில் நடக்கும் கஷ்டங்களைப் போல அவைகளைக் கருதி இந்த பைபிள் வசனத்தையே முணுமுணுத்துக் கொண்டிருப்பாள். நாளாந்தக் காரியங்களில் நல்ல படியாக ஏதும் நடக்கும் என்று எப்போதும் அவளால் எதிர்பார்க்க முடியாது. நான் ஒரு பாவி என்று அவள் அடிக்கடி முணுமுணுப்பதைப் பார்த்துநாங்கள் சிரித்தாலும் பின்னர் அவள் வாழ்க்கையில் அதுதான் அடங்கி இருந்தது என்று புரிந்து கொண்டோம்.
36
 

Uう
. GUGU
அவள் தனது பிள்ளைகள் மீது மிகவும் கரிசனை கொண்டிருந்தாள். அவர்கள் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதே அவளுடைய ஒரே ஆசை. பையன் நல்ல மதிப்புள்ள தொழில் செய்ய வேண்டும். பெண் பிள்ளைகள் கன்னியராகி சேர்ச்சில் முறைப்படி கலியாணம் செய்ய வேண்டும். இவைகள் தான் அவளின் எண்ணமெல்லாம்.
அவளின் மிசன் பாடசாலைப் படிப்பு இந்த உலகத்தை விட அடுத்த உலகத்தைப்பற்றியே தந்திரமாக வலியுறுத்தியது. அது அவளை எதிர்ப்புணர்ச்சி கொண்டவளாகவோ, துணிவுடையவளாகவோ, சுதந்திரமானவளாகவோ மாற்றவில்லை. குறைந்தது தனது பிள்ளைகள் அடைய வேண்டிய அந்தஸ்து எது என்பதை பற்றி சிந்திக்கும் திராணியுடையவளாகவோ கூட அது அவளை மாற்றவில்லை. சமூகத்தில் அவர்களுக்கு ஒரிடம் ஏலவே ஒதுக்கப்பட்டுள்ளது என அவன் நம்பினாள். அது வெள்ளையர்களோடு தொடர்பற்ற ஒரிடம்; அவர்களுக்கேயுரிய தனியிடம், அதை அவர்கள்அடையவேண்டும். அங்கு தான் அவர்கள் இருக்க வேண்டும். இந்த உலகம் எப்படி இருக்கிறதோ அப்படியேதான் வாழவேண்டும் என்று அவள் சொல்வாள். ஏன் இது இப்படி கஷ்டமாக இருக்கிறது என்று அவள் எதிர்க்கேள்வி கேட்பதில்லை. ஒரு சண்டை சச்சரவில்லாமல் எதனோடும் ஒத்து போகவே அவள் விரும்பினாள்.
அவள் தனது பிள்ளைகளுக்கு ஆசைப்பட்டது ஒரு நிச்சயமான சாதாரண வாழ்க்கை. ஆனால் எவ்விடத்திலும் அதைப் பெற்றுக் கொள்ள அவளால் முடியவில்லை.
லோகேசனில் தனது சொந்தக்காரர்களின் வீட்டில் பிள்ளைகள் தங்கிப் படிப்பதற்காக அறையொன்றை வாடகைக்கு எடுத்திருந்தாள். உணவுக்கான செலவையும் கொடுத்தாள்.

Page 41
«۔ حک ノ
༄།《《 M
ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று பிள்ளைகளைப் பார்த்து வருவாள். அவர்கள் பாடசாலைக்கு ஒழுங்காகப் போகிறார்களா, பொழுது பட்ட பிறகு கண்ட பாட்டில் இருட்டில் விளையாடித்திரிகிறார்களா என்று பார்த்துக் கொள்ள உறவினர் ஒருவரையும் ஒழுங்குபண்ணி
வைத்திருந்தாள். இருட்டில் அலைவது பிள்ளைகளின் படிப்பைக் கெடுத்துவிடும் என்பது சாராவின் திடமான நம்பிக்கை.
விரைவில் தெரிந்து விட்டது, றொபெர்ட் பள்ளி நாட்களிலும் கோல்ஃப் விளையாடப் போகிறான். பெலிஸியா, மாலைபட்ட பின்பும் பணி பெய்யும் இருட்டில் ஒடியாடித் திரிகிறாள். இது மற்றப் பிள்ளைகளுக்கு, கூலி வேலைக்கும் வீட்டு வேலைக்கும் செல்லப் போகும் அவர்களுக்கு சரி, சாராவின் பிள்ளைகளுக்கு அல்லவே. சாரா மனம் பொருமினாள்.
இது சரிப்படாது என்று சாரா அவர்களை விடுதியுள்ள பாடசாலைக்கு அனுப்பினாள்.
புருசனைக் கூப்பிட்டு வேலிக்கு மேலால் இரகசியம் பேசுவது போல் பன்னிப் பன்னி கதைத்து ஆளை ஒரு வழிக்கு கொண்டு வந்து, தபால் கந்தோர் சேமிப்பில் கிடந்த ஒன்பது பவுண்களையும் போதாதற்கு பருத்தித் துணி புகையிலைப்பையில் ஏதும் ஆத்திரம் அவசரத்துக்கென்று போட்டு வைத்திருந்த சில்லறைகளையும் சேர்த்து, வோடிங்'கில் பிள்ளைகள் கட்டாயம் கொண்டு வரவேண்டிய ஒரு பட்டியல் சாமான்களையும் வாங்கி அங்கே கொண்டு போய்விட்டாள். தனது மாதாந்த உழைப்பையும் இதற்காகவே செலவழித்து வந்தாள். முந்நூறு மைல்களுக்கப்பால்,நட்டால்நகரில் படிப்பதற்கு இதுவொன்றும்
 
 

பெரிய செலவல்ல; எதையும் மட்டு மட்டாகத்தான் செலவழிக்க முடிந்தது. செலவு சுருக்கம் கருதி கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு மாத்திரம் பிள்ளைகள் வருடத்துக்குகொரு தடவை தாயிடம் வந்து போயினர். அதற்குரிய ரெயில் கட்டணத்தையும் அனுப்பி வைத்தாள். மற்ற விடுமுறை நாட்களை அவர்கள் பாடசாலையிலேயே கழித்தனர்.
இவ்வாறு அவர்கள் அங்கே படிப்பிக்கப்பட்டு வந்தனர்.
சாரா அவர்கள் எழுதும் கடிதங்களை என்னிடம் காட்டுவாள். எல்லாச் சிறுவர்களின் கடிதங்களையும் போலவே அவைகளும் உணர்ச்சி வெளிபாடுகள் அற்று இருக்கும். ஏதும் தேவைப்பட்டதைக் கேட்டு எழுதியிருப்பார்கள். ஏதாவது இனிப்பு பண்டங்களை அடிக்கடி அவர்களுக்கு அனுப்பும்படி கொடுத்து விடுவேன். இளையவள் ஜேனெட்டிடமிருந்து எனக்குநன்றிதெரிவித்து ஒரு கடிதம் கூட வந்தது. பணிவோடு நன்றி தெரிவித்துக்கொண்டதைத் தவிர அன்பளிப்பினால் மன மகிழ்ச்சியடைந்ததாக அக்கடிதத்தில் ஒரு சிறு குறிப்பு கூட இல்லை. வாசித்த கடிதங்களை பெற்றுமடிக்கும்போது ஒரு பெருமிதம் அவள் முகத்தில் படரும், தனது பிள்ளைகள் நல்ல நிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதில்.
ஒரு கிறிஸ்மஸ் வந்த போது அவர்கள் வந்து தங்கி விடுமுறையைக் கழிக்க இங்கே, லோகேசனில் அறையொன்றை அவள் வாடகைக்கு எடுப்பது எனக்கு என்னவோ கூச்சமாக இருந்தது. அவள் விரும்பினால் ஒதுக்குப் புறமாயிருந்த காம்பராவில் பிள்ளைகளுடன் தங்கிக் கொள்ளலாம் என்று சொன்னேன். மிகவும் நேரத்தோடு வெளிக்கிட்டு, விக்டோரியா மகாராணி காலத்து மோஸ்தரில்
37

Page 42
உடையணிந்து ஸ்டேசனுக்கு போனாள். நாள் முழுக்க காத்திருந்து பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வந்தாள். நேரத்தை இப்படி மெனக்கெடுத்துகிறாளே என்று எனக்கு எரிச்சலாக வந்தது. ஆயினும் அவளிடம் காணப்பட்ட குதூகலத்தை உணர்ந்து ஒன்றும் பேசவில்லை.
அவர்கள் மிகவும் நல்ல பிள்ளைகள், அப்படி ஒரு ஒழுங்கான பிள்ளைகளை நான் ஒரு போதும் கண்டதில்லை. அவர்கள் நடமாட்டத்தில் ஒரு அடக்கம் இருக்கும். யாருக்கும் கேட்காமல் விளையாடுவார்கள். சிறுமிகள் வெளியில் குசினி சுவரில் சாய்ந்த படி குந்திக் கொண்டு இருப்பார்கள். அல்லது எதையோ கழுவிக் கொண்டோ பின்னிக் கொண்டோ இருப்பார்கள். சிறுவன் தடிகளையும் சிறுகற்களையும் கொண்டு வேலி ஒரமாக தன்பாட்டில் விளையாடிக் கொண்டிருப்பான். பெண் பிள்ளைகள் சிரிப்பது ஏதோ புதிராக இருக்கும். அது எங்கோ நிலத்தடியில் ஊர்ந்து செல்லும் அருவியின் ஒசை போல கேட்கும். ஆயினும் அதில் ஒர் அழகும் கெளரவமும் இருக்கும். ஆனால் அது ஒரு தேவைக்காக செய்வதுபோல் இருக்குமே தவிர மன மகிழ்ச்சியின் வெளிப்பாடாய்த் தோன்றாது. பையன் பொதுவாக சிரிப்பதேயில்லை. வீட்டுக்கு வந்த யாரோ ஒரு சிறுவன் தவறுதலாக விட்டுப் போயிருந்த தண்ணிர் துவக்கை ஒரு நாள் அவனுக்கு கொடுத்தேன். ஒரு தண்டனை போலவே அதை அவன் வாங்கிக் கொண்டான். 'அவன் பெட்டிக்குள் அதை பத்திரமாக போட்டுவைத்திருக்கிறான், அம்மா’ என்று சாரா பெருமையுடன் கூறினாள். தன்னை ஒரு பெரிய மனிதன் என்று அவன் நினைத்துக் கொண்டான்.
தாய் கூட்டிச் சென்றால் தவிர அல்லது ஏதும் காரியமாக அனுப்பினால் தவிர அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. 'கேற்றில் இருந்து வெளியே பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஒரு நாட்காலை றொபெர்ட்டைக் காணவில்லை. புழுதி படிந்த கால்களுடனும் புல்தாட்கள் ஒட்டிய சட்டையுமாக மத்தியானச் சாப்பாட்டுக்கு வந்தான். சாரா புறுபுறுத்துக் கொண்டேயிருந்தாள். அவன் எங்கே போயிருப்பான் என்று எனக்கு தெரியும். அவன் கோல்ஃப் விளையாடப் போயிருந்தான். அவளுக்கு கால்கள் ஏலுமாக இருந்திருந்தால் அவனைத் தேடி உடனே போயிருப்பாள். மனவருத்தம் தாங்க முடியாமல் பையனுக்கு அடித்தாள். ஆனால் அவன் மீது ஆத்திரம் கொள்ளவில்லை. அவனும் அடி நோவுக்கல்லாமல் ஏதோ மனம் குழம்பிப் போய் விட்டு விட்டு அழுதான். சிறுவன் வெளியே போனது பற்றி பல நாட்கள் வரையில் சாரா பேசிக்கொண்டிருந்தாள். அவள் குசினியில் இருந்து * வெளியேறுவதைக் கண்டால் மூன்று சோடிக்கண்களும் வெளிறத் தொடங்கி விடும். வெயிலுக்கு தலை தாழ்த்தி விளையாடிக் கொண்டிருக்கும் பையனின் தலை மேலும் தாழும்.
தனது பிள்ளைகள் பற்றி மித மிஞ்சிய கவலையும் கரிசனையுமாகவே சாரா எப்போதும் காணப்பட்டாள். அவர்களுக்கு சதா உபதேசங்களும் புத்திமதிகளும் பண்ணிக் கொண்டிருப்பாள்.
மிதமிஞ்சிய கண்காணிப்பு பிள்ளைகளின் உறுதியைக் குலைத்துவிட்டது. அது அவளுடைய ஆசைகளையும் அக்கறையையும் தாண்டி பிள்ளைகளின் புத்திசாலித் தனத்தை மழுங்கடிக்கத் தொடங்கியது.
குழந்தைகளோடு கடுமையாக நடந்து கொள்கிறாய் என்று அவளிடம் சொன்னேன். அதுபற்றி என்ன நினைத்தாளோ, ஒரு கணம்
38

யோசித்து ஏதோ சின்ன விசயம் போல் தலையாட்டினாள். "இப்போதிருந்தே நல்ல காரியங்களைப் பழகா விட்டால் எப்போதும் அவர்களால் அவைகளைப் பழக முடியாது. இப்படியே விட்டால் பிற்காலத்தில் அவர்கள் என்னைக் கோவிக்கக்கூடும். இப்போது கஷ்டமாகத்தான் இருக்கும். எனினும் பழகுவது நல்லது தானே. கட்டாயம் பழகிக் கொள்ளத் தானே வேண்டும்” என்று சொன்னாள்.
அவள் பிள்ளைகளை மிகவும் சலிப்படையச் செய்கிறாள் என்று நினைத்துக் கொண்டேன்.
அவர்கள் அடுத்த வருடமும் வருவதற்காக ரெயிலில் ஏற்றி பாடசாலைக்கு திரும்பவும் அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் மனத்தில் என்னத்தை எண்ணினார்கள் என்று யாருக்குத் தெரியும்? அதை யாராலும் அறிந்து கொள்ள முடியாதே நடு இளையவள் ஜேனெட் மாத்திரம் மெல்லிதாக விம்மினாள். எல்லாரிலும் அவள் புத்திசாலி. அவளை விட இருவயது மூத்த சற்று கட்டுமஸ்தான உடல்கட்டுள்ள பெலிஸியாவும் அவளும் ஐந்தாம் வகுப்புதான் படிக்கிறார்கள். பெலிஸியாவை என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனால் ஜேனெட் நிச்சயம் ஒர் ஆசிரியையாக வருவாள்; அவளுக்கு சமூகத்தில் நிச்சயம் ஒரிடமுண்டு. ஜேனெட்டை நினைக்க சாராவால் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை.
அவர்கள் திரும்பவும் எனது வீட்டுக்கு வரவேயில்லை. இக் காலப்பகுதியில் சாராவின் கால் வருத்தம் மிக மோசமாய்ப் போய்விட்டது. அவன் தனது வேலையை விட வேண்டியதாகியும் விட்டது. அவள் லோகேசனுக்கு போய் ஒரு வீட்டில் பாத்திரம் கழுவிப் பிழைத்தாள். அவளுடைய கணவனின் சம்பாத்தியம் அங்கே வீட்டு வாடகைக்கும் உணவுக்குமே கண்டது. "வோடிங் ஸ்கூல் படிப்பு நின்று விட்டது. பிள்ளைகள் வீட்டுக்கு வந்து தாயோடு இருந்தனர். உள்ளுர் பாடசாலைக்குப் போய் வந்தனர்.
சாரா ஒரு நாள் என்னைப் பார்க்க வந்தாள். முகத்தில் கவலையின் ரேகைகள், படிந்திருந்தன. தனக்கு உழைக்க முடியவில்லை என்பதும் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு வாய்க்கவில்லை என்பதும் அவளை வெகுவாகப் பாதித்திருந்தன. குசினியில் போடப்பட்டிருந்த கதிரையில் இருந்து பண்டேஜ் சுற்றியதால் ஒரு பெரிய தூண்போல் இருந்த காலை நீட்டிக் கொண்டு எப்படியாவது பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்துவிட வேண்டும் என்று சொல்லிப் பெருமூச்சு விட்டாள். -
அவள் திரும்பவும் வரவேயில்லை. அவளின் கால்கள் படுமோசமாகி விட்டன. பிள்ளைகளை, அதிலும் ஜேனெட்டை, அனுப்புவாள். அவர்கள் வந்து, ஒன்றும் பேசாமல் மெளனமாக நிற்பார்கள். பின் கதவுப் பக்கமாக வந்து எனது பார்வை படும் வரையும் பொறுமையோடு காத்து நிற்பார்கள். ஏதும் விசாரித்தால், அகலவிரித்த கண்களோடு, என்னையே பார்த்துக் கொண்டு, வெறெங்குமே திரும்பாமல் பதிலளிப்பார்கள்:ஆம்தாயின் கால்கள் மோசமாகிவிட்டன, இல்லை, அவைகள் முன்னைப் போலவே இருக்கின்றன', 'இல்லை, அவளால் ஒரு வேலையும் செய்யமுடிவதில்லை, "ஆம், நாங்கள் பாடசாலைக்குப் போகிறோம். நான் விசாரிப்பது அவர்களை அசெளகரியப்படுத்துகிறது என்பதை அவர்கள் முகக் குறிப்பிலிருந்து உணரமுடிந்தது. ஆயினும் என்னால் அவ்வாறு விசாரிக்காமல் இருக்க முடியவில்லை. என் விசாரிப்புகளால் அல்லாமல், அவ் விசாரிப்புகள் என்னைக் கவலையுறச் செய்கின்றன என்பதே அவர்களின்

Page 43
அசெளகரியத்துக்கு காரணமாகும். உண்மையில் அவர்களின் வாழ்க்கை நிலை எனது கேள்விகளும் ஊகிப்பிற்கும் அப்பாற்பட்டது. ஆளுக்கு ஒரு தோடம்பழம், ஒரு பழைய சட்டை அல்லது ஜம்பர் கொடுத்தனுப்புவேன்.
பொருத்தமற்று அலங்கோலமாக உடுத்து வந்தது போய் இப்போதுகந்தல் உடையோடுகூட வரத்தொடங்கினர். பெலிஸியாவின் பித்தல் பூட்டுசி ஒன்றால் சேர்த்து குத்தப்பட்டிருந்தது. றொபெர்ட்டின் களிசன் கிழிந்து போய் தைக்கப்படாமல் இருந்தது. ஜெனெட் கூட மிகவும் சிறிய கோட்டையே எப்போதும் போட்டுக் கொண்டு வந்தாள். உணவுக்கும் உடைக்கும் செலவுகள் கூடிக் கொண்டு வர வர அவர்களின் ஏழ்மையும் கூடிக் கொண்டு வருகிற தென்று நினைத்துக் கொண்டேன்.
பிற்பாடு வெகு நாட்களாக அவர்கள் வரவில்லை. மற்ற சுதேசிப் பெண்களிடம் சாராவைப் பற்றி விசாரித்தேன். சாரா இப்போது எப்படி ? நீங்கள் சாராவைக் கண்டீர்களா ? அவர்கள் அவளைப்பற்றி அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. அது ஏன் என்று எனக்கு புரியவில்லை. ஏதோ போகிற போக்கில் பதிலளித்தனர். அவள் இப்போது கடும் நோயாளியாகிவிட்டாள். கால்கள் வழக்கமற்றுவிட்டன என்று கேள்விப்பட்டேன்.
'சாராவின் புருஷனும் இப்போது வேலை செய்வதில்லையாம் வேலைக்காரிகரோலின் பேச்சு வாக்கில் ஒரு தடவை சொன்னாள், பாத்திரங்களைக் கழுவி அலசிக்கொண்ட படி,
“வேலை செய்யாவிட்டால் எப்படி ? எப்படி அவர்கள் சமாளிக்கிறார்கள்”நான் கேட்டேன்.
"அவளுடைய கால்கள் பழுதாய்ப் போய்விட்டன. அதனால் அவளால் வேலை செய்யமுடியாது"
"அது எனக்குத் தெரியும், அவர்கள் எப்படிச் சாப்பிடுகிறார்கள்”
"அந்தச் சின்னப்பையனின் உழைப்பிலிருந்து தான்” கரோலின் சொன்னாள்.
"அவன் மாட்டுப் பண்ணை ஒன்றில் வேலை செய்கிறான். பால் கறக்கும் இடத்தை துப்பரவு செய்வது அவன் வேலை" என்று விளக்கினாள் அவள்.
நான் கரோலினிடம் நேரம் கிடைக்கும்போது லோகேசனுக்குப் போய் சாராவைக் கண்டு நான் அவளுக்கு எவ்வாறு உதவி செய்யலாம் என்று பார்த்து வருமாறு கூறினேன். அவள் அவ்வாறு சென்று வந்து கூறினாள்; சாராவின் புருசனுக்கு வயது போய்விட்டது. முதல் செய்த வேலையை இப்போது அவனால் செய்ய முடியாது. இப்போது ஏதோ " சின்னவேலையில் சேர்ந்திருக்கிறான்.
"நான் சாராவிற்கு ஏதும் உதவி செய்ய முடியுமா ? இதை அவளிடம் சொன்னாயா ?”
"அவளின் புருசன் இப்போது வேலையொன்றில் சேர்ந்து விட்டான்" என்றாள் மீண்டும் கரோலின் சொல்வது உடனே எனக்கு விளங்குவதில்லையோ என்று அவள் மனதுக்குள் எண்ணுவது போல் எனக்குப் பட்டது.

ஒரு செவ்வாய்க்கிழமை பின் அறையில் உடுப்புகளை"அயன் செய்தவள் இடையே நிறுத்திவிட்டு வந்து சொன்னாள்:
"சாராவின் மகள் வந்திருக்கிறாள்" கரோலின் மீண்டும் அயன் பண்ணப் போய் விட்டாள்.
ஜேனெட் பெப்பர் மரத்தின் கீழே வெறும் பாதங்களால் தரையைச் சுரண்டிக் கொண்டிருந்தாள். அவள் நின்ற தோரணையில் இருந்துநீண்ட நேரமாக கரோலினைக் காணும் வரையும் அவ்விடத்தில் நின்றிருக்கிறாள் என்று புரிந்தது.
"குட் மோனிங் அம்மா’ என்று சொல்லி தலைகுனிந்து தயங்கித் தயங்கி படியேறி வந்தாள். இனிமேலும் அவள் சிறுமி இல்லை என்று தெரிந்தது. குழந்தைப் பிராயத்துக்குரிய அடி வயிறும் இடுப்பும் சற்று வளைவெடுத்து அகன்றிருந்தன. இறுக்கமான ஜேர்ஸி அணிந்திருந்ததால் வளர்ந்து வரும் முலைகள் குமிழ்ந்திருப்பது நன்கு தெரிந்தன. ஜேர்ஸி அழுக்காக இருந்தது. காதில் அணிந்திருந்த பித்தளைத் தோடுகளில் கண்ணாடி மணிகள் மினுமினத்தன. சற்று ஒருக்கணித்து என்னைப் பார்த்தாள். நான் இப்போது ஒரு குழந்தைப் பிள்ளையோடு பேசவில்லை என்ற நினைத்துக் கொண்டு சொன்னேன்.
"நீங்கள் மிகவும் கஷ்டப்படுகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன்"
“ஆம் அம்மா’ மெதுவாக, குரல் குழந்தைத்தனமாகவே இருந்தது.
"உனது அப்பாவுக்கு வேலையில்லையா” சாரா தலையாட்டுவது போல் தலையாட்டிக் கொண்டு, "ஆம், அம்மா அதனால்தான் கஷ்டம்"
"றொபெர்ட் வேலை செய்வது"
"மாட்டுப் பண்ணையில்" என்று சொல்லி தலை குனிந்தாள். பெலிஸியாவை என்ன செய்வது என்று சாரா கவலைப்படுவது நினைவுக்கு வர,
"பெலிஸியா எங்காவது வேலையில் சேர்ந்திருக்கிறாளா?” என்று கேட்டேன்.
"அவள் ஒடிப்போய் விட்டாள் அம்மா" சொல்லும் போது நாக்குழறியது.
அறிவதற் "அவளுக்கென்ன’ புருவத்தை நெளித்தேன் மேலும்
வதறகாக,
"அவள்பிலோமென்றியனுக்கு ஓடிப்போய்கலியாணம் செய்து 6't LITsir"
"அப்படியா,நல்லது, மிகவும் நல்லது, அப்படியில்லையா" என்று புன்னகைத்தேன். அவள் ஒன்றம் பேசவில்லை.
"அப்ப நீ மாத்திரம் தானே, ஜேனெட் வீட்டில், பாடசாலைக்கு போய்க் கொண்டிருக்கிறாய் தானே, ஒ,நீரீச்சராகப் போகப் போகிறாய்" அவள் இயல்பு நிலைக்கு வந்து புன்னகை புரிவாள் என்று எதிர்பார்த்தேன்.
39

Page 44
"நான் வீட்டில்தான் இருக்கிறேன் அம்மா" என்றாள் கொஞ்சம் கூச்சத்துடன்.
"வீட்டிலா"
"ஆம்,நான் வீட்டில் அம்மாவோடு இருக்கிறேன்" குரல் கம்மித் தேய்ந்து போனது.
"எப்போதும் அம்மாவோடு வீட்டில்தான் இருக்கிறேன் என்றா சொல்கிறாய் ஜேனெட்" என்றேன் சற்றுக் குரலை உயர்த்தி
"நான் வீட்டில் அம்மாவோடு இருக்கிறேன். அவளால் எழும்பி நடக்கமுடியாது"
"அப்போ நீ பாடசாலைக்குப் போவதில்லை. அம்மாவைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய்"
"ஆம் அம்மா" தலை குனிந்து கால் விரல்களைப் பார்த்த படி கூறினாள். பின் தலையை நிமிர்த்தி வெறுமனே, குருடன் சூரியனைப் பார்ப்பது போல் என்னைப் பாத்தாள்.
"ஒரு நிமிசம் நில் ஜேனெட்' என்று சொல்லி வீட்டுக்குள் போய் ஒரு சோடி உடுப்பையும் ஐந்து சில்லிங் சில்லறையையும் எடுத்து கொண்டு வந்தேன். அவள் அதே நிலையில் திகைத்துப் போய் தான் எங்கே நிற்கிறேன் என்பதை உணராதவள் போல் நின்றிருந்தாள். அவளிடம் உடுப்பை நீட்டி "ஜேனெட், இது உனக்குப் பொருத்தமாக இருக்கும், காசை அம்மாவுக்கு கொடு என்றேன்"
"நன்றி அம்மா" அவளுக்கு குரலே இல்லை என்பது போல் வேறெங்கோ இருந்து ஒலிப்பது போல் அது கேட்டது.
காசை சட்டையில் முடிந்து கொண்டாள். உடுப்பை திரும்பத் திரும்ப மடித்தாள்.
என்ன செய்வது என்று தெரியாமல் வாசல் படியில் நின்றேன். கரோலின் மண்டபத்தில் இருந்து யன்னல் ஊடாகப் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சடாரென்று கரோலினை கூப்பிட்டு ஜெனேட்டுக்கு fகொடுக்குமாறு கூறினேன்.
சில நிமிடங்கள் கழித்து குசினிக்குள் போன போது ஜேம் பூசிய பாண் துண்டுகளுடன் பெரிய ‘மக்’கில் ரீ குடித்துக் கொண்டிருந்தாள் ஜேனெட் என்னைக் கண்டதும் மெல்லிதாக தலை நிமிர்த்தி புன்னகைத்தாள். கண்களில் வெட்கம் நிழலாடியது.
"அவள் போகிறாள்" என்று சற்று நேரம் வந்து கரோலின் சொன்னாள். ஆனால் அவள் உடுப்பை மடித்து கையில் வைத்தபடி வாசலில் நின்றிருந்தாள்.
"குட்பை ஜேனெட், நான் சுகம் விசாரித்ததாக அம்மாவிடம் சொல்லு, எப்படியும் சுகமாகி விட வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகச்
சொல்லு அம்மா எப்படி என்று அடிக்கடி வந்து சொல்ல வேணும்"
ஜேனெட்டிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை. பொங்கி வந்த அழுகையைக் கட்டுப் படுத்த அவள் மிகுந்த பிரயாசைப்பட்டுக்
40

கொண்டிருந்தாள். அவளது முழு உடலும் பெருகிவரும் கண்ணிரை கட்டுப்படுத்த முடியாமல் திணறியது. அவளது கண்கள் விரிந்து விரிந்து கண்ணிரால் தளம்பியது. ஈற்றில் அவள் அழத் தொடங்கினாள். கண்களிலிருந்தும் மூக்கிலிருந்தும் கண்ணிர் தாரை தாரையாக ஒழுக, அவள் விக்கி விக்கி அழுதாள்.
"என்ன விசயம் ஜேனெட் என்ன விசயம்”
பதில் இல்லை. அவள் அழுது கொண்டிருந்தாள். முழங்கையால் தேய்த்து தேய்த்து, பீரீட்டு எழும் கண்ணிரை எங்கே துடைக்கலாம் என்று தடுமாறினாள். கேவிக் கொண்டு பெருமூச்சுகள் வெளிப்பட்டன. கண்ணிரைத் துடைக்க அவளுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. அவளுடைய கையில் மடித்த உடுப்பு இருந்தது. அதை என் முன்னிலையில் எவ்வாறு துடைக்க பயன்படுத்துவாள் ?
“என்ன விசயம் மகளே, என்ன பிழை நடந்தது. நீ அழக் கூடாது. என்ன நடந்தது எனக்குச் சொல்"
அவள் பேசமுயன்றாள். கேவிக் கேவி எழும் மூச்சுகளிடையே அது இயலவில்லை. "அம்மாவிற்கு நோய் முற்றிப் போய்விட்டது." என்றாள் கடைசியாக.
அவள் மீண்டும் அழத் தொடங்கினாள், குலுங்கி குலுங்கி நீண்ட பெருமூச்சுகளை விட்டபடி முகம் கன்றி சுருங்கிப் போய்விட்டது.
ஆற்றாமையால் ஈரக் கையினால் மூக்கைப் பொத்தினாள்.
அவளுக்கு நான் என்ன செய்யமுடியும் ? நான் என்ன செய்ய முடியும் ?
"இங்கே . இதை எடுத்துக் கொள்' என்ற எனது கைலேஞ்சியை அவளிடம் கொடுத்தேன்.
தமிழாக்கம்: சங்கமம்
நாதின் கோர்டிமெர்
நாதின் கோர்டிமெர் தென்னாபிரிக்காவின் மிகச் சிறந்த படைப்பாளி. ஜோன்னஸ்பர்க் நகரின் புறநகர்ப் பகுதியில் பிறந்தவர். ஒன்பதாவது வயதில் எழுதத் தொடங்கியவர். இவருடைய பல நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. தன் நாட்டில் நிலவும் இனப் பாகுபாட்டினால் விளைகிற துயரங்களையும் வேதனைகளையுமே பெரும்பாலும் தன் எழுத்துகளின் களமாகக் கொண்டவர். சுதந்திரம் வேண்டுகிற மனம் இவருடையது. அதே சமயம் இவர் எழுத்து எதிர்ப்புக் குரல் என்ற எல்லையைக் கடந்து செல்லக்கூடியது. 1991 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்றவர்.

Page 45
இன்னும்தான் தெரியும் அக்காட்சி என் மனதில்.
குத்துக்காலிட்டசையாது நிற்கும் கொக்கும் நாரைகளும் தூரத் தெரியும் கோரைப்புல் வெளியிடையே ஒடும் வாகனத்தில் இருக்கும் போதெல்லாம் இன்னும் தான் தெரியும் அக்காட்சி என் மனதில்.
உதிர்ந்த காலங்களின் வழியே கண்ணீரின் மீதே கரைந்து போன என் பால்யமும் சிறு மகிழ்வும், இந்தப் பெரு வெளியிலும் கொஞ்சமாய்த் தன்னை இழந்திருக்குமோ ?
ஒடும் பஸ்ஸிலிருந்து குதித்தோடி மேடும் பள்ளமுமாயான பெருமணல் திட்டுகளில் புரண்டு, உடலெங்கும் மண் அப்பி எழுந்து வர எண்ணிய பயணங்க ளெல்லாம்
முடிந்துதான் போயிற்று.
இப்போதெல்லாம் அசையும் வாகனத்தில் அசையாப் பிண்டமென ஓர் அமர்வும் நகர்வது தெரியாமல் ஒரு நகர்வும். இல்லையென்று போனால். உச்சி வெயிலுக்குத்
தகித்து தங்கப் புள்ளிகளாய்க் கொதிக்கும் LS நீர்ப் பரப்பைப்
பார்க்கும் சில சமயங்களில் மட்டும் முற்றுப் பெறா கவிதையொன்று வந்து வந்து நெருடி விட்டுப் போகும்.
வேறு என்ன ?
 
 
 

GTGoGo Lib
முடிந்துதான் போயிற்று. மூச்சிரைக்க மூச்சிரைக்க ஸ்டியரிங் கைத் திருப்புமென் தந்தையின் தோளைத் தொட்டபடி நின்று கொண்டு
நானே
பஸ்ஸை நகர்த்துவதாய் எண்ணிக் களிப்புறும் என் பயணமெல்லாம்
முடிந்துதான் போயிற்று.
இனியென்ன ?
இப்போதென் மகளும் இன்னுமிரு வருடங்களின் பின்
மகனும் யன்னல் கம்பிகளைப் பிடித்தபடி நின்று அசையாதிருக்கும் கொக்கும் மரங்களும் ஓடுவதாய் காட்டிக் காட்டி களிப்புறுவதில் எனை இழக்க முனைவேன்.
இருந்தும் இன்னும் தான் தெரியும் அக்காட்சி என் மனதில்
"மூச்சிரைக்க, மூச்சிரைக்க ஸ்டியரிங்கைத் திருப்புமென் தந்தையின்."
ஒரு சின்னப் பிரார்த்தனை இறைவா எப்பொழுதெல்லாம் நான் அப்புல் வெளியினூடு பயணிக்கின்றேனோ அப்பொழுதெல்லாம் ஒரு கொக்காவது நாரையாவது மிஞ்சிப் போனால் பஸ் சத்தத்திற்கு தலை நிமிர்த்தும் ஓர் எருமையாவது தோற்றம் தரட்டும்.
அவ்வளவே.
41

Page 46
') محمستحق لیمانہيں لياليسا عاشقی ساتھ
C
42
 

“ இலக்கியம் எல்லாமே ஏதோ ஒருவகையிற் சமுதாய விமர்சனமாகவே இயங்குகிறது” என்று தனது "போரின் முகங்கள் கவிதைத் தொகுதியின் முன்னுரையில் கவிஞர் சிவசேகரம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். உண்மை, இதையாரும் மறுப்பதற்கில்லை. அப்படியெனில் இலக்கியம் மூலம் விமர்சனத்தை மேற்கொள்ளாது, இதற்கென ஆய்வை மேற்கொண்டு விமர்சனம் புரியும் சமூக விஞ்ஞான, அரசியல் வரலாற்று அறிஞர்கள் போன்று நாமும் ஏன் முயலக்கூடாது? நாம் ஏன் இந்த இலக்கியம் மூலம் விமர்சனத்தை மேற்கொள்ள வேண்டும்?
விமர்சனம், ஆய்வு, கட்டுரை என்பவை இயங்குவது நமது அறிவின் தளத்தில் மட்டுமே. ஆனால் ஆக்க இலக்கியம் என்று வரும் போது, நம் அகத்தே உள்ள பல தளங்கள் இயங்க ஆரம்பிக்கின்றன. அறிவு உணர்வு, அடிமணம், பூர்வீக மனம் என்று பல தளங்கள் இயங்க ஆரம்பிக்கின்றன. இப்படிப் பல தளங்களின் சக்தியைத் தனக்குள் இழுத்து வெளிவரும் ஆக்க இலக்கியப்படைப்பு ஆற்றல்மிக்கதாக அமைகிறது. உதாரணமாக ஒருவிஷயத்தை அல்லது ஒரு நிகழ்ச்சியைக் கட்டுரையில் படிப்பவன் அதைத்தன் அறிவினால் கிரகித்து விட்டு அதனோடு அதை மறந்து விடவும் கூடும். அவனிடம் அவ்விஷயம் அதிக ஊடாட்டம் கொள்ளாமலும் போய்விடலாம். மாறாக அதே விஷயத்தை ஆக்க இலக்கிய வழியாகப் படிப்பவன், அவ்விஷயத்தை அறிவால் மட்டுமல்லாது உணர்வுகளின் பல தளங்களாலும் உள்வாங்குகிறான். அதனால் அது அவனிடம் ஊடாட்டம் கொண்டு இயக்கங்கொள்ள ஆரம்பிக்கிறது. இந்த இயக்கங் கொள்ளல் என்பது ஆக்க ரீதியானதாகவும் புரட்சிகரமானதாகவும் அமையலாம். சிலவேளை அழிவுக்குரியதாகக் கூட அமையலாம். இது ஒரு படைப்பாளி தன்படைப்பில் ஏற்றியிருக்கும் குணாம்சங்களைப் பொறுத்தது.
ஆகவே படைப்பாற்றல் என்பது அற்புதமானதும் அபூர்வமானதுமாகும். காரணம் விஷயஞானமுள்ள கலைஞன், தன்படைப்பாற்றல் மூலம் செய்யும் சமூக, சுயவிமர்சனம் மூலம் தான் செல்லும் வழியைச் சுத்தப்படுத்தி, தன் இருப்பைக் கண்டுபிடிக்கும் கருவியாகவும் அதை ஈற்றில் பாவிக்கிறான். உதாரணமாக சாதாரண கட்டுரை ஒன்றையே ஒழுங்காக எழுத முடியாத ஒருவன் கலை என்று வரும்போது அற்புதமான சிருஷ்டி ஒன்றைச் செய்து விடுகிறான். நாம் அதைப்பார்த்து வியந்து போகிறோம். ஆனால் வேடிக்கை என்ன வென்றால் அப்படைப்பைத் தந்தவனுக்கே சிலவேளை அதில் பொதிந்துள்ள விஷயங்கள் பூரணமாக விளங்கிக் கொள்ளப் படாமல் போவதும் உண்டு. இப்படைப்பு தனக்குள் இருந்தா வந்தது என்று அவனே வியப்புறுகிறான். இதற்குக் காரணம் மனிதன் தனக்குள் புதைந்துள்ள ஆழங்களை அறிவதில்லை. ஆனால் படைப்புத்தொழிலில் அவன் ஒன்றித்துஈடுபடும்போது அவனை அறியாமலே அவன் தன்னக ஆழங்களுக்குள் ஊடுருவுகிறான் இதை ஒருவகைத் தியானம் என்றே கூறவேண்டும்.

Page 47
இந்நிலையில் கவிதை பற்றிய விமர்சனத்துள் புகும் நாம் அக்கவிதைகளை எழுதிய கவிஞன் எந்தத்தளத்தின் செல்வாக்கால் பாதிக்கப்பட்டுள்ளான் என்பதை அறியவேண்டும். மேல்மன அறிவுத்தளமா, உணர்வுத்தளமா, அடிமனத்தளமா, இவற்றையும் கடந்தியங்கும் ஆத்மார்த்தத் தளமா அல்லது வெறும் உருக்க உணர்வு எனப்படும் Sentimental தன்மைவாய்ந்த மேலோட்ட உணர்வுத்தளமா என்பதை அறிந்துகொண்டே அதில் புகவேண்டும். அறிவுத்தளத்துக் குரிய படைப்பை உணர்வுத்தளத்துக்குரிய அளவுகோல்களைக் கொண்டு, தேவையின்றி அளக்கச்செல்ல கூடாது. இதேபோலவே ஆத்மார்த்த உணர்வுத்தளங்களுக்குரிய ஒன்றை, அதை எட்டமுடியாத அறிவுத்தளத்தில் மட்டும் வைத்துப்பார்க்கக்கூடாது. இதனால் ஒரு கவிஞனை விளங்கிக்கொள்ள முடியாமல்போகும் வாய்ப்புகளே அதிகம் ஏற்படுகின்றன. மேலும் ஒரு கவிஞனே மேலே கூறப்பட்ட பலதளங்களில் தன் ஆளுமையைக் காட்டக் கூடிய வல்லமை உடையவனாகவும் இருக்கலாம். அவன் எடுத்துச் கொள்ளும் தளங்களுக்கேற்ப அவன் சொற்கையாள்கை சொல்மாறுபடலாம்.இதை உணராத விமர்சகர் சிலர், ஒருவன் அறிவுத் தளத்தில் நின்று எழுதியதை உணர்வுத்தள அளவுகோல்களைக் கொண்டு அளக்கமுயல்வதும் உணர்வுத்தளத்துக்குரிய-ஆத்மார்த்தத்தளத்துக் குரியவற்றை மேலோட்ட அறிவுத்தள அளவுகோல்களால் எடை போட்டு மாறாட்டம் செய்வதும் குழப்புவதும் இதனால்தான். ஒருவருக்கு அறிவுத்தளம் பிடிக்கும். இன்னொருவருக்கு ஆழ்மனத்தள அனுபவங்கள் பிடிக்கும். ஒவ்வொன்றையும் அந்தந்தத் தளத்தில் வைத்து, அதற்குரிய அளவுகோல்களால் எடைபோடும் விமர்சகர்கள் இன்றுமிகக் குறைவே. (மேலும் விளக்கத்திற்கு யதார்த்தமும் ஆத்மார்த்தமும் தொகுப்பில்
உள்ள கலையும் விடுதலையும் கட்டுரையைப் பார்க்க)
இதன் பின்னணியில் வைத்தே நாம் கவிஞர் சிவசேகரம் அவர்களின் போரின் முகங்களைப் பார்க்கவேண்டும்.
போரின் முகங்கள் கவிதைகள் எத்தகைய தன்மைகளைக் காட்டுபவையாக உள்ளன?
உணர்வும் அறிவும் ஒன்றையொன்று பின்னிச் செல்லும் தன்மையை இவரது கவிதைகளில் காணலாம். கூடுதலாக அறிவின் ஆட்சி இதில் ஆளுமை செலுத்துவதைக் காணலாம். ஆனால் அத்தகைய ஆளுமையை நிலைநிறுத்தவேண்டிய சந்தர்ப்பங்களில் இவருக்கு உணர்வுத்தளமும் கை கொடுக்கிறது. சிலவேளை அறிவையும் உணர்வையும் கடந்து சென்று நுண்ணுணர்வும் பிரதேசமான ஆத்மார்த்த தளத்தையும் தன்னால் கைப்பற்ற முடியும் என்பதற்கான மினுக்கங்களையும் அவர் இடைக்கிடைஇக்கவிதைகள் சிலவற்றில் காட்டியும் உள்ளார் என்பதையும் கூறத்தான் வேண்டும். அதற்கு உதாரணமாக மெக்சிக்கோ புரட்சி பற்றிய கவிதையில்
"இலையுதிர்ந்து பட்டதுபோல்நின்ற நெடுமரத்தில்
வசந்தத்தின் கெந்தழல்கள் கிளை மூடப் பரந்து விரிந்த தெவ்வாறு ?"
என்று அவர் கூறிச் செல்வதைக் காட்டலாம். ஆனால் மொத்தத்தில் அறிவும் உணர்வும் சேர்ந்து உறவாடும்

கவிதைகளே இத்தொகுதியின் முக்கிய பண்பாகும்.உணர்வுகள் என்று கூறும்போது கண்டகண்ட கூளங்குப்பைகளையெல்லாம் நுரைத்து அள்ளிக்கொண்டு வரும் உணர்வுகள் போலல்லாது உயர்ந்த செதுக்கப்பட்ட உணர்வு வெளிப் பாட்டின் சாதனமாக இக்கவிதைகள் நிற்கின்றன. போரின் முகங்களின் முதலாவது கவிதை வரிகளே இதற்கு உதாரணம்.
"வாழ்வின் மீதான ஆசை மண்ணை விட்டுவிரட்டியது இரவின்முகத்தைச்சூடிக் கொண்டு கொழும்புக்கு ஒடினான்"
என்னும் கவிதை வரிகளில் வரும் "இரவின் முகத்தைச் சூடிக் கொண்டு" என்னும் வார்த்தைப் பிரயோகம் கவனிப்புப்குரியது. இது உணர்வுத்தளத்தின் கவித்துவப்பெய்கையாகும்."இரவின் முகத்தைச் சூடுதலை"நாம் உணர்வால் அனுபவிக்க முடியுமேயொழிய அறிவினால் கிரகிக்க முடியாது. இனி அடுத்து வரும் வரிகளைப் பாருங்கள்.
"அடையாள அட்டையில் இருந்தமுகம் தனதென்றான் அவன் இல்லை என்றார்கள் அவர்கள் அட்டை 10 வருடம் பழையது.ஆயினும் முகம் தனதென்று வாதாடினான். அவனது முகம் வாவியில் மிதந்தபோது அவனுடையதாக இருக்கவில்லை."
இதில் வரும் சொற்கள் எந்தவித உணர்வுத் தளத்திற்கும் உரியவை அல்ல. வெறும் அறிவுத்தளத்திற்குரிய சொற்கையாள்கையில், அமைத்துக் காட்டப்படும் முறையால் கவித்துவமும் உணர்வும் கிளறப்படுகின்றன.
இவ்விடத்தில், இத்தகைய அறிவுத்தளத்திற்குரிய சொற்களைக் கொண்டே உணர்வும் கவித்துவமும் கிளறப்படுவதற்கு உதாரணமாக அஸ்வகோஸ் இருள் என்ற கவிதையில் எழுதிய இறுதி வரிகளைக் காட்டலாம். போராடக்களஞ்சென்றிருந்த போராளி திரும்பி வந்திருந்த நிலையை அவன் தந்தை சொல்வதாக அக்கவிதை பின்வருமாறு அமைகிறது.
"இறுதியாக
என்னிடம் வந்திருந்தான் அவனது தேகம் குளிந்திருந்தது. இரத்தம் உறிஞ்சநூளம்புகள் வரவில்லை ஈக்களை அண்டநான் விடவில்லை"என்று
வரும் வரிகள் எத்தனை விதமான துன்ப உணர்வுகளை எமக்குள் கிளறிவிடுகிறதோ, அத்தகைய உணர்வுகளைத்தான் சிவசேகரம் அவர்களின் "அவனது முகம் வாவியில் மிதந்தபோது அவனுடையதாக இருக்கவில்லை" என்னும் வரிகள் எமக்குள் எழுப்பி விடுகின்றன.
கவிதை என்பது பல தளங்களின் கூட்டுச் சேர்க்கையால் நிகழ்த்தப்படுவதென்பது தெளிவு. ஆனால் எந்தத்தளத்தில் கவிதை
43

Page 48
நிகழ்த்தப்பட்டாலும் ஒவ்வொரு தளமும் அதற்கே உரிய ஒர் உணர்வுகளை எழுப்பாவிடில் அவை உயர் கவிதையாக எழமுடியாது போய்விடுகின்றன. அதனால்தான் வைரமுத்து, மேத்தாக்கள் போன்றவர்கள் பலவித அழகிய சொற்களைக் கொண்டு பல நெளிவு சுழிவுகளோடு கவிதைகள் எழுதியபோதும் அவர்கள் கவிதைகளில் இந்த ஒர் உணர்வு ஊட்டங்களுக்குப் பதில் வெறும் கற்பனைவாதச் சரசரப்புகளையே காண்கிறோம்.
இங்கே, சிவசேகரத்தின் "அவனது உடல் வாவியில் மிதந்தபோதுமுகம் அவனுடையதாக இருக்கவில்லை" என்னும் கவிதை வரிகள் எமக்குள் எத்தனையோவித ஒர உணர்வுகளை எழுப்பிவிடுகின்றன. "வாவியில் மிதந்த முகம் ஒருவனுக்கு, ஒரு ஏழைக் குடும்பத்தையும் அவனை நம்பிக் கனாக்காணும் விதவைத் தாயையும் நினைவுக்கு கொண்டுவரலாம். இன்னொருவனுக்கு தன்னிடம் விடை பெற்றுப் பிரிந்த நண்பனையும் அவனோடு பழகிய காலங்களையும் நினைவில் எழுப்பலாம். வேறொருவனுக்கு இன்றுரோட்டிலும் காட்டிலும் கடலிலும் வயலிலும் சிதைவுற்றுக் கிடக்கும் மனித உடல்களையும் துச்சமாகப் போய்விட்ட மனித உயிர்களையும் அதற்குரிய பன்முகக் காரணங்களையும் நினைவில் எழுப்பலாம். இப்படி ஒவ்வொருத்தரின் பின்னணிக்கேற்ப ஒரஉணர்வுகள் சிலிர்த்தெழலாம். இவை உயர்ந்த கவிதைகளின் முக்கிய அம்சமாகும். இத்தகைய கவிதைகள் போரின் முகங்கள் தொகுப்பில் நிறையவே உள்ளன. இதற்கு இன்னோர் உதாரணமாக ஸம்பவாமி யுகே யுகே என்னும் கவிதையில் உள்ள பின்வரும் வரிகளைக் காட்டலாம்.
தர்மம் நலிந்து அதர்மம் தழைக்குங்கால் வருவேன் யான் எனக் கூறிப் போனான் உன்மாமன் வரவில்லை. அவதார வேடங்கள் காவிபூணும் யுகமொன்றில் ஏ, அபிமன்யு
ஆர்ப்பாட்டம் இன்றி
அவதரித்துப் போகிறாய்
பெண்ணாக ஆணாக விடுதலைப்படையாக பணியமறுக்கும் தேசமாக.
மேற்காட்டிய கவிதைகளில் இருந்து நாம் சிவசேகரத்தின் கவித்துவ ஆற்றலை அறியலாம்.
அடுத்து சிவசேகரம் அவர்கள் தனது போரின் முகங்கள் கவிதைகள் மூலம் நமக்குத் தரும் செய்தி என்ன என்பது பற்றி அறிவது முக்கியமாகும். கவிதை ஒருவகை விமர்சனம் எனில் சிவசேகரம் அவர்களது கவிதை போரையும் அதற்கு பின்னணியாக நிற்கும் சமூக, அரசியல், பொருளாதார விஷயங்களையும் விமர்சிக்கிறது எனலாம். ஆனால் அப்படி விமர்சனத்துள் புகும் கவிதைகள் வெறும் விமர்சனமாகவே நின்றுவிடாது, தீர்வொன்றை நோக்கியும் அத்தீர்வு என்ன ரீதியில் எய்தப்படவேண்டும் என்பதையும் கோடி காட்டியும் செல்கிறது எனலாம்.
போரும் தீர்வும் என்ற கவிதையில் ஒரு சாதாரண பொதுமகனின்மனநிலைகாட்டப்படுகிறது. அதாவதுஎல்லாவற்றையும் “பேசியே”

தீர்க்கலாம் என்பவர்களின் கருத்தைப் பற்றி அவன் சிந்திக்கையில் "ஒருகணம் (அது)சரிபோல் இருந்தது, மறுகணம் பிழைபோல் இருந்தது" என்கிறாள். அதேநேரம் போரால் பாதிக்கப்பட்டவர்கள் எதுவுமே பேச மறுத்தனர். ஆனால் போராடிக் கொண்டிருக்கும் துப்பாக்கியோ, "பேசி எதுவுமே தீராததால் எல்லாவற்றையும் போர்களே தீர்க்கின்றன’ என்கிறது. இதை அவன் கேட்டபோதும் "அது சரிபோலவும் பிழைபோலவும் இருந்தது" என்கிறான். இது இன்றைய பொதுமகன் ஒருவனின் ஊசலாட்டத்தைக் காட்டுவதாய் உள்ளது. ஆனால் போரால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் எதுவும் கூறாது மெளனம் சாதித்தனர் என்று இங்கு கூறப்படுவதுதான் பல அர்த்தம் பொதிந்ததாயும் மிகுந்த நயத்திற்குரியதாகவும் அமைகிறது. போரால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு தம்மை இந்நிலைக்கு முகம் கொடுக்க வைத்த போராளிகளிலும் தம்மை இப்படிச் சின்னாபின்னப்படுத்திய “சமாதானத்துக்கான’ போராட்டம் நடத்துவதாகக் கூறும் ஆக்கிரமிப்பாளர்களிலும் அடக்கமுடியாத ஆத்திரம். அவர்கள் சாதிக்கும் மெளனத்துக்குள் அவர்களது பற்கள் ஒன்றோடொன்று நறும்பப்படுவது எம்முன் விரிகிறது. இதுவும் நாம் ஏற்கனவே கூறிய ஒரஉணர்வு சம்பந்தப்பட்ட கவிதைக்குச் சிறந்த உதாரணமாக நிற்கிறது.
ஆனால் விடுதலைக்குரிய தீர்வாக கவிஞர் முன்வைப்பது எது? இதில் எந்தவித ஊசலாட்டமும் இல்லை.
சமாதானப் புறாக்கள்’ என்னும் அவரது கவிதையின் இறுதிவரிகள், "சமாதான தேவதை என்னிடம் ஒரு போர் வாளைத் தந்தாள்” என்று மிக அழுத்தமாவும் ஆழமாகவும் முடிக்கப்படுகிறது. இது போராடித்தான் விடுதலை பெறவேண்டும் என்பதன் தெளிவாகவே நிற்கிறது. மேலும் 'ஸம்பவாமி யுகே யுகே என்னும் கவிதையில் வீரமிக்க வார்த்தைகளால், “ஏ அபிமன்யு, ஆர்ப்பாட்டம் இன்றி அவதரித்துப் போகிறாய் பெண்ணாக, ஆணாக, விடுதலைப் படையாக பணிய மறுக்கும் தேசமாக. ஈற்றில் இந்த யுகம் உன்னுடையது” என்று கூறி முடிக்கும் போதும், தீர்வின் தன்மை துல்லியமாகிறது. ஆனால் இந்த விடுதலைப் போரானது அறிவு, அதற்குரிய ஒழுக்கம் போன்றவற்றின் அடிப்படையில் நெறிப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதே கவிஞரின் நோக்கமாகும். அதனால்தான் அவரது கவிதை விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடும் போராளிகளின் போராட்ட முறைகளையும் சாடுவதாய் அமைந்துள்ளது. "உளவாளிகள்” கவிதை இதற்குச் சான்று பகர்வதாய் உள்ளது.

Page 49
இனி இவரது கவிதை, இன்றைய90களின் தமிழ்க் கவிதைப் போக்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவனவாய் உள்ளனவா என்ற கேள்விக்கு வருவோம்.
அறுபதுகளின் இறுதியில் ஆரம்பித்து எண்பதுகளில் எழுச்சிகொண்ட ஈழத்துத் தமிழ்க்கவிதை உலகில், நல்ல அறுவடைகளை கவிஞர் சிவசேகரமும் தந்துள்ளார் என்பதில் ஐயமில்லை. ஆனால் எண்பதுகளில் ஏற்பட்ட எழுச்சிகளில் இருந்து இன்னொரு பாய்ச்சலைக் காட்டும் படைப்புகளை போரின் முகங்கள் கவிதைகளில் காணலாமா?
இல்லை என்றுதான் இதற்குப் பதில் கூறவேண்டும். எண்பதுகளில் ஏற்பட்ட எழுச்சியின் தொடராகவே போரின் முகங்கள் கவிதைகளும் உள்ளன. ஆனால் அதேநேரம் எண்பதுகளின் பின்னர் ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் புதிய பாய்ச்சலை வேறு எவராவது காட்டியுள்ளார்களா என்றால் அதற்கும் நாம் இல்லை என்றுதான் கூறவேண்டும். சோலைக்கிளி அத்தகைய ஒரு போக்கைக் காட்டுவதாகச் சொல்வது விமர்சனரீதியாக ஆதாரப்படுத்தப்படாத ஒரு வெற்றுக் கூற்றாகும். அவரும் எண்பதுகளில் ஏற்பட்ட எழுச்சியின் ஒரு பின்னமாக நிற்கிறாரேயொழியபுதிய பாய்ச்சலைக்காட்டுபவராய் அல்ல.
60களில் பிச்சமூர்த்தி குழுவினர் புதுக் கவிதைகளை எழுதியபோது தருமு சிவராமு படிம அடுக்குக் கவிதைகளைக் கையாண்டார். ஆனால் அவரது படிம அடுக்குகள் அளவுகடந்தபோது தரும சிவராமு தனது போக்கை நிதானப்படுத்தி முன்னவர்களது போக்குக்கும் தனது போக்குக்குமிடையே ஒரு சமரசத்தை ஏற்படுத்தி தப்பிக் கொண்டார். பின்னர் "வானம் பாடிகள் ஏதோ புதுவித இடதுசாரி எழுச்சியைக் காட்டுவது போல் ஆரம்பித்து "செவ்வானம்", "செங்குருதி", "ரத்தப் புஷ்பங்கள்” என்று எல்லாவற்றிலும் சிவப்பைக் கலந்தபோது சிரிப்புக்கிடமாயினர். அவர்களது சிவப்பு வர்ணங்கள் அளவுக்கு மிஞ்சி கற்பனை வெற்றுச் சுலோகங்களாக வீழ்ந்ததால் வானம்பாடிகள் தம்மைத்தாமே தோற்கடித்து, கவிதையுலகிலிருந்தும் தம்மை அப்புறப்படுத்த வேண்டியவர்களாயினர். இவ்வாறே இன்று சோலைக்கிளியும் தாம் அஃறிணைப் பொருட்களோடு பேசுவதாக கவிதை எழுதியும், அதை அளவுக்கு மிஞ்சி எடுத்துச் சென்று, ஒருகோட்பாட்டு (IDEOLOGY) ரீதியான சிந்தனையற்றுப் பயன்படுத்தியும் வருவதால் அதன் வீரியத்தை இழக்கவைத்து தன்னைத்தானே தோற்கடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். தர்முசிவராமுவின் படிமங்களும் சரி, வானம்பாடிகளின் வர்ணனைகளும் éFrf சோலைக்கிளியின் அஃறிணை உருவாக்கங்களும் சரி கவிதை பயின்று வருவதற்கும் பயன்படுத்துவதற்குமுரிய ஒவ்வோர் குணாம்சங்களே ஒழிய புதிய பாய்ச்சலல்ல. புதிய பாய்ச்சல் என்பது இவற்றையெல்லாம் உள்வாங்கிக்கொள்ளும் புடைப்பில், கோட்பாட்டுச் சிந்தனையின் ஊடுருவலோடு, கோழிமுட்டையை உடைத்துக் கொண்டு குஞ்சுவெளிவருவது போல், தனது பழைய உருவ உள்ளடக்கங்களை உடைத்துக் கொண்டு புதுத்தளத்துக்கு ஏறுவதாகும். இதையே புதிய பாய்ச்சல்பற்றிக் கூற வருபவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

சோலைக்கிளி போன்றவர்களின் இத்தகைய குறைபாடுகள் சிவசேகரத்தின் கவிதையில் இல்லை என்றே கூறவேண்டும். அவரது ஆக்கங்களில் ஒரு கோட்பாட்டு ரீதியான சிந்தனை இழையோடுவது கூர்ந்த கவனிப்பில் தெரியவரும். ஆயினும் இவரது போரின் முகங்கள் தொகுதியில் காணப்படும் சில கவிதைகள் அவசரகதியில் எழுதப்பட்டவை போன்ற உணர்வைத் தருவனவாய் உள்ளன. அதனால் இக்கவிதைகளில் சில-(உதாரணமாக போரின் முகங்கள் கவிதையின் இறுதிப்பகுதி)--செப்பனிட்ட படிமங்கள், நதிக்கரை மூங்கில் போன்ற தொகுதிகளில் காணப்படும் கவிதைகளின் "செப்பனிட்ட தன்மையை இழந்து நிற்பன போல் தெரிகின்றன. இதனால்தானோ என்னவோ இவரது கவிதைகள் பற்றி விமர்சித்த நண்பர் ஒருவர் கவிதைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகளின் தன்மையை நினைவூட்டுவதாகக் கூறினார். இக்குறைகள் நீக்கப்பட்டிருந்தால் போர்க்காலச் சூழலில் அண்மையில் வெளிவந்த படைப்புகளில் "போரின் முகங்கள்" இன்னும் சிறந்திருக்கும்.
45

Page 50
தமிழ்த் கலை தண்மை 6
எந்தச் சமுதாயத்தினதும் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்களில் அயற் சமூகங்களது பங்கு புறக்கணிக்க இயலாதது. அயற் தொடர்புகளால் விளையும் மாற்றங்களின் தலைமை, அத் தொடர்புகள் நிகழுஞ் சூழ்நிலைகளைப் பொறுத்தது. இரு சமுதாயங்களிடையிற் சமத்துவமான உறவின் அடிப்படையில் நடக்கும் கலாசாரப் பரிமாறல்கள் இரண்டு சமுதாயங்களதும் கலாசார மேம்பாட்டுக்கு உதவலாம். ஒன்று, இன்னொன்றின் மீது ஆதிக்கஞ் செலுத்தி அடக்கும் நிலைமைகளிற் பின்னைய கலாசாரம் அழிவுக்கோ சிதைவுக்கோ ஆளாகலாம்.
மனித சமுதாயங்களிடையிலான உறவுகளை மிகுதியாக எளிமைப்படுத்துவதில் ஆபத்துக்கள் உள்ளன. ஆயினும், எந்தவொரு சமுதாயத்திலும் வெகு துரிதமான பொருளாதாரத் தொழில்நுட்ப மேம்பாடுகள் ஏற்படுவதற்கு அச் சமுதாயத்திற்குச் சாதகமான அயற் பாதிப்புகள் பங்களித்துள்ளன எனலாம். ஐரோப்பா முதல் கிழக்கு ஆசியா வரையிலான பெருஞ் சமுதாயங்களிடையே வேறுபடுமளவிற் சமூகப்பரிமாறல் இருந்தது. இதன் விளைவாக அனேகமாக ஒவ்வொரு சமுதாயமும் செழுமை பெற்றது. பல அழிவுகளும் நேர்ந்துள்ளன. ஆபிரிக்காவின் தென் பகுதியும் அமெரிக்காவும் அவுஸ்திரேலியாவும் ஆசிய-ஐரோப்பிய கலாசாரங்களினின்றும் நெடுங்காலமாகத் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன. இக் கண்டங்கள் ஐரோப்பிய உறவுகட்கு ஆளான சூழல், சமத்துவமான உறவுகளைக் கொண்டதல்ல. ஐரோப்பிய வல்லரசுகளின் இன வாதத் தேசியவாத ஆதிக்க நோக்கம் மேலோங்கியிருந்த காலத்தில் ஏற்பட்ட தொடர்புகளால், மத்திய, தென் அமெரிக்கப் பெரு நாகரிகங்களும், ஆபிரிக்க நாகரிகங்களும் சிதைவுக்காளாயின. அவுஸ்திரேலிய, அமெரிக்கப் பூர்வ குடிகள் கொன்றொழிக்கப்பட்டனர். இத் தொடர்புகளால் நன்மை பெற்றோர்
ஐரோப்பிய வல்லரசுகளே.
தமிழரிடையே தமது மொழியினதும் கலாசாரத்தினதும் தொன்மை பற்றிய ஆழமான உணர்வு உள்ளது. அவற்றின் தூய்மை’ பற்றிய வலிய அபிப்பிராயங்களும் உள்ளன. இந்த மிதமான உணர்வுகள், கடந்த சில நூற்றாண்டுகளில் தமிழ்ச் சமுதாயம் அயற் கலாசார ஆதிக்கத்தின் கீழ் அனுபவித்த நலிவின் விளைவானவை. புண்படுத்தப்பட்ட தமிழ்த் தேசிய உணர்வு தனது சுய அடையாளத்தை மிகவும் வலியுறுத்துவதில் வியப்பில்லை. இது உலகின் ஒடுக்கப்பட்ட பல தேசிய இனங்கட்கும் பொருந்தும். தமிழரது சுய அடையாளம் பற்றிய பிரச்சினை இந்தியத் துணைக் கண்ட்ச் சூழலில் ஆரிய-திராவிட
46

களின் தமிழ்த் σ5ιτι-ίτυ (τσ5 περιου.
வேறுபாட்டின் அடிப்படையில் வெளிப்பட்டதற்குப் பல அரசியற் காரணங்கள் இருந்தன. ஆயினும், தமிழ் மொழியினதும் தமிழ்க் கலாசாரத்தினதும் முக்கியத்துவத்தைக் குறைக்கும் முறையில் இந்தியாவின் பாரம்பரிய அதிகார வர்க்கத்தினர் நடந்து கொண்டமை முக்கியமானது. இந்தியக் கலாசாரம் முழுவதுமே சமஸ்கிருதத்தையும் இந்தோ-ஆரியக் கலாசாரத்தையும் மதத்தையுமே அடிப்படையாகக் கொண்டது என்ற எண்ணம் இன்னமும் பலரிடையே உள்ளது. 1950 களிற் கூட, சி. ராஜகோபாலாசாரிடுராஜாஜி) சமஸ்கிருதத்திலிருந்து தான் பிற இந்திய மொழிகள் வந்தன என வாதித்தார். பிற இந்திய மொழிகளினின்று சமஸ்கிருதம் வந்தது என வாதிப்பது, போளியிலிருந்துதான் சர்க்கரை செய்யப்பட்டது என்பது போன்றது என அவர் கேலியாக உவமை கூறினார். அவர் அறியாத பல உண்மைகள் இன்று உறுதியாகியுள்ளன. சமஸ்கிருதம் சர்க்கரை என்றால், பல இந்திய ஆதிமொழிகள் கரும்புகள் என்று கூறலாம் என்பதே உண்மை. நால் வேதங்களின் மொழியான ஆரிய மொழி அன்று இந்தியாவில் வழக்கிலிருந்த மொழிகளினின்று சொற்களையும் ஒலிகளையும் இலக்கண அமைதியையுங்கூடப் பெருமளவிற் கடனாகப் பெற்றதன் விளைவாகவே சமஸ்கிருதம் உருவானது என இன்று ஆதாரங் காட்டப்படுகிறது. மேற்கூறிய சமஸ்கிருதச் சார்பான சிந்தனையையொட்டிய இன்னொரு சிந்தனைப் போக்கும் மரபுவாதிகளிடையே உண்டு. இதன்படி, ஆற்றல்கள், குறிப்பாகக் கலைகள் தொடர்பானவை, யாவுமே பிறவிப் பயனாலும் முன்னோரின் தவப் பயனாலுமே வந்து அமைகின்றன. இவ்வாறான சிந்தனைகள் வருணாசிரமம் எனப்படும் சாதிய நெறியுடன் நெருங்கிய தொடர்புடையவை. அது மட்டுமன்றி மனித குலத்தின் சாதனைகள் எனக் கூறக் கூடியவற்றையெல்லாம் தனி மனிதர்களது கொடைகளாகக் காட்டும் மனோபாவமும் நமது மரபில் உள்ளது. ஒவ்வொரு துறைக்கும் உரிய இலக்கண நூல்களினின்றே அத் துறை உருவானது என்ற எண்ணம் இவ்வாறு வலியுறுத்தப்படுகிறது. தமிழ் அகத்தியர் மூலம் வந்தது என்றால், அதன்படி, அதற்கு முதற் தமிழர் என்ன மொழி பேசினார்கள் என்றெல்லாம் கேட்க இடமில்லை. பரத முனிவர் இலக்கணம் வகுக்கு முன் முறையான நடனம் இருந்திருக்க முடியாது என்று நம்புகின்றவர்களும் இருக்கிறார்கள்.
இந்தியத் துணைக்கண்டத்தின் இலக்கண நூல்கள் பலவும் மேலைநாடுகளின் இலக்கண நூல்களை விடக் காலத்தால் மிகவும் முற்பட்டவை. அவற்றை இயற்றினோரின் பங்களிப்பை எவரும் தாழ்வாக மதிப்பிடுவது தவறு. ஆயினும் எத்தகைய உயரிய இலக்கண

Page 51
நூலும் நடைமுறையினின்று தான் பிறக்கிறது என்பதை நாம் மறக்கலாகாது. இலக்கண நூல்கள் நடைமுறையை விளக்குவதுடன் அதை நெறிப்படுத்துவதிலும் பங்கு வகிக்கின்றன. இலக்கண விதிகள் மரபு பேணுவதில் முக்கியமான பணியாற்றுவதால் மாற்றங்கட்கும் மாற்றங்களின் மூலமே இயலுமான வளர்ச்சிக்கும் தடையாக அமையலாம். (இக் கருத்து விஞ்ஞானத்துறைகட்கும் பொருந்தும்). எவ்வாறாயினும், கொள்கைகட்கும் நடைமுறைக்கும் உள்ள இயங்கியல் உறவை மறுப்போர் ஆகாயத்தினின்றே ஞானிகள் இறங்கி வருவதாக நம்புவதற்கு ஒரு தடையும் இல்லை.
ஒரு சமுதாயத்தின் கலாசார விருத்தியை அதனுடன் தொடர்புள்ள கலாசாரங்களினின்றும் பிரிப்பது கடினம். அயற் கலாசாரங்களினின்று உள்வாங்கிக் கொள்ளப்படும் பண்புகள் அவற்றை உள்வாங்கிய சமுதாயத்தின் நிலைமைகட்கேற்ப மாற்றமடைகின்றன. ஒவ்வொரு கலாசாரக் கூறும் சமுதாய விருத்தியொட்டியே மாற்றமடைவதால், சமுதாயத்தின் சமகால நிலையைப் புறக்கணித்து, எந்தவொரு துறையிலும் உட்புகுந்த அயற்கூறுகளை முற்றாகவே நீக்குவதும் சென்றொழிந்த காலமொன்றின் நிலைமைகளை மீள நிலை நிறுத்துவதும் சமுதாய நடைமுறைக்கு ஒவ்வாதவை. அயல் ஆதிக்கச் சூழலிற் திணிக்கப்பட்ட பண்புகளைக்களையும் முயற்சிகள், விடுதலைக்கான போராட்டம் சூழல்களில் மேற்கொள்ளப்படுவது உண்மை. இவ்வாறான முயற்சிகள், தமது ‘கலாசாரத் தூய்மை' என்ற இலக்கை எட்டியதில்லை. எனினும் இவ்வாறன முயற்சிகட்கு ஒரு முற்போக்கான வரலாற்றுப் பங்கு, அவற்றின் வரையறைகட்கு உட்பட்டு, இருந்துள்ளது. அதே வேளை எவ்வகையான மரபுவாதத்தாலும் காலத்தின் தேவைகளை ஒட்டி ஏற்படும் மாற்றங்களை மறுதலிக்க இயலாது.
நவீனத்துவக் G3, Tsits0556it LT6 (up முற்போக்கானவையல்ல. நவீனத்துவம் தன்னளவிலேயே பெறுமதிவாய்ந்த ஒன்றுமல்ல. சமுதாயச் சார்புடைய நவீனத்துவம் மரபின் செழுமையுடன் முரண்பட அவசியமில்லை. நவீனத்தும் என்ற பேரில் கைக்கெட்டியதையெல்லாம் அயலிலிருந்து கொண்டுவந்து கொட்டுவது மூர்க்கத்தனம். சமுதாயத்தின்நிலைமைகளையும் அதைச் சூழவுள்ள உலகின் நிலைமைகளையும் கால ஒட்டத்துடன் ஒட்டிய மாற்றங்களையும் மாற்றத்துக்கான தேவையையும் கணிப்பில் எடுக்காத நவீனத்துவம், அதிக நன்மை தராது. அயிலினின்று பெறுவனவற்றைக் கொண்டு நம் கலாசாரத்தைச் செழுமைப்படுத்துவதும் சீரழிப்பதும் ஒரே அளவிற்குச் சாத்தியமானவை. எனவே, மரபும் நவீனத்துவமும் தூய்மையும் அயிலினின்று உள்வாங்கலும் பற்றிய விறைப்பான பார்வைகள் பயனற்றவை.
தனித் தமிழ், தமிழ் இசை என்பனவற்றுக்கான இயக்கங்கள் தூய்மைவாத இயக்கங்கள் என்ற வகையிற் தோல்வி கண்டன. ஆயினும், எளிய தமிழின் வலிமையைப் புலனாக்கிய வகையிலும் அயிலினின்று சொற்களை உள்வாங்குவதில் ஒரு நிதானமான

பார்வையை இயலுமாக்கியதிலும் தனித் தமிழ் இயக்கத்தின் பங்கு ஆக்கபூர்வமானது. தமிழிசை இயக்கம்,கர்நாடக சங்கீதத்திற்குத்தமிழ் ஒவ்வாத மொழி என்ற பொய்யை, முறியடித்தது, அதே வேளை, இவ்வாறான தூய்மைவாதப் போக்குக்களில் பொதிந்துள்ள முரண்களையும் நாம் நினைவுகூர்வது பயனுள்ளது.
தமிழ்த் தன்மை என நாம் எதை வலியுறத்துகிறோம் என்பது நமது சமுதாய நோக்கைச் சார்ந்தது. தலித், பெண்ணிய இயக்கத் தீவிரவாதிகளது நிலைப்பாடுகளை ஒத்த முறையில், தமிழிற் தமிழரால் தமிழருக்காக அமைக்கப்பட்டன மட்டுமே உண்மையான தமிழ்த் தன்மையுடையன என்று கருதுவோமாகில், அத்தகைய கூறுகளைத் தமிழ்க் கலாசாரத்திற் காண்பது அரிது. தமிழ்ச் சமுதாயத்தால் உள்வாங்கப்பட்டு அச் சமுதாயச் சூழலில் விருத்தி பெற்ற எதிலும் தமிழ்த் தன்மை உண்டென ஏற்போமாகில், அத்தகைய தமிழ்த் தன்மையைத் தமிழ்ச் சமுதாயச் சூழலில் உள்ள அனைத்திலும் வேறுபடும் அளவுகளில் நாம் காணலாம். எனவே, நமக்கு அவசியமானது ஏதெனில், தமிழ்ச் சமுதாயம் அயலினின்று உள்வாங்கியவற்றை எவ்வாறு செழுமைப்படுத்தித் தனதாக்கித் தன் கலாசாரத்தையும் செழுமைப்படுத்திக் கொண்டது என்பது தான். இத் தமிழ்தன்மைக்கும் இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமையான தமிழ்த் தன்மைக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு.
தமிழர் மத்தியிலே தொன்மையும் தூய்மையும் மிகுதியான முக்கியத்துவம் பெறுகின்றன. எனவே தான் எல்லாமே தமிழரிடமிருந்து தான் மற்றவர்கட்கு போயின என்றவாறான கட்டுக்கதைகளுக்கு இன்னமும் வரவேற்புள்ளது. இதற்கு மாறாக, எல்லாமே வடக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ வந்தது தான் என்று வாதிக்கிறவர்களும் உள்ளார்கள். ஒரு வியாதிக்கு இன்னொரு வியாதி மருந்தாகி விடாது. தமிழ் மரபில் இருந்தவை எவை, அவை எவ்வாறு அயற்தொடர்புகளாலும் காலத்தையொட்டிய மாற்றங்களாலும் செழுமை பெற்றன என்பனவற்றை விளங்கிக் கொள்வது நமது கலாசாரத்தைச் செழுமைப்படுத்துவதில் மரபின் பயன்பாடு பற்றியும் அயற்கூறுகளின் பயன்பாடு பற்றியும் விளங்கிக் கொள்ள உதவும். தமிழ்க் கலைகளின் தமிழ்த் தன்மை தொடர்பாக மறைவாக நமக்குள்ளே பேசப்படும் பழங்கதைகள் பற்றிய திறந்த விவாதம் ஒன்றை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இக் கட்டுரை எழுதப்படுகிறது.
கர்நாடக இசை பற்றிய பாரம்பரியப் பொய்கள் பல. சங்கீதமும் மூர்த்திகள் எனக் கொண்டாடப்படும் தியாகராஜர், ஷ்யாமா ஸாஸ்த்ரி, முத்து சுவாமி தீஷிதர் பற்றிய கதைகளில் உள்ள சாதியப் பிரசாரம் பற்றி நான் விவரிக்க அவசியமில்லை. இவர்கள் எல்லாரையும் விடக் காலத்தால் முற்பட்ட புரந்தர தாசர் என்ற வணிகர் குலத்தைச் சேர்ந்த கன்னட சாகித்தியகர்த்தா கூடப் பிராமணர் என்று சிலரால் கூறப்பட்டுள்ளது. மறுபுறம், சங்கீத மும்மூர்த்திகளை விடக் காலத்தால் முற்பட்டத் தமிழ்ச் சாகித்திய கர்த்தாக்கள் பற்றிய அக்கறை கர்நாடக இசைவட்டாரங்களில், தமிழிசை இயக்கம் எழும்வரை,இருக்கவில்லை.
47

Page 52
எழுதிவைக்கும் பழக்கம் இல்லாமையால் இன்று முத்துதாண்டவர் போன்றோரது சில சாகித்தியங்களை விட மற்றவை பெரும்பாலும் இழக்கப்பட்டுவிட்டன. சமஸ்கிருதமும் தெலுங்குமேசாகித்தியங்களை இயற்ற உகந்த மொழிகள் என்ற பொய் தமிழிசை என்ற ஒன்று இருந்ததை மூடிக்கட்டப் பயன்பட்டது. தமிழிற் கர்நாடக இசைக் கச்சேரிகளை நடத்த முடியும் என்பதை மிகவுங் கஷ்டப்பட்டே நிறுவ முடிந்தது. இன்றுங்கூடத் தமிழ்ச்சாகித்தியங்களை இழிவாகக் கருதும் போக்கை நாம் காணலாம். இவ்வாறான முனைப்பிற்கு எதிர்வினையாக எழுந்த வாதங்களிற் சில கர்நாடக இசை என்பது தமிழ் இசையே என்று அடித்துக் கூறின. இவ்வாறான வாதங்கள், கர்நாடக இசை என்பது இந்தியத்துணைக் கண்டத்தின் பல வேறு இசைமரபுகளை உள்வாங்கி விருத்தியடைந்த ஒன்று என்ற உண்மையை மூடி நிற்கின்றன.
சிலப்பதிகாரத்தில் இசை பற்றிய விரிவான குறிப்புகள் உள்ளன. ஆயினும் அவை இன்று நாம் அறியும் விருத்தியடைந்த கர்நாடக இசை முறையை விவரிப்பன அல்ல. சைவத் தேவார திருவாகசங்கள் தமிழின் மரபிற்கு அமையப் பாடுவதற்காகவே எழுதப்பட்டன. வைணவத்தின் திவ்வியப்பிரபந்தங்கள் கூட எளிய தமிழிற் தமிழிசைக்காக எழுதப்பட்டனவே. இவ்வாறான மரபுகள் அயிலினின்று சிந்தனைகளை உள்வாங்கியது போலப் பல்வேறு கலாசாரக் கூறுகளையும் உள்வாங்கின. இந்த விதமான கலாசாரப் பரிமாறல் மூலமே, விரிவான ஒரு இந்தியத் துணைக்கண்ட முறை உருவானது. வட இந்திய இசையும் தென்னிந்திய இசையும் அடிப்படையில் ஒன்றேயாயினும் பாரசீகத்தினூடு ஏற்பட்ட அயற் பாதிப்புக்கள், முகலாயர் ஆட்சிக் காலத்தில், இந்துஸ்தானி இசை எனப்படும் இன்றைய வட இந்திய இசை முறையை உருவாக்கின. வடக்கிலும் தெற்கிலும் இசைக்கப்படும் முறையில் உள்ள வேறுபாடுகள், அடிப்படையான வேறுபாடுகளல்ல.
கர்நாடக இசை இந்தியத் துணைக்கண்டத்திற்கு வெளியிலிருந்து எந்தவிதமான தாக்கங்கட்கும் உள்ளாகவில்லை என்று கூற முடியாது. இன்று கர்நாடக இசைக் கச்சேரியில் முக்கிய இடம் வகிக்கும் ராகம்- தாளம் - பல்லவியில் உள்ள தானம் என்பது இந்துஸ்தானி இசை மரபினின்று வந்தது தான். (தென்னானே தென்னானே என்று பாடினது தான் தானமாகியது என்று வாதிக்கிறவர்கள் இருக்கிறார்கள். அதை நம்புவதற்கான நல்ல ஆதாரங்கள்தான் இல்லை). மேலைநாட்டு இசையைக் கூடக் கர்நாடக இசையால் உள்வாங்கிக் கொள்ள இயலும் என்பதற்குப் பட்னம் சுப்பிரமண்ய ஐயரது சில சாகித்தியங்களை ஆதாரமாகக் கூறலாம்." மேனாட்டு இசைக்கருவியான வயலின் இரண்டே நூற்றாண்டுகளில் கர்நாடக இசையில் முக்கியமான ஒரு அம்சமாகி விட்டது. இதைவிட, கிளாரினெற், ஸக்ஸfோன் (ஸக்ஸஃபோன் ?) மன்டலின் போன்ற கருவிகள் அற்ப மாற்றங்களுடன் கர்நாடக இசைக்கு ஏற்றவாறு பயன்படுத்தப்படக் கூடியன என்று அறிவோம். ஆர்மோனியம் கர்நாடக இசையிலும் கூத்திலும் பெருமளவு பயன்பட்டு வந்துள்ளது. கர்நாடக இசைக் கச்சேரிகளே கடந்த சில தசாப்தங்களுள் மாறிவிட்டன.
48

இந்துஸ்தானி பாடகர்களது சில நுட்ப நுணுக்கங்களையும் கர்நாடக இசைக்குட் புகுத்தி அதைச் செழுமைப்படுத்தியவர்களுள் பாலமுரளி கிருஷ்ணா குறிப்பிடத்தக்கவர். கர்நாடக இசை,இன்று முன்னை விடச் சற்றுப் பரவலான செல்வாக்குப் பெற்றுள்ளது எனினும், அது இன்று தன்னை வியாபார நோக்கங்கட்காக மலினப்படுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டிலும் நியாயம் உள்ளது.
கர்நாடக இசைக்கு உகந்த மொழிகள் தெலுங்கும் சமஸ்கிருதமுமே என்ற வாதம் சங்கீத மும்மூர்த்திகளது சாகித்தியங்களை ஆதாரமாகக் கொண்டது. தமிழ் நாட்டில் தஞ்சை மண்ணில் திருவாரூரிற் பிறந்து வளர்ந்த இம் மூவரில் இருவர் தெலுங்கு வம்சாவழியினர். தியாகராஜரது சாகித்தியங்களில் ஏகப் பெரும்பான்மையானவை எளிமையான தெலுங்கில் அமைந்தவை. ஷ்யாமா ஸாஸ்த்ரியின் படைப்புகளில் ஒரு சில தமிழிலும் சமஸ்கிருதத்திலும் அமைந்தாலும் பெருவாரியானவை தெலுங்கிலேயே அமைந்தவை. முத்துசுவாமி தீட்சிதர் தமிழில் இயற்றியவை அனேகமாக அழிந்து விட்டன எனக் கூறப்படுகிறது. அவரது சமஸ்கிருதப் புலமையும் அவர் வாழ்ந்த காலச் சூழலும் அவரை அம் மொழியிலேயே அதிகம் எழுதுமாறு தூண்டின. இவர்களை முந்திய புரந்தரதாஸரது பாடல்களின் மொழி கன்னடம். எனவே எந்த மொழியிலும் எழுதலாம் என்பதே உண்மை. தமிழில் இயலாது என்று வாதித்தவர்களது நோக்கங்கள் பார்ப்பனியத்துடன் தொடர்புடையன. (தமிழிசைக்குப் பெரும் பங்களித்த பல பிராமணர்களை நாம் பார்ப்பணியம் என்கிற சாதியப் போக்குடன் குழப்பிக் கொள்ளக் கூடாது)
தமிழில் பாடல் இயற்றுகிற சிலருக்குச் செய்யுளுக்குரிய விதிகளைச் சார்ந்து எழுத இயலும். ஆயினும் பாடலுக்குரிய சில தேவைகள் விளங்குவதில்லை. வார்த்தைகள் அடையப் பட்டுப் பாடகரைத் திணறடிக்கும் பல பாடல்களைக் கேட்டிருக்கிறேன். பாரதி பாடல்களில் எவருக்கும் இத்தகைய பிரச்சினை இல்லை. பாபநாசம் சிவன், ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் போன்றோர் இயற்றிய பாடல்களில் வார்த்தைகள் இசையோடு சேர்ந்து சரளமாகப் பாய்வதைக் கேட்கலாம். பாடலாசிரியர்களது இசை உணர்வின் போதாமையைத் தமிழ் மொழியின் குறைபாடாகவே சிலர் காட்ட முயன்றுள்ளனர். இவ்விதமான வாதங்களே தமிழிசை பற்றிய அதிதீவிரமான நிலைப்பாடுகட்கு நியாயங்களாகி விடுகின்றன.
தியாகராஜர் சரளமான தெலுங்கிலும் புரந்தரதாசர் எளிமையான கன்னடத்திலும் எழுதியமை போற்ற வேண்டிய விஷயம். அவர்களது இசையில் பக்தி இலக்கிய யுகத்தின் வெகுஜனத் தன்மை இருந்தது. தமிழிசையின் எழுச்சி, தமிழில் அமையாத சாகித்தியங்களை அப்படியே நிராகரித்துத்தான் இயலுமாக அவசியமில்லை. மேனாட்டு இசையின் மிகப் பெரும் பகுதியும் ஹிந்துஸ்தானி இசையின் பெரும் பகுதியும் மொழி சாராதன. கர்நாடக இசை, பாடல்களை ஆதாரமாகக் கொண்டே பெருமளவும்

Page 53
செயற்படுவதாலேயே மொழி பற்றிய பிரச்சினை எழுகிறது. வாத்திய இசையாக இசைக்கப்படும் போது மொழிப் பிரச்சினை இல்லாது போய் விடுகிறது.
முக்கியமான தெலுங்குக் கீர்த்தனங்களையெல்லாம் தமிழில் மொழிபெயர்த்துத் தமிழிலேயே பாட வேண்டும் என்ற கருத்தும் தமிழர்களிடையே பரவலாக உள்ளது. இங்கே மொழி பெயர்ப்பின் பிரச்சினைகள் எழுகின்றன. தெலுங்குப் பாடல்களை மொழி பெயர்ப்பதை விடத் தமிழிலே புதிதாக எழுதுவது கூடப் பயனுள்ளது என்பது என் எண்ணம். அதைவிட முக்கியமானது பாடல்கட்கு உரிய விஷயங்கள் நமது சமுதாயச் சூழலுடன் தொடர்புடையதாக இருப்பது என்பேன்.
கர்நாடக இசையின் விருத்தியில் தமிழர்கட்குப் பெரிய பங்குண்டு. அது போலவே பிற இந்தியர் துணைக்கண்டக் கலாசாரங்கட்கும் பங்குண்டு. அவ்வகையில், அது ஐரோப்பியச் செவ்வியல் இசை போன்றது. குறிப்பிட்ட கால கட்டங்களில் வெவ்வேறு தேசிய இனத்தவரது பங்களிப்பு மேலோங்கியிருந்தாலும், அது தனியே ஒரு தேசிய இனத்துக்குரியதல்ல.
தமிழ்ச் செவ்வியல் இசைத்துறையினரால் வெகு காலம் அலட்சியப்படுத்தப்பட்ட பகுதி நாட்டார் இசை எனலாம். இந்த இசை வடிவங்களிற் பிரதேசவாரியான வேறுபாடுகள் இருந்துள்ளன. அயற் தாக்கங்களும் இருந்துள்ளன. ஆயினும் இவற்றின் தமிழ்த் தன்மை தெளிவானது. இவை தமிழ்ச் சமுதாய வாழ்வையொட்டி உருவானவை. ஆயினும் ஏற்றத் தாழ்வான சமுதாயவிருத்தியின் விளைவாகப் புறக்கணிக்கப்பட்ட இக் கலை வடிவங்கள் பிற்படுத்தப்பட்ட சமூகப்பிரிவினராலேயே கூடுதலான அளவுக்குப் பேணப்பட்டு வந்துள்ளன.
தமிழ் மரபு சார்ந்த இசை வடிவங்களைப் பின் தள்ளும் முறையிற், புதிதாக எழுந்தது சினிமாவின் அடிப்படையில் உருவான மெல்லிசை எனலாம். முதலிற் கர்நாடக இசையைச் சார்ந்து எழுந்த இம் மெல்லிசை, இன்று கணிசமான அளவுக்கு மேலைநாட்டு இசையின் பாதிப்புக்குள்ளாகி விட்டது. ருட்டார் இசையினதும் கர்நாடக ராகங்களினதும் பண்புகளை உள்வாங்கி இசையமைக்கும் போக்கு இன்னமும் தொடர்ந்தாலும், மேனாட்டுச் சமுதாயச்சூழலில் உருவாகும் இசை வடிவங்கள் தமிழ் மெல்லிசை மீது பாரிய தாக்கத்தைச் செலுத்துகின்றன. தமிழகத்தின் சமுதாயச் சீரழிவின் கூர்மையான . பிரதிபலிப்பாக அதன் சினிமா உள்ளது. அது சார்ந்த இசையிலும் அச் சீரழிவின் பண்புகளை நாம் அடையாளம் காணலாம். பெருவாரியான சமகாலத் திரைப்படப் பாட்டுக்களின் தமிழ்த் தன்மை அவை தமிழ்ச் சொல்லாக்கத்தை உடையது என்பதை மட்டுமே சார்ந்துள்ளது. விலக்காக, நல்ல இசையை இடையிடை கேட்க முடிவது உண்மையே. எனினும் சமுதாயச் சார்பானதும் சமுதாய, அழகியல் விழுமியங்களைப் பிரதிபலிப்பதுமான இசை சினிமாவுக்கு வெளியே தான் உருவாக வேண்டியுள்ளது.

இசை பற்றிக் குறிப்பிடப்பட்டவை நடனத் துறைக்கும் பொருந்தும். கர்நாடக இசைபோன்று பரதமும் வடக்கினின்றுதில்லானா போன்ற அம்சங்களை உள்வாங்கியுள்ளது. மேலை நாட்டு நாட்டிய நாடகங்களுடனான பரிச்சயமும் தென்னிந்திய நடனத்துறையில் புதிய ஆக்கங்களுக்குப் பங்களிப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. நாட்டார் இசை பற்றிக் கூறியவை கிராமிய நடனத்திற்கும் பொருந்தும். இதை இங்கு மேலும் விரிவுபடுத்த விரும்பவில்லை.
முத்தமிழ் என்பது இயல்,இசை, கூத்து என்பார்கள். எனினும் கூத்துத் தமிழ் நூல்கள் என்று கூறத்தக்க பழந்தமிழ் நூல்கள் எதுவும் நம்மிடையே இல்லை. சிலப்பதிகாரம் ஒரு நாடக நூல் என்ற வாதம் அண்மையில் இந்திரா பார்த்த சாரதியால் முன் வைக்கப்பட்டுள்ளது. அவரது கருத்துக்கள் சர்ச்சைக்குரியன என்றே எண்ணுகிறேன். எவ்வாறாயினும் நம்மிடையே வழக்கிலுள்ள மரபு சார்ந்த நாடக வடிவங்களைக் கவனித்தாற் பொதுவாகவே அவற்றின் கதைகள் பழந்தமிழ் மரபிற்கு அயலானவை என்பதைக் காணலாம். எனவே கூத்துவடிவங்களில் எப்போதுமே அயற் தாக்கம் வேறுபடும் அளவுகளில் இருந்து வந்தது என்பதற்கு ஆதாரம் உண்டு எவ்வாறாயினும், கூத்து மரபில் நாம் காணக்கூடிய பிரதேச அடிப்படையிலான வேறுபாடுகளும் அவற்றுக்கும் பிற இந்தியத் துணைக்கண்ட நாடக மரபுகட்கும் உள்ள வேறுபாடுகளும், கூத்துக்கள் தமிழ்ச் சமுதாயத்தின் உள்ளார்ந்த பண்புகளைத் தெளிவாகப் பிரதிபலிப்பதையே நமக்கு உணர்த்துகின்றன.
மேடை நாடகங்கள் என்பன காலத்தாற் பிற்பட்டவையும் இந்தியத்துணைக்கண்ட அயற் கலாசாரத்தின் விளைவாகவே தமிழில் உருவானவையும் எனலாம். நவீன மேடைநாடகம் இந்த மரபினின்றும் சினிமாவினின்றும் பல விஷயங்களை உள்வாங்கியுள்ளது. கடந்த தசாப்தங்களில் வெளியுலகுடன் தமிழரது தொடர்புகள் அதிகரித்ததன் விளைவாகப் புதியநாடக முறைகள் மேடை உத்திகள் போன்றவற்றுடன் பரிச்சயம் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும் ஆங்கிலேயரது ஆட்சிக் காலத்தையொட்டித் தமிழாக்கப்பட்டஆங்கில நாடகங்கட்கும் சம காலத்தில் மேற் கொள்ளப்படும் தமிழாக்கங்கட்கும் தழுவல்கட்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன. முன்னையவை அப்படியே ஐரோப்பியச் சூழலைத் தமிழர் முன் வழங்க முற்பட்டன. பின்னையவை, ஒரளவுக்கேனும் தமிழ்ச்சமுதாயத்தின் தேவைக்கமைய அவற்றை உரிய மாற்றங்களுடன் உள்வாங்குகின்றன. இவற்றை விடத் திறந்த நாடக மேடை, விதி நாடகம் போன்ற புதிய போக்குகளும் தமிழருக்கு அறிமுகமாகி வருகின்றன.
தமிழரது ஓவிய மரபு சிற்ப மரபுடன் ஒப்பிடுகையிற் பலவீனமானது. இந்தியத்துணைக்கண்டஒவியமரபில் பலமுறிவுகளை நாம் அவதானிக்கலாம். இலக்கியங்களைப் போலன்றி ஒவியங்களைப் பேணிப் பாதுகாப்பதில் இருந்த பிரச்சினைகள் ஒவிய மரபின் வரலாற்றுத் தொடர்ச்சியான விருத்திக்குத் தடையாகவே அமைந்துள்ளன. ஒவியம் பற்றிய நமது பார்வை அலங்கார வடிவங்கள்,
49

Page 54
உருவப்படங்கள், காட்சிகள் என்பன பற்றிய பழமை சார்ந்த வரையறைகட்கு உட்பட்டே இருந்து வந்தது. நவீன ஒவியத்துடனான பரிச்சயம் ஒவியத் துறையில் அதிக ஈடுபாடு இல்லாத ஒரு சமுதாயச் சூழலிலேயே முதலில் ஏற்பட்டது. தமிழ்க் கலாசாரச் சூழலுடன் நவீன ஒவிய முறையை இணைக்கும் முயற்சிகள் என்று பெருமளவில் மேற்கொள்ளப்படுகின்றன. கோட்டோவியங்கள் முதல் வண்ண ஒவியங்கள் வரை இன்று தமிழ்ச் சூழலில் உள்ளவற்றில் மேனாட்டுப் பாதிப்புப் பெரியது.
கட்புலனுக்குரிய கலைகளிற் தமிழ்ச் சமுதாயம் சிற்பக் கலைக்கும் படிமக் கலைக்கும் வழங்கிய பங்கு பெரியது. இக்கலைகள் கூட அயற் தொடர்புகளின் விளைவாக உருவானவை என்பதற்கான சான்றுகள் கூறப்பட்டுள்ளன. இன்று இக் கலைகள் ஒரு புறம் வியாபார நோக்கிற்குப் பலியாகின்றன. மறுபுறம், மரபு சார்ந்த கலைஞர்களுக்குப் போதிய ஆதரவு இல்லாமையால் நலிவு பெறுகின்றன.
மொத்தமாகக் கூறினால் தமிழரது மரபு சார்ந்த கலை வடிவங்கள் தமிழரது சமுதாய மாற்றங்களுடன் ஒட்டி விரிவடைந்தது போதாது எனலாம். குறிப்பாக, அண்மைய தசாப்தங்களின் துரிதமான மாறுதல்கட்கு ஈடுகொடுக்கும் விதத்தில் அவை வளர்த் தெடுக்கப்படவில்லை. சந்தையின் தேவைகள் சமுதாயத்தின் மீது செலுத்தும் ஆதிக்கம் கலைகளையும் பாதிக்கிறது. இச்சூழலில் பழமை பேணும் மரபு வாதமும் சமுதாய அக்கறையற்ற வியாபார நோக்கமும், மரபு சார்ந்த தமிழ்க் கலைகள் தமது சமகாலச் சமுதாயச் சூழலுக்கு முகங் கொடுப்பதற்கு இயலாதவாறு தடையாக நிற்கின்றன. இந்தச் சவாலுக்குரிய பதிலைச் சமுதாய உணர்வுடைய கலை இலக்கிய வாதிகளாலேயே தரமுடியும். இந்த நோக்கிலேயே தமிழ்க் கலைகளின் தமிழ்த் தன்மை என்பது என்ன என்பதையும் அதை எவ்வாறு பேணுவது என்பதையும் நாம் ஆராய வேண்டியுள்ளது. இவ் வகையிற் சில எண்ணங்களை, எண்ணங்களாக மட்டுமன்றிக் கேள்விகளாகவும், இங்கு முன் வைத்தல் இது பற்றிய புதிய விவாதங்கட்கு வழி கோலும் என எதிர்ப்பார்க்கிறேன்.
காலத்தால் மாறாததும் அயற் கலப்பு இல்லாததுமான தமிழ்க் கலைகள் என எதுவும் இல்லை என்றே கொள்ளலாம் என்பதாற். தமிழ்த் தன்மை என்பது வெறுமனே மரபின் அடிப்படையில் நிர்ணயிக்கக் கூடிய ஒன்றல்ல. ஒரு கலை வடிவின் தமிழ்த் தன்மையை அது சார்ந்துள்ள சமுதாய, அழகியல் விழுமியங்களே தீர்மானிக்க இயலும். அயலினின்றும் பெறப்படும் கலை வடிவங்கள் தமிழ்ச் சமுதாயத்தினால் எவ்வாறு உள்வாங்கப்படுகின்றன என்பதையொட்டி அவை தமிழ்த் தன்மை பெறுகின்றன என்று கருத இயலும். தமிழ்த் தன்மை என்பது வரலாற்றில் வைத்துக் கருத வேண்டிய ஒன்றாகிறது. ஒரு குறிப்பிட்ட காலச் சூழலில் அயற் பண்பினதாக இருந்தவை, காலப் போக்கிற். தமிழ்த் தன்மையுடையனவாக மாற இடமுண்டு.
சைவமும் தமிழும் என்ற விதமாகத் தமிழ்த் தன்மையை வரையறுக்குஞ் சூத்திரங்கள் வைணவ, கிறிஸ்துவ, இஸ்லாமியப்
50

பங்களிப்புக்களை நிராகரிக்கும் நோக்குடைய அளவில் மறுக்கப்பட வேண்டியவை. தமிழ் மொழிக்கும் கலைகளுக்கும் புத்த மதமும் சமண மதமும் ஆற்றிய பங்கு பெரியது. அவ்வாறே பிற்காலத்திற் சைவத்துடன் ஒப்பிடத்தக்க அளவு பங்களிப்பு வைணவத்தினின்று கிடைத்துள்ளது. அண்மைக் காலங்களில் கிறிஸ்தவ இஸ்லாமியப் பங்களிப்புக்களும் முக்கியமானவை. இவ்வாறே, பார்ப்பனிய மதத்தின் நிராகரிப்பு என்ற பேரில், சமய இலக்கியங்களதும் கலைகளதும் முக்கியத்துவத்தை மறுக்கும் முயற்சிகளும் மறுக்கப்பட வேண்டியவை. மதச் சார்பான பங்களிப்புக்களை மதிப்பிடுவதில், விறைப்பான பகுத்தறிவுக் கண்ணோட்டம், மக்களது உணர்வுகளை மதிக்க மறுக்கும் அபாயம் உள்ளது. எந்த ஒரு கலை வடிவையும் படைப்பையும் மதிப்பிடும் போது, அதற்குரிய காலத்தையும் சூழலையும் அது பிரதிபலிக்கும் சமுதாய உணர்வுகளையும் நாம் கணிப்பில் எடுக்க வேண்டியுள்ளது.
தமிழ்த் தன்மை என்பது வரலாற்றுப் பண்புடையது என்பதால் மரபு சார்ந்த தமிழ்க் கலைகளைப் பேணுவதில் ஒரு விரிந்த நோக்கு அவசியமாகிறது. மரபில் இருந்தவற்றை இருந்தவாறே பேணுவதும் காலத்திற்கேற்ற மாறுதல்களைப் புகுத்துவதும் அவற்றின் பயனுள்ள பண்புகளை எடுத்தாள்வதும் ஒன்றுக்கொன்று பகைமையான பார்வைகளாக இருக்க அவசியமில்லை. சமுதாய நலன்கட்கு ஒவ்வாத சிந்தனைகள் விமர்சிக்கப்படவும் திருத்தப்படவும் தேவை உள்ளது என்பதை விட, மரபுக் கலை வடிவங்களை அவற்றின் மூல வடிவிலேயே பேணுவதிற் தவறு இல்லை. இவ் விஷயம் மரபுவாதத்துக்கும் நவீனத்துக்குமிடையிலான மோதலாக அன்றிப் பரந்து பட்ட சமுதாய நலனில் அடிப்படையில் அணுகப்பட வேண்டும்.
சில மரபு சார்ந்த கலை வடிவங்கள், முக்கியமாகக் கர்நாடக இசையும் பரதமும், புராண இதிகாச மரபின் எல்லைகட்குள்ளேயே பெரிதும் வரையறைக்கப்பட்டு இயங்குகின்றன. இந்தச் செவ்வியற் கலை வடிவங்கள் தமதுதோற்றத்திற்கும் எழுச்சிக்குமுரிய காலங்களின் விழுமியங்களை மட்டுமே திரும்பத்திரும்ப வலியுறுத்த அவசியமில்லை. இவற்றின் ஆற்றல் பரந்துபட்ட மக்களை எட்டும் விதத்திலும் அவர்களது வாழ்வு பற்றிப் பேசும் விதத்திலும் விரிவுபடுத்தபட வேண்டிய தேவை உள்ளது. இவ்வாறான முனைப்புடைய வளர்ச்சி இக்கலை வடிவங்களையும், தமிழ்ச் சமுதாயத்தையும் செழுமைப்படுத்த உதவும். நவீனத்துவம், பரீட்சார்ந்த முயற்சிகள் என்பன புதிய உத்திகளும் உபகரணங்களும் சார்ந்ததாக மட்டுமன்றி உள்ளடக்கம் சார்ந்த ஒன்றாகவும் இருப்பதும் அவசியம். இத்தகைய மாற்றம் ஏற்படாத அளவில், மரபு சார்ந்த கலை வடிவங்களின் தமிழ்த் தன்மை, கடந்த காலத்தில் உறைந்து போன ஒரு தமிழ்த் தன்மையின் மறுவார்ப்பாக மட்டுமே தொடர இயலும்.
நாம் போற்றுதற்குரிய தமிழ்த் தன்மை அதன் தொன்மையிலோ தூய்மையிலோ இல்லை. தமிழ்ச் சமுதாய மேம்பாட்டுக்கு அது அளிக்கும் பங்கு என்ன என்பதும் அந்தச் சமுதாயத்தின் உயரிய விழுமியங்கள் அது எவ்வளவு தூரம் பிரதிபலிக்கிறது என்பதுமே அதன் சிறப்பின் அளவுகோல்கள்.

Page 55
- கிறுக்க 6 آلا آهوم
★ புரட்சிக் கவிஞர், புரட்சி நடிகர், புரட்சித்தலைவி, புரட்சிக் கலைஞர், புரட்
இயக்குநர் எனப் பல புரட்சிகளைக் கண்ட புண்ணிய பூமி தமிழ்நாடு. மண்மணக்கு புரட்சி இயக்குநரும், கண் சிவந்த புரட்சிக் கலைஞரும் இணைந்து வழங்கியும் கூ தமிழ்ச் செல்வன் வசூலில் புரட்சி செய்யவில்லை. ஏற்கனவே பலரும் கைவரிை காட்டிய மத்தளம் காலங்கடந்து பாரதிராஜாவின் கைகளிலிருந்து ஒலித்தது ஒ காரணம். தமிழ்ச்செல்வனுக்கு விசேஷ அடையாளம் ஏதுமில்லை. இத்தகைய தமி மலையாள, தெலுங்குச் செல்வர்களை பல தடவைகள் சினிமாவில் சந்தித்தாயிற் இதனால் தமிழ்ச்செல்வன் போன்ற நேர்மையான நிர்வாக அதிகாரிகளுக்கு அராஜ அரசியல்வாதிகளால் நேர்கின்ற அவலங்கள் நம்ை அதிர்ச்சிக்குள்ளாக்குவதில்லை. ஜூனியர் விகடன், தராசு, தமிழன் எக்ஸ்பிர போன்ற பத்திரிகைகள் அவ்வப்போது தரும் விஷயங்கள் இத்திரைப்பட காட்சிகளை விடநூறுமடங்கு அதிர்ச்சியூட்டுவன. எனினும் பொறுப்புணர்ச்சி மிச் ஒரு கலைஞனின் குரலை-காலங் கடந்தேனும் பாரதிராஜா எழுப்புகிறார் என்பதி பெருமையடைவோம்.
★ தமிழ்ச் சினிமாவில் தோன்றும் அரசியல்வாதிகள் அலுப்பூட்ட தொடங்கி விட்டார்கள். தமிழ்நாட்டை அரசியல்வாதிகள் மாத்திரம் தான் துவம் செய்கிறார்களா? தமிழ் நாட்டின் அரசியல் மாற்றங்களைத் தீர்மானம் செய்ய சினிமாக்காரர்களைத் தமிழ் சினிமா என் கண்டு கொள்வதில்லை? தின் வெளிச்சத்தில் ஒளிரும் நட்சத்திரங்களின் நிஜமூபங்களை, அவர்களின் முரண்பா மிகுந்த வாழ்க்கை எந்த தமிழ் சினிமா துணிவுடன் சொல்லியிருக்கிறது? பு புகைக்காதவர், தண்ணி அடிக்காதவர், ஏக பத்தினி விரதன், ஏழைப்பங்காள பரோபகாரி போன்ற திரையுலக அஸ்திவாரங்களுடன் கோட்டையை எம். ஜி. ஆ பிடித்தார். அவருடைய திரைப்படங்களில் தோன்றிய இதயக்கனி என்ற ஒ தகுதியுடன் ஜெயலலிதா பின்னர் ஆட்சிக்கு வந்தார். தட்டிக் கேட்பவர் என் திரையுலகத் தகுதியுடன் ரஜனிகாந்த் இப்போது நுழைகிறார். இவர்களுடைய சட் விரோத செய்கைகள், வரி ஏய்ப்புகள், இரகசிய உறவுகள், அடாவடித்தனங்கள் பற் விரிவாகப் பேசிய தமிழ்ச்சினிமா ஏதுமுண்டா? ஓர் Escapism உட அரசியல்வாதிகளைப் பற்றி ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்களோ இந் சினிமாக்காரர்கள் என எண்ணத் தோன்றுகிறது. தமிழ் சினிமாக்காரர்கள் தங்க முகங்களை ஒரு முறை பார்ப்பார்களாக.
★ 1996 இன் இந்தப் பிற்பகுதியில் நான் ரசித்துப் பார்த்த ஒரு தமிழ் திரைப்படம் ஜெமினியின் சந்திரலேகா 1947 இல் வெளியான இந்தப் படத்திற் இன்னும் வயதாகவில்லை. தொய்வுகளற்ற விறுவிறுப்பு, கிளுகிளுப்பு நிறைர் பிரமாண்டமான படம் எடுக்க விரும்புவர்களுக்கு சந்திரலேகா ஒரு பாலபாட அந்தக் காலத்தின் கறுப்பு-வெள்ளை கனவு நாயகி டி. ஆர். ராஜகுமாரி, ரஞ்ச எம். கே. ராதா போன்றவர்கள் அலட்டிக் கொள்ளாமல் நடிக்கிறார்கள். இடையி கத்தி தூக்கியவரும், கத்திப் பேசியவரும் நடிப்பில் கொண்டு வந்த செயற்கையா மாற்றங்களை எண்ணிப் பெருமூச்சு விட வேண்டியுள்ளது.

இணைந்த புரட்சி : பாரதிராஜா - விஜயகாந்த்
வருங்கால முதல்வர்?
டி. ஆர். ராஜகுமாரி 1947 இன் கறுப்பு - வெள்ளைக் 51 கனவுகளில்

Page 56
காதலுக்கான காலம் இது. அகத்தியன் காதல்கோட்டையை வ மீசைக்காரர் கே. டி. குஞ்சுமோன் காதல்தேசத்தைத் தந்திருக்கிறார். காண காதல் என்ற அபூர்வ கற்பனையின் அடிப்படையில் காதல் கோ கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. கண்டவுடன் காதல் என்ற சிறுபிள்ளைத்தன கற்பனையுடன் வந்திருக்கும் காதல் தேசம் இந்த ஆண்டில் நான் பார்த்தமோ தமிழ்ப்படம். இந்தியா போன்ற வறுமைமிக்க தேசத்தைக் காதல்தேசம் டே பிரமாண்டமான படங்கள் ஏளனம் செய்கின்றன. மெல்லிய உணர்வுகளை இ திரைப்படத்தில் சிறப்பாக வெளிப்படுத்திய இயக்குநர் கதிர், கே.டி குஞ்சுமே தும்புக் கட்டை மீசையைக் கண்டு பயந்து விட்டார் போலும். காதலுமில் தேசமுமில்லாத இந்தப் படத்திற்கு இசையமைத்திருப்பவர் மேற்குநாடொன் சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான் ஆவார். ஜென்டில்மேன் படவெற்றிக்குப்பின்னர் .
"என்னை ஜென்டில்மேனாக்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி குறிப்பிட்டிருந்தார். தமிழ் நாட்டு மக்கள் உடனடியாக செய்ய வேன் காரியமொன்றுள்ளது. கே. டி. குஞ்சுமோனனை ஒட்டாண்டியாக்குவது அ செய்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி.நன்றி.
காதல் கோட்டை யதார்த்த உலகுடன் தன்னைப் பின்னிப் பினை பெரிதும் முயல்கிறது. கொம்ப்யூட்டர் க்ராஃபிக்ஸ், அதிரடி இசை பே சித்துவேலைகளை ஒதுக்கிவிட்டுத் தன்னம்பிக்கையோடு அகத் ந்திருப்பதற்காகப் ட்டவேண்டும். தமிழ்ப்படங் க்கேயுரியபல நெருட காட்சிகளை இது கொண்டிருந்தாலும் படத்தின் உச்சக் கட்டக்காட்சி இயக்குநரின் சாமர்த்தியம் சிறப்பாக வெளிப்படுகிறது.
★ இனிமையான சுபாவங் கொண்ட எழுத்தாளர் திரு. கே. சிவகுமாரனுக்கு அவரது அறுபதாவது வயதில் கிடைத்த பரிசு நவமணி. இது வெளிவந்த நவமணியின் நான்கு இதழ்களையும் படித்தேன். தினகர அசமந்தம், வீரகேசரியின் அலட்சியம், தினமுரசின் பரபரப்பு. இவையெ இல்லாமல் நவமணி வெளியாகின்றது. பஞ்சாங்கத்தை ஞாபகப்படு அச்செழுத்துக்களை அவர்கள் உடனே மாற்றுவது நல்லது. முக்கிய வாசிப்புக்குத் தடையாக இருக்கும் அந்தப் பிள்ளைத் தாய்ச்சி "ஆனா" எ( கதை, கவிதைகளின் தரத்தை உயர்த்த நவமணி முயற்சிக்க வேண் நவமணியின் சினிமாப்பக்கமும் பிரசாந்த் புராணம், அந்தமான் நடிகர், இந்த நடிகை விவகாரம் பற்றியதாக அமைவது கெளரவமானதாகத் தோன்றவி நீண்ட நாட்களுக்குப் பின்னர் நெய்தல் நம்பியின் எழுத்துக்கள் நவமண வெளியாகின்றன. நெய்தல் நம்பி பிரதான சாலையைவிட்டு விலகி அடிக்கடி பொந்துகளில் நுழைந்து வெளிவருகிறார். வறண்ட தன்மையைத் தவி செழுமையான முறையில் அவர் சொல்ல முனைகிறார் என நினைக்கிறேன்.
责 சரி நிகரில் பூனைக்கு மணிகட்டும் பணியை நிறைவேற்றியிருக் திரு. மு. பொன்னம்பலம். வெவ்வேறு பெயர்களில் சோலைக்கிளியைத் தா பணியைப் பல கவிஞர்கள் ஏற்கனவே செய்தாலும் மு.பொன்னம்பலம் பகிரங் முன்வந்திருப்பது அவருடைய நேர்மையைக் குறிக்கிறது. மு.பொன்னம்பல கட்டுரையில் உடன்பாடு கொள்ளக் கூடிய சில பகுதிகள் உள் ஆட்சேபத்துக்குரிய சில பகுதிகளும் உள்ளன. சோலைக்கிளியின் கவி கற்பனைவளம் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவை. நிறைய எழுதுகையில் நேர் விபத்துக்களை சோலைக்கிளியும் சந்திக்கின்றார். இவை ஒருபுறமிருக்க என எழும் கேள்வி இது தான். முதிர்ந்த, நிதானமான மு. பொ. இத்த ஆக்ரோஷமான, மூர்க்கத்தனமான பாய்ச்சலை சக கவிஞன் ஒருவன் காட்டுவது நியாயமானதா? விமர்சனங்களை சினேகபூர்வமான முறையிலி முன்வைப்பது என்றநிலையிலிருந்துகீழிறங்கிஎதிரியை அம்பலப்படுத்துவது தொனியே கட்டுரையில் தென்படுகிறது. கட்டுரைவெளிவந்தபின்பிரசுரமான மட்டக்களப்புப்பெண்மணியின்கடிதம் சுவாரஸ்யமானது. குமரனாயிருந்துஇ கிழவனாகும் வரை பல கவிதைகள் எழுதியும் கவனிக்கப்படாத இந்நபரின் வேஷம் அவ்வை ஷண்முகியையும் மிஞ்சத்தக்கது. இத்தகைய காழ்ப்பாளர் வலையில் மு. பொ. சிக்கக் கூடாது என்பது என் வேண்டுகோள். தவறின என்ன பெரிய கொம்பனா? என்று மு. பொ. வின் தோளிலேயே ஏறி உட்க இவர்கள் கேள்வி கேட்கும் ஒருநாளை அவர் சந்திக்க வேண்டியேற்படும்.
52

ழங்க, ாமலே 60)
lost
First ான்ற இதயம் ானின் ஸ்லாத 1றைச அதன் களில் எனக் ண்டிய ப்படிச்
த்தின்
66. மனம், கின்ற க்குள்
6) ES
மீது ருந்து என்ற ஒரு இன்று பெண்
களின் ால் நீ ார்ந்து
காதல் தேசம் : குஞ்சுமோன்
ஜென்டில்மேன்" படம் பார்த்து என்னை ஜென்டில் மேனாக்கிய ரசிகப்பெருமக்களுக்கும். திரைப்பட வினியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும், மற்றும் அனைத்துதரப்பினருக்கும் என் நன்றி!
எங்களுடைய "காதலன்' படத்தையும் ஒரு மாபெரும் வெற்றிச் சித்திரமாக்க அனைத்து தரப்பினரையும்நன்றியுடன் கேட்டுக்கொள்கிறேன்.
- அன்புடன்
GENTLEMAN
K. T. KUNJUMON
காதல் கோட்டை : அகத்தியன்

Page 57
(్యలో
அவன் அவளோடு
/ உச்சி மோர்ந்தான் உள்ளங்கால் வன புரட்டிப் புரட்டி எ( அவளும் நிமிர்ந்து
எல்லாம் நீங்க காலடி மங்கலில் 9" x 6" x 3" அடிசற்றுச் சிறுத் வெண்கல நீள்சது
சாம்பலும் வெண் வெடிகுண்டுப் ெ நீலமுள்ளி கண்களை முளிசி
வெடிப்பதற்கு நிமிடங்களை எண்
இருவரும் அதை
உள்-வெளி கலந்து விடியல் தெளிகை இவள் எழுந்து
கதவைத் திறந்து இவன் எழுந்து
இந்தக் கவிதைன வெடிகுண்டு இரு மீண்டும் ஒருமுை
சண்முகம் சிவலிங்கம்

கிடந்தான்.
ரயில் மோர்ந்தான். த்ெதான்
நிமிர்ந்து கொடுத்தாள்.
ரத்துள்
மையும் கலந்த
பாறியின்
ாணிக் கொண்டிருந்தது.
னப் பார்த்தனர்.
த உணர்வில் sயில்,
போனபின்
ய எழுதினான் நந்த இடத்தை ற பார்த்துக்கொண்டே
53

Page 58
களத்திற்கு பரவலாக வாசகர்களிடம் இருந்து கிடைக்கும் ஆதரவு மிகுந்த ஊக்கம் தருகின்றது.
வாசகர்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றுவதன் மூலம் களத்தை கனமும் காத்திரமுமான சஞ்சிகையாக வெளியிட வேண்டும் என்ற உள்ளிப்பு, சிறந்த படைப்பாக்கங்கள் பெற்றுக் கொள்வதில் ஏற்படுகின்ற பின்னடைவு வெற்றி பெறுவதை கணக்குகின்றது.
இது சுதந்திரமான சிற்றேடுகள் எப்போதும் எதிர்நோக்கும் துயரந்தான்.
படைப்பாக்கங்கள் கேட்டு எழுதிய பட்டியல் மிகவும் நீண்டு செல்வகின்றது. பெரும்பாலான பதில்கள் மெளனமாகவே உள்ளன.
பின் தங்கிய ஒரு கிராமத்தில் இருந்து இலக்கியத் தரமான சஞ்சிகை வெளியிட எத்தனிப்பது சக்திக்கு மீறின ஆசையோ .? ஆனால் ஒன்று மட்டும் உறுதி. அது, களம், ஈழத்து தமிழ் இலக்கிய சஞ்சிகைகள் வரலாற்றில் தனக்கென்றும் ஒரு இடம் பிடிக்கும்.
★女★
தமிழில் இலக்கியச் சிற்றேடுகள் பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்குமுகங்கொடுத்து வெளிவர வேண்டிய துர்ப்பாக்கிய நிலையே இன்னமும் நிலைத்திருக்கின்றது. ஒரு இலக்கிய சஞ்சிகையின் ஆரோக்கியமான வெளிவருதலுக்கு படைப்பாளிகள், வாசகர்கள், அனுசரணையாளர்கள் என்ற முத்திறத்தாரின் ஒருமித்த பங்களிப்பு வேண்டும்.
படைப்பாளிகள் தமது தரமான படைப்புகளை உபகரித்தும் இலக்கிய ஆர்வலர்கள் பணம் கொடுத்து சஞ்சிகை வாங்கும் மன ஊக்கம் கொள்வதும் அனுசரணையாளர்கள் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு இலக்கிய சிற்றேடுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதன் வளர்ச்சிக்கு உதவுவதும் ஆகிய இந்த முக்கூட்டு ஒத்துழைப்பு முழுமைபெறும் பொழுது தமிழ் இலக்கிய சிற்றேடுகள் வளர்ச்சி பெறும். நிலைத்து நிற்கும். இது நிதர்சனமாவதும் சாத்தியமாவதும் எப்போது..?
★女★
"இருபத்தோராம் நூற்றாண்டு தமிழ் இலக்கியத்திற்கு ஈழத்து இலக்கியமே வழிகாட்டப் போகின்றது என்ற கருத்து தமிழ்நாட்டிலும் புலம் பெயர்ந்தவர்கள் வாழும் நாடுகளிலுமுள்ள இலக்கிய நோக்கர்களால் அழுத்திச்சொல்லப்படுவதாக"இங்கு பெரிதாக பிரஸ்தாபிக்கப்படுகின்றது. ஈழத்து ஆக்க இலக்கியத்துறை வளர்ச்சி பெற்றுள்ளது உண்மையேயாயினும் அது போதுமானதா? . படைப்பாக்கம் பெற்றுக்கொள்வதில் காணப்படும் தட்டுப்பாட்டிற்கு காரணம் என்னவாக இருக்கும் என்பதும் ஆராயப்பட வேண்டும்.
★女★
சமீபத்தில் எஸ். எல். எம். ஹனிபா அவர்களிடம் கதைத்துக்கொண்டிருந்த போது “என்னிடம் 80க்குப் பின் வெளிவந்த சிறந்த பத்துக்கதைகளைத் தெரிவுசெய்து தரும்படி கேட்கப்பட்டால்.அது எனக்கு இயலுமான ஒரு காரியமாக இருக்கமாட்டாது" என்று கூறியதன் அர்த்தம் என்ன? எங்கோ இடிக்குமாப் போல் இல்லை .?
இப்போ பிரசுரமாகும் கவிதைகளில் ஒன்றிரண்டைத் தவிர ஏனையவையில் கவிதையும் இல்லை; கவித்துவமும் இல்லை என்று கூறப்படும் பொதுவான ஒரு குற்றச்சாட்டு கவனத்தில் கொள்ளப்பட
54
 

வேண்டிய ஒன்றாகவே உள்ளது. சிறந்த கவிதைகளை மறுபிரசுரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்படுவதற்கு இதுதான் காரணமாக இருக்கலாமோ..?
இன்று எம்மத்தியில் ஆரோக்கியமான பல இளம் கவிஞர்கள் தோற்றம் பெற்றுள்ள நிலையில் இந்தக் குறைபாடு விசனத்திற்குரியதே.
★女★
களம் இலக்கிய ஆர்வலர்களுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டது. சிலரிடம் இருந்து அதற்கான தொகை கிடைக்கப் பெற்றது. அவர்கள் அனைவருக்கும் நன்றிகள் உரித்தாகுக.
இன்னும் பலரிடம் இருந்து எதிர்ப்பார்க்கப்படுகிறது. எவ்விதம் பணம் அனுப்புவது என்ற தடுமாற்றம் காரணமாக அவர்களிடம் இருந்து இதுவரை கிடைக்காமல் இருக்க கூடும் என்று நம்புகின்றோம். இதுவரை பணம் அனுப்பாதவர்கள் வா. சிவயோகம் பெயருக்கு காசுக் கட்டளையாகவோ } காசோலையாகவோ அனுப்பி வைக்குமாறு விண்ணப்பித்துக் கொள்கின்றோம்.
களம் ஒவ்வொரு பிரதிக்கும் நீங்கள் அனுப்பி வைப்பீர்கள் என்று எதிர்பார்க்கப்படும் ஒவ்வொரு நாற்பது ரூபாக்களின் திரள் தொகையே அடுத்த களத்தின் உற்பத்திச் செலவினை ஈடுசெய்வதற்கு பயன்படுத்தவேண்டி உள்ளது என்ற பிரத்தியட்ச நிலமையை உங்களுக்கு அறியத் தருவதில் நாம் வெட்கப்படவில்லை. உங்களிடம் இருந்து கிடைக்க போகும் நாற்பது ரூபாக்களின் அத்தியாவசியத்தை நீங்களும் அறிய வேண்டும். உங்களின் பூரண ஒத்துழைப்பிலேயே களத்தின் நிலைத்தல் 9-61T6ITS).
★女★
களத்தின் விலை 40/- அதிகம் என்று பலர் சுட்டிக்காட்டியுள்ளிர்கள். களத்தின் உற்பத்திச் செலவு அதிலும் அதிகமாக இருந்தது என்ற உண்மையை தெரிவித்துக் கொள்வதுடன் இந்த இதழில் இருந்து விலை 30- ஆக குறைக்கப்பட்டுள்ளது. உங்கள் கோரிக்கையை கெளரவிக்க வேண்டியது எமது கடமை.
களம் லாப நோக்கம் கொண்டதல்ல என்பதும் களம் வெளியீட்டில் லாபம் ஈட்ட முடியாது என்பதும்
நீங்கள் ஒவ்வொருவரும் அறிவீர்கள். மாதாந்தம் ஏற்படும் அதிகரித்த நட்டம் களம் வருகையை பாதித்துவிடக்கூடாது என்ற அடிப்படையிலேயே
அதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
ஆசிரியர்.
களம் 6ன் கணக்கு செலவு அச்சுக் கூலி 236OO வரவு விற்பனை 9350 விளம்பரம் 1750 11100 தபாற் செலவு போக்குவரத்து ஏனைய பிற செலவுகள் இதில் சேர்க்கப்படவில்லை. தயவு செய்து உங்களிடம் இருந்து வரவேண்டிய தொகையை அனுப்பி
உதவுங்கள. வா. சிவயோகம்.

Page 59
0.
Х»
சொரூபா விந
பரிட்சைக்குதவு
இலக்கிய
(முதலாம்
ஆசிரியர்: கலாபூ: கிடைக்
எல். முத்தைய 155, இரண்ட குமார வீதி, ெ

எார, நிலைக்க
ம் நிறைந்த த்தக்கள்
ΚΣ {X-
ாயகமூர்த்தி
@l).
N
யர்தர வகுப்பு/
up/7g
ம் கட்டுரைகள்
1 ஊற்று
தொகுதி)
சன ஏ. இக்பால் குமிடம்
பா அன் கோ டாம் மாடி காழும்பு - 11.
(ހ

Page 60

நாளாக நாளாக வயது குறைந்து வருகிறது எனக்கு ! என் புதைகுழி நெருங்க நெருங்க வெள்ளமாய் உயிர் விளைகிறது இழக்க இழக்க
(35IT56)|LD ஒரு திரவியமாய்க் கமழ்கிறது !
எல்லாம் முடிந்ததென்று வாழ்வினை வெறுத்து ஒதுங்குதல் கூடவில்லை வாழ்வோ V இடிபாடுகளின் அடியிலிருந்து தன்னைக் கட்டி எழுப்புகிறது பிணக் குவியலிடையிலிருந்து எழுந்து வருகிறது இரத்தச் சேற்றினிடை ஒரு மலராய்ப் பூக்கிறது
அணுகுண்டு வெடித்த புகையிடையும் ஒரு மின்னலாய் வெட்டுகிறது. பின் ஏது வழி ?
மண்மூடை முதுகில் சுமந்து மலையேறிக் கொண்டிருக்கிறேன்
உச்சி மலையில் நின்று உதிக்கும் சூரியனைத் தரிசிக்கும் நாளுக்காய் இருபது வயதினைத் தாண்டாமலேயே இருநூறு வயதிலும் இருப்பேன் என் முதற் குழந்தையை ஈன்ற பின்னரே இறப்பேன் !
UNIEARTS (PVT)LTD. COLOMBO.