கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இன்றைய பத்திரிகைத் தமிழ்

Page 1
எழுத்தாளர்-பத்தி அகில உலக கத்தே தமிழ்-இலங்கைக்

றைய பத்திரிகைத் தமிழ்
1. ܘ ̄ .
*
ܝ ܢܝ .
、
insults
ாலிக்க ஒன்றியம்

Page 2
வெளியீடு 1 கார்த்திகை 1985
jur 2f
இன்றைய பத்திரிகைத் தமிழ்
கட்டுரை
ஆசிரியத் தலையங்கம் கி
சிறுகதை 8
இலக்கியம் 13
செய்திகள் 29
அ. பெ. 2 யாழ்ப்பாணம்
இலங்கை

6ழுத்தாளர் - பத்திரிகையாளரின் அகில உலக கத்தோலிக்க ஒன்றியத்தின் தமிழ்-இலங்கைக் கிளை 9.8.1985ல் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டது.
"இலங்கைக் கத்தோலிக்க சமூகத் தொடர்பு சாதனங்களிற்கான தேசிய ஆணைக்குழுவின் தமிழ்ப் பிரிவின் வழி காட்டலுடன் இயங்கும் இந்த அமைப் பில், தமிழ்க் கத்தோலிக்க எழுததாளர் -பத்திரிகையாளர்கள் உறுப்புரிமை யினைப் பெறலாம். பின்வருவன இதன் நோக்கங்களாக வரையறுக்கப்பட்டுள்
g
* தமிழ் எழுத்தாளர்-பத்திரிகை யாளர்களைப் பயிற்றுவிப்பதும், அவர்களின் புணிகளை ஊக்குவிப் பதும், நெறிப்படுத்துவதும், ஒரு நிலைப்புடுத்துவதும்.
தமிழ் மக்கள் மத்தியிலான அச்சுச் சாதனத்தில் (Printe media) இலங்கைக் கத்தோலிக்க ஆயுர் மன்ழத்தின் பிரதிநிதிக
@rrrየöኝቇ சேயற்படுதல்.

Page 3
கத்தோலிக்கரல்லாத தமிழ் எழுத்
தாளர்-பத்தி ரி கை யாளர் க ளுடன் நட்புரீதியான தொடர்பு களை வலுப்படுத்தல்.
* எழுத்துத் துறைகளில் தமிழுக்கும் கிறிஸ்தவத்துக் குமிடையே நெருங்கிய தொடர்பினை ஊக்கு வித்தல்.
* சிங்கள, ஆங்கில எழுத்தாள
பத்திரி  ைக யாளர் களு ட
தொடர்புகளை ஏற்படுத்துதல். அங்குரார்ப்பன தினத்தன்று இன்றைய பத்திரிகைத் தமிழ் என்ற தலைப்பில் நிகழ் த்தப்பெற்ற கருத்தரங்க உரைகளின் சுருக்கம், கட்டுரைகள் வடிவில் இங்கு வெளியிடப்படுகின்றது. கருத்தரங்கில் பங்கேற்றவர்களில் இருவுர் தமிழ் நாளேடுகள் இரண்டின் ஆசிரியூர்; ஏனைய மூவுரும் நவீனத் தழிழ் இலக்கி யத் துறைகளுடன் தோழர்புற்றவர் கள். இவர்கள் அனைவுருக்கும் முேது நன்றிகள்.
இதுபோன்ற வெளியீடுகளை அவ்வுப் போது வெளிக்கொண்டுவரவும், இயன் றவரை முயல்வோம்.

கட்டுரை
உரைநடை வளர்ச்சி, அச்சுத் தொடர்பியல் முன்னேற் றம் எழுத்தறிவுப் பெருக்கம், என்பவற்றுடன் இணைந்த இலக் கிய வடிவம் கட்டுரை, சமூக நிபந்தனைப்பாடுகளால் எழுந்த அறிவுப்பெருக்கம், உணர்ச்சிப் பெருக்கம் என்பவற்றைச் செம் மையுறக் கோவைப்படுத்திக் கூறத்தக்க சக்திக்காப்பு வடிவ மாகக் கட்டுரை மலர்ச்சி கொண்டது.
கட்டுரை ஒரு கலை வடிவமா என்று எழுப்பப்படும் கேள்வி ஒருவகையிலே அதன் வடிவமைப்புக்குரிய தனித்துவத்தைக் காட்டுகின்றது. இச் சந்தர்ப்பத்தில் இலக்கியவடிவங்களுக்குரிய "வீச்சு" என்ற இயக்கத்தைப் பற்றிச் சிந்திக்கவேண்டியுள்ளது. கவிதையின் உருவ வீச்சினை நோக்கினல், முற்று முழுதாக இசைவடிவிலமைந்த கீர்த்தனைகள் தொடக்கம், பாரம்பரிய பாப்பு விடுதலை கண்ட புதுக்கவிதை வரை அதன் நீட்சியைக் காணலாம். கட்டுரை வடிவமைப்பிலும் இவ்வாறன ஒரு வீச்

Page 4
2
சைக் காணமுடியும். முற்றிலும் உணர்ச்சிக் கொப்பளிப்பாக அமையும் கட்டுரையாக்கத்திலிருந்து புறவயமான தருக்க முறைகள் கொண்ட ஆராய்ச்சிக் கட்டுரையாக்கம் வரை யிலான வீச்சைக் காணமுடியும்.
கட்டுரை வாசிப்பிலும், அனுபவப் பகிர்விலும், கலைப்பரி மாணங்களிலும் தர நிர்ணயம் என்பதை மேற்கொள்வது சிக் கலானதும் சிரமமானதுமான செயல், ஆராய்ச்சிக்கட்டுரை யொன்றினை வாசிக்கும் பொழுது புனைகதையை வாசிக்கும் இன்பத்திலும் மிகையான திருப்திபெறும் வாசகரும் உள்ள னர். இந் நிலையில் அகவயச்சார்பு இன்பத்தையும் புறவயச் சார்பு இன்பத்தையும் வேறு பிரித்தறிய முடியாத நிலையில் அறிவின் ஒன்றினப்பையே மீள வலியுறுத்த வேண்டியுள்ளது.
தமிழில் அச்சுத்தொடர்பியலும், பத்திரிகைத் தொடர் பியலும், கட்டுரை வடிவத்தினைத் தேவைப்படுத்த ஆறுமுச நாவலர், சி. வை. தாமோதரம்பிள்ளை, வேதநாயகம்பிள்ளை, பாரதி, வ. ரா. திரு வி. க., மறைமலையடிகள், உ. வே. சாமி நாதையர், வ. வே. சு. ஐயர் போன்றேர் தமிழிற் கட்டுரை யமைப்பை முழுமையாக்க உதவினர்.
இந்திய் விடுதலை இயக்கமும், காந்திய அலையும், பொது மக்களை நோக்கிய கல்வியின் விரிவும் தமிழ்க் கட்டுரையாக் கத்தை விசைப்படுத்தின. , . .
காந்தியத்தின் "சமூகப் போதாமை" என்ற இயல்பு பகுத்தறிவு மரபுைத் தோற்றுவிக்க, ஈ. வே. ரா., அண்ணு துரை, கருணுநிதி போன்றேர் பகுத்தறிவை முதனிலைப்படுத் தும் உணர்ச்சி வெளிப்பாட்டுக்குரிய தலைவடிவமாகக் கட்டு ரையைக் கையாள முயன்றனர். சாதிமுறைமை, மூடப்பழக்க வழக்கங்கள், போன்றவற்றைச் சாடும், கட்டுரையாக்கங்கள் பெருக்கெடுத்தன. ! " - " ،

மேற்கூறிய பண்புகளிலிருந்து விலகல் கொண்டதாக மணிக்கொடி குழுவினரது கட்டுரையாக்கங்கள் அமைந்தன. தமிழகச் சமூக வளர்ச்சியின் எதிர்மறைக் கோலங்களாற் பாரம்பரியமான விழுமியங்கள் உடைந்து நொருங்குவதை அவர்களது கட்டுரைப் புனைவுகள் காட்டின. சீர்கேடுகளைக் கிண்டலாயும் குத்தலாயும் கூறும் மரபையும் அவர்கள் வளர்த் தெடுத்தனர். "அந்நியமாதல்" என்ற சமூகத்தோற்றப் பாட்டினைச் சமூகவியற் பிரக்ஞை இன்றி இலக்கியப் பொரு ளாக்கினர்.
இவ்வாருண பகைப்புலத்திற் சமூக நோக்குத் தழுவியும், வரலாற்றின் இயக்கவியல் பற்றிய தெளிந்த தரிசனத்துடனும் ப. ஜீவானந்தம் அவர்களது கட்டுரையாக்கங்கள் அமைந்தன. அந்த மரபு. வானமாமலேயவர்களிளுல் மேலும் புடமிடப்பட் -2. 岑°
இலங்கையில் இந்த மரபின் தொடர்ச்சியையும் வளர்ச் சியையும் பத்திரிகை வாயிலாக அமரர் க. 6966)ratu5ualni கள் மேற்கொண்டுவந்தார். :
இந் நாட்டுக்குரிய தனித்துவங்கள் கட்டுரை இலக்கி யத்தை வளர்த்தெடுப்பதற்கு உறுதுணையாக அமைந்தன. குடியேற்றவாதத்துக்கு எதிரான போராட்டங்கள், தேசிய இனங்கள் அனுபவித்துவரும் வன்முகப்பட்ட விசைகள், மண் கிணயும் மக்களையும் நேசிக்கும் இலக்கிய இயக்கங்கள், சமூக, முரண்பாடுகளைக் கூராக்கும் போராட்டங்கள் முதலியவை, இந் நாட்டுக் கட்டுரையாக்கங்களிலே செழுமையினை வருவித் துள்ளன.
கலாநிதி FLAT Gguug vesir . விரிவுரையாளர்.
கல்விப்பீடம் யாழ். பல்கலைக்கழகம்."

Page 5
ஆசிரியத் தலையங்கம்
“ஆதிசிவன் அருளாலும் அறிவறிந்த மக்கள் ஆதரவின லும் வீறுபெற்று விளங்குவேன்" என்று தமிழன்னை வாயிலாகப் பாரதியார் கூறிய வாய்மொழி இன்றும் பொய்த்து விடவில்லை. முன்னுேடிகள்:
பாரதியாரின் கவிதை நடைக்கும் வசன நடைக்கும் பலத்த எதிர்ப்பு இருந்தது ஒரு காலம். படித்தோர் வழக்கு, பாமரர் வழக்கு என்ற பாகுபாட்டை நீண்டகாலம் பண்டித சமூகம் பாராட்டி வந்தது. இலக்கணத்துக்கு மாறுபட்ட எந்தப் படைப்பும் அரங்கேறுவதில்லை. இது தமிழ் நாட்டின் பழைய
Ab Ur Ly.
பாரதிக்கு முன்னரே கடு முனைப்பான இவ்விரு நடைக ளையும் யாழ்ப்பாண நல்லூர் ஆறுமுகநாவலர் துணிந்து நிராக ரித்தார். மக்கள் தமிழாகிய பழகு தமிழை தமிழ்மக்கள் மத்

5
தியில் அறிமுகப்படுத்திய பெருமை ஆறுமுக நாவலருக்கே உரியது.
நாவலர் வாழ்ந்த காலத்தில் சமயவாதம், இலக்கண-இலக் கிய வாதம், அரசியல் வாதங் கூட தமிழகத்திலும் யாழ்ப்பா ணத்திலும் அதிகரித்து வந்தது. இதற்கு, கண்டனத்தமிழ் மிக அவசியமாயிற்று.
அக்காலப்பத்திரிகைகள்-இலங்கை நேசன், உதயதாரகை, சத்தியவேத பாதுகாவலன், இந்து சாதனம் போன்ற வார ஏடுகள் கொந்தளிப்பான விவாதங்களை வெளியிட்டன.
பத்திரிகாசிரியரின் தலையங்கம் நடுநிலையை வகிக்கும் சூழ் நில இத்தகைய சமய, சமூக, இலக்கண மோதல்களில் அன்று சாத்தியப் படவில்லை. பத்திரிகைகள் ஏதேனுமொரு சமயச்சார் பில் இயங்கின என்பது காரணம்.
நேரடித்தமிழ்:
நேரடியான தமிழ் இயல்பான ஒட்டம் உணர்ச்சி மயமாக வும், அறிவு ரீதியாகவும் எழுதிப்பழகி நாவலரைப் பலர் பின் பற்றினர். அவருடைய நடிையைப்பற்றிக் குறிப்பிடும் ஓர் அறி ஞர் "அது குற்றவாளியைக் கொதிக்கச் செய்யும், தம்மவர் பிறர் என்ற பாரபட்சம் பாராத சொற்கள்' என்ருர்.
இந்த நூற்ருண்டின் முன்னேடியான மகாகவி பாரதி யார், நாவலரின் பணிக்கு வேறுபட்டவர். நாட்டின் சுதந்திரத் தில் ஆற்றமுடியாத தாகம் கொண்டவர். பாரதியார் பிற நாட்டு நல்லறிஞர் இயற்றிய புத்தம் புதிய கலைநூல்களைத் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டுமென்று வீறுகொண்டு எழுதிய வர்-பாடியவர். எந்தப் புதிய கருத்துக்களையும் தமிழ் வழக் காற்றில் உய்த்தல் வேண்டும், புதிய சொற்களை வேண்டுமாயின் தமிழ்ச் சொல்லாக்க முறையறிந்து அவற்றைப் பிறப்பித்தல் வேண்டுமென்று சங்க நாதம் செய்தார். வைதீகத்தை விட்டொ ழித்து மக்கள் தமிழில் உருசி கொண்டனர்.

Page 6
சிந்தனை தூண்டல்:
பத்திரிகையாளன் பாரதி மக்களைத்தட்டி எழுப்பி சிந்திக்க வைக்க தமிழை மிக எளிய இனிய நடையில், சனத் தொடர்பு சாதனமாக்கினர். இன்று பத்திரிகை படித்தல் மிகச் சாதாரண பழக்கமாய் விட்டது. அன்று மக்கள் மத்தியில் ஆரம்பமான ஆர்வம் பிறகு ஒரு பெரிய மரபை உருவாக்கியது. அது மக்கள் புரிந்து கொள்ளுமளவில் காரண காரிய ரீதியாக சுருங் க ச் சொல்லி விளங்க வைக்கும் திறனுடைய கட்டுரைகளும் ஆசிரி யத் தலையங்கங்களும் வளர்ந்து வந்த மரபு எனலாம்.
இன்று எந்த நாட்டிலும், குறிப்பாக இலங்கையிலும், பத் திரிகை படியாதவர்கள் எவரும் இல்லை எனலாம். சனத்தொடர்பு சாதனம்:
யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் வெளிவரும் தமிழ்த் தினசரிகள் வளர்ந்து வருவதற்கு மக்கள் பத்திரிகை படிக்கும் ஆர்வமே காரணம். ஆர்வம் இருந்தாலும் தனக்கென ஒரு பிரசு ரம் விலைக்கு வாங்கும் பழக்கம் தமிழ் மக்கள் மத்தியில் இன் னும் குறைவாகக் காணப்படுகிறது.
ஆசிரியத் தலையங்கம் பத்திரிகையின் சிரசு. இருப்பினும், சிரசில் நாட்டம் கொள்பவர் மிகக் குறைந்தவரே. படித்தவர்க ளுக்கும், உலக விவகாரம் கற்றுத் தெளிந்தவர்களுக்கும், பிரத் தியேகமான படைப்பு அதுவென்ற மூட நம்பிக்கை எழக் கார -ணம் இருந்தது. அது இன்று மலையேறுகின்றது. s ஆசிரியத் தலையங்கம் எழுதப்படும் நடை, எழுதப்படும் பொருளிலிருந்து பிரித்துப் பார்க்கக் கூடிய த ல் ல. எனவே பொருள் எத்தகைய தென்பது அவதானிக்கத்தக்கது. சான்றேர் கவனத்தை ஈர்க்க வல்ல, அதேசமயம் சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் எளிமை அவசியமானது. முறைசாராக் கல்வி:
"கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏது" என்ற நாடோடி வாசகம் நினைத்தற்குரியது. யாழ்ப்பாணத்தில் வெளி வரும் தினசரி, யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சம்பவங்களை

பும், அவற்றின் விளக்கங்களையும் கொண்டதாக இருக்க வேண்டுமென நினைப்பவர்கள் கிணற்றுத் தவளைகளே.
"நாட்டு வளப்பம்" என்னும் போது ஒரு சிறு தீவு போல கருங்கிவரும் உலக விடயங்கள், பத்திரிகாசிரியரின் நேரடிக் கவனத்திற்குரியது. அவற்றின் சிக்கல்களை அவிழ்த்து வாசகர்க னின் உணவுக்குரிய முறையில் சமைக்கும் திறமை, ஆசிரியரின் ஆளுமையைப் பொறுத்ததே. பஞ்சாப்பில் உடன்பாடு கைகூடி யது என்ற செய்தியின் உடனடி விளைவு என்னவாகலாம் என்ற முன்னறிவு ஆசிரியரின் மனத் திரையில் படம் போல ஒட வேண் டும். எனவே வாசகர்களின் மனதைக் கவரும் விடயம், அவ்விட யத்தின் பின்னணி, அதனல் ஏற்படக்கூடிய நன்மை தீமை, அதற்குப் பொருத்தமான அல்லது வேறுபட்ட நிகழ்ச்சிகள் யாவும் சங்கிலிக் கோவை போல் தொடர்பாக மிகத் தெளிவாக குறிப்பிட்ட அளவில் எழுதி முடிக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு பெரும் கருத்தையே தலையங்கம் விளக்க வேண்டியது. வளர்ந்தோர் கல்வி:
எனவே பத்திரிகைத் தமிழ் மக்கள் பழகும் தமிழ் என்பது வெளிப்படை. ஆனல் பழகும் தமிழை பத்திராதிபர் புதிய திசை களில் திருப்பும் பொறுப்புடையவர். ஆங்கில மொழிக்குரித் தான சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் அற்புதத் திறமை யும், எந்த நெருக்கடியிலும் மக்கள் நம்பிக்கை ஒளி கொழுந்து விட்டு எரியும் முறையில் பொருள் நோக்குடையதாக, அதே சமயம் ஆதாரமற்ற எதிர்ப்புக்களை தவிர்க்கும் திறமையுடைய தாக இருக்க வேண்டும். விவாதத்தின் நன்மை தீமைகளை தொட்டுக் காட்டி, வாசகர்களின் சிந்தனையைத் தூண் டு ம் காரண காரிய முறையில் நகைச்சுவை மயமானதாக ஆசிரியத் தலையங்கம் கவர்ச்சியூட்ட வல்லது. வளர்ந்தோர் கல்விக்கு இத்தகைய ஆசிரியத் தலையங்கம் ஒரு வரப்பிரசாதமே.
ந. சபாரத்தினம் ஆசிரியர்,
"ஈழநாடு"

Page 7
சிறுகதை
தமிழில் பத்திரிகைகளின் தோற்றம் தமிழ் உரை நடை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிற்று. மேலைத்தேய இலக்கியங் களின் பரிச்சயமும் பத்திரிகைகளின் இயக்கமும் தமிழில் நாவல் சிறுகதை போன்ற நவீன இலக்கியங்கள் தோன்றி வளரக் காரணமாயின.
தமிழில் வெளிவந்த வெளிவந்து கொண்டிருக்கின்ற தினசரி, வார, இருவார. மாதப்பத்திரிகைகளில் குறுகிய நேர த்தில் வாசித்து இரசிக்கத்தக்க சிறுகதைகள் தவிர்க்கமுடியாத

9
அம்சமாக இருப்பதை நாம் கண்டுகொள்ளலாம். இதன்விளை வாகத் தமிழில் சிறுகதை இலக்கியம் ஒரு துறையாகப் பரிண மித்துள்ளது. சிறுகதை இலக்கியத்தால் தமிழ் வளர்ச்சியும் வளமும் பெற்றுள்ளது.
பத்திரிகைகளில் வெளிவரும் சிறுகதைகளுக்கே உரிய "பத்திரிகைத் தமிழ்’ என்று ஒரு தனித்தமிழ் உண்டா? அல்லது பத்திரிகைகள் சிறுகதையின் தமிழை நிர்ணயிக்கின்றனவா? சிறுகதையுடன் தொடர்புடைய அம்சங்களை எடுத்து நோக்கு கையில் தனியே பத்திரிகைகள் காரணிஎனக் கூறமுடியாதா? அவ்வாறயின் சிறுகதையின் மொழியை நிர்ணயிக்கும் கார ணிகள்யாவை? பின்வருவனவற்றைக் காரணிகளாகக் கூறலாம்.
பத்திரிகை நிறுவனமும் அதன் நோக்கமும். பத்திரிகை ஆசிரியன்
சிறுகதை எழுத்தாளன்
சிறுகதையின் உள்ளடக்கம் வாசகன் இரசணை மட்டமும், வாசிப்புத் தரநிலையும்
பத்திரிகைத் தோற்றக் காலத்தில் மட்டுமன்றி, இன்றும், பெரும்பான்மையான பத்திரிகை நிறுவனங்களின் நோக்கம் பத்திரிகையில் வெளிவரும் விடயங்களால் வாசகர் கவரப்பட்டு மேன்மேலும் வாசகர் கூட்டம் பெருகி, அதன் மூலம் அதிக இலாபம் ஈட்டுவதே. இதற்கு சிறுகதை விதிவிலக்கன்று.எனவே சிறுகதைகள் எளிய நடையில் மக்களின் சாதாரண உணர்வு களைக் கவரத்தக்கனவாயிருத்தல் வேண்டும். ஆரம்பத்தில் பத் திரிகை நிறுவனங்கள், சிறுகதைகள் எழுதுவதற்காக எழுத்தா ளரை நியமித்து, தமது நோக்கத்துக்கிணங்க எழுதவைத்தனர். பின்னர்,வாசகர் மத்தியில் எழுத்தாளர்தோன்றி பத்திரிகைக்குக் கதை எழுதும் நிலை உருவானது. அப்போதும் நிறுவனங்கள் தம்நோக்குக்குப் பொருந்தியவற்றைத் தெரிந்து வெளியிட்டு வந்தன. இன்றும் இந்நிலையில் பெருமாற்றம் ஏற்படவில்லை.

Page 8
10
பத்திரிகை நிறுவனத்தால் நியமிக்கப்படுகின்ற பத்திரிகை ஆசிரியன் நிறுவனத்தின் நோக்கத்திற்கேற்பச் சிறுகதைகளைத் தெரிந்து, திருத்தங்கள் செய்து வெளியிடுகின்ற போக்கு இன் றும் நிலவுகின்றது. விற்பனைப் போட்டி காரணமாக வாசகர் களைக் கவருவதற்கு, ஒவ்வொரு பத்திரிகையும் தமிழ் நடையில் ஒவ்வொரு தனித்துவ பாணியை ஏற்படுத்தின. ஆனந்தவிகடன் பாணி, தினத்தந்தி பாணி, தி.மு.க. பாணி என்று சொல்வதை எடுத்துக்காட்டாகக் கூறலாம். விற்பனையை நோக்கமாகக் கொண்ட பத்திரிகைகள் சிறுகதை மூலம் தமிழை வளர்த்தன என்று கூறமுடியாது. அவை தமிழில் ஜனரஞ்சக நடை ஒன் றைத் தோற்றுவித்தன வென்றே கூறலாம்.
கலைத்துவம் மிக்க இலக்கியங்களைத் தமிழில் படைக்க வேண்டுமென்ற நோக்குடன் பல பத்திரிகைகள் தோன்றின. அவற்றிற்கு ‘மணிக்கொடி" பத்திரிகையை எடுத்துக்காட்டாகக் கூறலாம். இந்த மணிக்கொடிக் காலத்திலேயே தமிழில் புதுமை யானதும் தரத்தில் சிறந்ததும் உள்ளடக்கத்தில் வளமானது மான சிறுகதைகள் படைக்கப்பட்டன. தமிழில் சிறுகதையின் பிதாமகளுக வ.வே.ச.ஐயர் கருதப்படினும், மணிக்கொடிக் காலத்தில் தோன்றிய சிறுகதை மன்னன் எனப் புகழப்பட்ட புதுமைப்பித்தன், கு.ப.ரா., லா.ச.ரா., மெளனி, ரகுநாதன், விந்தன், கு. அழகிரிசாமி போன்ருேர் சிறுகதை இலக்கியத்தில் வளமானபங்களிப்பைச் செய்தனர்.
பெரிய பத்திரிகைகளைப் பார்க்கிலும் சிறு பத்திரிகைகள், சஞ்சிகைகளே சிறுகதைகள் மூலம் தமிழைச் செழுமைப்படுத் தின. மணிக்கொடி, அமுதசுரபி, சரஸ்வதி, தாமரை, சாந்தி, எழுத்து, முதலிய பத்திரிகைகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இலங்கையில் வீரகேசரி, தினகரன், சுதந்திரன், சிந்தாமணி போன்ற பத்திரிகைகள் சிறுகதை வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளபோதும், ஈழகேசரி,

A
மறுமலர்ச்சி, கலைச்செல்வி, வசந்தம், மல்லிகை, அலை போன்ற பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் காத்திரமான சிறுகதை வளர்ச் சிக்கு உதவின; உதவி வருகின்றன எனலாம்.
சிறுகதையின் மொழியை நிர்ணயிப்பதில் சிறுகதை எழுத் தாளனுக்கு முக்கிய பங்குண்டு. அவனது மொழி அறிவு, வாழ்க் கை அனுபவங்கள், மக்களின் மொழிப் பரிச்சயம், அவனது எழுத்துநோக்கம், அவனது உழைப்பு முதலியன சிறுகதைத் தமிழை வளம்படுத்துவதிற் பெரும்பங்கு வகிக்கின்றன. நிதர் சன வாழ்க்கையையும் கதாபாத்திரங்களையும் யதார்த்த பூர்வ மாக சித்திரிக்கின்ற எழுத்தாளன் மக்களின் பேச்சுமொழியைப் பெரிதும் கையாள்வதுண்டு. ஒரு காலத்தில் மக்களின் பேச்சு மொழி கொச்சைத்தமிழ், இழிசனர்வதிக்கு என பத்சுரிகைக் காரரால் நிராகரிக்கப்பட்டது. அம் மொழி பத்திரிகை ஆசிரிய ரால் திருத்தப்பட்டு, எல்லாவகைப் பாத்திரங்களும் ஒரே மாதிரி இலக்கணத் தமிழில் பேசுவனவாயிருந்தன. ஆனல் காலப்போக்கில் மக்கள் பேசும் மொழியிலேயே உயிர்த்துடிப்பு உள்ளதென்பதை எழுத்தாளர்களும் இரசிகர்களும் நிரூபித்த காரணத்தால் பெரும்பான்மையான பத்திரிகைகள் அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. சிறுகதை களில் மக்களின் பேச்சுமொழி கையாளப்பட்டதன் காரணமாக சிறுகதைத்தமிழ் வளமும் சிறப்பும் பெறுவதாயிற்று.
சிறுகதைகளின் உள்ளடக்கமும் சிறுகதையின் தமிழை வளர்ப்பதில் ஒரு தவிர்க்கமுடியாத காரணியாக அமைகிறது. ஆரம்ப காலத்திலும் இன்றும் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படு கின்ற சிறுகதைகளின் உள்ளடக்கம் காதல், சகோதரபாசம், மாமி-மருமகள் சண்டை, குடும்பப்பிரச்சினைகள், பாலுணர்வு ஆகியவற்றைச் சுற்றியே வட்டமிட்டுள்ளன. இத்தகைய உள் ளடக்கங்கள் ஒரே மாதிரியான தமிழ் நடையிலே எழுதப்பட்டு வந்துள்ளன. பத்திரிகைக்குப் பத்திரிகை, சிறிது வேறுபட்டா லும் அத்தமிழில் புதுமை காணமுடியவில்லை. மக்களின் உண்

Page 9
18
மையான பல்வேறு வாழ்க்கைப் பிரச்சினைகள், அபிலாஷைகள் சமுதாயப் பிரச்சினைகள் என்பவற்றைச் சிறுகதையின் உள்ளடக் கங்களாக வைத்து, எழுத்தாளர் கரிசனையுடன் எழுதத் தொடங் கிய பின்னரே சிறுகதைத் தமிழ் நவீனமும் எழுச்சியும் பெற்றுக் காத்திரமடைந்தது.
வாசகரின் இரசனைமட்டத்தினைக் கைபிடித்துப் பார்த்து, பெரும்பாலான மக்களின் வாசிப்புத்தரத்தை மட்டிட்டு, அவற் றைப் பயன்படுத்தி இலாபம் சம்பாதிக்கும் நோக்குடன் பத்தி ரிகைகள் சிறுகதைகளை எழுதி, எழுதுவித்துப் பிரசுரிப்பதஞல் தமிழ் சிறப்படைவதற்குப் பதிலாக மலிவுத்தனப்பட்டு வரு கின்றதென்றே கூறல் வேண்டும். உதாரணமாக, தமிழ்நாட்டில் ராணிமுத்து, குமுதம், கல்கி, தினமணிக் கதிர் இலங்கையில் மித்திரன், கதம்பம் போன்ற பத்திரிகைகள் இத்தகைய சிறு கதைகளையே பிரசுரித்து வருகின்றன. இப் பத்திரிகைகளால் சிறுகதைகளைப் பொறுத்தவரை தரத்துக்குப் பதிலாக, தொகை யையே முன்வைக்க முடியும்.
வாசகரின் இரசனை மட்டத்தையும் வாசிப்புத் தரத்தையும் உயர்த்தும் நோக்குடன், காத்திரமான சிறுகதைகளை பிரசுரித்து வாசகர்களுக்கு அளிக்கின்ற பத்திரிகைகள் சஞ்சிகைகளே, உண் மையில் சிறுகதைமூலம் தமிழை வளர்த்து வருகின்றன வென்று துணிந்து கூறலாம்.
ஒட்டுமொத்தமாக நோக்கும்போது சிறுகதை வளர்ச்சிக் கும் வீழ்ச்சிக்கும், சிறுகதைத் தமிழ் வளம் பெறுவதற்கும், மலிவடைந்து போவதற்கும் பத்திரிகைகளே காரணமென்று திடமாகக் கூறலாம்.
யோ. பெனடிக்ற் பாலன் விரிவுரையாளர், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, GBsriri Lurranu ,

இலக்கியம்
பத்திரிகை, இலக்கியம் என்ற இந்த இரண்டும் இருவேறு
பட்டவை. இரு துருவமானவை. இலக்கியம் தனக்கென ஒரு
நீண்ட பாரம்பரியத்தையுடையது. பத்திரிகை அவ்வாறன்று; இடையிட்டது. எனினும் நவீன இலக்கிய வடிவங்களை வளர் த்த தகைமையும், இலக்கியத்தைப் பொதுமக்கள் நிலைக்கு எடுத் துச் சென்ற பெருமையும் பத்திரிகைக்குண்டு. வளரும் எழுத் தாளனுக்குப் பத்திரிகை பயிற்சிக்களமாக அமைகிறது. பெரும் பத்திரிகைகள் மிகப் புகழ்பெற்ற கனதியான எழுத்தாளர்க ளைத் தமது பத்திரிகைகளில் எழுதவைத்து தம் விற்பனையைப் பெருக்குவதுமுண்டு.
பத்திரிகைக்காரன், எழுத்தாளன் என்ற இவ்விரண்டு ஆளு மைகளிலும் வலிமை வாய்ந்தவன் பத்திரிகைக்காரனே. ஏனிெ னில் இந்தச் சமூக அமைப்பில் பத்திரிகை நிறுவனம் மையமாக வுள்ளது. எனினும் தனித்துவம் மிக்க எழுத்தாளன் பத்திரி கைகளைத் துச்சமாக எண்ணி எழுதாமல் விடுவதுமுண்டு.
பத்திரிகைக்காரன், எழுத்தாளன் என்ற இந்த இரண்டு நிலப்பாடுகள் எழுந்தமைக்கான காரணத்தைப் பத்திரிகை வரலாற்ருேடு சம்பந்தப்படுத்திப் பார்ப்பது அவசியம்.
பத்திரிகை ஒரு வெகுஜனத் தொடர்புச் சாதனமாகும். இவ் வெகுஜனத் தொடர்புச் சாதனத்தின் தோற்றத்திற்குக் கைத் தொழிற்புரட்சி காலாயிற்று. 19-ம் நூற்ருண்டிலேற்பட்ட இப் புரட்சி நிலமானிய அமைப்பினின்று ஐரோப்பிய சமூகத்தை முதலாளித்துவ அமைப்புக்குள் வேகமாகத் தள்ளியது. இதனல்

Page 10
4
புதிய வர்க்கங்கள் உருவாகின. படித்த வர்க்கத்தினர் இவர்க ளுள் முக்கியமாஞேர். வெகுசனங்கள் உயரிய இடம் பெற்றனர், கைத்தொழிற் புரட்சி இதற்கு முன்னர் சமூகத்திற் காணப் படாத மிக உயர்ந்தோர் மிகத் தாழ்ந்தோர் என்ற வேறுபாடு பற்றிய கருத்துருவத்தைச் சுருக்கி விட்டது. சாதாரண மனித னும் இப்போது கணிப்பிற்குரியவனுஞன். இதனுல் சமுதாயத் தலைமைப் பதவியும் அவனுக்குரியதாயிற்று.
சனநாயகம் என்ற கோட்பாடு மனித வரலாற்றில் இதஞற் புகுந்தது. சனநாயகத்தின் அடிப்படையான அம்சம் அறிவைப் பெறுவதற்கு ஒவ்வொருவருக்கும் அடிப்படை உரிமை உண்டு என்பதாகும். இவற்ருல் இலக்கியம் சனநாயகப் படுத்தப்பட் டது. பிராமண, சத்திரிய, வைசிய குலத்திலிருந்து மாத்திர மன்றி, சூத்திர குலத்திலிருந்தும் வாசகர்களும் எழுத்தாளர் களும் உருவாகினர். இக் குலத்தினர் அனைவரையும் இணைத்த தாகவே வெகுஜனக் கலாசாரம் உருவாகிற்று.
இதற்கு முன்னர் தமிழ் நாட்டில் இரண்டு விதமான கலைப் பாரம்பரியங்களேக் காணுகிருேம். ஒன்று உயர் பாரம்பரியக் கலைகள், இன்னென்று உப பாரம்பரியக் கலைகள். இவ்விரு வேறுபாடுகள் மறைந்து அனைவருக்கும் பொதுவான வெ சனக் கலாசாரம் கைத்தொழிற் புரட்சியின் பின் உருவாகியது இதற்கு உதாரணமாகச் சினிமாவைக் குறிப்பிடலாம். இல் வெகுசன கலாசாரம் அந்தந்தச் சமூகத்தின் அறிவுக்கு ஏற்ட அமையும். சிலவேளைகளில் இக் கலாசாரத்தைப் பத்திரிகை களே திட்டமிட்டு உருவாக்கும். மக்களுக்குப் பிடித்தமானது இதுதான் என்று போலியான பிரமையை உருவாக்கி அதற்குத்தக இலக்கியங்களையும், வெளியீடுகளையும் வெளியிடும் பண்பும் பத்திரிகைக்குண்டு. مس- "ها . . .
வெகுசனக் கலாசாரத்தை வளர்த்த இப்பத்திரிகைகளே உரை நடையையும் வளர்த்தன. பத்திரிகைத் தமிழ் நடந்த வந்த பாதையினை மூன்ருக வகுப்பர்.

5
1) சமய போதனைக் காலம் 2) அரசியற் ருெடர்புக் காலம் 3) நவீனப் படுத்திய காலம் சமயபோதனைக் காலமே நவீன வசனநடையின் ஆரம்ப காலமாகும். சமய கண்டனம், பிரசாரம் என்பன மூலம் இக் ாலகட்டத்தில் பத்திரிகைமூலம் உரைநடை வளர்ந்தது. "சிறுசிறு வசனங்களில் மக்களுக்கு விளங்கக்கூடிய எளிய உரை நடை, கண்டன உரைநடை எனத் தமிழ் உரை நடை புதிய பரிமாணம் பெற்றது.
அரசியற் ருெடர்புக் காலகட்டத்தில் நாட்டுப்பற்றை யூட் டும் உணர்ச்சிகரமான உரைநடை, விவரண உரைநடை, தனித் தமிழ் உரைநடை, அடுக்குத் தமிழ் உரைநடை என்பன உருவாயின.
நவீனப்படுத்திய காலத்தில் நவீனத்துவம் வாழ்வின் பல் துறைகளிலும் புகுந்தது. விஞ்ஞான தொழினுட்பங்களில் மக் களார்வம் காட்டினர். இதனுல் தந்திமுறையிற் சுருக்கமாகக் கறும் உரைநடை, படம்பிடிப்பது போன்று நிகழ்ச்சிகளை விளக்கும் உரைநடை என்பன வளரலாயின.
இவ் உரைநடைகளைக் கையாண்டு பிறந்தவையே நாவலும்? *றுகதையும், ஏனைய நவீன இலக்கியவடிவங்களும். பத்திரிகை வாசிப்போரை (வெகுசனங்களை) மனதில் இருத்தியே ஆரம்ப கால நாவல்களும் சிறுகதைகளும் எழுதப்பட்டன. இதஞலேயே ஆரம்பகால நாவல்கள், சிறுகதைகள் என்பன இலக்கியம் என்ற பதத்திற்குள் உட்படாதனவாயின.
மக்களுக்குத் தேவை என்ற அடிப்படையில் வியாபார நோக்கில் கதைகளையும், நாவல்களையும் பத்திரிகை எழுத்தா ளர் உற்பத்தி பண்ணலாயினர். கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி இதற்குச் சிறந்த உதாரணமாவார். அவர் பரவலாக வாச கரை உருவாக்கிஞரேயொழிய ஆழமான இலக்கிய கர்த்தா Jaydy6vrł.

Page 11
6
நாவல்கள் தொடராகப் பத்திரிகையில் எழுதப்பட்ட போது அவை நாவலுக்குரிய பண்புகளை இழந்தன. நாவலை வாசிக்கும் வெகுசனங்களின் எதிர்பார்ப்பையும், கவலையையும் தூண்டும் விதத்தில் நாவலாசிரியன் எழுத வேண்டியவனஞன். இதனல் எழுத்தாளன் பத்திரிகை நிறுவனத்தின் ஊழியனுமானன்.
பத்திரிகையின் ரசனைக்கு ஏற்ப எழுத்தாளன் எழுதவேண்டி வந்தபையினுல் அவளுல் இலக்கியம் படைக்க முடியவில்லை. சுருங்கச் சொன்னல், பத்திரிகை, எழுத்தாளனைத் தன் கீழ்ச் சேவகம் புரியும் ஒருவனுக்கி விட்டது.
ஆனல் பத்திரிகை தன்னையறியாமலேயே ஒரு நல்ல காரிய த்தைச் செய்து விட்டது. எளிமையானதும், பல பரிமாணங் கள் கொண்டதுமான வசன நடையை அது வளர்த்துவிட்டது. இவ் அரைநடையே அதி உயர்ந்த உரைநடை இலக்கியமான நாவல், சிறுகதை தோன்ற வழிஅமைத்தது. இவ்வுரைநடை யைக் கையாண்டு தம் ஆத்மார்த்த அனுபவங்களை இலக்கிய மாக்கியோரின் எழுத்துக்கள் பெரும்பத்திரிகைகள் போக்கிற்கு மாருயிருந்தமையிஞல் பெரும் பத்திரிகைகள் இவற்றை வெளி யிடத் தயங்கின. புதுமைப்பித்தனின் கதைகளை ‘கல்கி", இவற் றில் தலையுமில்லை வாலுமில்லை என்று கிண்டலும் செய்தார். இதனலேயே காத்திரமான இவ்விலக்கியக்காரர்கள் தமக் கென ஒரு தனிப் பத்திரிகையை ஆரம்பித்தனர். தமிழில் "மணிக்கொடி" தோன்றியது. பெரும் நிறுவனங்களுக்கு எதி ராக எழுந்த முதற்குரல் அது. இதனைத் தொடர்ந்து இன்று வரை தோன்றி இலக்கியப் பணிபுரியும் சிறு பத்திரிகைகள் யாவும் குறுகிய வட்டத்தையேயுடையன. இவற்றில் எழுதும் கனதியான பல எழுத்தாளர்களைப் பல வாசகருக்குத் தெரியாது. ஏனெனில் இவர்கள் எழுத்துக்கள் பெரும் பத்திரிகைகளில் அதிகம் பிரசுரமாவதில்லை.
கைத்தொழிற் புரட்சியின் வருகை வெகுசன கலாசாரத்தை மாத்திரம் உருவாக்கவில்லை. தீவிர சிந்தனையுடைய விமர்சகர் களையும, இலக்கியவாதிகளையும் கூட உருவாக்கி விட்டது.

7
இவ்விடத்தில் நவீன இலக்கியமும் அதன் கோட்பாடுகளும் உருவாகி வளர்ந்து வந்த முறையினை மிகச் சுருக்கமாக நோக் குதல் பயனுடைத்தாகும்.
கைத்தொழிற்புரட்சியினல் வாழ்க்கைபற்றிய கோட்பாடுகள் யாவும் மாறத்தொடங்கின. மாற்றங்களின் வேகத்தால் புதிய கருத்துக்கள் உருவாகத் தொடங்கின. சிறுகதை இப்பின்னணி யிற்ருன் மேனடுகளில் உருப்பெற்றது. வாழ்க்கை (Pழுவதை பும் சித்திரிப்பது போய் வாழ்வின் ஓர் அம்சத்தைச் சிறுகதை சித்திரித்தது. கைத்தொழிற்புரட்சியின் விளைவாக இரண்டு உலகப்போர்கள் நடந்தன உலகப்போர்கள் ஏற்படுத்திய தாக் கத்தை நுண்ணறிவுள்ள இலக்கிய கர்த்தாக்கள் உணர்ந்தனர். பழைய மனிதன் புதிய உலகில் வாழ்வதாக இவர்கள் எண் nணினர். இவ்வனுபவங்கள் எழுத்தில் வெளிப்படலாயின. இக் காலகட்டத்தில் அறிவுலகில் ஏற்பட்ட வளர்ச்சியும் எழுத்தா எாரைத் தாக்கியது. பிராய்ட், அட்லர், ஜுங் போன்ற உள வயலறிஞர்களின் கருத்துக்கள் முதலாளித்துவ வளர்ச்சி கார ானமாக மனிதன் அந்நியப்பட்டுப் போன நிலை என்பன புதிய இலக்கியக் கோட்பாடுகள் தோன்ற வழி சமைத்தன. சன சமுகத்தில் தனித்துப்போன னிதனின் அக உணர்வுகளை வெளிப்படுத்துவனவாக இலக்கியங்கள். எழுந்தன.
இதற்கு மறுதலையாக அவன் தனித்துப் போனமைக்கான நாரணங்களைக் கண்டு அவனைச் சமூகத்துடன் இணைக்கும் தத் துவங்களும் தோன்றலாயின. மனிதனுக்கு நம்பிக்கையூட்டும் திலக்கியக் கோட்பாடுகளும் எழுந்தன.
இவ்லண்ணம் மனிதன் சம்பந்தமாக வளர்ந்த இலக்கியக் கோட்பாடுகள் அனைத்தும் இலக்கியத்தைப் பாதித்தன. இவற் γίου σC345ιτ ஒன்றை, அல்லது பலவற்றைத் தத்துவமாக ஏற்று எழுத்தாளர் எழுதினர்.

Page 12
፲8
இதன் பிரதிபலிப்பைத் தமிழ் நாட்டிலும் காணுகிருேம், கு. ப. ரா., புதுமைப்பித்தன் ஆகிய பழைய எழுத்தாளர் தனி மனிதனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர்கள். மெளனி, லா, ச. ரா. அவனது அக மனஉணர்வுகளை வெளிக் கொணர்ந்த வர்கள். இவர்களாற் பெரும் பத்திரிகைக்காரர்களுடன் ஒத் துப்போக முடியவில்லை.
ரகுநாதன் போன்றேர் மனிதனைச் சமூகத்துடன் இணைக்கும் முயற்சியில் பத்திரிகை தொடங்கியவர்கள். சரஸ்வதி இதற்கு உதாரணம். இவ்வகைகளில் இன்று எம்மிடையே பல சிறு பத்திரிகைகள் உலவிவருவதைக் காணமுடியும்.
இந்தப் பின்னணியிலே தான் பத்திரிகைக்காரனையும் இலக் கிய காரனையும் நாம் நோக்க வேண்டும். இன்று "கனதியான" எழுத்தாளனை எதிர்நோக்கும் பிரச்சினை இதுதான். பத்திரிகை கூறுவதற்கிணங்க எழுதிப் புகழ் சேர்ப்பதா? அல்லது தன் கருத்திற்குப் பங்கம் ஏற்படாத வகையிற் பத்திரிகைக்கு எழுதுவதா? V
எழுத்தை வியாபாரப் பொருளாக எண்ணி அதன் மூலம் புகழ்தேட விரும்பும் எழுத்தாளர், பத்திரிகைகளின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப எழுதிப் புகழ் சேர்ப்பர்.
எழுத்தைத் தனிமனித சுதந்திரமாக எண்ணும் எழுத்தா ளர் பெரும் பத்திரிகைகளைத் திரும்பியும் பாரார்.
எழுத்தை மனிதனை உருவாக்கும் கருவியாக எண்ணும் எழுத்தாளர் தமது அடிப்படைக் கருத்தினின்றும் வழுவாது பத்திரிகைகளை ஓர் ஊடகமாகப் பாவிப்பர். இம்மூன்று வகை எழுத்தாளர்களும் நம்மத்தியில் இன்னும் உண்டு. க்
கலாநிதி சி. மெளனகுரு விரிவுரையாளர், நுண்கலைப் பீடம், யாழ். பல்கலைக் கழகம்.

பத்திரிகைத் தமிழ்-செய்தி
தமிழ் என்று சொல்லும்போது முதலில் சிந்தனைக்கு வருவது முத்தமிழ். .
தமிழ் நடை என்று கூறும்போது பன்னெடுங் காலமாகக்
கூறப்பட்டு வரும் பண்டிதத் தமிழும், பாமரத் தமிழும்
நினைவுக்கு வரும்
ஒரு காலத்தில் பண்டிதர்கள் தமிழ் மொழியைத் தமது ஆதிக்கத்தில் வைத்திருந்து, இலக்கியம் படைத்தனர். இதனை சாதாரண மக்கள் இலகுவில் படித்து, அதன் கருத்தை உணர முடியாதிருந்ததால் பண்டிதத் தமிழுக்கு எதிரான போர்க்கொடி எழுப்பப்பட்டது. V
பாமர மக்களும் இலகுவாகப் புரியும் வகையில் எழுத் துக்கள் அமையவேண்டுமென்ற கோஷத்தின் காரணமாக இலகுநடை இலக்கியங்கள் வெளிவரத் தொடங்கின.
பிற்பகுதியில் பல்கலைக்கழகங்களின் தோற்றமும் அவற் றின் வளர்ச்சியும் பல்கலைக்கழகத் தமிழ் என்ற ஒன்றைப் புதிதாக உருவாக்கியது. இது இன்றும் கூட சர்ச்சைக்குரிய தாகவேயுள்ளது.

Page 13
ጳ0
இவ்வாறு பண்டிதத்தமிழ், பாமரர் தமிழ், பல்கலைக் கழகத் தமிழ் என்ற பல்வேறு பிரிவுகளுக்கு மத்தியில், "பத்திரிகைத் தமிழ்" என்று இக்கருத்தரங்குக்குத் தலைப்புக் கொடுத்திருப்பது நான்காவது வர்க்கமொன்றை இன்றைய தலை முறைக்கு அறிமுகம் செய்வதாக எடுத்துக்கொள்ளலாம் அல்லது பத்திரிகைத் தமிழைப் பிரித்துக் காட்டுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம். 3.
பத்திரிகைத் தமிழ் என்பது மேற்கூறப்பட்ட எத்தவொரு வர்க்கத்தையும் சார்ந்ததல்ல வென்றும் கூறலாம். எல்லா வர்க்கத்தையும் இணைத்ததென்றும் கூறலாம்.
பத்திரிகைத் தமிழ் என்று கூறும்போது அது பல பிரின் களைக் கொண்டதாக அமைகின்றது. புனை கதை இலக்கியம் கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, செய்தி என்று இவைகள்ை வகைப்படுத்தலாம்.
செய்தியைத் தவிர்ந்த மற்றவை அனைத்தும் அதனை ஆக்குபவர்களுடன் சம்பந்தப்பட்டதாதலால், அதன் மொழி வளம் அவரவர் போக்கினைக் கொண்டதாக மிளிரும். பல்கலைக் கழகக்காரர், பண்டிதர்கள் என்று சம்பந்தப்பட்டவர்கள் தமது நடையில் அதனை எழுதுவர்.
ஆனல் செய்தி எனப்படுவது எளிமையான, இலகுவான நடையைக்கொண்டது. பத்திரிகைகள் ஒன்று க் கொன்று போட்டியாக வெளிவந்தாலும், அவை செய்திகளைத் தெளி வாகவும் எளிமையாகவும் இலகுவாகவும், பொதுமக்களுக்கு வழங்கவே விரும்புகின்றன.
பணம் கொடுத்துப் பத்திரிகையை வாங்கும் ஒருவர் அதனை இன்னெருவரிடம் கொடுத்து வாசிக்கச் செய்து, அதன் அர்த்தத்தைக் கேட்டுப் புரியக்கூடியதாக േ எழுதப்படக் கூடாது என்பது அடிப்படை நோக்கமாகும்*

2
ஒரு காலத்தில் பத்திரின்ககளும் கூட க டி ன மான தமிழையே செய்திகள் எழுதுவதற்குப் பயன்படுத்தி வந்தன. இலங்கையில் தாய்மொழிக் கல்வித்திட்டம் அமுலுக்கு வந்த பின்னர் இதன் போக்கில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.
தமிழ்நாட்டில் தினத்தந்தி இத்துறையில் ஒரு முன்னுேடி 1ாக செய்திகளைப் பேச்சுத் தமிழில் வெளியிட முன்வந்தமை மற்றைய பத்திரிகைகளுக்கும் ஓர் எடுத்துக்காட்டாக அமைந் திதி
இருப்பினும் சில ஆங்கிலப் பதங்கள் இன்றும் தமிழ்ச் செய்திகளில் அழியாத இடத்தைப் பெற்றே வருகின்றன. 'பட்ஜட்’, ‘எம். பி', 'கவுன்ஸில்', 'ரெலிபோன்" போன்ற சொற்கள் பொதுமக்களிடம் நன்கு பழக்கப்பட்டுப் போனதால் செய்திகளில் அவற்றைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாத தாகியுள்ளது.
அதேவேளையில் செய்திகளுக்கு இடப்படும் தலைப்புகளில் இவ்வாறன சொற்கள் முக்கியத்துவம் பெற்று வருவதையும் காணமுடியும். குறிப்பிட்ட கலத்துக்குள் (Column) குறிப் பிட்ட தொகை எழுத்துக்களையே தலைப்பாகப் போடமுடியு மென்ற பிரச்சினை எழும்போது, எழுத்துச் சிக்கனத்துக்காக சிறிய சொற்ருெடர்கள் தேவைப்படுவதே இதற்கு காரணம்,
உதாரணமாக, வரவு செலவுத் திட்டம் என்று எழுதும் போது பன்னிரண்டு எழுத்துச்கள் தேவைப்படுகின்றன.இதனை 'பட்ஜட்" என்று குறிப்பிடும்போது நான்கு எழுத்துக்கள் மட்டுமே போதும். பாராளுமன்ற உறுப்பினரை "எம். பி' என்று எழுதுவதும் இவ்வாருன காரணத்தினலேயேதான்.
இதுமட்டுமன்றி, சில செய்தித் தலைப்புகள் தனித்தமிழில் எழுதும்போதும் இவ்வாருண சிக்கனம் அவசியமாகின்றது. இதனல் கண்காணிப்புச் சபை என்பது, கண்காணிப்பு சபை

Page 14
22
என்றும், சூட்டுக்குப் பலி என்பது குட்டுக்கு பலி என்றும் செய்தித் தலைப்புகள் இடம்பெறுவது தவிர்க்க முடியாததாகி
இவைகளை ஒரு புறத்தே விட்டு பொதுவாகப் பார்க்கு மிடத்து, அனைத்து வாசகர்களையும் ஒரே தரத்தில் எ!ை போட்டு, அனைவரும் தாமாகவே படித்து செய்திகளை விளங் கிக் கொள்ளக்கூடியதான இலகு நடையில் எளிமையாகவும், தெளிவாகவும் செய்திகளை வெளியடுவதையே பத்திரிகைகள் விரும்புகின்றன.
பல மணித்தியாலங்களுக்கு கேள்வி-பதில் அமைப்பில்
ஆராயப்பட வேண்டிய இவ்விடயத்தை குறுகிய நேரத்துக்
குள் ஒரு பேச்சாக எடுத்துக் கூறுவது சிரமமாகும். சந்தர்ப்பம்
கிடைக்கும்போது இதனை ஒரு முழுநாள் கருத்தரங்காவே
நீங்கள் நடத்தினுல் மேலும் பல கருத்துக்களை கேட்கவும், ள்டுத்துக் கூறவும் முடியும்.
எஸ். திருச்செல்வம்
பிரதம ஆசிரியர்
ஈழமுரசு


Page 15

என் கத்தோஜிக்க அச்சகம்