கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2012.03

Page 1
50வது ஆண்டை நோக்கி...
*மல்6
|மல்லிகை
மலையகத்தில்
இலக்கிய 6 மார்ச் 2012

Sகை!
ஆசிரியர்: டொமிக் ஜீவா
முகிழ்ந்தெழுந்த விடிவெள்ளி!
விலை 40/-

Page 2
திருமலை
15 வருடத் திருமணசேன வேல் அமுதன் பாரிய ே
விபரம்:
விவரங்கள் முன்னே மான தி சிட்டியூர் வெள்ளி) லேயோ
தொலைபேசி: 2360488/ 2360694/4873929
சந்திப் முன்eே
முகவரி: 8-3-3 மெற்றோ மாடிமனை (வெள்ளவ பக்கம், 33ஆம் ஒழுங்கை வழி) 55ம் ஒழுங்
துரித- சுலப மணமக்கள் தெரிவுக்குச் சா ரம்மிய-மகோன்னத மணவாழ்வுக்குக் குழு

ன சேவை
வை நிறைவினை முன்னிட்டு சவைக் கட்டணக் குறைப்பு!
கருக்குத் தனிமனித நிறுவநர், 'சுயதெரிவுமுறை எடி', முத்த, புகழ் பூத்த, சர்வதேச, சகலருக்கு 'நமன ஆலோசகர் / ஆற்றுப்படுத்துநர் குரும்ப ', மாயெழு வேல் அமுதனுடன் திங்கள், புதன், ' மாலையிலோ, சனி, ஞாயிறு நண்பகலி 'தயங்காது தொடர்பு கொள்ளலாம்!
னற்பாட்டு ஒழுங்குமுறை
த்தை காவல் நிலையத்திற்கு எதிராக, நிலப்
கை, வெள்ளவத்தை, கொழும்பு-06
---
லச் சிறந்த முறை சுயதெரிவுமுறையே நம்பசிட்டியூர் மாயெழு வேல் அமுதனே.

Page 3
* *
மல்லிகை
'ஆடுதல் பாடுதல் சித்திரம்கவி
ஆதியினையகலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலைகண்டு துள்ளுவர்'
உலகப் பாராளுமன்ற வரலாற்றிலேயே, இலங்கை நாடாளுமன்றத்தில் மாத்திரம் தான் ஓர் இலக்கியச் சஞ்சிகை விதந்து பாரா ட்டப் பெற்ற பெறுமதி மிக்க சம்பவம் இடம் பெற்றுள்ளது. அங்கு பாராட்டப்பட்ட சஞ் சிகை மல்லிகை, இதனை நாடாளுமன்றப் பதிவேடான ஹன்ஸார்ட் {04.7.2001) பதிவு செய்ததுடன் எதிர்காலச் சந்ததியினருக்காக ஆவணப்படுத்தியுமுள்ளது - அத்துடன் உலக வரலாற்றில் முதன் முதலில் சலு
னுக்குள் இருந்து வெளிவந்த இலக்கியச் சஞ்சிகையும் மல்லிகையே தான்!
50 - ஆவது ஆண்டை
நோக்கி...
மார்ச் - 394 'வெனப் ஒழமை
Monthly Magazine மல்லிகை அர்ப்பணிப்பு உணர்வுடன் வெளி
1 171 ஆம்
வரும் தொடர் சிற்றேடு மாத்திரமல்ல- அது ஓர் ஆரோக்கியமான இலக்கிய இயக்க முமாகும். மல்லிகையில் வெளியாகும் எழுத்துக்களு க்கு எழுதியவர்களே பொறுப்பானவர்கள்!
201/4, Sri Kathiresan St,
Colombo - 13.
Tel: 2320721 - mallikaijeeva@yahoo.com

ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள் ; தனிமனித உழைப்பையே
மூலதனமாகக் கொண்ட) நிறுவனம்தான் - மல்லிகை!
ஒன்றை என்னால் வெகு தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகின்றது.
மல்லிகை இதழ்களை மாதா மாதம் ஒழுங்காகத் தயாரிக்கும் கட்டங்களில், சில சமயங்களிலே இனி மன ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி உள்மனம் கட்டளையிடும்.
ஆனால், சதா இயங்கிக்கொண்டிருப் பதுதான் எனது நீண்டகாலப் பழக்க மாச்சே!"
மல்லிகைச் சுவைஞர்கள் இன்று வரைக்கும் கூட, ஒன்றைத் தமது கவனத் தில் கொள்ளத் தவறி விடுகின்றனர்.
தனி மனிதனின் அயரா உழைப் பிலும், இலக்கியத் தன்னம்பிக்கையின் விடாப்பிடியான பிடிவாதத் தாக்கத்தின் பின்னணியின் தாக்கத்தினாலும்தான் மல்லிகை மாத இதழ் தொடர்ந்தும் இத் தனை ஆண்டுகளாக - இந்தப் பெரும் முப் பது ஆண்டுக்கால உள்நாட்டு யுத்தச் சூழ் நிலையிலும், வெளியீட்டுப் பிரதேசம் மாறிய போதிலும்கூட, ஒழுங்காக வெளி வந்து கொண்டிருக்கிறது.
பலர் தெரிந்தோ தெரியாமலோ மல்லிகையை ஒரு வியாபராச் சஞ்சிகை எனக் கற்பிதம் பண்ணிக்கொண்டே, எம் முடன் தொடர்பு வைத்து வந்துள்ளனர்.

Page 4
இதை மனந்திறந்து சொன்னாலும் கூட நம்ப மறுப்பார்கள், பலர்.
முகவரி பதிந்து , தபாற் தலை ஒட்டி மூடையாகக் கட்டிச் சுமந்து சென்று தபார் காரியாலயதிற்கு மாதா மாதம் சென்று இதழ்களைச் சேர்ப்பித்து வருபவர்கூட மல்லிகை ஆசிரியர் தான். தனிமனித உழைப்பேதான்.
அத்தனை தனிமனித உழைப்பை யும், மல்லிகைக்காகப் பயன்படுத்தி இயங்கிவரும் ஆசிரியர், எந்தக் கட்டத் திலுமே மனச்சோர்வு அடைந்து வாழா விருந்தது கிடையாது.
எப்பவோ - பல ஆண்டுகளுக்கு முன் னரே - மல்லிகைக்கு ஓராண்டுச் சந்தா செலுத்தியிருப்பார், ஒரு சுவைஞர். திடீ ரென நினைவு வந்தவரைப் போல, "எனக் கேன், இப்போ மல்லிகை அனுப்புவ தில்லை?'' எனத் தொலைபேசியில் கேள்வியொன்றைத் தூக்கிப் போடுவார்.
சந்தா முகவரிகளைக் கணினி மயப் படுத்தி, ஒழுங்காக வைத்திருக்கின்றேன்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே, சம்பந்தப்பட்டவரின் சந்தாக் காலம் முடிந்து விட்டது. கணினி விவரம் சொல்லும்.
இருந்தும் சந்தா முடிந்து விட்டது. புதுப்பிக்கவும் எனக் கடிதக் குறிப்பு எழுத விரும்பமில்லை. விருப்பமில்லை என் பதை விட, ஆள் வசதியில்லை. அத்துடன் மல்லிகை வியாபார நோக்கத்தைக் கருத்தில் கொண்டு வெளிவரும் மாசிகை யல்லவே. யல்லவே.. --- கம்:
மல்லிகையின் ஆரம்பகால இதழ்

களில் இருந்தே தெளிவாக மல்லிகையின் மாதாந்த வெளியீடு சம்பந்தமாக வெகு தெளிவாக அதன் தொடர் வாசகர்களுக்குப் புரியும் வண்ணம் விளங்கப்படுத்தி வந்துள் ளோம்.
மல்லிகையின் மாத இதழ் வெளியீட் டுடன் தொடர்ந்து பல ஆண்டுக் காலங் களாக மல்லிகைப் பந்தல் புத்தக வெளி யீட்டு நிறுவனத்தையும் ஆரம்பித்து, பல் வேறு விநியோகச் சிரமங்களுக்கு மத்தி யிலும் நடைமுறைப்படுத்தி வருகின்றேன்.
மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் புத்தகச் சந்தையில் தரமானவை, இலக் கியக் கனதி நிறைந்தவை எனப் பலராலும் பாராட்டப்பட்ட வெளியீடுகள்தான்.
இத்தனை இலக்கியச் சிரமங்களை யும், பொருளாதாரக் கஷ்டங்களையும் இந்த மண்ணில் இலக்கிய நேசிப்புக் கொண்டு வாழும் தரமான இலக்கியச் சுவைஞர்களினது நல்லெண்ணத்தின் மீது பூரண நம்பிக்கை வைத்துத்தான் விடாப் பிடியாக இயங்கி வருகின்றேன்.
இந்த அரைநூற்றாண்டு இலக்கிய இதழ் வெளியீட்டில் நான் கண்ட அனுப வங்கள் வேறெந்தத் தமிழ்ப் படைப்பாளியும் அனுபவித்திராதவை எனச் சொல்லலாம்.
நான் நல்லதொரு நடிகன். இலக்கிய நடிகன்! சகலதையும், சகலரையும் நெஞ் சாரப் புரிந்துகொண்டு, இன்றுவரையும் இயங்கி வந்துள்ள இலக்கிய நடிகன்.
- மல்லிகையை நெஞ்சார நேசிப்பவர் கள் ஒவ்வொருவரும் அற்புதமானவர்கள்!
டி
சி.

Page 5
அரசியல்வாதி
தேர்தல் எழுத்தாளர் தலைமுறை
அடிப்
ஆழமாகக் கூர்ந்து சிந்திக்கும் போது தெரிவது போலத் தோன்றுகின்றது.
' இதுவரை காலமும் எழுத்தாளர்களுக்கு எழுதிக்கொண்டே இருக்கட்டும். காசு கொடுத்து வெளியே போய் கலை இலக்கியக் கருத்துக். அரசியல்வாசிகளுக்கு மட்டுமே உரித்தான க மீறும் அபிப்பிராயங்களை வெளியிடுதல் தகாது உருவாக்கிப் பாதுகாத்து வந்துள்ளனர்.
கடந்த அரைநூற்றாண்டுக் காலங்களுக் அரசியல் லாப நஷ்டவாதிகள் நாட்டை இன் என்பதைச் சகல இலக்கியப் புத்திஜீவிக ஆளுகைக்குட்பட்ட நிகழ்ச்சிகளில் இனப் கருத்துக்களை உருவாக்கி வருகின்றனர் வெளிவரும் பாரிய மாற்றுக் கருத்துக்களால் 6
இதுவரையும் இனப் பிரச்சினையால் பா முழுவதும் சந்தித்த சிறுபான்மை இனப் பிரதி கூறி சர்வதேச நியாயம் கேட்கக் கூடிய சந்தர்! நமது பிரச்சினையைச் சர்வதேசச் சண்டைப் மெய்யாகவே சிறுபான்மை இனத்தினது 8 பாராட்டுகின்றோம்.
நாடு இன்று புதிதாகச் சிந்திக்கத் ெ அரசியல்வாதிகளின் விளையாட்டு நிலமாக நி தெரிந்த எழுத்தாளர்களினது கவன ஈர்ப்பை கொள்ளும் போது, பேனா முனையின் சர்க உணர்ந்து கொள்ள முடிகின்றது. புரிந்துகொ

களுக்கோ அடுத்துவரும் கேண்! -ஆனால்,
ளுக்கோ அடுத்துவரும் யின் முன்னேற்றம் தான் படை நோக்கம்.
து, மெல்லியதொரு சர்வதேச வெளிச்சம்
எழுதுவது மட்டுந்தான் வேலை. அவர்கள் து வாங்குவோர் படிக்கட்டும் அதை விடுத்து கப்பால் நின்று அரசியல் சம்பந்தப்பட்ட - ருத்துக்களை, வெகுசனக் கருத்துக்களை ! என்றொரு பொதுவான மனப்பான்மையை
கும் மேலாக இந்த நாட்டுத் தமிழ் - சிங்கள று எங்கே கொண்டு சென்றிருக்கிறார்கள் ளும் தெளிவாக உணர்ந்தே தத்தமது - பிரச்சினை சம்பந்தமாக வெகுசனக் என்பதை அவர்களினது விழாக்களில் எம்மால் உணர முடிகின்றது. ரிய இழப்புகளை எதார்த்த பூர்வமாக நாடு நிெதிகள், தமது மாற்றுக் கருத்துக்களைக் ப்பம் இருந்த போதிலும் கூட, அங்கு போய் பாக்காமல் அடக்கி வாசித்ததைக் காண இன்றைய இராஜதந்திரத்தை மெய்ச்சிப்
தாடங்கி விட்டது. இதுவரை காலமும் ன்று நிலவிய இத்தேசம், இன்று சிந்திக்கத் பப் பெற்றுள்ளது என்பதைக் கவனத்தில் வதேச வலிமையை எம்மால் பூரணமாக
ள்ள முடிகின்றது. இதே
கு: 5

Page 6
அட்டைப்படம்
குழந்தை சாரண.
மீன்பாடும் தேன் நாடாம் மட்டுமா நக குடிவந்த புதிது. சுமார் பதினெட்டு வருடங் வீதியில் சின்ன சரஸ்வதி என்றழைக்கப்படு பித்துக் கொண்டிருந்த மலையக மாணிக்கா கையூம் ஆசிரியர் அவர்களைக் காட்டி, இல படுத்திய போது, ஆனந்தப்பட்டுப் போனேன்
அதற்குக் காரணம் உண்டு. இந்த வ என்ற ஆவல் என்னுள் கனிந்த காலமது எழுத்தாளரைச் சந்திக்கின்ற போது, ஏற்ப
கூர்மையான அமைதி கலந்த புன்ன பருமன். கன்னத்தோடு ஒட்டிய தாடி. கொ எழில் தோற்றம். அன்புடன் வரவேற்று அளவான பேச்சு... இவை எல்லாம் மதிப்பி அவர்களுக்கே உரித்தானது.
பதுளையில் பிரபல வர்த்தகமும் 'கொஸ்வத்தை முதலாளி' என்று கெளரம் அவர்களின் சிரேஷ்ட புதல்வர் நூர்சாலிப் புத்திரனான இவர், பதுளை அரசினர் தம் பாடசாலை, கண்டி ஆசிரிய பயிற்சிக் கல
1943ஆம் ஆண்டு முதல் கவிஞர் கற்றதோடு, மெளலவி கே.எம்.எ.ஜமால்தீ மார்க்கக் கல்வியையும் கற்கும் பாக்கியத்
அறுபதுகளில் 'வீரகேசரி' வார இதழ் அறிமுகமானவர். வீரகேசரி இஸ்லாமிய
மல்லிகை பூ

1: த க
க்கறிஞர் [ கையூம்
- வாஹிட் ஏ.குத்தூஸ்
ரிலிருந்து கூதலூராம் பதுளை மாநகருக்குக் களுக்கு முந்திய நிகழ்வு. பதுளை தேவாலய ம் சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயத்தில் படிப் ப்களில் ஒருவரான குழந்தைக் கவிஞர் சாரணா பர்தான் கவிஞர் கையூம் சேர்' என்று அறிமுகப்
ன்.
ாரமும் அவர் கவிதை வரும், கட்டுரை வரும் ப. அந்த அளவுக்கு என்னைக் கவர்ந்த ஓர் நம் மகிழ்ச்சிக்கு அளவேது? கைப் பூத்த முகம், உயரத்திற்கேற்ற அளவான ஞ்சம் வயதானாலும் வாலிப முறுக்குடனான உபசரிக்கும் நற்பண்பு. அலட்டல் இல்லாத ற்குரிய கவிஞர் என்.எஸ்.ஏ.கையூம் (சாரணா)
(Timber Merchant) சிங்கள மக்களால் வமாக அழைக்கப் பெற்றவருமான மு.ப.யூசுப் - மர்ளியா உம்மா தம்பதியர்களின் சிரேஷ்ட ழ்ெக் கலவன் பாடசாலை, சரஸ்வதி கலவன் Tசாலைகளின் பழைய மாணவர். அப்துல் காதர்லெப்பை அவர்களிடம் கல்வி ன் (அப்ஸலுல் உலமா, பாகவி) அவர்களிடம் தைப் பெற்றவர். பில் 'மகாகவி பாரதி' என்னும் கட்டுரை மூலம் உலகம் பகுதியில் இவருடைய ஆரம்பகால மார்ச் 2012 ஐ 4

Page 7
ஆக்கங்களைப் பிரசுரித்து ஊக்கப்படுத்திய அல்ஹாஜ் எஸ்.எம்.எ.ஹசன் (அறபி பாஷா நினைவாலயப் பணிப்பாளர்) அவர் களை எப்பொழுதும் நன்றியுடன் நினைவு
கூர்கின்றார்.
1958ம் ஆண்டு ஆசிரியர் தொழிலில் கால்பதித்து, அறுபதுகளில் இலக்கியத் துறை வரை குறுகிய காலத்தில் உயர்வு பெற்றவர். ஆரம்ப காலத்தில் தன்னை ஒரு சிறுவர் பாடலாசிரியராகவே அறிமுகப் படுத்திக் கொண்டார்.
ஒரு காலகட்டத்தில் இவர் தினகரன் புதன்மலர் பகுதியில் கொடிகட்டிப் பறந் தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கவிஞர் அப்துல் காதர் லெப்பை அவர்களுக்குப் பல்வேறுபட்ட துறைகளில் மாணவர்கள் இருக்கின்றார்கள். இருந்தாலும் எழுத் தோடு குறிப்பாகக் கவிதையோடு தொடர் புடையவர் இவர் மாத்திரமே என்பது
மகிழ்ச்சிக்குரியதாகும்.
கவிஞரைப் பற்றி, 'என் நினைவில் ஒரு கவிஞர்' என்னும் நூல், இவருக்கும் கவிஞருக்குமிடையே இருந்த குருபக்தி யையும் அபிமானத்தையும் நன்கு புலப் படுத்துகின்றது.
ஆரம்ப நாட்களில் பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்குச் சிறந்த சிறுவர் பாடல் களைப் பொழுதுபோக்கிற்காக எழுதியவர். பாடசாலையில் சக ஆசிரியர்கள் தலைப்பு களைத் தந்து, பாடல்களை இயற்றித் தரக் கேட்கும்போதெல்லாம் சளைக்காமல் பாடல்களை யாத்துக் கொடுத்தப் பண் பாளர்.
இவரது முதலாவது சிறுவர் பாடல்கள்
மல்லிகை ம .

தொகுப்பு குழந்தை இலக்கியம்' என்னும் தலைப்பில் 1962ம் ஆண்டு வெளிவந்தது. இந்நூலை ஆசிரியப் பயிற்சிக் கலாசாலை ஆக்கப் பணிக்காகச் சமர்ப்பித்தமை குறிப் பிடத்தக்கது.
1974ஆம் ஆண்டு சிறுவர்களுக்கென 'சிறுவர் பாரதி' என்னும் பத்திரிகையை நடத்தினார். ஊவா மாகாணத்திலிருந்து வெளிவந்த முதலாவது சிறுவர் பத்திரிகை
இதுவெனலாம்.
சிறுவர் சிறுமியர்களுக்கு எழுதி, விளங்கக்கூடிய எளிய மொழியில் பேசுவதோடு, எழுபதுகளின் ஆரம்பத்தில், 'சிறுவர் பாரதி' சிறுவர் இலக்கியம் வளர்ச்சி பெறாத ஒருநிலையில் அதற்கான ஒரு முயற்சியாக முன்னெடுப்பாக சிறுவர்களை யும், இலக்கியத்திற்குள் இழுக்கும் வாசிப் புப் பண்புக்குள் கொண்டுவரப் பாடுபட்ட ஏடாக இது விளங்கியது என்று பிரபல எழுத்தாளரும், விமர்சகருமான தெளி வத்தை ஜோசப் அவர்கள் சாரணா கையூ மின் 'சிறுவர் பாரதி' பற்றிக் குறிப்பிட் டுள்ளது நோக்கற்பாலதாகும்.
நாகமுத்தையா, அழ வள்ளியப்பா, பேராசிரியர் மா.இராசமாணிக்கனார், வீ.ஆர்.எம். செட்டியார் ஆகியோர் சாரணா கையூம் அவர்களின் சிறுவர் பாடல்களை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
கலாநிதி பட்டத்திற்காக சிறுவர் நூல் களை ஆய்வு செய்த திருவாளர் வே.தா. கோபாலகிருஷ்ணன் எம்.ஏ. (பூவண்ணன்) அவர்கள் சாரணா கையூம் அவர்களின் "குழந்தை இலக்கியம்' நூலையும் தமது ஆய்வுக்குட்படுத்தியிருப்பது சோடிட்டுக் காட்டக் கூடியதொன்றாகும். எச் 2012 5

Page 8
சிறுவர் இலக்கியப் பரப்பில் பாடல்கள் மாத்திரமன்றி நீதிக்கதைகள், கதைகள், நவீன தந்திரக் கதைகள் முதலிய பல வற்றையும் எழுதியுள்ளார். இன்றும் புகழ்ந்து பேசப்படும் பிரபல வாரப் பத்திரி கைகளில் ஒன்றான சிந்தாமணி'யில் வெளியான இவரது செட்டியார் காத்த புதையல்', 'சீப்பு வியாபாரி' முதலிய கதை கள் சிறுவர்கள் மத்தியில் நல்ல வர வேற்பைப் பெற்றிருந்தன. : மகாகவி அல்லாமா இக்பால் அவர் களின் கதைகளில் கவரப் பெற்று புத் துணர்ச்சி பெற்றவர்களில் சாரணா கையூம்
ஒருவர். ஒருவர். 31 ஆம்
1964ம் ஆண்டு, முன்னாள் செளதம் மகா வித்தியாலய அதிபரும், இலக்கிய அன்பரும் கையூம் அவர்களின் நெஞ்சுக்கு மான நெருக்கமான நண்பருமான 'கலைக் கூத்தன்' பி.எம்.எம்.ஏ.காதர் அவர்களோடு இணைந்து இக்பாலுக்கு 'மலர்' ஒன்றை வெளியிட்டு சிறப்புச் சேர்த்த பெருமை சார்ணாவுக்கு உண்டு. பெறுமதி மிக்க கட்டுரைக் கனிகளை உள்ளடக்கி நூற்று அறுபத்தெட்டு பக்கங்களில் ஒரு மலரை அக்காலத்தில் வெளியிட்டமை உண்மை யிலே ஒரு மகத்தான சாதனை என்றே குறிப்பிட வேண்டும்.
மலர் வெளிவந்த காலத்தில் காழ்ப் புணர்ச்சிக் காரணமாக மலரைக் கிண்ட லும் கேலியுமாக விமர்சனம் செய்தார்கள்.
அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ், கவிஞர் அப்துல்காதர் லெப்பை போன்ற சான்றோர் கள் அன்று 'இக்பால் தினம்' கொண்டாடி மகிழ்ந்த பொற்காலமும் அது. இது
மல்லிகை மா

இந்த சாரணா கையூம் அவர்கள், பரபரப் பில்லாமல் இலைமறை காயாக இருந்து தமிழ்த் தொண்டு புரிந்தவர். கடந்த நான்கு தசாப்தங்களாகத் தொடர்ந்திடும் அவரின் தமிழ்த் தொண்டு சிலாகித்துப் பேசப்பட வேண்டியதொன்றாகும்.
அரும்பெரும் ஆசிரியப் பணியிலி ருந்து தற்போது ஓய்வு பெற்றிருந்தாலும், மாணவர்களின் கல்வி முன்னேற்றங் கருதி, தன்னாலான உதவிகளைச் செய்து வருவது பாராட்டத்தக்க சேவையாகும். -
காசுக்குக் கல்வி விற்கப்படும் இக் காலத்தில் உயர்வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்மொழியை இலவசமாகக் கற்பித்து வருகின்றார்.
ஆசிரியராக, போதனாசிரியராக , விரி வுரையாளராக ஆற்றிய பணிக்காக ஊவா மாகாணத்தில் பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்ற ஒரே ஒருவர் சாரணா கையூம் ஆவார்.
குழந்தை இலக்கியம் (1962), குர் ஆன் ஹதீஸ் (1962), நபிகள் நாயகம் (1962), கவிதை நெஞ்சம் (1971), சிறுவர் பாட்டு (1983), நன்னபி மாலை (1987), என் நினைவில் ஒரு கவிஞர் (1997) ஆகிய நூல்களை எழுதியுள்ளதோடு, ஊவா மாகாணக் கல்வித் திணைக்களத்திற்காக சிறுவர் கவிதைகள் (1992), சிறுவர் பாடல் (1992), விஞ்ஞான மேதைகள் (1993), இவைகள் பேசினால்... (1993) ஆகிய சிறுவர்களுக்கான நூல்களையும் எழுதியுள்ளார்.
இவரது ஆக்கங்கள் ஈழத்துப் பத்திரி கைகள், சஞ்சிகைகளிலும், அப்த்-அல்
ர்ச் 2012 6

Page 9
சேது
=0
கையூம், 'எஸ்கே' என்னும் பல புனைப் பெயர்களில் எழுதி வந்தாலும், 'சாரணா கையூம்' என்ற பெயரே வாசகர் மத்தியில் நன்கு பரீட்சயமானது.
மலேசியாவில் டாக்டர் பட்டர் வொர்த் எஸ்.எம்.ஜெய்னுத்தீன் அவர்களின் தலை மையில் இயங்கிவரும் 'கவிதை மாலை இயக்கம்' 1994ஆம் ஆண்டு இலக்கிய மா மணி' பட்டம் வழங்கி கெளரவித்த மூன்று முத்தான முஸ்லிம் கவிஞர்களுள் சாரணா கையூமும் ஒருவர். (மற்றையவர்கள் மர்ஹூம்களான கவிமணி எம்.ஸி.எம். சுபைர், அ.ஸ.அப்துஸ்ஸமது)
சாரணா கையூம் அவர்களின் தமிழ்த் தொண்டுக்காக (தேடிப் போனதல்ல, தேடி வந்தவை) குழந்தைக் கவிஞர் (1974இல் கீழக்கரை இஸ்லாமிய இலக்கியக் கழகம்), இலக்கியச் சுடர் (1989இல் இந்து கலாசார அமைச்சு), நஜ்முஸ் ஸமஹரா (1992இல் முஸ்லிம் கலாசார அமைச்சு), கவிமணி, தமிழ்மணி (1991-2001 இல் ஊவா மாகாண இந்து கலாசார அமைச்சு),
ஆழ்ந்த பழம்பெரு பேச்சாளரு
அவர்கள்
யாழ்ப்பான அன்னாரது களினது சார் துயரத்தைத்
201
மல்லிகை மார்

இலக்கிய மாமணி (1994 இல் மலேசியா கவிதை இலக்கிய மாலை இயக்கம்), வருள் கஸீதா (2001 இல் பதுளை அஹதிய்யா பாடசாலை) ஆகிய விருது களும், 2002ம் ஆண்டு கொழும்பில் நடை பெற்ற அகில உலக இஸ்லாமிய மகா நாட்டில் கெளரவ விருதும் வழங்கப்பட்டது.
1998ம் ஆண்டு கலைஞர்களுக்கான கலாபூஷண' விருதும், அ.இ.சமாதான நீதவான் பட்டமும் கிடைத்தமை குறிப் பிடத்தக்க கெளரவங்களாகும்.
எல்லா விதத்திலும் கவிஞர் சாரணா கையூம் விதந்து பேசப்படக்கூடியவரே.
கவிஞரின் மேசையில் நவம்பர் மாத 2005) மல்லிகை சிரிக்கிறது. அலுமாரிக் தள் மல்லிகை இதழ்கள் மணக்கின்றன. பல தரப்பட்ட பத்திரிகைகள், சஞ்சிகை கள், நூல்கள் சகிதம் சுற்றுச் சூழ அமைந் திருக்கும் அவர்தம் வரவேற்பறை வாசிக சாலையா? என்று எண்ணத் தோன்றும். ஒரு தடவைச் சென்று பார்த்தால் புரியும்.
துயரமடைகின்றோம்! தம் எழுத்தாளரும் பிரபல மோன புதுமைலோலன்
ஈ இம்மாத ஆரம்பத்தில் எத்தில் காலமாகி விட்டார். இழப்பிற்காக எழுத்தாளர் பாக மல்லிகை தனது ஆழ்ந்த தெரிவித்துக் கொள்ளுகின்றது.
- ஆசிரியர் 5 2012 7

Page 10
225
அது
- 25
தை 1 :
இறு
வலிவடக்கில் இருந்து ஆயிரத்துத் இடம்பெயர்ந்த இரத்தினம் இன்னமு வில்லை! மீளக் குடியமரலாம் என அறி. ஊர் இன்னம் அதி பாதுகாப்பு வலயமே
இரத்தினத்திற்கு இருபக்க வதை. ஊரில் வந்தான் வரத்தான் என்ற வரலே. ஊர்ப் பிரபலம் ஒன்றின் வீட்டில் ஒரு கழித்துத்தான் அதற்குப் போக முடிந்தது வசதி இல்லாமற் போய்விட்டது. உடன யுங்கோ" என வேண்டிக் கொண்டார். மனைவிக்கு இழுப்பு நோய். கடந்த மூ இரத்தினம் தன்னம், தனிமையாக ம சென்று மூச்சுத் திணறலைத் தணிப்பித் வந்து - அனைத்தையும் கவனித்து ஆள்
போனகையோடு மன்னிப்புக் கேட் ரத்தினம் செத்தபோது, இழவு சொல்ல வந்தது தெரியும்தானே?" பிரபலம் கோ
"ஓம் ஐயா! நீங்க எங்க வீட்டுச் முன்னின்று நடத்தி, உருக்கமாகத் திரு இருக்கு!"
"நான் பாடியது கூலிக்கா? அதை எ நன்றி கெட்ட மனிஷரோடை சகவாசம்
''பிரச்சினை என்னவெண்டால், ஆசுபத்திரிக்கு அவளைக் கொண்டு மனிஷிக்கு நல்ல சுகமில்லை.''
"உதெல்லாம் தேவையில்லாத க ை "ஐ.யா!" இரத்தினத்தின் கண்களி
"போவெண்டால் போறதுதானே இங்கிருந்து உடனை போய்விடு!"
அவமானத்தையும், அவமதிப்பை நடைப்பிணமாக நகர்ந்தார்.
மல்லிகை ம

3
மாப்பு
- வேல் அமுதன்
தொளாயிரத்து எண்பத்தைந்தாம் ஆண்டு மம் ஊருக்குத் திரும்பிய பாடாய்த் தெரிய விக்கப்பட்டிருந்த போதும், இரத்தினத்தின்
- பிறந்த ஊரில் இராணுவம்; குடியமர்ந்த வற்பு. அண்மையில் இரத்தினம் குடியமர்ந்த 5 செத்த வீடு. இரத்தினம் இரண்டு நாட் து. இழவு வீட்டிற்குப் போனபோது, "ஐயா! மன நான் வரவில்லை எண்டு கோபிக்காதை உண்மை என்னவென்றால், இரத்தினத்தின் ன்று நாளாகக் கடுமை. அனாதரவாளரான னைவியை வைத்தியசாலைக்குக் கொண்டு த்து திரும்பத் தனது வீட்டிற்குக் கொண்டு வன செய்தார்.
ட இரத்தினத்திடம், "உமது மாமன் செல்வ ப்படாத போதும், நானாக உங்க வீட்டை ட்டது. ட்டது. - - - - -
செத்த வீட்டிற்கு வந்து - ஈமச்சடங்கை வாசகமும் பாடி உதவியது நல்ல ஞாபகம்
ப்படியப்பா மறந்தாய்? உன்னைப் போலை எமக்குத் தேவையில்லை! நீ போகலாம்.” என்ரை மனிஷிக்கு மோசமான ஆஸ்மா. போக வேண்டி வந்திட்டுது. இன்னமும்
தெயப்பா நீ போகலாம்.”
ல் இருந்து நீர் வழிந்தோடியது. ன? ஏன் நிற்கிறாய்? இன்னம் நிற்காதை!
பயும் தாங்கும் தைரியமற்ற இரத்தினம்
மார்ச் 2012 ஒ8

Page 11
ஆளுமை
மிக்க பெண்களால்
பாலியல்
சமத்துவத்தை எட்ட முடியும்.
- யுகாயினி
பெண்கள் தமது ஆற்றல் ஆளுமை களை வளர்த்துக் கொள்வதனால் தமது இருப்பை உன்னதமாக்கிக் கொள்ள முடி யும். ஆற்றல் ஆளுமை மிக்கப் பெண்களை தப்பான நோக்குடன் அணுக ஆண்கள் தயங் குவர். பெண் என்பவள் வெறும் பாலியல் பதுமையல்ல என்ற கருத்துருவை ஆற்றல் ஆளுமை மிக்க பெண்களால்தான் உடைத் தெறிய முடியும். பெண் என்றதும் உடல் என் பது மட்டும் முதன்மைப்படாமலிருக்க வேண்டுமாயின் அழகுக்கு நிகராக அவளது அறிவும், ஆற்றலும், ஆளுமையும் மேம்பட வேண்டும். இவ்வாறான ஒரு நிலையிலேயே பால் சமத்துவ நிலை ஏற்படும். பெண்ணும் தம்மைப் போல் ஒரு சக மானுடப் பிறவி என்கிற எண்ணமும் உருவாகும்.
பெண்கள் சமூகத்தில் இரண்டாந்தரப் பிரஜையாக இருப்பதற்கு அவர்களது உடற் பலயீனம் மட்டும் காரணமல்ல. ஆண்டாண்டு
மல்லிகை மார்க்

காலமாக அவளுக்குச் சமமான வாய்ப்பு களைக் கொடுக்காமல் எல்லா விடயங் களிலும் ஒதுக்கியும் ஒடுக்கியும் வைத்து அவளை ஆண்களின் தேவைகளுக்கான ஒரு கருவியாக வைத்திருந்ததினால்தான் பெண்ணுக்கு பின்னடைவு ஏற்பட்டது. அவளுக்கு சமத்துவம் கிடைக்க வேண்டுமா னால், தான் ஆணுக்கு நிகரானவள் என்ற எண்ணம் அவளது மனதில் உருவாக வேண் டும். இதன் பொருள் அவள் திமிர் பிடித்த வளாக இருக்க வேண்டும் என்று எண்ணி விடாதீர்கள். ஆணைப் போலவே தானும் சகல உரிமைகளையும் கொண்ட ஒரு பிறவி என்ற எண்ணமே வேண்டும். அகங்காரம் அல்ல. பெண்ணியம் பற்றி சிந்திக்கும் போது அதற்குச் சில எல்லைகள் வரையறைகள் வேண்டுமென தாட்சாயினி குறிப்பிட்டுள்ள மையையும், பெண் விடுதலை என்பது ஆண் களுக்கெதிரான போராட்டமல்ல என சந்திர காந்தா முருகானந்தன் குறிப்பிட்டுள்ளமை யையும் கவனத்தில் கொள்ளலாம்.
ஒருவரின் ஆற்றல் ஆளுமை விருத் திக்கு பல விடயங்கள் வித்திடுகின்ற போதி லும், கல்வியறிவு அதில் முக்கியமானது. பெண்களின் எழுச்சியும், விழிப்புணர்வும், சமத்துவ சிந்தனைகளும், பெண்களுக்கான கல்வி வாய்ப்பு அதிகரித்ததனால் ஏற்பட் டதை மறுக்க முடியாது. முற்று முழுதாக ஆண்களிலேயே தங்கியிருந்து, அவர்களுக் காகவே வாழ்ந்த நிலை மாறி, பெண் தனக் காகவும் வாழச் சிந்திக்கத் தொடங்கியது கல்வி அறிவினால்தான். பள்ளிக்கூடக் கல்வி முதலில் அவளை வீட்டுச் சிறையிலிருந்து வெளியுலகுக்கு கொண்டு வந்தது. இதனால் பெண் தனது தாழ்வு நிலையை உணரும் வாய்ப்பும், தனது நிலையை ஆணுக்கு நிக ராக உயர்த்திட வேண்டும் என்ற எண்ணமும் ஏற்பட்டது. கல்வியில் கிடைத்த தகைமை 2012 ஓ 9

Page 12
அவளுக்கு வேலை வாய்ப்பையும், வரு வாயீட்டலையும் பெற்றுக் கொடுத்தது. ஊதிய மற்ற அங்கீகாரமற்ற கடின உழைப்பாளியாக குடும்பத்திற்காக மாய்ந்து தன்னை அர்ப் பணித்து, தனது நலன்களைத் தியாகம் செய்து வாழ்ந்த தனது சமத்துவமற்ற வாழ்வை பெண் உணர்ந்து கொண்டாள். தனக்கான ஓர் அங்கீகாரம் வேண்டுமென்ற சிந்தனைக் கருவூலம் அவள் மனதில் எழுந்தது.
பெண் ஓர் அடிமை போல் வீட்டுக்குள் இருந்த காலத்தில் அவளுக்கெதிரான குடும்ப வன்முறைகள் இருந்தன. பாலியல் வன்முறைகள் குறைவாக இருந்தன. ஆனால் பெண், வெளியுலகுக்கு வந்த பின் னர் அவளுக்கெதிரான பாலியல் வன் முறைகள் அதிகரித்தன. வீட்டுக்குள் வைத்து பெண்ணை வெறும் போகப் பொரு ளாகப் பார்த்த ஆணாதிக்க சமுதாயம் வெளியே வந்த பெண்ணையும் அதே கண் ணோட்டத்தில் பார்த்தது. பெண் என்றதும் அவளது உடலும் உறுப்புகளும்தான் என்ற கோணல் பார்வையினால் பெண் பெரிதும் பாதிப்புக்குள்ளானாள். பிரயாணங்களிலும், பணியிடங்களிலும் அவள் மீதான பாலியல் வக்கிரப் பார்வை தொடர்ந்தது. இதனால் சந்தர்ப்பம் கிடைக்கும் போது சில ஆண்கள் எல்லை மீறி பெண் மீது பாலியல் அழுத்தங் களையும், உந்துதல்களையும் மேற்கொண் டனர்.
இதன் தொடர்ச்சியாக பெண்களுக் கெதிரான பாலியல் வன்முறைகளும், வல் லுறவுகளும் மேற்கொள்ளப்பட்டன. சமத்து வத்தை நோக்கிய பெண்ணின் எழுச்சிக்கு இது பெரும் சவாலானது. எனினும் இவற்றி லிருந்து மீட்சி பெற பெண்ணியவாதிகள்
மல்லிகை மார்

உலகளாவிய ரீதியில் பலவித போராட்டங் களை மேற்கொண்டனர். எனினும் இன்று வரை பெண்களுக்கெதிரான வன்முறை களை முற்று முழுதாக முடிவுறுத்த முடியா மலேயே இருக்கிறது.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன் முறைகள் முறியடிக்கப்பட வேண்டுமா னால் பெண்ணுடல் பற்றிய மாயை ஆண் களிடமிருந்து அகற்றப்பட வேண்டும். உடலுக்கு அப்பால் பெண்களின் உள்ளம் பற்றியதான தெளிவை ஏற்படுத்த வேண் டும். பெண்கள் கல்வியறிவு மிக்கவர்களா கவும், ஆற்றல் ஆளுமையுடையவர்களா கவும் இருப்பின் உடல் என்ற ஒற்றைப் பார்வை மறையும். பெண்ணுடலுக்கு அப் பால் பெண்ணின் மனதும், அறிவும் புலப் படும். இதன் மூலம் ஆண்களின் பாலியல் இச்சையைக் குறைத்திட முடியும்.
கட்டுப்பாடான, நாகரீகமான, சட்ட வரைமுறைகளுக்குட்பட்ட பாலுறவு இரு பாலாருக்கும் இன்பமளிக்கும். பெண் பாதிப்புற மாட்டாள். எனவே, பெண்களே முதலில் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். இது கல்வியாலும், உலக அனுபவத்தினாலும் கிடைக்கும். அடுத்து உங்களிடம் நீங்கள் அறியாமலே இருக் கின்ற திறமைகளை இனம் கண்டு அவற்றை வெளிப்படுத்துங்கள். நீங்கள் ஆற்றல், ஆளுமையுடையவர்களாக செயற்படும் போது, ஆண்களுக்கும் உங்கள் மீதான மதிப்பு உயர்வடையும். சமத்துவ சிந்தனைகளும் உருவாகும். அவர்கள் உங்களையும் சமவுரிமையுள்ள சக மானுடப் பிறவியாக எண்ணுவார்கள். இதன் மூலம் பெண்ணிய இலக்குகள் நனவாகும். ச் 2012 ஓ 10

Page 13
බෝනික්කා,
3. கேக்கலக்கதக சக 8
කෙටිකතා එකතුව
25 5, 8, அம், இஅைன
தொகுதியில் உள்ள 'பொம்மை' என்ற கதை - சிங்கள் இலக்கிய மொழிபெயர்ப்பாளர் எஸ். செய்துள்ளார்.
ஜெயகாந்தனின் படைப்புக்கள் சிங்களத் எழுதியும் பேசியும் வருகின்ற மல்லிகை ஆச் உந்துசக்தியாக இருந்தார் என்று மொழிடெ
இந்நூலில் பதிவு செய்துள்ளார்.
ஜெயகாந்தனோடு நேர்த் தொடர்பு வைத் 'சூழ ஓடும் நதி' என்ற ஆய்வு நூலை எழுதி பாளியுமாகிய கெகிராவை ஸஹானா இந்து போடு செயற்பட்டதோடு இதற்கு அணிந்துரை
'சகல இந்திய மொழிகளிலும், ருஷ்ய உக்ரேனிய, ஜேர்மன் முதலிய மொழிகளிலும் இவ்வாறான வெற்றிப் படைப்பாளியின் ப ை தில்லை என்ற கேள்வி நீண்ட காலமாகவே 6
மல்லிகை மார்ச்

ஜெயகாந்தனின்
தேவன் அருவறா?
சிங்கள் மொழிபெயர்ப்பு.... பேரளிக்கா
- பூரணன்
7 T -
காம்
11 , 15. .
ஜெயகாந்தன் ஆரம்ப காலத்தில் எழுதிய சிறப்பான சிறுகதைத் தொகுதி களில் ஒன்றான 'தேவன் வருவாரா?' சிங்களத்தில் வெளியாகியுள்ளது. மகுடமாக இடம்பெற்றுள்ளது. பிரபல தமிழ் ஏ.ஸி.எம்.கராமத் இதனை மொழியாக்கம்
கதில் வரவேண்டுமென்று நீண்ட காலமாக சிரியர் டொமினிக் ஜீவா இந்நூல் வெளிவர பயர்ப்பாளர் தன் முதல் நன்றியுணர்வை
துள்ளவரும், அவரது படைப்புக்கள் பற்றிய க் கவனிப்புப் பெற்றவரும், பிரபல படைப் ரலை வெளிக்கொணர மிகுந்த அர்ப்பணிப் - வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பிரெஞ்சு, ஆங்கில, செகோஸ்லேவேகிய, இவரது படைப்புக்கள் வெளியாகியுள்ளன. டப்புக்கள் ஏன் சிங்களத்தில் வெளிவருவ ன் மனதில் எழுந்திருந்தது. எனது மனதில் 2012 : 11

Page 14
மட்டுமல்ல சகோதர எழுத்தாளர் பலரது மனதிலும் இதே கேள்வி மேலோங்கி நின் றதை காலப்போக்கில் நான் அறிந்து கொண்டேன். அதனுடைய பெறுபேறா கவே இந்நூல் வெளிவருகிறது' என்று ஸஹானா சொல்வது மிகச் சரியானதே.
இலங்கை நண்பர்கள் அழைக்கும் போதெல்லாம் ஜெயகாந்தன் ஒரே பதிலையே அன்று முதல் சொல்லி வந்தார். இதனையே அவரது சிந்தையில் ஆயிரம்' (1987) நூலில் "எனது படைப்பு களின் மொழிபெயர்ப்பு நூல் ஒன்றே நான் இலங்கை வருவதற்கான பாலமாக அமையும்” என்று எழுதியுள்ளார்.
இருந்தும், தமிழ் ஆக்கங்களை சிங் களத்தில் கொண்டுவர வேண்டுமென்பதை கொள்கை ரீதியாக ஏற்றுச் செயற்படும் வெளியீட்டு நிறுவனங்களையோ, ஜெய காந்தனைப் புரிந்துகொண்டு மொழியாக் கம் செய்யக்கூடிய மொழிபெயர்ப்பாளர் களையோ கண்டுபிடிப்பது அப்போது கஷ்டமான காரியமாகவே இருந்து வந்தது.
இதற்கிடையில் ஏதோ ஒருவகையில் உபாலி லீலாரத்ன மொழிபெயர்த்த கொடி கஸ ஹந்திய' (இல்லாதவர்கள்) என்ற நாவலும், சு.முரளீதரன் தொகுத்த ஜெய காந்தன் அறிமுக நூலொன்றும் வெளி வந்துள்ள விடயம் காலம் கடந்தும் பரவ லாக அறியப்படாமலேயே உள்ளது.
முன்னணி சிங்கள் வெளியீட்டு நிறு வனங்கள் சில பரஸ்பரம் சிங்கள - தமிழ் மொழிபெயர்ப்புகளை பிற்போடும் நடவடிக் கைகளில் ஒன்றாக செயற்படுத்த முன்வந் துள்ளன. அதற்காக மொழிபெயர்ப்பாளர் குழுவொன்று அர்ப்பணிப்போடு வெளிப்
மல்லிகை மா

பட்டுள்ள நல்ல சூழலில்தான் இந்நூல் வெளிவந்துள்ளதென்பது கவனிக்கத்தக்க தாகும். இனி 'ஜெயகாந்தன் வருவாரா?' என்பதே கேள்வி.
பின்னட்டைக் குறிப்பு எழுதியுள்ள திக்குவல்லை கமால் “இவர் இந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச ரீதியாக நிறைய விருதுகள் பெற்ற உன்னதமான படைப் பாளியாவார். இவருக்குக் கிடைத்த விருது களைவிட இவரது படைப்புக்களையே வாசகர்கள் உயர்வாகக் கருதுகின்றனர்” என்று அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.
- இச்சிறுகதைத் தொகுப்பு மட்டுமன்றி, முன்னர் வெளிவந்த நாவலும்கூட கொடகே வெளியீடுகள் என்பது பெருமைப் படத்தக்கதே.
திக்குவல்லைக் கமாலின் மூத்தமகனின் திருமண வரவேற்பு பிரபல எழுத்தாளர் திக்குவல்லை கமால் தம்பதிகளினது சிரேஷ்ட புத்திரன்
ஸில்பி கமால் அவர்களுக்கும், பாத்திமா ஹிஷாமா அவர்களுக்கும் சமீபத்தில் வெகு சிறப்பாகத் திருமணம்
இனிதே நிறைவேறியது. பாணந்துறையில் நடைபெற்ற திருமண
வரவேற்பு விழாவுக்கு ஏராளமான இலக்கிய நண்பர்களும், கல்விமான் களும் வந்திருந்திருந்து சிறப்பித்தனர். மல்லிகை எழுத்தாளர்கள் சார்பாக மணமக்களுக்கு இனிய திருமண
வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றது.
- ஆசிரியர்) ர்ச் 2012 * 12
'

Page 15
சரோஜாவிற்கு என்ன செய்வதென் இதைச் சொல்வது? எப்படிச் சொல்வது அவளைத் தானே நொந்துகொள்வார்கள்
'ஆண்டவா! மூத்தவள் வயதுக்கு வ அடுத்தவள் பவானியும் இப்பவோ அப் இப்படி ...?
சரோஜா தன் இடதுகை விரல்கள் கொண்டாள். இது அவளுக்கு எட்டாவ , பெண் குழந்தைகளின் வருகையால், அ கொண்டே போனது. இதாவது ஆண் 0 மாரியம்மனை மனதார நேந்து கொண்டா
சரோஜாவிற்கு ஒரு முப்பது முப்பத்தி அவளது தோற்றம் நாற்பத்தைந்தை எட்ட
தோட்டத்துப் பாடசாலையில் மூன்றா லாகியதும் பாபுவுடன் ஓடியவள்தானாம். கைக்குழந்தைகளுடன்தான் வந்திருக்கிறா
மலையில் கொழுந்தெடுக்க, மட்டம் வென்று எந்த வேலையைக் கொடுத்தா என்ன ...! பார்ப்பதற்கு அத்தனை தூரம் , உலர்ந்து போன கறுப்புத் தோல், கழுத் இரண்டு எலும்புகள் வெறும் வத்தலாய்... ஆனால், அந்தச் சிரிப்பு இருக்கிறதே, ஒ அத்தனை அழகாய் வாய் நிறைய சிரிக் மனம் வருவதில்லை.
எட்டாவது
த க .
ஆரம்பத்தில் சரோஜாவும் பாபுவும் ச வதும் பெண்ணாகப் பிறந்த பின் ஏனோ அவனுக்கு முடியாமலேயே போய்க்கொ6 ஆண் வாரிசு வேண்டுமென அவன் உறுதி கட்டுப்பாடு செய்யவிடாது தடுத்து விட்
மல்லிகை மார்ச்

று ஒன்றுமே புரியவில்லை. யாரிடம் ? எவர் இதைக் கேள்விப்பட்டாலும்
ந்து முழுதாய் ஒரு வருடம் ஆயிற்று. பவோ என்றிருக்கும் இந்த நேரத்திலா
ல் வயிற்றை மெதுவாக ஸ்பரித்துக் ஏ பிரசவம். வரிசையாய் அடுத்தடுத்து வளது பிரசவ எண்ணிக்கை நீடித்துக் குழந்தையாக பிறக்க வேண்டுமென்று Tள்.
யிரண்டு வயது மதிக்கலாம். ஆனாலும், டியிருந்தது.
ம் தடவையும் எட்டாம் வகுப்பில் பெயி மீண்டும் அந்தத் தோட்டத்திற்கு இரண்டு
ள்.
வெட்ட, ஸ்டோரின் குச்சி பொறுக்க லும் மறுக்காமல் இயங்கக்கூடியவள். அம்சமாய் இருக்க மாட்டாள். காய்ந்து தடியில் துருத்திப் புடைத்துக்கொண்டு செழிப்பே இல்லாத ஒரு பெண்ணாய்... ரு கோடி ரூபாய் கொடுத்து விடலாம். sகும்போது கங்காணிக்கே கூட திட்ட
( LF- கே.
பிரசவம்
- பிரமிளா பிரதீபன் ந்தோஷமாகத்தான் இருந்தார்கள். நாலா தெரியவில்லை, அவள் மீது பிரியப்பட ண்டிருந்தது. எப்படியாவது தனக்கு ஒரு பாய் நினைத்தான். அவளையும் குடும்பக்
டான்.
2012 ஓ 13

Page 16
தோட்டத்து டொக்டர் கண்டபடி திட்டியும் கூட ஏழாவது பிரசவமும் நல்ல படியாகத்தான் நடந்தது. இப்படி அடுத்ததாயும் ஒன்றென்றால் யார்தான் ஒப்புக்கொள்வார்கள்.
கடைகுட்டிக்கும் ஆறுமாதமாகப் போகிறது. இன்னுமே பாலை உறிஞ்சிக் கொண்டுதான் கிடக்கிறாள். கடவுளே! இது வெளியே தெரியவரும் போது எப் படி இந்தத் தோட்டத்தில் நடமாடு வேன். போன தடவையே மலையில் ஆயிரம் சாடை பேச்சும், குத்தல் பேச்சு மாய்....
நேரடியாகவே பாக்கியம் கேட்டு விட்டாள்.
"ஏண்டி... ஓம் புருஷனுக்கு அறி வில்ல... ஒனக்கெங்கடி போச்சி புத்தி....?''
கசிப்பு போதையில் வெறி பிடித்த வனாய் ஒவ்வொரு இரவிலும் தன்னை துன்புறுத்தும் பாவுவை காட்டிக் கொடுக்க மனமின்றி அவள் பேசா திருந்து விட்டாள்.
தி சரோஜாவின் ஒவ்வொரு இரவுமே ஒரு யுகமாய் கழிவதுபோல் அவளுக் குத் தோன்றும். சதா எதிர்காலம் பற்றிய பயமும் வேதனையும் அவளை விடாது கவ்விக்கொள்ளும்."
நிம்மதியாய் தூங்கிய நாள் அவளுக்கு நினைவிலேயே இருக்க வில்லை. ஏழு பிள்ளைகளின் தகப்பன் அதுவும் பெண்பிள்ளைகளின் தகப்பன் எப்படியெல்லாம் பொறுப்புடன் உழைக்க வேண்டும்.
" ட்வி
மல்லிகை மா

தினமும் அவன் வேலைக்குச் செல்வதென்னவோ உண்மைதான். ஆனாலும், உடல் களைப்பு தீரவென்று சாயந்திரம் ஆறுமணிக்குப் பின், கசிப்பு ரவி வீட்டில் கிடையாய் கிடப்பதுதான் பொறுக்கவில்லை.
நல்லாயிருக்கும் மனுஷன் அந்தக் கருமம் பிடிச்ச கசிப்பை குடிச்சி தொலைஞ்சதும் படுற பாடு இருக்கே... அம்மாடி! தான் யாருன்னே தெரிய மாட்டேன்னுதே.
கம் சாப்பாடு இருக்கோ இல்லையோ.. பிள்ளைகள் தூக்கமோ இல்லையோ... எதுவுமே அவன் கண்ணுக்குத் தென் படுவதில்லை. பால் கொடுத்தபடி கிடக்கும் அவளை இழுத்து தன்வச மாக்கி, அவன் நடந்து கொள்ளும் விதம்.... - L போல், விதம்.... " சொல்ல சகிக்காது. அவனைச் சொல்லி குற்றமேதும் இல்லை. கசிப்பு வெறி அவனைப் படுத்துகிற பாடு அது. ப எத்தனை தடவை இதை மூத்தவள் கண்டிருப்பாளோ என்னவோ? மனது
அடியாய் அடித்துக் கொள்ளும்.
நீளமாய் ஒரு காம்பிறா. அதில் இஸ்தோப்பு, குசினி என்று இரு பிரிவு களே தவிர, ஒரு மறைவிடமோ, அறையோ, கதவோ இல்லாத இந்த வீட்டில் ஒரு கணவனும் மனைவியும் எப்படி அந்தரங்கமாய் இருக்க முடியும்? இந்த பாட்டிலும் ஏழு பிள்ளைகள் என்றால், தான் எத்தனை பெரிய கெட்டிக்காரி!
வெறியுடன் வரும் அந்த மனிச னிடம் நியாயம் கதைக்கப் போனாலும், பிள்ளைகள் முதற்கொண்டு லயத் ர்ச் 2012 * 14

Page 17
திற்கே விஷயம் அம்பலமாகிப் போகும். இதை எண்ணி எண்ணியே அவள் பல தடவை மெளனித்து கிடந்திருக்கிறாள்.
பிள்ளைகள் சாப்பிட்டார்களா? படிக்கிறார்களா? அவளுக்கு உடல் வலிக்கிறதா? சின்னவளுக்கு பால்மா இருக்கிறதா? எதுவுமே அவனுக்குத் தெரிவதில்லை.
குடி ஒரு மனிதனை எப்படியெல் லாம் வழிநடத்துகிறது? அவனுக்கு உழைப்பையும், போதையையும் தவிர இதைப் பற்றியெல்லாம் யோசிக்க நொடிதானும் அவகாசமில்லை.
அந்தக் கசிப்பு ரவி முள்ளுக்கம்பி, பழைய பெட்ரி, தகரத்துண்டு, அழுகிப் போன வெங்காயம், ரப்பர் சீட் எல்லாம் போட்டுக் கசிப்பு காச்சுவதாய்த்தான் ஊருக்குள் கேள்வி.
அது நன்றாக கொதித்து ... வத்தி வத்தி ஒரு கிளாஸ் குடிச்சதுமே வெறி சுர்ருன்னு ஏறுறதா பேச்சு. இந்த மனு சனும் நாள் தவறாம குடிக்க போயிடு றாரே. ஒன்னு கெடக்க ஒன்னு ஆச் சுன்னா யாரு பதில் சொல்றது? இத்தன பிள்ளைகளையும் வச்சி யாரு காப்பாத் துறது?
சரோஜா முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தாள். இனியும் நடக்கப் போவது எதுமில்லை. பேசாமல் டொக்டர் ஐயாவிடம் உண்மை யெல் லாம் சொல்லி இத கலைச்சிட வேண்டி யதுதான். அப்படியே இந்த மனுசனுக் கும் தெரியாமல் ஒப்பரேசனையும் பண்ணி.. நினைக்கவே முடியாமல் நெஞ்சு தடுமாறியது.
மல்லிகை மார்

இந்தப் பிஞ்சு ஜீவன் என்ன பாவம் செய்தது? நாங்கள்தானே கவனமாக இருந்திருக்க வேண்டும். என்ன செய் வேன்? யாரிடம் சொல்வேன்? இந்தக் கருவை கலைப்பதா? வேண்டாமா? தொடரும் இந்தப் பிரசவங்களுக்கு முடிவுதான் ஏது?
இந்த மனுசனைத் திருத்துவதா? குழந்தைகளைப் பராமரிப்பதா? இயந்திர மாய்... மிக வேகமாய் சுழலும் இயந்திர மாய் இயங்கும் எனக்கு ஓய்வு கிடைக் காதா என்ன? அவளால் ஒரு முடிவிற்கு வரமுடியவில்லை.
ஏதோ நினைத்தவளாய் உடுத்தி யிருந்த அதே உடையுடன் தலையை மட்டும் வாரி முடித்துக்கொண்டு தோட் டத்து டொக்டர் பங்களாவிற்கு ஓடினாள்.
இந்த நேரத்தில் ஏன்? என்று புரி யாமல் பார்த்த டொக்டரின் காலில் விழுந்து கதறத் தொடங்கினாள்.
"ஐயா... நீங்கதானய்யா எனக்கு ஒதவி செய்யனும். என் வயித்துல வள ருறது ஆணோ பெண்ணோ தெரியல சாமி! பொண்ணா இருந்தா அந்த மனு சன் ஓயமாட்டது சாமி... இனிமேலும் என்னுடம்புல தெம்பில்லயே...
ஒங்களுக்கு புண்ணியமா போகும். அநாதையா கெடக்குற எந்த ஆம்புளப் புள்ளையையாவது மாத்தி தந்திடுங்க சாமி... என் மத்த ஏழு புள்ளைகளும் நல்லா இருக்க, ஒரு பொட்டப்புள்ள அனாதையா போனா காரியமுள்ள சாமி...'' அவள் வயிற்றில் அடித்துக் கொண்டு கதறத் தொடங்கினாள்.
2012 & 15

Page 18
சிற
விட
டை பே
Western Philosophy (1945:704) என் யியலாளரான இமானுவேல் காண்ட் (1724 - ஏற்படுத்திய புரட்சியைப் போல் தாமும் மெ கின்றார். விஞ்ஞான அறிவைத் தலைமைய வலுப்பெறச் செய்கின்றார். தனித்த காலம், யறை செய்யப்பெற்றது என்பனவற்றை வகு வடிப்படையைக் கொண்டு எழுப்பப் பெற்ற மான மெய்யியல் சிந்தனைகளில் இருந்து பட்டார். அந்தவகையில் அவரது சிந்தனை தாக்கம் அவருடைய அழகியல் மெய்யியலி மெய்யியல் கொள்கையின் உள்ளடக்கமான உடையது.
ல் - 2
காண்ட் இன் மெய்யியல் ஆய்வுகள் ? அறிவியல், அறவியல், அழகியல் என்பனவ நூல்களை எழுதியுள்ளார். "தூய அறிவு பற்றி என்ற நூல் அறிவாராய்ச்சியியலை அடிப்பன் மேலைத்தேய அறிவாராய்ச்சியலில் முக்கிய படுகின்றது. 'நான் எதை அறிய இயலும் துள்ளது. இரண்டாவது நூலான நடைமுக Practical Reason) என்ற நூல் அறவிட
மல்லிகை மா

காண்ட இன்
அழகில் மெனுவில்
- ஏ.எச்.எம்.நவாஷ்
நவீன மெய்யியலாளருள் காண்ட் தலை மந்தவர் என்பதைத் தன்னால் ஏற்க முடியா ட்டாலும், அவருடைய சிறப்பையும், முதன் மயையும் ஏற்க மறுப்பது அறிவீனம் - என்று ட்ரண்ட் ரஸல் (1872-1970) A History of ன்ற நூலில் குறிப்பிடுகின்றார். ஜேர்மன் மெய் 1804) கொப்பனிக்கஸ் விஞ்ஞானத்துறையில் ய்யியலில் புரட்சி செய்துள்ளதாகக் குறிப்பிடு ாகக் கொண்டே காண்ட் தனது மெய்யியலை தனித்த இடம், இயற்கை முற்றிலும் வரை தக்க எழுந்ததே நியூட்டனின் பௌதீகம். இவ் தே காண்ட் இன் மெய்யியலாகும். பாரம்பரிய காண்ட் புதிய வகையில் சிந்திக்கத் தலைப் விமர்சன மெய்யியலாக அமைகின்றது. அதன் லும் வெளிப்பட்டது. காண்ட் இன் அழகியல் எது மிக அகலமான நோக்கமும் செழுமையும்
முன்று வகைக்குள் அடங்குகின்றன. அவை காகும். இம்மூன்று துறைகளுக்கும் தனித்தனி பிய விமர்சனம் (Critiqe of Pure Reason) ஓடயாகவும், முதலாவது விமர்சன நூலாகவும், ப மாற்றத்தை ஏற்படுத்திய நூலாகவும் கருதப் ?' என்பதற்கு விடையாக இந்நூல் அமைந் றை அறிவு பற்றிய விமர்சனம்' (Critiqe of யல் பற்றி ஆராய்கின்றது. இது நான் என்ன
ர்ச் 2012 த 16

Page 19
செய்ய வேண்டும்? என்பதற்கு விடையாக அமைகின்றது.
மூன்றாவது நூலான 'தீர்ப்பு பற்றிய விமர்சனம்' (Critiqe of Judgment) என்பதே அழகியல் பற்றிப் பேசுகின்றது. 1970ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்நூல் 'நான் எதை எதிர்நோக்கலாம்?' என்பதற்கு விடையாக அமைந்துள்ளது? இந்நூலில் பகுப்பாய்வு முறையை கையாளுவதன் மூலம் அழகியல் பற்றி பிரக்ஞைப் பூர்வ மாக ஆய்வு செய்கின்றார்.
காண்ட் உடைய ஆய்வு முடிவுகள் தற் கால அழகியல் முறையை மிகவும் புதிய முறையில் மாற்றியமைத்து, பிற்பட்ட கால வரலாறு புதிய முறையில் செல்ல வழி வகுத்தது. புலக்காட்சியின் தோற்றத்தோடு நில்லாமல் அதனைக் கடந்து சென்று காட்சிகளை ஒருங்கிணைக்கும் விதிகளை ஆராய்கின்றார். புலச்சார்பற்ற இவ்விதி களால் அழகியல் பொதுமை நிலை பெறு கின்றது என்கிறார் காண்ட்.
அழகியல் பற்றி காண்ட கூறும்போது, 'அழகுக்கு நோக்கமில்லாத நோக்கம்' இருக்கின்றது என்கின்றார். அழகியலில் ஒரு பொதுமை இருக்கிறது. அவை புலச் சார்பற்றவை. உள்நோக்கு உடையது. அழகியல் தீர்மானங்கள் பற்றியும், கலை பற்றியும், தோற்ற உலகையும் தன்னிலே உள்ள பொருள்களையும் இணைத்தல் பற்றியும் காண்ட் விளக்குகின்றார். 'தீர்ப்பு பற்றிய விமர்சனம்' நூலில் பொது நிலை யில் உள்ளது, தனிநிலையில் உள்ளது ஆகியவற்றிடையே தோன்றுகின்ற முரண் பாடுகளை அழகியல் அனுபவத்தின் பாகு பாடு கொண்டு விளக்கம் காண முற்படுகின் றார்.
மல்லிகை மார்

கலைப்பொருள்களே இயைபோடு விளங்கும் முழுமைகளை விளக்கும் , சிறந்த எடுத்துக்காட்டுகள் என காண்ட் கருதுகிறார். கலைப்பொருள்களிடத்து வடி வத்திற்கும் பொருளிற்கும் இடையே உள் தாகும் இயைபு நன்கு புலப்படுகின்றது. கருத்தியல்பான கருத்தமைவின் எடுத்துக் காட்டாக விளங்காமலேயே கலைப் பொருள் தன்னிலையிலேயே விளங்கு கின்றது. அழகியலில் அமையும் தீர்ப்பை பகுத்து ஆராய்ந்தால் அறிவாற்றலும் கற் பனையும் அறிவின் அமைவிலே எந்த எந்தப் பங்குகள் கொள்கின்றன என்று அறியலாம். அழகியல் தீர்ப்பை அழகுத் தீர்ப்பு எனவும், விழுமியதன் (Sublime) தீர்ப்பு எனவும் பகுக்கின்றார். அழகை உணர்வது என்பது நமது அறிவாற்றல் களிடையே விளங்குகின்ற இயைபைப் பொறுத்ததாகும். அல்லது காண்ட் இன் சொற்களிலே கூறினால், 'கற்பனைகள் ஒன்றிற்கொன்று செயலுரிமையால் விரை விற்குட்பட்டு சட்டத்தோடு பொருந்தும் அறிவாற்றலோடு தொழிற்படுகின்றது.' கற்பனை என்பது நேராக அறிவாற்றலை யும் அதன் எண்ணங்களையும் குறித்த தாகும். ஆதலால், அழகு பற்றிய தீர்ப்பு ஒன்றிலே அறிவாற்றல் எழுப்புகின்ற இடர் பாடுகள் இங்கு இல்லை.
அழகு அனுபவத்தின் முக்கிய நிலை யாக விளங்குவது அழகின் நுகர்வே யாகும். அழகினைப் பகுத்துப் பார்க்கும் போது அவ்வழகு ஒழுங்கு, செயலுரிமை, இயல்பிலே அமைதல், அறிவிற்குப் புலனாதல் ஆகிய யாவும் பொருந்தியன் வாக விளங்கக் காணலாம். கலைப் பொருள் என்பது தனிச்சிறப்புடையதும், ச 2012 ஐ 17

Page 20
பொதுமையானதும் ஆகிய அழகுப் பொரு ளாகும். ஒரு பொருளை கலைநயம் தோன்ற அமைப்பது என்பது இப்பொருளா, அப்பொருளா என்ற கேள்விக்கு விடை யாக அமைவது அன்று எனினும் இப் பொருளிடத்து விளங்குகின்ற சிறப்பியல்பு களும், ஒத்த இயல்புகளும் நமது கருத்தை ஈர்ப்பனவாகும். புறப்பொருள் உண் மையை அழகு பற்றிய தீர்ப்புரை விரும்ப வில்லை. புறப்பொருளால் வற்புத்தப் பெறு தலினின்றும் விடுதலையடைந்துள்ளது.
அழகுணர்வு என்பது காண்ட் கருத் துப்படி பன்மையும், ஒருமையும், பொதுப் பண்பும், தனிநிலைப் பண்பும் சந்திக்கின்ற நிலையாகும். நோக்க அமைப்பும், இயந் திர அமைப்பும் சந்திக்கின்ற இடமாகவும் விளங்குகின்றது.
அனுபவத்தில் விளங்கும் எண்ணி றந்த கூறுகள் இடையே சில பொருந்துவன வாகவும், முக்கியமானவையாகவும் விளங்குகின்றன. சில முக்கியமற்றவை யாகத் தோன்றுகின்றன. பொருந்துவன , பொருந்தாதன என்று எவ்வாறு பாகுபடுத்து வது? இப்பாகுபாடு ஓர் அடிப்படையைக் கொண்டதாக விளங்க வேண்டும். உலகம் ஒற்றுமை உடையது என்று கொள்வதே அடிப்படைக் கொள்கையாக விளங்கத் தக்கது. இவ்வாறு கொள்வதானது கற் பனை அமைப்போடு உறவு கொள்வது. இவ்வமைப்பு அழகியலிலே நாம் காணும் தீர்ப்பைக் கொண்டதாகும். ஆகையால் அனுபவநிலையில் விளங்கும் தீர்ப்புக்கள் பொதுமை உடையனவாக காணப்படு கின்றன. கலையுலகிலே விளங்கும் தீர்ப்பு களும் பொதுமைப் பண்பு உடையனவாக காணப்படுகின்றன. இவற்றிடையே அடிப்
மல்லிகை மார்

படைக் கொள்கையில் எவ்வித வேறுபாடும்
இல்லை.
தோற்ற உலகையும் , பௌதீக அதீதத் தையும் இணைத்து விளக்கும் நூலாக 'தீர்ப்புக்கள் பற்றிய விமர்சனம்' என்ற நூல் அமைந்துள்ளது. அழகியல் அனுபவத்தி னூடாக இவ்விரு உலகிற்குமான இடை வெளிகளை காண்ட் தாண்ட முற்பட்டார். அழகு பற்றிய தீர்மானங்கள் எவ்வாறு சாத் தியமாகின்றன என்பது பற்றி விரிவாக
ஆராய்கின்றார்.
காண்ட் உலகையும் ஆய்வு முறை யில் அகநிலை சார்ந்த உய்த்தறி முறை யையே பயன்படுத்துகின்றார். அழகு பற்றிய தீர்மானங்களை அறிவின் பதார்த்தங்கள் ஊடாகவும் விளக்க முற்படுகின்றார். புலச் சார்பற்ற தொகுப்புரைகள் அழகியல் பற்றிய தீர்மானங்களில் எவ்வாறு ஏற்புடையதாகின் றது என்பதை அறிந்தபோது, மேலும் ஆழ மான ஆய்வு முறையில் கடந்த நிலை ஆய்வு முறைக்கூடாக விளங்கப்படுத்துகின் றார். காண்ட் இன் அழகியல் கொள்கை அகநிலை சார்ந்த புலச்சார்பற்ற அனுபவ மாகும்.
காண்ட் உழைப்பை அடிமைத் தன்மையின் துறை எனவும், கலையை சுதந்திரத்தின் துறை எனவும் குறிப்பிட்டார். இதே கருத்தினை ஆடம் ஸ்மித் வெளிப் படுத்தியுள்ளார். தன்னுடைய செயற்பாட்டு டனும் உற்பத்திகளுடனும் கொள்ளும் மனித அணுகலே உழைப்பைப் படைப்புத் தன்மையும், ஆன்மீகமும் கொண்டதாக ஆக்குகின்றது. ஆனால் முதலாளித்துவ உலகில் உழைப்பு யாந்திரீகமானதாகவும், மனிதத்துவ நசிவாகவும் மாறும்போது கலை மட்டுமே சுதந்திரத்தின் துறையாக சச் 2012 18

Page 21
வும், படைப்புத் தன்மையின் துறையாகவும் வெளிப்படுகின்றது. இதன் காரணமாகவே காண்ட் உழைப்பை அடிமைத்தன்மை யின் துறையாகவும், கலையை சுதந்திரத் தின் துறையாகவும் கண்டார். கலைப் பொருட்களும் விற்பனைச் சரக்காக மாற்றப் பட்டு அடிமைத்தனமாகலாம் என்பதை அவர் சிந்திக்கவில்லை. உண்மையான கலைப்படைப்பு ஒப்பீடற்றது. திரும்பச் செய்ய இயலாதது. சந்தைப் பொருளாக மாறுவதோடு கலை அந்த இயல்பை இழந்து விடுகின்றது. அதனால் தான் மார்க்ஸ் முதலாளித்துவத்தைக் கலையின் எதிரி என்று குறிப்பிட்டார். முதலாளித்துவ உற்பத்தி விதிகள் கலையையும், உழைப் பையும் பிரித்து விடுகின்றன. கூடவே இரண் டையும் அந்நியப்படுத்தப்பட்ட உழைப்பு என்ற பொருளாதார வடிவத்துக்குச் சுருக்குகின்ற போக்கையும் வெளிப்படுத்து கிறது.
'தீர்ப்பு பற்றிய விமர்சனம்' நூலில் காண்ட், அழகியல் தீர்ப்பு சார்பற்றது என்றும், மனிதனது அழகியல் உணர் வானது எவ்வித நடைமுறை ரீதியான பயன்தரும் முடிவுடனும் பொருந்தாது என் றும் வற்புறுத்துகின்றார். மனிதனின் அழ கியல் உணர்வை காண்ட் 'சார்பற்ற பொருத்தமுடைமை' என்ற அளவில் கண் டார். மேலும் அழகியல் உணர்வில் பயன் பாட்டுத் தன்மை எப்போது கலந்து விடுகி றதோ, அப்போதே அது அழியத் தொடங்கி விடுகிறது என்றும் அவர் கூறுகின்றார். காண்ட் இன் 'அழகியல் தீர்ப்பின் சார்பற்ற தன்மை' என்ற இக்கோட்பாட்டினை ஏற்ற ஹெகல் பின்வருமாறு குறிப்பிட்டார்.
'இயற்கைக் காட்சிகளைச் சித்தரிக்க
மல்லிகை மார்க்

முயலும் போது, அதில் வரையப் பெற்ற பழங்களைப் பயன்படுத்தவோ, தின்னவோ
முடியாது.'
இதனை மறுக்க முடியாது. ஆனால் இந்த விடயத்தில் அவர் கொண்ட நிலை தவறானது. ஏனென்றால் அழகியதற்கும் பயனுள்ளதற்கும் இடையிலான தொடர்பு இம்மாதிரியான ஒரு சாதாரண நிலையில் இருக்காது. சில கொச்சையான பயன்களை அடைவதை நேரடியான நோக்கமாகக் கொண்டதல்ல மனிதனின் அழகியல் உணர்வு. அழகியதும், பயனுடையதும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. மேலும் ஒரு பொருளின் அழகானது பெரும் பாலும் அதற்குரிய நடைமுறை முக்கியத்து வத்தின் அடிப்படையிலேயே இணைந்து வளருகின்றது என்ற கருத்திலிருந்து மார்க் சிய அழகியலானது தொடங்கிகின்றது.
காண்ட் அழகு மற்றும் கலையின் குறிப் பிட்ட பரப்பினை வரையறுக்கவும், கலைக் கும் அதனோடு தொடர்புடைய மற்ற பரப்பு களுக்கும் இடையில் ஒரு எல்லைக் கோடு வரையவும் முயன்றார். இதில்தான் அவ ருடைய சந்தேகத்துக்கிடமில்லாத சாதனை அடங்கியிருக்கின்றது. அதன் கலைக் கொள்கையில் காண்ட் அழகியலுக்கும், ஒழுக்கத்துக்கும் இடையிலான தொடர்பை மறுக்கவில்லை. ஓரளவுக்கு அவர் உருவ வியல்வாதிகளின் கோட்பாட்டு எல்லை களைத் தாண்டவும் முயன்றிருக்கின்றார். என்றாலும் காண்ட் இன் அழகியல் தீர்ப்பு பற்றிய கோட்பாட்டின் கருத்து முதல்வாத மற்றும் உருவவியல்வாத தன்மையை இவை மாற்றவில்லை. குறிப்பாக இந்த கோட்பாடுதான் பிற்காலத்தில் உருவவியல் வாத தத்துவார்த்த அடித்தளத்தினை வழங்கிற்று. = 2012 * 19

Page 22
மின்னலாய் ஒளி விழுந்து தெறிக்கின்றது என்னில்
பி
மனச்சித்திரத்தை வரைந்து பே
அதில் முத்தமிட்டது ஒரு குளிர்கால இரவு )
அத்தியது > பனியில் நனைகின்ற காற்றில் என்னை அமிழ்த்தியபடி சுவாசத்தினை அடைகாக்கின்றது புட் - கே
' உனது போர்வை
பி வு:
உனது உருவத்தின் , மிரட்சியை கண்டிராத காதலின் கடைசிப்புள்ளி கடந்து செல்லும் நிமிஷங்களின் அருகிலிருந்து கண்ணீர் சொட்டுகின்றது அதன்
'தட் -
உனது உலகத்தின் தொடரை நட்சத்திரத்தின் சொந்தங்களிடமும் நிலவின் பந்தங்களிடமும் விசாரித்து கலைத்தது யார் எனது மெளனம் அல்லது அது போன்ற ஒன்று
நீ ஆழ்கடலின் நீட்சியில் புலர்கின்றாய் கடலின் நீல நிறத்தில் - விறைக்கின்றாய்
விளைட் சன்ஸாப் 3 ல்,
மல்லிகை மா

ਸਣੇ 2 ਨੂੰ 3 ਘ.
யக் கனவு
14 ஆம் தேதி
ਨਾ 5 .க்* !
1 ட்ட இக
- எல்.வஸீம் அக்ரம்
ஒரு புதைபொருளாளனாய் என்னை திமிட்டுகின்றாய்
தம் காட்சிகள் தெரியாத வானத்தில் அல்லது சருகுகள் நிரம்பிய 25 வனத்தில் உனக்கும் எனக்குமான தேடல் பயணிக்கின்றது .
பளிங்குகள் மாணிக்கங்களால் உன்னை உருவகிக்கின்றாய் எனக்கோ உவமைகள் கடனாகின்றன.
யௌவனத்தின் சுந்தரத்தை உன்னில் கடக்காமல் கலைகின்றது காலத்தின் காதல்
217
அதற்குள் எல்லாம் விடுகதையாக விடியலின் இசையில் கனவில் மீள்வேன் நான். எச் 2012 20

Page 23
கட்: , ,
நூற் சுவை நூல் : மீண்டு ஆசிரியர் : வதிரி சி.ரவீந்திரன் வெளியீடு : எஸ்.கொடகே சகே விலை : ரூபா 250/-
தி 1 :
நம் மண்ணில் 1960களுக்குப் பின் எழு வரலாற்றில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்து தப்பட்டு எழுதும் ஒரு காலகட்டம் உதயமாகி ஓங்கி ஒலிக்கப்பட்டது. மக்கள் இலக்கியம் படைக்கும் ஒரு புதிய யுகம் உதயமானது. பழைய மரபுக்கு எதிரான போராட்டம் முன் வைக்கப்பட்டு அதில் வெற்றி கண்ட முற் போக்காளர்கள் நவீன இலக்கியப் பரப்பில் தடம் பதித்தனர். அன்று தொடக்கம் இன்று வரை இலக்கியம் மக்களுக்காகவே என்ற நிலையில் நின்று பலர் இலக்கியம் படைத்து வருகின்றார்கள். 13 !
மரபுக் கவிதைகளின் ஆதிக்கம் குறைந்து, இலக்கிய உலகில் புதுக் கவிதைகளின் வரவு மேலோங்கத் தொடங் கியதும் பல கவிஞர்கள் தோன்றி புதுக் கவிதை உலகை ஆட்சி செய்யத் தொடங் கினார்கள். இலங்கையைப் பொறுத்தள வில் ஏராளமான எழுத்தாளர்கள் கவிதை எழுத ஆரம்பித்தனர். புதுக்கவிதைகள் தரமா? தரமில்லையா? என்ற வாதிப் பிரதி வாதங்களும் விமர்சனங்களும் முன்வைக் கப்பட்ட போதிலும், புதுக்கவிதை என்ற
மல்லிகை மா

நுகர்வோம் வந்த நாட்கள்
பட்டம்
காதரர்கள்
- தம்பு சிவா
ஒந்த தமிழ் இலக்கியங்கள், நவீன இலக்கிய தியுள்ளன. மக்கள் என்ற பதம் முன்னிறுத் யது. இலக்கியம் மக்களுக்காக என்ற குரல்
' வதிரி.சி.ரவீந்திரன்
மீண்டு வந்த நாட்கள்
ச் 2012 21

Page 24
வடிவம் கவிதை வரலாற்றில் முக்கிய புள்ளியாகவே அமைந்திருப்பதை இலக் கிய ஆய்வாளர்கள் முன் நிறுத்தியுள்ளனர்.
ஈழத்துக் கவிதை புதுக்கவிதை மய மான காலகட்டத்தில் தன் கவிதை முகத் தைக் காட்டியவர் வதிரி சி.ரவீந்திரன். ஈழத்துக் கவிதைகளின் பாடுபொருள் தீவிர சமூக விமர்சனமாக இருந்தபோது - அதன் அணியில் தன்னையும் இணைத்துக் கொண்டு கவிதை எழுதத் தொடங்கிய நூலாசிரியர், மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் தமது கவிதையாக்கங்களை முன்வைத்தார். நீண்டகால இடைவெளி யின் பின் அவரது முதலாவது கவிதைத் தொகுதி நூலாக மீண்டு வந்த நாட்கள் என்னும் பெயரில் வெளிவந்துள்ளது. கொடகே நிறுவனத்தினர் அதைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளனர்.
வதிரி சி.ரவீந்திரனிடத்தில் இயல்பா கவே ஒரு கவிதை உள்ளம் இருக்கின்றது. அவருடன் அமர்ந்து நேரில் பேசிக்கொண் டிருக்கும் சமயங்களிலும் இதன் வெளிப் பாட்டை அவதானித்து அறிந்து கொள்ள லாம். பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவதும், பொய்மையையும் போலித்தனத்தையும் கண்டு எள்ளுவதும், சமூகக் கொடுமை களைக் கண்டு சாடுவதும், ஏழ்மை கண்டு இரங்குவதும், கடந்துபோன வசந்தத்தை எண்ணி ஏங்குவதும் இவர் இதயத்தில் இயல்புகளாக இருந்து வருவதனை அவ ரது கவிதைகள் உணர்த்துகின்றன. அவ ரது கவிதைகளின் தனிச்சிறப்பு, சாதாரண பொதுமக்களும் விளங்கிக் கொள்ளத் தகுந் ததான எளிமையும், சற்று நுனிந்து நோக்க வல்லவர்களுக்கு மேலும் அழகான பொரு
மல்லிகை மார்.

ளைத் தரவல்லவைகளாக இருப்பதுமே எனலாம்' என்று முதுபெரும் முற்போக்கு எழுத்தாளர் தெணியான் நூலின் அணிந் துரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.
எனது எழுத்துத்துறையின் ஆர்வத் திற்கு வாசிப்பே முக்கிய காரணம் என்று கூறும் நூலாசிரியர் தமது எழுத்துப் பற்றிக் குறிப்பிடும்போது... 'வாசகனுக்குப் புரியும் படியாக எழுத்துக்கள் படைக்கப்பட வேண் டும். அந்தவகையில் எனது கவிதைகளை எல்லோரும் புரியும்படி வடித்துள்ளேன். எனது கவிதைகள் நேரடியாகவே விடயத் தைக் கூறுபவை' என்று சொல்லியுள்ளார். பாடுபட்டு உழைத்ததனால் பச்சை ரத்தம் செத்ததின்றி கடி : பலனென்ன கண்டோமென்று நாடுவிட்டு அகதிகளாய்
- - நம்மிதயத் தொழிலாளர் நாவசைக்க ஈரமின்றி , நல்லிதயம் குமுறுகிறார்.
என்ற கவிதை வரிகள் அந்த ரயில் போகிறது என்ற கவிதையில் இடம்பிடித் துள்ளன. ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தத்தி னால் நாடுகடத்தப் பெற்ற மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சோகம் நிறைந்த கருவூலமாக இக்கவிதை அமைந்துள்ளது. துயரத்துக்குள்ளான மலையக மக்களின் வரலாற்றுத் தடமாக இக்கவிதை எழுகை கொண்டுள்ளது. நூலாசிரியரின் எண்ணக் குமுறல் இங்கு கவிதை வடிவம் பெறுகிறது. மு.சிவலிங்கத் தின் ஒப்பாரிக் கோச்சி சிறுகதையும் தோட்ட மக்களின் அவலப் புலம்பலையே எடுத்துக் கூறியுள்ளது. சாவு வந்ததோ என்ற கவிதை யுத்த காலக் கொடுமை
ச் 2012 ஐ 22

Page 25
களை இயம்பி நிற்கின்றது. ஆழ் மனத்தைச் சுண்டி நிற்கின்றது. வாழ்ந்தவர்கள் மடிந்தார்கள்" அகதிகள் ஆனார்கள் உடுத்த புடவையுடன் தான் அடுத்த ஊர்கள் தஞ்சமானார்கள். கண்ணீர் சொரிகின்றார்கள்
வந்த இடங்களிலும் உயிர்வாழ வழியில்லை கொலை அரக்கனின் கோரக்கரங்கள் ஷெல்லாக விழுகிறது என்று அமைகிறது அக்கவிதை.
சமூகம் நோக்கிய பார்வை ஆசிரி யரின் அநேகமான கவிதைகளில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. மனிதம் சார்ந்த அவரு டைய மனிதநேயம் விண்டுகட்டி நிற்பதை அவதானிக்க முடிகிறது.
உள்ளக் குமுறல் என்னும் கவிதை யில் சில வரிகள்...
நாயாக அலைந்தயெனை தாயாக்கி வைத்துவிட்டு வெள்ளை உடையணிந்து
வீதியில் செல்கிறார்கள் அள்ளிப் பருகியோர்கள் அடக்க வருவாரோ! என்று பாதிக்கப்பட்ட மாது பரிதாபமாய் கேட்கிறாள். மீண்டு வந்த நாட்கள் என்னும் கவிதையில் எமது. மக்களின் மனவடுக்களை எடுத்துக்காட்டி சிந்திக்க வைக்கிறார்.
அகதிமுகாம் வாழ்வை அனுதாபமாகப் பார்த்தோர் ஏதிலிகளான எமக்கு ஏலுமான உதவிகள் புரிந்தனர் மீண்டு வந்த நாங்கள்
மல்லிகை மார்க்

சொந்த இடம் மீண்டபோது எங்கள் இருப்புகளையும் இழந்து... இழப்பதிற்கெதுவுமில்லையென மீண்டு வந்த நாட்களின் வடுக்களோடு! என்று அமைகிறது அந்தக் கவிதை.
மேதினம் பற்றியும் நூலாசிரியர் கவிதை தந்துள்ளார்.
அடிமையின் விலங்கு அறுந்தது இன்று அணியொடு கொடியும் பறந்ததின்று விடிவையே நோக்கி நடத்திடவே எங்கும் வீசிடும் காற்றே மேதினம்! என்கிறார்.
அனு என்ற கவிதைச் சஞ்சிகை முயற்சியிலும் வதிரி சி.ரவீந்திரனின் ஈடு பாடு இருந்தது. இவர் கவிதை எழுத ஆரம் பிக்கப்பட்ட காலகட்டமிது. இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் புதியவர்கள் சிறு கவிதைகளையே நிறைய எழுதினார் கள். இதைப் பொறிகள் தொகுப்பு ஊடாகச் சான்று படுத்தலாம். வதிரியின் ஆரம்ப காலக் கவிதைகளும் அவ்வாறே இருந் ததை மிக நெருக்கமான தொடர்பாக இருந்த அந்த ஐந்து ஆண்டுகளில் வெளி யான அவரது கதைகள் சமுதாய அவலங் களைப் பிட்டுக் காட்டுவதாகவே இருந்தன என்று அன்பு ஜவர்ஷா குறிப்பிட்டுள்ளார்.
போர்க்கால அழிவுகளால் ஏற்பட்ட பல சோகங்களுக்கு மத்தியிலும் அழியாத யாழ்ப்பாணத்து மண்ணின் இயல்பு நிலை யினை சாதிப் பூசல்கள் வாந்தி பேதியாய்
வந்துகொண்டுதான் இருக்கின்றன எனக் குறிப்பிடுகின்றார். யாழ்ப்பாணத்தாரின் - இந்த மனப்பாங்கு புலம் பெயர்ந்த
நாடுகளிலும் புரையோடிப் போய் இருப் ஈ 2012 23
மரப1

Page 26
பதை அடங்காத் திமிர் என்னும் கவிதை
மூலம் சுட்டிக் காட்டுகின்றார். எங்கள் நாட்டில்
அதே - தொழிலுக்கு ஒரு சாதி, சாதிக்கொரு தொழில் இழிவு சொல்லி அழைத்திடுவோம் இங்கு எந்தத் தொழில் செய்தாலும் அந்தச் சாதியிலா நாம் பிறந்தோம்?
மல்லிகை ஆண்டு
சேருபவர்கள் : ஆண்டுச் சந் தனிப்பிரதி ஆண்டு மா
ஓராண்டுச் சந்தாவுக்குக் குறைந்த
வங்கித் தொ Dominic Jeeva 072010004231, |
Colom காசோலை அனுப்புபவர்கள் Dummit அனுப்பு வோர் முக்கியமாகக் கவனிக் எழுதுவோர் இந்தப் பெயருக்கு முன்னால் எழுதக் கூடாது. காகக்கட்டளை அனுப்பு T0, எனக் குறிப்பிட்டு அனுப்பவும். தனித்தனி இதழ்களைப் பெற விரும்பு யனுப்பியம் பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள 2011/4, ஸ்ரீ கதிரேசன் வீதி, கொடி
மல்லிகை மார்

உயர்குலத்துப் பெருமையுடன் உழைத்துப் பொருள் சேர்த்து 18ம் உயர்ந்த குடிகோத்திரத்து உத்தமராய் நிமிர்ந்து நிற்போம்!
சாதி வேற்றுமை காட்டுகிறவர்களுக் குச் சாட்டையடி கொடுத்துள்ளார். மீண்டு வந்த நாட்கள் கவிதைத் தொகுதி சிந்திக்க வைக்கும் கவிதைகளைத் தந்து நிற்கிறது.
தத்தல்
ச் சந்தாதாரராகச் கவனத்திற்கு.... -தா 600/- தி 40/- மர் 200/-
து ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
தம்
க
டர்புகளுக்கு: Hatton National Bank. Sea Street, b0.11.
9 Jeeva எனக் குறிப்பிடவும், காசோலை க வேண்டியது, IDominic Jeeva என லா பின்னாலோ வேறெதுவும் கண்டிப்பாக பவர்கள் DominicJev1. Wolai011,
வோர் 5 பத்து ரூபா த.ாற் தலைகளை
* :
வேண்டிய முகவரி : அம்பு 13. தொலைபேசி : 2320721
ச் 2012 2 24

Page 27
கறது
நீங்கள் மல்லிகை 2012 - பெப்ர செல்லத்துரை அவர்களைப் பற்றி எழுதி கடைசியில் நான் யாழ்ப்பாணத்தில் சட்டத் துரை அவர்கள் யாழ்ப்பாண நிருபராக நீ நினைவுக்கு வருகின்றது.
ஒரு கொலை, கொள்ளை வழக்கில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வி. மூன்றாம் எதிரிகளுக்கு சட்டத்தரணி கே.பி யாகவிருந்து இளைப்பாறியவர்) ஆஜரான நாதனும் ஐந்தாம் எதிரிக்கு நானும் ஆன் அக்காலப்பகுதியில் வி.என்.நவரத்தினம்
அவ்வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி . யுடன் கூடிய விசாரணையாக அமைந்தது
சாட்சியங்கள் எல்லாம் நெறிப்படுத்தப் களின் தொகுப்புரை ஆரம்பமானது. என காரணமாக நான் தொகுப்புரை நிகழ்த், ரத்தினம் அவர்களிடம் கேட்டேன். "பயப்ப போதும். நான் பக்கத்தில் இருப்பேன். தட்டிக் கொடுத்து ஊக்குவிக்கும் ஒருவர்"
வி.என். நீண்ட தொகுப்புரையொன் ை எழும்பியவுடன் நீதிபதி அப்துல் காதர் "ர சபையினருக்கு கேட்காது. எனவே முன்ன நின்று பேசுங்கள்” என்று கூறினார். நான் கிறேன்" என்று சொல்லி வி.என். அவர்கள் பத்து நிமிடமளவில் எனது தொகுப்புரைபை வேளையில் நீதிபதி அப்துல் காதர் அவர்க ராக இருந்து இளைப்பாறினார்) வி.என். கள்.
மல்லிகை மார்

வடக்கு தேர்
பங்கள்
- கேது
வரி இதழில் வீரகேசரி யாழ் - நிருபர் யிெருப்பதை வாசித்தபோது எழுபதுகளின் தரணியாக கடமையாற்றியபோது செல்லத் திமன்ற செய்திகளை வெளியிட்டு வந்தது
- - - - - -
ல் ஐந்து எதிரிகள். முதலாம் எதிரிக்காக என்.நவரத்தினம் ஆஜரானார். இரண்டாம், பி.வரதராசா (பின்னர் மேல் நீதிமன்ற நீதிபதி சார். நான்காம் எதிரிக்கு சட்டத்தரணி நேமி ஓரானோம். நானும் வரதராசா அவர்களும் அவர்களின் ஜூனியர்களாக இருந்தோம்.
அப்துல் காதர் முன்னிலையில் ஜூரி சபை
2 பின் பபட்டு முடிந்தபின் எதிரி தரப்பு சட்டத்தரணி ரக்கோ அது முதல் அனுபவம். பயத்தின் தாமல் விட்டால் என்ன என வி.என்.நவ ட வேண்டாம். ஒரு பத்து நிமிடம் பேசினால் புப்துல் காதர் கனிஷ்ட சட்டத்தரணிகளை
என எனக்கு தெம்பைத் தந்தார். ம்
ற நிகழ்த்திவிட்டு அமர்ந்தார். அடுத்து நான் நீங்கள் மெல்லிய குரலில் பேசினால் ஜூரி வக்கு வந்து அரச சட்டத்தரணிக்கு அருகில் ''இல்லை உரத்த குரலில் பேச முயற்சிக் நக்கு அருகில் நின்றபடியே உரத்த குரலில் ப நிகழ்த்திவிட்டு அமர்ந்தேன். நான் அமரும் ளும் (அவர் பின்னர் உச்ச நீதிமன்ற நீதியரச அவர்களும் பாராட்டி உற்சாகப்படுத்தினார்
சச் 2012 225

Page 28
அன்று நீதிமன்ற அமர்வுகள் முடி வடைந்தபின் வி.என். நிருபர் செல்லத் துரையை அழைத்து "விஸ்வநாதனின் தொகுப்புரை இடம்பெற்றதை வீரகேசரி யில் நாளைக்குப் போடுங்கள். மேல் நீதி மன்றத்தில் அவர் ஆஜரான முதல் வழக்கு இது" எனக் கூறினார்.
நிருபர் செல்லத்துரை அவர்களும் அடுத்தநாள் வீரகேசரியில் "விஸ்வநாத னின் கன்னித் தொகுப்புரை '' என்று தலைப்பிட்டு பத்திரிகையின் இரண்டாம் பக்கத்தில் அனைவரினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் துலாம்பரமாக பிரசுரித் திருந்தார்.
நீங்கள் உங்களுடைய கட்டுரையில் எம்மில் பலரை வெகுசனங்களுக்கு மத்தி யில் அறிமுகப்படுத்தி வைத்தது இவரது பேனாதான். அது இன்றும் நினைத்து நினைத்துப் பெருமைப்படத்தக்கதொன் றாகும் என குறிப்பிட்டுள்ளீர்கள். நாட்டு முன்பின் தெரியாத என்னை நிருபர் செல்லத்துரை முப்பத்தைந்து ஆண்டு களுக்கு முன் கௌரவித்து முதன்மைப் படுத்தியது அவரின் அப்பழுக்கற்ற தூய உள்ளத்தின் வெளிப்பாடாகும்.
இவ்வாறு எத்தனை எத்தனை பேர் குறிப்பாக அரசியல்வாதிகள் இவரால் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி வைக் கப்பட்டிருப்பார்கள். பெரியவர்கள் - சிறிய வர்கள், பணம் படைத்தவர்கள் - ஏழைகள், படித்தவர்கள் - படிக்காதவர்கள் என வேறு படுத்திப் பார்க்காது இளையதலைமுறை யினரில் தகுதியானவர்களை இனம் கண்டு கைகொடுத்து தூக்கி விடும் இவர்
மல்லிகை மார்

போன்றோர் பத்திரிகையாளர்களில் போற் றத் தகுந்தவர். பத்திரிகையாளர் நடுநிலை தவறினால் ஆற்றலுள்ள பலர் அடை யாளம் தெரியாது போய்விடுவர். சப்பிகளுக் கும் நெல்லுக்கும் வித்தியாசம் தெரியாத நிலை தோற்றுவிக்கப்படும். கூவி விற்றால் குப்பையும் விலை போகும் என்ற நிலை வராமல் தான் வாழ்ந்த காலத்தில் பத்திரிகை தர்மத்தை நடு நிலையாகக் கடைப்பிடித்து இலட்சிய வேட்கையுடன் தான் சார்ந்த சமூகத்தை உயர்த்திவிட பாடுபட்ட வீரகேசரி யாழ் - நிருபர் செல்லத் துரை காலத்தால் அழியாதவர். "இந்த மண்ணுக்கு உழைத்தவர்களை நாம் அடிக்கடி நினைவுகூர வேண்டும்.''
ஜே. விஸ்வநாதன் Commissioner of High Court,
Jaffna. 47-வது மல்லிகை ஆண்டு மலர் சம்பந்தமாகத்தான் இன்றைய இலக்கியப் பேச்சு ஆரம்பிக்கின்றது, நண்பர் களிடையே.
மிக நிதானமாகவும், தன்னடக்கமாக வும் இருந்து கொண்டு, மிகச் சிறந்ததொரு இலக்கிய மலரை வெளியிட்டு வைத்ததற் காக முதலில் உங்களை வாழ்த்த வேண் டும் போல மனதிற்குப் படுகின்றது.
மலரில் எழுத்தியவர்கள் அத்தனை பேரும் கவனமெடுத்துக் கொண்டு, தத் தமது ஆக்கங்களை மல்லிகைக்குப் படைத்துத் தந்துள்ளனர். அதற்காக ஆண்டு மலரில் எழுதிய அத்தனை பேர் ச் 2012 26

Page 29
களுக்கும் இலக்கியக்காரர்களின் சார்பாக எமது பாராட்டுக்களைச் சொல்லியாக வேண்டும்.
மற்றும் ஆடம்பர எடுப்புச் சாய்ப்புகள் இல்லாமல் வெகு துல்லியமாக இலக்கியக் காத்திரம் மிளிர, மலரை ஆக்கித் தந்ததற் காக மல்லிகை மலருக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைத்த சகலரையும் மனந்திறந்து பாராட்டுகின்றேன்.
எனக்கொரு மன ஆசை உண்டு. அது என்னவென்றால், இதுவரையும் வெளிவந்துள்ள அத்தனை மல்லிகை மலர்களையும் ஒருங்கு சேரத் தொகுத்து ஆண்டு மலர்களின் கண்காட்சி ஒன்றைக் கொழும்பில் நடத்தினால் என்ன? என்பதே அந்த நீண்டநாள் மன ஆசையாகும்.
- எதற்கும் ஐம்பதாவது ஆண்டு மலரை வெளியிட்டு வைக்க, இப்போதிருந்தே சகல முயற்சிகளிலும் ஈடுபட்டு உழைத்து வருவதே இப்போதைக்கு நமக்கான இலக்கியக் கடமை எனக் கருதுகின்றேன். வெள்ளவத்தை, எம் . கமலாஷினி
நீங்கள் இதுவரையும் வெளியிட்டு வந் துள்ள ஆண்டு மலர்களில் இந்தாண்டு வெளிவந்து எங்குமே பரபரப்பாக விமர்சிக் கப்பட்ட 47வது ஆண்டு மலர் ஆகச் சிறந்த மலர் என்றே நான் கருதுகின்றேன்.
ஆரம்ப காலங்களில் நானும் யாழ்ப் பாணத்தில்தான் வாழ்ந்து கொண்டிருந் தேன். அந்தக் காலத்திலேயே உங்களை யும் தெரியும். மல்லிகையையும் இடைக் கிடையே படித்து வந்துள்ளேன்.
- -: கப்பு
மல்லிகை மார்

"அப்பொழுது போதிய வருமானம் இல்லை. ஆமான தொழில் வாய்ப்பு இல்லை. எனவே இடைக்கிடையே கண் களில் தட்டுப்படும், அல்லது கைக்குக் கிடைக்கும் உதிரி இதழ்களைத்தான் கருத்தூன்றிப் படித்து வருவது வழக்கம்.
பின்னர் புலப்பெயர்வுடன் வருமான மும் வரப்போகக் கொழும்பு பிரஜையாகி விட்டேன்.
உங்களுக்கு மெய்யாகத் தெரியுமோ தெரியாதோ எனக்குத் தெரியாது. உங்களு டன் நேரில் அறிமுகமாகாமலே நிறைய நிறைய என்னைப் போன்றவர்கள் மனதிற் குள் உங்களது செயற்பாடுகளைக் கண்டு, நிதானமாக உங்களை எடை போட்டு வரு கின்றனர் என்பதையும் நீங்கள் அவசியம் புரிந்து கொள்ளத்தான் வேண்டும்.
இதனது பலாபலன்கள் உடனடியாக இலக்கிய உலகிற்குத் தெரிய வராமல் கூடப் போகலாம். நாளை என்றொரு நாள் கட்டாயம் ஈழத்து இலக்கிய உலகில் வரத்தான் செய்யும். அந்தக் காலகட்டங் களில் எம்மைப் போன்றவர்களின் கணிப்பு நிச்சயம் எழுத்தில் வரத்தான் செய்யும்.
நேரில் தெரிந்த, அறிந்தவர்களைவிட, உங்களை நேரடியாகவே அறிமுகப்படுத் தப்படாமல் ஒதுங்கி வாழும் எம்மைப் போன்றவர்களின் ஆத்ம பலம் மல்லிகை யின் அடிச்சுவட்டில் உங்களைத் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும் என் பதை நீங்கள் நிச்சயம் நம்பலாம்.
வெள்ளவத்தை, ச.சர்வேஸ்வரன்
அ ஆ ----- --- க.
ச் 2012 ஓ 27

Page 30
*
கொடகே தேசி
விருது
* *.
இலங்கையின் முன்னணி நூ விருதுகளைப் பெற்றவர்களுமான கெ தடவையாக தமிழ் இலக்கியப் ப பரிசில்களும் வழங்கி கெளரவிக்க மு
2008ஆம் ஆண்டு வரை சிங்கள மாத்திரமே கொடகே இலக்கிய விரு. - 2011 வருடங்களின் தமிழ் எழு சாஹித்திய விருதும், பணப் பரிசில்க தமிழ் நாவல், சிறுகதை , கவிதை ஆ சிறந்த படைப்புகளுக்கு, நாவலுக்கு 5 கவிதைப் படைப்புகளுக்கு தலா 25 தோடு தமிழ் இலக்கியத்திற்கு அரு ஒருவருக்கு கொடகே வாழ்நாள் சாதம் முதல்முதலாக வெளியிட்ட சிறந்த வழங்கப்படும்.
இதில் பங்கேற்க விரும்பும் படை முதல் டிசம்பர் இறுதி வரை இலங்க பெற்ற, முதல் பதிப்புகளில் மூன்று கொடகே புத்தகசாலை, இலக்கம் 6 10 என்ற முகவரிக்கு 2012 ஏப்ரல் கிடைக்கும் வகையில் அனுப்பி எ பெயர்ப்பு படைப்புகள், சிறுவர், பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட
மல்லிகை ம

ய சாஹித்திய - 2011
5 வெளியீட்டாளர்களும் அரசின் பாடகே புத்தகசாலையினர் நான்காம் மடப்புகளுக்கு விருதுகளும் பணப்
ன்வந்துள்ளனர்.
22; மொழி இலக்கியப் படைப்புகளுக்கு து வழங்கப்பட்டு வந்தது. 2009, 2010, த்தாளர்களுக்கு கொடகே தேசிய களும் வழங்கப்பட்டது. இம்முறையும் கிய துறைகளில் தெரிவு செய்யப்படும் 0 ஆயிரம் ரூபாவும், சிறுகதை மற்றும் ஆயிரம் ரூபாவும், விருதும் வழங்குவ ம்பணியாற்றிய சிரேஷ்ட எழுத்தாளர் னையாளர் விருதும், 2011 வருடத்தில் படைப்புக்கும் விருதும் சான்றிதழும்
பபாளிகள் 2011ஆம் ஆண்டு ஜனவரி கையில் வெளியிட்ட ISBN இலக்கம் பிரதிகளை நேரயாகவோ அல்லது 5, பீ.டி.எஸ்.குலரத்ன வீதி, கொழும்பு மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் வக்க வேண்டும். தொகுப்பு, மொழி இளைஞர் இலக்கியப் படைப்புகள் மாட்டாது.
எச் 2012 * 28

Page 31
வீட்டிலிருந்து அவசரமாய் வெளிே நிறுத்தி, திருகோணமலை பஸ் நிலைய இறங்கி நின்று பார்த்தபோது கண்டிக்கு படுவதற்குரிய எந்தவொரு அறிகுறியுமி
முச்சக்கரவண்டிக்கு காசைத் தந்து நின்றிருந்தான். இறங்கிய இடத்திலிருந் அதிக ஆட்கள் இல்லாதிருப்பது தெளி நாயொன்று தலையைச் சிலுப்பிச் சோப் லிருந்த தேனீர்க்கடையின் வானொலி, "நீ என்று சத்தமாய்ப் பாடிக்கொண்டிருந்தது
“ஒருவேளை முதல் பஸ் போய் அடுத்த பஸ்ஸோ? இல்லையே? முதல் பேசியில் நேரத்தைப் பார்த்துக் கொண் அப்படியும் சந்தேகம் தீராமல் பொதுச் கோபுரத்தின் உச்சியைப் பார்த்தான். நேரமொன்றைச் சரியாகக் காட்டிக் கெ
வேடிக்கை
பஸ்ஸினுள்ளே அவன் ஏறிப்பார்த்து இரண்டொருவர் மட்டும் அமர்ந்திருக்க ஏ. வெறுமையாகக் கிடப்பது தெரிந்தது. யன் தேர்ந்தெடுத்து அவன் அமர்ந்து கொள்ள நிறச் சூரியன் பஸ் கண்ணாடிகளில் த
ஆட்கள் போதாது என்பதால் எப்பு போவதில்லை என்பதைப் புரிந்ததும், " சாப்பிட்டு விட்டே வந்திருக்கலாம். பா அதிகாலையில் எழுந்து அழுகின்ற மூ6 கொண்டே பரபரக்கச் சமைத்துத் தந்திரு விட்டது என்று சாப்பிடாமல் வைத்துவி
செல்போன் சிணுங்கியது. அவள்த
மல்லிகை ம

பறி, வீதியில் வந்த முச்சக்கரவண்டியை த்திற்கு பதறியடித்து ஓடிவந்த இம்தியாஸ் ச் செல்லும் முதலாவது பஸ்வண்டி புறப் ன்றி அமைதியாக நின்றிருந்தது. விட்டு பஸ்ஸைப் பார்த்து யோசனையுடன் து நின்று பார்க்கும்போதே பஸ்ஸினுள் வாகத் தெரிந்தது. துாங்கியெழுந்த தெரு பெல் முறித்தபடி எழுந்து செல்ல அருகி போகும் வழி தேடி வருவேனே பின்னாலே"
இப்போது நிற்பது கண்டிக்குப் போகும் 5 பஸ் 6.30க்குத்தானே?' கைத்தொலை டான். இன்னும் 10 நிமிடங்கள் இருந்தன. சந்தைக்கு எதிரேயிருந்த மணிக்கூட்டுக் அது வழக்கம் போல வேறொரு நாட்டின் Tண்டிருந்தது.
மனிதர்கள்!
- முகமட் ராபி
த போது அங்கொன்றும் இங்கொன்றுமாக னைய இருக்கைகள் எல்லாம் ஆட்களின்றி எனலோரமாக ஓர் வசதியான இருக்கையைத்
சற்றுமுன்தான் உதித்திருந்த செம்மஞ்சள் பண்டு துண்டாய் உடைந்து தெரிந்தான். படியும் இப்போதைக்கு பஸ்ஸை எடுக்கப் சே! இப்படித் தெரிந்திருந்தால் அழகாய்ச் வம் மதிவதனி” என்று கவலை வந்தது. ன்று மாதக் கைக்குழந்தையுடன் போராடிக் த்தாள். அந்தச் சாப்பாட்டைக் கூட நேரமாகி
ட்டு வந்ததை நொந்து கொண்டான். சான் எடுத்தாள். ர்ச் 2012 229

Page 32
"ஹலோ! மதி... கேட்குது சொல்லு! ஓகே. 6.30 பஸ் கிடைச்சுட்டுது! ஆனா எப்ப போகுமோ தெரியல்ல. ஸ்டாண்டுல தான் நிக்கிறேன். ஓமோம். சாப்பிட்டுட்டே வந்திருக்கலாம். அதைத்தான் இப்ப நினைச்சிட்டு... யாரு வந்தது? பள்ளித் தலைவரா? ம்ம்! இப்ப அங்க நிக்கிறாரா? இல்லையா? என் நம்பரைக் குடுத்திருக் கலாமே நீ.. சரி, அவரே எடுக்கிறாராமா? ஓகே.. ஓகே! இப்ப வெளிக்கிட்டா நான் 12மணிக்கெல்லாம் கண்டிக்குப் போயிடு வேன் ஆ? சரி சரி, போனதும் எடுக் கிறேன்... யசோ எப்பிடியிருக்கு? துாக் கமா ஓ! சரி சரி பை!” என்று போனை
அணைத்துவிட்டு நிமிர்ந்தான்.
பஸ்ஸின் வெளியே சில இளைஞர் கள் நின்றிருந்தனர்.
_"பஸ் எத்தனை மணிக்குப் போகும், தம்பி? பஸ்ஸின் முன்புற நுழைவாயில் வழியாக இறங்கிச் சென்று கண்டக்டர் போலிருந்த ஒரு இளைஞனிடம் சென்று கேட்டான், இம்தியாஸ்.
"கொஹாட்டத் ஐயே? நீங்க நுவர தானே போறது? அதிங்... எந்த நாளும். ஆறு அரைக்குப் போறதுதானே ஐயா! இன்டைக்கு ஆக்கள் கொஞ்சங் வர இருக்குது! ஏறி ஸீட்ல ஒக்காந்து இருங்க! இன்னம் ரெண்டு மூணு சீட் மட்டுந்தான் இருக்கிறது. ஆ! நுவர...! நுவர..!மாத்தளே... மாத்தளே...!”
"ரெண்டு மூணு சீட் மட்டுமா? பஸ்ஸே போறதுக்கு ஆக்களில்லாமப் பேயடிச்சுக் கிடக்கு... கதையப் பாரு. இவனுகளுக்கு ஆக்கள் இல்லையென் றாலும் இந்தப் பந்தா மட்டும் போகாது”
uாண்டு 9 ஆக்க பாரு.
மல்லிகை மார்ச்

என்று மனதுக்குள் சிரித்துக் கொண் டான். பஸ்ஸின் பின்னிருக்கையிலிருந்த யாரோ ஒருவர் யன்னல் வழியாக வெற் றிலைச் சாறைப் புளிச்சென்று துப்பினார்.
"ஆ! கடலை! கடலை! தண்ணிப் போத்தல்... பெப்பர்மின்ட்!”
பஸ் நிலையத் தின் முன் புற மிருக்கும் முஸ்லீம் ஹோட்டலில் இருந் து கடகடவென்ற காதைப் பிளக்கும் ஒலியுடன் கொத்துரொட்டி
வாசனை வந்தது.
"தம்பி, நான் போய் டீ ஒன்டு குடிச் சிட்டு வாரேன்... இப்ப போக மாட்டீங்க தானே?” என்று முன்கடையை நோக்கி நடந்தவனை, "ஐயா... போக வேணாம்! இந்தா இப்ப பஸ் போறது. ஒங்களுக்கு சாப்புட ஹபரணைக்கு பஸ் நிப்பாட்டு றான்... இப்ப வாங்க ஐயா!” என்று கூப்பிட்ட கண்டக்டர் பையனை அவன் பொருட்படுத்தவில்லை.
'இவன்கள் இப்படித்தான் சொல்லு வான்கள். பஸ் எடுக்க எப்படியும் ஏழு மணியாகிடும்!'
தேனீர்க் கடையை நோக்கி ஒரு பத்து மீற்றர் கூட நடந்திருக்கமாட்டான். திடீரென்று ஓர் இயந்திர உறுமல் கேட் டது. ஆச்சரியமாய் திரும்பிப் பார்த்த போது கண்டி பஸ்ஸின் சாரதி இருக் கையிலே ஒருவன் அமர்ந்திருந்து ஸ்டியரிங் சில்லை வட்டமாய்த் தொட்டுத் தொட்டு கும்பிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டான்.
"ஆ! நுவர்.. நுவர..மாத்தளே."
இரண்டொரு தடவை சத்தமாய் 2012 * 30

Page 33
ஹோன் அடித்துக் குலுங்கி விட்டு நகரத் தொடங்கியது பஸ்வண்டி முதலில் நம்பவே முடியாமல் திகைத்து பின் சுதா ரித்து ஓடிச்சென்று பஸ்ஸின் முன்புற நுழைவாயிலில் தொங்கிக் கொண்டிருந்த அந்த கண்டக்டர் பையனுடன் ஒட்டிக் கொண்டான். பஸ் நிலையப் பிரதான வாயிலைக் கடந்து மெல்லத் திரும்பி அது நின்றபோது இன்னும் சில பயணி கள் ஓடிவந்து பின்புறக் கதவு வழியாக ஏறிக் கொண்டார்கள். பஸ்ஸைத் தொடர்ந்து, "ஆ! கடலை... கடலை... கச்சான்... தண்ணிப் போத்தல்!”களும் சிறு ஓட்டத்தில் கூடவே வந்தன.
"தண்ணிப் போத்தல் ! தண்ணீ! ஒண்ணு?
"ச்சே! சில்லறை தாங்க நானா! விடிய வெள்ளனையோட ஆயிரத்தை நீட்டினா..? கடலைப் பக்கட் கொஞ்சம் தரவா?
"கந்தளே போற ஆக்கள்... முன் னுக்கு வாங்க! நுவர மாத்தளே மட்டும் அந்த ரெண்டு ஸீட்ல இருங்க... அம்மா எங்க போர? ஆ? சரி, இருங்க... முன் னுக்கு வாங்க. சந்திக்கா... ஏற வாணாம்... வாணாம்! சந்தில் நிக்காது...!
ரைட்! ரைட்!”
பஸ் புறப்பட்டு வேகம் பிடித்தது.
''என்ன புதினமிது ? அரைவாசி இருக்கைகள் கூட நிறைந்திராத வெறும் பஸ்ஸை எப்படி இன்றைக்கு மட்டும் நேரத்துக்கே எடுத்தான்கள்? ஆச்சரியம் நீங்காமலே ஓடிக்கொண்டிருந்த பஸ்ஸின் பின்புறமிருக்கும் தனது இருக்கையை நோக்கி நகர்ந்தான், இம்தியாஸ்.
மல்லிகை ம

பசி வயிற்றைக் கிள்ளியது.
மக்கெய்ஸர் மைதானத்தைத் தாண் டிய பஸ் நகர சபைச் சுற்றுவட்டத்தில் திரும்பிக்கொண்டிருந்தபோது, "ஆ! எப்படி இப்ப? நான் சொன்னதிங்தானே? டீ குடிக்கப் போக வேணாம் என்டு” நடுவழியில் நின்று கலாய்த்தான் கண் டக்டர் பையன்.
"அட! இல்லடாப்பா...! உன்ட பஸ் ஆக்களேயில்லாம் வெறும் சீட்டாக் கிடக் குது. இப்ப போக மாட்டீங்களென்டு நினைச்சன்” என்றான் இம்தியாஸ் அசடு
வழிய.
"இல்லே ஐயா! அதிக்கு எல்லாம் ஆக்கள் இருக்கு! அந்தா தாடி வச்சிட்டு இருக்கிறதுதானே மூணுபேர் பின்னால! அவங்கட ஆக்கள் எல்லாம் ஒரு இரு வது பேர் நுவரக்கு வாறது. பாருங்க... போஸ்ட் ஒபிஸ் சந்தியில கொஞ்சம் தாடி ஆக்கள் இப்ப ஏறுது. மத்த அவங்கட ஆக்கள் எல்லாம் கந்தளே வரைக்கும் ஒவ்வொரு இடத்திலே நிக்குற நேரத்துக்கு வந்து ஏறுறது.”
அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வேகம் குறைந்து தபால் நிலைய பஸ் தரிப்பிலே நின்றது பஸ். அங்கு வெண்ணிறத் தொப்பி மற்றும் முழங்கால் வரை நீண்டிருக்கும் வெண்ணிற அங்கி கள் அணிந்த நீண்ட தாடி ஆண்கள் பலர் தோளிலே பெரிய பயணப் பொதி களைச் சுமந்தவாறு சிறு கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள்.
பஸ் நின்று கண்டக்டர் பையன் வெளியில் இறங்கியதும் அந்தத் தாடி
மனிதர்கள் அனைவரும் அவனைச் மார்ச் 2012 ஓ 31

Page 34
சூழ்ந்து கொண்டார்கள். ஓரிரு நிமிடங் கள் நீடித்த சிங்கள் மொழி உரை யாடலின் பின்பு பஸ்ஸினுள்ளே எல் லோரும் ஏறிவந்தார்கள். ஆட்களில்லாத வெற்று இருக்கைகள் அனைத்திலும் தோளிலே சுமந்துவந்த பயணப் பை களைப் போட்டு இடம்பிடித்தார்கள். பின்பு இம்தியாசுக்கு முன்னாலும் பின்னாலு மிருந்த மீதி இருக்கைகளில் அமர்ந்து கொண்டார்கள்.
"அஸ்ஸலாமு அலைக்கும் ஹாஜி"
"அலைக்கும் ஸலாம் வரஹ்மத் துல்லாஹி”
"அப்படி உக்காருங்க ஹாஜி!”
"பரவாயில்ல சீதேவி நான் இங் கினக்கயே இருக்கிறேன்... அல்ஹம் துலில்லாஹ்”, "'சுபஹானல்லாஹ்", ''மாஷா அல்லாஹ்" என்பது போன்ற உரையாடலும் அத் தர் நறுமண வாசனையும் பரவிச் செல்ல மீண்டும் கிளம்பி வேகம் பிடித்தது பஸ்.
ஜெற்றிப் பொலீஸ் சுற்று வட்டத்தில் திரும்பி உள்துறைமுக வீதிக்கு வந்த தும் மீண்டும் சிணுங்கியது இம்தியாசின் செல்போன். அதிலே புதிய இலக்கம் ஒளிர்ந்திட இயர்போனை பொருத்திக் கொண்டு, "ஹலோ! யாரு” என்றான்.
"ஆ! தம்பி நாந்தான் பள்ளித் தலைவர் பேசுறேன். அஸ்ஸலாமு அலைக்கும்!”
"ஆங்... அலைக்கும் ஸலாம்! சொல்லுங்க தலைவர்!”
"தம்பீ , உங்களுக்கிட்டக் கொஞ்சம்
மல்லிகை மார்ச் |

பேசலாம் என்டுதான் வீட்டுக்கு வந்தேன். அந்தப் புள்ள மதிவதனி நீங்க இப்பதான் கண்டிக்குப் பயணம் போறதாச் சொல் லிச்சு. அந்தப் புள்ளயிட விசயமாத்தான் கண்டிக்குப் போறீங்க போல.”
"ஓமோம்... இப்ப பஸ்லதான் இருக் கிறேன். ஏதும் அவசரமா கதைக் கணுமா... அப்படியென்டா இறங்கி ஆட்டோ பிடிச்சி வாறேன். இப்பதான் பஸ் இன்னர் ஹாபர் ரோட்டுக்கு வந் திருக்கு...? இறங்கவா?
"இல்ல.. இல்ல! அல்லாட காவல், நீங்க போற பயணத்தை நல்லபடியா செய்து முடிங்க தம்பீ! நா இஞ்ச உங் கட விசயமா பள்ளி மற்ற ஆக்களோட கதைச்சுப் பார்த்தேன். அவங்கட கதை யப் பாத்தா?
''பார்த்தா? என்ன சொல்லுங்க நானா?
'இல்ல ... போன்ல எல்லாம் கதைக்க ஏலுமோ தெரியல்ல... இப்ப நீங்களும் நம்மட மார்க்கத்துக்கு வந்து ரெண்டு மூணு வருசமாகிட்டுது. அதுவு மில்லாம நீங்க இந்த ஊர்லயே நம்மட புள்ளைகளோடேயே ஒரே ஸ்கூல்ல படிச்சு ஒண்ணா விளையாடி ஒண்ணுக் குள்ள ஒண்ணாக் கிடந்த ஆள் தம்பி, அதால எங்களுக்கு உங்கள்ல சந் தேகம் எதுவுமில்ல. ஆனா அந்தப் புள்ள மதிவதனிட விசயமும் அந்த புள்ளய நீங்க வீட்ல வச்சிருக்கிறதும்தான் கொஞ்சம் பிரச்சினையாயிருக்கு". பஸ் மட்கோ சந்திப் புகையிரதக் கடவையில் நின்றிருக்க ரயிலின் இரைச்சலில் அவ ரது பேச்சு தெளிவின்றி இடறியது. 2012 ஓ 32

Page 35
"ஹலோ! அதுதான் அந்தப் புள்ள யும் நம்ம மார்க்கத்துக்கே மாறி வர்றதுக் குச் சம்மதிச்சுட்டுதானே தலைவர்? நான் முந்தநாளிரவு அந்தப் பிள்ளை மதியை யும் முன்னுக்கு வச்சுத்தானே உந் களிட்ட... ஹலோ... ஹலோ!” 2
"தம்பி, சிக்னல் கிளியரில்லாப் இருக்கு. நீங்க கட் பண்ணுங்க. நான் பிறகு எடுக்கிறேன்” என்று சட்டென போனை வைத்து விட்டார்.'
"சே!” என்று அலுத்துக் கொண் டான். அவரிடம் முழுமையாகச் சொல்லி முடிக்காதது சிறிது ஏமாற்றம் தந்தது மதிவதனி, இம்தியாசின் கடைசித் தங்கை சஹானாவுடன் ஒன்றாகப் படித்தவள். அவனது பயோலொஜி டியூட்டரி இருந்த அதே மரியாள் வீதியில் தான் மதிவதனியின் அண்ணன் பாலா மாஸ்டரின் கணித பாட டியூட்டரியும் இருந்தது. ஏ.எல் படித்து விட்டு ரிசல்ட்ஸ் வரும்வரை காத்திருந்த காலத்தில் பின் னேரங்களில் எல்லோரையும் போல சைக்கிளை எடுத்துக் கொண்டு வீதியுலா வருவது இம்தியாசின் வாடிக்கை. அந் தக் காலங்களில் மதிவதனி தனத அழகினால் அவனுக்கு மட்டுமல்ல அவன் போன்ற இளைஞர்கள் பலருக் கும் கனவு மங்கையாக இருந்தவள்.
அவளது பகட்டில்லாத அழகு மட்டு மல்ல் அமைதியான சுபாவமும் எல்லா வற்றுக்கும் மேலாக அவளது இனிமை யான குரலும்தான் அதற்குக் காரணம் அப்போதெல்லாம் பாடசாலை விழாக் கள், ஊர்க் கொண்டாட்டங்கள், கோயில் திருவிழாக்கள், இசை நிகழ்ச்சிகளிளெல் லாம் மதிவதனியின் இனிய பாடல்கள்
மல்லிகை பூ

ஒலிக்காதிருந்தது கிடையாது. 'மாணிக்க வீணையேந்தும் மாதே நீ கலைவாணி' என்று அவள் பாடுவது இன்று நினைத் தாலும் காதுகளில் தேன் பாய்ச்சுமே!
பஸ் கண்ணாடி யன்னலினுாடாக வீசிய காற்று முகத்தில் கவிதை பாட பழைய நினைவுகளில் மூழ்கி அப்படியே தூங்கிப் போனான் இம்தியாஸ்.
மீண்டும் அவன் கண் விழித்த போது பஸ் ஏதோ ஒரு தரிப்பில் நின்று புறப்பட்டது.
புறப்படும் போது இருந்ததைப் போலன்றி ஆசனங்கள் ஏறக்குறைய நிரம்பியிருந்தன. இரண்டொரு இருக்கை கள் மட்டும் எங்கோ வழியில் நின்று இனிமேல் ஏறப்போகும் தாடி மனிதர் களின் சகபாடிகளுக்காகக் காத் திருந்தன.
"அஸ்ஸலாமு அலைக்கும் அமீர் சாப்!”
கோரஸாக எழுந்த குரலால் சற்றுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். ஒரு 70 வயது மதிக்கத்தக்க வயோதிபரும் அவரைப் போலவே தோளிலே பயணப் பையுடன் இன்னும் சிலரும் பின்கதவு வழியாக ஏறிவந்து கொண்டிருந்தார்கள். ஆசுவாசப் பெருமூச்சுடன் அந்த வய தான மனிதர் அமர்ந்த பின்பே மற்ற
வர்களும் உட்கார்ந்தார்கள்.
"ஹாஷிம் ஹாஜி சாப், எல்லாரும் ஏறிட்டாங்களா?”
"ஓ! கந்தளாய் பேராத்துப் பள்ளி யில மட்டும் ஒரு நாலு பேர் நிக்கிறாங்க
சாப்! அவங்களும் ஏறிட்டா சரியாயிரும். மார்ச் 2012 $ 33

Page 36
இன்ஷால்லாஹ்!”
"அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்து லில்லாஹ்!” என்றார் திருப்தியுடன்.
அந்த மனிதரை இதற்கு முன்பு | இம்தியாசுக்கு எங்கோ சந்தித்ததைப் போலவும், அவரது முகம் நன்கு பரிச்சய மான முகம் போலவும் தோன்றியது. அவரது பயணப்பையை பவ்யமாக வாங்கி அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து யன்னலோரமாக இருந்த வேறு இருக்கையொன்றிலே மெதுவாக அமர்த் தினார்கள்.
அவர்களில் பலர் இளைஞர்களாக வும், சிலர் நடுத்தர வயதினராகவும் இருக்க மீதிப்பேர் வயோதிபர்களாக இருந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் அருகருகேயுள்ள இருக்கைகளிலே ஒன் றாக அமர்ந்திருந்து தங்களுக்கிடையே பல பாஷைகளிலும் பேசிக் கொண்டிருந் தார்கள். சிலர் ஏனைய பயணிகளுக்கு இடையிலே அமர்ந்து இருந்த போதிலும் மற்றவர்களைக் கண்டு கொள்ளாமல் பொதுவாகத் தங்களுக்கிடையிலே மட்டுமே பேசிக்கொண்டிருந்தார்கள்.
இப்போது அந்த பஸ் ஏறத்தாழ அவர் களின் பிரத்தியேக வண்டி போலவே தோற்றமளித்தது. அவர்களின் தயவில்தான் நாங்கள் சிலர் அதிலே ஏறிக்கொண்டு பயணிக்கிறோம் என்று கூறினால் யாரும் கேள்வி கேட்காமல் நம்பிவிடுவார்கள் போலிருந்தது பஸ்ஸின் நிலைமை.
இம்தியாசின் அருகாமையிலும் அவர் களில் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் புதிதாய் ஏறிய ஒருவர். அவரது கை
மல்லிகை மார்ச்

பிலே பிளாஸ்டிக் மணிகளாலான ஓர் சிறிய மாலை ஒன்று இருந்தது. அதைக் கையில் வைத்து வாய்க்குள் எதையோ முணு முணுத் தவாறு உருட்டிக் கொண்டேயிருந்தார். அவரது விழிகள் இரண்டும் அரைத்துாக்கத்தில் மூடியிருந் தது. அவரது மேலங்கியிலிருந்து வந்து கொண்டிருந்த கடுமையான அத்தர் வாசனை முதலில் சுகந்தமாக இருந்த போதிலும் போகப் போக அவனுக்குத் தலையை வலிப்பது போலிருந்தது.
பஸ் இடையிடையே நின்று ஹபரணைச் சந்தி , தம்புள்ள சந்தை போன்ற இடங்களுக்குச் செல்லும் பயணி களை ஏற்றிக் கொண்டது. அப்படி ஏறிக் கொண்டவர்கள் கம்பியைப் பிடித்தபடி நின்று கொண்டு பயணம் செய்தார்கள். இருக்கைகளில் அமர்ந்திருக்கும் பிர யாணிகளை ஒருவித ஏக்கத்துடன் பார்த்தவாறு நின்றிருந்த அவர்களின் உடல்கள் வெறி பிடித்து விரையும் பஸ் ஸின் வேகத்திற்கேற்ப முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருந்தன.
பஸ் கப்பல் துறை ஆயுர்வேத ஆஸ்பத்திரியைத் தாண்டிக் கொண்டி ருந்தது. ' ''எக்ஸ்க்யூஸ்மீ தொர! கொஞ்சம் தள்ளி இருக்கிறீங்களா? நான் ஏன்ட பேக்கை ஓசக்க போடணும்” என்றபடி எழுந்தார் பக்கத்திலிருந்தவர். அதற்கு அவருக்கு இடத்தைக் கொடுத்துவிட்டு மீண்டும் அமர்ந்தபோது, இம்தியாசைப் பார்த்து முதன் முதலாக சிநேகமாகப் புன்னகைத்து, ''ஜஸாக்கல்லாஹ்
ஹைராஹ்” என்றார் அவர்.
2012 ஐ 34

Page 37
அவன் புரியாமல் விழித்தான்! ''இல்ல.. தேங்ஸ் சொன்னேன்' என்றார் சிரித்தபடி. அவரது பற்கள் வெகுசுத்தமாக பளிச்சென்றிருந்தன. வெளித்தோற்றத்தை வைத்து அந்தத் தாடி மனிதரை 'அவர்' என்று கூறினாலும் அவரது அடர்த்தியான மார்புவரை நீண்டி ருந்த தாடியை நீக்கிவிட்டுப் பார்த்தால் இம்தியாசை விட கூடிப்போனால் நான்கு அல்லது ஐந்து வயது மட்டுமே அதிக மான ஓர் இளைஞன்தான் தெரிவான்.
"ஏன் நானா, 'நன்றி' என்று தமிழிலே சொல்ல மாட்டீங்களா?
"அப்படியில்ல தொர், உங்களப் பாத்திட்டு முஸ்லீம் என்று நெனைச் சுட்டேன்!"
"அட! நான் முஸ்லீம் இல்லை யென்று இப்ப யார் சொன்னது?
அவர் என்னை ஒருமுறை மேலி ருந்து கீழ்வரை உற்றுப் பார்த்துவிட்டு அமைதியாகி யோசனையிலாழ்ந்து விட்டார்.
''என்ன நானா, ஏதும் பிழையாச் சொல்லிட்டனா?
"இல்லல்ல... உங்கட கதையைப் பார்த்திட்டு?” என்று இழுத்தார் அவர், வேறு எதையோ சொல்ல வந்துவிட்டுச் சமாளிப்பது போலிருந்தது அவரது பார்வை.
'என்ன யோசிக்கிறீங்க. சொல்ல வந்ததைச் சொல்லிடுங்க!” நான் விட வில்லை.
"இல்ல தொர ஏன்ட பேர் பாசில்.
மல்லிகை ம

நான் ப்ரைவேட் பேங்க் ஒண்டில மனே ஜரா இருக்கிறேன். நாங்க எல்லாரும் கம்பளைக்கு மஹல்லா வேலையாப் போயிட்டிருக்கிறோம். தம்பீ உங்கட பேரென்ன...? என்ன செய்யிறீங்க?
இம்தியாஸ் சொன்னான்.
"அல்ஹம்துலில்லாஹ்! தம்பீ, நான் சொல்றனென்டு பிழையா நீங்க நினைக் கப்படாது. நம்ம முஸ்லீமென்டு மத்தவங் களுக்குத் தெரியிறதுக்கு தனியா அடை யாளம் வேணும். உங்களைப் பார்த்த சீருக்கு நான் குறிப்பில்லாமத்தான் இருந் தேன். முகத்தை வச்சுத்தான் முஸ்லீ மென்டு ஓரளவு வெளங்கிச்சு. ஆனா கதையைப் பார்த்துத்தான் பொறகு கொஞ்சம் சக்காயிருச்சு.”
"சரி, முஸ்லீமென்டு தெரியிறதுக்கு நான் எப்படியிருக்கணும் பாசில் நானா? இப்படி டெனிம் ஜீன்ஸ் டீ சேர்ட்லாம் போடக்கூடாதா? இல்ல தமிழ்லதான் ஒழுங்கா பேசக்கூடாதா? ஹாஹா..."
அவரும் லேசாய்ச் சிரித்துக் கொண்டார்.
"சேச்சே! அப்பிடிச் சொல்ல வரல்ல தொர், ஒரு ஆம்புளைய பாத்தாக்கா தோற்றத்துலயே இவரு இஸ்லாத்தை நம்புறவரு... பின்பற்றுறவரு அப்பிடி யெண்டு தெரியிற மாதிரி இருக்கணு மென்றுதான் நம்ம ரஸருல்லாஹ்."
"அப்படியென்டால் நீங்க போட்டிருக் கிற இந்த நீளமான உடுப்புத்தான் முஸ்லீம்களுக்குரிய அடையாளமா. என்ன?
அற?
அந்தக் கேள்வி அவருக்கு ரசிக்க மார்ச் 2012 ஓ 35

Page 38
1
4U, 6 2 -
வில்லை. வாய்க்குள் எதையோ முணு முணுத்தவாறு வெளியே பார்த்து யோசித்துக் கொண்டிருந்தார். பஸ்ஸின் யன்னலை ஊடறுத்து வீசிய தம்பல காமத்தின் வயல்வெளிக் காற்று தலை முடியை அலைக்கழித்துக் கொண்டி ருக்க அவர் திரும்பும் வரை காத்திருந் தான், இம்தியாஸ்.
தம்பி, ஒங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. நம்ம மார்க்கத்துல ஆம் பளைகளுக்கு வேறயா பொம்பளை களுக்கு இன்னன்ன மாதிரின்னு உடுத் திக் கொள்ளணும் என்று தெளிவாச் சொல்லியிருக்குத்தானே? அதைச் செய்தா சரிதான்.”
“ஓம் நானா, அதன்படிதான் நானும் உடுத்திருக்கிறேன் என்றுதான் நெனைக் கிறேன். ஆனா நான் போட்டிருக்கிறது நீங்களெல்லாம் போட்டிருக்கிற மாதிரி பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மக்கள் போடுகின்ற ஜூப்பா கிடையாது. பாருங்க, நம்மட ஆக்கள்ல சிலபேர் சாரம் சேட் போடுறாங்க, டீசேட் ஜீன்ஸ் போடுறாங்க, சிலபேர் உங்கள் மாதிரியும் போடுறாங்க. அரபு நாடுகளில் வேறொரு விதமா... இதில் இதுதான் முஸ்லீம்களுக்குரிய ஆடை என்று எதை எடுத் துக் கொள்றது?
பாசில் நானாவால் பதில் சொல்ல முடியவில்லை.
"இங்க பாருங்க நானா, பேசுகிற மொழியும் உடுத்துகின்ற ஆடைகளும் மனிதர்கள் நமது வசதிக்குத் தக்கபடி தான். நான் தமிழன் அதனால் தமிழை மட்டுந்தான் பேசுவேன் என்றோ, நான்
40,
மு -
•.
மல்லிகை மார்ச் 2

சிங்களவன் சிங்களத்தை மட்டுந்தான் யன்படுத்துவேன் என்றெல்லாம் சொல் பிட்டு இந்தக்காலத்தில் வாழமுடியுமா?
"பேசிக்கிற பாஷைக்கு வேணு மென்டா நீங்க சொல்றது சரி தம்பி. ஆனா இது உடுப்புக்குச் சரிவருமா? நமக்கென்று ஒரு கலாச்சாரம் பாரம் பரியம் இல்லியா என்ன?” கு
"சரி, ஒரு பேச்சுக்கு நீங்க காலைல பாக்கிங் போக வேண்டியிருக்கு என்று வைச்சுக் கொள்வோமா... இப்ப நீங்க போட்டிருக்கிற இந்த உடுப்பு அதுக்குச் சரிவருமா? டீ-சேட் பொட்டம் போட்டுத் நானே ஆகணும்? நம்ம பிள்ளைகள் ஸ்கூல்ல புட்போல், கிரிக்கட், நீச்சல் பயிற்சிக்கு போனா அந்தந்த விளை பாட்டுக்கு அவசியமான உடுப்புகளை அணியத்தானே வேணும்?
"இப்ப நீங்க சொல்றதப் பார்த் தாக்கா டீவில காட்டுறாங்களே, நீச்சல் போட்டி, பீச் - வொலிபோல்! அப்ப அதுக் கெல்லாம் போறதென்டா பிகினி உடுப் புலதான் போகணுமா? என்று கேட்டார் பாசில், அதிரடியாக.
"ஆ! நல்லாக் கேட்டீங்க நானா?” என்று அவரையே சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் இம்தியாஸ். அவனுடைய யோசனையைப் பார்த்து மடக்கிவிட்ட திருப்தியில் அவர் உள் ளுக்குள் சிரிப்பது நன்றாகப் புரிந்தது.
அதற்குள் பஸ் ஓரிடத்தில் நின்றது. அனுஹய பகின்ட! முள்ளிப் பொத் தானை இறங்குங்க! ஆ.. நுவர். மாத் தளே நுவர மாத்தளே!” சிலர் ஏறி இறங் கிக் கொள்ள மீண்டும் இரைச்சலுடன் 2012 ஓ 36

Page 39
புறப்பட்டது.
"என்ன தம்பி, பதிலையே காணம்?
"ம்ம்! அதுமாதிரி விளையாட்டுக் கெல்லாம் நாம் போகணுமா இல்லை யான்னு தீர்மானிக்கிற விஷயம் இன்னும் நம்ம கையிலதானே இருக்கு? ஆனா, நீச்சல் மாதிரிப் போட்டியில் கலந்து கொள்றது என்று முடிவெடுத்திட்டோ மென்றால் சேட், சாரம், ஜூப்பாவெல்லாம் உடுத்திக்கொண்டு நிச்சயமா நீந்த
முடியாது!”
"சரி தம்பி, உடுத்துறத வுடுங்க! இன்னும் எத்தனையோ விசயம் இருக்கே! ரஸுலுல்லாஹ் சொன்ன சுன்னத்தான விசயங்கள். ஆண்கள் தாடி வச்சுக் கொள்வது, தொப்பிகள் அணிந்து கொள்வது... இதெல்லாம் செய்யக்
கூடியதுதானே?
"ஓம். அதெல்லாம் செய்யக் கூடி யதுதான். ஆனால் அதை மட்டுமே செய்து கொண்டிருந்தால் போதுமா நானா? ஒரு முஸ்லீம் முதலில் தனது நற்செயல்களால் தன்னை அடையாளப் படுத்திக் கொள்வதிலே அக்கறை செலுத்தக் கூடாதா? உதாரணமா பாருங்க, நம்ம மார்க்கத்திலதான் சுத்தம் பற்றி அதிகமாகச் வலியுறுத்திச் சொல்லி யிருக்கு இல்லையா?
"நெசம்தான்.. “சுத்தம் ஈமானின் (இறை நம்பிக்கையின்) பாதி” என்று சொல்லியிருக்கிறாங்க நம்ம ரஸுலுல்
சம்
லாஹ்.”
"ம்ம்! ஆனால் சுத்தம் என்றால் தங்களோட உடம்பை மட்டும் கழுவிக்
மல்லிகை ம

கழுவி வைச்சுக்கொள்றாங்களே தவிர, நம்மில் எத்தனை பேர் தெருவில் காறி எச்சில் துப்புகின்றோம். வீட்டுக் குப்பையை வீதியில் கொட்டுகின்றோம் தெரியுமா? பொலித்தீன்களை, ஷொப்பிங் பேக்குகளை, பிளாஸ்டிக் போத்தல்களை யெல்லாம் ஓடைக்குள்ளேயும் கழிவுநீர்க் கான்களுக்குள்ளேயும் கொஞ்சமும் யோசிக்காமல் போடுகின்றோம் பார்த் தீங்களா?”
அவர் அவன் சொல்வதை அமைதி யாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.
“நம்ம மட்டுமா அப்படிப் போடுறம்? எல்லா ஜாதிச் சனங்களும்தானே போடு துங்க... சுத்தமில்லாம பொறுப்பில்லாம நடந்துக்குதுங்க. நீங்க ஏதோ நம்ம சனங்கள் மட்டும்தான் என்ட மாதிரிச் சொல்றீங்களே?
“உண்மைதான்! நம்மட நாட்டுல எல்லாரும் செய்றதைத்தான் நாங்களும் செய்யுறோம். அதுலயும் நாம் ஒருபடி மேலதான்! எல்லா இனமக்களும் குடி யிருக்கிற ஒரு டவுனை எடுத்துப் பாருங்க. மற்ற வீதிகளை விட நம்மட சனங்கள் குடியிருக்கிற வீதிகளும் சந்து களும்தான் அதிகமான கழிவுக்குப்பை களால் நிரம்பியிருக்கும். இந்தக் கசப் பான உண்மையை ஒத்துக்கொள்ளத் தான் வேணும்” விழா
அவர் அதை ஏற்றுக்கொள்வதைப் போல தலையாட்டினார்.
ஆனா, மத்தவங்ளோட மார்க்கங் களில் சுத்தம் இறை நம்பிக்கையின் பாதி என்றளவுக்கெல்லாம் சொல்
லல்லையே நானா? நம்மட மார்க்கத்துல மார்ச் 2012 ஓ 37

Page 40
தானே சுத்தத்தை ஆதாரமான நம்பிக் கையின் அரைவாசியோட சம்பந்தப் படுத்தியிருக்காங்க. அப்படியென்றால் நாமதானே மத்தவங்களை விட முன் மாதிரியாகச் சுத்தம் பேண்ணும்?'
"நீங்க சொல்றதெல்லாம் உண்மை தான் தம்பி. இருந்தாலும் இந்த அற்ப துனியாவோட விசயங்கள் திருத்திற துக்கு அதிகமா ஈடுபடப் போனா நாளைக்கு மறுமை நாள்ல நாம நஷ்ட வாளி ஆகிவிடுவோம். அதால...”
''என்ன..? எனக்கு விளங்கயில்ல?"
"இல்ல பாருங்க, இந்த உலகம் வந்து மறுமைக்கான விளைநிலமென்டு கண்மணி ரஸூல் ஸல்லல்லாஹு அலை ஹிவஸல்லம் சொல்லியிருக்கிறாங்க. நாம் தனித்தனியா ஒவ்வொருவரும் நம்மளை மறுமையில் கிடைக்கப்போற ஜன்னத்துல் பிர்தவ்சுக்காக தயார் செய்துக்கிட்டு வந்தாலே எல்லாம் சரியா கிடும். இதைத்தான் அல்லா... ஜெல்ல... சுபஹானல் தம்பீ! என்ன தம்பி, திரும்பிட் டீங்க..இதென்ன காதில இயர்போனைப் போடுறீங்க..?'
அவருக்கு பதில் சொல்ல அவகாச மில்லாமல் மீண்டும் பள்ளித் தலைவர் போனில் வந்திருந்தார்.
"ஆ! சொல்லுங்க தலைவர் ! இப்ப தெளிவா கேக்குது! எக்ஸ்க்யூஸ்மீ..! ஒண்ணுமில்ல அது இங்க பஸ்ல பக்கத் துல ஒருவர்... சரி, நீங்க சொல்லுங்க!
<< ,,
மதிவதனியும் நம்ம மார்க்கத்துக்கு வாறதில நம்ம பள்ளி ஆக்களுக்கு
மல்லிகை மார்ச் 2

என்ன பிரச்சினை? "
64 »
''சரி, பிழையா நினைக்கல்ல... பரவாயில்ல சொல்லுங்க!”
<< »
நான் சிறிது நேரம் எதுவும் பேச வில்லை. அருகிலிருந்த தாடிக்காரர், போனில் பதில் சொல்லிக் கொண்டி ருக்கும் என்னையே இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
"சரி தலைவர், நீங்க எல்லாரும் இப்ப எதைச் சந்தேகப்படுறீங்க? மதியும் , அந்தப் பிஞ்சுப் புள்ளையும் என்னைத் திருப்பியும் பழையபடி ஆக்கிடுவாங்க என்றுதானே? நானா, நீங்க சொல்ற மாதிரி அயலுக்குள்ளேயே நம்மட ஒரு பிள்ளையை நான் கட்டியிருக்கலாம் தான். ஏன் இப்ப கூட நீங்க காட்டுற பிள்ளைய நான் கட்டுறேன். ஆனா."
'' 7
' “ப்ளீஸ்... நான் சொல்றதையும் கொஞ்சம் கேளுங்க! நான் நிச்சயமாகக் கட்டுறேன். ஆனா, வன்னி அடிபாட்டுல சிக்கி புருசனையும் அவன்ட தாய் தகப் பனையும் குடும்பத்தையும் பறி கொடுத் திட்டு கைப்பிள்ளையோட யாருமே இல்லாம வந்து நிக்கிறவ மதிவதனி. அவளை உங்கட அயலுக்குள்ள யாரா வது ஒரு நல்ல தொழிலோடு இருக்கிற பொடியன்கள்ல ஒருத்தனைக் கட்டச் சொல்லுங்களேன் பார்ப்போம்..!”
"என்ன தலைவர் சத்தமேயில்ல? 012 ஐ 38

Page 41
பார்த்தீங்களா? மாட்டாங்கதானே? இப்படி இளம் வயதில வாழக்கையை பறி கொடுத்திட்டு பிள்ளையோட நிக்கிற வளை நாமே கைவிட்டா அவள் எங்க தான் போவாள் சொல்லுங்க? நீங்க கேட்டபடி மதி இருந்த கட்டுகஸ் தோட்டை பள்ளிவாசல்ல இருந்து கடிதம் எடுத்திட்டு வாறேன். அதுக்குத்தானே நானா, இப்ப நான் அங்கே போயிட்டிருக் கிறேன். அதன் பிறகு நாங்க சேர்ந்து இருக்கிறதில பிரச்சினை இல்லதானே?
- 77
"ஆங்! அதுவா? அது ஒரு பெரிய கதை! கடைசிச் சண்டை நடந்தது தானே. அதுல உயிர்த் தப்பி பிள்ளை யோட ஓடி வவுனியாவுக்கு வந்து சேர்ந் திருக்கிறா. அங்க மதியிட அப்பாவோட முதல் சேர்வையரா வேலை செய்த முஸ்லீம் பெரியவர் கண்டு கண்டிக்கு கூட்டி வந்திருக்கார். அங்க அவர்ர குடும பத்தோட வீட்டுல தங்க வச்சி உதவி யெல்லாம் செஞ்சிருக்காரு. அந்த மனிசன்ட குடும்பத்தாக்கள்ட உதவி
யையும் நல்ல குணத்தையும் பார்த்திட்டு அங்க இருக்கும் போதே நம்ம மார்க் கத்துக்கு வாற ஐடியாவுலதான் இருந் திருக்கா மதி.”
"ஓமோம் நானா! அங்க உள்ள பள்ளிவாசல்ல அதுக்குரிய எல்லா ஏற் பாடுகளும் நடந்து கொண்டிருந்தபோது தான் பொலீஸ் பிரச்சினையாகி இங்க டரிங்கோவுக்கு வர வேண்டியதாகிட்டுது அவளுக்கு! இங்க அதுகள்ற குடும்பபே அவளைச் சேர்க்காம துரத்தி விட்டதெல்
மல்லிகை ப

லாம் உங்களுக்கும் தெரியும்தானே? அப்படிப் பரிதவிச்சு நின்று கொண்டிருந்த வளைத்தான் நான் கட்டிக் கொள்றதுக்கு இப்ப உங்களுக்கிட்ட கேக்கிறேன்.”
<< »
"ஓகே... அதுக்கு என்ன செய்யுறது நானா? ஏதோ படிக்கிற காலத்துல வயசுக் கோளாறுல படிப்பிச்ச ஸ்கூல் மாஸ்டரை விரும்பி வன்னிக்குப் போயிட் டாள். இப்ப அவள்ற புருசனும் இல்ல.. கடைசிச் சண்டையில் மாட்டி எல்லாத் தையும் பறிகொடுத்திட்டு வந்திருக் கிறாள். இங்க, நாங்களும் சந்தேகப் பட்டுச் சேர்க்காம இருந்தா பாவம் அவள் என்னதான் செய்வாள் சொல்லுங்க, தலைவர்?
<< »
''
"சரி சரி, நான் விசயத்தை முடிச் சிட்டு இன்றைக்கு நைட் பஸ்ல திரும் புறன். நீங்கதான் யோசிச்சு ஒரு நல்ல முடிவெடுக்கணும். ஆ! சரி சரி வைங்க" என்று செல்போனை அணைத்த போது
அவனையே திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தார் பாசில்.
“யாரு அது? ஏதும் ஊர்ப் பிரச் சினையா?
"சேச்சே! இது வேற பிரச்சினை!”
"தமிழ் புள்ளயக் கலியாணஞ் செய்யப் போறீங்களா? நான், நீங்க பேசுனதைக் கேட்டுட்டுத்தான் இருந்தன் தம்பீ... யாரு அது தெரிஞ்ச ஆக்களா?
'ம்ம்! அந்தப் புள்ள என்ட தங்கச்சிட க்ளாஸ்மேட்!”
மார்ச் 2012 ஒ39

Page 42
"உங்கட வீட்டுல சம்மதமா அதுக்கு? அந்தக் குட்டியை உங்க வீட்ல சேர்ப்பாங்களா?”
"சே! முதல்ல என்னையே சேர்ப் பாங்களோ தெரியாது!”
அதன் பிறகு சிறிது நேரம் அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. இம்தியாஸ் வெகுநேரமாய் யோசனை யிலாழ்ந்திருந்தான்.
"தம்பீ இம்தியாஸ், கவலைப்படா தீங்க! எல்லாம் அல்லாஹ்ட ஒதவியால சரியா வரும். ரஸுலுல்லாஹ் கூட யுத் தத்துல ஸகீதான தோழர்களோட விதவைகளைத் திருமணஞ் செய்திருக் கிறாங்க.”
"அதெல்லாஞ் சரிதான், ஆனா இதேபோல ஒரு பொம்புளையச் செய்ய விடுவீங்களா நானா?
"ஆ! என்ன தம்பீ சொன்னீங்க?" என்றார் பதறியடித்து.
'இல்ல ஒண்ணுமில்ல, எனக்கு போன் கோல் வர முந்தி நீங்க என்னமோ சொல்லிட்டிருந்தீங்களே? அதைப் பத்திப் பேசுவோமே, பாசில் நானா" என்று பேச்சை மாற்றினான், இம்தியாஸ்.
"ஓ அதுவா? அதான் தம்பி, இந்த அற்ப உலகத்தினுடைய சீரழிவுகள்ல சிக்கிடாம் நாம் நிறைய அமல்களை செய்து நம்மட கப்றுக்குத் தேவை யானதை சம்பாதிச்சுக்கணும்”
"நீங்க சொல்றது சரிதான் நானா. ஆனா நீங்க அமல்கள் என்று சொல்றது எதை?"
மல்லிகை மார்ச் 2

"என்ன தம்பி, புரியாத ஆளாயிருக் கிறீங்க? இரவிலும் பகலிலும் பர்ளான சுன்னத்தான தொழுகைகள்ல அதிக மாக ஈடுபடுறது, நோன்புகள் நோற்கிறது, ஏழைகளுக்கு ஸகாத் கொடுக்கிறது, தீன் மார்க்கத்தை அடுத்தவருக்கும் எத்திவைக்கிறது.”
- "ஓகே.. ஓகே! அப்படியென்டா இந்த உலகம் எப்படியாவது போகட்டும். நம்ம மட்டும் தனித்த னியா சொர்க்கத்துக்குப் போக வழி தேடுனாப் போதும் அது தானே நீங்க சொல்ல வாறது?
பெ "இல்ல அப்பிடியில்ல!”
"வேற எப்பிடி? இங்க பாருங்க நானா, இந்த உலகத்துல மனுசனாய்ப் பிறந்த ஒவ்வொருத்தனுக்கும் சில கடமைகள் இருக்கு! முதல்ல சமூகத் தில உள்ள சீர்கேடுகளைப் பற்றி அறிஞ்சு கொள்ள வேணும். பிறகு அதில் இருந்து தன்னையும் மற்றவர் களையும் எப்படி மீட்கலாம் என்று யோசிக்கணும். அதுக்குத்தான் நமக் கெல்லாம் இறைவன் அறிவை தந்திருக் நின்றானே தவிர சீர்கேடுகளையெல்லாம் கண்டும் காணாம ஓதுங்கிப்போய் தப்பிக் றெதுக்கில்ல?
அதைத்தானே தம்பீ நாங்களும் சொல்றோம். எல்லாரும் இறைவன்ட வழி பில் வந்து அமல்கள்ல ஈடுபட ஆரம் ச்சா இந்த ஒலகத்தில் பூரா பிரச்சினை களும் மெல்ல மெல்லக் காணாமப் பாயிடுமே. துனியா வாழ்க்கையில் பாருக்குத்தான் பிரச்சினைகள் இல்ல. ஆனா அல்லாஹ்ட பாதையில் ஒருவன் காஞ்சநாள் சரி இறங்கிட்டானென்டா
12 * 40

Page 43
மனசுக்கு ஒரு நிம்மதி உண்டாகும். அவர்ட பிரச்சினைகளெல்லாம் அவ னோட கிருபையால ஸோல்வ் ஆகும் தெரியுமா?
"அடடே அப்படியா? அப்ப இங்க பஸ் முழுக்க உங்களோட வந்திருக்கிற வங்க எல்லாருமே அதுக்குத்தான் வந் திருக்கிறாங்களா?
"ஆங்! இல்ல. அதுவந்து...” விழித்தார் பாசில் நானா.
"சரி, நம்ம நாட்டில இப்ப திடீரென்று பெற்றோல் டீசல் விலையெல்லாம் கூடிப் போய் இருக்கு! பஸ் கட்டணம், லைட் பில், பாண், மரக்கறி, மற்ற சாமான்கள்ற விலையும் கூடி வாழ்க்கைச் செலவு சமாளிக்கவே முடியாதளவுக்கு ஆகிட் டுது. இந்தப் பிரச்சினையால் பாதிக்கப் படுகின்ற கூலிவேலை செய்து பிழைக் கிற ஒருவன் அல்லது மீன்பிடிக்கிற ஒரு வன் சிறு அரசாங்க உத்தியோகத்தன் தன்ட பிள்ளை குட்டிகள்ற சாப்பாட்டு நெருக்கடியில் இருந்து எப்படித் தப்புறது சொல்லுங்க நானா? அவன் தன்னைப் போல் பாதிக்கப்பட்ட மற்றவங்களோட ஒண்ணு சேர்ந்து போராடுறதா அல்லது உங்களோட வந்து பஸ் ஏறுறதா?
"சேச்சே! அதுகளுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? அரசியல் பிரச்சினை களை நம்மட மார்க்கத்தோட கொண்டு
சேர்க்கப்படாது, தெரியுமா?
''அரசியலும் பொருளாதாரமும் தானே நானா நம்மளோட வாழ்க்கை யைத் தீர்மானிக்குது. அப்படியிருக்க எப்படி? சரி, நீங்க மூச்சுக்கு மூச்சு சொல் லிட்டிருக்கீங்களே நம்ம ரஸுலுல்லாஹ்
மல்லிகை ம

ரஸுலுல்லாஹ் என்று அவங்க எப்படி பானவங்க தெரியுமா உங்களுக்கு?
“சொல்லுங்களேன் தம்பி, கேப்பம்”
"ரஸுலுல்லாஹ் தனியே பள்ளிவாச லுக்குள்ளே அமர்ந்து இறைவணக்கத் தில் மட்டும் ஈடுபட்டுக் கொண்டு இருக்க வில்லையே. அவர்கள் தாங்கள் வாழ்ந்த சமூக அவலங்களைச் சென்று பார்த்தார் கள். தோழர்களோடு சேர்ந்து எதிரிகள் மீது யுத்தங்கள் செய்தார்கள். பகைவர் களோடு பேச்சுவார்த்தை நடாத்தினார் கள், ஒப்பந்தங்கள் புரிந்தார்கள். இதெல்
லாம் அரசியல் இல்லையா?
திடீரென எற்பட்ட ஒரு குலுக்க லுடன் நின்றது பஸ்.
பஸ் ஒரு புறமாய்ச் சரிந்து நின்றி ருக்க, நடந்தது என்னவென்று பார்க்க பஸ்ஸின் அத்தனை யன்னல்களிலும் தலைகள் முளைத்தன..
“ஐயோ! டயரெக்க கியா மல்லி!” என்றபடி சாரதி இறங்கிப் பின்னே செல்ல, "கட்டிய ஒக்கோம் கருணாகரலா பகிண்டகோ! ஆக்கள் எல்லாரும் எறங் குங்க. டயர் மாத்திறது” என்ற கண்டக் டரின் குரல் கேட்டது.
அது ஒரு குடியிருப்புகளில்லாத சன நடமாட்டம் குறைவான வயல் பிரதேசம். நெடுஞ்சாலை வெய்யிலில் கொதித்துக் கொண்டிருந்தது. வேறு வழியின்றி எல் லோரும் இறங்கி வீதியோரத்தில் பச்சைக் குடை ஒன்றை விரித்து வைத் தது போல் நின்றிருந்த நிழல் வாகை மரத்தினடியில் செல்ல சிலர் சற்றுத் தள்ளியிருந்த ஒரேயொரு சிறு தேனீர்க்
கடையை நாடினார்கள். மார்ச் 2012 * 41

Page 44
ம 1h
வ
அதுவரை இம்தியாஸோடு பேசிக் கொண்டு வந்தவரான பக்கத்து சீட் பாசில் நானா அவனைத் தனது சகாக் களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்களில் பலர் நன்கு படித்தவர்களா கவும் உயர் பதவியில் இருப்போராகவும் காணப்பட்டார்கள். ஒருவரையொருவர் விசாரித்தறிந்து அளாவளாவிக் கொண்டி ருந்தார்கள்.
பஸ்ஸின் பின்புறமிருந்து உலோகச் சாவிகளின் உராய்தல் ஒலிகள் கேட்க
ஆரம்பித்தன.
அப்போது தாடி மனிதர்களின் தலை வர் போன்றிருந்தவர் திடீரென எழுந்து நின்று, "இறுக்கமான ஆன்மீகப் பின்பற்று தலின் அவசியம்" பற்றிய போதனை யொன்றைச் செய்ய ஆரம்பித்தார். மரத் தினடியில் அது நிகழ்ந்து கொண்டிருக் கும் போது பஸ்ஸின் சாரதியும் கண்டக் டரும் மிகவும் சிரமத்துடன் பஸ்ஸின் உதிரிச் சக்கரத்தை தனியாக மாற்றிக் கொண்டிருந்தார்கள். அது ஒரு சனநட மாட்டம் குறைவான இடமென்பதாலும் பஸ்ஸில் சாதாரண பயணிகள் குறைவு என்பதாலும் போதிய உதவியின்றி அவர் கள் இருவரும் கஷ்டப்பட்டுக் கொண்டி
ருப்பது தெளிவாகத் தெரிந்தது.
"எக்ஸ்க்யூஸ்மீ, பாசில் நானா!”
"எங்க தம்பீ போறீங்க? இருங்க, இது முடிய ஒரு கூட்டுத் துஆ ஒன்று இருக்கு. கலந்துக்குவோம்” என்றார் எனது பக்கத்து சீட்!
"என்ன? ஏன் திடீரென்று துஆ? “அது வந்து... இதேபோல இனி
EL
(
3
n
400 9
4 O
Uv 41 -
-)
மல்லிகை மார்ச் 2

பழியில் எந்தக் கரைச்சலும் வராம இருக்கிறதுக்கு அல்லாஹ்வுக்கிட்ட..” " "ஓ! அப்படியா? இருங்க நானா, அந்தா அவங்க ரெண்டு பேரும் பாவம் டயரை மாத்திறதுக்கு தனியாக் கஷ்டப்படுறாங்க. வேற ஆக்களும் இல் மப் போலிருக்கு. கொஞ்சம் ஹெல்ப் ஒன்று கொடுப்போம்!” என்றபடி அவர் களிடமிருந்து விலகி வீதியில் நின்ற
ஸ்ஸை நோக்கி நடந்தான் இம்தியாஸ். அருகிலிருந்த சிறு மரக்கிளையில் டீ சேர்ட்டைக் கழற்றிக் கொழுவி ஜீன்ஸை மடித்துக் கொண்டு சாரதியுடன் நின்று பயரை மாற்றுவதற்கு உதவ ஆரம்பித் நான். அவனைப் பார்த்துவிட்டு வேறு சிலரும் உதவிக்கு வந்தனர்.:
அவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து வெய்யிலில் நின்று வியர்வை வழிய டயரை மாற்றிக் கொண்டிருக்கும் போது நிழல்வாகையின் கீழ் நின்று இனி வரப் போகும் இடையூறுகளுக்காக துஆச் செய்து கொண்டிருந்தார்கள், அந்தத் தாடி மனிதர்கள்.
ஒருவழியாக முக்கால் மணி நேரத் தில் பஸ் பயணத்திற்குத் தயாராகி விட்டது.
வேலை முடிந்த களைப்பிலே சாரதி கண்டக்டர் உட்பட அனைவரும் சாலை யோரமிருந்த ஓர் இளநீர் கடையை நோக்கிச் சென்றனர். இளநீரைக்குடித் துக் கொண்டிருக்கும் போது பஸ்ஸின் சாரதியும் கண்டக்டரும் இம்தியாசின் மீது மிகவும் மதிப்புடன் நடந்து கொண்டார் கள். அவனது கண்டிக்குச் செல்லும் பயணத்தின் அவசரத்தை விசாரித்து
012 * 42

Page 45
வீணாகிய நேரத்தை எப்படியும் இனி வரும் ஓட்டத்தில் பிடித்துவிடலாம் என்று உறுதியளித்தார்கள்.
2001. பஸ் மீண்டும் புறப்பட்டது.
"என்ன தம்பி, கையெல்லாம் க்ரீஸ் போல? நல்லாக் கழுவியிருக்கலாமே என்றார் பாசில்.
"ஓமோம்! சோப் எதுவுமில்ல! பரவா யில்ல உங்கட கையெல்லாம் நல்ல சுத்தமா இருக்குத்தானே?
அப்போது வயதான மனிதர்கள் இரண்டு பேர் முதுமையால் தள்ளாடி நின்றபடி பயணம் செய்து கொண்டிருந் தார்கள். அவர்களில் ஒருவர் சுகவீன முற்றிருந்தவர் போலத் தோன்றியது இம் தியாசுக்கு அவர் நிற்கவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் தடுமாறுவதை பஸ்ஸில் இருந்த தாடி மனிதர்கள் உட் பட அத்தனை பேரும் பார்த்துக் கொண் டிருந்தார்கள். யன்னலோரமாக இருந்த தால் இம்தியாசினால் சட்டென எழுந் திருக்க முடியவில்லை. அப்படியும் அரு கிலிருந்தவரிடம் கூறிவிட்டு அவன் இடம் தர முனைந்தபோது பின்புறமிருந்த ஒரு வயதான பெண்மணி சட்டென எழுந்து அந்த வயோதிபரின் கையைப் பிடித்து தனது இடத்தில் அமரச் செய்து விட்டு எழுந்து நின்றுகொண்டார். அந்தப் பெண் மணியும் வயதான ஒருத்தி என்பதால் பஸ்ஸின் வேகத்துக்கு ஈடு கொடுக்க
முடியாது தள்ளாடினார்.
அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.
மல்லிகை ம

அந்தப் பெண்மணியிடம் தாடி மனிதர்கள் தமது சகாக்களுக்காக பிரயாணப் பைகளை வைத்து இடம் போட்டு வைத்திருந்த இரண்டு சீட் களைக் காட்டி அதிலே தற்காலிகமாக அமர்ந்து கொள்ளுமாறு சைகை காட்டி னான் இம்தியாஸ்.
"அணே எப்பா மகத்தயோ! மங் அலுத்ஓய லங்க பகிணவா நே! ஓண நெஹ மகத்தயா!” மறுத்தாள் அந்தப் பெண், அந்தத் தாடி மனிதர்களைப் பார்த்தபடி. ஆனால் அவர்களோ ஒன் றுமே அறியாதவர்களாய் யன்னலுக்கு வெளியே பார்த்தபடி இருந்தார்கள்.
"பரவாயில்ல! நீங்க உட்காருங்க. அவங்கட ஆக்கள்ற இடம் வாறதுக்கு இன்னும் நிறையத் துாரமிருக்குக்கு! வாடிவென்ன அம்மே!” என்று இம்தியாஸ் எவ்வளவோ வற்புறுத்தியும் கூட அந்தப் பெண்மணி ஏனோ அவற்றில் இருக்கத் தயங்கினாள். பின்பு அவன் தனது இருக் கையைக் கொடுத்து அதில் வயதான அந்தப் பெண்ணை அமர வைத்து விட்டு நின்று கொண்டே வந்தான்.
வயல்வெளிகளினுாடாக வீசிய காற்று பஸ்ஸினுள்ளிருந்த அனை வரையும் கிறங்கடித்துக் கொண்டிருக்க சரியாக இருபது நிமிடங்களில் பஸ் கந்தளாய் மணிக்கூட்டுக் கோபுரச் சந்திக்கு வந்து சேர்ந்தது. இம்தியாசின் கால்கள் லேசாக வலி கண்டன.
"இறுங்கு! உண உண இறுங்கு!”
மார்ச் 2012 43

Page 46
L
"கந்தளே ஹந்திய ஒக்கோம் பகிண்ட!” என்ற கண்டக்டரின் அதட்ட லின் பின்பு பஸ் மீண்டும் விரைந்தது. கந்தளாய் ரயில் நிலையத்தைக் கடந்து போட்டங்காட்டுச் சந்தியில் திரும்பி பேராற்றுப் பள்ளிவாசலின் முன் நின்றது. அதிலே ஒரே ஒரு தாடிக்காரர் மட்டும் ஏறி உள்ளே வந்தார்.
"என்ன இது? நீங்க மட்டும் ஏறி யிருக்கீங்க? மத்தவர் ரகீம் சாப் எங்க? என்று வந்தவரிடம் கேட்டார் அவர்களின்
அமீர் சாப்.
"அதுவா? அவருக்குக் விடிய சுப ஹோட கடுமையான வீசிங் மாதிரி வந்திட் டுது. நிலைமை கொஞ்சம் மோசமா இருந் திச்சு. ஒடனே பள்ளியில நைட்அவுட் நிண்டிருந்த குருநாகல் வேன் ஒண்டுல ஆள ஊருக்கு அனுப்பியாச்சு அமீர் சாப்! ஆள ஹொஸ்பிட்டல்ல சேர்த்திருக்காம். இப்ப கொஞ்சம் நல்லமாம் அவர்ர மகன் கோல் எடுத்தாரு இப்ப கொஞ்ச முந்தி!”
400 40 மு
"அப்படியா? யால்லாஹ்!... அல்ஹம் துலில்லாஹ்!” என்றார் தலையை ஆட்டிக் கொண்டு அமீர் சாப்.
மீண்டும் பஸ் கிளம்பிய போது இரு வருக்காக இடம் போடப்பட்டு வைத் திருந்த இருக்கைகளில் கடைசியாக ஏறிய தாடிக்காரர் மட்டுமே அமர்ந்ததனால் மற்றைய இருக்கை வெறுமையாக இருந்தது.
|
இப்போது இம்தியாசுடன் அருகே யிருந்து பேசிக்கொண்டு வந்த மனிதரான பாசில் நானா பஸ்ஸில் நின்று கொண்டு
மல்லிகை மார்ச் :

யணிக்கும் இம்தியாசையும் அந்த வறும் இருக்கையையும் மாறி மாறிப் ார்த்துக் கொண்டேயிருந்தார். அவனோ அவரைக் கவனிக்காமல் பஸ்ஸுக்கு வளியே எதிர்த்திசையில் வேகமாய் ஊர் பலம் போகும் மரங்களையே பார்த்துக் காண்டிருந்தான். ஆனாலும் அவனது கவனத்தைத் தன்பக்கம் திருப்புவதற்காக அவர் கையை அசைத்து சைகை செய்து
காண்டிருப்பது இம்தியாசின் ஓரக்கண் னில் லேசாகத் தெரிந்தது. ஆனாலும் அந்தப்பக்கம் திரும்பாமலே நின்று கொண்டிருந்தான். நீண்ட நேரம் நின்று பந்ததால் கால்வலி உயிரை எடுத்தது.
சிறிது நேரத்தில் தனது முதுகில் வேறு யாரோ தொடுவதை உணர்ந்து அவன் திரும்பியபோது வயதான தாடிக் காரர் அமீர் சாப் நின்றிருந்தார்.
"பரவாயில்ல, அந்த சீட்டில் இருங்க தம்பீ..! எங்கட ஆள் ஒருவர் வரயில்ல சுகமில்லாம் வீட்டுக்குப் போயிட்டாரு” என்று உற்சாகமாகக் கேட்டுக் கொண் டார்.
"அடடா! எனக்காக எழும்பி வந்தி நக்கீங்க போல இருக்கே அமீர் சாப்? மிச்சம் நன்றி! ஆனால் ஒண்ணு. நான் தின்றுட்டு வரத்தான் விரும்புறேன்! தேங்ஸ்” என்று சற்று முன்னே தள்ளிப் போய் சாரதிக்குப் பக்கத்திலே நின்று கொண்டான், இம்தியாஸ் எனப்படும் முன்
னாள் சரவணபவன்.
பஸ் புதிய பாதையில் விரைந்து கொண்டிருந்தது.
2012 $ 44

Page 47
வாழ்க்கை
அழகுதான் வாழ்க்கை என்றால் பூக்கள் மட்டும் போதும் இங்கு
அன்புதான் வாழ்க்கை என்றால் தாய் மட்டும் தாராளமாய்ப் போதும்
கல்விதான்
வாழ்க்கை என்றால் நல்ல புத்தகங்களில் நனைந்தாலே போதும்
காசுதான் .
வாழ்க்கை என்றால் வரவு மிக்க வழிமுறை ஒன்றை தெரிந்தாலே போதும்
நட்புதான்
வாழ்கை என்றால் நம்மைப் புரிந்த நல்ல நண்பர்கள் நம்மோடு இருந்தாலே போதும்
இ-ப
மல்லிகை

லட்
-- இன்னும்
அரசியல்தான் வாழ்க்கை என்றால் வாக்கு போடும் வல்லமை மிக்க கூட்டம் ஒன்று இருந்தால் போதும்
ஆனால்... வாழ்க்கை என்பது ஏக்கத்துடன் நின்று நாட்களை எண்ணி தூரம் அறிந்து துயரம் அறிந்து வாங்கிக் கொடுத்து முரண்பட்டு பின் உடன்பட்டு
தர்க்கித்து தகவல் அறிந்து நொந்து நூலாகி பின்
அமிழ்ந்து போகிறோமே! -
கம்
- எஸ்.முபீனா
திருகோணமலை
5 மார்ச் 2012 ஐ 45

Page 48
காரியாலய மின் விசிறிகள் ஒருவித கொண்டிருந்தன. ஊழியர்கள் பலரும் த பணியில் ஈடுபட்டிருந்தனர். மெனேஜர் எ பான நடையில் பிரசன்னமாகிக் கொண்டி எல்லோருக்கும் பரிமாறிக் கொண்டிருந்த . யசைத்து குட்மோர்னிங் சொன்னவாறு த நாதன்.
அவருக்கு ஐம்பது வயதுக்கு மேல் இரு. கனிவேயிருக்காது. காரியாலயத்தில் எல்லே கொள்வார். திருமணமாகிப் பல தசாப்தங்க வரை சித்திக்கவில்லை. வைத்தியங்கள் பா தன்னிடமா? மனைவியிடமா? என்பது குறி
சீப் கிளார்க் கந்தசாமி கோவைகளை
நில் பே சரி மா
சாபம்
ஒரு
- மு.பஷீர் சாம்
கோவைகளைப் புரட்டி விழிகளை ( திட்டுக் கொண்டிருந்தார். கந்தசாமி பவ்யம் யைக் குறைத்துக் கொண்டு பேசலானான்
"ஸேர்! அந்தக் காசோலைகள் மீண்டு வருக்கு தொலைபேசி மூலம் விபரத்தை அ ஒழுங்குபடுத்த முடியாத சங்கடத்தில் இ உரிய முறையில் கடனைக் கட்டாமல் கால கேஸ் இருப்பில், துண்டு விழுகிறது. இதற் தான் ஸேர் சொல்ல வேணும்.''
சுமை இறக்கிய ஆசுவதம் அவன் முகம் இறுக்கமாகி வித்தியாசமடைந்திருந்தது.
"இங்க பாரும், சீ... சீ... நீர் சோம்போ வேலை பார்க்கிறீர். எல்லாவற்றுக்கும் முழு நீராக்கும். இது ஒரு தனியார் கம்பனி .வ .
மல்லிகை மார்ச் 20

ஓசை லயத்துடன் சீராகச் சுழன்று ங்கள் இருப்பிடத்தில் அமர்ந்தவாறு கையிலைநாதன் தனக்கேயுரிய எடுப் -ருந்தார். கம்பனி காலைத் தேநீரை என் ஒபீஸ் பியோன். பலருக்கும் கை என் அறைக்குள் புகுந்தார் கையிலை
க்கும். ஒல்லியான ஆகுருதி . முகத்தில் ாரிடமும் கடுகடுப்பாகத்தான் நடந்து கள் கடந்தும், குழந்தை பாக்கியம் இது ல செய்து பார்த்தும், மலட்டுத்தனம் த்ெது விடை கிடைக்கவில்லை.
ச் சுமந்த வண்ணம் அவர்முன் குறுகி எறான். எள்ளும், கொள்ளும் எப் பாதும் வெடிக்கலாம் என்ற எச் க்கையுணர்வு அவன் முகத்தில் பூடக க இழையோடியிருந்தது. மெனேஜர் 5 அலட்சியப் பார்வையினால் கந்த மியை ஊடுருவிப் பார்த்தார். மேயவிட்டவாறு அவர் கையெழுத் பமாகக் குனிந்து நின்றவாறு தொனி
ஓம் திரும்பி வந்திருக்கின்றன. உரிய றிவித்து விட்டேன். சில பைல்களை ருக்கிறேன். லோன் எடுத்தவர்கள் ந்தாழ்த்தி வருகிறார்கள். கெசியரின் கு என்ன செய்யலாம் என்று நீங்கள்
த்தில் பிரதிபலித்தது. அவர் முகமோ
றித்தனமாகவும், அசட்டையாகவும் ப் பொறுப்பு சொல்ல வேண்டியவர் லு கவனம் தேவை. மேலிடத்தால் 12 ஐ 46

Page 49
திடீரென இன்ஸ்பெக்ஷன், விச ரணை என்று வந்து குதிச்சாங்களெல் றால், பேந்து நீர் கம்பி எண் வேண்டி வரும். போய் ஒடிட் கண. கரையும், கெசியரையும் கெதியா வந்து என்னைச் சந்திக்கச் சொல்லும் நீர் போகலாம்." அதிகாரத் தோரனை யோடு கட்டளையிட்டார்.
"நாசமறுப்பான்! மற்றவங்க செய்ய யிற தப்புக்கெல்லாம் நான் கம்ப எண்ண வேண்டுமா? உது நல்ல நியாயம். மனசில ஈரமில்லாதபடியான தான் இவன் மனைவி நீண்டகாலமா கருவுறாமலிருக்கிறாள்.'' புறுபுறுத்த வாறு கவலையோடு இருக்கையில் அமர்ந்தான், கந்தசாமி.
பக்கத்து இருக்கையிலிருக்கும் சரோஜா பிருஷ்டம் குலுக்கி ஒய்யா நடை நடந்து வந்து கந்தசாமியின் அருகில் நின்றாள். அவளிடமிருந்து வந்த கொலோன் கலந்த வியர்வை நெடி, இவன் நாசியைச் சிலிர்க்கவை, தது. இறுக்கமான சிவப்புச் சட்டை யும், ரோஸ் கலர் சாறியும் அணிந்திரு தாள்.
“என்ன... உம்மென்று இருக்கி, யள், ஜி. எம். திட்டினாரா?”
"அவரது திட்டல் எனக்குப் பழ கப்பட்ட விஷயம் சரோஜ டோண்ட் மைன்ட் அதுவல்ல என கவலை. இது பெமிலி மெட்டர். அன உம்மிடம் சொல்லக்கூடிய மனநின யில் நானில்லை. பிளீஸ் எக்ஸ்யூஸ்ம
மல்லிகை

!
"ஓக்கே! நோ புரப்ளம்'' எனக் கூறியவாறு தன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள், சரோஜா. அன்று வீட்டில் நடந்த சம்பவம் கந்த சாமியின் மனதில் உறைந்து, பெரிதும் பாதித்திருந்தது.
மனைவிக்கும் இவனுக்குமிடை யில் அன்று மாலை நடந்த சிறு சர்ச்சை, இவ்வளவு பெரிதாய் பூதாகர மெடுக்குமென இவன் கனவிலும் எண்ணியிருக்கவில்லை. காரியாலயம் செல்ல தாமதித்த சூழலில், இவன் பரபரத்துக் கொண்டிருந்தான். அவ னது சேர்ட், டவுசரை அயன் பண்ணித் தரும்படி பலமுறை சொல்லியும் மனைவி வேலைப்பாடு காரணமாக உடன் செய்து கொடுக்கத் தவறி விட்டாள்.
- பா.
9 0'
S• ?
S• |
காலை உணவு தயார் செய்து, பிள்ளைகளுக்கு உணவூட்டி, உடை அணிவிப்பதற்குள் அவளுக்குப் போது மென்று ஆகிவிட்டது. இவனுக்குச் சினம் தலைக்கேறியது.
''நான் சொல்லிக் கொண்டே யிருக்கிறேன். கொஞ்சமும் அக்கறை யில்லாமல் நேரத்தைப் போக்கிக் கொண்டிருக்கிறாய். நான் ஒபிஸ் போறதில்லையா? மூளை கெட்டுப் போய் அறிவு மழுங்கிப் போயிட் டுதா? உனக்கு!'' 21 “நான் என்ன மெஷினா? இரண்டு கைதான் இருக்கு. பிள்ளைகளை வேளைக்கு பள்ளிக்கூடம் அனுப்
புறதா? சாப்பாடு தயார் பண்றதா? மார்ச் 2012 & 47
95.

Page 50
மூளை கெட்டுப் போய் நீங்கதான் பேசுறீங்க, அறிவில்லாம."
13
> * A A A 5.
4 .
B +0
இவனுக்கு வந்த ஆத்திரத்தில், அவள் புஜத்தை பற்றியிழுத்து, அறை வதற்கு கையை ஓங்கி, பிடித்துப் பின் னால் தள்ளிவிட்டான். அவள் சுவரில் சென்று மோதியதால் நெற்றி தடித்து காயம் ஏற்பட்டு விட்டது.
பிள்ளைகள் பெருங்குரலெடுத்து அழுதனர். எதிர்பாராமல் நடந்த இச் சம்பவத்தினால் மனம் குற்றவுணர்வி னால் தவித்தது. இந்த முறுகலினால் மனைவியின் முகம் பார்த்துப் பேசி ஒரு வாரமாகி விட்டது.
இவன் இப்படி நினைக்கலா னான். பெண்களின் கூடப் பிறந்த குணம் பிடிவாதம் நடந்த சச்சரவிற்கு மன்னிப்புக் கூறி சகஜ நிலைக்கு வர லாமா? வரலாம். அதற்கும் இவனது ஈ.கோ. விட்டுத் தரவில்லை. கணவன், மனைவி சண்டையில் பெரிய மனத் தாக்கலுக்கு ஆளாகிறவர்கள் ஆண் களே. தினசரி வாழ்வில் ஆணை இயக்
குபவள் பெண்தானே?
அவளது முக இறுக்கமும், மௌன எதிர்ப்பும், எல்லா இல்லத்தர சர்களினதும் சந்தோஷங்களைத் தொலைப்பவையே.
இதில் யதார்த்தம் என்ன வென்றால், இந்த மெளன எதிர்ப்பை பெண்களால் எத்தனை நாளைக்கும் நீடித்துக் கொண்டு போகலாம்.
*2 l
இs ,
உ
R
•L
மல்லிகை மார்ச் 20

ஆணின் தவிப்பும், மன இயல்பும் வேறு. முறைத்த முகபாவம் உரை பாடலுக்குத் தடையாகும் போது, ஆணினது அன்றாட செயற்பாடுகள் நிச்சயமாய் சுறுசுறுப்பாய் இருக்காது. தவிர மனதளவில் இருண்மை சூழ , பெரும் அழுத்தம் ஏற்படும். மனமுறி வின் பின் தாம்பத்திய உறவுத் தடைச் சட்டத்தை நீக்கும் வீட்டோ அதி காரம் பெரும்பாலும் பெண்கள் கை பிலேயே தங்கியுள்ளது.
சச்சரவுக்குப் பின் - பாலியலை ஒருதலைப்பட்சமாக நிராகரித்து அடம் பிடிப்பதில் பெண் சூட்சுமம் நிறைந்தவள். இவ்விடயத்தில் இறுதிச் சரணடைவு ஆண்கள் தரப்பிலிருந்தே எழும். சரி! வெள்ளைக் கொடியைத் தூக்கிப் பிடிக்கலாம் என்ற முடிவிற்கு இவன் வந்து, நேற்று அவளிடம் கூறி பதை நினைத்துப் பார்த்தான். - ''நாளைக்கு அரைநாள் ஷோர்ட் மீலு போட்டுவிட்டு நேரத்தோ டேவே வீடுவந்து சேருவேன். பிள்ளை களை தயார்படுத்தி நீங்களும் ரெடி பாக இருங்க. கோயிலுக்குப் போய் விட்டு, ஷொப்பிங் போறோம். அப் படியே கடற்கரைக்குப் போய் பிள்ளைகளோடு பொழுதைக் கழித்து பிட்டு இரவு வீடு திரும்புகிறோம். தடும்பத்தோடு வெளியே கிளம்பிக் கனநாளாகுது.'
இதை உற்சாகமாகக் கூறிவிட்டு மனைவியை ஓரக்கண்ணால் பார்த் நான், இவன்.
அவள் முகபாவனையில் இன் 112 ஓ 48

Page 51
னும் இறுக்கம் தளர்ந்ததாய் தெரிய வில்லை. சந்தோஷக் கதவுகள் திறப்பு வதற்கான பாரிய முயற்சியிது. பென் களின் மன நெகிழ்ச்சியில் தானே சந்தோஷங்கள் கொட்டிக் கிடக்கி றன என்றாலும், இதற்கான உடன்ப பதில் வருவதற்கான சாத்திய.
கூறுகள் தென்படவில்லை.
மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி யென்பதில் இவன் மனம் தளர்ந்து போகவும் இல்லை. ஒபீஸ் பியோல் சூடான தேநீர் கோப்பையை மே ை யில் கொண்டு வந்து வைத்தான் உறிஞ்சிக் குடித்தான். தேனாமிர், மாகச் சுவைத்தது. திடீரென தொகை பேசி சப்தம் எழுப்பியது. அழைப். மனைவியிடமிருந்து . கந்தசாமி ச தோஷத்தால் நெகிழ்ந்து போனான்.
"நானும் பிள்ளைகளும் ரெடிய இருப்போம். தவறாம இரண் மணிக்கு வந்திடுங்கோ! வெளியான போறதுக்கு, சரியா?”
"ஓக்கோ டார்லிங், கட்டாய வந்திடுவேன்." ஒற்றைப் பறவையா? இறகு விரித்து ஆகாய வெளியெங்கு இனிய கற்பனையில் மிதந்தான் மகிழ்ச்சிப் பெருக்கில் கைகால் ஓ வில்லை. ஒரு வாரமாகத் தடை பட்டுப் போன கணவன் மனை உறவு, இன்றிரவு அணையுடைத்து. பாயப் போவதை நினைத்துப் பு: காங்கிதமடைந்தான். நேரம் பகல் ப னொன்றைத் தாண்டியிருந்தது.
திடீரெனக் கந்தசாமியை அவக
மல்லிகை

T
T' | 51 5
எ .' * 4
T .ம்
மாக வரும்படி மெனேஜரிடமிருந்து அழைப்பு வந்தது. திடுக்குற்றான். பர வாயில்லை! அவர் இன்றும் வழக்க மான பல்லவியைத்தான் பாடுவார். மனைவிக்கு சுகவீனமென அரைநாள் விடுமுறை கேட்டுப் பெற்றுவிட்டுப் புறப்படலாம் என நினைத்தவாறு அவரைச் சந்திக்க விரைந்தான். மெனேஜர் மிகவும் பதற்றமடைந் திருந்தார். தித்தவர்
“சீ... சீ... வாரும். ஒரு முக்கிய விடயம். நாளை மறுநாள் கம்பனி இன்ஸ்பெக்ஷனுக்காக மேலாளர்கள் இங்கு வரப்போவதாக அறிவித்திருக் காங்க. இன்றிரவும் நாளையும் விழித் திருந்து நீர் டே அன்ட் நைட் வேலை செய்ய வேண்டும். துணைக்கு கணக் கரையும், கெசியரையும் இருத்திக் கொள்ளும். பைல்கள் யாவற்றையும் பிழையில்லாமல் சரிக்கட்ட வேணும்.
துண்டு விழும் தொகையை நான் வெளியால புரட்டித் தருகிறேன். பிறகு எடுத்துக் கொள்ளலாம். இன் றும் நாளையும் ஒரே இருப்பிலிருந்து வலு கவனமாக எல்லா வேலைகளை யும் வடிவாக முடிக்க வேண்டும். ஓக்கே?"
நாதா பேரிடியொன்று சரிந்து வந்து தலையில் விழுந்த அதிர்வு கந்த சாமிக்கு.
S'
") 5
இன்றைக்குப் பார்த்து காரி யத்தை கெடுத்துப் போட்டான் பாவி! பேயன்! மனம் பேதலித்து வாய்க்குள்
திட்டினான். மார்ச் 2012 * 49

Page 52
9 ல்
என்ன புறுபுறுக்கிறீர்?'' என மெனேஜர் கேட்க,
"இன்று என் மனைவிக்கு கடும் சுகவீனம் ஸேர். அரைநாள் லீவு போட்டு மருந்துக்குக் கூட்டிப் போக இருந்தனான்.'' துண்டு துண்டாய் வார்த்தைகள் - சிதறி உடைந்து விழுந்தன. ஆற்றாமையில் துவண்டு பரிதாபமாகக் காட்சி தந்தான். கை யிலைநாதன் கண்டிப்பான குரலில் ம
கூறினார்,
L  ெ:
"இங்க பாரும், மிஸிஸை டொக் டரிடம் கூட்டிப்போக யாரையாவது துணைக்கு அனுப்பும்! இங்கு நெருப்பு பற்றியெரியுது! உமக்கு விளங்க வில்லையா? சேர்மன் - டிரக்டர் எல்லாம் வரப்போறாங்கடாப்பா. முதல்ல இந்தப் பிரச்சினையை சோல்ட்பண்ணுறதுதான் நம்முடைய வேலை. போய் ஆகவேண்டியதை கவனியும். லீவெல்லாம் கிடையாது.''
 ெ9 9 6 6 5 ஐ - 5
உடல் மரத்து தலை சுற்றிக் கொண்டு வந்தது. தன் இருக்கை வந்து சோர்ந்து விழுந்தான். ஜி. எம். வெளி யில் புறப்பட தோள்பை சகிதமாக வந்தவர், இவனை நெருங்கி, அதி காரத் தோரணையில் கூறினார்,
E E 9 ஓடு 2 1 S G 2
"நான் வெளியால போறன். அலு வல் கிடக்கு. நாளைக்கு காலத்தால வருவன். எல்லா வேலைகளையும் சுத்தமாக முடித்து வையும். அசட்டை யாக இருந்தீரென்றால், உம்முடைய பிழைப்புக்கு ஆபத்து வரும். விளங்
மல்லிகை மார்ச் 20

தோ?'' எனக் கூறிவிட்டு அவனை ரக்கண்ணால் முறைத்தார்.
கந்தசாமி வாய்க்குள் கறுவினான். என் சந்தோஷத்தில் மண்ணள்ளிப் பாட்ட பாவி! இப்ப என் பிழைப் லேயும் மண்ணள்ளிப் போடப் பாக்கிறான். நாசமாய்ப் போக!"
- இன்னும் எத்தனை நாளைக்கு மனைவியின் கடுகடுத்த முகத்தை றிட்டுப் பார்க்க வேண்டி வருமோ? அவளுக்குக் கொடுத்த வாக்கை நிறை வற்ற முடியாமற் போகின்ற குற்ற புணர்வு அவன் மனதை பெரிதும் பாட்டியது. உடலெங்கும் வியர்வைத் Tளிகள் ஊற்றெடுத்தன. கடவுளே! இது என்ன அநியாயம்? பிதற்றியவாறு பக்கத்தில் அமர்ந்திருப்போரைப் பரி
ரபமாகப் பார்த்தான்.
அலுவலக வாசல் வழியாக மனேஜர் வெளியேறிக் கொண்டி ந்தார். ஒருபக்க கூன் விழுந்த அவ து முதுகுப் புறத்தை பார்த்த கந்த ரமிக்கு, அசிங்கம் பிடித்த ஒரு ராகத்தைப் பார்ப்பதைப் போன்ற சூயை வெளிப்பட்டது. இவன் நஞ்சு வருந்தி இப்படிக் கூறினான்,
இவனது மனிஷிக்கு ஜென்ம ஜன்மத்திலும் வயிற்றில் ஒரு பூச்சி ம் தரிக்காமல் இருக்கட்டும்! மனதில் ழுந்த ஆத்திரத்தை மௌன மொழி ால் கொட்டித் தீர்த்தான் கந்தசாமி.
12 ஓ 50.

Page 53
த*ன்
கொழும்பு 2012 ஜூன் 1, 2, 3,
உலகத் தமி கொழும்புத் தமிழ்ச் சங்கம் தனது 70 ஆம் ஆன 4ஆம் திகதிகளில் உலகத்தமிழ் இலக்கிய மாநாடு ஒன் ை தொனிப் பொருளில் நடத்தவுள்ளது. முதல் மூன்று நாட்களின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறும். நான்காம் நாள் சென்னை நடத்தும் “பாரதி விழா" இடம்பெறும்.
மாநாட்டு ஆய்வரங்குகளில் சமர்ப்பிப்பதற்கு சிறு மொழிபெயர்ப்பு இலக்கியம், விமர்சனம், செவ்விதாக்கம் இதழியல், இணையமும் வலைப்பதிவுகளும் முதலான 5 இருந்து கோரப்படுகின்றன.
ஆய்வரங்குகளில் பங்குபற்ற விரும்பும் ஆய்வாளர் 300 சொற்களுக்கு மேற்படாதவாறு கணினியில் தட்டச்சு கூடிய வகையில் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கவேண் 2012 மே 15ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு மின்னஞ்சல்
மாநாட்டு சிறட்பு மலர் ஒன்று வெளியிடப்படவுள் தொனிப்பொருளுக்கு அமைய மேற்குறிப்பிடப்பட்ட விடயட் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னர் கட்டுரைகள் மின்னஞ்சலில் அனுப்பவேண்டும்.
மாநாட்டில் பேராளராகக் கலந்து கொள்ள விரும் கட்டணத்தையும் செலுத்தி, அதற்கான பற்றுச்சீ..ையும் இல்ல வகையில் அனுப்பி வைக்கவேண்டும். பேராளர் கட்டணமாக இலங்கைப் பேராளர்கள் தலா 1500/= செலுத்த வேண்டும்
பேராளர்களுக்கு மாநாடு நடைபெறும் நாட்களில் வெளியீடுகள், கோப்பு ஆகியவை அடங்கிய பொதியும் , பேராளர்களாகச் சேர்ந்து கொள்ள வேண்டும். பேராளர் விண்ணப்பங்கள், ஆய்வுச் சுருக்கங்கள், கட்டுன்
இலக்கியக் குழுச் செயலாளர்
கொழும்புத் தமிழ்ச்சங்கம்
7, 57 வது ஒழுங்கை கொழும்பு 106, ரீலங்கா. மின்னஞ்சல் முகவரி : Sangaincoference2012
மேலதிக தொடர்புகளுக்கு :- தொலைபேசி இ விண்ணப்ப படிவங்களை சுயமுகவரியிட்ட முத்திரை ஒட்டி விண்ணப்பப் படிவங்களை தமிழ்ச்சங்கத்தின் www.colornb செய்யலாம்.
22-02-2012
மல்லிகை

த் தமிழ்ச் சங்கம்
4 ஆம் திகதிகளில் நடத்தவுள்ள ழ் இலக்கிய மாநாடு ஈடு பூர்த்தியை முன்னிட்டு இவ்வாண்டு ஜூன் 1ஆம் 2ஆம், 3ஆம். ற “தமிழ் இலக்கியமும், சமூகமும் - இன்றும், நாளையும்" என்ற அம் மாநாட்டுத் தொனிப் பொருளுக்கு அமைவான ஆய்வரங்குகளும் ன பாரதியார் சங்கமும் கொழும்புத் தமிழ்ச் சங்கமும் இணைந்து
பர் இலக்கியம், புனைகதை, கவிதை, கட்டுரை, ஆவணப்படுத்தல், ), நிகழ்த்துகலைகள், இலக்கிய கோட்பாடுகள், பெண்ணியம், பிடயங்கள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள் ஆய்வாளர்களிடம்
(கள். தாம் சமர்ப்பிக்க விரும்பும் ஆய்வுக்கட்டுரையின் சுருக்கத்தை |செய்து 2012 ஏப்பிரல் 15ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் டும், தெரிவுசெய்யப்படும் ஆய்வுச் சுருக்கங்களின் முழுவடிவம் செய்யப்படவேண்டும். ளது. இம்மலருக்கு கட்டுரை சமர்ப்பிக்க விரும்புவோர் மாநாட்டின் பரப்புகளில் ஏதாவதொன்றைத் தெரிவு செய்து எழுதலாம். 2012 எமக்குக் கிடைக்கக்கூடியதாக கணினியில் தட்டச்சு செய்து
புவர்கள் உரிய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து பேராளர் ணைத்து 2012 ஏப்பிரல் 15 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடிய
= ரூபாவும் வெளிநாட்டுப் பேராளர்கள் தலா 25 அமெரிக்கடொலரும்
> உணவு, தேநீர் போன்றவற்றுடன் மாநாட்டு சிறப்புமலர், ஏனைய வழங்கப்படும். ஆய்வாளராக கலந்து கொள்ள விரும்புபவர்களும்
Dரகள் என்பவற்றை அனுப்ப வேண்டிய முகவரி:
@gmail.com லக்கம் - +94 773 956 761 ப (நீண்ட) கடித உறை ஒன்றை அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம். tamilsangam.com. என்ற இணையத்தளம் மூலமும் பதிவிறக்கம்
ஆஇரகுபதி பாலரீதரன் பொதுச்செயலாளர் கொழும்புத் தமிழ்ச்சங்கம்
மார்ச் 2012 ஒ 51

Page 54
உலகம் அ
உலகம் அழிந்து விடும் என்ற ஆருடம், அவ்வப்போது வெளிப்படுகின்றது - பல வருடங்கள் ஆனாலும் உலகம் அழியவில்லை. நன்றாகச் சிந்தியுங்கள் : உலகம் அழியவில்லையா? உலகத்தின் பல்வேறு நாடுகள் அழிவைச் சந்திக்கின்றனவே. ஊடக அறிக்கைகளைப் பாருங்கள். லண்டனில் பனிமழை - பலர் மரணம் சீனாவில் பூகம்பம் பலர் மரணம் தாய்லாந்தில் சூறாவளி பலர் மரணம் ஏன் நமது நாட்டில் கூட சுனாமி தாக்கி ஆயிரக் கணக்கானோர் பலியாவில்லையா? செயற்கையான அனர்த்தத்தில் நூற்றுக்கணக்கானோர் பலியாகவில்லை
இடங்கள் பறிபோகவில்லையா? இவைகள் எல்லாம் அழிவுகள் இல்லை இவ்வாறு ஒவ்வொரு நாட்டிலும் அழிவுகள் ஏற்படவே செய்கின்றன. ஓரேடியாகப் பூமிப்பந்து அழிந்துவிடும் என்பது நமது கற்பனை எனவே தவணை முறையில் உலகம் : நம் கண் முன்னே காண்கிறோம். அழிந்த பகுதிகள் மீள உருவாகும் என்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. எனவே உலக அழிவு நம் கண் முன்ே நடக்கிறது என்பதுதான் உண்மை.
மல்லிகை மார்ச் .

ழியுமா?
- அன்புமணி
Tக
மயா?
லயா?
அழிவதை
ன
2012 52

Page 55
சுமார் 56 ஆண்டுகளுக்கு முன்னர் 'மகா சபை ஆண்டு விழாவொன்றை யா 'முடித்தது. அவ்விழாவுக்கென்றே பாரி 'வைத்தது. அந்த மாநாட்டு மலரில் ர இம்மலரைத் தயாரித்தவர்கள், மகாசை
' எனது மொத்தச் சிறுகதைகளையு இணைத்து வெளியிடத் திட்டமிட்டிருந்தே இருக்கவில்லை. அதில் ஒரு சிறுகல 'கோவனின் பாரிய தேடலில் இக்கதை . 'மகிழ்ச்சியுடன் தட்டச்சில் பதிந்து எனது ' இனக் கலவரம், இனச் சங்காரம் மட் இயல்பான மானுட உரிமை பெறக்கூட எ 'தாண்டி இன்று கரை சேர்ந்துள்ளது என் ' மூலம் நிரூபிக்கின்றது.
-- உப ..
31
IDIT
யாழ்ப்பாணப் பட்டின ஆஸ்பத் வார்ட்டினுள்ளே ஒரு மூலையில் நி.
அவன் கண்கள் அங்குமிங்கு போவதும் வருவதுமாக இருந்தனர். அடிக்கடித் தென்பட்டனர். குழந் அதிகமாகப் பெண்கள்தான் அங்கு க
மருந்துகளின் நெடி ஞானசுந்த மணம் அது!
பகல் பன்னிரண்டு மணிக்கும் ; மது. இந்த இடை நேரங்களில் ஆள் பரபரப்புடனும் காணப்படும். கார களும் இனசனங்களும் பார்த்துப் டே
தான் பயன்படுத்துவார்கள்.
மல்லிகை 1

'அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் இப்பாணத்தில் வெகு கோலாகலமாக நடத்தி ய ஆண்டு மலரொன்றையும் வெளியிட்டு நானெழுதிய சிறுகதையே இந்தக் கதை. பயைச் சேர்ந்த படைப்பாளிகளே.
ம் ஒரு பாரிய தொகுதிக்குள் ஒருங்குசேர கன். எனது படைப்புகள் பல எனது கைவசம் த இதுவாகும். இலக்கிய நண்பர் இளங் அவரது கைவசம் கிடைக்கப் பெற்றதும் மன
கைவசம் சேர்ப்பித்தார். நன்றி. |
நமல்ல, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் பரம்பரை இத்தனை எத்தனை கஷ்ட நிஷ்டூரங்களையும் பதை கடந்த கால வரலாறு இந்தச் சிறுகதை
'- டொமினிக் ஜீவா
22
னுடம்
தேர்வு
- டொமினிக் ஜீவா ந்திரியின் குழந்தைகள் பகுதியான 'சில்ரன் ன்று கொண்டிருந்தான், ஞானசுந்தரன். ம் சுழன்று வட்டமிட்டன. சனங்கள் வெள்ளைக் கலையுடுத்த சில நர்ஸ்கள் தெ நோயாளிகளின் பகுதியானபடியால் காணப்பட்டனர்.
பெத்த குத்து ரனின் மூக்கைத் துளைத்தது. புதுவகை
- 2
ஒரு மணிக்கும் இடைப்பட்ட ஓய்வு நேர பத்திரி எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் ணம் - நோயாளிகளைப் பார்வையாளர் சிப் போவதற்கு இந்த இடைநேரத்தைத்
மார்ச் 2012 ஓ 53

Page 56
சனங்கள் வந்து கொண்டிருந் தனர். சிலர் போய்க்கொண்டிருந் தனர்.
- ஞானசுந்தரனும் தன்னுடைய சகோதரியின் மகனைப் பார்ப்பதற் காக வந்திருந்தான். விளையாட்டுத் தனத்தால் வேலியில் ஏறி, கால் சறுக்கி விழுந்தது காரணமாக அவ னின் முழங்கை எலும்பு பிசகி விட்டது.டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத் திருந்தனர். அதைப் பார்த்துப் போகத்தான்ஞானசுந்தரன்வந்திருந் தான். கையோடு சகோதரியின் பகல் உணவை கொண்டு வந்திருந்தபடி யால் சகோதரி சாப்பிடப் போய்விட் டாள். மருமகனுக்குக் காவலாக அவன் படுத்திருந்த கட்டிலுக்கு அருகில் நின்றுகொண்டிருந்தான்.
நேரம் ஊர்ந்து கொண்டிருந்தது. சாப்பிடப் போன சகோதரியும் இன் னமும் திரும்பி வரவில்லை. பெண் கள் விவகாரமே இப்படித்தான். ஆஸ்பத்திரியாக இருந்தால் என்ன? அடுப்படியாக இருந்தால் என்ன? பேச இரண்டு பேர் கிடைத்து விட் டால்... அவ்வளவுதான்! " நேரப் போக்குக்காக சுற்றும் முற் றும் கண்ணோட்டம் விட்டான்ஞான சுந்தரன். வார்ட்டில் சனங்கள் ஓரளவு நிறைந்து விட்டனர். வெள்ளைக்காரத் தாதி ஒருவர் ஒவ்வொரு கட்டிலாகச் சென்று குழந்தைகளை விசாரித்து விட்டுப் புன்சிரிப்புடன் அவர்களின் கன்னங்களைக் கிள்ளி விட்டுக் கொண்டு சென்று கொண்டிருந்தாள். ((
" 8
த
மல்லிகை மார்ச் 2

- ஞானசுந்தரன் அதைக் கூர்ந்து பார்த்துக்கொண்டு நின்றான். சிந் தனை சுழித்துப் புரண்டது. அவன் சிந்திக்கத் தெரிந்தவன். சுயமாகச் சிந்திக்கும் தனிப்பண்பு கொண்ட வன், அவன்.
அ எண்ணிப் பார்க்கவே முடியாத தொலை தூரத்தில், மேல் நாட்டில் ஏதோ ஓர் ஊரில் பெண்ணாகப் பிறந்து, வளர்ந்து, தேசம் விட்டு மொழியை மறந்து, தாய் - சகோ தரங்கள் - இனசனங்கள் அத்தனை பேரையும் உயிருடனே துறந்து, முன் பின் தெரியாத - பாஷைகளையே முன்பின் புரிந்து கொள்ள முடியாத தேசத்தில், ஊரில் இவர்களால் எப் படிப்புன்சிரிப்புடன் சேவை செய்ய, பாசம் காட்ட, அன்பு போதிக்க முடி நிறது? வெறும்... வெறும் மத நம் பிக்கை கொண்ட எண்ணம் மட்டுந் நானா? அல்லது...
''கொஞ்சம், அந்தக் கரண்டி யைத் தாறீங்களா?”
சிந்தனை இழை அறுந்தது. திரும்பிப் பார்த்தான், ஞானசுந்தரன்.
"தோடம்பழத் தண்ணி கரைப்ப தற்குக் கரண்டி இல்லை. என்னு டைய மிஸிஸம் சாப்பிடப் போய் பிட்டா. அதுதான் அந்தக் கரண்டி ...''
பக்கத்துக் கட்டிலில் படுத்திருந்த பெண் குழந்தையின் தகப்பனாரான அந்த மனிதனை அப்பொழுதுதான் நானசுந்தரனால் நன்றாகக் கவனிக்க முடிந்தது. கறுப்புப் பிளானல் நீட்டுக்
D12 54

Page 57
காற்சட்டை போட்டு, வெள்ளை சேர்ட்டுப் போட்டிருந்தான். வயது முப்பது அல்லது முப்பத்திரண்டு தான் இருக்கும். கண்ணுக்குக் கண் ணாடி அழகு செய்தது. நடு உச்சிட பிரித்துத் தலையை நன்றாக வா இருந்தான். சட்டைப் பையில் பார்க்க கர் பேனா மினுமினுத்தது. இடது கையில் தங்கச் சங்கிலியிட்ட கைக் கடிகாரம் ஜொலித்தது.
பார்ப்பதற்குப் பிரமச்சா போலக் காட்சி தந்த அலட்சியம் செய்ய முடியாத அந்த வாலிபன் பெரிய இடத்துப் பிரமுகனை போலக் காட்சி தந்தான். சென்ட் மணத்தின் வாடை அடிக்கடி மெல் லியதாகக் காற்றில் மிதந்து வந்தது. - இவ்வளவையும் கிரகித்து புரிந்து கொள்ள ஞானசுந்தரனுக்கு அதிக நேரமாகவில்லை. அறிமுகம் புன்முறுவலுடன் கரண்டியை எடுத்
துக் கொடுத்தான்.
ஆஸ்பத்திரிக்கு வருகிறவர்கள் ரெயில் சிநேகிதர்களைப் போன்ற வர்கள். பரஸ்பரம் எப்பொருட்களை யும் பரிமாறிக் கொள்ளுவார்கள் தங்கள் குடும்ப விவகாரங்களை
கூடத்தான். இது சர்வசாதாரணம் இதையொட்டித்தான் அவன் உதவி செய்தான்.
சிறிது நேர வேலைக்குப் பின் குழந்தைக்கும் தோடம்பழத்தண்ன ரைக் குடிக்கக் கொடுத்துவிட்டு பேச்சைத் தொடர்ந்தான், அந்த வாலிபன். "என் பெயர் நடராசா, சந்
மல்லிகை 1

பி
க்
e T•
கானையில் இருக்கிறோம். கொழும் பிலே வேலை. இவ என்னுடைய மகள், வாசந்தி.''
எதைப் பற்றியுமே கேட்க முனையாமலிருக்கும் பொழுது இப் படி அறிமுகப் படலம் நடத்தி முடித்த நடராஜா என்ற அந்த வாலி பனை ஆச்சரியத்துடன் பார்த்தான், ஞானசுந்தரன். விசித்திரமான இந்த அறிமுகத்தைத் தொடர்ந்து அபாய அறிவிப்பும் நிகழ்ந்து விடலாம் என்று மனதிற்குள் பயப்பட்டான். சகோதரி வந்துவிட்டால், இந்த ஆபத்தைத் தவிர்த்து விடலாம் என்று சகோதரி சென்று மறைந்த திக்கை எட்டி யெட்டிப் பார்த்தான். மனம் அரித் தது. காவல் நிற்க எரிச்சலாகவும் இருந்தது.
அவன் பயந்தபடியே காரியம் நடந்தது. "நீங்கள் எங்கு இருக்கிறது?" என்று கேட்டான், நடராஜா. அவ னுக்கும் பொழுது போகவேண்டி இருந்தது. சும்மா இப்படிக் கேட்டு
வைத்தான்.
- 2 ; இப்படியான விசாரிப்புகளைக் கட்டோடு வெறுப்பவன் ஞானசுந் தரன். எனவே முகத்தைச் சுளித் தான். தமிழர்களிடம் ஒரு அநாகரிகப் பழக்கம் இருக்கிறது. பஸ்ஸில், ரெயி லில் ஏன் சாவீட்டிலும் கூட ஊர், உத்தியோகம், குலம், கோத்திரம், சம்பளம், கலியாணம் செய்தது, செய் யாதது ஆகிய அத்தனையையும் வாய் விட்டே கேட்டு விசாரிப்பார்கள். இது கேவலமான ஒரு செய்கை என்று
S'
* ='
மார்ச் 2012 : 55

Page 58
அவர்கள் புரிந்து கொள்வதே இல்லை. இவர்கள் எந்த அநுபவத் தைக் கொண்டும் தங்கள் மனப்பான் மையை மாற்றிக்கொள்ள முயற்சிக் கவே மாட்டார்கள். ரெயில், பஸ் பிர யாணத்தில் பலதரப்பட்ட சுபாவ முள்ளவர்களைச் சந்திக்க வேண்டி யிருக்கும். ஆனால், இங்கு ஆஸ்பத் திரியில் - ஆஸ்பத்திரி கூட, இதற்கு விதிவிலக்கல்ல என்று எரிச்சல் பொங்க எண்ணினான். ஆயினும் சம்பிரதாயத்துக்காக ஆனைக் கோட்டை" என்றான் ஞானசுந்தரன்.
கேள்விக்கணை ஓயவில்லை. ஓய்ந்து விட்டால்தான் அது தமிழ னின் தனிப்பெரும் பரம்பரைப் பண் பாடல்லவே. தொடர்ந்து கேட் டான், நடராஜா. "என்ன உத்தி யோகம் பார்க்கிறீங்கள்?'' கேட்டு விட்டுத் தொடர்ந்து பதிலையும் அவனே ஊகித்துச் சொன்னான். "கொழும்பிலே கவுமென்ட் வேலை யாக்கும் என்ன, சரிதானே?'' தனது கண்டுபிடிப்பைத் தானே மெச்சிக் கொள்பவனைப் போல், ஞானசுந்த ரனைப் பார்த்துப் புன்சிரிப்புச் சிரித்தான்.
"இல்லை! நான் ஊரில் படிப்பிக்கிறன்.''
தி"ஓ! மாஸ்டரா?" அவன் முகத்தில் ஓர் அலட்சிய மனோபாவத்தின் ரேகை மின்னி மறைந்ததை ஞான சுந்தரன் கவனிக்கத் தவறவில்லை. தோல்வியை ஒத்துக்கொள்ளாத முறையில் தன்னுடைய முகமாற்றத்
மல்லிகை மார்ச் 2

தைச் சட்டென்று மாற்றிக்கொண் . டான். "நான் முதலில் அப்படித்தான் நினைச்சேன். ஆமாம், நான் அப்படித் தான் எண்ணினேன்."
அறிவு வளராத குழந்தையைப் போன்ற அந்த வாலிபன் தான் தவ மாகச் சொன்னதைச் சரி செய்வதற் காக எடுத்துக்கொண்ட முயற்சியை" யும், அதை உண்மையாக்க, நம்ப வைக்க பட்ட பாடுகளையும் நினைத்த பொழுதுஞானசுந்தரனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. மனதிற்குள் சிரித்துக்கொண்டான்.
" "மாஸ்டர்! நீங்கள் மாஸ்டராக இருக்கிறபடியால் ஒன்று ஞாபகம் வருகுது. இந்தப் பள்ளிக்கூட விவ காரம்..." பேசிக்கொண்டு வந்ததை முடிக்காமல் இடையிலேயே விட்டு விட்டு என் கண்களைக் கூர்ந்து பார்த் தான். நடராஜா முதலில் ஏற்பட்ட ஊகிக்கிற தோல்வியைப் போல ஆகி விடக் கூடாதே என்ற ஆவல் அவன் மனதில் நிறைந்திருந்தது. "என்ன மாஸ்டர் சொல்லுறீங்கள்?" -- "எதைக் கேக்கிறீங்கள்?"
"அதுதான் இந்தப் பள்ளிக்கூடங் களில் எல்லாச் சாதியும் சேர்ந்து படிக் கிற விஷயத்தைத்தான் கேட்கிறன். நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்?''
வேடிக்கையான இந்த விவாதத் தில் வென்றுவிட வேண்டும் என்று நினைக்கிற நாற்காலிக் கனவுவாதி களைப் போல, அவன் பரபரப்புடன், ஞானசுந்தரனைப் பார்த்துத்
2012 ஓ 56
<<

Page 59
தொடர்ந்து கேட்டான், ''இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக் கிறீங்கள்?"
'உங்கள் அபிப்பிராயங்களைக் சொல்லுங்கள். பிறகு நான் சொல்லு கிறேன்” ஞானசுந்தரன் தட்டிக் கழிச் கும் பாவனையில் சொன்னான்.
''நான் கொழும்பிலே வீடெடுத்து இருந்தனான். அங்கேதான் என் மகள் படித்தவள். இந்தச் சிங்களச் சண் டைக்குப்பிறகு சங்கானைக்கு வந்திட் டோம். இப்ப சங்கானைப் பள்ளிக் கூடத்தில்தான் வாசந்தி படிக்கிறாள்.
இப்படியான சம்பாஷணைகளில் இடையிட்டுப் பேசினால் உணர்ச்சி தோன்றும். ஆக்ரோஷம் பிறக்குப் என்பதை அநுபவ உண்மையாக உணர்ந்த ஞானசேகரன், வார்த்தை களால் உணர்ச்சியைக் கிண்ட நினைத் தான். "இப்ப ஒரு கரைச்சலும் இல்லையே, உங்களுக்கு? சொல்லுங்க என்ன கரைச்சல்?” என்றான்.
"கரைச்சலா? அதையேன் கேக் கிறீங்க? சிங்களவனிட்டே கொழுப் பில் அடி வாங்கினதுகூட எங்களுக்கு அவமானமில்லை. வெட்கமில்லை ஊரிலே - நாங்க பிறந்து, வளர்ந்தது படித்துப் பெரியவர்களான ஊரிலே எங்களை நாலுபேர் மதிக்கவில்லை யென்றால், கொழும்பிலே இருந்து ஓடியந்த மாதிரி, பிறந்த ஊரிலே இருந்து நாங்க எங்கே ஓடுகிறது?”
"ஆத்திரப்படாமல் விஷயத்தை சொல்லுங்க. என்ன நடந்தது?” சொல் லப் போகிற விஷயத்தை ஓரளவு
மல்லிகை |

ச' |
5
ஊகித்துப் புரிந்து கொண்டாலும், நட ராஜாவின் வாயினாலேயே விஷயம் முற்றாக வெளிவர வேண்டும் என்ற ஆவலினால் பரபரப்படையாமல் கேட்டான், ஞானசுந்தரன். * "ஆத்திரப்படாமல் இந்த அநியா யத்தை எப்படிச் சொல்ல முடியும், சொல்லுங்க பார்ப்பம். வாசந்தி படிக் கிற பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாதது குற்றமாம்.''
"பள்ளிக்கூடப் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பத் தவறி, அதற்குத் தகுந்த காரணமும் கூறாமல் இருந்தால் எந்த ஹெட்மாஸ்டரும் நடவடிக்கை எடுக்கத்தானே செய் வார்? இதிலென்ன அதிசயம்?" தான் ஆசிரியர், தனக்கும் பள்ளிக்கூடச் சட்டம் சிறிது தெரியும் என்பதைக் காட்டிக் கொள்ள இதைச் சொல்லி
வைத்தான், ஞானசுந்தரன்.
"காரணம் என்ன, கத்தரிக்காய்க் காரணம்!'' வார்த்தைகள் வெறுப் பைக் கக்கின. படுத்திருந்த குழந்தை யின் தலையணையைச் சரி செய்து மகளை நேராகப் படுக்க வைத்து விட்டுத் தொடர்ந்து சொன்னான் நடராஜா, "காரணம் என்ன? எங்களு டைய பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப விருப்பமில்லை. கண்ட சாதிகள், நிண்ட சாதிகள் எல்லாம் வந்து படிக்கும். அதுகளுடன் சேர்ந்து எங்களுடைய பிள்ளைகள் படிக்கிற துக்கு எங்களுக்கு இஷ்டமில்லை!''
சற்று நேரம் மௌனம் நிலவியது. மறுபடியும் அவன்தான் பேசினான். மார்ச் 2012 ஓ 57

Page 60
''என்ன இருந்தாலும் மாஸ்டர், இதை நீங்கள் ஒத்துக்கொள்ளத்தான் வேணும். இந்த எளிய சாதிகளிடம் நல்ல ஒழுக்கமோ அல்லது நல்ல பண் பாடோ, நன்றி உணர்ச்சியோ மருந் துக்கும் கிடையாது. இதைப் பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?'' கோழிச் சண்டையில் வெற்றி பெற்ற சேவல் இறக்கையை அடித்துக் - கொக் கரக்கோ கூவி விட்டு, அலட்சியமாக அங்குமிங்கும் பார்த்து நிற்குமே, அதைப் போன்ற அநாயசமான பார்வையுடன் நடராஜா ஞானசுந்த ரனைப் பார்த்தான். வெகுளித்தனம் பெண்களுக்குக் கவர்ச்சி தரும் ஆபரணமாக இருக்கலாம். ஆனால் அது ஆணிடம் தென்படும் பொழுது?
குதர்க்கம் பேசும் சோம்பேறி மனோபாவமுள்ள குழந்தைத்தன மான இந்த வார்த்தையைக் கேட்ட பொழுது ஞானசுந்தரனுக்கு அழு வதா சிரிப்பதா என்பதே புரிய வில்லை. நாகரிகமாக உடுத்துக் கன வானைப் போலக் காட்சி தரும் அந்த வாலிபனின் வார்த்தைகள் ஞான சுந்தரனைத் திகைக்க வைத்தன.
கொழும்பில் உத்தியோகம் வகிக் கும் ஒரு தற்கால வாலிபன் இப்படி யாக வெறி கொண்டு பேசுவான் என்று அவனால் கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை. குழந்தை களுக்குத்தான் பெயரே சொல்ல முடியாத சில நோய்கள் வருமாம். அதைப்போன்று புரிந்துகொள்ளவே முடியாத சமூக நோய்தானா, இது?
பி
மல்லிகை மார்ச் 2

"என்ன மாஸ்டர் பேசாமல் நிக் கிறீங்கள்?"
"ஓ... எனக்கொன்று ஞாபகம் வரு கிறது. கிளி ஒன்றைப் பல காலம் கூட் டிலே அடைத்து வைத்து வளர்த்து விட்டு, அதைத் துறந்து விட்டால் அந்தக் கிளி வானத்தில் பறக்காது. வளர்ந்த கூட்டைச் சுத்திச் சுத்தித் தான் வரும். புத்திசாலிகள், உண்மை மனிதர்கள் கிளியைக் கோபிக்க மாட்டார்கள். அதன் சிறகையும் குறை கூற மாட்டார்கள். கிளியின் சுதந்திரத்தைப் பறித்து, சுதந்திர எண்ணத்துடன் வானவீதியில் பறக் கும் சக்தியை மழுங்க அடித்த மனிதப் புல்லுருவிகளைத்தான் திட்டு
வார்கள்.
ஆம் அதைப் போல... .
-::-)
தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லக் கூடியவர்களான உண்மை உழைப்பாளிகளின், கிராமங்களில் இருந்து தமிழ் பேசித் தமிழ் சாகாமல் காத்தவர்களின் மனிதத் தன்மையை, மனிதப் பண்பை, ஏன் அவர்களின் மனித ஆத்மாவையே காலம் கால மாகக் கொன்றவர்கள், சாகடித்தவர் கள் அவர்களிடம் எதையாவது எதிர் பார்க்கலாமா? குளிக்கக் கிணறில்லை. தவளி அள்ளி விட்டால் கொலை! படிக்கக் பள்ளிக்கூடமில்லை. முயற்சி செய்து சேர்த்து விட்டால், குடிசைகள் கொளுத்தப்படும். இவர்களுக்கு ஒரே யொரு உரிமைதான் இருக்கிறது. சாகிறதுக்கு அல்லது தற்கொலை செய் 2012 ஐ 58

Page 61
கிறதுக்கு!'' மனதிலிருந்த ஆவேசம் நீண்ட நாட்களாக நெஞ்சில் கொதித்துக் கொண்டிருந்த கொதிப்பு வார்த்தைகளாக, சொற் பாணந் களாக வெளிவந்தன.
''அது சரி... உங்களுக்கேன் இல் வளவு கோபம் வருகிறது?"
''நான் கூட நீங்கள் கேவலமாகப் பேசும் எளிய சாதியைச் சேர்ந்தவன் அதாவது தாழ்த்தப்பட்டவன்!"
இன்று எவருமே வாய் திறந்து பேச வெட்கப்படும் இந்த அவமான கரமான பிரச்சினையைப் பற்றி பேசிவிட்டு தலை குனிந்து கொள் ளாமல் நிமிர்ந்து நின்று தன்னையே பார்த்துக் கொண்டு நிற்கும் நட ராஜாவை ஒரு கணம் கூர்ந்து பார்த்த தான், ஞானசுந்தரன்.
சாதி வெறி கூட ஒரு பயங்கர மான வியாதி. அது பகுத்தறிவை . சூனியமாக்கி மனிதனைக் கோடை யாக்கி விடுகிறது இந்த எண்ணம் அவன் நெஞ்சத்தில் நிழலாடியது.
மனச்சாட்சியுடன் தர்க்க வாதம் தனக்குள்ளே செய்து பார்த்தான் நடராஜா. குழந்தையின் பிடிவாதம் தைப் போன்ற ஒரு வகைப் பிம் வாதத்துடன், "என்ன சொன்னாலும் சரி, எங்களுடைய பிள்ளைகளை இப்படியான பள்ளிக்கூடங்களுக்கு அனுப்ப மாட்டோம். ஆமாம் அனுப்பவே மாட்டோம்!'' என்றான்
மல்லிகை

ஞானசுந்தரனின் வாய் துடி துடித்தது. தேகம் பதறியது. பொறு மையை ஒருகணம் இழந்து விட் டான். நிதானம் தவற அவன் பண் பட்ட மனம் இடம் தரவில்லை. நிமிர்ந்து நின்று கேட்டான்.
''பலதும் பத்தும் படிக்கிற பள்ளிக்கூடத்துக்கு எங்கள் உயர் சாதிக் குழந்தைகளை அனுப்ப மாட் டோம்; படிப்பிக்க மாட்டோம் என் கிறீர்களே அது சரியென்றால் கண்ட சாதிகளும் நிண்ட சாதிகளும் வந்து மருந்து குடிக்கிற, படுத்திருக்கிற ஆஸ்பத்திரிக்கு நீங்கள் மாத்திரம் வரலாமா? உங்கள் பிள்ளைகள் வந்து படுக்கலாமா?"
த்
அந்தக் குழந்தைகளின் வார்ட் டில் பரிதாபத்துக்குரிய குழந்தை யைப் போல, வாய் செத்து மெளன மாக நின்றான், நடராஜா.
ச்) |
3 *
அனுங்கல் சத்தம் கேட்டது.
ம் ம் ம் ஞானசுந்தரன் மருமகனைத்
திரும்பிப் பார்த்தான். நடராஜாவின் கண்களும் கவனித்தன். அங்கே அந்த வெள்ளைக்காரத் தாதி மருமகனின் போர்வையை ஒழுங்குபடுத்திவிட்டு அதன் கன்னத்தில் முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். கூடவே, கையில் வைத்திருந்த ஒற்றைப் பூவொன்றை அதன் காதில் செருகிய பின்னர் புன் முறுவல் பூத்தபடி நடந்து கொண்டி ருந்தாள்.
S 6'
மார்ச் 2012 59

Page 62
យ
( 1 ம்
யாழ் இலக்கிய YARL LITERA இங்ைகை இல SRI LANKA LI
இலங்கை இலக். 2011ஆம் ஆண்டு வெ
நூல்களுக்கான வ
இலங்கை இலக்கியப் பேரலை நாவல், காவியம், கவிதை, சிறுவ பல்துறை நாடகம், அறிவியல், மொழியிலிருந்து தமிழில்) ஆகி நூல்களுக்கு தெரிவின் மூலம் விரு
கடந்த 2011 ஆம் ஆண்டு வெ இலக்கிய நூல்களுக்கு விருதுகள் குறிப்பிட்ட ஆண்டில் நூலினை நூலின் ஒரு பிரதியை விருதின் தே
சி.சிவதாசன் செயலாளர், இலங்கை இலக்கிய இல, 58, கனகரத்தினம் வீதி, அ யாழ்ப்பாணம்.
ம்.காம் என்னும் முகவரிக்கு தாபலிலே வைக்குமாறு அல்லது சேர்ப்பிக் நூல்கள் இலங்கையில் பிரசுரமான
மல்லிகை மார்ச் 2

வட்டம் SRY CIRCLE அக்கியர் இராவை TERARY COUNCIL
கியப் பேரவை வளிவந்த இலக்கிய விருது வழங்கல்
வ வருடா வருடம் சிறுகதை, ர் இலக்கியம், ஆய்வு, சமயம்,
மொழிபெயர்ப்பு (வேற்று ஒய துறை சார்ந்த இலக்கிய கது வழங்கி வருகின்றது.
ளிவந்த இத்துறைகள் சார்ந்த - வழங்கப்பட இருப்பதனால் வெளியிட்ட நூலாசிரியர்கள் ர்வுக்காக 05.04.2012இற்கு முன்
பப் பேரசை, ரியாலை,
P ਦੀ ਕੁਰ
மா அல்லது நேரிலோ அனுப்பி தமாறு கேட்கப்படுகின்றனர். எதாக இருக்க வேண்டும்.
2012 ( 60

Page 63
வேத ஆகம -
உலகக் கவிஞன்
- செ.கணேசலிங்கன்
பவ்லோ நெருடா சிலி நாட்டைச் ே மொழியாகக் கொண்டு கவிதைகள் யா ஸ்பெயின் நாட்டில் 1936 - 39ல் நடைெ எல்லோரையும் ஆயுதம் ஏந்திப் போராட மக்கள் கொல்லப்பட்டனர். இப்போரே நெ ஒரு காலையில் அனைத்தும் எரிந்தது ஒரு காலையில் திரண்டது... அதன் பின்னர் துப்பாக்கி ரவைகள் அதன் பின்னர் இரத்தத் துளிகள் குழந்தைகளின் இரத்தம் தெருவழியே ஓ நான் இரத்தத்தைக் கண்டேன்... கொடூரமான படைத் தலைவன்... மலர்களல்ல, ஒவ்வொரு புதைகுழியிலும் சொந்த நாட்டில் மிகப் பெரிய எரிமலைகள் வந்து பார் தெருக்களில் இரத்தம்...
நெருடா 1927-43 காலகட்டத்தில் சில செனட்டராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். நோபல் பரிசு
1978ல் நோபல் பரிசு பெற்றார். 19. 1945ல் 12 பகுதியாக நீண்ட கவிதை 6 இங்காஸ் நாகரிகத்தை அழித்ததைக் | போதும் இங்காஸ் நாகரிகத்தின் அழிலை
1973ல் மரணிக்கும் வரை சோவிய புரட்சியையும் மாலுவையும் பாராட்டத் த
நெரூடாவின் இப்பாடல் இதயத்தை என் பெண்ணே, உன் இதயத்தை ஏழை பக்கம் வைத்தாய், உன் ஏழைக் கால்கள்
மல்லிகை

'உலக நிலப்பரப்பில் ஒரு சிவந்த ரோசா பூத்தது'
சிலி நாட்டு பவ்லோ நெருடா, லெனின் தலைமையில் சோவியத் ரஷ்யாவில் நடந்த 1 அக்டோபர் புரட்சியை ஒரே வரியில்
பாடினான். சர்ந்த போதும், ஸ்பானிஷ் மொழியையே தாய் வையும் தன் தாய் மொழியிலேயே பாடினார். பற்ற பாசிச யுத்தம் உலகின் அறிஞர்களால் ச் செய்தது. மூன்று ஆண்டுகளில் 7.5 இலட்சம் ரூடாவை கவிதை எழுதத் தூண்டியது என்பார்.
(ved By ਹਨ ਕਿ
டியது....
மனிதர்கள்...
ளாக
. பி நாட்டு அரசியலிலும் ஈடுபட்டிருந்தார். கம்யூனிச
13ல் பேரு சென்று 'மஞ்சு பிச்சு' மலையில் ஏறி ாழுதினார். ஸ்பானியர் ஈவிரக்கமின்றி முற்றாக கண்டித்தார். அன்னார் ஸ்பானிஷராக இருந்த வக் கவிதையில் கண்டித்துப் பாடினார்.
த் நாட்டு அரசியலை ஆதரித்தே வந்தார். சீனப் பறவில்லை. மாஓதுங்சிசம் எனப் பாடினார்.
த தொடும்:
கள்
மார்ச் 2012 ஓ 61

Page 64
3 க
கற்களுடன் பழகியவை, உன் வாய் என்றும் இனிப்புகளையோ, ரொட்டிகளையோ கண்டதில்லை... உன் தாய் இன்றும் துணிகளைத் தோய்க்கிறாள் என்னுடன் சேர்ந்து ... அதனாலேயே தோழி நான் உன் அருகில் ...
சிலி நாட்டில் சல்வடோர் அலண்டோ ஆட்சி வீழ்த்தப்பட்டு இராணுவ ஆட்சி ஏற் பட்டபோது, அவரும் நெருக்கடிகளுக்கு ஆட்பட்டார். இராணுவத்தினர் வீட்டைத் துருவி ஆராய்ந்தனர்.
'நன்கு பாருங்கள். கவிதைகள்தான் கிடைக்கும்!'' என்றார்.
இறுதி வினாக் கவிதை
= 6
22கப்
சு.
தி
at 6
68ஆவது வயதில் புற்று நோயால் பாதிக்கப்பட்டபோதும், 320 ஈரடி வினாக் களில் கவிதை வடித்தார். யாவும் தேசிய மல்ல. உலக நோக்கு. சில வினாக்கள் :
* விண்ணகத்தில் தேவாலயங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
* எந்த அநீதிக்காக மழை தனது மகிழ் வைக் கண்ணீராக்குகின்றது? * எல்லா நதிகளும் கலப்பதனால் கடலுக்கு எங்கே இருந்து வந்தது உப்பு?
* அசையாது நிலையாக நிற்கையில் சூறாவளிக்கு என்ன பெயர்? * ஒளியை நோக்கி மேலே செல்ல வேண்டும் என்று வேர்களுக்கு எப்படித் தெரியும்? தெரியும்?
அவசர காலம் ஊரடங்குச் சட்ட வேளையிலே அவரது மரண ஊர்வலம். 6
இராணுவ ஆட்சி விதிகளை மீறி நடந்தது.
மல்லிகை மார்ச் 2

'தோழர் நெரூடா எங்களுடன் வாழு வார்' என ஊர்வலத்தில் குரல்கள் எழுந்தன.
உலகக் கவிஞன் என நெரூடாவைக் கூறும்போது, அவர் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து, உலக அரசியல், முதலாளித்து வத்தின் ஏகாதிபத்திய வளர்ச்சி, முதலாவது உலகப் போர், ஸ்பானிஷ் உள்நாட்டு யுத் தம், சோவியத் புரட்சி, இரண்டாவது உல கப் போர், சோவியத் புரட்சி யாவையும் நன்கு அறிந்தவர். ஏழை மக்கள், தொழி லாள வர்க்கத்தின் சுரண்டல், வறுமைத் துன்பத்தைக் கண்டு மனம் கொதித்தார். வர்க்கப் புரட்சியை மரணிக்கும் வரை ஆதரித்தவர்.
உலகம்
உலகம் என்ற அடைமொழியை முன் வைத்து உலகக் கவிஞர்கள் பலர் பாடினர். தமிழ் பிற இந்திய மொழிக் கவிஞர்கள் பிலக்கன்று. கீழே 4-6ம் நூற் றாண்டு சார்ந்தவர்.
"உலகம் உவப்ப" "உலகெலாம் உணர்ந்து" "உலகியற்றியார்" "உலகத்தோடு ஒட்ட ஒழுகல்" "ஆதி பகவன் முதற்றே உலகு" "உலகத்தார் உண்டு என்பது ''
இங்கு உலகம் என்ற சொல்லைக் கவிஞர்கள் கையாண்டபோது, அவர்கள் அறிந்து, கூறிய உலகப் பரப்பு, எல்லை
ங்கே என்ற வினா எழுகிறது.
பள்ளுவர் பாரதி
வள்ளுவர் சாபமிடுகிறார்.
லெயிட்
012 ஐ 62

Page 65
"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகி யற்றியான்." (1062)
இக்குரல் 4ம் நூற்றாண்டு என்று சொல்வோம். இந்தக் குரலை நமது பாரதி 1920 வரையில் கொதிப்போடு கூறுகிறார். "தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்" (மாற்றிடு வோம் என்று கூறும் காலம் வரவில்லை எனலாம்.)
வள்ளுவர் கருதிய உலகத்திற்கும் பாரது கூறும் உலகத்திற்கும் வரலாற்று ரீதியாக வேறுபாடு காணலாம். முன்னது குறுகியது. பின்னது பரந்தது. கவிஞர்கள் அறிந்த உலகு
இந்தியா - ஆசியாவின் சில பகுதி களை நமது கவிஞர்கள், இந்தியக் கவிஞர் கள் அறிந்திருந்தனர் எனலாம். அதற்கு மேலாகப் பரந்த உலக நாடுகளை அறிந்தி ருக்கவில்லை. நாமும் கவிஞர்கள் வாழ்ந்து பாடிய காலத்தோடு உலகை அவர்கள்
அறிந்திருந்த பரப்பையும் கவனிக்க வில்லை. இன்றைய உலகத்தை வைத்தே 'பரந்த உலகத்தை அறிந்திருந்தனர் என புகழ் பாட முனைகிறோம். சில வரலாற்றுக் குறிப்புகளைக் காண்க.
1. மார்க்கோபோலோ (1254-1320) 2. கொப்பனிக்கஸ் (1454-1506) பூமி உருண்டையானது. சூரியனைச் சுற்றி
வருவது எனக் கூறியவர். 3. கொலம்பஸ் (1473-1543), வட அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். ..
மல்லிகை 1

ஆபிரிக்காக் கண்டம் இருண்ட கண்ட மாகக் கருதப்பட்டது. கப்பல்கள் தரிக்கும் நன்னம்பிக்கை முனை தவிர மற்ற நாடுகள் அடிமை வணிகத்திற்காக சிறைபிடித்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் வேளையே; ஆங்காங்கே பரந்த ஆபிரிக்க நாடுகளை 15ம் நூற்றாண்டில் காண
முடிந்தது. முடிந்தது. அது
டி.- - ஆங்கிலக் கவிஞர்
வணிகத்திற்காக போர்த்துக்கீசியர், டச்சுக்காரர், பின்னர் ஆங்கிலேயர் ஆசிய நாடுகளை போரிட்டு காலனிகள் ஆக்கினர்.
இவர்களில் முக்கியமாக ஆங்கிலே யரை எடுத்துக் கொள்ளலாம். சூரியன் மறையாத நாடுகளின் ஆட்சியோடு கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப முயன்றது மட்டுமல்ல, தமது கவிஞர்கள், பிற எழுத் தாளரை அறிமுகப்படுத்துவதோடு கல்வி யின் ஊடாகவும் கற்பித்தனர்.
இவர்களில் முதன்மையான உலகக் கவிஞராக அறிமுகப்படுத்தப்பட்டவர் வில்லியம் சேக்ஸ்பியராவார். (1564-1616)
14 வரியில் பாடப்பட்ட சொனட் கவி கள் அத்தனை முக்கியம் பெறவில்லை. நாடக இலக்கியத்தையே முதன்மைப்படுத் தினர். 36 நாடகங்கள் எழுதியதாகக் கூறு வர். பெரும்பாலும் கற்பனை கலந்த வரலா றாக மன்னர்களிடையான ஆட்சிப் பறிப்பு கள், பொறாமை, பொச்சரிப்பு, கொலைகள் சார்ந்தவை. அடுத்த கட்டமான வணிக மூல தன வளர்ச்சிக்கு வாய்ப்பளிப்பதாக அமைந் தவை சிறப்பே. அன்னாரது நாடகம் என்ற கலை வடிவம் முற்றாக வளர்ச்சி பெற்றவை என்று கூறுவதற்கில்லை. 'சொலிலொக்கி' போன்ற தானே பேசிக்கொள்வதை நாடக
மார்ச் 2012 * 63

Page 66
வடிவமாக கூறுவதற்கில்லை. பின்னர் வளர்ச்சி பெற்ற நாடக கலை வடிவங்களில் இத்தகைய போக்கை காண முடியாது. அத உதாரணமாகக் கூறின் ஹம்லெட் நாடக ஆரம்பத்தில் (To be or not to be) வாழ்வா சாவா என்று கூறப்படுவதை சோவி யத் நாடக மொழிபெயர்ப்பில் நாடக வடிவ மாக்கி ஹம்லெட் தனியே கடற்கரையில் நடந்தபடி பேசுவதாக மாற்றியுள்ளனர்.
சேக்ஸ்பியர் நாடகங்கள் நாடகக் கலை வடிவத்திலும் பார்க்க, இலக்கிய வடிவமாகவே சிறப்புறுவதாகக் கூறலாம். ஏனெனில் இன்றும் நாடகமாக நடிக்கப்படு வதிலும் பார்க்க, இலக்கியமாகப் படிக்கப் படுவதைக் காணலாம்.
ஆங்கில மொழி 15ம் நூற்றாண்டின் பின்னர் வளர்ந்த மொழியே. 19ம் நூற் றாண்டின் வரை சிறப்பாக எழுதப்பட்டவை யாவும் இலத்தீன் மொழியிலேயே எழுதப் பட்டன. மக்களது பேச்சு மொழியாக, நாடக மாகவும் ஆங்கில மொழி வளர்ச்சியடைந் தது.
: த் தொழிற் புரட்சியோடு வளர்ந்த அச்சி யந்திரமும் தேசிய எழுச்சியுமாக பிற ஐரோப் பிய மொழிகளை வளர்த்தது போல, ஆங்கி லத்தையும் வளர்த்தது என பெனடிக்ற் அண்டசன் கூறுவார். விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியுடன் மேம்பட்ட மூலதன வளர்ச்சியும் காலனி நாடுகளின் சுரண்ட லையும் ஆங்கில மொழியின் மேம்பாட்டுக் கும் பரவலுக்கும் துணை நின்றது. கலை, இலக்கிய வளர்ச்சியில் முற்போக்காக முதன்மை பெற்றதாகக் கூறுவதற்கில்லை.
பப்லோ நெருடா போன்ற உலகக் கவிஞன் அங்கு தோன்றவில்லை.
மல்லிகை மார்ச் :

பாரதி
வடநாட்டில் காளிதாசன் போன்றவரை பிட்டு தமிழகத்தில் நிலப்பிரபுத்துவ சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் மணிமேகலை, கம்பராமாயணம், பக்தி காலகட்ட சமய இலக்கியங்களின் தொடர்பாக மகாகவி பாரதி வந்து தேசிய விழிப்புணர்ச்சியோடு மொழிக்கும் மக்களுக்கும் புத்தெழுச்சி ஊட்டினான். தேசிய எழுச்சியோடு சமயப் பற்று இணைவது வியப்பில்லை. மேலும் சில காலம் வாழ்ந்திருப்பின், உலகத்திற்கு பிளக்கம் கூறும் கொள்கைகளை விட்டு உலகை மாற்றியமைக்கும் புரட்சி பற்றிப் பாடியிருப்பான். மாகாளி பராசக்தி உருசியநாட் டினிற் கடைக்கண் வைத்தாள் அங்கே ஆகாவென்றெழுந்தது பார் யுகப்புரட்சி - கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்'
- தொழிலாளி வர்க்கத்தின் வன்முறைப் போராட்டம் மாகாளி பராசக்தியின் கடைக் கண்ணால் நடந்த புரட்சி என்ற கூற்று திசை திருப்புவதாக உள்ளது.
மேலும் ரஷ்யப் புரட்சி பற்றி கட்டுரை களில் கூறும்போது அநியாயம் செய்வோர் அநியாயத்தாலே தான் அடிக்கும்படி ஸ்ரீமான் லெனின் கூறுவது முற்றிலும் தவ றான கொள்கை எனவும், மிஸ்டர் லெனின் முதலியோர் ஏற்படுத்தியிருக்கும் கூட்டு வாழ்க்கை குடியரசை அழிப்பர், 'லெனின் வழி சரியான வழியில்லை' என்றும் எழுதி னார்.
இந்திய தேசியக் கவிஞரான தாகூர் போல, மகாகவி பாரதியும் தமிழ்நாடு தந்த இந்திய தேசியக் கவிஞர் என்பதில் சந்தேக மில்லை. 2012 64

Page 67
குள்ளர்கள் (Dwarf பற்றிச் சிந்திக்க தூண்
"குள்ளன்"
சிறுவர் கலை இலக்கியம் என்பது மொழிகளில் படைக்கப்பட்டு வருகிறது மல்லாமல் சிறுவர்களுக்கான சினிமா என இருக்கிறது. பொதுவாக சிறுவர் கலை
த
எம் ன்ணரர்.
மல்லிகை ம

) என்ற மனிதர்களைப் டிய எம்.எம்.மன்ஸரின் 'சிறுவர் நாவல்
- மேமன்கவி -
பல்வேறு வகையிலும் இன்றைய உலக கலை இலக்கியப் படைப்புக்கள் மட்டு ன்பதும் வளர்ச்சி அடைந்துவரும் ஒன்றாக இலக்கியம் என்பது வேடிக்கை வினோத, மாயஜால வித்தைகள், இன்னும் ஆழமாக கூறுவது என்றால் அசாதராண தன்மை களைக் கொண்ட மனிதர்களைப் பாத் திரங்களாகக் கொண்டு படைத்தல் என் பது ஒரு சிறப்பான அம்சம் என்ற கருத் தும் நம் மத்தியில் இருக்கிறது. இக் கருத்து மேலைத்தேய சினிமாத்துறையில் சிறுவர்களுக்கென தயாரிக்கப்படும் திரைப்படங்களால் (அத்திரைப்படங்கள் பெரும்பாலானவை சிறுவர்களை மனங் கொண்டு எழுதப்பட்ட பிரபல நாவல் களைக் கொண்டு தயாரிக்கப்படுபவை உதாரணமாக ஹரி போட்டர்) உந்தப்பட் டவை என்பது நாம் அறிவோம். சிறுவர் களுக்கான அத்தகைய கலை இலக்கி யங்கள் (சினிமா உட்பட) குறிப்பாக மேலைத்தேய சமூகச் சிறார்களின் நடத்தை மீது பெரும் தாக்கத்தை ஏற் படுத்தி இருக்கின்றன. Superman, Spider man போன்ற திரைப்படங்களைப் பார்த்த தன் விளைவாக, அவ்வாறான அசுர,
ர்ச் 2012 ஓ 65

Page 68
அசாதாரண செயல்களில் ஈடுபட முனைந்து பல சிறார்கள் உயிர் இழந் திருப்பதை நாம் அறிவோம். அத்தகைய மாயஜால மந்திர, மற்றும் வேடிக்கை வினோதங்கள் கொண்ட மாந்தர்களை (சிறார்கள் உட்பட) பாத்திரங்களைக் கொண்ட சிறுவர் கலை இலக்கியங் களும் நம் மத்தியிலும் படைக்கப்பட்டும் வருகின்றன. இவை மேலைத்தேய சிறு வர் கலை இலக்கியங்களின் அருட் டுணர்வுபட்டதாகவும் உலக மயமாக் கலின் தாக்கத்தின் விளைவு என்றும் சொல்லிக் கொள்ளலாம்.
சிறுவர் கலை இலக்கியம் என்பது அவர் தம் பிரச்சினைகளை, அவர் தம்மைக் கொண்டோ, வளர்ந்தவர்களை கொண்டோ, அவர்களுக்கான மொழி யைக் கொண்டு, அவர்களின் வாழ்வின் சூழலின் ஊடாக, அதேவேளை யதார்த் தத்திற்கு முரண்பாடா வகையில், எழுப் பப்படுவதே சிறுவர் கலை இலக்கியங் களாக விளங்க வேண்டும். அதே வேளை அத்தகைய கலை இலக்கியங் களைப் பயிலும் சிறார்களின் மனோ நிலை, சமூக நடத்தை பாதிக்கப்படாத வகையில் படைக்கப்பட வேண்டும். அப் படைப்புக்கள் மூலம் அவர்களுக்கு நாம் போதிக்க நினைக்கும் 'நீதி'யைப் போதிக்க நாம் கையாளும் முறையால், அந்த நீதிக்கு முரணான வகையில் அவர்களின் நடத்தையும், மனோநிலை யும் கட்டமைக்கப்படும் வகையில், அத் தகைய கலை இலக்கிய படைப்புக்கள் படைக்கப்படக் கூடாது.
இவ்வாறான சிந்தனைகளைத் துண்டி விட்ட சிறுவர் நாவல் ஒன்று
மல்லிகை மார்ச்

சமீபத்தில் எம் கையில் கிடைத்தது. அது மாவனல்லை எம்.எம்.மன்ஸர் எழுதிய "குள்ளன்” என்ற அந்த சிறுவர் நாவலாகும். எம்.எம்.மன்ஸுர் நீண்ட காலமாக எழுத்துத்துறையில் ஈடுபட்டு வந்தாலும் இதுவே அவரது முதலாவது நூலாகும். மன்ஸுரின் இந்த நாவல் குள்ளமான ஒரு சிறுவனைப் பற்றி பேசு கின்ற நாவல் என்ற வகையில் நமது விசேட கவனத்தைக் கவர்ந்தது.
வயதில் வளர்ச்சி அடைந்தாலும் உருவத்தில் வளர்ச்சி அடையாத மனி தர்களான குள்ளர்கள் (இவர்களை ஆங்கிலத்தில் Dwarf என்று அழைப் பார்கள். இவர்களிள் இத்தன்மையை Dwarfism என்று குறிப்பிடுவார்கள்.) அதேநேரத்தில் உலகின் பல பாகங் களில் காணப்படும் Pygmy எனப்படும் இனக்குழும் மக்களும் இவ்வகையான குள்ளராக காணப்படுகிறார்கள். ஆனால் Dwarf எனப்படும் குள்ளர்கள் நமது சமூத்தில் ஒன்றர கலந்து வாழும் மனி தர்களாக பலர் நம் மத்தியில் இருக் கிறார்கள். ஆனால் இவர்கள் சமூகத்தி னால் ஒரு வகையான வேடிக்கை வினோத உயிரிகளாகப் பார்க்கப்படு கிறார்கள்.
உலக அரங்கிலும் இவர்களை முன் வைத்து பல திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் தயாரிக் கப்பட்டுள்ளன. இந்திய சினிமாவிலும், சிங்கள சினிமா உட்பட இத்தகைய மனிதர்களை அவமதிக்கும் வகையிலும், அவர்களை காமெடியன்களாகவும், வில் லன்களாகவும் சித்தரிக்கப்படுவதையும் காணலாம். 2012 66

Page 69
இத்தகைய உருவத்தில் தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் நகைச்சுவை நடிகர்களாக நமக்கு காட்டப்பட்டு வரு கிறார்கள். இவ்விடத்தில் உடனடியாக எனக்கு தமிழ் சினிமாவில் பிரபலமாகி வரும் மலையாள நடிகர் அஜய் குமார் நினவுக்கு வருகிறார்.
அவ்வாறான மனிதர்களில் உலக அளவில் பல அறிஞர்கள் அரசியல் வாதிகள், கலை இலக்கியவாதிகள் கலைஞர்கள் பலர் இருந்து இருக்கிறார் கள். இவர்களை முக்கியமாகக் கொண்டு பல இலக்கியப் படைப்பு களும் வெளிவந்துள்ளன. உதாரணத் திற்கு ஆங்கிலத்தில் Gerald Morris எழுதிய "The savage damsel and the dwarf" (2000) மற்றும் சுவிஸ் மொழி யில் Par Lagerkvist Vojpa "The Dwarf' (1944) இந்த நாவல் 1945ஆம் ஆண்டு Alexandra Dick என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. 1978ஆம் ஆண்டு கொரிய மொழியில் Cho Se-hui vojpa Nanjang-iga ssoa ollin chagun kong (Small Ball Thrown by a Dwarf) (1978) என்ற நாவல் போன்றவைகளை உதாரணத்திற்குக் குறிப்பிடலாம். இவ்வாறாக குள்ளர்கள் என அடையாளப்படுத்தப்படும் இந்த மனிதர்கள் பற்றிய எந்த அளவுக்கு கலை இலக்கியங்கள் பேசி இருக் கின்றன என்பதையும், இவர்கள் பற்றி மேலும் ஆழமாக அறிந்து கொள்ளும் வகையில் பல ஆய்வுகளும் தேடலும் நம் மத்தியில் மேலும் இடம் பெற வேண்டும். (Dwarf எனப்படும் இவர் களை பற்றி என்று இல்லாவிட்டாலும்
மல்லிகை ம

Pygmy எனப்படும் குள்ளர்கள் கொண்ட இனக்குழுவினரைப் பற்றி வந்தாறு மூலை அருணா தர்மலிங்கம் என்பவர் தினகரன் பத்திரிகை இதழ் ஒன்றில் (05.11.2010) "வாழ்வை இயக்குவது வன் தேவதை என்பதே குள்ள இனத்தவரின் நம்பிக்கை" என்ற தலைப்பில்) எழுதிய கட்டுரை குறிப்பு இங்கு குறிப்பிடத் தக்கது.)
தமிழ் கலை இலக்கியத் தளத்தில் இவர்களைப் பற்றி பேசி இருக்கிறோமா என்ற கேள்வியும் இவ்விடத்தில் எழு கிறது.
அந்த வகையில் நாம் அறிந்த மட்டில் எம்.எம்.மன்ஸர் குள்ளச் சிறு வன் ஒருவனை வைத்து தந்திருக்கும் இந்த நாவல் தமிழில் புதிதான ஒரு முயற்சி எனலாம். நான் அறிந்த மட்டில் தமிழில் முதல் முயற்சி என்று கூட சொல்லாம்.
ஆனாலும் வாசக அனுப நிலை யில் இந்த நாவல் சில கேள்வி களையும் பிரச்சினைகளையும் எழுப்பு கிறது. முதலாவதாக இந்த நாவலின் கதை எந்தப் பின்புலத்தில் நடைபெறு கிறது எனத் தெளிவுப்படுத்தப்பட வில்லை. குறிப்பிட்ட ஒரு நாடோ ஊரோ குறிப்பிடப்படவில்லை. அதனால்தான், குடியானவன், குதிரை வண்டி, சந்தை யில் விற்கப்படும் கட்டுப்பாட்டு விசை யந்திர பொம்மை இப்படியான நாவலில் வரும் பல விடயங்களும், மயக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இந்த நாவலில் எந்த இடத்திலும் எந்த பாத்திரங்களுக்கும் பெயரிடப் மார்ச் 2012 67

Page 70
படாத நிலையில், அந்த நாவலில் வரும் சர்க்கஸில் கோமாளியாக பணி புரியும் மனிதரின் (அவர் குள்ளர் அல்ல) மனைவியின் பெயர் சிவகாமி என தெரி விக்கப்படுகிறது. இதன் மூலம் சர்க்கஸ் கோமாளியாக பணிபுரியும் அந்த மனிதர் தமிழர் என யூகிக்கும் பொழுது மேலும் நாம் குழப்பம் அடைகிறோம். இன் னொரு விடயம் அந்த குள்ளச் சிறு வனின் வயது என்னவென்று தெரிய வில்லை. அதேவேளை குள்ளர்களின் (Dwarf) சாரசரி பருமனை விட, இந்த நாவலில் வரும் சிறுவனின் பருமன் குறைவாக இருக்கிறது. மற்றும் ஏழு மாதங்களில் பிறக்கும் (குறை மாத பிரசவம்) பிள்ளைகள் குள்ளர்களாக பிறப்பார்கள் என்ற மாதிரியான கருத் தும் முன் வைக்கப்படுகிறது. மேலும், இந்த நாவலின் நடை (உரையாடல்கள் உட்பட) ஒரு மொழிபெயர்ப்பு நூலினை படிப்பது போலான உணர்வினை ஏற் படுத்துகிறது.
A. R R. HAIR
89, Churc
Mattak Colomb Tel : 0112
முற்றிலும் குளிரூட்
மல்லிகை மார்ச்

ஆனாலும் மன்ஸூர் அவர்கள் இந்த நாவல் மூலம், குள்ளர்கள் பற்றி அந்த நாவலை படிப்பவர்கள் குள்ளர் களை பற்றி நம் சமூகத்தில் நிலவும் Social stigmaக்கு ஆளாகாமலும், அதே நேரத்தில் அந்த குள்ளமான சிறுவன் கொண்டிருக்கும் Extra Ordinary Talentdhd புத்திசாலித்தனத்தை எடுத்துக் காட்டியதன் மூலமும் குள்ளர் என்ற மனிதர்கள் மீது மதிப்பும் நேயமும் உண்டாக்கும் வகையில் எழுதி இருப்பது பாராட்டதக்கதாக இருக்கிறது. ஆக மொத்தத்தில், நம் மத்தியில் குள் ளர்கள் (Dwarf) என்ற மனிதர்களைப் பற்றிச் சிந்திக்க தூண்டிய ஒரு நாவல் என்ற வகையில், எம்.எம்.மன்ஸரின் "குள்ளன்'' சிறுவர் நாவல் நமது கவனத்தை ஈர்த்து இருக்கிறது. அதற்கு மன்ஸூர் அவர்களுக்கு பாரட்டுதலுடன் கூடிய நன்றிகள்.
-DRESSERS
h Road, uliya, ) - 15. :527219
_ப் பெற்ற சலூன்
2012 ஓ 68

Page 71
தூண்
& சமீப காலமாக நீங்கள் தமிழக காரணம்?
கல்முனை
3 எனக்கும் மெல்லிதான மனக்கஷ்டம் விட, ஏதாவது எழுத்தாளர் மாநாடு, பு சமயத்தில் பல எழுத்தாளர்களைச் சந்தி எல் - எப்படியும் தமிழகம் போக வேண்டி
தாகம 0
3 உங்களது இளமைக்கால இலக்கி நினைத்துப் பார்ப்பதுண்டா?
- -
பசறை
இ பல சந்தர்ப்பங்களில் பல கட்டங்கள் உழைத்த இலக்கிய நண்பர்களை ஆறு பார்ப்பதுண்டு.
இவர்களில் பலர் இன்று உயிருடன் இந்த மண்ணில் வாழ்ந்துவரும் இலக்கி சமயங்களில் வழிதெருக்களிலும் சந்தித்
பழைய நட்பு எனது இன்றைய வ நம்புகின்றேன். ஒப்புக்கொள்ளுகின்றேன்
மல்லிகை

டில்
அ - டொமினிக் ஜீவா
கத்திற்குப் போய் வரவில்லையே? என்ன
எஸ். சிவகடாட்சம்
> உண்டு. தனிப்பட்ட முறையில் போய்வருவதை த்தக வெளியீடுகளுக்குப் போய்வந்தால் ஒரே க்கும் வாய்ப்பு ஏற்படும். ய தேவை ஏற்படலாம்.
யெ நண்பர்களை, இன்று இடைக் கிடையே
எம்.எஸ்.செல்வன்
பில் ஆரம்ப காலங்களில் என்னுடன் ஒன்றுபட்டு, பதலாக இருக்கும் சமயங்களில் நான் எண்ணிப்
7 இல்லை. மற்றும் பலர் நாட்டிலேயே இல்லை. ய நண்பர்களை இலக்கிய விழாக்களிலும், பல து உரையாடி மகிழ்வதுண்டு. சர்ச்சிக்கு பெரும் பசளையிட்டுள்ளதை மனதார
-ரு-
மார்ச் 2012 ஓ 69

Page 72
3 மூத்த எழுத்தாளர்களுக்கும் வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர் களுக்கும் இடையேயான உறவுப் பாலத்தைக் கட்டியெழுப்ப நீங்கள்
கூறும் ஆலோசனை என்ன?
புலோலி
வேல்நந்தன்
8 அடிக்கடி சந்தித்து உரையாட வேண்டும். இலக்கியக் கூட்டங்களுக்கு வந்து, இலக்கியப் பேச்சாளர்களின் பேச்சைக் கேட்டு விட்டுத் திரும்புவதால், பெரும் பிரயோசனம் கிடையாது. குழுக் குழுவாக அடிக்கடி சந்தித்து, உரையாடித் தெளிய வேண்டும். சுமார் அரை நூற் றாண்டுகளுக்கு முன்னர் நம்மைப் போன்று வளர்ந்துவரும் எழுத்தாளர்கள் அடிக்கடி கூடிக் கூடிப் பேசி, நமது இலக் கியச் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள வாய்ப்பு வசதியிருந்தது. அதனால் நாம் பெரும் பயன் பெற்றோம். சிறு குழுக்களாக இருந்தாலும், வளரும் எழுத்தாளர்கள் அடிக்கடி சந்தித்துக் கதைத்துத் தெளிவு பெறுவதே வளர்ச்சிக்கு நல்லது.
3 இன்று நாடு பூராவிலும் இருந்து ஏராளமான புதிய புதிய தமிழ்ப் புத்த கங்கள் வாரா வாரம் வெளிவந்து கொண்டிருக்கின்றனவே, இது பற்றி உங்களது கருத்து என்ன?
மாவனெல்லை எஸ்.தாயுமானவன்
& நவீன அச்சகச் சாதனங்களின் வளர்ச்சி, இன்று பல்வேறுபட்ட ஏராளமான நூல்கள் வெளிவரச் சாத்தியப்படாக இருக் கின்றன.
மல்லிகை மார்ச் 2

ஏராளமான புத்தம் புதிய பல்வேறு வகைப்பட்ட புத்தகங்கள் தமிழில் வாரா வாரம் வெளிவருவது இருக்கட்டும். இன்று வெளிவரும் இந்த நூல்களில் நாளை எத்தனை உயிருடன் வாழப்போகின்றன என்பதுதான் எனது மனக்கவலை.
& மல்லிகையை நீங்கள் ஆரம்பிக் கும் போது அந்த மாத இலக்கிய இதழ் இத்தனை ஆண்டுக் காலம் - அரை நூற்றாண்டுக் காலம் - நின்று பிடிக்கும் என மனதார நம்பித்தான்
ஆரம்பித்தீர்களா?
நல்லூர்
எஸ்.தேவகாந்தன் டீ எனக்கென்றொரு இயல்பான குணம் ஒன்றுண்டு. எதையுமே நிதானமாக நீண்ட நாட்கள் பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து பார்த்துத்தான் தொடங்குவேன். அந்த வகையில் நீண்ட நெடுங்காலம் பல ஆத்மார்த்திகமான நண்பர்களுடன் கலந்து யோசித்துத்தான் மல்லிகை இதழை ஆரம்பித்தேன். என்னைப் புரிந்து கொண்டவர்கள், மல்லிகையின் தொடர்
வரவையும் புரிந்து கொள்வார்கள்.
3 எனக்கோர் ஆசை. மல்லிகையின் 50-வது ஆண்டு மலரை வெகு அற்புத மாகத் தயாரிக்க வேண்டும். அந்த மலரின் வெளியீட்டு விழாவைக் கொழும்பில் அதிவிமரிசையாக நாம னைவரும் ஒருங்கு சேர்ந்து ஓகோ வென்று கொண்டாட வேண்டும் என்பது எனது மன ஆசை. எனது :012 * 70

Page 73
நீண்ட நாளைய உள்மன ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டுமென இப்போதே கேட்டுக் கொள்ளுகி றேன். யாழ்ப்பாணம் செல்வி. ரூபதரிஷின்
S கொஞ்சம் பொறுத்திருங்கள். இன் மும் இடைக்காலம் இரண்டாண்டுகள் இருக்கின்றன. ஆறுதலாகத் திட்டமி வோம். இப்போதே மல்லிகையின் எழு; தாளர்களுக்கு அந்த அரை நூற்றாண் மலருக்கு எழுதும் வண்ணம் வேண்டி கொள்ளுகின்றேன்.
அந்த மலரை வெகு சிறப்பாகவும், த மானதாகவும் செய்து முடிக்க இப்பே திருந்தே உழைப்போம். செயற்படுவோம்
3 மல்லிகை வாசகர்கள் இன்று உலகம் பூராவும் பரந்து, விரிந்திரு. கின்றனரே, நாட்டுக்கு வரும்போ உங்களை வந்து சந்தித்துக் கலந்து யாடுகின்றனரா?
தெஹிவளை
எஸ்.தேவராஜன்
இ பரந்துபட்டு, உலகம் பூராவும் வாழு நம்மவர்களுக்கு எத்தனை எத்தனையே பிரச்சினைகள். சிலவற்றை எம்மா புரிந்துகொள்ளக்கூட முடியாது. இருந்து இந்த மண்ணின் மீதும் நமது பாரம்பரி மொழியின் மீது தூரப் போகப் போகத்தான் தனிப் பாசமும் பற்றும் ஏற்படும். இ ை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது இந்தப் புரிந்துணர்வுதான் ஊருக்கு வரு போது மல்லிகையையும் ஒருதட ை
மல்லிகை

ப எட்டிப ப'' -
எட்டிப் பார்க்க வைக்கின்றது என நம்பு கின்றேன்.
5
& எந்தக் கட்டத்திலாவது ஏன் இந்த இலக்கியத்துறைக்கு வந்தேன்? என நீங்கள் மனச் சங்கடப்பட்டதுண்டா?
மன்னார்
எம்.கே.முகுந்தன்
ச• )ெ அ• 6) - 9
இ உண்மையை மனந்திறந்து சொல்லு கின்றேனே, இந்த இலக்கியத்துறைக்கு - பொதுவாகச் சஞ்சிகைத்துறைக்கு நான் இயல்பாக வந்தது பற்றி எப்பொழுதுமே நான் மனநிறைவடைந்துள்ளேன்.
எத்தனை எத்தனையோ முன் பின் முகம் தெரியாத பலர் தெருக்களில் என்னைப் பார்த்துச் சுகநலம் விசாரிப்பதில் இருந்து, மனசார எனது இலக்கிய உழைப் பைப் பாராட்டுவதில் காட்டும் மெய்யான அக்கறைகளைப் பார்க்கும்போது, எனக்கு கந்த சமூகக் கடமையைத்தான் நான் தேர்ந் தெடுத்திருக்கின்றேன் என மன நிறைவு கொள்வதுமுண்டு.
5.
ர
3 நான் எழுத்தாளனாக வரவிரும்பு கின்றேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
2: 3 6:
சாவகச்சேரி |
எம்.நேசன்
ப
அ 9 E 5.
2 தொடர்ந்து படித்துவர வேண்டும். கண் டிப்பாக இலக்கியக் கூட்டங்களில் கலந்து, அங்கு பேசப்படுவதைக் கூர்மையாக அவ தானிக்க வேண்டும். பயப்படாமல் நெஞ்சில் பட்டதை எழுத்தில் வடிக்கப் பழக வேண் டும். தொடர்ந்து எழுத்துப் பயிற்சியில் ஈடுபட
வேண்டும். எழுதியவைகளை ஆக்கப்பூர்வ மார்ச் 2012 * 71
வ

Page 74
மான யோசனைகள் சொல்லத்தக்க நண்பர் களிடம் கொடுத்து, அதன் நிறை குறை களை மனந்திறந்து விமர்சனம் செய்யச் சொல்ல வேண்டும். எல்லாவற்றையும் விட, படைக்கும் ஆற்றலும் உத்வேகமும் உங் களிடம் இயல்பாகவே கைவரப் பெற்றிருக்க வேண்டும். இத்தனை தகுதியும் உண்டென் றால், நிச்சயம் நீங்களும் எதிர்காலத்தில் எழுத்தாளராக உருவாகுவீர்கள்.
1,
3. எழுத்தாளர்கள் அனைவரிடமும் சுமுகமான உறவைப் பேணி வருகின்
றீர்களா?
பதுளை
ஆர்.கென்னடி
டி ஒன்றை வெகு தெளிவாக நம்புங்கள். சகோதர எழுத்தாளர்களிடம் நேர்மையான நட்புறவையும் சுமுகமான உறவுகளையும் பேணாது போனால் இத்தனை ஆண்டுக் காலமாக ஓர் இலக்கியச் சஞ்சிகையை வெளியிட்டு வரமுடியாது என்பது திண்ணம். அத்துடன் எனக்கென்றொரு தனித்துவ மான கருத்தும் நடைமுறையும் இருப்பது சரியென்றால் ஏன் மற்றவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கக்கூடாது? அந்த மாற்றுக் கருத்தை நாகரிகமான முறையில், பரஸ் பரம் அங்கீகரிக்க நீண்ட காலமாகப் பயிற் சிப்பட்டவன், பழக்கப்பட்டவன், நான். எனது வழிமுறையும் இதுவேதான்!
3 சிற்றிலக்கிய ஏடுகளுக்கு இருக் கும் ஒரேயொரு சங்கடம் சந்தாதாரர் கள் ஆண்டு முடிவில் சந்தாக்களைப்
20174, ஸ்ரீ கதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்
டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த
அச்சகத்தில் அச்சிட்டு எக

புதுப்பிக்காமல் அலட்சியம் காட்டு வதுதான். மல்லிகையினது நிலை என்ன? சிலாபம்
எல்.சுகுணேஸ்
இ மல்லிகை அரைநூற்றாண்டை நெருங் கிக்கொண்டு வருகின்றது. வாசகர்கள் என்னை நேசிப்பதை விட, மல்லிகையைத் தான் அதிகம் அதிகமாக நேசிக்கின்றனர்.
3 நீங்கள் மேடையில் பேசும்போது, மல்லிகையின் வரலாற்றை மிகைப் படுத்தி அடிக்கடி கூறுவதாக ஒரு கருத்து இலக்கிய உலகில் நிலவு கின்றதே, அதுபற்றி நீங்கள் என்ன கருது கின்றீர்கள்? கொழும்பு 6
எஸ்.சாரங்கன்
2 ஒன்றை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நான் இளந்தலை முறையின் ஆழ்ந்த கவனிப்புக்கு கருத்துக் களை வெளியிடுகின்றேனே தவிர, எனக்கு இதனால் புதுப் புகழ் வந்து சேரும் என்ற எண்ணத்தில் எந்தக் கருத்துக்களையும் வெளியிடுவதேயில்லை.
நான் மல்லிகை பற்றி இன்று சொல் லும் பல கருத்துக்கள் நாளை வரலாற்று ஆவணமாகப் பதியப்படும் என்பது திண் ணம். இதைப் பதிவு செய்வதற்காகவே கருத்துக்களைச் சொல்லுகின்றேனே தவிர, மல்லிகைக்குப் புதுப் புகழ் தேடித் தரும் நோக்கம் எனக்குக் கிஞ்சித்தேனும் இல்லவே, இல்லை!
பவரும், மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான > மேடு, 103A, இலக்கத்திலுள்ள Lakshmi PrintciS வளியிடப் பெற்றது.

Page 75
தற்போது ?
• திருகோணம. இலக்கிய வர - திருமலை நவு
• ஈழத்து நவீன
- சு. சிவரெத்தி.
• பேராசிரியர் க
- லெனின் மதி
• இலங்கைத் த. சில பதிவுகள் - கலாநிதி ச. ம்
• யாழ்ப்பாண ? - பேரா. சி . பத் நூல் தேட்டம் - என். செல்வர பிற்கால இல். மாற்றங்கள் - க.வீரகத்தி சிறுவர் இலக் - பேரா. சபா.. இலங்கையின்
முரண்பாடு - குமாரி ஜயவ தமிழ்க் கவின பராம்பரியம் - பேரா. கா. சி.
குமரன்
39, 36வது ! தொலைபேசி E-mail: kumb

விற்பனையில் |
650.00
லை கலை, லாறு
ம் ஓவியம் னம்
350.00
5. கைலாசபதி வானம்
300.00
மிழியல்:
675.00
னோன்மணி இராச்சியம் நமநாதன்
490.00
5 - 7 ராஜா
1450.00
க்கண
600.00
கியம் ஜெயராசா ச இனவர்க்க
350.00
111),
ரத்தன
400.00
தப்
வத்தம்பி
600.00
புத்தக இல்லம் ஒழுங்கை, கொழும்பு 6 = 011 2364550, 011 3097608 alk@gmail.com

Page 76
i ai
Digital Centre We Are leading Towards to new
• Low Cost
High Speed
• High Quality
Positive
Plates
Colour Separati
Digital Pro Lab & Digit

Pvt. Ltd prints in various Styles
Ang Paper or Any Board 1200 dpi x 8 bit High
Resolution
colour output Panorama Print 13340
ion
KONICA MINOLTA
tal Offset Press