கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைமுகம் 1997.07-12

Page 1
·les est jisi sırı – Nors= fiss√© ing stos@ toisto, sipaeristorio.
 


Page 2
Sk அட்ை
 

ஜெனோவா
இசை - ஆடல்,
பாடல்
ம் படங்கள் - சாகாமனிதம்
ாக் கட்டுரை - நாராய். நாராய்.!
ழகம் - டொமினிக் ஜீவா
>டப் படம்: ஒவியர் இராசையா

Page 3
A---------------S
கலைமுகம் KALAIMUGAM
காலாண்டு இதழ்
1997
9bt ~ புரட்டாதி ஐப்பசி ~ மார்கழி
მრ606) ~ 8 முகம் ~ 3 ~ 4
தொடர்புகளுக்கு
Centre For Performing Arts Apartment 5/6, 19 Milagiriya Avenue, Bambalatiya, Colombo - 04. Sri Lanka. Tel: 597245
திருமறைக்கலாமன்றம் 238 பிரதான வீதி யாழ்ப்பாணம் இலங்கை
محے - - - - - - - - - - - - - - -

வெளி உலகில் மனித வினைகளாய் நிகழ்பவை,
உள்ளம்என்கின்ற உலகத்தில் நடப்பவற்றின் எதிரொலி உலகின் கண்ணாடி உள்ளம்; உலகின் அளவுகோல் உள்ளம்; உலகின் உயிர்த்துடிப்பு உள்ளம்; உலகின் மருந்தும் உள்ளமே!
உலகில் நடைபெறும் சில தீய நிகழ்வுகளையும் தவறுகளையும் ஒழித்துக் கட்ட, அவை உதயமாகும் உள்ளங்களை முதலில் அணுகவேண்டும்;அவைகளைத் தொட்டுக் குணமாக்கவேண்டும். அறிவினால், அன்பினால், இறையருளினால் ம்க்கள் உள்ளங்களைத் தொட்டு, மாற்றி, நலமாக்கலாம். அதேபோல் கலையினாலும் தீமையை வெல்லமுடியும்.
நன்மைதீமை என்பவை நடமாடும், அவை சமரிடும், அவை வெற்றிதோல்வியைச் சந்திக்கும் இவ்வுலகில், கலை உள்ளங்கள் ஏனோதானோ என்று இருந்துவிட முடியாது. தீமைகளைச் சுட்டிக்காட்டுவது கலை ஞர்களி டம் காணப்படும் பண்புதானே?
வேறொரு பக்கம், அப்பட்டமான தீமைகளை முதலாக சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இனங்காணுவது கடினமாக இருக்கும்போது, குழப்பமான பின்னணியில், அதுவும் செய்தித்தொடர்பு ஊடகங்களால் திரிபு படுத்தப் பெற்ற நிகழ்வுகளின் குணம் குறைகளைப் பக்கச் சார்பின்றி எடைபோடுவது சுலபம் அன்று. இருந்தும், உயிரைப் பறித்து, உடைமைகளைக் கரியாக்கி, வாழ்வையே பாழாக்கும் தீய நிகழ்வுகளுக்கு எதிராகவும், மக்களின் பொதுநலனுக்கும் சமூக அமைதிக்கும்சார்பாகவும்குரல் கொடுப்பது மனச்சான்று படைத்த நல்ல உள்ளங்களின் கடமையாகின்றது. எடுத்துக்காட்டாக, வியற்னாம் போரை எதிர்த்துப் பன்னாட்டு அறிஞர் பலர் குரல் எழுப்பவில்லையா? -
நம் நடுவிலும், கலை உள்ளங்கள் சமூக உணர்வுடன் ஒன்றிணைந்து செயற்படின், தீமையின் முனைப்புக்கள் பலவற்றை முறியடித்து நன்மையின் கையோங்க வழிவகுக்கலாம்.

Page 4
இலக்கியங்களில் தோன்றுவது தவி
ம்பியன் செல்வன்
ညှို႕,{lစ္၇န္f பெயர். இந்த மண்ணின் 35 வருடகால இல்க்கிய் உலகிற்கு நன்றாகப் பழக்கப்பட்ட பெயர். ேைல்ாசிபதி “சதாசிவம், கீனகசெந்தில் நாதன், 676Yს. பெர்ன்னுத்துன்ர, தள்ைய்சிங்கம் போன்ற இலக்கிய வாதிகளுட்னும் பeைப்பாளிகளுடனும்; மிக நெருங்கி *உறங்ஐடிய ஒரு கதாசிரியர், ' நாடகாசிரியர், இலுக்கியுவரத்தி, சிறந்த பேச்சாளர், ஒரு நல்ல மனிதர், அவரை இன்னொரு எழுத்தாளராகிய யோசப்பாலா அவர்கள் "கலைமுகம்" சார்பாக
S AeAeSehASTK0KASA SeeSS SKJJiSS SS SS SSSS
ಆಸ್ದಕ್ಕೆ. கதைததார். அதனை நங்களும் படித்துச்
○ リ**ヘ、ヘリ : 、 * . 。 -
# ဂိဓါ#႕႕, இங்கே தந்துள்ளார். ઈી હિ}0; ’ -
辙 岑
சுலபமான கேள்வி போலிருந்தாலும் இதற்கு விடைக் கூறுவது கடினம். கூறினாலும் அது முற்று முழுதாகச் சரியாக இருக்கும் எனவும் கருதக் கூடாது. என்னளவில் குழந்தையாக மண்ணுலகில் விழும்
 
 
 
 
 

அவதார புருஷர்கள் ாக்க முடியாததே.
பொழுதே ஒவ்வொரு உயிரிலும் அழகியல் சார்ந்த கலை உணர்வுகளும் கலந்தே பிறப்பெடுக்கின்றன. அதிசயம் என்ன வென்றால் இக்கலாபூர்வ வியக்தி வ்ாழ்க்கையின் அனுபவங்களால் மழுங்கடிக்கப் படுகின்றனவே அன்றி வளர்வதில்லை. இது கீற்றறிந்தவர்களுக்கு முரண்பாடாகத் தோன்றலாம். உதாரணமாக இராமபிரான் குழந்தையாக இருந்தபோது சந்திரனைக் கையில் எடுக்கத் துடித்த கலையார்வம், பின்னாளில் சீதையின் அழகை இரசித்த காலத்திலும் தோற்றங் காட்டியதில்லை. எதற்காக இந்த நீண்ட பீடிகையென்றால் எந்தவொரு மனிதனிலும் கலைஞன் கலந்திருக்கிறான். அவன் வெளியுலகிற்குத் தோற்றம் காட்டிய தினத்தை ‘கலாபிரவேசம்’ என்பது எங்ங்னம் பொருந்து மெனத் தெரியவில்லை. இயற்கையின் நியதியாக எனது இலக்கியப் பிரவேசம் ஆரம்பித்ததெனலாம். இதற்குச் சில புறக்காரணிகள் துணையாகியிருக்கலாம். எனது பிறப்பிலிருந்தே நான், என் அண்ணன், ஆச்சி என்னும் மூவர் நடாத்திய வாழ்க்கைப் போராட்டங்களும் எனது பாட்டனார் நடாத்திய லிலாவிநோதங்களும், அவர் தம் தொழிலாளர் போராட்டங்களும், இளமையிலேயே பொருள் புரியாது இறை வணக்கப்பாடல்களைப் பாடுவதைப் போலட் பதிந்து வயது முதிர்ந்த காலங்களில் இலக்கிய சிருஷ்டிகளுக்கு ஆதார சுருதியாக அமைந்திருக்கலாம் என எண்ணுகின்றேன். எனது முயற்சிகளுக்கு

Page 5
ஊக்கப்படுத்தியவர்களை விட உள்ளும் புறமும் இருந்து உபத்திரவம் கொடுத்தவர்களே அதிகம். அந்த உபத்திரவங்கள்தாம் “கிரியா ஊக்கியாக” நின்றனவோ என்னவோ?
அமைதியின் இறகுகள் (சிறுகதைக் கோவை), மூன்று முழுநிலவுகள் (நாடகம்), ஈழத்துச் சிறுகதை மணிகள் (விமர்சனம்), நாணலின்கீதை (ஆத்மாவின் /
உள்ளாளியின் தேடல்), நூறுகுறுங் கதைகள்,
நெருப்புமல்லிகை (நாவல்), கானகத்தின் கானம் (நாவல்), விடிய இன்னும் நேரமிருக்கு (ஓரங்க நாடகம்), விடியலைத்தேடும் வெண்புறா (நாவல்), உருவகக்கதைகள் (அச்சில்), இந்திரஜித் (நாடகம், அச் சில்), வாடைக்காற்று - (திரைக்கதை), உரையாடற்பிரதி திரைப்படமாகவும் வந்துள்ளது.
'விவேகி' சஞ்சிகையின் இறுதி நாலைந்து வருடங்கள், அமிர்த கங்கை”யின் பொறுப்பாசிரியராகவும் இருந்திருக்கிறேன். பேராதனைப் பல்கலைக் கழக தமிழ்ச்சங்க வெளியீடான "இளங்கதிர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விப்புல வெளியீடான 'கலைஞானம் -போன்றவற்றிற்கும் ஆசிரியராக இருந்துள்ளேன். இப்பதவிகள் மூலம் நான் பெற்ற பட்டறிவு அறிவியல்ரீதியாகவும், அழகியல்ரீதியாகவும் அநந்தம்.
மிக நல்ல கேள்வி. என்னுடைய எழுத்து ஆரம்பக் கட்டத்திலிருந்த பொழுதே இரசிகமணி கனக செந்திநாதன், க. கைலாசபதி, எஸ். பொன்னுத்துரை,
மு. தளையசிங்கம் போன்றோரினது கவனத்தைப் பெற்றது. இதன் விளைவு எஸ். பொன்னுத்துரை என்னைத் தனது 'ஜாரி யாகக் கருதத் தொடங்கி இருவரும் சேர்ந்தே ஒரு நாவல் படைக்குமளவிற்கு வளர்ந்தது. இரசிகமணியின் பெறாமகன் போன்ற
 
 
 

உறவு அவரது குடும்பத்தாராலேயே சித்தித்தது. மு. தளையசிங்கத்திடமும், என்னிடமும் எதிர்கால எதிர்பார்ப்பு இருப்பதாக நேரடிப்பேச்சில் சொல்லுவது வழக்கம். க. கைலாசபதி அவர்கள் எங்கள் படைப்புகளை மாக்ஸிச நோக்கில் விமர்சித்தார். அவர் எனது ஆசானாக இல்லாதபோதும் (நான் ஒரு புவியியற் பட்டதாரி) அவரது விமர்சனங்கள் எனது படைப்பியலுக்கும், விமர்சனநெறிக்கும் சிறந்த வழி காட்டலாக அமைந்தன. இரசிகமணி எப்படி ஒரு படைப்பை. இரசனைக்கும் தத்துவக் கோட்பாட்டு நெறிக்கும், வாழ்வியலுக்குமிடையே இணக்கம் காண்பது என்பது பற்றி அறியவைத்தார். ஆனால் முன்னர் கூறப்பட்ட நால்வரும் இலக்கியத்தின் நான்கு திசைகளிலும் நின்றவர்கள் - இந்த நால்வரும் எனக்கு நெருங்கியவர்களாக, (கோட்பாட்டின் அடிப் படையிலல்ல) இருந்தமையாலும், இவர்களின் கண்டன விமர்சனங்களுக்கும் ஆளாகி இருந்தமையாலும் எனது இலக்கிய விமர்சனப் பார்வை இன்றைய நிலையை அடைந்தது. ஆனால் இன்று இத்தகைய ஆற்றல் உடையவர்களும், பயன்கருதாத் தன்மையுடையவர்களும் இலர். கல்விசார் அடிப்படையில் இலக்கிய அனுபவ ஒன்றிப்பற்ற பல்வேறுபட்டவர்களின் கருத்துக்களை மனனம் செய்து ஒப்புவிக்கும் விமர்சகர்களே அதிகம். இவர் களை விமர்சகர்கள் என்பதை விட
"வாத்தியார்கள்" என்பதே மிகப் பொருந்தும்.
நிச்சயம் சுட்டிக் காட்ட முடியாது. ஒரு படைப்பைப் படித்து முடித்தபின் ஏற்படும் நிறைவே அந்தப்
படைப்பின் சிறப்பினைக் கூறும். எந்த அம்சம் அந்த
நிறைவை ஏற்படுத்தியது என்று பிரிவு படுத்த முடியாது. பிரிவு படுத்த முடியுமானால் அது சிறந்த படைப்பாக இருக்க முடியாது. முழுமையான நிறைவே படைப்பைச் சிறப்பாக்கும். தற்போது Anti-Short Story, Anti-Novel என இலக்கிய வகைகள் வகைப் படுத்தப்பட்டபோது படைப்பில் இடம் பெற்ற அம்சங்களுடன் இடம் பெறாத அம்சங்களும் அப்படைப்பின் சிறப்பம்சமாகி விடுதலையும் நாம் காண்கிறோமே. ܀-

Page 6
காலத்திற்கு ஏற்ப கருத்துக்களில் மாற்றங்கள் ஏற்படுவதில்லை. கருத்துக்கள் மெருகூட்டப் படுகின்றன. மெருகு பெற்றதனால் மேலும் பல நன்மைகளைக் கொண்டு வருவன. அன்று கொண்ட அன்பு, காதல், வீரம் போன்ற கருத்துக்கள் தாம் இன்றைய மதம், அரசியல் வாழ்வு என்பவற்றுக்கு அடிநாதம். இவற்றை விட்டு முன்னே கூறிய மூன்றும் இன்று இயங்குகின்றனவா? ஆனால் மேன்மையுறும் இக்கருத்துக்களின் முன்னைய தோற்றங்களும் எண்ணக் கருத்துக்களும் வியாபித்துப் பரவுதால் கருத்துக்கள் காலங்களுக்கு ஏற்ப மாறுதலடைவது போலத் தெரிகிறது. பேதைப்பெண் பூப்பெய்துவது போல். மங்கையாக மலர்வது போல் எனலாம். எனினும் சர்வதேச அரசியல் பொருளாதாரச் சமூகக் கருத்துக்கள் மாறுகையில் இங்கும் மாறும்.
வெகுஜனத் தொடர்புச் சாதனங்களுள் கலை ஊடகங்களின் சக்தி மிகப்பெரிது. கற்றவர்களானாலும், கற்காதவர்களானாலும் கலை ஊடகத்தினால் ஒரு கருத்தை வெளியிடும்போது இலகுவில் புரிந்து கொள்ள முடிகிறது. அதுமட்டுமல்ல, தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சியின் காரணமாக வெகுஜனத் தொடர்புச் சாதனங்களே மக்களின் தேவைகளையும், அவற்றின் அளவுகளையும் வழிமுறைகளையும் நிர்ணயிக்கின்றன. உதாரணமாக வானொலி, தொலைக் காட்சி விளம்பரங்களைக் கூறலாம். இவ்வகையான மாற்ற வழிமுறைகளுக்கு உலகமக்கள் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டார்கள். எனவே பழக்கப்பட்ட மனநிலை கொண்ட இவர்களை கலை ஊடகங்கள் மூலம் மாற்றி சமூக விழிப்புணர்வைத் தோற்றுவிக்கலாம்.
நிச்சயமாக இல்லை. மாறாக உந்து சக்தியாக அம்ைவதைத்தான் வரலாறு காட்டுகிறது. நவீன நாவல்கள், நாடகம் என்பன நமக்கு நன்குணர்த்து கின்றனவே. பாரசீக நாடகமரபு, ஐரோப்பிய நாடகமரபு, என்பன தமிழ் நாடகக் கூத்து மரபுகளுக்கு ஆற்றிய தொண்டுகளைத் திருமறைக் கலாமன்றமே நன்குணர்ந் திருக்குமே.
 
 
 

புலம் பெயர்ந்தோர் - தமது புதிய களம், புதிய வாழ்க்கை முறை தாயகத்தோடும், வாழ்வகத்தோடும் ஏற்படுத்த முனையும் பொருத்தப்பாடு என்பவற்றின் பின்னணியிலேயே தமது படைப்புக்களை வெளியிட முனைவர். இவர்களின் படைப்புக்களுக்கும், வாழிடங்களின் தேசிய இலக்கியப்படைப்புகளுக்கு மிடையே காணப்படும் பல்வேறு வேற்றுமைகளுக்கு மிடையே எழப்போகின்ற சுயத்துவமான தனித்துவமே இவர்கள் படைப்புக்களைப் பற்றிப் பேசவைக்கும். அந்தக்காலம் வரும்வரை புலம் பெயர்ந்தோர் இலக்கியம் பற்றிப் பேசுவது பொருத்தமாகப்படும்
என நினைக்கவில்லை.
4.
இன்றைய புதிய இளந்தலைமுறை அனுபவங்களாலும் செயற்பாடுகளாலும் பட்டறிவு மிக்கவர்கள் . இவர்களுக்குத் தொலைபேசி, வானொலி, பத்திரிகை போன்ற வெகுஜனத் தொடர்பு சாதனங்களின் கொடைகள் கிட்டாமலே இருக்கின்றன. இந்த நிலையில் இவர்களிடம் இருளிலிருந்து புதியவொளி பிறப்பதை எதுவும், எந்த விதத்திலும் தடை செய்ய முடியாது என்று பெரிதும் உறுதியாக நம்புகிறேன். மதங்களில் அவதார புருஷர்கள் தோன்றுவது போல் இலக்கியங்களிலும் அவதார புருஷர்கள் தோன்றப்போவது தவிர்க்க முடியாததே.
மேடைக்கலையில் பேச்சுக்கலையும் ஒன்று, நயம் பட உரைத்தலும், மெலிதான நடிப்பும், ஏற்ற இறக்கங்களுடன் கூடிய உச்சரிப்புகளும், சபையோரை உள்வாங்கும் விழிகளும், சந்தர்ப்பத்திற்கேற்ப பேசவந்த விடயத்தின் ஒழுங்குகளை மாற்றலும், புதுப்பித்தலும் மேடைக்கலைக்கு அவசியம். நிச்சயமாக மேடைப்பேச்சு அவைக்காற்றும் கலையே. இந்தப் பின்னணியில் ஈழத்தில் ஒரு சிலரே பெயரிட்டுச் சொல்லக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
நேர்கண்டவர் - யோசப் பாலா

Page 7
நீண்ட காலமாக நான் தேடியலைந்த உலகப் புகழ் பெற்ற "தாய்" என்ற ரஷ்ய நாவலை எதிர்பாராத விதமாக மகனுக்குப் பாடசாலைய் புத்தகங்கள் வாங்கச் சென்ற புத்தகக் கடையில் கண்டதும் வாங்கி விட்டேன்.
பத்தகத்தின் விலை சற்று அதிகமாக இருந்ததால் வாங்கச் சென்ற ஒரு ஜாக்கெட் துணியைக் கைவிட வேண்டியதாயிற்று,
துணியை நாளையோ, மறு நாளோ அல்லது அடுத்த மாதமோ வாங்கிக் கொள்ளலாம். புத்தகக் கடைக்கு வந்த ஐந்தே ஐந்து பத்தகங்களில் எஞ்சியிருப்பது இது ஒன்று தான் என்று கடைக்காரர் சொன்னார். பல வருடங்களாக தேடியலைந்த இந்த நாவலை இன்று தவற விட்டு விட்டால் இனி மேல் எனக்கு இது கிடைக்காமலும் போகலாம். எனவே எதுவும் யோசிக்காமல் விலை அதிக மென்றும் பாராமல் வாங்கி விட்டேன்.
எப்படியும் இதை ஒரே மூச்சில்
படித்து விட வேண்டும் என என் மனம் பரபரத்தது .
மத்திய பஸ் வீட்டுப் பாதையி இல்லாததால் ஒ( புத்தகத்தை வாசிக் பதினாறாவது பச் கொண்டிருக்கும்
அந்தா பஸ் வ மகனின் குரல்
நிமிர்ந்து பார்த்
முந்திப் பிந்தி இரண்டு பஸ் ஒரேயடியாக 8 ஒன்றன்பின் ஒன் பில் நின்றன.
முந்திச் செல் சொல்லப்பட்ட பஸ் சக்தியுள்ளவர்கள் இடம் பிடித்துக்
நான் , தாமதி பஸ்ஸில் ஏறி ஒ லோரத்தைப் பிடித் மகன் இன் ெ சன்னலோரத்ை கொண்டான்.
 

6.6J.
நிலையத்தில் என் Iல் செல்லும் பஸ் ந ஒரமாக நின்று கக ஆரம்பித்தேன்.
5கத்தைப்படித்துக்
போது,
(55), என்ற σπούτ கேட்டுத் தலை தேன்.
வர வேண்டிய கள் இப்போது ஒரே நேரத்தில் ாறாக வந்து தரிப்
ல்லும் பஸ் என்று ஸில் நின்றவர்களில் ள் முன்னால் ஏறி கொண்டார்கள்.
த்துச் செல்லும்
ரு சீற்றின் சன்ன
துக் கொண்டேன். னாரு சீற்றின் தைப் பிடித்துக்
6புருரகுனை
இதீைன்
மகனையும் பொருட்களையும் ஒரு முறை சரிபார்த்துக் கொண்ட நான் மீண்டும் நாவலில் மூழ்கினேன்.
“இந்த இடத்துல யாராவது இருக்கிறாங்களா , , , , ?” என்ற குரல் கேட்டுத் தலைநிமிர்ந்தேன்.
அதிகமாக இருக்கும் ஒரு பெண்; என் மகனை விடச் சற்றே வயது குறைந்த அவள் மகனுடன் நின்று
கொண்டிருந்தாள்.
நான் ‘இல்லை' என்று தலையசைத்ததும் அப்பெண் அங்கு அமர்ந்து கொண்டாள். அது இருவர் அமரக்கூடிய சீற். அந்தப் பெண்ணின் மகன் எனக்கும் அவன் தாய்க்கும் இடையில் அமர்ந்து கொண்டான்.
'அம்மா நான் போய் ஒரு ட்ரோயிங் கொப்பி வாங்கிக் கொண்டு வரவா, ?’ அந்தச் சிறுவன் அவன் தாயைக் கேட்டது என் காதில் இலேசாக விழுந்தது.
“இப்ப வேணாம் பஸ் போகப் போகுது...” என்றாள் அவன் தாய்.

Page 8
*இது போக இன்னும் பதினைஞ்சு நிமிசம் இருக்குது” என்றார் எனக்கு முன்னால் "டிக்கட்” எழுதிக் கொண்டிருந்த கண்டக்டர்.
"ம். ..சரி. போய் கவனமாக வாங்கிக்கொண்டு வாங்க...!" என்றவாறு அந்தப் பெண் அவள் மகனிடம் பணம் கொடுத்ததும் அந்தச் சிறுவன் பஸ்ஸிலிருந்து இறங்கிச் சென்றான்.
சிறுவன் சென்ற சில நிமிடங்களில் பிரதான ப்ாதையில் பரபரப்பும், கலவரமும்காணப்பட்டன. பஸ்ஸில் இருந்தவர்கள் எழுந்து அப்படியும் இப்படியுமாக எட்டிப் பார்த்தனர்.
அங்கே இருந்து பஸ்ஸில் ஏறிய ஒருவாலிபனிடம்"என்ன சங்கதி..?”
என்று ஒருவர் விசாரித்தார்.
அதற்கு அந்த வாலிபன் "யாரோ
ஒரு சின்ன ஸ்கூல் பொடியன். வேனுக்குமுட்டுப் பட்டுட்டானாம்."
உடனே நான் என் மகனைப் பார்த்தேன் . அவன் முன்னர் அமர்ந்திருந்த இடத்திலிருந்து சன்னலால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந் தான் . LD SOT ஆறுதலடைந்த நான் மீண்டும் தாய்மையின் மகத்துவத்தை விளக்கும் அந்த அற்புத நாவலில் மூழ்கினேன்.
என்ன ருகே அமர்ந்திருந்த அந்தப் பெண் திடுதிப்பென எழுந்து பஸ்ஸை விட்டிறங்கி விபத்து நடந்த இடத்துக்கு ஒடினாள். அவளின் பரபரப்பினால் கலவரப்பட்ட நான் என் இருக்கையை யாரும் ஆக்கிரமித்து விடாதவாறு புத்தகத்தை மூடி அதன்மேல் வைத்து விட் டு மகனிடம் இறங்க வேண்டாம்" விட்டு அவளைப்பின் தொடர்ந்தேன்.
என்று எச்சரித்து
எனக்கு முன்ன அந்தப் பெண், அடையாளம் தெரி மூழ்கியிருந்த அ
வனைக் கட்டியன
கொண்டிருந்தாள் பிடித்து நின்(
பெருமளவில் கூ
“என் மகனி குறைந்த அந்தப் இந்தக் கதி. . .”
என் மனம் கலங்
R s
醬
f~ リを>ト。
جمعS
அதே நேர gols uud... ! g சிறுவன் ஆம். . . கையில் "ட்ரோயி பஸ்ஸில் ஏற மு ஒடிச்சென்று إليك “அங்கே நீ தான் பட்டிருக்கிறாய் 6

ாால் ஒடிச்சென்ற விபத்தில் சிக்கி யாமல் இரத்தத்தில் ந்தப் பள்ளிச்சிறு ணைத்துக் கதறிக் நான் திக்பிரமை றேன் . சனமும் டிநின்றது.
பின் வயதிலும் பிள்ளைக்கா. . .
என்று நினைத்து
கியது.
இன்னொரு பொடியனைக் கட்டிக் கொண்டு அழுறா. . . போய் உன் அம்மாவைக் கூட்டிவா. . .!” என சிறுவனை அனுப்பி விட்டு பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டேன். சில நிமிடங்களில் அந்தச் சிறுவன் தன் தாயுடன் பெருமகிழ்சசியுடன் பஸ்ஸில் ஏறி முன்போல் இருவரும் என்னருகில் அமர்ந்தனர்.
இப்போதும் அப்பெண்ணின் கண்களில் கண்ணிர் பெருக் கெடுத்தது. ஆணுல் சற்று முன் அவள் கண்களில் பெருக்கெடுத்த கண்ணீரல்ல இது. பாலில் கலந்த நீராக தரம் குறைந்ததாகவே என் கண்களுக்கு அது தென்பட்டது.
மோதுண்ட அந்தச் சிறுவனைக் கட்டிக் கொண்டு அவள் அரற்றிய போது அவள் முந்தானையிலும் ஜாக் கெட் டிலும் இரத்தம் தோய்ந்திருந்தது. முந்தானையைப் பிரட்டி அந்த இரத்தக்கறைகளை
A
三y
塞ーー
 ̄c-r
b . . . 6T 6or 60T தோ. . . அந்தச் அவனே தான். . .
Iங்” கொப்பியுடன் யல்கிறான். நான் வனைத் தடுத்து,
* அக்சிடென்ட்” என்று உன் அம்மர்
VU
* பையைத் திறந்து அதனுள்ளிருந்த
அவள் மறைத்தாள், பின் தன் கைப்
கைக்குட்டையை எடுத்துத் தன்
கரங்களில் உள்ள அந்த இரத்தக் கறையை மிகவும் அருவருப்புடன்
துடைத்த பின் அந்தக் கைக்குட்டையை சன்னலுக்கு வெளியில் வீசி எறிந்தாள். இது
என்சி தனைத் தடாகத்தில் எறிந்த கல்லாக, என் மனதில் சிந்தனை
அலைகளைத் தோற்றுவித்து
விட்டது.
"தாய்ப்பாசம்!” என்பது இது தானா . . . ? அது இவ்வளவு தானா . . .! இதில் எவ்வளவு சுயநலம் கலந்து விட்டிருக்கிறது. 6) 6) is ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இந்த மகத்தான தாய்ப்பாசம் தன் வயிற்றில் ஜனித்த உயிர்களுக்கு மட்டும் தானா?
ஏன் இந்தப் பாசம் ஏனைய மனித
உயிர்களுக்காக முழுமையாக ஏங்க மறுக்கிறது.

Page 9
மண்ணின் பொறுமையை விட, வான வெளியை விட, கடலை விட, காற்றைவிட அளவிட முடியாதது இந்தத் தாய் பாசம் ஒன்று தான் என இதிகாசங்கள் வர்ணிக்கின்றனவே. அப்படிப்பட்ட இந்தத் தாய்ப்பாசத்தில் இத்தனை ஒரவஞ்சனை ஊடுருவி மறைந்து உறைந்து விட்டிருக்கிறதா...?
இது கால வரையும் இதற்கு ஒப்புவமை இல்லை என்றல்லவா
நான் எண்ணி இறுமாந்திருந்தேன்.
தாய்ப்பாசம்’ என்பது தன் பிள்ளையை மட்டுமே பாதுகாக்கக் கூடியதா? விரும்பக் கூடியதா?
அப்படியில்லையென்றால் தன் மகன்தான் மோதுண்டான் என்று கட்டியணைத்து அரற்றிய இந்தத் தாய் . . . அது தன் மகன் இல்லை என்று தெரிந்ததும் திருட்டுப் போன பொருள் கிடைத் து விட்டதைப் போல் மனநிம்மதியுடன் என்னருகில் அமர்ந்திருப்பாளா..?
“ஒரு பாடசாலை மாணவன்
மோதுண்டான்” என்று அந்த வாலி
பன் சென்ன போது நான் என் மகன் இருக்கிறானா . . .? எனப்பார்த்து விட்டுப் புத்தகம் படிப்பதில் நானும் மூழ்கினேன்.
என் தலை மெல்ல மெல்லக் கிறங்க ஆரம்பித்தது. வீட்டிற்கு வந்து மாலையாகியும் என் தலைப்பாரம்தணியவில்லை. சற்றுச். சாய்ந்து கொள்ளலாம் எனக் கட்டிலில் அமர்ந்த போது என் மகன் என்னிடம் ஓடி வந்து
'அம்மா கறுப்பு நிறக் கோழி மஞ்சக் கோழியின்ர குஞ்சச் சேக் காமக் கொத்தி விரட்டுது என்றான். நான் புறக்கடைப் பக்கம் சென்று பார்த்தேன் . இரு கோழிகளையும் ஏக காலத்தில்
அடைகாக்க வை குஞ்சுகள். ஒரு :ே மற்றக் கோ விரட்டுகிறதே. . இல்லை என்று
பிடித்தது! இந்தச் சக்திக்குத்தான என்று பெயர்.
தான் அடைகா குஞ்சு, தான் இ இருந்து வரவில் 6 குயில் குஞ்சை விரட்டுகிறதே. இ
"தாய்ப்பாசம்', ..!
தான் ஈணா
பாலூட்டாமல் முட்
விரட்டுகிறதே பு தாய்ப்பாசத்தின்
மன்னன் 'பிள்ளையை வெட் என்றாளே ஒருத் வானத்தை வி தாய்ப்பாசம். . . “L குழந்தையை வெ ഥങ്ങ് ഞ് ബി ട്ര பதறினாளே . . . இதுவா தாய்ப்பா
9 | UL uT6OT n "தாய்ப்பாசம்’ என்
விளிம்பில்இடப்பட்
எழுத்தில் வடி பட்டுள்ள தாய்ப்பாசத்தின் கs அது ஒரவஞ்சை பூச்சு இடப்பட்ட
எனக்கு எதுவே என்கிறதே. . .
அதோ, ஆ அந்த உலகப் புகழ் "தாய்” என்னால் தொடர்ந்து படிச் வாரங்களாக அ தூசு படிந்து கி

பத்துப் பொரித்த காழியின் குஞ்சை ழி கொத்தி தன் குஞ்சு எப்படிக்கண்டு கண்டு பிடிப்புச் ா தாய்ப்பாசம்
ாத்துப் பொரித்த ட்ட முட்டையில் 0ல என்பதற்காக காகம் கொத்தி இதுவா மகத்தான
த கன்றுக்குப் -டியும் உதைத்தும் சு. இது தான் மகத்துவமா...?
சாலமோனிடம் டிப் பாதி கொடு” தி. இதுவா அந்த ட விசாலமான மன்னா . . . அந்தக் பட்டாதே? என்று :ாலமோனிடம்
இன்னொருத்தி
'சம். . .?
6) இந்தத் பது சுயநலத்தின் -அத்திவாரமா...?
வம் கொடுக்கப்
அளவுக் குத் TüD 35)60)GULT...? ன என்ற முலாம் 马T···?
மே புரியமாட்டேன்
வலுடன் வாங்கிய
பெற்ற நாவலான மேற்கொண்டு
5க முடியாமல் பல
லுமாரியின் மேல் டக்கிறது.
மாதவன

Page 10
சில உணர்வுகளும்
துே ஒரு நீண்ட பயணத்தின் முதற் கட்டம். உலகளாவிய தமிழ் அரங்கத்தைக் கட்டுவதற்கான முதற்கல்.
தமிழகத்திலும், ஈழத்திலும்
வேறுபல நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும், தமிழ் அரங்க ஆர்வல்ர்கள் முதன்முதலாக ஒன்று கூடும்களம். தத்தம் கலை வடிவங்களையும், அனுபவங்களையும் சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ளும் சங்கமம்.
இந்த உறவுப் பகிர்தலும் ஒரு மிப்பும் ஒரு பொதுவான தமிழ் அரங்கத்தைக் கண்டெடுப் பதற்கான திசையைக் காட்டும்.
தமிழ் அரங்கம் மரபுசார்ந்த வேர்களிலிருந்தே எழவேண்டும் என் ற கரு த் தொற்றுமை கொண்டவர்கள் இப்பயணத்தில் பங்கேற்கின்றனர். இலண்டனி லிருந்து “களா?" அரங்க இயக்கத்தினரும் இலங்கையி லிருந்து "நாடக, அரங்கக் கல்லூரி யினரும், சென்னையிலுள்ள “பல்கலை அரங்க”த்தினரும் பங்கேற்கிறார்கள்.
இது இந் நாடகப் பயணத்தைப் பற்றித் தமிழக நாடக ஆர் வலர்களுக்கு வழங்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தின் ஆரம்பப் பகுதியாகும்.
1997 Lupilasî I பத்துப்பேர்வன பண்டாரநாயக் விமான நிலையத்த போக ஆயத்தம விமானம்ஏற சகள் தீவிரமாக நை விமானமும், நா எங்கள் நா தொட்ங்கி விட்
எவ்விதம் இந்த உதயமாயிற்று? ஏ போகிறோம். பதிவுகள் அை
 
 
 

ரான்சிஸ் ஜெனம்
ம் மனப்பதிவுகளும்
7ம் நாள் நாங்கள் ரை கொழும்பு 5கா சர்வதேச தில் இந்தியாவிற்குப் ாக இருக்கிறோம். U நடைமுறைகளும் டைபெறுகின்றன. மும் வானத்தில். டகப் பயணம்
டது. ܝ
த நாடகப்பயணம் ன் இந்தியாவிற்குப் என் உணர்வுப்
சபோடுகின்றன.
1978 நாடக, அரங்கக் கல்லூரி யாழ்ப்பாணம், திரு நெல் வேலியில் ஆரம்பித்தவேளை - நாடகம், அதற்கெதற்கு பயிற்சி. களப் பயிற்சியா. அப்படி யென்றால். என்று ஏளனமாகச் சிரித்த வேளை - அதன் ஆணிவேர்கள் இருவர். ஒருவர் குழந்தை ம. சண்முகலிங்கம். இன்றும் எம்மோடு வாழ்பவர். அடுத்தவர் அ. தாசீசியஸ் பயிற்சிக் காலத்தில், கொழும்பிலிருந்து வார இறுதி நாட்களில் பயிற்சி தருவதற்கென்று தவறாது வந்தவர். அதுவும் கொழும்பு தமிழ் நாடக விற்பன்னர்களின் நச்சாரி புக்கு மத்தியில் - அவ்வளவு மனம் சுத்தம். செயல் சுத்தம். நாடகத்தை உள்ளும் புறமும் நேசிப்பவர். படித்தவர், செயல் வீரர். நாடகத்தின் மூலம் மனித நேயத்தைக் காண்பவர் . அவரைப் பதினேழு வருடங் களுக்குப் பின் சந்திக் கப் போகிறேன் என்ற ஆரவாரம். தமிழ் நாட்டில் எம் நாடகங்களை நிகழ்த்தப் போகிறோம் அதில் நானும் ஒருவன் என்ற ஆனந்த மெல்லாம் இந்த ஆரவாரத்தினால் அடிபட்டும் போயிற்று.
இப் பயணமும் அவரது சாதனைகளில் ஒன்று. தான் புலம் பெயர்ந்து வாழும் இலண்டனிலும் “களரி" என்னும்

Page 11
அரங்க அமைப்பொன்றினை நிறுவி அதன்மூலம் ஐரோப்பிய நாடுகளில் நாடகப் பயிற்சிப் பட்டறைகள், நாடக மேடை யேற்றங்கள் செய்து கொண் டிருக்கிறார். அவ்வமைப் பைச் சேர்ந்த பத்துப்பேரோடு, நாடக, அரங்கக் கல்லூரியைச் சேர்ந்த எங்கள் சிலரையும் அழைத்து, சென்னை பல்கலை அரங்கைச் சார்ந்த பேராசிரியர் வீ. அரசு தலைமையிலான நாடகர்கள் சிலரும் சேர்ந்து மொத்தம் முப்பத்து மூன்று பேர்வரை இப் பயணத்தில் பங்கேற்க வைத்தார். சென்னை விமான நிலையத்தில் எம்மை வரவேற்க தாசீசியஸ் அவர்களும் அரசு அவர்களும் வந்திருந்தனர் எம்மைக் கண்டதும் தாசீசியஸ் ஆரத் தழுவி அணைத் துக் கொண்டார். அதில் தான் எவ்வளவு இறுக்கம். பாசப் பிணைப்பு எங்கள் கூத்துக்களை அரசு அவர்கள் புன்முறுவலுடன் ஆழ்ந்து அவதானித்துக் கொண்டிருந்தார். இவரும் இவரது துணைவியார் பேராசிரியை அ. மங்கை அவர்களும் தான் தாசீசியசின் நாடகப்பயணத் திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுத்தவர்கள்.
விமானநிலையத்திலிருந்து எங்களுக்காகக் காத்திருந்த வாகனத்தில் சென்னையிலுள்ள பெருங்குடி என்னும் இடத்திற்குப் போ கிறோம். விசாலமான வளவுள்ள, மொட்டை மாடியுடன் கூடிய ஒரு மாடி வீடு. யாழ்ப் பாணத்துச் சூழல் ஞாபகத்திற்கு வருகிறது. இது பேராசிரியர் அரசுவின் வீடாம். அவ்வீட்டில் குடியிருந்த தம் உறவினர் குடும்பத்தை அப்புறப் படுத்தி விட்டு எமக்காக ஒதுக்கித் த ந் திரு ந் தார் . எ ப் படி விருந்தோம்பல். எப்படி நாடக மனித நேயம் எல்லா ஏற்பாடுகளும் கனகச் சிதம், வேளாவேளைக்கு ஒரு சிலர் வந்து தமிழ் நாட்டு உணவு வகைளை நேர்த்தியாக, நேரத்துக்கு ஒன்றாக செய்துதந் ததோடு, அவற்றை உண்ணும் பக்குவத்தையும் கூடச் சொல்லித்
தந்தார்கள். எ இடத்தில் உண கருத்தாடல்க இரண்டொரு நா குழுவினரும் தனி ஆளுமைக6ை விட்டு ஒன்றா விட்டோம். பகல பயண ஒழுங்கு படுத்தல். இரவில் அடுத்த நாள் ெ வரைதலுமாக 3 கழிந்தன. இரவில்
நடுச் சாமத்தை
போகும். இப்படிய
தாசீசியஸ் அணி திடீர் அறிவிப்பு “நாளைக் காலை தப்பாட்டம் பழக்க ஆகவே எல்லோ இருங்கோ” மறுந லேயே குளியல் துமளிப்படும். நாடக ஒத்தின “நீர் ஜனாத வாங்கினாப் ே தெல்லாம் நடி இந்த இடத்தில் { வேணும்" இது விழும் அர்ச் பதினேழு வருட பழக்கம்.
நாடகப் பயண ஒழுங்குகள் அ6 அரசு தம்பதிகளி சென்னை பல் உறுப்பினர்கள் ஒ தார்கள். இந்த முழுப் பொ இலண்டன் கள சேர்ந்த திரு தலைமையிலே வ ஆளுக்கொன்ற கொண்டார்க பிரயாணம், இப்படிப் பல பி. இலங்கையிலி அரங்கக் கல்லு திரு.சோ.தேவரா சென்ற எம் பத் கனமான எந்த தரப்படவில்லை

ால்லோரும் ஒரே னவு, படுக்கை, ள் இதனால் ாட்களில் மூன்று எம்மிடையேயுள்ள ா துரக்கி எறிந்து க இணைந்து பில் ஒத்திகைகள், நகள் ஆயத்தப் ல் கருத்தாடலும், சயல் திட்டங்கள் ஆரம்ப நாட்கள் ஸ் கருத்தாடல்கள் த் தாண்டியும் ான வேளைகளில்
வர்களிடமிருந்து ஒன்று வரும். 0 ஏழு மணிக்குத் 5 ஒருவர் வருவார். ரும் ஆயத்தமாக ாள் அதிகாலையி அறை அமளி அதே போல் கயின் போது, பதி விரு து பால நடிக்கிற ப்போ! எனக்கு இந்த உணர்ச்சி அடியேனுக்கு ச் சனை. இது
உங்களுக்கு முன்
எம் தொடர்பான னைத்தையும் வீ. ன் வழிகாட்டலில் கலை அரங்க ஒடி ஒடிக் கவனித் ப் பயணத்தின் றுப் பினையும் ரி அமைப்பைச் . தாசீசியஸ் பந்த குழுவினரும் ாகப் பகிர்ந்து 5ñt . JF fT `u LI FT (6), நாடக ஒழுங்கு ரிவுகள். ஆனால் ருந்து நாடக
Fரியின் சார்பில்,
ாஜா வழிகாட்டலில்
ந்துப் பேருக்கும்"
தப் பொறுப்பும் ). அது ஏதோ
எம் மனதிற்ருக் குழப்பமாக இருந்தது. அதை திரு. தாசீசியஸிடம் நேரடியாகவே கேட்டோம். அதற்கு அவர் "நீங்கள் எங்கள் விருந்தாளிகள்”.
"ஏன்?
நாங்கள் உயிருக்குப் பயந்து ஏதோ ஒரு இக்கட்டில் தாய் நாட்டை விட்டு ஓடிவந்தவர்கள். நீங்கள் எது நடந்தாலும் பரவாயில்லை என்று இன்றும் அங்கு வாழ்கிறீர்கள்.
உங்களை உபசரிக்க எங்களை
அனுமதியுங்கள்.
எப்படி நியாயம். அவரோடு பேசிப் பயனில்லை. வெறும் வார்த்தையால்மட்டுமல்ல, செயலாலும் அவ்விதமே நடந்தார்கள். ஒரு சில தினங்களுக்குள்ளேயே எம் மூன்று குழுக்களுக்கும் இடையே இருந்த இடைவெளி மதில்களை எல்லாம் இடித்து தூள்தூளாக்கி முப்பத்து முன்று பேரும் ஒருவராக
மாறிவிட்டோம். இந்த மானிட
இறுக்கம் பண்பட்ட நாடகக் காரர்களால் தான் முடியும் என்பது எனது கருத்து.
எங்களது நாடகப் பயணத்தின் முதற்கட்டம் இவ்விதம் பங்குனி 25ம் திகதியோடு முடிவுற்றது. பங்குனி 26ம் திகதி தொடக்கம் சித்திரை 12ம் திகதி வரை நாடகப் பயணத்தின் முக்கிய கட்டம் இடம் பெற்றது. இக் காலப்பகுதியில், தமிழ் நாட்டின் முக்கிய நகரங்களான கல்பாக்கம் திண்டுக் கல், விழுப்பு ரம் , கும்பகோணம், தஞ்சாவூர் , பொள்ளாச்சி, திருச்சி, மதுரை, திருப்பூர், சென்னை உட்பட பாண்டிச்சேரி, பெங்களூர்
ஆகிய இடங்களில் "பொறுத்தது
போதும்" "புதியதொரு வீடு", 'எந்தையும் தாயும் போன்ற நாடகங்களும் கருத்தரங்குகளும் நடைபெற்றன. ஒவ்வொரு மேடையேற்றத்திலும், கருத்தரங்கிலும் புதுப்புது முகங்கள், புதுப்புதுக் கருத்துக்கள், புதுப்புது அனுபவங்கள், எல்லாமே தனித்தனி அலாதியான விஷயங்கள்.

Page 12
வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு’ என்று ஒரு சினிமா வசனம் உண் டு . அதை யதார்த்தமாக இப்பயணத்தின் போது கண்டோம். ஒவ்வொரு ஊர் ஊராகப் போகும் போது அவ்விடக் கலைஞர்கள் எம்மை அன்பொழுக வரவேற்றதிலும் சரி, கருத்தரங்குகளில் உற்சாகத்துடன் கலந்து, தம் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதிலும் சரி, சொல்லும்கருத்துக்களை ஆணித் தரமாக முன்வைப்பதிலும் சரி, நாடகம் முடிந்தவுடன் மேடைக்கு வந்து நாடகர்களைப் பாராட்டுவதிலும் சாரி, அவர் களுக்கு நிகர் அவர்கள் தான்.
கருத்தரங்குகள் ஆரம்பமாகும் முன் கூடியளவு ஒரு வரை ஒரு வர் அறிமுகம் செய்து கொள்வது வழக்கம். அப்போது
அவர் களில் கலைஞர்கள் , கவிஞர்கள், எழுத்தாளர்கள், கல்விமான்கள், சுதந்திரவீரர்கள் என்று s9 6ð) 6! 6ð) H
அலங்கரித்திருப்பார்கள். அப்போது எமக்கும் ஒரு பெறுமதியான கூட்டத்தினரோடு, அதுவும் மனித நேயமுள்ள குழுவினரோடு நாம் இருக்கிறோம். என்ற பெருமிதம் இயற்கையாகவே எம் முள் தோன்றும். கருத்தரங்குகளில் கலை, கலைஞன் என்ற வட்டத்தைத் தாண்டி, தானாடாவிட்டாலும் தன் தசையாடுமென்பார்களே அது இடைக்கிடை மேலோங்கும். இலங்கையின் அரசியல் நிலை,
தமிழர் களின் இன் ன ல் போன்றவற்றை அறியத் துடிப் பார் கள். இவற்றுக்
கெல்லாம் பேராசிரியர் வீ. அரசு அவர் கள் ஆப்பு வைத் து விடுவார். "இது உண்மையில் ஒரு கலைப்பயணமே. தவிர வேறு
உள்நோக்கம் எதுவும் இல்லை.
தயவு செய்து அவர்களைச் சங்கடத்தில் மாட்டாதீர்கள்" என் று ஆரம்பத்திலேயே சொல்லிவிடுவார்.
ஒருவர் கேலியாகச் சொன்னது
இப்போ ஞாபகத்திற்கு வருகிறது. "நீங்கள் உங்கள் உணர்வுகளை
சில வரைமுறைகளுக்காகக் கட்டுப் படுத்தி வைத்திருக் கறர் கள் என் பதை
உணர்கிறோம். ஆயினும் நீங்கள்
மேடையேற் நாடகங்களின் உங்கள் உண காட்டுகிறது.
மறைக்க முடி இருக்கும் நாடு
உங்களுக்கு உணர்வோடு ' ஆகக் கூடி வா வாழ்வு ‘அபசுர "பொறுத்தது மனம் கிளர்ந் வீடு அமைக் வீட்டீர்கள். " சேற்றில் வாழ் அங்கே நெருப் இதுதான் எங்
எம்மால் பே நாடகத்தினுரடா மக்களின்வாழ்க்ை துளாவித்துளா அவர்களின்நாட் அதற்கு மாறா இங்கு மேடையே மாற் றத் திற் "புதியதொரு வி போதும் போன்ற Lu 5ی زnه 2 9 19 'எந்தையும் தாயு அங்கு மேடையே பற்றிய விளக்கங்க கொடுக்கப்பட்ட அரசு அவர்கள் காக்கக் கூடிய
"புதியதொரு வ
போதும் ' நாடகங் மோடித்தன்மைக இலங்கை ! கையாளப் அவதானித்து பாராட்டும் (
நாடக வளர்ச்சி
(தமிழ் நாடு) முன் ன னரியி எனபதை ம6 ஒப்புக் கொண் இங்கு நவீன பரவலாக்கப்ப அங்கு இன்னு கப்படவில்லை இவ்வரங்கு { பகுதியினரிை பரீட் சார்த்த  ெகா னி டி நாடகப்பயணத் நாடகங்களில்

) tö உங்கள் தலைப்புக்களே ார்வை எடுத்துக் அதை நீங்கள் யாது. நீங்கள் தொன்
எல்லாம் என்ற ாந்தையும் தாயும் ழ்ந்தீர்கள். அந்த "ம்" பேச இப்போ போதும்" என்று
து புதியதொரு
கப் புறப்பட்டு
தாங்கள் இங்கே கிறோம். நீங்கள் பில் நடக்கிறீர்கள். கள் நிலை".
)டையேற்றப்பட்ட ாக எம் தாட்டு கை நிலைமைகளை வி அறிவதிலேயே டம்அதிகமிருந்தது. ாக 1970 களில் பறி, நவீன அரங்க கு வித் தட் ட பீடு", "பொறுத்தது 0 நாடகங்களையும ாாரிக் கப் பட்ட 1ம் நாடகத்தையும் ற்றியதோடு அவை ளும் சபையினருக்குக் ன. இதனால் வீ. கூறிய 'கற்பினைக் தாக இருந்தது' வீடு", "பொறுத்தது களில் கையாளப்பட்ட ள் 1970 களிலேயே நாடக ங் களில் பட்டிருந்ததை
ஆச்சரியமும், தெரிவித்தார்கள். பில் இந்தியாவிலும்
பார்க்க இலங்கை ல் உள் ளது னத்திருப்தியுடன் டனா. அததுடன நாடக அரங்கு ட்டிருப்பது போல் னும் பரவலாக்
இப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட டயே மாத்திரம் )ாகச் சுழன்று ரு க க? ற து . தில் பங்குபற்றிய வயது குறைந்தது
O
உசுப் பிவிட்டது.
“எந்தையும் தாயம்” எனும் யதார்த்தப் பண்பு நிறைந்த நாடகம், எல்லா நிலைமைகளும் சின்னா பின்னப்பட்டிருக்கும் தற்போதைய யாழ்ப்பாணத்திலிருக்கும் மக்கள், வெளி நாட்டிலிருக்கும் தங்கள் பிள்ளைகளின் கடிதங்களைக் கூட பெறுவதில் அடையும் சிக்கல்களையும், அவலங்களையும் கருவாகக் கொண்டது இந் நாடகம். அங்கு இந்நாடகம் பார்வையாளர்களின் சிந்தனையை சாதாரண கடிதம் ஒன்றைப் பெறுவதற்கே யாழ்ப்பாணமக்கள் இத்தனை அவலங் கள் அனுபவிக் க வேண்டி இருக்கிறதே என ஆதங்கப்பட்டார்கள். நாடகத்தில் எதையும் பிட்டுக்காட்ட வேண்டிய தில்லை, ஒரு தீப்பொறி போதும் என விளங்கிக் கொண்டார்கள். இதனால் பல இடங்களில் இதனை மேடையேற்ற வேண்டிய கட்டாயம் எமக்கு ஏற்பட்டது.
1992 ශa3 இந் நாடகம் யாழ்ப்பாண நாற்சார் வீடுகளில் தவழ்ந்து பின் இரண்டு மேடை அளிக் கைகளோடு, g it. கண்வைத்தியத்தின் பின் எனது கொழும்புக் குடியேற்றத்தோடு அது நின்றுவிட்டது. அதில் பெரியய்யா என்னும் முக்கிய பாத்திரத்தில் நடித் தேன் . எனக்குப் பதிலாக வேறொரு
வரை நடிக் க வைத் து அந் நாடகத் தைத் தொடர குழந்தை ம. சண்முகலிங்கம் அவர் : ஞக் கோ அல்லது
அதனை நெறியாள்கை செய்த
வைத்திய கலாநிதி சிவயோகனுக்கோ மனம் வரவில்லை. என்னால் பல மேடைநிகழ்வுகள் ரத்தாகின. நானும் நான்கு வருட இடை வெளிக்குப்பின் இப்பயணத்தின்
மூலம் இந்தியாவில் தான் நடித்தேன். சில வருட இடைவேளைக்குப் பின் ஒரு
புதிய குழுவோடு இணைந்து
நடித்ததும், அதுவும் ஒரு அயல்
நாட்டில் பங்குபற்றியது எனக்கு புதிய அனுபவமாக அமைந்தது. எமது நாடக ஆற்றுகை முறைமை நடிப் பைப் LJ GU (15 LÊ பாராட்டினர். அதுவும் எனது நடிப்பைப் பாராட்டதவர்களே
இல்லை எனலாம் நாடக முடிவில்
மேடையில் வந்து பாராட்டுவார்கள்.

Page 13
கலைப்பாலம் 1997
Cultural Interactive
Awareness Seminar
கித்த செவன (பவுத்தலோக மாவத்த)
23/24-08-97
 
 


Page 14
dboop6o ILIIGOLD 1997 கவின் கலைகள் பயிலக நிகழ்ச்சிகள் இராமகிருஷ்ண மிஷன் மண்டபம்
 


Page 15
மறுநாள் நடக்கும் கருத்தாடல்களில் ஒவ்வொரு கோணத்தில் எனது நடிப்பை விமர்சித்துப் பாராட் டுவார்கள். உதாரணத் திற்கு இரண்டொன்றைக் குறிப்பிடா விட்டால் எனது நெஞ்சு வெடித்து விடும்.
பொள்ளாச்சியில் நாடகம் முடிய வழமை போல் எங்களைச் சந்திக்க வந்தனர். தாங்களும் நாடகக்காரர் எனத் தங்களை அறிமுகம் செய்து கொண்டபின்னர், உண்மையில் பல வருடங்களுக்குப் பின்னர் இப்போது தான் ஒரு தரமான நாடகம் பார்த்ததாகக் கூறினர். அத்தோடு நிற்கவில்லை. என்னைப் பார்த்து “இன்று மேடையில் நடிக வேளைக் கண் டோம் ” என் றனர் . என்னிடமிருந்து ஒரு அசட்டுச் சிரிப்பு. எனது நிலையைப் புரிந்து கொண்ட அவர்கள் “சத்தியமாகவே சொல்லுகிறோம். இரண்டு பேரின் நடிப்பிற்கும் ஒரு சிறு வித்தியாசம். அவர் அட்டகாசமாக நடிப்பார். நீங்கள் அமைதியாக நடித் தீர்கள். அவ்வளவுதான்” என்றனர். நான் நன்றி தெரிவித்தேன்.
அடுத்தது பெங்களுரில் நாடகம் முடிந்ததும் நடிகர் அறிமுகத்திற்கு (Curtain Calls) -?gui5 LDTG60Trib. அப்போது ஒரு வர் எப்படியோ மேடைக்குள் வந்து, என்னைக் கட்டிப் பிடித்து, உணர்ச்சிவசப் பட்டு அழுது கொண்டிருந்தார். நான் அவரை ஆறுதல்படுத்தி என்னை விடுவித்து மேடையில் தோன்றுவதற்கு பெரும் பாடாகி விட்டது. இவற்றுக் கெல்லாம் சரி க ரம் வைத் தாற் போல் மந்தது, பயணத்தின் இறுதி நாளன்று, சென்னை மியூசியம் அரங்கில் நடைபெற்ற நிகழ்வு, இந் நிகழ்வு தமிழக அமைச்சர், மாண்புகு தமிழ்க்குடி மகன் தலைமையில் இடம் பெற்றது. அவர் நாடக முடிவில் தம் உரையில் எனது நடிப்பைப் பெரிதும் பாராட்டத்தவற வில்லை. அத்துடன் தமிழகத்தில் சிறந்த தரைப்பட நடிகர்களோடு என்னை ஒப்பிட்டு, நான் இந்தியாவில் இருந்திருந்தால், இன்று திரை உலகில் ஒரு உன்னத இடத்தில் இருப்பேன் என ஒரு போடு போட்டார்.
ஒரு நாடகத்தி
மாத்திரம் சிறர்
மதிப் பரிடும்
மாற்றுக்கருத்து சிறந்த நடிகன் அவன் பாத்திர அவன் பங்கள் தான் இருந்தத் எழுத்துரு, அ பாத்திரத்தன்மை ஒத்திசைவு, ஒ மேடையமைப்பு காரணிகளும் ( உயர்த்திவிட, (
தனியே அந்
மாத்திரம் தெ நியாயம்? எனி பதம் என்பதற்:ே பல தரமான நா உள்ளனர் என் இப்பயணம் தய ஆர்வலர்களுக் நாம் மகிழ்ச்ச என்னைப் பொ சாதனையோ, எதுவுமில்லை. வாழ்வில் ஈழத்த சிறந்த பல நாடக கைபட்டு உருவா GL) GolfGOD5 TG நடிக்கும் வா ததையிட்டு பெரு உடையவன். பல உறவாடி அன் பெற்றவன். இத் நாடகக் களப் போகுமா? ஒரு வெவ்வேறு வித்தியாசமான இரு நெறியாளர் நடித்த ஒரு அனுபவம பயணத்தில் “எந்தையும் தா யாழ்ப்பாணம் கடிதங்களை எதிர் கொண்டது. பிள் நாடுகளுக்கு வேதனையில் யாழ்ப்பாணத பத்தோடு சி கேலியாக சிலர் உணர்வுக் கேற் தயாரிப்பு இட ஆனால் நாட லணடன கடி:

ல் தனியே ஒவரை த நடிகன் என செயலுக் கு |டையவன் நான். எனக் கொள்ளும் ம் சிறக்க தனியே ரிப்பு மாத்திரம் ா? நாடகத்தின் தில் அவனது , சக நடிகர்களின் ப்பனை, இசை, போன்ற பிற சேர்ந்து அவனை இவற்றை மறந்து த நடிகனை
ரிவதில் என்ன
னும் ஒரு அவல் கற்ப இலங்கையில் டகக் கலைஞர்கள் ாற உணமையை மிழ்நாட்டு நாடக கு அறிவித்ததில் சி அடையலாம். றுத்தவரை இதில் ஆச்சாரியமோ எனது நாடக நின் புடம்போட்ட நெறியாளர்களின் ானவன்; அத்துடன் ா நாடகங்களில் ாய்ப்புக் கிடைத் மையும் நன்றியும் நாடகர்களோடு ம், அனுபவமும் தனை ஆற்றலும் பயிற்சியும் வீண் நாடகப் பிரதியை, நாடுக ளில்
சூழ் நிலைகளில்
களின் தயாரிப்பில் புதுமையான இந் ஈ நாடகப் ஏற்பட்டது. யும்" நாடகத்தில் பிள்ளைகளின் பார்க்கும் களத்தைக்
ளைகளை வெளி
அனுப்பிவிட்டு, தவிப்போரை, தில் அனுதா
லர் பார்ப்பர் .
நோக்குவர். இந்த
பவே இந் நாடகத் ம் பெற்றிருந்தது. கப் பயணத்தில் 5ம் அனுப்பும்
1
களமாகக் கொண் டதால், அதனை நெறியாள்கை செய்த தாசீசியஸ் அவர்கள், இந் நாடகத்தில் கேலிக்கு எது வித இடமும் வைக்கவில்லை. காரணம் அங்கிருப்பவர்கள் தங்கள் குடும்ப நினைவிலேயே வாழ்கிறார்கள்.
பிரிவு அவர்களைத் தினமும் வாட்டுகின்றது. இதன் தாக்கம் நாடகத் த யாாரிப் பரிலும் ஏற்படுவது தவிர்க்க இயலாது. வாழ்க்கை தான் நாடகம். அவர்களின் அனுபவங்கள் சோகமானவை . தங்கள் குடும்பத்தாரிடமிருந்து கடிதம் வராதா என ஏங்குவார்கள். வந்தால் அதை உடனே பிரித்து வாசிக்கப் பயம். கடிதத்தைத் திறந்ததும் திகதியைத்தான் முதலில் பார்ப்பார்கள் அத்தனை அவசரம் அங்கலாய்ப்பு. இந்திய யாத்திரை நோக்கத்திற்காக, என்னோடு வந்த என் மனைவியும் இப்பயணத்தில் கலந்து கொள்ள நேரிட்டது. அவரை லண்டன் பிள்ளைகள் அம்மா அம்மா என அன்பொழுக அழைத்ததும் உணவருந்தும் போது அவரைச் சூழ இருந்து உணவு பரிமாறி உண்பதும், உரிமையோடு உறவாடுவதும் கண்கொள்ளாக் காட்சி. தங்கள் அம்மாவை ஒவ்வொரு வரும் இவரில் கண்டார்கள். இவரோ வெளி நாட் டி லிரு க் கும் தன் மகனை இவர் களில் கண்டார். அதைப் போலத்தான் தாசீசியஸ் அவர்களைத் தங்கள் தகப்பனாக, சகோதரனாகக் கருதுகிறார்கள். இதுதான் கலைத்தாகத்திலும் பார்க்க அவர்களை ஒன்றிணைத்து வைத்திருக்கிறது. லண்டன் பிள்ளை ஒருவர் கூறினார், "நாங்கள் எதனைத் தவற விட்டாலும் ஞாயிற் று க் கிழமைகளில் நடக்கும் நாட்கப் பயிற் சிக் குப் போவதைத்
தவறவிடமாட்டோம்". அப்படி ஞாயிற்றுக் கிழமைகளில் என்னதான் நடக் கிறது..? தா சீசரியஸ் வீட்டுக் கு
அருகாமையிலுள்ள விளையாட்டுத்
திடல் மத்தியில் அதிகாலையில்
எல்லோரும் கூடுவார்கள்.

Page 16
அதிலிருந்து அயல் வீட்டு யன்னல்கள் திறக்கப்படும் வரை, பயிற் சரி ஒத் திகை , திரு . தாசீசியஸிடம் கண்டிப்பிலும் பார்க்க பல மடங்கு அன்பும், ஆதரவும் உண்டு. நாடகத்தின் மூலம் உருவாகக் கூடிய ஒரு மனிதப் பிணைப்பு அவர்களிடம் உருவாகி இருப்பதை உணர்கிறேன். அதி து டன் க ட் டு ப பா டு , பொறுப்புடன் செயலாற்றும் பண்பையும் ஐரோப்பியர்களிடம்
நிறையக் கற்றிருக்கிறார்கள்.
இந்தியக் குழுவில் சிறுவரும் சிறுவர் நாடகமும் என்னும் துறைபற்றிக் கலாநிதிப் பட்டத் திற்காக ஆராய்ச்சி செய்யும் திரு வேலு சரவணன் என்பவரும் இடம் பெற்றிருந்தார். இவரும் அவர் குழுவினரைப் போல், படாடோபம் எதுவுமின்றி மிகவும் எளிமையாக காட்சி தரு வார். இவருடைய இரண் டு நிகழ்வுகளைப் பார் க் கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. நிகழ்வுகளை யாரும் நடத்தலாம். அதிலென்ன ஆச்சரியம். நண்பர் சோ. தேவரா சாவின் மகள் சசிறு மரி அபலா ஷா வும் இப் பயணத்தில் எம்மோடு கலந்து கொண்டாள். அவளும் நடித்தாள். இந்த வேலு
சரவணன் பெட்டிப் பா மாற்றினார். அ வேலு சரவண நாடகத்திற்காக பாவிக்காமல், உள்ளும் புற அவர்களை ஒரு கலை வா நாடகம் என்
நாடகமே மை
அற்புத நிலையின் நான் எங்கும் கா
இது.
லண்டன் களி பி. பி. சி. அறிவி விக்னராஜா ஒ( உரையாற்றும் ( சாள்ஸ் இளவ அலுவலகத்திற்கு 4 அப்போது இந்தி அறிவிப்பாளர் தி அறிமுகம் செய் தமிழ் அறிவி அறிமுகப்படுத் அப்படியென்ற என இளவரச வெளி நாடு என்றால் இலங் நிலைக்கு வளர் இதனை கோவை கருத்தும் வலுப்ப
யாழ். மண்ணில் தற்போது இயங்கும் சிறு
திறந்த
 

என் ன மாதிா? ம்பாக அவளை வளுக்கு எல்லாமே ன் என்ற நிலை. சிறுவர் அரங்கைய்
சிறுவர்களை மும் நேசித்து, அரவணைபபது "ழ்க்கை என்பது பதற்கு மேலாக விதம் என்னும் னை உணர்ந்தேன். "ணாத அனுபவம்
ாரியைச் சார்ந்த ப்பாளர் திரு. தி. ரு கருத்தாடலில் போது ஒரு முறை ரசர் பி. பி. சி. விஜயம் செய்தாராம் தியாவைச் சோந்த ரு. மகாதேவனை யும் போது இவர் ப்பாளர் என தப்பட்ட போது ால் இலங்கையா ர் கேட்டாராம். களில் தமிழர்
கையர் என்னும் ர்ந்து விட்டோம். ஞானியின் கீழ்வரும் டுத்துகிறது.
"தமிழ் என்று ஒரு மொழி உண்டு. அதற்கு ஓர் இனமுண்டு என்று உலகிற்குத் தெரிந்திருக்கக் காரணம் ஈழத்துத் தமிழர்கள தான.
ஈழத்தமிழர்கள் தான் கலை, இலக்கியத் துறைகளில் வழி காட்டிகளாகக் காணப்படுகின்றனர்.
“எமது கலை வடிவங்களின் மூல வேர்களைத் தேடி வந்தோம், என இந் நாடகப்பயணத்தின் நோக்கங்களில் ஒன்றாகக் கூறப்பட்டது. அது உண்மையும்,
தேவையானதும் கூட. அதற்கு
முன்னர், நாடகம் நடிக்கலாம்,
யாரும் நெறியாள்கை செய்யலாம்; தயாரிக்கலாம். ஆனால் அவற்றினு:ா டாக வேற்றுமையில் கூட ஒற்றுமை
காண விளையும் ஒரு மனிதம் எழவேண்டும். இந் நாடகப் பயணம் மூலம் இம் மனித
உணர்வு, பயணத்தில் இணைந்து கொண்ட குழுக்களிடையேயாவது நிச் சயம் மலர்ந்துள்ளது. இவ்வுணர்வு எங்கும் ஆல்போல் பெருகி, அறுகு போல் வேரூன்ற.
உடன் ஒரு கை கொடுங்கள் ஊர் கூடித் தேர் இழுப்போம்.
றுவர் கலைக் கூடம் திருமறைக் கால மன்ற
த வெளி
12

Page 17
ஆசை/
மனோ ஊஞ்சலில் நிதம் - ஆடிக் களிக்கின்ற
மாயை நான்!
மேக வர்ஷிப்பில் தோய்ந்து கரைந்து போகும் உலகக் கூட்டுக்குள்
ஒழுக்கின் கனம் உணராது தாகந் தீர்த்துக் கொள்ள
அலகுகளைப் பிளந்து பாய்கின்ற மனிதக் குஞ்சுகளே! உங்கள் -
மனோ பீடத்தை ஆட்சி செய்யும் மாயாஜால மகாராணி நானே!
f அழுதும் தொழுதும் வழிபார்த்திருந்தும் இரவில் சூரியன் எமக்கென்று வராது
11 எரிதலை கொண்ட மனிதராய் எழுக இவ்விரவினைப் பகலாக்கிப் பொழிக
111 உலகம் திகைக்க தொடுவான் பிளந்து இன்னோர் சூரியன் இருளில் உதிக்கும்
உலகத்தின் வனப்பெங்கு சூறை போனது? வறுமை எப்படி விதி யென்றானது?
ஏ. சதீஸ்பீன்
@@ (
என்னதான நன்னம்பி திண்மைய உண்மைய
என்னளவி உன்னளவி
நெஞ்சமதி
அஞ்சலெ
எல்லாரும் கண்டடை காசாகி F
OTF56) 6.
பெற்ற ெ கற்றவன்ே நாளதனை ஏழையென
காலையழ மாலையிே
போலாகி
மேலவனே
எப்போது தப்பாது 6 கண்ணுறா மண்மீதெ
 

ஹயருள் இருத்தல்
இர்
“யாழ் ஜெயம்" -
* ஏற்படினும் எப்போதும் உன் மீது க்கை கொள்ளும் ஞானமதை - மன்னவா ாய்த் தந்தெனக்குத் தீர்க்காயுளுந்தந்து ால் என்வாழ்வை உயர்த்து.
女
லே பெரிது எனது செபம் என்றாலும் பிலே அணுவும் ஒவ்வாது - என்னிறைவா தில் நீங்காது நின்னருளை நான் தேட ன ஆதரித்தே ஆள்.
-
நல்லாரென் றெண்ணாதே குறை கூறும் ந்த சுகமென்ன - செல்லாத ஈசாநான் கல்லறைக்கே போவதன்முன் ான் மனத்தே மலர்.
★
வலாம் நீதந்த பிச்சையென்ப துணராதே போற் கர்வம் காட்டுகிறேன் - தற்பரனே ா அறியாதே நடந்து தடம்புரளும் னை ஏந்தியருள் செய்.
女
குபெறும் கண்குளிரக் காட்சிதரும் லா சோர்ந்துகீழ் மண்பார்க்கும் - சோலைமலர் நின்னருளைப் புகழ்ந்துமணம் சோராதே ா மீளவழி தா.
★”
ம் உன்னருகே இருக்கின்றேன் எனும்வாக்குத் ான அறிந்துந் தத்தளித்தேன் - அப்பாநான்
வ்கும் வேளையிலுங் கண்டே அரவணைக்க göT மனங்குளிர

Page 18
கலைப்படைப்புக்கள் இன்று பல முனைகளில் நெருக்குதல் களுக்குள்ளும், வேதனைகளுக்குள்ளும், பிரச்சனைகளுக்குள்ளும். நிமிர்ந்து வளர்ந்து வருகின்றன. இந்த வகையில் ஒவியத் துறை என்பதும் இன்று முக்கிய பங்கு வகிக்கின்றது. மொழிப் பிரச்சனையின்றி தனது செய்திகளை அது வெளிக் கொணர் கின்றது . அழைக்கப்படும் இந்த ஒவியங்கள். எத்தனையோ உணர்வுகளை தன்னுள் தாங்கி பகிரங்கப்
“உலக மொழி” என |
படுத்துகிறது.
“பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முற்படும் பொழுது பீறிடும் தத்துவங்கள் ஊடாக ஒவியங்களை உருவாக்கினேன்” எனக் கூறும்
மரியாம் பிள்ளை டொமினிக் ஜீவா
என்பவர் நவீன
தன் கால்களை தொடங்கியுள்ளா சுன் னாகத்தைப் கொண்ட இவர், ! தனக்கென உரிய
படைத்து வருகி
வெளிப்பட்ட படைப் புக்கள் ஆண்டுகளாக படுகின்றது. கா தனைகள் அவர்ப8 படுகின்றது. “ந தத் துவ ரேை பொதுவாகப் பெ படைப்புகளின் குருவாகவும் ஒ அவர்கள் திகழ்ந்
ஆழமான சிந்த குறியீட்டு வகைே இவரின் ஒவியங்க
 

ஒவியத் துறையில் ஆழமாகப் பதிக்கத் ர். யாழ்ப்பாணம்,
பிறப்பிடமாகக் நனது ஒவியங்களை தனித் தன்மையுடன்
ன்றார். 17 வயதில் இவரது ஓவியப் இன்று எட் டு
அவரால் தொடரப்
லத்திற்கேற்ப சிந் டைப்புகளில் வருடப் வீன ஒவியங்களும் ககளும்” எனப் ரிடப்பட்ட இவரது ஆதரவாளனாகவும், பியர் அ. திருக்கின்றார்.
னைச் செறிவோடும்,
ாடும், வெளிப்படும் ா உண்மையிலேயே
4.
மாற்கு
தனித்துவமானவை . வேறுபட்ட பார்வையை அவர் மீது படியவைப்பவை. சீர்செ ட்டுப் போகும் இன்றைய உலகுக்குச் சில உண்மை நிலைகளைத் தெளிய வைப்பவை. சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் கல்வி பயின்ற இந்த மரியாம்பிள்ளை டொமினிக் ஜீவா ஒரு கத்தோலிக்கள் மட்டுமல்லாது, தற்போது யாழ். மத்திய கல்லூரியில் சித்திர ஆசிரியராகக்கடமை யாற்றுகிறார் என்பதும்குறிப்பிடத்தக்கது. வளர்ந்து வரும் இவரது கலைப்பணியை பெருமையுடன் நோக்குவதோடு தனது ஆசீரையும், வாழ்த்துக் களையும் "கலைமுகம்" தெரிவித்து நிற்கின்றது.
1. எமது நிலைகள் 2. எதிர்கால வன்முறைவழி 3. ஆதரவற்ரோர் 4. பாலியல்நாகரீகம்

Page 19


Page 20
瓯画
நாட்டு நடப்பு எதுவானாலும் அது கமலாவிடம் தான் விபரமாக அறிய முடியும். அது எப்படி அவள்தான் ஊர், உலக செய்தித்தாள், முணுமுணுப்புக்கள், அபிப்பிராயங்கள், வதந்திகள் எல்லாம் தொகுத்துத் தரும் செய்தி ஊடகம் என அவ்வூரே அவளை எதிர்பார்த்திருக்கும்.
“கமலா, கடிதம் வந்திட்டுதா”? அடுத்த வீட்டு பவளத்தின் குரல் கேட்ட கமலாவோ “இன்னும் வரேல்ல . . . உனக்கு என்ன அவசரம் கப்பல் வந்தாத்தானே கடிதம் வரும். வந்திருந்தா பேப்பரில போட்டிருக்கும் தானே. அடுத்த 15ம் திகதி கப்பல் ஓடுமாம். அதில தான் ஆறு மாத 435 கடிதப் பார்சலும் வருகுதாம். அதிலதான் காசு வரும். இப்ப ஏன் அதைப் பார்க்கிறாய். கடிதத்தைப் பார்க்காம உலையை வை பிள்ளை’.
ஒரு கேள்விக்கு பத்து பதில் கிடைத்த மகிழ்ச்சி இருந்தாலும் பவளம் இப்போ கப்பல் கடிதத்தைச் சொல்லிச் சொல்லிப் பலரிடம் பணம் மாறி பல மாதம் கரைந்து விட்டது. இதுதான் வெளிநாட்டுக்கணவன்மார் தொழில் பார்க்கும் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கை. இதில் கமலாவும், பவளமும் ஏழு எட்டு வருடங்களாய் கடிதக்காரரை எதிர் பார்த்துத்தான் உலை ஏறும் அன்றாட நடைமுறை வாழ்க்கையுமாகி விட்டது.
இவர்களுக்கு கடிதம் ஒன்றும் இரகசியமானது அல்ல. முதலில் சோதனைக்காக கொழும்பில் உடைத்து, பின் சில சமயம் கடிதங்கள் மாறியும் வைக்கப்பட்டுப் பின் யாரோ ஒருவரின் கடிதம் யாருக்கோ கிடைக்கும். அவரவர்களிடம் தவறி நேராக வந்தாலும், கடித செய்தியோ பணமோ காலாவதியானதாக இருக்கும். அதைவிட எந்தச் செய்தி வந்தாலும் கமலாவிடம் சொல்லி அது பரகசியப் பட்டாலே கடிதம் வந்ததற்க்கான அத்தாட்சி பிறக்கும்.
வாசலில் ஒலித்த மணி ஓசை சகல படலைகளையும் ஒரு முறை திறந்து மூட வைத்தது. "தாரு பவளம் சிவரூபன்” தபாற்காரரின் குரல் கமலாவுக்குக் கேட்டு விட்டது. பதில் கிடைக்கு முன்னே பவளம் பெற்று விட்டாள். "எத்தின கோயில் குளத்தில நேத்தி வைச்சு இருந்தாய் பிள்ளை, பாத்தியா, பலிச்சுட்டுதே'

, 6» «Q O» 0
என்று கமலா கூறிய போது கடிதத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வமும், எதிர்ப்பார்ப்பும், அருகில் நின்றகமலாவுக்கு விளங்கிக் கொண்டாலும் அதில் உள்ள செய்தியை அறிந்துவிட வேண்டுமே என்ற ஆவல் அவள் பார்வையை அங்கிருந்து அகல விடவில்லை.
“என்ன, பவளம் கடிதம் கனமாயிருக்கு. காசு கட்டாக வந்திருக்குப் போல, உடையன் பிள்ளை’ என்ற போது பவளத்தால் மறுக்க முடியவில்லை. நாலு மாதத்திற்கு ஒரு கடிதம் வரும். அதற்காக தினமும் கதைத்து வரும் கமலாவின் உறவைத் தவிர்க்க முடியுமா? ஆவலோடுஉடைத்தாள் பவளம். அதில் இருந்த படங்கள் முற்றத்தில் விழுந்தது.
அட, இது அவற்ற பிறந்த நாள் படங்களாம்.” பிள்ளைகள் ஓடி வந்து ஒவ்வொரு படங்களையும் எடுத்துக் கொண்டன. அப்பாவை அறிமுகப்படுத்தும் துர்ப்பாக்கிய நிலையில் பவளத்தின் கண்கள் கலங்கிக் கொண்டன. ஸ்ரிக்கர் பல. அதற்காக சிறுசுகள் சண்டையிட்டன. சிறுவர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி கூடப் பவளத்துக்கு ஏற்படவில்லை. காரணம் அவள் எதிர்பார்த்த காசோலையைக் காணவில்லை , கடிதத்தைப் படிக்கப், படிக்க கண்ணீர்த்துளிகள் கரைந்து கொண்டன, கமலாவோ நேர்முக வர்ணனைக்குத் தயாரானவள் போல் கண்களை உருட்டி, உருட்டி பவளத்தின் வார்த்தையை எதிர்பார்த்திருந்தாள்.
எதுவுமே புரியாத நிலையில் கமலாவிற்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. தணிக்கையின் பின் சில வரிகளை பவளத்தின் வாய் முணுமுணுத்தது. "அவருக்கு வருத்தமாம். அடுத்த மாதம் இலங்கைக்கு வாப் போறாராம்”.
“அடி, பிள்ளை இப்படி எத்தனை முறை சொல்லி இருப்பினம். ஏழு வருஷமா இதைத்தானே எழுதினம். எத்தினை தரம் எதிர் பார்த்து எத்தினை சோதினைகளைக் கடந்து நாங்க இங்க சீவிக்கிறம். இது தெரியுமா அவையளுக்கு? எங்கட ஏக்கத்தப் புரியாம இந்த ஆம்பிளையள் சும்மா, கடிதத்தில்

Page 21
குடும்பம் நடத்திறதுக்கு கலியாணம் எண்ட பேரையும் வைச்சிருக்கினம். பொஞ்சாதி பிள்ளை குட்டியளின்ர உணர்வுகளைப் புரியாத ஆம்பிளையஞக்கு ஏன் தான் கலியாணமோ”, எனக் கமலா தன் தாக்கத்தையும்
வெளிப்படுத்தினாள்.
பவளத்துக்கோ எதுவுமே காதில் ஏறவில்லை. மீண்டும் ஒரு முறை கடிதத்தைப் படிக்க வேண்டுமென்ற ஆவலில் “கமலாக்கா அடுப்பில் அரிசி வேகுது பார்த்திற்று வாறன்’ என இடத்தைவிட்டு நகர முயன்றாள்.
“என்னடி, பிள்ள அரிசி வேகினா, குழையும் கரையும். எங்கட மனசு வேகினா அதை யாரிட்டச் சொல்லி ஆத்திறது? வாழுற வயசில அருகில இருக்காமல் பாயில படுக்கையில கிடக்கேக்கதான் வீட்டில ஒதுங்குவினமோ? எனக் கமலாவும் தன் மனக் குமுறலைச் சொட்டியபடி அடுத்த வீட்டிற் செய்தி பகர நகர்ந்தாள்.
உலைக் கொதிப்பை விட, மனக் கொதிப்பு அதிக மாகிக் கண்கள் பனிக்க கணவனின் கடிதத்துக்குள் மனதைப் புதைத்துக் கொள்ள வாசற் படலைச் சத்தம் மீண்டும் பழைய நினைவுக்குப் பவளத்தை வரவழைத்தது.
அடுத்த வீட்டு புனிதமக்கா கமலாவின் கதை கேட்டு ஓடி வந்தவள் போல், “என்ன பவளம் கடிதம் வந்துதாம். ஏதும் கிடைக்குமோ” என்றாள்.
“ஒண்டும் வரேல்லப் புனிதமக்கா. இது நாலு மாதத்துக்கு முன்பு போட்ட கடிதமாம். இப்ப கப்பலில் வருகுதாம். அதில் வரும். கொஞ்சம் பொறுங்கோ” எனத் தவணைகள் கூறிக் கொண்டாள்.
“பவளம், உங்களுக்குக் கடிதம் வந்தாக் கத்தையா வரும். எங்களுக்குயார் இருக்கினம்? யார் தருவினம்? இருந்ததைத் தந்திட்டு இப்படி அலையிறன் ஒருக்கா ரெலிபோனை செய்து பாரன்”, என்றாள் புனிதம்.
"ஐயோ, அக்கா ரெலிபோன் எடுக்க சரியான காசாம். மூண்டு நிமிசத்துக்கு முழுசா ஐநூறு ரூபாவாம். அதுக்க என்னத்தைக் கதைக்கிறது. அதுக்காக தூங்கி அலையிறதுக்கு பத்தாது”.
"அதுக்கென்ன பவளம் ஒருக்காக் கதைச்சுப் பாரன், உங்களுக்குத் தான் கலோ, கலோ எண்டா, கிலோ, கிலோவாக் கிடைக்குமே. எங்களுக்கு யாரிருக்கினம், கிலோவில வேண்ட “என்ற போது பெருமைப்படும் "வார்த்தைகள், உலைக்கேறுமா என்ற முணுமுணுப்புடன் "அக்கா பொறுத்தோடை பொறுங்கோ, அடுத்த கப்பல் வரத் தந்திடுறன்?” என சுடச்சுட தேநீரைக் கொடுத்து வழியனுப்பினாள்.

ஊரோ ஒச்சம், வீடுபட்டினி என்ற நிலையில் பிள்ளைகளும் தமது செலவை இரட்டிப்பாக்கி, வரவு எட்டணா, செலவு பத்தணா, என்ற நிலையில் இன்றைய போர்ச் சூழல் நிலையை நிதிஅமைச்சராலும் சமாளிக்க முடியாத அரசைப் போல, தடுமாறித் திண்டாடினாள் பவளம்.
ஏழு வயதில் கண்ட கடைசிப் பெண்பிள்ளையின் நீராட்டு விழாவுக்கும் இல்லை. O/L, A/L என பாடசாலைப் பருவம் தாண்டி திருமணத்தை எதிர் கொள்ளும் குமர்கள் வீட்டிற்குந்தி இருக்க இலட்சியங்கள் பேசியவர் எல்லாம் இலட்சங்கள் கேட்க பணத்துக்காக படும்அவலம்தானே, இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் நோக்கி படை எடுக்க வைத்தது . . . என்று எண்ணிய போது பவளத்துக்கு கணவனில் பரிவும், பாசமும் மனதை வாட்டியது. நித்திரை கலைந்த இரவுகள், பாதுகாப்பற்ற பயங்கர சூழல்கள், சுற்றிவளைப்புக்கள் எல்லாம், எல்லோரையும் கூட்டிக் கொண்டு புறப்பட்டு விடுவோமா என்ற விரக்தி அவள் மனதையும் உலுப்பியது.
அந்த சிந்தையைக் கலைக்கும் குரலாக, வெளிநாட்டால் வருபவர் போல ஒருவர் வாசலில் வந்து நின்று.
“இது சிவரூபன் வீடா” எனக் கேட்டு உள்ளே நுழைந்தவர் தன்கையில் இருந்த கடிதத்தைக் கொடுத்தார்.
“ஓம் ஓம் வாங்க இருங்க, என்ற பவளத்திற்கு கணவனின் கடிதம் கண்டு மகிழ்ச்சியுற்றவள், வந்தவரை மறந்து கடிதத்துள் தன் மனதை விட்டாள். "நான், கொழும்பில் வந்து நிற்கிறேன். நீங்கள் உடன் கொழும்புக்குவரவும்”, என்றதும் அவளுக்குத் திகைப்பும், மகிழ்வும் உலுப்பியது.
வந்தவர் கூறினார், "அது வந்து . . . என்னோடதான் வந்தவர், கப்பலில் போட்ட பார்சல்கள் இன்னும் வந்து ச்ேரேல்லை. ஒருமாத லீவில வந்தவர். அதுதான் அங்க நிக்கிறார். எனக்குச் சாமான் குறைவுதானே. அதுதான் பிளைற்றில நான் வந்திட்டன். அவர் உங்களை வரட்டாம். கொழும்பில் வீடு எடுத்துக் கொஞ்சநாளைக்கு இருக்கலாம் எண்டார். வருகிற செலவுக்கு எண்டு இந்தக் காசைக் குடுக்கச் சொன்னவர்”, எனப் பணத்தை நீட்டினார்.
பவளத்தின்தளம்பிய மனம் குழம்பியது. விளக்குமாறு காவிய மூஞ்சூறின் நிலைதான்கணவருக்கு என எண்ணிய போது பிள்ளைகள் வந்து சூழ்ந்து கொள்ள, அப்பாவின் செய்தி அடுத்த வீட்டுக் கமலத்தின் காதுகளுக்கும் எட்டி விட்டது. தேநீர் போட்டுக் கொடுப்பதற்குள் கமலம் வந்து விபரம் யாவும் பெற்று விட்டாள்.

Page 22
“விரைவாய்க் கொழும்புக்குப் போக முயற்சியுங்கள். நானும் கடிதம் போடுறன்” என வந்தவர் புறப்பட்ட கையோடு கப்பலில் செல்வதற்கு விண்ணப்பிக்க, கிராமசேவகர், கச்சேரி என அலையத் தொடங்கினாள். அன்றாடப் பத்திரிகைகள், வானொலிச் செய்திகள் மூலம் பிரயாண நிலை, நாட்டு நிலை, கணவரின் இருப்பிடப் பாதுகாப்பு நிலை, அறிவதில் உலகச் செய்தி ஈறாக கேட்டு வரப் பழக்கப்பட்டு விட்டாள். தற்போதைக்கு கப்பற்சேவை இல்லையாம். இன்னும் இரண்டு வாரத்தில் முன்னுரிமை உள்ளவர்க்காம், பின்னுரிமை என்று பார்த்தாலும் இன்னும் இரண்டு மாதங்க்ள் செல்லும் என்ற குழம்பிய செய்திகள் அவளைக் கலக்கியது. சொந்த நாட்டுக்குள்ளே பயணம் செய்வதற்கு தீர்மானிக்க முடியாத பயணங்களை எண்ணி விரக்தியுற்றாள்.
இரண்டு மாதத்தின் பின் போக வழி பிறந்தது. எடுத்த வீடும் கட்டிய அற்வான்சும் வீட்டுப் பொருட்கள் எல்லாம் தயாராய் இருப்பதாக தாமதக் கடிதங்களும் இரண்டு மூன்றாய்க் கையில் கிடைத்தது.
பவளத்தின் சொந்த வீட்டுப் பொருட்களெல்லாம் அயலவர்க்கு அன்பளிப்பாகவும், அறாவிலைக்கும் விற்றுத் தீர்த்தாள், கப்பலிற் செல்லும் பயணத்திற்கு விரைந்தாள். புதிய சூழலும், புதிய பயணமும்களைத்து விழுந்து கரைபுரண்டோடும் கற்பனைகளுடன் பிள்ளைகளும் தாயுமாய் கொழும்பிற்புதிய விலாசத்தைச்
வல்ல ULDLILD
முடிவுகளெல்லாம் முடிவுகளல்ல புதிய ஆரம்பங்கள்
வசந்தங்கள் போய்விடவில்லை தூரத்தில் காத்திருக்கின்றன
நடந்து வந்தது முட்கள் நிரம்பிய பாதை தான் தூரத்தில் தெரிகிறது. , , ! பசுமையான புல்வெளி

சென்றடைந்தனர். தட்டிய கதவை எட்டிப் பார்த்த வீட்டுக்காரர் விபரம் அறிந்து திறப்பை நீட்டி உள்ளே அழைத்தார். அழகும், பொருளும், வசதியும் நிறைந்த வீடாய் இருந்தன. அப்பாவை மட்டும்அங்கே காணோம்.
தாயும், பிள்ளைகளும் அப்பாவைத் தேடி பார்வையை விரித்தனர். அப்பாவை இன்னும் காணமுடியவில்லை. வீட்டார் கூறினார். “சென்ற வாரமே விசா முடியுதென பிளைற்றில் சென்று விட்டார்” என வீட்டார் செய்தி பகர்ந்தார்.
மண்டை விறைத்தது. மனது கல்லானது . நட்டாற்றுச் சீவியம் நமக்குமா என ஏங்கி நிற்கையில் புதியவர் வருகை. பொலிசில் பதிவில்லை என காவற் துறையினர் கதவைத் தட்டிய போது கலங்கிய இதயங்கள் கண்ணீர் சொரிந்தன.
இளையவர்களை விசாரணைக்கென கூட்டிச் சென்றபோது பவளத்தின் சுயநினைவு மீண்டும் துளிர்க்க சற்று நேரம் எடுத்தது. விழித்துப் பார்க்கையில் மருத்துவ நிலைய மொன்றில் தனியே படுத்திருப்பது என மெதுவாய் உணர்கையில் இவை எல்லாம் இருக்கும் இடத்தை விட்டு இடம் மாறிச் சென்றதால் தானே எங்கள் அமைதி குலைந்தது என, சொந்த மண்ணின் அமைதியின் சுவையினை எண்ணி ஏங்கிக் கொண்டாள்.
- ஜோசப் பாலா -
கடந்து வந்த பயணம் இருள் மயம் தான் தொலை தூரத்தில், , , ! விடிவெள்ளியின் வெளிச்சம்
இதயம், உறைந்த பணிப்பறை தான் உடைந்த கண்ணாடியில்லை
நினைவுகளில் கரைந்தது கடந்த காலம் நிஜத்தையே தரிசிக்கப் போகிறது எதிர் காலம்
அஸ்தமனங்கள் இல்லாமல் உதயங்கள் இல்லை இரவுகள் இல்லாமல் விடியல்கள் இல்லை முடிவுகளின்றி ஆரம்பங்கள் இல்லை
முடிவென்றால், அது முடிவல்ல புதிய ஆரம்பம்
giraft

Page 23
பேராசிரியர் நீ, மரி
ஒரு துறையைச் சார்ந்த விற்பன்னர் சிலரை ஒன்று கூட்டி அவர் களது துறைபற்றிய கலந்துரையாடல்களை நடத்துவது இப்போது வழக்கமாகி வருகிறது. அரசியல், பொருளாதாரம், சமயம், பண்பாடு, மருத்துவம், புதைபொருள் ஆய்வு, விஞ்ஞானம் போன்ற துறைகளைச் சேர்ந்த மேதைகள் ஒன்றாகச் சந்தித்து உரையாடித் தம் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அந்நிகழ்வுகளின் சாரத்தை அல்லது முக்கியமான, தேவையான பகுதிகளை சஞ்சிகைகளும், செய்தித்தாள்களும், வானொலி, தொலைக் காட்சி போன்றவைகளும் வெளியிடுகின்றன. அரங்கவலைகளும் இந்நூற்றாண்டின் நாடகத்துறை வரலாற்றில் தமது சுவடுகளைப் பதித்துச் சென்ற நால்வரை - அவர்கள் எழுத்துக்கள் மூலமும், அவர்களைப் பற்றிய இலக்கியங்கள் மூலமும்- சந்தித்து உரையாட விரும்பியது. அது தெரிந்து எடுத்த நால்வர்: ருஷ்ய நாட்டின் வ்செவொலொட் மேயர்ஹோல்ட் (1874-1940), ஜேர்மனியைச் சேர்ந்த பேர்த்தோல்ற் ப்றெ..ற் (1898-1956), இலங்கையின் எதிரிவீர சரத்சந்திர (1914-1996), இங்கிலாந்தின் பீற்றர் ப்ரூக் (1925- )
அரங்கவலைகள்: நீங்கள் நால்வரும் நாடக உலகில், உலக நாடக அரங்கில், வரலாறு படைத்தவர்கள். நாடகத்துறையில் நீங்கள் காலடி எடுத்து வைத்தபோது அன்று நிலவிய அரங்கியற் கோட்பாட்டுச் செயற்பாட்டு நிலைகளுடன் உங்களில் எவருக்கும் பெரும் உடன்பாடு இருக்கவில்லை என்பது உங்களது எழுத்துக்களி ருந்தும், செவ்விகளிலிருந்தும் தெரியவருகின்றது. உங்களுக்கு முன்பிருந்த நாடக அரங்கியல் நிலைபற்றிக் கூறுங்கள்.
 

LJ
சேவியர் அடிகள்
மேயர்ஹோல்ட் நான் நாடகத்துறைக்குட் புகுந்த போது இருந்த அரங்கு தனது சமூக, சமய ஊற்றுக்களிலிருந்து விடுபட்டு வெகு தொலைவில் நின்று கொண்டிருந்தது. அது புறப்பொருள் மெய்ம்மையை வற்புறுத்தும் கருத்துப் பாங்கால், பார்வையாளர்கள் அகன்று செல்ல வழி வகுத்து விட்டது. அவ்வரங்கு தனது ஈர்க்கும் தன்மையை இழந்து விட்டதோடு, பார்ப்போரை உருமாற்றி உயர் நிலைப் படுத்தும் சக்தியையும் கைநெகிழ்ந்திருந்தது. பாகுபாடற்ற இயற்கை வாய்மை வழியினைப் பின்பற்றும் தன்மை, வெளித் தோற்றங்களின் மிகவும் சிறிய கூறுகளிலும் செலுத்தும் மித மிஞ்சிய கவனம் போன்ற தகாத பண்புகள் ஸ்ரனிஸ்லவ்ஸ்க்கியின் மொஸ்கோ கலையகத்திலும் காணப்பட்டன. மேலும் சமூக மெய்ம்மைகளை அன்றைய அரங்கு உள்வாங்கிச் செயற்படவில்லை.?
அரங்கவலைகள்: நீங்கள் குறிப்பிடும் அரங்கியல்சார் தன்மைகள் மைனிங்கன் நாடகக் குழு 1890ல் மொஸ்கோவிற்கு வருகை தந்தபின் ஏற்பட்ட விளைவுகளுள் ஒரு சில அவ்வரங்கினால் தூண்டப்பட்டுச் செயற்பட்டவர் ஸ்ரனிஸ்லவ்ஸ்க்கி. ஆகவே அவரது அரங்கு முதலாக மாற்றியமைக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தத்துள் இருந்தது என்கிறீர்கள். ப்றெ..ற் அவர்களே, உங்களுடைய நாட்டில் நீங்கள் நாடகத் துறையில் நுழைந்தபோது எத்தகைய அரங்கு காணப்பட்டது?
ப்றெஃற். இந்நூற்றாண்டின் இருபதுகளில் ஜேர்மன் மண்ணில் மேடையேற்றப்பட்ட நாடகங்கள் பார்ப்போர் உணர்ச்சிகளைத் தொடுவதாயும், பார்ப்பவர்களை

Page 24
பாத்திரங்களுடன் ஒன்றிக்க வைக்கும் தன்மை உடையவையாயும் மேடையில் நிகழ்பவை உண்மையாக நடப்பவைபோல் சித்தரிப்பதாகவும் அமைந்திருந்தன. சுருக்கமாக, ஜேர்மன் அரங்கு மாயத்தோற்றத்தை உருவாக்கும் அரங்காய் இருந்தது. உண்மையில் அது ஒரு போலி அரங்கு.?
அரங்க வலைகள்: நடிகர் தமது ஆற்றுகையால் பார்வையாளர் தம் மையே மறந்து நடிகர் வெளிப்படுத்திய உணர்ச்சிகளுடன் ஒன்றிக்கச் செய்ய வேண்டும், பார்வையாளர் ஆழ்ந்து சிந்திக்காது மேடையில் நடக்கும் நிகழ்வுகளைப் பின்தொடர வைக்க வேண்டும், " என ஜேர்மன் நாடக ஆசிரியர் கோஎத், ஷில்லர் கூறிய கருத்துக்களை நீங்கள் நிராகரித்தீர்கள். சரிதானே?
ப்றெஃற்: ஆமாம்.
அரங்கவலைகள்: பீற்றர் ப்ரூக் அவர்களே! நீங்கள் நாடகத் துறையில் காலடி எடுத்து வைத்த போது அத்துறை உங்கள் நாட்டில் என்ன நிலையில் இருந்தது?
ப்ரூக் பலவிதமான அரங்குகள் இருந்தன. பணத்தை நோக்காகக் கொண்டவை சில வேறு, புகழையும், உணர்ச்சிகளையும், அரசியலையும், களிப்பூட்டிலையும் நோக்காகக் கொண்டு வெவ்வேறு விதமாய் இயங்கி வந்தன அன்றைய அரங்குகள். அநேகமாக பழைய குருடி கதவைத்திறவடி என்ற பாணியில் நடிப்பு, இயக்கம், மேடை அமைப்பு, மொழி, இசை அனைத்தும் கலந்து இறந்த ஒரு நிலையைப் பிரதிபலிப்பதாகவே இருந்தன. அவ்வரங்குகள் பார்வையாளரை உயர்த்தவும் இல்லை, அவர்களுக்குப் புதியதைப் புகட்டவும் இல்லை; பெரிதாகக் களிப்பூட்டவும் இல்லை. ஒட்டு மொத்தமாக இறந்த அரங்குளாகத் தென்பட்டன."
அரங்கவலைகள்: ஆகவே அதற்கு உயிரளிக்க நீங்கள் இளைஞராக இருந்தபொழுதே முன்வந்தீர்கள். சரத்சந்திர அவர்களே! மேற்புலத்து நாடக மேதைகள் கூறும் கருத்துக்களைக் கேட்டீர்கள், இலங்கையைப்
பொறுத்தளவில். . .

சரத் சந்திர நாற்பதுகளில் ரவர் மண்டப இசை நாடகங்களும், ஜயமன்னாவின் நாடகங்களும் கொழும்பிற் கொடிகட்டிப் பறந்தன. ரவர் மண்டப நாடகங்கள் நாடகம் எழுதத் தெரியாதவர்களாலும். அத்துறைக்குப் புதியவர்களாலும் ஆக்கப்பட்டிருந்தன. நாடக மொழி பற்றிய தன்மை அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை, காட்சிகளும் பாடல்களும் தான் நாடகமாக இருந்தன. நடிப்பைப்பற்றி முதலாகப் பெரிதாகச் சொல்வதற்கில்லை. மிகவும் சிறந்த நகைச்சுவை நடிகரான ஜயமன்னாவின் நாடகங்கள் அவரது சகோதரனால் எழுதப்பட்டவை. அவைகள் உணர்ச்சி முனைப்புடைய இன்பியல் வகையைச் சார்ந்தவை. இலக்கியம் சார் மொழியே அவைகளில் விரவி இருந்தது. அவை சமுதாய மேல்மட்டத்தினரின் வாழ்வைப் பிரதிபலிப்பவையாக இருந்தன. நாடகப் பாத்திரங்கள் அன்றைய காலத்தவரைச் சித்தரித்தாலும், நாடக மொழியின் பாணி பாத்திர வெளிப்பாட்டுக்குத் தடையாக அமைந்திருந்தது. நாடகத்தில் வரும் உபகதைகள் சமூக அடிமட்டத்து மக்களின் வாழ்வை இயல்பாகச் சித்தரித்தன. சுருக்கமாக, நாடக “அனுபவம்” அவைகளில் இருக்கவில்லை, இக்குறை பாடுகளிலிருந்து அரங்கை விடுவித்து, வழக்கு மொழியிலே அமைந்ததும், நாடக அனுபவத்தைக் கொடுப்பதுமான அரங்கினை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் நாடக விரும்பிகளைச் சார்ந்திருந்தது."
அரங்கவலைகள்: நீங்கள் கூறிய புதிய பாணியினை அமைப்பதற்குப் பேராசிரியர் லுடோ வைக்கின் பங்கு இன்றியமையாத ஒன்றாக இ' த்தது என்பது பலருக்கும் தெரிந்ததே. நீங்கள் இத்தகைய புது அரங்கினை அமைக்க என்ன முயற்சிகளை மேற்கொண்டீர்கள்?
சரத் சந்திர: பேராசிரியர் லுடோவைக்கும் அவரது மனைவி எடித்தும் நானும் சேர்ந்து 1945ல் ரங்கசபா என்ற கழகத்தை உருவாக்கினோம். சிங்கள நாடகத்துறையில் எமக்கென ஒரு பாரம்பரியம் இல்லாதிருந்தமையாலும், நாற்பதுகளில் தலைநகரில் மேடையேற்றப்பட்ட நாடகங்களில் முன்பு நான் குறிப்பிட்ட அரங்கியல் சார் அனுபவத்தை அளிக்கின்ற தன்மை இல்லாதமையாலும் மேற்புலத்து நாடகங்களைத் தழுவியும், மொழிபெயர்த்தும் நாடகத்தினை வளர்ப்பது என்று தீர்மானித்தோம். அதன்படி கோகொல் உடைய "திருமணம்” என்னும் நாடகத்தை முதன்முறையாக

Page 25
மேடையேற்றினோம். அது வெறும் மொழி பெயர்ப்பு நாடகம் அன்று. அதில் தோன்றிய பல கதாபாத்திரங்கள் நமது சமுதாயத்தில் வாழும் பலருடைய பிரதிபிம் பங்களாக அமைந்திருந்தன. அப்பாத்திரங்களைப் (முதலாளி, கலியாணத்தரகர், சட்டத்தரணி) பார்வையாளர் , தமக்கு தமது சூழலிலும் அறிமுகமானவர்கள் என்று சொல்லக் கூடிய வகையில் அமைத்தோம். இலங்கை (தமிழ் / சிங்கள) நாடக மரபு வேரிலிருந்து நமக்கெனப் புதிய வடிவங்களை உருவாக்குவதற்கு ரங்கசபாவின் செயற்பாடுகள் முன்னோடியாக வழிகோலின.
அரங்கவலைகள்: ப்ரூக் அவர்களே! பத்தொன்பது வயதிலே ‘எ சென்ரிமென்ரல் ஜேர்ணி’ என்னும் திரைப்படத்தை நெறிப் படுத்தியும், ஷேக்ஸ்பியரின் ஆக்கங்களைப் புதுமுறையில் தயாரித்தும் இளம் வயதிலேயே புகழ் பெற்றவர் நீங்கள். உங்கள் நாடகத்துறைக்கு எங்கிருந்து தூண்டுதல்களைப் பெற்றீர்கள்?
ப்ரூக்: நாம் மற்றவர்களினுடைய கருத்துக்களை உள்வாங்குதல் போல மற்றவர்களும் எங்களுடைய கருத்துக் குடைக்குள் வயப்படுவது இயற்கை ஓவியர் போன்ற ஒரு சில கலைஞருக்குத் தமக்கெனத் தனி முத்திரை குத்தும் தன்மை இருக்கின்றது. நாடகத் துறை அப்படிப்பட்டது அன்று. அங்கு கருத்துக்களிலும், செயற்பாடுகளிலும் நிறைந்த பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. ஒருசில நாடக மேதைகளினால் நான் மிகவும் கவரப்பட்டுள்ளேன். அவர்களுள், நடிகர்களுக்குப் பதிலாகப் பொம்மைகள் பயன்படுத்தப்பட வேண்டும், காட்சி அமைப்பு வேண்டியதில்லை என்றெல்லாம் மாறுபடச் சிந்தித்த கோர்டன் க்றேக் ஒருவர் . அரங்கு என்பது தூய்மைப்படுத்தும் சடங்கு என்ற கொள்கை கொண்ட ஜூலியன் பெக், மேடைப் பிம்பங்களை அடையாளங்கள் இன்றியே அடையாளங்களாக காட்டக்கூடிய ஆற்றல் பெற்ற சாமுவேல் பெக்கெற்.நடிப்பின் இயல்பு பற்றியும் அதன் பொருள், அதன் உணர்வு உணர்ச்சிசார் செயல் முறைகள் பற்றியும் ஆய்வு செய்த க்றொரொவ்ஸ்க்கி, மாறுபட்ட முனைகளில் நின்று அரங்கு பற்றிய கோட்பாடுகளை முன்வைத்த அகோர அரங்கின் ஆர்த்தோவும் இருபதாம் நூற்ருண்டு நாடக அரங்கியல் சிந்தனையில் புரட்சிகளை ஏற்படுத்திய ப்றெ..ரும், உலகத்தைப் புதிய கண்களால் பார்த்து முரண்பட் டவைகளை ஒருங்கிணைத்துப் பார்க்கும் பண்பைப்

2.
பெறவேண்டும் என்று கூறிய பீற்றர் வைஸ் போன்றேரின் கருத்துக்கள் என்னில் ஆழமாகப் பதிந்து எனது நாடகச் செயற்பாடுகளிலும் அவைகள் எதிரொலியை எழுப்புகின்றன."
அரங்கவலைகள்: ப்றெ..ற்அவர்களே! அன்ரொனின் ஆர்த்தோவும் நீங்களும் மாறுபட்ட துருவத்தில் நிற்பவர்கள் என ப்ரூக் கூறியதைக் கேட்டீர்கள். இதைப்பற்றி நீங்கள். . .
ப்றெஃற்: அக்கூற்றில் உண்மை உண்டு. நாம் சம காலத்தவர்களாக வாழ்ந்திருந்த போதிலும் நமக்குள் நேரடித் தொடர்பு ஏதும் இருக்கவில்லை. கதை கூறும் போக்கையும் உளப்பாங்கான யதார்த்தத்தையும் விலக்கி புனைமங்களையும், வித்தைகளையும் கையாளுவது ஆர்த்தோவினது கொள்கை பார்வையாளர்களது உள்ளத்தின் அடித்தளத்தில் உள்ள சக்திகளை விடுவித்து அங்குள்ள கனவுகளுக்கும் ஆசை வெறிகளுக்கும் இடம் கொடுப்பதாக அரங்கு அமைய வேண்டும் என்பதுஅவரது குறிக்கோள், இவ்வகைக் கருத்துப் பின்னணியில் உரையாடல் தனது முதன்மையான இடத்தை இழந்து உடல் அசைவுகளும், சைகைகளும், மேடைப்பிம்பங்களும், ஒளியூட்டலும் மேலிடம் பெறுகின்றன. நடிகரும், பார்வையாளரும் “நெருப்பில் போட்டுக் கொளுத்தப்படும் இரையாக" மாறுகிறார்கள். எனது கருத்துப்படி நடிகனோ பார்வையாளனோ பாத்திரங்களுடன் ஒன்றிக்காது இருக்க வேண்டும். நடிகன் தான் மேடையில் தோன்றும் பாத்திரம் அன்று ஒரு நடிகனே என்பதைக் காட்ட வேண்டும்; புறத்தே நின்று மேடையில் நடப்பவற்றை அறிவுக்கண் கொண்டு விமர்சிக்கும் பக்குவம் பார்வையாளனுக்கு வர வேண்டும்.இருப்பினும் எங்கள் இருவரினதும் முரண்பட்ட கோட்பாடுகளை ஒருங்கிணைத்து மராத் / சாட் என்னும் நாடகத்தை தயாரித்துக் காட்டிய பெருமை பீற்றர் ப்ரூக்கைச் சேரும். "
அரங்கவலைகள்: ஆகவே மாறுபட்ட நடைமுறைக் கொள்கைகளும் பின்னிப்பிணைக்கப்பட்டு அரங்கிற்குப் பயனுள்ளதாக்கப் படலாம் என்பதை உறுதிப்படுத் துகின்றீர்கள்.
மேயர்ஹோல்ட் அவர்களே! நீங்கள் "மோடிப்” படத்தப்பட்ட நாடகங்களை உங்களது நாட்டில் அறிமுகப்படுத்தினீர்கள். மோடியின் உள்ளார்ந்த நோக்கு?

Page 26
மேயர் ஹோல்ட் எனக்கு முன்பே அது நிக்கொலை மின்ஸ்க்கி, அன்ரே பெலிபோன்றவர்களால் அறிமுகப் படுத்தப்பட்டிருந்தது. மோடி (உஸ்தொவ் நொஸ்ற்) என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தையது அல்ல. நிகழ்வொன்றினுடைய பாணியை, புகைப்படப் பிடிப்பாளர் போன்று, அதே விதமாக ஆற்றுகைப் படுத்துவது அன்று மோடி என்பது குறியீடு, பொதுமைப்படுத்தல், பொது இணக்க ஒப்பந்தச் சார்புடையது எனப் பொருள் கொண்டது. ஒரு குறிப்பிட்ட காலத்தை அல்லது நிகழ்வை மோடிப்படுத்துவதென்பது, அக்காலத்தின் அல்லது நிகழ்வின் உட் கூட்டுத் தொகுப்பை வெளிப்படுத்து வதற்கும், கலைப்படைப்பொன்றின் பாணியில் வேர்விட்டுள்ள மறைந்த பண்புகளை வெளிக் கொண்டு வருவதற்கும் எல்லா வழிவகைகளையும் கையாளல் என்று பொருள்தரும். "இங்கு, கவிஞர், நாடகாசிரியர் மேற்றர்லிங்கின் கருத்துக்களை நான் வரவேற்கிறேன். உண்மையான துன்பியல் என்பது சாதாரண மனித இருப்பில்தான் காணப்பட வேண்டுமே தவிர பெரும் இதிகாச நிகழ்வுகளிலன்று என்பது போன்ற அவரின் கருத்துக்கள் . ஏற்றுக் கொள்ளக் கூடியவை. " இத்தகைய மோடிப்படுத்தலில் உடற்தோற்ற நிலைகளால், சைகைகளால், பார்வைகளால், மெளனத்தால் மனித உறவுகளின் உண்மை நிலைநாட்டப்படுகின்றது. உடல் அசைவுகளின் பாங்கு பார்வையாளரின் கவனத்தை ஈர்க்க உதவுகின்றது. இத்தகைய புதிய அரங்கில் பேச்சும், உடற்தோற்ற நிலைகளும் தத்தமக்குரிய இலக்கணங்களுடன் இயங்குகின்றன. "இப்புதிய அரங்கில் காட்சி அமைப்பு, இசை, ஒளி முதலியவை புதிய விதத்தில் கையாளப்படுகின்றன. * பழைய அரங்கில், 69 (5 நடிகனுக்கு உளம், உடல்சார் செயற்பாடுகளின் எதிர்விளைவு முக்கியமானது போல் புதிய அரங்கிற்கு சைகைகளும், ஊமங்களும் முக்கியம் பெறுகின்றன. "
அரங்கவலைகள்: நாடக அரங்கியல் வட்டங்களில் மேயர்ஹோல்ட் என்ற பெயரைச் சொன்னால், பையோ மெக்கானிக்ஸ் (உடல் இயக்க விதிக் கோட்பாடு, உடற் பொறி முறைக் கோட்பாடு) கொன்ஸ்றக்ரிவிஸ்ம் (மேடைக் காட்சிகள் கட்டமைப்புக் கோட்பாடு) போன்ற கருத்து நிலைகள் நினைவிற்கு வரும். இவைபற்றி சிறிது கூறமுடியுமா?

மேயர்ஹோல்ட்: நடிகர் தமது உடல் உறுப்புக்களால் படைக்கும் மேடை வடிவங்களின் மூலம் ஒரு நிகழ்வை உருவகப்படுத்தி அதை முனைப்புடன் வெளிப்படுத்த முடியும். காரணம், மனித உடல் பல இயந்திரங்கள் அடங்கிய ஒரு பெரிய இணைப்பு இயந்திரம். அரங்கில், அதன் ஆற்றலைப் பயன்படுத்தி ஆழமான உணர்வலைகளை எழுப்ப முடியும். அப்படி எழுப்பவும் வேண்டும். ஒரு சில செய்கைகள் மூலம் சில உணர்ச்சிகளைத் தெளிவாகக் காட்ட முடியும். எடுத்துக் காட்டாக ஆனந்தத்தை வெளிப்படுத்த
குத்துக்கரணம் போடுவது.
என்னுடைய மாணவர்களுக்கு இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் நாளாந்தம் ஒரு மணிநேரக் களப்பயிற்சி அளித்தேன். உடல் இயக்க விதிக்கோட்பாடு ஒரு வகையில் விஞ்ஞானமுறை ஒழுங்கமைப்பில் தொழிலை தேர்வாய்வு செய்த ரெய்லர் என்னும் அமெரிக்கரின் கருத்தையும், உளவியல் மேதைகள் வில்லியம் ஜேம்ஸ், பெக்ரேறெவ் போன்றவர்களின் "தற்சுட்டு" கோட்பாட்டையும் ஒட்டி நிற்கின்றது. கத்தியால் குத்துதல், நெஞ்சில் ஏறிக்கொள்ளுதல், பாரமான எடையைக் கீழே கொணர்தல், அம்பு எய்தல் போன்றவற்றை நடிகர்கள் பயிற்சி செய்து பழகுவர். இந்தப் பயிற்சிகள் மூன்று கூறுகளில் அடங்கும்: குறிப்பிட்ட ஒரு செயலைச் செய்யும் எண்ணம், அதை நடைமுறைப்படுத்துவது, செய்து முடித்தபின் உள்ளத்தில் எழும் எதிர் வினைகள். "
அரங்கவலைகள்: மேடைக்காட்சிகளின் கட்டமைப்புக்
கோட்பாடு பற்றி . . .
மேயர்ஹோல்ட் ஏணிகள் 1ாரக் கட்டுகள், மேடைகள் போன்றவற்றை அருகருகில நாடக நிகழ்வுகளுக்கேற்ப அடுக்கி மேடைக் காட்சிகளை அமைக்கும்போது முறையே வீடுகள், தொழிற்சாலைகள், பொதுக் கட்டடங்கள் உள்ளன என்ற உணர்வு பார்வையாளருக்கு ஏற்படும், “ இம்மேடை அமைப்பை "நடிப்பதற்கான இயந்திரம்” என்றும் கூறலாம். “இத்தகைய முறையை நான் நாடியதற்கு முதற்காரணம் பழைய மேடைக்காட்சி அமைப்புக்களைச் செய்யப்பணப்பற்றாக்குறைதான். அது மட்டுமல்லாது, இப் புதிய காட்சியமைப்பு முறையில் நாம் பயன்படுத்தும் பொருட்கள் பல பயனுடையவை: அவைகளை ஒரு தேவைக்கு மேலாகப் பல தேவைகளுக்கும் பயன்படுத்த முடியும். மேலும், வெறும் அலங்காரம் செய்பவை, உருப்படுத்திக் காட்டுபவை, சூழ்நிலைக்குத் தகவமைத்துக் கொடுப்பவை போன்ற காட்சியமைப்பு தேவையில்லை என வலியுறுத்த விரும்பினேன்.

Page 27
அரங்கவலைகள்: ப்றெ..ற், அவர்களே, உங்கள் பெயர், காவிய அரங்கு, அந்நியப்படுத்தல், சொற் செயல் பக்குவ வெளிப்பாடு (Gestus) என்ற சொற்றொடர்களுடன் பிணைந்துள்ளது.
ப்றெஃற் சொற்-செயல் பக்குவ வெளிப்பாடு- அதை ஜெஸ்ரஸ் என அழைத்தேன் - ஒரு நிகழ்வு அல்லது காட்சி எவ்வளவு தூரம் சமூகத் தொடர்பையும் தொனியையும் கொண்டுள்ளது என்பதில் தங்கி உள்ளது. "வேட்டையாடப்படும் மனித மிருகம்” ஒன்றின் அச்சம் நிறைந்த பார்வை எப்போது சமூகத் தொனியைக் கொடுக்கும் என்றால் மனிதர்கள் இழைக்கும் குறிப்பிட்ட ஒரு சில சூழ்ச்சிச் செயல்கள் தனி ஒரு மனிதனை மிருகம் என்ற அளவுக்குத் தள்ளுமாயின், அதுவே அவ்வெளிப்பாடு, மாறாக, துயரைச் சித்தரிக்கும் நடிகனின் பார்வை, மிருக செயற்பாட்டுடன் மட்டும் நிற்கும் போது, அது சமூகத் தொணியைக் கொடுக்காது. ? சமூகச் செய்கை என்பது சமூகத்துடன் தொடர்புடைய செய்கை. அது சமூக சூழலைப்பற்றி அறிந்து கொள்ளக் கூடியதாக அமைவது. * ஒரு விபத்தை நடித்துக் காட்ட வேண்டு மென்றால், ஒரே நடிகன் விபத்துக் குள்ளானவனின் பாத்திரத்தையும், விபத்தைச் செய்பவனின் பாத்திரத்தையும் மாறி மாறி நடித்து, உரை மூலம் விளக்கி, விபத்து எவ்வாறு நடந்தது என்றும் அதை எவ்வாறு தவிர்த்திருக்கலாம் என்றும் பார்வையாளரே முடிவை எடுக்க துணை செய்ய வேண்டும். *
அரங்கவலைகள்: அந்நியப் படுத்தல், . ப்றெஃற்: வேர்வ்றெம்டுங் என்ற சொல்லுக்கு அந்நியப்படுத்தல் என்ற மொழி பெயர்ப்புப் பொருந் தவில் லைப் போல் தெரிகிறது. "பழக்கப்பட்டதிலும் மாறுபட்டிருத்தல்”, “புதினமாகத் தோன்றல்”, “வேறுபட்டுத் தோன்றல்” என்பவை அந்நியப்படுத்தல் என்ற சொல்லைலிடப் பொருத் தமானவை ஒரு நிகழ்வு எல்லாருக்கும் வழமையாகப் புரியும் படியான, பழக்கப் பட்ட தெளிவான தன்மையிலிருந்து விடுவிக்கப்பட்டு, அதைப்பற்றிய ஆச்சரியத்தையும், அதை அறியத்தூண்டும் ஆவலையும் எழுப்பச் செய்ய வேண்டும். இது தான் இதன் மையப் பொருள். * உரைஞன் பாத்திரம், பாடல்கள், முகமூடிகள், அறிவிப்பு அட்டைகள் முதலியவைகள் ஒரு நிகழ்வுபற்றிய அதிக உணர்வை எழுப்பவும் அது பற்றி விமர்சிக்கவும் உதவுபவை. ஒருவன் ஓர் ஆற்றோட்டத்தோடு சென்றுகொண்டிருப்பினும்,

அதற்கு மேலே நிற்கும் நிலைக்கு இதனை ஒப்பிடலாம். நமக்குப் பழக்கப்பட்ட, தெரிந்த ஒரு நிகழ்வை, புதிய பார்வையிலும் உண்மையான சமூகக் கண்ணோட்டத்திலும் உற்று நோக்கும் போது, பற்பல கேள்விகள் எழும்பும், சுயவிமர்சனம் உருவாகும். இது தான் வேர்வ்றெம்டுங். நடிகனின் பெரும் பொறுப்பு, தான் நடிக்கிறேன் என்று காட்டிக் கொள்ளவும் வேண்டும்.
அரங்கவலைகள்: காவிய அரங்கு பற்றி . ப்றெஃற். உணர்வையும் உணர்ச்சியையும் பிரித்து விடமுடியாது. காவிய அரங்கின் நோக்கம், உணர்ச்சிகளைத் தூண்டி விடுவது மட்டும் அல்ல, அவைகளை அறிவுத் தராசில் எடை போட்டுப் பார்ப்பதும். அரங்கு என்பது களிப்பூட்டுவது மட்டும் அன்று, சிறப்பாக அது அறிவூட்டவும் வேண்டும். காவிய அரங்கில் உரைஞனின் பங்கு, காட்சியமைப்பு மேடைநிகழ்வுகளுடன் இணைந்து நிற்கும் தன்மை, நடிகர்கள் "பாத்திரங்களாக மாறாது” நிற்கும் நிலை, அரங்கு அறிவு புகட்டும் மேடையாக விளங்குதல், யுத்தம், சமூகப் போராட்டம், குடும்பம், உணவு, சந்தை முதலிய சமுதாய பொருளாதாரப் பிரச்சனைகள் பற்றிய நாடக நிகழ்வுக் கோவை, பார்வையாளருக்குக் கருத்துத்தெளிவூட்டும் பரடகர் குழாம், திரைப் படங்களிலிருந்து காட்டப்படும் துணுக்குகள் முதலியவை காவிய அரங்கின் கூறுகள். மக்களின் செயல்கள் விமர்சனத்துக்குள்ளாக்கப்படுகின்றன. அரங்கு, உலக மாற்றத்துக்கு உழைக்கும் ஆய்வாளரின் தளமாக மாறுகிறது. *
அரங்க வலிைகள்: ப்றுாக் அவர்களே, உங்களது அரங்கிற்கு பொருத்தம்ான ஒரு பெயரை வைப்பதற்கு மேதைகள் அவதிப்படுகின்றனர். நீங்கள் பலருடையவும் நாடகக் கோட்பாடுகளையும், கருது கோள்களையும் தேர்ந்து இசைந்தேற்றுக் கொள்ளும் அரங்கியலாளர் என்ற கருத்து பரவலாகக் கூறப்படுகிறது . எங்களுடைய கருத்து, நீங்கள் நாடகத் துறையில் உலகப் பொதுமையைத் தேடுபவர். இதைப்பற்றி . . .
ப்றுாக்: நான் ஆபிரிக்காவுக்கு எனது குழுவினருடன்
சென்றிருந்த போது, மானிடவியலாளர் ஒருவரை
நோக்கி, நம் ஒவ்வொருவரிலும் ஓர் ஆபிரிக்கா
உள்ளது என்று கூறினேன். அவர் திகைப்புற்றார். நான் விளக்கமும் அளித்தேன். நாம் ஒவ்வொருவரும்
ஒரு முழு மனிதனின் பாகங்கள், முழுமையாக வளர்ச்சி
பெற்ற மனிதன் ஆபிரிக்கன், ஆசியன், ஐரோப்பியன்
போன்ற அனைத்தையும் உள்ளடக்கி இருப்பான். *

Page 28
இப்படியான விளக்கத்தை அளித்தேன். ஒருசில ஆண்டுகட்டு முன் 1970 நான் பாரிஸில் நிறுவியுள்ள சர்வதேச நாடக ஆய்வு நடுநிலையத்தில், பன்னாட்டுக் கலைஞர், இசைஞர், நடிகர், சாகச வீரர், பொது மொழியோ, பொதுப் புனைமங்க்ளோ, பொதுப் பண்பாட்டுக் கூறுகளோ இன்றி ஒருங்கிணைந்து செயற்படுகின்றனர். பல கண்டங்களிலும் நமது கூட்டுப் படைப்புகளை, எடுத்துக் காட்டாக மகாபாரதத்தை, மேடையேற்றியுள்ளோம். ஆமாம், உலகப் பண்பாட்டுப் பொதுமையை நாடகம் மூலம் "அனுபவிப்பது” “அனுபவிக்கச் செய்வது” எனது குறிக்கோள்.
அரங்க வலைகள்: பேராசிரியர் சரத்சந்திரா அவர்களே. மனமே, சிங்கபாகு போன்ற நாடகங்கள் உங்களுக்கு ஒரு வகையில் இலங்கையின் எல்லைகளைக் கடந்த புகழை ஈட்டித் தந்துள்ளன. இந் நாடகங்கள் பற்றிக் கூறமுடியுமா?
சரத் சந்திரா: மனமே என்னும் நாடகம் புத்தசமய ஜாதக கதை ஒன்றுக்கு புதுவடிவம் கொடுக்கிறது. மனமே என்று அழைக்கப்படும் பெனாறஸ் நாட்டு இளவரசன் ரக்சிலாவில் கல்வி பயின்று வருகிறான். அவனுடைய குரு தனது மகளை அவனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார். அவர்களும் ஒருவர் ஒருவரை விரும்புகின்றனர். இருவருமாக பெனாறஸ் நாட்டுக்குக் காட்டின் ஊடாகத் திரும்புகையில், வேட்டுவர்கள், இருவரையும் சிறைப்பிடிக்கிறார்கள். உயிருடன் அரண்மனை செல்ல விரும்பினால் இளவரசனது காதலியைத் தன்னுடன் விட்டுச் செல்லுமாறு வேட்டுவத்தலைவன் நிபந்தனை விதிக்கிறான். அதை ஏற்காத மனமே தன் மானத்தைக் காக்க வேட்டுவர் தலைவனுடன் போரிடுகிறான், விற்போர் முடிந்து மற்போரில் வேடனை இளவரசன் மடக்குகிறான். அவனைக் கொல்ல வாள் தரும்படி மனைவியிடம் கூறுகிறான், அவளோ, எதிரிக்கு உயிர்ப்பிச்சை அளிக்குமாறு கெஞ்சிக் கேட்கிருள். மனம் தடுமாறிய மனமேயின் கைகள் எதிரியை அழுத்திப்பற்றிய பிடியை விட, வேட்டுவர் தலைவன் இளவரசியின் கையிலிருந்த வாளை உருவி மனமேயைக் கொன்று விடுகிறான். அதன் பின் இளவரசியைத் தனக் காக்கிக் கொள்ளுகிறான். அவளோ, தனக்கு வேட்டுவர் தலைன்மேல் எழுந்த காதலினால்தான் இளவரசனுக்கு வாளைக் கொடுக்கவில்லை என உள்ளந்திறந்து சொல்கிறாள். அவளது துரோகத்தை வெறுத்த
2

4.
வேட்டுவ அரசன் அவளைக் காட்டில் இறக்கவிட்டுச் செல்கிறான். மனமே ஒரு கவிதை நாடகம். உரைஞர் மூலமும் பாடகர் குழாம் மூலமும் கதைநகர்ந்து செல்கின்றது. மனித வாழ்வின் மாறிடும் தன்மை, மனிதத்தின் பலவீனம் முதலியவை நாடகத்தில் அழுத்தம் பெறுகின்றன. ஓர் இளவரசியின் வாழ்வின் மூலம் மனிதரின் வாழ்வும் அதன் போராட்டங்களும், விருப்பு வெறுப்புக்களும், வாழ்வில் ஒவ்வொருவர் எடுக்கும் தீர்மானங்கள் முதலியவையெல்லாம் சுட்டிக் காட்டப்படுகின்றன. நாடக இறுதியில் உரைஞன் கூறுகிறான்:
கதறியழும் இளவரசியை கானகத்தில் தவிக்கவிட்டான் காட்டரசன். அவளும் மனமுடைந்தாள். வருத்தமுற்றாள்; அதனால் அவள் நெஞ்சம் மார்பில் பிளந்தது அவள் இறந்தாள். இப் பழங்கதையைக் கேட்டால் இந்தச் சபையில் உள்ள இரக்கம் எழும் பெரியோரே! நாம் பிழை செய்திருப்பின் அன்புடன் பொறுக்க. கோபம் வேண்டாம். உள்ளத்தின் களங்கமற்ற இரக்கம் உங்களை ஆட்கொள்ளட்டும். *
அடுத்து, சிங்கபாகுவின் கதை சிங்கள மக்களுடைய பூர்வீகத்தோற்றத்தைக் கூ ம் புனைமத்தைக் கருவாகக் கொண்டது. வங்க இளவரசியைச் சிங்கம் ஒன்று கண்டு, காதல் கொண்டு, தூக்கிச் சென்று, இரு குழந்தைகளின் தாயாக்குகிறது . சிங்கபாகு (சிங்கத்தின் கை) ஆண் மகனின் பெயர், சிங்கசீவலி பெண்மகள் பெயர். பதினாறு வயது வந்ததும், சிங்கபாகு தனது குடும்பத்தின் வரலாறு கேட்டு, வங்க நாட்டு அரண்மனைக்குத் தப்பிச் செல்லத் தாயை அழைக்கிறான். அங்கிருந்து தப்புவது கடினம். சிங்கம், குகையை விட்டுச் செல்லும் போது அதை ஒரு பெரிய பாறாங்கல்லினால் மூடிவிட்டே வெளியேறும் எனத் தாய் கூறுகிறாள். ஒரு நாள் சிங்கபாகு குகையின் கல்லை அகற்றிவிட்டுத் தாயை ஒரு கையிலும், தங்கையை மறுகையிலும் தூக்கிக் கொண்டு தப்பி ஓடுகிறான், இரை தேடிவிட்டுத் திரும்பிய சிங்கம், குகையில் யாரும் இல்லாததைக் கண்டு,

Page 29
கவலை கொண்டு உணவின்றி வாடியது. சீற்றங் கொண்டு, கிராமங்களுக்குத் தேடிச் சென்று அழிவுகளை ஏற்படுத்தியது. வங்கநாட்டு அரசன் அச் சிங்கத்தைக் கொல்பவர்களுக்குப் பரிசு வழங்குவதாகக் கூறியும் யாரும் அதனுடன் முட்டி மோத முன் வரவில்லை. தகப்பல்னக் கொல்ல எத்தனித்த சிங்கபாகுவை, அவனின் தாய் இருமுறை தடுத்தும், இறுதியில் தனது தந்தையாகிய சிங்கத்தை எதிர் கொள்ளச் செல்கின்றான் இளைஞன். அம்பை எய்தான். மகனின் பாசம் மேலிட்டு நின்ற சிங்கத்தின் உயிர் தப்பியது. வேகமாகச் சென்ற அம்பு சிங்கத்தின் சடையில் பட்டுத் தீங்கிழைக்காது நிலத்தில் விழுந்தது. மூன்று முறை இப்படி நிகழ, சிங்கம்சினம் கொண்டது. அடுத்து எய்யப்பட்ட அம்பு சிங்கத்தின் உயிரைப் பறித்தது. வெற்றி கண்ட இளவரசன் சிங்கபாகு, சிங்கபுரம் என்னும் நகரைக் கட்டி எழுப்பினான்; தங்கையை மணம் முடித்தான். அவர்கள் இருவருக்கும் பிறந்தவன் தான் விஜயன்,
இந்நாடகத்தில் தொனிக்கும் ஒரு சில கருத்துக்கள்: பழமை / மிருகம், புதுமை / மனிதன் - இவைகளுக்கிடையில் நடப்பது ஒரு போராட்டம், மகன்மேல் வைத்த அன்பு சிங்கத்தை மனித நேயக் கணிவுள்ள உயிராக மாற்றி, மிருகம் / மனிதன் என்ற பாகுபாட்டை உடைத்தெறியச் செய்கிறது. அன்புக் கவசம் உண்டானால் ஆயிரமாயிரம் அம்புகள் பொழியப்படினும் ஆபத்து நேராது. அன்பு மறையும் போது தான் அழிக்கும் மிருகமாகச் சிங்கம் மாறுகிறது. அன்பு மாறிக் கோபம் எழுவது, மாறி மாறித் தோன்றும் மனித உணர்ச்சிகளுக்கு ஒர் எடுத்துக் காட்டு, இவ்விருநாடகங்களிலும் எல்லாச் சமய நெறிகளுக்கும் பொதுவான ஓர் உண்மை வலியுறுத்தப்படுகிறது. இயற்கைக்கு மேலாக ஓர் அற்புத சக்தி உள்ளது அதுவே முதன்மையானது. *
அரங்க வலைகள்: உங்கள் ஒவ்வொருவரிடமும் ஓர் இறுதிக் கேள்வி. மேயர்ஹோல்ட் அவர்களே, நாடக அரங்கியல் துறையில் உங்கள் சாதனை எதுவென எண்ணுகிறீர்கள்?
மேயர்ஹோல்ட் "அவர் (மேயர்ஹோல்ட்) மேடையின் மறைவரிசை மின்விளக்குகளைத் தகர்த்தது மட்டுமல்ல,

திரைகளைக் கிழித்தது மட்டுமல்ல, வாழ்விலிருந்து அரங்கைப் பிரிக்கும் எல்லையையும் இல்லாமல் ஆக்கிவிட்டார்” என்று கொளின்ற்செவ் என்னைப் பற்றிக் கூறியது உண்மையா இல்லையா என்று நீங்கள் தான் கூற வேண்டும். *
அரங்கவலைகள்: ப்றெ..ற் அவர்களே, உங்களது அரங்கியற் கொள்கைகளால் எத்தகைய மாற்றங்கள்
ஏற்பட்டன என எண்ணுகிறீர்கள்?
ப்றெஃற். இந்நூற்றாண்டின் பிற்கூறுகளில் நாடகத்
துறையில் பல மட்டங்களில் எனது கருத்துக்கள்
5
மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதைப் பலரும் ஏற்றுக் கொள்ளுகிறார்கள். எனது எதிரிகள் முதலாக அதை ஏற்பர். பாத்திரப்படைப்பில் நிகழ்ந்த சில மாற்றங்கள்: கதாநாயகன் முரண்பட்ட பண்புகளும் மாறுகின்ற போக்கும் உடையவனாகச் சித்தரிக்கப்படல், அவனின் தனிமனிதத்தன்மையை சமூக சூழலின் ஒரு வெளிப்பாடாகக் காட்டல், தனிமனிதனுடைய உள்ளம் சார் உணர்ச்சிகளுக்கு முதன்மை கொடாது சமூக சூழ்நிலைக்கு முதன்மை வழங்குவது, கதை எவ்வாறு முடியப் போகின்றது என்பதை அறிந்து கொள்ள எழும் தூண்டுதலைத் தவிர்த்து, அது எவ்வாறு நகர்ந்து செல்லுகின்றது என்பதில் கவனம் செலுத்துவது. மேலும், காட்சி அமைப்பில் தேவையான பொருட்களை மட்டும் பயன்படுத்தி, அவைகளும் ஒரு “மொழி” கொண்டுள்ளவை என்பதைக் காட்டுதல், நெறியாளரும் நடிகரும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் விமர்சித்துப் பழக்கப்பட்ட பழையதைக்களைந்து புதியவைகளைப் புகுத்துதல், நடிகருக்கும் பார்வையாளருக்கும் இடையில் நெருங்கிய உறவை ஏற்படுத்தல், புரட்சி அரங்கில் பார்வையாளரையும், நடிகரையும் பிரிக்கும் கோட்டை முற்றாக அழித்தல், பார்வையாளரை குணம் குற்றம் நாடிச் சீர் தூக்கிப் பார்க்கும் விமர்சனக் கண்ணோட்டத்திற்குக் கொண்டு வருதல், இவை போன்ற மாற்றங்களுக்கு ப்றெ..ற்றிசமும் காரணியாக இருந்தது என எண்ணுகிறேன். *
அரங்கவலைகள்: ப்றூக் அவர்களே! அரங்கைப் பற்றி நீங்கள். . .

Page 30
ப்றூக் கலை மனிதனுக்கும், சமூகத்துக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டுமெனின், அது மனிதனைச் செயலில் ஈடுபடவைப்பதற்கு உந்து சக்தியாக இருக்க வேண்டும். ஆற்றுகையின் வேளையிற்றான் நாடக அரங்கியற் கலையின் நல்ல அல்லது நல்லது அல்லாத பயன் நடைமுறையாகிகணிகிறது. அரங்கு உயிருள்ளதாக மாறவேண்டுமானால், நடிகனின் நடிப்பு மூலம் அவன் படம் பிடித்துக் காட்டும் அனுபவங்களைப் பார்ப்பவர்கள் ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும். நடிகன் என்ற சிறுவட்டத்துத் தனிமனிதன் தன்னையும் விஞ்சிய மேடைப் படிமத்தைப் படைக்கவேண்டியவன், அவன் உயர்ந்த மனிதனை மேடையில் நடமாடவைக்க வேண்டியவன். அதற்காக அவன் இடைவிடாது தனக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்க வேண்டும். பார்வையாளர்கள் தங்களை மறந்து அவர்களை இன்னுமோர் உலகத்திற்குக் கூட்டிச் செல்லும் அரங்கு வேண்டாம். இந்த உலகிலேயே முழுமையாக வாழ வழிகாட்டித் துணைசெய்யும் அரங்கே வேண்டும். ஆற்றுகை என்பது சிறப்புப் பயிற்சி பெற்ற நடிகருக்கும் அப்பயிற்சி பெறாத பார்வையாளருக்கும் இடையில் நிகழும் உயிரூட்டமான சந்திப்பு. நடிகரும், பார்வையாளரும் சந்திக்கும் போதுதான் அரங்கின் இருப்புக்குப் பொருள் கிட்டுகிறது. *
அரங்கவலைகள்: , சரத்சந்திர அவர்களே! நாடக அரங்கியலாளருக்கு நீங்கள் ஏதாவது கூற விரும்பு கிறீர்களா?
சரத் சந்திர "மனமே", "சிங்கபாகு" போன்ற
நாடகங்களை இலங்கைத் தேசிய உணர்வு வலுப்
பெற்றிருந்த காலத்தில் படைத்தேன். அவைகளை ஒரு வகையில் காலத்தின் கண்ணாடிகளாகவும்
கணிக்கலாம். எனது வாழ்வின் இறுதிக் காலத்தில்,
இலங்கை உள்நாட்டுப் போரினால் பாதிக்கப் பட்டு
யுத்தக் கருமுகில்கள் தோன்றி இரத்த இடி
முழக்கங்களும் கேட்ட போது, அமைதி - புரிந்துணர்வு
- மானிட இணக்கம் போன்ற செய்திகளை வெளிக்
கொணர திருமறைக்கலாமன்றம் அரங்கேற்றிய
வார்த்தைகளற்ற புதுவகை நாடகங்களில் எனது
குழுவினரையும் கலந்து கொள்ள வைத்தேன்.
காலத்தின் தேவைகளை உணர்ந்து, சமூக உணர்வுடன்
இன மத மொழி பேதமின்றி முகிழும் படைப்புக்கள்தான் உயிரோட்டமானவை.

6
என எண்ணுகிறேன். மேடை ஆற்றுகைகள் மூலம்
அமைதியின் செய்தியைத் திருமறைக் கலாமன்றக்
கலைஞருடன் சேர்ந்து வெளியிட நேர்ந்ததை நான்
தற்செயல் என்று கருதவில்லை. இத்தகைய முயற்சிகள்
மேலும் தொடர வேண்டும்.
அரங்கவலைகள்: அனைவர்க்கும் நன்றி.
20,
21.
22.
அடிக்குறிப்புகள்
றிச்சட் ட்றெயின் (பதிப்பாசிரியர்) ருவென்ரியெத் செஞ்சரி
தியேட்டர் (1995) பக். 243,
எட்வட் ப்றவுண்,
மேயர்ஹோல்ட் (1995) பக். 7,9,10
மாட்டின் எஸ்லின்,
ப்றெ..ற். ஏ சொய்ஸ் ஒவ் ஈவில் (1984) பக். 13-14
அதே நூல், பக். 13.
பீற்றர் ப்றூக், தி எம்ரி ஸ்பேஸ் (1990) பக், 31-32.
அதே நூல், பக். 44.
மைக்கேல் ஹக்ஸ்லி, நோஎல் விற்ஸ் (பதிப்பாசிரியர்) தருவென்ரியெத்
செஞ்சரி பேர்வோமன்ஸ் ரீடர் (1996) பக். 13. பேர்ஸி கொளின் தொமே, ஆஷ்லி ஹல்ப்பே ஹொனறிங் ஈ எவ்
சி லுடொவைக் (1984) பக். 54-55.
,59 .நூல் , us ریش) و
பீற்றர் ப்றூக், த ஷிவ்ரிங் பொயின்ற் (1994) பக். 22, 48. ஜீன் ஏ. ப்ளங்கா ( பதிப்பசிரியர்) அன்ரொனின் ஆர்த்தோ அன்ட்
த மொடேண் தியேட்டர் (198. பக், 185, ஜேன் றஸ்ஸெல் ரெய்லர்,
டிக்ஷனறி ஒவ் த தியேட்டர் (1993) பக். 16/17,
எட்வட் ப்றவுண்இ மே. சு. பக். 33,35.
அதே நூல், பக். 37.
அதே நூல், பக். 38.
அதே நூல், பக். 40 - 41.
அதே நூல், பக், 51.
அதே நூல், பக். 173, 174,
றிச்சட் ட்றெயின், மே e. பக், 30.
பீற்றர் தொம்சன், க்ளென்டீர் சக்ஸ்(பதிப்பாசிரியர்) த கேம்ரிட்ஜி
கொம்பானியன் ரு ப்றெற் (1994) பக், 653,
அதே நூல், பக். 195.
அதே நூல், பக்கம்.
அதே நூல், பக். 197,

Page 31
汇 且 佳 è 留 五
ஜெனோவா
 


Page 32
கலைப்பாலம் 1997 øE
பல்லினக் கலை நிகழ்ச்சிகள்
ஜோன் டீ சில்வா மண்டபம்
17-08-97
 
 
 


Page 33
23.
24.
25,
26
27,
28.
29.
30
ஜோன் வில்லெற், பேர்த்தோல்ட் ப்றெ..ற், ப்றெ..ற்ஒன் தியேட்டர், (1996) பக் 136-141.
பீற்றர் தொம்சன், க்ளென்டீர் சக்ஸ், பக். 187-191. பீற்றர் தொம்சன், க்ளென்டீர் சக்ஸ், மே. சு. பக். 189. பீற்றர் ப்றுக் த ஷிவ்ரிங் பொயின்ற், பக். 129. பேர்ஸி கொளின் தொ மே, ஆஷ்லி ஹல்ப, மே. சு. பக். 105-108
எட்வட் ப்றவுண், மே, சு. பக். 312
பீற்றர் தொம்சன், க்ளென்டீர் சக்ஸ், பக். 27-284,
பீற்றர் ப்றூக், த ஷிவ்ரிங் பொயின்ற் பக். 233-236,
என் நாட்களி
 

கடந்த இரண்டு கலைமுகம் இதழ்களிலும் “அரங்கவலைகளில்” டாறியோவோ என்னும் இத்தாலிய நாடகாசிரியரைப்பற்றிய கட்டுரைகள் வெளிவந்திருந்தன. அவரின் இலக்கியப் பணியைப் பாராட்டும் முகமாக இவ்வாண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அவருக்கு கிடைத்துள்ளது. தமக்குக்கிடைத்த பணத்தை ஏழைகளுக்கு நன்கொடை 6ց նա அவர் முன் வந்திருப்பது குறிப்பிடத் தக்கது.
ன் நகர்வுகள்
பிரதீபன் -

Page 34
----------
அறவு துன்பத்தின்
ജ_Dഖ
6T6র্তা 0; வாழ்ந்து காட்டிய
9(D
ഖഖb
பாவிகளை
அல்ல பரதேசிகளை தேடி சேரி வரை சென்றவள் செத்து மடியும் வரை அதன்
தொழு நோயாளரை தொட்ட அவள் கரங்களை இன்று தொழுவதற்கு துடிக்கும் 鄒 錢
பக்தர்கள்
ஏராளம்.
2
 
 
 

வேதாகமத்தை நெஞ்சிலும் வேதனையுறுவோரை S. கையிலும் தாங்கி போதனை இன்றியே சாதனை புரிந்தவள்
செந்நிற புரட்சியை வெண்ணிற ஆடையில் வெற்றி கண்ட மெளன
துறவி
மதம் கொண்டு அலையாது மக்கள் நலம் பேண தவம் பூண்ட தேவ அடியாள்,
புத்தனும் காந்தியம் பிறந்த
பூமி தத்தெடுத்து தந்த தவப்பயன்
ஸ்வி ges - - - - - - - - - - - - - -

Page 35
எதிர் வீட்டுப் பையன் தாலிகட்டிவந்த அந்த மணப்பெண்ணைப் பார்த்ததிலிருந்து காந்தா மாமிக்கு இருப்பே கொள்ளவில்லை. திருமணத்துக்குப் போயிருந்த அவளுக்கு மணக்கோலத்தில் உச்சிராக்கு, ஜடைநாகம், நெற்றிச் சூடிகை, பூ வைத்ததினால்தான் ரதிமாதிரி இருக்கிறாள் என்று எண்ணிக்கொண்டாள். ஆனால் மறுநாள் காலையில் குளித்துவிட்டுக் கூந்தலை விரித்தபடி தலையைத் துவட்டியவாறு வாசலுக்கு வந்துபோன அந்தப் பெண்ணைப் பார்த்துக் காந்தாமாமியே ஒரு கணம் தன்னை மறந்து சொக்கிப்போனாள். அவள் வீட்டுச் சுவரில் தொங்கிய ரவிவர்மா வரைந்த மோகினிப்பெண்ணின் படத்தைவிட "எழிலாக இருந்தாள். உண்மையில் அவள் அழகுக்கு இலக்கணம்தான்.
காந்தா மாமிக்குப் பீத்திக்கொள்வது ஒரு "பெஷன்" ஏன் பிறவிக்குணம் என்று கூடச் சொல்லலாம். தன்னைவிட யாரும் எதிலும் இம்மியும் உயர்ந்திருப்பது அவளுக்கு அறவே பிடிக்காத ஒன்று. சமயத்துக்கு ஏற்றமாதிரிப் பேசி விஷயத்தை வளைத்துப்போட்டுச் சந்தர்ப்பம் பார்த்துக் குட்டுப்போட்டு எப்படியோ ஜெயித்துவிடுவாள்.
சாத்தூரில் மகன் கட்டிய பெண்ணை, அதாவது தன்மருமகள் சாருலதாவை வாய்க்குவாய் மெச்சியபடியே இருந்தாள். தன் மருமகளின் பெயர் லட்சுமி, சுந்தரி, காமாட்சி என்றில்லாமல் சாருலதா என்று சினிமா நட்சத்திரப் பாணியில் பெயர் அமைந்திருந்தது அவளுக்கு ஏதோ ஒரு பெருமிதமாகவே இருந்தது. ஒருவேளை தன் பக்கத்தில் மகனின் மனை இல்லாததால் இந்த சுபாவம் ஏற்பட்டதோ என்னவோ?
பக்கத்து வீட்டுப் பெண்ணோடு தன் மருமகள் சாருலதா அழகில் கம்மிதான் என்பதை அவள் மனச்சாட்சியே ஒத்துக் கொண்டது. இருந்தாலும் ஏதோ ஒருவகையில் தன் மருமகளைவிட ஒரு மார்க்' குறைந்தவளாக இருக்கவேண்டும் என்பது அவளுடைய அபிலாஷை.
எப்படியோ அப்படி இப்படியென்று ஒரு வாரம் ஓடிவிட்டது. என்றாலும் காந்தா மாமி அதை கைவிட்டபாடாக இல்லை.
 

இடைக்கிடையே அந்த வீட்டுக்குப் போய்வந்த காந்தா மாமிக்கு ஒரு "க்ளு' கிடைத்துவிட்டது.
அந்தப் பெண் அட்வான்ஸ் லெவல் மட்டுமே படித்திருந்தாள். ஆனால் அவளுடைய மருமகள் சாருலதாவோ பி. ஏ. படித்தவள். அப்ப்.ப.ா அவளுக்கு மனம் பூரித்துப்போய்விட்டது. என்றாலும் அத்தோடு திருப்திப்பட்டு விடவில்லை.
தன் மருமகள் சாருலதா அந்தப் புதுப் பெண்ணைவிடக் கூட படித்தவள், கெட்டிக்காரி என்பதை அந்தப் பெண்ணிடமே சொல்லிவிடத் துடியாய்த் துடித்தாள். தன்னந்தனியாக இருக்கும் நேரங்காலம் பார்த்துக் காதில்போடவேண்டும் என்பது அவளுடைய திட்டம்.
புதுப்பெண்ணின் அத்தை எங்கேயோ கல்யாணம் என்று பட்டுச்சேலை உடுத்திக் கொண்டு போய்விட்டார். அந்தப் பெண் மட்டுந்தான் தன்னந்தனியாக இருந்தாள். இதையறிந்த காந்தா மாமிக்கு சமயத்தை நழுவவிட அறவே மனமில்லை. கல்யாண அல்பத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
“என்னம்மா உங்க அத்தை வெளியே போயிருக் காங்களா? "என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தாள் காந்தா மாமி.
சஞ்சிகையும் கையுமாக இருந்த அந்தப் பெண் எழுந்து "வாங்க மாமி உட்காருங்கள்” என்றபடியே சோபாவைச் சுட்டிக்காட்டினாள்.
சோபாவில் உட்கார்ந்த காந்தாமாமி “என் மகன்வூட்டுக் கல்யாண ஆல்பத்தைப்பார்க்கல இல்ல. அதக் காட்டலாம்னு வந்தேன்” சொல்லியபடியே அந்தப் பெண்ணின் கையில் அல்பத்தைக் கொடுத்தாள். அல்பத்தைக் கையில் வாங்கியவள் அப்படியே பக்கத்தில் வைத்துவிட்டு “இருங்க மாமி” என்று கூறி உள்ளே போய் பிஸ்கட்டுகளை ஒரு தட்டில் வைத்து சாப்பிடச் சொன்னாள். புதுப் பெண் அல்பத்தைத் திருப்பினாள்.
“எம் மருமக பி. ஏ. படித்தவள். படிப்பில் மகாகெட்டிக்காரி" - காந்தா மாமி கம்பீரமான குரலில் பெருமை தொனிக்கச் சொன்னாள்.

Page 36
அல்பத்தைத் திருப்பிய பெண்ணின் முகத்தில், கண்களில் ஒரு வியப்பு.
தான் சொன்னவார்த்தைதான் சுள்ளென்று பட்டு முகத்தில் அப்படி ஒரு பாவத்தை உருவாக்கிவிட்டதோ என்று காந்தா மாமி நினைத்து உள்ளூர ஆனந்த மயமானாள் .
அல்பம் ஒவ்வொரு பக்கமாகத் திருப்பப் பட்டுக் கொண்டிருந்தது.
“எம் மருமக குடும்பம் கொழும்பிலதான் இருந்தது.
83 கலவரத்தோட இந்தியாவுக்குப் போனாங்க, அங்கேதான் பி. ஏ. படித்தாள். படிப்புவகையில் கெட்டிக்காரின்னா கெட்டிக்காரிதான். காலேஜிலே நல்ல பேரு. கல்யாணப்பத்திரிகையிலஅவ பட்டத்தைக் கூடப்போட்டிருக்கு”.
"அப்படியா மாமி’ என்று சொன்னவள் பார்த்து முடித்த அல்பத்தை அவளிடம் கொடுத்தாள்.
"இருங்க டீ குடிச்சிட்டுப் போங்கள்” - உள்ளே போனாள்
எதைச் சொல் விட வேண்டு மென்று நினைத்தாளோ அதைச் சொல்லிவிட்ட பூரிப்பு - மனநிறைவு.
டீ கொண்டு வந்த அந்தப் பெண் “குடிங்க” என்று கூறிவிட்டு ‘மாமி இந்த அல்பத்தைப் பாத்தீங்களா? நாங்க பள்ளிக் கூடகாலத்தில பிடித்தது. ஆறாம் வகுப்புப் படிக்கிற காலத்தில் நாங்க பிடித்த படம் மாமி, இந்த படத்தை நல்லா பாருங்க மாமி உங்களுக்குத் தெரிந்த ஒரு பொண்ணு இருக்கு”.
யாழ்மண்ணில் தற்போது இயங்கும் சிறுவர் கலைக்கூடம். திருமறைக் கலாமன்றம்
திறந்தவெளி
 

“யாரு நீ தானே” “இல்ல மாமி. உங்க, சாருலதா” “என்ன எம் மருமக சாருலதாவா’? - அதிர்ச்சி
"ஆமா. எம் பக்கத்திலதான் நிற்கிறா. நல்லா பாருங்க”
காந்தா மாமி அகலக்கண்களைத் திறந்தபடி பார்த்தாள். அவளேதான் - சாருலதாவேதான்.
"நீயும் எம்மருமகளும் ஒன்னாத்தான் படிச்சீங்களா” - குரலில் தொய்வு
"ஆமாம் மாமி. இந்த ரிப்போர்ட்டைப் பாருங்க. இது என் ரிப்போர்ட்”.
"ஏம்மா இந்த ரிப்போர்ட் டை இன்னமும் வச்சிருக்கே”. -
“எனக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்குக் காட்டத்தான். படிக்கும் காலத்தில் நான்தான் கிளாஸ்ல பஸ்ட்முதலாம் பிள்ளை, அம்மாவே முதலாம்பிள்ளையா வந்தா நாம் செக்கன்ட் ஆகலாமா, அப்படின்னு பிள்ளைகள் நினைக்கமாட்டாங்களா? அதற்குத்தான். ரிப்போர்ட்டைப் பாருங்க. எம் மார்க்ஸ் எப்படின்னு’?
“வேண்டாம்மா, நீதான் முதலாம் பிள்ளைன்னு சொல்லிட்டியே. அதற்கு மேலே பார்க்கணுமா” ಟ್ಲಿ கொண்டிருந்த டீயில் பாதி அப்படியே
தமாகிவிட்டது.
"நான் இப்பதாம்மா மீதியிருந்த காப்பியைக் குடிச்சிட்டு வந்தேன்” - டம்ளரை அப்படியே வைத்தாள். அல்பத்தோடு கிளம்பிவிட்டாள்.
வந்த வேகத்திலேயே க்ளின் போல்ட் ஆன கிரிக்கட் ஆட்டக்காரனைப் போல் காந்தாமாமியின் முகம் ஆனது.

Page 37
"தர்மம் தலைகாக்கும் எண்டு சொல்லப்போறியள். இப்ப அதுதானே
எங்களக் காக்கப் போகுது”
அந்தப் பிச்சைக்காரன் இந்த வீட்டிற்கு வரத் தவறுவது இல்லைத்தான். தந்தை ஒதுக்கி வைத்த சில்லறைகள் அவனுக்கெனக் காத்திருக்கும். மூத்தவளின் முணுமுணுப்புக்கும் பற்கடிப்புக்கும் மத்தியில், , .
 
 
 

“சீ. சீ. இதென்ன வீடா?.
yy
சந்தையா?.
தாயைற்பறிகொடுத்து விட்ட குடும்பமிது. சேய்களின் முரண்பாட்டு இறுக்கங்களோடு நாட்களின் நகர்வுகள். உத்தியோகத்தில் ஒய்வு பெற்று விட்டாலும், அந்தத் தந்தைக்கு வீட்டிலே இல்லையே ஒய்வு.
“வாங்கித்தாறன் பெஞ்சன் வரட்டும்"
வெளிநாட்டு மோகத்தில் மூத்த மகன், கொம்பியூட்டர் படிக்கும் நாகரீகத்தில் இளையவன், காற்சட்டை துணி கேட்டு அடம் பிடிக்கும் கடைக்குட்டி, ரியூசன் காசிற்கு சிணுங்கும் செல்வி. எல்லாவற்றிற்கும் பெஞ்சன் திகதி தவணை கொடுத்துவிடும்.

Page 38
“பயணம் பேர்கேக்க புறத்தால்
கூப்பிடாதீங்க அப்பா"
“தம்பியவை நீங்கள் இப்படி வீட்டை விட்டு போனால் தங்கச்சிமாரைப் பாக்கிறது யாரு...?”
“அவையள இவையளப் பாக்கவா எங்களப் பெத்தனிங்க?, , , நாங்க இப்ப எங்களப் பாக்க வேணும்"
‘எங்கே போகிறார்கள் இவர்கள்?. திரும்பி
வருவார்களா?
 
 
 

"நான் அவசரமாய்ப்போறன். பின்னுக்குத்
தம்பி வாறான் கேளுங்க”
இத்தனை வருடமாக மாடாக உழைத்த பாசமுள்ள தந்தைக்கு கேவலம் ஒரு மூக்குப் பொடி வாங்கித்தர எவருக்குமே நேரமில்லையோ?. . . 'தம்பியிட்டச் சொல்லுங்க” இது ஒருவன் கேட்காததுபோலவே போகிறான். அடுத்தவன்.
சின்னவன் மட்டுமென்ன. . . .
“உங்கள ஆரு கிணத்தடிக்குப் போகச்
சொன்னது?
முப்பத்து ஐந்து வருடத்து ஓய்வில்லா உழைப்பின் M முடிவில் சோர்ந்து போய் விட்ட உடல் , முதுமையின் கோடுகள் படிந்து விட்ட முகத்தில் எனோ வேதனையின் தழும்புகளும் கூடவே . . . கிணற்றடியிலா வழுக்கினார்?. . . ஏன், மனமும்
¢ பலவீனப்பட்டு விட்டதோ?

Page 39
“டேய் சின்னவன். ஏன்ரா இப்பிடிச்
செய்திட்டாய்?.
"அவன் G8 Lu T T T L ü போறானாம்” கத்துகிறாள்.அக்கா, ஏங்குகிறாள் சின்னக்கா, நெஞ்சே வெடித்து விடும் போலுள்ளது. தந்தைக்கு. நேற்று வரை குழந்தைத் தனமாக ஒடியாடித் திரிந்தவன். எப்படிப் பொறுக்கும் நெஞ்சு?.
 
 
 

“lust gFGDITP... இது என்ன நேசமோ?
என்ன ஒட்டுறவு, எத்தனை பிரியம். இவன் கடைக்குட்டி அல்லவா? செல்லம் கொஞ்சிக் | கொண்டு திரியும் பருவ மிது. வேதனைகளுக்குள்ளும் அந்த வயோதிப ஆல மரத்தின் சிறு புன்னகைக்கு இன்று இவன் தான் ஒரு ஆதரவு போலும்.
“அவன்ர திமிரப்பாத்தீங்களாப்பா? நீங்க ஒரு நாளைக்குக் குடுக்காட்டி அவன்
எதையாவது துரக்குவான்".
அவன் ஏன் வாங்க மறுக்கிறான்?. மானமுள்ள பிச்சைக்காரன் போலும். வழமையாகவே முணு முணுக்கும் அவளிடம் அன்றி தந்தையிடமே வாங்குவேன் என்று அடம் பிடிக்கிறான். என்ன
விசித்திரமானவன் இவன்,

Page 40
“ என்ர அளுசு பிள்ளையஞரும் ஒண்டா நிண்டு சண்ட பிடிக்கேக்கையும் ஒரு சந்தோசம் ”
ஏன் இந்தத் தனிமை? எதற்கு இந்தக் கொடுமை?. காவோலை என்பதாலா?, உறவென்று சொல்வதற்கோ மனிதரில்லை, இங்கு தனிமராகி அழும் நிலை இதுவோ? பெற்றது யாவும் கை
விட்டுப்போனபின்னே நெஞ்சுக்குள்ளே சாடும் ” நிலை இதுவோ?
ust 60) D.5 இந்தப்பத போய் வி
 
 
 
 

95 - ஐப்பசி 30. . .
“இரண்டு கிழமையில வருவீங்கதானே?.
ஊரே ஒடுகின்றது இராணுவத்தின் பிடியில் இருந்து தப்புவதற்காக இந்த 95ன் ஐப்பசி 30ல், நடக்க முடியாத வயோதிபத் தந்தை. இளமைப் பொலிவில் பூத்திருக்கும் பெண் பிள்ளைகள். கற்புக்கு வந்த சோதனையோ இது . . . போக வேண்டிய நிற்பந்தம். ஒரு பிரிவின் ஒப்பந்தம் இங்கு கைச்சாத்தாகிறது. Y−
பவளம் 1 பவளம் !!
"பவளமும் போய்ற்றாள் போல”
தேடுகிறார்? அடுத்த வீட்டுப் பவளத்தையா? ஏன் ட்டம், எதற்கு இந்த ஆதங்கம். ஒ1. பவளமும் ட்டாளா? உதவி என்று இருந்தவளும் இன்று.

Page 41
முடிந்து விட்டது ஒரு ஆல மரத்தின்கதை, விழுதுகள் இல்லாமலேயே சரிந்துவிட்டது அது இறுதி மூச்சுக்களில் எத்தனை, எத்தனை நினைவுகள் வந்து போயிருக்குமோ. மனைவி. பிள்ளைகள் . . . நெஞ்சுகள் கல்லான பிள்ளைகளால் துயர்
கொண்டது போதுமென்று போனாயோ...?
"சாகாத மனிதம்" ற்கு உயிர் கொடுத்த க6ை
இது ஒரு திரு மறைக்
 
 
 

“88шпт!.... 33шп!... 83.... шп...”
மண் வெட்டியும் கையுமாக கல்லறை மேட்டுக்கா இவன் புறப்பாடு? ஊழைச் சதைகளுக்குள் இயங்கும் இதயம் கணக்கிறது. யார் இவன்? இவனுக்கு என்ன உறவு? எங்கிருந்தோ வந்து அன்பு கொண்டு
நின்று உள் ளத்தினால் வேகும் சாகா மானிடமிதோ!.
எழுத்துரு வாக்கம் P. S. அல்பிறட் இசையமைப்பு: M. ஜேசுதாசன்
தடே/ல7: P. ஜெகதீஷ்
உதவி நெறியாள்கை: M. சாம் பிரதீபன் ஆலோசனை: J. ஜோண்சன் ராஜ்குமார்
நெறியாள்கை: G. P. பேர்மினஸ்
மேற்பார்வை பேராசிரியர் நீ. மரியசேவியர் -- அடிகள்
ஞர்கள்
தலா மன்றத் தயாரிப்பு
5

Page 42
தத்துவக் கவி (த்) தைகள்
காலிலே அடிபட்டால் கண்கள் ஏன் அழுகின்றன?
لإك
காயத்தினால் ஏற்பட்ட கவலையினால் அல்ல
ஒரே காயத்திலே இணைந்துவிட்ட கருணையினால்,
கண்ணீரிலும் வியர்வையிலும் ஏன் உப்புக் கரிக்கிறது?
ஒன்று உள்ளத்தையும் மற்றது உடலையும் உருக்கிக் கொண்டு வருவதால்,
கண்கள் அழும் போது கண்ணீர் அதன் சாட்சி
நம்பிக்கை மரம்
நேற்றைய இழப்புக்களை யெல்லாம் எண்ணி - எண்ணி நெக்குருகி
இன்றைய பொழுதுகளை யெல்லாம் இரவுகளாக்கி
நீயேன்
இடிந்து போகிறாய்?
.ങ്ങ് கனவுகள் கூடக் கண்ணீரிலேயே
நீர்கொழும்.

மனம் அழும் போது . . . . . மெளனம் அதன் சாட்சி.
மலர்கள் மரத்தைச் சுமந்தால் 은의 나 60L)·
மானுடப் பிஞ்சுகள் வாழ்க்கையைச் சுமந்தால்...? அது வறுமை.
இதயப் பாறைகளிலே சுகங்களை விட சோகங்கள் மட்டும் ஏன் துல்லியமாய்ப் பொறிகிறது. . . . .
நினைக்க வேண்டியதை மறந்து விட்டு மறக்க வேண்டியதையே மனங்கள் நினைத்து மாய்வதால்,
ஆத்மாவின் ராகங்களில் அழுகுரல்கள்
கேட்கா விட்டால். . . . .
ஆண்டவனின் - முகவரியைக் கூட மானுடம் முழுதாக மறந்து போகும்.
*
உன்னைக் கரைப்பது ஏன்? போதும்! அழுவதை நிறுத்து!
ஆண்டவன் போட்ட பூந் தோட்டத்தில் எங்கோ ஒரு மூலையில்
உன் கைபட்டுக் கூடப் பூத்துக் குலுங்கக் காத்துக் கிடக்கும் ஒரு பூ மரம்.
புறப்படு!
அதைத் தேடி உடனே புறப்படு!
பு: தருமலிங்கம்
36

Page 43
KALA
Publisher
Editor -n - Chief
Co-Editor
Associate Editor
Checking Dept.
Art / Layout
Cover
Typesetting & Printing
 

MUGAM
Tirumarai Kalamanram
Nee. Maria Xavier Adikal
P. S. Alfred
Sam Pradeepan
A. Francis Jenam
A. A. Junaideen
M. . Loshan
A. M. Recilda
S. D. Samy
A. Rasiah
St. Anthony's Printers
கலைப்பாலம்
கண்காட்சி
திருமறைக்கலாமன்ற
வெளியீடுகள்
6-9-1997

Page 44
羲 భ କ୍ଷ{క్లబ్లిళ్ల