கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூங்குன்றம் 1976.01

Page 1
-്.-—ബ=
உங்க ளு
5ரிநந்திர ஈழநாட்டின் இருபத்தி எட்டு வருட வரலாற்றில், இதுவரை பல்வேறு துறை களிலும், நூற்றுக்கணக்கான சஞ்சிகைகள், இலக்கிய ஏடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பல பெரும் பொருள் வசதியுடனும் விளம்பர பலத்துடனும் ஆரம்பிக்கப்பட் டவை. ஆணுல் அற்ப ஆயுளில் மடிந்தனவே அதிகமான ஏடுகள். ஆயிரத்துத் தொளாயி ரத்து ஐம்பத்தி ஆறில் தொடங்கிய தேசிய மறுமலர்ச்சியின் பின்னரும் கூட சிங்கள இதழ் கள் அடைந்துள்ள வளர்ச்சியுடன் ஒப்பிட்டு
ஆ நோக்கும் பொழுது தமிழ்ச்சஞ்சிகைகளின்=
வளர்ச்சி மிகமிகக் குறைவேஎனினும் சில் பத்திரிக்கைகள், தங்கள் பணியைத் தொடர் ந்து செய்து வருகின்றன.பலத்த போராட்டங் களுக்கிடையில்-இதை நாம் அறிவோம்.
கல்வியறிவிலும் சரி, சிந்தனை வளர்ச்சி யிலும் சரி, பொருளாதாரத் துறையிலும் சரி, மலையகம் மிகவும் பின்னடைந்த பகுதி. நாட்டின் பொருளாதார உயர்வுக்குப் பெரும் பங்காற்றும் மலையக மக்களின் வாழ்வு இன் னும் புறக்கணிக்கப்பட்டே உள்ளது. எனவே மலேயகத்திலிருந்து, அதிலும் பதுளையில் இருந்து, ஒரு தமிழ் பத்திரிகையை நடத்துவ தென்பது இலகுவான ஒரு செயலல்ல.-இதை யும் நாம் அறிவோம்.
எனினும், குன்ருத ஆர்வம், எழுதத் துடிக்கும் இளம் உள்ளங்களுக்குக் களம் அமைத்துத் தரவேண்டும் என்ற எண்ணம்; சமுதாயத்துக்கு ஏதாவது ஒரு துறையில் பணி யாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண் டோருக்கு ஒரு தூண்டுகோல்-ஒரு சிறுநண்பர் வட்டத்தின் கனவின் உருவம் தான் பூங்குன்
.-—=="' =
இங்கெவர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றத்தின் தோற்றம்.
புதிய சமுதாயக் கரு த்துக்களே, கருத்துக்களின் வளர்ச்சியை, உரத்த குரலில் எடுத்து எதிரொலிப்பதுதான் பூங்குன்றத்தின் 品L@LD· அரசியலிலாகட்டும், பொருளியலி
கட்டும், இலக்கியத்தில், அறிவியலில் சமய, நெறியில் ஆகட்டும், எத்துறையிலாயினுஞ் ரியே, சமுதாயத்தின் வளர்ச்சிக்கான் 鱼_山击防药 கருத்துக்களே யார் உருவாக்கித் தந் தாலும், அவை அனைத்துக்கும் பூங்குன்றத்தில் இடம் உண்டு: உண்மையாயும் நேர்மையா
குன்றம் பணிபுரியும்
புகழ் பெற்ற கொலே வழக்குக் காதை கள், கலை என்ற போர்வையில் ஆபாசத்தை அள்ளித்தரும் மட்டரசு ஒளிமாவைப் பற்றிய புகழாரங்கள். உடைகளையும் நடிகைகளின் கவர்ச்சிப் போஸ்கள், சித்திரக் கதைகளும், ஒளிமாக் குறுக்கெழுத்துப் பூங்குன்றத்தில் இடம் பெருது
அப்படியானல் பூங்குன்றத்தின் வாழ்வு நீடிக்குமா?
அறிவுலக வாசக நண்பர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகின்ருேம்:
உயர்ந்த கருத்துக்களே, படைப்புக்களே வாசிக்கும் வாசகர் தொகை ஈழத்தில் குறை வல்ல, இந்த ஈழத்து வாசகர் மேல் நமக்கு நம்பிக்கை உண்டு.
பூங்குன்றத்தின் பணி நீண்டு தொடர
வேண்டுமா என்பதை அன்புள்ள வாசகர் களே, நீங்களே முடிவு செய்யுங்கள்.
立山f岳芭
ன்து பூங்=
போட்டிகளும்
كانت تسمية العصيكالسيليكسيسيكسيكية كالسيليسيسيبيسيجسم
பங்காப் பு:கொண்ட மலேயகத்தின் எழுச்சிக் குரல்.
三一 三_三

Page 2
செள - என் - லாய்
சீனு ஒரு மகத்தான நாடு, நீண்டபெரும் வரலாறும், பழம் பெருமையும் கொண்ட அந்நாட்டின், மொழி பண் பாடு அனைத்துமே மகத்தானவை. கன்பூசியஸ் சன்யாட் சென் போன்ற தத்துவ மேதைகளையும் பேரறிஞர்களையும் கடந்த காலங்களில் உலகுக்கு அளித்த நாடு அது. அதன் பழைமை தரும் செய்திகள் இவை.
• • இன்று, 20ம் நூற்ருண்டின் மிகப் பெரிய மக்கள் புரட்சியை நடத்தி, பொதுவுடமைச் சமுதாயத்தை நிறுவி வெற்றி கண்ட மிகப் பெரிய நாடாகத் திகழ்கின்றது சீன என்ருல், அப் பெரும் சீனப் பெரும் புரட்சியை முன்னின்று வழி நடத்தி, அடக்கி ஒடுக்கப்பட்டுக் கிடந்த அறுபது கோடி சீன மக்களுக்கு விடுதலை வாழ்வைத் தந்து, கடந்த 26 ஆண்டு கள் அந்நாட்டின் தலைமை அமைச்சர் பதவியையும் ஏற்று, இன்று உலகமே கண்டு வியக்கும் அளவுக்கு நாட்டை முன் னேற்றிச் சென்ற பெரும் தலைவன் தான், அண்மையில் மறைந்த செள-என்- லாய் அவர்கள். s
மா-சே-துங் அவர்கள் தலைமையின் கீழ் கல்வியறி வற்ற மக்களாய் வாழ்ந்த சீனப் பெருஞ் சமூகத்தைத் தட்டி எழுப்பி, அவர்களுக்கு அறி ையும், சிந்தனையையும் ஊட்டி பலமான ஒரு பொதுஉடமைப் பொருளாதாரக் கட்டுக் கோப்பின்மேல் சீனவை நிலை நிறுத்திய பெருமையில் பெரும் பங்கு செள-என்-லாய்க்கே உரியது.
செள, தலைவர் மாவைப் போல் சாதாரணக் குடும்பத் தில் பிறந்தவரல்ல. பரம்பரை பரம்பரையாகச் செல்வச் செழிப்பிலே திகந்த குடும்பத்திலே பிறந்தவர். அந்நேரத் இல் சீனவின் ஒரு பிராந்தியத்தின் தலைவர் அந்தஸ்தில் இருந்த ஒருவரின் பேரன் செள. செல்வந்தர்களின் பிள்ளை கள் மட்டுமே கல்வி கற்ற, புகழ்பூத்த பீக்கிங் கல்லூரியிலும் டோக்கியோ பல்கலைக் கழகத்திலும் இறுதியில் பாரீஸ் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றவர் அவர், சீன, சப்பா னிய மொழிகள் மட்டுமன்றி, பிரேஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றவர் அவர்,
மாவோ, புரட்சிகரமான், தன்னிறைவு கொண்ட பொதுவுடமைச் சீனவை, பல கோணங்களிலும் கனவு கண்டு இருந்தார் என்ருல், அவருடைய கனவுகளையும் சிந்தனை களையும், ஏற்று, அவற்றுக்கு உருவம் கொடுத்து, நடைமுறையில் கொண்டுவந்து வெற்றி கண் டவர் செள தான்.
செள ஒரு பல துறை விற்பன்னர். அவர் ஒரு சிறந்த தொழிநுட்ட அறிஞர். சிறந்த நிர்வாகி, சிறந்த இராஜ தந்திரி. நம்முடைய பிரதமர் அவர்கள் ஒரு முறை செள என்லாய் பற்றிக் குறிப்பிடும் பொழுது "உலகின் பல்வேறு
நாடுகளின் பல்வேறு தரப்பட்ட பிரச்சனைகளையும் பற்றி
அவருடைய ஆழ்ந்த அறிவு என்னைப் பெரும் வியப்பில் ஆழ்த்திற்று' என்றர். நம் பிரதமர் மட்டுமல்ல, எட்கர் ஸ்னே, அன்றி மேல்ரஸ், ஜோன் ரொபின்சன், மொகமட் ஹெய்க்கல், ஹென்றி கீசிங்கர், போன்ருேரும் அவருடைய ஆற்றலை வியந்துள்ளார்கள்.
ஏகாதிபத்தியம், காலனித்துவம் போன்ற வற்றுக்கு எதிரான உலக மக்களின் சிந்தனைக்கு, புரட்சிகர எண்ணங் களுக்கு, செள ஒரு ஆதர்ச சக்தியாய் விளங்கியுள்ளார் சமதர்ம உலகை நோக்கி நடைபோடும் மக்களுக்கு அவர் என்றும் தூண்டு கோலாய் இருபார் என்பதில் ஐயமில்லை.

| L
ஒன்ருே இரண்டே உருவமற்ற கல்லறைகள் உன் மடியில்? ܗܝ மலைமகளே உணர்வயோ மட்டாயே!
நச்சரவக் காடாய் நாறிக்கிடந்த நின்னை மெச்சும் கவின்விடாய் மேன்மைப் படுத்திய என் பச்சைக் குழந்தைபுல பசியநின் போர்வைக்குள் அச்சமின்றி உறங்கும் அமைதிச் சிறுகுடில்கள்
ஒன்றே இரண்டோ?
குன்றுயர்ந்த கோமகளே கொடிய நின் வாழ்விற்காய் பொன்றிப் பழங்கதையாய் போனபல வாழ்வுகளை
இன்று நினேப்பாயா? இல்லே நீ வஞ்சகிதான்! என் கன்றுக் குருளைகளைக் களித்துண்டு வளர்ந்தவளே
கணக்கிட்டால் உன்மடியில் கவினூட்டும் தேயிலைகள் அனைத்துக்கும் சராசரியாய் அன்புடலம் என்றுதிர்த்து மணக்கும் மலராக மடிந்து உரமாயிருக்கும் உனக்கென்ன; மறந்து விட்டாய் ஒட்டுகிறல் நன்றியின்றி
இன்று எமைவிரட்டும் எத்திற்கு நட்பாகி நன்றியைக் கொன்றயோ! நாளை நினைப்பாயோ? என்றலும் எம்அன்னே என்றுமே நீதானே சென்றுவிட மாட்டோம் சிந்தை யுன்னிடந்தான்
அன்னையே வணக்கம் அருள்புரிவாய் நீ எமக்கும் சின்னத்தனம் நீங்கிச் சிறப்பாக நாம்வாழ உன்னருள் வேண்டுமம்மா உதருதே உதவிபுரி கொன்றலும் எம் சடலம் குடிபுகுவது உன்மடிதான்
இன்றென்ன, நாளையும் இனிவருமெக்கால மெலாம் நின்றனுக்கே நாமுரிமை நேற்றேடு முடிந்திட்ட சென்றநாள் வரலாற்றில் சீருழைப்பால் உடல் சிதைந்து பொன்றியுன் பொன்மடியில் புகல் கொண்டோர் மீதான
எண்ணற்ற கல்லறைகள்- என் மக்கள் உனக்காக கண்ணியமாய் உழைப்பீந்து கடைசி இளைப்பாறுமிடம் மண்மகளே! மறவாதே! மாசற்ற அவர் தூங்கும் மண்வீட்டின் மீதான நாம் மடிவதுன்மடியில்தான்.
N
-நிவேதிதா.

Page 3
மலையகத் தொழிற் சங்கங்கள் பற்றிய ஒரு மதிப்பீடு
தொழிலாள வர்க்கத்தினரின் வாழ்வும் தாழ்வும் முற்ருகவே தொழிற் சங்கங்களில் தங்கியுள்ளது என்று கூற முடியாவிடிலும் அவ்வர்க்கத்தினரின் முன்னேற்றத்துக்குத் துணைபுரியாத தொழிற்சங்க இயக்கம் தனது தலையாய பணி யிலிருத்து தவறிவிட்டது என்று குற்றம் சாட்டப்படலாம். எனவே தொழிற்சங்க இயக்கம் பற்றிய மதிப்பீடுகள் அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகள், பணிகள் முதலியவற்றை வரலாற்று ரீதியாக ஆராய்வதாக அமையாது அதன் வழி காட்டலுக்குத் தம்மை சமர்ப்பித்துக் கொண்ட தொழிலா ளர்களின் வாழ்க்கை நிலை, அரசியல் அந்தஸ்து, பொருளா தார மேம்பாடு முதலியவற்றைக் கருத்திற் கொண்டதாக அமையலாம். மேலும் முதலாளித்துவ அமைப்பில் தொழிற் சங்கங்களின் வெற்றியும், சித்தியும் ஒரு வரம்புக்குட்பட்டது என்ற உண்மையைக் கருத்திற் கொண்டதாகவே அம் மதிப் பீடுகள் அமைய வேண்டும். -
இலங்கையில் மலையகத்தில் தான் முதன் முதலாகத் தொழிற் சங்கங்கள் தோன்றியிருக்க வேண்டும். தொழி லாள வர்க்கமொன்று முறையாகத் தலையெடுக்கத் தொடங் கியது முதன் முதலில் மலையகத்தில் தான். ஆயினும் இலங் கைத் தோட்டங்களில் குடியேறிய இந்திய வம்சாவழியினர் நிரந்தரமாகத் தங்கியிராது இந்தியாவுக்கு சென்று மீள்வோ ராயும் கல்வி வசதிகள் வாய்க்கப் பெருதோறயும் பல்வேறு
ஆல்பங்கு ' ( ட் ட்டு தோட்டங்களில் 6մուք நேரிட்டமையாலு அவர்கள் மத்தியில் உடனடியாகத்
தொழிற் சங்க இயக்கமொன்று தோன்றவில்லை. அவர்கள் இலங்கை வந்து ஒரு நூற்ருண்டு காலத்துக்குப் பின்னரே முறையான தொழிற் சங்கங்கள் மலையகத்தில் தோன்றின. இவ்வொரு நூற்றண்டு காலப்பகுதியில் தோட்டத் தொழி லாளர்கள் சொல்லொணுத் துன்பங்களை அனுபவித்த போதி லும் அவர்கள் தம்மை பலம் வாய்ந்த சக்தியாக மாற்றும் வகையில் இயக்க ரீதியாக செயற்படவில்லை. அவர்களுடைய வாழ்வும், தாழ்வும் பிரித்தானிய முதலாளித்துவத்தின் விருப்பு, வெறுப்பில் தங்கியிருந்தது. அவ்வப்போது பிரித் தானிய பிரபுக்களும் பொது மக்கள் சபை உறுப்பினரும் இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் பிரச்னைகள் குறித்து அந்நாட்டில் கேள்விகள் எழுப்பினர். கடல் கடந்த இந்திய்ர்களின் நலன்கருதிய இந்திய அரசாங்கமும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கடல் கடந்த இந்தியர்களின் நலன்கள் முறையாகக் கவனிக்கப்பட்டால் மட்டுமே அவர்கள் குடிய கன்று செல்வதை அனுமதிக்க முடியும் என்று விரித்தது. ஆனல் தொழிலாளர்கள் தாமாக ஒருங்கிணைந்து தமது நலன் களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு இவை சற்றேனும் ஈடானவைகளாக அமையவில்லை, அமைந்திருக்கவும் முடி யாது. மலையகத்தில் தொழிற் சங்கங்கள் கடந்த 40 ஆண்டு களாக இயங்கிவந்த காலப்பகுதியிலேயே தோட்டத் தொழி லாளர்கள் சகல துறைகளிலும் அலட்சியமாக நடத்தப்பட்ட விடத்து அவை நிலவாத ஏறத்தாழ ஒரு நூற்ருண்டு காலட பகுதியில் அவர்களுடைய நிலை என்னவாயிருந்திருக்கும் என் பதை இலகுவாக விளங்கலாம். தொழிற் சங்கங்களில் தோற்றத்துக்கு முன்னும் பின்னும் தோட்டத் தொழிலாளி

Gay T. சந்திரசேகரன்
ரின் நிலை என்னும் விடயம் உண்மையில் விரிவான ஆராய்ச் சிக்குரியதெனினும் சட்டென்று கூறுவதாயின் இரு காலப் பகுதியிலும் அவர்கள் நிலை ஒன்ரு கவே தான் இருந்தது என்று எவரும் கூறக்கூடும். இன்று தோட்டத் தொழிலாளர்களின் குடியியல் உரிமை, அரசியல் அந்தஸ்து, பொருளாதார நிலை, வாழ்க்கைத்தரம், கல்வி வசதிகள் முதலியனவற்றை உற்று நோக்கும் எவரும் அவர்கள் மத்தியில் ஒரு சக்திவாய்ந்த தொழிற் சங்க இயக்கம் நிலவி வந்தது என்பதை ஏற்றுக் கொள்ளவர்களோ என்பது ஐயத்துக்குரியதாகும். மேற் கூறிய நான்கு முக்கிய விடயங்கள் எந்த முன்னேற்றத்தை யும் காணுத நிலையில், இவ்விடயங்களின் முன்னேற்றம் தமது நோக்கங்களுக்கு உட்பட்டது அன்று என்று கூறி தோட்டத் தொழிற் சங்கங்கள் எதுவும் தப்பியோடிவிட முடியாது. இம் முன்னேற்றங்கள் தொழிலாள வர்க்கத்துக்குத் தேவையில்லை யாயின் தொழிற் சங்க இயக்கமே தேவையற்றது என்று கூறி விடலாம். இன்றைய தோட்ட மக்களின் வாழ்க்கை நிலை யின் சீர்கேட்டின் காரணமாக தொழிற் சங்க இயக்கத்தின் உயரிய நோக்கங்கள் எவை என்பதுபற்றி தொழிற் சங்சங் களுக்கு மீளவலியுறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் வெற்றி இலங்கை வாழ் முழுத் தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமைப்பட்ட தொழிற் சங்க முயற்சியில் தங்கியிருந்தது. ஆயினும் இந்திய வம்சக வழியினரா”தே' த் தொழிலாளர்களில் ரே மு: ன் இலங்கையின் ஏனைய பாகங்களில் வாழ்ந்த தொழிலாளர் தம் பிரச்னையிலிருந்து வேறுபட்டதாகவும் அவர்களுக்கே உரிய சில பிரச்னைகளும் காணப்பட்டமையால் தவிர்க்க முடி யாத வகையில் அவர்கள் தனித்தியங்க வேண்டியேற்பட்டது. இந்தியரல்லாத தொழிற்சங்க இயக்கம் இழைத்த மாபெரும் தவறு சக இந்திய தொழிலாளர்களின் பிரச்னேகளைத் தன தென எண்ணி அவர்களைத் தம்மோடு இணைத்துக் கொள்ள வாய்ப்பான சூழ்நிலையை ஏற்படுத்தாமையாகும். இதற்கு மாருக ஆரம்பகாலத் தொழிற் சங்கத் தலைவர்களான ஏ.ஈ. குணசிங்க போன்றவர்கள் இந்திய எதிர்ப்பு உணர்ச்சி மிக் கோராய் காணப்பட்டனர். இந்திய தொழிலாளர்களின் பிரச்னைகளைக் கருத்திற் கொண்டு தொழிற் சங்க இயக்கத் தைக் கடினமான பாதையினுாடாக இட்டுச் செல்வதைவிட இந்திய எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி இலகுவான முறை யில் இயக்க முற்பட்டனர். غر ؟
இந்தியத் தொழிலாளர்களை இலங்கை அரசாங்கம் வேலை நீக்கம் செய்தபோது ஏற்பட்ட பிரச்னை, இந்திய வம்சாவழி யினருக்கும் குடியுரிமை மறுக்கப்பட்டமையால் ஏற்பட்ட பிரச்னை என்பன அவர்களுக்கும் ஏனைய தொழிலாளர் பிரிவினருக்குமிடையில் இடைவெளியை ஏற்படுத்தியது. இத் தகைய பிரச்னைகளினல் ஏற்படக் கூடிய பாரதூரமான விளை வுகள் முழு தொழிலாள வர்க்கத்துக்கும் பொதுவானவை என்னும் உண்மை அக்காலத்தில் உணரப்படவில்லை. இடது சாரித் தலைவர்கள் இப்பிரச்னைகளில் ஆரம்பகாலங்களில் மார்க்சிய அடிப்படையில் சரியான கொள்கைகளை முன் வைத்து இந்திய தொழிலாளர்களின் பிரச்னைகளை முன் வைத்து "பேசிய" போதிலும் அவர்கள் இப்பிரச்னைகளில்
(தொடர்ச்சி 8-ம் பக்கம்)

Page 4
பத்திரிகை உலகம்
ஒரு கண்ணுேட்டம்
பத்திரிகைகள் மக்கள் மத்தியில் கருத்துக்களைக் கொண்டு செல்ல சிறந்த, சக்திமிக்கதோர் சாதன மாகும். ஒரு சமூகத்தின் சிந்தனைகளின் போக்கு, சமூக மாற்றங்கள் என்பனவற்றை அளந்தறியும் சிறந்ததோர் அளவு கோலாகும். ஆனல் இலங் கையைப் பொறுத்த வரையில் தூரதிஷ்டவசமாக இப்பத்திரிகைகளைப் பொறுத்த வரையில் நிலை யானதோர் இடத்தினைப் பெற்றுக் கொள்ள முடி யாமல் இருக்கின்றன. உயர்ந்த இலட்சியங்கள். தெளிவான கருத்தோட்டங்கள் என்பனவற்றை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட இலட்சியப் பத்திரிகைகளும் சரி, ஜனரஞ்சகம்" என்ற போர் வையில் மனிதனின் வக்கரித்த சிந்தனைசளுக்கு இரை போடும் வியாபாரப் பத்திரிகைகளும் சரி அவ்வளவு தூரம் வெற்றிகரமாக இங்கு தமது பாதையைத் தொடர முடிவதில்லை.
பொதுவாகவே நல்ல பத்திரிகைகளுக்கு ஆயுள் குறைவுதான். சமூகத்தில் மறைந்து கிடக் கும் எழுத்தாற்றல் மிக்கவர்களையும், தெளிந்த "சிந்தனைகளைக் கொண்டவர்களையும் தேடிப் பிடி த்து அவர்களை முன்னணிக்கும் கொண்டு வரும் சிறந்த பணி பத்திரிகைகளின் கையில் தான் இருக் கின்றது. இத்தகைய சக்தி வாய்ந்த இந்த பத்திரி கைத் துறை ஏன் இலங்கையில் பின்தங்கியிருக் கிறது? ஸ்தாபன ரீதியாகச் செயல்பட்டு, சிறந்த நிர்வாக அமைப்பினைக் கொண்டதாக ஏன் இவை கள் இயங்கக் கூடாது?
தென்னிந்தியக் குப்பைப் பத்திரிகைகள் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோஷம் எழுந்த் போது, நல்ல ஆரோக்கியமான சிந்தனைகளைத் தாங்கிய சுதேசியப் பத்திரிகைகள் வெளிவரும் என்ற எண்ணம் பரவலாக இருந்தது. அதன்படி 1970-ம் ஆண்டின் பின்னர் தென்னிந் தியப் பத்திரிகைகள் அதிகமாகக் கட்டுப்படுத்தப் பட்டன. ஆனல் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஈழத்தில் பத்திரிகைத் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியினை அடைந்திருக்கின்றதா? என்ற நியா யம்ான கேள்விக்கு விடை பூஞ்ஜியமாகத்தான் இருக்கின்றது.
சுய சிந்தனை, சமுதாய மறுமலர்ச்சிக்கு உத வும் எண்ணங்கள் என்பன வளர்ந்து வரும் இளம் சமுதாயத்தினர் மத்தியில் பரப்பப்பட்டு, அவர் களை நேர்வழிப் படுத்த வேண்டும் - இத்தகைய நோக்கங்கள் மகத்தானது. ஒரு சமூகம் இந்த ரீதியில் சிந்திக்கின்றது என்பதே நம்பிக்கைத்தரும்

எஸ். கணேசன்
ஒன்றுதான் இவற்றிற்கெல்லாம் வடிகாலாக அமையும் பத்திரிகைகள் மட்டும் வளர்ச்சியடை யாமல் ஏன் தேங்கிநிற்க வேண்டும்? - பொதுவாகப் பத்திரிகை நடத்துவது என்பது இலகுவான ஒன்றல்ல. ஆனல் பலருக்கு இது இலகுவாகத் தோற்றமளிக்கின்றது. இந்த எண் ணத்தில் 'பத்திரிகை’ என்ற மாயத்தின் பின்னல் சென்று தமது பொருளையும் இழந்து மீள முடியா மல் போனவர்கள் பலர் (இங்கு தோன்றி மறைந்த பத்திரிகைகளின்பட்டியலைத் தவிர்ப்போம்).
இலங்கை போன்ற பொருளாதார ரீதியில் பின் தங்கிய, விஞ்ஞான சாதனங்கள், வாய்ப்பு கள் என்பன மிகவும் குறைவாகவே காணப்படும் நாடுகளில் பத்திரிகை நடத்துபவர்கள் பல சிக்கல் களை எதிர்நோக்க வேண்டியிருக்கின்றது என்பது உண்மையே. காகிதப் பஞ்சம், அது தொடர்பாக ஏற்பட்ட அச்சகத்துக்கான கூலி உயர்வு, போக்கு வரத்துக் கஷ்ட்டங்கள், தபால் செலவுகளின் அதி கரிப்பு போன்றன பத்திரிகைத் துறையின் வளர்ச் சிக்குப்பெரிதும் தடையாக இருக்கின்றன. மேலும் இன்றைய பொருளியல் சூழலில் விளம்பரம் செய் யும் வர்த்தகஸ்தாபனங்கள் மிக, மிகக் குறைவே யாகும். எனவே ஒரு பத்திரிகைக்குத் தேவை யான அடிப்படை அம்சங்கள் பாதிக்கப்பட்டு வரு கின்றன.
கணிசமானதோர் தொகையினை இத்துறை யில் முடக்கி லாபம் தேடலாம் என்பது நம்பிக்கை யான ஒன்றல்ல. எனவே பண வசதி படைத்த யாரும் துணிந்து இத்துறையில் பணத்தினை முடக் குவதற்கு முன்வருவதில்லை. ஆகவே அனேகமான பத்திரிகைகள் குறைந்த மூலதனத்துடன் ஆரம் பிக்கப்படுகின்றன. இது 'யானைப்பசிக்கு சோளப் பொறி” என்ற கதையாகி விடுகின்றது. இதன் காரணமாகப் பத்திரிகைகள் விரைவில் ‘மூடுவிழா நடத்தி விடுகின்றன.
மேலும் பத்திரிகை ஆரம்பிப்போர் பத்திரிகை துறை பற்றி (Journalism) அதிகம் அறிந்தவர்க ளாக இருப்பதில்லை. (எல்லோரும் இதில் விற்பன் னர்களாக இருக்க வேண்டுமென்பதல்ல) இத் துறையை ஒரு கலையாக இங்கு டயிற்றுவிக்கப்படு வதுமில்லை. அப்படி இத்துறையில் ஆழ்ந்த ஈடு பாடும், பயிற்சியும் கொண்டவர்கள் எண்ணிக் கையில் அதிகரித்தால் ஒரு வேளை பத்திரிகைத் துறையானது ஓரளவுக்கு ஸ்தாபன ரீதியாகச் செயல்படலாம்.

Page 5
படித்த வர்க்கத்தினர் எண்ணிக்கையில் அதி கரிக்கும் போது பரவலாக வாசிக்கும் உணர்வு அதி கரிப்பது இயல்பே. அந்த வகையில் ஈழத்தைப் பொறுத்தவரையில் மேலும், மேலும் வாசித்தறி யும் ஆர்வம் பரவலாக இருக்கின்றது. அதே சம யம் மட்டரகமான கீழ்த்தர உணர்ச்சிகளைக் காட்டி இவர்களை அதிக தூரம் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்பதும் உண்மையே. ஓரளவுக்கு சிந்தனைப் பக்குவம் கொண்ட ஒரு படித்த வட்டம் இங்கு இருப்பது மகிழ்ச்சி தரும் ஒரு அம்சமே. ஆனல் இவர்களின் அறிவுப் பசிக்கு தீனி போடும் வகையில் பத்திரிகைகள் இல்லாமலிருப்பதுதான் வருந்தக் கூடிய அம்சமாகும்.
பொதுவாக மலையகத்திலும் சரி, வேறு பிர தேசங்களிலும் சரி எத்தனையோ பத்திரிகைகள் வெவ்வேறு காலகட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டன ஆனல் மேற் கூறப்பட்ட கஷ்டங்கள் ஒன்ருகத் திரண்டு சீறும் போது அவற்றை எதிர்த்து நிற்க முடியாமல் மறைந்து போய்விட்டன. இதஞல் மறை முகமாக ஏற்பட்ட ஒரே ஒரு நன்மை பல எழுத்தாளர்கள் ஈழத்தில் தோன்றியமையாகும்.
ஈழத்தோடு ஒப்பிடுமிடத்து இந்தியாவில் பல வாய்ப்புகள், வசதிகள் அதிகம்தான். என்ற போதும் அங்கு கூட இலக்கிய நோக்கோடும், அறி வியல் நோக்கோடும் ஆரம்பிக்கப்பட்ட பல நல்ல தரமான பத்திரிகைகள் மிகவும் குறைவான கால கட்டத்தோடு தமது பயணத்தை முடித்துக் கொண்டன.
இலக்கியம் என்ற அம்சத்துடன் மட்டும் நில் லாமல் விஞ்ஞானம், குழந்தைகளுக்கான பத்திரி கைகள் போன்ற பல துறைகளுக்கும் தனித்தனி யாகப் பல நாடுகளிலும் பத்திரிகைகள் நடத்தப் படுகின்றன. ஆனல் இங்கு மாதர் மலரில் இருந்து ‘பாப்பா மலர் வரையில் ஒரே பத்திரி கையில் தான் அடக்கம். w
பத்திரிகை என்ற வேள்வித் தீயில் தம்மையே அர்ப்பணித்துக் கொண்டவர்களை முன்மாதிரி யாகக் கொண்டு, மேலும் பத்திரிகைத் துறையில் முயற்சி செய்யாமல் இருப்பது நல்ல தல்ல. இங்கு இன்னும் ஒரு தரமான ஏட்டிற்கு வழியிருக் கின்றது. என்ற போதும் பத்திரிகை உலகின் நுணுக்கங்களையும் புரிந்து செயல்பட வேண்டும். ‘நல்ல பத்திரிகைகளுக்கு ஆயுள் குறைவு’ என்று "சரஸ்வதி பத்திரிகையில் வ. விஜய பாஸ்கரன் எழுதியதை இங்கு குறிப்பிடுவது பொருந்தும்.

தேசியத் தேவை
நமது கலை-இல்க்கிய சீரழிவைத் தடுப்பதற்கு, ஆரோக்கியமான தேசிய, சமூகச் சூழலில் நல்லதரமான-ஆக்கபூர்வமான, வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கின்ற-கலை இலக்கியம் தோன்ற வேண்டு மானல், தோன்றிச் செழித்து வளர வேண்டு மானல், முதலில் நாடு திருத்த வேண்டும். அதைத் திருத்தி அமைத்தல் வேண்டும். அதற்கு இப் போதைய எழுத்து உதவ வேண்டும். இப்பணி யில் அதுவும் பங்கெடுக்க வேண்டும். இவ்வகையில் உதவ, பங்கெடுக்க, எழுத்து இயக்கமாதல் வேண் டும். அதாவது எழுத்து, வெறும் இலக்கியமாக இல்லாமல், நாட்டின் சகல சிறுமைகளையும் வெட் டிச்சாய்க்கும் ஆயுதமாகவும், பெருமையைச் சாதிக்கும் சாதனமாகவும், மக்கள் கைகளில் திகழ வேண்டும். அது மக்கள் இலக்கியமாக வேண்டும். எழுத்தாளர்களுக்கும் மக்களுக்கும் இடையில் நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும், சமுதாயத்தின் உணர்ச்சிகளை, பிரதிநிதித்துவப் படுத்தக்கூடியதாகவும், எழுத்தா ளர்களையும் வாசகர்களையும் ஒரு பொது நோக் கோடு ஒரு பொது உணர்வோடு இயக்கத் தூண் டக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். சுருங்கச் சொன்னல் சமுதாய உணர்வு படைத்ததாக இருக்க வேண்டும்.
இன்றைய ஈழத்து எழுத்து, இந்நாட்டின் இலக்கியம், இத்தன்மை கொண்டதாய்த்தான் இருக்க வேண்டும். இது இன்றையத் தேசியத் தேவை. இன்றைய நமது சமுதாயத் தேவை. இதை உணராத எழுத்து, இதை விரும்பாத இலக் கியம் அர்த்தமற்ற சுகானுபவத்துக்காக வாயில் போட்டுச் சப்பிவிட்டுத் துப்பிவிடும் வெற்றிலைச் சக்கையைப் போன்றது. அது ஒரு மலட்டு இலக் கியம். அதனல் சமுதாயத்தில் ஒன்றையும் சிருட் டிக்க முடியாது.
இளங்கீரன்- ܗܝ
.குரல் ای عی

Page 6
பாரத பிதாவுக்கு சில
s பதுளை -
காக்கை எச்சில்களின் கண்ணுடிச் சட்டத்துள். . . கருகிச் சிலையாகிப் போனவனே. . . .
நாதியற்ற நாம் தான் நடுத் தெருவில் நிற்கின்ருேம் என்ருல்-அங்கு நீயென்ன செய்கின்ருய்...?
ரஸ்தா தூசிகளின் ரஸவாத பெருமையுள்-உருகி பிக்காசோ படைப்பாகிப் போனவனே. . .
சந்தியில் நாம் தான் மந்திகளாய் வாழ்கின்ருேம் என்ருல்-இங்கு நீயென்ன செய்கின்ருய்...?
மழைக்-கண்ணீர்களின் மங்காத பொழிவுள்-வெளிறி வெள்ளை நிறமாகிப் போனவனே. . .
(5-ம் பக்கத் தொடர்ச்சி)
சாதகமான போக்கினையுடைய பொதுசன அபிப்பிராயத் தைப் பெரும்பான்மையோர் மத்தியில் ஏற்படுத்தத் தவறி னர். இந்தியர்களுக்கு எதிரான துவேஷம் நிறைந்ததும் வலுவானதுமான பிரசாரங்களுக்கு முன்னர் இடதுசாரி யினரின் வர்க்கப்பாங்கான பிரசாரமுறை தாக்குப்பிடிக்க முடியாது போயிற்று. காலப்போக்கில் இந்தியர்களின் நாடற்ற தன்மை உறுதிப்படுத்தப்பட்டதும் இடதுசாரித் தலைவர்களும் அந்நிலையை ஏற்றுக் கொண்டவர்களாய் பிரச்னைக்கு புதிய முறையில் தீர்வுகாணமுற்பட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு இலங்கைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற தமது பழைய கொள்கைப் பிடிப்பிலிருந்து நழுவினர். இலட்சக்கணக்கான இந்தியர்களை இந்தியாவுக்கு அனுப்ப வழி செய்த ஒப்பந்தங்களை ஏற்ற இடதுசாரிகள் இந்நாட்டின் தொழிலாள வர்க்கத்துக்குச் சரியாக வழி காட்டவோ தலைமை தாங்கவோ தவறினர். அவர்களைத் தலைவர்களாகக் கொண்ட தொழிற் சங்க இயக்கங்களை தோட்டத் தொழிலாளர்கள் நம்பத் தயாராக இருக்கவில்லை
யாதலின் அவை பெருவளர்ச்சி பெறவில்லை. அண்மைக் །ཕལ་རྫ་རྔ་བ་ཆེ་ இடதுசாரியினர் அதிகார பீடத்தைச் சார்ந்து

ல பகிரங்க கேள்விகள்
ராகுலன்
தரத்தில் நாம் தான் தரையளவு தாழ்ந்திருக்கின்ருேம் சான்ருல்
அங்கு நீயென்ன பார்க்கின்ருய்...?
வறட்சிக் கரங்களின் வற்ருத பிடியுள்-குமுறி வெடித்து வேறுருவாகிப் போனவனே. . .
ஆடையில் தான் நாம் சிக்கனத்தை ஏற்கின்ருேம் என்ருல்-அதையே நீயுமேன் செய்கின்ரு ய் . . . ? V
வால் போஸ்டர்களின் வண்ண உடையுள்-தினமொரு
வைப்பாட்டி ஆனவனே. . .
மேடையில் நாம் தான் பிலாத்தி நிற்கின்முேம் என்ருல்-படத்தில்
நின்று நீயென்ன செய்கின்ருய்...?
நின்றமையினல் தோட்டத் தொழிலாளரின் பிரச்னைகளில் அக்கறை செலுத்தவில்லை.
இந்திய தொழிலாளர்களின் பாரம்பரிய தொழிற் சங்க இயக்கம் இந்திய தலைவர்களின் ஆசியுடன் உருவாகி விரிவான கட்டமைப்புடனும் கூடிய உறுப்பினர்களுடனும் பெரு வளர்ச்சி பெற்றுது; அரசியல் அரங்கிலும் கூடிய செல்வாக் குடையதாய் திகழ்ந்தது. உள்நாட்டில் மட்டுமல்லாது வெளி நாடுகளிலும் புகழ்பெற்ற ஒரியக்கமாய் பரிணமித்தது. சனப்பிரதிநிதிகள் சபையிலும் செனட் சபையிலும் இடம் பெற்று இந்திய பிரச்னைகளில் கருத்துத் தெரிவித்தது. தொழிலாளர்களை நாட்டைவிட்டு அகற்றும் ஒப்பந்தங்கள் தீவிரமாக அமுல் செய்யப்படாது தடை செய்தது. அவ் வியக்கம் உறுப்பினர் அளவில் பலம் வாய்ந்ததாய் விளங்கிய போதிலும் அதன் பலமும் விரிவான கட்டமைப்பும் தொழி லாளர் தம் வாழ்க்கை நிலை; அரசியல் அந்தஸ்து, பொருளா தார நிலை முதலியவற்றை மேம்படுத்தும் முயற்சியில் முறை யாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

Page 7
e9ᏏᎧᏠ
சிடடையைத்தூக்கி தலையில் போட்டதும் ஏதோ நினை வுக்கு வந்தவளாய், "பெரிய பய இங்கே வாப்பா! இன் னிக்கு நம்ம தோட்டத்துப் பெரிய காட்டிலே போயி ரெண்டு மூணு வெறகுக் குச்சியும் அதோட அதா ஒரு பிலாக் காயும் பிடுங்கிக்கிட்டு வா, இன்னையப் பொழுதே ஒப்பேத் திடலாம், சம்பளமும் இன்னிக்கிப் போட்டுவாங்க, தட்டு முட்டுச் சாமான நாளைக்கி வாங்கிடலாம்,மறந்துடாதே!' எனக் கூறிக் கொண்டே தனது மூன்று மாதக் குழந்தை வீரிட்டலறுவதையும் பொருட்படுத்தாமல், கூடையையும் கம்பையும் எடுத்துக் கொண்டு மேடும் பள்ளமுமான குறுக் குப்பாதையில் ஒட்டமும் நடையுமானுள் காமாட்சி.
கால் சறுக்கியதால் கூடையும் கம்பும் ஒரு புறம் உருள தானும் ஒரு பக்கம் விழுகின்ருள். சிறு காயம் ஏற்பட்டா லும் 'பிரைவெட்" ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லும் பணம் படைத்தவர்களுக்கு அவள் விதிவிலக்கு.
எழுந்து தன் காலில் வழிந்து கொண்டிருக்கும் இரத் தத்தை துடை த்துவிட்டு மீனுக்குலேயுடன் சுண்ணும்பையும் வைத்துக் கசக்கிக் காயம்பட்ட இடத்தில் கட்டிவிட்டு வலி யையும் பொருட்படுத்தர்மல் நடக்கின்ருள். , "י * காமாட்சிக்கு வறுமைதான் தாண்டவமாடியதே தவிர குழந்தைச் செல்வத்திற்குக் குறைவே இல்லை. எட்டுக் குழந் தைகட்குத் தாயான அவள் சதா நோயாளி கடைசிக் குழந்தை கமலா பிறந்த மறு மாதமே கணவனை இழந்த அவள் தன் உழைப்பால்தான் குடும்பத்தை காப்பு:ாற்ற வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டது. அவளுக்கு உதவ> பெற்ருேரோ, பிறந்தாரோ இல்லை.
'டேயி பழநி! வாரியாடா வெறகுக்கு' என்று அழைத்த வண்ணம் அடுத்த வீட்டுப் பழநியின் ஸ்தோப்பில் போய் நின்றன் பெரிய பய என அழைக்கப்படும் ராசு,
* சரிடா," எனக் கூறிக்கொண்டே கயிmற்ையும் பழைய சாக்கொன்றையும் கக்கத்தில் இடுக்கியபடியே கூட நடந்தான் பழநி,
டேய் பழநி! நீ இந்த மரத்தில் ஏறி ரெண்டு பிலாக் காய் பிடுங்கு. நான் போயி ரெண்டு பேத்துக்கும் வெறகு கொண்டாறே" எனக் கூறிக்கொண்டே காட்டினுள் சென் முன் ராசு.
'காவல் இங்கே வா,நேத்து அந்த ரெண்டாம் நம்பரில் மரம் வெட்டியாச்சு. நீ கவனிக்கல்லே, இன்னம் ஒரு குற்றத் தோட வேலையிலிருந்து வெளியே தள்ளிடுவன்' என்று துரை கூறிய வார்த்தையால் தனக்கிருக்கும் மதிப்பு போயி டுமே என்பது ஒருபுறமிருக்க தெரியாமல் விறகு கொடுத்து ஒன்றிரண்டு சம்பாரிப்பதும் போய்விடுமே என்ற கவலையால் உந்தப்பட்ட காவல் என்றழைக்கப்படும் ரெங்கன் காட்டை நோக்கி நடந்தான்-சவுக்கடிபட்ட வண்டி மாடப்.
ஆள் அரவம் கேட்கவே காட்டினுள் நடந்தான். விறகு பொறுக்கிக் கொண்டிருந்த ராசு கண்ணில்படவே அவனை அதட்டி நிறுத்தினன். ‘எத்தனை முறை உன்னை விறகு வெட்ட வேண்டாம் என்று சொல்வது. இன்று -ாழிடம் தான் அழைத்துச் செல்வேன். உனக்கெல்லாம் Eயம் பார்த்தா ஏ வேலையே போயிடும்" எனக் *ரடு திரும்பியவனுக்கு செடியின் மறைவில் பச்சை
இே

பெ. ந. சகுந்தலா
மரம் வெட்டி மறைத்து வைத்திருப்பது கண்ணில் படுகின்றது.
'டேய்! பச்சை மறத்தை வெட்டி மறச்சி வச்சிட்டு என் னயக் கண்டதும் பட்டதைக் கட்டினியா? நட தொர வங்க ளாவுக், "
‘நான் பொறுக்க வந்ததே பட்ட வெறகு. அந்தப் பச்சை வெறக நா வெட்டலீங்க" என்ருன். காவல் பிடிவா தமாக பச்சை விறகை அவன் தலையில் வைத்துப் பின் தொடர்ந்தான்.
இவ்வளவையும் மரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த பழநி கீழே இறங்கினல் தன்னையும் பிடித்துக் கொள்வானே என்ற எண்ணத்தில் ஒளிந்து அவர்கள் சென்ற பின் வீடு நோக்கி நடந்தான்.
வீட்டிற்கு வந்த காமாட்சி மகனைக் காணுது திகைத் தாள். 'பிள்ளை மறத்தில ஏறும் போது தவறி விழுந் திடுச்சோ என்ன்வோ ஆண்டவனே' என வேண்டினள். சிறிது நேரத்தின் பின் அடுத்த வீட்டுப் பழநியின் மூலம் உண்மையை அறிகின்ருள்.
'பிலாக்காயும் பிடுங்கினப்பிலே இருக்கும் வெறகும் கொண்டாந்தாப்பிலே இருக்கும் என நெனச்சே! ஆண்ட வன் என்னே ஒரு வழியிலயும் பொழைக்க விடமாட்டான் போலிருக்கே" எனக் கூறியவளாய் மற்றக் குழந்தைகளைக் கவனித்தத் தொடங்கினள். a . . ነ
சம்பளத்திற்காகச் சங்கும் ஊதப்பட்டது. "இன்னிக்கி எனக்கு ஊது முத்தை வாங்கித்து வாம்மா..! இது ஒரு குழந் தையின் கதறல்,
"அம்மா எனக்கு எப்பவுமே ஒன்னும் வாங்கித்து வராது" இது ஒரு குழத்தையின் நச்சரிப்பு : ............... بعد تیس سی حمص سب
"ஆம்மா எனக்கு சீ. காயி. எல்லா. இப்படியே ஒவ் வொரு குழந்தையும் கூற அத்தனைக்கும் சரியென்று தலை யசைத்துவிட்டு பிரட்டுக் களத்தை நோக்கி நடக்கின் முள்.
ஒவ்வொருவருடைய பிரட்டும் வந்து போயின. பந்தி பிரிக்கவும் காமாட்சி.துரை பெயர் கூப்பிடுகின்ருர், துரை யின் முன்னுல் கூனிக் குறுகி இரண்டு கைகளையும் நீட்டிய வண்ணம் நிற்கின்ருள்.
**இந்த மாசம் ஒங் கொந்தரப்புக்கு ஆள் போட்டாச்சு! அரை ஏக்கர் பிடிச்சாச்சு. ஓம் மகன் பச்ச மரம் வெட்டி யாச்சு, பத்து ரூபா தெண்டம், அரிசிக் காசெல்லாம் பிடிச்சா தெண்டத்துக்குக் காசு கொடுக்க முடியாது. அடுத்த மாதம் அஞ்சு இந்த மாசம் அஞ்சு பிடிக்கிறேன்' எனக்கூறி இரண்டைம்பகைக் கொடுத்தார்.
அத்தனை குழந்தைகளும் தன் கையை ஆவலுடன் எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் என்ருலும் மடியில் சுருட்டி வைக் கப்பட்ட பணத்துடன் வெறுங்கையுடன் வீட்டை நோக்கி நடக்கின்ருள்.
காவல் தனது வேலை நிலைத்து விட்டது என்ற சம்பீரத் துடன் நின்று கொண்டிருந்தான் ஐந்து பத்து சம்பாரிக்கலாம் என்ற நோக்குடன்.
குறுக்குப் பாதையில் தாயின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகள் அம்மா வந்திடுச்சு. அம்மா வந்திடுச்சு என கத்துகின்ருர்கள்.
இம்மாதம் எப்படியும் குடும்பத்தை நடத்திடலாம் எனக் காத்திருந்த அவளும் தங்களின் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளக் காத்திருந்த குழந்தைகளும் ஏமாற்றத்துடன் பின் தொடர ஸ்தோப்பில் போய் அத்தனை ஜீவன்களும் அமர் கின்றன. (யாவும் கற்பனை)

Page 8
சந்தர் ಇಂಕಣ್ಣಿ
தனிப்பிரதி
SSSMSSSYSSSZSSLLSSLSSZSSLLSSLSSZ SLS ZSLSLSSSS Z SSLSSSSS Z S SSSYSSS SS S L L S LSSZ S SSZ SSS SZSSS
இந்து கலாச்
பதுளே வாழ் இந்துப் பெருமக்களுக்காக அவர்களின் நீண்ட நாள் கன்வை நிறைவே. யினர் மேற்கொண்டு அதற்கான முயற்சிகள் மகிழ்ச்சியைத் தருகின்றது.
இதற்கு முன்னரும் இத்தகைய ஒரு தி தன எனினும், அவை வெறும் ஏட்டுச் சுை காலங்களில் இந்து மகா சபையினர் மேற் நோக்குமிடத்து, அவர்கள் தமது பேராற்ற பெரு மக்களுக்கே, பெருமை தேடித்தரும் தருவார்கள் என்று நம்புகின்ருேம்.
அவர்களின் அப்பெரு முயற்சி வெல்க!
SSS SYSSS SSLSSSMSSSMSSSSSSS S LSS S SS SS SS SSLSLSS SS SSLS SLSSZSLSSL SSSSSSMLSLS S L
'பூங்குன்றம்"
(மாத இதழ்)
■
-50 ஆண்டுச் சந்தாதிருவி 600 இ விகிதம் 2- نيجية
-- ஆரைக்கம் சூ 3-6 ஆால் பக்கம் 3000 தொடர்ச்சியாக விளம்பரம் செங்ய விரும்புவோருக்கு சலுகை உண்டு. விபரங்கள் பேற:
'பூங்குன்றம்' மேப பதுளே அச்சகம், 235, லோவர் வீதி, பதுளை.
உங்கள் அச்சு வேலேகளுக்கு
எங்களையும் கலந்து ஆலோசிய
பதுளை அச்சகம் 235, லோவர் வீதி பதுளை
—
Edited & Published by J. Sa kuru na tbaD, No.
Badulla Printers, 23
 
 
 

" ... .
LLS SYS SL LSYS S SLS SS Y SS SSLSLS D LS S S S S S S S SLS SLS S S YS SLSL SZ SLLL SSSS Z S S S S S SLSS S SDSSS S S S S S S SDSSS
சார நிலையம்
ஒரு கலாச்சார நிலேயம் வேண்டும் என்ற 1ற்றும் முயற்சியை, பதுளே இந்து மகரிசபை எளில் ஈடுபட்டுள்ளனர் என்னும் செய்தி பெரு
ட்டத்தினேப் பல அமைப்புக்கள் கொண்டிருந் ரைக்காய்களாகவே இருந்துவிட்டன. கடந்த கொண்டு செய்த சமய, சமூகப் பணிகளே லேப் பயன்படுத்தி, ஊவா மாகான இந்துப் வகையில், தமது திட்டத்தை நிறைவேற்றித்
வெல்க!! என்று வாழ்த்துகின்ருேம்.
LSLLSSS SS SSLSLSSSSMSLLS SYSLLLSSSSSSSMSSSSS S S S S Y SLSSZ SS SLS SSLSSSYSSSSSSSMLSSSY SSSSSSMSSSLSS S S K SLLLLSMS S SSY SSSSS SLS S Y LSLSS Y
எழுத்தாளர்களுக்கு
பூங்குன்றத்தில் பிரசுரிக்க சிறுகதைகள்
எழுதி அனுப்பும்படி வேண்டுகிருேம். சிக்கப்
போதிய தபால் தலேகள் வைத்து அனுப்பப்பட
வேண்டும்.
புங்கள்
எங்கள் பிரசுரங்களே
படாத விஷயங்களை திருப்பிப் பெற விரும்பினுல்
திட்டுரைகள் கவிதைகள் T-- 「 ਪ ---
ཚ -
= لكي تقهي :
ன் தாவில் ஒரு பு கத்தில் மட்டு:ே
எங்களுக்கு விளம்பரம்
ܢ ܒ
17, Kumara singhe Road, Badulla, and Printed ab 5, Lower Street, Badulla.
“ کس حصے سے ------______ٹی_جسیے بہت