கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து ஒளி 2014.06-07

Page 1
- -
F- கே.
ஆடி அமாவாசை - சுவாமி வ
ஜய வருடம்
அகில இலங்கை இந், ஆனி = ஆடி
Religious Journal of

இந்து ஒளி
HINDU OLI
தீபம் - 18 சுடர் – 06
2புலானந்தர் நினைவுச் சிறப்பிதழ் து மாமன்ற ஆன்மீக இதழ்
June - July All Ceylon Hindu Congress
2014

Page 2
HINDU OLI - REGISTERED IN THE DEPARTMENT OF
இந்து நாகரிகம் வெளியீட்டு விழா, பம்பல
திரு. வி. கயிலாசபிள்ளை பாற்றும் திரு. மா. தவயோகராஜா இந்திய தூதரக முதன்மைச் செயலாளர் கௌரவ. ஜஸ்ரின் மோகம்
அக இலங்.
4 பக்கம்
ALL | - - ராணா.
இந்திய தூதரக முதன்மைச் செயலாளர் கௌரவ ஜஸ்ரின் பேமாகன் நூலை வெளியிட்டு வைக்கிறார்.
சிறப்பு
சுக்ப்ப கடி Tங் மாகா -------- -- ---
கLL ELTLA HIT LIL CHEEEE - Fiாக டக க க ப ட ,
பட்ட சான் பா
நது IIாம். மத கோ கம்பு க
|--
கலாநிதி. த. முத்துக்குமா
மேடையில் திருமதி சாந்தி நாவுக்கரசன். திரு நீலகண்டன், கௌரவ. ஜஸ்ரின் மோகன்.
(பேராசிரியை கிருஷ்ணவேணி. திரு மா கணபதிப்பிள்ளை திருட த. மனோகரன், திருமதி
வானதி காண்டீபன்
மு.வ படர்.
EETLE
அவன் இலங்கை இந்து
- பாப்பா
அH HITHIாக -- =
திருமதி சாந்தி நாவுக்கரசனை திருமதி அ, கயிலாசபிள்ளை -
கெளரவிக்கிறார்
முன்னைநாள் கல்க திருமதி இராஜம்
சிறப்புப் பிரதி
'இவ்விதழ் இல. 488, புளுமெண்டால் வீதி, கொழும்பு - 13, யுனி ஆர்ட்ஸ் (பிறைவேட் லிமிட்டட் நிறு

POSTS OF SRI LANKA UNDE.
ப்பிட்டி சரஸ்வதி மண்டபம் (25.05.2014)
அs
க இந்த
AL
மகா பாவத்தை 1
HINDU
பாபா
பிரதம விருந்தினர் என கெளரவிக்கிறார்கள்.
கெளரவ. இஸ்ரீ யோகன்
உரையாற்றுகிறார்
கHiடடஇது பாசி
---- 1
"EFLர் - பாகம் -
திருமதி அ. கயிலாசபிள்ளை புப் பிரதி ஒன்றினைப் பெறுகிறார்.
பொதுச் செயாளர் முத்தையா கதிர்காமநாதன்
நது யாமம் கை கொழும்பு - DU CONG
EE,
பயம்
பார்ப் பக
ப - 5 1 மாலை நாடு |
EL |
ப பார்ட்
திரு. த. ஸ்னோகரன்
பேராசிரியை து. எள். கிருஷ்ணவேணி
ரசாட்சி
அகப் பங்காக இடமாயன் பாம் பாக் சரக டர் காரப்ப
ETடப்H HIE -
THEEE -- E போபா
வி இராஜாங்க அமைச்சர்
னோகரி புலேந்திரன் யைப் பெறுகிறார்.
திருமதி பொன்மலர் கந்தசாமி திருடாதி வானதி காண்டீபனை
கௌரவிக்கிறார்
வனத்தில் அச்சிடப்பட்டு அகில இலங்கை இந்து மாமன்றத்தினால் வெளியிடப்பட்டது,
IIIF - TET

Page 3
ரிய
(தீபம் - 18) இந்த
தீபர் - 18)
ஜய வருடம் ஆடித் திங்கள்
NRSRRRRRRRRRRRRRRERA
'பஞ்ச புராணங்கள்
திருச்சிற்றம்பலம்
தேவாரம் -4 இலங்கை மன்னன் எடுத்த அடுக்கன்மேல் நலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும் மலங்கி வாய்மொழி செய்தவ னுய்வசை நலங்கொள் நாம் நமச்சி வாயவே!
திருவாசகம் (கேட்டாரும் அறியாதான் கேடொன் றில்லான்
கிளையிலான் (கேளாதே யெல்லாம் கேட்டான் நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத் துள்ளே
நாயினுக்குத் தவிசிட்டு நாயி னேற்கே காட்டாதன வெல்லாம் காட்டிப் பின்னுங்
(கேளாதன வெல்லாம் கேட்பித் தென்னை மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான்
எம்பெருமான் செய்திட்ட விச்சைதானே!
திருவிசைப்பா பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப்
பருகுதோ பமுதமொத் தவர்க்கே தித்தியா இருக்கும் தேவர்காள் இவர்தம்
திருவுரு இருந்தவா பாரிர் சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த
தனிமுழு முதலுமாய் அதற்கோர் வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி
விடங்கராய் நடக்குலா வினரே!
திருப்பல்லாண்டு நிட்டையி லாவுடல் நீத்தென்னை
ஆண்ட நிகரிலாவண் ணங்களும் சிட்டன் சிவனடி யாரைச்
சீராட்டுந் திறன்களுமே சிந்தித்து அட்ட மூர்த்திக்கென் அகம்நெக
ஊறும் அமிர்தினுக்கு ஆழநிழற் பட்டனுக் கென்னைத்தன் பாற்படுத்
தானுக்கே பல்லாண்டு கூறுதுமே!
திருப்புராணம் பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரானடி போற்றி
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி!
திருச்சிற்றம்பலம்
(இந்து ஒளி

சமயம்
வ ஒளி
சுடர் – 06
10ஆம் நாள் (26.07.2014) RURNRERURNERERERERNRERNRERERERERERER
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
சைவ சமயத்தவர்களின் பண்பாட்டில் தாய் தந்தையரை உயர்ந்த தெய்வங்களாகப் போற்றுவது மரபு. அவர்கள் வாழும்போது மட்டுமன்றி, வையகத்தை விட்டுச் சென்ற பின்னரும் மீள நினைந்து வணங் கும் மரபு சைவ வழிபாட்டில் முக்கியத்துவம் பெறுகிறது. தாய் தந்தையர்க்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக, அவர்களது மறைவிற்குப் பின் மாதந்தோறும் அமாவாசை திதியன்று தந்தையை நினைந்தும், பெளர்ணமி திதியன்று தாயை நினைந்தும் விரதம் அனுஷ்டிப்பதும் பாரம்பரிய மரபாகும், விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு மட்டுமன்றி தாய் தந்தையர்க்கும் மறுமையிலும் நற்கதி கிடைப்பதற்கு இவ்விரதங்கள் பயன் செய்யும் என விரத மகத்துவம் கூறுகிறது.
எமக்கு உயிர் தந்து, உணவு தந்து, கல்வி தந்து, வாழ்வு தந்து எம்மை ஆளாக்கி விட்டுச் சென்ற தாய் தந்தையர் இறப்புக்குப் பின்னால் நற்கதியை அடைய வேண்டும் என, பிரார்த்தித்து செய்யும் கடமைகளே பிதிர்க்கடன்களும், ஏனைய இது தொடர்பான பிரார்த்தனைகளுமாகும். அந்திமக் கிரியைகள், அந்தியேட்டி, திவசம், மாளயம் போன்ற கருமங்களுக்கு அப்பால், பிள்ளைகள் மாதந்தோறும், வருடந்தோறும் நீள நினைந்து வணங்குவதற்கு வேறெந்த சமயத்தவரும் கடைப்பிடிக்காத உன்னத பண்பாட்டை சைவசமயம் காலாதிகாலமாகப் பேணி வருகிறது.
இன்று பெற்றோரை பேணும் பண்பாடு வாழும்போதும், அவர் களின் வாழ்வுக்கு பின்னாலும் அருகிவருவது கவலைதரும் செய்தியாகும், ஒருவரது வாழ்வில் ஆற்றலும் ஆளுமையும் தந்தையிடமிருந்து அதிகம் பெற்றுக்கொள்வது
இயல்பு. தாயிடம் அன்பு, அரவணைப்பு. தயவு, மன்னிப்பு எனப் பலவற்றைக் கற்றுக் கொண்டாலும், தந்தையிடமிருந்து நாம் பெறும் ஆளுமை தனித்துவமானது. எந்தவொரு பிள்ளையையும் கவலையின்றி வாழவைப்பதில் தந்தை அதிகம் அக்கறை கொள்வார். குடும்பத்தின் தலைவனாக விளங்கும் தந்தையின் உழைப்பும் குடும்பமே அநுபவிக்கும், ஒவ்வொருவரதும் வாழ்வின் வெற்றியிலும் தந்தையினுடைய பங்களிப்பு நிறையவே உண்டு. தாய் தன் பிள்ளையை மகிழ்வாய் வளர்ப்பதில் ஆர்வம் கொள்வாள், ஆனால் தந்தையோ தன் பிள்ளை எதிர்காலத்திலும் மகிழ்வாக இருப்பதற்கு வழிதேடுவார். அதற்காக எங்கள் கல்வியில்,
ஐய வருடம் ஆணி - ஆடி

Page 4
எங்கள் கெளரவத்தில், எங்கள் வாழ்வின் வசதிகளில் தந்தையின் வியர்வைத் துளிகள் எல்லையற்ற பங்களிப்பாகும். இந்த அரிய உண்மையை எமது
சைவசமயம் உலகுக்கு நன்றாக உணர்த்தியுள்ளது.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற கருத்து மிக ஆழமானது. தந்தை தீயதை நீக்கி நல்லதையே பிள்ளைகளுக்கு எடுத்துரைப்பார். ஒவ்வொரு வீட்டிலும் அறிவு விளக்காக நின்று எம்மை அழைத்துச் செல்பவர் தந்தையே, எங்கள் வாழ்வில் ஒவ்வொரு விநாடியும் கவனம், பக்குவம், பொறுப்பு, நிதானம் என்ற சொற்களை உச்சரித்து திசைகாட்டுபவராக விளங்கிய தந்தை, இறப்பை சந்திக்கின்றபோது அவர்கள் தாம் பெற்ற பிள்ளைகளை, மனைவியை நினைந்து நினைந்து உருகிய வண்ணம் தம் பயணத்தை தொடர்வார், ஒவ்வொரு தந்தைக்கும் தன் குடும்பத்தை தவிர வேறு உலகம் இல்லை. அத்தகைய தந்தையை வருடத்தில் ஒருநாள் பிதிர் தர்ப்பணம் செய்து, புண்ணிய தீர்த்தத் தில் நீராடி விரதம் அனுஷ்டித்து நன்றியோடு பிரார்த்திப்பதற்காக ஆடி அமாவாசையை சைவ உலகம் பேணிவருகிறது. தந்தையை இழந்தவர்கள் ஆடி அமாவாசை நாளன்று புனித தீர்த்தங்களில் நீராடி பிதிர் தர்ப்பணம் செய்து மோட்சதீபம் ஏற்றி வழிபாடு செய்யும் மரபு இன்றும் தொடர்கிறது. இம்மரபு எதிர்காலத்திலும் பேணப்படவேண்டும். மூத்தோர், குடும்பத் தலைவர்கள் இப்பயன்பாட்டை சரியான முறையில் பேணினாள், எதிர்கால தலைமுறை இம்மரபை பாதுகாப்பார்கள். இன்றைய குடும்பத் தலைவர்கள் ஆடி அமாவாசை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த தினங்களை ஏனோதானோ என அலட்சியம் செய்தால், வாழும்போதே பிள்ளைகள் தாய் தந்தையரை நேசிப்பதை கைவிட்டு விடுவார்கள்.
ஈழத்திருநாட்டில் ஆடி அமாவாசை பிதிர் தர்ப்பணத்தை பக்திபூர்வமாக அனுஷ்டிக்கும் மரபு உண்டு. குறிப்பாக வட இலங்கை மக்கள் கீரிமலை கண்டகி தீர்த்தத்திலும், திருகோணமலை மக்கள் கன்னியா வெந்நீர் ஊற்றினும், நீர்கொழும்பு சிலாபத்து மக்கள் மாயவன் ஆற்றிலும், கிழக்கிலங்கை மக்கள் மாமாங்கேஸ்வரர் தெற்பைக் தளத்திலும், மன்னார் மாதோட்ட மக்கள் பாலாவிக் கரையிலும், கொழும்பு வாழ் மக்கள் முகத்துவாரக் கடற்கரையிலும், ஏனைய மக்கள் தத்தம் தஊரிலுள்ள கடற்கரைகளிலும், குளக்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும் சிறப்பாக பிதிர்க்கடன் செய்து விரதத்தை பேணுவர். இலங்கை வேந்தன் இராவணன் காலத்தில் கூட, அவன் தாய் தந்தையின் பிதிர்க் கடன் விரதத்தை முறையாக அனுஷ்டித்தான் என்ன சான்றுகள் கூறுகின்றன. சைவமக்களான எம் மூதாதையர் பேணிக்காத்த நன்றிக்குரிய விரதத்தை நாமும் போற்றிப் பாதுகாப்பது எம் தலையாய கடமையாகும்,
(இந்து ஒளி

வாழ்த்து வைய நீடுக மாமழை மன்னுக மெய் விரும்பிய அன்பர் விளாங்குக
சைவ நன்னெறி தாம்தழைத்தோங்குக தெய்வ வெண்திரு நீறு சிறக்கவே!
இந்து ஒளி அகில இலங்கை இந்து மாமன்ற இந்து ஆராய்ச்சி நிலையத்தின் வெளியீடு ஆடி அமாவாசை / சுவாமி விபுலானந்தர் நினைவுச் சிறப்பிதழ்
(ஜய வருடம் ஆனி-ஆடி) 26.07.2014 ஆசிரியர் குழு :
திரு. கந்தையா நீலகண்டன்
பாவஞானபானு கலாநிதி ஆறு. திருமுருகன் கலாநிதி முத்தையா எதிர்காமநாதன் சிவபரீ ம, பாலபாலாசநாத சர்மா திரு. து. மனோகரன்
திரு. அ. கனகசூரியர் ஒரு பிரதியின் விலை
ரூபா 50.0) வருடாந்தச் சந்தா (உள்நாடு)
ரூபா 300,00
(தபாற் செலவு தனி) & வருடாந்தச் சந்தா (வெளிநாடு) Us டொலர் 15
அகில இலங்கை இந்து மாமன்றம்
A.C. H. C. கட்டிடம் 81/5, சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு - இலங்கை.
யாழ் பணிமனை : 211/17, கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம், இனணயத்தளம்
: http://wwrwww.hinduCongress.lk மின்னஞ்சல்
: hinducongress@gmail.com தொலைபேசி
: 0112434990, தொலைநகல் : 0112344720 இந்து ஒளியில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ஆக்கியோன்களுடையதே.
HINDU OLI
Publication of HINDU RESEARCH CENTRE OF
ALL CEYLON HINDU CONGRESS Aadi Amavasai / Swami Vipulanandar Commemorative Issue
- 16.07.2014 Editorial Board :
Mr. Kandiah Neelakandan Dr. Aru, Thirumurugan Dr. Muthiah Kathirgamanathan Sivasri M. Balakailasanatha Sarma Mr. I. Manoharan
Mr. A. Kanagasooriar
Rs.50.00 Annual Subscription (Inland)
Rs, 300.00
(Excluding Postage) Annual Subscription (FOrgign) பூ.3 $ 15
(Including Postage) ALL CEYLON HINDU CONGRESS
A.G.H.G, EIdg. g1/5, Sir Chittapalam A, Gardinar Mawatha Colomb) - 2, Sri Lanka, Jattria ப்ப் ; Z11/1T, TEmpl= HOHd, Nalluா, Jaffna, | Website : http://www.hinducறாgress.lk
E-Mail ; hirாபிபCongrESSாராail ,ப்பா TElephபாகு NO.1 ]11 2434u), FAH No.1 011 2344720 Views expressed in the articles in Hindu oli
are those of the contributors. ISSN : 2012 - 9645
Price
ஜய வருடம் ஆனி - ஆடி

Page 5
ஆன்மீக
அருக நீத்தாரை நிை
இருந்து கூரும் மூதாதை
வழிநடத்துகிறது. மூதானைறிவருவதும் போது
எங்கள் மூதாதையர்களை சமயச் சடங்குகள் ஊடாக . நினைவுகூரும் பாரம்பரியம் இந்துமதத்தில் நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. அதற்குரிய சிறப்பான காலங்களுள் ஆடி அமாவாசையும் ஒன்றாகும். உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் இத்தகைய மூதாதையர் வழிபாடும் போற்றுதலும் இப்போது கலாசாரரீதியில்நத்தார் நினைவாக வேரூன்றிவருவதும் சிறப்பான விடயமாக அமைந்துள்ளது. மூதாதையர்கள் வானுபெகியிருந்து நம்மை வழிநடத்துகிறார்கள் என்ற நம்பிக்கையுடன் இத்தகைய பிதிர் வழிபாடுகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுவரையில், தனிப்பட்டவர்களால் மட்டுமே தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்காரின் மறைவுக்குப்பின், அவர்களுக்காக பிதிர் வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தன. இப்போது சமய நிறுவனங்கள், ஆச்சிரமங்கள், பாடங்கள் என்பனவும் நீத்தார் நினைவுகளைநடத்திவருகின்றன. இத்தகையசமய நிறுவனங்கள், ஆச்சிரமங்கள், மடங்கள் போன்றவைகளை உருவாக்கிய வர்கள் மற்றும் உதவியவர்கள் என்போர் பூவுலகை விட்டு மறைந்த பின்லார், அவர்களை நினைவு கூர்ந்து, அவர்கள் வழியில் நடக்க திட சங்கற்பம் பூணும் வகையிலான சிறப்பம்சமாகவே
இந்த நிகழ்வுகள் அமைந்திருக்கின்றன.
இந்தவகையிலேயே அகில இலங்கை இந்து மாமன்றமும் நீத்தார் நினைவு நிகழ்வை முதன்முறையாக ஏற்பாடு செய்து ஏற்கனவே கொழும்பு மாநகரில் நடத்தியிருந்தது. தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை தினத்தன்று கீரிமலை பூமியில் இத்தகைய நிகழ்வை நடத்தவிருப்பது சிறப்பான காரியமாக அமைந்திருக்கிறது.
கீரிமலையானது கண்டகி எனப்படும் புண்ணிய தீர்த்தம் கொண்ட புனித பூமியாகும்.
இந்தியாவில் காசி எனப்படும் மோட்ச சேத்திரம் எவ்வாறு புனரிதமும் புண்ணியமும் நிறைந்ததாக அமைந்திருக்கிறதோ, அதுபோல ஈழத்தில் பாரம்பரிய சமய முக்கியத்துவம் வாய்ந்த வகையில் மகிமை பொருந்தியதாக கீரிமலை திகழ்கிறது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அங்கக் குறைபாடும் நோயாலும் பிடிக்கப்பட்டிருந்த மாருதப்புரவீகவல்லி என்று சோழநாட்டு இளவரசி, இங்குள்ள கண்டகி தீர்த்தநிலையில் நீராடி நோய் நீங்கி அழகுத்தோற்றம் பெற்றதாக ஒரு வரலாறு உண்டு. இத்தகைய மகிமையும் பெருமையுள்ள கீரிமலையிலே இப்போது சிவபூமி அறக்கட்டளையினரும், அகில இலங்கை இந்து மாமன்றத்தினரும் மடங்களை நிறுவியிருப்பதுடன், அங்கு வருகை தரும் யாத்திரிகர்களுக்கு பல்வேறு வகையில் சேவையாற்றி வருவதும் சிறப்பாக தரிப்பிடத்தக்க விடயங்களாகும்.
தமது முன்னோர்களையும் முகாதையர்களையும் மறவாது. இருப்பது என்பது இப்போது மேலைத் தேசங்களில் பெருமளவில்
மாமன்றத்தின் கட்டளையினருகயுள்ள கீரிமல
(இந்து ஒளி

நச்சுடரின்
ள் பாடல்
னவு கூருவோம்
பேணப்பட்டு வருவதை காணமுடிகிறது. குறிப்பாகச் சொல்வ தானால், அமெரிக்காவிலுள்ள பல தேசிய பூங்காக்களிலும் வனவிலங்குப் பராமரிப்பு மற்றும் சரணாலயங்களிலும் நீத்தார் நினைவுகளாக, குடும்பத்தில் மறைந்தவர்களுக்காக மரங்களை நாட்டும் வழக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் பல வருடங்களருக்கு பயன்தரும் வகையிலான இத்தகைய செயற்பாடாளாது மேலைத்தேய கலாசாரத்தில் முக்கிய இடத்தைப் பெற்றிருப்பதையும் சிறப்பாகக் குறிப்பிடவேண்டும், இன்னொரு வகையிலான கருமமாக, மறைந்த தங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களது ஞாபகார்த்தமாக அறக்கட்டளை நிறுவனங்களை தோற்றுவித்து அவற்றின் ஊடாக ல்லூரிகள், பல்கலைக்கழகம் மற்றும் வளாகங்கள், பீபங்கள் என்பவைகளில் கட்டடங் களையும் ஆய்வுகூடங்களையும் நிறுவி இப்போதும் எதிர்காலத் திறும் இளம்சந்ததியினர் கல்வி பயிலுவதற்கான வசதிகளை ஏற்படுத்தி வருவதை அமெரிக்காவிலும் ஏனைய போலைத்
தேசங்களிலும் காண முடிகிறது.
இத்தகைய முற்போக்கு கலாசாரம் எமது மக்களிடமும் உருவாகவேண்டும், எமது மூதாதையரை நாம் மட்டும் நினைத்துப் போற்றி வழிபட்டால் மட்டும் போதாது. எதிர்கால சந்ததியினர் பயன்பெறும் வகை யிலும் ஆவன செய்வது சாலச்சிறந்தது. நீத்தார் நினைவாக மேலை நாடுகளில் செயற்படுத்துவது போன்ற அறக்கட்டளை களை எங்கள் நாட்டிலும் நிறுவி அதனூடாக நற்பணிகளை முன்னெடுத்துச் செல்வது என்பது நல்லதொரு கைங்கரியமாகவும் அமையும், சமயக்
கிரியைகளின்போது இறந்தவர்களது நினைவாக தென்னம்பிள்ளை அல்லதுகழகம்பிள்ளைநாட்டுவதுஇப்போது அருகி வருகின்றது. எதிர்காலத்தில் இத்தகைய மரங்களை
நாட்டி, எமது வனங்களை பாதுகாக்கவேண்டும். மறைந்த அன்புக்குரியவர்கள் கல்வி கற்ற பாடசாலைகளில் கல்வி மற்றும் சமூகநல வசதிகளை செய்து கொடுப்பது நீத்தார் நினைவாக
அமையும்.
முன்னைய காலத்தில் நீத்தார் நினைவாகவே தெருவோரங் களில் சுமைதாங்கி, இளைப்பாறும் மடம், ஆவுரஞ்சிக்கல், நீர்க்கேணி போன்றவைகள் அமைக்கப்பட்டு அருகே நிழல் தாம் பெருமரங்களும் நாட்டப்பட்டு வந்தன, வீதி விஸ்தரிப்பு. நகரத்தை அடகுபடுத்தல் போன்று அபிவிருத்தித் திட்டங்களால் மேற்சொல்லப்பட்ட செயற்பாடுகள் இப்போது சாத்தியமாகாத நிலையிலிருக்கிறது. எனவே காலத்திற்குப் பொருத்தமான வகையிலான புதிய திட்டங்களை செயற்படுத்தி நீத்தாரை நினைவுகூருவது அவசியமானதும் தேவையானதுமாகும்.
தொண்டுநாதன்
ஜய வருடம் ஆனி -ஆடி)

Page 6
சமூg95gேeyஏரெசgy ஈரேரசரடுதோதரரே579
ஆடி அமாவாக
(பண்டிதர் த.ச
THIIIIIIIIIIIIIIIIIா பாப்பா tiiii
IIIIII
அமாவாசை என்றால் நம் சமயத்தவர்களுக்கு மிகவும் பயபக்தி உண்டாகின்றது. ஆடி அமாவாசை சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் ஒரு முக்கியமான தினம். பிதிர் வழிபாட்டைக் குறிக்கும் ஒரு புண்ணியமான சிரார்த்த தினமாகும்.
திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள துாரத்தை- பாகத்தைக் குறிப்பிடும் ஒரு சொல். அமா என்றால், ஓரிடத்தில் பொருந்தியது (குவிந்தது-அடுத்தது) என்று பொருள். ஓர் இராசியில் சூரியன் சந்திரன் இருவரும் சேர்ந்து உறவாகும் வாசியான நாள் அமாவாசி எனப்படும். வான மண்டலத்தில் தமது அளப்பு வேலையைச் சிருட்டியின் ஆரம்ப காலத்திலிருந்தே தொடங்கிய இருவரும் அமாவாசை நாளிலன்றுதான் ஒருங்கு கூடுகின்றனர்..
- சூரியனும் சந்திரனும் ஒரே பாகையில் பூமிக்கு நேராக வரும் பொழுது அமாவாசைத் திதி உண்டாகும், சந்திரன் சூரியனிலிருந்து பிரிந்து பூமியைச் சுற்றி வருகின்ற மார்க்கத்தில் பூமிக்கும் சூரியனுக்கும் 130ஆவது பாகையில் வரும் பொழுது பெளர்ணமித் திதி நிகழும்,
திதிகள் பூர்வபக்கத் திதிகள், அபரபக்கத் திதிகள் என இருவகைப்படும். அமாவாசைக்கடுத்த பிரதமை முதல் பெளர்ணமி இறுதியாகவுள்ள பதினைந்து திதிகளும் பூர்வபக்கமெனப்படும், பெளர்ணிமைக்கடுத்த பிரதமை முதல் அமாவாசையிறுதியாகவுள்ள பதினைந்து திதிகளும் அபரபக்கமெனப்படும். பூர்வபக்கம்,அபரபக்கம் என்பன முறையே சுக்லபக்ஷம், கிருஷ்ணபக்ஷம், வளர்பிறை, தேய்பிறை எனவும்படும்.
அமாவாசையின் கருத்தை ஞானமுறையிற் கவனித்தலும் நல்லது. சூரியன் ஞானகாரகன், ஆத்மகாரகன் ஆவான். பிராணிகளின் ஆத்ம அமைப்பு சூரியனாற்தான் நிகழ்கின்றது. ஆண்மை, ஆற்றல், பராக்கிரமம், வீரம், தீரம் தவம் யாவும்
சூரியனாலேயே தோன்றுகின்றன,
சந்திரன் மனத்திற்கு அதிபதி, மகிழ்ச்சி, தெளிந்த அறிவு, உற்சாகம், இன்பம் முதலியன சந்திரனால் அடையத்தக்கன. இத்தகைய சூரிய சந்திரர் இருவரும் ஒரு ராசியில் சஞ்சரிக்கும் நாள் புனிதமான நாள். உயிர்களின் சுகபோகமாகிய மாறுதலையுணர்த்தும் நாள். சகல் தேவர்களும் அமாவாசையின் அதிபர்களாவர். அன்று நோன்பு நோற்றல், விரதங் காத்தல் சிறந்ததும் இறைவனுக்கு மகிழ்ச்சியளிப்பதும், பெருமை தருவதுமான நன்னாளாகும்.
நமக்கு இரண்டு சரீரங்கள்- சீவதேகங்கள் உள்ளன. அவை தூல சரீரம், சூக்கும சரீரம், குண சரீரம் எனப்படும். நமது உடம்பு தூால சரீரம். இது துாலகாயம், துாலதேகம்,
(இந்து ஒளி

அரங்கு ரோத799999999999ரேரா 7ே76 சையின் சிறப்பு
சுப்பிரமணியம்)
IIIIIIIIIIIIIIIIIIIIIIIாம்
புறவுடல் எனவும் படும், ஆயுள் முடிவில் முன்னுடல் விட்டு மற்றோர் உடம்பெடுத்தற்கு ஏதுவாயிருப்பது அருவுடம்பு. இது சூக்கும காயம், சூக்கும தேகம், உள்ளுடம்பு எனவும் படும்.
இவற்றுள் துால் சரீரமானது, பஞ்ச பூதங்களாலும் பரிணமிக்கப்பட்ட உருட்டடம்பு. சூக்கும சரீரமானது காரண தன் மாத்திரைகளைந்தும், அந்தக்கரணங்கள் மனம், புத்தி,
அகங்காரமெனும் மூன்றும் கூடியது அருவுடம்பு.
ஒருவர் இறக்கும்போது துாலசரீரம் அழிந்து போகும். சூக்கும சரீரம் அழிவதில்லை. அவை சர்வசங்கார காலத்திலே அல்லது முத்தி நிலையிலாவது அழியும். ஓர் உயிர் துால் சரீரத்தை விட்டு நீங்கும்போது சூக்கும சரீரத்தோடு செல்லும். அங்ஙனம் சென்ற உயிர் பூமியிற் தான் புரிந்த ' வினைகளுக்கேற்ப இன்பதுன்பங்களைச் சுவர்க்க நரகத்தில் அநுபவிக்கும், சுவர்க்கத்திலே இன்பங்களை அநுபவிக்கும் போது அச்சூக்கும சரீரமும் அதற்கென்றே ஒரு சரீரத்தைப் பெற்றுக் கொள்ளுகின்றது. அது நோய் கொண்டதாயும் எவ்வகைத் துன்பங்களையும் தாங்க வல்லதாயும் இருக்கும். அது யாதனாசரீரம் எனப்படும். இவ்விதம் அநுபவித்துத் தொலையாமல் எஞ்சி நின்ற (பிராரத்துவ) வினைகளினாலே மீண்டும் பூமியில் வந்து பிறக்கும்.
இறந்தவர்களுடைய துாலவுடம்பும், சூக்குமவுடம்பும் பிறவிக் குக் காரண மான வி னை யு மெ னப் பட் ட வெல்லாம் தகனக்கிரியை, அந்தியேட்டி இவற்றால் நீங்கிவிடும். அபுத்திபூர்வமாகச் செய்தன அந்தியேட்டி, தகனக்கிரியைகளால் மாறும். புத்திபூர்வமாகச் செய்தன அநுபவித்தேயாக வேண்டும். உயிர் சபிண்டிகரணம் (பிதிர் பூசை) என்னுங் கிரியையினாலே - சிவலோகத்தையடையும். * அங்கு பிதாவினுடைய உயிர் ஸ்கந்த சொரூபமாக இருக்கும். பாட்டனுடைய உயிர் சண்டபதத்திலே சண்ட சொரூபமாக இருக்கும். முப்பாட்டனுடைய உயிர் கணாதீச பத்திலே கணாத சொரூபமாக இருக்கும். இவர்களுக்குத் தலைவர்களாக ஸகந்த, சண்ட, கணாதீதர் எனும் மூவர் அதி தெய்வங்களாக விளங்குவர். இவர்கள்தான் பிதிர் தேவதைகள் என அழைக்கப்படுவர். இவர்களைப் பிரீதி செய்து வழிபடுவதுதான் சிரார்த்தம் எனப்படும். நிருவாண தீட்சை பெற்றவர்களுடைய பிதுர்வேதர்கள் ஈசர், சதாசிவர், சாந்தர் எனப்படுவர்.
மண்டலங்கள் சூரிய மண்டலம், சந்திர மண்டலம், மேக மண்டலம், பூமண்டலம் எனப் பல்வகைப்படும். இறந்துபோன உயிர்கள் தாம் செய்த புண்ணிய பாவத்திற்கேற்பச் சுவர்க்க நரகங்களையடைவனவும் முத்தியடைவனவுமன்றிச் சில
ஜய வருடம் ஆனி – ஆடி)

Page 7
உயிர்கள் உடனே ஒரு தூலதேகத்தை எடுப்பனவுமாகவும் இருக்கும், அன்றி அவை இறக்கின்ற கால நேரங்களைப் பொறுத்ததாக உயிர்களை நற்பதவியடையச் செய்தலுக்குச் சிரார்த்தம் இன்றியமையாததாகும்.
சூரியனும் சந்திரனும் ஒன்றுபட்டுப் பூமிக்கு நேரே நேர்படுஞ் சமயமே இதற்கு மிகவுஞ் சிறந்தது. ஒவ்வோர் அமாவாசையும் பிதிர்கருமத்திற்கு விசேஷசமானது. எனினும் ஆடி அமாவாசை மிகவும் புனிதமும் விசேஷ சமுமானதாகும். தை அமாவாசையும் சிறந்தது. ஏனெனில் சூரிய மண்டலத்துக்கு அப்பாலுள்ள பிதிர்களுக்குரிய இடமாகும். இது பிதுர் லோகம் எனப்படும், வடக்கு நோக்கிச் சநஞ்சரிக்கும் சூரியன், தெற்கு நோக்கிச் சஞ்சரிக்கும்" ஆரம்பகாலம் ஆடிமாசமாகும். ஆகவே ஆடி அமாவாசை பிதிர் தருப்பணத்திற்கு மிகவும் சிறந்த காலமாகும்,
அமாவாசை, பௌர்ணமி நாட்களில் கடல் தீர்த்தமாடுதல் மிகவும் நல்லது. கடல் நீரை நமது பாபத்தைக் கழுவும் பரிசுத்த நீராகவும் இறைவனது அருள் நீராகவும் நினைந்து காலஞ்சென்ற பிதிரர்களை எண்ணி அவர்களது பாவத்தைப் போக்கி அவர்களுக்கு முத்தியளிக்கும் வண்ணம் இறைவனை வேண்டி நீராடல் வேண்டும்.
உடல் நலத்தின் பொருட்டும் கடல் நீராடுதல் நன்மையாகும், அமாவாசை பெளர்ணமி நாட்களில் கடலின் நினையும் நமது தட்டபின் நிலையும் மாற்றமடைகின்றது. கடல் நீராடுவதனால் அநேக உள்!ரோகங்களும் புறரோகங்களும் சொஸ்தமடைகின்றன. நீராடினால் சரீரம் சுத்தமாகின்றது. ஆரோக்கியம், உற்சாகம் என்பன உண்டாகின்றன. மன ஒருமைப்பாடும் மனப்பரிசுத்தமும் உண்டாகின்றது. அதிக பசியுண்டாகின்றது. ஆதலின் இடையிடையே கடல் நீராடுதலும் அவசியமாகும்,
அமாவாசை நாளில் (மாதரின் பந்துய்த்தல்) மாபாவ மெனக் கூறப்படுகின்றது. ஆத்மகாரகனான சூரியனுடன் மனத்தின் காரகனாகிய சந்திரன் ஒருங்கே கூடியிருக்கும்பொழுது மானிடரின் ஆத்ம சக்தி குன்றியிருக்கும். மாதரின் மனமும் மிகவும் சோர்ந்திருக்கும். இதனை மீறி இன்பந்துய்த்தால் அங்கவீனமுள்ள- ஆண் பெண்ணற்ற -அலிகள் போன்ற குழந்தைகள் பிறப்பர் எனச் சொல்லப்படுகின்றது.
காலற்றன உடலற்றன தலையற்றன நாளில் கோலக் குய மடவார்தமைக் கூடின்மல டாவர் மாலிக்கொரு கோயில் செயின் அதுவும் வெகு பாடாம் ஞாலத்தவர் வழிபோமின் நல்முய் திடாரவமே பயன்
ஆதலின் இப்புண்ணிய தினத்திலே மூர்த்தி தலம் தீர்த்தம் அமைந்த புண் ணிய தலங்களிலாயினும் வீடுகளிலாயினும் பிதிர் கருமங்களை முறைப்படி செய்தல் இன்றியமையாததொன்றாகும்.
(நன்றி: சைவசமய புண்ணியகாலம்)
(இந்து ஒளி

மகிமை மிக்க மாவைக் கந்தன்
"நத சு.
அமாவாசை தினத்தை தீர்த்தமாகக் கொண்டு வருடாந்த உற்சவம் நடைபெறும் ஆலயங்களுள் ஒன்றுதான் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில். இங்கு இருபத்தைந்து நாட்கள் உற்சவம் இடம் பெற்று வருகிறது. யாழ் குடாநாட்டிலுள்ள முருகன் ஆலயங்களுள் நல்லுார், தொண்டமானாறு, மாவிட்டபுரம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள மூன்று ஆலயங்களுமே வரலாற்றுப் பெருமையும் தொன்மைச் சிறப்பும் மிக்கதாக விளங்குகின்றன. ஒரு அற்புத நிகழ்வுடன் இணைந்த வகையிலேயே மாவைக்கந்தன் ஆலயம் தோற்றம் பெற்றதாக வரலாறு சொல்கின்றது. பல நூற்றாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவம் இது. திசையுக்கிர சோழன் மனைவியாகிய கனகாங்கி என்பவள் குதிரை முகம் கொண்ட பெண்குழந்தையொன்றைப் பெற்றெடுத்தாள். மாருதப்புரவீகவல்லி என்ற பெயருடைய அந்தப் பிள்ளை குன்ம நோயினாலும் பீடிக்கப்பட்டிருந்தது. சோழனின் மகளாகிய மாருதப்புரவீகவல்லி வளர்ந்து வரும் நாளில் சோழநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து கீரிமலையில் உள்ள மகிமை மிக்க கண்டகி தீர்த்தக் கேணியில் நீராடிவிட்டு திரும்பி வரும் வழியில் அவளது குதிரை முகம் மாறி அழகுத் தோற்றத்தைப் பெற்றாள், அந்த இடமே மாவிட்டபுரம் (மா-குதிரை , விட்ட- நீங்கிய, புரம்நகரம்) என அழைக்கப்படுகின்றது. தனது குதிரை முக தோற்றம் நீங்கியதால் மகிழ்ச்சியடைந்த அரசகுமாரி மாருதப்புரவீகவல்லி அவ்விடத்தில் அழகன் முருகனுக்கு ஓர் ஆலயம் அமைக்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவிக்கவே, சோழ மன்னனும் அங்கிருந்து ஆலயம் அமைப்பதற்கு வேண்டிய பொருட்களுடன், ஆலய விக்கிரகங்கள், தொழிலாளர்கள், சிதம்பரத்தைச் சேர்ந்த அந்தணப் பெரியார்களையும் அனுப்பி வைத்து சிவாகம் முறைப்படி பெரும் இராஜகோபுரத்துடன் ஆலயத்தை நிர்மாணித்தான் என்பது வரலாறு.
ஆடி அமாவாசைத் தினத்தன்று நடைபெறும் தீர்த்ததோற்சவத்தின்போது மாவைக் கந்தன் கீரிமலை கண்டகி கேணிக்கு எழுந்தருளி தீர்த்தமாடுவது பல வருடங்களாகவே இடம் பெற்று வரும் வழக்கமாகும். ஆலயத்தில் இப்போது புனருத்தாரண வேலைகள் இடம் பெற்று வருவதனால் இவ்வருடம் மகோற்சவத்துக்குப் பதிலாக காம்யோற்சவம் நடைபெற்று வந்தது. இம்மாதம் 2ஆம் திகதி ஆரம்பமான உற்சவம் இன்று (26.07.2014) நடைபெறும் தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறுகின்றது.
ஆலயத்தின் புனருத்தாரண வேலைகள் நிறைவு பெற்ற பின்னர் அடுத்த ஆண்டு (2015) மகா கும்பாபிஷே கப் பெருவிழா இடம்பெற்று தொடர்ந்து மகோற்சவம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. "
ஜய வருடம் ஆனி - ஆடி

Page 8
Keerimalai: The spring
Prof N. Shani Former Vice Chancellor, Professor
Hindus recognize multiple Sources of power in the world around them, sacred forces in rivers, rocks, in village temples and hill top shrines. In this context Keerimalai spring and the
Naguleswaram temple are places of importance to the spiritual heritage of Hindus in Sri Lanka and South India. It had been a pilgrimage center of this cultural area. The Maha Kumbabishekant of the temple became a reality by the tireless efforts of Maharajasri Naguleswara kurukkal and the eternal prayers of the devotes gives a spiritual strength to the people and at the same time give an opportunity to re-visit and re-vitalize the cultural heritage of Keerimalai.
During this day of Kumbabishegam, inevitably our memories took us to the days of the Hindu Reformer, Arumuga Navalar and his call in 1894 to re-establish all the five ISWARAM temples, namely Naguleswaram (Thiru thambaleswaram), Thiruketheeswaram, Thirukoneswaram,
Muneswaram and Thondeswaram. In addition, it brings us to the reality that the repeated destructions of these treasured temples did not destroy the faith of the Hindus, and these temples were rebuilt to its original glory by the untiring efforts of the Hindus scattered throughout the country.
The historical roots of Keerimalai and Naguleswaram temple date back to ancient times. This temple is referred in Dakshina kailasa puranam and Skanda puranam. There are references of Nagulisa relating to early preceptors of Pasupatha school of Saivaism. There are references (Yalppana Vaipava malai} about the Sahasralingas 1000 lingams within the Lingam) of Naguleswaram The name of the nearby Fort, Sambuthurai is also related to be the site at which the Shivalingam has been brought to this temple from South India. There are also references to the same a sage Nagulamuni with the face of a mongoose who meditated in a cave in Keerimalai, after his continued devotion and prayers at Naguleswaram, Lord Shiva had mercy on him and restored his human form. The Tamil word 'Keeri' is synonym with the Sanskrit word Nagulam meaning mongoose. It is from this divine act that the name of Keerimalai is said to have been derived.
Another set of beliefs reputing Keerimalai spring, as a spring with curative powers. The story reveals that the Pandyan princess Maruthapuraveeka valli with the face of a horse came all the way to Sri Lanka to have a bath
(இந்து ஒளி

of our spiritual heritage
mugalingam of Sociology, University of Jaffna
in the spiritual spring and worship Naguleswararar in order to restore her human form. She too was able to get back her human face after a bath at the Keerimalai spring. As a tribute to the Gods for restoring her human form, she built the Maviddapuram Murugan temple and few other temples in the nearby villages. Thus one can see that a close link existed from very early times between the temple at Maviddapuram and Naguleswaram, the place name Koyil kadavai also signify this. All these myths, spiritual stories are "living stories in the memories of the people, and which are handed down from generation to generation.
The Hindus flock in large numbers on the day of 'Adi amavasi' which falls during the Tamil month of Adi to pay tribute to their ancestors in Hindu tradition. A river basin and the seashores are the sites where this ancestral worship is carried out. The sea at Keerimalai is also the spot where the ashes of the departed are finally mingled
with the sacred water and even the rituals are carried out by family members to their departed. In this regard the river basin and the sea are important to the Hindus where ever they live. The rivers symbolize the cyclic time span between birth and death. All the rivers eventually lead to the sea or the ocean. The rivers receive their significance due to this, particularly so in India. In this respect Kasi (Bennaris) probably enjoy the most widespread acclaim, but it is not a unique site for Hindus in any absolute sense. There are numerous other 'Kasis' throughout the Hindu land of India and Sri Lanka.
The Keerimalaitheertham receives importance in this regard, which is treated as a crossing place between the world for human beings after death, and also as a link between the divine and the human world and thus the place where the deities are supposed to appear on earth, it is an interesting coincidence that it is the day for the Lord of Maviddapuram Murugan's theertham and also the day when homage is offered to the dear departed following the theertham after a bath in the spiritual spring. This divine and human mix is experienced by people with a lot of excitement and beliefs.
Now I wish to record my own experiences and exciting socialization of Hindu rites and ancestral worship. From
my childhood onwards | accompanied my father to this sacred spot where my memories register a number of
au nGL 48ofl – 8,4)

Page 9
socio cultural activities in this area. The Naguleswaram templeand the connected madams {inns) in large numbers in the neighborhood like the Shirapar madam, Sadai amma madam were the centers of community gathering, spiritual exchanges and are some of the scenario by which I was socialized and which remain cherished in my memory even to this day. Other than the newly erected Sivaboomi madam, none of the traditional ones are now existing
People are longing for the revival of all these cultural centers and cherish the nostalgia of this rich tradition. Loosing these experiences in the last 3 decades or so is very painful and can never be forgiven in this regard, I wish to record that I was not able to carry out the last rites of my father in this traditional spiritual soil and to this day it remains painful to me. There must be hundreds and thousands of Sons who would have undergone this experience like me.
We have recorded such forms of mourning, nostalgia and remembrance as well as physical sickness and experiences of trauma, in our studies of displaced people.
But with the regaining of the spiritual journey to Keerimalai and the Maha Kumbabishekam of Nagulambikai Sametha Naguleswarar, gave new strength to the people and we were able to witness the hope and the happiness expressed in their faces. Naguleswarathan has graced us to witness this great occasion with a large number of devotees,
I பா ப I II II II II IT
நகுலேஸ்
கீரிமல
சி.
1ா 1
கீரிமலைத் தீர்த்தத்தின் சிறப்பும் நகுலேஸ்வரம் ஆலயத்தின் தொன்மையும்
கீரிமலை, மாவிட்டபுரம், காங்கேயன்துறை ஆகிய மூன்று கிராமங்களும் உள்ளடங்கிய பிரதேசம் கோயிற் கடவை என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. சிவபூமி என்று தவயோகி திருமூலநாயனாரால் அழைக்கப்பட்ட ஈழமணித் திருநாட்டின் வடக்கே மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற சிறப்புமிக்க திருத்தலமாக நகுலேஸ்வரம் திகழ்கிறது. புராதன காலத்தில் இவ்வாலயம் திருத்தம்பலேஸ்வரம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. நகுலேஸ்வரம் அமைந்துள்ள கீரிமலைத் தீர்த்தம், சாகர் சங்கம் தீர்த்தம், கண்டகி தீர்த்தம், கங்கா சமுத்திர சங்கமம் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. நகுலகிரிக்கு மேற்குப் பக்கத்திலே தெற்கிலுாறுகின்ற சுத்த நீரும், வடக்கிலுள்ள உப்பு நீரும் கலந்து கிழக்கு நோக்கிய சிவ
(இந்து ஒளி

I am unable to express my happiness"-one of the devotes expressed her emotion with tears. Another devotee drowned in happiness on seeing the beauty of the newly renovated temple Back to its original glory said that "Lord Nagulewaran has blessed us to return to our village; although we have no proper dwelling, but we are proud that our Nagulesan temple is beautifully rebuilt". One of my own village man from Kadduvan holding my hand with a firm grip lamented, 'when are we going back to our Village, that is my only prayer.....,being in keerimalai today gives me the fleeing that we will retrace our journey soon'.
People are bounded with places and have their deep roots in their ancestral land. Ancestry is viewed as a meaningful, legitimate, valuable, natural source of personal and collective identity. In fact as Eva Hoffman (1989) underlined, 'it is the soil of significance and that is Keerimalai , the spring of our Spiritual heritage.
(Courtesy Nagulanatham - 2012)
IT IT
வரம் என சிறப்புப்பெறும் லெச் சிவன் கோயில்
வத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம்
1பபபபபடடILIL Iப பபபபபபபபபப
ரூபமும் சக்தி ரூபமும் ஆக இருக்கின்ற இயப்பினாலே கங்கா சமுத்திர சங்கமம் என்றும், கண்டகி தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகின்றது.
கீரிமலையை நகுலகிரி என்றும் கூறுவர். நகுலமுனிவர் அங்கு தவம் செய்து தமது கீர்முகம்: மாறப் பெற்றமையினால் கீரிமலைக்கு நகுலமலை என்ற பெயரும் இறைவனுக்கு நகுலேஸ்வரர் என்ற நாமமும் இறைவிக்கு நகுலாம்பிகை என்ற நாமமும் ஏற்படலாயிற்று. யாழ்ப்பாணக் குடாநாட்டில் எழுச்சி பெற்ற சிவாலயங்களில் கீரிமலைச் சிவன் கோயில் மிகவும் தொன்மை வாய்ந்த ஆலயமாகும். கீரிமலைக் கடற்கரைப் பிரதேசத்தில் மக்கள் குடியேற்றமும் மற்றும் வேளாண் மை போன்ற தொழில்களும் வர்த்தகமும் ஆரம்பமாகிய காலம் முதலாகவே நகுலேஸ்வர ஆலயம் சிறப்பிடம் பெற்று வந்துள்ளது என்ற குறிப்பினைத் தட்ஷிண கைலாச புராணத்தில் காணலாம்.
சோழ இளவரசியாகிய மாருதப்புரவீகவல்லி குதிரை முகத்துடனும் குன்மவலி நோயுடனும் இருந்து அவஸ்தைப்பட்டாள். சந்நியாசி ஒருவரால் வழிப்படுத்தப்பட்ட
ஜய வருடம் ஆனி - ஆடி)

Page 10
மாருதப்புரவீகவல்லி கீரிமலைச் சாரலில் வந்திறங்கி நகுலமுனிவரிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கீரிமலைத் தலத்தின் விஷேடத்தையும் தீர்த்தத்தின் மகிமையையும் முனிவர் வாயிலாக அறிந்து கொண்டாள். கீரிமலைப் புனித தீர்த்தத்தில் நீராடி சிவாலய தரிசனமும் செய்து வந்த மாருதப்புரவீக வல்லியின் குன்மவலியுந் தீர்ந்து குதிரை முகமும் மாறியது.
மாருதப்புரவீகவல்லி எழில்மிகு இளமை வடிவத்தை மீண்டும் பெற்றுக் கொண்டாள். மகளின் குதிரை முகம் மாறப்பெற்றமையால் மகிழ்ச்சி அடைந்த சோழ அரசனால் கட்டப்பட்ட ஆலயமே மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் ஆகும். மாவிட்டபுரத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட முருகப்பெருமானின் விக்கிரகங்கள் வந்து இறங்கிய இடம் ஆகையால் காங்கேயன்துறை என்ற பெயர் ஏற்பட்டது.
இலங்கையை ஆட்சி செய்த முதல் சிங்கள அரசனாகிய விஜயன் இந்து சமயத்தவன் என்றே வரலாற்று நுால்கள் குறிப்பிடுகின்றன. இவன் தனது நாட்டையும் ஆட்சியையும் பாதுகாப்பதற்காக இலங்கையின் நான்கு எல்லைகளிலும் நான் கு ஈஸ்வரங்களையும் கட்டுவித்தான் என்றும், இவனால் வடக்கே கீரிமலையில் கட்டப்பட்ட ஆலயம்தான் திருத்தம்பலேஸ்வரம் என்றும் யாழ்ப்பாண வைபவ மாலை என்ற நுாலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கீரிமலைக்கு காந்தருவநகா', வீணாகானபுரம் என்ற பெயர்களும் வழங்கப்பட்டு இருந்ததாக யாழ்ப்பாண வைபவ கெளமுகி என்ற நுாலில் கல்லடி வேலுப்பிள்ளை அவர்கள் குறிப்பிட்டுள்ளார்,
நகுலேஸ்வரம் ஆலயத்தின் வரலாறு பற்றி ஆலயத்தின் பிரதமகுரு அவருடைய பவளவிழா மலருக்கு வழங்கிய செவ்வி.
நகுலேஸ்வரத்தின் மிக அநாதியான முதற்கோயில் கடலில் அமிழ்ந்துவிட்டது. இரண்டாவது கோயில் போர்த்துக்கேயரால் தரைமட்டமாக்கப்பட்டது. மூன்றாவது கோயில் ஈழப்போரில் சிதைவடைந்தது. இதுவே புதுப்பிக்கப்படுகிறது.
முதற்கோயில் கடற்கரையில் உள்ள மலையின் மீதிருந்தது. கடல்கோள் ஒன்று ஏற்பட்டபோது அக்கோயில் கடலுள் அமிழ்ந்துவிட்டது. அதன் கரையில் எஞ்சியிருந்த மலையின் மேல் பிற்காலத்தில் வைத்து வணங்கப்பட்ட சிவலிங்கம் இப்போதும் இருக்கிறது. இப்போதைய கேணிக்குப் பக்கத்தே சடையம்மா மடப்பக்கத்தில் அச்சிவலிங்கம் வைக்கப்பட்டுள்ளது. அதன் அருகே நன்னீர்ச் சுனை ஒன்றும் இருக்கிறது. இரண்டாவது கோயில் கி.பி.1621ஆம் ஆண்டு "அளவில் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போது சைவாலயங்கள் எல்லாவற்றையும் தரைமட்டமாக அழித்தவேளை நகுலேஸ்வரர் ஆலயமும் அழிந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கி.பி.1878ஆம் ஆண்டில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் வழிகாட்டலால் எம்மவர்கள் மூன்றாவது கோயிலைக் கட்டி எழுப்பினார்கள். மூன்றாவது கோயில் 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் திகதி கேதார கௌரி விரத விழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கெளரிநுால் பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் கோயிலின் மேல் பல விமானக் குண்டுகள் வீசப்பட்டுக் கோயில் அழிவுக்குள்ளானது.
(இந்து ஒளி -

நாவலரும் கீரிமலைச் சிவன் கோயிலும்
1378ஆம் ஆண்டு வைகாசித் திங்கள் 24ஆம் நாள் கீரிமலைச் சிவன் கோயில் என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரம் ஒன்றை நாவலர் வெளியிட்டார்.
| ""யாழ்ப்பாணத்திலே மாவிட்டபுரத்திற்கு வடமேற்கே இரண்டு மைல் துாரத்தில் உள்ள கீரிமலையிலே ஆதியில் ஒரு பெரிய சிவன் கோயில் இருந்தது. அது போர்த்துக்கீசரால் இடிக்கப்பட்டது. கீரிமலையின் அடியினின்றும் சுத்தசலம் ஊற்றெடுத்துக் கடலினுள்ளே பாய்கின்றது. அந்தச் சங்கமம் புண்ணிய தீர்த்தம் என்று விசுவாசித்தன்றோ யாழ்ப்பாணம் எங்கும் உள்ள சைவசமய சனங்கள் விசேஷ தினங்களில் அங்கே போய் ஸ்நானம் செய்கிறார்கள். அநேகர் அங்கே சங்கற்பஞ் செய்து ஒரு மண்டலம் அரை மண்டலம் எஸ்நானம் செய்து கொண்டிருக்கிறார்கள். அநேகர் அந்தியேஷ்டி, சிரார்த்தம் முதலிய கிரியைகளை அங்கே போய்ச் செய்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஸ்நானம் செய்த உடனே சுவாமி தரிசனம் செய்யும் பொருட்டு அங்கே ஒரு கோயில் இல்லையே. யாழ்ப்பாணத்தில் எத்தனையோ இடங்களிலே கோயில் சமீபத்தில் இருக்கவும் புதிது புதிதாக கோயில் கட்டுகின்ற நம்மவர்கள் எல்லாச் சனங்களுக்கும் பொதுத் தலமாகிய கீரிமலையிலே ஒரு கோயில் கட்டுவிக்க இது. வரையும் நினையாததென்னையோ?
கீரிமலையிலே ஒரு கோயில் கட்டுவித்துச் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்வித்து நித்திய பூசை நடாத்துவிப்பது மேலாகிய சிவ தருமம். தல் விஷேட தீர்த்த விஷே டத்தோடு மூர்த்தி விசேடமும் கூடுமாயின் மிக நலமாமே. யாழ்ப்பாணத்துச் சனங்கள் தங்கள் தங்களால் இயன்ற பொருளுதவி செய்வார்களானால் இந்தச் சிவ தருமத்தை தொடங்கி நிறைவேற்றலாம்."
கீரிமலைச் சிவன் கோயிலை மீண்டும் கட்டுவதற் குரிய காலமும் இடமும் பற்றிச் சோதிட வல்லுனரான இரகுநாதையருடனும் அராலிச் சிற்பாசாரியார் சு.சுவாமி நாதருடனும் நாவலர் கலந்து ஆலோசித்தார். அவ்வுத்தமோத்தம் சிவதருமத்தின் பொருட்டுப் பொதுமக்களின் பொருளுதவியை நாவலர் நாடினார். நாவலர் கீரிமலையில் சிவாலயம் அமைக்க எடுத்த முயற்ச்சி நிறைவேற முன்பு அவர் சிவபதம் அடைந்துவிட்டார். இவருடைய வேண்டுகோளை ஏற்ற சைவப் பெருமக்கள் விழிப்புற்று இவ்வாலயப் பணியினை நிறைவேற்றினர்.
நகுலேஸ்வரர் வரலாறு கூறும் நுால்கள்
வடமொழியில் உள்ள கூத சம்ஹிதை, மகாபாரதம், மதஸ்ய புராணம், தக்ஷண கைலாய மான்மியம் முதலான நுால்களில் நகுலேஸ்வரர் ஆலயத்தின் வரலாறு பற்றிக் கூறப்பட்டுள்ளது. இத்தலத்தின் மேன்மையைக் கூறும் நூல்களாகத் தமிழ் மொழியில் யாழ்ப்பாண வைபவமாலை, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சரித்திரம், நகுலாசபுராணம், நகுலேஸ்வரமான்மியம், நகுலமலைக் குறவஞ்சி, நகுலேஸ்வர பூங்கொத்து, நகுலேஸ்வரர் சதகம், நகுலேஸ்வரர் ஊஞ்சல் ஆகிய நுால்கள் காணப்படுகின்றன.
(நன்றி : ஈழத்துச் சிவாலயங்கள்)
ஜய வருடம் ஆனி - ஆடி)

Page 11
ஈசனானானனானான
கீரிமலை சிவபூமி
(செஞ்சொற்செல்வர் க 能是一些类是集类是类是类是类是类类
சரித்திரப் பிரசித்தி பெற்ற கீரிமலை தீர்த்தத்தின் மகிமையை அறியாத சைவமக்கள் இல்லை எனலாம். பஞ்சு ஈஸ்வர தலங்களில் ஒன்றாக நகுலேஸ்வரப்பெருமான் குடிகொண்டிருக்கும் புண்ணியபூமி கீரிமலை. ஈழத்திருநாட்டின் வரலாற்றை எழுதுபவர்கள் பஞ்சாப்வரங்களை தவிர்த்து வரலாற்றை எழுத முடியாது. இலங்கை வேந்தன் இராவணன் காலத்தில் ஈழத்திருநாட்டின் கடல் எல்லைகள் யாவும் சிவசேத்திரங்களாக காட்சியளித்ததை இதிகாசபுராணங்கள் எடுத்து இயம்புகின்றன. கீரிமலை நகுல்கிரி என்றும். கண்டகிசேத்திரம் என்றும் பல நாமங்களால் பேசப்படுகின்றது ஏழு ஜென்மத்துப் பாவங்களையும் கழுவக்கூடிய புண்ணிய தீர்த்தக்கரையை நாடி பலநூறு சந்ததி பண்டுதொட்டு நீராடி வந்தது. கீரிமலை கடல் சூழலில் சித்தர்கள், யோகிகள், தவஞானிகள், முனிவர்கள் தவம் செய்து அருளாட்சி செய்த
வரலாறு இன்றும் பேசப்படுகிறது.
தீர்த்தக் கரையிலே நிம்மதி தேடி வருபவர்கள் தங்கு வதற்கு எத்தனையோ சத்திரங்கள், மடங்கள், தாகசாந்தி நிலையங்கள், கட்டிடங்கள் முன்னோர்களால் அமைத்து பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்தன. இருநூற்றி ஐம்பது
வருடங்களிற்கு மேற்பட்ட வரலாறு கொண்ட சத்திரங்கள், மடங்கள் காலத்திற்கு காலம் தேய்ந்து கடந்த முப்பது ஆண்டுகளாக நடைபெற்ற கடும் போரின் போது முற்றாக அழிந்தொழிந்து போயின. மடங்கள் இருந்த இடங்கள் கீளமுற்றுப் போய் மரஞ்செடிகள் காடு போல் காட்சியளிக் கின்றன. கடற்படையின் அரண்களும் தரைப்படையின் தடைகளும் கீரிமலையை போர்ப் பூமியாக இன்றும் அடையாளப்படுத்துகின்றன. சிவராத்திரி நாளிலும், ஆடி அமாவாசை நாளிலும் கடல் பகுதியில் சிறிய பாதை திறக்கப்பட்டு நீராட அனுமதிக்கப்படுகின்றது.
பலவருடமாக யாழ்ப்பாணத்து மக்கள் இறந்தவரின் அஸ்தியை கீரிமலையில் கரைக்க முடியாமல் தவித்தனர் தற்போது அழிந்துபோன அந்தியேட்டிமடமும் மீளவும் உயிர் பெற்றுள்ளது. கீரிமலைக்கு வரும் மூத்தோர் அன்றைய கீரிமலை சூழலை மீளவும் நினைவூட்டி உள்ளத்தால் அழுவார்கள், மோர்க்குடம், அன்னதானம் வழங்கிய மடங்கள் புராணப் படிப்புக் கேட்ட சத்திரங்களின் கதை கனவாகிப் போயின.
அடியேன் சிறுபராயத்தில் எனது பெற்றோரோடும், என் தாய் மாமனோடும் மிக விருப்பமாகப் போய் நீராடி வழிபாடு செய்த கீரிமலையை அகத்திலே இருத்தி அடிக்கடி மீளவும் நினைவூட்டுவேன். கீரிமலை நகுலேஸ்வரப்பெருமான் கோவிலில் இராஜரீ. கு. நகுலேஸ்வரக் குருக்கள் ஐயா அவர்களின் ஆற்றுப்படுத்தலில் பலதடவை உரையாற்றும் வாய்ப்புப் பெற்றவன் யான். குருக்கள் அவர்களின் அன்பினால் நகுலேஸ்வர ஆலயத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களில்
(இந்து ஒளி

சளசாராசாராசராசனாசனா
மடம் பிறந்த கதை
--லாநிதி ஆறு. திருமுருகன்)
பி பி பி சி வி வி வி வி வி வி வி வி வி வி வி விடடவிடடிவி'
கடந்த சில வருடங்களாக பங்குபற்றி வருகிறேன். அவ்வகை யில் 2011ஆம் ஆண்டு ஆடி அமாவாசை அன்று காலை கீரிமலையில் தீர்த்தமாடிய பின் எனது தந்தையின் பிதிர்க் கடனை செய்துவிட்டு உரையாற்றுவதற்கு ஆயத்தமானேன். கடலுக்குள் என்னை மறந்து மூக்குக்கண்ணாடியுடன் இறங்கி விட்டேன். அலைகடலில் என் கண்ணாடி அள்ளுண்டுபோனது. வெளியே வந்து கண்ணாடியை இழந்த நிலையில் நின்ற போது வயது முதிர்ந்த ஒருவர் எனக்கு அருகே வந்து "தம்பி" என்று அன்போடு அழைத்தார். "கீரிமலையில் ஒரு நிழல் கூட இல்லை. தாகத்திற்கு தண்ணீர் குடிக்க தண்ணீர்ப் பந்தலோ மடமோ ஏதுமில்லை. என்ர அப்பு ஒரு சிறு கொட்டிலாவது கீரிமலையில் போட்டு வருகிற போகிறவர்கள் ஆறுதலடைய வழிசெய்" என்றார். அவர் எனக்கு முன்பின் தெரியாதவர். அவருக்கு என்னை நன்றாகத் தெரிகிறது. நான் அவரைப் பார்த்து சிரித்துவிட்டு நகுலேஸ்வரப்பெருமான் கோவிலுக்கு எனது உரைக்காக சென்றுவிட்டேன்.
அந்த வயோதிபரின் வார்த்தைகள் அன்று முழுவதும் என் சிந்தனையில் நிழலாடியது. ஆடி அமாவாசை முடிந்து ஆறாவது நாள் நல்லூர் கொடியேற்றம் நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் இருபத்தைந்து நாட்களும் அன்னதானம், அந்தப் பணியில் நின்ற வேளை கீரிமலையிலும் அடியார் களுக்கு சோறு போடவேண்டும் என்ற ஆவல் என்னுள்ளத்தில் வளர்ந்தது. கீரிமலை கடற்சூழலில் உள்ள காணிகளின் உரித்தாளர்கள் பற்றி பலரிடமும் விசாரிக்கத் தொடங்கினேன். சில் காணி உடமையாளர்களிடம் நேரில் சென்று கேட்டேன். அவர்கள் எல்லாம் யோசிப்போம் என்கிறார்களே தவிர என் ஆதங்கத்திற்கு செவிசாய்ப்பதாக இல்லை.
துர்க்கை அம்பாளுடைய மகோற்சவம் ஆரம்பமாகி சில திருவிழாக்கள் கடந்து கொண்டிருக்கின்றபோது தேவஸ்தான நிர்வாக சபையின் உபதலைவர்களான திரு.ச.ஆறுமுகநாதன் அவர்களும், திரு, சி, அருளானந்தசிவம் அவர்களும்"உங்களைச் சந்திப்பதற்கு கீரிமலை கடற்கரையில் செகராஜசிங்க மடத்தைப் பராமரித்த அமரர் விஸ்வநாதன் ஆசிரியர் அவர்களின் பிள்ளைகள் இன்று வருவார்கள்" என்று கூறினர். அன்று முற்பகல் பத்து மணியளவில் அமரர் விஸ்வநாதன் ஆசிரியர் அவர்களின் பிள்ளைகள் மருமக்கள் சந்தித்தனர். "மடம் ஒன்று கட்டுவதற்கு நிலம் தேடுகிறீர்களாம் எங்கள் குடும்பத்தின் மடம் அழிந்து போய் காட்சியளிக்கின்றது. அம்மடக் காணியை மனப்பூர்வமாக உங்கள் சிவபூமி அறக்கட்டளைக்கு நாம் அன்பளிப்பாக வழங்க முன்வந்துள் ளோம்" என்றனர்.
கடவுள் மனிதவடிவத்தில் வருவதை என் வாழ்வில் பல தடவை உணர்ந்திருக்கின்றேன், ஓரிரு நாட்களில் விஸ்வ நாதன் ஆசிரியர் அவர்களின் மருமகன் திரு.முருகதாஸ் ஆசிரியர் அவர்களும் பாரியாரும், ஆனைக் கோட்டையைச்
ஜய வருடம் ஆணி - ஆடி)

Page 12
சேர்ந்த சட்டத்தரணி திரு.மா.தியாகராஜா முன்னிலையில் மடத்திற்குரிய உறுதி முடித்து கையளித்தனர். கனவு நனவா வதற்கு காணி கிடைத்தது. மடம் கட்டுவதற்கு என்னிடம் காசு இல்லை. சிவபூமி அறக்கட்டளை என்னும் சுமையை சுமந்துகொண்டு திரிபவன் யான். சிவபூமி பாடசாலை, சிவபூமி முதியோர் இல்லம், சிவபூமி விவசாயப் பண்ணை என சிவபூமி கடமைகள் விரிந்து கொண்டிருக்கின்ற போது கீரிமலையில் மடமா? பணத்திற்கு என்ன செய்வீர் என சிவபூமி நிர்வாக சபையை சேர்ந்த அன்பர்கள் என்னை (நோக்கி கேள்விகள் தொடுத்தனர். கடவுள் வழிவிடுவார் என்று கூறினேன். அமெரிக்காவில் வாழும் தவத்திரு ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் அவர்களுக்கு இச்செய்தியை தொலைபேசி மூலம் கூறினேன். அவர் உடனடியாக ரூபா பத்து இலட்சம் அனுப்பி வைத்தார். கட்டிடப் பொறியியலாளர் ஊரெழு சண்முகநாதன் அவர்களை நாடினேன். ஆவணி சதுர்த்தி அன்று மடம் கட்டப்போகும் காணிக்குள் கற்பூரதீபம் ஏற்றி தேங்காய் உடைத்தேன். காவலுக்கு நின்ற கடற்படையினர் (கேள்விகள் தொடுத்தனர். அனுமதியின்றி எதுவும் செய்யக்கூடாது என விளக்கினர். ஆவணி மாதத்து கடைசி நன்னாளில் அத்திவாரமிட திட்டமிட்டேன். இராஜரீ. நகுலேஸ்வர குருக்களை ஆசிர்வதித்து பூர்வாங்க கிரியைகளை தொடங்கி வைக்குமாறு கேட்டுக் கொண்டேன். செப்ரெம்பர் மாதத்தில் வேலைகள் தொடங்கின. தை மாதம் நடைபெறும் நகுலேஸ்வர கும்பாபிஷேகத்திற்கு வரும் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கவேண்டுமென ஆதங்கப் பட்டேன். என் வேண்டுதலை சிவபரம் பொருள் தலை மேற் கொண்டு நிறைவேற்றி வைத்தார். பிரமாண்டமான சிவபூமி மடம் 28.01.2012 அன்று ரிஷி தொண்டுநாத சுவாமிகள் அவர்களால் மங்களகரமாக திறந்து வைக்கப்பட்டது. சிவபூமி மடத்தில் ஏழு அறைகள், சமையலறை, களஞ்சிய அறை, குளியலறை அனைத்தும் நவீன முறையில் அமைக்கப் பட்டது. கண்டவர்கள் அதிசயப்பட்டனர். நான்கு மாத காலங் களில் சிவபூமி மடம் உருப்பெற்றது தெய்வத் திருவருளாகும்.
சிவபூமி மடத்தின் வளவில் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஆதரவில் இருமாடி கட்டிடம்.
சிவபூமி மடத்தின் துரித வளர்ச்சிக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் அளப்பரிய தொண்டு செய்துள்ளது.சிவபூமி அறக்கட்டளையின் வேண்டுதலுக்கமைய இந்து மாமன்றத்தின் முகாமைப் பேரவை கீரிமலையில் புதிய மாடிக் கட்டிடத்தை கட்டுவதற்கு அங்கீகாரம் வழங்கியிருந்தது. மாமன்றத்தின் கெளரவ தலைவர், மனிதநேயர் திரு. வி. கயிலாசபிள்ளை தம்பதிகளும் கெளரவ செயலாளர் பிரபல சட்டத்தரணி திரு.கந்தையா நீலகண்டன் அவர்களும் பொருளாளர் திரு. (வே.கந்தசாமிகணக்காளர்) அவர்களும் உபதலைவர் திரு சி.அருளானந்தம், உபதலைவர் தவயோகராசா தம்பதிகளும் கீரிமலைக்கு நேரில் வருகை தந்து இந்து மாமன்ற கட்டிட வேலைகளை ஆரம்பிக்க ஆதரவளித்தனர். சிவபூமி மடத்துக்கு அருகில் அடியவர்கள் தங்கிச் செல்வதற்கான இருமாடிக் கட்டிடங்கள், நவீன வசதிகளைக் கொண்ட அறைகள் அனைத்தும் உள்ளடங்கிய பிரமாண்டமான கட்டிடத்தொகுதி அமைக்கப்பட்டது. இறையருளாலும் பெரியவர்களின் ஆசியாலும் கீரிமலையில் சிவப்பணி சிவபூமி என்ற நாமத்தோடு தொடர்கிறது.
(நன்றி : நகுலநாதம் - 202)
(இந்து ஒளி

புதிய மாடிக்கட்டிடத் திறப்பு விழா
பஞ்ச ஈஸ்வரங்களுள் ஒன்றாகவும் வடமாநில மக்களின் புண்ணிய தலமாகவும் சிறப்புப் பெறும் கீரிமலை நகுலேஸ்வர ஆல யத் துக்கு சமீபமாக கண்டகி தீர்த்தக்கரையில் அமைக் கப்பட்ட சிவபூமி மடம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திக தியன் று திறந்து வைக்கப்பட்டது. கீழ்த்தளம் மற்றும் மேல் மாடி கொண்டதான இந்தப் புதிய கட்டிடத்தின் தள மண்டபம் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் நிதியுதவியுடனும், மேல் மாடி மண்டபம் மாமன்றத்தின் அறங்காவலர் சபைத் தலைவர் மனிதநேயமாமணி வி.கயிலாசபிள்ளை அவர்களது குடும்பத்தினரின் நிதியுதவியுடனும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கீழ்த்தள மண்டபத்தை மாமன்றத் தலைவர் திரு.கந்தையா நீலகண்டன் அவர்களும், மேல் மாடி மண்டபத்தை மாமன்றத்தின் அறங்காவலர் சபைத் தலைவர் மனிதநேயமாமணி வி.கயிலாசபிள்ளை தம்பதியினரும் திறந்து வைத்தார்கள். |
மாமன்ற உபதலைவர் செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் தலைமையில் நடந்த இந்த வைபவத்தின் போது நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், ஆன்மீகச் சுடர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள், கீரிமலை நகுலேஸ்வர ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ நகுலேஸ்வரக்குருக்கள், மாவிட்டபுரம் முருகன் ஆலய பிரதம குரு மஹாராஜஸ்ரீ இரத்தினசபாபதிக் குருக்கள் ஆகியோர் ஆசியுரைகள் வழங்கினார்கள். மாமன்றத் தலைவர் திரு. கந்தையா நீலகண்டன் அவர்களும், மனிதநேயமாமணி வி. கயிலாசபிள்ளை அவர்களும் சிறப்புரையாற்றினார்கள். அன்றைய திறப்புவிழா வைபவத்தின் சிறப்பு அம்சமாக துர்க்காபுர மகளிர் இல்லப் பிள்ளைகள் வழங்கிய "வள்ளி திருமணம்" இசை நாடகமும், சிவபூமி பாடசாலை மாணவர்கள் வழங்கிய கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. | 11 தள மண்டபமானது கலையரங்கம் மற்றும் நவீன வசதிகள் கொண்ட பதினொரு அறைகளுடனும், மேல் மாடி மண்டபமானது "கயிலாசபிள்ளை கோட்டம்" என்ற பெயரில் கலைக்களஞ்சியம் என்ற அமைப்பில் யாழ்ப்பாணத்து பழம்பெரும் கலைஞர்களின் புகைப்படங்கள் பாரம்பரியமாக பயன்பாட்டிலிருந்த பித்தளைப் பாத்திரங்கள் மற்றும் மண்ணாலான சட்டி பானைகள் போன்ற செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன் அவர்களது சேகரிப்புக்கள் உள்ளடக்கியதாகவும் அமைந்துள்ளது.
கீரிமலையில் சிவபூமி அறக்கட்டளையினரால் 2012 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட சிவபூமி மடத்துடன் இணைந்த வகையில் இந்தப் புதிய மாடிக்கட்டிடமும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜய வருடம் ஆனி - ஆடி,

Page 13
முத்தமிழ் வித்த
- ஒரு
சைவமும் தமிழும் சிறப்பான வளர்ச்சி பெறுவதற்கு பெரும் தொண்டாற்றிய ஈழத்து தமிழ் அறிஞர்களுள் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியவர் சுவாமி விபுலானந்தர் அவர்கள். மட்டக்களப்பு மாவட்டத்தின் காரைதீவு என்ற சிற்றூரில். 1897ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் திகதி சாமித்தம்பி கண்ணம்மையார் தம்பதியினருக்கு புதல்வனாக அவதரித்த இவரது இயற்பெயர் மயில்வாகனம் என்பதாகும்.
சின்னஞ்சிறு வயதிலேயே கல்வி கற்பதில் ஆர்வமிக்கவராக விளங்கிய இவர் தமிழ்மொழிமீது வைத்திருந்த அளவிலாத பற்றும், பாசமும் காரணமாக பழந்தமிழ் இலக்கியங்களையும் படித்து அறிவதில் காலத்தைச் செலவிட்டார். இதுவிஷ யத்தில் இவரது பெற்றோரும் ஆசிரியர்களும் பெரிதும் துணைபுரிந்தனர். இவர் ""நன்னூால்" என்ற பழந்தமிழ் நூாலைக் கற்கும்போது செய்யுள்களின் தன்மைகளை உணரலானார். இதனால், தனது பன்னிரண்டாவது வயதிலேயே, தாமாகவே செய்யுள் இயற்றும் திறமையைப் பெற்றார், பிறரின் துணையின்றி அணி யாப்பு வகைகளையும் கற்றார்.
இவர் தனது பத்தாவது வயதிலிருந்தே ஆங்கிலத்தையும் கற்க ஆரம்பித்தார். இதற்காக 1902ஆம் ஆண்டில் கல்முனை மெதடிஸ்த கல்லுாரியில் சேர்க்கப்பட்டார். நான்கு ஆண்டுகளின் பின்னர், மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் உயர்கல்வியைத் தொடர்ந்தார். கேம்பிறிட்ஜ் ஜு
னியர், கேம்பிறிட்ஜ் சீனியர் பரீட்சைகளில் சித்தியடைந்ததைத் தொடர்ந்து, 1911ஆம் ஆண்டு கொழும்பு அரசினர் ஆசிரிய கலாசாலையில் சேர்ந்து கொண்டார். மறுவருடம் (1912) ஆசிரிய கலாசாலைப் பரீட்சையில் சித்தியடைந்ததைத் தொடர்ந்து மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லுாரியில் இரண்டு வருடகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார்,
இவர் மொழி, இலக்கியத் துறைகளில் மட்டுமல்ல, வி ஞ் ஞானத் துறை யி லும் தனது திறமையை வெளிப்படுத்தியிருப்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. 1915ஆம் ஆண்டு கொழும்பு அரசினர் பொறியியற் கல்லுாரியில் சேர்ந்து கல்வி பயின்று, 1916ஆம் ஆண்டு பொறியியல் டிப்ளோமா பரீட்சையில் சித்தியடைந்தார். விஞ்ஞானக் கல்வியை ஆங்கிலத்தில் கற்றாலும், தமிழ் மொழியின் இலக்கண, இலக்கியங்களை மேலும் கற்றறிவதில் ஏற்பட்டிருந்த ஆர்வத்தை அவர் கைவிடவில்லை.
1916ஆம் ஆண்டு மதுரை தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் முதன்மையாக தேர்ச்சியடைந்து பண்டிதர் பட்டத்தையும் பெற்றார். இதனால், இலங்கையிலிருந்து இப்பட்டத்தை முதன்முதலாகப் பெற்றவர் என்ற பெருமைக்குரியவரானார்,
1917ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியராகக் கடமையாற்றினார். இதனைத் தொடர்ந்து 1920ஆம் ஆண்டு மானிப்பாய் இந்துக் கல்லுாரியின் அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார். (இந்து ஒளி

தகர் சுவாமி விபுலானந்தர் |
வரலாற்றுப் பதிவு )
அ. கனகசூரியர் )
இலங்கையில் தமிழ்மொழியைப் போற்றி வளர்க்க - ஓர் அமைப்பு இல்லாததைக் கண்டு, தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக அறிஞர்கள் பலரையும் கலந்து ஆலோசித்து தனது அயராத முயற்சியின் பயனாக "யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம்” என்றதொரு கழகத்தை அமைத்து தமிழை வளர்க்கலானார். இந்த சங்கத்தின் மூலம் பிரவேசப் பண்டிதர், பால் பண்டிதர், பண்டிதர் ஆகிய மூன்று தேர்வுகளை ஏற்படுத்தினார். இவரது இந்த முயற்சி, எத்தனையோ பண்டிதமணிகளை நாட்டிற்கு அளிப்பதற்கு பேருதவியாக இருந்துள்ளது.
1977ஆம் ஆண்டு இவரது வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது என்று சொல்லலாம், அதிபர் பதவியைத் துறந்து, சென்னை மயிலாப்பூரிலுள்ள இராமகிருஷ்ண மிஷனில் சேர்ந்து பிரமச்சரிய தீட்சையையும், சந்நியாச தீட்சையையும் பெற்றார். இவருக்கு அங்கு *பிரபோதசைதன்யர்" என்ற தீட்சா நாமம் வழங்கப்பட்டது.
சென்னையிலிருந்த காலத்தில் பல்வேறுபட்ட தமிழ், இலக்கியப் பணிகளில் ஈடுபட்டார். சென்னை மயிலாப்பூர் இராமகிருஷ் ணமிஷன் வெளியிட்ட "இராமகிருஷ்ண விஜயம்" என்ற தமிழ் சஞ்சிகைக்கும், "வேதாந்த கேசரி” என்ற ஆங்கில சஞ்சிகைக்கும் ஆசிரியராகவிருந்தார். இந்த காலகட்டத்தில் டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர், தமிழ்க்கடல் திரு.வி.கல்யாணசுந்தரனார் போன்ற பெரும் தமிழ் அறிஞர்களின் நட்பும் கிடைத்தது. இக்காலத்தில் மதுரை தமிழ்ச் சங்கத்தின் விழாக்களில் கலந்து கொண்டு பல இலக்கிய ஆய்வுரைகளை நிகழ்த்தினார். மதுரை தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டிதர் பரீட்சையின் பரீட்சகராகவும் பணியாற்றினார். தமிழ்ச் சங்க வெளியீடான "செந்தமிழ்" என்ற சஞ்சிகையில் பல இலக்கியக் கட்டுரைகளை தொடர்ந்து எழுதிவந்தார்.
துறவறத்துக்குரிய கடமைகளை ஒழுங்காகப் பூர்த்தி செய்திருந்த பிரபோதசைதன்யருக்கு 1924ஆம் ஆண்டு சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தில் மயிலாப்பூர் இராமகிருஷ்ண மிஷன் தலைவராகவிருந்த சுவாமி சிவானந்தரால் ""சுவாமி விபுலானந்தர்" என்ற துறவறப் பெயர்
வழங்கப்பட்டது.
1925ஆம் ஆண்டு சுவாமி விபுலானந்தர் தாயகம் திரும்பி சமய சமூகப் பணிகளை மேற்கொண்டார். இலங்கையிலுள்ள இராமகிருஷ்ண மிஷன் பாடசாலைகளை பராமரிக்கும் முகாமையாளரானார். மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பாடசாலைகளை நிறுவியுள்ளமை சுவாமிகளின் சமூக, கல்விப் பணிக்கு சிறப்பான எடுத்துக்காட்டாகும், கல்வியின் மூலமே சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதில் சுவாமிகள் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.
11
ஜய வருடம் ஆனி - ஆடி

Page 14
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சைவமும் தமிழும் தழைத்தோங்க பெரும் பணியாற்றியதுபோலவே சுவாமி விபுலானந்தரும் மட்டக்களப்பு, யாழ்ப்பாண மாவட்டங்களில் மட்டுமன்றி மலையகப் பகுதிகளுக்கும் சென்று சைவமும், தமிழும் வளரும் வகையில் ஆற்றிய சேவைகளை வரலாற்றுப் பதிவுகள் சிறப்பாக எடுத்துச் சொல்லுகின்றன, மட்டக்களப்பு நகரத்தில் ஆங்கிலக் கல்வியை வளர்க்க சில கல்லூரிகள் இருந்தபோதிலும், சைவசமயத்தவர்கள் அதிகமாக வாழும் அங்கு சைவசமய நெறிகளைப் பரப்புவதற்கு ஆங்கிலக் கல்லுாரியொன்று இல்லாதது சுவாமிகளுக்கு ஒரு பெரும் குறையாகத் தெரிந்தது.
மட்டக்களப்பில் அப்பொழுது கல்லூரி ஆரம்பிக்கக்கூடிய இடவசதி இல்லாததினால், சிறிது தொலைவிலிருந்த கல்லடி - உப்போடை என்ற ஊரில் காடாகக் கிடந்த ஒரு இடத்தை தெரிவு செய்து, பலரது உதவிகளைப் பெற்று, கல்லுாரி நிறுவும் பணியினைத் தொடங்கினார். 1920ஆம் ஆண்டு மே மாதத்தில் கல்லூரி இயங்கத் தொடங்கியது. ''சிவானந்த வித்தியாலயம்" என்ற பெயரை இந்தக் கல்லுாரிக்குச் சூட்டியதன் மூலம், சுவாமி விபுலானந்தர் தனது குருமீது வைத்திருந்த பக்தியின் சிறப்பை நன்கு தெரிந்து கொள்ளமுடிகிறது.
1931ஆம் ஆண்டு சென்னை சிதம்பரத்திலுள்ள அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராகப் பதவியேற்றதன் மூலம், தமிழ்நாட்டின் முதலாவது தமிழ்ப் பேராசிரியர் என்ற பெருமையை நமது நாட்டைச் சேர்ந்த சுவாமி விபுலானந்தர் பெற்றிருக்கிறார்.
இமயமலைச் சாரலிலுள்ள இராமகிருஷ்ண மிஷன் வெளியிட்ட "*பிரபுத்தபாரத" என்ற ஆங்கில மாத இதழின் ஆசிரியராக சில காலம் சிறப்பான சேவையாற்றியிருக்கிறார். இந்த இதழில் தமிழ்மொழியின் சிறப்புப் பற்றியும், தமிழ்ப் பண்பாட்டின் உயர்வு பற்றியும், சைவசமய தத்துவங்களைப் பற்றியும் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். பு.
1943ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதலாவது. தமிழ்துறைப் பேராசிரியராகப் பதவியேற்றார். அத்துடன் கல்விப் பகுதி பாடநூாற்சபை, தேர்வு சபை, கல்வி ஆராய்ச்சி சபை ஆகியவற்றின் கெளரவ உறுப்பினராகவும் திகழ்ந்தார். பாடசாலைகளில் சைவசமயம் படிப்பிக்க வேண்டும் என்ற திட்டம் ஏற்பட்டபோது, சமயத்திற்காக ஒரு
திட்டத்தை சுவாமிகள் வகுத்துக் கொடுத்தார்.
(யாழ் கீரிமலை புனித பூமி
நீத்தார் நினை
அகில இலங்கை இந்து மாமன்றத்தில் இணைந்திரு அமரத்துவமடைந்த முன்னோர்களை நன்றி மறவாது நினை ஆம் திகதி காலை கீரிமலை புனித பூமியில் மாமன்றம் ஏற்பா
இந்த நிகழ்வின்போது அமரத்துவமடைந்தவர்கள செய்வதற்கான ஒழுங்குகளை மாமன்றம் மேற்கொண்டிரு விரும்புவர்கள் அவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்கான
(இந்து ஒளி

இயல், இசை, நாடகம் எனும் முத் தமிழைக் கற்றுணர்ந்து, அவற்றின் தனித்துவத்தையும் சிறப்புக்களையும் வெளிப்படுத்தியதன் வாயிலாக ஆற்றிய நற்பணியின் காரணமாக "முத்தமிழ் வித்தகர்" என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட சுவாமி விபுலானந்தர் கட்டுரைகள், பாடல்கள் அடங்கிய பல நுால்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவற்றுள் ஒன்றுதான் மதுரை தமிழ்ச் சங்க வெளியீடாக வந்துள்ள ''மதங்க சூளாமணி" என்ற நாடக நுாலாகும்.
சைவசமயத் தத்துவங்களில் ஆழ்ந்த புலமையும், தெளிந்த அறிவும் பெற்றிருந்த சுவாமிகள், தனது சமயச் சிந்தனைகளைப் பல் கட்டுரைகள், நுால்கள் வாயிலாக வடித்துள்ளார். நடராச வடிவம், தில்லைத் திருநடனம் போன்ற நூல்கள் அவரது சமயச் சிந்தனைகளை வெளிப்படுத்துவனவாக அமைந்திருப்பது சிறப்பாக நோக்கத்தக்கது. இவை தவிர, அவர் இயற்றிய கணேச தோத்திர பஞ்சகம், கதிரையம்பதி மாணிக்கப்பிள்ளையார் இரட்டை மணிமாலை, குமரவேள், நவமணிமாலை, கங்கையில் விடுத்த ஓலை, மகாலஷ்மி தோத்திரம், ஈசன் உவக்கும் இன்பமலர் போன்ற கவிதைகள் இறைபக்திக்குச் சான்றாக விளங்குகின்றன. எம்மதமும் சம்மதம் என்ற உயர்ந்த கருத்துக்கமைய சுவாமிகள் அனைத்து சமயங்களையும் மதித்து அவற்றின் சிறப்புக்களை தனது ஆக்கங்கள் வாயிலாக வெளிப்படுத்தியிருப்பதையும் சிறப்பாகக் குறிப்பிடலாம்,
சுவாமி விபுலானந்தரின் தமிழ்த் தொண்டால் தலை சிறந்து விளங்குவது அவருடைய ''யாழ்நூல்” ஆராய்ச்சியாகும். சுவாமிகள் பதினைந்து ஆண்டுகாலம் ஆராய்ந்து கண்டுணர்ந்த யாழ்நுாலினை 1947ஆம் ஆண்டு மே மாதம் திருக்கொள்ளம் புதுார் திருக்கோயிலில் அரங்கேற்றினார்.
யாழ்நூல் அரங்கேற்றத்துக்குப் பின்னர் நாடு திரும்பிய சுவாமி விபுலானந்தர் சுகவீனமடைந்து கொழும்பில் சிகிச்சைபெறும் வேளையில், அதே ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதி இறைவனடி சேர்ந்தார்.
சுவாமி விபுலானந்தர் மறைந்து அரை நுாற்றாண்டு காலத்திற்கும் மேலாகி விட்ட போதிலும் அவரது கல்விப் பணியும், அவர் விட்டுச் சென்ற எழுத்துச் செல்வங்களும் இன்றும் அவரை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கின்றன, அவரது சமய தமிழ்ப் பணியும், அவர் உருவாக்கிய தாபனங்களும் காலத்தால் அழியாதவை.
யில் மாமன்றம் நடத்தும் வுதின நிகழ்வு )
இது அதன் வளர்ச்சிக்காக அளப்பரிய பணிகளைச் செய்து ஏவுகூரும் நிகழ்வை ஆடி அமாவாசை தினமான ஜூலை 26
நி சய்து நடத்துகிறது. பின் சின்னுரித்தாளர்கள் ஈகைச்சுடரேற்றி அஞ்சலி பதுடன், கீரிமலை கடற்கரையில் சிதிர் தர்ப்பணம் செய்ய ஏற்பாடுகளும் செய்யப்படடுள்ளன.
ஜய வருடம் ஆனி - ஆடி

Page 15
டி
சுவாமி விபுலானார்
சைவப்புலவர்
சமன்பிட்டி, |
"அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" எனும் பாரதியாரின் "பா"வரிகளுக்கேற்பவும்,
"திதான்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார் பிதாழைவிற் தோன்றாமை நன்று"
என்னும் வள்ளுவர் வாக்குக்கு அமையவும் தமிழணங்கு பெற்ற தவப்புதல்வருள் ஒருவராக முற்றிய துறவியாக முத்தமிழ் வித்தகனாக துறவுக்கு புதியதொரு பரிமாணங்கண்டு மனித நேயத்துடன் வாழ்ந்து வந்த பெருந்தகை சுவாமி விபுலானந்த அடிகள் தன்னலம் சிறிதுமின்றி தமிழினத்தின் மேம்பாட்டுக்காகப் பணிகள் பல் ஆற்றிய பெருமைக்குரியவர் எமது தமிழ்த்துறவி விபுலானந்த அடிகள்.
தற்பற்றின்றி தமிழ்ப்பற்றுடன் துலங்கிய தமிழ்த்துறவு ஒன்று இளங்கோவடிகள் தொடக்கம் நாவலர் விபுலானந்தர் தனிநாயக அடிகள் பண்டிதமணி வரை வளர்ந்து வந்தமையை நாம் அறிய முடிகின்றது. தமிழ்ப்பணியும் "கல்விப்பணியும் இந்துறவுப் பணிகளில் ஒன்றையொன்று பிரிக்கமுடியாதவாறு இணைந்து வளர்ந்துள்ளன.
1916 இல் விஞ் ஞான டிப்ளோமாவுடன் மதுரைச் தமிழ்ச்சங்க பண்டித பரீட்சையிலும் சித்தி பெற்ற விபுலானந்தர் வேதாந்தம் சைவ சித்தாந்தம் மெஞ்ஞானம் கைவரப்பெற்றவர் முத்தமிழாம் இயல் இசை நாடகம் மூன்றின் திறன் உணர்ந்தவர் மேற்கத்திய உலகில் கல்வி நெறியையும் ஆன்ற நோக்கில் உணர்ந்து புதிய கல்வி நெறி கண்டவர். பிளேட்டோ, ரூசோ, கார்ல் மாக்ஸ் காந்தியடிகள், சுவாமி விவேகாநந்தர் போன்றோரின் கல்விச் சிந்தனைகளுக்கு ஒப்ப சுவாமி விபுலானந்தரின் கல்விச் சிந்தனைகளும் இன்றைய நிலைமைகளுக்கு பொருந்துவனவாகவும் உள்ளன.
நாட்டின் பல பகுதிகளில் ஆசிரியராகவும் இராமகிருஷ்ண சங்கக்கல்வி நிலையங்களில் முகாமையாளராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தினதும் இலங்கைப் பல்கலைக்கழகத்தினதும் முதற்தமிழ் பேராசிரியராகவும், கல்வி ஆய்வுக்குழு பாடவிதான சபை பரீட்சைச்சபை போன்றவற்றின் உறுப்பினராகவும் விளங்கி விபுலானந்தர் கல்வித்துறையில் ஆற்றிய பணிகள் அளப்பரியனவாகும், ஆளுமையும் நல்லொழுக்கமும் மன வலிமையும் தன்னம்பிக்கையையும் வளர்ப்பது கல்வி என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். அவரது வழியை கடைப்பிடித்த சுவாமி விபுலானந்த அடிகள் வாழ்க்கையின் அர்த்தத்தை அறிந்து கொள்வதற்கும் உள்ளத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் சமூகத்தோடு பொருந்தி வாழ்வதற்கும் ஒழுக்கத்தை விருத்தி செய்வதற்கும் சமரச சமத்துவ உணர்வினை வளர்ப்பதற்கும் உதவுவதாக
(இந்து ஒளி

தேரின் கல்விப்பணி
பாலன் சுதாகரன் கிபாலனறுவை
கல்வியைக் கண்டார். சமயக்கல்வி விஞ்ஞானக்கல்வி - பெண் கல்வி அழகியற்கல்வி உடற்கல்வி மொழிக்கல்வி பல்கலைக்கழகக் கல்வி எனப் பல விடயங்களைப்பற்றி அவர் தெளிவாக விளக்கினார்.
வாழ்நாள் முழுவதும் கல்வியை ஒருவன் தொடர் வேண்டும் என்று சிந்தனைத் தெளிவையும் வாக்குத் தெளிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கற்றவற்றை பிறரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். உண்மையான ஒரு கல்விமான் மனிதர் மத்தியில் ஓர் இளவரசனைப் போல் விளங்குவான் என்றும் செல்லுமிடமெல்லாம் வலிமையையும் துாய்மையும் அவன் பரவச் செய்வான் என்றும், நன்மையின் சக்தியாக அவன் விளங்குவான் என்றும் சுவாமி விபுலானந்தர் கூறினார். "யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பாடிய புலவர் கணியன் பூங்குன்றன் அவர்களை உண்மையான ஒரு கல்விமான் எனப் போற்றியுள்ளதிலிருந்து "கல்விமான்" பற்றிய அவரது கணிப்பினை அறிந்து கொள்ளலாம்.
"மன்னுயிரனைத்தையும் தன்னுயிர் போலக் கருதுகின்ற நற்குணத்தை இளம் பராயத்திலேயே நிலைபெறச்செய்ய வேண்டும்” என்று சுவாமி விபுலானந்தர் சிறுவர் கல்வி பற்றி மிகுந்த அக்கறை செலுத்தினார். பயிற்சி பெற்ற ஒரு ஆசிரியராக இருந்த போது 1914 இல் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி ஆண்டு மலரில் அவர் ஆங்கிலத்தில் எழுதிய முதல் கட்டுரையில் ஆரம்பக்கல்வி முக்கியத்துவம் பற்றியும், குழந்தைகளின் இயல்புகளை பரிவோடு புரிந்து கொண்டு ஆசிரியர்கள் அவர்களை எவ்வாறு நெறிப்படுத்த வேண்டும் என்பது பற்றியும், ஆரோக்கியமும் உற்சாகமும் அளிக்கும் இதமான சூழலின் தேவை பற்றியும், மொழிக்கல்வி ஒழுக்கக்கல்வி சமயக்கல்வி ஆகியவற்றின் இன்றியமையாழை பற்றியும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளைகளுக்கு இசைவான சூழலில் மிகுந்த பரிவாடு கல்வி ஊட்டப்பட வேண்டும் சுவாமி விபுலானந்தர் கருதினார். கல்வியின் வாயிலாக மனிதர்களை உருவாக்கும் பணியில் ஓர் ஆசிரியர் பெறும் முக்கியத்துவம் குறித்தும் அவருக்கு இருக்க வேண்டிய ஆற்றல்கள் பண்புகள் குறித்தும் சுவாமிகள் பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார். "எதைக்கற்பிக்கின்றார்கள் என்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஓர் ஆசிரியர் எவ்வாறு கற்பிக்கிறார் என்பதுமாகும்” என்று அவர் வலியுறுத்தினார். -
சுவாமி விபுலானந்தர் தாய்மொழி மூலமான கல்வியை வற்புறுத்தியமைக்கான முக்கிய காரணங்கள் இரண்டு. ஒன்று கற்பவரின் சுயசிந்தனை வளர்ச்சிக்கு அது கூடிய அனுகூலமாக அமையும் மற்றையது அவனது சமூகம் அதனால் கூடிய பயனைப் பெறக்கூடியதாக இருக்கும் என்பதாகும். பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தாய்மொழியே
ஜய வருடம் ஆனி - ஆடி)

Page 16
போதனைமொழியாக இருக்க வேண் டும் என்பதனை வலியுறுத்தினார். ஓரினத்தின் மொழி தவிர்ந்த வேற்று மொழியில் கல்வி பயிலுதல் அவ்வினத்தின் கலாசாரத்தையும் கல்வி முறையையும் மழுங்கடிக்கும் செயலாகும் என்ற சிந்தனையை முன்வைத்து விஞ்ஞானம் கணிதம் போன்ற பாடங்களைத் தமிழ் மொழியில் போதிப்பதற்கு வேண்டிய தமிழ்ச் சொற்களை ஆக்கும் பணிகளிலும் ஆங்கிப் நுால்களை மொழி பெயர்ப்பு செய்வதிலும் முன்னின்று உழைத்தார்.சென்னை பச்சையப்பன் கல்லுாரியில் இடம் பெற்ற கலைச் சொல்லாக்கு அமுலாக்கல் குழுவின் தலைவராக அவர் விளங்கியமை இதற்குச் சான்றாகும். - 1927 இல் சென்னை மயிலாப்பூரில் இருந்த இராமகிருஷ்ண சங்கத்தில் சேர்ந்து பயிற்சி பெற்ற சுவாமி விபுலானந்தர் துறவு பூணுவதற்கு முன்னர் யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியில் ஆசிரியராகவும் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் அதிபராகவும் பணியாற்றினார். இக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பிரபல்யம் வாய்ந்த தேசிய மறுமலர்ச்சிக்கழகமாக யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ் விளங்கியது.இச்சங்ச செயற்பாட்டிற்கு சுவாமி விபுலாநந்தர் அயராது உழைத்தார். இதனூாடாக நாட்டிற்குப் பொருத்தமான கல்விச் சிந்தனைகளையும் கோட்பாடுகளையும் உருவாக்கி அக்கால ஆங்கில அரசிற்கு அறிக்கை சமர்ப்பித்தார்.
1925 இல் இராமகிருஷ்ண சங்கப் பாடசாலைகளை பரிபாலிக்கும் பொறுப்பை ஏற்ற அடிகளார், 1926 இல் யாழ்ப்பாணத்தில் அனாதை இல்லத்தை ஆரம்பித்து அனாதைச் சிறுவர்களுக்கு கல்வி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். 1920 இல் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தை ஸ்தாபித்து ஏழைகளுக்கான கல்வி வாய்ப்பினை மேலும் விரிவுபடுத்தினார்.
1943 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ் பேராசிரியராக ஆனதும் அதுவரை தமிழ் மொழிப்பாடத்தை ஆங்கில மொழி மூலம் பயின்று பரீட்சைக்கு தோற்றிய நிலையை மாற்றி தமிழ்மொழியிலே பயின்று தமிழ் மொழியிலேயே பரீட்சை எழுத வழி செய்தார். இயல் இசை நாடகம் போன்ற அழகியற் கல்வியை பாடசாலைப் பாடத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி உள்ள உயர்வுக்கு வழி சமைப்பது
யாழ் நகரில் சுவாமி விபுலா
நினைவு தினம்
கிழக்கிலங்கை தந்த பேராசான் - முத்தமிழ் விபுலானந்தர்நினைவுதினம் இம்மாதம் (ஜூலை)19 அகில இலங்கை இந்து மாமன்றம், மட்டக்களப் இளைஞர் பேரவையுடன் இணைந்து ஏற்பாடு ெ விபுலானந்தர் நினைவுதின வைபவம் இம்மாதம் 2: மாலை மாமன்ற யாழ் பணிமனையில் நடைபெறவி
(இந்து ஒளி

அழகியற் கல்வி என்பது சுவாமி விபுலாநந்தர் அடிகளார் கருத்தாகும் பல ஆண்டுகளாக இசை ஆராய்ச்சியில் ஈடுபட்டதன் விளைவாக யாழ் நூல், மதங்க சூளாமணி என்னும் நாடகத் தமிழ் நூல்களை உருவாக்கினார், இது அடிகளாரின் அழகியற் கல்விப் புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும், இவ்விரு நுால்களும் அகில உலகம் போற்றும் நுால்களாக சிறப்புப் பெற்றுள்ளன.
'உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது" என்பது சுவாமி விபுலாநந்தரின் முத்தான மொழியாகும். உடல் செயற்பாடு சடங்கு அனைத்தையும் மேவி உளச்செயற்பாட்டின் முக்கியத்துவத்தை சுவாமி விபுலானந்தர் அவர்கள் எடுத்துக் காட்டுகிறார். இக்கருத்து சுவாமி விபுலானந்தர் அவர்களின் உளவியற் சிந்தனைக்குச் சான்று.
கல்வி மக்களை சேவைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் இதனால் கற்றோர் சமுதாயமே சான்றோர் சமுதாயம் என்பதும் சுவாமி விபுலானந்தரின் சீரிய கருத்தாகும், சுவாமி விபுலானந்தரின் ஒவ் வொரு கருத்துக்களும் ஆழமானவையாகவும் தீர்க்க தரிசனமிக்கதாகவும் அமைந்துள்ளன. தற்போது பரவலாகப் பேசப்படுகின்ற கல்வி உரிமைகள் சம வாய்ப்புக்கள் சுய மொழிக்கல்வி தொழிநுட்பக் கல்வி என்பவை பற்றி எல்லாம் சுவாமி விபுலாநந்தர் அவர்கள் பல வருடங்களுக்கு முன்னரே கூறிவிட்டார்கள். தற்போது நடைமுறையிலுள்ள புதிய கல்விச் சீர் திருத்தத்திலுள்ள அடிப்படையான ஐந்து திறன்களை பற்றியும் சுவாமி விபுலானந்தர் அவர்கள்
முன்னரே சிந்தித்து விட்டார்கள்.
சுவாமி விபுலானந்தர் அவர்களுக்கு எல்லாத்துறைகளிலும் வல்லமை இருந்தது.தமிழ் ஆங்கில மொழி இரண்டிலும்: பாண்டித்தியம் பெற்றிருந்தார். கணிதம் விஞ்ஞானம் கலை ஆகிய எல்லாத்துறைகளிலும் வேறு ஒருவரால் இவ்வாறு புலமை பெற முடியாது என்றால் அது மிகையாகாது.
வித்தகர் என்பது சுவாமியின் புலமைக்கு ஒரு பரிசாகும்,
கல்விப் பணிக்கே தம்மை முழுமையாக அர்ப்பணித்தவர் சுவாமி விபுலானந்தர். கல்விப்பணி செய்தார். கடவுள் பணி செய்தார் என்பதற்கிணங்க சுவாமி விபுலானந்தர் அவர்கள் தமிழ் உலகம் உள்ளவரை வாழ்ந்து கொண்டே இருப்பார்.
லானந்தர்
வித்தகர் சுவாமி "ஆம்திகதியாகும். பு மாவட்ட இந்து சய்துள்ள சுவாமி 7 ஆம் திகதியன்று ருக்கிறது.
ஜய வருடம் ஆனி - ஆடி

Page 17
HQ
D
சுவாமி விபு செழுங்கலை நியமமு
சைவவித்தகர் sெ
வந்தாறுமூலை
வந்தாறுமூலை
இசையிடை நுணுகி யாய்ந்து இசை பெறு யாழ்நூல் யாத்து இசைத்தமிழாசா னாகி இன்கலைக் கழகம் தங்களின் இசைவார் விபுலாநந்தர் அழிபசி னீங்கி வாணிர் இசைற்பொழி அமரராகி எகிழண்றும் வாழ்கின்றாயிர
முத்தமிழ் வித்தகரான சுவாமி விபுலானந்த அடிகணர் எத்தனையோ கட்டுரை எழுதியுள்ளார்கள் அந்தவகையில் செழுங்கலை நியமத்துடன் வடமொழிக்கல்வியை இணைத்து எழுதிய கட்டுரை கற்பவர்கள் யாவரையும் கவரும் தன்மை வாய்ந்ததாகையால் அதனை இங்கு குறிப்பிடுதல் சாலவும் சிறந்ததாகும்.
சிந்தாதேவியாகிய நாம்கள் கோயில் கொண்டெழுந் திருக்கும் செழுங்கலை நியமங்கள் (Universites)கல்வித்துறை அனைத்தினுக்கும் இருப்பிடமாவன. "கல்வி கரையில கற்பவர் நாட்சில” என்பது ஆன்றோர் வாக்கு. ஆதலினால் கலை பயில்வோர் தனக்கு இயன்ற கலைத்துறை இதுவென தேர்ந்துணர்ந்து அத்துறையில் நிரம்பிய புலமைபெற முயலுதல் முறையாயிற்று. அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூ ற்பயனே என்றலின் அறிவுடை மாந்தர் கற்றற்குரியன. அறநூ ல் பொருனுால் இன்பனூால் வீட்டுநூல் என நால்வகைப்படுவது தெளிவாகின்றது. இவற்றை வடமொழியாளர் தர்மசாத்திரம் அர்த்தசாத்திரம் காமசாத்திரம் மோட்சசாத்திரம் என்பர். பண்டையோர் வகுத்த இந்த நால்வகையினை இக்காலத்து செழுங்கலை நியமங்கள் எவ்வாறு பகுத்துணர்கின்றன என்பதைச் சுருக்கமாக ஆராய்ந்து நோக்குவோம்.
ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படுத்தி முன்னோர் ஆராய்ந்த அறநூலினை இக்காலத்து செழுங்கலை நியமங்கள் நீதிநூல் (Law) ஒழுக்கநூல் (Moral Science) எனப்பகுத்து ஆராய்ந்து வருகின்றன. கரு உரி எனத் தொல்காப்பிய ஆசிரியர் வகுத்த பொருட்பகுதிகள் இந் நூளில் மிக விரிவெய்தி நடக்கின்றன. நிலநூலும் (Geography and Geology) வானநூலினை (Ay) stronom உள்ளிட்ட கணிதநூலும் (Mathematics), பூதநூலும் (Physics) இயைபுநூ
லும் (Chemistry) முதற்பொருட்பாலாய் அமைந்துள்ளதுடன், தாவர நூல் (Botany) விலங்கியல் நூல் (Zoology) என்றிருதிறத்தாகிய உயிர்நூலும் (Biology) மன்பதைநூ
லும் (Anthropology) தொன்மைநூலும் (Archaeology) பயிர் தொழில் நூலும் (Agriculture) பொறியியல் நூலும் (Engineering) என்பன வெல்லாம் கருப்பொருட்பாலாக அமைந்துள்ளதுடன், அரசியலமைச்சியல் நூல் (Politis) பொருளியல் நூல் (Economics) போர்த்தொழில் நூல் [Military Science) என்றித் தொடக்கத்தன புறத்திணை உயிர்ப்பொருட்பாலாய் அமைந்துள்ளன. இயல் (Literature) இசை (Music) நாடகம் (Drama) என முத்திறப்படுத்தி நம்முன்னோர் ஆராய்ந்த அழகுக்கலையாகிய இன்பநூலானது
(இந்து ஒளி

கலானந்தரின் ம் வடமொழிக்கல்வியும் வற்றிவேல் சசிகரன்) (QR
50, மட்டக்களப்பு.
இயல்வாய்ந்த மொழிகள் பலவற்றையும் ஓவியம் சிற்பம் * என்றித்தகைய அழகுக்கலைகளையும் தன்னுள்ளடக்கி நடக்கின்றது. வீட்டுநூலானது தெய்வநூல் (Divinity Theology) என்னும் பெயரோடு மேற்றிசைச் செழுங்கலை நியமங்கள் சிலவற்றில் கிறிஸ்தவ மதத்தின் ஆதார உண்மைகளை விளக்கி நிற்கின்றது.
இயல்வாய்ந்த மொழிகள் இன்பநூற்பால் என மேலே குறிப்பிட்டோம். இக்காலத்தில் உலக வழக்கிலுள்ள செவ்விய மொழிகள் பலவுள்ளன. பொதுமக்களிடையே வழக்கற்றதாக காணப்படினும் அறிஞர் அவைக்களத்தே நிலைபெற்று நிற்பனவாய் பழமையும் செழுமையும் வாய்ந்த செம்மொழிகளுள் சிலவுள்ளன. "செவ்விய மதுரஞ் சோர்ந்தநற் பொருளிற் சீரிய கூரிய தீஞ்சொல் வவ்விய கவிஞர் வகுத்த காவியங்கள் நாற்பொருளும் பயக்கும் நலனுடையவை" ஆதலினால் அத்தகைய காவியங்களையுடைய மொழிகள் கலைமாச் செல்வத்தை திரட்டி வைத்த கருவூலங்களாக மிளிர்கின்றன. பண்டைக்காலத்தில் இருந்த யவனார் வழங்கிய கிரேக்க மொழியும் உரோமர் வழங்கிய இலத்தீன் மொழியும் மேன்னாட்டு நாகரீகத்திற்கு அடிப்படையாகிய கருத்துக்களை தம்மகத்தே அடக்கி நிற்பதோடு, இக்காலத்தில் மேல்நாட்டில் வழங்கும் மொழிகளின் இலக்கண அமைதிக்கும் மொழிவளத்திற்கும் கருவியாகியும் நிற்பன ஆதலினாலே மேனாட்டிலுள்ள செழுங்கலை நியமங்களில் இவ்விரு பழைய மொழிகளும் பெரிதும் விரும்பிக் கற்பிக்கப்படுகின்றன.
சமஸ்கிருதமும் பிராகிருதமாகிய பாளியும் இந்நாட்டு மக்கள் விரும்பிக் கற்கக்கூடிய பழைய மொழிகளாம், மேனாட்டு மாணவர் கல்வி நிரம்புதற்கு எவ்வாறு இலத்தீன் கிரேக்கு முதலிய பழைய மொழிகளை பயின்று கொள்கின்றார்களோ அவ் வாறே இந்நாட்டு மாணவர் கள் சமளம் கிருதம் பாளி என்னும் பழைய மொழிகளை பயிலுதற்குரியர். ஈழநாட்டிற் பரவியுள்ள நாகரீகத்திற்கு அடிப்படையாகிய தமிழ் சிங்கள மொழிகளின் இலக்கணவமைதிக்கும் வளத்திற்கும் கருவியாகி நிற்பன இம்மொழிகளே. தமிழ் எழுத்தாராட்சியும் சொல்லாராட்சியும் செய்தற்கு வடமொழி அறிவு இன்றியமையாததாக வேண்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. காவ்யாதர்சனம் என்னும் வடமொழி அலங்கார நூலின் மொழிபெயர்ப்பே தமிழ்த்தண்டியலங்காரம் என அறியப்பட்டிருந்தது. அணியிலக்கண ஆராய்ச்சிக்கு வடமொழியறிவு வேண்டப்படுவதென்பது தெளிவாகப் புலனாகின்றது. வட மொழி விருத்த விகற்பங்கள் பல தமிழில் வருவதனால் யாப்பாராட்சிக்கும் வடமொழி இன்றியமையாததாகும். பொருளாராட்சிக்கு வடமொழி மாத்திரம் அன்றி பிறமொழியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.
மேனாட்டில் பெரிதும் பிராகிருத
- 15
ஜய வருடம் ஆனி - ஆடி)

Page 18
சுன்னாகம் திரு. அ. குமாரசாமிப்புலவர் அவர்களின் காலம் வரையும் தமிழ்ப்பெரும்புலவர்கள் வடமொழி கற்றும் வடமொழிநூல்களை மொழி பெயர்த்தும் வடமொழி மரபு பற்றிப் புத்திலக்கண நூல்களை எழுதியும் தமிழுக்கு ஆக்கமளித்தார்கள். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரவர்களை உள்ளிட்ட சைவ நூற் பெரும்புலவர்கள் சைவாகமபுராணங்களை மூலமொழியிற் பயிலும் நோக்கமாக வட மொழியினை விரும்பிக்கற்று அம்மொழியினும் பாண்டித்தியமுடையவர்களாக மிளிர்ந்திருந்தார்கள். இந்நாட்டு மாணவர் அண்மைக்காலம் வரையும் ஆங்கிலநாட்டுச் செழுங்கலை நியமங்களோடு தொடர்புடையவராய் இருந்தமையின் ஆங்கிலம், பிரெஞ்சு இலத்தீன் கிரேக்கு முதலிய மொழிகளை பயிலவேண்டியவராய் இருந்தனர். இப்பொழுது புதிய யுகம் பிறந்துவிட்டது. இலங்கையர் தமக்கென பல் செழுங்கலை நியமங்களை அழைத்துக் கொண்டனர். தமிழ் சிங்களம் சமஸ்கிருதம் பாளி என்னும் மொழிகள் இலங்கைச் செழுங்கலை
நடராஜர் உருவச் சிறப்பு
இறைவன் எங்கும் நிறைந்தவன், எல்லாம் அறிகின்றவன். கருணை நிறைந்த வன். இன்பமயமானவன். எல்லா ஆற்றல்களையும் உடையவன், ஆன்மாக்களின் பொருட்டு பல்வேறு திருமேனிகளை எடுத்துக் கொள்ளுகிறான். அவற்றுள் இடையறாது ஆனந்தத் தாண்டவம் புரியும் நிலை ஒன்று. அது எல்லா மூர்த்திகளிலும் சிறந்தது. அந்த ஆனந்தத் கூத்து ஆன்மாக்களின் பொருட்டு ஒயாது சிவபெருமானால் நிகழ்த்தப்படுகிறது. அவன் ஆடவில்லையானால் உலகத்தில் ஒன்றுமே ஆடாது. அந்தத் திருக்கூத்துக்கு முதலுமில்லை, முடிவுமில்லை. ஏனைய தெருக்கூத்துக்களைப் போன்றதன்று அந்தத் திருக்கூத்து. அற்புதத் தனிக்கூத்து அது. சேக்கிழார் சுவாமிகள் கூறி அருளினார்.
'ஆதிபு முடிவுமில்லா அற்புதத் தணிக் கூத்தாகும் நாதஸார் கழல்கள் வாழ்த்தி வழிபடும் நலத்தின் மிக்கார்
இதையும் தவிர நடராஜ மூர்த்தியைப் பற்றிய தியான சுலோகம் என்ன சொல்லுகிறது?
நடேசப் பெருமானுடைய திருவுருவம் மூன்று கண்களும், நான்கு தோள்களும் சாந்த குணமும் சிவப்பு நிறமும், புன்முறுவல் செய்யும் முகமும் உடையதாகவும், தலையின் ஓடும், கொக்கின் இறகும், ஊமத்தையும் எருக்கும், கங்கையும் நிலவும் ஆகிய
ஆடிப்பூரம்
இருபத்தேழு நட்சத்திரங்களுள் ஒன்றுதான் பூரம். ஏகை நாள் மகத்துவம் மிக்கதாகப் போற்றப்படுகின்றது. இது அம்பு உமையம்மையார் பக்குவமடைந்த அல்லது ருதுவாகிய தி
பெரும்பாலான அம்பாள் ஆலயங்களில் ஆடிப்பூரம்தின; வழக்கமாகும். இந்நாளில் அம்பாள் ஆலயங்களில் பெல் நிறைவேற்றும் நிகழ்வு இடம் பெற்றுவருகின்றது.
(இந்து ஒளி 2)

நியமத்திலே முதன்மையெய்தி நிற்கின்றன. சிங்கள் மாணவர்கள் தங்கள் தாய்மொழியோடு சமஸ்கிருதம் பாளியாகிய இருமொழிகளையும் பயின்று உயர்தரப் பரீட்சைகளிலே சிறந்தமுறையாகத் தேறுகின்றார்கள். தமிழ் மாணவர்களும் அவ்வாறு தேறிப்பெருமையடையும் பொருட்டுத் தாய்மொழியாகிய தமிழோடு வடமொழியும் பயிலுதல் நலமாகும்.
இவ் வாறான் அறிவுக் கல் விக கரு வு, லத் தை அடைவதற்கு சுவாமி விபுலானந்த அடிகளார் மேற்குறித்த கட்டுரையின் வாயிலாக அக்காலத்திலேயே அறிவியலையும் ஆத்மீகத்தையும் செழுங்கலை நியமங்களினுாடான கல்விமுறையில் வெளிப்படுத்தி இருந்தார். இவை அக்காலம் முதல் எக்காலம் வரையும் அழியாத அறிவுரையாக பின்பற்றி பாதுகாத்து பேணவேண்டியது தற்கால சமுதாயத்தினதும் எதிர்கால சந்ததியினதும் தலையாய கடமையாகும்.
இ வ ற்  ைற த் த  ைல யி ல் அணிந்ததாகவும், வலப்பாதம் அபஸ்மார (நினைப்பு நீங்கிய) முயலகன்மீதுஊன்றி நிற்பதாயும், இடப்பாதம் தூக்கப்பட்டு சற் று கு ஞ் சித் த தா யு ம்,
ராம் வலக்கரங்களுக்குள் முன்கரம் அபயம் அளிப்பதாயும், பின்கரம் டமருகம் தாங்கியதாகவும், இடக்கரங்களுள் முன்னது வீசித் தொங்கவிட்டுள்ளதாகவும் பின்னது நெருப்பை ஏந்தியதாயும் இடச்செவியில் திருத்தோடும் வலச்செவியில் மகர குண்டலமும் அணிந்ததாயும் அபய கரத்தில் நாகாபரணம் பூண்டதாயும் சர்வாங்கத்திலும் தரித்து நிலவுவதாயும் சிவமந்திரத்தால் பூசிக்கற்பாலது.
திருச்சிராப்பள்ளிக்கு அருகில் யானை பூசித்த தலம் திருவானைக்காவும், எறும்பு பூசித்த தலம் திருஎறும்பூறும் காட்சி தருகின்றன, பெரிய பிராணி யானை; சிறிய பிராணி எறும்பு. 'எறும்பு முதல் யானைஈறாக' என்பார்கள், யானையும் இறைவனை வழிபட்டது. எறும்பும் இறைவனை வழிபட்டது. மனிதராகப் பிறந்த நாம் இறைவனை வழிபட வேண்டாமா?
("வாரியார் விரிவுரை விருந்து" என்ற நூலிலிருந்து)
னய மாதங்களைவிட ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திர பாளுக்கு உரிய தினமாக அமைந்திருக்கின்றது. அதாவது
னம் ஆடிப்பூரம் என்று சொல்லப்படுகின்றது. த்தை தீர்த்தமாகக் கொண்டு உற்சவங்கள் நடைபெறுவது ன் அடியார்கள் பாற்குடம் எடுத்து தங்கள் நேர்த்தியை
ஜய வருடம் ஆனி - ஆடி)

Page 19
திருவாசகத்தில்
(தெய்வத் திருமகள் கலா
%%%%%ETERKETETTAKEEET!
தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் தெய்வத்திருமகள் 4 இந்து மாமன்றத்துடன் நெருங்கிய தொடர்பையும் உறவை செயலாளராகவும் பின்னர் துணைத் தலைவராகவும் தெ மாமன்றத்தின் சிறப்பான வளர்ச்சிக்கும் அதன் செயற்பாடுக ஆனாடு இனவரிமாதம் அம்மையாருக்கு கொழும்பில் நடத்த டொனவிழாவையொட்டி 2005ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துத் பட்டத்தையும் வழங்கிக் கௌரவித்தது. அடம்மையார்2008 ஆ
மாமன்றத்தின் மற்றுமொரு கெளரவமாக ஆன்மீக இதழான 2009 ஆம் ஆண்டு அம்மையாரின் முதலாவது குருபூசை என்ற நூலை மாமன்றம் வெளியிட்டிருந்தது. அத்துடன் இப் "இந்து ஒளி அம்மையாரின் முதலாவது குருபூசை சிறப்பிதழ் ஆண்டு குருபூசை நிகழ்வு இம்மாதம் ஜூலை 8 ஆம் திகதி பிரசுரமாகிறது.
"நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப்பெற்றோர் தேனாய்இனர் னமுதENாய்த் தித்திக்கும் சிவபெருமார் தானேவந் தெனதுள்ளம் புகுந்தாயே கருகர்தான் ஊனாரும் உயிர்வாழ்க்கை நிறுத்தண்ட்ரே வெறுத்திடவே. "
பிறவிப்பிணி தீர்க்கும் பெருவாசகமாகிய திருவாசகத்தைச் சைவ உலகுக்கு அளித்தவர் மணிவாசகர். அவருடைய தூய இதயக் கமலத்திலே இருந்து வெளிப்பட்ட செஞ்சொற்களாகிய மணிகளை அன்பாகிய கயிற்றிற் கோத்து இறைவனுக்கு அழுதழுது சாத்தி அதன்பொருள் அவனே என்று காட்டி அவனடிக்கீழ் நீங்காப் பேரின்பம் பெற்றவர் அவர். தேனாய் அவருக்கு இனித்தான் இறைவன், அந்த இன்ப உயிர்ப்பை வாய்மடுத்த அடிகளின் பாடல்கள், அவற்றை ஓதுகின்ற ஒவ்வொருவருக்கும் தேனாய் இனித்தன. அத்தகைய சுவை மிக்க திருவாசகப் பாடல்களை ஐம்பத்தாறு பதிகங்களாய் அமைத்துள்ளனர், அவற்றுள் முதலாவது பதிகம் சிவபுராணம் என்பது. திருவாசகம் அறிவிக்கும் நெறி இரண்டு. முதலாவது நாதன் நாமம் போற்றுதல். இரண்டாவது நாதன் தாள் போற்றுதல். இவற்றைக் கொண்டே சிவபுராணம் தொடங்குகிறது.
சிவபுராணம்
சிவபுராணம் என்றால் சிவனது அநாதி முறைமையான பழைமை என்பது பொருளாகும். இறைவன் பழையதிற் பழையவன். புதியதிற் புதியவன். இதனை அடிகளே திருவெம்பாவையில்,
மூண்ணைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருயே" பினேனனப் புதுமைக்கும் உயர்த்தும் அப் பெற்றியனே"
என்றும் அருளியுள்ளார். திருவாசகம் குருவருள் விளக்கத்தைச் சிறப்பாக எடுத்துக் காட்டுவதாகும். பக்குவமுள்ள ஆன்மாக்
(இந்து ஒளி

ல் சிவபுராணம்
ாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி)
-KISSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் அகில இலங்கை பயும் கொண்டிருந்தவர். எழுபதுகளில் மாமன்றத்தின் துணைச் காடர்ந்து மாமன்ற அறங்காவலர் சபையிலும் இணைந்திருந்து களுக்கும் பெரிதும் துணை நின்றவர். மாமன்றம் 1974 ஆம் திய பாராட்டு விழாவில் சிவஞான வித்தகர் என்ற பட்டத்தையும், தில் நடாத்திய இந்து மாநாட்டின்போது தெய்வத்திருமகள் என்ற ம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் திகதியன்று சிவபதமடைந்த போது 7 "இந்து ஒளி" நினைவு அஞ்சலி சிறப்பிதழாக வெளியிடப்பட்டது. நிகழ்வையொட்டி “தெய்வத்திருமகளின் வாழ்வும் பணிகளும்” தே காலத்தில் வெளியிடப்பட்ட மாமன்றத்தின் ஆன்மீக இதழான Tக மலர்ந்திருந்தது. தெய்வத்திருமகள் அம்மையாரின் ஆறாவது நெடைபெற்றது. இதனையொட்டி அம்மையாரின் இந்தக் கட்டுரை
களுக்கு இறைவன் குருவடிவில் வந்து ஆட்கொள்வான் என்பது சைவ சித்தாந்தம், திருவாசகத்தின் முழுப்பொருளும் திருவைந்தெழுத்தைக் கொண்டு தொடங்கித் திருவைந் தெழுத்தின் அடக்கமான ஓங்காரத்தைக் கொண்டு முடிகிறது. ஓங்காரத்து உட்பொருளை "ஐயன் எனக் கருளியவாறார் பெறுவார் அச்சோவே" என்று முடிவிலேயமைந்த அச்சோப் பதிகத்தில் பாடியுள்ளார்.
திருவைந்தெழுத்து
"நமச்சிவாய வாழ்க" என்று தொடங்குகின்ற தொடக்கம் எல்லாப் பொருளையும், அவனடிக்கீழ் அடக்குகின்ற அடக்கமாக அமைந்துள்ளது. ஏனென்றால் இவற்றுக்குள் அடங்காதது எதுவுமிருக்க முடியாது. அண்டங்கள், அறியாமை, சிவப்பரம் பொருள், திருவருள், உயிர்கள் என்பவற்றை முறையே நமசிவாய என்னும் ஐந்தெழுத்தும் விளக்குகிறது. திருவாச கத்தின் முழுப்பொருளும், திருவைந்தெழுத்தின் விளக்கமும் திருவடிப்பேறு ஆகும். இதனையே முதலிடிகளில் 'நமச்சிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க' என்பதால் விளக்குகிறார்.
பாயிர மரபு
ஒரு நூலின் தொடக்கத்தில் வாழ்த்து, வணக்கம், அவையடக்கம், நூற்பெயர், நூற்பயன் என்பன கூறுவது மரபு, மணிவாசகப் பெருமான் இதனைச் சிவபுராணத்திலே விளக்கிப் பாடியுள்ளார். இதனைத் திருவாசகத்துக்கு ஒரு முன்னுரை என்று கூறினால் அது மிகையாகாது. முதலிலே வாழ்த்துக்கள் கூறித் தொடங்குவதைக் கவனிப்போம். ஞானாசிரியர்கள் அறுவகை வாழ்த்துக் கூறி ஆன்ம கோடி களை உய்விக்க விரும்பினார்கள். 'வாழ்க அந்தணர்' என்று தொடங்கிப் பாடி வைகையிலே ஏட்டினை இட்ட சம்பந்தரும்.
ஜய வருடம் ஆணி - ஆடி
17

Page 20
"வான்முகில் வழாது பொய்க" என்று பாடி வாழ்த்திய கச்சியப்பரும், 'நமச்சிவாய வாழ்க என்று வாழ்த்திய மணிவாசகரும் ஞானப்பெருமக்களே. 'நமச்சிவாய வாழ்க' என்று பஞ்சாட்சரத்தை வாழ்த்தி 'நாதன்றாள் வாழ்க' என்று உருவத் திருமேனியை வாழ்த்தி, 'இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்கா தான்றாள் வாழ்க' என்று அருவத் திருமேனியை வாழ்த்தி, 'கோகழியாண்ட குருமணிதன்றாள் வாழ்க' என்று குருவடிவை வாழ்த்தி, 'ஆகமம் ஆகிநின் றண்ணிப்பான் றாள் வாழ்க' என்று சாத்திரங்களை வாழ்த்தி, "ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க" என்று 'ஒன்றாய் வேறாய் உடனாய் நிற்கும் பெருமானை வாழ்த்தி,
நமச்சிவாய வா அழக நாதன்றாள் வாழக இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான்ராள்கிவாழக கோகழி யாண்ட தநமாணிதாநாள்காழர்க ஆகம மாகிநின் றண்ணிப்பான்நாள்வாழ்க ஏக னனேக வைரவ னம்EMாழர்க"
என அறுவகை வாழ்த்துக் கூறுகிறார். அடுத்து ஐந்து வகை வெற்றி கூறுகிறார்.
வெற்றி
புறத்திலே நாம் காணுகின்ற வெற்றியிலும் பார்க்க அகத்திலே வெற்றியைக்காண முயலவேண்டும், ஐம்புலன் களை அடக்கி வெற்றி கொள்வதுதான் சமய வாழ்வு வாழ்வார்க்கு வேண்டியவை. அப்பரடிகள் அகத்திலே வெற்றி கண்ட அருளாளர். அவர்,
புள்ளுவர் அவர் கள்வர் புனத்திடைப் புகுந்து நின்று துள்ளுவர் துறை கொள்வர்தூநெறிவிளளய வொட்டார்
என்று பாடி ஐம்புலன்கள் செய்யும் தீங்குகளை எடுத்துக் காட்டி அவற்றை வெற்றிபெற வேண்டுமானால்,
முக்கண்ணான் பாத நிழல் உள்ளிடைப் புகுந்து நின்று அங்கு உணர்னோல்எய்யலாமே" என வெற்றிபெறும் மார்க்கத்தையும் விளக்குகின்றார். ஐவகை வெற்றி முக்கியம் என்பதை அடிகளும் சிவபுராணத் தினே,
வைகங் கெடுத்தாண்ட வேந்ணடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க பரத்தார்க்குஞ் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார்உள்மகிழங் கோர்னழாகள் வெல்க சிராங்குவார் ஓங்குவிக்கும் சிரோன் கழலிவாக" எனக் காட்டுகின்றார்.
உலகியலுக்குள் இன்பம் துய்க்க நாடும் அந்த -ஊட்டத்தை அடக்கித் திசைதிருப்பி ஆட்கொண்ட தன்மையை அடுத்த அடியாலும், அடியவர்கள் அல்லாதார்க்குப் பாலில் வெண்ணெய் போல மறைந்திருக்கும் தன்மையை அடுத்த அடிகளாலும் விளக்கி அருளுகின்றார், இந்த ஐந்து வெற்றி களும் புன்னெறி யதனிற் செல்லும் போக்கை விலக்கி நன்னெறியைக் காட்டுவதாகும்.
போற்றி
அறுபகை செற்று ஐம்புலனை அடக்கி வழிபடுவோருக்கு உதவுவனவாகிய போற்றிகளை எட்டுவகையாகக் காட்டு கின்றார். அட்ட வீரட்டம் புரிந்த பெருமானுக்கு காட்டு நாண் மலர் கொண்டு வழிபடுவது இயல்பு. அவை எட்டும் போற்றி களாக வெளிவருகின்றன. எண் குணத்தானை எட்டு முறை (இந்து ஒளி

போற்றிசெய்து துதிக்கின்றார், 'ஈசனடி போற்றி' என்பது தொடக்கம் இவை அமைந்துள்ளன.
ஈசனடி போற்றி எந்தை யழபோற்றி தேசனடி போற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நினற்ற நிமல னடிபோற்றி மாயப் பிரப்பறுக்கும் மன்ன னடிபோற்றி சீரார் பொருந்துனாநந் தேவ னழடோர்ரி
ஆராத இன்பம் அருளுமலை போற்றி" குருதரிசனம்
வாழ்த்தும் வெற்றியும் போற்றியும் கூறிய அடிகள், இறைவன் குருவாக வந்து தன்னை ஆட்கொண்ட திறனை நினைந்து போற்றுகின்றார். 'சிவனவன் என் சிந்தையுள் நின்றவதனால்" என்பதால் இறைவன் சகலர்க்குப் பக்குவமுடைழை கண்டு குருவடிவாக வந்து அருள்புரியும் திறத்தால் தனக்கும் அப்பேறு கிடைத்ததெனக் காட்டிச் சிவனென்பதால் இறைவனைக் குறித்தும், அவன் என்பதால் குரு மூர்த்திகளைக் குறித்தும் பாடியருளினார். நூ ற்பயனையும், அவையடக்கத்தையும் அடுத்துக் காணலாம். 'சிவபுராணந் தன்னை' என்பது நூற்பெயராகும், 'முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான்' என்பதும், 'அவனருளாலே அவன்றாள் வணங்கி உரைப்பேன்' என்பதும் அவையடக்கமாகும்.
திருவாசகத்தின் முகவுரை போன்று பிறவியின் இழிவையும், இறைவனின் பெருமையையும், அடியவர்க்கு அருள்புரியும் திறனையும், அடியார்கள் இறைவனை வேண்டி நிற்கும் திறனையும் காட்டிச் சிவபுராணத்தை முடிக்கின்றார். வினையின் காரணமாகப் பிறந்து உழலுகின்ற உயிரானது கொடிய இருளாகிய ஆணவத்தினாலும் அறம் பாவம் என்னும் இருவினைக் கயிற்றினாலும் கட்டப்பட்டுப் புறத்தே தோலால் போர்த்து, அகத்தே புழு முதலிய அழுக்குகளைச் சொரியும் ஒன்பது வாயில் கொண்ட குடிலாக அமைந்த உடம்பினை எடுக்கிறது. மானுடப்பிறவி எடுத்த பின்பும் நேரிய வழியிற் செல்ல விடாது தடுத்து விலக்கி விடுகின்றன மலங்கள். இதனால் அறியாமையில், உழன்று நிற்கும் உயிர் ஏதோ தவப்பயனாலும், முன்பிறவிகளில் ஈட்டிய நல்வினை வசத்தாலும் இறைவனைக் குருவாகப் பெற்று உய்யும் நெறியை அடைகின்றது. ஆன்மாவின் குறிக்கோள் இறைவன் திருவடியை அடைதலாகும். இதனைச் சிறப்பாக விளக்குகிறார்.
"எல்லாப் பரப்பும் பறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேயுனர் பொன்னடிகள் கண்டிண்று நிரபரணி"
பதி இலக்கணம்
பசு, பாசங்களைப் பற்றிக் கூறிய அடிகள் சைவசித்தாந்த அடிப்படைக் கொள்கையில் நின்று பதியிலக்கணத்தைக் காட்டுகின்றார்.
"ஆக்கம் அளவுஇறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நினைதொம்பல் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே"
என்பதால் இறைவனுடைய சொரூப நிலையும் தடத்த நிலையும் கூறப்படுகிறது. தடத்தத்தில் இறைவன்
2ஜய வருடம் ஆனி - ஆடி

Page 21
இறங்கிவருவது அடியவர்களுடைய பிறந்த பிறப்பை அறுப்பதற்காகவாம் என்பதை நாமறிய உணர்த்துகிறார்,
நிலந்தர்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிதர் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே" . என்பதைப் பன்முறை நாம் படித்து இன்பம் அடையவேண்டும். இறைவன் தாய்க்கருணையுடையவன்: தாயினும் நல்ல தலைவன்; பால்நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிவுடையவன். எங்கள் பிழையறுப்பதில் அவன் தாய். எங்கள் பணிகளை ஏற்றுக்கொள்வதில் அவன் தாய், அருள் சொரிவதில் ஈடிணையற்ற எமது அன்னையாக நின்று கன்றினுக்குச் சேதா கனிந்திரங்கல் போல் எமக்கு
இரங்குகிறான் இறைவன். இத்தன்மையில் தயவுகாட்டும், இறைவனிடம் அடிகள் கேட்கும் வரங்களைக் கவனிப்போம்.
வேண்டும் பரிசு வேற்று விகார | விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன எம் இயா பாப்பா என்பது அவ்வரமாகும்.
அடிகள் மாத்திரமல்ல: ஆண்டவன் நெறியைப்பற்றி நிற்கும் நாம் ஒவ்வொருவரும் கேட்கும் வரமும் இதுவே. 'அரனே அரனே' என்று அரற்றி யரற்றிக் கேட்கவேண்டும். எந்த நிலையில் நின்று கேட்க வேண்டுமென்றால் பொய்கெட்டு மெய்யான நிலையில் நின்று கேட்க வேண்டும். அப்படிக் கேட்போமானால் எம்பெருமான் எமக்கு மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராத நெறியைத் தந்தருளுவான். இதனால் கள்ளப் புலக்குரம்பைக் கட்டறுத்துவிடும், "வீடு பேறு" என்ற பெரு நிலை வாய்த்துவிடுமென ஆன்மாவின் குறிக்கோளில் நிறுத்துகிறார், பாட்டின் பயன்
இறுதியாக இத்தகைய பாட்டினைப் பாடி இறைவனை வணங்குபவர்க்கு கிடைக்கும் பெரும்பயன் விளக்கப்படுகிறது.
நினைவலைகளில் பாலா
நெஞ்சிருக்கும் வ
கொழும்பு மாநகரில் அமைந்துள்ள உயர்ந்த கட்டிடங்களுள் ஒன்றாக பெருமை பெறும் அகில இலங்கை இந்து மாமன்ற தலைமையகம் கம்பீரமாக எழுந்து நிற்பதற்கு உழைத்தவர்களுள் முதல்வராகப் போற்றப்படுபவர்தான் அமரர் வே. பாலசுப்பிரமணியம் அவர்கள்.
இவர் 1986ஆம் ஆண்டு அக் டோபர் 26ஆம் திகதியிலிருந்து மறையும் வரை இந்து மாமன்றத்தின் தலைவராகப் பதவிவகித்ததன் மூலம், மாமன்ற வரலாற்றில்" முக்கியமானதொரு இடத்தைப் பெற்றுள்ளார்.
பாலா என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டு வந்த அமரர் வே. பாலசுப்பிரமணியம் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள நெல்லியடி கிராமத்தில் பிறந்தவர். கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியில் தனது கல்வியை ஆரம்பித்து கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும், பின்னர் யாழ் இந்துக் கல்லூரியிலும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லுாரியிலும் பயின்று பாடசாலைப் படிப்பை நிறைவு செய்தார்.
(இந்து ஒளி

சொல்லிய பாட்டினர் பாராளுணர்ந்து பொய்ய4Mார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் மோத்தப் பணிந்து."
பொருளுணர்ந்து சொல்லுவார் எழுவாயாகவும், செல்வர் " சிவப்புரத்தினுள்ளார் பயனிலையாகவும் அமைந்துள்ளன. சிவனடியார்களால் போற்றப்படும் ஒரு பேறு. சிவனடிக்கீழ் சென்றடைவது மற்றைய பேறாகும்,
"கட்டாத் தெனையாண்டு கண்ணார நீர் இட்ட அன்பரோடு யாவருங் காணாவ பட்டி மண்டபம் ஏற்றினை சாரினை எட்டி னோரண டும்அதி யேனையே." என்றார் இன்னோரிடத்தில்.
பாட்டின் பொருளுணர்தல் என்பது மெய்பொருளை அறிதல் என்பதாகும். அந்தப் பொருளே சிவமென்னும் செம்பொருளாகும்.
எனவே, திருவாசகத்தின் முழு அடக்கமும் சிவபுராணமே என்பதையும், சைவ சித்தாந்த அடிப்படையில் ஆன்மா இறைவனை அடையும் நெறியை இப்பகுதி விளக்கி நிற்கிறது என்பதையும், இதனைப் பொருளுணர்ந்து பாடிப் பரவுவோர் பிறவாத இன்பப் பேரின்ப வீட்டினை அடைவர் என்பதையும் முழுப்பொருளாக அறிய வைப்பது சிவபுராணம். இதனை நாடொறும் காலை மாலை ஓதிப் பயனடைவோமாக!
தொல்லை இருப்பரவச் சூழுந் தளைநீக்கி அல்லலறுத் தாணந்த மாக்கியதே – எல்லை மருவா நொயளிக்கும் வாதவூ ரெங்கோன் திருவா சகமென்னுந் தேன்."
ரை நினைவிருக்கும்
இதன் பின் தனியார் நிறுவனங்களில் இணைந்து நிதி தொடர்பான பதவிகளை வகித்துவந்தார். - பின்னாளில் இவர் வர்த்தக நிறுவனங்களை தோற்றுவித்து, அதனை நிர்வகித்து வந்ததன் மூலம் பிரபல தொழிலதிபராக விளங்கினார். இதன் காடாக உழைப்பால் உயர் ந்த பெருமகனாகக் காணப்பட்ட இவர், சமய சமூகநல மற்றும் கல்விப்பணிகளுக்காக வாரி வழங்கிய வள்ளன்மை பலராலும் போற்றப்பட்டு வந்தது.
இவரது பரந்த சமய சமூகப் பணியின் மகுடமாகவே அகில இலங்கை இந்து மாமன்றத் தலைமையகக் கட்டிடத்தைக் குறிப்பிடலாம். இந்து மாமன்றத்திற்கான காணி கிடைத்திருந்தும், அதன் கட்டிடவேலைகள் ஆரம்பிக்கப்படாதிருந்த வேளையிலேயே மாமன்றதி தலைவராக இவர் பதவி ஏற்றிருந்தார். மாமன்றத் தலைமையகத்திற்கான கட்டிடம் அமைக்கப்படவேண்டும் என்பதில் இவர் காட்டிய ஆர்வமும், இவரது துணிச்சலான முயற்சிகளும், செயற்பாடுகளும் முழு அளவில் வெற்றிபெற்றன.
| 19
ஜய வருடம் ஆனி - ஆடி

Page 22
ஒரு தொகைப் பணத்தை தனது அன்பளிப்பாக வழங்கி இவர் தொடக்கி வைத்த கருமம் அகில இலங்கை இந்து மாமன்றத் தலைமையகமாக வடிவம் பெற்று, இவரது நினைவை என்றென்றும் மீட்டிக் கொண்டிருப்பதுடன், அன்னாரின் பரோபகாரப் பண்பையும் எடுத்துச் சொல்கிறது.
இவரைப் பற்றி, நம்நாட்டின் பிரபல எழுத்தாளராக விளங்கிய அமரர் நா.சோமகாந்தன் அவர்கள் 1996 ஆகப் ட் 4 ஆம் திகதி வெளியாகிய தினகரன் வாரமஞ்சரியில் எழுதியிருப்பதையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகவிருக்கும்.
| ""எத்தனையோ பெரிய மனிதர்கள் முயற்சித்தும் இந்து மாமன்றத்திற்கான ஒரு கட்டிடம் எழுப்ப முடியாமற்
அமரர் பாலா நினைவு திரு வே.பாலசுப்பிரமணியம் 1992ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் திகதியன்று காலமானார். கடந்த 15ஆம் திகதி இவரது 27ஆவது நினைவு தினமாகும்.
இவரது சேவையை நினைத்துப் போற்றும் வகையில் மாமன்றம் வருடந்தோறும் நினைவு நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்திவருவது வழக்கமாகும், இம் முறை நினைவு நிகழ்வாக "திருவுருவ வழிபாட்டின் தத்துவமும் ஆலய வழிபாட்டு முறைகளும்" எனும் பொருளிலான சிந்தனைக் களம் இடம்பெற்றது. இம்மாதம் (ஜூலை) நீ,ஆம் திகதி பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் காலை 10.00மணியளவில் மாமன்றத் தலைவர் திரு.கந்தையா நீலகண்டன் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்ற இந்த நிகழ்வின் போது இரத்மலானை சக்தி இல்லப் பிள்ளைகளின் இறை வணக்கப் பாடல் இடம்பெற்றது.
திரு.கந்தையா நீலகண்டன் தலைமையுரையின் போது "மாமன்றத் தலைமையகத்திற்கான கட்டிடவேலைகள் ஆரம்பிக்கப்பட்டபோதும், அது எழுந்திராத நிலையில் "கட்டிக்காட்டுவேன்” என உறுதிபூண்டு எங்களுக்கு பலவகையிலும் உதவிபுரிந்து வெற்றிகண்டவர் அமரர் பாலசுப்பிரமணியம் அவர்கள். இன்று மாமன்றம் நாடளாவிய ரீதியில் பல்வேறுபட்ட சேவைகளைச் செய்வதற்கு அன்று பாலா அவர்கள் வழிவகுத்து தந்திருப்பதை என்றுமே மறந்து
ஆடிப்பிறப்பு
oooooooooooooo)
|
பூவுலகில் ஓராண்டு காலம் தேவர்களுக்கு ஒரு நாளாகும், அதாவது தை மாதம் முதல் ஆனி மாதம் வரையிலான காலப்பகுதி பகற்பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையிலான காலப்பகுதி இரவுப் பொழுதாகவும் அமைகின்றது. பகற் பொழுது உத்தராயண காலம் என்றும், இரவுப் பொழுது தட்சிணாயண காலம் என்றும் சொல்லப்படுகின்றது.
உத்தராயண காலம் நிறைவு பெற்று தட்சிணாயண காலம் ஆரம்பிக்கும் நாள் ஆடி மாதப் பிறப்பாகும், பூமியில் கார் காலத்தின் ஆரம்பமாகவும் ஆடி மாதம் அமைகின்றது. அதாவது பயிர் வளர்ச்சிக்குத் தேவையான மழைக்காலம் ஆடி மாதத்திலேயே ஆரம்பிக்கின்றது.
(இந்து ஒளி

போய்விட்டது. பாலா இந்து மாமன்றத் தலைவராகப் பொறுப்பேற்றபோது, "எத்தனையோ பேர் ஏறிச் சறுக்கி விழுந்த சண்டிக் குதிரையில் இப்போது பாலா ஏறியிருக்கிறார், இதை இவரா அடக்கப் போகிறார்?' என எண்ணியவர்களும் உண்டு. ஆனால் பாலாவின் திடசித்தத்தையும், உபகரிப்பு உள்ளத்தையும் தெரிந்து கொண்டவர்கள் கட்டிடம் இனி எழுந்து விடும் என்பதை உறுதியாக நம்பினர், குறுகிய காலத்தில் தனது சொந்தப் பணத்தைக் கொண்டு முதல் மாடியைக் கட்டி முடித்து, அடுத்த மாடிகள் அமைய வழிவகுத்தவர் வள்ளல் பாலா" என்கிறார் எழுத்தாளர் சோமகாந்தன் அவர்கள்.
புச் சிந்தனைக் களம்
விட முடியாது. இவரது நினைவாக இடம்பெறும் இன்றைய சிந்தனைக்களம் மூன்றாவது தொடர் நிகழ்வாக அமைகிறது, மாணவர் களுக்கான நல்ல விடயங்களை வழங்கும் இந்த சிந்தனைக்களம் மிகவும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பமாகும். தாய்மார்கள் இளம் சந்ததியினரை ஆன்மீக ரீதியில் சிந்திக்க வைக்கத் தூண்டவேண்டும்.” என்று குறிப்பிட்டார்.
தலைமையுரையைத் தொடர்ந்து சிந்தனைக் களம் ஆரம்பமானது. கிழக்கு பல் கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி ம. பாலகைலாசநாத சர்மா கருத்துரை வழங்கினார். கணினியுடன் இணைந்த வகையிலான நவீன தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தி ஒளித்திரை ஊடான விளக்கங்களுடன் இவர் கருத்துக்களை எடுத்துச் சொன்னது சிறப்பாக இருந்தது. இவரது கருத்துரையின் பின், அவையினர் கேட்ட கேள்விகளுக்கு சிவஸ்ரீ மணி ஸ்ரீநிவாசக் குருக்கள் அவர்களும், சிவஸ்ரீ வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்களும் விளக்கமளித்தார்கள்.
நிகழ்வின் இறுதியாக மாமன்றப் பொதுச் செயலாளர் கலாநிதி மு.கதிர்காமநாதன் நன்றியுரை வழங்கினார்.
நிகழ்வில் “ கலந்து கொண்ட அனைவருக்கும் திருமதி சாந்தி பாலசுப்பிரமணியம் அவர்களது ஏற்பாட்டில் மதிய போசனம் வழங்கப்பட்டது.
ஆடி மாதப்பிறப்பு நாளன்று இந்துக்கள் கூழ் காய்ச்சி கொழுக்கட்டை அவித்து வைத்து தங்கள் வீடுகளிலே இறைவழிபாடு செய்து வருவது நீண்டகாலமாக இடம் பெற்று வரும் ஒரு கிராமியப் பாரம்பரிய வழக்கமாக * அமைந்துள்ளது. இதனையே நவாலியூர் சோமசுந்தரப் 3 புலவர்,
"ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே கூசப்பனங்கட்டி கூழும் நடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
என்னும் பாடல் மூலம் ஆடிப்பிறப்பின் மகத்துவம் பற்றி சொல்லியிருப்பதையும் இங்கு நோக்குவது பொருத்தமானது.
ப்-2********************-*-*-*-*-*-*-*
ஜய வருடம் ஆனி - ஆடி

Page 23
(சிவயோகர் சுவாமிகள் பக்கம்
நல்லாசானாக விளங்கிய தவ
((கலாபூஷணம் திருமதி. இராஜேவ
#வண்டு பணி செய்யும் வாய்பெருரு நாதாரில் சிண்டு மனத்தவரை இமணிலைக்குக் கொண்டுவரும் - தெரடியில் தேசிதனைக் கண்டு தரிசித்தேன் தீபா பற்று என்றான் சிரித்து"
கிளிநொச்சியிலிருந்து நல்லூர்த் -4 தேரடியைத் தே நாடி ஓடி வந்து தேரடிச் சுவாமிகளின் உபதேசம் பெற்றவ யோக சுவாமிகள் ஆவர்.
ஆரம்பத்தில் அரசாங்க நீர்ப்பாசனக் களஞ்சியம் காப்பாளராக கடமையாற்றி வந்த சதாசிவன் என்னும் இளைஞனை செல்லப்பா சுவாமிகளின் தொடர்பு காந்தம்போல் இழுத்தது. இயற்கையாகவே ஆன்மீக ஈடுபாடு கொண்டிருந் இளைஞன் செல்லப்பா சுவாமிகளின் உபதேசம் பெற்றது தனது அரசசேவையைத் துறந்து, உற்றார் உறவினரை; துறந்து, தன் குருவையே தாயாகவும், தந்தையாகவும், ஆசாரி ரகவும், தெய்வமாகவும்,சகலதுமாகவும் கொண்டு அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி தானும் ஒரு துறவியானா இவரே எமது நெஞ்சமெல்லாம் குடிகொண்ட யோ. சுவாமிகள் ஆவர்.
இன்று அவர் பரமபதமடைந்தாலும் யாழ்ப்பாணம் செங்கலிடி போன்ற இடங்களில் சமயப்பணி ஆற்றிவரு அருள் நிலையங்களான சிவதொண்டன் நிலையங்களிலே இன்றும் நாம் யோகர் சுவாமியை மானசீகமாகத் தரிசிக்கலாம் தரிசிக்கின்றோம்.
யோக சுவாமிகள் யாழ் மாவிட்டபுரத்தில் பிறந்தவ அவரது ஜனனம் சைவ உலகிற்கு அதிலும் யார் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தமை யதார்த்தம் நோயுற்றோர்க்கும், இன்னலுற்றோர்க்கும், வாழ்க்கை பயணத்தில் வழிதடுமாறியோர்க்கும், அவர் வழிகாட்டியா கலங்கரை விளக்கமாக திகழ்ந்தார், அவரது அருள்வாக்கின்ப வாழ்ந்து உய்ந்த குடும்பங்கள் ஏராளம். அவரது போக்கு இயல்பு, தன்மை, செயற்பாடு என்பனவற்றை எவராலு இலகுவில் புரிந்து கொள்ள முடியாது. அவரைப் புரிந்த கொண்டவர்கள் அவரைப் பல் வேறு கோணங்களில் கண்டறிந்தனர்.
சிலருக்கு அவர் ஒரு ஆன்மீக குருவாகத் தென்பட்டார் சிலருக்கு அவர் ஒரு தத்துவஞானியாகத் தென்பட்டா சிலருக்கு அவர் ஆத்மீக வித்தகராகத் தென்பட்டா சிலர் அவரை ஒரு அருளாளராகக் கண்டுகொண்டன சிலருக்கு அவர் ஒரு இரட்சகராக விளங்கினார், சிலருக்கு இவர் வேடிக்கை காட்டும் பித்தனாகவும் தோன்றினா இவ்வாறு இவரது தன்மை செயற்பாடுகள் இவரோ நன்கு பழகியவர் களுக்கும் அவர் மேல் நம்பிக்ை வைத்திருந்தோர்க்கும் அவரை உணர்ந்தோர்க்கும் அவர: வழிகாட்டும் அருளைப் பெற்றவர்க்கும் மட்டுமே நன்கு புரியு பலருக்கு அவர் தாயினும் அன்பு தழைத்தோர் குருவா விளங்கினார்,
சுவாமிகள் தன்னைச் சரண் என்று வந்தடைந்தோர்க்கு செய்த உதவிகள் ஏராளம், அவை அற்புதமானவை (இந்து ஒளி

மத்திடு யோகசுவாமிகள்
ஸ்வரி ஜெகானந்தகுரு)
தெய்வத் தன்மை நிறைந்தவை. இலகுவில் புரிந்து கொள்ளமுடியாதவை. அவரது உபதேசங்கள், சொற் சுருக்கத்தோடு ஆழ்ந்த கருத்துக்கள் பொதிந்தனவாய் அமைந்திருக்கும்.
E = M H" பி 2 5
"சும்மா இரு" "எல்லாம் எப்போதோ முடிந்த காரியம்" "ஒரு பொல்லாப்புமில்லை" "நாழி அறிவாய், முழுவதும் உழை"
இ ைவ சுவா மிகளின் தலையாய உபதேச மொழிகளாகும்.
"சும்மா இருப்பது என்றால் சுலபமான காரியமா என்ன? பேச்சை அடக்கலாம், மனசை இலேசில் அடக்கமுடியுமா? இவை அருள் தேடுவோர்க்கு நாடுவோர் க்கு மிக அவசியமானவை.
யோகர் சுவாமிகள் தனது குருவை சிவகுருவாகவே கண்டவர். தனது குருவின் உபதேசங்ளை ஒன்று திரட்டி அவர் தனது நற்சிந்தனைப் பாடல்கள் மூலம் எமக்குத் தந்திருப்பது யாம் அறிந்ததே, இப்பாடல்கள் எளிமையும் சொல்லழகும் கருத்தாழங்களும் மிக்கவை. உதாரணமாக,
5, ம்
"அந்த வாக்கும் பொய்த்துப் போபியா ஆசான் நல்தார் வீதியில் அருளிய அந்த வாக்கும் பொய்த்துப் பொதிமார் என்ற பல்லவியைக் கொண்ட கீர்த்தனை தனித்துவமானது. இரசனைக்குரியது. இவரது பாடல்கள் ஒவ்வொன்றும் நவரத்தினங்களுக்குச் சமமானவை, ஞான தீபங்கள் இவை என்பது உண்மை: சுவாமிகளின் குருவாக விளங்கிய செல்லப்பா சுவாமிகள் தனது வாழ்வில் பெரும் பகுதியை நல்லூர் மண்ணில் கழித்தவர். நல்லைக் கந்தன் ஆலயத்தின் முன்றலிலே உள்ள வில்வமர நிழலிலே நிட்டைகூடி அமர்ந்திருப்பது அவரது வழக்கமாகும். அவர் தேர்ந்தெடுத்த தனது உத்தம சிஷ்யனே யோகர் சுவாமிகளாவர். இவரையும் நல்லூர் மண்ணையும் பிரித்து நோக்கமுடியாது. ப யோக சுவாமிகளது ஆச்சிரமம் கொழும்புத்துறையில் அமைந்திருந்தது. அங்கு எந்நேரமும் அவரது தொண்டர்கள் அவரைச் சூழ்ந்திருப்பர். அவரது தொண்டர்களிடையே வெளிநாட்டம் இருந்தமை கண்கூடு. பிடிகொடாது பேசுவதில் சுவாமிகள் வல்லவர். அது அவரது இயல்பு. ஒவ்வொரு " நேரமும் ஒவ்வொரு நிலையில் அவர் காணப்படுவார். சில சமயங்கள் அருள் வாக்குப் பெற வந்த அடியார்கள் சுவாமியிடம் ஏச்சு வாங்கிய சந்தர்ப்பங்களுமுண்டு. ஆனால் சுவாமியை நன்கு புரிந்து கொண்டவர்கள் அவரது ஏச்சுக்களை தம்மேல் அவர் சொரியும் அன்பு மலர்களாகவே ஏற்றுக் கொண்டனர். காரணம் தமது குருவை அவர்கள் நன்கு
அறிந்து கொண்டதுடன் நன்கு புரிந்தும் கொண்டவர்கள். த தீர்க்க தரிசனம், கருணை, அன்பு, ஆதரவு, புரிந்துணர்வு, அதிகாரம், ஹாஸ்யம், கோபம், சினம் ஆகிய குணங்களை
ஜய வருடம் ஆனி -ஆடி
=" H.
+ F
து
க
பி;

Page 24
சுவாமிகள் அவ்வப்போது வெளிப்படுத்துவது வழமை. சுவாமிகளிடம் அணுகிய அடியார்களை அவர் பக்குவப்படுத்திய
முறையே தனித்துவமானது.
நல்லூர் - நல்ல ஊர். சுவாமிகள் சுற்றிச் சுற்றி உலாவந்த சுந்தர நல்லூர். அவர் பாதம்பட்ட நல்லூரின் ஒவ்வொரு மணலும் அருள் சுமக்கும். ஆலயவீதி ஒவ்வொன்றும் சுவாமிகளது புனிதமான நினைவுகளைப் பசுமையாக்கித் தருகின்றன. மனச்சாந்தியையும் அளிக்கின்றன.
பெரியோர்,சிறியோர், ஏழை, செல்வந்தன், விவேகி, முட்டாள் என்ற பேதம் பாராது தனது தொண்டர்களின் மனநிலையை நன்கு புரிந்து மிக நுணுக்கமான முறையில் அவர் களது மனப்புண்ணுக்கு மருந்திட் டவர் எமது பெருமதிப்புக்குரிய யோக சுவாமிகள், ஞானி போலும், முரடனாகவும் சில சமயம் தோன்றுவார். ஏழைகளால் சமுதாயத்துக்கு தீங்கு நேராது. செல்வந்தரின் பணபலமும்
அன்னதான் விஷ்ணுவித்யாசாகரம் பிரம்மஸ்ரீ .
"கொடை வள்ளல்" என்று சொன்னதும் சட்டென்று நம் நினைவுக்கு வருபவன், கர்ணன். தனது உயிர் பிரியும் நேரத்தில் கூட அள்ளிக் கொடுத்தவன் அவன். மகாபாரத போர்க்களத்தில் அருச்சுனன் எய்த அம்பு மழையில் | உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவனிடம், அவன் அதுவரை செய்த புண்ணியங்களை எல்லாம் வேதியர் வடிவம் எடுத்துச் சென்று கண்ணன் பெற்று விடுகிறார்.
ஒருவனது உயிர் பிரியும் நேரத்தில் அவனிடம் ஒருவர் தானம் கேட்கிறார் என்றால் அதில் காரணம் இல்லாமல் இருக்காது என்பதை உணர்ந்த கர்ணன், தான் தானம் செய்த பிறகே "தாங்கள் யார்” என்பதை அந்த வேதியரிடம் கேட்கிறான். வேதியராக வந்தது கண்ணன் அல்லவா? அந்த மகாபாரதப் போர்க்களத்தில் கர்ணனுக்கு தனது | விஸ்வரூப் காட்சியைத் தருகிறார். அதன் பிறகு கர்ணன் உயிர் பிரிகிறது. இல்லை என்று வந்தவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்தவன் அல்லவா கர்ணன்? நேராக சொர்க்கம் செல்கிறான். அங்கே அவனுக்கு எல்லா விதமான வசதிகளும் கிடைக்கிறது. ஆனால் கடுமையான பசி மட்டும் அவனுக்கு | எடுக்கிறது. சொர்க்கத்தில் பசி என்ற உணர்வே கிடையாதே, அப்படியென்றால், நமக்கு மட்டும் பசி எடுக்க என்ன காரணம்? என்று அவன் எண்ணிய போது, அங்கே நாரத மகரிஷி தோன்றினார். கர்ணனிடம் நாரதர், "உன்னுடைய பசி நீங்க வேண்டுமானால், உன் ஆள்காட்டி விரலை வாயில் வைத்துக் கொள்.”' என்று கூறி விட்டு மறைந்தார், கர்ணனும் அதன்படி செய்ய , அவனது பசி உணர்வு அடங்கிப் போயிற்று. உடனே ஆள்காட்டி விரலை வாயில் இருந்து எடுத்தான். ஆனால் மறுபடியும் பசித்தது. உடனே திரும்பவும் தனது ஆள்காட்டி விரலை வாயில் வைத்தான். எழுந்த பசி உணர்வு அடங்கிப் போனது. ஆள்காட்டி விரலை எடுத்த போது திரும்பவும் பசிக்க ஆரம்பித்தது.
(இந்து ஒளி

செல்வாக்கும் சில சமயங்களில் ஆபத்தானது என்பதை, அவர் மனதில் கொண்டு அவர்களைத் தனிப்பட்ட முறையில் அணுகி நல்ல மனிதர்களாக்கிய சம்பவங்களும் உண்டு. நல்ல சமுதாயமொன்றை உருவாக்கிட வேண்டும் என்பது அவரது உள்ளத்து அவா.
அவரது துாய்மையான தெய்வீகத் தோற்றத்தை சற்று உங்கள் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றேன். உயர்ந்த நெடிய கம்பீரமான தோற்றம், வெண்ணிற வேஷ்டி, தோளில் ஒரு துண்டு, வெள்ளி அலைகள் போல் பரவிய நீண்ட தாடி, முகத்தில் தெய்வீகக் களை, கண்களில் அருட்கனல், இத்தனையும் அமைந்து எங்கள் நல்லாசான் இன்று எமது மத்தியில் இல்லாவிடினும் அவரது நற்சிந்தனைப் பாடல்கள் அனைத்திலும் அவர் நிறைந்துள்ளார், பொலிந்துள்ளார். எனவே அவற்றைப் பாடுவோம், படிப்போம், நிச்சயம் அவை எமக்கு கைகொடுக்கும்.
ர மகிமை சத்திய நாராயண குருக்கள்.
ஏன் தனக்கு மட்டும் இப்படி நேர்கிறது? என்று கர்ணன் தவித்த போது, அங்கே மறுபடியும் நாரதர் தோன்றினார். "என்ன கர்ணா ஆள்காட்டி விரலை எடுத்ததும் மறுபடியும் பசிக்கிறதா?'என்று கேட்க, ""ஆமாம் நாரதரே! அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை...., தாங்கள் தான் விளக்க வேண்டும்" என்கிறான் கர்ணன். "கர்ணா!..... உன் வாழ்வில் நீ அனைத்து தானங்களையும் செய்து இருக்கிறாய் - ஆனால் ஒரே ஒரு தானத்தைத் தவிர," என்கிறார் நாரதர், "அது என்ன தானம்?” ஆர்வமாகக் கேட்டான் கர்ணன். "அது தான் அன்னதானம்!.ஆம்! நீ பூலோகத்தில் அன்னதானம் செய்யாமல் சொர்க்கத்திற்கு வந்ததால், இங்கு வந்ததும் உனக்குப் பசியெடுக்கிறது. உன் பூலோக வாழ்நாளில் ஒருநாள் உன்னிடம் இருந்து தானம் பெற்ற ஒருவர், அன்னசத்திரம் எங்கிருக்கிறது எனக் கேட்க... அதற்கு நீ உன் ஆள்காட்டி விரலை சுட்டிக்காட்டி அங்கே இருக்கின்றது என்றிருக்கிறாய். நேரடியாக அன்னதானம் செய்யாவிட்டாலும் அன்னதானத்திற்கான காரணியாக விளங்கிய உன் ஆள்காட்டி விரல் மட்டும் அன்னதானப் பலன் பெற்றது. அதனால்தான் உன் ஆள்காட்டி விரலை வாயில் வைக்கும் போது மட்டும், சொர்க்கத்தின் முழுப்பலனாகிய பசியின்மையும் சேர்த்து உனக்குக் கிடைக்கிறது" என்றார் நாரதர்.
இதற்குப் பிறகுதான் கர்ணனுக்கு அன்னதானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. நாரதர் வழிகாட்டலில் இறைவனிடம் அந்தக் கோரிக்கையை முன்வைத்து திறைவேற்றினான், கர்ணன்! - அன்னதானம் செய்யாமல், அன்னசத்திரம் இருந்த இடத்தைக் காட்டியதற்கே சொர்க்கத்தில் பசியின்மை என்கிற புண்ணியம் கிடைக்கும் போது சொர்க்கத்தை விரும்புபவர்கள் தம்மால் முடிந்தவரை அன்னதானம் செய்ய வேண்டும் என்பது இதன்மூலம் உணர்த்தப்பட்டுள்ளது.
ஜய வருடம் ஆனி = ஆடி )

Page 25
சிவயோக சுவாமிகளின் ஐம்பதாவது குருபூசை தி கட்டுரைப் போட்டியில் மத்திய பிரிவில் முதலாவது
சிவயோக சுவாமிகளின் போதன
செல்வன் ராமலிங்கம் ஹெவன்பிட்டி தமிழ் மகா வித்திய
மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம் எனுப் ஒளவையார் அமுதமொழியை அடியொற்றி, அலைபாயுப் மனத்தினை அதன் வழிச்செல்ல விட்டு வாழ்வாங்கு வாழ் வேண்டிய நெறிமுறைகளை அறவே புறந்தள்ளி ஆன்மீக நாட்டம் சற்றுமின்றி உலகியல் என்ற சகதிக்குள் அகப்பட்ட அமிழ்ந்து அல்லற்படும் மக்களை அவ்விருளிலிருந்து மீட்கவும் மெய்ப்பொருளை உணர்த்தி உய்யும் வழி காட்டவும் ஞானிகள், அருளாளர்கள், அனுபூதிமான்கள், அவதாரபுருவ ர்கள் என்போர் அவ்வப்போது தோன்றுவது உலக வரலாற்றில் இடைக்கிடை இடம்பெறும் நிகழ்வாகும்.இத்தகைய அனுபூத பெற்ற ஞானிகள் ''புண்ணியபூமி” எனப் போற்றப்படும் பாரதி நாட்டைப் போலவே "சிவ பூமி" எனப் போற்றப்படும் ஈழத் திருநாட்டிலும் அவ்வப்போது தோன்றி மனுக்குலம் மண்ணில் நல்ல வண்ணம் வாழ நல்வழி காட்டியுள்ளனர்.கடையி சுவாமிகள், செல்லப்பாசுவாமிகள், யோகர் சுவாமிகள் மார்க்கண்டு சுவாமிகள் என அந்த ஞானப் பரம்பரை நீண் செல்லும்.
இவ்வரிசையில் சதாசிவன், யோகநாதன், ஜோன், யோகர் யோகசுவாமிகள் எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்ட சிவயோக சுவாமிகள் என்ற செந்தமிழ் ஞானி 1872-19654 கால பகுதியில் மக்களோடு மக்களாக வாழ்ந்தவர்.மாவிட்டபுரத்தில் பிறந்து யாழ் நகரில் கிறிஸ்தவ சூழலில் கல்வி கற்ற கிளிநொச்சியில் ஆங்கில அரச அதிகாரியின் கீழ் அரச பதல் வகித்து உலகியலுடன் ஊடாடிய யோகநாதன் என்ற அந்த பக்குவப்பட்ட ஆன்மா நல்லுார்த் தேரடியில் செல்லப்ப என்ற ஞான தேசிகரின் அருட்பார்வைக்கு ஆளானதிலிருந்து ஆழமான பொருள் பொதிந்த மந்திரமனைய அவர் த அருளுபதேசங்களைச் செவி மடுத்ததிலிருந்து ஆன்மீக பயணத்தில் பல தடவைகள் சிரமங்களைப் படிப்படியாக. கடந்து ஞான முதிர்ச்சி பெற்ற மறைஞானியாக உயர்ந்து மனுக்குலம் உய்தி பெற வழிகாட்டிய ஒப்பற்ற ஞான குருவாக விளங்கினார்.
இவ்வாறாக, மனுக்குலம் மாண்பு பெற சுவாமிகள் செய்தி போதனைகளும் சாதனைகளும் பற்றிய எமது எண்ண ஓட்டத்தைச் சற்று திசைதிருப்புவோம்.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது கொப்ப மனுக்குலம் மண்ணில் நல்ல வண்ணம் வா அருமையான நல்லுபதேசங்களை சுவாமிகள் உலகுக் அளித்துள்ளார்.ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற சாத சமயம் கடந்த நிலை, சமரச சன்மார்க்க நெறி, எளிமை உயிர்களிடத்து அன்பு, ஜீவகாருண்யம் சமயம் விதிக்கு சமயக்கிரியைகள், உள்ளத்தில் உத்தமனைக்காணும் அகவழிபாடு, ஆன்ம ஈடேற்றம் இவைகளைப் பெரிது
(இந்து ஒளி |

னேத்தையொட்டி மாமன்றம் நடத்திய து பரிசைப் பெற்றுள்ள கட்டுரை இது.
மனகளும் சாதனைகளும்
நித்தியராஜ்
பாலயம் = பொலநறுவை
பேசியிருக்கிறார் சுவாமியவர்கள்.மக்களோடு மக்களாக வாழ்ந்து மெய்நெறியில் வாழ வழிகாட்டிய பெருமகான். மனத்துக்கண் மாசிலனாகி அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் நான்கினையும் அறவே ஒழித்து அறவாழ்க்கை வாழ்ந்த புனிதரே சுவாமிகள்.அவரின் துாய்மையான துறவு வாழ்க்கையினை ஞர்னப் பொக்கிஷமான நற்சிந்தனை மூலம் நன்கு அறியலாம்.
தன்னை அறிந்து மெய்ப்பொருளைக் காணவிழைந்த சுவாமிகள் ஓதி உணத்தும் தன்னையே, தவத்தையாற்றி அறிவதும் தன்னையே எனக் கூறி நானார் என்னுள்ளமார் என சிந்தித்துக் கண்டு கொண்டார். மக்களைத் தன்பால் ஈர்க்கும் எண்ணம் சுவாமிகளிடம் இருந்ததாகத் தெரியவில்லை.இஷ்ட சித்திகள் எய்தவும் விட்டிலன் என சித்துக்கள் செய்யும் ஆற்றல் தனக்கிருந்தும் அவற்றைச் செய்யும் வாய்ப்புக்களை தன் ஞானகுரு தனக்கு மனமுவந்து அளிக்கவில்லை எனக் குறிப்பிடுகிறார்.வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து ஆன்ம ஈடேற்றம் பெற வழிகாட்டிய ஒப்பற்ற ஒரு ஞானகுருவாக விளங்கினார்.நல்லுார் முருகனிடம் ஆராத பக்தி கொண்ட சுவாமிகள் அடிக்கடி அவரைத் தரிசிக்க செல்லும் வழக்கமுடையவராயிருந்தார்.இறைவனே செல்லப்பா வடிவில் வந்து தன்னை ஆண்டு கொண்டார் என்பதை,
"இருவீணையார் மதிமயங்கி இடர்பட்டுக் கடப்பேனைக்
கருணையினால் ஆண்டு கொள்ளக் கடவுள் திருவுளங் கொண்டு அருள் மேனி தாங்கி அவனியிலே வந்தானைத் திருவிழும் நல்லை நகர்த் தேரடியில் கண்டேனே!" எனப்பாடி பரவசமடைகிறார்.மேலும்,
=
"ஆசானைக் கண்டேன் அருந்தவர் வாழ் நல்லூராரின் இபசாதன வெல்லாம் பேசினான்- கடசாமல் நிதிறன் நீ யாரடாவென்றே அதட்டிலாண் அறே யான் பெற்றேன் அருள் - 5
எனவும் கூறினார். செல்லப்பா சுவாமிகளின் ஒரு பொல்லாப்புமில்லை அப்படியேயுள்ளது.ஆரறிவார் எனக்கூறிய வாசகத்தை உணர்ந்த அந்நிலையில் தான் அடைந்த சுகத்தை,
"அயலறியாத ஆனந்தம் பெற்திறன் பயனறியாத மெளனத்தி அற்றன செயமறியாத சித்திளைக் கற்பிழன் இயகியமாறி யாவையும் அற்றேன்" எனவும் பலபட கூறி மகிழ்கின்றார்.
ஞானவைராக்கியம் பெற்ற சுவாமிகளின் அருட்பார்வை யாலும் நல்லுபதேசங்களாலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்
ஜய வருடம் ஆனி - ஆடி

Page 26
இறைநிலையை உணர்ந்தார்கள்.சற்குரு தரிசனம் ஒருவனுக்கு உய்யும் நெறிகாட்டும் என ஞான நுால்கள் கூறுவதற்கேற்ப சுவாமிகளை மக்கள் தரிசிக்கத் தொடங்கினர்.தன்னை வந்தடைந்தவர் களின் மனோநிலையினை உணர்ந்து அவர்களைத் துாயவர்களாக்கி பக்தியில் திளைக்கச் செய்து அவர்களுக்கு நன்நெறி காட்டியுள்ளார்.உண்மை முழுவதும் அறிந்திடடா. இது முடிந்த முடிவு. இதை உணர் என்றும், ஒரு பொல்லாப்புமில்லை. எதற்கும் ஏங்காதே, பயப்படாதே, வருவது வந்து போகட்டும், பொருட்படுத்தாதே எனவும், இறை நம்பிக்கையும் மனத்துணிவும் தான் வையகத்தில் வாழ்வாங்கு வாழ வழிகாட்டுமென அழுத்தி உரைப்பார்.இனி மக்களின் உயர்வுக்கு இன்றியமையாதது ஒழுக்கம் என்பதனை,
"ஒழுக்கம் விழப்பம் தரும் தம்பியாகிர ஓழென்று சிகேத செய்வீர் தம்பிமசாமிரர் அழுக்காறு அவா தெளி தம்பிமாரே ஆன்மாவைப் பந்திக்கும் தம்பிமாரே வழுக்கி விழுந்தாலும் தம்பிமாரே மலரடியைச் சிந்தை செய்வீர் தமரிமாவீர மாப்பிளக்க பொய்யுரைத்துத் தம்பிமணாவிர நாட்டில் பொருள் தேட வேண்டாம் தம்பிமாரே ஓதி உணரவேண்டும் தம்பிமாரே "உய்ய வழியது காணும் தழிரிமாரே!"
எனச் சிவத்தியானத்தின் மூலம்தான் புலன்களையடக்கி ஆளலாம் எனச் சுவாமிகள் குறிப்பிடுகிறார்.இவையெல்லாம் குறிப்பாக நாளைய நற்பிரசைகளான இளைஞர்களுக்கு காலமறிந்து அவர் கூறும் உபதேசங்கள் பொன்போல் போற்றத்தக்கவை.
இறைவனின் திருநாமத்தை வழுத்திய வண்ணமிருந்து அவருள்ளம்
நாமஞ் சொல்லுவோம் சிவநாமஞ் சொல்லுவோம் காமனை வெல்லுவோம் நாமே அவனென்று நடந்து செல்லுவோம் நிசாழ சுந்தரன் பாதங்காணுவோம் சும்மா விருக்கிற சூட்சம் பேணுவோம்" எனவும்,
""நமது உயிருக்குயிராய் இருப்பவர் கடவுளே ஆகையால் நாம் அவருடைய உடைமை. அனைத்தும் சிவன்செயல். அவனன்றி அணுவும் அசையா. தெய்வத்தை நம்பு, முழுமனதுடன் நம்பு” எனவும், "இறையருளைப் பெறுவதற்கு சிறந்த வழி பக்திநெறி" எனவும், "அல்லும் பகலும் திருவடியினையே எண்ணித் தொழ வேண்டும்.பக்தியால் கும்பிட்டுப் பாடிட வேண்டும்" எனவும், "சத்தியம், பொறுமை, சாந்தம், அடக்கம், அடியாரைப் பணிதல், ஐந்தெழுத்தோதல், குருபாதம் பணிதல் ஆன்ம ஈடேற்றத்துக்கு வழிகாட்டும்” எனவும் கூறியிருக்கிறார்.
"அண்புடனே ஐந்தெழுத்தைச் சொல்லு- வேல்வேல் ஆசானடிக்கீழ் அயர்ந்து நீ நில்லு
(இந்து ஒளி

கொஞ்சம் கொஞ்சமாய் மனது நிவன்-இவன்சிவம் கூடாது கூட்டத்தை விட்டு நீ - செல்லு" என்றும்
அன்பு சிவமென்ற ஆன்றோர் திருவாக்கை இன்பமுடன் போற்றியிருப்பதுவுழெக்காலம் " என்றும், எல்லாவற்றையும் அன்பாகக் காணும் சுவாமிகள் அன்பு ஒன்றே சிவப்பேற்றைத் கருமென உபதேசித்தார். - சுவாமிகள் கடவுள் என்று சொல்லிக் கொண்டு அங்குமிங்கும் ஓடி அங்கலாய்த்துத் திரிவோரை தாம் கற்ற வாலறிவினைக் கொண்டு கடவுளைக் கண்டு விட்டதாகப் பிதற்றித் திரிவோரை போலிவேடதாரிகளை மிகவும்: கடுமையாக சாடியுரைக்கிறார்.
"அங்குமிங்கும் ஓடிய அவதிப்படுகிறார் பங்கு பொட்டுப் பார்க்கிறார் பரிதவித்து வாழ்கிறாய்
சங்கர் தெய்வம் உங்கள் தெய்வம் என்று வாது பெசுகிறார்
சாதி சமயமென்று சண்டைப்பருகிறாய் தத்துவத்தையறியாமல் சங்கடப்படுகிறாய் நிதியுணராமல் கயறிந்தவர் பிபால் பிரெங்கும் சென்று பிரசங்கம் பண்ணுகிறாய்" எனக் கூறிக் கொண்டார்.
உலகம் உய்ய அனைவருக்கும் இனிய இலகுதமிழில்” அண்ணன்மாரே தம்பிமாரே ஆச்சிமாரே கேளீர்! அருமையான தெய்வம் நாங்கள் அதையறிந்து வாழ்வீர். இன்ன தன்மை என்று நம்மை எடுத்துச் செல்வாருண்டோ? என்ன பயம்? எங்களுக்கு எல்லாம் சிவமன்றோ. அவனன்றி ஓரணுவும் அசையாதெனப் பெரியோர் அன்று சொன்ன நிறை மொழியை மறுப்பதுவும் சரியோ? அங்கிங்கெனாதபடி எங்கும் சிவமென்று அறிந்தடங்கி அகிலத்தில் வாழ்வதுவே நன்று" என்று அருளுபதேசம் புகன்றார்.
"சிவபக்தி மாத்திரம்தான் மனிதனைப் பாக்கிய வானாக்கும். மற்றவை அனைத்தும் பிரயோசனமற்றவை. ஆகையால் இடை விடாமல் சிவத்தியானம் பண்ணு. ஒன்றுக்கும் பயப்படாதே, வெற்றியுன் சொந்தம். வெளிமாதிரியொன்றும் செய்யாதே உள்ளுக்குள் பலத்துக் கொள். தரும் நெறியில் பிசகாதே. எவ்வுயிரும் பெருமான் திரு முன்னிலை என்று சாதனைசெய், கடவுள் உள்ளும் உள்ளவர்."* இப்படிப் பலப்பல அருளுபதேசங்களை தமது திருமுகங்கள்
வாயிலாகவும் கூறிச் சென்றுள்ளார்,
த மனித குலம் மாண்பும் மகத்துவமும் பெற்று தனது போதனைகள் மூலம் அவற்றை சாதனைகளாக்கி ஆழமாக ஆத்மீகத்தில் திளைத்த மக்கட் சமூகத்தை உருவாக்கிய சுவாமிகள் தொண்ணூற்றொராண்டுகள் நின்று அருள்புரிந்து 1964ஆம் ஆண்டு பங்குனித் திங்கள் ஆயிலிய நட்சத்திர நாளில் திருவடிக்கலப்புற்றார்.
அத்துவிதப் பொருர் காப்பாழ்-ராத் கழியார் களென்றென்றுங் காப்பாம் சித்தரும் பிதாரும் காப்பாய் -அன்றர் சித்தத் திலங்குத் திருவருள் காப்பாம்.
அய வருடம் ஆனி = ஆடி

Page 27
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
சைவ உலகம் வக பஞ்ச கோபுரங்களில்
(சிவதொண்டன் தில்
உலக சைவ ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மளனத்திற்கும் அமைதிக்கும் இருக்கும் மதிப்பு விலையிடமுடியாதது. "சும்மாயிரு சொல்லற என்பது முருகப் பெருமான் அருணகிரிநாதரைப் பார்த்து அருளிய ஆசி. மௌனம் என்று சொல்லும் போது மனம் பேசாதிருத்தல் எனப் பொருள்படும். அவ்வாறு இருக்கும் நிலையில் தான் மெய்ஞ்ஞானத்தை உணர முடியும். இத ஆன்மீகத்தில் திளைத்த மகான்களின் வாக்கு.
மெளனமே பெரியோர் மனதில் நிரம்பிக் குடிகொண்டிருக்கும் ஞானத்திற்கு வெளியே தோன்றும் ஒரு அடையாளமாகும். "மெளனம்" என்பது ஞான வரம்பு இவ்வாறு ஒளிநெறி பெற்ற பஞ்ச கோபுரங்களான மௌல ஞானிகள் முறையே ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பகவான் ரமண மகரிஷி ஈழத்து மாமுனிவர் சிவயோக சுவாமிகள் காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் ஈழத்துக் கைதடி மெளன முனி மார்க்கண்டு சுவாமிகள் ஆவர். இவ்வைவரும் ஒரு குத்து விளக்கின் ஒளிவிடு பஞ்சமுனைகள். திருவருள் இந்த அருள் விளக்கை ஏற்றி வைத்திருப்பது சைவ உலகம் செய்த பாக்கியமே இந்த ஞானியரைக் குரு மூர்த்தங்களாகக் கொண்டாடுப் ஆச்சிரமங்களும் உள். இந்த ஞானியர்கள் காட்டிய ஒளிநெறியிலே அருள்பெற்றுய்ந்த அடியாரும் அநேகர்.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் புனித கங்கைச் கரையிலே தியானத்தில் அமர்ந்து மௌனத்தில் ஒளிநெர அருளினார்.இராமகிருஷ்ண இயக்கம் கதிரொளி போன்று உலகமெல்லாம் பரவியிருப்பதால் இராமகிருஷ்ணன் ஒரு அகில உலக ஞானி என்றே கூறலாம். "உன்னை நீ அறிந்து கொள், அப்போது கடவுளை அறிவாய் இறைவனை வெளியே தேடுதல் அறியாமை. தமக்குள்ளே இறைவன் இருப்பதை உணர்வதே அறிவு.இறைவனை உணர்ந்தவனே அவரது பாதத் தாமரைகளில் தன்னை அர்ப்பணம் செய்வான். தியானத்தில் சித்தியடைந்தவனுக்கு முத்தி நெருங்கிவிட்டது.” ஆகியவை பரமஹம்சர் அருளிய அருள் மொழிகளில் சிலவாகும்.)
சிவயோக சுவாமிகளும் இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் பெருமதிப்பு வைத்திருந்தார். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஸ்ரீமத் பிரேமாத்மானந்தாஜி இராமகிருஷ்ன மடத்தின் துறவியாக வருவதற்கு வழிகாட்டிய சிவயோக சுவாமிகள் ஊக்கம் கொடுத்தார்.
யாழ்ப்பாணம், செங்கலடி சிவதொண்டன் நிலையங்களில் இராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்த "காவி" உடுத் துறவிகள் மட்டும் தங்கும் வசதி செய்வதற்கு சிவயோக
(இந்து ஒளி

ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
ணங்கிப் போற்றிய ன் மெளன ஞான ஒளி
லையம்பலம் சிவயோகபதி ப் பேரவை, கனடா -ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
சுவாமிகள் உத்தரவு கொடுத்தார். ஆனால் "கந்தசாமியே காவி உடுத்து வந்தாலும் தங்கும் வசதி இல்லை என்றும் கட்டளையிட்டார். காரணம் யாதெனில் சிவதொண்டன் ஆசிரமத்தில் புனிதம் கட்டுப்பாடு ஆன்மீகம் ஆகியவை மதிப்புடன் பேணப்படவேண்டும் என்ற கொள்கைதான். காவி உடுத்து வரும் சாதாரண பண்டாரிகளிடம் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமெனவும் அவர்களுக்கு அன்னதானம் மாத்திரம் கொடுத்து உடனே வெளியே அனுப்பி விடுக" என்றும் மிக எச்சரிக்கையுடன் சுவாமி கட்டளையிட்டார்,
சிவயோக சுவாமிகள் தமிழ் நாட்டில் உள்ள சைவத்தலங்களுக்கு ஒரு தருணம் யாத்திரை சென்றபோது சிதம்பர நடராஜர் தரிசனம் செய்த பின்னர் திருவண்ணாமலைத் தலத்திற்கும் சென்றார். அங்கு - ரமணரின் அருகில் சுவாமியும் அமர்ந்தார். இருவரும் சொல் எல்லாம் மோனம்" என்றிருப்பவர்களே.ஆதலால் அவர்களுக்கு வாய்ப்பேச்சு என்ன "பயனுமில" சிவயோக சுவாமிகள் பின்னர் இது பற்றிக் கூறியபோது "ஒரு குன்றின் முன் இருந்தது போன்றிருந்தது. என ரமண மகரிஷியைப் மதித்துப் போற்றினார். அப்பரும் சம்பந்தரும் ஒருவரையொருவர் மதித்து வணங்கியும் இருந்த நிலைபோல் ரமணரும் சிவயோகரும் விளங்கினார்கள், ரமண மகரிஷி வாழ்ந்த காலத்தில் அவரைத் தரிசித்த அன்பர்கள் அடியார்கள் யாவரும் அவரவர் சந்தேகங்களுக்கான விளக்கங்களை மகரிஷியின் அமைதிப் பார்வையாலும் மெளனத்தாலுமே பெற்றனர். அவரைத் தரிசிக்க அன்பர்கள் பலர் குவிந்தனர்.குழப்பம் நீங்கினர். தெளிவுபெற்றனர். ரமண பகவான் அண்ணாமலைச் (சோதியாய்த் திகழ்ந்தார்.
ரமண மகரிஷியையும் சிவயோக சுவாமிகளையும் தனது இரு கண்களாக மதித்துப் போற்றி குருபீடமாக வணங்கிவந்த ஒரு உத்தம் சீடர் ஈழத் திருநாட்டின் நயினை நாகபூசணி அம்மனைத் தனது குலதெய்வமாக வணங்கிவந்த சைவப் பெரியார் அமரர் கே, ராமச்சந்திரா அவர்களாவர். இவர் வழியைப் பின்பற்றியவர் சைவப் பெரியார் அமரர் "ஆத்மஜோதி" முத்தையா அவர்களாவர். காஞ்சிப் பெரியார் ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் எழுந்தருளியிருக்கும் ஆலயத்தில் பீடாதிபதியாகவும் "ஸ்ரீ காஞ்சி காமகோடி காஞ்சிப் பெரியவர் என்றும் உலகில் பரந்து வாழும் சைவ மக்கள் மதித்துப் போற்றி வணங்கிவந்த ஒரு
]
1
125
ஜய வருடம் ஆனி - ஆடி)

Page 28
மகாஞானியாவார். தன்னை நாடிவரும் அன்பர்களுக்கு சிறிது வார்த்தைகள் மாத்திரம் கூறி நல்லாசி வழங்குவார். சிவசின்னமாக எளிமையாகக் காட்சிகொடுப்பார். சிலவேளைகளில் தியான நிலையில் மௌனத்தில் ஆழ்ந்திருப்பார். மெளான் குருவாகவே திகழ்ந்தார்.
ஈழவள நாட்டின் நல்லூர்க் கந்தன் ஆலய வீதியில் அருளாட்சி புரிந்த செல்லப்பா சுவாமிகளின் உத்தம் சீடராகி அருள் பெற்றவர் தவத்திரு சிவயோக சுவாமிகள். "சும்மா இரு” (Be stil] “மெளனமாக இரு” என்று பற்பல அன்பர்களுக்கு நல்வழி காட்டிய ஞான ஒளி! அவற்றுடன் "தன்னை அறி” எனும் தாரக மந்திரத்தையும் (knOW thyself) உபதேசித்தார். "தன்னைத் தன்னால் அறிவதே குருபூசை மற்றெல்லாம் வெறும் உண்டாட்டு" என்றும் சிவயோக குருமணி கூறுவார். யாழ்ப்பாணம் செங்கலடி சிவதொண்டன் ஆச்சிரமங்களில் தியானம் செய்வதற்குத் தயாராக வேண்டிய கொள்கை நெறி சிவயோக சுவாமிகளால் விதிக்கப்பட்டது. "
"சொல் எலாம் கோணம் தொழில் ஆதியும் இமானம் பால்களாம் நபிமான நிறைவே மொணம் நிலவுக" 'சிவயோக சுவாமிகளின் உத்தம சீடர்தான் ஈழத்துக் கைதடி மார்க்கண்டு சுவாமிகள். இவரை "மெளன முனி" என்றும் மரியாதையுடன் அன்பர்கள் அழைப்பர். நன்றும் தீதும் அறியாத நன்மோனத்தில் ஆழ்ந்து கிடக்கும் நிட்டர், சிவயோக சுவாமிகள், மெளன முனியைப்பற்றி தம் அடியவர்களிடம் கூறும்பொழுது "அவனை உங்களுக்கெல்லாம் ஒரு திசைகாட்டியாக
வைத்திருக்கிறேன்” என்று கூறுவதுண்டு. மார்க்கண்டு சுவாமிகளும் "நற்சிந்தனை" எனும் நறுமலர்களைச் சொரியும் கற்பக தரு எனவே திகழ்ந்தார்.
ஹவாய் சைவ சித்தாந்த ஆதீன ஸ்தாபக முதல்வரும் சிவயோக சுவாமிகளின் சீடருமான குருதேவர் என்று சைவ உலகத்தினரால் அன்புடன் அழைக்கப்படுபவருமான சிவாய சுப்பிரமுனிய சுவாமிகள் மார்க்கண்டு சுவாமிகளிடம் மரியாதையும் பெருமதிப்பும் அர்ப்பணம் செய்து "'நற்சிந்தனை" பற்றிய விளக்கங்கள் சைவ சித்தாந்த தத்துவ சாரம் பற்றிய விளக்கங்கள் ஆகியவற்றை ஆங்கில மொழியிலும் நன்றாகப் பாண்டித்தியம் - பெற்ற மார்க்கண்டு சுவாமிகளிடம் கற்றுக் கொண்டார்.
சிவயோக சுவாமிகள் ஒருமுறை சிவராத்திரி விரத நாளில் கைதடி ஆச்சிரமம் சென்று தாள மேளம் இல்லாமல் பாட்டு படிப்பு நான்கு சாமப் பூசை என்ற ஆடம்பரங்கள்
எல்லாவற்றையும் அடியோடு விட்டுவிட்டு தானும் தனது சீடனும் தியான நிலையில் மௌனமாக விரதம் அனுட்டித்து துாய சிவராத்திரி விரதத்தை பூரணமாக நிறைவுசெய்தனர்.
சிவயோக சுவாமிகள் எங்களுக்குப் பல வேலைகள் தரவில்லை ஆனால் ஒரே ஒரு வேலைதான் அது (இந்து ஒளி
36)

யாதெனில் "தன்னைத் தன்னால் அறிவதுதான்!” என்று மார்க்கண்டு சுவாமிகள் மிகச் சுருக்கமாக தனது அடியார்களுக்கு கூறுவார்.
இங்கிலாந்தின் சோல்பரிப் பிரபுவின் புதல்வன் சந்தசுவாமி அவர்களும் சில ஆண்டுகள் கைதடி ஆச்சிரமத்தில் மார்க்கண்டு சுவாமிகளுடன் தங்கியிருந்து மெளனியாகவே தியானத்தில் திகழ்ந்தார்.
ரமண பகவானின் சமாதி நாள். அன்று மாலை அவரைச் சூழ்ந்திருந்த அன்பர்கள் அருணாசல அட்ஷர மாலையை உருக்கமாகப் பாடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது பகவானது கண்கள் குளமாகி நீர் தாரை தாரையாகப் பெருகியது! அருணாசல சிவத்தின் மீது கொண்ட அன்பின் பெருக்கே அக்கண்ணீராகும். மாணிக்கவாசக சுவாமிகளையும் அழுது அடி அடைந்த அன்பர்" என்பர், ""காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி" செய்த இறைவழிபாடாகும்!
சிவயோக சுவாமிகள் முகா சமாதி அடைவதற்கு சில நாட்களுக்கு முன்பு தமது நோய் பற்றிக் கூறியவை
வருமாறு:
"இந்த நோய் ஒரு வரப்பிரசாதம், கன்மத்தை அனுபவித்தே தீரவேண்டும். உடம்பு தோன்றிய பொழுது அதோடு சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் கொண்டு வந்தது. அதில் நோயும் ஒன்றாகும். இந்த நோயைப்பற்றி ஆராய வேண்டியதில்லை. இது எப்பவோ முடிந்த காரியம், ஒன்றுக்கும் அஞ்சவேண்டியதில்லை. இந்த நோயின் காரணத்தை அறிந்தவர். இது எல்லாத் துக்கங்களுக்கும் நிவர்த்தி என்பதை அறிவர். அறிந்து அமைதியாயிருப்பர்.”
இராமகிருஷ்ண பரமஹம் சருக் கும் ர ம ண ம கரிஷிக்கும் புற்று நோய் வந்ததை அன்பர்கள் அறிவார்கள். உடலுக்குப் பிணி மூப்பு சாக்காடு வருவது இயற்கை என்றும் ஞானிகளின் உடம்பும் இதற்கு விலக்கானவை அல்ல என்றும் சுவாமி விவேகானந்தர் கூறினார்.
"சர்வம் சிவமயம்! ரிசர்வம் சிவன் செயல் ,
சும்மா இரு தன்னை அழி! ஒருசிபால்லாப்பும் இல்லை!
எப்போதோ முடிந்த காரியம்." நாமறியோம் முழவதும் உண்மை! ஓம் நமசிவாய" - (சிவயோக சுவாமிகள்)
இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி உள்ளது பல்லக விளக்கது பலரும் காண்பது நல்லக விளக்கது நமச்சிவாயவே!
తీతీతీతీతీతీతీతీతీతీతీతీ
ஜய வருடம் ஆனி - ஆடி)

Page 29
நாவலர் பக்கம் -
என்றும் வாழ்ந்துகெ.
நாவலர் பெ.
ஐந்தாம்குரவர் என சிறப்பித்துப் போற்றப்படும் நல்லைநகர் பெற்றெடுத்த நாவலர் பெருமான் சைவத்தமிழ் உலகில் என்றுமே மறக்கப்படமுடியாதவர். அத்தகைய பெருமைவாய்ந்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களை குருபூசை, விழாக்கள். மாநாடுகள் என பல்வேறு வகைகளில் சைவத்தமிழ் உலகம் போற்றித் துதித்து வருகிறது.
இந்த வகையில் ஒன்றாக கடந்த வருடம் (2013) டிசெம்பர் மாதம் 7ஆம் 8ஆம் திகதிகளில் மன்னார் திருகேதீச்சர் திருத்தலத்தில் நடந்த நாவலர் மாநாடு அமைந்திருந்தது, அகில இலங்கை இந்து மாமன்றமும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையும் இணைந்து திருகேதீச்சர ஆலய திருப்பணிச் சபை மற்றும் மன்னார் மாவட்ட அறநெறிப் பாடசாலைகளின் இணையம் ஆகியவற்றின் அனுசரணையுடன் நாவலர் மாநாட்டை இருநாள் பெருவிழாவாக நடத்தியிருந்தது. இதுதவிர கடந்த வருடம் (2013) டிசெம்பர் 3ஆம் திகதியன்று அகில இலங்கை இந்து மாமன்றம், தனது அங்கத்துவ சங்கமான இந்து வித்தியா விருத்திச் சங்கம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை என் பனவற்றின் அனுசரணையுடன் கொழும்பு, பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நாவலர் விழாவை ஏற்பாடு செய்து நடத்தியிருந்ததையும் குறிப்பிடவேண்டும்.
யாழ் குடாநாட்டின் நல்லூர் பிரதேசத்திலுள்ள நாவலர் பெருமான் பிறந்து வளர்ந்த வீடு அமைந்திருந்தும் இடத்தில் இப்போதுள்ள நாவலர் கலாசார மண்டபம், என்றென்றும் நாவலர் பெருமானை நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறது நல்லூர் கைலாசபிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் இந்த கலாசார மண்டபம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. இந்த
(இந்து ஒளி

எண்டிருக்கும் நமான்
மண்டபம் அமைந்துள்ள வீதிக்கு நாவலர் வீதி என்றே பெயரிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள ஒரு சில நீண்டசாலைகளுள் இந்த நாவலர் வீதியும் ஒன்றாகும். இது அரியாலையிலுள்ள மாம்பழம் சந்தியிலிருந்து ஆரம்பமாகி, நல்லூர், ஆனைப்பந்தி. யாழ்நகரப்பகுதி, வண்ணார்பண்ணை ஊடாக நாவாந்துறை பகுதியை சென்றடைகிறது.
நல்லைக் கந்தன் ஆலய கோபுர வாசலுக்கு அருகே அமைந்துள்ள நாவலர் மணி மண்டபமும், நாவலரின் நினைவைச் சொல்கிறது. மண்டபம் அமைந்துள்ள காணி நாவலர் பெருமானுக்கு சொந்தமானது. இங்கு இவரது உருவச் சிலையும் வைக்கப்பட்டிருப்பதுடன் பூசை வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை வெளியில் நின்றும் பார்ப்பதற்கு வசதியாக, மண்டப நுழைவாயில் பகுதிக்கு வெளியே வளைவான முகப்புக் கூரையொன்று கடந்த மாதத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
1848ஆம் ஆண்டு ஆவணி மாதம் நாவலர் பெருமான் யாழ் வண்ணார்பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலையை ஸ்தாபித்தார். இதுவே இப்போது நாவலர் வித்தியாலயம் என்ற பெயரில் இயங்கிவருகிறது. நாவலர் வீதியிலேயே இந்தப் பாடசாலையும் அமைந்துள்ளது.
4 5 - 44
நாயகர்
பாடம்
நாவலர் வீதி, நாவலர் மணிமண்டபம், நாவலர் கலாசார மண்டபம், நாவலர் வித்தியாலயம் என்பன இருக்கும் வரை நாவலர் பெருமான் சைவப் பெருமக்களின் இதயங்களில் என்றுமே வாழ்ந்து கொண்டிருப்பார்.
ஜய வருடம் ஆனி - ஆடி)
127)

Page 30
இவரல்லவே.
திருமுருக கிருபானந்தவாரியார் 198
பரமஹம்சர்பற்றி கட்டுரையொன்
சரியாக 150 ஆண்டுகளுக்கு முன்பு நம் பாரத நாட்டில் ஓர் ஆன்மிகப் பேரொளி தோன்றியது. அவர் தாம் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர். அந்த ஸ்ரீராமகிருஷ்ண ஜோதி, ஆன்மிக வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரியாமல் இருளில் தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆண்டவனை அடையும் வழி காட்டியது.
"ஆண்டவன் உண்டா?' என்று சில பேர் சந்தேகப்படுவார்கள். சில பேர் கேட்பார்கள், அப்படிப்பட்டவர்கள் நம் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையைப் படித்துப் பார்த்தால், 'கடவுள் ஒருவர் மட்டுமே உண்மை; மற்றவை அனைத்தும் இந்த உலகில் அர்த்தமற்ற சங்கதிகள்' என்ற உண்மையை உள்ளங்கை நெல்லிக்கனி போலவும், பட்டப்பகல் வெளிச்சம் போலவும் உணர்ந்து கொள்வார்கள்.
* கடவுளைக் கண்ட ஞானிகள் இந்த உலகத்திலே எவ்வளவோ பேர் இருந்திருக்கிறார்கள். ஆனால் கடவுளை மற்றவர்களுக்குக் காட்டக் கூடியவராகவும் இருந்தார் நம் தட்சிணேசுவர பகவான்,
ஒரு பெரிய சினிமாக்காரியோ, அரசியல்வாதியோ, எழுத்தாளனோ, பணக்காரனோ, பேச்சாளனோ வந்தால், மக்கள் அந்தக் கவர்ச்சிகளிலே மயங்கி அங்கே போய் விழுவார்கள். ஆனால் இது போன்ற கவர்ச்சி எதுவுமே இல்லாத நிலையிலும் மக்கள் ஸ்ரீராமகிருஷ்ணரை மதித்தார்கள், மதிக்கிறார்கள், என்ன காரணம்? அவரிடம் இருந்த அப்பழுக்கற்ற, பரிசுத்தத்திற்கே இலக்கணமாக அமைந்த அவரது வாழ்க்கைதான் அதற்குக் காரணம்.
தேவலோகத்துக் கங்கையை மண்ணுலகத்திற்குக் கிடைக்கச் செய்தவன் பகீரதன், அது போல் ஸ்ரீராம கிருஷ்ணர் என்ற கங்கையை உலகம் முழுவதற்கும் கிடைக்கச் செய்த நவீன பகீரதன் சுவாமி விவேகானந்தர்.
ஆன்மிக வாழ்க்கையில் சமத்துவ மனநிலைக்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு. இது பற்றிப் பவருக்குத் தெரியாது. சிலருக்குத் தெரிந்திருந்தாலும் அதை நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றுவதற்குப் பெரிதும் போராடுபவர்களாக இருப்பார்கள், " பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரோ எப்போதும் சமத்துவ நிலையிலேயே இருந்தவர். அதிலிருந்து ஒரு போதும் இம்மியளவும் பிறழாதவர்; மண்ணையும் பொன்னையும் கங்கையில் எறிந்து, "கல்லும் மண்ணும் ஒன்றே" என்று அவர் சொல்லியிருக்கிறார்,
காமமும் காஞ்சனமும் அதாவது பெண்ணாசையும் பொன்னாசையும் ஞான வாழ்க்கைக்குப் பெரும் இடையூறுகள் என்று பரமஹம்சதேவர் அடிக்கடி தமது சிஷ்யர்களுக்கு உபதேசிப்பது வழக்கம்.
காம காஞ்சனப் பற்றின்மை என்பது அவரது இரத்தத்தில் ஊறிக் கலந்து அவரது இயல்பாகவே ஆகியிருந்தது. பெண்கள் எல்லோரையுமே சாட்சாத் அம்பிகையாகக் கண்ட பெருமான் நம்
(இந்து ஒளி

வா மகான்!
15 ஆம் ஆண்டு ஸ்ரீராமகிருஷ்ண றில் குறிப்பிட்ட விஷயம் இது.
குருதேவர், தமக்கு வாழ்க்கைத் துணையாக அமைந்த சாரதா தேவியாரை ஜகன்மாதாவுக்கு உரிய பீடத்தில் எழுந்தருளச் செய்து லோகமாதாவாகவே கருதி அவர் பூஜித்த நிகழ்ச்சியை நாம் படிக்கும்போது நமக்கு மெய்சிலிர்க்கும்: ஆ! ஆ! இவரல்லவா மகான்!' என்ற எண்ணத்தால் நம்மை அறியாமலே நமது தலை அவரை வணங்குகிறது.
பணத்தின் மீது பற்று வைத்தால் அது ஆத்ம ஞானத்தைத் தடைப்படுத்தும் என்று உபதேசித்தார் பரமஹம்சர். உபதேசித்தது மட்டுமல்ல, பணத்தின் ஸ்பரிசத்தையும் அவர் தாங்க முடியாதவராக இருந்தார்.
ஒரு சமயம் நரேந்திரர், பரமஹம்சரின் படுக்கையடியில் குருதேவருக்குத் தெரியாமல் ஒரு நாணயத்தை மறைத்து வைத்தார். இதை அறியாத குருதேவர், படுக்கையில் உட்காரப் போனார், அவர் படுக்கையில் உட்கார்ந்தாரோ இல்லையோ, நாணயத்தின் ஸ்பரிசம் அவருக்குத் தேள் கொட்டியதுபோல் இருக்கவே பதறி எழுந்தார். உடனிருந்த ஓர் அன்பர் படுக்கையை எடுத்துப்போட்டு உதறினார். நாணயம் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. தம்மைச் சோதிக்க நரேந்திரர் செய்த காரியம் இது என்பது தெரிந்து பரமஹம்சர் பரம சந்தோஷம் அடைந்தார்.
தம்மைச் சீடர்கள் எப்படி வேண்டுமானாலும் சோதித்துப் பார்க்கலாம் என்று பரிபூரண சுதந்திரம் கொடுத்திருந்தார் பரமஹம்சர், சீடர்களும் அவரைப் பலவிதங்களிலும் சோதித்துப் பார்த்தே குருவாக ஏற்றார்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணரின் தாயார் பெயர் சந்திரமணிதேவி, அந்த அம்மையார் ஒருநாள் சிவன்கோயிலுக்குச் சென்றார். அங்கிருந்து ஓர் ஒளி வெள்ளம் புறப்பட்டு வந்து, சந்திரமணிதேவியாரைச் சூழ்ந்து அவருள் புகுந்தது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் ஸ்ரீராமகிருஷ்ணர் பிறந்தார். எனவே ஸ்ரீராம கிருஷ்ணரிடம் சிவாம்சம் இருந்தது." " சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை ஸ்ரீராமகிருஷ்ணர் பின்வருமாறு சொல்வது வழக்கம்:-
"பிரம்மத்துக்கும் சக்திக்கும் சொல்லளவில்தான் வேறுபாடே தவிர உண்மையில் இல்லை, நெருப்பும் அதன் உஷ்ணமும், பாலும் அதன் வெண்மையும், மணியும் அதன் ஒலியும் ஒன்றானவை போல, பிரம்மமும் சக்தியும் ஒன்றேயாகும். ஒன்று இல்லாமல் மற்றொன்றை நினைக்க முடியாது. அல்லது அவை இரண்டையும் வேறுபடுத்தவும் முடியாது.
க தட்சிணேசுவரக் காளிகோயிலின் நிர்வாகியாக மதுர்பாபு இருந்தார். அவர் ஸ்ரீராமகிருஷ்ணரைச் சிவனாகவும் சக்தியாகவும் கண்டார்.
சர்வம் சிவமயம் என்பது ஸ்ரீராமகிருஷ்ணருக்கு வெறும் வார்த்தையாக இல்லாமல் அனுபவமாக ஆகியிருந்தது. இதைப் பற்றி அவரே பின்வருமாறு சொல்லியிருக்கிறார்.
ஜய வருடம் ஆணி - ஆடி)

Page 31
“ஒருநாள் சிவபூஜையின்போது வில்வதளங்கனை! சிவலிங்கத்தின்மீது போட்டுக் கொண்டிருந்தேன். அந்த. சமயத்தில் ஜகத் முழுவதும் சிவசொரூபமாக எனக்கு தோன்றியது. அவ்விதம் காண்பதற்கு நான் எந்த முயற்சியும் செய்யாதிருந்தபோதே அந்தத் தோற்றம் என் கண்முன் உண்டாயிற்று. அன்றையிலிருந்து சிவலிங்கத்தின் மூலமாக சிவபெருமானை நான் வழிபடுவது முடிவுற்றது. ஒருநாள் பூப்பறித்துக்கொண்டிருந்தேன். திடீரென்றுஒவ்வொரு பூச்செடியும்! சர்வ வியாபகனுக்கு அணியப்படும் பூக்கொத்தாக உணரப்பட்டது அதிலிருந்து நான் புஷ்பம் கொய்வது நின்று விட்டது.”
மதுர்பாபுவோடு ஸ்ரீராமகிருஷ்ணர் காசி யாத்தினை மேற்கொண்டார். வழியில் தேவ்கர் என்ற இடத்தில் மக்கள் வறுமையிலும் பசியிலும் வருந்துவதைக் கண்டு பரமஹம்ச உள்ளம் மிகவும் நெகிழ்ந்தார். அந்த ஏழை எளியோருக்கு உதவும்படி மதுர்பாபுவிடம் கூறினார். மதுர்பாபு தயங்கினார். பிறகு அந்த ஏழை மக்களுக்கு நிவாரணம் தந்தாலன்றி ஸ்ரீராமகிருஷ்ண காசியாத்திரைக்கு வரமாட்டார் என்பது புரிந்தது. பின்னர் மதுர்பா ஸ்ரீராமகிருஷ்ணர் குறிப்பிட்ட மக்களுக்கெல்லாம் உணவு. உடையும் பணமும் தந்தார். அவ்விதம் தந்த பிறகே மேற்கொண்டு KSHISSSSSSSSSSSSSSSSSSSSSSSSSYSYSISEX திருவள்ளுவர் ஓர் இந்து
ஒவ்வொரு மதத்துக்காரருக்கும் முக்கியமான கட்டா களில் எல்லாம் தமது மதக்கடவுளும், மதத் தத்துவமும் நினைவுக்கு வருவது போல் ஒவ்வொரு மதக் கவிஞனுக்கு தனது எழுத்துக்களில் தனது கடவுள் பற்றிய சிந்தனையே வரும். வள்ளுவரும் அப்படியே! - இறைவனைப்பற்றி அவ குறிப்பிடுகின்ற சில வார்த்தைகள், வேறு சில மது கடவுளுக்கும் பொருந்தும் என்றாலும், பெரும்பாலானலை நேரடியாக இந்து மதக் கடவுளையே குறிக்கின்றன.
உதாரணமாக "வேண்டுதல் வேண்டாமை இலான்" என்பது எல்லா மதத்தின் மூலவருக்கும் பொருந்தும் என்றாலும் விருப்பு வெறுப்பற்றவர் என்று இந்துக்களே இறைவனை அதிகம் கூறுகிறார்கள். ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல்கள் அனைத்திலும் இந்த எண்ணம் பிரதிபலிக்கின்றது.
கடவுள் என்ற வார்த்தையைவள்ளுவர் பயன்படுத்தவில்லை என்றாலும், கடந்து உள்ளிருப்பவன் என்ற பொருளில் இந்துக்கள் மட்டுமே அதனைப் பயன்படுத்துகிறார்கள். "இறைவன் என்ற சொல் "கடவுள்" என்ற பொருளில் வள்ளுவரால், இரண் இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஐந்தாவது குறளில், "இருக் சேர் இருவினையும் சேரா இறைவன்" என்றும், பத்தாவது குறளில், "பிறவிப்பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் சேராதார்" என்றும், அது ஆளப்படுகின்றது.
கடவுளை "இறைவன்" என்று பௌத்தர்களோ, முஸ்லீ களோ, கிறிஸ்தவர்களோ கூறத் தொடங்குவதற்கு பா நுாற்றாண்டுகளுக்கு முன்னால் வள்ளுவர் கூறியிருக்கிறா வள்ளுவர் காலத்தில் பௌத்த மதமும், இந்தியாவிலேர் பிறந்த வேறு சில மதங்களும் மட்டுமே இருந்தன. அந்நாளி அவை கடவுளை இறைவன் என்று அழைத்ததில்லை ஆனால், இந்துக்களின் கடவுள் பாடல்கள், பிரபந்தங்கள் இ-ஆர்ஆர் இத4 ஆடி இச் இச் 4- மர்- இடு- பர் மாத இய க புதிய மதி- சி ப ர் த்து 4
(இந்து ஒளி

பொதுசன நூலகம்
யாழப்பாணம்,
த
பு.
காசி யாத்திரை பயணத்தைத் தொடர் ஸ்ரீராமகிருஷ்ணர் சம்மதித்தார்.
காசி என்ற சொல்லுக்கு பிரகாசம் என்று அர்த்தம், காசி சுேடித்திரம் முழுவதுமே பொன்போல் பிரகாசிப்பதை ஓர் ஆன்மிகக் காட்சியில் கண்டு ஸ்ரீராமகிருஷ்ணர் அந்த க்ஷேத்திரத்தின் பெருமையை பெரிதும் போற்றினார்.
காசியில் அவர் தங்கியிருந்த காலங்களில் காசி விஸ்வநாதர் கோயிலுக்குப் போகும் வழியிலேயே அவருக்குச் சமாதி நிலை வந்து விடுமாம், காசியில் விஸ்வநாதர் கோயிலிலும் கேதார்நாத் கோயிலிலும் அவர் தம்மை மறந்து எத்தனையோ முறை சமாதியில் ஆழ்ந்து இருந்திருக்கிறார்.
காசியில் இறக்க முக்தி என்பது பழமொழி. காசியில் இறக்கும் ஜீவன்களுக்கு காசி விஸ்வநாதரும் அம்பிகையும் முக்தி வழங்குவதை ஒரு ஞானக் காட்சியில் தாம் கண்டதாக ஸ்ரீராமகிருஷ்ணர் குறிப்பிட்டிருக்கிறார்.
சிறிய சிறிய உதாரணங்களின் மூலம் பரமஹம்சர் அருளிய உபதேசங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக அவர் பெற்ற ஆன்மிக அனுபவங்களையும் நாம் சிந்திக்கும்போது 'சமானமில்லாத பரமஞானி இவர், ஆகா! இவரல்லவோ மகான்!' என்ற எண்ணமே
நம் உள்ளத்தில் நிறைகிறது. SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
அனைத்திலும் அந்த வார்த்தை வருகிறது. "இறைவன்" என்ற சொல்லை அரசன் என்ற பொருளில் நீg), 733, T78 ஆவது குறள்களிலும் வள்ளுவர் கையாள்கிறார். இறைவனையும் அரசனையும் வேறு எந்த மதத்தவரும், ஒன்றாக கருதுவதில்லை. ஓரே சொல்லாய் அழைப்பதில்லை, பிற்காலத்தில், தமிழ் இந்துக்கள் இன்னும் ஒருபடி மே*ே போய் "கோ" என்ற வார்த்தைக்கு இறைவன், அரசா பசு என்ற மூன்று அர்த்தத்தைக் கொடுத்திருக்கிறார்கள் - "இறைவனடி சேர்வது" என்ற மரபு இந்துக்களுக்கு மட்டுமே உண்டு.
பு.
-5
E F"
="
H"
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படுழி* என்ற குறளில் வரும் "வானுறையும் தெய்வம்" இந்துக் களுக்கே உரியது. தெய்வம் வானத்தில் இருக்கிறது என்பதை மற்ற மதத்தவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை வள்ளுவர் இன்னு மொரு குறளில்,
ள்
டி
E = 2
"கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தஜை" என்கிறார். இந்துக்களின் இறைவனுக்கு மட்டுமே அதாவது, " பரமசிவனுக்கு மட்டுமே எட்டுக்குணங்கள் கற்பிக்கப்பட்டிருக் கின்றன.
இவ்வாறு, வள்ளுவப் பெருந்தகை தொட்ட இடமெல்லாம் இந்துக் கடவுளையும், இந்துக்களின் மரபையும் கூறுவதால் அவரும் ஓர் இந்து என்பது, சந்தேகத்திற்கு இடமில்லாத உண்மையாகிறது.
- கவிஞர் கண்ணதாசன்
+ தார் சர் ஆர்தர் கார் பர்டோ ர் தி தி த தி ஆர்டி சர் ஆர்தர்
| 29
ஜய வருடம் ஆனி -ஆடி)

Page 32
நல்லூர் கந்தசுவாமி கோயில் வருடாந்த
மாணவர்களுக்கான கட்(
அகில இலங்கை இந்து மாமன்றம் நல்லூர் கந்தசுவாமி கோயிலின் இவ்வருட மகோற்சவத்தை முன்னிட்டு 1 " நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கிடையே கட்டுரைப்போட்டியொன்றை ஏற்பாடுசெய்து நடாத்துகின்றது. இந்தப் போட்டி ஆரம்பபிரிவு, கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு என நான்கு பிரிவுகளாக அமைந்துள்ளது. 6 ஆம், 7 ஆம் தரங்களில் பயிலும் மாணவர்கள் ஆரம்பபிரிவு போட்டியிலும், 8 ஆம் 9 ஆம் தரங்களில் பயிலும் மாணவர்கள் கீழ்ப்பிரிவு போட்டியிலும், 10 ஆம் 11 ஆம் தரங்களில் பயிலும் மாணவர்கள் மத்தியபிரிவு போட்டியிலும், 12 ஆம் 13 ஆம் தரங்களில் பயிலும் மாணவர்கள் மேற்பிரிவு போட்டியிலும் பங்கு கொள்ளமுடியும்.
ஒவ்வொரு பிரிவுக்குமுரிய கட்டுரையின்
தலைப்புக்கள் பின்வருமாறு :
ஆரம்பபிரிவு 1. அன்பே சிவம் 2. கோமாதா
நவராத்திரி
கீழ்ப்பிரிவு 1. மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் 2. பிச்சை புகினும் கற்க நன்றே
திருக்கேதீஸ்வரம்
மத்தியபிரிவு
1. திருத்தொண்டர் புராணம் 2. திருமந்திரம் கூறும் அறம் 3. திருக்கோணேஸ்வரம்
மேற்பிரிவு 1. திருமுறைகளில் இலங்கைவேந்தன் இராவணன் 2. திருமுருகாற்றுப்படை கூறும் தெய்வீகம் 3. திருப்புகழில் ஈழத்து திருத்தலங்கள்
போட்டியில் பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் தங்களது பிரிவுக்குரிய கட்டுரைத் தலைப்புக்களில் ஒன்றைத் தேர்ந் தெடுத்து கட்டுரையை எழுதியபின் குறிப்பிட்ட மாணவன் அல்லது மாணவியால் அந்தக்கட்டுரை எழுதப்பட்டது என்பதை பாடசாலை அதிபரால் உறுதிப்படுத்தப்பட்டு
(இந்து ஒளி |

த மகோற்சவத்தையொட்டி நடத்தும் டுரைப்போட்டி - 2014
அதனை 2014 ஆகஸ்ட் 25 ஆம் திகதிக்கு முன்பதாக பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைத்தல்வேண்டும்.
பொதுச் செயலாளர்,
அகில இலங்கை இந்து மாமன்றம், 91/5 சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு - 02
கட்டுரைகள் பின்வரும் சொற்களின் எண்ணிக்கைக்கு மேற்படாதவகையில் அமைந்திருக்கவேண்டும்.
ஆரம்பபிரிவு - 300 சொற்கள் * கீழ்ப்பிரிவு - 500 சொற்கள்
மத்திய பிரிவு - 800 சொற்கள் * மேற்பிரிவு – 1000 சொற்கள்
ஒவ்வொரு கட்டுரையுடனும் பின்வரும் தகவல்கள் அடங்கிய கடிதமொன்று இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
1. முழுப்பெயர் ;
முகவரி :
வயது * 4. கல்வி பயிலும் பாடசாலை : 5. தரம் : 6. போட்டியில் பங்குகொள்ளும் பிரிவு : 7. மாணவன் மாணவியின் கையெழுத்து : 8. அதிபரின் உறுதிச்சான்றும் கையெழுத்தும் : 9. திகதி :
கட்டுரை எழுதப்படும் தாளில் மாணவர்கள் தங்களது பெயர், முகவரி, பாடசாலை போன்ற எதுவித விபரங்களையும் எழுதக்கூடாது.
பரிசுகள் விபரம்: முதல் மூன்று இடம்பெறுபவர்களுக்கு பரிசாக நூல்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
முதலாம் பரிசு பெறும் கட்டுரைகள் மாமன்றத்தின் ஆன்மீக இதழான 'இந்து ஒளி' யில் பிரசுரமாகும்.
இந்தக் கட்டுரைப் போட்டி தொடர்பான
சகப் விடயங்களுக்கும் மாமன்றப் போட்டிக் குழுவினரின் தீர்ப்பே இறுதியானது.
ஜய வருடம் ஆனி = ஆடி)

Page 33
ஒரு தகவல் சிவலிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானி
ஒரு ரஷ்ய விஞ்ஞானி சொல்வதை படித்து பாருங்கள். ஒவ்வொரு இந்துவும் படித்து அறிய (வேண்டிய விஷயமிது.
சிவலிங்கங்களைப் பற்றிய டாக்டர் விளாதிமீர் என்பவரின் ஆராய்ச்சி மிக வித்தியாசமானது. அது இந்த பூமியில் மொத்தம் எத்தனை லிங்கங்கள் உள்ளன என்று எண்ணிப் பார்க்கவோ, அவற்றின் பூர்வ புராணக் கதைகளை அறியவோ முயலவில்லை, இவற்றுக்கப்பால் சிவலிங்கங்கள் பற்றி நாம் யோசிக்கவும் அதை நாம் நேசிக்கவும் நிறைய அடிப்படைகள் இருப்பதாக டாக்டர் விளாதிமீர் கருதினார். அதில் முதலாவது ஸ்தூல வடிவங்களில் இறை உருவங்களை உருவாக்கி வழிபாடு செய்யும் இந்து மதத்தில் ஒரு குழவிக் கல்லைப் போன்ற லிங்கம் என்னும் உருவமற்ற ஒரு உருவம் எப்படி உட்புகுந்தது என்பதுதான்.
உண்மையில் லிங்க சொரூபமானது மூன்று மதத்திற்கும் புத்த ஜைனர்களுக்கும் கூட பொதுவானது என்பதையும் அவர் கண்டுபிடித்தார்.
ஒரு மலை உச்சி! அதில் பெளர்ணமி இரவில் கரிய நிழல் உருவாய் கண்ணுக்குத் தெரிந்த லிங்க உருவத்தை ஒரு கிறிஸ்தவன் சிலுவைச் சின்னமாகப் பார்த்தான். ஒர இஸ்லாமியன் தங்களின் மசூதிக் கூரை தெரிவதாக கருதினார் புத்த ஜைன சன்யாசிகள் தங்கள் குருமகான்கள் அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதாகக் கருதினார்கள். ஒரு இந்துவோ அது சிவலிங்கம் என்று திடடமாக கருதி இருந்த இடத்தில் இருந்தே
வில்வ இலைகளை வாரி வாரி அர்ச்சித்தான்.
உருவம் ஒன்று. ஆனால் அனைத்து மார்க்க தரிசிகளையும் அது திருப்திப்படுத்தியது என்றால் சிவம் தான் முதலும்
(இந்து ஒளி

Eயின் ஆராய்ச்சி
முடிவுமான அனைவருக்கும் பொதுவான இறை ஸ்வரூபமா? டாக்டர் விளாதிமீர் இப்படிதான் கேட்கிறார்.
மேலும் புராணங்களிலும், இதிகாசங்களிலும் சிவம் பற்றி சொன்னதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. விங்க உருவம் பற்றி யாரும் சரியாக உணரவில்லை என்பதுதான்
அவரது கருத்து.
ஒரு ரஷ்ய நாட்டுப் பிரஜையாக இருந்தாலும் சிவலிங்க சொரூபம் அவருக்குள் ஆழமான பாதிப்புகளை உருவாக்கியதாக
கூறுகிறார். த லிங்கம் சதுரம் , செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று கணித வடிவங்கள் அவ்வளவையும் தனக்குள் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும்போதும் ஒரு பொருள் தருவதாகவும் இருக்கிறது என்பது அவர் கருத்து. குறிப்பாக அணு தத்துவம் சிவலிங்க சொரூபத்துக்குள் விலாவரியாக இருக்கிறது. லிங்கத்தைப் பயன்படுத்தத் தெரிந்தால், அது மழை தரும், நெருப்புத் தரும், காற்று தரும், கேட்ட எல்லாம் தரும் என்றும் நம்புகிறார்.
அப்படி என்றால் சிவமாகிய லிங்க ஸ்வரூபம் என்பது மானுடர்கள் பயன்படுத்தத் தெரியாமல் வைத்திருக்கும் . மகத்தான ஒரு எந்திரமா?
டாக்டர் விளாதிமீரின் சிவஸ்வரூப ஆராய்ச்சியில் ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றும் அவருக்குக் கிட்டியதாம். இந்த மண்ணில் பூமிக்கு மேலாக கண்ணுக்குத் தெரியும் விதத்தில் உள்ள லிங்க ஸ்வரூபங்கள் இல்லாமல் பூமிக்குள் புதைந்து கிடக்கும் ஸ்வருபங்களும் ஏராளமாம்! அதுவே அவ்வப்போது
ஸ்வயம்பு மூர்த்தியாய் வெளிப்படுகிறதாம்.
ஸ்வயம்பு மூர்த்தங்களின் பின்புலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கம் ஒரு சீராகவும், ஆச்சரியம் ஊட்டும்
ஜய வருடம் ஆனி - ஆடி

Page 34
விதத்தில் ஒன்றோடொன்று பின்னிப்பினைந்த கூட்டுறவோடும் செயல்படுகிறதாம்.
சுருக்கமாகச் சொன்னால், அந்த மூர்த்தங்களைப் பஞ்ச பூதங்கள் ஆராதிக்கின்றன என்பதே உண்மை என்கிறார்,
இப்படிப்பட்ட ஆராதனைக்குரிய இடங்களில் கூர்ந்து கவனித்தபோது பஞ்ச பூதங்களும் சம அளவிலும் அத்துடன் சீரான இயக்கத்துடனும் அவை இருக்கின்றன. மனித சரீரத்திலும் பஞ்ச பூதங்கள் உள்ளன. இவை சுயம்புலிங்க ஸ்தலங்களில்
இயற்கையோடு கூடிச் செயல்படுகின்றன என்கிறார்,
அதாவது சுயம்பு மூர்த்தி உள்ள எஸ்தலங்களில் வாழும் மனிதர்களே அந்த மண்ணுக்கான மழை, காற்று. அக்கினி மண்வளம் ஆகியவைகளைத் தீர்மானிக்கிறார்கள் என்று கூறும் விளாதிமீர், மதுரை போன்ற சுயம்புலிங்க ஸ்தலங்களில் கூடுதலான மழை அல்லது குறைவான மழைக்கு அங்கு வாழும் மக்களின் மனநிலையே காரணமாகிறது என்கிறார். சுயம்பு லிங்கங்கள் உள்ள மண்ணில் வாழும் மக்கள் மனது வைத்தால் அங்கே எதை வேண்டுமானாலும் உருவாக்கிட இயலும் என்றும் கூறுகிறார்.
இந்த பூமியானது சூரியன் உதிர்ந்த ஒரு சிறிய அக்னித் துளி என்கிறது விஞ்ஞானம், மெல்லக் குளிர்ந்த இதில் அடுக்கடுக்காய் உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன. அந்த உயிரினங்கள் உயிர் வாழத் தேவையான அனைத்தும் கூட அப்போது தோன்றின. இதுதான் பல கோடி ஆண்டுகளைக் கண்டு விட்ட இந்த பூமியின் சுருக்கமான வரலாறு.
* மாற்றம் என்பதே இந்தப் பூமியில் மாறாத ஒன்றாக என்றும் இருப்பது. அந்த மாற்றங்களால் வந்ததே இந்த மனித சமூகம். கூன் விழுந்த, கொத்துக் கொத்தான முடி கொண்ட ஏழு எட்டு அடிக்குக் குறையாத உயரம் கொண்ட குறைந்த பட்சம் 150. கிலோ எடையுடன் தொடங்கியதுதான் சராசரி மனிதனின் உடலமைப்பு.
இன்று அவன் சராசரியாக ஐந்தரை அடி உயரம். எண்பது கிலோ நிறை. நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை என்று மாறியிருக்கிறான். பல ஆயிரம் ஆண்டுகளாக இந்நிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை, ஆனாலும் காலப்போக்கில் இவன் மேலும் குட்டியாகி சுண்டிச் சுருங்கி வினோதமான முக அமைப்பை எல்லாம் பெற்று. ஒரு பெருச்சாளி போல் நிலப்பரப்பைக் குடைந்து அதனுள் தீர்ந்து சென்று பதுங்கி வாழும் காலம் வரலாம் என்பதெல்லாம் விஞ்ஞான அனுமானங்கள். இந்த பூமியில் கிடைக்கும் பலவித
இறைவனுக்கு அருவம், அ சைவ மரபு. அருவம் என்பது க செய்வோர்க்கு உரியது. அருவுரு இருபத்தைந்து வகைப்படும், மடு முறையாகும். இருபத்தைந்து திர வடிவம்.உமாதேவி இறைவனோ மட்டும் வலம் வந்து வணங்கிச் பிருங்கி முனிவரின்உடலில் உள் நடக்க முடியாதவரானார். இறை காலினையும் ஊன்று கோலில் தவஞ்செய்து, இறைவன் உடலில்
இந்து ஒளி
135 |

ஆதாரங்களும், மனித மனத்தின் ஊகம் செய்து பார்க்கும் சக்தியுமே!
இதன் நடுவே மிக மாறுபட்ட கருத்துகளுடன், நமக்கிருக்கும் அறிவாற்றலால் நம்பமுடியவில்லை என்று ஒரு வார்த்தையில் கூறும் விதமாய் இருப்பதே மதப் புராணங்கள். இதில் புராணவழி அறியப்பட்ட சிவமானது தனித்து நிற்கிறது. புராணம், விஞ்ஞானம் இரண்டையும் கடந்து மூன்றாவதாய் ஒன்றும் உள்ளது. அதுதான் நான்! மானுடமே முடிந்தால் என்னைப் புரிந்துகொள் என்பதுபோல் இருக்கிறது அது என்கிறார் டாக்டர் விளாதிமீர்!
இந்த பூவுலகில் சிவம் தொடர்பான அடையாளக் குறியீடுகள் பாரத மண்ணில் மட்டுமன்றி ஆபிரிக்கா, ஐரோப்பா முதலிய கண்டங்களில் கூட இருக்கிறது என்பது டாக்டர் விளாதிமீரின்
கருத்து. - அமெரிக்காவில் " கிராண்ட் கன்யான் - என்னும் வித்தியாசமான மலைப் பகுதியில் பராசக்தியின் அம்சங்கள் என்று வர்ணிக்கப்படும் = சிவம், விஷ்ணு, பிரம்மன் " மூன்றின் அடையாள உருவங்கள் காணப்படுகின்றனவாம்.
ஆயினும் இந்திய மண்ணில் மட்டும் சிவம் தொடர்பான சிந்தனைகளும் சைவம் என்கிற ஒரு பிரிவும் உருவாக ஆழமான ஒரு காரணம் இருப்பதாக விளாதிமீர் கருதுகிறார்,
உலகின் உயர்ந்த சிகரமான இமயம் பூகோள ரீதியில் பூமியின் மையத்தில் கிட்டதட்ட காணப்படுகிறது. அதன்படி பார்த்தால் இந்த உலகே கூட சிவலிங்க சொரூபம் எனலாம், ஒரு வட்டத்தில் இருந்து கூம்பு முளைத்தது போல் உலகமே ஆவுடையராகத் திகழ இமயம் சிவஸ்தம்பமாக எழுந்து நிற்கிறது.
அங்கே பஞ்ச பூத ஆராதனையாக குளிர்ந்த காற்றும் உறைந்த பனியே நீராகவும், அதன் முற்றிய குணமே நெருப்பாகவும் இருக்கிறது. ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட வெளி வேறு எங்கும் காணப்படாத விதத்தில் தூயதாக எல்லாவித கதிர் வீச்சுக்களையும் காணப்படாத்தாகத் திகழ்கிறது. | இங்கே உயிராகிய ஜீவன் மிகச் சுலபமாக சிவத்தை அடைந்து விட உணர்ந்து விட ஏதுவாகிறது. அதனாலேயே இங்கே ஞானியர் கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதும் அவரது கருத்து! இந்த ரஷ்ய விஞ்ஞானி சொன்ன விஷயங்கள் எதனையுமே எந்த விஞ்ஞானியும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(நன்றி : இணையம்)
மாதொரு பாகன்
ருவுருவம், உருவம் என்ற மூன்று நிலைகள் உள்ளன. இது கண்ணால் காணஇயலாத நிலை. ஞான நெறியில் வழிபாடு வம்-சிவலிங்க வடிவம் ஆகும். கண்ணால் காணலாம், உருவம் கசுவர மூர்த்தங்கள் இருபத்தைந்து என்று வழங்குவது சைவ நவுருவங்களில் ஒன்றே மாதொருபாகன்-உமையொருபாகன் Tடுவீற்றிருந்தாள். வழிபட வந்த பிருங்கி முனிவர் இறைவனை சென்றார். அதனைக் கண்டு கோபம் அடைந்த உமாதேவி, Tள - சக்தியைத் தரும் தசையினை நீங்கச் செய்தாள். இதனால் யன் முனிவர்க்கு நிற்பதற்காகவும் நடப்பதற்காகவும் மூன்றாவது னையும் தந்து உதவினார், உமாதேவியோ கடுமையாகத் ம் இடப் பாகத்தைத் தன்னுடையதாகப் பெற்றாள்.
- முனைவர் ந. கரர், சென்னியப்பனார்
ஜய வருடம் ஆனி - ஆடி)

Page 35
தீப ஆராதைைச
(முனைவர் ந. இ
விளக்கு வழிபாடு தமிழகத்தில் மிகப்பழங்காலந்தொட்டு நடைபெற்று வருகின்றது. வரலாற்றுக் கு முற்பட்ட காலத்திலேயே விளக்கு வழிபாடு நடைபெற்றிருக்கின்றது! பெருங்கற்சின்னம், முதுமக்கள் தாழி முதலிய அகழ்வாய்வுப் பொருள்களில் பலவகையான விளக்குகள் கிடைத்துள்ளன. எனவே, அக்காலத்தில் விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வழிபாட்டுக் குரியனவாக இருந்துள்ளன இன்று கிடைக்கும் தமிழ் நூல்களில் தொல்காப்பியமே மிகத் தொன்மையானது. அந்த நூலில் 'விளக்குநிலை" என்ற துறை புறத்திணை இயலில் குறிக்கப்பெற்றுள்ளது. சங்க இலக்கியங்களில் விளக்கு வழிபாட்டுச் செய்திகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. "மங்கையர் நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇக் கையமை விளக்கு நந்துதொறுமாட்ட என்று முல்லைப் பாட்டிலும் 'மனன மான்சுடர்' என்று நற்றிணையிலும் "இரவில் பஞ்சிவெண்திரிச் செஞ்சுடர் நல்லில்', 'மகளிர் கை புணையாக நெய் பெய்து மாட்டிய சுடர்' என்று குறுந்தொகையிலும் குறிக்கப்பெறுகின்றன.வீடுகளில் முன்பகுதியில் அமைந்த முற்றங்களில் மகளிர் மாலை நேரத்தில் விளக்குகளை வைத்து நெல், மலர் இட்டு வழிபட்ட செய்திகள் நெடுநல்வாடை, மதுரைக் காஞ்சி முதலிய
இலக்கியங்களில் உள்ளன.
"எல்வளை மகளிர் மணிவிளக்கெடுப்ப மல்லன்மூதூர் மாலை வந்திறுத்தென"
(சிலப்பதிகாரம்
“பைந்தொடிர் மகளிர் பலர் விளக்கு எடுப் ப (மணிமேகலை)
"உள்இழுது உறீஇய ஒள்ளடர்ப் பாண்டில்
திரிதலைக் கொளீஇ எரிதருமாலை" (பெருங்கதை)
என்று காப் பியங் களிலும் காணப் படுகின்றன. கோவில்களிலும் அரண் மனைகளிலும் விளக்குகள் எரிக் கப் பெற்ற செய் திகளும் காணப் படுகின்றன, திருமுறைகளில் விளக்கு வைத்து வழிபாடு செய்தல்விரிவாகட் பேசப் பெறுகின்றன. திருஞானசம்பந்தர் காலத்திலேயே கார்த்திகை மாத விளக்கு வழிபாடு தொன்மையானது எனக் கூறப்பட்டுள்ளது. "தொல் கார்த்திகை நாள்... தையலார்
(இந்து ஒளி

களின் சிறப்புகள்
பூரா, சென்னியப்பனார்
கொண்டாடும் விளக்கீடு" என்பது அவர் வாக்கு. வீடுகளில் விளக்கு வழிபாடு, பொது இடங்களான மண்டபங்கள், கோவில் மண்டபங்கள் முதலிய இடங்களில் பலர் சுகூடி விளக்கேற்றி
வழிபடுதல் கோவில்களில் விளக்கு இடுதல், பூசை நேரங்களில் பலவகையான அலங்கார தீபங்கள் காட்டுதல்என்று விளக்கு வழிபாட்டை வகைப்படுத்திக் கொள்ளலாம். வீடுகளில் மாலைநேரம், சிறப்பு நாட்கள் முதலிய காலங்களில் விளக்கேற்றி வழிபாடு செய்தல் நல்லது. வீட்டுக்கு மங்கலம், எட்டுத் திருமகளிரும் (அஷ்ட லக்ஷ்மிகள்) அருள் செய்வர். கூட்டு வழிபாட்டின்போது ஒரே தன்மையான விளக்குகளை வைத்து நெய் அல்லது எண்ணெய் ஊற்றிப் பற்றவைத்து குங்குமம் அல்லது மலர்களால் அருச்சனை செய் து வழிபடலாம். 'விளக்குப் போற்றி என்று நூல்கள் வந்துள்ளன. ஒருவர் போற்றி சொல்ல மற்றவர் பின்தொடர்ந்து சொல்லி நிறைவின் போது படையலிட்டுக் கற்பூரங்காட்டி வழிபடலாம் பலரும் ஒன்று சேர்வது சமுதாய ஒற்றுமைக்குக் காரணமாக அமையும். ஐந்து திரியிட்டுச் சுடரேற்றி வழிபடும் விளக்கில் மலைமகள், கலைமகள், அலைமகள் மூவரும் அமர்ந்து அருள் செய்வர்.திருக்கோவில்களில் விளக்கு வைப்பது புண்ணியமாக முன்பு கருதப்பட்டது. திருமறைக்காட்டில் எலி ஒன்று கோவிலில் எரிந்து கொண்டிருந்த விளக்கில் நெய் உண்ணப் புகுந்தது. சுடர் மூக்கைச் சுடர் திரியை எலி தூண்டியது. அலைணயும்விளக்கு நன்றாக எரியத்தொடங்கிற்று. இந்தப் புண்ணியத்தால் எலி அடுத்த பிறப்பில் மூன்று உலகங்களையும் ஆளுகின்ற மாவலிச்சக்கரவர்த்தியாக ஆயிற்று.
"நிறை மறைக்காடு தண்ணில் நீண்டுஎரி தீபம் தன்னைக்
கறைநிறத்து எலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்டவான் உலகம் எல்லாம் குறைவறக் கொடுப்பர்போலும் குறுக்கைவீரட்டனாரே என்பது திருநாவுக்கரசர் தேவாரப் பாடல் ஆகும்.
நாயன்மார்களில் கலியநாயனார் நமிநந்தியடிகள், கணம்புல்ல நாயனார்ஆகியோர்கள்கோவிலில்விளக்கு எரித்து
இறைவன் திருவருள் பெற்றவர்கள் ஆவர். கோவில்களில் ப வைக்கப்பெறும் விளக்கினை நந்தியா தீபம், சந்தியா தீபம்
எனக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. அணையாமல் எரியும் தீபம் நந்தியா தீபம், நந்தா தீபம், நுந்தா தீபம் எனப் பலவாறாக
ஜய வருடம் ஆனி - ஆ,டி.

Page 36
வழங்கப்பெறும். பூசை வேளைகளான காலை, நண்பகல், மாலை, இரவு முதலிய சந்திகளில் வைக்கப் பெறும் தீபம் சந்தியா தீபம் ஆகும். பூசைகளின்போது கோவில்களில் கடவுளரின் திருவுருவத்தின் முன் பலவித அலங்கார தீபங்கள் காட்டப்பெறுகின்றன. அவை அனைத்தும் ஆழமான பொருள் உடையன. தத்துவம் உடையன. கோவில் கருவறையில் வழிபாட்டுக்கு உரிய திருவுருவங்கள் அமைந்திருக்கும். கருவறையின் முன் உள்ள மண்டபம் ஒன்றில் வாகனம் அமைந்திருக்கும். வாகனம் மூலமூர்த்தியை நோக்கியே பார்த்துக் கொண்டிருக்கும், வாகனத்திற்குப் பின் பலிபீடம் இருக்கும், சிவன் கோவிலாக இருந்தால் மூலமூர்த்தியாகிய சிவலிங்கம் பதி, வாகனமாகிய எருது பசு, பலிபீடம் பாசம்.
"ஆயபதி தான் அருட்சிவ லிங்கம் ஆயாசு வும்அடல் நிறுஎன நிற்கும் ஆயபவி ரீடம் ஆகும்நல் பர்சமாம் ஆய அரர் நிலைஆய்ந்து கொள்வார்கட்கே"
என் பது திருமூலர் திருமந் திரப் பாடலாகும். பிறகோவில்களிலும் இவ்வாறே மூலமூர்த்தியைப் பதியாகவும் வாகனத்தைப் பசுவாகவும், பலிபீடத்தைப் பாசமாகவும் கொள்ள வேண்டும்.
ஆலயங்களில் பூசைக் காலங்களின் போது முதலில் திரை போடப்பெறும். பின் அலங்காரதீபம் காட்டும் போது திரை நீக்கப்பெறும். தீபம் காட்டும் அருச்சகர் பலவித அலங்கார தீபங்களை முறையாகக் காட்டுவார். ஆன்மாவின் பிரதிநிதியாகிய வாகனம், மூலமூர்த்தியைக் காணமுடியாமல் ஒரு மறைப்பு. திரோதானம் உண்டாக்குகிறது. அது ஆணவ மலம் எனும் தடையாகும், ஆணவ மலம் எனும் தடை நீங்கினால் – திரைநீங்கினால் மூலமூர்த்தியைக் காணலாம். அதுவும் நன்றாக காணமுடியாது. அருச்சகர் தீபம் காட்டினால் நன்றாகக் காணமுடியும். அருச்சகர் ஞானாச்சாரியரைக் குறிக்கும். விளக்கு ஞானத்தைக் குறிக்கும், மலம் நீங்க - ஞானாச்சாரியர் ஞானத்தைக் கொடுக்க - இறைவனைக் காணலாம்.உலகத்தில் வெளிச்சம் வருதலும் இருள் நீங்குதலும் ஒரே சமயத்தில் நடைபெறும். அதுபோல ஞானாச்சாரியரால் ஞானம் வருதலும் மலம் நீங்கலும் ஒரேசமயத்தில் நடைபெறும், கோவிலில் திரை நீங்குதலும் அருச்சகர் அலங்கார தீபம் காட்டுதலும் ஒரேசமயத்தில் நடைபெறும். எனவே, விளக்கு ஞானத்தின் அறிகுறியாகும் "ஞான விளக்கை ஏற்றி வெளியாக உள்ள கடவுளை அறிந்து கொள்க, ஞானமாகிய விளக்கினால் முன்பு இருந்த துன்பங்கள் நீங்கும். இவ்வாறு ஞானமாகிய விளக்கின் தன்மையை அறிந்து கொண்டவர்களே வாழ்க்கையில் விளக்கம் பெற்றவர். ஞான விளக்கில் விளங்கித் தோன்றும் விளக்காக மாறுவார்கள் என்ற பொருளில்
(இந்து ஒளி

"விவசக்கினை திற்றி வெளியை அறிமிர் விளக்கினின் முன்னை வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள் விளக்கின் விளங்கும் விளக்காவர்தாமே!"
என்று திருமூலர் பாடியுள்ளார். "விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறிஞானமாகும்" என்று திருநாவுக்கரசரும் பாடியுள்ளார். எனவே, கோவிலில் காட்டப்பெறும் அலங்கார தீபம் ஞானத்தின் அறிகுறியாகும்.
பதினாறு வகை உபசாரங்களில் ஒன்று தீபாராதனை, பூசைக் காலத்தில் பலவித தீபங்கள் காட்டப்பெறுகின்றன. தீபாராதனைக் காலத்தில் தெய்வங்கள் பலவும் தீபங்களில் வந்து அமர்ந்து இறைவனைத் தரிசித்துச் செல்வார்கள் என்பது மரபு. பல அடுக்குகளைக் கொண்ட நட்சத்திர தீபம்
முதல் பல தீபங்கள் காட்டப் பெறுகின்றன.
நட்சத்திரங்கள் இறைவனை வழிபட்டு ஒளி பெறுகின்றன என்ற கருத்தில் நட்சத்திர தீபம் காட்டப் பெறுகின்றது. ஒன்பது தீபங்கள் நவசக்திகளைக் குறிக்கும்.ஏழு தீபங்கள் சப்தமாதர்களைக் குறிக்கும். ஐந்து தீபம் - நிவிர்த்திகலை, பிரதிட்டாகலை, வித்தியாகலை, சாந்திகலை, சாந்தி அதீதகலை என்ற ஐந்து கலைகளைக் குறிக்கும். மூன்று தீபம் சந்திரன், சூரியன், அக்னி என்ற மூன்று ஒளிகளைக் குறிக்கும், ஒற்றைத் தீபம் சரசுவதியையும், சுவாகாதேவியையும் சுட்டும்.ஐந்து தட்டுக்களில் தீபம் ஏற்றி நான்கு திசைகளில் நான்கு, நடுவில் ஒன்று என்ற முறையில் அமைத்த - அவ்வமைப்புக்கு ஒற்றை விளக்குக் காட்டிப் பின் நடுத்தட்டு முதலாக ஐந்து தட்டுகளையும் தீபத்துடன் காட்டப் பெறும், ஐந்தும் இறைவனுடைய ஐந்து முகங்களைக் குறிக்கும், மந்திரங்களுள் பஞ்சப்பிரம மந்திரங்கள் சிறப்புடையன. ஈசானம், தத்புருடம், அகோரம். வாமதேவம், சத்யோசாதம் என்ற ஐந்தும் பஞ்சப்பிரம மந்திரங்கள் எனப்படும். ஏனைய மந்திரங்களுக்கு முன்னே தோன்றியதாலும், ஏனைய மந்திரங்களுக்குக் காரணமாக இருப்பதாலும் பஞ்சப் பிரம மந்திரங்கள் சிறந்தன என்று சிவஞானசித்தியார் குறிப்பிடுகின்றது. * அந்தந்த மந்திரங்களால் அந்தந்த முகத்தைத் தரிசிப்பது என்றமுறையில் ஐந்து தட்டுத்தீபங்கள்காண்பிக்கப்படுகின்றன. இறுதியாக கும்ப தீபம் காண்பிக்கப் பெறும்.கும்ப தீபம் சதாசிவ தத்துவத்தை குறிக்கும். அனைத்தும் சதாசிவத்துள் ஒடுங்கும் என்றமுறையில் அமைந்தது. விரிவாகப் பலவாறாக இருக்கும் தீபங்கள் முதல் கும்பதீபம் இறுதியாக புருட தீபம், மிருக தீபம், பட்ச தீபம், வார தீபம், ருத்ர தீபம் முதலிய தீபங்களும் விரிவாகக் காட்டும்போது காட்டப் பெறுவதுண்டு. அந்தந்தத் தீபத்திற்குரியவர்கள் அந்தந்த உருவில் வந்து இறைவனை வழிபடுகிறார்கள் என்பது கருத்து.
(நன்றி : இணையம்
ஜய வருடம் ஆனி - ஆ,டி)

Page 37
இரத்மலானை சக்தி இல்லப் பிள்ளை
கல்லடி உப்போடை சித்தி சைவஞானபானு செஞ்சொற்செல்வர் ஆ
அங்கு வருகைதந்தவர்களையும்
இந்து ஒளி

ளகளின் பிறந்ததின விழா 15.06.2014
த்தி விநாயகர் ஆலயத்தில்
று. திருமுருகன் சிறப்புரையாற்றுவதையும், > இங்கு காணலாம். (25.06.2014)
மக
ஜய வருடம் ஆனி - ஆடி)

Page 38
ஆன்மீகச் சுடர் ரிஷி தொண்டுந
வன்னிப் பிரதேசத்தில் நிகழ்
- டாபயாககைய 'முள்ளிவாய்க்கால்
MULLIVAIKAL
(இந்து ஒளி

தன் சுவாமிகள் தலைமையில் ந்த மனிதநேயப் பணிகள்
பிரியா?
ஜய வருடம் ஆனி - ஆடி

Page 39
ஆன்மீகச் சுடர் ரிஷி தொண்டு
வன்னிப் பிரதேசத்தில் நி.
| THE AFTE
நயினாதீவு நாகபூஷணி ஆலய
இந்து ஒளி

நாதன் சுவாமிகள் தலைமையில் கழ்ந்த மனிதநேயப் பணிகள்
1 உற்சவ நிகழ்வுகள் Il.07.2014
இ
ஜய வருடம் ஆணி - ஆடி)

Page 40
இந்தச் சுடரில்...
* பஞ்ச புராணங்கள்
* ஆன்மீகச்சுடரின் அருள்மடல்
3
* ஆடி அமாவாசையின் சிறப்பு
* Keerimalai: The spring of our spiritual heritage 6
* நகுலேஸ்வரம் என சிறப்புப்பெறும்
கீரிமலைச் சிவன் கோயில்
* கீரிமலை சிவபூமி மடம் பிறந்த கதை
* முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர்
- ஒரு வரலாற்றுப் பதிவு --
* சுவாமி விபுலானந்தரின் கல்விப்பணி
N # 4 ப க - ம |
* சுவாமி விபுலானந்தரின்
செழுங்கலை நியமமும் வடமொழிக்கல்வியும்
* திருவாசகத்தில் சிவபுராணம்
* நினைவலைகளில் பாலா
* நல்லாசானாக விளங்கிய தவத்திரு யோகசுவாமிகள் 21
* சிவயோக சுவாமிகளின் போதனைகளும்
சாதனைகளும்
23
சைவ உலகம் வணங்கிப் போற்றிய பஞ்ச கோபுரங்களின் மெளன ஞான ஒளி
* என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும்
நாவலர் பெருமான்
27
8 S ஐ *
* இவரல்லவோ மகான்
28
* சிவலிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சி |
31
* தீப ஆராதனைகளின் விளக்கங்கள்
13
தூண்டா விளக்கின் நற்சோதி
தொழுவார் தங்கள் துயர் தீர்ப்பாய் பூண்டாய் எலும்பைப் புரம் மூன்றும் -
பொடியாச் செற்ற புண்ணியனே பண்டு ஆழ் வினைகள் அவை தீர்க்கும்
பரமா பழைய னூர்மேய அண்டா ஆலங்கடா உன்
அடியார்க்கு அடியேன் ஆவேனே!
(இந்து ஒளி

தீபம் காட்டும் பொழுது பாடவேண்டிய பாடல்கள்
உடம்பெனும் மனையகத்து உள்ளமே தகளி யாக மடம்படும் உணர்நெய் அட்டி உயிர் எனும் திரி மயக்கி இடம்படு ஞானத் தீ யால் எரிகொள இருந்து நோக்கில் கடம்பர் காளை தாதை கழட்டி காணலாமே!
(தேவாரம்)
விளக்கினால் பெற்ற இன்பம் மெழுக்கினால் பதிற்றியாகும் துளக்கில் நன்மலர் தொடுத்தால் தூய விண் ஏறல் ஆகும். விளக்கு இட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானம் ஆகும். அளப்பில கீதம் சொன்னார்க்கு அடிகள்தாம் அருளுமாறே.!
தேவாரம்)
காமனை அன்று கண்ணால் கனல் எரி ஆக நோக்கித் தூபமும் தீபம் காட்டித் தொழுமவர்க்கு அருள்கள் செய்து சேம நெய்த் தானம் என்னும் செறிபொழில் கோயில் மேய வாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வுற நினைந்த வாறே.!
(தேவாரம்)
நிறை மறைக் காடு தன்னில் நீண்டு எரி தீபம் தன்னைக் கறை நிறத்து எலி தன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட நிறை கடல் மண்ணும் விண்ணும் நீண்ட வான் உலகம் எல்லாம் குறை வறக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே.
{ தேவாரம்) சோதியே! கடரே! சூழ் ஒளி விளக்கே!
கரிசூழல் பனைமுலை மடந்தை பாதியே! பானே! பால் கொள் வெண்ணீற்றாய் ரீ பங்கயத்து அயனும் மாலறியா நீதியே! செல்வத் திருப்பெருந்துறையில் "
நிறைமலர்க் குருந்தம் மேவிய சீர் * ஆதியே! அடியேன் ஆதரித்து அழைத்தால்
அதெந்துவே என்று அருளாயே!
(திருவாசகம்)
ஒளிவளர் விளக்கே! உலப்பிலா ஒன்றே
உணர்வு சூழ் கடந்த தோர் உணர்வே தெளிவளர் பளிங்கின் திரள் மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்கும் தேனே அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே
அம்பலம் ஆடரங் காக வெளிவளர் தெய்வக் கூத்து உகந்தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே!
(திருவிசைப்பா)
ஜய வருடம் ஆனி - ஆடி)

Page 41
அகில இலங்
நீத்த
தலைமை தாங்கி வட
1 5ங்!
சங்ப
நீதிபரிபாட்டர்கார
வாரி வழங்கிய கொடை வள்
பதுங்கப்பா கதராசன.
மாமன்ற தலைமையகத்தை நிர்மாணித்த சிற்பிகள்
0
நோ.கூ சாறு
நே பாக்., கவாரகா
சிவாயாக
முக்கிய பதவிகளில் இருந்
பி
இE
டாடப ட
(இந்து ஒளி

பாடப்
கை இந்து மாமன்றம் தார் நினைவு
நடத்திய தலைவர்கள்
32
காதது
ரீதியாக பி.சீகப்பணிகம்
திரு காக்கா
மிருக மயகப்பகம்
ளல்களின் குடும்பத் தலைவர்கள்
திரு காத்து
நடபங்ய
ஆன்மீக வழிகாட்டிய சுடர்கள்
சிவகாதுகட்க
பர்தயர்
பரிசாக.
பொது
எது வழிகாட்டிய செம்மல்கள்
பிற On 62 தி இன வா
நீ பாது -
பி
ஜய வருடம் ஆனி - ஆடி)

Page 42
மற்றும் பொறுப்புகளையேற்று/சேவைய
கேடேமாக
டி.நா ய
திங்கட தாபம்.
நிருபசிங்கம்
, ஓம் சாந்தி ஓம் ச
பாரொடு விண்ணாய்ப் பரந்த எம் பரனே
பற்று நான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத்தரசே
திருப்பெரும் துறை உறை சிவனே ஆரொடு நோகேன் ஆர்க்கு எடுத்து உரைக்கேன்
ஆண்ட நீ அருளிலை ஆனால் வாழ்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருக என்று அருள் புரியாயே.
மாறி நின்று என்னை மயக்கிடும் வஞ்சப்
புலன் ஐந்தின் வழி யடைத்து அமுதே ஊறி நின்று என்னுள் எழுபரஞ் சோதி |
உள்ளவா காண வந்து அருளாய் தேறலின் தெளிவே சிவபெருமானே!
திருப்பெருந் துறையுறை சிவனே! ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
இன்பமே! என்னுடைய அன்பே!
* முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாலன்ட அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே!
(இந்து ஒளி |

பற்றிய முகாமைப் பேரவை தொண்டர்கள்
பேக்காக
சந்தாத் பொன்னி தங்கம்
எந்தி! ஓம் சாந்தி! .
அம்மையே! அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே! பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்கு செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே! இம்மையே! உன்னைச் சிக்கனப் பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவது இனியே.
+=t
உடையாள் உன்றன் நடு விருக்கும்
உடையாள் நடுவுள் நீ இருத்தி அடியேன் நடுவில் இருவீரும்
இருப்பதனால் அடியேன் உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப்
புரியாய் பொன்னம்பலத்து எம் முடியா முதலே என் கருத்து
முடியும் வண்ணம் முன்னின்றே.
உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர்வேண்டேன் கற்றாரை யான் வேண்டேன் கற்பனவு இனியமையும்
குற்றாலத்து அமர்ந்து உறையுங் கூத்தா உன் குரை கழற்கே கற்றாவின் மனம் போலக் கசிந்து உருக வேண்டுவனே.
ஜய வருடம் ஆனி - ஆடி)

Page 43
கீரிமலை ஸ்ரீ நகுலாம்பிகா சமேத நகுே
நகுலேஸ்வரத்தில் சில புதிய விக்க
கீரிமலை தீர்த்தக்கோ

லஸ்வர சுவாமி தேவஸ்தான நுழைவாயில்
-ரம்பு -
கிரகங்களும் புதிய கொடித்தம்பமும்
னியும் அதன் சுற்றாடலும்
நடப்பாங்i: IEடவர்

Page 44
அமரர் வே. பாலசுப்பிரமணியம் நிலை
பங்குபற்றிய பிரபு
மாத்தளை இந்து தேசியக் கல்லூரி
இந்து ஆலயங்கள் தொடர்பா
திரு. இராசேந்திரம் தலைமையில் தலைவர், பொது
திருக்கேதீஸ்வரத்தில் “இந்துஒளி” திருக்கேதீஸ்வ
இதர திருத்ததர்மர் ம் போது இதரர்
"வாடா அணி
(ந்தி ரேனவர்
நல்லை ஆதீன முதல்வர் முன்னிலையில் இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோ

எவுச்சிந்தனைக்களம் (06.07.2014)
இது
ALL
முகர்கள்
கலாநிதி மா. கைலாசநாத சர்மா
உரையாற்றுகிறார்.
யில் நடைபெற்ற மாத்தளை மாவட்ட ன செயலமர்வு (14.06.2014)
ச்செயலாளர், பொருளாளர் உரையாற்றுகிறார்கள்.
பர மகோற்சவ சிறப்பிதழ் வெளியீடு (10.06.2014)
"சகர் ஸ்ரீ சிவதர்ஷன் சிங் இந்து ஒளி சிறப்பிதழை வெளியிட்டு வைக்கிறார்.