கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண்ணின் குரல் 1996.09

Page 1
AFII III 1996
பெண்களின் உரிை
 
 
 

ISBN 1391 - 0914
மைக்கான சஞ்சிகை

Page 2
பொருளடக்கம்
விடிவு எப்போது?
யுத்தமும் குடிமுதல்வனாட்சி
முறைச் சமுதாயமும்
பாலியல்வதை படுகொலை
சட்டமும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும்
அகதிமுகாம்களில் அவலமுறும் பெண்கள்
செய்திகள்
நிகழ்வுகள்
அபிப்பிராயம்
கடிதங்கள்
மலையக நாவல்களில் பெண்கள்
சிறுகதை
கவிதைகள்
நூலகம்
O5
O9
11
13
16
19
20
21
26
27
10, 23,
31
32
அ
வருகின்றது இப்பிரச்சி பூசல்களின் பெயர்ந்து சோக நி
சொல்லெ
துன்புறுத் புள்ளி விட
இ ஆய்வுக் க
வெளியிட்
(o)
தண்டனை
செய்யப்ெ
சாவித்திரி
g பெரு வரே சில கடிதங்
Go)
தயங்கும் சிறுகதையி
G)
வெளியிட்
32
ஊக்கப்படு
17 ஏ, பார்க் கொழும்பு -

பெண்ணின் குரல்
i
இதழ் : 14 செப்டம்பர் 1996
இந்த இதழில்.
ாசகர்களுக்கு வணக்கம்.
கதிகள் பிரச்சினை, நாளிலும் பொழுதிலும் பெருகி து. எமது நாட்டிலும் உலக அரங்கின் பல பகுதிகளிலும் னை பூதாகாரமாக வளர்ந்து விட்டது. யுத்தம், இனப் ன் விளைவு; மக்களைச் சொந்த நாட்டிலேயே இடம் அல்லலும் அவதியுமுற்று அச்சத்துடன் வாழ வேண்டிய லைக்குத் தள்ளியிருக்கிறது ! இதில் பெருமளவில் )ானாத் துயருறுவதும் பலாத்காரப் பாலியல் தலுக்குள்ளாவதும் பெண்களும் சிறார்களுமே எனப் பரங்கள் தெரிவிக்கின்றன. து சம்பந்தமாக இசபெல்கெய்மர் ஆங்கிலத்தில் எழுதிய ட்டுரையினைத் தமிழில் மொழிபெயர்த்து இவ்விதழில் டுள்ளோம். பண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் னக்குரிய குற்றச் செயல் என சட்டத்திருத்தங்கள் பெற்ற போதிலும், அவற்றிலுள்ள, ஒட்டைகளை குணசேகரவின் கட்டுரை பிட்டுக் காட்டுகிறது. ங்கள் 'பெண்ணின் குரல் இலங்கைக்கு வெளியேயும் வேற்புப் பெற்று வருவதை இவ்விதழில் வெளியாகியுள்ள களிலிருந்து நீங்கள் உணரலாம். vn பண்கள் எதிர்கொள்ளும், ஆனால் வெளியே சொல்லத்
பிரச்சினையொன்று, தேவகெளரி எழுதியுள்ள பின் மூலமாக முன் வைக்கப்படுகின்றது. பண்ணினம் சார்ந்த சில கவிதைகளையும் இவ்விதழில் டுள்ளோம். ங்கள் அபிப் பிராயங்கள், எமது பணியை த்ெதும் என்பதால், படித்தபின் கருத்தை எழுதுங்கள்.
நன்றி.
அன்புடன், ஆசிரியர்.
அவனியு
a GG2 笠

Page 3
பெண்ணி
(அமைப்பின்
பெண்கள் சம்பந்தப்படட பிரச்சினைகளை அட காணக்கூடிய விடயங்களில் கூடடடு நடவடிக்கை மாதத்தில் பெண்ணின் குரல் (காந்தா ஹண்ட) அ
எமது நோக்கங்களையும் குறிக்கோள்களையும் சுரு
1. பெண்களின் சமூக பொருளாதார, அரசியல் அபிவிருத்தியில் பெண்களை முழுமையாகப்
இயங்குதல்.
2. அரசாங்கக் கொள்கைகள் பெண்களை எ அக்கொள்கைகளை பரிசீலனை செய்தல், அர வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் என்பன ெ மதிப்பிட்டு அவற்றின் கண்ணோட்டங்களையி அவசியமான சந்தர்ப்பங்களில் நடவடிக்கைக
3. பெண்களின் பிரச்சினைகள் சம்பந்த கலந்துரையாடல்களையும் ஒழுங்கு செய்தல், ே குழுக்களுக்கும் இயக்கங்களுக்கும் பேச்சாள
4. பெண்கள் சம்பந்தப்பட்ட ஆய்வுகளையும்
பேறுகளை - நகர - கிராம தோட்டப்புற மற்று
5. பெண்களினது பிரச்சினைகளைப் பற்றிய
உயர்த்துவதற்காக புத்தகங்களையும் L மொழிப்பெயர்ப்புகளைச் செய்தல், வெகுஜ கருத்துக்களையும் வழங்கல்.
6. மனிதர்களின் பிரச்சினைகளைப் பற்றிய பெண் பரந்த அணியினர் மத்தியில் கிடைக்ககூட மும்மொழியிலும் தொடர்ச்சியாக சஞ்சிகை பி
ニー 7 மேலே குறிப்பிட்டுள்ள நோக்க ஏற்று கொள்பவர்கள் எமது அ
6i III பெண்ண
17 6J LITrif
கொழு
 
 
 
 
 

ரின் குரல்
குறிக்கோள்கள் )
டிக்கடி கூடிக்கலந்துரையாடி, பொது உடன்பாடு எடுக்கும் மாதர்களின் குழுவாக 1988 செப்டம்பர்
புமைப்பு உருவாக்கப்படடது.
க்கமாக கீழே தருகின்றோம்.
சட்ட ரீதியான உரிமைகளுக்காகவும் இலங்கையின் பங்கு கொள்ளச் செய்வதற்குமாக குரல் கொடுத்து
வ்வாறு பாதிக்கின்றன என்பதை மதிப்பிடுவதற்கு சாங்க மற்றும் தனியார் துறைகளின் பொருளாதாரம், பண்களை எவ்வளவு தூரம் பாதிக்கின்றன என்பதை ட்டு எச்சரிக்கையோடும் விழிப்போடும் இருப்பதோடு ளை மேற்கொள்ளல்.
தமாக நாடு (փԱghlgյմ கூட்டங்களையும், மேற்படி உரையாடல்களை நடத்துவதற்கு பெண்களின் ர்களை அனுப்பி உதவுதல்.
கற்கைகளையும் மேற்கொண்டு அவற்றின் பெரு ம் பெண்கள் அமைப்புகளுக்கும் விரிவாக்கல்.
மாதர்களினதும் ஆண்களினதும் விழிப்புணர்வை பிரசுரங்களையும் வெளியிடுதல், அவசியமான னத் தொடர்பு சாதனங்களுக்கு கட்டுரைகளையும்
ாணின் குரல் அமைப்பின் கருத்துக்களை பெண்களின் டிய விதத்தில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய ரசுரித்தல்.
ܢܔܢܔ===– – ங்களையும் குறிக்கோள்களையும் P மைப்பில் அங்கத்துவம் பெறலாம்.
களுக்கு
ரின் குரல்

Page 4
விடிவு எப் Gua
தொடர்ந்து பல ஆண்டுகள் புத்தத்தில் அமிழ்ந்துவிட்ட வட பிரதேசத்தின் சில பகுதிகளை அரசாங்கம் போராளி அமைப்பிடமிருந்து பிடுங்கிக் கொண்டது. அப்பிரதேசங்களில் அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பரவவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அரசாங்கத் தொடர்புச் சாதனங்கள் மூலம் அரசு, அங்குவாழும் மக்களை இயல்பு வாழ்விற்கு இட்டுச் செல்வதாகவும் தெரிவிக்கின்றது. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வீரப்பட்ட அப்பகுதிகளில், மக்களின் வாழ்வு தொடர்ந்து துன்பச் கமையால் அழுத்தப் பட்டேயிருக்கின்றதென்று செய்திகள் கசியத்துவங்கியுள்ளன.
இடிந்த கட்டிடங்கள்; உடைந்த வீடுகள், காய்ந்து கவனிப்பாாற்றுக் காடுபற்றி விட்ட பூமியானாலும் கூட தாம் வாழ்ந்த பிரதேசம், தாம் அன்றாடம் மிதித்து வாழ்ந்து ஒன்றிவிட்ட மண் என்ற மனநிம்மதி அம் மக்களுக்கு இருப்பது இயல்பே. உறவுகளை விட்டு உடைமைகளை இழந்து வாழுகின்ற மன எக்கம் மட்டுமல்ல வாழ்விக்குத் தேவையான சூழ்நிலை இல்லையே என்ற அச்சம் உச்சநிலையிலே அவர்களிடம் இருக்கின்றது.
உயிரைக் காக்கும் உணவுத் தேவை கூட போதுமானதாக உள்ளது என்று கூற முடியாத நிலை நிலவுவதாகத் தெரிகின்றது. கோதுமை மாவும் அரிசியும் பருப்பும் அத்தியாவசியத் தேவையாக இருந்தாலும், இந்த நாலைந்து உணவுப்பொருட்களுடன் எத்தனை மாதங்களைக் கழிப்பது? கப்பல் செல்லத் தாமதமானாலோ, விநியோகத்தில் ஏதாவது கெடுபிடி ஏற்பட்டாலோ, வண்டும், கல்லும், புழுவும், நெல்லும் கலந்த நாட்பட்ட அரிசியே விநியோகிக்கப்படும். அதனையும் இலகுவில் பெறமுடிவதில்லை. விதிச் சோதனைச் சாவடிகளிலும், விற்பனை நிலையங்களிலும் நீண்ட நேரம் கால்கடுக்க வரிசையில் காத்துநிற்க வேண்டும். சிறுவர்கள், இளைஞர்கள் விதிக்கு வர அஞ்சுகின்றனர். அதனால் குடும்ப உணவுப் பொருட்களைப் பெற முதியோரின் அனுபவங்கள் பெரும்பாடாகவே இருக்கிறது.
சாக்கு வகைகள், காய்கறி முதலியன பெறுவதிலும் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். வெங்காயம், மிளகாய், கத்தரி, வாழைக்காய், முருங்கை போன்ற உள்ளூர் காய்கறி வகைகளைக் கண்ணில் பார்க்கக் கிடைத்தாலும் அவற்றின் விலை யானை, குதிரை விலையை எட்டிப்பிடிப்பனவாபபுள்ளன.
உணவுப் பொருட் தட்டுப்பாட்டினால் ஏற்பட்ட மனச்சோர்வாடு, கண்ணி வெடிகள், பொறி வெடிகள், படையினர் புவிகளின் மோதல்கள் தாக்குதல்கள் மக்களுக்கு சொல்ல GENUIT SIT GOOTT அச்சத்தையும், இடைஞ்சல்களையும்
விழைவிக்கின்றன.
நீர், சுற்றுப்புறச் சூழல் ஆகியவற்றில் மாக படிந்துள்ளமையால், நோய்களும் அதிதீவிரமாகத் தமது

2/. 0 பத்மா சோமகாந்தன்
ஆக்கிரமிப்பை நடத்துகின்றன. இருமல், காய்ச்சல், வாந்தி, வயிற்றுக் கழிச்சல் அங்கு பெருமளவில் உலவுகின்றன. காசநோய், மலேரியா, வயிற்றோட்டம், பல் வருத்தம், நீரிழிவு, கான்சர் முதலியவற்றால் கஷ்டப்படுவோர், இதயநோயாளர், காபமடைந்தோர் போன்ற நோயாளிகள் நோய்க்குரிய மருந்துகளையோ, வைத்தியர்களையோ, பராமரிப்போரையோ கானமுடியாமல் திண்டாடுகின்றனர்.
சிரங்கு சொறி போன்ற தொற்றுநோய்களால் அவதியுறும் குழந்தைகள் கர்ப்பிணிகள் ஏராளம்,
பெற்றோரை, சகோதரர்களை, பிள்ளைகளை, உற்றார் உறவினரை இழந்து தனிமரமாக்கப்பட்டு என்றுதான் விடிவு ஏற்படுமோ என்ற கவலையால் மனம் வெதும்பி மன நோயாளர்களாக அலைபவர்களின் தொகை பெருகிவருகிறது.
வடக்கின் வளர்ச்சிக்கு அத்திபாரமாக உள்ள கல்விப் பாரம்பரியம் அறுந்து சிதைந்துபோய்க் கிடக்கின்றது. Luft LFF6-1613,5i. நூலகங்கள், கல்வியலுவலகங்கள் சுவர்களையிழந்து கல்லும் தடியும் தும்பும் தூசியுமாக ஒளியற்றுக் கிடக்கின்றன. பாடநூல்கள், கல்விக்குரிய உபகரணங்கள் யாவுமே தட்டுப்பாடான நிலையில் இருப்பதால் கைக்கெட்டும் பொருள்கள் பொன்விலையில் உயர்கின்றன. கல்விக்கு இறைக்க அவர்களிடம் வழியில்லை.
போக்குவரத்து வசதிகள் சீர்பெறவேயில்லை. விதிகள் வெறிச்சோடிக் குண்டும் குழிகளுமாக பாழாகிக் கிடக்கின்றன. போக்குவரத்துச் சாதனங்கள் மக்கள் செல்ல வேண்டிய இடங்களை எட்டக்கூடியனவாக இல்லை. தொகையான பஸ்களும், வான்களும் வாடகை மோட்டார்களும் ராக்சிகளும் ஒடிய விதிகளில் ஓரிரு வாகனங்களின் ஒட்டம் போதியதன்று. போக்குவரத்துச்சேவை முடங்கியே கிடக்கிறது. எஞ்சியிருக்கும் உறவினரைப் பார்த்துவரவோ, கோயில் வழிபாடு ஆற்றவோ வைத்தியசாலைக்குச் செல்லவோ வாழ்வின் அத்தியாவசிய கருமங்களில் ஈடுபடுவதென்பதோ இயலாத காரிமாகிவிட்டது.
தெருவெல்லாம் நாய்கள் பசியினால் அளளையிட்டுக் குரைத்தபடி விசர்கொண்டு அலைகின்றன.
கூடாரமற்ற வண்டில்கள் போல பல வீடுகள் கூரையின்றி சோபையிழந்து சோகத்தில் அமிழ்ந்தியுள்ளன. சனங்களின் அடர்த்திக் குறைவால் விடுவாசல்கள் தோட்டம் துரவுகளெல்லாம் கவனிப்பாரின்றி பற்றைவளர்ந்து பாம்பின் உறைவிடமாகியுள்ளன. கிணறுகள் இறைப்பைக்கண்டு பல மாதங்களாகிவிட்டதால் ஷெல் சன்னத் துண்டுகள், குப்பை கஞ்சல்கள் நிரம்பப்பெற்று குடிநீரே நாற்றமெடுக்கும் நிலையில் உள்ளன. தோட்டம் துரவுகள் பற்றை படர்ந்த காடுகளாக மாறிவிட்டன.

Page 5
விவசாயத் தேவைக்கான மண்ணெண்ணெய், நீரிறைக்கும் இயந்திரம், பசளை, விதை பெற்றுக் கொள்வதும் அவர்களுக்கு சிரமமாகவே உள்ளது. கூட்டுமுயற்சியான விவசாயத்துறைக்கும் போதிய அனுசரணை ஒத்துழைப்பு இல்லாவிடில் விளைபயனைப் பெறுவது கடினமே. திடீர்ச் சோதனைகள், சுற்றிவளைப்புகள், வாணவெளியில் வட்டமிடும் புக்காராக்கள் மக்கள் அமைதியாக வெளியில் தொழில்புரியத் தயக்கத்தைக் கொடுக்கின்றது.
கால்நடைகளும் போதிய இரையோ, நீரோ இன்றி கட்டாக்காலிகளாகிவிட்டன. இவற்றைக் கட்டுப்படுத்தி ஒழுங்காகத் தீனிபோட்டுப் பராமரித்து பயன் அடையக் கூடிய முறையில் நாளாந்த வாழ்வில் அங்கு அமைதியில்லை.
எந்த நேரம் என்ன நடக்குமோ? வெடிச்சத்தம் கேட்டால் எத்திசை நோக்கிஓடுவது என்பதே சிந்தனையாகிவிட்ட மக்களின் மனதின் கிலியை நீக்கி மக்களுக்கு பாதுகாப்பு உண்டு என்ற நம்பிக்கையை முதலில் ஏற்படுத்துவதில் அக்கறை காட்டப்பட வேண்டும்.
இயல்பு வாழ்விற்கு மக்கள் வந்துகொண்டிருக்கிறார்கள் என்று பத்திரிகைகளிலோ தொலைக்காட்சியிலோ சொல்லிவிட்டால் மட்டும் போதாது. உண்மையான அக்கறையோடு
அஞ்சலி ஒடுக்கப்பட்டே உரிமைக்குரல்
9LÍ55ůLIL GLIF j. என்போரின் உரிமைகளுக் குணவர்த்தன என்ற புரட்
Guiu sîLLIF j.
தொழிற்சங்கங்களு இருவாரங்களின் முன் மி நன்றியறிதலை வெளிப்படு
IJsbU30)JIIITBij G இளமையிலேயே புரட்சிக சமூகத்தில் நிலவிய சம்பி இயக்கத்தில் சேர்ந்து அத 1956ல் பாராளுமன்றத்து அமோக வெற்றி பெற்று 2(
தொழிலாளர் பே இனப்பாகுபாடுகளுக்கு எ மறுப்புகளுக்கு எதிராக இப்பெண்மணியின் மறைவு
அவர் மறைந்துவி போராட்டக்காரியான விவி ஐயமில்லை.
 

அம்மக்களின் மனதில் நம்பிக்கையையூட்ட அரசு முயலவேண்டும். மக்கள் மனத்தை வருத்திக் கொண்டிருக்கும் அச்சம் நீக்கப்பட வேண்டும். உணவு, இருப்பிட வசதி, பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். துயருற்றுத் தவிக்கும் மக்களைத் தனிமைப்படுத்தாமல் தெற்கில் இருக்கும் அவர்களது உறவினர் நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவும், தெற்கே வந்துபோகவும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
மாவும் அரிசியும் மட்டுமல்ல, மக்களின் வாழ்க்கை. பல்வேறு உணர்வுகளும் கொடுக்கல்வாங்கல்களும் இன்பதுன்பங்களும் பின்னிப்பிணைந்ததே வாழ்க்கை. எனவே அவர்களின் மனம் ஆறுதலடைந்து, தாமும் இந்த நாட்டுமக்களே என்ற உணர்வை இதயபூர்வமாக அவர்கள் எய்தும் வகையில் வசதிகளைச் செய்யும் அதேநேரத்தில், இந்த அவலங்களுக்குக் காரணமான இனப்பிரச்சனைக்குச் சரியானதும், பொருத்தமானதும், எல்லாத் தேசிய இனங்களுக்கும் இந்நாட்டில் சமமான உரிமையுண்டு என்ற தத்துவத்தின் அடிப்படையில் தொடர்ந்து யுத்தத்தினாலன்றி பேச்சுவார்த்தைகளின் மூலமாக தீர்வைக்காண வேண்டியது அரசின் கடமையாகும். அதுதான் எல்லோருக்கும் நிரந்தர விடிவை ஏற்படுத்தவல்லது.
_ாரின்
ஒயநதது!
, ஒடுக்கப்பட்டோர், உரிமைகள் பறிக்கப் பட்டோர், ஏழைகள், தொழிலாளிகள்
காகவும், உயர்வுக்காகவும், தனது வாழ்நாளை அர்ப்பணித்துப் போராடிய விவியன் சிப் பெண் தனது 80 வது வயதில் சென்ற ஒக்டோபர் 3ம் திகதி இயற்கை
ரும் பெண்கள் அமைப்புகளும் அவரின் 80வது பிறந்த நாளை அவர் இறப்பதற்கு ச் சிறப்பாக ஏற்பாடு செய்து அவரின் முன்னுதாரணமான சேவைக்குத் தங்க்ளின்
$ମ୍ପିକ୍ସ୍]].
சல்வாக்கும் வசதிகளும் மிக்க குடும்பத்தில் 16-09-1916ல் பிறந்த விவியன், ரமான எண்ணங்களைக் கொண்டவராக விளங்கினார். அக்கால ஆணாதிக்க ரதாயங்களை உடைத்துக் கொண்டு ஏகாதிபத்தியத்துக்கு எதிரான 'சூரியமல் னுாடாக அரசியலில் பிரவேசித்தார். 1950ல் கொழும்பு மாநகர சபை உறுப்பினராகி க்குப்பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார், அதன்பின் நடந்த ஒவ்வொரு தேர்தலிலும் ) ஆண்டுகள் இடையறாது மக்களின் குரலாகப் பாராளுமன்றத்தில் ஒலித்தார்.
ாராட்டங்களில் தோளோடு தோள் நின்று போராடியவர். போருக்கு எதிராக, திராக, ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகப் பெண்களின் உரிமை நடைபெற்ற அனைத்துப் பேரணிகளிலும் முன்னணிப் போராளியாக விளங்கிய பு ஈடு செய்ய முடியாதது.
ட்ட போதிலும், இலங்கைத் தொழிற்சங்க வரலாற்றிலும், அரசியல் வரலாற்றிலும், பியன் வகித்த பங்கு என்றும் எல்லோருக்கும் ஆதர்சமாக விளங்கும் என்பதில்

Page 6
யுத்தமும் குடிமுதல்வ6 (Ln60s) EF F(L)
குடிமுதல்வராட்சி சமுதாயம் என்பது அடிப்படையில்
ஆனியல்புகளின் சிறப்புத் தன்மைகளிலும் ஆண் கருத்து நிலைபாடுகளிலும் கரிசனை கொண்டு இயங்கும் அமைப்பு முறையாகும். இவ்வாறான சமுதாயத்தை ஆள்வதற்கு அல்லது வழிநடத்துவதற்கு ஆண்கள்தான் அவசியம் என்று அர்த்தமல்ல. உலகின் பலப் பகுதிகளிலும் காணப்பட்ட் குடிமுதல்வராட்சி முறை சமுதாயங்களில் பெண்கள் தலைமைப் பதவிகளை வகித்திருந்த காலங்களில் கூட அச்சமுதாயங்கள் புத்தத்திலீடுபடுவதை அப்பெண் தலைவர்களால் தடுக்க முடியவில்லை. குடிமுதல்வராக அமர்ந்து பெண்கள் ஆளுமை செய்தமைக்கு உதாரணங்களாக முதலாவது எலிசபெத் அரசி, விக்டோரியா மகாராணி, ஈவா பெரன், மார்கிரட் தாட்சர், இமெல்டா மார்கோஸ் ஆகியோரை குறிப்பிடலாம். இப்பெண் தலைவர்கள் பெண்பாலரின் சிறப்பியல்புத் தன்மைகளுடனும் பெண் உரிமை கருத்தியல்களுடனும் தொடர்பில்லாமலிருந்ததுடன் குடிமுதல்வராட்சி
கட்டுப்கோப்புகுகளைக் பாதுகாத்தவர்கள்.
முதலாவது எலிசபெத் தனது இராணுவத்தை ஸ்பானிய கப்பற் படைக்கு எதிராக போர்புரிய ஏவிவிட்டவர். பிரிட்டிஷ் g)jlş. 6Ö)LO ஆட்சியிலிருந்து உடைத்துக்கொண்டு வெளியேறத்துடித்த குடியேற்றநாடுகளில் ஒடுக்குமுறை அட்டூழியங்கள் தலைவிரித்தாடியதும் இரத்த ஆறுகள் ஒடியதும் விக்டோரியா ராணியாக இருந்த காலத்திலே தான். ஈவா பெரன் முதல்வராக இருந்தபோது தான் அந்நாடு ஊழல் மிக்க ஆட்சியில் வன்முறைகளையும் அச்சுறுத்தல்களையும் அனுபவித்தது. மார்கிரட் தாட்சர் தனது இராணுவத்தை போக்லண்ட் தீவுகளுக்காக போரிடுமாறு ஆணையிட்டார். பிலிப்பைன்ஸ் நாட்டின் உள்ளூர் அரசியல் சண்டை சச்சரவுகளுக்கு காரணமாக விளங்கியவர் இமெல்டா
மார்க்கோஸ்.
குடிமுதல்வராக அல்லது பெண்ணுரிமை ஒம்புபவராக இருப்பதென்பது ஒருவரின் உடல் ரீதியான பாலின் தன்மையை அடிப்படையாக கொண்டதல்ல. அது ஒரு அரசியல் கருத்துருபண்பாட்டின் ஊடாகவும் பொருளாதாரத்தின் ஊடாகவும் சமூகக் கட்டுக்கோப்புகளினூடாகவும் சந்ததிசந்ததிகளாக ஒப்படைக்கப் பட்டது. ஆண்கள், பெண்களின் உரிமைகளுக்காக பரிந்து பேசுபவர்களாக இருக்கமுடியும். பெண்கள் குடிமுதல்வராட்சியை வலியுறுத்துபவராக அமையமுடியும்.
யுத்தம், குடிமுதல்வராட்சியைப் போன்றது. ஏனெனில்
 

OIIILéf தாயமும்.
இசபெல் கெய்மர்
அதனிடம் அழிவு, கொலை, கொடுமை, பயம் பீதி, அடக்குமுறை, பாலியல் வன்முறை, அதிகாரத்திமிர், பேராசை போன்ற தன்மைகள் செறிந்துள்ளன.
சமாதானமோ பெண்ணுரிமை ஆதரவாளரைப் போன்றது. ஏனெனில் அது பெண்ணியல்புகளின் விழுமியங்களான சமத்துவம், பேணி வளர்த்தல், மகிழ்ச்சிகரம் முதலியவற்றை உறுதியாகப் பின்பற்றவது. சமாதானம் என்ற இலக்கை பெண்கள் மட்டுமல்ல, ஒவ்வொருவருமே ஈட்டமுடியும். உலக சமாதானத்தை எய்துவதென்பது பெண்ணியக் கோட்பாட்டின் பிரதான அம்சமாகும். ஏனெனில் யுத்தக் கொடுமைகளுக்கு ஆளாகும் குடிமக்களில் பெரும்பாலானோர் பெண்களே என்பதற்காக மட்டுமல்லாமல், குடும்ப வாழ்க்கை என்பது முழுச் சமூகத்திலே அச் சமுதாயத்தின் நுண்மாதிரிப்படிவமாக அமைந்திருப்பதினாலேயுமாகும். சமுதாயத்தில் குடி முதல்வராட்சியின் முடிவு ஏற்பட்டால் வீட்டில் ஆணாதிக்க குடிமுதல்வனின் சட்டத்துக்கு முடிவு ஏற்படும். அதன் மூலமாக, குடும்பங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகள்,
சுரண்டல்கள் ஒழியும். எனவே,
சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் பெண்கள் முக்கியபங்கை வகிக்க வேண்டியது அவசியமானது. பெண்ணியமென்பது ஒடுக்குமுறையை ஒழிப்பதே. யுத்தம் ஒடுக்கமுறையானதென்பதில் எவருக்கும் ஐயமில்லை. பெண்ணியக் கருத்துக்கள் பலவும் சமாதானத்துக்குச் சார்பானவையே. பூமி எமது அன்னை. யுத்தம் எமது பூமி மாதாவைக் கெடுத்து நட்டமேற்படுத்துவது. பூமித்தாய்க்கு ஊறு ஏற்படுத்தும் யுத்தம் அனைத்து அன்னையருக்கும் அழிவை ஏற்படுத்துவதாகவே கருதப்படும். உலக அரங்கில் சமாதானத்துக்கான பெண்கள் இயக்கங்களை நோக்கும் போது, இயற்கையுடனும் சுற்றுச் சூழலுடனும் பெண்களுக்குள்ள தொடர்பின் முக்கியத்துவத்தை உணரமுடியும். இயற்கைக்கும் பெண்ணினியல்புகளுக்குமிடையே உள்ள தொடர்புகளை இணைத்து, அவர்கள் சமாதானத்துக்கான போராட்டத்துக்குப் பயன்படுத்துகின்றனர்.
எல்லாக் காலத்திலும், சமுதாய மட்டங்களிலும் குடிமுதல்வராட்சிமுறை நிலவுகிற போதிலும், யுத்தகாலத்திலேயே அது எம்மீது அதிகமாக நிர்ப்பந்திக்கப்படுகின்றது. தொடர்பு ஊடகங்கள், கல்விப்போதனை, குடும்பம் முதலியவற்றினூடாக இது மேலும் வலுப்படுத்தப்படுகிறது. யுத்த காலத்தில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் நழுவல் போக்குடையதாயும், நிலை குலைவிப்பதாகவும் அமைவதால், இவை வரலாற்றையே

Page 7
மாற்றிவிடக் கூடியவையாயமைவதுண்டு. இவ்வாறான பிரச்சாரத்தின் விளைவாக பொது மக்கள் குடிமுதல்வராட்சிமுறையைக் காப்பதற்கு துணை போவதுண்டு.
யுத்தவேளையில், ஆண்கள் இயந்திர மனிதர்களாகி விடுகின்றனர். கட்டளைகளை ஏற்றுச் செயலாற்றுகின்றனர்: கொல்வதற்குப் பயிற்சி அளிக்கப்படுகின்றனர். தமது தனித்துவமான சிந்தனையை இழந்து தாம் செய்வதே சரியானது என்ற நம்பிக்கைக்குப் பயிற்றப்படுகின்றனர்.
“அகிம்சை வழியிலான ஆர்ப்பாட்டக் கூட்டங்கள் முறையீடுகள், பிரசுரங்களின் ஊடாக யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டுமென்ற பொதுக் கருத்தை - அனைத்துப் பெண்களை இணைத்து ஐக்கியப்படுத்தித் திரட்டுவதன் மூலமாக பெண்கள் அமைப்புகள் - வெற்றிகரமாக
உருவாக்கமுடியும்.”
யுத்தத்தின்போது ஆண்கள் ஒருவரை ஒருவர் கொல்வதும், காயப்பட்டுக் கொல்லப்படுவதும் உண்டு. பெண்களே யுத்தத்தின் இடை நடுவில் இடரில் சிக்குண்டவர்களாக அல்லது அகதிகளாக மாற வேண்டியுள்ளது. யுத்தத்தில் கணவருக்கு, சகோதரருக்கு அல்லது புதல்வருக்கு ஏற்படும் மரணம், படுகாயம் முதலிய காரணங்களினால் பெண்கள் மனப்பாதிப்புக்கு உள்ளாகின்றனர். யுத்தத்தின் போது பெண்களைப் பகைவனின் உடைமை எனக்கருதி இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவதும், இராணுவவீரர்களின் பாலியல் பசிக்கு போகப்பொருள் அடிமைகளாக பயன்படுத்தப்படுவதுமுண்டு.
போரில் ஈடுபட்டுள்ள சமுதாயங்களில் எதிர்கால வீரர்களை உருவாக்கும் நோக்கில், அதிக எண்ணிக்கையான பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பெண்கள் மிகவும் ஊக்குவிக்கப்படுகின்றனர். நாஜி ஜெர்மனியில், பெண்கள் குழந்தைகளை குறிப்பாக ஆண்குழந்தைகளை உற்பத்தி செய்யும் ஒருபொருளாகவே கருதப்பட்டனர். இக்குழந்தைகள் எதிர்காலத்தில் இராணுவ வீரர்களாகி வாள்முனையில் உலகெங்கும் நாசிசக் கருத்துகளைப் பரப்புவர் என எதிர்பார்க்கப்பட்டது. சீனாவில் மாவோவின் ஆட்சிக் காலத்திலும் இவ்வாறான மனநிலை நிலவியதன் காரணமாக, அந்நாடு வறுமைக்குள்ளாகி அளவுக்கு மிஞ்சிய ஜனத்தொகைப் பெருக்கத்தினால் பொருளாதார அபிவிருத்தியில் மோசமான விளைவை எதிர்நோக்கியது. அவ்வாறான சமூகங்களின் குடும்பங்களில் பெண்கள் சக்திக்கு அதிகமான

வேலைப்பழுவைச் சுமப்பவர்களாகவும், அவர்களின் உழைப்பின் பெறுமானம் எவ்வித பொருட்படுத்தலுக்கும் உட்படாத நிலையிலும் இருந்தது.
அதிகளவு போர்வெறி பிடித்த ஒரு சமுதாயத்தில் அதிகளவு பாலியல் வெறி நிலவும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதிக எண்ணிக்கையான குழந்தைகள் பிறக்க வேண்டும் என்பதன் காரணமாக, அமெரிக்காவில் றீகன் ஆட்சி நடத்திபோது, கர்ப்பச்சிதைவு செய்வதென்பது சட்ட விரோதமாக்கப் பெற்றிருந்தது.
இன்று அமெரிக்கா செல்வத்தில் உச்ச நிலையிலும், அதேவேளையில் வறுமையின் படுபாதாளத்திலும் வாழ்பவர்களைக் கொண்டதாகவும், இனம், வர்க்கம், பால் முதலியவற்றில் அசமத்துவ நிலையிலுள்ளவர்களைக் கொண்ட ஒரு நாடாகவும் விளங்குகிறது.
பால் சமத்துவத்தை ஊக்குவித்தல் என்ற போர்வையில், அமெரிக்கா போன்ற நாடுகளில் பெண்கள் ஆயுதப்படைகளில் சேர்ந்து கொள்ளுமாற ஊக்குவிக்கப்படுகின்றனர். சமத்துவம் என்ற பெயரில் குடிமுதல்வராட்சி முறைக்கு பங்களிப்புச் செய்வதென்பது பெண்ணுரிமை சார்ந்தல்ல. 'ஆனியல்புத்தன்மைகளைக் கட்டவிழ்த்து விடுகின்ற, மனிதத்துவத்தை மதிக்காத, கொடுமையும், கொடூரமும் கொண்டதான, பெண்மையை கடுமையாக இழிவுபடுத்துகின்ற அமைப்பில், சமத்துவம் என்ற பெயரால் சேர்ந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றது! நாம் கேட்கிறோம் - நாம் யாருடன் சமத்துவமாக இருக்க வேண்டும்? எதில் சமத்துவமாக இருக்க வேண்டும். கொல்வதிலேயா சமத்துவம் வேண்டும்?’ (புறொக் 9 (E600T 1985:22). ஆயுதப் படைகளில் பெண் இராணுவத்தினர்கள் குடிமுதல்வராட்சி முறையைப் பாதுகாக்குமாறு கேட்கப்படுகின்றனர். உலகம் முழுவதிலும் உள்ள தனியுடைமைச் சொத்துக்களில் ஒரு வீதமானவை மட்டுமே பெண்களின் சொந்தமாக உள்ளன. எனவே போரிட வேண்டுமெனில் ஆண்களுக்குச் சமமாக சொத்துக்களைப் பெறுவதற்காகத்தான் போராட வேண்டும் அரசியல் ரீதியாக நாடுகள் குடிமுதல்வராட்சி முறை அரசுகளைக் கொண்டதாக ஆணியல்புகளை வளர்ப்பன என்பதே உளதாந் தன்மையாகும். எனவே யுத்தங்களில் போரிடும் பெண்கள், ஆண்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவே அதில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஆயுதங்கள் அதிகளவு தனிச் செறிவு ஊட்டப்பட்டிருப்பதனால், யுத்தங்களில் பாதிப்புறும் குடிமக்களின் எண்ணிக்கை பெருகிவருகின்றது. அமெரிக்க-ஈராக் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வியட்நாம் யுத்தத்தால் பாதிப்புற்றவர்களைப்போன்றே பெருந்தொகையினராவர். இரண்டாவது உலகயுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் ஹிரோஷிமா,

Page 8
நாகசாகி நகர்களின் மீது குண்டு வீசப்பட்டதனால் அழிவுற்ற குடிமக்களின் எண்ணிக்கை மிகப்பெரிது. எனவே யுத்தத்திற்கு பலிக்கடா ஆகின்றவர்கள் இராணுவத்தினரல்ல - சாதாரண
பொதுமக்களேயாவர்.
யுத்தப்பகுதிகளில் அப்பாவிச்சிறுவர்கள் துடித்துப் பதைத்துச் சாகிறார்கள். தமது பெற்றார் சகோதரர்கள் கண் முன்னால், இரத்த வெள்ளத்தில் இறந்து விடுவதைச் கண்டு அதிர்ச்சியடைகிறார்கள். அணுக்குண்டுகள் ஆயுதங்கள் என்ற வரையறைக்குள் அடங்காதவை. அவற்றை பாதுகாப்புக்காகப் பயன்படுத்துவதில்லை. எவரைப்பாதுகாக்க வேண்டுமோ அவர்களை அழிப்பதுதான் அதன் வேலை அரசுக்கு எதிரானவர்களெனக் கருதப்பட்டவர்களை அடைத்து வைத்திருந்த முகாம்களிலும் இரண்டாவது யுத்தத்தின்போது  ெப ா து ம க் க ளி ல்
єT J п 6т цо п (5 60т т ії
பா தி ப் புக் கள் ளா கி
இ று தி யி ல் '' y Dr கொலை யுண் டனர். (ԼԲ ul l இதில் c அடைகக பங்ை படடிருநத ஆண கள பெண்கள், சிறுவர்கள் அவசி அடிமைக் கூலிகளாகவும் ஒடுச் நடத்தப்பட்டனர். யுத்த
этойти c) 1J af Lu 6io ༼༽ நெருக்கடி, மற்றும் யுத்த ծ| 1 || 6 : காலத்திலும் பெண்கள் 9+ {O} அடிக்கடி கைது дпітш (ଗ ୫ !i] [l] [] u [ (ତ) "T சி த் தி ர வ  ைத க் " -- -- ܝܝܝܝܝܝ--- - ܚܝܝ ܝ குள்ளாகினர். "பகைவர்களின் மனைவிகளாக
சகோதிரிகளாக, மகள்களாக, தாய்மார்களாக இருந்ததுதான் அவர்கள் செய்த ஒரே குற்றம் (டீ சூசா 1986:49)
இந்த ஆணாதிக்க குடி முதல்வராட்சி முறையின் கேவலமான மனப்பாங்கு இரண்டாவது மகாயுத்தத்தின் முடிவின் போது தெட்டத் தெளிவாக தெரிய வந்தது. அப்போது பிரசார அமைச்சராயிருந்த கோயபெல்ஸ், ரஷ்யர்கள் தனது மனைவியையும் குழந்தைகளையும் பிடித்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களை நஞ்சூட்டிக் கொன்றான். முசோலினி அவனின் வைப்பாட்டிமாருடன் கொல்லப்பட்டான். ஹிட்லர் தனது செல்லப் பிராணியான நாயைச் சுட்டுக் கொன்றுவிட்டு, தனது இளம் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டான்!
யுத்தங்கள் தொடரும் இனத்துவத்தின் விளைநிலங்களாகின்றன; நினைவுச்சின்னங்களின் தொகையைப் பெருக்குகின்றன. சந்ததி சந்ததிகளாகக்

கதைகள் மீளமீளச் சொல்லப்பட்டும். வெறுப்புணர்வே மீளப்பிறவி எடுக்கின்றது.
மனங்கொள்ளப்படாமல்,
படிப்பினைகள் தவறுகளே மீளவும் அரங்கேறுகின்றன. யுத்தவீரர்களும் அவர்கள் புரிந்த போர்த்தினங்களும் வரலாறாகின்றன. ஆனால் ஏதிலாரின் வேதனைகளையும் குடிமக்களின் மன அதிர்ச்சிகளையும் நினைத்துப் பொருட்படுத்துவாரில்லை. அகதிகளின்
பரிதாப நிலைமையையும், குடிமக்களின் நெருக்கடிகளையும், குடிமுதல்வராட்சி முறை வரலாற்று ஏட்டில் குறிப்பிடுவது "உயர் குடித் தன்மைக்கு
உகந்ததல்ல!
பாதிப்பு
இதன் காரணமாக மூன்றாவது உலக நாடுகளில் நிகழ்ந்த பல சண்டைகள் மேற்கு நாடுகளினால்
* 。 a
மறகக பபடடன.
கு டி ம க் க ளே
ாதானத்தை
)சிகளில் பெண்கள் முக்கிய
Fயம். பெண்ணியம் என்பது
பிா தா ன மா கப் ப ா தி ப் பு று ம் வகையில் அடிக்கடி
ஏற்படுத்தும்
படுகொலைகள், கற் பழி ப் புக ள் , பயங்கரவாதம், படை
வகிக்க வேண்டியது
குமுறையை ஒழிப்பதே ஆக்கிரமிப்பு இடம் ம் ஒடுக்கு முறையானது பெறு கி ன் ற ன . பதில் சந்தேகமே இல்லை. மேற்கு நாட்டுத் w e. தொலைக்காட்சிகள் ண்ணியக் கருத்துக்கள் இ வ ற்  ை த்
த ன த் து க் கு ச் ானவையே."
நாகரிகமற்ற பிற் போக்கு
ஆரவாரிக்கின்றன.
திரையில் காட்டி முன்னேற்றமடையாத மூ ன் ற | வ து ந Iா டு க ளி ன் அகதிகள் பற்றி
இனப்போராட்டங்களை
மதக்குழுக்களின் மோதல் எனச்சித்தரித்து இச்சண்டைகள் இன உரிமைக்கான போரல்ல, மதச்சார்பானவை என்ற மாயைத்தோற்றத்தை பிரசாரப்படுத்துகின்றன. இந்த மாயைத் தோற்றத்தைக் காட்டி சமயத்துக்காக சண்டைபிடிக்கும் பிற்போக்கான சமுதாயம் என்ற மேற்கு பெண்தன்மை
எண்ணத்தை ஏற்படுத்த விரும்புகின்றனர். நாடுகளில் கொண்டதென்பதால், அதனிடத்தில் 'ஆனியல்பு கொண்ட
e
3) jU எனபது
விஞ்ஞானம் ஏற்றி உட்காரவைக்கப்பட்டுவிட்டது
இரண்டாவது மகாயுத்தத்துக்குப் பின்னர், பெரிய அளவிலான சண்டையெதுவும் மூன்றாவது மண்டல நாடுகளுக்கு வெளியே மூலப்பொருட்கள், யூரேனியம்,
நடைபெறவில்லை. எரிபொருள், கருத்துநிலைநாட்டல் முதலியவற்றிற்கான அனைத்துச்

Page 9
சண்டைகளும் மூன்றாவது d 6) B5 நாட்டின் மக்களுக்கெதிராகவே ஈவிரக்கமற்ற முறையில் நடத்தப்பட்டன. (டி சூசா 1986:43) மேற்கு நாடுகள் சண்டையிடாமல் அமைதியாக இருந்து கொண்டு, தமது ஆணியல்பின் ஒரு பகுதியாக மூன்றாவது மண்டல நாடுகளுக்கு யுத்த ஆயுதங்களை விற்பனை செய்வதற்காகத் தொடர்ந்து அவற்றை உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றன.
பிரதான அதிகார நாடுகள் சண்டையில் ஈடுபடாதவரை உலகம் அமைதியாக இருந்தது. சமாதானத்தைப்பற்றிப் பேசியது, சமாதானம் பற்றி பேச்சுவார்த்தையிலீடுபட்டது. சமாதானத்தைப் பேணியது-ஆனால் அதேநேரத்தில், மூன்றாவது மண்டல நாடுகளில் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு அங்கு சண்டைகளுக்கு தூபமிட்டபடியேயிருந்தது!
யுத்தங்கள் அபிவிருத்தி யடைந்துவரும் நாடுகளில் வறுமையை ஏற்படுத்தி, மேற்குநாடுகளில் தங்கியிருக்கச் 'குடி-முத ல்வராட்சி செய்தன. கைத்தொழிலில் ஏற்பட்டால், வீட்டில் அ பி வி ரு த் தி யு ற் ற  ெச ல் வ ந் த ந Iா டு க ள் அபிவிருத்தியுற்று வரும் குடும்பங்களில் பெ? நாடுகளுக்கு ஆயுத விற்பனை செய்கின்றன. இதன் மூலம்
முதல்வனின் சட்டத்து
வன்முறைகள், சுரண்ட
வளர்முகநாடுகள் ஏழைப்பொது
மக்களின் வயிற்றில் அடித்து, சிறார்களைப் பட்டினி போட்டு, நாசகார உயிர்க் கொல்லியான குண்டுகளை வாங்குகின்றன.
பொருளாதார வளர்ச்சிக்கு யுத்தம் நன்மை பயக்கும் என்பது இட்டுக்கட்டிய பயங்கரமான பொய்க்கதை. வீடுகள், மருத்துவமனைகள், பாடசாலைகள், பெருந்தெருக்கள் ஏற்படுத்துவதன் மூலமே தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படுகின்றன. இராணுவத்தில் தொழில் வாய்ப்பளிப்பது பொருளாதார வளர்ச்சியைத் தடுத்துவிடும். யுத்தத்திலீடுபடுகின்ற நாடுகள் அபிவிருத்தியற்றவையாகி, செல்வந்த நாடுகளிலே தங்கியிருப்பவையாகிவிடும். இது செல்வந்த நாடுகளின் திட்டமிட்ட பொருளாதார சதித்திட்டத்தின் உத்தியே. செல்வந்த நாடுகள் தமக்குள் ஒன்றுடன் ஒன்று ஏன் யுத்தமிடுவதில்லை ? வளர்முக நாடுகளின் சண்டைகளில் அவை ஏன் தலையை நுழைத்துக் கொண்டிருக்கின்றன? யார் ஆயுதங்களை விநியோகிக்கிறார்கள்? வளர்முக நாடுகளில் நிலவும் சச்சரவுகளைச் சாதாரண பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக் கொள்ள முடியாதா ? அல்லது இப்பிரச்சினைகள் மேற்குநாடுகளின் உற்சாகமளிப்பினால் உருவாக்கப்

பெற்றவையா ? வளர்ச்சியடைந்த நாடுகள் என்ன காரணங்களினால் அகதிகள் மீதும் அரசியல் புகலிடம் கோருவோரிடமும் அக்கறை கொண்டு முடிவை மேற்கொள்ளுகின்றன ? வளர்ந்த நாடுகள் எதற்காக அறம் உரைக்கும் நீதிமான்கள் போல எமது விஷயங்களில் தீர்ப்பளிக்கும் பொறுப்பை ஏற்க முன்வர வேண்டும் ? அவை எதற்காக அகதிகளை தமது நாடுகளில் ஏற்க மறுக்கின்றன. ? மேற்கு நாடுகள், சில சந்தர்பங்களில் தலையிடுகின்றன. சிலவற்றில் மெளனமாகிவிடுகின்றன ஏன் ? எமது கண்களை மறைத்துள்ள திரையை நீக்கி விட்டு இக்கேள்விகளை நாம் எம்மிடமே கேட்க வேண்டும்.
குடிமுதலவனாட்சிக் கருத்துப்போக்குகளை பகுத்துப்பார்க்கும் போதுஇவற்றுக்கான விடைகளைக் காணமுடிகிறது. உலகப் போருளாதார அடிப்படையில் மூன்றாவது மண்டல உலக நாடுகள் 'பெண்மைத்
தன்மையானவை எனக்கருதப்பட்டு, மேலாதிக்கஞ் செலுத்தி o கட்டுப் படுத்தப்படுகின்றன. (p65) D J (5 (plq6)
முதலாவது மண்டல நாடுகள்
ஆணாதிக்க குடும்ப |க்கும் முடிவு ஏற்படும் ண்களுக்கு எதிரான டல்கள் ஒழியும்.”
'ஆண்மைத் தன்மையுள்ளவை என்பதனால் அவற்றின் மேலாதிக்கம் சகித்துக்  ெக |ா ள் ள ப் ப ட் டு ,
அங்கீகரிக்க ப் படுவது டன் ,
ஊக்கமளிக்கவும் படுகின்றது.
உலகடங்கிலும் பரந்துள்ள பெண்களின் குழுக்களுக்கு குடி முதல்வனாட்சி முறையின் கெட்ட தன்மைகளை அம்பலப்படுத்தக்கூடிய சக்தி இருக்கிறது. இந்தவலு அகிம்சை வழியிலான ஆர்ப்பாட்டக் கூட்டங்கள், முறையீடுகள், பிரசுரங்களினூடாக எமைச் சேரும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டுமென்ற பொது நோக்கினை அங்கும் இங்கும் என இரு பகுதிகளிலுமுள்ள பெண்களை இணைத்து ஜக்கியப்படுத்தித் திரட்டுவதின் மூலம் பெண்களின் குழுக்கள் வெற்றிகரமாகச் செய்யமுடியும். யுத்தத்தினால் அதிகமாகப் பாதிப்படைபவர்கள் பெண்களும் குழந்தைகளுமே என்பதனால் சமாதானம் என்பது குறிப்பாக பெண்களுக்கு முக்கியமானதாகும். அவர்கள் கணவன்மாரை, பிள்ளைகளை, தந்தைமாரை பலிகொடுக்கிறார்கள். அவர்களே பாதிப்புக்கு ஆளாகும் குடிமக்களாக உள்ளனர்; அவர்கள் அகதிகளாகவும் அல்லல்படுகின்றனர். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்பதற்காகவும், அழிவுகளை தடுக்க வேண்மென்பதற்காகவும் சமாதானமாக ஒன்று திரள்வதிலும் நோக்கத்தை வெளிப்படுத்துவதிலும் அவர்களுக்குள்ள செயற்திறம் வெற்றிகரமானது. மிகவெற்றிகரமான தென்பது ஐயப்பாட்டிற்கும் அப்பாற்பட்டது.

Page 10
كص
இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பாலியல் வதை, படுகொலை
வடக்கில் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் பெருமளவில் இடம்பெற்று வருவதாகச் செய்திகள் வருகின்றன. சாதாரண மனித உரிமை மீறல்கள் மட்டுமல்ல, சோதனைச் சாவடி, திடீர்ச் சுற்றிவளைப்புகளின் போது, இளம் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டு மிருகத்தனமான முறையில் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, விஷயம் வெளியே தெரியாமலிருப்பதற்காக அப்பெண்கள் படுகொலை செய்யப்பட்டு சடலங்கள் புதைகுழிகளில் போட்டு மூடப்பட்ட
சம்பவங்கள் சில வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
கோண்டாவிலில்.
ராஜினி என்ற கோண்டாவிலைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு பெற்றோர் கனடாவிலுள்ள மாப்பிள்ளையை நிச்சயித்திருந்தனர். அதனால் புறப்படுவதற்கு முன் உறவினர்கள், நண்பர்களிடம் பிரியாவிடை கூறுவதற்காக வெளியே சென்ற ராஜினி கோண்டாவில் சோதனைச் சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டார். இதனைப் பொதுமக்கள் பலர் கண்டுள்ளனர். பின்னர் அவர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகியிருக்கிறார். பின்னர் பயன்படுத்தப்படாமலிருந்த மலசலகுழியிலிருந்து அவர் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. காவலுக்கு நின்ற ஆறு படையினர் இந்த இளம் பெண்ணை அடுத்தடுத்துக் கெடுத்தபின் கொலைசெய்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் முக்கிய பங்கைவகிக்கக் கூடியவர்கள் பெண்களே என்ற ஆழமான நம்பிக்கையை மகாத்மா காந்தி கொண்டிருந்தார். அவர் அகிம்சை வழியிலான சட்டமறுப்பு, ஒத்துழையாமை, இயக்கங்க ளுக்கான உத்தியை பெண்களிடமிருந்தே தான் கற்றுக்கொண்டதாகக் கூறினார். அவரின் சீடர்களில் பெரும்பாலானோர் பெண்களே. காந்தி நடத்திய பொது ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிகளும் பேரணிகளும் அமைதியாக அர்த்தமுள்ள விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் பெரு வெற்றி பெற்றன.

N
உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த இன்னும் ஒர் இளம் பெண், கோண்டாவிலில் வைத்து சென்ற 30.996ல் காணாமல் போயுள்ளதாயும், விசாரித்துச் சென்ற பெற்றோரிடம், அப்படித்தாம் யாரையும் கைது செய்ய வில்லையென இராணுவ வட்டாரம் கைவிரித்து விட்டதாகவும் அறியப்படுகிறது ? காணாமல் போன அப்பெண்ணும் ஏதாவது ஒரு புதைகுழிக்குள் பாலியல் பலாத்காரத்தின் பின்பு புதைக்கப்பட்டிருக்கலாமென்ற
அச்சம் அங்கு பரவலாக நிலவுகின்றது.
கைதடியில்.
சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் பயின்ற 18 வயது மாணவி கிருஷாந்தி சென்ற 7.9.96 அன்று அக்கல்லூரியில் ஏ.எல். பரீட்சை எழுதிவிட்டு, கைதடியிலுள்ள தனது வீட்டுக்குத் திரும்பிய போது. யாழ்ப்பாண நகர எல்லையிலுள்ள இராணுவ சோதனை முகாமிலுள்ளவர்கள் அங்கே அவரைத் தடுத்து நிறுத்தி உள்ளே அழைத்துச் சென்றனர். இதனைக் கண்ணுற்ற குடிமக்களில் சிலர் கைதடியில் வாழ்ந்த அவரின் குடும்பத்தாரிடம் வந்து கூறியுள்ளனர். அவர்கள் செல்வதற்கு முன்பே பல மிருகங்கள் அந்த இளம் பயிரை மேய்ந்து பசியாறிவிட்டன. பாலியல் துன்புறுத்தலால் சுருண்டு மயக்கமாகி விட்ட அவளை வெளியே விட மறுத்து, விசாரிக்க வந்த தாயார் இராசம்மா, தம்பி பிரணாபன், அயலவர் கிருபாமூர்த்தி சிதம்பரம் ஆகிய மூவரையும் கழுத்துக்களை நெரித்துக் கொன்றுவிட்டனராம். அவளின் உயிர்பிரியும் வரை மேலும் கிருஷாந்தி மீது மிருகங்கள் பலர் பால்வதை புரிந்துள்ளதாகத் தெரிகிறது. சடலங்களை அவசர அவசரமாக புதைகுழிகளில் போட்டு மூடிவிட்டனர். இந்த கொடுமையைப் புரிந்த குற்றவாளிகளைக் கூண்டிலேற்றி கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கையை சுணங்காமல் எடுக்க வேண்டும் எனவும், இவ்வாறான கொடுமைகள் நடப்பதைக் கண்டித்தும் பெண்கள் அமைப்புக்கள், மனித உரிமை
நிறுவனங்கள் கடுமையாகக் குரலெழுப்பியுள்ளன.
%سے
வட அயர்லாந்தில் வன்செயல்களை முடிவுக்கு கொண்டு வருமாறு, கத்தோலிக்க - புரட்டஸ்டான் ஆகிய இரு மதக்குழு க்களையுஞ்சார்ந்த பெண்கள், ஐரிஷ் பெண்கள் சமாதான இயக்கத்தில் இணைந்து ஐக்கியப்பட்டு யுத்தத்துக்கு எதிராக ஓரணியில் செயலாற்றினர். நோர்டிக் பெண்கள் அணு ஆயுத பாவனைக்கு எதிராக ஒன்று சேர்ந்து ஒரே குரலில் எதிர்ப்புக்குரல் எழுப்பினர். மாபியா இயக்கத்துக்கு எதிராக இத்தாலி நாட்டுப் பெண்கள் ஒன்று சேர்ந்து இயக்கம் நடத்தினர். நிறப்பாகுபாட்டை எதிர்ப்பதற்காக அனைத்து இனங்களையும் சேர்ந்த தென்னாபிரிக்கப் பெண்கள் ஓரணியில் நின்று ஆர்ப்பாட்டப்

Page 11
பேரணி நடத்தினர். 1980 களில், அவுஸ்திரேலியாவிலுள்ள அலைஸ் ஸ்பிறிங்கில் அமெரிக்கா யுத்தத்தளத்தை நிறுவியதை எதிர்த்து ஆட்சேபப் போராட்டத்தில், தொல்குடிகளைச் சேர்ந்தவர்களுடன் மகளிர் அமைப்புகளும் சேர்ந்து கொண்டன.
இவ்வமைப்புகள், தொல்குடிமக்களின் காணியுரிமைக்காகவும் ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிகளை நடத்தின. முதலாம் யுத்தத்துக்கு முன்னரும், இரண்டாவது யுத்தகாலத்திலும் யுத்த எதிர்ப்பு இயக்கத்தில் பெண்கள் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளனர்.
யுத்தத்தினாலும், இனப்போராட்டங்களினாலும் சின்னாபின்னப்பட்டுள்ள வளர்முக நாடுகளில் வாழும் பெண்கள், ஐக்கியத்தை ஈட்டவும், சமாதானத்தை வலியுறுத்தவும் சக்தி கொண்டவர்கள். மிக வலிமையுடன் எமது கோரிக்கையை எழுப்பினால், இதனை நாம் பெற்றே தீரலாம். சமாதானம் நிலவினால் தான் சமுதாயத்திலும் இல்லங்களிலும் ஒத்திசைவும் மகிழ்ச்சியும் ஏற்பட முடியும்.
குடிமுதல்வனாட்சி முறையை நிலை நிறுத்துவதற்கு சிறார்களைக் குறியாக வைத்து நடத்தப்படும் யுத்தப் பிரசாரங்களை தடுத்து நிறுத்துவது பெண்களின் கடமை. யுத்தக் கருவிகளையும், ஆயுதங்களையும் போன்ற உருவில் அமைந்த விளையாட்டுச் சாமான்களும் போரிடுவது போன்ற விளையாட்டு உபகரணங்களும் விற்பனைச் சந்தையிலும் சிறார்களின் மனங்களிலும் இடம்பெற்றுள்ளன. இவ்விளையாட்டுக்கள் வெவ்வேறானவை எனினும் அவை வெளிப்படுத்தும் செய்தி ஒன்றுதான். அதாவது தளபதிகள், விஞ்ஞானிகள், நிபுணர்களுக்கே அறிவும் அதிகாரமும் வெற்றியும் எப்போதுமே உரித்தானது என்பதாகும். திரைப்படங்களிலே யுத்தங்கள் பெருமைக்குரியவையாகப் புகழ்ந்து சித்தரிக்கப்படுகின்றன. விஞ்ஞானப் புனை கதைகள் அனைத்தும் போரைப்பற்றி வர்ணிப்பவையே. தந்தைமார் தமது ஆண் குழந்தைகளை விளையாட்டு துவக்குடன் பொழுது போக்குவதை ஊக்குவிக்கும் வேளைகளில், அன்னையர்கள் அக்குழந்தைகளுக்கு வேறு விளையாட்டுச் சாமான்களைக் கொடுத்து மென்மையாக நடந்து கொள்ளும்படி ஊக்கப்படுத்த முடியும்.
சமாதானமே மூன்றாவது மண்டல நாடுகளை வலிமையுள்ளவையாக்க முடியும். நாடுகளின் சுயாதீனத்தையும், மேல் நாடுகளில் தங்கியிருப்பதிலிருந்து விடுபடுதலையும், உலக அரங்கில் தத்தமக்கு உரிய இடங்களை பெறுவதனையும் உத்தரவாதப்படுத்துவது சமாதானமேயாகும். குடிமுதல்வனாட்சி முறையும் யுத்தமும் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

()
TーーーーーーーーーーーーーーーーーーI
O கவிதை
பொட்டும், பிறையும், பூவும்!
பொட்டும், பிறையும், பூவும், பெண்ணே, உன் அழகுக்கு அணி சேர்க்கும் மறுக்கவில்லை ஆயின், அவ்வெழிலில் திளைத்து மெத்தனமாய் இருக்காதே! அவை இல்லாதவிடத்தும் நீ வாழ வேண்டும். உனக்கு பலம் சேர்க்க கல்வியைத் துணைக் கொள்! துணிவைத் துணைக் கொள்! உண்மையைத் துணைக் கொள்! ஒழுக்கத்தை ஒம்பு!
9Ꭰ , ᎾᎼᎢ பொட்டும், பிறையும், பூவும் என்றும் இவையாக வேண்டும்!
அன்னலட்சுமி இராஜதுரை.
.
لـ

Page 12
சட்டமும் பெண்
பாலியல் வன்மு
பெண்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல்களையும் வன் முறைகளையும் சமுதாயம் பெரிய விஷயம் எனக் கருதுவதில்லை. பெண்களாயிருப்பதால் அவர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களே அவை எனத் தட்டிக்கழிக்கப்பட்டு விடுவதுண்டு. பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகள் பற்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளே. அவ்வன் முறைகள் அற்பமானவை எனக் கருதி துன்புறுத்திய கணவனிடமே மீளச்சென்று வாழும்படி புத்திமதியுரைக்கின்றனர்.
பெண்களின் உடலின் மீதான பலாத்காரங் கூட அற்பமான ஒரு விஷயமென கருதப்படுகின்றது. அண்மையில் பத்திரிகையில் ஒரு செய்தி வெளிவந்திருந்தது. ஒரு பெண் மீது பலாத்காரம் புரிந்த ஒருவருக்கு தண்டனை வழங்கிய நீதிபதி அத்தண்டனையை ஒத்திவைக்கப்பட்ட தொன்றாக தீர்ப்பளித்திருந்தார். இதன் கருத்து அக்குற்றவாளி குற்றத்துக்கான தண்டனையை அனுபவிக்காமல் தண்டனையிலிருந்து தப்புவதற்கே வாய்ப்பாகிறது. ஆனால் அப்பத்திரிகைச் செய்தி ஏதோ பெரிய தண்டனையை அக்குற்றவாளி பெற்றுவிட்டது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
ஒத்தி வைக்கப்பெற்ற தண்டனைச் சலுகையைப் பெறும் பொருட்டு சட்டத்தரணிகள் குற்றவாளி பல பிள்ளைகளைப் பராமரித்துக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பைக் கொண்டவர். அவர் குடிமயக்கத்திலிருந்ததால் தான் செய்வது குற்றம் என்பதை உணராமற் போய்விட்டார் என நீதிபதியிடம் வாதாடி, ஒத்தி வைக்கப்பெற்ற தண்டனையைப் பெற்றுக்கொடுத்து விடுகின்றனர். தண்டனை அனுபவிப்பதில் இவ்வாறான ஒத்திவைப்பு அளிக்கும் தீர்ப்புக்களினால் இவ்வகைக் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் பொறுத்துக் கொள்ள வேண்டுமென்ற எண்னம் சமுதாயத்தில் தோற்றுவிக்கப்படுகின்றதெனலாம்.
பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகளைக் குற்றமாக கருதும் சட்டங்கள் இப்பொழுது - 100 ஆண்டுகளுக்குப் பிறகாவது - சட்டப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன.
இச்சட்டங்கள் பற்றி திருத்தங்கள் பரிசீலிக்கப் பெற்ற பொழுது, பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பாக விசேட சட்டமொன்றை உண்டாக்குவது அதிக
 

களுக்கு எகதிரான றைகளும் விதி
பொருத்தமுள்ளதாக இருக்குமா என ஆலோசிக்கப் பட்டது
இறுதியில் இக்குற்றங்கள் கொடுமையானவை எனக்கருதப்பட வேண்டுமானால், குற்றவியல் சட்டங்களுக்கு வேண்டிய திருத்தங்களைச் செய்வதே தகுந்தது என முடிவாகியது.
இச்சட்டத்திருத்தங்கள் சந்தேகத்துக்கிடமின்றி போற்றப்பட வேண்டியவை. எனினும் சில குறைபாடுகளையும் கொண்டிருக்கின்றன. பாலியல் வன்முறைக் குள்ளான பெண்ணின் கர்ப்பத்தை அல்லது கடுமையான ஊனமுற்றதாக பிள்ளை பிறக்கும் ஆபத்து ஏற்படலாமென கருதுமிடத்து அதை மருத்துவப் பூர்வமாக அழிப்பதற்கு அனுமதியளிப்பதாக கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தம் கடும் எதிர்ப்புக் காரணமாகக் கைவிடப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக குறிப்பிடக் கூடிய முரணான புதியதொரு சங்கடமான நிலை எழுந்துள்ளது. அதாவது பெண்ணின் உடல் மீது பாலியல் வன்முறை புரிவதை சட்டத்தக்கு எதிரான குற்றமெனக் கூறும் அதே சட்டம், அவ்வாறான பலவந்த உடலுறவின் விளைவாக ஏற்பட்ட கர்ப்பத்தை அழிக்கக் கூடாதென கட்டளையிடுகின்றது! பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பாகத் தனது முன்னுரைகளில் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள சட்டமானது. இவ்வாறு வெளிப்படையாக இரட்டை வரை அளவுகளைக் கொண்டிருப்பது முரண் நகைச் சுவையை
ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது
எனவே இவ்வாறு அருவருப்பான கர்ப்பங்களைவயிற்றில் சுமக்க வேண்டிய நிர்ப்பந்தமான நிலையிலுள்ள பெண்கள், கருச்சிதைவு செய்து கொள்வதற்காகச் சட்டபூர்வமற்ற வழிமுறைகளையே நாடவேண்டியுள்ளது. ஏனெனில் எமது மருத்துவர்களோ சட்டத்துக்கு அஞ்சி சட்ட விரோதமான இதனைச் செய்ய
முன்வரமாட்டார்கள்.
மண வாழ்க்கையில் மனைவி பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது தண்டனைக்குரிய குற்றம் எனச் சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் சட்ட பூர்வமாகப் பிரிந்திருக்கும் மனைவிமார்மட்டுமே இச்சட்டத்தினூடாக நீதிகோரலாம். இலங்கையில் கணவன் - மனைவி சட்டபூர்வமாகப் பிரிந்திருப்பதற்கு மேல் மத்திய தரத்தைச் சார்ந்த சிறு தொகையான பெண்களினாலே தான் சட்ட உதவி நாடப்படுகிறதென்பது அனுபவபூர்வமாக நாம் அறிந்த ஒன்று. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மனைவிமார்

Page 13
விவாகரத்துக்கே விண்ணப்பிப்பர். அல்லது கணவன்மார்களால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு பிரிந்து வாழ்வர். இவ்வாறான சட்டங்களை உருவாக்கியவர்கள் ஒரு
அடையாளமாகவே இவற்றைச் செய்துள்ளனர்.
தமது இளம் பெண் பிள்ளைகளை வீட்டில் விட்டு வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் சென்றுள்ள தாய்மார்களின் குடும்பங்களிலேயே, அச்சிறுமிகள் பலாத்காரப் பாலியல் நிர்பந்திப்புக்குள்ளாகி அவர்களின் உறுப்புகளில் காயமேற்பட்ட சம்பவங்கள் அதிகமாக இடம் பெற்றிருப்பதை மதிப்பீடுகள் தெளிவு படுத்துகின்றன.
பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் பலாத்காரச் சம்பவங்களில் குற்றவாளிகளுக்குத் தண்டனைகள் அளிக்கப்படுவதில் கூட ஒரு வழிகாட்டி நடைமுறையிருக்க வேண்டும். அல்லாவிட்டால் சட்டத்தில் இணைவிசைவு இருக்காது. ஒரு நீதிபதி 17 வருடத் தண்டனை அளிப்பார். மற்றவர் ஒத்திவைக்கப்பட்ட தண்டனையென தீர்ப்புக் கூறுவார். 18ம் நூற்றாண்டில் சட்டங்கள் வார்த்தைகளால் விளாசி விஸ்தரிக்கப்படுமே தவிர, செயலில் இருக்காது.
அவ்வழக்கம் இன்றுமுற்று முழுதாக மாறிவிட்டதென்று சொல்வதற்கில்லை. சட்டப் புத்தகத்தில் இடம்பெறுமாறு அடையாளமாக சட்டங்களை இயற்றிவிட்டால் மட்டும் போதாது. அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். கற்பழிப்பு வழக்குகளில் சட்டத்தரணிகளுக்கும் மருத்துவர்களுக்கும் இடையே நெருங்கிய ஒத்துழைப்பு இருக்க வேண்டும். அப்போது தான் தெளிவான மருத்துவ ஆதாரங்களை இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும். சாட்சியம் அளிக்க முன்வரும் மருத்துவ அறிஞரை கூண்டில் ஏற்றி குற்றவாளி போல குடைந்து அவரின் மருத்துவ தராதரங்கள் முதலியவை பற்றி கிண்டிக்கிளறி நீண்டநேரம் குறுக்கு விசாரணை செய்யப்படுவது ஒன்றும் அசாதாரண நிகழ்ச்சி அல்ல. இதன் விளைவாக பல மருத்துவர்கள் சாட்சியம் அளிக்க முன்வருவதில்லை. அதனால் வழக்கு விசாரனைகள் தாமதம் அடைகின்றன.
சட்டங்களை நிறைவேற்றுவோருக்கு அரசாங்கம் தேவையான பக்க உதவிகளை அளிக்க வேண்டும். பொலிஸ் நிலையங்களில் பெண்கள் சிறார்களுக்கென நிறுவப்பெற்ற நிலையங்களில் மேசைகளைத் தவிர எதுவுமே இல்லை!
(தேசிய பெண்கள் பேரவையுடன் இணைந்து வைத்திய சட்டச் சங்கம் அண்மையில் மகளிர் துஷ்பிரயோகம் - பிரச்னைகளும் தீர்வு வழிகளும்’ என்ற தலைப்பில் நடத்தில் கருத்தரங்கில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியின் தமிழாக்கமே இக்கட்டுரை.)

12
ஆண்டுதோறும்
6 லட்சம் பெண்கள் பலி!
ஐ. நா. சிறுவர் நிறுவனம் (Unicef) வெளியிட்டுள்ள அறிக்கையொன்றின்படி, வளர்முக நாடுகளிலுள்ள பெண்களில் கர்ப்பம், பிரசவம் முதலிய காரணங்களினால் ஆண்டொன்றுக்கு 6 லட்சம் பெண்கள் மரணமடைகின்றனர். இதுதவிர, கோடிக்கணக்கான மகளிர் பிரசவ உறுப்புகளில் வீக்கம், காயம், கர்ப்பப்பை நெகிழ்ச்சி காரணமாக நோய் நிலையெய்துகின்றனர்.
ம ர ன ம  ைட ப வர் களி ல் மு க் கால் வாசி தொகையினர் பாதுகாப்பற்ற கர்ப்பச்சிதைவு, மருந்துகள், முறையற்ற தேய்த்துப்பிசைதல்களின் விளைவாக இறக்க நேரிடுகின்றது. தினமும் 50 ஆயி ர ம் பெ ண் க ள் இ வ் வழி க  ைள க் கையாளுகின்றனர். சுமார் 40 ஆயிரம் மரணங்கள்,
| பிரசவப்பாதை தடைப்படுவதால்நேரிடுகின்றன.
இவ்வறிக் கையில் காணப் படும் புள்ளி விபரங்களின்படி ஆசிய-பசுபிக் நாடுகளில் நாளொன்றுக்கு 818 கர்ப்பிணிகளுக்கும், சகாரா ஆபிரிக்க நாடுகளில் 615 கர்ப்பிணிகளுக்கும் மரணம் சம்பவிக்கின்றது.
சியாராலியோன் நாட்டில், ஒரு லட்சம் பிரசவங்களில், பிரசவ நேரத்தில் 1800 பெண்கள் இறந்து விடுகின்றனர். ஆப்கானிஸ்தானில் இதன் எண்ணிக்கை 1700
கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் பாரம்பரிய கலாசார வழக்கம் என்ற பெயரால் கற்புக்குப் பாதுகாப்பும், பாலுணர்வுக்கு ஊக்குவிப்பும் எனக் கூறி சிறுமிகளின் பெண் உறுப்புகள் சிதைக்கப்படுகின்றன. இதனால் இரத்தக்கசிவு, ! தொற்றுநோய் அபாயம், மலட்டுத் தன்மை, மரணம் முதலியவற்றுக்கு இப்பெண்கள் ஆளாகின்றனர்.
>, if I A è5 T6Ao பிரசவ கால மரனங்களைத் தடுப்பதற்கு நவீன மருத்துவ கவனிப்பு முறைகளை ஆஸ்பத்திரிகளில் அமைப்பதற்கு இந்நாடுகளின் அரசாங்கங்கள் உடனடி நடவடிக்கை எடுக்குமாறும், இதனைப் பெண்களுக்கு ஏற்படும் இயல்பான வியாதி என அலட்சியம் செய்து அக்கறை செலுத்தாமல் விட்டால், உலக சமுதாயம் பெண் ணி ன த் துக் கு இ  ைழ க் கும் பெ ரு ம் குற்றத்துக்கான பழியை ஏற்கவேண்டியிருக்கும் எனவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

Page 14
அகதி முகாம்களில் அல்லலுறும் பெண்க
யுத்தம். இனப்போர்கள், மனித உரிமைத்
துஷ்பிரயோகங்கள் காரணமாக இன்று உலகில் 20 மில்லியன் மக்கள் அகதிகளாபுள்ளனர். சர்வதேசச்சட்டத்தின் மூலம் அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. இதனைச் சர்வதேச நிறுவனங்களும் சம்பந்தப்பட்ட அரசுகளும் அளிக்க வேண்டியது அவற்றின் பொறுப்பாகும்.
அகதிகள் தங்களின் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் திடீரெனத் தீர்மானித்து தங்கள் வீடுகளைவிட்டு வேறிடங்களுக்கு ஒடுகிறார்களேதவிர, புதிய இடங்களில் சொகுசான வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காக அல்ல. உலகின் ஏழை நாடுகளிலிருந்தே பெருந்தொகையான அகதிகள் வெளியேறுகிறார்கள். ஆண்களினால் சமூக அரசியல் அரங்கில் குரலெழுப்ப முடிவதனால் அகதிகளில் அதிக பாதிப்புக்கு உள்ளாகுபவர்களில் பெண்களும் குழந்தைகளுமே அதிகமானோர்
ஆவர்.
பெரிய முகாம்களில் அதிக எண்ணிக்கையில் அடைக்கப்படும் அகதிகள் பெரும்பாலும் நீண்டகாலத்துக்கு அங்கு வாழ நேரிடுகிறது. அவர்களுக்கு உணவு, உடை வழங்கப்பட்டபோதிலும் பற்றாமையால் பட்டினியும் நோயும், அடிக்கடி முகாம்களில் தாண்டவமாடுகின்றன. சில வேளைகளில் இம்முகாம்கள் தாக்கப்பட்டு படுகொலைகளும் நடப்பதுண்டு. பெரும்பாலான முகாம்களில் முகாம் நிர்வாகிகளினால் கலாசாரத் தேவைகளோ உணர்வுகளோ மதிக்கப்படுவதில்லை.
முகாம்களில் அனைத்து அகதிகளையும் ஒரேதரத்தினராக அதாவது அவர்கள் எவ்வித உதவியுமற்றவர்கள், உதவியை அளிப்பது ஒன்றே அவர்களுக்கு அவசியமானது என்று கருதப்படுகிறது. முகாம்களிலுள்ள அகதிகளின் புள்ளிவிபரமும் எண்ணிக்கையுமே கணக்கிலெடுத்துக் கவனிக்கப்படுகிறது. நீண்ட காலத்துக்கு முகாம்களிலிருப்பதனால் அகதிகள் உணர்ச்சியற்று எதிலும் அக்கறையற்றவர்களாகிவிடுகின்றனர். இப்பிரச்சனையைத் தவிர்ப்பதற்காக அவர்களை ஏதாவது செயற்திட்டங்களிலீடுபடுத்தும் முயற்சிகளெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் பல பிரச்சனைகள் கவனிக்கப்படாமலேயே இருக்கின்றன. அல்லது அவற்றின் பரிமாணம் பெரிதென்பதால், அரசாங்கங்களும் தொண்டர் அமைப்புகளும் கைநெகிழ அவற்றை விட்டுவிடுகின்றன. இப்பிரச்சனைகளில் பெரும்பாலானவை பெண்களுடன் தொடர்புற்றவையாகும்.
யுத்தம் போன்ற காலத்தில் சட்டமும் ஒழுங்கும் சீர்கெட்டுப் போய்விடுவதனால் பாலியல் வன்முறைகளுக்குப் பலியாவது பெண்களும் சிறுமிகளுமே, அகதிமுகாம்களிலும், அகதிமுகாமுக்குச் செல்லும் பயணத்தின் போதும் இவ்வாறான நிலையே ஏற்படுகிறது. 1980களில் வள்ளத்தில் பயணித்த வியட்நாமிய மக்களைக் கடற்கொள்ளைக்காரர்கள் அடிக்கடி தாக்கினர். தஞ்சம் கோரிச்சென்ற இவ்வகதிகளில் பெண்களும் சிறுமிகளும் மிருகத்தனமாக பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகியதால், உடற்
 
 
 

Ο இசபெல் கெய்மர்
காயமுற்றனர். பலர் மரணமுற்றனர். பெண்களுக்கு எதிரான பல
உரிமை மீறல்கள் மனித உரிமை மீறல்களே எனக் கருதப் படுவதில்லை.
1993ல் வெகுஜனத் தொடர்புச் சாதனங்கள், பொஸ்னியாவிலும் ஹெர்சோகோவினவிலும் நடந்த பெண்கள் மீதான கொடிய பாலியல் வன்முறைகளைப் பெரிய அளவில் பிரசாரப் படுத்தியபோதிலும், இவ்வாறான பிரசாரங்களையும் பொருட்படுத்தாது. யுத்தங்களின் போதும், அகதிமுகாம்களிலும் பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுவது நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. அகதிமுகாம்களும், மீள்குடியேற்றப்பட்ட கிராமங்களும் தாக்குதல்களுக்கு ஆளாவதுடன் பெண்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டுக் கொலை செய்யப்படுகின்றனர்.
அகதிமுகாம்களில் அதிக ஜன நெருக்கடி நிலவுவதால், பெண்கள் அந்தரங்கத்துக்கெனத் தனிஒதுக்கிடமில்லாமல் அவதிக்குள்ளாவதுடன், தங்களின் குடும்பங்களைப் பசியில் இருந்து பாதுகாப்பதற்காக பொருளிட்டப் புதிய தொழில்களைக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. பாரம்பரிய வழக்கப்படி ஆண் பெண் வித்தியாசத்தைக் குறிக்கும் பொது, மற்றும் தனிமையான சூழ்நிலைகளில் அரைகுறைமறைப்புகளோடு உலவவேண்டியிருப்பது அகதிமுகாம்களில் பெண்கள் எதிர்நோக்கும் மற்றொரு பிரச்சனையாகும். ஆண்கள் பகிரங்கமாக உலவ, பெண்களோ தனிமையில் முடங்கியிருக்க வேண்டியுள்ளது. அகதிமுகாம்களில் பெண்கள் குளிப்பதற்கோ, மலசலகூடத்தைப் பயன்படுத்தவோ அந்தரங்கமான வசதிகளிருப்பதில்லை. பகிரங்கமாக முடிவுகளை எடுக்குமாறும் முகாம்களில் பெண்கள் வற்புறுத்தப்படுகின்றனர். இது பெண்களுக்கு ஒரளவு அதிகாரம் வழங்குவதாயிருந்த போதிலும், அவர்களின் மனப்பாதிப்புக்கு காரணமாகின்றது. ஏனெனில் பெரும்பாலான இப்பெண்கள் கணவன்மாரைப் பறிகொடுத்ததனால் விதவைகளாகி, வேதனை சூழ்ந்த கட்டத்திலே குடும்பச்சுமையையும் தமது தலைகளில் தூக்கி வைத்திருப்பவர் களாவர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கலாசார வழக்கப்படி விதவையான பெண் தனது கணவரின் சகோதரை மணந்து கொள்வாள்; அல்லது அவளின் மகன் குடும்பத்தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்வான். யுத்தத்தில் ஆண்கள் கொல்லப்பட்டு அல்லது போர் முனையில் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இது சாத்திமானதல்ல. சில சந்தர்ப்பங்களில் பெருந் தொகையான ஆண்கள் கொல்லப்பட்டோ, காயப்பட்டோ, யுத்தத்தில் காணாமற் போய் விட்டாலோ, தனது குழுவினரை அல்லது தான் வசிக்கும் முகாமை நிர்வகித்து நடத்துவதில் பெண்கள் ஈடுபட வேண்டியுள்ளது.
மேற்கு நாடுகளின் உதவிகளில் தங்கியிருப்பதற்குப் பதிலாக, அகதிகளே அவர்களின் முகாம்களை நிர்வகிப்பதன் மூலமாக, அவை ஒத்திசைவாக இயங்கும் என்ற வாதம் முக்கியமானது. தொழில்நுட்ப உதவிகள், பொருட்கள், சேவைகள், போன்ற சகலவற்றையும் உதவி வழங்குபவர்கள் முகாம்களுக்குக் கொடுக்க வேண்டும். முடிவெடுப்பது, பொருளாதாரம் அபிவிருத்தி போன்றவற்றின் மீதான கட்டுப்பாடுகளை அகதிகளே கவனித்துக் கொள்ளலாம். உதவி

Page 15
வழங்கும் நிறுவனங்களின் தலையீட்டின் காரணமாக, மற்றவர்களின் உதவிகளில் தங்கியிருக்கும் நிலைமைக்கு அகதிகள் பழக்கப்பட்டு விடுவதனால், இவ்வகதிகள் மீளத்தமது இடங்களில் குடியமர்த்தப்படுகிற போது அவர்களின் பிள்ளைகளுக்குத் தேவைாயன தொழில் முறைப்பயிற்சிகளில்லாத பாதகமான விளைவு ஏற்படுகிறது. உதவி வழங்குபவர்கள் மீது தங்கியிருக்க வேண்டிய நிலைமையினால் போரிடும் நாடுகளின் அரசியல் விளையாட்டுக்குப் பகடைக்காய்களாக அகதிகள் இருக்க வேண்டி உள்ளது.
அகதிகள் ஆதரவை எதிர்பார்த்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களென்ற பொய்க்கருத்தை வளர்த்து நட்டத்தை ஏற்படுத்தியவர்களுக்கு மேலைத்தேய ஊடகங்களின் மூலமாக அகதிகள் என்பவர்கள். படித்தவர்கள் பல்கலைக்கழகப்பட்டதாரிகள், தொழில் பார்க்கும் திறமையும் கெளரவமும் மிக்கவர்கள் என்பது வலியுறுத்திக் கூறப்பட வேண்டும்.
ருவண்டா, சோமாலியா, சூடான், காஷ்மீர், ஆப்கானிஸ்தான், பொஸ்னியா, ஹெர்சோகோவினா, என்பவையே தற்சமயம் அதிக எண்ணிக்கையான அகதிகளைக் கொண்ட நாடுகள். பெருந் தொகையான வர் கள்
அகதிகளாகி பின்னர் தமது த ய க த் தி ல் "யுத்த காலத்தில் ச
மீளக்குடியேறியவர்களைக்
நாடுகளில் கெட்டுப்போய் வி
கொண்ட அங்கோலா, மொசம்பிக், வன்முறைகளுக்குப் பலிய நிக்கராகுவ, சிம்பாவே O
ஆ கி ய வ ற்  ைற க் முகாம்களிலும், அகதி குறிப்பிடலாம். பயணத்தின் போதும் இவ் பெண்களம் சிmமிகளம் அகதிப் பெண்கள் ளு () ளு அ னு ப வி க் கு ம் வன்முறைகளுக்கு ஆளாகி கொடுமைகள் அகதி மரணமுற்றனர்.”
முகாம்களுடன் முடிந்து விடுவதில்லை. யுத்தம் முடிந்தவுடன் அல்லது அரசியல் நெருக்கடி தணிந்த பின்னர், அகதிக் குடும்பங்கள்
அவர்களின் தாய் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவர். 1971 டிசம்பரில் பங்களாதேஷ் உருவாக்கப்பட்ட பின்னர், ஒரு கோடிக்கு மேற்பட்ட எண்ணிக்கையான மக்கள் அங்கு திருப்பி அனுப்பப் பட்டனர். மீண்டும் அகதிகளை அவர்களின் நாட்டில் குடியேற்றும் போது வறுமை, மூலவளமின்மை, அளவுக்கு மிஞ்சிய ஜனநெருக்கம் முதலிய பிரச்னைகளேற்படுகின்றன.
உலகெங்குமுள்ள பெண் அகதிகள், முகாம்களிலும் முகாம்களுக்குப் பயணம் செய்யும் போதும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும் போஷாக்கின்மைக்கும் உள்ளாகின்றனர். பெண் அகதிகள் சமூகத்தில் தாம் வகிக்கின்ற வாழ்க்கைப் பங்கை மாற்றி, தமது குடும்பங்களின் முழுப் பொறுப்பையும் தாமே ஏற்க வேண்டி உள்ளது. அவர்களின் நிச்சயமற்ற எதிர்காலமும் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலமும் அவர்களின் மனதுக்குப் பெருத்த வேதனைச் சுமையே. பெரும்பாலான பெண் அகதிகளுக்கு, யுத்தத்தினால் ஏற்பட்ட மனப்பாதிப்புகள், உளரீதியாக ஏற்பட்ட குழப்பங்கள் சிக்கல்கள், கணவனை இழந்ததால் ஏற்பட்ட கைம்மை, தனிமையான சூழ்நிலையில் வாழுமாறு நிர்ப்பந்திக்கின்றன.

இப்பெண்கள் முகாம்களில் நடக்கும் விஷயங்களில் தீர்மானம் எடுப்பதிலும், கலாசாரத்துக்கமைந்த செயற்பாடுகளிலும், ஈடுபட வாய்ப்பேற்படுத்திக் கொடுக்கப்படவேண்டும். தங்கள் விஷயங்களைத் தாங்களே நிர்வகிப்பதற்கு வாய்ப்பளிப்பது அனைத்து அகதிகளுக்கும் பயனளிப்பதாகும். அகதிகள் கையாலாகதவர்கள் பின்னடைந்தவர்கள் என்ற மேற்கு நாடுகளின் பொதுவான பார்வை, எதிர் விளைவு ஏற்படுத்தும் கருத்து போக்கப்பட வேண்டும். அகதிகளை அவரவர்களின் நாடுகளுக்குத் திருப்பி அனுப்புவதற்குரிய சிறந்த திட்டங்களும் வகுக்கப்பட வேண்டும்.
இலங்கையில்.
இலங்கையில் இன்று சமார் 10 லட்சம் மக்கள் தமது சொந்த வாழ்விடங்களிருந்து இடம் பெயர்ந்து அகதி முகாம்களிலும் நலன்புரி நிலையங்களிலும் வாழ்கின்றனர். (புத்தத்தின் கொடுமையிலிருந்தும் இனப்போரின் அழிவுத் தாண்டவத்திலிருந்தும் தப்பிக் கொள்வதற்காக தமது இல்லங்களிலிருந்து வேறிடங்களுக்கு அல்லது பிறநாடுகளுக்கு ஒடிச்சென்று தஞ்சமடைவோரே அகதிகள். மேற்குறிப்பிட்ட காரணங்களிால் தமது வீடுகளை விட்டோடி П, п 6о 6ll I (5)
வெளியேறாமல் தமது
ட்டமும் ஒழுங்கும் சீர் நாட்டில் வேறு டுவதால் பாலியல் பிரதேசங்களில் தஞ்சம் அடைந்திருப்பவர்கள் இடம்
பாவது பெண்களே. அகதி
பெயர்ந்தவர்களெனக் முகாமுக்குச் செல்லும் கூறப்படுவர்.
வாறான நிலை எற்படுகிறது. மிருகத்தனமான பாலியல்
கி உடற்காயமுற்றனர். பலர்
1 9 8 O - 9 O காலகட்டத்தில் சுமார் 12 லட்சம் பேர் இனப்போர்
காரணமாக இலங்கையில் இடம் பெயர்ந்து
6нтрj,g, 60ti. (IAWID
1995;6()) இவர்கள்
இலங்கையின் மூன்று இனக்குழுக்களையும் சேர்ந்தவர்களே. ஆண்கள் நேரிடையாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாலும் ஆண்களில் பலர் இறந்ததனாலும், இடம் பெயர்ந்தவர்களின் தொகையில் அதிக வீதமானவர்கள் பெண்களும் குழந்தைகளுமேயாவர். இலங்கையில் இவ்வாறு இடம் பெயர்ந்தவர்களில் 60 வீதமானவர்கள் பெண்களே என மதிப்பிடப்பட்டது. இதனை வடபகுதி முகாம்களுடன் ஒப்பிடும் போது அங்கே இதன் பரிமாணம் மிகப்பெரிது. (செனவிரத்தின 1996:8)
இலங்கையில் பெரும் எண்ணிக்கையாக இடம் பெயர்ந்தவர்கள் வடக்கு கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்தவர்களே. இவர்களில் மிகப் பாதிப்புக்காளாகியவர்கள் பெண்களே. பலாத்காரப் பாலியல் வன்முறைகள், அடித்து விரட்டல்கள், துவக்குச் சூட்டுச் சம்பவங்கள், குழந்தைகளுட்பட கொலைகள் அடங்கிய கொடுங்கோன்மை அடிக்கடி கிராமங்களையும் குடும்பங்களையும் குறிவைத்தன.
இலங்கை போன்ற நாடுகளில், சொந்த நாட்டிலேயே மக்கள் வாழ்விடங்களிலிருந்து வெளியேறி அகதிகளாக மாறிய நிலைமை துரதிஷ்டவசமானது. இனங்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டை

Page 16
மக்களைத் தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேறி, வேறு பகுதிகளில் குடியேறி எப்போது தமது இல்லங்களுக்குத் திரும்புவோம் இனி எப்போதாவது திரும்ப முடியுமா ? என நிச்சயமற்ற நிலைமைக்குள்ளாக்கி விட்டது. விவசாயமும் அபிவிருத்தியில் நிறுவனம் ஆய்வொன்றின் படி 70 வீதமான பெண்கள் அரச இராணுவத்தின்
தற்காலிகமாக
பெண்களும், மேற்கொண்ட
தாக்குதலுக்குப் பயந்தே தாம் வீட்டை விட்டு வெளியேறி வந்ததாகக் கூறியுள்ளனர். ஏனைய இனக்குழுக்களின் கொடுமைக்கு அஞ்சியே தாம் வெளியேறியதாக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இடம் பெயர்ந்த தமிழ்ப் பெண்களில் 34 வீதமானவர்களும், அம்பாறை மாவட்டத்திலிருந்து வெளியேயவர்களில் 56 வீதமான தமிழ்ப் பெண்களும் கூறியுள்ளனர்.
இலங்கையில் இடம்பெயர்ந்தவர்களை குத்துமதிப்பாக 3 பிரிவுகளாக வகுக்கலாம். (1) அகதி முகாம்களிலும் நலன்புரி நிலையங்களிலும் வசிப்பவர்கள் (2) பிரச்சினைப் பகுதிகளிலிருந்து வெளியேறி வேறிடங்களில் உறவினாகளுடன் வாழ்பவர்கள் (3) தமது இடங்களில் இருந்து கொண்டு - பிரச்சினையின் போது தற்காலிகமாக வெளியேறி ஒடிச் சென்று ஒழித்திருந்து விட்டு - தணிந்ததும் வீட்டுக்குத்
திரும்பி வருபவர்கள்.
இலங்கையில் இடம் பெயர்வோர் எண்ணிக்கை
'அகதி முகாம்களில் ஆ
தங்களின் கடமைகளை
அதிகரித்துவிட்டது. அது வரட்சியால் பாதிப்புற்ற பகுதிகளில் நிலைமையை மிக
பெண்களோ தனிை
மே ச மா க் கி யுள் ளது . வேண்டியுள்ளது. அக தற்சமயம் 253, 177 குளிப்பதற்கோ குடும்பங்கள் இடம்  ெப ய ர் ந் து ஸ் ள ன . இ வ் வ க தி க ளி ல்
படுத்துவதற்கோ அந்தரர் மறைவான வசதிகளிருப்
பார்க்க
1Ᏺ0 6ᏓᎩ ᏧᎦ
ஆண்களிலும்
பெண்களின் தொகை
அதிகமானதாகும். இடம் பெயர்ந்த இலங்கை அகதிகளில் 30 வீதமானவர்கள் சிறார்கள். மேலும், அடிக்கடி அகதிமுகாம்களில் குழந்தைகளும் பிறக்கின்றன. இப்போது சிசு இறப்பு விகிதம் சுமார் 1-2 வீதமாகும். 1983ல் ஆரம்பித்த வாழ்விடங்களை விட்டு இடம் பெயர்ந்து ஒடத்துவங்கிய வழக்கம் 1990ல் உச்சத்துக்கு உயர்ந்தது!
இலங்கையிலுள்ள தொண்டர் நிறுவனங்கள் அகதிகளின் நலன்களைக்கவனிப்பதில் குறிப்பிடக் கூடிய பங்காற்றின. அகதி முகாம்களில் சவர்க்காரம், உடைகள், சமையல் பாத்திரங்கள், துவாய்கள், பாய்கள், போர்வைகள் நுளம்பு வலைகள் முதலிய பொருட்களை அகதிகளுக்காக வழங்கின. பெண் அகதிகளை ஆடை நெய்தல், உடுப்பு தைத்தல், சுகாதாரப் பராமரிப்பு பயிற்சி முதலிய வருவாய் தரும் திட்டங்களில் ஈடுபடுத்துவதிலும் இத்தொண்டர் நிறுவனங்கள் நேரிடையாக ஈடுபட்டன. அகதி முகாம்களிலிருந்தவர்களுக்கான உணவு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது.
பெண்கள் தகுதி குறைந்தவர்கள் என்ற இகழ்ச்சி நிலையிலும், நெருக்கடி காலங்களில் அவர்கள் கட்டுப்பாட்டைக் காத்தனர்.

'இராணுவ நடவடிக்கை காரணமாக இடம் பெயர்ந்து வாழ்ந்த கிழக்கிலங்கையின் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அளித்த தகவலின்படி, அவ்வகதிகளின் முகாமிற்கான தற்காலிக கொட்டில்களை பெண்களே அமைத்துக் கொடுத்ததுடன், சமையலுக்குத் தேவையான நெல்லைச் சேகரிப்பதிலும், பொதுச் சமையற் கூடத்தை அமைப்பதிலும் பெண்கள் ஈடுபட்டனர். மேலும் அச் சமூகத்தினருக்கான உணவைத் தயாரித்துக் கொடுத்ததுடன் குழந்தைகளையும் பராமரித்தனர். (செனவிரத்தின 1996:8)
அகதி முகாமுக்கு வந்து விட்டால், சமூகவாழ்க்கையில் தமக்குரித்தான தமது எண்ணப்படி செயலாற்றும் உரிமையை பெண்கள் இழக்கநேரிடுகின்றது. முகாமில் எதிர் நோக்கும் இடர்கள் பல-உளரீதியான பிரச்னைகள், உடற் சுகாதாரத்தைப் பராமரிக்க முடியாமை, அந்தரங்கமின்மை, மாதவிடாய் நாட்களில் நாப்கின்' தேவைகள் எனப்பல. மகப்பேறு, கர்ப்பம் சம்பந்தப்பட்ட பிரச்னை, குடும்பக் கட்டுப்பாடு, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்முறையாளர் தொடர்பான பீதி முதலியன பெண் அகதிகள் எதிர்நோக்கும் ஏனைய பிரச்னைகளாகும். கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கும் தேவைப்படும்  ேப ா ஷ க் கு த்  ேத  ைவ க  ைள ப் பெற்றுக் கொள்வது ண்கள் பகிரங்கமாக உலாவி வரண்ட பிரதேசங்களில் முடிக்கும் அதேவேளையில் : மயில் முடங்கிக்கிடக்க விதவைப் பெண்கள் தமது பிள்ளைகளின் ந ல  ைன ப் பே ணரி ல கூடங்களைப் பயன் வளர்த் தெ டு க் கும்
தி முகாம்களில் பெண்கள்
வகத்தைப் பேணும் வகையில் குடும்பப் பொறுப்பை த  ைல மே ல்
y பதில்லை. சுமப்பவர்களான புதிய
கடமையை சமூகத்தில்
ஆற்ற வேண்டியுள்ளது.
இப்பொறுப்பை ஜன நெருக்கமும், தண்ணிர் தட்டுப்பாடு மற்றும் உணவுப்பற்றாக் குறை நிறைந்த அகதி முகாம்களில் நிறைவேற்றுவதென்பது மிகவும் கஷ்டம். முகாம்களில் போஷாக்கின்மை வெகு சாதாரணம். முதலுதவி வசதிகளோ ஒரளவு தான் உண்டு. முகாமில் அடை க்கப்பட்டு சதந்திரமாக வெளியே உலவித்திரிய முடியா மலிருப்பதென்பது கொடுமையானது. வெளியே திரிவது ஆபத்தானது. போராளிகளின் தாக்குதல்களில் அல்லது இராணுவத்தினரின் ஷெல் வீச்சில் சிக்கிப் பொது மக்கள் காலமடையவோ மரணமடையவோநேரிடும்.
இடம் பெயர்ந்த பெண்களில் அநேகர் தமக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவங்கள் மறக்க முடியாத மனவேதனையை ஏற்படுத்துவதனால் வீட்டை விட்டு ஒடி விடுவதுமுண்டு. தாக்கப்பட்டு விடுவோமோ என்ற பீதி, உண்மையாக தாக்குதலுக்குள்ளானது பற்றிய நினைவுகள், துவக்குச் சூடு, குண்டு வீச்சு, பாலியல் வன்முறைக்கு ஆளாகியது பற்றிய ஞாபகங்கள், மற்றும் விதவையாகிவிட்ட ஏக்கம் முதலியவையே மன அதிர்ச்சி ஏற்படுவதற்கான காரணங்களிற் சில. தங்கள் குடும்பங்களிலிருந்தவர்களைப் பிரிந்து தனிமைப்பட்டிருப்பதும்,
(தொடர்ச்சி 23ம் பக்கம் பார்க்க)

Page 17
பங்களாதேஷில்
பெருகிவரும்
பெண்கடத்தல்
6SFUL TIL III’n!
பங்களாதேஷில் விபசாரம், இரத்தத்தை விற்பனைக்காக தி: உறிஞ்சி எடுத்தல், உடலுறுப்புகளை வலோற்காரமாக அகற்றி விற்பனை செய்தல்
போன்றவற்றிற்காக இளம் பெண்கள் பலர் கடத்தப்பட்டு காணாமற் போகின்றனர். பணம். திருமணம், தொழில் வாய்ப்பு என்ற மாயவலையில் அப்பாவிப் பெண்கள் சிக்கிச் சீரழிந்து விடுகின்ற பல சம்பவங்கள், மற்றும் கொலைகள் பங்களாதேஷ் தேசியப் பெண் சட்டத்தரணிகள் சங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. டாக்காவிலுள்ள விபசார விடுதியொன்றிலிருந்து காப்பாற்றப்பட்ட இளம் பெண்ணொருத்தி "துன்புறுத்தலிலிருந்து தப்புதற்காகப் பல்வேறு வகைப்பட்ட ஆண்களின் பாலியல் ஆசைகளைத்தான் திருப்திப்படுத்த வேண்டியிருந்தது. இதை நம்புவது உங்களுக்கு கடினம். நாம் அனுபவிக்கின்ற கொடுமைகளின் யதார்த்தம் இதுவே' என இச்சங்கத்தின் நிர்வாகிகளிடம் கூறினாள்.
"என்னை எனது பெற்றோர் இனி ஏற்கமாட்டார்கள்” எனத் தேம்பி அழுதாள் 10வயதுச் சிறுமி தியா.
14 வயதுச்சிறுமி பிங்கி தன்னை வேறு நாட்டுக்கு விற்பனை செய்ய விபசார விடுதியை நடத்துபவர் பேரம் பேசிக் கொண்டிருந்ததாயும், எதோ சாட்டில் தான் தப்பி வெளியே ஒடி வந்ததாயும் கூறினாள்.
ரஹிமா தனது கணவரின் கொடுமை காரணமாகத் தான் இவ்விடுதியில் தஞ்சமடைந்ததாகச் சொன்னாள்.
விபசாரத்துக்காக கடத்துவது மட்டுமல்ல, பெண்களைக் கொன்று கண், சிறுநீரகம் முதலிய உறுப்புகளையும் இரத்தம் முதலியவற்றையும் அகற்றி வேறு நாடுகளுக்கு அவற்றை பெருந்தொகைப் பணத்துக்கு விற்பனை செய்யும் கொடுரமும் நிகழ்கின்றது.
 

திகள்
16
இந்தியாவிலுள்ள பல மருத்துவமனைகளுக்கு கண், சிறுநீரகம், இரத்தம் முதலியவற்றை வழங்கும் தொழிலில் பங்களாதேஷில் உள்ள ஒரு கும்பல் செழிப்பான வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அங்குள்ள பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பங்களாதேஷிலிருந்து கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு லட்சம் பெண்கள் பாகிஸ்தானுக்குத் தொழில் வாய்ப்பு, திருமணம் என ஏமாற்றிக் கடத்திச் செல்லப்பட்டுள்ளனராம்!
இக்கொடுமைகளைத் தடுப்பதற்கு இருக்கும் சட்டம் வலு குன்றியதாக இருக்கிற போதிலும், பெண்களைக் கொடுமைகளிலிருந்து காப்பாற்றுவதற்கான போராட்டத்தை தாம் கைவிடப் போவதில்லை என்று பங்களாதேஷ் தேசிய பெண் சட்டத்தரணிகள் சங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.
உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வன்முறையின் பாதிப்புக்கு உள்ளாகி பலியாகுபவர்கள் சிறார்களே. சென்ற தசாப்தத்தில் சுமார் 15 லட்சம் குழந்தைகள் யுத்தங் காரணமாக கொல்லப்பட்டனர். அகதி முகாம்களில் அல்லல் வாழ்க்கை அனுபவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 50 லட்சம். அதேவேளையில் வீடுகள் குடும்பங்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 120 லட்சமாகும். அமெரிக்காவில் துவக்குச் சூட்டுக்காயங்களினால் சுமார் 7000 சிறார்கள் 1992ல் இறந்ததாக ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது.
சுற்றுலாப் பயணிகளின் பாலியல் தேவைக்காக நெதலாந்து, இலங்கை, பிலிப்பைன் ஆகிய நாடுகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 5 லட்சத்துக்கு மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது! எமது இலங்கை நாட்டில் 10 ஆயிரம் சிறுவர்களுக்கு மேல் பாலியல் துஷ்பிரயோகக் கொடுமையில் பயன்படுத்தப் பட்டுள்ளனர்!
ஐந்தரைக்கோடி மக்கள் தினமும் பட்டினி!
இப்பூவுலகில் சுமார் ஐந்தரைக் கோடி மக்கள் ஒவ்வொரு இரவும் பட்டினி வயிற்றோடு படுக்கைக்குப் போகின்றனர். பத்தரைக் கோடி மக்களுக்கு குடிப்பதற்குச் சுத்தமான நீரோ சகாதார வசதிகளோ துப்பரவாகவே இல்லை. ஆபிரிக்க

Page 18
செய்
நாடுகளில் 1000 பிரசவங்களுக்கு 175 என்ற அடிப்படையில் சிசுக்கள் மரணித்து விடுகின்றன. இந்தியாவில் 1000க்கு 100 குழந்தைகள் இறக்க நேரிடுகிறது. ஆனால் அபிவிருத்தியுற்ற கீழை மேலைத்தேயங்களில் பிரசவமாகும் குழந்தைகளில் ஆயிரத்துக்கு சராசரி 15 சிசு மரணங்கள் தான் ஏற்படுகிறது.
10 கோடி மக்களுக்கு அடிப்படை! சுகாதார வசதிகளே இல்லை!
உலகின் அரைவாசி ஜனத்தொகையினர் சம்பாதிக்கும் மொத்த வருமானத்துக்குச் சமமான தொகையான சுமார் 800 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒரு வருடத்தில் புத்தங்களுக்குச் செலவழிக்கப்படுகிறது! ஆனால் 10 கோடி மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகளேயில்லை. வளர்ந்தவர்களில் 4 பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் எழுத வாசிக்கத் தெரியாது. உலக ஜனத்தொகையில் 20 வீதமானவர்கள் தினமும் பட்டினிக் கொடுமையை அனுபவிக்கின்றனர்.
உலகில் எழுத்தறிவில்லாதவர்களில் 66% பெண்களாவர் எழ்மையில் உழல்பவர்களில் 700 பெண்கள். ஆசியாவில் மட்டும் 374 மில்லியன் பெண்கள் வறுமையில் வாடுகின்றனர். இது மேற்கு ஐரோப்பாவின் ஜனத்தொகையிலும் பார்க்க கூடுதலானது.
பாலியல் இச்சைக்கு பலியாகும் சிறுவர்கள்
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பலரின் பாலியல் பசிக்கு சிலகாலமாக எமது நாட்டு சிறுவர் சிறுமிகள் பலியாகிவருகின்றனர். தென்னிலங்கைக் கடற்கரைகள், நீர்கொழும்புப் பகுதி கடற்கரைகளில் இதுவரை காலமும் நடைபெற்று வந்த தொழில் இப்போது உள்ளுர் விடுதிகளிலும் பெருமளவில் தொற்றிக் கொண்டுள்ளதாக பத்திரிகைகளில் பயங்கரமான செய்திகள் அடிக்கடி வெளிவந்து கொண்டிருக்கின்றன. பெற்றோரினால் கைவிடப்பட்ட பிள்ளைகள், போரினால் இடம் பெயர்ந்துள்ள அகதிக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள், அனாதைப்பிள்ளைகள் முதலியோரைத் தேடிப்பிடித்துக் கொண்டுவந்து அனாதைச் சிறுவர் பராமரிப்பு நியைம், அநாதை சிறுமியர் காப்பகம் என்ற பெயரில் அனுமதியற்ற நிலையங்களைப் பலர் நடத்தத் துவங்கியுள்ளனர். இங்கு
இச்சிறுவர் சிறுமிகள் நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றபோதிலும்,
 
 
 
 

தி
கள்
இவற்றை நிர்வகிப்போரின் இலக்கு இச்சிறார்களைப் பாலியலுக்கு பலி கொடுத்து பணம் குவிப்பதாயுள்ளதாம். மேலை நாட்டுச்சுற்றுலாப் பயணிகள் தங்கியிருக்கும் ஹோட்டல்களுக்கு இச்சிறார்கள் பலிக்கடாக்களாக அனுப்பப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனரென்பது அம்பலமாகியுள்ளது. துரதிருஷ்டமென்னவென்றால், இச்சிறார்கள் கூட உண்மையை வெளியே சொல்லாமலிருப்பதற்கு பழக்கப்பட்டுள்ளனரென்பதே தாம் ஆங்கிலம், ஜெர்மன், பெல்ஜியம், சுவிஸ், மொழிகள் அங்கு கற்பதற்காகச் சென்று வருவதாகச் சிறார்கள் மூடிமறைக்கின்றனர்.
"இளம் பையன்களை விரும்புவோர் செல்லவேண்டிய இடம்
இலங்கை. பிலிப்பைன் தாய்லாந்தில் இருப்பது போல இது தடைகள் எதுவுமில்லாத இடம்’ என இந்நிலைமையை பெல்ஜியம் சஞ்சிகையொன்று அந்நாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் வர்ணித்திருக்கிறது!
சிறுவர் சிறுமியரைக் கூட்டிக் கொடுப்பவர் அதிய தொகைப் பணத்தையும், விடுதி நடத்துபவர் ஒரு பகுதியையும் கறந்து கொள்கின்றனராம். வெள்ளைத் தோலிலும் அற்ப பரிசுப்பொருளிலும் மயங்கி இச்சிறார்கள் தாம் தவறான வழியில்
செல்வதையோ சுரண்டப்படுவதையோ உணர முடியாமலுள்ளனர்.
இதனைத் தடுக்க சட்டம் வலுப்படுத்தப்பட வேண்டும். அச்சட்டங்களை அமுல்நடத்துவோர் தீவிர அக்கறையெடுக்க வேண்டுமென நலன்விரும்பிகளும் பத்திரிகைகளும் பலமாக குரலெழுப்பத் துவங்கியுள்ளன.

Page 19
பெண்ணினத்தை அவம அழகுராணிப் போட்டிக்கு
பங்களூரில் ஆர்ப்பாட்
 

அழகுராணிப் போட்டி என்ற பெயரால் இளம் பெண்களை முழு நிர்வாணமாகவும் (மக்கால் எதிராக நிர்வாணமாகவும் பல : தோற்றங்களில் வீணிர்வடிக்கும் பலர் LII) முன்னிலையில் பவனிவரச் செய்து, பெண்களினத்தை அவமானப்படுத்தும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடக்கிறது. அழகு. பெண்களுக்கு இயற்கை அளித்த கொடை அழகான இளம் பெண்களைப் U600T in என்ற ஆசைகாட்டி, அவர்களின் அழகையும் கவர்ச்சியான உறுப்புகளையும் காட்சிப் பொருளாக்குவது பெண்ணினத்தின் கெளரவத்துக்கு எதிராக இழைக்ககப்படும் குற்றமான அநீதிச் செயலாகும்.
அழகுராணிப் போட்டி நடத்துபவர்களின் பிரதான நோக்கம் பணம் குவிப்பதே. உள்ளூர் மற்றும் சர்வதேசக் கம்பனிகள் இதில் மிக உற்சாகங்காட்டி வருகின்றன. அவர்களுக்கு எளிதாக விளம்பரமும் பணமும் எக்கச் சக்கமாக கிடைக்கின்றன. கெளரவப் பாதிப்புக்கு உள்ளாவது பெண்ணினமே என்பதை
எவரும் உணர்வதாயில்லை.
அழகுராணிப் போட்டிகளை 'ரெண்டருக்கு விடுவதில்கூட பலத்த போட்டி சர்வதேச மட்டத்தில் நிகழ்கிறது.
இவ்வாண்டு 6) அழகுராணிப் போட்டியை நடத்தும் உரிமையை சினிமா நடிகர் அமிதாப் பச்சன் பெற்றிருக்கிறார். பெங்களூரில் நடைபெறவுள்ள இப்போட்டிக்கு எதிராக பெண்ணிய நடவடிக்கையாளர்களும் உள்ளூர்மக்களும், மகளிர் அமைப்புகளும் பெருத்த எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். தீக்குளிப்பு நடத்தியாவது இதனைத்தடுத்து நிறுத்தப் போவதாக பெண்கள் அமைப்புகள் அறை கூவல் விடுத்துள்ளன.

Page 20
நிகழ்
* இலக்கியப்பேரங்கு
1996 ஜூலை 5, 6, 7 திகதிகளில் பம்பலப்பிட்டி சரசுவதி
மண்டபத்தில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய 1950க்குப் பின் ஈழத்து ஆக்க இலக்கிபம் பற்றிய இலக்கிய ஆய்வு அமர்வுகளில், கலாநிதி செல்வி திருச்சந்திரன், சித்திரலேகா
மெளனகுரு பத்மா சோடாகாந்தன், அன்னலட்சுமி ராஜதுாை, ஏ. தேவ கெளரி, அம்மன் கிளி முருகதாஸ், சூரிய குமாரி பஞ்சநாதன், நதீரா மரிய சந்தனம், முதலிய பெண் எழுத்தாளர்களுட்படப் பலர் நிகழ்ச்சிகளில் ஆய்வுனாகளை நிகழ்த்தினர்.
மனஸ்யகத்தமிழர்களது இனத்துவ வளர்ச்சிப் போக்கும் அதன் சாதி, பர்க்க, பால் நிEபத்தாற்-பரியங்களும் தொடர்பான கருத்தரங்கு 31895 அன்று பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தால் நடத்தப்பட்டது. வ.ஐ.ச. ஜெயபாலனும் கமலினி கதிரவேலாயுத பிள்ளையும் ஆய்வுரையாற்றினர். மலையக மக்களின் பிரச்னைகளும் தீர்வுமார்க்கங்களும் பற்றிக் கலந்துரையாடப்
பெற்றது.
* பெரியாரியம் கருத்தரங்கு
பெண் விடுதலைக்கான சீர்திருத்தக் கருத்துக்களைப் பாப்பிய பெரியார் ஈ.வெ.ரா நினைவாகப் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த முழுநாள் கருத்தாங்கு 17.996ல் நடைபெற்றது. பேராசிரியர் கா. சிவத்தம்பி, பெரியாரின் தோற்றத்துக்கு அக்காலத்தில் களமாக அன்ாந்திருந்த தமிழ்
நாட்டின் சமூக அரசியல் நிலைமை பற்றியும் பத்திரிகையாளர் டி. சிகிராம் தேசியவாதக் கருத்தியலும் பெரிபாரின் தேசியவாதமும் பற்றியும், என்.ரவீந்திரன் தமிழ்க் கலாசாரத்தில் பெரியாரின் கடபுள் கொள்கை ஏற்படுத்தியதாக்கம் பற்றியும், பெரியாரின் பெண்ணியல்
ாதக் கொள்கைபற்றி சித்திரலேகா மெளனகுருவும், வர்க்க
 

வுகள்
முரண்பாடுகளைப் புறக்கணித்துச் சாதீயத்தை அடிப்படையாகக் கொண்டு பெரியார் வேண்டி நின்ற சமூக உருமாற்றம் சாத்தியப்படுமா என்பது பற்றி கலாநிதி செல்வி திருச்சந்திரனும், மொழியும் இலக்கியமும் பற்றிய பெரியாரின் சிந்தனைகள் பற்றி கலாநிதி எம்.எ. நுஃமானும் ஆழமான கருத்துக்களை
முன்வைத்தனர். கஸ்பந்துரையாடலும் இடம் பெற்றது.
பெண்களின் முதுபெருந் தலைவியாக விளங்கிய விவியன் குணவர்தனாவின் 80வது பிறந்த நாளையொட்டி, பெண்கள் கல்வி ஆய்வுநிலையத்தில் ‘உழைப்பாற்றவில் பெண்கள் பற்றிய முழுநாள் கருத்தரங்கு 18.998ல் நடைபெற்றது. உடல்நலம் குன்றியிருந்த போதிலும் விவியன் இதற்கு சமுகமளித்திருந்தார்.
குமாரி ஜெயவர்தன தலைமையில் ஆரம்பமாகிய கருத்தாங்கில், சுதந்திர வர்த்தக வலபங்களில் பணிபுரியும் பெண்கள் எதிர் நோக்கம் இடர்கள் பற்றிரமணி முத்தெட்டுவேகம, பெருந்தோட்டப் பெண் தொழிலாளிகள் பற்றி கமலினி கதிர் வேலாயுதபிள்ளை. தொழிற் சங்க இயக்கத்தில் பெண்கள் பற்றி மங்களா டி சில்வா, வெளிநாட்டுக்குச் சென்று தொழில் செய்யும் பெண்களின் நிலைபற்றி மாலா திசநாயகா குமாரி விக்கிரமசிங்க
ஆகியோர் உரையாற்றினர்.
"இனப்பிரச்னைத் தீர்வுக்கு மார்க்கம் புத்தமல்ல; பேச்சுவார்த்தை மூலமே சமாதானம் பிறக்கும்” எனக்கோஷம் எழுப்பி, சுலோக அட்டைகளைத் தாங்கிய வண்ணம், தேசிய சமாதானப் பேரவை, சமாதானத்துக்கான பெண்கள் அமைப்பு மற்றும் பெண்கள் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்குபற்றிய ஆர்ப்பாட்டப் போணிகள் கொழும்பு லிப்டன் சந்தி, ஹைட் பார்க் முதலிய இடங்களில் செப்டம்பர், ஒக்டோபர் மாசங்களில்
ாடக்கப்பட்டன.
U- 모

Page 21
45/ILáPj júbUG)JUDTáEu கர்ப்பமும் மகப்பேறு
கர்ப்பந் தரிப்பதும், குழந்தையைப் பெறுவதும் ஆண்கள் பெண்களினால் மட்டுமே முடிந்த புனிதமான பணி; பெண்ணினத் சமுதாயப்பணி. பெண்ணின் வயிற்றில் கர்ப்பம் எவ்வாறு ஏற்படுகின் காலப்போக்கில் எப்படி வளர்கிறது; கர்ப்ப காலத்தில் ஒரு பெண் தேகாரோக்கியம் மற்றும் உணவு முறைகள் எவை? வயிற்றிலு ஆரோக்கியமாக வளர்வதற்கு கர்ப்பிணி புரிய வேண்டிய பணிகள் எ6 மூடி மறைக்கப்பட்ட இரகசியங்களல்ல. மாணவப்பருவத்திலும் 6 பாலாருக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்கள் என்ற பரிம இவற்றை அறிந்து கொள்வது ஆரோக்கியமான சமுதாயத்துக்கே அ இவற்றை விளக்கும் பிரசுரங்கள், திரைப்படங்கள் பல வெளி இவை வயது வந்தவர்களுக்கு மட்டும் என முத்திரை குத்தப்பட்டு காணமுடியாத ஏதோ செக்ஸ் சமாச்சாரங்கள் இவற்றில் இருக்கின்றன வேண்டும் என்ற அங்கலாய்ப்பும் விடுப்புணர்வும் இளம் ஆண்களிடம் இன்னும் தூண்டி விடும் வகையில் வாய்ப்பைப் பயன்படுத்தி பண விரும்பும் திரையரங்க உரிமையாளர்கள் பரபரப்பான போஸ்களில் ெ போஸ்டர்கள், கட் அவுட்டுகள் என காட்சிக்கு வைத்து விடுகிறார்களே? பெண்ணின் கர்ப்பநிலையையும், மகப்பேற்றை வகையில்,"(இப்படம்) எல்லாவற்றையும் சொல்லுகிறது, எல்லாவற்றை எனக் கண்களை உறுத்தும் விளம்பர வாசகங்கள் வேறு
புனிதமான கர்ப்பச் சமாசாரம் தொடர்பான அறிவுரைகளை கூட ஏதோ நடக்காதது நடந்து விட்டது போல அர்த்தம் கற்பித்து பெண் பொருளாக்கிக் காட்டி காம உணர்வைத் தூண்டும் வகையில் விளட் பெண்களை இழிவுபடுத்தும் கேவலமான செயலே.
 

ரினால் செய்யமுடியாத, தினால் மட்டுமே முடிந்த றது; கர்ப்பத்திலுள்ள சிசு
கண்டப்பிடிக்க வேண்டிய லுள்ள குழந்தை பூரண ன்ன? - இவை இப்போது பளர்ந்த பின்னரும் இரு ாணத்தை எய்தி விட்டன. டிகோலும். அதனால்,
பாகியுள்ளன. ஆனால், விடுவதனால், இலகுவில் T, அவற்றைப்பார்த்து விட ஏற்படுகிறது. இவற்றை வசூலைப் பெருக்கி விட பண்ணுருவங்களைக் கீறி டு அமர்க்களப்படுத்தி பும் கொச்சைப்படுத்தும் ம் (திறந்து) காட்டுகிறது"
க் கொண்ட படங்களுக்கு உருவங்களைக் கவர்ச்சிப் பரங்கள் செய்யப்படுவது,
குயிலி கொழும்பு - 6
- - - - - - - -
O கவிதை
கண்ணிரில் அர்த்தம்.
குளிர்வாட்டி வதைக்கின்ற போதும் - இளந் தளிர் நீட்டி மிளிர்கின்ற
முகையைக் கிள்ளி எம்மவர்
முகவாட்டம் போக்கும் - அந்தத் துளியேனும் களையில்லா தலித்துக்களின் # କୋର୍ଡotଶ୪୪ffiti), ଭୈ) அர்த்த மிருப்பதைக் கனவான்களே கொஞ்சம்
உற்றுப் பாருங்கள்.
செல்வி
மிடில்டன்
தலவாக்கலை
L

Page 22
கடி
Ο சுவிஸ்ஸிலிருந்து.
நீங்கள் வெளியிடும் பெண்ணின் குரல் பிரதியொன்றை தமிழ் நாட்டிலிருந்து வ. கீதா அனுப்பியிருந்தார். மிகவும் பயனளிக்கும் இச்சஞ்சிகையை வெளிக்கொண்டுவரும் உங்கள் அனைவருக்கும் எங்கள் யாவரினதும் நன்றியைத் தெரிவிக்கிறோம். இதுவரை வெளிவந்த இனி வெளிவரவுள்ள 'பெண்ணின் குரலின் அனைத்து இதழ்களையும் அனுப்பிவைப்பீர்களாயின் சந்தோஷமடைவேன். அதற்கான
செலவை அனுப்பிவைக்கலாம்.
இங்கே நாங்கள் சுமார் 25 பெண்கள் மாதந்தோறும் சந்திப்போம். சென்ற சந்திப்பில் நிவேதினியை அறிமுகஞ் செய்தோம். 3 மாதங்களுக்கு ஒரு முறை ஜெர்மனி, பிரான்ஸ், லண்டன், கனடா, நோர்வேயில் வசிக்கும் பெண்களின் சந்திப்பை நடத்துகிறோம். அடுத்த சந்திப்பு ஜெர்மனியில் நடக்கவுள்ளது. பெண்ணின் குரல் சம்பந்தமான அறிமுகம்
அதில் இடம் பெறும்.
இங்குள்ள பெண்கள் பெண்ணின் குரலுக்கு சந்தா அளிக்க விரும்புகிறார்கள். அதனால் 25 பிரதிகளை இங்கு அனுப்பிவைக்க முடியுமா? அதற்கான சந்தாத் தொகையை முன்னாாகவே செலுத்த முடியும்.
இலங்கையின் நிலைமை மோசமாகியிருப்பது கவலையாயுள்ளது. பெண்ணின் குரல்' சஞ்சிகை எவ்வளவோ சிரமங்களுக்கிடையில் வெளியிடப்படுவதால், புலம் பெயர்ந்து வாழும் தமிழ்ப் பெண்களாகிய நாம் முடியுமான உதவிகளை
வழங்கத் தயாராயுள்ளோம்.
உங்கள் பணிதொடர எங்கள் வாழ்த்துக்கள்.
பி. ரஞ்ஜனி உஸ்னாஷ், சுவிட்சர்லாந்து
Ο தமிழ் நாட்டிலிருந்து.
பெண்கள் உரிமையை முதன்மைப் படுத்துகிற தங்களின் பெண்ணின் குரல் இதழ் 11, 12 ஆகிய இரண்டு

ங்கள்
இதழ்களையும் படித்தேன். என்னை மிகவும் கவர்ந்தது எஸ். டி. சாமியின் ஒவியங்கள். இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய இந்தச் சூழலில் - ஒவியங்கள் சொல்ல வேண்டியதை நுணுக்கமாக, ஆணித்தரமாகச் சொல்கின்றன.
தஸ்லிமா நஸ்ரீன் பற்றிய குரலை திக்குவலை எழுத்தாளர் சங்கம் உரத்துக் கூறுவது தேவையானதே. டானியல் ஏற்கின்ஸின் தேயிலைத் தோட்டங்களில் பெண்கள்கட்டுரை மிகச் சிறப்பாக அவர்களின் உண்மை நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. செல்வி திருச்சந்திரனின் ஆய்வு விதவைப் பெண்களின் பல்வேறு செய்திகளை எடுத்தியம்புவதாக உள்ளது. தலை நகரில் மீண்டும் திடீர்க்கைதுகள் என்ற இந்நிலை எப்போது மாறும்?
தங்களின் இதழ் எனது சிற்றிதழ்களின் தொகுப்பில் 1870 ஆவது வகையான இதழாக வகைப்படுத்தப் பட்டுள்ளது. பெண்ணின் குரல் அமைப்பினர் தமது பணியை வெற்றிகரமாக நிறைவேற்ற வாழ்த்துக்கள்!
பொள்ளாச்சி நசன்
ஆசிரியர் 'சிற்றிதழ் செய்தி பொள்ளாச்சி, தமிழ் நாடு
Ο மட்டக்களப்பிலிருந்து.
பெண்களின் அடிமைத்தளை, துன்ப நிலைகளுக்கு எதிராக குரல் கொடுக்கக் கூடிய ஒரு சஞ்சிகை இல்லாத குறையைப் போக்கத் துணிந்து செயற்படுகிற தங்களின் செயற்றிறனை நான் பாராட்டுகிறேன். "இந்தத் தொடர்கதைக்கு முடிவு எப்போது?’ என்ற மகுடமிட்டு தாங்கள் எழுதியுள்ளவை காத்திரமானவை. பெண்களுக்கு இழைக்கப்படுகிற கொடுமைகள், அவள் எதிர் நோக்குகிற தொல்லைகள், இடர்பாடுகளை, அநீதிகளை எல்லாம் அழகாக எடுத்துக் கூறியுள்ளீர்கள். இப்படிக் காரசாரமான எழுத்துக்கள் மூலம் தான் நாம் எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும். தடைகளை வென்று பெண்ணின் குரலை நடத்திச் செல்லுங்கள். என்னால் முடிந்த உதவிகளை மகிழ்ச்சியுடன்
செய்வேன்.
- மண்டுர் அசோகா

Page 23
) பறகாதெனியாவிலிருந்து.
ஆணாதிக்கம், பொருளாதார அரசியல் சமத்துவமின்ை போன்ற பல பிரச்னைகள் பெண்களுக்கு உண்டு. இவைகளை கழைந்து பெண்களின் தனித்துவமான சுதத்திரத்துக்கா பாடுபடும் 'பெண்ணின் குரலுக்கு என் உள்ளத்தில் ஆழத்திலிருந்து பாராட்டுகளை அள்ளிச் சொரிகிறேன்.
இஸ்லாம் மார்க்கம் பெண்ணுக்காக முன்வைத்திருக்கு சட்டங்கள், போதனைகள் குறித்து உங்களின் அபிப்பிராய என்னவோ தெரியாது. இஸ்லாத்தின் பெண்க கொள்கைகளை நடுநிலை நின்று மனத்தராசில் எடைபோட்டு பார்த்தபோது, அது பெண்ணுக்குச் சுமையாக இருப்பதா எனக்குத் தோன்றவில்லை.
இன்று பெண்கள் பல கொடுமைகளுக்கு சுமைகளுக்கும் உட்பட்டிருப்பதை நான் மறுக்கவில்லை அக்கொடுமைகளை அகற்ற நீங்கள் மேற்கொள்ளு பிரயத்தனங்களை நான் எதிர்க்கவில்லை. ஆனால், அந்த கொடுமைகளுக்கு இஸ்லாம் காரணம் என்ற வாதத்தை, நான் - மதச்சார்பான மனப்பாங்குடனன்று - நடுநிலை சிந்தனையின் அடிப்படையில் ஆட்சேபிக்கிறேன். அதேவே6ை இன்றைய இஸ்லாமிய சமுதாய நடை முறைகளிலுள்ள பெண்ணை மதிக்காத தன்மையை, அவளை அடக்கும் போக்ை நான் முழுமனதாக வெறுக்கிறேன்.
பெண்களுக்கு இஸ்லாம் வழங்கும் போதனைக6ே அவர்களை உண்மைச் சுதந்திரத்துடன் வாழ இட ஏற்படுத்தியிருக்கிறது.
பெண்ணின் குரல்' சஞ்சிகை எனக்கு அவசியம் தேவை சமூக நலனில் அக்கறை கொண்டுள்ள நான் சமூகத்தில் சரிபாதியான பெண்களின் துன்பங்களில் அனுதாபமு அக்கறையும் கொண்டுள்ளேன்.
- றஸிம். எ. றஹீட
O வெலிகமையிலிருந்து.
நான் ஒரு இஸ்லாமிய மதத்தவன். எங்கள் பெண்களுக்கு ஒழுக்கம் பற்றியே நிறையப் போதிக்கப்படுகிறது எனினும் சில அடிப்படைவாதிகள் அதனை அடக்கு முறையாகவும் அடிமைத்தனமாகவும் நினைத்து பெண்களை பெரிதும் வதைப்படுத்துவதைப் பார்க்கிறேன். நான் மாத்தை

ங்கள்
மாவட்டத்திலுள்ள ஒரு பெண்கள் பாடசாலையில்
ஆசிரியராகப் பணியாற்றுகிறேன். அங்கு இதுபற்றி நிறைய ஆலோசனைகளையும், பெண்களின் ஆளுமை, தனித்துவம் முதலியவை பற்றிய சரியான உணர்வையும் ஏற்படுத்த முயற்சிக்கிறேன்.
$
மும்தாஸ் ஹபீள் தெனிப்பிட்டிய
h
行
KD வாழைச்சேனையிலிருந்து.
'பெண்ணின் குரல் சஞ்சிகையை நடத்தும் உங்களுக்கு எனது பாராட்டுகள். இங்கும் h இதழ்கள்கிடைக்க எற்பாடு செய்யுங்கள்.
இன்று பெண்கள் எதிர்நோக்கும் பல பிரச்னைகளில் கணவனால் மனைவிக்கு ஏற்படும் துன்புறுத்தல்கள் சொல்லிலடங்காதவை. எங்களூரில்
f
s
ச் கணவன் குடிபோதையில் மனைவியை அடித்துவதைப்பது
ா சர்வ சாதாரணம். அதனைச் சகிக்க முடியாத
ா மனைவிக்குத் தற்கொலை தான் மார்க்கமாயுள்ளது.
க தனது குழந்தைகளைப் பற்றி சிறிதேனும் சிந்திக்காமல் மனைவி நச்சுக்காய்களை - (அவை இங்கு காசில்லாமல் தாராளமாக கிடைக்கின்றனவே!) - பறித்து மாங்காய்
ா சாப்பிடுவது போலச் சாப்பிட்டு தற்கொலை செய்து
ம் கொள்கிறாள்! இது கணவனை எதிர்த்து நிற்க முடியாத மனைவியின் இயலாமைத்தனத்தாலும், மூடத்தனத்தாலும்
நிகழும் சம்பவங்கள்.
பாடசாலை செல்லும் வயதில், காதலில் ஈடுபட்டு
ம் வீட்டை விட்டு காதலனோடு ஓடிவிடும் இளம் பெண்களிற் பலரே இவ்வாறான தற்கொலையைத் தழுவிக் கொள்கின்றனர்.
இளம் வயசில் பெண்கள் திருமண ஆசையை வளர்த்துக் கொள்ளாது, படிப்பில் முன்னேறி, எதிர்காலத்தில் சொந்தக்காலில் நிற்பதற்கான மார்க்கத்தையும் நம்பிக்கையையும் 'பெண்ணின் குரல் சஞ்சிகையும் பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்களும் ஏற்படுத்த வேண்டுமென வேண்டிக் 5 கொள்கிறேன்.
எஸ். செவ்வந்தி, பேத்தாழை.

Page 24
L|fullDI?
நாங்கள் அகதிமுகாம்களில் முடங்கிய கன்னியர் அல்ல! அல்ல ! சிறகொடிந்த கிளிகள்! நாளும் பொழுதும் வாழ்க்கைப் போராட்ட களத்தில் நாங்கள்! இங்கே, தனித்துவமான போராட்டம் புரியுமா உங்களுக்கு? நானூறு கண்களுக்கு மத்தியிலே நாங்கள்! உண்டுடுத்து, உடைமாற்றி உறக்கமும் கொண்டு காலை மாலைக் கடன்கழித்து, உதரத்தைக் காக்கின்ற
போராட்டம்
புரியுமா? உங்களுக்கு!
அன்னலட்சுமி இராஜதுரை.
 

(15ம் பக்க தொடர்)
வெளியுலகத்துடன் தொடர்பின்றியிருப்பதும் ԼՈ60f அதிர்ச்சியேற்படுத்துவதற்கான பிற காரணங்கள். அகதிநிலை காரணமாக வறுமையிலும் மற்றவர்களில் தங்கியிருப்பதற்கும் நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதனால் முகாம்களிலுள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் மனச்சோர்வும் விரக்தியும் ஏற்படுகின்றன. போரின்போது காணாமற் போய்விட்ட அல்லது கொல்லப்பட்ட குடும்ப அங்கத்தவர்களை நினைத்து சோகமுற்றிருக்கும் பெண் அகதிகளுக்கு எத்தனையோ வேதனையான நினைவுகள் ஏற்படுவதுண்டு.
அகதி முகாம்களில் பெண்களுக்கு, குறிப்பாக முஸ்லிம் பெண்களுக்கு தனி ஒதுக்கிடம் அவசியமென்பது கருத்தில் கொள்ளப் படவேண்டும். குளிப்பதற்கு மட்டுமல்ல தமது சமயப் பிரார்த்தனைகளுக்கும் முஸ்லிம் பெண்களுக்குத் தனி ஒதுக்கிடம் அவசியமாகும். முகாம்களில் தனி ஒதுக்கிடமில்லாத காரணத்தால், பிளாஸ்டிக் பெட்டிகளைக் கொண்டு மறைத்த சில அடிவிஸ்தீரணம் மட்டுமேயுள்ள சிறிய இடத்துக்குள், இப்பெண்களும், சிறுமிகளும் வெளியே வராமல் அடைந்து கிடந்து திக்குமுக்காட நேரிடுகிறது. சமய கிரியைகளையும் கொண்டாட்டங்களையும் அகதி முகாம்களிலுள்ள ஒவ்வொருவரும் கடைப்பிடித்து நிலைநாட்ட வேண்டுமென்பது கஷ்டமானது. உடல் நிலை காரணமாக கடுமையான உணவு முறையை அல்லது சமயக் காரணத்தினால் சைவ உணவை வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள், போதிய போஷாக்கானவற்றை முகாம்களில் பெற்றுக் கொள்வதும் கஷ்டமானது. இனக்கலவரங்களின் கோரப் பிடியிலிருந்து தப்புவதற்காக அடிக்கடி ஒடி அலையவேண்டிய கொடுமைகளுக்கு முகம் கொடுக்காத நிலைமை நிலவினால் வளர்முக நாடுகளிலுள்ள பெண்களின் இப்போதய உடற்சக்தி மிகப்போதுமானதே. முன்னர் பழக்கப்பட்ட முகம்களோடு கிராமத்தில் பாதுகாப்பாக வாழ்ந்த பெண்கள் பெரிய, அகதி முகாம்களில் சன நெருக்கத்திலும் முன்பின் அறிமுகமற்ற அந்நியர்களுடனும் ஒன்றாக வாழவேண்டி நேரிடுகிறது. முகாமில் எவ்வளவு காலத்துக்கு இருக்க வேண்டுமென்பது நிச்சயமற்றது. அங்கே குழந்தைகளுக்கு விளையாட்டு வசதிகள் மிகச் சொற்பம். குடும்ப வாழ்க்கை குலைக்கப்பட்டு, பெண்கள் விரக்திக்குள்ளாகும் கொடுமையான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அகதி முகாம் வாழ்க்கையில் ஆண்களுக்கு வயற் செய்கை செய்வதற்கு இடம் இருப்பதில்லை. அவர்கள் கலக்கமும் சோர்வும் அடைகின்றனர். இந்நிலை குடும்ப வன்முறைக்கு வழிகோலுகிறது. இராணுவ வீரர்களிடமும், அகதியாகிவிட்ட ஆண்களிடமும் ஏற்படும் 'மனிதத்துவம் அற்ற நிலை காரணமாக பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை எழுச்சியடைகிறது. அகதிமுகாம்களில் ஆண்கள் வேலை எதுவும் செய்து உழைப்பதற்கு வழியற்றவர்களாகத் தம்மைக் கருதுகின்றனர். இந்த எண்ணம் ஆணாதிக்க வழிமுறை வந்த சமுதாயத்தில், அவர்களை குடும்பச் சண்டைக்கும், பாலியல் வன்முறைக்கும் தூண்டுகின்றது. அகதி முகாம்களிலுள்ளவர்களின் வீடும் கிராமமும் அழிக்கப்பட்டதனால் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையினத்துக்கும் கசப்புக்கும் அவர்கள் ஆளாகியுள்ளனர். அவர்களின் கிராமங்களுக்கு மீண்டும் திரும்பிப் போவதற்கு அவர்களுக்கென அங்கு என்ன இருக்கிறது?

Page 25

அகதி முகாம்களில் உள்ள ஆண்களை வேலைகளில் ஈடுபடுத்தி உற்சாகப் படுத்துவதுடன், குடிப்பழக்கமுள்ளவர்களுக்கு ஆலோசனை அளிப்பதற்கும் எற்பாடு செய்யப்படவேண்டும். விரக்திமிக்க அகதிமுகாம் வாழ்க்கைச் சூழ்நிலை காரணமாக குடும்ப வாழ்க்கை தடைப்படுவதனால் தற்கொலைகள் கூட ஏற்படக் கூடும்.
அகதி முகாம்களில் பெண்களின் தேவைகள் ஆண்களின் தேவைகளிலிருந்து வித்தியாசமானவை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். பெண்கள் தமது அந்தரங்கத்தை காப்பதற்கான வசதிகள், குடும்ப வன்முறைகளிலிருந்து பாதுகாப்பு முதலியவை முகாம்களில் செய்யப்பட வேண்டும். குடும்ப அங்கத்தவரை வன்முறையில் இழந்த சோகம், கணவனை இழந்த கைம்மை ஏற்படுத்திய தனிமையான வாழ்க்கை என்பவை முகாம்களிலுள்ள பெண்களை பாதிப்புறச் செய்யும் விடயங்கள். குறிப்பாக யுத்தத்தின் போது சமூகத்தையும் குடும்பத்தையும் ஒன்று சேர்த்து வைத்திருப்பவளாக பெண் விளங்குவதால், அவளுக்குரிய மதிப்பான ஸ்தானத்தை வழங்குவதை கருத்திலெடுக்க வேண்டும். சமூகத்தையும் குடும்ப வாழ்க்கையையும் காப்பாற்றுகிற அவர்களின் திறமையும்
ஊக்கமான அக்கறையும் பாராட்டப்பட வேண்டியன.

Page 26
() புத்தளம் அகதி முகாமில்
க்கட்டுக்கள் (இக்கட்டுக்குள்
1990ல், 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட முஸ்லீம் குடும்பங்கள் எல்.ரி.ரி.ஈயின் ஆணைப்படி யாழ்ப்பானக்குடா நாட்டிலிருந்து வெளியேறினர். இடம்பெயர்ந்த இவர்களுக்கு அநுராதபுரம், புத்தளம், குருநாகல், மாத்தளை, பொலன்னறுவைப் பகுதிகளில் புகலிடமளிக்கப்பட்டது.
புத்தளம் மாவட்டத்தில் இடம் பெயர்ந்து வந்தவர்களின் பொதுநிலைமை பற்றி 1994ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் இறுதியில், கமலினி விஜயதிவக பூரணமான அறிக்கையோன்றை உதவிவழங்கும் தொண்டர் நிறுவனங்களிடம் சமர்ப்பித்தார். பெண் அகதிகள், அங்குள்ள முகாம்களில் எதிர்நோக்கும் இடர்கள் பற்றி, அவ்வறிக்கையில் பின்வரும் குறிப்புக்கள் காணப்படுகின்றன:
புகலிடம் - அகதிகள் தங்குவதற்கென அமைத்துக் கொடுக்கப்பட்ட தற்காலிக கொட்டில்களில், பெண்களுக்கும் இளம் பெண்களுக்கும் அந்தரங்கத்துக்கான ஏற்பாடுகள் எதுவுமில்லை,
தண்ணிர் - பெண்கள் குளிப்பதற்கு வசதிகளில்பை மறைவான அந்தரங்கமான அடைப்புக்கள் ஏற்படுத்தப்படவில்லை,
உணவு - உலர் உணவுப் பொருள் விநியோகம் பெரிய குடும்பங்களுக்குப் போதியளவு கொடுக்கப்படுவதில்லை. கருவாடு, காய்கறி வாங்குவதற்கு அவர்களுக்கு நிதிப்பற்றாக்குறை. கர்ப்பினிைப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சத்துள்ள உணவு வழங்க அக்கறை எடுக்கப்படவில்லை. உணவுப் பொருள்களின் விவையேற்றத்துக்கு காரணம் இடம்பெயர்ந்து வந்தவர்கள் இவற்றை வாங்கிவிடுவதே என உள்ளூர் வாசிகள் கருதுகின்றனர். உள்ளுர்ப் பெண்கள் அகதி முகாமில் உள்ளவர்களுக்கு உனவு முத்தினர வழங்குவதே பொருத்தம் எனக் கூறுகின்றனர். கொடிய வறுமையிலும் ஏழ்மையிலும் உள்ளும் மக்களில் பெரும் பகுதியினர் உழல்வதனால், அகதி முகாம்களில் உள்ளவர்களுக்கு அணிக்கப்படுவது போப் தமக்கும் உதவிகள் வழங்கப்பட வேண்டுபொன்று உள்ளுரவர்கள் கருதுகின்றனர்.
சுகாதாரம்
கொட்டில்கள் ஒன்றுடன் ஒன்று தெருக்கமாக அமைக்கப்பட்டிருப்பதனால், சகாதாரத்தைப் பற்றிய சிந்தனை அங்கு வாழ்பவர்களிடமில்லாததால், அது வருத்தம் பரவ வழிவகுக்கிறது. அங்கு சில மசைல கூடங்களே உள. அவற்றைப் பாவிக்கும்போது பெண்கள் அந்தரங்கத்தைப் பேணுவதற்குக், கதவுகளில்லை.
பொருளாதாரச் செயற்பாடுகள்.
தொழிற்பயிற்சி பெற்றவர்கள் அதனைப்பயன் பெறக் கூடிய
வகையில் உபயோகிப்பதற்கான வாய்ப்புகளில்லை. வசதியுள்ள சிலர்
பெட்டிக்கடை வியாபாரம் நடத்துகின்றனர்.
பல பெண்கள் வெங்காயத் தோட்டங்கள், வீடுகளில் கூலிகளாக வேலை செய்கின்றனர். சிலர் உள்ளூரிலும் அருகிலுள்ள நகர்களில் இருக்கும் கடைகளிலும் தொழிலாற்றுகின்றனர்.

ாாகும் பெண்கள்)
சில சந்தர்ப்பங்களில் குறைந்த கூவி கொடுக்கலாம் என்னும் காரணமாக ஆண்களிலும் பார்க்க கூடுதலாக பெண்களுக்கே தொழில்கள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. கூடுதல் நேர த்துக்கு வேலை, ஆனால் குறைந்த சம்பளம் என இப்பெண்களின் உழைப்பு காண்டப்படுகிறது.
சமூகப்பிரச்னைகள்
போதிபளவு சீதன வசதிகள் இல்லாததால் இளம் பெண்களின் திருமண வாய்ப்பு இருண்டேயிருக்கிறது. பெற்றோரில் ஒருவர் மட்டுமே உயிரோடிருக்கும் குடும்பங்களில் இது பெரிய ീ[$('ll,
நெருக்கமாக கொட்டில்கள் அமைந்திருப்பதால், அந்தாங்கமின்றி முகாம் சூழல் விளங்குகிறது. இடம் பெயர்ந்து வாழும் இம்மக்களின் ஒழுக்கத்திலும் சமூக விதிமுறைகளிலும் எதிர்மறைவிளைவேற்படுத்த இது வழிவகுப்பதாகிறது.
சில முகாம்களில் பாலியல் பலாத்காரச் சம்பவங்கள்,பாலியல் நச்சரிப்புத் தொல்லைகள் இடம் பெற்றுள்ளன. தொண்டராசிரியராகப் பEணியாற்றும் ஒரு ஆண் 12வயதுச் சிறுமியை பவாத்காரம் செய்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும், அவளின் பெற்றோர் தமது நிாாதரனான நிலைமையின் காரணமாக இச்சம்பவத்தையிட்டு உள்ளூரைச் சேர்ந்த அவ்வாசிரியருக்கு எதிராக முறைப்பாடு எதனையும் உடனே பொலிசில் பதியாமல்
மெளனமாகவே உள்ளனர்.
இன்னுமொரு சந்தர்ப்பத்தில், முகாமில் வீடியோ நிலையம் நடத்திவரும் இடம் பெயர்ந்தவரான ஒருவர் அந்த முகாமில் வசிக்கும் சிறுமியொருத்தி மீது பாலியல் பலாத்காரம் புரிந்தபோது கையும் களவுமாக பிடிக்கப்பட்டார். அங்கு வசிப்பவர்கள். இந்நபர் இவ்வாறான இழிசெயலைச் சிலகாலமாக பல பெண்களிடம் புரிந்து வந்ததை அறிந்திருந்த போதிலும், போதிய சாட்சியமில்லாததால் அவருக்கெதிராக முன்னரே எதனையும் செய்ய முடியாமலிருந்தனர். பாதிப்புக்கு ஆளாகுபவர்களும் அவர்களின் குடும்பங்களும் வடுப்படும் நிலைமையிலிருப்பதனால் இவ்வாறன சம்பவங்கள் உரிய அதிகாரிகளின்கவனத்துக்கு கொண்டு வாப்படுவதில்லை.
இங்கதிகளின் செயல்களினால் உள்ளூர் சிங்கள முஸ்லிம் மக்கள் காட்டிய நல்லெண்ணமும் ஆதரவும் குறைந்துள்ளதுடன் சமூக ஒழுக்க விழுமியங்களும் குன்றியுள்ளதாக உள்ளூர் மக்கள் கருதுகின்றனர்.
இடம் பெயர்ந்து வந்தவர்களின் தொகை பெருகியுள்ளதன் காரணமாக, உள்ளுர் மக்களிடம் இலைமறை காயாக நிலவிய சீதன வழக்கம், இப்பொழுது தமது வாழ்க்கை முறையில் பெரியளவில் குறுக்கிட்டிருப்பதாக உள்ளுரார் அபிப்பிராயப்படுகின்றனர்.
இடம் பெயர்ந்து வந்த சில குடும்பங்களுக்கிடையிலும் உள்ளுரைச் சேர்ந்த சில குடும்பங்களுக்கினடயேயும், நடந்த திருபானங்கள், சில உள்ளூராரிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

Page 27
மனதை நெகிழ வை:
மலையக நாவல்கள் ஒவ்வொன்றிலும் பெண்களின் அவஸ் வாழ்வு தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. வேறு எந்த ஒரு சமூகத்திலும் பெண்கள் அனுபவிக்காத துன்பங்களை இவர்கள் அனுபவித்துள்ளார்கள்.
மலையகத்தில் கோகிலம் சுப்பையாவின் தூரத்துப் பச்சையை அடுத்து நந்தியின் மலைக் கொழுந்து நாவல் வெளிவந்தது. இந்த நாவல் முதலில் 'தினகரன்' பத்திரிகையில் தொடர் கதையாக வெளிவந்து பின்னர் 1964-ல் நூலுருவில் வெளிவந்தது. பின்னர் தமிழகத்தில் நர்மதா வெளியீடாக 1982ல் மறுபதிப்பு பெற்றது.
இந்த நாவலில் நாயகனான பாலையப்பன் "இது என் கதை. இது என்னுடன் கூடிவாழும் வள்ளி, வீராயி, காத்தான், ரங்கசாமி மாா, சிதம்பரக்கங்காணி, மீனாட்சிப் பாட்டி முதவிய பல தோட்டத் தொழிலாளர்களான எங்களின் கதை. இது எனது இலங்கை மனAU நாட்டுக் கதை. எனது மூதாதையரின் எலும்புரத்திலே வேர்விட்டுச் செழித்து வளர்ந்தது. செல்வப் பசுங் கொழுந்துகளைத் தளிர்விடும் தேயிலைச் செடிகள் இதில் பேசுகின்றன. அவைகளை நாம் காதலிக்கின்றோம். எங்கள் அன்னையர் வயிற்றில் நாங்கள் கருவாக இருந்த காலம் தொடக்கம் பூமாதேவியின் வயிற்றில் நாங்கள் உருவாகும் காலம் வரை நபாக்கும், பணி ஆண்ட உடுத்திய தேயிலைச் செடிகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு."என இவ்வாறு பேசுகிறான்.
மலைக் கொழுந்து நாவலில் பெண்கள் எவ்வாறு உழைப்பால் உறிஞ்சப்படுகிறார்கள். செல்வச் செருக்கு கோண்டவர்களால் எப்படி வஞ்சிக்கப்படுகிறார்கள். உழைப்பைத் தவிர வேறு ஒன்றையும் அறியாத வாயில்வா ஜீவன்காாக அவர்களின் வாழ்வை நாவரலாசிரியர் நந்தி நன்றாகப் படம் பிடித்து காட்டுகிறார்.
பிரட்டுக்களத்திலிருந்து நூற்றுக்கணக்கான ஏழைப்பெண் தொழிலாளர்கள் தனியாகவும், சோடிகாாகவும், சிறு கூட்டங்காகவும் மலைகளில் விாைந்து ஏறிக்கொண்டிருக்கின்றனர். சிறிது நேரத்தில் தேயிலைச் செடிகனன் வெட்டுக்கிரிகள் பண்ட ாடுத்து வந்து தாக்குவதுபோல் அவர்கள் செடிகளைச் சூழ்ந்து கொள்கின்றனர். கொழுந்து கிள்ளும் வேலை நடைபெறுகிறது எங்கு பார்த்தாலும் உயிர்த்துடிப்பு 3 Eழப்பின் இயக்கம் இவவாறு நாள்கலை டிகர் 14 செல்கிறார் நந்தி.
 

3. $கும் மலைக்கொழுந்து
இந்த நாவலில் முக்கிய பாத்திரங்கள் இரண்டு பெண்கள் ஒருத்தி வள்ளி, மற்றவள் வீராபி. இவர்கள் இருவருமே இEாணபிரிபாத தோழிகள்.
நாவலின் ஓரிடத்தில் " கபாலிஸ்வரன் ஒரு நிமிடமாவது தாமதிக்கவில்லை. வீராபியின் நெஞ்சில் கைவைத்துத் தள்ளிபாறு அவன் காம்பிராவுக்குள் நுழைந்தான்."
நகர்ப்புறங்களில் யாராவது பெண்களின் நெஞ்சில் கைணிவக்க முடியுமா. இது தான் இன்றைப காலகட்ட தோட்டப்புற சூழ்நிலை, பெண் என்பவளுக்கு பாதுகாப்பே கிடையாது.
நாவலில் இன்னொரு இடத்தில் "கண்டி நாட்டு சுந்தரிகளுக்கு வீராயி அமுகமைப்பில் எந்த விதத்தில் குறைந்தவள் ?
"அவளை டாக்டர் நண்பர்களுக்கு பரிசளிக்க நினைத்தான் மகராஜன். அவன் அந்த தோட்டத்தின் சக்கரவர்த்தியல்லவா?
இப்படி தோட்டத்து பெண்களை மிகவும் மட்டமாக எடைப்போடுகிறார்கள். வீராயி என்ற பெண்மணியின் கற்பை சூறையாடப் பார்க்கிறார்கள். ".
இந்த நா:வில் வரும் வள்ளி என்ற வள்ளியம்மா பாத்திரம் மிகவும் சிறப்பானது தோழிலாளர்களுக்கு உதவுவதில் முன்னின்று செயல்படுகிறது. தோட்டத் தொழிலாளர்களிடையே ஏற்படும் பிளவும், ஒற்றுமை இல்லாத தன்மையும். சுயநலக்காரர்களின் சூழ்ச்சியால் வள்ளி துப்பாக்கி குண்டுக்கு இாைபாகின்றாள்.
நாளில் இன்னொரு பெண் பாத்திரான விராயி தான் காதலில் மலையப்பனை மணக்க முடியாமல் போனதால் வேறு ஒருவனை மணக்க விரும்பாபல் வீட்டை விட்டு ஓடி தற்கொலை செய்து கொள்கிறாள்.
மலையக நாவல்களில் பெண்களின் அவல வாழ்வும், அவலச்சாகம் பதார்த்த பூர்வமான உண்மைகள்ாாகும். அதனைத்தான் வாழ்ந்த நாவலப்பிட்டி பிரதேசத்தைகளமாகக் கொண்டு, தாம் கண்டு கேட்டு நேரடியாக பார்த்த பாத்திரங்களை வைத்து மலைக் கொழுந்து நாப:ள எழுத்தாளரும். டாக்டரு(141 நந்தி வடித்தெடுக்கிறார்
மலைக் கொழுந்து நாவலில் பெண்கள் படும் துயரங்கள் மனதை நெகிழச் செய்கின்றன.
இன்துர்தினரும்

Page 28
'rள்: 'டிச்சிருக்கா
முதலிானில் கேட்கப்படும் எரிச்சலூட்டும் முதற் கேள்வி.
"தெரிய இல்ல."
"என்ன இப்பிடிச் சொல்லு. முடிக்கவில்லை.
"ஆணுடம்பு,
பிடிக்கத்தான் வேணும் பெண்ணுக்கு.
ஆனா எனக்கு தெரிய இல்ல."
”(8lekx63. நான் உடம்ப கேக்க ဖွံ့) ဓါပဲ6ါ” அவசரமாய் மறுத்தான்.
"கலியானத்திற்கு முதல்ல பழகியிருந்தா குணம் தெரிஞ் சிருக்கும்.
பேசிச் செய்தது,
இனித்தானே தெரியோணும்.” நிதானமாய் வரிவரியாய் வெளிப்படுத்தினாள்.
"ஏன் ஒருத்தரிட்டபும் விசாரிக்க இல்லையே?"
"விசாரிச்ச ஈப்டோஸ் சனம் சொல்லுறதுதான் உங்கட குணமாயிடுமா?" கேள்வியாய் பார்த்தான்.
"சரி. சரி. வேணாம்' அவன் முகத்தை இரு கரங்களாலும் பற்றியபடி "எனக்கு 2 ت كأسLEL- لكي الإنكي
பிடிச்சிருக்கு, அறிவு பிடிச்சிருக்கு போதும்'
தழ்களால் நெற்றியை ஒற்றினான்.
கண்மூடி ஏற்றுக் கொண்டாள். "கேக்கிறன் எண்டு குறை நினைக்கக்கூடாது. நீர்
முதல்ல யாரையும் "sosi ; siig:T இல்லையே?”
முகத்தை விடுவித்துக் கொண்டவள் சிரித்தபடி
இல்ல. இனித்தான்."
 

thiյԿ?
0 தேவகெளரி
"என்ன? இனித்தானோ?"
"ஒ. உங்கள்."
'அபுடி கள்ளி.”
இழுத்து அவளைத் தன்னுடன் சேர்த்துக்
கொண்டான்.
முதற் தடவையாக ஒரு ஆணின் அரவணைப்புசுகம் இனிக்கத்தான் செய்தது. கிறங்க வைத்தது.
விழிமுடி அனுபவித்தாள்.
மெல்ல மெல்ல அவனின் 8 - L ၏ါ၊ ஆக்கிரமிப்புக்குள் அவள்,
தன்னை மறந்தான்; தன்நாமம் கெட்டாள் தலைவன்
தாழ்பட்டாள்.
என்ன இது. இந்த நேரம். இந்தப் பாடல்
வரிகள்.
அவன் எழுந்தான் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல் குளியலறை கூட இனிய சுகந்தம் வீசியது.
குளியலறை சென்று திரும்பியவன் தண்ணிக் குடித்து, அவளருகில் படுத்தான். கையிர்ண்டையும்
தலைக்குக் கீழ் வைத்துக் கொண்டு
ப்ஸ்லாந்திருந்தான்.
என்னப்பா . . . மெதுவாய் 学fさtatme。 கிசுகிசுத்தாள்.
அவள் பக்கம் திரும்பியவன், "ஒண்டுமில்ல . . . மீண்டும் முன்னைய ஆக்கிரமிப்பு. எந்தவித அரவணைப்பும் இல்லாத ஆக்கிரமிப்பு. அபுவளுக்கு எரிச்சலை ஊட்டியது.

Page 29
மீண்டும் எழுந்தான்.
குளியலறை புகுந்தான்.
திரும்பி வந்து மங்கிய ஒளியை பேரெளியால் மறைத்து றுரம் லைற்றைப் போட்டான்.
அவள் அவசர அவசரமாக ஆடைகளைச் சரியாக்கினாள்.
கட்டிலருகில் வந்தவன். " ஏய். உனக்கு என்ன நடந்தது அவனது குரல் மாற்றத்தால் சற்றுக் கலவரமானாள் ; தடுமாறினாள். என்ன ஏதெனத் தெரியாது விழித்தாள்.
" நான் நினைச்சன் . . . என்னடா, இவ்வளவு படிச்சவள், சீதனத்தோட ஒரு வெளிநாட்டு மாப்பிளைக்கு ஒம்பட்டிருக்கிறாளே எண்டு.
சொல்லு. 6Tଦୈ160;} E一步生色j...... யாழ்ப்பாணத்தில் கனக்க பொம்பிளையன் சீரழிக்கப்பட்டதென்டு கேள்விப்பட்டனான் சொல்லு. . அப்பிடி ஏதும். ?
அவளது சர்வாங்கமும் படபடத்து துடித்து, அடங்கி, புடைத்துக் கொண்டன. எல்லாம் ஒரு நொடிப் பொழுதில்.
என்ன கத கதைக்கிறீங்க . . . " நீ. பத்தினி வேஷம் போடாத உனக்கு பிளிடிங் இல்ல. ஏன் ?
கட்டிலில் இருந்து பாய்ந்து எழுந்தாள். தன்இரு கரங்களையும் மூடி இறுக்கினாள்
"யூ . . பிளிடி ராஸ்கல். என்ன ரெண்டு தரமும் ரெஸ்ரா செய்தனி ராஸ்கல்’ ஆக்ரோஷத்துடன் அழுகையும் கலந்தது.
கட்டிலில் இருந்து முகம் பொத்தி அழுதாள். முதல் தடவையாக மனமுடைந்து அழுதாள். " நான் படிக்காத னான் தான். ஆனா என்ன ஏமாத்த ஏலா வெளி நாட்டில் இருக்கிற எங்கட பொம்பிளையள் வேண்டாம் எண்டுதான் இங்க வந்து பொம்பிள எடுத்தனான். புதுசா வேணும்!
எனக்கு புதுசா வேணும் பழ செல்லாம் வேணாம்.”
" பிளிஸ் . . . தயவு செய்து நிப்பாட்டுங்கோ
y
கதைய. . .
ह९
ஏன் . . . ஏன்.. நான் ஏன் நிப்பாட்ட வேணும். . .?

3.
நீ உண்மையைச் சொல்லு. . .
"என்ன உண்மை." "உனக்கு என்ன நடந்தது?" "ஒண்டுமில்ல. ஒண்டுமே இல்ல” பரிதாபமாய் கூறினாள்.
"பொய்” இறுகினாள் "இல்ல உண்மை." "அப்ப ஏன் உனக்கு இரத்தம் வர இல்ல?” "எனக்குத் தெரியா 'உன்ர உடம்பப் பத்தி உனக்கு தெரியாட்டி எவனிட்ட கேக்கிறது."
பல்லைக்கடித்து கண்களை மூடிக் கொண்டாள். எதற்கும் பொறுமையாய் இரு; எல்லாத்தையும் சகிச்சுக் கொள்; அதுதானம்மா பொம்பிளைக்கு வேணும். சரிக்குச் சமனா நிண்டு எதற்கும் வாதாடத. அவருக்கு கோபம் வந்தா நீ மெளனமாய் இரு.
கலியாணத்திற்கு முதல், அம்மா அடிக்கடி சொல்லித் சொல்லித் தந்தாள்.
'அம்மா. பொறுமையா இருக்கச் சொல்லுறியா. இனியம் பொறுமையா இருக்கச் சொல்லுறியா. பொறுமை காத்து, 'இல்லை; இல்லை" எண்டு காலைப் பிடிச்சு அழச் சொல்லுறியா. இன்னுமொரு சீதையா கற்பை நிலை நாட்டச் சொல்லுறியா. என்னால . . . முடியாதம்மா. முடியாது.”
இத. நான் முறிச்சா உனக்கும் அப்பாவுக்கும் கெளரவப் பிரச்சினை. முறிக்காட்டி எனக்கு மானப் பிரச்சினை, தன்மானப் பிரச்சினை. இந்த அசிங்கத்த ஆயிரம் காலமா (திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள்) தாங்கச் சொல்லுறியா. முடியாது. என்னால முடியாது மன்னிச்சிரு அம்மா.
எழுந்தாள் குளியலறை புகுந்து நன்றாக குளிர் நீரை வாரி முகத்தில் அடித்தாள்
றுரீமுக்குள் வந்து கண்ணாடியில் முகம் பார்த்து துடைத்தாள். கட்டிலில் சரிந்து படுத்திருந்து இவளையே பார்த்துக் கொண்டிருந்தவனையும் கண்ணாடியில் அவதானித்தாள்.
நேரம் 10.30. லைற் றை அனைத்து விட்டு அருகில் வந்து

Page 30
படுத்துக் கொண்டாள்.
"என்ன நான் பாட்டுக்கு கதைக்கிறன் நீ என்னென்னமோ எல்லாம் செய்யிறா"
"இதப்பற்றி ஆறுதலா கதைப்பம் இப்பு எனக்கு நித்திரை வருது."
s: sisted as it சொல்லுமட்டும் உன்னநான்தொடமாட்டன். உனக்கு இதுதான் தண்டனை."
"நீ எனக்குச் செய்யிற உதவி இது மனதுள் மகிழ்ந்தாள்.
நித்திரைபோல் கண்களை மூடி மறுபுறம் திரும்பி ஒருக்களித்துப்படுத்தாள்.
எவ்வளவு நேரம் அப்படியே படுத்தாளோ தெரியாது.
இருட்டிலும் நேரம் காட்டும் கடிகாரத்தை மங்கிய ஒளியில் கவனித்தாள்.
M.CN) LIFEf
எழுந்தான்.
5 551 61: 7 {g
பார்த்துத் E; &ն 5Ա பிழுத்தாள். உடுப்பு மாத்தினாள்.
تلك E في بييتي
றக்கத்தில் அவன்.
வனுக்கு இப்பிடி
த் தி  ைர
초
வந்திருக்கா! மனது
|Eu $ ଶବ୍ଦୀ ଶ୪t [[..| |- cff;
C
-
= - ,
EST உடுப்பு =esneiT g! (Bʼl5#: &#:]'g2ST rTöñt,
வெளி யில் செல் ப்ெ
5 | T | 7
போறாய்." பாய்ந்து
Ele பிடித்து
ஒரு உதறலில்
鲤上 ܩ ܩ
 

கொண்டான்.
"இந்தக் கல்யாணம் சரிவராது விட்டிடுங்கோ' இத்தனை ஆத்திரத்திலும் தன் மொழி காத்தாள்
“என்ன விசர்க்கதை கதைக்கிறாய் இதால உன்ர வாழ்க்க தான் பாழாய் போகும்."
"பரவாயில்ல' எவ்வளவுதான் நிதானப்பட்டாலும் உடைத்துக் கொண்டு அழுகை வந்தது.
"இப்பு என்ன. உனக்கு பிளிடிங் இல்ல அதுதான் ஏன் எண்டு கேட்டன்."
"நோ. ஷட்அப், போ. போய் ரெஸ்ற்பண்ணி பாத்து ஆருக்கு பினிடிங் இருக்கோ அவள் கட்டு.” மொழி காக்க முடியாது கொட்டினான்.
பல்களைக் கடித்து தணிந்தாள். "கதைச்சு வேலையில்ல. நான் போறன், நீ கட்டின தாலியக்கூட என்னால கழட்டித் தர ஏலும்,
ஆனா அதுவும் என்ர சீதனக் காசில் செய்தது.
அதனால தரமாட்டன்”

Page 31
அவன் வாயடைத்து கல்லானான். இப்படி நடக்குமென்று அவன் நினைக்கவே இல்லை. அவள் கெஞ்சி கூத்தாடி தன்னிடம் பணிவாள் என்றுதான் எண்ணியிருந்தான், இப்போ அவள்
போய்விட்டாள்.
அதிகாலை மைம்மலுக்குள் வீட்டின் கோலிங் பெல்லை அமத்தினாள். கதவைத் திறந்த அப்பா விக்கித்து நின்றார். அம்மாவும் தான்.
அவளை வீட்டுக்குள் இழுத்து எடுத்து கதவைச் சாத்தினர். எந்த இக்கட்டிலும் சமூகத்தை நோக்கிய தற்காப்புச் செயல் அது.
ee
என்ன. என்ன பிள்ள” ஒருமித்த குரலில்
இருவரும் இறைஞ்சினர்.
"அப்பா. அந்தாளுக்கு. அந்தாளுக்கு வருத்தம் அப்பா. மனம் அறிந்து பொய்
சொல்லி அழுதாள்.
"எங்கள ஏமாத்திற்றினம் அப்பா. அப்பா ஒடி ஒடி சாதகப் பொருத்தம் பாத்தீங்க மெடிக்கல் றிப்போட்ட பாக்க இல்லையே. வெளிநாட்டில இருந்து வந்திருக்கிறார். என்னென்ன பழக்கம் இருந்திருக்கும். அங்க”
தாயின் நெஞ்சின் மீது சாய்ந்து குலுங்கி குலுங்கி அழுதாள்
“என்ன பிள்ளை சொல்லுறாய்.” புரிந்ததை விளங்க அப்பா கேள்வி தொடுத்தார்.
தன் அறிவுக்கு எட்டிய வரை காம நோயின் அறிகுறிகளை மனதில் கொண்டு அவனின் அந்தரங்க உறுப்பில் வருத்தம் இருந்ததாகச் சொல்லி முடித்தாள்.
தாய் தந்தையர் கொதித்தனர். "இனி இவங்களின்ர சாதகத்த பாக்கிறதில வேல இல்ல மெடிக்கல் றிப்போட் தான் கேக்கவேணும். என்னென்ன வருத்தங்களோட வாறாங்களோ ஆருக்குத் தெரியும்” அப்பா பொருமினார்.

அவளை ஆசுவாசப்படுத்தி தம்பிள்ளை செய்தது சரி என அமைதிப்பட்டனர். "கெதியா விவாகரத்துக்கு நடவடிக்கை எடுத்து சீதனக்காச திருப்பி எடுக்க வேணும்” என அப்பா
அங்கலாய்த்தார்.
சில நாள்களின் பின் “வெளிநாட்டில் இருக்கேக்க அதுகள் அப்பிடியும் இப்பிடியும் தானாம். வாலிப வயசில அங்கபோய் ஒருத்தரின்ர கட்டுப்பாடும் இல்லாம வேலை வேலை எண்டு உழைச்சதுகள் தங்கட உடம்பு பசியை தீர்த்துத்தானே இருக்குங்கள். வெளிநாட்டில் இதெல்லாம் சர்வசாதாரணம். ஆனாஅவங்கள் பாதுகாப்போட நடந்து கொள்ளுவாங்கள்.
எங்கிடதுகளுக்கு என்ன தெரியப்போகுது. வீணா வருத்தங்கள வேண்டிக் கொண்டு வருகுதுகள்.”
'ஓம் இவன் பெடியனும் அப்பிடி இப்பிடித்தானாம். என்ர மகன் முந்தி ஒருக்கா எழுதியிருந்தவன்.”
“நல்ல காலம். இவள் பெட்டை படிச்சவள் எண்டபடியா வருத்தத்த கண்டு பிடிச்சிற்றாள். எங்கட தரவளி எண்டா சீரழிஞ்சு போக வேண்டியதுதான்.”
இப்படிப் பலரும் தெரிந்ததை வந்து இவள் வீட்டில் கதைத்துக் கொண்டனர்.
தனக்கு 'பிளிடிங் இல்லாததற்கு உடம்பில் ஏதாவது குறைபாடு இருக்கா என்று பார்க்க எண்ணிய வள்தன்டாக்டர் நண்பியிடம்
சென்றாள். தன் கதை கூறினாள். ஆயிரத்தில்

Page 32
ஒருவருக்கு பிறப்பிலேயே கன்னிப்படை இருப்பதில்லை என அவள் படித்திருக்கிறாள். அப்படியும் இருக்கலாம் என எண்ணியவள்.
"ஏனடி அப்பிடி..?” 'சிலருக்கு பிறப்பிலேயே இருக்கிறதில் ல. இன்னும் சிலருக்கு பலத்த அதிர்வுகளால் உடைந்துபோக வாய்ப்பிருக்கு
சிலருக்கு வலை போன்ற அமைப்பில் இருப்பதால் 'பிளிடிங் இருக்காது.
"இத செக் பண்ணி பாக்கலாம் தானே.”
ee לו
ஒ. P KK | "எனக்கு ஒருக்காபாரன்.”
இருவரும் அறைக்குள் சென்றனர்.செக்பண்ணினாள். அதிசயித்தாள்.
y
"சரிவா.
ஏன் பிளிடிங் வரயில் ல. ஆராய்ந்தாள்.தன்சிந்தனைக்குள்ஆராய்ந்தாள்.
“எழும்பிநட. நான் வோஷ் பண்ணிற்று வாறன்.” அவனை நினக்கநினக்க அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. - இவங்களெல்லாம் என்ன நினச்சுச் கொண்டு கட்டிலுக்குப் போறாங்கள் ராஸ்கல்கள் எண்ணிக் கொண்டே கையை துடைத்துக் கொண்டு தோழியிடம் வந்தவளை,
“என்ன. சொல்லன்.” "ஒண்டுமில்ல. எல்லாம் நல்லா இருக்கு. அவசரம்தான். உன்ன ரெஸ்ற் பண்ற அவசரத்தில அவன் சரியா செய்ய யில் ல. அவனுக்க கவனமெல்லாம் உன்ர கன்னித்தன்மை களங்கப்படாம இருக்கா இல்லையா எண்டதிலதான் இருந்திருக்கு. அதனால அவன் சரியா செய்ய யில் ல. அந்த படையில அவன் உறுப்பு படாததில் அது உடைய இல்ல. உடைஞ்சாதானே பிளிடிங் இருக்கும்.”
டாக்டர் நண்பி சொல்ல சொல்ல இவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
"பிளடி ராஸ்கல்” என்றாள் பல்லைக்கடித்தபடி டாக்டர் நிதானப்படுத்தினாள். கண்ணை மூடி நிதானப்பட்டாள். கண் திறந்து சிரித்தாள். 'ஏய். இப்ப எனக்கு கற்பு இருக்கா இல்லையா?”

O கவிதை
b)LI
LI)sul
ஒரு பாடம்
ஸ்வப்னா
இது வரை கற்பின் மேன்மை பற்றிக் கற்றோம்; இனிக்
கற்புக்கரசியரிடம் சிறிது கேட்போம்:
சூரியனை எழாதே என்று மறித்தவளே சூரியன் எழாததால் உயிர் தப்பியவர் யார்? யமனோடு போராடி உயிரை மீட்டவளே மீட்டெடுத்த உயிர் எவருடையது? நீதி தவறிய மாநகரைச் சுட்டவளே அறுந்து போன முலை யாருடையது? கணவனைப் பிரியாமற் காட்டுக்குப் போனவளே தீக்குளித்த பின்னாலும் சந்தேகம் தீர்ந்ததா? வாளியை அந்தரத்தில் விட்டு அவசரமாய் ஓடியவளே வாளியில் இருந்த நீர் யாருடைய தேவைக்கு?
சோரம் போன கணவனைத் தாசி மனைக்குச் சுமந்து போய்க் கற்பின் மகிமையைப் பறை சாற்றும் மாதரே உங்கள் கற்பால் உங்களுக்கே பயனில்லாத போது எங்களுக்கு எதற்கு? உடன்கட்டை ஏற எவனாவது ஆண்பிள்ளை ஆயத்தமா என்று கேளுங்கள் - அவனது கற்பைப் பரீட்சிப்போம்
(நன்றி. தாயகம்)

Page 33
hisTt
புதிய வார்ப்புகள் (சிறுகதைத் தொகுதி)
ஆசிரியர்: பத்மா சோமகாந்தன் வெளியீடு: குமரன் பப்ளிஷர்ஸ்
வடபழனி, சென்னை.
பெண்ணியம் முற்போக்கான
சார்ந்த கருத்துக்களில் பத்மாவுக்குள்ள ஆழ்ந்த பற்றை
இத்தொகுதியிலுள்ள பலகதைகளிலிருந்து காணலாம். முதற்கதையான சக்தியில் சகல தகுதிகளும் சிறப்புகளும் அனுபவமும் பெற்ற ஆசிரியை, அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டியவர் பெண்’ என்ற காரணத்தால் ஒதுக்கப்படுகிறார். வீட்டு வேலைக்காரியாகச் செல்லும் பெருந்தோட்டம் சார்ந்த பெண் உயர்வர்க்கத்தவரால் தண்டிக்கப்படுகிறாள். உயரப் பறந்தாலும் கதையில் கனடாவில் குடியேறிய பெண்ணே கணவனின் சீதனக் கொடுமையால் தன் உரிமைச் சொத்துகளைவிற்க இலங்கைக்குப் பறந்து வரநேரிடுகிறது. அகதி முகாம்களில் வாழநேரும் போதும் ஆண்களிலும் பார்க்க பெண்களே துன்புறுகின்றனர். மனிதச் சருகுகள் கதையில் தன் மகள் வயிற்று வலியால் துன்புறுவதாக அவதிப்படும், தந்தைபடும் மனத்துன்பமும் சித்தரிக்கப்படுகிறது. உண்மையில் அப்பெண் அகதிமுகாமில் பெரிய பிள்ளையாகி, ஊரிலே கிடைக்கும் வசதிகளின்றி இன்னல் படுவது படிப்பவன்ர நெகிழவைக்கிறது.
இக்கதைகள் பெண்களின் நிலையை, துன்பங்களை, பாகுபாடுகளைக் கூறி மனித உரிமை, மானிட நேயம், மனிதாபிமானத்தை மறைமுகமாகத் தட்டிக் கேட்பவை.
செருப்பு என்ற கதை, மக்களுக்குச் சேவை செய்ய வேண்டிய அதிகாரத்துவம் பெண்ணைப் போகப் பொருளாக எண்ணி தொல்லைப் படுத்திப் பயன்படுத்த முயலும் போது அந்த ஈனத்தை நோக்கிச் சீற்றத்துடன் செருப்பைக் கழற்றும் பெண்ணை முதன்மைப் படுத்துகிறது. வெளிநாட்டிலிருந்து அண்ணன் அவளுக்கென அனுப்பிய சீதனப்பணத்தை பெண் விடுதலைக்காகப் பயன்படுத்தமுன்வரும் புரட்சிப்
பெண்ணைக் காட்டு சிறகுகள் என்னும் கை உயர்த்திப் பார்க்கிறது இலட்சிய பெண்களுக்கு இழை தரும் கோபமும் காண எழுத்துக்களின் தனி
நோக்க
கற்பனைகளில் அத்து L
செட்டை நார் (கவிதை
ஆசிரியர்: ரவி
வெளியீடு: விடி D_liti
கோல்
1983 வன்முை
தமிழர்கள் தமது தாயக பெயர்ந்து, மேலை நா உடலால் புலம் பெ உள்ளத்தால் புலம் பெயர் சுற்றத்தினர், இளமை எங்கி ஏங்கி அங்கே அ வாடுகின்றனர். 'உ உடலுக்கும் 蚤 வாழ்க்கையைத்தான் வேண்டியிருக்கிறது. செல்வதைப் போல ெ செல்ல வேண்டிய அெ வேண்டியது ஒரு கலைக்கப்படாத தூ எங்குகின்றனர்.
சுவிஸில் வாழ் (பாலமோகன்யின் கவிதைகள், மேலை பெயர்ந்துள்ள ஈழத்தமிழ் அனுபவிக்கும் இன்ன உருக்கத்துடன் வெளிப்
 
 

லகம்
கிறது. மெல்ல விரியும் த ஒரு தீக் கோழி தலை கதையில் மகளிரின் மும் நடைமுறையில் க்கப்படும் கொடுமைகள் fப்படுகிறது. பத்மாவின் ச் சிறப்பு அவர் வெறும் மீறி நுழையாததுவே.
-செ.க.
கழற்றிய வகள்
த் தொகுதி)
பல் பதிப்பகம் லிப்பாளையம்,
(G),
றயைத் தொடர்ந்து அநேக மான ஈழத்திலிருந்து புலம் டுகளில் வாழுகின்றனர்: யர்ந்துள்ள போதிலும் முடியாமல், உறவினர்கள், க்கால நினைவுகள் என வர்கள் மனத்துன்பத்தில் டல் உயிருக்கும் உயிர் O) DJ T if: (U.િ 601 அவர்கள் வாழ்ந்து தீர சவம் ஒன்றைக் காவிச் சாந்த உடலையே சுமந்து பலம்! துயரம்! அமைதியான இரவு. க்கம்' என இவர்கள்
எனககு
ந்து கொண்டிருக்கும் ஈவி இத்தொகுதியிலுள்ள நாடுகளுக்குப் புலம் இளம் தலைமுறை அங்கு ல்க:ையும், தவிப்பையும் படுத்துகின்றன.
y
நகரமும் சொர்க்கமும்
(நாவல்)
ஆசிரியர்: செ. கணேசலிங்கன் வெளியீடு: குமரன் பப்ளிஷர்ஸ்
வடபழனி, சென்னை,
இலாப நோக்கத்துக்காக இயற்கை வளங்கள் அத்துமீறி அழிக்கப்படுகின்றன. முதலாளித்துவ அரசுகள், அவர்கள் வளர்க்கும் சர்வ தேசக் கம்பனிகளின் மூலதனக் குவியலினால், தொழில் நுட்பத்தையும எந்திரங்களை இயக்கும் புதிய சக்திகளையும் பெருக்கி வலுப் பெற்று வருகின்றன. இதன் விளைவாகப் பண்ட உற்பத்தி பெருகியபோதிலும், அது உலகச் சனத்தொகையில் கால் பங்கு தொகையினரிடை மட்டும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. யந்திர உற்பத்தி பெருகி இயற்கை வளங்கள் பலமடங்கு அழிக்கப்படுகிறது. அதனால் ஏற்படும் கழிவுகள் பயங்கர விளைவை தோற்றுவிக்கின்றன. நிலம் நீர்காற்று மாசடைந்து, பூமியும் வானமும் பாதிக்கப்படுகின்றன. வாட்சி வெள்ளம் போன்ற இயற்கை அழிவுகளால் கிராமங்கள் பாதிக்கப்பட்டு, விவசாயிகள், கூலிகளாக நகர்களை நோக்கிச் சென்று குடியேறி, உதிரி உழைப்பாளிகளாகி சேரிகளில் வாழநேரிடுகிறது. நிரந்தர வேலையின்மை. உயிர்வாழ்வதற்காக இவர்களை திருட்டு, விபசாரம், வழிப்பறி, கள்ளச்சாராயம்போன்ற சட்ட விரோதத் தொழில்களிலீடுபடச்செய்கிறது. அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாததால் சேரிகளில் நோய்கள் பரவுகின்றன. எதிர்காலச் சந்ததியே பாதிப்புறுகிறது. சேரிகளில் பெண்கள் ஆணாதிக்கத்தின் அடிமைகளாக, உழைப்புச் கரண்டல், சுரண்டல்,
கர்ப்பச் LJT 6ůl tu 6io
பலாத்காரத்துக்கு உள்ளாகின்றனர்.
சுற்றுச் சூழல் மாசடைவதைச் சிறப்பாகச் சித்தரித்து, சமூகப்பணியே முதன்மையானது என வலியுறுத்தும் இந்நாவல், புகழ் பெற்ற நாவலாசிரியர் செ. கணேசலிங்கனின் புதிய இலக்கிய அறுவடையாகும்.
- ழரீகாந்த்

Page 34
巫叫! " ( ) 후S2 # sā,) { s + 2. T'JË 而娜娜。『國岡門國 在一ā所 | _1.E·{|^而制驰事 ^----
〜
டப்படம் எஸ்.டி. சாமி
அட்ை
 

ன் குரல்
*
RAL - 14 th
விலை:
直 றுவனியு 20.00
* r , *
ISBN 1391 - 0.914
பெண்ணின் குரல்
பெண்களின் இன்றைய நிலமையை எடுத்து விளக்கும் பெண்களின் பிரச்சினைகளைப் பற்றி பகுத்தறிவுக் கோ படபாடடுடன் போராடும் பெண்களால் பெண்களுக், 4 மும்மொழிகளிலும் பிரசுரிக்கப்படும் இலங்கைப்
உரிமையான ஒரு சஞ்சிகை
பெண்ணின் குரல் அமைப்பு
பெண்ணின் குரல் (தமிழ்
කාන්තා හඬ
Voice of Women
(வொயிஸ் ஒவ்வியின்)
ஆசிய சஞ்சிகைகளை
வெளியிடுகின்றது.
விபரங்களுக்கு
பெண்ணின் குரல் 17 ஏபார்க் அவனியு கொழும்பு-5 இலங்கை
கனணி தட்டச்சமைப்பு
: UII nie arts -330)||95