கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: லங்கா ராணி

Page 1


Page 2

லங்கா ராணி
அருளர்
கிடைக்குமிடம்
89, கோவில் வீதி
நல்லூர் யாழ்ப்பானம்.

Page 3
Cዎቇቇ பதிப்பு - டிசம்பர் 1978 இரண்டாம் பதிப்பு - ஜனவரி 1988
Eelam Research Organization
179, Norval Road North Wemply Middlesex
England U. K.
ஈழம் த. பெ. எண் - 2356 Gyir2OT - 600024
ഖി ரூபா - 20


Page 4
ஒரு கண்ணுேட்டம்
கரையை நோக்கி ஒரு கப்பல்.
Guyrsfluf: Quflumfgrsfür
அண்மையில்தான் அந்த தேசம் இரத்தத்தில் நனைந்து போயிற்று. மனிதர்களில் ஒரு பகுதியினர் கழுகுகளாக மாறிப் போயினர். கொலே, கொள்ளை, தீவைப்பு ஆகியவற்றின் உச்சக் கட்ட அரங்கேற்றம் நடந்து முடிந்தது. 1958ல் தொடங்கி இந்தக் கால கட்டம் வரை இலங்கையில் அடிக்கடி தமிழர்கள் மீது வெறித் தனமாய் நடத்தப்பட்ட இனப்படுகொலைகளுக்கெல்லாம் இந்தக் கலவரம் சிகரம் வைத்தாற் போலிருந்தது. பிணந்தின்னி அரசியல் தான் பேரினவாதம் என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டுவிட்டது. சிங்களப் பேரினவாத சோவனிச அரசு மனித நாகரீகத்தை முற் முகக் கைகழுவிவிட்டு மிருகத்தனத்தில் முழுமையாய் ஈடுபட்டு விட்டது.
முதலாளித்துவ சுரண்டும் வர்க்கம் பன்னட்டு மூலதன ஆதி பந்தியம், இனவெறிப்பாது காப்புடைய மத அமைப்பு இத்தனை யும் கைகோர்த்துக் கொண்டு ஊக்குவித்து வந்த முரண்பாடுகள் இப்போது முற்றி வெடிக்கத் தொடங்கிவிட்டன. இதற்குமுன் இதேயளவில் இல்லாவிட்டாலும், இதேவகையில் நடைபெற்ற 1977 ஆகஸ்ட் கலவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளும், விளைவு க்ளும் இலங்கையர்களால் குறிப்பாக இலங்கை வாழ் தமிழர்க ளால் சரியாகப் பயிலப்பட்டிருக்குமானல், பின்னர் நடந்தது இன் ணுெரு கலவரமாகாமல் வர்க்கத் தீர்வை உள்ளடக்கிய போராக இருந்திருக்கக்கூடும். அவ்வாறு ஏற்பட்டிருந்தால் முடிவுகள் தமி ழர்களின் தொடர் துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கக் கூடும்
இனி எதிர்காலத்தில் செயல்பாடுகளை சரியாகத் தீர்மானிக் கவாவது 1977, ஆகஸ்ட் இனக்கலவரத்தைப் பற்றிய படிப்பினை கள் உதவலாம். இந்த இலக்கைக்கொண்டு படைக்கப்பட்ட இலக் கியம் தான் "லங்காராணி" சரித்திர நாவல் என்ற பெயரில் யதார்த்தத்திற்கு விரோதமான கொச்சைத் தனங்கள் மட்டுமே, எழுத்தாக்கப்படுவது தழிழ் நாவலுலகில் வழக்கம்! இடிந்த கோட்டைகளின் இடுக்குக்ளில் சரித்திர நாயகிகளின் சதைக் கதைகளைத் தேடியலையும். சாண்டில்யத்தனமான கதைகளுக்கே
i

தற்போது சரித்திர நாவல்கள் என்று பெயர், ஆளுல் இன மொழி வாழ்நிலை, வரலாற்று உரிமைகளை தக்கவைத்துக் கொள்ளப் போராடும் போராளிகளின் செயற்பாடுகளைச் சித்தரிப்பனவே சரியான வரலாற்று நாவல்களாக இருக்கமுடியும் இந்தவகையில் லங்காராணி நிகழ்ச்சிப் போக்குகளின் நிதர்சன வடிவமான ஒரு மிகச் சிறந்த வரலாற்றுப் படைப்பாகத்திகழ்கிறது. 77 கலவரத் தின் இரத்தவாடையும் அதனல் எழுச்சி பெற்ற இளைஞர்களின் புரட்சி மணமும் பதிந்து நிலைத்திருக்கிறது இந்த நாவலில்
77 கலவரத்தின் போது பாதிக்சுப்பட்ட இலங்கைத் தமிழர் கள் கொழும்பு அகதிகள் முகாம்களில் நிரம்பி வழிந்தனர். பரி வோடு அவர்களுக்கு உதவி புரியவந்த தமிழ் இளைஞர்களும், மாணவர்களும், பம்பரம் போல் சுழன்று பணியாற்றினர். உடனே அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட் டாலன்றி உயிர்பிழைக முடியாது கொழும்புக்கும் யாழ்ப்பா ணத்திற்கும் இடையில் இருப்பது இருநூறு மைல்கள் தான் ஆனல் சிங்களப் பகுதிகளுக்கூடாகப் பயணம் அமையுமென்பதால் பாதுகாப்பு இல்லை. எனவே ஏறத்தாள 600 மைல்கள் கடற்பய ணம் செய்து அவர்களை கரை சேர்க்கும் நோக்கத்தோடு "லங்கா ராணி" என்கிற கப்பல் புறப்பட்டது. பயணகாலமான அந்த மூன்று நாட்களில் தான் எத்தனை நிகழ்ச்சிகள் எத்தனைப் பாத்தி ரங்கள்! எவ்வளவு உணர்ச்சிகள் எத்தனை விவாதங்கள்! எப்ப டிப்பட்ட தீர்வுகள் ஒ அதுவொரு ஈடு இணையில்லா துன்பியல் நாடகம் பரபரப்பான நிகழ்ச்சிகளின் சரியான படப்பிடிப்பு எதிர்கால செயற்பாட்டிற்கான திட்டவரையறை: a Guerrid 54t குமுறல்களின் ஒருமித்த வடிகால், தீர்க்கமான இலக்கை நோக்கி வடிவமைக்கப்பட்ட ஒருவகைப் போர்ச்சாதனமாக இந்த தாவ லைப் படைத்துள்ளார் ஆசிரியர் அருளர்.
லங்கா ராணி கப்பலில் பயணம் செய்யும் ஏறத்தாழ ஆயி ரத்து இருநூறு அசதிகளில் எல்லோரும் தமிழர்கள் தான். என் ரூலும், அவர்களுக்குள் தான் எத்தனை வேறுபாடு வயோதிபர் கள். குழந்தைகள் காயம்பட்டவர்கள் ஓடுகிற அவசரத்தில் விலை உயர்ந்த பொருட்களை மாத் திர ம் பெட்டியில் அடைத்துக் கொண்டு வந்தவர்கள் எடுத்துக்கொள்ள ஏதுமேயில்லாதவர்கள் இதுவொரு வகை இன்னெருவகையின்ர் இதற்கு நேர்மாருன வர்கள் மூன்று இரும்புப்பெட்டிகள் நான்கு சூட்கேசுகள், ஆறு சீலைப் பொட்டலங்கள் ஒரு கிளிக்கூண்டு ஒரு நாய்க்குட்டி இத் தன் பரபரப்பிலும் கலவரத்திலும் கூட இவ்வளவையும் சுமத்து
谜

Page 5
கொண்டு சப்பலில் பயணம் செய்யும் அந்த நாகரீகத் தமிழ்க் குடும்பத்தில் அந்த பெல்பாட்டம் அணிந்த நங்கை அந்த பாம ரேனியன் நாய்க்குட்டியைப் பிரியவேயில்லை.
எல்லாம் தெரிந்தவர்போல் எசுத்தாளமாகக் கதைக் கும் ஒன்றுமறியா - ஆனல் சுயநலத்தில் எப்போதும் கண்ணுயிருக்கிற கொழும்பு வியாபாரி ஒரு புறம் நாலும் தெரிந்து விவரமாகப் புட்டுபுட்டு வைக்கும் பெரியவர் நாகலிங்கம் ஒரு புறம் கலவர நிசழ்ச்சிகள் தந்த கலகம் இன்னும் நீங்காத முனியாண்டி ஒரு புறம். கச்சதீவு ஒரு பெரிய நாடு போலவும் இலங்கை ஏகாதி பத்தியத்தின் பொலீசும் இராணுவமும் போரிட்டு அந்நாட்டைப் பெற்று விட்டது போலவும், உண்மையிலேயே நம்பிக்கை கொண் டிருக்கிற நீர்கொழும்பு இளைஞன் ஒரு புறம் இவர்களுக்கிடையே எவ்வளவு கீழான பணியையும் முகஞ்சுளிக்காமல் ஒ'ே " tg தொண்டாக செய்கிற பலையக இளம் பெண் இராணி ஒருபுறம் நடந்தவைகளை மதிப்பிட்டு நடக்க, இருப்பவைகளை கணித்து என்ன செய்ய வேண்டும். அதை எப்படி செய்யவேண்டும் என் பதில் தீர்மானியாய் இருக்கிறவைகளை அற்புதமாய் விளங்கவும் தெரிந்திருக்கிற வேட்டிக்கார இளைஞன் ஒருபுறம் மற்றும் அகதி களுக்கு தொண்டு செய்வதில் தோய்ந்து போய் அதே நேரத்தில் தமது தேசத்தைத்தாம் எவ்விலை, கொடுத்தேனும் பெற்றேயாக வேண்டும் என்கின்ற புரட்சி உணர்வு பொங்கித்துடிக்கும் ரவு வணன் குமார், தேவன் போன்ற இளைஞர்கள் ஒரு புறம் இவர் களுக்கு உதவியாய் இருக்கிற டாக்ட்ர் நற்குணம் ஒருபுறம் இத் தன வகைப்பட்ட தமிழர்களையும் சுமந்து கொண்டு * அசைந்து நீலக்கடலில் நிதானமாகப் பயணித்துக் கொண்டிருக் கிறது லங்காராணி
சிங்கள சோவனிச பேரினவாதம் இராணுவத்தின் துணை யோடும், காடையர்களின் உதவியோடும் அண்மையில் நடத திய தமிழின அழிப்பு. தமிழகத்திலும் இந்தியாவிலும், பொது மக்களிடையே ஒரு பேரெழுச்சியை உண்டாக்கியது. ஆ இ ? இலங்கையின் நிலப்பாடுகள் சரிவரப் புரிந்து கொள்ளப்' யால் இந்த எழுச்சி விழலுக்கிறைத்த நீராயிற்று ஆளுக்கொரு விதமாய் தகவல் தந்தும், அவரவர் கற்பனைக்கேற்ற வரலாற்றை திரித்துரைத்தும் இனி நடக்க வேண்டியவற்றைப் பற்றிய கணிப் புக்களை மிகத்தாராளமாக குழப்பிப் போட்டனர். லங்காராணி யில் வரும் வேட்டிக்கார இளைஞன் கதாபாத்திரம், நீர்கொழும்: இளைஞர்களுக்கு விளக்கம் தருவதாக வரும் ஒரு சில பக்கங்கள்
iii

ஈழவரலாற்றின் மிகத்துல்லியமான, கையடக்கப் பதிப்பாக விளங்குகின்றன. நீண்ட போராட்ட வரலற்றை இவ்வளவு தெளி வாக சில பக்தங்களிலேயே சுவைபட விபரித்திருப்பது கடுகைத் துளைத்து, ஏழ்கடலைப் புகட்டுவதும், சாத்தியமே என்னும் படி பாக அமைந்துள்ளது. தங்கள் கல்வியையோ, வேலையையோ, காணிகளையோ, சிங்களவர்கள் பறித்துக் கொள்கிருர்கள் என்ப தற்காக மட்டும் தமிழர்கள் அங்கு G rrgmt_séávða',
தங்கள் பாரம்பரிய பிரதேசத்தில் தங்கள் "வாழ்நிலையின் சுயநிர்ணய உரிமையை தாங்கள் பெறுவதற்கும் சமதர்ம ஆட்சி L{ ஏற்படுத்திக்கொள்வதற்குமான ஒரு பெரிய இலக்கைת? ויומuJab) L முன்னிறுத்தியே அவர்கள் போராடுகிறர்கள். இந்தப் போராட் டத்தை நாட்டுப் பிரிவினைக்கான போராட்டம் என்ருேபிழைக் கப்.ோன இடத்தில் ஏன் போராடவேண்டும் என்ருே கொச்சைப் படுத்தும் இந்தியப் பிரமுகர்களும் அவர்கள் கூற்றை அப்படியே ஏற்கும் மக்களும், ஊன்றிப் படிக்கவும், உண்மையை உணரவும் இந்த நாவலில் அநேக செய்திகள் உள்ளன.
ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன்னுல், ஆதிக்க வெள்ளை யர்களால், தென்னிந்திய கிராமங்களிலிருந்து, அழைத்துச் செல் லப்பட்டு, தேயிலைத் தோட்டங்களில் தங்கள் இரத்தத்தை வியர் வையாக்கி உழைத்து, பன்றிக் குடிசைகளுக்கும் கீழான, லயன் களில் அடைபட்டு, சாதியில் கீழாய், சமூகத்தில் தாழ்வாய், பொருளாதாரத்தில் சோற்றுக்கும், துணைக்குமே போதாத வரு மானத்தில் இன்றுவரை உழன்றுவரும், மலையகத் தோட்டத் தொழிலாழிகள் உண்மையான பாட்டாளிகள், அவர்கள் இழப் பதற்கு ஏதுமில்லாதவர்கள், போராட்டம் என்பது அவர்கள் வாழ்வியலில் அத்தியாவசியக்கூறு அவர்களை இணைத்துக்கொள் ளாமல் ஈழ மக்கள் போராட்டம் நடைபெற முடியாது. இந்த உண்மையை பட்டவர்த்தனமாக இந்த நாவல் வெளிப்படுத்து கிறது. இன்றைக்குகூட தொண்டமான்களும், செல்லச் சாமிக ளும், பூரீமாவோ சாஸ்திரி ஒப்பந்தப்படி இங்கே, கொண்டு வந்து கவிழ்க்கப்பட்ட, நாலே முக்கால் லட்சம் தோட்டத் தொழிலா ளர்களைத் தவிர மீதியிருப்போரை இங்கே ஒட்டிக் கொண்டு வந் துவிட பெரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிருர்கள், எவ்வளவு பெரிய அக்கிரமம், என்பதை தொலை நோக்கோடு இந்த நாவல் தெளிவு படுத்தியிருக்கிறது, Y
எந்தப் போராட்டத்திலும், தத்துவம், ஆயுதம் மக்கள் சக்தி ஆகிய மூன்றும் முரண்பாடின்றி தகுந்த விதத்தில் இணைந்தாக
iv

Page 6
வேண்டும் இதில் பிரச்சனைகள் சரியாகவும், வரலாற்று ரீதியாக வும், இயங்கியல் பூர்வமாகவும் புரிந்து கொள்ளப்படுதல் அவசி யம் ஈழப்பிரச்சனைகளுக்கு வெறும் கோசங்களும், வீண் விவா தங்களும் நெடும்பயணங்களும் பேச்சுவார்த்தைகளும் எள்ளளவும் பயன்படப் போவதில்லை.
தத்துவத் தெளிவின் அடிப்படையில், மக்கள் சக்தியின் அர வணைப்பில் நடைபெறும் ஆயுதம் தாங்கிய போராட்டமே, இதற் கொரு நிரந்தர தீர்வை உண்டாக்கும் அதோ! காங்கேசன் துறையில் கம்பீரமாக வந்து நிற்கும் லங்காராணியிலிருந்து ஏறத் 379 அகதிகள் எல்லோரும் இறங்கிப் போய்க் கொண்டிருக் கின்றனர். போராட்டமே என்று புரிந்து கொண்ட இளைஞன் சரவணன் கத்தியால் தன் விரல்களைக் கீறிக்கொண்டு அதில் பொழிகின்ற இரத்தத்தால் தன் புரட்சி துடிப்பை எல்லாம் உள் ளடக்கி 'ஈழப்புரட்சி வெல்க" என்று எழுதி முடிக்கிருன் வேட் டிக்கார இளைஞன் அவனுக்கு உதவிக் கொண்டு இருக்கிருன். கப்பலின் கனத்த இரும்புச் சுவரின் மேல் சூரிய கிரணங்கள் பட் டுப்பளபளக்க கொட்டிக் கொண்டிருக்கிற இரத்தத்துளிகள் tu சியை நோக்கி மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றன. லங்காராணி நாவல் இங்கே முடிகிறது, போராட்டம் தொடர்கிறது.

இரண்டாம் பதிப்புரை
நானூறு ஆண்டுகளாய் ஆதிக்கத்திலிருந்து வரும் அந்நியர் 6ள் தமிழ் பேசும் மக்களின் நலன்களை மனதில் கொண்டிருக்க வில்லை என்பதனுல் எங்கள் இனத்தின் இலட்சணங்கள் சிதைக் கப் பட்டுள்ளன. சகல விதத்திலும் எமது இனத்திற்கான குணும் Fங்களை நிலைநிறுத்துவதற்கு தடங்கல்கள் இரு ப் பதா லே யே போராட வேண்டிய சூழ்நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ாங்கள் இனத்தின் எதிரிகளை இனங்கண்டு எங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் சக்தியை இழந்து தப்பித்துக் கொள்வதை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு தனி மனிதனுகவும் குடும்பம், உறவினர் ான்ற நிலையிலும் செயல்படுகின்ற நிலையே தொடர்ந்து நீடிக்கிறது. இவ்வாருன நீடித்த போராட்டமொன்றிற்கு அடிப்படையான ஒரு மைப்பாட்டை ஏற்படுத்த திரைமறைவிலும் வெளிப்படையாகவும் இயங்கும் பல்வேறு சக்திகள் முட்டுக்கட்டையாயுள்ளன இவற்றை இனங்கண்டு புறத்து ஒதுக்கிவிட்டு எங்கள் இனத்தின் குணும்சங் களை நிறைவு படுத்த வேண்டும். எமது மக்களின் நலன்களை முன் னிறுத்தி இந்திய வெளியுறவுக் கொள்கையுடன் முரண்படாத வகை பில் செயற்பட வேண்டிய கடமைப்பாடு எமக்குண்டு. இலங்கை பில் எமது மக்களின் எண்ண வேட்கையைப் புரிந்து கொண்டவர் நள் எமது சுபீட்சமான எதிர்காலத்தை நிர்ணயிப்பதன ள்மது மக் களிடமே விட்டுவிட வேண்டுமென மனித நேயத்துடன் கேட்டுக் கொள்கிருேம்.
இந்த எண்ண வேட்கையின் அடிப்படையிலேயே தமிழ்பேசும் மக்கள் தனியரசுக்கான தமது வேணவாவினை 1977-ம் பொதுத் தேர்தல் மூலம் உலகிற்குப் பிரகடனம் செய்தனர், ஆனல் ஈழத் தில் நிராயுதபாணிகளாய் அப்பாவிகளாய் - அரசியல் ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டம் தனியாட்சி உரிமைப் பிரகடனம் செய்ததன் பின்னர் 1977-ன் ஆவணி மாதத்தில் ஒரு பெரும் கல வரத்தைச் சந்தித்தது. "போர் என்ருல் போர்; சமாதானம் என் ரூல் சமாதானம்' என்ற ஜே. ஆரின் அரசு கட்டவிழ்த்துவிட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் அகதிகளாக முகாம் களில் தஞ்சமடைந்தனர். தஞ்சமடைந்தவர்களில் ஒரு பகுதியின ரைச் சுமந்து கொண்டு கொழும்பிலிருந்து லங்காராணி புறப்பட் டுச் சென்றது.
லங்காராணி என்னும் இந்தப் படைப்பு வெறுமனே கற்ப னக் கதையல்ல பொழுது போக்குவதற்காக எழுதப்பட்ட புனை தையல்ல இந்தப் படைப்பிற்கு என்ன இலக்கியப் பெயர் சூட்ட ாம் என்பது எமது ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது.

Page 7
ஆல்ை இலங்கைத் தீவின் இனப்பிரச்சனை என்பது வெறும் மொழியுரிமைப் பிரச்சனையோ அல்லது ஒரு சிலரின் பதவிப் பிரச் சனையோ அல்ல என்பதனை இது தெளிவுபடுத்துகின்றது. நாளாந்த வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் வாழ்க்கைப் பிரச்சனையாக உருவெடுத்திருக்கும் இனப்பிரச்சனை தனியரசு ஒன்றை ஏற்படுத்துவதன் மூலமே தீர்க்கப்பட முடியும் என்பதை தெளிவுபடுத்துகிறது. என்ருலும் ஈழக்கோரிக்கை ஆண்ட பரம்பரைகளை மீண்டும் ஆளவைக்கும முயற்சியல்ல; மாருக சமத் துவ சமதர்ம சமூக அமைப்பை உருவாக்க முனையும் 6rst 650r வேட்கையையே என்பதை உறுதிப்படுத்துகிறது. ممبر
இவ் எண்ணத்தை ஈடேற்ற ஒரு மாபெரும் மக்கள் எழுச் சியைத் தோற்றிவைக்கவேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறும் இந்தப்படைப்பு பத்து ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலில் வெளி யிடப்பட்டது. இன்றைய காலகட்டத்தின் அவசியமும் தேவையும் கருதி இதனை மீள் பதிப்பாக வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிருேம்.
ஏனெனில் யூலை 29 ஒப்பந்தம் ஏற்படுத்தியதாக கருதப்படும் அமைதிப் போர்வைக்குள் அருளர் சுட்டிக்காட்டியுள்ள - எமது சமு தாயத்தில் புரையோடிப் போய் இருக்கின்ற சகல ஏற்றத்தாழ்வு களையும் மறைத்து வைக்க நாம் தயாராக இல்லை. அன்று அரு ளர் எழுதிய சூழ்நிலைக்கும், இன்றுள்ள சூழ்நிலைக்கும் என்ன பெரிதான வேறுபாடு? இதனை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய இந்த சந்தர்ப்பத்தில் இந் நூல் வெளிவருவது வரலாற்றுத் தேவையா கின்றது. அடிப்படைத் தமிழ்பேசும் மக்களின் நல்வாழ்வுக்காக எமது போராட்டம் தொடரப்பட வேண்டுமென்பது இத் தால் உணர்த்தப்படுகிறது.
ஆசிரியர் அருளர் இன்று இங்கு இல்லை. சில தனிப்பட்ட காரணங்களுக்காக பெளதீக ரீதியாக லண்டனில் வாழ்ந்தாலும் மனத்தளவில் எம்முடன் இணைந்தே உள்ளார். அவரது போராட்ட வேட்கையின் அணையா விளக்காகவும் அவரது பங்களிப்பை என் றும் நினைவு கூரும் ஞாபகத் தடமாகவும் இந் நூல் என்றும் விளங்கும். எனவே "லங்காராணி மீள் பதிப்பாக வரும் இத் தரு கனத்தில் அவருக்கு எமது தோழமை கலந்த நன்றியறிதலை தெரி விக்க கடமைப்பட்டுள்ளோம். எமது முயற்சிக்கு அவரது மனப் பூர்வமான ஆதரவு கிடைக்கும் என நம்புகிருேம். இந்தப் படைப்பு வாசகர் மனத்தில் ஏற்படுத்தும் ஆழமான மனப்பதிவுதான் இதன்ட வெற்றியாகும்.
வெளியீட்டுக் குழு ஈழப்புரட்சி அமைப்பு (EROS)

g"షి-e ്ട് (). ప్క * ജയ ،است "ఫిస్ట్రేgy * ల ఇతిష్టిస్ట్ఫ్వ్యీ * அகதிகள்
నిన్దేసి S ܟܲܫܘggܟܼܧܵܧܵܐܢà¬ܐܚܝ"Sܓ݁ܶ ೪ಙ್ಗಾಶ" 6ూడిe£a A b*a sluram கல்மணனர்.அ Z நிள்வியறுகி ઇ. డ్నీ luuiulazzoni Texa.
$2"లొ తిట్టే * 21 2ே புரியங்குளம்}N" ܘ • ဇူ အမ်ားဟိုးကြီး... ̈နှီ အိန္နဲပွဲ--L`ီ t ே ー palayadur ( \\ سه سابقه つ。
ஒகிச்சுகக هټلرنه د حسد 镑 f ஆத்து : கோணம&
ി(്.
ஆற்குடா

Page 8

'நண்பர்களே!.
*இது ஒரு இனப்பிரச்சினை, இந்நாட்டின் இரு தேசிய இனங் களுக்கிடையிலான பிரச்சினை. இதை ஒரு ( டிவுக்குக் கொண்டு வர வேண்டிய தேவை முன்னெப்பொழும் இல்லாதவாறு இன்று எழுந்தள்ளது. ஒரு தீர்வு நிச்சயமாகக் கிடைக்கும். விடை பெறுகின்ருேம்." 4.
இவ்வாறு குமார் பேசிமுடிக்க கூட்டத்திலிருந்து ஒரு குரல் சற்றும் எதிர்பாராத வகையில், 'இளைஞர்களே! ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள், நல்லபடியாகச் சென்று வாருங்கள்!" என்றது.
குமார் மீண்டும் 'நன்றி, நன்றி' என்று கூறி சமாளித்துக் கொண்டான். கப்பல் துறைமுகத் தளத்தை விட்டு மெதுவாக விலகத் தொடங்கியது. இடையில் ஒலித்த குரலினல் இளைஞர் கள் வியப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள அங்கு நின் றிருந்த டாக்டர் நற்குணம், “முன்னை நாள் கடற்படைத் தள பதி" என்ருர்,
**ஆ! அப்படியா.நாங்க சற்றும் எதிர்பார்க்கவில்லையே?’’ குமார் ஆச்சரியத்துடன் கூறினன்.
இந்நிகழ்ச்சியால் அங்கு நின்றிருந்த மூன்று இளைஞர்களும், டாக்டர் நற்குணமும் லங்கா ராணியின் இந்த வரலாறு மிக்க பயணத்தின் பொறுப்பு வாய்ந்த பணிகளுக்குத் தங்களைத் தாங் களே நியமித்துக் கொண்டவர்களானர்கள்.
கப்பல் மெதுவாக நகரத் தொடங்கியது. கீழே துறைமுகத் தளத்தில் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர், கடற்படையினர் காவல் படையினர், சாதாரண உடையில் இருந்த சுமார் ஐம் பது சமூகச்சேவைப் பகுதியினர் தளத்தின் நீளத்திற்கு நின்று கொண்டிருந்தனர். இதில் ராணுவத்தினரின் மூன்று கவச வாக
6, i

Page 9
2. லங்காராணி
னங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. பலர் வாகனங்களில் சாய்ந்த வாறு மேலே இஃாஞர்களின் இடத்தை நோக்கியவண்ணம் நின் றிருந்தனர். இளேஞர்கள் பேபியதை யாரும் எதிர்பார்க்காததால் அசைவின்றி நின்றிருந்தனர். இச் சோக நிகழ்ச்சி, அவர்களுள் ஒரு சிலரின் மனதைத் தொட்டிருப்பது அவர்களின் பார்வையி லேயே தெரிந்தது.
கப்பலின் மேல்தளத்தில் ஒரு சிலரைத் தவிர வேறு எவரை பும் காணமுடியவில்லே. நேரம் இரவு ஒன்பது மணியானகயால் கொழும்புத் துறைமுகத்தின் உள்ளே நிறுத்தப்பட்டிருந்த வேற்று நாட்டுக் கப்பல்களின் மின் விளக்குகள் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தன. வங்கா ராணி துறைமுகத்தின் வெளிவாசஃ: நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
திட்ட்த்தின்படி கப்பல் நாளே மறுநாள் யாழ்ப்பானத்தைப் போய்ச் சேரும். இருநூறு அடி நீளமான இந்தக் கப்பலில் ஆயி ரத்து இருநூறு தமிழர்கள் இருந்தனர். லங்கா ராணி சரக்குக் கப்பலாகையால் பயணிகள் தங்குவதற்கு எவ்வித பிரத்தியேக வசதிகளும் இருக்கவில்லே. சமூகச் சேவைப் பகுதியினர், கப்பலில் அவசர அவசரமாக ஏதோ ஒருசில வசதிகளேச் செய்து முடித் திருந்தனர். கப்பலில் முன்னுக்கு இரண்டும் பின்னுக்கு இரண்டு பாக நான்கு சாமான் கிடங்குகள் இருந்தன. இவற்றின் அடித் தளத்திற்கு இறங்குவதற்கு மரத்தினுல் படிகள் செய்து பொருத் தப்பட்டிருந்தன. கப்பலின் முன்பகுதியில் இருந்த கிடங்குகள் ஆறாக இருந்ததனுல் படிகள் செங்குத்தாக இருந்தன. கிடங் குகளின் தளங்களில் பலர் பாய்களே விரித்து இருந்துகொண்டும், அங்கும் இங்குமாகச் சிலர் நின்றுகொண்டும் பேசிக்கொண்டிருந் தனர். இவர்களில் அனேகர் இதற்கு முன் கப்பலில் பிரயாணம் செய்யாததாலும், தமது சொந்தப் பிரதேசங்களில் ஒன்றுன யாழ்ப் பானம் செல்லப்போகின்ருேம், உறவினரைக் காணப்போகின் ருேம் என்பதாலும் சில நாட்கள் அகதிகள் முகாமில் தங்கிய சூழ்நிலே அற்றுப் போனதாலும், இவர்களின் கஃாப்படைந்த முகங் களிலும் மகிழ்ச்சியே தென்பட்டது.
ஒரு வாரத்திற்குமுன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற களி பாட்ட விழாவில் சிங்களப் பொலிசாருக்கும், சில தமிழர்களுக் கும் இடையில் ஏற்பட்ட ஒரு சிறு கைகலப்பு நாடு முழுவதை பும் இனக்கலவரத்தில் மூழ்கடித்துச் சின்னுபின்னப்படுத்தியிருந் தது. ஆயிரமாயிரம் தமிழர்களேச் சொல்லொண்ணுத் துன்பத் திற்கும், பொருட்சேதத்திற்கும், உயிர்ச் சேதத்திற்கும் ஆளாக்கி அகதிகளாக்கியிருந்தது.

அருளர்
சரவணன், குமார், தேவன் மூவரும் கொழும்பு இந்துக் கல் லூரி அகதிகள் முகாமில் தொண்டர்களாகப் பணியாற்றியவர் கள் முன்பே பழகியிருந்தார்கள். டாக்டர் நற்குனத்தை அர சாங்கம் கப்பலில் வைத்தியராக நியமித்திருந்தாலும், பொதுத் தொண்டில் ஈடுபாடு கொண்டவரான கபால் இளேஞர்களுடன் பழகிக் கொள்வதில் அவருக்கு எவ்வித சிரமமும் இருக்கவில்லே. குமார் சட்டக்கல்லூரியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்த வன், வயது இருபத்துநான்கு இருக்கும்" தேவன் கொழும்பில் கல் இாரி ஒன்றில் படித்துக்கொண்டிருந்தவன், பரீட்சைக்கு ஆயத்தி மாகிக் கொண்டிருக்கையில் கலவரம் வந்ததஞல் பரீட்சையைத் தூக்கி எறிந்துவிட்டு முகாமுக்கு வந்துவிட்டான். சற்று உயரமா னவன், அமைதி அவனது இயற்கைக் குாைம்.
டாக்டர் நற்குணம் கப்பல் புறப்படுவதற்கு மூன்று மணித் தியாலயங்களுக்கு முன்பே கப்பலில் ஏறி விட்டார். அங்குள்ள நிலேமைகள் ஒரளவு தெரிந்திருந்தும் கப்பல் கப்டஃனச் சந்தித்து உரையாடுவது நல்லதென நினைத்து இளேஞர்களிடம் தெரிவித் தார். இதனே இளைஞர்களும் ஏற்றுக்கொண்டு படிகளில் ஏறி மேல்தளத்தில் உள்ளே கப்டனின் இருப்பிடத்தைக் கண்டு பிடிப் தில் முஃனந்தனர். தளத்தில் வேலே செய்துகொண்டிருந்த &jጎr ̆] பந்தியிடம் விசாரித்ததன் மூலம் கப்டனின் இருப்பிடத்தைத் தெரிந்து அங்கு சென்றனர். கப்பலின் மேல்தளத்தின் வெளியி ேேம கதிரைகஃனப் போட்டு அந்தச் சிப்பந்தி, இளேஞர்களே ட்காரணவத்தான். குளிர்காற்று வீசிக்கொண்டிருந்தது. அதிக வளிச்சமும் அங்கு இருக்கவில்லே. சிறிது நேரத்தில் கப்டன் வத்
TT
டாக்டர் நற்குணம் இளேஞர்களே அகதிகள் முகாமில் பணி பாற்றியவர்கள் என்று அறிமுகப்படுத்தி வைத்தார். "நல்லது.
ல்லது." என்றுகூறி கப்டன் கதைக்கத் தொடங்கினூர்
"எங்களுக்கு இந்தப் பயனத்திற்குத் தயாராகும் படி இன்று மத்தியானம் பன்னிரண்டு மணிக்குத்தான் உத்தரவு கிடைத்தது
ாங்கள் சிங்கப்பூர் போவதற்குத்தான் தயாராகிக் கொண்டிருந் தோம். நாங்கள் இயலுமானதைச் செய்திருக்கின்றுேம் சமூகச் சேவைப் பகுதியினர் உணவுப் பொருட்களோக் கொண்டுந்ெது வத்துள்ளார்கள். அவை சமையலறையில் இருக்கின்றன. தாஸ்" ரம் இருத்தல் Llyfr Gŵyr, மரக்கறி, வாழைப்பழம், மா, குழந்தை இருக்கான உணவுகள், ஆயிரத்தைநூறு பீங்கான்கள், + 2" I r lr r I தற்கான பாத்திரங்கள் எல்லாம் இருக்கின்றன எல்லாமே உங் கள் பொறுப்பு. சமையலறையைக் காட்டுவதற்கு உதவியாயே

Page 10
4 லங்காராணி
அனுப்புகின்றேன். வைத்திய வசதிகளுக்கு இவர், டாக்டர் இருக் கின்றர். வேறு ஏதாவது உதவி தேவையானல் என்னிடம் கேட் டுக் கொள்ளுங்கள்' என்று ஃப்டன் படபடவென பேசி முடித் தார். கப்டன் சிங்களவராகையால் ஆங்கிலத்திலேயே பேசினர்.
“யாழ்ப்பாணத்துக்கு எப்போ சென்றடையும்?* குமார் வினவினுன்.
“நாளை மறுநாள் அங்குச் செல்லலாம் என எதிர்பார்க்கின் ருேம். நேரத்தைக் குறிப்பாக என்னல் செர்ல்ல முடியாது "
* யாழ்ப்பாணம், எந்தத் துறைமுகத்துக்குக் கப்பல் செல் லும்?" மேலும் குமார் கேட்டான்.
'இதுபற்றியும் எனக்குத் தெரியாது. காங்கேசன்துறை அல்லது பருத்தித்துறையாகத்தான் இருக்கவேண்டும். இதுபற்றிப் பின்பு எங்களுக்கு அறிவிக்கப்படும்.' கப்டன் கூறிவிட்டு இளைஞர் களிடமிருந்து மேலும் கேள்விகளை எதிர்பார்த்தார்.
*மன்னரில் இருந்து சுமார் ஐம்பது பேர் இருக்கின்றர்கள். இவர்களை மன்னுரிலேயே இறக்கிவிட்டால் நல்லது." ஆலோசனை கூறுவது போல் மீண்டும் குமார் கூறினன்.
**இல்லை. இல்லை. நாங்கள் மன்னர் வழியாகப் போகவில்லை காலி, மட்டக்களப்பு, திருக்கோணமலை சுற்றிப் போகின்ருேம். மன்னர் கடல் ஆழம் இல்லாதது. அப்பகுதியால் இக் கப்பலைச் செலுத்த முடியாது.”* கப்டன் பதிலிறுத்தார்.
கப்டனை மேலும் கீழுமாகப் பார்த்துக்கொண்டிருந்த சரவு ணன் குறுக்கிட்டு, “அகதிகளை ஏற்ற கப்பல் மீண்டும் வருமா?" என்ருன்.
கப்டன் சற்று யோசித்தபின், *அநேகமாக வராது. நாங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து சிங்கப்பூர் போகலாம் என எதிர்பார்க் கின்ருேம். இதுபற்றியும் பின்புதான் எங்களுக்குத் தெரியும்" என்ருர்,
இதே சமயம் தேவன் பக்கத்திலிருந்த குமாரிடம் மெதுவாக 'இரவு சாப்பாடு?" என்று ஞாபக மூட்டினன்.
சற்று யோசித்த குமார், "அதைக்கேட்கத் தேவையில்லை விடு." என மெதுவாகத் தமிழில் கூறினன்.
டாக்டர் நற்குணம் எதவும் பேசாமல் அமர்ந்திருந்தார். இளைஞர்களில் தாமும் ஒருவர் என கப்டனுக்குக் காட்டிக்கொள்

vyge:Tř s
ளாமல் இருக்கவே விரும்பினர். வேறு பேச எதுவும் இல்லாத
தனுல் இருக்கையைவிட்டு எல்லோரும் எழுந்தனர். உதவியாள
ாைக் கூப்பிட்டுக் கப்டன், "இவர்களுக்குச சமையலறைப் பகுதி பைக் காட்டு' என உத்தரவிட்டார்.
உதவியாளர் பின்தொடர்ந்து நால்வரும் படிகளில் இறங் கினர். இடது பக்கம் இருந்த இரும்புக் கதவைத் திறந்து கொண்டு உதவியாள் உள்ளே நுழைந்தார். உள்ளே நீளமான வழி சிென்பட்டது. இருமருங்கிலும் அறைகள் காணப்பட்டன. மீண்டும் இடதுபக்கமிருந்த அறையைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார். இளைஞர்களும் நுழைந்தனர். மின்சார அடுப்பு களுடன் கூடிய சமையலறை இருந் சது. மின்சார அடுப்புகளை இயக்கும் முறையை விளக்கிய உதவியாளர் மேசையில் இருந்த கத்கிகளைக் கண்பித்து, இரண்டு கத்திகள்தான் உள்ளன. அவற்றை வைத்துச் சமாளித்துக் கொள்ளுங்கள் ' என்ருர்,
“சமாளித்துக் கொள்வோம்' என எல்லாம் விளங்கிக் கொண்டவன் போல் குமார் கூறினன்.
தலையசைத்தவண்ணம், உதவியாளர் விடைபெற்ருர் டாக் டர் நற்குணமம் விடைபெற்றுத் தனது அறைக்குச் சென் ருர் சரவணன் மேசையில் இருந்த கத்திகளை எரிச்து ர் 7ர்த் தான் தேவன் மீண்டும் சாப் பாட்டுப் பி ச்ட்டி யை எழுபயினன்.
குமார் சற்று யோசித்தபின், ‘தேவையில்லை ; காலையில் பார்த்துக்கொள்ளலாப் எல்லோரும் சாப்பாட்டை மறந்து வி. டார்கள்'" என்ருன் res
மாலையில் ஆறு மணிக கே முகாம்களில் இருந்து அகதிகளை பஸ்களில் ஏற்றி, பலத்த இராணுவப் பாதுகாப்புடன் துறை முகத்திற்குக் கொண்டு வந்து, எட்டு மணிக்குக் கடபலில் ஏற்றி விட்டார்கள். கப்பலின் கீழ்த் தளங்களுக்குச் செல்லும் படிகள், பாது "ப்பற்ற முறையில் அடைச் கப்பட்டிருந்ததால் பெட்டிப் பொருட்களுடன் இறங்குவது பெரிதும் சிரமமாய் இருந்தது அதிலும் வயோதிபர்கள், குழந்தைகள், காயம்பட்டவர்கள்  ெசிதும் சிரமப் பட்டனர். இவர்களுக்குத் தொண்டர்கள் உதவி செய்தனர். பெடடிகளைக் கயிற்றில் கட்டிக் கீழே இறக்கினர் கள் சிலர் சிா:மத்துடன் தங்கள் பெட்டிகளோடு தாங்களே இற வகினர். வீடுகளை விட்டு அவசரமாக வெளியேறியதால் விலையுயர்ந்த பொருட்களை மாத்திரம் பெட்டியில், அடைத்துக் கொண்டு வந்திருந்தனர் ஒன்றுமில்லாதவர்களும் உண்டு. ஒரு குடும்பத்தினர், மூன்று இரும்புப் பெட்டி, நான்கு சூட்கேசுகள்

Page 11
6 லங்காராணி
ஆறு சீலேப் பொட்டலங்கள், ஒரு கிளிக்கூடு, ஒரு நாய்க்குட்டி இவைகூட எடுத்துவந்திருந்தனர். அந் நாய்க்குட்டியைப் பெல் பொட்டம் அணிந்த மங்கை வைத்துக்கொண்டு இறங்கப் போ ஞள். தொண்டன் ஒருவன் நாய்க்குட்டியை வாங்கிக்கொண்டு அவளை இறங்கவைத்தான். பலத்த காயம்பட்டவர்கள் பயணி களாகக் கப்பலின் வர அனுமதிக்கப்படவில்லை. அவர்களை விமானம் மூலம் யாழ்ப்பாணம் அனுப்பி இருந்தார்கள். விமானத் தில் பிரயாணம் செய்ய முடியாத நிறைமாத கர்ப்பிணிகள் இக் கப்பலில் பிரயாணம் செய்தனர்.
இப்போது நேரம் இரவு பத்துமணி. ஆயிரத்து இருநூறு பேருக்கு உணவு பரிமாற விடிந்துவிடும். இது முடியாத காரியம் என இளைஞர்களுக்குத் தெரிந்தது. கீழ்த்தளத்தில் தூங்குவதற் குப் பலர் ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். இளைஞர்கள் நாளைய ஏற்பாடுகளைப்பற்றி விவாதித்தபின் சமையலறையிலேயே படுக்கைகளை விரித்துக்கொண்டனர்.
சரவணனுக்குத் தூக்கம் வரவில்லை. அங்கிருந்த காகிதப் பெட்டியைக் கிழித்துப்போட்டு அதன்மேல் படுத்திருந்தான். சிகரெட் புகையை ஊதிக்கொண்டிருந்தான்.
கலவரம் தொடங்கிய அடுத்த நாளே பாதுகாப்பு கருதி கட்டுபெத்த தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களைக் கொழும் புக்கு அனுப்பிவிட்டார்கள் இவர்கள் கொழும்பு இந்துக் கல் அாசியில் தஞ்சம் புகுந்தார்கள். இதுவே முதல் அகதிகள் முகா மாக மாறியது. பின்பு கலவரம் பரவியது. சிங்களக் காடை யர்கள் கூட்டம் கூட்டமாகச்சென்று, கொலை, கொள்ளை, தீவைப் பதில் ஈடுபட்டனர். தெகிவளை, இரத்மலானை, களுபோவில, கல்கிசை போன்ற கொழும்பை அடுத்த பகுதிகளில் கலவரம் மோசமடைந்தது. ஒருசிலர் தமது சொந்த கார்களில் ஏறி அகதி கள் முகாமை அடைந்தனர். இவர்கள் கொடுத்த தகவல்களின் படி வேறு வாகனங்களில் சென்று அவ்வப் பகுதித் தமிழர்களை இர'வப் பாதுகாப்புடன் அகதிகள் முகாமுக்கு ஏற்றிவர வேலடி யதாயிற்று. சரவணன் இவ் வேலைகளில் பல நாட்கள் தாக்கமில்லாமலே ஈடுபட்டான். பஸ்வண்டிகளைக் கொண்டு போய் நிறுத்தியதும், தமிழர்கள் ஓடிவந்து பஸ்களில் ஏறினர்கள்.
இலங்கையின் சிங்களப் பகுதிகளில் இருந்து ஆயிரமாயிரம் தமிழர்கள், பல்வேறு முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். இவர் களைத் தமிழ்ப் பிரதேசமாகிய யாழ்ப்பாணத்திற்கு அனுப்ப ஏற் பாடுகள் நடந்தன. கொழும்பில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட

JNogarir
தமிழர் அநேகருக்கு யாழ்ப்பாணத்தில் உறவினர்கள் இருந்தார் கள். இதனுல் கப்பல் யாழ்ப்பாணத்திற்கு அகதிகளுடன் புறப் பட்டிருந்தது. அரசாங்கமோ பஸ்களிலும், புகைவண்டியிலும் ஏற்றிச் செல்ல முதலில் முயற்சித்தது. புகையிரதங்களைச் சிங்களக் காடையர் வழிமறித்துத் தாக்கியிருந்ததால் தமிழர் அதில் போகத் தயங்கினர். கப்பலில் போகவிரும்பினர். கப்பலில் அனுப்ப அரசாங்கம் முதலில் தயங்கியது. இதனல் ஒருசிலர் உண்ணு விரதமிருக்கத் தீர்மானித்தனர். வேறுவழியின்றி அரசு - லங்கா ராணியையும் வேறு இரு கப்பல்களையும் ஏற்பாடு செய்தது. லங்கா ராணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் மட்டு மல்லாது, திருக்கோணமலை, மட்டக்களப்பு, மன்னர், வவுனியா, மலைநாடு போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் பயணம் செய் தனர். கொழும்பில் நிரந்தரமாகக் குடியிருந்தவர்கள் கூட கப் பலில் வந்துகொண்டிருந்தன்ர். யாழ்ப்பாணத்தில் எவ்வித உற வினர்களும் இல்லாதவர்கள். சுமார் நானூறு பேர் இதில் இருந்தனர்.
ஒருமணித்தியாலம் சென்றிருக்கும். சரவணன் சுற்றும் முற் றும் பார்த்தான். நண்பர்கள் தூங்கிக்கொண்டிருந்தனர். திடீ ரென எழுந்து பூட்டியிருந்த இரும்புக்கதவைக் திறந்துகொண்டு வெளியே வந்தான். சிகரெட்டை எடுத்துப் புகைத்துக்கொண்டு கப்பலின் மேற்பகுதியை நோட்டமிட்டவாறு முன்பகுதிக்கு வந்து கீழ்த்தளத்தின் அறைகளை எட்டிப் பார்த்தான் பெரும்பாலோர் தூங்கிவிட்டிருந்தனர். ஒருசிலர் மாத்திரம் விழித்திருந்து கதைத் துக் கொண்டிருந்தனர். எல்லாவற்றையும் நோட்டமிட்டவாறு மேலே நடந்து முன் அணியத்துக்கு வந்தான். வேளிச்சம் அதிக மில்லை. அங்கிருந்த உயரமான மேடையில் பல்வேறு சாதனங் கள் பொருத்தப்பட்டிருந்தன. கம்பி உருளைகள், நங்கூரமிடும் சாதனங்கள், பாரந்தூக்கிகள், இன்னும் பல பொருத்தப்பட்டி ருந்தன. மேடையில் இரு உருவங்கள் அமர்ந்திருப்பது மங்கலா கத் தெரிந்தது. படிகளில் ஏறி மேடைக்கு வந்தான். அங்கிருந்து பாரந்தூக்கி ஒன்றின் அருகில் வந்து கையை ஊன்றி வலதுகையை இடுப்பில் வைத்துக்கொடு நின்றன்.
"என்னமாதிரி போகுது..? **கப்பல் திரும்பிவராதுபோல இருக்கு சிங்கப்பூருக்குப் போகி றதாம்." சரவணன் பதில் சொனனன்.
சரவணன் அங்கிருந்த இருவரையும் அகதிகள் முகாமில் கண்டு பழகியிருந்தான். இருவரில் ஒருவன் வேட்டி அணிந்திருந் தான். தன்னுடைய சொந்த இடத்தின் பெயரை யாரிடமும்

Page 12
லங்காராணி
அவன் தெரிவிக்கவில்லை. திருகோணமலையில் இருந்து தம்பலகா மம் சென்று அங்கிருந்து தன்னுடைய இடத்திற்கு நடந்துபோக வேண்டும் என்று மட்டும் கூறியிருந்தான் யானைகளுக்கு வெடி வாங்குவதற்குக் கொழும்புக்கு வந்ததாகவும் கூறியிருந்தான். சரவணனை அகதிகள் முகாமில் சந்தித்துப் பேசியபோது தன்னு டன் பண்ணைக்கு வரும்படியும் கூறிஇருந்தான். அவனுக்குப் பக் கத்தில் இருந்து அவனுடன் பேசிக்கொண்டிருந்த மற்றவன் ஒரு வளாக மாணவன் வேட்டியுடன் இருந்த இளைஞன் இவனையும் அகதிகள் முகாமிலே:ே சந்தித்திருந்தான். சரவணன் கப்பலில் ஏறும்போது ஒரு சிறு பெட்டியுடன் ஏறி இருந்தான் அதைக் கப்பலின் முன்பகுதியிலுள்ள தளத்தில் ஒரு இடத்தில் வைத்து மீண்டும் மேற்பகுதிக்கு வந்திருந்தான். சரவணனுக்கு அங்கு ஏதோ பிரச்சினையை விவாதிக்க வேண்டும் போல் இருந்தது.
'வளாக மாணவர் எத்தனைபேர் இருக்கிறர்கள்" என்று கேட்டான்.
*சுமார் நாற்பது பேர்" என பதில் வந்தது
சரவணன் சிகரெட்டை அடிக்கடி வாயில் வைத்து இழுத்துக் கொண்டான் அங்குக் கீழ்த்தளத்தில் வைக்கப்பட்டிருந்த தனது பெட்டியைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கக் கூறி 'பண் ணைக்கு வேறு இளைஞர் , ளை யும் கூட்டிக்கொன்று போனல்
என்ன?' என்று கேட்டான்.
இதற்கு வேட்டியுடன் இருந்த இளைஞன் எந்தவித பதிலும், கூறவில்லை. இத்தோடு தங்கள் பேச்சை முடித்துக்கொண்டு இளை ஞர்கள் மேடையில் இருந்து இறங்கித் தளத்திற்கு வந்தனர்.
சரவணன் இரும்புக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனன். மற்ற இருவரும் கீழ்த்தளத்திற்கு இறங்குவதற்கு அத் தப் படிகளில் ஏறிக் கீழிறங்கினர்கள். அந்தக் கிடங்கு களின் மேற்பகுதியில் சுமார் மூன்றடி உயரமான இரும்புச் சுவர் பற்றி இருந்தது. இதில் கைகளை ஊன்றிக்கொண்டு. கீழே எல்லோரை யும் பார்க்கலாம். கீழ்த்தளத்தின் மத்தியில் மேடை இருந்தது. நீளப்போருக்கு இருந்த சட்டங்கள் மேல் பலகைத் தட்டுகளைப் பரப்பி இருந்தார்கள். இத்தட்டுக்கள் ஒன்றுக்கொன்று சரியாகப் பொருந்திக் கொண்டன இந்தப் பலகைத் தட்டுக்களைக் கழற் றலாம் கழற்றினுல் மேலும் சுமார் முப்பதடி ஆழத்தில் அடித் தளம் இருந்தது. ஆயினும் மேடையைச் சுற்றியிருந்த தளப் பகுதி நிரந்தரமாகவே பொருத்தப்பட்டிருந்தது. இதன்மேல் நட மாடுவதில் எவ்வித ஆபத்துமில்லை. ஆகவே பிரயாணிகள் எல்

அருளர்
லோரும் மேடையைச் சுற்றியுள்ள தளப்பகுதியில் பாய்களை விரித் துப் பெட்டிகளை வைத்துக் கொண்டார்கள். ஆங்காங்கே சாய் ந்து கொண்டுமிருந்தனர்.
அவர்கள் இருவரும் இறங்கி வந்து சுற்றிலும் ஒரு கண் ணுேட்டம் விட்டார்கள். சரவணனுடைய பெட்டி வைத்த இடத் திலேயே இருந்தது. இளைஞர்கள் மூவரும் எல்லா இடங்களையும் புரிந்துகொண்டவர்கள்போல் இருந்தனர். மற்ற முக்ங்களில் காணப்பட்ட ஏக்கம், கவலை, தவிப்பு எல்லாம் இந்த முகங்களில் இல்லை. ஒரு மூலையில் இரண்டு பாய்கள் கிடந்தன. வேட்டி அணிந்திருந்தவன் அதைத் தூக்கிக் கொண்டு வந்தான். மேடை யில் இரண்டையும் விரித்துக் சொண்டனர். அங்கிருந்த முகங் களே உற்றுப் பார்த்தனர். அகதிகள் முகாமில் பழக்கப்பட்டவர் கள் தான்.
மற்ற பக்கத்தில் படுத்துக்கொண்டிருந்த சற்று வயதானவர் தலையைத் தூக்கிய வண்ணம். 'தம்பிமாரே அதில படுக்காதே யுங்கடா, கீழே பெரிய பாதாளமாம். இதுக்குள்ள போனமாசம் ஒருவன் விழுந்து செத்தவனம்" என்ருர்,
பலகையை உற்று நோக்கினர்கள். நன்ருகப் பொருத்தப் பட்டிருந்தது. பாயில் சாய்ந்து படுத்துக்கொண்டார்கள். கையை மடித்துத் தலையணையாக வைத்துக்கொண்டார்கள்.
சரவணனும் இரும்புக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்து பழைய இடத்தில் படுத்துக் கொண்டான். லங்கா ராணியில் அநேகமாக எல்லாருமே உறங்கிக் கொண்டிருந்தனர்.

Page 13
2
காலை ஆறு மணிக்கே பலர் மேல்தளத்திற்கு வரத்தொடங் கிவிட்டிருந்தனர். காலைக் கடன்களை முடிப்பது பெரும் கஷ்ட மாகவே அமைந்திருந்தது. வெறும் மரச்சட்டங்களைப் பொருத்திச் சாக்குகளால் அடைத்துவிட்டிருந்தார்கள். ஆண்களுக்கு வலது பக்கம். பெண்களுக்கு இடது பக்கம். கதவுகளும் சாக்குகள் தான். வாளிகளை வைத்திருந்தார்கள். நிரந்தரமாகப் பொருத் தப்பட்டிருந்த கூடத்திற்குப் பெரிய வரிசையில் காத்து நின்றனர். முகம் கழுவுவதற்கும் கடல் நீர்தான். ஏதோ அலசிக்கொண் LisT TSGT.
டாக்டர் நற்குணம் கீழ்த்தளத்தில் நின்றுகொண்டிருந்தார். பலபேர் கடலில் முதல்முறையாகப் பிரயாணம் செய்வதாலும் இரவுச் சாப்பாடு இல்லாததாலும் களைப்புற்றுக் காணப்பட்ட னர். வழக்கமாக ஏற்படும் கடற் சோர்வு விசுவரூபம் எடுத்துப் பலரின் தலையை அமர்த்தி இருந்தது. வாந்தி எடுத்தனர். தலை சுற்றுகிறது என்றனர் டாக்டர் நற்குணம் முன்னெச்சரிக்கை யுடன் கொண்டு வந்திருந்த மாத்திரைகளை ஒவ்வொன்ருகக் கொடுத்து உட்கொள்ளும்படி வற்புறுத்திக்கொண்டிருந்தார். அங்குள்ளவர்களில் அவருக்குத் தெரிந்த முகங்கள் பல இருந்தன.
“ஹலோ! டாக்டர் எப்படி?’ என்று ஆச்சரியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வினவினுர், *
லங்கா ராணியில் சுமார் இருபது டாக்டர்கள் வெவ்வேறு பகுதிகளில் அகதிகளாகப் பிரயாணம் செய்து கொண்டிருந்தனர்.
"பரவாயில்லை, போகுது" என்று கூறினர் மற்றவர்.
ஒரு சாரத்தை உடுத்திக்கொண்டு கால்களை மடித் துக் கைகளைக் கோர்த்துப் பிடித்தவண்ணம் உட்கார்ந்துகொண்டிருந் தார். டாக்டர்களுக்கே உரித்தான முழுமையான முகபாவம்.

Ayrr? V
வயது நாற்பத்தைந்து இருக்கும். அவரது பக்கத்தில் அவர் மனைவி, குழந்தைகள், வேறு இரண்டு பெண்களும் இருந்தனர் வயது பதினறு, பதினெட்டு இருக்கும். கூந்தல் பின்னிவிட்டிருந் தனர். இழுத்துச் சீர்படுத்தாமல் இருந்தது. பொது நிறம். நல்ல அழகானவர்கள்போல இருந்தது. முகத்திலொரு பயம் மிகுந்த களைப்பு, கண்கள் கலங்கியபடியே இருந்தன. அவர்களைச் சற்றுக் 'கூர்ந்து நோக்கியபின் டாக்டர் நற்குணம்,
"ஏதும் வேண்டுமா?" என்று டாக்டரைப் பார்த்தவாறே கேட்டார்.
“தேவையில்லை" என்று டாக்டர் சற்று இழுத்தவாறே கூறினர்.
கொழும்பை அடுத்த பாணவிலையில் டாக்டர் திருமுருகன் கடந்த ஆறு ஆண்டுகளாகப் பிரதம வைத்திய அதிகாரியாகக் கடமை புரிந்தவர். இவருடன் மேலும் மூன்று தமிழ் டாக்டர் கள் கடமையாற்றிக்கொண்டிருந்தனர். ஒருவர் பெண். வயது இருபத்தாறு இருக்கும். மருந்தாளராகவும் இரு தமிழர் இருந் தனர். சிங்களவர் பெரும்பான்மையாக இருந்த அந்த இடத்தில் ஏராளமான நோயாளிகள் இவரிடம் வந்து போவதுண்டு. பெளத்த பிக்குகள், பெரும் முதலாளிகள், தேர்தலில் நிற்பவர் கள், அங்குத் திரியும் காடையர்கள், அந்தப் பகுதியிலிருந்த எல்லோரும் டாக்டரிடம் வந்து போகிறவர்கள் தான். அவர் களின் உடல் நோயை டாக்டரே முன்னின்று குணப்படுத்தி அனுப்பிவிடுவார்.
வியாழக்கிழமை ஆகஸ்டு பதினெட்டாம் தேதி நாட்டில் பயங்கரமான நிலை உருவாகியிருந்தது. இதை டாக்டர் உணரா மலில்லை. அங்கு வேலை பார்த்த சிங்களக் கங்காணிமார், எடு பிடிகள் டாக்டரின் உத்தரவுகளை முகத்தைச் சுளித்துச் செய்து முடித்தார்கள். தங்கள் கடமைகளைக்கூடப் பெரிதும் சிரமப்பட் டே செய்து முடித்தார்கள். தமிழரின் கீழ்ப் பணிபுரிகிருேம் என்பது அவர்களின் மனதைப் பிய்த்துப் பிடுங்கிக்கொண்டிருந் தது. அங்குப் பணியாற்றிய இரு சிங்கள டாக்டர்சளும் வேறு பதவிகளில் இருந்த மற்றவர்களும் தங்களுக்கும் இவற்றுக்கும் எவ்வித சம்பத்தமும் இல்லை என்பதுபோல பாசாங்கு செய்து கொண்டார்கள். தமிழர்களை விரட்டி அடித்தால் தங்களுக்கு அந்தப் பதவிகள் வரும் என்பதை அவர்கள் உணராமலில்லை.

Page 14
2 லங்காராணி
டாக்டர் மத்தியானம் வீட்டிற்குப் போனர். வீடு பக்கத் தில்தான். சாப்பாட்டு மேசையில் எதுவும் பிரமாதமாக இல்லை. மனைவி சுகதி சற்றுக் கலக்கம் அடைந்தவாறு இருந்தார். கதிரை யில் உட்கார்ந்து சாப்பாட்டை ஒரு நோட்டம் விட்டார்.
“என்னங்க கலவரம் வரப்போகுதாம். முனியாண்டி சொல் அலுருன். ஐம்பத்தெட்டாம் ஆண்டிலும் மோசமாக வந்தாலும் வருமாம். மீன் வாங்கப்போனவன் வாங்காமலே ஓடிவந்துட் டான்" என்று கூறி முடித்தார் அவரது மனைவி சுகதி.
டாக்டர் தனக்கே உரித்தான பாணியில் மனைவியின் கலக் கத்தைப் போக்குவதற்கு 'அவன் விசரன், அவன்ட கதைய விடு" என்று கையைக் கழுவிக்கொண்டே சாப்பிடத் தொடங் கினர். இரண்டு பிடி எடுத்து வாய்க்குள் வைத்திருப்பார். அந்த எண்ணம் அவரையே ஆட்கொள்வது போல இருந்தது. விழுங் குவது கஷ்டமா இருந்தது.
"முனியாண்டியைக் கூப்பிடு"
சுகதியின் கையைப் பிள்ளைகள் பிடித்துக்கொண்டு நின்றனர். முனியாண்டி சமையலறைப் பக்கம் நின்றவன் டாக்டர் கூறுவ தைக் கேடடுத் தானகவே வந்து முன்னுக்கு நின்றன். -
முனியாண்டிக்கு வயது அறுபது இருக்கும். உழைத்து ஓய்ந்த முகமும் உடம்பும். கட்டைக்காற்சட்டையும் சேட்டும் அணிந் திருந்தான். டாக்டரிடம் வந்து சேர்ந்து மூன்று வருடங்களா கின்றன. மலைநாட்டில் இருந்தவன். நுவரெலியாவில் ரோச்சைல் தோட்டத்தில் வேலைபார்த்தவன். ஒரு நாள் இரவு இவனை வானில் ஏற்றிக்கொண்டு வந்து கண்டிப்பகுதியில் உள்ள காட்டில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். இருட்டில் நடந்து கண்டிக்கு வந்து சேர்ந்தான்.
உழைப்பு ஒன்றுதான் இவனுக்குத் தெரிந்திருந்தது. எந்த வெயிலிலும் இவனுடைய தோல் எலும்போடு உறைந்துபோய் இருக்கும் எலும்பை உருக்கி உருக்கி வேலை செய்து கொண்டி ருப்பான். 'இலங்கையும் இந்தியாவும் ஒப்பந்தம் செய்திருக்காங்க அதால நீ வெளியேற வேண்டும்" என்று சிங்களக் கங்காணி கூறினன்.

Wogarrf
"ஆமாம் கருவாட்டு ஏற்றுமதி இறக் கு ம தி என்றல்லோ நினைச்சிக்கிட்டருந்தேன். இப்படியா சங்கதி’ என்று விழித்தான்
"ஏறு, எறு" என்று இழுத்துக்கொண்டு வந்து வானில் ஏற் றினர்கள். அவன் பிறந்து வளர்ந்ததெல்லாம் அதே தோட்டம் தான் பிரஜா உரிமை, பாஸ் போர்ட், விசா தூதரகம் இதெல் லாம் விளங்காத சொற்கள் அவனுக்கு. காங்கிரஸ் மாத்திரம் கொஞ்சம் தெரியும். மாதா மாதம் ஒரு ரூபாய் கொடுத்து வந் தான். கொடுக்காமலிருக்கலாமென்ருல் ‘வேலை போகும், சம்ப ளம் கிடையாது. விரட்டிப் போடுவார்கள்" என்று சொன்னர் கள். இதனுல் கொடுத்து வந்தான்.
வானில் இருந்து இறங்கும்போது உள்ளிருந்த சிங்களக் கங் காணி, முதுகில் ஒரு உதையும் விட்டான். கையில் இருந்தது பத்து ரூபாய்தான் இரண்டு கந்தைத்துணிகள், அதை வைத்துக் கொண்டு கொழும்புக்கு வந்துசேர்ந்துவிட்டான் இவனைப்போல் ஆயிரமாயிரம் பேர் தெருவில் நின்றர்கள் உழைப்பதற்கு இட மில்லை. பேணியை எடுத்துக் கொண்டு பிச்சை எடுக்கப் புறப்பட் டான் பாணவிலவில் ஒரு பணக்கார வீடு. படலைத் திறந்து கொண்டு உள்ளே போனன். ‘அம்மா.அம்மா." ஒரு சத்த மும் இல்லை. "வாள். வாள்."என்று இரண்டு பெரிய நாய்கள் தொடையைக் கிழித்துவிட்டன. நல்ல கடி, யாரோ வேலைக்கா ரன் வந்து கட்டுப்போட்டுவிட்டான். நொண்டி, நொண்டி வைத் தியசாலைக்கு வந்து சேர்ந்துவிட்டான். விருந்தையில் படுக்கவிட் டார்கள். அங்குதான் டாக்டர் திருமுருகன் முனியாண்டியைக் காண்கிறர்.
கொஞ்சம் குணமடைந்ததும், 'ஐயா சாமி" என்று ஒரே பிடியாகப் பிடித்துக் கொண்டான்.
டாக்டரும் அவனைப்பற்றிய விபரங்களை எல்லாம் நன்கு கேட்டு அறிந்துகொண்டு, "சரி சரி வா, வந்து நில்லு, சாப்பாடு தாரன்; அம்மா சொல்ற வேலைபு செய்."
அன்றிலிருந்து முனியாண்டி டாக்டரின் குடும்பத்துடன் ஒன்றி விட்டான். முனியாண்டிக்குச் சிங்களம் நன்கு தெரியும். சந்தை க்கு நாள்தோறும் அவனே போய் வந்தான்.
முனியாண்டியின் முகத்தை டாக்டர் நிமிர்ந்து பார்த்தார். முனியாண்டி கதைக்கத் தொடங்கினுன்

Page 15
14 லங்காராணி
"பெரிய மோசமா இருக்கும்போல இருக்கு சாமி. சந்தைப் பக்கம் போக முடியல கலு அல்பட்தான் கொஞ்சம் ஆட்கள் வச்சி கதைச்சுக்கிட்டு நிக்கிருன். மீனென்னும் விக்கல்ல. யாழ்ப் பாணத்துல இருந்து புத்தபிக்கவெட்டி மீன் பெட்டிக்குள்ள ஐஸ் போட்டு அனுப்பியிருக்காங்களாம். சிங்களப் பொண்ணுகளி வெட்டி பனமரத்துல தொங்கவிட்டிருக்காங்களாம். அங்க ஒரு சிங்களவனும் மிச்சம் இல்லியாம்" என்று பதற்றத்துடன் கூறி நிறுத்தினன்.
கலு அல்பட்டுக்கு நாற்பது வயதுஇருக்கும். கையில்லாதபெனி யன்போட்டுக்கொள்வான் சாராயத்தில் ஊறிப்போனமுகம் கண் அரைவாசி மூடியவாறே இருக்கும். வெள்ளைச்சாரத்தை உடுத்தி அகலமான கருப்பு பெல்ட் அணிந்திருப்பான் பச்சை குத்தியிருப் பான் ஒரு கையில் புத்தரின் முகமும் மறு கையில் கத்தி பிடித்த சிங்கமும் இருக்கும். மீன்சந்தையில் அவனை மிஞ்ச ஆட்கள் இல்லை அவனுக்கென சுமார் இருபது எடுபிடிகள் முனியாண்டி மீண்டும் தொடர்ந்தான்.
*அங்க நின்னவன்களெல்லாம் கத்திகள தூக்கிக்கிட்டு வெட்டுடா தமிழன இன்னு அங்கிட்டும் இங்கிட்டும் ஒடருங்க நம்மவங்கல்லாம் கடய இழுத்து மூடிட்டாங்க. கடைக்கு வந்தி ரெண்டு தமிழ்ப் பொண்ணுகல-யாரோ யாழ்ப்பாணத்தும் பொண்ணுக போல இருக்கு-சுத்திப் புடிச்சிட்டானுக, நகநட்டு தாலியெல்லாம் பறிச்சிப்போட்டு உட்டுட்டானுக, பெரிய மோசம் பண்ணுருக.
கலு அல்பட் தேர்தல் நாட்களில் மும்முரமாக நின்றவன் மந்திரிமாரையும் தெரியும், டாக்டர் கேட்டார்.
*பொலிஸ்காரங்க இல்லியா?"
“அவனுக என்ன சும்மா பாத்து சிரிச்சிகிட்டு நிக்கிழுணுக."
டாக்டர் கையை அலம்பிய வண்ணம் எழுந்தார். டெலி போனை எடுத்து மற்ற தமிழ் டாக்டர்களிடம் பேசினர். தமிழ் நோயாளிகளை வீட்டுக்குப் போகும்படி உத்தரவு போட்டார். மற்ற தமிழ் டாக்டர்களும் வந்து அவரது வீட்டில் கூடிவிட்
TT56.
இரவு எட்டு மணியாகிவிட்டது.

prio 13
பாணவில இந்துக் கோவில் சற்றுத் தொலைவில்தான் உள்ளது. அங்கிருந்த குருக்கள் சாமிநாத சர்மா, வயது ஐம்பது இருக்கும், வாட்டசாட்டமானவர். இருபது வருடங்களாக அங்கேயே இருக்கிறர். மனைவியும். இரண்டு பெண் பிள்ளைகளும். அவருக்கு உதவியாக அவருடைய தம்பி ஒருவர். கலவரம் தொடங்கிவிட் டதை ஊகித்துக்கொண்ட குருக்கள், தமது இரண்டு பெண்களை யும் கர்ப்பக்கிருகத்தில் விட்டுப் பெரிய பூட்டு போட்டுப் பூட்டி விட்டார். மாலை ஆகியதும் கலு அல்பட் தனது, வேலையைத் தொடங்கியிருந்தான்.
கலு அல்பட் தலைமையில் வந்த நூறு பேர் வீட்டையும் கோவிலையும் சுற்றி வளைத்துக்கொண்டார்கள். கையில் கத்தி, வாள்கள் இருந்தன. சிலபேர் பேணிகளில் பெட்ரோலை நிரப்பி வைத்துக்கொண்டு நின்றனர். குருக்கள் தன் தம்பியுடன் வெளி யே வந்தார். ஏதோ சமாதானம் சொல்லி அனுப்பலாம் என்ற எண்ணத்தோடு *என்ன வேணும்" என்று ஏதும் புரியாத மாதிரி வினவினுர்.
"கொல்லுடா" என்று கலு அல்பட் உரக்கக் கத்தினன். குருக்கள் இருவரும் சுருண்டு விழுந்தனர். இரத்தம் வெள்ளமாக ஒடியது. இருவரும் துடிதுடித்துச் செத்தனர். அங்கு நின்றவர்கள் இருவரையும் ஒன்ருக இழுத்துப்போட்டு பெட்ரோலை ஊற்றி நெருப்பு வைத்தனர். வீட்டுக்குள் புகுந்து எல்லாம் பொறுக்கி எடுத்தனர். கலு அல்பட் எல்லாம் தன்னுடைய பொருட்கள் மாதிரி அங்குமிங்கும் நின்று மேற்பார்வை செய்துகொண்டிருந் தான். அடுத்து கோவிலை நோக்கி ஒரு பகுதியினர் படை யெடுத்துப் போயினர். கர்ப்பக்கிருகம் பெரிய இரும்புப் பூட்டு போட்டுப் பூட்டப்பட்டிருந்தது. கலு அல்பட் வரும் வரைக்கும் மற்றவர்கள் பார்த்துக்கொண்டு நின்றனர். கலு அல்பட் வந் தான்.
“al68plugil56Tlerr” 6T6ärQyp6är.
ஒருவன் எங்கோ இருந்து பெரிய இரும்புக் கம்பியை எடுத் துக்கொண்டு வந்தான். இடையில் விட்டான். நாலுபேர் பிடித்து இழுத்தார்கள். பூட்டு உடைந்துவிட்டது. கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்கள். அங்கிருந்த பிள்ளையார் சிலை யிலிருந்த எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டார்கள். பின்னுல்

Page 16
6 லங்காராணி
நின்ற இரண்டு பெண்களையும் பிடித்துக்கொண்டார்கள். அவர் கள் போட்ட கூச்சல் ஏதும் அந்தக் காடையர்களுக்குக் கேட்க வில்லை.
பிள்ளையார் சிலையைக் கீழே தள்ளிவிட்டனர். சிலை உடைந்து சிதறியது. நினைவற்ற நிலையில் பெண்கள் கீழே கிடந்தனர். காடையர்கள் விட்டுவிட்டு அடுத்த தெருவிற்குப் போய்விட்டனர்.
சுமார் ஒருமணி நேரத்திற்குப் பின் பொலிசார் வந்தனர் இரு பெண்களையும் கொண்டுவந்து ஆஸ்பத்திரியில் போட்டு விட்டுப் போனர்கள்.
கலு அல்பட் அதே இடத்தைச் சேர்ந்தவனகையால் தமிழ ருடைய வீடுகளெல்லாம் தெரியும். அவனேடு வெளியிலிருந்து வந்த வேறு பலரும் சேர்ந்துகொண்டனர். தமிழர் வீடுகளுள் புகுந்து கொள்ளையடித்தனர். ஒருசில தமிழர்கள் பக்கத்திலுள்ள சிங்கள வீடுகளில் புகுந்து தஞ்சம் கேட்டனர். காடையர்கள் அந்த வீடுகளிலும் புகுந்து தமிழர்களை வெளியில் விடும்படி மிரட்டினர். சிறு குழந்தைகளையும் வெட்டித் துண்டுதுண்டாக் கினர். வீடுகள் தீப்பற்றி எரிந்தன. எவ்வித பாதுகாப்பும் இல் லாது தமிழர்கள் அங்குமிங்கும் ஓடினர்கள்.
டாக்டர் திருமுருகன் வீட்டில் மற்ற தமிழ் டாக்டர்களும் தங்கள் குடும்பங்களுடன் கூடியிருந்தனர். பாதுகாப்புக்கு ஒரு துப்பாக்கியும் இருந்தது. நகரின் பல பகுதிகள் தீயில் எரிந்தன. கடைகள் கொளுத்தப்பட்டு எரிந்தன. பெண்கள் இருவரையும் வீட்டுக்குக் கொண்டுவரும்படி உத்தரவு போட்டார். வீட்டில் மற்ற டாக்டர்களுடன் சேர்ந்து முதலுதவிகளை அளித்தார். பொலிசாருக்குப் போன் செய்தார். மனைவி சுகதி இயலுமான வற்றை ஒருசில பெட்டிகளில் போட்டுத் தயார் செய்துகொண்க t-Ts'
ஒரு மணித்தியாலத்தின்பின் பொலிசார் வந்தனர். இரண்டு கார்கள், ஒரு ஆம்புலன்ஸ் வண்டி புறப்படத் தயாராயின. இ பெண்களையும் ஏற்றிக்கொண்டார். முனியாண்டியும் ஏறி கொண்டான் பொலிஸ் ஜீப் முன் சென்றது. அதிலிருந்தவர் இயந்திரத் துப்பாக்கிகள் வைத்திருந்தனர். அதில் ஒருவர் தமிழர் கொழும்பின் சில பகுதிகளில் தமிழ்ப் பொலிசார் உயர் பதவி

Noyarł 17
களில் இருந்தார்கள். அவர்கள் கடமை ஆபத்தானதாகவே இருந்தது. அந்த ஒரு சிலரின் கையில் ஏராளமான தமிழர் களின் பாதுகாப்பு தங்கியிருந்தது. வண்டிகளில் ஏறி நேரே இந்துக் கல்லூரி அகதிகள் முகாமுக்கு வந்துவிட்டனர்.
டாக்டர் நற்குணம் டாக்டர் திருமுருகனிடம் விடைபெற்று அடுத்திருந்தவர்களிடம் கதைத்து அவர்களுக்கு மாத்தின்ரகளை வழங்கினர்.
லங்கா ராணியில் உள்ள அகதிகளில் அதிகமானவர் இந்தக் கிடங்கிலேயே இருந்தனர். கப்பலின் பின்பகுதியில் இருந்தத ஞல் படிகள் குறைவானதாகவும் சாய்ந்தும் இருந்தன. பெட்டி, கூடைகளை வைத்துக்கொண்டு சற்று நெருக்கமாகவே அமர்ந் திருந்தனர். காலை சூரிய வெளிச்சம் விழத்தொடங்கியிருந்தது. அகதிகள் முகாம்களில் பெண்களும் ஆண்களும் வெவ்வேருகவே இருந்தனர். இந்தக் கட்டுப்பாடுகள் இங்கு நீங்கி இருந்தன. சிலர் ஆங்காங்கே சுற்றி வளைத்துத் தங்கள் அனுபவங்களை விமர் சிப்பதில் ஈடுபட்டிருந்தனர். ஒருவர் கைகளிலும் தலையிலும் கட் டுப் போட்டிருந்தார். வயது இருபது இருக்கும். சாரத்தை உடுத்த வண்ணம் உட்கார்ந்திருந்தார். டாக்டர் நற்குணம் அவ ரைப் பரிசோதிப்பதில் ஈடுபட்டிருந்தார்.
கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவர் இரவில் வேலை பார்த்தார். யாழ்ப்பாணம் பூநகரிப் பகுதிய்ைச் சேர்ந்தவர். முன்னைய தபால் அமைச்சர் குமாரசூரியர் தேர்தலில் போட்டியிட்ட கிளிநொச்சித் தொகுதி யிலிருந்த பலருக்குத் தேர்தலுக்கு முன் தபால் பகுதியில் வேலை கொடுத்திருந்தார். மிளகாய்த் தோட்டத்தில் நல்ல வருமானம் இருந்தது. அரசாங்க உத்தியோகம் பார்க்க வெளிப்பட்டு ஆறு மாதங்களுக்கு முன்புதான் தலைமைத் தபால் அலுவலகத்தில் சேர்ந்தார். அன்று வழக்கம் போல தபால் பிரிப்பதில் ஈடுபட்டி ருந்தார். கலவரம் தொடங்கியிருந்தும் அடுத்த நாள் சம்பளம் எடுத்துக்கொண்டு வேலைக்கு முழுக்குப்போடலாம் என்ற நோக் கத்தோடு அன்று வேலைக்கு வந்திருந்தார்.
மேலதிகாரி சிவாவும் வேறு இருவரும் அவரோடு வேலையில் யில் ஈடுபட்டிருந்தனர். வெளிச்சம் திடீரென நின்று ஜிட்டது. எங்கும் ஒரே இருள். மெதுவாகப்போய் அங்கிருந்த unnrfl
S). 3

Page 17
18 லங்காராணி
யின் பின்புறமாக ஒளிந்து கொண்டார்கள். டோர்ச் லைற்றுடன் பத்து பேர் நுழைந்தார்கள் "எங்கே சிவார்" என்று எல்லா இடமும் தேடி கடைசியில் கண்டுபிடித்து விட்டார்கள். சிவா தா தலைமை அதிகாரி, வயது ஐம்பது இருக்கும். சற்று ஒல்லி யானவர். கண்ணுடி அணிந்திருப்பார். தலைமயிரைப் பிடித்துக் கீழே தள்ளினர்கள். நால்வருக்கும் அடி, உதை. உடுத்தியிருந்த உடைகளையும் கழற்றிக்கொண்டு போங்கடா யாழ்ப்பாணத்துக்கு என்று போய் விட்டார்கள்,
சுமார் அரைமணி நேரத்திற்குப்பின் வெளிச்சம் வந்தது. . பொலிசார் வந்தனர். இயந்திரத் துப்பாக்கிகளைக் கையில் வைத் திருத்தனர். ஒருவர் மட்டுமே கையில் எதுவும் இல்லாமல் நின்று கொண்டிருந்தார். அவரது முகத்தை உற்றுப்பார்க்கும்பொழுது அவர் ஒரு தமிழர் என்பது நன்கு தெரிந்தது. பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆட்களைத் தெரியுமா என்று கேட்டனர்.
*தெரியும்" என்று பதிலளித்தார். எல்லோரும் அங்கு வேலை செய்யும் பியுன்மார்தான்.
"எப்படித் தெரியும் இருட்டில்" என்று Gurra6Fmri “ Gasul டனர்.
அதற்கு அவரால் விடை கூற முடியவில்லை.
அந்தத் தமிழ்ப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒரு மூலையில் நின்றுகொண்டிருந்தார். அவரே பயத்தால் நடுங்கிக் கொண்டி ருப்பது போலத் தெரிந்தது. பின்பு மூவரையும் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டனர்.
'டாக்டர் கப்பல் எப்ப யாழ்ப்பாணம் போகும்" என்று
வாலிபன் வினவினன்.
*நாளைக்குப் பின்னேரம் போகும். என்ன அவசரம்"
"இல்ல டாக்டர் ஊரில பேக்கறியில் நாலஞ்சு சிங்களவர் இருக் கிருங்க. கெதியாப்போனத்தான் ஒருக்காத் தட்டிப்பார்க்கலாம்."
வாலிபனின் நகைச்சுவை பலரைச் சிரிக்க வைத்தது.
'அவன்களெல்லாம் பிளேனில இப்ப வீட்டபோய் சேர்ந்தி ருப்பாங்க என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் கூறிவைத்தது.

Gert 19
யாழ்ப்பாணத்தில் சம்பத்ரிசியார் கல்லூரிக் களி யாட்ட விழாவில் அனுமதிச் சீட்டு இல்லாமல் நுழைய முனைந்த பொலீ சாரும் அங்கு நின்ற காவலாளிகளும் மோதிக்கொண்டனர். அடு ந்த நாள் யாழ்ப்பாணத்தில் வேறு ஒரு பகுதியில் மூன்று வாலி பர்களைப் பொலிசார் சோதனை இடுவதற்கு மறித்தனர். அவர் களில் ஒருவன் திடீரென சுழல் துப்பாக்கியை எடுத்துப் பொலீ சாரைச் சுட்டான். இதனல் பண்டா என்ற சிங்களப் பொலி சார் காயம் அடைந்து விட்டார் வாலிபர்கள் ஒடித்தப்பி விட் டனர். நிலைமை மோசமடையத் தொடங்கியது.
இலங்கைப் பொலிஸ் படையினரில் மூன்று வீதத்தினரே தமிழர்கள். இருபது வருடங்களுக்கு முன் முப்பது சதவிகிதம் தமிழராக இருந்தது" ஆங்கிலமோ தமிழா பெரிய தவர்களே இப்போது அதிகமாகப் பொலிசில் சேர்த்துக் கொள்ளப்பட்ட69 ரீர். சிங்களமே கரும மொழியாக இருந்ததனல் அங்கிருந்த ஒரு சில தமிழ்ப்பொலிசார் கூட தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரங் களைப் பிரயோகிக்க முடியாமல் திண்டாடிக்கொண்டிருந்தனர். தமிழரானபடியால் உயர்பதவிகள் மறுக்கப்பட்ட நிலையில் பலர் இருந்தனர். தனிச் சிங்களப் போக்கைக் கடைப்பிடித்த அரசுக் குத் தமிழர்கள் பல முறைகளில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித் துச் சாத்வீகப் போராட்டங்களில் ஈடுபட்டனர் இப்படிப் பாத கமான அரசாங்கத்தின் போக்கைப் பாதுகாக்கும் கடமை இந் தப் பொலிசார் உடையதாகவே இருந்தது. ஒருசில சமயங்களில் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டனர். தமிழ்ப பகுதிகளில் இந்தப் பொலிசாரை மக்கள் வெறுக்கத் தொடங்கினர். இதற்கு ஈடுகொடுப்பதாகவே இவர்களும் நடந்து கெ" ண்டனர். பொது . மக்களின் பாதுகாப்பு, சமுதாய ஒழுங்கை நிலை நாட்டுதல் அமை தியைப் பாதுகாத்தல் போன்ற பணிகளைச் செய்வதற்க அவசிய மான மக்கள் நம் பிக்கை அற்றுப்போனதால் தமிழ்ப் பகுதிகளில் பொலிசார் தங்கள் கடமைகளைச் செய்வதில் பல சிக்கல்களை எதிர்நோக்கிய வண்ணம் இருந்தனர். சட்டத்தையும் ஒழுங்கை யும் பாதுகாக்க வேண்டிய இடங்களில் இவர்களுடைய வருகை பதட்ட நிலையையும் குழப்பங்களையும் உருவாக்கியது.
1972இல் பதவிக்கு வந்த அரசாங்கம் குடியரசு என்ற Curt ri வையில் மேலும் பல தமிழ் ஒழிப்புச் சட்டங்களை உருவாக்கியது. பொறுமை இழந்த இளைஞர்கள் இதுகாறும் தமிழ்த் தலைவர்கள் கடைப்பிடித்து வந்த சாத்வீகப் போராட்ட முறைகளுக்கு மாறு:

Page 18
20 லங்காராணி
பட்ட வன்முறை நடவடிக்கைகளில் இறங்கினர். தமிழ் இளைஞர் களப் பிடித்து சிறையிலடைத்தனர். மோதல்கள் ஏற்பட்டன. இகளஞர்கள் இந்த விசாரணையில் ஈடுபட்ட தமிழ்ப் பொலிசார் ஒருசிலரையும் சுட்டுக்கொன்று விட்டார்கள். இதனல் பொலிசார் மிகவும் பதட்டம் அடைந்த நிலையிலேயே கடமையாற்றி வந்த னர். அரசாங்கம் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்த அரசாங்க உத்தியோகம், குடியேற்றம் என்ற போர்வையில் மேலும் பல சிங்களவரைத் தமிழ்ப் பகுதியில் குடியேற்றியது. புதிதாகத் தொடங்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் ஏராள மான சிங்கள மாணவர்கள் இருந்தனர்.
பொலிசாரை இளைஞன் சுட்டுவிட்டு ஓடியதும் அங்கு தெரு வில் போய்வருபவர்களை பொலிசார் தாக்கத் தொடங்குகிருர்கள். இரவு யாழ்ப்பாணத்தில் உள்ள பழையசந்தையைத் தீ வைத்துக் கொழுத்தி விடுகிருர்கள். காலையில் அதைப் பார்வையிட மக்கள் திரள்கிறர்கள். தலைவர்கள் வருகிருர்கள். தலைவர்களைப் பொலி சார் தாக்குகிருர்கள். மக்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய் கிருர்கள். நால்வர் இறந்து போகிறர்கள். தமிழ் மக்கள் கொதித் தெழுகிறர்கள்.
எங்கும் பதட்டநிலை உருவாகிறது. பலத்த பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்திலிருந்த சிங் கள வர் களைத் தென்னிலங்கைக்கு அனுப்பி விடுகிருர்கள். வதந்திகள் பரவுகின்றன. யாழ்ப்பாணத் தில் கடமையாற்றும் பொலிசார் இதை முன்னின்று செய்கின் றனர். தென்னிலங்கைக்குத் தொலைபேசி மூலம் பொய்யான செய் திகளைக் கொடுக்கிறர்கள்.
*யாழ்ப்பாணத்தில் புத்த பிக்குகள் கொல்லப்படுகிருர்கள். விகாரைகள் தகர்க்கப்படுகின்றன. சிங்கள மாணவிகள் கற்பழிக் கப்பட்டுக் கொல்லப்படுகிருர்கள் இங்கு ஒரு சிங்களவனும் மிச்ச மில்லை. நீங்கள் ஏன் பார்த்துக் கொண்டு இருக்கின்றீர்கள்" என்று கேட்டுச் செய்தி அனுப்புகின்றனர்.
கலவரம் பரவத் தொடங்குகிறது. பாராளுமன்றத்தில் யாழ்ப் பாணத்தில் நடந்தவற்றை அமிர்தலிங்கம் விளக்கிக் கூறினர்
*இதற்கெல்லாம் நீங்கள் தான் காரணம். போர் வேண்டு மானுல் டோர், சமாதானம் வேண்டுமானுல் சமாதானம் என்று

vegard Z
நாட்டின் பிரதமர் ஜெயவர்த்தனு தமிழ்த் தலைவர்களைப் பார்த்து சவால் விடுகிருர். இதைத்தான் மக்கள் கூறுவார்கள் என்று பாமர சிங்கள மக்களையும் இழுத்து விடுகிருர்.
எங்கும் பயங்கர மோதல் ஏற்படுகிறது. நாடு காடையரின் கையில் சிக்கிச் சின்னபின்னப்பட்டுத் தீப்பிடித்து எரிகிறது.

Page 19
3
காலை ஏழு மணியாகிவிட்டது. மின்சார அடுப்புகளை தூண்டி விட்டு ஒரு மணித்தியாலமாகியும் சூடு ஏறியதாகத் தெரிய வில்லை இரண்டு பெரிய பாத்திரங்களில் நீர் நிரப்பி வைக்கப் பட்டிருந்தது. அங்கு வந்த உதவியாள் அடுப்பு சூடேற நான்கு மணித்தியாலங்கள் செல்லுபெனக் கூறிவிட்டு போய்விட டான் இரண்டு கத்திகளே இருந்தன. காலை உணவுக்குப் பாணை வெட் டிக்கொண்டிருந்தார்கள் குமார் வேறு சில தொண்டர்களையும் அங்கு சேர்த்துவிட்டிருந்தான். சமையல் அறை அளவில் மிக வும் சிறியதாகவே இருந்தது. இதனல் எவரும் உள்ளே புகாத வாறு கதவைப் பூட்டிவைத்திருந்தனர். இளைஞர்களும் சுமார் ஆ 'ரத்து இருநூறு பேருக்குக் காலையுணவைத் தயார் செய்ய வேண்டி இருந்ததால், சற்றுச் சுறுசுறுப்பாகவே வேலையில் ஈடு பட்டிருந்தனர் பலர் அங்கு எட்டிப்பார்த்தவண்ணம் இருந்த னர் குழந்தைகளுக்குப் பால் கரைக்க சுடுநீர் தேவையானதாக இருந்தது. அடுப்பு சிறிது சிறிதாக சூடேறிக் கொண்டிருந்தது பெரிய பாத்திரங்களில் இருந்த நீரைச் சிறிய பாத்திரங்களில் ஊற்றி வைத்தனர்.
கப்பலில் சமையல் தெரிந்தவர்களும் இருந்தார்கள். அவர் களையும், அழைத்து இந்தப்பொறுப்பை அவர்களிடமும் ஒப்ப டைப்பது நல்லதுபோல குமாருக்குத் தோன்றியது குமார் தேவ னிடம் காலை உணவைக் கொடுக்கத் தொடங்கும் படிக்கூறினன். தேவனும் அங்கு தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பாணை எடுத்துக்கொண்டு, கதவைத் திறந்து வெளியேறினன்.
லங்கா ராணியின் மேல்தளத்தில் பலர் நின்று கொண்டிருந் னர். கப்பல் கரையை ஒட்டியே சிறு தொலைவில் சென்று கொண் டிருந்தது. தூரத்தில் ஈழப் (ாக உயரமாகத் தெரிந்த பகுதி களைக் 'கதிர்காமம்' எனச் சிலர் கைகாட்டிக் கதைத்துக் கொண் டிருந்தனர்,

Awarto 23.
கதிர்காமத்தில் தமிழர்கள் வழிபடும் கந் தன் குடி இருக்கின் மூன். இக்கோயிலைச் சுறறி ஏராளமான தமிழர்கள் குடியேறி இருந்தனர். அதே இடங்களைச் சிங்களப் பிரதேசம் ஆக்குவதில் அரசாங்கம் படா தபாடுபட்டு வருகினறது கலவரத்தில் சுமார் மாறு குடும்பங்கள் அங்கிருந்து விரட்டப்பட்டன அவர்கள் அனை வரும் கரையோரமாக உள்ள பாதையால் நடந்து பொத்து விலுக்கு வந்துகொண்டிருந்தனர் இதைக் கப்புலில் இருந்த யாரும் அறிந்திருக்கவில்லை. இந்த ஏழு து மைலக்ளையும் கடந்து முடிக்க ஐந்து நாட்கள் ஆகி இருந்தன
லங்கா ராணியில் பிரயாணம் செய்பவர்களில் சிலர் இப்படி யான பிரயாணத்தை இரண்டாவது தடவையாக செய கிருர் கள். முதல் பிரயாணம் ஐம்பத்தெட்டாம் ஆண்டில் இதே சூழ் நிலையில் அந்த நாட்களில் இலங்கை அரசாங்கத்திடம் சொந் தக் கப்பல்கள் இருக்கவில்லை. அதனல் வெனிநாடுகளில் இருந்து வந்து கொழும்பு துறைமுகத்தில் தங்கி ' ருந்த கப்பல்சளை ஏற் பாடு செய்திருந்தனர். அப்போது எஸ். டபிள்யூ ஆர் டி. பண் டாரநாயக்கர் பிரதமராக இருந்தார் சிங்களம் மட்டுமே ஒரே ஆட்சிமொழியென பிரகடனம் செய்தார். அப்போது தமிழ்த் தலைவர்கள் வவுனியா, வில் ‘சமஷ்டி” கேட்டு மாநாடு கூட்டி யிருந்தனர். இது தமிழ்ப் பிரதேச எல்லையில் உள்ளது. இதற்கு மட்டக்களப்பில் இருந்து வந்த பிரதிநிதிகள் சிங்களப் பகுதி களில் வைத்துத் தாக்கப்பட்டார்கள் தமிழர்களும் எகிர்க் தாக் குதல் நடத்தினர்கள்: கலவரம் நாடு முழுவதும் பரவியது. கொழும்பு பகுதியிலும், தமிழ்ப்பகுதிகளில் உள்ள சிங்களக் குடி யேற்ாப் பகுதிகளிலும் தமிழர்கள் பலத்த சேதத்துக்கு ஆளா னர்கள். நாட்டில் அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப் படுத் தாமல் பிரதமர் வாளா இருந்தார் சுமார் நூற்றைம்பது தமி ழர்கள் இறந்துபோயினர். இந்திய அரசும் தலையிட்டது பின்பு கலவரம் ஓய்ந்துவிட்டது. கொழும்பிலுள்ள தமிழ்ப் பிரமுகர்கள் பிரதமரை அணுகி கப்பலை ஏற்பாடு செய்தார்கள்.
இலங்கையிலுள்ள தமிழர்களில் இருபகுதியினர் உள்ளனர் ஒன்று பாரம்பரிய குடியினர். இவர்கள் இலங்கையின் வடக்கு கிழக்குமாகாணங்களில் வாழ்கின்றர்கள் ஆயிரமாயிரம் ஆண்டு களாக இலங்கையிலேயே இருக்கின்ருர்கள் மற்றவர்கள் குடி யேற்றப்பட்ட தமிழர்கள். ஆங்கிலேய ஆட்சியில் தேயிலைத் தோட்டங்களில் வேலை பார்க்க தமிழ் நாட்டில் இருந்து கொண்டு

Page 20
24 லங்காராணி
வரப்பட்டவர்கள். இலங்கையின் குடித்தொகையில் மூன்றில் லொரு பகுதியினர் தமிழர்கள். மலையகத் தமிழர்களின் ஒரு பகுதியினரை 1964ல் செய்யப்பட்ட சிறிமா - சாஸ்திரி ஒப்பந் தப்படி இந்தியாவிற்கே மீண்டும் அனுட்புகிருர்கள் 1958ம் ஆண் டின் கலவரம் மலையகத்தை அதிகம் பாதிக்கவில்லை இம்முறை மலையகம் பலத்த சேதத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தது. ஏராள மாஞேர் உயிரிழந்தனர். சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அர சாங்கம் தோட்டங்களைத் தேசியமயமாக்குதல் என்ற போர்வை யில் பல தமிழ்த் தொழிலாளர்களைத் தோட்டத்தில் இருந்து வெளியேற்றியது. இவர்களில் பலர் கொழும்பைச்சுற்றி குடி யேறி சில்லறைத் தொழில்களில் ஈடுபட்டிருந்தனர். இக்கல வரத்தினுல் இவர்கள் அனைவரும் அகதிகள் முகாமில் குடிபுகுந்து கொண்டனர். இவர்கள் அடுத்து எங்கு போவது என்பது பெரிய கேள்வியாக இருந்தது.
சரவணனும் நண்பர்களும் மீண்டும் கப்பல் அணியத்தில் கூடிப் பேசிக்கொண்டனர். காலையில் வளாக மாணவர் சிலரைத் தெரிந்து பார்த்திருக்கின்றர்கள் அவர்களைச் சேர்த்துக் கொள் வதில் எவ்வித தடங்கலும் இருக்காது என்று மற்ற இருவரும் அபிப்பிராயம் கூறினர். சரவணன் காலையிலேயே சகல கிடங்கு களிலும் இறங்கி நோட்டம் விட்டிருந்தான்.
கொழும்பிலுள்ள தமிழர்கள் சிலர் துப்பாக்கிகள் வைத்தி ருந்தனர். தற்பாதுகாப்பு நிமித்தம் அரசாங்க உத்தரவுடன் அதை வைத்திருந்தனர். கலவரத்தின்போது காடையர் கூட்டம் கூட்டமாகவே வந்தனர். ஒருசிலர் துப்பாக்கிப் பிரயோகமும் செய்தனர். அப்படிக் செய்தவர்கள் ஒட்டமாகவே அகதிகள் முகாமுக்கு வந்தனர். சுழல் துப்பாக்கிகளை இடுப்பில் சொருகிய வண்ணம் குடும்ப சகிதம் வந்திருந்தவர்களும் உண்டு. சரவணன் அகதிகள் முகாமுக்கு வந்தவர்களிடம் இத் துப்பாக்கிகளைக் கேட் டதுண்டு. என்ன விபரீதம் நடக்குமோ என்று பயந்து கொடுப் பதற்கு எல்லோரும் மறுத்து விட்டனர். யார் யாரிடம் இவை உள்ளது என்பது ஓரளவுக்குச் சரவணனுக்குத் தெரிந்திருந்தது. சரவணன் சற்று சிந்தித்து விட்டு நிதானமாக விட்டு விட்டுக் கூறினன். “கப்பலுக்குள் இருக்கிறதெல்லாம் எடுக்க வேண்டும். நாங்கள் போனுல் சரிவராது."
சற்று மெளனமாய் இருந்து விட்டு. மீண்டும் கூறினன். "வேறுயாரையும் விட வேண்டும்."

adyatt 29
சரவணன் அந்த இடத்தைவிட்டு எழுந்து மேல் தளத்திற்கு ாடந்து சென்ருன். இதே நேரத்தில் குமாரும் சமையலறைக் கத வைத் திறந்துகொண்டு வெளியே வந்து கப்டனின் இருப்பிடத்தை நோக்கிப் படிகளில் ஏறினன். இதைக் கண்ட சரவணன் வேக
மாக வந்து படிகளில் ஏறிக்கொண்டு ‘எங்கே? என்று கேள்வி கயைக் கிளப்பினன்.
"கப்டன் ஒருக்கா வரட்டாம்" என்னென்று தெரியவில்லை. சரவணன குமாரை முந்திக்கொண்டு அடுத்த தளத்திற்கு ஏறினன்
மேலே சென்றதும் சரவணன் இடங்களை நோட்டம் விட் டான். இப்பகுதியில் தங்குவதற்கென பல அறைகள் இருந்தன. ஓடையால் இடைவெளியில் சென்றதும் ஒரு சிறிய கூடமும், மேல் மாடிக்குச் செல்வதற்குப் படிகளும் இருந்தன. எதிர்த்தாற்போல் காணப்பட்ட இரண்டு அறைகள் ஒன்றில் கப்டன் என்று ஆங்கி லத்தில் எழுதப்பட்டிருந்தது. அதைத் திறந்து பார்த்தனர், அங் குக் கப்டனைக் காணவில்லை. அடுத்த அறையையும் திறந்து பார்த் தனர். அது ஒரு சிறிய “பார்" அதில் ஒருவர் இருந்து ஏதோ பானம் அருந்திக்கொண்டிருந்தார். கப்டன் மேலே இருக்கின்றர் என இளைஞர்களுக்குக் காட்டி விட்டார். இருவரும் படிகளில் ஏறி மேலே சென்றனர். அங்கு ஒரு கூடம். எல்வோரும் வெள்ளை அங்கி அணிந்திருக்கின்றனர். பெரியமேசையில் கிழக்கிலங்கையின் படம் தெரிந்தது. அதில் ஒருவர் வட்டாரியை வைத்துக்கொண்டு அளந்துகொண்டிருந்தார். அவர் கப்பலின் பாதையை நிர்ணயிப் பவர் என்பது தெரிந்தது. அந்த அறையில் நின்றவண்ணம் நோட் டம் விட்டனர். எவரும் கவனிப்பதாகத் தெரியவில்லை. அந்த அறைக்கு முன்னல் இன்னெரு கூடம் இருந்தது. இதில் திசையறி கருவி வைக்கப்பட்டுத் தூண் மீது ஒரு பேழை பொருத்தப்பட் டிருந்தது. இதை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றர். இந்த அறையில் கண்ணுடியினுரடாக நோட்டம் விட்டான் சரவணன், சுக்கான் பிடிக்கும் வளையமும் இதில் தான் இருந்தது.
இந்த அறையின் இடதுபக்க மூலையில் கப்டன் நின்று தொலை பேசியில் பேசிக்கொண்டிருந்தார். இளைஞர்கள் நின்று கப்டனப் பார்த்துக்கொண்டிருந்தனர். கப்டன் பேச்சை முடிப்பதாகத் தெரி யவில்லை. இந்த அறையின் இடது பக்கத்தில் கதவு இருந்தது. அதனூடாக இளைஞர்கள் இருவரும் வந்து கப்பலை நோட்டம் விட்டனர். இந்த இடம் பார்வை இடுவதற்காகவே செய்யப்பட்
(R), 4

Page 21
26 ல்ங்காராணி
டிருந்தது. சுற்றி வர இரும்புக்கம்பியால் பாதுகாக்கப்பட்டிருந் தது. இதில் இன்னெருவரும் நின்றுகொண்டிருந்தார். அமைதியா னவர், இளைஞர் வயது இருபத்தைந்து இருக்கும். வெள்ளைக்காற் சட்டையும் நீலசேட்டும் அணிந்திருந்தார். வேலை முடிந்து நிற்ப வர் போல் தெரிந்தது. சரவணன் சற்று உற்று நோக்கவே புன் னகை புரிந்த வண்ணம் இருவரையும் நெருங்கி, "நீங்கள் யாழ்ப் பாணத்தில் எந்த இடம்" என்று தமிழில் தொடங்கினர்.
“சரவணனும் மிகுந்த மகிழ்ச்சியுடன், “ஏன் என்ன விச யம்?" என்ருன்.
'இல்லை ஒருகடிதம் கொடுத்துவிட வேண்டும்."
'எழுதித்தாரும் கொடுக்கலாம்" என்று கூறிவிட்டு கப்பலைப் பற்றி வேறு விசயங்களைக் கேட்கத் தொடங்கினன் சரவணன், இவர் சுக்கான் பிடிப்பவர் என்பதும், தொடக்க காலத்தில் இருந்தே பணி புரிபவர் என்பதும், கப்பலைச் செலுத்துவது பற்றி ஓரளவு தெரிந்திருக்கின்றது என்பதும், அவரது பேச்சில் இருந்து தெளிவாகியது. இந்தக் கப்பலில் நாற்பது சிப்பந்திகள், அதிலும் அதிகாரிகள் என்ற தோரணையில் பதினைந்து பேர் இருக்கிருர்கள். இதில் இவர் ஒருவர் தான் தமிழர். அநேகமாக எல்லோரும் கடற்படையில் இருந்து கப்பல் வாங்கியதும் இதில் நியமிக்கப்பப் டிருந்தனர். தான் இரவில் வேலை பார்ப்பவர் என்று மேலும் அவர் சொன்னர்.
கப்டன் பேச்சை முடிக்கவே குமார் உள்ளே சென்று "என்ன கூப்பிட்டீங்களாமே" என்று ஆங்கிலத்தில் வினவினன்.
**ஆம்! நேற்று உங்களுக்குக் கூற மறந்துவிட்டேன். நாங்கள் கழிவிடங்களைத் துப்பரவு செய்ய யாரையும் அழைத்து வரவில்லை. நீங்களே யாரையும் பிடித்துச் செய்யவேண்டும். ஏதா வது உதவி வேண்டுமானுல் கூறவும்" என்று கூறி அவரின் ஆமோதிப்பை எதிர்பார்த்து நின்றர்.
*குமாரும் நாங்களும் இதைப்பற்றிச் சிந்தித்தோம். யாரை யாவது தேடிப்பிடிக்கலாம்" என்று கூறிவிட்டு விடைபெற்று அத் கிருந்து வெளியேறினன். சரவணனும் பின்தொடரந்து படிகளில் இறங்கி ராணியைச் சந்திக்க இரண்டாவது தளத்திற்குச் சென் முன், ராணி மலையகத்தைச் சேர்ந்தவள்.

அருளர் 27
இலங்கை சுதந்திரம் அடைந்தபின் ஏற்பட்ட தேர்தலில் பஜல பகத் தமிழர்கள் பல இடது சாரிகளை வெற்றிபெறச் செய்து அனுப்பி இருந்தார்கள். அப்போது இந்த யூ. என். பி. அரசாங் கம் இதனைப் பொறுக்க முடியாமல் மலையகத் தமிழர்களின் வாக் குரிமையைப் பறித்துவிட்ட்து. இவர்கள் தமிழர்களாகவும் இருந் சிதகுல் இந்தியாவில் இருந்து வந்தவர்களை இந்தியாவுக்கே அனு ப்பவேண்டும் என்ற கோஷமும் எழுப்பப்பட்டது. சிங்கள மக்க ளின் ஆதரவு அற்றுப்போய்விடுமென்று இடதுசாரிகளும் வாயை முடிக்கொன்டு இருந்து விட்டனர். இதே அரசாங்கத்தில் மந்திரி பாக இருந்த ஜீ. ஜீ. பொன்னம்பலம் இந்த மசோதாவை ஆத ரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானர். இவர் யாழ்ப்பாண பிரதிநிதியாக பாராளுமன்றத்தில் இருந்தார். இவையெல்லாம் இலங்கை அரசியல் தேசிய ரீதியிலான அமைப்பை மாற்றி இன அடிப்படையில் ஒரு போக்கை உருவாக்கி இருந்தன. அரசாங் கத்தின் தனிச் சிங்களப் போக்கை எதிர்த்து எஸ். ஜே. வி. செய்வநாயகம் தமிழ் மக்களின் பிரச்சினையைப் பிரதிபலிக்கக் கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தோற்றுவித்தார். இதன் பின்பு நடந்த தேர்தல்களிலெல்லாம் சிங்களக் கட்சிகளுக்கிடை யில் யார் அதிகமாக இனவெறிப்போக்கைக் கடைப்பிடிக்கின்றர் கள் என்பதே போட்டி இந்தப் போக்கின் அடிப்படையில் அமைந் ததே. இலங்கை ஒரு தனிச்சிங்கள பெளத்த நாடாக ஆக்கவேண் டுமென்பது. தமிழர்களை எல்லாம் இந்தியாவுக்கு அடித்து விரட் டுவோம். தமிழர்களின் தோலை உரிப்போம். தமிழ் மொழிக்கு இங்கு இடமில்லை. தமிழர்கள் நாட்டைஅபகரித்து விட்டார்கள். என்று கூறுவதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற்ருர்கள். இந்தக் கொள்கைகளின் கீழ் பதவிக்கு வந்தவர்கள் சிங்களத்தை நாட் டின் தேசிய மொழியாகவும் அரசகரும மொழியாகவும். ஆக்கி ஞர்கள். தமிழர்களின் பாரம்பரிய பூமியாகிய வடக்கு, கிழக்குப் பகுதிகளில் திட்டமிட்டு ஏராளமான சிங்களவர்களைக் குடியேற் ரிரூர்கள். மலையகத்தில் தொழிலாளர்களைத் தோட்டங்களில் இருந்து வெளியேற்றினர்கள்.
இவ்வாறு வெளியேற்றிய தொழிலாளர்களில் பலர் வவுனியா போன்ற தமிழ்ப்பிரதேசங்களில் பல இன்னல்களுக்கு மத்தியில் சென்று குடியேறினர். சிங்களவர் குடியேற்றங்களால் தமிழ்ப் பிர தேசங்கள் அபகரிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தினுல் தமி மர்கள் சென்று குடியேறுவதை அரசாங்கம் விரும்பவில்லை. சுல

Page 22
28 லங்காராணி
வரத்தில்ை சிங்களப்பகுதிகளில் இருந்து விரட்டப்பட்டவர்கள் பலர். டங்கு போவதென்று தெரியாத நிலையில் அகதிகள் முகா ம்களில் இருந்தனர் அரசாங்கமோ இவர்களைப் பழைய இடத் திற்கே போக வேண்டுமெனக் கட்டளையிட்டது இந் நிலையில் தொண்டர்கள் எல்லோரையும் வட பகுதியில் சென்று குடியே றும்படி ஆலோசனை கூறினர்கள். இப்படி வந்த பல குடும்பங்கள்) லங்கா ராணியில் இருந்தன. ராணியின் குடும்பமும் அவற்றுள் მე2307.pl.
ராணி மலையகத்தில் பிறந்தவள். தோட்ட மக்களின் இன் னல்களை உணர்ந்திருந்தாள். அகதிகள் முகாமில் பெண்கள் பகு தியில் தொண்டுசெய்து வந்ததால் சரவணனுக்கு முன்பே அஷ் ளைத் தெரிந்திருந்தது.
சரவணன் கீழே இறங்கி ராணியின் இருப்பிடத்துக்குச் சென் முன். அவளின் பக்கத்தில் தாய் தகப்பனும் அமர்ந்திருந்தனர்
** 6rgrøðr? அமைதியாக உட்காந்திருக்கிறீங்க" என்றவாறே சரவணன் பேச்சைத் தொடங்கினன்.
"ஏன்? மேல ஏதும் வேலையிருக்கின்றதா?" புன்னகையுடன் வினவினுள் ராணி.
**ஆமாம் மேல வாlங்களா?" என்று தலையை ஒருவாறு அசைத்தான்.
"ஓ அதுக்கென்ன" என்று கூறியவாறே எழுந்து சரவணி னைப் பின்தொடர்ந்தாள்.
படிகளில் ஏறும் போது சரவணன், "உங்களுக்குப் பெரி வேலையிருக்கு" என்ருன்.
"அப்படி என்ன பெரியவேலை" என்று கேட்டவாறே படி ளில் பின்தொடர்ந்தாள்.
இருவரும் கப்பலைப்பற்றி கதைத்தவாறே கப்பலின் முன் பது தியை அடைந்தனர். ராணியிடம் சரவணன் நேராகவே வின் பந்துக்கு வந்தான். அவள் செய்யவேண்டியதை விளக்கினுன்

ayGari 29
தேவன் கீழ்த்தளத்தில் காலையுணவை விநியோகித்துக் கொண் டிருந் தான். குமார் சமையலறை வேலைகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்தான் குமார் தீர்மானித்தவாறு சமையல் அறை யில் புதிய ஆட்கள் வேலையைப் பொறுப்பேற்றிருந்தனர்.
'தம்பி நான் அவங்களை சும்மா விட்டதுதான் பிழை"
"ஏன் என்ன சொல்லுங்கோ .முத்தையாண்ண"
காரட்டை வெட்டிக் கொண்டே முத்தையா கதையைத் தொடர்ந்தார். சமையல் அறையில் தனது பரிவாரங்களுடன் புகுந்து சில நிமிடங்களாயிருந்தன. குமார் மதிய உணவிற்குச் சாம்பார் தயாரிக்கும் பொறுப்பை அவரிடமே விட்டிருந்தான் சமையலறைக்கு ஆட்கள் தேவைப்படுகின்றர்கள் என்றதும் தனது வெள்ளவத்தை சாப்பாட்டுக்கடை எடுபிடியாட்களுடன் 'தம்பி என்ன வேண்டுமான லும் சொல்லுங்கே நான் செய்து தாறன்" என்றவாறே சமையல் அறைக்குள் நுழைந்து விட்டார்.
கத்தி இல்லையென்று தெரிந்தவுடன் தம்முடன் கொண்டு வந்திருந்த நான்கு பெரிய கத்திகளையும் கொண்டு வந்தனர். அங்கிருந்த பெரிய பாத்திரத்தில் தண்ணிர் பிடித்து அடுப்பில் வைத்து மரக்கறிகளை ஒவ்வொன்ருக வெட்டிச்கொண்ட்ே கதைத் தார்.
"இவங்க நாலுபேர் வந்தாங்க ஒருத்தன் நீளக் காற்சட்டை மற்றவங்க கட்டைக் காற்சட்டை. அதைக்கொண்டு வா, இதைக் கொண்டுவா என்ருங்க. பொடியனும் எடுத்துக் கொடுத்தான். அவையின்ர சிரிப்பும் விளையாட்டும் எனக்குப் பிடிக்கவே இல் ஆல. நான் பின்னுக்குப் போய் சமையலறையில் இருந்தவங்களை மெல்ல வரச் சொல்லிப்போட்டுத் தெரியாத ஆள்ம திரி வெளியில் வந்து நிண்டுகொண்டன். கணக்கு முப்பத்தி ஆறு ரூபா அறுபது சதம் வந்தது. பொடியன் பில்லைக் கொடுத்தான் அதைக் கிளிச்செ றிஞ்சு போட்டினம் வந்து மேசையில் கணக்குப்பிள்ளையிட்ட லாச் சிபில் எவ்வளவு காசு வச்சிருக்கிருய் எண்டினம், இது தான் சமய மென்று நான் பாய்ஞ்சு பிடிச்சன் நீளகாற்சட்டைக்காறன. மற் ற வங்களும் ஒரே பாச்சலா பாஞ்சு எல்லோரையும் பிடிச்சுப்போட் டம். இடித்து மூடடா கதவை எண்டன். மூடினங்க. நல்ல அடி. மேசையில் எல்லாரையும் வளத்தி, உள்ள சாம்பாறெல்லாம் வத்தி அபிஷேகம் பண்ணிப்போட்டு ஓடு நாய்களே என்று துரத்தி

Page 23
லங்காராணி
முத்தையா வெட்டிய காரட்டை பாத்திரத்தில் அள்ளிப் போட்டுக் கொண்டு தொடர்ந்தார். "ஆறுமணிபோல வாருங்க தம்பி, ஒரு இருநூறுபேர் இருக்கும். எனக்குத் தெரிஞ்சு போட் துெ என்னட்டத்தான் வாராங்க எண்டு. நான் பின் கதவாலே வெள்ளவத்தைக்கு வந்து சேர்ந்திட்டன். முன்னுக்கிருந்த கிருஷ்ணு கபேக்கு அடிச்சிருக்கிருங்க பெற்ருேல் பொம்ப், கசியர் பொடி பன் அதிலேயே எரிஞ்சி துடி துடிச்சி செத்தானும், இன் னுெரு பொடியன் வெளியில் தப்பியோடியிருக்கின்றன். பார்த் துக்கொண்டு நின்ற பொலிஸ்காரன் அவனே சுட்டுக்கொண்டு போட்டான்கள் என்னடா எண்டால் அவன்தான் பொம்ப் அடிச் சதெண்டு நினேச்சாங்களாம். எப்பிடியிருக்குது காலம்."
முத்தையா வீராவேசத்துடன் கத்தியை உயர்த்திக் காட்டிய வண்ணமே பேசினர். கதவைப் பிடித்துக் கொண்டு நின்ற இளே இதன் முத்தையாவுடன் கதையைத் தொடரும் நோக்குடன் "இதுக்கெல்லாம் என்ன செல்யலாம் சொல்லுங்கோ' என்ருன்,
'தம்பி ஒரே வழி தனிநாடுதான்." "அது சரி எப்ப திரும்பி போறது'ஏளனத்துடன் கேட்டான்.
"இப்படித்தான் ஐம்பத்தெட்டிவியும் சொல்லிப் போட்டு அடுத்தமாலம் எல்லாரும் திரும்பியிட்டினம்"
"அது அம்பத்தெட்டு. இது எழுபத்தேழு தம்பி. நாங்கள் இப்ப தனிநாடு கேட்டு போராடிக்கொண்டிருக்கிறம்"
ஒரு பக்கத்தில் இன்னும் பாண் வெட்டப்பட்டுக்கொண்டிருந் தது. தேவனும் வேறு சிலரும் மற்ற தளங்களில் எல்லோ ருக்கும் கொடுத்துக்கொண்டிருந்தனர். குழந்தைக்ளுக்குப் பாலும் சு 1ாத்துக் கொடுத்தார்கள் எல்லோருக்கும் தேனீரும் வழங்கப் பட்டது.
க தவைத் திறந்துகொண்டு தேவன் உள்ளே நுழைந்தான், வழக்கமாக எதையாவது சொல்லி மற்றவர்களே மகிழ்விப்பவன், கோபத்துடன் உள்ளே நுழைந்தது எல்லோரையும் சற்று ஆச்ச ரியத்தில் ஆழ்த்தியது. எல்லோரும் தேவனின் முகத்தைப் பார்க் கவே, "இதுகளுக்கு ஏன்சாப்பாடு கிடந்து சாகட்டும்" என்று கையிலிருந்த பொலித்தீன் உறையைக் கீழே விட்டு வீசினுன் தவன்

ருளர்
"ஏன் தம்பி? என்ன நடந்தது?" முத்தையா கேட்டார்.
எதுவுமே சொல்ல முடியாமல் கோபத்தால் முகம் முட்டிப் போயிருந்தது சற்று நேரம் நின்றும் பதில் வராததால் குமார் கதவைத் திறந்து கொண்டு தேவன் காஃலயுணவு பரிமாறிய தளத் திற்கு இறங்கினுன். அங்கு ஒருவரைப் பலர் 1ற்றி வளத்து ஆறு தல் சொல்வது போல் தெரிந்தது. அவரைப் பார்க்கும்போது அரசில் உயர் பதவியில் இருந்தவர் போல் தெரிந்தது. அங்கு
நின்றவர்களில் ஒருவரிடம் குமார் அணுகினன்.
தேவன் ஒரு பக்கத்தில் இருந்து ஒவ்வொருவராக ரொட்டி களேக் கொடுத்து வந்திருக்கிருன் கடைசியில் ஐந்து ரொட்டிகள் இருந்தன. அதை முறைப்படி ஒரு குடும்பத்திற்குக் கொடுத்திருக் கின்ருன், அந்தச் சமயம் இந்தப் பெரியவர் தனது இரும்புப் பெட்டியின் மேல் இருந்தவாறே தேவனே நோக்கி, 'தம்பி. அவங்க இந்த ஊர் உலகமெல்லாம் பட்டினி கிடந்து பழக்கப் பட்டவங்க, அவங்களுக்கு. என்ன அவசரம்."
ஏதோ பெரிய ஆலோசஃன வழங்குபவர் போல் கூறியிருக் கின்ருர் தேவன் இன்தச் சற்றும் பொருட்படுத்தாமலே ரொட் டிகளை அந்தக்குடும்பத்திற்கு வழங்கியபின் மெதுவாக அந்தப் பொலித்தீன் உறைபைக் கீழே வைத்துவிட்டுப் பெரியவரை அணுகி அவருடைய மேற்சட்டையைப் பிடித்து த்தூக்கியிருக்கிருன். ஏதோ பெரியவர் எழும்புவதற்கு உதவி செய்கின்றன் என்று நினேத்த வர்கள் தேவன் பெரியவரை மேலும் துர்க்கி தொப்பொன்று கீழே தள்ளியதும் தான் விஷயத்தை புரிந்து கொண்டனர்.
பெரியவர் பதறத் தொடங்கினூர், "இல்ஃத் தம்பி, தெரி பாமல் சொல்விப் போட்டன். ராத்திரியும் சாப்பிடல்ல."
"அது எங்களுக்குத் தெரியுந் தானே, உங்களுக்கு அடிகாணுது முறையா கிடைத்திருந்தால் திருந்தியிருப்பீங்க" என்று பலதை பும் கூறிவிட்டுத் தேவன் மேலே சென்றிருக்கிருன்.
கொழும்பிலும் அதையடுத்த பகுதிகளிலும் உள்ள தமிழர் கள் பல்வேறு வாழ்க்கை நி3லகளைக் கொண்டவர்கள். சேரிப் புறங்களையும் காடையர் விட்டுவைக்கவில்லே, அடுக்கியிருந்த சட்டி பானைகளேயும் கொள்ளையடித்துவிட்டு அவர்களேத் துரத்திவிட்ட

Page 24
ጨ)ßrésmዐrffeጻå 32
னர். அவர்களும் வந்து அகதிகள் முகாமில் தஞ்சம் புகுந்து கொண்டனர். அங்கே எல்லோரும் ஒன்ருக இருந்தனர்.
குமார் திரும்பி வந்தபோது, தேவன் அதே இடத்தில் யாரு டனும் பேசாமல் உட்கார்ந்து கொண்டிருந்தான்.
'உன்னுடைய உணர்ச்சிகளைக் கண்மூடித்தனமாக வெளியிடு வதால் எந்தப் பிரச்சினையும் தீராது தேவன். இது அவ்வளவு சுலபமாகத் தீர்ந்துவிடக்கூடிய பிரச் சினை ய ல் ல. எதற்கும் பொறுமை வேண்டும். நீ அதைக் காதில் போட்டுக்கொள்ளாது பேசாமல் வந்திருக்க வேண்டும்" என்று கூறி வேறு தொண் டர்களை உணவு பரிமாற அனுப்பி வைத்தான்.

4.
மதிய நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. முத்தையா சாம் பார் செய்து முடித்திருந்தார். உறைப்பு கூடுதலாக இருந்தது. குமார் சாம்பாரைச் சுவைபார்த்து உறைப்பைக் குறைக்க வேண் டுமென்று கூறிவிட்டான். எப்படிக் குறைக்கவேண்டுமென பலர் ஆலோசனை கூறினர்கள். தண்ணீர் ஊற்றவேண்டுமென்றனர், கத்திரிக்காய் கரட்டில் வெட்டிப்போட வேண்டுமென்றனர். புளி விட வேண்டுமென்றனர். பலத்த ஆலோசனையின் பின் முத்தையா சாம்பாரைத் தெளித்து குழம்பை வேருெரு பாத்திரட்தில் அகப் பையால் அள்ளிவிட்டுக் கொண்டிருந்தார்.
"இல்லைத் தம்பி.நான் இது கடைத் தூளாக்குமெண்டு அள்ளிப் போட்டிட்டன். இவங்க வெறும் மிளகாயை இடித்து வைத்திருக்கிருங்களெண்டு யார் கண்டது" என்று குமாரைப் பார்த்துக்கொண்டு கூறினர். இந்தப் பிரச்சினைகளின் மத்தியில் அங்கு நின்றுகொண்டிருந்த இளைஞர்களுக்குத் தனி நாட்டுப் போராட்டம் பற்றித் தனது கருத்துக்களை கூறிக்கொண்டிருந் தார். இரும்புக்கதவைப் பிடித்து நின்ற இளைஞன் பல குறுக்குக் கேள்விகளைப் போட்டு முத்தையாவை ஆவேசத்துடன் போர் விவகாரங்களைப் பேச வைத்திருந்தான். Y
*தம்பி முதலில் பனை மரங்ககளை எல்லாம் தறித்து ருேட் டுக்குக் குறுக்கபோடு. ஒரு வாகனமும் ஓடக்கூடாது. பாப்பம்
எத்தனை நாட்களுக்கு நிண்டு பிடிக்கிருங்க எண்டு’
தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவு கொடுக்கத் தொடங் கிய நாள் முதல் முத்தையா இதைப்பற்றி சிந்தித்ததுண்டு.
தனி நாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவு கொடுக்கத் தொடங் கிய நாள் முதல் முத்தையா இதைப்பற்றி சிந்தித்ததுண்டு.
Rs. 5

Page 25
34 லங்காராணி
"முத்தையா அண்ண, இப்ப பீரங்கி வாகனமெல்லாம் கொண்டுபோய் வச்சிருக்கிருங்க. தூரத்தில் இருந்து குண்டு குண் டாய் போடுவான். போவோரையும் வருவோரையும் சுட்டுதி தள்ளுவான்கள். விமானத்தில் இருந்து குண்டு போடுவாங்க"
போடுவாங்க பாப்பம், எத்தனை நாளைக்கு? அப்படி குண்டு போட்டால் கிடங்குகளை வெட்டி ஒளியவேண்டியது தானே. இது தத் துவக்குகளை பீரங்கிகளைக் காட்டி ஆட்களை வெருட்டி அடிஏ கிற காலம் போயிட்டுது. அது ஒரு காலத்தில வெள்ளைக்காரன் செய்தான். இப்பவேற காலம்."
கதவு தட்டப்பட்டதும் கதவைத் திறந்துகொண்டு ராணர உள்ளே நுழைந்தாள்.
“பிள்ளை.இங்க பார் பிள்ளை உறைப்பு கூடிப்போச்சுதெண் நிக்கிருங்கள். இங்க ஒருக்காபார் என்னெண்டு நான் சொல்ற பாணுேட சாப்பிட்டால் தெரியாதெண்டு."
ராணி கையை நீட்டவே முத்தையா அகப்பையால் கொஞ் சம் சாம்பாரை உள்ளங்கையில் விட்டார். ராணி அதை நா4 கில் தடவிப் பார்த்தாள் முகத்தை சுளித்துக் கொண்டாள் கண் கள் கலங்கின. முத்தையா எந்த மறுமொழியையும் எதிர் பார்க் காமல் தொடர்ந்து சாம்பாரைத் தெளித்து வேறு பாத்திரத்திவ ஊற்றிக்கொண்டிருந்தார்.
"கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கொதிக்கவைச்சால் எல்லாறு சரியாப் போய்விடும்" என்று கூறிக்கொண்டார்.
கதவுக்கு வெளியில் பெல்பொட்டம் அணிந்த மங்கை நின்று கொண்டிருந்தாள்.
குமாரைப் பார்த்து ராணி. "கிளிக்கும் நாய்க்கும் சாப்பம் டாம்" என்ருள்.
‘என்ன வேணும்; பாணு?"
ராணி வெளியில் தலையை நீட்டி கதைத்து விட்டு மீண்டு கூறிஞள்.

agad? 3$
"பாண் தின்ஞதாம். கிளிக்கு வாழைப்பழமும், நாய்க்கு பில்கட்டும் இருக்கா?
கீழே இருக்கவேணும் என்று கூறி உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றன். அங்குக் குழந்தைகளுக்குக் வைக்கப்பட்டிருக்கும் பிஸ்கெட் பெட்டியை உடைத்துச் சில பிஸ்கட்டும், ஒரு வானழப்பழமும் கொடுத்து அனுப்பினன்.
'தங்கச்சி வேணுமெண்டா பிறகும் வாங்கோ கதவை பிடித் ரக் கொண்டு நின்ற இளைஞன் கூறி அனுப்பினன். பின்பு குமா ரிடம் “குமார். ஆச்சி உன்னுேட கதைக்கவேணுமாம் என்னெண்டு கெளு.
குமார் வெளியே வந்ததும் கிழவி தன்னை அறிமுகம் கெய்து கொண்டாள். 'தம்பி.இந்தா இதில இரண்டு விலாசம் இருக்கு, கப்டனிட்டக் கொடுத்து நான் சுகமாயிருக்கிறனெண்டு தந்தியில் செய்தி கொடுக்கச் சொல்லு.”
அந்த முகவரிகளைக் குமார் வாங்கிப் பார்த்தான். ஒன்று அமெரிக்கா, ஒன்று லண்டன். இருவரும் டாக்டர்கள்.
*ஆச்சி, ஒரு செய்தியும் இங்க இருந்து அனுப்ப ஏலாது, யாழ்ப்பாணம் போனபின்பு செய்தியை அனுப்பலாம். என்டா லும் கப்டனுேட கதைச்சுப் பாக்கிறன்.”
இந்நேரத்தில் சரவணனும் ஒரு சோடி கையுறைக்ளுடன் வந்து சேர்ந்தான்"
"ஆச்சி சுகமாயிருக்கிருயா?”
"ஒம். தம்பி” பாட்டி தலையை அசைத்தாள். ஆச்சியுடன் உதவிக்கு ஒருவனும் நின்றுகொண்டிருந்தான்.
ஆச்சிக்கு இரண்டு பிள்ளைகள். இருவரும் படித்து வெளிநாடு களில் உயர் பதவிகளில் இருந்தனர். கொழும்பை அடுத்த இரத் மலானையில் பெரிய வீடு. பிள்ளைகள் மாதா மாதம் பம்ை அனுப்புவார்கள். பக்கத்து வீடுகளில் உறவினர்களும் இருந்தார் கள். கலவரம் தொடங்கியதும் உறவினர்கள் பலர் அகதிகள் முகாமுக்குப் போய்விட்டனர்.

Page 26
3S svrsisтретећ.
பாட்டியையும் வந்து கூப்பிட்டனர். பாட்டி அசைய மறுத்துவிட் டாள். "நான் இந்த இரத்மலானையில தான் பிறந்து வளர்ந் தது எனக்கு யாழ்ப்பாணத்தில் ஒருவரையும் தெரியாது. நான் செத்தாலும் இங்கேதான் சாவன் ' என்று அடம் பிடித்தாள்.
பாட்டியும் வேலைக்காரனுந்தான் வீட்டில். பாட்டியின் வீட் டில் ஏராளமான பொருட்கள் இருந்தன. விலையுயர்ந்த நகைகள், சிலைகள், தளபாடங்கள் வீட்டை நிறைத்திருந்தன. கலவரம் தொடங்கி இரத்மலானையில் காடையர்களின் அட்டகாசம் மோ சமடைந்திருந்தது. பாட்டியின் வீடு தாக்கப்படுவது நிச்சயமா கிவிட்டது. தயாராக வேலைக்காரன் வீட்டிற்குப் பின் வளவில் வைத்திருந்த பீப்பாவில் பாட்டியை மறைத்து விட்டு தானும் காடையர்போல நடித்துக்கொண்டு அகதிகள் முகாமிற்கு வந்து சேர்ந்துவிட்டான். வரும் வழியில் தமிழர்களைத் துண்டு துண்டாக வெட்டித் தெரு நெடுகிலும் போட்டிருந்தார்கள் எங்கும் ஒரே ஒலம். நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. அடுத்த நாள் ஊரடங்கு சட்டம் அமுலாகி இருந்தது. பாட்டியின் நிலைபற்றி வேலைக்காரன் அகதிகள் முகாமில் செய்தி கொடுத்திருந்தான், சரவணன் பொலிஸ் பாதுகாப்புடன் வேலைக்காரனையும் கூட்டிக்கொண்டு பாட்டி இருந்த இடத்திற்குப் போனன். வீடு வெறிச்சோடிப் போய்க்கிடந்தது. தூக்கிக் கொண்டு போகக் கூடியதைத் துரக்கிக்கொண்டு மிகுதிக்கு நெருப்பு வைத்திருந்தார்கள். பாட்டி யைத் தார்ப் பீப்பாயில் இருந்து சரவணனும் வேலைக்காரனு மாகத்தூக்கி அகதிகள் முகாமிற்குக் கொண்டுவந்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
"ஆச்சி நீங்க போங்க, நாங்க கப்டனேட கதைச்சுப் பாக் கிறம்.” என்று கூறிவிட்டு குமாரிடம் 'ஒரு சோடி ! தான் கிடைத்தது. எல்லா இடமும் தேடிப் பார்த்தாயிற்று" என்ருன் ଶfor quତ୪arଜନୈr.
*கழிவிடங்களைத் துப்பரவு செய்யும் பணிக்கு யாரையும் தேடிப் பிடிக்க அதிகம் முயலவில்லை. இந்த வேலைகளைச் செய்யக் கூடியவர்களைக் கப்பலில் தேடிப் பிடிக்க கூடியதாக இருந்தும் அதை வேறு யாரிடமாவது ஒப்படைப்பது சரியெனப்படவில்லை. வளாக மாணவர்களை உதவிக்கு அழைத்துப் பார்த்தான்.
"ஏன் நாங்கள் செய்ய வேண்டும்? நீ செய்தாலென்ன என்று
வினவினுர்கள்.

algoriř 37
"சரி.நான் தான் செய்யப் போகின்றேன்" என்று கூறி வேறு யாரிடமும் ஒப்படைக்கும் முயற்சியைக் கைவிட்டான். இதற்கு குமாரையும் அழைத்துக்கொண்டான். அந்தக் கைஉறை ஒரு பக்கம் தோலாலும், மறுபக்கம் தடித்த புடவையாலும் செய்யப்பட்டிருந்தது. இதனைக் கப்பலின் பல இடங்களில் தேடிய பின் கப்பல் சிப்பந்தி ஒருவன் சரவணனிடம் கொடுத்திருந்தான்.
*சாப்பாட்டுக்கு எல்லோரையும் கீழ்ப் பகுதிக்கு அனுப்பிய பின் இதைச் செய்வோம்." என்று கூறி சரவணன் சமையலறை புள் நுழைந்தான்.
நேரம் ஒரு மணியாகிவிட்டது.
"தம்பிமாரே பீங்கான்களை எடுத்துக் கழுவுங்கோ சாப்பாட்டு வேலை முடிந்து விட்டது " முத்தையா சாம்பாரை அகப்பையால் கிண்டிய வண்ணம் தொடர்ந்து கதைத்துக்கொண்டிருந்தார்.
கதவை மூடிநின்ற இளைஞன் "சண்டைக்குப் போக இயலாது முத்தையாண்ண, அவங்க பத்து பேர் நாங்க நாலு பேர். அது போல உயிர்களைக் கொலை செய்யக் கூடாது. அவங்க செய்யிருங் கெண்டு நாங்களும் செய்ய வேண்டுமா?"
முத்தையாவின் முகத்தை வியர்வைத் துளிகள் நிரப்பியிருந் தன. அவர் ஆவேசமாகப் பேசும்போது பார்ப்பவர்கள் அவரின் பேச்சால் தான் வியர்கின்றது என்று நினைக்கவேண்டி இருந்தது. அடுப்பு வெக்கையும், சாம்பாரில் இருந்து கிளம்பிய ஆவியும் தான் அவரின் வியர்வைக்குக் காரணம். முத்தையாவிற்கு நாற் பது வயது இருக்கும். கறுத்த உருண்ட உருவப் அதற்கேற்றவாறு உய்ரம் பெரிய மீசையை முறுக்கி விட்டிருந்தார்.
* இது மனுசனை கொல்லுற விஷயமில்லை. அநீதியையும், அச்ரமத்தையும் அழிக்கிற விஷயம். அது மனித உருவில் வந்தால் மனித%னயே அழிக்க வேண்டும். இரக்கம் சாட்டிறது பாவம் தம்பி. அவனை விட்டு வச்சால் உன்னையே உயிரோட விழுங்கி விடுவான்."
சாட்பாரை அகப்பையால் துளாவிக் கொண்டே டேசினர். இளைஞன் கதவை மூடி கதவில் சாய்ந்துகொண்டு மடித்து ஒரு காலை பொறுப்பாக கதவில் வைத்துக்கொண்டு மேலும் கேள் விகளைப் போட்டவண்ணம் நின்முன்.

Page 27
38 avšasrgrnremá
"தhபி அந்த பத்து பேர் நாலு பேர் கதையை விட்டுப் போடு, அது இந்தக் காலத்துக்கு ஒத்து வராது. இதென்ன வரிசையில் விட்டுப் போட்டு அடிபடுகிறதா?”
'முத்தையா அண்ண." முத்தையா பையனின் முகத்தை i ir tabir rh. Y
"நீங்கள் ஜஞதிபதியாய் வருகிறீர்கள் எண்டு வைப்பம். என்ன செய்வீர்கள்?"
முத்தையா இளைஞனின் இந்தக் கேள்வியால் சற்று திணறிப் போளுர் பாத்திரத்தில் சுற்றி வலம்வந்து கொண்டிருந்த அகப் பையை மத்தியில் நிறுத்தி இரண்டு கைகளாலும் அதைப்பிடித்து சற்று குனிந்து யோசித்த பின் நிமிர்ந்து இளைஞன் முகத்தைப் பார்த்தார். இளைஞன் பதிலை எதிர் பார்த்துத் தனது கேள்வித் திறனை நினைத்துப் புன்முறுவல் பூத்தான். முத்தையா கதைத் தார். -
**போம் அடிச்சு கொடுப்பன், முதலில அதுதான், எல்லோ ருக்கும் இந்த தந்தி மணி ஒடர் மாதிரி ஒரு போம்; பத்திரம்"
4ts'
*அதில என்ன இருக்குமெண்டா, நாடு பிரியப்போகுது ஒரு பகுதியில் தமிழ், மற்றப் பகுதியில் சிங்களம். யார் யார் தமிழ் நாட்டில இருக்கவிரும்பு நீங்க, எழுது, யார் யார் சிங்கள நாட் டில இருக்க போநீங்க, எழுது, வாங்கி எல்லாத்தையும் எண்ணிப் பார்ப்பன். அடுத்தது கணக்கு இந்த நாட்டில இத்தனை பேர். தமிழ் நாட்டுக்கு வரப்போற இத்தனை பேருக்கும் இத்தனை சதுர மைல்."
{;if و هه
"பிரகென்ன அளக்க வேண்டியதுதானே. இடமா இல்லை வடக்கு, கிழக்கு பதுளை, பண்டாரவளை.
*இல்லை, இல்லை, மலைநாடு தேவையில்லை.
'தம்பி பதுளை, பண்டாரவளையில்ல; அதுக்கு மேலேயும் அளப்பன். நுவரெலியா, மஸ்கெலியா, அப்புத்தளை நேரபொத் துவில் மட்டும் அளப்பன். இந்த நாட்டுக்கு ஆயிரம் இரண்டா

ayaberi!
யிரம் வருடத்திற்குச் சரித்திரம் இருக்கலாம். ஆனல் இந்த நாட்டில இருக்கிற மக்களின் உரிமைகளைப்பற்றி பேசவேண்டு மெண்டால் 1948 ல் இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து தான் தொடங்குது அன்றைக்கு யார் யார் இந்த நாட்டு மக்களாகக் கருதப்பட்டு வாக்குரிமை பெற்றங்களோ, அவர்கள் எல்லோருக்கும் இந்த நாடு சொந்தம், அதுக்கு மேலே யாருக் கும் இருக்குமெண்டால் அது வெள்ளைக் காரனேட பேசித் தீர்த் திருக்கவேண்டிய விடயம். அவன் இருக்குமட்டும் பதுங்கி இருந்து போட்டு அவன் அங்கால போக எழும்பி நிண்டு வீரம் பேசுறது சரி வருமா?*
**dpesهه
*பிறகென்ன, இந்தக் குடியேற்றங்கள், திருக்கோணமலையில வீடுகள் எல்லாம் சும்மாதானே கிடக்கும். போய் இரன்”
"பிறகு உங்கடயாடு"
**அதுக்குப் பிறகு எனக்கென்ன தம்பி. நான் சோத்துக் கடைக்காரன், கொழும்பில இருக்கிறத கொண்டுபோய், திருக் கோணமலையில போடுவன். ஒன்ருக இருக்க ஏலா தெண்டால் பிரியவேண்டியதுதானே சரி தம்பிமாரே, இப்ப என்னமாதிரி சாப்பாடு கொடுக்க போநீங்க?" குமாரை பார்த்தார்.
இதுவரை முத்தையாவின் அரசியல் கருத்துகளில் சிந்தனை யைப் பறிகொடுத்திருந்த குமார், வெளியேறி தளத்திற்கு வந் தான். பீங்கான் கழுவும் வேலையும் முடிந்திருந்தது.
சற்று முன்பு நேராக வீசிய காற்று தற்போது கப்பலின் பக்கவாட்டில் வீசியது. கப்பல் திரும்பி வடக்கு நோக்கிப் பயணத் தைத் தொடர்ந்தது தெரிந்தது. கப்பலின் தளத்தில் பலர் நின்று கொண்டிருந்தனர். கீழ்த்தளங்களிலும் சூரிய ஒளி நேராக விழுந்ததனுல் வெளிச்சமாக இருந்தது. குமார் மேல் தளத்தில நின்றவர்களைச் சாப்பாடு பரிமாற இருக்கின்றபடியால் இடங் களில் போய் அமருங்களென்று கூறினன். பலரும் படிகளில் இறங்கித் தங்கள் இருப்பிடங்களுக்குச் செனறனர். உணவு பரிமாறுவதற்குத் துணையாகப் பல வளாக மாணவர்கள் தயா ராகிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் எப்படி பரிமாற லாம் என்பது பற்றிக் குமாருக்கு ஆலோசனை ‘ தெரிவித்துக் கொண்டிருந்தான்.

Page 28
40 லங்காராணி
டாக்டர் நற்கணம் குமாரிடம் உணவு பரிமாறல் பற்றி கேட்டறிந்துகொண்டார்.
மாணவர்கள் ஒவ்வொருவராகப் படிகளில் உட்கார்ந்து கொண்டனர். மேல் நிற்பவர்களில் ஒருவர் தட்டில் ஊற்றி ஒரு வரிடம் கொடுக்க அவர் கீழ் இருப்பவரிடம் கொடுத்தார். சாப் பாட்டுத் தட்டு ஒவ்வொருவராக கைமாற்றப்பட்டு கீழ்த்தளத்தைச் சென்றடைந்தது. அங்கும் மாணவர்கள் வரிசையில் நின்று தளத்தின் பல பகுதிகளுக்கும் சாப்பாட்டுத் தட்டை எடுத்துச் சென்றர்கள். பாணையும் பரிமாறினர்கள். ஒவ்வொரு வாழைப் பழமும் வழங்கப்பட்டது.
கப்பலின் மற்ருெரு கீழ்த்தளத்தில் சரவணனுடைய நண்பர் கள் பேச்சில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இந்தத் தளத்தில் காலை பத்து மணிக்குக் காலை உணவு பரிமாறியிருந்தார்கள், நீர் கொழும்புக்கடையில் வேலை பார்த்த இளைஞர்கள் இருவர், வளாக மாணவர் நால்வர், கொழும்பைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் எல்லாமாக பத்துப்பேர் இருந்தனர். வேட்டியுடன் இருந்த இளைஞன் பல கேள்விகளைக் கேட்டு எல்லோருடைய அபிப்பிராயத்தையும் அறிந்தபின் பல பிரச்சினைகளை எழுப்பி விவாதத்தில் ஈடுபட்டனர். யார் எதிரிகள் என்பதே பிரச்சினை
பொலிசார், இராணுவத்தினர் பற்றி ஒருவன் கேட்டான் இதற்கு இளைஞன் பதில் கூறத் தொடங்கியதும் தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்ச்சியைப் பற்றி, சிவகுமாரனைப் பற்றி, வேறு பல நிகழ்ச்சிகளைப்பற்றியும் கூறும்படி ஒவ்வொரு வரும் கேப் டனர். முதலில் இருந்து தொடங்குகிறேன் என்று கூறி வேட்டி யுடனிருந்த இளைஞன் சரித்திரத்தைத் தொடங்கினன்.
இலங்கைக்கு 1948-ல் சுதந்திரம் கொடுத்துவிடடு ஆங்கி லேயன் சென்றதும் சிங்களவரால் மலையகத் தோட்டத் தொ லாளர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. சிங்களத்தை ? ஒரே தேசிய மொழியாகவும், அரசகரும மொழியாகவும் ஆக்கினர் கள். இலங்கையில் மூன்றில் ஒரு பகுதியினர் தமிழர்கள். தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து, தமிழ்த் தலைவர்கள் பாராளு மன்றத்தின் முன்பு சத்தியாக்கிரகம் செய்தனர். அவர்கள் மீ காடையர்களை ஏவித் தாக்கினர்கள். இவ்வாறு அகிம்சை முை

Jlogertř 4.
யிலான அவர்களது போராட்டங்களைக் கணக்கில் போட்டுக் கொள்ளாமல் சிங்கள அரசியல்வாதிகள் தமிழ் ஒழிப்பு நடவ டிக்கைகளைத் தீவிரப்படுத்தினர். பொலிசாரும் இராணுவமும் அர சாங்கத்துக்கு உதவியாக இருந்தன. தமிழ்ப்பகுதிகளில் ஏராள மான குடியேற்றங்கள். எங்கும் சிங்களவருக்கு முதலிடம், அர சாங்க உத்தியோகத்தில் இருப்பவர் எத்தனை வயதாக இருந்தா லும், எத்தனை ஆண்டுகள் வேலையில் இருந்தாலும், எந்த உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் சிங்களம் படித்தால்தான் சம் பள உயர்வு, பதவி உயர்வு என்றுயிற்று, சிங்களம் தெரிந்தால் தான் அரசாங்க வேலைகள். சிங்களம் படிப்பதற்கு காலக்கெடு வும் கொடுக்கப்பட்டது. இதனல் பல தமிழர்கள் பதவியில் இருந்து விலகி, வெளிநாடுகளுக்குச் சென்றர்கள். தமிழ்ப் பகுதிகளில் உயர் பதவிகள் எல்லாம் சிங்களவர்கள் கைக்குச் சென்றன. இதோடு நிறுத்திக் கொள்ளாமல் தமிழரின் உயர் கல்வியிலும் கைவைத்தார்கள். தமிழர் ஒதுக்கு நடவடிக்கையில் ஒன்றன தரப் படுத்தல் முறைமூலம் இளைஞர்கள் மேல்படிப்பு மறுக்கப்பட்டு அவ்விடங்களைச் சிங்கள மாணவர்களால் நிரப்பியிருந்தனர். தமி ழர் கெட்டித்தனமாக படித்தும் பல்கலைக்கழகம் புகமுடியவில்ஜ
இவ்வேளையில் சிவகுமாரன் என்னும் இளைஞன் தோன்றி அகிம்சை முறை, சாத்வீகழுறைப் போராட்ட முறைகளில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தினன்.
சிறிமாவோ அரசாங்கத்தின் உதவி மந்திரி ஒருவர், யாழ்ப் பாணத்தில் உரும்பிராய் என்னும் இடத்திற்கு வருகிருர், கூட்டம் முடிந்து திரும்பும் போது காரின் பின்புறம் வெடித்துச் சிதறுகின் றது. ஒரு மாதத்தின் பின் அவரும் இறந்து விடுகின்றர். சலுகை களின் மூலம், தமிழரில் ஒரு சிலரைத் தங்களின் அரசியல் பிரதி நிதிகளாக்க அரசு படாதபாடுபடுகின்றது. ஒருசிலர் இந்த வலை யில் விழுந்தும் விடுகின்றர்கள். இவர்களைத் துரோகிகள் என இளைஞர்கள் அழைக்கின்றர்கள். இப்பட்டம் பெற்றவர்களில் முக் கியமானவர்கள் அரசில் மந்திரியாக இருந்த குமாரசூரியரும், யாழ்ப்பாண மேயராக இருந்த அல்பிறட் துரையப்பாவுமாவார். துரையப்பா காரை வீதியில் நிறுத்திவிட்டு உணவு விடுதிக்குச் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தார். அவர் காரில் ஏறுவ தற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்பே கார் வெடித்துச் சுக்கு நூருகின்றது. மயிரிழையில் உயிர் தப்புகின்றர். சந்தேகத்தின் பேரில் சிவகுமாரனைப் பிடித்துச் சிறையில் அடைத்து விடுகின் ருர்கள், சித்திரவதை செய்கின்றர்கள்.
R * 6

Page 29
4富 லங்காராணி
72 மே மாதத்தில் சிறிமாவோ அரசு, இலங்கையை ஒரு பெளத்த சிங்கிளக் குடியரசாகப் பிரகடனப்படுத்துகின்றது. தமிழ்த் தலைவர்கள் அரசியல் அமைப்பை எதிர்க்கின்றர்கள். எரிக்கின்றர்கள். துண்டுப் பிரசுரம் விடுகின்ருர்கள். பாராளு மன்றத்தைப் புறக்கணிக்கின்ருர்கள். காந்திய முறையில் ரூராட்டத்தில் இறங்குகின்றர்கள். அரசு செவிசாய்க்க மறுக்கின் றது. வடக்கு கிழக்கில் இராணுவமும் பொலிசும் வந்துகுவிகின் நன. எழுபது இளேஞர்கள் சிறையில் தள்ளப்படுகின்றர்கள். நான்கு மாதங்களின் பின் விடுதலே செய்யப்படுகின்ருர்கள்.
சிவகுமாரனே அனுராதபுரம் சிறையில் வை த்திருந்தார்கள். பதிறன்கு நாட்களுக்கொருமுறை பாழ்ப்பாணம் கொண்டு வருகின்ருர்கள். சிறையில் மற்ற இளேஞர்களேயும் ச ந்திக்கின்
H.
முன், இளேஞர்கள் ஒவ்வொருவராக விடுதலையாகின்றர்கள். இாேஞர்களின் மனக் குமுறல் ஒய்ந்தபாடில்லே. துரோகிகளின் பட்டியல் நீண்டுகொண்டு போகின்றது. தாக்குதல் செய்கிறர்கள்.
1971-1972 ஆம் ஆண்டுகளில் தமிழ்ப் பிரதேசங்களில் நடந்த வன்முறை சம்பவங்களுக்காக மானவர் பேரவையைச் @王f画画 நாற்பத்திரண்டு பேர் சிறையில் தள்ளப்படுகின்ருர்கள். சிவகுமாரனின் வழக்கு சாட்சியங்கள் இல்லாததாலும் நிரூபிக்க முடியாததாலும் தோல்வியடைகின்றது. சிவகுமாரன் வெளியே வருகின்ருன்.
*岳珂 நேரத்தில் தமிழ்த் தலைவர்கள் தனிநாட்டுக் கோரிக் 昏、山 முன்வைக்கவில்லே. சிவகுமாரன் தனிமையில் போராட முளேகிருள். ஊர்மக்கள் அவனைத் திரவியமென வைத்துப் பாது காக்கின்ருர்கள். சிவகுமாரன் தனது வாழ்க்கையைச் சீர்திருத்த வாதியாகவே தொடங்குகின்றன். சாதியொழிப்பு சமபந்தி, Fru Fri FNL"high போன்றவற்றில் ஈடுபடுகின்றன். அவனேக் கம்யூனிஸ்ட் என்று ஊரில் அழைப்பார்கள். அவனது போராட் ,ோக்கைச் சந்தர்ப்ப சூழ் நிலேகள் மிா ற்றியிருந்தன. சிறை ஆாடபின் தனிநாடுதான் அவனது மூச்சு. அவனுடைய தாய் அனுைக்குச் சகல உதவிகளையும் செய்தார். சிவகுமாரன் யாழ்ப் பாணத்தில் ஒரு கண்க்காளராய்ப் படித்து வந்தான்.
1973 ஆம் ஆண்டு குடியர* தினம். தமிழ்த் தவேர்கள் அதைப் புறக்கணிக்கும்படி வேண்டினூர்கள். நல்லூர் எம். F. பாக அருளம்பலம் இருந்தார். இவர் அரசாங்க கட்சியை ஆதரித்

தார். அவருடைய ஆதரவாளர்கள் தேசியக்கொடியை இரு ಇಂಗ್ಲಿ' கட்டி குடியரசு விழா கொண்டாடிக் கொண்டிருந் தார்கள். இலங்கைத் தேசியக் கொடியில் சிங்களவரைக் குறிக் கும் சிங்கம் கத்தியுடன் நிற்கின்றது. இலங்கை சுதந்திரம் அடைந்தபோது இத்தேசியக் கொடிக்குத் தமிழ்த்தஃவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். முதலில் சிங்கம் மாத்திரமே இருந் தது. இதை அகற்ற வேண்டுமென்றனர். கடைசியில் தமிழ ரைக் குறிக்கும் இரண்டு நிறங்கள் சேர்க்கப்பட்டன. இந்நிறக் கோடுகளைச் சிங்கத்துக்கு எதிர்ப்புறமாக அமைத்தனர். தமிழ ருக்கு அந்தச் சிங்கம் கத்தியைக் காட்டிக்கொண்டிருப்பதுபோல் அமைந்திருக்கிறது. அந்தக் கொடி.
சிவகுமாரன் அந்த வழியாக வந்தான். "ஏன் உங்களுக்கு இந்த வேலே, வெட்கமாயில்லே' என்று கூறிவிட்டுப் போய்விட் டான். அப்போது மெளனமாக இருந்தவர்கள் அவன் சென்ற தும் அவனுக்குப் பாடம் படிப்பிக்க வேண்டுமெனக் கதைத்தனர். இது சிவகுமாரனின் காதில் விழுந்தது. கல்லூரி முடிந்து திரும் பினுன். வீரம் பேசியவர்கள் வீதியில் நின்றுகொண்டிருந்தனர்.
"யார் எனக்குப் பாடம் படிப்பிக்க விரும்பியவன்' என வினவிஞன். எவரும் முன்வரவில்ஃப். அங்கு ஒரு தேநீர்க்கடை இருந்தது. அதில் ஒரு கயிற்றைக் கேட்டு வாங்கி அதன் நுனியில் கல்லேக்கட்டி கொடிக் கயிற்றின்மேல் எறிந்து இழுத்துக் கொடியை அறுத்து அதைச் சுக்குநூருகக் கிழித்து விட்டு, "யாருடி கேட் டால் சிவகுமாரன்தான் செய்தான் என்று சொல்லுங்க. நாள் வீட்டில்தான் இருப்பேன்" என்று கூறிவிட்டுப் போய்விட்டான்.
இன்னுெரு நாள் நல்லுரரில் சுந்தனுக்குத் திருவிழா, அங்கு ழங்கையும் சட்டத்தையும் நிஃநாட்ட பொலிசார் கோட்டில் பாட்டுக்கொண்டிருப்பார்கள், இத் திருவிழாவுக்கு இலங்கை எங் தமிருந்து தமிழர்கள் திரளுவார்கள். இங்கும் பொளிசார் சிங்க ளவர்தான். கந்தன் கம்பீரமாக ஊர்வலம் வந்துகொண்டிருந் தான். இரு கன்னியர் கந்தரினத் தரிசித்துக்கொண்டு நின்றவர். பொலிசாரில் இருவர் அப்பெண்கனின் பின்பக்கத்தில் தட்டிப் பார்த்திருக்கின்ருர்கள். பெண்கள் கூச்சனிட்டனர் பக்தர்கள் திகைத்து நின்றனர். பொலிசார் சீருடை அணிந்து இலக்கமும் பொருத்தியிருந்தனர். திருதிருவென முழித்தனர். சிவகுமாரன் ஆங்ஜி நின்றுகொண்டிருந்தான் அவனுக்குச் சிங்களம் கொஞ்சம் தெ யும், சிறைச்சாலேயில் படித்திருந்தான்.

Page 30
44 AvisTpTnTaof
'இந்த விளையாட்டுக்களை உங்கள் நாட்டில் வைத்துக் கொள் ளுங்கள்' என்று கூறிக்கொண்டு பாய்த்து மோதினன். பொலி சார் திணறிப்போஞர்கள் பொலிசார் பலர் சேர்நது இவனைப் பிடிக்கு பொலீஸ் நி%லய அறையில் அடைத்து விட்டனர் அங்கு உயர் அதிகாரியாகத் தமிழர் இருந்தார். வழக்கைப் பதிந்த பின் விட்டுவிட்டார்.
இளைஞர்கள் சிலர் குடியரசு நினைவு நாளன்று அவனது ஊரில் வைத்து ஒரு பஸ்சை எரித்து விடுகின்றர்கள். பொலிசார் நான் வரைப் பிடித்து அடைத்து விட்டார்கள். இவர்களைக் காட்டிக் கொடுத்தது யாரென்று தேடிக் கண்டுபிடிக்கிருன் சிவகுமாரன் நான்கு இளைஞர்களும் சிறையில் இருந்து வெளியே வருகின்ருர் கள், காட்டிக்கொடுத்தவனைச் சிவகுமாரன் பிடித்துக்கொண்டு வருகின்றன். ஊர்மக்களும் கூடிவிட்டார்கள். அவர்களைப் பார்த்து 'தான் காட்டிக் கொடுத்ததை இவன் ஒப்புக்கொள்கின்றன். இவன் காதை வெட்டலாமா? கையை வெட்டலாமா?’ என்று கேட்டான். ஊர்மக்கள் மன்னித்து விடும்படி வேண்டுகின்றனர். காட்டிக்கொடுக்கப்பட்ட நான்கு இளைஞர்களையும் முன்னழைத்து அவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவைத்து, ‘போ. இனிமேல் இப்படிச் செய்யாதே" என்று அனுப்பி விடுகிறன்.
மாணவர் பேரவையைத்; தலைவர்களைப் பிடித்து அடைத்த தன் மூலம் அழித்துவிட்டதாக அரசாங்கத்தினர் கருதினர். இளைஞர் பேரவை உருவாகிறது. இதன் வளர்ச்சிக்குச் சிவகு மாரன் தோள் கொடுத்து உதவுகிருன். இவன் பெயர் எங்கும் அடிபடுகின்றது. இளைஞர்கள் அவனை விரும்பினர்.
1974இல் தமிழர்கள் தமிழுக்கு ஆராய்ச்சி மாநாடு நடத்து கின்றனர். சிவகுமாரன் தொண்டர்களுக்குத் தலைமை தாங்கு கிறன். யாழ்ப்பாணத் தமிழர்கள் இதை ஒரு பெரும் விழா வாகக் கொண்டாடினர்கள். அரசும் பொலிசாரும் தமிழின் சிறப்புப்பற்றி உலகெல்லாமிருந்து அறிஞர்கள் வந்து பேசுவதை விழுங்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தனர். இறுதி நாளன்று மாபெரும் பொதுக்கூட்டம். தமிழ் நாட்டிலிருந்து வந்திருந்: பேராசிரியர் பேசிக்கொண்டிருந்தபோது பொலிசார் கூட்ட தினர் மீது பாய்ந்தனர். கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி எறி தனர். ஒன்பது தமிழர்கள் இறந்து போயினர். சில நிமிட களின் பின் அங்கு யாரையும் காணமுடியவில்லை. கிழிந்த ஆடை

அருளர் 4.
ாளும், செருப்புகளும், சைக்கிள்களுந்தான் கிடக்கின்றன சிவகு ம ரன் அவற்றையெல்லாம் எடுதது மண்ட பச் தி போட்டு விட்டு வைத்தியசா% சென்று இறந்தவர் புளைப் ர்த்து விட்டு மார் போய்ச் சேருகின்றன். இரவு ஒரு மen க்கு மீண்டும் நகரத் நிற்குத் திரும்,கிருன் இரண்டு கைக்குண்டுகளு ன். நகரில் பொலிசார் எவருமில்லை. அருளம்பலத்தின் வீட்டுக்குக் காவலாக இருவர் நிற்கின்றனர். அவர்கள் சிவகுமாரனை பறித்துச் சோதனை யிட முயலுகின்றனர் குண்டுகளை விட்டெறிந்தன். அவர்சளி ை கால்கள் பெயர்ந்துபோகின்றன. இவனைப பிடிக்கி பொலிசrர் வலை வீசுகின்றனர் சிவகுமாரன் தலையறைவ, கின்றன்.
யாழ்ப்பாளைத்கில் பொலிசாருக்குத் தலையை அதிகாரியாய் இருந்த சந்திரசேகாா என்னும் சிநசள அதிகாரி யைச் சிவகு மாரன் தேடி அ% கிருன். தெல்லிப் ளை என்னும் இடத்தில் வைத்துக் குண்டு வீசுகிருன். சந்திரசேகர தப்பிலிடுகிருர் . மீண்டும் யாழ்ப்பாணத்தில் அவரது வீட்டுக்குப் க்கத்தில் வேலைக்குச் செல்லும் சப யம் ஜீப்பை பறிக்கிருன் , குண்டுகளை எறிகிறன் வெடிக்க மறுக்கின்றது சுழல் துப்பாக்கியை எடுத்துச் சந்திரசேகராவின் மார்புக்கு நேராக வைத்து ஆறு ரவைகளையும் தீர்க்க முயலுகிருன். ஆறும் வெடிக்க மறுக்கின்றன சிவகுமா ரன் மீண்டும் மறைகி (:ன். தலைக்கு விலைபோட்டுப் பொலிசார் தேடுகின்றனர். ஆயிரம் பேர் ஆயுதங்களுடன் ஊரை வளைத் துக் கொள்கிருர்கள், சிவகுமாரன் யாழ்பபணத்தல் உல. விக் கொண்டிருக்கின்ருன்.
பணம் தேவைப்படுகின்றது. யாரும் உதவி செய்வதாகத் தெரியவில்லை. நண்பர்கள் மூவரை கூட்டிக்கொண்டு ஒரு இடத் திற்குப் போகின்றன். பணம் கிடைக்கவில்லை ஒரு சிலர் அவனைத் துரத்துகிருர்கள். அவர்களுக்கு நின்று எல்லாவற்றையும் விளங் கப்படுத்துகிருன் . நேரம் போய்க்கொண்டிருந்தது பொலிசார் சுற்றி வளைத்துக்கொள்கிருர்4ள். சுழல் துப்பா சகியில் இருந்த ரவைகள தீர்ந்துவிடுகின்றன. நால் வரையும் நாலுடக்சமாக ஒடும்படி கூறிவிட்டு அவனும் ஓடுகிறன் . அறுவடை செய்யப் பட்ட புகையிலைத் தோட்டத்தின் அடிக்கட்டை அவனின் காலில் குத்திவிடுகின்றது. வேகமாக ஓட முடியவில்லை பொலிசார் பிடித்துவிடுகின்றர்கள். அவ னிடம் ஒரு சிறு குப்பியில் 'டிசையனேட்" என்ற நஞ்சும், கத்தியும் எப்பொழுதும் இருக்கும்

Page 31
46 Gorštémprrraf
தொடையைக் கத்தியால் கிழித்து நஞ்சை இரத்தத்துடன் கலக்க முயற்பிக்கின் (?ன் பொலிசார் கத்தியைப் பறித்துவிடுகின்றனர். நஞ்சை வாயில் வற்றிக் குடிக்கின்றன்.
பெ விசர் அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்துச் சங்கிலிகளால் கட்டிலு -ன் பிணைத் துப் போடுகின்றனர். பயங்கர ஆயுதங்களு டன் காவல் நிற்கின்றனர். ஒருசில மணித்தியாலங்களின் பின் கண்க%ள மூடிக்கொள்கின்றன். இளைஞர்கள் வேங்கைகளாக மாறுகின்றனர்.
சிவகுமாரனைப்பற்றி அந்த வேட்டியுடன் இருந்த இளைஞன் கூறிக்கொண்டிருந்தான். மாணவர்கள் உணவைத் தளங்களில் பரிமாறி முடிவுக்குக் கொண்டுவந்தனர். முத்தைய சமையல் வே%லகளை முடித்தபின் வெளியில் வந்து ஒய்வெடுப்பதற்குத் தளத்தில் இறங்கும் படியில் உட்கார்ந்தார். கதவடியில் நின்ற இளைஞன் அவரை விட்டதாகத் தெரியவில்லை.
**éFfl முத்தையா அண்ண, நீங்க சொல்லுறீங்க இந்த நாட்டில தமிழனும் சிங்களவனும் ஒன்றக இருக்க ஏலா தெண்டே?"
*எப்ப தம்பி ஒண்டா இருந்தவன். ஒருத்தனை ஒருத்தன் பிடுங்கிறதும், சண்டை போடுறதுந்தான். இந்தத் தீவில தமிழ னும் சிங்களவனும் சமாதானமாக இருந்ததெண்டால் வெவ் வேறு அரசர்களின் கீழ் இருந்தபோதுதான்."
"எல்லோரும் சமம், எல்லோரும் ஒன்று என்பதைப் பற்றி என்ன நினைக்கிறியள்?' சாய்ந்துகொண்டு நின்ற இளைஞன் கேட்டான்.
"அதெல்லாம் அனுபவமில்லாத கதை தம்பி இதென்ன தக்காளிப்பழமும் வெங்காயமுமா? போட்டுத்தாளிக்க ஒன்ருய் போறதுக்கு. இது கடுகும் மிளகும். என்னதான் எண்ணெய் விட்டுத் தாளிச்சாலும் ஒன்ருய்ச் சேராது. சடுபுடு என்னு வெடிக்கும் அவ்வளவுதான். அப்படி ஒன்டாப்போறதெண்டா கருகிச் சாம்பலாப்போனப் பிறகுதான்."
இளைஞன் சிரித்தான்.

5
சரவணனும், தேவனும் தங்கள் மேற்சட்டைகளைக் கழற்றி காற்சட்டைகளை மடித்து முழங்காலுக்கு மேல்விட்டுக்கொண்டு தயாராகிக்கொண்டிருந்தனர் உணவு பரிமாறுகின்ற இளைஞர்கள் பின்பச்கத்திலிருந்த தளத்தை முடித்துக் கொண்டு முன்பகுதிக்கு மாறியிருந்தனர். சரவணன் இடது கையில் ஓர் உறையை மாட்டிக் கொண்டான். தேவன் மற்ற உறையை வலது சையில் மாட்டிக் கொண்டான். குமாரும் தானும் சேருவதாகக் கூறியும் சமையல் அறை வேலைகள் பார்க்கவேண்டியிருந்ததால் தேவையில்லையெனக் கூறினர். கொழும்பு ஆஸ்பத்திரியில் மருந்தாளராகக் கடமை யாற்றும் வேறு இருவரும் சேர்ந்து கொண்டனர்.
முத்தையாவும் உதவியாளர்களும் இரவு சாப்பாட்டுக்குத் தயார் செய்யத் தொடங்கியிருந்தனர். கரையில் குன்றுகள் தெரிந்தன. மழைக்கோலம் போட்டு சூரியனை மேகங்கள் மூடி யிருந்தன. சரவணன் உணவு முடித்துத் தளத்தின் மேற்பகுதிக்கு வருபவர்களைக் கீழேயே இருக்கும்படி கூறினன்.
சரவணன் ஒருமுறை அங்கெல்லாம் நோட்டம் விட்டான். இந்த வாளிகளுக்கு ஒரு பக்கத்தில் மாத்திரம் கைப்பிடி இருந் தது. அதில் கயிற்றைக் கட்டி ஒரு முனையைப் பிடித்துக்கொண்டு வாளியைக் கடலில் தள்ளிவிட்டனர் தேவன் கயிற்றைப் பிடித் துக்கொண்டான். இப்படி அங்கே முப்பது வாளிகள் வைக்கப் பட்டிருந்தன. கப்பலின் பின்பகுதியாதலால் நீர் சுழித்துக் கொண்டிருக்கும். அதில் வாளியை விடுவார்கள். கழுவிக்கொள் ளும். கயிற்றைப் பிடித்துத் தாக்கி வாளியை இருந்த இடத்தில் வைத்து விடுவார்கள் கப்பலைச்சுற்றிக் கம்பிவேலி போட்டிருந்த படியாலும், வாளிகளுக்கு ஒரு பக்கத்தில் தான் கைப்பிடி இருந் ததனலும் இதைத்துக்கி கடலில் வீச முடியாது. கப்பலைக் கரையில் கட்டுவதற்கு தூண்கள் தளத்தின் பின்பகுதியில் இருந் தன. அத் தூண்களுக்கு நேராக இடைவெளி விடப்பட்டிருந்

Page 32
48 லங்காராணி
தன. இந்த இடைவெளிக்கு முதலில் வாளியை இழுத்து வர் தான் சரவணன். இவற்றை மிகவும் கவனமாகவே இழுத்துவ வேண்டியிருந்தது. கயிற்றை வளியின் சைப்பிடியில் கடடிஞர் கள் தேவன கயிறறின் ஒரு தலைப்பைப் பிடிக்க சரவணன் வளியைக் கடலில் தள்ளிவிட்டான்.
சரவணனுடைய நண்பர்கள் தொடர்ந்து விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர் தமிழர் விடுதலைக் கூட்டணி பற்றிட பேசிசி கொண்டிருந்தனர். மாணவர்பேரவை உடைந்து இளைஞர் பேரவை உருவாகியது இதில் வடக்கு, கிழக்கு, படலையக இளைஞர் கள் த% மைய க இருந்தனர். பிரிநது தனித் தனிக் கடசிகளாக இருந்த தமிழர் கட்சிகள் ஒனறு சோநது தமிழர் விடுதலைசி கூட்டணியை உருவாக்கியிருந்தன. இதற்குத் தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகமும், தமிழ்க் காங்கிரஸ் கட்சித் தலைவர் பொன்னம்பலமும், மலையகத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரி தொண்டமானும் கூட்டுத் தலைவர்களாக இருந்தனர். இது 1971 இல் உதயமாகியது. அரசு தனது தான் தோன்றித்தை மான போக்கை நிறுத்தவில்லை. இளைஞர்கள் தனிநாடு வேண்டு மென்றனர். தலைவர்கள் 1974 ஆம் ஆண்டு மே மாதம் வட்டு 4 கோட்டையில் நடை பெற்ற மாநாட்டில் இதை ஏற்றுத் தமிழர் கோரிக்கையாக முன் வைத்தனர். இதற்காகக் காந்தீய வ களில் போராட வேண்டுமென்றனர். இளைஞர் பேரவை கூட்டணி யின் ஒர் அங்கமாக மாறுகிறது. பாராளுமன்றத்திலும் காந்தியத் திலும் நம்பிக்கையில்லாத இளைஞர் பேரவையினர் தன்த்து இயங்க முற்படுகின்றனர்.
1974 ஆம் ஆண்டு யூன் மாதம் சிவகுமாரன் இறக்கிருன் அவனது இலடசியங்களை இளைஞர்கள் தொடர்கிறர்கள்.
துரையப்பாவை சிறிமாவின் சிறிலங்காக்கட்சி, தமிழ் பகுதியில் அமைப்பாளராக முடிசூட்டியிருந்தது. தமிழாராய்ச்சி மாநாட்டின்போது நடைபெற்ற மரணங்களுக்குத் துரையப்பர் தூண்டுகோலாக இருந்தார் என ஜளைஞர்கள் குற்றம் சுமத்து கின்றனர் அரசாங்கமும் எவ்வித விசாரணையும் வைக்க மறுக கிறது இவருட்ைய மெளனமும் இதை நிரூபிப்பதாக இருந்தது. இதனல் துரோகிகள் பட்டியலில் துரையப்பாவின் பெயருக்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது. இளைஞர்கள் மத்தியில் இடம் காலம் இவை பற்றியபல கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன

அருளர் 49
மூன்று வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து செயல்படுகிருர்கள். செவ்வாய்க்கிழமைகளில் மாணிப்பாய் என்னுமிடத்திலமைந்த அந்தோனியார் கோயிலுக்கும் வெள்ளிக்கிழமைகளில் புன்னலையி லமைந்த வரதராஜப் பெருமாள் கோயிலுக்கும் உதவியாளர்க ளுடன் சென்று வருகிருர் துரையப்பா. வரதராஜப் பெருமாள் கோயிலில் இளைஞர்கள் நால்வர் காத்திருக்கின்றனர். காரின் கதவைத் திறந்து துரையப்பா கீழே இறங்குகிருர், "இப் பொழுது நேரம் என்ன?’ என்று கேட்டபடி இளைஞன் ஒருவன் அவரை அணுகுகிருன். துரையப்பாவுக்கு அந்த நேரத்தில் என்ன நேரம் என்று தெரியாமல் இருந்ததாகையால் நேரத்தைப் பார்த் தார். தீர்ந்தன வேட்டுக்கள். இளைஞர்களுக்கு அந்த நேரம் என்ன நேரம் என்று தெரியவேண்டிய அவசியம் இருக்கவில்லை. துரையப்பா வந்த காரில் ஏறித் திரும்பிப் போய்விடுகிருர்கள், துரோகிகள் பட்டியலில் வேறு பெயர் முதலிடத்தை எடுக்கிறது.
முந்நூறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக யாழ்ப்பாணக் கோட்டையில் சிறை வைக்கப்படுகின்றனர். அப் பொழுது அவசரகாலச் சட்டம் நாட்டிலிருக்கிறது பத்துப் பேர் மீது குற்றம் சாட்டப்படுகின்றது. மூவர் கைதாகவில்லை தப்பித் துக்கொள்கின்றனர். நூற்று ஐம்பது பேர் சாட்சிகளாக மாறு கின்றனர். தமிழ் இளைஞர்கள் மீதான விசாரணைக்கெல்லாம் கொழும்பில் ஒரு தனியான பொலிஸ் பிரிவு இயங்குகிறது. இதற்கு யாழ்ப்பாணத்திலும் கிளை திறக்கின்றனர்.
வேட்டியுடன் இருந்த இளைஞன் இவற்றையெல்லாம் கூறிக் கொண்டிருந்தான். சரித்திரம் தொடர்ந்தது. தமிழ்த் தலைவர் செல்வநாயகம் தனது தொகுதியை ராஜினமா செய்து தனி நாட்டுப் பிரகடனத்தை முன்வைத்து உதயசூரியன் கொடியுடன் போட்டியிட்டு மீண்டும் அமோகமான அதிகப்படியான வாக்கு களால் வெற்றியீட்டுகிறர். குடியரசுக் கொண்டாட்டங்களைப் புறக்கணிக்கின்றனர். அரசு மந்திரிகளுக்குக் கறுப்புக்கொடி காட்டு கின்றனர். 1975ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் திகதி இலங்கைப் பாராளுமன்றத்தில் தனிநாட்டுக் கோரிக்கையைப் பிரேரணையாகக் கொண்டுவருவதற்கு முன்னறிவித்தல் கொடுக் கின்றனர். ஜனவரி 31ஆம் திகதி தமிழ் நாட்டில் இந்திராகாந்தி யால் தி. மு. க. அரசு கலைக்கப்படுகின்றது. புத்தளத்தில் முஸ் லீம் தமிழர்கள் பள்ளி வாசலுக்குள் வைத்துச் சுடப்பட்டு ஏழு பேர் இறக்கின்றனர். திருகோணமலையைச் சுற்றி வளைத்துக்
as

Page 33
SO லங்காராணி
கிழக்கு மாகாணத்தில் சேருவாவில என்னுமொரு புதிய சிங்களத் தொகுதி உருவாகிறது. இலங்கையில் அணிசேரா நாடுகள் மாநாடு நடைபெறுகிறது வடக்கில் நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்படுகின்றன போக்குவரத்துச் சாதனங்கள் தகர்க்கப்படு கின்றன. பரராசா என்ற இளைஞன் பொலீசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகின்றன். மாநாட்டுக்கு வந்த உலகத் தலை வர்களுக்குத் தமிழர் நிலைபற்றித் துண்டுப் பிரசுரங்கள் வினியோ கிக்கப்படுகின்றன. தமிழ் இளைஞர்கள் வெளி நாடுகளில் கெரில்லா யுத்தத்தில் பயிற்சி பெற்று நாடு திரும்புகிருர்கள் என்ற செய்தியை லண்டன் கார்டியன் பத்திரிகை வெளியிடு கிறது. மாநாட்டு நேரம் விசாரணையின்றி சிறையில் இருக்கும் 56 இளைஞர்கள் உண்ணுவிரதம் இருக்கின்றனர். தலைவர் செல்வ நாயகத்தின் வேண்டுகோளின் பேரில் உண்ணுவிரதம் கைவிடப் படுகின்றது.
குடியரசுச் சட்டத்தினை எதிர்த்துத் தனிநாட்டுக் கோரிக் கையை ஆதரித்துத் துண்டுப் பிரசுரம் வினியோகித்த தமிழர் கூட்டணிப் பிரமுகர்கள் அமிர்தலிங்கம், துரைரட்னம், நவரட் னம், க. பொ. இரத்தினம் ஆகியோரை அரசு கைது செய்து! மூன்று நீதியரசர்கள் முன் நாட்டைக் கவிழ்க்கச் சதி செய்தனர் என்று அவசரகாலச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்தது. வழக்கறிஞர்களாகத் தமிழ்த் தலைவர்கள் ஜி. ஜி. பொன்னம்பலம், எஸ். ஜே. வி. செல்வநாயகம், மு. திருச்செல்வம் ஆகியோர் தோன்றி, நாட்டில் ஆறு வருடங்களாக அமுலில் இருந்த அவ சரகாலச் சட்டம் தவருண முறையில் பிரகடனப்படுத்தப்பtடுள்ளது என்பதை நிலைநாட்டுகின்றனர். வழக்கு முடிந்த ல நாட்களின் பின் திருச்செல்வம் இறக்கிறர். இதன் பின் பொன் னம்பலம் காலமாகிருர், இவற்றுக்குப் பின் முப்பது நாட்கள் நினைவு இழந்த நிலையிலேயே மீண்டும் நினைவு வராமலே செல்வ நாயகம் காலமாகிருர், மூன்று கூட்டணித் தலைவர்களில் தொண்டமான் மாத்திரம் உயிருடன் இருக்கிருர்,
அமிர்தலிங்கம் விடுதலைக் கூட்டணியின் செயலாளராகப் பொறுப்பேற்கின்றர். தேர்தல் வருகிறது விடுதலைக் கூட்டணி யினர் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்துப் போட்டியிடு கின்றனர். இதற்கு முன் சிறையில் இருந்த இளைஞர்கள் விடுதள்ை யாகின்றனர். தமிழர்களுக்குப் பிரச்சினைகள் இருப்பதாகவும் இவற்றைத் தீர்த்து வைப்பதாகவும் ஜெயவர்த்தன தலைமையி

அருளர் w si
லான ஐக்கிய தேசியக் கட்சி கூறுகிறது. மலையகத் தமிழர்களை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்குமாறு தொண்டமான் கூறு கிருர். தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. சிறீமாவின் சிறீ லங்கா சுதந்திரக் கட்சி 9 இடங்களைப் பிடிக்கிறது. விடுதலைக் கூட்டணியினர் 17 இடங்களைக் கைப்பற்றிப் பிரதான எதிர்க் கட்சியாகின்றனர். ஜெயவர்த்தணுவின் ஐக்கிய தேசியக் கட்சி 139 இடங்களைப் பிடிக்கின்றது. இதில் தேவநாயகம் என்ற தமிழரும் இருக்கிருர், அவர் நீதி மந்திரியாகப் பதவியேற்கின்ருர் அமிர்த லிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகின்ருர், இந்த நிலையிலும் தனி நாட்டுப் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதைவிட வேறு வழி யில்லை எனக் கூட்டணியினர் தீர்மானித்துத் தங்கள் கோரிக்கை களைத் தொடர்கின்றனர். இவ்வாறு எல்லாவற்றையும் முதலில் இருந்து கூறி முடித்தான் அந்த வேட்டியணிந்த இளைஞன்.
சரவணனும், தேவனும் ஒரு நீளமான படங்குக் குழாயைக் கப்பலின் தளத்தைக் கழுவுவதற்குப் பொருத்தப்பட்டிருந்த இரும்புக் குழாயில் பொருத்திவிட்டு, கப்பலின் மேல் தளத்தில் இவர்களைப் பார்த்தபடி நின்ற கப்பற் சிப்பந்திக்குத் தமது கைகளை அசைத்துச் சைகை செய்தனர். அந்தச் சிப்பந்தி உடனே போய் நீர் இறைக்கும் இயந்திரத்தை முடுக்கிவிட்டான். சற்று நேரத்தில் குழாயில் கடல் நீர் வேகமாக வர ஆரம்பித்தது. அதன் மூலம் கழிவிடங்களை தூரத்தில் நின்றவாறே நீரைப் பிடித் துக் கழுவினர். கப்பலின் கீழ்த்தளத்தில் இளைஞர்கள் தொடர்ந்து உரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
"1971ஆம் ஆண்டு சிங்கள அரசுக்கெதிராக ஆயுதம் கொண்டு போராடிய சிங்கள இளைஞர்களுடன் ஒன்று சேர்ந்து நாம் ஏன் போராடக் கூடாது. சிங்களப் பாட்டாளிகளும் தமிழ்ப் பாட்டாளி மக்களும் ஒன்றுசேர்ந்து அமைக்கும் ஒரு தொழிலாள விவசாயிகள் தலைமையிலான அரசுதான் தமிழர் பிரச்சினை யைத் தீர்க்கும் உலகப் பாட்டாளிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து புரட்சி செய்ய வேண்டும். ஆளும் வர்க்கத்தினர் தமி ழர் சிங்களவர் பிரச்சினையை முன்வைத்து மக்களை ஏமாற்றுகி ?ர்கள் இதைத் தமிழ்த் தொழிலாளிகளும், விவசாயிகளும் ளேங்கிக்கொண்டு சிங்கள தொழிலாளிகளுடன் ஒன்று சேர்ந்து போராடவேண்டும்" என்று வளாக மாணவன் கேள்வி ஒன்றை எதையும் ஏற்றுக்கொள்ளாதவன் போல் கேட்டான்.

Page 34
s2 ல்ங்காரானக்
"சரி, சரி. நான் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லுகிறேன்" என்று அந்த வேட்டியுடன் இருந்த இளைஞன் அதற்குப் பதில் சொல்லத் தொடங்கினன்.
"முதலாவது இந்த 71ஆம் ஆண்டு விடயம் ஒரு இளைஞர் கிளர்ச்சிதான். அது இலங்கைத் தொழிலாளர்களுடைய புரட்சி யல்ல. இரண்டாவது இலங்கையில் தொழிலாளர் வர்க்கமென்று இருப்பவர்கள் முதலில் மலையகத் தொழிலாளர்கள்தான். என்ன புரட்சி ஏற்பட்டாலும் அவர்கள்தான் முன்னிற்கவேண் டும். சரி, முன்னுக்குத்தான் இல்லையென்ருலும் அவர்களைச் சேர்த்துக்கொண்டாவது போகலாம். அதற்கு மாருக இவர் க3ளக் காலனித்துவ ஆக்கிரமிப்பு, இந்திய ஊடுருவல் என்றெல் லாம் இழிவுபடுத்த முற்பட்டனர் இந்தப் புரட்சியாளர்கள்."
இதெல்லாம் பழைய கதைகள்" அந்த வளாக மாணவன் கூறினன்,
"இவர்கள் இவற்றையெல்லாம் உணர்ந்து திருத்திக்கொண் டிருக்கலாம்; வரவேற்கிருேம். உலகப் பாட்டாளிகளின் புரட்சி என்பதெல்லாம் உயர்ந்த எண்ணங்கள் உலகம் முழுவதும் சம தர்ம நாடுகளாக மலரவேண்டுமென்ற நியதியை இது குறிக்கிறது. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படவேண்டுமென்ப தையே இது குறிக்கிறது. அத்தோடு இதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இது சோறு போடாது. மற்றது ஆளும் வர்க்கத் தினர் சிங்களப் பாட்டாளிகளையும், தமிழ்ப் பாட்டாளிகளையும், விவசாயிகளையும் ஒன்றுசேர விடாமல் வைத்திருப்பதற்காக இனப் பிரச்சினையைக் கிளப்பிவிட்டுக்கொண்டிருக்கின்றனர். சரி, அதற்கு நாங்கள் ஒன்றுபடவேண்டும் ஒன்றுபடவேண்டும் என்று கூறிக்கொண்டிருந்தால் அந்தச் சூழ்ச்சிக்கு ஆட்பட்டுப் பொறியில் விழுந்தவர்களாகத்தான் இருப்போம் சரி, ஒன்ருகப் போனலும் உண்மையிலேயே அந்தப் புரட்சி வெற்றி பெற்ருலும் இனப்பிரச் சினை சுலபமாகத் தீர்ந்துவிடுமா என்பதும் சந்தேகம் தான். இப் படிப் பல பிரச்சினைகள் இருக்கின்றன. தமிழர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்ற அவ்ர்களுடைய ஆசை வரவேற் கத் தக்கதே. அவற்றை வெளிநாட்டு நிர்ப்பந்தங்களுக்காகச் சொல்லுகிருர்களோ, தங்களுடைய கிளர்ச்சியின் தோல்வி கார ணமாகச் சொல்லுகிருரர்களோ அல்லது நாம் ஒரு வேறு இனம், சரித்திர, சமய, மொழி, கலாச்சார, புவியியல் ரீதியாக வேருன

அருளர் 第3
வர்கள் என்பதை ஏற்றுக்கொண்டுதான் சொல்கிருர்களோ தெரி யாது. எங்கள் கால்களில் முதலில் சரியாக நிற்கவேண்டும். பின்புதான் நாம் யாரை அணைத்துக்கொள்ள வேண்டும் என்ப தைத் தீர்மானிக்கலாம். ஏற்றுக்கொள்கிறீரா? இப்படி எத்த இனயோ பிரச்சினைகள் இருக்கின்றன" என்ருன் அந்த இளைஞன். வளாக மாணவன் தனது சந்தேகங்கள் தீர்ந்தது போல் தலையை அசைத்தான்.
இலங்கையில் 1971 ஏப்ரல் மாதத்தில் ஒரு இளைஞர் இளர்ச்சி ஏற்பட்டது. இந்தக் கிளர்ச்சியின் அடிப்படை இலங்கைப் பொலீ Frraouth இராணுவத்தினரையும் கொன்று இலங்கையின் ஆட்சி யைப் பிடிப்பதுதான். வெளிநாடுகளின் உதவியுடன் இந்தக் இளர்ச்சியை அரசு அடக்கிவிட்டது. பதினருயிரம் சிங்கள இளை ஞர்கள் கொல்லப்பட்டனர். பலர் சிறைப் பிடிக்கப்பட்டனர். இவர்கள் வைத்திருந்த ஆயுதங்களெல்லாம் வெறும் சாதாரண கைத்துப்பாக்கிகளும் உள்ளூரில் தயார் செய்யப்பட்ட கைக்குண்டு களும் தான்
இளைஞனது அந்தக் கேள்விக்கு மறுமொழி கூறிவிட்டு இன் றைய நிலை உருவாகுவதற்கு அடிப்படைக் காரணங்கள் என்ன TGör. u GM5 er m illu முற்பட்டனர். ஒருவன் தனிச் சிங்களச் சட்டம் தான் இன்றைய பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் என்றும், இன்னெருவன் சிங்களக் குடியேற்றம் என்றும், தமிழ் இளைஞர் களுக்கு உயர் கல்வி மறுப்புத்தான் எனவும் தெரிவித்தனர். இவ் வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைக் கூறினர்.
நோங்கள் ஒரு தேசிய இனம் என் יש எங்களை அழைக்கிருேம்" இதன் பொருள் என்ன?" என்று வேட்டியுடன் இருந்த இளைஞன் மற்றவர்களை வினவினன்.
அதற்கு வளாக மாணவஞெருவன் 'ஒரு பொதுமையான கலாச்சாரமாக பிரதிபலிக்கப்படும் பாரம்பரியங்களையும், மொழி யையும், பூமியையும், பொருளாதார வாழ்க்கை முறையையும் கொண்ட மக்களின் தொகுப்பே ஒரு இனம்" என்று கூறினன். தான் இதை எங்கோ படித்ததாகவும், இதை யார் எழுதியது என்று தனக்கு ஞாபகமில்லை என்றும் கூறினன். இன்னுமொரு வன் இதன்படி பார்க்கப்போனல் நாம் ஒரு தேசிய இனம் இல்லை யென்றும், நிலப் பரப்பால் தமிழர்கள் இலங்கை முழுவதும் இருக்

Page 35
54 லங்காராணி
கிருர்கள் என்றும் ஒன்றுபடாமலும் பாரம்பரியங்களால் வேறு பட்டும் பொழி வகையில்கூட இதுவரை காலமும் கையே விரும் பிப பேசி வருகிறர்கள் எனவும் கூறினன். இதனை பலர் மறுததனர் என்ன என்னவாக இருந்தாலும் தமிழர்கள் தமிழர்கள்தான் என், னர்.
கடைசியாக இளைஞன் குறுக்கிட்டு சகல விதத்திலும் எமது இனத்திற்ான குண மசங்களை நிலைநிறுத்துவதற்குத் தடங்கல்கள் இருப்பதால்தான் நாங்கள் போராடவேணடிய சூழ்நிலையில் இருச் கிருேம். இவ்வாருன ஒற்றுமைப்பாட்டுக்குப் பாதகமான வெளி நிலத் தாக்கங்களை அகற்றவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறினன் நானூறு ஆண்டுகள் அந்நியர்கள் இருந்ததி ஞல் அவர்கள் தமிழ் இனத்தின் நலன்களை என்றும். மனதில் கொண்டிருக்கவில்லை என்பதையும் இதனல் இனத்தின் இலடசி ணங்கள் சிதைக்கப்பட்டுள்ளன என்றும் எங்கள் எதிரிகளை நாசி கள் அறிந்து எங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் சக்தியை முற்ரு) இழந்துபோய் தனிமனிதராகவும் குடும்பம் உறவினர் என்ற நின்ை யிலும் தப்பித்துக்கொள்வதை மாத்திரம் நோக்கமாகக்கொண்டு செயற்படும் அந்நியர் ஏற்படுத்திச் சென்ற நிலையே தொடர்ந்து நீடிக்கிறது என்பதையும் அந்தப் போக்கை மாற்றி எங்கள் இனத்திற்கான இலட்சணங்களை நிறைவுபடுத்த வேண்டும் என்டி தையும் குறிப்பிட்டான். மற்றவர்கள் அமைதியாகக் கேட்டு) கொண்டிருந்தனர்.
"அது சரி, அந்நியன் இங்கிருந்து போய்விட்டான். அதர் காக நாம் ஏன் சிங்களவருடன் மோதவேண்டும்?" என்று வளாக மாணவஞெருவன் கேட்டான்.
அந்நியர் சட்டத்தின் அரசு, தி ரூல் ஒவ் லோ, என்ற போர் வையில் சட்டங்களை இயற்றி அவற்றை நடைமுறைப்படுத்திக் கொண்டதால் தங்கள் அடக்கு முறைகளை நடைமுறைப்படுத்தி யது போல, ஒரே நாட்டுக்குத் தேவையான உயர்ந்த இலட் யங்களையோ கோட்பாடுகளையோ பொதுமைப்பாட்டையோ முன் வைக்காமல் ஒரே நாடு என்ற போர்வையில் பெரும்பான்ம்ை யினரின் பலமே சட்டங்களாக மாறும் நிலையால் தொடர்ந்து அடக்குமுறை நீடிப்பதே இந்த நிலைமைக்க முக்கிய காரணம் என்று சொன்ஞன். தொடர்ந்து கூறுகையில் ஆங்கிலேயர் விட் டுச் சென்றவற்றின்மீது ஏறி உட்கார்ந்துகொண்டு இவர்கள்

ANC 56nrif SS
தங்க%ள அறியாமலே ஆங்கிலேயர்களைப் போல் நடந்து கொள்வ கீறல் த மி ழ ர் க ள் தங் ள் நாட்டுச் சு ந் ரத்திற்க கத் தொடர்ந்து போராடவேண்டிய நில ஏற்பட்டுள்ளது நாங் ஸ் ஒரு இனமாக இருப்பதால இந்த உரியை யை அதாவது பிரிந்து ஃப ய் தனியான ந டு காணும் உரிமை 3, ய, சுயநிர்ணய உரிமை, திரை ட்ரு செல்வ்டிற்றேமினேசன் எங்கள் போராட்டத்திற்கு ந பங்கள் பிரயோகிப்பதாக அ ையும் இதில் எவ்வாறன தவறு மில்லை என்றும் கூறினன். இலங்கை ஒரே நாடாகத் தொடர்நது இருக்க இந்நாட்டு அரசு இரண்டு இனங்களுக்குமிடையில ஏற் படும் உடன்பாடாக அமைய வேண்டுபேயொழிய ஒரு நாடு ஒரு மொழி வேண்டுமென்ற போர்வையில் ஒரு இனம் தனது மொழி யையும் கலாசச. ரத்தையும் தினத்து இன்னொரு இனத்தை சிதைத்து அழிகக முற்படுவதாக இருக்கக்கூடாது என்றும் குறிப பிட்டான். அது ஆங்கிலேயரை விட மோசமாக நடந்து கொள் வது போல் அமையும் என்றும் கூறினன்.
அங்கிருந்த நீர்கொழும்பு இளைஞன் சிங்களக் கடையொன் றில் எடுபிடி வேலை பார்த்து வந்தவன். இவற்றையெல்லாம் தன்னல் விளங்க முடியவில்லை என்பதைக் கூற விரும்பாமல் ‘இதுகளெல்லாம் இவங்களுக்கு எங்கே விளங்கப்போகுது. நாங் கள எங்கடை பாட்டிலை போறதுதான் புத்தி " எனக் குறிபபிட் டதும் மற்றவர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
பின் தளங்களில் உணவு பரிமாறி முடிந்தபின் தொண்டர் கள் இந்தத் தளத்திறகு வந்தனர். படிகளில் நின்றுகொண்டே சாம்பார் தட்டுக்களைக் கீழ்த்தளத்திற்குக் கொடுத்தனர். பேசிக் கொண்டிருந்த இளைஞர்கள் தட்டுக்களைப் பெறறுக்கொண்டு சாப்பிடத் தொடங்கினர் விவாதம தொடர்ந்தது.
மேலே தளத்தில் சரவணனும் நண்பர்களும் வேலையை முடித்துவிட்டிருந்தனர். வேறு பலரும் உணவை முடித்த பின் மேல்தளத்திற்கு வந்துவிட்டிருந்தனர். டாக்டர் நற்குணம் *வினேல்" என்ற கிருமிநாசினியைக் கழிவிடங்களுக்குத் தெளித் தார் மழைக்கோலம் போட்டு வானத்தை மூடி இருளாக இருந் தது. அந்த வாளிகள் சரியாக வைக்கப்பட்டிருக்கின்றன. பா என று சரவணன் மீண்டுமொரு தடவை எட்டிப் பார்த்துச் சிலவற்றை உள்ளே தள்ளிவிட்டான்.

Page 36
S5 avÊasrrerard
சரவணன் யாழ்ப்பாணக் கல்லூரி ஒன்றில் படித்து வந்தவன் இவனுடைய தகப்பன் ஒரு புகையிலைத் தோட்டத்தைக் குத் தகை எடுத்துச் செய்து வந்தார். மூன்று தங்கைமார் இருக்கின் றனர். "தரப்படுத்தல்" திட்டம் வந்தது. கடினமான நிலையே வீட்டில் தொடர்ந்து நீடித்தது. இனிமேல் படித்தும் பிரயோ சனம் இல்லையென்று தெரிந்ததும் இவனுக்குப் படிப்பு ஓடவில்லை மாணவர் பேரவையில் சேர்ந்தான். கூட்டங்களுக்குப் போவான் ஊர்வலங்களில் முன்னுக்கு நிற்பான். மாணவர்கள் துரோகிகள் பட டியல் தயாரிப்பதைப் பொழுதுபோக்காகச் செய்வார்கள் இவனும் அதில் ஈடுபடுவான். துரோகிகள் பட்டியலில் சிங்களவர் பெயர் இடம்பெற முடியாது என்ற கடடுப்பாட்டையும் ஏற்படுத் திக்கெ ள்ளுகிறர்கள். சிவகுமாரன் இறக்கிருன். மேலும் கோர் படைகிருன் கைத் துப்பாக்கிகள் தேடி அலைகிருன். கிடைக் றது. இப்படி இருக்கும்போதுதான் நண்பன் ஒருவன் வந்து வர தர ஜப் பெருமாள் கோயிலுக்கு துரையப்பாவைப் பார்க்க வரும் படி அழைக்கிருன்.
இவனுக்குக் கார் ஓட்ட அதிகம் தெரியாது. கார் நிற்பா. டிய பின் சாரதியின் ஆசனத்தில் ஏறி அமரும்படி கூறிக்கொள் கிருர்கள். அதன்படியே எல்லாம் நடக்கிறது. திரும்பி வருகை யில் சற்றும் எதிர்பாராதவாறு பொலிஸ் ஜீப் ஒன்று வருகிறது வேறு வழியில்லை பிரேக் போடுகின்றன். கார் மற்ற பக்கமாக திரும்பி வயலுக்குள் பாய்ந்தோடி நிற்கிறது. இளைஞர்கள் நால் வரும் தப்புகின்றனர். அதன்பின் சரவணன் தலைமறைவாகிருன் கடைசியாக வீடு போயிருந்தபோது இவனுக்குப் பணம் தேவைப் பட்டது. வீடு மேய வைத்திருந்த ஐம்பது ரூபாவையும் தல் கொடுகக மறுத்துவிட்டாள். தங்கையி ைதங்கச் சங்சிலியை வாங் கிக்கொண்டு புறப்பட்டு வந்தவன் மீண்டும் வீடு திரும்பவில்ல. அதற்குப் பின்பும் நண்பர்களுடன் சேர்ந்து பல இடங்களுக்குப் பே ய்வருகிருன்,

6
மழை தூறத்தொடங்கியிருந்தது. கீழ்த் தளங்களை மூடக் கூடிய இரும்புத் தட்டுகள் இருந்தும், அவற்றை இழுத்து மூடி னல் காற்ருேட்டமிராது என்ற காரணத் கால் இந்த மூடிகளை ஒரளவு இழுத்து மூடிவிட்டு மிகுதி பகுதிக்குப் படங்குகளைத் தொங்கவிட்டிருந்தர்கள். மழை தொடங்கியதும் தொண்டர் கள் பலர் சேர்ந்து படங்குகளை இழுத்துக் கிடங்குகளை மூடினர். படங்குகளுக்குப் பொறுப்பாக பெரிய பாரங்களைத் தூக்கிவைத் தனர். டேல்தளத்தில் யாரும் தென்படவில்லை.
தளத்தின் பின்பகுதியில் ஒரு சிறிய அறை இதில் சில பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இவை தும்புச் சிப்பங்கள் என்பது உற்றுநோக்கும்போது தெரியவந்தது. இந்த அறையில் சரவணன் உட்கார்ந்திருந்தான். இதில் ஒரு சிறிய யன்னல், வேறு மூவரும் இந்த அறையில் ஒதுங்கியிருந்தனர்( வர்கள் அங்கு போடப்பட்டிருந்த துப் புச் சி பங்கள் மீது உட்காந்திருந் தனர். சரவணன் மேசைமீது உட்கார்ந்துகொண்டிருந்தான் மழை தூறலகத் தொடங்கிப் பல பாகப பெய்ய ஆரம்பித்தி ருந்தது குளிர்காற்றும் அடித்துக்கொண்டிருந்தது. சரவணன் குளித்து விட்டு வெறும்மேலுடன், ஈரக் காற்சடடையுடன் உட் கார்ந்திருந்தான். காற்சட்டை முழங்காலுக்குமேல் மடித்துவிடப் பட்டிருந்தது. யாரும் எவருடனும் எந்த விதமான கதைகளி லும் ஈடுபட முன் வராமல் ஒருவர் ஒருவரின் முகத்தைப் பார்ப் பதைத் தவிர்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தனர். அங்கிருந்த வர்களில் ஒருவர் கிழவர். வயது அறுபது இருக்கும். வேட்டியை உடுத்தி, சால்வையைத் தோளில் போட்டிருந்தார். அவர் கையில் ஒரு சிறிய பை, துணி யா லான இந்தப் பையில் வேல்முருகன் ஸ்ரோர்ஸ் கொழும்பு- 6 என்று எழுதப் பட்டிருந்தது. இந்த விலாசத்திற்கும் அவருக்கும் எந்தவித
as B

Page 37
岛8 épában prnraát
தொடர்பும் இல்லாமல் இருக்கலாம். இதுதான் அவர் தன் சொத்தாக தன்னுடன் கொண்டுவந்திருந்தது என்பதை ஒர ளவு ஊகிக்கக்கூடியதாக இருந்தது. இன்னுமொருவரும் அங்கு இருந்தார். அவருக்கு வயது சறறுக் குறைவாக இருக்கலாம். அவரும் ஒரு வர்த்தகராக இருக்கலாம் என்பதற்கு அடையா ளங்கள் தென் பட்டன. ஒரு சாரத்தை உடுத்தி சேட் அணிந்தி ருந்தார். அவர் அதை உடுத்தி இருந்த விதத்தில் சாதாரண மாக அதை அணிவதில்லை என்பது நன்கு புலப்பட்டது. அரை மணித்தியாலம் சென்றபின் அவர் தான் சற்றுத் தயக்கத்துடன் பேச்சைத் தொடங்கிவைத்தார்.
*இவங்களுக்குச் சும்மா இருக்க ஏலாது, இந்த வாயை வச்சுக்கொண்டு, தனிநாடு, தனிநாடு."
எவரும் அவருடைய பேச்சைக் காதில் போடுவதாக இல்லை. இதைக் காட்டிக்கொள்ளாதவனக சரவணன் யன்னல் வழியா கத் தளத்தை நோட்டம் விடுவதுபோல் பார்த்தான். யன்னல் அவனது பின்புறமாக இருந்ததாகையால் திரும்பி குனிந்து பார்க்கவேண்டியிருந்தது. கதைத்தவர் தொடர்ந்தார். "கொழும் பில் வந்து கதைக்கிருங்கள் சிங்க்ளவன்ர இரத்தத்தில் குளிப்ப மெண்டு கண்டறியாத தனிநாடு,"
யாரும் அவருக்குப் பதில்கொடுக்க முன்வரவில்லை, சரவ
ணன் திரும்பி இருந்துகொண்டு தலைமயிரைக் கைகளால் கோதி விட்டான்.
பெரியவர் கேட்டார். "நீங்களென்ன கொழும்பா?
"ஒம்,. இரண்டு கடை பாருங்கோ, புறக்கோட்டையில ஒன்று, தெகிவளையில் ஒன்று, போனமாதந்தான் எல்லாம் வாங் கிப்போட்டது. விட்டிட்டு வாறன், நான் நினைக்கவில்லை அங்க ஏதும் மிச்சம் இருக்குமெண்டு"
"இதைப்போல எத்தனை?"
நீங்கள்..???
*நான் நாகலிங்கம். சுருட்டுக்கடை. எனக்கென்ன சேதம் இழுத்து மூடிவிட்டு வாறன். ஒரு நூறு ரூபாய்க்கு சுருட்டு ஆவளவுதான்."

Gerst s)
இதன் பின்பு நாகலிங்கம் தனது வாழ்க்கையைச் சுருக்கமாக கூறினர். தான் நாற்பது வருடங்களாக அந்தக் கடையை வைத்திருப்பதாகவும், 1958-லும் கப்பலில் போனதாகவும், பணம் கொஞ்சம் இருந்ததாகவும், அதைத் தான் ஏற்கனவே வீட்டுக்கு அனுப்பி இருபபதாகவும் கூறினர். தனக்கு இரண்டு பிள்ளைகள் எனவும், ஒருவர் கிளிநொச்சியில் கபம் செய்வதாக வும், மற்றவர் மட்டக்களப்பில் ஒரு வேலையில் இருப்பகாகவும் கூறினர். கடைசியாக முடிக்கும்போது "எனக்கி து வருமெண்டு தெரியும். இனி எங்க திரும்பிப்போறது" என்றும் அலுத்துக் கொண்டார்.
இதைக்கேட்டு அந்தக் கொழும்பு வியாபாரி தொடர்ந் தார். ‘இனித்தானே எல்லாம் இறக்குமதி செய்யப்போகின மாம். இந்தத் தட்டுப்பாடுகளெல்லாம் முடிஞ்சு போட்டுதே. என்ன வேணும் எண்டாலும் வாங்கலாம். யப்பான்காரன் யேர்மன்காரனெல்லாம் தொழிற்சாலைகள் கட்டப்போகின்ருன் கள். இவங்களுக்கு ஜே. ஆரைத் தெரியாது பாருங்கோ, இத%ன விட்டுப்போட்டு, தனிநாடு தனிநாடு, கண்டறியாத தனிநாடு. வெள்ளவத்தையில் என்ட வீட்டையும் விட்டு போட்டு வாறன். அங்கஅப்படி ஒண்டும் வராது." இப்படி கொழும்பு வியாபாரி கூறிமுடிக்கவும் நாகலிங்கம் தொடர்ந்தார்.
**இந்த அரசாங்கம் வந்து முதல் செய்த வேலை, வெங்கா யத்தையும், மிளகாயையும் இறக்குமதி செய்ததுதான். அவங்க ளுக்கு நல்லாத் தெரியும், இதை விளைவிக்கிறதும் தமிழர், விக் கிறதும் தமிழர். நாலாங் குறுக்குத்தெரு ஆட்கள் பாடுதான் கெட்டது. எனி கட்ை போடுறதெண்டால் எங்கடை பக்கத் திலதான் கொண்டுவந்து போடவேண்டும்."
கடை, கடை, கடை, ஆகத் தெரிந்தது கடைதான். பிறகு உழுந்து வடை, மாலாவடை, பருப்பு வட்ை எண்டு அடிவாங்கிக்கொண்டு எல்லாத்தையும் தூக்கிக்கொண்டு ஒட் டம்.' மேசைமீது உட்கார்ந்து கதைகளைக் கேட்டுக்கொண்டி ருந்த சரவண ன் இவ்வாறு கதைக்கத்தொடங்கினன். தொடர்ந் தான், “ஆகத் தெரிந்தது ஒரு கடைதான்."
இருவரும் மெளனமாக இருந்தனர். சிறிது நேரத்தின் பின்
கொழும்பு வியாபாரி சறறுத் தயக்கத்துடன், நாகலிங்கத்தைப் பார்த்தவண்ணம் கூறத்தொடங்கினர்.

Page 38
50 லங்காராணி
**இந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில என்ன இருக்கு. இண்டைக்கு யாழ்ப்பாண மெல்லாம் இப்படி இருக்கக் காரணம் மணியோடர்தான். பொருளாதாரமெண்டு என்ன இருக்கு பனைதான்." -
‘இதெல்லாம் நூற்றண்டில கதைக்கிற கதையா? இப்படிச் சொல்லிக்கொண்டு அங்கு போய் கடையைப் போடுறது, கொள் ளையடிக்கிறது, பிறகு அடிவாங்கிக்கொண்டு ஓடிவாறது' சரவ ணன், இப்படி பேச, மற்றவர்கள் மூவரும் அமைதியாக இருந் தனர்.
நாகலிங்கம் சொன்னர் 'எல்லாம் மனம் பாருங்கோ மனம்." கொழும்புக் கடைக்காரர் கதையை நிறுத்த விரு. ப மில்லாமல் தொடர்ந்தார்.
"தனிநாடு, தனிநாடு என்று சொல்லுறம், நாங்களெல்லாம் இந்தியாவில் இருந்தெண்டு சொல்லுருங்க **
நாகலிங்கம் சொன்னர் 'சொல்லுவாங்க, சொல்லுவாங்க, இதப்போல எத்தனைய சொல்லுவாங்க."
சரவணன் கூறினன், “சிங்களவன்தான், இந்தியாவில் இருந்து வந்தது.”*
நாகலிங்கம் சுருட்டு ஒன்றை எடுத்துப் பற்றவைத்துப் புகையை இரண்டு தடவை இழுத்துவிட்டுக் கொண்டார். பின்பு கூறிஞர், "இரண்டாயிரம் வருடத்துக்கு முன்னல் தமிழ் மன் னன் எல்லாளன் இத்தீவு முழுவதையும் ஆண்டிருக்கிருன். அவ னுக்குப் பிறகு சிங்களவரும், தமிழரும் மாறிமாறி ஆண்டிருக் Sarth.'
சற்று அமைதிக்குப்பின் கொழும்பு வியாபாரி மீண் டு ம் "என்ன சொன்னலும் அவங்களுக்கு நாட்டுப்பற்று இருக்குது பாருங்கோ விட்டுக்கொடுக்க மாட்டார்கள்." நாகலிங்கம் தொடர்ந்தார். "நாட்டுப்பற்று . . நாட்டுப்பற்று ந ல் ல து பாருங்கோ, ஆளுல் அவங்கட நாட்டுப்பற்று எல்லைமீறி எங்க டைக்குள்ள வந்தால்தான் இந்தப் பிரச்சனைகள் எல்லாம்."
'நீங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சொல்லுறீங் களோ, அதென்ன இப்ப வெள்ளைக்காரன் போட்டதுதானே."

அருளர் 61
'இல்லை நான் அதுக்கு முந்திய எல்லைகளைச் சொல்லுறன்." "எந்த நாளைய கதை சொல்லுறீயள்." என்ருர் கொழும்பு ə9unr unrtifi.
"முதல் துவக்கத்தில் இருந்து தமிழர்கள், வடக்கு கிழக்குப் பகுதியிலேயும், அனுராதபுரப் பகுதியிலேயும் இருந்திருக்கினம். : இருநூறில் இருந்து தமிழருக்குத் தனியாட்சி இருந்
ருக்கு."
'எல்லைகள் இருந்திருக்கெண்டு சொல்லுறியளா?*
*எல்லாம் இருந்திருக்கு. வெவ்வேறு பகுதிகளாப் பிரிச்சி ஆண்டிருக்கினம் "
நாகலிங்கம் சுருட்டைச் சில தடவைகள் இழுத்துவிட்டு நன்கு ஆயத்தப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார். “நல்லூர்தான் தலைநகரம். வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவுப்பற்று பச்சிலைப்பள்ளி, கொட்டியாரப்பற்று, கரவாகுப்பற்று, கரை துறைப்பற்று, கரைச்கிக்குடியிருப்பு, முள்ளியவளை, பனங்காம வன்னிமை, பழுங்காம வன்னிமை, பாணமை வன்னிமை என்று இருந்திருக்கு. இதில் பாணமை, பழுங்காமம், கொட்டியாரப் பற்று, கரைதுறைப்பற்று, காவாகுப்பற்று, பனங்காமவன்னிமை, யாழ்ப்பாண மேலாண்மையை ஏற்ற சிற்றரசர்களாக ஆண்டி ருக்கினம். இதில் பாணமை வன்னிமை என்ருல் கும்புக்கன் ஆறு ம ணிக்ககங்கை இதுகளை தென்மேற்கு எல்லையாகக் கொண் டது. கதிர்காமம், குமணை, உகந்தை, பொத்துவில், அம்பாறை, இதெல்லாம் இதுக்குள்ள இருந்திருக்கு. மேற்குப்பக்கமா மகா வலி கங்கையையும், வடக்குப் பக்கமாக வெருகல் ஆற்றையும் கொண்டிருந்ததுதான் பழுங்காம வன்னிமை. மட்டக்களப்பும் வேடர்களின் விந்தனையும் இதிலதான் வருகுது. அடுத்து கொட் டியாரப்பற்று' என்று கூறி நிறுத்திவிடடு, சுருட்டை வாயில் வைத்து இழுத்து ஊதினர். கொழும்பு வியாபாரி நாகலிங்கம் கூறுவதை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தார். நாகலிங் கம் தொடர்ந்தார்.
"கொட்டியாரப்பற்று என்ருல் தெற்குப் பக்கமா வெருகல் ஆற்றையும், வடக்குப் பக்கமா பறங்கி ஆற்றையும் கொண்டது. சேருவாவில, மூதூர், தம்பலகாமம், திருக்கோணமலை, கந்த

Page 39
62 6wfbais fir pyntaf?
ளாய், பதவியாக்குளம், பன்குளம், குச்சவெளி, நிலாவெளி இதெல்லாம் கொட்டியாரப்பற்றுதான். மன்னரைச் சேர்ந்தது தான் பனங்காம வன்னிமை. முல்லைத்தீவு முள்ளியவளையைச்
சேர்ந்தது இப்படித்தான். போர்த்துக்கேயர் இலங்கைக்கு வரும்
போது இருந்தது. 1619 ல்தான் யாழ்ப்பாணத்தைப் போர்த் துச்கேயர் பிடிச்சு சங்கிலி மன்னனை நாடுகடத்தித் தூக்குப் போட்டது'
இவற்றையெல்லாம் நாகலிங்கம், இவ்வளவு தெளிவாக கூறுவார் என்பதைக் கொழும்பு வியாபாரி எதிர்பார்க்கலில்லை. அவர் மேலும் கேள்விகள் கேட்கவும் விரும்பவில்லை. சரவண னுக்கு ஆனந்தமாக இருந்தது. கொழும்பு வியாபாரியின் முகத் தைப் பார்த்தான். தலையை ஒரு உன்னல் உன்னினன். இதற்கு என்ன கூறுகிறீர் என்பது போல் இருந்தது அவன் தலையசைப்பு. கொழும்பு வியாபாரியின் முகத்தை இருவரும் பார்த்தனர். அவர் ஏதாவது கூறியே ஆகவேண்டும் போல் தொடர்ந்தார்.
'அதுக்கென்ன, நாங்கபோய் அவங்கட இடத்தில் இருக் கிறம், அவங்க வந்து, எங்கட இடத்தில் இருந்தால் என்ன?"
சும்மா வந்து இருக்கிறது வேறபாருங்கோ. கபட எண்ணங் களோட எங்கட பூமியை அபகரிக்கின்றது வேற, அவன்கள் இதைத்தான் செய்யிருன்கள்." என்றர் நாகலிங்கம்.
கொழும்பு வியாபாரி கொழும்பிலேயே இருப்பவர். அவர் யாழ்ப்பாணம் சென்று வருவது கிடையாது. அங்கு போன: பலர் உதவி கேட்டு வருவார்கள். காலம் செய்த சதியால் கட் பலில் யாழ்ப்பாணம் போய்க்கொண்டிருக்கின்ருர்,
‘நாங்கள் கண்மூடித்தனமாகக் கடைபோட்டுக்கொண்டு திரிந்தால் இருக்கிறதுக்து இடமில்லாமல் அலையவேண்டிவரும், இப்படி. எத்தனையோ பேருக்கு உலகத்தில் நடந்திருக்கு" என் ருர் நாகலிங்கம் கொழும்பு வியாபாரியை உற்று நோக்கிக் கொண்டு. ஆங்கிலேயர் இலங்கையை ஆண்டபொழுது இலங்கை மக்கள், பிரித்தானிய சாம்ராச்சியத்தின் குடிகள் எனவே கரு
தப்பட்டனர். ஆங்கிலேயர் இங்கிருந்து வெளியேறவேண்டிய
நில்ை ஏற்பட்டதும் சுதந்திரம் தந்து விடுவதாகக்கூறிப் பேச்சு

அருளர் 63
வார்த்தைகளில் இறங்கினர்கள். அப்போது ஆங்கிலேயரைப் பொறுத்தவரையில் தங்கள் தேயிலை, ரப்பர் தோட்டங்களையும் வியாபார நிறுவனங்களையும், விமானப்படை, கடற்படைத் தளங் களையும் எவ்வாறு தொடர்ந்து வைத்திருக்கலாம் என்பதே பிரச் சினை. மற்றைய பிரச்சினைகள் பற்றி அதிக அக்கறை கொள்ள வில்லை. இனங்களின் தனித்தன்மை பற்றியோ, அவற்றிற்கு மத்தியில் இருக்கும் பிரச்சினைகள் பற்றியோ அதிக அத்கறை இருந்திருக்க முடியாது. அது மாத்திரமல்ல, இவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தியவர்களும் பல்வேறு காரணங்களால் மேற் கத்தைய சிந்தனையில் ஊறிப்போய் ஆங்கிலேயருக்கு மனதால் அடிபணிந்து போனவர்கள். ஆங்கிலேயப் பெண்களை மணந்து ஆங்கிலேயருடன் ஒன்றிப்போனவர்கள். ஆங்கிலேயர் தங்கள் செளகரியங்களை பாதுகாப்பதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டபின் ஒவ்வொருவக்கும் ஒரு வாக்கு என்ற அடிப்படை யில் பல கட்சிகள் போட்டியிட்டு அதிக நபர்களைப் பெறும் கட்சி ஆட்சியை அமைக்கும் என்று கூறிவிட்டு இவற்றை மேற் பார்வை செய்வதற்கு மகாராணியின் பிரதிநிதி என்று ஒருவ ரையும் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். இதுகாலவரிைக் கும், ஆங்கில ஆட்சியில் வெளிவரமுடியாமல் திணறிக்கொண்டி ருந்த இடதுசாரிகள் வெளிப்பட்டு ஆட்சியைப் பிடிக்கும் முயற் சியில் ஈடுபட்டனர். வறுமையில் வாடிய தொழிலாளர்களும், இலங்கைக் கிராம மக்களும், இடதுசாரிகள் பக்கம் அனுதாபத் தைக் காட்டத்தொடங்கினர். தங்கள் நிலைகளைக் காப்பாற்றிக் கொண்டு, ஆங்கிலேயர் விட்டுச்சென்ற லெளகீக வாழ்க்கை முறைக்கும் அவர்களின் போக்குகளுக்கு உடந்தையாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கும் உட்பட்டவர்களால் இடதுசாரி கள் இலங்கை மக்களைத் தட்டியெழுப்புவதைச் சகிக்கமுடிய வில்லை. அரசியல் ரீதியாகவும் அவர்களுக்கு ஈடுகொடுக்க முடிய வில்லை. இவர்களுக்கு மக்களின் ஒட்டு பெறுவதற்கு ஒரே ஒரு வழிதான் இருந்தது. தமிழனை விரட்டு
நாகலிங்கம் கொழும்பை அடுத்த கடகந்தையில் சுருட்டுக் கடை வைத்திருந்தார். 1980 ஆம் ஆண்டிலேயே போய்விட்டார். யாழ்ப்பாணத்தில் இருந்து சுருட்டு ரெயிலில்வரும். அந்தக் கிரா மத்தில் இருந்தவர்கள் எல்லாம் ஏழை விவசாயிகள்தான். தேர் தல் காலங்களில் இந்த அரசியல்வாதிகள் கூட்டம் போடுவுரர் கள். கிராம மக்கள் கூடுவார்கள். சிறுவர்கள் மேடைக்கு முன்

Page 40
எங்காரா:
ஞல் வட்டமாக உட்காருவார்கள். பேசத் தொடங்குவார்கள். "தாய்மார்களே, பெரியோர்களே வணக்கம் இந்தப் பறத்தமி ழர்களின் தோலே உரித்துச் செருப்பு தைத்து எனது காலின் போடாவிட்டால் நீங்கள் இருந்து பாருங்கள். ஒரு தமிழரையும் இங்கு வைக்கக்கூடாது. இந்தியாவுக்கு விரட்டவேண்டும். நீங்கள் இந்த நிலையில் இருப்பதற்கு இவர்கள்தான் காரணம்" இவ்வா றுதான் அவர்கள் பேச்சுக்கள் அமையும். கைதட்டல் வாஃனப் பிளக்கும்.
இந்த வகுப்புவாதக் கலேயில் முன்னணியில் நின்றவர்களில் முக்கியமானவர் கே. எம். பி. ராஜரட்ணு. இவர் தனக்கென கட்சியை வைத்துக்கொண்டார் பின்பு இன்று ஆட்சியிலிருக்கும் கட்சியில் சேர்ந்துகொண்டார் ஆர். ஜி. சேனநாயக்கா, முன் னேய பிரதமர் டட்லி சேனநாயக்காவின் உறவினர். இதே போன்ற வகுப்புவாத பேர்வழிகள், அரசாங்கங்களில் மத்திரியாக இருந்துகொண்டு வகுப்புவாதத்தைக் கக்கிக்கொண்டிருப்பார்கள்.
தற்போது அமைச்சராக இருப்பவர்களிலும் இந்தப் பணி யைத் தொடர்பவர்கள் இருக்கிருர்கள். கடந்த யூ என். பி. அரசாங்கத்தில் தமிழரசுக் கட்சியும் அரசாங்கத்தில் சேர்ந்திருந் ததினுல் இதனை வெளிப்படையாகக் காட்ட முடியவில்3ல ஆயி ணும் இன்றைய ஜனுதிபதியாக இருக்கும் ஜே ஆர். ஜெயவர்த் தணு தமிழர் கோரிக்கைக்கு அடிக்கடி எதிர்ப்புத் தெரிவித்துக் குறுகிய சிங்கள இனவாதத்தின் பிரதிநிதியாகக் காட்டிக்கொண் டார். இவர் சிங்கள இனவாதத்துடன், தன்னே ஆரம்பகாலம் முதலே பின்னிப்பிணேத்து வந்துள்ளதால் இவர் தமிழர்களுக் குச் சாதகமாக எதைக் கூறினுலும், தமிழர்கள் நம்பும் நிலையில் இல்லை. அதேபோல் சிங்கள மக்களும் இவர் தமிழர்களே ஏமாற் றுவதற்காகவே இப்படிக் கூறுகிருர் என்று உடன் விளங்கித் கொள்கிருர்கள்.
கடகந்தையில் ஒரு சிறு மைதானம் அதில்தான் கூட்டங்கள் நடக்கும். இந்த அரசியல்வாதிகள் வந்து தங்கள் உயர்ந்த சிந் தனேகளைப் பொழிந்துவிட்டுப் போய்விடுவார்கள். அங்கு கூட்டத் திற்குச் சென்ற சிறு வட்டங்களெல்லாம் அடுத்தநாள் நாகலிங் கத்தின் கடைக்குமுன் கூடுவார்கள் நாகலிங்கத்தின் கடை மிகச் சிறியது. ஐந்தடி நீளம் ஐந்தடி அகலம், முன்னுல் ஆறு போத் தல்கள். அதில் நாலில் விதவிதமான யாழ்ப்பாணச் சுருட்டு,

அருளர் 茵高
மற்ற இரண்டு போத்தல்களிலும் இனிப்பு. கடைக்கு முன்
ரண்டு வாங்குகள். மேற்சாரளம் இறக்கிவிட்டிருந்தார். இந்த வட்டங்களெல்லாம் கிடைக்கு முன் வந்து நின்றுகொண்டு 应T占 விங்கத்தைப் பார்த்துக் கதைத்துக் கொண்டிருப்பார்கள் கந்தையில் ஒரே ஒரு தமிழர் நாகலிங்கந்தான்.
" மேதியன சல்வி ஒக்கம, மேயாதமாய் அரங்யனவாலு" இங்க இருக்கிற காசெல்லாம் இவன் தான் கொண்டு ே பாகிற
ன்)
நாகலிங்கம் மேசைக்குப் பின் இருக்கும் கதிரையில் இருந்து இவற்றைப் பார்த்துக் கொண்டிருப்பார்.
"அமகல வன்டோன" (தோலே உரிக்கவேணும்)
"கோமத அமகலவன்ன" (எப்படி தோலுரிக்கி நிறது
நாகலிங்கத்தின் தோலே எப்படி உரிக்கவேண்டுமென சர்ச் சைகள் ஏற்படும்.
"எலுRாட்ட அமகலவன்னேக்க தக்காை நியனவாத" (ஆட்டுத்தோல் உரிக்கிறது பார்த்திருக்கிருயா? அது மாதிரி
செய்ய வேணும்) ஒரு பையன் கூறுவான்.
"தெக்கலாந கோமத' (பார்க்கவில்லே எப்படி
என்று) மற்குெரு பையன் கூறுவான்.
"கை, கால்களேச் சேர்த்துக் கட்டிப் போட்டு ஆளேக் கீழ் விழுத்திக் கழுத்தை அறுக்க வேணும். பிறகு தலை கீழாகக்கட்டிப் போட்டுக் காவில் இருந்து உரிக்கத் தொடங்க வேணும்"
*பிறகு"
"தோலுக்கு உப்புத் தடவி காய வைக்கவேணும். பிறகு வெட்டி வெட்டி செருப்பு தைக்கிறது."
"ஏம்த" (அப்படியா) என்று மற்றவர்களும் மனத்திருப்புற யைக் காட்டிக்கொள்ளுவார்கள். நாகலிங்கம் எல்லோரையும் பிட்டு ஒவ்வொரு இனிப்புக் கொடுத்து அனுப்பிவிடுவார்.
கடகந்தையில் நாகலிங்கத்திற்குத் தெரிந்த நண்பர்களும் இருந்தனர். இதில் ராலாமி, ராலாறி என்று அழைக்கப்படும்
ם נה.

Page 41
66 லங்கா ராணி
கிழவரும் ஒருவர். நாகலிங்கத்துடன் நெடுங்காலமாகத் தொடர்பு வைத்திருக்கிருர், ஊர் நடப்புகள், நாட்டு நடப்புகள் பற்றி நாள்தோறும் வந்து வாங்கில் இருந்து கொண்டு பேசிக் கொண்டிருப்பார். நாடு இப்படிப் போகிறதே என்று அடிக்கடி மனம் நொந்து கொள்வார்.
கலவர நிலை ஏற்பட்டதும் முதலில் அந்தக் கிழவர் வந்து கடையைப் பூட்டி விட்டுத் தன்னுடன் வருமாறு நாகலிங்கத் தைக் கூப்பிட்டார். நாகலிங்கம் முதலில் மறுத்தாலும் ராலாமி
நாகலிங்கத்தை வற்புறுத்தி அழைத்து வீட்டுக்குக் கூட்டிக்
கொண்டு போய் வைத்திருந்தார். அகதிகள் முகாம் தொடங் கப்பட்ட செய்தி கிடைத்ததும், ராலாமி ஒரு காரைப் பிடித்து, வேறு இருவரையும் துணைக்குக் கூட்டிக் கொண்டு நாகலிங்கத் தை அகதிகள் முகாமில் சேர்த்துவிட்டுப் போனர்.
நாகலிங்கத்தினுடைய கதைகளுக்குத் தாக்குப் பிடிக்க முடி யாத கொழும்புக் கடைக்காரர், கதைக்காமல் மெளனமாக இருந்த மற்ருெரு 1ாலிபனேடு கதையைத் தொடுத்தார்.
*தம்பி நீர் யாழ்ப்பாணம் எந்த இடம்?*
*நாரந்தனை"'
"நாரந்தனையே. நாரந்தனை ஆர்ர மகன்?"
*சூசைப்பிள்ளையின்ர மகன்"
“எந்தச் சூசைப்பிள்ளை?*
“நடுநாரந்தனை"
.." இவன் புட்டுத்தின்னி. புட்டுத் தின்னியின்ர மகளு
கொழும்பு வியாபாரி, நாகலிங்கத்தைப் பார்த்து "புட்டு தின்னி சூசைப்பிள்ளையும், நானும் ஒன்ருகப் படித்தனங்கள்
*புட்டுத்தின்னி சுகமாக இருக்குதா?", மீண்டும் வாலிபனை பார்த்துக் கேட்டார். கொழும்பு வியாபாரியின் எதிர்பரா தாக்குதலால் வாலிபன் திணறிப் போனன்.
ஆம் என்பதற்கு அடையாளமாக தலையை ಜ್ಷಣೆ,... காற்சட்டையும், மேற்சட்டையும் போட்டிருந்தான். வி

அருளர் 67
யுயர்ந்த மணிக்கூடும் கட்டியிருந்தான். இந்தக் கதைகளை காதில் போட விரும்பினவனுகத் தெரியவில்லை. கொழும்பு வியாபாரி தொடர்ந்தார்.
*நீ என்ன கொழும்பில வேலை பார்க்கிறீயே?? "இல்லை"
** yILی 6۶
*குவைத்துக்குப் போறத்துக்கு வந்தனன். பிளேன் எடுக்க ஏலாமப் போச்சுது; திரும்பிப் போறன்."
*குவைத்தில் என்ன வேலை?" *கொன்ஸ்ரக்சன்”*
*பிறகென்ன..நீ . வீரன்தான்; இந்தப் பொடியன்கள் மாதிரி விசர்பிடித்துத் திரியாமல் எங்கையெண்டாலும் ஒடித்தப்புறது தான் கெட்டித்தனம்." t
நாகலிங்கம் குறுக்கிட்டு மெதுவாகச் சொன்னர். “அது சரி u do o 8 u இப்படியே எல்லோரும் ஒட மிச்சம் இருக்கிற கிழடு கட்டை களை ஏறி மிதிக்க ஒரு ஆமிக்காரன் போதும். இதெல்லாம் அழிவுக்குப் பாருங்கோ."
*அப்பிடிச் சொல்லாதேயுங்கோ, அங்க உழைக்கிற மாதிரி இங்க உழைக்க ஏலுமே? இங்க வேலையா இருக்கு செய்யிறதுக்கு."
மெதுவாக நாகலிங்கம், “என்ன வேலை கண்டறியாத ഖേá' சிறுத்தி விட்டு தொடர்ந்தார். “வயலுக்க போய் இறங்கவேணும் பாருங்கோ.”*
“என்ன வயல் இந்த நாளையில ஒரு கோடாலி தீட்டுறதுக் தம் அரசாங்க அதிபரபட்ட பேமிற் எடுக்க வேண்டியிருக்கு, பயல் என்னெண்டு செய்யிறது.”*
கொழும்பு வியாபாரி சொல்வதில் உண்மை இருப்பதைத் தெரிந்தும் நாகலிங்கம் விட்டுக் கொடுக்க மனமில்லாமல், “கோ -ாலி என்னத்துக்கு. வயல் செய்யிறதுக்கு.” ܥ -
கொழும்பு வியாபாரி உடனே, “மண்வெட்டியையும் சேர்த்து ான் சொல்லுறன் ? ۔۔۔۔ . .

Page 42
68 லங்கா ராணி
நாகலிங்கம் “சேத்தில வேலை செய்யிறதுக்கு மண்வெட் டியைத் தீட்டத் தேவையில்லை” என்ருர்,
சரவணன் சிரித்தான். நாகலிங்கம் தொடர்ந்தார். “வயல் செய்யிறதுக்கு மனம் இல்லையெண்டு சொல்லுங்கோ. நான் இதை ஏன் சொல்லுறனெண்டால் நாங்கள் வயலுக்குள்ள இருந்து தான் வந்தனங்கள். இப்ப எல்லாம் குழம்பிப் போச்சு, திரும்பப் போய் வயலுக்க நிண்டுகொண்டு தொடங்கவேணும்.”
கொழும்பு வியாபாரி சரவணனைப் பார்த்துக் கேட்டார். *நீர் யாரட மகன்?"
கொழும்பு வியாபாரி தனக்கு யாழ்ப்பாணத்தில் தெரியா தவன் இல்லை என்ற எண்ணத்தில் அவன் எந்த இடம் என்று கேட்காமல் நீர் யாருடைய மகனென்று கேட்டு விட்டார்.
சரவணன் பதில் சொன்னன். “ஆண்டியடமகன்’ சிரித்தான். அவன் கூறிய ஆண்டியைக் கொழும்பு வியாபாரிக்குத் தெரி
யவில்லை. அடுத்ததாகக் கேட்டார். "யாழ்ப்பாணத்தில் எந்த இடம்?"
“கொத்தளாய்.”*
சற்று யோசித்து விட்டு நுணுக்கமாகக் கேட்டார். “கொத் தளாய் எங்க இருக்கு?
சரவணன் இதற்கு எந்தவித பதிலும் கூருமல் “கொப் பற்ற தலைக்குள்ள” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டு மேசையிலிருந்து குதித்து அறையைவிட்டு வெளியேறித் தளத் திற்கு வந்தான். மழை தூறிக் கொண்டிருந்தது. காற்று வீசிய தால் கப்பல் ஆட்டம் காட்டத் தொடங்கியிருந்தது. நேராகச் சமையல் அறைக்குச் சென்று குமாருடன் ஏதோ கதைத்துவிட்டு, சரவணன் அங்கிருந்து வெளியேறி வந்து முன் தளத்திற்கு இறங் கினன். . . . .
இளைஞர்கள் தொடர்ந்து விவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருத்தனர். சாதிப் பிரச்சினை, தமிழரின் எதிர்காலம், இந்த அர சாங்கம் எவ்வாறு நடந்து கொள்ளும் என்பது பற்றிய பல்வேறு
கருத்துகள் பரிமாறப்பட்டன.
இந்தத் தளத்தில் பெண்கள் மிகக் குறைவாகவே இருந்த னர். கப்பல் கிழக்கு மாகாணத்தை அண்டிப் போகத் தொடங்கி விட்டதால் எல்லோரும் உற்சாகமாகவே காணப்பட்டனர்.

அருளர் 69,
இலங்கையில் தமிழ்ப் பெண்களுக்கும், சிங்களப் பெண்களுக்
கும் பல வித்தியாசங்கள் இருக்கும். இரு வகையினரையும் வெகு இலகுவில் அடையாளம் கண்டு கொள்ளலாம். வாழ்க்கை முறை
களும், பழக்க வழக்கங்களும் மாறுபட்டவையே. தமிழ்ப் பெண் கள் பொட்டு வைத்திருப்பார்கள், மணமானவர்கள் தங்கத் தாலிக் கொடி அணிந்திருப்பார்கள். சிங்களப் பெண்கள் இதை அணியமாட்டார்கள். சேலை உடுத்துவதிலும் வித்தியாசம் உண்டு.
சிங்களப் பெண்கள் சேலை உடுத்தினுல் அது உடலோடு ஒன்றிப்
போயிருக்கும். தாவணியை வலது பக்கம் விட்டிருப்பார்கள்" தமிழ்ப் பெண்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை வைத்திருக்கின்ற
னர். தென்னிந்தியாவிலுள்ள தமிழர்களுடன் பலவழிகளாலும்
ஒன்றுபட்டுக், கலாச்சார ரீதியிலும் தொடர்புகளை வைத்துக்
கொண்டிருக்கிருர்கள். தமிழ்ப் பெண்கள் தென் இந்தியப் பட்டுச் சேலைகளையும், சிங்கப்பூர்ச் சேலைகளையும் விரும்பி அணிவார்கள்.
இந்தச் சேலைகளுக்கு இலங்கை அரசாங்கம் இறக்குமதிக் கட்டுப் பாடு விதித்திருந்தது. இதனுல் சிங்களப் பெண்கள் அநேகமா
ஞேர் இலங்கையில் தயாராகும் சின்தெற்றிக் சேலைகளையே அணி
வர். தமிழர்கள் மத்தியில் மிகவும். கண்டிப்பாக நிலவிவரும் சீதன வழக்கம் சிங்களவர் மத்தியில் இல்லாததால் தமிழ்ப்
பெண்களைப் போல் பொருள் சேர்ப்பதிலோ, பிள்ளைகள் கல்வி
பற்றியோ குறைவாகவே கவலைப்படுவார்கள். இதே போல் தமிழர்
மத்தியில் நிலவிவரும் சாதி முறையும், அவ்வளவு கடுமையாகச்
சிங்கள்வர் மத்தியில் கடைப்பிடிக்கபடாததினுல் பெண்கள்
வாழ்க்கை முறையில் கட்டுப்பாடுகள் குறைந்தே காணப்படு
கின்றன. குடும்பங்களும் பெரிதாக இருக்கும். இனக்கலவரங்
களில் அதிகம் பாதிக்கப்படுகின்றவர்கள் பெண்கள்தான். தமிழ்ப்
பெண்களை இது மிகவும் பாதித்திருந்தது. சிங்களப் பெண்கள்
கூட தமிழ்வீடுகளில் புகுத்து கொள்ளையடித்தார்களாம்.
தேனீர் பரிமாறுவதற்குத் தொண்டர்கள் கீழிறங்கி வந்த னர். சரவணன் தான் கொண்டுவந்த பெட்டியில் வைத்திருந்த சேட்டை எடுத்து மாட்டிக் கொண்டு, இடுப்பில் எதையோ எடுத்து வைத்துக் கொண்டு, இளைஞருடன் வந்து இருந்து கொண்டான். எல்லோருக்கும் தேனீர் வழங்கப்பட்டது. இளை ஞர்களின் உரையாடல் தொடர்ந்துகொண்டிருந்தது.
நீர்கொழும்பைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் தனக்கு நடந் ததைக் கூறிக்கொண்டிருந்தான். தான் ஒரு சிங்களவனின் கடை யில் வேலைக்கிருந்தானம். தன்னுடன் இன்னுமொரு சிங்க்ள

Page 43
70 லங்கா ராணி
வாலிபன் வேலை பார்த்தவளும். கலவரம் தொடங்கிய தாள் காலையிலிருந்து இச்சிங்கள வாலிபன் அதைச் செய், இதைச் செய் எனக் கட்டளையிட்டாளும். வழக்கமாக இந்த வேலையெல்லாம் சிங்கள வாலிபன் தான் செய்வானும். பின்னேரம் நாலு மணி யிருக்கும், எண்ணெய்த் தகரங்களை எடுத்துத் துடைக்கச் சொல்லி யிருக்கின்றன்; இவன் மறுத்திருக்கின்றன். அச்சிங்கள இளைஞன் இவனுடைய சேட்டைப் பிடித்திருக்கிருன். “என்னடா சொறி யிறியா” என்று கூறிக்கொண்டு அங்கிருந்த அரிசி அளக்க பாவிக்கும் பொல்லை எடுத்து மண்டையில் போட்டாணும். சிங் களவனின் நெற்றியிலிருந்து இரத்தம் பீறிட்டிருக்கின்றது. “தமிழனைத் தொட உனக்கென்ன துணிவு” என்று கடையை விட்டு ஒரே ஒட்டமாக ஓடி வந்திருக்கின்றன். இவன் ஒரு முடக் கால் திரும்பும் போது, ஒரு பொலிஸ்காரன் எட்டிக் கையில் பிடித்து விட்டான். நல்லகாலமாக அது தமிழ்பொலிஸ். “அங்க பாருங்க” என்று தமிழில் பொலிஸ்காரனுக்குக் கூறியிருக்கிருன் பொலிஸ்காரன் திரும்பிப் பார்த்தான். சுமார் முப்பது காலிகள் துரத்திக்கொண்டு வந்தனர். “ஒடித் தப்பு” என்று ைைய விட்டு விட்டானும். பின்பு கோவில் ஒன்றில் தஞ்சம் புகுந்தா ஞம். அங்கிருந்து அகதிகள் முகாமுக்கு வந்து சேர்ந்திருக்கிருன்.
அடுத்ததாக மருத்துவ வளாக மாணவன் ஒருவன் தனக்கு
நடந்ததைக் கூறினன். மருத்துவக் கல்லூரியில் தமிழ் மாண
வர்களும்,சிங்கள மாணவர்களும் அன்புடனேயே பழகிவந்தஈர்கள்
ஆனல் பரப்பப்பட்ட வதந்திகள் சிலவற்றைக் கேள்விப்பட்ட
இளைஞர்கள் பரபரப்படைந்தனர். அன்று மாலை ஆறுமணிக்கு ஒரு சில சிங்கள மாணவர்கள், யாழ்ப்பாண வளாகத்திலிருந்து
வந்து சேர்ந்தனர். அவர்கள் வரும்போது நன்ருகத்தான் இருந்
தார்கள். ஒரு மனித்தியாலம் சென்றிருக்கும். அங்குள்ள கூடத்
தில் ஒரே சத்தம். என்னவென்று பார்ப்பதற்கு இம்மாண வன் சென்றிருக்கிருன். அங்கு யாழ்ப்பாண வளாகத்திலிருந்து அனுப்பப்பட்ட சிங்கள மாணவன் தனது சேட்டை சிழித்து விட்டுக்கொண்டு மேசையில் ஏறி உரக்கக் கத்திக்கொண்டிருந் தான். “யாழ்ப்பாணத்தில் சிங்களவர் இருக்கமுடியாது. மாணவி கள் கற்பழிக்கப்படுகின்ருர்கள். அவர்கள் மார்புகளை வெட்டியுள் ளார்கள். எங்கள் மாணவரில் சிலர் உயிரிழந்துள்ளார்கள். நீங்க ளெல்லாம் இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் சிங்களவர் தாஞ? வெட்கமாக இல்லையா? ஒரு தமிழனையும் இங்கே இருக்கவிடக் கூடாது" என்றெல்லாம் பேசினன். அங்கு இருந்தவர்களும் அதை நம்பியவர்கள்போல் பரபரப்படைந்தார்

அருளர் 71
கள். இவன் மெதுவாக நடந்ததை மற்ற தமிழ் மாணவர்களுக் கும் கூறினன். எல்லோரும் ஒன்று கூடினர்கள். ஒரு சில இடது சாரிச் சிங்கள மாணவர்கள் வந்து பாதுகாப்பாக நின்றனர். போன் செய்தனர் சில நிமிடங்களில் பொலிசார் வந்து எல் லோரையும் அழைத்துக்கொணடு அகதிகள் முகாமில் சேர்த் தனா.
சரவணனல் அங்கு அதிக நேரம் இருக்க முடியவில்லை. மீண் டும் மேல் தளத்திற்கு வந்தான். சரவணன் இந்த நாட்களில் கொழும்பை அடுத்த வத்தளையில் ஒர் அறையெடுத்து தங்கியிருந் தான். அங்கெல்லாம் இவனை யாரென்று கேட்டால் தன்னை ஒரு தோட்ட முதலாளியின் மகனென்று கூறுவான்.

Page 44
சரவணன் மேலே வந்து மீண்டும் சமையல் அறைக்கு வந் தான். அங்கே முத்தையாவும் ஆட்களும் வேலையில் ஈடுபட்டி ருந்தனர். குமாரை வெளியே வரும்படி அழைத்தான். குமாரை அழைத்துக்கொண்டு சமையல் சாமான்கள் வைக்கப்பட்டிருந்த கீழறை ஒன்றுக்கு இறங்கினன். அங்கே வெவ்வேறு பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. மா மூடைகள், அரிசி மூடைகள், பால்மா தகரங்கள், வாழைப்பழங்கள் அங்குமிங்குமாகப் போடப்பட்டி ருந்தன. இதில் வேறுயாரும் இருக்கவில்ல. சிறிய அறை. சர வணன் வசதியாக ஒரு மாமூடையின் மீதேறி அமர்ந்துகொண் டான். குமாரும் எதிராக அமர்ந்து கொண்டான்.
“ அங்கு ஒருத்தர் இருந்துகொண்டு கொஞ்சம் அதிகமாகக் கதைக்கிருர்.”
** என்னவாம். ??
“அமிர்தலிங்கத்தால்தான் கலவரம் வந்ததாம். எங்களுக் கெல்லாம் பைத்தியம் பிடிச்சிருக்காம். இப்படி கன கதைகள்.”
*எங்கே இருக்கிருர் ஆள்?”
“பின்னுக்கு ஒரு அறை இருக்குது; அதில’ என்று கூறிக் கொண்டு இருவரும் வெளியேறினர். சரவணன் முதலில் ஏறித் தளத்திற்கு வந்தான். குமார் பின் தொடர்ந்தான். நாகலிங் கம் கதைத்துக்கொண்டிருந்தார். அங்கிருந்த மற்ற இளைஞனக் காணவில்லை. அவன் கீழே தனது இருப்பிடத்திற்குச் சென்றி ருந்தான். சரவணன் மெதுவாக அங்கிருந்த மேசை மீது உட் கார்ந்துகொண்டான்.
கொழும்பு வியாபாரி ஜே. ஆர். ஜெயவர்த்தன மீது அபார நம்பிக்கை வைத்திருந்தார். அவர் யூ. என். பி. கட்சிக்குத் தேர் தலில் ஆதரவு அளித்தவர் என்பது நன்கு தெரிந்தது. கொழும்

அருளர் 73
பில் உள்ள பிரபல தமிழ் வியாபாரிகள் யூ. என். பி. கட்சிக்குத் தேர்தலுக்குத் தடையின்றி நிதி அளிப்பார்கள், கொழும்பு வியாபாரி, ஜே. ஆர். ஜெயவர்த்தன எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவைப்பார் என்றும், யப்பான்காரருக்கு ஜே. ஆர். மீது நல்ல நம்பிக்கை இருக்கிறது என்றும், யேர்மன்காரனும் சகல உதவிகளையும் செய்வார்கள் என்பது பற்றியும் தமிழர்களுக்கு எவ்வித ஆபத்துமிராது என்றும் கூறினர். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த நாகலிங்கம் சிறிது அமைதிக்குப்பின் கேட்டார்.
*சரி நீங்களே சொல்லுங்கோ; ஒரு தமிழன் இந்த (BITL. டின் பிரதமராக வரமுடியுமா?”
கொழும்பு வியாபாரி யோசனையில் ஆழ்ந்துவிட்டு 18 ஏன் ஏலாது; காசு வேணும். ஒவ்வொருத்தனுக்கும் ஒரு சாராயப் போத்தல், பொம்பிளைகளுக்கு ஒரு சேலை இது கொடுக்க உங் களுக்குப் பணம் இருந்தால் நீங்களும் வரலாம். காசுதான் வேணும். '
நாகலிங்கம் கேட்டார். “நான் ஒரு போத்தல் கொடுக் கிறன். ஒரு சிங்களவனும் ஒரு போத்தல் கொடுக்கிறன். யாருக்கு ஒட்டுப் போடுவாங்கள். சிங்களவனுக்குத்தான்.”
கொழும்பு வியாபாரி யோசனை கூறுவதுபோல ‘* அப்ப நீங்கள் இரண்டு, இரண்டு கொடுங்கோ.”
நாகலிங்கம் சொன்னர். “அப்படி, அப்படியே கூட்டிக் கொண்டு போகச் சொல்லுகிறியளே. எங்கை போய்முடியும்? அதுசரி இதுக்கெல்லாம் யாரிட்ட பணம் இருக்குது.? சிறிது நேர அமைதிக்குப் பின் நாகலிங்கம் தொடர்ந்தார். * அமெரிக் கனத்தான் போய்ப் பிடிக்கவேணும். அவனும் இந்த நாட்க ளில் நேரடியாக வரமாட்டான். வேற யாரையும் பிடிச்சுவிட் டாத்தான். அவன் ஏன் சும்மா தரப்போருன்? நாகலிங்கம் நிறுத்திவிட்டுக் கொழும்பு வியாபாரியின் முகத்தை உற்று நோக் கினர். “எல்லாத்தையும் முதலில் எழுத்தில வாங்கிப் போடு வான். நான் காசைக் கொடுத்துப் பிரதமராக வர அவன் வந்து எனக்குமேலே இருப்பான். இந்தச் சட்டத்தைப் போடு அந்தச் சட்டத்தைப் போடு என்று கூறுவான். இதுக்கு சனம் ஒத்துப்
ഖ 10

Page 45
74. லங்கா ராணி
போகவா போகுது. இறுக்கிப் பிடிக்கவேணும். இது என்னவாக முடியும் சொல்லுங்கோ பார்ப்பம்: வெளிநாட்டு மூலதனத்தை எடுத்து உள்நாட்டில் மகாராஜாவாக வாறதாகத்தான் முடியும்.”
‘* அப்படிச் சொல்லாதையுங்கோ” கொழும்பு வியாபாரி சொன்னர். “அவர்கள் உதவி செய்யத்தான் வாருங்கள்.”
“என்ன உதவி பாருங்கோ இவ்வளவு நாளும் எங்கை போயிருந்தவை. இங்கைதானே நாங்கள் இருந்தனங்கள் நாக லிங்கம் நிறுத்தினர். அமைதி நிலவியது கொழும்பு வியாபாரி எதுவும் கூற முன்வரவில்லை. நாகலிங்கம் தொடர்ந்தார் **இந்த விஷயங்களில் நீதி, நியாயம் என்கிற பேச்சுக்கு இட மில்லைப் பாருங்கோ. எனி என்ன அவன் ஆட்களை இங்கை வைத்துக்கொண்டு ஆட்டிப்படைக்கிருன், அவன்ரை பணத்தை அச்சடிச்சு எல்லாத்தையும் விலைக்கு வாங்கிப் போடுவான்.”
இப்படித் தொடங்கின விடயத்தைவிட்டு நாகலிங்கம் வேறு பக்கமாக கதையைக் கொண்டுபோய்க் கொண்டிருந்தார். அதில் கொழும்பு வியபாரிக்கு அதிக நாட்டமில்லாமற் போகவே அவர்,
“இப்ப இந்த உல்லாசப் பிரயாணிகள் வாருங்கள். ஹோட் டல்கள் கட்டுகினம். அங்கை வந்து தங்கிருன்கள், எவ்வளவு காசு பாருங்கோ, வெளிநாட்டுச் செலவாணியல்லா??
“மெய் மெய். அவன்கள் உல்லாசப் பிரயாணிகள் தான். எங்கடை ஆட்கள் யாரும் அவங்கடை நாடுகளுக்கு உல்லாசப் பிரயாணிகளாகப் போகினமே? இதில் ஒரு பெரிய விளையாட்டு இருக்குது பாருங்கோ, ஏவறை விளையாட்டு. ”
“என்ன 6?äuurl"(?”
“ஏவறை வாதிகள்'
*சொல்லுங்கோ? நாகலிங்கம் சற்று நிறுத்தி விட்டு மீண்டும் தொடர்ந்தார்.
“மேற்கத்திய நாடுகளில பல பிரச்சினைகள் இருக்குது. பல இனங்கள், மனக்குழப்பங்கள், பல மொழிகள், முதலாளி தொழி லாளி பிரச்சினைகள். இப்படி எத்தனையோ பிரச்சினைகள். இது களுக்கு மேலாக எல்லாரையும் ஒன்றுபடுத்த, அவன்கள் எங்களைக் கீழ்த்தரமாகப் பார்த்துத் தங்களைவிட ஆட்கள் இல்லை என்

அருளர் .75
கிறதும் உலகம் முழுவதும் தங்கடை காலுக்குக் கீழே கிடக்கி றது என்கிற எண்ணங்களை நிலைக்க வைக்கிறதுக்குச் சகல வழி களிலும் செயல்பட்டுக் கொண்டு நிற்கிருன்கள். இப்படியே இந்த எண்ணத்தில் ஊறிப்போனவன்களுக்கு இந்த நாடுகளுக்கு வந் திட்டுப்போக வேண்டுமென்கிற ஆசை வருந்தானே. அதுதான் வருகினம். எனி அவன்கள் வந்தவுடன, இதுகள் எங்கடை ஆட் களுக்கு எங்கே விளங்கப் போகுதே? அவைக்கு எல்லா எடுபிடி களுமாக நாங்கள் நின்று செய்தவுடன் மன ஆறுதல் பாருங் கோ. இது நாங்கள் நிரம்ப சாப்பிட்ட பிறகு ஏவறை விடுவம். அதுமாதிரித்தான். தங்கடை காலுக்குக் கீழே நாங்கள் இருக் கிறம். தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை, இங்கை இருக் கிறவன்கள் நாகரிகம் அற்றவன்கள், இவன்களுக்கு எல்லாம் நாங் கள் பெரியவன்கள் என்று நினைக்க நினைக்க அவையஞக்கு ஒரு முட்டு வாறது பாருங்கோ. இப்படி ஒருக்கா வந்திட்டுப் போன ஏவறை விட்டது மாதிரி." நாகலிங்கம் நிறுத்திவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.
“நாங்கள் இதில கண்மூடித்தனமாக இருந்தால் எங்க கொண்டுபோய்விடும் சொல்லுங்க பார்ப்பம்.’’ நாகலிங்கம் கொழும்பு வியாபாரியை "உற்று நோக்கினர். அவர் நாகலிங்கம் அடுத்து என்ன கூறப்போகிருர் என்பதையே எதிர் பஈர்த்துக் கொண்டிருந்தார்.
*பிறகும் எங்களை வெள்ளைக்காரனுக்கு விசிறி விசுக்கிற நிலை மைக்குத்தான் கொண்டுபோய் விடும்."
நாகலிங்கத்தின் ஆழ்ந்த கருத்துக்கள் இளைஞர்களையும் கவர்ந் திழுத்தது. குமார் சரவணனின் முகத்தைப் பார்த்தான். அது வரைக்கும் நாகலிங்கத்தின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த சரவணன் குமாரை நிமிர்ந்து பார்த்தான். நாகலிங்கம் எப் பொழுதும் தென் பகுதியில் காலத்தை யோட்டியிருந்தபடியால் அவருடைய கடைக்கு வரும் பலருடைய கதைகளையும், நாட்டு நடப்புக்களையும், பத்திரிகைச் செய்திகளையும் நன்கு தெரிந்து வைத்திருந்தார்.
*இதுகள் உங்களுக்கு விளங்குகிறது இல்லை பாருங்கோ. வெள்ளைக்காரன் ஏன் பாருங்கோ இங்கை வந்தவன். தன்னு டைய பொருட்களை விற்கிறதுக்கும் இங்குள்ள பொருட்களே மலி வாக கொண்டு போறதுக்கும்தானே. உங்களுக்குத் தெரியுமே?

Page 46
76 லங்கா ராணி
வெள்ளைக்காரன் எங்கடை பருத்தியில செய்த துணியைக்கொண்டு வந்து தந்துபோட்டு இங்கையிருந்து தங்கத்தையும் இரத்தி னத்தையும் ஏத்திக்கொண்டு போனவன். நாடும் என்ன அவன் களுக்குக் கீழே தானே இருந்தது.”
கொழும்பு வியாபாரி இடைமறித்துக் கூறினர், "இப்பதான் சுதந்திரம் கிடைச்சுட்டுதே'
தாகலிங்கம் மெதுவாக ஒவ்வொரு சொல்லாகத் தொடர்ந் தாா.
“சுதத்திரம், சும்மா விடுங்கோ.நாங்கள் தான் இதைச் சுதந் திரம் என்று கூறிக்கொண்டு இருக்கிறம். அவனுக்கு நல்லாத் தெரியும் இங்கை என்ன நடக்குதென்டு முந்தி உள்ளுக்க இருந்து செய்துகொண்டிருந்தவன் இப்ப வெளியில் நின்று செய்கிருன். விலையை அவன்தான் தீர்மானிக்கிருன் பாருங்கோ. எங்கடை பொருட்களுக்குக் குறைவாகவும் அவங்கடை இயந்திரங்களுக்குக் கண்விண் தெரியாமல் விலையைக் கூட்டுகிருன். எங்கடை காசின்ர பெறுமதியை அவன் தான் நிர்ணயிக்கிருன்."
கொழும்பு வியாபாரி கூறினர், “வெள்ளைக்காரன் இருந்த போது இந்தப் பிரச்சினைகள் இருக்கவில்லை பாருங்கோ. அவன் காலத்தில இருந்த மாதிரி ஆங்கிலம் தொடந்து இருந்திருக்கு மென்டால் இதுகள் ஒன்றும் வந்திருக்காது.'
“ஆங்கிலம்தான் இந்த ஒற்றுமையைக் கட்டிக் காக்க வேண் டுமென்டால் அந்த ஒற்றுமை என்னத்துக்கு. நீங்கள் ஒரு தமிழன். ஏன் ஆங்கிலத்தைத் தூக்கிப்பிடிக்க வேணும். இதைத்தானே சிங்களவர் சொல்கினம், நாங்கள் சிங்களவர் எங்களுக்கு என் னத்துக்கு ஆங்கிலம் என்டு. நீங்கள் எவ்வளவு தான் ஆங்கிலத் தைப் படியுங்கோ. படிச்சுப் போட்டுப் போய் வெள்ளைக்கார னேட கயையுங்கோ. அட நீ தமிழன் ஆங்கிலத்தைத் தெரிந்து வைத்திருக்கிருய். சரி நானும் உன்ர மொழியைத் தெரிந்து வைத்திருக்க வேண்டுமென்று நினைக்கமாட்டான். கறுப்பா நீ ஆங்கிலத்தைப் படிச்சு நாகரீகம் அடைந்து விட்டாய் ஏன்றுதான் சொல்லுவான்’ என்ருர் நாகலிங்கம். உடனே கொழும்பு வியா பாரி,
“அதுக்காக ஆங்கிலத்தை விட ஏலாது பாருங்கோ. ஆங் கிலம் தெரிஞ்சா உலகத்தில எங்கு வேண்டுமென்ருலும் போக 69ff)...... 9

அருளர் 77
“அது சரி படிக்கலாம் பாருங்கோ. மற்றவனுேட தொடர்பு கொள்கிறதுக்காக ஒரு மொழியைப் படிக்கிறது நல்லது. அதுக் காக ஆங்கிலத்தை மாத்திரம் தெரிஞ்சு வைச்சுக் கொண்டு ஆங் கிலத்திலேயே பேசிக்கொண்டு ஆங்கிலேயேரைப்போல் நடந்து கொண்டு தங்களையே குழிவெட்டிப் புதைத்துக்கொண்டு இருக் கிறது பிழை பாருங்கோ. நாங்கள் ஆங்கிலம் ஆங்கிலம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறதால தான் ஆங்கிலம் அப்படியே இருக் குது. இல்லை நாங்கள் தமிழ்தான் என்று சொன்னல் தமிழ் அப் படி வந்திருக்கும் பாருங்கோ. பிறகு எங்களோடை தொடர்பு கொள்ளவாறவங்கள் தமிழைப் படிச்சுக் கொண்டு வருவாங்கள்
“என்ன ஆங்கிலம் வேண்டாமென்றே சொல்லுறியன்.?
“இல்லை ஆங்கிலத்தை வேண்டாமென்டு சொல்லவில்லை. ஆனல் அதைப் படிக்கிறமாதிரிப் படிக்கவேணும். இது எங்கை பிழையெண்டால் பாருங்கோ, நாங்கள் ஆங்கிலத்தைப் படிக்கிற பொழுதே ஆங்கிலேயரையும் ஆங்கில கலாச்சாரத்தையும், வெள் ளேக்காரணுல் ஏலாதது ஒன்றுமில்லை என்றதையும் சேர்த்து விழுங் கிப் போடுகிருேம். இதுக்குப் பிறகு தமிழ் தமிழன் என்ருல் வெட்கமாக இருக்குது. எங்கள் மீது நம்பிக்கை வைக்கிறதுக்கு ஏலாமல் இருக்குது.
இந்த ஜே. ஆர். எல்லாத்தையும் தீர்த்து வைப்பார் என்று சொல்லுகிறது எங்களை நாங்களே ஏமாத்துகிறது பாருங்கோ, என்னத்தைத்தான் ஜே. ஆரின் கட்சி பணக்காரரின் கட்சி பாருங் கோ. இந்த நாட்டு அரசியல் ஒரு குப்பை அரசியலாகப் போயிட் டுது. எதையாவது சொல்லிப் பதவிக்கு வரவேண்டுமென்பது தான் ஆசை. தமிழர்களுடைய ஆதரவு தேவைப்பட்டுது. எல் லோரும் சமம்தான் என்ருன்கள். பிரச்சினை தீர்த்து வைக்கிறம் என்ருன்கள். இவன்கள் முதலாளிகளின்ரை ஆட்கள், சிங்கள மக் களின்ற பிரச்சினையைத் தீர்க்கிறதுக்கு இவன்களால் ஏலாது, முதலாளிகளை என்ன வேணுமென்றடாலும் செய் என்று விட்டு விடுவன்கள். முதலாளிகள் யாராவது பொது சனத்தின்ரை நன் மைக்காகச் செயல்படுகின்றவர்கள் இருக்கிருங்களோ?"
நாகலிங்கத்தின் கருத்துக்களை கொழும்பு வியாபாரி ஏற்றுக் கொண்டதாக இல்லையென்ருலும் கடந்தகால சம்பவங்களும் தன்னைப் போலல்லாமல் நாகலிங்கத்தார் எவ்வித பாதிப்புமில் லாமல் கப்பலில் வந்து கொண்டிருப்பதும் அவருக்குத் தன்மேலே

Page 47
78 லங்கா ராணி
யே ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அத்துடன் அங்கு இருந்து கொண்டு பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த இண்ாஞர்களின் போக்கும் நாகலிங்கத்தை ஆமோதிப்பதாகவே அமைந்திருந்தது. தயங்கிய வண்ணமே தொடங்கிஞர் கொழும்பு வியாபாரி,
“ஜே. ஆர். ஜெயவர்த்தளுவைப் பற்றி உங்களுக்குத் தெரி யாது போலிருக்கு. அவர் தான் சொல்வியிருக்கிருரே, எல்லாம் தீர்த்து வைப்பன் என்டு'
*சும்மா விடுங்கோ புல்லையும் பூண்டையும் விதைச்கவன் நெல்லை எதிர்பார்க்க முடியுமே? அதுகளைச் சொன்னல் கட்சி அரசியல் என்று சொல்லுவிங்கள். இப்படியான பொறுப்பற்ற அரசியல்வாதிகளால்தான் நாடு இப்படிப் போய் மீள முடியாத நிலையைத் தாண்டிவிட்டுது. இந்தப் போர் வேணுமெண்டால் போர் சமாதானம் வேணுமெண்டால் சமாதானம் என்ற கதை யைப் பார்த்தீங்களே. நல்ல மணிதனுடைய மனத்தில இருந்து இது வருமே. இந்த எல்லாரும் ஒன்று என்கிறபேச்சுவெறும் நுனி நாக்குத் தேன் பாருங்கோ' கொழும்பில் உள்ள தமிழர்கள் பலர் யூ. என். பி கட்சிக்கே வாக்களித்தனர். இலங்கையின் மற்ற கட்சியான சிறிமாவோ கட்சியினர் தமிழ் ஒழிப்புடன் மாத்தி ரம் நின்று விடாது இறக்குமதிக் கட்டுப்பாடுகளால் தமிழ் வியா பாரிகளையும் பல இன்னல்களுக்கு உள்ளாக்கினர். இதே போல் மேல்மட்டத்திலிருந்த மற்றவர்களும் பாதிக்கப்பட்டனர்.
நாகலிங்கம் தொடர்ந்தார், "நாங்கள் கண்மூடித்தனமாக நடக்கப்படாது பாருங்கோ. ஒரு காலத்தில வெள்சேக்காரன் இருத்தான். உத்தியோகத்திற்குப் போனுேம், கடைகளைப் போய் போட்டோம் பாதுகாப்பாக இருந்தது. அந்தப் பாதுகாப்பு இப்பு இல்லைப் பாருங்கோ. வெள்ளேக்காரனும் ஏதோ எங்களிலை உள்ள அன்பிலேயே கொண்டு போய்விட்டவன்? நாங்கள் கெட்டித் தனமாகப் படிச்சம், வேலே செய்தம், அது ஒரு பக்கம் நான் இல்லையென்டு சொல்லயில்ல. இன்னுெரு விஷயம் பாருங்கோ. அவன்கள் எங்களைக் கொண்டு போய் நடுவிலவைச்சுக்கொண் டான்கள். அது எங்களுக்குத் தெரியவில்ல. எங்களுக்கென்ன வயிற்றுப் பிழைப்புத்தானே.”*
இந்த விடயங்களே நாகலிங்கம் மிக நுட்பமாகச் சுட்டிக் காட்டிஞர். நாகலிங்கம் ஒல்லியானவர், அதிக உயரமில்லை. துவாய்த் துண்டைக் கழுத்தில் போட்டுக்கொண்டு அதை அடிக்

அருவர் 79
கடி தாக்கிவிட்டுக்கொண்டார். ஒரு சுருட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு தொடர்ந்தார். ‘இவங்கள் மக்கள் மக்கள் என்று எத்தனை நாளேக்கு ஏமாத்துகிறது. 71ம் ஆண்டில் வந்தது அத்தோடு முடிஞ்சு போச்சுதென்டு நினைக்காதையுங்கோ. இவன் களால் ஒரு விரலேக்கூட முதலாளிக் கெதிராக உயர்த்த முடியாது பாருங்கோ. சுொஞ்ச நாளைக்குப் பளபளப்பாக இருக்கும். நீங்கள் யூ. என். பி. யூ. என். பி. என்று சொல்லுகிறீங்கள். இதென்ன முதல் முறையாகவா வந்திருக்கு. இதற்கு முந்தின டட்லி சேன நாயக்காவின்ர அரசாங்கம் 65ல் வந்தது தானே. அதுவும் தொடக்கத்தில இப்படித்தான். பசுமைப் புரட்சியென்ன, வெளி நாட்டு மூலதனமென்ன, அதென்ன இதென்ன பராக்கிரமபாகு வென்ன, இந்தா தமிழர்களுடைய பிரச்சினையெல்லாம் தீர்ந்து போச்சுது, இப்படி எத்தனை வண்டவாளங்கள். பிறகு எழுவதில அரசாங்கம் கவிண்டு போன பிறகு தான் அந்த அரசாங்கத்தைப் போல ஒரு புஸ்வாணம் இலங்கைச் சரித்திரத்திலேயே இல்லை யென்டு தெரிஞ்சது. அவங்கட ஆட்சியில உருவான கொந்தளிப் புத்தான் சிறிமாவோ வந்ததும் வெடிச்சுது. அது முதலில் வந் தது பாருங்கோ இனி வாறது அவ்வளவு லேசானதாக இருக் காது." நாகலிங்கம் சுருட்டை வாயில் வைத்து மூன்றுமுறை புகையை இழுத்து இழுத்து ஊதி விட்டுத் தொடர்ந்தார்.
*இதில இருக்கிறவன்கள் முதலாகளின்ர ஆட்கள் தான். அவன்கள் என்ன இந்த முதலாளிகள் இல்லாமல் செய்ய வேண் டுமென்கிறதுதானே?
கொழும்பு வியாபாரி இடைமறித்து “அவன்கள் தமிழருக்கு எதிர்பாருங்கோ."
“எனக்கென்னாம் தெரியும் பாருங்கோ. என்ர கடைக்கு முன் னுக்கு இருந்து தான் கதைப்பான்கள். எல்லாம் நான் தூக்கி வளர்த்ததுகள்தான். தமிழன் வந்து கொள்ளையடிக்கிருன் அவனை விரட்ட வேணும் எண்டுதான் சொல்லுவான்கள். நீங்களே பாருங் கோ, இண்டைக்குக் கொழும்பில நகைக் கடைகன் மொத்த விற்பனயாளர் எல்லாம் எங்களட ஆட்கள்தான். அதிலும் இந்த நகைண்டைக்காரர்கன் அவை இவையெண்டு, அவைகளுக்கு இந் தியாவில ஒரு கால் இலங்கையில ஒருகால். சம்பாதிச்சு என்னத் தைச் செய்யிறது. போய் லட்சம் கோடியெண்டு சீதனம் கொடுத் துத் தங்களின் பிள்ளைக்குக் கலியாணம் பண்ணிவைக்கிருன்கள் அப்ப அவனுக்கு ஆத்திரம் வராமல் என்ன வரும்.”

Page 48
80 லங்கா ராணி
நாகலிங்கம் நிறுத்திவிட்டுப் புகையை இழுத்தார். மேசை மேலிருந்த சரவணன் யன்னல் வழியாக வெளியே பார்த்தான். மழை தொடர்ந்து தூறிக் கொண்டிருந்தது. நேரம் நான்கு மணி யாகியிருந்தது மேல் தளத்தில் யாரும் தென்படவில்லை. மாணவத் தொண்டர்கள் தேனீரைக் கீழ்த்தளத்திற்குக் கொண்டு செல் வதற்காகத் தயாராகிக்கொண்டிருப்பது சரவணனுக்குத் தெரிந் தது. நாகலிங்கம் தொடர்ந்தார்,
*அது முடியவில்லைப் பாருங்கோ. திரும்பி வரும்.”
கொழும்பு வியாபாரி இடைமறித்தார். “ஜே. ஆர். லேசுப் பட்ட ஆளில்லை. இப்போ வேலையில்லாமல் இருக்கிறவர்களுக் கெல்லாம் வேலை கிடைக்கப் போகுது. அதுகளுக்குப் பிறகு இந் தப் பிரச்சினைகளெல்லாம் தீர்ந்து போயிடும் பாருங்கோ. இந்த ஆளுக்கு வெளிநாட்டில் நல்ல செல்வாக்கு இருக்கு. கடன்கள் நிறையக் கொடுக்கிருன்கள். யப்பான்காரன் தாங்கள் என்ன வேணுமெண்டாலும் தாறம் என்று சொல்லுகிருன்களாமே.”*
*சும்மா விடுங்கோ, யப்பான்காரன் யப்பான்காரன். உங் களுக்கு உலக அரசியல் அவ்வளவு விளங்குவதில்லைப் பாருங்கோ. மூண்டாவது உலகயுத்தம் வரப்பாக்குது. நாங்கள் கண்மூடித் தனமான அரசியல் நடத்திக்கொண்டிருந்தமெண்டால் முதல் அணுக்குண்டு இலங்கைக்கு மேலதான்.’’ இப்படி ஒரு குண்டை தூக்கிப் போட்டுவிட்டு நாகலிங்கம் தொடர்ந்தார்; “இந்தக் கடன் பாருங்கோ, இந்தக் கப்பலைக் கொண்டுபோய் நிற்பாட்டிப் போட்டு இறங்குகிறதுக்கு ஏணியை இறக்கி விட்டமாதிரி. இந் தக் கடன்களாலதான் இறங்கிவாறது. அது வரும் அது வராமல் விடாது அந்த உயிர்ப் பலி.” நாகலிங்கம் இழுத்தார். “அந்த உயிர்ப்பலி சும்மா விடாது. பாருங்கோ. என்ன ஒண்டு இரண் டா பதினையாயிரத்துக்கு மேலே என்டு சொல்ருங்க. நாங்கள் இந்த நேரத்தில் கவனமாக இருக்க வேணும். இது வரும் என் கிறது இவன்களுக்குத் தெரியும் பாருங்கோ. வெள்ளைக்காரன் செய்தது மாதிரி இவங்களும் எங்களை நடுவில தூக்கி வைத்தி ருக்கப் பார்க்கிருங்கள். அப்படி வைச்சிக்கொண்டு எங்களுக்கு மேலே ஏவி விடுவான்கள். எத்தனை நாளைக்கெண்டு ஏவிவிடு கிறது, நாங்களும் கண்மூடித்தனமாக ஒட்டிக்கொண்டிருந்தால் அது வந்து எங்களையும் சேர்த்து அடிச்சுக்கொண்டு போகும், இல்லாவிட்டால் என்ன இவன்களுக்கு எங்கள் மேல் கரிசனையே

Y(omtrř 81
இருக்குது? நாகலிங்கம் கொழும்பு வியாபாரியின் முகத்தைப் பார்த்தார்:
"இவங்களை நாங்கள் எவ்வளவுக்கு நம்பிப் போகிருேமோ அவ்வளவுக்கவ்வளவு அடுத்து வருகிறவன்கள் எங்களுக்கு எதிராக நின்றுகொண்டு வருவான்கள். தமிழ னை ஒழிக் க வேண்டு மெண் டு கூறிக் கொண் டு வ ரு வான் க ள்? அது தா ன் இலங்கையில் அரசியலாகப் போயிட்டுது. இந்த வத்துகாமத்தில ஐம்பது கடைகளை எரிச்சான்களாம். முன்னுக்கு நிண்டு செய் தது முழுக்க இவங்கடை ஆட்கள்தாளும், எங்கையும் அப்படித் தானுமே. என்னத்தைச் சொன்னுலும் நாங்கள் வேற அவங்கள் வேற. இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்க முன்பே தனிச் சிங்களம் என்று சொன்ன ஆள் பாருங்கோ இந்த ஜே. ஆர். பிறகு ஐம் பத்தி ஆறில பண்டாரநாயக்காவும் செல்வநாயகமும் ஒப்பந்தம் என்று வெளிக்கிட நாட்டைத் தமிழனுக்குக் கொடுத்திட்டான் என்று கொழும்பில் இருந்து கண்டிக்குப் பாதயாத்திரை போன ஆள் பாருங்கோ இந்த ஜே. ஆர். நல்லாக இனிக்கப் பேசுற சொற்கள்தான், நான் இல்லையென்று சொல்லவில்லை. சும்மா இந்தக் கட்சி அரசியல் இருக்குமட்டும் எங்கடை உதவி தேவைப் படுகிறது. அது முடிஞ்ச உடன நீ யாரோ நான் யாரோ."
“எங்கடை ஆட்களும் தானே செய்யினம்" கொழும்பு வியா பாரி குறுக்கிட்டார்.
“எங்கட ஆட்கள் கீழே நின்றுகொண்டு செய்யினம். அவன் கள் மேலே நின்றுகொண்டு செய்கிறன்கள். எல்லாரும் சேர்ந் தான் நாசமாக்கிருர்கள்" நாகலிங்கம் தொடர்ந்தார்.
“இந்தக் கட்சி அரசியல் இருக்கு மட்டும் அப்படித்தான் பிரிக்க ஏலுமான அளவு பிரிச்சு வெறி ஏத்தி ஒருத்தனை ஒருத் தனேடு மோதவிட்டு எல்லாத்தையும் நாசமாக்கி, கண்டதுகளை யும் கிளறிவிட்டு, அதே நேரத்தில் மக்கள் மக்கள் என்றும் கத் திக் கொள்வான்கள். பிரச்சினைகளை இப்படிக் கிளப்பி விட்டுப் போட்டு யானைதான் பலமான மிருகம் ; அதால ஏலாதது ஒன்று மில்லை, யானைக்குப் போடுங்கள் என்கிருன்கள். எனி கையில்லாம என்ன செய்யப்போறிங்க, கைக்குப் போடுங்க எண்டு அவையள் மற்றப் பக்கத்தால. யானைக்குப் போட்டுப் பார்த்தான்கள்.

Page 49
82 லங்கா ராணி சரிவரவில்லை. பிறகு கைக்கு, இப்படியே பிறகு இந்தா யானைக்கு, மாறி மாறி. களைச்சுப்போன சனம் என்ன செய்யும் எத்தனை
நாளைக்கெண்டு’
நாகலிங்கம் புகையை இழுத்துவிட்டுக் கொண்டு சுருட்டை வாயில் வைத்துக்கொண்டே தொடர்ந்தார்.
“எத்தனை நாளக்குச் சனத்தை ஏமாற்றுகிறது? கட்சி மாறி மாறி களைத்துப் போன சனம் எனி போதும் எண்டு சொல்லிக் கொண்டு கட்சிகளுக்கு மேலதான் ஏறும்.
இப்படிப் பிரிச்சு பிரிச்சு சனத்தை மோதவிடவும் வேணும். அதே நேரத்தில ஒரேயடியாகப் பிரியவும் கூடாது. இருந்திங்கு அடிபட்டுக்கொண்டு குத்துப்பட்டுக்கொண்டு கிடக்க வேணும். அதுதான் இவங்கள் மற்ற பக்கத்தால எல்லாரும் ஒன்று எல்லா ரும் ஒன்று என்று சத்தம் போடுகிறது. அப்பதானே தாங்கள் தான் எல்லாத்துக்கும் ராசா என்று இருக்கலாம்" சற்று நேர அமைதிக்குப்பின் கொழும்பு வியாபாரி கூறினர்.
“கடவுள் பக்தி, கடவுள் பக்தி. அது இல்லாமல் போன தாலதான் இந்தக் கேடெல்லாம்’ கொழும்பு வியாபாரி தனது தீர்ப்பை வெளியிட்டார். நாகலிங்கம் சற்றும் நிதானம் இழக் காதவராக,
"சும்மா விடுங்கோ. கடவுள் பக்தி கடவுள் பக்தி! கடவுள் பக்தி, கடவுள் கடவுள் எண்டு கடவுளையும் கும்பிட்டுக் கொண்டு பாட்டுக்களையும் பாடிக்கொண்டு கோயில்களையும் கட்டிக் கொண்டு அடியும் வாங்கிக்கொண்டு இவங்கட வித்தைகளையும் பார்த்துக் கொண்டு எத்தனை நாளைக்கு இப்படியே சும்மா இருக் கிறது" என்று கூறிவிட்டு கொழும்பு வியாபாரியை உற்று ஒரு பார்வை பார்த்தார். வெண்கலம் ஒலித்தது போல் இருந்தது அவருடைய கூற்று.
"சும்மாவே இருக்கிறம்" என்ருர் கொழும்பு வியாபாரி. *சும்மா இருக்காமல் வேற என்ன செய்யிறம்?"
தனது வாதங்களை மேலும் தொடர விரும்பாதவர்போல்: கொழும்பு வியாபாரி கேட்டார்.

Sy(tømt riř 88
"அப்ப இதுகளுக்கு என்ன செய்யலாம் சொல்லுங்கோ".
கொழும்பு வியாபாரி வளத்தில் வந்திருப்பதை உணர்ந்து கொண்ட நாகலிங்கம் அதைக்காட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கு முகத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படா வண்ணம் பார்த் துக்கொண்டு சுருட்டை வாயில்வைத்து இழுத்தார். இளைஞர் களின் முகத்தையும் கடைக்கண்ணுல் பார்த்துக்கொண்டு சிறிது நேரத்தின்பின் தொடர்ந்து கூறினர். wa
*பிரியவேணும், பிரியவேணும், இது பாருங்கோ வெள்ளைக் காரன் கண்மூடித்தனமாகச் செருகி விட்டிட்டுப் போயிருக்கிருன். முதலில் பிரிய வேணும். இலங்கையர், இலங்கையர் என்று சும்மா சொல்லுகிறதில ஒன்றுமில்லை பாருங்கோ. நாங்களாக ஒன்று சேர்ந்து இது ஏற்படயில்லை “பாருங்கோ. வெள்ளைக்காரன் விட்டு விட்டுப் போனதுகளை வைச்சுக்கொண்டு வெட்டிக் கொத்திக் கொண்டு கிடக்கிறம், நாங்கள் யார் என்பதை முதலில் நிர்ண யிக்க வேண்டும் பாருங்கோ. அப்படிப் பார்க்கப் போனல் தமிழ் சிங்களமெண்டுதான் வருகுது. முதலில் நாங்கள் பிரிஞ்சு எங்கஎல்லைகளை நிர்ணயிக்கவேண்டும் பாருங்கோ. இல்லாவிட்டால் இப்ப நடக்கிறமாதிரி நாங்கள் வெட்டிக்கொத்திக்கொண்டு கிடக்க யார் வேண்டுமானலும் இங்கை வந்து எதுவும் செய்து விட்டுப் போய்விடுவான்கள். பிரிகிறது எங்களுக்கும் நல்லது. அவங்களுக்கும் நல்லது. இப்படித் தமிழ் இனம் சிங்கள இனம் இல்லை இல்லை இலங்கையர் என்கிறதை விட்டால் இது இப்ப டியே போய்க்கொண்டிருக்கும். ஆயிரம் வருஷத்துக்கும் போகும் நீங்கள் சரித்திரத்தை எடுத்துப் பார்த்தீங்களென்ருல் தெரியும்" இரண்டாயிரத்து ஐந்நூறு வருஷம் தமிழரும் சிங்களவரும் இருந்திருக்கிருர் கள். ஆணுல் தமிழர்கள் தமிழர்களாக வும், சிங்களவர்கள் சிங்களவர்களாகவும்தான் இருந்திருக்கிருர் கள்’. நாகலிங்கம் இப்படிக் கதைக்கத் தொடங்கவே கொழும்பு வியாபாரிக்குத் தனது கொழும்புக் கடைகள் வீடுகள் இவை பற் றிய சிந்தனை வந்துவிட்டதுபோல் அவருடைய முகம் மாறியது. கேட்டார்,
"அப்ப நீங்கள் சொல்லுகிறியள் இதைப் பேச்சு வார்த்தை, களால் தீர்க்க ஏலாதென்று". V

Page 50
84 லங்காராணி
"என்ன பேச்சுவார்த்தை பாருங்கோ. இந்தச் செல்வநாயக மான செல்வநாயகமும்தானே பேசித் தீர்க்கலாமெண்டு திரிஞ் சது. அது செய்யக்கூடிய காலமெல்லாம் போயிட்டுது பாருங்கோ, இந்தத் திருகோணமலையைப் போட்டுப்படுத்துகிறபாடு, மலை நாட்டில் எங்கள் ஆட்களை படுத்துகிற பாடு, இங்கு ஏதும் இருக் கெண்டால் அந்த உழைப்புத்தானே. இந்தக் கப்பல் கூட அவங் களைப் புழிஞ்சு எடுத்ததுதானே. ஒண்டாக இருக்க ஏலுமென்ருல் பாருங்கோ இப்படியெல்லாம் செய்யமாட்டான்கள். ஏதோ பெளத்தம், சிங்களம் அதில் தாங்கள் மட்டும்தான் என்று ஆசைப்படுகிருன்கள். எத்தனை வருஷம், வெள்ளைக்காரன் இருந் திட்டு இப்பதானே போயிருக்கிருன். ஏதோ அதெல்லாத்தையும் திரும்பவும் கொண்டு வரவேண்டுமென்று ஆசையைக் கிளப்பி விட்டிருக்கினம். வச்சுச் செய்யட்டுமன், நாங்கள் ஏன் அதுக்குள்ள நின்று குழப்புவான். எங்கடை பொடியன்களும் பாருங்கோ இந்தப் பேச்சுவார்த்தையெல்லாம் போதுமெண்டு நிற்கிருன் கள்?",
கொழும்பு வியாபாரிக்கு இவற்றைக் கேட்க ஒரே மனக் குழப்பமாக இருந்தது. அவருடைய வீடு வாசல்கள், கடைகள் உறவினர்கள் பலரும் கொழும்பிலேயே இருந்தனர். நாகலிங்கம் கூறுவது எதையும் காதில் போட்டுக்கொள்ள முடிந்ததாகத் தெரியவில்லை. இந்த நிலை போகப் போக மோசமகசிக்கொண்டு போனது.
பொடியன்கள்! பொடியன்களால் என்ன செய்ய ஏலும்? எல்லாருக்கும் வேலைகொடுக்க எல்லாம் சரியாகப் போயிடும்” என் Grf.
நாகலிங்கம் கதையை வளர்க்க விரும்பவில்லை, என்ருலும் தொடர்ந்தார். “பொடியன்களின்ரை வேலை யால தானே கப்பல்லவாறியள். உங்களுக்கு நிலைமைகள் அவ்வளவு சரியா விளங்குவதில்லை பாருங்கோ. நீங்கள் நினைச்சுக்கொண்டு இருங்கோ நான் அப்படி நினைக்கயில்லை. எனி அந்தப் பக்கம் போகமாட்டன். நீங்கள் வேணுமெண்டால் இருந்துபாருங்கோ, பொடியன் கள் விடமாட்டான்கள்’.
இதுவரைக்கும் மெளனமாக இருந்த சரவணனல் மேலும் பொறுக்க மூடியவில்லை. நாகலிங்கத்தைப் பார்த்துக் கேட்டான்.

அருளர் 8莎
“நீங்கள் இந்தத் தளத்தில் தானே இருக்கிறியள்." பின் தளத்து யன்னல் வழியாகக் கைகளைக் காட்டினன்.
“ஒம். ஏன் தம்பி?"
"அங்கை தேத்தண்ணி கொடுக்கிருன்கள். போய்க் குடி யுங்கோ' சரவணன் இப்படிக் கேட்டது நாகலிங்கத்தைத் தே நீர் குடிக்க அனுப்புவதற்கு மாத்திரமல்ல, கொழும்பு வியாபாரி முன் தளத்தில் இருக்கிருர் எள்பது சரவணனுக்குத் தெரிந்திருந் தது. நாகலிங்கத்தை தேநீர் குடிக்க அனுப்பினல் கொழும்பு ளியாபாரி தனித்து இருப்பார் என்றும் அவன் எண்ணினன். ஆனல் தடந்தது முற்றிலும் எதிர்பாராதது. கொழும்பு வியா பாரி உடனே எழுந்தார். நாகலிங்கத்தாரின் பேச்சு அவரைக் குழப்பியிருந்தது. உடனே சரவணன் “முன் தளத்திற்கு நேரம் எடுக்கும்" என்ருன்.
"அதுக்கென்ன நான் இங்கை போய்க் குடிப்பன். இந்த மழைக்கு ஒரு தேத்தண்ணி குடிச்சா நல்லதுதானே" என்று கூறியவாறு அங்கிருந்து வெளியேறினர். சரவணன் சிரித்தான். ந்ாகலிங்கத்தைப் பார்த்தான். அவர் இன்னுமொரு சுருட்டை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டே,
“என்ன தேத்தண்ணி. நான் இந்தச் சுருட்டைக் குடிச்சுக் கொண்டு எத்தனை நாளைக்கும் கிடப்பன்." சரவணனும் குமாரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறித் தளத்திற்கு வந்தனர்.
கப்பல் போய்க்கொண்டிருந்தது. கடலலைகள், மழைக்காற்று 3 பிரயாணம் தொடர்ந்தது. ராணியைப் பார்த்துவிட்டு வரவேண் டுமென்று சரவணன் கூறிக்கொண்டு கீழ்த்தளத்திற்கு இறங்கி ஞன், குமார் சமையல் அறைக்குப் போனன். கீழ்த்தளத்தில் உள்ளவர்கள் சற்று மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். மாணவர் கள் தேநீர் கொடுத்து மசிழ்வித்திருந்தனர். லங்கா ராணியில் உள்ள தமிழர்களில் அநேகமானவர்கள் கொழும்பில் வாழ்ந்தவர் கள். கலவரம் மலை நாட்டில் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தியி ருந்தது. 2500 ஆண்டுகள் இலங்கைச் சிரித்திரத்தில் தமிழர்க ளும் சிங்களவர்களும் ஒன்ருக இருந்திருக்கிருர்கள். சிங்கள

Page 51
86 Gurë 65m grirash
அரசர்களின் கீழ் தமிழர்கள் மந்திரிகளாகவும், பிரதம மந்திரிகளா கவும் இருந்திருக்கிருர்கள். இதேபோல் தமிழ் மன்னர்களின் கீழ் சிங்களவர்களும் தமிழர்களும் ஒன்ருக இருந்திருக்கிருர்கள். ஆயி னும் என்றும் அவர்கள் ஒன்ருக இலங்கையர் என்ற உணர்வில் கட்டுண்டிருக்கவில்லை. தமிழர் தமிழர்களாகவும் சிங்களவர் சிங் களவராகவுமே இருந்திருக்கிருர்கள். இதைச் சரித்திர ஏடுகள் நன்கு புலப்படுத்துகின்றன.
யாழ்ப்பாணத்திலிருந்து தமிழர்கள் ஆங்கிலேயர் காலத்தில் தான் கொழும்பு, மற்றப் பகுதிகளுக்குச் சென்ருர்கள். அந்த நாட்களில் இலங்கை ஒற்றையாட்சியின் கீழ் வந்துவிட்டது. யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் இலங்கையின் மற்றப் பகுதிகளுக்கு மாத்திரமல்ல, சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களுக்கும் சென்றனர். ஆங்கிலேயர் ஆட்சியில் சிறந்த நிர்வாகிகளாகப் பல நாடுகளிலும் கடமை புரிந்தனர். இருபது வருடங்களுக்கு முன் இலங்கை வைத்திய சேவையில் முற்றிலும் தமிழர்கள்தான் பணி புரிந்தனர். இதே போல் பொறியியல் துறை, பொது நிர்வாகம், முப்படைகள் யாவற்றிலும் தமிழர்கள் அதிகமாகவே இருந்த GÖTT
சிங்களவர்களில் பெரும்பாலானவர்கள் பெளத்தர்கள். அவர் களுடைய கிராமிய வாழ்க்கை பெளத்த கோயிலைச் சுற்றியதாக அமைந்திருக்கும். பெளத்த விகாரையில் பல பெளத்த பிக்குகள் இருப்பார்கள். பின்பு பண்ணைக்காரர், முதலாளிகள், அவர்களின் கீழ் வேலை பார்க்கும் கிராமிய மக்கள். அனேகமான வீடுகள் இன்னும் சிறிய குடிசைகள்தான். எங்கும் வறுமைதான். ஆங்கி லேயர் காலத்தில் பள்ளிகளைத் திறந்த கிறிஸ்தவ சமய போத கர்களால் இந்தப் பெளத்த கிராமங்களை ஊடுருவ முடியவில்லை, ஆனல் தமிழர்களின் பகுதிகளில் அந்த நிலையிருக்கவில்லை. முத லில் கல்லூரிகள் யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டன. பலர் படித் துப் பட்டம் பெற்றனர். இவ்வாறு தமிழர்கள் கல்வியில் முன் னேறுவதற்குக் காரணம் நேர்மை, கட்டுப்பாடு, முன்னேற்றம் என்ற கோட்பாடுகளுடன் புதிய சூழ்நிலைகளை உணர்ந்து உழைத் ததுதான்.
தமிழர் பிச்சா பாத்திரம் ஏந்தி புத்த பிக்குகள் வேடம் பூண்டு படிப்பது பாவம் என்று கூறிக்கொண்டு உண்டியல் பணத்தில் பிள்ளைகளை இந்த நிலைக்குக் கொண்டுவந்தவர்களலல்.

அருளர் , 87 யாரையும் காட்டிக்கொடுக்கும் நோக்கத்துடன் வெள்ளைக்கார னுடன் சேர்ந்தவனுமல்ல.
இலங்கை சுதந்திரம் அடைந்தது. ஆங்கிலேயர் தமிழர்களின் உரிமைகள் புதிய சூழ்நிலைகளில் பாதுகாக்கப்பட வேண்டுமென் பதை ஒரளவு ஏற்றுக்கொண்டு இதற்காக அரசியல் சட்டத்தில் ஒல பிரிவுகளை ஏற்படுத்திவிட்டுச் சென்றனர். அவர்கள் இலங் கையை விட்டுப் பிரிந்தவுடன் இலங்கை அரசியல் இந்தப் பெளத்த சிங்களச் சுழியில் அகப்பட்டுக்கொண்டது. சிங்கள மக் களின் வறுமைக்குக் காரணமாகிய சமய பிரபுத்துவம், நிலப் பிர புத்துவம், முதலாளித்துவம் மறைக்கப்பட்டுத் தமிழர்கள் பலிக் கடாவாகினர். இதற்காகத் தாங்கள் சமஷ்டி முறையில் ஆட் சியை அமைத்துத் தங்கள் தங்கள் பாரம்பரிய பிரதேசங்களுக்குச் சென்று உழைக்க வேண்டும் என்று தமிழ்த் தலைவர்கள் போராடி ஞர்கள். இதற்குப்பிறகும் சிங்களத் தலைவர்கள் முழு இலங்கைத் தீவும் ஒரு பெளத்த சிங்கள நாடு, தமிழர்களுக்கு இங்கே இடமில்லை என்ற போக்கை வலுப்படுத்தினர். இவ்வாறன பிரச்சினகளுடன் தமிழர்கள் தொடர்ந்து சிங்களிப்பகுதிகளில் வாழ்வதற்கு முக்கிய காரணம் அவர்களுடைய வாழ்க்கைப் பிரச்சினைதான்.
கலவரம் தொடங்கியதும் கொழும்பு அகதிகள் முகாம்களில் சுமார் பத்தாயிரம்பேர் இருந்தனர். அகதிகள் முகாமைச் சுற்றி யுள்ள கொழும்புப் பகுதிகளான கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, கல்கிசை போன்ற இடங்களில் தமிழர்கள் ஏரா ளமானவர்கள் இருந்தார்கள். அவர்கள் கொழும்பு வாழ்க்கைக்கு தன்முகப் பழகிவிட்டவர்கள். அகதிகளாக முகாம்களில் தஞ்சம் புகுவதைப் பார்க்கிலும் அடி விழுந்தால் விழட்டும் ஏற்றுக் கொள்ளுகிருேம் என்று இருந்தவர்கள் ஏராளம்பேர் இருந்தனர். அரசாங்கம் அகதிகள் யாழ்ப்பாணம் போவதற்குப் போக்கு வரத்து வசதிகள் செய்வதில் இழுபறி பண்ணிக்கொண்டிருந்தது. பின்பு விமானங்களிலும் கப்பல்களிலும் அனுப்புகிறதென்ற செய்தி வந்தது. இந்தச்செய்தி பரவியதும் அந்தப் பகுதிகளில் இருந்த தமிழர்களில் சுமார் ஐயாயிரத்திற்குமதிகமானேர் ஒரு சில மணித்தியாலங்களில் மூன்று புதிய அகதிகள் முகாம்களைத் திறக்கவைத்து அவற்றைத் தங்களால் நிரப்பிக்கொண்டனர். அரசாங்கம் மாத்திரம் இந்தப் பிரயாண வசதிகளைப் பலவந்த மாக நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்திருந்தால் கொழும்பில் ஒரு தமிழரும் மிச்சமிருந்திருக்கமாட்டார்கள்.

Page 52
மழை சற்றே ஓய்ந்திருந்தது. படங்குகளை உயர்த்திக்கொண்டு மேல்தளத்திற்குப் பலர் வந்தனர். ஆறு மணியாகியிருந்தது. குமாரும், சரவணனும் தளத்தில் அங்கும் இங்கும் நடந்துகொண்டி ருந்தனர். கப்பலின் மேல்தளத்தில் வெளிச்சம் போடப்பட்டிருந் தது. மழையினுல் தளம் தண்ணிர் நிரம்பியிருந்தது.
லங்கா ராணியில் இருந்தவர்களில் பலர் யாழ்ப்பாணத்தவ ராக இருந்தாலும், கொழும்பில் நெடுங்காலமாக வாழ்ந்தவர் கள். கல்யாண வீடு, கோயில் திருவிழா போன்றவற்றுக்கு மாத்தி திரம் யாழ்ப்பாணம் போவார்கள். உறவினர் இருந்தாலும் கொழும்பில் நிரந்தரமாக இருப்பவர்கள் என்பதனுலும், உயர் பதவிகளில் இருப்பதனலும், இவர்களது யாழ்ப்பாண மண்ணுட னை உறவு “யாழ்ப்பாணத்தவன்” என்ற சொல்லுடன் மாத்தி ரம் நின்றுவிடும். அங்குபோனுல் நல்ல பனங் கள்ளுக் குடிக்கலாம் என்று கூறுவார்கள். கொழும்பு வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டு மேலைய நாகரிகத்துடன் ஒன்றிப்போனவர்கள். யாழ்ப்பாணம் சென்ருல் இவர்களைக் குடிமக்கள், உறவினர், பயபக்தியுடன் வர வேற்று உபசரிப்பர். இவர்கள் யாழ்ப்பாணம் வருகின்ருர்கள் என்ற செய்தி ஒரு மாதத்திற்கு முன்பு கிடைத்தாலும் அன்றிலி ருந்தே ஆயத்தங்கள் தொடங்கிவிடும். வரும் நாளை எண்ணிக் கொண்டிருப்பார்கள். கிராமங்களில் குடும்பங்களுக்கிடையில் சிறப்பு நிலை பற்றிப் பலத்த போட்டி இருக்கும். கொழும்பில் உறவினர்கள் இருப்பவர் பலம்வாய்ந்தவராக இருப்பார்கள். தாங் கள் வறுமையில் வாடிஞலும் கொழும்பில் இருக்கும் உறவின ரின் செல்வ நிலை பற்றி நினைத்து மகிழ்ச்சியடைவார்கள்.
இந்த உறவுகள் இன்று நேற்று ஏற்பட்டதல்ல, ஆங்கிலேய ரின் காலத்தில் யாழ்ப்பாணத்தில் பல கல்லூரிகளைத் தொடக்கி ஞர்கள். இலங்கையின் முதல் மருத்துவக் கல்லூரி கூட யாழ்ப்பா ணத்தில்தான் தொடங்கப்பட்டது. இதனல் யாழ்ப்பாணத்தவர் கல்வியறிவில் இலங்கையில் முதலிடத்தைப் பல காலமாக வகித்துவந்தனர். ஆங்கிலேயர் காலத்தில் இலங்கையின் பல பகுதிகளிலும் சென்று யாழ்ப்பாணத்தவர் வேலைசெய்தனர்.

PICI56Tit 89
இந்த அரசாங்க உத்தியோகங்களுக்குப் பிள்ளைகளைச் சிரமப்பட் டுப் படிக்க வைத்தனர். யாழ்ப்பாண மக்களுக்கு இதுதான் இலட் சியமாக அமைந்துவிட்டது. இப்படி உயர் பதவிகளில் இருப்பவர் களைத் தாய்மார்கள் நல்ல சீதனம் கொடுத்துத் தங்கள் பெண் களுக்கு மணம் முடித்துவைப்பர். ஆண்களைப் படிப்பித்து அரசாங் கத்தில் வேலையென்ருல் பெரிய இடத்தில் நல்ல சீதனத்துடன் கட்டிவைப்பதில் தாய்தான் முன்னுக்கு நிற்பாள். இதில் ஒரு பகுதி அவளுக்குக் கிடைக்கும். வீடுகள், தோட்டங்கள், நகைகள் எல்லாம் சீதனமாக எழுத்து மூலம் கொடுப்பார்கள். டாக்டர், என்சினியர் என்ருல் பேச்சுவார்த்தைகள் இலகுவில் முடிந்து விடும். மற்ற வேலையென்றல் தரகர்கள் செயல்படுவார்கள். அர சாங்க உத்தியோகம் இல்லையென்ருல் அதோகதிதான். தமிழர் களுக்கு உயர்கல்வி, தரப்படுத்தல் மூலம் குறைக்கப்பட்டபோது அந்தப் பிரச்சினை யாழ்ப்பாணத்தவரின் அடிப்படை வாழ்க்கை முறைக்கே சவாலாக அமைந்துவிட்டது. யாழ்ப்பாணத்தவரும் சொந்த முயற்சியில் தொழிற்சாலைகளைத் தொடங்கி இளைஞர் களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தக்கூடிய நிலையிருந்தும் அதை யாரும் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.
லங்கா ராணியில் இப்படிச் சீதனம் வாங்கிக் கல்யாணம் செய்துகொண்டவர்கள் பலர் இருந்தனர். இவர்களுக்கு யாழ்ப் பாணத்தில் அல்லது கொழும்பில் வீடு சீதனமாகக் கிடைத்திருக் கும். மாப்பிள்ளைகளின் இந்த அரசாங்க உத்தியோகம் என்றும் நிரந்தரமாக இருக்கும் என்ற எண்ணத்தில்தான் சீதனம் கொடுத் திருப்பார்கள், இனக் கலவரங்களைப் பற்றி எண்ணியிருக்க மாட் டார்கள். இந்தப் பிரச்சினையைக் குமாரும் சரவணனும் பேசிக் கொண்டனர்.
“இவன்கள் எவ்வளவுதான் கொழும்புக்குத் திரும்பிப் போக மாட்டம் என்று சொன்னுலும் மாமி ஒரு கிழமைக்குத் தேத் தண்ணி போட்டுக்கொண்டு வந்து எழுப்ப, பேசாமல் பெண்டிலை விட்டுப் போட்டு பெட்டிகளைக் கட்டிக்கொண்டு கோச்சி ஏறு வான்கள். நீ வேண்டுமானல் இருந்துபார்' என்ருன் சரவணன்.
குமாருக்கு சிரிப்பு பொறுக்க முடியவில்லை. “அது மெய், அது கட்டாயம் நடக்கும்” என்று கூறினன்.

Page 53
90 லங்காராணி
கடந்த இரு வாரங்களாக நடந்த இனக்கலவரத்தால் எவ் வித பாதுகாப்புமற்ற நிலையில் அல்லல்பட்டு உடுத்திய உடுப்பு களுடன் அகதிகள் முகாம்களில் தஞ்சம் புகுந்து, தாய் மண் நோக்கி கப்பலில் புறப்பட்டு, சீதன வாக்கும் குடும்பச் சிறப்பும் தற்பெருமையும் தவிடு பொடியாகி அனதைகள்போல் ஆக்கப் பட்டு, அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்ற ஏக்கத்துடன் கப்பல் தளங்களில் யோசனையில் ஆழ்ந்திருந்தனர் பலர். யாழ்ப் பாணம் நோக்கி கப்பல் புறப்பட்டதும் இந்தப் பிரச்சனை ஒர ளவு குறைந்திருந்தது என்பதை மறுக்க முடியாது. அகதிகள் முகாம் வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்திருந்தது. யாழ்ப்பாணத் தில் உள்ளவர்கள் தங்கள் உறவினர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி பரிதவித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களை எப் போது அரவணைப்போம் என்று கப்பல் யாழ்ப்பாணம் சென்றடை யும் நேரத்தை எதிர்பார்த்திருந்தனர். கப்பலின் மேல் தளத்தில் ஒரு சிலர் உலவுவதற்கு வந்திருந்தனர்.
இளைஞர்கள் தொடர்ந்து விவாதத்தில ஈடுபட்டிருந்தனர். நீர்கொழும்பு இளைஞன் இலங்கையில் இராணுவத்தினர், பொலி சார், நவீன ஆயுதங்கள் வைத்திருக்கின்றனர். வாகனங்கள் வைத்திருக்கின்றனர். ரேடியோ மூலம் எங்கு வேண்டுமானலுன் தொடர்பு கொள்ளலாம். அப்படி இருக்கும் போது அவர்களுடம் எல்வாறு போரிடுவது என்ற கேள்வியை கேட்டான். வேட்டியு. டன் இருந்த இளைஞன் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலைச் சொல் லிக்கொண்டிருந்தான், அவனது முகம் கமயிரமாக, கண்கள் ஒளி வீசிய வண்ணம் இருந்தன. களைப்படைந்து இருக்கவில்லை. என்ன ஏதோ என்று திகிலடையவில்லை. திரும்பி போகிருேம் ஊரார் தன்னை மதிக்க மாட்டார்கள் என்று பிரச்சினைப் படவில்லை. நீங் கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று கேட்டால் சிரித்துச் கொள்வான் பதில் சொல்ல மாட்டான். திருகோணமலையில் கமம் செய்கிறேனென்று சில நிமிடங்களுக்குப் பின் பதில் சொல்வான். எந்தப் பிரச்சினையையும் உடன் விளங்கிக்கொள் வான். அவனுக்குத் தாய் இருந்தாள். ஊரார் தாயிடம் மகன் என்னவேலையிலிருக்கிறர் என்று கேட்பார்கள். தாயும் பலவா சொல்லிவிட்டு மகனிடம் வந்து சொல்வாள். “நீயும் லண்டனு குப் போ" அவன் சிரித்துக்கொள்வான். நான் திருகோணமை யில் வயல் செய்கிறேன் என்று சொல்லு என்று அடித்துக் கூறு

ருேளர் 92
வான். இவனுக்கு என்ன நடந்துபோய்விட்டது. என்று தாய் ஏங்குவாள்,
இலங்கையில் இராணுவத்தினரும், பொலிசாரும் அழகாக உடையணிந்து பெரிய சப்பாத்துக்கள் போட்டிருப்பார்கள். 1971 ஆம் ஆண்டு சிங்கள இளைஞரின் கிளர்ச்சியின் பின் அவசர காலச் சட்டம் ஏழு ஆண்டுகளாக அமுலில் இருந்தது. பொலி சாருக்கு இய்ந்திரத் துப்பாக்கிகளை அரசு வழங்கியிருந்தது. இந் தக் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களையும், அவர்களுக்கு ஆதரவு அளித்த கிராமங்களையும் இராணுவத்தினர் அழித்துவிட்டனர்" இதைத் தொடர்ந்து பொலிசார் தமிழ் இளைஞர்களையும் கைது செய்து வைத்திருந்தனர். அடிக்கடி தமிழ்ப் பகுதிகளில் ஏதாவது மோதல் ஏற்படும். தப்பித்தவறி இந்தப் பொலிசாரை மக்கள் எதிர்த்தால் அதற்குப் பயங்கரமாக பதிலடி கொடுப்பார்கள் வீதியில் போவோர் வருவோர்களை அடித்து நொறுக்குவார்கள் இவர்களுக்கு அரசு புதிய வாகனங்களையும் இறக்குமதி செய்து கொடுத்திருந்தது. 72 ஆம் 73ஆம் ஆண்டுகளில் இலங்கையில் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் உணவில்லாமல் ஒட்டிப்போய் எலும் பும் தோலுமாய்க் காட்சியளித்தார்கள். உணவுப் பொருட்களே ஒர் இடத்தில் இருந்து மற்ருெரு இடத்திற்குக் கொண்டுபோகக் கூடாது என்று அரசு சட்டம் போட்டிருந்தது. இரண்டு கொத்து அரிசிக்கு மேல் புகையிரதத்தில் கொண்டு சென்ருல் அவனேப் பிடித்து விசாரணை செய்வார்கள். பட்டினியால் பாமர மக்கள் வாடினர்கள். பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் நல்ல உணவை அரசு வழங்கி இருந்ததால் நன்முகச் செழித்துப் போயிருப்பார்கள். தமிழ் மக்களின் பொருளாதார வீழ்ச்சியும் வறுமையும் அரசின் மீது தமிழர் நம்பிக்கையை முற்ருக இழக் கச் செய்திருந்தது. அரசைப் பாதுகாத்தல் என்ற புனித பணி யில் ஈடுபட்டிருந்த பொலிசார், தங்களை எதிர்ப்பவர்களை அரசை எதிப்பவர்களென்றுதான் கொள்வார்கள்.
ஆங்கிலேயர் பாணியில் ஏற்படுத்திக் கொண்ட சம்பிரதாயங் களும் ஒரு போலி சிறப்புணர்ச்சியும் பாதுகாக்கப்பட வேண் டியதென்றும், அப்படியான நிலைதான் தங்கள் பணியைச் செய் வதற்கு மிகவும் அவசியம் என்ற கருத்தும் பொலிசார் மத்தி யில் பரவ்ல்ாக இருந்தன. ஆங்கிலேயர் காலத்தில் இந்த இரா

Page 54
92 லங்காராணி
ணுவத்தினரும் பொலிசாரும், ஒரு காலனி ஏகாதிபத்தியத்தின் பாதுகாவலராக இயங்கினர். மக்களைச் சுரண்டும் நோக்குடன் அங்கு வெள்ளைக்காரர் இருந்தனர். பொதுசனங்களை எப்போ தும் பயப்படுத்தி வைத்திருக்க வேண்டிய நிலை. ஆங்கிலேயர் சென்றுவிட்டனர். அவர்களுக்குப் பதிலாக வேருெருவர். பொரு ளாதார ரீதியில் அதே பிரச்சினைகள். புதிதாக வந்தவர்கள் ஆங் கிலேயர் ஏற்படுத்திச் சென்ற அதிகார பீடங்களையும் அவற்று டன் ஒன்றிப்போய்விட்ட ராஜரீக போகங்களையும் துறந்து, மக் களின் முன்னேடிகளாக விளங்க வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இந்தப் பொலிசாரையும். இரா ணுவத்தினரையும் பயன்படுத்தினர். அதே நிலை தொடர்ந்து நீடித்தது.
அரசியல்வாதிகளின் இயலாமை, அரசியல் பாரம்பரியத்தின் பிற்போக்குத் தன்மை, இவற்றையெல்லாம் மூடி மறைத்துப் பாதுகாக்கும் பொறுப்பைப் பொலிசார் பெருமிதத்துடன் ஏற்றுச் செயல்பட்டு வந்தனர். இதற்காக இவர்களுக்குப் பல சலுகை கள். அந்த அதிகார வெறிப்போக்கிலும் ராஜரீக சுகபோகங் களிலும் ஒரு பங்கு மக்களுக்கும் அரசுக்கும் ஏற்படும் முரண் பாட்டிற்கும், எதிர்ப்புக்கும், வெறுப்புக்கும் ஏற்றவாறு இவர்கள் பொறுப்பும் கூடிக்கொண்டு போகும். இதனல்தான் புரட்சி என்று புறப்பட்ட சிங்கள இளைஞர்கள், முதலாவதாகப் பொலி சாரை இலக்காக்கித் தாக்கினர்கள்.
சிங்கள அரசின் தமிழின விரோதப்போக்கு ஏற்படுத்திய அது ருப்தியும், அரசின் மீதான வெறுப்பும், இளைஞர்களின் துடிப்பும் தமிழ்ப் பகுதிகளில் பொலிசாரின் பொறுப்புகளுக்கு ஒரு புதிய திருப்பம் கொடுத்திருந்தது. பொலிசார் இயந்திரத் துப்பாக்கி களைத் தேrளில் போட்டுக்கொண்டு வீதிகளில் வலம் வருவர். இத்துப்பாக்கிகளைச் சாக்கில் சுற்றி இடுக்கில் வைத்துக்கொண்டு விற்பதற்கு ஆடுமாடு ஏதாவது இருக்கிறதா என வினவிக் கொண்டு வீடுகளுக்கு வருவார்கள் இளைஞர்களைத்தேடி. இளைஞர் களின் அந்தப் போக்குத் தமிழ் இனத்தின்மீது சிங்கள அரசாங் கத்தினல் கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறையின் பிரதி பலிப்பே என்பதை இந்தப்பொலிசார் உணரத் தவறிவிட்டனர்.

அருளர் 98
ஏதோ இளைஞர்களைப் பிடித்த அடைத்தால் எல்லாம் சரியா கப் போய்விடும் என்று கருதினர்.
இதோடு மாத்திரமல்லாமல் கடந்த பொதுத்தேர்தலில் பத விக்கு வந்த அரசு ஏழு ஆண்டுகளாக அமுலில் இருந்த அவசர காலச் சட்டத்தை எடுத்து விடுவதாகக் கூறிக்கொண்டு பத விக்கு வந்ததால் அவசரகாலநிலை நீக்கப்பட்டது. ஏழுவருடங் களாக அவச்ரகாலச் சட்டத்தின் உதவியினல் இயங்கி வந்தவர் கள் சட்டம் அகற்றப்படவே திக்கற்றவர்களாகத் தத்தளித்த னர். பொதுசனங்கள் மீது அவர்களுக்கிருக்கவேண்டிய பிடியை நழுவ விட்டிருந்தனர். எவ்வித குற்றங்களுக்கும் துப்புத் துலக்க முடியாமல் சித்திரவதையே ஒரே முறையென அதில் தஞ்சம் புகுந்தனர். பயம் அவர்களை ஆட்டிப்படைத்தது. இளைஞர்களைப் பிடிக்க முடியாவிட்டால் அவர்களின் தாய் தந்தையரைப் பிடித்துக் கொண்டுபோய் சிறையிலடைத்துச் சித்திரவதை செய் தனா,
“எங்கள் பொலிசாரும் இராணுவத்தினரும் போரில் வெல்லக் கூடிய இன்னுெரு நாட்டின் பெயரைச் சொல்லு பார்க்கலாம்" இவ்வாறு வேட்டியுடனிருந்த இளைஞன் நீர்கொழும்பு இளைஞனை வினவினன், சிந்தனையைச் சற்று ஒட்டம்விட்டான். எல்லோரும் அந்த நீர்கொழும்பு இளைஞன் முகத்தைப் பார்த்தனர். இவனுக்குச் சரித்திரம் அதிகம் தெரியாது. சற்று மேலே பார்த்தவண்ணம் வாயை முணுமுணுத்தான்.
*அமெரிக்கா , ஏலாது அணுகுண்டு, ரஷ்யா. ஏலாது அணு குண்டு, சீன. ஏலாது ஏகப்பட்டசனம், இங்கிலாந்து. ஏலாது வெள்ளைக்காரன், ஆபிரிக்கா . ஏலாது காப்பிலி, இந்தியா. ஏலாது ஏகப்பட்ட சனம் . அதுதான் சரி -ம் .ம் முதலில இந் தியா பிடிக்கப்போய் தோற்றுவிட்டது. பிறகு இலங்கை பிடித் தது’ - முகம் மலர்ந்தது. வாயைத் திறந்தான்.
*கச்சத்தீவு".
“என்ன கச்சத்தீவா?"
வளாக இளைஞருக்குச் சிரிப்புப் பொறுக்கமுடியவில்லை. அங்

Page 55
94 லங்காராணி
கிருந்த மற்ற நீர்கொழும்பு இளைஞருக்குச் சிநேகிதனின் பதிலை நிளேத்துத் தலைகுனியவேண்டியநிலை, கோபம் வந்துவிட்டது,
*நீயொரு வேடனடா, கச்சத்தீவில ஆட்களாடா இருக்கினம்? நீ தோசைக்கடையில உளுந்து அரைக்கத்தான் சரி. உனக்கு இதெளலாம் சரிவராது.
வேட்டியுடன் இருந்த இளைஞன் கைகளை உயர்த்திப் பேச்சை நிறுத்தினன். 'இதற்கெல்லாம், சிரிக்கக்கூடாது. கோபப்படவும் கூடாது. எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்கவேண்டிய அவ சியமில்லை. கச்சத்தீவில் ஆட்கன் யாருமில்லை, அதுபோக அது ஒரு தனிநாடு அல்ல. முன்பு கச்சத்தீவு இந்தியாவிற்கா அல்லது இலங் கைக்கா சொந்தம் என்பது பற்றி சர்ச்சை இருந்தது. இலங் கைக்குச் சொந்தம்' நீர்கொழும்பு இளைஞனின் கோபம் தணிய வில்லை. முட்டி மோதிக் கொள்பவன்பேல் தோன்றினன்.
*சரி வேடன் என்ருல் ஏன் கோபப்படவேண்டும். வேடு அன், வேடு என்ருல் மறைந்திருந்து தாக்குதல் என்று பொருள். மறைந்திருந்து தாக்குபவன்தான் வீரன். காடுகளில் மறைந்தி ருந்து விலங்குகளைத் தாக்குகின்றவனைத்தான் வேடன் என்ற சொல் குறிக்கும். வேடன் தான் வீரன்."
கோபம் இன்னும் தீர்ந்ததாகத் தெரியவில்லை.
*தோசைக்கு உழுந்து அரைப்பவன் லேசானவன் அல்ல. அவன் உணவு தயாரித்துக் கொடுப்பவன். வேடனுக்கும் உணவு வேண்டும். வேடனின் வெற்றியில் உழுந்தரைப்பவனுக்கும் பங் குண்டு. அவரவர்களுக்கு ஒரு பணி இருக்கும். அவனவன் தனது பணிகளைச் சிறப்பாகச் செய்தால் எல்லாம் சிறப்பாக அமையும், தோசைக்கு அரைப்பவன் எந்தவிதத்திலும் குறைந்தவனல்ல. இதற்கெல்லாம் கோபப்படக் கூடாது’ நீர்கொழும்பு இளைஞ னின் கோபம் சற்று குறைந்துவிட்டது. தொடர்ந்தான்,
“பெரிய படைகள், நவீன போர்க் கருவிகளுடன் போரிட் டும், சிறிய வறிய மக்களை வெல்ல முடியாமல் வல்லரசுகள் தங் கள் பாய்படுக்கைகளைச் சுருட்டிக்கொண்டு ஓடிய சரித்திரங்கள் இந்நாட்களில் ஏராளம். உண்மையிலேயே இராணுவத்தினருட

JICD06ntiff 95
னும், பொலிசாருடனும் மோதவேண்டுமானுல் அவர்களைத் தோற்கடிப்பது பெரிய காரியமல்ல. ஆனல் எழுந்தமானமாக அவர்களை எங்கள் எதிரிகள் என்று நினைத்து அவர்களுடன் மோதப்படாது. அவர்கள் மத்தியில் எங்களுக்கு நண்பர்களும் இருப்பார்கள். எதற்கும் எங்கள் போராட்ட வழிமுறைகளை வகுத்துக்கொள்ளும் முன்பு நாம் எதற்காகப் போராடுகிமுேம் என்பதில் மனக்குழப்பம் இருக்கக் கூடாது. உரிமைகளுக்காகப் போராடுகிருேம். என்ன உரிமைகள்? தனிநாட்டுக்குப் போரா டுகிருேம். எதற்குத் தனிநாடு?
சிங்களவர் உனது உடைமைகளைக் கொள்ளை அடித்துவிட்டார் கள் என்பதாலேயோ,டாக்குத்தர். என்ஜினியராக வரமுடியவில்லை என்பதாலேயோ, அரசாங்க உத்தியோகத்திற்குச் சிங்களம் படிக்க வேண்டுமென்பதாலேயோ, சிங்களவன் யாழ்ப்பாணத்திலேயும் திருகோணமலையிலும் வந்து வாழ்கிருன் என்பதாலேயோ, பாட் டன் காலத்தில் கொழும்பில் கடை போட்டது மாதிரி இப்போது போட முடியவில்லை என்பதற்காகவோ நாங்கள் தனிநாடு கேட் டுப் போராட வேண்டிய அவசியமில்லை. உனது சுயநலப் போக் கையும் போலிச்சிறப்பையும் பாதுகாப்பதற்காக ஒரு தனிநாடு உருவாக்க வேண்டிய அவசியமில்லை. நீ அரசாங்க உத்தியோகத் தில் இருந்துகொண்டு, என்னிடம் ‘உதவிக்கு வரும் பாமர மக் கஃா எனக்கு நேரமில்லை, ‘இன்றுபோய் நாளை வா" என்று ஆணை யிடுவதற்குத் தேவையான அந்த மேசைக்கும், கதிரைக்கும் சிங் களவன் போட்டிபோடுகிருன் என்பதற்குத் தனி நாடு கேட்டுப் போராட வேண்டிய அவசியமில்லை. உனது கள்ளக்கடத்தல் தோணியைக் கடற்கரையில் மறித்துச் சோதனை போடுகிருர்கள் என்பதற்காகத் தனிநாடு கேட்க முடியாது.
நான் தமிழன் எனக்கு ஆங்கிலம்தான் பேசத்தெரியும், சிங் களம் தெரியவேண்டியதில்லை என்பதற்காகத் தனிநாடு கேட்கக் கூடாது. உனது வறுமை நிலைக்குச் சிங்களவன் தான் காரணம் என்று யாரோ கூறிவிட்டார்கள் என்பதற்காகத் தனிநாடு கேட் டுப் போராடக்கூடாது. உனது லாபத்தைச் சிங்களவன் கெடுக் கிருன் என்பதற்காகத் தனிநாடு கேட்கக்கூடாது. உனது வீட் டின் பின்னல் உள்ள அரசமரத்தைப் புத்த கோவிலாக்கிவிட் டார்கள் என்பதற்காகத் தனிதாடு கேட்கக்கூடாது.”

Page 56
96 லங்காராணி
இளைஞன் சற்று நிறுத்தினன். அங்கிருந்த வளாக மாண ருக்கு இவையெல்லாம் சற்று ஆச்சரியத்தைக் கொடுத்தது. இளை ஞன் மீண்டும் தொடர்ந்தான். தனது குரலைத் தணித்துக் கொண்டான். அவனுடைய முகம் உணர்ச்சியில் விறுவிறுப்படை ந் தது. கண்கள் கலங்கின.
"இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்கள் வறுமையைப் போக் கிச் செல்வத்தை வளர்க்கவும், தங்கள் மொழியை, கலாச்சா ரத்தை, பாரம்பரியத்தைப், பேணிக்காத்து வளர்க்கவும் தங்கள் நிலத்தில் ஒரு அரசை நிறுவ விரும்புகிறர்கள்.
இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்கள் தமிழர்கள் என்ற கார ணத்தால், நாடற்றவர்களாகக் கருதப்பட்டு, அல்லல்பட்டு, இன் னலுற்று, அகதிகளாக ஆக்கப்பட்டுக் கப்பலில் ஏற்றப்படுகின்ற னர். அவர்களுக்கு இருக்க இடமில்லை; உண்ண உணவில்லை; செய் வதற்குத் தொழில் இல்லை. இவர்களுக்கு இடமும் உணவும் தொழிலும் கொடுக்கவேண்டும். தமிழன் என்று தலைநிமிர வைக் கவேண்டும்
இந்த நாட்டிலுள்ள தமிழர்கள், கட்சியென்றும், சாதியென் றும், சமயமென்றும், ஊரென்றும், தெருவென்றும் பிரிந்து சொந்த மண்ணில் எதையும் சாதிக்கமுடியாமல் அந்நிய மண் ணில் கையேந்தி நிற்கிருர்கள். இதையொரு முடிவுக்குக் கொண்டு வர தமிழனுக்கு ஒரு அரசு வேண்டும்.
சுதந்திரம், ஜனநாயகம் என்று கூறிக்கொண்டு, மனிதனை மனிதன் சுரண்டும் சுதத்திரத்தை வளர்த்துக் கொண்டு, அதி கார வெறிபிடித்துச் சொந்த மண்ணிலேயே தமிழனை அந்நியன க்குகிறன் தமிழன், இதை ஒரு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்,
தமிழன் நாகரிகம் என்று கூறிக்கொண்டு வெறும் போலியான பண்பாடுகளேயும் போட்டியையும், பொருமையையும் வளர்த்து ஏகப்பட்ட பொறுப்புகளத் தலையில் வைத்துக் கொண்டு மண் ணுேடு மண்ணுக அழுந்திப்போய்க் கிடக்கின்றன். இதிலிருந்து அவனை விடுவித்துத் தமிழர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் முன்னேற் றத்திற்காக உழைக்கும் பொருளாதாரத் திட்டத்தை அமைத்து வழிநடத்த ஒரு சமதர்ம அரசு நிறுவவேண்டும்.

JI(patri 97
சமுத்திரத்தை ஆட்கொண்டு, சந்திரனை வென்று அணுவைத் துளைத்து விண்ணப் பொழிய வைக்கின்றன் மனிதன். இந்த யுகத் தைத் தமிழன அடையவைக்க, அவனை வழிதடத்த ஒரு அரசு வேண்டும். அதை நிறுவ மண்வேண்டும், பூமி வேண்டும். இதற் குத்தான் நீ போராடவேண்டும், வேலெடுக்க வேண்டும்."
வேட்டியுடன் இருந்த இளைஞன் பேச்சை நிறுத்தி விட்டு அங்கு இருந்தவிர்களை நோக்கினன். அவர்கள் கேள்விகள் . எது வும் எழுப்பாமல் அடுத்து என்ன கூறப்போகின்றன் என்பதை எதிர்பார்த்தனர். வேட்டியுடன் இருந்த இளைஞன் வீர உணர்வு டன் தானே கேள்வியை எழுப்பி மீண்டும் தொடர்ந்தான்.
*யார் கரங்கள் வேலெடுக்கும்?".
"உண்டு கொழுத்து திரண்டுபோய்க் கிடக்கும் கரங்கள் இதைத் தொடாது; இதைத் தொடவும் முடியாது.
உழைத்து உழைத்து முறுகிப்போன கரங்கன் தான் இதை முதலில் எடுக்கும்.
ஏர் பிடித்துக் காய்ந்த கரங்கள்தான் இதை எடுக்கும்.
பேணு பிடித்துச் சோற்றுக்கு ஏங்கும் வெற்றுக் கரங்கள்தான் இதை எடுக்கும்.
இனத்தின் வீழ்ச்சியை நினைத்து நினைத்துத் துடிக்கும் கரங் கள் தான் இதை எடுக்கும்.
நீ முதலில் அவர்களைத்தேடி அவர்களுக்கு முதலிடம் கொடு இதற்குச் சிந்தும் இரத்தம் அவர்களிடம்தான் உண்டு. இந்த அரசை நிறுவிக் காக்கும் கரங்கள் அவர்களிடம்தான் உண்டு இந்த அரசைத் தாங்கும் இதயம் அவர்களிடம் தான் உண்டு. அவர்களுடைய எழுச்சிதான் இந்த அரசு.
ஆகவே வரப்போகும் தமிழர் சமதர்ம சமுதாயம் எப்படி யானதாக இருக்கும் இருக்கவேண்டும் என்பதுபற்றி முதலில் தெரியப்படுத்து. அங்கு வரப்போகும் அமைப்புகளைப் பற்றி தெரி யப்படுத்து. அவற்றின் நிழல்களை ஏற்படுத்து. கொள்கைகளை

Page 57
98 லங்காராணி
விளக்கு. அங்கு பரிணமிக்கப்போகும் புதிய தமிழனுடைய சமு தாயத்தின் சாதனைகளைத் தெரியப்படுத்து. இதற்காக நீ யாருக் கும் கும்பிடு போட வேண்டியதில்லை. நீயும் ஒட்டுக் கேட்க வந்தி ருக்கிருய் என்று நினைத்துக் கொள்வார்கள். இதுதான் வேண்டு மென்று அடித்துச் சொல்லு, நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள், இதே அவர்களது எண்ணமாக இருக்கட்டும். இதை ஏற்படுத்த எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராய் இருப்பார்கள். இது தான் எழுச்சிக்கான சந்தர்ப்பம், நீ யாருக்கும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. கட்டுகளை அறுத்துவிடு. எதிர்ப்பவர்க ளின் மீது வேலைப்பாய்ச்சு, ஈழம் தானுக வெடித்துக் கிளம்பும்.'
மற்றவர்கள் கேள்விகள் கேட்க முனந்தனர். அவற்றை அவனே யூகித்துக்கொண்டு தொடர்ந்தான்.
*யார் தலைவன் என்று நினைத்து நினைத்து மண்டையை உடைத்துக் கொள்ளாதே. உன்னிடமிருந்துதான் இந்தத் தலைமை எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு தலைவர்கள் வித்தைக்காரர்களாக இருக்கமாட்டார்கள். சமுதாயத்தில் உள்ள எல்லோருக்கும் பொதுவான கோட்பாடுகள் இருக்கும். இலட்சியம் இருக்கும் திட்டங்கள் இருக்கும். தலைவர்கள் மக்களின் பிரதிபலிப்பாகவே இருப்பார்கள்.
இவ்வெண்ணங்களை உன் மனதில் எடுத்துக்கொண்டு இந்தப் புதிய சமுதாயத்தை நிர்மாணிக்க நீ புறப்பட வேண்டும். நீ முத லில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் உனது வீட்டுக்குள் இருந்து தான் வரும். உனது அம்மா நீ எங்கு போகிருய் என்று கேட் பாள், உனது தங்கைமாரின் கண்கள் கலங்கும். அயலவர் உனக்கு வேலையில்லையா என்று கேட்பார்கள். சீதனம் கொடுக்கவேண் டும் என்று உனது காதில் விழ கதைகள் கூறுவார்கள். நீ எப் படியாவது உன்னேப் பார்த்துக்கொண்டால் போதும், மற்றவர் களைப் பற்றிக் கவலை வேண்டாம் என்று அம்மா கூறு வாள். இவ்வாருன சமுதாயத்தில்தான் இருக்கிருேம். இதற்காக யாரையும் குறை சொல்லக் கூடாது. புதிய சமுதாயத்தில் இந் தக் கவலைகள் உங்களுக்கு இருக்காது என்று கூறிவிட்டுப் புறப்படு.

அருளர் 99
விடுதலை விடுதலை என்று கூறிக்கொண்டு பலர் நிற்பார்கள். தமிழனைத் தமிழன் சுரண்டும் சுதந்திரம் அங்கு இருக்குமா? என்று கேள். அதைப் பிறகு பார்த்துக் கொள்வோம் என்று கூறுவார்கள். அவர்களையிட்டு நீ மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தம் சுயநலங்களைப் பாதுகாக்க உன்னைக் கருவியாகப் பாவிக்க முயல்வார்கள். அவர்களை ஒரு பக்கத்தில் தள்ளிவைத்து விடு. ஆறுதலாகப் பார்த்துக்கொள்வோம்."
இவ்வாறு வேட்டியுடன் இருந்த இளைஞன் பிேச்சை நிறுத் தியதும் இதுவரை பேச்சில் ஒன்றிப்போயிருந்த இளைஞர்கள் இளைஞனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர். இச்சம யத்தில் அங்கு தேவன் வந்து மேல்தளத்தில் நின்றுகொண்டு படங்கை உயர்த்தி உள்ளே தலையைவிட்டு இளைஞர்களை நோக்கி கைகளை அசைத்தான். இளைஞர்களும் அவன் ஏதோ கூறப்போ கின்ருன் என்பதால் மேலே நோக்கினர். “மட்டக்களப்பு . மட் டக்களப்பு.’ என்று கைகளை அசைத்தவாறே கத்தினன். இளே ஞர்கள் எழுந்து படிகளில் வேகமாக ஏறி மேலே தளத்திற்கு வந்தனர். அங்கிருந்த பலரும் ‘என்ன..? என்ன..?" என வின வினர். “மட்டக்களப்பு தெரிகிறதாம் மட்டக்களப்பு'. என்று வளாக மாணவன் ஒருவன் கூறிக்கொண்டு மேலே ஏறினன் வேறு பலரும் அவர்களுடன் சேர்ந்துகொண்டனர்.
மாலை ஆறுமணியாகி இருந்தது. மழைக்கோலம் நீங்கவில்லை; இருட்டாக இருந்தது. மழை பெய்திருந்தது. கடலின் தூரத் தில் இரண்டு மின்சார வெளிச்சங்கள்தான் தெரிந்தன. அதுவும் ஒன்று அணைந்துவிடும்போல் மின்னிக்கொண்டிருந்தது.
"ஆக இரண்டு வெளிச்சந்தான?" அங்கு நின்றவர்கள் ஆச் சரியத்துடன் கேட்டுக்கொண்டிருந்தனர்.
*மழைக்கோலம் toப்பும் மந்தாரமுமாக இருப்பதால் அப்படி தெரிகிறது." யாரோ கூறினர்கள்.
அங்கு நின்ற நாகலிங்கம் இதை தம்பமுடியாமல் "பொத்து விலத்தான் பொடியள் பிழையாக சொல்லுகிருன்கள்" என்று கூறிக் கொண்டார்:

Page 58
00 லங்கா ரா63ர்
தேவன் ஒவ்வொருதளமாக தலையை நீட்டி மட்டக்களப்பு மட்டக்களப்பு என்று கத்திவிட்டிருந்தான். பலர் மேல்தளத்திற்கு வந்திருந்தனர். அங்கு மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களும் இருந் தனர். மட்டக்களப்புக்கு நேராகப் போக வசதி இல்லாததால் கப்பலில் யாழ்ப்பாணம் போய்க்கொண்டிருந்தனர்.
மட்டக்களப்புத்தான் கிழக்கு மாகாணத்தின் தலைநகர். இது தமிழருடைய பூமி. கப்பலின் ஒரு பக்கமாக பாதுகாப்புக்காகப் போடப்பட்டிருந்த கம்பியில் பிடித்துக்கொண்டு பலர் பார்த் துக்கொண்டு நின்றனர். அங்குமிங்குமாக வேறு வெளிச்சங்களும் தெரியத் தொடங்கின. அங்கு கைகளைக் காட்டி மகிழ்ச்சியோடு கதைத்துக்கொண்டிருந்தனர்.

லங்கா ராணி வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தாள். படங்குகளை (எடுத்துவிட்டிருந்தனர். மாலையாகிவிட்டதால் பலர் மேல் தளத்திற்குக் காற்றுவாங்க வந்திருந்தனர். அங்குமிங்குமாக நின்று கதையில் ஈடுபட்டன்ர். கப்பல் மட்டக்களப்பைத் தாண்டி விட்டதால் கதைக்கும் சத்தம் சற்று உரத்துக் கேட்ட்து. யாழ்ப் பாணம் மட்டும் கப்பல் தமிழ்ப் பிரதேசத்தை அண்டியே போய்க் கொண்டிருக்கும்.
ஒரு பெரியவருக்குத் தொய்வு ஏற்பட்டுச் சுவாசிக்க முடியா மல் வேதனைப்பட்டுக்கொண்டிருந்தார். அவரை டாக்டர் நற் குணம் சென்று பார்த்துவிட்டு தனது அறைக்குக் கையைப் பிடித்துக் கூட்டிக்கொண்டு போனர். சரவணன், குமார், டாக் டர் திருமுருகன் சமையலறைக் கதவுக்கு முன்னல் நின்று கதைத் துக்கொண்டிருந்தனர். நாகலிங்கமும் கொழும்பு வியாபாரியும் அங்கு நின்று மட்டக்களப்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர், 1ாணி அடிக்கடி வந்து சரவணனை அழைத்துப் பேசிவிட்டுப் போளுள், w
முத்தையா சமையலறையில் இரவு உணவைத் தயாரித்து முடித்துப் பரிமாறுவதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டு நின்றர். கப்பலின் மேல்பகுதியில் மின்சார வெளிச்சம் போடப் பட்டிருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் உள்பிரச்சினைகள் பற்றிக் காரசாரமான வாதங்கள் நடைபெற்றன. இதில் மட்டக் களப்புப் பிரச்சினை பற்றி ஒரு இளைஞன் கடுமையாகப் பலரை விமர்சித்துக்கொண்டிருந்தான். மட்டக்களப்பில் கூட்டணியின் பேரில் இராசதுரையையும் காசி ஆனந்தனையும் போட்டியிட வைத்தனர். இந்த வேலை இராசதுரையை வீழ்த்துவதற்கு அமிர்த லிங்கம் செய்தது என்பது அவனது வாதம். அங்கிருந்த வேருெரு வன் இராசதுரையின்மேல் குறைகூறிஞன்.
டாக்டர் திருமுருகனும் குமாரும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டுநின்றனர். டாக்டர் திருமுருகன் நாங்கள் எப்படி தனி

Page 59
109 லங்கா ராஜினி
நாடு கேட்க முடியும் என்று குமாரைக் கேட்டிருந்தார். அதற்குக் குமார் நாங்கள் ஒரு தேசிய இனம், எங்களின் அடிப்படை உரிமை களை வழங்காவிட்டால் எங்கள் சுயநிர்ணய உரிமையை நிலைநாட் டித் தனிநாடு கேட்கலாமென்றும் இதற்கு ஐக்கியநாடுகள் சபை யின் அடிப்படை உரிமைகளை மேற்கோள் காட்டியும் பேசிக் கொண்டுநின்றன். சரவணன் அந்த ஆங்கிலக் கலந்துரையாடலில் பங்குகொள்ள முடியாததனுல் நடந்து தளத்தின் முன் பகுதிக்கு வந்தான்.
லங்கா ராணியின் முன்பகுதியில் வெளிச்சம் குறைவாகவே இருந்தது. மட்டக்களப்பைப் பார்க்கவந்தவர்கள் சிறிது சிறிதாக உள்ளே போய்க்கொண்டிருந்தனர். குளிர்காற்று வீசத் தொடங்கி இருந்தது. வேட்டியுடன் இருந்த அந்த இளஞனைச்சுற்றி மற்றவர் கள் நின்றுகொண்டிருந்தனர். அங்கு சரவணன் வந்துசேர்ந் தான். அவன் அந்த வேட்டியுடன் இருந்த இளைஞனின் பக்கத்தில் போய் நின்றுகொண்டான் அங்கு நின்ற மற்ருெருவன் சரவண னைப் பார்த்து "உனக்கு ஒரு செய்தி தெரியுமா' என்று கேட் டான். அதற்கு சரவணன் “என்ன செய்தி” என்ருன்.
“இலங்கைப் படையினர் பிடித்து வெல்லக்கூடிய நாடு கச்சத் SourTub””*
'பிறகென்ன? இப்பிடியான உண்மைகளைத் தெரிந்து வைத் திருப்பவர்களை ஜனதிபதி ஆக்கவேண்டும். யார் சொன்னது??
‘இவன்! இவன்! இவன்" என்று பல குரல்கள். *இல்லை நான் சும்மா சொன்னனன்' என்று அந்த நீர் கொழும்பு இளைஞன் கூறி மழுப்பிக்கொண்டான். பின்பு அவனே வேட்டியுடன் இருந்த இளைஞனைப் பார்த்துக் கேட்டான்.
"அண்ண, சமதர்ம அரசு என்ருல் என்ன?" நீர்கொழும்பு இளைஞனுக்கு இதை விளங்க வைப்பது சற்றுக்
கடினமான வேலைதான். சிறிது நேரம் சிந்தித்துவிட்டு அந்த வேட்டியுடன் இருந்த இளைஞன் கூறத்தொடங்கினன்.

அருளர் 1.03
*சமுதாய ஆட்சிமுறையென்று உலகில் இரண்டு பிரதான கோட்பாடுகள் உண்டு. ஒன்று முதலாளித்துவம் மற்றது சமதர் மம். முதலாளித்துவத்தில் முதலாளி இருப்பான். எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு என்று கூறுவார்கள். யாருடைய வறுமைக் கும் யாரும் பொறுப்பல்ல. ஏழைகளும் தங்கள் சொந்த முயற். சியால் பணக்காரராக - முதலாளிகளாக வரலாம். இதற்குக் சுதந்திரம் உண்டு. ஆனல் வறியவர்கள் எல்லோரும் முதலாளிக ளாக வரமுடியாது. ஏன்? அப்படியான நிலையில் முதலாளிகள் கான் முதலாளிகளுக்கு கூலி வேலை செய்யவேண்டும். இப்படி 1ான நிலை ஒரு போதும் இருக்கமுடியாது. முதலாளி இருந்தால் கி.லியாள் இருப்பான். ஒரு முதலாளி எவ்வளவு பெரிய முதலா வியாக இருக்கிருனே அவ்வளவுக்கதிகமான கூலியாட்கள் அவனி டம் இருக்கவேண்டும். அதே அளவுக்கு அவனிடம் பணம், இயந் திரங்கள் இருக்கும். பணம் பெருகும். மேலும் இயந்திரங்களை, நிலத்தை, உற்பத்தி சாதனங்களை வாங்குவான். கூலியாள் கூடிக் கொண்டே போவார்கள்.
அதே நேரத்தில் கோழி முட்டை விற்றவன் கோடீசுவரன் ஆகிறன், கச்சாங்கொட்டை விற்றவன் ஜனதிபதியாக வந்திருக் கிருன், நீயும் வரலாம் என்று முதலாளி கூறுவான். நீயும் முத லாளியைப்போல் வரலாமென்று நினைத்து உழைப்பாய். முத லாளி மேலும் பணக்காரணுவான். அன்றைய செலவுக்கும் உன் இணுடைய ஊதியம் போதாமலிருக்கும். அதற்கு மேலாகப் பணமி ருந்தால் நீ வேலைக்குப் போகமாட்டாய் என்று கருதி கணக்குப் பார்த்துக் குறைத்துக் கொடுப்பான். உன்னல் பொறுக்க முடி யாது. உனக்குப் பேசுவதற்குச் சுதந்திரம் இருக்கும். நீ சத்தம் போடுவாய். அதை யாரும் காதில் போட்டுக்கொள்ள மாட் டார்கள். வேலை செய்ய மாட்டேன் என்று கூறுவாய். முதலாளி கொஞ்சம் காசைக் கூட்டித் தருவான், நீ அதை வாங்கிக்கொண்டு கடைக்கு ஒடுவாய். முதலாளி உனக்குக் காசைக் கூட்டித் தரு முன்பே விலையைக் கூட்டியிருப்பான். நீ மீண்டும் வந்து உழைப்பாய்.
உனக்கு முதுகு உளையும், மனம் உளையும், பைத்தியம் பிடிப் பது போல இருக்கும். சினிமாவுக்குப் போவாய். அங்கு முதலாளி

Page 60
104 லங்கா ராணி
கொடை வள்ளலாக வந்து தாண்டவம் போடுவான். பாட்டுப் படிக்கும். கலகலப்பாக இருக்கும். கதாநாயகன் கதாநாயகியின் இடுப்பில் பிடித்துக் கொள்வான். கதாநாயகி காலை உயர்த்தி உயர்த்தி சுழன்று சுழன்று ஆடுவாள். மினுமினுப்பாக இருக்கும். எல்லாம் சரிவந்தது போலத் தோன்றும். ஆனல் நீ இருட்டில் இருப்பாய். முதலாளியைக் கதாநாயகன் உதைப்பான். உனக்கு முதுகு சுகமாக இருப்பது போல இருக்கும். நீ கைதட்டுவாய் வெளியில் வருவாய் அதே பிரச்சினைகள். நீ தொடர்ந்து உழைப்பாய்,
உனக்கு முதுகு உளையும், பசிக்கும், மனைவியை பிள்ளைகளை நாளையை நினைக்கப் பயமாக இருக்கும். உனக்கு முதலாளியின் மீது ஆத்திரம் வரும். அவனேடு சண்டைக்குப் போவாய். அவன் ஆட்களை வைத்துப்போட்டு மாறு வேடத்தில் கச்சாங்கொட்டை விற்பவன்போல வந்து உன்னைக் கட்டிப்பிடித்து அழுவான். சாத் திரம் பார்ப்பாய் எல்லாம் சரியாகிவிடும் என்று சாத்திரக்காரன் கூறுவான். நீ லொத்தர் சீட்டு எடுப்பாய். பத்திரிகைகளை எடுத்து இலக்கத்தைப் பார்ப்பாய். மாறி மாறிப் பார்ப்பாய். அதில் இருப்பது இதில் இருக்காது. இதில் இருப்பது அதில் இருக்காது உனது பையைப் பார்ப்பாய். அதிலும் எதுவும் இருக்காது தொடர்ந்து உழைப்பாய்
உனக்கு கோபம் வரும். அவன் இவன் என்று கண்டதிலும் ஏவிவிடுவான். எதுவும் சரிவராது. கோவிலுக்குப் போய் ஆண்ட வனே சோறுபோடு என்று அழுவாய். முதலாளி ஆண்டவனுக்குப் பக்கத்தில் இருப்பான். ‘என்னை எந்த ஆபத்தும் வராமல் பார்த் துக்கொள்' என்று அவன் ஆண்டவனைப் பார்த்துக் கேட்பான். நீ வெளியே வருவாய், உனக்கு முதலாளிக்கு உழைப்பதைத் தவிர வேறு வழி இருக்காது. உனக்குக் கோபம் வரும். நீ சண்டை போடுவதக்கு முதலாளியிடம் போவாய். அவனுடைய தலைக்கு மேல் அந்த ஆண்டவனுடைய படம் தொங்கும். உனக்கு அவனை நெருங்கப் பயமாக இருக்கும். உனக்கு வேறு வழி இருக்காது. கோழி முட்டை விற்றவன் கோடீசுவரனுக வந்திருக்கிருன். கச் சாங்கொட்டை விற்றவன் ஜனதிபதியாக வந்திருக்கிருன் என்று நினைத்துக் கொண்டு உழைப்பாய்.

அருளர் 0.
உனக்கு முதுகு உளையும், அரசியல்வாதிகள் வருவார்கள். *னல் லாம் சரிசெய்து விடுவோம்." என்று தம்பட்டம் அடிப்பார்கள் அவர்களுக்குப் பணம் கொடுத்து முதலாளியே அனுப்பிவிட்டி ருப்பான். அவர்களால் எதுவும் சாதிக்க முடியாது. உனக்கும் சுதந்திரம் இருக்கும். முதலாளிக்கும் சுதந்திரம் இருக்கும். முதலாளி வளர்ந்து கொண்டே போவான். நீ உழைத்துக் கொண்டே இருப்பாய். எல்லோருக்கும் சுதந் தி ரம் உண்டு என்று முதலாளியின் ஆட்கள் பத்திரிகைகளில் கொட்டை எழுத்தில் போடுவார்கள். *நீ தான் ராசா ?" என்று கூறுவார்கள். உனக்கு வேறு வழி இராது. சாராயம் குடிப்பாய். நான் தான் ராசா என்று சத்தம் போடுவாய். வீட்டுக்குப் போ வாய். மனைவி வெறும் சட்டியைக் காட்டுவாள்; உனக்கு ஆத் திரம் வரும். மனைவியோடு சண்டைக்குப் போவாய். அவளை அடிப்பாய். பக்கத்து வீட்டுக்காரனுேடு சண்டைக்குப் போவாய். கத்தியால் குத்துவாய். போலீஸ் வரும். கோர்ட்டில் நிறுத்து வார்கள். அங்கு வழக்கறிஞர்கள் ஆரவாரமாகக் கைகளை வீசி உனக்குப் பரிந்து பேசுவார்கள். நீ மறியலுக்குப் போகலாம் அல் லது விடுதலை செய்யப்படலாம். ஆனல் நீ உள்ளதையும் கொடுத்துவிட்டு மீண்டும் உழைப்பாய்.
உனக்கு இருப்பதற்கு வீடு இருக்காது. உனக்கு உடுப்பதற்கு உடுப்பு இருக்காது. வெறும் மேலுடன் போவாய். முதலாளியும் தனது உடுப்பைக் கழற்றிப் போட்டு வெறும் மேலுடன் வரு வான். உன்ஞல் அவனை எதுவும் செய்ய முடியாது. போலீஸ் இருக்கும். உனக்கு வேறு வழி இருக்காது. நீ தொடர்ந்து உழைப்பாய்.
உனக்கு வேலை செய்யப் பிடிக்காது. வேறு பலர் வேலையில் லாமல் தெருவில் நிற்பார்கள். பெரிய முதலாளி சிறிய முதலா ளிகளை விலைக்கு வாங்கி விட்டு அவர்களையும் தெருவில் விட்டி ருப்பான். அவர்களுடைய நிலை உன்னிலும் பார்க்க பல மடங்கு மோசமானதாயிருக்கும். முதலாளி இவர்களை வேண்டுமென்றே விட்டுவைத்திருப்பான். உன்வேலைக்கு அவர்கள் வந்துவிடுவார்கள். அவர்கள் நிலை உனக்கு வந்துவிடுமென்று நீ உழைப்பாய். உனது பொறுப்புக்கள் எதையும் உன்னல் நிறைவேற்ற முடியாது. அவை எல்லாம். உன்னை அமர்ந்தி நடுரோட்டில் விழுத்தும்

Page 61
106 லங்கா ராணி
உனக்கு வேறுவழி இருக்காது. நீ எழுந்து போய் தொடர்ந்து 2-சிசிப்பாய். உழைத்து உழைத்துச் செத்துப்போவாய். முதலாளி கொழுந்துக்கொண்டே போவான். இதுதான் முதலாளித்துவ *முதாயம் விளங்குகிறதா?" என்று கூறி நிறுத்தினன்.
அந்தப் பேச்சில் லயித்துப்போயிருந்த இளைஞர்கள் எல்லாம் விளங்குகிறது என்பதற்கு அடையாளமாகத் தலையை அசைத்த னர். மீண்டும் தொடர்ந்தான்.
ஆகவே எல்லோரும் முதலாளிகளாக வரலாம். பணக்காரணுக வரலாம் என்று இயங்கிக்கொண்டிருக்கும் இந்த முதலாளித்துவ சமுதாயம் ஒரு ஏமாற்றுவித்தை. இதில் நம்பிக்கை வைக்கக் கூடாது. முதலாளி இருக்கும்வரை தொழிலாளி இருந்து கொண்டேஇருப்பான். வறுமை இருக்கும். எங்கும் சுயநலம் தாண்டவமாடும். சமுதாயம் பலவீனமானதாக இருக்கும். எவ் வித முன்னேற்றமும் இருக்காது, சமுதாய முன்னேற்றத்திற்கு ஏற்படுத்தப்படும் சகல திட்டங்களையும் தனக்குச் சாதகமாக்கி முதலாளி பாழடித்து விடுவான்.
வங்கிகள் உதவிசெய்யும் என்று கூறுவார்கள். உனக்கு நூறு, இருநூறு என்று தருவார்கள். அவன் இலட்சம், கோடி என்று வாங்கி, தனது சொத்தைப் பெருக்குவான். உனது நூறு, இரு நூறை எடுத்து அவன் தனது இலட்சம், கோடியைக் கட்டி முடித்துவிடுவான். நீயோ அந்த நூறு, இருநூறையும் திருப்பிக் கொடுக்க முடியாமல் திணறுவாய். நடுத்தெருவில் நிற்பாய்.
இவனை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது. ஒரு துரும்பு இடம் கொடுத்தாலும் முழு இரத்தத்தையும் உறிஞ்சி எடுத்துவிடுவான். கள்ளக் கணக்கை எழுதிவைத்துக் காட்டுவான். எந்தச் சட்டம் போட்டும் இவனை நல்லவனுக்க முடியாது. இவ ணேப் பிடிக்கப் போகும் பொலிஸாருக்கு, சாராயத்தை, பணத்தை கொடுத்து திருப்பியனுப்பிவிடுவான். இவனை விட்டுவைக்கவே
கூடாது.
பதுக்குவான்; கடத்துவான்; கொள்ளையடிப்பான்; சகலத்தை
யும் வழித்தெடுத்துவிடுவான். எல்லாவற்றையும் எடுத்துவைத் துக்கொண்டு அவற்றின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு சும்மா

அருளர் O
இருப்பான். சமுதாயம் மூச்சுவிட முடியாமல் திணறிக்கொண்டி ருக்கும். நீ வறுமையில் வாடுவதுதான் அவனுக்கு நல்லது. அவன் நினைத்ததை இலகுவில் சாதித்துக்கொள்வான்.
நீ தமிழ், தமிழ் என்று அழுவாய். அவனும் தமிழ், தமிழ் என்று கத்திக்கொண்டு முன்னுக்கு நிற்பான். அதே நேரத்தில் தமிழர்கள் இவனுடைய செய்கையால் வறுமையில்வாடி அழுகிக் கொண்டிருப்பார்கள். அதற்கு யார் காரணம் என்று இவனிடம் போய்க் கேட்டால் 'கடவுள்' என்று வாய் கூசாமல் கூறிவிட் டுக் காலை ஆட்டிக்கொண்டிருப்பான்.
இவன் படு கள்ளன். இவனை விடக்கூடாது. இவனது இந்தச் சுரண்டும் சுதந்திரத்தை அடியோடு அழித்து விடவேண்டும். இவன் எதையும் கெடுத்துவிடுவான்.
இவனுக்கு ஆபத்து என்றதும் தன்னைப்போன்ற மற்றவர் களுடன் சேர்ந்து கொள்வான். கண்ட மினுக்கங்களையும் தெரு வில் போட்டு மலிவாக விற்பான். ஆபாசங்களை அச்சடித்து வெளியிடுவான்.
பழசுகளைப் போட்டு மலிவு விற்பனை என்று கூறுவான். கச் சேரி வைப்பான். நாட்டியம் வைத்து ஆட்டுவான். இவனுடைய பத்திரிகைகளில் கடவுளப்பற்றிய கட்டுரைகள் அடுத்தடுத்து வரும். பூச்சாண்டி காட்டுவான். அடியாட்களை வைத்து மிரட்டு வான். உனது பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதுபோல கூட்டங் கள் கூட்டித் தீர்மானங்கள் போட்டுக் கட்டுரைகளை எழுதி அச் சடித்துவிடுவான். இவன் கொடை வள்ளலாகி காசோலை கொடுப்பதைப் படம் பிடித்துப் போடுவிப்பான். எல்லாம் பொய். இவன் படுகள்ளன். இவனை வைக்கப்படாது. தூக்கி யெறிந்துவிட வேண்டும். S.
நடுத்தெருவில் நின்று உன்னை மறித்துக்கொண்டு தனது கைகளை உயர்த்திக் கொள்வான். சமாதானம் என்று கூறுவான். அதே நேரத்தில் உன்னை அழிப்பதறகுப் பயங்கரமாகச் செயல் படுவான். நீ விழிப்பாக இருக்கவேண்டும். இவன் இருக்கும்வரை உன்னுடைய மக்களை நல்ல நிலைக்குக் கொண்டு வர முடியாது. தலை தூக்க விடமாட்டான்.

Page 62
08 லங்கா ராணி
எந்தத் தியாக மனப்பான்மையுடைய அரசியல் தலைவனை யும் பணத்தைக் கொடுத்து உருத்தெரியாமல் சீரழித்து விடு வான். திசை திருப்பி விடுவான். இவனுடைய சுதந்திரத்தைப் பறித்துவிட வேண்டும். இவனை வைக்கப்படாது.
முதலாளி இருக்கும்வரை கூலியாள் இருப்பான். வறுமை இருக்கும். ஆகவே எல்லோரும் முதலாளிகளாக வரலாம் என்று இவன் போதிக்கும் இந்தச் சுதந்திரத்தைக் குப்பையில் போடு. அது இருக்க முடியாது. முதலாளி இருக்கும்வரை கூலியாள் இருப்பான். இதிலிருந்து மீழ்வதற்கு ஒரே வழி முதலாளியை ஒரு தட்டுத் தட்டி அவன் இல்லாத ஒரு சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவதுதான்.
செல்வத்தை உண்டுபண்ணும் சகல உற்பத்திச் சாதனங்களை யும் உழைப்பவர்களுக்குச் சொந்தமாக்கு. உற்பத்தி சாதனங் கள் எல்லாம் பொதுவுடைமையாகி எல்லோருக்கும் சொந்த மானதாயிருக்கும். அரசு இருக்கும். எல்லோரும் பொதுமை யான கட்டுப்பாடுகளை வகுத்துக்கொண்டு முதலாளியின் வேலை யையும் பார்த்துக்கொண்டு உழைப்பார்கள். செல்வம் பெருகும். எங்கும் போகாது. உழைப்பவனை வந்தடையும், எல்லேரும் உழைப்பார்கள். மனஉளைச்சல் இராது, முதுகு உழைச்சல் இராது, எல்லோருக்கும் வீடு இருக்கும். வேலை இருக்கும். பிள் ளைகளைப் பற்றிய கவலை இராது. அவர்களுடைய எதிர்காலத் திற்கு நல்ல திட்டங்கள் இருக்கும். அவர்களுக்குக் கல்வி வசதி யும் நல்ல உணவும் இருக்கும். நீ மனைவியுடன் கட்டிலில் இருந்து ஆறுதலாய்க் கதைத்துக் கொண்டிருப்பாய். உழைப்பவனுக்குத் தான் முதலிடம். அவனுக்குத்தான் அரசு. எல்லோரும் உழைப் பார்கள். யாரும் யாருடைய தோளிலும் உட்கார்ந்து கொண் டிருக்க மாட்டார்கள். செல்வம் பெருகும். சமுதாயம் பலமான தாக இருக்கும். எல்லோரும் சகோதரர் போன்ற உணர்ச்சி உண்டாகும். எங்கும் மகிழ்ச்சி நிலவும்.
உழைப்பவனுக்குத்தான் முதலிடம்.
எல்லோரும் உழைப்பார்கள், பொறுப்பானவர்கள் இருந்து சமுதாயத்தின் நலனுக்கு அயராது பாடுபட்டு முன்னின்று

அருளர் 109
உழைப்பார்கள். "அறிஞர்கள் இருப்பார்கள். விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், கலைஞர் இருப்பார்கள். திறமையான நிர்வாகி கள் இருப்பார்கள். திட்ட வல்லுநர்கள், பொறியியல் வல்லுநர் கள் இருப்பார்கள். வெவ்வேறு அமைப்புகள் இருக்கும். நிறுவ னங்கள் இருக்கும். பேரவைகள் இருக்கும். இவர்களெல்லாம் பொது நலனை முன்வைத்துக் கடினமாக உழைப்பார்கள். இவர் கட்குச் சமுதாயம் அரசு சகல வசதிகளையும் செய்து கொடுத்தி ருக்கும். எல்லோரும் பலனடைவார்கள். மக்கள் " முன்னேறிச் செல்வார்கள். சமுதாயத்தின் பெறு பேறுகளைக் காத்திட வீரர் கள் இருப்பார்கள்.
அரசு நிர்வாகத்தில் முழு மாற்றம் இருக்கும். இப்பொழுது உள்ளதெல்லாம் வெறும் பற்ருக்குறை நிர்வாகம்தான். நீ இவர் கள் ஏதாவது தருவார்கள் என்று இவர்கள் முன்பு கைகட்டி நிற்க வேண்டிய நிலை, உனக்குத் தருவதற்கு இவர்களிடம் அதி கம் ஒன்றுமில்லை. முதலாளியிடம்தான் உண்டு. அவன் யாருக்கும் கொடுக்கமாட்டான். இதெல்லாம் அற்றுப் போய்ச் செலவ நிலையை ஏற்படுத்தி நடத்தும் நிர்வாகம் உருவாகும். அவர்கள் உனக்கு இவையெல்லாம் இருக்கவேண்டுமென்று பொறுப்பேற்றுச் செயற்படுவார்கள். உனக்குத் தேவையானவை உனது உரிமை யாக இருக்கும். அவற்றை நீ தேடி ஓடாமலேயே உன்னை வந் தடையும். உனது கடமையை மாத்திரம் செய்தால் போதும்,
அனேகமாக இன்றுள்ள இந்த அரசாங்க உத்தியோகங்க3 யெல்லாம் பெண்களே பார்த்துக்கொள்வார்கள். ஆண்கள் தொழிற்சாலைகளைக் கட்டியெழுப்புவார்கள். கப்பல்களையும் விம னங்களையும் கட்டுவார்கள். இயந்திரங்களைக் கட்டுவார்கள், க. டிடங்களைக் கட்டி எழுப்புவார்கள். பாரிய திட்டங்களைச் செயற் படுத்துவார்கள். புதிய தமிழனுடைய சமுதாயம் எழுந்து முன் னேறிச் செல்லும். எங்கும் மகிழ்ச்சி நிலவும். எங்கள் எதிரிகள் எங்களைக்கண்டு நடுங்குவார்கள். இதுதான் சமதர்ம சமுதாயம். இப்படியான சமுதாயமாகத்தான் ஈழம் மலரவேண்டும். இது சுலபமான காரியமல்ல. இதை வழிநடத்துவதற்குப் பலமான தமிழனுடைய அரசைக் கட்டி எழுப்பவேண்டும். இதுதான் வேண்டுமென்ற மக்களுடைய விழிப்புணர்ச்சி வேண்டும். இதற்கு எதிராக உள்ளிருந்து பல சூழ்ச்சிகளை முதலாளியிடமிருந்தும்

Page 63
10 லங்காராணி
உளுத்துப்போன சுயநலவாதிகளிடமிருந்தும் எதிர்நோக்குவோம். வெளியிலிருந்து அகில உலகக் கொள்ளைக்காரர்களிடமிருந்தும் சுரண்டல்வாதிகளிடமிருந்தும் எதிர்நோக்குவோம். புதிய தமிழ னுடைய சமுதாயம் ஏற்பட்டால் இவர்களால் இங்கு வாலாட்ட முடியாது என்பது இவர்களுக்குத் தெரியும். இவர்களுடைய சூழ்ச்சிகளை விழிப்புடனிருந்து முறியடித்திடவேண்டும்.
நாங்கள் பலகாலம் தனித்துத் தனித்து வாழ்ந்துவந்தபடியால் இப்படியான ஒற்றுமையைக்கட்டியெழுப்புவது முதலில் கடின மானதாயிருக்கும். ஆனல் இதன் வெற்றி கண்ணில் தெரியத் தொடங்கியதும் எல்லாம் சரியாகப்போய்விடும்; நம்பிக்கை ஏற்
Oth. s
இதையெல்லாம் நான் உயர்த்திச் சொல்கிறேன் என்று நினைக்கவேண்டாம். உலகில் பல நாடுகளில் இப்படியான சமுதா யங்கள் மலர்ந்து யாவரும் வியக்கும்வண்ணம் முன்னேறிச் செல் கின்றன. இந்த சமதர்ம நாடுகளின் சாதனைகளைக்கண்டு முதலா ளித்துவ நாடுகள் நடுங்கத் தொடங்கியுள்ளன. இந்த முதலா ளித்துவ நாடுகள் பல காலமாக எங்களைக் காலணி நாடுகளாகவும் பின்பு வர்த்தகம் என்ற போர்வையிலும் சுரண்டிக் கொள்ளை படித்தன. இப்பொழுது இந்தச் சமதர்ம நாடுகளின் வளர்ச்சியைக் கண்டு தங்களுக்கு ஆபத்து வரப்போகிறதென்று பயந்து எங்களே வந்து கட்டிப்பிடித்து முதலைக்கண்ணீர் விடுகிறர்கள். சிறு உதவிகளையும் அவர்களுடைய பொருட்களை வாங்குவதற்கு கடன்களையும் தந்துவிட்டு ‘வெட்டுகிருேம் பிடுங்குகிருேம்" என்று சத்தம் போட்டுத் திரிகிறர்கள். நாம் ஏமாறக் கூடாது. மீண்டும் புதியரகமான காலணிகளாகத்தான் மாறுவோம்.
விழிப்புடனும் வீரத்துடனும் செயல்பட்டு உண்மையான சமதர்ம ஈழத்தைக் கட்டியெழுப்பவேண்டும். இதற்கு எங்களுக்கு கைகொடுத்து உதவ உலகிலுள்ள உண்மையான சமதர்ம நாடு கள் காத்திருக்கின்றன. தங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர் ந்துகொள்வார்கள். நாங்கள் உழைப்போம். புதிய தமிழனுடைய சமுதாயம் இந்து சமுத்திரத்தில் மலர்ந்து வீறுநடைபோடும்.”

அருளர்
வேட்டியுடனிருந்த இளைஞன் நிறுத்திவிட்டுச் சகலரின் முகத் தையும் பார்த்தான் இதுவரைக்கும் மெளனமாக இருந்த இளை ஞன் ஒருவன் கேள்வியொன்று கேட்டான். "இந்த சிறிமா ஜே. ஆர். எல்லாம் சமதர்ம அரசு" என்றுதானே சொல்ருங்க, அதென்ன சமதர்ம அரசு? இவனுடைய பெயர் வெள்ளைச்சாமி
'சமதர்ம அரசில் முதலாளிகளுக்கு இடமே இல்லை. முத லாளி இருக்கும்வரை சமதர்ம அரசு இருக்கவே இருக்காது. இவர் . கள் சமதர்மத்துக்கு முன்னுக்கும் பின்னுக்குமாக 6 ஜனநாயகத் தைப் போட்டு மழுப்பிச் சுரண்டல் சுதந்திரத்தை வளர்ப்பவர் களாக இருக்கிருர்கள். ஒரு சில சலுகைகளைத் தொழிலாளிக்குக் கொடுத்துவிட்டு உண்மையான சமதர்ம ஆட்சி ஏற்படுவதைத் தடுப்பார்கள். முதலாளி வளர்ந்துகொண்டே போவான். முதலா ளிக்கு வேலைசெய்து சுரண்டப்படுவதிலும் பார்க்கத் தானும் தன் பாடுமாக வறுமையில் வாழ்வதே மேல் என்று கிடப்பவனை யும் இழுத்து வதைக்கலாமென்று நினைக்கிருர்கள். பொருட்களின் விலையைக் கூட்டுவதால் அவனுடைய வறுமையை மேலும் கூட்டி அவனுல் தொடர்ந்து வாழமுடியாத நிலையை ஏற்படுத்தி அவ னைத் தெருவுக்கு இழுத்து முதலாளியின் பிடியில் சிக்கவைத்து அழிக்கலாம் என்று நினைக்கிருர்கள். ஆனல் அவனை ஏமாற்றுவது அவ்வளவு சுலபமல்ல. வறுமையிலும் அவனுக்குப் பெருமையுண்டு. "கடினமாக உழையுங்கள் கடினமாக உழையுங்கள்" என்று எவ்வ ளவு கத்தினுலும் முதலாளியிடம் போய் கடினமாக உழைப்பதி லும் "மண்ணுேடு மண்ணுகக் கிடந்து வறுமையில் வாடுவதே மேல்" என்று சும்மா கிடப்பான். அவன் உழைக்க முன்வரமாட் டான். அவனிடம் நாய் இருக்கும். கூட்டிக்கொண்டு வேட்டைக் குப்போய் விடுவான். எந்த வித்தைக்காரனுலும் நாட்டை முன் னேற்ற முடியாது. உண்மையான சமதர்ம சமுதாயத்தில் முத லாளி இல்லாத நிலையில் தான் அவன் முன்வந்து தன்னை மறந்து உழைப்பான். அவன் உழைப்பால் அவனும் முன்னேறுவான் சமு தாயமும் முன்னேறும்.
அந்தக் கேள்விக்கான விடை முடிந்ததும் அடுத்த கேள்வியை எதிர்பார்த்தான் வேட்டியுடன் இருந்த அந்த இளைஞன். வளாக மாணவன் ஒரு கேள்வி கேட்டான்.

Page 64
112 லங்கா ராணி
அங்கு தேர்தல் இருக்குமா?
"இருக்கும். யார் பெரிய வித்தைக்காரன் என்பதற்காக இருக்காது' அங்கு திட்டங்கள் இருக்கும். சமுதாயத்திற்கென கோட்பாடுகள் இருக்கும். இலட்சியம் இருக்கும். தொடர்ச்சி யான முன்னேற்றம் இருக்கும். இந்த நிலையில் மக்களின் பிரச்சினை களைப் புரிந்து அவர்களை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்வதற் கான நடவடிக்கைகளை யார் திறமையாகப் புரிந்து செயற்படு கிருர்கள் என்று நீ நினைக்கிருயோ அவர்களைத் தெரிவுசெய் வாய். கருத்து வேறுபாடுகளும் இருக்கும். அவை எங்கள் இலட்சி யங்களை எவ்வாறு நாங்கள் சுலபமாக அடையலாமென்பது பற்றியதாகவே இருக்கும்”, -
அடுத்தும் அவன் ஒரு கேள்வி கேட்டான். “இந்த முதலாளி களும் தமிழர்கள்தானே? அவர்கள் தப்புவதற்கு வழியில்லையா?"
“இருக்கிறது ஒரே ஒரு வழி. தங்களைத் துறந்து எங்களுடன் சேர்ந்துகொள்வதுதான் அந்த ஒரே ஒரு வழி. இதற்காக நீ அவர் களிடம் போகத் தேவையில்லை. அவர்கள், நானும் உன்னேடு தான் என்று கூறிக்கொண்டு எல்லாவற்றையும் குழப்புவார்கள் நீ கவனமாயிருக்கவேண்டும்."
மற்ற மாணவன் ஒரு கேள்வி கேட்டான். “சமதர்ம அரசில் கோவில்களுக்கு என்ன நடக்கும்?" அந்தக் கேள்வியால் சற்று அதிருப்தியடைந்தவன்போல வேட்டியுடனிருந்த இளைஞன் கூறி னுன்
“கோவில்களுக்கு என்ன நடக்கும்? ஒன்றும் நடக்காது அதே இடத்தில் இருக்கும். நீ தாராளமாகக் கோவிலுக்குப் போகலாம். அங்கு எல்லாம் அழகாக வைக்கப்பட்டிருக்கும். சுற்றிலும் பார்ப் பாய். ஆண்டவன் இருப்பான். ஆனல் அவனுக்குப் பக்கத்தில் முதலாளி இருக்கமாட்டான். ஆண்டவன் உன்னைப் பார்ப்பான். நீ ஆண்டவனே சோறுபோடு என்று அழமாட்டாய். ஆண்டவன். உன்னைப்பார்த்துப் பெருமைப்படுவான்’ இவ்வாறு அந்த இளை ஞன் கூறிமுடிக்கவே வெள்ளைச்சாமி எதையோ கேட்கவேண்டு

«Y(1567 if 1
போல முற்பட்டான். அவன் எதைக் கேட்கவிரும்புகிருன். என் பதை உணர்ந்து கொண்டவன்போல வேட்டியுடனிருந்த இனே குன் தொடர்ந்தான். “எனினும் புதிய சமுதாயம் சமத்துவத் உடையதாக இருக்குமாகையால், கடவுள் என்ற இந்த அபூர்வ சக்தியைச் சுற்றி ஏற்படுத்தப்பட்டுள்ள சமுதாயக் கட்டுப்பாடு களும் ஏற்றத் தாழ்வுகளும் அவற்றை நிலைநிறுத்துவதற்குக் கட் டப்பட்டுள்ளன. சமயம் என்கிற பாழடைந்த கோட்டையும், கோபுரமும் இடிந்து கொட்டுண்டு நிலத்தோடு கிடக்கும். உய பத்தில் இருந்தவர்கள் அங்கு கிடக்கும் கற்கும்பலில் ஒளிந்திரும் பார்கள். அவர்களுடைய முதுகு வெளியே தெரியும். நீ அவர் களை அடிக்கப்படாது. காலத்தின் சுழிகளால் அள்ளப்பட்டு அந்த நிலைகளுக்குச் சென்றவர்கள், அவர்களேத் தட்டியெழுப்பி அரவ ணைத்துக்கொள். நிச்சயம் உன்னை விளங்கிக் கொள்வார்கள். நீ புதிய தமிழன். நீ கட்டியெழுப்பும் புதிய கோட்டையில் அவர் களுக்கு இடம்கொடு. ஆயினும் சிலர் அந்தக் கற்கும்பலேக் கோட்டையென்றும் அதற்கொன்றும் ஏற்படவில்லையென்றும், கூற முற்படுவார்கள். அவர்களையும் நீ அடிக்கப்படாது. அவர் கள் பைத்தியக்காரர்கள்."
బ్దిల్షన్లో சுேட்டான், “சமயத்துறவிகள் நன்மை செய் திருக்கிருர்கள்??
"ஆம், செய்துகொண்டிருக்கிருர்கள். ஒரு காலத்தில் அன் னியன் இருந்தான். அவர்களால் மாத்திரம்தான் செய்ய முடித் தது. ஆளுல் புதிய சமுதாயத்தில் கல்வியும், பொருளாதார அபிவிருத்தியும் உலகைத் துறந்து மோட்சம் செல்லத் தயாரா கிக் கொண்டிருப்பவர்களால் செய்யப்படும் புண்ணிய கருமங்க ளாக இருக்காது. அவை உனது உரிமைகள். இவற்றை யாரும் உனக்குத் தருமம் செய்யத் தேவையில்லை. நன்மைகள் செய்தி ருக்கிருர்கள். நான் அதை இல்லையென்று சொல்லவில்லை. அவற் றிற்கெல்லாம் நாங்கள் எங்கள் இரு கைகளையும் உயர்த்திக் கும்பிட்டு நன்றி கூறிவிடவேண்டிய காலம் வந்துவிட்டது. அவர்கள் மோட்சம் போக விரும்பினுல் போகலாம். யாரும் தடை செய்யப் போவதில்லை.

Page 65
14 லங்கா ராணி
எனினும் நீ எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தங்களுக்கு என்ன நடந்துவிடும் என்ற ஏக்கம் அவர்களைப் பிடித்து ஆட்டும். இதஞல் அவர்கள் பழமை நிலைகளை அப்படியே வைத்துக்கொள் வோமென்று அவற்றின் போலிப் போக்குகளை மூடி மறைக்க கதைகள் சொல்வார்கள். இவர்களைப் போன்றே வேறு சிலரும் நடந்துகொள்வார்கள். வேறு வழியில்லாமல் முதலாளியின் கோழி முட்டைக் கதையை நம்பித் தாங்களும் சுரண்டல் பட் டறை போட்டுக்கொண்டு தங்களையும் அழித்து மற்றவர்களையும் அழித்துக்கொண்டிருப்பவர்கள். தனி மனுதனுக்கு என்ன மிச்சம் என்று கேட்பார்கள். எல்லாம் தனிமனிதனுடைய நன்மைக்குத் தான். தமிழனுடைய நன்மைக்குத்தான். தனி மனிதனுடைய உடைமைகளை எடுத்துப் பொதுமையாக்குவது சமதர்மமல்ல. தனிமனிதனை அழிக்கும் சுரண்டும் உடைமைகளைப் பொதுமை யாக்கி, எல்லோருடைய நன்மைகாகவும் செயல் படவைத்து மேலும் வளர்வதுதான் சமதர்மம்.
வளாக மாணவன் மீண்டும் ஒரு கேள்வி கேட்டான். அது ஒரு நீண்ட கேள்வியாகவுமிருந்தது.
“ஒரு மீனவன் ஒரு கட்டுமரத்தை வைத்துக்கொண்டு, சில வலைகளையும் வைத்துக்கொண்டு கடலுக்குப்போய் மீன் பிடித்துக் கொண்டு வருகிருன். அவனுடைய வாழ்க்கை ஒடுகிறது. அதே போல் ஒரு விவசாயி அரை ஏக்கர் நிலத்தை வைத்துக்கொண்டு நீரிறைக்கும் இயந்திரத்தை வைத்துக்கொண்டு தோட்டம் செய் கிருன். அவனுடைய வாழ்க்கை ஒடிக்கொண்டிருக்கிறது. மீன் பிடிபட்டதும் குதூகலிக்கிறன். பயிர் விளைந்ததும் ஆனந்தம் அடைகிருன், ஏன் நாங்கள் அவர்களைக் குழப்ப வேண்டும்? அவர் கள் தங்கள் சுதந்திரத்தைப் பாதுகாக்கவே விரும்புகிருர்கள்."
இளைஞன் ወወ மொழி கூறினன்.
“நாங்கள் ஏன் இந்தக் குறுகிய வாழ்க்கை முறைகளை மாற்ற வேண்டும்? எங்களைக் குறுக வைத்து எறும்பாக்கிக்கொண் டிருக்கும் இந்தப்போக்கை ஏன் கைவிட வேண்டும்? பல கார ணங்கள் இருக்கின்றன. எமது சமுதாயம் இயல்பற்றுப்போய் அழிந்துகொண்டிருக்கிறது. இந்தப்போக்கை நிறுத்த வேண்டும்.

அருளர் I I 5
எங்களுடைய பொருளாதார நடவடிக்கைகள் தனி மனித அள விலேயே குறுகிப்போய்க் கிடக்கிறது. நவீன விஞ்ஞானத்தைப் புகுத்த முடிவதில்லை. இந்த நீரிறைக்கும் இயந்திரமெல்லாம் பல வருடங்களுக்கு முன்பே நவீன விஞ்ஞானத்தால் கழித்து விடப்பட்டவை. இந்த நாட்களில் ஆயிரம் ஏக்கர் நிலத்தை இரண்டு பேர் சாகுபடி செய்துவிடுகிறர்கள். இங்கு இரண்டு ஏக்கர் நிலத்தைச் செய்வதற்கு ஆயிரம் பேரைக் கூலிகளாகப் பிடித்து முறிக்க வேண்டியிருக்கிறது. ஒரு கிராமம் முழுவதும் பிடிக்கும் மீனை ஒருவனே பிடித்து விடுகிறன். அதுதான் நவீன விஞ்ஞானம்.?
"மீதி ஆட்கள் எங்கு போவது?" வளாக மாணவன் G35 -nrir.
*அதற்குத்தான் திட்டமிட்ட பொருளாதாரம் வேண்டும். உண்மையான சமதர்ம நாடுகளில் நவீன விஞ்ஞானத்தை இல குவில் புகுத்தி விடுகிருரிகள். அங்கு யாரும் தெருவில் நிற்பதாக இல்லை. அங்குயாரும் கொட்டில்களில் கிடந்து வறுமையில் வாடு வதாக இல்லை. அவர்களுடைய கப்பல்கள் ஆயிரமாயிரம் மைல்கள் தாண்டிப் போய் மீனைப் பிடித்துக்கொண்டு வருகின்றன. நீ ஒரு கட்டுமரத்தை வைத்துக்கொண்டு ஆட்டிக்கொண்டு நிற்கிருய். அதை வைத்துக்கொள்ள சுதத்திரம் வேண்டுமென்கிருய், அரை ஏக்கர் நிலத்தையே பயிர் செய்யமுடியாமல் திணறுகிருய். உனக் குக் கூலியாட்கள் தேவையாக இருக்கிறது. அதே நேரத்தில் உனது நிலம் பறிபோகிறது. யாரோ வந்து மீனைப் பிடிக்கிருர் கள் என்று உன் தலையில் அடித்துக்கொள்கிருய். "உன்னை மாத்திர மல்லாமல் உன்னைப்போல் எல்லோரையும் அதே வறுமையில் வைத்துக்கொண்டிருக்கும் இந்தச்சுதந்திரம் தேவைதான?
இந்தச் சுதந்திரத்தால் யார் நன்மை அடைகிருர்கள்? ஒரு சிலர் தான். சுரண்டத் தெரிந்தவர்கள் தான் நன்மையடைகிருரர் கள். கொள்ளையடிப்பவர்கள் தான் நன்மையடைகிருர்கள்.
ஏன் நீ தாளைக்குப் படித்துப் பட்டம் பெறுவாய். நீ படித்த விஞ்ஞானம் இங்கு யாருக்கும் தேவைப்படாது அவர்களது கட்டு மரமும் மண்வெட்டியும் அவர்களுக்குப் போதுமானதாய் இருக்தி

Page 66
116 லங்கா ராணி
றது, அவற்ருல் பயனடைவதற்குத் தேவையான சமுதாய மாற் றங்கள் ஏற்படுத்துவதற்கு யாருக்கும் விருப்பமில்லை. உன்னு டைய ஆற்றலப் பயன்படுத்தும் ஆற்றல் அவர்களுக்கில்லை. உனக்கு வேறு வழி இருக்காது. வெளிநாட்டுச் சந்தையில் உன் இனக் கொண்டு போய் நிறுத்துவாய். தாங்கள் என்ன செய்கி ருர்கள் என்று விளங்கிக் கொண்டு பலர் வந்து உன்னைக் கை கொடுத்துக் கூட்டிக் கொண்டு போவார்கள். நீ போய் யாருக் கோ உழைத்துக் கொண்டு பண்டையத் தமிழனின் வாழ்க்கை யைப் புத்தகங்களில் படித்துப் பெருமைப்பட்டுக் கொண்டிருப் பாய். ஆனல் உன்னவர்களோ கட்டுமரத்தோடும் மண்வெட்டி யோடும் கொட்டில்களில் கிடந்து வறுமையில் வாடுவார்கள். யாருக்கு வேண்டும் இந்த இழிநிலை. யாருக்கு வேண்டும் இந்தச் சுதந்திரம்?
சுதந்திரம் சுதந்திரம் என்று கூறி, பேச்சுச் சுதந்திரம். எழுத் துச் சுதந்திரம் என்று கூறி எவ்வித நெறிமுறைகளையும் ஏற்ப டுத்திக் கொள்ளாமல் வெறும் வரட்டு அரசியல் வாதிகளின் குரண்டல் குரோதங்களையும், வெட்டுக்குத்துகளையும், இழுபறி களையும் அவர்களுடைய இயலாமையை மூடி மறைப்பதற்கு அவர் கள் காட்டும் வித்தைகளையும் பார்த்துக் கொண்டும் பேசிக்கொண் டும் எழுதிக்கொண்டும் நாங்களே மோதிக்கொண்டும் உலகமே எங்களைப் பார்த்துச் சிரிக்கும் நிலையில் வைத்துக் கொண்டிருந்தது போதும். வேண்டாம் இப்படியான சுதந்திரம். இந்தச் சுதந்தி ரத்தில் “நான் நான் நான்" என்ற வரட்டுக் கவுரவம்தான் எங்களிடம் மிச்சமிருக்கிறது. எங்கும் வறுமை, வீடு, வாசல் இல் லாமல் உண்பதற்கு உணவில்லாமல் செய்வதற்கு வேலையில்லா மல் செய்த வேலைக்கு ஊதியமில்லாமல் ஊழல்வாதிகள் கொள் ளைக்காரர்கள், பதுக்கல்காரர்கள், கடத்தல்காரர்களை நம்பி இவர் களைப் போற்றிக் கொண்டு வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் இந்தச் சுதந்திரம் வேண்டாம், இவற்றையெல்லாம் எதிர்த்துங் போராடுவதற்குத் தான் சுதந்திரம் வேண்டும்.
சமுதாயத்தின் ஒற்றுமை நிலைக்கு எதிராக இயங்கும் இந்தச் சுயநலத்தையும், தீயசக்திகளையும் எதிர்த்துப் போராடும் சுதற் திரம் கொண்ட புதிய சமுதாயம் வேண்டும். அன்னியன் விட்டுப்

அருளர் R7
போன அடிமைத் தார்ப்பரியங்களை வைத்துக் கொண்டு போலி ஒற்றுமையைக் கட்டிக் காத்துக் கொண்டு திசை தெரியாமல் தத்தளிக்கிருேம்,
இந்த அடிமைத் தார்ப்பரியங்களைத் தகர்த்தெறிந்து விட்டுப் புதிய தமிழனுடைய சமுதாயத்தை வெளிக் கொண்டு வா. அதன் ஆற்றலைக்கண்டு உலகமே வியந்து போய் நிற்கும். அதற்கென இலட்சியங்கள் இருக்கும். திட்டங்கள் இருக்கும். யாரும் வேலை யில்லாமல் தெருவில் நிற்க மாட்டார்கள். 翰
நமது வீரர்கள் உலக அரங்கில் எடுக்கும் தங்கப் பதக்கங் களைப் பற்றியும் நமது விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுநர் களின் புதிய கண்டுபிடிப்புகள் பற்றியும், விவசாயம், மீன்பிடி, தொழில்துறை, வர்த்தகம் போன்ற துறைகளில் புதிய சாதனை கள் பற்றியும் பெருமிதத்துடன் பேசிக் கொள்வோம். ஏன்? வான்வெளியில் வலம் வரும் தமிழனைப் பற்றியும் பேசுவோம். இவை எல்லோருக்கும் சொந்தமானதாக இருக்கும். எல்லோரும் பெருமைப்படலாம். XV.
தமிழனைத் தமிழனே அழிக்கும் சுதந்திரம் அகற்றப்பட்ட சமுதாயத்தில்தான் தமிழினம் வளரும். தமிழ் மொழி வளரும் பண்பாடு வளரும். தமிழ்வழி முறைபாடுகள் அழிந்துபோகும் என்று கவலைப்படத் தேவையில்லை. அவை புதிய சமுதாயத்திற் கேற்ப மாற்றமடையும். பழமை உன்னுடன் எப்போதும் இருக் கும.
நீதான் தமிழன். நீ அமைப்பதுதான் தமிழனுடைய பண் பாடு. இதற்காக நீ புதைகுழியைத் தோண்டிக் காலத்தைப் போக்கிக்கொண்டிருந்தது போதும் புறப்படு . உலகிலுள்ள உண் மையான சமதர்ம நாடுகளில் மலர்ந்துள்ள புதிய சமுதாயங்கள் தங்களுடைய பழமையைப் பிரதிபலிப்பதாகவே அமைந்துள்ளன. இவற்றின் மத்தியில் பல்வேறு முரண்பாடுகளும் ஏன் மோதல் களும் கூட காணக்கூடியதாக இருக்கின்றது. இதே போல் தமிழ னுடைய சமதர்ம சமுதாயமும் தனக்கே உரித்தான இயல்புகளே யும் ஆற்றல்களேயும் இலட்சணங்களையும் கொண்டதாக இருக் கும். தீ புதிய தமிழனுடைய சமுதாயத்தை அமைக்கப் புறப்பட்

Page 67
8 லங்கா ராணி
டுச் செயல் வீரஞகிச் செயற்படு. வெற்றுப் பேச்சு வீரர்களின் காலம் கடந்துவிட்டது. தமிழினம் தமிழினம், என்ற உனது வெறும் உணர்ச்சிகளும் பேய்ப் போக்கும் எதையும் தராது. தமிழர்களை வெறும் தடைப்பிணங்களாக த்தான் ஆக்கும். இங்கு தேவைப்படுவது தமிழனுடைய புதிய சமுதாயம். அதை மறுப்ப தற்கு யாருக்கும் அதிகாரமில்லை. அந்த எழுச்சியைத் தடுக்க யாராலும் முடியாது."
இவ்வாறு அவன் பேசிமுடித்ததும் இளைஞர்கள் கேள்விகள் கேட்டு மேலும் விவாதத்தைத் தொடர விரும்பியவர்கள் போலத் தென்பட்டாலும் வேட்டியுடனிருந்த இளைஞன் இவை இன்றைக்குப் போதும் என்று கருதியவன் போல, “வாருங்கள் சமையலறைப் பக்கம் போய்ப் பார்ப்போம் என்ன நடக்கிறது. என்று" என்று கூறிக் கதையை முடித்துக்கொண்டு சமையலறைப் பக்கமாக எல்லோரையும் கூட்டிக்கொண்டு தளத்தில் நடந்தான். வேட்டியுடனிருந்த அந்த இளைஞனும் சரவணனும் முன்னுக்குச் சென்றுகொண்டிருந்தனர். மணி எட்டு ஆகிக் கொண்டிருந்தது.
குமார் உணவைப்பார்த் துவிட்டு மாணவத் தொண்டர்களைப் பரிமாறத் தொடங்கும்படி கூறினன். அவர்களும் ஆயத்தமானர் கள். டாக்டர் திருமுருகனும் குமாரும் தொடர்ந்து பேச்சில் ஈடுபட்டனர். அங்கு வந்த இளைஞர்களும் மெதுவாகச் சேர்ந்து கொண்டு பல்வேறு பேச்சுக்களைக் காதில் போடத் தொடங்கி
டாக்டர் திருமுருகன் இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிசார் பற்றி பல கேள்விகள் கேட்டார். பல விடயங்கள் குமாருக்குத் தெரியாமலேயே இருந்தன இலங்கை இராணுவத்தினர் இங்கிலாந்திடமிருந்தே அதிக ஆயு தங்களை வாங்கினர். இவற்றில் சுமார் பத்து கவச பீரங்கி வண்டி களும் வேறு சில கவச துருப்பு வண்டிகளும் அடங்கும். இவற்றில் பலவற்றைக் கலவரம் ெ தாடங்கியதும் யாழ்ப்பாணத்தில் கொண்டுபோய் அடுக்கிவைத்திருந்தார்கள். இவற்றின் அமைப்பு கள் பற்றி டாக்டர் பல கேள்விகன் கேட்டார். தான் எங்கோ புத்தகத்தில் படித்திருந்த விபரங்களைக் கூறினர். இவற்றின்

அருளர் 9
கவசங்களைப் பற்றியும் அவற்றைத் தகர்ப்பது கடினம் என்றும் குறிப்பிட்டார். இவற்றைச் சாதாரண துப்பாக்கிகளாலேயோ' கைகளாலேயோ என்ன செய்யப்போகிறீர்கள் என்றும் கேட்
Trir.
குமார் எதுவித பதிலும் சொல்லாமல் சிறுபிள்ளைபோல் நின்று கேட்டுக்கொண்டிருந்தான். &
இந்த நேரத்தில் டாக்டர் நற்குணம் அந்தப் பெரியவரைக் கூட்டிக்கொண்டு தனது அறையிலிருந்து வெளியே வந்தார். அவர் முற்றிலும் குணமடைந்தவராகக் காணப்படவில்லை: மூச்சு விட முடியாதவராக இழுத்து இழுத்துவிட்டு வேதனையிலிருந் தார். டாக்டர் நற்குணம் ஒரு பக்கத்திலும் இன்னுெரு பக்கத்தில் ஒரு பெண் - அவருடைய மகளாக இருக்கவேண்டும் - பெரியவ ரைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள்.
அந்தப் பெரியவர் குமாரை நோக்கினர். அங்கு பேசப்படுவ தைக் காதில் போட்டுக்கொண்டார். டாக்டர் நற்குணம் அவரை படிகளால் ஏற்றிக் கீழே தளத்திற்குக் கொண்டுபோக முற்பட் டார், அந்தப் பெரியவர் படிகளில் ஏருமல் அப்படியே நின்று கொண்டு அங்கு பேசப்படுவனவற்றையும், குமார் திணறிப் போய் நிற்பதையும் கவனித்துக்கொண்டிருந்தார். டாக்டர் நற்குணம் அவரைப் பலவந்தமாக ஏற்றி, படிகளால் கீழ்த் தளத்திற்கு இறக்கிக்கொண்டு சென்ருர், சில படிகள் போனதும் மகளிடம் ஒப்படைத்துவிட்டு மேலே வந்தார்.
டாக்டர் திருமுருகன் பெரியவரைப் பற்றிக் கேட்டார். டாக் டர் நற்குணம் அவரது தொய்வு வருத்தத்தை விளங்கப்படுத்தி ஞர்.
"இவரைத் தெரியுமா?" என்று கேட்டார்.
*இவர்தான் சிற்றம்பலம். யாழ்ப்பாணப் பொ துவுடமைக் கட்சியில் பெரிய தூண்’, M
'ஆ அப்படியா! இவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்" என்று குமாரும் கூறிஞன். பொதுவுடமைக்கட்சியின் தேசிய ஒரு

Page 68
120 லங்கா ராணி
மைப்பாட்டு மாநாட்டுக்குப் போயிருந்தாராம். மாநாடு முடிந்து நண்பருடன் வீடு திரும்பிக் கொண்டு இருக்கையில் காலிகள் இவர்களைத் துரத்தியிருக்கிருர்கள். இருவரும் சற்று தூரம் ஒடியிருக்கிருர்கள். இவரால் ஓட முடியாமல் போகவே இவரை ஒரு வீட்டு மதிலால் ஏற்றி உள்ளே விட்டு விட்டு இவருடைய நண்பர் தொடர்ந்து ஒடியிருக்கிருர். அவருக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லையாம். இவர் அந்த வீட்டிலுள்ள பூ மரங் களுக்குள் ஒளிந்து கொண்டாராம். பின்பு சில மணித்தியா லங்கள் சென்ற பின் அந்த வீட்டுக்காரன் உதவியுடன் பலத்த சிரமப்பட்டு வீடு வந்த சேர்ந்தாராம். அங்கிருந்து எல்லோரும் அகதிகள்முகாமிற்கு வந்து தஞ்சமடைந்தனர். அதிலிருந்து பல நாட்கள் மாறியிருந்த தொய்வு மீண்டும் ஏற்பட்டு மிகுந்தி தொல்லப்படுகிருர் என்று குமார் கூறினன்.
இந்தச் சமயத்தில் அந்தப் பெரியார் மீண்டும் மேலே தளத் திற்கு ஏறி வந்தது பலருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவ ருடைய மகள் அவரைப் பிடித்து இழுத்து நிற்பாட்ட முடியா மலும் மேலே வருவதற்கு உதவி செய்ய விரும்பாதவளாகவும் பின்னுக்கு வந்து கொண்டிருந்தான். அந்தப் பெரியவர் அங்கு வந்து குமாரின் கையைப் பிடித்து அவனை ஒரு பக்கத்திற்கு கூட்டிக் கொண்டு போனுர், எல்லோரும் வியந்துபோய்ப் பார் த்துக் கொண்டிருந்தனர். குமாரை வெளிச்சம் சிறிது குறைந்த பகுதிக்கு அழைத்துச் சென்ருர், மூச்சை இழுத்து இழுத்து விட் டுக்கொண்டிருந்தார்.
குமாரின் முகத்தைப் பார்த்தார். சுற்றுமுற்றும் பார்த்தார். ஏதோ இரகசியம் சொல்லவேண்டுபவர் போல அந்தரப்பட்டார். குமாரும் அவர் என்ன சொல்லப்போகிருர் என்பதை ஆவலோடு எதிர்பார்த்தான். அவர் கதைத்தார். ஒவ்வொரு சொல்லாக இடையில் நிறுத்தி மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு கதைத் தார்.
*ஆர்.பி.ஜி. வி.த்தீரி வி. செவன் வி. டுவல்வ்."
இரண்டு கைகளையும் இடது பக்கத் தோளுக்கு நேராகப் பிடித் துக்கொண்டு மீண்டும் கதைத்தார். “சோல்டர் பயர்ட்.தோள்

அருளர் 18 Ꭵ
மீது வைத்துக் கொள்ளவேண்டும். பாரமில்லை வெரிலைட்" ஒரு கையால் தோளைத் தட்டியவாறே இவ்வாறு கூறினர்.
*வி. செவன் இனப், அது போதும், ரேஞ்ச்ஃ பை ஹன்ரட் மீட்டர்ஸ்.”*
நிறுத்தி பலதடவை மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு மீண் டும் தொடர்ந்தார்,
**வெரி ஹை டெம்பரேச்சர், இட் வில் எக்ஸ்பிளோட் எவ்ரி திங் ஒன்றும் மிச்சமிருக்காது." ஒருகையை விரித்து நிலத்தை தோக்கி ஒரு வெட்டு வெட்டினர்.
*அன்ட் கிரனேட், ஹேன்ட் கிரனேட்' இடது கைவிரல் ஈளை உள்நோக்கி மடித்துக்கொண்டு உள்ளங்கையைப் பார்க்கும் படி குமாருக்குச் சாடை காட்டினர்.
குமார் கைகளைப் பார்த்தான். அது கைக்குண்டு அளவாக மடிக்கப்பட்டிருந்தது.
'அன்ட் த்ரோ இட்" விட்டெறிவது போல கைகளை பின் னெடுத்து செய்து காட்டிஞர். மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு சொன்னர் "யு கேன் கோ டு கியூபா, ஐ வில் சென்ட் யு, யு கம் அண்ட் சீ. மீ."
அவருடைய பேச்சைக் கிரகித்துக் கொண்டவன்போல தலையை அசைத்துவிட்டு அவரைக் கூட்டிக்கொண்டு போகும்படி மகளி டம் கூறினன். குமாரும் ஒரு பக்கத்தில் பிடித்துக்கொண்டான். அவரைப் படிகளால் ஏற்றிக் கீழ்த்தளத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டு அவரைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளும்படி அவரது மகளிடம் கூறிவிட்டு மேலே வந்தான். சிலபடிகள் ஏறிய பின் திரும்பவும் கைகளை ஆட்டி குமாரைக் கூப்பிட்டார். குமார் இறங்கித் தலையைக் குனிந்து காதைக் கொடுத்தான்.
"அன்ட் கிளாஸ் நிக்கோவ் ஏ. கே. பார்ட்டி செவன் . " ஆட்டோ மெடிக் மெசின்கன் . . வெரிலைட். த பெஸ்ட், யூஸ்டு ஆல் ஓவர் தி வெர்ல்ட். த பெஸ்ட் . கிளாஸின். கிளாஸின். த பெஸ்ட்.
6). 16

Page 69
교 லங்காராணி
"பு கம் அன்ட் சி மீ. தினபீஸ் ஃபா விளம். பாவிஸ்ட்ஸ்' அழித்துவிட வேண்டும் என்பதைப் போல முகத்தைச் சுழித்து கைகளையும் வெட்டினுர் அவரைக் கொண்டுபோய்க் கவனமாக அமர்த்துமாறு அவருடைய மகளுக்குக் கூறி கைகளேயும் காட்டி விட்டுக் குமார் மேலே ஏறி வந்தான். அங்கு அவனது வரவை பலரும் எதிர்பார்த்துக்கொண்டு நின்றனர்.
குமார் அங்கு வந்து அந்த வேட்டியுடன் இருந்த இளஞ: ஒரு பக்கத்துக்கு அழைத்துக் கொண்டுபோய் பெரியவர் கதைக் தவற்றைப் பற்றிக் கூறினுன், வேட்டியுடனிருந்த அந்த இஃாஞன் புன்முறுவலுடன் கண்களைச் சிமிட்டிவிட்டான். பெரியவருடைய கூற்று அவனுக்கு எதையும் புதிதாகத் தெரிவிக்கவில்லேபோலி ருந்தது அவனது சிரிப்பும் கண் சிமிட்டலும்,

10
லங்காராணியின் மேல்தளத்தில் நின்றவர்கள் குளிர்காற் றைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லே. உணவு பரிமாறு வதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததால் பலர் கீழ்த் தளத்திற்குப் படிகளில் இறங்கிக்கொண்டிருந்தனர். மேல்தளங்க வில் படங்குகள் முற்ருக எடுத்துவிடப்படாத நிலையில் பாதி மூடிக்கிடந்தன. சரவணன் வெள்ளேச்சாமியைக் கூட்டிக்கொண்டு சுப்பவின் மற்றைய பகுதிகளேப் பார்வையிட்டான். வெளிச்சம் பல இடங்களில் இல்லாமலிருந்தும் அவன் அது அவ்வாறிருப்பதை விரும்பினுன், வேட்டியுடன் இருந்த இளைஞன் எதுவும் பேச விரும்பாவிடினும் அங்கு பேசப்படுவனவற்றைக் கேட்ட வண்ணம் நின்றன்.
குமாரும் டா க் டர் திருமுருகனும் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தனர். தனிநாட்டுக் கோரிக்கை கணிசமான மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லே என்றும், விடுதலேக் கூட் டணியினர் போட்டியிடாத மற்றைய இடங்களில் உள்ள தமிழர் 5ள் தங்கள் சம்மதத்தைத் தெரிவிக்கும் சந்தர்ப்பத்தைப் பெற வில்லே என்றும் டாக்டர் குறிப்பிட்டார். இதற்குக் குமார்,
"இந்த வாக்கெடுப்பை முழுமையான வாக்கெடுப்பாக கருத முடியாவிட்டாலும், இக்கோரிக்கையை உலகுக்குத் தெரியப்படுத் துவதற்கு இது நல்ல சந்தர் ப்ப மாக பயன்படுத்தப்பட்டது. உண்மையிலேயே அப்படி இரு நாடுகள் உருவாக்கப்படுமானுல் மலேயகத் தமிழர்களும், முஸ்லீம் தமிழர்களும் நிச்சயம் ஆதரவு தருவார்கள்" என்று குறிப்பிட்டான். ஆனுல் சமாதானமாக அப்படி பிரிவு ஏற்படும் சாத்தியம் இல்லே என்றும் குமார் தொடர்ந்து கூறிஞன்.

Page 70
24 லங்காராணி
லங்காராணியில் அகதிகளாக உள்ள தமிழர்கள் யாரும் திட் டமிட்டுச் சிங்கள நாட்டை ஊடுருவல் செய்தவர்கள் அல்லர், ஏதோ வயிற்றுப்பிழைப்புக்கு வேறு வழியில்லாததால் அங்கு போய்ச் சேர்ந்தவர்கள். இலங்கை அரசியலில் இனக்கலவரம் ஒன்றிப்போயுள்ளது. தமிழர்கள் உரிமை ஏதாவது கேட்டால் இரத்தக்களறி ஏற்படும் வாயை மூடுங்கள் என்று சொல்வார்கள் சிங்களத் தலைவர்கள். இந்த நிலையை ஏற்படுத்தி வைத்திருக்கச் சிங்களத் தலைவர்கள் சிங்கள மக்களைச் சுண்டி விட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்களும் ஆ.ஊ . தமிழனைப் பிடி என்று கத்துவார்கள். அதே சமயத்தில் தமிழனுடைய பூமியில் பொரு ளாதார வளங்களை ஏற்படுத்துவதற்குத் தமிழனுக்கு அதிகார மில்லை: ஆட்சியில்லை. இதனுல் சிங்களப் பிரதேசங்களை அண்டி வாழவேண்டியநிலை. அப்பிரதேசங்களை மாத்திரம் அபிவிருத்தி செய்து சிங்களவரின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள். தமிழ் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு இருக்காது. இனக்கலவரம் எப்போதும் வரலாம். இது தமிழர்களை ஆளுவதற்குச் சிங்கள ஆட்சியாளர் ஏற்படுத்தி வைத்திருக்கும் கடிவாளம்.
இது மாத்திரமல்ல, சமீப காலங்களில் தமிழ் இளைஞர்சளுக் கும் பொலிசாருக்கும் மோதல் ஏற்பட்டிருந்தது. சிங்களப் பொலிசாருக்கும் மனதில் பயம். இந்தப் பயத்தைப் போக்கித் தைரியத்தை வரவழைக்க அவர்களும் இந்த இனக்கலவரத்தில் தஞ்சம் புகுந்தார்கள். இளைஞர்கள் தமிழ் இரகசியப் பொலிசா ருடன் நேரடியாக மோதினர்கள். சிங்களப் பொலிசார் வெளிப் படையாகவே, அவ்வாறு தாக்கப்பட்டவர்கள் சிங்களப் பொலி சாராக இருந்திருந்தால் 1958ஆம் ஆண்டு இனக்கலவரத்தைவிட மோசமான இனக்கலவரத்தை ஏற்படுத்துவோம் என்று கூறிக் கொண்டார்கள். இதை வதந்திகள் பரப்பியே செய்துவிடலாம் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்த அபாயத்தை எதிர் நோக்கத் தமிழர்கள் தங்களை எந்த விதத்திலும் தயார்படுத்திக் கொண்டவர்கள் அல்ல. மற்றவர்களை திட்டுவதிலேயே காலத் தைச் செலவிடுவார்கள். இரு தமிழர்கள் கதைத்தால் அது வாக்குவாதமாகத்தான் இருக்கும். கருத்துப் பரிமாறலாகவோ, ஒத்துப்போவதாகவோ இருக்காது. இப்படிப் பேசிக்கொள்வதில் தான் எல்லா வீரமும் தங்கியிருக்கின்றது என்ற ரீதியில் அடித் துப் பேசுவார்கள். ஒற்றுமைப்படமாட்டார்கள் ஒரே கருத்தை இருவர் ஏற்றுக்கொண்டால் அது பெரும் இழுக்கு என்று கருது பவர்போல் தெரியும்.

அருளர் 25
கலவரம் தொடங்கிவிட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்குப் புகையிரதம் வந்துகொண்டிருந்தது. யாழ்ப்பா ணத்தில் சில இளைஞர்கள், புகையிரதத்தில் சிற்றுண்டிச்சாலை யில் புகுந்து கலாட்டா பண்ணிவிட்டார்கள் இந்தச் சிற்றுண் டிச்சாலையில் சிங்களவர்கள்தான் வேலை செய்வார்கள். அந்தப் புகையிரதத்தில் சுமார் ஆயிரம் தமிழர்கள் போய்க்கொண்டிருந் தார்கள். தமிழர்களின் எல்லைப்பிரதேசமான வவுனியாவில் சில தமிழ்ப்பெரியவர்கள் வண்டியில் ஏறி கலவரச் சூழ்நிலை உருவாகி இருக்கின்றது இறங்கிவிடுங்கள் என்று கூறினர்கள். யாரும் இறங்கவில்லை.
"நீங்கள் சம்பளம் தருவீர்களா?' என்று கேட்கிறர்கள். புகையிரதம் போய் அனுராதபுரத்தில் நிற்கின்றது. எல்லோருக் கும் நல்ல அடி விழுகின்றது பொருட்களெல்லாம் கொள்ளைய டிக்கப்படுகின்றது. அல்லல்படுகின்றர்கள்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண் டிருந்த புகையிரதம் பொத்துக்கரையில் நிற்கின்றது. அதிலும் சுமார் ஆயிரம் தமிழர்கள் இருக்கின்றர்கள். சில சிங்களக்காலி கள் ஏறிக் கொள்ளையடிக்கின்ருர்கள். தமிழர்களில் சிலர் தாங் கள் சிங்களவர் என்று கூறித் தப்பித்துக்கொள்ளப்பார்க்கிருர்கள். 1958ஆம் ஆண்டுக் கலவரவத்தில், காதில் ஒட்டை போட்டவர் களையும், தலையில் நல்லெண்ணெய் மணக்கிறவர்களையும் தேடிப் பிடித்து அடித்தார்களாம்.
இந்த நாட்களில் சிங்களவர் மாதிரியே சிங்களம் பேசும் தமிழர்கள் பலர் இருக்கின்றர்கள். இவர்களைக் கடுமையான சிங் களச் சொற்களைச் சொல்லும்படி கேட்பார்கள். பெளத்த சம யக் கவிகளைப் பாடும்படிக் கேட்பார்கள். சிங்களம் படித்துத் தேர்ச்சியுற்ற தமிழர்களால் இப் படிச் சொல்லழடி வில்லை, பாட முடியவில்லை. வாங்கிக் கட்டிக்கொண்டார்கள். சிங்களவர் களைக் கல்யாணம் பண்ணிய தமிழர்களையும் மிச்சம் விடவில்லை. பெளத்தராக மாறிய தமிழர்களும் மிச்சமில்லை. எல்லோருக்கும் ஒரேகதிதான். ஒரே ஒட்டந்தான். சிங்களவருடன் ஒத்து ஒன் றிப்போனவர்களும் அடி வாங்கினர்கள். சிங்கள மொழியில் கல்வி பயின்ற மாணவர்களை சிங்கள மாணவர்கள் தாக்கிஞர் கள். சிறைச்சால்யில் சிங்களக் கைதிகள் தமிழ்க் கைதிகளைத் தாக்கினர்கள். தமிழ்ச் சிறைக்காவலாளிகள், சிங்களக் கைதிக

Page 71
வங்காராஓரி
ளுக்குப் பயந்து சீருடையுடன் அகதிகள் முகாமில் தஞ்சம் புகுந்து லங்காராணியில் அகதிகளாகப் பயணம் செய்துகொண்டிருந்தார்
Gir.
குமாரைச் சுற்றி வேறு பலரும் கூடி நின்றனர். சரவணன் அந்த ஆங்கில உரையாடவில் பங்குகொள்ள முடியாமல் வெள் ளேச்சாமியுடன் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்.
டாக்டர் திருமுருகன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நட வடிக்கைகள் பற்றிய கேள்விகளைக் கேட்டார். உலகநாடுகள் ஆதரவு தருமா..? ஐக்கிய நாடுகள் சபையில் இந்தப் பிரச்சி ஃனயை ஏன் எழுப்பக்கூடாது? என்றும் கேட்டார். ஐக்கியநாடு கள் சபை இந்தப் பிரச்சின்னயை எவ்வாறு அணுகக்கூடும் என்று கூறி இன ஒடுக்கல் வெறும் காலணி ஆதிக்க நாடுகளில் மட்டு மல்ல, சுதந்திரம் அடைந்த நாடுகளிலும், மனித உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலும், இனங்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலும் மக்கள் வாழ்கின்றர்கள் என்று குமார் குறிப்பிட்டான். உதாரணமாக பங்களாதேச மக்கள், பாகிஸ் தானிடமிருந்து பிரித்து தமது அடிப்படை உரிமைகளே நிலைநாட் டியுள்ளனர் என்றும் குறிப்பிட்டான். இப்பிரச்சினேகளேத் தீர்ப் பதற்கு ஐக்கிய நாடுகள் சபை என்ன கட்டுப்பாடுகளே இயற்றி வைத்திருக்கின்றது என்றும் குறிப்பிட்டான்.
1948ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மனித உரிமைகள் சாசனத்தின்படி எல்லா மக்களும் சுதந்திரமானவர்களாகவும் சமமான உரிமைகளுடனும் பிறக்கின்ருர்கள் என்றும், இனம், திறம் பால், மொழி, மதம், அரசியல் கருத்துக்கள், சமூக உற விகள் ஆகிய வித்தியாசமில்லாமல் எல்லோருக்கும் உரிமைகள் வழங்கப்படவேண்டுமென்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்றும் சொன்னுன். அதேபோல் 1960 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப் பட்ட காலனி நாடுகளுக்குச் சுதந்திரம் வழங்குவது பற்றிய சார் னத்திலும், மக்கள் சுயநிர்ணய உரிமை கொண்டவர்களாக இருக் கிருர்களென்றும் இந்த உரிமையால் அவர்கள் தங்கள் பொரு ளோதார, சமூக, கலாச்சார உறவுகளைச் சுதந்திரமாக அமைத் துக்கொள்ளும் உரிமை கொடுக்கப்பட்டிருக்கின்றதென்றும் கூறி குனூன். இத்தோடு குமார் இவையெல்லாம் எல்லோரும் ஏற்று நடக்க வேண்டுமென்று விரும்புகிற தீர்மானமேயன்றி இவற்றை ஒரு நாட்டில் நிலை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையிடம் எவ்வித அதிகாரமுமில்லை என்பதையும் குறிப்பிட்டான். ஆகவே அவர்களிடமிருந்து எந்த உதவியையும் எதிர்பார்க்க முடியாது என் றும் குறிப்பிட்டான், குமாரைச் சுற்றி பலர் கேட்டுக் கொண்டு நின்றனர். -

அருளர் Ie
இச்சமயத்தில் அங்கு இந்திய வாணுெவியின் செய்திகள் கேட்டுக்கொண்டு நின்ற சிலர் கைகளே உயர்த்தி ஆரவாரம் செய்தனர். அது ஒரு சிறிய ரேடியோ, சத்தம் அதிகமில்லாத தால் ஒருவர் காது கொடுத்துக்கேட்டு எல்லோருக்கும் சத்தமா கக் கூறிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றிப் பலர் கேட்டுக் கொண்டு நின்றனர். முதலில் மாநிலச்செய்திகள் படிக்கப்பட் டன. இதில் தமிழ்நாட்டுச் சட்டசபையில் இயற்றப்பட்டு இந்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானம், அங்கு நடந்த விவா தங்கள் பற்றிக் கூறப்பட்டது. பின்பு அகில இந்தியச் செய்தியில் கொழும்பில் இருந்து அகதிகள் கப்பலில் போய்க்கொண்டிருக் கின்ருர்கள் என்ற செய்தி எல்லோருக்கும் ஆரவாரத்தைக் கொடுத் திருந்தது. எல்லோரும் உற்சாகம் அடைந்தனர். கைகளே உயர்த்திச் சத்தம் போட்டனர். இச்செய்தி கீழ்த்தளத்திற்கும் சென்றது
இச்செய்தி பற்றிய விபரங்களேக் குமாரும் டாக்டரும் கேட் டறிந்தனர். அவர்கள் பேச்சு தமிழகத்துடன் உள்ள தொடர்பு
பற்றித் திரும்பியது
'தி. மு. க. அரசு இருந்தால் எங்கள் கோரிக்கைக்குத் தமி ழகத்தில் நல்ல ஆதரவு இருக்கும்' என்று கூறிஞன் குமார். °马凸卤 一T岳Ls,
"இந்தியாவைப் பொறுத்தவரையில் மாநில அரசின் கொள்கை பெரிய விடயமல்ல, மத்திய அரசு என்ன நோக்கம் கொண்டிருக்கிறதோ அதுதான் பிரதானம்' என்று கூறிஞர். அங்கு தி. மு. க. பிரிவினயை ஆதரிக்கும் கட்சியாதலால் இங்கு தனிநாடு உருவாகுமானுல் இந்தியாவில் தமிழ்நாடு பிரியும் என்ற நோக்கம் மத்திய அரசுக்கு இருக்கும் என்றும் கூறிஞர்.
அதனுல் எல்லாக் கட்சிகளினதும் ஆதரவையும் திரட்டவேண் டும் என்றும் தமிழ்நாட்டு மன உணர்வுகளுக்கு மதிப்பளிப்ப தால் தமிழ் மக்கள் மத்திய அரசின் மீது வைத்திருக்கும் நம்பிக் கையைப் பலப்படித்திக்கொள்ளலாம் என்றும் டாக்டர் கூறிஞர். வல்லரசுகள் இலங்கை அரசியலில் கொண்டுள்ள அக்கறையை பம் சுட்டிக்காட்டினுர், இதனுல் பேச்சு மீண்டும் உலக அரங்கில் தனிநாட்டுக்கு ஆதரவு தேடுவதுபற்றி எழுந்தது. ஆபிரிக்காவில் நடக்கும் விடுதலேப் போர்கள்பற்றிக் குமார் குறிப்பிட்டான். அவர்கள் பெறும் உதவிகள் பற்றியும் அவற்றைப் போல நாங்க

Page 72
128 லங்காராணி
ளும் பெறுவதற்கு முயற்சிப்பதில் தவறெதுவும் இல்லையென்றும் குறிப்பிட்டான் வல்லரசுகள் எங்கள் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடும் என்று டாக்டர் கூறினர். அதற்குச் சமதர்ம நாடுகளின் உதவி ஒரு கடமையாகக் கருதப்பட்டு உபகாரங்கள் எதுவும் எதிர்பார்க்கப்படாமலே அளிக்கப்பட்டு வருகின்றன என்றும் பல நாடுகளை மேற்கோள்காட்டிக் குமார் கூறினன். அதை டாக்டர் முற்ருக ஏற்றுக்கொள்ளத் தயங்கவே,
"பிணங்களைத்தான் கழுகுகள் வந்து கொத்தும். நாங்கள் விழிப்பாக இருந்தால் யாரும் எவரும் ஒன்றும் செய்யமுடியாது. நாங்கள் பலவீனர்களாக இருந்தால் வல்லரசுகளாக இருந்தால் என்ன இந்தியாவாக இருந்தாலென்ன? யாராக இருந்தாலும் எங்களுக்கு உதவிக்கு வருபவர்கள் எங்கள் தோள்மீது இருந்து சவாரி விடத்தான் பார்ப்பார்கள். நாங்கள் பலமான சமுதாய மாக ஒற்றுமையோடு விளங்கினல் எவரும் எங்களை ஒன்றும் செய்துவிட முடியாது" என்று குமார் குறிப்பிட்டான்.
குமார் சற்று மன்னிக்கும்படி கூறிவிட்டுச் சமையல் அறை யில் எப்படி எல்லாம் இருக்கின்றது என்று பார்க்க உள்ளே போனு ன். அங்கு போய் எல்லாவற்றையும் பார்வையிட்டு மான வத் தொண்டர்களை உணவைப் பரிமாறும்படி கூறி விட்டு வெளியே வந்தான்.
குமாரும், சரவணனும், டாக்டர் நற்குணமும் மீண்டும் கப் டனைப் பார்க்கப் போனர்கள். அங்கு கப்டனுடன் வேறு அதிகாரி யும் உடனிருந்தார். முதலில் குமாரிடம் அங்கு நடந்த விடயங் களைக் கேட்டறிந்தார்,
"கப்பல் எந்தத் துறைமுகத்துக்குப் போகும்?' குமார் வின வினன். 'கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்துக்குப் போகும், அங்கு வத்தைகளில் அகதிகள் கரைக்குக் கொண்டு போகப்படு வார்கள். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன’’ என்று கப்டன் கூறினன்.
‘கப்பலிலுள்ள இருநூறு பேருக்கும் அதிகமானவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் உறவினர்கள் இல்லை. இவர்கள் அங்கு தங்கு வதற்கு வசதி வேண்டும். இது பற்றி யாழ்ப்பான எம் பி.க்கு அல்லது அரசாங்கத் தொடர்பு அதிகாரிக்கு அறிவிக்கவேண்டும்’ என்று குமார் கேட்டுக்கொண்டான்.

அருளர் 29
சந்திப்பு நல்ல சூழ்நிலையிலேயே நடந்து கொண்டிருந்தது. சரவணன் மாத்திரம் சுற்றிலும் எவ்வாறு இருக்கின்றது என்ப தைப் பார்த்துக்கொண்டிருந்தான். நாளை இறங்கும்பொழுது செய்யவேண்டிய ஒழுங்குபற்றிக் கேள்வி எழுந்தது. இந்தப் பொறுப்பைக் குமார் ஏற்றுக்கொண்டான். நாளை கப்பல் மேல் தளத்திற்கு எவரையும் வரவேண்டாமென்றும் எல்லோரையும் உள்ளே இருக்கச் செய்யும்படியும் கப்டன் கூறினர். இதற்குக் குமார் அப்படியாக எல்லோரையும் உள்ளே வைத்திருப்பது கடி னம் என்றும் எல்லோரும் மேல்தளத்தில் நிற்கத்தான் விரும்பு வார்கள் என்றும் கூறினன் 'இது என்ன உல்லா சக்கப்பலா?" என்று கப்டன் வினவினர். " நாங்கள் தெண்டிக்கிருேம்' என்று குமார் பதிலிறுத்தான்.
கப்பல் மதியம் பன்னிரண்டு மணிக்குக் காங்கேசன்துறையை அடையுமென்று கப்டன் கூறினர்.
"திருகோணமலையால் எந்த நேரம் கப்பல் போய்க் கொண் டிருக்கும்?' என்று சரவணன் கேட்டான்.
"கூடிய சீக்கிரத்தில் இன்னும் இரண்டொரு மணித்தியாலங்க வில், நாளை காலை முல்லைத்தீவில் இருந்து எங்களை இட்டுச் செல் வதற்குக் கடற்படையினரையும் விமானப்படையினரையும் எதிர் பார்க்கின்ருேம். எங்களுக்கு இத்தக் கடலைப்பற்றி அதிகம் தெரி யாது அவர்களின் உதவி தேவை" என்றும் கப்டன் கூறினர். சரவணன் குமாரின் முகத்தைப் பார்த்தான். குமாரும் சரவணை னின் முகத்தைப் பார்த்துக் கொண்டான்.
அங்குள்ள நோயாளர்களைப்பற்றி டாக்டர் நற்குணம் கூறி ஞர். இரண்டு கர்ப்பிணிகளைத் தவிர வேறு யாருக்கும் அவசர உதவிகள் தேவையில்லை என்றும் இவர்கள் இருவரையும் ஏற்றுக் கொள்ள் வைத்தியப் பகுதியினர் தயாராய் இருத்தல் வேண்டும் என்றும் கூறினர். இவற்றையெல்லாம் தான் யாழ்ப் பாணத் தொடர்பு அதிகாரிக்கு தெரியப்படுத்துவதாகக் கப்டன் கூறினர்.
"நாட்டின் நிலைமைகளைப்பற்றி ஏதாவது தெரியுமா?’ என்று குமார் கேட்டான். அதற்குத் திருகோணமலையில் இன்று ஊரடங் குச் சட்டம் மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணி வரைக்கும் அமுல் செய்யப்பட்டிருக்கின்றதென்றும் மற்ற மாவட்டங்களில்

Page 73
லங்காராணி
고
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருக்கின்தென்றும் கப்டன் கூத ஞர். எல்லோரும் எழுந்தனர் விடைபெற்றுக் கொண்டனர்.
பின் தளத்தில் உணவுப் பரிமாறல் முடிந்து முன்தளத்தில் பரி மாறப்பட்டுக் கொண்டிருந்தது. அங்கு தேவன் நின்று சகல க3ளயும் மேற்பார்வை செய்து கொண்டிருந்தான் உசி' பொருட்கள் மிகுதியாக இருந்ததால் எல்லாவற்றையும் முத்தை யாவின் பொறுப்பில் குமார் விட்டிருந்தான் முக்கே" staint வற்றையும் பிரமாதமாகவே தயார் செய்திருந்தார். அகதிகள் முகாம்களில் எல்லோரும் வரிசையாக வருவார்கள். தொ நின்று உணவைப் பரிமாறுவார்கள். இங்கு தொண்டர்கள் வரிசை பாகநின்று உணவைப்ப மாறினுர்கள் மற்றவர்கள்.அதே இடத்தில்
இருந்தார்கள்.
அகதிகள் முகாம் கட்டுபெத்தை மாணவர்களின் பாதுகாப்புக் *ாகத் தொடங்கப்பட்டது. கவிவரித்தேப் 山岛山*Tā*** டுப்படுத்திவிடும் என்று கருதினூர்கள் தேசிய அரசுப் பேரவையில் எதிர்க் கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் யாழ்ப்பானத்தில் நடந்து வற்றை விவரித்துக் கூறினூர். இந்தச் சமயத்தில் கலவரம் פ!gèi ராதபுரத்தில் பயங்கர விளேவுகளே ஏற்படுத்திக் G(原市岛、 பல தமிழர்கள் இறந்திருந்தர்ர்கள் நாடெங்கும் பதட்ட நி: உருவாகி இருந்தது. இச் சமயத்தில் தான் பிரதமர் ஜே ஆர். ஜெயவர்த்தகு தமிழர் கூட்டணித் த8லவரைப்ப் பார்த்துக்" சின்டூர்,"உங்களுக்குப் போர் வேண்டுமானுல் போர் சமாதானது வேண்டுமானுல் சமாதானம்' இவருக்குப் பக்கபலமாக ஒரு அது சுக் கட்சி முக்கிய உறுப்பினர். "துட்டவிசுழலு இன்று எல்லோ சிங்கள இளைஞர் மனதிலும் வாழ்த் துகொண்டு இருக்கின்ரன்' என்று கூறிஞர் துட்டகைமுனு ஒரு சிங்கள் அரசன். அவன் எ லாளன் என்னும் தமிழ் அரசனேக் கொன்றவள் 函滿語中 GL*壺 சுள் வானுெவியிலும் பத்திரிசிகளிலும், வெளியிடப்படுகின்றன கலவரம் பயங்கரமாகப் பரவுகின்றது. தமிழ் மக்கள் சின் மீது வைத்திருந்த நம்பிக்கை தவிடுபொடியாகின்றது.
இலங்கையில் சிங்களவரின் வரலாறு கி.மு 543 ஆம் ஆண்டில் இருந்து தொடங்குகின்றது. விஜயன் என்பவன் வட இந்தியாளி இருந்து அவனுடைய சகாக்களுடன் நாடுக்- த்தப்படுகின்றன். இங்க வாறு அகதிகளாக வந்த விஜயனேயும் சகாக்கரேயும் இங்குள் மக்கள் உபசரிக்கின்றனர் விஜயன் குவேனி என்ற உள்ளூர் பெண்ணே மணந்து கொள்கிமூன். குவேனிக்கு மூன்று குழந்தைகள் பிறக்கின்றன. இந்த வாழ்க்கை விஜயனுக்கு ஒத்துவரவில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அருளர்
குவேனியின் உதவியுடன் அங்குள்ள அரசனேக் கொன்று தானே முடிசூட்டிக் கொள்கின்ருன், தனது சகாக்களேச் சிற்றரசர்களாக நியமித்துக் கொள் கிருன் பின்பு குவேனியைத் துரத்தி விடு கின்முன் குவேனி வீடு வாசல் இல்லாமல் அலேகின்ருள். அவள்ே இலங்கையின் ஆதிக் குடியினர் கொன்றுவிடுகின்றனர். விஜயன் பாண்டி நாட்டு மன்னனுக்குப் பல வெகுமதிகளேக் கொடுத்து அங் கிருந்து பெண்களே வரவழைத்து மனந்து கொள்கின்ருன். இவ் வாறு "மகாவம்சம்' என்ற பெயரில் புத்தபிக்குவால் எழுதப் பட்ட சிங்களவரின் சரித்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முற்பட்ட இலங்கை இராமாயணத்தில் குறிப்கிடப் பட்டுள்ள இராவணன் அரசாண்ட "இலங்ாபுரி" பாகவும் சீன பன்னிகர்களால் குறிப்பிடப்பட்ட செல்வம் கொழிக்கும் "தாமிர பரவி'யாகவும் விளங்குகின்றது. இதற்குப்பின் கி.மு. 84ஆம் ஆண்டளவில் புத்தசமயம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது. இத்துடன் 'பாலி' மொழியும் கொண்டுவரப்பட்டது.
மகாவம்சம் என்ற சிங்களவரின் சரித்திரத்தில் கி.மு 237 இல் தமிழர்கள் ஆட்சியைக் கைப்பற்றியதுபற்றிக் குறிப்பிடப்படு கின்றது. அந்நாளில் சிங்களவரின் போர் வீரர்கள் தமிழர்கள் நானும் சேனன், குத்திலன் ஆகிய இரு தமிழ்ப் போர்வீரர்கள் அரசனேக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றுகின்றனர். இருபது ஆண்டுகள் ஆட்சிபுரிகின்றனர். பின்னர் இவர்களும் கொல்லப் படுகின்றனர்.
இதற்குப் பத்து ஆண்டுகளுக்குப்பின் தமிழ்நாட்டில் இருந்து சோழ இளவரசகுகிய எல்லாளன் இலங்கைக் கரையில் தனது படைகளே இறக்கித் தலைநகரை முற்றுகையிட்டு ஆட்சியைக் விசுப் பற்றுகின்ருன் எல்லாளன் நாற்பது ஆண்டுகள் ஆட்சிபுரிகின் ரன். இவனுடைய ஆட்சியின் சிறப்புப்பற்றி மகாவம்சத்தில் விரி பாசுக் கூறப்பட்டுள்ளது. தீவின் பல பாகங்களுக்கம் சிற்றரசர் ஃ நியமித்துக் கோட்டைகளே நிறுவி எல்லாளன் ஆட்சிபுரிந்து பந்திருக்கின்றன். இவனே எதிர்த்துத் துட்டகைமுனு என்பவன் ாடுகளில் பதுங்கி இருந்து படைகளேத் திரட்டிக் கொண்டு புறப் படுகின்ருன் சிற்றரசர்களின் கோட்டைகளே ஒன்றன்பின் ஒன்ரு க் கைப்பற்றுகின்றன். இவனுடைய படைகள் பெருகுகின்றன. ஒரு சிற்றரசனே வெல்லமுடியாமல் போகவே தன் தாயை ர்ப்பணித்துவிட்டு அவனேக்கொல்கிருன். இவ்வாறு பல வருடங் ள் போர் நடக்கின்றது. கடைசியாக துட்டகைமுனு அனுராத ரத்தை அடைகின்ருன்.

Page 74
夏3易 லங்கா ரா63)
இங்கு நடந்தவற்றை மகாவம்சம் அழகாகக் கூறுகின்றது. எல்லாளன் பெரிய கோட்டை அமைத்திருந்தான். இந்தக் ாேட் டைக்குப் பெரிய இரும்புக் கதவுகள் போடப்பட்டிருந்தன. இந்த இரும்புக் கதவுகளை யானைகளை விட்டுத் தாக்குகின்றன். இதில் துட்டகைமுனுவின் யானை கன்துலவும் ஒன்று தமிழர் க ள் கோட்டைமேலிருந்து உருக்கிய இரும்பை ஊற்றுகின்றனர். யானை கள் ஓடிப்போய்க் குளத்தில் விழுகின்றன. ஆயினும் தாக்குதல் தொடர்கின்றது. சல வருடங்களுக்குப் பின் மீண்டும் ஒரு தாக்கு தலைத் துட்டகைமுனு ஆரம்பிக்கிறன். இதில் துட்டகைமுனுவின் ஆட்கள் வெற்றி பெறுவது உறுதியாகின்றது. து ட் ட  ைக மு னு தானே எல்லாளனுடன் போரிட வேண்டுமென்று கோருகின்ருன் , எல்லாளனும் அந்தச் சவாலை ஏற்றுக்கொள்கின்ருன் துட்ட கைமுனு தனது தந்த யானேயால் எல்லாளனின் யானையை முட்டி மோதுகின்றன். யானையுடன் எல்லாளன் கீழே விழுகின்ருன். இது கி மு. 204 இல் நடக்கின்றது. துட்டகைமுனு எல்லாளனுக் குச் சகல மரியாதைகளையும் கொடுத்து அடக்கம் செய்கின்ருன். அவனது சமாதிக்கு எல்லோரும் தலைவணங்க வேண்டுமென்று கட் டளையிடுகின்றன். இந்தப் பழக்கம் சிங்கள மக்களிடையே இன்றும் நிலவி வருகின்றது. ஆயினும் சிங் ஸாத் தாய்மார்கள் தங்கள் குழந் தைகளுக்கு துட்டகைமுனுவின் கதையைக் கூறுவார்கள். இதைத் தான் "துட்டகைமுனு இன்று எல்லாச் சிங்சளவர் மனதிலும் வாழ்கின்றன்" என்று அரசுக் கட்சியினர் பாரளுமன்றத்தில் முழக்கமிட்டனர். அதாவது தமிழர்களை விரட்டவேண்டுமென்ற அவா எல்லாச் சிங்களவர் மனதிலும் உண்டு என்பது தான்.
இலங்கையில் சிங்கள பெளத்தர்கள் ஏறக்குறைய 60% உள்ள னர். இலங்கைக்குப் போத்துக்கேயர் வருமுன் சிங்கள அரசர்கள் பெளத்தமதத்தைப் போற்றி வந்தனர். இன்றைய ஆட்சியினரும் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டபின் புத்த பிக்குமாரின் சங் சங்கத்தலைமைப் பீடாதிபதியைத் தரிசிப்பார்கள். அவர் எந்தக் கட்சி புத்த சமயத்திற்கு அதிக சலுகை கொடுக்க முன்நிற்கின்றது என்பதைப் பொறுத்து மக்களை ஆதரவு அளிக்கும்படி கோருவார். தேர்தலின் தலைவிதியை அந்தக் கோரிக்கை நிர்ணயிக்கும். தமிழ் அரசனுகிய எல்லாளனை வென்று புத்தமதத்திற்கு மீண்டும் அதன் இடத்தை அளித்ததால் துட்டகைமுனு மகாவம்சத்தில் சிங்கள இனத்தின் பாதுகாவலனென்றும் மாவீரனென்றும் உயர்த்தப் பட்டிருக்கிருன். இந்நூல் 12ஆம் நூற்ருண்டில் வல்பொலராகுல என்னும் புத்தபிக்குவால் எழுதப்பட்டது.

அருளர் 133
ஆயினும் துட்டகைமுனுவின் முடிவும் பரிதாபகரமாகவே இருக்கின்றது. அவன் நாட்டைக் கைப்பற்றியபின் புத்தபிக்குகள் அவனை சூழ்ந்துகொள்கிருரர்கள். அவன் இறக்கும் தறுவாயில் அவனைக் கட்டிலுடன் கொண்டுபோய் இன்னும் கட்டிமுடிக்கப் படாத நிலையில் இருந்த மகர்புத்தருவன் வலி என்னும் தாது கோபுரத்க்ை கட்டினர்கள். துட்டகைமுனு தன்னைச் சூழ் ந் து நின்ற புத்தபிக்குகளைப் பார்த்து 'இருபத்துநான்கு ஆண்டுகள் நான் குருபீடத்தைப் போற்றி பரிபாலித்து வந்துள்ளேன். இறந்து போன என் உடலும் புத்தமதத்தின் பாதுகாவலருக்கு அடிமை யாகவே இருந்து விடட்டும் ஆகவே உங்களுக்கு அடிமையான இவ னுடைய உடலை எடுத்து நீங்கள் இந்த உப்பசீதை மண்டபத்தின் வளவில் புதைத்துவிடுங்கள்?’ என்று கூறுகிருன்
துட்டகைமுனு இறந்த பின்பு அவனுடைய சகோதரன் சுதாதிச பதவியேற்கிருன். இவனுக்கும் அதே கதிதான் எட்டாம் நூற்றண்டளவில் வாழ்ந்த பத்தி திச என்ற அரசன் செய்து கொண்ட தானம் மிகவும் விசித்திரமானதாக அமைந்திருக்கின் றது. இவன் தன்னையும் தனது மனைவி மகாராணியையும் இருமகன் மாரையும் தனது யானையையும் புத்தபிக்குமாருக்குத் தானமாக வழங்கினனும் .
மகாசேனன் என்பவன் அனுராதபுரத்திலுள்ள யட்டராம அல்லது கிழக்குத் தாதுகோபுரத்தைக் கட்டி எழுப்பி அதனுடன் கட்டப்பட்ட விகாரைக்கு இந்தத் தாதுகோபுரத்தையும், அவன் கட்டிமுடித்த புதுமின்னேரியாக் குளத்தையும், அதனுடன் சேர்ந்த சுமார் எண்ணுயிரம் நீர்ப்பாசன வயல்களையும் தானமாக அளிக் கின்ருன்,
இவ்வாறு ஏராளமான காணிக்கைகளையும் பூந்தோட்டங்களை யும் புத்தபிக்குகள் தானமாகப் பெறுகின்ருர்கள். இவற்றிற்கு வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுவது மாத்திரமல்ல இந்தக் காணிகளுக்குச் சேர்ந்த கிராமவாசிகளிடமிருந்து அடிம்ை வேலை வாங்குவதற்கும் உரிமை கொடுக்கப்படுகின்றது.
சிங்கள அரசர்கள் புத்தபிக்குகளின் அ பி லா  ைசக ஞ க்கு அடிமையாகி யார் அதிகம் வாரி வழங்கி தானம் செய்துகொள்கின் ரூர்கள் என்பதைப் பொறுத்தே தங்கள் ஆட்சியின் சிறப்  ைப எடைபோட்டுக் கொண்டார்கள் என்பது காணக் கூடியதாக உள்ளது.

Page 75
I34 、 லங்காராணி
ஆங்கிலேயர் தங்கள் ஆட்சிக் காலத்தில் இந்தப் புத்தபிக்குக ஆளத் தலை தூக்கவே விடவில்லை. 1915 ஆம் ஆண்டில் இலங்கை யில் பெளத்தர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் சமய ரீதியான ஒரு பயங்கரக் சலவரம் ஏற்படுகின்றது. இதில் பெளத்த சிங்களத் தலைவர்களை ஆங்கிலேயர் சிறையில் போடுகின்றனர். இவர்களை விடு விக்கும்படி பேச்சுவார்த்தை நடத்தியவர் சேர் பொன்னம்பலம் இராமநாதன் என்னும் தமிழரே. இலங்கையில் இருந்து ஆங்கி லேயர் சென்றபின் சிங்கள அரசாங்கங்களில் மீண்டும் பழைய நிலை பயங்கரமாக உருவாகி வருகின்றது. எங்கும் புத்தபிக்குக ளுக்கு முதலிடம். பெளத்த மதத்தை அரசாங்கம் பாதுகாக்கும். பெளத்த மதத்திற்கு உரிய இடம் கொடுக்கப்படும் , பெளத்தமே நாட்டின் மதம். ஜனதிபதி பெளத்த விகாரையில் நின்று கொண்டு நாட்டு மக்களுக்குக் கொள்கைப் பிரகடனம். பெளத்த நகரங் க%ளப் புனித நகராகப் பிரகடனம் செய்து அதற்கு அவற்றின் புனருத்தாரண வேலைகளுக்கு அரசாங்கச் செலவு. இதை எதிர்க்கும் சக்தி எந்தச் சிங்களத் தலைவருக்கும் இந்தப் பாராளுமன்ற ஜன நாயகத்தின் கீழ் ஏற்பட முடியாதநிலை உருவாகியிருக்கிறது.
1956 ஆம் ஆண்டுத் தேர்தலில் எஸ். டபிள்யூ ஆர். டி பண் டாரநாயக்கா வெற்றிபெற்றுச் சிங்களத்தை அரசகரும மொழி யாக்குகிருர். இவர் இங்கிலாந்தில் படித்துப் பட்டம் பெற்றவர். புத்தபிக்குகளின் கெடுபிடிகளுக்கு அடிபணிந்து போக மறுக்கி ருர். இதனல் சோமராமதேரோ என்ற புத்தபிக்கு தனது மஞ்சள் அங்கியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியால் பண் டாரநாயக்காவைச் சுட்டுக் கொன்றுவிடுகின்ருர், 1964 இல் ஏற் பட்ட அரசாங்கத்தில் தமிழரசுக்கட்சியுடன் யு. என். பி. uମିତor if கூட்டுச்சேர்ந்து கொள்கிருர்கள். வடக்குக் கிழக்கு மாகாணங்க ளில் தமிழ்மொழி பிரயோகத்திற்குச் சட்டங்கள் பாராளுமன்றத் தில் தாக்கல் செய்யப்படுகின்றன. இதை எதிர்த்துப் பாராளு மன்றத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டிம். பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்கின்றர்கள். இதில் இறந்து போனவர் ஒரு புத்த பிக்கு. கலவரம் தொடங்கி நாட்டில் ஏராளமான தமிழர்கள் இறந்துபோயிருந்தனர். பல்லாயிரம் தமிழர்கள் அகதிகள் முகாம் களில் தஞ்சம் புகுந்திருத்தனர். ஏராளமான பொருட்சேதம் உறவினரைப் பற்றி ஏக்கம். இந்நிலையில் கொழும்பு பம்பலப்பிட்டி புத்தவிகாரை பீடாதிபதி பத்திரிகைகளுக்குச் செய்தி விடுகிருர்,
வடக்குக் கிழக்கில் இராணுவத்தை குவியுங்கள் சிங்களவ ரைக் குடியேற்றுங்கள். தமிழரை விரட்டுங்கள்." அரசு இந்தச்

அருளர் 35
செய்தியை ஏற்றுப் பத்திரிகைகளுக்கு கொடுக்கிறது. பத்திரிகை கள் முதல் பக்கத்தில் போடுகின்றன. சிங்கள அரசினரும், ஆளும் வர்க்கத்தினரும், ஜனதிபதியும் புத்தபிக்குமாருக்கு அடிபணிந்து போகவேண்டிய நிலை துட்டகைமுனுவின் காலத்தில் இருந்தது போலவே இன்றும் இருக்கின்றது.
புத்தசமயம், இந்து சமயத்தில் நிலவிவந்த சிலைவழிபாட்டை யும், ஆத்மா, மறுபிறப்பு, குருவழிபாடு மு த லி ய வ ற்றை யும் எதிர்த்துக் கெளதம புத்தர் எனப்படும் சித்தார்த்தணுல் கி. மு. 500 ஆம் ஆண்டளவில் வடஇந்தியாவில் ஏற்படுத்தப்பட்டது இதில் கோயில்களுக்கும் சாமிகளுக்கும் பூசை விழாக்களுக்கும் இடமில்லை ஒவ்வொரு தனிமனிதனும் அடைய வேண்டிய ஒரு உன்னத நிலையை, நிர்வாண நிலையை, முன்வைத்து ம னி தன் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறையையே புத்தரின் போத னேகள் எடுத்துக்கூறுகின்றன.
இதில் முதலில் கடைப்பிடிக்கவேண்டியது அன்பு. இரண்டா வது கவலை, மற்றவர்களைப்பற்றிய கவலை, உலகைப்பற்றிய கவலே. மூன்றுவது மற்றவர் மகிழ்ச்சியில் மகிழ்ச்சி. ஒரு ஈயைக் கொல்வ தும் புத்த சமயத்தில் தகாது என்று புத்தர் போதிக்கிருர்,
இலங்கைக்குப் புத்தசமயம் தேவநம்பியதீசன் கா லத் தி ல் அசோகனின் மகன் மகிந்தனல் கொண்டுவரப்பட்டது. தேவ நம்பியதீசன் புத்தசமயத்தைத் தழுவுகின்றன். புத்த சமயம் இலங்கையில் பரவுகின்றது. பலர் புத்தபிக்குகளாக மாறுகின்ற
6ð fi“,
இவ்வாறு துறவிகளை ஏற்படுத்துவது புத்தரின் நோக்கமாக இல்லாவிட்டாலும் இந்நிலையைப் புத்தர் எதிர்பார்த்தார். இத ல்ை துறவிகளுக்கான கட்டுப்பாட்டையும் கோட்பாடுகளையும் ஏற் படுத்தினர் இவற்றுள் ஒன்ருன ஒரே ஒரு மஞ்சள் அங்கி  ைய மாத்திரம் வைத்திருக்க வேண்டுமென்பது இன்றும் கடைப்பிடிக் கப்பட்டு வருகின்றது. இதேபோல் குகைகளில் வாழவேண்டும் என்பது இன்னென்று. குகைகள் நிரம்பிவிட்டபடியால் விகாரை கள் கட்டப்படுகின்றன. அடுத்ததாகப் பிச்சை எடுத்து உண்பது. பிச்சா பாத்திரம் ஏந்தி பிச்சை எடுப்பதை இங்கு குறிப்பிட்டா லும் இந்தச் சொல் தற்காலத்தில் பல்வேறு கருத் து க் களைக் கொண்ட சொல்லாக மாற்றப்பட்டிருக்கின்றது. நடைமுறையில் புத்தபிக்குகள் புத்தரின் எண்ணங்களின் உருவாக இருப்பதில்லை.

Page 76
136 லங்கா ராவி
உலகைத் துறந்து துறவியாகித் தியானத்தில் ஈ டு படு வ தாலேயே நிர்வாணம் என்ற உயர்ந்த நிலையை அடையலாம் எனக் கருதப்பட்டதால் அந்த நிலையை அடைந்து விட்டோம் அல் லது அடையப் போகின்ருேம் என்ற எண்ணம் அவர்களை அறியாம லேயே ஒரு இறுமாப்பு நிலையை உண்டு பண்ணுகிறது. இந்த இறு மாப்பு எப்படியானது என்பதை அடையாளம் கண்டுகொள்ள முடி யாததால் அதைத்தவிர்க்க முடிவதில்லை. இது வெவ்வேறு விதமாக நாளாந்த நடைமுறைகளில் வெளிப்படுவது தவிர்க்க முடியாத தாகி விடுகின்றது.
சிங்கள மக்கள் மத்தியில் கிராமிய வாழ்க்கை பழைய நிலையி லேயே பல்வேறு சட்டதிட்டங்களோடு இன்றும் இயங்கி வருகின் றது. அங்கு புத்த விகாரை இருக்கும். நிலஉைைடமயாளர்கள் முத லாளிகள் இருப்பார்கள். புத்த குரு ஒரு வீட்டிற்குப் போனல் அங்குள்ள எல்லோரும் சாஷ்டாங்கமாக நிலத்தில் விழுந் து வணங்குவார்கள். இந்தப் பழக்கத்தில் இருந்து நாட்டின் ஜனுதி பதியும் விதிவிலக்கல்ல.
கடவுள் இல்லை, சிலைகள் இல்லை, குருக்கள் இல்லை, பூசை இல்லை, வழிபாடு இல்லை, என்ற எல்லாவற்றையும் எடுத்துவிட்டு அந்த இடத்தில் யாரும் இலகுவில் அடையமுடியாத, அந்த மகத் தான நிர்வான நிலையை அடைந்த புத்தபிக்குவை வைத்தால், மக்கள் அவர்களை சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடுவது ஆச்சரிய மான விடையமல்ல. அது மாத்திரமல்ல; அந்த நிர்வாண நிலையை இலகுவில் அடைவதற்கு விகாரைகளையும் கட்டிக்கொடுத்து அவர் களுக்குப் பிச்சை அளித்துப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரச னிடமும் இந்த சாதாரண மக்களிடமும் விடப்பட்டிருக்கின்றது. நாட்டின் செல்வநிலையைப் பொறுத்தும் அரசன் இவர்களுக்கு அளிக்கும் நன்கொடையைப் பொறுத்தும் இவர்கள் எண்ணிக்கை பெருகும். எந்த வேலையையும் செய்ய வேண்டியதில்லை என்ற கோட்பாடு இன்றைய சிங்கள மக்களின் சாதாரண இயல்புக ளுடன் நன்கு ஒத்துப் போகின்றது.
இவ்வாறன நிலையை மீண்டும்(ஏற்படுத்திக்கொள்ள வேண்டு மென்கிற ஆசையும் அதற்குத் தமிழர்கள் இடையூருக இருக்கின் ருர்கள் என்பது மாத்திரம் இந்தப் புத்தபிக்குகளின் தமிழர் எதிர்ப் புப் போக்குக்குக் காரணமாக அமையவில்லை. முழு இலங்கையை யும் புத்தபிக்குகளின் புனித பூங்காவாக மாற்ற வேண்டுமென்றி எண்ணமும் இந்தியாவில் இந்துசமயம் புத்தசமயத்தை இருந்த

அருளர் 137
இடம் தெரியாமல் ஆக்கிவிட்டது என்ற அச்சமும் அவர்களிடம் உண்டு. பொருளாதார ரீதியில் எவ்வித பயனுமற்ற இந்த நிர் வணிகளின் தாபரிப்பே அடிக்கடி ஏற்பட்டுள்ள சிங்கள அரசு களின் வீழ்ச்சிக்குக் காரணம், சிங்கள அரசர்களால் இவர்களை விலக்கி வைக்க முடியவில்லை. கிராமிய மட்டத்தில் நில வி வந்த அடிமை முறைகளின் தாபரிப்புக்கு இந்தப் புத்தபிக்குமாரையே அரசர்கள் நம்பி இருந்தனர்.
சிங்கள அரசர்களை இந்தச் சாந்த சொரூபிகள் சூழ்ந்திருந் தும் அவர்கள் கதை பரிதாபகரமானதாகவே இருக்கின்றது சூழ்ச் சிகளும் சதியும் கொலையும் நிறைந்து போய் விஜயன் காலத்தில் இருந்தே குருதியில் நீந்தி வந்திருக்கின்றனர்.
சிங்கள அரசியாகிய அனுலா தனது கணவன் குடாதிசாவை நஞ்சு கொடுத்துக் கொன்று தானே முடிசூட்டிக் கொள்கிருள். பின்பு தனது ஆசை நாயகர்களான ஐவரை ஒருவர் பின் ஒருவராக நஞ்சு கொடுத்துக் கொல்கிருள். பின்பு அவளது கட்டிலைப் பகிர்ந்து கொள்ள யாரும் முன் வராததால் நான்கு மாதங்கள் தனித்து ஆட்சியில் இருக்கின்ருள். கடைசியாக அவளை குடாதிசாவின் மகனே கொன்று ஆட்சியைக் கைப்பற்றுகிருன்.
‘ராஜ வலிய" என்னும் சிங்கள சரித்திர ஏட்டில் கி.பி. 52ல் இருந்து சிங்கள ஆட்சியாளரின் குத்துவெட்டுக்கள் பற்றிக் கூறப் '-டுகின்றது.
குமார தாதுசேனன் தன்னைத் தானே கொன்று விடுகிறன்" பதவி ஏறிய அவன் மகன் கீர்த்திசேனன் கொலை செய்யப்படுகின் முன். அவனைக் கொன்ற சாவாக்கா என்பவனைத் தாபுலால் என் பவன் கொன்று விடுகிறன் . தாபுலால் இரண்டு வருடங்களுக்குள் தற்கொலை செய்து கொள்கிறன். அவனுக்குப் பின் வந்த கீர்த்தி சிறியை கொலை செய்கின்றனர். அவனைப் போலவே சலகாதிசா வையும் புகாமுகலமையும் சிரச்சேதம் செய்கின்றனர். இலங்கை யில் இரத்தக் களரி ஒரு முடிவுக்கு வருவதாக இல்லை. கி.பி. 523 ஆம் ஆண்டில் இருந்து கி பி. 648 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் பதினன்கு அரசர்கள் அவர்களுக்கு அடுத்து பதவியேற் பவர்களால் கொல்லப்படுகிறர்கள். ராஜ வலியவின்படி அங்கு அடிக்கடி ஏற்பட்ட இரத்தக் களரியும் பதட்டமும் அமைதியர்ன
ல, 18

Page 77
38 லங்கா ராணி
சிங்களவர் பலரை அந்த நாட்டை விட்டு வெளியேற்றி இந்தியா வில் ஒரிசாவிலும் பீகாரிலும் சென்று குடியேற வைக்கின்றது.
கடந்த காலத்தில் தேர்தலின் பின் சிங்களவரின் பி ர தா ன கட்சிகளான ஐ. தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் மோதிக் கொள்ளும் வென்றவர்கள் அடித்து நொறுக்குவார்கள். கொள்ளை யடிப்பார்கள். பலர் கொல்லப்பட்டும் இருக்கின்றர்கள். இக்கல வரங்களின் உக்கிரமம் ஒவ்வொரு தேர்தலின் பின்னும் கூடிக் கொண்டே போய்க்கொண்டிருக்கின்றது.
கலவரம் தொடங்கி அகதிகள் முகாம்களில் ஏராளமான தமி ழர்கள் தஞ்சம் புகுந்திருந்தனர். பிரயாண வசதிகள் கிடையா தென தெரிந்தும் ஏராளமான அகதிகள் முகாமுக்குப் படை யெடுத்தனர். ی
'தமிழர்கள் மத்தியில் எனக்கும் உறவினர்கள் இருக்கின்ருர் கள். நான் அவர்களைப் போகவிடமாட்டேன்' என பிரதமர் அறிக்கைவிட்டார். அதை யாரும் பொருட்படுத்தியதாகத் தெரிய வில்லை. அதே நேரத்தில் புத்தபிக்குகளின் அறிக்கைகளில் சிங்கள அரசுகளின் உண்மையான தன்மையும் நோக்கும் வெளிப்படுத்தப் பட்டவை தமிழருக்கு நன்மையாய் அமைந்து பலரின் கண்களைத் திறந்துவிட்டிருந்தது.
எல்லாளனின் நீதி வழுவாத அரசைப் புகழாமல் விடமுடியா விட்டாலும் சிங்கள சரித்திர எழுத்தாளர்கள் தமிழர்களை நாச காரிகளாகவே எழுதி வைத்திருக்கின்றனர். தமிழர்களின் படை யெடுப்புகளைப்பற்றிப் பல விரிவான செய்திகளுண்டு. 7ஆம் நூற் ருண்டிலருந்து தமிழர் ஆதிக்கம் தவிர்க்க முடியாததொன்ருகி விடுகின்றது. அனுராதபுரத்தைத் தமிழர்கள் அடிக்கடி கைப் பற்றுகின்றனர். 8ஆம் நூற்ருண்டில் தமிழர்கள் ஒரேயடியாக அனுராதபுரத்தைக் கைப்பற்றுகின்றனர். சில காலங்களின் பின் பொலநறுவாவில் புதிய சிங்கள ராசதானி நிறுவப்படுகின்றது. அதையும் தமிழர்கள் தங்கள் ஆதிக்கத்தில் கொண்டு வருகின்ற னர். மாகன் என்பவனின் படைகள் இதைச் செய்கின்றன அவன் முடிசூடிக் கொள்கின்ருன் , பொலநறுவாவைத் தமிழர்கள் கைப் பற்றுவது பற்றி மகாவம்சத்தில் விபரமாகப் பிக்குராகுல இவ் வாறு குறிப்பிடுகிருர்.
"ஒரு கொடூரமான சுழற்காற்றைப் போன்ற இந்த மாகன்
என்பவன் தன் பலம் வாய்ந்த வீரர்களின் சேஞதிபதியாக வந்து இந்த லங்காவைக் காட்டுத்தீ போல் அழிக்கத் தொடங்கினுன்,

அருளர் 139
பின்பு கொடூரவாதிகள் அங்கும் இங்குமாகத் தாவி நாங்கள் சேர நாட்டு மறவர்கள் என்று கூறி அமைதியைக் குலைத்தனர். மக்க ளின் மாலைகளையும் அணிகலன்களையும் எல்லாவற்றையுமே பறித் தெடுத்தனர். வீடுகளை அழித்தனர். எருமைகளையும் மாடுகளையும் மற்றும் தாபரிப்புகளையும் பலவந்தமாகக் கட்டியிழுத்துப் போயி னர். செல்வந்தர்களைப் பிடித்து அவர்களேக் கயிற்ருல் பிணைத்து விட்டு அவர்களிடம் இருந்தவற்றைக் கொள்ளையடித்து வறுமை யாக்கினர். தங்குமடங்களையும் தாது கோபுரங்களையும் இடித்து நொறுக்கினர். விகாரைகளில் குடிபுகுந்து அங்கிருந்த சனங்களை தாக்கினர். மக்களை பாரங்கள் சுமக்க வைத்து வேலை வாங்கினர். பல அரிய நூல்களை அவற்றிற்கு உரிய இடங்களில் இருந்து எடுத்து இல்லாமல் செய்தனர். அந்த மகத்தான பாரிய தாதுகோபுரங் களையும் விட்டுவைக்கவில்லை. முழுவதையும் இடித்து அதிலிருந்த புத்தரின் புனித அங்கவஸ்துகளை ஒழித்துக்கட்டினர். இப்படியாக இந்தத்தமிழ் மறவர்கள் இராட்சியத்தையும் சமயத்தையும் அழித் தொழித்தனர். பின்பு அவர்கள் பொலநறுவா நகரத்தையும் எல் லாப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர். அரசன் பராக்கிரம பாகுவைப் பிடித்து அவனுடைய கண்களைப் பிடுங்கி, அங்கிருந்த எல்லாச் செல்வங்களையும் முத்துக்களையும் இரத்தினங்களையும் அள்ளிக்கொண்டனர்."
இவ்வாருன தமிழர்களைப் பற்றிய விவரங்கள் சிங்கள ஏடு களில் ஏராளம். ஆயினும் அந்த நாட்களில் பொய்வதந்திகளைப் பரப்பி, அப்பாவித் தமிழர்களைக் கொள்ளையடித்துக் கொலை செய்து கற்பழித்துவிட்டதாகச் செய்திகள் எதுவும் எழுதிவைத்த தாகத் தெரியவில்லை.
வடக்கில் இருந்த தமிழர் ஆட்சிபற்றி ராஜவலிய என்ற சிங்கள சரித்திர நூலில் இப்படியான குறிப்பு உள்ளது
"இலங்கைத் தமிழர்களின் அரசன் தனது ஆட்சியை வடக் கில் அமைத்து அங்கிருந்து முழு இலங்கைக்கும் கப்பம் வாங்கி வந்தான். திறமையான நிர்வாகம் நிலவித் தமிழர்களின் சிறப் பான வாழ்க்கையின் உறைவிடமாக அது திகழ்ந்தது"
தமிழரின் வடக்கு நோக்கிய பயணம் தொடர்ந்தது கப்பல் திருகோணமலையை அண்மித்துக்கொண்டிருந்தது.
16 ஆம் நூற்றண்டில் ஏற்பட்ட போத்துக்கீயர் காலத்திலும் அதற்குப் பின்பு வந்த ஒல்லாந்தர் காலத்திலும் இலங்கையில்

Page 78
லங்கா ராணி 140
தமிழராட்சி, சிங்கள ரட்சி என வெவ்வேருண ஆட்சிகள் நடை பெற்றன. அதற்குப் பின்பு வந்த ஆங்கிலேயர் காலத்தில்தான் 1813 ஆம் ஆண்டில் அவர்கள் தங்களது ஆதிக்கச் செருக்கினலும் சுரண்டல் நலன்களுக்காகவும் இரு நாடுகளுக்கும் இடையிலிருந்த எல்லையை நீக்கிவிட்டு இரண்டையும் இணைத்து விடுகின்றனர்.

11
கப்பலின் மேல்தளத்தில் எவரும் தென்படவில்லை. இரவு 11 மணிக்க மேலாகப் பேய்விட்டிருந்தது. கீழ் த் தள த் தி ல் இளைஞர்கள் பலர் கூடி நாளேய ஒழுங்குமுறைகளை விவாதித்துக் கொண்டிருந்தனர். இதற்குக் குமார் பல தொண்டர்களின் பெயர்களைத் திரட்டி ஒவ்வொருவருக்குமாக அவர்களிடம் வெவ் வேறு பொறுப்புக்களைப் பிரித்துவிட்டிருந்தான். யாழ்ப்பாணத் தில் உறவினர்கள் இல்லாததால் அகதிகள் முகாம்களில் தங்க வேண்டியவர்களின் பெயர் விபரங்களையும் சேகரிக்கும்படி கட்டளை யிட்டான்.
கப்பலின் மேல்தளத்தில் ஒரு பகுதியில் சரவணன் தனித்து நின்றுகொண்டிருந்தான். அவனுடைய சிந்தனைகள் முற்றிலும் வேருன விடயங்களிலேயே சென்றுகொண்டிருந்தது. மேல்தளத் தில் வேறு எவரும் தென்படவில்லை. சரவணன் ராணியின் வரவை எதிர்பார்த்துக்கொண்டு நின்றன் கப்பல் திருகோணமலையை அண்மித்துக்கொண்டிருந்தபடியால் அவனது சிந்தனைகள் மேலும் தீவிரமடைந்திருந்தன. அன்று மாலை ஒலிபரப்பப்பட்ட செய்தி யில் நாட்டின் மற்றைய பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் தளர்த் தப்பட்டிருந்தாலும் திருகோணமலையில் மட்டும் மாலை ஆறு மணியிலிருந்து காலை ஆறு மணிவரை அமுலில் இருக்குமென்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதிலிருந்து அங்கே ப த ட் ட நிலை தொடர்ந்து நீடித்து வருவது தெரிந்தது.
திருகோணமலை இன்று தமிழருடைய பூமி என்று அழைக்கப் படும் பிரதேசத்தின் மத்தியில் உள்ளது. அதுமட்டுமல்ல; இது இந்து சமுத்திரத்தின் மத்தியிலும் அமைந்துள்ளது. இதன் தொன்மையும் சிறப்பும் உலகறிந்ததொன்ருகும். இலங்கையிலுள்ள

Page 79
742 Gviágsfru frøðss)
தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களுக்குள் திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வரமும் ஒன்று. இது விஜயன் வருகைக்கு மூன்பே சிறப்புற்று விளங்கியது. இதுபற்றி ரென்னட் என்ற ஆங்கில அறிஞர் 'திருகோணமலை மிகப் பழமை வாய்ந்த இட மெனினும் அரசியலிலும் பார்க்க சமயத் தொடர்புகளினலேயே தன் பழம் பெருமையைப் பெற்றுள்ளது" எனக்குறிப்பிட்டுள்ளார் மேலும் “படையெடுத்த மலபார் இனத்தவர்கள் தமது வழி பாட்டுக்குரிய பெயர் பெற்ற தலங்களில் ஒன்ருக இதனைக் கருது கின்றனர். இன்று சுவாமிமலையென்று கூறப்படும் உச்சப்பகுதியில் ஒரு பெரும் கோபுரம் இருந்தது. அத்துடன் இந் தி யா வின் எல்லாப் பகுதிகளிலும் இருந்து வந்த யாத்திரீகர்கள் தங்குவதற்கு ஏற்ற மடமும் இன்றைய பிரெட்ரிக் கோட்டையில் இருந்தது. இக் கோட்டையில் மிகப் புகழ்பெற்ற ஆயிரங்கால் மண்டபமும் இருந்தது. இதையொட்டிச் சுவையான மரபுவழிக் கதைகளைத் தமிழர்கள் கூறுவார்கள்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை குன்றுகள் நிறைந்த இயற்கை அர ண் கொண்ட ஒரு சிறந்த துறைமுகமாக விளங்குகிறது. இத்துறை முகத்தின் சிறப்பை நன்கு உணர்ந்த ஆங்கிலேயர்கள் 1795 இல் திருகோணமலையைத் தாக்கி அதனை ஒல்லாந்தரிடமிருந்து சைப் பற்றுகின்றனர். இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்காசியா, இந்து சமுத்திரம் ஆகியவற்றில் தங்களுடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்த திருகோணமலைத் துறைமுகத்தை ஒரு அடித்தளமாக அமைத்து 1958 ஆம் ஆண்டு வரைச் செயல்பட்டு வந்தனர்.
1956 இல் பண்டர்ரநாயக்கா திருகோணமலைத் துறைமுகத் தைத் தேசிய மயமாக்கி ஆங்கிலேயரை அங்கிருந்து வெளியேற் றிஞர். முழு இலங்கைத் தீவும் தங்கள் காலடியில் கிடப்ப தாகவே கருதி ஆதிக்க வெறியுடன் வெளிநாட்டு ஏகாதிபத்திய வாதிகளுடன் பேரம் பேசி நாட்டைவிற்று வெளிநாட்டு வங்கி களில் தங்கள் செல்வங்களைப் பெருக்கிக்கொள்ளப் பழ கி க் கொண்ட சிங்களத் தலைவர்கள் திருகோணமலையின் தரத்தை உணராமல் இருக்கவில்லை.
இலங்கை அரசின் தமிழர் ஒழிப்பு நடவடிக்கைகள் பலவழிகளில் நடைபெற்றுவருகின்றன. முதலாவது தமிழர்களில் பெரும்பான் மையினருக்குக் குடியுரிமை இல்லாமல் செய்தது; இரண்டாவது மலைத் தோட்டங்களில் உள்ள தமிழர்களை நசுக்கிப் பிழிந்து கொடு மைகளுக்கு உட்படுத்துவது, அங்கிருந்து அவர்களை விரட்டுவது: மூன்ருவது வடக்குக் கிழக்குப் பகுதிகளில் எவ்வித பொருளாதார

அருளர் l43
வளர்ச்சித் திட்டங்களையும் உருவாக்காமல் அப் பகுதிகளைப் புறக் கணிப்பது; தமிழ் மொழிக்கு எவ்வித உரிமைகளையும் வழங்காமல் விடுவது, தமிழர்களுக்கு உயர்கல்வியையும் வேலைவாய்ப்புகளையும் இல்லாமல் செய்வது, தமிழ்ப் பகுதிகளில் சிங்க ள வர் களைக் கொண்டுபோய்க் குடியேற்றித் தமிழர்களைச் சிறுபான்மையின ராக்கிப் பாராளுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அபகரித்து நாளடைவில் அப் பகுதிகளைச் சிங்களப் பிரதேசமாக மாற்றிவிடுவது. இந் நிலையில் சகல விதத்திலும் சிறப்பு வாய்த்த திருகோணமலையையே சிங்கள அரசியல்வாதிகள் முதலில் முற் றுகையிட்டனர் இதைத் தமிழர்களிடம் இருந்து பறித்துவிட்டால் தமிழர்களுடைய பிரதேசத்தையும் வடக்குக் கிழக்காகப் பிரித்து விடலாம் என்ற எண்ணமும் அவர்கள் மனதில் இருந்தது. முத லில் புத்த பிக்குமார் வந்து அங்கேயிருந்த அரசமரங்களைப் புத்த கோயில்களாக்கினர். பின்பு அரசாங்கம் குடியேற்றத் திட்டங் களை உருவாக்கி அங்கு சிங்ளவர்களைக் குடியேற்றியது. கடற் படை, இராணுவம், விமானப்படை ஆகியவற்றின் த ள ங் கள் அமைக்கப்பட்டு அங்கு சிங்களவர்கள் குடியேறினார்.
இலங்கையின் மிக நீண்ட ஆருண மகாவலிகங்கை திருகோண மலைக் கடலில் வந்து விழுந்து சங்கமமாகிறது. இது திருகோண மலைக் குடாவில் பல கிளைகளாகப் பிரிந்து ஊடறுத்துச் சென்று அதனைப் பல படுகைகளாகப் பிரிக்கிறது. இதனல் போக்கு வரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதில் பலவிதமான க ஷ் டங்க ள் இருப்பதால் மக்கள் மத்தியில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள் வதிலும் பல சிரமங்கள் உள்ளன. இந்நிலையை அரசு சிங்களவர் களைக் குடியேற்றும் திட்டத்திற்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகிறது. குடியேற்றத் திட்டங்களுடன் போக்குவரத்து வசதி களும் ஏற்படுத்தப்படுகின்றன. கடந்த பொதுத் தேர்தலில் திரு கோணமலையைச்சுற்றி வளைத்துச் சேருவாவில என்ற புதிய தேர் தல் தொகுதி உருவாக்கப்பட்டது. இதில் ஒரு சிங்களப் பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அங்கு தொடர்ந்து குடியேற்றங் கள் ஏற்படுத்தப்படுகின்றன. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் னர் ஒரு சிங்களவர் கூட இல்லாமல் இருந்த திருகோணமலையில் இன்றைக்கு ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட சிங்களவர் இருக்கி மூர்கள். முற்றிலும் ஆக்கிரமிப்பு எண்ணத்துடனேயே இவர்கள் குடியேற்றப்பட்டிருக்கிருர்கள்.
1956 இல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநில மாநாடு திருகோணமலையில் நடைபெற்றது அங்கு இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழர்கள் வந்து திரண்டனர். இதைக் கண்ட

Page 80
14 f. லங்கா ராணி
அன்றைய பிரதமர் பண்டாரநாயக்கா தமிழ்த் தலைவர்களுடன் ஒப்பந்தம் செய்ய முன்வந்தார். இந்த ஒப்பந்தம் பின்னர் நடை முறைக்கு வரவே இல்லை. இதில் சிங்களவர்களின் குடியேற்றத் தைத் தடுப்பதற்குப் பண்டாரநாயக்கா ஒப்புக்கொண்டிருந்தார்.
கலவர நேரங்களில் இங்குள்ள தமிழர்களும் பாதிக்கப்படு வார்கள். 1958 ஆம் ஆண்டில் நடைபெற்ற இனக் கலவரத்தின் போது திருகோணமலையை அடுத்த கந்தளாய் எ ன் னு ம் குடி யேற்றத் திட்டத்தில் பல தமிழர்கள் கொல்லப்பட்டனர். இங்கு கலவர நேரங்களில் பொலிசாரும் இராணுவத்தினரும் சிங்கள ர்ெசளுடன் சேர்ந்துகொண்டு தமிழர்களைத் தாக்குவார்கள். தமி ழர்களும் இங்கு எதிர்த் தாக்குதல் நடத்துவார்கள்.
கப்பலின் கீழ்த்தளத்தில் ஒரு சிலரே இன்னமும் விழித்திருந் தனர். சரவணன் மாத்திரம் மேல் தளத்தில் அங்குமிங்குமாக நடந்துகொண்டிருந்தான். அவனது இடுப்பில் கைத் துப்பாக்கி இருந்தது. இதை அவன் பல காலமாகவே இடுப்பில் வைத்துக் கொண்டு திரிவது வழக்கம். எதையும் ஆயுதம் எடுக்காமலும் இரத்தம் சிந்தாமலும் சாதிக்க முடியும் என்ற அகிம்சைத் தத்து வத்தை முன்வைத்துப் போராடலாம் என்ற கூற்றில் அவனுக்குச் சந்தேகம் கிளம்பியிருந்தது. ஏகாதிபத்தியவாதிகளைக் காந்தியடி கள் அகிம்சையால் வென்முர் என்றும் அம்முறையே சிறந்த போராட்ட முறையென்றும் இலங்கையில் தலைவர்கள் கூறுவதில் சரவணனுக்கு ஐயம் ஏற்பட்டிருந்தது. இந்திய மக்கள் ஆங்கிலேய ரின் ஆதிக்க வெறிப் போக்கையும் சுரண்டல் தன் மை யை யும் உணர்ந்து அவர்களைத் தூக்கி எறிவதைவிட வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தபின் படை பட்டாளங்களைத் திரட்டி அவர் களின் தார்ப்பரியங்களைத் தகர்த்தெறியத் தொடங்கியதும் அவற்றிற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆங்கிலேயர் விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப் போல நாங்கள் அகிம் சைக்கு அடிபணிந்து போகிருேமென்று கூறி இந்தக் காந்தியைக் கண்டுபிடித்து ஆட்சியை ஒப்படைத்துவிட்டு தப்பினுேம் பிழைத் தோம் என்று ஓடிவிட்டிருக்கலாமென்று சரவணன் தன்னுடைய நண்பர்களுடன் வாதிடுவதுண்டு. உண்மை பில் போராடியது வேறு யாரோ என்றும் அவர்கள் அடிபணிந்து போ ன த ரீ க க் கூறிக் கொள்ளும் இந்த அகிம்சைக்குப் புத்தகம் வெளியிட்டு விளம் பரப்படுத்திப் புனித உருவம் கொடுத்துத் தங்கள் பெருந்தன் மையை இழந்து போகாமல் பார்த்துக் கொண்டார்கள் என்றும் சரவணன் வாதிடுவான். இந்த அகிம்சையில் எதுவும் இல்லை என்

அருளர் 45
பான் சரவணன். நாட்டின் முன்னேற்றத்திற்குச் சகல வழிகளி லும் தடங்கலாக இருக்கும் பழமை நிலைகளில் ஊறிப்போனவர் களும் தங்கள் இயலாமையை மறைக்க முயல்பவர்களும், போராட் டத்தில் தங்கள் நிலைகளுக்கு என்ன கெடுதி வருமோ என்று எண் ணிப் பார்த்து நடுங்குபவர்களும் சாய்வு நாற்காலியில் இருந்து கொண்டு போராட்டத்தை ஆரம்பித்து வெற்றிபெற்று விட லாம் என்று மனப்பால் குடிப்பவர்களும் இந்த அகிம்சையைப்
போதிக்கிறர்கள் என்று அவன் அடிக்கடி கூறுவான். ஆதிக் க
வெறிபிடித்தவர்கள் அகிம்சையின் நெறிகளை எப்பொழுதும் விளங் கிக் கொள்ளமாட்டார்கள் என்பதையும் அவன் விளக்குவான்.
சரவணன் இந்தக் கலவரத்தை முற்றிலும் எதிர்பார்க்காமல் இருந்தவனல்ல. ஆயினும் மலைநாட்டில் நடைபெற்றிருந்த சம்பவங் கள் அவ%னக் கதிகலக்கி விட்டிருந்தன. அடிக்கடி அகதிகள் முகா முக்குச் செய்திகள் வரும். அவனுக்கு இவற்றைக் கேட்கும்போது கைகள் விறுவிறுக்கும்.
f மலையகத்தில் ஏராளமான தமிழர்கள் கொலை செய்யப் பட் டிருந்தனர். தமிழ்த்தாய்மார்கள் மிகவும் கொடூரமான முறை யில் துன்புறுத்தப்பட்டிருந்தனர்; கற்பழிக்கப்பட்டனர். தமிழர்க ளாகப் பிறந்த ஒரே காரணத்திற்காகச் சின்னஞ்சிறிய குழந்தை சுள் கூட ஈவிரக்கமின்றி வெட்டிக் கொல்லப்பட்டனர்; தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர். எத்தனையோ குடும்பங்கள் வீட்டுக்குள் ளேயே சிறை வைக்கப்பட்டு தீச் கிரையாக்கப்பட்டுள்ளன. தோட் டங்களில் லயன்கள் எனப்படுகின்ற அந்த ஒரு சிறிய அறைத் தொட்டிகளையும் கொள்ளையடித்துத் தீயிட்டுக் கொளுத்தியிருக் கிறர்கள். தாய்மார்கள் குழந்தைகளோடு கொடிய காடுகளில் தஞ்சம் புகுந்து பல நாட்கள் பட்டினியால் வாடியிருக்கின்றனர். சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய பொலிசாரோ, படைகளோ அவதிப்படுபவர்களுக்கு உதவவில்லை மாருக பொலிசாரும் படை களும் முன்னின்று வன்செயல்களுக்கு உடந்தையாக இருந்திருக் கிருர்கள்.
இலங்கை வருமானத்தின் அறுபது சதவீதம் தேயிலையில் இருந்து வருகிறது. இந்தத் தேயிலைத் தோட்டங்களை ஏற்படுத்தி யது மலையகத் தமிழர்களின் உழைப்பேயாகும். மலைக் காடுகளை அழித்துப் பண்படுத்தி அவற்றைத் தோட்டங்களாக்கி அதில்
f
ல 19

Page 81
146 லங்க்ா ராணி
தேயிலைச் செடியைப் பயிரிட்டு வளர்த்து அவற்றை ஏற்றுமதி செய்ய உழைப்பவர்கள் தமிழர்களே. இந்தத் தேயிலைத் தோட் டங்களைச் சென்றடைவதற்கு வீதிகள் அமைத்து, மலைகளைப் பிளந் தும் குடைந்தும் புகையிரதப் பாதைகளை உருவாக்கியவர்சள் தமிழர்களே.
மலையகத்தில்இன்று தமிழர்கள் வாழும் பகுதிகள் அன்று காடுக ளாகவே கிடந்தன. இதிலும் கிழக்குப் பகுதிகள் வே ட ர் கள் வாழும் நிலங்களாக இருந்தன. இன்றும் இந்தக் கா டு களி ல் வேடர்கள் வாழ்கின்றனர். மகாவலி கங்கைக்கு கிழக்கே உள்ள மகியங்கனேயில் வேடுவர் தலைவன் திசகாமி வாழ்கிருன். தேர்தல் காலங்களில் சிங்களத் தலைவர்கள் மகாவலி கங்கையைத் தாண்டி, கிழக்குப் பகுதிக்கு வநது வேடுவர் தலைவனை திசகாமியுடன் நின்று படம் எடுததுக் கொள்வார்கள். திசகாமி, கோவணத்து டன் தோளில் கோடரியுடன் நிற்பான். இந்தப் படங்கள் அடுத்த நாள் காலையில் இலங்கைப் பததிரிகைகளில் முதல் பக்கத் தி ல் போடப்பட்டிருக்கும். யாழ்ப்பாண மன்னர்கள் காலத்தில் வேடர் கள் வாழும் விந்தனைப் பகுதி தமிழர்களுடைய வாழ்விடமாக இருந்தது. அங்கு வாழ்ந்த வேடர்களின் தலைவர்கள் பழுங்காமை வன்னிமைக்கு திறை செலுத்தி வந்தனர். வேடர்கள் த மி பூழ் பேசக்கூடியவர்களாக இருந்தனர்.
மகாவலி கங்கை ஆறு பதுளை, பண்டாரவளை, அ ப் புத்தளை போன்ற மலநாட்டுப் பகுதிகளைப் பிரித்துக் கிழக்கு மாகாணத் துடன் இணைக்கிறது. இதற்கு மேற்கேயும் தமிழர்கள் அதிகமாக வாழும் மலைநாட்டின் கீழ்ப்பகுதிகளான நுவரெலியா, மஸ்க் கெலியா, அட்டன், தலவாக்கொல்லை போன்ற இடங்கள் இருக் கின்றன. இவற்றிற்கு இயற்கை அரணுக மலைகள் உள்ளன. நுவ ரெலியாவில் இராவணன் சீதையைச் சிறை வைத்திருநத அசோக வனம் உள்ளதாகக் கூறுவார்கள். தமிழர்கள் பெரும்பான்மை யாக வாழும் இந்தப் பகுதியில் கலவர அசம்பr விதங்கள் அதிகம் இருககவில்ல. இங்கு தோட்டங்களில் நுழைந்த சிங்களவர்களைத் தமிழர்கள் விரட்டியடித்திருக்கிருர்கள்.
கடந்த அரசாங்கம் தோட்டங்களைத் தேசிய மயமாக்குகிருேம் என்று கூறி அவற்றைத் தங்கள் குடும்ப ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு வந்து அங்கிருந்த தமிழ்த் தொழிலாளர்களை விரட்டித் தெருவில் விட்டுவிட்டுத் தோட்டங்களைப் பிரித்துச் சிங்களவருக் குக் கொடுத்தது. இதனல் ஏராளமான தமிழ்த் தொழிலாளர்கள்

அருளர் - A7
தெருவிலேயே நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலை பல உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருந்தது. இதனுல் இலங்கை யின் தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. சிங்களவர்கள் குடி யேற்றப்பட்ட தோட்டங்களிலேயே அவர்கள் தமிழர்களைத் தாக் கினர். இவர்களுடன் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வந்த சிங்களக் காடையர்களும் சேர்ந்துகொண்டனர்.
கண்டியில் லோபகாமம் தோட்டத்தில் 16வயது தமிழ் மங்கை யொருத்தி கற்பழிக்கப்பட்டாள். தெல்தெனியாவில் 9 கடைகள் கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்பட்டன. கிரிமிட்டிய தோட்டத் தில் வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டன. மாபெரி, மாகந்தை, கழு காமம் முதலிய தோட்டங்களில் அங்கு வேலை பார்க்கும் சிங்கள வர்கள் தமிழர்களைத் தாக்கினூர்கள். தாக்குதலின்போது தப்பிஓடி யவர்களில் வள்ளி எனப்படும் வள்ளியம்மாளும் ஒருவர். அடுத்த வீட்டுப் பிள்ளையையும் தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிருள். அவளைக் காடையர்கள் விரட்டிப் பிடித்துக் கற்பழித்து முலைகளை அறுந்து அவள் உடலை வெட்டித் தள்ளியிருக்கிறர்கள்.
தம்புள்ள பகுதியில் 300 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. வத்துகாமத்தில் 50 கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன. பலர் உயிரோடு எரிக்கப்பட்டனர். தமிழர்கள் எதிர்த் தாக்குதல் நடத் தினுல் காடையர்களின் எண்ணிக்கை ஆயிரமாகக் கூடிவிடும். கம் பளையில் தெமிகச தோட்டத்தில் சுமார் 70 தொழிலாளரின் வீடு கள் கொள்ளையடிக்கப்பட்டுத் தீயிடப்பட்டன. கலபீலித் தோட் டத்தில் 16 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. ஆடுகள் மாடுகள் யாவும் கொள்ளையடிக்கப்பட்டன. அலபத்துக்கொடையிலுள்ள கந்தையா துரைராசா என்பவருக்குச் சொந்தமான தோட்டத் தில் சுமார் 70 காடையர்கள் புகுந்து லயன்களைக் கொள்ளை யடித்துத் தொழிற்சாலைகளை நாசமாக்கி அங்கிருந்த எல்லாவற் றையும் திருடிச்சென்றனர். கடுகண்ணுவ அண்டியத்தனை தோட் டத்தில் 5 வீடுகள் முற்ருக எரிக்கப்பட்டன. ஒரு சேலையைக் கிழித்து இருவர் அணிந்து கொண்டனர். குண்டகசாலைப் பண் ணையில் 40 குடும்பங்கள் அகதிகளாக்கப்பட்டன. அவர்களுடைய உடமைகள் யாவும் கொள்ளையடிக்கப்பட்டன. ஹோமகமயில் 23 குடும்பங்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
வழக்கமாகச் சிங்களத் தலைவர்களேச் சுற்றியிருக்கும் காடை யர்களே இந்தக் கொள்ளைக் கூட்டங்களுக்கு தலைமை வகித்தனர். இந்தச் சிங்கள அரசியல்வாதிகளில் அநேசம் பேர் கல்வியறிவு அற்றவர்கள். தமிழர்களின் வாழ்க்கையைப் பறித்து சிங்களவர்

Page 82
贾4母 avriü5nt grrrayo)
களிடம் கொடுத்தால் சிங்களவர்களுடைய பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று கருதுபவர்கள் இவர்கள். இது தான் சோஷலிசம் எனக் கூறுபவர்களுமுண்டு தங்களைத் தெரிவு செய்து அனுப்பிய சிங்கள மக்களுக்கு இவர்கள் அளிக்கும் பொருளாதாரத் திட்டம் இதுதான். பொல்கொல நெசவு ஆலை யில் கழிவுப்பொருட்கள் வாங்கி விற்கும் மைக்கல் யோசேப்பு என்பவரை ஆலையில் நின்ற சிங்களவர்கள் **நீ தமிழனு" என்று கேட்டு தாக்கிவிட்டு மகாவலி கங்கையில் தூக்கிப் போட்டனர். அவர் ஒருவாறு உயிர்தப்பி ஓடி வீட்டுக்கு வந்தபோது அங்கு அவருடைய மனைவி கற்பழிக்கப்பட்டுக் கிடந்தாள்.
கோட்டாகொட என்ற இடத்தில் பெரியண்ணன் பிள்ளை இராமசாமிப்பிள்ளை என்பவரின் வீட்டில் 30 அல்லது 35 காடை யர்கள் புகுந்து கொள்ளையடித்துவிட்டு அவரது 6 பெண்பிள்ளை களையும் மாறிமாறிக் கற்பழித்துவிட்டுச் சென்றனர். இவர்களுள் பருவமடையாத 12 வயதுப் பெண்ணும் ஒருத்தி.
சங்கால சின்னத்தோட்டத்தைச் சேர்த்த 4 மாதக் கர்ப்பிணி யான தெய்வானை மாரிமுத்து என்பவரை 6 பேர் மாறிமாறிக் கற்பழித்தனர். மயக்கம் தெளிந்து பார்த்தபோது கணவனின் தாயார் பக்கத்திலிருந்தார்.
மானம் ஒன்றே பெரிதென வாழும் தமிழ்ப்பெண்கள் சிங்கள வெறியர்களினல் மலையகத்தில் மிலேச்சத்தனமான முறையில் கற்பழிக்கப்பட்ட சம்பவங்கள் ஏராளம், கேகால அம்பன் பிட்டிய தோட்டத்தில் 30 வயது நிரம்பிய மூன்று பிள்ளைகளின் தாயான பிலிப் செபமாலை கற்பழிக்கப்பட்டாள்.
வடக்கில் தமிழர்களின் படையெடுப்புக்களுக்குத் தாக்குப் பிடிக்கமுடியாத சிங்களவர்கள் படிப்படியாக மலைகளில் ஏறத் தொடங்கினர். ஆங்கிலேயர் 1815 இல் கண்டியைத் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர். அங்கு அரசனுக இருந்த தமிழ் மன்னஞன விக்கிரமராஜசிங்கன் சிறைப் பிடிக்கப்பட்டுத் தமிழ் தாட்டிலுள்ள வேலூருக்கு நாடு கடத்தப்பட்டான்.
மாத்தளை, அவிசாவளை, ரக்குவான, பன்வில, காவத்தை, பொகவந்தலாவ, எவாகெட்ட, பிந்துல போன்ற பகுதிகளில் வன்செயல்கள் ஏராளம். கண்டியில் இந்தியத் தூதரகத்திற்குப் பாஸ்போர்ட் எடுக்க வந்தவர்கள் தாக்கப்பட்டனர். இந்தியத் தூதரகம் யாருக்கோ வந்த விருந்தென சும்மா இருந்துவிட்டது

for it 斑49
இந்திய தூதரகத்தைச் சேர்ந்த சோமசுந்தர அய்யர் குடும்பத் தோடு தாக்கப்பட்டார். அவருடைய மனைவியின் தாலியும் பறிக்கப்பட்டது. அவருக்கும் பலமான தாக்குதல் நடைபெற்றது.
முன்னைய அரசாங்கத்தின் கொடுமைகள் காரணமாகத் தோட்டங்களிலிருந்து வெளியேறியவர்கள் பலர் வடபகுதிக்குப் பிரதானமாக வன்னிப்பகுதிக்குச் சென்றனர். அது தமிழருடைய பூமி, வறண்ட பூமி. இங்கு வாழும் மக்களில் அநேகம் பேர் குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்தவர்கள். காடுகளில் தேன் எடுத்தல் மிருகங்களை வேட்டையாடுதல் போன்றவற்றை விரும்பிச் செய் பவர்கள். இந்த நாட்களில் வடக்கிலிருந்து வருபவர்கள் காடுகளை வெட்டி உளுந்து, பயறு போன்ற மேட்டுநிலப் பயிர்களை அங்கு பயிரிடுகிருர்கள். ம%லநாட்டிலிருந்து வருபவர்கள் இவர்களை நம் பியே இருக்கவேண் 17 ய நிலை. இவர்கள் மலைநாட்டிலிருந்து வரு பவர்களாகையால் இவர்களுடைய பேச்சுவழக்குகளில் பல வித்தி யாசங்கள் இருக்கும். வன்னியர்களுக்குக் காடுகளை வெட்டி அழிப் பது பிடிக்காது. வடக்கிலிருந்து வருபவர்களிடம் பணம் அதிகம் இருக்காது. இவர்கள் தாங்கள் போவதற்கே வழி தெரியாதவர் கள். இதனுல் எல்லோரும் ஒன்றுடன் ஒன்ருய் முட்டி மோதிக் கொண்டு கிடப்பார்கள். இந்தக் குட்டையில் மீன் பிடிக்கவரும் அரசியல்வாதிகள் ஏராளம்.
ஆனல் அங்கு தமிழர்கள் வந்து குடியேறி வாழவேண்டுமென் பதில் யாருக்கும் அபிப்பிராய பேதம் இருக்காது தமிழர்கள் அங்கு வந்து சேரக்கூடாது என்பதற்காக அரசாங்கம் பல வழிக ளிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கும். பல தடைச்சட்டங்களைப் போடுவார்கள். மக்களைத் துன்புறுத்துவார்கள். அரசாங்க உதவி கள் எதுவும் கொடுக்கமாட்டர்ர்கள். இங்கு தமிழர்கள் திட்ட மிட்டு ஏதும் செய்வதற்கு அவர்கள் கையில் அதிகாரம் எதுவும் இல்லை.
மலையகத்தில் சுமார் 50, 000க்கும் அதிகமான தமிழர்கள் அகதிகளாகி அங்கிருந்த முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். இவர் களை அகதிகள் முகாம்களில் சேர்ப்பதற்கு இராணுவத்தினர் உதவி புரிந்தனர்.
ராணி மலையகத்தில் பிறந்து வளர்ந்தவள். சரவணன் அவளை அகதிகள் முகாமில் சந்தித்திருந்தான். கப்பலில் தமிழர்களிடம் உள்ள துப்பாக்கிகளைப் பற்றி விசாரித்துக் கூறுமாறு ராணியைக் கேட்டிருந்தான். ராணியும் அங்குள்ள குடும்பங்களை அணுகிப்

Page 83
10 øvršesnt irrt 337?)
பெண்களைப் பிடித்துக்கொள்வாள். கலவரத்தில் அவர்களுடைய அனுபவங்கள்பற்றிக் கேட்பாள். கேட்கும்போது துப்பாக்கி வைத்திருப்பவர்களுடைய அனுபவங்கள் வித்தியாசமானதாக இருக்கும்; பிடித்துக்கொள்வாள். அவற்றைப்பற்றிய விபரங்களைக் கேட்பாள். எங்கே வைக்கப்பட்டிருக்கின்றன என்று அறிந்து கொள்வாள். சரவணனும் ஓரளவு யார் யாரிடம் இவை இருக் குமென்று கூறியிருந்தான்.
ராணி படிகளில் ஏறி மேல் தளத்திற்கு வந்தாள். 9 []് ബഞ് ஓம் அவளைக் கண்டு கொண்டான். நேரம் இரவு பதினுெரு மணியைத் தாண்டி விட்டது.
“என்ன, ரொம்ப நேரமா காத்துகிட்டு நிக்கிறீங்களா" என்ற ராணியிடம் "ஆமாம் காலையிலிருந்தே நிற்கிறேன்" என்று கூறி விட்டு "வாருங்கள் முன் பக்கத் தளத்திற்குப் போவோம்" என்றவாறே அவளை அழைத்துக்கொண்டு நடந்தான். சரவணன் ராணியை முதன்முதலில் அகதிகள் முகாமில் சந்தித்தபோதே அவளை அவனுக்குச் சகல விதத்திலும் பிடித்துவிட்டிருந்தது. அவளுடைய கருத்த மேனியும் எழிலான அவளது ந  ைட யும் வனப்பும் அழகான முகமும் அவனைக் கவர்ந்திருந்தன. அவள் ஒரு சிவப்புச் சேலையணிந்து வெள்ளை ரவிக்கை அணிந்திருந்தாள் அந்தச் சேலையிலும் வெள்ளைப் பூக்கள் பதிக்கப்பட்டிருந்தன.
சரவணன் மலையகத்திற்குச் சென்றதே கிடையாது.
சிறு வயதில் தாய் மலையகத்தைப்பற்றி அவனுக்குக் கதைகள் சொல்லுவாள். அவனுடைய மாமனுக்கு அங்குள்ள தோட்டமொன்றில் யாரோ வேலை எடுத்துக் கொடுத்தார்களாம். அவர் வீட்டில் சும்மா இருந்தவராம். அங்கு வெள்ளைக்காரன்தான் முதலாளியாம்; ஒரு நாள் அந்த வெள்ளைக்கார மு த லா வளி சரவணனுடைய மாமனைக் கூப்பிட்டு நீ எதுவும் படிப்பிக்கக் கூடாது. உனது வேலை போய்விடும், நீ படிப்பித்தால் இங்கு ஒருவரும் வேலை செய்ய மாட்டார்கள் என்று கூறிவிட்டானம். அதற்குப் பின் இவர் காலுக்கு மேல் கால் போட்டுக்கொண்டு சும்மா இருந்துவிட்டாராம். மலைத்தமிழரில் ஒருசிலர் படித் திருந்தும் அவர்கள் கடை போடப் போய் விட்டதால் அவர் களுக்குச் சொல்லிக் கொடுக்க வேறு யாரும் இருக்கவில்லையாம்,
மலைத் தமிழர்கள் அங்கு வசிக்கிருர்கள். அங்கு சந்தானம் என்று ஒருவர் இருந்தாராம். அவரும் தோட்டத்தில் வே ஃ)

அருள்ர் 5 t
பார்த்து வந்தாராம். அவர் படித்தவராம். மற்றவர்கள் அவரி டம் உதவிக்குப் போவார்களாம். அவருக்குத்தான் வெள்ளைக் கார முதலாளியுடன் பேசத் தெரியுமாம். இதனுல் எல்லோரும் அவரிடம் போவார்களாம். சந்தானத்திடம் கொஞ்சம் பணம் இருந்ததாம். தோட்டத்தில் இன்னுெருவனுக்கும் பெயர் சந்தான மாம். அவன் தெருவில் கிடப்பாளும். இதனுல் எல்லோருக்கும் உதவும் சந்தானத்தை சந்தானம் 1.1ணக்காரர் ஆகவே சந்தாப்11ணக்காரர் என்று அழைப்பார்களாம்.
சிலநாட்களில் மலைத்தமிழரின் பிரச்சினைகளும் சந்தாப்பணக் காரரின் பிரச்சினைகளும் ஒன்முசப் போய்விட்டனவாம். மலைத் தமிழரின் பிரச்சினைகளை வளர்த்தால்தான் தான் வளரமுடியும் என்ற நிலை வந்துவிட்டதால் மலைத்தமிழரின் பி ர ச் சினை களை வளர்த்து வளர்த்துத் தானும் தன்னை வளர்த்துக் கொண்டா ՄITLD ,
சந்தாப்பணக்காரரிடம் எல்லோரும் உதவிக்குப் போகப் போக அவர் வீட்டில் இடமில்லாமல் போய்விட்டதாம். இதனுல் வருபவர்களை இவரது வீட்டைச் சுற்றி நிற்கும் மரங்களின் கீழே நிற்கும்படி கூறினர்களாம். சந்தாப்பணக்கார முதலாளியின் வீடும் மலையுச்சியில் இருந்ததாம். அது வேறு மலையாம். அங்கு யாரும் போவதில்லையாம். சந்தாப் பணக்காரருடைய விட்டுக் கும் வெள்ளைக்கார முதலாளியின் வீட்டுக்கும் தந்திக் கம் பி போடப்பட்டிருந்ததாம். சந்தாப்டனக்காரரிடம் உதவி கேட்டு வேறு தோட்டங்களிலுமிருந்து ஆட்கள் வருவார்களாம். இதனுல் மலையடிவாரத்தில் கயிற்றைச் சுற்றி வளை த் துக் கட்டிவிட்டு அதற்கு அந்தப்பக்கம் எல்லோரையும் நிற்கவிட்டார்களாம். சந்தாப்பணக்காரர் ஆட்களை வைத்துக் கொண்டாராம். சந்தாப் பணக்காரருடைய நண்பர்கள் சந்தாப்பணக்காரரிடம் எத்தனை பேர் எத்தனை பேர் என்று கேட்பார்கள். ஆயிரம் இரண்டா யிரம் மூவாயிரம் என்று கூட்டிக் கொண்டேபோக வேண்டுமென் பதற்காகச் சந்தாப்பனக்காரர் ஆட்களைவிட்டு ஆட்களைச் சேர்ப் பாராம்.
சந்தாப்பணக்காரருக்குப் பிள்ளைகள் இருந்தார்களாம். எல் லோரும் ஆண்களாம். சந்தாப்பணக்காரருடைய பிள்ளைகளிடம் கார் மோட்டார் சைக்கிள்கள் இருந்தனவாம். சந்தாப்பனக் காரர் அடிக்கடி வெளியே வரமாட்டாராம். இதனுல் அவர் வரவை எதிர்பார்த்துக் காலையிலிருந்து மாலை வரைக்கும் எல்

Page 84
芷岳岛 வங்கா ராக்ஷ்ரி
லோரும் அங்கு நிற்பார்களாம், அதிக நாட்கள் அங்கு நின்ற தஞல் பல மலேத் தமிழர்களின் முதுகெலும்பு வளந்து போப் விட்டதாம். இதஞல் அவர்கள் நிமிர்ந்து நிற்க முடியா பல் குனிந்து கொண்டே நிற் பா ர் கள் T ம். சந்தாப்பனக்காரர் வெளியே வருவாராம். பலர் அவரைக் கண்டதும் க எண்ன ர் விடுவார்களாம் கையெடுத்துக் கும்பிடுவார்களாம். பெண்கள் "ஆண்டவனே" "ஆண்டவனே" என்பார்களாம்.
சத்தாப்பணக்காரர் கைகஃா உயர்த்தி ஆட்டி அசைத்து விட்டு உள்ளே போய்விடுவாராம்.
சந்தாப்பனக்காரர் வெளிநாடுகளுக்கும் போய் வருவாராம். "போய் வருகிறேன் எல்லாம் சரிவத்துவிடும்" என்று கூறிவிட் டுப் போவாராம். இவர் போப் பேசிவிட்டு வரும் இடங் களுக்கும் வெள்ளேக்கார முதலாளிக்கும் எதுவித தொடர்பு மில்லயாம். இவர் போகும் இடங்களிலும் வெள்ளேக்காரர்கள் இருக்கிரர்களாம். அவர்கள் வேறு வெள்ளேக்காரர்களாம். அங்கு சந்தாப்பனக்காரருக்கு முதுகுவவி ஏற்படுமாம். வெள்ளேக்காரப் பெண்கள் இவரது கைகளைப் பிடித்துக் கட்டிலில் கிடத்துவார் களாம். சந்தர்ப்பனக்காரரின் வ ர னி வ எல்லோரும் எதிர் பார்த்து நிற்பார்களாம். சந்தாப்பனக்காரர் திரும்பிவந்து மே யுச்சிக்கு ஏறிப் போவாராம். எல்லோரும் திரும்பி மண் யுச்சி பைப் பார்த்துக்கொண்டு நிற்பார்களாம்.
சில சமயங்களில் சந்தாப்பதனக்காரர் கீழிறங்கி வருவாராம் மலேயுச்சியில் மழைபெய்யும். சந்தாட பணக்காரர் தொப்பி போட் டுக் கொள்வார். அவருக்கு முன் குழலுதுபவர்கள் மேளம் அடிப் பவர்கள் வருவார்கள். பரிவாரங்கள் பலர் வருவார்கள். கீழி றங்கி வந்ததும் சந்தாப்பணக்காரர் தொப்பியைக் கழற்றி ஒரு வனிடம் கொடுத்துவிடுவார் அவன் 'சந்தாப்பணக்காரர் வாழ்க’ *சந்தாப் பணக்காரர் வாழ்" என்று கத்திக்கொண்டு வருவான். ஊர்வலம் எஃாந்து திரும்பும் போது வாய் தடுமாறி "சந்தாப் பணம் வாழ்க" என்று சுத்துவான். கையில் தொப்பியைப் பிடித் திருப்பவன். மோம் அடிப்பவன் "குடுடா" "குடுடா' என்று மேளத்தை அடிப்பானும், குழல் ஊதுபவன் 'பே' 'பே' எனறு குழல் ஜாதிக்கொண்டு போவான். சந்தாப்பணக்காரரோ "நான் தான் தலைவன்" என்ற தாரக மந்திரத்தைப் பயபக்தியோடு உச் சரித்துக் கொண்டு வருவாராம்.
"சாமி சம்பளம் காணுதுங்க சாமி' என்று சந்திாப் ப*ைக் தாரரிடம் முறையிடுவார்களாம். "உனக்குச் சம்பளம் எவ்வளவு?

அருளர் 교 5
என்று சந்தாப்பனக்காரர் கேட்பாராம். அவர்கள் இவ்வளவு என்று கூறுவார்களாம். "அடே உன் பெண்டாட்டி, பிள்ளேகுட்டி, பாட்டன், பூட்டன், அண்ணன், தம்பி சம்பளம் எல்லாத்தை யும் சுட்டிச் சொல்லு" என்று கூறுவாராம். அவர்கள் கூட்டிச் சொல்லுவார்கள். அடே உனக்கு இவ்வளவு கிடைக்குதே இதற்கு மேலே என்னடா சம்பளம்" என்று கூறுவாராம். வயதுவந்த மலேந்தமிழர்கள் எல்லோரும் வேஃலக்குப் போயே திரவேண்டு மாதலால் மலேத்தமிழர்களின் பிள்ளே:ள் அங்குமிங்கும் கிடந்து ச "வார்களாம். இருந்துவிட்டு ஏதாவது கிடைக்குமாம். அதைப் பாஃனயில் வைத்து ஊர்வலமாக எடுத்து வருவார்களாம். பானே யைச் சந்தாப்பனக்காரர் கையில் ஏந்திக்கொண்டு வருவார். சில சமயங்களில் எதுவும் இல்லாத வெறும் பானேயையும் எடுத் துக் கொண்டு மலேயைச் சுற்றிச் சுற்றி வருவார்களாம்.
தன்ஃனத் தவிர சந்தாப்பணக்காரர் மலேத்தமிழருடன் வேறு யாரையும் பேச அனுமதிப்பதில்லேபாம். இவரைத் தேடி அரசி பல்வாதிகள் வருவார்களாம். சந்தாப்பணக்காரரிடம் என தயும் பச்சை பச்சையாகவே பேசிக்கொடுத்து வாங்குபவர்களுக்கு ஒட்டுப் போடச்சொல்லி கைகளே அசைத்து விடுவாராம். தேர் தல் முடிந்ததும் சந்தாப்பனக்காரர் ஒட்டுப்போடாத கட்சிக்கா ரர்கள் வந்து கற்களால் எறிவார்கள். கற்கள் வந்து மலத்தமி பூரின் மண்டையில் விழும். அடித்து விரட்டுவார்கள். இப்படியே மலேத் தமிழரின் வாழ்க்கை போய்க் கொண்டிருக்குமாம்.
கதையைச் சரவணன் ஆவலாகக் கேட்பான். அப்போது அவன் சின்னப்பையன். தாய் சரவணஃனக் கேட்பாள். "சரி, சந்தாப்பனக்காரர் நல்லவரா? கெட்டவரா? சொல்லு" சரவ எணன் திருதிருவென்று முழிப்பான். பிறகு மெல்லக் கூறுவான், "கெட்டவர்'. தாய் சரவரை ரிைன் காதைப் பிடித்து திருகு வாள். "இரண்டா கெட்டவர்? ஏண்டா கெட்டவர்? நல்லவரடா நல்லவர். சந்தாப்பனக்காரர் இல்லாட்டா இருக்கிற மலேத்தமி ழரும் உயிரோட இருக்க மாட்டாங்க எல்லோரும் செத்துப் போயிருப்பாங்க' சரவணன் தொடர்ந்து முழிந்து கொண்டே இருப்பான்.
சரவணன் அதிகமான நாட்களே யாழ்ப்பாணத்திலேயே கழித் தவன். மலேயகத்திற்குச் சென்றுவர அவனுக்கு அங்கே நண்பர் கள் யாரும் இருக்கவில்லை. சுப்பலின் மேல்தளத்தில் வெளிச்சங்
| sv, 8ዕ

Page 85
I54 லங்காராணி
களை அணைத்துவிட்டிருந்தார்கள். அங்கு முன் பக்கத்தில் அமை தியான இடத்தில் சரவணனும் ராணியும் நின்று பேசிக் கொண் டிருந்தனர். சரவணன் கூறிவிட்டிருந்த விடயங்களைப்பற்றி ராணி விபரமறிந்து சரவணனுக்கு கூறிக்கொண்டிருந்தாள்.
"அதோ வெளிச்சங்கள்" ராணி காட்டினள். 'அதுதான் திருகோணமலை" சரவணன். ஆங்காங்கு கரையில் வெளிச்சங் கள் தெரிந்தன. சில வெளிச்சங்கள் குன்றுகள்மீது தெரிந்தன . அதில் ஒன்றைக் காட்டி "அதுதான் கோணேசர்மலை" என் முன், கப்பல் எதிர்பார்த்ததைவிட கரைக்குச் சமீபமாகவே சென்று கொண்டிருந்தது.
"இன்றைக்கு மாலை ஆறுமணியிலிருந்து விடிய ஆறுமணி வரைக்கும் ஊரடங்குச் சட்டம்" என்ற சரவணன் 'நீந்திப் போகடடா" எனக்கேட்டான். ராணி சிரித்துக் கொண்டாள் கப்பல் மெதுவாகப் போய்க் கொண்டிருந்தது. அமைதியாக இருவரும் வெளிச்சங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சரவ ணன் ஒரு கையை ராணியைச் சுறறி அங்கே பாதுகாப்புக்காகப் போடப்பட்டிருந்த கம்பியின்மீது வைத்துக் கொண்டான் , அவனது மற்றக்கை அவனுடைய இடுப்பில் இருந்தது. குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தது. -
சிலநேரம் சென்ற பின்பு சரவணன் தனது இடுப்பிலிருந்த கைத்துப்பாக்கியை வெளியே எடுத்தான். ராணியைக் கேட்டான், *"இது என்ன தெரியுமா?" ராணி அதை அப்போதுதான் முதன் முறையாகப் பார்த்தாள். சரவணன் தொடர்ந்தான், "கோல்ற் பொயின்ட் திறீஎயிட்" அது கைக்கடக்கமாகச் சிறிய அளவி லேயே இருந்தது. அதை ராணியின் கையில் கொடுத்தான். சுற் றிலும் பார்த்துவிட்டு துப்பாக்கியைப் பிடித்துக்கொண்டு கைகளை நீடடிச் சுடுவதுபோலச் செய்தான். ராணியும் அப்படியே செய்து பார்த்தாள். இவையெல்லாம் ராணிக்குப் புதிய அனுபவங்கள்.
*அகிம்சை, நீதி நியாயம் பேசும்; மொழியை விளங்காத வன் விளங்கிக் கொள்ளும் மொழியைப் பேசுவது இந்தத் துப் பாக்கிதான். துப்பாக்கி பேசும்பேது இலகுவில் புரிந்து கொள் கிருர்கள்' என்ருன் சரவணன்.
ராணி "யாழ்ப்பாணத்தில் எல்லாப் பெண்களும் சுடப்பழ கிக்கொண்டார்களா?" என்று கேட்டாள்
அதற்கு சரவணன் 'இல்லை. இல்லை. எனித்தான்" என்றன்.

அருளர் 15
சரவணன் கம்பிமீது வைத்திருந்த கைகளை எடுத்து ராணி யின் இடுப்பை அணைத்துக்கொண்டு மறுகையால் துப்பாக்கியை ராணியின் இடுப்பில் செருகினன். அவனுடைய இடுப்பில் இருந் ததால் துப்பாக்கி குளிரவில்லை. அவனுடைய கைகள் குளிர்ந் தன. ராணி சரவணனின் மார்பில் சாய்ந்து கொண்டாள். கப் பல் மெதுவாகத் தவழ்ந்து கொண்டிருந்தது. திருகோணமலையின் வெளிச்சங்கள் நன்ருகத் தெரிந்தன.
'நண்பர் ஒருவர் திருகோணமலையில் வயல் வைத்திருக்கிருர், நான் அவருடைய பண்ணைக்குப் போகிறேன். நீங்களும் வருகி நீர்களா" என்ருன் சரவணன்.
*கட்டாயம் வருவேன்" என்ருள் ராணி.
கைத்துப்பாக்கியை ராணியின் இடுப்பிலிருந்து எடுத்து அவளை வளைத்துக்கொண்டபடியே அதன் ரவைக்கள வியத்தை வெளியே எடுத்தான். அதில் இரண்டு ரவைகள் மிச்சம் இருந்தன. அவற்றை வெளியில் எடுத்து ராணியின் கையில் கொடுத்தான். அவள் அவற்றைப் பிடித்துப் பார்த்துக் கொண்டாள். இவற்றை நானே நிரப்பி இந்தக் குண்டுகளால் அடைப்பேன் என்றும் கூறினன்.
அவற்றை மீண்டும் களஞ்சியத்தில் போட்டுத் துப்பாக்கி யில் பொருத்திவிட்டு தாவணியை விலக்கி மறுபடி ராணியின் இடுப்பில் செருகி விட்டான். W
ராணி "நீங்கள் அந்தச் சாமான்களையெல்லாம் எதற்காக என்னைக் கேட்டறிந்து சொல்லச் சொன்னீர்கள்?’ என்ருள்.
சரவணன் சற்றுச் சிந்தித்துவிட்டு கூறினன், *"அதுபற்றி எனித்தான் தீர்மானிக்கப் போகிருேம்". சரவணன் ராணியை அழைத்துச் சென்று தளத்தின் படிகள் அண்டையில் விட்டான்.
'காலையில் சந்திப்போம் தேவைப்பட்டால் உன்னை இரவில் வந்து எழுப்புவேன்" என்று கூறினன். சுற்று முற்றும் பார்த்து விட்டு அந்தக் கைத்துப்பாக்கியை எடுத்து "இரவு உங்களுக்கு தேவை வந்தாலும் வரலாம் வைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறி சிரித்துக்கொண்டே அவனிடம் கொடுத்துவிட்டு விடைபெற் ருள். அவளது விழிகள் சரவணனிடமிருந்து விடைபெற்றுக் கொண்டதும் கீழே இறங்கினள்.

Page 86
12
அடித்தளங்களில் தமிழர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நேரம் இரவு இரண்டு மணியாகியிருந்தது அடித் தளங்களில் இருந்த சற்றே உயரமான மேடைகளெல்லாம் வெறுமனே கிடந் தன. அதனைச் சுற்றிக் கண்டதையும் தலைக்கு வைத்துக்கொண்டு மூலை முடுக்குகளிலும், சந்து பொந்துகளிலும் பாய்களைப் போட் டுத் தமிழ் அகதிகள் தூங்கிக் கொண்டிருந்தனர்.
வெகுகாலத்திற்கு முன்பே தமிழர்கள் பண்பாடு மிகுந்த நாகரிகம் பெற்றிருந்தனர். தமிழ்மொழி செழிப்புற்று வளர்ந் திருந்தது. மக்கள் பொதுமையான வாழ்க்கை நெறிகளை வகுத் துக்கொண்டு உழைப்பாலுப் ஊக்கத்தாலும் முன்னேறினர். பண் டைக் காலங்களிலிருந்தே வீரமும் காதலும் நிறைந்த வாழ்க் கையைத் தமிழர் பேணி வளர்த்தனர். பல கோயில்களைக் கட்டி முத்தமிழ்க் கலைகளைப் போற்றி வளர்த்தனர். புலவர்கள் தோன்றி சமுதாய வாழ்க்கையின் நுட்பங்கள்பற்றியும் அதன் சிறப்புப் பற்றியும் பாடல்களைச் சமைத்தனர். அரண்மனைகளையும் கோட் டைகளையும் கட்டினர்கள். கால்வாய்களையும் குளங்களையும் வெட் டிஞர்கள். சாலைகளையும் சத்திரங்களையும் உருவாக்கினர்கள். தமி ழர்கள் போர்க்கலையை அறிந்து வைத்திருந்தனர். அவர்களு டைய சேனைகளில் யானைப் படை, குதிரைப் படை, வில்தாங்கிய காலாட்படை யாவும் இருந்தன. எத்தனையோ விதமான போர்க் கருவிகளையும் போர் முரசங்களையும் பெற்றிருந்தனர்.
தமிழர்களுடைய நாட்டில் பட்டினங்களும் கிராமங்களும் செழிப்புற்றிருந்தன. பிறநாடுகளுடன் வாணிபம் செழித்தோங்கி செல்வம் கொழித்தது. மேற்கே வெகுதூரத்திலுள்ள எகிப்து, கிரேக்கம், ரோமம், கிழக்கே சீனம் முதலிய நாடுகளுடன் கடல்

அருளர் 57
கடந்து சென்று வாணிபம் செய்தனர். மிளகு, முத்து, தங்கம், சந்தனம், ஏலக்காய், துணி, தாவர எண்ணெய், விலங்குகளின் தோல்கள் முதலியவற்றை ஏற்றுமதி செய்தார்கள். கடற்கரை யோரங்களில் கலங்கரை விளக்கங்களும் சுங்கச் சாவடிகளும் அகன்ற வீதிகளும் அமைத்திருந்தனர். தமிழர்கள் தங்கள் தூதர் களை அனுப்பி தங்கள் நாட்டின் தேவைகளைப் பெற்றுக்கொண் டது மட்டுமல்லாமல் தமிழன் பெருமையையும் நிலைநாட்டினர்.
மக்களில் பெரும்பாலானேர் விவசாயத்தைப் பேணியதுடன் கைத்தொழில்களிலும் ஈடுபட்டனர். மலைநாட்டில் வாழ்ந்த மக் கள் விலங்குகளை வேட்டையாடி இறைச்சியையும் தானியங்களை யும் சமைத்து உண்டு வாழ்ந்தார்கள். ஆடுகள், மாடுகள், கோழி கள், பன்றிகள், மயில்கள் முதலியவற்றைச் சிறப்பாகப் பேணி வளர்த்தனர். மக்கள் விதம் விதமான ஆடை கள் அணிந்து பொன் முதலான உலோகங்களாலான ஆபரணங்களை அணிந்துகொண்டு அத்துடன் அகில், சந்தனம், புனுகு முதலிய நறுமணப் பொருட் களையும் தங்கள் இன்ப வாழ்விற்குப் பயன்படுத்தினர்.
அரிசி தேன் முதலியவை எல்லா மக்களுக்கும் முக்கிய உண வாக இருந்தன. அரச களஞ்சியங்கள் மக்களிடமிருந்து பகுதி யாக வழங்கப்பட்ட தானியங்களால் நிறைந்திருந்தன. நகரங் களின் சமுதாய வழக்கம் நாடெங்கும் மேம்பாடு அடைந்திருந் தது. திருமணங்கள் பெரும்பாலும் காதலின் அடிப்படையில் பல சடங்குகளுடன் நிகழ்ந்தன. பரத்தையர் வாலிபர்களின் மனத்தைச் சூறையாடியும் பத்தினிப் பெண்டிரின் இன்ப வாழ் விற்கு இன்னலிழைத்தும் வாழ்ந்து வந்தனர். சமய சமூகக் கலை விழாக்களை ஆடல் பாடல்களுடன் மக்கள் ஆர்வத்துடன் கொண் டாடிஞர்கள். பல்வேறு துறைகளில் அவர்கள் தேர்ச்சி பெற்றி ருந்தனர். இசை அவர்களுடைய கலவாழ்வை ஒளிபெறிச் செய் தது. நாடகங்களை நடத்தினர்.
போரில் இறந்துபட்ட வீரர்களுக்கு ஞாபகச் சின்னமாக நடுகற்களை நிறுத்தி அவற்றிற்கு மரியாதை செலுத்தினர். இவ் வித கற்களில் இறந்தவர்களின் பெயரையும் வீரச் செயல்களை யும் பொறித்தனர். சங்கங்களைக் கூட்டித் தமிழை வளர்த்து வாழ்வைப் பெருக்கினர்.
சங்கங்கள் மூன்ருகும். அவை முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் எனப்படும். கடைச்சங்க கால நூல்கள் எட்டுத் தொகை பத்துப்பாட்டு எனவும் ஐம்பெருங் காப்பியங்கள் என

Page 87
I 58 லங்கா ராணி,
வும் பதினெண் கீழ்க்கணக்கு எனவும் ஆயிரம் ஆயிரம் பாடல் களைக் கொண்டு தமிழிலக்கியம் சிறப்புற்று விளங்குகிறது. புற நானூறு, சிலப்பதிகாரம், திருக்குறள் போன்ற நூல்கள் தமிழர் களின் வாழ்க்கையை நன்கு சித்தரிக்கின்றன.
குமரி நாட்டுக் காலம் தான் முதற் சங்க காலம். இது பத் தாயிரம் ஆண்டு தொடக்கம் ஐயாயிரம் ஆண்டு வரைக்குட் பட்ட காலமாகும். குமரிக்கண்டம் இந்து சமுத்திரத்தில் அமைத் திருந்த கண்டமாக விளங்கியது. இது ஏழ் மதுரை ஏழ் தெங்கு என நாற்பத்தொன்பது நாடுகளாகப் பிரிக்கப்புட்டு இந்து சமுத் திரத்தின் பெரும்பகுதியை அடக்கியிருந்தது. பன்மலைத் தொட ரான குமரிமலைத் தொடரும் பஃறுளியாறு, குமரி ஆறு என்னும் ஆறுகளும் இருந்தன.
இந்தியத் தென் முனையான் இக்கால குமரிக்குத் தெற்கே இமயம் போன்றுயர்ந்த குமரிமலைத் தொடரும், குமரி ஆறும் குமரிக் கண்டத்தின் வட எல்லையாக இருந்தன. மடகாஸ்கர் தீவுக்குத் தெற்கே நீண்டிருந்த நிலப்பரப்புத் தென்பாலி முகம் என அழைக்கப்பட்டது. இந்தத் தென்பாலி முகத்தின் வட எல் லையாக ஒடிய பஃறுளி ஆறு குமரிக்கண்டத்தின் தென் எல்லை யாகும். இந்தப் பஃறுளியாற்றங்கரையில் இருந்த தென்மதுரையே தலைச் சங்கம் வைத்துப் பாண்டியர் தமிழ் வளர்த்த தலைநகரம். இது ஏழ்மதுரை நாடு என்று அழைக்கப்பட்டது.
பாபிலோனியா, சுமேரியா ஆகிய நாடுக டன் கடல் வாணி பம் செய்து அங்கெல்லாம் நாகரிகம் பரப்பினர்கள் என்பதற் கான சான்றுகள் அந்தந்த நாட்டு எழுத்துகளில் கிடைக்கின்றன.
பாண்டியன் பஃறுளியாற்றங்கரையிலிருந்த மதுரையென்னும் தலைநகரில் முதல் தமிழ்ச் சங்கம் நிறுவினன் அதில் 549 புல வர்கள் உறுப்பினராயிருந்தனர். தமிழரின் மிகத் தொன்மை யான அரசியல் சமுதாய நாகரிகச் செம்மையும் ஒழுங்கான வாழ்க்கையமைப்பும் வர்லாற்ருசிரியர்களின் வரையறைக்கு அப் பாற்பட்ட முதற் சங்க காலத்திலேயே தோன்றியிருந்தன.
அதற்கடுத்தது நாவலந்தேய காலம். இக்காலத்தில் தான் இடைச் சங்கம் இருந்தது. குமரிக் கண்டத்தின் பெரும் பகுதி யைக் கடல் கொண்ட பின் எஞ்சியிருந்த நிலப்பகுதி தான் நாவு

அருளர் 159
லத்தீவு என அழைக்கப்பட்டது. இந்தியாவின் பெரும் பகுதியாக இது இருந்தது. குமரி ஆறு கடலொடு கலக்கும் இடத்திலிருந்த கபாடபுரத்தில் இடைத் தமிழ்ச் சங்கத்தைப் பாண்டியர் நிறு வியிருந்தனர். இதில் 59 புலவர்கள் உறுப்பினராக இருந்தனர். மூவாயிரத்து எழுநூறு புலவர்கள் அச்சங்கத்தில் பங்கு கொண்
I
இலங்கை பழந்தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. அங்குள்ள மக்கள் தொழில் துறைகளில் சிறந்து விளங்கினர். அரும்பெரும் கட்டிடங்களைக் கட்டியெழுப்பி இருந்தனர். குமரிக் கண்டத்தின் எஞ்சியிருந்த பகுதியான சூரியத்தீவு, பனைத்தீவு, 1கெனதீவு. சேரன்தீவுகளில் தமிழ் நாகரிகம் தழத்திருந்தது. இந் தக் காலத்தில் கி. மு. 2300 ஆண்டளவில் ஏற்பட்ட கடல் கோளால் இந்தத் தீவுகள் கடலில் மூழ்கின. அப்பொதுதான் தற்போதுள்ள இலங்கைத்தீவு தனியாகப் பிரிந்தது. இலங்கை பழந்தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக இருந்ததால் மர்மம் நிறைந்த கட்டிடங்களைக் கொண்டதாக இருந்தது. மாந்தை என்னும் மாதோட்டத்தில் இரும்பினல் செய்த காந்தக் கோட்டையிருந் ததாக நூல்க ! கூறுகின்றன.
பழங்கால நாகரிக நகரங்கள் பல சிந்து வெளியில் கண்டு பிடிக் சப்பட்டுள்ளன. மொகஞ்சதாரோ, அரப்பா நகரங்கள் தமி ழர் நாகரிகத்தின் தொன்மையைப் பறைசாற்றுகின்றன. சிந்து வெளியில் கருங்கற்களால் கட்டப்பட்ட அணைக்கட்டு ஒன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. உலகிலேயே தொன்மையான அனேக்கட்டாக இது விளங்குகிறது. சிந்துவெளித் தமிழர் கட லில் போக்குவரத்து நடத்தினர். அங்குள்ள துறைமுகம் உலகில் முதன் முதலாக நிறுவப்பட்ட துறைமுகமாகக் காணப்படுகிறது. சிந்து வெளி மக்கள் சங்கும் பவளமும் பயன்படுத்தினர். நடுத் தர மக்கள் வாழ்ந்த வீடுகள் பல அறைகள் கொண்டனவாக இருந்தன. வீடுகளில் தடுப்புச் சுவரால் பிரிக்கப்பட்ட குளிக்கும் அறைகள் கட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் கிணறு இருந்தது. புதை சாக்கடை, வடிகலால் முறைகள் செம்மையாக இருந்திருக்கின்றன. நகரங்கள் துப்பரவாக வைக்கப்பட்டிருத்தன.
அரப்பாவில் இருந்த மிகப் பெரிய கட்டிடம் தானியக்களஞ் சியக் கட்டிடமாகும். தானியம் கொண்டுவர எருது பூட்டப் பட்ட வண்டிகளைப் பயன்படுத்தினர்கள். தேர்களும் பயன்படுத் தப்பட்டன. மொகஞ்சதாரோ நகரில் ஒரு பெரிய நீராடும் மண்

Page 88
6. siz mülayim" T.T 33ı//
டபம் கட்டப்பட்டிருந்தது. இது கோட்டைத் திடலின் அருகில் அமைக்கப்பட்டிருந்தது. சிந்து வெளி மக்கள் யாவேத் தந்தம், செம்பு, வெள்ளி, வெண்கலம் ஆகியவற்ருல் செய்யப்பட்ட பொருட்களே வைத்திருந்தனர். குத்தீட்டி ஈட்டி, வாள், தண்டு அம்பு ஆகிய போர்கருவிகளேப் பயன்படுத்தினர். கடுகு போன்ற எண்ணெய் விதைகள், பருப்பு வகைகளான கோதுமை முதலிய தானியங்களே விளவித்தனர். ஆடு, மாடு, எருமை, நாய், பூஃன ஆகிய விலங்குகளே வளர்த்தனர். கி. மு. 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் தேரைப் பயன்படுத்தினர்கள். கணிதம் சமயம், போர், நீதி முதலியவற்றை முதலில் நெறிப்படுத்தி வளர்த் தவர்கள் தமிழர்கள்தான்.
குமரிக்கண்டம் கடலில் மூழ்கத் தொடங்கிய காலங்களில் தமிழர்கள் வடக்கே கங்கை சிந்து சமவெளிகளில் குடியேறினர். இந்தச் சிந்து வெளியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட வார்கள் இருந் தன. பல ஆயிரம் ஆண்டுகள் தமிழரின் நாகரிகம் த ைபுத் தோங்கி பிருந்தது.
கடவுளென்று முதலில் வழிபட்டவன் தமிழன். சிந்துiெளி யில் கிடைத்த முத்திரைகளில் சிவன் உருவம் பொறிக்கப்பட் டுள்ளது. தமிழனுடைய இந்தச் சிவவழிபாடு உலகெங்கும் பர வியது. கி.மு. 8000 ஆண்டளவில் அமெரிக்காவிலுள்ள கொல ரடோ ஆற்றங்கரையில் சிவன் கோயில் இருந்திருக்கிறது. பிலிப்பைன்ஸ் மக்கள் சிவனே வெப்பன் என்னும் பெயரால் வழி பட்டனர். இந்தோனேசியாவில் சிவன் கோயில்கள் இருந்தன. இன்றும் சிவனே வணங்குபவர்கள் அங்கு இருக்கின்றனர். பபி லோனியா களிமண் ஓடுகளில் சிவன் என்னும் சொல் உள்ளது. எகிப்து ஆற்றங்கரைகளில் சிவலிங்கங்கள் சுண்டெடுக்கப்பட
IsiTarra .
இதே தமிழனுக்கு இன்று கடவுளேப் போதிக்க உலகின் மூலேமுடுக்குகளில் கிடந்தெல்லாம் ஆட்கள் வருகிருர்கள். அவன் வழிபடுவது ஆயிரம் கடவுள்கள். அவனுக்கு நாகரீகம் கற்பிக்க நாள்தோறும் வந்து குவிபவர்கள் எத்தனே பேர்? அவனுடைய அரசு எள்வாறு அமையவேண்டுமென்பதில் அவனிடம் ஆயிரம் கருத்துக்கள் மோதல்கள். எதையுமே சாதிக்கமுடியாத அடிமை
நிக்ல.
மாற்ருனேப் போற்றி வழிபடுவதிலும் எதற்கும் அவனிடமே கையேந்தி நிற்பதிலும் பெருமை அடையும் மனப்போக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 

கையில் ஒரு மணிக்கூட்டை வாங்கிக் சுட்டிக்கொள்வதற்காக நாட்டை விட்டோடி மாற்ருன் நாட்டில் எந்த இழிதொழில பும் செய்யத் தயாராக இருக்கும் வாலிபர்கள். அதற்கு உடத் தையாக இருக்கும் தாய்மார்கள்.
அதே தமிழன் இன்று ஒரே நோக்குடன் ஒரே சமுதாயமாக இயங்கித் தன்னையே பாதுகாத்துக்கொள்ள முடியாத இழி நிஐ. தன்னவனேயே மாற்ருனிடம் காட்டிக் கொடு க்கும் பயங்கரமான "ஈசிம் எதிற்குமே உதவாத கருத்துக்களிலும் கோட்பாடுகளி அலும் வெறிப்பற்று. நானூறு ஆண்டுகளாக கொள்ஃளயடிப்பை 4ம் பீ-க்குமுறையையும் நோக்கமாகக்கொண்ட அந்நியராட்ரி, இறு ஆண்டுகளாக நீடித்த அடிமைத் தனத்திகுல் ஏற்பட்ட சிந்தண் நினைவுகளில் கன் மூடிக்கிடக்கும் அவனப் பினமென நிஃனத்து வட்டமிடும் கழுகுகள். அவனைத் தொடர்ந்து தூக்கத் தில் வைத்திருக்கப் பாட்டுப்பாடி துர க் க பிணிவத்துக்கொண்டு அவன் வீட்டைக் கொள்ஃாயிடத் தவிக்கும் எத்தர்கள் கூட்டம். அந்த அடக்குமுறையிலும் அழிவிலுமிருந்து தங்களைக் காப்பாற் விக்கொள்ள அமைத்துக்கொண்ட குறுகிய வாழ்க்கை முறையும் நடைமுறைகளும் என்றுமே நீடித்து நீலக்கும் ஆபத்து.
தமிழர்கள் இன்று உலகிலே சிறந்த கூளிகளெனப் பெயரெ டுத்துக்கொண்டு அடிமைகளாக எழக்காத நாடுகளே இன்ஃ. "தற்கும் நான் என்ற அகம் பாவம். இத்துப்போக மறுக்கும் வறண்ட சுயகெளரவம்.
இங்கு தமிழர் தமது நாடென்று சிறிக்கொள்ளும் அதே காட்டில் மாற்ருனரிடம் அடிபட்டு உதைபட்டு பொருளிழந்து உடைமையிழந்து மானமிழந்து கற்பிழந்து அல்லற்பட்டு இன்ன ஆற்றுக்கண்டவன் காவில் விழுந்து காப்பு ாற்றப்பட்டு அகதிகளாகி முகாம்களில் தஞ்சம் புகுந்து கிப்பலேற்றப்பட்டு அடித்தளங்களில் அங்குமிங்குமாசுத் தூங்கிக்கொண்டு கிடந்தனர்.
சிவர் விழித்துக் கொண்டிருந்தனர். சரவணன், குமார் வேட்டியுடன் இருந்த அந்த இன்ஞன். கடல் மோதிக்கொன் டிருந்தது. மூவரும் மேல்தளத்தில் நடந்து கொண்டிருந்தனர். வேட்டியுடன் இருந்த இளேஞன் நடுவில் போய்க்கொண்டிருந் தான். இளைஞர்கள் மூவரும் உற்சாகமாகவே இருத்தனர்.
m). 21

Page 89
i 6 லங்கா ராணி
நாளைய திட்டங்களைப் பற்றி வேட்டியுடன் இருந்த இளைஞனுக்கு குமார் விளக்கிக் கொண்டு இருந்தபொழுது அங்கு சரவணன் வந்து இருவரையும் மேல்தளத்துக்கு வரும்படி கூறி அழைத்துக் கொண்டு வந்திருந்திருந்தான்.
இவர்கள் மேல்தளத்தில் அங்குமிங்குமாக நடந்துகொண்டிருந் தனர். சரவணன் கையில் ஒரு சிகரெடடை வைத்துக்கொண்டு அடிக்கடி புகைத்துக் கொண்டிருத்தான். கப்பலின் முன்தளத்தில் வெளிச்சம் குறைவாகவே இருந்தது. ஒரு சிலர் விழித்திருந்து கப்பலை ஒட்டிக் கொண்டிருந்தனர். அதில் பணிபுரியும் தமிழ் மாலுமி சுக்கானிலேயே இந்நேரம் சேவையிலிருபபார் என்பது சரவணனுக்குத் தெரிநதிருந்தது. கடைசியாக இருந்த சிறுதுண்டு சிகரெட்டைக கடலில் வீசி எறிந்து விட்டுத் தொடர்நது சிறிது தூரம் நடந்த சரவணன் கதைக்கத் தொடங்கினன்.
"கப்பலை எடுத்துச் சென்னைக்குக் கொண்டு போவோம்' குமார் எதுவும் கூற முன்வரவிலலை. சரவணன் தொடர்ந்தான்
“காலை பத்து மணியளவில் பருத்தித்துறைக்குப் போகும். அங்கிருந்து இநதியக் கரை சுமார் முபபது மைல்கள், கப்பலை எடுத்த அரை மணித்தியாலத்தில் இலங்கைக் கடலைத் தாண்டி விடலாம்" சரவணன் மீண்டும் தொடர்ந்தான். -
"நாற்பது சிப்பந்திகள் இருக்கிருர்கள். அவர்கள் எந்நேரமும் தங்கள அறைகளிலேயே தங்கியிருக்கினறனர். கப்டனின் கட்டளை போல இருக்கிறது. அவர்களை அறையிலேயே வைத்துப் பூட்டி விடலாம். கப்பல ல் ஒரு இரட்டைக் குழல் துப்பாக்கியும் ஒரு சாதாரண துப்பாக்கியும் இரண்டு சுழல் துப்பாக்கிகளும் மூன்று விளையாட்டுத் துவக்குகளும் இருக்கின்றன. எங்களிடம் உள்ள வற்றுடன் இதையும் சேர்த்தால் எல்லாவற்றிற்கும் இ  ைவ போதும். கப்டனை முதலில் பிடித்துக்கொண்டு மற்றவர்களையும் பிறகு மடக்கிவிடலாம். தமிழ் ஆட்களைக் கப்பலைச் செலுத்தச் சொல்வோம். தலைமை வகிக்கக் கூடியவர்கள் பத்துப்பேர் இருக் கிருேம். மேலும் ஐம்பது பேரை இலகுவில் சேர்த்துக் கொள்ள லாம். யாராவது கப்பலில் ஏற முற்பட்டால் வெடிகுண்டுகளால் கப்பலைத் தகர்த்துத் தாழ்த்திவிடுவோம் என்று கூறுவோம்"
குமார் மெதுவாக அவனைத் தொடர்ந்து கதையைக் கேட்கும் நோக்குடன் 'பிறகு'

அருளர் 69
'கப்பலைச் சென்னைக்குக் கொண்டு போய்ச் சேர்ப்போம். உலகமே நடுநடுங்கும் எங்கள் பிரச்சனையை உலகத்திற்குத் தெரியவைக்க வேண்டுமானுல் இதனைக் கட்டாயம் செய்தாக வேண்டும்’
வேட்டியுடன் இருந்த இளைஞன் கேட்டான் "சென்னையில் என்ன நடக்கும்?
சரவணன் இதுபற்றி முன்பு சிந்திக்காதவன் போல சற்று நிறுத்திவிட்டுச் சொன்னன்.
"கலைஞர் இருக்கிருர்'
**இருந்தால்!"
‘கதைக்க வரும்படி அழைப்போம். சென்னையில் அகதிகள் தங்குவதற்கு வசதி செய்து தரும்படி கூறுவோம். பங்கா ள தேசம்பேர்ல் நடக்கும்"
*அங்கு போய்ச் சேர எத்தனை நாள் எடுக்கும் எ ன் று நினைக்கிருய்?" வேட்டியுடன் இருந்த இளைஞன் கேட்டான்.
"ஒரு சில மணித்தியாலங்கள்.' *அது இந்தியக் கரைக்கு. நான் கேட்டது சென்னைக்கு."
இதுபற்றி சரவணன் எதிர்பார்த்திராதவன் போல் ஒரு கேள்வியாகவே சொன்னன்.
f is
"ஒருநாள்?
"கொழும்பிலிருந்து வர இரண்டு நாட்கள், இதற்கு ஒரு நாளிலும் கூடுதலாகப் பிடிக்கும்."
"சாப்பாடு' குமார் குறுக்கிட்டான் "மாமூட்டைகள் தான் மிச்சம் இருக்கிறது, மற்றதெல்லாவற்றையும் முடிக்கச் சொல்லிவிட்டேன்.
*ரொட்டி போட்டுக் கொள்ளலாம்" சரவணன் சமாளித்
தான்.
'தவறுகள் எங்கு நடக்கும்?' வேட்டியுடன் இருந்த இளைஞன் சரவணனிடம் கேட்டான். அவன் பதில் எதுவும் கூற முன்வரவில்லை. இளைஞன் தொடர்ந்தான்,

Page 90
64 avnstr Drt stof
'முதலில் துவக்குகளை எங்களுக்குத் தராவிட்டால் நாங்கள் பலாத்காரமாக அவற்றை எடுக்க வேண்டி ஏற்படும். கீழ்த்தளங் களில் உள்ளவர்களில் இதில் விருப்பம் இல்லாதவர்களும் இருக் கிருர்கள். அவர்கள் எங்களுக்கு எதிராகச் செயல்பட முன்வந் தால் எல்லாம் விபரீதமாகவே முடியும். சரி, அதுதான் பிரச் சினைகள் இல்லாமல் முடிந்து விட்டதென்று வைத்துக் கொண் டாலும், கப்பல் சிப்பந்திகள் தங்கள் தற்பாதுகாப்புக்காகக் கைத்துப்பாக்கிகள் தரவேண்டுமென்று கேட்டார்கள் என்று ஒரு வதந்தி. ஒருவேளை அவற்றை இவர்கள் பெற்றிருக்கலாம் இதிலும் பல சங்கடங்கள் வரலாம். கப்பலைச் செலுத்துவதிலும் சிரமங் கள் ஏற்படலாம். அடுத்து எங்களுக்கு கடலைப்பற்றி அதிகம் தெரியாது. கடற்படையினர் வழிகாட்ட காலையில் வருகிருர்கள். அவர்கள் எங்களுக்கு உதவ முன்வராமல் விடலாம். வடக்குக் கடல் கற்பாறைகள் நிறைந்தது. கப்பல் பாறைகளில் மோதினு லும் மோதும்' ܝ
சரவணன் குறுக்கிட்டான். 'ஒருவன முடித்துக் கடலில் வீசிவிட்டு மற்றவனையும் கடலில் எறியப் போகிருேம் என்றவுடன் எங்களுக்கு வழிகாட்டுவார்கள்,'
*சரி, அடுத்ததாக நாங்கள் சந்திக்கவிருப்பது இந் தி ய க் கடற்படையினர்."
'தமிழக மீனவர்களும் வருவார்கள். கடற்படையினர் எங் களுக்கு வழிகாட்டுவார்கள்."
*என்று நீ நினைத்துக் கொண்டிருக்கிருய்'? ** என்ன செய்வார்கள்"
**ஹெலிகாப்டர்களில் வந்து கப்பலில் இறங்க முயற்சிக் கலாம்." ۔
"சுடுவோம்."
"அவர்களிடம் இ ய த் தி ரத் துப்பாக்கிகளிருக்கின்றன. சுட்டுக் கொண்டே கப்பலில் இறங்கப் பார்ப்பார்கள். உன்னல் எவ்வளவு நேரம் சுட முடியும். இத்தியக் கடற்படையினரோடா போர் தொடுக்கப் போகிருப்?"

Jeffert?
*சப்பலில் இறங்கினல் கப்பலை வெடி வைத்துத் தகர்த்து விடுவோம் என்று கூறுவோம்! அவ்வளவு தூரம் பாதகமான முறையில் எங்களுக்கு எதிராக செயல்படமாட்டார்கள். இந்தி யாவில் நாலரைக் கோடி தமிழர்கள் இருக்கிருர்சள், கலைஞர் இருக்கிருரர். கிளர்ச்சி செய்யக்கூடும் என்று பயப்படுவார்கள்."
*இதைச் சாட்டாக வைத்துக்கொண்டு தமிழ் நா ட் டி ல் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவார்கள்?
*எம். ஜி. ஆர். ஆட்சிக்கெதிராக அப்படிச் செய்ய மாட் Larrfassîr , " ”
“எம். ஜி ஆரும் தி. மு. க விலிருந்தவர்தால், அ. தி. மு. விலி இருப்பவர்களும் தி மு. க. விலிருந்தவர்கள் தான். அவர்களிலும் எங்களுக்கு அனுதாபம் தெரிவிப்பவர்கள் ஏராளம் பேர் இருக் கின்றனர். தி மு. க. கலைக்கப்பட்டு தமிழ்நாட்டில் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டதற்கு நம்மவர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த தனிநாட்டுக் கோரிக்கையும் ஒரு காரணம். எதற்கும் சரவணன் கேள்! இன்றும் தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு எத்தனையோ சக்திகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அடிமட்டத்தில் இருக்கும் தமிழர்களை ஒரு சிறு அளவிலாவது தட்டியெழுப்ப வெளிக்கிட்டிருக்கும் இந்தத் திராவிடர் இயக்கங்களுக்கு எதிராகவே இத்தனை சூழ்ச்சிகள் என்ருல் ஒரு முழுமையான தமிழனுடைய எழுச்சிக்கு எதிராக இந்தச் சக்திகள் எவ்வளவு பயங்கரமாகச் செயற்படும் என்பதை நீ சற்று எண்ணிப்பார். நாம் எந்தவிதமான ஒரு அனுதாபத் தையும் இந்திய அரசிடம் இருந்து எதிர்பார்க்கக்கூடாது. தமிழ் மக்களுடைய இதயங்கள் எங்களுக்காகக் குமுறிக் கொண்டிருக் கலாம். அது அவ்வளவுதான். அதற்குமேல் எதையும் எ தி ர் பார்க்க இயலாது.
"கலைஞர் மாபெரும் ஊர்வலம் நடாத்தினர். அதனல் தான் கலவரம் நின்றது." - ,
*அது ஒரு காரணமாக இருக்கலாம். நான் இல்லை என்று சொல்லவில்லை. அதற்குமேல் எதுவும் கலைஞரால் செய்யமுடியாது இதற்கு மேல் அவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்த்து நாங் கள் செயற்பட்டு, அவர்களுடைய இக்கட்டான நிலையையும், இயலாமையும் உலகத்திற்குத் தெரியப்படுத்தி எங்களுடைய

Page 91
168 லங்கா ராணி
எதிரிகளை எள்ளி நகையாட வைப்பதில் என்ன பயன்? தமிழ் நாட்டில் இருக்கும் அனுதாபமும் இல்லாமல் போய்விடும். அங்கு கொந்தளிப்புகளை ஏற்படுத்தித் தமிழ்நாட்டு காவல் துறை யினருக்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தி எங்கள் மீது அவர் களுக்கு வெறுப்பை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை. அவர் கள் கண்ணியமாக கடமையைச் செய்யத் தெரிந்தவர்கள். எங் களுக்கு உதவக் கூடியவர்கள் தமிழ் நாட்டில் யாருமில்லை என்று நான் கூறவில்லை. ஒரு சிலர் இருக்கிருர்கள். அவர்களையும் எவ்வித பயனும் இல்லாதவர்களாக ஆக்குவதாகத்தான் இந்த ஏற்பாடு முடியும். அதுபோக எங்களைச் சென்னைத் துறைமுகத்தினுள்ளே நுழைய விடுவார்களோ தெரியாது. சென்னைத் துறைமுகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
'விடாவிட்டால் திரும்பி வருவோம். உலகம் எல்லாவற் றையும் அறிந்து விட்டிருக்கும்'
“எத்தனை நாட்களுக்கு பின்? திரும்பி யாழ்ப்பாணம் வந்து சேர நான்கு நாட்களாகப் போய்விடும். எல்லோரும் பட்டினி தான் கிடக்க வேண்டும். சரவணன்! உலகிற்கு எங்கள் பிரச் சினைகளை இவ்வாருண பயங்கரவாதங்களால் தான் எடுத்துக் காட்ட வேண்டுமென்று நினைத்துக் கொள்ளக் கூடாது. ஒரு சிலர் அப்படிச் செய்கிருரிகள் தான். அவர்களுக்கு நல்ல விளம் பரம் கிடைக்கிறது. பத்திரிகைகளிலும் வருகிறது. ஆனல் விளம் பரம் வேறு. நமக்குத் தேவையான அனுதாபமும் ஆதரவும் வேறு இதற்கு நாங்கள் தொடர்ந்து உழைக்க வேண்டும். நீதியையும் நியாயத்தையும் மூடிமறைக்கும் சக்திகளே இன்று முன்னின்று செயற்பட்டுக் கொண்டிருந்தாலும் நாளடைவில் எங்கள் நிலை உலகெங்கும் அறிவுறுத்தப்பட்டு விடும்.
வங்களாதேசத்தில் நடைபெற்றது வேறு விடயம். பாகிஸ் தான் எப்பொழுதும் இந்தியாவின் எதிரியாகவே இருந்தது. அதனுல் அகதிகள் வந்து நிறையுமட்டும் பார்த்துக்கொண்டிருந் தார்கள். பங்களாதேசம் பங்களாதேசம் என்கிருயே அங்கு என்னதான் நடந்து போய்விட்டது. ராணுவசர்வதிகாரம் ஏற் பட்டிருக்கிறது. சுரண்டல்வாதிகள் தங்கள் வேலையைத் தொடர் கிருர்கள். பசிபட்டினி வறுமை தொடர்கிறது. நாடு விடுதலை அடைந்துள்ளது போல உனக்குத் தோன்றலாம். மக்கள் விடுதலை அடைந்துள்ளார்களா? இல்லவே இல்லை. மக்கள் விடுதலை அடை. யாத நாட்டு விடுதளை எதற்கு? í

அருளர் 16
அதுபோக இங்கு நிலைமை வேறு. இலங்கையில் தனியான தமிழருடைய நாடு இந்தியாவின் ஒற்றுமைக்கு முடிவு கட்டும் என்று வாதிடுபவர்கள் ஏராளம். அல்லற்படுகின்ற தமிழரின் முதுகில் ஏறி நின்று கொண்டு தங்கள் கொடிகளை இங்கு பறக்க விடலாம் என நி%னப்பவர்கள் எத்தனையோ பேர். எங்களை அப் படியே கப்பலில் திரும்பிக் கொண்டு வந்து கொழும்பில் விட் டாலும் விட்டுவி வொர்சள். எங்களுக்கு உதவி செய்பவர்கள் நீதியையும் தர்பத்தையும் உலகின் எந்தப் பகுதியிலும் நிலை நாட்டுவதற்குத் தேவையான மனுேபலமும், சக்தியும் உடைய வர்களாக இருக்கவேண்டும். அவர்களைத்தான் நாம் அணுகிச் செயல்பட வேண்டும். வெறும் ஆட்களின் எண்ணிக்கையை நம்பி நாம் செயற்பட முடியாது" வேட்டியுடன் இருந்த இள்ைளுன் தனது பேச்சைச் சற்று நிறுத்திவிட்டு மறுபடியும் தொடர்ந் தான,
‘எங்களுடன் இருப்பவர்கள் ஒன்று இரண்டு பே ர ல் ல. ஆயிரத்து இருநூறு பேர். ஆயிரத்து இருநூறு உயிர்கள். எவ் வளவோ அனைல்களுக்குப் பின்னர் வீட்டை அடைவதற்குத் துடித்துக் கொண்டிருபபவர்கள். அவர்களுடைய மனநிலைகளை நாங்கள் மறநதுபோகப்படாது. இந்த அல்லலுற்ற இதயங்களைக் கடலில் அலேககழித்து பரிதவிக்க விட்டுததான் எங்கள் பிரச்சினை களைத் தெரியபபடுத்த வேண்டும் என்ருல் அந்த உலகத்திற்குத் தெரியப்படுததவேண்டியதில்லை. அவ்வளவு தூரம் மடமையான உலகில இருபபதிலும் பார்க்க கப்பலைப் பாறையில் மோ தி க் கடலில் அமிழ்த்தி நாங்களும் சேர்ந்து இறந்துமடிந்து போ ப் விடலாம். ஆனல் நீ நினைப்பது போல் அவ்வளவு தூரம் உலகம் பாழடைந்து போய்க் கிடக்கவில்லை' -
சரவணனுக்குப் பொறுக்கமுடியவில்லை. 'தனிநாடு வேண்டு மென்ருல் எல்லோரும் தியாகம் செய்ய வேண்டும். எங்க ள் பிரச்சினையை உலகிற்குத் தெரியப்படுத்துவதற்கு இதைப்போல சந்தர்ப்பம் இலகுவில் வராது’’
"தனிநாடு வேண்டும்தான். ஆனல் தியாகங்கள் செய்ய எல்லோரும் தயாராக் இல்லை. அதற்கான ஒற்றுமை இல்லை. காலையில் சமையல் அறையில் பாண்வெட்டிக் கொண்டிருந்த பையன் ஒருவன் எதையோ எடுத்துச் சாப்பிட்டுவிட்டான் என் பதற்காக ஒருவர் "எங்களுக்குத் தராமல் தின்று முடிக்கிருர்கள்' என்று ஒரு கலாட்டாவையே உருவாக்கி விட்டாராம். நல்ல

Page 92
i68 லங்கா ராணி
காலமாக குமார் அங்கு நின்றதால் அவரை ஒருவாறு சமா தானம் செய்து அனுப்பி விட்டாராம். நீங்கள் என்ன தா ன் தியாகம் செய்தாலும் ஆளை விட்டால் போதும் என்று கூறு பவர்கள் ஏராளம். தனிநாட்டுப் போராட்டம் அவ்வளவு சுலப மான தல்ல. ஒரு கிழமையில் திரும்பப் போகிறவர்களுமிருக் கிருர்கள். கப்பலால் இறங்கி நேராகப் படத்துக்குப் போகிறவர் கள் எத்தனையோ பேர் இருக்கிறர்கள். இன்னும் ஏராளமான வர்கள் தென்பகுதியிலே இருக்கின்றனர்.
சரவணன் குறிக்கிட்டான். 'ஒரு மாதத்திற்கு ஒரு சிங்களப் பொலிசைச் சுட ஒரு இனக்கலவரம் வரும். இப்படியே எல்லோ ரையும் வரவைத்தால் தனிநாடுதானுக வருய'
"அது நல்ல திட்டம் தான். ஆனல் தனிநாட்டில் இருப்ப தற்குதான் யாரும் இருக்கமாட்டார்கள். எல்லோரும் ஓடிவிடு வார்கள். சரவணன் நான் சொல்வதைக் கேள். வெறும வண் செயல் எதையும் தராது. எல்லாவற்றையும் அழித்தொழிபட தாகத்தான் முடியும். பொலிசாருடனும இராணுவததினருடனும் மோதப்படாது. அவர்கள் வெறும் கருவிகள. வெறும் போலப் புகழ்ச்சியால் உந்தபபட்டுச் செலடவர்கள். அவர்களுடைய துர்ப் பாக்கியம் எப்பொழுதும் தீயச்சகதகளின எ டு பி டி கள க ச் செயலபட வேண்டிய நிலை, நாங்கள் கண்மூடித்தனமாக அவர் களைத தாக்கினுல் அவர்கள் பிரிக்க முடியாதவாறு தீயசக்திகளு டன் ஒனறிப்பாய்விடுவார்கள். இவர்களுடைய கண்கள மூடிக கிடக்கின்றன. இவர்களை அப்படியே வைத்துக் கொண்டு கண் களேத் திறந்துவிடவேண்டும. அதுதான் அகடபடித்தனம்.'
‘இவர்கள் என்ன எதிரிகள் அல்ல? இவர்கள்தான் இந்தத் கலவரததைத் தொடக்கி இத்தனைக்கும் பொறுப்பானவாகள. இவர்களுடைய சேவைச்ய எங்களுககுத தேவையல்லை. ஒழு ங் கையும் சடடத்தையும் பாதுகாப்பையும் நாங்கள் பாாததுசு கொள்வோம். முதலlல் இவர்கள் வெளியேற வேணடும்'
'அது வேறு விடயம். ஆனல் இருக்குமட்டும் அவர்கள் தங்கள் கடமையைச் செய்யவே அங்கு இருககிருர்கள். வி வர் களுடன் மிகவும் கவனமாகப் பழகிக் கொள்ள வேண்டும்'
‘இவர்கள் கடமையைச் செய்யத் தவறிவிட்டார்கள். இருக்கவே விடப்படாது அனுப்பிவிடவேண்டும்"

அருளர் Î6 šį
"அவர்கள் கடமையைச் செய்யத் தவறினல் அதற்கு விசா ரணைகள் வரும். தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும். அப்படி எதுவும் நடைபெரு விட்டால் பார்த்துக்கொள்வோம்'
'அவைகள் எதுவும் நடக்காது’
"சரவணன் கேள்! நாங்கள் கண்மூடித்தனமாக அவர்களே எங்கள் எதிரிகளாக ஆக்கப்படாது. எதற்கும் முதலில் மக்கள் தயாராக இருக்க வேண்டும். அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது தெரியவேண்டும். இது இலகுவான காரியமல்ல.
**இதற்குமேல் என்ன தெரிய வைப்பது?"
"எதுவுமே அவர்களுக்கு விளங்கவில்லை. யாரோ தனிநாடு கேட்டார்கள். யாரோ அடித்தார்கள். கொள்ளையடித்தார்கள், துரத்தினர்கள் என்று பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு வருகிருரர் கள். அவ்வளவுதான். எங்கு இருக்கிறுேம், எங்கு போகவேண்டும் எப்படிப் போகவேண்டுமென்பது பற்றி அவர்களுக்கு முதலில் நன்கு தெரியப்படுத்தவேண்டும். திட்டமிட்ட பரந்த பொருளா தாரமும் முன்னேற்றமடைந்த விஞ்ஞானமும் கலாச்சாரமும் கொண்ட புதிய தமிழனுடைய சமுதாயத்தை ஒரு சரவணனு டைய சுழல் துப்பாக்கியால் நிறுவி விடலாம் என்று நினைக்கிருங் ஒரு போதும் முடியாது. தமிழனத் தட்டியெழுப்பி அவனுடைய ஆற்றலை அவனுக்குத் தெரியப்படுத்துவது அவ்வளவு கலப்பான காரியமல்ல. உனது தியாக மனப்பான்மை உனது உணர்ச்சியால் சீரழிந்து போகக்கூடாது. எதற்கும் நீ முதலில் பண்ணைக்கு வா!'
சரவணன் மெளனமடைந்து போனுன், வேட்டியுடன் இருந்த இளைஞன் குமாரைப் பார்த்து "எத்தனை மணி’ என வினவினன்.
'மூன்று மணி'
"கொஞ்சம் தூங்குவோம்'
"இந்த இடத்திலேயே தூங்குவோம்" என்ருன் கு மார். குமார் நின்றுகொண்டே தூங்கப் பழகியவன்.
“தேவையில்லை எதற்கும் கீழே இறங்கி மற்றவர்களுடன் சேர்ந்து தூங்கிவிட்டு காலையில் ஒன்ருக எழுந்திருப்போம் என்ற படி இறங்கிக் கீழ் தளத்திற்குச் சென்றனர். நடுவில் சற் து உயரமாக இருந்த மேடையில் துப்புரவு செய்துவிட்டுப் படுத்துக் கொண்டனர்.
ல 22

Page 93
13
காலை ஏழு மணி முப்பது நிமிடம். முல்லைத்தீவு. எதிர்பார்த்த படி கடற்படையினரின் வேகப்படகு கப்பலின் முன்னல் வழியை இட்டுச் செல்வது போலப் போய்க் கொண்டிருந்தது. விமானப் படையினரின் சிறிய விமானம் ஒன்று கப்பலின் மேலாகச் சுற்றி சுற்றிப் பறந்து கொண்டிருந்தது. கப்பலின் மேல் தளத்தில் பலர் காணப்பட்டனர். மழைக் கோலம் தொடர்ந்ததால் சூரிய வெளிச் சம் ஏதும் கப்பலின் மேல் விழவில்லை. கரையும் அதிகம் துலக்க மாகத் தெரியவில்லை. அந்த விமானம் தாழ்வாகய் பறந்துகொண் டிருந்ததால் விமான ஒட்டியைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. பலர் அந்த விமானத்தை அவதானிப்பதிலேயே தங்கள் நேரத் தைச் செலவிட்டனர்.
தொண்டர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். முத்தையாவும் ஆட்சஞம் காலை உணவைத் தயார் செய்வதில் ஈடுபட்டுப் பாணை வெட்டிக் கொண்டிருந்தனர். குமாரும் முத் தையாவும் காலையுணவை முடித்துக்கொண்டால் போதும் பகல் பன்னிரண்டு மணிக்குக் காங்கேசன்துறைக்குக் கப்பல் போய்விடு மாகையால் மதிய உணவு தயார் செய்ய வேண்டியதில்லே என்று தீர்மானித்திருந்தனர் இதனல் காலையுணவை எவ்வளவு பிரமாத மாகச் செய்ய முடியுமோ அவ்வளவு பிரமாதமாகத் தயார் செய்ய வேண்டுமேன்று முத்தையா முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்தார். நேற்று நடைபெற்றது போல் இல்லாமல் முத்தையா காலை நாலு மணிக்கே அடுப்பை முடுக்கிவிட்டிருந்தார். தேனீருக்காகப் பெரிய பாத்திரங்களில் தண்ணீர் வைக்கப்பட்டுச் சுட்டுக் கொண்டிருந் தது. எல்லோரும் காலைக்கடன்களை முடிப்பதற்காகக் கப்பலின் மேல் தளத்திற்கு வந்தனர். கடல் நீரில் முகத்தைக் கழுவினர்கள். கப்பல் பயணத்திற்கு யாவரும் பழக்கப்பட்டுவிட்டனர் என்பது நன்கு தெரிந்தது.

அருளர் 7
நேரம் போய்க் கொண்டிருந்தது. தொண்டர்கள் கப்பலில் உள்ளவர்களது பெயர் விலாசங்கள் அவர்கள் யாழ்ப்பாணத்தில் எங்கு தங்கப் போகிறர்கள் என்பதையும் எழுதிக் கொண்டளர். தங்குவதற்கு உதவியில்லாதவர்களின் விபரங்களைத் தனியான பட்டியலில் எழுதிக்கொண்டனர். இழந்த பொருட்களின் விபரங் கள், கலவரத்தில் பாதிக்கப்பட்ட விபரங்கள் கொடுத்துக் களைத் துப் போனவர்களும் சிலர் இருந்தனர். "இது என்னத்துக்கு" என்று தொண்டர்களைக் கேட்டவர்களும் உண்டு,
காலையுணவு ஒரளவு தயார் பண்ணப்பட்டு விட்டிருந்தது. தொண்டர்கள் காலையுணவைப் பரிமாறத் தொடங்கினர். பாணு டன் வாழைப்பழம். அன்னசிப்பழம், பிஸ்கட் எல்லாமே வழங் கப்பட்டது. தேநீரும் பரிமாறப்பட்டது. பலர் உற்சாகமாகக் காணப்பட்டனர்.
நாங்கள் ஒரு இனமா? என்ன? தமிழ் இனமா? அப்படியென் ருல் என்ன? என்று கேட்டுத் திரிந்தவர்கள் பலருடைய மனதில் அப்படி ஏதும் இக்குமோ என்ற கேள்வி எழுந்திருந்தது. நாட் டின் ஒரு மூலையில் ஒரு சிலர் மோதிக்கொண்டனர். அது ஏன் இந்த நிலையை ஏற்படுத்த வேண்டும்? நாங்கள் தமிழ் இனமா? இல்லை இல்லை நாங்கள் மனித இனம். என்று கூறிக்கொள்பவர் களும் கப்பலில் இருந்தார்கள். அவர்கள் மனதில் ஒரு கேள்வி. நாங்கள் தமிழ் இனமாக இருக்குமோ? என்பது தான் அந்தக் கேள்வி. ஒரு சிலருக்கு அடிவிழுந்திருந்தபடியால் இந்தக் கேள்வி சற்று வேகமாகவே அவர்களைத் தாக்கியது. அப்படியிருந்தும் அவர்கள் அதை வேறு விதமாக வெளிக்காட்டிக் கொண்டிருந் தனர். "அவன்கள் சும்மா இருந்திருந்தால் ஒன்றும் வந்திருக் காது" என்ற அபிப்பிராயமாகவே அவர்கள் மனநிலை வெளிப்
•Jھی۔ا۔Lلا
முன் தளத்தில் உணவு பரிமாறப்பட்டுப் பின் தளத்திற்குத் தொண்டர்கள் மாறினர்கள். மேல் தளத்தில் நின்றவர்கள் உணவு பரிமாறப்படுவதால் இறங்கிக் கீழ்த்தளத்திற்குச் சென் றனர். டாக்டர் நற்குணம் அன்றைய ஏற்பாடுகள் பற்றிக் குமாருடன் கதைத்தார். இளைஞர்கள் எல்லாவற்றையும் திறமையாகவே நிர் வகித்து வந்ததையிட்டு அவர் பெருமைப்பட்டுக் கொண்டார்.
ஒன்பது மணி. காலையுணவை முடித்துக்கொண்டு பின்தளத் திற்குக் குமார், சரவணன், தேவன் ஆகியோர் இறங்கி ஒவ் வொருவராகச் சந்தித்துக் கதைத்தனர். கப்பல் காங்கேசன்துறை

Page 94
72 லங்கா ராணி
துறைமுகத்தைப் பகல் பன்னிரண்டு மணிக்குச் சென்றடையுமென் பதையும் அங்கிருந்து வீடுகளுக்குச் செல்வதற்குப் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதையும் தெரிவித்தனர். சரவணன் பிரத்தியேகமாக உடைகளை அணிந்து அழகு படுத்திக் கொள்ளாமல் உடுத்தியிருக்கும் உடுப்புக்களுடனேயே இறங்க வேண்டுமென்றன். பலரும் அதை வரவேற்றனர். எனினும் சில பெண்கள் அந்த நேரத்திலேயே தலையை வாரத் தொடங்கி யிருந்தனர்.
அங்கு உள்ளவர்களில் பலர் இளைஞர்களிடம் அடுத்ததாக என்ன நடக்கும் என்றனர். “ஒருவரும் திரும்பிப் போகப்படாது. நாங்கள் வந்து கூறுவோம்" என்ருன் சரவணன். அவர்களில் அநேகம் பேர் திரும்பிப் போய்விடுவார்கள் என்பது சரவணனுக் குத் தெரிந்திருந்தும் பலர் அவனுடைய கருத்தை உற்சாகமாக வரவேற்றனர். 'தம்பிமாரே எனக்கு ஐம்பது ஏக்கர் காணி யிருக்கு. வேணுமென்ருல் எடுத்துக்கொள்ளுங்கோ’’ என்ருர் ஒருவர் சரவணன் கேட்டான். 'எங்கே இருக்கு?"
**ஆனை முறிச்சான் புலியன் குளம்' "அதெங்கே இருக்கு?"
:*மிாங்குளத்தில் இருந்து முல்லைத்தீவு போற வழியில பதிஞறு கட்டை போகவேனும். முள்ளியவளையில இறங்கி மூன்று கட்டை போகவேனும், பாதையிருக்கு, வண்டிப்பாதை."
"நல்லது அதுதான் எங்களுக்கு வேணும் உங்கடை விலா சத்தை இதில் எழுதித் தாங்கோ."
சரவணன் துண்டைக் கொடுக்க அவர் தனது விலாசத்தை எழுதிக் கொடுத்தார். யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்தவர். யாரைப்பார்த்தாலும் தம்பிமாரே விடாதேயுங்கோ. ஒருத்தரும் திரும்பிப் போகப்படாது என்பதுதான் கதை.
ஒருவர் குமாரின் முதுகைத் தட்டினர் *எகின தடந்தாலும் திரும்பிப்போகப்படாது. இதை ஒரு முடிவுக் குக் கொண்டு வரவேணும். என்ன வேணுமென்டாலும் கேளுங்கோ" என்ருர், அவரை அகதிகள் முகாமிலேயே குமாருக்குத் தெரிந்திருந்தது. தெகிவளை பக்கத்தில் வாழ்ந்தவர். காடையர்கள் அடுத்த தெருவில்

அருளர் 179
கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். இவருடைய வீடு வெகு தூரத்தில் இருக்கவில்லை. அவசர அவசரமாக எடுக்கக் கூடுமான வற்றை எல்லாம் எடுத்துப் பெட்டியில் போட்டுக் கொண்டார். மிகுதியாகக் கிடந்த பெரிய பொருட்கள் குளிர்சாதனப் பெட்டி, வானெலி, மின்விசிறி. தளபாடங்கள் எல்லாவற்றையும் கொண்டு வந்து நடுவிட்டில் போட்டார். மனைவி பெட்டியுடன் ஆயத்த மாகிக் கொண்டு நின்ருள். எடுத்துக்கொண்டு வந்தார் உலக் கையை, அடி நொருக்கு. எல்லாம் தூள்பறந்தது. மண்ணெண் ணையை ஊற்றி நெருப்பு வைத்துவிட்டு மனைவியுடன் வெளி யேறிவிட்டார். டாக்சியைப் பிடித்துக்கொண்டு அகதிகள் முகா மிற்கு வந்தவர், வந்த வேகம் இன்னும் தணியவில்லை.
பலர் இளைஞர்களுக்கு நன்றியும் கூறினர்கள். அவர்களுடைய சேவையின் ஒழுங்கான போக்கும் தி யாக மனப்பான்மையும் துணிச்சலும் எல்லோரையும் பெருமைப்பட வைத்திருந்தது.
பின்தளத்தை முடித்துக்கொண்டு இளைஞர்கள் மேலே ஏறி வந்தனர். மேல்தளத்தில் பலர் வந்து சிறுசிறு கூட்டங்களாக நின்று கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். சூரியன் மேல் ஏறியிருந்தது. வெளிச்சம் கூடுதலாக இருந்தாலும் மேகங்கள் மூடிய வண்ணமே இருந்தன. எவ்வித கூட்டங்களிலும் பங்கு பெற்ருதவர்கள் தனிமையில் நின்று கொண்டிருந்தனர். கடைகள் வீடுகள் எல்லாவற்றையும் பூட்டிவிட்டு அவற்றுள் ஏராளமான பொருட்களை விட்டு விட்டு வந்தவர்கள், அவற்றிற்கு எ ன் ன நடக்குமோ என்ற ஏக்கத்தில் இருந்தனர். சிலர் ஒவ்வொரு கூட் டங்களாகச் சென்று கேட்டுத் தங்களுக்குப் பிடித்தமான கூட்டங் களில் நின்று கொண்டனர்.
இற்றைக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன் இலங்கை சுதந் திரம் பெற்ற நாள் தொடக்கம் தமிழ்ப் பேசும் மக்களின் உரி மைகள் பறிக்கப்பட்டு அவர்கள் மூன்ரும் தர குடிமக்களாக ஆக்கப்பட்டு வருகிறர்கள். இந்த உரி ைம க ளை மீட்பதற்காக நாங்கள் போராடவேண்டும். கிழக்குமாகாணம் சிங்களக் குடி யேற்றங்களால் பறிபோய்விட்டது. 1956 ஆம் ஆண்டு பண்டார நாயக்கா ஒப்பந்தம் செய்ய முன்வந்தார். அது கிழித்தெறியப் பட்டுவிட்டது. 1972 ஆம் ஆண்டு திருமதி பண்டாரநாயக்கா அரசின் குடியரசுப் பிரகடனத்தால் தமிழர்கள் மேலும் பல இன்னல்களே அனுபவித்து வருகிருர்கள், தமிழ் இளைஞர்களுக்கு

Page 95
174 லங்கா ராணி
தரப்படுத்தலால் உயர்கல்வி மறுக்கப்படுகிறது. அரசாங்க சேவை யில் 1950 ஆம் ஆண்டு ஐம்பது சதவீதமாக இருந்த தமிழர்கள் 1970 ஆம் ஆண்டு ஐந்து சதவீதமாக ஆகிவிட்டார்கள். 1958 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தில் பல தமிழர்கள் கொல்லப் பட்டிருக்கிறர்கள். 1981 ஆம் ஆண் டு சத்தியாக்கிரம்-சட்ட மறுப்பு-தடுப்புக் காவல்-குடியரசு தினப்பகிஷ்கரிப்பு-இளைஞர்கள் தடுப்புக் காவல் சித்திரவதைகள்-புத்தளம் துப்பாக்கிச் சூடுபரராஜா கொலை-தனிநாடு .இப்படி சாதாரண பா னி யி ல் போய்க்கொண்டிருந்தது ஒரு கூட்டம்.
இன்னுமொரு கூட்டம். அங்கு இரு டாக்டர்கள் மத்தியில் உயரமான தூண் ஒன்றின் மீது ஏறி நின்றுகொண்டிருந்தனர். வயதில் இளைஞர்கள். அவர்களைச் சுற்றி சில பேர் நின்றுகொண் டிருந்தனர். அவர்களில் ஒரு சிலர் சிறிய பார்சல்களையும் பைகளை யும் வைத்துக் கொண்டு நின்றனர். அவர்கள் கொண்டு வந்த பொருட்கள் அவ்வளவுதான் போல இருந்தது. சாப்பாட்டுக் கடை தியேட்டர்கள் போன்றவற்றில் எடுபிடிகளாக வேலை செய் தவர்கள். இழப்பதற்கு அதிகம் வைத்துக் கொள்ளாதவர்கள் போல இருந்தது. கூட்டம் ஏதோ பாலர் வகுப்பு மாதிரி நடந்து கொண்டிருந்தது. VA
"எனிமேல் என்ன வந்தாலும் அங்கை திரும்பிப் போகப் படாது. என்ன? திரும்பிப் போகப்படாது. சரி. எங்கை எல்லாரும் ஒன்ருகச் சொல்லுங்கோ"
"என்ன வந்தாலும்"
"என்ன வந்தாலும்'
'திரும்பிப்போக மாட்டோம்'
'திரும்பிப் போக மாட்டோம்-டோம்-டோம்"
"எங்க எல்லோரும் ஒன்ருகச் சொல்லுங்க பார்ப்போம்”*
"என்ன வந்தாலும் திரும்பிப் போகமாட்டோம்'
"குட்." ஒருவர் தலையில் கட்டோடு நின்று கொண்டிருந் தார். தொடர்ந்தது.
“உங்களுக்கு ஏன் அடி விழுந்தது? ஏன் அடி விழுந்தது?" .மயான அமைதி.
"நீங்க அங்கு போனதால் எங்க'
"நாங்கள் அங்கு போனதால.தால தால.

அருளா 75
‘என்ன எல்லோரும் ஒவ்வொரு பக்கமாக இழுக்கிறீங்கள் ஒன்ருகச் சொல்லுங்கள். ஏன் அடிவிழுந்தது?"
'நாங்கள் அங்கு போனதால' "குட்’ இவ்வாறு கூட்டம் தொடர்ந்தது.
இளைஞர்கள் தொடர்ந்து சென்று பின்தளத்திற்கு வந்தனர். மேல்தளத்திலும் பலர் நின்று கொண்டிருந்ததால் அவர்களிட மும் இளைஞர்கள் கூறவேண்டியவற்றைக் கூறிக் கொண்டு சென் றனர். வேட்டியுடன் இரு ந் த இஃாஞனும் வெள்ளைச்சாமியும் அங்கு ஒரமாக நின்றுகொணடும் அதே நேரத்தில் வேறு மூவர் நடத்திககொண்டிருந்த கூட்டத்தை தெரியாதவர்கள் போலப் பார்த்துக் கொண்டும் நின்றனர். இந்த நேரத்தில் மற்றைய யாவரும வந்து சேர்ந்தார்கள். இந்தக் கூட்டம் கப்பலின் முன் பகுதியில் உள்ள நங்கூர மேடையைச்சுற்றி கடந்துகொண்டிருந் தது. அவருக்குக் கீழ் வலது பக்கத்திலும் இடது பக்கத்திலுமாக இருவர் நின்றனர்.
பட்டாளிகளின் புரட்சி பற்றி பேசினர், இடையினில் தமிழ் சொற்கள் வராததினல் கீழே அவருக்குப் பக்கத்தில் நின்றவர் கள் அவருக்கு உதவி செய்தார்கள். உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபடவேண்டும் ஒன்றுபடவேண்டும் என்று பலதும் கூறப் பட்டது. இவற்றையெல்லாம் வேட்டியுடன் நின்ற இளைஞ ன் கேட்டுக் கொண்டு நின்றன்.
'புரட்சி செய்வதற்கு முதல் கட்சி அமைக்க வேண்டும், ஆயுதம் வேண்டும். பணம் வேண்டும். இது க்கு உங்களிடம் இருககிற காசு போதுமா? இல்லை. இதற்கு அரசாங்கத்திட மிருந்து எடுக்கவேணும். அரசாங்கத்திடமிருந்து எப்படி எடுக்க வேண்டும்." வங்கிகளைக் கொள்ளையடிக்க வேணும்? வெறுங் கையோட போய்க் கொள்ளையடிக்கலாமா? அதற்கும் ஆயுதம் வேண்டும். துவக்கு வாங்க வேணும். அதற்காவது பணம் கொடுங்கள். சரி உங்களிட்ட இருக்கிற காசுகளைக் கொடுங்க ஆயுதம் வாங்க. யாரும் ஏலுமானதைக் கொடுங்க வில்லங்கப்படத் தேவையில்லை" பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்தார்.
"யு கான்ட் வோஸ் தெம், லெற் தெம் கிவ் வட் தெவான்ட்” பலர் பணம் எடுப்பதற்கு மடியைத் தடவினர். இளைஞர்கள் கூட்டத்தைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். இவர்களும் தங்கள் கூட்டக் தை ரசிப்பதற்கு வந்தார்கள் என நினைத்துக் கொண்டு

Page 96
• , ივ,
176 லங்கா ராணி
**வீ ஆர் கலெக்டிங் மணி போர் ஆம்ஸ்" என சமாதானமாகக் கூறினர். மேடையில் பேசிக் கொண்டு நின்ற அவரிடம் சரவணன் கூறிஞன்.
'இறங்கும் கீழே" **வை?வி ஒல் காவ் டெமோகிறC'> 'இறங்கு கீழே"
'யு சீ வீ ஆர் ஜெனியுன் கெறக்டர்ஸ்" பக்கத்தில் நின்றவர் களைப் பார்த்துக் கேட்டார் "கவ் டு யூ ட்ரான்சிலேட் ஜெனி ህjsär?””
*உத்தமம்" பக்கத்தில் நின்றவர் மொழி பெயர்த்தார். மேடையில் நின்றவர் கூறினுர், "ஐ ஆம் அன் உத்தமன்" "அவர் உத்தமர். அவருக்குப் பக்கத்தில் இரண்டு புத்திரர்கள் இறங்கடா கீழே"
*உத்தம புத்திரர்கள். அடேஅப்பா இறங்கடா கீழே' தேவ னும் சேர்ந்து சிொண்டான்.
“டோன்ட்ற் இன்சல்ட் அஸ். வீ காவ் நேம்ஸ். ஹிஸ் நேம் இஸ் மிஸ்டர் ராஜ். ஐ ஆம் கந்தா, ஹி இஸ் மிஸ்டர் வில்சி. கி டிட் ஹிஸ் பி எச். டி. இன் றெவலூஷனறி பார்லிமென்டரி டெமோ கிறகி அன் லண்டன் ஸ்கூல் ஒவ் எக்கனமிக்ஸ், ஜ ஆம் வொறம் ஒக்ஸ்வோட், ஹி இஸ் வொறம் வெள்ளவத்தே'
அதெல்லாம் பிறகு பார்க்கலாம். முதலில் கீழே இறங்கு பார்ப் பம். இப்ப இறங்கிப் போரீரா? அல்லது இறக்கிறதா?" கூட்டத் தில் நின்றவர்கள் மாறி மாறிப் பார்த்தார்கள். தேவன் கைகளை மடித்து விட்டுக் கொண்டான், வலது பச்கத்தில் நின்றவர் *கேள்வி கேட்கலாம்" என்று நேரடியாக இளைஞர்களிடம் கூரு; மல் அதை மேலே நின்றவரைப் பார்த்துக் கூறினர், மேலே நின்ற வர் குனிந்து 'ஸ்பீக் இன் இங்கிலீஸ், த மாஸஸ் டோன்ட் றெஸ் பெக்ட்' சனங்கள் மதிக்கமாட்டார்களாம். ஆங்கிலத்தில் தங் களுக்குள் பேசும்படி ஞாபகப்படுத்தினர். வலது பக்கத்தில் நின்ற றவர் ஆங்கிலத்தில் தொடர்ந்தார்.
"யூ சீ யூ காவ் டெமோகிறC, யூ கான் ஆஸ்க் குவெஷ சன்ஸ், நோ. தே ஆர் ரூ மச். வீ வில் ஆஸ்க் குவெஷ்சன்ஸ் யூ ஆஸ்க் எப வுட் ரொட்ஸ்கி, நோ லிம்பியாவோ, நோ. நோ ஆஸ்க் எபவுட்

அருளர் 77 காங் ஒவ்வோர்" வலது பக்கத்தில் நின்றவர் கூறினர். மேடை யில் நின்றவர் கேட்டார்.
“வெல் வாட் டூ யூ நோ எபவுட் காங் ஒவ் வோர்?"
சரவணன் சொன்னன், ‘'இப்ப எங்கடை பிரச்சனை காங் ஒவ்வோர் இல்லை காங் ஒவ் த்ரீ. இறங்கு கீழை இதுதான் கடைசி முறை?"
'ஓ கே வி கெட்டவுன். டோன்ட் கெட் எக்சயிற்றட் யூ மஸ்கம் அன் சி மீ ஐ வில் பி ஸ்டேயிப்ங் அட் மெயின் ஸ்ரீட் ஜவ்ஞ. வி மஸ்ற் டிஸ்கஸ்" என்றவாறு மேடையிலிருந்து இறங்கினர்கள். சரவணன் 'அதெல்லாம் நல்லாயிருக்கும். ப்ப துதில் நிக்காதை யுங்கோ. ஒடித்தப்புங்க கெதியா' என் முன். அவர்களும் அங்கி ருந்து நழுவினர்கள்.பலர் மடியில் இருந்து எடுத்த காசை திருப்பி வைத்தனர்.
இதற்குப்பின் வேட்டியுடன் இருந்த இளைஞன் அங்கே இருந் தவர்களிடம் கூறினன். போய்க்கொண்டிருந்த அந்த மூவரை யும் காட்டி "இந்தப் பேர்வழிகளையிட்டு நீங்கள் மிகவும் எச் சரிக்கையாக் இருககவேண்டும்' அங்கே சரவணனும் அவனுக் குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தான். தொடர்ந்து இளை ஞன் கறினன்.
"இவர்கள்தான் புத்தகத்தில் இருக்கும் புரட்சியை போத் தலில் அடைத்து விற்று அதில் வரும்லாபத்தில் வீடுகட்டிக் கார் வாங்கிக் கொள்பவர்கள். இந்தப் பேர்வழிகள்தான் எங்கு எல் லாம் மக்கள் தங்கள் கண்கள் திறபட்டு தங்களுடைய கைகளில் உள்ள விலங்குகளை கண்டு அவற்றை உடைத்தெறிய வேண்டு மென்று நிற்கிருர்களோ அங்கு வந்து அவர்களுக்கு அவற்றை உடைத்தெறிய முடியும் எனறு கூறிவிட்டு அந்த விலங்கைப் பற்றி பேசிப் பேசியே காலத்தை கடத்தி அவர்களுடைய கைக ளில்தான் அந்த விலங்குகள் இருக்கின்றன என்பதையே மறக்க வைத்து விடுவார்கள். பேசுவார். புரட்சியைப் படித்துப் படித்து அப்படிப் படித்துத் தெரிந்துகொள்வதுதான் புரட்சி என்று நினைத்து எல்லோருக்கும் அதைப் படிப்பிப்பதுதான் முதல்வேலை என்று போதிப்பார்கள். படித்தவர்கள் இவர்களைப் போலவே எதுவும் இயலாதவர்களாகி சாய்வு நாய்காலியைத்தேடி ஒடு
ல. 23

Page 97
78 லங்கா ராணி
வார்கள். இந்தப் பேர்வழிகள்தான் வெறும் சரித்திரங்களைப் படித்து வைத்துக்கொண்டு அதைப்பேசுவதுதான் புரட்சி என்று
பிதற்றிக்கொண்டு திரிவார்கள். புரட்சி என்று நிற்கும் மக்கள்
மத்தியில் போய் இந்தப் பேர்வழிகள் அவர்களுடைய பிரச்
சினைகள் எல்லாவற்றையும் புரிந்து கொண்டவர்கள் போலவும்
அவற்றையெல்லாம் தீர்த்து வைப்பவர்கள்போலவும் கதைத்து நடித்து எல்லோரும் தங்களையே நம்பியிருக்க வைத்து தங்களுக்
கென ஒரு நிலையை ஏற்படுத்தி உயர்த்திக்கொண்டு பின்பு அந்த
நிலைகளைக் காப்பாற்றிக்கொள்வதற்காகவே புரட்சி, புரட்சி எனக் கத்திக்கொண்டு எதுவும் சாதிக்க இயலாமல் இயக்கமற் றுப் போய் சாக்குப் போக்குகள் சொல்லிக்காலம் கழிப்பவர் கள். ஏமாற்று வித்தைக்காரர்கள். தங்கள் பாரம்பரிய நிலை
களைக் காப்பாற்றிக்கொள்ள புரட்சியில் புகுந்து கொள்பவர்
கள். கண்ட இடமெல்லாம் இவர்களுடைய கடைகள் இருக்
கும். ஏன் இப்படி நூறு கடைகள் என்று கேட்டால் அதற்கு வெயில் அடிக்குது மழையில்லை என்றுபொருத்தமற்ற காரணங் கள் ஆயிரம் கூறுவார்கள். சுயநலத்தையும் சுயகெளரவத்யுைம் தங்களுக்குள் மோதவிட்டு எல்லாவற்றையும் தூள் தூள் ஆக்கு வார்கள். மேலேயே இருந்து கொள்வார்கள். கீழே இறங்கி வரமாட்டார்கள். லாபத்தை மனதில் வைத்து அர சி யலை விற்பார்கள். புரட்சி புரட்சி என்று மாத்திரம் கத்திக்கொள்வார் கள். இயலாதவர்கள். இவர்களையிட்டு நீங்கள் மிகவும் எச்ச ரிக்கையாக இருக்க வேண்டும்." என்ருன் அந்த இளைஞன்.
அங்கு நின்றுகொண்டிருந்தவர்களில் ஒருவரைச் சரவணன் முன்பே நன்கு தெரிந்து வைத்திருந்தான். அகதிகள் முகாமிற்கு வந்தபின் தான் இருந்த இடந்தில் தன்னுடைய பணத்தை நிலத் தில் புதைத்து வைத்துவிட்டு வந்ததாகவும் அவற்றை மீட்க வேண்டுமென்றும் கூறினர் பல சிரமங்களுடன் அகதிகள் முகா மில் உள்ள அதிகாரிகளைக் கொண்டு இவரைப் பலத்த இரா இணுவப் பாதுகாப்புடன் அவருடைய இடத்திற்குக் கூட்டிக்கொண்டு போனர்கள். சரவணனும் கூடப்போயிருந்தான். அவர் மிகவும் ஆர்வத்துடன் பின் வளவில் ஒரு இடத்தில் மண்ணைத் தோண் டினர். ஒரு அடி ஆழத்தில் கண்ணுடி உறையில் கடதாசியில் பணத்தைச் சுற்றி வைத்திருந்தார். இராணுவ உயர் அதிகாரிகள் சரவணன் எல்லோரும் சுற்றி வளைத்துக்கொண்டு நின்றனர். அந்தக் கண்ணுடி உறையைப் பிரித்து அதில் வைத்திருந்த பணம் சரியாக இருக்கின்றதா எனறு பார்த்துக்கொண்டார். அதில் இருந்தது ஆக மொத்தம் பதினைந்தே ரூபாய் தான். ஒரு பத்து ரூபாய்த்தாளும் ஒரு ஐந்து ரூபாய்த்தாளும். திரும்பி எல்லோ

அருளர் 麗79
ரும் முகாமிற்கு வந்தனர் அதற்குப் பின் அவர் மிகவும் மகிழ்ச் சியுடன் காணப்பட்டார். அவர் அந்தக் காசை மீண்டும் மடி யில் வைத்ததைப் பார்த்துச் சரவணன் சிரித்துக்கொண்டான்.
இளைஞர்கள் யாவரும் ஒரு பக்கமாகக் கூடினர். கப்பலின் கீழ்த்தளத்திலேயே எல்லோரும் இருக்க வேண்டும் என்ற கப்ட னின் உத்தரவுபற்றிக் கேட்டனர். இதற்கு அந்த உத்தரவை நாங்கள் அதிகம் காதில் போட்டுக் கொள்ளத் தேவையில்லை. அது தேவையற்ற கட்டுப்பாடு. மேல் தளங்களில் உள்ளவர்களைக் கீழ்த்தளத்திற்கு அனுப்புவது மடியாத காரியம். ஆயினும் உள்ளே இருப்பவர்களை வராமல் இருக்கும்படி கூறுவோம் என்ற னர். கப்டனத் தளத்திற்கு அழைத்து வந்து அவருக்கு நன்றி கூறுவது நல்லது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இதற்குப்பின் முற்பகுதியில் இருந்த கீழ்த்தளங்களுக்கும் சென்று கூற வேண்டியதைக் கூறிவிட்டு மீண்டும் மேல் தளத் திற்கு வந்தனர். காலை உணவு பரிமாறி முடிய அதிக நேரம் எடுக்கவில்லை. மீண்டும் மேல்தளத்திற்கு வந்த இளைஞர்கள் கப் பலின் கீழ்த்தளத்தில் உள்ளவர்களை மேல்தளத்திற்கு வராமல் பார்ப்பதற்கு நியமிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்தனர். கப்ட னைக் கூப்பிட்டிருப்பதாகவும் அதற்காக முன்வந்து நன்றிகூற வேண்டும் என்றும் பலரைத் தெரிந்தெடுத்துக் கூறிக்கொண்டு போனர்கள்.
நேரம் பத்து மணி. காலையுணவை எல்லோரும் முடித்து விட்டிருந்தனர். யாழ்ப்பாணம் வரப்போகிறது என்பதால் தங் கள் காலையுணவை அதிகம் யாரும் பொருட்படுத்தவில்லை. கப் பல் நிற்பதற்கு முன் கழிவிடங்களைக் கழுவுவது பற்றி சரவணன் வந்து குமாரிடம் கூறிஞன். இப்பொழுது அதில் நாங்கள் இறங் குவது சாத்தியமில்லை. கரையிலிருந்து யாரையாவது வரவழைத்து கழுவுவதற்கு ஏற்பாடு பண்ணலாம் என்று கூறி அனுப்பிவைத் தான். கீழ்த்தளத்தில் உள்ளவர்களே மேல்தளத்திற்கு வராமல் பார்த்துக்கொள்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த தொண்டர்கள் எல்லோரும் ஓரி இடத்தில் கூடியிருந்தனர். அவர்களை அவர்கள் நியமிக்கப்பட்டிருந்த தளங்களுக்குப் போகும்படி கூறிவிட்டுக் கப்பலின் முற்பகுதிக்குச் சென்று கப்டன் வருவதுபற்றிக் கூறிஞன்.
கப்பலின் மேல்தளத்தில் எவரும் நிற்கப்படாது என்ற உத் தரவு பற்றிய செய்தி முன்பே பரவியிருந்தது. இதனைத் தெரிந் தவர்கள் பலர் காலையிலிருந்தே மேல்தளத்தில் நின்றிருந்தனர்

Page 98
80 லங்கா ராணி,
தொண்டர்கள் தளத்திற்கு இறங்கும் படிகளில் உட்கார்ந்து கொண்டனர். ஒவ்வொரு தளத்திற்கும் மூவர் நியமிக்கப்பட்டி ருந்தனர். மூவரும் ஒரே படியில் எவரும் மேலே போகமுடியாத வாறு உட்கார்ந்து கொண்டனர்.
கீழ்த்தளத்தில் நின்றிருந்த சிலர் வந்து படிகளின் கீழ்ப்பகுதி யில் சுற்றி வளைத்து நின்றுகொண்டனர். இதில் ஒருவர் கேட் டார். 'தம்பிமாரே இது யார் சொன்னது?" *கப்டன்" என தொண்டர்களின் நடுவில் இருந்தவன் கூறினன். எவரும் வாய் பேசவில்லை. படிகளைச் சுற்றி நின்றுகொண்டனர். வரவர அவர் களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது.
நேரம் போய்க்கொண்டிருந்தது. கப்பல் யாழ்ப்பாணக் குடா நாட்டை அடைந்துவிட்டது என்பது கரையில் தென்பட்ட பன மரங்களில் இருந்து தெரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது" மேலே நின்றவர்கள் கீழ்த்தளத்தில் நிற்பவர்களை சாட்டிப்பார்த்து யாழ்ப்பாணம் வந்துவிட்டது எனக் கூறவே இவர்களுக்கு மனக் குழப்பமாக இருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தனர். மேலே போய் மற்றவர்களைப் போல பார்க்க வேண்டுமென்பதில் ஆசை. ஆஞல் தொண்டர்களை எதிர்க்கும் சக்தி அவர்களுக்கில்லை.
எல்லோரும் நல்ல சேலைகள் அணிந்து தலைவாரி கால் சட்டை கறுப்புக் கண்ணுடி பெல்பொட்டம் போட்டு குடும்ப சகிதமாய் நின்றுகொண்டிருந்தனர். நூறு போர் இருக்கும். இவர்களைப் பார்க்கும்போது உயரத்தில் இருப்பவர்களென்பதும் வசதி படைத் தவர்களென்பதும் கொழும்பில் வீடுவாசல் உள்ளவர்கள் போல வும் தெரிந்தது. எதற்கும் குறைவில்லை. நின்றுகொண்டிருந்தனர். தடைச் சட்டம் நேற்றுவரைக்கும். இவர்கள்தான் நாட்டில் சட் டத்தின் பாதுகாவலர்கள். சுங்கப் பகுதி, பொலிஸ், மறியல் சாலே, நீதி இலாகா இவற்றின் நிர்வாகமே இவர்கள் கையில் தான். இவர்களுடைய கண்ணியமான சேவையை பாராட்டா தவர்கள் இல்லை. இன்றைக்கு இவர்கள் அகதிகள், நின்றுகொண் டிருக்கிருர்கள். மேலே தளத்திற்குப் போகவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தனர். யாருக்கும் மேலே போகத் துணிவு வரவில்லை. எதற்காக இந்தத் தடைச்சட்டம்? மேல் தளத்தில் உள்ள வெளிச் சத்திற்கு வரவும் கரையைப் பார்க்கவும்தானே விரும்பினர்கள் முடியவில்லை தடைச் சட்டம்.

Marsî 181
முன்னரே பலர் மேல்தளத்திற்கு வந்துவிட்டார்கள். பவுடர் கறுப்புக் கண்ணுடி போடாதவர்கள் சப்பாத்துச் செருப்பு இல் லாதவர்கள் காவல் காத்துக் கொண்டிருக்க, வேண்டிய பெட்டி பொட்டலங்கள் இல்லாதவர்கள் நேரக ; லத்திற்கு மேல் தளத் திற்கு வந்துவிட்டார்கள். எவ்வித சிரமமுமிருக்கவில்லை.
இத்தனைக்கும் இளைஞர்கள் காலையில் ஒவ்வொருத்தராகச் சென்று இந்தச் சோடனைகள் வேண்டாமென்று கூறியிருந்தார் கள். கேட்டார்களா? கேட்கவில்லை. ஏன்? இளைஞர்கள் என்ன கேட்டிருந்தார்கள்? நேரம் வந்துவிட்டது, தார்ப்பரியங்களைத் தகர்ந்தெறிந்துவிட்டுக் கொடியை ஏற்றவா கூறினர்கள்? இல்லை. பிரத்தியேகமாக எதையும் அணிந்து கொள்ளத்தேவையில்லை. அப்படியே போய் இறங்குவோம் என்றுதானே கூறிஞர்கள். பல பேர் எதுவுமில்லாமல் எல்லாவற்றையும் இழந்து போய் வருகிருர் கள் அவர்கள் மனத்தைப் புண்படுத்தாமல் இருக்கவே இந்த வீண் ஆடம்பரங்கள் தேவையில்லை என்று கூறினர்கள். கேட் டார்களா? ஏன் கேட்கவில்லை? ஏன் இந்தக் காட்டாப்பு?
பழக்கப்பட்டுவிட்டார்கள். மேல் தளத்திற்கு வரவேண்டிய நேரத்தை தவற விட்டிருந்தார்கள். பழக்கம் விடவில்லை. இப் பொழுது ஏன் விரும்புகின்றனர்? தாங்கள் கீழ்த்தளத்தில் நின்று கொண்டிருக்க தாங்கள் காண முடியாதவற்றை மேல்தளத்தில் நின்றுகொண்டிருப்பவர்கள் கண்டுகளிக்கிருர்கள் இவர்கள் நின்று கொண்டிருக்கும் தளம் இருட்டறைபோல் காட்சியளிக்கிறது. திடீரென இப்படியானதொரு மாற்றம். மேல்தளத்திற்கு வர விடாமல் இவர்களது பழக்கம் இவர்களைத் தடுத்துவிட்டது.
கொழும்பில் இருப்பவர்கள் அல்லவா! ஊரில் இருப்பவர் கள் நாளைக்கு என்ன சொல்வார்கள் நின்றுகொண்டிருந் தார் கள், சட்டத்திற்கு அடிபணிந்து பழக்கப்பட்டு விட்டார்கள். ஏன் என்று கேட்க முடியவில்லை. எதுவும் தங்களுக்கு நடந்து விடுமோ என்று பயப்படுகிருர்கள். இவர்கள் பழக்கப்பட்டுவிட். இந்த எடுப்புகளால்தானே தங்கள் நிலைகளைத் தெளிவுபடுத்தி, நிலைநிறுத்தி அந்த ஏற்றத் தாழ்வுகளையும், சுகபோகங்களையும், பிற்போக்குத் தனத்தையும் வாழவைத்துக் கொள்கிறர்கள். மேல் தளத்தில் நின்று முற்றிலும் புதுமையான காட்சி களை க் கண்டுகளிப்பவர்களோ, கரையில் நிற்பவர்களோ, இவர்களின் இந்த எடுப்பைக் கவனத்தில் போடும் நிலையில் இல்லை என்பன்த இவர்களால் ஏன் உணரமுடியாமல் போய் விட்டது. பழக்கம்.

Page 99
82 லங்கா ராணி
இவர்களுடைய இந்தப்பழக்கமும் அதோடு ஒன்றிப்போன இந்த இயலாமையும் தெரிந்துதானே போட்டிருந்தார்கள். என்ன இந் தச் சட்டம் என்று கேட்டார்களா? இல்லை. மற்றவர்கள் மேல் தளத்தில் நிற்ருர்களே என்று கேட்டார்களா? இல்லை. "யார் போட்டது சட்டம்!" "கப்டன்". அவ்வளவுதான் . நின்றுகொண் டிருந்தார்கள். இவர்களுடைய நிலையையும் போக்கையும் தெரிந்து தான் சட்டம் போடுபவர்கள் கண்ணை மூடிக்கொண்டு சட்டம் போடுகிருர்கள். நின்றுகொண்டிருந்தனர். மேல்தளத்திலிருந்து ஒருவன் எட்டிப்பார்த்து ‘நாகர் கோவில், வல்லிபுரக் கடற் கரை மணல் தெரியுது" என்ற அறிவிப்பையும் இவர்களுக்குச் செய்து விட்டிருந்தான். இவர்கள் நிலை மேலும் மோசமாகி பையன்களைப் பார்த்த வண்ணம் நின்றுகொண்டிருந்தனர்.
தளத்தின் ஒரு மூலையில் ஒருவன் தன் தலைக்கு ஒரு சிறிய பார்சலை வைத்துக்கொண்டு படுத்தபடி இருந்தான். இங்கு நடப் பதைப் பார்த்து ரசித்துக்கொண்டு கிடந்தான், அவன் இவர் களில் ஒருவனல்ல. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன்தான். கொழும்பில் பலகாலமாக இருந்ததால் யாழ்ப்பாணத்தை மறந் தவனுமல்ல. இவனுடைய குடும்பம் உறவினர் எல்லோரிலும் இவன்தான் குடாநாட்டை விட்டு வெளியே போனவன். அவர் சள் அந்தக் குடிசைகள், கொட்டில்கள். கூலிவேல், தள் , வண்டில், இப்படியான வாழ்க்கையில் உழன்றுகொண்டிருப்பவர் கள். இவன் மட்டும் ஒரு மாதிரி கொழும்புத் துறைமுகத்தில் போய் பிழைக்கப்பழகிக் கொண்டான் இவனுக்கு யாழ்ப்பா ணத்திற்கு வரவும் விருப்பமில்லை. யாழ்ப்பாணத்தைப் பார்க்க வும் விருப்பமில்லை. அப் படி யே படுத்துக்கொண்டிருந்தான். எழுந்து உட்கார்ந்துகொண்டான், இந்தக் கூத்தைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு ஒரே சிரிப்பு. இவர்களைப் பார்க்க, இவர்கள் படும் பாட்டைப் பார்க்க அவனுக்கு ஒரே சிரிப்பு
பையன்களையும் பார்த்தான். ஒரு சவால், எழுந்து வந் தான். ஒரு பக்கம் சிரிப்பு, சாரத்தை மடித்து இரண்டு பக்க மாகப் பிடித்தபடி எழுந்து வந்தான். சட்டமாம் சட்டம். ஒரு நீலச்சாரமும் வெள்ளை சேட் டும் அணிந் திரு ந் தான். இவர்களது பின்பக்கமாக வந்து எல்லோரையும் துளைத் துக் கொண்டு முன்னல் வந்துநின்ருன். ஒரு பக்க சாரத்தைக் கீழே விட்டான். மற்ற பக்க சாரத்தை மாத்திரம் ஒரு அளவாக உயர்த்திப் பிடித்துக்கொண்டான். பையன்களுடைய கவனத்
தைத் திருப்பினன். நடுவில் இருந்தவன் இவனைப் பார்த்தான்

அருளர் 18s
*தம்பிமாரே ஒண்டுக்கு வருகுது."
பையன்கள் இதைக் காதில் போட்டுக் கொள்ளாதவர்கள் போலப் பாசாங்கு செய்து அவனுடைய தலைக்கு மேலாக அவ னுக்குப் பின்புறமாக நின்றவர்களைப் பார்த்தனர். இந்த விட யம் அப்படித்தான். சட்டத்தின் அநீதியைச் சுட்டிக் காட்டினுல் அதைப் பாதுகாப்பதற்கென்று இருப்பவர்கள் எதையும் கண்டு கொள்ளாதவர்கள்போல தலைக்கு மேலாகப் பார்த்துக் கொண் டிருப்பார்கள். அடுத்த முறையும் கையை உயர்த்தினன்.
'தம்பிமாரே இதில இருக்கப் போகிறேன்."
பையன்கள் இம்முறை விழித்துக்கொண்டனர். ஒருவரோடு ஒருவர் தங்களுக்குள் கதைத்துக் கொண்டனர். ஆலோசனை நடாத்தினர்கள். தீர்மானம் எடுத்தார்கள். நடுவில் இருந்த பையன் இவனைப் பார்த்தான். மேலேவரும்படி கைகளை அசைத் தான். இவன் சாரத்தைக் கீழே விட்டு விட்டு படிகளில் ஏறிப் போனன். கம்பீரமானநடை, அவனுக்கு ஒரே சிரிப்பு, மனதிற் குள் சிரித்துக் கொண்டான். மற்றவர்கள் பார்த்துக் கொண்டு அமைதியாக நின்றனர். பையன்களைக் கடந்து போகும்போது தங்கள் முதுகை வளைத்து இவனைப் போகவிட்டார்கள். அவன் நினைத்திருந்தால் பையன்களின் கழுத்தைப் பிடித்துக் கீழே தள்ளி விடடு எல்லோரையும் மேலே வரும்படி கூப்பிட்டிருப்பான். அவ னுக்கென்ன மறியல், வீட்டிலும் நல்ல சாப்பாடு. ஆனல் அவ் வாறு இவன் செய்தால் அங்கு நின்றுகொண்டிருப்பவர்கள் இவன் அதைச் செய்து விட்டான் என்பதற்காக மேலே வர மறுப்பார் கள். அப்படித்தான் மேலே வந்தாலும் அவர்கள் செய்யும் முதல் வேலை இவனைப பிடித்துக் கொடுப்பதுதான். மேல்தளத்திற்கு வந்தபின் கீழ்த்தளத்தில் நிற்பவர்கள் முகத்தைப் பார்த்துச் சிரித்து அவர்களது மனததைப் புண்படுத்த விரும்பாமல் வேறு பக்கமாகப் பார்த்துக் கொண்டு போய்விட்டான்.
இவனுக்குப் பின் மேலும் இருவர் வந்து கைகளை உயர்த் திக் காடடினர் எதுவும் சொல்ல முன்வரவில்லை. அதே பிரச் சனைதான் என்பதை எல்லோம் விளங்கிக் கொண்டனர். பையன் கள் அதே ஆலோசனை தீர்மானங்கள் நேரத்தையும் கடத்தி விட்டு சரி என்பதற்கு அடையாளமாக கையைக் காட்டிஞன் ஒருவன். அவ்விருவரும் மேலே வந்தனர். மற்றவர்கள் அமைதி யாக நின்றனர். அவர்களைப் பார்க்கும் பொழுது பையன்களுக்

Page 100
184 லங்கா umrGsafi
குப் பரிதாபமாக இருந்தது. நின்றுகொண்டிருந்தார்கள், அவர் களால் அந்தக் கைகளைக் கூட உயர்த்த முடியவில்லை.
பையன்களால் அங்கு மேலும் இருக்க முடியவில்லை. சட்டத் தின் போலித்தனம் அவர்களை மேற்கொண்டுவிட்டது. அதை அவர்களால் உணரக் கூடியதாக இருந்தது. கைகளைக் காட்டி விட்டு எழுந்து சென்ருர்கள். எல்லோரும் மளமளவென்று ஏறி மேலே வந்தனர்.
கப்பல் நகர்ந்துகொண்டிருந்தது. கரைக்கு அண்மையாகவே சென்றுகொண்டிருந்தது. நீலக்கடலும் வெள்ளை மணற் கடற் கரையும் அதன் மீது கறுப்பு நிறமாக இடைவெளியில்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பனை மரங்களும் கடும்பச்சை ஓலை வரியும் வெள்ளைவானமும் நாடாபோல் நீட்டி விடப்பட்டிருந்தது. இடையிடையே வீடுகள் கண்கொள்ளாக்காட்சி.
கீழ்த்தளத்தில் இன்னும் ஒருசிலர்தான் இருந்தனர், மிகுதிப் பேர்கள் எல்லோருமே மேல் தளத்திலிருந்து கரையை நோக் கிய வண்ணம் நின்றுகொண்டிருந்தனர் முத்தையாவும் பரிவாரங் களும் நின்றுகொண்டிருந்தனர். நாகலிங்கமும் கொழும்பு வியா பாரியும் ஒரு பக்கத்தில் நின்றுகொண்டிருந்தனர்.
பெல்பொட்டம் அணிந்த மங்கையும் மேலே நின்றுகொண் டிருந்தாள். கையில் நாய்க் குட்டியையும் வைத்துக் கொண்டு கேட்டாள்,
'டாடி வாட் இஸ் திஸ் கன்றி? சவுதி அரேபியா?" "நோ நோ ஈழம், ஈழம்" *வாட் ஈழம்? வெயர் இஸ் தற்? இன் ஆப்பிரிக்கா?
சற்று யோசித்துவிட்டு ஏதோ வாய் தடுமாறிக் கூறி விட் டவர் போல அவசரப்பட்டபடி "நோ நோ இன் த நோத். இற் இஸ் ஜவ்ணு. திஸ் இஸ் வெயர் குட்டிமாமி லிவ்ஸ்’’
அவளும் “வீ ஆர் கோயிங் ரு லிவ் வித் கே என்று கேட்கவே.
**யெஸ்' என்ருஜர்,
நேரம் பதினெருமணி, பருத்தித்துறை வெளிச்சவீடு. பல ரும் கரையில் தென்படுவனவற்றைக் கைகாட்டி ஆங்காங்கே

அருளர் 185
காணப்படும் இடங்கள் எவை எவை என்பதைப் பெயர்கூறித் தெரிவித்த வண்ணம் இருந்தனர். கப்பல் திரும்பி மேற்கு நோக்கி காங்கேசன்துறையை நாடிச்சென்று கொண்டிருந்தது. தாங்கள் ஒரே நாட்டின் ஒரு பகுதியில் இருந்து இன்னெரு பகுதிக்குக் கப்பலில் வந்து சேர்ந்துவிட்டதாக எவரும் எண்ணியதாகத் தெரியவில்லை. முற்றிலும் வேருனதொரு தங்கள் சொந்த நாட் டுக்கு வந்து விட்டதாகவே எண்ணினர். நாகலிங்கம் பக்கத்தில் நின்று கொண்டிருந்த கொழும்பு வியாபாரியைப் பார்த்துக் கூறினர்.
*" என்னத்தைச் சொன்னலும் பிறந்த மண்பாருங்கோ."
பொழும்பு வியாபாரியின் கண்கள் கலங்கின. சுவர் இருந் தாற்ருன் சித்திரம் வரையலாம் என்று கூறுவார்கள். என்ன தான் மாறுபட்ட சூழ்நிலைகளிலும் வாழ்க்கை முறைகளிலும் தஞ் சம் புகுந்திருந்தாலும் அவர்களை அறியாமல் அவர்களின் மன தைப் பற்றிக்கொண்ட அந்த உள்ளத்து உணர்ச்சிகளால் பரித வித்தனர். தமிழனுடைய சமுதாயம் அன்நியனுல் அழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டு உருத்தெரியாமல் மாற்றப்பட்டு போலிப் போக் குகளில் தஞ்சம் புகுந்து ஒருமைப்பாட்டுடன் செயல்படும் சக் தியை இழந்து தனிமனித சுயநலப் போக்கில் தஞ்சம் புகுந்து ஒருவரையொருவர் தூற்றிக்கொண்டு கிடந்தாலும் அவனுடைய பிறந்த மண்மீது அவனுக்குள்ள பாசத்தை யாராலும் அழிக்கி முடியவில்லை. இந்தப்பாசம் அவனுக்கு அப்பாற்பட்டது.
அந்தப் புழுதி வயல்களும் வாழைத் தோட்டங்களும், மாந் தோப்புகளும் பனங் கூடல்களும், தென்னஞ் சோலைகளும் அவ னேடு அவனையறியாமலேயே கலந்திருக்கின்றது. அந்தக் காடு கள், ஓடைகள், ஆறுகள், குளங்கள், குன்றுகள், பாறைகள் இவையெல்லாம் அவனது இரத்தத்தில் கலந்து போய்க் கிடக் கின்றன. அவன் எங்கிருந்தாலும் அவனுடைய இயல்புகளும் எண்ணங்களும் இவற்றின் பிரதிபலிப்பாகத்தான் வெளிப்படு கின்றன. சொந்தத்தில் அவனுக்கென ஒரடி நிலம்கூட இல்லா விட்டாலும் தன்நாடு, தன் மலைகள், தன் ஏரி என்ற அவனு டைய அந்த உணர்வு அரசியலுக்கு அப்பாற்பட்டது.
அவன் எங்குபோய் உட்கார்ந்துகொண்டிருந்தாலும் இவற் றின் மீது அவனுக்குள்ள உரிமைகள் பறிக்கப்படுமாயின் இவற்
፴›• 24

Page 101
186 லங்கா ராணி
றின்மீது அவனுக்குள்ள பற்றுதல் தாக்கப்படுமாயின் அவன் துடித்தெழுவான். அவனுடைய மொழியும், வாழ்க்கை முறை யும் எல்லாமே இந்த இயற்கையோடு பின்னிப்போய்க் கிடக் கிறது. இந்த மண் இருக்குமட்டும், தமிழன் இருந்தே தீருவான்.
உத்தியோக மோகம், பணஆசை, வெளிநாட்டு மோகம், இவற்ருல் ஒரு சிலர் வேரறுந்துபோய்க்கிடப்பதாக இருந்தாலும் அவன் கண்மூடிக் கிடக்கிருன் என நினைத்து அவனை அழித்து விடலாம் என்று நினைப்பவர்கள் பகற்கனவு காணுகிருர்கள்.
அந்த மலைக்குன்றுகள், கடல் ஏரிகள், பனங்கூடல்கள். வயல் வெளிகளில் ஒன்றிப் பேய்க் கிடப்பவர்களை அவர்கள் மறந்து போய்விடுகிருர்கள்.
சாய்ந்து போய்க்கிடக்கும் நெல் வயல்களில் அறுவடை செய் யப் போய்க்கொண்டிருபான், அவனுடைய கைகளில் கூரான பற்கள் கொண்ட அரிவாள் இருக்கும் இனிய கள் நிரம்பி வடி யும பனைகளைத் தேடிப் போய்க்கொண்டிருப்பான், அவனுடைய கைகளில் கூரான பாளை சீவும் கத்தி இருக்கும். பாரிய மீன் களைத் தேடிக் கடலில் போய்க் கொண்டிருப்பான், அவனுடைய கைகளில் கூரான ஈட்டி போன்ற மண்டா இருக்கும். மலைத் தோட்களுக்குப் போய்கொண்டிரு.பான் அவனுடைய கைகளில் செடிகளை மட்டமாகச் சீவத் தள்ளும் கூரான கவ்வாத்துக் கத்தி இருக்கும் இவர்கள் இருப்பதாற்ருன் தமிழன் இருக்கிறன். தமிழ் மண் இருக்கிறது. இவர்களுடைய இதயத்திலிருந்துதான தமிழ் ஊற்அறடுத்து வருகிறது. சட்டம் போட்டு தமிழை அழிக்கலாம். தமிழனை அழிககலாம் தமிழ் மண்ணை அபகரிக்கலாம். என்று நினைப்பவர்கள் இவர்கள் இருப்பதை மறந்து விடுகிருரர்கள். இவர் களுடைய கைகளில் என்ன இருக்கிறது என்பதை மறந்துபோய் விடுகிருர்கள். விளைவுகளே எண்ணிப்பார்க்க மறுககிருர்கள்.
காங்கேசன்துறையை நோக்கிக் கப்பல் திரும்பிவிட்டபடி யால் பலர் கீழ்த்தளங்களுக்குச் சென்று தங்கள் பொருட்களை மேல்தளத்திற்குக் கொண்டு வருவதற்குத் தொடங்கினா. கடற் படையினரின் வேகப்படகு பக்கவாட்டில் போய்க் கொண்டிருந் தது. அதில் நின்ற மாலுமி ஒருவன் தொப்பியைக் கையில் எடுத்து அதனைப் பல நிலைகளில் பிடித்து சமிக்ஞையின் வாயிலாக ஏதோ செய்திகள் அனுப்பிக் கொண்டிருந்தான் லங்கா ராணியின் பின்னல் அதனைத் தொடர்ந்து இரண்டு கப்பல்கள் வந்துகொண்

அருளர் 187
டிருந்தன. சிப்பந்திகள் பலர் வெளியே தென்பட்டு சுறுசுறுப் பாக இயங்கத் தொடங்கியிருந்தனர்.
குமாரும் தேவனும் கப்டனை சந்தித்து உங்களுக்கு நன்றி கூறப்பலர் விரும்புகிருர்கள் எனக் கூறி அழைக்து வந்தனர். அவரும் அதை ஏற்கவே அவர்கள் மூவரும் கீழிறங்கி தளத்தின் மீது நடந்துசென்றனர் பலர் முன் வந்து நன்றி கூறினர். ராண் யும் நன்றி கூறினுள். தேவன் ஒரு பக்கமாகவும் சென்றி கொண் டிருந்தனர். கப்டன் சற்றுப் பதட்டத்துடன் காணப்பட்டாலும் இளைஞர்களின் நடவடிக்கைகளுக்கு அவரால் மறுப்புத் தெரி விக்க முடியவில்லை. h
வெள்ளைச்சாமியும் வேட்டியுடன் இருந்த இளைஞனும் தளத் தில் நடந்துசென்று அங்கு நடப்பவற்றைக் கண்காணித்துக் கொண்டு நின்றனர் பெயர்கள் விலாசங்கள் எழுதிய தொண் டர்களைக் குமார் சந்தித்து அவர்கள் தயாரித்திருந்த பட்டியலை வாங்கிக் கொண்டனர். கப்பலின் முன் பகுதியில் உள்ளவர்களே முதலில் ஏறியவர்களாகையினல் அவர்களையே முதலில் இறக்கு வது எனத் தீர்மானிக்கப்பட்டது.
கரையோரமாக வத்தைகளும் கப்பல் ஒன்றும் தென்பட்டன. அது தான் காங்கேசன்துறைத் துறைமுகம் என்பதைத் தெரிந்து கொண்டனர். எல்லோர் மனத்திலும் ஒரே ஆரவாரமாக இருந் தது. கப்பல் சிறிது நேரத்தில் தனது வேகத்தைக் குறைக்கத் தொடங்கியது. சிப்பந்திகள் கப்பலின் முன் பகுதியில் உள்ள மேடைக்கு வந்தனர். தொண்டர்கள் அங்கிருந்தவர்களை அவ் விடத்தை விட்டுப்போகுமாறு கூறினர்கள். அங்கு தலைமைச் சிபபந்தி கையடக்கமான ஒலிவாங்கி ஒன்றை வைத்து கதைத்த படி இருந்தான். இதேபோல் லங்கார ணிக்குச் சமீபமாக மற் றைய கப்பல்களும் நங்கூரமிட ஆயத்தமாகிக்கொண்டிருந்தன.

Page 102
14
கப்பல் நங்கூரமிடப்பட்டடு நிறுத்தப்பட்டது. படிகளைச் சிப் பந்திகள் இறக்கி நன்ருகப் பிணைத்துக் கட்டினர். அது பெலப் பாக உள்ளதா என்பதையும் பார்ப்பதற்காகப படிகளில் இறங்கி ஏறிப் பார்த்துக்கொண்டனர். பிடித்துக்கொண்டு இறங்குவதற் குப் படிகள் ஒரமாக உள்ள சட்டங்கள் ஊடாக கயிற்றை விட் டுக் கட்டிவிட்டனர், படிகளின் கீழ்ப்பகுதியில் வத்தைகள் அணைக் கப்படும்பொழுது மோதிக் கொள்ளாதவாறு டயர் ஒன்றையும் கட்டிவிட்டனர்.
மேலும் இரண்டு கடற்படையினரின் ரோந்துப் படகுகள் வந்து கப்பலைச் சுற்றின. மீன்பிடி படகுகளும் வந்தன. அவற் றில் வந்தவர்கள் ஆரவாரமாக கப்பலில் வந்தவர்களைப் பார்த் துக் கைகளை அசைத்தனர்.
முதலில் முன்பக்கத்தில் உள்ளவர்களே இறங்குவதாகத் தீர் மானிக்கப்பட்டிருந்தபடியால் பின் தள த் தி ல் உள்ளவர்களைக் கீழ்த்தளத்திற்குச் சென்று அமர்ந்து கொள்ளுமாறு தொண்டர் கள் கூறிச் சென்றனர்.
இறங்குவதற்கு நேரமெடுக்குமாகையால் அவ்வாறு செய் வது நல்லது என்று தீர்மானித்திருந்தனர். பொருட்களை மேலே கொண்டு வந்திருந்தபடியால் தொண்டர்கள் கூ ற் றை நிறை வேற்ற முடியாத நிலையில் அநேகர் நின்றனர். தொண்டர்களும் யாரையும் நிர்ப்பந்திக்காமல் விட்டுச் சென்றனர்.
இறங்குவதாயிருந்த முன் தளங்க ளில் இருந்தவர்களின் பொருட்களை மேலே கொண்டு வருவதற்குத் தொண்டர்கள் உதவினர். இறங்குவதற்கு ஆயத்தம் ஆகும் படியும் தொண்டர்

அருளர் 189
கள் கேட்டுக்கொண்டனர். அவர்கள்வரிசையாக நிற்பதற்கு உதவி யாகத் தொண்டர்கள் கயிற்றை நீளமாகப் பிடித்தார்கள்.
சில சிப்பந்திகள் கரையைப்பார்த்தவண்ணம் அங்கு நின்று கொண்டிருந்தனர். இது வரிசையாக நிற்பதற்குத் தடையாக இருந்ததால் தொண்டர்கள் அவர்களை அங்கிருந்து போகும்படி கூறினர்.
அவர்கள் அங்கிருந்து நகர மறுத்ததனுல் தொண்ட்ர்கள் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த நேரத்தில் சர வணனும் அங்கு வந்து சேர்ந்தான். தொண்டர்களும் சரவண னுக்கு விட யத்தைக் கூறவே அவனும் உடன் திட்டத்தைத் தீட் 1.த் தொடங்கினன். எதற்கும் மற்றவர்களுக்குத் தெரியப்படுத் துவது நல்லது என்று குமாருக்கும் மற்றவர்களுக்கும் தெரியப் படுத்தினன். அவர்கள் அங்கிருந்து நகராவிட்டால் அவர்களை அடித்துக் கடலில் போடுவது எ ன் ற தனது திட்டத்தையும் அவிழ்த்துவிட்டான்.
குமார் அவனைத் தடுத்துவிட்டு அங்கு வெள்ளைச் சீருடை யுடன் நின்ற அதிகாரி ஒருவரிடம் முறையிடவே அந்த அதிகாரி வந்து சிப்பந்திகளை அங்கிருந்து அனுப்பிவிட்டார்.
கப்பலின் பக்கவாட்டின் நடுப்பகுதியில் இறங்கும் வாசல் இருந்தது. முன்தளங்களில் இருந்தவர்கள் எல்லோரும் வரிசை யாகத் தங்கள் பெட்டிகளுடன் நின்றுகொண்டிருந்தனர். பின் தளங்களில் உள்ளவர்களும் பெரும்பாலும் மேல் தளத்தில் நின்று கொண்டிருந்தனர். இவர்களில் சிலர் தங்களை முதலில் இறங்க விட வேண்டுமென்று கூறிக்கொண்டு நின்றனர். இவர்களை விடா மல் தேவன் குறுக்கே வழியை மறித்துக் கொண்டு நின்றன் எவ ரும் தளத்தின் கீழிறங்கி நேரம் வரும்வரை அங்கேயே இருக்க விரும்பவில்லை. தேவனும் சமாதானம் பண்ணிக்கொண்டு நின் முன். அப்படியிருந்தும் ஒருவர் ** யாரடா நீ? என்னைப் போகவிடு' என்ருர்,
அதே கூட்டத்தோடு உத்தமபுத்திரர்களும் நிற்பது தெரிந் தது. இவர் இல்வாறு கூறவே தேவனுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. அவன் ஒரு காலை அந்த இரும்புச் சுவரில் பொறுப்பாக உதைத்துக் கொண்டு நின்றன்.
'உங்களுக்கு வேண்டாம் என்ருல் நான் விட்டிட்டுப் போயி டுவன். ஆனல் பிறகு இந்த இடத்தில கடற்படைக்காரன் துவக்

Page 103
190 லங்கா ராணி
கோடு நிற்பான், அது விருப்பபோ?" என்று ஒரு போடு போட் டான். •
"அதுதான் சரி, தம்பி! அப்படிச் சொன்னல்தான் இது களுக்கு விளங்குது' என்று பல பெண்களும் வேறு சிலரும் சேர்ந்து தேவனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர் அங்கி ருந்து நகர்ந்தவர்களில் உத்தமபுத்திரர்கள்தான் முதலிடம் வகித்தனர்.
இறங்கும் வாசலில் டாக்டர் நற்குணம், வெள்ளைச்சாமி குமார் நின்றுகொண்டிருந்தனர். முதலில் கடற்படையினர் ஏறி னர். இவர்களில் பத்துபேர் இருந்தனர். வாசலுக்கு வந்து சேர்ந் ததும் அதில் ஒருவன் குமாரை நோக்குபவன் போல நோக்கிக் க்ொண்டு ஆங்கிலத்தில் கூறினன், "இவன்தான் வடமாநிலக் கடற்படைத் தளபதி, இவருடன் பேசவும்' கு மார் அதைப் பொருட்படுத்தாமல் நிற்கவே அவன் மீண்டும் ஒரு முறை அதே அறிவிப்பை விடுத்தான்.
இதன்பின் குமார், 'கப்பலில் இருந்து இறங்குவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்து வைத்திருக்கிருேம் எங்களுக்கு வெளியாட்களின் உதவி தேவையில்லை, கடற்படையினர் உட்பட என்று வேறு பக்கமாகப் பார்த்துக்கொண்டு கூறிவிட்டான்.
“கப்டனைச் சந்திப்போம் வாருங்கள்" என்று அவர்களைக் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்கள். அங்கு நின்றிருந்த அதி காரி ஒருவர் கூட்டிக்கொண்டு போனர். கடற்படையினரை வெள்ளைச்சாமி மேலும் கீழுமாகப் பார்த்தான். இந்த ஆடம் பரங்களுக்குப் பணம் எங்கிருந்து வருகிறது என்பதுதான் அவி னுடைய பிரச்சினை.
வடமாநில அரசாங்க துணை இணைப்பு அதிகாரி சுந்தரலிங் கம் வந்தார். அவர் வாசலில் நின்ற யாருடனும் கதைக்காமல் கப்டனிடம் சென்று கதைத்துவிட்டுச் சென்றுவிட்டார். வத்த்ை யில் இருந்தவர்கள் சிலர் படிகளில் ஏறிக்கொண்டு வத்தையைப் படிகளோடு அணைத்துப் பிடித்தனர். ஒரே சத்தமாக இருந்தது.
பருத்தித்துறை எம்.பி. கே. துரைரத்தினம் வந்தார். அந்தர் படகில் வெள்ளைக்கொடி பறக்க விடப்பட்டிருந்தது. அவர் சிரித்த முகத்துடன் நின்றுகொண்டிருந்தார். கப்பலில் உள்ளவர்களின்

அருளர் 19
விபரங்களைக்கொண்ட பட்டியலுடன் குமார் படிகளில் இறங்கிப் போய் வத்தையின்மீது நடந்து இயந்திரப் படகின் மீது தாவிக் கொண்டான். படகு ஒருமுறை வட்டமிட்டுவிட்டு கரையை நோக்கிச் சென்றது.
அடுத்ததாக மருத்துவத் தொண்டர்கள் நோயாளிகளைக் கொண்டு போவதற்கு வந்தனர். அவர்களோடு வத்தைகளுக் குப் பொறுப்பாக இருந்தவரும் வந்தார். கப்பலில் உள்ள்வர் களுக்கு ஏதாவது உதவி தேவையா என்று வெள்ளைச்சாமியிடம் விசாரிக்கவே, "தேவையில்லை, கழிவிடங்களைக் கழுவுவதற்கு யாரையேனும் அனுப்பிவைப்பதற்கு ஏற்பாடு செய்தால் நல்லது" என்று கூறி அனுப்பிவிட்டான். மருத்துவத் தொண்டர்கள் நோயாளிகளைக் கொண்டு போவதற்கு ஒரு படுக்கையை மிகவும் சிரமப்பட்டு மேலே கொண்டு வந்தனர். அது தேவைப்படாது, நோயாளிகள் எல்லோரும் நடக்கும் நிலையிலேயே இருக்கிருர்கள் என்று தெரிவிககப்பட்டது. அங்குள்ள நோயாளிகளைப்பற்றி டாக்டர் நற்குணம் அவர்களுக்கு விவரித்துக் கூறிஞர். கரையில் இருந்து யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை என்பதில் இளை ஞர்கள் மிகவும் தீர்க்கமாக இருந்தனர். மருத்துவ தொண்டர் கள் இறங்கிச் சென்று விட்டனர்.
இறங்குவதற்கு ஆட்களைவிடலாம் என்று வத்தைக் காரர்கள் கூறியதும் வெள்ளைச்சாமி நோயாளிகளை வரவிடும்படி தேவனி டம் கூறினன். நோயாளிகளில் பெரும்பாலானேர் பின் தளத் திலேயே இருந்தனர். கர்ப்ப வேதனையில் இருந்த பெண்கள் இரு வரை குடுமபத்தினர் மெதுவாக அழைத்து வந்தனர். காயப்பட் டவர்கள் வந்தனர். சிறு குழந்தையுடன் ஒரு குடுப்பத்தினர் வந்தனர். இக்குழந்தை அகதிகள் முகாமிலேயே பிறந்திருந்தது. டாக்டர் நற்குணம். அந்தக் குழந்தையை வாங்கிக்கொண்டு 8660TLDITs இறங்கும்படி மற்றவர்களுக்குக் கூறினர். அந்தப் படி களால் இறங்குவது சிரமமாக இருந்தது ஒரு பக்கம் கடல் நாற்பது அடி இறங்கவேண்டி இருந்தது. படிகளுக்குப் பாதுகாப் பாகக் கயிற்றையே போட்டிருந்ததாலும் படிகள் கயிற்ருல் தொங்க விடப்பட்டிருந்ததாலும் எல்லாம் ஆட்டம் கொடுத்தது. டாக்டர், நற்குணம் பிள்ளையையும் கொண்டு கீழே இறங்கி வத் தையில் இறங்கிக் கொண்டவர்களிடம் சேர்த்துவிட்டு மேலே வந்தார்.
வேறு சிலரும் தங்களுக்கும் சுகமில்ல என்று தேவனிடம் முறையிட்டனர்.

Page 104
192 லங்கா ராணி
“டாக்டரைக் கூப்பிடவா?" என்று அவன் திரும்பிக் கேட் கவே பேசாமல் இருந்தனர். காலைத் திரும்பவும் குறுக்கே வைத் துக் கொண்டான்.
படிகளால் பொருட்களைக் கொண்டு போவது சிரமமாக இருக்கவே வெள்ளைச்சாமி தொண்டர்களைக் கூப்பிட்டு அவர்களைப் படி நீளமாக கைக்கெட்டும் தூரத்தில் நிற்கவிட்டான். இறங்கு பவர்களுக்குப் பாதுகாப்பாகவும் இருந்தது. பொருட்கள் ஒவ் வொருவராகப் பரிமாறப்பட்டு வத்தையைச் சென்றடைந்தனர். நோயாளிகள் இறங்கியதும் முன் தளத்தில் வரிசையாக நின்ற வர்களை வரும்படி வெள்ளைச்சாமி கூறவே தொண்டர்கள் வழியை விட்டனர்
வத்தைகளும் ஒன்றன்பின் ஒன்ருகத் தயாராக நின்றன, வத்தையில் நூறுபேர் ஏறிக்கொண்டதும் மேலும் ஏற்றுவதை நிறுத்திக் கொண்டனர். இதற்குச் சுமார் அரை மணி நேரம் எடுத்தது. வத்தையை இழுப்பதற்கு ஆயத்மமாக நின்ற இயந் திரப்படகிலிருது கயிற்றை எறிய வத்தையில் நின்றவர்கள் பிடித் துக்கொண்டனர். கப்பலில் தள்ளி வத்தையைப் பாதுகாப்பாக நகர்த்திவிட்டனர். வத்தை புறப்பட்டது. அடுத்த வத்தை வந்து அந்த இடத்தில் நிற்பதற்குத் தயாராகியது.
கப்பலின் பின்தளத்தில் நின்றவர்களை வரிசையாக நிற்கும் படி தொண்டர்கள் கூறவே அவர்களும் வரிசைப்படத் தொடங் கினர். அநேகர் இருந்தபடியால் அந்த வரிசை தளத்தின் மூலை மூடுக்கெல்லாம் சுற்றி வளைத்துச் சென்றது.
நேரம் போய்க்கொண்டிருந்தது. இரண்டாவது வத்தையி லும் இறங்கத் தொடங்கியிருந்தனர். பலர் தொண்டர்களுக்கு நன்றி கூறிவிட்டுச் சென்றனர்.
கரைக்குச் சென்ற குமார் திரும்பிவந்து கப்பலில் மீண்டும் ஏறிக்கொண்டான். கரையில் செய்து வைக்கப்பட்டிருந்த ஏற் பாடுகள் பற்றியும் கரையில் நின்ற மற்றவர்களைப் பற்றியும் கூறி ஞன்.
வேட்டியுடன் இருந்த இளைஞனும் குமாரும் சரவணனும் கதைத்துக் கொண்டிருந்த சமயம் அவர்களுக்குச் சற்று தூரத் தில் நின்று சமுத்திரத்தை அவதானித்த வண்ணம் ஒருவர் நின்று

அருளர் 93
கொண்டிருந்தார். அவருடைய மனைவியும் பிள்ளைகளும் பக்கத் தில் நின்று கொண்டிருந்தனர். அவரைப்பற்றி அந்த இளைஞன் வினவவே குமார் "அவர்தான் டாக்டர் நித்தியானந்தன். மீன் பிடி இலாகாவில் ஆராய்ச்சித்துறையில் இருப்பவர். ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் சென்று பல்வேறு துறைகளில் பயிற்சி பெற்றவர். பல ஆண்டுகளாகத் தென்பகுதியில் மீன்பிடி வளத்தை அபிவிருத்தி செய்வதற்குப் பல ஆராய்ச்சிகளில் ஈடு பட்டிருந்தார். இவரால் ஏராளமான தென்பகுதி மீனவர்கள் பயனடைந்து இருக்கிருர்கள்" என்று குமார் அவரைப் பற்றிக் கூறினன்.
அங்கு திடீரென ஏற்பட்ட நீளமான வரிசையில் இடம் பிடிக்காமல் வேருக நின்றுகொண்டிருந்தார். வேட்டி அணிந் திருந்தார். அவருக்குப் பக்கத்தில் அவருடைய மனைவியும் மூன்று பிள்ளைகளும். இளைஞர்கள் அவரை அணுகி அவருடன் கதைத் தனர். அவர் மிகவும் கவலையுடன் காணப்பட்டார். "எல்லோ ரும் சென்றபின் செல்லலாம். அவசரமில்லை, அவசரமில்லை" என்று கூறினர். w
அவருடைய நிலையைப் புரிந்துகொண்ட அந்த உயரமான இளைஞன் எட்டு மணிமட்டும் இங்கு நிற்கத் தேவையில்லை. பரவாயில்லை; வாருங்கள்" என்று கூறி ஒரு பெட்டியையும் தூக்கினன். கப்பலில் மற்ற பகுதியில் இருந்த வழியால் அவர் களை அழைத்துக்கொண்டு முன் பகுதிககு வந்தனர். சரவணன் இரண்டு பெட்டிகளையும் குமார் ஒரு பெட்டியையும் அவர் ஒரு பெட்டியையுமாகத் தூக்கிக் கொண்டு வந்தனர்.
அங்கு இறங்கிக்கொண்டு நின்ற வரிசையில் இரண்டு மாண வர்களின் இடத்தை இவர்களுக்குக் கொடுத்தனர். மாணவர்கள் இருவரும் விலகிக்கொண்டனர். வரிசையின் பின்பகுதியில் நின்ற ஒருவர் ஏதோ செர்ல்ல முற்பட்டார். சரவணன் அவரை நோக்கி வாயில் கைவைத்து 'உஸ் . மூச்சு" என்றன். அவர் எதுவும் பேசாமல் நின்றுவிட்டார். இளைஞர்கள் மீண்டும் மற்ற பகுதிக்கு வந்தனர்,
கழிவிடங்களைக் கழுவுவதற்கு ஆட்களைப் பிடித்து அனுப் பியிருந்தனர். அவர்களிடம் சரவணன் எல்லாவற்றையும் பிடுங்
೧ು 25

Page 105
.! $ታ4 லங்கா ராணி
கிக் கடலில் போட்டுவிட்டுக் கழுவிவிடுமாறு கூறிவிட்டான்" நேரம் நான்கு மணி ஆகிக்கொண்டிருந்தது.
டாக்டர் நற்குணம் இளைஞரிடம் விடைபெற்று அங்கிருந்து சென்ருர், முன்பகுதியில் நின்றவர்கள் இறங்கிமுடியவே பின் பகுதியில் நின்றவர்கள் இறங்கத் தொடங்கினர்.
கரையிலிருந்து கடகங்களில் சோற்றுப் பார்சல்கள் வந்தன. தொண்டர்கள் அவற்றை மேலே கொண்டுவந்து சேர்த்தனர். ஆட்கள் இல்லாத முன்பகுதியில் கொண்டுவந்து வைத்துச் சிலர் அமர்ந்து உண்ணவும் தொடங்கினர். வெள்ளைச்சாமியின் இடத் தைத் தேவன் எடுத்துக் கொண்டான். டாக்டர் நற்குணத்தின் இடத்தைக் குமார் எடுத் துக் கொண்டான். பின்தளத்தில் இருந்தவர்கள் பலர் வந்தனர்.
முத்தையாவும் ஆட்களும் வந்தனர். "சரி, தம்பிமாரே! போயிட்டு வாறன், விட்டிடாதேயுங்கோடா, எத்தனை முறை யண்டு இப்படி கோச்சியில் போயிட்டுக் கப்பல் வா ற து அவங்க வேணுமமண்டால் என்னத்தையாவது வச்சு செய்து கொண்டு கிடக்கட்டும. எங்கள சும்மா விட்டா போதும்" இவ் வாறு கூறிக்கொண்டு சென்ருர், நாகலிங்கம் வந்தார். இளைஞர் களைப் பார்த்துச் சிரித்து நன்றியைத் தெரிவித்துக் கொண்டு தலையைத் தாழ்த்திவிட்டுச் சென ருர் ஒருவர் நன்றி கூருமல் குமாரைப் பார்த்துத் "தய பி! நீர் எங்கட அவட்ர "சன்'னலே?" ! என்று கேள்வியை எழுப்பி விடடுச் சென்ருர், குமாரும் வேறு வழியில்லாமல் தலையைத் தடவி விட்டுக் கொண்டான். தொண் டர்கள் சிலரும் விடைபெற்றுச் சென்றனர். ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு குமார் கூறியனுப்பின்ை.
வேட்டியுடன் இருந்த இளைஞனும் வெள்ளைச்சாமியும் முன் தளத்தில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் அவர்களோடு சரவணனும் இருந்தான். பார்சல்கள் பிரமாதமாக இருந்தன. வெள்ளைச்சாமி பண்ணையைப்பற்றிக் கேட்டான்.
வெள்ளைச்சாமி பல விடயங்களைத் தெரிந்துகொள்ள விரும் பினன். “சோவியத் யூனியனும் சீனவும் ஏன் இப்படி சண்டை போடுகின்றன" என்று கேட்டான். வெள்ளைச்சாமி கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் வேட்டியுடன் இருந்த இளைஞன் அமைதியாக மறுமொழி கூறினன்.

அருளர் 19
உலகில் சோவியத் யூனியன்தான் முதலாவது சம த ரி ம நாடு. 1918 இல் அங்கு புரட்சி நடந்தது உலகில் சனத்தொகை கூடிய சமதர்ம நாடு மக்கள் சீனம். இங்கு 1949 இல் சமதர்ம ஆட்சி நிறுவப்பட்டது. இந்த இரு நாடுகளும் வேறுபட்ட பூகோள அமைப்பையும் தேசிய இனங்களையும் பாரம்பரியங்களை யும் கொண்டவை. ஒரு நாடு சமதர்ம சமுதாயமாக மாறும் பொழுது அந்த நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை உள்நாட் டில் நிலவிவரும் சமூகமுரண்பாடுகள், தேவைகள், வெளித்தாக் கங்கள் இவற்றைப் பொறுத்து அமையும். இந்த வெளிநாட்டுக் கொள்கைகள் எல்லாச் சமதர்ம நாடுகளுக்கும் ஒரே மாதிரியான தாக இருக்க வேண்டியதில்லை. இதனுல் இந்த வேறுபாடுகள் ஏற்படுகின்றன. நடைமுறைகள் நாடுகளுக்கு நாடுகள் வேறு படுகின்றன. நாங்கள் எங்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்க முனையும்போது எல்லோருடைய அனுபவங்களையும் அறிந்து வைத்துக் கொள்வது நல்லது இதற்காக இவர்தான் சரி அவர் தான் சரி என்று எங்களுக்குள் மோதிக்கொண்டு எதிரிகளின் கைக்குள் எங்களைத் தள்ளக்கூடாது. ஒரே இலட்சியத்தை அடை வதற்குப் பல பாதைகள் இருக்கலாம். எங்களுடைய பாதையை நிர்ணயிக்க வேண்டியவர்கள் நாங்கள் தான்." இவ்வாறு இளை ஞன் கூறினன்.
வெள்ளைச்சாமி அடுத்த கேள்வியைக் கேட்டான். "சமதர்ம வாதிகள் கடவுளை எதிர்ப்பவர்கள். கடவுள் இல்லாவிட்டால் அழிவுதான் என்று போதித்து வைத்திருக்கிருர்களே அதற்கு என்ன செய்வது?"
‘கடவுள் எல்லாம் பொய், மூடநம்பிக்கை என்று கூறுபவர் கள் நம்முள் எப்பொழுதும் இருந்திருக்கிருர்கள். கடவுளைச் சமு தாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள், அக்கிரமங்கள், வறுமை எல் லாவற்றுக்கும் பொறுப்பாக்கிச் சமூக விரோதிகள் நல்ல லாபம் பெற்றுக்கொண்டு வருகிருர்கள். கடவுள் எல்லாவற்றுக்கும் அப் பாற்பட்டவர் என்றும் அவர் உண்மையானவர் என்றும் சமய வாதிகள் போதிக்கின்றனர். தர்க்கீகத்திற்கு அப்பாற்பட்டது எதுவும் இல்லை என்பதுதான் என் கருத்து.
சாந்த சொரூபியும் எல்லாவற்றையும் துறந்து ஒரு எறும் பைக்கூட கொல்லக்கூடாது என்று போதித்தவருமான புத்தரை வழிபடுபவர்கள் இரத்த வெறிகொண்டு ஆக்கிரமிப்பாளராகி எல்லாம் வேண்டும் என்று பித்துப் பிடித்துப்போய்த் திரிகிறர்

Page 106
196 லங்காராணி
கள். வறுமையையும், சிக்சனத்தையும், உபாதையையும், நேர் மையயுைம் போதித்த கிறிஸ்துவை வழிபடும் அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் உலக ம் முழுவதையும் கொள்ளையடித்துக் குபேரத்தைச் சேர்த்து வைத்துக்கொண்டு லெளகீகங்களில் மூழ் கித் திளைக்கிருர்கள். ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத் தைத் திருப்பிக் காட்டு என்று கிறிஸ்து போதித்திருந்தாலும் இவர்கள் எதற்கெடுத்தாலும் போர் என்று கூறிக்கொண்டு விசர் பிடித்த நாய்கள் போல எங்கும் திரிகிருர்கள். உதவி செய்வ தாகக் கூறிக்கொண்டு வந்து உள்ளதையும் சுருட்டிக் கொண்டு போய்விடுகிருர்கள். நாங்களோ வேலை வீரமுடன் கையிலேந்திச் செல்வச்சீமாஞக நிற்கும் முருகனையும் சூலத்தை ஏந்தி விசுவ ரூபம் எடுத்து நிற்கும் சிவனையும் காளியையும் வழிபட்டும் அகிம் சாவாதிகளாகி சமாதானவிரும்பிகளாகி முடங்கிப் போய் எங்கும் குட்டுவாங்கிக் கொண்டு பிச்சையெடுத்துக் கொண்டு கிடக்கி ருேம். இப்படிப் பல உதாரணங்கள் உண்டு.
வழிபடுவதற்கும் நடைமுறையில் காணப்படுவதற்குமுள்ள இந்த முரண்பாடு போதுவானது போலவே எனக்குப் படுகிறது. ஆகவே வழிபாடு, நம்பிக்கை, நடைமுறைகள் இவ ற் றி ற்கு இடையிலான உறவுகளைச் சிந்தனைக்கு அப்பாற்பட்டது என்று தள்ளி வைக்காமல் விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து இந்த முரண் பாடுகளின் காரணமான பிரதிபலிப்பு இயல்புகளைக் கண்டறிந்து புதிய சூழ்நிலைக்குத் தேவையானவற்றை அறிவுப்பூர்வமாக மாற்றி யமைக்கலாம். இதைக் கலை, கலாச்சாரம், பண்பாட்டு அம்ச மாகக் கொள்ளலாம். ஆளுல் இது இங்கு பெரிய விடயமல்ல.
சிந்திப்பதற்குச் சுதந்திரமுண்டு என்று கூறுபவர்கள் சிந்திக் கப்பட வேண்டியவற்றைச் சிந்தித்தால் சமூக விரோதிகள் என்று பட்டம் கட்டிவிடுகின்றனர்.
தங்களைக் காப்பாற்றிக்கொள்ள பிற்போக்குவாதிகள் செய் யும் வேலை இது. ஆனல் வெள்ளைச்சாமி இதை இங்கு பெரிய பிரச்சினையாக ஆக்கிக்கொள்ளக் கூடாது. காவற் கொட்டிலில் கிடந்துகொண்டு செய்வதற்கு ஒன்றுமில்லர்த நேரத்தில் இதைப் பற்றிச் சிந்திப்பேன். இவ்வாறன தத்துவ ரீதியிலான பிரசினை களை நாம் ஆறுதலாகத் தீர்த்துக்கொள்ளலாம்.
இங்குள்ள முதன்மையான பிரச்சினைகள் சுரண்டல், வறுமை ஏற்றத் தாழ்வுகள், விஞ்ஞானத்திற்குப் புறம்பானகாலம் கடந்து போன சமுதாய அமைப்பு வெளியில் இருந்து வரும் ஆதிக்க

அருளர் 197
அடக்குமுறை. இவற்றை முதலில் மாற்றி அமைக்க வேண்டும். சமதர்ம சமுதாயம் முதலில் மலரவேண்டும். சமுதாயத்தில் அதர்மம் அடக்குமுறைகள் முதலில் அகற்றப்படவேண்டும். உற் பத்தி சாதனங்களை எல்லோருக்கும் பொதுமையானதாக்கிச் சுரண் டல் சுதந்தரத்தை அகற்றிவிட்டு எல்லோரும் தொழிலாளராகி உழைத்துச் செல்வத்தைப் பெருக்கிப் பலனடையும் சமுதாயம் மலர வேண்டும். இதற்கான தத்துவரீதியிலான பிரச்சினைகளைக் கார்ல் மார்க்ஸ் மிகவும் அழகாகத் தீர்த்து வைத்திருக்கிருர், உலகத்தில் இன்று சமதர்ம நாடுகளின் மகிமை சந்தேகத்திற் கிடமின்றி நிலைநிறுத்தப்பட்டுவிட்டது. ஆகவே சந்தேகக் கண் கொண்டு எதையும் பார்த்துக்கொண்டிருக்கத் தேவையில்லை. விதண்டாவாதிகளிடம் பேச்சுக் கொடுத்துக் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் நேரம் இதுவல்ல." • •
உணவுப் பார்சலை ரசித்து உண்டனர். கடந்த சில நாட் களாகக் கிடைத்துவந்த சாம்பாரிலும் பாணிலும் வேறுபட்டி ருந்தது அது,
"வெள்ளைச்சாமி இங்கு எங்கும் நீ தங்கவேண்டியதில்லை. நேராகப் பண்ணைக்கு வா," தெர்டர்ந்து கதைத்தான். 'இறுங்கு போட்டிருக்கிறேன் இரண்டு ஏக்கரில். யானைகளின் அட்டகாசம் பெரிய அட்டகாசமாக
'யானைகளா?" வெள்ளைச்சாமி கேட்டான்.
"ஆம் யானைகள் அதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று தான் பண்ணையை நண்பரிடம் ஒப்படைத்துவிட்டு வந்தேன்"
'யானைகள் கூர்மையான புத்தி உள்ளவை. அவற்றை கொல்லக் கூடாதென்று கூறுவாங்களே."
*கூறுகிறர்கள்தான். நானும் எ ல் லா ம் செய்துபார்த்து விட்டேன். இந்த யானைகள் எல்லாப் புத்தியும் மழுங்கிப்போய் இந்த நிலை நிற்கின்றன என்றுதான் எளக்குக் கவலையாக இருக் கிறது. எல்லாம் செய்துபார்த்துவிட்டேன். சங்கைவைத்து ஊதி னேன். ஒரு சங்கை ஊதினுல் பழக்கப்பட்டு விடுமென்று இரண்டு சங்கை மாறி மாறி ஊதினேன். அதற்கும் பழக்கப்பட்டுவிட்டன. கிழக்குப்பக்கமாக வயல் விதைத்திருந்தேன். ஒருவயலும் மிச்ச மில்லை. அதைக் கைவிட்டுவிட்டேன். மணியைக் கட்டி அடித் தேன்." V

Page 107
98 லங்கா ராணி
*கோயில் மணியா?" வெள்ளைச்சாமி விநோதமாகக் கேட் unrer.
"இல்லே. ஒரு தண்டவாளத்தையே கொ ன் டு போ ய் ப் போட்டு வாங்கு வாங்கென்று வாங்கினேன். அதற்கும் பழகிக் கொண்டன. வேலிகள் இருப்பதற்கு அடையாளமாக வெள்ளைக் கொடிகளைப் பறக்க விட்டேன். சில நாட்கள் தான். மீண்டும் வந்து இறங்கிவிட்டன. கண்ணுேடு கண் மூட முடியாது. வெரு ளிகளைச் செய்து அவை வரும் பாதையில் நிறுத்திப் பார்த் தேன். வெருளிகளை ஒரே மிதியாக மிதித்துக்கொண்டு வந்திறங்கி விட்டன. இவற்றேடு பன்றிகளும் சேர்ந்துகொண்டு பெரிய அட்டகாசம்'
“எத்தனை யானைகள்' வெள்ளைச்சாமி கேட்டான்.
"கிளை பன்றிகளும் அப்படித்தான். இதில் அலியன் ஒன் டுண்டு. இதுதான் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு இந்த நிலை நிற்க வைக்கிறது போல எனக்குத் தோன்றுகிறது. அவை எங் கும் போகாமல் திரும்பத் திரும்பப் பண்ணையையே வந்து அழிக் கின்றன. இந்தப் பெரிய காடு இருந்தும் பண்ணை நன்கு ருசிப் பட்டுவிட்டபடியால் அவற்றின் கண்களுக்கு வேறு எதுவும் தென் படுவதாகத் தெரியவில்லை. காவற் கொட்டிலை இரண்டு முறை பிடுங்கி எறிந்து விட்டன. அங்கு கிடந்த மான் தோ லை யும் விட்டுவைக்கவில்லை."
'யானைகளைக் கொல்லக் கூடாதென்று சட்டம் இருக்கிறதே?"
*இருக்கிறது. யானைகளை வேண்டும் என்று கூறுகிறவர்கள் அவற்றைக் கொண்டுபோய்த் தங்கள் கொல்லைப்புறத்தில் கட்டி வைத்துக் கொள்ளலாம். எனது பண்ணையை நான் காப்பாற் றித்தான் ஆகவேண்டும். இவற்றிற்கு வேலிகள் இரு ப்ப தே தெரியவில்லை. நிம்மதியாக ஒரு வேலையும் செய்ய முடியாது. பண்ணை வேலைகளை விட்டுவிட்டு இருபத்தி நாலு மணி நேரமும் காவலோடு கிடக்க வேண்டியிருக்கிறது. எத்தனை நாட்களுக்கு இந்த நிலை"
வெள்ளைச்சாமி இளைஞன் எடுத்த முடிவு தீர்க்கமான முடிவு என்பதை உணர்ந்து கொண்டான். அவன் கேட்டான், "கட்டுத் துவக்கு கட்டிப் பர்த்திருக்கிறீர்களா?"
"தான் செய்து பார்க்கவில்லை. ஆனல் துவக்கு வெடி யானை களை எதுவும் செய்துவிடாது. அங்கு வந்து பார்த்தால்தான்

அருளர் 199
நிலைமை உனக்குப் புரியும்." சற்றுப் பொறுத்துவிட்டு வெள்ளைச் சாமி கூறினன்,
'எனக்கு நெல் வேலைகள் அதிகம் தெரியாது. உருளை க் கிழங்கு, கோவா, பீற்ரூட் போன்றவற்றையே பயிரிட்டிருக்கி றேன். இதற்கு நல்ல மேட்டு நிலம் வேண்டும்'
"அங்கே மேட்டு நிலம் உண்டு வெள்ளைச்சாமி. மேற்குப்பகுதி மூலையெல்லாம் மேட்டு நிலம்தான். நல்ல தண்ணீர் வசதியும் இருக்கிறது. நீ பயிரிட்டதைத் தொடர்ந்து பயிரிடலாம். அதற் கெல்லாம் நீதான் பொறுப்பு. அவற்றிற்குச் சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனல் மேற்குப்பகுதி மூலையில் யானை புழக்கம் அதிகம். கிழங்கு, பீற்ரூட் என்ருல் பன்றிகளும் வரும் காவல் உனது பொறுப்புத்தான்."
வெள்ளைச்சாமி கேட்டான், 'புலிகள் உண்டா?" 'உண்டு சிறுத்தைகள்." 'இவை நின்ருல் மிருகங்கள் வராதாமே?"
"அப்படிக் கூற முடியாது. இவை காட்டில் நின்றல் மிருகங் கள் வெருண்டடித்துக் கொண்டு அங்குமிங்கும் ஒடும். பன்றிகள் தான்படாதபாடுபடும் அவையெல்லாம் வ ய லு க் கு ஸ் வந் து பாயும். வெருட்சியுடன் வரும் யானைகள் கண்டதையும் அழிக் கும். காவல் கொட்டிலை யானைகள் அழித்ததும் இப்படித்தான். பன்றிகளும் அப்படித்தான். அத்தோடு வழக்கமாக வேலிகளைத் தாண்டாத காட்டு மாடுகள் எருமை, மான், மரை எல்லாமே பண்ணைக்குள் வந்து பாயும் வெருண்டடித்துக்கொண்டு அங்கு மிங்கும் ஓடும்.'
"இதைப்பிடித்து வளர்த்தால் மிருகங்கள் வராது?" 'வளர்க்கலாம். ஆனல் சிறுத்தைகள் சிறுத்தைகள்தான்." 'இப்பொழுது என்ன செய்யலாமென்று போகிறீர்கள்."
“வந்து பார். மருந்து வாங்கிக்கொண்டு வருகிறேன். அந்த அலியன்தான் இதற்கு ஒரு முடிவுகட்டிவிட்டால் எல் லா ம் சரிவரும் என்றுதான் நினைக்கிறேன். மற்ற யானைகளைவிட இது தனியாக நின்று மேயும். இது மேய்ந்திருக்கும் இடங்களைப் பார்த்தால் இது வலது பக்கத்தால் மேய்ந்து கொண்டுபோய் இருப்பது நன்கு தெரிகிறது, இதன் இடது கண் குருடு என்று

Page 108
200 6uñésir trprasaï
நினைக்கிறேன். தீர்ப்பவற்றை இடது பக்கமாக நின்றுகொண்டு தான் தீர்க்கவேண்டும். இதை ஒரு கரைகண்டால் யானைகள் போய்விடும்.”*
'அலியன்தான் முதலில் வருமா?"
*இல்லை, அதுதான் கடைசியாக வரும். முதலில் குட்டி குருமான்கள், பக்கவாத்தியங்கள்தான். கடினமான வேலைதான். ஆளுல் வேறு வழி இல்லையே. அப்படி இல்லாவிட்டால் பண் ணையைவிட்டு ஓடவேண்டியதுதான். அப்படி ஒடி ஒடி எங்கு ஒடு வது? அவை வேலிகளைக் காண்பதில்லை. எத்தனை பட்டுக் கம்பி கள் இருந்தாலும் ஒரே மிதியாக மிதித்து அறுத்துக்கொண்டு உள்ளே வந்துவிடுகின்றன. என்ன செழிப்பாக இருந்தாலும் அதற்கு ஒரு முடிவுகட்டும்வரை ஒரே அட்டகாசம்தான். புத்திக் கூர்மையானவைதான். ஆனல் அந்தப் புத்திக்கூர்மை எல்லாம் பண்ணையை அழிப்பதற்குத்தான் பயன்படுகிறது. நான் விழிப் பாக இருக்கும்போது வராது. கண்களை மூடிக்கொண்டால் வந் திறங்கிவிடுகின்றன. நான் துரத்துவதற்கு போடும் சத்தத்தைக் கொண்டு நான் விழிப்பாக இருக்கிறேன் என்று அறிந்து கொள் கின்றன. உண்ணக்கூட முடிவதில்லை. அந்த நேரத்தில் வந்து வயலுக்குள் இறங்கிவிடுகின்றன. என்ன செய்யச் சொல்கிருய்? மழைக்காலம் தொடங்கப்போகிறது. வேலிகளை அறுக்கை செய் யவேண்டும். இந்த யானைகளுக்கு ஒரு முடிவுகட்ட வேண்டும். இல்லாவிட்டால் ஒரே அழிவுதான். எதைப் பயிரிட்டும் பய னில்லை. யானைகளுக்கும் பன்றிகளுக்கும் பயிரிட முடியுமா? பன் றிகளுக்கு உனது கட்டுத்துவக்கு போதும்."
இந்தக் கதைகள் எல்லாம் வெள்ளைச்சாமிக்கு ஒரே விருந் தாக இருந்தது.
உணவை முடித்துக்கொண்டு இளைஞர்கள் அங்கிருந்து எழுந்து கைகழுவிக்கொண்டு முன்பகுதியில் வந்து உட்கார்ந்து கொண்டனர். சிப்பந்திகள் தளங்களில் இறங்கி அவற்றைத் துப் புரவு செய்வதில் முனைந்தனர். தளங்களின் மேல் மூடிகளைத் திறந்துவிட்டனர். இதை தானகவே திறந்து கொள்ளும்படியான ஏற்பாடுகள் கப்பலில் பொருத்தப்பட்டிருந்தன.
சரவணன் ராணியைக் கண்டு கதைத்துக்கொண்டான். அவ ளுக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டான்.

அருளர் U.
துறைமுகத்திலிருந்த வேற்று நாட்டுச் சரக்குக் கப்பலின் பாதுகாப்புப்படகை இறக்கி அதையும் கொண்டுவந்து ஆட்களை ஏற்றினர். இது வரிசையாக நின்ற வத்தைகளைக் குழப்பியதால் இரண்டு தடவையோடு இளைஞர்கள் அதை நிறுத்திவிட்டனர். அதைக் கொண்டுவருவதில் கடற்படையினரே முன்னின்றிருந்தா லும் இளைஞர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.
முன் பகுதியில் வேட்டியுடன் இருந்த இளைஞனும் வெள்ளைச் சாமியும் உட்கார்ந்துகொண்டனர். வெள்ளைச்சாமி கேள்விகளைத் தொடர்ந்தான். சரவணனும் அவர்களோடு உட்கார்ந்துகொண் டான்.
*வேலையில்லாத் திண்டாட்டம்தான் இங்கு பிரச்சினை என்று கூறுகிறர்கள். அதைப்பற்றி என்ன கூறுகிறீர்கள்?"
"இப்படி எத்தனையோ கதைகள் சொல்வார்கள். எல்லாம் அடிப்படைப் பிரச்சினையை மூடி மறைப்பதற்குத்தான்.'
அடிப்படைப் பிரச்சினை என்ன?
சுரண்டல் சுதந்திரம், யாருடைய வறுமைக்கும் யாரும் பொறுப்பல்ல என்ற நிலை. ஒரு இனத்தை இன்னுெரு இனத் தின்மீது ஏவிவிடப்பட்ட நிலை. இந்த உண்மை நிலையைத் தெரிந்து கொள்ளாமல் இருக்க எத்தனையோ கதைகள் சொல்வார்கள். தங்கள் நிலைகளை இவர்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். விட் டுக்கொடுக்காமல் இருக்கவேண்டும் என்பதே இவர்களுடைய ஒரே மூச்சு. வேலை கொடுப்பதாகக் கூறி இவர்களுடைய கூட் டாளிகளைச் சென்று கூட்டி வருவார்கள். அவர்கள் உள்ளே வந்து இறங்குவதற்குத் தங்கள் முதுகை வளைத்துக் கொடுப்பார்கள். அவர்களும் வேலை கொடுக்கிருேம் உங்கள் பிரச்சினைகள் எல்லா வற்றையும் தீர்த்துவைக்கிருேம் என்று கூறிக்கொண்டு வருவார் கள். கழுகுகள் வந்து எங்களை மேலே கொண்டு போவதாகக் கூறினல் நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளவா வேண்டும்?
அவர்களுடைய நாடுகளில் கோடிக்கணக்கானவர்கள் வேலை யில்லாமல் தெருவில் நிற்கிருர்கள். அவர்களுடைய வேலையில் லாப் பிரச்சினையை ஏன் அவர்களால் தீர்த்துவைக்க முடியவில்லை?
இங்கொரு சமதர்ம அரசு ஏற்பட்டால் இந்த வேலையில் லாப் பிரச்சினை இருந்த இடம் தெரியாமல் போய்விடும். சம

Page 109
202 லங்க்ா ராணி
தர்ம நாடுகளில்தான் சமுதாயப் பிரச்சினைகளைத் தீர்க்கமுடனும் பொறுப்புடனும் அணுகித் தீர்த்துவைக்கிருர்கள். அங்கு இவற்றை வைத்து ஏமாற்று வியாபாரம் பண்ணுபவர்கள் இருப்பதில்லை. ஆனல் இவர்கள் போய்க் கூட்டிக்கொண்டு வருபவர்கள் இங் குள்ள பிரச்சினைகளைச் சாதகமாகப் பயன்படுத்தித் தங்களை வளர்த்துக் கொள்வார்கள். ஒரு இனத்தவர் மற்ற இனத்தவரின் நலனுக்காகச் செயல்படமாட்டார் என்ற நிலை இங்கு இருப்ப தைத் தெரிந்து கொண்டு ஒருவரை வைத்து மற்றவரைச் சுரண் டுவார்கள்.
இந்த முதலாளித்துவவாதிகளால் இனப்பிரச்சினை எங்கும் தீர்த்துவைக்கப்பட்டதில்லை. சமீபகாலத்தில் இரண்டு நாடுகள் லெபனன், சைப்பிரஸ். லெபனனில் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்க ளும், சைப்பிரசில் துருக்கியர்களும் கிரேக்கர்களும். இங்கு இனப் பிரச்சினை தலைதூக்கியபொழுது நாங்கள் வேலை கொடுக்கிருேம் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று கூறிக்கொண்டு போனர் கள் ஒட்டல்கள், விடுதிகள், வங்கிகள், கார்கள், நிர்வாணக் கூடங்கள், எண்ணெய் போட்டுப் பிடித்துவிடும் இடங்கள், பெரிய அளவிலான சுரண்டல் பட்டறைகள் எல்லாவற்றையும் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். அங்கு எந்தப் பிரச்சனையும் தீரவில்லை. கடந்த பல ஆண்டுகளாக அங்கு உள்நாட்டு யுத்தம். தெ டர்கிறது. இனங்களுக்கிடையே மோதல் இரத்தம் வடிந்து கொண்டு குற்றுயுராகக் கிடக்கினறன. அந்த நாடுகள்,
இனங்களுக்கிடையில் ஏற்படும் மோதலால் ஒரு நாடு இரண் டாகிக் கொண்டிருக்கும் நிலையில் ஏற்படும் பலவீனத்தின் மீது கட்டியெழுப்பப்படும முதலாளித்துவம் மிகவும் ஆபத்தானது. அது பிரச்சினையிலேயே வளர்வது; பிரச்சினையைத தீர்த்து வைப் பதல்ல.
அடுத்ததாக இந்த நாட்களில் மனித உரிமைகளைப் பாது காப்பவர்கள் போல பேசுகிருர்கள். பேச்சுச் சுதந்திரம், எழுத் துச் சுதந்திரம், மதச் சுதந்திரத்தைப்பற்றி பேசிக்கொண்டு வரு கிருரர்கள் இப்படிப் பேசிக்கொண்டு வருபவர்கள் சில நாட்கள் சென்றதும் அமெரிக்க நலன்களையும் ஆங்கிலேய நலன்களையும் ஜெர்மன், பிரஞ்சு, ஜப்பர்னிய நலன்களையும் பாதுகாக்க படை களைக் கொண்டுவரும் நிலைக்கு வந்துவிடுகிறர்கள்.
இராணுவம், போலீசிலுள்ள உயர் அதிகாரிகளுக்குப் பணத் தைக் கொடுத்துத் தங்களுக்குச் சாதகமாக புரட்சியை ஏற்ப

அருளர் 2038
டுத்த முனைகிருர்கள். இவர்களை இட்டு நாங்கள் மிகவும் எச்ச ரிக்கையாக இருக்கவேண்டும் இவர்களுடைய கொல்லைப்புறத்தி லுள்ள தென் அமெரிக்க நாடுகளிளெல்லாம் இவர்கள் ஏற்றி வைத்திருப்பது இராணுவ சர்வாதிகாரம் அங்கு மூச்சு விடுவ தற்கும் சுதந்திரம் இல்லை. நமக்குச் சமீபத்திலுள்ள பாகிஸ்தா னில் என்ன நடக்கிறது? இவர்களுடைய சிங்கப்பூர், தாய்லாந்து, தைவான், இந்தோனிசியா, பிலிப்பைன்ஸ், தென்கொரியது என் னதான் மினுமினுப்பாக இருந்தாலும் பாடசாலை விடுதிகள் மாதிரி காட்சியளிக்சின்றன. அங்கு சர்வாதிகாரிகளின் ஆட்சி.
சமதர்ம நாடுகளில் மனித உரிமைகள் பறிபோவதாகப் பிதற்றித் திரிகிறர்கள். அங்குள்ளவர்கள் தாங்கள் யார் என். பதை இவர்களுக்குப் புகட்டியிருப்பதால் அவர்களுடைய மனித உரிமைகள் பறிபோகும்போது இவர்களுக்குப் பதறுகிறதுபோல இருக்கிறது. இங்குள்ளவர்கள் நிலை இவர்கள் கண்களுக்குத் தெரியவில்லை. இந்தச் சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம் மனித உரிமைகள் பற்றிய கோட்பாடுகள் அனைத்துக்குமே முரண்பட்டுப் போய்க் கிடக்கிறது அதைப்பற்றி யாரும் குரல் கொடுத்ததா கத் தெ "யவில்லை." இவ்வாறு பேசிக்கொண்டிருந்தனர்.
கழுவுவதற்கு வந்தவர்கள் எல்லாவற்றையும் தூக்கிக் கட லில் போட்டு முடித்துவிட்டு அந்த இடங்களைக் கழுவவேண்டு மென்று சரவணனிடம் வந்து கூறினர்.
சரவணன் அங்கு சென்று சடங்கக் குழாயைப் பொருத்தி விட்டுச் சிப்பந்தியி ம் கூறி நீரை முடுக்கிவிட்டான். குழாயைப் பிடித்துக் கழுவிக் காட்டிவிட்டு மீண்டும் இள்ைஞர்கள் இருந்த இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டான். நேரம் ஐந்து மணி யாகிவிட்டது. தொண்டர்கள், வேறு பலரும் விடைபெற்றுச் சென்றனர்.
வெள்ளைச்சாமி தொடர்ந்து கேள்வி கேட்டான். "சமதர்ம வாதிகளைத் தமிழர்களைத் தமிழர்களே எதிர்க்கலாமா? என்று கேட்டு மடக்கப் பார்க்கிருர்களே அதற்கு என்ன சொல்வது"
"சமதர்மவாதிகள் அவ்வாறு யாரையும் அழிக்க விரும்பு கிறவர்கள் அல்ல. இப்படி எத்தனை புராணங்களைக் கிளப்பி விடு வார்கள். சமதர்ம சமுதாயத்தை எழவிடாமல் தங்கள் சுயநலன் களையும் சுரண்டல் சுதந்திரங்களையும் பாதுகாத்துக்கொள்ள விரும் புகிறவர்கள் என்னவெல்லாம் சொல்வார்கள். இதே பேர்வழி கள் சமயவாதிகளுடன் கூடிக்கொண்டு கடவுள் பூச்சாண்டி காட்

Page 110
204 Gvišišno prires.
டுவார்கள். சமதர்ம நாடுகளில் எல்லாமே கூடாது என்று கூறு வார்கள். விடுதலை கோரி நிற்கும் இனத்தைத் தட்டில் வைத் துக் கொண்டுபோய்ப் பாதகாணிக்கையாக வைத்துவிட்டுக் கைகளைக் கும்பிட்டு வணங்கி நிற்பார்கள். தங்கள் சுயநலன் களுக்குக் கருணை வேண்டி விதண்டாவாதங்களில் ஈடுபடுவார்கள் மக்கள் எழுச்சிக்கு எதிராக இவர்களுடைய சூழ்ச்சிகள் பயங்கர மானதாக இருக்கும். ‘தமிழினம் தமிழினம்’ ‘விடுதலை விடுதலை" என்று கூறித் தாங்களும் படை திரட்டுவார்கள். இவர்களை என்ன செய்யச் சொல்லிக் கூறுகிருய்? s
சமுதாயத்தின் சாரத்தை உறிஞ்சி அதற்கு நஞ்சு ஊட்டிக் கெடுத்துக் கொண்டு கிடந்தவர்கள் மக்கள் எழுச்சியால் வடி கட்டப்பட்டு அந்தப் பன்னுடையின்மேல் கிடப்பார்கள் வண்டு கள், பூச்சிகள், தத்தன்கள், இலையான்கள், இவர்களே என்ன செய்யச் சொல்லிக் கூறுகிருய்? தங்கள் நிலைகளைப் புரிந்துகொண்டு திருந்திக்கொள்வார்கள் என்று நினைக்கிருயா? மாட்டார்கள். அதே மயக்கத்தில் கிடப்பார்கள். இவர்களை என்ன செய்வது? இவர்களால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமென்ருல் காப்பாற்றிக் கொள்ளட்டும். KM.
வெள்ளைச்சாமி, தமிழ் மக்கள் தங்கள் விடுதலை எவ்வாறு அமைந்திருக்கவேண்டும் என்று நிச்சயம் புரிந்துகொள்வார்கள். ஏதாவது ஒன்றை மாத்திரம் முன் வைத்து உண்மையான பிரச் சினைகளை மறைத்து விட்டுப் போராடுவது விடுதலை அல்ல. தமிழ் மொழி தமிழ்மொழி" என்கிறேம். அடிப்படையில் என்ன உள் ளது என்பதை மறந்துபோகக் கூடாது. சிங்கள மக்கள் தமிழ் மக்களை இவ்வாறு அடக்கி ஆள்பவர்களாக மாற்றப்படுவதற்கு முக்கிய காரணம் அவர்கள் மத்தியில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை யும் அதற்குக் காரணமானவர்களையும் அவர்கள் இனம் கண்டு கொள்ளாதவாறு திசை திருப்பி விடுவதற்காகவே என்பதை நீ மறக்கக் கூடாது.
மொழி மாத்திரம் எதையும் தராது; அது மக்களின் உணர்வு களின் பிரதிபலிப்பே. இதனல் மொழியை நான் இரண்டாம் நிலைக்குத் தள்ளுகிறேன் என்று நினைக்கக்கூடாது. பல விடயங் களில் இதுவும் ஒன்று என்றுதான் கூறுகிறேன். அடிப்படையா னது மக்களின் எழுச்சி. இதற்கான எண்ணங்கள், இந்த எண் ணங்களின் செயற்பாட்டிற்கு மொழி, மொழி பறிபோனல் வேற்று மொழியால் அழிக்கப்பட்டால் தான் அது பிரதானமாகிறது.

9|civil ደ205
மொழியே சமுதாய இயக்கத்திற்குப் பிரதானமானது. சமுதா யத்தில் உள்ள பிரச்சினைகளுக்குக் காரணமானது என்று கொள்ள முடியாது. மொழியை வைத்து விடுதலை கோருபவர்சளுக்கு அவ் வாருன விடுதலை ஏற்பட்டால் அதற்கு அப்பால் செல்வதற்கான பாதை தெளிவாகத் தெரியவில்லை. இவர்கள் பலவீன மடைந்து விடுவார்கள். இதை இவர்கள் எவ்வளவு முன்னேறிச் செல்கி முர்களோ அவ்வளவுக்கு உணர்ந்து கொள்கிருர்கள். இதனல் அவர்கள் பலமாக இருந்த அதே கோட்டிற்கு மீண்டும் திரும்பி வந்து விடுவார்கள். பழைய சூழ்நிலைகள் உருவாக மீண்டும் போராட்டம் போராட்டம் என்று தொடங்குவார். இவர்கள் இவ்வாறு முன்னுக்குப் போவதும் பின்னுக்கு வருவதும் பார்ப் பதற்கு வேடிக்கையாக இருக்கும் நாங்கள் மொழிவுரிமைக்காகப் போராடும் தீரர்கள் என்று உலகிலே பெயரெடுத்து இருந்தா லும் எங்கும் எதையும் உருப்படியாகச் சாதித்ததாக இல்லையே வெள்ளைச்சாமி இங்குள்ள சூழ்நிலைகளில் தனி மொழிக்காக மாத் திரம் போராடுவது முடிவில்லாத போராட்ட பாதையேயொழிய இனத்தின் வெற்றிக்கான பாதையல்ல. இங்கு மொழி அழிவு, இனத்தின் அழிவு, அதன் மீது ஏவி விடப்பட்டுள்ள ஆதிக்கவெறி அவற்றின் போக்கை எடுத்துக் காட்டுவதால் மொழியை வைத்தே அரசியல் வளர்ந்து விட்டது. இனத்தின் விடுதலையே இங்கு முன் னிற்கவேண்டும்.
சீர்திருத்தவாதிகள் வருவார்கள். சாதியை ஒழிப்போம் என் பார்கள் மூடநம்பிக்கையை ஒழிப்போம் என்பார்கள். சமுதா யத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படைக் காரணங்களை ஆரா யாமல் அவற்றின் புற வெளிப்பாடுகளைத் தாக்குவதால் உருமாற் றம் தான் ஏற்படும். உட்சாரம் மாறுவதில்லை. சீர்திருத்தவாதி கள் கோட்டை விட்ட கதைகள் இந்த நாட்டில் ஏராளம். சீர் திருத்தவாதிகள் சுரண்டல் வாதிகளின் சூழ்ச்சிகளுக்கு இலகுவில் பலியாகிவிடுகிறர்கள். சமுதாயத்தில் உள்ள பிரிவினைகள், சாதி சமய வேறுபாடுகள், மூடநம்பிக்கைகள், வறுமை எல்லாவற்றுக் கும் அடிப்படையாக உள்ளது சுரண்டும் சுதந்திரமும் யாருடைய வறுமைக்கும் யாரும் பொறுப்பில்லை என்ற நிலையும்தான். ஒவ் வொருவரும் தன்னைத்தானே பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருப்பதால்தான். இவ்வாறன குறுகிய வட்டங்கள் புகுந்து கொள்ளவேண்டி இருக்கிறது. காலப்போக்கில் அவற்றின் மத்தியில் ற்பட்ட டோட்டியும் மோதலும் இவ்வாறன ஏற் றத்தாழ் ை1ள ஏற்படுத்தி விட்டன.

Page 111
லங்கா ராணி 206
ஆகவே எங்களுடைய விடுதலை மொழியை அழிக்கிருர்கள் என்று கூறித் தனிநாடு அமைத்துக் கொண்டு மற்றவற்றைச் சீர்திருத்திக் கொள்ளலாம் என்பதல்ல. எல்லா விலங்குகளையும் உடைத்தெறிந்துகொண்டு சமதர்ம சமுதாயமாக எழுவதுதான் எங்கள் இனத்தின் உண்மையான விடுதலைக்கு வழிவகுக்கும். வெள்ளைச்சாமி, உன்னுடைய சமூகம் இலட்சியமற்று காலங் கடந்துபோன கட்டுக்கோப்புகளால் கட்டுண்டு கொள்ளைக்காரர் கள் ஏமாற்று எத்தர்களின் வேட்டைக் காடாகக் கிட்ந்து அழிந் தது போதும். இதற்கு முடிவுகட்ட வேண்டிய காலம் வந்து விட்டது. அன்பும் அறமும் நிறைவுபெற்ற அந்தப் புதிய தமிழ னுடைய சமுதாயம் இங்கு வேண்டும். திட்டங்களை ாங்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்குப் படிப்படியாக நிறைவேற் றிக்கொள்ளலாம். ஆனல் இதற்கான உழைக்கும் மக்களின் ஆட் சியை, அரசை, அதிகாரத்தை ஒரேயடியாக நிறுவிவிடவேண்டும். எங்களுடைய போராட்டம் இந்த அடிப்படையில்தான் அமைய வேண்டும். இதற்குத் தீரமுடன் இறங்கிச் செயல்பட வேண்டும். தொடங்க வேண்டியதுதான் எதற்கும் நீ முதலில் பண்ணைக்கு விாத என்றுகூறி வெள்ளைச்சாமியைப் பார்த்தான்.
கழிவிடங்களைக் கழுவிவிட்டவர்கள் அங்கு வந்து சரவணனி டம் எல்லாம் முடித்துவிட்டதாகக் கூறினர். அவர்கள் சரவண னிடமிருந்து எதையோ எதிர்பார்ப்பவர்கள்போல் நின்றனர். சரவணன் அவர்களிடம் என்ன வேணும்' என்று கேட்டான்.
'இல்லை தம்பி, அதுல கொஞ்சம் கயிறு கிடக்குது' என்று இழுத்தனர்.
சரவணன் அவர்களோடு சென்றன். அவர்கள் ஒரு கயிற் றுக் கத்தையைக் காட்டினர்கள். விலை உயர்ந்த கயிறு. அதன் ஊடாகக் கம்பி வைத்துச் செய்யப்பட்டிருந்ததால் அது நல்ல பலமாக இருந்தது. சரவணனும் புரிந்து கொண்டான். சுற்று சிேற்றும் பார்த்தான், கண்களைக் காட்டி விட்டான். அவர்களும் அதைச் சாக்இல் வைத்துச் சுற்றி மறைத்து, ஆரவாரமாகத் அாக்கித் தோளில் வைத்துக் கொண்டு சென்றனர். சரவணன் அவர்களைக் கொண்டு போய்ப் படிகளில் விட்டான்.

15
பொழுது பட்டிருந்தது. கடைசியாக வரிசையில் நின்றவர் கள் கரைசேர்வதற்குத் தயாரானர்கள். அதற்கான வத்தையும் அனைத்துவிடப்பட்டிருந்தது. இளைஞர்கள் வேகமாகச் செயல் பட்டனர் அதிகமான பொருட்களைக் கொண்டு வந்தவர்களே கடைசியாக நின்றுகொண்டிருந்தனர். தங்கள் பொருட்களையும் சுமந்துகொண்டு வரிசையில் நகரமுடியாததஞல் அவற்றை ஆங் காங்கே குவித்து வைத்துவிட்டு நின்றுகொண்டிருந்தனர். பெல் பொட்டம் அணிந்த மங்கையின் குடும்பத்தினரும் தங்கள் பெட்டி பொட்டலங்கள் கூடைகள் கிளிக்கூடு முதலியவற்றைத் தொண் டர்களின் உதவியுடன் மேலே கொண்டுவந்தனர். இவற்றை ஒரு பக்கத்தில் சிறிய மலைபோல் அடுக்கிவைத்துவிட்டு அங்கு நின்று கொண்டிருந்தனர். தொண்டர்களும் அவர்களைக் கடைசியாக இறங்குமாறு கேட்டிருந்தனர். கிளிக்கூடு மேலே வைக்கப்பட் டிருந்தது.
வரிசை நகரத்தொடங்கியது. பெரிய பெட்டிகளும் இருந் தன. இவற்றைத் தொண்டர்கள் இருவராகப் பிடித்துப் படிக ளால் இறக்கினர். வத்தையின் பின்பகுதியில் எல்லாவற்றையும் ஒன்ருக அடுககினர், வத்தையில் நின்றவர்களும் உதவி செய் தார்கள்.
பெல்பொட்டம் அரிைந்த மங்கையின் குடும்பத்தினருடன் தொண்டர்கள் நெருக்கமாக ப் பழகத்தொடங்கியிருந்தனர். தொண்டர்களில் ஒருவன் அந்த நாய்க்குட்டியை வாங்கிக்கொள்ள முனையவே அதுவும் வள் வள் என்று குலைக்கத் தொடங்கியிருந் தது. மேலும் சில தொண்டர்கள் கூடி அந்தச் சடைநாயை மேலும் குலைக்கவைத்தனர். தொண்டர்களும் தங்கள் பணி முடி வுக்கு வந்து கொண்டிருந்ததனல் விளையாட்டாகவே அங்குமிங் குமாக வேடிக்கைகளில் ஈடுபட்டனர்.

Page 112
και θε லங்கா ராணி
கடைசியாக நேரம் வந்ததும் ஒருவன் கிளிக்கூட்டை எட் டித் தூக்கினன். பொட்டலங்களைச் சிலர் தூக்கித் தலையில் வைத் துக்கொண்டனர். இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைத் தாக்கிக்கொண்டு இறங்கினர். மங்கையின் தாயார் எல்லாம் சரி யாகப் போகிறதா என்பதை வாசலில் நின்றுகொண்டு எண்ணி விட்டாள். நாய்க்குட்டியையும் ஒருவன் வாங்கிவிட்டிருந்தான் வத்தையில் ஏறிக்கொண்டவர்கள் சாமான்களை வத்தையின் பின் பகுதியில் வைத்துவிட்டு உட்கார்ந்துகொண்டனர். சில தொண் டர்கள் முன் அணியப்பகுதியில் நின்றுகொண்டிருந்தனர். கடை சியாகக் குடும்பத்தினரும் ஏறவே வத்தை புறப்படுவதற்குத் தயா ரானது. சடைநாயை வைத்திருந்த தொண்டன் அதை மங்கை யிடம் திருப்பிக் கொடுக்க அவளும் அதை அணைத்துப் பிடித் தாள். தொண்டனும் தனது கைகளை விடுவித்துக்கொண்டான். நாய் தொடர்ந்து வள் வள் என்று குலைத்துக்கொண்டிருந்தது.
வத்தையில் உத விக்கு நின்றவன் இதை விநோதமாகப் பார்த்துவிட்டுக் கூறினன்.
"இப்படியான நாய்க்குட்டிகள் எங்கட நாய்களுக்குப் பழக்க மில்ல. கட்டுல போட்டுக் கவனமாக வளர்க்க வேணும்' இவன் இவ்வாறு கூறும்பொழுது முதலில் சத்தத்தை உயர்த்தியும் பின்பு தாழ்த்தியும் கூறிக்கொண்டு அணியத்தில் இயந்திரப் படகிற்கு எறிவதற்குக் கயிற்றைத் தயாராக வைத்துக்கொண்டிருந்த கிழ வரையும் பார்த்தான். கிழவரும் இவனை முறைத்துப் பார்த் தார். அவனும் விட்டபாடில்லை.
'காங்கேசன்துறை, மாதகல், கீரிமலை, ஊராத்துறைப் பக் கம் நான் இப்படியான குட்டிகளைக் காணவில்லை."
தொண்டன் ஒருவன்,
"இது குட்டியில்லை இது இவ்வளவுதான். இதுக்குமேல வள ராது" என்று கூறவும் அவன் மேலும் விநோதமாக அந்தப் பூனைபோல் இருந்த சடைநாயைப் பார்த்தான்.
கிழவர் மேலும் கோபமடைந்து,
"உன்னை என்னடா சொன்னனன்?' என்று அதட்டிஞர். அவனும் 'சரி சரி ' என்று கூறிக்கொண்டு அமைதியானன்.
இதே வத்தைதான் இரண்டாவதாகவும் வந்திருந்தது. அந்த நேரத்தில் கப்பலில் இருந்து இறங்குபவர்களுக்கு இவன் ஒரு பக்

அருளர் 209
கத்தில் நின்றுகொண்டு கூறியவற்றிற்கு முதலில் வாங்கிக் கட்டி யிருந்தான். ஒவ்வொருவராக வரவர இவன் ஒரு பக்கத்தில் நின்றுகொண்டு
*வாருங்க வாருங்க, நீங்க போனபோக்கும் வாறவரத்தும். ஆச்சி, உனக்கேன் இந்த வேலை? ஊரோட கிடக்கிறதுக்கு., கவ னம் பெட்டிய மடியில வச்சுக்கொள்ளும், சம்பாத்தியம் எல் லாம் இதுக்கதானே. நீங்கள் அந்தக் கோணர் சீற்றுக்கு ஏறிப் பாயுற பாச்சல். அங்க அர வெறும் மேலோட, அவங்கள் எல்லாரும் போயிட்டாங்காாே, பாவாயில்லை, வந்ததே பெரும் காரியம். உங்களுக்கு எவ்வளவு சென்ஞலும் கேட்கப் போறி யாளே." இவ்வாறு அவனும் ஒவ்வொருவராகக் கூறிக்கொண்டே போனன். நிறுத்தின பாடில்லை. தொண்டர்களில் பலர் இவனது நகைச்சுவையை ரசித்தனர். மற்றவர்களாலும் விரிக்காமல் இருக்க முடியவில்லை. கிழவர் சிலநேரம் இவனைப் பார்த்துவிட்டு மேலும் பொறுக்க முடியாமல் போகவே,
"டேய் மூடடா வாய, போய் நில்லடா அங்க." என்று அவனை அதட்டி ஒரு மூலைக்கு அனுப்பியிருந்தார்.
தொண்டர்கள் பலர் இந்த வத்தையில் ஏறியிருந்ததால் அவன் உற்சாகமடைந்து மீண்டும் கதைக்கத் தொடங்கியிருந் தான்.
கிழவர் கயிற்றை எறிந்தார். இயந்திரப் படகில் நின்றவன் பிடித்துக்கொண்டான். கப்பலில் தள்ளி வத்தையை நகர்த்தி விட்டனர். வத்தை புறப்பட்டது. தொண்டர்கள் மேலிருந்து இவர்களைப் பார்த்துக்கொண்டிருந்த இளைஞர்களிடம் இருந்தும் விடை பெற்றுக்கொண்டனர்.
தேவன், சரவணன், கமார், வெள்ளைச்சாமி, வேட்டியுடன் இருந்த அந்த இளைஞன் ஆகியோர் மேலே நின்றுகொண்டிருந் தனர். எல்லோரும் கரை சேர்ந்துவிட்டிருந்தனர். இளைஞர்கள் இறங்குவதற்குத் தயாராஞர்கள். சமையல் அறையில் மீதமாக இருந்த பொருட்களை அகதிகள் முகாமிற்கு எடுத்துச்சென்று ஒப் படைப்பதாகத் தீர்மானித்தனர். கப்டனுக்குத் தெரியப்படுத்து வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. சரவணன், குமார், தேவன் "கியோர் கப்டனிடம் சென்று கதைத்துவிட்டு இவற்றை எடுத்
... 2

Page 113
210 லங்கா ராணி
துச் செல்வதாகக் கூறினர். அவரும் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லையாயினும் அங்கிருந்த பீங்கான்களை எடுத்துச் செல்வதற்கு மறுத்துவிட்டார். சமூகச்சேவை இலாகா வினல் அவை கொண்டுவரப்பட்டவை என்றும் அவற்றை மீண்டும் திருப்பி ஒபபடைக்கவேண்டும் என்றும் கூறினர்.
இளைஞர்கள் மூவரும் சமையல் அறைக்குச் சென்று கீழ் அறைக்கு இறங்கி, கிடந்த பொருட்களை மேலே கொண்டுவரும் முயற்சியில் *டுபட்டனர். அங்க மூலையில் கிடுகுச் சிப்பம் ஒன் றும் கிடந்தது. அதை என்னவென்று ஆராய்ந்த இளைஞர்கள் அது ஒரு கருவாட்டுச்சிப்பம் என்பதை அப்போதுதான் தெரிந்து கொண்டனர் அதையும் சேர்த்து வெகுசிரமப்பட்டுப் படிகளால் உருட்டி மேலே தளத்திற்குக் கொண்டுவந்தனர் தேவன் கீழி ருந்து உருட்ட சரவணன் மேலிருந்து அதைப் பிடித்துக்கொண்
IT 67.
வெள்ளைச்சாமியும் வேட்டியுடன் இருந்த அந்த இளைஞனும் முன்பகுதியில் இருந்து கதைத்துக்கொண்டிருந்தனர். பாராளு மன்ற அரசியலைப்பற்றி வெள்ளைச் சாமி கேட்டிருந்தான். இளை ஞன் பதில் கூறிக்கொண்டிருந்தான்.
‘இவர்கள் ஆடம்பர அரசியலுக்குப் பழக்கப்பட்டுப் போன வர்கள். பிற்போக்குச் சக்திகளின் மாலைகளுக்கும் வரவேற்புக ளுக்கும் ஆலாத்திகளுக்கும் ஆலவட்டங்களுக்கும் இலகுவில் மண் டியிட்டுவிடுவார்கள். அவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்வது இவர்களுக்குக் கடினமாக இருக்கும். இவர்கள் எல்லோரும் ஒரு காலகட்டத்தில் ஏற்பட்ட இவ்வளவு தீமைகளுக்கும் காரணமாய் இருக்கக்கூடிய ஒரு வறட்டுத்தனம் மிகுந்த அரசியல் போக்கின் அடிவருடிகளாக இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் இங்கிருக்கிறது. ஐந்து வருடங்களுக்கொருமுறை ஒட்டு பெற்றுப் பாராளு:ன்றம் செல்லவேண்டியிருப்பதால் இவர்களுடைய நடவடிக்கைகள் எல் லாமே அதைச் சுற்றியதாகவே அமைநதிருக்கிறது. இதை ஜன நாயகமெனவும் மக்கள் ஆடசியென்றும் குடியாட்சியென்றும் போதித்து வந்திருக்கிருர்கள். இதன் விளைவுதான் என்ன?
சிங்கள மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் இந்தக் காடைத் தனத்திற்கும் அது இவ்வாறு இலங்கை அரசியலையே விழுங்கி விடுவதற்கும் வழிவகுத்தது இந்த அரசியல் நடைமுறைதான். மக்களின் சுபீட்சமான பொருளாதார வாழ்வை அவர்களை முன் ணிமுத்துச் செல்வதற்குப் பதிலாக குறுகிய வழிகளில் பதவியை

அருளர் 2
அடைய முற்படுபவர்களால் அவர்கள் பகடைக்காய்களாக மாற் றப்படுவதற்கு வழிவகுத்திருக்கிறது.
இந்த அரசியல் ஆங்கிலேயருடைய பாரம்பரியம்தான். அவர் களைப் பொறுத்த அளவில் அவர்கள் வேறு வழிகளில் ஏற்படுத் திக்கொண்ட ஏகாதிபத்திய நலன்களைப் பாதுகாக்கவும், அவற்றை மேலும் தேடிச்செல்லவும் இது நல்ல வசதியாக இருக்கிறது. இங்கு நிலைமை வேறு.
வெகுகாலமாக இங்கு அன்னியன் இருந்திருக்கிறன். ஆதிக்க வெறிபிடித்துச் சுரண்டும் நோக்கோடு இங்கிருந்தவர்கள் மக்க ளின் நல்வாழ்வில் அக்கறை செலுத்தவில்லை. தாங்களே தங்க ளைப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்ற நிலை இங்கிருக்கிறது. இதனுல்தான் இந்தச் சாதிமுறை சுயநலத்தைச் சுற்றிய சமுதா யக்கோட்பாடுகள் இங்கு இவ்வளவு தூரம் வேரூன்றிக் கிடக்கி றது. இந்த அரசியல்முரை ஆங்கிலேயர் தங்கள் பாரம்பரியத் தில் இதை ஏற்படுத்திவிட்டுச் சென்ற நாட்களிலிருந்து இது தொடர்ந்து அவர்கள் காலத்தில் இருந்த சமுதாய முறைகளை யும் ஏற்றத்தாழ்வுகளையும் சுரண்டலையும் அரசின் பொறுப்பற்ற தன்மையையும் தொடரவைத்திருக்கிறது.
நவீன யுகத்திற்கு எங்களை உயர்த்துவதற்கு முற்றிலும் சக்தி யற்றுத் தார்மீகம் என்ற போர்வையிலும் ஜனநாயகம் என்ற போர்வையிலும் எங்கும் ஒரே சுடலை நாடகமாக இருக்கிறது. தேநீர்க்கடை திறப்பும், கங்காணி வேலைக்கு விண்ணப்பப்படிவ விநியோகமுமே இந்த அரசியல்வாதிகளின் பெரும் சாதனையாக விளங்குகின்றன.
இந்த அரசியல் போக்கில் நன்கு ஊறிப்போனவர்கள் புதிய சமுதாயத்தின் கோட்பாடுகளுக்குத் தங்களை உயர்த்திக்கொள்ள முடியாதவர்களாகி இந்த பாழ்பட்ட கட்சி அரசியலின் மகிமை யைப் பல ஏகாதிபத்திய நாடுகளை மேற்கோள்காட்டிப் போதிக்க முற்படுவார்கள். அதுதான் சுதந்திரம் என்று கூறுவார்கள் இதே ஆட்சிமுறை தொடர்ந்தால் என்ன பயன்? இங்குள்ள வறுமை யும் ஏற்றத்தாழ்வுகளும் மூடநம்பிக்கைகளும் மோதல்களும் தொடரும். ஆங்கிலேயர் பிரித்தாண்டதுபோய் சிங்களவர் பிரித் தாண்டதுபோய் நம்மவரே எங்களைப் பிரித்தாளும் நிலை ஏற்ப டும். இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?
1ணம் படைத்தவர்களால்தான் இந்த அரசியலை நடத்த முந்தது. முதலாளிகள், போடிமார்கள், தரகர்களே இங்கு

Page 114
92 லங்கா ராணி
முன்னிற்கவேண்டிய நிலை. இவர்களிடமிருந்து நீ என்னத்தை எதிர்பார்க்கலாம்? இனத்தின் விடுதலையைப் பொறுப்பேற்று நடத்தத் தயங்குகிருர்கள். நாங்கள் இந்நிலைக்குத் தள்ளப்படுகி ருேம். என்று கூச்சல் போடுகிறர்கள். ஒருசிலர் அபிவிருத்தி என்று கூறிக்கொண்டு லஞ்சம் விளையும் களங்களைத் தேடிப் போகிருர்கள். இந்நிலையில் உன் இனத்தின் விடுதலைக்காகப் போராடப் புறப்பட்டுள்ள உன்னுல் என்ன செய்யமுடியும்?
இவர்களுடைய தலைமையை நம்பியிருந்த சிலர் இவர்களு டைய போக்கால் சஞ்சலமடைந்து தகாத வேலைகளில் இறங் குகிருர்கள். முற்றிலும் வேண்டப்படாததொன்று. நாங்கள் என்னசெய்யலாம்? இவர்களுடைய வரையறைகளை அறிந்து கொண்டு இவர்களுக்கு ஒர் இடத்தை ஏற்படுத்திக் கொண்டு முன்னேறவேண்டியிருக்கிறது. நல்லவர்களும் இருக்கிருர்கள் என் பதை நாங்கள் மறந்து போகக்கூடாது. பாராளுமன்றத்தை அண்ணுரப் பார்த்துக்கொண்டிருக்கத் தேவையில்லை.
தமிழனுடைய சமதர்ம சமுதாயத்தை அமைத்து அந்த மகத்தான விஞ்ஞானம் நிறைந்த சமூக உறவுகளையும் வழி முறை களையும் ஏற்படுத்த முனையும் போது இவ்வாறு நாம் நடந்து கொள்ள வேண்டியிருப்பது நமது கடமையாகிறது.
நாங்கள் போகும் பாதைக்கு வழிகாட்டுவதற்கு இவர்களால் முடியாது மக்களின் ஏழ்மையிலும் அறிவீனத்திலும் வேர்விட்டுத் தழைத்து நிற்கும் இந்த அரசியல் வறட்டுத்தனத்தின் சூத்திரங் களிலேயே இவர்கள் நிபுணத்துவம் பெற்றிருக்கிருர்கள். நாங்கள் முற்றிலும் வேருண புதிய சூழ்நிலைகளை நோக்கிப் போய்க்கொண் டிருக்கிருேம். அங்கு உழைப்பவனுக்கே முதலிடம் அவனே இங் கும் முன்நிற்க வேண்டும்" என்று கூறி முடித்தான் அந்த
அடுத்ததாகச் சிங்கள இளைஞர்கள்பற்றி வெள்ளைச்சாமி கேள்வி எழுப்பினன், வேட்டியுடன் இருந்த இளைஞன் சற்று நேரம் சிந்தித்துவிட்டுப் பதில் கூறத் தொடங்கிஞன்.
"எங்களுடை இனத்தின் விடுதலையோடு வேறு எந்த இனத் தின் விடுதலையையும் சேர்த்துப் போராடத் தயார். ஆனல் இங்குள்ள சூழ்நிலைகளில் இரு இனங்களின் விடுதலையும் வெவ் லுேருன பாதைகளில் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப் பதை நீ உணர்ந்துகொள்ளவேண்டும். சிங்கள மக்கள் பலவேறு
பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்குகிறர்கள்.

அருளர் 213
* உலகில் சமாதானத்தையும் நீதியையும் நிலைநிறுத்தும் நோக் கோடு பலமான சக்திகள் செயல்படும் இந் நாட்களில் சிங்கள மக்கள் மத்தியில் எழுந்துள்ள இந்த ஆதிக்கவெறிப் போக்கு முடிவுக்கு வர வேண்டியது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இந் நிலையில் இவ்வாருன நிலையை ஏற்படுத்தித் தங்களைப் பாது காத்துக்கொண்ட அந்தத் தீய சக்திகள் என்ன செய்வார்கள்? தங்களைப்போன்ற அதே தீய சக்திகளுடன் அகில உலக ரீதியில் கூட்டுச் சேர்த்துக்கொண்டு சிங்கள மக்கள் தாங்கள் பெற்றுள் ளதாக நினைத்துக்கொண்டிருக்கும் இந்தச் சுதந்திரத்தை என்ன வென்று அறிந்துகொள்ளுமுன்பே அதை அடைவு வைத்துவிட்டுத் தங்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள். இதை முன்னின்று எதிர்த்துப் போராட வேண்டியவர்கள் சிங்கள மக்களே ஒழிய நாங்களல்ல. தமிழ் மக்களை அழித்துவிடும் அந்த வெறிப்போக் கிலும் மயக்கத்திலும் இருக்கும் சிங்கள மக்களால் இந் நிலைகளை எதிர்த்துப் போராடித் தங்கள் சுதந்திரத்தை நிலைநிறுத்துவது கடினமான செயலாகவே இருக்கும். எனினும் இதைச் செய்ய வேண்டியவர்கள் அவர்களே. இங்குள்ள இரு இணங்களும் சரித்திர ரீதியாகவும் சமுதாய, பண்பாட்டு ரீதியாகவும் வெவ்வேருன பாதைகளிலேயே வந்திருக்கின்றன. சமதர்ம சமுதாயத்தைக் கட்டி நிறுவும்போது, அந்த மகத்தான மக்களின் ஒற்றுமைப் பாட்டையும், ஒப்பந்தத்தையும் நிலைநிறுத்தும் போது, இந்தப் பாழ்பட்ட வெற்றுத்தனம் நிறைந்த அரசியல் குப்பைத்தனத்தை ஒழித்துக் கட்டிவிட்டுச் சிறப்பான அந்தப் புதிய அரசியல் பாரம் பரியத்தை ஏற்படுத்திக்கொண்டு முன்னேறிச் செல்லும்போது, ஏற்படும் பிரச்சினைகளும் அவற்றைத் தீர்த்து வைப்பதற்கு முன் வைக்கப்படும் முறைபாடுகளும் எங்களுடையதும் சிங்கள மக்களு டையதும் அதற்கேற்றவாறு வேறுபட்டே இருக்கும். இ  ைத நாங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
அந்தப் பாதையில் எங்களுடைய முன்னேற்றம் மற்றவர் களவிட பலவழிகளிலும் சிறப்புற்று விளங்குவதற்கான சாத்தியக் கூறுகளைக்கூட என்னுல் காணமுடிகிறது.
தங்களை முற்போக்குவாதிகள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் சுயநிாணய உரிமையைப்பற்றிப் பேசி இந்தப் போலி ஒற்றுமையை மேலும் தொடர முற்படுகிறர்கள். இவர்கள் எவ்வாறு புரட் சியை ஏ ட் டு ச் சுரைக்காயாகி விற்றுத்திரிந்து தீய சக்திகளை வளர்த்துவிட்டார்களோ அதேபோல் சுயநிர்ணய உரிமையையும் விற்கத் திரிகிருர்கள். இவர்களால் உருப்படியாக ஏதும் முடியு மாஞல் முதலில் அங்கேயே செய்யட்டும்.

Page 115
214 லங்கா ராணி
எங்களுக்குச் சுயநிர்ணய உரிமை உண்டு என்று ஏற்றுக் கொள்ளும்போது நாங்கள் யாருடன் ஒத்து வாழ வேண்டும் என் பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் நாங்களே என்பதையும் ஏற்றுக் கொள்கிருர்கள். அதற்குமேல் எதையாவது கூற முற்படு வார்களானல் அது வெறும் ஆலோசனையாக இருக்குமே தவிர அதற்கு மேற்பட்ட எதுவுமாக அது இருக்க முடியாது.
எனினும் எங்கள் தனித்துவத்தை ஏற்றுக்கொண்டு இரு இனங்களின் விடுதலைக்காகவும் ஒன்றிணைந்த போராட்டப் பாதையை வகுத்துக்கொள்ள முன்வருபவர்களை நாங்கள் நிராக ரிப்பது புத்திசாலித்தனமுமல்ல: அது நாகரிகமான அரசியலு மல்ல. எத்தனை நாடுகள் வேண்டுமானலும் இங்கிருக்கலாம். ஆனல் எல்லாவற்றிற்கும் மேலாக இங்கிருப்பது மனித குலம் ஒன்றே என்பதை நாங்கள் மறந்து போகக்கூடாது.
ஏகாதிபத்திய நாடுகளும்கூட எங்கள் தனித்துவத்தை ஏற் றுக்கொண்டு இருசாராருக்கும் ஒரேயளவில் நன்மை பயக்கும் முறையில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முன்வந்தால் நாங்கள் அதை நிராகரிக்க வேண்டியதில்லை.
அடுத்ததாக ஒரு நாட்டைப் பிரிக்கக்கூடாது என்று கூறு கிருர்கள். அது ஒரு நல்ல கருத்துத்தான். ஆனல் நாட்டின் ஒரு மைப்பாடு ஆதிக்க வெறிச் சக்திகளின் நிலைக்களஞகவும் சுரண் டல்வாதிகளின் தார்மீகமாகவும் மாறி அந்த நாட்டு மக்களின் வறுமைக்கும் இயலாமைக்கும் காரணமாகிவிட்ட பொழுது அந்த வேண்டாத ஒற்றுமைப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவர வேண் டியது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. நாட்டுப்பற்றை என்ன வென்று எங்களுக்கு உபதேசம் செய்ய முற்படுகிருர்கள். இது பற்றி யாரும் தமிழர்களுக்கு உபதேசம் பண்ணவேண்டியதில்லை.
"வெளிநாடுகள் யாரும் உதவி செய்ய முன்வருவதாகத் தெரியவில்லையே' என்ருன் வெள்ளைச்சாமி.
"அது அப்படித்தான் இருக்கும் வெள்ளைச்சாமி. அதையிட்டு நீ கவலை கொள்ளக்கூடாது அவர்கள் யாருடைய நன்மைக்காக வும் நாங்கள் இதில் இறங்கவில்லையே உலக நாடுகள் எல்லாமே இங்குள்ள இந்தப் போலித்தனத்துடன் கூட்டுவைத்திருக்கின் றன. பல ஒப்பந்தங்கள், கடன்கள், வியாபாரம்; வேறுசிலர் தங்கள் நீண்டகால நலன்களுக்காக பல திட்டங்களைபம் தீட்டி
அவற்றை நிறைவேற்றுவதிலும் ஈடுபட்டிருக்கிருட்கள் இந்நிலை

அருளர் 215
யில் இங்கு இரு நாடுகள் உருவாவது பல்வேறு பிரச்சினைகளைத் தோற்றுவிப்பது எதிர்பார்க்கக்கூடியதே. இது மாத்திரமில்லை பல நாடுகளில் இதேபோல் விடுதலைகோரும் இனங்கள் அவற்றின்மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்ட நிலையிலும் தங்கள் விடு தலைக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றன.
இந் நிலையில் நீ எதையும் பிரமாதமாக எதிர்பார்க்க முடி யாது. நீதியையும் தர்மத்தையும் வில்லங்கமாகப் பல இடங்க ளில் விழுங்க வைக்கவேண்டியிருக்கிறது. இதற்காக நீ கவஜல கொள்ளவும்கூடாது. தயங்கவும் கூடாது. யாரோ இப்படிக் கனவு கண்டுவிட்டார் என்பதற்காகவோ ஏகாதிபத்தியவாதிகள் தங் கள் நலன்களுக்காக ஏற்படுத்திவிட்டுச் சென்றுவிட்டார்கள் என் பதற்காகவோ நாங்கள் இந்தப் போலித்தனத்தில் மூழ்கிக் காலத்தை விரயமாக்க முடியாது.
எங்களுடைய மக்களின் சுபிட்சமான வாழ்வே இங்கு பிர தானம். அதற்கான பொருளாதார, சமுதாய, பூகோள, பண் பாட்டு வரையறைகளே நாட்டின் எல்லையாகவும் இருக்கவேண் டும். இங்குள்ள சூழ்நிலைகளில் எங்கள் இனத்தின் வரையறை களோடு அவை நின்றுவிடுகின்றன. அதற்கு, அப்பால் ஆதிக்க சக்திகளோடும் அடக்குமுறை ஆக்கிரமிப்பு அபகரிப்புச்சக்திக ளோடும். கூட்டுச்சேர்ந்து அவற்றில் இருந்த எங்களைப் பாதுகாப் பதிலேயே காலத்தைச் செலவிட வேண்டியிருக்கிறது.
பல இனங்கள் ஒன்முகச்சேர்ந்து வாழும் நாடுகள் இருக்க லாம். அவ்வாருன நிலை இருக்க முடியாது என்று நான் கூற வில்லை இங்குள்ள 1,ழ்நிலைகளில் இது ஒன்றுதான் ஒரே வழியாக இருக்கிறது.
சிங்கள மக்களோடு சிநேகப்பூர்வமான உறவுகளை ஏற்படுத் துவதற்கும் அவர்கள் தங்களை ஆட்கொண்டிருக்கும் தீயசக்திகளை எதிர்த்துப் போராடுவதற்கும் இவ்வாறன ஏற்பாடு கட்டாய மாக இங்கு தேவைப்படுகிறது வெள்ளைச்சாமி.
அங்கு என்ன பொருளாதாரம் உண்டு என்று சிலர் கேட்க முற்படுகிறர்கள். இவர்கள் என்னத்தைத்தான் கூறுகிருர்கள் என்று என்னல் விளங்க முடியவில்லை. ஈழம் சற் று வறட்சி யு ையதாகத் தென்படலாம். எனினும் பாலைவனத்திலும் வான் வெளியிலும் சமுத்திரத்தின் அடியிலும் மனிதன் நகரங்களை நிர்மாணித்து நாகரிகம் சமைக்கப் புறப்பட்டுள்ள இந் நாட்களில்

Page 116
ż10 GÜAfinasir prır. Göyasi
இவர்கள் கூற்று விந்தையாகவும் வேடிக்கையாகவும் அ  ைம ந் துள்ளது. இயற்கையே பொருளாதாரம் என்ற காலம் ஒன்று இருந்தது தான். அது கற்காலத்திற்கு முன்னைய காலம். இந்த நாட்களில் பொருளாதாரம் என்பது பெரும்பாலும் ம னி த னுடைய ஆற்றல் பற்றியதாகவே இருக்கிறது. எல்லா விதமான இயற்கையையும் வெல்ல மனிதன் அனுபவம் பெற்றுவிட்டான். இவர்களுடைய கதைகளை இவர்கள் இருந்துகொண்டு கூறும் அதே சாய்வு நாற்காலிகளைப் பார்த்துக் கூறிவிட்டு இருந்து விட்டார்களானல் அது மிகவும் நலமானதாக இருக்கும்.
சிலர் தாங்கள் அங்கு ஏற்படுத்திக்கொண்டுள்ள சுரண்டல் தார்ப்பரியங்களையும் சுகபோகங்களையும் தொடரும் நோக்கோடு எங்கள் சுதந்திரத்தை அடகு வைக்கலாம் என்று நினைக்கிருர் கள். இதற்கு நாங்கள் ஏமாளிகளல்ல. இவர்கள் கனவு காண் கிருர்கள். இவர்களுக்காக நாங்கள் ஒரு துளி கண்ணிர்கூடச் சிந்தப் போவதில்லை.
இங்கு வந்து உட்கார்ந்துகொண்டிருக்கும் சிங்களக் கனவான் களின் தார்மீகம்பற்றிப் பத்திரிக்கையில் செய்திகள் போடுகிருர் கள். இவர்களைப் பார்க்கும்போது காலனிய நாட்கள் தான் எனக்கு ஞாபகம் வருகிறது. இவர்களுடைய தார்மீகத்தைப் பாராட்டும் நிலையில் நான் இல்லாததையிட்டு நான் மிகவும் கவலைப்படுகிறேன். அங்கிருந்து கொண்டு சிங்கள மக்களின் வறுமையைப் போக்குவதற்கு உருப்படியான காரியங்களில் ஈடு படுவார்களானல் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். இவர் களுடைய சேவை அங்கு தான் தேவைப்படுகிறது.
இங்கு எரிந்துகோண்டிருக்கும் பிரச்சினைகளில் சிலர் கூதல் காய முற்படுகிருர்கள். இப் பிரச்சினை வெகு நாட்களுக்குத் தொடர முடியாது. அதன் பின் இவர்கள் நிலை மிகவும் பரிதாப மானதாக இருக்கும். வெள்ளைச்சாமி நீ எதற்கும் த யங் க வேண்டியதில்லை. உன்னுடைய சமுதாயம் யாருடையவும் மிதி படியாக இருக்கவேண்டுமென்ற நியதி இங்கு எப்பொழுதும் இருந்ததில்லை. அவ்வாருன சூழ்நிலை இங்கு இருக்குமாயின் அதன் முழுப் பொறுப்பையும் நீயே ஏற்றுக்கொள்ளவேண்டும். அந் நிலையை எதிர்த்துப் போராட வேண்டியவனும் நீதரன்' என்ருன். அந்த இளைஞன்.
வள்ளமொன்று கரையிலிருந்து வருவது தெரிந்தது. இறங்கு வதற்கான நேரம் நெருங்கிக்கொண்டிருந்ததை இளைஞர்கள் தெரிந்துகொண்டனர். சரவணன், குமார், தேவன் ஆகியோர்

அருளர் 21 7
கீழ் அறைகளில் இருந்து கொண்டுவந்த பொருட்களை இறங்கும் வாசலுக்குக் கொண்டுவந்து சேர்ததிருந்தனர்.
சிறிது நேரத்தில் வள்ளம் வந்து அணைக்கப்படும் சத்தம் கேட்டது. க  ைட சி யாக வெள்ளைச்சாமி சிரித்துக்கொண்டே கேட்டான்.
"ஆமா இந்தப் புத்தகமெல்லாம் படிச்சுப் பார்த்திருக்கி றேன். எதுவுமே புரியமாட்டேங்குதே' என்றன். வேட்டியுடன் இருந்த இனைஞனல் அவனுடைய கேள்வியால் சிரிக்காமல் இருக் கமுடியவில்லை. கடல் பக்கமாகப் பார்த்துச் சிரித்துவிட்டு வெள் ளைச்சாமியைப் பார்த்து மறுமொழி கூறினன். அவனுடைய கண்களில் இருந்து வந்த ஒளி எவ்வித திலும் குன்றியதாகத் தெரியவில்லை.
"அது அப்படித்தான் இருக்கும் வெள்ளைச்சாமி. நீ சஞ்சலப் படக்கூடாது. மீண்டும் மீண்டும் படிக்கப் புரியத்தொடங்கிவிடும் இதுவும் ஒருவிதமான மொழிப் பிரச்சினைதான். ஒரு காலத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சியும் அத்தோடு ஒன்றி வளர்ந்த முதலாளித்துவ வளர்ச்சியும் அவை தோற்றுவித்த முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் பின்னணியாக வைத்தே இந்நூல்கள் பிறந்தன. ஆனல் அதே காலகட்டத்தில் நாங்கள் காலனிய ஆதிக்கத்தின் கீழ் இருந்ததனல் இங்கு அவ்வாறன தொழிற்புரட்சி ஏற்படவுமில்லை; அவ்வாான அரசியல் பிரச்சினை களும் அவற்றைப் பிரதிபலிக்கும் மொழியின் வளர்ச்சியும் ஏற் படவில்லை. ஆகவே இந்த மொழிபெயர்ப்புகளை வைத்துக் கொண்டு எங்களுடைய சமுதாயத்தை நோக்கும்போது இவ்வா முன சிக்கல் எழத்தான் செய்கிறது.
ஆயினும் அடிப்படையான சூட்சுமத்தை விளங்கிக்கொண் டால் எவ்வித பிரச்சினையும் எழாது வெள்ளைச்சாமி. இங்கிருப் பது ஒருவரை ஒருவர் சுரண்டி லாபமடைந்து தனிமனிதப் போக்கில் போட்டி பொருமை நிறைந்து, சுயநலம் நிறைந்து, எதிர்காலத்தைப் பற்றி எதுவித பாதுகாப்புமற்ற, வறுமை நிறைந்த ஒரு சபதாய அமைப்பு. இதை மாற்றிச் சுரண்டலற்ற திட்டமான பொருளாதார அமைப்பினை - சமுதாய ஒற்றுமைப் பாட்டையும் வறுமை ஏற்றத்தாழ்வுகளற்ற ஒரு அமைப்பை ஏற் படுக்க முனையும்போது பழைய நிலைகளில் ஊறிக் கொழுத்தவர்

Page 117
8 லங்கா ராணி
களும் அவற்றுல் லாபம் அடைந்து வருபவர்களும் அவற்றை இலகுவில் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். அவ்வாறன ~ற்று மைப்பாடு ஏற்படுவதற்குத் தடங்கலாகப் பல சூழ்ச்சிகளில் இறங் குவார்கள்.
இந்நிலையில் சமுதாயம் வர்க்கமாகப் பிரிகிறது. அந்த ஒரு மைப்பாட்டை நாங்கள் நிலைநிறுத்தும்போது அது போராட்ட மாக மாறுகிறது. இந்நிலையில் நாங்கள் எவ்வாறு புன்னேறிச் செல்லவேண்டுமென்பதையும் எங்கள் எதிரிகள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதையும், அதை எவ்வாறு நாங்கள் முறி யடிக்க வேண்டுமென்பதையும் இந்நூல்கள் சித்தரிக்கின்றன. இத் தோடு அந் நூல்கள் விபரிக்கும் சமதாயப் பின்னணியையும் மன தில் வைத்துக்கொண்டால் அவற்றைப் புரிந்துகொள்வது சுலப மாகிவிடும். இதில் சஞ்சலமடைவதற்கு ஏதுமில்லை.
சமதர்ம சமுதாயம் என்பது எவ்வித சமுதாய அமைப்பை யும் மேலிருந்து திணிப்பதல்ல வெள்ளைச்சாமி. அந்த உன்னத மான விஞ்ஞானம் நிறைந்த பொருளாதார சமுதாய ஒற்று மைப்பாட்டை உழைக்கும் மக்களின் தலைமையில் நாங்களே எங் களுடைய நன்மைக்காக ஏற்படுத்தி நிலைநிறுத்திக்கொள்வதுதான் சமதர்ம சமுதாயத்தை அமைக்கும் செயலாகும்" என்று அந்த இளைஞன் கூறிவிட்டு அங்கிருந்து எழுந்த இருவரும் இறங்குவ தற்காக வந்தனர். பொருட்களைக் குமார், சரவணன், தேவன் மூவரும் வள்ளத்தில் இறக்கி அடுக்கிவிட்டு மேலே வந்கிருந்த னர். குமார் கடைசியாக எல்ல இடமும் நோட்டம்விட்டு ஏதும் தவற சிடப்பட்டிருக்கிறதா என்பதையும் பார்த்துக்கொண்டான். இளைஞர்கள் கரை சேர்வதற்காகக் கப்பலைவிட்டு இறங்குவதற் குத் தயாராஞர்கள்.
ஏதோ திடீரென்று தீர்மானித்தவன்போல் சரவணன் கால் ச . யிலிருந்து ஒரு சிறு வில்லுக்கத்தியை எடுத்து விசித்தான். அவனை மறறவர்கள் அவதானித்துக் கொண்டு நின்றனர். அவன் துடி.பது தெரிந்தது. சற்றும் எதிர்பாராதவகையில் ஆள்காட்டி விாலில் கத்தியை வைத்து ஒரு இழுவை இழுத்தான். இரத்தம் பீறிட் இக்கொண் a வந்தது.
அங்கிருந்த வெள்ளை இருப்புச்ச வரில் எழுதினன் 'ஈழ விடு தலைப்' எழுத்துகள் வந்தன; அடுத்த தாகப் 'பு' என்ற எழுத்தை எழுதினுன் அடுத்ததாக *ள' வை எழுதுவது போல் முதலில் ஒரு சுழியைப் போட்டான் இதுவரை க்கும் அவனைப் பார்த்துக்

அருளர் 29
கொண்டிருந்த இளைஞன் அவனது மணிக்கட்டை எட்டிப் பிடித் தான் சரவணனும் கையை விடுவிக்க முயற்சித்தான். மற்றவர் கள் பார்த்துக்கொண்டு நின்றனர். தனது கையை மேல்பக்க மாக மடக்கித் திருகி விடுவிக்க்ப் பார்த்தான். அவனுடைய விர லிலிருந்து வெளிப்பட்ட ரத்தம் ஓடி முழங்கையால் வடிந்தது. 'நான் உனக்கு உதவி செய்கிறேன் எழுதுவதற்கு" என்று இளை ஞன் தாழ்மையாகக் கூறினன் சரவணன் ஏற்றுக்கொண்டவன் போலச் "சரி" என்ருன் இளைஞன் மணிக்கட்டிலிருந்த பிடி யைத் தளர்த்திச் சற்று மேலாக விரல்களையம் சேர்த்துப் பிடித் தான். சரவணன் ஆட்காட்டி விரலை நீட்டிக்கொண்டான். அந் தச் சுழியை மற்ற கையால் அழித்துவிட்டுச் சரவணனுடைய கையைப் பிடித்துக்கொண்டு ர-ட்-சி-வா-தி-க-ள் என்ற எழுத் துகளை எழுதிவிட்டான்.
"ஈழ விடுதலைப் புரட்சிவாதிகள்" என்று எழுதப்பட்டிருந்தது
அங்கு எழுதப்பட்டிருந்த ஒவ்வொரு எழுத்துகளிலிருந்தும் இரத் தம் துளிகளாகக் கீழே வடிந்துகொண்டிருந்தது. நேரம் ஆகிவிட் டது. இளைஞர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பெட்டிகளு டன் கீழே இறங்கினர். சரவணனை வேட்டியுடன் இருந்த இளை ஞன் அரவணைத்தபடியே இருவரும் இறங்கினர். "நீ எதற்கும் முதலில் பண்ணைக்கு வா " என்பதே சரவணனுக்கு இளைஞனின் ஒரே வேண்டுகோளாக இருந்தது.
எல்லோரும் ஏறிக்கொண்டபின் இயந்திரப் படகு புறப் பட்டது. அது ஒரு மீன்பிடிப் படகு, வலைகள் மத்தியில் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. நடுவில் வேட்டியுடன் இருந்த இளைஞனும் ஒரு பக்கத்தில் குமாரும் மறுபக்கத்தில் சரவணனும் இருந்தனர். பின்னர் தேவனும் வெள்ளைச்சாமியும் இருந்தனர். இருவர் பட கைச் செலுத்தினர் ஒருவர் இயந்திரக் கூட்டின் மற்ற பக்க மாக நின்று சுக்கானைப் பிடித்துக்கொண்டு நின்றர். அதற்குமுன் வலைகளுக்கு அப்பால் மற்ற மீனவ இளைஞன் நின்று கொண்டி ருநதான.
குமார் யாழ்ப்பாணம் நிகழ்ச்சிகளைப் பற்றிக் கேட்டதும் அந்த மீனவ இளைஞன் யாழ்ப்பாணத்தில் ஒரு சிங்களவர் கூடத் தாக்கப்படவில்லை என்றும் எல்லோரையும் பாதுகாப்பாக அனுப்பி விட்டார்கள் என்றும் கூறினன். பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழர் கூட்டணித் தலைவருமான அமிர்தலிங்கத்தை எவ்வாறு பொலிசார் தாக்கினர்கள் என்பதை விவரித்தான். இளைஞர்கள் திருகோணமலையைப்பற்றிக் கூறவே அங்கு பொலி

Page 118
220 லங்கா ராணி
சாரும் ராணுவத்தினரும் காடையர்களுடன் சேர்ந்து தாக்கிப் பல தமிழர்கள் இறந்திருப்பதாகச் செய்தி கிடைத்திருப்பதாகச் கூறினன். இயந்திரத்தில் இருந்து வந்த சத்தம் அவனுடைய பேச் சைக் கேட்கவிடாமல் செய்யவே அவன் உரத்துக் கத்தி எல்லா வற்றையும் விவரித்தான். அவனுடைய கண்கள் சிவந்து கழுத்து நரம்புகள் புடைத்துப்போய் நின்றன.
முல்லைத்தீவிலிருந்து திருகோணமலைக்கு வள்ளங்களில் சரக்கு கள் கொண்டு போகிருர்கள் என்றும் கூறினன். வேட்டியுடன் இருந்த இளைஞன் வெள்ளைச்சாமியைத் திரும்பிப் பார்த்தான். அடுத்ததாகச் சரவணனைப் பார்த்துக்கொண்டு "நாங்கள் எப்படி யாவது இன்றைக்கே அங்கு போவதற்குப் புறப்படவேண்டும்" என்ருன்.
படகு கரைக்குச் சமீபமாக வந்திருத்தது.
 


Page 119

! *-“4ょ鶴シ **** 4 ** **"