கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வியூகம் 1988.04

Page 1

ராஜேந்திராவின் பக்கம்
வே,
ரபா 5/-
ܠܤܸ

Page 2
வெளியீடுகள்
உமா வரதராஜீனின் உள்மனயாத்திரை சிறுகதைத் தொகுப்பு
நண்பர் சபா. சபேசனின் நேசத்தில் g
 

தொடர்பு கொள்க : 127/4, பிரதான வீதி, கல்முனை.
|ப்பக்கம்.

Page 3
மு. சடாட்சரம் பக்கம்
தேசிய ரீதியாக அறுபதுகளில் ஏற் பட்ட இலக்கிய வளர்ச்சிக்கு கல்முனை எழுத்தாளர் சங்கமும் கணிசமான பங் களிப்புச் செய்துள்ளது. அறுபத்தொன் றிலே உருவாக்கப்பட்ட கல்முனைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் பல வருடங்கன் குறிப் பிடத்தக்க சேவைகள் புரிந்தது. ஆரம்ப காலம் முதல் அதில் முக்கிய உறுப்பினராக நான் இருந்துள்ளேன். சில விடயங்களைக் கூறவேண்டியுள்ளன.
கல்முனைப் பகுதியின் இலக்கிய வளத் துக்கு உரமிட்ட பெருமை நீலாவண னையே பெரும்பாலும் சாரும். இவர் (11-01-75) எம்மைவிட்டுப் பிரியும்வரை எழுத்தாளர் சங்க த் தி ன் தலைவராக இருந்து இப்பகுதியின் இலக்கிய விழிப் புணர்ச்சிக்கு உயிர் கொடுத்தார். எழுத் தாளர் சங்கக் கருத்தரங்குகளிலும் அவ ரின் வீட்டில் நிகழும் சந்திப்புகளிலும், மனம் திறந்து சுவையாகவும், சரளமாக வும் நீண்டநேரம் பேசுவதில் நீலாவணன் வல்லவர். அவருக்கு நிகராக எவரையும் கொள்ளமுடியாது.
ஆரம்பகாலத்தில் காரைதீவிலிருந்து சி. பி சத்தியநாதனும், கல்முனையிலிருந்து நானும் நுஃமானுமாக மூவரும் பின்னேர மானதும், நீலாவணனைத் தேடி ஒடிப் போவது வழக்கம். நாங்கள் திரும்புவ தற்கு இரவு பத்து மணிக்குமேல் ஆவதும் உண்டு. கொஞ்சக்காலம் இதுவே எங்கள் வேலை. அவரோடு உரையாடிக்கொண்டி ருப்பது ஒரு போது ம் தெவிட்டியதே இல்லை. அவர் புதிதாய் எழுதிய கவிதை, அதன் ரிஷிமூலம், சுவைத்துப் படித்த நூல்கள், பழைய சுவையான அனுபவங் கள், படைப்பிலக்கியத்தின் தாற்பரியங் கள் - இவைகளே உரையாடலின் பொரு ளாய் அமைந்து நீளும். இடையிடையே எங்கள் உள்ளக் கிடக்கையையும் கூறு வோம். எமது சிருஷ்டிகளையும் காட்டித் திருத்தங்களையும் கேட்டுத் தெளிவடை
வோம். எங்களைப்போல் பல எழுத்தா ளர்கள் அங்கு சமுகம் தருவார்கள்.

இப்பகுதியின் முன்னணி எழுத்தாள் ராக விளங்கும் பலர் அப்போது சல் முனைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்கில் அங்கத்தவர்களாக இருந்தனர். ஆரம்ப கால உறுப்பினருக்கு ஓர் ஆதர்ச வழி காட்டியாகவே நீலாவணன் இருந்தார். எமது எழுத்தாளர் சங்கம் கவியரங்கு களையும், கருத்தரங்குகளையும், இலக்கிய விழாக்களையும் சிறப்பான முறை யி ல் நடாத்தியது. பெருந்தொகையான ரசி, கர்களின் ஆதரவும் கிடைத்தது. பிரமுகர் களும் மனமுவந்து நிதி உதவியும் புரிந் தனர். அகில இலங்கை ரீதியாக நடாத் திய இலங்கையர்கோன் சிறு கதை ப் போட்டி, இலங்கையர்கோன் விழா, மழைக்கை கவிதை நாடகம், பாராட்டு விழாக்கள், சந்திப்புக்கள், அறிமுகக் கூட்டங்கள், விமர்சன அரங்குகள் என் பன இன்னும் பசுமையான நினைவாகவே மிளிர்கின்றன,
சில ஆண்டுகளின் பின் எழுத்தாள நண்பர்கள், தொழில்புரிய வெளியூர் சென்றனர். 63ல் இலிகிதராக கொழும்பு சென்ற நான் 64ல் பறக்கடுவையில் ஆசி ரியராக அமர்த்துவிட்டேன். சங்கம் சம் பந்தமான என் முயற்சிகளும் சிறிது சோர்வடைந்தன. பின் பு அவைகள் வழமைபோல் தொடர்ந்தன.
நான் வெளியூரில் வேலை செய்யும் போது நீலாவணன் எனக்கு ‘அன்புத் தம்பி’ என்று கடிதம் எழுதிக்கொண்டி ருந்தார். நானும் "அருமை அண்ணு" என எழுதிக்கொண்டிருந்தேன். நீலாவண னின் "வழி", "வேளாண்மை" இரண் டும் தான் இதுவரை வெளிவந்துள்ளன. இன்னும் ஐ ந் தாறு தொகுதிகளுக்குப் போதுமான கவிதைகள் பத்திரிகை நறுக் குகளாகவே இருக்கின்றன. எதிர்வரும் வைகாசி 31ல் அவரது 57ஆவது நினைவு தினம். அந்த நினைவாக அவர் எனக்கு எழுதிய கடிதம் ஒன்றிலிருந்து சில வரி களை வாசகர்களோடு பகிர்ந்துகொள்வ தில் மகிழ்ச்சி அடைகிறேன். O

Page 4
'...... 02.10-66, அன்புத் தம்பி, யாழ் யரங்கம் நன்ருகச் செய்ததாகவே நம்புகிறேன். வீ. சி. க. போன்ருேரும் இருந்து ரசித்தனர். கவியரங்கு முடித்தவுடன் என்னுடன் வாழ்க்ை முறையாகப் பேசிஞர் ஆனல் என் கவிதை சொல்லவில்லை. நம் நாட்டின் மானத்தை எந் நான் விட்டுவிடவில்லை. என்வரை திருப்தி. திய வி. கந்தவனம், இ. நாகராசன் ஆகியோர் பாடினர்கள். சொக்கன் தலைமைதாங்கி "நெரு நீலாவணன்" என்று சொன்னர். அந்தக் கவி தீபன் கொண்டு சென்றர். நீங்கள் நேரில் ப
திரு. நுஃமான் "உறவு' கவிதை பற்றி பிராயம் தெரிவித்திருந்தார்.
யாழ்ப்பாணத்தில் இலக்கிய நண்பர்கே சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஒரே நாள் தர் பெருமழை. வெள்ளம். எங்கும் வெளியில் டொமினிக் ஜீவாவைக்கூட காணவில்லை. தங் மல்லிகையில் பிரசுரமாகியுள்ளதாக நல்லை அ பவர் சொன்னுர், ஒன்று வாங்க முயன்றும் கி மல்லிகைக்கு அங்கு நல்ல கிராக்கியாம் என் இனி ஜீவாவுக்கு நேரில் எழுதித்தான் டெ கிடைத்ததும் அனுப்புவேன்.
இங்கு ஒரேநாள் மழைபெய்து ஒய்ந்திரு பள்ளயம் தீபன், கனி, மெளனகுரு ஆகிய நல்ல சந்திப்பை ஏற்படுத்தியதாம். மெளனகு கவிதையை திரு. கைலாசபதிக்குப் படித்துக் ச இப்படியெல்லாம் எழுதும்படியாக நீலாவண யது எதுவ்ாக இருக்கும்? என்று வியந்தாராம் லியும் இப்படிப் பாடியுள்ளான் என்றும் கூறி கையனின் மொழிபெயர்ப்புக்களின் தாக்கம் வர் தங்களிடம். நான் எதைச்சொல்லலாம்? லும், காத்திருப்போம். யாவரும் நலம் உடைே நலத்துக்கும் பிரார்த்திக்கிருேம். வணக்கம்!

கம்பன் கவி புலவர்மணி, வீ0 கி. க. கையில் முதல் பற்றி எதுவும் த அரங்கிலும் ைெலத்துமிலன், என்னுடன் }ப்புக் கவிஞர் தையை தம்பி டியுங்கள்.
நல்ல அபிப்
ளாடு பழகச் கல். ஓயாத போகவில்லை. கள் குளிப்பு’ மிழ்தன் என் டைக்கவில்லை. றும் கேள்வி. பறவேண்டும்.
ருக்கிறது. தீப் மூவருக்கும் ரு, எனது ‘தீ’ ாட்டிஞராம். னைத் தாக்கி அவர். ஷெல் ஞராம். முரு என்ருர் ஒரு காலம் சொல்
பாம். தங்கள்
மு. சடாட்சரம் பக்கம்
- அண்ணன் நீலாவணன்

Page 5
எச். எம். பாறுக்கின் பக்கம்
யதார்த்தவாதி சமூகவிரோதி
யதார்த்தமாக எழுதவேண்டும் என்ற கருத்து வலியுறுத்தல் நமது பெரும்பாலான எழுத் தாளர்களிடையே ஒரு fashion ஆக இருந்து வருகின்றது. ஆனல் அவர்களின் எழுத்து இந்த யதார்த்தவாதத்திற்கு எதிரானதாக அமைவது பொதுவான அம்சமாகும். இதை விட “சோசலிஸ் யதார்த்தம்', என்ற கோட் பாட்டுக்குரல் விளங்கியோ விளங்காமலோ நமது எழுத்தாளர்களிடையே அடிக்கடி அடி படுகிறது.
சரி விசயத்திற்கு வருவோம்.
ஒரு கவிதை எழுதப்போய் ஒருத்தியின் வேலை போய்விட்டது. "வாழ்க்கை, என்ற தலையங் கத்தில் மெனிக்கா என்ற பெண் முதன்முதலாக ஒரு கவிதை எழுதினர். அவள் கட்டுநாயக்கா வில் உள்ள சுதந்திரவர்த்தகவலயத்தில் வேலை செய்யும் ஏழைத் தொழிலாளி. சுதந்திர வர்த் தக வலயத்தில் வேலை செய்பவர்களில் தொண் ணுாறு வீதமானவர்கள் பெண் தொழிலாளிகள். இவ்வலயத்தில் வேலைசெய்பவர்கள் கிட்டத் தட்ட அடிமைகள் என்பது எல்லோரும் ஒரு தத்துவம்போல ஏற்றுக்கொள்கிற உண்மை. இவ் வலயத்தில் வேல் செய்வதனுல் ஏற்படும் அவலங்களை வெளியிட்டு மூச்சுவிட அவளுக்கு வேறு ஒரு சாதனம் கிடைக்கவில்லை. கவிதை கைகொடுத்தது.
அவள் கவிஞை அல்ல. அவள் அவ்லம் கவிதை எழுதத்தூண்டியது. எழுதி அவ்வட்டாரப் பத்திரிகையில் பிரசுரித்தாள். அவளது முதற் கவிதை பிரச்சிக்னயைத் தொடக்கியது. வர்த் தக வலய ஊழல்களை வெளிப்படுத்தியதற்காக அவள் வேலையில் இருந்து நீக்கப்பட்டாள். பின்னர் கஸ்டப்பட்டு, போராடி கவிதை எழுத

மாட்டேன் என்ற கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தின் கீழ் மீண்டும் வேலைகிடைத்தது. மனதுக்கு ஆறு தலான விசயம்.
நானும் ஒரு கவிதை எழுதி ஏற்பட்ட ஓர் அனுபவத்தை நினைத்துக் கொள் கிறேன். ஆனல் வேலை போகவில்லை. சமூக விரோதியாகி 'ஹிஜ்ரத், போகவேண்டி ஏற்பட்டுவிட்டது. ஆனல் அப்பொழுதெல்லாம் ஆறுதல் தந்தது அ. யேசுராசாவின் கவிதை அடிகள்
"காலநகர்வில்
தாங்காமையில் வெளிவந்து சிறு தூரம் நடக்கத் தொடங்கினேன் தடிகளுடன் எனச்சூழ்ந்தனர் "கலகக்காரன்" என்று சொல்லி"
ஐவன்
இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பிரபல்யம் பெற்று விளங்கிய ஓவியக்கலைஞர் ஐவன்பீரிஸ்
தமது 66வது வயதில் இங்கிலாந்தில் கால
மானதாக பத்திரிகையில் இருந்து அறியமுடி கிறது. சிங் களச் சினிமாவிற்கு புது உத்
வேகத்தை அளித்த பிரபல சினிமா இயக்குனர்
லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் இவரின் மூத்த சகோ
தரராவர். 1921 ஜூலை31ல் தெகிவளையில்பிறந்த
இவர் இளவயதில் இருந்தே ஒவியத்தில் மிக
விருப்புடையவராக விளங்கினர். குழுAசன்
ஓவியக்கலைஞர்களுடன் இணைந்து தொடர்ந்து ஒவியக்கண்காட்சிகளை நடத்தினர். தனிமனி
தக் கண்காட்சியின் மூலமூம் இலங்கையிலும்
வெளியிலும் தனக்கென்று ஓரிடத்தைப் பிடித்
துக் கொண்டார். அவருடைய ஓவியங்கள்
ஆத்மீக உணர்வுகளை நன்கு வெளிக்காட்டுபவை
களாகவும் கிழக்கத்திய கலைச்சுவையை மரபுரீதி
பான கோடுகளால் சிறப்பாக பொருத்துபலை
களாகவும் அமைகின்றன என்று விமர்சகர்க
ளின் பாராட்டைப் பெறுகின்றன.

Page 6
தேடலும் படைப்புலகமும்
ஓவியர் அ. மாற்குவை கெளரவிக்குமுகமாக "தேடலும் படைப்புலகமும்', ஓவியர் மாற்கு சிறப்புமலராக வெளிவந்துள்ளது. அ. யேசு ராசா, இ. பத்மநாப ஐயர், அ. சுகுமார் இத சீனத் தொகுத்துள்ளார்கள். இது ஒரு தமிழியல் வெளியீடாகும். ஒவியர் மாற்கு வைப்பற்றியும் அவர் ஓவியங்களேப்பற்றியும் நன்கு அறிவது டன் சமகால ஓவியங்கள், நவீன ஓவியங்களேப் பற்றியும் இலகுவாக அறிய இத்தொகுதி - உதவுகின்றது. நவீன ஓவியம் விளங்காத ஓவியம் என்று ஒரு வகையாக ஒதுக்கப்படும் இக்காலத் திலே நவீன ஓவியத்துடன் ஈடுபாடு கொள்ள வும் சுவைக்கவும் இத்தொகுதி நமக்கு வாய்ப் பேற்படுத்துகிறது. சர்வதேச ரீதியாக நவீன ஓவியம் பற்றியும் நம் அக்கறையினே விரிவு படுத்த இம்மவர் தூண்டுகிறது.
மாற்கு பற்றி ஒரு பகுதியாகவும், கலே, கலஞர் பற்றி இன்னுெரு பகுதியாகவும் இம்மலர் சிறப் பாக, பெறுமதி வாய்ந்ததாகத் தொகுக்கப் பட்டிருக்கின்றது.
சிங்கள ஓவியக்கஃலஞர் பற்றியும், அவர்களின் நவீன ஓவியத்தின் கற்கால நிஃமைகள் பற் றியும் ஒரு சிறு குறிப்பாவது வெளிவந்திருத் தால் இம்மலர் இன்னும் நன்முக பூரணமடைத் திருக்கும் என்று சொல்லலாம்.
இந்தச் சிக்கலான காலத்தில், இவ்வளவு சிர மத்திற்கு மத்தியிலும் இவ்வளவு அழிகா இந்த மலர் வெளிவந்ததே பெரியதொரு சந் தோசம் பெரியதொரு திருப்தி, நவீன இலக் கியத்தில் ஒவியத்தில் அக்கறை கொண்டவர் கிள் அ&னவரும் படிக்கவேண்டிய தொகுதி. ஆணுல் விலேதான் 100 ரூபா.
ஹைக்கூக் கவிதைகளும், டங்காக் கவிதைகளும்
ஜப்பான் நாட்டில் இப்பொழுது கவிதைகள்

எச். எம். பாறுக்கின் பக்கம்
ரீ - சேட்டில் அச்சடிக்கப்பட்டு விற்பனயாகின் றன. மச்சிரரா என்பவருடைய கவிதைகள் தான் அப்படி பிரபல்யம் அடைந்திருக்கின்றன. ஜப்பானிய டங்கா வடிவத்தில் புதுமைகள் புகுத்தி எழுதப்படும். அக்கிவிதைகள் பெரும் பாவானுேரைக் கவருகின்றன. உதாரணமாக சில கவிதை அடிகள்.
"பெற்றேர்கள் சொல்கிறர்கள்
பிள்ஃாக&ள வளர்க்கிருேம் என்று தோட்டத்தில் தக்காளி தானுகவே பழுக்கிறது.'
"எனது சேட்டின் வியர்வையின் மனம் நீ தந்த பழக்கூழின் ருசியைச் சொல்கிறது.
தமது புதிய பண்டிதர்கள் ஹைக்கூக் கவிதை கள் எழுதுவது எப்படி என்று பாடம் நடத் துகிறர்கள். அதன்படி நமது கவிஞர்கள் ஹைக்கூக் கவிதைகள் எழுதவும் முன்னகிருர்கள். எல்லாக் கவி தை சு ஃா யு ம் போக்கு கீளேயும் படிப்பது மிகவும் நல்லது. அதற்காக நாமும் ஹைக்கூக்கவிதை எழுதவேண்டும் என்று ஒற் றைக் காலில் நிற்பது நமது சொந்தக்கவிதைப் போக்கை - சிதைப்பதாகவே முடியும். பெரும் பாலான நமது இளங்கவிஞர்களிடம் மேத்தி , வைரமுத்து தாக்கமே ஏற்படுகின்றது. ஹைக் சுக் கவிதைகள் என்று அது இன்னுெருபுறம் தமிழ் நாட்டை விட நல்லதொரு கவிதைப் போக்கு இ ல ங் கை யி ல் வளர்ந்திருப்பதாக தமிழக விமர்சகர்களே ஒத்துக்கொள்கிருர்கள். நம்மைநாம் ஒருதரம்உற்றுப்பார்த்துக்கொள்ள வேண்டும் நமது கவிதை அமைப்பில் சுயமான புதுமைகள் செய்ய வேண்டும். பலநாட்டுக் கவிதைகளேயும் நன்கு அறிந்து நமது கவிதை அமைப்பின் அடித்தளங்களே கண்டுணர்ந்து நமது கவிதைகள் புத்துணர்ச்சி பெறவேண்டு மே ஒழிய இன்னுெரு நாட்டு பண்பாட்டில் நம் இலக்கியக் கொடிசுளே படர விடக் O

Page 7
வீ. ஆனந்தன் பக்கம்
கேரளம் லஜ்ஜிக்கட்டே'
1985 டிசம்பர் 23ம் திகதி திங்கட் கிழமை (மலையாள மஞேரம) தினசரிப் பத் திரிகை முதற் பக்கத்தில் வெளிவந்த மலையாள மகாகவி வைலோப்பிள்ளி பூரீதரமேனேனின் மரணச் செய்தி.
"மகாகவி வைலோப்பிள்ளி பூரீதரமே ஞேன் தனது 74வது வயதில் மரணமாஞர். ஒக்டோபர் 15ம் திகதி நோய்வாய்ப்பட்ட இவர் பூங்குன்னத்திலுள்ள இவரது நண் பரான டாக்டர் ராதா கிருஷ்ணனுடைய வாசஸ்தலத்திலி நந்து சிகிச்சை பெற்ருர், இராத்திரி 10-15க்கு காய்ச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு 10-50க்கு மரணமடைந் தார் மரண நேரத்தில் அவருடைய மனைவி பr னுமதியும், மகன் பூரீதரவிஜயனும் அருகிலி ருந்தனர். கேரளத்தில் அண்மைக் காலத்தில் வாழ்ந்தவர்களில் மிகப் பெரிய கவிஞர் இவர். மகாகவி என்று அழைக்கப்படுவதை விட மலையாளிகளின் விருப்பத்திற்குரிய கவிஞர் என்று அழைக்கப்படுவதையே இவர் விரும் பினர். கல்லூரி நாட்களில் அந்தக் கல்லூரி யின ஆசிரியரும் அந்தக் காலத்தின் பிரபல கவிஞருமான குற்றிப் புரத்து கேசவன் நாய ருடைய பரிச்சயம் இவருக்கு ஏற்பட்டது. இந்தக் கல்லூரி ஆசிரியரின் பரிச்சயம் பூரீதர மேனேன் ஒரு சிறந்த கவிஞஞக உருவாகுவ தற்கு உதவியது. 1931ம் ஆண்டு முதல் 1966ம் ஆண்டு வரை கல்லூரி ஆசிரியராகப் பணிபுரிந்தார். இந்த நீண்ட காலகட்டத்தில் நிறையக் கவிதைகள் எழுதினர். இவைகள் 12 தொகுதிகளாக வெளிவந்தன "கனி கொய்த்து’ (1947) சிறிரேக (1951) வித்தும் கைக்கொட்டும், ஒணப்பாட்டுக்கார், குடிஒழிக் கல், ரிஷியசிருங்கரும் அலக்சாண்டரும் (இரு நாடகங்கள்) கண்ணிமணிகள் (குழந்தைக் கவிதைகள்) கடல் காக்ககள், கய்ப்பவல்லரி, குருவிகள், விட, மகரக் கொய்த்து ஆகிய இவருடைய நூல்களில் அதிகமானவை பரிசு பெற்றவைகள். கய்பவல்லரிக்கு மத்திய அர சின் சாஹித்திய அக்கடமிப் பரிசும், சோவியத் ரஷியாவின் நேரு நினைவுப் பரிசும் கிடைத்தது. மகரக்கொய்த்துக்கு கேரள மாநில சாஹித்திய அக்கடமிப் பரிசும் வயலார் பரிசும் கிடைத்
தது. வைலோப்பிள்ளி பூரீதர மேனேனின்

மிக உன்னத இலக்கிய சிருஷ்டி "மகரக் கொய்த்து’ என்னும் கவிதைத் தொகுதி. கடந்த பத்து ஆண்டுகளில் மலையாளத்தில் வந்த இலக்கிய சிருஷ்டிகளிலெல்லாம் இது மிகச் சிறந்தது எனப்போற்றப்பட்டது.
1985 டிசம்பர் 24ம் திகதி எல்லா மலை யாளப் பத்திரிகைகளிலும் பூரீதர மேனேனு டைய மரணச்சடங்கு பற்றிய செய்திகளை வெளியிட்டிருந்தது. அதில் நூற்றுக்கணக்கான ரசிகர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண் டதாகவும் கண்ணிர் அஞ்சலி செலுத்தியதா கவும் கூறப்பட்டிருந்தது. அதிகம க எல்லா மலையாளப் பத்திரிகைகளும் ஆசிரியத் தலை யங்கம் எழுதி அவரைக் கெளரவித்திருந்தது. சுருக்கமாகச் சொன்னல் எல்லா பத்திரிகை களும் "வானத்தமரன் வந்தான் காண்; வந்ததுபோல் போனன் காண்" என்று புலம்பின.
ஆளுல், அடுத்தநாள் அதாவது 1985 டிசம்பர் 25ம் திகதி "மலையாள மனுேரமா" பத்திரிகையில் பூரீதர மேனேனுடைய இறுதிச் சடங்குகளிற் கலந்து கொண்ட கேரள சாஹித்திய பரிக்ஷத் தலைவர் சி பி. சிறிதரனுடைய அறிக்கை "கேரளம் லஜ்ஜிக் கட்டே" (கேரளம் வெட்கப்படட்டும்) என்ற தலைப்பில் வெளிவந்தது, அதில் அவர் கூறு கிருர்,
“மலையாள மொழி என்றுமே மறக்க முடியாத மகாகவி வைலோப்பிள்ளியுடைய மரணச் சடங்கு மலையாளிகளைப் பொதுவாக வும் இலக்கியக் காரர்களச் சிறப்பாகவும் வெட்கப்படவும் அதிர்ச்சி அடையவும் செய் யும் ஒரு சம்பவமாகும்.
வைலோப்பிள்ளியுடைய இறுதியாத்தி ரையில் நான் பங்கெடுத்துக் கொண்டேன். அவருடைய இறுதி யாத்திரையைக் கண்ட போது எனக்கு மிகவேதனையும் அளவு கடந்த துக்கமும் ஏற்பட்டது. திருச்சூரில் இருந்து 12-30 மணிக்கு இறுதியாத்திரை தொடங் கியது. நானும் டாக்டர் ராகுலனும் உன்னி கிருஷ்ணன் புத்தூரும் சென்ற ஒரு காரும் அதற்குப்பின் வைலோப்பிள்ளியுடைய நெருங் கிய உறவினர்கள் நாலைந்து பேரும் வந்த

Page 8
ஒரு காருமே இறுதியாத்திரையிற் பங்கெடுத் துக் கொண்டன. வழியில் எந்த ஒர் ஆடத் திலும் அந்த இறுதியாத்திரையைப்பற்றி எந்தவித அக்கறையும் இருக்கவில்லை. யாரு டைய இறுதியாத்திரை என்ற பிரக்ஞை கூட அங்கே யாருக்கும் ஏற்படவில்லை. திருவில்லா மல பஞ்சாயத்து மயானத்தில் எங்களுடைய கார்களிரண்டும் நின்றன. அங்கே ஒரு சிறு குழந்தை கூடக் கிடையாது. அப்பொழுது நாங்கள் மயானம் மாறிவந்து விட்டோமோ என்று நினைத்தோம். அங்கு வந்த அதே ஊ வரச் சேர்ந்த பழைய வாத்தியார் ஒருவர் இறுதிச் சடங்கு நடைபெறும் மயானம் இது கடன் என்று உறுகிப்படுத்தினர். இதுதான் அந்த மயானம் என்ருல் எங்களுக்கு முன்பே தகனக் கிரியைகளுக்குரிய விறகுகளுடனும் வேறு சாதனங்களுடனும் வந்த லொறி எங்கே? வைலோப்பிள்ளியினுடைய பூ த வுடலுடன் நாங்கள் இரண்டு மணித்தியாலங்கள் உச்சி வெயிலில் லொறிக்காகக் காத்திருந்தோம், பிறகு லொறி வந்தது. அந்த லொறிக்காரர் களே சிதையை அடுக்கினர்கள். ஓர் ஆற்றின் கரையிலிருந்து அரைக் கிலோ மீற்றர் தூரத் தில் ஒரு மணல் வெளியில் சிதை அடுக்கப் பட்டது. அவருடைய மக்களும் சொந்தக்காரர் களும் தகனக்கிரியைக்குரிய சடங்குகளைச் செய் து முடித்தார்கள். அப்பொழுது அங்கிருந்த வர்களை எண்ணிச் சொல்லலாம் மக்களும் மரு மக்களும் மகாகவிக்கு வைத்தியம் பார்த்த டாக்டர் ரி. ஏ. ராதாகிருஷ்ணனும் எரிமேரி பரமேஸ்வரன் பிள்ளையும் சேர்ந்து எட்டுப் பேர். நானும், ராகுலனும், உன்னிகிருஷ்ணன் புத்தூரும் திருச்சூர் கங்காதரன் மாஸ்டரும் கிருஷ்ணக்குட்டியும், கார்டிறைவரும் சேர்ந்து ஆறுபேர். அதே ஊரைச் சேர்ந்த இருவர். எல்லாம் பதினறு பேர். பத்திரிகை நிபெர்க ளில்லை. புகைப்படக்காரர் இல்லை, அரயல் வாதிகள் இல்லை, அக்கடமிக்காரர்கள் இல்லை, இலக்கிய ஈடுபாடுடையோர்கள் இல்லை.
2-45க்கு சிதைக்குத் தீவைக்க்ப் பந்தம் கொளுத்தினுேம், அப்போது ஏ. ஐ. டி. யு. சி. என்ற பட்டி அணிந்த சிகப்புக் கோட்டும் சிகப்புத் தலைப்பாகையும் அணிந்த 20 பேர் வந்தனர். "சவம் இவ்விடத்தில் எரிக்கக் கூடாது; இந்த ஆற்று நீரைத்தான் நாங்கள் குடிப்பது; இவ்விடத்தில் எரித்தால் நாங்கள் பொல்லாதவ்ர்களாக மாறிவிடுவோம், என்றர் க்ள்.

வீ. ஆனந்தன் பக்கம்
நாங்கள் தனித்தனியாகவும் கூட்டாகவும் அவ்ர்களுடன் பேசிப்பார்த்தோம். மகாகவி வைலோப்பிள்ளி பூரீதரமேனேனுடையபிரேதம் இது என்றும் சொன்னுேம், "யாருடைய பிரே தம் என்ருலும் இவ்விடத்தில் எரிக்கமுடியாது’ என்று கூறிவிட்டார்கள். அந்த ஊர்க்காரரில் ஒருவர் அவர்களோடு பேசினர் இரண்டு வாரங்களுக்கு முன்பு அவ்விடத்திலொரு பிரே தம் எரிக்கப்பட்டதை எடுத்துச் சொன்னுர், ஆனல் அவர் கள் ஒத்துக்கொள்ளவில்ல' எரித்து முடித்ததும் சாம்பல், அடிமண் எல் லாவற்றையும் அப்புறப்படுத்தில்விடுவோம்; அடுக்கிய சிகையை கலைக்கச் செய்யாதீர்கள். என்று கெஞ்சிப்பார்த்தோம்; அது ஒன்றும் அவர்களிடம் பலிக்கவில்லை. இனி வேறுவழி எதுவும் இன்றி சிதையைக் கலைத்து அவ்விடத் திலிருந்து கொஞ்சம் தூரத்திற்கு அப்பால் ஒரு வயலில் திரும்பவும் சிதையை அடுக்கி னுேம், இரண்டாவது சிதையை அடுக்கித் தீ வைப்பதற்கு முன்பு வைலோப்பிள்ளிக்கு இறுதி மரியாதையைச் செலுத்துவதற்காக கவிஞர் சச்சிதானந்தனும் அவரின் நண்பர்கள் நாலைந்து பேரும் ஓடிவந்தார்கள்.
நடந்தவிடயம் இப்படி இருக்கி அடுத்த நாள் காலைத் தினசரிகளில் எல்லாம் நூற்றுக் கணக்கான ரசிகர்களும் அனுதாபிகளும் கண் ணிர் சிந்திக் கதறியழுதுகொண்டிருக்கும்போது மகாகவி வைலோப்பிள்ளி பூgதரமேனேன் அவர்களின் பூத உடலைத் தீ விழுங்கியது: பழைய புதிய தலைமுறை இலக்கியக்காரர்கள் அதிகமானேரும் நூற்றுக்கணக்கான ஊர் மக் களுமாக இறுதிச்சடங்கில் ஏகப்பட்டோர் கலந்து கொண்டார்கள் என்று செய்தி வெளியிடப் பட்டிருந்தது. கேரளமே, இலக்கியக் காரர் களே, அரசியற் கட்சிகளே, அரசே, மக்களே! நான் வெட்கப்படுகின்றேன்.
1985ல் மகாகவி பூீரீதரமேனனுக்கு மல்ை யாளிகள் கொடுத்த இதே மதிப்பையும் மரி யாதையையும் இதற்கு முன்பே 1921ம் ஆண்டு மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் இறுதிச் சடங்கில் பதினெருபேர் கலந்துகொண்டதன் மூலம் தமிழர் கள் தங்கள் மகாகவிக்கு செலுத்திவிட்டார்கள்.

Page 9
சோலைக்கிளியின் பக்கம்
சுமார் 2000 நூற்ற
கைவேறு
கால்வேழுய் அங்கங்கள் பொருத்திப் ெ மனிதர்கள் தயாரிக்கப்படு நேற்று என் கனவில் கண்
கண்கள் இருந்தன ஒரு ை மூக்கும் இருந்தது இன்குெ முழங்கால் பின்மூட்டு விலா குதி எல்லாமே ஏற்கனவே செய்து கடைசி தம்பதியர் வந்தார்கள் புரட்டிப் புரட்டிச் சிலதை பார்த்தார்கள் பின்னர் விரும்பியதை எடுத்தார்கள் கொண்டுபோய் கோர்வை(
வானம் புடவையாய் வெ கிடந்தது வீதியாய் நான் நின்ற பாதை
ஒருவன் வந்தான்
துவக்கோடு பூனை எலிதே பார்த்துப் புன்னகைத்தால் அப்புறமாய் வீட்டுக்குள் நு காலில் இருந்த இருதயத்ை மனைவியிடம் கொடுத்துவி
வெயிலோ கொடுமை எரிச்சல் தாங்கவில்லை அவன் பெண்டாட்டி எழு பொத்தானை அழுத்திவிட்( இரவு உடனே சூரியன் மறைந்த நிலவு. நான் இன்னும் கொஞ்சம் ஆண்டவனைக் குடும்பியிே தன்னுடைய புறங்காலை 6 மணிசி. 1. காலம் எனக்கு அவ்வளவு எங்கிருந்தோ இந்த நூற்( கத்தியது இடையில் நின்று முக்கிய
5 ft. . . . . . . . . . . . oo see . . . . . a as

ண்டு
பாருத்தி வதை டேன்.
பக்குள் றன்றில்
sei Ga Gasmas
ከr செய்யக் கொடுத்தார்கள்
ட்டுண்டு
டி அலைவதனைப் ir
ழைதீது தைக் கழற்றி ட்டுப் படுத்தான்.
ந்தாள் போனள் அங்கிருந்த டு நிமிர்ந்தாள்
கண்ணயர்ந்து போயிருந்தால்
ல இழுத்து வணங்கச் செய்திருப்பாள்
மோசமில்லை முண்டுக்காகம்
8 8

Page 10
இன்றைய இளைய தலைமுறைப் கவிஞர்களாக மூவரைக் குறிப் அவர்கள் மு. மேத்தா, வைரமு
இந்த மூவரும் இன்றைய இளைய தலைமு பெற்றிருக்கும் இடத்தை ஆற்றல் வாய்ந்த கூத்தன், வைத்தீஸ்வரன் போன்ருேரோ அ பரசன் போன்றேர்களோ பெற்றிருக்கவில்லை
வைரமுத்து இப்பிரதேசத்திற்
பிரதான வாய்ப்பாக இருக்கின்ற குறிப்பிட்டுச் சொல்லுமளவிற்கு னுதாரணங்களாகக் கொள்ளப்ட ""வஸந்த வரிகள்” இன்றைய ". வகணிகள்” ஆகின்றன. இவர்கள் களையும் பெற்றுவிடுகின்றன. இக் பெறுமானம் பற்றிய வெட்டுமுக இளையதலைமுறைப் புதுக்கவிதைய மாயைக்கு இட்டுச் செல்கின்றது
சென்ற ஆண்டில் இரா. வைரமுத்துவின் "தி வது பதிப்பாக வெளிவந்தது. இது அவ்ரது படைப்பாக விதந்துரைக்கப்படுகின்றது. ஆணு தை"களிற் பெரும்பாலானவை படைப்பாற்றி மானம் உள்ளனவாக இல்லை.
கவிதையும் ஏனைய கலைகளைப்டே பொருத்தியிருக்க வேண்டிய ஒரு திருத்தி எழுதிய தீர்ப்புகளிற் அல்ல என்று ஒரு தீர்ப்பை நாப் பவ வெளிப்பாட்டு அம்சத்தை பினுல், இத்தொகுதியிலுள்ள பாட்டு வரட்சி அவை கவிதைக் இட்டுச் செல்லும். பிரதானமாக மூன்று அம்சங்கள் (அவற்றைக் காணப்படுவதனை அவதானிக்கலாம்.
1. சொல் விளையாட்டுக்கள் 2. அதீத பிரச்சாரப் பண்பு 3. இறுக்கமின்மை அல்லது நாயக்கர் காலத்திற் காணப்பட் இதிற்காணப்படும் பெரும்பால இழைத்து சந்தனப்பின்னங்களுக் புலவர்கள் செய்யுள் வீதியிற் கா மைப்படுத்தி சொல்லாடுகின்ருர் டிய கலைத்துவம் எக்கேடுகெட்ட எழுதுகின்ருேம்" என்ற எந்தவி யில் லாவகமாகக் காய்களை ந

மன்சூர் ஏ. காதரின்,:பக்கம்
ஒர் அப்பீல் திருத்தி எழுதிய தீர்ப்புக்கள்பற்றி
புதுக்கவிதையாளர் பலர் தம்முடைய ஆதர்ஸ் பிடுவதிற் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். த்து, நா. காமராசன் ஆகியோர்களாவர்.
றைப் புதுக்கவிதையாளர்களிடம் புதுக்கவிதையாளர்களான ஞானக் ஸ்லது ஈழத்தில் ஜெயபாலன், கவி
"செங்கோல் செலுத்துவதற்கு' சினிமா ஒரு து. ஆனல், மற்றிருவருக்கும் இந்த வாய்ப்பு க் கிடைக்கவில்லை. ஆனலும் இவர்கள் முன் டுகின்றனர். இவர்களுக்குச் சொந்த மா ன கவிதை தேசத்தில்" செல்லுபடியாகும் "செலா து கொகுதிகள் பெருவாரியான மறு பதிப்புக் கவிஞர்களின் கவிதைகளிற் காணப்படும் கலைப் மான ஆய்வுகள் முன்வைக்கப்படாமையே பல ாளர்கள் இவர்களை ஆதர்ஸமாகக் கொள்கின்ற
ருத்தி எழுதிய தீர்ப்புகள்" பத்தா தொகுதிகளிலேயே முத்திரைப் ல் இதிற் சேர்க்கப்பட்டுள்ள ‘கவி மலை வெளிப்படுத்தும் கலைப்பெறு
பால படைப்பாற்றலும் அழகியல் அந்தஸ்தும் கலைவடிவமாகும் என்பதை ஏற்றுக்கொண்டால்,
கோர்க்கப்பட்டுள்ள பலவற்றை கவிதைகளே எழுதவேண்டிவரும், கவிதை என்பதும் அனு உள்ளடக்கிய ஒரு கலைவடிவம் என நாம் நம் பலவற்றில் காணப்படுகின்ற அனுபவ வெளிப் களல்ல என்னுமோர் தீர்மானத்திற்கு நம்மை
குறைபாடுகள் என்றும் குறிப்பிடலாம்) இதிற்
தொய்வு
ட வித்துவச் செருக்கின் மலிவுப் பதிப்பாகவே ான கவிதைகள் அமைந்துள்ளன. சொற்களை குள் சதுரங்கம் ஆடவைத்து நாயக்கர் காலப் ட்டியவிளையாட்டை வசன "விலாசத்தில்” நொய் இந்தக் கவிஞர். கவிதையிற் காணப்பட வேண் ாலும் சரி என்ற தோரணையில் "நாம் கவிதை 5மான கரிசனையுமின்றி சொற்சதுரங்க மேடை கர்த்தி "கவிதை" எழுதியிருக்கின்றர். இதஞல்

Page 11
மன்சூர் ஏ காதரின் பக்கம்
இவரை ஆதர்ஸமாகக் கொள்ளு கவிதை என்கின்ற ஒரு கப்பான படுகின்றனர். இவருக்குச் சொ என்ற மாயை திரும்பவும் புதுக் டிருக்கின்றது. நூற்ருண்டுக் காலமாகச் சொல்லடுக்குச் தமிழ்க்கவிதைக் கிளியை பாரதி என்ற மக்க சிறகடிக்க வைத்தான் அவனின் வாரிசு ந மேடைக்கு வ்ந்த இன்றைய கவிஞர்கள் சி பரையைத் தோற்றுவிக்குங்கைங்கரியத்தைக் க கின்றனர். கல்யான தேசம், கர்வக் கனவுக வைத்துக் கொண்டு ஒரு கவிதைத் தொழிற்ச என்ற நம்பிக்கையை இன்றைய இளைய தலைமு யிருக்கின்றனர். இந்தச் சொல்லடுக்குகளில் எ யின் இராகங்கள் மீட்டப்படுகின்றன என்பத வடிகிறதா - அந்தி என்ற கவிதை) இவை எல்ல ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ‘வ கிண்ணம் சூரியனிற் தடுக்கிச் சிந்திவிட்டது. மானது" போன்றவரிகள் இவற்றின் காணப்ப கள்தாம். அதற்காக எல்லா "வெத்து வேட எப்படி அங்கீகரிக்க முடியும்?
அற்புதமாகச் செய்திருக்கும் சில மேலோங்கி நிற்கின்றது. இது க உதாரணமாக "உறக்கம் கலைவ( கவிதையில் "பாரத தேவீ சுதந் மயக்கத்திலா? பார்! - என்ற ெ அப்பட்டமாகக் கொண்டிருக்கின் நாட்டான் இட்ட விலங்கை உா போன்றவரிகள் தேசிய முதலாளி இப்படி அற்புதமாகச் சொல்லப்ட னத்தில் இருந்து இறங்குவதற்கு இ "கம்பனுக்கு ஒரு கேள்வி, மன்னிப்பு பரிகா களிலும் அழகாகச் சித்தரிப்பதில் நிறைவான மைக்கு அருகில் வைரமுத்து வந்திருக்கின்றர். , கவிதைகளிற் கூட இறுக்கமின்மை என்ற குறை யில் போடப்பட்ட "பெளல்களாகவே தெரிகின் புதமாக செய்யப்பட்டிருக்கின்றது. (இதன் ைெ காரணமாக அமைகின்றது) 'இந்திர லோ மோகக் கிறுக்கெடுத்து முந்நூறு முத்தமிட மு பார்த்துவிட. இட்ட முத்தத்து எச்சிற் கறைய கழுவ" என்று கடைந்தெடுத்து உரிக்கிய கவி கும் ஒரு கேள்வி கேட்கவில்லை" என்று தண் 6 கவிதையிற் காணப்பட்ட ஒவிய ஒத்திசைப்பை போல 'மன்னிப்பு பரிகாரமல்ல' என்ற கவி வரைந்து இறுதியில் 'மதம் ருேஸிகலுக்கு மன் மறு வாழ்வை.?” என்று அவசியமற்ற ஒரு செய்திருக்கின்ருர்,
மொத்தத்தில் இக்கவிதை நூல் கி வலுப்படுத்துவதைவிட அதனைக் நூல்களை வெளியிட்டுள்ளேன். அ துள்ளன என்பதிற் கொள்ளும் " ருலும் முத்திரைக் கவிதைகள் வைரமுத்து கவனம் செலுத்துவ

9
ம் பலர் இந்தச் சொல்விளையாட்டுக்கள் தான் அபிப்பிராயத்திற்கு மீண்டும் இட்டுச் செல்லப் ந்கமான 'அந்தபடரலரிகள்” தான் கவிதை கவிதையாளர்கள் பலரிடம் தோற்றுவிக்கப்பட்
சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்த ர் கவிஞன் சுதந்திர வானத்தில் ாங்கள் என்ற கட்டியத்துடன் லர் ஒரு புதிய பண்டிதப்பரம் ச்சிதமாகச் செய்து கொண்டிருக் ள், விடியல் முதலிய பதங்களை ாலையை லாபகரமாக இயக்கலாம் றையினருக்கு இவர்கள் ஏற்படுத்தி 'ங்கேயாவது ஒரீடத்தில கவிதை bகாக (உ-ம் தீயில் அங்கே தேன் )ாவற்றையுமே கவிதைதான் என்று ரையக் கொண்டு வநத வர்ணக் ஆனல், சிந்தியதெல்லாம் சித்திர டும் கவிதைத்தன்மையின் சாயல் ட்டுக்களையும் கவிதைகள் என்று
கவிதைகளிற் கூட அதீதப் பிரச்சாரப்பண்பு விதையின் பாரத்தைக் குறைத்து விடுகின்றது. தெப்போ, மயக்கம் தெளிவதெப்போ" என்ற தான? எழு! நீ கிடப்பதென்ன உறக்கத்திலா? தாடக்கவரிகளே அதீத பிரச்சாரத் தன்மையை றன. அதேவேளை இதே கவிதையில் "வெளி க்கி உள்ளூர் விலங்குகள் உற்பத்தி செய்தது த்துவ எழுச்சியை அழகுறச் சித்தரிக்கின்றன. டும் கவிதைவரிகள் கூட கவிதை என்ற ஸ்தா இந்த அதீத பிரச்சாரப்பண்பு வழிசமைக்கின்றது.
ரமல்ல. ஆகிய இரண்டு கவிதை
வெற்றியைக் காணும் உச்சநிலை ஆணுல், இப்படித் தேறுகின்ற ஓரிரு பாடு இதன் வெற்றியின் இறுதிநிலை 9து கம்பனுக்கு ஒரு கேள்வி அற் பற்றிக்கு சந்தம் கூட ஒரு வகையிற் கத்து இளசுகளை தேவரெல்லாம் )த்தமிடும் கூத்துகளை மூத்த நிலா ளிக்க வட்டில் அமுதெடுத்து வாய் தை நெய்யில் "உன்னை இதுவரைக் aர் வரிகளைச் சிந்தவைத்து அக்
கிலும்பலாக்கி விடுகின்ருர், அது பிதையில் அழகான ஒரு படத்தை ணிப்பைத்தானே வழங்குகின்றது. தீர்ப்பை எழுதி விரிசலடையச்
விஞர் வைரமுத்துவைப் பற்றிய அபிப்ராயத்தை குறைத்து விடவே வழிவகுக்கின்றது. "இத்தனை பற்றின் இத்தனை அதிக மறுபதிப்புகள் வெளிவந் "ராஜ கர்வத்தை” விட ஒரு சில தான் என் படைத்துள்ளேன் என மார்தட்டும் வகையில் து அவருக்கு நல்லது.

Page 12
10
தங்களுக்கிடையில் மூத்தோர், இளை யோர், என்ற சுவர்களை எழுப்பி வைத் துக் கொண்டு அதிகம் பேர் எழுதி வருகிருர்கள். "மூத்கோர்கள்’ என வகு பட்டுக் கொள்பவர்களிடமிருந்தே பொது வாகப் பேட்டி எடுத்துப் பிரசுரிப்பது வழக்கம்.
அவ்வாறு செய்யாமல் - இலக்கியத் தின் ஆழம் - இளைய தலைமுறையினரிடம் எந்தளவுக்கு வியாபித்துள்ளது என்பதை அறிவதற்காக, கல்முனை கார்மல் பாத் திமா கல்லூரியில் விஞ்ஞான பிரிவில் கற்றுக் கொண்டிருக்கும் சஞ்சீவ் சிவ குமார் என்ற மாணவனிடம், "பேட்டி’ என்று தெரிவிக்கப்படாமல் கறக்கப்பட்ட 10 நிமிட நேர உரையாடல் இதுவாகும்.
இலக்கிய இயக்கங்கள் இன்னும் செய்ய வேண்டிய மிக அவசியமான கடமைப்பாடுகளுடன் தான் உள்ளன என்பதைத் தெளிவாக்கி நிற்கின்றது இவ்வுரையாடல் , குறிப்பாக இளம் தலை முறையினர் அறிந்து கொள்ள வேண்டிய எத்தனையோ விடயங்களை இனங்காட்டிக் கொடுக்கவேண்டியது முக்கிய கடமைப் Lu TL.-nrC5th.
O “குன்றின் குரல்" - சஞ்சிகையில் (மலர்-7, இதழ்-12) உங்கள் கவிதை மூன்ருவது பரிசைப் பெற்றதன் பின், ஏதும் எழுத வில்லையா..? அதிகமாக வானெலியில் தான் எழுதுகிறேன். ஆனல் எழுது வதற்கு வீட்டில் விடுகிருஜர் களில்லை. படிப்பு முடிந்தபின் எழுதச் சொல்கிருர்கள்.
O அப்படியாளுல் படிப்பு முடிந்த தன் பின்னர் தான் இனி இலக் கியம் ? அப்படியென்றில்லை. இடைக் கிடை ஏதாவது வாசிக்கவேண்டி யேற்படுகிறது. அதைத் தவிர்க்க முடியவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு நாவல் படித்தேன்.

நற்பிட்டி முனை பளிலின் பக்கம்
யாருடைய நாவல்.? விந்து. (அதிக நேரத்தின் பின). அகிலன் எழுதியது. நாவலின் பெயர்.? (நெடுநேரமாக தோல்வியுடன் சிரிக்கிருர்). மறந்து போயிட் டுது. V. எமது பத்திரிகைளில் வரும் வாராந்தக் கதைகளைப் படிப் பதில் லையா. சென்ற வாரம் வீரகேசரியில் பிரசுாமாகியிருந்த கொடிக்கு. GosT qlé5@g5. . . . . . கொடிக்கேங்கும் கொப்புக் களா..? (வீரகேசரி 08-03-88) ஆம். யார் எழுதியிருந்தார்.? . நன்ருகப் பார்க்கவில்லை. (இந்திரன் - குமாரு) கல்முனைப் பிரதேச எழுத்தா ளர்களில் உங்களுக்கு எவரையும் தெரியாதா..? ஏன் தெரியாது. கலைமகள் ஹிதாயாவைத் தெரி யும். சடாட்சரத்தையும் கேள் விப் பட்டிருக்கின்றேன். இன்னுமொருவர் இருக்கிருர் பாண்டிருப்பில்...! எமது பிரதேசத்தில் வெளி யாகும் ரோணியோ பத்திரிகை களில் எழுதுவதில்லையா..? ஒழுங்காக வாசிக்கக் கூடக் கிடைப்பதில்லை. (நான் கேட் காமலேயே அவர் தொடர் கிருர்) அவற்றில் அதிகம் புதுக் கவிதை மாதிரியே இல்லை. அதைவிட *ஹைக்கூ" பர வரயில்லை. இதில் ஒரு அர்த்த மாவது இருக்கும். உங்களுக்கு யாருடைய திரைப் படம் அதிகம் பிடிக்கும்.? திரைப்படங்கள் பார்ப்பதில்லை. அப்படியென்றல் அழகுணர்வில் நாட்டமில்லையா..? அப்படியென்றில்லை. மாருதி யின் ஒவியங்களை விரும்பிப் Lurrrif Guair... ! (பாடசாலையில் இடைவேளைக் கான மணி ஒலிக்கிறது)

Page 13
உமாவரதராஜன் பக்கம்
யானைக்கு முந்திய மணியோசையை பாறுக்கின் "பதம்’ கவிதை நூல் சம்பந்தமான கொத்தன் அதற்கு வழங்கிய முன்னுரை. தி மாகக், குறிப்பாக கடைசிப் பந்தி பற்றி என் அது ஒர் இலக்கியப் பொறுப்பற்ற அனுமான மேத்தா என்பவர் கவிதைகள் தரவுமில்லை. பு நா. காமராசன் பெயர்களைப் பிரஸ்தாபிப்பவ ஞானக்கூத்தன், வைதீஸ்வரன், பசுவய்யா, வி வ. ஐ. ச ஜெயபாலன், ஊர்வசி, சோலைக்கி சற்று முயற்சித்தால் என்ன ? எழுத்தாளர் வழங்க வேண்டியது பொருத்தமற்ற முன்னுை என் அபிப்பிராயம், க்ளுக்கோஸ் பக்கெற் ஒன்
உணர்வுகளுடன் கைகோர்த்த, அல் முனையும் சொற்பமான சொற்கள், அதுவும் வாங்கியவுடன் படிப்பவன் மனதில் உருவாகி குரிய சில அம்சங்கள் என்பேன். கவிதையில் பாங்கு எத்தனை கிரும், ஒசையின் கிலோ ே சமையல் குறிப்புப் பாணியில் மேலதிக விபர
கவிதைகள் என நம் மக்கள் பரிச்சய கவிதைகளும் அமைகின்றன. பேடித்தனத்துக்கே தைகள்எவற்றிலும் இவர் சொல்லவில்லை. கவி கள் இவரிடம் இல்லாமலில்லை. காதலிக்கு ஒரு யன அத்தகையவை. ஆனலும் அந்த அனுப கூட சரியாகப் பற்றிக் கொள்ளவில்லை என்ப வீண் பிரயோகம், ஜனரஞ்சகப்படுத்தும் தன் ணங்களால் கவிதை ஒரு மாயமானைப் போல் யிருப்பதாக எனக்குப்படுகிறது.
கிடைத்த இன்னெரு கவிதைத் தொ ஒரு மலர்'. சாதனையாளர் , ஆழிக்குமரன் ஆன தால் பத்தாயிரம் கவிதைகள் எழுதிவிட்டுத்த

ப் போல் அமைந்து விடுகிறது. பாலமுனை ா எல்லாக் கூட்டங்களிலும் திரு. மருதூர்க் ரு. மருதூர்க்கொத்தனின் முன்னுரை சம்பந்த ஆட்சேபனையைச் சொல்லியாக வேண்டும். ம். பிச்சமூர்த்தி தோல்வியடையவும் இல்லை. துக்கவிதை என்றதும் மேத்தா, வைரமுத்து, ர்கள் சி. மணி, வேணுகோபாலன், பலராமன், க்ரமாதித்யன், ஆத்மாநாம், யேசுராசா, சேரன், ளி போன்றேரின் கவிதைகளைப் பற்றியும் அறிய களை உற்சாகப்படுத்துவதெனில் அவர்களுக்கு ரையல்ல. க்ளுக்கோஸ் பக்கெற்தான் என்பது எறின் விலை 8/10 தான் ஆகிறது.
லது கைகோர்த்து இடைவெளியைக் குறைக்க சீரான கூரான சொற்கள், சொற்களை உள விடும் காட்சிகள். இவை நல்ல கவிதைக் சமூகப் பெறுமானம் எத்தனை கிலோ, கலைப் ஹர்ட்ஸ் எவ்வளவு தென்பட வேண்டும் என ங்கள் என்னுல் தரமுடியாது.
ப்பட்ட ஒரு வடிவத்தில் பாலமுனை பாறுக்கின் ா அதர்மத்துக்கோ துணை போகும்படி தன் கவி தையில் மிக நன்ருக வரக்கூடிய அனுபவப்பொறி கடிதம், தலைவரே பேசுங்கள், சிவப்புக்கோடு ஆகி வப் பொறிகள் இக்குறிப்பிட்ட கவிதைகளில் துதான் என் ஆதங்கம். சொற்களின் விரயம், மை (கவியரங்குக் கவிதைகள்) போன்ற கார
இவர் கையில் அகப்படாமல் ஓடிக்கொண்டே
குப்பு, திரு. செ. குணரத்தினத்தின் "நெஞ்சில் ந்தன் இன்று நம்மிடையே இல்லை இருந்திருந் ான் ஒய்வேன் என்ற செ. குணரத்தினத்துக்கும்,

Page 14
ஆனந்தனுக்குமிடையே கின்னஸ் புத்தகத்தில் ருக்கும். வீரப்பா பாணியில் "சபாஷ் சரியா திரு. செ. குணரத்தினம் நிறைய எழுதியும் அவருடைய முக்கியமான குறைபாடு தேய்ந் களைக் கையாளும்போது வயது போய்த் ே ஒப்பனைகள்தான் ஞாபகத்திற்கு ஓடி வருகி இருக்கும் பயணி போன்ற திரு. செ. கு.வுக்கு முடிப்பது) மாத்திரமே ஞாபகம்.
87ல் வெளிவந்த 102 தமிழ் பட கணிப்பில் தேறுகின்றன. இனி ஒரு சுதந்தி கட்டுப்பாடு, நாயகன், பூவிழி வாசலிலே, ெ இவை பிரமாதமான படங்கள், என என் யமைப்பு, கதையைத் திரையில் வெளிப்படுத் இப்படிச் சில அம்சங்களிலாவது தம்மை ஒரவி இவற்றுள் பேசும் படமென்ற பேசாத படத்ை பான மெளனத்துடன் படம் நகர்கிறது என். மெளனவிரதம் அனுஷ்டிக்கின்றன என்ற உ சில நல்ல படங்கள் தோன்றுவதற்கு இத்தை
திரையரங்கு நிறைந்த மக்களுடன் " 'விராகய நிராசைகளுடன் மரித்துப் போன சிங்கஹாவின் இந்நாவலுக்குத் திரைப்பட வட மப்பட்டே வெற்றியடைந்திருக்கிறர் என்பன ஆறிலிருந்து அறுபது வரை என்ற தமிழ்ப்பட கலை வடிவமொன்றின் அசலுக்கும் போலிக்கு
இன்னமும் குரங்குச் சேட்டை பன் காரர்களை இவ்வேளை எண்ணி எரிச்சலடையா காரமிருக்குமானுல் இரண்டு சட்டங்களை உட
1. இதுவரை வெளிவந்த (10 அல்
களைக் குறைந்தது ஐந்து வருட திரையிடுவது தடுக்கப்பட்டுள்ளது
2. விசு, ராஜேந்தர், பாக்யராஜ்,
யார்கள், எஸ். ஏ. சத்திரசேகர "மேதைகள்’ மறு அறிவித்தல் வ (Suh ! டும் ! டும் !

உமாவரதராஜன் பக்கம்
இடம் பெறுவது குறித்துப் போட்டி ஏற்பட்டி ன போட்டி" என்று நானும் சொல்லியிருப்பேன். கூட மனதில் பதிய மறுக்கும் ஒரு கவிஞர். து போன சொற்கள்தான். அவர் வார்த்தை தருவுக்கு வந்துவிட்ட விபச்சாரி ஒருத்தியின் றது. ரயில் பயணத்தில் சதா தூக்கத்தில் 5 இறங்கும் இடம் (10000 கவிதைகள் எழுதி
ங்களுள் பின்வரும் ஏழு படங்கள்தான் சான் ரம், காணி நிலம், கடமை - கண்ணியம் - ரட்டை வால் குருவி, பேசும் படம் ஆகியன. ாணுல் ஆனந்தக்கூத்தாட ஆடியவில்லை. கதை நிய முறை, நடிப்பு, தொழில் நுணுக்கம். . ாவு அடையாளங் காட்டிய படங்கள் இவை, தை இயக்கியவர் சிங்கிதம் சீனிவாசராவ். இயல் று சொல்வதிலும் பார்க்கக் கதாபாத்திரங்கள் ணர்வே மேலோங்குகிறது. எனினும் தமிழில் கய படங்களின் தேவையை மறுப்பதற்கில்லை.
விராகய பார்த்தது ஒரு வியப்பான அனுபவம், ஒரு மனிதனின் சரித்திரம். மார்டின் விக்ரம டிவம் கொடுக்க திஸ்ஸ அபேசேகர மிகவும் சிர' தைக் காட்சி நகர்வுகள் உறுதி செய்கின்றன. -மும் விராகய என்ற இந்தச் சிங்களப் படமும் ம் நல்ல உதாரணங்கள்.
ாணிக் கொண்டிருக்கும் நம் தமிழ் சினிமாக் மல் இருக்க முடியவில்லை. என் கையில் அதி னே இயற்றுவேன்.
லது 15 படங்கள் விதிவிலக்கு) தமிழ்ப் படங் காலத்துக்கு எக்காரணம் கொண்டும் மறுபடி
.
எஸ். பி. முத்துராமன், ஏ. வி. எம். செட்டி ன், ராமநாராயணன், பாலச்சந்தர். போன்ற ரும்வரை வீட்டுக்காவலில் வைக்கப்படுகிருர்கள்

Page 15
SLLSS LSLSSLS SSSSSSMLSLSLLSLSSLLSLSL S SS a raun
A tribute to th
T-E TA
COCA
BENNET STORES, M
------------------

gracious people
ASTE OF
COLA
AIN ROAD, POTHUWIL,

Page 16
உள்ளது உள்ளபடி துல்லியமான இசையின்பம் புதிய, பழைய தமிழ்த் திரைப்படட் இசைத் தட்டுகளில் சுழலும் ஒரே இடம், கல்முனையில்
பிரஸாத் ஒடியோ சென்ர
g6
22, அம்மன் கோயில் வீதி,
*சிகை "வியூகம்’ ஆசிரியர் குழுவினுல்
அச்சிட்டு, 14-04- 8

i Lunraivas Git
• r
புதிய, பழைய மிழ், பிற மொழித் திரைப்படங்கள் இவற்றுள் எதன் ரசிகர் நீங்கள்? எம்மிடம் வந்து தெரிவு செய்யுங்கள். வRலியா வீடியோ சென்ரர்
கல்முனை.
ل بیستس
மட்டக்களப்பு, புனித செபஸ்தியார் அச்சகத்தில் 8ல் வெளியிடப்பட்டது.