கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அது

Page 1


Page 2

lن9H
மு. பொன்னம்பலம்

Page 3
முதற்பதிப்பு ஜூல-1968
dаар 5, 8
விற்பனை உரிமை
தமிழ்ப் புத்தகாலயம்
பைகிராப்ட்ஸ் ரோடு, சென்னை-5.
அச்சிட்டோர் நாவல் ஆர்ட் afleir-fefos சென்னை-14

கோரிக்கை
உன்னை நினைக்கவென துள்ளம் உகுக்கின்ற கொன்னை நினைவினுக்கோர் கோயில் எடுத்துவிட என்னைப் பிழிகின்றேன் தாயே எனக்குதவு.

Page 4
Shut not your doors to me proud libraries For that which was lacking on all your well-filled shelves, yet needed most, I bring......... A book separate, nor linked with the rest not felt by the intellect But you yet untold latencies will
thrill to every page.
——И"alt ИУhitтат.--

முன்னுரை
ஈழத்தில் சிறுகதை, காவல் எழுத்காளர்களிடம் ெேபாதுப்படையாகக் காணப்படும் ஒரு முக்கியப் பண்பு அவர்களின் எழுத்துக்களில் தெரியும் Seriousness ஆகும் தாங்கள் வாழும் காலத்தையும் அதன் தேவைகளையும்பற்றி இவர்களுக்கு இருக்கும் உணர்வே இத்தகைய போக்கிற்குக் காரணம் என்று சொல்லவேண்டும். 1956ல் ஏற்பட்ட சரித்திர நிகழ்ச்சிகளும் அதே காலத்தையொட்டி தினகரன் பத்திரிகைக்கு ஆசிரியராக வந்த க. கைலாசபதியின் ஒத் துழைப்பும் "முற்போக்கு" வட்டத்தின் எழுச்சியும் இத்த கைய உணர்வைப் பிறப்பிக்கப் பெரிதும் உதவின. அதனுல் இல்லாத சரித்திரக் கற்பனைகளையும் நடைமுறையில் காணப்படாத ஜனரஞ்சகச் சினிமா இலட்சியங்களேயும் கதைகளாகச் சோடிக்கும் போக்கை இன்றைய ஈழத்து எழுத்தாளர்களிடம் காண்பது அரிது. ஆணுல் Seriousness இருந்துவிட்டால் கலைத்திறமையும் இருக்குமென்று சொல் வதற்கில்லை. அதனுல் ஈழத்தில் சிறுகதை, நாவல் எழுது வோரின் தொகைக்கேற்ப சாதனைகளின் வெற்றி இருப்ப தாகச் சொல்லமுடியாது. அதாவது தங்களிடமிருக்கும் நோக்கத்துக்கேற்ப அதன் Seriousness க்கு ஏற்ப கலைfதி யிலும் பூரணமாக அவர்கள் வெற்றியைக் காட்டுகிறர்கள் என்று சொல்லமுடியாது.
சிறுகதை, நாவல் ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ளோ ரின் கிலே அப்படியென்றல் கவிதைத்துறையில் ஈடுபட்டுள்
5

Page 5
ளவர்களின் கிலே அதற்கு ஓரளவுக்கு எதிர்மாருகத்தான் இருக்கிறது. கவிதைத்துறயிைல் ஈடுபட்டுள்ளோர் பலருக்கு அதிகமான கலைத்திறமை இருக்கிறது. ஆனல் அதற்கேற்ற வகையில் தாங்கள் வாழும் காலத்தையும் அதன் தேவைகளை யும் பற்றிய சீரான உணர்வும் அந்த உணர்வு பிறப்பிக்கும் Seriousness ம் இல்லை. இப்போது நான் வாழும் இந்தச் சின் னஞ்சிறு ஊரிலேயே ஆச்சரியப்படும் வகையில் கலே மிளி ரக் கவிதையாக்கக்கூடியவர்கள் பலர் இருக்கிருர்கள். ஆளுல் இலக்கியத்தைப்பற்றி அவர்களிடமிருக்கும் பார் வையோ படுபிற்போக்கானதாகவே இருக்கிறது. தமிழ் இலக்கியம் என்பது அவர்களைப்பொறுத்தவரையில் கம்ப ளுேடும் மாணிக்கவாசகரோடும் நின்றுவிட்டது. பாரதி ஒருவன் பின்னர் வந்தான் என்பதை மறுப்பதில்லைத்தான். ஆணுல் அந்த அங்கீகாரமும் அவன் பள்ளிக்கூடப் பிள்ளை களுக்குரியவன் என்ற அர்த்தத்திலேயேதான். தற்காலத் துத் தரமான சிறுகதை, காவல்கள் இலக்கியமாக அவர் களுக்குப் படுவதில்லை. அவற்றில் தரமானவை என்பவை யும் இருப்பதாக அவர்கள் படித்ததுமில்லை. கினைப்பது: மில்லை. அவர்கள் வாழும் இலக்கிய உலகம் அப்படிப்பட் டது! அதனுல் சிலேடைகள், அணிகள் என்று தங்களுக் குத் தெரிந்த வித்துவச் செருக்கெல்லாம் வழிய அவர்கள் இயற்றும் பாடல்கள் வெறும் ஸ்தலபுராணங்களாகவும் வரவேற்பு-பிரியா விடை வாழ்த்துக்களாகவும் இரங்கற் பாக்களாகவுமே இருக்கின்றன. அவற்றில் சிலசமயம் ஆச் சரியப்படும் வகையில் கலைத்திறமை காணப்படும். ஆனல் கம்பனையும் மாணிக்கவாசகரையும் அபிநயித்து இன்று எழுதுவது இருக்கிற திறமையை விழலுக்கு இறைப்பது போலல்லாமல் வேறு என்ன? ஆத்மீக விசயம் பண்டைய விசயமென்ருலும் அதைப்பற்றிப் பாடுவதும் பண்டைய முறையிலா இருக்கவேண்டும்? அவர்கள் எல்லாரையும் சரி
6

யான முறையில் ஆற்றுப்படுத்தவேண்டுமானல் அவர்கள் வாழும் காலத்தையும் அதன் பிரச்னைகளையும் அவர்கள் எந்த முறையில் அணுகுகிருர்களோ, அந்த முறையையே முற்ருக மாற்றி அமைக்கவேண்டும். அதாவது அவர்களைத் திரும்பவும் ஒருக்கால் இதேகாலச் சமூகத்தில் பிறந்து வாழ வைக்கவேண்டும். காலத்தினதும் சமூகத்தினதும் மாற்றங் களினது வளைவு சுழிவுகளையெல்லாம் எப்படியோ தட்டிக் கழித்துத் தப்பவிட்டு இருந்தவிடம் விட்டு நகராமல் இருக் கும் கற்பாறைகள் அவர்கள் அந்தநிலையில் அவர்கள் *டல்தெறிக்கும்” பாடல்கள் இயற்ருமல்விடுவது ஆச்சரி யந்தான். அவர்கள் ஓர் ரகம், இன்னுேர் ரகம் காலத்துக் கேற்றதுமாதிரி கவிதை செய்வதாக நினைத்துக்கொண்டு பாரதியையும் பாரதிதாசனையும் பிரதிபண்ணுவது. அவர் களின் திறமையும் வீணே தான் விரயமாகிறது. எனவே இந்தநிலையில் திறமை இருந்தும் தேறுபவர்கள் ஒரு சிலர் தான், ஆணுல் ஈழத்துத் தமிழ் உலகின் பரப்போடு பொருத் திப் பார்க்கும்போது அந்தச் சிறுதொகையும் கணிசமான தாகவே தெரிகிறது என்பதையும் மறுக்கமுடியாது. சோ. நடராசா, செ. நடராசா, மஹாகவி, முருகையன், சில்லையூர் செல்வராசன், லேவாணன், நுஃமான், சடாட் சரன், சத்தியசீலன், ஜீவா ஜீவரத்தினம், காசி ஆனந்தன், மு. பொன்னம்பலம் ஆகியோர் அந்த வரிசையில் குறிப் பிடப்படக்கூடியவர்கள். இவர்களில் முதல் அறுவரும் சிறிது காலத்தால் முந்தியவர்கள். மற்றவர்கள் சிறிது பிக் தியவர்கள் புதுப்பரம்பரையினர். எதிர் பார்க்கக் கூடிய விதத்தில் இவர்களிடையேயும் தரவித்தியாசங்கள் இருக் கின்றன. சோ. நடராசாவும் செ. நடராசாவும் திறமை இருந்தும் படிப்பு” இருந்தும் இயற்கையான தரி சனவீச்சு அற்றிருப்பதால் வரவசச் சொத்தைளாகி வரு கின்றனர். சில்லையூர் செல்வராசனே திறமையோடு தனக்
7

Page 6
கேயுரிய அங்கதச் சுவையையும் பார்வையையும் காட்டிய வர். இருப்பினும் அவரை ஆதரிக்கும் கட்சி எதை "பூஜ"வா" வர்க்கம் என்று சாடுகிறதோ அதே "பூஜாவா" வர்க்கத்தின் மதிப்பீடுகளுக்கும் இயக்கங்களுக்கும் தன்னை யும் தன் திறமையையும் இரையாக்கிக்கொண்டு ஒரு Show-man ஆக உருமாறிவருகிருர். உண்மையில் முன்பு போட்ட முதலிலேயே இன்னும் அவரது பெயர் வாழ்கிறது என்று சொல்ல வேண்டும். ஆணுல் அந்த முதல் அவரைக் காப்பாற்றுவதற்குப் போதாது. மஹாகவி, முருகையன், லோவணன் ஆகியோரே முந்திய பரம்பரையின் இன்று வாழும் கலைத்தூண்கள். என்னைப்பொறுத்தவரையில் பாரதிக்குப்பின்னர் பாரதிதாசனையும் மேவியெழும் தமிழ்க் கவிஞனுக வளரும் திறமையும் செயலும் மஹாகவியிடம் இருக்கிறது என்ற கம்பிக்கை. ஆணுல் இன்னும் அவர் பூரண மாகக் கண்டுபிடிக்கப்படவில்லை.
இவர்கள் முந்திய பரம்பரையினர். இவர்களோடு ஒப் பிட்டுப் பார்க்கும்போது புதும்பரம்பரையினரின் வேகமும் வீச்சும் சற்று அதிகமாகவே இருக்கின்றன என்று சொல்ல வேண்டும். நுஃமான், சத்தியசீலன், மு. பொன்னம்பலம் ஆகியோர்களில் ஒருவரான மு. பொன்னம்பலத்தின் கன்னிக்கவிதைத் தொகுதிதான் இந்த "அது."
மு. பொன்னம்பலம் தன் பரம்பரையினரை மட்டுமல்ல முந்திய பரம்பரையினரையுமே மேவிக்கொண்டு போகும் வேகத்தைக் கொண்டவராகவே இந்தத் தொகுதி மூலம் தன்னை வெளிக்காட்டுகிறர். தன்னை விரித்து எல்லாவற்றி லும் தன்னைப் பார்க்கும் ஓர் ஞானப் பார்வை அவருடைய தாகத் தெரிகிறது. அதனுல் பழைய மரபு காட்டும் ஆழத்தை நோக்கி அவர் வேர்விட்டவாறே புதிய புரட்சிகளையும் மாற்றங்களையும் மலரவிட முயல்கிருர். மரபு என்பது
8

வெறும் தேக்கமல்ல. இலக்கிய மரபுமட்டுமல்ல தத்துவ மர புந்தான். எல்லாப் பக்கமும் பார்க்கவும் எல்லாருக்கும் டொருந்தவும் எல்லாக் காலத்துக்கும் இயைந்துகொடுக்கவும் வல்ல மரபு நம் மரபு-நம் சனதன மரபு. ஆனல் அந்த மர பில் வேர் விட்டவாறே புரட்சியை மலரவிடமுயலும் பொன்னம்பலத்தின் இந்த முயற்சி ஒருவேளை மரபுவாதி களையும் திருப்திப்படுத்தாமல் புரட்சிக் "கட்சி"க்காரர் களையும் திருப்திப்படுத்தாமல் போகலாம். ஆனல் அதற்காக தரிசனவீச்சுள்ள உண்மையான ஓர் சிருஷ்டிவாதி கவலைப்ப டப்போவதில்லை. விரிந்த சனதனதர்ம மரபில் சைவத்தை மட்டும் காண்பதும், காணமுயல்வதும் தெரியாத்தனமே தரின். அது பண்டிதர்களுக்குரியது. பண்டிதர்களுக்குத் “தேடல்" தெரியாது. பண்டிதர்களிலும் பலரகம் இருக் கிருர்கள். சைவசித்தாந்த இலக்கணப் பண்டிதர்கள் பழைய ரகத்தினர். மார்க்ளியச் சித்தாந்தத் துரைத்தனக்காரர்கள் புதிய காலத்துக்குரிய புதுப்பண்டிதர்கள். இந்தப் பண்டி தர்களுக்கு ஒன்றுக்கொன்று பொருந்தாமல் முரண்பட்டுத் தெரிபவையெல்லாம் எல்லாருக்கும் அப்படியே தெரிய வேண்டும் என்ற கட்டாயமில்லை. நம் சணுதனதர்ம மரபில் வேர்விட்டு கிற்கமுயலும் மு. பொன்னம்பலத்துக்கு அவை முரண்பட்ட விசயங்களாகத் தெரியவில்லை. அனுபவமற்ற ஓர் ஆர்த்தர் கோஸ்ட்லர் (Arthur Koestler) சர்வாதிகாரியை யும் யோகியையும் பொருந்தாத இரு எதிர்ப்பிரிவுகளாகக் கற்பனை பண்ணலாம். ஆனல் யோகிக்கு அந்தக் கற்பனை கள் கிடையாது. அதனுல் மாற்ற மற்ற கிரந்தரமான ஒன்’ றில் நின்றுகொண்டே பயங்கரமான மாற்றங்களையும் புரட்சிகளையும் அவன் விளங்கிக்கொள்கிருன். அவற்றை ஆதரிக்கவும் செய்கிருன். மாற்றமற்ற கிரந்தரம் என்பது தேக்கமல்ல. ஆனல் பழைய பண்டிதர்கள் அப்படித்தான் கினைத்துவிடுகிருர்கள். மாற்றமற்ற ரிரந்தரமென்பது முழு
9

Page 7
கிறைவும் அந்த நிறைவு நிரம்பி வழிக்தோடும் பிரவாகமுக் தான். அந்தப் பிரவாகம் காலத்துக்குக்காலம் புதுக்கோலம், புரட்சிக்கோலம் காட்டுகிறது. அதை விளங்கிக்கொள்ப வன் எல்லாவற்றையும் அதுவாகவே காண்கிருன். பழைய ஒழுங்குப்படி பாடுவதும், அதேசமயம் அதே பா ஒழுங்கு களை வேண்டுமென்றே உடைத்துப் புதுவேகம் கட்டுவதும் அவற்றேடு முற்ருகப் புதியவற்றைச் சிருஷ்டிப்பதும் வெறும் வெளிப்படையான உருவ வித்தியாசங்கள் மட்டு மல்ல, பலரகக் கருத்துக்களையும் தன் சிறகுக்குள்ளேயே அணேத்து ஆதரவளித்து மணிகோத்த கயிருக அவற்றி னுரடே தன்னைக் காணும் உணர்வின் வெளிக்காட்டல்களு மாகும். என்னைப்பொறுத்தவரையில் இந்த்க் கவிதைத் தொகுதியைப் படிக்கும்போது ஈழத்தில் தற்காலத் தமிழ் இலக்கியத்தில் ஈடுபட்டிருக்கும் புதுப்பரம்பரையினரின், மலிந்த ஜனரஞ்சகம் கலப்படமற்ற தரமான இலக்கிய ஈடு பாட்டையும் விசாலமான பார்வையையும் மட்டுமல்ல, எதிர் காலத்தில் தமிழ் இலக்கியம் எடுக்கக்கூடிய வளர்ச்சி உச் சங்களின் அறிகுறிகளையும் தரிசிப்பதுபோலவேதெரிகிறது. கன்னித் தமிழச்சி இன்னும் புதுப் புதுக் கலன்கள் பூணத் தான் போகிருள். மு. பொன்னம்பலத்தின் இந்தக் கன்னித் தொகுதியிலேயே அந்தப் புதுவேலைகளின் கனமும் மெரு கும் தெரிகின்றன என்று சொல்லத் தோன்றுகிறது.
4.ಸತ್ಥಸ್ಡಿ" !!! y
14-1-68 Op. தளையசிங்கம்
O

முன்னுரை இயற்கை
lo
2。 3.
• لكه
5.
6. 7.
8.
9.
O
ll. 2.
நடுப்பக uniteh) காலே
உள்ளடக்கம்
ல்
ஆற்றேரம் gi
முற்றம்
முகில்கள்
காற்று
வானம் ஒரு வயல் . Орфpžig sureoup . . « விடி விளக்கு is வேட்டை sh
மார்கழிக்குமரி p 0 KM
சமூகம்
3. 14. 15.
6, 7.
8.
9.
20. 21.
&2。
23。
24。
ஒருவன் ஒருத்தி குடிசை ஏக்கம்
வருகை தேர்தல்
இன்னுெருவன் மட்டும் .
பாரதியைக் கண்டேன் விடுகாலி சபதம்
ඝඨිතා
விமர்சனங்கள் .
மதிப்பீடு 4
தொழில
rafii; O }
2及
25
26
28
30
3
32
38
40
43
50

Page 8
நான
89.
25. சாவெனும் காவியம் 4 28. உறவு e 27. அழுகை «» e
8. அவள்29. அவள்-2
30. வேட்கை 9 8 p. is p 31. தேடல்
அது
82. குருவின் மொழி . 33. துளிகள் ● 琴 34. தியானம் 35. காலியின் வருகை 36. வழக்கு 87. Arooth 88. SejřůL6zorů
புதியவை
மின்னல் } O is 40. அம்மணம் d. 41. 6ir of 42. உழைப்பில் உறிஞ்சல் 48. எனக்குள் இருக்கும் நான் . 44 குருவி 45. குரிசு - 46. குழு 娜赣象 e o o
53
59
60
62
64
66
68
7.
ሃ.8
75
77
8.
85 100
03
05
106 107 08
J.
12

இயற்கை
விளக்கிய முற்ற ஒளித்தரை மீதில் பளிச்செனக் கோல் வெளிச்சங்கள்

Page 9

நடுப்பகல்
வடவைக் கனலே வெய்யோன் கக்கி சுடலைப் பொடியாய் உலகைத் தீய்ப்பான் ! உடலை விடுத்தே உயிர்போய்த் திரிந்தோர் படலை எதையோ திறக்கப் பார்க்கும் !
குடரில் வெறுமை குதிர மனமோ படரும் வெய்யிற் பாழில் மிதக்கும் ! எயிறு பிழைத்த கடலைத் தெறிப்பாய்ச் சிறகை மடக்கிக் குருவி பறக்கும் !
காலை யிருந்த காதல் பொசுங்கும் வாலை யிளமைத் துடிப்பும் வரஞம் மூலை யிருந்தோர் உணர்வு முடுக்க வேலை யிழந்தே உடலம் வீழும் !
ஆவி யெழுந்தங் அரவாய்நெளியும் சாவிலிருந்த பீதி வளரும் வீசி யெழுந்த காற்றின் அசைப்பில் மா வி லிருந்து வீழும் சருகு
உச்சி விசும்பில் உருளும் கதிரோன்
மிச்ச மிருந்த நிழலும் தேய்ந்து செத்து மடியும் செவ்வா ஞட்சி ! பச்சைக் கணவாய் பதைக்கும் உலகம்
3

Page 10
Darbo
மேற்கு மலச்சரிவில் வெய்யோன் விழுந்துயிரைப் போக்கி முடித்தான், உலகம் புதிதணியும் ! வாழ்க்கை புதிய மரபை எடுக்குமொரு போக்காம், கரி இரவுப் பூவின் இதழ் விரிப்பு !
பாக்கு மரத்தின் இலைகள் அமைதிபெறும் காக்கை குருவி ககன அலைவொழிக்கும் தேய்த்துக் கழுவி உடலைப் புதுத்திசைக்கு ஆற்றுப் படுத்த அனேத்தும் இயங்கிறது !
செத்த பகலில் கொடிய சிறையிருந்த கொத்துக் கனவு குதிர்ந்தே உடுக்கொலிக்கும் கொத்திக் கனிவகைகள் கோதிச் சுவை பார்க்கப் பெற்று விழிகள் வெளவால் பறக்கிறது !
காண்டற் கரிய கணங்கள் உயிரெடுக்கும்: தீண்டி உயிரைத் திருகும் அரவினங்கள் ; நீண்ட மனித நினைவாய் அவற்ருேடு தூண்டா மணியின் சுடரும் மலர்கிறது !
இருள இருள இறுக்கம் அதிகரிக்கும் பொருளைப் பகுத்தறிய போலிப் பகல் விரித்த வெருளல், அறிவொழுக்கம் வீழ்ந்தேஒரு புறமாய்ச் சுருள, சுயந்தன்னைத் தொட்டுச் சுவைக்கிறது!
4

காலே
ஞானியின் நுதல் போலவே ஒளி காலுதே கீழ்வான கம் ஆழியில் துயில் நீங்கியே திரு மாலவன் விழிப்புற்றனன் !
ஊமையாய்த் தனி லிங்கமாய் வதி உத்தமன் உமைபற்றினன் பானுவின் பரித் தேரிடும் ஒலி பாயுது வினேகோருது !
காவினில் குயில் கூவுது கிளி காய்களும் விழ ஆயுது ! வாவியில் மலர் நெஞ்சிலே கரு வண்டுகள் நின் ருடுது !
தோகையர் குடம் தூக்கினர் படு சுட்டிகள் பள்ளி ஏகினர் ! யாவிலும் புது வேகமே கர்ம யோகமே நடந்தேறுது!

Page 11
ஆற்ருேரம்
ஆற்ருேரம் காடாய் அடர்ந்த மரத்தோப்பு, போக்காளர் நாளாந்தம் போன வழிக்கோடு ஊடறுத்தே ஒடும் உணர்ச்சிப் பொறிபோல ! போயிடுக்கில் ஒளிந்து பார்க்கும் மகளிரைப்போல் செம்மண்ணுல் செய்த சிறிய குடிசையினம் அங்கொன்ருய் இங்கொன்ருய்-ஆங்கவற்றின்
(மேலாய் குமையும் புகை மோனக் குரலாய் இழைகிறது!
வாலைக் கதிர் அந்தி வாழ்வை அடைந்தோடி மேற்கில் விழக் கடைசி மூச் சாய் படரொளியில் தூரத் தெரியுமொரு பாலம் புனலாடும் ஈர உடல் விட்டு ஏகும் உயிரைப்போல் மேலே ஒருசோடி வெளவால் பறந்தேகும் ! ஆரோ நதியில் அலம்பி எழுகின்றர் நீர்தன் துயில் விட் (டு) இமைகள் நெளிக்கிறது
மாரிமுனர் வந்த வடுவாய் கரையோரம் மரங்கள் உரங்கிழிந்து வீழ்ந்த விறகுண்டு கோடை அரசிப்போ, குழந்தை அவளுட மேடு, மணல்திட்டு, மேலே முகங்கவிழ்ந்து ஒடம் கிடக்கு (து) உயிர்போய் கனநாளோ ? வாடைச் சிலிர்ப்பொன்று வீசிக் கழிக்கிறது !
6

சடசடென மூங்கில் தடிகள் முறிப்பதுயார் ? களிருென்று நின்றுதன் கையை எறிகிறது ! இன்னுென்று ஆற்றில் இறங்கிக் கரும்பாறைக் கல்லைப்போல் தந்தங்கள் காணக் கிடக்கிறது! சொல்லெறிந்து ஆங்கவற்றைத் தூண்டும்
(ஒருபாகன்
யாரெங்கோ இன்துயர யாழைப் பிழிந்துவிட இரவிங்கே மேவும் இசைபோல் விரிகிறது. உறவொன்றைக் காட்டியே ஊர்ந்த
(வழிக்கோட்டின் சுவடெங்கே இப்போதாம்? தூர்ந்த
(பொறியாச்சா ? அரவங்கள் இல்லை எனினும் இருந்தாற்போல் உருவிப்போம் நெஞ்சத்தை ஒற்றை
(ஒலி எதுவோ

Page 12
முற்றம்
ஒலயால் சமைந்த குடிசை
ஒன்றது, முன்னே அழகுப்
பாலைபோல் சிறிய முற்றம்
பசுந்தரை என்ன நடுவே
நாலந்து பூஞ் செடிகள்,
நனந்தவோர் கந்தல் தெற்கு
வேலியின் முள்ளில் தொங்கி
வெடவெடத் தாடும் காற்றில்
இரண்டொரு காக்கை முற்றம்
இறங்கவா விடவா என்றே முருங்கையில் இருந்து தங்கள்
மூளையைக் குழப்பிக் கொள்ளும் வெருண்டு கிரீ* என்னும், வானில்
வலம்வரும் பருந்தால் கோழி சுருண்டொரு நாய் கிடந்து
சுற்றித்தன் வாலத் தின்னும்!
சிற்றடி பெயர்த்து மழலைச்
செல்வ மொன்றங்கு மிங்கும்
தத்திடும், மண்ணை வாரித்
தலையிலே கொட்டும், ஆட்டுக்
8

குட்டியொன் றங்கு வந்து
குடத்துளே தலையை விட்டு மொத்திடும் நிலத்தில், “சூய்,சூய்”
என்றதைத் தொடரும் மொழிகள்
கிளம்பியே காற் றெழுந்து
கிண்டிடும் மண்ணை, துரசு நுழைந்ததால் வீட்டுள் தும்மல்
நேர்ந்திடும் அச்சு அச்சு குழந்தைகள் பள்ளி விட்டுக்
குதித்தங்கு வருதல் கேட்டு ஒழுங்கைபோம் மட்டும் விழியை
ஒட்டியே நிற்கும் அன்னை

Page 13
முகில்கள்
செருக்களம் நோக்கியே
திரண்ட தேர்ப்படையென
பருத்தகார் முகிலினம்
படர்ந்தன வானத்தே
களிறுகள் பிளிறியே
கைகளைக் கோத்தபோல்
குளிரும் வான் தோப்பிலே
கூடின முகிற்திரள்
அருக்கனை மறைத்தரை
அவனுெளி குடித்ததும்
சிரித்தன முகிலினம்
தீச்சுடர் மின்னலாய்
இடித்தன பேரிடி
இடையிடை பொன்னிறக் கொடிச்சுடர் காட்டியே
குலுங்கவும் நகைத்தன.
பறித்தன வெம்மையை
வாய்ச்சின தண்மையை கொறித்தன வரட்சியை
கூட்டின குளிர்ச்சியை.
1 O

காற்று
எங்கிருந்தோ ஊற்றெடுத்தே இங்கு
வந்தாய் காற்றே-மலைக் கொங்கைகளில் பொங்கிவரும்
கங்கையெனப் பொலிவில்-இள மங்கையவள் நெஞ்சிலெழும்
காதலென உருவில்-நீ இங்கலேவாய் உன்னுருவை
எங்கொளித்தாய் காற்றே?
பூவுறையும் காவிலுெங்கும்
புகுந்துவரும் நீயே-தீய்ச் சாவுறையும் காட்டிலெங்கும்
தவழ்ந்துவரல் ஏனுே? பேதமில்லை சாதியில்லை
என்பதுவுன் பொருளோ -சம வாதியிந்த உலகினிலே
நீயொருத்தன் தானுே?
காதலித்து பிரிந்தவர்க்குக்
கனலாக நிற்பாய்- அக்
காதலரே கூடிவிட்டால் மலர்தூவக் கற்பாய்
11

Page 14
ஊதிவரும் ஒலிக்குலத்தோ(டு)
உறவாடப் பெற்ருய் -அச் சேதிதரும் நிருபரைப்போல்.
எத்-தேசத்தும் உற்ருய்
மழையோடு கைகோத்துச்
சிலவேளை வருவாய் - இலை தழையெல்லாம் சிதைத்தாடிப் புயலாகச் செல்வாய் எளியோரின் குடிலெல்லாம்
எடுத்தெறிந்து போவாய்- அவர் அழுமோசை உன்நெஞ்சை
அறுக்காதோ சொல்வாய்?
உயிர்வாழும் இனமெல்லாம்
உன்னுலே வாழும் -செடி பயிரெல்லாம் உன்னுலே
சதிராடப் பழகும்! வயிருேடு வயிருெட்டி
வாழ்கின்ற ஏழை -உன் தயவாலே மட்டுந்தான்
வாழ்கின்ருன் அன்றே!
12

வானம் ஒரு வயல்
பகல் விடிந்தது,
பைங்கரு வானத்தில்
நகை யவிழ்ந்திட
நன்செயு முழவனும்
கதிர் எழுந்தனன்
கைகளே விசியே
விதை விதைத்தனன்
வீடுபோய்ச் சேர்ந்தனன்.
பகல் மடிந்தது .
பகலவன் தூவிய
விதை முளைத்தது
வெள்ளியாய் விடியுமுன்
அவன் பயிர்களை
அறுவடை செய்தனன்
இவை தினந்தொறும்
இனிது நடப்பவை
, 1 SB

Page 15
முற்றத்து வாழை
முற்றத்திலே கதலி வாழை முளைத்து நிற்குது. அதன் சிற்றுடலைச் சுற்றியெழில் சிறகடிக்குது புற்றைவிட்டு நாகமொன்றுபுறப்படுதல்போல்அதன் பக்கத்திலே குட்டியொன்றும் தலையை நீட்டுது
குருத்தை வீசிக் கன்னிவாழை சிரித்துநிற்குது
தோகை விரித்த மஞ்ஞை போல் இலையைப் பரப்பிவைக்குது கருத்தையுடன் கெளவியெம்மைக் கிறங்க வைக்குது -இளங் கன்னிபோல மென்னுடலைத் தாங்கி நிற்குது
வளர்ந்து வாழை சிறிதுநாளில் குலையும்விட்டது-பல குழந்தைகளும் ஒன்றேடொன்று கூடிநின்றன!
மலர்ந்த பூவும் பிஞ்சுமாக மெள்ளச் சாய்ந்தது-குலே முதிர்ந்த போது தன்னுயிரை மாய்த்துக்கொண்டது
துண்டமாகி அன்ருெரு நாள் மண்ணில்
துவண்டது-அதன் கண்டனைய கனியைப்பலர் உண்டுகளித்தனர் நின்ற இடம் இன்றுவெளி யாகிப் போனது-நல்ல தொண்டு செய்வோர் வாழ்வதெல்லாம்
சொற்ப நாளன்ருே
14

விடி விளக்கு
ம&னச் சோலேயில் இருளில் மலரும் ஒளி விளக்கே
உனைப் பூவெனச் சூடி
உவகை பெறும் இரவே
கூத்துப் பயில் பெண்ணுய்
குதிப்பாய் இளங்காற்றில்
கோத்துப் புகைமாலை
கொடுப்பாய் அடுக்கடுக்காய்
பகலின் ஒரு துளியாய்
படர்வாய் இருளுள்ளே
அழகு மனே'நுதலில்
அமரும் ஒளிப் பொட்டோ?
ஒடியும் வரை கதிராம்
உந்தன் இமை கொட்டி
விடியும் வரை வாழும்
விளக்கே விடி விளக்கே
15

Page 16
வேட்டை
சந்தி விளக்கோ இருட்டைத் தறித்து வேட்டை ஆடும், அங்கு பறக்கும் ஈசல் ஆவி கொறிக்க வெளவால் வந்து பறக்கும்; கீழே வாயில் எச்சில் ஊற குந்தி இருக்கும் பூனே குறித்து வெளவால் உயிரை ஒன்றின் உயிரில் ஒன்று உலகே வேட்டைக் காடு.
16

மார்கழிக்குமரி
மார்கழிக் குமரி கார்முகச் செல்வி ஊர்களி கொள்ள உலாவருகின்ருய் பனிநனை தென்றல் முனைபடத் தளிரின் கனவுகள் அதிரும், காதலின் இறுக்கத் தேவைகள் மலர்ந்து ஆசையில் நடுங்கத் தாதினைத் தள்ளும் போதுகள் நடுவே மார்கழிக் குமரி கார்முகச் செல்வி ஊர்களி கொள்ள உலாவரு கின்ருய்
ஆழியின் அலைகள் கீழிழுத் தடங்க தோளினில் சுமந்த பாயொடு கலங்கள்
ஊர்மனே நடுவே உறங்கிய வாவி நீர்விடு மூச்சாய் நெளிதரு தரங்கம் நாரைகள் கரையில் நாட்டிய தவமும் தேரைகள் வரம்புள் தேக்கிய குரைவும் சீரெனக் கொண்டு மார்கழிக் கோதாய் ஊர்களி கொள்ள உலாவருகின்ருய்
ஏரோடு முன்னர் இயற்றிய புணர்வு சூல்தர வயலில் வேல்முனைக் கதிர்கள் அறுவடை புரியும் பறவைகள் திகில வெருளிகள் புரியும் அபரித நடனம்
17

Page 17
நுளம்புகள் மலிந்து வலம்புரி ஊத புலன்சிறு உயிரும் வலம்வர மகிழ்ந்து மார்கழிக் குமரி கார்முகச் செல்வி ஊர்களி கொள்ள உலாவருகின்ருய்
விளக்கிய முற்ற ஒளித்தரை மீதில் பளிச்செனக் கோல வெளிச்சங்கள் தூய பாவையர் பாடும் போவையின்* கீதம் ஆலயமணியின் ஒசையில் தோய வையகம் எங்கும் ஐயனின் பாதம் கொய்மலர் என்ருே குனிந்தது சூட? மையிருள் அகற்றும் தைவழி நோக்கி மார்கழிக் குமரி கார்முகச் செல்வி ஊர்களி கொள்ள உலாவருகின்ருய்

சமூகம்
விடிந்த வாழ்வினை வேண்டிடும் அவனின் ஒடிந்திடி விலங்குகள் சக்தியாய்த் திரளுவன்

Page 18

ஒருவன், இன்னுெருவன்
கார்மேலே ஊர்சுற்றிக்
களிக்கின்ருன் ஒருவன் - சுடு தார் எல்லாம் கால் ஒட்டத்
தவிக்கின்றன் ஒருவன் போர் வேண்டிப் பொருளெல்லாம் அழிக்கின்ருன் ஒருவன்-தன் ஓர் நேர வயிற்றுக்காய்
உழைக்கின்ருன் ஒருவன்.
மேல்மாடி பல போட்டு
வாழ்கின்றன் ஒருவன் -தன் கால்நீட்ட இடமின்றிக்
குறுகின்ருன் ஒருவன் பால் ஊட்டி நாய்க்குட்டி
வளர்க்கின்ருன் ஒருவன்-தெரு மேல்காணும் எச்சிலைக்காய்
திரிகின்ருன் ஒருவன்.
பலகட்டி தன்னழகைப்
பார்க்கின்ருன் ஒருவன்-கந்
தலுக்குள்ளே தன்மானம்
காக்கின்றன் ஒருவன்
21

Page 19
கொலெசெய்து பணம் சேர்த்துக்
குவிக்கின்றன் ஒருவன்-தற் கொலக்கேனும் வழியின்றிக்
கிடக்கின்ருன் ஒருவன்.
ஏர்பூட்டி நீலங்கீறி
உழைக்கின்ருன் ஒருவன் - அவன் வேர்வையிலே முளைத்தெழுந்து குதிக்கின்றன் ஒருவன் நேர்மாறிக் கிடக்கின்ற
உலகே நீ எந்நாள் -சம ஒர்மட்டத் தினையெட்டி
உயர்வுற்று நிற்பாய்?
22

ஒருத்திமட்டும்
* ஒடிப்போ” என்ருய், உனக்கு வணக்கமொரு கோடி எடுத்துனது குஞ்சியிலே சூடிக்கொள் பொட்டிடுதல் வேண்டாமா? புண்ணியனே
w (என்னுறுப்பு கொட்டும் சிவப்பில் விரல் குளித்தே
இட்டுக் கொள் နှီးခံၾကိဳၾ ஆற்ற முடியாது கோமான் உனைவந்து கும்பிட்டேன்
a5ArLoh பிழைத்தால் உலகப் பிரளயமே! பின்னர் தழைக்க நமக்குத் தருணம்
முளேக்காதே என்பதனுல் ஏறே எனயும் உனதினிய பங்கில் அமர்த்தப் பணித்திட்டேன்
சங்கைக்கு ஒவ்வாதவை சொன்னுய், ஓடு ஒருத்திக்கே இவ்வூரில் உண்டாம் இடம்” என்ருய் அவ்வேளை *ஏனையா மாந்தர்க் கினியோன் அரன் தனது மாஞேடு கங்கை மதிகொண்டான் கானமயில் ஏறி வருகும் இளையோன் தனக்கருகில்
28

Page 20
வேறு இருவரையே வைத்திருந்தான் *பாறுக்கு உற்ற பிறவி உலகளந்த கீதாசான் கற்ருன் பலபெண்ணைக் காதலிக்க இச்செயலே . . எங்கும்!” எனக்கோபம் ஏறி எஇனக்கொல்ல அங்கவிழ்த்தாய் நாயை அது பாய்ந்தென் கொங்கை
செவியோடு மூக்கு சிறிய இதழ்பிய்த்து. அவையன்ருே வீரர்க் கழகு
(1958 கலவரத்தால் உந்தப்பட்ட கவிதை இது)
UT-UTřané
24

குடிசை
வெய்யில் உள்ளே எய்யும் கதிரை பெய்யும் மழையும் ஐயோ சுவரில் மெய்யின் வடிவோ முற்ருய்ச் சிதைந்த செய்யுள் போலத் தோற்றும் குடிசை
வீசும் புயலில் கூவிச் சிரிக்கும் தூசும் துரும்பே துணைக்காய் நிற்கும் மூசும் சாரை முகட்டில் எலியைத் தாவிப் பிடிக்கத் தருணம் பார்க்கும்
சேவல் நின்று கூவாக் கூரை காவல் செய்ய நாயும் இல்லை தேவை வேண்டி வருவார் இல்லை நாவின் பேச்சைக் கேட்டே பலநாள்
உறவை யிழந்த உள்ளம் போல இரவில் தானும் வெளிச்சம் இல்லை அரவின் புற்றும் அருகே உண்டு வரவே சாவும் சிலநாள் உண்டு
அடுப்பில் நெருப்பின் சுவடே இல்லை மிடுக்கை இழந்த பூனே கிடக்கும் தடுக்கில் தலையை வளர்த்திச் சாவில் நடக்கும் யாரோ கிழந்தான் படுக்கும்
25

Page 21
ஏக்கம்
பிள்ளைகள் பெற்றே என்ன
பேற்றினை இங்கு கண்டேன்? துள்ளிய இளமை தேய்ந்து
துயரொடு சாவும் வந்தே அள்ளியே செல்லும் போது
அண்வரும் பின்ஞல் வந்து கொள்ளியைச் செத்த கூட்டில்
கொளுத்தவோ பெற்றேன் பாவி
கல்வியை அவர்க்கிங்(கு) ஊட்டிக்
கண்டது என்ன வாமோ? தொல்லையில் முதுமை வாழ்வு
துயருரு வண்ணம் ஊன்று பொல்லென நின்றே என்&னப்
பேணுவார் என்றேன், இன்றே வல்லையில் தனியே ஆடும்
வளைந்தவோர் பனையே யானேன்?
வதுவைகள் செய்து வைத்தேன்
வந்தவளோடு எனது முதுமையின் தணலின் வீச்சை
மழையெனத் தணிப்பார் என்றே
28

சிதைவிகின நினைவு காணச்
சிறுகுளம் வற்றிச் சாகப்
புதுப்புனல் நாடிச் சென்ற
புட்களாய் ஆஞர் அன்ருே
பெற்றென்ன பிள்ளை, பெற்றும்
பெற்றிடா மலடே யானேன்
நக்கிய பருக்கைக் காக
ந1யொன்று மட்டும் அருகில்
சுற்றிடும்; வேறே என்ன?
தூரத்தே இயமஞரின்
கொக்கரிப் போய வில்லை
கூப்பிட்டால் அவரே உதவி
27

Page 22
வருகை
இரவு பதினுென் ருச்சா?
எங்கும் அமைதி, எதற்கோ
வரவு கூறக் காத்து
வாழும் சந்தி விளக்கு
விளக்கின் ஆவல் தீர்க்க
வருவார் அங்கே வருவார்
களேத்துப் போன வாழ்வைக்
காவி ஒருத்தர் வருவார்
இருமல் ஒன்றின் இசைப்பு
எதிரே, ஆமாம் அவர்தான்!
கருமம் முடித்து விளக்கைக்
கடந்து செல்ல வாருர்
ஈரக் காற்றின் இடையே
இடுப்பில் கைகள் தாங்கி
தூறும் பனிக்குத் தோதாய்
சுள்ளிக் காலில் வாருர்!
புவியின் சுழற்சி அவரின்
புயங்கள் அதிர்வில் தெரியும்
அவியும் சுடரின் புகையாய்
அசைந்து அசைந்து வாருர்
28

விரட்டும் எதுவோ ஒன்றின் விபத்தில் தப்பி நாளும்
சுருக்கிட் டுயிரைப் பிதுக்கும்
தொய்’’வில் நடந்து வாருர்
நரைத்த கீற்று விழிகள்
நறுக்கிப் பின்னர் வளர்ந்து
துருத்தும் தாடி கழுத்தோ
தோளில் அமுங்க வாருர்
கூடப்பிறந்த ஏழ்மை
குட்ரில் தெரியும், ஆளோ
ஒடைக் கொக்காய் எதையோ
உற்றுப் பார்த்து வாருர்
வாருர் மெல்ல வாருf
வளர்ந்த விளக்கின் அடியில்
போருர் இருந்தார் மெல்ல
பொசிந்து சடங்கை முடித்தார்
போருர் எழுந்து போருர்
புகுந்தே இருளில் போருர்
29

Page 23
தேர்தல்
தேர்தலே இங்கெதற்காகவோ திரிகிருய்? ஈரமே அற்றுநீ எளியவர் பணத்தினை வாரவோ அள்ளிவாய்க் கரிசி போடவோ சோர்விலா தோடியே தொடர்ந்து வருகிருய்?
அரசியல் வாதிகள் அவர்களின் வேட்கையோ பதவியே ஏழைகள் படுகின்ற பாட்டினைப் புரிந்திடாக் கழுகுகள், தம்வலி பார்த்திட அரியவுன் ஆற்றலோ அவர்க்கிரையாவது?
பேசிய பேச்சினை பிறிதொரு பகுதியில் யோசனை யின்றியோர் நொடிக்குளே மாற்றிட ஆசியாவிலே ஆருளர் நம்மவர் போலவே? அவர்செயல் போற்றவோ வருகிருய்
மக்கள்நல் லாட்சியின் மாபெரும் உண்மையோ வக்கரித் துளுத்தவை வாழுமோர் பந்தலோ எத்தனை நாமமும் உனக்கினிச் சூட்டலாம் அத்தனை போக்குமுன் அரங்கெழுந் தாடுமே
SO

Lưtry26ou Jả đssởr(&t-sẵr
பாரதியார் மாண்டு பலகாலம் ஆணுலும் நேரே அவரை நினைத்தவுடன் காணும் சித்து விளையாட்டுக் கொண்ட சிறுவன்நான் ஆகையினுல் நேற்றுத்தான் அன்னுரை வீதிவழி போகையிலே கண்டேனுேய் வானில் புகுந்ததினுல் இம்மியளவும் இளமை குறையாது அம்மிக் குழவியென அங்கெழுந்தார், என்ணுேடு ஏதோ கதைத்தார் இறுதியிலே நானவரை
சோதனைகள் ஏதும் இலக்கியத்தில் செய்தீரோ? என்று வினவியதும் *ஏனில்லை?” என்றுபுதுக் காவியத்தைக் காட்டியே கட்டுரைத்தார்
*இக்கதையோ பாவியொரு பெண்பிறவி பட்டப்பகலிலொரு ஆண்பிள்ளை சேலை அனைத்தும் உரிந்த கதை" என்ருரோ இல்லையோ இங்கதனைக் கொண்டுவந்து உங்களுக்கும் ஓத உளங்கொண்டேன் கேட்டிடுவீர்.
3.

Page 24
*விடுகாலி சபதம்’
பாஞ்சாலி என்ற ப்திவிரதை மாண்டதன்பின் ஆம், மீண்டும் பாரில் அவதரித்தாள் ஒர்வணிதை பெண்குலத்துக் குற்ற பெருத்த அவமானம் எண்ணத்தகுமோ? இதனைத் துடைப்பதென நீண்டு வளர்ந்துள்ள நைலோன் துகிலெடுத்தேமீண்டும் எவனும் மிலேச்சன் உரியாதுவார்பூட்டி நன்ருய் வரிந்தே அதையுடுத்து பாராள இந்தப் பவளம்மாள் வந்துதித்தாள் ஆணுெருவன் மானம் அழிய அவைக்களத்தே தானுரிய ஆடை சபதம் எடுத்தவளாய் காலம் தருணத்தைக் காய்க்கின்ற நாள்ப்பார்த்து மூலயிலே அம்மாள் முடங்கிக் கிடக்கின்ருள்!
அப்போதோ இப்பாரை ஆண்டிருந்த நாயக்கன் தப்பாட்சி கண்டோர் தவமுனிவன் தன்கண்ணுல் சுட்டெரிக்க, பாவம் சுருண்டே அவனிறக்க, பெட்டைக் குலத்தின் பெருவாழ்வே லட்சியமாய் வாழ்ந்திருந்த அம்மாள் வருவாள் வெளிக்கிளம்பி தாழ்ந்துவிட்ட ஆண்குலத்தின் தர்பாரைக்கண்(டு) இனிமேல் ஏந்துமுலை மாதென் இடைக்குள் இவையடக்கம்" என்ருள் மகிழ்ந்தாள் இசைத்தாள் அரியணையில் குந்த வழிகாணக் கொய்யகத்தைக் கட்டுகிருள்
32

ஊர்ஊராய் அம்மாள் உயர்ந்த தனதுபெரும் தேரேறிச் சென்றே ஒலிபரப்புச் செய்கின்ருள் *ஐயா, பொதுமக்காள்!அன்பாக இங்கரசு செய்த மறமன்னன் செத்தான், அவன் குலத்தை உய்விக்க வந்த ஒருத்திநான் தான்” என்று அழுதும் விழுதும் அரற்றித் திருமுகத்தில் எழுதித் துயர்காட்ட இப்பார் பிரஜைகளும் ஆணுக்குச் சேலே அவளுரிய எண்ணியதை காணுதவராகி கசிந்து மனமுருகி *இஷ்ட மகாதேவி” என்ருேதி நல்லரசுக் கட்டிலையும் தந்தருகே காலுருவி நிற்கின்றர்
அம்மாள் அரியணையில் கால்வைத்த அவ்வே&ள இம்மா நிலத்தில் இருந்த சமதரும வீரக் குலத்தோர் வெகுண்டெழுந்தார்,
*ஆணுக்குச, சீரை உரிதற்குச் சிந்தித்து வந்தவளை ஆள விடுவோமா? அல்ல, பெரும்புரட்சி மூளும்” எனச்சீறி மொழிந்தவர்கள் தோளுதற அம்மாள் விழியசைத்தாள், அவ்வளவே நம்புரட்சி சம்மேளனக்காரர் சொக்கிப்போய் தாவணியின் ஒட்டில் பிடித்தாஞ்சல் ஆட வெளிக்கிட்டார்
வெற்றிக்கு மேல்வெற்றி! மேலே விளைவதினி தக்கவொரு ஆணேச் சபையில் பிடித்தேற்றி ஆடை கஃாகின்ற அவ்வேலை ஒன்றேதான் *ஆரைப் பிடித்தோ அவையில் நிறுத்துவது? என்றம்மாள் எண்ண இருந்த சமதருமர் விேடுகாலி என்றபெரும் விண்ணன் அவனைப்
33

Page 25
பிடித்துரிவோம், அன்றே பிழைக்கும் உலகெ”ன்ருர் அம்மாளும் "ஒமோம் அதுதான் சரி"யென்ன பெம்மான் விடுகாலி பிரசன்ன மாகின்ருர்!
விடுகாலி யாரா? விளக்கம் தருவேன். சுடுபுழுதி வீரர், சுயவி சாப் பேர் வழிகள் ஏழை முதுகின்மேல் ஏறிக் குதிரை விடும் ஊளைச் சதையர், உலுத்த, ஒழுக்கலர்க்கும் பாவலர்கள் நாவலர்கள் போன்ற பெரியோர்க்கும் எல்லார்க்கும் இந்த இனிய விடுகாலி நல்ல பெருந்தலைவன் நாட்டைக் குழப்புகிற கூட்டம், களியாட்டம், கோள்மூட்டும் பத்திரிகா ஆட்டம் அனைத்தின் அரங்கம் விடுகாலி கப்பல்கள் ஏறிக் கடல்கடந்து வந்தவனும் மக்களாட்சி என்னும் மருந்தொன்றைத் தந்தவளும் கப்பல்கள் ஏறிக் கடல் கடந்து வந்தாலும் கொத்தி வயல்உழுது கோவணமாய் நிற்கின்ற எங்கள் சுதேசி ஏழைக்கும் இனியவன்தான்! இந்த விடுகாலி எங்கம்மாள் பேரவையில் கொண்டு வரப்பட்டுக் கூனிப்போய் நிற்கின்ருள்
கேள்வி நியாயக் கிருத்தியங்கள் ஆகியதும் ஆளுபவள் கண்ணே அசைக்க, சமதரும வல்லோன் எழுந்து விடுகாலி மேனியினை
புல்லியதும் "ஐயையோ போச்செல்லாம்
போச்*சென்று
கல்லாய்ச் சமைந்தார் கனத்த அறிவுடையோர் ஒவ்வொன்ருய் ஆடை உரியப்படுகிறது
84

தொப்பி விழுகிறது, தோளிரண்டு காவுகின்ற எப்பதையோ காலத்துக் கோட்டும் இழிகிறது பாம்புச் சருகாய் பறக்கும் நிறம்போன சூம்பல் கழுத்தணியும் சுங்கானும் போகிறது . நல்லவொரு பிள்ளைக்கு நற்சான்ருய்
போட்டிருந்த வெள்ளைத் துணிச்சேட்டும் வீழ்த்தப்படுகிறது தூண்போன்று பொய்யான தோற்றம்தருகின்ற நீண்ட களிசானும் நீக்கப் படுகிறது! ஆண்டவனே அப்போநம் அரிய விடுகாலி நிர்வாணமாகியோ நிற்கின்ரு ? அல்ல அல்ல கோவ ணரூபஞய்க் கூன்விழுந்து நிற்கின்றர் கோவணத்தைக்கூட களைய முனைகையிலே ஆமணக்கெண்ணை அருந்தியவோர்
ஆள்போல
தம்ம விடுகாலி நாக்கெடுத்துக் கத்துகிருரீ
*மெய்யோ இது முறையோ
மானம் போய் வாழுவதோ? தெய்வம்போல் என்னைத் தலைமீது வைத்தாண்ட ஐயா பெரும்வீர ஆங்கிலேயா ஆங்கிலேயா எங்கும் நிறைந்தே எளியோர் உயிருண்டு பொங்கும் சுகத்தோடு போற்றியெனை வாழும் துங்க முதலாளித் துரையே துரைமாரே! நாட்டைக் கலக்கின்ற நாவலரும் பேனேயினுல் ஆட்டிப் படைக்கும் அறிஞர் எழுத்தாளர் வாழ்கின்ற நாட்டில் விடுகாலி சாவதுவோ நாளே இனி நீரும் நல்லாய் இருப்பீரோ? என்று விடுகாலி ஏங்கிக் குரல்கொடுக்க
35

Page 26
முன்னர் பலருக்கு முன்நின்றுதவிய விஷ்ணு தயினுர் விடுகாலி ராஜபக்தர்
அக்கணத்தில் அங்கெழுந்தே,
* அப்பா சமதருமா, விட்டுவிடு அந்த விடுகாலி ஆடையினை கிட்ட நெருங்கா தே கேடுவரும்! இன்றுனது சாதகத்தில் சின்னச் சகுனப்பிழை அதனை மேவாது போனுயேல் மண்டை வெடித்துநீ சாவாய்” என, அச் சமதருமர் பின் வாங்கி சாதகத்தைப் பார்க்காத் தவறை 火
உணர்வதற்குள் கோவணமாய் நின்ற விடுகாலி கோமானுர் தாவி மறைந்தோடித் தன்மானம் காக்கின்ருர்.
பார்த்திருந்த நல்லவர்கள் பல்தெரியப் புன்ன
கைத்து வாழ்த்துக்கள் சொல்லவிடுகாலிக்குற்றநண்பன் பத்திரிகா வீமன் எழுந்து பறையறைவான்*சத்துருவாய் வந்த சமதருமா? உன்னை, வரும் பங்குனியில் நேரும் படுபோரில் ஊரவர்கள் *வெங்காயம்” என் ருேத நானே வழிவகுட்பேன் என்று மொழிய முதலாளி மாரெல்லாம் அர்ச்சனை செய்கின்ற அர்ச்சகஞர் சொல்
கின்ருர் நண்பன் விடுகாலி நாணழியச் செய்தவிப் பெண்ணையும் இங்குள்ள டேயன் தருமனையும் என் கீழ் அடிமைகளாய் என்றும் இருத்திடு
• ' . வேன்"
என்றவரும் சொல்ல இதயப் பயம் நீங்கி
86

எங்கோ இடுக்கில் ஒளிந்த விடுகாலி கொஞ்சம் தலைகாட்டிக் கொக்கரித்துச்
சொல்லுகிறன்
* உன்னுணை, என்னுணை ஊருக் கெனையளித்த
அண்ணல் பெருமானவ் ஆங்கிலேயன்
மீதாணை உண்டு கொழுத்த முதலாளி மார்களின் தொந்தி மீதான எனக்குத் துகிலுரிந்த இந்தத் தருமனையும் இங்குள்ள பெண்ணையும் பங்குனித் திங்கள் படுபோரில் மண் கவ்வச் செய்தபிறகே தொய்ந்துவிட்ட என் உடையை தூக்கி வரிந்திடுவேன்’ என்றவனும் சூளுரைக்க கேட்டிருந்தோர் மிக்கக் கிளர்ந்து நகைத்து புகழ்ந்து சிகரட் புகைத்து அகன்றர்கள்
பங்குணி, 1965)
87

Page 27
ආණ්ඨික
தெருவின் முதுகில் tP6oop uTutu iš தெளித்த சின்னிரீத் தேக்கம்
உருவிக் கிடக்கும் அதனுள்
உலகக் கலையின் தோற்றம்!
ஊமைக் காடாய் உயரே
உம்மென்றிருந்த வானம்
ஓமக் கொழுந்தாய் அதனுள்
ஒளிவிட் டெரியும், விரியும்
அருகில் ஊத்தை புனைந்து
ஆடிச் சென்ற கிழவன்
பிரதி விழுந்தங்(கு) அழகுப்
பிம்பமாயிற்(று) அதனுள்
வீரென் றிசைத்து மேலால்
விரையும் குருவிப் பேடு
பாரோய் அதற்குள் கவிதைப்
படிமம் விழுந்த வீச்சை
நாயொன் றருகில் சென்று
நீக்குப் , நீரில் இமைகள்!
பாரும் இசைய7ய் நாயின்
படங்கள் மிதந்த கதையை
38

யாரோ மனிதக் குழந்தை
யாத்த பேப்பர் கப்பல்
தீரா மனிதக் கனவாய்
திரியும் தலைகீழாக
ஒதுங்கி எவளோ ஆடை
உயர்த்திச் சென்ருள், ஒமோம் பளிங்கு போலத் தொடைகள்
படிய அவளும் பதிந்தாள்
எருமை விழுந்த பின்னர்
இடறிக் கலக்கிச் செல்லும்
கருமை படரும் இன்னும்
கனபோழ் தாகும் தெளிய.
39

Page 28
விமர்சனங்கள்
விளம்பரங்கள் காடாய் விளையும் நமதுரில் பழங்களுடன் வெம்பிப் பழுத்து
விழுந்தவைகள் எல்லாம் ஒரு விலையில் ஏற்றி இறக்குகிருர்! நன்று, சுவையுணரும் நாவில் அடிவயிற்றின் பொல்லா உலேயின் புகையால் தழும்பேற்றம்! நாமரத்துப் போக நமக்கேன் சுவையுணர்வு? தேவையிலை விட்டதனைத் தள்ளும்-பாவற்காய் கைப்போ இனிப்போ கறிக்(கு) உப்பிருக்
கிறதோ சக்கை எனினும் தள்ளாதீர். இது கோயிற் புக்கையன்ருே போற்றிப் புசியும்-புது
Gg * DITřešil
பல்லில்லார் கொஞ்சம் வதியும் பதியிங்கு பொல்லா இறைச்சிப் பொருளினிமேல்.
வில்லாதீர் இளகியவை செய்யும், இரும்பைக் கடிக்கின்ற எயி(று) இனிமேல் மெல்ல எழும் பொன்னை அறியார் பலர், அதனுல்
பொற்கொல்ல பித்தளையில் வேலை பழகு
40ه

உண்ணக் கனிகள் உதிர்க்கும் மரத்தினிடம் சென்று அவற்றினைச் சீவி அருந்து தற்காய் கத்தியையும் காய்க்குக என்க, இலையென்றல் வெட்டி யுடன் தனை வீழ்த்து பின்னர் மரங்கள் பெரிதாய் வளர்க்
கையில் நாம் சின்ன (வோர்) இன்ஜெக்ஷன் செலுத்தி
கண்முன்னே தீங்கனிகளோடு சிறகு விரித்துள்ள கத்திகளும் காய்த்திருக்கக் காண்போம்!
உண்டு கொழுத்தே உரல்போல் இருப்பவர்கள் திண்டவைகள் கொஞ்சம் செமிக்கவே
வெண்சுருட்டு போன்ற பொருட்கள் புரிந்திடுக! காசற்றுத் தோன்றிவிட்ட எங்கள் தொழில்மகனத்
தாலாட்ட பீடி சுருட்டுக்கள் போன்ற பொருள் இயற்றும்
சல்லி பரிமாறல் சந்தையிலே, Tacticsல் வல்ல விளம்பரங்கள் வாழும்
41

Page 29
மதிப்பிடு
எனக்கு வயதோ இருபத்தைந் தாகிறது வாழ்க்கை இதுகால் வரைந்த வரலாற்றை மீட்டுச் சுவைத்து மதிப்பீடு செய்கின்ற வேட்கை எனக்குள்ளே விம்மி எழுகிறது ஏட்டை எடுப்பேன் எழுதிக் கணக்கெடுக்க.
அனந்த நெருப்பாய் அவிழ்ந்த குமிண்
சிரிப்பாய்
காற்றில் கலந்தவென் கால்நூற்று
ஆண்டுகளே! பாலை மணலில் பதிந்த அடிச்சுவடாய் தூர்ந்து தெரிகின்ற காலச் சுவடுகளே! நீங்கள் எனப்பிரிந்து நீள்தூரம் செல்கின்றீர் போங்கள், இதுகால் புணயாய் அலைகடலாய் வாழ்ந்தே எனக்கு வரலாறு தந்திப் போ போகின்றீர் நானுே, பொருமி எழுந்தெதிரே எங்கும் அலைகள் எறியும் கடல்நடுவே குந்தியிருக்கும் ருெபின்சன் குருசோப்போல் பேரறியா நச்சுப் பிரண்டை விளைகின்ற ஓர் தீவில் வந்தே ஒதுங்கிக் கிடக்கின்றேன்!
நீரோடு முத்தம் நிகழ்த்தும் அடிவானின் ஒரத்தே ஆடி ஒளிரும் ஒருசுழிப்பில்
42

தன்னே இனங்கண்டு தாவும் மனப்பேடு என்ன அது? வாழ்வின் இலக்கோ?
கலைத்துடிப்பின் சின்னக் கனவுலகோ? சீர்பெற் ருெளிர்கின்ற எல்டராடோ என்கின்ற இன்ப மணிப்புரியோ? ஏதோ அறியேன், எனது முதுசெலும்பின் கோதில் உருள்கின்ற குன்றி மணித்துடிப்பில் பீறியெழும் மின்னல் பெருக்கின் நொடியில்
அவை:
எல்லாம் புரியும், இருந்தும் புரியாது. மல்லாந்தே அங்கேகும் மார்க்கம் அறியாது பேரரறியா நச்சுப் பிரண்டை விளகின்ற ஓர் தீவில் வந்தே ஒதுங்கிக் கிடக்கின்றேன்!
நானேறிப் பாயிழுத்த நாவாய் அனுபவத்தின் போதாக் குறையாலோ பிஞ்சில் பழுத்ததிலோ மோதுண்டு கல்லில் முடமாய் ஜடமாகி ஒரம் கிடக்கிறது, ஓய்ந்து தனி மனுவாய் குந்தியிருக்கும் ருெபின்சன் குருசோப்போல் நானிங்கு ஏதாலும் நாவாய் வருஞ்சிலமன்? ஆவல் விழியீற்றில் ஆட அடிவானம் கூவும் மெளனக் குரலில் உளமோட காத்துக் கிடக்கின்றேன் காலம் வரும்வரைக்கும் பாட்டில் விழுந்த பழைய வியாபாரி ஏட்டைப் புரட்டி இதயத் திருப்திக்காய் ッ பார்க்கும் பழங்கணக்காய் நானும் பழையவற்றின் ஈர்ப்பில் மனதை எடுத்தே நடக்கின்றேன்!
48

Page 30
அம்மா எனுமந்த அன்புமலைக் கோயில்
சந்நதியில் நான்முன்னர்த் தாவித் தவழ்கையிலே என்ன நினைவையவள் என்னில் செதுக்கினளோ? சோறுரட்டி வானம் தொடுத்த மலர்ச்சரத்தின் சீர் காட்டி, பாலூட்டி தூக்கச் சிறுக்கியவள் ஊர்காட்டி, அன்பு ஒழுக்கி வளர்த்த அவள் என்ன நினேவையெல்லாம் என்னில் செதுக்கி
6O7 Gstit? என்ன நினைத்திருப்பாள்? எந்தன் மகன் பெரிய மன்னணுய் காரில் மதிப்போடு மாற்ருரின் கண்ணில் படவாழும் காட்சி வழியிலவள் என்னை நிறுத்தி இறும்பூதல் எய்திருப்பாள் என்ன பிழை? இற்றைச் சமூக இயல்புகளின் சின்னம் அவள்1 வேறு சிந்தை அவட்கேது? பாவமோய், என்ன நிதம் பள்ளிக் கனுப்பியவள் மோகமுற நாணுே, முருங்கை மரக்கிளையில் காகம் இருந்து கரையும் அழகினிலும் வேகமுடன் காற்று விரைய நிலமிருந்து சேவல் உதிர்த்த சிறகு மிதப்பதிலும் அண்ணுந்து பார்க்கையிலே அங்கே கரும்பருந்து பண்ணுய் விசும்பில் படரும் சுருதியிலும் ஏதோ கனவை இயற்றத் தொடங்குகிறேன்.
பள்ளியிலே ஆசிரியர் ‘பேயா உனக்கிங்கு கல்வி வராது களிமண்ணே மூளை*யென அன்னுரி திருமொழிக்கு அப்பழுக்கு நேராது கண்ணன், சிவபெருமான், காராம் பசுவெல்லாம் மண்ணில் சமைத்தேக மாணவர்கள் கொண்டாட
44

ஆதிச் சிவனுர் அடிநுனியைக் கண்டபுது மாலயணுய் என்றன் மனது சிறகடிக்க. அந்தி அடிவான் அமுதக் கடைசலென குந்தி யெழும் நிலவு, பூவரசங் குழையூடாய் சிந்திக் கிரணங்கள் செல்லம் பொழிகின்ற காலைப் பரிதி, ககனச் சிறு பறவை, ஏலோ என நீர் இறைப்போர் -இவையெனது பிஞ்சு மனதைப் பிசைய மறுகணமே **பெஞ்சில்” எடுத்தெச்சில் பெய்து சுவரெல்லாம் நெஞ்சில் உருண்ட நினைவுக்கு தொட்டிலிட.
என்ன விதமாய் இளமை மறைகிறது கன்னக்கோல் இட்ட களவாய், நெருப்புற்ற பொன்னுருக்காய், மென்சிரிப்பாய், போகம்தரும் திகிலாய்: சின்ன வயது சிறகடிக்க நான்பெரிய மன்னணுய் அல்ல அல்ல, மண்டுகம் என்கின்ற பட்டத்தை வாங்காக் குறையாப் படித்தந்த எஸ்ஸெஸ்ஸி யென்னும் இடறும் பரியின் பிடரி பிடித்தேறி-பின்னங்கால் தந்த உதை இன்னும் விலாநோக-எப்படியோ தொத்தியதில் வெற்றி முழக்கமிட்ட வீர வரலாறு.
தூரறயில்கூவும் தொத்துதற்கு முன்அம்மாள் ஈர முகம் நோக்கி “எல்லாம் சரி” என்று கூறிப் பிரிந்து கொழும்பு நகர்வந்தால் ஏதோ கடையில் இருந்து கிறுக்கின்ற மாதம் வயிற்றை நிரப்பும் ஒருவேலை! போதாதா? என்னைப் படைத்தோன் படியளந்தான்
45

Page 31
வாழ்க அவன் வேலை முடிந்து அறையடைந்து பாட்டில் விழுந்து முகட்டில் விழிபதித்தால் ஒட்டு ரயிலாக ஒடும் எலிக்குஞ்சு நீட்டு ரயிலாய் நெளியும் ஒருசாரைவேட்டை அடடா, இதுகால் விழுந்திருந்த தொட்டில் பழக்கம் சுரீரென்று பற்றியெழ சிற்பி ஒருவன் செதுக்கத் தொடங்குகிருன்! எட்டாக் கனியாய் இருந்த நிலாப்பேடு கொட்டும் மழை, அண்டம் குடையும் பிரளயங்கள்,
மொட்டாக்கில் வாழும் மருமமுடிச்சுக்கள், கிட்டாப் பொருளாய்க் கிடந்து கரங்காட்டும் எல்லாம் எதிர்வந் திரங்கிக் கரங்கூப்ப சொல் நுழையா ஊரெல்லாம் தேரோட்டி
அங்குலவி வில்லாளனுய் அகிலம் வென்ற களிப்போடு மீண்டும் உலகிறங்க முன்ஞலுள யன்னல் வாங்கும் நிகழ்வில் விழிபோய் நனைகிறது.
என்ன ஜனங்களிவf? ஏதோ வெறியில் கடலைச் சிதறலென கால்போன போக்கில் உடலை நடத்துகிறர் ஓவென் றிரைந்தவரைத் தின்று பசியாற திரியும் அசுரக்கார் வண்டியினம், ஒயா வாய்பிளந்து கொக்கரிக்கும் வானுெலிகள், ருேட்டில் விழுந்து புரள்கின்ற கூனல் முடம் நொண்டிக் குப்பை - இவற்றுள்னே என்னை நி3னப்போரார்? எனக்கே எனதுருவம் கொன்ன நினைவாய், குருடாய், குறைச்சிலேயாய் தன்னை இழந்தழிய தாவி வெளியுலகக்
4A

குப்பைக்குள் நானும்போய் குன்றி மணிபொறுக்க ஆயத்தமாகின்றேன்-அப்போதான் அங்கவளே சந்தித்தேன், ஐயா நம் சங்கத் தமிழ்க்காதல் வந்ததுவோ! எச்சில் வடிய ஒருதலையாய் வாடாமல் சட்டை அணிந்து, தலைமயிரை நீரோடு எண்ணெய் நிரவி நிமித்திவிட்டு மாதாந்தம் பெற்ற வரும்படியில் மண்வீசி
ஓடோடி நாளும் உரோமம் சிலிர்த்தெழும்ப காதலித்தால்-அந்தக் கனகி புரிந்த வினே! இல்லாத ஒன்றை இருத்திப் பொருத்தித் தரித்து வரித்து தடவிழியால் என்னுயிரை தேடி எடுத்தன்னுள் தான் போகும் திக்கெல்லாம் ஒடக் கலைத்தே-ஒருநாள் இவையெல்லாம் வார்த்தைக் கடங்காத வானச் சிதறல்களாய் பூச்சரமாய் ஆச்சரியம் புரிந்து சொரிந்து புஸ்வாணமாக, புரியாத் துயரத்தில் மூழ்கி அடியேன் முணுமுணுக்க, ஒர்கடிதம் அம்மா அனுப்புகிருள் "என்றும் சிவபெருமான் முன்னிட்டு வாழிற மோனுக் கெழுதுவது. இங்கு கடன்காரர் என்னே நெருக்கீனம் கூப்பன் எடுக்கவும் காசில்லை ஏதாலும் பார்த்தனுப்பு இப்படிக்குன் தாயார்” என்றந்தக் கடிதம் கதைக்கிறது, கரிம வினையால் நான் விடிய அவள்வயிற்றில் வீணே எனேநம்பி காலம் கடத்துகிற கட்டுப் பிணிப்பையெல்லாம் நாலாய்க் கிழிக்கும் நமைச்சல் எனக்குள்ளே, ஆஞலும் ஏதோ அனுப்பித் தொலைக்கின்றேன்!
47

Page 32
காதல் ஒடிந்துவிழக் காமம் தலைதூக்கும் சேலைச் சரசரப்பு, சின்ன இடை, காற்ருல் மேலெழவே ஆடை அதனுள் மினுங்குகிற வாழைத் தொடைகள் வயிற்றின் இடைவெளிகள் ஆளுக்குள் எதையோ அருட்டிவிட நானே எனக்குக் குருவாய் இருந்து படித்தறிந்த கரமைதுனம் இன்னும் காலத்தால் சாகாத ஒஸ்கா வைல்டாரின் உத்தி-அவை விரிக்கின் உட்பிரிவு கூடும், அது ஒன்றல்ல-இவையென்ன ஆட்சி புரிந்தே அளந்த திரவியங்கள். அம்மி இருந்தே அகன்ற இடமாயென் கன்னங் குழியோட கண்டால் எனதம்மா
சகோதாரிப் போவாங்கள்” என்று கொழும்பூரில் சோருக்கிப் போட்டோரைத் திட்டித் தொலைத் :
திருப்பாள்
இப்படியாக இனிமை எனக்களித்து காலங்கள் வேப்பமரக் காயாய் உதிர்கிறது! ஏனப்பா மென் மேலும் இந்தச் சனி வாழ்க்கை? நானெட்போ என்னை நசுக்கித் தொலைத்திருப்பேன் ஆணுல் முடிகிறதா? அந்தக் கருவானின் கூனல் முடிவில் குதிக்கும் ஒருசுழிப்பில் ஏணுே இதயம் இழைய மறுகணமே இங்கு வதிகின்ற எல்லா உயிரினமும் என் கீழ் இயங்கிவர இப்பார் முழுதையுமோரி சங்காய் எடுத்தூதும் சக்தி எனக்கேற இங்கெனது வாழ்வின் இலக்கைப் பிடிப்பதற்குள் அன்ருெரு நாள் கால ஆமாம் எனக்குத்தான்
48

தந்திவரும் “அம்மா சாகக் கிடக்கின்ருள் வந்து பார்” என்று! வயிற்றில் அடித்தபடி ஓடுகிறேன் அங்கே உருவம் அழிந்தம்மா கட்டிலிலே, என் செய்வேன், காசம் அவளுக்கு வட்டிலிலே சோறு வழங்கி எனையணேத்த பட்டுச் சிறுகரங்கள், பார்த்த மறுகணமே ஒற்றித் துயரை எடுக்கும் ஒளிவிழிகள் வற்றிக் கிடந்தாலும் வந்தே யெதிர் நின்ற என்னை இனங்கண் டிறக்கை அடித்திட்ட அந்தக் கணப்பொழுதில் ஆமையா என்ளுேடு இந்த உலகே இதுகால் இழைத்திருந்த பாவமெல்லாம் நீங்கிப் பரிசுத்தம் பெற்றிருக்கும் எல்லாம் முடிகிறது, எங்கோ நெடுந்தொலைவில் மல்லாந்தே அம்மாள் மரணத் துணை யோடு சொல்லாட, நானே சுருண்டு கொழும்பூரில். எல்லாம் முடியும் இளைய பரம்பரையின் செல்வன் இதுகால் நான் சேகரித்த கையிருப்பை எண்ணிக் கணக்கிட்டேன் ஏ, என்னை விட்டோடும் காலக் கொழுந்துகளே! கையொடிந்து இங்கேநான் எங்கும் அலைகள் எறியும் கடல்நடுவே குந்தியிருக்கும் ருெபின்சன் குரூசோப்போல் பேரறியா தச்சுப் பிரண்டை விளை கின்ற ஒர்தீவில் வந்தே ஒதுங்கிக் கிடக்கின்றேன்! ஏதாலும் நாவாய் இனியும் வரும் சிலமன்? அாரத்தே அந்தச் சுழிட்பின் ஒளியாட்டம்.?
49

Page 33
தொழிலாளி
குடைந்த மரமெனக் கூனிய உடலுடன் நடந்து திரி கிருன் நாயிலும் கேவலம் கிடந்து பசியொடு காலையில் எழுகிருன் அடைந்த துன்பங்கள் ஆயிரம், வாழ்க்கையோ
உடைந்த பானையின் ஓடுகள், ஆடையா? படர்ந்த சிரங்கெனப் பற்பல ஒட்டைகள் அடர்ந்த தாடியோ அவனிடம் தங்கிய மடந்தை வறுமையின் மாளிகைக் கட்டடம்
நொடிந்த வீட்டினில் நோயுடன் குழந்தைகள் வடிந்த முகத்துடன் வாடிடும் பத்தினி மடிந்த கனவொன்று மனதிலே நிழல்தடம் தொடங்கி யசைந்திடும் தோற்றமில் காட்சிபோல்
கடந்த காலங்கள் கல்லிலும் முள்ளிலும் நடந்து வந்தவை, நலிவின் நா டினும் தொடர்ந்து தன்தொழில் செய்கிருன் நாளுமே இடிந்த வாழ்க்கையில் ஏற்றமே கண்டிட
ஒடிந்த சிறகினை ஒட்டவும் பார்க்கிருன் படிந்த வறுமையைப் போக்கவும் முனை சிருன் விடிந்த வாழ்வினை வேண்டிடும் அவனினி ஒடிந்திட விலங்குகள் சக்தியாய் திரளுவான்
50

நான்
உணர்ச்சிகள் பிரக்ஞைக் கூட்டம்

Page 34

சாவெனும் காவியம்
சாவினை யாரோய் நம்முள் சரிக்கட்டி வைத்தார்? அந்தக் கோபுவோ நேற்றிருந்து குதித்தவன் இன்ருே இல்ல! பாவமோய் கொஞ்சம் முந்தி பகிடிகள் விட்டுப் போன நாகுவும் செத்தான், நல்லா நாகேனம் ஊதும் அந்த
ரெத்தினம் கூடக் காலி ரேடியோச் செய்தி கேட்டான் சுப்பிர மணியன் செத்தான்! சும்மாகா லாட்டிக்கொண்டு சப்பின தம்பி முத்து ராத்திரி குளோசாம்! என்ன எக்ஸ்பிரஸ் வண்டி யில்தான் இயமன்வந் திறங்கு வாரோ?
சாவினை யாரோய் நம்முள் சரிக்கட்டி வைத்தார்? சுத்தப் பாவிகள் எல்லாம் பெரிய பல்லக்கில் ஊரும் போது
53

Page 35
கோவிலே தஞ்சம் என்று குத்தகைக் கெடுத்தோர் Ꮳ ᏗfrᏊfl தானங்கள் பண்ணி அந்தத் தெய்வத்தைக் கையுள் போட
ஆயத்தம் பண்ணினுேரும் அவதியில் மூச்சை விட்டார் காயங்கள் ஏது மின்றிக் கட்டுடல் விட்டோர் C3ѣтtg! பாயைவிட் டெழுப்பு தற்குப் பஞ்சிப்பட்டிறந்தோர், இன்னும் நாயெனச் சீரழிந்து யமனயே நடக்க வைத்தோர்.
ஆரென்று பார்க்கி ருஞ? அவர்பெரும் புள்ளி யென்று பேரிருந் தென்ன வையா பிசகவா செய்தான்? பெரிய நேருவே போனுர், ஏதோ நீண்டவர் தாங்க ளென்று போர்புரிந் திருந்த ஹிட்லர் போய்விட்டார், ஆளே இல்லை
பாரதி எங்கே? அந்தப் பைங்சரு மீசை கண்டும் நேரயே வந்தான் காலன் நின்றிதோ பாட்டி சைக்கும்
54

பேர்பெரு எங்களுக்கும் இப்பவோ பிறகோ எந்த நேரமோ யாரோ கண்டார்? நிச்சயம் நாமும் சாவோம்!
மானிடர் மட்டுந் தாணு மரிக்கிருர்? இல்லைப் பழைய வேதகா லத்தின் போது விளங்கிய கடவுளர்கள் போவதும் வருவதாயும் பெரியதோரி தொல்லைப் பட்டார் தேவனுய், சோம பானத் தீர்த்தத்தில் போதை கொண்ட
இந்திரன் கொஞ்சக் காலம் இயங்குவார், அவரை வீழ்த்திச் சுந்தர வருணன் வந்து தோன்றுவார் போவார், இன்னும் சந்திர சூரி யர்கள் தள்ளுண்டு மல்லுக் கட்டி வந்துவந்(து) "அவுட்” டாஞர்கள்! விட்டதா அவரைச் சாவு?
சாவிதன் வகைதான் ஒன்ரு?
தரங்களோ அனந்தம் வீட்டில் கோவித்துக் கொண் டு சின்னக் குழந்தையாய்ப் போன சுப்பன்
55

Page 36
ஆளெப்போ செத்தே யிட் போர் ஆப்பிளை யாக வந்தான் ! காதலே பெரிதாம் என்று கல்யாணம் செய்த புரட்சி
வாதியோ செத்துக் காவி வஸ்திரச் சாமி யாஞர்! ஏதப்பா சாவில் இன்னும் எத்தனை வகையோ? உடலில் ஏறிய சாவைக் கண்டோம் இதயத்தால் நாளும் சாகும் மானிடர் உண்டே, அன்னுர் மறைவிலும் பலர கங்கள்!
கண்ணம்மா உனக்கே தாலி கட்டுவேன் என்று சொன்ன பொன்னையன் கால மானுன் பொருளுக்காய்ப் பின்னுயிர்த்து அன்னம்மா என்ற பெண்ணை அவன் மணம் முடித்துச் செத்தான்! என்னவோ பெரிதாய் "புரட்சி இயற்றுக, இங்கு நம்மை
**ஆளுவோர் நடுநடுங்க
அனைவரும் திரள்க’ என்ற தோழரோ கொஞ்சங் கையில் துட்டுகள் சேர்ந்த பின்னர்
56

ஆள்மெல்லச் செத்தார், இப்போ ஆளுவோர் வாலர் அந்தாள்! நாளொரு கணமும் வாழ்க்கை நடக்குதோ சாவில்? எந்த
வேலையும் சாவில் தொங்கும் விளக்கமோ? கலைக்கண் பூண்ட மாலையோ இரவில் சாக, மனத்தொடர் துயிலில் சாக, காலையில் நாங்கள் நீங்கள் கந்தோரில் சாக, நெஞ்சின் மூலையில் நாளும் அற்ப ஆசைகள் முளைத்துச் சாக
உணர்ச்சிகள், பிரக்ஞைக் கூட்டம் உயர்ந்தமா தத்து வங்கள் மலைத்தொடர் விண்ணும் மண்ணும் மரங்கொடி, இன்னும் நம்மைப் படைத்தவர், பேச்சு மூச்சு பழக்கங்கள் வழக்கம், சாதிப் பிரச்சனை, கரைச்சல் சண்டை யாவையும் வேகங் கொண்ட
தொடர்நிலைப் புரட்சி போல, திரெளபதை துகில்ப் போல, சலசலத் தோடும் ஆற்றுத் தண்ணிராய் ஒன்றை யொன்று துரத்திக் கொண் டோடித் தம்முள் தற்கொலை புரிந்து சாக
57

Page 37
நிலப்பது எதுவோ? சாவே நெடியதோர் அரக்கன் ஆக
மருத்துவர் கைவிரித்தார் மந்திர வாதி சாவைக் கொடுக்கவே கற்ரு னன்றி கொல்லவா தெரியும்? குறிப்பைப் பிரித்தசாத் திரியார் சும்மா கிரகத்தில் பழியைப் போட்டார் பெருத்தவிஞ்ஞானிக் கிவைகள் பிடிபடா சமய வாதி
முப்புரம் எரித்தோன் கோப முற்றனன் என்ருன்! அல்ல அப்படி யல்ல"வென்றே அங்கொரு மார்க்கண் டேயன் கொக்கரித் தெழுந்து காலன் கயிற்றினை வீசும் போது எச்சிறு பயமு மின்றி எதிர்த்தினி தாகச் சொல்வான்
தேம்பிநீ சாவே" இந்தத் தரணியில் தோன்றும் யாவும் வந்துவந் திறப்ப தானுல் வாழ்ந்திடும் உனக்குக் கூட இங்குசா வுண்டே” என்ருன் இறந்தது சாவும் அங்கு நின்ற அவ் ஒருவனுக்கு நன்றினி நாமும் பார்ப்போம்!
58

Փ-ք0ճռ
இரவில் உடுக்கினங்கள் இறைத்துக் கிடக்கையிலுன் உறவின் நினைவேணுே ஓடி வருகுதடி? பிறையின் முலை சுரந்து பெய்யும் நிலவொளியில் கிளைகள் முழுகுவதோ நெஞ்சைக் கிளறுதடி அரவின் நுழையலென இரவில் வருங்காற்றுன் கரவின் விளேச்சலடி, கபடச் சிறுத்தையடி சருகுவிழ மற்றத் தளிரின் கலகலப்புன் அழகின் சிரிப்பாமோ? அகந்தைக் கிறுக்காமோ? துயின்ற குயிலொன்று தூங்கி விழும்போது எழுந்த சிறகோசை - என் இதயக் குமுறலடி சேவல் சிறுகுஞ்சின் கூவல் தொலைவில் என(து) ஆவியினை யெங்கோ அள்ளி நடக்குதடி ஆமாம் எனப்போன்று அந்தப் பெருவானம் ஊமை, எதைஎதையோ உற்று முறைக்குதடி
59

Page 38
அழுகை
வானழுதால் வையம் வாழும், வளமோங்கும்,
வளரும், சிலவேளை
கோனழவும் குடிய ழவும் குதிப்பு, பெருக்கெடுப்பு
குறுக்கே வருந்தடைகள்
சேதமுறல், பாலம் சிதைதல், மரம் முறியல்
சீற்றம் புனற்காடு
நீயழுதால் நூறு நெஞ்சம் உனக்காக
நின்று தலைவணங்கிப்
போயெழுந்து விண்ணில் பூத்த மலரினத்தைக்
கோத்துச் சரம்புனேயும் S.
பாயெழுந்து செத்த பிணமும்வரும் உலகைப்
படைத்த பிரம்மாவே
வாயவிழ உனது வாசல் படிவந்து
வருகை தரநிற்பார்
நானழுதால் எந்த நாயோ செவிமடுக்கும்?
சிறிதும் நலிவின்றி
வானிருந்து நிலவு வழங்கும் தயிர், தென்றல்
வாச மலரிடையே
பூனை யென மெல்லப் புகுந்து முகந்தடவிப்
புளுகுக் கதை சொல்லும்
6O

ஓரிடுக்கில் கொம்பில் உள்ள வதைமொய்த்தே
உறிஞ்சும் மதுவீக்கள் காவிருந்தோ இசையாம் கள்ளை குயிலொன்று
கவிழ்க்க அதையள்ளி பாரருந்த நீயருந்த பார்த்துக் கிடக்கின்ற
பாவி யெனக்கிரங்க யாரிருந்தார்? யாருமிலை நானே எனக்கிரங்க
நயனம் நிதம்சுரந்து.
6

Page 39
அவள் (1)
நெஞசினேக் குடையும் வண்டு
நிஜனவிஜனக் கடையும் மத்து நஞ்சுசெய் நோவும் மாவின்
நறுங்கனிச் சாறுஞ் சேர்ந்த வஞ்சகி, நெருஞ்சிக் காடு,
வாலிபன் எனது பிஞ்சுப் பஞ்செனும் மனதில் வந்து
படுத்தவோர் நெருப்புப் பேடு ஆழியின் அமைதி, காளி
அம்மனின் ஈர்ப்பு, கடைசிக் கோழியின் கூவல் கேட்டுக்
குதிர்விடும் இரவு மேனி தாழியில் தூங்கும் வெண்ணெய்த்
தண்மையின் காதல் நெஞ்சள் ஊழியை ஏவுகின்றள்
ஒழிந்ததோ என்னுல் பூமி?
கைக்கிஆள அல்ல, இருவர்
கண்களும் அறியும் D 6oitoun
பொய்க்குணம் அன்றே பெண்மைப் பூமியில் விளைதல் முள்ளைத்
தைக்கவும் விட்டுப் பின் னர்
தட்டியே எடுக்குங் காலை
62

பிய்த்தெழும் இன்ப நோவில்
பேரவாக் கொண்ட கோதை
இங்கவள் விந்தை நூருல்
என்னகம் சேர்ந்தாள், வானத் திங்களைச் சேர்ந்த அழகுத்
தேமலாய், இருண்ட நெஞ்சை அங்கமொவ் வொன்றி ஞலும்
அனலெழச் செய்து நீற்றுத் தங்கிய கங்குல் தேய்த்தாள்
திறந்தன ஒளியின் கண்கள்!
காமமாம் வேங்கை தாணுேய்
காதல் ஆந் தோலைப் போர்த்தே ஆமையாய் வாழும்” என்றங்(கு)
அரற்றுவர் சிலரும், எனில்ஏன் சாதலும் அழிவும் என்ற
செய்திகள்? உண்மை, காதற் போதவிழ் நெஞ்சம் இறையின்
பூசனைக் கோயில், ஆமாம்!
ஊமையாய் எமது காதல்
ஒய்துபோய் வீழின் நாளுேர் கோமுனியாதல் எட்டாத்
தூரமா? பொதுவில் மாக்கள் காமனுர் வில்லில் இறையைக்
கலந்திடும், அதையும் தாண்டின் ஒமமொன் றெரியும் அங்கல்
உண்மையாய் அவள் திகழ்வாள்!
69

Page 40
அவள் (2)
வருகிருள் எனது காதல்
வதிந்திடச் சமைந்த கோயில் உருகுமஷ் வெள்ளி யாற்றின்
ஒரத்தே கூந்தல் என்னும் கருநதி ஒழுக வந்தாள்
கண்மணி சிந்தும் ஒளியோ பெருகிடும் வேறேர் ஆருய்
பேதையேன் அள்ளுண் டேனே.
தேர்செலும் வீதி அவளின் சிரவகிடங்கு காட்டும் கூர்முனே க் கோபுரங்கள்
குவி முலை காட்டும், தெப்பை நீர்நிறைப் பொய்கை விழிகள்
நீந்திடும் முகமே, உள்ளம் பேரொளிப் பிளம்பாம் அவளோ
பூச்சொரி கின்ற தோட்டம்
போயவள் ஆற்றில் பாய்ந்து
பொடிமுழுக் கிட்டு வந்தே
வேயுடல் தேய்ப்பாள் துகிலும் விழுந்ததா உடலே விட்டு?
சேயிதழ்ச் சிரிட்பும் வெள்&ளச்
சிந்தையின் வடிவும் எந்தன்
ஆவியைச் சுண்டும், தீயுள்
அமுங்கியே முழுகு கின்றேன்
64

அங்குநான் எனயிழந்தே
அவளையே தொடருகின்றேன் இங்குநான் முன்பு காமி
என்பவளோடு வந்தேன் பின்பொரு படலை கண்டு
போயதைத் திறந்தால் இந்த மங்கையின் தூய்மை கண்டேன்
மற்றவள் எங்கே போனுள்?
காதலச் சொன்னேன் ஆற்றில்
கண்டதும் விண்டேன், இரக்கம் ஏதுமில் லாளே யாகி
ஏகினள் இ?ளத்து நின்றேன். சாதலே வருக வென்று
சாற்றினேன் ஈற்றில், என்னே மாதிர மெல்லாம் சோதி
மயமுற விளக்கெடுத்து
வருகிருள் எனது காதல்
வதிந்திடச் சமைந்த கோயில் உருகிறேன் கடலை நோக்கி
ஓடிடும் நதியாய், நெஞ்சக் கரையெலாம் அலைகள் கொட்டும்
காற்சிலம் போசை, பின்னுல் அருகுதே உலகம்! புணர்ச்சி
ஆகையில் அவையேன், அவையேன்?
65

Page 41
வேட்கை
இரவில் எனக்குப் பிரியம் - மழை இடியோ(டு) ஆடும் இரவோ பிரியம் மிக்கப் பிரியம் - புயல் பேயாய் வீசின் என்னுள்
விரியும் ஆவல் கொள்ளை - கொடி விழுத்தும் மின்னல் என்னே அரியும் மாயக் கத்தி - உடன் எங்கோ இழுக்கும் சக்தி
தெருவில் மழையின் நடுவே தெரியும் விளக்கென் நெஞ் சுள் எரியும் பற்றி எரியும் - அது எதையோ அள்ளிச் சொரியும்
காற்றில் மழைபின் கசிவு - LשםSif காலில் திகிலின் ஊற்று சாத்தும் திறக்கும் கதவு - பேய்க் கூச்சல் காட்டும் இரவு
66

ஓடித் தாவ மழையில் - என் உள்ளம் கிளர்த்தும் ஆவல் கோடித் துளிகள் உமிழும் - அக் குமிழாய்த் தவழ வேட்கை
பாடிச் சேற்றில் விழின் - உளப் பதுமம் மெல்ல மலரும் மூடித் தனியே இனியும் - இம் முடுக்கில் வாழ்வா? ஐயோ!
87

Page 42
தேடல்
நான் -
நேற்றுவரை ஏதும் நேராப் பழம்மனிதன் ஊற்றெடுத்தாய் கன்னி உதயம் எனக்குள்ளே,
நேற்றிருந்தோன் சாக நீற்றெடுத்தேன்
உன்னை
ஆற்றேரம் உன்னே அடையத் தவமிருந்தேன் ஈற்றினிலே ஏதும் இன்றி நடக்கையிற்றன் ஊற்றெடுத்துப் போன உந்தன் நினைவுவரும்
பாதையிலே உன்னைப் பார்க்க விழிபதித்தேன் ஏதுமின்றிப்பின்னர் ஏகும் பொழு திணிற்ருன் ஊர்த்திரளாய்ப் போன உந்தன் நினைவுவரும்.
கங்குல் படரவுன்னைக் காணத் துடிதுடிப்பேன் அங்கும் உனைக் காணு தலைந்து படுத்த பின்பே திங்களென வந்து சிரித்த உனையுணர்வேன்.
தனியே கிடக்கையிலுன் தாகம் எனக்கதிகம் கனியாய்ட்மனது கசிய உருகிடுவேன்
மணிபோல் விழியுருண்டு வீழ்ந்தாய் பிறகு
ணர்ந்தேன்
புயலில் உஆனக்காணப்போவேன் புழுதியெழும் வயலிலுஜனக் காண வருவேன் விகளந்திருப்பாய் அயலிலுஜனக் காண அலைவேன் "அவளாணுய்,
68

9IIقے
வேலி போட்டுநான் கட்டிய தனிமன வென்வெலத்தது வெடிப்புகள் நேர்ந்தன

Page 43

குருவின் மொழி
என்றே ஒருபோ(து) எனக்குக்குருவாய் இருந்தான் ஒரு மனிதன் சென்ருன் பின்னர் ஒர்நாள் இரவில் சிறிதும் பறையாது கன்ருய் உள்ளம் துள்ளிக் குதித்தேன் கழன்றது விலங்கென்று இன்ருே மனதின் ஆழக் கிணற்றில் எழுந்தது பேர் ஏக்கம்
ஏக்கம் மெதுவாய்எேழுந்து கிளம்பி இறுக்கிக் கொள்கிறது விக்கம் கழன்றென் உடலோ வீழும் மனதில் பெருவீக்கம்! சாக்கள் பலதைக் கண்டேன் உடலோ தரியாப் பொருளென்ருர் ஈக்கள் போன்று நாமும் பொரித்தோம் மரித்து விடுவதற்கோ
*சாகா மருந்தைத் தருவேன்" - ஒர்நாள் சற்குரு எனக்குரைத்தான்! போமோய் நீயோர் பொய்யன்” என்று பொருமி மனத்துள்ளே பாகாய் இன்றே இனிக்கும் அதனேப் 'பாலில்" கரைத்தொழிந்தேன்
71

Page 44
ஓகோ அந்நாள் ஒடுங்கிக் கிடவா உடலே படு நன்ருய்
நன்றே உலகாம் இளமைப் போதில்; நலிவு தலையெடுக்கின் அந்தோ விடமாய் அதுவும் திரளும் அனைத்தும் பெரும் மாயம் கம்பே நீருள் கயிருய் நெளியும் காணும் நிலைக்கேற்ப, எங்கோ உண்மை இருக்காம்? "உன்னுள் இருக்கே”-குருமொழிந்தான்!
என்னுள் இருக்கும் உண்மை எடுக்க ஏணுே நீமுனைந்தாய்? தன்னுள் இருக்கும் மகவை ஈற்றில் தாயே ஈன்றளிப்பாள்! என்னுள் இருக்கும் தருக்கம் உரைக்க அவனை எடுத்தெறிந்தேன்! என்னை முடக்கி வயது நடத்த இன்ருே பொல்லெடுத்தேன்!
பொல்லா அறிவுப் புலமைச் சுவட்டில் போன எனக்கின்றே சொல்லா திருட்டில் மறைந்த குருவின் சுவட்டில் ஒளிபடரும்! *நல்லார் குறைந்திங்(கு) அல்லார் மலியின் நானே பலமுறையும் பல்லோர் உருவில் வருவேன்”-கீதைப் பொருளை உணர்கின்றேன்.
72

துளிகள்
பெய்யும் இதுமழையா? வானப் பெருமுட்டி கைதவறி வீழக் கவிழும் புனலாமோ? வீட்டின் முகட்டில் விழுந்த மழைத்துளிகள் ஒட்டைத் தகர்த்தியென் உச்சந் தலைசாட அண்ணுந்து பார்க்கின்றேன், அப்போது
வாய்க்குள்ளே தொப்பென்றே இன்னுேர்துளியின் விழுக்காடு அப்பப்பா தேவர் கடைந்த, அமுதைப்போய்ப் பொச்சடித்து பார்த்த புவியன் இருப்பானேல் அப்பேறெனக்கே அமிழ்தின் உரைசல்கள் நாவில் சிதறி யுடல் நாலா புறம்கிளைகள் தாவி யிழுக்கவென(து) ஆழ நரம்புகளை யாழில் நெருடுவது யாரப்பா? - முன்னேயோர் ஊழிக் கொழுந்தாயென் உள்ளக் கிழத்தியவள் ஆடத் தலைப்பட்டாள், அங்கே அவளிதழின் மேடையினில் பூத்த முறுவல் நடனங்கள், கோடையினுக் கேற்ற குரும்பைக் குலுக்கல்கள் வேட்கை யினுக்கென்னை வார்க்க எழுங்காம வெள்ளம் அவளே வளைத்து வயல்தழுவி பள்ளத்துள் பாய்ந்து பரவையுடன் கலக்க எங்கும் அமைதி, இனிய வொருவாழ்க்கை அங்கு மடியும், அமிழ்தின் முதலூற்று
78

Page 45
இன்ஞென்று பின்னர் எழுந்தே எனதறிவுக் கண்ணின் நரம்பைக் கடைய, படைபடையாய் எண்ணச் சிலந்தி இழுத்த வலைநடந்தேன்! காடு சுடுகாடு, கபாலங்களைக்கோத்தே ஆடு மொருத்தன் அழிந்த மனுச் சாம்பல் மேடு உலகை முறுக்கிப் பிழிந்தவரும் ஓடு சுரத்தே உறுத்த நடந்தோரும் கூடும் சமபூமி கூற்று விரித்துள்ள சாவின் மருமத் திரையைக் கிழித்தவரார்? வாழ்வில் சுகங்கள் மழைபோல் வழிந்தாலும் ஈற்றில் மனுத்தன் இயலாத் தனம்வெளிக்கக் கூற்றின் கரத்தில் குழையும் சிறுபூச்சி வேர்க்க உடலம் விழியைப் புரட்டுகிறேன் ஆர்த்து மடியும் அமிழ்தின் மறுவூற்று
எல்லாம் அடங்க எனது குதிகாலைச் சில்லிட்டே ஈரச்செம் மண்ணிலிருந்தேறும் பொல்லா உணர்வென் புலன்கள் முழுவதையும் தன்பா லிழுக்கத் தரள மணிபோன்று ஒன்றென் புறமுதுகில் ஊர அதுகிழித்த வெள்ளித் தெருவழியே வீரென்று நானேற எல்லாம் வெளிக்கும் இயமன் எனக்கங்கு இல்லாப் பொருளாய் இயங்கும் சிறுபூச்சி அப்பப்பா! பிறப்போர் அமிழ்தோ! அதனடியில் கொப்பளிக்கும் ஜீவ ஊற்றைக்குடைந்தோடிப் பற்றிப் பிடிக்கின் பிறவேன்! பெருமழையே பெய்க, துளிகள் புரள அவையிசைக்கும் ஒய்யென்ற ஓசை உலகை நிறைக்கட்டும்
74

தியானம்
பின்னேரம், வாழ்நாளின் பாதி அழிந்து புது
முன்னிரவைக் காணும் முகூர்த்தத்
தொடக்கங்கள் என்னிமைகள் மூடி இசைக்கும் கடலெதிரே குந்துகிறேன், உள்ளக் குதிப்பை அடக்குமொரு ஆவல் உடல்தினவின் ஆற்றல் முழுதையுமோர் கோவில் புகுத்தக் கொடும்போர்
தொடுக்கின்றேன்
இடக்குப்பல-கேள்விகள் என்றே
எனச் சுருக்கும் முடிச்சுக்கள், சும்மா முரட்டு வயதின் படிப்புக்கள் வித்திட்ட பச்சைச் சிசுத்தனங்கள் கூக்காட்டி என்னுள் குலுங்கி நகையெறிய வேர்க்கும் உடலம், இமைகள் வலிக்கிறது!
மெள்ள விழிதிறப்பேன், முன்னே கடற்பரப்பு, பள்ளத்துள் வெய்யோன் படுக்க அவன்விடுத்த கடைசிப் பெருமூச்சின் காற்றல் பெருவானம் தாக்குண் ண, ரத்தத் தழும்பாய் விழுப்புண்கள் ஊற்றுக்கண் எங்கோ உடைய இளங்கங்குல் ஆற்றெழுக்காய் மெல்ல அவிழ-வெளியுலகக் காற்று வெளியில் திரிந்த மனங்களைத்துச் சோர்ந்தே இமையின் சுவருள் பதுங்கிறது!
75

Page 46
மீண்டும் கபால முகட்டின் இருட்டுள்ளே தோன்றும் மெளனத் தொனியை நிலப்படுத்த ஆங்கு முயற்சி, அனைத்தும் விழலாகி ஈற்றில் மடிய இளைத்து விழிதிறப்பேன்!
முன்னே இருளின் முதிர்வு, திடீரென்று என்முன்னே யாரோ எடுத்த விளக்காகக் கூத்தன் புனைந்த கூணல் பிறையாளின் கீற்றுநகை, பின்னர் கிளர விருக்கின்ற கும்பப் பொலிவைக் குறிக்கும் இளவட்டம் பூநூலின் வெள்ளைப் பொருக்காய்த் தெரிகிறது

காலியின் வருகை
காலி யென்ருெரு காரிகை வந்தனள்
காளே யென்மனப் பீடம மர்ந்தனள்! வேளே யென்பதைக் கேட்டறியாதவள்
வெற்றுச் சூனியக் காட்டில் வதிந்தவள்! மாலை உலாத்தையில் எங்கிருந் தோர்குரல்
**மைத்துணு!” வெனக் கேட்டது, பார்க்கையில் *நாளே யென்று கடத்திய கிரிகைகள்
நடத்தும் இன்றெனத் தோள்களைப் பற்றினுள்.
தோளில் ஆடிய கைகளைப் பற்றவா?
தொட்ட போதுளம் பட்டது காந்தமா? ஆளி வள் பெரும் வேசியோ? ஆடவர்
அடியில் தேங்கிய ஆண்மையைக் கிளறிஞள் ஊழி, மூங்கில் உரசலில் தெறித்ததோ?
ஓடி யென்மனக் காட்டை யெரிக்கிருள்! நாளே நாணினி வாழ்வதும் பொய்த்தது
நாச காரியின் ஆளுகை மெய்த்ததோ!
எங்கை யெங்கோ இடுக்கில் பதுங்கியும்
எகிறி விழுந்தவள் அங்கு சிரிக்கிருள் சங்கரா, என் காதல, என்னைநீ
தள்ளி வாழவோ?’ என்கிருள், தள்ளிநீ எங்கு போகவோ? இத்தலம் அத்தலம் ஏழு சாகரம் பூதலம் பாதளம்
77

Page 47
அங்கு போகவா? ஆகுக, அங்கெலாம்
அனுங்கு கின்றவென் கிண்கிணிக் கால்களில்
வந்து சேருவன், உனக்கவை ஆசையாய்
வாங்கி விட்டவென் சின்னிலப் பொட்டல்கள்
பொட்டு வாழ்க்கையில் உன்னைப் புகுத்துவேன்
பூமியாவையும் உன்னில் விரிக்குவேன் சிட்டுப் போலவும் உன்னுள் சிறுத்துநான்
சின்னச் சொண்டினுல் கீச்சம் விளைக்குவேன் அட்ட திக்கையும் தாங்கிடும் சேடனின்
அண்ட மண்டலக் குண்டலி நானடா எட்டி யெங்கடா போகிருய் இன்னுமே?
என்று கூறியக் காலி இலங்குவாள்!
இலங்குகின்றவக் காலியைப் பார்க்கிறேன்
இதயம் நின்ருெருக் கால்துடிக் கின்றது பழங் கதைக்கரு என்மனம் ஏறுது
பார்த்து நிற்குமிப் பாவையை எங்கையோ கலந்த நாட்களில் கண்டனுன் அல்லவா?
கனவு போலெதோ நெஞ்சில் மிதக்குது குலைந்த வென்மனப் பொய்கையில் சட்டெனக்
காதல் ஒன்று ருதுப்பெற்றெழுகுது
கலந்த நாட்களே நினைவு படுத்தவா?*
காலி மெல்லக் கூறத் தொடங்குவாள்
இலந்தைக் காட்டில் எம்மூரிலே முன்னர்தாம்
இரண்டு பேருமாய்த் திரிந்ததைச் சொல்லவா 1
78

குழந்தைக் காலம் நீங்கிட என்னேநீர்
குமரிப் போதில் அணைத்ததும், உன்னேநான்
அளந்த தால்கருவுற்றதும், அதற்குளே
அழகுப் பாலணுய் நானே கிடந்ததும்,
பிேன்னர் என்னை விட்டுப் பிரிந்துநீர்
பிறவிடங்களில் உழைக்கத் திரிந்ததும், பொன்னை மண்ணைச் சேர்க்க அவற்றினுள்
புகுந்து நின்ருெளி கான்றதும், தோன்றிய கண்ணைக் குத்திய காரிகை பலரைநீர்
கவன்றபோ தங்கு துவன்றதும் நானல்லோ? இன்னும் என்ன? இனந்தெரிகின்றதா?
இல்லை யாயின் சொல்லுக” என்றனள்
சொல்ல வின்னும் இருக்குதோ? என்மனச்
சுருள விழ்ந்து சரித்திரம் புரளுதே நல்ல அன்னை தந்தையாய் அன்னவர்
நாவில் தேக்கிய பொய்யுமாய் மெய்யுமாய் கொல்லை பூத்த மல்லிகைக் கூட்டமாய்
குலவு மென்கவிச் சொல்லுமாய், யாவையின் எல்லை யாகவும் நடுவுமாய் நுனியுமாய்
இயங்குகின்றைநீ அறிகுவேன்” என்றனன்
*அறிய வின்னும் இருக்குதோய் ஒன்றுநீ!
அகிலம் யாவும் என்னில் கருக்கொளும்
முறையை ஒர்ந்ததாய் முகஸ்துதி பண்ணினுய்,
மோசம் போவனுே நானிதால்? காதல,
79

Page 48
எரியும் உன்னகக் கோவிலின் தீபமாய்
ஏற்றி யென்னேநீ போற்றிய வன்றுதான் விரியும் என்னகக் காதலே, அதுவரை
வேறு வாழ்க்கைதான்” என்றனள், போகிருள்
காலி போகிருள் காற்றெழ, கால்களில்
கலக லத்து மென் சிலம்புகள் ஆர்த்தன! நீல வார்குழற் கற்றைகள் இருட்டிலே
நெளிநெளித்ததால் நித்திலம் தெறித்தன! கோலி, நில்லொருக் கால்” எனக் கத்துமுன்
கண்ட மேறிவந் தென்னவோ திரண்டது வேலி போட்டுநான் கட்டிய தனிமனை
வெலவெ லத்தது, வெடிப்புகள் நேர்ந்தன!
8O

வழக்கு
(1)
நேற்றிருந்தவை இன்றிலை, ஆயினும்
நெஞ்சி லிட்டவை சென்றதும் கொஞ்சமோ ? ஈக்கொ டிந்தது போன்ற நிகழ்ச்சிகள்
எறும்ப சைந்தது போன்ற அருட்சிகள். தீத்து ணுக்கவை நெஞ்சக ஒரத்தில்
திரிபிளக்கிற பாறைகள் பாரத்தில் ஏற்றி யேற்றி யித்தனை பொதிகளே
எங்கி ழுக்கிறன் கொண்டுதான் போகவோ?
ஆற்றெழுக்கெனும் வாழ்க்கையில் வண்டல்கள்
அள்ளி யேற்றினன் கொள்ளிடம் எங்கவோ? பூக்க ஒனுக்களும் பொன்ணுெடுமணிகளும்
பொச்சு மட்டைகள் நச்சுகள் எச்சங்கள் சேற்ற முக்குகள் சேர்ந்தன இரண்டறத்,
திருப்பிடங்களும் முனைப்புகள் சுழிப்புகள் கூற்றெழுந்தபோல் அண்ணப்புகள் கூட்டுகள் குறுக்கே நின்றன, ஆயினும் ஒட்டமே !
ஒட்டு கின்றது வாழ்க்கையை ஒட்டமே!
உருவுகின்றவென் உணர்ச்சிகள் பிரக்ஞைகள்
ஒட்டு கின்றன தங்களைத் தாங்களே
உருளை போன்றவை சுழல்கையில் புதுப்புது
81

Page 49
நோக்க மேற்றன, நுண்பொருள் தேடின,
நுரைத்து நின்றவை கரைத்தன, எத்தனை கோட்டை பூந்திவை கொண்டனன், இலகுவில்
கொட்டி விட்டெதைக் கொள்ளவோ
நிற்கிறேன்?
(2)
* கொள்வதற்குன் காதலி இல்லையா !
குருதி யோடுலாச் செய்தவள் அல்லவோ? அள்ளு தற்குநீ ஆயிரம் கோடியாம்
ஆக்கி யேற்றிய திரவியம் எங்கயோ ? செல்வதற்குநீ சீமையில் வாங்கிய
செதிள் ஜொலிக்கிற வண்டிகள் எத்த ை? கொள்வதற்கு வீண் தயக்கமோ? இப்பெரும்
குவலயம் உனக் * கென்றதே என்மனம் !
குவலயம்எனக் காகலாம் ஆயினும்
'குத்த கைக்கொரு புற்றரை தா” வென அவள்க நுப்பி யிரந்திட ஈந்ததால்
அதுபெரும்வழக் காக முடிந்ததே! நவந வப்புது வாதுகள் காட்டினுள்
நாலு வேலியும் தனக்கென நாட்டிட முதுபழம்பெரும் உறுதியை எங்கயோ
மூல பூந்துடன் எடுத்துவந் துதநினுள்
ஈக்கொடிந்தது போன்ற நிகழ்ச்சிதான்
எறும்ப சைந்தது போன்ற அருட்சிதான் தீத்துணுக்கவை பட்டதும் பஞ்சிலே
திசையனைத்தையும் ஓடிக் கொழுத்துதே !
82

சாட்சியாளராய் கறுப்பிதன் உறுதியில்
சண்மு கத்தையும் சரவணப் பொடியையும்
போட்டி ருந்தனள், இனிவழக் காடலே
பாக்கி யென்றணுய் மன்றமும் ஏறினேன்
(8)
மன்ற மேறிநான் கண்டதும் என்னவோ ?
மாய மாயவள் வீசிய ஒலையை *அங்கு நோக்கிய நீதியின் காவலர்
அனுசரித்தனர்” விளக்கமும் தந்தனர் *இங்கு பார், இவள் உறுதியோ தலைமுறை
எண்ணி றந்ததைக் கண்டதே, உங்களின் தந்தை தாயரின் சந்ததி தோன்றுமுன் -
சாட்சியாளரும் அன்னதே செப்பினர் -
*அடிமை யாகிய கறுப்பியின் ஆதிகள்
ஆண்டி ருந்ததைக் காட்டுதிவ்வுறுதியே! கடுமை தாங்கிய ஆண்டியின் பரம்பரை, கபட மேந்திய நீலவன் சந்ததி, நடன மாதிவள் கறுப்பியின் வழிகளே!
நாங்கள் தோன்று முன் இந்நிலம் கொத்தியே விடிவு காட்டியோர், வளர்கலை யாத்தவர்
வந்து, நாம் இதை எங்ங்ணம் மறுப்பதோ?
*உன்னிடத்துள உறுதியை ஏற்கிலோம் ! உண்மை போன்றவோர் பொய்நகல்,
யாரவோ
88

Page 50
வன்கணத்தவர் மாற்றியில் வாறுனை
வலயில் வீழ்த்தினர், உன்னறி வோய்ந்ததால்
என்ன கத்ததே இப்பெரும் நில” மென
இறக்கை கட்டினுய் பறக்கவே ! உணர்கவிப்
பெண்ண கத்ததே இப்பெரும், நிலமெலாம்,
பிசகோ உன்னது” என்றவர் தீர்த்தனர்!
(4)
வழக்கொ ழிந்தது, காலங்கள் காலமாய்
வாழ்ந்திருந்தவென் பெறுமதி எங்கயோ ? அழக்கி டக்கிற கவலையா ? அல்ல, நெஞ் (சு)
அடியில் ஊறியோர் அமைதிமெல் லெழுகுதே முழுப்பரப்பையும் கெளவுதே, ஆனந்தம்
முகிழ்த்து நிற்குதே! அப்பொழு தென்முனே கிழக்கெழுந்த ஞாயிற்றின் சிரிப்பொடு
கறுட்பி நிற்கிருள், நானவள் ஆகிறேன்!
S4

Ursúñb
பார்த்துக் கிடக்கின்றேன் பாலமிதன்
மேலிருந்தே காத்துக் கிடக்கின்றேன் காலமெல்லாம்
நெஞ்சழிந்தே நேற்றின்ரு? இல்லை, நினைவெழுந்த நாளிருந்து பார்த்துக் கிடக்கின்றேன் பாலமிதன்
மேலிருந்தே
என்றே அவள் வருவாள், என்று வருவாளோ?
அன்றுமுதல் என்ன அரிக்கும் ஒரு கேள்வி நின்றும் இருந்தும் நிலாவில் குளித்திருந்தும் *கங்குல் தவமியற்றிக் காலம் இடம் என்ற
வண்டி தவறவிட்டு வாழ்க்கை துறந்திருந்தும் உண்டு களியாது உயிரை வெறுத்திருந்தும் எங்கும் நகராதிப் பாலத்தில் மேலிருந்தும் அன்றுமுதல் என்னை அரிக்கும் ஒருகேள்வி
என்றே அவள் வருவாள், என்று வருவாளோ? இன்று வருவாளா? இல்லை, இரவில்தான் நின்று வருவாளோ? நிஜமாய் வருவாளா? அன்றி, பகல்ல்தான் ஆறி வருவாளோ?
85

Page 51
என்ருே அவள் வருவாள், என்று வருவாளோ? சென்று கதிர் மாளும், சிரித்து நிலாக் குதிரும் கங்குல் இடம்மாறும், காலை விழிமலர்த்தும் திங்கள் பலவந்து சிரசு மறைத்தேகும்
ஆஞல் அவள்சுவடு அங்கு மிதித்தறியாள்! வேனில் வரும், மாரி விளாசும் மரங்களை நிர் வாணம் புரியுமொரு காலம்வரும், கோடைக் கானல் எழும்ஆயின் காணேன் அவள்வரவை
என்றே அவள் வருவாள், என்று வருவாளோ அன்றே ஒருகாலம், ஆமப்பா இப்பாலம் இங்கே இடமுன்னர் இருந்த நிலைவேறு எங்கும் ஒளிர, இசையாய் அசைகின்ற
இந்த நதி, கவிதை என்ன அதில்திரியும் அந்தப் படகு அடியேன். அவள் வரவு, தங்கமணல், மூங்கிற் தழைகள். அடடாவோ எங்கோ பழசில் இதயம் பறக்கிறதே!
2
ஏழுமணி காலை என்ருல் எனக்கினிய வேளையது, முன்னர்; வருவேன் விடியுமொரு நாளுந்தவருதிந் நதிக்கே குளிக்கவென தோளிலொரு துண்டு, துரித நடைவேறு
வந்து கரையமர்ந்து வாயுள் கரிபோட்டுத் தந்தம் துலக்கின்ற சாட்டில் சிறுபொழுதைச்
86

சிந்த, எதிர்க்கரையில் தெரிவாள் எனதுயிரை கொந்தவென வந்த குமரி அவள்பயிலும்
கல்லூரி இந்தக் கரையில், அந்தற்காயோர் வள்ளம், அதனை வலிப்போன், அவன்தயவில் பிள்ளைமுதல் இன்னும் பெரியோர் வரை மனித வெள்ளம் நதிக்கரையில் வந்தே அலைமோத
ஓட்டம் நடையுமாய் ஓடம் சுழன்றுவர ஆற்றில் குளிக்குமிளம் ஆண்கள் பலருக்கோ வேட்டை படகில் வருகும் அழகியர்க்குச் சேட்டை அவர்விழியால் செய்ய, அவரோடு
நானுமோர் ஆளாய் நதியில் பிறந்துவிட்ட மீனுய் உருவெடுத்தென் மேன்மைக் கெதிர்ப்
பளித்த கோணல் இளைஞர்களின் கொட்டம் அடக்கி
யந்த மானின் முகம் நோக்க, முறுவல் பரிசாக,
பள்ளத்தை நோக்கிப் பாய்ந்த அருவியென உள்ளங்கள் சேர, ஒராயிரமினிய வள்ளங்கள் நெஞ்ச வாவி யினுட்பாய, கள்ளங் கபடற்ற காதல் ருதுவாக,
கங்கை மகிழ, அதைக் கண்டு கரையிலுள முங்கிற் குலம் தம்முள் மூரல் புரிய நறுந் தங்கமலர் சுரும்பைத் தழுவ, மகரந்தம் எங்கும் புரள எனக்கோ வெறியாட்டம்
87

Page 52
ஆற்றுப் புனலில் அவளின் அழகுபுது ஊற்று விழிகள் உடைத்துப் பிரவகிக்க வீற்றுத் தனியே இருந்து முழுவதையும் ஏற்று மனதில் எழுதி உருக்கொடுத்துப்
பாடம் புரிந்தாலும் பாயும் அருவியென தேடும் பரம்பொருளின் தேனுர் வினைகளென ஒடம்விடும் அவளின் ஓயா அழகுநிதம் போடும் புதுக்கோலம், பூவின் மணஞ்சுமந்து
வாடையென ஒர்நாள் வருவாள், பிறகெரியும் கோடையெனக் காட்சி கொடுப்பாள், குலுக்கு
Iങ്ങ ஒடையென பின்னுல் உருவம் பொலியமணிப் பேடையெனச் சாந்தப் பெருக்குள் கொலு
விருப்பாள்
போன நறுங்காலம் புரிந்த செயலனத்தும் “நானே” எனக்கோத்து நடப்பாள், நிகழ்ந்து
வரும் சோனை நிகழ்ச்சித் தொகுப்பும் இனிக்குமையும் மோன எதிர்கால முடிச்சும் அவளாவாள்!
வெய்யில் அவள், மழையின் வீழ்ச்சி அவள்
இயற்கை நெய்யும் பனியாடை நேர்த்தியவள், சிரித்துப் பையவரும் மாலைப் பாவையவள் இரவின் மையும் அதையறுக்கும் மதியும்ஒளியும் அவள்
88

3
எல்லாம் அவளாய் இயங்க எனதுமணம் கல்லாய் அடிபட்ட காயாய் தெறித்தோடிச் சொல்லா தவளடியில் சுருள பெருக்கெடுத்துப் பொல்லாத காதல் புரள-புதுவாழ்க்கை
ஆணுல் இளங்காதல் அருவி ஒழுக்காக நாளும் இதமாய் நடத்தல் அரிதன்றே மேலே மலையில் மழையோ பொழிந்து
vwv விட்டால் கீழே நடந்த அருவி கிறுக்குற்று ஏதிம் மனிதருக்கு என்றன் பெருக்கைவெலும் காதற் பெருக்குண்டோ? கர்வம் விடும், பாரும் ஈதோ எனதுகை இருப்பை எனுமாப்போல் மோதியெறிந்தலைகள் முட்டித் தரையுடைத்துப் பாயும் பெருக்கெடுத்து பாவம், அருகிருந்த வேயின் துணைகொண்டு வேய்ந்த சிறுகுடிசைச் சேய்கள் பரதவிக்கச் சேனையெனச் சீறும்! நாயும் நிதம்நீரில் நாறும் எருமைகளும் அள்ளுண்டு செல்ல அழகு மதயானைப் பிள்ளைகளும் கூடப் பின்னுல் பெயர்ந்தோட தள்ளுண்டு மரங்கள் சாய, அவைக்கிடையே வள்ளங்கள் மூழ்கி வருவோர் களமிட்க,
ஒலங்கள் கேட்க உடமை இழந்தவர்தம் மேலங்கி யோடு மேட்டுத் திசையேக
ஆலங் கணியாக அந்த மழை வீழ்ந்து நாலைந்து நாளாய் நின்று சதிராட
89

Page 53
பாதைபல மூழ்க பயணம் செயலிழக்க வீதிவெளிக்க நகர் நீரால் சிறையிருக்க ஒதும் திருக்கல்வி உறையும் தலமனைத்தும் சேதமுற எனது செல்வி முதல்எல்லாப்
பாலர்களும் வீட்டில் பதுங்க எனக்கிந்நாள் ஆலவிடம் அந்த ஆற்றில் குளிப்பேது? நீல விழியாள்முன் நீந்த வழியேது? மூலக் கொதுங்கியொரு முக்காலி மேலிருந்தால்
காலம் இடம் என்ற கட்டுக்கள் பட்டனவே நூலறுந்து போஞற்போல் நுழையும் திடீரென்றேர் நீல விரிப்பு, நிமலப் பெருவளியாம்! ஓலைக் குருத்தாக அங்கோர் சுடர்க்கீற்று
மேலெழுந்து அண்டம் முழுதும் பரவியெழ, ஆலைக் கருவியென அங்கங்கள் மின்னேறிக் கோலக் கதிர் பாய்ச்சக் கூத்துக் கவள்வருவாள்! சேலைத் தலைப்பலைய சிலம்போ அலம்பிவிழ
தாளங்கள் கேட்கத் தடக்கை எடுத்துலகம் கோளங்கள் மீது கொட்டி நகைக்க வுயிர் நாளங்கள் ஒடி நடுங்கக் கொடியகடி வாளந் துறந்துமணம் வைய நினைவழிந்து
தேகம் கழன்றதென தென்றலென நீந்தி மேக வனம்புகுந்து மின்னல் சரங்கோத்தப் பாகை அடையபிர பஞ்ச முடிச்சவிழ போகங்கள் நேர புணர்ச்சி வெளியிலிரு
90

ஆகங்கள் சேர்ந்தங் கனலைப் பிரசவிக்க யாகங்கள் ஆக யமனும் பிரமனுந்தம் பாகம் முடிந்ததெனப் பணிந்து தலைசாய்க்க நாகங்க ளாகி நாங்கள் நடைபயில
ஊழித்தீ பின்னர் உலகில் திரிந்தலைய ஆழி யொரு பக்கம் ஆர்த்திச் சிரிக்கவொரு நாழிக்குள் இந்த ஞாலம் பொடியாகி விழ, அதிலிருந்து விம்மும் சிறுதுகள் போய்க்
காடொன்று செய்யக் கங்கை அதனுரடே கோடொன்று கீறிக் குதிக்க அவளுடன்நான் வேடன்போல் வெற்று மேனியுடன் திரிய பாடம் பழசே, பதிப்போ மிகப்புதிசு இப்படியாக எனது இளங்காதல் குப்புறவும் மல்லாந்தும் குறுக்கே வருந்தடையால் எத்துண்டும் தத்துண்டும் இடறிக் கடைசியிலக் கற்பனையே தஞ்சமெனக் காலூன்றி மேலெழுந்து
காற்று வெளியில் ககன மதிக்கீற்றின்
ஊற்றில் தவமியற்றி உள்ளத்தை ஆற்றுவதாய் வீற்றிருக்க நாட்களோ வீணே அழுகிவிழுந்(து) ஆற்றுப் பெருக்காக அள்ளுண்டு செல்கிறது.
4
எனக்கோ மனக்கவலை, இன்னும் நமக்கிடையே சுனைப்பே யிலா வெற்றுத் தொடர்பு செயல்படவா? வினைக்கே இடமில்லா வாழ்க்கை எதற்காமோ? மனத்தே இதைக்களைய மூழும் பலநினைவு
91

Page 54
தயன வெறும்பாஷை நாளும் நடத்துவதா? அயனப் புறங்காணும் ஆக்கச் செயலறிய மயனின் கலைக்கோட்டை மாட்சி இவையளிக்கும் பயனை உணரவிழிப் பார்வை வெளிகடந்து
உறவு எனும்பசிய ஊற்றை இனியடைவேன் முறுவலுடன் இளமை மூட்டும் தணலவிக்க நறவு அவள் தருவாள், ஞாலம் கொடியதெனும் சிறுமையற வாழ்க்கைத் திறப்பு விழாப்புரிவாள்
என்று பலவெண்ணி ஏங்கி அவளருகே சென்று மொழியாடுந் தீரா வெறியோடு அன்று பசுங்காலை ஆற்றுக் கரையடைந்தேன்! குன்றில் மழைநேற்றுக் கொட்டி யிருந்ததினுல்
ஆறு குளுவுற்ற ஆண்மா டெனவன்று வீறு வரப் பெற்று வீங்கிச் சுழித்தோடும் தூர எதிர்க்கரையில் தூக்கி மனுச்சுமையை ஈரப் புதுநீரில் ஏறி வரும்படகு
ஆமாம், எனக்கினிய அவளும் வருகின்ருள் ஓமக் கொழுந்தோவென் ஊனுக் குயிரேற்ற சாமப் பொழுதீன்று சமைத்து வழியனுப்பும் காமக் குருத்தோவிக் கன்னி யெனவியந்து
அயலே மறந்தெனது ஆகம் நெருப்புண்ண புயலுக் கெதிர்ப்பட்ட பூண்டாய் புதுவெள்ள வயலை உழுதுவரும் வாத்துப் படகினிலே துயிலும் அவளுருவே தோன்ற விழிய &ணவேன்!
92

படகு கரைசேரப் பத்தே கஜமிருக்கும்! இடையில் அதுவென்ன! ஏது, படகோட்டி அடையத் துடுப்பொன்றை ஆற்றில் தவறினணு? மடையன், படுசுழியில் மாட்டித் தவிக்கிறதே!
வந்த படகீர்க்கும் வாரிக் கிழுவுண்ண நின்ற சில பெண்கள் நெஞ்சில் கிலியேறி உந்த ஒருபுறமாய் ஓடிச் சிலபாலர் முந்தி மறுதிசையில் முடக்கப் படகந்தோ
பேரோசை ஒன்று பிறக்கத் தலைகுற்றி நீருக்குள் மூழ்கும் நின்ற மனுக்குழுவோ வாருண்டு நாலா புறமும் விழஉதவி கோரும் இழவோசை காதைக் குடைய, இடி
ஏறுண்ட நாகம் என்ன இருநிமிடம் ஆறுண்ணும் அந்த அவலச் செயலிலுளம் ஊறுண்ண நின்றேன் உலக்கை இதற்கிடையில் வீரென்று எந்தன் வலத்தே இருந்துபலர்
பாய்கின்றர் மூழ்கும் படகின் உதவிக்கு போய்நின்ற எண்ணம் புதுக்கவரச் சிலையின் வாய்விண்டு பாயும் வாளியென நானும் பாய்கின்றேன் அவர்கள் பின்னுல் மறுகணமே
பாய்ந்தவுடன் எனது பார்வைக் கெதிர்ப்பட்ட ஓய்ந்த கிழமொன்றுக் குதவி மறுவீச்சில் மூன்று தரம் மூழ்கி மூன்ரும் முறைமேலே தோன்றும் ஒருவரையும் தூக்கி வருகின்றேன்!
98

Page 55
ஐயோவென் ருரோ அமிழ்ந்தே எழும்போது செய்தகுரல் என்றன் செவியைக் குடைய வுடன் எய்த கணையாகி ஏகி அவரையுமென் கைக்குள் எளிதாகக் காலி வருகின்றேன்!
புரண்ட படகினையே புல்லிப் பிடித்தவராய் உருண்ட சிலரின் உயிரும் எமைப் போன்ற திரண்ட இளந்தோள்கள் செயலால் கரைசேரும் இரண்டு கரங்கொண் டியங்கும் படகோநாம்?
உடுத்த துகில்முனையே ஒடப் புனையென்று பிடித்த படிமாளும் பெண்கள் அவர்களேயே கிடைத்த துணையென்று கெளவும் சிறுபாலர் கொடுக்கை வரிந்தவனுய்க் கூற்றின் நிழலாட்டம்
நீந்த முடிந்தவர்கள் நீந்த இயலாதோர் ஏந்தல் எனும்நம் இளேஞர் கருணையினுல் மீண்டு கரையடைய மீதித் திரள்யமனின் தூண்டிற் கிரையாய்த் துடித்துத் துடித்தாழும்!
இதற்குள் முதலைகளாய் எங்கும் சிறுபடகு மிதக்கத் தொடங்கிமனு மீட்கும் பணிசெய்யும் ! அதைத்த முகத்தோடு அங்கே நதிக்கரையில் உதைக்கும் ஜனவெள்ளம் ! ஒதுக்குப்புறமாய் நான்
ஒய்ந்து கரையேறி உட்காரப் போகையிற்றன் தீய்ந்து விழவுயிரென் செல்வி நினைவுவரும் ! பாய்ந்த நதியோடப் பாவை நெடும் பயணம் தாங்கி நடந்தாளா? தலேயே சுழல்கிறது !
94

கண்கள் நதியாகக் காதல் மனம்பொசுங்க எண்ணம் மறுந்தேயங்கேதோ நினைந்தவனுய் அண்மையிருந் தோரை அலச, அட எனயே உண்ணும் விழியோடு . ஒமோம் அவளேதான் !
என்ன! அவள்தோணி ஏறி வரக்கண்ட உண்மை வெறும் பிரமை ? ஒயா தெனதுமனக் கண்ணில் அவள் நின்ற காட்சி பிரசவித்த பொய்மை அது 1 ஆமாம் புரிந்தேன், புரியவில்லை !
5
தோணிப் புரள்வால் தொலைந்தோர் அதிகமென ஆணி அறைந்தாற்போல் அங்கே எழும்செய்திஊனில் சரம்பாய உற்றர் பலர்துயரக் கேணி விழுந்தாங்கு கேவி அழுகின்ருர் 1
ஆற்றைச் சிலர்பழிப்பார், அந்த மரப்படகுப் போக்கைச் சிலர் எள்ளிப் பேச வெளிக்கிடுவார் ஏற்றம் மிகவுள்ள இன்றும் இதைக்கட்டிக் காத்தல் பெரும் வெட்கக் கேடு எனப்பறைவார் ! ஆற்றில் பிழையில்லை அந்த மரப்படகில் போக்கும் பிழையில்லை பிழைகள் நமதாமே ! நாற்றம் மதம்புகுந்தால் தாங்கள் அதைப்புரிந்த போக்கின் விளைவன்றி பிழைகள் அத ற்கேது? என்று சிலர்கூடி எடுத்தே அறிவுரைகள் அங்கு மொழிந்தாலும் ஆரோ அதைக்கேட்பா ? ஒன்று திரண்டன்ன உறுதி எடுத்தீற்றில் கங்கைக் கொருபாலம் கட்ட முடிவெடுத்தார் !
95

Page 56
6
plo Gallus மூளத்தொடங்கிறது கொடிய இரும்பினங்கள் குவிய நதிக்கரையில் இடிகள் எழுகிறது, எங்கும் கணகணப்பு நெடிய பெருந்தூண்கள் நிலத்தைக் குடையவல
பொறிகள் உதவியினுல் பூட்டப் படுகிறது அறிவின் சிதறலென ஆற்றின் இருகரையும் உறுமும் பிறபொறிகள் ஓடி அதையியக்கித் திரியும் பலவினைஞர் தேசம் அதுவேறு
கரையில் நதிப்பெண்ணின் கன்னம் தடவிய வேய் நிரைகள் த8லகொய்து நீக்கப் படுகிறது தரையில் வெளிப்பேறத் தாவி நிலத்தோடு அரையும் சிறுவுயிர்கள் அகன்று நடக்கிறது!
குருவி யினம்கால கூவும் மொழிய வித்து இருமல் எழும் செருமல் ஈழை இவைகேட்கும் பொருமல் வரும் " அப்பொறியின் இயக்கங்கள் அருவியினுக்கிருந்த ஆற்றல் குறைகிறதா? பாலம் எழுகிற (து) அப்படகும் அதுவரையும் மேலும் சிலநாள் மிதக்க அவளதிலே நாளும் வருகை புரிந்து பழங்கதையை மேலும் தொடர முயலும் அறிகுறிகள் !
96

ஆணுல் எனக்கிப்போ(து) ஐயம் அவளின்மேல்! கனல் படகாற்றில் கவிழ்ந்த முதலாக ஏணுே எனக்கவளை ஏற்கும் மனமில்லை ! ஆனபொருளாயென் அகத்தில் கொலுவிருந்த
மங்கை இவள்தானு ? அன்றி வெறும் பிரமை? அங்க நெளிவில் அசைவில் குறைவில்லை ! முன்புபோல் காதல் முறுவல் சொரிகின்ருள் ! எங்கயோ என்னை இழுக்க முயல்கின்ருள் !
வெள்ளைச் சிரிப்பு. விதம்விதமாய்த் தோற்றங்கள், கள்&ளச் சுமக்கின்ற கண்மலர்கள், காமத்தை கொள்வனவு முன்போலச் செய்யும் பழங்குமரி ! வள்ளத்தில் தான் நிதமும் வந்து திரிகின்ருள் ஆணுல் அவளை அணுகேன், அவள் வருகும் தோணி வழியினையும் நோக்கேன், துருதுருத்துக் காலப் பெருமுதிர்வைக் காட்டி யெழுகின்ற பாலத் திறப்புக்காய் பார்த்துக் கிடக்கின்றேன்
பாலத்தால் தானென்றன் பாவை யினிவருவாள் + கால எழில்முழுதும் தன்னுள் கருத்தரிக்கப் பாலத்தால் ஓடிவரும் பாவை வரவுக்காய் நாளெண்ணிக் காத்திருக்க, அன்றேர் கனவுவரும் !
7
பறை முழங்குது பாலத்தின் வாயிலில் 1 கொலை நெடியெழும் கூத்தினை யாரவோ கடைக் குலத்தவர் கத்தியே ஆடினுர் 1
97

Page 57
நில கலங்கியவ் வேளையில் ஒர்குரல் நீதியோ வெனக் கோருது, யாரது ?
அட பாரடா அங்கென தன்பளை படு பாவிகள் பலியிட வைத்தனர் 1
மட ஜனங்களோ நின்று மகிழ்ந்தனர் 1 விடு என்னேயில் வேளையில் என்றுநான் விரைய முன்பொரு வீணன் நெருங்கினன் கொடு வாளினை ஓங்கி உயர்த்தினன் தலை விழுந்தது பாலம் திறந்தது!
பால மெங்குமென் பாவையின் ரத்தமே ! ஒடுகின்றது ! உருத்திர வேள்வியோ? அங்க மங்கமாய் அறுத்தவள் மேனியை தொங்க விட்டனர், தொடக்கினர் கூத்துகள் விண்ணெழுந்தனர் மண்பு தைந்தனர் விறு விறுத்தனர் பதை பதைத்தனர் 1
பால மெங்குமென் பாவையே தொங்கினுள் ! பால முற்றுமென் பாவையே ஆகினுள் !
பால மேயென் பாவையே ஆனது
கொலை நெடியெழும் கூத்தினை யாரவோ கடைக் குலத்தவர் கத்தியே ஆடினர்.
98

8
காலப் பொழுதில் கண்ட கொடுங்கனவு வேலைசெய நெஞ்சுள் விம்மும் துயரோடு பாலம் அடைந்தேன், கனவு பலித்திடுமா ? மூலை யொதுக்கில் முதுகு சரிந்ததுவாய்
படகு கரையேறிப் பாட்டில் கிடக்கிறது ! அடடோ அதனுட்சி அன்றே டொழிந்தாச்சு நெடிதாய் அருகெழுந்து நிற்கும் கரும்பாலம் முடியே புனைந்து முறுவல் புரிகிறது !
காலப் பெருமுதிர்வை காட்டி யெழுந்துள்ள பாலத்தின் நல்லெழுச்சி கண்டு உளம்பெருத்தேன்! வாலக் குமரியென் வாஞ்சைக் கிலக்காளுள் நாளும் இதனுல் வருவாள் இனியென்று
பார்க்கத் தொடங்குகிறேன் பாலமிதன்
மேலிருந்தே ! காக்கத் தொடங்குகிறேன் காலமெலாம்
நெஞ்சழிந்தே ! நேற்றின்ரு ? இந்த நினைவெழுந்த நாளிருந்தே பார்க்கத் தொடங்குகிறேன் பாலமிதன் மேலிருந்தே
ஆளுல் அவள் சுவடு அங்கு பதித்தறியாள் வேனில் வரும் மாரி விளாசும் மரங்களை நிர் வாணம் புரியுமொரு காலம் வரும் கோடைக் கானல் எழும் ஆயின் காணேன் அவள் வரவை !
99

Page 58
காலம் இடங்கள் உ றவைப் பிளந்தாலும் ursuth 96T606 பிஜணக்கும் ெ பாருளென்ருர் ஆனல் அவளோ இன்னும் வரக்காணேன் 1 பாலம் உறவைப் பிளந்த பொருளாச்சு
காலம் விரைகிறது கங்குல் வருகிறது நீல நதியின் தெளிவில் எழுமலையின் ஒலம் மெதுவாய் ஒலித்து நடக்கிறது
ாலமே உலகாய்ப் பருத்துக் கிடக்கிறது
அர்ப்பணம்
அஆலவழி ஆவியாக
அவள்முகம் கண்டேன், நெஞ்சில் அலையெழக் Свети, шта,
அங்கேயே நின்றேன், பின்னர் அஆலயலை யென்று பின்னுல் அஜலந்தனன் அந்தே என(து)இன் 6Oabucu960sf எங்குசேர்ப்பேன் அவளுக்கே அப்பணித்தேன்.
1OO

புதியவை
நல்லார் குறைந்திங்(கு) அல்லார் மலியின் நானே பலமுறையும் பல்லோர் உருவில் வருவேன்.

Page 59

மின்னல்
யன்னல் இடுக்கிடையே மின்னல் தெறிக்கிறது! பருக விழிவாயின் கதவு திறபடுமுன் நழுவும் அணில் வாலா? அரவின் எயிற்றிடையே நெரியும் தவளையின்கால் கிண்ணி நடுக்கமென. இல்லை, அச்சத்துக் கழகெங்கே? சாவுக்கு ஒளியேது?
وقتیکہ
சாவின் நிழலல்ல நினைவிற்குள் நிற்காது நெஞ்செல்லாம் தாணுகி உருவில்லா மன்மதனுய் ஒளிந்தும் தெரிந்தும் கஞ்சத்தனம் தன்னக் காட்டப் புரிவதனுல் தன்பால் எமையிழுக்கும் இன்பப் புதுக்கவியா? மின்னல் கவிதையா? அல்ல
1O3

Page 60
கவிதைக்குள் சிக்காது கவிநெஞ்சு புரிகின்ற காலத்தின் நேரத்தின் கட்டுக்கு மேலாக நிற்கும் ஒரு துடிப்பின் நிழலாய், வானப் பெருநீரில் வெட்டும் நீர்க் கோடு
1 O4

அம்மணம்
ஆடையைக் கழற்றித் தலையிலே சுற்றி அம்மணமாய் அவன் தெருவிலே நடந்தான் கூக்குரல் தந்தனர் தெருவிலே நின்றவர் கொக்கரிப்போடு கல்லுகள் பறந்தன! கவலை யின்றியோர் நிலையிலே சென்றன் கல்லெறி சொல்லெறி தொடர்ந்து நடந்தது பெண்களும் ஒரக் கண்களால் பார்த்தபின் போலியாய் நாண வேலியைப் போட்டனர்
வெட்கமே யிவனுக் கில்லையோ காமப் பித்தணுே வென்ருெரு கிழமும் வியந்தது வியப்பவன் முகத்திலும் தொத்தியதா? வான் வீதியிலே விழி பாய்ந்திட நின்றன், பெயர்த்துப்பின்விழியை நிலத்திலும் மரத்திலும் நீண்ட நான்கு திசையிலும் எய்தான்.
இயற்கை யெல்லாம் என் இனத்தவரே பின் ஏனிந்த வம்புகள்?’ போலவன் சென்ருன்
எங்கிருந்தோ நகர்க் காவலர் வந்தனர் அங்கவன் செயலில் சங்கட முற்றனர். ஆடையைப் புனைய பணித்தனர் மறுக்க, அவ்வளவுதான் விழி கொவ்வையாய் மாற வைதனர் அம்மண வார்த்தையில், கோலால் செய்தனர் வதைகள், தெய்வ நெஞ்சினுன் அப்படியே நிலை கெட்டிட மயங்கி அம்மணமாய் வெறும் மண்ணிலே வீழ்ந்தான்
1 O5

Page 61
புள்ளி
புள்ளியது, வெற்றுப் புள்ளியது தள்ளியதை வைத்தால் தலையா முழுகிவிடும் தனித்தே இயங்கும் உரம் இல்லையதற் கிங்கே, இருந்தாலும் புள்ளியுடன் ஒன்றைப் போடு
1 O
பத்துப் பேர் வந்தார்கள் பாரில் கிடந்தவர்கள் கற்றவைகள் பெற்றவைகள். காற்றில் பறந்தார்கள்,
கடலில் மிதந்தார்கள், சேற்றைக் குடைந்தார்கள்
ஈற்றில்?
தமையீன்ற
புள்ளிக்கே கொள்ளிவைத்து பூவென்று ஊதி விட்டார் பிறந்த கருஞ்சாம்பல்
இருட்டைக் கவிக்கிறது
இவர்கள் திரிகிழித்து விளக்கிற்காய் வேறு திசையில் அலகின்ருர்
O6

உழைப்பில் உறிஞ்சல்
தோளில் சிதறும் வேர்வைத் துளிகள்= உழைப்பு நசுக்கும்
உதிரப் பேச்சு மேலில் புரளும் ஊளைச் சதைகள். உழைப்பை உறிஞ்சும் கொழுப்பின் பேச்சு
O7

Page 62
எனக்குள் இருக்கும் நான்
எனக்குள் இருக்கும் நான் எதையோ எட்டிப் பார்க்கும் உணர்ச்சிக் கடங்கா உணர்ச்சி உள்ளும் புறமும் வழிய எனக்குள் இருக்கும் நான் எதையோ எட்டிப் பார்க்கும்
நேரம் என்ன இருக்கும்? நிசியா? அந்திக் கசிவா? கனத்த இருட்டென் அறையுள் காற்ருல் நெரித்த விளக்கின் குமைச்சல் நாற்றம், பதுங்கிக் குந்தி யிருக்கும் புலியின் மூச்சின் வீச்சு இருந்தும் எனக்குள் இருக்கும் நான் எதையோ எட்டிப் பார்க்கும்.
விரட்ட இருளை, வெளியே உருட்டும் காற்றை அழைக்க முளைத்த ஜன்னல் கதவின் மூடா அரைக்கண் வழியே புடைத்து நிற்கும் கரிய சடைத்த இரவுத் தோப்பில்
108

கொழுத்தி வைத்தாற்போல பழுத்த ரத்தச் சிவப்பு பொறித்த தெருவின் விளக்கா? பூத்த நிலவா? நெஞ்சைக் கொறிக்கும் ஒருத்தி முகமா? குதிரும் உள்ளக் கனியா குருத்து நரம்பை ஓயா(து) அறுக்கும் மாயக் காட்சி உணர்ச்சிக் கடங்கா உணர்ச்சி உள்ளும் புறமும் வழிய.
குதித்துப் போயங்கத&ன குடையக் கிடைத்தால் இன்பம் மடைபோல் திறக்கு மாமோ? பறந்தே எழுந்தங் கதனைப் பற்றிப்பினையத் தின்ன இறக்கை எங்கே எங்கே? இழிந்த மனிதப் பிறப்பு இன்றே இந்தக் கூட்டைத் துறந்து காற்ருய்த் தூசாய் சுகித்த சிகரெட் புகையாய் பொறியாய் ஆவிப் பொருளாய் எழுந்து மேலே மேலே srfluth f8;orá, Gsm 8ir அளேந்து தழுவ அவைக்கும் அப்பால் அப்பால் தப்பி ஒளிந்து நிற்கும் என்னை எனையா? உனயா? எதையோ
1 O9

Page 63
ஓடிப்.புணர..பின்னர் விழுந்து மழையின் துளியாய் வீறுற்றெழுந்து பாயும் மடந்தை ஆற்றில் மிதந்து அடைந்து கடலை அதனின் ஆழங் கண்டே இன்னும் வேழம் போலக் கீழே கீழே கீழே விரைந்து விழுங்க எதையோ. ஆமாம் விழுங்க எதையோ.. go-60örfd}éflék st-silssr o_60OrféFðR உள்ளும் புறமும் வழிய எனக்குள் இருக்கும் நான் எதையோ எட்டிப் பார்க்கும்
11 Ο

குருவி
வான வெளியில் விரிப்பு
குருவி குந்தியிருக்கும் கொம்பில்
குரிசு
பின்னேரம், கட்டிடங்கள் மேலாக கழுத்தை மிக நீட்டி தெரியும் ஒரு குரிசு
11

Page 64
குழி
வெட்டிக் குழிபறித்தார், விபத்தில் உயிர்துறந்த குட்டிநாய் அங்கு குடிபோயிற்று
சின்னுளில் அவ்விடத்தே
வெட்டிக் குழிபறித்தார், இனிய கனிவாழைக் குட்டிபோய் அங்கு குருத்துவிடும்
112


Page 65