கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண்ணின் குரல் 1982.09

Page 1
பெண்ணடிமை தீராமல் ம
1982 செப்தம்பர்
-
హై
sm -
 
 
 

| =
ன ஒரே சஞ்சி pg.
'முதுகொடியப் பாடுபடும் எம்ழ்ை பார்த்து
மூண்டெரியும் எங்களது ர்ேவைக் கேட்டு இதுகளுக்காய் எழுதவெனப் பேஜ் துக்கி
இங் கெழுந்து பாவலரே உர்லெம்மை எதுவரையும் எழுதிடுவீர் எமக்கு உதிகள்
ஏக்கங்கள் தேவையில்: மாற்ற்ம் GGGar அதுக்கெழுத முடியுமெனில் போள்
அனுக்கங்கள் தேவையில்: நெருக்கம் தேவை
- புதுவை இரத்தினதுரை
ண்ணடிமை தீராது
- பாரதியார்

Page 2
ஆசிரியர் குறிப்பு
 ேபாரதியாரின் 2 அபிலாசைகளை
முன்னெடுத்துச் செல்வோம்
பல கோணத்தில் இருந்து பலராலும் கொண்டா டப்படும் பாரதி நூற்ருண்டு விழாவை பெண்ணின் குரலும் கொண்டாடத் தீர்மானித்துள்ளது " ஊர் ஒட ஒத்தோட வேண்டும்’ என்பதற்காகவா இத்தீர் மானம்? இல்லை. இந்திய விடுதலையை விரும்பி அதற் காகவே தன்னை அர்ப்பணித்த ஒரு கவிஞனுக்கு மரியாதை செலுத்தவும், அவனின் சரியான கருத்துக் களையும், சமுதாயத்திற்கு பயன் உள்ள அபிலாசைக ளையும் முன்னெடுத்துச் செல்லும் உணர்வை மக்களுக்கு ஊட்டுவதற்காகவுமே நாமும் இக்கொண்டாட்டத்தில் பங்குகொள்ள விரும்புகி~ேம்.
- − Aعم
இலங்கையை விட வேறுபட்ட ம7ர்க்கத்தில் பவனி வந்த இந்திய விடுதலே க்குட் இலங்கை விடுதலைக்கும் **ன தொடர்பு என்ர்ே கேள்வியும். அதைத்
தொடர்ந்து இந்திய விடுதலைக்கும் பெண்கள் விடுதலை க்கும் என்ன தொடர்பு என்ற மற்ருேர் கேள்வியும் எழ இடமுண்டு. பாரதியார் இந்திய விடுதலையை வெறுமனே ஓர் ஆட்சி மாற்றமாக மாத்திரம் அணுக வில்லை. (இலங்கையில் இருந்த பெயர்பெற்ற தேசிய வீரர்கள் இலங்கை விடுதலையை அடிப்படையில் வெறும் ஆட்சி மாற்றமாகவே கருதினர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது) அவர் இந்திய விடுதலையை சமூக விடுதலையுடன் இணைத்தார். வெள்ளையனுக்கெதிராக மக்களின் உணர்வை தூண்டி விடுவதுடன் மாத்திரம் அவர் நின்றுவிடவில்லை. இந்திய சமுதாயத்தினது சமூக வளர்ச்சிக்குத் தடையாக இருந்த பிரச்சனைகளில் பல வற்றை அவர் இனங்கண்டு கொண்டு அவற்றிற்கு எதிரான உணர்வை தனது கவிதைகள் மூலம் இந்திய தமிழ் மக்கள் மத்தியில் பரப்பினர். மக்களின் ஆத்தி ரத்தை அவற்றிற்கு எதிராக தூண்டிவிட்டார். இவ் விதம் அவர் பொங்கியெழுந்த சிறுமைகளுள் பல இன்னமும் கூட மூன்ரும் உலக நாடுகளுள் பலவற்றிற்கு பொதுவானவையாகவே உள்ளன. பெண் அடிமைத் தனம், அறியாமை, மூடநம்பிக்கை, போலித்தனமான தேசப்பற்று, தேசிய இனங்கள் மத்தியிலான ஒற்றுமை போன்றவை இவற்றுள் சிலவாகும்.
இவர் தமிழ் கவிஞனகவும், இந்திய விடுதலைக் காகவே தன்னை அர்ப்பணித்தவராகவும், இதனையே தனது உடனடி இலக்காகக் கொண்டவராகவும்,
 

வாழ்ந்தார். சமூகப் பிரச்சனைகளை பொறுத்தவரையில் இவர் இந்தியத் தமிழர்களின் நிலைமைகளை ஆப்ப டையாகக் கொண்டு தமிழ் மொழிமூலமே தனது இலக்கியப்பணியை ஆற்றியுள்ளார். எனினும் இந்தியத் தமிழர்களால் மனித இனத்திற்கு வழங்கப்பட்ட ஒரு பொதுச்சொத்தாகவே பாரதியை நாம் கருதுகின்ருேம். சமூக விடுதலையை ஒரு பொதுத்தன்மை வாய்ந்த பிரச்சனையாகக் கருதிய இவர் தேச-தேசிய இன-நிறமத வரையறைகளுக்கு அப்பாற் சென்று மனித இன த்தை நேசித்தார்.
பெண்விடுதலையைப் பொறுத்தவரையில் அவர் கற்பு நெறியை இருபாலருக்கும் பொதுவானது என்று முரசு கொட்டினுர், விடுதலை வேஐக கொண்ட, சமுதாயத்தின் தவறன போக்குகளுக்கு எதிராக நெஞ்சு நிமிர்த்தி நடக்கும் புதுமைப் பெண்ண்ை தமிழ் இலக்கியத்தில் உலாவவிட்டார்.
பெண்விடுதலையை சமுதாயப் பிரச்சனைகளுள் ஒன்ருகக் கருதும் பெண்ணின் குரல் இத்தகைய ஒரு மகா கவிஞனுக்கு மதிப்பளிப்பது அப்புடியொன்றும் புதுமையானதல்ல.
நிறைவேற்றப்படாது இருக்கும் பாரதியின் முற் போக்குக் கனவுகளை நனவாக்குவதில் பெண்ணின் குரல் ச2ளயாது உழைக்கும் என கூறிக்கொள்ள விரும்புகிருேம்.
சர்வஜன வாக்குரிமை பொன்விழா
1981ம் ஆண்கிசர்வஜன வாக்குரிமையைப் பெற்ற 50வது ஆண்டாக கொண்டாடப்படுகின்றது அரசா ங்கமே இக்கொண்டாக்டத்தை முன்னின்று நடத்தி Այ Ցչ]. இங்கிலாந்திலும் இது விமரிசையாக கொண்டா டப்பட்டது. சர்வதேசிய மாநாடுகளில் இதுபற்றி பிரஸ்தாபிக்கப்பட்டது. இக் கொண்டாட்டத்திற்காக மகாராணியும் இலங்தைக்குiருகை தந்தார். அரசாங்க நிறுவனங்களிலும் த்ரியர் துறை பெருந்தொழில் நிறுவனங்களிலும் (1933-1981) ‘சர்வஜன வாக்குரிமை பொன்விழா” என்ற வாசகங்கள் தொடர்ந்தும் பெரும் ஆடம்பரமாகத் தொங்க விடப்பட்டுள்ளன, ஆனல் மக்களோ அல்லது மக்கள் ஸ்தாபனங்களோ பொன் விழாவை சுயமாக கொண்டாடியதாகத் தெரியவில்லை. சர்வஜன வாக்குரிமை அரசாங்கத்துக்கும் பெருந் தொழில் அதிபர்களுக்கும் மாத்திரமா? மக்களுக்கு அதில் சம்பந்தமேயில்லையா? அல்லது சர்வஜன வாக் குரிமையின் மகத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ள வில்லையா? என்ற கேள்விகள் எழுகின்றன். ஆகவே சர்வஜன வாக்குரிமைபற்றி பெண்ணின் குரல் தனது கருத்தைக் கூறவேண்டியது அவசியமானதாகின்றது.
"ஜனநாயகத்தை' உலகுக்கு அறிமுகப் படுத்திய ஐரோப்பிய நாடுகளில் பல ஜனநாயகத்தின் உச்சாணிக் கொம்பாக வர்ணிக்கப்படும் சர்வஜன வாக்குரிமையை தமது நாடுகளில் அமுல் படுத்துவதற்கு முன்பாகவே

Page 3
ஐரோப்பியக் காலனியாக இருந்த இலங்கைத் தீவு சர்வ்ஜன வாக்குரிமையை பெற்றது ஆச்சரியமான தொன்ருகும். இலங்கையர்கள் எல்லோரும் காலனிய லிசத்தின் அடிமைகளாக இருக்கும் போதே அவர்கள் தம்மை, தமக்காக, தாமே ஆளும் அதிகாரத்தை பெற்றுவிட்டார்கள்; இவ் அதிகாரத்துக்காக அவர்கள் போராடவில்லை; அவர்கள் கேட்காமலேயே அவர்க ளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. அதிகாரத்தை வழங்கியது வேறுயாருமல்ல அவர்களின் காலனித்துவ எஜமானர்களேயாவர். இதுதான் சர்வஜன வாக்குரி மையின் தோற்ற வரலாருகும்.
சர்வஜன வாக்குரிமை என்பது என்ன? இன, மத, சாதி, பால், வர்க்க, சமூக அந்தஸ்து வேறுபாடுகள் இன்றி வயது வந்த சகலரும் அரசியல் ரீதியில் சம உரிமை பெற்றவர்கள். தம்மைத் தாமே ஆளும் உரிமை பெற்றவர்கள் என்பதேயாகும். சுதந்திரம், சகோதரத் துவம், சமத்துவம் என்ற சுலோகத்தின் ஒரு வெளிப் பாடே இதுவாகும். இங்கு பொருளாதார ரீதியில் மக்களின் நிலைமையும், அரசியல் ரீதியில் மக்களின் நிலைமையும் வேறு படுத்தப்படுகின்றது. பொருளாதார ரீதியாக மக்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகளும், மக்களின் நிலைமைகளும் மூடிமறைக்கப்படுகின்றன. அங்கு அவர்கள் யார் என்பது மறக்கப்படுகின்றது. உதாரணமாக (1) 1931ல் இருந்து 1940ன் பிற்பகுதி வரை இத்தீவின் மக்கள் (பிரஜைகள் அல்ல) காலணி யலிஸத்தினதும், பெருந்தோட்ட பொருளாதாரத் தினதும், அந்நிய ஏஜென்ஸி நிறுவனங்களினதும் அடிமைகளாவர். தேசிய பொருளாதாரத்தை உருவா க்கும் உரிமையிழந்தவர்கள். ஆனலும் அரசியல் ரீதியில்
உரிமைபெற்ற சுதந்திர பிரஜைகள்.
(2) இன்று, இத்தீவின் மக்கள் பல்தேசிய கம்பெனி களினதும், உலகவங்கி, உலகச் சந்தை உட்பட்ட ஏனேய ஏகாதிபத்திய நிறுவனங்களினதும், வல்லரசு களினதும் நவீன அடிமைகள். தமது சொந்த தேசிய நலனுக்குகந்த தேசிய பொருளாதரத்தை உருவாக்கும் உரிமை இழந்தவர்கள்; ஆனலும் சுதந்திரப் பிரஜைகள்.
(3) அந்நியர்களின் நலனுடன் தமது நலன்களை இணை த்துக்கொண்டு பொருளாதார ரீதியில் சுதந்திரமான மனிதர்களாக இருப்பவர்களும், அந்நிய நலனுல் தமது நலன்கள் அழிக்கப்பட்டு பொருளாதார ரீதியில் சுதந் திரமற்றவர்களாக வாழும் பெரும்பான்மை மக்களும் அரசியல் ரீதியில் சமமானவர்கள், சம அரசியல் உரிமை
யுள்ள சுதந்திரப் பிரஜைகள்.
(4) பெண்களைப் பொறுத்தவரையில் இவர்கள்கூட அரசியல் ரீதியில் ‘சுதந்திரமானவர்கள்’ சமஉரிமை யுள்ள பிரஜைகள்தான், ஆனல் பொருளாதாரரீதியில் ஆண் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள், பாரபட்சமாக நடாத்தப்படுபவர்கள், அவர்கள் தமது அன்ருட வாழ் க்கையில் முகங்கொடுக்கும் பிரச்சனைகள் பெண்களை கீழ்நிலையில் வைக்கும் சமூக வழமையுடன் தொடர்பு பட்டனவேயாகும். சம உரிமையுள்ள சுதந்திரப் பிர ஜைகள்’ என்ற அவர்களின் ‘உரிமைகள்' அவர்களுக்கு உதவிக்கு வரமாட்டா.
2

பொருளாதார ரீதியில் குறிப்பாக உற்பத்தித்துறை யில் தனிச்சொத்துடமையின் எஜமானர்களாகவும் அதன் இரைகளாகவும் இரு துருவங்களாக பிரிந்து நிற்கும் மனிதர்கள் அரசியல் ரீதியில் ‘சம உரிமையுள்ள பிரஜைகளாவர்”.
அரசியல் ரீதியில் சம உரிமையுள்ள பிரஜைகள் (சர்வஜன வாக்குரிமை என்பது இதன் ஒரு அங்கம்.) என்பது ஐரோப்பாவை தனது பிறப்பிடமாகக் கொண்ட முதலாளித்துவத்தின் ஒரு மகத்தான கண்டு பிடிப்பாகும். தனது சொந்த அரசியல் அதிகாரத்தை மூடிமறைத்து அதை முழுமக்களினது அரசியல் அதிகா ரமாகக் காட்டுவதற்காக அது உருவாக்கிய ஒரு அரசியல் சாணக்கியமாகும். இதுதான் சர்வஜன வாக்குரிமையின் பிரதான நோக்கமாகும்.
இதைவிட அதற்கு வேருேர் நோக்கமும் உண்டு. பல்லாயிரக்கணக்கான ஆண்டு வரலாறுடைய நிலப்பிர புத்துவ சமூக கட்டுப்பாடுகளுடனும், இக் கட்டுப்பாடு களை பாதுகாத்துவரும் கருத்துகளுடனும், இதைப் பாதுகாக்கும் இயக்கங்களுடனும் கணிசமானளவிற்கு மோத வேண்டியது முதலாளித்துவத்தினது அவசிய மாகின்றது. மக்களுக்கும் இது அவசியமாகின்றது. இந்த இடத்தில் சுதந்திரமான பிரஜைகள் என்பது மக்களுக்கு சாதகமானதாக அமைகின்றது. நிலப்பிர புத்துவ தளைகளில் இருந்து மக்கள் தம்மை விடுவித்துக் கொள்வதற்கு ஒத்துழைப்பு நல்கின்றது.
ஆனலும் முதலாளித்துவ அரசியல் அதிகாரத் திற்கு சேவை செய்வதே ‘சுதந்திர பிரஜைகள்’ என்ற உரிமையின் அடிப்படை நோக்கமாகும். இவ் அதிகார த்துக்கு தீங்கு விளையும் பட்சத்தில் மக்கள் ‘பிரஜை களாக கருதப்படும் ‘உரிமையை இழப்பார்கள். மலையகத் தமிழர்களின் பிரஜா உரிமை பறிக்கப்பட் டது இதனலேயேயாகும். இதன் மூலம் இவர்கள் நிலப்பிரபுத்துவ தளைகளில் இருந்து விடுதலை பெறுவது தடுக்கப்பட்டது. அவர்களின் தேசிய வளர்ச்சி பின்ன டைந்தது. மலையகப் பெண்கள் பொருளாதார ரீதியில் ஆண்களின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டிருந் தாலும் அவர்களினது தேசீய இயக்கம் பெலம் பெற்ற தாக வளர முடியாததன் காரணத்தால் அப்பெண்கள் நிலப்பிரத்துவ சமூக வழமைகளில் இருந்து விடுபடுவது கடினமானதாய் உள்ளது. பிரஜா உரிமை பறிக்கப்படு முன்பான அவர்களின் வரலாறும், அதன்பின்பான அவர்களின் வரலாறும் வேறுபட்டுள்ளதை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. தோட்டத் தொழிலாளர் களின், பிரஜா உரிமையை பறித்தலானது அவர்களின் தேசிய வளர்ச்சிக்கு இடப்பட்ட ஒரு தடையாகும்.
ஆகவே இந்நாட்டு மக்களில் ஒரு சாராரரின் பிரஜா உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் "சுதந்திரப் பிரஜைகளுக்கு உரித்தான ‘சர்வஜன வாக்குரியை’ யின் 50வது ஆண்டுவிழா கொண்டாடப் படவேண் டிய தொன்ருக நாம் கருதவில்லை.

Page 4
விவாகரத்துரிமையும் யாழ் குடாநாட்டுப் பெண்களின் நிலையும்
- காந்தன்
(சென்ற இதழ் தொடர்ச்சி)
கைத்தொழில் துறையின் வளர்ச்சி யாழ்ப்பாண த்தில் மிகவும் பெலவீனமானது. இத் துறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மூலதனமும், இதனுல் உருவாக் கப்படும் செல்வமும் யாழ்பாணத்துப் பொருளாதா ரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியளவிற்கு வளர் ந்துள்ளது என்று கூறுவது சற்று கடினமானதாகும். யாழ் விவசாயகூலித் தொழிலாளர்களையும் விட இத் தொழிலாளர்கள் குறைவான வருமானம் பெறுபவர் களாகவே உள்ளார்கள். பெண்களே கூடுதலாக ஈடு படுத்தப் படுகிருர்கள். மின்தறி, சாயம் இடல், பெனியன் தயாரித்தல், கைத்தறி, பீடி சுற்றுதல், இனிப்புப் பண்ட உற்பத்தி சாலைகள் போன்றவற்றில் பெண்களே ஈடுபடுத்தப்படுகிருர்கள். இங்கு பெண்கள் தொழில் ரீதியில் ஆண்களிடமிருந்து சுதந்திரமான வர்கள். தமது தொழிலுக்கு தாமே எஜமானர்கள். ஆஞல் மிகக் குறைவான சம்பளத்தின் காரனத்தாலும் தொழில் நிபந்தனைகளின் காரணத்தாலும் பொருளா தார ரீதியில் சுதந்திர மற்றவர்களாக உள்ளார்கள். திருமணமான பெண்கள் இத்தொழில் துறைகளில் ஈடுபடுவது நடைமுறைச் சாத்தியமில்லாததாய் உள் ளது. இதனுல் இத் தொழில் துறைகள் பெண்களினது விவாகரத்துரிமையில் நேரடியான செல்வாக்குச் செலு த்தும் அளவிற்கு வளர்ச்சி அடையவில்லை. விவாகரத் துரிமையானது ஏட்டளவினதானதாகவே உள்ளது.
வர்த்தகத்துறை
வர்த்தகர்கள் என்றேர் பொது அணி இருந்தாலும் இது பல வர்க்கங்களை உள்ளடக்கிய, தொன்ரு:கும். இவ் வர்த்தகர்கள் பல்வேறு விதமான முறையில் பொருள் விநியோகத்துடன் தொடர்பு பட்டுள்ளார் கள். இவர்களில் பெரும்பான்மையோர் பண்ட உற் பத்தியில் இருந்து விடுபட்டவர்களேயாவர். இப்பிரிவு களை தெளிவாக ஆராய்வது இங்கு எமக்கு அவசிய மில்லை. குடா நாட்டின் சனத்தொகையில் 5-10%

க்கும் இடைப்பட்ட மக்களை இவ்வணி உள்ளடக்கியி ருந்தாலுங்கூட, யாழ் - குடாநாட்டினுள் இவர்களின் சமூகப் பங்கு அல்லது சமூக செல்வாக்கு கணிசம்ான தாக உள்ளது.
இவர்களைப் பொதுவாக மூன்று பிரிவுகளாக பிரி க்கலாம். பெரும் வர்த்தகர்கள், இடை நடுவினர், அங்காடி வர்த்தகர்கள் சிறு வர்த்தகர்கள் ஆகியோரே அப்பிரிவினராவர். கிராமப்புறங்களில் உள்ள சிறு கடைக்காரர்களைத் தவிர ஏனைய கடைக்காரர்கள் அனைவரும் முன் சொன்ன இரு பிரிவில் ஏதாவதொ ன்றைச் சார்ந்தவர்களாவர். இவ்விரு பகுதியினரைப் பொறுத்தவரையில் ஆண்களே இங்கு பிரதான பங்கை வகிக்கின்றனர். பெண்கள் ஈடுபடுத்தப்படுவது மிகக் குறைவானதாகவே உள்ளது. இவ்விதம் ஈடுபடுத்தப் பட்டாலும் ஆண்களுக்கு உதவியாளர்களாகவே உள் ளார்கள். வர்த்தகத்துக்கான மூலதனத்தில் பெண் களின் சீதனச் சொத்து கணிசமான பங்கினதானதாக இருக்கக்கூடும். ஆஞல் அதைச் செயல்படுத்தும் உரிமை ஆண்கள் வசமே உண்டு. இங்கும் பெண்கள் விவாக ரத்துரிமையை பிரயோகிக்கும் சமூகபலம் குன்றியவர் களாகவே உள்ளார்கள்.
அங்காடி வர்த்தகர்கள் அல்லது சிறு வர்த்தகர் களைப் பொறுத்தவரையில் சந்தையில் வியாபாரம் செய்பவர்களில் பெண்கள் பெரும்பங்கை வகிச்கின்ற ர்கள். 30%த்துக்கும் குறையாதவர்கள் பெண்கள் என்று சொன்னல் அது மிகையாகாது. இங்கு பெண் கள் தனித்தே ஈடுபடுகிருர்கள். இவர்கள் ஆண்களில் தங்கியில்லை, அவர்களின் உதவியாளர்களாக இல்லை. இப்பெண்கள் பொருளாதாரரீதியில் சுதந்திரமான வர்கள். இவர்களினது பொருளாதார நிலைமை விவாக ரத்துரிமையை பிரயோகிக்கும் வாய்ப்பிற்கு தடையாக இல்லே.
சேவைத்துறை
இதில் ஈடுபடும் பெண்களினது எண்ணிக்கை படி ப்படியாக அதிகரித்து வருகின்றது. வேலை நிபந்தனை களிலோ அல்லது சம்பள அளவிலோ ஏற்றத்தாழ்வுகள் அவ்வளவாக இல்லை. இத் துறையில் ஆண்களையும் விட பெண்களே கூடுதலாக விரும்பப்படுகிருர்கள். ஏனைய துறைகளுடன் ஒப்பிடும்போது இங்கு பெண்கள் ஒப்பு நோக்கில் சுதந்திரமானவர்கள், சீதனமாக வந்த சொத்துக்கள் இங்கு உற்பத்திச் சாதனங்களாக செயல்படவில்லை. அவை பெரும்பாலும் நுகர்வுக் கானதாகவே இருக்கின்றன இதனுல் ஒப்புநோக்கிப் பார்க்கும்போது பெண்கள் இங்கு பொருளாதாரரீதி யில் சுதந்திரமானவர்களாய் உள்ளார்கள்.
விவாகரத்துரிமையை பிரயோகிப்பதில் பெண்கள் முகங்கொடுக்கும் பிரச்சன்ைகளை சுருக்கமாக இங்கு அவதானித்தோம். தொழில் துறையில் ஈடுபட்டுள்ள பெண்களில் பெரும்பான்மையானவர்கள் பொருளா
3.

Page 5
தார சுதந்திர மற்றவர்களேயாவர். விவாகரத்துரிமை என்து ஏட்டளவிலான தொன்றகவே உள்ளது. நிலவும் பொருளாதார நிலைமைகளும், உற்பத்திச் செயல்முறையுடன் அவர்கள் இணைக்கப்பட்டுள்ள முறைகளும் விவாகரத்துரிமையை பிரயோகிப்பதற் கான சாத்தியப்பாட்டை மறுக்கின்றன பணம் சம்பா திக்கும் பெண்களே பொருளாதார சுதந்திரமற்றவர் களாக இருக்கும் நிலையில் பணம் ஏதும் சம்பாதிக்காத சாதாரண குடும்பப் பெண்களின் நிலமையைக் கேட் கவும் வேண்டுமா?
சமூக வழமையின் பங்களிப்பு
விவாகரத்துரிமையை பிரயோகிப்பதற்கு தடை யாக உள்ளது பொருளாதார காரணி மாத்திரமல்ல. நிலவுகின்ற சமூக வழமையும் அவ் வழமைக்கு கார ணமாக உள்ள பாரம்பரிய கருத்தோட்டங்களும் இத ற்கான ஏனைய காரணிகளாகும். இவற்றில் சிலவற்றை இங்கு கவனத்திற்கொள்ள முற்படுவோம்.
'விதவைகள் பற்றிய அபிப்பிராயம்
இவர்கள் அபசகுணங்களாகவும், மங்களவைபவங் களின்போது ஒதுக்கிவைக்கப்பட வேண்டியவர்களா கவும் கருதப்படுகிறர்கள். ஏனைய பெண்களைப் போன்று வாழும் உரிமை இவர்களுக்கு மறுக்கப்படுகின்றது. அவள் தன்னை அழகுபடுத்திக் கொள்வாளானல் அவள் காமஇச்சை பிடித்தவளாக கருதப்படுகிருள். எல்லோ ரும் முயற்சித்துப் பார்ப்பதற்கு விடப்பட்ட ஒர் அழைப்பாக கருதப்படுகின்ருள். இயற்கை மரணத்தின் காரணத்தால் கணவனை இழந்தவளின் நிலையே இது வாஞல் தனது கணவனே கோட்டுக்கு இழுத்து விவா கரத்துரிமை கோரிய பெண்களை சமூகம் எப்படி நடாத்தும்?
கணவன் இறப்பதற்கு முன்னல் உயிர் துறக்கும் பெண்களை சமூகம் ஏற்றிப்போற்றுகின்றது. அவள் "கொடுத்துவைத்தவளாகவும் மாங்கல்யபெலம் மிக்க வளாகவும் கருதப்படுகிருள். இந்த நிலையில் தனது *மாங்கல்யத்தை” தானே அறுத்த பெண்ணையிட்டு சமூகம் என்ன கருதும்?
புருஷ்ய விசுவாசம்
இது பரம்பரை பரம்பரையாக புகுத்தப்பட்டு வந்த ஒரு விஷயமாகும். கல்லானலும் கணவன் புல் லானுலும் புருஷன் தொட்டு தாலி கட்டினவனை கண்கண்ட தெய்வமாக மதிக்கவேண்டும், சோரம் போன கணவனை தலையில் சுமந்த சதி அனுசூயாவை பின்பற்றவேண்டும், இவ்விதம் மதித்தும் பின்பற்றியும் நடந்து கோவலன் போன்ற சோரம்போன புருஷனை சகிப்புத்தன்மையுடனும், விசுவாசத்துடனும் மதித்து வாழ்ந்தால் ‘மதுரையை எரிக்ககூடிய’ சக்திபெற்ற கண்ணகியாக மாறலாம், என்றெல்லாம் கூறி புருஷ்ய
4

விஸ்வாசமானது நிபந்தனைகளின்றி ஏற்றுக் கொள்ள ப்பட வேண்டிய தொன்ருகும் என்ற கருத்து நிலை நாட்டப்பட்டுள்ளது. மறுபுறத்தில் புருஸ்ய விஸ்வாச த்திற்கு முன்னுதாரணமாக காட்டப்படும் பெண் கணினது கணவன்மார்களில் பெரும் பான்மையோர் தமது மனைவிமேல் எதுவித விஸ்வாசமுமில்லாதவர் களாக உள்ளார்கள் அல்லது அவர்களின் கற்பின் தூய்மையைப்பற்றி யாருமே கவலைப்படவில்லை. (உதா ரணமாக இராமனின் கற்பின் தூய்மைபற்றி யாருமே கவலைப்படவில்லை.) கணவன் மனைவிக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்பது ஒரு கட்டாயமல்ல. சுருக் கமாக சொல்லப்போல்ை கனவனின் பொறுப்பின்மை, ஒழுங்கின்மை விருப்பத்துடன் சோரம்போகும் தன்மை ஆகியவற்றை மனைவியானவள் தடுக்கவோ, பின் பற்றவோ கூடாது என்பதற்காக பெண்கள்மேல் விதிக் கப்பட்ட ஒரு தடையே புருஷ விஸ்வாசமாகும்! தனது கணவனை விவாகரத்துகோரும், பெண்ணை அதாவது விவாகரத்துரிமையை பிரயோகிக்கும் பெண்ணை புருஷ்ய விஸ்வாசமுள்ளவளாக கருதமுடியுமா? அப்படிப்பட்ட பெண்ணை இச் சமூகம் ஏற்குமா?
பெண் என்பவள் காம இச்சையை தீர்க்கும் ஒரு பண்டம்
இது மிகவும் ஜனரஞ்சகமானதும், சமூக அங்கத் தவர்கள் மத்தியில் ஆழப்பதிந்துள்ளதுமான ஒரு கரு த்தாகும். ஒவ்வொரு ஆணினதும் தாயும், சகோதரி யும், மகளும் மாத்திரமே இதற்கு விதிவிலக்கானவர் களாவர். பெண்களை தாயைப்போல அல்லது சகோத ரியைப்போல மதிக்கவேண்டும் என்று சொல்வது இத ஞல்தான் போலும் ஆண்களுக்கிடையேயுள்ள சமூகக் தொடர்புகளைப்போல (நட்பு, தோழமை, ஊரவன், மாணவன், ஆசிரியன் சகபாடி ... இத்தியாதி) ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே தொடர்புகள் இருக்கக் கூடாது என்பதே இதன் அர்த்தமாகும். அவ்விதம் இருக்குமாஞல் அப்பெண் 'கொஞ்சம் பிழை யானவள்’ என்று அர்த்தப்படும். எல்லோரும் 'முயற் சித்துப் பார்பதற்கு பச்சை விளக்கு காட்டுபவளாக கருதப்படுவாள். கணவனை இழந்த பெண், வேறு ஆண் துணை எதுவும் இல்லாவிடில் தானகவே தனது பிரச் சனைகளை தீர்க்க முற்படும்போது அவளுக்கு ஏனைய ஆண்களுடன் ஏற்படும் சமூக தொடர்புகளை ‘காதல் தொடர்புகளாய்தான்’ சமூகம் கணிக்கும்.
பெண் வலுக்குறைந்த இரண்டாந்தர பிரஜை
பெண் உரிமை குறைந்தவளாகவும், வலு இழந்த வளாகவும், ஆணிற்கு கீழ்பட்டவளாகவும் கருதப்படு கிருள், இதனல் சமூக விவாகரங்களில் பெண்ணுல் தனித்து நிற்க முடியாதுள்ளது. ஆணே இதற்கு தகுதி யானவனகிருன். (முழு முற்போக்காளஞகவும், பழ மையை முழுமையாக எதிர்ப்பவனுகவும் தன்னைக்காட் டிக் கொள்ளும் முதலாளித்துவம் பெண்களினது இர ண்டாந்தர பிரஜை நிலையை தனக்கு சாதகம்ாக பயன் படுத்தி மலிவான கூலிகளாக அவர்களை அமர்த்திக்

Page 6
கொள்கின்றது தனது கணவனை விவாகரத்துச் செய துள்ள இளம்பெண் எந்த ஆணினுாடாக தன்னை பி திநிதித்துவப்படுத்திக் கொள்வது? சமூக விவகாரங்களை எப்படிக் கையாள்வது?
முடிவுரை;
விவாகரத்துரிமை என்பது ஒரு போலியேயாகும்
அது ஏட்டளவிலானதேயாகும். நிலவும் உற்பத்தி
செயல் முறைகளும், ஆதிக்கம் வகிக்கின்ற சமூக
கருத்துகளும் விவாகரத்துரிமையை மறுக்கின்றன.
இவை இரண்டிலும் பெலமான காரணி எது உற்பத்தி உறவு முறைகளா அல்லது ஆதிக்கம் வகிக் கின்ற கருத்துகளா? இரண்டுமே பெலமானதும், நீண்ட காலபாரம்பரிய முள்ளதும், மக்களின் வாழ்க்கை முறை களுடனும் சிந்தனை ஒட்டங்களுடனும் பின்னிப்பிணை ந்துள்ளதுமான காரணிகளாகும். ஆகவே இவற்றில் எது பெலமானது என்பதல்ல பிரச்சனை, இவற்றில் எது அடிப்படையானது என்பதே பிரச்சனையாகும் அதாவது விவாகரத்துரிமை என்பது ஒரு நிஜமான தாக மாறவேண்டுமானுல் அது முதலில் இல்லாதொ ழிக்கப் படவேண்டும் என்பதே பிரச்சனையாகும்.
எமது சமூகம் வளர்ந்து வருகின்றது என்பது நிதர்சனமானது. இவ்வளர்சியின் ஒரு விளைவே சேவை த்துறையாகும். இத்துறையில் உள்ளவர்களுக்கு பொரு ளாதார ரீதியான சுதந்திரம் உண்டு. ஆகவே தனது கணவனை விவாகரத்துச் செய்துகொள்ளும் தகைமை இப்பெண்களுக்கு உண்டு. பாரம்பரிய கருத்துகள் ஒரு தடையாக இருந்தாலுங்கூட இதன் தாக்கத்தில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய நிலையில் உள் ளார்கள். உற்பத்தி உறவுகளில் ஏற்படும் மாற்றங்கள் தான் சுதந்திரத்துக்கான அடிப்படை உத்தரவாத மாகும் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டாகும். ஆகவே இஷ்டபூர்வமான குடும்ப இணைவானது பெண் களின் பொருளாதார ரீதியான விடுதலையுடனேயே நடைமுறைச் சாத்தியமானதாகும். அதாவது உற்பத் திச் செயல்முறையுடன் பெண்களுக்கு இன்றுள்ளி தொடர்பில் மாற்றம் ஏற்படாது இஷ்டபூர்வமான குடும்ப இணைவு என்பது சாத்தியமாகமாட்டாது. பார ம்பரிய கருத்துகளுக்கு எதிரான போராட்டங்கள் அவ சியமானதே, ஆனல் அவை வழிவகைகளே தவிர இல க்காக அமைந்துவிடாது.
இஷ்டபூர்வமான குடும்ப இணைவென்பது சமூகத் தில் ஆழவேரூன்றியுள்ள, சிக்கலாகும் ஒரு சமூகட் பிரச்சனையாகும். துணிவாகவும், தியாகங்களுக்கு அஞ் சாமலும் பெண்விடுதலைக்காக போராடுவது மட்டுமல் லாமல் சமூகத்தை விளங்கிக் கொள்ளவும் அதை மாற்றி அமைக்கவும் துணிவதன் மூலம் மாத்திரபே பெண்விடுதலே என்பது சாத்தியமானதாகும். அட் போதுதான், அப்போது மாத்திரம்தான் விவாகரத் துரிமை என்பது நிஜமானதாக மாறும், அதுவரை இது போலியே; பெண்களை ஏமாற்றும் கானல் நீரேயாகும்.

"மலையகப் பெண்ணுள்!" வரலாறு படைக்க மாட்டாளா?
U TSS scu T.
"பெண்ணின் குரல்" மூன்ரும் இதழில் 9ம் பக்கத் தில் வெளிவந்துள்ள மலையகப் பெண்ணுள்’ என்னும் கவிதை மலையகப் பெண்களை பிறர் தயவை எதிர் பார்த்து நிற்கும் முதுகெலும் பற்றவர்களாக்கி விட்டது.
பயன் கருதா உழைப்பை நல்கும் பண்பு மிக்கப் பெண்ணுள் நயன் நினைந்து உயர்ந்த வாழ்வை நல்கிடவே வாரீர்!
மலையகப்பெண்ணுக்கு “உயர்ந்த வாழ்வை நல்கிட தகுதி பெற்றவர்கள் யார்? அவரே பதில் கொடுக்கிருர்,
இதய முள்ள பேர்களெல்லாம் இவர்களைப் பாரீர் - இவள் இழிந்த வாழ்க்கை போக்க நல்ல எழுச்சி பெற்று வாரீர்!"
இதயமுள்ள பேர்கள் என்பது யாரை? இப்பெண் களின் இழிந்த வாழ்வைப் போக்க எழுச்சி பெற வேண்டியது யார்? யார் அந்த இரட்சகர்கள்? இப் பெண்களால் தமது வாழ்வை வளம் பெற்றதாக்கிக் கொள்ள முடியாதா? தாமே தமக்காக கிளர்ந்தெழ மாட்டார்களா? அவர்கள் என்ன கையாலாகதவர் களா? நிச்சயமாக இல்லை. அவர்களே தமது உரிமை க்காக கிளர்ந்தெழவேண்டும், அவர்களால் கிளர்ந் தெழவும் முடியும். இதுதான் தமது விடுதலையை பெற் றுக்கொள்வதற்கான ஒரே வழியாகும். மாற்றுவழி எதுவுமேயில்லை.
“பெண்ணின் குரல்" மூன்ரும் இதழில் அட்டைப் பட கவிதையில் குறிஞ்சி நாட்டான் இதை தெளி வ்ாகக் கூறியுள்ளார்.
தேயிலைத் தளிரை - நிதம் தீண்டும் கரங்கள் - இனி தீமைகளைப் பொசுக்கும் மாயிருள் அகற்றி - நலம் மண்ணில் விளைய - தினம் மாண்புடனேயுழைக்கும்!

Page 7
களம்
புதுமைப் பெண் எ
பெண்கள் என்பது பாலியல்ரீதியான ஒரு வகைப் பிரிவு மாத்திரமேயாகும். பெண்கள் சம்பந்தப்பட்ட உயிரியல் பிரச்சனையைப் பொறுத்தவரை இவ்வகைப் பிரிவு முழுமையானதும், ஏகமானதுமாகும். ஆளுல்ை பெண்கள் சம்பந்தப்பட்ட சமூகவியல் பிரச்சனைகளைப் பொறுத்தவரையில் (“பெண்விடுதலையும் இவற்றில் ஒன்ருகும்) இவ்வகைப்பிரிவு முழுமையானதோ அல் லது ஏகமானதோவல்ல. இது முழுமையற்றதும், பல் தன்மை கொண்டதுமாகும். இவ் வகைப்பிரிவு ஒரே விதமான உடற்கூறுகளை கொண்டவர்களை உள்ளடக் கியதாய் இருந்தாலும் பல்வேறு வர்க்கங்களையும், வர்க் கத்தட்டுகளையும் உள்ளடக்கியதாகும். இதனுல் பெண் கள் என்பது பல்வேறு விதமான வர்க்க தேவைகளை உள்ளடக்கியவர்களின் பாலியல்ரீதியான வகைப்பிரி வினராகும் என்று கூறுவது பொருத்தமானது. சமூக பிரச்சனைகள் பற்றிய சகல விதமான கருத்துக்களும்
யி
Ժր
இந்திய விவ சாய அணிதிரட்டுவதிலான
நாம் இங்கு குறிப்பிடும் அனுபவங்கள் எந்தவழி யிலும் ஆனதல்ல. ஆனலும் அவை திட்டவட்டமான வழியைக் காட்டக் கூடியனவாகும். ஒன்றைப் பற்றிய அனுபவத்தைப் போல் மேலானது ஒன்றுமில்லை. நாம் கூறவருவது கூடிய அனுபவங்களையல்ல. இவ் அனுப வங்களின் பிரதிபலிப்புக்களையேயாகும். அடக்கு முறையை அனுபவித்தும் அதற்கு எதிராக போராடி யும் உள்ள தொழிலாளி வர்க்கப் பெண்களினது பிரதிபலிப்புக்களையும் இது உள்ளடக்கியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மாவட்டத்தை சேர்ந்த சகடாவும், ரவோடாவும் செல்வச் செழிப்பும் வளமும் மிக்க பிரதேசமாகும். 75% மான காணிகள் ஜனத்தொகையில் 15% மானவர்களின் கைகளில் உண்டு. இவர்கள் வெளியூர் காரர்களாகவும், ஆதிக குடியல்லாதவர்களாகவும் உள்ளார்கள். மீதமாய் உள்ள 25% மான காணியும், ஜனத்தொகையில் 25% மான வர்களின் கைகளில் உள்ளன. இவர்களில் அநேகமா னவர்கள் ஆதிவாசிகள் ஆவர். இவை 1-3க்கும் இடை ப்பட்ட ஏக்கர் காணிகளாகும். உயிர் வாழ்வதற்கு போதாதவையாகும். இதனுல் இவ் உடமையாளர்கள் விவசாயக் கூலிகளாக வேலை செய்ய வேண்டியுள்ளது.
6
应

“ன்பவள் யார்?
ர்க்க நலன்களுக்கிடையேயான முரண்பாடுகளையும், ரிக்கும் பிழைக்கும் இடையேயான முரண்பாடுகளையும் ரதிபலிக்கின்றன. பெண்கள் விடுதலை’ பற்றிய கரு, து எதுவிதத்திலும் இதற்கு விதிவிலக்கானதல்ல. }கவே பல்வேறு விதமான கருத்துகள் நிலவுவது யற்கையானதேயாகும்.
இதனுல், “பெண்கள் விடுதலை’ பற்றிய கருத்தை மலும் வளர்த்தெடுப்பதற்காகவும், பாரதியின் இலட் யக் கனவான புதுமைப் பெண்ணை’ தெளிவாக பகுப் ாய்வு செய்வதையும் நோக்கமாகக் கொண்டு “நூறு ந்தனைகளை மோதவிடுவதற்கான ஒரு களத்தை இங்கு மைத்து தருகின்ருேம்.
இந்தியாவில் இருந்து வெளிவரும் மாதர் வெளி டான மனுசியில் வெளிவந்த ஒரு பகிரங்க அறை வலை கீழே தருகின்ருேம்.
ப் பெண்களை
அனுபவங்கள்
همهھــــــسس
னத்தொகையில் 100 வீதமானவர்கள் பிரதானமாக நீதிக்குடிகளை உள்ளடக்கியவர்கள்; தமக்கு எதுவித லமும் இல்லாமல் விவசாயக் கூலிகளாகவே வேலை சய்கிருர்கள். பின்சொன்ன இரு வர்க்கங்களையும் ார்ந்த பெண்கள் வயல் வெளிகளில் கூலிகளாக வேலை சய்வதுடன், வீட்டில் எதுவித துணையும் இல்லாமல் மது வேலைகளைச் செய்கிருர்கள்.
சகோடா, ரவோடா பிரதேசங்களில் உள்ள ள்ளூர் ஸ்தாபனமான 'சரமிக் துங்ஹட்டன (உழை பாளர்களின் ஸ்தாபனம்) ஆதிவாசிகள் தமது நில தை இழந்தது சம்பந்தமான பிரச்சனையை முன்னெ த்துச் சென்றது. ஒழுங்கு படுத்தப்பட்ட ஒரு கிளர் சி ஆரம்பமாகியது; ஆரம்பத்தில் எந்தப் பெண்களும் பாதுக்கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை. பின்பு, தாழிலாளர்களை இம்சைப்படுத்தும் பிரச்சனை (விசே மாக பெண்ணை) முன்னெடுக்கப்பட்டது. பணக்கார வசாயிகளாலும், கைக்கூலிகளாலும் பொலிசாராலும் பண்கள் கற்பழிக்கப்படுவதற்கு எதிரான பிரச்சார Dம், கிளர்ச்சிகளும் ஆரம்பமாகின. கிளர்ச்சி நடவடி கைகளிலும் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவ:

Page 8
தற்காக பெண்கள் தாமாகவே முன்வந்தார்கள். ஆன லும் ஒழுங்கான பெண்கள் அமைப்பொன்று இருக்க வில்லை.
1972ம் ஆண்டு, உழைப்பாளர்கள் உயர்ந்த சம் பளத்திற்காக போராட்டத்தை முன்னெடுத்து சென் ரூர்கள். பெண்களின் முழுநாள் உழைப்பிற்காக 75 சதமே சம்பளமாக கொடுபட்டது. பரிவார்டா போன்ற இடங்களில் வேலைநிறுத்தத்தை முறிப்பவர் களுக்கு எதிரான போராட்டத்தில் பெண்கள் ஈடுபடு த்தப்பட்டார்கள். கிராமத்தில் அவர்கள் சம்பள உய ர்வுக்காக நடந்த ஊர்வலங்களில் பங்குபற்றினர்கள். இதன் பின் இவர்கள் " அடக்குமுறைக்கும், எமது சம்பள உயர்விற்கும் எமது கோரிக்கைகளுக்கு மாக எம்மால் இவ்விதம் உரத்து கோஷமிட முடியும் என்று நாம் நம்பியிருக்கவில்லை; எம்மால் இதை செய் யமுடியுமென்று நாம் என்றுமே கருதியிருக்கவில்லை. வீடுகளே எமது இடம் என்று தான் எமக்குக் கூறப் பட்டு வந்தது’ என்று கூறினர்கள். பரிவார்டாவின் வேலைநிறுத்த முறியடிப்பாளர்களை தடுத்து நிறுத்துவ தில் பெண்கள் முன்னணிப் பங்கு வகித்தார்கள். ஆனல் இவர்கள் வெறுமனே கருவிகளாகவே குறைத்து மதிப் பிடப்பட்டார்கள். சம்பளப் பிரச்சனை சம்பந்தமான பேச்சுவார்த்தையின் போது ஆண்கள் “பெண்களின் பிரச்சனையை நாங்களே பேசித்தீர்த்துக் கொள்கிருேம். அவர்கள் வரவேண்டியதில்லை, என்று கூறிஞர்கள். இது பெண்களால் எதிர்க்கப்பட்டது. ‘எமது சம்பள த்தையிட்டு நாமே பேசிக்கொள்கிருேம். நாம் போரா ட்டத்தில் பங்குபற்றியிருப்பது மரத்திரமல்ல, நாம் போராளிகளாகவும் இருந்துள்ளோம்" என்று பெண்கள் வாதிட்டார்கள். எவ்விதமானுலும், பெண்களின் பங்கு பற்றலானது தன்னிச்சை வகைப்பட்டதாகவும், சில கிராமங்களில் மாத்திரம் காணக்கூடியதாயும், தனிமை ப்பட்டதாகவும் இருந்தது.
9 s
1973ம் ஆண்டு கோடைகாலத்தின் போது பெண் கள் மேலும் போராட்டத்தில் சுறுசுறுப்பானவர்களா கவும், ஈடுபாடு கொண்டவர்களாகவும் மாறினர்கள். இதேநேரத்தில் இத் தாபனம் போராட்டத்தில் ஈடு பாடுள்ள பெண்களுடனுன உரையாடலின் பின்ட பெண்கள் முகாம் ஒன்றை ஸ்தாபனப் படுத்தியது. பெண்களின் முகாமையிட்டு ஆண்கள் காட்டிவந்த எதிர்ப்பானது பெண்கள் நடாத்திய நீடித்த உரை யாடல்களினல் வெல்லப்பட்டது.
பெண்களுக்கெதிரான பலாத்காரம்
பெண்கள் முகாமில் அவர்கள் தமது சொந்த பிரத்தியேக அனுபவங்களை பரிமாறிக்கொண்டார்கள் இங்கு நிலவிய அடக்குமுறையற்ற ஓர் சூழலின் கார் ணத்தால் இவர்கள் தமது உண்மையான பிரச்சனை களை உரையாடக் கூடியதாய் இருந்தது. பணச் கார விவசாயிகளும் ஏனையோரும் தம்மை எளி விதம் ஒரு பாலியல் பண்டங்களாக நடாத்தினர்கள்

என்பது சம்பந்தமான அனுபவத்தை பரிமாறிக் கொண்டார்கள். இவர்கள் இதை எதிர்த்தார்கள். தனியாகவும், கூட்டாகவும் இதற்கெதிராக போராடத் தீர்மானித்தார்கள். இதன் பின்பு இவர்கள் போதை வஸ்து உபயோகித்தலையும், இதில் இருந்து தோன்றும் மனைவியை அடிப்பதையும் பற்றி கதைத்துக் கொண் டார்கள். இது எவ்வளவுதான் பிரத்தியேகமானதாக தோற்ற மளித்தாலும் இதுவுங் கூட கூட்டாக எதிர்க்கப்பட வேண்டியதேயாகும் என்று அவர்கள் தீர்மானித்தார்கள். ஆதிக்கத்திற் கெதிராகவோ, சம்பளத்திற்காகவோவான போராட்டங்களில் ஏற் கெனவே பங்கு பற்றிய பெண்கள் தமது சொந்த இயலுமையைப் பற்றியும், சொந்த சக்தியைப்பற்றியும், சொந்த ஆற்றலைப் பற்றியுமான அனுபவங்களைக் கொண்டிருந்தார்கள். செல்வந்தர்களுக்கெதிரான தமது செயல்பாட்டையும், கற்பழித்தலுக்கெதிரான தமது போராட்டத்தையும் குடிகார கணவன்மார் களால் நையப்புடைத்தலை ஏற்றுக் கொள்தலுடன் தொடர்புபடுத்த விரும்பவில்லை. மது அருந்தலுக்கும், பெண்களை அடிப்பதற்கும் எதிரான போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு தமக்கு உதவும்படி கரணிகாட்’ பகு தியை சார்ந்த பெண்கள், முகாமில் உள்ள பெண்களைக் கோரினர்கள். முகாமைச் சார்ந்த சகல பெண்களும் கரண்ஹெட்ட பகுதிக்குச் சென்ருர்கள். அவர்கள் மதுக் குடங்கள் சகல வற்றையும் உடைத்த்ார்கள். தமது மனேவியரை அடிப்பார்களானல் அவர்கள் பயங்கரமாக தண்டிக்கப்படுவார்கள் என்று கணவன்மார்களைப் பய முறுத்தினுர்கள். இதனை ஆரம்பம்ாகக்கொண்டு பெண் கள் மேலான சகல அடக்குமுறைகளுக்கும் எதிரான போராட்டங்கள் ஆரம்பித்தன. பெண்களின் பட்டா ளமும், இளைஞர்களும் கிராமம் கிராமமாக சென்று குடிகார கணவன்மார்களை கைக்கூலிகள் போன்றேர் களை (குண்டர்கள்) பயமுறுத்தினர்கள். ஏனைய பெண் களை தம்முடன் சேர்த்துக் கொள்வதற்கான பிரச்சா ரத்தைச் செய்தார்கள். ‘நாம் இனியும் பொலிஸ் கொடுமைக்கு பயப்பட மாட்டோம்’ என்று குதுர கலித்தார்கள், இப்போது சாதிப்பாகுபாடுகள், ஊழல், வேலையின்மை, குறைந்த சம்பளம் இத்தியாதி போன்ற வற்றிற்கு எதிரான அவர்களின் போராட்டம் மேலும் விரிவடைந்தது.
பெண்கள் இயக்கம்
கிராமிய மஹாராஷ்டிராவின் சகாடா பகுதியில் உள்ள பெண்களின் இயக்கத்தினது வளர்ச்சி ஒழுங்கு களும், பம்பாய் சேரிப் பெண்களின் இயக்கத்தினது வளர்ச்சி ஒழுங்குகளுக்கு, ஒப்பானதாகவே உள்ளதை காணக்கூடியதாய் உள்ளது. வேலை நிலைமைகளையோ அல்லது வாழ்க்கை நிலைமைகளையோ அடிப்படை யாகக் கொண்டு எழும் வர்க்க கோரிக்கைகளுக்கான பொதுவான வர்க்கப் போராட்டத்தில் மிகச்சிறு அள வினரான பெண்கள் பங்குபற்றினர். பெருமளவினரான பெண்கள் இப்போராட்டங்களுக்கு வெளியில் இருந் தார்கள். அல்லது பட்டும்படாமல் ஈடுபாடுள்ளவர்
7

Page 9
களாய் இருந்தார்கள். இப்போராட்டங்களில் நாட்ட முள்ள இச் சிறுபான்மையானது, வேலை நிலைமைக் காகவும், தொழில் நிலைமைக்காகவுமான போராட் டத்தின் மூலம் தான் பெற்ற புதிதான அதிகாரத் திற்கு வீட்டில், சமுதாயத்தில் தமக்குள்ள இரண் டாந்தர நிலைமைக்கும் இடையே வளர்ந்து வரும் முரண்பாடுகளுக்கு முகம் கொடுத்தார்கள். இது மனைவிமாரை அடித்தல், விபச்சாரம் இத்தியாதி போன்ற பெண்களுக்கென்றே தனித்துவமான பிரச் சனைகளையொட்டிய போராட்டங்களின் வளர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வளர்ச்சியின் காரணத்தால் பெண் களாய் இருப்பதனல் முகங்கொடுக்கும் அடக்குமுறை களுக்கு எதிரான போராட்டத்தில் பெருமளவு பெண் கள் உள்ளெடுக்கப்பட்டார்கள். வர்க்க இயக்கத்தில் அவர்களின் ஈடுபாடானது இன்று முற்றிலும் புதிய பரிமாணத்தையும் நோக்கத்தையும் கொண்டதாய் அமைந்துள்ளது.
ஆண் - பெண் உறவுகள்
இப் போராட்டத்தின் போதும், அதன் பின்பு மான ஆண் - பெண் உறவுகளின் வடிவமைப்பு எவ் விதமானதாக இருந்தது? ஆரம்பத்தில், பெண்களும், சகலவித போராட்டங்களிலுமான அவர்களின் பங்கும் போராட்டத்தின் துணையாகவே பார்க்கப்பட்டன. போராட்டங்கள் பிரதானமாக ஆண்களை கவனத்திற் கொண்டதாகவே இருந்தன. பெண்களை அடித்தலும் மிதமிஞ்சிய பாலுறவு, பெண்களை இரண்டாந்தர, கீழ்மைப்பட்டவர்களாகக் கருதுதல், அதே நேரத்தில் ஆண்களின் உயர் நிலைம்ை இயற்கையானதாக கரு
g) ur பெற்றெழுந்
கல்லானலும் அவன் கணவன் புல்லானுலும் அவன் புருஷன் கட்டளை உனக்கா பெண்ணே? மண்ணுனலும் மனைவி வெறும் மரமானலும் அவள் மனைவி ஆணுக்கில்லை ஏன் பெண்னே?
சேற்றில் மிதித்து நீரில் கழுவ சமூகம் மதிக்கும் ஆண்தனை சறுக்கி விழுந்த உனக்குக்கூட சமூகம் சவக்குழி பதிப்பதேனே? ஆணுெருபாதி பெண்ணுெருபாதி தத்துவம் வைத்தார் பெண்ணே!
தத்துவம் தன்னை வாழ்க்கையில் கொள்ள தயக்கம் எதனுல் பெண்ணே? தாய்க்குலம் என்று மகுடமிட்டோர்

தப்படல் போன்றவை சாதாரண மானதாகவோ அல்லது மிகவும் தனிப்பட்ட விவகார மாகவோ கணிக்கப்பட்டது.
முகங்கொடுக்கும் அடக்கு முறைகளுக்கு எதிரான போராட்டத்தில் பெருமளவு பெண்கள் உள்ளெடுக்கப் பட்டார்கள். வர்க்க இயக்கத்தில் அவர்களின் (ஈடுபா டானது) இன்று முற்றிலும் புதிய பரிமாணத்தையும் நோக்கத்தையும் கொண்டதாய் அமைந்துள்ளது.
ஆனல் பெண்களால் நடாத்தப்பட்ட போராட் டங்கள் ஆண்கள் மத்தியில் மாத்திரமல்ல பெண்கள் மத்தியிலும் கூட இருந்த இந்த ஆதிக்க கருத்து களுக்கு சவால்விட்டது. போராட்டத்தின் போதும், பேச்சுவார்த்தையின் போதும் பெண்களுடன் கலந் தாலோசித்துக் கொள்வதையும், செயல்பாடுடைய பெண்களினது வீட்டு வேலைகளுக்கு உதவுவதுமே பெண் களையொட்டிய நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்களுக் கான ஆரம்ப அறிகுறிகளாகும். சமையல்காரர்களா கவும், பிள்ளை பராமரிப்பவர்களாகவும் இருப்பது தவிர வேறு எதுவும் பெண்களுக்கு தெரியாது என்ற கருத்து தூக்கி யெறியப்படும் ஒரு நிலையில் இருந்தது. பெண்களின் போராட்டமானது அதுவரை ஆதிக்கம் செலுத்திவந்த கருத்துகளுக்கு ஒரு சவாலாக மாறியது, ஆண் - பெண் உறவில், ஒரு புதிய, உயர்ந்த வடி வத்தை ஏற்படுத்த உதவியது. இந்த அனுபவங்கள் சுட்டிக்காட்டுவதன்படி, இது பெண்களின் கீழ்மைப் படுத்தலினதும், ஒடுக்கு முறைகளினதும் குறிப்பிட்ட வெளிப்பாடுகளுக்கும் பிரதிபலிப்புகளுக்கும் மாத்திரம் சவாலாக அமையும் ஒரு தொடர்ச்சியான போராட் டம் மாத்திரமல்ல, இயற்கையாகவே பெண் ஒடுக்கு முறையின் ஆணிவேர்களையே உலுப்பி எடுக்கும் தொட ர்ச்சியான போராட்டங்களுமாகும்.
து வருவாயே
- ஞானி ஜெகன்
தரணியில் உனக்குப் பெண்ணே தாங்கமுடியாச் சுமையை உந்தன் தலையில் வைத்தா ரேன்பெண்ணே?
அழன்று எரியும் அடுப்பங்கரையின் அரிசி யாக்கி அடிமை கொண்டார். அழன்று உழலும் காமத்தீயை அடக்கும் கருவியாய் உனைக்கொண்டார். உலகம் போற்றும் உத்தமர்களை உயிர்த்தியாகம் செய்தவர்களை உயர் சிந்தனைச் செல்வர்களை உலகம் உய்திட நீ பெற்றும் உந்தன் தளையேன் ஒடியவில்லை?
உள்ளதை உரத்துச் சொல்லிவிட்டால் உற்றதை வெளியில் செப்பிவிட்டால் உனக்கு அடக்கம் இலையென்பார்.

Page 10
பினக்குக்காரி எனவுரைப்பார். தந்தை கணவன் சோதரர்கள் விந்தை இவர்கள் செயல்பாராய் மந்தை போலே நீ வாழும் நிலையை நினைத்தேன் பார்ப்பதில்லை? கண்ணே மணியே நீயென்பார் பொன்னே முத்தே எனச் சொல்வார் பிறப்பால் ஒத்த உயிருன்னை
பொருளால் அளப்பவர் யார் பெண்னே?
உந்தன் அடிமை விலங்கொடிக்கும் உரிமை உந்தன் கையிலுண்டு உரிமை பெறத்தான் போராடு உந்தன் கு 3. த்தை ஒன்ருக்கு விடிவின் ஒளியில் விளையாட விழிப்பாய் திரள்வாய் துணிவாக
பாரதி என்றெரு புலவன் பிறந்தான்
зтсъщо:
தி
பிறப்பில் பெண்னைப் பீடையென்றும் - ஆண் பிறப்பு புண்ணிய தானமென்றும் மறுக்கும் மானிட உண்மைகளே - தமிழ் மனிதர் கொண்டிருந்த வேளையிலே
பாரதி என்ருெரு புலவன் பிறந்தான். தமிழால் பாவையர் தம்மின் உரிமை இசைத்தான்.
கட்டில் அறையின் காதலுக்கும் - பின்னர் தொட்டில் அறையின் காவலுக்கும் கட்டுப் பட்டவள் பெண் ணென்ற - பொய்மை கற்பனை வாழ்ந்த காலமதில்
பாரதி என்ருெரு புலவன் பிறந்தான்; தமிழால் பாவையர் தம்மின் உரிமை இசைத்தான்
கல்லாய் ஆளுலுைம் கணவனென்றும் - அவன் புல்லாய் ஆனலும் புருஷனென்றும் சொல்லிய சொல்லால் வெட்கமின்றி - பெண்ணை சோதனைக் குள்ளாக்கியோர் மத்தியிலே
பாரதி என்ருெரு புலவன் பிறந்தான்; தமிழால் பாவையர் தம்மின் உரிமை இசைத்தான்.
நாணம் மடம் பயிர்ப்பென்று - பெண்ணை நாலு குணங்களில் சிறையிலிட்ட கோணல் கொள்கைகள் கோலோட்கிய - தமிழ் குடியில் புதுமைக் குரலொலிக்க
பாரதி என்ருெரு புலவன் பிறந்தான்; தமிழால்
பாவையர் தம்மின் உரிமை இசைத்தான்.
ஆணே உலகின் அனைத்துமென்ற - பழமை ஆணவம் வாழ்ந்த பூமியிலே

ஆணுக்குப் பெண் சமமென்றே பூண்டப்ாய் கொள்கை நகையாக உலகம் உய்வு பெறுவதற்கே உந்தன் உதிரம் நீ சிந்து மடிந்து அழியும் மணியில்தான் பல்லாயிரம் மணிகள் பொலிந்திடுமே அடிமையாக உழல்வதிலும் விடிவை எண்ணி உழைத்திடவே வீட்டுக் கொருபெண் வேண்டுமடி உத்தம பெண்ணே வரவேண்டும் உன் மத்தர் ஆயிரம் சொல்லட்டும் உன்னை எள்ளி நகைக்கட்டும் உரிமைக் குரலை நீ உயர்த்து உடையும் அடிமை விலங்கென்றே உறுதி குலையாய் நெஞ்சாய் நீ உயிர்பெற் றெழுந்து வருவாயே!
கானம் இசைத்த தன்கவியால் - பெண்ணின் மானம் உரைத்த மாகவியாய்
பாரதி என்ருெரு புலவன் பிறந்தான்; தமிழால் பாவையர் தம்மின் உரிமை இசைத்தான்
பாரதக் கதையில் பாஞ்சாலியை - தருமன் பந்தயப் பொருளாய் ஆக்கியதை பாவில் வடித்து பெண்ணினத்தின் - புதுப் பாதையை பகரத் துணிந்தவனப்
பாரதி என்ருெரு புலவன் பிறந்தான்; தமிழால் பாவையர் தம்மின் உரிமை இசைத்தான். தாய்மை இன்றித் தரணியுண்டோ - பெண் தாயாகா விட்டால் தமிழுமுண்டோ வாய்மை இதன் வரலாறு கண்டேட் பெண்ணை' வாழ்த்தத் தன் வரகவிரிந்த
பாரதி என்ருெரு புலவன் பிறந்தான்; தம்ழால் பாவையர் தம்மின் 'உரிமை இசைத்தான் ஆடல் பாடல் ஆயகலைகள் - பெண்ணை அடிமை கொண்டு ஆகமுயல்தல் கூடல் தகுமோ கொள்கையாமோ - சிறை கூண்டுக்குள்ளே பெண்கள் கிளியோ?
பாரதி என்ருெரு புவவன் பிறந்தான்; தமிழால் பாவையர் தம்மின் உரிமை இசைத்தான்.
ஆதியில் மனிதர் வாழ்ந்ததுபோலே 8 உலகில் அனைவரும் சமமாய் ஆகுதல் வேண்டி நீதியின் குரலை நீளஒலித்து - தன் நேர்மையால் கவிதை வீதி சமைத்த
பாரதி என்ருெரு புலவன் பிறந்தான்; தமிழால் பாவையர் தம்மின் உரிமை இசைத்தான்.
போதும் போதும் என்ற வகையில் - பெண்ணை போகப் பொருளாய் கொண்டவர் நெஞ்சை மோதியுடைக்க மூண்ட இடியாய் - தமிழ் மூட்டிய பெருமை நூற்ருண்டுகானும்
பாரதி என்ருெரு புலவன் பிறந்தான்; தமிழால் பாவையர் தம்மின் உரிமை இசைத்தான்.

Page 11
பெண் விடுதை
தாய்ம
பெண்டாட்டி தனையடிமைப் படுத்த வேண்டிப்
பெண்குலத்தை முழுதடிமைப் படுத்தலா மோ?
* கண்டார்க்கு நகைப் ” பென்னும் உலக வாழ்க்கை
காதலெனும் கதையினுடைக் குழப்பமன்ருே??
மனைவியொருத் தியையடிமைப் படுத்த வேண்டித்
தாய்க்குலத்தை முழுதடிமைப் படுத்த லாமோ?
'தாயைப்போ லேபிள்ளை’ என்று முன்னூேர்
வாக்குளதன் ருே? பெண்மை அடிமை யுற்ருல்
மக்களெலாம் அடிமையுறல் வியப்பொன்ருமோ!
பெண்விடுதலே
பெண்ணுக்கு விடுதலையென் றிங்கோர் நீதி
பிறப்பித்தேன்; அதற்குரிய பெற்றி கேளீர்; மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்ருல்,
மனையாளும் தெய்வமன்ருே? மதி கெட் டீரே! விண்ணுக்குப் பறப்பதுபோல் கதைகள் சொல்வீர், விடுதலையென் பீர் கருணை வெள்ள மென்பீர், பெண்ணுக்கு விடுதலைநீ ரில்லை யென்ருல்
பின்னிந்த உலகினிலே வாழ்க்கை யில்லை
புதுமைப் பெண் ( சில பகுதிகள் )
மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின்
வண்ம வர்த்திரு வாயின் மொழிந்தசொல்
நாதந் தானது நாரதர் வீணையோ?
?நம்பிரான் கண்ணன் வேயங்குழ லின்பமோ تاچیز
வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே
மேன்ம்ை செய்தெமைக் காத்திடச் சொல்வதோ?
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமோ?
தையல் வாழ்கபல் லாண்டுபல் லாண்டிங்கே!
அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமையாக்க முயல்பவர் பித்தராம்; நெறிகள் .யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே, சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள் தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்; நறிய பொன்மலர் மென்சிறு வாயினல்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டீரோ!
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம் பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப் போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்; நாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திாம் பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ!
0

ல பற்றி பாரதி
ாண்பு ( சில அடிகள்)
நிமிர்ந்த நன்னடை சோர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திரும்புவ தில்லையாம்; அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டிரோ!
உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும், ஒது பற்பல நூல்வகை கற்கவும், இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே திலக வாணுத வார்நங்கள் பாரத
தேசமோங்க உழைத்திடல் வேண்டுமாம்; விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்
சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்;
சுவுரி யங்கள் பலபல செய்வாராம்;
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பாராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பாராம் ;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பாராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்:
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டிரோ!
سیسے O سسس۔
இனிக் கற்றுக்கொடுப்போம்.
‘இனி வரும் தலைமுறைக்குத் துன்பங்களை வெறுமனே சகித்துக்கொண்டே போகாமல், அவற்றை எதிர்த்துப் போராடக் கற்றுக் கொடுப் போம். அவர்கள் உழைப்பை நேசிக்கவும், நிமிர்ந்து நிற்கவும், செயலாற்றவும் கற்றுக் கொடுப்போம்.”
கார்க்கி - பிரமச்சாரியின் டயரி

Page 12
காதல் ட காதலின் புகழ் ( சில பகுதிகள்)
காதலினுல் மானுடர்க்குக் கலவி யுண்டாம்;
கலவியிலே மானுடர்குக் கவலை தீரும்; காதலி ஒறல் மானுடர்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம்; சிற்பமுதற் கலைக ளுண்டாம் ஆதலினல் காதல்செய்வீர்; உலகத் தீரே!
அஃதன்ருே இவ்வுலகத் தலைமை யின்பம்; காதலினல் சாகாம லிருத்தல் கூடும்;
கவலைபோம், அதனுலே மரணம் பொய்யாம்.
நாடகத்தில் காவியத்தில் காதலென்ருல்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்ரும் என்பர், ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்ருே ரத்தே
ஊரினிலே காதலென்ருல் உறுமு கின்றர்; பாடைகட்டி அதைக்கொல்ல விழிசெய் கின்ருர்;
பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க மூடரெல்லாம் பொருமையிஞல் விதிகள் செய்து முறைதவறி இடரெய்திக் கெடுகின்ருரே.
காதலிலே இன்பமெய்திக் களித்து நின்ருல்
கனமான மன்னவர் பே7ர் என்ஒ வாரோ?
. a ... ^گی۔ ہیٹ ܟܗܝ լ: : 5 5ւ - : : 37 - ԼՐ T 337 0 ԼՐ Այ 5] * si:: - - T6)
- ந் தி சி. - டே - + த்தொழி2. மனங்கொள் வாரோ? பாதிநடுக் கலவியிலே காதல் பேசிப்
பகலெல்லாம் இரவெல்லாம் குருவிபோல காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால்
படைத்தலைவர் போர்த்தொழிலைக் கருது வாரோ?
-- Ꭴ --
பெண்கள் 6 ( காப்பு நீக்க
(1) கும்மியடி! தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி! நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி (கும்மி)
(21 ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென் றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்; வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்றே விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார். (கும்மி)
(3) மாட்டை யடித்து வசக்கித் தொழவினில்
மாட்டும் வழக்கத்தை கொண்டுவந்தே, வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார், அதை வெட்டி விட்டோமென்று கும்மியடி (கும்மி)
(4) நல்ல விலை கொண்டு நாயை விற்பார், அந்த
நாயிடம் யோசனை கேட்ப துண்டோ? கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை
கூட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார் (கும்மி)

ற்றி-பாரதி
விடுதலைக் காதல்
காதலிலே விடுதலையென் ருங்கோர் கொள்கை
கடுகிவளர்ந் திடுமென்பார் ஐரோப் பாவில்; மாதரெலாம் தம்முடைய விருப்பின் வண்ணம்
மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னர் பேதமின்றி மிருகங்கள் கலத்தல் போலே,
பிரியம் வந்தால் கலந்தன்பு பிரிந்துவிட்டால், வேதனையொன் றில்லாதே பிரிந்து சென்று
வேருெருவன் றனைக்கூட வேண்டும் என்பார். வீரமிலா மனிதர் சொல்லும் வார்த்தை கண்டீர்
விடுதலேயாங் காதலெனிற் பொய்மைக் காதல்!
காரணத்தான் யாதெனிலோ; ஆண்க ளெல்லாம்
களவின்பம் விரும்புகின் ருர் கற்பே மேலென்று
ஈரமின்றி யெப்போதும் உபதே சங்கள்
எடுத்தெடுத்துப் பெண்களிடம் இயம்புவாரே!
ஆனெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்,
அப்போது பெண்மையுங்கற் பழிந்தி டாதோ? நாணற்ற வார்த்தையன்றே? வீட்டைச் சுட்டால், நலமான கூரையுந்தான் எரிந்தி டாதோ? பேனுமொரு காதலினை வேண்டி யன்ருே
பெண்மக்கள் கற்புநிலை பிறழ கின்ருர்? காணுகின்ற காசிலெலாம் மறைத்து வைத்துக் கற்புக்கற் பென்றுலகோர் கதைக்கின்ருரே!
-Or
விடுதலைக் கும்மி
ப்பட்டுள்ளது )
(5) கற்பு நிலையென்று சொல்ல வந்தார், இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்
வற்புறுத் திப்பெண்ணேக் கட்டிக்கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம். (கும்மி)
(6) பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டு மறிவினில் ஆணிக் கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி (கும்மி)
(7) வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோ மென்று கும் மியடி ! சாதம் படைக்கவும் செய்திடுவோம்; தெய்வச் சாதி படைக்சவும் செய்திடுவோம். (கும்மி) (8) காத லொருவனைக் கைப்பிடித்தே, அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து, மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி! (கும்மி)

Page 13
பாரதி யார்? (ஒரு மதிப்பீடு
பீ. ஏ. காதர்
பாரதி நூற்ருண்டு தமிழர் வாழும் நல்லுலக மெங்கும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. விமர்சன விற்பன்னர்கள் அவனைப் பற்பல கோணங்களிலே பல்வேறு, விதமாகச் சித்திரம் தீட்டு கின்றனர். ‘பண்டிதர்களின் ஏகபோகமாகத் திகழ்ந்த இலக்கியத் துறையை முதற் தடவையாக எளிய நடை யில் கவிதை வடித்துப் பாமரரும் நுகரும் வண்ணம் செய்தவன் பாரதி; தேசிய எழுச்சிக்காகப் பாடிய மக்கள் கவிஞன் பாரதி என்றெல்லாம் ஒரு புறத்திலே பாரதியின் புகழ் விண்ணுக்கும் அப்பால் வைத்துப் போற்றப்படுகிறது. ஒரு சிலர் ‘நமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணுேம்' என்ற பாரதியின் வாசகங்களை வைத்துக் கொண்டு தமது . மொழிவாத பேச்சுகளில் உலக மொழிக்கெல் லாம் தீர்ப்பு கூறும் நீதிபதியாக பாரதியை நிலை நிறுத்துகிருர்கள்.
மறுபுறத்தில் கடவுள் பக்தியை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொண்ட கருத்து முதல்வாதி பாரதி; அக்டோபர் புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தினதும் மக்களதும் பாத்திரத்தை மதிக்காமல் காளியின் கடைக் கண் பார்வைக்கு நன்றி கூறும் பிற்போக்குவாதி பாரதி எனச் சீறுகின்றனர்.
அப்படியானுல்........
பாரதி யார்?
அவனை எவ்வாறு மதிப்பீடு செய்வது?
எளிய நடையிலே மக்கள் புரிந்து கொள்ளும் வகையிலே அழகுபட கவிதைகள் தீட்டியமைக்கும், மொழியியலில் அவனுற்றிய பங்களிப்பிற்காகவும், அழ கியலுக்காகவும் அவனது கருத்துகளையும் கவிதைகளை պւի அப்படியே கண்மூடித் தனமாக ஏற்றுக் கொள் விதா”இந்த கருத்தோட்டத்தை அப்படியே ஏற்றுக் கொண்டால் அழகியலையும் மொழி இயலையும் தொழுகின்ற வலதுசாரி கண்ணுேட்டமே மேலோங்கும்.
இந்தப் பிழையான ஒருபட்ச பார்வையில் இருந்து விடுங்ட்டு மறுகோடிக்கு ஓடுகின்ற இடதுசாரி அதி தீவிர வாதிகள் வக்காலத்து வாங்குகின்ற வரட்டுத் தனத்தில் சரண்புகுந்து பாட்டாளி வர்க்கப் புரட்சி ஒன்றையே அளவுகோலாகக் கொள்ளவும் முடியாது.
அவ்வாறயின் எமது அளவுகோல் எதுவாக இருத் தல் வேண்டும்? ஒரு கவிஞனை மாத்திரமல்ல எந்த ஒரு வரலாற்றுப் புருசனையும் சரியாக மதிப்பீடு செய்வது எவ்வாறு?
12

'அவன் வாழ்ந்த காலகட்டத்தில் வரலாற்றுரீதியான இயக்கப் போக்கிற்கு அவன் பங்களிப்பு செய்தானு? அல்லது எதிராக நின்றனு?’’ இது தான் ஒருவனை முற்போக் காளனுகவும் பிற்போக்காளனுகவும் வகைப்படுத்தும் எல்லைக் கோடு.
இப்போது பாரதியை இந்த அளவு கோலினல் எடை போடுவோம்.
பாரதி வாழ்ந்த காலகட்டத்தை இரு பகுதிக ளாகப் பிரிக்க வேண்டும். ஒன்று, அக்டோபர் புரட் சிக்கு முற்பட்ட காலம். இரண்டு, அக்டோபர் புரட் சிக்குப் பிற்பட்ட காலம். இதிலே முதலாவது கால கட்டம் உலகெங்கும் நிலப்பிரபுத்துவத்திற்கும் ஏகாதி பத்தியத்திற்கும் எதிராக பூர்ஷ்வா தேசிய விடுதலை இயக்கங்கள் வரலாற்றில் மகத்தான முற்போக்குப் பாத்திரத்தை ஆற்றிக் கொண்டிருந்த பகுதியை குறி க்கிறது. இந்த கால கட்டத்திலே தான் பாரதியார் பெரும் பகுதி தனது வாழ்நாளைக் கழித்தார்.
அக்டோபர் புரட்சிக்குப் பிந்திய இரண்டாவது காலகட்டம் பாட்டாளி வர்க்கத்தின் சோஷலிசத்திற் கான இயக்கங்கள் மேலோங்கி இருந்த காலத்தைக் குறிக்கிறது. பாரதி மிகச் சில ஆண்டுகளே இந்த காலகட்டத்தில் வாழ்ந்தான்.
அவன் வாழ்ந்த அன்றைய இந்தியா பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் இரும்புக் காலடியில் மிதிபட்டு சுதந்திரத்திற்காக, பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சிக் காகப் போராடிக் கொண்டிருந்தது. பூர்ஷ்வா ஜன நாயகப் புரட்சிக்கான இயக்கம் ஒரு முற்போக்கான தனது வரலாற்றுப் பாத்திரத்தை அப்போது ஆற்றிக் கொண்டிருந்தது.
அப்போதுதான் இலக்கிய உலகில் பாரதியின் யுகம் தொடங்குகிறது, அவன் வாழ்ந்த காலத்தில் ஏகாதி பத்தியத்தை துதி பாடி அடிமைத் தனத்தை அழகு பட வர்ணித்து பல கவிஞர்கள் வாழ்ந்தார்கள். அவர் களை எல்லாம் வரலாறு குப்பைத் தொட்டிக்குள் தள்ளி விட்டது. அழகியல் அம்சம் மாத்திரம் அவர்களை நிலை நிறுத்தும் வல்லமையைப் பெற்றிருக்கவில்லை.
ஆனல், பாரதி மாத்திரம் ஒரு யுகத்தின் கவிஞணுக வாழ்வதற்கு காரணம் என்ன? முதலாவதாக, அவன் ஒரு மகத்தான கவிஞன். அவனது கவித்துவத்தின் நயமும் சுவையும் அழகியலில் ஒப்பற்ற ஓரிடத்தை அவனுக்கு வழங்குகிறது. இரண்டாவதாக, அவன் ஒரு மக்கள் கவிஞன், அவன் மக்களை மாத்திரம் பாடவில்லை மக்களுக்காகவும் பாடினன். அதுவரை மேல்மட்ட வகுப்பினரின் நுகர்ச்சிப் பொருளாக இருந்த இலக்கிய துறையில் மக்கள் நடையை துணிந்து முன்வைத்து தமிழ்மொழியியலில் ஒரு புரட்சியையே உருவாக்கி ஞன். அதுவரை மன்னர் புகழையும், வணிகரின் வாழ் க்கையையும், மதங்களின் மேன்மையையும் பற்றிப் பாடிய இலக்கியத்தை மக்களுக்காக மக்களைப் பாட வைத்தான். மூன்ருவதாக ஆணுல் பிரதானமாக அவன் ஒரு முற்போக்கு கவிஞன் இந்தியாவில் அப்போது

Page 14
உருப்பெற்று வளர்ந்து வந்த தேசிய உணர்வையும் சுதந்திர தாகத்தையும், முற்போக்கு பூர்ஷவா ஜன நாயக இயக்கத்தையும், ஏகாதிபத்திய நிலபிரபுத்துவ எதிர்ப்பையும் அவன் சரியாக பிரதிநிதித்துவம் செய்தான்.
எனவே, அவன் ஒரு மகத்தான மக்கள் கவிஞன், முற்போக்காளன். இதனற்ருன் கம்பனுக்கு இல்லாத ஒரு கவர்ச்சி, வள்ளுவனுக்கு இல்லாத ஒரு வரலாற் றுப் பாத்திரம், இளங்கோவுக்கில்லாத ஒரு இடம் பாரதிக்கு இலக்கியத்தில் உண்டு. அவனுக்கு முந்திய கவிஞர்கள் அவர்கள் வாழ்ந்த சமுதாய அமைப்பை அப்படியே ஏற்று அழகு பட வர்ணித்து அதற்கு சேவை செய்தவர்கள், ஆனல் பாரதி அன்றைய பாரதத்தில் நிலவிய காலனியல் நிலபிரபுத்துவ சமுதாய அமைப் புக் கெதிராக மக்கள் அணியில் நின்று துணிச்சலோடு குரல் கொடுத்தான். இங்கு தான் அவனது தனிப் டே நடை உயர்ந்து நிற்கிறது.
- ப்ட"  ைஅட்சம். நானயத்தின் ཏ་ *சச் சித் திரட் தான பத்தின். மற்ருெரு பக்கமும் உண்டு. அதனை இப்போது பார்ப்போம். இங்கே தான் வாழ்ந்த கிராமிய சூழலில் ஏழை விவசாயியின் தெளிவற்ற கண்ணுேட்டத்தை அவன் பிரதிபலிக்கிருன். கருத்து முதல்வாதியின் இழிந்த உலகப்பார்வையுடன் அவன் கடவுளர்களைத் தொழு கிருன். பாட்டாளி வர்க்கப் புரட்சியையும், தொழி லாளவர்க்கத்தின் பாத்திரத்தையும் அவனுல் தெளி வாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவனது கற்ப னைகளும் கனவுகளும் பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சிக்கு அப்பால் செல்லவில்லை. எனவே அக்டோபர் புரட்சி வரை புரட்சியாளனுக இருந்து அதற்கடுத்த காலகட் டத்தில் அக்டோபர் புரட்சியை ஒரு வறிய விவசாயி யின் நோக்குநிலையில் ஆதரிப்பவனுக மாத்திரம் நின்று விடுகிருன். ஆயினும் அவன் அக்டோபர் புரட்சியை எதிர்க்கவில்லை அதே சமயம் பாட்டாளி வர்க்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்யவும் முடியாமல் மறைந்து விடு கிருன். அவனது கருத்து முதல்வாத சிந்தனை சிறிது சிறிதாக மாறி குறுகி மூடநம்பிக்கைகளைச் சாடும் சீர்திருத்தவாத கருத்தாக உருப்பெற்று இடைநடுவே நின்று விடுகிறது. பொருள் முதல்வாதியாக அவன் வளரவில்லே.
எனவே தான் பூர்ஷ்வா ஜனநாயக புரட்சியின் கலைத்துறை காவலனுக, ஒப்பற்ற மக்கள் இலக்கிய இராட்சதனுக, உயர்ந்து நிற்கும் அளவுக்கு அவன் ஒரு மேதையாக, தலைவனுக, இருக்கவில்லை. அவன் ஒரு கவிஞணுக மாத்திரமே மறைந்துவிடுகிருன். அவன் ஒரு வறிய விவசாயியின் கண்ணுேட்டத்தையே கொண் டிருந்தான். பாட்டாளி வர்க்க சிந்தனையைச் அவன்
பெற்றிருக்கவில்லை.
பூர்ஷ்வா ஜனநாயகத்தைப் பொருத்தளவில் அவன் ஒரு புரட்சியாளன். பாட்டாளி வர்க்கப் புரட்சியை ஆதரிக்கும் கருத்து முதல்வாத வறிய விவசாயியின் இரட்டைத் தன்மையை அவனது பாடலெங்கும் காண முடியும், இதோ:-

1. பாரதியும் உழவனும்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்து உழ வனை உறிஞ்சி வாழும் நிலப்பிரபுக்களை நிந்தனை செய் யும்போது விவசாயிகளின் வாழ்விலே மாற்றத்தை விரும்புகிறது அவனது உள்ளம். ஆனல் மறுபுறத்தில் அவனது அறிவோ கருத்து முதல்வாதத்தில் மூழ்கிக் கிடக்கிறது. எனவே அவன் விவசாயியை தெய்வமாகத் தொழுகிருன். தொழிலாள வர்க்கத்தைப் பற்றி அவ னல் பாடமுடியவில்லை. இங்கே அவனை ஒரு முற் போக்கு மக்கள் கவிஞனுகப் பார்க்கிருேம். மேதையை அல்ல. மன்னர் புகழ் பாடிய மற்றவர்களுடன் ஒப் பிட்டு அவன் வாழ்ந்த காலத்தில் அந்த அளவே ஒரு பெரும் முன்னேற்றம் என நாம் அவனை வாழ்த்து கிருேம்.
2. தேசிய பாடல்களும் - பாரதி கண்ட சமுதாய மாற்றமும்
அன்று முதலாளித்துவ ஜனநாயகத்திற்கான இயக் கம் வரலாற்றில் முற்போக்கு பாத்திரம் ஆற்றிக் கொண்டிருந்தது. அந்த இயக்கத்தை ஆதரித்து ஏகாதி பத்தியத்திற்கு எதிராக பாடும்போது அவனது ஒவ் வொரு பாடலும் எரி மலையாகக் குமுறுகிறது. "ஒளி படைத்த கண்ணினுய் வாவா’ என அவன் சுதந்திர இந்தியாவை சங்வி அழைக்கும் போதும்; “தாயின் மணிக்கொடி' யை சுதந்திர வீரர்களின் கையில் கொடுத்து புரட்சிப்படைக்கு ஆள் சேர்க்கும் போதும், தேசிய வீரர்கள் சிறையிலே வாடும் போது ‘கண்ணிர் விட்டோ வளர்த்தோம்’ என உருகிப்பாடும் போதும் அவனை புரட்சியாளனுகவும் அதே சமயம் கருத்து முதல்வாதியாகவும் காண்கிருேம். அவன் மக்களிலும் பார்க்க கடவுள் மீது நம்பிக்கை வைக்கிருன்.
மக்களை வறுமையில் இருந்தும் அடிமைத்தளையில் இருந்தும் விடுவிக்க வல்ல எதையுமே அந்த கருத்து முதல் வாதி ஆதரிக்கத் தயாராக இருந்தான். தெய் வங்களை மாத்திரம் அல்ல தேசியத் தலைவர்களை மாத் திரமல்ல அக்டோபர் புரட்சியைக் கூடத்தான்,
மக்களை அந்தளவுக்கு அவன் நேசித்தான். அவர் களுக்காக அவன் தனது கற்பனையிலே சிருஷ்டித்த கனவு உலகிலே மக்களுடன் ஒன்முக “சிந்து நதியின் மிசை நிலலினிலே’ தோணிகள் ஒட்டி விளையாடும் போதும் சரி 'வெள்ளிப்பனி மலை மீது” உலாவி ஆலைகளும், தொழிற் சாலைகளும் உருவாக்கும் போதும் சரி அவ னல் ஒரு முதலாளித்துவ சமுதாய அமைப்புக்கு அப் பால் செல்ல முடியவில்லை. ஆனல் அன்று அவன் கண்ட முதலாளித்துவ சமுதாய அமைப்பு அப்போது. நிலவிய நிலபிரபுத்துவ காலனியல் இந்தியாவை விட பெரும் முன்னேற்றம் கொண்டது. எனவே அவனது கற்பனை முற்போக்கானது,
3. பாரதியும் - அறியாமையும்
* பாட்டன் தோண்டிய கிணறு என்பதற்காக மூடன் உப்பு நீரைக் குடிக்கிருன்’ என பழமைப் பற்றைச் சாடும் போதும் ' சாதிகள் இல்லையடி
13

Page 15
பாப்பா' என பாலர்களுக்குச் சீர்திருத்த கருத்தைப் போதிக்கும் போதும் 'நெஞ்சில் உரமுமின்றி நேர் மைத் திறனுமின்றி” அந்த மரத்தில் பேயைக் கண்டு நடுங்கும் கோழையை' அச்சமில்லை அச்சமில்லை என துணிவூட்டும் போதும் பாரதி பாதித் தூரம் பொருள் முதல் வாதத்தை நோக்கி வந்து விடுகிருன். ஆனல் அப்போது இந்திய கிராமங்களில் வேரூன்றி இருந்த மதவாதம், தெய்வ நம்பிக்கை, அவனை பிடித்திழுத்து இடை நடுவே நிறுத்தி விடுகிறது. எனவே முதலா ளித்துவ சீர்திருத்த வாதியாக அவன் கருத்துத் துறை யிலும் நின்று விடுகிருன்,
4. பாரதியின் தமிழ் மொழிப் பற்று
மேலை நாட்டு மோகத்தினுல் தாய் மொழிப் பற்
றைத் துறந்தவர்களை மிக அழகாகத் தூற்றும் போது பாரதி ஒரு தேசிய வாதியாகவும் அதேசமயம்
* நாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணுேம்' எனக் கூறும் போது ஒரு விவசாயியின் குருட்டு வழிபாட்டுப் போக்கையும் அவனில் காணுகிருேம். இங்கே பாரதி ஒரு குறுகிய மொழிவாதியாக மாறிவிடுகிறர். உலக மொழிகளை எல்லாம் கற்றுணர்ந்த ஒரு மேதாவிக்குரிய இறுமாப் புடன் இவ்வாறு தீர்ப்பு கூறும் தகைமையும் உரிமை யும் பாரதிக்கில்லை.
ஆயினும் அதிலுள்ள ஏகாதிபத்திய எதிர்ப்புத் த்ன்மையும் அழகியலும் நிராகரிக்க முடியாதவை.
5. பாரதியும் - பக்திப் பாடல்க்ளும்
பாரதியின் கருத்து முதல்வாதக் கண்ணுேட்டம் அவன் வடித்த பக்தி பாடல்களில் மாத்திரமல்ல ஏனைய பாடல்களிலும் ஆங்காங்கே காணலாம். இந்த பக்தி பாடல்கள் கூட எளிமைக் காகவும் அழகியல் அம்சத்திற்காகவும் சாதாரண மக்களின் சமய சடங்கு களில் விரும்பி ஏற்கப்பட்ட ஒன்ருக இரண்டறக் க்லந்துவிட்டது 6. பாரதி கண்ட புதுமைப் பெண்
பாரதி கண்ட சமுதாய மாற்றம் எவ்வாறிருந் ததோ அவ்வாறே அவன் கண்ட புதுமைப் பெண்ணும் இருந்தர்ள். ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பென்ன பயனைத் தரும்’ எனக் கூறும் பெண் அதுக்குமுறை யர் ளர்களைச் சாடி பெண்களின் கல்விக்காக உரிமைக் குரல் எழுப்பும் போதும்’ மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்துவோம்’ என ஆண் ஆதிக்க வாதத்தை கனல்கக்கும் வார்த்தைகளால் க்ண்டிக்கும் போதும் அவன் ஒரு ஜனநாயகவாதியாக பெண் விடுதலைக்காகப் போராடும் ஒரு மக்கள் கவிஞ ஞக காட்சியளிக்கிருன்.
ஆனல் அவன் கண்ட புதுமைப் பெண் கூட முதலாளித்துவ சமுதாய அமைப்பிலே உலாவும் ஒரு சராசரிப் பெண்ணுக மாத்திரமே இருந்தாள். ஆயினும் அவள் நிலப்பிரபுத்துவ தளையால் பிணைந்து கிடந்த அடிமைப் பெண்ணை விட வெகு தூரம் முன்னேறிய
14

வளாக, சுதந்திரம் பெற்றவளாக இருந்தாள். இங்கே பாரதி பாரதப் பெண்ணின் முன்னேற்றத்தை விரும்பி அதற்காகக் குரல் கொடுக்கும் போது அவனது முற் போக்குப் பாத்திரம் நிறைவேறுகிறது-பூரணத்துவம் பெருவிட்டாலும் கூட.
ஆணுல் இன்று பாரதி கண்ட புதுமைப் பெண் காலாவதி ஆகிவிட்டாள். இனி பெண்களுக்கு விடு தலையை சோஷலிசப் புரட்சியே கொண்டுவர முடியும். இதற்காக பாரதியின் புதுமைப் பெண்ணை ஏளனம் செய்ய முடியாது. அவள் வரலாற்றில் ஒரு முற் போக்கு பாத்திரம் ஆற்றியவள். அவளுக்குரிய இடத்தை வழங்கியே தீரவேண்டும்.
7. பாரதியும் - அக்டோபர் புரட்சியும்
ரஷ்யாவில் 1917ல் நடைபெற்ற அக்டோபர் புரட் சிக்காக 'கா9:யின் கடைக்கண் பார்வைக்கு” நன்றி கூறும் பாரதி அதிலே மக்களின் பாத்திரத்தை மறுத் தளிக்கிருன் எனக் கூறுவோர் 'அதுதான் பாரதியின் இரட்டைத் தன்மை' என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கேள்வி இதுதான்,
பாரதி அக்டோபர் புரட்சியை ஆதரித்தாஞ) அல் லது எதிர்த்தான? நிச்சயமாக அவன் ஆதரித்தான். அப்படியானல் . . . . அவன் ஒரு முற்போக்காளன். இந்திய கிராமிய சூழலில் வாழ்ந்த ஒரு ஏழை விவ சாயினுல் அப்படித்தான் ருஷ்யப் புரட்சியைப் பாட முடியும். பாரதி ஒரு பாட்டாளிவர்க்கத் தலைவனுக இருக்கவில்லை, பூர்ஷ்வா புரட்சிக்கு சேவை செய்யும் ஒரு மகத்தான கவிஞணுக மாத்திரமே இருந்தான். ஆஞல் அவன் ஒரு பூர்ஷ்வாவாகவும் இருக்கவில்லை. எனவே தான் ருஷ்யப் புரட்சியை ஆதரித்தான். அவன் ஒரு ஏழை விவசாயியின் கண்ணுேட்டத்தைப் பிரதி பலித்தான். அதனல் அக்டோபர் புரட்சியை ஒரு கருத்து முதல்வாதியின் களங்கமில்லா நேர்மையோடும், உணர்வோடும் உற்சாகமாகப் பாடுகிருன்.
அவன் ஒரு மக்கள் கவிஞன் மக்கள் தலைவனல்ல அவன் வரலாற்றில் முற்போக்கு பாத்திரம் வகித்தான். அதே சமயம் கருத்து முதல் வாதியாகவும் திகழ்த் தான். அவனது பாடல்களுக்கு வரலாற்று ரீதியில் வேண்டிய இடத்தை வழங்கியே தீரவேண்டும். ஆயி னும் அவனது பாடல்களை விமர்சனம் எதுவுமின்றி மக்களிடம் இன்று கையளிக்க முடியாது. இன்று கூட அவனது பாடல்கள் பல சமுதாயத் தேவையை ஈடு செய்கின்றன, எனினும் அவனது பெரும் பகுதி படைப்புகளை வழங்கும் போது நாம் மக்களுக்கு எச் சரிக்கை செய்ய வேண்டிய தென்ன வென்றல்:- ஒன்று பாரதியின் கவிதையில் காணப்படும் அழகியல் தன்மை உங்கள் உள்ளத்தை அப்படியே கொள்ளைக் கொள் ளும் அபார சக்தி பெற்றவை. எனவே உங்கள் இரு தயத்தை அவை திருடிவிட்டு கருத்து முதல் வாதத்தை நிலைநிறுத்தி விடாமல் எச்சரிக்கையாய் இருங்கள் ! இரண்டு அவனது கவிதையில் உள்ள கருத்து முதல் வாதத்திற்கு அஞ்சி அவனையும் அவனது கவிதையையும் நிராகரித்து விடாதீர்கள்-உலகில் உள்ள மிகச் சிறந் ததில் ‘ஒன்றை இழந்து விடுவீர்கள்!'

Page 16
தந்தையை விட தாய்க்கே அதிக புரதச்சத்து தேவைப்படுகின்றது.
பேராசிரியர் காலோ பொன்சேக்கா
புரதச்சத்து இன்றி பெண்கள் உயிர்வாழ முடி யாது. அவ்வாறே குழந்தைகளும் ஆண்களும் புரதச் சத்து இன்றி உயிர் வாழ முடியாது. இவ்வாருகப் பெண்கள், குழந்தைகள் ஆண்கள் ஏன் புரதச்சத்து இன்றி உயிர் வாழ முடியாது என நீங்கள் வினவலாம். மனித உடலில் உள்ள சகல கலங்களும் புரதச் சத்தை உள்ளடக்கியே அமைக்கப்பட்டுள்ளன. புரதச் சத்தின்றி இளம் க - ங்கள் வளர்ச்சி அடைய இயலாது. முதிர்ச்சியடைந்த கலங்கள் தமது கட்டமைப்பை பராமரிக்க முடியாது. புரதச்சத்தை விட மாச்சத்தும் (கார்போஹைட் ரேடுகள்) கொழுப்புச் சத்தும் எமது உணவில் சேரவேண்டியது மிக மிக அவசியம், உடலின் உள்ளே நிகழும் செயற்பாட்டால் மாச்சத்திலிருந்து கொழுப்புச் சத்தும், புரதச் சத்திலிருந்து மாச்சத்தும் பெறப்படுகின்றது. ஆனல், மாச்சத்திலிருந்தோ அல்லது கொழுப்புச் சத்திலிருந்தோ புரதச் சத்தைப்பெற்றுக் கொள்ள முடியாது. எனவே பெண் கள், ஆண்கள் குழந்தைகள் சுகாதார வாழ்வு வாழ வேண்டுமேயாயின் அன்ருட உணவில் கட்டாயமாக புரதச்சத்து சேர்த்துக் கொள்ளப்படவேண்டும்.
குழந்தைப் பருவத்தில் புரதச்சத்து போதாமை காரணமாக க்வொசியொர்கோர் என்னும் நோய் உண்டாகின்றது. உடல் வளர்ச்சிக் குறைவு, தசை நார்கள் செயலிழத்தல் மானசீக அக்கறையின்மை, உடல் வீக்கம், ஈரலில் ஏற்படும் பாதிப்புகள் என்பன இந்நோய்க்கான பிரதான அறிகுறிகளாகும் காணுவின் ஃகா என்னும் பழங்குடி மக்களிடமிருந்தே இந்நோய் ' க்வொசியோர்கோர்’ எனப்பெயர் பெற்றது. 'காஞ’ மொழியில் "க்வொசியொர் கோர்' என்ற சொல்லின் பொருள்: ' இரண்டாம் குழந்தை பிறந்தபின் மூத்த sழந்தைக்கு ஏற்படும் நோய்” என்பதாகும். புதிதாகப் டறந்த குழந்தைக்கு சந்தர்ப்பம் அளிப்பதற்காக, தாயின் அரவணைப்பில் இருந்து விலகும் மூத்த குழந்தை உயர் வகைப் புரதச்சத்து கிடைக்கும் முக்கிய உணவான தாய்ப்பாலைக் குடிக்கும் சந்தர்ப்பத்தை இழக்கின்றது. * க்வொசியொர்கோர்’ அல்லது புரதச் சத்து பற்றக் குறை எந்த வயதிலும் ஏற்படலாம். ஆனல் குறிப்பாக தாய்ய்பால் நிறுத்தப்பட்டு புரதச் சத்து குறைவான உணவு வகைகளுக்கு குழந்தை மாற்றப்படும் போது இந்நோய் ஏற்படுகின்றது. வயது வந்தோரிடையே புரதச் சத்து பற்ருக்குறை காணப்படின், இயங்கும் ஆற்றல் குறைகின்றது; வேலை செய்யும் ஆற்றல் குறைகின்றது. பல்வேறு நோய்களுக்கு ஆளாகும்

தன்மை அதிகரிக்கின்றது. புரதச் சத்து பற்ருக்குறை காரணமாக பெண்கள், ஆண்கள், குழந்தைகள் இறப்= பதாகக் கூறினல் அது மிகைப்படுத்திக் கூறுவதாக அமையாது, வறிய நாடுகளில் புரதச் சத்து பற்ருக் குறையால் இறப்போர் எண்ணிக்கையில் பெண்களே அதிகமானேராவர். சம்பிரதாயபூர்வமான குடும்பங்களில் உடல் கூற்றுத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு புரதச் சத்து விநியோகிக்கப்படுவதில்லை. தாயானவள் கருவுற்றது முதல் குழந்தைக்கு தாய்ப் பால் வழங்க முடியும் வரை, புரதச்சத்து பற்ருக்குறை காணப் படுமேயானல், உடற் தேவைகளுக்கமைய குடும்பத்தில் தந்தையை விட தாய்க்கு அதிக புரதச் சத்து தேவைப்படுகின்றது. ஆளுல் இது நடை முறையில் வெகு அரிதாகவே கிடைக்கின்றது.
இலங்கை உட்பட பெரும்பாலான நாடுகளில் இன்று ‘புரதச் சத்திற்கு' பெரும் நெருக்கடி ஏற்பட் டுள்ளமையே முழு உண்மையாகும். இந்நாடுகளில் உற்பத்தியை விடத் தேவை அதிகரித்திருப்பதனல், அல்லது நியாயமற்ற விநியோக முறை காரணமாக அல்லது இவ்விரண்டும் காரணமாக, பெண்கள். ஆண்கள் குழந்தைகள் என்போரின் சுகாதார வாழ்விற்கு அவ சியமான புரதச்சத்து கிடைப்பதில்லை. இலங்கையில் 10 லட்சம் குழந்தைகளுக்கு மேற்பட்டோர் புரதச் சத்து கலோரிகள் பற்ருக்குறையால் நோய்வாய்ப்படு கின்றனர் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந் நிலைமைகள் காரணமாக ஏற்படும் சிக்கல்களினல் இவர் களில் பலர் இறந்துவிடுகின்றனர்.
மனிதனின் சுகாதார வாழ்விற்கு புரதச் சத்து இன்றியமையாத காரணத்தாலும், இலங்கையில் புரதச் சத்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதன் காரண மாகவும், பெறக்கூடிய புரதச் சத்தை நியாயமான முறையில் பகிர்ந்து கொள்வது மிக முக்கியமாகும். இவ்வாறு கூறும்போது ஒரு பிரச்சினை எழுகின்றது. சுகாதாரமாக வாழ்வதற்கு ஒரு மனிதனுக்கு நாளொன்றுக்கு எவ்வளவு புரதச் சத்து அவசியம்? வயது வந்தோர் உடல் வளர்ச்சியடைந்து முடிந்தவர்கள் தம்மைப் பராமரித்துக் கொள்வதற்கு மாத்திரமே அவர்களுக்கு புரதச்சத்து தேவைப்படுகின்றது. 1971ல் கூடிய உலக சுகாதார நிறுவனத்தினதும், உல்க உண்வு நிறுவனத்தினதும் கூட்டு நிபுணர் குழு பின்வருமாறு தீர்மானித்துள்ளது: வயதுவந்த ஆணுக்கு தனது நிறை யில் ஒவ்வொரு கிலோ கிராமிற்கும் 0.57 கிராம் அளவு புரதச் சத்து பால் அல்லது முட்டை மூலமாகக் கிடைத் தல் வேண்டும். வயது வந்த ப்ெண்ணெருவருக்கு தனது நிறையில் கிலோகிராம் ஒன்றிற்கு 0.52 கிராம் புரதச் சத்து கிடைத்தல் வேண்டும். இதன்படி கிட்டத்தட்ட" 55 கிலோகிராம் நிறையுள்ள ஆணுக்கு நாளொன்றிற்கு 30 கிராம் புரதச் சத்தும், கிட்டத்தட்ட 45 கிலோ கிராம் நிறை கொண்ட (100 இருத்தல்) பெண்ணுக்கு நாளொன்றிற்கு 23 கிராம் புரதச் சத்தும் அவசிய மாகும், புரதச் சத்து பால் அல்லது முட்டை வடிவில் பெறுவதாயின் மாத்திரமே மேற்படி அளவீடு பொருந்தும், ஆனல் இந்நாட்டில் மிகச் சிறு தொகையினருக்கே
15

Page 17
பால், முட்டை என்பன கிடைக்கின்றது. பால் அல்லது முட்டையிலிருந்து பெறக்கூடிய புரதச் சத்தை விட போஷாக்குக் குறைந்த புரதச் சத்து உள்ளடக்கிய காய்கறி ஊன் உணவு வகைகள் மூலம் பெரும்பான்மை இலங்கை மக்கள் புரதச் சத்தைப் பெறுகின்றனர் எனவே உடற்தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மேற் குறிப்பிட்டுள்ள புரதச்சத்து அளவீடுகளை விட அதிச அளவு புரதச் சத்தை உணவு மூலம் உட்கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே, இலங்கை ஆடவனெருவனுக்கு சராசரியாக தினசரி 12 அவுன்ஸ் புரதச்சத்து தேவைப்படுகின்றது.
இலங்கைப் பெண்களின் சராசரி நிறை ஆண்களை விடக் குறைவாக இருப்பதனல் அவர்களுக்கு சராசரி யாக தினசரி 1 அவுன்ஸ் புரதச் சத்து போதுமானது. பெண் கருவுற்றிருக்கும் போதும் குழந்தைக்குத் தாய்ப் பாலூட்டும் காலகட்டத்திலும் சராசரி அளவை விடக் கூடுதலாகப் புரதச் சத்து கட்டாயமாக உட்கொள்ள வேண்டும், கர்ப்பிணிகள் பெறும் உணவுச் சத்து வயிற்றில் வளரும் சிசுவினதும் கர்ப்பமுற்றிருக்கும் தாயினதும் சுகாதாரத்தை தீர்மானிக்கின்றது. 100 மிலிலீற்றர் தாய்பாலில் 1.2 கிராம் புரதச் சத்து உள்ளது. தாய்ப்பாலூட்டும் தாய் சராசரியாக நாளொன்றிற்கு 850 மில்லி லீற்றர் பாலை உற்பத்தி செய்கின்ருர்; அதாவது அவர் சராசரியாக 10 கிராம் புரதச் சத்து உற்பத்தி செய்கின்ருர்; எனவே இத் தாயின் சராசரித் தேவைகளுக்கு மேலதிகமாக குறைந்த பட்சம் 10 கிராம் புரதச் சத்தேனும் இவர் உணவாக உட்கொள்ள வேண்டும்.
கணவன் எவ்வளவு கடுமையாக உழைப்பவரா யினும், கர்ப்பிணி அல்லது தாய்ப்பாலூட்டும் தாயொ ருவர் இருக்கும் குடும்பத்தில் மேற்படி பெண் கண வன விடக் கூடுதலாக புரதச் சத்து பெறுவது கட்டாயம் அவசியமாகும். ஆனல் குடும்பங்களில் ஆண்கள் சிறு குழ்ந்தைகளின் தேவைகளையும் மீறி, கிடைக்கும் இறைச்சி அல்லது முட்டையில் கூடிய அளவைக் கோரி பெறுகின்றனர். உடலை வருத்தி உழைப்போருக்கு அதிக இறைச்சி-முட்டை அவசியம் என்ற நம்பிக்கையே இதற்கு அடிப்படைக்காரணமாகும். உடல் உழைப்பிற்கு அதிக அளவு புரதச் சத்து செலவிடப்படுகின்றது என்ற கருத்தை முன்வைத்தவர் லைஃபக் (Liebig) என்னும் பிரசித்திபெற்ற ஜெர்மன் இராசயன விஞ் ஞானியாவார். இது ஒரு தவருன கருதுகோள் என்பதை நாம் இன்று அறிவோம். உடல் உழைப்பினல் அதிக அளவு புரதச் சத்து செலவாகின்றது என்பதற்குச் சான்றுகள் இல்லை. 1889ல் 'ஹிக்”, விசிலென்ஸ்’ என்ற உடற்கூற்று விஞ்ஞானிகள் இருவர் 6000 அடி உயரமான சுவிட்சர்லந்து மலையில் ஏறி அப்பயணத்தின் போது சராசரி உழைப்பு நாள் ஒன்றில் செலவாகும் புரதச் சத்தே செலவாகியது என்பதை நிரூபித்துக் காட்டினர். இதன்படி குடும்ப உணவில் அதிக அளவு புரதச் சத்தை காம் உரிமையாக்கிக் கொள்வதற்கு ஆண்களுக்கு உயிரியல் விஞ்ஞான ரீதியான அடிப்படை
16

இல்லை. உடற் தேவைகளுக்கு ஏற்ப புரதச் சத்து பங்கிடப்படுமேயானல் வழக்கமாக ஆண்கள் பெறும் புரதச் சத்தின் அளவு குறையும் பெண்களும் குழந்தை களும் கூடுதலாகப் புரதச் சத்தைப் பெறுவார்கள்.
k X ár
ஏ க்கம்
சுபத்திரன்
வானில் கீழ்த்திசை யன்னல் திறந்தது. நிலக்காற்று, கடற்காற்று - பார்த்த நாளை பழமையெனச் சாற்றும். மோட்டார்ப் படகுகள் புதிய மாப்பிளைப் பர்ணியில் நிமிர்ந்து நடந்தன. வானின் பக்க நட்சத்திரங்கள் இறகு விரித்து வளைந்தன. பெற்ற குழந்தையை -மரணக் கரங்களில் கொடுத்த தாயென. கடல் இருண்டது. “என்ன தாமதம். மீனின்றதிகமாய் இருக்குமோ..? -அல்லது ‘போட்டுக் கேதும் நடந்து விட்டதோ? -முதலாளியின் ஈரல் குலையின் நடுக்கம். சொற்களில் ஏறி பவனி வந்தது. சொத்தின் மீது நினைவு மேய்ந்த அந்த வேளையில்..? “என்ன தாமதம். போனவர் இந்த மட்டில் கரைக்கு தட்ட வேண்டிய நேரமல்லவா..?’’ கடல் அலைகளின் மீது கரங்களால். --செய்தி எழுதி அனுப்பும் மீனவ தொழிலாளர் ஏங்கினர். இரண்டு ஏக்கமும். -இரண்டு வர்க்கமாய் இருண்ட கடலின் எல்லையைத் தேடின.
(நன்றி களனி - சித்திரை - ஆனி 1974)

Page 18
தேயிலையும் பத்து லட்சம் அடிமைகளும்
-ரோஹினி, 3, விரசிங்க
உங்கைக்கு அந்நியச் செலாவணியைப் பெற்றுத் ஆ இ க்கங்களின் தேயின் உற்பத்தி மிக உா தேவி உற்பத்தியில் மயோகப் LT S S S === கொழுந்தெடுப்போரில் 95 விதமாஞேர் டொவர். தேயிலைத் தோட்டங்களில் வேே செட்டம் தொழிலாளர்களில் 50% வீதத்திற்கும் அதிக மானுேர் பெண்கள், 18 வயதிற்குக் குறைந்த வேலை வாய்ப்புள்ளோரில் 62% சத வீதமானுேர் தோட்டங் கவிலேயே வேலை செய்கின்றனர். இவர்களில் 60% சதவீதமானுேர் பெண்கள்.
7s¬
வேலகள் அதிகம் சம்பளம் குறைவு
தேயிலேக் கொழுந்து பறிப்பதற்கு மேலதிகமாக, கொழுந்தை சுமந்து செல்லுதல், கொழுந்து நிறுத்து முடியும் வரை வரிசையில் நிற்றல் ஆகிய பணிகளையும் பெண்கள் செய்வதால், ஆண்களே விட அவர்கள் 1 மணித்தியாலம் மேலதிகமாக வேலை செய்கின்றனர்.
தேயிலே தோட்டத் தொழிலாளரி
( 1969
ஆண்டு ஆண்கள் Gшота
1959 - d. - 莒.齿岳
197) H . 7마 3 GG)
교 구교 : Ոէ) ኯ,88
교구 E.A. 罩,0置
1973 - . - 4. 교 7 5.83 盟。岛岛
I) 75 - 7. II
IG - 3.57 岳.卫尘
IG - 8. 位。°5
I978 GaFL "u — 8.9 - 5.78
I979 Gia L' - I3. IO - 2.
(மூலம் இலங்கைத் தொழிலாளர் வர்த்தமானப்பத்தி

கொழுந்து பறிப்பதற்கு மேலதிகமாக தே பிஇ ச் செடிகளே நடுதல், களேபிடுங்குதல் ஆகிய தொழில் களேயும் பெண்கள் செய்து வருகின்றனர். ஆணுல், ஆண்களின் சம்பளத்தைவிட பெண்களின் சம்பள்ம் 30% சதவீதம் குறைவு.
வேலே செய்யும் நாட்களைக் கொண்டே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படுகின்றது. தேயிலைச் செடிகளின் செழிப்பைப் பொறுத்து கொழுந்து பறிக்கக் கூடிய நாட்களின் எண்ணிக்கை பிரதேசத் திற்குப் பிரதேசம் கூடிக் குறையும், தோட்ட நிருவாகம் அதிக இலாபம் பெறக்கூடிய வகையில் தொழிலா ளர்களே வேலேயில் ஈடுபடுத்த இந்நிலைமை வழிவகுக் கின்றது"
தோட்ட நிருவாகம் ஆகக் குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்கு 109 நாட்கள் அல்லது ஆண்டொன்றிற்கு 218 நாட்கள் தோட்டத் தொழிலாளருக்கு வேஃப் வழங்க வேண்டும் என 1974ல் ஒரு சட்டம் பிறப் பிக்கப்பட்டது. ஆனுல் வாரமொன்றிற்கு எத்தனே நாட்கள் வேகி வழங்கப்பட வேண்டும் என சட்டம் உருவாக்கப்படவில்லே, எனவே வாரமொன்றிற்கு நாட்கள் மாத்திரமே வேலே வழங்கப்படுகின்றது. சில சமயம் தொடர்ந்து சில மாதங்கள் வேலே இருக்கும்; அடுத்து வரும் சில மாதங்கள் வேலே இல் லாமல் இருக்கக் கூடும்.
இலங்கையில் தேயிலேச் செய்கைக்கான பெருந் திட்டத்தின் கீழ் 1978ல் நடைபெற்ற ஆய்வின்படி தோட்டத்தில் நிரந்தமாக வசிக்கும் ஆண் தொழிலாளி ஒருவரின் சராசரி மாத வருமானம் 469 ரூபா 21 சத மாகும். (ஊழியர் சோலாப நிதிக்கு கழிக்கப்படவில்லே) பெண் தொழிலாள் ஒருவ்ரின் சராசரி மாத வருமானம் 328- ரூபாயாகும்.
என் மிகக் குறைந்த சம்பளத் திட்டம்
- 1978 ) 高 வித்தியாசம் வித்தியாசம் SS சதவீதத்தில்
m I. Ա. 1.8 . - . m . m 23.0
I.: É , H 38 25.3
- - 翌齿.品,- "
m R EG. E}
I, Elt) H. -
I.-3 IS
- 卫。岛岳 E.
호), II g."
骂。卫岳 .

Page 19
1969-1978 வரை தோட்டத் தொழிலாளரின் அடி படைக்குறைந்த சம்பளம் மேலேயுள்ள அட்டவணையி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண் பெண் வேறுபாட்டிற் அமைய வித்தியாசங்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன
1979 செப்தம்பர் மாதத்தில் ஆண் தொழிலாளி ஒருவரின் ஆகக் குறைந்த சம்பளம் நாளொன்றுக் ரூ. 13 சதம் 40 ஆகும். பெண் தொழிலாளி ஒருவரில் ஆகக் குறைந்த சம்பளம் ரூபா 11 சதம் 25 ஆகுப் மாதமொன்றிற்கு 25 நாள் வேலை செய்தால் (ஒ( போதும் நடைமுறையில் சாத்தியமில்லை ) பெண் தொழிலTS ஒருவரின் மாதவருமானம் ரூபா 287 சத 25 ஆகும்.
இச் சம்பளத்திலிருந்து பின்வரும் விடயங்களுக் பணம் கழிக்கப்படும்.
தொழிற் சங்க சந்தா, சம்பள முற்பணம்
உணவு
விழா முற்பணம்
வேறு விடயங்கள்.
உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத உண6 மாத்திரமின்றி, உடைகள், மண்ணெண்ணெய் போன் அத்தியாவசியப் பொருட்களே வாங்குவதற்கேனுட அவர்களுக்குப் போதிய பணம் கிடைக்கப் போவதில்லை வேலை செய்த நாட்களுக்கு ஏற்பவே தோட்ட தொழிலாளர்கள் லீவு பெற முடியும்.
தோட்டத் தொழிலாளர்கள் அனைவருமே கடு!ை யான சுரண்டலுக்கு ஆளர்க்கப்பட்டுள்ளனர். இவ களில் தோட்டத் தொழிலாளப் பெண்கள் பல மடங்கு களால் சுரண்டப்படுகின்றனர்.
சுகாதார நிலமைகள்
இலங்கையின் தேசிய மட்டத்துடன் ஒப்பு நோக்கு போது தோட்டங்களின் சுகாதார நிலைமைகள் ப மோசமாகும். தோட்டத் தொழிலாளரிடையே, குறி பாக பெண்கள் மத்தியில் போசாக்கின்மை இரத்த சோகை அதிக அளவில் காணப்படுகின்றன.
தோட்டங்களில் மருத்துவமனைகளுக்குப் பதிலா சிறு மருந்தகங்களே (டிஸ்பென்சரிகள்) உள்ளன. பயிற் பெற்ற தாதிமாரோ அல்லது திறமையான வைத்திய களோ இங்கில்லை. பெரும்பான்மையாக தோட்ட களைக் கொண்ட ஊவா மாகாணம், மத்திய மாகாணப் சப்ரகமுவ மாகாணம் ஆகிய பகுதிகளில் பணியாற்று வைத்தியர்களின் தாதிமார்களின் எண்ணிக்கை தேசி மட்டத்துடன் ஒப்பு நோக்கும் போது மிகக் குை வாகும். கீழ் வரும் அட்டவணை மூலம் இது நன் தெளிவகின்றது.
8

う
வைத்தியர்கள் (சனத்தொகையில் 1 லட்சம் பேருக்கு)
தேசிய மத்திய ΦώYI6) 1 Π சப்ரகமுவ மட்டம் மாகாணம் மாகாணம் LOIT 5Ff357 s)
257 15.2 13.2 13.4
தாதிமார் (சனத்தொகையில் 1 லட்சம் பேருக்கு)
தேசிய மத்திய 3GI3)) fT சப்ரகமுவ மட்டம் மாகாணம் Lpr5 i T6007 Ld மாகாணம்
50.8 29.4 24.l 34.6
தோட்டப் பகுதிகளில் பிரசவ வைத்தியசாலைகள் கிடையாது, சுமார் 10 X 12 சதுர அடி பரப்பளவான லயங்காமராக்களிலேயே பெண்கள் குழந்தைகளைப் பிரசவிப்பார்கள். இந்த அறைகளில் கட்டிலோ அல்லது வேறு தளபாடமோ இல்லை, பிரசவ வைத்தியசாலை களுக்குச் செல்வதாயின் தோட்டங்களில் இருந்து பல மைல்கள் செல்ல வேண்டும். அதற்குப் பிரயாண வசதிகள் கிடையாது. ஒரு சமயம் பிரசவ வேதனை யால் அவதிப்பட்ட பெண்ணுெருவர் ட்ராக்ட்டரில் எடுத்துச் செல்லப்பட்டபோது நடுவழியில் உயிர் துறந்தார்.
பிரசவத்திற்கு முன்னர் இருவாரங்களும் பிரசவத்திற்கு பின்னர் மூன்று வாரங்களும் மாத்திரமே பிரசவ விடு முறை கிடைக்கிறது. 8 மாதக் கர்ப்பிணியாக இருக்கும் போதும் வேலை செய்ய வேண்டும் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது. இத்தகைய தாய்மார் கொழுந்துக் கூடையையும் சுமந்து கொண்டு சுமார் 9 மணி நேரம் நின்று கொண்டே பிரசவத்திற்கு முன்னரும் வேலை செய்ய வேண்டியுள்ளது. பின்னரும் இவ் வாருக மனிதாபிமானமற்ற முறையில் வேலை வாங்கப் படுவது பெரும் வேதனைாகுரிய விடயமாகும். இத் தகைய நிலைமைகளின்கீழ் தோட்டங்களில் பிரசவங்களில் போது ஏற்படும் தாய் சேய் மரண விகிதாதா சாரம் தேசிய மட்டத்துடன் ஒப்பிடும் போது இரு மடங்காக உயர்வது ஆச்சரியத்திற்கு உரியதல்ல.
தாய்மாரின் மரணம் குழந்தைகள் மரணம் (1000 பேருக்கு) (1000 பேருக்கு) தேசிய தோட்டப் தேசிய தோட்டப் மட்டம் பகுதிகள் மட்டம் பகுதிகள் 15 27 52.7 II 0
பின்வரும் வரைபடம் மூலம் தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ள மாவட்டங்களில் குழந்தைகள் மரண விகிதாசாரத்தை மிகத் தெளிவாக அறிய முடிகிறது.

Page 20
g(4.
O 20-39
a/N AC) - SS) 69-CO ܛܠܢܡܰ>܀
3 "to-93
தமது குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவ, தோட்டப் பகுதிக3 ன் தாய்மாருக்கு விசேட ே ஒதுக்கப்படுவதில்லே. குழந்தைகளுக்குப் பாலூட்ட ே டிய நேரத்தில் தேயிலை மலைகளில் இருந்து இறங்கி பி மடுவத்திற்கு ஒட்டமும் நடையுமாக வரவேண் குழந்தைகளுக்குப் பாலை ஊட்டிவிட்டு சொற்ப நேர யும் வீணுக்காது திரும்பவும் தேயிலை மலைக்கு ஒட வேண்
இந்தப் பிள்ளை மடுவங்களில் உள்ள குழந்தைகளு கட்டில்களோ வேறு வசதிகளோ இல்லை. தோட்ட ( களுக்கு மேலதிகமாக வீட்டு வேலைகளையும் செய்வ தோட்டப் பெண்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளமை தமது குழந்தைகளைப் பராமரிக்க அவர்களுக்கு பே நேரங்கிடைப்பதில்லை அத்துடன் போதிய தண்ணிர் கள் இல்லாமையால் குழந்தைகளே சுத்தமாக வைத்தி முடிவதில்லை.
குடும்ப நல வசதிகள்
மிகக் குறைந்த வாழ்க்கைத் தரங்கள், ஏனைய பீனங்க : காரணமாக தோட்டப் புறங்களில் குடும்ப திட்டங்கள் தோல்வியிலேயே முடிந்துள்ளன. எ தோட்டப்பெண்கள் அடிக்கடி குழந்தைகளைப் பிரச நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக தோட்டங்களில் வ மக்கள் பல நோய்களால் பீடிக்கப்பட்டுள்ளனர். ெ
நிலை குறைந்த மலைப் பிராந்தியங்களிலேயே தேயி
 

தோட்டங்கள் அமைந்துள்ளன. குளிரிலிருந்தும் பனியிலிருந்தும் தம்மைப் பாதுகாப்பதற்கு அவர் களுக்குப் போதிய வசதிகள் இல்லை. எனவே, குளிரிலும்-பனியிலும்-மழையிலும் வேலை செய்ய அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சுவாசத் தொகுதியுடன் தொடர் பான பல நோய்களுக்கு அவர்கள் ஆளாகின்றனர்.
தேசியமயத்தின் பின்னரும் முன்னேற்றம் இல்லை.
தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்ட பின் தோட்டச் சுகாதார சேவை தேசிய சுகாதாரச் சேவையுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஆனல், இன்றும் தோட்டச் சுகாதார சேவையில் எதுவித மாற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்தும் தோட் டத் தொழிலாளர் ஒருவருக்கு ஆண்டொன்றிற் குக் கிடைக்கும் வைத்திய நிவாரண உதவி 50 சதமாகும். சுகாதார சேவைகள் பணிப்பாளரால் அங்கீகரிக்கப்பட்ட மருந்து வகைகளும் தோட்டங் களுக்குக் கிடைப்பதில்லை. தோட்டத் தொழி லாளி ஒருவர் அரசாங்க வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்ருல் தோட்டத்துரை அந்நோயாளி யின் சார்பில் நாளொன்றிற்கு 5 ரூபா 60 சதம் அரசாங்க வைத்திய சாலைக்குச் செலுத்த வேண்
டும்.
தோட்டத் தொழிலாளர்களில் 89% சத வீதம் 10 X 12 சதுர அடி பரப்பளவு கொண்ட லயன் காமராக்களிலேயே வாழ நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர் இச்சிறு லயன் காமராக்களிலேயே உணவு சமைக்கவும் நித்திரை செய்யவும் வேண்டி யுள்ளது. இலங்கையில் மிக நெருக்கமாக வாழும் மக்களில் 75% சதவீதமானேர் தோட்டங்களி லேயே வாழ்கின்றனர். இவர்களின் லயன் காமராக்களில் கதிரை, மேசை, கட்டில் போன்ற எதுவித தளபாடங்களும் கிடையாது. லயன் களுக்கென மலசலகூட வசதிகளும் ஒழுங்கான தண்ணிர் வசதிகளும் இல்லை.
ᏪᏐᎭ- *tru" .
தோட்டத் தொழிலாளர் குடும்பம்
மண் சரிவுகள் ஏற்படும் சில இடங்களிலும் லயன்காமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல
19

Page 21
ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மண் சரிவொன்றின்
w -് போது இத்தகைய லயன்களில் வாழ்ந்த 4. 9தாழ லாளர்கள் மண்சரிவினுல் பாதிக்கப்பட்டு இறந்தனர்
யன் காமராக்களின் நிலைமைகளை அபிவிருத்தி செட் வதற்கும், புதிதாக சிறு வீடுகளை அமைப்பற்குட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனல் தோட்டப் பகுதி களின் குடியிருப்புப் பிரச்சினையின் சிக்கலான தன் மையை எண்ணிப்பார்க்கும் போது இத்திட்டம் எது விதத்திலும் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது.
கல்வி
ஏைேய சகல துறைகளையும் விட கல்வித்து.ை யிலேயே தோட்டப்பகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று கூறினுல் மிகையாகாது. தோட்டப்பகுதிகளின் கல்வி மட்டம் மிகக் கீழ் மட்டத்திலேயே உள்ளது.
.t, gi: slí. It i Lir a 955íig5;¡5968)
இலங்- நகர்ப் கிராமப் தோட்ட ତ୪) is புறம் புறங்கள் i பகுதிக
Lut Laftësi digji Gogo Gu GJIT Fř 7.5 II, 4 1 5 - 8 38.9 எண்ணிக்கை
ஆரம்பப் பாட
சாலை வரை 44,6 37.8 45.4 50 கல்வி கற்ருேர் மத்திய தரங் கள் வரை 30.4 37.8 31, 7 88 கல்வி கற்றேர்
க. பொ. த. (சாதாரணம்) சித்தியடைந்
6.6 11.0 6.3 l نه தோர் -
க. பொ. த. (உயர்தரம்) . ܕ
சித்தியடைந் 6.9 11.0 O8 0.0 தோரி
இவ்வூட்டிவணையின்படி நாட்டின் ஏனைய பிரதேச களுடன் ஒப்பிடும் போது தோட்டத் தொழிலாள மத்தியில் கல்வி " அறிவு பெற்றேர் மிகக் குறைவு இந்நிலைமை கீழ்வரும் அட்டவணை மூலம் மேலு!
உறுதிப்படுத்தப்படுகின்றது.
நகர்ப் கிராமப் στος, ο : - புறங்கள் புறங்கள் பகுதிகள் ಸ್ಥಿಞ್ಞತ್ತಿ 88.7 84.3 61.2
ಜ್ವಞ್ಞತಿ II, 53 16.7 38.8
தோட்டப் பகுதிகளில் விசேடமாக பெண்க: மத்தியில் எழுத வாசிக்கத் தெரிந்தோர் எண்ணிக்ை மிகக் குறவுை.
20

if
r
தோட்டப்பகுதிகளில் பெண்கள் மத்தியில் 51% சதவீதமானேர் எழுத வாசிக்கத் தெரியாதோராவர். ஆண்களில் 26.8% சதவீதமானுேருக்கு எழுத வாசிக்கத் தெரியாது. இந்நிலைமை காரணமாக சிறுமிகள் தமது தம்பி தங்கைகளைப் பார்த்துக் கொள்வதற்கென ஈடு படுத்தப் படுகின்றனர், அல்லது வேலைக்காரச் சிறுமி களாக வேறு பிரதேசங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். 14 வயது வரை சிறுவர்கள் கட்டாயமாக பாடசாலைக்கு அனுப்பப்படவேண்டும். இச்சட்டம் தோட்டப்பகுதி களில் அமுலாக்கப்படுவதில்லை. தோட்டப் பகுதிகளில் வாழும் சிறுவர் சிறுமியர் தமது 14 வயதிலும் தோட் டத்தில் வேலை பெறலாம்.
தோட்டப்பகுதிகளில் பாடசாலைகளுக்குச் செல்வோர் வயது விகிதாசாரம்
வயதெல்ல ஆண்கள் பெண்கள்
5- 9 58.5 57.7
10-14 69.2 49.5
15-19 20.8 6.7
(கல்வி அமைச்சின் புள்ளி விபரங்கள்)
தோட்டப் பாடசாலைகளில் 5ம் தரம் வரை மாத் திரமே வகுப்புகள் உண்டு. முழுப் பாடசாலையிலும் ஒர் ஆசிரியர் மாத்திரமே கடமையாற்றுவார். எழுத்து, வாசிப்பு, எண்கணிதம் தவிர்ந்த வேறு பாடங்கள் இங்கு போதிக்கப்படுவதில்லை, வகுப்பறைகள் காற்ருேட்டமும் வெளிச்சமும் இல்லாத இருட்டறைகளாகவே காட்சி தருகின்றன. இங்கு கதிரை-மேசைகள் போதியளவு கிடையாது. கரும்பலகை உட்பட ஏனைய வசதிகளைப்
பொறுத்தவரையும் நிலைமை இத்தகையதே.
சமூகப் பொருளாதார தீர்வு
தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்ட பின் தோட் டத் தொழிலாளர்களின் சுகாதாரம், கல்வி, குடியிருப்பு வசதிகள் என்பன அபிவிருத்தி செய்வதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. யுனிசெஃப் உட்பட்ட பல சர்வதேச நிறுவனங்களும் இத்துறையில் உதவி வருகின்றன. ஆனல் தோட்டத் தொழிலா ளரின் அடிப்படை தேவைகள் கூட இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை.
தோட்டத் துறையில் நிலவும் மோசமான நிலை மையை நோக்கும்போது அரசாங்கத்தின் புதிய வேலைத் திட்டங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதி எதுவிதத் திலும் போதாது, எனவே எதிர்காலத்தில் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமை முன்னேற்றம் அடையும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை.
இத்தோட்டத் தொழிலாளருக்கென நாடு ஒன் றில்லை; வாக்குரிமை இல்லை. எனவே தமது வாழ்க்கை நிலைமைகளை முன்னேற்றுவதற்கு அரசியல் அதிகாரம் கிடையாது. தொழிற் சங்கங்களில் அங்கத்துவம் வகிக்கும் உரிமை மாத்திரமே அவர்களுக்குண்டு. வரையறுக்கப்பட்ட சில தொழிற்சங்க உரிமைகளை மாத்திரமே தொழிற் சங்கங்கள் மூலம் வென்றெடுக்க (1Քւգսյւb.
(தொடர்ச்சி 26ம் பக்கம் பார்க்க.)

Page 22
சிறுகதை!
உணர்வுகளின்
விழிப்பு
கே. ஆர். மாணிக்கம்
கணேசன் தன் வீட்டு வாசல் நிலப்படியைப் பிடித்தபடி பிரக்ஞையற்ற நோக்கோடு முற்றத்தைப்
பார்த்துக்கொண்டு நின்றன்.
"இருடி ராஸ்கோல் உன்னுடைய தோனே உரிச் கிறேனு இல்லையா பார்?' கையை உயர்த்திக் காட்டி உரக்கக் கத்துகிறர் வடிவேலு.
வவ்வவ்வே" காட்டிவிட்டு கன்றுக்குட்டியைப் போல
துள்ளி ஓடுகிருள் சுதா,
இரண்டே எட்டில் அவனே எட்டிப்பிடித்துவிட முடியும். ஆணுல் அவர் அவளே மடக்க விரும்புவதில்லே,
தோற்றுப் போனவரைப் போல 'பாவலா" காட்டிச்
கொண்டு "வீட்டுக்கு வா பண்டி செம்மையாக தரு கிறேன்" என்று கூறிக்கொண்டே வாயிற்படியில் உட் கார்ந்து கொள்கிறர்.
ஐந்து வயதே நிரம்பிய களிதுள்ளும் முகத்தின் சொந்தக்காரியான சுதா தன் பாட்டனுரின் தாடியை இழுத்துவிட்டு ஓடுவதும், அவர் ஒரு தடியை வைத்துச் கொண்டு வீட்டிற்கு முன்னுலுள்ள தோட்டத்தை சுற்றிச்சுற்றி அவளத்துரத்துவதும், அடிக்கடி நடக்குப் மேடையேரு நாடகங்களாகும்.
சவிப்புத்தட்டாத இந்த நாடகத்தில் தன்னே மறந்து அவன் மனம் லயித்துப் போகிருன்.
'தன்னுடைய எதிர்கால பேரப்பிள்ளைகளும் இட் படித்தான் தன்னுேடு குறும்பு செய்வார்களோ? அவனுடைய கற்பனே கிளே பரப்பும்போது அவன் உன் ளம் சிலிர்க்கிறது; முகத்தில் மெல்லிய புன்னகை இ!ை யோடுகிறது.
"தொப் தொப்' என்ற சத்தத்தாலும் "அடிக்க தேம்மா அடிக்காதேம்மா' என்ற அலறலாலும், சற்! முன் புன்னகை பூத்த அவன் முகம் கறுத்து கும்பி மலராகிவிட்டது சூனியத்தை ஊடுறுவுவதைப்போ விரக்தியோடு சமையற்கட்டைப் பார்க்கிருன். அவர் மனேவி 'பத்திரகாளி' போல் நிற்க சின்ன மகன் விக் விக்கி அழுகிருன்.
எனப்பா அவனேப்போட்டு அடிக்கிறே' இவ்வார் தையை எதிர்பார்த்து இருந்த்வன் போன்று, "அப்ப அப்பா" என்று பரிதாபமாக அவன் முகத்தைப்பார்த் அழுகிருன் "கேள்வியில் குறைச்சல் இல்லை. கா.

莒 }
யிலிருந்து பட்டினியாக பிள்ளேகள் கிடக்கேன்னு உங்க ஞக்கு நினைப்பிருக்கா? பானையில் அரைச்சுண்டு குறனே
தான் கெடந்துச்சி, அதைப்போட்டு கஞ்சி வைத்திருந்
தேன். நானு தளத்திக்கப்போறேன்? இதுகளுக்குத் தானே ஊத்தப்போறேன்? அதற்குள்ளே இந்த சEரிய ணுக்கு எவ்வளவு அவசரம், ஓடி வந்து இவ்வளவு கஞ்சி யையும் கொட்டிவிட்டானே" வேதனையோடு அலுத்துக் கொள்கிருள்.
நிலமையைப் புரிந்துக்கொள்ள முடியாத அளவுக்கு அவன் மூளே இன்னும் செல்லறித்துப்போகவில்லே, என்ருலும் பிஞ்சு உள்ளத்தின் கேவல் ஒலி அவன் ஆத்மாவைக் கிள்ள 'இவனே அடித்துவிட்டால் கஞ்சி வந்துவிடுமா?’ சூடாகவே கேட்கிருன்,
'நீங்சளும் ஓர் ஆம்பிளேயாட்டம் இப்படியே வீட்டில் அடைந்துக்கிடந்தால், இனி நான்தான் [୍ଵiଶif பில் போய் சம்பாதிக்கனும்." ஆற்ருமையினூல் பேஜ் மை சீறுகிறது.
எண்ணற்ற இரவுகள் தன்னுடைய ஆண்மைக்கு அடங்கிப்போனவள், தன்னுடைய ஆண்மையை சந் தேகிக்க முடியாதென்பதையும், வெளியில் போய்தான் சம்பாதிக்க வேண்டும்' என்ற அவளுடைய கேள்வியின்
அர்த்ததத்தையும் அவன் விளங்கிக்கொள்ளாமல் இல்லே
அவள் மீது கோபப்படுவதற்கு மாருக இரக்கமே கொள்கிருன் "அவளும் என்னிடம் வந்தபோது விரிய முள்ள எந்த ஆண்மகனும் திரும்பிப்பார்க்கும் வண்ணம் கவர்ச்சிமிக்க அழகியாகத்தானே இருந்தாள். வறு மைக்கு விளம்பரமாக இன்று நிற்கிருளே' வார்த்தை கள் முணுமுணுப்பாக காற்ருேடு கலக்கின்றன.
'உலகத்திலுள்ள முதலாவது ஜனநாயக நாடு எமதே' என்று கூரை மீது நின்று கூவும் இந்த அரசு வேலை நிறுத்தக்காரர்கள் மீது இவ்வளவு கெடுபிடியாக இருக்குமென்று இவன் எ ர்பார்க்கவில்லை. "நாங்கள் விலக்கவில்லை. அவர்களாகவே விலகிக்கொண்டார்கள் அரசு தார்மீகம்" பேசிக்கொண்டிருந்தது. エ
'நாங்கள் வேலே நிறுத்தம் செய்யப்போகிருேழெ) ன்று கூறியபோது நீயும் தானே அதற்கு சிரதிகமாகப் பேசிஞய்? இப்போழுது ஏன் குை றப்பட்டுக்கொள்கி ரூப்' கம்"
'சாமான்கள் விலை இப்படியே கூடிக்கொ ண்டு போகுல் எப்படி வாழ்க்கை நடத்துவது? அரச்ையும் அதன் தார்மீகத்தையும் மனம்போல வசைப்பாடி அரச பூசை' நடத்தினுள். ஒவ்வொரு ஏழையின் வீட்டிலு: இந்த அரச பூசை தினசரி நடந்தேறிக்கொண்டுதான் இருக்கிறது.
வேலே நிறுத்தத்தின் தாக்கம் பெண்களேயே பெரும் சுமையாக அழுத்துகிறது. வெளியில் சென்றுவிடும் ஆண்கள் ஒரளவேனும் அதன் பாதிப்பிலிருந்து தப்பு முடிகிறது. பிஞ்சுகளின் எறியும் கும்பிகளைக் குளிரச் செய்வதற்கு குடும்பத்தலேவிதானே போராட வேண்டி
இருக்கிறது.
고 1--

Page 23
பாடசாலையிலிருந்து அவனுடைய மகள் சோர்ந்து கலைத்துப்போய் வருகிருள். அவளுடைய புத்தகங்களுக் கிடையில் ஏதோ முட்டிக்கொண்டிருப்பதை அவன் அவதானிக்கிருன். “அது என்னம்மா?’ அவன் சுட்டிக் காட்டி கேட்கும்போது, மிரள மிரள விழித்துக்கொ ண்டே அவளுடைய தாயின் கையில் அதைக்கொடுக்
அவள் அதைப்பிரித்துப் பார்க்கிருள். ஈரப்பலாக் காய் பிஞ்சுகள் இரண்டு அதனுள் ஒளிந்துகொண்டு இருக்கின்றன. "யாரம்மா இதைக் கொடுத்தது?’ ஆதரவோடு மகளிடம் கேட்கிருள்.
“யாரும் கொடுக்கலேம்மா. பாடசாலேயிலிருந்து வரும் வழியிலுள்ள மரத்தின் கீழ் விழுந்துகிடந்தன. வேறு சில பிள்ளைகளும் எடுத்தார்கள். அதனுல் தான் நானும் எடுத்தேன்” அம்மா திட்டுவாளோ, அடிப்பாளோ என்ற எதிர்பார்ப்பு கண்களில் 'மின்னுகின்றது.
தாய்மையின் வேதனையால் உள்ளம் கணக்க கண்கள் பனிக்கின்றன. அவளை ஏரிட்டு வெறித்துப்பார்க்கிருள். சற்றுநேர மெளனத்திற்குப்பின் ஏதோ முடிவுக்கு வந்தவளாக காய்களை எடுத்துக்கொண்டு சமயலறைக்கு போகிருள்.
** வேறு சில பிள்ளைகளும்’ மகள் கூறியதை அவன் மனம் அசைப்போடுகிறது. "வேலே நிறுத்தத்தால் தண்டிக்கப்பட்டவர்களின் பிள்ளைகளாகத்தான் இருப்பார்கள்' மனதின் ஆழத்திலிருந்து வெளிவரும் சூடான காற்று பெருமூச்சாக வெளியேறுகிறது.
வேலை நிறுத்தக்காரர்கள் இன்று ஊர்வலம் செல்ல இருப்பூது அவன் நினைவ்ைத் தொடுகிறது. அவன் ஊர் வலத்தில் பங்கு பற்றுவதைப்பற்றி இறுதி முடிவு செய்ய வில்லை. இந்நாட்டு அரசியல் குளறுபடிகளால் அவன்
மனம், ம்சப்புத்தட்டி போய்விட்டது. என்ருலும் முற்ருக சாகடிக்கப்படாத அவனுடைய நம்பிக்கைகள்
ஆத்மாவின் விளிம்பில் ஒளிக்கீற் பிரகாசித்துக் கொண்டுதான் இருக்கிறன?” m
தொழிற்சங்கக் காரியாலயத்திற்குப் போனல் மற்ற
ரடு’* தன்னுடைய உள்ளுணர்வுகளே பங்கீடு இயே முடியுமென்று 'சீலை மோல் பக்கம் கொஞ்சம் போய்விட்டு வருகிறேன்’ என்று புறப்படுகிரு:ன்.
淑
r
சற்று முன் தன் கணவனே எடுத்தெரிந்து பேசியது **அவள் உள்ளத்தில் முள்ளாக உறுத்துகிறது. ‘இரவு எப்படியும் சமாதானப்படுத்தி விடலாம்' என்ற நம்பிக்கை துளிர்க்க கூறினுள் 'கொஞ்சம் இருங்க, பல்ாக்காயை அவித்துவிட்டேன் ரெண்டு துண்டு சாப் பிட்டு விட்டுப்போங்கள்'
வெறும் உப்பை மாத்திரம் போட்டு அவித்த பலாக் காயை சுவைத்து - ரசித்து சாப்பிட முடியுமா? இரண் டொரு துண்டுகளை பலாத்காரமாக தொண்டைக் குழிக்குள் தள்ளிவிட்டு வெளியேறுகிருன்.
“வீட்டில் ஒரு சதமுமில்லை, யாரிடமாவது ஒரு பத்து ரூபா காசாவது வாங்கிக்கொண்டு வாங்கள்’
துணைவி இரைந்து கத்துகிருள்.
22

நெசவாலைக்கு முன்னுலுள்ள காரியாலயத்தை அவன் அடைந்தபோது, பலர் அங்கு தங்களுடைய கோரிக்கைகளை சுலோக அட்டைகளில் எழுதுவதிலும், பதாகை தயாரிப்பதிலும் சுறுசுறுப்பாக ஈடுபட்டு இருக் கிறர்கள். எத்தனையோ பிரச்சினைகளுக்கும் துன்பங் களுக்கும் மத்தியில் விடாப்பிடியான நம்பிக்கையோடு அவர்கள் இயங்குவதைக் கண்டு அவன் வெட்கிப் போகிரு:ன்.
இதோ ஊர்வவம் ஆரம்பமாகிவிட்டது. 6; நூருக வியாபித்து ஊர்ந்துச் செல்லும் அந்த ஊர் வலத்தின் இரைச்சலில் 'ஒரு பத்து ரூபா காசாவது வாங்கிக்கொண்டு வாருங்கள்’ என்ற கோரிக்கை உயி ரற்றுப்போகிறது. அலே அலையாக ஊர்ந்துச் செல்லும் ஊர்வலத்தில் அவனும் பங்காளியாகி அதில் சங்கம மாகி விடுகிறன். ஊர்வலம் மெல்ல மெல்ல ஆனல் உறுதியாக கூட்டம் நடக்கும் திடலை நோக்கி முன் னேறுகிறது.
‘அங்கே பார், அங்கே பார்! ஆச்சரியத்தால் விரிந்த கண்களோடு அவன் நண்பன் சோதி ஊர்வலத் தில் ஒர் இடத்தை சுட்டிக்காட்டுகிறன்
‘ எந்த உந்து சத்தி அவ3 இங்குப் பிடித்துத் தள்ளியது? பெரும் வியப்பில் அவன் திளைத்துப்போகி
“உங்களுக்கு நான் சளைத்தவள் அல்ல’ என்று கூறு வதைப்போல், அவன் மனைவி தன் சின்ன மகனின் கையைப் பிடித்தபடி ஊர்வலத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிருள்.
- k -
'ஜனங்களே நீங்கள் தான் இந்தப் பூமிக்குச் சொந்தக்காரர்கள். அரசாட்சியார் உங்களிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு உங்களுக்கு வேலை செய்யும் தொழும்பர்கள். அரசாட்சியார் சரி யானபடி வேலை பார்க்கவிட்டால் அதைமாற்றும் சக்தி உங்களுக்கு உண்டு. உங்களுடைய சுதந்தி ரங்களையும், உரிமைகளையும் அறிந்து கொண்டு சட்டத்திற்கிணங்கிய காரியங்களிலே தலையிடு வோர்களை சிறிதேனும் தாட்சணியமின்றி எவ் விதங்களாலும் அடக்கி விடுங்கள் மனத்துணி வுடையவர்களிடம் போலிஸாரின் குறும்பு செல்ல மாட்டாது. மனத்துணிவுடையவர்களை பிசாசுகூட அணுகாது.”
- பாரதியார் 1907 GBlo 4

Page 24
ஒரு பகிரங்கக் கடிதம்
இடதுசாரி தீவிரவாதிகளும் பெண்கள் பிரச்சினையும்
frans Hipi 13) 13 TIJ IJIT
இலங்கையின் தேசிய அரசியலில் கடந்த 40 வருட ங்களுக்கு மேல் "இடதுசாரி தீவிரவாதம் முக்கியத்துவ மிக்க பங்கை வகித்து வந்துள்ளது. பெண்களின் பிரச்சினேயையிட்டு எந்த ஒரு இடதுசாரிக்கட்சியாவது திட்டவட்டமான தீவிர நிலேப்பாட்டை எடுப்பதில் ஈடுபாடுள்ளதாக இருக்கவில்லே என்பது இங்கு குறிப் பிடக்கூடிய ஒரு விடயமாகும். விரல்விட்டெண்ணக் கூடிய சில படித்த பெண்கள் மாத்திரமே இக்கட்சிகளின் உயர்மட்ட கட்சி அதிகாரபீடத்துள் உட்புகுவதில் வெற்றியீட்டியுள்ளார்கள்.
எழுபதுகளிலேயே பெண்களப்பற்றியதும் அவர் களினது உரிமைகள் சம்பந்தப்பட்ட விடயங்கள் பற்றியதுமான பிரச்சினேகள் கூடுதலானளவு மேடைக்கு வர ஆரம்பித்தன. அப்போது இக்கட்சிகளின் பெரும் பான்மையான ஆன் அங்கத்தவர்கள் தமது ஈடுபாடின் மையை மூடிமறைப்பதற்காகவும் இப்பிரச்சினேபற்றிய தமது தத்துவார்த்த விளக்கமின்மையை வெளிக்காட்டிக் கொள்வதை தவிர்ப்பதற்காகவும் (Feminism) பெண் முதன்மைவாதமானது வர்க்கப் போராட்டத்தில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்கான ஒரு பூர்ஷ்வா தந்திரோபாயமாகும் என்ற கேடயத்தை முன்வைத்தார்கள். இதன் மூலம் பெண்முதன்மைவாத நோக்கத்துடன் தம்மை இணேத்துக்கொள்ள விரும்பும் தீவிரசக்திகளே பயமுறுத்தவும் செய்தார்கள்.
உங்களைச் சுற்றி நோட்டம் விட்டுப்பாருங்கள். தீவிர "இடது அரசியல்வாதிகளின் மனே விகள், மகள் மார், சகோதரிகள் போன்ருேர்களில் எத்தனைபேர் அரசியல் ஈடுபாடுள்ளவர்களாக உள் ளா ர் க என்? இவர்களில் எத்தனேபேர் முழு மாலேநேரத்தையும் "புரட்சிகரத்தத்துவமும் நடைமுறையும்' என்ற தத் துவங்களேப்பற்றிக் கலந்துரையாட ஒதுக்கியுள்ளனர்? அதே நேரத்தில் இவர்களின் "புரட்சிகர உறுதி யானது குடும் ப பாரத் தை தமது தோள்களில் சுமக்கும் விரும்பியோ விரும்பாமலோ) பெண்களாலேயே கிடைத்தது என்பதையிட்டு மெளனம் சாதிக்கிருர்கள் "நான் ஓரளவு ஆண் ஆதிக்கவாதிதான்' என்று கேலியாக சொல்லும் எத்தனைபேரை நாம் கண்டுள்ளோம். "முற்போக்கு இந்த மனிதர்களின் வாழ்க்கைப்பாதை தான். அவர்கள் குறிப்பிடும் "பெண்கள்" அவர்களது வீட்டிற்கு அப்பாற்பட்டவர்களாவர். . . . தமது

மனேவியையோ, மகள்களேயோ, சகோதரிகளையோ
அவர்கள் குறிப்பிடவில்லே. ஒரு போராளிப் பெண்ஐ பிட்டு அவர்கள் இவ்விதம் கூறுவார்கள் "ஆம்! உண்மைதான் . . . . . அவள் புத்திக்கூர்மையானவள் தான் . . . . . மிகவும் சுறுசுறுப்பானவள்தான் . . . . முன்னணியானவள்தான் . . . . . இலங்கைப் பெண் களுக்கு உண்மையான ஒரு மதிப்புத்தான் . . . . .
ஆணுல் நான் அவளே மணந்து கொள்ள விரும்பவில்லே!" வேறு சிலர் தனது மனேவிக்கு சுதந்திரம் வழங்கும் ஆண்களேயிட்டு இழிவான வார்த்தைகளால் பேசுவார் கள். 'பெண் டாட்டி தாசன் என்றும் கூறுவர்.
இவையெல்லாம் எதை நிரூபிக்கின்றன? விட்டுக்கு வெளியில் எழும் சகல பிரச்சினேகளிலும் இவர்கள் "முற்போக்காளர்களாக" இருக்கிருர்கள். அடக்குமுறைபும், சுரண்டலும் வர்க்க சமுதாயத்தின் தவிர்க்க முடியாத பகுதிகள் என்பதை ஏற்றுக்கொள்ளத் தயா ராக இருக்கிருர்கள். ஆணுல் வீட்டினுள் தந்தை வழி அமைப்பை துர்க்கி எறியும் பிரச்சினேகளுக்கு முகங் கொடுக்கும்போது தயக்கமும், வெறுப்பும் காட்டுகிருர்கள். இவ்வமைப்பு இவர்களுக்கு பல செளகரியங்களேயும் வரப்பிரசாதங்களையும் வழங்குகின்றது எ ன் ப ஒத குறிப்பிடவேண்டும்.
வரலாறு பூ ரா வு ம் நர்ம் அறியக்கூடியதாய் இருந்தது, முதலாளித்துவ்வாதிகள் சமுதாயத்தின் உற்பத்தி சக்திகளின் மீதான தமது ஆதிக்கத்தை தாமாகவே கைவிடமர்ட்டார்கள் என்பதேயாகும். இதேபோல்தான், 'ஆண்களாக இருக்கும் ஒரே காரணத்திற்காக தமத்கு கிடைத்துள்ள வரப்பிரசாத ங்களே தாமாகவே கையளிப்பார்கள் என்று கருதுவது மிகவும் கடினமானதாகும். முதலாளித்துவ உற்புத்தி உறவுமுறையானது தந்தைவழிச் சமூக வடிவங்களுடன் நெருக்கமாகவும் பிரிக்கமுடியாமலும் இண்ேக்கப் பட்டுள்ளது என்பதையும், பொருளாதார உற்பத்தித் துறையிலான சுரண்டல் முதலாளித்துவ சுரன்ட்ல் என்ற முழுமையினதும் ஒரு பகுதியேயாகும் ஒன்பதை "- யும், அடுத் த பகுதி மீள் பிறப்பாக்கம்' என்ற துறையிலான சுரண்ட்ரோகும் என்பதையும் நீசம்பந்து: கொள்ளவேண்டும். மீள் பிற ப் பாக்க மா ன் து (உழைப்புச்சக்தி, உழைப்பாளர்கள் ஆகிய இரண்டின்
தும்) இந்த சமூகத்துள் பெண்களுக்கு என்று ஒது و قلعة பட்ட குறிப்பிட்ட கடமையாகவே உள்ளது. ايي-.
ஆகவே, முதலாளித்துவத்தை தூக்கியெறிவது சம்பந்தமான விளக்கமானது தந்தைவழி அமைப்பை தூக்கி எறிவதையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் இதனுல்தான் முதலாளித்துவத்தை தூக்கி எறிய முன்னிற்கும் சகல ஸ்தாபனங்களும், தனிநபர்களும் தந்தைவழி அமைப்பை தூக்கி எறிவதற்காகவும்: பெண்களின் விடுதலைக்காகவும் முன்னிற்பது அவசிய மாகின்றது. இதன் காரணத்தால்தான் பெண்கள்: என்ற முறையில் எமது பிரதான கோரிக்கைகளில் ஒன்ருக பின்வரும் கோரிக்கை அமைந்துள்ளது. சகல இடதுசாரி கட்சிகளும், முற்போக்குக் கட்சிகளும் பெண்களின் பிரச்சினேகஃா? யிட்டு திட்டவட்டமான
2

Page 25
அரசியல் நிலப்பாட்டை எடுத்துக் கொள்ளவேண்டும். தமது கட்சிக்குள்ளும் அதற்கு வெளியிலும் உள்ள சகல முண்களிலும் பெண்களுக்கு சமத்துவத்தை வென்றெ டுப்பதற்காக ஆக்கபூர்வமான, உடனடியான நடவடிக் கைகளில் இறங்கவேண்டும்.
"பெண்ணின் குரல்' வாசகர்கள் தயவு செய்து உங்கள் கண்ணுேட்டத்தை எழுதி அனுப்பவும்.
●
* மிகச் சில கணவன்மார்கள்தான் பாட்டாவி
வர்க்கத்தை சேர்ந்தவர்கள் கூட (பெண்களின்
வேலேயில் தாம் உதவுவதன் மூலம்) தமது மனேவி
களின் சுமைகளையும் கவலைகளேயும் எந்தளவிற்கு குறைக்கமுடியும் என்பது சம்பந்தமாகவும் அல்லது "
அவர்களை பூரணமாக விடுதலேயர்க்குவது எவ்விதம்
- I என்பது சம்பந்தமாகவும் சிந்திக்கின்ருர்கள்.
ஆணுல் ஒருவராவது "கணவனின் வரப்பிரசாதங்
களுக்கும் அந்தஸ்துக்கும் எதிராகச் செல்பவர்
களாகத் தெரியவில்லை. தனக்கு ஓய்வும், செளகரி
பங்களும் உண்டு:ன்று ஆவன் கோருகிருன். பெண்களினது குடும்பவாழ்க்ன்க்ஜிரக்கணக் கான முக்கியத்துவற்ேறி இனக்கிளுக்கான நாளாந்த தியர்கடிாத்துள்த் எஜம்ான்னுமான் கீவீன் உரிமைகள் ஒத்தில் # மல் வாழ்கின்றன: స్క్రీ 筠 இது >9ILLG:חות அவனது பழிவாங்கஜ மேற்கொள்திருள். இது இரகசியர்னதாகவும்: மைகின்றது, அவளது | பின்தங்கிய தன்மையுஜ்த்தினர்வனின் புரட்சி 'கர அபிலானிசகளை புரிந்த்திெர்ள்ளாத்தன்மையும் அவனது ாேர்: போாாட்ட ப்ரீ சக்தியாக்கு
உறுதிய்ைய்க் ஜின்ஜி
ந்த் தெர்ல்:தரும்,
இன்றது:இவை:இந்தி துெ
இசல்லுக்கப்ஜழ் ழ்க்கர்ப்போன்றன. இது இழுதுவானதுஆதில் நிச்சயம்ானது. மாதர் அதி: லாஜி, எம்து வேலையும், எமது
பெரிதுiஇரசியல்வேலேயீழ், ஆண்கள் மத்தி யிலான ஆபிரக்லேண்டம்ான 'போதனையூட்டும் | வேலன்:ள்ளடக்கியதாகும். கட்சிக்குள்ளும் வெகுஜன்ந்க்ள் மத்தியிலும் உள்ள பழைய அடிம்ைச்3 சொந்தக்காரர்களின் கண்ணுேட் டத்தை தர்ம் களைந்தெறிய வேண்டும். இது
எமது அரசியல் கடமைகளில் ஒன்ருகும்."
ଦn'titlist "முதலாளித்துவமும் பெண் தொழிலாளியும்' 1933, - ||
=
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அட உள்ளேயிருப்பது
தமிழர்கள்
புரட்சி ரத்தம் !! சுதந்திரம்!!! பயங்கர விடுதலேப் படை எத்திக்கிலும் ஆர்த்தெழும் உணர்வுகளின் நிழல்கள் நீண்டு மறைய செந்திரையின் மறைவில் அதோ அதோ ! சீதனம் - முதுகன்னிகள் சுயநலம் – சுரண்டல் தலைமைப்பசி - இளேஞர் சாவு அட உள்ளே இருப்பது இதுதானு
சீதனமற்ற சோதரிகளே உங்கஃா முதுகன்னிகளென எள்ளுவது புத்திஜீவிகள் சுரண்டுவது பொதுநலவாதிகள் போர்வையில் முதுகெலும்பற்ற இளஞர்கள்
LUGU I UGUri |
தோட்டத் தொழிலாளப் பெண்ணுெருவரின் வாழ்க்கையில் ஒருநாள்
காலேயில் நாங்கள் 5 மணிக்கு படுக்கையிலிருந்து ாழும்பி பாத்திரங்களேக் கழுவி தண்ணீர் எடுத்து கால், முகம் சுத்தம் செய்து ஏதும் சமைத்து சாப்பிடுவோம். பின்பு தலேசீவி, பவுடர், பொட்டு அணிந்து படங்கு ாட்டி வேட்டி மடித்துப்போட்டு புறப்படுவோம். ாங்கள் வீட்டை விட்டுப் புறப்படுவதற்கு நேரம் 7.15 ஆகிவிடும். கிட்டத்து மலேயாய் இருந்தால் 7.25 க்கு பாய்ச் சேர்ந்திடுவோம், தூரத்து மலேயாய் இருந்தால் 45 க்கு போய் சேருவோம். நேரம் பிந்தினுல் வேலை 1றுக்கப்பட்டு விரட்டப்படுவோம். மீண்டும் நாங்கள் வஃல பெறுவதாயின் தேயிலையில் புல்புடுங்க வேணும். மாட்டை அரும்பு காது முடிச்சி இல்லாமல் நாங்கள் வ&ல செய்ய வேண்டும். இவைகள் இருந்தால், டனே தண்டிக்கப்படுவோம். பின்பு 11.30க்கு நாங்கள் காழுந்து கொண்டு வந்து நிறுப்பதற்குள் நேரம் 2.30 ஆகிவிடும். பின்னர் நாங்கள் வீட்டில் உள்ள வஃகளேச் செய்து சாப்பிட்டு விட்டு மலேக்குப் புறப் டுவோம். கிட்டத்து மலேயாயிருந்தால் பி. ப. 1 மணி நிமிடமாகும். தூரத்து மலேக்கு போவதற்கு நாங்கள் காஞ்சம் சுணங்கி 1 மணி 35 நிமிடத்திற்குப் போய்ச் சருவோம். அதற்குபிறகு போனுல் விரட்டப்படு வாம். மாலேயில் 4மணிக்கு மணி அடிப்பார்கள். ாங்கள் வேலே விட்டு வருவதற்கு மாலே 4.20 ஆகும். ங்களுக்கு அதற்குப் பிறகு பெயர் போட்டு முடிய ாலே 5.45 மணியாகி விடும்.
செல்வி, எம். மாரியாய் அகப்பை தோட்டம், லோவர் டிவிசன்-ஏவானட்டை.

Page 26
356i5 usi GL65 Tg5665T பங்கு
இந்திராணி ஈரியகொல்லே
கல்வியில் பெண்களினது பங்கு இன்று சாதனைகளின் பாரம்பரிய வரையரைகளுக்கும் அ ப் பால் சென்று விட்டது. பிளேட்டோ, கெளதம புத்தர், யேசு கிறிஸ்து போன்ற மகான்கள் பெண்களின் சம அந்தஸ்த்திற்காக குரல் கொடுத்திருந்த போதிலும் கூட ஆரம்ப கலாச் சாரங்கள் பொதுவாக பெண்களே குறைவானவர் களாகவே கருதி யது. முழு மை யாக எடுத்துக் கொண்டால் 19ம் நூற்ருண்டின் பின்வரை இவர்களுக்கு சாதாரண கல்வி தானும் வழங்கப்படவில்லே. அதிகார மும் செல்வாக்கும் உள்ள பெண்கள் எங்காவது இருந்திருப்பார்களானுல் அது தற்செயலானதாகவே இருந்தது. ஏனெனில் கல்வியினூடாக பெண்கள் உயர்ந்த நிலையை அடையக்கூடியதாக இருக்கவில்லே. ஆகையினுல், சாதாரண கல்வி கூட அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்த காலம் வரை சமூகத்தில் அவர்களின் நிலேமை ஸ்திரமற்றதாகவே இருந்தது.
இக் கட்டுரையில் 'கல்வி' என்பது அதனது பரந்த அர்த்தத்திலே பிரயோகிக்கப்படுகின்றது. கல்வியில் பெண்களின் பங்களிப்பை தாயாக பாடசாலே ஆசிரியை யாக, போதனையூட்டும் சக்திகளாக, இறுதியில் சமூக சீர்திருத்தவாதிகளாக, கட்டுரை ஆசிரியர் நோக்குவார்.
தாய்மார்கள்
இந்த நான்கினுள்ளும், தாயென்ற முறையில் பெண்கள் வழங்கும் பங்களிப்புத்தான் முரண்பாடு களின்றி வளர்ந்துவரும் ஒன் ரு க இருந்துள்ளது ஏனெனில் குடும்ப அமைப்பில் பிரதான போதகன் என்ற முறையில் இருக்கும் தாயினது நிலை பொருள தார அதிகாரமும் அரசியல் அதிகாரமும் இல்லாததன் காரணத்தாலோ அல்லது கல்வியறிவு இல்லாததன் காரணத்தாலோ பாதிக்கப்படவில்லே. குழந்தைகளினது சமூகமயப்படுத்தலில் இவர்கள் இரண்டாம் இடத்:ை எடுக்கவேண்டிய அவசியம் என்றுமே இருக்கவில்: அவர்களது சமூக அந்தஸ்த்து எவ்வளவுதான் கீழான் தாய் இருந்தாலுங்கூட சமூகத்தையொட்டிய கடை களேயும், பொறுப்புணர்ச்சிகளேயும், கடமைப்பாடுகள் யும், உளப் பண்புகளேயும் (அதாவது சரி எது தவறு எ; என்பதை கற்பித்தல்) சமாளித்து வாழக்கூடிய பயிற் யையும் கற்றுத்தரும் முக்கியமான கடமையை தாயா இருக்கும் பெண்களே பொறுப்பேற்கிருர்கள்.

மேற்கத்தைய நாடுகளில் பெண்கள் அவர்களினது பங்களிப்பிற்காக ஆஊக்குவிக்கப்படுகிருர்கள், குழந்தை களினது உருவாக்கக் கட்டத்தின்போது அவர்களுடன் செலவிடுவதற்கு கூடிய நேரத்தையும், சக்தியையும் பெற்றுக்கொள்வதற்காக பெண்களுக்கு அங்கீகரிகப் பட்ட அரச மானியங்கள் வழங்கப்படுகின்றன. நீண்ட வேலே செய்யாத காலங்களுக்கான தாய்மார்களின் ஓய்வூதியத்தொகையை அதிகரித்தல், வயது முதிர்ந்த காலத்திற்காக சம்பளத்தில் ஒரு தொகையை சேர்த்து ஒன்ருக வழங்கல், தாய்மார்க்கான விசேடபடி வழங்கல் இதற்கான சில உதாரணங்களாகும். குழந்தைக் கல்விப் போதனை திட்டங்களுக்கு சா த க மா சு தாய்க்கும் குழந்தைக் கும் இடையேயான உறவுகள் பயன்படுத்தப்படுகின்றன.
தாயின் இப் பங்களிப்பு இயற்கைத்தேர்வாக அமைந்ததொன்ருகும். ஆகவே இதை ஏற்கும் ஒவ்வொ ருவரும் இதன் தன்மையை வளர்த்தெடுக்க முற்பட வேண்டும். இவ்விதம் வளர்த்தெடுப்பதால் பெறப்படும் பலாபலன்கள் குடும்பத்திற்கு மட்டும் உதவுவதொன் நல்ல, தேசம் முழுவதற்கும் உதவுவதாகும். இது "மனித நாகரிகத்தின் தொட்டிலே ஆட்டுகின்ற பெண்களால் வழங்கப்படும் அளப்பரிய முதலீடாகும்.
ஆசிரியைகள்
கல்வி கற்பித்தலானது (பாடசாஃவ ஆசிரியையாக வகிக்கும் பங்கு) எல்லா உத்தியோகங்களேயும் விட பெண்களுக்கு இ யு ற் கை யாக அமைந்ததொன்ருக பொதுவாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தாயென்ற பென்களின் பங்களிப்பின் ரு தொடர்ச்சியே இதுவாகும். இங்கு 'பாடசாலை 蠶 அவளது చీప్తి 3:Ñ: இது அறிவின் வீச்சுக்களே விரிவடிையூன்வக்கின்றது. பழக்க வழக்கததையும் ஒழுக்க மட்டத் திற்கு உயர்த்துகின்றது: ஆசிரியர்களுக்கும் மாணவர் களுக்கும் இடையேயானது 燃鑫 ந்திரமான் தாகின்றது. ஆணுலும் ప్లేస్ట్రీ # பங்கு இன்னும் நிறைய உண்டு:
| . ஆசிரியைகள் என்ற முறையில் படிப்பித்தல் ஒருபிழைப்புத் தொழில் என்ற அங்கீகாரத்தைப் பெறு வதற்கான போராட்டத்தில் பெண்கள்தப்பந்தகாலத்தில் ஈடுபட்டுள்ளார்கள் 'பிரித்தானியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட சாதாரண ஆசிரிய பயிற்சியும் பட்டங் கள் வழங்குவதும் 1878ம் ஆண்டு LSTSII. குயின்ஸ் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி அமைப் பொன்றை உருவாக்க உதவியது. இலங்கையின் நிலேமை வேருனதாக இருந்தது. பிரித்தானிய உதாரணங்களின் செல்வாக்கினுல் மதநிறுவனங்களினது அல்லது அரசி னது முன்முயற்சியாலேயே கல்வியிலான சீர்திருத்தங் கள் மேற்கொள்ளப்பட்டன. இங்குள்ள முக்கியத்துவ மிக்க அம்சம் என்னவென்ருல் ஆசிரியைகளாக பெண் கள் தொழில் வாய்ப்புப்பெறத் தொடங்கியது தான் பல்வேறு வகையான ஏனேய தொழில் துறைகளுள் செல்வதற்கான ஆரம்பமாக இருந்தது சட்டத்திலும், சமூக மூடப்பழக்க வழக்கங்களிலும் தங்கியிருந்த ஆசிரியப் பெண்கள் ஏனய தொழிற் துறைகளுள் செல்வதன் மூலம் விதிவிலக்கின்றி தம்மை வேறுபடுத்திக் கொண்டார்கள்,

Page 27
குடும்பத்திலும், பாடசாலையிலும் வகிக்கும் பங்கை விட ஒரு பகுதியினர் போதனையூட்டுவதில் சக்திமிக்க கருவியாகத் திகழ்கிருர்கள். இன்றைய பெண்கள் வெளிஉலகுடன் சமூக, கல்வி விவகாரங்களில் தொடர்ச்சியான வாதவிவாதங்களில் ஈடுபாடுள்ளவர் களாய் இருக்கிருர்கள் இவர்கள் தாம் கற்றவர்களோ இல்லையோ என்று பாராமல் முன் என்றும் இல்லாதள விற்கு சுதந்திரமான சமூக தொடர்புகள் உள்ளவர் களாக இருக்கிருர்கள். சிறந்த பல்கலைக்கழகங்கள். வெளிவாரிப்பட்டப்படிப்பு, தொழிற் கல்வி, ஏனைய பல போதனை வாய்ப்புகள் அனைத்தும் ஆரம்பத்தில் சந்தர்ப் பத்தை தவறவிட்டவர்களுக்கு ஒர் உதவியாக அமைந் துள்ளது. ஆகவே, இன்றைய பெண்கள் இவர்கள் கற்றவர்களோ இல்லையோ, சம்பளம் பெறும் தொழில் களில் ஈடுபட்டுள்ளார்களோ இல்லையோ, ஒரு கூட்டு சக்தியாக மாறிவிட்டார்கள். சமூகத்தின் நல்வளர்ச்சிக் கான பொதுவான உணர்வுகளை பரப்பக்கூடியவர் களாக மாறியுள்ளார்கள். வேறுவார்த்தையில் சொல் வதானல் அவர்கள் பொதுமொழியை உருவாக்கி யுள்ளாகள். வீட்டினது மகிழ்ச்சியை முன்கொண்டு செல்வதற்காக மாத்திரமல்ல, வீட்டிற்கு வெளியே தம்மை பெலப்படுத்திக் கொள்வதற்காகவும் அவர்கள் இதை பிரயோகிக்கிருர்கள். இதன் மூலம் ஒரு சிறந்த சமுதாயத்தை ஆக்குவதில் அவர்கள் ஒரு பொதுவான பங்களிப்பை பகிர்ந்து கொள்கிருர்கள்.
படித்த பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அளவிற்கு இப்பெண்கள் தொழில் வாய்ப்புப் பெறும் விகிதம் அதிகரிக்கவில்லை என்பது சகலரும் ஒத்துக்கொண்ட ஒரு விடயமாகும். குறிப்பாக, குடும்ப பொறுப்புகளும் ஆண்களுக்கு இருந்துவரும் வாய்ப்புகள் போல் அல்லாமல் பெண்களுக்கு இருக்கும் சமூகத் தடைகளும் பெண்களின் வளர்ச்சியை தடுத்து வருகின் றன. ஆசிய நாடுகளில் இந்நிலைமை கூடுதலாகவுள்ளது. ஆண் ஆதிக்க உலகத்தில்-முன்னேற்றத்திற்கான எதிர் கால வாய்ப்புகள் பெலவீனமானவை, போட்டி கடுமை யானது, தொழில் வாய்ப்பு கடினமானது, ஆய்வு போன்ற துறைகளில் பெண்கள் ஈடுபடுவதற்கு கடுமை யான போரர்ட்டம் அவசியமாய் உள்ளது அப்படி யிருத்துங்கூட தொடர்ச்சியான எழுச்சியை காணக் கூடிதாய் உள்ளதுடன் தனது கடமைகளையும் பொறுப்புகளையும் உறுதியுடன் ஏற்பதில் மாத்திரமல்ல ஒரு சகபாடி என்ற முறையில் சம உரிமைக்காகவும் சமமான அங்கீகாரத்திற்காகவும் பெண்கள் போராடி வருவதையும் காணமுடியும்.
சமூக சீர்திருத்தக்காரள்ே
தொழில் துறையில் உள்ள பெண்களினது பாது காப்பிற்கான எழுச்சி இயக்கத்தில் இவர்கள் பிரதான பங்களித்துள்ளார்கள். பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும் பத்து மணித்தியால வேலைநாட்கள் கோரி வெற்றி யீட்டிய 1847ல் பிரித்தானியாவில் நடந்தபோராட்டம் இதற்கோர் உதாரணமாகும். எப்படியிருந்தாலும் இருபதாம் நூற்ருண்டின் ஆரம்பகாலப்பகுதியில் பிரித் தானிய பெண்கள் பலதுறைகளில் தமது உரிமைகளை வென்றெடுத்திருந்தார்கள். கல்வி, வா க்கு ரி மை, சொத்துடமை உரிமை, கைத்தொழிற் துறைகளில் சிறந்த வேலை நிபந்தனைகள், பல்வேறுபட்ட தொழில் துறைகளில் உட்புகுவதற்கான உரிமை போன்றவை வற்றில் சிலவாகும். மூட நம்பிக்கைகளை தகர்த் தறிவதில் பிரித்தானியப் பெண்கள் வழிகாட்டிகளாக திகழ்ந்தார்கள். இது ஏனைய நாடுகளிலும் பின்பற்றப் பட்டது. இலங்கையில், கல்விச்சீர்திருத்தத்தின்போது இப்பிரசிச்னையையொட்டிய பல ஒழுங்குகள் சட்டங்
26

களாக சேர்த்துக் கொள்ளப்பட்டன. ஆனல் இதற்காக மக்களின் உணர்வுகள் தட்டிக்கழிக்கப்படவில்லை. அதா வது இவை மேலிருந்து திணிக்கப்பட்டவையேயாகும். இதனல் இச்சீர்த்திருத்தங்களுக்கு இன்னமும் பலமான எதிர்ப்பு இருந்துவருகின்றது. சீர் திரு த் தங்க ள் தொடரவேண்டும் அவை பெண்கள் மத்தியிலிருந்தே தோற்றுவிக்கப்படவேண்டும் நவீன இளம் பெண்கள் சமுதாயத்தில் சமபங்காளிகளாக இருப்பதையே மிகவும் விரும்பினுலுங் கூட இதற்காக இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. தம்மை சமமானவர் களாகவும், சுதந்திரமானவர்களாகவும் காணக்கூடிய ஒரு சூழலை பெண்களுக்கு வழங்கும்வரை கல்விச் சீர் திருத்தம் என்பது அர்த்தமற்றதேயாகும். அர்ப்பணமும் ஆற்றலும் உள்ள பெண்கள் தேசிய நடவடிக்கைகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் வரை மனித வளங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று சமீபகாலமாக ஜனரஞ்சகமாக்கப்பட்டுவரும் உர்ைவானது அர்த்தமற்றதும் கற்பனையானதுமாக இருக்கும்.
சமூக சீர்திருத்தமானது இதுவரை கிடைக்காத தையோ அல்லது ஒர் இலட்சியத்தையோ அடைவதற் கான குறுகிய இயக்கம் என்று விளங்கிக் கொள்ளப்படக் கூடாது. மாருக சகல பெண்களினதும் பொதுவான நல்வாழ்விற்கு உதவுவதும் அதில் பங்கெடுப்பதுவுமாகும் என்ற பரந்த அர்த்தத்தில் இது புரிந்து கொள்ளப்பட வேண்டும். இளசுகள் மீதும் தமது சொந்த பிரிவினர் மீதும் (சைமன் பியுவெயர் இதை ‘இரண்டாம் பால்’ என்று அழைத்தார்) மிக அதிகளவு செல்வாக்குச் செலுத்தக்கூடியதொரு விசேட சாதகமான நிலைமையில் பெண்கள் உள்ளார்கள். பெண்கள் ஏளனப்படுத்தப் படலுக்கு உள்ளாகியிருந்தபோதிலும், வரலாற்றில் சமூக சீர்த்திருத்தவாதிகளாகப் பங்காற்றிய பெண்கள் ஏளனத்தையும், தண்டனையையும் தாங்கிக் கொள்வதில் வெற்றிபெற்றுள்ளார்கள். மாறி யா மொ ன் ர ச ரி, அணி பெசன்ற், மாறி கியுரி, ஜோர்ஜ்எலியெற், எ ன் போர் முதல் இலங்கையின் மகிலா சமத்தி (மாதர் சங்கங்கள்), குடும்பப் பெண்கள் நிறுவனம், பெண்கள் பல்கலைக்கழக நிறுவனம் வரை எமது நாட் டி ன் பலபகுதிகளிலும் காணப்படும் சிறிய கழகங்களும், நிறுவனங்களும் வகிக்கும் செல்வாக்கில் இருந்து எமது திறமை வாய்ந்த பெண்கள் நாட்டினது நிருமாணத்திற்கும். மக்களினது பொதுவான நல்வாழ் விற்குமாக அர்ப்பணிப்புகளை செய்யும் உரிய இடமென்று சமுதாயத்தில் உண்டு என்ற உண்மையை தெளிவு படுத்துகின்றது.
J
சமூகப் பொருளாதார!... . (20ம் பக்கத்தொடர்ச்சி)
இலங்கையில் மாத்திரமன்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் மக்களுக்கு சுவையான தேனீர் அருந்துவதற்கு பல லட்சக்கணக்ான தொழிலாளப் பெண்களும் ஆண்களும் நெற்றி வேர்வை சிந்திக் கடுமை யாக உழைக்கின்றனர். இலங்கைச் சமூகத்தை வாழ வைக்க ஒரு நூற்ருண்டுக்கும் அதிகமாக அடிமைகளைப் போல மனித உரிமைகளின்றி வாழ்கின்றனர்.
தோட்டத் தொழிலாளரின் உழைப்பை மதிக்கும், அவர்களின் உழைப்பை அவர்களுக்கே உரிமையாக்கும் பொருளாதார சமூக அமைப்பு உருவாக்கப்பட்டால் மாத்திரமே தோட்டத் தொழிலாளருக்கு விடிவு காலம் பிறக்கும்.

Page 28
பெண்கள், விடுதலை பற்றிய ஒரு
கண்ணுேட்டம்
- செல்வி திருச்சந்திரன்
பெண்கள் விடுதலைபற்றி பரவலாகப் பேசப்படு கின்றது. இலங்கையில் இதன் தாக்கத்தைப் இ பொழுது நாம் உணருகின்ருேம். ஏனைய கிழைத்தே நாடுகளாகிய இந்தியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளிலும் பெண்கள் சமத்துவம் பெரு மளவில் பேசப்படுகின்றது. பொதுவாக மேலைத்தேயா களில் பெண்கள் பெரும்பாலும் சுதந்திரமுடையவ களாக வாழ்கின்றனர். அவர்களுக்கு எமது பெண்களு குரிய பிரச்சினைகள் இல்லை. பல வசதிகளை அவர்கள் பெற்றிருக்கிருர்கள். விஞ்ஞானத்தின் முன்னேற்றம் ப6 பெறுபேறுகளை அப்பெண்களுக்கு அளித்திருக்கின்றது வீட்டுவேலைகளில் இயந்திர பாவனை. எளிதான போக்கு வரத்து சாதனங்கள், அவர்களின் கலாசாரத்தில் ஒன்ற யுள்ள ஒரு சில பண்புகள் ஆகிய பல காரணிகள் வெளி தோற்றத்துக்கு அவர்கள் பல சுதந்திரங்களை அனுபவி கிருர்கள் என்ற ஒரு போலி எண்ணத்தை தோற்றுவி கிறது. ஆனலும் பிரச்சினைகள் அவர்களுக்கும் உண்டு ஒருவித திருப்தியின்மை, அறிவுபூர்வமான சந்தோ மின்மை எப்பொழுதும் பின்தள்ளப்பட்ட ஒரு மன பான்மை அவர்களுக்கும் தோன்றத் தொடங்கியது எனினும் இப்பிரச்சினைகள் நாட்டுக்கு நாடு தேசத்துக்கு தேசம் வேறுபட்டே நிற்கும். இப்பிரச்சினைகள் பெரு பாலும் கலாசாரத்தையும் மதக்கோட்பாடுகளையு அடிப்படையாகக் கொண்டிருக்கும். சமூகஇயல் பண், கள்-கலாச்சாரம்-மதம் என்ற இரு தூண்களில் தங் யிருக்கின்றது. பழமை போற்றும் பழமைவாதிகள் பல பெண்கள் சுதந்திரம் - பெண்கள் சமத்துவம் என் கோரிக்கைகளைக் கேட்கும் பொழுது சமுதாயத்தின் அரியபெரிய கோட்பாடுகள் இதனல் ஆட்டங்காணுமே என நியாயமான ஒரு பயத்தை வெளிபடுத்துகிருர்கள்
முரண்பட்டு நிற்கும் இவ்விரு தத்துவங்களையு பரிசீலனை செய்வதே இக்கட்டுரையின் நோக்கம். கல சாரம், பழமை, பண்பு எனக்கூறும் நாம் மாறிவரு சமுதாயத்தை அதன் பல்வேறு முனைத்தாக்கங்கை ஏற்றுக்கொள்ளாமலா இருக்கப்போகின்ருேம். உண உடை-வீடு-கல்வி-சுற்ருடல் ஆகிய மிக அத்தியாவசி துறைகளில் நாம் மாறி விடவில்லையா? ஏனைய ப விஞ்ஞான மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவில்லையா இம்மாற்றங்களின் பெறுபேருக வந்த இன்னுமொ துறையை மட்டும் நாம் ஏன் புறக்கணிக்க வேண்டு.

பொருளாதாரக் காரணங்களுக்காக மனைவியும் உத்தி யோகத்துக்குச் செல்ல வேண்டுமென்ருல் - அவள் கொண்டு வரும் பணம் குடும்பத்தின் சமூகப் பொருளா தார நிலையை உயர்த்துகிறது என்ருல் பிள்ளைகளின் கல்விக்கும் வளர்ச்சிக்கும் தேவைப்படுகிறதென்ருல் எட்டுமணித்தியாலங்கள் வெளியே சென்று வேலை செய்யும் பெண்ணுக்கு, கணவன்மார் வீட்டு வேலைகளில் பிள்ளைகளின் பராமரிப்பில் ஏன் கைகொடுத்து உதவக் கூடாது? அதுதானே தர்மம்? அதுதானே நீதி? வீட்டு வேலைகளைப் பகிர்தலும் பிள்ளை வளர்ப்பதில் பங்கெடுப் பதும் ஒரு ஆண்மகனுக்கு இழுக்கல்ல. அவனது ஆண் மைக்கு அது பங்கம் விளைவிக்காது. குடும்பத்தில், சமநிலை நிலவும் - பிள்ளைகள் பொறுப்புள்ளவர்களாக வளர்வார் கள். குடும்பத்தின் பொறுப்பு பங்கிடப்பட்டு, அன்பும் ஆதரவும் பரஸ்பர நம்பிக்கையும் நிலவ ஆரம்பிக்கும். வெளியில் வேலைபார்த்துவிட்டுவரும் பெண் ஒருத்தி, சமயலில் ஈடுபட, சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து பத்திரிகை படிக்கும் ஒரு கணவன் மனிதப்பண்பு அற்றவணுவான். இதல் பண்பாடு அழிந்து விட்டது என்று கூக்குரலிடமுடியுமா? இது ஒரு உதாரணமே தவிர, முழுப்பிரச்சினையும் அல்ல.
பத்தொன்பதாம் நூற்றண்டில் புதுமைக் கவிஞர் பாரதியார் பெண் விடுதலைக்கு கவிதை இயற்றினர். கட்டுரைகளிலும் பெரும் ஈடுபாடு கொண்டு இதனை அலசி ஆராய்ந்தார். கற்பு நிலையில்கூட ஆணுக்கு சலுகைகள் கொடுக்கப்படுவதை அவர் வெறுத்தார். ஆணுக்கு இருதார மணத்தை ஆதரித்து வந்த ஒரு சமுதாயக் கோட்பாட்டையே, புரட்சிக்குள்ளாக்கிருர். அரசபரம்பரை முதல், சிவனடியார்கள் வரை இரு மனைவிகளை வைத்திருக்கலாம் என்ற அங்கீகாரம் சமுதா யத்தில் அன்று இருந்தது. இது ஒரு சமுதாயக்குறை பாடாகவும் இருந்தது. சட்டபூர்வமான தடுப்பு தேவைப் பட்டது. பெண்ணுரிமையும் பெண்விடுதலைய்ம் இதில் பின்னிப்பிணைந்து நிற்கின்றன. ஆகவே, பெண்கள்"சமத் துவம் கோருவது எமது கலாச்சாரத்தைத் தாக்கி அழித்து விடும் என்பது வித்ண்டாவாதம்.
விவாகரத்து உரிமை சட்டத்தளவில் மறுக்கப்பட வில்லையாயினும் சமுதாய அங்கீகரிப்பு ஒரு பெண்ணுக்கு இல்லை. குடிகாரக் கணவனுல் அடிக்கடி அடிஉதை வாங்கும் ஒரு மனைவி ஏன் அர்த்தமற்ற அடிமை வாழ்வு வாழவேண்டும்? இதில் என்ன தர்மம் உள்ளது? என்ன நீதி உள்ளது? கீழ்த்தரக்குணங்கள் உள்ள ஒருவனைத் திருத்த எத்தனிக்கலாம். திருந்தவில்லை என்ருல் காலம் எல்லாம் ஏன் அவனேடு கஷ்டப்பட வேண்டும்? தன்னை உணர்ச்சி உள்ள ஒரு மனித ஜன்மமாக மதிக்காத ஒருவனுக்கு ஏன் ஒரு மனைவி தியாகங்கள் செய்யவேண் டும். சுகயினமாகப் படுத்த படுக்கையில் உத்தியோக மில்லாது இருக்கும் ஒரு அன்பான கணவனுக்கு தியாக ங்கள் செய்யலாம். ஆளுல் முதல் கூறிய ஒரு கணவனுக் காக வாழ்நாளை வீணடிப்பதில் காரணமே இல்லை. செய்யப்பட்ட சடங்குகளுக்கும் கட்டப்பட்ட தாலிக்கும் அர்த்தமே இல்லை. விவாகரத்துக்கோரும் ஒரு மனைவி யால் பிள்ளைகளின் மனுேநிலை பாதிக்கப்படும் என்று ஒரு

Page 29
வாதம் எழுப்பப்படுகிறது. இதில் ஒரளவு உண்மை இருப்பினும் அடிக்கடி அடிதடி சண்டையிடும் தகப்ப னின் கீழ் வாழும் பிள்ளைகளின் மனேநிலை பாதிக்கப் படாதா? மேலும் மனேநிலை பாதிக்கப்படும். அப்பிள்ளை களின் பூரண பொறுப்பையும், ஏன் பெண் என்ற காரணத்திற்காக தாய் ஒருத்தி மட்டும் ஏற்கவேண்டும். தகப்பன் அதற்குப் பொறுப்பாளி இல்லையா? சமுதாய நலன்கருதி, அனுபவமிக்க பெரியோர் பலர் பெண்கள் விவாகரத்துக் கோருவது சரியில்லை என்று கூறுகின்றனர்; தகப்பனிடமிருந்து பிரிந்த பிள்ளைகள் பூரண மனவளர் ச்சியடைவதில்லை; இவர்கள் இலகுவில் மனேவியாதிக் குள்ளாகிருர்கள்; மேலைத்தேயங்களில் இது இப்பொழுது ஒரு பெரும் பிரச்சினையாகும்; என்று பல வாதங்களை எழுப்புகிருர்கள். இவையாவும் சரியல்ல என்று ஒதுக்க முடியாது. ஆனல் பரம்பரை பரம்பரையாகப் பெண் இந்தத் தியாகங்களைச் செய்து வந்ததினுல்தான் ஆண் கள் தங்களுக்கிருக்கும் பொறுப்பை உணர்வதில்லை. இப்பொறுப்பின் முழுப்பங்கை அப்பாவிப்பெண்களின் தலையிற் கட்டி விட்டு விட்டார்கள். ஆகவேதான் சமுதாய வளர்ச்சிக்கும் அதன் முன்னேற்றத்துக்கும்
அதன் உறுதிக்கும் வருங்கால சந்ததியினரை மன நோயாளியாக்காமல் உங்கள் பங்கை நீங்களும் சரிவரச் செய்யவேண்டும் என்று ஆண்களை மன்ருடி அழைக்கின் ருேம். வேலைப்பொறுப்பை பகிர்ந்து கொள்ளுங்கள். மனையாளை சம அந்தஸ்துடன் உரிமைகள் யாவையும் கொடுத்து வாழுங்கள். பெண் என்பவள் உங்கள் உடை மை அல்ல, தோழி-அவளைப் ஆட்டிப் படைக்காதீர்கள். *மாதர் தம்மை இழிவு படுத்தும் மடைமையைச் செய்யாதீர்கள்.
இச்சிந்தனைக்குவியலிலிருந்து சற்று விலகினல் இன்னுமொரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். இந்த ஆண்வர்க்கத்தின் ஆளுகைத்தத்துவத்திற்கு படை ப்பின் இரகசியத்தில் காரணத்தைத் தேடலாமா? ஆண் பலம் படைத்தவன் வீரம் உள்ளவன்"இலகுவில் gd 600T fif ச்சி வசப்படமாட்டான். உலகியல் அறிவு நிறைந்தவன் ஆகவே, ஆண் ஆளவேண்டும்; முன்நடத்த வேண்டும். பெண் அடிமையாகப் பின்பற்றவேண்டும். ஆணுக்குரிய குணங்கள் அவளிடம் இல்லை. ஆகையால் சமுதாயத்தின் பல்வேறு தொழில்களைப் பங்குபோட்டு மிக முக்கியமான கடினமான புத்திக்கூர்மையுடன் அணுக வேண்டிய தொழில்களை ஆண்கள் எடுத்துக் கொண்டார்கள். இந்த வழக்கம் நீடிக்கப்பட்டு வந்து பெண்கள் தொழில் ஆண்கள் தொழில் என பாகுபாடு செய்யப்பட்டது. பெண்களின் தொழில்கள் ஆண்களின் தொழில்களை விட கீழ்ப்பட்டதாக கருதப்பட்டது. ஆனல் இது தர்க்க ரீதியாக இன்று ஏற்கப்படக்கூடியதா? தொழில் பாகு பாட்டின் காரணமாக ஒரு விதி அமைக்கப்பட்டது. அவ்விதி பழங்காலந்தொட்டு சமுதாயத்துக்கு பழக்கப் பட்டு விட்டது என்ற ஒரு காரணத்தை தவிர, வேறு ஒரு தர்க்கரீதியான விளக்கமும் இதற்கில்லை. சமையற் கலை, தையற்கலை, நடன்க்கலை, சங்கீதக்கலை போன்ற பெண்களுக்கு என்று அன்று ஒதுக்கப்பட்ட கலைகளில் ஆண்கள் வல்லுனராக இருக்கிருர்கள். இன்று பெரிய ஹோட்டல்களில் மிக அதிக சம்பளம் வாங்கும் சமை
28

யற்கலை வல்லுனர்களாக ஆண்கள் கடமையாற்றுகின் றனர். இதேபோன்று விரிவடைந்திருக்கும் பல்வேறு தொழிற்துறைகளிலும் பெண்கள் முன்னணியில் இருக் கிருர்கள். அப்பெண்களின் கீழ், பல ஆண்கள் பணிவுட னும் அடக்கத்துடனும் விசுவாசத்துடனும் பணிபுரி கிருர்கள். வர்க்க வேறுபாடு தொழில் நிபுணத்துவத் தைப் பாதிக்கவில்லை. இதே பெண் குடும்ப வாழ்வில் மட்டும் ஏன் பின்தள்ளப்பட்டு அடிமை வாழ்வு வாழ வேண்டும். பெண் எனப்பட்டவள் ஏன் ஆணுக்கு அடங்கி வாழவேண்டும். ஏன் இருவரும் சமரச சமநோ க்குடனும், சமஉரிமைகளுடனும் பிரச்சினைகளை அணுக க்கூடாது? அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு? “பெண் புத்தி பின் புத்தி" என்பன போன்ற சில பழமொழிகள் படிப்பில்லாத அடுப்பூதுவதற்கும் லாயக் கற்ற ஆண்மகனுல் இயற்றப்பட்டதாக இருக்கலாம். அவன் அடுப்பூதுவதின் மகிமையை அறியாத மூடஞக இருக்கவேண்டும். அடுப்பு ஊதப்படா விட்டால் “வீட்டில் அடுப்பு எரியாது’. பட்டினியும் பஞ்சமும் தலைவிரித்தாடும் ஆதிகாலத்திலேயே ஒளயைார் போன் ருேரின் புலமை பெரிதும் மதிக்கப்பட்டது. புத்திக்கூர் மை மேதாவிலாசம் நிபுணத்துவம் போன்ற குணங்களை ஆசிரியராவது பெற்றேராவது இனங்கண்டு கொண் டால் ஆளுக இருந்தாலும் பெண்ணுக இருந்தாலும் போற்றத்தவற மாட்டார்கள். ஆனல் அதை வளர்ப் பதிலும் ஊக்கம் காட்டவேண்டும். தொட்டில் ஆட்டு வதற்கும், சமைப்பதற்கும் அவை தேவையில்லை என்று எந்த ஒரு ஆசிரியனும் பெண்களின் புத்திசாதுரியத்தை அவமதிக்கமாட்டான். ஆணுல் சில பெற்றேர்கள் பெண் படித்து என்ன செய்யப்போகிருள் என அலட்சியமாக இருந்துவிடலாம் அதற்கு செலவழிக்கும் பணத்தை ஆண்மகனுக்கு செலவிடலாம் என்று எண்ணுகின்றனர். இது முற்றிலும் தவருண கருத்து. மணவாழ்வு சரியாக அமையாத படியால் இன்று அல்லற்பட்டு அவமானப் பட்டு, அவதியுறும் பெண்களுக்கு இக்கல்விச்செல்வம் இருந்தால் அவர்கள் ஒரு வேலையைத் தேடி சுயமாகச் சம்பாதித்து சுயமரியாதையுடன் புனர்வாழ்வைத் தொ டங்கலாம். பெற்றேர்கள் தங்கள் பெண்பிள்ளைகளையும் ஆண்பிள்ளைகளை வளர்ப்பது போலவே வளர்க்க வேண்டும். பிற்காலத்தில் ஏற்படும் பிரச்சினைகளை தனி த்து நின்று நம்பிக்கையுடனும் திடபுத்தியுடனும் அவர் கள் அணுக வேண்டும். கண்ணிர் சிந்தி அவமரியாதைப் பட்டு அவர்கள் அடிமை வாழ்வு வாழ்ந்து அழியக் கூடாது. அவர்களது உரிமைகள் காக்கப்பட்டு சுயமரி யாதைக்கு பங்கம் வராமல் மேன்மையான வாழ்க்கை யை அவர்கள் நடத்த வேண்டும்.
பெண்கள் விடுதலை இயக்கத்தைக் கண்டு நாம் பயப்படத்தேவை இல்லை. அவர்களது கோரிக்கைகள் நியாயமானவை. அங்கீகரிக்கப்பட வேண்டியவை. சமு தாயத்தின் கண்ணுேட்டத்தில் ஒரு சிறு மனமாற்றம் தேவை. பெற்றேர்களின் பங்கும் இதில் முக்கியமானது.
(அடுத்த இதழில் தொடரும்.)

Page 30
1980 uła
நிறுத்தமும்
யூலை பொது வேலை நிறுத்தம் ஆரம்பமாகி இரண்டு ஆண்டுகள் பூர்த்தியடைந்து விட்டன அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களின்படி யூலை வேை நிறுத்தம் காரணமாக வேலை இழந்தோர் தொை 40 ஆயிரமாகும். தொழிற் சங்கங்களின் மதிப்ட் ட்டின்படி 80 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையில னேர் வேலை நிறுத்தம் காரணமாக வேலை இழ தனர். தொடர்ந்தும் சுமார் 24 ஆயிரம் பேர் இல் றும் வேலை இழந்த நிலையிலேயே வாழ வழியின்ற தவிக்கிருர்கள். வேலை நிறுத்தஞ் செய்த சுமா 21 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
வேலை இழந்த ஊழியர்களின் இடத்துக்கு இரவோடு இரவாக புதியவர்கள் நியமிக்கப்பட டார்கள். வேலை இழந்து நிற்பவர்களுக்கு மீண்டு! தொழில் வழங்குவது பற்றி சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கவனிப்பார்கள் என ஜனதிபதி
நாள் தோறும் அதிகரித்துவரும் விலைவாசிகள் முன்னே தமது உயிரைக் காப்பதற்காகவும் கடந்த கா: த்தில் தொழிற் சங்கப் போராட்டங்கள் மூலம் வென் றெடுத்த உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் 198 யூலை வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது மனிதர்களாக வாழும் உரிமை கோரி நடத்தப்பட்ட இப்போராட்டத்தை யூ. என். பி. அரசாங்கம் மிருக தனமாக அடக்கியொடுக்கியது. இலங்கையின் வேை நிறுத்த வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு பொது மக்களும் விவசாயிகளும் யூலை வேலை நிறுத்தத்திற்( தமது ஆதரவை நல்கினர். அரசாங்கமும் அதன் அட வருடிகளும் சில முதலாளித்துவ சக்திகளும் மாத்திரே இவ்வேலை நிறுத்தத்தை எதிர்த்தன.
வேலை நிறுத்தம் காரணமாக வேலை இழந்தோ மத்தியில் கணிசமான அளவு பெண்களும் உள்ளனர் சகல வேலைத்தலங்களிலிருந்தும் பெண்களும் பொது வேலை நிறுத்தத்தில் பங்குபற்றினர். ஆட்சியாளரிட மண்டியிடுவது மூலம் தமது உரிமைகளை வென்றெடு கவோ அல்லது அவற்றைப் பாதுகாக்கவோ முடியா: என்பதை பெரும்பான்மை உழைக்கும் பெண்கள் புரிந்து கொண்டிருந்தனர். அவர்கள் உற்சாகத்துடன் வேலை நிறுத்தத்தில் பங்கு பற்றியது மூலம் இது தெளி வாகியது.

பொது வேலை
பெண்களும்
- பிரேமலால் பர்ட்டி ரணவீர
ஒரு கட்டத்தில் உறுதி மொழி கூறினர். ஆனல் ஒரு சில அமைச்சுகளில் குறிப்பிட்ட சிலர் மாத்தி ரம் மீண்டும் வேலையில் சேர்க்கப்பட்டனர்.
வேலை நிறுத்தத்தில் பங்கு பற்றியவர்கள் பொய்க்காரணம் கூற அரசாங்கத்தால் நிர்ப்பந் திக்கப்பட்டனர். பொய்க் காரணத்தை கூறியவர் களிலும் ஒரு சாரார் மாத்திரமே மீண்டும் வேலை யில் சேர்க்கப்பட்டனர். உண்மைக் காரணங்களைக் கூறியவர்கள் தார்மீக அரசால் பழிவாங்கப்பட்டி ருக்கின்றனர். ஜனநாயகம் பற்றி தம்பட்டம் அடிக்கும் ஆட்சியாளர்கள் வேறு எந்த முதலாளித் துவ நாட்டிலும் இல்லாத வகையில் வேலைநிறுத்தஞ் செய்த தொழிலாளர்களை பழிவாங்கி வருகிருர்கள். வேலை நிறுத்தத்தில் பங்குபற்றிய, அரசாங்க திணைக்கள எல்லைக்குள் அமைந்துள்ள தொழிற் சங்க அலுவலகங்களில் பெரும் பான்மையானவை தொடர்ந்தும் அரசாங்கத்தால் மூடி வைக்கப் பட்டுள்ளன.
宁
வேலை நிறுத்தஞ் செய்த பெண்களில் பலர் தாம் தொழில் செய்த இடங்களில் வேலை நிறுத்தத்திற்குத் தலைமை தாங்கினர். சில ஆண்கள் வேலை நிறுத்தத்தில் பங்கு பற்றத் தயங்கியபோது இத்தலைவிகள் அவர்களுக் குத் தைரியமூட்டி வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்ளச் செய்தனர்.
பெண் போராளிகள்
அவசரகாலச் சட்டத்தின்கீழ் வேலை நிறுத்தஞ் செய்யத் தூண்டுதல் கடுமையான குற்றமெனவும் அவ்வாறு தூண்டுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அரசாங்கம் பிரகடனப் படுத்தியிருந்தது. இதன்படி பலர் கைது செய்யப்பட்டனர். ஆனல் இதைக் கண்டு அஞ்சாத தோழியர்கள் ஒரு வேலைத் தலத்திலிருந்து மற்றுமோர் வேலைத் தலத்திற்குச் சென்று வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்ளுமாறு தோழர்களுக்கு உற்சாக மூட்டினர்; வேலை நிறுத்தத் திற்குப் புதிய தெம்பையும் சக்தியையும் ஏற்படுத்தினர்; இவ்வாறு உற்சாக மூட்டிக் கொண்டிருந்த ஒரு தோழி யர் அனுராதபுரியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
29

Page 31
அங்குள்ள மாவட்ட அமைச்சரின் நிர்ப்பந்தத்தின் பேரில் பொலிசார் அவரைக் கைது செய்து விளக்க மறியலில் வைத்தனர்.
வேலை நிறுத்தம் ஆரம்பமானபோது ஆசிரியை யாகக் கடமையாற்றிய ஒரு தோழியர் வைத்திய சாலையில் தங்கி சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். வேலைநிறுத்தம் ஆரம்பமாகி ஒரு கிழமைக்குப் பின்னர் அவர் குணமாகி வீடு திரும்பினர். கடமைக்குச் செல்லு மாறு பலர் அவருக்கு ஆலோசனை கூறினர்கள். இவ் வாலோசனைகளை நிராகரித்த அவர் வைத்தியசாலையி லிருந்து வெளியேறிய திகதி முதல் தான் வேலை நிறுத் தத்தில் பங்குபற்றுவதாக பாடசாலைக்கு அறிவித்தார். அச்சந்தர்ப்பத்தில் வேலை நிறுத்தத்தின் வெற்றி சந் தேகத்திற்கிடமானதாகவே இருந்தது.
ஆசிரியையாகப் பணியாற்றிய மற்றுமோர் முஸ்லீம் தோழியர் வேலை நிறுத்தம் ஆரம்பமாகி ஒரு மாதம் கடந்த பின்னரே வேலை நிறுத்தத்தில் பங்குபற்றினர். வேலை நிறுத்தம் ஆரம்பித்தபோது அவர் கடமை யாற்றிய முஸ்லீம் பாடசாலைக்கு நோன்பு விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை காரணமாகவே அவருக்கு ஆரம்பத்தில் வேலை நிறுத்தத்தில் பங்குபற்ற முடிய வில்லை. விடுமுறை விட்டு பாடசாலை மீண்டும் ஆரம்ப மான போது ஒரு மாதம் கடந்திருந்தது, அப்போது வேலை நிறுத்தம் தோல்வி,கண்டிருந்தது; இந்நிலையிலும் இப்பெண்மணி வேலை நிறுத்தத்தில் பங்கு பற்றியதே மிக உயரிய பண்பாகும். வேலை நிறுத்தஞ் செய்த தொழிலாளர்களை தனிமைப்படுத்துவது மிகவும் கீழ்த் தரமான செயலாகவே அவர் கருதினர். மறுபுறம் சாதாரண தொழிலாளர் எப்படியிருப்பினும் தொழிற் சங்க உயர் மட்டங்களில் பணிபுரிந்தோர் கூட அன்றைய நிலையில் வேலை நிறுத்தத்தில் புதிதாகச் சேர்வதையிட்டு அஞ்சினர். எனவே இத்த்ோழியர் ஏனைய பெண்களுக்கு மாத்திரமல்ல சகல தொழிலாள வர்க்கத்திற்கும் முன்னு தாரணமாகவே நடந்து கொண்டார்.
வேலை நிறுத்தஞ் செய்தவர்களில் கணிசமான தொகையினர் வேலை நீக்கஞ் செய்யப்பட்டமையால் வாழவழியின்றி பல துன்பங்களை அனுபவித்து வருகின் றனர். அவர்களில் தங்கி வாழ்வோர் படும் துன்பங் களுக்கு அளவில்லை. வேலை வாய்ப்பற்றேர் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமானேர் வாழும் இந்நாட்டில் வேலைநிறுத்தஞ் செய்தோர் புதிதாக வேலைகளைத்தேடிக் கொள்வது முயற்கொம்பாகும். வேலைவாய்ப்பின்மை யால் தொழில் தேடுவோருக்கும், பல ஆண்டுகளாக (மிகக் குறைந்த ஊதியம் பெற்று) ஒரு தொழிலைச்செய்து வேலை நீக்கஞ் செய்யப்பட்டவருக்கும், இடையே பெரிய வித்தியாசம் உண்டு. வேலை வாய்ப்பில்லாத ஒருவர் தொழில் இல்லா நிலையில் வாழ்ந்து பழக்கப்பட்டவர். வேலை வாய்ப்பினைப்பெறும் சந்தர்ப்பங்களும் அவருக்கு நிறைய உண்டு. ஆனல் ஏற்கனவே ஒரு தொழில் செய்த வர் குறிப்பிட்டதொரு வாழ்க்கை முறைக்கு பழக்கப்
30

பட்டிருப்ப்ார். அவர் எதிர்பாராத வகையிலே திடீரென வேலை வாய்ப்பை இழக்க நேரிடுகின்றது. மேலும் வேலை வர்ய்ப்பிற்கான அவரது வயதெல்லையும் கூடியதாயிருக் கும். வேலை நீக்கஞ் செய்யப்பட்ட நிலையில் வேறு வேலை வாய்ப்பு பெறுமீ சந்தர்ப்பமும் மிகக் குறைவு. அரசாங் கத்தால் வேலை நீக்கஞ் செய்யப்பட்டுள்ள நிலைமை காரணமாக தனியார் துறையினரும் அவருக்கு வேலை வழங்கமாட்டார்கள்.
வாடகை வீடுகளில் குடியிருந்தோர் நடுத்தெருவுக் குத் தள்ளப்பட்டுள்ளனர். அரசாங்க வீடுகளில் குடியிரு. ந்தோரை அவற்றிலிருந்து வெளியேறுமாறு அரசாங்கம் கட்டளையிட்டுள்ளது. இந்நிலையில் குடும்பம் சீர்குலைந் துள்ளது.
சொந்த வீடுகளில் குடியிருந்தோரைப் பொறுத்த வரை அவர்களின் வீட்டுத்தளபாடங்களும் ஏனைய பொருட்களும் இன்றில்லை. அவற்றை விற்று உயிர் வாழும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
சில தாய்மார் மிகக்கவலைக்கிடமான தீர்மானங்களை எடுத்துள்ளனர். இது வரை தமது பிள்ளைகளின் கல்விக் காக தமது மாதச்சம்பளத்தில் சேமித்த சிறு தொகைப் பணத்தையே செலவு செய்தனர். வேலைநிறுத்தம் காரணமாக மேற்படி வருமானம் கிடைக்காதபடியால் பிள்ளைகளின் பாடசாலைக் கல்வியை இடையில் நிறுத்த, தாய்மார் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
கணவன் மனைவி ஆகிய இருவரும் வேலை நிறுத்தத் தில் பங்கு பற்றிய சந்தர்ப்பங்களில் நிலைமை மிக மோச மாகியுள்ளது. இன்று அவர்களின் குடும்ப வாழ்வு சின்ன பின்னமாகியுள்ளது. கணவன் ஓரிடத்திலும் மனைவி இன்னுமோரிடத்திலும் வாழ நேர்ந்துள்ளது.
கைக்குழந்தைகள் உள்ள தாய்மாரின் நிலைமை மிகக் கவலைக்கிடமானது. பால் மாவின் விலை 600% சதவீதத் தால் அதிகரித்துள்ள நிலையில் தமது குழந்தைகளுக்கு ஊட்டுவதற்குப் புட்டிப் பால் வாங்க வழியின்றி தவிக் கின்றனர். தாய்ப் பால் மிகவும் போசாக்கானது என அரசாங்கம் எவ்வளவு தம்பட்டம் அடித்தாலும் வயிற் றுக்கு ஒழுங்கான உணவு கிடைக்காத தாய்மாருக்கு எப்படி தாய்ப் பால் சுரக்கமுடியும்?
கணவன் மனைவி ஆகிய இருவரும் வேலை நிறுத்தத் தில் பங்கு பற்றிய ஒரு குடும்பத்தில், வேலை நிறுத்தம் ஆரம்பமாகி சில தினங்களில் மனைவி ஒரு குழந்தையைப் பிரசவித்தாள். குழந்தை மிகப் பலவீனமாயிருந்த படி யால் தாய்ப்பால் மாத்திரம் பருக்கும்படி வைத்தியர் ஆலோசனை கூறியதோடு தாய் அதிக போசாக்குள்ள உணவை உட்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி ஞர். கிடைத்த மாத வருமானத்தைத் தவிர வ்ேறு வருமான மார்க்கம் அவர்களுக்கு இருக்கவில்லை. மிகத் தூரப் பிரதேசம் ஒன்றில் குடியிருந்தபடியால் பெற்றேரி

Page 32
டமிருந்தோ அல்லது உறவினரிடமிருந்தோ எதுவித உதவியும் கிடைக்கவில்லை. பலவீனமுற்று உயிர் துறக் கும் வரை குழந்தைக்குப் பாலூட்டும் தீர்மானத்தையே தாய் மேற்கொள்ள வேண்டியிருந்தது.
விவாகமாகாத பெண்கள்
வேலை நிறுத்தஞ் செய்த விவாகமாகாத பெண்களும் பல கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். எதுவித வருமானமும் இல்லாத நிலையில் அவர்கள் பெற்றேர் களிடமே தங்கி வாழ வேண்டியுள்ளது. அல்லது யாரிட மாவது பிச்சை எடுத்த பணத்தில் வாழ வேண்டும். அல்லது பட்டினியால் சாக வேண்டும்.
உயிர் வாழும் பிரச்சினைக்கு மேலதிகமாக திருமனப் பிரச்சினையும் அவர்களை வாட்டுகின்றது. ஒருவரின் சம்பளத்தில் இன்னுமொருவரை வாழவைக்க முடியாத நிலைக்கு சாதாரண மக்களின் வாழ்க்கை மட்டம் வீழ்ச்சி யடைந்துள்ளது. இதனல், பெரும்பான்மையான ஆண் கள் தொழில் செய்யும் பெண்களையே விவாகஞ் செய்ய விரும்புகின்றனர். வேலை நிறுத்தத்தால் வேலை இழந்த காரணத்தால் பல ஆண்கள் அவர்களை திருமணஞ் செய்ய மறுத்து வருகின்றனர். விவாகம் நிச்சயிக்கப்பட்டிருந் தாலும், வேலை நிறுத்தம் காரணமாக அது கால வரை யறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய பல இடையூறுகளுக்கு முகங்கொடுத் தாலும் அமைச்சர்கள் அல்லது யூ.என்.பி. பா. உ க்கள் முன் மண்டியிட்டோ அல்லது பே7 லி வைத்திய சான்றி தழ்களைச் சமர்ப்பித்தோ தமது வேலைகளை மீளப்பெறு வதற்கு தயாராயில்லாத வேலை நிறுத்தஞ் செய்த தோழியர்கள் இருக்கின்றனர். இவர்களின் தைரியமும், தன்னம்பிக்கையும், திடசங்கற்பமும், வர்க்க உணர்வும் பாராட்டுக்குரியது.
எவ்வாறயினும், கடந்த பொது வேலை நிறுத்தத்தில் இதைவிடக்கூடிய எண்ணிக்கையினர் பங்குபற்றத் தயாராயிருந்தனர். ஆனல், வேலை நிறுத்தம் ஒழுங்கு செய்வதில் ஏற்பட்ட குறைபாடுகள், தொழிற் சங்கத் தலைமையின் பின்வாங்கல், அரசியற் கட்சிகளிடமிருந்து கிடைத்த மிகக் குறைந்த ஒத்துழைப்பு, போலிப் புரட்சி வாதிகளின் சீர்குலைவு வேலைகள் என்பன காரணமாக பெருந்தொகைப் பெண்கள் இப்பொது வேலைநிறுத் தத்தில் பங்கு பற்றவில்லை. பெருந்தொகையான தொழி லாளர்கள் பங்கு பற்ருமைக்கும் இவை காரணமாக அமைந்தன. மறுபுறம் அரசாங்கத்தின் பயமுறுத்தல் களும் செல்வாக்குச் செலுத்தின. மேற் குறிப்பிட்ட குறைபாடுகள், சீர்குலைவு வேலைகள், என்பன தவிர்க்கப் பட்டிருந்தால் கூடிய எண்ணிக்கையினர் வேலை நிறுத்தத் தில் பங்கு கொண்டிருப்பார்கள்.
ஸ்தாப்ன ரீதியான பலவீனங்கள் இருந்தபோதிலும் அரசாங்கத்தின் அடக்குமுறையின் முன்னே அஞ்சா நெஞ்சத்துடன் குறிப்பிட்டளவு பெண்கள் வேலை நிறுத்தத்தில் பங்கு பற்றியமை மகிழ்ச்சிக்குரியதாகும்.

அவர்கள் இலங்கைப் பெண்கள் விடுதலை இயல் உறுதி மிக்க போராளிகள் என்பதில் எதுவித சந்.ே இல்லை. எனினும் முதலாளித்துவ ::*ಾ அடிமையாகி வர்க்கப் போராட்டங்களைப் பற்றி கன் லும் கருதாத இந்நாட்டு பெரும்பான்மை பெண்க யும் விழிப்படையச்செய்து போராட்ட மார்க்கத்தில் ஈடுபடுத்துவதற்கு பெண்கள் விடுதலை இயக்கத்தின் வழிகாட்டிகள் வேலை நிறுத்தஞ் செய்த தோழி: களுடன் செயற்படவேண்டும்.*
ܠܗ
-டும்
“சீனவில் ஒரு மனிதன் சாதாரணமாக மூ: அதிகார அமைப்புகளின் (அரசியல் அதிகா குல அதிகாரம், மத அதிகாரம்) அதிகாரத்திற் கீழ்ப்படுத்தப்பட்டிருக்கிருன் . . . . . பெண்கலை பொறுத்தவரையில், அவர்கள் இம்மூன்று அதிகஅமைப்புகளோடு ஆண்களாலும் ஆதிக்கம் செ யப்படுகின்றனர். (கணவனின் அதிகாரம்) இந் நான்கு - அரசியல், குல, மத, ஆண் அதிகார களுமே நிலப்புத்துவ-தந்தையாட்சித் தத்துவாமிழா த்தம், அமைப்பு ஆகியவை முழுமையினதும் உழு வடிவமும், சீன மக்களை, குறிப்பாக விவசாயிகளை, பிணைத்திருக்கும் நான்கு தடித்த கயிறுகளும் ஆகும். விவசாயிகள் எவ்வாறு நாட்டுப்புறத்தில் நிலப்பிர ப்புக்களின் அரசியல் அதிகாரத்தை வீழ்த்தியுள்ள னர் என்பது மேலே விவரிக்கப்பட்டது. நிலபிரபு களின் அரசியல் அதிகாரமே மற்ற அதிகார அடை ப்புகள் எல்லாவற்றினதும்'முதுகெலும்பு. அத்மா வீழ்த்தப்பட்டதோடு, குல அதிகாரம், மத அதிக’ ரம். கணவனின் அதிகாரம் எல்லாம் ஆட்டா காணத் தொடங்குகின்றன . . . . . . கணவனிட் அதிகாரத்தைப் பொறுத்தவரை, வறிய விவசாயி களின் பெண்பாலர் பொருளாதார அவசியத்தின் நிமித்தம் செல்வம் கூடிய வர்க்கங்களின் பெண் களைக்காட்டிலும் கூடிய உடல் உழைப்புச் செய்ய வேண்டும். ஆகவே குடும்ப விவகாரங்களில் அவர் களுக்குக் கூடிய செல்வாக்கும் முடிவுகள் எடுக்கும் அதிகாரமும் இருப்பதால், வறிய விவசாயிகள் மத்தியில் இது எப்போதும் பலவீனமாகவே இருந்து வந்துள்ளது. சமீப ஆண்டுகளில் கிராமீய பொருளாதாரமும் வரவரக் கூடுதலாகப் பங்கலோ ட்டாகியதோடு, பெண்கள் மீது ஆண்களின் ஆதிக் கத்திற்கான அடிப்படை ஏற்கனவே வேரனுக்கப் பட்டு விட்டது. விவசாய இயக்கத்தின் எழுச்சி யோடு பல இடங்களிற் பெண்கள் இப்போது கிராமீய மாதர் சங்கங்களை ஸ்தாபிக்கத் தொடங் கியுள்ளனர்; தங்கள் தலைகளை நிமிர்த்த அவர்களுக் குச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. கணவனின் அதிகாரம் நாளுக்கு நாள் அதிகமாக ஆட்டங் காணுகிறது. ஒரு வார்த்தையிற் கூறினல், விவசா யிகளின் அதிகாரத்தின் வளர்ச்சியோடு, நிலபிரபுத் துவ - தந்தையாட்சித் தத்துவார்த்தமும் அமைப் பும் முழுவதும் ஆட்டங்காணுகின்றன.”
1927 ιDπάέ - மா ஒசேதுங்
31

Page 33
惠 "பெண்ணி
அமைப்பின் (
பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை அடிக்கடி
கலந்துரையாடி, பொது உடன்பாடு காணக்கூடிய
பங்களில் கூட்டு நடவடிக்கை எடுக்கும் மாதர்களின்
i YN
வாக, 1978 செப்தம்பர் மாதத்தில் 'பெண்ணின் "(காந்தா ஹண்ட) அமைப்பு உருவாக்கப்பட்டது.
எமது நோக்கங்களையும் குறிக்கோள்களையும் சுருக்க கக் கீழே தருகின்ருேம்:
பெண்களின் சமூகப்பொருளாதார, அரசியல் சட்ட ரீதியான உரிமைகளுக்காகவும், இலங்கையின் அபிவிருத்தியில் பெண்களை முழுமையாகப் பங்கு கொள்ளச் செய்வதற்கும் ஆர்ப்பாட்டஞ் செய்தல்.
அரசாங்கக் கொள்கைகள் பெண்களை எவ்வாறு ப்ாதிக்கின்றன என்பதை மதிப்பிடுவதற்கு அக்கொ ள்கைகளை பரிசீலனை செய்தல். அரசாங்க மற்றும்
தனியார் துறைகளின் பொருளாதாரம், வெகுஜ னத் தொடர்பு சாதனங்கள் என்பன பெண்களை ஸ்வவளவு தூரம் பாதிக்கின்றன என்பதை மதிப் பிட்டு அவற்றின் கண்னேட்டங்களையிட்டு எச்சரி க்கையோடும் விழிப்போடும் இருப்பதோடு, அவசிய மான சந்தர்ப்பங்களில் நடவடிக்கைகளை மேற் கொள்ளல்.
3. பெண்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக நாடு முழு வதும் கூட்டங்களையும், கலந்துரையாடல்களையும் ஒழுங்கு செய்தல். மேற்படி உரையாடல்களை நடத் துவதற்கு பெண்களின்; iழக்களுக்கும் - இயக்கங் க்ளுக்கும் :ಞ್ಞ? உதவுதல்.
"மகத்தான சோசலிச சமுதாயம் ஒன்றைக் 5#oż' உற்பத்தி நடவடிக்கையிற்
ர்ந்துகொள்ளும்படி பெண்களின் பரந்த சாரி களை விழிப்புறுத்துவது மிக மிக முக்கியம்,உற்பத் தியிற் சமமான வேலைக்கு ஆண்களும் பெண்களும் சமமான ஊதியம் பெற வேண்டும். இரு பாலுக்கு மிடையில் உண்மையான சமத்துவம். சமுதாயம் முழுமையினதும் சோசலிச மாற்றியமைப்பின் ஊடு மட்டுமே அடையப் பெற முடியும்.’
1955 - மா ஒ சேதுங்
fG)
 

ST
குரல்"
குறிக்கோள்கள்
பெண்கள் சம்பந்தப்பட்ட ஆய்வுகளையும், கற்கை களையும் மேற்கொண்டு அவற்றின் பெறுபேறுகளை நகர - கிராம - தோட்டப்புற மற்றும் பெண்கள் அமைப்புக்களுக்கும் விரிவாக்கல்.
பெண்களினது பிரச்சினைகளைப் பற்றி மாதர்களின தும் ஆண்களினதும் விழிப்புணர்வை உயர்த்துவத ற்காக புத்தகங்களையும் பிரசுரங்களையும் வெளியிடு தல், அவசியமான மொழிபெயர்ப்புக்களைச் செய் தல், வெகுஜனத் தொடர்பு சாதனங்களுக்கு கட்டு ரைகளையும் கருத்துக்களையும் வழங்கல்.
மாதர்களின் பிரச்சினைகளைப் பற்றிய 'பெண்ணின் குரல்’ அமைப்பின் கருத்துக்களை பெண்களின் பரந் த அணியினர் மத்தியில் கிடைக்கக்கூடிய விதத்தில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளி லும் தொடர் ச் சி யா க சஞ்சிகையொன்றை பிரசுரித்தல்.
மேலே குறிப்பிட்டுள்ள நோக்கங்களையும் குறிக்கோள் களையும் ஏற்றுக் கொள்பவர்களுக்கு எமது அங்கத்துவம் உரித்தாகும். அங்கத்துவ சந்தா வருடம் ஐந்து ருபாவாகும்.
விபரங்களுக்கு:
**பெண்ணின் குரல்’ (காந்தா ஹண்ட) 1819, சித்ரா ஒழுங்கை, கொழும்பு-5.
'சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்"
- பாரதியார்
“எந்த நாட்டிலும் சரி, எந்தக் காலத்திலும் சரி; நாட்டின் செல்வம், நாட்டிலுள்ள மக்கள் அனைவ ருக்கும் பொதுவானதே! அவரவர் உழைப்புக்கேற் பவும் தேவைக்கு ஏற்பவும் அந்தச் செல்வத்தை அனுபவிக்க மக்களிலே ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.” ப. ஜீவானந்தன்

Page 34
கொழும்பு-5.
PENNIN KURAL - 4 (Woice of Women in Tamil)
18 9, irġi TIT ஒழுங்கை,
பெண்ணின் குரல் 4
9) 6T6T 9555)
ாரதியாரின் அபிலாசைகளே முன்னெடுத்துச் செல்வோம்
- ஆசிரியர் குறிப்பு வாகரத்துரிமையும் யாழ் குடாநாட்டுப் பெண்களின் நிலேயும்
- காந்தன் - 3. மலேயகப் பெண்ணுள் வரலாறு
| 537 AF, DIT " TGM7 TP - IJ ITG:ll III IIT - 岳 Tந்திய விவசாயப் பெண்களே அணிதிரட்டுவதிலான அனுபவங்கள் " யிர் பெற்றெழுந்து வருவாயே
“ါ႔ႏွ - ஞானிஜெகன் -
துதி என்ருெரு புலவன் பிறந்தான்
- சாருமதி - விடுதலே பற்றி-பாரதி (சில அடிகள்) - I ஆ ஈதல் பற்றி - பாரதி - II
விடுதலேக் கும்மி - མ་ பாரதி 山厅f°
தந்தையைவிட தாய்க்கே அதிக புரதச் சத்து தேவைப்படுகின்றது
- பேராசிரியர் காலோ பொன்சேக்சு- 卫岳 । - சுபத்திரன் Iff * தேயிலையும் பத்து லட்சம் அடிமைகளும்
--ரோஹினி ந. வீரசிங்க - 17 * உணர்வுகளின் விழிப்பு (சிறுகதை)
- கே. ஆர். மாணிக்கம் 2I * இடதுசாரி தீவிரவாதிகளும்
பெண்கள் பிரச்சினேயும் - சுமனு பெரேரா - அட உள்ளேயிருப்பது |- 2 s *தோட்டத் தொழிலாளப் பெண்ணுெருவரின்
வாழ்க்கையில் ஒரு நாள்
- செல்வி எம். மாரியாய் * கல்வியில் பெண்களின் பங்
- இந்திராணி ஈரியகொல்லே -- 25 * பெண்கள் விடுதலே பற்றிய
ஒரு கண்ணுேட்டம்-செல்வி திருச்சந்திரன்- 7 1980 யூலே பொது வேலே நிறுத்தமும் பெண்களும் - பிரேமலால் பர்ட்டிரணவீர -
எமது நன்றி:
கருணுரத்ன அச்சக
நீரிமையாளருக்கும் 'ஊழியர்களுக்கும் எமது நன்றி
 
 
 

பெண்ணின் குரல்
பெண்களின் இன்றைய நிலைமையை
எடுத்து விளக்கும்
பெண்களின் பிரச்சினைகளைப் பற்றி பகுத்தறிவுக் கோட்பாட்டுடன் போராடும் பெண்களால், பெண்களுக்காக மும்மொழிகளிலும் பிரசுரிக்கப்படும் இலங்கைப் பெண்களின் உரிமைக்கான ஒரே சஞ்சிகை
කාන්තා හඬ
(காந்தா ஹண்ட) *
பெண்ணின் குரல்
Voice of Women (வொய்ஸ் ஒப் விமன்)
at a EE (பெண்ணின் குரல் சிங்களத்தில்)
(ஒரு சில பிரதிகள் விற்பனைக்கு உண்டு) இலக்கம் 2 - விலே 3 ரூபா 50 சதம் இலக்கம் 3 - விலே 3 ரூபா இலக்கம் t - விலே ரூபா தபாற் செலவு ரூபா 1 1 பெண்ணின் குரல்
(ஒரு சில பிரதிகள் விற்பனேக்கு உண்டு) இலக்கம் 2 - விலே 3 ரூபா 50 சதம் இலக்கம் 3 - விலை 3 ரூபா தபாற் செலவு ரூபா 1
WOICE OF WOMEN (பெண்ணின் குரல் ஆங்கிலத்தில்)
(ஒரு சில பிரதிகள் விற்பனைக்கு உண்டு) இலக்சம் 3 - விலே 5 ரூபா தபாற் செலவு ரூபா 1
சந்தா:
விெ)ை கிெ 4 இதழ்களுக்கு ரூபா 18.00 பெண்ணின் குரல் ঢ়েLJIT 16.00 VOICE OF WOMEN , 20,00
(தபாற் செலவு உட்பட)
விபரங்களுக்கு:
"பெண்ணின் குரல்"
189, சித்ரா ஒழுங்கை,
கொழும்பு-5.
கோழும்பு- பி.