கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாலபோத வாசனம் ஆறாம் புத்தகம்

Page 1
* *.
id) 16
(0 Jun!
ஓ* - *8* QE2
* * *
5ே 5 ஏ.
3) முப |

இ க ஜே
14ம்
போத
வான ஆரம் புத்தகம்
அநாதை
இடுக

Page 2

கொழும்புத் தமிழ்ச் சங்கம்
வரை நிiேtச் சபை,
73
பதிவு இல். 10, 5. 1950
அறக்கட்டளை நிலையம்,
14805
கசெட் இல். 7. 6. 1968

Page 3

TAMIL SIXTH READER
(THIRID RI 5 )
2 91
tv
'ரிழி கeேl/
??? பாலபோத வாசனம் வே.
ஆறாம் புத்தகம்
Printed at the Industrial School Press,
Colombogam, Jaffna.
1928
(All rights reser'Vel)

Page 4

270, 2&t+
SLI PR
பாட அட்டவண.
13
16
30
பாடம்
பக்கம் 1. புத்திதெளிந்த வித்தியார்த்தி 2. அவதானம் 3. முயற்சிக் கோர் முன்மாதிரி 4. பொறையுடைமை 5. மனோபீதியின் கெடுதி 6. மனோபீதியின் கெடுதி (முன்தொடர்பு) 7. பழக்கம் ...
19 8. பொய் இன்பம் (பேரின்பநாதன்கதை) 9. பேரின்பம் (பேரின்பநாதன். ) 10. நேர்மை (பேரின்பநாதன்.) 11. கால உபயோகம் ... 12. அகந்தையின் பலன் 13. கல்வியுங் கைத்தொழிலும் 14. அடாது செய்தவர் படாது படுவர்; ஐந்துகொ அடுத்தவர் ஆயிரம் பெறுவர் (பேரின்பநாதன்.) 15. நன்றிமறவேல்...
48 16. நல்லொழுக்கமாண்பு
52 17. சுயதேச ஒழுக்கமுறை
56 18. நீதிமானுக் குலகம் பகை (பேரின்பநாதன். )
59 19. தொழில் நிருணயம் ' 20. தன்வினை தன்னைச்சுடும் ; நல்வினை புகழைத்
தரும் (பேரின்பநாதன்.). 21. நோயுஞ் சுகமும் ... 22. நோயுஞ் சுகமும் (தொடர்ச்சி). 23. உயர்ந்ததும், இழிந்ததும்... 24. கூட்டுத்தொழிலும், தொழிற்பிரிவும் 25. புதிய உலகங் கண்ட விவரம்
...... 26. புதிய உலகங் கண்ட விவரம் (தொடர்ச்சி) 27. சிறுமியர்க்குரிமை (Written in pure Tamil).
கடிதமெழுது முறையுஞ் செய்யுட் - காசி -
43
64
0 0 ] க .. பல ..
89

Page 5
OPINIONS F'10m: THE INSPECTOR OF SCHOOLS, N. P. To: Tா MANAGER, CoLOMBOGAM INIDUSTRIAL SCHOOL PRESS.
TAMIL SIXTH READER This book can be recommended for the careful way in which the authors, who are already well known as writers of successful text book, have compiled their information. It has the attraction of readableness.
T. S. Tillainayakam, B. A.
Inspector of School, N. P.
//
"பாலபோ த வா சனம்' ஆகிய இந் நூலினை வகுத்த ஆசிரி யர் மாணவர் மீது மிகுந்த அன்புடையவர் ஆதலினால் நோய் தீர்க்கும் அருமருந்தை வெல்லக் கட்டியுள் இட்டுக் கொ டுப்ப வர் போல உயிர்க்கு உறு திபயக்கும் நீதிகளைப் பெரும்பா லும் இளை ஞர் மனதைக் கவரும் இனிய கதைகளாகத் தொடுக் துத் தருவாராயினார். அவற்றுள் ஒருசில " பொ றுமை கடலி னும் பெரிது". "ஒழுக்கம் விழுப்பந் தரும் '', 'ஊக்கம் உயர்வை அளிக்கும் '', ''அகந்தை அதோ க திப்படுத்தும்'' என இவைபோன்ற ஒவ்வோர் உண்மைகளை விளக்குவதற்கு எழுவன பின் னும் ஒருசில ' பேரின்பநா தன் கதை '' என நின்று பல நீதி முடிபுகளை ஒருங்கே உணர்த்தும் நீர்மையின. ''நன் றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம், தீயொழுக்கம் -என் றும் இடும்பை தரும் '' என்னும் பொது மறை மொழிக்குச் சார்பாக முடிந்தமையால் இந்நூல் எம்மதத்தினர்க்குஞ் சம்மத மான து. மேலும், தெளிவாகிய வசன நடையினை யுடையது; 'சொன் னயம், பொருணயம் பொருந்திய மேற்கோள்களை யுஞ் " செய்யுட்பாடங்களையும் தன்னகத்து அடக்கியது. ஆதி லால் ஆறாம் வகுப்பில் தமிழ் கற்குஞ் சிறுவர், சிறுமிகள் அனை வருக்கும் இந் நூல் மிகப் பயன்படும் என்பது நம் உள்ளக்கி டக்கை.
S. P. C.
5. மயில்வாகன பண்டிதர்
111. சிலவின் சொல் பாஷைவிற்ப னத் திரேத்து வந்திர வாலசூரி யப்ரகாச மாமதிப் பெருக்கமாண் லேயுத்தி நன் னெறித் துலக்கமீயு முண்மையிப் பாலபோ த வாசனம் படிக்க வித்தி யார்த்தியே.
K. வேலுப்பிள்ளைப்புலவர்

('ஹின்டுக் கொலிஜ்' பிரதம ஆசிரியர் ஸ்ரீலஸ்ரீ நெவின்ஸ் செல்வத் துரையவர்கள் தந்த
நா ன் மு கம் .
முற்காலத்திலே தமிழ் நாடெங்கணுமுள்ள அர சர்கள் பிரபுக்கள் முதலான பெருந்தகையாரெல்லாஞ் செய்யுட் கிரந்தங்களை யே உவந்தும் வியந்துங்கொண் டமையின், செந்தமிழ் நூல்கள் பெரும்பாலுஞ் செய் யுள் வடிவாகவே இயற்றப்படலாயின. அக்காலத்துச் சிறு வரும் நெடுங்கணக்குப் பயின்றபின் முறையே ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலியனவும், சொற் பொருள் உணர்த்துவனவாகிய திவாகரம், சூடாமணி யாதிய நிகண்டுகளும் படித்தபின், பாரதம், இராமா யணம் முதலிய இலக்கியங்களும் பயின்று தமிழ்ப் பாஷா ஞானத்தில் வல்லோராய் விளங்கினார்கள்.
தமிழ்நாடு பிற அரசராதீனத்தின் பாற்பட்ட காலங் களில் அவ்வவ் வரச பாஷை தலையெடுக்கத் தமிழ்ப் பாஷாபிமானங் குன்ற, முன் போல அதைப் பயில்வா ரும் மிகச் சிலரேயாயினர். தற்காலம் அரசாட்சியார் வசதிநோக்கி வசன பாடங்களோடு சிறிது செய்யுட் பாடங்களையுஞ் சேர்த்துக் கற்பிக்க ஏற்பாடு செய்தி ருக்கிறாராயினும், சிறுவர், அங்கிலேய பாஷையிலே தேர்ச்சியடைய வேண்டிப் பெரும்பாலும் ஐந்தாம் ஆறாம் வகுப்போடு தமிழ்க்கல்வியை நிறுத்திக்கொள் ளுகிறார்கள். அதை அனுசரித்து வறிய பிதா மாதாக் களுந் தமிழ் மாத்திரமே கற்குந் தம் மக்களுக்கும் உயர்தரக் கல்வியைப் பயிற்றுவியாது போகிறார்கள். போகவே வசன நடையிலே பிழையற எழுதவேனுஞ் செய்யுட் கிரந்தங்களை வாசித்துணரவேனும் ஆற்றலில் லார் தொகை நாடோறும் பெருகிக்கொண்டே வரு கின்றது.
(1) இதனை முற்றாய்த் தடுக்க முடியாதாயினும், தமிழ் வாசகப் புத்தகம் இயற்றுவாருக்குச் சாதி அபி

Page 6
மானம் ஒன்றிருக்குமானால், உபாத்திமாரின் சுகத்தின் பொருட்டுப் பாஷை இலகினையுஞ் சுருக்கத்தையு நோக்காது இயன்றவரையில் அருஞ் சொல் வழக்கு கள், சந்திகள் ஆதியவற்றைப் பிரயோகித்து உள்ள சொற்ப காலத்துளே மாணவர் எடுத்த புத்தகத்தை வாசித்துணாவும், நினைத்த விஷயத்தைப் பிழையற எழுதவும் தகமையுடையராக்கலாம் என்பதற்கைய மில்லை."
(2) இந்நாட்களில் வெளிவரு நூல்களெல்லாம் வட மொழியுந் தென்மொழியுஞ் சரிவரக் கலந்த சங்கர பண்டாரங்களாயிருப்பதால், தென்மொழியை மாத்தி ரமே கொண்ட வாசகப் புத்தகங்கள் மாணர்க்குப் பெ ரிதும் பயன்படாவென்பது யாவரும் ஒப்புக்கொள்ளத்
தக்கதாகும்.
(3) சாஸ்திர உணர்வோடும் நீதிசாாங்களோடுங் கூடிய தாட்டாந்தங்களைச் சிறு வர்க் குவப்பான கதா பாடங்களிற் புகுத்திவிடுதலும் இலகுவான பாஷை யில் எழுதி விடுதலுந் தக்க தாம்.
(4) வாசன பாடங்களில் இடையிடையே சொன் னயம் பொருணயம் பொருந்திய மேற்கோள்களாவது பிறநூற் பாகமாவது சேர்ந்திருப்பது சிறு வரின் அறி வு விருத்திக்கின்றியமையாததாகும்.
(5) வேதானுசா நூல்களிலன்றி வாசினைப் புத்த கங்களிலே சமைய சாரம் புகுதல் முறையன்று.
மேற்போந்த கொள்கைகளுக்கியைய இந் நூல் எழுதியிருத்தலின் தமிழபிமானிகள் யாவரும் தங்கள் தங்கள் வித்தியாசாலைகளில் இதனை உபயோகிப்பது நலமாகும்.
நெ. செல்வத்துரை நான்முகந்தந்தும் போந்த அபிப்பிராயங் கூறியும்புன்னு லாகிய இந் நூலைச் சிறப்பித்த கலா சிரேஷ்டருக்குப் பெரி தும் வந்தனங் கூறு கிறேன்.
ஆக்கியோன்

»L 14ம்
/43.u-a.டி
-- (01/04/J -
அநாதிநம்.
Cy பாலபோத வாசனம் 4.1/LA
ஆறாம் புத்தகம் «// அடி04
54./ 1. புத்திதெளிந்த வித்தியார்த்தி.'
சு. ~ சிறிய பாலியனொருவன் ஒருநாள் அழுத கண் ணுஞ் சிந்திய மூக்குமாய் ஒரு கல்லூரித் தலைவாயி லின் கண்ணே வந்துநின்றான். அதைக்கண்ட கல் லூரித் தலைவர் : நீ இவ்வண்ணம் அழுது கண்ணீர் துளித்து நிற்குங் காரணம் யாதென்று வினவினர். பாலியன் மாறு த்தரமாக, தர்ம உத்தமரே! அடி யேன் ஜெனிவா நகரத்திற் பெரும் புகழோடு வாழ்ந் திருந்த எக்பேட் பிரபுவின் புத்திரன். என் பிதா சீவந்தராயிருந்த காலத்தில் நான் கல்வியில் விருப்பு வையாமல் உலக உல்லாசங்களிலும் வினோத வேடிக் கைகளிலுமே மனதைச் செலுத்தி வந்தேன். அப் போது நான் கக்கத்தில் இடுக்கித் திரிந்த புத்தகங் கள் கண்டோர் கண்ணுக்குப் புத்தகங்களாய் இருந் திருப்பினும் எனக்கோ அவைகள் செங்கற்களாக வேயிருந்தன. தோழரோடு கூடிச் சம்பாஷிக்கவும் விளையாட்டயரவும் போதற்காய் நான் அதிகாலையிற் சுறுசுறுப்போடு நித்திரைவிட்டெழுவதையும், பொழு தொளி காணுமுன் போசன பானம் பண்ணுவதை யும், புத்தகங்களை அடுக்கிச் சுமந்துகொண்டு வீட் டிற் சற்றுந் தாமதியாமற் புறபப்டுவதையுங் காணும். என் பெற்றார் தங்கள் புத்திரன் மகா கல்விப் பிரி யன் என்றெண்ணி மனப்பால் குடித்துக்கொள்வார் கள், நாளாந்தம் பெரும்பங்கை வீணே ஈரிச் க

Page 7
பாலபோத வாசனம்
விட்டுக் காலந்தாழ்த்துப் பாடசாலைக்குப் போவே னாயினும் அங்குதங்கிய நேரமெல்லாம் என் கண் புத்தகத்திலும் கவனம் விளை யாட்டிலுமாகவேயிருக் கும். இப்படியே நான் புத்தகப் பொதிமாடாய்த் திரிந்துவரு நாளில் என் தகப்பனார் சடுதியில் இறந் துவிட, அவரையிழந்த துக்கமிகுதியால் தாயாரும் வியாதிகொண்டு சில நாட்களுள் மரணமாயினாள். எனது பெற்றார் எனக்கு விட்டுப்போன சொத்துக் கள் யாவையும், என் பேதமையைக் கண்ட அந்நிய ரும் அயலவரும் அநீதமாய் அபகரித்துக்கொண்டார் கள். அதனால் வறுமையும் மனத்துன்பமும் என் னைப் பற்றித் தொடர்ந்துகொண்டன. கொள்ளவே என் ஐயனே! காலத்தின் மதிப்புங் கல்வியின் அரு மையும் அப்போதுதான் என் மனதிற்றோன்றலாயின. தோன்றியுமென் " கற்கவேண்டிய காலத்தையுந் தரு ணத்தையும் விட்டுவிட்டேனே! இதற்கென் செய்ய லாம்! ஆயினுங் காலமிருக்கின்றது ; வறுமையென் னும் ஆசான் நல்ல பாடம் படிப்பித்தான். வயதிருக் கும்போது சற்றாவது படிப்பிற் கவனஞ் செலுத்து வதே மதி ; இல்லாவிடில் இந்நாட்டிற் காலந் தள்ளு வதெப்படி? என்று இப்படி ஆலோசித்து முகமறிந்த ஒரு வயோதிக ஆசிரியரை அடுத்துச் சிலகாலம் வித்தி யாப்பியாசஞ் செய்துவந்தேன்.
இப்படி நிகழும் நாளில் கல்வியின்மீது எனக்குள்ள விருப்பையுங் கவனத்தையுங் கண்ட தயாசீலரான அந்த ஆசிரியர், வெனிசுக்குப் புறப்படவிருந்த கப்ப லொன்றில் என்னை ஏற்றி வழியனுப்பிவிட்டார். கரும் சீலரே! அடியேன் கரைசேர்ந்து இரண்டு நாட்களாய் அவர் சொன்ன குறிப்பின்படி இந்தத் தருமக் கலாசாலையைத் தேடி வழிநடந்து அலுத்துக் களைத்துப்போன தருணத்தில், நற்குணசாலியொரு

ஆறம் புத்தகம்
வர் என்னை இவ்விடத்துக்கு இட்டுவந்து விட்டுப்போ யினார். கழகசாலையைக் கண்டவுடன் இத்தனை தூரம் கால் கடுக்க நடந்துவந்தும் இதன் தலைவர் என்னை ஏற் றுக்கொள்ளாதிருப்பாரானால் என் கதி எவ்வாறாகு மோ! என்று நினைத்து அழுகிறேன் என்றான்.
இதைக் கேட்ட கல்லூரித் தலைவர் : தம்பீ! உன் வரலாற்றைக் கேட்கவும் உன் நிலைமையைக் காண வும் என் மனம் பெரிதுங் கவல்கின்றது. ஆயினும் என் செய்வேன் எனச் சொல்லிக் கல்லூரியில் இட. மில்லையென்பதை வாயாற் சொல்லத் துணியாமற் குறிப்பாகக் காட்டும் பொருட்டு, ஒரு பாத்திரத்தைக் கொண்டுவந்து அதன் விளிம்பளவாய்த் தண்ணீர் பெய்து அவனுக்குக் காட்டினார். அதைக் கண்டவுடன் அதன் தாற்பரியமின்னதென்று சிறுவன் மட்டிட்டுக் கொண்டான். அந்நேரம் அவன் மனம் எவ்வாறு வருந்தியிருக்குமென்பது சொல்லாமலே விளங்கும். ஆயினும் அவன் மனமடிவு கொள்ளாமல் தேவதிரு வுளம் எப்படியோ அப்படியே ஆகட்டுமென்று பெரு மூச்செறிந்து சொல்லிக்கொண் டவ்விடத்தினின்றும் புறப்பட்டான். புறப்பட்டு இரண்டு அடி எடுத்து வைத்தமாத்திரத்திற் கண்ணிற் தென்பட்ட இலைச் சருகால் அவன் புத்தியில் ஓர் உச்சித உணர்ச்சி தோன் றியது. உடனே அவன் குனிந்து அதையெடுத்துப் போய், பீடத்தில் வைத்தபடியிருக்கும் நிறை பாத்தி பத்தின்மீதே அதனையிட்டான். ஆனாற் பாத்திரத்தி னின்றும் ஒரு துளி நீராவது புறத்துவழியவேயில்லை. அதைக்கண்ட கல்லூரித் தலைவர் பெரிதும் ஆச்சரிய வசத்தாராகிப் பையனது சாதுரியத்தை மிகவும் புகழ்ந் து அவனைக் கல்லூரியிலே சேர்த்துக்கொண்டார்.

Page 8
2. அவதானம்
கண்ணினால் விதம்விதமான காட்சிகளைக் காண லாம். காதினாற் பல விகற்பமான தொனிகளைக் கேட்கலாம். ஆனால் அவைகளைக் கூர்ந்தவ தானியா விடின் நாம் கண்டதெது கேட்டதெதுவென்று செவ் வனே உணர்ந்துகொள்ள நம்மால் இயலாது. ஆத லால் அறிவுக்குத் துணைக்காரணம் அவதானமேயாம். உலகில் மலிந்து பொலிந்துள்ள சகல சாஸ்திரங்களும், அவற்றினாற் பெறப்படும் சகல வித்தைகளும் அவ தானத்திலிருந்தே உற்பத்தியாகின்றன. அதுவே காணப்படும் வஸ்துக்களைக்கொண்டு காணப்படாத கட. வுளை உண்டென உணரவும் அவரை வழிபடவுஞ்செய் வது. பின் நிகழவிருக்கும் இயற்கை மாற்றங்களை முன் ன றிந்து எச்சரிக்கைகொள்ளச் செய்வதும் அதுவே. உழுநன் ஒருவனை நோக்கி இன்றைக்கு மழை பெய் யுமோ? என வினாவினால் அவன் அதோ பார்! வாடைக்காலத்தில் வானவில் காலைப்பொழுதிற்றோன் று வதால் இன்றைக்கு மழை வராதென்பான். கட லோடியை நோக்கி இந்நாட்களிற் புயலடிக்குமோ? எனக் கேட்டால், சூரியன் உதயமாகையில் அதை மேகம் மறைக்கக் கண்டேன் ஆதலின் இன்றைக்கே புயல் உரத்து வீசும்போலும் என்பான்.
"இளமையிற் பட்டதும் விட்டதும் முதுமையைத் தொட்டிடும் தொட்டிடும்'' என்னும் ஆன்றோர் அனு பவ மொழிப்படி, நமது பொறிகளிலும், மனத்திலும் இளம் பிராயத்திலே பட்டு அமைந்த அறிவெதுவோ அதுவும், நமது பராமுகத்தாலுண்டான அறியாமை காலச்சேதம் முதலிய நஷ்டங்கள் எவையோ அன! யும் நமது வயோதிகமட்டும் நமக்குரித்தானவை பாம். ஆகையாம் கல்வியிற் கிரமமாய் ஏற்றமடைய

- ஆறம் புத்தகம்
வேண்டிய மாணவர்க்கு அவதானம் இன்றியமையாத தாகக்கொள்ள அஃதில்லா வித்தியார்த்தி எவனும் கல்வியிற்றேறு தல் அரிதேயாம்.
ஆசிரியர் ஓர் பாடத்தை விளக்கும்போது அதிற் கவனஞ்செலுத்தா மாணவனிடத்தே நேரிடுவதைக் கவனிப்பாம். அவன் முதற்சொல்வதை அவதானி யாவிடின் அப்பாற் சொல்வதை விளங்குதலரிது. அஃ தரிதாகவே மேலும் மேலுஞ் சொல்வனவெல்லாம் அவ்வாறாகி, அப்பாடத்தின்மீதே அலுப்புங் கசப்புந் தலைப்பட, கேட்குங் கேள்விகளுக்கு விடை சொல்ல " மாட்டாமை தோன்றும். அது தோன்றவே, வகுப் பில் முன்னேறுவதற்கீடாய்ப் பின்னிட்டுக்கொண்டே போவான். கடைசியில் மதியீனன் சோம்பன் என் னும் பட்டங்களைப் பெற்றுக்கொள்வதே அவன் அடை யும் பலனாமன்றி வேறல்ல. இதற்கு மாறாய்த் தாங் கற்குங் காரியங்களிலுமன் றித் தங் கண்ணிற் படும் இயற்கை நூதனங்கள்மீதும் கடைப்பிடியோடு கவ னஞ்செலுத்தி வந்தவரே அறிவிற் சிறந்த ஞானிகளாக வும் உலகுக்குகந்த சகாயிகளாகவுமிருந்திருக்கிறார்கள்.
பேர்பெற்ற நீயூட்டன் என்னும் பண்டிதர், மரத் தைவிட்டுப் பெயர்ந்த அத்திப்பழமானது ஆகாயத் தைத் தாவிச் செல்லாது பூமியை நோக்கி வீழ்ந்த காரணத்தை நிதானித்துப் பூமிக்குக் கவர்ச்சிச் சக்தி உண்டென நிரூபித்தார்.
உவாற் என்பவன் தன் தாய் அடுப்பிலிட்டிருந்த நீர்க் கரகத்தின் மேன்மூடியானது எழுந்தெழுந்து வீழ்வதின் காரணத்தை அவதானித்து நீராவி யந்தி ரத்தை ஏற்படுத்தினான்.
கொலம்பஸ் என்பவர், ஸ்பானிய தேசக் கரையோ பரமாய்ச் சமுத்திரங் கொணர்ந்தொதுக்கி விட்டனவும்,

Page 9
பாலபோத வாசனம்
தாம் முன்னொருபோதுங் கண்டிராதனவுமான பட்சி இறகு, மரப்பட்டை முதலிய அபூர்வ வஸ்துக்களை அவதானித்து அமெரிக்கா என்னுமோர் புதிய கண் டத்தைக் கண்டுபிடித்தார்.
மனிதனுடைய புத்தியானது தன்னியல்பிலே முள் stளும் முரடும் பற்றையுங் கற்களும் மண்டிய பாழ்நிலத் துக்குச் சமானமானது. அவதானமென்னுங் கருவி கொண்டு அதைத் திருத்திப் பண்படுத்தாவிடின் அதில் அறிவென்னும் செழும்பயிர்கள் முளைப்பனவாகா வாம். அதனைச் சாம்பருள் மறைந்து கிடக்குந் தீப் பொறிக்கும் ஒப்பிடலாம். அவ தானமென்னும் வாயு வும் விறகும் அதனோடு சம்பந்தப்படாவிடில் அதி னின்றும் அறிவென்னும் அக்கினிச்சுவாலை எழுதல்
அரிதன்றோ.
ஆதலால், வித்தியார்த்தியே! அவதானி, உன் பாடங்களை அவதானி; பெரியோர் சொல்லும் நன்மதி களையும் அவதானி ; கடவுள் உனக்காகச் சிருட்டித் தருளிய சராசரங்கள்மீதும் உன் சிந்தனை செல்வதாக. அப்போது உலக ஞானத்தோடு பாம் ஞானமும் ஒருங்கே உன் கைவசமாகும்.
3. முயற்சிக்கோர் முன்மாதிரி
----------- அநேக நூற்றாண்டுகளின்முன் கிரேக்க தேசத்தில் வசித்த கலிஸ்திரேடஸ் என்னும் நிபுணர் ஒருவர் பிர சங்க சாதுரியத்திற் பேரோங்கி விளங்கினார். அவருக் குச் சனங்கள் செய்துவந்த சன்மானங்களைக் கண்ட,

ஆறப் புத்தகம்
டிமோஸ்தினிஸ் என்னும் ஒருவர், தாமும் அவரைப் போல் ஆகவேண்டுமென்னும் மன எழுச்சிகொண்டு பிரசங்கிக்கத் தலைப்பட்டார். அப்போது அவர் பிரசங் கமோ கேட்போர்க்கு, பயிலாதவன்கை மேளமுங் குயி லாதவன் குரலோசையும்போல் மிக்க கேவலமாயிருந் தது. பற்பலமுறை அவர் பெரும் பிரயாசையோடா யத்தஞ்செய்து பேசிய பேச்சுக்களைக் கேட்பவர்கள், இடையிற் குழப்பி அவரைக் கேலிபண்ணிவிடுவார்கள். இந்த அவமானத்தால் டிமோஸ்தினிஸ் துக்க சாகரத் தில் அமிழ்ந்தினாராயினும் மனந்தளராமல் தமது குறைகளை யெல்லாம் நிவாரணஞ்செய்ய முயன்றார். அவர் இயல்பிலே பெருந் தெற்றுவாயர். சொற்களின் உச்சாரணம் மிகவும் அவலட்சணமாயிருக்கும். மூச் சுப் பிடித்து விடாமற் பேசுஞ் சாமர்த்திய மில்லாத தால், வாக்கியங்களை நெடுநேரம் நிறுத்தி நிறுத்திப் பேசுவார். பிரசங்கத்துக்கத்தியாவசியகம் வேண்டிய குணங்களில் ஒன்றையேனும் அவர் இயற்கையில் அமையப்பெற்றிலர். ஆயினும் வாசாலகத்திற் சிறந்து பெருநாவலராக வேண்டும் என்னும் ஆவல் அவரிடத் திற் பூரணமாய்க் குடிகொண்டிருந்ததால் அது நிறை வேறும்பொருட்டு அவர் செய்துவந்த விடாமுயற் சியோ யாவரும் வியக்கற்பால தாம்.
திக்குவாயை நீக்குதற்காகக் கூழாங் கற்களை வாயிற் போட்டுக்கொண்டு சமுத்திர தீரத்தில் உரத்த சத்தத்துடன் சிறந்த கிரந்தங்களை வாசித்துவந்தது மன்றி, அவற்றை முகபாடஞ்செய்து சமுத்திரத்தை நோக்கி ஒப்பித்தும் வந்தார். இதனால் நாவு நன்றாய்த் திருந்தியதுமன்றி வசனிப்பதற்கு இன்றியமையாத னவாகிய நாம்புகளுஞ் சீர்ப்பட்டுவந்தன. அக்காலத் திலே கிரேக்கர் வெட்டவெளியான இடங்களிலே லட் சக் கணக்கான சனங்கள் கேட்கத்தக்க தொனியோடு

Page 10
பாலபோத. வாசனம்
பிரசங்கிப்பது வழக்கமாயிருந்தபடியால், டிமோஸ் தினிஸ் உரத்த சத்தத்தோடு சமுத்திரத்தின் பேரி ரைச்சலுக்கு மேற்பட்டுத் தம்முடைய செவிக்குத் தாம் சொல்வது நன்றாயுந் தெளிவாயுங் கேட்டுரும்படி பேசிப் பழகி வந்தது, பின்பு அவ அவ்விடங்களிலே தம்முடைய பிரசங்கத்தைச் சனங்கள் கேட்டு உவக் கச் செய்வதற்கனுகூலமாயிருந்தது. செங்குத்தாயும் ஏறுதற்கரிதாயுமுள், மலைச் சரிவுகள்மீதே அவர் ஏறப்பழகிவந்தார். இது தருடைய சுவாசப்பையை நன்றாகப் பலப்படுத்தியது. அது பலப்படவே மிக நீண்ட வாக்கியங்களைத்தானும் மூச்சுவிடாமற்சொல்லி
முடித்தற்குக் கூடியவரானார்.
வதற்கனுசு மலைச் டய சுவாச வே மிக
இய க , 'ருல கள்,குத
(து அங்க நிக்கல், வின் வழக்கம். பு.
பிரசங்கங் கேட்போர்க்குப் பிரிதியையும் விளக்கம் தையுங் கொடுப்பதற்கவசியமான அபிநயங்களிலே தமக்கிருந்த அலங்கோலங்களைத் திருத்த அவர் கொண்ட சிரமம் மிகப்பெரிது. அவைகள் எவையென் றறியும் பொருட்டு, அவர் எப்போதும் ஒரு நிலைக் கண் ணாடியின் முன்நின்று பேசிவருவது வழக்கம். புருவம் நெளித்தல், தலை நடுக்கல், விழி புரட்டல் முதலிய அவாது அங்க விகாரங்கள் அக்கண்ணாடி வழியாய் ஒருவாறு ஒழிந்துபோயினவாயினும், பேசும்போது தோளை நெளித்து நெளித்துக் குலுக்குதலாகிய துர் வழக்கமொன்று நெடுநாட்டொட்டு அவரை விட்டக லாதிருந்தது. அதை ஒழிக்கவேண்டி அவர் தமது தோளுக்கு மேலாகக் கூரிய ஈட்டி ஒன்றைக் கட்டித் கொங்கவிட்டிருந்தார். பேசும்போது அதை நினை யா மல் தோளை உயர்த்திக் குலுக்கும் வேளையிலெல்லாம் ஈட்டி முனையானது உதிரம் பெருகும்படி குத்திக் குக்தி அப்பழக்கம் இருந்ததோ என்றுந் தெரியாமற் செய்துவிட்டது. நயம்பட அநேக உதாரணங்களுட னும் மேற்கோள்களுடனும் பிரசங்கிப்பதற்காகத்

ஆறாம் புத்தகம்
தமக்கு முன்னிருந்த வித்துவான்கள் எழுதிய கிரந்தங் களையெல்லாம் வாசித்து, அவற்றில், சாராம்சங்களை ஞாபகத்தில் வைக்கவேண்டிய அவசியமிருந்தபடியால், அவற்றையெல்லாம் அவர் அயர்விலா ஊக்கத்துடன் வாசித்து ணரத் தலைப்பட்டார். இப்படியாகையில் மனம் ஒருப்பட்டு வேறு விஷயங்களில் நாடாமலும், தாம் அங்கிங்கு போகாமலும் இருப்பதற்காய்த் தமது சிரசை மழுங்க முண்டனஞ் செய்துவிட்டு, நில அறை ஒன்றிற் புகுந்து, அங்கே பதினாறு வருடகாலம் ஏகாந்தமாய் வசித்துவந்தார். )
''முயற்சி தன் மெய்வருந்தக் கூலி தரும்'' என்ப தற்கொப்ப அவர் நெடுங்காலம் இராப்பகலாய்ப் பட்ட பிரயாசத்தின் பயனாகத் தாம் விரும்பியபடி பிரசங்க் சாதுரியத்திற் பிரசித்தி அடைந்ததுமன்றிச் சொல் வன்மையில் நிகரற்ற சிங்கேறென்னும் பெரும் புக ழையும் அடையலானார்.
நீ வகுப்பிலே பின்னிடைய, உன் உடன் மாணவன் முன்னேறுவதும், ஒருவன் குடிக்கக் கஞ்சிக்கும் வழி யற்றுத் திரிய, மற்றொருவன் கோடி செல்வனாயிருப் பதும், ஒருவன் கொலை, குடி, களவு முதலிய துன் மார்க்க பாபியாக, இன்னொருவன், எவர்க்கும் இனிய புண்ணியசீலனாய் விளங்குவதும் வித்தியார்த்தியே! தளரா முயற்சியினாலேயாம். இந்தத் தாளாண்மை தான் முன் பாமரன் பாமரன் என்று புறக்கணித்த உலகத்தைப் பண்டிதன் பண்டிதன் என்று கையெடுக் கச் செய்ததென உணர்ந்து, முயற்சியின் உயர்ச்சி யைப் போற்றி, அதை உனக்குத் தோழமையாக்கிக் கொள்ளக்கடவாய்.
ஆ. 2

Page 11
4.
பொறையுடைமை
------------- நாம் இவ்வுலகிலே துன்பமுந் தொல்லையுமின்றிச் சீவிப்பதரிதேயாம். இன்றைக்கொருவன் பாதுகாா ணமுமின்றி நம்மை வைது நிந்திப்பான். நாளைக்கு வயிற்று வலி, தலைநோ முதலிய பிணிகளால் வருத்த மடைவோம். வேறொருநாள் மழையும் புயலும் நமது நில புலங்களிலுள்ள பலன்களைச் சிதைத்துநிற்கும். இவ்வாறே நமது மனதுக்குந் தேகசெளக்கியத்துக் கும் விரோதமானவைகளையெல்லாம் மனவுறுதியோடு சகித்துக்கொள்ளும் பெருங்குணமே பொறையுடை
மை எனப்படும்.
பூமியிலே விவேகியாக மதித்துப் போற்றப்படத் தக்கவன் யாவன்? சகல சாஸ்திரங்களும் திரண்டு ருவெடுத்தாற்போன்றுள்ள ஒரு கலா சிரேஷ்டனா? அன்றிப் பெரிய நெப்போலியனைப்போல் ''அரிய தொன் றில்லை '' யென்னும் விருது கையேந்தியவோர் வீரதீரனா? அல்ல, அல்ல. துன்பம் வந்தாலும் சுகம் பெற்றாலும், செல்வம் வந்தாலும் வறுமை நேர்ந்தா லும் எல்லாவற்றையும் மனரம்மியத்தோடு பொறுத் தநுபவிப்பவனேயாம். இவனே பெரிதும் மதிக்கப் படத்தக்கவன் ; புண்ணியசாலிகளின் உயர் வரிசை யில் வைக்கப்படத்தக்கவன். சிலர், மாசற்ற தனத்தி லும் ஈகை, தவ முதலிய சுகிர்தங்களிலும் வானத் தில் நின்றுவந்த மனோரூபிகள் போலத் துலங்குவார் களாயினும் ஒரு கடுஞ்சொல் அவர்களிடையே சொல் லிவிட்டால், அல்லது அவர்களுக்கு விருப்பமில்லாத தொன்றைச் செய்துவிட்டால் அவர்கள் தண்ணளியுங் கண்ணியமும் இருந்த இடமுந் தெரியாது மறைந்து விடக் காணலாம். பொறையுாளனிடத்திலே இங்ஙன மாகாது.

ஆறாம் புத்தகம்
11
சொக்கிறத்தீஸ் என்னுந் தத்துவ ஞானி, தன் அடிமைமேல் ஒருகால் கோபங் கொண்டபோது "எனக்குக் கோபந் தோன்றாதிருக்குமாயின் இப்போ . துன்னை அடிப்பேன்'' என்றாராம். வேறொரு தரு" ணம், கடுங்கோபகுணம் பூண்ட அவர் மனையாள், அவ ரைத் தூஷித்தபோது அவர் மவுனஞ் சாதித்து நிற்க, அத்துஷ்டை, அதி கோபங்கொண்டு, அழுக்கு நீ பால் ஒரு பாத்திரத்தை நிரப்பி, அவர் தலைமேற் சொ ரிந்துவிட்டனளாம். அதையுமவர் அதிசயித்தற்குரிய விதமாய்ச் சகித்துக்கொண்டு " அவ்வளவு முழக்கத் துக்கும் இவ்வளவு தூற்றல் தானா?'' என்று சொல்லி அமைதியாய் இருந்தாராம்.
''குறுமை மனத்துன்பங் கொள்ளுமே கோபம், பொறுமை பெறுமேபுகழ்" என்னும் நீதிமொழிப்படி, கோபியானவன், மனச் சகிப்பின்மையினால் என்றுஞ் சஞ்சலத்திற்குள்ளாக, பொறையுடையவனோ, தனக்கு நேரிடுந் துன்பங்களைச் சகித்துக்கொள்வதின் பயனாக, உள்ளளவுஞ் சமாதானத்தையும் வெகுமானத்தையு .
மடைந்துகொள்பவனாவான்.
கண்ணுக்குக் கண்மடல் எங்ஙனம் இன்றியமை யாததோ அங்ஙனமே ஐக்கிய சீவியத்துக்குப் பொ றுமையும் இன்றியமையாததா யிருக்கிறது. ஒரு மடத்திலே கோபக்குணமுள்ள சந்நியாசியார் ஒருவர் இருந்தார். அவர் தமது முன்கோபத்திற்கும் பொறா மைக்குமெல்லாந் தன்னோடு சீவிக்குந் துறவிகளே காரணமென்றெண்ணி ஒருநாள் மடத்தைவிட்டு வனத் திலே தனியே சீவிக்கப் போயினார். போய், குடிக் கிறதற்காக ஓர் குடத்திலே தண்ணீர் மோண்டுவந்து தாமிருக்குமிடத்திலே வைத்தார். வைத்த மாத்தி பத்தில் நீர்க்குடம் சரிந்து கவிழ, நீர் முற்றும் வீண் போயிற்று. இரண்டாம் முறையுமப்படியே நிகழ்ந்

Page 12
12
பாலபோத வாசனம்
அதன்பின், கான் பொல்லமாம்' -ததைத் தன்
தது. மூன்றாம்முறை கொண்டுவந்த நீரும் முன்போ லக் குடங் கவிழ்ந்ததால் ஊற்றுண்டுபோயிற்று. சந்நி யாசியார் இதைத் தாள மாட்டாமல், குடத்தைத் தரை பிலே மோதிச்சில்ல பொல்லமாய் உடைத்தெறிந்தார். அதன்பின், தமது பொறாமைக்கும் முன்கோபத்துக் குங் காரணந் தஞ் சகோதரரல்ல, தாமேயென்று
ணர்ந்து மடத்துக்குத் திரும்பிப்போயினார்.
சகல அநுகூலங்களுக்கும் வழியாகிய மனச்சமா தானத்தை அழித்துவிடுவது கோபமே. கோபத்தை அடக்குவதிற் றாமதப்படின் மனக்கலக்கமுண்டாகும் ; அஃதுண்டாகவே அறிவு நிலை தளம்பும்; அது தளம் பவே, பிறர்மேற் கிருபையென்பதில்லையாகும்; அஃ தில்லையாகவே சடுத்தமும் பகையும் சிலகாற் கொலை பாதகமுமே நேரிட இடமாம்.
செமெயி என்பவன் தாவீதாசரை வைது திட்டிய போது அவர் மெய்காப்பாளர் அவனைத் தண்டிக்க எத்தனித்தார்கள். அதனைக் கண்ட அரசர் அவர்க ளைத் தடுத்து ''எனது விரோதிக்கு யாது தீங்குஞ் செய்யாதீர்கள். அவனால் எனக்கு நேர்ந்த அவமானத் தின்பொருட்டு என் மனம் வருந்துவதைக் காணுங் கடவுள் என்மீதிரங்கி என் பாவங்களை மன்னித்து எனக்கு நன்மை புரியக்கூடுமாதலால் நிந்தனைப்படுவது மகா பாக்கியம்" என்றாராம்.
உள்ளங் கவர்ந்தெழுந் தோங்குசினங் காத்துக் கொள்ளுங் குணமே குணமென்க --வெள்ளந் தடுத்த லரிதோ தடங்களை தான்பேர்த்து விடுத்த லரிதோ விளம்பு என்றார் அனுபவமுதிர்ந்த பெரியோரும்.
''நாயானது தன் வாயினால் நம்மைக் கடித்தவிடத து, மீட்டதனை நாமும் வாயினாற் கடிக்கத் துணிவது

ஆறாம் புத்தகம்
13
மூடத்தனமன்றோ.'' அதுபோலவே வதிலுக்குவதில் தீங்குசெய்யுஞ் செயலுமாகும். "ஒருவன் நமக்குச் செய்த அடாத்தினிமித்தம் அவனைக் கோபித்துத் தண்டிப்பதைவிட்டுச் சற்றுப் பொறுமையோடு சும் மா இருந்துவிடுவோமாயின், '' நமது பொறையுடை மையே அவன் மனதை உதைத்துப் பழிக்குப் பழி வாங்கி நிற்கும். இதனை உணர்ந்தன்றோ விவேகிகள் பொறுமையாலுஞ் சாந்தத்தாலுந் தஞ் சத்துருக்க ளைப் பழிவாங்கிச் செயசீலாரானார்கள்.
5: மனோபீதியின் கெடுதி
நமது சரீரமானது, தன் சுக நிலையை இழந்து நோய்கொண்டிறப்பதற்கு, மூன்று காரணங்களுள. தகாத ஆகாயம், நீர், உணவு, வேலை ஆதியவற்றாற் சீரண உறுப்பு முதலிய இயக்காதாரங்கள் பழுதடை தல் ஒரு காரணம். மிதமிஞ்சிய கவலைகள் சிந்தனை களால், ஆகாரம் நித்திரை முதலியன குறைபடுதல் வேறோர் காரணம். மற்றைக் காரணம் அவநம்பிக் கையோடு பொருந்திய வீண் பயமாம். இதுவே மனோ பீதியெனப்படும். மனோபீதியால் வியாதிப்படுவோ ரும் இறப்போருமுண்டோ என, யாரும் மலைத்தல் கூடும். ஆனால், இது மனிதனுடைய மன நிலையைக் கூறும் மனோதத்துவ சாஸ்திரிகளுமன்றித் தேர்ந்த வைத்திய விற்பன்னரும் அனுபவ சித்தமாய்ச் சொல் லுமோர் உண்மையாதலின், ஆட்சேபத்துக்கிடமில்லை. இவ்வுண்மைக்குச் சாட்சியாக அநேக சம்பவங்களை

Page 13
14
பாலபோத வாசனம்
எடுத்துச் சொல்லலாம். அவற்றுள் : இங்கிலாந்து தேசத்திலே, சில வருடங்களின் முன் நோயுற்றிருந்த ஒரு துரைமகளுக்கு நேர்ந்த சம்பவம், மிகவும் விசே ஷித்தது. அவள் தன் வியாதிக்கேற்ற மருந்துமுறை அடங்கிய சீட்டொன்றை வைத்தியரிடம் பெற்று, மருந்துச்சாலைக்குச் சென்று அதன் தலைவனுக்குக் காட்டி, அதிற் குறித்த மருந்துகளைச் சித்தஞ்செய்து தரும்படி கேட்டாள். அவன் அதிற் கண்டபடி, சற் றேறக்குறைய ஒரே நிறங்கொண்ட இரண்டவுஷதங் களை, முறைப்படி கலந்து, வெவ்வேறான இரு குப்பி களில் வார்த்துக் கொடுத்து, ஒரு மருந்தை உள்ளே கொள்ளவும், மற்றயதை வெளிப்புறத்தே தடவவுங் கற்பித்ததோடு, புறத்தே பூசும் மருந்தில் நஞ்சு கலந்திருப்பதால், அதைக் குடிக்கவேபடாதெனவும், அப்படிச் செய்யாதபடிக்கே, நஞ்சு என்று வரைந்த சிவப்புப்பத்திரம் அதில் ஒட்டப்பட்டிருக்கின்றதென வும், வற்புறுத்திச் சொல்லி அனுப்பிவிட்டான்.
அப்படி பத்திச் lெ
அம்மாது இவ்விரண்டு மருந்துகளையும் மிக்க கவ னத்தோடு, தனித்தனியே வெவ்வேறு சுவர் மாடங்க ளில் வைத்திருந்து, தனக்குச் சொல்லப்பட்ட முறைப் படி பிரயோகித்து வருவதில் நடக்குங் கிரியைக் கி மத்தை அவதானித்திருந்த அவளது மைத்துனன் ஒருநாள் வேடிக்கை நிமித்தமாய், அவளறியாதபடி, பூச்சு மருந்துக் குப்பியில், நஞ்சு என்றிருந்த பத்திரத் தை மெல்ல உரித்தெடுத்து, மற்றதிலொட்டிவிட்டு, இஃதொன்றுந் தெரியாதான்போல் இவளோடு சம்பா ஷித்துக்கொண்டிருந்தான்.
இது நிகழ ஒரு நாழிகையின் முன்னரே, பிணி யாளி வழக்கம்போல் உட்கொள்ளவேண்டியதையுட் கொண்டும், வெளியே பூசவேண்டியதைப் பூசியும், வேறலுவலிலே நேரம் போக்கிக்கொண்டிருந்து, திடு

ஆறம் புத்தகம்
15
உள்ள
கூறாய், அக்குப்பிகள் வைக்கப்பட்ட மாடங்களுக்குச் சமீபமாகப் போக நேர்ந்தபோது, உள் மருந்திருக்க வேண்டிய இடத்திலே, சிவப்புப் பத்திரமொட்டிய நஞ்சுமருந்துக் குப்பியிருக்கக் கண்டாள். கண்டதும், ஐயையோ! மோசம்போனேனே! என் கைப்பிசகி னால் மருந்துக் குப்பிகள் இட மாறிவிட்டனவே! சற்றுமுன் நான் குடித்தது நஞ்சைத்தானே! இன் றோடு முடிந்தது என் வாழ்நாள்! என்று பலபடச் சிந்தித்து மனோபீ திகொண்டு தத்தளித்துப் படுக்கை பயில் வீழ்ந் தாள். உடனே தொண்டையும் உந்தியும் கபகபவென்றெரிகின்றனவென்றும், மயக்கமாய்த் தலை சுற்றுகின்றதென்றும் முறையிட்டுச் சற்றுநேரத்தி லெலாம் மூர்ச்சையுமானாள். வைத்தியர் வந்து மூர்ச் சையைச் சற்றுத் தெளிவிக்கவே, அவள் "ஐயோ! அறியாமல் நஞ்சைப் பருகிவிட்டேன்'' என்று பல தாம் மீட்டு மீட்டுச் சொல்லிக்கொண்டேயிருந்தாள். இதன் மேல் வைத்தியர், நஞ்சு முரிக்கும் மருந்தைக் கொடுத்தார். விஷ பானத்தையுட்கொண்டதாக அவள் கொண்டிருந்த தப்பெண்ணமும் பீதியும், அவள் மன தில் நன்றாய் ஊன்றியிருந்ததால், அம்மருந்து அவளை எவ்வளவுங் குணப்படுத்தாதே போயிற்று. ஆனால், பாஷாணத்தை உள்ளபடியுட்கொண்டால் என்ன குறி கள் தோன்றுமோ, அக்குறிகளெல்லாம் அவளிடத் கிலே தோன்றின.
இவற்றிற்கெல்லாங் காரணனாயிருந்தான், மிகவும் பயந்து விளையாட்டுக் காரியம் வினையமாய் முடிந்ததே யென்று விசனித்துத், தான் வேடிக்கை காரணமாகச் செய்த யாவற்றையும் வைத்தியருக்கு விவரித்தான். அவர் உடனே பிணியாளியை எழுந்திருக்கச்செய்து, நடந்த காரியத்தை அவள் மைத்துனனைக்கொண்டே சொல்லுவித்ததோடுகூட, அவரும் '' நீ யுட்கொண்

Page 14
18
பாலபோத வாசனப்
டது நஞ்சல்ல, பயப்படாதே'' யென்று எத்தனையோ தரஞ் சொன்னாலும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால், என்று சாதித்தவன் சீலமாய்த் தனதெண்ணத் கிற் சலஞ்சாதித்து நின்றாள். இதன்மேல், வைத்தி யர், சிவப்புப் பத்திரம் ஒட்டிய குப்பியைத் தருவித்து, அவள் பார்க்கும்படி அம்மருந்தைத் தாமேயுட்கொண் டு காட்டியதால், சற்று மனமாறினாளாயினும், அவள் நன்றாகக் குணப்படுவதற்கு, நான்கு தினங்கள் வரை யிற் சென்றன.
6. மனோபீதியின் கெடுதி (முன்தொடர் பு)
90---- இது விஷயத்தில், இன்னுமோர் அதிசய சங்கதி புள து. பிரான்சு தேசத்திலே, மனோதத்துவ உண் மைகள் சிலவற்றைப் பரீட்சித்தறிய விரும்பிய பிர பல வைத்தியரொருவர், அத்தேச சக்கரவர்த்தியிடம், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஒருவ னைக் கேட்டுப் பெற்றுக்கொண்டார். அவனை அவர் தம் வீட்டுக் கிட்டுப்போய், சிநேகிதனே! செய்த குற்றத்தினிமித்தம், எப்படியோ நீ இறக்கவேண்டி யவன் தான். ஆனால், சற்றேனும் உன்னை வருத்தா மல், உன் உடலிலிருந்து உன் உயிரைப் பிரிக்கப் போகிறேன்-உன் தேகத்திலுள்ள உதிரமெல்லாம், ஒரு சிறு துவார வழியாய் வெளியே புறப்படும். இஃகானவுடன், நீயுஞ் சுகமாய் மரித்துவிடுவாய் என்று அவனுக்குச் சொன்னார். குற்றவாளி இதைக் கேட்டு, மிகுதியுஞ் சந்தோஷமடைந்து,

ஆறம் புத்தகம் |
17
ஐயா! அது எனக்குப் பெரிய சகாயமாய் இருக்கும் ; அப்படியே செய்திடுகவென்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். உடனே வைத்தியர், அவன் கண்க ளைத் துணியால் மறைத்துக் கட்டிவிட்டு, அவன் கழுத்திலே ஒரு ஊசிகொண்டு மெல்லக் கீறி னார். அதிலிருந்து உதியஞ் சற்றாவது புறப்படவேயில்லை. அப்பால், அக்கீற்று வாய்க்குக் கீழே, ஒரு கிண்ணத் தைப் பிடித்துக்கொண்டு, அக்குற்றவாளி செவிப் படத் தண்ணீர் வார்த்துக்கொண்டிருக்கும்படி ஒரு ஏ வலாளிக்குக் கட்டளை பண்ணினார். தன் கழுத்தி லுள்ள் காயவழியாகவே, இரத்தம் பாத்திரத்துட் சொரிகின்றதென அவன் நம்பிப் பிதிகொள்வதற்கு இச்செய்கை உதவியாய் இருந்தது.
சமீபத்திலிருந்தவர்களும் வைத்தியரும் இடையி டையே ஐயோ! ஐயோ!! என்றும், இன்னுஞ் சற்று நோந்தான் என்றும், முடிவாய்விட்டதென்றும் குற்ற வாளி மனதிலே திகிலையும் ஏக்கத்தையும் எழுப்பக் கூடிய இன்னோரன்ன வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டிருந்தார்கள்.
இப்படி ஐந்து நிமிஷங்கள் சென்றபின், தண்ணீ ரைத் தொடர்ச்சியாய் வாராது, துளி துளியாய் விழ விட்டுச் சற்றுப் பொறுத்து அதை நிறுத்திவிடவுஞ் சொன்னார். இவ்வாறு யாவும் ஒய்ந் ததை அறிந்த அக்குற்றவாளி, தன் னுதிரமெல்லாம் வெளியேறிவிட் டது; இனி ஒரு துளியாவது தேகத்தில் இல்லையென நம்பி, ஏங்கித் தியங்கி நிலத்தில் வீழ்ந் துயிர் விட் டான்.
உள்ளபடியே, ஒருதுளி இரத்தமேனுஞ் செலவாகா கிருந்தும், இவன் உயிரை மரணத்தின்வாய்ப்படுத்தி பது, மனப்பயமேயன்றி வேறேது? மிதமிஞ்சிய சந்

Page 15
18
பாலபோத வாசனம்
தோஷத்தாலும், மிகுந்த மனத்துயரத்தாலும் மனித ருக்கு மாணாபத்து நேரிடுவதுண்டு. இது ஆயிரத்துக் கொன்றென்றால், மனப்பயத்தால் உயிர் துஞ்சுவோர் தொகை ஆயிரத்துக்குப் பத்தென்று சொல்லுதல் பொய்யாகாது. விஷபேதி காலங்களிலே இறப்பவர் அநேகர், பயத்தினாலேயே. ஒருமுறை ஐரோப்பிய பட்டணமொன்றிலே பேதிநோய் உண்டுபட, அநே காயிரக் கணக்கானோர் இறந்துபோனார்கள். அவர்க ளுள் இரண்டேயிரண்டு பேர் மாத்திரம் உள்ளப் டியே விஷபேதியால் மடிந்தவர்களென்றும், ஏனையோ ரெல்லாம் பீதியினாலே இறந்தவர்களென்றும் ஒரு மகாத்துமா அறிந்து வெளிப்படுத்தினார்.
சில நோயாளிகளுக்கு வைத்தியர் எவ்வித மருந்து கொடுப்பினுங் குணமுண்டாவதில்லை ; எப்பொழு தும் ஒருகண்ட சீபாகவேயிருக்கும். நோய்க்குரிய காரணம் இல்லையென்று சொல்லக்கூடியதாய் இருக் கும்போதும், சிலருடைய தேகம் வரவர இளைத்து மெலிந்துபோகக் காண்கிறோம். இவற்றிற்கெல்லாங் காரணமாயிருப்பது, மனப்பயம், அல்லது வீண்மனோ கற்பிதம் (Imagination) என்னும் வியாதிதான். இவன் மாரணத்தாற் செத்தான்; அவன் பேயடித் துச் செத்தான் என்னுஞ் செய்திகளைச் சரிவர ஆராய்ந்து பார்ப்போமாயின் அவற்றிற்கும் அதுவே காரணமாய் நிற்பதென உணர்ந்துகொள்வோம். ஆகையால் நாம் மனதுக்கடுத்த துன்பங்களில் நின்று நீங்கவேண்டின், எதற்கும் மிதந்தப்பிப் பயப்படலா Aாது.
('Janavinothiny ''.)
பிதம் பபது, மனம் "ம். இவர், இளைத்த

/ Aa4 %84
7. பழக்கம்
மனுஷ சஞ்சாரமில்லாத காட்டின் இடத்தே விடப் பட்ட சிறு குழந்தையானது, ஏதோ விதமாய்த் தப் பிப் பிழைத்துப் பெரிய மனிதனாகுமட்டும் அவ்விடத் திலேயே சீவிக்குமானால், அதன் நாவொலியும் பழக் கங்களும் மிருகத்துக்கொப்பாகவே இருக்கும். அன் றியும் அது மீண்டு நம்மைப்போலத் திருத்தமான நிலையை அடைதலு மரிதேயாம். இதுபற்றித்தான் ''பலநாட் செய்வது பழக்கமாய்விடும், பழக்கத்தை மாற்றுவது மரணம் போலிருக்கும்'' என்றார் பெரி யோரும்.
பத்து றாத்தல் பாரமுள்ள இருப்பு வளையத்தை நமது கழுத்திற் போட்டுக்கொள்ள வேண்டும் என் றொரு இராசகட்டளை யிருந்தால், அக்கட்டளைப்படி அதைத் தரித்துக்கொண்ட தினந்தொட்டுச் சிலகால் மட்டும் அது சகிக்கரிய வேதனை போலத் தோன்றுமா யினும், நாட் செல்லச் செல்ல அப்படியோர் வளையம் நம்மிடத்தில் உண்டோ என்று சந்தேகிக்கத் தக்கவா (ஒய், அதனோடு நாம் பழகிவிடுவோம். ஏனெனில், நமது கண் முதலான பஞ்சேந்திரியங்களும் அவயவங் களும், புத்தி முதலான மனோதத்துவங்களுஞ், சிறுப் பந் தொட்டுப் பழகிக்கொண்டவற்றில் உறுதிப்பட, அது நமக்கு வேறோர் சுபாவம்போல் ஆய்விடுகின் றது. இதற்கு அத்தாட்சி சில கூறு வாம்.
கொலைத்தொழில் புரிந்த குற்றவாளியொருவன், எட்டு வருடமளவும், பலாப்பழத்தின் மேற்புறம் போல் அமைக்கப்பட்ட இருப்பு முட்கட்டிலின்மீதே சயனித்தலாகிய தண்டனை விதிக்கப்பெற்றான். அவ்ன் விடுதலாவதற்குச் சில காலத்தின்முன், சிறையிலிருப் போரைத் தரிசிக்கப்போன அரசன், அவனைக் கண்டு,

Page 16
பாலபோத வா சனம்
நீ இந்த வேதனை எத்தனத்தாற் பெரிதும் துன்பப்படு கிறாய் என்று நினைக்கிறேன். உனக்குச் சம்மதமா னால் வேறொரு லேசான ஆக்கினையைத் தெரிந்து கொள்ள உத்தரவளிக்கிறேன் என்றான். குற்றவாளி மாறுத்தரமாக: என் அருமைப் பெருங் கருணைப்பெ ருமானே! கொடிய துரோகியாகிய அடியேனை நினைவு கூர்ந்து, இந்தப் பெருந் தயவைப் புரிய உளங் கனிந் ததற்காய் ஆயிரம் வந்தனஞ் சொல்லு கிறேன். ஆனால் என் தேகத்தைப் புண்படுத்தி, எனக்குப் பொருந்தாத சத்துருக்களாயிருந்த முட்களெல்லாம், என்னோடு பழகி என து மித்துருக்களாய் விட்டன. என் முது கடங்கலும் காட்டுக் கற்பார் போல் ஒப்பசெப்பமற்றி ருப்பதால், சமமும் மிருதுவுமான சாதாரண படுக் கை, எனக்குப் பொருந்தமாட்டாது. தேவரீர் அடி. யேனுக் கிரக்கஞ்செய்ய விரும்பினால், இன்னுமுள்ள மீதிக்காலமட்டும் இந்தக் கட்டிலின்மீதே படுத்துக் கொள்ளவும், சிறைமுடிந்து என்னை அனுப்பிவிடும் போது, இக்கட்டிலையும் என் கையில் தந்துவிடவுந் தயை செய்ய வேண்டுமென்று விண்ணப்பஞ் செய்கி றேன் என்றான். பழக்கத்தின் வலிமையைப்பற்றி
அரசன் நன்கறிந்தவனாகக்கொள்ள, இது காரியத்தில் அதிசயப்படாமல் அக்குற்றவாளி கேட்டுக்கொண்ட படி செய்யலாம் என்று உத்தரவளித்தான்.
சுபாவத்துக்கு முரணான காரியங்கள் தானும் ஆரம் பத்திற் பொருந்தாதிருந்து பழக்கத்தாற் பொருத்த முடையனவாகுமென்றால், அகங்காரங் கோபங் காம் முதலிய சுபாவ துர்க்குணங்களோடு பழகிக்கொண்ட வன் நிலைமையைப்பற்றிப் பேசவேண்டியதென்ன?
கண்டகண்ட சிறுவரையெல்லாங் கிள்ளித் துன்பப் படுத்தப் பழகிய ஒரு துஷ்டப் பையன், ஒருநாள் தன் கர்ப்பழக்கத்தின்படி கிள்ளுவதற்கு ஒருவருமில்லை

ஆறாம் புத்தகம்
21
யெனக்கண்டு, சமீபத்தில் நின்ற ஒரு விருத்தாப்பிய னிடம்போய், அப்பா! ஒருதரம் மாத்திரம் உன்னைக் கிள்ளிவிட உடன்படுகிறாயா? என்றானாம்!
மதுபானம்பண்ணப் பழகிய ஒருவன், தன்னாஸ்தி பொருள்பண்டமெல்லாம் விற்றுக் குடித்துப் பணமில் லையெனக் கண்டு, தசன வித்தைக்காரன் ஒருவனுக் குத் தன்பற்களைக் கழற்றி விற்றுக் குடித்தானாம். பின், தன் மனையாளின் பற்களை உடைத்து விற்று, அப் பணத்தைக்கொண்டு குடித்தானாம். அந்தப் பணமுஞ் செலவழிந்துபோக, உயிரோடிருக்கும்போதுதானே வைத்திய கல்லூரித் தலைவருக்குத் தன் பிரேதத்தைப் பொருத்த முறையாக விற்றுக் குடித்தானாம்!
காமாதுமனாய்த் திரிந்த வாலிபன் ஒருவனை ஒரு பெரியவர் கண்டு, தம்பீ! பெருஞ் செல்வாக்குள்ள உன் குடும்பத்துக்கும் உனக்கும், உன் ஊருக்கும் ஏன் இந்த அவகீர்த்தியை உண்டுபண்ணுகிறாயென்று கேட்க, அவன் : பெரியவரே! நான் என்ன செய்வேன். என து துராகிருதம் என்னாத்துமத்துக்குஞ் சரீரத் துக்குங் கேடு விளைப்பதோடு, என் கீர்த்தியையும் பழுதாக்குகின்றதென நான் நன்றாய் அறிகிறேன் ; ஆனால் ஐயோ! எனக்கது பழகிப்போனபடியால், அதை விடுவது சீவனைத்தானே விடுவது போலிருக் கின்றதென்றானாம்.
வேரூன்றிய கெட்ட பழக்கத்தை ஒழிப்பது கடி ன மானாலும், இடையறாத பிரயாசத்தினாலும் விடா முயற்சியாலுந் தங்கள் தீய பழக்கங்களை மாற்றி நல் லொழுக்கமுடையவர்களாகி, யாவராலும் புகழவும் மதிக்கவும்பட்டவர்களுமுண்டு.
ஆகையால் இப்பாடம் நமக்கு இரண்டு விசேஷ உணர்ச்சிகளைத் தருகின்றது. பழக்கம் மிக வலிமை

Page 17
22.
பாலபோத வாசனம்
யுடையதென்பதால், இளம்பராயந்தொட்டு நமது சத் துராதிகளாகிய சுபாவ துர்க்குணங்களைத் தவிர்த்து வா என்றும் அயராத எச்சரிக்கையும் விடா முயற் சியுங் கொள்ளவேண்டும் என்பது ஒன்று. மற்றது, நமக்கு மன துண்டானால் எதற்கும் அசையாத கடும் பாறைபோல் வயிரிப்படைந்த நெடுங்காலத் துர்ப் பழக்கங்களையும் இருந்த இடமுந் தெரியாமல் ஒழித்து விடுவதும், தயை, பொறை, சாந்தமாதிய சுகிர்தங்க ளாற் சிறந்த குணசீலராய் மாறிவிடுவதும் நம்மாற் கூடாத காரியங்களல்ல என்பதாம். பழக்கமே! உன் னால் விளையாத தீமையுமில்லை, உன்னால் அடையப் படாத நன்மையுமில்லையன்றோ!
-->:):0---
8. பொய் இன்பம். (பேரின்பநா தன் கதை)
- 90
இத்தாலி தேசத்திலே றவென்னா வென்னு நகரிலே கயிவாறே என்னுஞ் சிறுவனொருவன் விடுதிப் பாட சாலையொன்றிலே கல்வி பயின்று வந்தான். அவனது தந்தையார் தம்மருமைப் புதல்வனது கல்வி வளர்ச்சி யில் மிகுந்த கவனஞ் செலுத்தி வந்தார். இவர் ஒரு பிரபல சேனாகர்த்தர். மகா யோக்கியர். கோபம் வன் (மமென்பதறியாக் குணசீலர். ஈசனைப்போலத் தாச னும் என்றபடி, பிதாவுடைய சற்குணங்களெல்லாஞ் சிறுவனிடத்தே குறைவின்றி அமைந்திருந்தன. அவன் தனது பாடசாலையின் உயர்தரக் கல்விகளைக்

ஆறாம் புத்தகம்
23
கற்று முடியாமுன்னரே, தந்தையார் மரணமாயினார். கடவுட் பக்தி சிறிதளவுமில்லாத கல்விச்சாலையிலே வளர்க்கப்பட்டதால் சிறுவன், மறுமையைப்பற்றிய சிந்தனைகளின் றியே நாட்கழித்து வந்தான். ஒருநாள் ''வித்தியாநலம் '' என்னும் நூலொன்று அவன் கைக் கெட்டியது. அதிலே ('கல்வியின் பயன் ஒழுக்கம் ; ஒழுக்கத்தின் பயன் அழியாத பேரின்ப நுகர்வு' என்றிருக்கக் கண்டு, அந்தப் பேரின்பமாவதென்ன? அது என்றும் அழியாததென்றால் அதனையே யான் பெறுதல் வேண்டும் எனத் துணிந்து பேரின்பம் என் றால் என்ன என்பதைத் தெரிவிக்குமாறு தன் தலை மை ஆசிரியரிடத்தும், கல்விமான்களென்று தான் அறிந்த மற்ற யாவரிடத்தும் வினாவியும், தக்கவிடை பெறாத கவலையால் ஊண் உறக்கமின்றியிருந்து, ஒரு நாள் பித்தம் பிடித்தவன் போலத் தெருநீளஞ் சென்
றுகொண்டிருந்தான்.
அவ்வேளை, தேகாதியந்தம் அசுத்த இரணம் பற் றியவனாய்க் கையிற் கோலூன்றி நடக்கப் பெலனற் றுத் தள்ளாடித் தள்ளாடி வரும் ஒரு கூன் கிழவன் அவனுக்கெதிர்ப்பட்டான். பையன் முகத்திற் றோன் றும் விசனக் குறியை அவதானித்த அவ்வயோதி கன் சற்றுத் தரித்து, தம்பீ! நீர் எங்கு போகின்றீர்; உமது மனதிற் பெரிதுங் கவலை சூழ்ந்திருப்பதாகக் காண்கிறேன் என்றான். அதற்குப் பையன் : அப்பா! பேரின்படமாவது பாதென்றறிய நெடுங்காலம் அபேட் சிக்கின்றேன். என்னாவலைத் தீர்ப்பார் இல்லாத கவலை யால் வருந்துகின்றேனென்று உள்ளதை உள்ளபடியே சொன்னான். அதற்குக் கிழவன் : பேரின்பத்தைப்பற் றி விவரிக்க நான் அறியேன்; ஆனாற் சிற்றின்பத்தின் நிர்ப்பாக்கியத்தைப்பற்றி என் அனுபவத்திற் கண்ட வற்றைச் சொல்லுகிறேன்; பிரியமானாற் கேட்பாயாக

Page 18
24
பாலபோத வாசனம்
என்க, பையன், புன்னகையோடு நான் ஒன்றைக் கேட்க, நீ வேறொன்றைச் சொல்லப்போகிறேன் என் கிறாய். நன்று அதைச் சொல்லுவாயாக என்றான். கிழவன் நெட்டுயிர்ப்போடு தம்பீ! நான் ஒர் உயர் குலத் துரைமகனுக்கொரு மகன். என் பிதா என்னைத் தம்முயிரிலும் அருமையாகப் பேணி வளர்த்து எனக்கு ஆறு பராயமாகும்போது பள்ளிக்கு வைத்துக் கல்வி பயிற்றுவித்தார். நானும் வீண் விளையாட்டில் வெறுப் புங் கற்பதில் விருப்புங்கொண்டு படித்து, வகுப்புக. ளில் முதலிட முஞ் சமர்த்தன் என்ற கண்ணியமும் பெற்று வந்தேன். அப்போதெனக்கிருந்த புத்தித் தெளி வுஞ் சாமர்த்தியமும் நாவாலுரைக்குந்தன்மை (யினவல்ல. அதுநிற்க, என் பிரியனே! எனக்கு ஒன் புது வயது நடக்கும்போது சில துன்மார்க்க தோழ ரோடு சகவாசஞ் செய்யலானேன். நான் இயல்பிலே நற்குணசாலியாயிருந்தவிடத்தும், நெருப்போடு சேர்ந் த இரும்பும் நெருப்பாவதுபோல, அவர்கள் கூட்டுற வால் நானும் படிப்படியே அவர்கள் மயமானேன். அன்றுமுதல், கரும்பாயிருந்த கல்வி எனக்கு வேம் பாய்ப்போய்விட்டது. ஞாபகமற்றுப் புத்திமழுங்கிச் சித்தசத்துவம் தளர்வடையலாயிற்று. முன், படிப்பிற் கெட்டி கெட்டி என்னப்பட்ட நான் மட்டிமட்டியென் னப்பட்டுப் பாடசாலையாலுந் தள்ளப்பட்டுப் பெற்றார் உற்றாராலும் வெறுக்கப்பட்டுப் பிழைப்புழைப்பற்று,
இக்கோலமாய்த் தெரு நீளந் திரிகின்றேன்.
மானம்போம் கல்விபோம் வாய்ந்த மனவலிபோம் ஞானம்போம் ஆண்மைபோம் நற்றவம்போம் --- கானம்போம் பொல்லாத காமமெனும் புன்மைகொண்ட பேதையைவிட் டெல்லாம்போம் ஓர் நொடியிலே
என் னும் அனுபவக்கூற்று என்னிற் சம்பூரணமாய் நிறைவேறலாயிற்று.

ஆறும் புத்தகம்
25
தம்பீ! காமாதுரர் அனுபவிக்குந் தீய நுகர்ச்சி யை இன்பமென்றாவது சுகமென்றாவது எவ்வளவுஞ் சொல்லுதல் தகாது. அதைச் சிற்றின்ப மென்றுதா னுஞ் சொல்லுதல் பொருந்தாது. தாமோக்கிலேஸ்) என்பவன், தன் தலைக்கு மேலே ஒற்றிழை நாலிற் கட்டித் தொங்கவிட்டிருக்குங் கூரிய வாள் ஒன்றைக் கண்டு, அது எங்கே அறுந்து தனக்குமேல் விழுமோ வென்று பயந்து நடுங்கிக்கொண்டிருந்ததால், அவன் நாவுக்கினிய பலவகைச் சுவை வர்க்கங்களோடு கூடிய விருந்தைப் புசித்தாலும், கர்ணாமிர்தமான நாதகீதங்க ளைக் கேட்டாலும், சுவை இன்பமாவது இசை இன்ப மாவது சற்றேனும் அனுபவியாதுபோனானாம். மனச் சாட்சிக் கண்டனத்தோடும், பிறர் அறியவந்தாலோ என்னும் அச்சத்தோடும், மனக்கலக்கத்தோடும் காமா துார் அனுபவிக்கும் இன்பம் நொடிப்பொழு. தேனும் இன்பமாயிருத்தல் கூடாதாகவே, அதைப் பொய்யின்பமென்று சொல்லுதலே தகுதியாம். ஆகை பால் இந்தப் பொய்ச்சுக மாய்கையிற் சிக்குண்டு வருந் தாமல் என்றும் எச்சரிக்கையாய் இருக்கக்கடவாய் எனவுரைத்து விருத்தாப்பியன் தன் வழியே போயி
னான்.
9. பேரின்பம் (பேரின்பநா தன் கதைத் தொடர் பு)
---- -அ»*ெ---- கயிவாறே அன்றிரவு முழுதுஞ் சற்றாவது நித்தி ரை போகவேயில்லை. அந்தப் பேரின்பந்தானென்ன? அதை நான் அடையும் வழியென்ன? என்னுஞ் சிந்
ஆ. 4

Page 19
26
பாலபோத வாசனம்
தனைகள் அவன் மனதை இடைவிடாமற் குழப்பிக் கொண்டேயிருந்தன. அச்சமயம் வீடுமுழுதும் இடிந் து தவிடுபொடியானதுபோலச் சடுதியில் ஒரு பேரொ லியுண்டாக, பையன் செத்தேன் என்று திகைத் தெழுந்து நடுநடுக்கத்தோடு மேலே நோக்கினான். அங்கே ஆயிரஞ் சூரியப் பிரகாசம் ஒருங்கே திரண் டுருவெடுத்த தன்மையாய்ச் சுடர்விடும் அழகிய வ த னந் தங்கிய யெளவன னொருவன், முகத்திற் புன்ன கையரும்பப் பையனை நோக்கி, நண்ப! நீ அஞ்சவேண் டாம். நான் உனது சத்துருவல்ல, மித்துருவேயாம் என்று தேற்றவும், கயிவாறே அச்சம் நீங்கி அமை தியோடு அவ்வந்நியனை உற்று நோக்கிக்கொண்டே நின்றான். அந்த அதிசய யெளவனன் தன் கையி லேந்திய நரம்புக் கருவியின் முறுக்காணியைப்பற்றித் திரித்து, நாம்புகள் ஒன்றின் சுதியை ஏற்றுவதும், மற்றதின் சுதியைத் தாழ்ப்பதும், கிரமப்படுத்திய தந்திகளை மீட்டிப் பரீட்சிப்பதும், தனது மாதுரிய குரலின் தொனியோடு வாத்தியத்தின் சுதியை இசைப் பதுமாயிருந்தான். இவ்வளவிலே கயிவாறோ மெய் மறந்து தான் எங்கு நிற்கிறேன் ஏது செய்கிறேன் என்றறியாதவனாகி, முன்னொருபோதும் பெற்றறியா ஆனந்த வெள்ளத்தில் அமிழ்ந்தினவனானான்.
யெளவன னுங் கீதநாம்புகளைச் சீர்ப்படுத்தியபின் பையனை நோக்கிக் கயிவாறோ! இந்தமட்டும் நிகழ்ந்த வைகளைப் பற்றி அறிய விரும்புகிறாய் என்றெண்ணு கிறேன் ; உன்னாவல் உடனே நிறைவேறுவதாகும். அதன் முன் நீ இப்போது எங்கிருக்கின்றாய் என்ப தைத் தெரிந்து சொல்லுவாயாக என்றான். பையன் சிறுக நகைத்து, யாது சொல்லுகிறீர் ? நான் இன் றிரவு படுத்த படுக்கையின் சமீபமாகவே இருக்கி றேன் அல்லவா? என்ன ! நீர் கேட்குங் கேள்வி சால்

ஆறம் புத்தகம்.
27
வும் அழகியதே என்றான். யெளவனன் : பதறாதே, உனது பாதம் படிந்திருக்கும் இடம் புற்றரையா, கற் றளமா என்றும், வானத்தை நோக்கி இந்நேரம் இ
வா பகலா என்றும், நிதானித்துப் பார் என்றான். கயிவாறே, குனிந்து கீழே நோக்கினான் ; வானத்தை அண்ணாந்து பார்த்தான் ; சுற்றும்முற்றும் திரும்பி னான் ; முட்களாலுங் கற்களாலுங் கிளிபட்டுக் குருதி பாயுந் தன து பாதங்களையுங் கண்டான். ஆச்சரியமுந் திகி லும் அவனைச் சூழ்ந்துகொள்ள, அவன் பதைத்து நான் எங்கு நிற்கிறேன் ! இப்போது உச்சிப்பொழுதா கின்றதே! இது ஒரு பெருங்கானகமாயிருக்கின்றதே! ஒருபோதுங் கண்டறியாத இந்த இடத்திற்கு நான் வந்ததெப்படி! என் கால் கடுத்து வலியெடுக்குதே! அறி வு தளம்புதே! ஐயா உத்தமரே! நீர் ஆர் என்ப தையும், நான் இப்போது உள்ளாயிருக்கும் நிலைமை ஏதென்பதையுந் தயைசெய்து சொல்லியருள மாட்டீ ரோ என்று மிக்க வாஞ்சையோடு கெஞ்சி மன்றாடி னான். யெளவனன், அவனை அன்போடு நோக்கி நண் ப! நீ முப்பத்திரண்டு தினங்களாய் ஊணின்றியிருக் கிறாய் ; அதோ பார் அந்த அத்திமரம் கனிபொலிந்து நிற்கின்றது. கனிந்த பழங்கள் சில புசித்து, முந்தப் பசி நீங்கப் பெறு வாயாக என்று ஒரு அத்திமரத்தைக் காட்டினான். கயிவாறோ ஆவலோடு சென்று பழங் களை ஆய்ந்தாய்ந்து தின்றும், பசியடங்காமலே திரும் பினான். திரும்பி, யெளவனனைக் கிட்டிச் சேருதற் குள்ளாக, நான் முப்பத்திரண்டு தினங்களாய் ஆகாம் மின்றி எப்படி உயிர் பிழைத்தல் கூடும்! இது நம்பத் தக்க காரியமா! என்ன ! நான் காண்பது கனவா, நனவா என்று தன்னுள் எண்ணமிட்டுக் கலங்குவதை யெளவனன் குறிப்பால றிந்து, நண்ப! ஏன் வீணே கலங்குகின்றனை? நீ காண்பது கனவல்ல; நனவேயாம். நெடுநாட்களாய்ப் பேரின்பம் பேரின்பம் என்றேல

Page 20
28
பாலபோத வாசனம்
மிட்டு வருந்தினாய் அல்லவா? அந்த உன் துன்பத்தை ஒழிக்கும் பொருட்டே, அத்தியந்த காருண்ணியபா கிய பேரின்ப லோக அரசன், உன்னிடம் என்னை அனுப்பிவிடலானார். நான் அங்கிருந்து கொண்டுவந்த இந்த வாத்தியக் கருவியைப்பற்றி என்ன நினைக்கிறாய் என்க, பையன் : என் ஐயனே ! நான் நினைப்பதென்ன ; இத்தாலி தேசத்தவரிலும் யாழிற் சிறந்தவர் உலகில் வேறாரும் உளரா? என் தேசத்தில் நான் எத்தனை
யோ விதம் விதமான வீணை ஒசைகளைச் செவியாரக் கேட்டிருக்கிறேன். எத்தனையோ சங்கீத சமாசங்க ளிற் சமுகமாகி மகிழ்ந்திருக்கிறேன். ஆனால் என் பஞ்ச புலன்களையும் மனத்தையும் ஒருங்கே வசப்படுத் தி இசை அமுத வெள்ளத்தில் அமிழ்த்திவிட்ட இவ் வாத்தியத்தைப்போலும் ஒரு வாத்தியத்தை என் றேனும் அறியேன், அறியேன்! அம்மம்ம் ! இதன் ஆச்சரியத்தை எவ்வாறெடுத்துச் சொல்லுவேன் ! என்று பெரிதும் அதிசயத்தோடு கூறினான். அதற்கு யௌவனன், நன்று சொன்னாய். நான் உன்னைச் சந் தித்து உன்னோடு பேசியதற்குள்ளாக உனக்கு முப் பத்திரண்டு தினங்கள் கழிந்துவிட்டனவே ! அத்த னை நாளும் நீ உண்ணாமலும் உறங்காமலும் இருந்திருக் கின் றனை யே ! கற்களும் முட்களும் இடறிக் கால்கள் புண்படக் கடுநடை நடந்து நூற்றைம்பது காதஞ் சரி வரத் தாண்டிவிட்டனை யே! இந்தமட்டும் உனக்குப் பசி உணர்ச்சி தோன்றாமலும் பிரயாணத்தின் களைப் பும் நோவுங் கொஞ்சமேனும் நீ அநுபவியாமலும் இருக்கச் செய்து உன்னைப் பாவசப்படுத்தியதெல்லாம், களர்வடைந்த இசை நாம்புகளைச் சீர்ப்படுத்திய என் செய்கை ஒன்றுமே என் றால், பேரின்ப லோக சுதிக்க (யான முறைப்படி ஒரு கீதம் யாழிலிட்டு வாசிப்பே பின்னால், உன் உயிர் அவ்வின்பத்தைப் பெற ஆற்றாமல் உடலை விட்டு நீங்குவதாகுமே! சங்கீதத்தின் பெரு

29
ஆதும் புத்தகம் மை இவ்வாறாகக்கொள்ள அங்குள்ள சற் காட்சி ஆதி யவற்றின் பெருமையைச் சொல்லிக் காட்டவும் வேண் டுமோ!
10. நேர்மை (பேரின் பகா தன் கதைத் தொடர்பு )
--> OK
நண்ட!! கேள்; இவ்வுலகில் உள்ள கோடிக்கணக் கான படைப்புக்களுளெல்லாம் மனிதனே சிறந்தவன் என்றுஞ் சிருட்டிகளின் அரசனென் றுஞ் சொல்லப் படுகிறான் அல்லவா? அது யாதுபற்றியென் று நினைக் கிறாய்? மனிதனைவிட உலகில் வேறெந்தச் சிருட்டியா வது நினைக்கவும் நியாயமாராயவும், நன்றி து தீதிது எனக் கண்டுணரவுங் கூடியதல்ல. பகுத்தறிவென்னப் படும் அவ்வாற்றல், மனிதனுக்கு மாத்திரமே உண்டு. ஆன தாற்றான் அவன் உயர்ந்த வரிசையில் வைத்தெண் ணப்படுகிறான். பகுத்தறிவு, மனிதர் எல்லோருக்கும் ஒரே அளவாய் இருப்பதில்லை. சரீய வளர்ச்சியிலும் அழகிலுங் குணத்திலும் அவர்கள் வேறுபட்டிருப்ப துபோல், அது சிலருக்குக் கூடியுங் குறைந்துமிருக் கும். இப்படி இருந்தவிடத்தும், நன் றென்று காண் பதை விரும்பவும், தீதென்று தோன்றுவதை வெறுக் கவும், அஞ்சுவதற்கஞ்சவும், இரங்கத் தகுவதன் மேல் இரங்கவும் போதிய பக்குவம் பொதுவாக யாவருக் கும் உண்டென்பதை அடுப்பண்டைக் கிழவி தானும் மறுக்கமாட்டாள். இதுபற்றித்தான், சீர்திருந்திய மனித முகமறியாத காட்டு மனிதனானாலும், சூரியப்

Page 21
30
பாலபோத வாசீனம்
பிரகாசத்தைக் கண்டு கேட்ட றியாத சுரங்க வாசியா னாலும் நான் எங்கிருந்து வந்தேன் ; எதற்காக இருக் கிறேன் ; என் சிந்தனை வாக்கு கிரியைகள் முறையான வையோ தவறானவையோ என்பதைத் தனக்குள்ள அறிவுக்குந் தன் மனச்சாட்சிக்கும் ஒத்தபடி சிந்தித் துத் தீர்மானிக்கப் பாரமான கடமைப்பாடுடையவ னாகின்றான். இதனை நேர்மை என்னுங் குணமுடைய வனன்றி மற்றவன் கனவிலேனுஞ் சிந்திக்கமாட்டான். நான் அறியாமல் இருக்கிறேன், அறியாமற் செய்கி றேன் என்று வீண் போக்குச் சொல்ல முன்னிற்பதே அவனுக்கியல்பாம். இப்படிப்பட்டவன் ஒழுங்கற்ற தன் சுய பிரிதியை முன்னிட்டுத் தன் மனச்சாட்சி பின் நல்லேவுதலுக்குக் காது கொடாது போவதால் எப்போதுங் கேட்டுக்குச் செலுத்துந் தீய வழியில் வழுவி நடக்கிறான் என்னத்தகும்.
நேர்மை என்றாலும் மனத் தூய்மை என்றாலும் பொருந்தும். பேரின்ப லோகத்துக்குச் செல்லவும், பேரின்ப மயமாகிய அவ்வுலோக அரசனைத் தரிசிக்க வும் பாக்கியம் பெறுபவன் மனத் தூய்மை உடைய வனேயாம். அவன் அறிய அவசியமானதை அறிய வேண்டுமென்னுந் தன் கடமையினிமித்தம் துன்பம் மடையவுங் கூடும்; அல்லது அறியாமை என்னும் இருளில் நன்னெறி வழுவி நடக்கவுங்கூடும். இத் தருணங்களிலெல்லாம் அவனுக்குக் கை தந்து நல்வழி காட்டும் பொருட்டுப் பேரின்ப லோக அாசன், தமது பரம தூதரையென்கிலும் அவனிடம் அனுப்பச் சித் தங்கொண்டவராயிருக்கின்றார்.
பேரின்ப ராசனென் றது : சகல லோகங்களுக்குந் நாமே காரணராகித் தமக்கொரு காரணமில்லாமல் விளங்குகின்ற பேரானந்தப் பெருங் கருணைத் தடங் கடலாகிய கடவுளையேயாம்.

ஆறம் புத்தகம்
31
தீட்டுவோனின்றிச் சித்திரமாகாது ; மீட்டுவோ வின்றி யாழ் இசை செய்யாது ; ஆட்டுவோனின்றிப் பம்பரம் ஆடாது ; நாட்டுவோனின்றி நாடு நாடாகா தென்றால், வான மண்டலத்திலுள்ள எண்ணடங்கா அண்ட கோளங்கள் ஒன்றோடொன்று மோதுண்ணா மல், ஒழுங்காய் அசைவாடவும், இரவும் பகலும் மாரி புங் கோடையுங் கிரமமாய் நிகழ்வும், ஊர்வன நடப் பன, பறப்பன, நீந்துவன ஆதிய நானாவித உயிர்ப்பிரா ணிகள் சேமமாய் உயிர் வாழவுஞ் செய்வதற்கோர் காரண கர்த்தா வேண்டியதில்லையென்று சாதிப்ப தைப்போலும் மூடத்துவம் வேறென்ன தானுண்டு! இந்நிர்மூடக் கொள்கையாளரது துர்ப்போதனையால் * கேடடையாவண்ணம் உய்யும் வழியை உனக்குக் காட்டிவிட்டது, உனது நேர்மை என்னுஞ் சிறந்த குண லமேயாம். ஓ! எதற்கும் அஞ்சாததும், எவருக்கும் அச்சம் வருவிப்பதும், கடவுளைக் கடமைப்படுத்துவ நும், பேரின்பத்தைப் பெறு விப்பதுமாகிய ஒப்பற்ற நேர்மையென்னுஞ் சுகிர்த லட்சணமே வாழ்க ! நண்ப! உய்ந்தாய், உய்ந்தாய். இனி உன் துர்ப்போதனா வித்தியாசாலையை நோக்காமல், உன் உறவினர் வீட் டை நாடிச் செல்வாயாக. உனக்கு நல்வழி காட்டவும் ஞானோபதேசஞ் செய்ய வும், உற்றவிடத்துதவி புரிய வம் ஓர் துணை வன் முற்பட்டுவருவான். பின்னர், நேர் மையாளரது புகழைப் பாடித் துதிப்பதற்கெனத் திட் டஞ் செய்துள்ள யாழினோசையைக் கேட்கப் பேரின் . புலோகம் வருவாய் என மொழிந்து யௌவனன் நிர்த்தரிசனமாயினான்.
(தொடரும்)
---வீல்மா

Page 22
11. கால உபயோகம்
நாம் பிறந்தக்ஷணந் தொட்டுக் கடைசி மூச்சுவிடும் க்ஷணமட்டுமுள்ள நோமே நமது சீவியகாலமாம். க்ஷணம் 360 கொண்டது ஒருநாளும், நாள் 365 கொ ண்டது ஒரு வய துமெனப்படும். நீதிமொழியுரைப் படி '' இக்காலத்து மனிதர்க்கு வயது நாறல்ல தில்லை ; அவற்றில், ஐம்பது இரவிலே துயிலில் அகல, இளமை யிற் பத்தும் முதுமையிற் பத்தும் ஒழிய, எஞ்சிய முப் பதில் நோய் முதலியவற்றால் தொலைவதுபோக, மீந் திருப்பது மிகச் சிலவேயாம் " இதற்குள் ளேயே நாம் உலக ஞானத்திலும், கல்வி கேள்விகளிலும் வல்லோரா தல் வேண்டும், நமக்கும் பிறர்க்கும் பயன்படுஞ் செ யல்களைப் புரிகுதல்வேண்டும். கடவுளை அறிந்து அவ ரை வழிபடல் வேண்டும். மறுமையில் நித்திய சுகங் களைத் தருவனவாகிய புண்ணிய பலன்களை ஈட்டுதல் வேண்டும். நமது சீவியமோ ஊசி முனையிலாடும் பம் பாம்போலவும், உரத்த புயல் முகத்தேயகப்பட்ட மரக் கலம்போலவுமாகின்றது. அது இழுத்துப் பிடிப்பி னும் நிற்பதல்ல ; முளையறைந்து தடுப்பினுந் தரிப்பு தல்ல ; இன்றைக் குயிரோடிருக்கின்றோம் ; நாளைக்கு மவ்வாறிருப்பமோ! அறியோம்! இப்படியாயின் நாம் பொது செய்வோம்! காலத்தை விலைகொடுத்து வாங்கு வாமா? உலகத்திலுள்ள பொன் வெள்ளி இரத் தினாதி திரவியமெல்லா மதற் கீடாகாவெனில் அதை (பாது கொடுத்துப் பெறுதல் கூடும் காலம் ஏன் மதிக்கரியதென்றாலோ, அது தன்னை உபயோகிக்குந் கன்மைக்கேற்பப் 2. பலன் தருதலாலும், கடந்து பின் னொருபோதும் மீளா இயல்பினையுடையதினாலுமாம். இதனை உணர்ந்தே கிப்பொக்கிறாத்திஸ் என்னுஞ் சாஸ்திரி தனது மாணவர்க்கறிவுறுத்தும் பொருட் டும் தான் கலையுணர்த்தும் மண்டபக் கதவு நிலை

'ஆறம் புத்தகம் !
38 யொன்றிலே 'சீவியஞ் சுருக்கம்'; வித்தை பெருக் கம்; சாவகாசங் கடக்கின்றது, சித்தி தவறுகின்றது" என்னுஞ் சுவர்ண மொழிகளை வரைந்து வைத்தானாம். ஆகையாற் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளல் வேண்டும். இரும்பு நெருப்பு மயமாயிருக்கையிலே யே அதைத் தட்டி நீட்டி வளைத்துத் துளைத்து வேண் டிய உருவத்தை அதிற் செய்துகொள்ளல் வேண்டும். காலதாமதம் நேரத்தைக் கொள்ளை கொள்ளுந் திரு டன். இன்றைக்குச் செய்வதை நாளை மட்டும் பின் போட்டு வைப்பது மதியீனம். இன்றையில் ஒன்று நாளையில் இரண்டிற்கு நிகராகுமென்று பிறாய்ங்கிளின் பண்டிதர் கூறுவார். அற்ப அலக்ஷியம் அளவற்ற கேட்டிற்கு வழியாகும். சுக்கானைச் சற்றுக் கைதவ ற விட்டதனால் அது சுழன்றடித்து நிலை பெயா, அப் பெயர்வால் தோணி வழி தப்பிக் கற்பாரில் மோதியு டைய, அதிலிருந்தவர்கள் தப்பிப் பிழைக்க வகையம் றுச் சமுத்திரத்தில் அமிழ்ந்தி மடிந்த தன்மைபோ லாம்.
நேரம் ஆகாயப்படுவதற்கு விவேகத்தோடு கூடிய முயற்சியும், வரையறவும் கடைப்பிடியும் வேண்டும். தனக்குரிய தொழிலைத் தெரிந்து அதில் ஊக்கமாய் இருப்பவனே தன் காலத்தை நற்பிரயோகஞ் செய் பவனாவன். பெரும் வருவாயை உண்டுபண்ணத்தக்க தொழிலறிந்தான், உரிய வழிவகைகளிருந்தும், சுமை யெடுத்தல், மரந் தறித்தல் முதலிய கூலிவேலைகட்குட் பட்டும், கல்வி நூால் இயற்றுந் திறமையுள்ளான், மண் வெட்டி பிடித்துக் கொத்தி நிலத்தைப் பண்செய்தும் இடைவிடாது முயற்சியில் இருப்பானேயாயினும் இவர் கள், தங்காலத்தை வீணே கழிக்கின்றாரெனத்தகும்.
தெரிந்து வரையறுத்தவோர் இலக்குவைத்து நடப் பதே சீவியானுகூலத்துக்குச் சிறந்த விதி. இலக்கும்
ஆ. 5 220

Page 23
34
பா லபோத வாசனம்
எல்லையும் வைத்து நடப்பவன், அவையின்றி எழுந்த மானமாய் நடப்பவனை எதிலும் வெல்லுவான். முயல் நரியைப் பார்க்கிலும் வேகமாயோடும். ஆயினும் அது ஓடுகையில் இடைக்கிடை நின்று பின்னே பார்ப்பதால் வேட்டை நாய்கள் அதை இலகுவாய்த் துரத்திப்பிடிக் கும். நரியோ ஒரே தொடர்பாய் ஓடுவ தால், அது நாய்களுக்ககப்படுதல் மிகவரிதேயாம்.
முயற்சியோடு கடைப்பிடியுஞ் சேர்ந்திராவிடிற் காரிய சித்தியை எதிர்பார்த்திருத்தலாகாது. அஃ தில்லா முயற்சி ஓரிரக்கையேகொண்ட பறவை, பறத் கலை நிகர்க்கும். அதுவே காலத்தின் விலையை மட் டின்றி உயர்த்தி விடுவது. அது பெரிது சிறிதென்று நோக்காமற் கையிட்ட விஷயங்களிலெல்லாம் ஆதா யம் பிறப்பியாமலிராது. "யூக்கிளிட்'' என்னும் ரேகா கணித நூலாக்கியோன், அதனைத் தனது தினமுயற்சிக ளுளொன்றாகிய பாற்கலசங்கள் சுத்திசெய்யும் வேளை களிற்றானே யூகித்தியற்றி முடித்தான். பரிசுத்த லிகோரி என்னும் மேற்றிராணியார், ஒரு கணமே னும் வீணிற் செலவிடுவதில்லையென்னும் விரதமேற் கொண்டவராய்த் தாந் தினந்தினஞ் செய்யக் கடமை பூண்ட ஆயிரம் அலுவல்களுக்கிடையே, அநேகாநேக : சிறுகிரந்தங்களையுமன்றி, ஐம்பத்திரண்டு பெரிய பிர பந்தங்களையும் இயற்றுதற்கு நோம் உண்டுபண்ணிக் கொண்டார். வேறொரு நிபுணர் பிராஞ்சுப் பாஷை. யிலுள்ள பல்லாயிரக்கணக்கான சொற்களை யெல்லாந் தாம் உடைதரிக்கும் நேரங்களிலேயே மனனம்பண்ணி, அப்பாஷையிற்றேர்ந்து விளங்கினார். ஆதலால் ஒரு." நொடி நோமும் வீணிற் செலவிடாது, காலத்தை, நல் | லாகாயப்படுத்த முயலுவோமாக.
லிகோரி 2 யூகித்திய வகள் சுத்திதேனமுயற்சி
..
னு கே ----

12. அகந்தையின் பலன்
தான் நினைப்பனவெல்லாஞ் செயப்படல் வேண்டு மென்னுமாவலும், தன்னைப் பிறர் புகழ்ந்து பாராட்ட வேண்டுமென்னும் பிரிதியும் மனிதனுக்கியல்பாகவே யுண்டு. இவ்வாசை விருப்பங்களைக் கீழ்ப்படுத்தி ஆள்பவனிடத்திலே மனத்தாழ்மையென்னும் மேன் குணமும், அவற்றை ஆதரித்து நடப்பவன் உளத் திலே அகங்காரமென்னுங் கீழ்க் குணமும் வாசமா கும். அகங்காரமான து, மனிதனுக்குச் சென்மத் தோடு தொட்ட ஆன்ம நோயான தால், அவன் புத்தியி லும் மனத்திலும் அது நன்றாய்ச் சுவறி, அவன் செய் யுங் கிரிகைகளிலெல்லாந் தன்னாண்மையைச் செலுத் தத் தேடுகின்றது. இதனாலன்றோ தன்னை இகழ்ந்து பேசிய ஒரு வார்த்தையைத் தாளமட்டாமல் அழுது கண்ணீர் சொரிந்து நிற்குஞ் சிறு பிள்ளை தானும், நீ சமர்த்தன் ; உன்னையன்றி ஒன்றும் ஆகமாட்டாதென் னும் இச்சக மொழிகளைக் கேட்டமாத்திரத்தே, தன் வழுகையை முற்றும் நிறுத்தி ஏதோ பெரும் நன் மையைத் தான் பெற்றுக்கொண்டாற்போலப் பேரா னந்தங்கொள்ளக் காண்கிறோம்.
நற்பயிரோடு களைக ளும் முளைப்பதுண்டேயாயி னும், அவற்றைக் காலந்தோறுங் களைத்து விடாமல் யதேச்சையாய் வளர விடுதல், அப்பயிரை அழிப்பு தற்கே ஒப்பாகும். அவ்விதமே சகல தீமைகளுக் கும் ஊறணியாகிய மனக் கர்வமுந் தலையெடாதபடி எச்சரிக்கை கொள்ளாதவன், தன தாத்துமாவின் ஞான வளர்ச்சியைக் கெடுத்துவிடுகிறான். இதனைநன்குணர்ந் தன்றோ தோபியாசென்னும் பெருமகா னுந் தன் புதல் வனை நோக்கி: (1 அகங்காரம் உன் மனசிலும் வாக்கி லும் ஆண்மை செலுத்த விட்டுவிடாதே, ஏனெனில்

Page 24
36
பாலபோத வாசனம்
சகல தீமைகளும் அரசாளத் தொடங்கியது அஃ கொன் றினாலே '' என்றாராம்.
சர்வந் தலைக்கேறியவன், நன்மனச்சாட்சியால் உண் டாகும் மனப் பாக்கியத்தை அடைந்துகொள்வதற் கருகனல்லன். அவன் தன்மட்டில் மேலான எண்ண முற்றிருப்பதால், தான் விரும்பியபடி சங்கிக்கப்பட் டாலல்லாமல், ஒருபோதும் இரமியங்கொள்ளான். தன்னைச் சற்றேனும் மதியாதார்மீது கோபங்கொள் வான். யாவரையுமவன் தன்னிலுந் தாழ்ந்தோராக எ ண் ணுவ தால், தானே யன்றி மற்றொருவர் சன்மர் (னிக்கப்படச் சகியான். இதனால் அவன் அமரிக்கை யற்றுக் கொந்தளிக்கிற சமுத்திரம்போல் இடையறாத கலக்கமுற்று வாடுவான். 1' அழிவுக்கு அகந்தை ; விழுகைக்கு மேட்டிமை'' என்னுஞ் சுருதியுரைப்படி ஒருவனிடத்து மனக்கர்வம் எப்போ தலை காட்டுமோ,
அப்போதே அவன் பெரிதும் கேட்டுக்குள்ளாகி னெனத்தகும். இவ்வுண்மையை, அகங்காரியான ஆமான் என்பவன் சரித்திரம். பரீஷ்காரமாய்க் காட்டு கின்றது.
<< இந்து தேசமுதல் எத்தியோப்பியா வரையுமுள்ள நாற்றிருபதின் மேற்பட்ட இராச்சியங்களுக்கு ஏகா திபதியாய் அரசு செலுத்திய அஸ்வேருஸ் என்னும் அ.மசனொருவனிருந்தான். அவனுக்குத் தனது பிர தானிகள் யாவரிலும் ஆமான் என்பவன் மேல் மிகுந்த மதிப்பும் பட்சமுமிருந்தது. அது பற்றி அவ னைப் பெருந் தனவந்தனாக்கி உன்னத மகிமைப் பட்
முஞ் சூட்டிவிடலானான். இதனால் ஆமான், தன்னை ஓர் தேவேந்திரனாக வெண்ணிச் சகலருந் தன்னைத் தாட்பணிய வேண்டுமென்னும் அகந்தை மேற்கொண் டவனாக, அது மென்மேலும் அவனிடத்தில் அதிக ரிக் து வ மலாயிற்று. இப்படியாகையில், யூத குல்த்த

ஆறாம் புத்தகம்
வனும், அஸ்வேருஸ் அரசனின் பாரியாகிய எஸ்தேர் அரசியின் சிற்றப்பனும் அரமனை வாயில் காப்போனு மான மாடோக்கை என்பவன், தான் செல்கையில் வருகையில் எழுந்து தண்ட நமஸ்காரஞ் செய்யாதிருக் கிறான் எனக் கண்டு, அதைச் சகிக்கலாற்றாமல், மாடோக்கைமேற்கொண்ட குரோதத்தால், அவனைப் பழிவாங்குவதோடு நின்று விடாமல், யூத சந்ததி அனைத்தையுமே பரிநாசஞ்செய்யத் தீர்மானித்தான். அப்படியே ஒருநாள் உரிய காலத்திலே அரசனைத் தரி சித்து யூதசந்ததியார் கலகக்காரர், இராச துரோகி கள் என அவர்கள் மேல் இல்லாத பழிகளை யெல்லாஞ் சுமத்தி முறையிட்டான். அரசன் கேள்விச் செவிய னாகையால், இதைச் செவியுற்றதும் இடியேறு கேட்ட விடநாகம்போற் றிகைத்துக் கோபாக்கிரம் பொங்கி யெழ, யூதரை முனிந்து நின்றான். தக்க சமயம் இது எனக்கண்ட ஆமான், அவர்களைச் சிரபங்கஞ் செய்விக் குமாறு அரசனை இணக்கவே, அவனும் பின்முன் பாராமல் அதற்கியைந்து, மரணத் தீர்ப்புப் பத்திர முமெழுதி அவன் கையிற் கொடுத்தான். இப்பத்தி ரத்தைப்பெற்ற ஆமானின் உள்ளக்களிப்பு எத்தன் மையாயிருந்திருக்குமென்பது சொல்லாமலே விளங் கும். ஆயினும் யூதரைச் சிதைக்கக் குறித்த கெடு வுக்கு முந்தியே, தன்னெதிராளியை மானபங்கமாய் வதைத்துக் கொல்லவேண்டு மென்னுமாவல் அவனுக் குப் பேராவலாயிருந்தது. அதற்காகத் தன்மனை முற் றத்திலே உந்நத கழுமரமொன்றை நாட்டி வைத்து, இராச அனுமதி பெறவேண்டி, ஒருநாள் விடியற் சாம வேளையிலேயே எழுந்து அரமனை சென்று விடியு மட்டும் வாயிலிற் காத்துநின்றான். அன் றிசாத்திரி அரசன் நித்திரை போகாததால், தன்னிராச்சியத்தில் நடந்த பிரதான வர்த்தமானங்க ளெழுதிய புத்தகத் தைக் கொண்டுவந்து வாசிக்குமாறு தன் குற்றேவல்

Page 25
38
பாலபோத வா சனம்
னுக்குக் கற்பித்தான். அப்படியே வாசிக்கையில், இரா சாவின் விரோதிகள் அவருக்குச் செய்ய விருந்த சதி மானத்தை, மாடோக்கை என்பவன் வெளிப்படுத்தி, அத்தீங்கினின்றும் அவரைக் காப்பாற்றினான் என் னும் வரலாறு குறுக்கிட்டது. உடனே அரசன் வாசிப்போனை நிறுத்தி, என்னுயிரைத் தப்புவித்த அந்தப் பேருதவிக்காக மாடோக்கைக்கு யாது தியார் கஞ் செய்யப்பட்டதென்று அங்குள்ளவர்களை வி ன வினான். அவர்கள் : ஒன்றுஞ் செய்யப்படவில்லை யென்றார்கள். அப்போது வெளியே நின்றுகொண் டிருந்த ஆமான், அரமனையினுள்ளே பிரவேசிக்க வேண்டிக் கதவைத் தட்டினான். அது ஆமானென் றறிந்ததும் அரசன், உள்ளே வரச்செய்து நண்ப! இராசா ஒருவனைக் கனம்பண்ண வேண்டுமானால் அவ னுக்கு யாது செய்யவேண்டுமென்று நினைக்கிறீர் என் றான், தன்னைவிட வேறொருவருக்கும் இராச சன் மானங் கிடைக்கமாட்டாதென் னும் மமதை மேலிட் டிருந்த ஆமான், அதற்கு மாறுத்தரமாக, இராசா ஒரு வனுக்கு வெகுமானஞ்செய்ய விரும்பினால், அவனுக் கிராச உடையுடுத்திச் சிரசிற் கிரீடந் தரித்து இரா சாவின் குதிரைமேல் அவனையேற்றி அரமனையில் உயர்ந்த உத்தியோகஸ்தரிலொருவன் கடிவாளம்பிடித் துக்கொண்டு இராசா கனம்பண்ண விரும்புபவனுக்கு இந்த மகிமை கிடைக்குமென்று கட்டியங்கூறி நகர் வலம் வரவேண்டுமென்றான். அப்போது அரசன், அண்ணகர் செய்த சதிமானத்தினின்றும் என்னுயி ரைக் காப்பாற்றிய மாடோக்கைக்கே இந்த வெகுமா னம் அகத்தியஞ் செயப்படல் வேண்டும், ஆதலால் நீர் தாமதியாது போய், இராச வஸ்திரத்தையுங் கிரீ டத்தையும் அவனுக்கணிந்து, குதிரை மீதேற்றிக் கடி வாளத்தை நீரே பிடித்துக்கொண்டு கட்டியங்கூறி நகர் வலம் வருவீராக! இவற்றுள் ஒன்றாவது தவறாமற்

ஆறாம் புத்தகம்
39
செய்யவேண்டுமென்பதே எனது தாற்பரியம் என் றான். ஐயையோ! இதைக் கேட்டதும் அகங்காரத். தால் விம்மிப்போயிருந்த ஆமானினிருதயம் இரண் டாய் வெடித்தாற்போலாயிற்று. இதைவிட வெட் கத்துக்குரிய அவமானம் அகங்காரிக்கு வேறு யாதி ருக்கக்கூடும்! ஆயினும், அவன் அரசன் கற்பித்தவற் றையெல்லாஞ் சரிவரச் செய்து முடிக்க வேண்டிய தா பிற்று. இதன்பின் ஆமான் யூதர்மேற் சாட்டிய அபாண்டமும் அரசனுக்கு வெளியாகவே, அவன் மாடோக்கைக்கென நாட்டிய கழுவிலே, தான் தானே எற்றுண்டிறக்கவேண்டியவனானான். இவ்வாறே தேவ திருவுளம் அகங்காரிமேல் என்றும் வெறுப்பாயிருப் பதால், ஆமான் கொண்டிருந்த கருத்தையெல்லாம் நிர்மூலமாக்கி அவனை வெட்கப்படுத்தி, மாடோக்கை பிடம் அவன் வாங்க நினைத்த பழிக்கு அவனையே இலக்காக்கிவிட்டது.''
13. கல்வியுங் கைத்தொழிலும்
0K கல்வியின் ஊங்கில்லைச் சிற்றுயிர்க்குற்ற துணை '' என்பதற்கொப்ப, நமக் கெக்காலத்திலும் எவ்வழியி லுந் துணை நின்று தவுவது கல்வியாம். நமது வீட்டுக் கணக்கையென்கிலுஞ் செவ்வனே பார்க்கவேண்டின், தமக்குக் கணித அறிவின் உதவிவேண்டும். எழுத்து வாசகம் அறியாமல், மனதுக்கின்பமும் பெலனுந் தூய் மையுந் தருஞ் சுகிர்த வாசகங்களை வாசிக்கவேனும், ஈற்போதகங்களைத் தெள்ளிதின் உணர்ந்துகொள்ள வேனும் நம்மால் இயலாது. இலக்கண இலக்கிய நூல மிவு சிறிதளவும் இல்லாவிடின், நமதெண்ணத்தைப் பிழையற எழுதிவைக்கவும், பிறருக்கு எழுதித் தெ ரிவிக்கவும் வல்லுநர் ஆகோம். பூமிசாஸ்திரம், தேச

Page 26
40
பால்பேர்த வாசிளம்
சரித்திர முதலிய நூல் உணர்வின்றித் தேச தேசங் களின் நிலைமையையும், அவைகளிலுள்ள கைத்தொ ழில், வர்த்தக விவசாய விசேஷங்களையும் ; அர்சர் கள், பிரபுக்கள், கல்விமான்கள், பராக்கிரமசாலிகள் ஆதியோரின் பூர்வோத்தாங்களையும் அறியவும் அவற் 7ால் உண்டாகும் பலாபலன்களை அடையவும் மாட் டோம்.
கல்வியே மனிதனுடைய மனமாகிய புதர்க் காட் டைத் திருத்திப் பண்படுத்திச் செழுமையுங் கொழு மையும் இனிமையும் பொருந்திய கனிகளை விளை . விப்பது. அதுவே அவனது ஞாபகத்தையும் புத்தி யையும் ஒருங்கே விருத்தி செய்து, ஊக்கத்தையுந் தாளாண் மையையுமுண்டாக்கிப் பலருங் கண்டதிசயப் பிரமைகொள்ளத்தகுஞ் செயல்களைச் செய்விப்பது. அவன், பட்சிகளைப்போல் ஆகாயத்திற் பறந்து திரிவ தற்கும், மச்சங்களைப்போல் ஆழ்கடலுள் ஆழ்ந்து செல்வதற்கும், அதி உக்கிர பூதியங்களாகிய தீ, வளி, நீர் என்பவற்றை அடக்கியாண்டு தன்பணிசெய்ய ஏவு தற்கும், பழைய உலகத்திலிருந்து புதிய உலகத்துக் குச் செல்வதற்கோர் குறுகிய பாதை அமைக்கவேண் டிப் பூமியைத் துளைத்துவிட்டாலோ என்ற சிந்த னையை எழுப்பிவிடுவதற்குமன்றி, உலகில் விளங்கும் எண்ணடங்கா நவீன நிருமிதங்களை யூகித்து நிருமிப் பதற்கும் கல்வியே கருவியாய் நிற்பதால் அதன் |பயன் அளவிடற்கரிதேயாம்.
ஆகவே, கைத்தொழில் முதல் எத்தொழிலுஞ் சிறப் புறுவது கல்வியாலாயினும், மனுஷ சீவியத்துக்குக் கைத்தொழிலேயன்றிக் கல்வி இன்றியமையாத நன்று. இஃதிவ்வாறாகப் பட்டினியிருந்தாலும் பட் டுத் தரித்தாலே போதுமென்றவள் சீலமாய், நந் தேசத்திலே அநேக பெற்றார், தாம் எக்கேடு கெட்

ஆறாம் புத்தகம்
(டாலுந் தம் மக்களுக்கேதாவதோர் உயர்ந்த உத்தி யோகத்துக்குரிய கல்வி கற்பித்தாலே போதுமென் றெண்ணி நடக்கிறார்கள். உத்தியோகத்தை நோக்கிக் கல்வி கற்பிப்பது உசிதந்தான். ஆனால், உத்தியோ கமே சீவியத்துக்கு முக்கிய சாதனம்போ லெண்ணி, அவகாசத்தின் மிக்க செலவு செய்தல் ஒருபோதும் தகாது. அவகாசமுள்ள பெற்றார் தாமுந் தம் மக்க ளுக்கு யாதாயினுமோர் உத்தியோகத்திற்கு மாத்திர மேயுரிய அறிவிருந்தாற் போதுமென்றெண்ணப்பு டாது. இங்கிலாந்து, ஜேர்மனி முதலிய மேலைத்தேச தாய் தந்தையரின் எண்ணம் இதற்கு முழுதும் மாறா னது. அவர்கள் செல்வராயிருப்பினும் வறிஞராயிருப் பினுந் தம் பிள்ளைகள் கல்வியிற்றேறுதலோடு, பல வித கைத்தொழில்களிலுந் தேர்ந்தவர்களாயிருக்க வேண்டுமென்பதே கரிசனையாயிருப்பார்கள். இது அத்தேசத்தவரின் சாதாரண வழக்கமாயிருப்பதனா லன்றோ செல்வத்தில் முக்குளித்துக்கொண்டிருக்கும் முடிமன்னர் முதலாய்த் தம் மக்களுக்கவ்வாறு தொ ழில் பயிற்றுவிப்பது தங்கடமைபோல் எண்ணியிருப் பார்கள். எம்மை ஒருகாலந் தண்ணளியோடரசர்ண்ட மாட்சிமை தங்கிய எற்வேட் அரசர் தாமும், கப்பல் செலுத்துந் தொழில், தச்சுத்தொழில் முதலிய தொ ழில்களில் நன்கு பயின்றவராயிருந்தார் என அவர் சரித்திரத்தாலறிகின்றோம்.
மேலைத்தேசவாசிகள் கொண்டிருக்கும் இவ்வபிப் பிராயம் பெரிதும் பாராட்டப்படத்தக்கதொன்றாம். ஏனெனில் மனிதனுக்கு வலதுஞ் சுகமும் எப்போ தும் ஒத்திருப்பனவல்ல. சன்னி முதலிய நோய்களா லும், வேறு பல காரணங்களாலும், கண், காது, வாய் முதலிய உறுப்புக்களில் ஒன்றேனும் ஊனமடைய நேரிடலாம். அப்படியான காலத்தில் நியாயதுரந்த
ஆ. 6

Page 27
பாலபோதி வாசீனம்
ரத்துவம், து விபாஷித்துவம், ஆசிரியத்துவ முதலிய உத்தியோகப் பயிற்சி கை கட்டி நிற்க, ஆமையானது தன் கண்ணை இடந்தாலுங் கழுத்தைத் துண்டித்தா லும் நகர்ந்து செல்வதுபோலக் கைத்தொழிற் பயிற்சி கை தந்து, சீவியத்தைச் சராய் நடத்துவதாகுமே.
பெரிய ஐரோப்பிய யுத்தத்தில் இறந்தவர்களும், மூளை, கை, கால் முதலிய உறுப்புகள் சேதமடைந்த வர்களும் போக, மூன்று லட்சத்துக்கதிகமானோர் மூகையராகவுங் கண்ணறையராகவுஞ் செவிடார்கவு முள்ளவர்களே. இவர்களில் மூன்றிலொன்றுக்கு மேற்பட்டவர்கள், பெரிய பெரிய உத்தியோகம் வகித் தவர்களாயிருந்திருந்தாலும், தாங்கள் பயின்ற கைத் தொழிலின் துணையைக்கொண்டு மனத் திருத்தியோடு வாழ்நாட். கழிப்பதை அறியாதாரெவர் ?
ஜேர்மனி முதலாம் ஐரோப்பிய தேசங்கள் கொடி முந்திரிகைக் கொழுந்துபோல் வர்த்தகத்திலும் வரை யற்ற செல்வத்திலும் நாகரீகத்திலும் இருந்தாப்போ லத் தளைத்துத் தலையெடுத்ததற்குக் காரணம், கல் வித் தேர்ச்சியோடு கைத்தொழிற்றேர்ச்சியும் இணைந் திருந்ததுவேயாம்.
எம் நாட்டாரிற் பலர், உத்தியோக கல்வியை நாடு வதும் ஊர் உறவினரை விட்டுத் தேசாந்தரம் போவ தும், பலர் ஒரு முயற்சியுமின்றித் தெருநீளந் திரிவ தும், கைத்தொழிற்சாலைகளுங் கைத்தொழிற் பயிற் சியும் இல்லாக் குறைவினாலாம். தற்காலம் அரசாட்சி யார் செய்யும் பெரு முயற்சியால் இது படிப்படியே நிவாரண மாகுமென்றெண் ணுதற்கிடமுண்டு.

மேகக் கேட்டாலே 'ருத காட்சியும் விட்டன.
14. அடாது செய்தவர் படாது படுவர் ; ஐந்து கொடுத்தவர் ஆயிரம் பெறுவர். (பேரின் பநா தன் கதைத் தொடர்பு)
--04---- தனக்குத் தரிசனமாகி, அத்தனை ஆச்சரியங்களைச் செய்து சடுதியில் அதரிசனமான யெளவனன், ஒரு வான் தூதன் என்று கயிவாறே அறிந்துகொண்டான். யாழிலும் இனிய குரலோடு அவன் மொழிந்த அமிர்த போதனைகளும், வாத்தியக் கருவியிலிருந்தெழுந்த ஒப்பிலாப் பேரின்ப ஒசையும், இன்னும் ஓர் தாம் அதைக் கேட்டாலோ என்ற ஆசையும், வானவனிடத் தில் விளங்கிய அலங்கிருத காட்சியும், அவனை இக லோக சிந்தனைகள் இல்லாதவன் போலாக்கிவிட்டன. அத்தருணம் வானவன்குறிப்பிட்ட துணைவன் அவனை அடைந்து, அன்புடன் அளவளாவி, அவனைத் தன் வீட்டுக்கிட்டுப்போய், ஞான உபதேசஞ் செய்து பெயாத்தி றிசோ அதாவது பேரின்பநாதன் என மறு நாமமுஞ் சூட்டி, அவன் உலகில் இனிதே உய்யும் வழியையுங் கற்பித்து, ஒரு துணை வனோடு உறவினர் வாசஸ் தானத்துக்கு அவனை அனுப்பி வைத்தான்.
பேரின்பநாதன், வீட்டிற் சேர்ந்து துணை வன் உட! தேசப்படி ஒழுகிவருகையில் ஒருநாள் சாயங்காலம் ஒரு தங்கு (சாவடி ''யின் உள்ளே துடுக்கரான சில பிள்ளைகளோடு விளையாடிக்கொண்டிருந்தான். அப் போது சடுதியில் முகில் திரண்டு வான மிருண்டு மின் னல்களோடும் இடி முழக்கங்களோடுந் தொடர்ந்து பெருமழை பொழிந்தது. தன் கூடாரத்தைவிட்டுத் தனியே துாக சாரியாய் மிக்க தூரஞ் சென்றிருந்த அரச குமாரன் அந்த மழையில் அகப்பட்டுக்கொண் டான். அவன் தரித்திருந்த விலையேறப்பெற்ற உடை

Page 28
பாலபோத வாசனம்
களும் அணிகலங்களும் நனைந்து சீர்குலைந்தன. குளிர் கூதல் என்றதறியா அந்த அரசிளங் குமரன், விறைத்து விடவிடத்துப்போனான். என்றா லும் அவன், குதிரை பாசத்தோடு சதுப்பு நிலத்தில் வழுக் Aவிழாவண்ணம் அதனை விட்டிறங்கித் தன் வெளி "உடைகளைக் களைந்து மூட்டையாகக் கட்டி ஒர் கோலி லே தொடுத்துத் தோளில் இட்டுக்கொண்டும், குதி ரையை நடத்திக்கொண்டும் குதிரைக்காரன் வேஷ் மாய்ப்பிரசித்ததெருவூடேசெல்லவேண்டியதாயிற்று.
அவன் இக்கோலமாய்த் தங்களுக்கெதிரே வரு வ33)த முன் சொல்லிய பையல்கள் அவதானித்தார் கள்.குதிரைக்காரத் தம்பி ஒருவர் தோய்ந்து தோய்ந்து வருகிறார்; அவர் இங்கே இடம் பெறாத படி வாயிலில் நின்று பரிகாசஞ் செய்து அகற்றிவிடு வோமாக என்று அவர்களில் ஒருவன் சொல்ல, மற் றொருவன். அப்படியல்ல; உள்ளே வரவிட்டு, வந்த பின் குதிரையின் செவிகளைக் கொய்து வேடிக்கை பார்ப்போம் என்றான். பேரின்பநாதனுக்கோ அவர் கள் சொல்லியனவெல்லாம் பெரும் பயித்தியமாகவே தோன்றின. இந்தக் குரங்குக் கூட்டத்தோ டேன் கூடினேன் என்று தன் னுள்ளே சொல்லிக்கொண் டான். அதற்குள்ளாக அரசகுமாரனும் குதிரையை வினைவிற் செலுத்திக்கொண் டுள்ளே புகுந்துவிட் டான். கொடுங் குணம் மிகுந்த அந்தப் பையல்கள் அவன்மேற் கடுமொழி கூறியும் அவன் முகத்தில றைந்தும் பெருங் கோட்டாலை செய்யத் தொடங்கி னார்கள். பேரின்பநாதன் அதைத் தடுக்க எத்தனை புத்தி சொல்லி அவர்களை மன்றாடினாலும் '' இந்தக் குதிரைக்காரனையுங் குதிரையையும் இங்கு நிற்க விடோம் விடோம்" என்று யாவரும் ஓரே பிடியாய் கின்றார்கள். அரசகுமாரனே இத்தன்மையான துஷ்

ஆறாம் புத்தகம்
4
டப் பிள்ளைகளுக்குத் தன்னை இன்னானென்று வெளிப் படுத்தத் துணியவேயில்லை. பேரின்பநாதனோ இரக்க மேலிட்ட மனத்தினோடு அவ்வந்நியனை நோக்கி : ஐயா! உம்மைப் பார்க்க என் மனம் வருந்துகின்றது. குதிரையை நடத்திக்கொண் டென் பிறகே வருக, உமக்குங் குதிரைக்குந் தகுந்த ஒதுக்கிடங் காண்பிக்கி றேனெனச் சொல்லி அரச குமாரனை அழைத்துக் கொண்டு, தானும் மழைத் தூற்றலில் நனைந்து நனைந்து ஏகாந்தமான ஒரு தங்குமடத்திற்போய்ச்சேர்ந்தான். அங்கே சேர்ந்தவுடன் தான் நனைந்திருப்பதைச் சிந் தியாது, கிட்டே கிடந்த உலர்ந்த கந்தைத் துணிகளைக் கொண்டு ராச குமாரனது தலையையும் மேனியையுந் துவட்டிவிட்டுத் தீ மூட்டிக் கணப்புண்டாக்கி, அதில் அவனுங் குதிரையுங் குளிர்காயச் செய்து, தானும் விறைப்பு நீக்கிக்கொண்டான்.
பேரின்பநாதன் தனக்குச் செய்தவைகளை நினைக்க நினைக்க, அரச குமாரனுக் கவன்மேல் அன்பு மென் மேலும் பெருகுவதாயிற்று. இத்தன்மையான தயா ளமுந் தற்பரித்தியாகமுமுள்ள மாந்தரும் உலகில் இருக்கிறார்களோ! என்று அவன் எண்ணி அதிசயப் படலானான். என்னை அரச குமாரன் என்று இவன் சற்றாயினும் அறிந்திருக்கவேண்டும்; அதனாற்றான் இவ்வண்ணஞ் செய்கிறான் போலும் என்ற சந்தேக எண்ணமும் அவனுக்குண்டாயிற்று. இப்படியாகை யில், பேரின்பநாதன் அவனை நோக்கித் துாக பாலரே! உமது முகத்திலே துக்கக் குறிகள் தோன்றக்காண் கிறேன். குதிரையை நனைத்ததற்காய் எசமானன் ஓர்போ தும்மிற் பழி சுமத்துவானென் று யோசிக் கிறீராக்கும். அப்படியானால் நான் உமது வாச ஸ்தலமட்டு மென்கிலும் வந்து உமக்காகச் சிபா ரிசு செய்வேன். துக்கப்படாதீராக; நீர் இருக்கும்

Page 29
46
பாலபோத வாசனம்
இடந் தாரமா என்றான். ஓகோ! இவன் என்னைக் குதிரைக்காரன் என்றன்றோ எண்ணிக்கொண்டான். என்னப்பா! இவனது குணத்தின் மகத்துவம்! என இளவரசன் தன் மனதிற் சிந்தித்துக்கொண்டு, இன் னுந் தன்னை வெளிப்படுத்த மனமற்றவனாய், ஈரஞ் சுவ றிய கடுதாசித் துண்டொன்றைத் தன் சட்டைப் பையினின்றும் எடுத்துச் சில வரைந்து மடித்து அதைப் பேரின்பநாதனுக்கு நீட்டி, தம்பீ! நீர் இது வரைக்குஞ் செய்த உதவிக்காக நான் மிகுதியும் நன்றிய றிந்திருக்கிறேன். மழையும் ஒய்ந்துவிட்டது. அரச குமாான் இந்நாட்களில் வேட்டையாடவந்து தங்கியி ருக்குங் கூடாரம் உமக்குத் தெரியவேண்டும் என்று நினைக்கிறேன். இன்னும் ஒரு தயவாக இந்தச் சீட் டை அந்தக் கூடாரத்தில் வசிப்பார் ஒருவருக்குக் கொ டுத்துவிடும்படி வேண்டுகிறேன் என்றான். பேரின்ப நாதன் அதற்குச் சந்தோஷமாய் உடன்பட்டுச் சீட் டைப் பெற்றுப் போய் வாயில் காத்து நின்ற சேவ கன் கையிற் கொடுத்தான். சேவகன் அவனை நிற்கும் படி சைகை செய்து விட்டு உள்ளே போயினான். போய்ச் சிறிது நேரஞ் சென்றதும், சிங்காரமான பாச பரியிரதமும் அதைத் தொடர்ந்து ஆயுதமணிந்த நான்கு குதிரை வீரரும் இரண்டு மெய்காப்பாளரும் பயணகோலமாய்ப் புறப்பட்டுவாப் பையன் சற்றே ஒதுங்கி நின்றான். அதைக் கண்ட மெய்காப்பாளரில் ஒருவன் அவனை நோக்கி : அரச குமாரன் கையினின் முஞ் சீட்டுப் பெற்று வந்தவன் நீதானா ? என்றான். பையன் மாறுத்தரமாகச் சீட்டுக் கொண்டுவந்தவன் நான் தான். ஆனால் அதைத் தந்தவர் அரச குமாரன் என்பதை அறியேன் என்றான். அதற்கவன் நல்லது, வந்து நம்மோடு வண்டியில் ஏறிக்கொண்டு சீட்டுத் கந்கவர் இருக்கும் இடத்தைக் காண்பிப்பாயாக என் 17) நன். அப்படியே பேரின்பநாதன் தான் ஆதரித்த

ஆறம் புத்தகம்
47
அந்த அந்நியனிடம் அவர்களைக் கொண்டுபோய்விட். டான். அவர்களெல்லாரும் நெற்றி தரையிற்பட அவனை நமஸ்கரித்துத் தாங்கள் கொண்டுவந்த விலையுயர்ந்த இராச உடைகளை அவனுக்குச் சமர்ப்பித்தார்கள். இராசகுமாரன் தாமதியாமல் அவைகளைத் தரித்துத் தன் குதிரை மீதேறிக்கொண்டு தனக்கிடும்பு செய்த துஷ்டப் பையர் இருக்கும் இடம் நோக்கி, மெய்காப் பாளர், துரகவீரர் சகிதமாய்ப் புறப்பட்டான். பேரின் பநாதன் தனக்குக் கற்பிக்கப்பட்டபடியே அவ்விடத் திலேயே நின்று விட்டான்.
மனிதர் தங்கள் எண்ணத்தில் எவ்வளவு தவறிப் போகிறார்கள் ! பொன்னை மண்ணென்றும், குற்ற மற்றவனைக் குற்றவாளியென்றும் எண்ணிக்கொள்வ தவர்களுக்கியல்பு. ஆயினும் எதையும் முன் ஆலோ சனையின்றித் தாழ்ந்ததென்று கொள்வது ஆபத்துக் கேதுவான காரியந்தான். ஐயோ! அந்தப் பாவிப் பையல்கள் அகப்படப்போகிறார்களே. இராச குமா ரன் அவர்களுக்கு யாது தண்டனை விதிப்பானோ அறி யேனே! என்று பேரின்பநாதன் எண்ணியும் எண்
ணாமலும் இருப்பதற்கிடையே தனது விளையாட்டுத் தோழர் ஏழுபேரும் விலங்கு பூட்டப்பட்டுக் குறாவிய முகத்தோடு வருவதைக் கண்டான். கண்டதும் அவ னுக்கு இரக்கம் மேலிடக் கண்ணீர் மளமளவென்று சொரியத் தொடங்கியது. பெருங் குணவானே! நீ எவ்வளவழுதாலும் சீவ இரக்கமில்லாத இந்தத் துஷ் டருக் கிரக்கங் காண்பிக்கப்படும் என்பதைக் காத்தி ராதே. ஆனால் நீ எனக்குச் செய்த ஒப்புயர்வில்லாத பேருதவியானது, உன்மீது எனக்குத் தணியாத மெய் யன்பை மூட்டுகின்றது. எனது அரமனையில் வசிப் பதற்கே நீ உரியவன் என உரைத்து ராசகுமாரன், பேரின்பநாதனைத் தன்னோடு கொண்டுசென்று அவ

Page 30
18
பாலபோத வாசனம்
னை வெகுமானப்படுத்திக் குற்றவாளிகளான மற்றப் பையல்களைத் தண்டித்துச் சிறைப்பள்ளியில் விடுத் தான்.
15. நன்றி மறவேல்
-----ெ----- நாம், கல் மண் முதலிய அறிவிலாப் பொருட்களா யேனும், விலங்கு, பறவை முதலிய தாழ்ந்த சிருட் டிகளாயேனும், ஆகாமல், ஞானமும், அறிவாற்ற லும் பொருந்திய மானிட தசையை உடையவர்களாய் இருக்கின்றோம். இந்நிலையில் நாமிருக்கச் செய்து கணந்தோறும் நம்மைப் பரிபாலிப்பவர், கருணைத்
தடங் கடலாகிய கடவுளன்றே.
பத்துமாதஞ் சுமந்து பத்தியமிருந்து பெரும் பிர சவ உபத்திரவமுற்றுப் பெற்றெடுத்துப் பயோதரப் பாலூட்டித் தாலாட்டி, மார்புற அணைத்து மடிமிசை யிருத்தி ஊஞ்சல் வைத்தாடி, ஊ ண் துயில் ஒறுத்து, நல்லனவெல்லாம் நமக்கென்று விட்டு எம்முயிர் தன்
னுயிர்போலப் பேணி வளர்த்துவிட்டது, நம்மருமை மாதாவன்றோ.
வெயில் மழை பாராமல், நெற்றி வெயர்வை நிலத் தில் விழ உழைத்து, வரும் ஊ திபங்கொண்டு நமக்கு நல்லுணவுடைதந்து பள்ளிக்கு வைத்துக் கல்வி அறி வும், பல தொழில் பயிற்றிக் கைத்தொழில் அறிவும், உலக ஞானமும் ஒழுக்கமும் ஓதித் தீயரோடு கூடாம் லுஞ் செவ்வழி தவறாமலுஞ் செய்து வைத்தது நம்ம ருமைத் தந்தையன்றோ.

ஆதம் புத்தகம்
49
என்றும் இறவாத பேரின்ப வாழ்வை அடைந்து சுகிப்பதற்கு வழியாகிய ஞானோபதேசங்களை நமக் கோதி, ஞானத்தீட்சையும் பிரசாதங்களும் அளித்து, நன்னெறிவிட்டு நாம் பன்முறை வழுவினாலும், சற் றும் முனியாமற் சாந்தமாய் அணைத்து நம்மை ஈடேற்றுவதொன் றிலே கவலையாயிருப்பவர், வாப்பி. சாதம் வாய்ந்த குருப்பிரசாதியன்றோ.
இகபர நலங்களைத் தருவனவாகிய கல்வி அறிவை யும் நல்லொழுக்க முறைகளையும் செப்பமாய் ஊட்டி வைத்தவர், காத்திரம் மிக்க உபாத்தியாயான்றே.
கைப்பொருள் உதவியும் கனத்த சகாயமும் நற்றே றுதலும் புரிபவர், பெரியோராதி உபகாரிகளன்றோ.
ற்றார், உல் நாம் வருத்?
ஆதலால், கடவுள், பெற்றார், குரு, உபாத்தியாயர், உபகாரிகள் ஆகிய இவர்கள் மட்டில் நாம் ஆயுளுள் எளவும் நன்றியறிதல் உள்ளவர்களாய் இருத்தல் வேண்டும்.
நம்மைப் படைத்து ரட்சித்துப் பரிபாலனஞ் செப் துவருங் காருண்ணியக் கடவுளுக்கு நாம் செலுத் தத் தகும் நன்றி யாதெனில் : நமது மன மொழி மெய்களால் அவருக்கு யாதுந் துரோகஞ் செய்யா திருந்து, கணந்தவறாமல் அவர் நமக்குச் செய்துவரும் எண்ணிறந்த உபகாரங்களைத் தினமும் நினைவுகூர்ந்து அவரை வாழ்த்தி வணங்குதலாம். சிலர், தம்மால் ஏதாவது அற்ப உதவி பெற்றவன் நானும், பதில் நன் ரி செலுத்தாதிருப்பதைத் தாளமாட்டாமல், அவலை தன் றிகெட்டவனென்றுங் கீழ்க்குணமுடையவனென் றும் வைது நிந்திப்பார்கள். ஆனால், தங்கள் பேருட காரியாகிய கடவுள் மட்டிலோவெனில், அவர் இருக்கி
வகுத்தன் தாமல் பவததரு'
ஆ. 7

Page 31
50
பசிலபோத வாசனம்
றாரோ என்று தானும் அறியாதார்போல ஒரு வந்தனை வழிபாடுமின்றி நடந்துகொள்வார்கள். இது எவ்வ ளவு உணர்வற்றதனம் !
பிதா மாதாவாகிய பெற்றார்மட்டிற் கீழ்ப்படிதலும், வணக்கமும் பட்சமுங்கொண்டு, நோயுற்ற காலத்தில் அவர்களைப் பரிகரித்துத் தள்ளாமையான காலத்தில் அவர்களை ஆதரித்து, நமக்கவர் புரிந்த தினைத்துணை நன்மையையும் பனைத்துணையாகக்கொண்டு, நம்மாற் செய்யக்கூடிய உதவியெல்லாஞ் செய்தலே நாம் அவர் களுக்குச் செலுத்தத்தகும் நன்றிக் கடனாகும். அன் றியும், இவ்வளவு குணசீலம் பொருந்திய புத்திர னைப் பெற்றெடுப்பதற்கு இவனுடைய பிதா என்ன தவஞ் செய்தானோ! என்று பிறர் அதிசயிக்கத்தக்க வாறாய் ஒழுகும் புத்திரனே தன் தந்தைக்குச் செய் யத்தகும் உதவியைச் செய்கிறான் என்றும், தன் மகன், கல்வியும் நல்லொழுக்கமுமுள்ள மகா யோக்கி யன் என்று கேள்விப்படும்போது தாய்க்குண்டாகும் பேரானந்தமானது, அவனைப் பெற்றபோதுண்டான மகிழ்ச்சியிலும் பெரிதே என்றுந் திருவள்ளுவர் கூறுவார்.
சிசிலி தீவிலுள்ள எற்னா என்னும் அக்கினி மலையா னது அநேக நூற்றாண்டுகளின் முன், என்றுமில்லாத மூர்க்கத்தோடு, கிட்டமுஞ் சாம்பரும் அக்கினியுங் கக்கிச் சூழவுள்ள கிராமங்களை நாசமாக்கத் தொடங் கியது. அதைக்கண்ட கிராமவாசிகள் சற்றுந் தாமதி யாமல், தங்களோடு கொண்டுசெல்லக்கூடிய பொருட் களில் மிகவும் விலைபெற்றவைகளைச் சேமமாய் எடுத் துக்கொண்டோடித் தப்பினார்கள். அவர்களுள் அனாப் பிலஸ், அம்பினோமஸ் என்னும் இரு உத்தம் வாலிபர் மாத்திரம் தங்கள் அருமைப் பெற்றாரையே உயர்ந்த திரவியங்களாக மதித்தாற்போன்று, அவர்களைத் தங்

ஆறாம் புத்தகம்
5!
கள் முதுகின்மீதெடுத்துச் சுமந்து சென்றார்கள். இந்த அரிய புண்ணியச் செய்கையின்மேற் பிரீதியான கடவுள், மற்றவர்கள் சென்ற வழிப்புறமெல்லாந் தீயி னல் வேகடிக்கப்பட்டவிடத்தும், இவ்விருவர்போன வழிப்பாதை மாத்திரங் கருகிப் போகாமற் பச்சனவா யிருக்க அருள் செய்யலாயினார். அன்றுதொட்டின்று மட்டும் அந்த இடம் '' பத்திமான்கள் பூமி '' என் றழைக்கப்படுகின்றது.
இதைப்போலும் நன்றியறிதற் குணங்களன்றோ போற்றப்படத்தக்கன. ஆனால் அந்தோ! எம் நாட் டில் எத்தனையோ பிள்ளைகள் புலிக்குட்டிகள் போல் வளர்ந்து தங்கள் பெற்றாரை அடித்தலும், உதைத் தலும், வைதலுஞ் செய்து அவர்களுக்கு ஒருதவி யும் புரியாமற் சீர்குலைய விடுகிறார்கள். இது எவ் வளவு கொடூரமான நடக்கை. தங்கள் அன்பிற்கு ரியவர்களை இம்மாத்திரம் பிறக்கணிக்கிறவர்கள், கடவுள் வணக்கம், குருவணக்கம் முதலியன செய் யக் கனவிலும் நினைப்பார்களா? உபாத்தியாயரை மதிப்பார்களா ! உபகாரிகளுக்கோர் உபசார வார்த் தை என்கிலுஞ் சொல்வார்களா? இப்படிப்பட்ட வர்களுக்குப் பின்வருங் கவியிற் கூறியிருப்பதுலே
நேரும்.
தந்தையுரை தட்டினவன் - தாயுரை இகழ்ந் ேதான், அந்தமுறு தேசிகர்த மாணையை மறந் ேதான், சந்தமிகு வேதநெறி தாண்டினவ னால்வர் செந்தழலின் வாயினிடை சேர்வதுமெய் கண்டீர்.
சற்றே நாகரீகமுள்ளவர்க ளென்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் இன்னொருபாலாரை நோக்கு வோம். ''உப்பிட்டவரை உள்ளளவும் நினை'' என் பது உலக நீதி; இதை மறந்தாற்போலப் பாலியத்

Page 32
52
பாலபோத வாசனம்
தில் ஞான போதகஞ் செய்த குருவானவர் அருகி லிருந்தாலும் இவர்கள் கண்டு பேசார்கள். தூரத் திலிருந்தால் யுகத்துக் கொரு கடிதமென்கிலும் எழு தத் துணியார்கள். தங்களுக் கறி வூட்டிய ஆசி ரியரை வழியிலேனுந் தெருவிலேனுங் கண்டால், விழிகண் குருடர்போல் அண்ணாந்து கொண்டு போய் விடுவார்கள். முப்பத்திரண்டு பற்களை யுங் காட்டி இச்சகம் பேசுகிற அந்நியருக்கு வைத்திருப்பனவெல் லாங் கொடுத்து விடுவார்கள்; ஆனால் இடைஞ் சற்பட் டுதவி கேட்கிற ஏழை முகத்தை எட்டியும் பாரார்கள்.
நன்றியொருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் என வேண்டா--நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான்தருத லால், என்பதை முன்னிட்டு, பிரதி நன்றியை எதிர்நோக்கி என்கிலும் நன்மை செய்தலும் நன்றி காட்டலும் வேண்டாமா?
நன்றி மறப்பது நன்றன் று, நன்றல்ல தன்றே மறப்பது நன்று.
16. நல்லொழுக்க மாண்பு
- 0Keமிகுந்த கல்விச் செருக்குள்ளவனும், கவிபாடி -24ாங்கேற்றும் புலவர்களுக்குப் பரிசளிக்கு மியல் 1.புடையவனுமான அரசனொருவனிருந்தான். இவன் ஒருநாள், புலவர்களாலே கல்விமானான தன்னை வியப் பிக் (8; விரும்பி, இராசாதிராசனிலும், மாதம், முத்து,

ஆறும் புத்தகம்
38
வைடூரியமென்னும் விலையுயர்ந்த மணிகளிலுஞ் சிறந் தது யாதென்று காட்டுகிறவன், ஆயிரம் பொன் வெகுமதி அளிக்கப் பெறு வானென நகரெங்கும் பறை அறைவித்தான். இதனை அறிந்த புலவசெல் லாரும் ஒன்றாய்க்கூடி, அரசனிலும், அவன் மனைவியர் களாகிய மரகதம், முத்து, வைடூரியம் என்பவர்களி லுள் சிறந்ததொன்றை நாம் காட்ட எழுந்தால், அது அவனுக்கே அவமானமாய் முடியும். ஆகையால் இது விஷயத்தில் மவுனமாயிருப்பதே யோக்கியம் என ஆலோசித்து முன்போல் அரமனைக்குப் போதலையும், கவிபாடிப் பரிசு வாங்குதலையும் விட்டுவிட்டார்கள். அரசனும் புலவர் வருவர் வருவர் என எதிர்பார்த்தி நந் தும் நெடுங்காலமாய் அவர்கள் ஒருவரும் வராதது கண்டு, கடுங் கோப மூண்டவனாய், இன்னும் பன் னிரு தினங்களுள்ளே புலவர் வராராயின் அவரெல் லாம் ஒருவருந் தப்பாது சிரங்கொய்யப்படுவாரென ஓர் அறிக்கை செய்தான். இவ்வறிக்கையை அறிந்த கவிஞர் யாவரும், பொறியில் அகப்பட்ட எலிபோல் அலமலந்து கலங்கி மந்திரி பாதத்திற் போய்விழுந்து, தாங்கள் இராச சமுகஞ் செல்லாமைக்குண்டான காப ணத்தை வெளிப்படுத்தி, அத்தருணந் தங்களைத் தற் காக்க வேண்டுமென்று கெஞ்சி மன்றாடினார்கள். மந் திரி மிகவும் புத்தி சாதுரியமுள்ளவனும், அரசனு டைய கர்வத்தை அடக்கத் தருணம் பார்த்திருந்தவனு! மாதலால், புலவருக்குத் தேற்றுரை கூறித் தாமதியா மற் போய், கல்வியிலுஞ் செல்வத்திலும் அரசனிலுஞ் சிறந்தது ஒழுக்கமே என அமைத்து, ஒரு பிரபந்தம் பாடிவருவீர்களாக; நான் அதை அரங்கேற்றி வெகு மதியும் பெற்றுத் தருவேனெனச் சொல்லி அவர்களை அனுப்பிவிட்டான். அவர்கள் போய், மந்திரி கருத் துப்படி ஐந்து தினங்களுட் பிரபந்தம் பாடி முடித்து, ரா சமுகஞ் சென்று நின் 1ார்கள். புலவர் வரவை

Page 33
54
பாலபோத வாசனம்
அரசன் அறிந்து மிக மகிழ்ந்து பிரபுக்கள், துரைமக் கள் ஆதிய சகலரையும் வரவழைத்து, இயற் றிய சவி மாலையைப் படனஞ் செய்யுமாறு ஏவினான். படனஞ் செய்கையில் அதிலுள்ள பாவெல்லாந் தான் கருதிய பொருளை விட்டு வேறொன் றிற் செல்வதை அவதானி க்க அவதானிக்க அரசனுக்குக் கோபந் தலையளவாய்ப் பொங்கியது. உடனே அவன் வாசிப்பை அவ்வள வில் நிறுத்தச்செய்து புலவரைப் பார்த்துப் பேதை காள்!'' கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லான் மற் றோர் அணிகலம் வேண்டாவாம் '' என்னும் நீதியை அறியீர்களா? நான் அநேக தேசங்களை அடிப்படுத் திப் பிரதாபத்தோ டாசு புரியும் முடிமன்னனாய் இருப் பதினிமித்தம் என்னை மேன்மை பாராட்டுவதில்லை. அழகிலுங் குலத்திலும் வாய்ந்த மனைவியரை உடை யவனாய் இருக்கிறே னென்பதைப் பற்றியுஞ் சலாக் கியமடையேன். ஆனால் என்னிடத்திலுள்ள கல்வி ஒன்றுமே நான் பெற்ற பேறுகள் யாவற்றிலும் மேலா ன தாய், நான் சென்றவிடமெல்லாம் எனக்குச் சிறப் பைத் தருவதாய் இருக்கின்றது. அதுபற்றி நான் என் னிற் பெருமைகொள்ளுவதும், பிறர் என்னை வியந்து கொள்ளுவதும் தக்க தாம் என்பதை நீங்கள் உணரா திருப்பதென்ன ? எனது சமஸ்தான வித்துவான்க ''ளாய் உங்களை ஏற்றிப்போற்றித் திரளான திரவியங் களை உங்களுக் கிறைத்ததினால் நான் பெற்ற சலாக் கியம் இது தானா! எனப் பலவாறாய்ப் புலவரைக் கடிந் துரைத்தபின், மந்திரி பக்கம் திரும்பி, இந்தப் பாமா ரை இன்று தொடக்கம் என் வீட்டுக் கடைவாயிலுக் கும் வராமற் செய்வதே தகுதியென் றெண்ணுகி றேன் என்றான். மந்திரி சலேரென் றெழுந்து வல்ல ப மிக்க வேந்தனே ! வித்துவான்கள் மீது எட்பிள வளவேனுங் குறைகூறுவது யுத்தமாய்த் தோன்ற வில்லை. ஏனெனிற் கேட்பீராக,

ஆறாம் புத்தகம்
55
கல்வியினால் உயர்வுஞ் சுகமுஞ் சிறப்பும் உண்டென் பது உண்மையே. ஆனாலுங் கற்றவனைக் கற்றோ ரும் மற்றோர் சிலருமே மதிப்பார்கள், ஒழுக்க சாலி யையோ கற்றோர் கல்லாதோர் என்ற பேதமின்றி எல்லோரும் மதிப்பார்கள். கல்வியினால் ஒருவனுக்கு உயர்குல மகிமை உண்டாகாது. ஒழுக்கம் உயர்குலத் தில் வைக்கும். கல்வியோடு பெரும்பாலும் கர்வமும் அடங்காமையுஞ் சேர்ந்திருக்கும், ஒழுக்கத்தோடு தாண்மையுங் கீழ்ப்படிவும் பொருந்தியிருக்கும். கற்ற வன் முகத்துக்கு முன்னே இச்சகம் பேசுபவர்கள், அவனைப் போகவிட்டுப் புறங் கூறுவார்கள். ஒழுக்க முள்ளவனை உள்ளும் புறம்பும் மெய்ச்சிக்கொள்வார் கள். கல்வியைப் பணங்கொடுத்தாவது கற்றுக்கொள் ளலாம்; ஒழுக்கத்தைக் கோடி பொன் கொடுத்தாலும் பெற்றுக்கொள்வ தரிது. கற்றவ னிருதயம் புத்தக சாலைக்குச் சரி; ஒழுக்கசாலியினிருதயம் மோட்ச வீட் டுக்குச்சரி. கற்றவனிடத்திலே கோபம், பொறாமை முதலிய அக்கிரமங்கள் வாசஞ்செய்வதற்கிடமுண்டு. ஒழுக்கமுள்ளவனிடத்திலோ தயை பொறை சாந்த மாதிய சீலங்கள் விளைவதற்கே இடமுண்டு. கற்ற வன், அரசரை மாத்திரம் வசப்படுத்துவான் ; ஒழுக்க முடையவன் அரசரையன் றி அரசர்க்கரசனாகிய கட வுளையும் தன் வசப்படுத்துவான், கல்வியானது, மனி தாாற் கிடைக்கும் வெளி மகிமையை மாத்திரம் அடைந்துகொள்ளும்; ஒழுக்கமோ அந்தரங்கமெல் லாம் ஊடுருவிப் பார்க்கிற கடவுள் கண்களுக்குமே புகழ்ச்சிக்குரியதாகும். அன்றியும், ஒழுக்கம் இன்பம் தருமென்றும், அது உயிரிலுஞ் சிறந்ததென்றும், நன் றிக்கு வித்தாகுமென்றும், ஒற்றுமையையும் மனப் பாக்கியத்தையும் வளர்க்குமென்றும் நீதி நூல்களெல் லாம் ஓலமிடுகையில், செல்வத்திலுங் கல்வியிலுஞ் சிறந்தது நல்லொழுக்கமே யென்று வித்துவான்கள்
2001

Page 34
56
பாலபோத போ 'ணம்
கூறுங் கூற்று நியாயமான கூற்றேயாமென மந்திரி சொல்லி முடித்தான். அரசன் நாணித் தலை குனிந்த வனாய், ஆயிரம் பொன்னையும் அட்டியின்றி வழங்கிப் புலவரை அனுப்பி வைத்தான்.
17. சுயதேச ஒழுக்கமுறை
-- கா -------
குல ஆசாசம், வேத ஆசாரம், சாகிய ஆசாரம் ஆகிய மூன்றையுந் தழுவிய ஒழுக்கமே நல்லொழுக்க மெனப் பெரும்பாலுங் கருதப்படும். நல்லொழுக்கத் தின் ஒரு பிரிவாகிய சாகிய ஆசாரம், சுயதேச ஒழுக் கம் எனவும்படும். சுயதேச ஒழுக்கமான து பேச் சொழுக்கம், நடை ஒழுக்கம் என்னும் இரண்டு பிரி வினை உடைய து.
பேச்சொழுக்கமாவது : பேச்சிலே குற்றப்படாமல் நயம்படப் பேசுதலாம். நம் தேசத்தாருள்ளே நமக் குச் சமத்துவமானவர்களுமுண்டு ; தாழ்ந்தோரு முண்டு; உயர்ந்தோருமுண்டு. இவர்களோடு நாம். சம்பாஷிக்கும்போது அவரவர் பதவிக்கேற்ற உபசார மொழிகளை வழங்குதலே முறையாகும்.
நீர், இரும், போம், தாரும் என்பன ஆதிய சொற்க ளைத் தனக்குச் சமத்துவமானவர்கள் மட்டில் வழங் கத்தகும்.
நீங்கள், இருங்கள், போங்கள், தாருங்கள் என்பன திய மொழிகளைத் தன்னிலும் மேற்பட்ட பெரி யோர், முதியோர் ஆதியோர் மட்டில் வழங்கத்தகும்.

- 57
ஆறாம் புத்தகம் தாம், தாங்கள், வர, போக, தா, தேவரீர் என்பன போன்ற மொழிகளைத் தாழ்ந்தோர் : உயர்ந்தோருக் கும், பிரசைகள் : இராச அதிகாரம், ஞான அதிகார முள்ளவர்களுக்கும் உபயோகிக்கத் தகும்.
நீ, போ, வா, இரு என்பன போன்ற மொழிகளைத் . தனக்குத் தாழ்ந்தோர் மட்டில் அருமையாய் வழங்கத் தகும்.
அடா, அடீ என்பனபோன்ற இழிசன வழக்குகளை , உயர்ந்தோர் தமக்குத் தாழ்ந்தோர் மட்டிலே னும் உபயோகித்தல் அயோக்கியமாம்.
(“இன்சொலாலன்றி இரு நீர் வியனுலகம் வன் சொலால் என்றும் மகிழாதே'' என்னும் ஆன்றோர் மொழியைச் சிரமேற் கொண்டு, நாமும் நம்மோடு பேசிச் சகவாசஞ் செய்பவர்களுக்கு நமது வாக்கி
னால் எவ்வளவுந் துன்பமுண்டாகாதபடி, அன்பாயுள் சாந்தமாயும், அமைதியாயும் பேசல் வேண்டும். பெரும் பாலும் மனிதர், தங்கள் மக்கள் வறிஞராயிருந்தா லும் செல்வராசா, அரசரத்தினம் என்றும் ; வயோ திகமானாலும் தம்பிமுத்துப்பிள்ளை, பாக்கியநாதபிள்ளை என்றும் ; அழகில்லாதவர்களானாலும் அழகம்மா, சித்திரவல்லி என்றும் ; பிணியாளரானாலும் ஆரோக் கிய நாயகம், சுப்பாக்கியசுந்தரம் என்றும், மங்கல நாம் தேயஞ் சூட்டி அழைக்கும் வழக்கத்தை நோக்கினால், இன்சொற் கூறுதலின் அகத்தியம் இனிதே விளங் கும். யாரிடத்திருந்தாவது ஒன்றைப் பெற்றுக்கொள் ளும்போது, பெரிய உபகாரம்; அல்லது ""மெத்தப் பெரிய'' உபகாரம் என்பனபோ லும் உபசாரமொழி ஏதாவது சொல்லாமல் விடப்படாது. பெரியோர்முகத் தும், சபை முன்னிலையிலும் மிகுந்த அடக்கமாயும் யோக்கியமாயும் பேசல்வேண்டும். மற்றவர்கள் பேசிக்
ஆ. 8

Page 35
38
பால்போதி வாசனம்
கொண்டிருக்கும்போது குறுக்கே பேசலாகாது. வழி யிலேனுந் தெருவிலேனும் வீட்டிலேனும் பெரியோ லரக்கண்டால், வந்தன மொழிகளை வழங்குதல் வேண் டும். கோபங் கொண்டபோதும், மனப்பதகளிப்புள்ள வேளை களிலும் மவுனமாயிருத்தலே முறை. பேசுவ தற்கல்ல, நல்ல பேச்சுக்களைச் செவிகொடுத்துக் கேட் பதற்கே அதிகமாய் விரும்பவேண்டும். அளவு கடந்து பேசுவதிலும், வேண்டியதை மட்டாயும் நயம்படவும் பேசி முடித்தலே உசிதம். முன் ஆலோசனை செய் 1.பா து ஏதொன்றையும் பேசத் துணியலாகாது. பிற எரைக் குறித்துப் பேசவேண்டி வந்தால், அவர்கள் செய்த தீமைகளை அல்ல, நன்மைகளையே பாராட்டிப் பேசல் வேண்டும். புறங்கூறுதலும், பழிமொழிசொல் லுதலும், தற்புகழ்ச்சி பாராட்டுதலும், வீம்புரை, சுடுசொல் , கடுமொழி பேசலும், அதப்பியம், வசவு, தூஷணை, சாபனை முதலியன மொழிதலும் ஆகா வாம்.
சற் அடங்க மற
நடை ஒழுக்கமாவது : வெளிக்கிரியையிலே பிறர் குற்றங் காணா விதமாய் ஒழுகுதலாம். தமிழ் வழங் கும் நாடெங்கும் பேச்சொழுக்க வழக்கம், ஏறத்தாழ ஒரே தன்மைப்படும். ஆயினும், நடை ஒழுக்க வழக் கம் இடத்துக்கிடம் சற்றுச்சற்று வித்தியாசமடையும். இவ்வேறுபாடு, அவ்வவ்விடங்களில் உள்ளவர்களின் உடை., உத்தியோக முதலியவற்றால் உண்டாகும். நகர்ப்புறங்களில் உள்ளவர்கள், பெரும்பாலுஞ்சட்டை தொப்பியே தரிப்பதால், அவர்கள் : உபசார கிருத்திய மாக, பெரியோர் ஆதியோர் முன், தாங்கள் தரித்தி ருக்குந் தொப்பியைச் சற்று உயர்த்தித் தாழ்ப்பதும், சாமானியர் முதலியோருக்குக் கை குலுக்குதலுஞ் செய்வார்கள். உள் நாட்டுப் புறங்களில் வசிப்பவர்கள், சட்டை தொப்பிக்குப் பதிலாகச் சொல்வை"யை உப

ஆறாம் புத்தகம்
50
யோகிப்பதால், தங்கள் தோளில் இருக்குஞ் சால்வை யைச் சற்றுத் தளர்த்திக்கொள்வார்கள். தலைப்பாகை யோடு சட்டை தரித்திருந்தால், அல்லது சட்டைமாக் திரமே தரித்திருந்தால் தங்கள் இரு கரங்களையும் எடுத்து வலப் பக்கம் அமையக் கூப்பிக்கொள்வார்கள். இன்னுஞ் சிலர் சிரசை மாத்திரஞ் சாய்த்துக்கொள்ள லுமுண்டு.
பெரியோரோடு சம ஆசனத்தில் இருத்தலும், அவர் கள் வரும்போது ஒருவன் தானிருந்த ஆசனத்தை விட்டெழா திருத்தலும், வழியில் அவர்கள் போம் போது, ஆசாரத்தோடு வழிவிலகாதிருத்தலும், அவர் கள் சமுகத்திலே சுருட்டுப் புகை குடித்தலும், இலை போல்வன பிறவும் எவ்விடத்திலும் ஒழுக்க விரோத மாய்க் கொள்ளப்படும்.
''தேசத்தோடொத்துவாழ் '' என்னும் மூதுரைப் படி, அவரவர் தஞ் சுயநாட்டார் தக்கதென்று கொள் ளும் ஒழுக்க முறைப்படி நடந்துவரத் தெண்டித்தலே, நல்லொழுக்க அனுசாரத்துக்கின்றியமையாததாம்.*
18. நீதிமானுக் குலகம் பகை (பேரின்பநா தன் கதைத்தொடர்பு)
----- -Ke~---- பேரின்பநாதன் ராசமனையிலிருந்து படித்துக் கல்வி சாஸ்திரங்களிலுமன்றி நீதி, தயை, தர்ம முதலியர் சுகுணங்களிலுஞ் சிறந்து விளங்கியதால், நகரநீதி விசாரணைக் கர்த்தாவாக நியமனஞ் செய்யப்பட்டார். அன் கடிதம் எழுது மு ைறயும் இவ்விஷயத்தோடு சோ வேண் டியதாயினும், விரிவுபற்றி அ து வேற்றிடம் பெறலாயிற்று.

Page 36
80
பாலபோத வாசனம்
மிகவுஞ் சாதுரியமுள்ள அனுபவசாலிகள் எத்தனை யோ பேரிருக்க, நேற்றுப் பிறந்த இவர் இந்த மேலான பதவிக்குயர்த்தப்படவோ ! என்னும் பொறாமையான எண்ணம் உடன் உத்தியோகஸ்தர் பலருக்குண்டா யிற்று. அவர்களில் : (என் மித்தியோவாகும்) அபிகா யன் என்பவனே சிரேஷ்டமானவன். அவன் ஒரு நிரீச் சுரவாதி, பிறர் நன்றாயிருப்பதைக் காணச் சகியா தி வன்னெஞ்சன். அதிகார வரிசைக் கிரமப்படி சிரேஷ் ட நீதிபதி உத்தியோகந் தனக்கே கிடைக்குமென்று மனப்பால் குடித்துக்கொண்டிருந்தவன். தற்போது பேரின்பநாதன் வகித்திருக்கும் பதவி, தான் எண் அரிய கருமங்களுக்கெல்லாந் தடையாயிருக்கின்றதே என நினைந்து நினைந்து அவர்மீது தீராப் பகையும் வன் மமுங் கொள்ளத் தொடங்கினான். ஆயினும் அபிகா யன் கொண்ட வன்மத்திற் சனித்த உக்கிர குண்டு மாரிகளெல்லாம், பேரின்பநாதன து மதுரமுஞ் சாந் தமும் பொதிந்த சுகுண மாகிய பஞ்சு மெத்தையிற் பட்டுப் பயனில்லாதுபோயின.
இப்படியிருக்கையில், ஒரு ஏழை விதவைக்குச் சீவாதாரமாயிருந்த திராட்சத் தோட்டமொன்றை அபிகாயன் அநீதியாய்ப் பறித்துக்கொண்டான் என்று பேரின்பநாதன் கேள்வியுற்று, அவன் வீட்டிற் சென்று அந்த நிராதாபமான கைம்பெண்ணின் மீதி ரங்கி, அவளிடங் கைப்பற்றியதைத் திரும்பக் கொடுக் கவேண்டுமென்று கெஞ்சி மன்றாடினார். அதற்கு அபிகாயன், அவளுக்குத்தான் கொடுத்த, கடன்பணத் 83) தயுங் காலத்தையும், வட்டியையும் பன்மடங்காகப் பெருக்கிக் காட்டித் தனக்கின்னும் வருமதி உண் டென்று, கண்மூடி விழிக்காமுன் முந்நூறு பொய் சொல்லிச் சாதித்தான், பேரின்பநாதன் அதற்கு நண்ப! உம்மை அறிந்தவர்களெல்லாரும் நீர் செய்தது

ஆறாம் புத்தகம் -
61
அநீதி என்று பேசிக்கொள்ளுகிறார்கள். விதவையும் அழுது பெருமூச்சின்மேற் பெருமூச்சு விட்டுக்கொண் டிருக்கிறாள். இவை ஒருபுறமிருக்க, நீர் சொல்லுவ து சரி என்பதை ஒப்பிக்குமாறு, விதவை உமக்குத் தந்த வட்டிச் சீட்டைக் காட்ட வேண்டுமே! அதை யும் இழந்துபோனேன் என்கிறீர். அன்பார்ந்த மித் திர! நாம் பிறர்மட்டில் இரக்கமாயிருந்தாற்றான், கட வுள், வேண்டியபோது நமக்கும் இரக்கங் காண்பிப் பார். அவர் அளவில்லாத தயாள் சமுத்திரமாய் இ ருப்பதுமல்லாமல், நீதிகோணாத நடுவராகவுமிருக்கி (றார். மனிதர் மீதே என்றும் அயராத பராமரிக்கை அவருக்குண்டு. அதுபற்றி, நீர் விதவையின் ஆஸ்தி யை அபகரித்தது தவறென்றுகண்டால், ஒருபோது உமது பொருள்பண்டமெல்லாம் வேறொருவன் க
வர்ந்துகொள்ள விட்டுவிடவுங்கூடும் என்பதை மறந் துபோகப்படாதென்று சாந்தமாய்க் கூறினார்.
கடவுள் என்ற சொல்லைத்தானுங் கேட்கச் சகியா த அந்தத் துராத்துமாவுக்கு, இப்போதகம் அளவி றந்த கோபத்தை மூட்டிவிடுவதற்கே உதவியது. இல் லாத கடவுளை இழுத்துப் பொல்லாத பேச்சுக்கள் ஒன்றும் பேசாதே. உன்னை எனக்கு நடுவனாக ஏற் படுத்தியவன் ஆர் ? நொடிப்பொழுதில் என் வீட்டை விட்டுப் புறப்படுதி! என்று பேரின்பநா தனைப் பெரி தும் வைது, முரட்டுத்தனமாய் அவர் பிடர் பிடித்துத் தள்ளி அகற்றினான்.
அபிகாயன், இந்தத் தர்மசீலர்மீது கொண்ட வர் மம் இவ்வளவோடு நின்றுவிடவில்லை. பேரின்பநாதன் இடையிடையே ஒரு பள்ளத்தாக்கின் ஓரமாயுள்ள பாதை வழியாக உலாப்போவது வழக்கம். அந்த வ முக்கத்தை அறிந்திருந்த அவ்வன்னெஞ்சன், ஒருநாள் அஸ்தமன வேளையில் அந்தப் பள்ளத்தாக்கின் சமீபத்

Page 37
62
பாலபோத வாகனம்
திற் பதிவிருந்து, பேரின்பநாதன் அதை அடுத்து வருந் தருணம் பார்த்து, ஐயோ பாவம்! அந்தக் கிடு கிடு பாதாளத்துள்ளே அவரை இரக்கமின்றித் தள்ளி வீழ்த்தினான். அந்தப் பெரும் பாதகத்தைப் பகவா னன்றி வேறாராவது கண்டவர்களல்ல. இதனால் அபி காயன், தான் செய்த துரோகத்தை நினைந்து மனோ பயங்கொள்வதொழிந்து, மிஞ்சிய துணிகரங்கொண்டு, கடவுள் ஒருவர் இருக்கிறாரென்றும், அவர் மனிதர் செய்த தீமைகளுக்கு மறு வுலகத்திலே தானும் பழி வாங்காமல் விடமாட்டார் என்றும் இந்த வீணன் அடிக் கடி சொல்லி வருவானே ; இவன் சொன்னவற்றின் மெய் பொய்யை இருந்தறிவோம். அந்தக் கடவுள் வந்து இவனை இரட்சிப்பதையும், ஒருவருமறியாத இந்த மர்மத்தை வெளியாக்குவதையும், என்னைப் பழிவாங்குவதையும் பார்த்துக்கொள்ளுவோமென்று தன்னுள்ளே பரிகாசமாய்ச் சொல்லிக்கொண்டு, சந் தோஷத்தோடு தன் வீட்டுக்குப் போயினான்.
மற்றநாள் உதயவேளையில் திருடர் தலைவனாகிய ஜெனபனும், அவன் கூட்டாளிகளாகிய மற்றக் கள் வரும், பட்டினத்தினின்றும் அவ்வழியாகச் சென் றார்கள். வழியோரத்தில் ஓர் பிணை மான் தான் அப் போதே ஈன்ற இளங் - கன்றுக்குப் பால் ஊட்டிக் கொண்டு நின்றது. அதைக் கண்ட. கீசகன் என்னுந் திருடன் மானைச் சுட்டுக் கொல்லுமாறு, தன் துப்பாக் கியை அதற்கெதிரே நீட்டினான். மற்றத் திருடர் அது பாதகச் செயல் என்று தடுத்தார்கள். கீசகன் அதைச் சற்றுங் கவனியாமல் ஆள் அரவத்தால் திகில்கொண் டோடிய அந்த மானைத் துரத்திச் செல்லுகையில் கால்வழுவி முன்சொன்ன பாதாளத்துள்ளே கமல் குண்டலமாய் விழுந்துவிட்டான். மற்றத் திருடர் விரைந்தோடிப் பார்க்குமளவில், மிகுந்த ஆழமாயுள்ள

ஆறம் புத்தகம்
63 கணவாயின் விரிந்தகன்ற புடையொன்றில் ஏதோ கிடப்பதாகக் கண்டார்கள். கீசகன் அனுங்குகிற சத் தங் கேட்கிறதென்றும் ஒருவன் சொன்னான். உடனே குற்றுயிராய்க் கிடந்த அந்த ஆளைக் கயிற்றேணி கொண்டு பக்குவமாய் வெளியே எடுத்துவிட்டார்கள். இது கீசகன் அல்ல என்றான் ஒருவன். இல்லை அவன் தான் ஆறாட்டத்தால் முகம் வேறுபட்டிருக்கிறதென் றான் வேறொருவன். என்ன உங்களுக்குப் பித்தம் பிடித்ததா? இந்தப் பிரபு உடையா அவன் தரித்தி ருந்தது? என்றான் இன்னொருவன். இப்படியே ஒரு வருக்கொருவர் விவாதஞ்செய்து, கடைசியில் கீசகன் பாதாளத்தில் அதோகதியாயினான் என்றும், அது வேறொருவன் தான் என்றுந் தீர்த்துப்போட்டார்கள். இவனைத் தப்பவைத்தால் எங்கள் உயிருக்கே வினைய மாய் முடியும். ஆகையால் மீண்டும் இவனைப் பாதா ளத்தில் எறிந்துவிடுவோமாக என்று மற்றக் கள்வ ரெல்லாரும் ஒரே பிடியாய் நிற்கவும், ஜெனபன் : அது துஷ்ட மிருகங்களுஞ் செய்யாத ஈனச்செய்கையல் லவா? நாங்கள் திருடரானாலுஞ் சீவ இரக்கஞ் சற்றா வது வேண்டாமா ? என்று சொல்லித் தடுத்து அவ ரைத் தங்கள் கெபிக்குக் கொண்டுசென்று பரிகரிக்கு மாறு கற்பித்தான். அவன் கற்பனைப்படியே திரு டர், நோயாளியை ஒருவருமறியாமற் கெபிக்குக் கொண்டுசென்றார்கள். அரமனையாருந் தங்கள் அருந் திரவியமாகிய பேரின்பநாதனை ஆறாத் துயரோடு தேடியுங் காணாமல் ஒருமாத வரையில் துக்கங்கொண் டாடி ஓய்ந்திருந்தனர்.
(தொடரும்)

Page 38
19. தொழில் நிருணயம்
Kெ -
எறும்புகள் இங்குமங்கும் ஓடித்திரிவதும், வண் டுகள் புஷ்பங்கள் தோறும் பறந்து திரிவதும் எதற் காகவென் று எப்போதாவது நீ சிந்தித்ததுண்டா ? அவைகள் தங்கள் போஷணைக்காக உழைக்கவே அவ்வளவு சிரமப்படுகின்றன. நீயும் அவைகளைப் போல் இடையற முயற்சியுடன் உழைத்தாலன்றி உண்டுடுத்துச் சீராய் வாழ முடியாது. * பசி, வேலை செய்பவன் வீட்டை எட்டிப் பார்த்தாலும், உட்செல் லப் பயப்படும்.'' ஆனால், அது சோம்பேறியின் வீட்டிற் குடி கொண்டிருக்கு மென்பதை மறந்து போகாதே.
இவ்வுலகத்திற் சீவனோபாயத்தின் ஏதுக்களாக ஏற்பட்டிருக்கும் தொழில்கள் எண்ணிறந்தனவாயி னும், அவையெல்லாம் விவசாயம், கைத்தொழில், வர்த்தகம், உத்தியோகம் என்னும் நான்கு பிரிவி னுள் அடங்குவன. நீயும் உன் சீவியத்தை நடத்த அவற்றில் ஏதோ ஒரு தொழிலைத் தெரிந்துகொள் ளுதல் மிக்க காத்திரமும் அகத்தியமுமாயிருக்கின் றது. அதிலேயே உனது முழுச் சீவியத்தின் அனு கூலமுந் தங்கியிருக்கின்றது. சென்ற கால் சீவியத் தை யோசித்து, நான் இன்ன முயற்சியிற் கையிட்ட தனால் இன்ன இன்ன அனுகூலங்களைப் பெற்றேன் என்றும், இன்ன முயற்சியிற் கையிட்டதனால் இன்
ன இன்ன பிரதிகூலங்களை யடைந்தே னென்றுஞ் சொல்லக்கூடாதவன் ஒருவனுமில்லை. ஆதலால், தேற விசாரித்துத் தக்கவோர் முயற்சியைத் தனக்குத் தெரிந்துகொள்ளாதவன், தன் வாழ்நாள் முழுதுந் துக்கமும் வெட்கமும் அனுபவிக்க வேண்டியவனா வான்.

ஆறாம் புத்தகம்
85
கைத்தொழிலிலாவது, வர்த்தகத்திலாவது தேர்ந்த வர்கள் தாமும் நவமானவோர் முயற்சியைத் தொடங் கும்போது தம்மினும் அறிவிற் சிறந்தோரும், பயிற் சியுடையோருமான பலரிடத்தும் ஆலோசனை கேட் டன்றி அதிற் கையிடார்கள். அறிவிற் சிறந்தாரும் அப்பியாசமுள்ளாரும் இவ்வாறு செய்ய, அனுபவஞ் சற்றுமில்லாத வாலிபனாகிய நீ, உன் சீவியகால முழு துக்கும் அடி யீடாகத் தொடங்கும் முயற்சியை உன் சுய புத்திகொண்டு நிர்ணயிக்கத் துணிவது நன்றன்று.
எம் நாட்டுப் பிள்ளைகளுக்கன்றி ஐரோப்பிய பிள் ளைகளுக் கிவ்வித கவலையும் ஆராய்வும் வேண்டிய தில்லை. அவர்களது பெற்றாராய், அல்லது காவலரா யிருப்பவர்கள், தம் பிள்ளைகளுக்குத் தொழில் சம்பந் தமாயுள்ள நாட்டமென்ன ? பற்றுதலென்ன? என் பதை இளமைதொட்டே அவதானித்துச் சித்திர நாட் டமுள்ளவனுக்குச் சித்திர வித்தையையும், யந்திர நாட்டமுள்ளவனுக்கு யாந்தரீகத்தையும், போதனா சக்தியுள்ளவனுக்கு உபாத்திமைத் தொழிலையும், இவ் வாறே அவரவர் போக்குக் கொத்த தொழில்களை விசே ஷமாய்ப் பயிற்றுவிப்பார்கள். இதனால் ஒருவர் தள் ளுபடியின்றி எல்லாரும் ஒவ்வொன்றில் திறமையுள் ளவர்களாயும், போதிய ஊதியத்தை உண்டுபண்ணத் தக்கவர்களாயும் விடுகிறார்கள். இவ்வித தன்மை, நந்தே சத்தவரிற் பெரும்பாலாருக் கில்லாமையால், ஐரோப் பியராயுள்ள அல்லது ஐரோப்பிய முறைப்படி பயிற் றப்பட்டு அனுபவமடைந்துள்ள விவேகிகளுக்கே உன் மனச் சார்பைத் தெரிவித்து அவரெண்ணப்படி உன் தொழில் இன்னதென நிருணயிக்கக்கடவாய்.
இம்முறைப்படி நீயொரு தொழிலைத் தெரிந்து கொண்டாலும், அத்தொழிலைத் தொடர்ந்து நடத்தா விடின் அனுகூலமடையமாட்டாய். சிலர், பேராவ.
ஆ. )

Page 39
86
பாலபோத வாசனம் லால் தாந்தொடங்கிய தொழில் அற்பமென்றுந் தமது திறமைக்குப் போதியதல்லவென்றும் இகழ்ந்து விட் டுப் பிறிதோர் தொழிலைத் தொடங்கிச் சிறிது காலத்தில் அதையுங் கை நெகிழவிட்டு, இன்னுமோர் முயற்சி தேடி, இவ்வாறே தஞ் சீவியகாலமெல்லாம் ஒரு நிலையுமின்றி அலைந்து திரிவார்கள். இவர்கள் விதைப்பாரன் றி யறுப்பாரல்லர். தொடங்கிய தொழி லைத் தொடர்ந்து நடத்தா து பிரயாசத்துக்கஞ்சிப் பின் வாங்குபவர் பலர். உழவு தொழில் செய்பவன் வெயி லுக்கஞ்சி வீட்டிலிருப்பின், அவன் களஞ்சியம் நிரம்பு வதெங்ஙனம்? யுத்தவீரன் மாற்றார் விடுங் குண்டுக ளுக்கஞ்சி ஓடின், வெற்றிபெறுவதெங்ஙனம் ? அவ் வாறே தொழிலுடையான் பிரயாசத்துக்கஞ்சிப் பின் வாங்கினாற் சித்தியடையான்.
உலகத்திற் பெரும் புகழ் படைத்து இறந்தும் இற வாதார் போன்று, பூத உடம்பழிந்தும் புகழ் உடம் பழியாதவராய் விளங்கு மகான்கள் எல்லோரும் பிர யாசத்துக் கஞ்சாது விடாப்பிடியாய் உழைத்தவரே யன்றி, நம்மவரிற் சிலர் போன்று எதிர்ப்பட்ட இடை யூறுகளுக்கு அஞ்சிப் பின்வாங்கினவரல்லர்.
20. தன்வினை தன்னைச்சுடும் ;
நல்வினை புகழைத்தரும். (பேரின்பநா தன் கதைத்தொடர்பு)
----- பேரின்பநாதன், கள்வர் கெபியிலே பதினைந்து மாத காலம் பரிகரிக்கப்பட்டு, நடக்கச் சக்தியுண்டா ன தாம், தீயோர்களாகிய அவர்கள் இல்லத்தில் ஒரு

ஆறும் புத்தகம்
67 நொடிநோமேனுந் தங்கியிருக்கச் சகியா தவராய்த் தாந் தப்பி ஓடிவிடத்தக்க தருணம் எப்போ வரும் வருமென்று நோக்கிக்கொண்டேயிருந்தார். இஃதிவ் வாறிருக்க, அந்நாட்களில் ஜெனபனின் திருடர் அபி காயன் வீட்டிலே சடுதியாய் இரவில் நுழைந்து அவன் ஊழியரைக் கொன்றெறிந்துவிட்டு, சொக்க மாய் அவன் வசமிருந்த பெருந்தொகைப் பணங்களை யெல்லாம் வாரிக்கொண்டு போய்விட்டார்கள்: அபி காயன், திருடர் தன் வீட்டைக் கொள்ளையடித்தார்கள் என்பதை ஒப்பியாததால், ஊழியரை அடித்துக் கொன்றது அவனேயெனக் குற்றஞ்சாட்டப்பட்டுச் சிரேஷ்ட நீதிஸ்தல் விசாரணை ஆகுமட்டுஞ் சிறையில்
இடப்பட்டான்.
இங்கே இப்படியாக, அங்கே பேரின்பநாதன் கள் வர் கெபியினின்றும் உபாயமாய் நீங்கி, இரகசியமாய் இருபது மைலுக்கப்பாலுள்ள இரா சமனைக்குப்போய்ச் சேர்ந்தார். அவரது முகமுங் கோலமும் பெரிதும் மாறிப்போன தால், தொடக்கத்தில் அரசன் அவரை ஆரென்று விளங்கிக்கொள்ளவில்லை. பேரின்பநாதன் தம்மை இன்னாரென்று வெளிப்படுத்திய மாத்திரத் தில், அரசனுக்கும் அரச குமாரனுக்கும் மற்றும் அங் கிருந்த பாச சபையாருக்கும் உண்டான மகிழ்ச்சியோ வருணிக்குந்தரமல்ல. அபிகாயனின் விசாரணைக் கால மும் அடுத்து வந்ததாலும், சிரேஷ்ட நீதிபதி, வயோ திகராயிருப்பதாலும், அரசன் உடனே, தான் கொண்ட மகிழ்ச்சியின் பயனாகச் சிரேஷ்ட நீதியதிபதி உத்தி யோகத்தைப் பேரின்பநாதனுக் களிக்கலானான்.
அதற்கு மூன்று நாள் சிரேஷ்ட நீதிவிசாரணை ஆரம்பமாயிற்று. பேரின்பநாதனும் நீதியாசனத் தெழுந்தருளியிருந்தார். முதன் முதலாக அபிகாய னின் வழக்கு, விசாரணையாகி நீதாசன மத்தியஸ்த

Page 40
பாலபோத வசனம்
ஆலோசனைக்கு விடப்பட்டது. அவர்கள் நெடுநேரந் தேற ஆலோசித்து அபிகாயன், மாணத்துக்குரிய குற்றவாளியென்று வாக்குமூலந்தா, நீதியரசரும் அதனை அனுமதிசெய்து, அவனுக்கு மரணத்தீர்வை விதிக்கலானார். தனது தீர்வை வாசகத்தைக் கேட் டதும் அபிகாயன், கண்ணீர்களோடும் விம்மல் தேம் பல்களோடும் நியாயஸ்தலத்திற் கூடியிருப்பவர்களை நோக்கிப் பின்வருமாறு சொல்வானாயினான்.
எனது தேசத்தவரே! உறவினரே! மித்துருக் களே! சத்துருக்களே! என்னுயிர் என்னை விட்டு நீங்குவதற்கு அடுத்திருக்கும் இந்நேரத்தில் அந்திய வாக்காகச் சிறிது சொல்ல உத்தரவு தரும்படி உங் களை வேண்டுகிறேன்.
என து வாலப் பிராயத்தில் நான் நல்ல ஒழுக்கமும் நேர்மையும் பொருந்திய உத்தமசாலியாயிருந்தேன். இருக்கையில் ஒருநாள் என் மனச்சாட்சிக்கு விரோத மாய் ஒரு பெருந்தீச்செயலைச் செய்து போட்டேன். அன்றுமுதல் என் மனந் துக்கமுங் கிலேசமுமுள்ள தாகி, முன் தான் கொண்டிருந்த சமாதானத்தை இழப் பதாயிற்று. நன்மையின் சார்பு நீங்கித் தின்மையின் சார்பே தலைப்பட்டுக்கொண்டது. நற்குணங்களெல் லாம் நிலைபெயாப் பாவப் பழக்கஞ் சுபாவப் பழக்க மாயிற்று. இடைவிடாமற் கடகடென்று பெருஞ் சத் தமிட்டோடும் புகையிரதப்பாதையினருகே அயர்ந்து நித்திரைசெய்யும் மனிதனைப்போல் என் மனச்சாட் சியுந் தேவ குரலொலிக்குச் செவிடாகிப் பாவமென்ப தும் புண்ணியமென்பதும் பகிடிக்குரிய காரியமா பிற்று. மோக்ஷமென்பதுங் கடவுளென்பதும் பயித் தியமாயிற்று. இத்தோடு லுக்கிறேசியஸ், பித்தாகோ றஸ் முதலிய நிரீச்சுரவாதிகள் எழுதிய நூல்களும் எனக்குக் கை தந்து என்னிடத்திலே தலைப்பட்ட

ஆறாம் புத்தகம்
69
நாஸ் திகக் கொள்கையை உறுதிப்படுத்திவிடலாயின. நானிந்தமட்டுஞ் சொல்லியவற்றால் உங்களுக்க திசய முண்டாகுமென்ப துண்மையே. ஆனால் அதிலும் பெரிதாய் உங்களைப் பிரமிக்கச்செய்யுங் காரியமொன் றுண்டு. அது யாதெனில் : பேரின்பநாதனென்னும் உத்தம நீதிபதியை அநியாயமாய்ப் பள்ளத்தாக்குட் தள்ளிக் கொன்றதேயாம். ஒருவரும் இல்லாத இடத் தில் இந்த அநீதச் செய்கையைச் செய்ததால், நீதிஸ் தர் கையிலகப்படாமல் தப்பிக்கொள்வேன் என்று நான் எண்ணியிருந்தபடியே அவர்கள் என்னைக்கண் டுபிடிக்க மாட்டாதே போனார்கள். இதனால், கடவுள் என்ற பொருளொன்றிருக்குமாயின் இந்த மர்மத்தை வெளியாக்க மாட்டாதா ? என்றெண்ணி மனதிற் பெரி தும் நகைக்கலானேன். ஆ! எனக்கு நகைப்புக்குரி யதாயிருந்த அந்தப் பொருள் தானே என்னைக் காட் டிக்கொடுப்பதாயிற்று. செய்த தீமைக் கீடாகச்ெெசய் யாத தீமை என்னைப் பழிவாங்கி விட்டது. இது தற் செயலாய் நடந்த காரியமல்ல. ஐயோ! இப்போது சாட்டப்பட்ட தீமைகளில் ஒன்றையும் நான் கனவிலே னுமறியேன். கோடிக்கணக்கான பணங் களவுபோ ன துதான் உள்ள காரியம். கடவுளே! நீயே உண்மைப் பொருள்; நான் தான் இன்மைப்பொருள் என்று வா னத்தை நோக்கிச் சொல்லிமுடித்தான்.
இதைக்கேட்ட நீதியரசர், அவனைப் பிடித்திருந்த கொலைஞர் கையை விடுவித்து, இக்குற்றவாளியின் பேச்சைக் கேட்க எனது தீர்வையிற் சந்தேகந் தோன் றுகின்றது. நல்லது ஸ்ரீமத். என்மித்தியோ ! உமது பணப் பெட்டியிலாவது பத்திர நாணயங்களிலாவது
அடையாளமேதுமுண்டா? என வினாவினார்.
அபிகாயன் : ஆம், அரசரே! பணப்பெட்டியில் வெள்ளி அட்சாங்களால் எனது நாமம் முத்திரித்தி

Page 41
70
பால்போத வாசனம்
ருந்தேன் ; பெருந்தொகைகொண்ட பத்திர நாணயங் களிலும் என் கையொப்பத்தைக் காணலாம்.
நீதியரசர் : அப்படியாயின் நீர் இது செய்தியை அய சாட்சியாருக்கு அறிக்கை செய்யாத காரணம் என்ன?
அபிகாயன் : அறிக்கை செய்யுமுன் ராச சேவகர் என்னைச் சிறையிலடைத்துக்கொண்டார்கள். நீதிவி சாரணையின்போது எனக்கிருந்த மனக் குழப்பத்தினி மித்தம் இதுவிஷயத்தை முற்றாய் மறந்துபோனேன்.
நீதியரசர் : (சேவகரை நோக்கி) இது ஜெனபன் என்பவனைத் தலைமையாகக்கொண்ட கள்வர் கூட் டத்தின் வேலையென்று சந்தேகிப்பதற்கிடமிருக்கின் றது. ஆதலால் வீசரே! இதிலிருந்து பன்னிரண்டு மைலுக்கப்பால் தருகுவா என்றொரு வனமிருக்கின் றது. வேங்கை மாங்கள் செறிந்தடர்ந்த அந்தக் காட் டின் மத்தியில் விருத்த வடிவான செயற்கைக் குகை யொன்று காணப்படும். அதன் கீழே விரிந்தகன் ற ஒரு நில அறையிருக்கின்றது. அதுவே அந்தப் பொல் லாத கள்வர் வசிக்கும் மறைவிடம். அவர்கள் அதி னின்று புறப்படும் நேரங் கிட்டத்தட்ட இரவு பதி னொரு மணியாகும். ஆகையால் நீங்கள் இரண்டு பட்டாளங் காலாட்களோடு அவ்விடஞ் சென்று அவர்கள் புறப்படுந் தருணம் பார்த்து ஒருவரையும் தப்பவிடாது பிடித்து நில அறையையும் பரிசோதித்து அவர்களை விலங்கிட்டு இங்கு கொண்டு வருவீர்க ளாக என ஆஞ்ஞாபித்தார்.
ஜெனபனும் அவன் கூட்டாளிகளும் பிடிபட்டு கோசனத்தின்முன் கொண்டுவரப்பட்டார்கள். அபி காயனது நாமத்தையுடைய பணப்பெட்டியும் நீதி .ா (ருக்குக் காட்டப்பட்டது. அப்போது நீதியரசர்

ஆறாம் புத்தகம் கள்வர் தலைவனை நோக்கி: ஜெனபனே! நீயும் உனது கூட்டாளிகளுந்தான் அபிகாயன் வீட்டைக் கொள்ளை 4படித்ததும், அவருடைய ஊழியரைக் கொன்றதும் என்பதற்குப் போதிய சாட்சியிருக்கின்றது. ஆயினும் இதற்கெதிராய் உங்களைச் சுத்தவாளிகளென்று காட்ட ஆதாரம் ஏதுமுண்டா? என்று வினாவினார்.
ஜெனபன் கண்ணீர் ததும்ப, குற்றவாளிகளென் றொத்துக்கொள்ளாமலிருப்பதெப்படி ? இனி எங்க ளுக்கு ஆண்டவனுடைய தயவுதானென்று பணிந்து மொழிந்தான். நீதியரசர் அபிகாயன் பக்கந் திரும்பி உமது ஊழியரைக் கொலைசெய்தது நீரல்லவென் றொத்துக்கொள்ளுகிறேன்; ஆனாற் பேரின்பநாதனைக் கொன்றது நீரே என்று வெளிப்படையாய்க் கூறு கின்றீர். ஆகையால் நான் உமக்கிட்ட தீர்வை நீதி யான தீர்வையேயாம். இதற்கு நீர் என்ன சொல்லு கிறீர்?
அபிகாயன் : ஐயோ! இது தற்செயலாய் என்மேல் விழுந்த தீர்வையல்ல. யாவற்றையுங் கண்காணித்து நடத்தும் ஒருவரால் இடப்பட்ட தீர்வையென்பதை நான் எதிர் வாதமின்றியே ஒத்துக்கொள்ளுகிறேன்
அரசரே!
நீதியரசர் : மிகவுஞ் சரி. கடவுள் இல்லையென்று வாதித்த உமது நாவு தானே அவருடைய இருக்கை யைப் பகிரங்கமாய்த் தாபிப்பதால், இத்தருணம் நீர் பெரிதும் இரக்கத்துக்குரியவராய்க் காணப்படுகிறீர். ஆ! நான் உமக்கு என்ன இரக்கத்தைப் பெறுவித் தல் கூடும்! விதித்த தீர்வையை மாற்றவும் நீக்கவும் எனக் கதிகாரமில்லையே. உம்மாற் பாதாளத்திலே தள்ளிக் கொல்லப்பட்டவன் தானே, உயிரடைந்து வந் து, அந்த மாணத் தீர்வையை விதித்தவனாயிருந்தால்,

Page 42
12
பாலபோத வாசனம்
38ாக்கிற் றங்காதிருப்ப பழைய சிகே"
அவனுக்கு மாத்திரம் இதிற் சுதந்தரம் உண்டென்ப தற்குப் பிரமாணந் தடைநிற்கமாட்டதென்று நினைக்கி றேன். என்மித்தியோ! என் பழைய சிநேகிதா! உமது மனங் கலங்காதிருப்பதாக. உம்மாற் பள்ளத் காக்கிற் றள்ளிவிடப்பட்டவன் நான்தான் !! இறந்து போனான் என்று எண்ணப்படுகிறவன் நான் தான் 11! ஆகையால் நீர் எனக்குச் செய்த தீங்குகள் யாவற்றை யும் மறந்து உமக்குப் பூரண மன்னிப்பளிக்கின்றேன். ஜெனபனே! நீயும் உனது கூட்டாளிகளும் இந்நகா வாசிகளுக்கு இதுகாறும் வருவித்த துன்பங்களும், செய்த கொலை பாதகங்களுஞ் சொல்லிலடங்கத் தகுவ னவல்ல. இக்கொடுஞ் செயல்களைப் புரிந்த உங்கள் அனைவரையும் தகதகென்றெரியும் அக்கினிச் சூளைபி லிட்டுச் சாம்பராக்க வேண்டியதே நீதி. ஆனால் நான் பள்ளத்தாக்கிற் குற்றுயிராய்க் கிடந்தபோது நீ என் மேற்கொண்ட பரிதாபத்தையும் என் சாயங்களைக் குண மாக்கி எனக்குப் புரிந்த சகாயத்தையும் முன் னிட்டு உனக்கும் நான் இரக்கங் காட்டாமலிருக்கப்ப டாது. ஆகையால் உன்னை நன்னடத்தைப் பிணை யோடு மாணத்தினின்றும் ஆக்கினையினின்றும் விடு தலை செய்கிறேன். மற்றக் கள்வர் யாவரும் சீவபரி (பந்தஞ் சிறையில் அடைபடுவார்களாக என விதித்துக்
தமது தீர்வையை முடிக்கலானார்.
இவ்வாறே நீதியரசராகிய பேரின்பநாதன் தமது நற்குண நற்செய்கையாலும், புத்தி போதகங்களா லுந் தஞ் சத்துருக்களையுந் துன்மார்க்கரையும் நன் னிலைப்படுத்தி, அன்றொரு நாள் வான் தாதன் சித் தஞ் செய்த பேரின்ப யாழினோசையைக் கேட்கப் பேரின்ப லோகஞ் செல்லலாயினார்.
பாடு

21. நோயுஞ் சுகமும்
---------- நோய்க்கு வேறு பல காரணங்கள் இருப்பினும், அணுக் கிருமிகளே அதற்கு முக்கிய காரணமெனத் தற்காலத்து வைத்திய சாஸ்திரிகள் ஒருப்படத் துணி கின்றனர். இவ்வ ணுக்கிருமிகள், அணு தரிசனி என் னுங் கருவியின் துணையின்றிக் கண் ணுக்குப் புலப் படாத அத்தனை சிறிய உருவினை உடையன. அவை: தாவரவர்க்கத்தைச் சார்ந்தனவும், பிராணி வர்க்கத் தைச் சார்ந்தனவும் என இரு வகைப்படும். பிராணி வர்க்கக் கிருமிகளிலும், தாவா கிருமிகளே மிகக் கொடி யன. சின்னமுத்து, பொக்கிளிப்பான், வைசூரி முத லிய தொற்று நோய்களின் மூலங்கள் இவைகளே.
அணுக் கிருமிகளை இருவகையில் அடக்கிக் கூறி னும், மக்கள், விலங்கு முதலிய சீவபிராணிகளிலும், புல் பூண்டு விருட்சமாதிய தாவர வருக்கங்களிலுங் கணக்கற்ற பேதங்கள் இருப்பதுபோல், அவற்றிலும் உண்டென விளங்கிக்கொள்ளல் வேண்டும். கிருமிப் பாண்டமெனப் புலவர்களால் வருணிக்கப்படும் நமது தேகமானது புறத்து நின்றும், புகுந்த கிருமிகளைக் கொண்டிருப்பது மாத்திரமல்ல ; இயல்பாகவே அது கிருமிகளுக்கு ஓர் ஆசயமாயுமிருக்கின்றது. ஆகை யால் நமது சரீரத்திலுள்ள கிருமிகளின் ஒரு சில, மிருக தேகத்தில் உண்ணி முதலியனபோல அதற் குப் பெருந் தீங்கு விளையாதனவாயும், ஒருசில, மாத் திற் புல்லுருவிபோல் அதை வதைத்துச் சேதப்படுத் துவனவாயும் இருக்க, இன்னொருசில, வேறு வகைக் கிருமிகள் புறத்திருந்தும் வந்தடைந்து விருத்தியாகா மல் அவைகளைக் கொன்றும் பட்சித்தும் விடுதலால் சரீரத்தை நோய் அணுகாமற் காக்கின்றன. தொற்று
ஆ. 10

Page 43
74
பாலபோத வாசனம்
நோயாளிகளோடு புழங்குஞ் சிலரிடத்தில் அந்நோய் அண்டாமைக்குக் காரணம் இதுவேயாம்.
நோய்க் கிருமிகள், உண் ணும் உணவு, பருகும் நீர், சுவாசிக்கும் வாயு இவை மூலமாயுமன்றிச் சருமத் துவார வழியாயும், புண்வாய் மூலமாயுந் தேகத்திலே செல்கின்றன. இப்படியே, குடர்ச் சுரம் முதலிய நோய்களை : உணவு, நீர் இவை வழியாய்ச் சென்ற கிருமிகளும் ; சுவாதம், க்ஷயம் முதலிய பிணிகளை : வாயுவின் வழியே பிரவேசித்த கிருமிகளும் ; ஏர்ப்பு முதலிய நோய்களைச் சருமத்தினூடாய்ச் சென்ற கீடங்களும், பைத்திய சோகமாதியவற்றை விசர் நாய்க்கடிவாய் வழியாயும் ; காட்டுச்சுரநோயை, நுளம் 1புக் கடி மூலமாயும் புகுந்த கிருமிகளும் உற்பத்தி செய்வனவாம். ஆயினுஞ் சீதோஷ்ணத்தினாலேனும் அசீரண முதலிய வேறு காரணத்தினாலென்கிலுந் தேகம் பலவீனப்பட்டாலன்றி இந்நோய்க் கிருமிகள் உட்சென்றவிடத்தும் அதைத் துன்பப் படுத்தக் கூடி (பனவல்ல. ஆகையால், நமது சரீரம் நொய்மைகொண் டு அதன்வழி நோய்மைகொள்ளாதிருப்பதற்கு விசே ஷமாய் உணவு, நீர், ஆகாயம், வாசஸ்தானம், தேகாப் பியாசம், சுசி, நித்திரையாகிய இவ்வேழுஞ் சீர்ப்ப டல் வேண்டும்.
உணவு : பாலியப் பருவங்கடந்த ஒவ்வொருவரும் தத்தம் அனுபவத்தால் இன்ன உணவு தந் தேகத்துக் கேற்காது, இன்னது ஏற்குமென அறிந்துகொள்ளு தல் கூடும். இப்படியிருந்தும் தமது மன நாட்டத் தைத் திருத்திப்படுத்தும் பொருட்டுத் தகாத உண வுகளைச் சாப்பிடுவாரும், அமிதபோசனஞ் செய்வா ரும் மதியீனராம். ஒரு நாள் இரண்டு செட்டிகள் மிதமிஞ்சிப் போசனம் பண்ணியதாற் கீழே குனியக் கூடாமல் மேல்நோக்கின பார்வையாய்த் தெருவிற்

ஆறாம் புத்தகம்
75
போம்போது அவர்களில் ஒருவருக்குக் காலில் மிதி யடி இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகமுண்டாகி, மற்றவரை நோக்கித் '' தம்பி, சுப்பு! என் காலில் மிதி யடி இருக்கிறதா பார்'' என்றாராம். அந்தப் புண்ணி (யாத்துமாவுங் குனியக்கூடாமல் அண்ணாந்துகொண்டு போன தால் "அண்ணா! ஆகாச மண்டலம் எட்டப் பார்த்தேன், மிதியடியைக் காணேன் '' என்றாராம். இப்படிப்பட்ட பேருண்டிக்காரருக்குச் சுகம் எப்படி யிருக்கும்.
இன்ப நுகர்ச்சியினிமித்தம் ஏற்கையான உணவு களைத் தெரிந்துகொள்ளும் விஷயத்தில் அநேகர் தவ றிப்போவதால், பின்வருவனவற்றை அறிந்திருப்பது நலம்.
உணவுப் பண்டங்கள், கர்க்கியகர பதார்த்தம், (Nitrogenous) இருந்தைச் சலபதார்த்தம், (Carb)- hydrates) நெய்ப் பதார்த்தம், உப்புப் பதார்த்தம், நீர்ப்பதார்த்தம் என ஐவகைப்படும். கோழிமுட்டை வெண்கரு, இறைச்சி, கடலை, பயறு, நெற்றவிடு, குரக் கன், துவரை, கொள்ளு முதலியன தர்க்கியகாபதார்க் தவகையிலடங்கும். நெல்லரிசி, சிறு தானியம், சீனி முதலியன இருந்தைச்சல் பதார்த்தவகையிலடங்கும். நெய், கொழுப்பு, எண்ணெய் முதலியன, நெய்ப் பதார்த்த வகையிலும், கறியுப்பு முதலியன உப்புப் பதார்த்த வகையிலும், தே நீர் முதலியன நீர்ப்பதார்த் த வகையிலுமடங்கும். பாலிலே இவ் வைவகைப் பதார்த்தங்களும் பொதுவாக இருப்பினும் அதிலுள்ள வெண்கருப் பதார்த்த சத்தின் விசேஷம்பற்றி அத னைத் தர்க்கியகர பதார்த்தவகையில் வைக்கத்தகும்.
(தொடரும்)

Page 44
22. நோயுஞ் சுகமும்
(தொடர்ச்சி)
-அ**
தேகம் சுகநிலையில் இருக்கும் பொருட்டு அது நா ளாந்தம் 5 பங்கு வெண்கருப் பதார்த்தமும், 3 பங்கு நெய்ப் பதார்த்தமும், 24 பங்கு சல பதார்த்தமும், 15 பங்கு மாப் பதார்த்தமும், 2 பங்கு உப்புப் பதார்த் தமுங் கொள்ள வேண்டியதே முறையாம். இதற்கு விரோதமாய், வெண்கருப் பதார்த்தங்கள் தேக பல வீனத்தை நிவிர்த்தியாக்கும் என்பதுபற்றி அவற் றையே நாம் நாளாந்தம் அதிகமாக உண்போமானால், சீரண உறுப்புகள் தந் தொழிலை மிதந் தப்பிச் செய்ய வேண்டியனவாகும். அதனால் அவை அதி விரை விலே தளர்வடைதல் தப்பாது. சோற்றை மாத்திரம் அப்படி உண்ணப் புகினும் அதிலே வெண்கருச் சத்து மிகக் குறைவாயிருப்பதால், அச்சத்தைப் போதியமட் டும் பெறும் பொருட்டுப் பெரும் பங்கு சோற்றை வயி றார உண்ணவேண்டி நேரிடும். இங்ஙனம் மாப்பதார்த் தங்களை அமிதமாக உட்கொள்ளுதல், இரைப்பை மென்மேலும் பருப்பதற்குமன்றிக் குன்மம், நீரிழிவு
முதலிய ரோகங்கள் தலைப்படுவதற்கும் வழியாம்.
பலாப்பழம், வாழைப்பழம், எண்ணெய்ப் பணி காரம், சீனி மிட்டாய் முதலிய கிரந்திப் பண்டங்கள் வாய்க்கு மதுரமாயிருப்பினும், நோய்க்கிருமிகள் பலி கித் துன்பஞ்செய்ய ஏதுவாகுமாதலால் அவைகளை
இயன்றமாத்திரம் மட்டாய்ச் சாப்படல் வேண்டும்.
அரிசியை உலையிலே ஒரே தடவையில் இடாமற் கொஞ்சங் கொஞ்சமாய் இட்டால் எல்லா அவிழுஞ் சமமே வெந்திருக்கமாட்டா. அப்படியே, கிரமமின்றி அடிக்கடி சாப்படுவாரின் உணவுஞ் சரியாய்ச் சீர

ஆறம் புத்தகம்
77
ணிக்க மாட்டாது. ஆகையால் ஒருதாஞ் சாப்பட்டு நான்கு அல்லது ஐந்து மணித்தியாலஞ் செல்லுமுன் மறு தரம் போசனம் பண்ணும் வழக்கத்தை ஒழித்து விடல் வேண்டும்.
மதுபானம், ஈரல் முதலிய சீரணக் கருவிகளைப் பெலவீனமாக்கி நரம்புத் தளர்வை உண்டாக்குவது மன்றிக் குடியைக் கெடுத்து மிடியைத் தருவ தால், அதை நமது கொடிய சத்துருவாய் எண்ணி நடத்தல் வேண்டும்.
நீர் : நந்நீர் ஊறணிகளை அடுத்து வசிப்பவர்களன் றிக் கட்டுக்கிடைக் குளம், கேணி, சங்களைக்கிணறு, சதுப்பு நிலக்குழி முதலிய நீர்க்கால்களை அடுத்துள் ளவர்கள் தாங்கள் எடுக்கும் நீரை அவித்து வடித் துபயோகித்தல் உத்தமம்.
ஆகாயம் : மாஞ் செடிகள் மருங்கில் அடர்ந்துள்ள குடிசைகளிலும், சன நெருக்கமான இடங்களிலும் வா தாயனங்களில்லாத ஒடுங்கிய அறைகளிலும் வசிப் பவர்கள், அடிக்கடி வேற்றிடஞ் சென்று சுத்தா காய பூரகஞ் செய்தல் வேண்டும்.
வாசஸ் தானம் : சூரிய வெளிச்சம் புகாதனவும், ஈர லிப்பான தளத்தினை உடையனவுமான வீடுகளில் வசிப்பதிலும் யாசகர் போலத் தெருத் திண்ணைதோ றுஞ் சென்று சென்று வாழ்வது தாவிளை.
தேகப் பயிற்சி : உண்ட உணவு நன்றாயுங் கிரமமா யுஞ் சீரணித்தற்கும், இரத்த உறுப்புகள் தளர்வின் மித் தம்ம் லுவலைச் செய்தற்கும், தசை நரம்புகள் உறுதியாகித் தேக பலம் அதிகரித்தற்குந் தேகாப் பியாசத்தைப்போலுஞ் சிறந்த வழி வேறொன்றில்லை. இதனைச் சிந்தியாமல் ஒரு துரும்பைக் குனிந்தெடுக் கத்தானும் பஞ்சிப்பட்டுப் பிடித்து வைத்த பிள்ளை

Page 45
78
பாலபோத வாசனம்
யார் பேர்ல இருப்பவர்களின் சுகநிலையைப்பற்றிப்பேச வேண்டியதென்ன ? விசேஷமாய்ச் சிறு பிள்ளைகளின் தேகவளர்ச்சிக்குஞ் செளக்கியத்துக்குந் தேகப்பயிற்சி இன்றியமையாததாகக்கொள்ள, பாலிய சோம்பே றியே! உனக்கு விளை யாட்டில் விருப்பமில்லையென்பா யானாற் பசுக்கன்று முதலிய இளம் பிராணிகளை யா வது கவனித்துப் பார். அவைகளின் ஓயாத ஓட்டத் தையும் கும்மாளத்தையுங் கண்டபின்னாவது உனக் குத் துணிபுண்டாகும். ஆயினுந் தேக முயற்சியிலு மன்றி மன முயற்சியிலும் மிதந்தப்பலாகாது.
சுசி : தேகத்திலிருந்து வியர்வு வெளியேற்றவும், வெளிகொண்ட வியர்வும் அதனோடு பற்றிய ஊத்தை யுஞ் சருமத்தைவிட்டு நீங்கவும், அடிக்கடி ஸ்நான் செய்தல் அத்தியாவசியம். அங்ஙனமின்றியும், ஊத் தை உடம்பிகளாயும், அழுக்கடைந்து துர்க்கந்தம் வீசுந் தங்கள் உடைகளைத் துவைத்துக் கட்டாது திரிபவர்கள் நோய்வாய்ப்படுவது நூதனமன்று.
மனித சரீரமானது வெளி அழக்கினால் மாத்திர மன்றித் துர்நினைவு துர்க்கிரிகையாகிய உள்ளழுக்கின லும் நோய்க்கிடமாகின்றதென்னும் வைத்திய சாள் திர உண்மையையும் ஊன்றி நிதானிக்கத்தகும்.
நித்திரை : துயிலொறுப்பாற் சுகங் கெடுகின்றதென் பதைச் சொல்லவேண்டியதில்லை. ஆகையால் எவரும் கூடியமாத்திரம் நித்திரையைக் குறைக்காதபடி கவ னித்தல் வேண்டும். விசேஷமாய்ப் பாலிய மாணவ ருக்கு நெடுநேர நித்திரை அகத்தியம் என்பதைப் பெற்றார் கவனிக்கத்தகும்.
மனோபீதியுஞ் சுகத்தைக் கெடுக்குங் கொடிய சத் துராதியென்று முன்னொரு பாடத்திற்கண்டதாயிற்று.

23. உயர்ந்ததும் இழிந்ததும்
----- ----- ஞானத்தாலுந் தரும் நெறியாலும் முதிர்ச்சி அ டைந்த ஒரு மகாத்துமா ஒரு வனத்தின் மத்தியில் விளங்கிக்கொண்டிருந்தார். அவரது முகதரிசனையைப் பெற நெடுங்காலம் அபேஷித்திருந்த ஒரு அரசன் ஒருநாள் தன் பரிசனரோடும் புறப்பட்டு, அம்முனி வருடைய ஆச்சிரமம் நோக்கிச் சென்றான். சென்று முனிவரை வணங்கி, ஆசிபெற்றுக்கொண்டு மீளுகை யில், தன்மட்டில் அவருக்குள்ள எண்ணம் எத்தன் மைத்தாகுமென்றறிய விரும்பினவனாய், அவரை நோக் கித் தபோ சிரேஷ்டரே! சகல சிருட்டிகளிலும் மனிதன் மேலானவன் என்பதும் பிரபஞ்ச சடப் பொ ருட்கள் மீதுமக்கு விருப்பு வெறுப்பென்றதில்லை யென்பதும் ஒருபாலிருக்க, அப்பொருட்களை நீர் எவ் வாறு மதிக்கின்றீர் என்பதைத் தெரியச் சொல்ல வேண்டுமென்று வினாவினான். அதற்குத் தபோதனர் : கடவுள் மனிதனுக்காகச் சிருஷ்டித்த பொருட்களில் ஒன்றாவது பயனின்றி யிருப்பதில்லை ; அன்றியும் அவற்றில் ஏதொரு பொருளைத்தானும் தக்கவாறு மதித்து வரையறை செய்ய மனிதன் ஆயுளோ போதி யதுமல்ல ; ஆதலால், உயர்ந்தது தாழ்ந்தது என்ற பேதம் அவற்றில் நான் காண்கிலேன் என் று விடை கூறினார். அப்போதாசன் மலைக்கும் அணுவுக்கும், அரசனுக்கும் பிரசைக்கும், நெல்லுக்கும் புல்லுக்கும் நீர் பேதங் காணாதிருப்பது போதிசயமே! என்று பிரமித்துக் கூறினான். அதற்கு முனிவர், மன்னனே! வானத்தை அளாவிநிற்கும் பிரமாண்ட பருவ தந்தா னென்ன ? கொந்தளித்துக் குமுறி எழுந் திரைகளை யுடைய பெருங் கடலைத் தடுத்து நிற்குந் தடங்கரை தானெங்கே? நுண்ணிய மணற் பொடிகள் பல சேர்ந் தொன்றிய தொகுதிதானே. மண்ணுள் மறைந்து

Page 46
8(0)
பாலபோத வாசனம்
தி.க்கும் பஞ்சலோகத் துகள்களல்லவா மலையையும் பெயர்த்தெறியத்தக்க பாரிய இயந்திரங்களாய் உருப் பெறுவன. விலைமதிக்கரிய இரத்தினக்கல்லை அடுப் |-க் கரியென்றாற் பொருந்தாதா ? முத்தின் உற்பத்தி யை நோக்கினால் அதையொரு சிறு மணற்பொடி என் றன்றோ சொல்லவேண்டும். ஆலம் வித்தானது சிறு மீன் சினையினும் நுண்ணியதாயினும் தேரோடும் பரி கரிகளோடும் பெருங் காலாட் படைகளோடுங் கூடிய அரசனது பரிவாரத்தைத் தன் கீழடக்கி நிழல்செய் பத்தக்க பாரிய விருக்ஷமாவதைக் காண்கிலீரோ? இன்னுங் கேளீர்; உணவுப் பொருட்களிற் சில, மிக விலையுயர்ந்தனவென்றாலும், ஒரு சிறு உப்புக் கட்டி யின் உதவியின்றிச் சுவை தராது போகின்றனவே. அறுசுவைப் பதார்த்தஞ் சுக தேகிக் கிதந் தருமன் றிப் பிணியாளிக்குச் சுகந் தருமா ? தக்ககாலத்திற் பருகிய விஷம் அமிர்தமாகவும், தகாத காலத்திற் குடித்த அமிர்தம் நஞ்சாகவும் ஆவ தியல்பல்லவா?
அரசனுக்கு மகத்துவமும் அவன் மட்டிற் குடி களுக்கு வணக்கமும் அமைவும் வேண்டுமென்பதை நான் மறுக்கத் துணியேன். ஆனால் அரசனே மதிப்புக்குரியவன். பிரசை அவமதிப்புக்கேயுரிய வனென்னுங் கொள்கை எனக்குச் சம்மதமாகாது. ஏனெனில் : வரப்புயர்வின்றேல் நீருயராது ; நீருயர் வின்றேல் நெல்லுயபாது; நெல்லுயர்வின்றேற் குடி யுயராது ; குடியுயர்வின்றேற் கோனுயர்வ தெங்ங் னம்? அன் றியுங் குடிகளின்றிக் கோனிருத்தல் எங் ஙனம்? என் றிவ்வாறு தபோதனர் கூறா நிற்கையில், அவர் தாங் குடிப்பதற்கென மொண்டு வைத்த நீர்க் குடத்தின்மீது காக்கையொன்று வந்திருந் ததைக் கவிழ்த் துடைத்தது. அப்போது முனிவர் தம் பேச்சை நிறுத்திக் கண்ணை அங்கே செலுத்தினார்.
எ த நிய”வாங்கெல்

ஆறம் புத்தகம்
81
காக்கையின் செயலை அரசனுங் கண்டதால், அவன் உடனே ''சுவாமீ! இந்தத் தீச்செயலைச் செய்த இவ் வற்ப பிராணியைத்தானும் அவமதிக்க உமக்குத் துணிபில்லையா?'' என்று முனிவர்பால் வினாவினான். அதற்கு முனிவர், காக்கைகளின்றி உலகமுய்தல் அரி' தென்ப தறிகிலீரோ? என்ன, அரசன் அதிசயித்துக் காக்கைகளால் யாது பயனுளது ? நன்றதைச் சற்றே கூறுகவென்க, முனிவர் : அரசனே! மனிதர் வாசஞ் செய்யுமிடங்களிலே நாளாந்தம் மடிகின்ற தவளை, நத் தை, வண்டு, பூச்சி, புழுக்களின் தொகையையும் மனி தர் உணவுக்கெடுத்துக்கொண்டு புறத்தே வீசிவிடு கின்ற குடர், சக்கை முதலிய பிராணி தாவர கழிவுப் பதார்த்தங்களி னளவையும் அளவிட யார் தான் தாம் ? இத்தொகைப்பட்ட கழிகடைப் பொருட்களெல்லாம் ஒருதினம் அல்லது இருதினமளவும் இருந்த இடங்க ளிலேயே விடப்படுமாயின் அம்மம்ம! உலகமானது பிணிக்காதாரமான கிருமிகளால் நிறையலாகி, விசை வில் நோய்வாய்ப்பட் டழியுமென்பது சொல்லவும் வேண்டுமா ? ஆனால் இவற்றையெல்லாம் ஒருங்கே பாரணம்பண்ணி நம்மைச் சுகத்தோடு வாழச்செய்வது காக்கைகளல்லவா ? இப்படியாயின், காக்கையோர் உதவாச் சிருட்டியென் றெப்படிச் சொல்லத் துணிவே னென்று கூறினார். அதற்கரசன், அப்படியாயின் உல . கத்திலே பெரிது சிறிதென்றதில்லையோவென வினா வினான். முனிவர் நெட்டுயிர்ப்போடு வேந்தனே! பாவமொன்றே சிறிதும் பயனற்றதும் இழிவுக்குரியது மாகும். அதைச் செய்பவனே தாழ்ந்தவனெனப்படு வான். அவனால் இம்மையாகிய இவ்வுலகமும் அவ னுக்குரிய கதியாகிய நரகமும் ஒரு சிறிது பயனும் பெறுவதாகாது. இதற்கு மாறாய்ப் புண்ணியமொன் றே பெரிதும் மதிப்புக்குரியதுமாகும். அதை உடை யவனே பெரியவ னெனப்படுவான். அவன் தன்
ஆ, 11

Page 47
82
பால்போத வாசனம்
தரும் ஈட்டத்தாலும் முன்மாதிரிகையாலும் உலகத் தைச் சீர்ப்படுத்துவதன்றி, மறுகதியடைந்தபின்பும் தன து பேரின்ப பிரதாப் சோதிக்கதிராலும் அதைப் பிரகாசிப்பித்து வாழுவான் என்று கூறி முடித்தார். இவையெல்லாஞ் சொல்லக்கேட்ட வரசன், என்னைப் பற்றி இவருக்குள்ள அபிப்பிராயமும் இவ்வாறாகவே இருக்குமென்று தன்னுட் சொல்லிக்கொண்டு வே றென்றும் பேசாது முனிவரிடம் விடைபெற்றுக் கொண்டு தன்னாட்டுக்கேகினான்.
24 கூட்டுத் தொழிலும் தொழிற் பிரிவும்
-->0K4~ உலகத்திற் சகல தொழில்களும் விருத்தியடைய வும், நல் வாழ்வுக்கடுத்த சௌக்கியங்க ளெல்லாருக்கு முண்டாகவும், கூட்டுவேலை இன்றியமையாததேயாம். கூட்டுத்தொழிலில், ஒரு வேலையை அநேகர் கூடிமுடிப் 4பது ஒருவகை ; பல வேலைகளைச் செய்வதிற் சனங் கள் ஒருவர்க்கொருவர் உதவிசெய் துழைப்பது மற்ற வகை. இவ்விரண்டும் பின்வரும் உதாரணங்களால் வெளிப்படும்.
நான்கு வேட்டை நாய்கள் தனித்தனி ஓடிப் பிடிக் கும் முயல்களிலும், இரு நாய்கள் ஒன்றாய்க்கூடி ஒடி அதிகம் முயல்களைப் பிடிக்கும். அப்படியே மனிதர் பிரயாசத்துடன் செய்துமுடிக்கும் வேலைகளில், நால் வர் தனித்தனிசெய்து முடிப்பதிலும் இருவர் ஒன் றித்து அதிகஞ் செய்து முடிப்பார்கள்.
பாரச்சுமை தூக்கல், மரம் வெட்டுதல், தண்ணி ரி றைத்தல், படகோட்டுதல், சுரங்கமறுத்தல் முத லி,1 எண்ணிறந்த கருமங்களில் அநேகர் ஒன்றாய்க்

அறம் புத்தகம்
83
கூடி, ஒரேகாலத்தில், ஒரே இடத்தில், ஒரேவிதமாக வேலையை நடத்த வேண்டும். சீர்திருந்தாத இடங்களி லுள்ள சனங்களிடத்தில் இப்படி ஒருவருக்கொருவர் உதவி புரியும் வழக்கமில்லை. ஆதலால் அவர்கள் சோம்பித் தேம்பித் திரிந்து பட்டினியாயிருப்பார்கள்.
நாகரீக தேசங் களிலுள்ளவர்கள் பாரித்த வேலைகளை , எல்லாம் ஒருவரோடொருவர் கூடி ஆளுக்காளுதவி யாகச் செய்து முடிப்பார்கள். அப்படி முடிக்கும் வேலை களைத் திடீரென நிறுத்தி, அவனவன் தனித்தனி அவ்வேலையை முடிக்கப் பார்க்கின் எவ்வளவு கெடுதி நேரிடும்! இதை நினைத்துப் பார்ப்போமானால், கூட்டு வேலையினால் எவ்வளவு திரளான நன்மைகள் உண்டா குமென்பதை அறியலாம். பலர் கூடி ஒரு வேலையை முடிக்கும் வகையிதுவே.
மற்றவகை, ஒரு வகுப்பான தொழிலாளர் பயிரிட் டுத் தங்களுக்கு வேண்டிய அளவுக்கும், பிறர்க்கும் போதுமான அளவு ஆகாரத்துக்கு வேண்டிய தானி பத்தை விளைவித்துக்கொள்ள, இன்னொரு வகுப்பார், தங்களுக்கு வேண்டியதிலும் அதிக புடவைகளை நெய் துவைக்க, இப்படியே அவ்வவ் வகுப்பார் தத்தம் வேலையில் முயன்று முடித்த மீதியான பொருளைக் கொண்டு அவரவர் தத்தமக்கு வேண்டிய சாமான்க ளைக் கலந்து மாறிக்கொள்ளுதலாம். இப்படியில்லா மல் ஒவ்வொருவனுந் தன் தனக்கு வேண்டிய பொ ருள்கள் யாவற்றையுந் தான் தானே செய்வ திய லுங் கருமமா?
பலவித தொழிற்காரர் வேறு வேறிடங்களி லொரு வர்க்கொருவர் தெரியாமல் வெவ்வேறு வேலைகளைச் செய்தாலும் இதுவுங் கூட்டுத் தொழிலைச் சேர்ந்த மற்ற வகைபாம்.

Page 48
84
பாலபோத வாசனம்
தற்கால நாகரீகத்துக்கொத்தபடி நிலத்தைப் பண் படுத்திப் பருத்திச் செடி வைத்து வளர்த்துப் பஞ்சுண் டாக்கி, பஞ்சை நூலாக நாற்று, நூலைப் புடவையாக நெய்து, புடவைக்குச் சாயமேற்றி வருதல், தனிக் தனி வெவ்வேறு கூட்டத்தார் தொழில்கள். இவர்க ளுடன் எத்தனையோ பெரிய வர்த்தகர்கள், சில்லறை வியாபாரிகள், கூலி வேலைக்காரர், ஆடை செய்தலாகிய ஒரே காரியத்திற் சேர்ந்திருக்கின்றனர். இவர்களெல் லோரும் இந்த வித வேலைகளை முன்கூடி யோசித்து இன்ன இன்ன வகையாகச் செய்து கொள்வோம் என் றுடன்பாடு பண்ணிக்கொண்டவர்களல்லர். ஒருவர் செய்வது மற்றொருவர்க்குத் தெரிந்திலது. தமக்கு வேண்டிய மற் றுஞ் சாமான்களைப் பிறர் முடித்துக் கொடுப்பார்களென்ற நம்பிக்கை யில்லாமற்போனால், தாங் கையிடும் ஒரே வேலையைச் செய்துகொண்டிருப் பார்களா? இப்படித்தான் ஒவ்வொரு வேலைக்காரரும் மற்ற வேலைக்காரரிடத்தில் உதவி பெறுகிறார்கள். நாம் முன் சொல்லியபடி ஒவ்வொரு வகுப்பு வேலைக்கார ரும் ஒவ்வொரு சாமானை மற்ற வகுப்பாருக்குச் செய் து கொடுக்கிறதும், வேறு சாமான்களைத் தாங்கள் மற் ற வகுப்பாரிடத்தில் வாங்கிக்கொள்ளுகிறதுமாய், ஒவ் வொரு வகுப்பாருக்கு மொவ்வொரு வேலையாய் மொத் தமாகப் பொதுவான ஒரு தொழிற் பிரிவு ஏற்பட்ட பின், ஒரு தொழிலே பல உட்டொழிலாகப் பிரிவு படக் கூடுமாவெனப் பார்த்து, அங்ஙனந் தொழிற்பிரி
வை ஆக்கிக்கொள்வது நன்று.
ஒருவன் கம்பியிழுப்பது, ஒருவனதை நீட்டுவது, ஒருவனதைத் துண்டு துண்டாகத் தறிப்பது, ஒரு வன் கூர்ப்படுத்துவது, முதலாகப் பதினெட்டு வித் தியாசமான செய்கைகளாய், மிக அற்ப குண்டூசி வேலையைப் பிரிக்கலாம். இவ்வேலையை இப்படிப்

ஆறும் புத்தகம்
85
பிரித்துச் செய்தால், பதினெட்டுப் பெயருஞ் சேர்ந்து நாளொன்றில் இருபதிறாத்தல் குண்டூசி செய்யக்கூடும். ஒரு றாத்தலுக்கு நாலாயிரம் ஊசியாக, எண்பதினாயி சம் ஊசி செய்து முடிப்பார்கள். ஆகவே ஒவ்வொரு வன் நாலாயிரத்துச் சில்வான ஊசி செய்ததாக வைக் கலாம். ஒருவனே இவ் வேலைகளெல்லாவற்றையுஞ் செய்து குண்டூசிசெய்ய முயன்றால், ஒரு நாளில் நூறு தானுஞ் செய்யமாட்டான். இவ்வண்ணமே கடுதாசி செய்யும் வேலையை எழுபது பங்காகப் பிரிக்கலாம். மணிக்கூடு செய்யுந் தொழிலுக்கு நூற்றிரண்டு வே லைக்காரர் வேண்டும். இப்படி அந்தந்தத் தொழிலுக் குத்தக்கபடி ஆட்கள் வேண்டும். அவ்வவ் வேலையை ஒவ்வொருவனுந் தனித்துச் செய்ய முயன்றாலெப்படி யாகும்?
ஒரு காரியத்தைப் பலர் பிரித்துச் செய்யுந் தொ ழிற் பிரிவால், அதிகமாகச் செய்து முடிக்கலாம். ஒரு வன் ஒரு வேலையையே செய்துகொண்டிருந்தால், அ தில் அவனுக்கு அதிக சாமர்த்தியமுண்டாகும். அன் றியும் ஒருவிதமான வேலையைச் செய்தவன், மற்றொ ரு வேலையை ஆரம்பிப்பதற் கிடையிற் கால தாமத முண்டாகும்.
இந்த இரண்டையுந்தவிர இன்னோர் தன்மையுமுண் டு. ஒரு தொழிலின் பாகங்கள் அனைத்திற்கும் புத்தி சாமர்த்தியஞ் சமமாக வேண்டியிரா. ஒன்றுக்கதிக சாமர்த்தியம் வேண்டியிருக்கும். மற்றொன்று சாதா ரண மாக எவருஞ் செய்யத்தக்கதாயிருக்கும். ஆத லால், அவ்வத் தொழிற் பிரிவுகளின் தாரதம்மியத்துக் குத் தக்க வித்தியாசமான சம்பளமுள்ள வேறுவேறு திறமை கொண்டவர்களை ஏற்படுத்தி நடத்துவதில் மிகுந்த பலனுண்டு.
(Old Senior Reader)

Page 49
25. புதிய உலகங் கண்ட விவரம்.
7ை ய 4 இ ) b-- இதிகாசங்களில் மிகப் புகழப்பெற்றோரு ளொருவ மான கிறிஸ்தோப்பர் கொலம்பஸ் என்பவர், பதினைந் தாம் நூற்றாண்டிற் சீவித்திருந்த ஒரு இத்தாலியர். அவர் பல வருடங்களாய்ச் சமுத்திர யாத்திரை செய் து வருங்கால், ஒருமுறை அவரேறிச்சென்ற கப்ப லுக்க பாயமுண்டாய்ப் போர்த்துக்கால் தேசத்தின் கரையை அடைந்தது. ஆகையால் அவரத் தேசத்தி லிறங்கிச் சில காலத்தின்பின் ஓர் பிரபல கப்பல் மாலு மியின் புத்திரியை விவாகஞ் செய்து அங்கேயே இருந்துவிட்டார்.
அஷ்விடத்தில் அவர் தஞ் சீவனத்தின் பொருட்டுப் பூகோளங்களையும் மாலுமிகட்குபயோகமான படங் களையுஞ் செய்து விற்று வருவார். அப்படங்கள், அக் காலத்துள்ள ஏனையோரியற்றும் படங்களிலும் விசே ஷமுடைத்திருந்தமையால், மாலுமிகளுக்கு அவை மிக அகத்தியமும் உபயோகமுமுள்ளனவாயிருந்தன. அவர் தம் படங்களில் அங்கங்குள்ள, தேசங்களையுஞ் சமுத்திரங்களையும் அச்சமுத்திரங்களிற் சிதறிக்கிடக் குந் துவீபங்களையும் வரைந்து கொண்டு வருங்கால், அத்திலாந்திக் சமுத்திரத்தின் மிக விஸ்தீரணமுள்ள நீர்ப்பரப்பில், ஓர் தேசமாவது துவீபமாவதில்லாமல் ஏக வெளியாயிருப்பதில், அவருடைய புத்தியானது ஆழ்ந்து யோசித்தவிடத்து, இவ்வளவு விஸ்தீரணமுள் ள நீர்ப்பரப்பிலே தேசமாவது தீவுகளாவது இல்லா திருத்தல் கூடாதென்றும், இருப்பின் ஆசியாக் கண் டத்தின் தேசங்கள் தான் மேலைச் சமுத்திரம் வரைக் குஞ் சென்றிருக்கலாமென்றும், அத்தேசங்களுக் குக் கீழைச் சமுத்திர வழியாய்ச் செல்வதிலும் மே "லச் சமுத்திர வழியாய்ச் செல்வது மிகச் சமீபமும்

ஆறாம் புத்தகம்
87
இலகுவுமா யிருக்கலாமென்றும் அனுமானித்துக் கொண்டார். அஸோர்ஸ் துவீபங்களைக் கடந்து அப் பாலும் யாத்திரை செய்து திரும்பிய மாலுமிகளுட் சிலர், தாம் முன்னறிந்திராத சில மரங்கள் இலைக் கொப்புகளோ டடைந்துவரக் கண்டதாகவும், சிலர், பரும்படியாகத் தோண்டப்பட்ட மா வள்ளங்கள் மிதப் பதைக் கண்டதாகவும், சிலர் தாங்கள் முன்கண்டிராத வோர் சாதிச் சனங்களின் பிரேதங்கள் அலைமேல் மிதப்பப் பார்த்ததாகவுஞ் சொல்லிய நவமான சங்கதி கள் அவருடைய அனுமானத்தை மென்மேலும் உறு திப்படுத்தி விட்டன. இது விஷயத்தை அவர் போர்த் துக்கால் தேச மாலுமிகளுக்குரைக்க, அவர்கள் பரிகா சஞ் செய்து அவர் பேச்சைச் சட்டை பண்ணாதபடி யால், அவாதை அத்தேசத் தாசனுக் கறிவித்தார்; அரசனுமதைப் பராமுகஞ்செய்துவிட்டான். பின்பு அ வர் தம்மிஷ்ட சிநேகிதரொருவர் வழியாய்த் தங் கருத் தை ஸ்பானிய தேசத்தை ஆண்ட பேடினண் டாச னுக்கும் அரசியான இசபெல்லா என்பவளுக்குந் தெ ரிவிக்க, அதை அவ்வாசியானவள் ஒப்புக்கொண்டு தன்னாயகனும் ஒப்புக்கொள்ளச் செய்தாள்.
பின்னர், அவ்விருவருடைய சகாயத்தையும் பெற் றுக்கொண்டு கொலம்பஸ் என்பவர் பேலொஸ் என் னுந் துறையினின்று மூன்று கப்பல்களோடும் நூற் றிருபது கப்பலோட்டிகளோடும், 1492-ம் வர ஆவ ணி மீ 8-ந் உ பிரயாணமானபொழுது, அவர் மாத்திர மே தம்மெண்ணம் வாய்க்குமென்ற நம்பிக்கையோ டுந் துணிவோடுஞ் செல்ல, ஏனையோர் : தாம் எவ்வி தத்திலும் ஆழிவாய்ப்பட்டு மாழுவது தப்பாதென்ற அச்சத்தோடே சென்றனர். ஆயினும் அவர்கள் சற் றும் அஞ்சாதபடி கொலம்பஸ் என்பவர், தேற்றா வான வார்த்தைகள் சொல்லி அவர்களைத் தயிரியப் படுத்திக் கொள்வார்.

Page 50
88
பாலபோத வாசனம்
இவ்வாறு சிலநாட் சென்றபின், கீழ்த்திசையினின் று வீசியவோர் சீரான பயணக் காற்றி னுதவியால் அவர்கள் ஏறிச்சென்ற கப்பல்கள் சமுத்திரத்தில் வெகுதூரமோடிச் சென்றன. இப்படி வெகு தூர மோடியவிடத்துங் கொலம்பஸ் என்பவர், தங் கூட் டாளிகள் அஞ்சுவார்களென்ற எண்ணத்தால் அதை அவர்கள் மட்டிட்டுக்கொள்ளாதபடி உபாயஞ் செய்து வந்தார். ஒருமுறை அவர் தாமுமஞ்சிப் பிரமிக் கத் தக்க பிரகாரம், திசையறி கருவியின் ஊசி உத் தர திசைக்கு நேரே திரும்பாமல் வேறுபட்டிருக்க, அதையுமவர்களுக்குத் தெரிவியாமல் மூன்று நாட்க ளாய் மறைத்திருந்தார். மூன்றா நாட் கப்பலோட்டி கள் இம்மாற்றத்தைக் கண்டுபிடித்தபொழுது, பூதி யங்களும் இயற்கைப் பிரமாணத்துக் கமையாத இடத் தில் வந்துவிட்டோம்! என்று அச்சங்கொண்டார்க ளேயன்றி அதன் காரணமின்னதென் றறியாமற்போ னார்கள். அச்சமயங் கொலம்பஸ் மனக்கவலையுடைய வராயிருந்தாலும் அதை வெளியே காட்டவில்லை. பின் னர் சற்றுத் தூரம் போகச் சமுத்திரத்தில் வளரும் நா தன பூண்டுகளையும், பென்னம் பெரிய திமிங்கல் மொன் று மிதந்து வருவதையும், முன் கண்டிராத நீரோட்டங்களையும், வேறு நவமான காட்சிகளையும் அவர்கள் கண்டு பிரமிப்புக்கொள்ள, கொலம்பஸ் தாமி வைக ளெல்லாவற்றையுங் கண்டுகழித்தவர் போலக் காட்டி அவர்களுக் குண்டான சமுசயங்களை நீக்கின துமன்றி இராப் பகலாய்ச் சமுத்திரத்திலுள்ள மாற் றங்களை விளிப்போடு கவனித்துப் பார்த்துக்கொண் டும் வந்தார்.
(தொடரும்)
"லெச் ச.

26. புதிய உலகங் கண்ட விவரம்.
(தொடர்ச்சி)
------ஆOK----- கொஞ்சத் தூரம் பிரயாணம் பண்ணியபின், அவர் கள் மனஞ் சற்றாறுதல் அடையத்தக்கதாக ஆகாயம் மிகத் தெளிவாகி நட்சத்திரங்களும் துலங்கின. இன் னுஞ் சில நாட்களின்பின், பாய்மரத்தைச் சுற்றிப் பட்சிகள் வட்டமிடக் கண்டதுமன்றித் தூரோடு பிடுங்கப்பட்டனவும் முன்னொருபோதும் அறியப்படா தனவுமான பசிய மரங்கள் கப்பலின் சமீபத்தில் மிதக் கவுங் கண்டார்கள். கண்டுங் கரை காணப்படாமை யால், இன்னும் அவர்க ளொவ்வொரு நாளு மிராப் பக லாயோடியும் ஒவ்வொருநாள் விடிகையிலும் எழுந்து கரை தெரிகிறதா என்று அத்தியந்த ஆவலோடு பார்த்து வந்துங் கண்டுகொள்ளாமையால் முன்னையி லும் அவர்களுக்கு அச்சம் அதிகமுண்டாகத், தங்கள் தலைவனான கொலம்பஸை மிக வைது நிந்தித்து அவ ரை வந்து சூழ்ந்துகொண்டார்கள்.
இப்படியிருக்குஞ் சமையம், ஒரு கப்பலிலிருந்து தசை! தரை!! என்ற சந்தோஷ ஆர்ப்பரிப்பு மற்றக் கப்பற்காரர் காதில் விழ, உடனே அவர்கள் யாவரும் முழந்தாளில் நின்று கடவுளுக்குத் துதிசெலுத்தி னார்கள். மறுநாட் காலையானபோது அவர்கள் கண்ட கரை, உறைபனியால் மூடப்பட்ட கடலெனவறிந்து மனமலூத்தவராய் இன்னும் மூன்று நாளுக்குள் கரை சேராவிடில், ஐரோப்பாவுக்குத் திரும்புவதென வாக்குத்தந் தா லல்லாமற் கப்பலைச் செலுத்த மாட் டோமென்று முாணிக்கொண்டு நின்றார்கள்; அவர் கள் கேள்விக் கவருடன்பட்ட பின் மாக்கலத்தைச் செலுத்தியபொழுது, பருமட்டாய் வெட்டப்பட்ட வோர் மரத்துண்டுங் கொத்துவேலை தீர்ந்த

Page 51
90
பாலபோத வாசனம்
லும், ஒரு குருவி கூடுகட்டி முட்டையிட்டு அடை காத்தபடி யிருக்கவும், வெள்ளிய புட்பங்கள் அலர்க் திருக்கவும் பெற்றவோர் மரக்கிளையுங் கப்பலுக்குச் சமீபத்தில் மிதந்துவரக் கண்டார்கள்.
இதனால் அவர்கள் சந்தேகம் நீங்கித் தயிரியமடைக் தார்கள். அதன்மேற் கப்பற்காயர் தாமாகவே யின் னுஞ் சற்றுத் தூபம் கப்பலைச் செலுத்த முயன்று, தாம் முன்பு அமையாது செய்த குறைகளை மன்னிக்க வேண்டுமெனத் தந்தலைவனை வேண்டிக்கொண்டார் கள். இப்படியிருக்க அன்றிரவடுத்தது.
அவர்கள் அடிக்கடி விழுதுவிட்டுக் கடலினாழத் தைச் சோதித்துக்கொண்டு கண் தூங்காமல் எப் பொழுது விடியும் விடியுமென ஆவலோடு காத்திருக்க, அவர்கள் தலைவன் தாம் அபேட்சித்திருந்த தரை யைக் கண்டறி விப்பவனுக்கு வெகுமதி கொடுப்போ மென்று சொன்னார். அவ்வெகுமதிக்கு அவர் தாமே பாத்தியரானார். எவ்வாறெனில், அவர் கப்பலின் மேற்றட்டிலிருந்துகொண்டு மேற்றிசையைக் கவன மாய் உற்றுப் பார்த்துக்கொண்டிருக்குஞ் சமயம் அடி வானத்துக்குச் சமீபமாய் ஒரு வெளிச்சம் மினுங்கக் கண்டு உடனே இருவரைப் பக்கத்திலழைத்து அவ் வெளிச்சந் தோன்றிய திசையைக் காட்டிக் கவன மாய்ப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, விடியுமட் டுந் தேவதோத்திரஞ் செய்துகொண்டிருந்தார். விடிந் தவுடன் கரை தோற்றியதற் கடையாளமாய் மற்றக் கப்பலிலிருந்து ஒரு துப்பாக்கிச் சத்தங் கேட்டது.
அதன்பின் அலைகள் கரையில் மோதுஞ் சத்தமுங் கேட்க, இன்பமான கரைக் காற்றோடு சுகந்தமும் வீசச் சூரியனு முதயஞ் செய்தான். அப்பொழுது மிகவும் அழகு வாய்ந்த நவமான ஒர் துவீபம் ஆவலோடு காத் ஸ்லாச அவர்கள் கண்ணுக்குத் தோன்றிற்று. இவ்

ஆறாம் புத்தகம்
வாறே, கொலம்பஸ் என்பவர் இருபது வருடகாலமாய் அல்லும் பகலுந் தம்மனதிற் குடிகொண்டிருந்த ஒரு புது உலகத்தை முதன்முதல் அதாவது 1492-ம்வரம் ஐப்பசி மீ 12-ந் உ வெள்ளிக்கிழமை காலையிற் றமது கண்கள் களிக்கக் கண்டுகொண்டார். அது மலைகளா லும் பசுந் தரைகளாலுங் கரைக் கடுக்க மிகப்பெரிய விருட்சமுள்ள சோலைகளாலுஞ் சிறந்து விளங்குவதை யும், பசுந் தரைகட்கிடையிடையே சிறு குடிசைகள் அங்குமிங்குந் தோற்று வதையுங், குடிசைகளிலிருந்து பாதி நிர்வாணத்தோடு திரள் திரளாய்க் காட்டுத்தன முடைய சனங்கள் புறப்பட்டு வெகு ஆச்சரியத்தோடு அக்கப்பல்களை ஏதோ மாய வித்தையாற் கடலைக்கீண் டிவந்த பூதங்களாக எண்ணிக் கரையில் விம்மிதத் தோடு பார்த்துக்கொண்டு நிற்பதையுங் கண்டார்.
அவர் தம் பாதங்களைத் தரையில் மிதித்தற் கெத் துணை ஆவலுடையவராயும், கடவுண்மட்டி லெவ்வ ளவு நன்றியுடையவராயு மிருந்திருப்பா ரென்பதுஞ் சொல்லுந்தன்மையல்ல. அவர் தாம் கரையிலிறங் கும்போது மகிமையோடுஞ் சிறப்போடு மிருக்கக் கருதி, உயர்ந்த உடைகளை யணிந்து, இராச விருதுக் கொடியைக் கையிற் பிடித்துக்கொண்டு வள்ளத்திலிறங் கிக் கரையில் மிதித்தவுடன், முழந்தாளினின்று நிலத் தை முத்தமிட்டானந்த பாஷ்பஞ் சொரிந்து, கட.. வுளை நோக்கி ஆண்டவரே! இப்புதிய உலகந் தேவரி ருடைய இராச்சியத்தி லொரு பங்காக இருக்கக்கடவ தென்று சொல்லிப் பரிசுத்த மீட்பரென்னும் பொருள் கொள்ளச் “சாந்த சல்வதோர் '' என்னும் நாமத்தை அதற்கிட்டார். பின்னர் தம் வாளையுருவி ஸ்பானிய தேச அரசின் கொடியை உயர்த்தி, அத்தேசத்தாச னின் பெயரால் அதை உரிமைப்படுத்திக்கொண்டார்.

Page 52
27. சிறுமியர்க்குரிமை
------ . செல்வரிடத்துப் பிறந்தாலும், வறிஞரிடத்துப் பிறந் தாலும் பிள்ளை தன் வாழ்நாளின் முதற் பங்கைத் தன் தாய் முன்னிலையிலே கழிக்கின்றது. அந்நாட்க ளில் அதன் வாயிற்படுவதும், வயிற்றுட் சென் றதை வளர்ப்பதும் அவள் முலைப்பால். அதன் கண்ணிற் படுவது அவள் கோலமுஞ் செயலும், காதிற்படுவ தவள் பேச்சு, மனதிற்படுவது அவள் பழக்கமும் வழக்கமுமாம். ஆகையால், இளைஞர்க்கியல்பாயுள்ள பண்பின்படி, அது நல்லது பொல்லது பாராமற் சொல் வதைக் கிளிப்பிள்ளை போற் சொல்லியுங், கண்டதைக் குரங்குக் குட்டிபோற் செய்தும், நெஞ்சிற் படுவதை ஒளிபடக் கருவிபோல் (Photographic Camera ) அமைத்துங்கொள்கின்றது. '' சிறுமையிற் கல்வி சிலை பில் எழுத்" தென்றபடி இளமையிலே அதன் பொறிக ளிலும் உளத்திலும்பட்டனவெல்லாங் கன் மேலெழுத் துப்போல் என்றைக்கும் அழியாதிருத்தலால், அது தன் தாயிடங் கற்றுக்கொண்டவற்றின்படியே ஒன் மில் தீய வழியை அல்லது நல்வழியைப்பற்றி நடக்கத் தொடங்குகின்றது. தொடங்கவே, அதன் போக்கை எதிர்த்து வலுவான தடைநின் று தடுக்காவிடின், முன் போலவே வளர்ந்தும் முதிர்ந்தும்விடுகின்றது. ஆகை யால் உலகத்திலே அன்பு பொறை, ஈகை, தண்ணளி யாதி நற்பண்பு நற்செயல்களிற் சிறந்த மக்களை ஓர் நாடு தன்மடியிற்கொண் டிருத்தலால் வானளவாய் உயர்த்திப் போற்றப்படுதலும், தீயராய்த் திருடராய் வெறியராய் அடக்கமும் அமைவுமில்லாத் தறு தலைக ளாயுள்ள எண்ணிலாக் கயவர் திரளை அடக்கியிருத்த லால் வேறோர் நாடு யாவராலுந் தாழ்த்தி வெறுக்கப் லச நம் தாய்மாரின் நல்ல அல்லது தீய முன்னடக்கை

ஆஜம் புத்தகம்
93
பினாலேயாம். "தொட்டிலிற் பழக்கஞ் சுடுகாடுமட்டு” மென்றும், ''நூலைப்போலச் சீலை தாயைப்போலப் பிள்ளை '' என்றும், “தாயைப் பார்த்துப் பெண்ணைக் கொள் '' என்றுஞ் சொல்லப்படும் முது மொழிகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன வன் 5 மு.
ஊ.சார் பொருள்களைத் திருடியுங் கொலைத்தொழில் புரிந்தும் பெருங் கொடுமை செய்து வந்த ஒரு பேர் போன திருடன் ஒருநாள் அரச நடுவர் முன்னிலையிற் கொண்டுவரப்பட, அவர் அவனைக் கழுவேற்றி உயிர் பறிக்குமா றறிக்கை செய்தார். இதனை அறிந்த கள் வன், உடனே நடுவர் அடிமுன் வீழ்ந்து, நடுவர் பெரு மானே! அடியேன் தங்களிடங் கேட்டுக்கொள்ளும் விண்ணப்பம் ஒன்றேயொன்று. அது யாதெனில் : என் ஒருவனால் ஊரும் பொருளும் உயிரும் அழிவுறா தபடி என்னுயிரைப் போக்குவது முறையே என்றால், என்னுடன் பிறந்தான் இன்னும் ஒருவனிருக்கிறான்; என் தாயோ மீளவும் பல பிள்ளைகளைப் பெற்றெடுக்கத் தக்கவோர் பேரிளம்பெண். என் குழந்தைப் பொழு தில் நான் செய்த சிறுகளவுகள் குழப்படிகளை அவள் கண்டு சாய்த்துவிட்டும், பேசிய அதப்பிய மொழிக ளைப் போற்றிப் புகழ்ந்து என்னை உச்சி மீதெடுத்து மெச்சியுமிராவிட்டால் அடியேன் இந்தத் துன்பு மிக்க சாவுத் தீர்வைக் கோர்போதும் உட்பட்டிருக்கமாட் டேன்! இப்படியாயின் நான் வளர்க்கப்பட்டபடிதா னன்றோ என் தம்பியும் வளர்ந்திருப்பான்! இனிமேல் அவள் பெற்றளிக்கும் பிள்ளைகள் பாடும் அங்ஙனமே யாம் என்பதைக் கேட்கவேண்டியதில்லை. ஆகையால், உலகுக்கு நன்மையும் தங்கள் நடுவுக்குப் பெருமையும் ஆம் பொருட்டு எனக்கிரண்டாவதாய் அவளையுங் கழு வேற்றவேண்டும் என்பதே என்று பணிந்து மொழிந் தான். இதன்மேல் நடுவர் அவனை நோக்கித் சி -

Page 53
94
பாலபோத வசனம்
னே! உன் கூற்று ஒப்பத்தக்கது தான். ஆனால் நீ செய்த தீங்குக் குத்தரிக்கவே வேண்டுமென்றுசொல் லி, அவனைக் கழுவேற்றுவித்ததுமன்றி அவனீன்றா ளையும் அழைப்பித்துத் தகுந்த எச்சரிக்கை செய்த
னுப்பிவைத்தார்.
சிறுமியே! பெண்ணின் பொல்லாப்புந் திரிபாவா மும் உலகத்திற் பொலிந்து பொலிந்து அதை நிரப் புகின்ற எண்ணிலாத் தலைமுறைவரைக்கும் எட்டிப் பரவுதலால், உன் ஒழுக்கம் பொருந்திய வாழ்வை எத்தனையோ கண்கள் எதிர்நோக்கியிருக்கின்றன வென்பதை மறந்துபோகாதே. நீ பெதும்பையாய் இருக்கும் இப்போதே கொடும் புலிபோற் சினப்பவ ளாய்த், தாய் தந்தையர்க் கடங்கா மாரியாய், வீண் விளையாட்டுக்காரியாய்ச் சோம்பேறியாய்ச் சண்டைக் காரியாய் இருந்தால், மடந்தையான போதும் மண மக ளானபோதும், பின் ஈன்றாள் ஆனகா லும் அவ்வித மே இருப்பாய் என்பதற் - கையமுண்டா? தந்தைக் கமையாதவள் கணவனுக் கடங்குவளா? தாய்க்குதவா தவள் தன் வீட்டுக் குதவுவளா ? தன்குறை திருத்தா தவள் தன் பிள்ளை குறை திருத்துவளா? ஐந்தில் வளை யாதது ஐம்பதில் வளையுமா ? சற்றே நிதானித்துப் பார்.
நல்லுனர் 99ல், உன் ;ெ ஆனால் அ."
நீ ஒழுக்கமுடையவளாய் நடந்து வருகின் றாயானால் கடவுளுக்குப் புகழுண்டாகுக. ஆனால் அதில் மழுக்க முள்ளவளானால், உன் பெரியோர் உனக் குணர்த்திய நல்லுணர்வுகளைத் தட்டி நடந்த நாட்களை இகழ்ந்து விட்டு இனியாவது நல்லவளாய் ஒழுகிவரத் துணிவா யாக. *
* இப்பாடம் செந்தமிழ்ப் பாஷாபாடத்துக்கோ ருதாசன
மாம்பொருட்டு வடமொழியேனும் திசைமொழியே விவச பர் விரவாதி சுத்த தமிழில் எழுதப்பட்ட தி.

கடிதமெழுதும்முறை
நாம் பேச்சாற் றெரிவிப்பதிலும் எழுத்தாற் றெரி விக்கும் விஷயமே நெடுங்காலமட்டும் நிலைக்கத்தக்க தாம். அப்படி நிலைத்திருப்பது நல் விஷயமானால் நன்மைதான். ஆனால், அது பிறருக்கு மனத்தாங்கல் வருவிக்கக்கூடியதாய் அல்லது உண்மைக்கு மாறான தப்புரைகள் பொதிந்ததாயுள்ள தானால், அதனால் ஓர் போது பரிகரிக்கரிய தீங்கு விளை யவும் நேருமென்ப தாற், பிறர்க்குப் பேசித் தெரிவிப்பதிலும் எழுதித் தெரிவிப்பதற்குப் பன்மடங்கு கவனம் வேண்டுமென் பதை வித்தியார்த்திகள் ஒர்போதும் மறந்து போக
லாகாது.
கடிதத்திலே, மரியாதை வாக்கியம், விஷயம், முடிபு வாக்கியம், மேல்விலாசம் என நான்கு பிரிவுகளுள.
மரியாதை வாக்கியமாவது : கடித ஆரம்பத்தில் விளித்தற்பொருளில் எழுதப்படும் வாக்கியமாம்.
அதனை : (1) குருவுக்கு, மிக வணக்கத்துக்குரிய அல்லது வணக்கத்துக்குரிய பிதாவே! என் றும்,
(2) உபாத்தியாயருக்கு: சங்கைபோந்த உபாத்தி பாயரவர்களுக்குத் தாழ்மையோடெழுதிக்கொள்வது என்றும்,
(3) தகப்பனுக்கு : எனதன்பார்ந்த தந்தையே! என்றும்,
(4) தாய்க்கு : என திரு கண்மணிபோலும் அன் பான தாயே! என் றும்,
(5) சிநேகிதருக்கு என தாருயிர் நண்ப! அல்லது என தன்பார்ந்த மித்திர! என்றும்,
(6) அந்நியரான பெரியோருக்கு : சங்கைபோந்தவ சே! அல்லது பட்சமுள்ளவரே!என்று மெழுத
(3) ச"! 7. "னதி

Page 54
பாலபோத வாகனம்
கடிதவிஷயம்: தாழ்மையும் அன்பும் மாதுரியமுந் தோன்ற, நடபடியான சொற்கள் கொண்டு விளக்கமாக வும் வேண்டியனவெல்லாம் அடக்கமாகவும் தெளி வான எழுத்தில் வடிவாய் எழுதப்படல் வேண்டும்.
முடிபுவாக்கியம் : மேற்போந்த இலக்க முறைப்படி, (1) இங்ஙனம், தேவரீருடைய கீழ்ப்படிவுள்ள ஞா னப் புத்திரன், (2) தங்கள் விதேயன், (3) தங்கள் அன்பார்ந்த புத்திரன், (4) தங்கள் நேச மைந்தன், (4) உமதாப்த நண்பன் அல்லது உமது நண்பன், (6) தங்கள் விசுவாசமுள்ள அல்லது பட்சமுள்ள,
...............(பெயர்)....... என எழுதத்தகும்.
மேல்விலாசம் : முறையே, (1) மிக வண. அல்லது வண .........(பெயர்....... சுவாமியாருக்கு என்றும்,
(2) சங். அல்லது ம. 17. T. ஸ்ரீ ...(பெயர் ) ....... அவர்களுக்குச் சேர்வது என்றும்,
(3) ஸ்ரீல ஸ்ரீ அல்லது ம, ள. T. ஸ்ரீ....(பெயர்) ....... அவர்களுக்குச் சேர்வது என்றும்,
(4) ஸ்ரீமதி....(பெயர்).......அவர்களுக்குச் சேர் வது என்றும்,
(5) ம, ள. 17. ஸ்ரீ , அல்லது ஸ்ரீமான் .......(பெயர்) ....... அவர்களுக்குச் சேர்வது என்றும்,
சிறுவருக்கு : சிரஞ்சீவி....(பெயர்) ....... க்கு என் மும்,
சிறுமியர்க்கு: செளபாக்கியவதி .......(பெயர்)....... .க்கு என்றும்,
(5) சிநேகிதருக்கு, 2-ம் அல்லது 3-ம் இலக்கத்தி லுள்ளபடியும் எழுதத்தகும்.
'வலச் 2

வசனடாக அரும்பத உரை அகராதி.
--> 3 4-- அணு தரிசனி - அணுக்களை க் குயிலா த- பாடாத
காட்டுங் கருவி
குறுமை - பாவம் அபிநயம்-கைமெய்காட்டுகை
கெடு - தவணை அயர்தல்-செய் தல், சோர் தல்
கேவலம் - மோசம் அரும்ப- ேதான்ற
கொடும்புலி-சிங்கம் அலமலந்து -கலங்கி
கோட்டாலை-துன்பம், சரசம் அலக்ஷியம் - கனவீனம்
சன்மானிக்க மதிக்க அளவளாவி-கலந்து (டம் சரா சரம் -சரம் + அசாம், இயங் ஆச்சிரமம் - முனிவர் உறைவி கியல் நிலையியல் (ணல் ஆட்சேடம் - எதிர்ப்பேச்சு சலஞ்சா தித்தல் - முரண்டுபண் ஆயசம் - தங்குமிடம்
சருமம் -தோல் (ண று ஆற்றல்-சத் துவம், வல்லமை
சங்களைக்கிண று - கொட்டுக்கு இடும்பு-துன்பம்
சமர்ப்பித்தல் - (தாழ்ந்தோர் உய இதம் -நலம் *
ர்ந்தோருக்கு) ல்ெ எடுத்தல் இரக்கை - செட்டை.
சகி சமாய் கூட்டக் கொடு இரணம் - புண்
சாகியம்-கூட்டம் இயக்கா தா ரம் - தொழிலின் து; சாதனம்-எத்தனம்
ணைக்கருவி
(ய சாதித்தல்-உறுதிகூறல் இன்னோரன்ன - இவை முதலி சாதுரியம் - திறமை இன்றியமையாமை - இல்லா சிங்கேறு - ஆண் சிங்கம்
மல் முடியாமை
சிபாரிசு - பரிந்துபேசுகை ஈடு-ஒப்பு
சிரமம் - வருத்தம் உச்சாரணம் - உச்சரிப்பு
சுகிப்பதற்கு- அனுபவித்தற்கு உழுநன் - உழவன்
(து
சுசி.சத்தம் உற்றவிடத்து - வேண்டியபோ
சுருதியுரை - வேதவாக்கு ஊடங்கு - மிகுதி -
சுதிக் கியானம்' இசைவித்தை ஊள திபம் -லாபம்
சுவர் ணம் - பொன் ஊனம் - குறைபாடு
செவ்வழி நேர் வழி ஒருகண்டசீர் - ஒரேவிதம்.
தசனவித்தை -பல் வித்தை கண்ணறையர் - குருடர்
தடம்-விசாலம் கண்ணியம் -மதிப்பு
தண்ணளி - இரக்கம் (கம் கர்ணம்-காது
தண்டநமஸ்காரம்-மிகு வணக் கவல்கின்றது - வருந்துகின் ற தற்பரித்தியாகம் - தன்னை முற் காதம் - கிட்டத்தட்ட 10 மைல் றாய்க் கொடுத்தல் காருண்ணியம் - கருனை
தாசன் - அடியவன் கிரந்தம் -கல்வி நூல்
தாளாண்மை -முயற்சி சீடங்கள் - துட்பபுழுக்கள்
தாளல் -சகித்தல் -

Page 55
98
ஆறம் புத்தகம்
து ரகசாரி - குதிரை ஏறிச் செல் மடந்தை -- 14 க்கும் 19 க்குடன்
லுபவன்
டைப் பட்டவயதுள்ள பெண் து வட்டி-ஈரம்நீக்கி
மண்டிய நெருங்கிய து விபாஷி - ஒரு பாஷையை. ம் மயம் -வடி வம்
ய பாஷைப்படுத்துவோன் மர்மம் - இரகசியம் தூரோடு - வேரோடு
மலைத்தல் - அதிசயித்தல் தெள்ளிதில் - தெளிவாய்
மனனம்- மனப்பாடம் தெற்று வாய் - கொன்னை வாய்
மைேக ற்பிதம் - மனோ பாவனை தேவேந்திரன் - தேவர் தலைவன் மனோதத்துவம் --மனம் + தத் நனவு - உண்மைக்காட்சி
துவம் நாவலர் - புலவர்
மனோ ரூபிகள் - சம்மனசுகள் நாஸ் திகம் - தேவனைமறுத்தல் மா துரியம் - மது பாம் நியா ய துரந்தரம் - நியாயம் பே மாய்கை-மயக்கம்
சும் நிலைமை
[ல் மிதம்- மட்டு நிருபித்தல் - அத்தாட்சிப்படுத்த மித் துரு சிநேகிதன் நிர்ணயிக்க - தீர்மானிக்க
முகபாடம் - வாய்ப்பாடம் நிர்த் தரிசனம் - மறைதல்
முண்டனம் - மொட்டை நிவா ரணம் நிவிர்த்தி
முனியாமல் - வெடிக்காமல் நுகர்வு - சுகிப்பு
மெய்காப்பாளர் - உயிர்த்துணை பயோ தரம் - மார்பு
வர் பரவசம் - தன் வசமிழந்தநிலை
யதோசை - தன்னிஷட்டம் (ம் பரிநா சம் முழு நாசம்
ரேகா கணிதம் - கீற்றுக்கணத பரீஷ்கா ரம் - தெளிவு
வசவு - வா ச பாமான் - அறிவிலான் (த்தல் வருவாய்- வரும்படி பா ரணம்பண்ணல் தின் 7ெமி வல்லுநர் - வல்லோர் பலப்--பலவிதப்பட
வளி - ஆகாயம் பாஷ்பம் -கண்ணீர்
வா தாயனம் - (4 சன் னல் 2) பிரசாதம் - அருட்கொடை
வாய்ந்த-வாய்த்த பிரபந்தம் பெரிய தூல்
விடவிடத்து - நடுநடுங்கி பிரமிக்க - அதிசயிக்க
விடுத்தல் விடல் புதர் - பற்றை
விதேயன் - கீழ்ப்படிவுள்ளவன் பூதியம்-தனிப்பொருள்
வித்தியா நலம் -கல்வி நலம் பூர்வோத்தாம் - ஆதிச்சம்பவம் விம்மிதம்- அதிசயம் பெதும்பை - பதினொருவயது விருது வெற்றிக்கொடி
ப்பெண்
விவசாயம் -வேள எண்மை பெயர்ந்த - நீங்கிய
விவாதம் - தர்க்கம் "39 ன் -அரசன் (பெண் விற்பன் னர்- கற்றோர்
"- - - 40 வயதுப் வினையம்-தீங்கு

செய்யுட் பாகம் நீதிமொழிமாலை
1. விருத்தம். ஆபத்துக் கு தவாப்பிள்ளை யரும்பசிக் குதவா வன்னந் தாபத்தைத் தீராத்தண்ணீர் தரித்திர மறியாப்பெண்டீர் கோபத்தை யடக்காவேந்தன் குருமொழி கொள்ளாச்சீடன் பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனிலை யேழுந்தானே.
2 குக்கலைப் பிடித்து நாவிக் கூட்டினி லடைத்துவைத்து மிக்கதோர் மஞ்சட்பூசி மிகுமணஞ் செய்தா லுந் தான்
அக்குலம் வேறதாமோ அதனிடம் புனுகுண்டாமோ குக்கலே குக்கலல்லாற் குலந்தனிற் பெரிய தாமோ.
3 ஒப்புடன் முகமலர்ந்தே யுபசரித் துண்மைபேசி உப்பிலாக் கூழிட்டா லு முண்பதே யமுதமாகும் முப்பழ மொடுபா லன்ன முகங்கடுத் திடுவராயின் கப்பிய பசியினோடு கடும்பசி யாகுந் தானே:
வீணர்பூண்டா லுந் தங்கம் வெறும் பொய்யா
| மேற்பூச் ெசன்பார் பூணுவார் தராப்பூண்டாலும் பொருந்திய
தங்கமென்பார் காணவேபனைக்கீ ழான் பால் குடிக்கினுங்
கள்ளேயென்பார் மா ணுலகத்தோர் புல்லர் வழங்குரை
மெய்யென்பாரே.
அாவினை யாட்டுவாரு மருங்களி லூட்டுவாரும் இரவினிற் றனிப்போவாரு மெறி யுநீர் நீந்துவாரும் விரைசெறி குழலியான வேசியை விரும்புவாரும் அரசனைப் பகைத்திட்டாரு மாருயி ரிழப்பர் தாமே.
6
புத்திமான் பலவானாவான் பலமுளான் புத்திர : எத்தனை விதத்தினாலு மிடாது வந்தேதீரு'.

Page 56
10)
செய்யுட் பாகம் குத்திர முயல் தானொன் ற கொடும்புலி தன்னை ஏய்த்து விட்டபாண் கிணற்றின்கண் ணே வீழ்த்தியகதையை ஓர் வீர்
செல்வம்வந் துற் றகாலைத் தெய்வமுஞ் சிறி துபேணார் சொல்வன வ றிந்து சொல்லார் சுற் றமுந் துணையுநோக்கான் வெல்வதே கருமமல்லால் வெம்பகை வலிதென்றெண்ணார் வல்வினை விளைவுமோ பார் மண்ணன்மேல் வாழு மாந்தர்.
நிலைதளர்ந் திட்ட போது நீணிலத் துறவமில்லைச் சலமிருந் தகன்றபோது தாமரைக் கருக்கன் கூற்றம் பலவன மெரியும்போது பற்று தீக் குறவாங்கா ற்று மெலியது விளக்கேயாகின மீண்டுமக் காற்றே கூற்றாம்.
மாத்தபாவாணர் சக்கோர் மறையவ ரிப்போர்க்கெல்லாங் கொடுத்தெவர் வறுமையுற்றார் கொடாது வாழ்ந்தவரார்? எடுத்துகாடுண்ட நீருமெடாதகாட்டகத்தநீரும் (மண்மேல். அடுத்தகோடையிலேவற்றி யார் தகாா பெருகுந் தானே
10 வேலியானது பயிர் தனை மேய்ந்திட நினைத்தாற் காலனானவ னுயிர் தனைக் கவர்ந்திடத் துணிந்தால் ஆலமன்னையர் பாலகர்க் கருத்து வரானால் மேலிதோந் துடன் யார் கொலோ விலக்குவர் வேந்தே.
{1
தீமையுள்ளன யாவையுந் தந் திடுஞ் சிறப்புக் தோமில் செல்வமுங் கெடுக்குநல்லுணர் வினைச்தொலைக்கும் ஏமநன்னெறி தடுத்திரு ளுய்த்திடு மிதனால் காமான் றியே யொருபகை யுண்டுகொல் கரு தில்.
12 கலி விருத்தம் நன் றியைக் கோ றலு நலனை க்கோ றலும் வென்றியைக்கோ றலும் விவேகங்கோ றலும் துன் றியவெ க்கலைத் துறந்து நிற்றலும் கன்றியகாமத்தி னன் றியில்லையே.
13
ஏர்பெறு மிருநிதிச்செருக்க தெய் திடில் தேர்செவி யுடையவர் செவிடாகுவர் 1' " " - முரைவலா ரூமராகுவர்
டஈடயவர் குருடாரவசே.

101
ஆறம் புத்தகம்
14 கலித்துறை பா லுக்குச் சர்க்கரையில்லை யென்பார்க்கும்
பருக்கை யற்ற கூழுக்குப்போட.வுப் பில்லையென் பார்க்குமுட்
குத்தி த்தைத்த கா லுக்குத் தோற்'செருப் பில்லையென்பார்க்குங்
கனக தண்டி மேலுக்குப் பஞ்சணை யில்லையென் பார்க்கும்
வி தனமொன்றே
15
நாட்டமென்றேயிரு சற் குருபாதத்தை நம்புபொம்ம லாட்டமென்றேயிரு பொல்லாவுடலை யடர்ந்த சந்தைக் கூட்டமென்றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ்நீ ரோட்டமென் றேயிரு நெஞ்சேயுனக் குபதேசமிதே.
- 10
(ணு ஞ் எரியெனக்கென்னும் புழுவோ வெனக்கென்னு மிந்தமண் சரியெனக்கென்னும், பருந்தோவெனக்கெனுந் தான் புசிக்க நரியெனக்கென் னும் புன்னாயெனக்கென்னு மிந்நா றுடலைப் பிரியமுடன் வளர்த்தே னிதனாலென்ன பேறெனக்கே!
17 வெண்பா துர்ச்சனரும் பொன் னுந் துடியுந் துரக தமும் அச்சமற முன்னிற்கு மாயிழையும் -- நச்சரவும் கண்டித்த வெள் ளு ங் கரும்பு மிளநீரும் தண்டித்தார் ககன் றா சயம்.
18 கற்ற துகைம் மண் ணளவு சல்லா துலகளவென் றுற் றகலை மடந்தை யோ துகிறாள் - மெத்த வெறும் பந்தயங் கூற வேண்டா புலவீ ரெ றும்புந் தன்கையா லெண் சாண்.
19
பிறப்பித்தோன் வித்தை தளைப்பேணிக் கொடுத்தோன் சிறப்பினுபதேசஞ் செய்தோன்---அறப்பெரிய பஞ்சத்தி லன்னம் படைத்தோன் பயந்தீர்த்தோன் எஞ்சாப் பிதாக்களென வெண்.
2} - அம்பு மழலு மவிர்கதிர் ஞாயிறும் வெம்பிச் சுடினும் புறஞ்சுடும் --- வெம்பிக்

Page 57
1{12
செய்யுட் பாகம்
கவற்றி மனதைச் சுடு தலா ற் காமம்
அவற்றினு மஞ்சப் படும்.
21 கற்புடைய பெண்ணமிர் தங் கற்றடங்கி னான மிர் தம் நற்புடைய நாடமிர் தம் நாட்டுக்கு - நற்புடைய மேகமே சேர் கொடி வேந்தமிர் து சேவகனும் ஆகவே செய்யி ன மிர் து.
22
எத்தொழிலைச் செய்தா லு மேதவத்தைப் பட்ட ா லும் முத்தர் மனமிருக்கு மோனத்தே-வித்தகமாய்க் காதி விளை யாடியிரு கைவீசி வந்தா லுந்
தா திமன நீர்க்குடத்தே தான்.
23 ஆவியொடு காய மழிந்தாலு மேதினியிற் பாவியென்று நாமம் படையாதே -மேவியசீர் வித்தார முங் கடம்பும் வேண்டா மடநெஞ்சே செத்தாரைப் போலே திரி.
24 ஒன்பது வாய்த்தோ ற்பைக் (கொருநாளைப்போலவே யன் புவைத்து நெஞ்சே யலைந்தாயே--வன்கழுக்க டத்தித் தத்திச் சட்டை தட்டிக் கட்டுப்புட்டுக் கத்திக்கொத்தித் தின்னக் கண்டு
25
போந்த வு தா னுக்குப் பொன் துரும்பு சூானுக்குச் சேர்ந்த மாணஞ் சிறு துரும்பு--பாய்ந்த வறிவோ ற்கு நாரியருந் துரும்பா மில்லத் துறவிக்கு வேந்தன் றுரும்பு.
26 வான் குருவியின் கூடு வல்லாக்குத் தொல்கறையான் றேன் சிலம்பி யாவர்க்குஞ் செய்யாதால்-யாம் பெரிதும் வல்லோமே யென் று வலிமைசொல் வேண்டாங்கா ணெல்லார்க்கு மொவ்வொன் றெளிது.
27 சித்திரமுங் கைப்பழக்கஞ் செந்தமிழு நாப்பழக்கம்
வைத்தவொரு கல்வி மனப்பழக்கம் -நித்தம்
--டயு நடைப்பழக்க நட்புக் தயையுல் ”லர் '- ம் பிறவிக் குணம்.

நீதிமொழிமாலைப் பொழிப்புரை.
-- --> இK~--
(தன் பெற்றார்) துன்பப்படுங் காலத்தில் உதவிசெய்யாத புத்திரனும், சகித்தற்கரிய பசிக்குதவாத சோறும், தாகத் தைத் தணிக்க உதவாத குளிர்ந்த நீரும், (தன் குடும்ப) வறு மையை உண ரா த பெண் ணும், கோபத்தை அடக்காத அரச னும், ஆசாரியரின் உபதேசத்தைப் பிறக்கணிக்கும் மாணாக்க னும், (மந்திரிக்கப்படாத நீர் குற்றந் தீர்க்க மாட்டாதாதலால்) குற்றத்தைப் போக்கமாட்டாத ( அப்படிப்பட்ட) நீரும் (ஆ கிய) ஏழும் பயன ற்றன வாம்.
2 நாயைப் பிடித்துப் புனுகுப் பூனையின் கூட்டில் அடைத்து வைத்து (மஞ்சள் வகைகளில் ) உயர்ந்த தொன்றாகிய கஸ் தூ ரிமஞ்சளை அதற்குப் பூசி மிகுந்த வாசனையை அதனிடத்தில் எழச்செய்தா லும், அந்நாயானது (புனுகுப்பூனை யாய்) மாறிவி டுமோ? அதனிடத்திலே புனுகு உற்பத்தியாகுமோ? (ஏன் ன செய்தாலும்) நாய் நாயே அல்லாமற் குலத்தில் உயர்ந்து விடுமோ ? (அல்ல)
மனச்சம்மதத்தோடு முகமலர்ச்சி யடைந்து மரியாதை செய் து உள்ளதை உள்ளபடி பேசி, உப்பிடாத கூழைத் தந்தாலும் அது தேவர் விருந்து போலிருக்கும். (ஆனால்) வெறுப்பான முகத்தோடு (க தலி, பலா, மாவாகிய) மூன்று கனி வர்க்கங்க ளோடுந் தரும் பாற்சோற்றை உண்டாலும், முன் வயிற்றை மூ டிக்கொண்டிருந்த பசியோடு ( இன் னும்) அதிக பசி உண் டாகும் என்பதாம்.
பெருமை தங்கிய உலகத்தவர் ( இயல்பேதென்றால்) சற்றே செல்வராயிருக்குங் கீழ்மக்கள் பொய் சொன் னாலும் அது மெய்யென் று சொல்வார்கள் ; (ஏழைகளான) பயனற்றவர் கள் பொன் பைரணங்களை அணிந்தா லும் (அவை பொன் னென்பது) வெறும் பொய்; (தாழ்ந்த லோகத்திலிட்ட) மேற் பூச்சென் று சொல்வார்கள். பொன் பூணத்தக்க செல்வர், பித் தளையைத் தரித்தாலும் உயர்வு பொருந்திய தங்க நகையென் று கூறுவார்கள். பனையின் கீழிருந்து (யாவருங் ) கா~ம் - டிக்கும் பசுவின் பாலைக் கள் ளென் று சொல்ல -

Page 58
104
செய்யுட் பாகம்
பாம்பாட்டிகளும், அரிய யானைக் குணவு கொடுத்துவளர்க் கும் யானைப் பாகரும். இராக் காலத்திலே தனிவழி போவா ரும், திரை யெறியும் நீர் நிலையங்களில் நீந்தி விளையாடுபவர்க ளும். வா சனை பாவுங் கூந்தலையுடைய நாணமற்ற ஸ்திரீயை விரும்புபவர்களும், (தம்மை ஆளுகின் ற ) இரா சாவை விரோ திப்பவர்களும் தங்கள் அருமையான உயிரை இழந்துபோவார் கள் என்பதாம்.
புத்தியுள்ளவன் (பலவீனனானாலுந் தன் புத்தி நுட்பத்தால்) பலமுடையவனாவான். பலமுடையவன் தன் புத்தியை இழந் துபோவானாயின் (அவன் எவ்வளவு சமர்த்தான செயல்களைச் செய்தவிடத்தும் (அவனுக்குத் துன்பம் வந்தேமுடியும். (இத ற்கத்தாட்சியாகத்) தந்திரமுள்ள முய லொன் று (வலிய சிங்கத் தை அ ணாப்பி அழைத்துப்போய் இறை பாது) விடப்பட்ட பாண் கிணற்றுள்ளே வீழச்செய் த க ைதீயை உணர்வீர்களாக.
இந்தப் பூவுலகத்திலே சீவிக்கும் மனிதர் (தங்களுக்கு) 3சு வரியம் வந்தடுத்துவிட்டால் கடவுளைச் சற்றேனும் வழிபடா மல் அவரை மறந்து விடுவார்கள்; தாம் பேசத்தக்க வார்த்தை கள் எவையென்று ஆராய்ந்து பேசார் கள் ; பந்துக்களையுந் துணை புரிபவர்களாகிய தங்கள் சிநேகிதரையும் (தமக்குரிய வர்களென் று) பார்க்க மாட்டார்கள் ; (தங்கள் சத்து ராதிகளை ) வென்று விடுவதே காரியமல்லாமல் (அவர்களுடைய கொ டிய விரோ தம் வலிமையுடையதோ அல்லவோ என்று நினைக் கமாட்டார்கள் : கொடிய பாபக் கிரியைகளைச் செய்தாலும் அவற்றால் விளை யுந் தீமை எத்தன் மைத்தா கு ெமன் டி டுத மாட்டார் கள் என்பதாம்.
தாமரைக்கு (குளத்திலுள்ள) நீர் வற்றிய காலத்தில் முன் (அதை வளரச்செய்த சூரியனே அதற்குச் சத்துரா தியா கும். நற்பயனுள் ள காடான து தீப்பற்றி எரியும்போது வாயுவான து அதிற் பற்றுகின்ற நெருப்போடு சேர்ந்து நின்று அதனை வளர்ப்பதாகும். (ஆனால் அப்பெரு நெருப்பான து) சிறிய வி ளக்கு வெளிச்சமாயின் முன் அதற்குதவியாய்நின் ற காற்றே -- கா தியாகும். (இவைபோல இந்த நீண்ட உலகத்தின் கண்
ழ் பிறவன்
ன் தன் னுடைய உயர்ந்த நிலையினின்றும் ழோ

ஆறம் புத்தகம்
105
கும்போது, முன் அவனோடு உறவு செய்தவர் களெல்லோரும் அவனைக் கைநெகிழ்ந்து விடுவார் கள் என்பதாம்.
நாட்டிலுள்ளோர் அள்ளிப் பருகும் நீரும், (அவர் களால் மொண்டெடுக்கப்படாது) விடப்படும் நீரும், அடுத்துவரும் கோடைகாலத்திலே வற்றி, நிறைந்த மாரியிலே பெருகுகின் றனவன்றோ. (அதுபோலத்) தருமஞ் செய்தவரும் செய்யா தவருஞ் சமமே ஒருகால் வறிஞராகவும் மறுகாற் செல்வரா கவுமிருப்பது உலக இயல்பேயாம். (அவ்வாறில்லையாயின்) நிறைந்த கல்வி அறிவுள்ள புலவருக்கும், தகுதியுடைய முனி வருகும், குருக்களுக்கும், யாசகர்க்கும் பொருளுதவி செய்து தரித்திரமானவர்களார் ? அப்படிக் கொடுத்து தவாமல் (நெடுங் காலஞ்) செல்வாராயிருந்தவர்களார் ? (ஒருவருமில்லை) என்ப
தாம்.
அ பசனே ! பயிரைக் காக்கின்ற வேலி தானே அப்பயிரைத் தின்ன நினைத்தால், மாண தூ தனானவன் உயிரைப்பறிக்க எண்ணினால், தாய்மார் தங்கள் குழந்தைகளுக்கு நஞ்சூட்ட நினைத்தால் தவிர்க்கக்கூடாத இவ்வாபத்துகளை நினைத்து யாபால் விலக்கக்கூடும்! (சொல்லுக)
(வெட்கத்துக்குரிய) மோக ஆசையான து கெடுதி எனப் பட் யாவற்றையும் உண்டாக்கும் ; அழகையும் குற்றமற்ற
தயுங் கெடுக்கும்; நல்லுணர்ச்சிகளைப் பாழாக்கும் ; ள் ள மோட்ச வழியை அடைத்து இருள் நிறைந்த எ தாளத்திற் செலுத்தி விடும், ஆதலால் இதை ஆராய்ந் பார்த்தால் (உலகத்திலே பொல்லாப்புக்குரியது காமபாவ பல்லாமல் வேறொன் றுளதோ? (அல்லஎன்ன வேண்டும்)
நன்மையைக் கெடுத்தலும் அழகை நாசப்படுத்தலும் ; (துர் இச்சைகளை அடக்கி நடத்தலாற் பெறும் வெற்றியைக் கெடுத்தலும் நல்லறிவைத் தொலைத்தலும் ; நெருங்கிய சுற் றத்தாரின் உதவியின்றி நிற்றலும் (மனத்தையும் சரீரத்தை யும்) நையச் செய்யுங் காமத்தின் வேலையேயன்றி (° என்பதாம்.

Page 59
106
செய்யுட் பாகம்
13
சிறப்பைத்தரும் பெருந் திர வியத்தினால் (மனிதருக்கு) ஆங்காரம் உண்டாகுமானால், பிறர் சொல்வதைக் கேட்டுத் தெளிவதற்குரிய காதுகளை உடைய அவர்கள் (ஒருவர் சொல் லையும் ஏற்றுக்கொள்ளாமையால்) செவிடர் போலாவார்கள். அறிவைத் தரும் வாய் வல்லபத்திற் சிறந்த அவர்கள், ஊமை யர் போலாவார்கள். கூர்மையான கண்களை உடைய அவர் கள், குருடர்போலாவார்கள் என்பதாம்.
14
தாங்குடிக்கும் பாலைச் சுவைப்படுத்தவேண்டி அதற்குச் சருக்கரை இல்லையேயென்பவர்களுக்கும், சோற்றுப்பருக்கை ஒன்றேனுங் கல்வாத கூழுக்கு உப்பில்லையென்பவர்களுக்கும், (முள்ளான து) குத்திப் பாய்ந்து வருத்திய காலுக்குப் பா தரட் சை இல்லையென்பவர்களுக்கும், பொன்மயமான பாரித்த தந் தேகத்துக்குப் பஞ்சணை மெத்தை இல்லையேயென் பவர் களுக் கும் உள்ள கவலை ஒரே தன்மைத்தாம் என்றவாறு.
15 மனமே! (உனது ரக்ஷா பெருமானாகிய) சற்குருவின் திரு அடிகளிலேயே நம்பிக்கைவைப்பதல்லாமல், உன் தேகத்தைப் பொம்மைக் கூத்தாடவுதவும் வெறும் பொம்மை என் றெண் ணிக்கொள்வாயாக. உன் உறவினரை, (அன்று கூடி அன்று குலையும்) சந்தைக் கூட்டமென் றெண்ணிக்கொள்வாயாக. உனது உலக வாழ்வை, நீர்க்குடங் கவிழ்தலால் ஓடுகின்ற நீரோட்டமென்று சிந்தனை செய்வாயாக. இதுவே உனக்கு உபதேசமாகும்.
பல 0o07 க , 15
ய்தா லும் (உயிர் உடலினின் று நீங்கினவுடனே அதை ' தீ எனக்கென் றும், புழு எனக்கென்றும், இந்த மண்ணும், எனக்குத் தான் என் றும், தின்னும் பொருட்டுப் பருந்;ெ பக்கம், நரியொரு பக்கம், ஈனமான நாய் ஒரு பக்கம் எனக் கெனக்கென் றும் வாதாடிப் பங்கடைகின்ற இந்த நாற்றமுள் ள சரீரத்தைப் பேணி வளர்த்தேனே! இதனால் நானடைந்த பயனென்ன?
17 துன்மார்க்கரையும், பொன் கட்டியையும், மேளத்தையும், 'யு நீ..?"யையும், யாதொரு பயமுமின் றித் தன் கணவனை
உம் பிந. 'நம் பெண்ணையும், கரும்பையும், இளநீர்த்

ஆறம் புத்தகம்
107
தேங்காயையும் (அடித்தோ நசுக்கியோ வெட்டியோ) வருத் தினார்க்கே வெற்றி, (அதாவது பயனுண்டாம்) எ-ம்.
நாம் இன் னுங் கற்றறியா திருப்பது பூமியிலுள்ள மண்ண ளவு விஸ்தாரமாகவும், கற்றது ஒரே ஒரு பிடி மண்ணளவு கொஞ்சமாயு மிருக்கின்றதென்று (சரசுபதி என்னப்படும்) கல்விப் பெண்ணானவள் கூறுகின்றாள். எறும்பு தானும் தன் கையினால் எட்டுச் சாண் நீள முள்ள தாகும். (ஆகையால்) புல வரே! (நீர் கற்க வேண்டியதிலும் அ திகங் கற்று விட்டீரென் று) பெரிதும் வீண் பந்தயம் பேசாதிருப்பீராக.
19
மனமே! புத்திர சந்தானத்துக்குக் காரணனாகிய மனிதனை யும், கல்வியை விரும்பிக் கற்பித்த ஆசிரியனையும், முறையோ டு ஞானோபதேசஞ்செய்த குருவையும், மிகவும் பெரிய பஞ்ச காலத்தில் அன்ன தானஞ் செய்த உபகாரியையும், வந்த மனக் க வலையை நீக்கித் தயிரியம் உண்டாக்கியவனையும், பிதாத்தன் மையிற் குறையாத பிதாக்களென்று கருதக்கடவாய்.
20 (காய்ச்சிய) அம்பும், நெருப்பும், ஒளிபொருந்திய கிரணங் களை யுடைய சூரியனும் வெப்பத்தோடு சுட்டாலும் சரீரத் தின் மேற்புறத்தை மாத்திரம் வெதுப்பி வருத்தும். கா ம நோயோவெனில், அகோரமாய் இருதயத்தைக் குடைந்து துன்பப்படுத்துவதால் (அம்பு, நெருப்பு, சூரியன் ஆகிய 3 அ வற்றினும் மிகுந்த பயங்கரத் துக்குரியதேயாம்.
21 ணவன் மீது விசுவாசமுள்ள) பதிவிரதையானவள் அக்கு) இனிமை செய்பவளாவள் ; சகல சாஸ்திரங்களை கற்றுக் (கர்வமின்றி) அடக்கமுடையவனாயிருப்பவன் கெத்துக்கு) நலஞ்செய்பவனாவான்; நன்மையுள்ள நாடா ன து ( அ தில் வாழ்வாருக்கு) இன்பந் தருவதாகும்; நன்மை செய்யும் மேகமண்டலந் தொடும்படி உயர்த்தப்பட்ட வெற் றிக்கொடியையுடைய அரசன், சுகந் தருபவனாவன் ; அவ்வா சன் ஆஞ்ஞைப்படி யெல்லாஞ் செய்யும் இராண வீரனுஞ் சுகந் தருபவனாவன் என்பதாம்.
22 (நீர்க்குடத்தைத் தலைமீது வைத்து அதைத் "ெ இரண்டு கைகளையும் வீசி அமைந்து விளையாட

Page 60
4 ...
50
K~
108
ஆறம் புத்தகம் செய்யுட் படிகம்
பெண்ணின் கவனமானது அந்நீர்க்குடத்தின் மீதேயிருக் கும். அவ்வாறே, என் ன தொழிலைச் செய்தா லும், என்ன பெருந் துன்பங்களை அனுபவித்தாலும் முத்தி நெறியில் நடக் கும் மகாத்துமாக்களுடைய சிந்தனையானது கடவுளை யே நோக்கியிருக்கும் என்பதாம்,
23 அறியாமை பொருந்திய மனமே! உன் உயிர் போனாலும் உலகம் உன்னைக் கெட்டவனென்று சொல்லாதபடி நடந்து கொள். (அது மாத்திரம் உனக்குப் போதும்) மற்றப்படி இடம்பமும் பெருமை சலாக்கியமும் உனக்கு வேண்டாம். செத்தவரைப்போலத் திரிவாயாக.
24. மனமே! வலிமை பொருந்திய கழுகுகள் குதித்துக் குதித் துத் தங்கள் செட்டைகளை அடித்து மொய்த்து உடலைப் பிய்த்துச் சத்தமிட்டுக் கொத்தித் தின்னக் கண்டும், ஒன்பது வாயையுடைய தோற்பையாகிய அந்தச் சரீரத்தின் மீது கா தல் கொண்டு திரிந்தாயே! என்பதாம்.
25 மிகவும் பொருள் வழங்கும் தர்ம சிந்தையுள்ள வனுக்' பொன் னும், போர்வீரனுக்கு மரணமும் , நன்றாய்க் கற்ற னிக்குப் பெண் ணும், இல்வாழ்வை நீங்கிய சந்நியாசிக்கு த சனுந் துரும்பாய்த் தோன்றும் என்பதாம்.
26 வானத்தில் சஞ்சரிக்கும் குருவியின் கூட்டையும், வலிகை பொருந்திய அரக்கு மெழுகையும், பழமையா கி சோற்றையும், தேன் கூட்டையும், சிலந்திவலையை, வப்பிராணிகளேயன்றி எல்லாருஞ் செய்யத்தக்கவ
ஆகவே எல்லாருக்கும் ஒவ்வொன்று எளிதா தலின், நாட ரிதங் கெட்டித்தன முள்ளவர்களென்று ஒருவருஞ்சொ திருக்கக்கடவார்கள் என்பதாம்.
27
ம ற்சியாலும் லியான தி கு
சித்திர வித்தை கையின் பயிற்சியாலும், செவ்வையான தமிழ்ப் பேச்சு நாவின் பயிற்சியாலும், கல்வியானது மனக் இன் பயிற்சியாலும், நடக்கை, நாளாந்தம் நடந்து பழகுவு
ழ்ெ பெறப்படும். ஆனால், இரக்கமும் ஈகையுஞ் சு பா Wா wrயையும், - .. பம் பின் 'கும் டே
3 p, us (olnloan InA.

.و -
- د اما
2 0
ک
ن
7-06
شده و با او با

Page 61
},x !i° // ,890
נית, 9


Page 62
都於

三船多
發
尊也
發展
曾是学
10