கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொடர்பு 1991.12

Page 1
வாழ்க சாந்த
நீதி
CHARLES
வாழ்க
 

தொடர்புகள் シリ
-
த பிரபுவே!
சூரியனே!
WESLEW

Page 2
S. நுகர்வோரின்
6í7 t- u_t tiể
ஆசிரியரிடமிருந்து கிறிஸ்மஸ் பண்டிகையில் குடும் தேவதூதன் பேசிய அந்த இ இயேசுக் கிறிஸ்துவைத் தவிர இ வலது குறைந்தவர்கள் பேரிலும் அருளைப் பெற கவிதை எனது மன்னிப்பை வென்றெடுத் வேதாகமம் பயில்வோம்
கிறிஸ்தவ எழுத்தாளர்களே,
ஆண்டவர் உங்களுக்கு அளித்துவ பகிர்ந்து கொள்ள இதோ ஒரு வாய்ப்பு
* “அவரை விசுவாசியாதவர்கள் வார்கள்? அவரைக் குறித்துக் கேள்விப்ட பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்ப
இவ்வாறு வேதாகமம் கூறுகின்ற, அவருடைய சித்தப்படி உங்களுக்கு அ அனுப்பி வையுங்கள். கட்டுரை - சவிதை ஆக்கங்கள் சுருக்கமானவையாகவும், ெ வாகவும் அமைதல் வேண்டும்.
THODARPU' CHRISTIAN CC
D/RECTOR «mv ReV. R.
EDITOR man Bro. DE LETTERPRESS - ROYAL
19 O - CO
ALL CORRESPONDENCE To:
The Editor -
"DASONS’
90 - A, Kandy ! 25 December, - 1991

வசதிக்காக. . . .
பக்கம்
bப ஜீவியம் ... 3 }ரவு ... 5 இரட்சிப்பு இல்லை ... 7 இயேசு அன்பாயிருக்கிறார் .10
..ll
தவர் . கிறிஸ்மஸ் கதை ... 12
... 5
iள வரங்களை மற்றவர்கள் மத்தியில்
ாப்படி அவரைத் தொழுது கொள்ளு டாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்?
டிக் கேள்விப்படுவார்கள்? -ரோமர் 10:14
து. ஆகவே, ஆன்ம ஈடேற்றத்துக்காக
ருளப்படும் செய்திகளை ஆசிரியருக்கு
- சிறுகதைகள் வரவேற்கப் படும். உங்கள்
தாடர்பின் நோக்கை நிறைவேற்றுவன
- ஆசிரியர்,
MMUNICATIONS
THUR ARAJAH
/ADASON JEYASNGH
PRINTERS ombo Street, Kandy.
THODARPUʼ
Road - Kengalia

Page 3
ஆசி
கிறிஸ்துவுக்குள் ஒன்றில் என்னையும் உங்களையு இயேசுரட்சகரின் இனி
என் வாழ்த்துக்கள் . .
என் அக்கிரமங்களை ( என் நோய்களை யெல் என் பிராணனை அழி கிருபையினாலும் இரக்
நன்மையினால் என் வ
*நீ என் தாசன், நான்
நான் உன்னை வெறுத்
என்பதாக வாக்குத்தத்தம் பண்ணி வரங்களை "தொடர்பு மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள் கருதுகின்றேன்.
*உண்டான தொன்றும் அவராலேயல்லாமல் உ யிருக்கிறபடி இத் தொடர்பும் அவராலேயல்லா பங்காகவும் வகை வகையாகவும் தீர்க்கதரிசிகள் தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமார கொண்டதன் பேரிலேயே இத் தொடர்பும் எம செய்தியைக் குறித்து அனைவரும் களிகூரும் இச் இதழ் மூலம் தனது கன்னிப் பயணத்தைத் தொ
"தானே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இரு *இ பேசுக்கிறிஸ்து ஒருவரால் மட்டுமே இரட்சி அவ. பால் வழி நடத்தும் ஒரு பாலமாக “தெ வெளியீட்டின் குறிக்கோள். அத்தோடு மாதாந்: வேண்டும் என்பதும் எம் அவா.
எனினும் “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே" கூறும் போது அவருடைய சத்தத்துக்குச் செவி ஒப்புவிக்க வேண்டியது எமது கடமையாகும்.
 

ரியரிடமிருந்து.
ணையும் உள்ளங்களே, ம் மீட்டெடுத்த ப நாமத்தில்
வரவேற்புகள்.
யெல்லாம் மன்னித்து லாம் குணமாக்கி வுக்கு விலக்கி மீட்டு கங்களினாலும் என்னை முடிசூட்டி
ாயைத் திருப்தியாக்கி
உன்னைத் தெரிந்து கொண்டேன். ந்து விடவில்லை" (ஏசா. 41:9)
ஈந்தருளிய வல்ல தேவனின் வார்த்தைகளை இத் ளக் கிடைத்தமை எனது பெரும் பாக்கியமென்றே
ண்டாகவில்லை" (யோவான் 1:3) என்று எழுதி மல் ஏற்படவில்லை. பூர்வ காலங்களில் பங்கு
மூலமாய் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றிய ன் மூலமாய் தம்மை வெளிப்படுத்தச் சித்தங் க்குள் ஏற்படுகின்றது. எனவே, அவரின் பிறப்பின் சந்தர்ப்பத்தில் "தொடர்பு" தனது முதலாவது டர்வது எல்லாம் வல்ல இயேசுவின் சித்தமேயாகும்.
க்கிறேன்" - (யோவான் 14: 6) என்று உரைத்த ப்பு உண்டு; ஆதலால், அனைத்து மக்களையும் ாடர்பு அமைய வேண் டு ம்” என்பதே இவ் தம் வெளிவரும் ஒரு “மாசிகை” யாக இது இருக்க
போதித்து நீ நடக்க வேண்டிய வழியிலே உன்னை (ஏசாயா 48; 17) என்று எல்லாம் வல்ல கர்த்தர் கொடுத்து அவருடைய சித்தத்துக்கே இதை

Page 4
ஆகையால் பிரியமானவர்களே, ‘தொடர்பு உங்கள் கரங்களில் வரும்போது அதை
ஆசீர்வாதத்துக்காகவும் வழி நடத்துதலுக்காக கொள்ளுகிறேன்.
*யார் நமது காரியமாய்ப் போவான்" (ஏசாய நாம் என்ன உத்தரவைச் சொல்வோம்? ‘அடியே புரிய என்னை வழிநடத்தும்’ என்று சொல்ல மு
*அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறதே; நீதிமான் சொல்லப்பட்டிருக்கிறபடி இந்த இருபதாம் நூற். பற்பல வழிகளில் அசைக்கப்படுவதை நமது நாள
உறுதியான கிறிஸ்தவ ஜீவியத்திற்கு உற்சாகமா மாகிறது. அந்த ஜெபம் ஒரு மனப்பட்டதாக இரு இருப்பதாக வாக்களித்திருக்கின்றார். வல்லமைய ஜெபத்தில் இணைந்து கொள்வாராயின் அந்த (
இயேசுவின் சீஷர்கள் ஏகோபித்து ஒருமனப்பட்ட போது அந்த இடம் அசைக்கப்பட்டது. அக்கினி தவர்களின் உள்ளத்திலே கர்த்தர் கிரியை செய்
"விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட் (யாக்கோபு. 5 15) என்ற வேதவாக்கிள் காரி இருக்கின்றது. வாசருவின் சகோதரி கூட "ஆண்டவரே, நீர் இ மாட்டான்" என்று அங்கலாய்த்ததுண்டு.
எனவே, இயேசுக்கிறிஸ்து எம் மத்தியில் இருக்க இருக்க வேண்டும் என்பதை நாம் மறந்து போ
"உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்து கண்டடைவாய்." - (உபாகமம் 4 : 29)
"கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெல அடித்து எழும்புவார்கள். அவர்கள் ஓடினாலும் போகார்கள்." - (ஏசாயா. 40 :31)
தூய ஆவியானவர் தாமே. *தொடர்பு மூலமாக உங்கள் உள்ளங்களில் கிரி

க் கர்த்தருடைய பாதத்தில் படைத்து அவருடைய வும் ஜெபிக்கும்படியாக உங்களை க் கேட்டுக்
ா 6:8) என்று எம்மைக் கேட்கும் இயேசுவுக்கு ன் இருக்கிறேன்; உம்முடைய ஊழியத்திற்கு உதவி
ன்வருவோமா?
ர என்ன செய்வான்?" (சங்கீதம், 11:3) என்று றாண்டில் ஆவிக்குரிய ஜீவியத்தின் அஸ்திபாரங்கள் ாாந்த ஜீவியத்தில் நாம் சந்திக்கலாம் - உணரலாம்.
னதும் இடைவிடாததுமான ஜெபம் அத்தியாவசிய ருக்குமானால் இயேசுக்கிறிஸ்து அங்கே எம் நடுவில் புள்ள தேவன் நம்முடனே கூட இருந்து நமது ஜெபம் அதிக வல்லமையுடையதாக இருக்கும்.
டவர்களாய் எருசலேமில் கூடியிருந்து ஜெபித்த மயமான நாவுகள் அங்கே இறங்கின. கூடியிருந்
தார்: மக்கள் மனந்திரும்பினார்கள்.
Fáš5b; &srf AŠA5tř sy aj GD67 GT p Ü y Gavrir ff” - பங்கள் நடந்தேறியதை இங்கு காணக்கூடியதாக
இங்கே இருந்தீரானால், எள் சகோதரன் மரிக்க
வேண்டுமானால் எமது ஜெபம் ஒருமனப்பட்டதாக கக் கூடாது.
மாவோடும் அவரைத் தேடும் போது அவரைக்
ன் அடைந்து கழுகுகளைப் போலச் செட்டைகளை இளைப்படையார்கள்: நடந்தாலும் சோர்ந்து
Gou GMFüava7 prntras.
கிறிஸ்துவின் பணியில், - தேவதாசன் ஜெயசிங் -

Page 5
ஒரு காலத்தில் நத்தார் பண்டிகைகளில் குடும்பஐக்கியமே மிக முக் கி யமான தோர் இடத்தை வகித்துவந்தது. இன்றோ குடும்பமாக ஒன்றித்து நத்தார் தினத்தைக் கொண்டாடுவது மிகவும் நலிந்து விட்டது என்றே குறிப் பி ட வேண்டும். "ஒன்று கூடல்" இன்றிச் சிதறுண்டு பிரிந்த குடும்பங்களாக வெவ்வேறு இடங்களில் இருந்து நத்தார் தினத்தைக் கொண்டாடுவதை நாம் பல இடங்களில் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அநேக இனபந்துக்கள் பல மைல் களுக்கப்பால் பிரிந்து வாழ்கின்றனர். பெற் றோர் பலர் பிரிந்து வாழ்வதனாலும் பிள்ளை கள் பெற்றோருக்கிடையிலும் ஒரு மை ப் பாடு இல்லாதிருக்கிறது. மறுபுறம், இவ்வாறு பிரிந்து பெற்றோர் பலர் மறுமணம் செய்து கொண் டுள்ளமையால் ஏற்படும் மாறுதல்கள் காரண மாக இதைப் பழைய பாரம்பரிய நிலை யில் கொண்டாட முடியாத இழிநிலை ஏற்படுகின் றது. அனைத்து நாடுகளிலும் இவை இ ன் று சகஜமாகிவிட்டது.
வயது முதிர்ந்தவர்கள் அநேக மாக க் காணப்படும் இக் காலகட்டத்தில் தமது சொந்த இல்லங்களிலே இருக்க முடியாமையால், தாம் விரும்பித் தெரிந்து கொள்ளாத பல விடுதிகளில் வயோதிபர் இல்லங்களில், அயலவர் வீடுகளில் தமக்குச் சொந்தமானவர்களைப் பிரிந்து வாழும் நிலையை நாம் பல நாடுகளில் காணக்கூடிய தாக இருக்கின்றது. இவர் கள் பாரம்பரிய முறையில் நத்தாரைக் கொண்டாட முடியாமல், உற்றார் உறவினரோடு குதூகலமாகக் கொண் டாடி அனுபவிக்க முடியாமல் மிகவும் பரிதபிக் கத்தக்கக் கூடிய நிலையில் உள்ளனர்.
இன்று, பல பிரச்சினைகளைக் கொண்ட, மனநிலை உள்ளவர்களாய், துன்பம் சோதனை களை அனுபவித்து வாழும் பல குடும்பங்களை
 

ஸ்மஸ் பண்டிகையில்
ச குடும்ப ஜீவியம்
நாம் சந்திக்கின்றோம். இக்குடும்பங்கள் இந் நத்தார் காலங்களில் சொல்லமுடியா பல வேத னைகளையும், துன்பங்களையும் அநுபவிக்கின் ይወ6õፓ.
அன்றும், பிளவுபட்டிருந்த - குழப்பம் நிறைந்திருந்த காலகட்டத்திலேதான் இயேசுக் கிறிஸ்து பிறந்தார். வேத வாக்கியங்களின்படி யோசேப்பும் மரியாளும் திருமணத்திற்கென்று நிச் சயிக் கப்பட்டிருந்தார்கள். ஆனாலும் யோசேப்பு அவளை அறியுமுன்னரே பரிசுத்த ஆவியினால் கர்ப்பந்தரித்த மரியாள் இயேசு வைப் பெற்றெடுத்தார். அவர் பிறந்தது ஒரு மாளிகையிலோ அல்லது வீட்டிலோ அல் ல மா ட் டு த் தொழுவத்தில். மகிமையெல்லாம் துறந்து கடவுளின் குமாரனாக, ஏழையின் உரு வெடுத்து, எம்மோடு வாழ்வதற்கு இங்கு வந் தார். இதை ஆழ்ந்து கவனிக்கும் போது பரிசுத் தமான கடவுளின் குமாரனாக தன் உன்னத மகிமையை விட்டு எங்களுடன் இருக்கும்படியா கவே இங்கு வந்தார்.
சகல வசதிகளோடும், உறுதியான நிலவ ரங்களுடனும் நத்தார் காலத்தைச் செலவிட நாம் எண்ணுகின்றோம். ஆனால், அநேக மக்க ளுக்கு இப்படியான நிலை அமைவதில்லை. அன்று - அந்த முதல் நத்தாரின் போதும் இந் நிலை இருக்கவில்லை. ஆனாலும் அது உண் மையான சந்தோஷத்தையும் மகிமையையும் உலகுக்கு அளித்தது.
அன்பர்களே, இயலுமானவரை இந்த நத் தார் தினத்தில் உங்கள் இனபந்துக்கள் குடும் பத்தாருடன் உறவுகொள்ள முயற்சி செய்யுங் கள். இந்த விசேஷ தினம் இதற்கமைய இல் லாவிடினும் - இந்த நாள் உண்மையாக எதை வெளிப்படுத்துகின்றது? என்ன கருத்தை வெளிப் படுத்துகின்றது என்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள்.

Page 6
கடவுள் முதல் நத்தார் தினமான இயே சுவின் பிறப்பை வேறு வழிகளிலே திட்டமிட்டு நடத்தியிருக்கலாம். ஆனால் அவரோ நாசரேத் துக்கு வெகு தொலைவிலிருந்த மாட்டுத்தொழு வத்தைத் தெரிந்து கொண்டார்.
இயேசுவின் பிறப்பின் போது யோசேப் பும் மரியாளும் தாங்கள் அருமையாக நேசித்த சொந்த ஊருக்கு வெகு தொலைவில் இருந் தார்கள்.
நத்தார், குடும்பமாக - ஐக்கியமாக அன் பாக - அந்நியோந்நியமாக நாம் ஒன்று கூடும் நேரம். இதற்காக நாம் யாவரும் முயலவேண்
O வாசகர் கேள்வி
எமது அடுத்த ‘தொடர்பு" வாசகர்களின் ே மாகிறது. உங்கள் கேள்விகளை ஒரு தபால் அட்
() கிறிஸ்தவ கவிதைப் போ O வேதாகமப் புதிர் போட் O குறுக்கெழுத்துப் போட்டி
இதயம்
அது ஒரு குக்கிராமம். புதுமை ஒருவன் ஒரு நாள் பட்டணம் போனா மாகியிருந்தது மேசைக்கடிகாரம். அதில்
சில நாட்களில் அக்கடிகாரம் இய ஆத்திரம் அதை வாங்கிய கடைக்குச் செ
"கடிகாரம் எங்கே?’ என்றார் ச விட்டவன் கடிகாரத்தின் முட்கள் இர *கடிகாரம் நல்லாத்தான் இருக்கு; இந் செய்து தாங்க" என்றான்.
அங்கிருந்த அனைவரும்
இதயத்தை இறைவனுக்கு கையையும் காலையும் ே

டும். செப்பக் கூடியவற்றைச் செய்ய வேண்டும். அதேவேளை, எல்லாவற்றுக்கும் மேலாக பெத் லகேம் மா ட் டு த் தொழுவத்தையும் அங்கு பிறந்தவரையும் நினைவு கூரவேண்டியது அத்தி யாவசியமாகும்.
இங்கு அவர் உங்களுடனே கூட இருக் கின்றார். அவரை நேசியுங்கள். அவர் உங்களை நேசிக்கிறார்.
இயேசுக் கிறிஸ்துவே கர்த்தர் உங்களுக் குத்தரும் நத்தார் அன்புப் பரிசு.
assen e
கள்விகளுடன் தொடர்பு கொள்ள ஆயத்த டையில் எழுதி எமக்கு அனுப்பி வையுங்கள்
ALLLLLL ALLLLLL ALLLLL LSL LSL LSLSLLLSLSLLLSLSLLLLLSLLLLS LSeLSLSLSLLLLLS
ாட்டி
.لها -
. விபரங்கள் அடுத்த தொடர்பில்.
எங்கே?
சு குறுங்கதை =
எதையுமே அறிந்திராத அக்கிராமவாசி ன். அவ் ஆரில் அப்பொழுதுதான் அறிமுக
ஒன்றை வாங்கிச் சென்றான்.
ங்காமல் நின்று விட்டது. கிராமவாசிக்கு ன்றான். “கடிகாரம் ஒடலியே” என்றான். டைக்காரர். சட்டைப்பைக்குள் கையை ண்டையும் எடுத்து மேசைமீது வைத்து ந முள்ளுதான் நிண்ணு போச்சி. இதைச்
விழுந்து விழுந்து சிரித்தனர்
க் கொடாமல்
காடுப்பதால் என்ன பயன்?
நன்றி: நகைமொழிக் கதைகள்

Page 7
அநேக நூற்றாண்டுகளுக்கு முன்னர் அறி விக்கப்பட்டிருந்தபடி மனித வரலாற்றில் கிறிஸ் துவானவர் மனுவுருக் கொண்ட அச்சம்பவத் தையே இக் கிறிஸ்மஸ் தினம் எமக்கு நினை வூட்டுகிறது. எதிர்கால நிகழ்வுகளைத் திட்ட வட்டமாகத் தெரிவிக்கும் தீர்க்கதரிசிகள் கிறிஸ் துவானவரின் பிறப்பைப் பற்றிய வியக்கத்தக்க பல செய்திகளை ஏற்கனவே விபரமாகக் கூறி யிருந்தார்கள்.
‘நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம்
அவர் தோளின் மேல் இருக்கும்.
தாவீதின் சிங்காசனத்தையும் அவ னு டைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி அதை இதுமுதற் கொண்டு என்றென்றைக்கும் நியா யத்தினாலும், நீதியினாலும் நிலைப்படுத்தும்படி க்கு அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத் துக்கும், அதின் சமாதானத்திற்கும் முடிவில்லை” - gressFiruunr 9: 6, 7
என்பதாக ஏசாயா தீர்க்கதரிசி கூறியி ருந்தான். மேலும் அவன் “கிறிஸ்துவானவர் ஒரு கன்னிகையின் வயிற்றிலேதானே பிற ப் பார்" என்பதையும் உறுதிப்படுத்தி "இதோ ஒரு கன்னி கை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானு வேல் என்று பேரிடுவாள்' - gJFrrum 7: 14
எனவும் குறிப்பிட்டிருந்தான். அது மட் டுமல்ல; மீகா என்றும் தீர்க்கதரிசி கிறிஸ்துவான வர் பிறக்கப் போகும் ஊர் "பெத்லகேம்’ என் பதாகப் பெயரிட்டே காட்டியிருந்தான்.
இவைகளெல்லாம் கடவுளின் பிள்ளைகள் கணநேரம் கேட் க க் கூ டி ய தீர்க்கதரிசிகளின் தொனிப் பொருளாகவே அமைந்திருந்தன.
ஆனால், வேளை வந்த போது - உண்மை உருவகமானபோது - உரைக்கப்பட்ட தீர்க்கதரி சனங்கள் நிறைவேறிய போது . . .
 

பேசிய அந்த இரவு .
- அருட்திரு. ஆர். துரைராஜா
அதுவே ஏறத் தாள இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட முதல் கிறிஸ்மஸ் இர
tas ۔۔۔۔۔ ۔۔۔ " ;"0 : ۔۔۔- . b. s AA ***
."". . . . . به مناً تحت عنشتاقهای
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இச் சம்பவம் நிகழ்ந்த அவ்வேளையிலே தானே உன் னதமான நற்செய்தியொன்று ஒரு தேவதூத னால் வழங்கப்பட்டது.
அந்நாட்களிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத் துக் கொண்டிருந்தார்கள். அவ் வேளை யி ல் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான். கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகா சித் த து அவர்கள் மிகவும் பயந்தார்கள்.
தேவதூதன் அவர்களை நோக்கி "பயப் படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய் தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் ரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறற் திருக்கிறார். . .' என்றான் - லூக்கா, 2: 8-11
முதலாவது கிறிஸ்மஸ் ஆராதனை ஒரு கோயிலிலோ, அன்றி பேராலயமொன்றிலோ அல்லது சபை மண்டபம் ஒன்றிலோ நடைபெற வில்லை. ஒரு திறந்த வெளியிலேதான் அது நடை பெற்றது.
கிறிஸ்துவானவர் பிறந்த செய்தி விண் ணிலே எதிரொலித்தது. தேவதூதன் அந் நற் செய்தியை தாழ்மையுள்ள ஒரு குழுவினர்க்கே முதன் முதலில் அறிவித்தான். அந்த மேய்ப் பர்கள் அறிவிலிகளும், எளியவர்களுமாய் இருந் தும் கூட சந்தடி நிறைந்த உலகத்தின் பிரச்சி னைகளுக்கு மத்தியிலும் பரலோகின் சத் தத் தைப் புரிந்து கொள்ளக் கூடியவர்களாய் இருந் தார்கள்.

Page 8
மகிழ்ச்சிகரமான இந்நற்செய்தி முதலில் சபைத் தலைவர்களுக்கோ, கல்விமான்களுக்கோ அறிவிக்கப்படவில்லை என்பது இங்கு ஆச்சரி யத்துடனே குறிப்பிடத்தக்க வொன்றாகும்.
கவனிப்பதற்காக எவர்கள் தங்கள் இத யங்களை ஆயத்தப்படுத்துகிறார்களோ அவர்க ளிடமே கடவு ள் பேசுகிறார். யூதேயாவின் மேய்ப்பர்கள் விண்ணிலிருந்தே இச்செய்தியைப் பெற்றார்கள்.
இச்செய்தி இரவு வேளையில் கொடுக்கப் பட்டமையும் இங்கு கவனிக்கத்தக்கதொன்றா கும், ஆதவன் அஸ்தமித்து விட்டதனால் ஏற் பட்ட இரவாக மட்டும் அது இருக்கவில்லை. ஆவிக்குரியதும் நீதிக்கேற்றவைகளுமான காரிய ங்களில் அரையிருள் கொண்டதாக உ ல க ம் தன்னைப் போர்வையினால் மூடியிருந்த நேரம் அது. இருளடையும் சந்தர்ப்பங்களில் எல்லாம் இறைவன் தம்மை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.
இஸ்ரவேலர் பார்வோனின் அடிமைத்தளையிலிரு ந்து அறுக்கப்பட்ட வேளை எகிப்திலே இரவாகவே இருந்தது.
சாமுவேல் என்னும் பிள்ளையாண்ட்ான் தீர்க்கதரி சியாகத் தெரிந்து கொள்ளப்பட்டு அழைக்கப்பட்ட அந்த வேளையும் ஓர் இரவாகவே இருந்தது.
தாவீதுக்கு இனிமையான சங்கீதங்களைப் பாடும் வன்மை வழங்கப்பட்டதும் இரவு வேளையாகவே இருந்தது.
பவுலும், சீலாவும் காவற் சாலையிலே கர்த்தரைப்
போற்றிப் புகழ்ந்து பாடி ஜெபித்ததும் இரவிலே யேதான்.
அதேபோல், பெத்லகேமிலே இயேசுவான வர் பிறந்ததும் ஓர் இரவில்தான். அவ்வேளையி லேதானே, தேவதூதன் ஒருவன் தோன்றுகிறான் இரட் சக ர் ஒருவர் பிறந்து விட்டார் என்ற மகிமை வாய்ந்த அந் நற்செய்தியை அறிவிக்கின் றான்.
உங்களில் அநேகருக்கு இது ஒர் இராக் காலமாக இருக்கலாம். இழப்புகள். துன்பங்கள் காரணமாக ஆஸ்பத்திரி அறைகளில் உங்களுக்கு இருள் இருக்கக் கூடும். ஆனால், மேகங்களுக்கு மேலாகவே சூரியன் பிரகாசிக்கின்றது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டுமென நான் விரும்புகின்றேன். உங்கள் உள்ளங்களிலே இயே சுக்கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு உங்கள் வாழ்

வினை அவரு க் கே அர்ப்பணிப்பீர்களாயின் மகிழ்ச்சியையும், புகழ்ச்சியையும், மயிர்கூச்செறி யும் மாற்றத்தையும் நீங்கள் ஒருபொழுதும் உணர்ந்திராத வகையில் அவர் உங்களுக்கு அருளிச்செய்வார்.
அந்த முதலாவது கிறிஸ்மஸ் இரவிலே, தேவதூதனால் அருளிச் செய்யப்பட்ட அச்செய் தியின் அர்த்தம்தான் என்ன? 1991 ஆம் ஆண்டு நிறைவு பெறும் இவ்வேளையில். கிறிஸ்துவான வரைப் பற்றிய உண்மை என்ன? என்பதை அறிந்து கொள்ள வேண்டியது முக்கியமான தொன்றாகும். இருபது நூற்றாண்டுகள் வந்து போய்விட்டன. ஆனால் இயேசுக்கிறிஸ்துவோ நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராகவே இருக்கிறார்.
தேவதூதன், முதலாவதாக "பயப்படா திருங்கள்” என்பதாகக் குறிப்பிட்டான். கிறிஸ் துவானவரின் வருகைக்கு முன்னர் உலகம் அச் சத்தால் நிறைந்திருந்தது. ரோமர் கலகத்திற்குப் பயந்திருந்தார்கள், அவர்களுடைய அச்சுறுத்தல் கள் ஆட்சியாளர்களைப் பயமுறு த் தி ன. மதவாதிகள் மற்றவர்களைப் பயமுறுத்தினார் கள். இருசாரார் மீதிலும் பொதுமக்கள் சந்தே கப்பட்டார்கள். எங்கு பார்த்தாலும் மக்களின் உள்ளம் சந்தேகத்தினாலும், அச்சத்தினாலும் அவநம்பிக்கையினாலுமே நிறை ந் திருந்தது. ஆனால், தம் மீது நம்பிக்கை கொள்ளும் அனை வரது பயத்துக்கும் ஒரு முடிவினைக் கொண்டு வர இயேசுக்கிறிஸ்துவினால் முடி யும். “பயப் படாதே சிறுமந்தையே' என்பது இயேசுக்கிறி ஸ்துவின் வழிகாட்டலையும், போதனையையும் குறிக்கும் ஒரு பதமாகும்.
இன்றைய உலகம் பயத்துடனேயே வாழ் கின்றது. எம்மில் அநேகர் கடவுளைத் தவிர்ந்த மற்றெல்லாக் காரியங்களிலும் பயப்படுகின் றோம். எல்லாவற்றையும் விட கடவுளுக்கே நாம் அதிகம் பயப்பட வேண்டும்.
எவ்வாறாயினும் இயேசுக்கிறிஸ்துவின் மூலம் நாம் கடவுளோடு இணைந்து கொள்வோ மாயின் நாம் அஞ்சவேண்டிய அவசிய மே இல்லை. “மாசற்ற அன்பு மனப் ப யத் தைப் போக்கும்’ பயத்திலிருந்து விடுதலை பெற ஒரே வழி இயேசுக் கிறிஸ்துவே. “பயத் தி லிருந்து விடுதலை.” என்பது எமது சுய பல த் தால் ஆகக் கூடிய ஒன்றல்ல; அது கடவுளால் தரப் படக் கூடியதும். பயத்தைப் போக்குவதற்காக நேரடியாகவே வருகை தரும் இயேசுக்கிறிஸ்து வுடனான தைரியமுள்ள ஓர் இணைப்புமாகும்.

Page 9
உங்களுடைய பயம் என்ன? எதிர்காலம் நிச்சயமற்றதாக இருக்கிறதே என நீங்கள் அஞ்சு கிறீர்களா?
அதற்குப் பதில் இயேசுக்கிறிஸ்துவே.
சில சமயங்களில் வாழ்க்கையின் பாரங்கள் உங்க
ளால் சுமக்கக் கூடாதளவு சுமையாக இருப்பதாக
எண்ணி நீங்கள் அஞ்சுவதுண்டா?
அதற்கும் பதில் இயேசுக்கிறிஸ்துவே
மரணத்திற்கு நீங்கள் பயப்படுவதுண்ட்ா?
அந்த மரணத்தையே வென்றவர் இயேசுக் கிறிஸ்து. நீங்கள் அவரில் நம்பிக்கை வைத்தால், அப்போஸ்தலனாகிய பவுலுடனே கூட நீங்களும் இணைந்து 'சாவே, உன் கூர் எங்கே? எனக் கேட்க முடியும்.
ஆம். இயேசுக் கிறிஸ்துவே எல்லாவற்றுக் கும் பதிலாக இருக்கிறார். அந்த முதலாவது கிறிஸ்மஸ் இரவிலே தேவதூதனால் தரப்பட்ட
(அதற்காகவே
இவ்வுலகையும் இதிலுள்ள சிருஷ்டிகள் அனைத்தையும் படைத்த தேவன் அ வை ய னைத்தும் நல்லதாக அமைய வேண்டும் என்றே அவாக் கொண்டிருந்தார். ஆனால், மனிதனைப் படைத்த போது அவருடைய நோக்கத்திற்கு மாறான - பிரதிகூலங்கள் நடக்கத் தொடங்கி விட்டன.
இயற்கை வனப்புடன் இலங்கிய இவ்வுல கத்தின் எழிலை ரசிக்கவும் அதன் பல னை ப் புசிக்கவும் இறைவனின் சித்தப்படி வாழவுமே மனிதன் சிருஷ்டிக்கப்பட்டான். தனிமையாக இருந்த அந்த மனிதனோடு கடவுள் தொடர்பு கொண்டிருந்தார். சாயங்கால வேளைகளிலே அவனோடு உலாவி = உறவாடிக் கொண்டும் வந்தார்.
 

அம் மகத்தான செய்தி மனித சமுதாயத்தினுள் இன்றும் வந்து கொண்டேயிருக்கிறது. அச்செய்தி மிக மிக அருமையானது.
"பயப்படாதிருங்கள்:இரட்சகர் பிறந்திருக்கிறார்"
கடவுள் உலகை நேசிப்பதோடு மட்டும் விட்டு விடாமல், மனுவுருக் கொண்ட இயேசுக் கிடஸ்து மூலமாய் தம்மைத் தாமே அறிமுகப் படுத்திக் கொள்வதற்காக மனித கு லத் துள் வந்தார்.
unr av iš S9 av uavšiSabarŮ unrri & 66th கடவுளின் வல்லமை மேலானது என்பதை த் தெளிவாகக் காட்டுவதனால் இத்நற்செய்தி உன் னதமான ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அவ் வல்லமையை நம்முடனே கூட பகிர்ந்து கொள்ள அவர் என்றும் வாஞ்சையாக இருக் 6Reliw prif.
கிறிஸ்துவைத் தவிர
ரட்சிப்பு இல்லை
அவர் மனுவுருக் கொண்டார் )
மனிதனின் தனிமையை விரும்பாத மகத் துவமுள்ள தேவன், “மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல; ஏற்ற துணையை அவ னுக்கு உண்டாக்குவேன்" எனச் சித்தங் கொண் டார். ஆகவே, தான் உருவாக்கியிருந்த மனித னின் விலா எலும்பைக் கொண்டே ஒரு அழகிய பெண்ணை உருவாக்கி - ஜீவ சுவாசத்தை ஊதி அவனோடு இணைத்தார். ஆணும் பெண்ணு மாக வாழ்ந்த அவர்கள் இறைவனோடு இன்ப கரமாக ஜீவித்து வந்தார்கள். இதைப் பொறுக் காத சபிக்கப்பட்ட சாத்தான் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் இருக்கும் தொடர் பைக் குறைக்க வேண்டும்; அதை அ டி யோ டு அறுக்க வேண்டும் என்று எண்ணினான். அவனது எண்ணம் நிறைவேறியது.

Page 10
எப்படியெனில், ஆணா கி ய ஆதா மை விட்டுப் பெண்ணாகிய ஏவாளைச் சந்திக்கிறான். பெண் இயற்கையாகவே கொஞ்சம் பலவீனப் பட்டவள்தானே. “கடவுள் தந்த கட்டளைகள் நயவஞ்சகமானவை; தன்னைப் போலவே மணி தனும் வாழத் தொடங்கி விடுவான் என்ற கார ணத்தினால்தான் அவர் இத்தோட்டத்தின் மத் தியில் உள்ள கனிகளைப் பு சிக் க வேண்டாம் என்று கூறியிருக்கிறார். எவ்வளவு அநியாயமான காரியம் இது? இப்படி நீங்கள் கடவுளுக்கு அடி மைப்பட்டு வாழவேண்டுமா? இக்கனிகளைப் புசி த்து நீங்களும் தேவர்களைப் போல வாழ்ந்து கொண்டிருக்கலாமே" என்று ஆசை காட் டு கிறான்.
தானும், தன் கணவனும் ஒருபடி உயர்ந் திருக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமென்றால் எந் தப் பெண்தான் சும்மா இருப்பாள்?
அந்தக்கனியை தானும் புசித்தாள். தன் கணவனுக்கும் கொடுத்தாள். இரு வ ரு மே புசித்த போதுதான் - “கீழ்ப்படியாமை" என்னும் பாவம் அங்கே உண்டாகிறது. அதுமட்டுமல்ல; தேவசித்தம் மீறப்பட்டபடியினால், தே வ ச த் தத்துக்குச் செவி கொடுக்கப் பயந்து அவர்கள் இருவரும் விருகூrங்களின் கீழே பதுங்கிக் கொள் ளுகிறார்கள். இரண்டாவதாக, இங்கே, இது வரை இல்லாத “ப யம்’ ஒன்று ஏற்படுகிறது. மூன்றாவதாக, “தேவ சமுகத்தினின்றும் ஒதுங்கி ஒளித்துக் கொள்ள வேண்டிய நிலை" ஏற்படு கின்றது.
என்றாலும் அன்போடு ஆதரிக்கும் தேவன் அந்திவேளையிலே அங்கு வருகிறார். வழமை யாக நிமிர்ந்து நிற்பவன் - அவரது வரவை எதிர் பார்த்திருப்பவன், என்றும் மகிழ்வோடிருப்வன், இன்று சோர்ந்து - கூனிக்குறுகி, துக்கத்தோடு, அவர் வர வை வெறுத்தவனாக பற்றைக்குள் பதுங்கியிருக்கிறான்.
ஆனாலும், தேவனாகிய கர்த்தரி ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்?" என்கிறார். ஒளித்துக் கொண்டிருக்கிறேன்" என்று பதில் வருகிறது. "அப்படியானால், நான் புசிக்க வேண் டாம் என்று சொன்ன கனியைப் புசித்தாயோ? என்கிறார்.
அந்தச் சந்தர்ப்பத்தில் பாவ அறிக்கை செய்ய அவன் மனம் இடம்தரவில்லை. தன் னைக் குற்றவாளி என்று ஏற்றுக் கொள்ள அவனது மனச்சாட்சி ஒவ்வவில்லை. மாறாக,

மனைவி மீது குற்றம் சுமத்துகிறான். மனை வியைக் காட்டிக் கொடுக்கிறான். 'நீர் எனக் குத் துணையாகத் தந்தீரே ஒருத்தி; அவள்தான் கொடுத்தாள்; அவளேதான் என்னைக் கெடுத் தான்" என்கிறான். ஆனால் அந்தப் பெண்ணோ, தானும் தன் கு ற் ற த் தை ஒப்புக் கொண்டா ளில்லை. தன்னைக் குற்றவாளியெனக் கூறு வதை அவள் ஏற்கவுமில்லை . ‘நான் அ ல் ல; சர்ப்பம் தான் எ ன் னை வஞ்சித்தது" என்கி றாள். ஆனால் சர்ப்பமாகிய சாத்தானோ எது வும் பேசவில்லை. 'மெளனம் சம்மதத்திற்கு அ* கறி" என்பார்கள். தன் குற்றத்தை ஒப்புக் 2 . கண்டுதானே ஆகவேண்டும். பரலோக தேவ னுக்கு முன்பாக ப்ாவம் ஒன்றைச் செய்ய மணி தனை மயக்கி விட்டேனே என்ற மகிழ்ச்சி அதற்கு.
இவற்றின் பெறுபேறாக மூவருக்குமே சாபம் கிடைக்கிறது. இவர்களைச் சபித்தபடி யினால் இறை வன் மகிழ்ச்சியடைந்தாரா? இல்லை. வாழ்விழந்து போன இந்த மனுக்குலத் துக்கு மீண்டும் வாழ்வளிக்க வேண்டும் என்பதே அன்பின் தே வ னு டைய ஒரே எண்ணமாக இருந்தது.
இரண் டாம் தலைமுறையிலே இருவர் சகோதரர்கள். காயீன் - ஆபேல் என்பவர்கள் இருவருக்குமே ஒருவரிலோருவர் உள் ளன் பு இல்லை. காயின் கமக்காரன். ஆபேல் பண்ணை யாளன். இரு வ ரும் தங்கள் காணிக்கைகளை இறைவன் சந்நிதியில் படைத்த வேளை. ஆபே லின் காணிக்கை மட்டும் அங்கீகரிக்கப்பட்டது. ஏனெனில் அவன் தாழ்மை, பொறுமை, அன் புடையவனாகக் காணப்பட்டான். காயீனோ, இவை அற்றவனாகவும் அவனைவிடவும் தான் உயர்வானவன் என்ற ஆணவம் கொண்டவனா கவும் காணப்பட்டான். இதனால் இவனது காணிக்கை யை இறைவன் ஏற்றுக் கொள்ள வில்லை.
இங்கே. ஆத்திரம் - பொறாமை - இரத் தம் சிந்துதல் எல்லாமே ஏற்படுகின்றன. ஆம். அன்றுதான் மனிதனை மனிதன் கொலை செய்த மாபெரும் பயங்கர சம்பவம் முதன் முதலில் நடக்கின்றது.
‘எல்லாமே நல்லபடியாக இருக்க வேண் டும்’ என்ற எதிர்பார்ப்பில் அனைத்தையும் படைத்த கடவுளுக்கு கசப்பான அனுபவங்களே கிடைத்தன.

Page 11
காலப்போக்கில் பாவத்தின் இருப்பிட மாகவே பூமி நிறையத் தொடங்கியது. என்றா லும் அன்புள்ள தேவன் தன் பிள்ளைகளில் ஒருவராவது கெட்டுப் போகாமல் எல்லாரும் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என ஆசைப் பட்டார். ஒவ்வொருவரும் வெவ்வேறு வழிக ளில் புறப்பட்டு - தாம் நினைத்ததே சரியென்ற கொள்கை உலகில் பரவிற் று. தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் ஒருவனாகிலும் உல கில் இல்லை பாவ நிவாரண பலி யென்றும் குற்ற நிவாரண பலி யென்றும் தமது பாவங் களுக்காக மிருகங்களைப் பலியிட்டு அவற்றின் இரத்தத்தைப் பலி பீடத்தில் தெளிப்பதும் ஒரு பாரம்பரியமாக வந்து கொண்டிருந்தது.
“ஒவ்வொரு மனிதனின் பாவத்துக்காகவும் அநேக மிருகங்களின் உடல்கள் தகனிக்கப்படு வதை விட எல்லா மனிதரின் பாவங்களுக்காக வும் தம்மைத் தாமே பலியாக செலுத்தி விட் டால் நல்லது' என்பதே அன்புள்ள தேவனின் சித்தமாக இருந்தது. தம்மைப் பலியாக்க வேண் டுமானால் தான் மனுவுரு எடுக்க வேண்டும்.
எனவே, இதுபற்றி ஏசாயா தீர்க்கத்தரிசி பல ஆண்டுகளுக்கு முன்னே தீர்க்கதரிசனம் உரைத்தான். “இதோ ஒரு கன்னிகை கர்ப்பவ தியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு "இயேசு என்று பேரிடப்படும். ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்கள் பாவங்களை இரட்சிப்பார்"
தீர்க்கரின் வாக்குப் படியே தேவனாகிய பிதா. குமாரனாக. தம்மை ஒரு கன்னியின் வயிற்றில் “அர்ப்பணித்து. ம னு மகனாக ப் பிறந்து. இழந்து போயிருந்த தொடர்பை-மீண் டும் ஏற்படுத்தினார். அத்தொடர்பு மீண்டும்
曾掌索堂常堂曾曾曾曾曾曾曾曾曾曾曾堂堂堂营饰
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு அவர் தோளின் மேல் இருக்கும். அவர் ந வல்மையுள்ள தேவன் - நித்திய பிதா - ச
女 தேவன் - தம்முடைய ஒரே பேறான கு கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அை உலகத்தில் அன்புகூர்ந்தார்.

அறுந்து போகாமல் அதை வலுப்படுத்திக் கொள் ளும் படியாக, மக்களின் பாவத்தின் காரண மாக மரத்திலே உயிர் நீத்து - அடக்கம் பண் ணப்பட்டு - மீண்டும் மூன்றாம் நாள் வெற்றி யோடு உயிர்த்தெழுந்து.
இருந்தவராகவே இருக்கிறேன்’ என்றும் "அல்பாவும் ஒமேகாவும் - முந்தினவரும் பிந்தினவ ரும் ஆதியும் அந்தமுமாய் இருக்கிறேன்’ என்றும், *இதோ உலகத்தின் முடிவு பரிபந்தம் நான் சதா காலமும் உங்களோடே இருக்கிறேன்’ என வும் வாக்களித்திருக்கிறார்.
“நானே, ஜீவ அப்பம்; வானத்திலிருந்து இறங்கி வந்த மெய்யான ஜீவ அப்பம் நானே;” *நானே, வழியும் - சத்தியமும் ஜீவ னு மாய் இருக்கிறேன் - என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்”
என்றெல்லாம் வாக்களித்திருக்கும் நம் இயேசு என்றென்றும் நம்மோடிருக்கிறார். நாம் அவரைத் தேடினால் அவரைக் கண்டடைவோம்.
உலகம் அவரைப் பற்றிப் பல விமர்சன ங்கள் - வியாக்கியானங்கள் கூறலாம்’ ஆனால், *அவராலேயன்றி இரட்சிப்பு இல்லை’ என்பதை எவராலும் மறுக்க முடியாது. இயேசுவின் வழி யில் செல்ல முற்படும் போது இக்கட்டு - இடர் - ஏற்படத்தான் செய்யும். இடுக்கமான வாசல் வழியாய்ப் பிரவேசிப்பவன் இறைவனைக் கண் டடைவான். அகன் ற வாசல் எப்பொழுதும் கேட்டுக்குப் போகிற வழியாகவே அமையும்.
எனவே, இரட்சகர் இயேசுவுடன் தொடர்பு கொண்டு இரட்சிப்பைப் பெற முயல் Ganu Torr &5.
>索索索索索堂堂索索堂堂堂事堂*索索索索索堂堂常
ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார். கர்த்தத்துவம் ாமம், அதிசயமானவர் - ஆலோசனைக் கர்த்தர் - மாதான பிரபு என்னப்படும். -எசாயா 9:7
மாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் டையும்படிக்கு அவரைத் தத்தருளி இவ்வளவாய்
--யோவான். 3:16

Page 12
வலது குறைந்த இயேசு அன்
நான் ஐந்து வயதாக இருந்த பொழுது
நடந்த சம்பவங்களை நினைவுபடுத்த முடியா லிட்டாலும் அந்த வயதில் முதன் முதலாக பாடசாலைக்குப் போன நாளை எ ன் னால் மறக்கவே முடியாது. நான் பாடசாலைக்குப் போவதை விரும்பவில்லை. ஆனால் கட்டாய மாகச் செல்ல வேண்டியிருந்தது. அன்று வீடு திரும்பியதும் என் தாயாரிடம் “நான் இனிமேல் திரும் பவும் பாடசாலைக்குப் போ வே ன்; ஏனெனில் அங்கு எனக்கு ஒரு நண்பனுண்டு. அவன் பெயர் மைக்கல், அவன் என்னிலும் பெரியவன்.” என்று கூறினேன். அப்படியே ஒவ்வொருநாளும் பாடசாலையிலிருந்து திரும்பி யதும் அவனைப் பற்றி என் வீட்டாரிடம் எடுத்துச் சொல்வேன்.
ஒருநாள் என் தா யாரு டன் வெளியே சென்றபோது மைக் கலை என் தாயாருக்கு சுட்டிக் காட்டினேன். அவனைச் சந்தித்தபோது என் தாயார் ஆச்சரியப்பட்டார். அவன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தான். அவனுக்குப் பேச முடியாது. அவன் ஒரு வலது குறைந்த பை யன். பாடசாலையில் பலகையில் ஒட்டி யிருக்கும் படங்கள், எழுத்துக்கள் மூலமே அவன் மற்றவர்களுக்குத் தான் கூற எண்ணியதை வெளிப்படுத்த முடியும். எனது சகோதரனின் பெயர் ‘மைக்" என்றபடியால் அவன் பாடங் களைச் சுட்டிக் காட்டி ‘மைக் எ ன் ற தை வெளிப்படுத்தியபோது இ லகு வில் அவ ன் பெயரைப் புரிந்து கொண்டேன்.
‘மைக்கல் வலது குறைந்தவன் என்ற எண்ண" மே எனக்கு ஏற்படவில்லை நான் பாடசாலைக் குப்போக ஆரம்பிக்கு முன்னரே எனது குடும்பத் தார் வலது குறைந்தவர்களுக்கென ஸ்தாபிக்கப் பட்ட ஒரு இல்லத்தில் ஆராதனைகளை ஒழுங் காக நடாத்தி வந்தார்கள். எனது தாயார் ஒரு சமூக சேவையாளர். வலது குறைந்தவர்கள் எவ்வகையிலும் எங்களிலும் பார்க்க எவ்விதமும் மாறுபட்டவர்களல்ல என்பதை நாம் அறிந்து, வளர்ந்து வருவதை அவர்கள் நமக்கு வலியுறுத்தி வந்தனர்.
ஒருநாள் இவ்வித ஆராதனையில் நாம் கலந்து கொண்ட பொழுது என்ன பாட்டைப் பாட விரும்புகிறீர்களென்று கேட்டபொழுது தலை வீங்கியிருந்த நோயுடைய ஒரு பெண் "இயேசு என்னை நேசிக் கிறார்” என்ற பாட்டைப் பாடும்படி கூறினாள். அந் த ப் பாட்டை நாம் பாடத் தொடங்கியவுடன் எல்லாச் சிறு வர் களும், மிக ஆர்வமாகக்
 

வர்கள் பேரிலும் பாயிருக்கிறார் S.
கைதட்டி, தலையசைத்து தங்களால் செய்யக் கூடிய சைகைகள் காட்டி மகிழ்ந்தனர். அந்தப் பாட்டு அநேக பிள்ளைகளுக்குத் தெரிந்தமை யால் சந்தோஷமாகப் பங்கு பற்றினர்.
இப்போது எனக்கு வ ய து பதினைந்து. நான் ஒரு தொண்டனாக அதே வலது குறைந்த பிள்ளைகள் இல்லத்தில் வேலை செய்கிறேன். "கெலி" என்னும் ஒரு வலது குறை ந் த பெண்ணுக்கு வாராவாரம் என்னால் செய்யக் கூடிய உதவியைச் செய்து வருகிறேன். நடக்க முடியாத சிலரை வெளியே கூட்டிச் சென்று விளையாட்டிடங்களில் சேர்ந்து விளையாடப் பண்ணும் பொறுப்பையும் ஏற்றிருக்கிறேன். இவர்களைச் சந்தோஷப்படுத்துவதன் மூலம் கடவுளைச் சேவிக்கிறேன் என்று உணருகிறேன்.
எனது நண்பர்கள் இவர்களோடு ஏன் நான் வீணாக நேரத்தைச் செலவிடுகிறேன்; இதனால் என்ன பயன் என்று கேள்விகேட்பதுண்டு. இவர் களுடன் பழகுவதால் என்னையும் இவர்கள் நோய் பாதிக்கக் கூடும் என்று சொல்பவரும் உண்டு. மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்களென்று நான் கவலைகொள் வதே கிடையாது. பலவீனமுடைய இந்த மக் களும் சாதாரண மக்கள் போல் ஓரளவிலேனும் சந்தோஷமான வாழ்க்கை வாழ நாம் முயற்சி செய்து எங்களாலான உதவி வழங்க வேண்டு மென்பதே எனது மனப்பான்மை. இச் சேவையை sleesel- சேவையென எண்ணி அன்புடனும் பண்புடனும் இந்த மக்களுக்கு உதவி புரிவதே உகந்த காரியம். அவர்களைக் குளிப்பாட்டி உணவூட்டிப் பராமரிப்பது எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் அவர்கள் பதில் கூற அல்லது நன்றி சொல்ல இயலாத நிலையிலிருந்தாலும் நாம் இச்சேவையை இயேசுவுக்கென்று செய்
Gaunruh. மகிழ்ச்சியுடன் பணிபுரிவோம். *நான்
O
பசியாயிருந்தேன்; எனக்குப் போஜனம் கொடுத் தாய். தாகமாயிருந்தேன். என் தாகத் தைத் தீர்த்தாய். வியாதியாயிருந்தேன்; என் னை ப் பார்க்க வந்தாய், அந்நியனாயிருந்தேன்; என் ச்ை சேர்த்துக்கொண்டாய். இந்தச் சிறியரில் ஒருவனுக்கு எதைச் செய்தாயோ அதை எனக்கே செய்தாய்” என்று ஆண்டவர் கூறுகிறார். ஆகை யால் நான் இந்த உதவிகளை இப்பேர்ப்பட்ட மனிதருக்குச் செய்யும்பொழுது அது "கடவுளுக்கு நான் கொடுக்கும் பரிசு’ என எண்ணுகிறேன்.

Page 13
1])Iلانہ
(கவிதை)
ஏசுவின் வார்த்தை ஏற்றமே கண்டி( மாற்றமும் பெற் மாசுமறு விலான்
மாண்புடன் வா ஆண்டவன் சாய மன்னித்து வாழ்பவ மன்றிலே வாழ்ந் நன்றே நலம்பெ எண்ணத்தில் தூய் ஏசுவிடம் இணை பாசத்தினிலே வ
பாவத்தை விட்டுந6 பரமனும் உனை. l u fTrf6a06Qu aumr tili gy பாவங்கள் யாவை
பரிந்துமன் னித்தி புரிந்துனைக் காத்தி தாலந்தைப் பெற்ற தாகத்து டன் உல சோகம தைத்தை தாலந்தைத் தந்துை தாழ்ந்த நிலைமா சூழ்ந்த துயர்அழி ஏசுவே எனக்கொளி இருள்வழி போக மருள்வழி காண காசுப்பொருள் பண் கருணையைப் டெ அருளையும் பெற
l
 

நளைப் பெற
( to
- தமிழ்ச்செல்வன் மாசிலாமணி
யை ஏற்று நடப்பவன் டு வான் - மன றிடு வான் - அந்த நேயவழிச் சென்றால் ழ்ந்திடு வான் - அவன் J69T Sutter
பன் மன்னிக்கப் பட்டிறை திடு வான் - என்றும் று வான் - தன் மையாய் வாழ்பவன் நாளெலாம்
வான் - அவர் ளர் வான்
ல் வாழ்வைத் தொடர்ந்திட அணைப் பார் - ஞானப் வர் இருப் பார் . நம் , பும் தேவனிடம் சொல திடு வார் . அன்பைப்
டு வார்.
வன் தாரணி மேவிட ழைத் தால் - சூழும் னித் தால் - மேலும் னை மேன்மைப் படுத்துவார் top Austri - 2-6)6O7 & lui Liri.
என்றுபின் செல்பவர் மாட் டார் - பாவ onTulu-morrot - Son Gor ub rடம் மேலென எண்ணுவோர்
Aotontt - Litri - Gsay | lonr L-rriř.

Page 14
எனது ம
அது ஒரு கிறிஸ்மஸ் வாரம். பதினான்கு வயதுடைய சிறுவனாகிய நான் கைது செய்யப் பட்டு நீதிமன்றுக்குக் கொண்டு செல்லப்படுகி றேன். சட்டப்படி கைது செய்யப்பட்டபடியி னால் எனக்கு மன்னிப்பு கிடைக்கவே இடமில் லை. எந்தவொரு உதவியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை. நான் குற்றவாளி என்பதை நன்கு அறிவேன்.
இப்பொழுது நான்குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறேன். எனக்குத் தாகமாக வும் இருக்கிறது. வாயிற் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்கிறது. அதில் சாய்ந்தபடி நிற்கும் அந்தப் பொலிஸ் காரரின் பார்வை என்மீது விழுகிறது. நான் நிச்சயமாகவே தண்டிக்கப்படு வேன் என்ற திருப்தி அந்தப் பார்வையிலே பிரதிபலிக்கின்றது.
அறவே நான் உதவியற்றவன் என்பதை உணர்கின்றேன். அழுது அழுது எனது கண்ணிர் முழுவதுமே வெளியேறிவிட்டிருந்தபடியால் இப் பொழுது. என்னால் அழக்கூட முடியவில்லை எனது பிழையையும், இழப்பையும் எண் ணி உற்சாகமற்றவனாக சோர்ந்து போய் நிலம் நோக்கி நிற்கின்றேன்.
அதோ. நீதிபதி தன்னுடைய ஆசனத் தில் அமர்ந்திருக்கின்றார். அவரைப் பார்க்கக் கூடிய தைரியம் எனக்கு வரவில்லை. அவர் கருணைகாட்டுவார் என்ற நம் பிக் கை யும் எனக்கு இல்லை. எப்படியுமே வரப்போகும் தீர்ப்பு எனது அழிவாகவே அமையும் என்பதை நான் உணர்ந்து கொண்டு விட்டேன்,
O எனக்கும் ஒரு பிரதிநிதியா?
மக்களால் நிரம்பி வழியும் அந்த நீதி
மன்றிலே. குற்றவாளிக் கூண்டில் நான் குனிந் தபடி நின்றிருக்கும் வேளையிலே, எல்னைக்
 

இது ஒரு கிறிஸ்மஸ் கதை.
பன்னிப்பை வென்றெடுத்தவர்
ஆங்கிலத்தில்: - ஜே. ஸி. மொறிசன்
குற்றப்படுத்தும் தோரணையில் உற்றுப்பார்த் திருக்கும் மக்கள் கூட்டம் “கனம் நீதிபதியவர் களே, சட்டத்தின் வல்லமையை இவனுக்கு 67 S gat as cypapabuoaunt si Usuair uGasariassi; இனிமேலும் இவனால் பிரச்சினைகள் ஏற்படா வண்ணம் சமூகத்தைப் பாதுகாருங்கள்" எனக் கோஷமிடுகிறது.
நீதிமன்ற எழுதுநர் எழும்புகிறார். அங்கே அமைதி நிலவுகின்றது. நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்படப் போவதாக அறிவிக்கின்றார். முதலாவதாக எனது வழக்கே வாசிக்கப்படு கிறது.
நீதிபதி எழுதுநரை வினவுகின்றார்.
இந்தச் சிறுவனைப் பிரதிநிதித்துவப்படுத்த எவ ரேனும் இருக்கிறார்களா?”
*பிரதிநிதித்துவம். இப் ப த த் தை இப்பொழுதுதான் நான் கேட்கிறேன். இது எனக்கு ஒரு புதிராகத் தோன்றுகிறது. "எனது மரண தண்டனையை நிறைவேற்ற இருப்பவனே என்னைப் பிரதிநிதித்துவப் படுத்துபவனாக்கும்' இப்படித்தான் நான் எண்ணிக் கொள்கிறேன்.
“இவனுக்காக யாருமே இல்லை." இது எழுதுநரின் பதில். இந்தப் பதிலைக் கேட்ட நீதிபதியின் விழிகள் வக்கீல்கள் அமர்ந்திருக்கும் பகுதியை நோக்குகின்றன. குறிப்பிட்ட ஒரு வரை அவர் பார்க்கின்றார்.
இந்தச் சிறு வ னை ப் பிரதிநிதித்துவப்படுத்த உம்மை நான் நியமிக்கின்றேன்.”
என நீதிபதி கூறியபோது, வக்கீல் ஒருவர் எழுத்து அங்கிருந்த ஆசனங்களுக்கூடாக நடந்து. அனைவரையும் கடந்து, குற்றவாளிக் கூண்ட ருகே வாசலில் நிற்கும் பொலிஸ்காரரையும் ஒதுக்கிவிட்டு கைதிக் கூண்டின் கதவைத் திறந்து என்னருகில் வருகின்றார்.

Page 15
பயத்தினால் பதுங்கிய நான் பிதுங்கும் விழிகளோடு எனது வக்கீலை நோக்குகிறேன்.
அவரது முகத்தைப் பார்க்க ஆச்சரிய மாக இருக்கின்றது. அது வலுவுள்ளதாக - சாந்த மானதாக - அன்பு கொண்டதாக - அழகு மிக்க தாகக் காணப் படுகின்றது. அவர ༽ ཀྱཏུ་ கண்ணின் ஒரத்திலே ஒ 5 கண்ணிர்த்துவி வெளி வருவதை நான் காண்கறேன்.
அந்த கண்ணிர்த் துளி ஆச்சரியப்படத் தக்க வகை யில் எனக்கு உதவியாக அமை கின்றது.
அவர் என்னருகே அமர்கின்றார். அவரது கரங்கள் என்னைச் சுற்றி அணைக்கின்றது இறுக்கமான அந்த அணைப்பினால் என் எலும்பு களெல்லாம் அவற்றின் இணைப்புகளில் இருந்து சுழன்று விடும் போல் தோன்றுகிறது. வெகு சிரமத்தோடுதான் சுவாசிக்கவும் வேண்டியதாயி ருக்கிறது.
எனது வக்கீல் என்னைத் தன்னிடமாக இழுக்கின்றார். அந்த இழுப்பு மென்மையோடு கூடிய வன்மையுள்ள தன்மை கொண்டதாக உணர்கின்றேன். கழன்று போவதாகத் தெரிந்த எலும்புகள் இப்போ புதிய உணர்வையும், நரம்புகள் அமைதியையும் பெறுகின்றன. இட் பொழுது சுகமாக சுவாசிக்கின்றேன். வக்கீலின் பட்டுப் போன்ற தாடி என் முகத்தை வருடு கின்றது. அவரது அதரங்கள் என் செவியுடன் சேர்கின்றன. “எனது சிறிய நண்பனே, நீ குற் றவாளியா” இப்படிக் கேட்கிறார் எனது வக்கீல்.
*இல்லை, என நான் பொய்யினைக் கூறி னாலும் அதனால் பயன் ஏ ற் படப் போவ தில்லை. ஆகவே நடுங்கும் குரலில் நான் பதில் கூறுகிறேன். V
**ஆம் = ஐயா, இவர்கள் அறிந்திருப்பு தற்கு மேலாக நான் மாபெரும் குற்றவாளி.
"நீதி மன்றின் கருணை உன்னை விடு தலை செய்யுமானால் அதுவே சிறந்ததாக இரு க்கும்’ என நீ நினைக்கிறாயா?’ எ ன் பதா எனது வக்கீல் என்னிடம் கேட்கிறார். கருணை யினால் விடுதலை’ என்ற பதம் எனக்குப் பு யாத புதிராக இருக்கின்றது. ஆனால், "நான் விடுதலை செய்யப் பட் டா ல் எனக்குரிய இடத்தை நான் பெற்று விடுவேன்’ என்பதை மட்டும் என்னால் உணர்ந்து கொள்ள முடிகி

நறது. ஆகவே, உடனடியாகவே அவருடைய வினாவிற்கான வி ைட யை உறுதிப்படுத்துகி றேன். எனது வக்கீல் எனது தலையை மெது வாகத் தட்டியபடி எழுந்து நீதிபதியை நோக்கி நிமிர்கின்றார்
O கருணை காட்டப்படுகிறது. எனது வக்கீல் பேசத் தொடங்குகிறார். *கன ம் நீதிபதியவர்களே, தங்களுடைய நீதி மன்றில் பல்லாண்டு பணிபுரியும் அனுபவத்தை நான் கொண்டுள்ளேன். தங்களுடைய தீர்ப்புகள் உறுதியானதாக அமைவதையும், அதனால் முழுச் ச மகமும் பாதுகாக்கப் படுவதையும் நான் மகிழ்ச்சியோடு அவதானித்து வந்திருக்கின்றேன். அது தங்களுக்கே உரித்தான கருணை காட்டும் பண்பினாலாகும்.
இந்தச் சிறுவனின் சார்பில் பேசுவதற்கு என்னை நியமித் த மை க் காக இந் நீதிமன் றுக்கு நான் நன்றி கூறுகின்றேன். இவன் தனது பிழையை ஏற்றுக் கொள்கிறான். இவனுடைய இதயம் நொறுங்குண்டிருக்கிறது - பச்சாதாபத் தினால் இவன் நிறைந்திருக்கிறான். தனது குழந்தைப் பராயமுதல் ஓர் அநாதையாகவும், பணமில்லாதவனாகவும், பிறரைச் சார்ந்து வாழ் பவனாகவும், இரக்கத்துக்கு ஏங்குபவனாகவுமே வாழ்ந்து வந்திருக்கிறான்.”
இவ்வாறாக அவர் குறிப்பிட்ட வேளை எனது அழுக்கு நிறைந்த கை விரல்கள் அவரு டைய கோட் தொங்கலைப் பற்றிக் கொள்கின் றன. அவரை நான் பற்றிப் பிடித்துக் கொண் டால் என்னை வெளியே இழுத்துக் கொண்டு விடுவார் என்ற உணர்வோடு அவரைக் கெட் டியாகப் பிடித்துக் கொள்கிறேன்.
அவருடைய பேச்சு முடிந்து விட்டதென நான் நினைக்கின்றேன். ஆனால் அங்கு நிலவிய அமைதியைக் கிழித்துக் கொண்டு அவரது கணி வான குரல் மீண்டும் ஒலித்த போதுதான் நடந்து முடிந்தது வெறும் முக வு ரை மட்டுமே என உணர்கின்றேன்.
எனது வக்கீல் தனது மகத்துவமான விண் ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஆரம்பிக்கின்றார்.
அநாதை க் குழந்தைகள் - அவர்களது பாதுகாப்பற்ற தன்மை - அவர்களது தனிமை = அவர்களை அடிமையாக்கும் சோதனைகள் - மேய்ப்பனற்ற மந்தை போல பாழாகும் அவர் களது ஜீவியம் - அவர்களை அழிப்பதற்காக பசியோடு சுற்றித் திரியும் ஓநாய்கள் ஆகியன பற்றி அவர் பேசிக் கொண்டிருக்கின்றார்.

Page 16
கடின மனம் படைத்த மக்கள் இளகு மட்டும். வயது சென்றவர்கள் உரத்துப் புலம்புமட்டும் அவர் பேசிக் கொண்டேயிருக்கிறார்.
என்னை நோக்கிக் கொண் டி ருந்த பொலிஸ்காரரின் கண் ணிர் அவருடைய கன் னங்களில் வடியும் வரை அவர் பேசிக் கொண் டேயிருக்கிறார்.
நானோ, எனது வக்கீலின் கோட்டைக் கெட்டியாகப் பற்றிக் கொள்வதிலும், ஆச்சரி யமிக்க அவரது முகத்தை உற்றுப் பார்ப்பதி லும், அவரது வார்த்தைகளைக் கவனிப்பதி லுமே ஆர்வமாக இருக்கிறேன். இப்பொழுது நான் நல்லபடியாக சுவாசிக்க ஆரம்பிக்கிறேன். புதியதொரு வாழ்க்கையும், நல்லதொரு நம் பிக்கையும் எனக்குள் ஊர்ந்து செல்வதை நான் உணர்கின்றேன். மிகுந்த தைரியத்தோடு எனது வக்கீலின் பால் நான் அன்பு செலுத்துகின்றேன்.
எனது வக்கீல் இன்னும் பேசுகிறார்.
*கனம் நீதிபதியவர்களே, தாங்கள் கருணை கூர்ந்து இவ்வழக்கைத் தள்ளுபடி செய்து - இச் சிறுவனை விடுதலை செய்வீர்களாயின் இவனுக் குக் குடியிருப்பும், பாதுகாப்பும் அளித்து நானே இவனது பாதுகாவலனாகவும் இருப்பேன். அத் தோடு, இவனை ஒரு கல்விமானாக்கி நாட் டுக்கு ஏற்ற ஒரு நல்ல பிரஜையாக உருவாக்கு வேன் எனவும் உறுதியளிக்கிறேன்.”
மகிழ்ச்சியின் காரணமாக எனக்குச் சத்த மிட்டு அழவேண்டும் போலிருக்கிறது. நன்றியு ணர்வினால் என் இதயமே வெடிக்கும் போல் தோன்றுகிறது. நான் அமர்ந்திருக்கும் ஆசனத் தின் மேல் என் அசுத்தமான பா தனிகளை வைத்து அழுக்கடைந்த எனது மேற்சட்டை யோடு எனது வக்கீலை ஆர த் தழுவி ஒரு தடவை அவரது கன்னங்களில் முத்தமிட எண் ணுகிறேன். அவ்வாறு நான் செய்தால் அவர்கள் என்னைத் தூக்கிலிட நான் ஓ ல மி ட் டு க் கொண்டே உயிரிழக்க நேரிடும் என்பதையும் உணருகிறேன்.
* என் தகப்பனே...!
எனது வக்கீலின் அந்த நெடிய உரையின் நடு விலே ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. இது வரை “கனம் நீதிபதியவர்களே,” என விளித்த அவர் "என் தகப்பனே’ என அழைக்கின்றார். இது, என் உள்ளத்தை “தொட்ட து’ என்று கூறுவதை விட “சுட்டது’ எனச் சொல்வதே மிகப் பெருத்தமானதாகும். எனக்காக வழக்

காட தனது சொந்தக் குமாரனையே அந்த நீதிபதி நியமித்திருக்கிறார் என்றால், தனது முழுக் கவனத்தையும் என்மீது செலுத்தி என க்குக் கருணை காட்டுவதற்காகத்தான் இருக்க வேண்டும்.
நீதிமன்றில் நிற்கும் அனைவருமே அழ ஆரம் பிக்கின்றார்கள். எனது இரு கரங்களும் வக்கீ வின் கோட்டை இறுகப் பிடித்துக் கொள்கின் றன. என் எதிரில் நிற்கும் பொலிஸ் கா ரர் தனது தொப்பியை ஒருபுறம் சாய்த்து அருவி போல் அவரது முகத்தில் பாயும் கண்ணிரைத் தனது கைக் குட்டையினால் துடைத்துக் கொள் கிறார்.
எனது வழக்கிலே இது மிக முக்கியமான வொரு சந்தர்ப்பமாகும். எனது வக்கீல் தனது வாதத்தின் உச்ச நிலைக்கு வருகிறார். ‘என் தகப்பனே, இவ்வளவு நேரமாக நான் யாருக் காக வக்காலத்து வாங்கினேனே. அவன் வேறு யாருமல்ல; அவன் எனது சகோதரன்.”
அமர்ந்திருக்கும் நீதிபதி எனது வக்கீலுக் குத் தகப்பன் என்றால் - அந்த வக்கீல் எனது சகோதரன் என்றால், - அந்த நீதிபதி எனக்கும் தகப்பன் தானே. VM
அதற்கு மேல் என்னை அடக்க என்னால் முடியவில்லை. ஆனந்தக் கண்ணிர் பெருக - குற்றவாளிக் கூண்டுக்கு வெளியே குதித்து - நீதிபதியின் இருப்பிடத்தை அடைந்து - அவரது மார்பினில் வீழ்கின்றேன்.
அவர் என்னை ஆரத்தழுவிய போது நான் ஒரு புது சிருஷ்டியாகவே மாறிக் கொண்டி ருப்பதை என்னால் உணரமுடிகின்றது.
அவர் எழும்புகிறார். தனது கரங்களை எனது தோள்கள் மீது போடுகிறார்.
"என்னோடு கூடக் களி கூருங்கள்; எனது மகன் மரித்தான்; மறுபடியும் உயிர்த்தாள். காணாமற் போனான் , திரும்பவும் காணப்பட் டான்' என்று கூறுகிறார்.
கண்ணிர் மல்க அங்கிருந்த ஜனக் கூட் டம் ஆரவாரித்து மகிழ்கிறது. ஒருவரையொரு வர் உற்சாகத்துடன் தழுவிக் கொள்ளுகிறார் கள். என்னோடு கைகுலுக்கப் புறப்படுகிறார் கள். எனது வக்கீலைப் பாராட்டுகிறார்கள். நாம் அனைவரும் ஒன்றிணந்ைது சிரித்து மகிழ் கின்றோம்.

Page 17
இக்கதையிலிருந்து கட்டாயமாக நான் அவசியமாக உங்களுக்குச் சொல்ல வேண்டிய சிலவுண்டு. அந்த நீதிமன்று ஒரு குறிப்பிட்ட திருச்சபையாகும். அவ் வழக்கு ஒரு பழங்கால மறுமலர்வு ஆகும். என்னை க் கைதியாக்கி குற்றப்படுத்தி, நியாயத் தீர்ப்புக்காக கூண்டில் நிறுத்தியது கடவுளுடைய வார்த்தையாகும் நீதிபதி சிங்காசனத்தில் வீற்றிருக்கும் கடவுளே தான். வழக்கில் எனக்காக மன்றாடி, எ ன து மன்னிப்பை வென்றெடுத்து என் இரட்சிப்டை உறுதிப்படுத்திய வக்கீல் இயேசுக்கிறிஸ்துவாகும்
நான் பாவத்தினால் கட்டப்பட்டு. குற்றப் சுமத்தப்பட்டு. தலை நிமிர முடியாமல் நின்றி ருந்த வேளை இயேசு க் கிறிஸ்து என்னைட்
வேதா
* தொட்ர்ந்து வரும்
வார்த்தைகள் வழங்கு
கொள்ளவும், வேதாக
கொள்ளவும் இப்பகு
பாடம் 1
மரியாள் கடவுளால் ஆசி
1 ஆம் 2 ஆம் வாரம்,
மரியாள் - ஆண்ட்வரின் அடியாள்;
மனன வாக்கியம் - (புனித லூக்கா 1:38) "இதோ, நான் ஆண்டவரின் அடி மை; உம்முடைய வார்த் தையின் படி எனக் (
ஆகக்கடவது.”
இதன் பொருள் 6Tsirer
 

பொறுப்பேற்று, எனது கட்டுகளைத் தகர்த்து. எனது பாவங்களைக் கழுவி நிறைவானதும், இலவசமானதுமான மன்னிப்பீந்து ஆசீர்வாத மானதும். மகிமையானதுமான அம்மன்னிப்பை வெளிப்படுத்திய கடவுளை, உலகமனைத்தையும் நியாயந்தீர்க்கும் நீதிபதியை, இருந்தவரும் இருக் கிறவருமான என் பரலோகத் த த் தை யை, அச் ச ந் த ர் ப் பத் தி ல் ஏற்பட்ட அனுபவத் தோடும், பேரன் போடும் திரும்பிப் பார்க்கின் றேன்.
நன்றி: கிறிஸ்தவ தொடர்புகள் - 1982
கமம் பயில்வோம்
ஒவ்வொரு வெளியீட்டின் வாயிலாகவும், கடவுளின்
நம் வல்லமையான செய்திகளை அதிகமாய் அறிந்து
மக் கதாபாத்திரம் ஒருவரைப்பற்றி விரிவாக விளங்கிக்
தி அரிய சந்தர்ப்பத்தினை அளிக்கின்றது.
ர்வதிக்கப்பட்டவள்
அனைவருக்கும் பரிச்சயமான இவ்வார்த் தை#ள் காபிரியேல் எனப்படும் தேவதூதனின் செய்தியால் முற்றிலும் குழப்பமடைந்திருந்த மரியாளின் மறுமொழியாகும்.
*நான் கன்னிகையாக இருக்கிறேனே; இது எப்படி ஆகும்?" என்ற வினாவினால் மரி யாள் தனது த டு மாற்ற த் தை வெளிப் படுத்தினாள்.

Page 18
"கடவுளின் தூய ஆவியின் அருளினால் குழந்தையின் பிறப்பு சாக்தியமாகும். கடவுளால் ஆகாத காரியம் எதுவுமேயில்லை. ஆகவே கன்னி கைகூட குழந்தையொன்றினைப் பெறலாம்’ என்பதாக காபிரியேல் பதிலளித்தான்.
கடவுளின் வல்லமையை உறுதிப்படுத்தும் வகையில் மரியாளின் பதில் அமைந்தது.
“நான் ஆண்டவரின் அடிமை; உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது’
கடவுளுடைய திட்டப்படியும், சித்தப் படியும், வழிநடத்தப்பட்ட ஆண் - பெண் சில ரைப் பற்றி மரியாளின் சிந்தனை சுழன்றது.
* ஆபிரகாமும் - சாராளும் அதிக வயது சென்றவர்களாயிருந்த நாட்களிலே தான் (நியதிக்கு மாறாக) அங்கே ஈ சாக் கு பிறந்தான்.
* எல்க்கானாவுக்கும் - அ ன் னா ளு க் கும் கிடைத்த சாமுவேலின் பிறப்பும் ஒரு புற நடையாகவே நிகழ்ந்தது.
* சகரியாவும், - எலிசபெத்தும் தங்கள் முதிர் வயதில்தான் யோ வான் ஸ் நானகனைப் பெற்றெடுத்தார்கள்.
வழமைக்கு மாறான பிறப்புக்கள் ஏற் பட்ட இச்சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றிலும் கடவுள் தமது இரட்சிப்பின் திட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் என்ற தொனிப் பொருள் ஒலிக்கின்றது. இவை நமது வாழ்வின் நிச்சயமற்ற சூழ்நிலைகளுக்கூடாக நமது இரட் சிப்புக்காகவும், நமது மகிமைக்காகவும் கடவு ளின் வல்லமை செயற்படுவதை நமக்கு நினை வுறுத்துகிறது.
மரியாளின் மறுமொழியின் மற்றையபகுதி கவனிக்கத்தக்க கருத்து மிக்கதாகும்.
'உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது.”
மேசியாவை உற்பவிப்பதற்காக கடவுள் மரியாளைத் தெரிந்து கொண்டார். ஆகவே கடவுளின் சத்தத்தைக் கேட்டபோது அவள் ழ்ேப்படிந்தாள்.
““ssan G660 - 1 வார்த்தைகளுக்குச் செவி
கொடுத்து அவற்றின்படி செய்கிறவனே எனக் குத் தாயும் சகோதரருமாய் இருக்கிறான்"

என்றார் இயேசு கடவுளுடைய வார்த்தை களைக் கேட்டு அதை நடைமுறைப்படுத்திய ஒரு உதாரண வன பூழ் வை மரியா ள் காபிரி யேலுக்கு அளித்த மறுமொழியில் காணக்கூடிய தாக இருக்கின்றது.
3 ஆம் 4 ஆம் வாரம்
மரியாள் - மாதிரி ஷேத்துவம்
மனன வாக்கியம்: (புனித லூக்கா 2:49-50)
'நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்க வேண்டிய தென்று அறிபீர்களா?” என்றார் இயேசு. ஆனால் அவர்களோ அவரது வார்த்தைகளைப் புரிந்து கொள்ளவில்லை.
* இது எதைத் தெளிவுபடுத்துகிறது?
இவை இயேசுவின் பிள்ளைப் பராயம் பற்றிப் புதிய ஏற்பாட்டிலே குறிப்பிடப்படும் கதையில் வரும் வாக்கியங்களாகும். இயேசுவின் குடும்பம் யூத குலத்தில் மிக வறுமையானதாக வாழ்ந்த போதிலும் யூத கலாசார நியமங்களி லே நேர்மையும் ஒழுங்கும் உள்ளதாக இருந்தது. யூதர்களான ஆண்கள் எருசலேமுக்குப் போய் பண்டி கை யை ஆசரிப்பதை வழமையாகக் கொண்டிருந்தார்கள். யோசேப்பு தன் குடும்பத் தாரோடும் கூடச் சென்று அக் கடமையை முழு மையாக நிறைவேற்றினான்.
பண்டிகையின் முடிவில் கலிலேயாவுக்கு அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்த போது வழியிலே இயேசுவைக் காணாம்ல் மரியாளும் யோசேப்பும் ம ன ம் நொந்தார்கள். மீண்டும் எருசலேமுக்கு அவர்கள் வந்தபோது அங்கே ஆலயத்தில் அவரைக் கண்டார்கள். “அனாவசி யமான சிரமத்தை எங்களுக்கு ஏன் கொடுத் தாய்? என அவர்கள் கேட்டபோது அவர் அளித்த இந்தப் பதிலை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
இக்கதை முதலாவது இயேசுவைப் பற்றி யும் இரண்டாவது மரியாளைப் பற்றியும் சில உண்மைகளை வெளிப்படுத்துகின்றது. இயேசு முதலாவதாகப் பேசியதாக லூக்காவின் நற் செய்தியில் காணப்படும் இவ்வார்த்தைகள் பூலோகப் பெற்றோருக்குக் கீழ்ப்படிவதற்கும் மேலாக கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டியதன்

Page 19
முணமாதிரியைத் தெளிவுபடுத்தி நின் றன. உண்மையில் இயேசு மரியாளையும் யோசேப் பையும் விட்டுத் த்ொலைவில் விலகியிருப்பது போல் காணப்பட்டார்.
கானா வூ ர் த் திருமணத்தில் இயேசு நீரைதிராட்சரசமாக மாற்றியதாக யோவான் 2 இல் குறிப்பிடப்பட்டிருக்கும் சம்பவத்தை ஒட்டியதாக இக்கதை விளங்குகிறது. திருமண் வீட்டிலே திராட்சரசம் தீர்ந்துபோன போது மரியாள் இயேசுவானவரின் உதவியை வேண்டி னாள். இதற்கு இயேசு அளித்த பதில் சற்று கடினமானதாகவே காணப்பட்டது.
*ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன?”
என்றாலும் இது ஒரு மரியாதைக் குறை வான வார்த்தைப் பிரயோகம் அல்ல. அன்னை யுடன் அவர் கொண்டிருந்த அன்புக் குறைவைப் பிரதிபலிக்கும் அர்த்தமும் அங்கு இல்லை.
மரியாள் தனது தாய்மைக்குரிய உரிமை களையும் அவரிடமே அர் ப் பண ம் செய்ய வேண்டும் என்பதையே இயேசுவின் வார்த்தை கள் குறித்தன.
இந்த இரு சம்பவங்களுமே "மரியாள் இயேசுவை அறிந்து கொள்வதில் முன்னேற்றம் கண்ட ஒரு முன்மாதிரியான சீஷி’ என்பதைக் காண்பிக்கின்றன. அத்தோடு அவளது தாய்மை உறவும் அவளுக்கு உதவியாக அல்லாது இடை யூறாகவே இருந்து கொண்டது. இதை உணர்ந்து கொள்வதே பெரும் போராட்டமாக இருந்தது. "உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப் போகும்” (லூக், 2 : 35) என்ற சிமியோனின் கூற்றுப்படி இயேசுவிலுள்ள த னது உரிமை களைக் கூட கைவிட வேண்டிய நிலை மரியா ளுக்கு ஏ ற் பட்ட து. மன வேதனைகளின்றி மரியாள் வாழ்ந்ததாகக் குறிப்பிட முடியாது. இறுதியாக, இயேசுவின் மர்ணத்தோடு அது உச்ச நிலையை அடைந்து ஆழ்ந்த துயரத்தை அளித்தது. ஆனாலும், மரியாள் தனது வேத னைகள் - போராட்டங்களைக் குறித்து யாரை யுமே கடிந்து கொள்ளவில்லை. ஏனெனில் கடவுளின் திருமைந்தனைப் பற்றிய நிறைவான அறிவில் வளர்ச்சிபெறும் சரியான சீஷத்துவ வழியை அமைத்துக் கொடுப்பவரும் அவரே.
5 ஆம் 6 ஆம் வாரம்
மரியாள் ஒரு புதிய குடும்பத்தின் அங்கம் மனை வாக்கியம் - (புனித யோவான். 19:26-27)

“இயேசு தம்முட்ைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு தம்முடைய தாயை நோக்கி, ‘ஸ்திரீயே, அதோ, உன் மகன்’ என்றார். பின்பு அந்தச் சிஷனை
நோக்கி, “அதோ உன் தாய்” என்றார்.”
* இவை எதைக் குறிக்கின்றன?
மரியாள் தொடர்பாக நற்செய்தி நூல் களில் தரப்பட்டிருக்கும் எல்லாக் குறிப்புகளை யும் விட இது மிக மிக வேதனைக்குரியதொரு சந்தர்ப்பமாகும். தனது மகனின் மரணத்தை எதிர்பார்த்தபடி தாயாகிய மரியாள் சிலுவை
யண்டையிலே துயரத்தோடு நிற் கி ன் றாள்.
இயேசுவின் வரலாறு இறுதியில் இவ்வாறாக முடிவுபெறுமென அவள் எதிர்பார்த்திருக்கவே இல்லை.
மீண்டும் இங்கே மரியாளை விட இயேசு வே பிரதான கதாபாத்திரமாக வருகின்றார். அவரது உயிர் பிரியும் தறுவாயிலும் ஓர் உத்தம பணியை அவர் நிறைவேற்றுகிறார். தான் வெகு வாக நேசித்து வந்த தனது சீஷனான செபதேயு வின் குமாரன் யோவானை தன் அன்னையின் மகனாக அறிமுகம் செய்து அன்னையை அவனி டம் ஒப்படைக்கின்றார். மறுபுறம் அந்தச் சீஷன் மரியாளின் மகனாக சேர்ப்பிக்கப்படுகிறான்.
தன் அன்னையின் நிலையினைப் பொறுத்
தமட்டில் அச்சந்தர்ப்பத்தில் அவசியமாகவும்,
அவசரமாகவும் மேற்கொள்ளப்பட்ட இயேசு
வின் அன்பு நடவடிக்கையாக இது கருதப்பட்
டாலும் கூட ஆழமான அர்த்தங்களும் இதில் அடங்கியுள்ளன.
நற்செய்திகள் அனைத்திலுமே மானிட குடும்பங்களை கடவுளின் குடும்பங்களாக இயேசு உருவகித்துள்ளார். தங்களது உறவுகளையும் குடும்பங்களையும், உதறிவிட்டு வருபவர்கள் தற்போது தமது இல்லங்களிலும், இன ஜன, பந்து உறவுகளிலும், நிலபுலன்களிலும் வெறுவ தைப் பார்க்கிலும் நூறத்தனையான நன்மைக ளைப் பெறுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் ஒரு புதிய குடும்ப உறவுக்குள் அழைக்கப்படுகிறார் கள். 'கடவுளுடைய வசனத்தைக் கேட்டு அதன் படி செய்கிறவனே எனக்குத் தாயும் சகோதர னுமாய் இருக்கிறான்” என இயேசு குறிப்பிட்ட போது, பூலோகக் குடும்ப உறவுகளை அவர்

Page 20
குறைவாக மதிப்பிடவில்லை. அவரைப் பின் பற்றுவோர் பரலோகின் குடும்ப ஜீவியத்தை உணரும்படியாக் இவ்வுலக மக்களுடன் அவர் மிக நெருங்கிய தொடர்பு கொண்டு வாழ்ந்து காட்டினார். சிலுவையடியிலே மரியா ஞ ம் யோவானும் ஒருவரை யொருவர் பராமரிக்கும் உத்தரவாதத்தினைப் பெற்றார்கள். அவர்களு டைய புதிய குடும்ப உறவானது ஒன்றிணைந்
: ச ந் தி
இயேசுவே, பிலிப்பை -
அத்தி மரத் சகேயுவை = அத்தி மரத்
சவுலை - வ
லாசருவை சந்தித்தீர்.
என்னை -
எங்கே... எ
சந்திக்க உ
92 Ф—L—6ӧї.
தொண்ணுாற்றி ஒன்றுடன் ,ெ தொண்ணுரற்றி ரெண்டுடன் தொடர்புகள் வளர்ந்துநம் து தொடர்புடன் நெருங்குவோட
வாசக நேயர்களுக்கு எ

ததும், இயேசுவின் மரணத்தினால் ஏற்படுத்தப் பட்ட கடவுளின் புதிய குடும்பத்துக்கான முன் அனுபவமுமானதாக அமைந்தது.
இத்தகைய உறவுகளை இன்றும் நாம் எமது திருச்சபை ஐக்கியத்திற்கூடாக அனுப விக்கக் கூடியதாக இருக்கிறதல்லவா?.
(தொடரும்)
ནི་
தின் அடியிலும்
தின் மேலும் ழியிலும் - குழியிலும்
"ப்படி. எப்போ.
ம்சித்தம்?
. 'தொடர்பு
தாடர்பில்லை எமக்கினி தொடர்பு கொண்டிங்கினி பர்களும் நீங்கிட
ம் தூரவழி போகாமல் .
'மது புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Page 21
இந்த
இயேசுக் கிறிஸ்துவை அறியாத வதற்கும் ,
இயேசுக் கிறிஸ்துவை அறிந்து ே தோடு கிறிஸ்துவின் மகிமைக்கா
இயேசுக் கிறிஸ்துவை அறிந்து ெ ஜைகளாகப் புறப்படுவதற்கும்,
எமது வேதாக மக் கல்வி நிலைய தொடர்பினை ஏற்படுத்திக் கெ
疆等* சிந்தனை
உங்களைச் சிநேகிக்கிறவர்களை( என்ன?
உங்களுக்கு நன்மை செய்கிறவர் பலன் என்ன?
திரும்பக் கொடுப்பார்கள் என்று பலன் என்ன?
உங்கள் சத்துருக்களைச் சிநேகியு மல் கடன் கொடுங்கள். அப்டெ களாய் இருப்பீர்கள். அவர் நன் மை செய்கிறாரே.
அன்பார்ந்த நேயர்களே,
事 s t
சஞ்சிகையை வாசித்து விட்டீர்க தயவு செய்து உங்கள் நண்பர்க சஞ்சிகை பற்றிய உங்கள் எண் அனுப்புங்கள்.

*தொடர்பு'.
பர்கள் அவரைப் பற்றித் தெரிந்து கொள்
கொண்டவர்கள் விசுவாசத்தில் வளர்ச்சி பெறுவ ன சாட்சிகளாக விளங்குவதற்கும்,
காள்வதோடு சமூகத்திற்குப் பயன்படும் நற்பிர
1 - BIBLECOR - Lon Gooravittagll-gir ாள்ளுவதற்குமாகும்.
க்குச் சில வார்த்தைகள்
யே நீங்கள் சிநேகித்தால் உங்களுக்குப் பலன்
களுக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்குப்
நம்பி நீங்கள் கடன் கொடுத்தால் உங்களுக்குப்
1ங்கள். நன்மை செய்யுங்கள். கைம்மாறு கருதா 1ாழுது உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளை
ாறியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்
- லூக்கா, 6 32
Grrr?
ளுக்கும் இதை அறிமுகம் செய்யுங்கள். ண அலைகளை ஆசிரியருக்கு எழுதி

Page 22
உள்ளத்தின் பாரம் டே
உலகத்தின் கவலை நீக்
உண்மைச் சமாதானம் இறைவனின் -
உன்னத அன்பினை உ
உங்களுக்கு ஓர் அரிய
இலவச வேதாக
தொடர்பு கொள்ளுங்கள்:
'B BLE
6, Bala henamu
COLOMBO
இச் சஞ்சிகை கொழும்பு - 6, பல்ஹேனமுல்ல ஒழு ஆர். துரைராஜா அவர்சளுக்காக, செங்கல்ல - கண்டி வி தேவதாசன் ஜெயசிங் அவர்களால் கண்டி - கொழுப் அச்சகத்தில் அச்சேற்றப்பட்டு 25.12.1991 ல் வெளியி
 

பாக்கிட
க்கிட
பெற்றிட
ணர்ந்திட
சந்தர்ப்பம்!
நம வழிக் கல்வி
C O R”
Illa Lane
&VN O - S54OO9
NAMNYRISSN
ங்கை - இல. 6 இல் வதியும் அருட் திரு
தி - 90 A 'தாசன் ஸ்" இல்லத்தில் வசிக்கும் பு வீதி - இல. 190 இல் உள்ள றோயல் -ப்பட்டது.