கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1983.05

Page 1

。 ika- 3 ஆப

Page 2
o O 9
உலகம் புகழ் பெற்ற
îgrafi
rடு அண்ணே என்ஜின் இதின் மோட்டர்
EHF F Histor
ஆகியவற்றுடன் இணைந்த
1/2 குதிரை வலு 112 H. P. லிருந்து
50 குதிரை வலு S0 H. P.
இயங்கு 疆動
au îi spira
5 II பம்ப்ஸ்
இலந்ஜைதில் அதிேகமாக விற்பனயாகிக் கொண்டிருக்கின்றன.
களது தனித்த தேவைகளுக்கு ஏற்ப வேண்டியி uứcủtsâu vujủo தயாரித்துத் தருவோம்
வீடர ல்களுக்கு: s
ா(ட் °ற என்ஜினியரிங்
பே var: 22496
தொழிலகம் அலுவலகம்:
நனவற்குளி ஒட்டோஸ் கட்டிடம்
@學藝* 90, يمتلكه الة بين في غوستانفوخي
學 யாழ்ப்பாணம்
 
 

ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைக்ளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர்பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்"
SS5
'Mallikai' Progressive Monthly Magazine
7O G3LD — 1983
g666L6)5
பேராசிரியர் கைலாசபதி ஞாபகார்த்தச் சிறப்பிதழ்
பலர் கேட்டார்கள்: 'ஏன் இதுவரை பேராசிரியர் ஞாபகார்த்த இதழொன்றை மல்லிகை பிரசுரிக்கவில்லை?" என்று.
அவசர கோலத்தில் நாம் இதைச் சிெய்ய விரும்பவில்லை. பொறுத்திருந்து ஆற அமர அவரது ஞாபகார்த்தச் சிறப்பிதழை வெளிக் கொணர வேண்டுமென்று திட்டமிட்டுச் செயல்பட்டோம்.
சிறப்பிதழ் சம்பந்தமாகவே தமிழகத்திற்குச் செல்லக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. மூன்று வாரங்களுக்கு உட்பட அங்கு தங் கிப் பலதரப்பட்ட எழுத்தாளர்களையும் இலக்கிய ஆர்வலர்களையும் சந்தித்து உரையாடினுேம்.
நாம் எதிர்பார்த்ததை விட, தமிழகத்தில் பே ரா சிரியர் கைலாசபதியின் இழப்புப் பற்றி அதிகமானேர் து க் கித் தன ர். தமது துக்கத்தை மனசாரத் தெரிவித்துக்கொண்டனர்.
ஒரு மன வெப்பியாரத்தை உங்களுக்குச் சொல்ல வேண்டும்இந்தச் சந்தர்ப்பத்தில். கைலாசபதி அவர்களுக்குக் கடமைப்பட் Tவர்கள், அவரது இழப்பினல் பாதிக்கப்பட்டவர்கள் என நம்பப் பட்ட பலரை சிரமப்பட்டு நேரில் சந்தித்து - இங்கும் அங்கும்பல மாத அவகாசம் கொடுத்துச் சிறப்பிதழுக்கு எழுது ம்ப டி கேட்டுக் கொண்டிருந்தோம்.
நாம் முக்கியமாக எதிர்பார்த்திருந்த சிலர் எம்முடன் ஒத் துழைக்கவில்லை. கடைசி வரைக்கும் அவர்களது பங்களிப்புக்காகக் காத்திருந்தோம். இரண்டு வாரங்களுக்கு மேலாக வேலைகளைக் கூடத் தாமதப்படுத்திப் பார்த்திருந்தோம். முன்னரே அவர்கள் வாக்குப் பண்ணியபடி கட்டுரைகள் கிடைக்க ஆவன செய்யவில்லை. இந்த அலட்சியத்தை அவர்கள் நமக்குச் செய்ததாகக் கருத வில்லை- நாம்,
பேராசிரியர் கைலாசபதிக்குச் சிறப்பிதழ் வெளியிட ஆயத்தம் செய்த போது, நம்முடன் பல்வேறு வழிகளில் ஒத்துழைத்த சகல

Page 3
நண்பர்களுக்கும், கட்டுரைகள் தந்துதவி கைலாசின் நாமத்தைச் சிறப்பாக நே சித் த நெஞ்சங்களுக்கும் எமது மனங் கனிந்த நன்றிகள்.
இச் சிறப்பிதழில் இடம் பெற்ற கட்டுரைகள், கவிதைகள் அனைத்தையும் சேர்த்துத் தொகுத்து நூலுருவில் வெளி யி ட ஆவஸ் செய்துள்ளேம். கூடிய விரைவில் தமிழகத்தில் இவை நூலுருப் பெற்று வெளிவரும்.
கைலாசபதி என்ற ஆளுமை பெற்ற ஓர் இலக்கிய விமரிச கரை தேவதூதனக்குவது நமது நோக்கமல்ல. ஆனல் அதே சம யம் அந்தச் சம கால மேதை நவீன தமிழுக்கு அளித்த ஆரோக் கியமான பங்களிப்பை உலகிற்குப் பகிரங்கமாக பறையறைந்து அறிவிக்காமல் ஒதுங்கிக் கொள்வதிலும் நமக்கு வடன்பாடில்லை. சிறப்பிதழ் தயாரிப்பு நிமித்தமாகத் தமிழகப் பயணத்தால்
ஏப்ரல் 83 இதழ் வெளியிட முடியவில்லை.
ரசிகமணி கனக சொந்திநாதன் ஞாபகார்த்தக் குறுநாவல் போட்டி முடிவுகள் அடுத்த இதழில் வெளிவரும்,
- ஆசிரியர்
"தாய்" வார ஏட்டிலிருந்து
இலங்கை இலக்கிய இதயம் டொமினிக் ஜீவா அவர்களும் அவரோடு கவிஞர் மேமன் கவி அவர்களும் வந்திருந்தார்கள். அறிஞர் கைலாசபதி அவர்களின் எதிர்பாராத மறைவைப் பற்றி டொமினிக் ஜீவா அவர்கள் சொன்னபோது என் உள் மனம் ஓவென்று அழுதது. மக்கள் இலக்கியம் படைக்கின்ற மகத்தான மனிதர்களை இந்த மண்ணுக்கு அடையாளம் காட்டியவர் அவர் . தமிழுக்கு அவரது பார்வை புதிதாகவே இருந்தது. அவர் தனி ஒருவராக இந்த மொழிக்கும், இலக்கியத்திற்கும் சேர்ந்த செல் வம், பல பல்கலைக் கழகங்களின் பணியை விட மேலானது. அவர் இலங்கைத் தீவில் இருந்து தமிழுக்குத் தந்த புது ப் பார்  ைவ போற்றி வணங்கப்படத்தக்கது. அவரது சாம்பல் குமரிக்கடலில் கரைக்கப்படுவதற்காக இந்தியாவிற்கு வருகிறதாம். கடல் அலை களே! அந்த கற்பக விருட்சத்தைக் காலமெல்லாம் தாலாட்டுங் கள்i கைலாசபதி எரிந்தும் தமிழ் வளர்த்தார். கரைந்தும் காலத் தைக் கடந்து வாழ்வார்.
- ஆசிரியர் தொகுதி
தயாரிப்புக்கு உதவியவர்: கா. சந்திரசேகரம்
மல்லிகை 234 B, - கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம் தல்லிகையில் வரும் கதைகள், சம்பவங்கள் அனைத்தும் கற்பஃனயே,
2

சமகாலத்தை வென்றவர்
எதிர்காலத்தை நிர்ணயித்தவர்
நம்முடைய காலத்தில் நம்முடன் ஒருவராக ஒருங்கிணைந்து நின்றவர். நமது இலக்கியப் போராட்டங்கள் அத்தனையிலும் மிக நெருங்கிய பக்கத் துணைவனுகப் பிணைந்து நின்று செயலாற்றியவர். தனது சக்திக்கேற்ற வகையில் ஈழத்து இலக்கியத் துறை யி ன் முன்னேற்றத்திற்காக உழைத்து, அதனுல் தமது தனித்துவ முத்தி ரையைத் தமிழ் இலக்கியத்தின் மீது பொறித்தவருமான மேதை கைலாசபதி அவர்களினது ஞாபகார்த்தச் சின்னமாக இந்தச் சிறிய சிறப்பிதழைர் சமர்ப்பிக்கின்ருேம்.
நாம் முன்னர் ஒரு தடவை குறிப்பிட்டுச் சொன்னது போல, காலம் போகப் போகத்தான் அவரது இலக்கிய ஆளுமையின் ஆகிருதி நமக்கெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய வரும்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அவரது அறிவு வீச்சு, திற ய்ைவுப் பார்வை, மேதைத்துவம் தமிழ் இலக்கிய உலகையே வெகுவாகப் பாதித்துத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை இன்று பலரும் ஒப்புக் கொள்ளுகின்றனர்.
அவரை - அவரது விஞ்ஞான யுகக் கண்ணுேட்டத்தைக மன சார வெறுத்தவர்கள் கூட, தமது கருத்துச் சாதனங்களில் அவ ரைப் பற்றி நாலு வரி எழுதி வெளியிட வேண்டிய அளவுக்கு அந்தத் தாக்கம் அவரது இலக்கிய எதிரிகளுக்குக் கூட ஏற்பட் டுள்ளது. இதை நினைக்கும் போது அவரது ஆய்வு வீச்சு இன்னும் பல புதுமைகளை அவரில்லாத காலத்திலேயே செய்யும் என்பதை நாம் உண்மையாகவே நம்புகின்ருேம்.
இவைகளல்லப் பேராசிரியரின் இலக்கியப் புகழின் அடித்தளம்.
அவர் மக்களை அதிகமாக நேசித்தவர். மக்களினது வாழ்வின் சகல துறைக் குால்களும் இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களில் எதிரொலிக்க வேண்டும் என மனசார விரும்பியவர், அதற்காகப்
போராடியவர்

Page 4
தோழர் பீட்டர் கெனம னின் அணுசரணையுடன் இலங் கைக் கம்யூனிஸ்ட் கட்சி எடுத் துக் கொண்ட பாரிய முயற்சி யின் பெறுபேருக யாழ்ப்பாணத் தில் பல்கலைக்கழக வளாகம் நிறு வப்பட்ட காலம். அக்காலத்தில் யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபல மனிதனுகப், புதிதாக நிறுவப் பெற்ற அந்த வளாகத்தின் முதல் தலைவராக பேர. சிரியர் கைலாச பதி அவர்கள் விளங்கினர்கள். ாாழ் குடா நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் இடம் பெற்ற விழாக்களிலும், பாட சாலை நிகழ்ச்சிகளிலும் பிரதம விருந்தினராகக் கை லாா பதி அவர்கள் அழைக்கப் பெற்றுக் கெளரவிக்கப்பட்டார்.
எங்க ள் கல்லூரியின் வரு டாந்தப் பரிசளிப்பு வைபவத் துக்கு அழைத்து, சுல்லூரிச் சஞ் சி  ைகயா ன "தேவரையாளி இந்து" வை கைலாசபதி அவர் களைக் கொண்டே வெளியிட்டு வைக்க வேண்டுமெனத் தீர்மா னித்தோம். இவ்வைபவத்துக்குக் கைலாசபதி அவர்கள் வருகை தருவதற்கான ஏற்பாடுகளைச் செய்து முடிக்கின்ற பொறுப் பினை சஞ்சிகையின் ஆசிரியர்க ளுள் ஒருவனுன என்னிடமே
92nui ஈர்த்து ஆய்வாளன்
தலைமுறையை
அணைத்துச் சென்ற
தெணியான்
ஒப்படைத்திருந்தனர். அந்தச் சமயத்திலேயே பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங் கம் எடுத்த தேசிய ஒருமைப் பாட்டு விழா நடைபெற்றது. அந்த விழா மண்டபத்தில் முதல் த்டவையாக கைலாசபதி அவர்களைத் தனிப்பட்ட முறை யிலே நான் சந்தித்து உரையாடி னேன். அதற்கு முன்னர் ‘விடிவை நோக்கி" என்ற எனது நாவல் வெளிவந்த சமயத்தில், கொழும் பில் வாழ்ந்து கொண்டிருந்த எனது நண்பர் ஒரு வ ரின் தொடர்பு காரணமாக. நாவல் பற்றி விரிவான ஒரு விமர்ச னத்தை எனக்கெழுதவதாகக் கைலாசபதி அவர்கள் தெரிவித் திருந்த தொடர்பொன்று மாத் திரமே எம்மிடையே இருந்து வந்தது.
அந்தச் சம்யதில் பல்வேறு பொறுப்புக்களும் நெருக்கடிகளும் இருந்தபோதும், விழா வுக் கு வருகை தருவதாகக் கைலாசபதி அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். பின்னர் ஒருவாரம் கடந்து விழா வுக்கான அழைப்பிதழுடன் ஒரு தினம் வளாகத்துக்குச் சென் றேன். வளாகத் தலைவரின் அறை வாயிலிலே சிலர் கூடி நின்ருர் கள். அங்கு நின்ற பணியாளி
 

டம் சென்று கைலாசபதி அவர் களைச் சந்திக்க வேண்டுமென நான் கேட்டுக் கொண்டபோது, நேர்முகப் பரீட்சை ஒன்று நடை பெறுவதாகவும், இப்போது அவ ரைச் சந்திக்க முடியாதென்றும் பணியாள் தெரிவித்தார். நான் எனக்குள்ளிருந்த நம் பிக் கை காரணமாசு, நான் வந்திருக்கும் செய்தியை அவருக்குத் தெரிவிக் குமாறு கேட்டுக் கொண்டேன்: செய்தி கிடைத்த மறு கணம் நேர்முகப் பரீட்சையை இடை நிறுத்திவிட்டு, என்னை உள்வே வருமாறு கைலாசபதி அவர்கள் அழைத்தார்கள். AY
எங்கள் கல்லூரியில் விழா நடைபெறவிருக்கும் குறித் த தினத்தில், வளாகம் சம்பந்த மான அவசரக் கூட்டமொன்று கொழும்பில் இருப்பதாக அவர் தெரிவித்தபோது, அழைப்பிதழ் களை அச்சிட்டு முடித்துவிட்ட தால் இந்த இக்கட்டான நிலை மையில் என்ன செய்வதென்றே எனக்குப் புரியவில்லை. எனக்குரு வாகி இருக்கும் சிக்கல்ை விளங்கிக் கொண்ட அவர் நண்பர் சிவநே சச் செல்வனை அழைத்து வெளி யீட்டுரையை நிகழ்த்துவிக்குமாறு ஆலோசளை சொன்னர். ஆளுல் அழைப்பிதழில் அவருடைய பெயரையே நாம் அச்சிட்டுவிட் டோம் என்பதனை நான் சுட்டிக் காட்டினேன். அப்போது நடந்து கொண்டிருந்த நேர்முகப் பரீட் சையை இடைநிறுத்தம் செய்து விட்டு, தமது அறையைவிட்டு வெளியே வந்து. வளாக நூல கத்துக்கு எ ன் னை அழைத்துச் சென்று, நண் பரி சிவநேசச் செல்வனைச் சந்தித்து, எனக்கு உருவாகி இருக்கும் நெருக்கடி யான சூழ்நிலையையும் எடுத்துச் சொல்வி, அந்த வெளியீட்டுரை யைச் செய்வதற்கான ஒழுங்கி னேச் செய்து முடித்துவிட்டே மீண்டும் நேர்முகப் பரீட்சை
யைத் தொடர்வதற்காகத் திரும் பிச் சென்ருர்,
கைலாசபதி அவர்களுடனுன் நேரடித் தொடர்பு இவ்வாறு எனக்கேற்பட்டபோதும், அவர் எனக்குப் புதியவரல்லர், அண் னத்துரை, கருணுநிதிகளை வெறி யோடு படித்து, வரதராசனில் மூழ்கித் திளைத்து, அகிலன். பார்த்தசாரதிகளில் G) լք մյ 8 லிர்த்து, காண்டேகரில் கிறங்கிப் போன காலகட்டங்களைப் படிப் படியாகத் தாண்டி வந்து ஈழத்து இலக்கியம், முற்போக்கு இலக் கியம் என்பவற்றைப் படி க்க ஆரம்பித்த காலத்திலேயே கைலாசபதி அவர்களை நான் அறிய ஆரம்பித தேன். பின்னர் வாசகன் என்ற நிலையிலிருந்து எழுத்தாளஞக அடியெடுத்து வைத்த காலத்தில், இலக்கியம் எப்படி இருக்க வேண்டும் என்ற எனது தேடலுக்குத் தமது விமர் சனச் செல்நெறி மூலம் வழி காட்டிகளாக  ைக லா சபதி, சிவத்தம்பி ஆகிய இருவருமே, எனக்கு மாத்திரமன்றி, மார்க் சிய - லெனினிஸக் கேட்பாட்டி னைத் தமது இலக்கியக் கோட் பா டா க க் கொண்டிருக்கும் ஈழத்து எழுத்தாளர்கள் அனைவ ரும்ே ஏதோவொரு வழி யி ல் அவர்களது தாக்கத்துக்கு - வழி
காட்டலுக்கு உள்ளானவர்கள் தான்,
இதேசமயம் , பின்னர் ஒரு
சந்தர்ப்பத்தில்  ைக லா ச பதி என்ற தனி மனிதனை விடுத்து, ஆய்வாளர் கைலாசபதியைக் கண்டித்தும் நான் விமர்சித்தி ருக்கிறேன். எனது கண்டனம், அ வருக் கும் எனக்குமிடையே இருந்துவந்த தொடர்பை மேலும் இறுகச் செய்ததே அன்றி ஒரு விரிசலை உருவாக்காமை கண்டு இன்றும் எனக்கு வியப்பாகவே இருக்கிறது:

Page 5
பாரதி நூற்ருண்டு விழாக் காலத்தை ஒட்டி, கைலாசபதி அவர்கள் பல ஆய்வுக் கட்டுரை களை எழுதிக் கொண்டிருந்தார் கள். ஈழத்துக் கவிஞர்களிடத் தில் பாரதியின் தாக்கம் பற்றித் தாம் எழுதிக் கொண்டிருக்கும் கட்டுரைக்கு, மறைந்த கவிஞர் களான அல்வாயூர் மு. செல்லையா மற்று ம் யாழ்ப்பாணன் ஆகிய இருவர்கள் பற்றியும் தகவல்கள் சில தேவைப்படுவ தாகவும் அதனை உடனே அனுப்பி வைக்குமாறும் ஒருதினம் எழுதி இருந்தார். தகவல்களைத் திரட்டி நான் அனுப்பிவைத்து. இரண்டு வாரங்கள் கழியுமுன்னர். அக் கட்டுரையின் அச்சிட்ட பிரதி ஒன்றினை அனுப்பி வைத்ததோடு ஈழத்துக் கவிஞர்கள் பற்றி லிரி வான ஒரு நூல் எழுதவிருப்பதா கவும் மேலும் பல தகவல்கள் வேண்டுமெனக் கேட்டிருந்தார். அவர் கேட்டுக் கொண்ட தக வல்களை நான் அனுப்பிவைத் தேன். ஆனல் கைலாசபதி அவர் கள். . ? அவர் வெளியிடுவதற் குத் திட்டமிட்டிருந்த அந்த
கடந்த 20 - 11 - 82 அன்று யாழ் றிம் மர் "மக்கள் இலக்கியம்" வெளியீட் விழா. விழா ஆரம்பிக்கும் நேரம் கட்ந்து விட்டதால், மிக அவசர மாக யாழ் ஆஸ்பத்திரிக்கு முன் னுள்ள பஸ்தரிப்பு நிலையத்தில் பஸ் வண்டியிலிருந்து இறங்குகி றேன். இறங்கிய வேகத்தில் நான் நடக்க ஆரம்பித்தபோது, என் பெயரைச் சொல்லி யாரோ அழைக்கின்ற குரல் என் காதில் விழுகிறது. நான் திரும் பி ப் பார்க்கிறேன். தமது ஸ்கூட்ட ரில் அமர்ந்த வண்ணம் அவர் சிரித்த முகத்தோடு எ ன் னை நோக்குகிருர் . நான் அருகே சென்றதும் நான் போய்க்கொண்
ஆமாம் இறுதியாக..
மண்டபத்தில்
டிருக்கும் விழாவைப் பற்றி விசாரிக்கின்றர். இறு தி யாக, Golf GTIT கத்தில் நீண்ட நேரமாகக் கூட் டமொன்று நடைபெற்றதாகவும் தாம் போட்டுக் கொன்ஞம்
கண்ணுடியை மிக அவசியமாக
மாற்ற வேண்டி இருப்பதால், அத்தக் களைப்புடன் வந்துபோக வேண்டி இருந்தது என்பதனை யும் கூறி. "எனக்குக் களைப்பாக இருக்குது தெணியான்; நான் வாறன்" என்று விடைபெற்றுக்
GoldsterLITii.
பின்னர் என்னைச் சந்தித்த மறுதினமே அவர் நோய்வாய்ப் பட்டுக் கொழும்புக்குச் சென்று விட்டதாக நான் அறிந்தேன். அன்று இறுதியாக நாம் பிரிந்து கொண்ட சமயம் அவர் கூறிய அந்த வார்த்தைகளில் எந்த விசேஷ அர்த்தமும் இருந்ததாக எ ன க் குத் தோன்றவில்லை. ஆன ல் இன்றே, "எனக்குக் களைப்பாக இருக்குது தெணி
யான்: நான் வாறன்" என எதை நினைத்துக் கொண் டு சொன்னரோ என்று எப்படி
எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியும்? حصہہ حملہ سیہہ حیہ حملہ حصہ حصہ حصہ
வாழ்த்துக்கள்
பிரபல எழுத்தாளரும் கவி ஞருமான திரு. இ. முருகையன் முல்லைத்தீவு மாவட்டக் கல்விப் பணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். அண் ணு ரு க்கு எழுத்தாளர் சார்பிலும் மல்லி கையின் சார்பிலும் வாழ்த்து கலையும் மகிழ்ச்சியையும் தெர் வித்துக் ஈொள்ளுகிருேம்.
- ஆசிரியர்

1977 ம் ஆண்டு கலாச்சார அமைச்சு நடத்திய சிறுகதைப் போட்டிக்கான முதற் பரிசை நாவலப்பிட்டியில் நடந்த கலாச் சார விழாவில் பெற்றுக் கொண்டு சான்றிதழோடு கொழும்பு திரும் பினேன். கொழும்பு புத்தகக்
கடையொன்றின் நண்பனுக்கு பெருமிதத்துடன் பரிசுச் சங்க தியைக் கூறி சான்றிதழையும்
காண்பிக்கின்றேன். 'கைலாசபதி கையொப்பமிட்டுள்ளார். அப்ப நீ பெரிய எழுத்தாளன்தான்" என்று நண்பன் பாராட்டுகின்றன்.
எ னது படைப்பை விட க்ைலாசின் உறுதிப்படுத்தின கையொப்பம் உசத்தியானதா? என்று என க்கு ஸ் ஒரு மன ஆதங்கம். நண்பனின் வாய் முறைப்பாடு மூலம் கைலாசபதி என்ற பெரிய தோற்றமொன்று என்முன் விரிகிறது அவ்வளவு தான். பிறகு இலக்கிய விவகா ரங்களில் நேரத்தை வீணுக்காமல் அறம்புறமாக எழுத்து முயற்சி భీషు மும்முரமாகியிருந்தேன்,
1980 ம் ஆண்டு காவலூரில் ரு இ லக் கி ய க்கூட்டத்தில் சபையிலேயே என் னைக் குறிப் பி ட் டு "குத்தல்" செய்தார். மன்னனிடம் அதி லும் எவ்வளவு அழுத்தம். அதிக வாசகர்களை. அதிக, அதிக. என்று அதிலேயே கவனமாக இருந்த எனக்கு கைலாசபதியின்
பேராசிரியரும்
ஒரு சிறுகதை தொகுதி முன்னுரையும்
காவலூர், எஸ். ஜெகநாதன்
குத் த ல் முரண்பட்டிருந்தது.
பிற்பாடு நான் பேராசிரியருடன்
7
உரையாடிய போது, சில சிறு கதைகளைத் தரமாக இருப்பதா கவும் மல்லிகை போன்ற இலக் கியச் சஞ்சிகைகளில் எழுதுங் கள் என்றும், எழுதும் தொகை யைக் குறைத்து மல்லிகையில் தொட்ர்ந்து சிலகாலம் எ வந்தால் உருவாகி விடுவீர்கள் என்றும் கூறிவைத்தார். இதன் பின்னர் கைலாசபதி அவர்களைப் பயிலவும், அவருடன் பழகவும் வாய்ப்பு ஏற்பட்டது.
பேராசிரியர் கைலாசபதி யைப் படித்த, அவரது பேச்சைக் கேட்ட, அவரோடு பழகிய எவ ரும் அவரது ஆளுமைக்கு ஆட் படாமல் இருக்க முடியாது. தொடர்ந்து மல்லிகையில் எழுதி வந்த ஆரோக்கியமான கால கட்டத்தில் 81 இன் இறுதியில் டொமினிக் ஜீவாவின் முயற்சி யால் யுகப்பிரசவம்" சிறுகதைத் தொகுப்புக்கான க  ைத க ள் தமிழகத்துக்கு அனுப்பிய பின் னர் அ தன் பிரதிகளின் பிறி தொரு தொகுப்பு கையிலே. யாரிடம் முன்னுரை பெறுவது? கைலாசபதிதான் என்முன் விஸ்வ ரூபமாகக் காட்சி தருகின்றர்.
நேரில் சென்றபோது பேரா சிரியர் நிறைந்த வேலைப் பளு வோடு இருந்தார், இருபது

Page 6
கிதைகள்வரை. . ஒரு மாதத்
தில் முன்னுரை வேண்டும் என்றுஉறது.
தயக்கத்துடன் இழுக்கின்றேன். உவப்போடு பெற்றுக் கொள்ளு கிருர், "பெரும்பாலானவற்றை ஏற்கனவே படித்த ஞாபகம். என்ருலும் ஒன்ருகப் படித்து குறிப்பெடுத்து விட்டு அதுபற் றிப் பேசுவோம் மு ன் ரு வ து கிழமை வாருங்கள்" என்கிருர்,
மூன்ருவது வாரத்தில் ஒரு நாள். . ஒவ்வொரு கதைகளைப் பற்றி யும், குறிப்பெடுத்துப் பாராமலே அ ல சு கி ன் ரு ர். எனக்கு மலைப்பு. கைலாசபதி யின் ஆற்றல் மலைப்புக்குரியது தான். அவரது ஆளுமை மலை போன்றதால், எமக்கு மலைப் புக்குரியதுதான். குறை நிறை களைக் கூறி "இதைத்தான் எழு தப் போகிறேன் ச ரி தானே எ ன் கி ழு ர். அந்தப் பண்பு யாருக்கு வரும்? அடுத்தவாரமே
மென்மையம், கவர்ச்சியும் அழகும் நிரம்பிய நவீன ஸ்தாபனம்
73.
தரமான பல்வேறு சுவை நிரம்பியதுமான
ஐஸ்கிறீம் மதுரமான சிற்றுண்டி
வகையருக்களுக்கு
குடும்பத்தினர் அஃனவரும் குதூகலித்து மகிழ்ந்திடப்
புதிய நிறுவனம் N கல்யாணி கிறீம் ஹவுஸ்
கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
முன்னுரை தயாராவிகிடுகின் எனது முதல் நாவலான "நாளை" வெளிவர முன்னரே கையெழுத்துப் பிரதி ஒன்றை அவரிடம் கொடுத்து அபிப்பிரா யத்துக்காகக் காத்திருத்தேன். படித்துப் பார்த்து அபிப்பிராயம் கூறு வதாக சொன்னர்b என் அடுத்த நாவலுக்கு நீங்கள்தான் முன்னுரை எழுத வேண்டும் என்றேன். அவர் படித்த மூன்ரு வது வாரமே "நாளை" நூலுருப் பெற்றது.
அடுத்த நாவல் ‘விடியும்" எவரைக் கொண்டு முன்னுரை எழுத வேண்டுமென்று எண்ணி யிருந்தேனே? எவரிடம் கேட்டு வைத்தேனே? அவரான அமரர் கைலாசபதிக்கே அந்நூலை சமர்ப் பணம் செய்ய நேரிட்டு விட்டது: நாம் கொடுத்து வைத்தது அவ் வளவுதான்! O
i
 

தமிழியல் வரலாற்றிற்
கைலாசபதியின் பங்களிப்பு
-- SENTAaba
பேராசிரியர் கைலாச பதியை எனது மாணவனக, பத் திரிகை ஆசிரியனுக, பல்கலைக்
கழக ஆசானகி, ஆராய்ச்சியாள
னக, இலக்கியவாதியாக, உடன் நிர்வாகியாகக் கடந்த முப்பது
ஆண்டுகளாக நான் அறிந்திருக் கின்றேன். பேராதனைப் பல்கலைக்
கழகத்திலே தமிழைச் சிறப்புப்
பாடமாகப் பயின்ற காலத்து, எனது அபிமானத்துக்குரிய மாண வனகத் திகழ்ந்தார். பேராசிரி பர் கணபதிப்பிள்ளையினல் எழு தப்பட்டு என்னற் தயாரிக்கப் பட்ட உடையார் மிடுக்கு. தவ
ன எண்ணம், சுந்தரம் எங்கே, துரோகிகள் என்னும் நான்கு நாடகங்களில் நடித்துக் கலேயுல திலே அறிமுகமானர். பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்க இதழாகிய இளங்கதிரில் பல கட்டுரைகள் எழுதி வந்தார். இவற்று பாரதிக்குப் பின் வசன இலக்கி பங்கள், என்பது குறிப்பிடத் தக்கது. மாணவனுக இருந்த ாலத்திலேயே பாரதி புற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். எனவே, பல்கலைக் கழகத்திற் கலைத்துறையிலும் எழுத் துத் துறையிலும் பெற்ற அனுபவம அவரது பிற்காலக் கலை இலக்கி யத் தொண்டிற்கு அடித்தளமாக அமைக்க க.
ತಾ. வித்தியானந்தன்
கைலாசபதி அவர்கள் கடந்த கால் நூற்றண்டுத் தமிழினல் வரலாற்றிலே முக்கிய பங்கினை வகித்தார். அவரது பங்களிப்புக் களை ஆதாரமாகக் கொண்டு அவ ரது ஆளுமையை இருவகையாக
நோக்கலாம். ஒன்று தமிழா ராய்ச்சித் துறையிலே அவர் வகித்த பாத்திரம். மற்ருென்று
நல்ல தமிழிலக்கியத் துறையின் திசையறி கருவியாக அவர் பயன் பட்டமை. பல்கலைக்கமகக் கிர் தமிழாசிரியன் என்ற :ಜ್ಜೈ இவ்விருதுறைகளின் சங்கமமாக அவர் திகழ்ந்தார். சில காலம் பத்திரிகை ஆசிரியணுக அவர் வகித்த பதவியின் அனுபவம் இவ் விருதுறை இணைப்புக்குத் துணை செய்ததெனலாம். அவர் பணி யினைப் பற்றிய ஆய்வு எதிர் காலத்தில் நிகழக்கூடிய மதிப் பீட்டிற்குரிய கருத்துருவாக்கத் திற்குப் பயன்படும் எனக் கருது கின்ருேம்.
தமிழியல் ஆய்வாளர் என்ற வகையிலே கலாநிதி கைலாசபதி அவர்களின் பணிகளது முக்கியத் துவத்தை நாம் விளங்கிக் கொள் வதற்கு இருபதாண்டுகட்கு முற் பட்ட தமிழாராய்ச்சிச் சூழலைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.
தமிழாராய்ச்சி இலக்கியங்களையும்
என்பது :லக்கணங்
9

Page 7
களையும் பதிப்பிப்பது, கற்றுச் சுவைப்பது, மரபைப் பேணுவது என்ற அளவோடு அமையாமல் தமிழர் சமூகத்தின் பண்பாட்டு வரலாற்றை அறிவியல் பூர்வமாக அணுகியறிதல் என்ற நோக்கில் விரிவடையத் தொடங் கி ய காலப்பகுதியது. இப்பணிக்குக் காய்தல், உவத்தல் அற்ற நடு நிலையான ஆராய்ச்சி நோக்கும் சமூகத்தையும் மொழி இலக்கி யம் என்பவற்றையும் நுணுகி நோக்கிச் சர்வதேசத் தரத்தில் கருத்துக்களை வெளியிடத்தக்க ஆற் ற லும் தேவைப்பட்டன. தமிழகத்திலே பேரா சிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை இவ் வகை ஆராய்ச்சிக்கு வித்திட்டி ருந்தார். ஈழத்திலே பேராசிரியர் க. கணபதிப்பிள்ளே இத்தகைய முயற்சிகளுக்குக் களம் அமைத்தி ருந்தார். தமிழகத்தைவிட ஈழத் திலேயே இத்தகைய ஆய்வுக்கு வாய்ப்பு அதிகம கக் காணப்பட் டது. தமிழகத்திலே அரசியல் L. GioTTL LGB) j; காரணிகளாலே தமிழ் மரபு பேணுவதில் காணப் பட்ட தீவிரம் ஆராய்ச்சித் துறை களைப் பாதித்தன என்பதையும், ஈழத்திலே அத்தகைய பாதிப்புக் களற்ற சுதந்திரமான ஆராய்ச் சிக்கு வாய்ப்பு இருந்ததென்பதை யும் நாம் உணர வேண்டும்.
இலங்கைப் பல்கலைக் கழகத் தின் வழிகாட்டலிலே தமிழா ராய்ச்சியைச் சர்வதேச தரத்திற் பேணத்தக்க மாணவர் உருவாயி னர். த மிழகத்திலே எஸ், வையா புரிப்பிள்ளை ஆராய்ச்சி பூர்வமாக முன்வைத்த கருத்துக்கஃ வளர்த்
துச் செல்லும் வாய்ப்பு அன் றைய காலப்பகுதியில் இங் கைப் பல்கலைக் கழகத் தமிழா
ராய்ச்சியாளருக்கே கிடைத்தது. இந்த வாய்ப்பினை நன்கு பயன் படுத்திக் கொண்டதன் மூலம் கடந்த இருபது ஆண்டுகளின் தமிழாராய்ச்சி வரலாற்றிலே
0
னதும் தமிழ்
தமது ஆளுமையை நிறுவியவர் களில் ஒருவராகப் பேராசிரியர்
கைலாசபதி திகழ்ந்தார்.
பேராசிரியர் கைலாசபதியின்
இடைவிடாத முயற்சியாலே
தமிழாராய்ச்சித் துறை யிலே
வளம்படுத்தப்பட்ட துறைகளை
இருவகைப்படுத்தலாம். ஒன்று
ஒப்பியல் நோக்கு, மற்றது சமூக
வியற் பார்வை. தமிழ் மொழியி
னதும் இலக்கியத்தினதும் வர லாற்று வளர்ச்சியை ஆராய்
வதற்குத் தமிழ் மொழியோடு தொடர்புடைய பிறமொழிகளி போலப் பாரம்
பரியமுள்ள அந்நிய மொழிகள தும் வளர்ச்கி வரலாற்றை
அறிந்து தொடர்புபடுத்தி நோக் குவது அவசியமாய் இருந்தது: இது ஒப்பியல் நோக்கின்பாற் படும். மொழி இலக்கியம் என் பவற்றுக்கும் அவற்றுக்குக் கள மாகவுள்ள சமூகத்திற்குமுள்ள உறவை விளங்கிக் கொள்வதோடு அவற்றின் சமுதாயப் பயன்
பாட்டு அம்சங்களைக் கண் டு கொள்வதும் சமூகவியற்படும்.
இவ்விருவகைப் பார்வைகளின் பெறுபேறுகளாகவே கைலாசபதி
யவர்களது ஆராய்ச்சி வெளியீடு கள் அமைந்துள்ளன.
அவர்களின் ஆராய்ச்சிகள் யாவற்றிலும் கனதியுடையதாக
வும் அனைத்துலக அறிஞர்களது
கவனத்தைக் கவர்ந்துள்ளதாக வும் அமைவது என்ற தமிழ் வீர யுகப் பாடல்களைப் பற்றிய ஆய்வு நூலாகும். அவரது கலா
நிதிப் பட்ட ஆய்வேட்டின் நூல்
வடிவமான இது தமிழ்ச்சங்கச் சான்ருேர் செய்யுட்களைக் கிரேக்க காவியங்களுடன் ஒப்பிட்டு அணு கியது. பல ஆண் டு களு க் கு ஜி. யு. போப், எஸ். கிருஷ்ணஸ் சுவாமி ஐயங்கார் என். கே. சித்

தாந்தா முதலியவர்கள் இத்த கைய ஒப்பீட்டுக்கான பொதுப் பண்புகள் இருப்பதாகக் கருதி யிருந்தனர். பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை இத்தகைய ஒப்பீட்டின் அவசியத்தைத் தமது எழுத்துக்களில் வலியுறுத்தியிருந் தார். கைலாசபதி அதனை த் தமது சாதனையாக்கினர். இவ ரது இவ் வாய் வு தமிழியல் ஆராய்ச்சியிற் புதிய கருத்தோட் டங்களைத் தந்தது. செக்கோஸ் லாவிய தமிழறிஞர் கமில் சுவல பில் தமது தமிழிலக்கிய வர லாற்றுநூலிலே இந்நூலின் தரத் தினை விதந்து பாராட்டியுள்ளார்.
கலாநிதிப் பட்ட ஆய்வுக்கு முன்னரும் அது முடிந்து மீண்ட பின்னரும் கைலாசபதியவர்கள் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினர். அனைத்துலக ஆராய்ச் சிக் கருத்தரங்குகளிற் கலந்து கொண்டார். இவ்வாறு எழுதப் பட்ட கட்டுரைகள் பல நூல் வடிவம் பெற்றுள்ளன.
** இரு மகாகவிகள். பண் டைத் தமிழர் வாழ்வும் வழி பாடும், தமிழ் நாவல் இலக்கி யம், ஒப்பியல் இலக்கியம், அடி யும் முடியும், இலக்கியமும் திற
ஞய்வும், பார தி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும், சமூக வியலும் இலக்கியமும், திறனுய்
வுப் பிரச்சினைகள், நவீன இலக் கியத்தின் அடிப்படைகள்" ஆகிய தலைப்புக்களில் வெளிவந்த இந் நூல்களும். இ. முருகையனேடு இணைந்தெழுதிய ‘கவிதை நயம்" நூலும் அவரது சமூகவியற் பார்வை, ஒப்பியல் நோக்கு என் பவற்றின் அறுவடைகளாக எமக் கும் கிடைத்துள்ளன. தமிழர் பண்பாட்டு வரலாற்றின் வேறு காலகட்டங்களும், பல் வேறு விடயப்பரப்புக்களும் இவ
Liou &
ரது ஆராய்ச்சிக்கு உட்பட்ட மையை இந்நூல்கள் உணர்த்து கின்றன.
நாயன்மார் பற்றியும் சித்தர் கள் பற்றியும் புதிய கருத்துக் 33T Galgiu9 -i-rri. LD5T és பாரதியாரை வங்கத்து ரவீந்தர நாத தாகூருடன் ஒப்பிட்ட தோடு பாரதி பற்றிய ஆய்வுக் குப் பல சிந்தனைகளை முன்வைத் தார். சோழப் பெருமன்னர் காலத்துச் சமூக பொருளாதா ரத்திற் சைவசித்தாந்த தத்துவத் தினைப் பொருத்தி நோக்கினர். நல்ல தமிழிலக்கியங்களின் வர லாற்றை அணுகுவதற்கான வழி வ  ைக களை உணர்த்தியதோடு மேல்நாட்டுத் திறனுய்வுக் கருத் துக்களைத் தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இக்கட்டுரை நூல்கள் அவருக்கு ஈழநாட்டில் மட்டுமன்றித் தமிழகத்திலும் பிற நாடுகளிலும் பரந்த அறி முகத்தினை ஏற்படுத்தின.
ஈழத்தின் ஆராய்ச்சியாளர் என்ற வகையிலே ஈழத் துத் தமிழர் பண்பாட்டிற் கைலாச பதி குறிப்பிடத்தக்க பங்களிப் பைச் செய்தார். பூரீல பூரீ ஆறு முகநாவலர், பாவலர் தெ. அ. துரையப்பாபிள்னை, சபா பதி நாவலர், விபுலானந்த அடிகள் ஆகியவர்களின் பணிகளை மதிப் பிட்டார். ஈழத்தறிஞர்கள் நாவ லரை ஈழத்துத் தேசியவாதத்தின் முன்னேடி என்று நிறுவுவதற்கு மேற்கொண்ட முயற் சி யிற் கைலாசபதியின் பங்கு கணிச மானது. ஆறுமுகநாவலர் சபை தயாரித்த நூற்ருண்டு விழா மலரின் பதிப்பாசிரியராக கடமை யாற்றினர்.
ஓர் ஆராய்ச்சியாளனுக்கு இருக்க வேண்டிய முக்கிய பண்பு தனக்குக் கிடைக்கும் வாய்ப்புக்

Page 8
கிள் அனைத்  ைத யும் தனது ஆராய்ச்சித்திறனை வெளிக்கொண ருவதற்கும் பயன்படுத்தும் திற ஞகும். இத்திறன் கைலாசபதி யிடம் நிறைந்திருந்தது. தமிழி யல் ஆய்விலே அவர் ஒரு முழு
நேர ஊழியனுகப் பணி செய் தார். மாணவனுகவும், பின் பத்திரிகையாளனுகவும், அதன்
மேற் பல்கலைக்கழகத் தமிழாசிரி யராகவும் அவர் பணி செய்த காலங்களிலே திட்டமிட்டுத் தம் ஆய்வுத் திற னை வளர்த்துக் கொண்டார். முப்பதாண்டுகள் அவருடன் தொடர்பு கொண்ட வன் என்ற முறையிலும், அவரை உருவாக்கிய ஆசிரியன் என்ற வகையிலும் அவரது இந்த வளர்ச்சியை நான் அவதானித் துள்ளேன்.
ஆராய்ச்சியாளர் எ ன் ற வகையில் ஆய்வரங்குகள் பலவற் றில் கலந்து உரைகள் நிகழ்த்சி வும் தலைமை வகிக்கவும் அவருக்கு வாய்ப்புக்கள் கிட்டின. அவற்றை அவர் சிறப்புறப் பயன்படித்திக் கொண்டார். 1970 ம் ஆண்டில் பாரிஸ் மாநகரில் நடைபெற்ற மூன்ருவது அனைத்துலகத் தமிழா ராய்ச்சி மாநாட்டில் என்னேடு இணைந்து ஈழத்தினைப் பிரதி நிதித்துவப்படுத்தினர். 1981 ல் மதுரையில் நடைபெற்ற ஐந்தா வது தமிழாராய்ச்சி மாநாட்டிலே எம்மோடு ஈழத்தின் பிரதிநிதி யாகக் கலந்து கொண்டதோடு, பொதுநிலை அரங்கொன்றிற்குத் தலைமை தாங்கினர். அதே ஆண் டில் மதுரைப் பல்கலைக் கழகத் தாற் சிறப்பு  ைர நிகழ்த்த அழைக்கிப்பட்டார். இவை அவ ரது ஆற்றலும் புகழும் பெருகத் துணை செய்தன.
ᏗᏰ
அவர் நோய்வாய்ப்ப்டுவ தற்கு முற்பட்ட சில மாதங்கி ளிலே தமிழியல் ஆய்வின் குறிப் பிடத்தக்க இரு முக்கிய துறை களிலே கவனம் செலுத்தியிருந் தார். ஒன்று ஈழத்துத் தமிழிலக் கிய வளர்ச்சி தொடர்பானது. மற்றது, மகாகவி பாரதி பற்றி யது. குறிப்பாகப் பாரதி நூற் ருண்டையொட்டி பாரதி பற்றிய ஆழமான ஆய்விலே திட்டமிட்டு உழைத்தார். உடல் சுகவீனமுற் றுப் படுக்கையாக இருந்தபோது கூடப் பாரதி பற்றிய நூலொன் றுக்கு முதலுரை வழங்கினர். மரணம் நெருங்கும் வரை தமி ழாராய்ச்சியை மூச்சாகக் கொண் டிருந்தமைக்கு இது சான்ருகும்.
பல்கலைக்கழக மட்டத்தில் ஆராய்ச்சியறிஞராகத் திகழ்ந்த பேராசிரியர் கைலாசபதி நல்ல இலக்கியகாரர் மத்தியில் ஓர் இலக்கிய வாதியாக திகழ்ந்தார். நவீன இலக்கிய வளர்ச்சியை மதிப்பிடுபவராகவும் படைப்பா ளிகளை ஊக்குவிப்பவராகவும் பணி செய்தார். தி ற ஞ) ய் வு தொடர்பான இப்பணி அவரது ஆராய்ச்சித் திறனுக்குரிய சிறப் L{6ðl-tug!-
தமிழில் நவீன இலக்கியம் என்ற சொற்ருெடர் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம்,
திறஞய்வு ஆகிவவற்றைச் சுட்டி
நிற்பது. சடந்த ஒரு நூற்ருண் டுக் காலப் பகுதியிலேயே தனி வளர்ச்சி பெற்ற இவை, முதல் அரை நூற்ருண்டுக் காலப் பகு தியிலேயே தமிழ் உயர் கல்வி யாளரின் கவனத்தைக் கவர வில்லை. மரபுவழித் தமிழறிஞர் மத்தியில் இவைபற்றியவொரு தீண்டாமை” நிலவியது. இச் சூழ்நிலையை இலங்கைப் பல்கலைக்

கழகம் உடைத்தெறிந்தது. பத் தொன்பதாம் இருபதாம் நூற் முண்டுத் தமிழிலக் கி ய வர லாற்றை மாணவருக்கு கற்பிக் போது பாரதிக்கு முன்னும் பின் னும் எழுந்த கவிதை இலக்கியம் பற்றியும் வசன இலக்கியம் பற் றியும் விரிவாகப் போதனைகள் நடத்தியது. இலக்கிய விமர்சன மும் பாடமாகக் கற்பிக்கப்பட் டது. இலங்கைப் பல்கலைக் கழ கம் காட்டிய வழியில் நடந்த கைலாசபதி நல்ல தமிழிலக்கிய வளர்ச்சியை நுணுகி நோக்குந் திறனைத் தன்னில் வளர்த்துக் கொண்டார். தமிழைச் சிறப்பா கக் கற்றபின் பொது சனத் தொடர்பு சாதனமான பத்திரி  ைக யில் பணியாற்றுவதற்கு இங்கு கிடைத்த வாய்ப்பு இதற் குப் பெருந்துணையாக இருந்தது.
தினகரன் பத்திரிகை ஆசிரி
யராக அவர் இருந்த காலத்திலே
தமிழகத்திலும் ஈழத்திலும் நவீன இலக்கியகாரராகத் திகழ்ந்த பல ருடன் அவருக்கு நேரடி த் தொடர்பு கொள்ளும் வாய்ப் புக் கிடைத்தது. சமகால இலக் கியப் போக்கின் நாடித்துடிப்பை உணர்ந்து செயற்பட இத் தொடர்பு துணைசெய்தது. பத்தி ரிகைப் பணியை விட்டு நீங்கிய பின்னரும் இத்தொடர்பும் அனு பவமும் தொடர்ந்தன. கைலாச பதி என்னும் இலக்கியவாதியை உருவாக்கியதில் இவ ற் றிக் கு முக்கிய பங்குண்டு.
இலக்கியவாதி என்ற வகை யிற் கைலாசபதியின் பணிகள் இருவகையில் அ ைம் ந் த ன. ஒன்று, நவீன இலக்கியங்களை வழிநடத்தியமை, மற்றென்று படைப்பாளிகளை வழிநடத்தி ய்மை, இந்த இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலத் தொடர்புடையவை,
திறனய்வு செய்து மதிப்பிடும் பொழுதே வழிகாட்டுபவராகவும் அமைந்தார். திறனய்வு தொடர் பான தனது அளவு கோல்களைத் துணிவுடன் முன்வைத்தார். தாம் சார்ந்து நின்ற பொதுவு டமைக் கோட்பாட்டின் அடிப் படையில், இலக்கியத் திறனுய் விலே சமூகவியல் நோ க் கினை வலியுறுத்தினர் இலக்கியம் படித்து இரசிப்பதற்கு மட்டுமே உரியதென்ற கலை கலைக்காக" கோட்பாட்டை 665T60)LDtl IIT 5 மறுத்தார். உருவத்தைவிட உள் ளடக்கத்திற்கு முக்கியம் தர வேண்டுமென்பதனை வற்புறுத்தி ஞர். இலக்கியத்திற்கு ஒரு சமூ கப்பணி உண்டென்று அவர் திட மாக நம்பினர். இக்கருத்துக்கள் சமகாலத்திற் பெரும் வாதப்பிர திவாதங்கனை ஏற்படுத் தி ன. அவற்றை அவர் துணிவுட ன் எதிர் கொண்டார்.
சம கால இலக்கியங்களை மதிப்பிட்டமை என்ற வகையில் இளங்கீரனின் "நீதியே நீ கேள்", செ. கணேசலிங்கத்தின் ‘செவ் வானம்" ஆகிய நாவல்களுக்கும், தமிழன்பனின் "தோணி’க் கவி தைத் தொகுதிக்கும், "நாடகம் நான்கு" என்ற நாடகத் தொகு திக்கும் வழங்கிய முன்னுரைகள் குறிப்பிடத்தக்கன. மேலே சுட் டிய தமிழ் நாவல் இலக்கியம் என்ற நூலில் அமைந்த கட்டு ரைகளிற் சம கால நாவலாசிரி யர்கள் பலரை அவர் மதிப்பிட் (Беiтотпri.
தம் க் கென ஒரு கோட் பாட்டை வரித்துக் கொண்ட போதிலும் அதனேடு உடன்பா டற்றவரையும் இலக்கியகாரரி என்ற வகையில் அவர் நேசித் தார். தனது அணியைச் சாரா தவர்களது படைப்புக்களுக்கும்
1.

Page 9
முன்னுரைகளும் அணிந்துரை களும் வழங்க அவர் பின்னிற்க வில்லை. இது அவர் அணியைச் சார்ந்தவரிடத்து கசப்பை ஏற் படுத்தியதுமுண்டு. ஒரு குழுவின ருடன் மட்டும் கட்டுப்பட்டு நிற் காமல் எல்லாரையும் அணைத்துச் செல்லும் போக்கைக் கடைப் பிடித்தார்.
வழிகாட்டி என்ற வகை யிலே ஈழத்து முற்போக்கு இலக் கியத்தின் தலைமைச் சிந்தனையா ளஞக அவர் திகழ்ந்தார். அத னுடைய கடந்த முப்பதாண்டுக் கால வளர்ச்சியிலே தன்னுடைய இலக்கிய வாழ்க்கையைப் பிணைத் துக் கொண்டார். தனது ஆளு
 ைம யி ஞ ல் அவ்வியக்கத்தைத்
தன்னையே மையமாக வைத்து வளர வழிகாட்டினர். ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் மட்டு மன்றித் தமிழகத்து முற்போக்கு எழுத்தாளர்களும் கைலாசபதி யின் ஆலோசனைகளை நாடிநின் றனர்.
60)56). TEF ஈழத்துத்
வழிகாட்டியாகக் பதி ஆற்றிய பணி தமிழிலக்கியத்தில் இரு வ  ைக் வளர்ச்சிக்குத் தூண்டுகோலா யிற்று. ஒன்று சமுகப் பொரு ளாதார ஏற்றத் தாழ்வுகட்கு எதிரான முற்போக்ரு இலக்கிய வளர்ச்சி. மற்றது ஈழத் தி ன் தேசியப் பண்புடனுன தமிழிலக் கிய வளர்ச்சி.
கைலாசபதியவர்கள் தினக ரன் ஆசிரியராகக் கடமையாற் றிய காலத்தில் ஈழத்துப் படைப் பாளிகளுக்கான பயில்களமாக அதனை விரிவுபடுத்தினர். இது ஏனைய தமிழ்ப் பத்திரிகைகளின் இலக்கியப் போக்குகளிற் குறிப் பிடத்தக்க தாக்கத்தை விளை வித்து, ஈழத்தில் நவீன தமிழி லக்கிய வதற்கான சூழ்நிலையைத் தோற் றுவித்தது.
சஞ்சிகைகள் தோன்று ,
தொடர்ந்து கடந்த கால் நூற்ருண்டுக் காலப்பகுதியின் ஈழத்து இலக்கியப் போக்கின் உணர்வோட்டத்தினை அவதா னித்து அவ்வப்போது பத்திரிகை வானுெலி. மேடைகள் என்பவற் றில் அவர் வெளியிட்ட கருத் துக்கிள் ஈழத்தின் இக்காலப் பகுதி இ லக் கி ய வரலாற்றை எழுத முயல்வோர்க்கு அருந்துணை யாக அமையவல்லன. இவற்றுட் பல இன்னும் நூல்வடிவம் பெற வில்லை. அவை நூல்களாக வெளி வர வேண்டியதவசியம்.
ஈழத்து நவீன இலக் கி ய உலகம் அனைத்துலகக் கவனத் தைக் கவரத்தொடங்கிய நிலை
யில் ஏற்பட்ட இழப்பு பாரிய
இழப்பாகும். கைலாசபதி விட் டுச் சென்ற வழியில் ஒரு புதிய தலைமுறை உருவாவதற்கு உழைப் பது எமது கடமையாகும்.
O
ELaS LEL S SEELLLEELLLLLELESMMt
சென்னை நர்மதா வெளியீட்டாளர் சமீபத்தில் வெளியிட்ட
டொமினிக் ஜீவாவின்
ஈழத்திலிருந்து
ge 亦
இலக்கியக்குரல்
இலக்கியப் பரப்பில் ஒரு பரிணும வடிவம்
தேவையானவர்கள் மல்லிகை யுடன் தொடர்பு கொள்ளலாம்;
LaSLAABaLLEEttLLAtLLEELMLLLgSEES
4.

இற்றைக்கு முப்பது ஆண்டு
களுக்கு முன், "வாழ்வும் எழுத் தும்" என்னும் மகுடமிட்டு,
சில கட்டுரைகளை இலங்கையில் ஒரு கல்லூ ரி (உயர் பள்ளி) மாணவர் எழுதினர். அவர்தான் க. கைலாசபதி அக்கட்டுரைகள் பிறநாட்டு நல்லறிஞர் சிலரை, குறிப்பாக, பிரித்தானிய எழுத் தாளர்களைத் தமிழ் மக்களுக்கு அறிமுகஞ் செய்வனவாக இருந் தன. பிற்காலத்திலே பிரபல மான விமரிசகராக வளரவிருந்த இளைஞரொருவரின் ஆ ர ம் ப முயற்சிகள் அவை,
இப்பொழுது பேராசிரியரின் மறைவுக்குப் பிறகு, இவரைப் பற்றியும் "வாழ்வும் எழுத்தும்" என்று தலைப்பிட்டு விரிவாக எழுதிட வேண்டிய நிலை யில் இலக்கிய அபிமானிகள் உள்ள ன ர், வரலாற்றுணர்வுடைய எழுத்தாளர்கள், பலதரப்பட்ட ஆதாரங்களையும் சேகரித்து நிதா னமாகச் செய்ய வேண்டிய எழுத் துப் பணி அது. அப்பணி நிறை வேறுவதற்குச் சில ஆண்டுகள் தேவைப்படலாம். அதற்கிடை யிலே கைலாசபதியின் வாழ்வை யும் எழுத்தையும் மிகவுஞ் சுருக் கமாகக் கோடி காட் டும் பொருட்டு இக்கட்டுரை எழுதப் படுகிறது. கைலாசின் வாழ்வை
EELLLLELLMLLEELLLEEELLEEEEL LESSEELLLESESS
கைலாசபதி6 ாழ்வும் எழுத்தும்
"ካዛuሀዞ"ዛካዛዘሠ""ካuu፡ዞዞ""ካካlu፡፡፡ዞ"ካዛuuuዞሠ"ዛuuuዞዞ""ዛዛuu፡ዞዞ"ካዛuሡዞ"
முருகையன்
யும் எழுத்தையும் தொடர்ந்து அவதானித்தவன் என்ற முறை யிலே இதனை எழுத முற்படு கிறேன்.
2
1048, 1949. 1950 ஆம் ஆண்டுகளையொட்டிய கால ப்
பகுதியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி விடுதிச் சாலை யி லே தங்கியிருந்து கைலாசபதி கல்வி கற்று வந்தார். அதே காலத்தில் நானும் அதே கல்லூரி விடுதிச் சாலையிலே தங்கியிருந்து கற்று வந்தேன். நாம் இருவரும் ஒரே வகுப்பிலே படித்தோம். ஆனல் பிரிவுகள் வெவ்வேறு. அவர் கலை; நான் விஞ்ஞானம்.
அக்காலத்திலும் கைலாஸ் நகைச்சுவை உணர்வு மிக்கவராய் இருந்தார். ஆங்கில மொழிப் பரி சயமும் கணிசமான அளவு இருந் , தது. தமிழார்வமும் நிறுைய இருந்தது. தமது பிள்ளைப்பரு வத்தை மலேசியாவிலே கழித்த ஒருவருக்கு அக்காலத்திலே தமி ழார்வமோ, திறமையோ இருப் பது மிகவும் அபூர்வமாகும்.
இந்துக் கல்லூரியில் இருந்த காலத்திலே கைலாசபதி பல வகைத் தமிழ் நூல்களை வாசித் தார். அக்காலத்திலே திராவி
:

Page 10
முன்னேற்றக் கழகத்தார் எழுதி வெளியிட்ட சிறு சிறு நூல்கள், பள்ளி மாணவர் மத்தியிலே பிர பலமாயிருந்தன. * கம்பரசம் , "ஆரிய மாயை', 'தீ பரவட்டும்’ *நாடும் ஏடும் , "நிலையும் நினைப் "பரமசிவனுக்குப் பகிரங்
ւյւն՚, கக் கடிதம்', ‘பரந்தாமனுக்குப் பகிரங்கக் கடிதம்" என்பவற்
றைக் கைலாசின் கைகளிலே கண்ட ஞாபகம் இப்பொழுதும் உள்ளது. திராவிட இயக்க ஏடு களுடன், வேறும் பல நூல்களை அக்காலத்திவே வாசிக்கலானுர், பாரதிதாசன், புதுமைப்பித்தன். ரகுநாதன், மு. வரதராசன், சுத்தானந்த பாரதி. ச. து. சு. யோகியார் மு த லா னே ரி ன் படைப்புகளையும் படிப்பதுண்டு.
அத்துடன் சேக்கிழார். கம்பர், திருமூலர், வள்ளுவர் முதலிய பண்டைத் தமிழாசிரியர்களின்
படைப்புகளிலும் பயிற்சி உடை யவரானுர்,
பாடசாலையிலே வித்துவான் க. கார்த்திகேசு, பண் டி த ர் க. செல்லத்துரை எ ன் போர்  ைக லா சி ன் தமிழார்வத்தை வளர்த்து ஊக்குவதிற் பெரிதும் உதவினர். கொம் யூனிஸ் ற் மு. கார்த்திகேசன், எ. எஸ் கன கரத்தினம் அற்புதரத்தினம் ஆகிய ஆசிரியர்கள் அவருடைய கருத்துகள் வளம் பெறுவதற்குத் துணை நின்றனர்.
அப்பருவத்திலேயே கைலாச
பதி கட்டுரைகள் சிலவற்றை எழுதி வெளியிட்டார். "தமிழ் மணி" (தெல்லியூர் செ. நடரா
சாவை ஆசிரியராகக் கொண் டது) "இந்து சாதனம்’, ‘சுரபி" போன்ற பத்திரிகைகளிலும் கல்லூரி இலக்கிய மன்றப் பத்தி ரிகைகளிலும் அவை இடம் பெற் றன. சமயச் சார்பும் இலக்கியச் சார் பும் அக்கட்டுரைகளிற் காணப்பட்டன.
கைலாசைப் பொறுத்த வரை யிலே. இந்துக் கல்லூரிக் கால கட்டம் எழுத்தார்வம் முளை கொண்ட பருவம் என வருணிப் பது பொருத்தமாகும்.
3
1956 ஆம் ஆண்டில் கைவா சபதி ருேயல் கல்லூரி மாணவரி ஆகிருர், அங்கு இவருடைய தமிழார்வத்துக்கு ஆசிரியர் இரு வர் துணை நின்றனர். ஒருவர், நாவற்குழியூர் நடராசன் எனப் படும் க. செ. நடராசா. இவர் கவிஞர்; பிற்காலத்தில் இலங்கை வானெலி நிகழ்ச்சி அமைப்பாள ராயிருந்தவர். மற்  ைற ய வ ர் கி. லக்ஷமண ஐயர். இவர் தத் துவ ஞானப் பயிற்சி உடையவர். பிற்காலத்திலே இலங்கைக் கல் வித் திணைக்களத்திற் கல்விப் பணிப்பாளராய் இருந்தவர்.
ருேயல் கல்லூரிக் காலத் தில், கைலாசபதியின் வாசிப்புப் பழக்கம் மிகவும் பரந்து விரிந் தது. பல துறை நூல்களையும் அவர் பயின்ருர். ஆங்கில இலக் கிய விமரிசகர்களின் ஆக்கங்களை ஊக்கமாகக் கற்றர். ற்றி. எஸ். எலியற் எஃப். ஆர். லீவிஸ், சிசில் டேய் லூயி, ஸ்ற்றிஃபன் ஸ்பென்டர் முதலிய விமரிசகர் களும் டி. எச். லோறன்ஸ் பேணுட் ஷோ, ஜேம்ஸ் ஜோய்ஸ். வேஜினியா வூல்ஃப், ஷேக்ஸ்பியர் மு த லி ய எழுத்தாளர்களும் கைலாசபதியினல் வாசிக்கப்பட் டனர். எனக்கு அவர் எழுதிய இலக்கியக் கடிதங்களின் வாயி லாகவும், நேரிலே சந்திக்கையில் நிகழ்ந்த உரையாடலின்போதும் அவருடைய வாசிப்புப் பின்னணி புலனுகும். இங்கு கூறப்படாத இன்னும் எத்தனைபோ நூலாசிரி யரின் படைப்புகளை அவர் வாசித் திருந்தாரென்பதைச் சொல்ல தேண்டியதில்லை. என் நினைவுக்கு
6

வந்த நூலாசிரியர் சிலரைக் கூறியுள்ளேன்; அவ்வளவுதான்
இக்காலத்திலே கைலாசபதி ஒரு படைப்பாளியாகவும் தோற் றங் காட்டினர். கவிதைகள் சிவவற்றையும், சிறுகதைகள் சிலவற்றையும் அவர் ஆக்கினர். நாடகங்களும் எழுதினர். இவை வானெலியில் ஒலிபரப்பாயின. 30, 40 நாடகங்களை இவர் எழுதினர் என ஒரு சம் யம் இவரே சொல்லக் கேட்டிருக்கி றேன். ஷேக்ஸ்பியரின் "ற்றெம் பெஸ்ற் என்னும் நாடகத்தை வானெலிக்கெனத் தமிழாக்கி ஒரு தொடராக ஒலிபரப்பச் செய் துள்ளார். ஒரு நத்தார்ப் பெரு நாளையொட்டி, "கல்லறைக்கு எதிரில்" என ஒரு நாடகம் ஆக் கினர். புதுமைப் பித்தனின் *க பா ட புரம்" கைலாசின் கையிலே ஒரு வானெலி நாடகம் ஆயிற்று. "குரல்கள்? “ என்னும் மகுடமிட்ட வேருெரு நாடகம் ஒரு விதத்திலே பரிசோதனை முயற்சியாய் அமைந்தது.
இவ்விதம் படைப்பு முயற்சி யில் இடையிடையே ஈடுபட்டா லும், தமது துறை விமரிசனமே என்பது வெகு வி ைர வி லே கைலாசபதிக்குப் புலனுயிற்று. விமரிசன க் கட்டுரைகளையும் குறிப்புகளையும் அவர் அதிகமாக எழுதி வந்தார்.
இவ்வாறு அவர் விமரிசனத் து  ைற யை த் தேர்ந்தெடுத்து அதில் மேம்பாடு பெறுவதற்கு, அவர் இலக்கியப் படைப்பாளி யாகி நின்று பெற்ற அநுபவமும் பெரிதும் உதவிற்றெணவே எனக் குத் தோன்றுகிறது.
ருேயல் கல்லூரிக் கால க்ட் டம், கைலாசபதியின் இலக்கிய
விமரிசனப் L/G60ע( Lמ செழும்ை பெற்று விரிந்த காலம் எனக் கொள்வது பொருத்தமாகும்.
4
அடுத்தது, பல்கலைக்கழக மாணவராக இருந்த காலமாகும். பல்கலைக்கழக'மு த லா ன் )b( ולו பரீட்சை முடிந்ததும் தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்து பட் டப் படிப்பை மேற்கொண்டார் கைலாசபதி, முதலாம் வகுப்பிற் சித்தியட்ையும் அளவுக்கு அவ ருடைய கல்வி நிலை பிரகாச மாய் இருந்தது.
பல்கலைக் கழகத்தில், பேரா gl fի այ II- க. கணபதிப்பிள்ளை, பேராசிரியர் சு. வித்தியானந்தன் எ ன் போ ரு டன் ஏற்பட்ட தொடர்பு, கைலாசபதியின் இலக்கிய நோக்குடன் மேலும் புதிய பரிமாணங்களைச் சேர்த் தது, மரபு பற்றிய கருத்துக் களும், மரபுகளை நன்குணர்ந்து விளங்கிக் கொள்வதன் அவசியப் பாடும் அவருக்கு மேலும் மேலும் தெளிவாயின.
பேராதனைப் பல்கலைக் கழ கத்திற் படித்துக் கொண்டிருந்த வேளையிலேதான் இவரது உடன் மாணுக்கராகிய கா. சிவத்தம்பி யுடன் நெருக்கமான நட்பும் தொடர்புகளும் வலிமை பெற் றன. "தவருன எண்ணம்?
சுந்தரம் எங்கே?' ஆகிய மேடை நாடகங்களிலே சிவர் தம்பியும். கைலாசபதியும் நடித் தள்ளனர். (இவை பேராசிரியர் : கணபதிப் பிள்னையிஞல் இயற்ற பட்டனவ சு. வித்தியானந்தனல் நெறியா
ளப்பட்டவை).
நாடகங்களில் மட்டுமன்றி, மாணவர் மன்றக் கூட்டங்கள்,
7

Page 11
விழாக்கள். லிவாதங்கள் ஆகிய பலவற்றிலும் கைலாசபதி பங்கு பற்றுவதுண்டு. இவற்றின் விளை வாக, ஆய்வறிவு நோக்கு விமரி சன மனப்பான்மையும் மேலும் மேலும் கூர்மை பெறலாயின.
பட்டப் படிப்பு முடிந்த பின்
னர் சில காலம் 'தினகரன்' ஆசிரியராக அமர்ந்து விட்டு, மீண்டு ம் பல்கலைக் கழகஞ்
சென்று அங்கு விரிவுரையாள ராய் நியமனம் பெற்ருர், தமது எம். ஏ. பட்டத்தையும் பெற் றுக் கொண்டார்.
பத்திரிகை ஆசிரியரா ய் இருந்த காலத்திலும் அதற்குச்
சற்று முன்னும் பின்னும் அவர்
இலங்கையிலுள்ள எழுத்தாளர்
பலருடனும் மிகவும் பயனுள்ள தொடர்வுகளை ஏ ற் படுத் தி க் கொண்டார். இலங்கை எழுத் தாளர் மத்தியிலே புதியதோர் எழுச்சி உண்டாவதற்குத் துணை நின்றர். இதற் கு இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தின் இயக்கம் பெரிதும் உதவிற்று. பிரேம்ஜீ, சிவத்தம்பி, எச். எம். பி. மொகிதீன், இளங்கீரன். அ. ந. கந்தசாமி, சில்லையூர் செல்வராசன், செ. கணேசலிங் கன் என்போருடன் இணைந்து நின்று பலவிதத் திட்டங்களையும் ஆலோசனைகளையும் கொள்கை களையும் முன்வைப்பதில் கைலாச பதி ஊக்கமாக உழைத்தார். இந்த வகையிலே சங்கத்தின் அச்சாணி போல அவர் செயற் பட்டார் என்ருல் அது மிகை ஆகாது.
இலங்கைத் தமிழர்க்கெனத் தனியான தன்மைகளும் அக்க றைகளும் உள்ளன; பிரச்சினை யிலும் பின்னணியிலும் தனி இயல்புகள் உண்டு. ஆகையால் தேசியச் சார்பு இலச்கியத்திலும் பிரதிபலிக்கும்; சமூகப் பண்பு
களையும், வரலாற்றையும் நிகழ் காலச் சூழலையும் ஒ ட் டி யே உயிர்ப்புள்ள இலக்கியங்கள் பிறப் பெடுக்கும்: அவையே கிறப்பா னவை; பாராட்டப்பட வேண் டியவை- இவ்வாருண எண்ணங் களை மக்களிடையே விதைப்ப தில் முற்போக்கெழுத்தாளர் சங் கம் முன்னின்றது. கைலாசபதி சங்க மூலவர்களிலே முக்கியமா னவர். இந்த வகையிலே கைலா சபதி ஒரு சக்தியாகப் பரிணமித் தார். இங்குள்ள எழுத்தாளர் அனைவரும் தமது படைப்புக்கள் பற்றி,  ைக லா சபதி என்ன நினைக்கிருர் என அறிவதிலே பெரும் ஆர்வங்காட்டினர். இதன் விளைவாக, நேரடியாகவும் மறை முகமாகவும் இலங்கை எழுத்தாக் கங்களின் திசையை நிருணயிக் கும் பணியையும் கைலாசபதி மிகவும் நுணுக்கமாகச் செய்து வந்தார் எனல் பிழை ஆகாது;
5
எம். ஏ. பட்டம் நிறைவெய் தியபின் பேமிங்காம பல்கலைக் கழகம் சென்று பி. எச். டி. பட் டத்துக்கென "வீரயுகத் தமிழ்க் கவிதை" பற்றி ஆராய்ந்தார். பட்டம் பெற்ற பின்னர் மீண் டும் இலங்கைக்கு வந்து தமிழ்த் துறையிலே சேர்ந்து தமது பல்கலைக்கழக நிலைப்பட்ட பணி களைத் தொடர்ந்தார்.
இலங்கைப் பல்கலைக் கழகத் துக்கு யாழ்ப்பாணத்தில் வளாக மொன்று நிறுவப்படல் வேண்டு மென முடிவு செய்யப்பட்ட காலத்தில், கலாநிதி கைலாசபதி யிடமே தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது. அக்கா
லத்திற் பல இடையூறுகளுக்கு

மத்தியிலும் இவர் அரும்பாடு பட்டு, யாழ்ப்பாணத்திலே பல்கலைக்கழக வளாகத்தினைத்
தோற்றுவிப்பதிலே பெரும் பங் களிப்புச் செய்தார். இ ன் று அந்த நிறுவனம், யாழ்ப்பாணப் பல்கலை க் கழகம் (ாக பரந்து விரிந்து கொண்டிருக்கிறது.
கைலாசபதி ஆற்றிய அறி வுப் பணிகள் பன்முகப் பட்டவை. வானெலி, விரிவுரைசள். கருத் தரங்குகள், மாநாடுகள், கலந் துரையாடல்கள் என்பவை மூலம் பணியாற்றினர். அவ்வளவில் நில்லாது, எழுத்தாளர்களுக்கும் ஆய்வாளருக்கும் ஆலோசனை கூறுதலும் அவரது முக்கிய பணி களுள் ஒன்ருயிற்று
இவை தவிர, கைலாசபதி யின் நூலாக்கங்களும் வெளியீடு களும் அவரது கலாசாரப் பங்க ளிப்பின் அழியாத பதிவுகளாக நிலைபெற்றுள்ளன.
இவருடைய நூல்களிற் சில வரலாற்றுத் தன்மை பெற்றவை: "தமிழ் நா வ ல் இலக்கியம்", "இரு மகாகவிகள்" ஆகியவை அப்படிப்பட்டவை5
சில நூல்கள் இலக்கிய வர லாற்றையும் சமூக வரலாற்றை யும் இணைபுபடுத்திக் காட்டுவன. "பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்", ஒப்பியல் இலக்கி யம் என்பன அவ்வாறம்ையும்.
ஒப்பியல் இலக்கியத்திலும்" வீரயுகத் தமிழ்க் கவிதையிலும்" பிற நாட்டு, பிற மொழி இலக் சிபங்களோடும் தமிழினை ஒப்பிட் டுக் காட்டும் இயல்பு உண்டு.
"அடியும் முடியும்" என்னும் நூலில், எண்ணக் கருக்கள் சில வற்றின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் தேடிக் காணும்
முயற்சி இடம் பெறுகிறது. கடவுள் வாழ்த்து, பெண்ம்ை (கற்பு), சாதி போன்ற எண் ணக் கருக்கள் பல்வேறு இலக் கியப் படைப்புகளில் இடம் பெறும் பான்மையை இந்த தூல் காட்டுகிறது.
‘கவிதை நயம்", "இலக்கிய மும் திறனய்வும்" என்னும் நூல்களில், இலக்கிய விமரிசனக் கோட்பாடுகளும் இ லக் கி யக் கொள்கைகளும் எடுத்துரைக்கப் படுகின்றன,
இன்னும், சைலாசபதி அவர் கள் பல் வேறு எழுத்தாளர்க ளுக்கு வழங்கிய நூல் முன்னு ரைகளும் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளும் மனங்கொள்ளத் தக்கன. இவையெல்லாம் நூலு ருப் பெற்ருல். கைலாசபதியை முழுமையாகவும் முறையாகவும்
மதிப்பிட வழி பிறக்கும்.
O
1uvaaraavaanr Mrrarr MM Ava
புதிய சந்தா விவரம்
1983 ஏப்ரல் மாதத்திலி ருந்து புதிய சந்தா விவரம் பின் வருமாறு.
தனிப்பிரதி 2 - 50 ஆண்டுச் சந்தா 36 - 00 (தபாற் செலவு உட்பட)
அரை ஆண்டுச் சந்தாக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா.
மல்லிகை
234 பி. கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்.
is.

Page 12
பேராசிரியர் கைலாசபதியின்
ஆய்வறிவுச் சிந்தனை
பட்டுக்கோட்டை வே. சிதம்பரம்
9லோ விமர்சனம் படைப்பு, ரசனை ஆகியவற்றைவிட வித்தி யாசமானது. ஏனெனில் விமர்ச னம் சமுதாய ரீதியான உள்ள டக்கம் கொண்டது. பெளதீகம், மானிடவியல். வரலாறு, தந்து வம், உளவியல் போன்றவையும் சமுதாயத்தின் படைப்புகளே. எனவே விமர்சகனுக்கு ஆழா மான சமூகவியல் அறிவு தேவை. அப்பொழுதுதான் விமர்சகன் அவ்வறிவிலிருந்து அடிப்படை களை அமைத்துக் கொண்டு சரி யான விமர்சனம் செய்ய முடி யும்" என்ற கிறிஸ்டோபர் காடு வெல்லின் கூற்று கைலாசபதிக் கும் பொருந்தும். அதனை தனது ஒப்புதல் வாக்கு மூலமாக 'திற னய்வுத் துறையில் முக்கிய கவ னஞ் செலுத்தத் தொட்ங்கிய காலம் முதல் கலை, இலக்கியம் முதலியவற்றை அவற்றுக்குரிய வரலாற்றுப் பின்னணியிலும், சமுதாயச் சூழலிலும் வைத்தே ஆராய்ந்து வந்திருக்கிறேன். ம் (ார் க் சீ ய த்  ைத த் தழுவிக் கொண்ட நாள் முதலாக அதன் முனைப்பான கூறுகளில் ஒன்ருகிய சமூகவியலை எனது பல்வேறு ஆய்வுகளுக்கும் பற்றுக்கோடா கக் கொண்டு வந்துள்ளேன். இவற்றின் பயனுக இலக்கியத்தை அறிவியல் அடிப்படையிலே
உருவகம்
ஒரு கண்ணுேட்டிம்
அணுகக் கற்றுக் கொண்டேன்" என்று கூறுவதன் மூலம் நிரூபிக் கிருர்,
கைலாசபதியின் ஆய்வறிவுச் சிந்தனை உருவாக்கத்தில் బ్తో பங்கு வகித் த கருத்துக்களை கண்டுணர்வது அவரைப்புரிந்து கொள்வதற்கு வசதியாக இருக் கும். கைலாசபதி தலைசிறந்த ஆராய்ச்சியாளராகவும். விமர்ச கராகவும் உருவானமைக்கு அடிப் படை அவரது மார்க்சியப் பயிற் சியே ஆகும். இந்த அடித்தளத் தின் மீது உருவான அ வ ர து சமூகவியல் சிந்தனை உருவாக்கத் தில் பங்கு கொண்ட நூல்கள்.
நண்பர்கள், இவற்றைப் பற்றிய
சிறுகுறிப்புரையே இங்கு Ֆp Լյ படுகிறது. அவரது 7 முழுச் சிந்தனை உருவாக்கத்திற்கும் பின் னணியான சமூகக் காரணங்கள் அனைத்தும் இங்கு பேசப்பட வில்லை. அவ்வாறு செய்வது தனி
ஆய்வாக - விரிந்த ஆய்வாக அமையும்:
GuLJIT Grfuri கைலாசபதி அவர்களைப் பற்றி எண்ணும் போது சிறப்பிடம் பெறுவது
அவர் ஒப்பியல் ஆய்வாளர் என் பதே இந்த உண்ம்ை அவரது முழு ஆக்கங்களையும் கூர்ந்து
盛0。

நோக்கினல் புலப்படும். அவரே கூறுகிருர், "மார்க்சியத்தின் ஒளி யில் விஞ்ஞான பூர்வமான இலக் கிய விசாரம் நட்க்கும் எவர்க் கும் ஒப்பியல் ஆய்வுமுறை இன் றியமையாதது" பொதுப்படை யாகக் கூறிய அவர் சிறப்பாக அவருக்கும் அதனைப் பொருத்தி "ஒரு வகையிற் பார்க்கும் போது நான் எழுதும் கட்டுரைகள் பல வ ற் றிலும் இவ்வொப்பியல் நோக்கு நிலை இழையோடுகிற தெனலாம்" என்று கூறுகிருர், கைலாசபதி ஒப்பியல் இலக்கியம் என்ற த லை ப் பில் ஒரு நூல் எழுதியிருப்பினும் அவரது சிறந்த ஒப்பியல் ஆய்வு நூல் "தமிழ் வீரயுகக் கவிதை" ஆகும். இத் தகைய ஒப்பியல் நோக்கு அவ ருக்கு இளம் வ ய தி லேயே அமைந்து விட்டதை அவரே ஒப்பியல் இலக்கிய முன்னுரை யில் "உலக ஞானியர் சிலரது நல்லுரைகளைக் குறட் பாட்கள் சிலவற்ருேடு ஒப்பிட்டு வள்ளுவ ரின் மேம்பாட்டை எடுத் துக் காட்டியிருந்தேன். "வ ள் ஞ வர் விஞ் சி வி ட் டார் எ ன் ற தலைப்பில் பதினை ந் து வய துப் பருவத்திலே எழுதியது" மேலும் ஒப் பி ய ல் ஆய்வில் தன்னைப் பாதித்த நூலைக் குறிப் பிடும் அவர் "நான் கல்லூரி மாணவனுக இருந்த காலத்தி லேயே வ. வே. சு. ஐயரது கம்ப ராமாயணம் பற்றிய ஆங்கிலத் திறனுய்வு நூல் வெளிவந்தது. ஏலவே ஒப்பு நோக்கில் ஈடுபட் டிருந்த எனக்கு அந்நூல் பேரூக்க மூட்டியது. தமிழில் ஒப்பியல் ஆய்வு செய்யும் பிறரும் என்னைப் போலவே ஐயருக்குக் கடமைப் பட்டவர்கள் என நினைக்கிறேன்.
இன்று ஐயரது ஒப்பியல் ஆய்வின் குறை நிறைகளைத் துணிய முற்படும் பொழுது ஐய ரது செல்வாக்கே செயற்படுகி றது எனல் வேண்டும் கைலாச
பதி தன் கூற்ருலேயே ஒப்புக் கொள்ளும் இந்த உண்மைக்கு வேறு சான்று வேண்டுவதில்லை. ஆயினும் கைலாசபதி மற்றும் பல சூழலால். தொடர்புகளால்
சிறந்த ஒப்பியல் ஆய்வாளராக
உருவானர் என்பதை அவரது அறிவுலகத் தொடர்பினுல் அறி யலாம். இலங்கைப் பல்கலைக் கழகத்திலே எனக்குத் தமிழறி வித்த ாேராசிரியர் கணபதிப் பிள்ளை தனது விசாலமான உள் ளத்தால் உலக இலக்கியங்களை ஆர்ந்தளந்தவர். எனது ஒப்பிலக் கிற வேட்கைக்கு உற்சாகந்தந்து உரமூட்டியவர் அவர். பர்மிங் ஹாம் பல்கலைக் கழகத்தில் எனது ஆராய்ச்சிக்கு மேற்பார்வையாள ரான பேராசிரியர் தொம்சன் "நடமாடும் கலைக் களஞ்சியம்" என்று வழங்கப்பட்டவர். ஒப்பி யலின் தத்துவங்கள் அவரிடம் கற்றது மட்டுமின்றி அவற்றிற்கு உருவம் கொடுக்கவும் பழகிக் கொண்டேன்" கைலாசபதி நேர டியாகக் கூறும் இவர்கள் சிறப் பான பங்கு வகிக்கும் அதே வேளையின மில்மன் பரி என்பார் யுகோஸ்லாவிய வாய்மொழிப் பாடல்களையும் ஹோமர் காவி யத்தையும் ஒப்பிட்டுச் செய்த ஆய்வும் சாட்விக் தம்பதிகளின் இலக்கிய வளர்ச்சி" என்ற ஆய்
வும் சி. எம். பெளராவின் வீரப்
ப ா ட ல் கள் என்ற ஆய்வும்.
சித்தாந்தாவின் "இந்தியாவின் வீரயுகம்" என்ற ஆய்வு ம்
கைலாசபதியின் ஒப்பியல் ஆய்வு
நெறியை உருவாக்குவதில் கன. தியான பங்கு வகித்துள்ளன.
சிறப்பாக தமிழ் வீரப் பாடல் உருவாவதற்கு அடிப்படையாக மேற்குறிப்பிட்ட ஆய்வு க ள்
அமைந்தன.
தேமிழ் ஆய்வாளரில் பேராசி ரியர் வையாபுரிப்பிள்ளை கைலா சபதியின் ஒப்பியல் ஆய்வில்
I

Page 13
சிறப்பான இடத்தைப் பெறுகி முர்: வையாபுரிப்பிள்ளை தனக்கு ஆத ர் ச மாக விளங்குவதை "யாமறிந்த வரையில் வையா புரிப்பிள்ளை அவர்களைப் போல சமயம் வாய்க்கும் போதெல்லாம் ஒப்பியலை வற்புறுத்திய தமிழறி ஞர் வேறு யாருமில்லை" என்று கூறுவதிலிருந்து அறியலாம். மேற் குறிப்பிட்ட அறிவுலகத் தொடர்பும் நூல்களுமே கைலா சபதியை சிறந்த ஒப்பியல் ஆய் வாளராக உருவாக்கின.
கைலாசபதி பழந் தமிழ் இலக் கியங்க%ள மார்க்கிய அணுகு முறையில் ஆய்ந்த முன்னேடி யாக விளங்குகிருர். மார்க்சியப் பயிற்சியோடு, தமிழிலக்கியத்தை புதிய நோக்கில் அறிய உதவிய வர்களாக பே ரா சி ரி ய ர்கள் வையாபுரிப்பிள்ளை, கணபதிப் "பிள்ளை இருவரையும் சிறப்பாகக் குறிப்பிடலாம். பல கருத்துக் களில் வேறுபட்டாலும் கைலா சபதியின் அணுகுமுறை மீது வையாபுரிப்பிள்ளை அபரிமிதமான செல்வாக்குச் செலுத்தியதை அவரது நூ ல் களி ல் பரக்கக் காணலாம், மார்க்சிய நோக்கில் ஆய்வு செய்யக் காரணமாக அமைந்தவர்களில் ஜார்க் தாம் சன் தலைசிறந்து விளங்குகிருர், அவரின் நூல்கள் கைலாசபதி யின் சிந்தனை உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்துள்ளன.
தமிழ் இலக்கியத்தை அறிவ தற்கு அடிப்படையாக இந்திய சமூகத்தை விளங்கிக் கொள்ள கைலாசபதிக்கு அடிப்படையாக அமைந்த நூல்கள் பேராசிரியர் டி. டி. கோசாம்பியின் "இந்திய வரலாற்றை ஆய்வதற்கு ஒர் அறிமுகம்" என்ற நூலும் மார்க் சிய தத்துவ அறிஞர் தேபி பிரசாத் சட்டோபாத்தியாவின் லோகாயதா நூலும் ஆகும். கோசாம்பியின் நூலை மிக அதிக
மாக கைலாசபதி பயன் படுத்
துகிறர்.
இந்திய வரலாறு பற்றிய கண்ணுேட்ட்த்தை அவருக்கு
உருவாக்கியது இந் நூல் என்ருல் மிகையாகாது. நவீன கால இந் திய சமூகத்தை அறிவதில் ரஜினி பாமிதத்தின் 'இன்றைய இந் தியா" நூலும் ஏ. ஆர். தேசா யின் "இந்திய தேசியத்தின் சமூ கப் பின்னணி" என்ற நூலும் கைலாசபதியின் சிந்தனை உரு வாக்கத்தில் சிறப்பிடம் பெறு கின்றன. மேற்குறிப்பிட்ட நூற் கருத்துக்களின் அடிப்படையி லேயே இந்திய சமுக த்  ைத விளக்கி வந்துள்ளார்.
நவீன இலக்கியம் என்று வரும் பொழுது நாவல் இலக்கி யத்தையே கைலாசபதி பிரதா னப் படுத்துகிரு?ர். அ வ ர து நாவ ல் இலக்கிய ஆராய்ச்சிச் சிந்தனை வணர்ச்சியில் அர்டுை கெட்டிலின் "ஆங்கில நாவலுக்கு ஓர் அறிமுகம்" என்ற தூல் சிறப்பான இடத்தைப் பெறுகி றது. மற்றும் அவரின் நவீன கலை இலக்கியம் பொதுமக்கள் தொட்ர்புச்ாதன ஆய்வில் சிறப் பான பங்கு வகிப்பவரி ரெமாண்ட் வில்லியம்ஸ் ஆவார். இலக்கிய விமர்சனத் துறையில் கைலாசப தியின் தொடக்க கால சிந்த னையை உருவாக்கியதில் சிதம்பர ரகுநாதன் சிறப்பான பங்கு வகிக்கிருர். ரகுநாதனின் இலக் கிய விமர்சனம்" நூல் 1948-ல் வெளிவந்தது. அதனை முதன் முதலில் தனது பல்கலைக்கழக தொடக்க நாட்களில் படித்த போது ஒரு புதிய சிந்தனைப் போக்கை முதன் முதலாக தரி சித்ததாகக் கைலாசபதி குறிப்பி டுகிருர், அந்நூல் தங்களை ப் போன்ருேருக்கு பெரும்"(உற்சா
கத்தை அளித்ததாகவும் கூறு.

கிறர். அந் நூலை தமிழிலக்கிய விமர்சனத் துறையில் ஒரு திருப்பு முனையாக அவர் கருதுகிருர்,
நவீன தமிழ் இலக்கியம் பற்றிய பெரும்பாலான கருத் துக்கள் அவரது நண்பர்கள் மூலம் உருவாகியவை. எனது இலக்கிய முயற்சிகளுக்கு வாய்ப் பாக ஆசிரியரும் ந ண பரும் அமைந்தனர். இது எனக்குக் கிடைத்த நற்பேருகும். ஈழத்தில் எனது நெருங்கிய இலக்கிய நண் பர்களான முருகையன், தம்பி. கந்தசாமி, செல்வராசன் முதலியோரும் தமிழகத்திலே ரகுநாதன், அழகிரிசாமி முதலி யோரும் பிரபல கன்னட எழுத் தாளர் உடுப்பி ஆனந்த மூர்த்தி யும் பிறகும் மேனுட்டிலங்கியங் களிற் பயிற்சியும் "பாண்டித்திய மும் உடையவரே இத்தொடர் புகளினுல் நாணடைந்த பயனை வேறுபடுத்திப் பார்ப்பது இலகு வன்று" மேலும் ஜார்ஜ் தாம்ச னுக்கும் பண்டைத் தமிழ் வாழ் வும் வழிபாடும் நூலை பேராசி ரியர் கணபதிப்பிள்ளைக்கும், ஒப் பியல் இலக்கியத்தை அ. ந. கந்த சாமிக்கும் சமர்ப்பணம் செய்த திலிருந்து அவரது ஆசிரியர்களுக் கும் நண்பர்களுக்கும் அவர் எவ் வளவு கடமைப் பட்டுள்ளார் என்பது விளங்கும்.
நவீன தமிழ் இலக்கியம்
பற்றிய காத்திரமான சிந்தனை அவருக்கு உருவாக மற்ருெரு சாதனமாக இருந்தது அவரது பத்திரிகை ஆசிரியர் தொழில். இந்த வாய்ப்பினுல் அவர் மேலதி கமான பயனை அடைந்துள்ளார். இந்த தன்மைதான் அ வ  ைர மற்ற பல்கலைக் கழக பேராசிரி யர்களிலிருந்து வேறுபடுத்தும் அம்சமாகும்.
மகாகவி சுப்பிரமணிய பார தியாரின் செல்வாக்கு கைலாச
சிவத்
பதியின் சிந்தனை உருவாக்கத்தில் கணிசமான பங்கு வகித்துள்ளது. பாரதியின் மீது அளவு கடந்த ஈடுபாடுடையவராக அவர் விளங் கிவந்தார். தனி ஒருவர் பற்றி அவர் பழகியவற்றுள் பாரதி பற்றி எழுதியனவே அதிகமா கும். இலங்கையின் தேசிய எழுச்சிப் போராட்ட காலகட் டத்தில் கைலாசபதியின் அரசி யல் கலை இலக்கியக் கரு உரு வானததால் பாரதியின் க்ருத் துக்கள் அவர்மீது செல்வாக்குச் செலுத்துவது தர்க்கரீதியானது.
கைலாசபதியின் சிந்தனை உருவாக்கத்தில் நூல்களும் அவ ரது நண்பர்களும் சிறப்பான பங்கு வகித்த அதே வேலையில் அவரைப் பல்வேறு கோணங்க ளில் ஆழமாகச் சிந்திக்கவைத்த பெருமை அவரது எழுத்துக்கள் பற்றி செய்த கடுமையான விமர் சனத்தையே சாரும். இது பற்றி அவர் கூறுவதாவது: *எனது முந்திய நூல்களுக்குத் தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் சிற்சிலர் எழுதிய சீற்றம் கொண்ட தாக் குதல்களே நான் இக் கட்டுரை கன உற்சாகத்துடன் எழுதுவ தற்கு தூண்டுதலாய் அமைந்தன. உதாரணமாக தமிழ் நா வல் இலக்கியம் இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் "நவீன இலக்கி யத்தின் ஆக்கமும் விமர்சனமும் தம்க்கே பிறப்புரிமை எனக்கரு தும் நசிவிலக்கியக்காரர் சிலர் மறுபுறமும், இந்நூலின் சமூக வியல் அணுகுமுறையைக் கண் டித்தது மட்டுமின்றி அவ்வாய்வு முறைக்கு ஆதாரமாயுள்ள மாக் சியப் பார்வையின் மீதே போர் த்ொடுக்கலாயினர்" அவர் குறிப் பிடுவது. அந்நூல் பற்றி வெங் கட்சாமிநாதன் எழுதிய "மார்க் சின் கல்லறையிலிருந்து ஒர் குரல்" என்ற க ட் டு  ைர  ைய மனம் கொண்டே ஆகும்.

Page 14
க. நா. சு. குழுவினரான வெங்கட் சாமிநாதனின் மேற் படி கட்டுரையே திறனுய்வுப் பிர்ச்சனைாள்" என்ற நூல் எழுக அடிப்படைக் காரணமாக அமைந் ததை நாம் ஊகிக்கலாம். நூல் முன்னுரையில் க.நா.சு. வை மையமாக வைத்துக் கொண்டு கட்டுரை எழுதப்பட்ட பொழு திலும், நிலவும் ஒரு திறய்ைவுப் போக் கைத் திறனய்வு செய்வதே எனது நோக்கமாயிருந்தது" என் றும் தொடர்ந்து "க.நா. சு.
தற்சமயம் முழு மூச்சாய் போர்க்
2ளத்தில் யுத்த சன்னத்தணுய்
நிற்கவில்லையாயினும் அவரது
ர்ர்கள் ஆங்காங்கு குரல் எழுப் பிய வண்ணமுள்ளனர். வெ. சாமிநாதன் முதலியோர் க. நா. சு. வழியிலேயே மார்க்சியப்
பர்வை மீதும் முற்போக்கு
இலக்கியங்கள் மீதும் "தர்மபுத் தம் தொடுத்து வருகின்றனர். (ஆத்திரம், ஆபாசம் அவலம் அங்களாய்பு, ஆற்றலின்மை முத லியனவே அவர்களின் எழுத்துக் களில் முதன்மை இந்தவகைத் திறனய்வுப் போக்கு பற்றிய கைலாசபதியின் கணிப் பும், அது கடுமையாக விமர்சிக் ப்ப்டவேண்டும் என்பதும் விளைவு- எதிர் விளைவுகளாலேயே ஏற்பட்டதே.
சமீப காலங்களில் அழகியல் பற்றிய விவாதங்களில் கைலாச பதி கடுமையாக விமர்சிக்கப்பட் மையால் கூ டு த லாக அப் பொருள் பற்றி அதிக அக்கறை காட்டத் தொடங்கியிருந்தார். மார்க்சிய அழகி ய ல் பற்றிய நூலொன்றும் எழுத முயன்று வந்தார்.
கைலாசபதியின் சிந் தனே உருவாக்கத்தில் பங்கு கொண்ட நூல்கள், அவரது நண்பர்கள், எதிர்க்கருத்துக்கள் பற்றி சுருக்க
நமது இலக்கிய உலகில்
பெறுகின்றன)
ம்ாக இவ்விடத்தில் குறிப்பிடப் பட்டது, இது பற்றி விரிவாக ஆய்வு செய்வதற்கு இது ஒரு தொடக்கமே. O
LAqLT LLALALA L LqLMA LALALTLLLLLTALMLLALLSLLLAqLA LS
உதிர்ந்த மலர்
நேற்றுவரை நெஞ்சில் நட்டு. 8 s a வளாதத. . .
தன்னுள் நெகிழ்ந்தாடிய ஆதங்கக் *கொடிமலர் அழகாரம் காலக் காற்றில் கட்டவிழ்ந்து உதிர்ந்து . . .
இன்று
எங்கோ
urr(3pr
கூந்தலை அழகேற்ற அரங்கேறியதோ... நினைப்பது நடப்பதில்லை நடப்பதை நினைத்தறியோம் நிழல்கள் நிஜமாவதில்லை. நேற்றுகளின் எதிர்பார்ப்பு இன்றயதின் விரகதாபம்.
. . . . . . . . . மனவட்டத்தில் 188ði sö6frtg-nu
விழுமிய
பொற்கனவு
இனி அறிதுயில் தானே..?
த. பி. செல்லம்
£4

பேராசிரியர் கைலாசபதியும்
ح
இயங்கியல் விமர்சன நெறியும்
பேராசிரியர் கைலாசபதி யைப் பற்றிய மதிப்பீடோ, அ ல் ல து சிலர் குறிப்பிடுதல் போன்ற மறு மதிப்பீடோ எழு தப்படுவதற்கு முன்னுேடியாக தமிழர் தம் சமூக் வரலாற்றை உட்கொண்ட பூரணமான விமர் சன வரலாறு எழு த ப் பட ல் வேண்டும். அத்தகைய விரிர்சன வ ர ல ள று அகக்க: ட்ரியல் பேராசிரியரைப் போற்றுவதோ, அல்லது தூற்றுவதோ சத்தில் லாத வெறும் அதிர்வுகளாகவே அமைந்து விடும்.
விமர்சன இலக்கியம், நவீன இலக்கியப் பரப்பில் நிகழ்ந்த புத்தாக்கம் என்பதில் ஐயமில்லை யாயினும், பண்டைய உரையாசி ரியர்களது ஆக்கங்களில் விமர் சன இலக்கியங்களுக்குரிய சில ஆய்வு மூலகங்கள் காணப்பட் டாலும், அவை உதிரிப் பூக்க ளாகவேயிருந்தன. −
நவீன வர்த்தக வளர்ச்சியும் விமர்சன இலக்கிய வளர்ச்சியும் ஒன்றிணைந்தவை. நவீன வர்த் தக வளர்ச்சி தொடர்பாக பிரித் தானிய அரசின் தலையிடாமைக் கொள்கை பொருத்தமானதா என்று வர்த்தகவிடலில் எழுப்பப் பட்ட விமர்சனங்களும், உற்பத்தி
FLüT. GguuJTJFT
நிறுவனங்கள் சிக்கனமான நட வடிக்கைகளை மேற்கொள்ளுகின் றனவா என்று செலவீடு தொடர் பாக எழுப்பப்பட்ட விமர்சன முறைகளும், இலக்கிய விமர்ச னக் கலை வளர்ச்சிக்கு உரமூட்டி வழிகாட்டியதென்று கொள்ள முடியும். சிக்கனமீட்டாத உற் பத்தி முறைகள் கைவிடப்படல்
O ھ۔۔۔ ۔ ۔ " வேண்டும் * ஃ: ற உழைமையை கிறிடெர்ந்த மகுேபாவம்,
நவீன இலக்கிய விமர்சன க் கலேக்கு அடிப்படையாய் அமைந் ததென்று கொள்ள முடியும். உற்பத்தித் து  ைற யிற் பழை
மையை எதிர்த்தல், புதுமை யைச் சூடுதல், அவற்றுடன் தொடர்புடைய ஆய்வறிமுறை
மு ன் று பெரும் பண்புகளும், ந வீன விமர்சனக் கலைக்குரிய மூலக் கூறுகளாயிருத்தலையும் இணைத்து நோக்க முடியும்.
அத்தகைய பின்னணியிலே தோன்றிய மேலைத்தேய விமர் சனக் கலை, இந்நாட்டுப் பண் Lunt. q. 63 Gv வேரூன்றியமைக்கு அடிப்படையாக அர சி ய ல், பொருளாதார நிகழ்வுகளுடன் ஒன்றிணைந்த சமய சீர்திரு த்த அமைந்தமையை ஏற்கனவே சுட்டிக் J, rrull q. upsil 67 687 ri , விமர்சனக் கலை தமிழிலே வேரூன்றுவதற்
நோக்குகள் ஆய்வாளர்

Page 15
குரிய விளைநிலமாக நவ இலக்கி :பப் பெருக்கங்கள் விளங்கின.
தமிழ் விம ரி ச ன க் கலை வளர்ச்சியின் ஆரம்ப காலகட் டங்களிலே “தொழிற் பிரிவு'
அதிக அளவு வளர்ச்சி பெற வில்லையென்றே கொள்ள வேண் டும், மாதவையா, வ. வே. சு. ஐயர், பாரதி போ ன் ருே ர் படைப்பாளிகளா ? வம் விமர்சகர் களாகவும் ஏக கா லத் தி லே தொழிற்பட்டார்கள். தொழிற் பிரிவின் வளர்ச்சியையும் சிறக்கு மியல் பின் பண்புகளையும் விளங் கிக் கொள்ளாத நிலையில் இன் றும், விமர்சகர்கள் படைப்பாளி
களாயிருத்தல் வேண்டு என்ற கருத்தைச் சில ர் எழுப்புதல் உண்டு.
தமிழில் விமர்சன இலக்கிய வளர்ச்சிப் போக்கைப் பகுப் பாய்வு செய்தவர்கள் முற்போக்கு இலக்கிய அணியைச் சார்ந்தவர் கள் எ ன் ப  ைத யும் நினைவு கொள்ள வேண்டியுள்ளது. சமூக இயங்கியல் நோக்கில் நல்லதை யும் பொல்லாததையும் இனம் பிரித்தக் காட்டுவதற்குப் பகுப் பாய்வு உறுதுணையாக அமைந்த தென்றுங் கூறலாம். எண்ணக் கருக்களக் கூராக்கிக் கொள்வ தற்குத் துண்டி வேறு பிரித்து அறிதல் என்றும் துணையாக இருந்து வந்துள்ளது. முரண் பாடுகளேக் கண்டறிவதும் சமூக நோக்கு விமர்சன அடிப்படை யாகும்.
பகப்பாய்வில் பி ரி வி: T க க் கொள்ளத்தக்கது பழைமை நயப்பு விமர்சனப் போக்காகும். தி ரு வ ள் ஞ வர் கூறிய கருத்துக்கள் எக்காலத் து க் கும் பொருத்தமானவை என்று கூறுதலும், கம்பனது சொல்லின்பமே போதும், பிற வேண்டியதில்லை என இலயித்த லும் பழைமை நயப்புக்குச் $ல
முதலாவது
எடுத்துக் காட்டுகளாகும். இரசிக மணி டி. கே , சி. , அ. ச. ஞான சம்பந்தன் போன்ருேர் கட்டி வளர்த்த விமர்சன நெறி இது வாகும். இவற்றை ஒருவகைப் பட்டித் திறனுய்வு என்று பேரா சிரியர் கைலாசபதி சுட்டிக் காட் டியுள்ளார் - பழைமை இலயிப் பின் ஒருதலை மோகம், நவீனத் துவத்தை முற்றிலும் புறுக்கணித் துவில் கின்றது. அதனுற் சமூக இயங்கியலை இவ்விமர்சன நெறி புரிந் து கொள்ளாததாகவே விளங்கியது.
இரண்டாவது 635 விமர்சனப் பகுப்பு, குறுகிய அர சியல் இலக்குகளால் ஊட்டம் பெற்ற போக்காகும், "ஆரிய காவியம்" என்று கம்ப இராமா யணத்துக்குப் பெயர் சூட்டி அதனைப் பொசுக்கிவிட வேண் டும் என்ற ஒதுக்கல் விமர்சனங் களும், வேற்று மொழி இலக்கி யங்களாலே தமிழ் மொழியின் சீரிளமைத் திறன் சிதைந்துவிடும் என்று கருதும் நலனுய்வுகளும், இப்பகுப்பில் அடக்கப்படும். பகுத்தறிவு இயக்கத்தினரின் அலை களாக இவ்வாருன விமர்சனங் கள் எழுந்தன.
மூன்ருவது வகையான விமர் சன வளர்ச்சி உயர் கல்வி ஊட் டத்தினுல் முகிழ்த்த சில அறி வியல் நோக்குத தழுவிய விமர்
சனமாக அமைந்தது. உணர்ச்சி
வசப்படும் ஆய்வுகளுக்கு ஒரு வகையில் ஆப்புவைக்கும் LDti சனப் போக்காகவும் இது அமைந் ததென்றுங் கொள்ள முடியும். விபுலாநந்த அடிகளார், பேராசி ரியர் வையாபுரிப்பிள்ளை போன் ருே?ரில் இத்தகைய போக்குக் காணப்பட்டதென்று கொள்ள முடியும். இந்த விம் ர் ச ன ப் போக்கின் சில பண்புகளை ஜனப் பிரியமாக்கப்பட்ட சோவின் சில கட்டுரைகளிலும் காணமுடியும்,
36 A

நான்காவது விமர்சனப் பாகுபாடு வெறும் அழகியல் பற்றியதாக அமைகின் றது. சமூக இயங்கியலைத் தெளி வாகப் தூய அழகியல் பற்றிய பிரலா பமும், ஆங்கில மொழியிலோ, பிரஞ்சு மொழியிலோ கூறப்பட்ட கருத்துக்கள் சிலவற்றை கண் மூடித்தனமாகத் தமிழ் இலக்கிய விமர்சன ஒடு பாதையிலே திணித்
துவிட வேண்டும் என்ற ஒரு
வகைச் சிக்கலும் இவ்வகை விமர் சகர்களிடத்துக் காணப்படுகின் றன. இவர்களைப் பற்றிப் பேரா சிரியர் கைலாசபதியவர்கள் குறிப் பிடும் பொழுது, "நவீனத்துவம் என்ற கோஷத்தின் பேரில் பல் வேறு வகைப்பட்ட மாய மான் களை ப் பின்தொடர்வோராக இருக்கின்றனர்" எ ன் ரு ர் . க. ந. சுப்பிரமணியன் முதல், தருமு சிவராமு வரை பலர் இப் பிரிவிலே அடக்கப்படக் கூடிய வர்கள்,
இன்று இவர்களுடைய பிர தான பணி, சமூகவியல் அணுகு முறையைத் துண் டு படுத் தி விளக்கி, அது வெறும் இயந்தி ரப்பாங்கானது என்ற வாய் பாடுகளை மொழிந்து கொண்டி ருத்தலாகும். மார்க்ஸிய அணுகு முறைகளைக் கொச்சைப்படுத்து வதிலும் இவர்களே முன்னணி வகித்தார்கள். இப்பண்பு நின் ருேர், சாதாரண தமிழ் வாசக ராற் புரிந்து கொள்ள முடியாத வேற்று மொழிச் சொற்களைப் பயன் படுத்தி, வாசகரை மலைப் புக்குள்ளாக்கி, அந்த மலைப்பி னுரடாகத் தாம் கூறும் கருத் துக்குப் பலம் தேட முற்படுப வர்கள்
வகையான
புரிந்து கொள்ளாது,
மேற் கூறிய விமர் ச ன அணுகு முறைகளை நிதானத்து ட ன் அணுகுதலும், நல்லவற் றைத் தேர்ந்து தெளிதலும், இயங்கியல் நெறிப்பட்ட சமூக வியல் அணுகு முறையில் அமை கின்றன. மார்க்ஸிய நெறி சமூக அணுகுமுறையைக் கூர்மையாக்கி வளப்படுத்தியுள்ளது. வரலாற்று நோக்கு, வர்க்க ஆய்வு, கொடு மைகளை வேரனுத்தல் போன்ற பண்புகளை உள்ளடக்கிய இந்த நெறி தமிழ் இலக்கியத்திலே சுவறுவதற்குரிய காலம் பழுத்தி ருந்தது. கிராமங்களிலே பண்ணை முறையின் கொடுமைகள், நகரங் களிலே தரகு முதலாளித்துவம் விளைவிக்கும் அவலங்கள், நவ குடியேற்றவாத நெருடல்கள் போன்றவை சுரண்டலின் வடி வங்களாக எழுந்தன. வறுமை, லேலையின்மை, பேரினவாதம், அடக்குமுறை அவலம் அன்னிய மாதல் முதலியவை மேலோங்க.
அவற்றைப் பல கோணங்களி லும் சித்திரிக்கும் முற்போக்கு அழகிய ல் எழுத்தாக்கங்கள்
வளர்ந்தன. அவ்வாருண் ஊட் டத்தின் பின்னணியில் அவற்றை முழுமையுடன் அணுகும் பாரிய பணியைப் பேrாசிரியர் கைலாச பதி மேற்கொண்டார்.
ஒரு புறம் முற்போக்கு அழ கியல் எழுத்தாக்கங்கள் அவருக்கு ஊட்டத்தை வழங்க, மறுபுறம் எழுத்தாளர்களுக்கான சமூகப் பார்வையைக் கூராக்கும் பணியை பேராசிரியர், தமது தோழர்களு டன், ஆழ்ந்து வற்புறுத்திய இரு வழித் தொடர்பும் நிகழ்ந்தன. இந்த இருவழித் தொடர்பை ஈட்டவல்ல திறன் சமூக நோக்கு விமர்சன நெறிக்கு மட்டும் உண் டென்று கூற முடியும்

Page 16
வெறும் அழகியல் வாதம் பேகவோர் உடைந்த துண்டுக ளாய்ச் சிதறித் தனித்து நிற்ப தும் சமூக நே7 க்கு விமர்சன நெறியாளர் நிறுவன வடிவில் ஒன்றிணைந்து நிற்றலும், மேற் கூறிய இருவழித் தொடர்புகளை மீள வலியுறுத்துகின்றன.
மார்க்ஸிய நடைமுறைகளில்
இவர்களுக்கிடையே கருத் து வேறுபாடுகள் இரு ப் பினும் பொல்லாமையை ஒழிப்பதில்
இவர்கள் அனைவரும் ஒரு கொடி யின் கீழே திரண்டு நிற்பவர்கள். அண்மைக்கால நிகழ்ச் சிகள் இவற்றை வெகு துல்லியமாகக் காட்டுகின்றன.
இலங்கையின் தேசிய இனப் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டது என்ற போலி மலைப்பு நிலவிய காலத்தில், அதுபற்றிய கருத்து எழுச்சியை ஊட்டும் பாரி ய மாநாடு ஒன்றைத் திரட்டிய முற் போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமைக் குழுத் தொண்டனுக இயங்கியவர் பேராசிரியர் கைலா சபதியவர்கள். அதன் தொடர்ச்சி யாக தேசிய இனப் பிரச்சினையை சமூக நோக்கிற் பேராசிரியர் சிவத்தம்பியவர்கள் இ ன்று ஆழ்ந்து அணுகி இலக்கிய ஆக் கங்களுடன் தொடர்பு படுத்த லும் கவனத்துக்குரியன.
பேராசிரியர் கைலாசபதியின் விமர்சனம், அழகியல் மொய்யாப் பில் மூழ் கி யிருந்தோ  ைர க் குறைத்து மதிப்பிட்டதாக ஒரு
குறைபாடு சுட்டிக் காட்டப்படு தல் உண்டு. ஆழ்ந்து நோக்கி ஞல், அவ்வாறன அணுகுமுறை
களால், வெறும் அழகியற் பிர லாபத்திலிருந்த பல எழுத்தா
ளர்கள், சமூகந் தழுவிய அழகி யற் சிருஷ்டிகளைத் தந்தார்கள் என்பதும் உண்மை
பேராசிரியர் சிவத்தம்பியின் சொல்லாட்சியில் இந்நிகழ்சியைக்
குறிப்பிடுவதானல், "அவர்கள்",
"நாங்களாக மாறினர்கள்.
தமிழிலே சமூக நோக்கு இயங்கியல் நெறி த  ைழ க் க வேண்டிய மாபெரும் வரலாற் றுத் தேவையைக் கம்பீரமாக நிறைவேற்றிய கிளர்மின் சக்தி போன்ற விமர்சகரே பேராசிரி யர் கைலாசபதி, உலகை மாற் றியமைக்க வந்த மார்க்ஸிய தத்துவமும், சமூக விசைகளாற் பெருக்கெடுத்த ஆக்க இலக்கிய வேகமும், முற்போக்கு எழுத் தாளர் சங்க நிறுவன அமைப்பு வளர்ச்சியும், பேராசிரியர்கள் க. கணபதிப்பிள்ளை, சு. வித்தி யானந்தன் போன்ருேர் வளர்த்த தமிழியல் நெறிகளும், புரட்சி கர இயக்கங்கள் பலவற்றின் பரந்துபட்ட வளர்ச்சியும், பேரா சிரியர் கைலாசபதியின் ஆளுமை யுருவாக்கத்தின் புறத் தூண்டிக ளாகி விளங்கின. அந்தத் தூண் டிகளின் மத்தியிலே பூரணமான துலங்கலைத் தந்தவர் பேராசிரி
யர் கைலாசபதி
O
ଢେଁକ୍ ତ୍ରିନ୍ଧି
身8

6ᏈᎠᏪᏏᏛᏂᎩ
இலங்கைத் தமிழர்கள் இலங்கைக்குக் குடிபெயர்ந்த மக் கள் அல்லர்: அவர்கள் இங்கு வந்தேறு குடிக்ள் அல்லர். இன்று இலங்கையில் "இலங்கைத் தமிழர் கள்" என்று அழைக்கப்படுபவர் இலங்கையின் இன்றைய பெரும் பான்மை மக்களான சிங் க ள மக்களைப் போன்றே புராதனக் குடிகளாவர். அவர்களும் தனித் துவமான ஒரு தேசிய இனம்வரையறுக்கப்பட்டதான அவர் கள் வாழும் தனியான பிரதே சம் உண்டு தனியான மொழி, கலாசாரம், பாரம்பரியப் பண் பாடு. தனித்துவம் பேனும் தன் னுணர்வு - அ%னத்தும் உண்டு.
* தமது இலக்கியப் பாரம் பரியத்தைப் பேணுத மக்கள் (கா ட் டு மிராண்டித்தனமான) அந்ாகரிக மக்களாகி விடுகிருர் கள்; தமக்கென இ லக் கி யம் படைக்காத மக்கள் கருத்தும் உணர்வுமற்ற மக்களாகி விடு வார்கள்" என்று இந்த நூற்ருண் டின் சிறந்த இலக்கிய விற்பன் னர்களுள் ஒருவரான டி. எஸ். எலியட் கூறியுள்ளார். இலங் கைத் தமிழர்களுக்கு ஒரு தனி யான தொடர்பான பாரம்பரியம் உண்டு.
இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு இடையழுத தனி யான இலக்கியப் பாரம்பரியம் உண்டு. ஈழத்துப் பூதந்தேவனர் பாடல்
LLL ALALLSALL LALALLLL LLLLAAAqqLALLAAqqLLLAALLLLLAqL LqLALMLALLALALMTALL LALAL LALALALLS
TJ L
தியின்
காத்திரமான பங்களிப்பு
qALLSLLLAAASASqqq AALLLLAALA A AS SiALA ALSeLeqASA ALqqSA SALALLALAALASLLqASLLL S
میںسمحھ عرصہ محیرہ
ஆ. தேவராசன்
கள் சங்க இ லக் கி யங் களில்
காணப்படுகின்றன. மிக அண் மையில் 14 ஆம் நூ ற் ரு ண் டு
முதல் 18 ஆம் நூற்ருண்டு வரை
யிலான ஈழத்து இலக்கிய வளர்ச்
சியினை நூலாகத் தொகுத்துத்
தந்துள்ளார் கலாநிதி க. செ.
நடராஜா அவர்கள். 14 ஆம்
நூற்றண்டுக்கு முந்திய இலக்கிய
வளர்ச்சிக்குரிய சான்றுகளாக
விளங்கும் சில கல்வெட்டு வெண்
பாக்களையும் இந்நூலில் கலாநிதி
நடராஜா சேர்த்துள்ளார். சங்க
காலத்துக்கும் 14 ஆம் நூற்ருண்
டுக்கும் இடைப்சட்ட காலப்
பகுதிகளைச் சார்ந்த இலக்கிய
வளர்ச்சி ஆராயப்பட்டு நூலுருப்
பெறவேண்டிய ஒன்று. எனினும் இக்காலப் பகுதியிலும் இலக்கி
யப் பாரம்பரியம் இருந்திருக்கி
றது என்பதற்கு மேற்கூறிய கல் வெட்டுக்களிற் காண ப் படும்
வெண்பாக்கள் சான்ருகும்.
இதையடுத்து 19 ஆம் நூற் முண்டு இலக்கியம் கவனத்திற் கொள்ளற்பாலது. அந்நிய ஆட் சிக் காலத்தின் பிற்பகுதியாகவும் சுதந்திர இயக்கத்தின் முன்னுேடி யாகவும் இந்தக் காலகட்டம் அமைகிறது. சு தேச மக்கள் அச்சியந்திரசாலை வைத்திருப்ப தும். நூல் வெளியிடுவதும் தடை செய்யப்பட்டிருந்தது. இந்தியா வில் ராஜா ராம் மோகன்றேன் இதற்கு எதிராக ஒரு போராட் டமே நடத்திஞர். ஆயினும்

Page 17
அவர் இறந்தபின்பே இந்த த் தடை நீக்கப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கையின் ஆறுமுக நாவலர் இலங்கையிலும் இந்தியாவிலும் அச்சியந்திர சாலைகளை அமைத்து
தமிழ், சைவ நூல்களை முதன் முதலில் வெளியிட்டார். தென் கிழக்காசிய மொழிகளிலேயே
முதன் முதலில் அச்சுப் பதிப்புப் பெற்றது தமிழ் மொழிதான். அந்நியரால் கிறித்துமத நூல்கள் அச்சேற்றப்பட்டன. 19 ஆம் நூற்ருண்டில் அச்சுப் பதிப்புக் கலை பற்றி பேராசிரியர் கைலாச பதி ஒரு அருமையான கட்டு ரையை தினகரனில் வெளியிட் டார். தமிழ் நூல்களைப் பொறுத் தவரையில் அச்சுப் பதிப்புக்குக் கால்கோள் கொண்டவர் அறுமுக நாவலர், சுவர் எழுப்பியவர் சி. வை. தாமோதரம் பிள்ளை, கூரை வேய்ந்தவர் உ. வே. சாமி நாத ஐயர் என்ற கருத்தை முத லில் பம்மல் சம்பந்த முதலியார்
சொல்லி வைத்ததை ஏற்றுத்
தனது 19 ஆம் நூற்ருண்டுத் தமிழ் இலக்கியம் என்ற நூலில் மயிலை சீனி வேங்கடசாமி வலி யுறுத்தியுள்ளார். 19ஆம் நூற் ருண்டு இலங்கைக்குரியது என்றே அவர் அழுத்திக் கூறியுள்ளார். 19 ஆம் நூற்றண்டு தமிழ் இலக் கிய வரலாற்றில் ஒரு முக்கிய காலகட்டமாகத் திருப்பு முனை யாக அமைகிறது. இத்தத் திருப் பத்தின் வரலாற்றுப் பிதாமகன் ஆறுமுக நாவலர்.
சுதந்திர இயக்கத்துக்கு தமது பாரம்பரியத்தைக் கட்டிக்காத்து தன்னுணர்வு பெற்ற மக்களால் தான் பூரண பங்களிப்புச் செய்ய முடியும். அந்தவகையில் தமிழ் மக் களைப் பொறுத்தவரையில் இதற்குக் காரணராக விளங்கு பவர் ஆறுமுக நாவலர். ஈழத்து இலக்கியத்தைப் பொறுத்தவரை மட்டுமன்றி தமிழ் இலக்கியத்
தின் தற்காலத்துவத்திற்கு வழி வகுத்தவரும் அவரே.
ஈழத்து இலக்கிய வளர்ச்சி யைப் பொறுத்தவரை தற்கால இலக்கிய முயற்சிகள் காலத்துக் குக் காலம் முகிழ்ந்தனவாயினும் அது சரியான ஒரு நெறிப்படுத் தலின்றி அது முழுமை பெற வில்லை. அதுமட்டுமன்றி பாரம் பரிய தமிழ் அறிஞர்கள் சங்க இலக்கியங்கள், சங்கம் மருவிய கால இலக்கியங்கள், தமிழ் வல் லரசுகள் காலத்துப் பேரிலக்கி யங்கள், பல்லவர் காலத்துடன் எ (p ந் த பக்தி இலக்கியங்கள் ஆகியவற்றையே போற்றினர். சிறுகதை, தற்காலக் கவிதை, குறுங்ககைகள், நெடுங்கதைகள் ஆகியவற்றைப் புறக்கணித்தனர். இதனுல் இந்தப் புது இலக்கிய முயற்சிகளின் படைப்பாளிகளும் பின்தள்ளப்பட்டு ம  ைற க் கப் பட்டு வந்தனர். இந்த மந்த நிலை இரு ந் த பொழுதுதான் கைலாசபதி இந் நூற்ருண்டின் நடுக் கூற்றுப் பிற்பகுதியில் தினகரன்' ஆசிரியர் குழுவில் சேர்ந்தார்.
* தினகரன்" பத்திரிகையின் வாரப் பதிப்பு ஆசிரியராகச் சேர்ந்த கைலாசபதி பின்பு அதன் பொறுப்பாசிரியராக உயர்ந்தார். தினகரன் பத்திரி கையின் போக்கு பெரும் மாற் றம் பெற்றது. தி ன கர ணி ல் அதற்கு முன்பு முற்கூறிய பாரம் பரிய இலக்கியங்களை பற்றிய கட்டுரைகளே வெளிவந்தனஉ  ைர ட கி விமர்சனமாக, நயப்புகளாகக் கட்டு  ைரக ள் வெளிவந்தன. வெளிவந்த சிறு கதைகள் கூட் தமிழ் நாட்டுப் பாணியில் தமிழ் நாட்டுப் பின் னணியில் (மெரின கடற்கரைஐ காட்சிகள், மவுண்ட் ரோட்டு நிகழ்வுகள்) தமிழ்நாட்டு மொழி ந  ைடயி ல் எழுதப்பட்டன. கைலாசபதி ஆசிரியராக ப்

பொறுப்பேற்ற பின் இலங்கைச் சூழலும், இலங்கைப் பேச்சுத் தமிழ் நடையும் சிறுகதைகளில் இ ட ம் பெறத் தொடங்கின. இந்தப் பின்னன்ணியில் எழுதிய எழுத்தாளர்களுக்கு தினகரன் வரவேற்பு அளித்தது. அத்துடன் இலங்கைச் சூழலையும், இலங் கைத் தமிழர் பேச்சுத் தமிழ் நடையினையும் மையமாக வைத் துக் கொண் டு படைப்புகள் வெளிவரத் தொடங்கின. பல இளம் எழுத்தாளர்கள் இந்த வாய்ப்பின் மூலம் அரங்கிற்குக் கொண்டுவரப் பட்டனர். குறுங் க  ைத க ள், நெடுங்கதைகளைப் பொறுத்தவரையிலும் இதுவே நிலை. சில நெடுங்கதைகள் தின க ர னி ல் தொடர்கதைகளாக வெளிவந்தன. இதன் வாயிலாக சில நெடுங்கதை ஆசிரியர்களும் அரங்கிற்கு வந்தனர். இளங் கீரன், செ. கணேசலிங்கன், பென டிக்ற் பா வ ன், டானியல், எஸ். பொன்னுத்துரை, Sfe லூர் ராஜதுரை போன்றவர்சள் தரமான முன்னணி நெடுங்கதை ஆசிரியர்களாகத் தேறினர். இலங்கை, தமிழ்நாடு, சமகால நவீன படைப்புகள் தினகரனில் விமர்சிக்கப்பட்டன. இத ஞ ல் தரமான இலக்கிய விமர்சனமும் வளர்த்துவிடப் பட்டது. தின கரன் வளர்த்த புதிய இலக்கிய அலை ஏனைய இலங்கைப் பத்திரி கைகளையும் மேவிப் பாய்ந்தது. இலங்கையின் தனித்துவமான நவீன இலக்கிய சகாப்தம் உரு வாக்கப்பட்டது, ம ர க த பம், மல்லிகை, வஈந்தம் முதலான பல புதிய நோக்குடைய சஞ்சி கைகளும் இந்தப் பணி யின் ஈடேற்றத்துக்காகத் தோற்றுவிக் கப் பட்டன. எனினும் மல்லி கையே தொடர்ந்தும் உயிரோடு வாழ்கிறது.
ஆக, கூட்டுமொத்தமாகப் பார்க்குமிடத்து கைலாசபதி
3.
யின் முயற்சி தனிமனித முயற் சியாகத் தொடங்கி, ஒரு இயக் கமாக மாறி, ஒரு புதிய சகாப் தத்தையே தோற்றுவித்திருக்கி றது என்பதை எந்த விமர்சக் னும் மறுத்துவிட முடியாது. இந்த சகாப்தத்தின் தோற்றமும் தாக்கமும் வெறுமனே இலக்கிய உலகோடு நின்றுவிடவில்லை. அப் படி இலக்கியத்துடன் மட்டும் தான் என்று பிரித்துப் பார்ப்ப து: வி:ர்சிப்பதும் இந்த இலக்
கிய எழுச்சியின் முழுமையான வடிவத்தை மூடி மறைப்பதா கவே இருக்கும்.
சுருங்கச் சொன்னல் இந்த எழுச்சி இலங்கைத் தமிழர்களு டைய தேசிய உணர்வுகளும், தேசிய தனித்துவத்துக்கும் காத் திரமான உரமாக மாறியுள்ளது. கைலாசின் புது  ைம நோக்கு பழமையிலிருந்து துண்டிக்கப் பட்ட முன் தொடர்ச்சி இல் லாத வெற்றுப் புதுமையல்ல. கைலாசபதி இலங்கைத் தமிழ ரின் பழமைப் பாரம்பரியத்தை ஊன்றுகோலாகக் கொண்ட யதார்த்தமான புதுமை நோக் காகும். கைலாசபதி தொடர்ச்சி யாக, சிறப்பாக 19 ஆம் நூற் ருண்டு இலக்கியப் பணிகளின்அதாவது அந்நிய ஆட்சிக்குபின் எழுந்த இலக்கியப் பணிகளையும் பண்புகளையும் துருவித் துருவி ஆராய்ந்து அவற்றில் காணப் படும் தற்காலப் போக்கிற்கான அடித் தளங்களையும் தனித்துவ நோக்குகளையும் போக்குகளையும் வலியுறுத்தி வந்திருக்கிருர். இத னலேயே இலங்கைத் தமிழர்க ளுடைய அரசியல் சிந்தனையின் தனித்துவமான தேசிய உணர்வு களம் கண்டு நிலைகொண்டு செம் மையும் செழுமையும் பெறுகி பி) து. சோவியத் ஒன்றியத்தின் அறந்த விமர்சகரான பிளெக் னேவ் தனது "கலையும், சமுதாய வாழ்க்கையும்" என்ற நூ லில்

Page 18
கூறும் முழுமைக் கலை வடிவத் தின் பரந்துபட்ட சமுதாய கூட் டுத்தொகை விளைவுகளில் இந்த இன சமூக தன்னுணர்வும் ஒன் ருகும். 1980 ஆம் ஆண்டு சிங் கள இலக்கிய மேதை மாட்டின் விக்கிரமசிங்கவின் நினைவுச் சொற் பொழிவாற்றிய சோவியத் ஒன்றி யத்தின் பேராசிரியர் யூலியன் புருெம்லி (மொழி, கலாசாரமும் தேசிய உணர்வும்- சோவியத் ஒன்றிய இன அமைவியல் ஆய் வின் தற்காலத்துவ சிந்தனைகளி லிருந்து) வேறு இனங்களிலிருந்து காணப்படும் வேற்றுமையும், தம்மிடையே உள்ள ஒற்றுமை யும் பற்றிய தன்னுணர்வும் விழிப்பும் பெற்ற - மொழி,
பெயர், அவர்களின் இயல்பு
உட்பட்ட தனித்துவமான பொது
வான நிலையான கலாசாரப் பின் னணி கொண்ட - வரலாற்று ரீதியாக அமைந்த இனம், ஒரு தனி இனம் என்று கூறியுள்ளார். அந்நியர் ஆட்சிக்கு அடிமைப்பட முன் இருந்த நிலை, சுதந்திர இயக்க காலபட்டங்களில் ஏற் பட்ட கசப்பான அனுபவங்கள், சுதந்திரத்துக்குப் பின் தொட ராக சங்கிலிக் கோர்வையாக ஏற்பட்டுவரும் இனரீதியான கசப்பான அனுபவங்கள், ஏமாற்
றங்கள் விரக்திகள் தமிழ் த்
தேசிய உணர்வை வலுப்படுத்தி தனித்துவத்தை வலியுறுத்தி வரு கின்றன. ஆன ல் இத்தகைய நிகழ்ச்சிகள் தமது தனித்துவ மான பாரம்பரியம், வரலாறு, கலாசாரப் பின்னணி இல்லாத மக்களிடத்தில் எத்தகைய சிந் தனை மாற்றத்தையும் ஏற்படுத்த மாட்டா. ஆணுல் இலங்தைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் வரலாற்றுப் பின்ன னியோ, கலாசாரப் பாரம்பரிய தொடர்வரலாருே, த னித் து வமோ இல்லாதவர்கள் அல்லர். பவெல் குறேவிச் அவர்களின்
கருத்துக்களை தொ ளி வா க வேறுபடுத்தும்
*கோடனு கோடி மக்களுக்கு காலாசாரம்" என்ற் நூலில் அவர் சோவியத்து ஒன்றிய இன அமைப்புப் பற்றிக் கூறுவதும், விக்டர். ஷெவ்ற்சோவ் அவர்கள் "சோவியத்து ஒன்றியத்தில் அர சும் தேசிய இனங்களும்" என்ற நூலில் கூறும் இன அமைவியல் பற்றிய கருத்துகளும், வி. எஸ். செமியோனேவ் ‘தேசங்களும் சர்வதேசவியலும்" என்ற தூலில் கூறும் சோவியத்து ஒன்றியத்தின் இன அமைவியல் பற்றிய கருத் துக்ளுெம் பேராசிரியர் புருெம்லி யின் கருத்தை வலியுறுத்துகின் றன. இவை யாவும் லெனினின் தேசியப் பிரச்சினைகள் பற்றிய அடியொற்றியும் வலியுறுத்தியும் றிற்கின்றன.
ஒரு ச கா ப் த த் தின் உரு வக் அமைப்புக் காரணிகள் ஒன்றையொன்று த ழு வா ம ல் இருக்க முடியாது. கைலாசபதி வாழ்ந்த சகாப்தத்தில் கைலாச பதியின் இலக்கியச் சேவை புதிய ஒரு இலக்கிய சகாப்தத்தைஅந்தப் பெரும் சகாப்தத்தில் உட் பிரிவாக உருவாகியது. அதே பெரும் சகாப்தத்தில் உருவான தமிழ் அரசியல் அனுபவங்கள் புதிய தமிழ் அரசியல் சகாப் தத்தை இன்னுெரு உட்பிரிவாக உருவாகியது. இந்த உட்பிரிவு சகாப்தங்கள்  ைக லா ச பதி வாழ்ந்த சகாப்தத்தின் உருவக அமைப்புக் காரணிகளே. அவை  ைகலாச ப தி விரும்பியிருந்தா லென்ன விட்டிருந்தாலென்ன ஒன்றையொன்று தழுவத் தவற வில்லை. அந்த நிலையில் கைலாச பதியின் பங்களிப்பு தமிழ்த் தேசி யத்தின் இக்காலத் தனித்துவப் போக்கிற்கும் வளர்ச்சிக்கும் காத் திரமான உரமாக அமைந்துள் ளது என்பதை எவரும் மறுக்க
முடியாது, இந்த அம்சம் விரி வாக ஆராயப்பட வேண்டிய ஒன்ருகும். ()
Se

இது வீர வழிபாடல்ல ஒரு வேதனைப் பாடல்
புதுவை இரத்தினதுரை
அன்றும் வழமையைப்போல் அலைவரிசை செப்பனிட்டு வானெலிக்கு முன்னிருந்து செய்தியைக் கேட்கின்றேன், பிள்ளைக்குப் பால்கொடுக்கும் பிராக்கில் என்மனைவி
செய்தியைக் கேட்கவில்லை.
W II a A e M , கைலாசபதி காலமாஞர். வானெலிக் குள் விருந்திந்த வார்த்தை வருமென்று எண்ணுத காரணத்தால். என்றும்போல் கதிரைக்குள் சாய்ந்தபடியிருந்து செய்தியைக் கேட்கின்றேன். வந்தது செய்தி
வரலாறு முடிந்ததென்ற
செய்தி வந்தது.
"ஐயோ அம்மா"
ஆமாம் இப்படித்தான்
கத்தியதாய் நினைவு பால்கொடுத்த மனைவி பதறிக்கொண்டோடிவந்து என்னத்தான் என்ருள். செய்தியைக் கேள் என்று, சொல்லிவிட்டு நானழுதேன். ...கைலாசபதி. . . கலியுகத்தில் எதிர்பார்த்திருக்கும் கல்கி அவதாரமல்ல. . . இரட்சிக்க வந்த தேவ கும்ாரனல்ல இது எனக்கும் தெரியும்.
எங்களுடன் பேசி
எழுதிச், சிரித்திருந்த
தங்கமனிதன்,
தமிழன்,
உலகமெங்கும் செங்கொடிக்குக் கீழே திரள அவாக் கொண்டோன்.

Page 19
மங்களத்தின் கணவன்
மகள்மார் இருவருக்கு
அப்பன். . . அவ்வளவுதான்: அவ்வளவுதானு?
இவ்வளவு தானென்ருல் இழப்பின் கனம் குறைவு. இந்த இழப்போ ஈடுகட்ட முடியாத இழப்பாகி எங்கள் இதயத்தை எரிக்கிறதே. . கைலாசபதி. . . உரையெழுதிப் பயன்சொல்லி உழன்ற தமிழ் இலக்கியத்துள் புதிய அணுகுமுறை யொன்றை புகுத்தி வைத்த பேராசான். தமிழறிஞன் மட்டுமல்ல. . . ஒர் சமூக விஞ்ஞானி. அரும்புகளை இனம் கண்டு அவைகளுக்கு நீர்வார்த்தோன். யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் நாயகன் எல்லாவற்றுக்கும் மேலாக
நல்ல மனிதன்.
நம்பிக்கைத் தோழன். வெளிநாட்டில் வேலைபெற்று சிங்கப்பூர் செல்வதற்கு முதல்நாள் ஒரு திங்கட்கிழமை பேராசிரியர் வீட்டுக்குப் பயணம்சொல்லப் பேனேன். சந்தோஷப் பட்டார். மனித இச்சைகட்கு மலிவாகத் தீன்போடும் * சிங்கப்பூர் கவனம் செலவு மிக அதிகம் "கவனமாக நட" என்ருர், ஒரு மகனுக்குச் சொல்வதுபோல் நண்ட நேரம் விரிவுரையே நடத்தினர்.
சிராங்கூன் ரோட் டையும் "கோமள விலா சையும் இங்கேயே சொல்லி எனக்குத் தெம்பளித்தார். அங்குள்ள தனது நண்பர்கட்கு அறிவித்தார். மாதம் ஒருகடிதம் பே டுவேன். மறக்காமல் பதில் போடுவார். குடும்பத்தில் ஒருவனுக்கு எழுதுவதுபோல். குறிப்புகள் இருக்கும். இலக்கி பப் புதினங்கள் இடைக்கிடையே தலைகாட்டும். சுபத்திரன் இறந்ததை உடனேயே அறிவித்தார். இறப்புக்குப் பின்னே இவைகளை எழுதுதற்கு ஆதாரங்கள் தேவை. அதிலும் நியாய முண்டு. "சாட்சி" தேவை யெனில்
4.

*சர்வம் அக்கிாவை கேளுங்கள்: செய்தி கேட்டபோது இருந்த துயரப் பளு இப்போது இல்லை;
மாத ஒத்தடங்கள் மனதை ஆற்றிவிட்டன.
ஆனல். . . W வேறு வேதனைகள் விரியத் தொடங்கியுள்ளன. தங்களின் உயரத்துக்கு சமதையாக, கைலாசபதியின் கால்களை தறித்துவிடப் பார்ப்பவர்கள் அவரைத் தெய்வமாக்காதீர்” என்று வளாகத்துக் குள்ளிருந்து "இருகுரலிசை" எழுப்புகின்றனர், ...கைலாசபதி. 拳拳染 நிழல் மரமாய் நின்றவர்
அதன் கீழே நிழ்லுக்கு ஒதுங்கியவர் நிறையப்பேர். ஒதுங்கியவ ரெல்லாம் உரிமைக்கு வழக்காடும் வேடிக்கை நிகழ்ச்சி வேதனையைத் தருகிறது. *நல்லவரும் வல்லவரும் நடுவயதில் போவாரம் i அல்லாத பேரோ அறுபதையும் தாண்டுவராம்" என்ற பழமொழிக்கு இலக்கணமாய் ஆனவனே! சென்று வருக,
கைலாச பதிக்கு கணக்கு வைத்த கொடுமதியா நீகொண்டு போனுய் நிழலின்றி வாடுகின்ருேம்.
路
வேரதில் நீரை வார்த்தாய்
விழுதுகள் விட்டோம்; எங்கள் சாரதி ஆணுய் நாங்கள்
சரித்திரம் படைத்தோம் அந்தப் பாரதி கூட உன்னல்.
பவிசுகள் பெற்றன். கண்ணில் நீரதைச் சொரிய வைத்தேன்
நீயெமைப் பிரிந்து போளுய்.

Page 20
ஈழமும் தமிழ கத்து
இதயமும் இணைத்து வைத்து
ஆழம்ாய் நின்ற தாலே
அமைதியாய் தெரிந்தாய், இன்று
வேழமே! கனத்தை யென்ற
வெறுவெளி புகழைச் சூடி
வாழவா எரிந்தாய்; நாங்கள்
வாடிடப் பிரிந்தேன் போனப்
3
தமிழுடன் கலந்தாய், வாழ்வில்
சர்வமங் களமும் பெற்ருய்,
சிமிழெனத் திகழ்ந்தாய், எங்கும்
செந்தூரம் மணக்க வைத்தாய்
உமதடி மண்ணில் நானும்
ஒருமுளை யாகி வந்தேன்
எமதணி வெற்றி கொள்ள
எழுதினய் எங்கே போனய்.
3
ጁሠ"ካካn።ሡጣሡዞ"ካካሡዞ"lካካ•።ዞ"ካካ...።"ጣካu"ዞ"ካካtruዞ"ካካtatዞ"ካካ።uሠ"ካካu"ዞዞ"ካu"ዞዞ"ካካwጁ
சிறந்த சோவியத் அறிவியல், மார்க்சிய தத்துவ நூல்கள்
விலங்கியல் 17 - 50 இதயம் தருவோம் வேதியலைப்பற்றிய குழந்தைகளுக்கு 7 - 50 107 கதைகள் G மூலதனம பற்றி a 8 s - 75 லெனின் தேர்வு நூல்கள் 12 - 50 புவியகத்தின் டூரிங்குக்கு மறுப்பு 12 - 50 புரியாப் புதிர்கள் 12 - 30 அரசும் புரட்சியும் 3 - 75 இதயத்தை வலுவாக்கு 8 - 75 கூலி விலை இலாபம் 2 - 90
மக்கள் பிரசுராலயம் லிமிட் புத்தகசாலை 40. சிவன் கோயில் வடக்கு வீதி, யாழ்ப்பாணம். 12. குமரன் ரத்தினம் ருேட், கொழும்பு-: sunlil". "..."unusunse

அணு ஆயுதப் Gumir
*கூடாது' எனக் கூறுகின்றனர்
உலக விஞ்ஞானிகள்
எம். மார்க்கோவ்
நாளும் அதிகரித்து வரும் ஆயுதப் போட்டியினுல் சர்வதேச நிலைமை முற்றி மோசமடைந்து வருவதானது, உலகப் பேரழிவு ஏற்படக் கூடிய ஆபத்தை மென் மேலும் அதிகரிக்கச் செய்கிறது: அத்தகைய போர் ராஜ தந்திரி களின் பொறுப்பற்ற அல்லது த வருக த் தீர்மானிக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக மட்
டுமல்லாது, தற்செயலாகவும் வெடித்துவிடக் கூடும். இவ்வாறு தற்செயலாக வெடிக்கக்கூடிய
அணு ஆயுதப் போர் ஆபத்து அதிகரித்துக் கொண்டே வரு கிறது.
மனித குலத்தின் தலைக்கு மேல் சூ ழ் ந் து வரும் இந்த ஆபத்தை உணரும் உலக விஞ் ஞானிகள், மக்களையும் இதனை உணர வைப்பதற்காகத் தமது அறிவு விஷயஞானம். விவேகம் அனைத்தையும் ஒன்று திரட்டி வருகின்றனர். பிரபலமான ரஸ் ஸல்- ஜன்ஸ்டீன் அறிக்கைக்குச் செவி சாய்த்து 07 நோபல் பரிசு வெற்றியாளர்கள் உட்பட பிரபல விஞ்ஞானிகள் ப்லர், அணு ஆயுதப் போர் அபாயத்
தைப் பற்றித் தாம் அறிந்து கொண்டுள்ளதையும், அதனைத் தவிர்ப்பதற்கான வழிகளை க்
கூறும் யோசனைகளையும் கொண்ட பிரகடனம் ஒன்றில் பக்வாஷ் அறிக்கையின் உணர்வோடு கை
யெழுத்திடுவதன் மூலம் பக்வாஷ் இயக்கத்தின் 25 ஆது ஆண்டு விழாவைக் கொண்டாடத் தீர் மானித்துள்ளனர்.
இந் த ப் பிரகடனத்தில் இயற் கை விஞ்ஞானங்களின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள் ளனர். அணு ஆயுதங்களின் படு பயங்கரமான, ஈடிணையே காண முடியாத நாச சக்தி படைத்த ஆற்றலைக் குறித்து, உலகின் தலையாய பெளதிக நிபுணர்களைக் காட்டிலும் வேறு யாரோநன்கறி வர்? வேறு யார்தான் அதனைக் குறித்து மக்களுக்கு நன்கு எடுத் துக் கூற முடியும்? நவீன ரசா யன ஆயுதங்கள் தோற்றுவித் துள்ள பயங்கரமான ஆபத்தைக் குறித்து தலையாய ரசாயனவியல் அறிஞர்களைக் காட்டிலும் வேறு யாரோ நன்கறிவர்? இந்தப் பிர கடனத்தில் கையெழுத்திட்டுள்ள வர்களில், ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் வீசப்பட்ட அணு குண்டுகளால் விளைந்த விளைவு கள் பற்றிய படுபயங்கரமான விவரங்களைத் தெரிந்தவர்களாக மட்டுமல்லாது, ஓர் அணு ஆயுத ரசாயன ஆயுத, உயிரியல் ஆயு தப் போரில் மனிதன் எவ்வாறு பாதிக்கப்படுவான் என்பதையும் ஆழமாக அறிந்தவர்களாகவும் விளங்கும் பெளதிக நிபுணர்களும் இடம் பெற்றுள்ளனர்;
` `8ሃ

Page 21
ஓர் அணு ஆயுதப் போர் வெடிக்குமானல் நகரங்களிலுள்ள மக்களின் கதி என்னவாகும் என் பதற்கு, ஹிரோஷிமா, நாகசாகி ஆகியவற்றின் துயரக்கதை ஒரு பயங்கரமான உதாரணமாகும். அணு ஆயுதப் பரிசோதனைகளால் விளைந்த கதிரியக்கத்தால் நச்சு மயமான பிக்கினித் தீவுக் கூட் டம் அணு ஆயுதப் போரினல் மக்களும் நகரங்களும் அழிவ தோடு மட்டுமின்றி, சுற்றுச் சூழலும் நாசமாகி விடும் என்ப தற்கான உதாரணத்தை வழங்கு கிறது. ஆண்டுகள் பல கடந்து விட்டன: எ னினும் அணுச் சோதனை வெடிப்புக்களுக்கு ஒரு பரிசோதனைக் களமாகப் பயன் படுத்தப்பட்ட அந்தத் தீவு இன் னும் ஒரு பாலைவனமாகவே இருந்து வருகிறது.
அணு ஆயுதப் போர் அல் லது ரசாயன ஆயுதப் போர் சுற்றுச் சூழலுக்கு எத்தகைய பயங்கரமான சேதத்தை விள விக்க முடியும் என்பதைப் பிர சித்தமான உயிரியல் நிபுணர் களைக் காட்டிலும் வேறு யாரும் நன்ருக எடுத்துக் கூற இயலாது, வியத்நாமில் அம்ெரிக்கா நடத் திய போர், சுற்றுச் சூழலுக்கு நேர்ந்த பாதகத்தை எடுத்துக் காட்டுகிறது. ஹிரோஷிமா, நாகசாகி, பிக்கினி ஆகியவற் றின் விஷயத்திலோ தனித்தனி அணுகுண்டு வெடிப்புக்கள்தான் நிகழ்ந்தன. இன்றைய ஆயுதப் படைகளிலோ கப் பெரும் எண்ணிக்கையில் அணு ஆயுதங் கள் இடம் பெற்றுள்ளன. அவற் றை லேசாகத் தொட்டாலும் சரி, அல்லது கைதவறித் தொட் டுவிட்டாலும் சரி அவை உடனே வெடித்துவிடக் கூடும்.
மேற்கூறிய பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ள 97 விஞ்
ஞானிகளும் வெவ்வேறு அரசியல்
கருத்துக்களை, ஏன், எதிரும் புதி ருமான அரசியல் கருத்துக்களை யும்கூடக் கொண்டவர்களை என் ருலும், அவர்கள் ஒன்றுகூடி இந்தத் தல்தாவேஜியில் கை யெழுத்திடுவதற்கு எத்தகைய விவேகம் அவர்களுக்கு உதவியது? அது ரஸ்ஸல் ஜன்ஸ்டீன் அறிக் கையின் பிரதானக் "கட்டளை" யில் குடிகொண்டுள்ள விவேகமே யாகும்
அந்த அறிக்கை இவ்வாறு கூறுகிறது: "நாம் ஒரு புதிய வ்ழியில் சிந் தி க்க க் கற்றுக்
கொள்ள வேண்டும். நாம் விரும் பும் எந்தவொரு கோஷ்டிக்கும் ராணுவ வெற்றியை உறுதி செய்
வதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்
கைகள் என்ன என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ளாதிருக்க நாம் கற்றுக் கொள்ள வேண்
டும். ஏனெனில் அத்தகைய நட
வடிக்கைகள் ஏதும் இ னி யும் இருக்கவில்லை. நாம் நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி இதுதான்: Yசகல தரப் புக்களுக்கும் படுந்ாசத்தைேைய விளைவிக்கக் கூடிய ஒரு ராணுவ மோதலைத் தடுப்பதற்கு என்ன நடவடிக்கைகளை எடுக்க முடியும்" வேறுவிதமாகச் சொன் ஞ ல், அணு ஆயுத யுத்தம் என்பது கொள்கையின் தொடர்ச்சியாக இருக்க முடியாது என்றே இந்த அறிக்சுை கூறுகிறது.
உலகம் மோதல் நிறைந்த தாக உள்ளது: மகத்தான சம்ப வங்கள் மிக்க நமது கடந்த காலத்தின்போது நாம் சேகரித்து வந்துள்ன சமூக, ஒழுக்க, தாரி மிக மதிப்புக்கள் பலவற்றின் பாத்திரத்தை வெவ்வேறு மக்கள் வெவ்வேறு விதமாகப் புரிந்து கொள்கின்றனர். "போருக்கு முடிவு கட்டுவது" என்பது சக லத்தையும் மன்னித்து விடும் கேட்பாட்டை ஏற்றுக் கொள்

65) 67 6ät py அர்த்தமாகாது. நமது காலத்தின் மிக முக்கிய மான பிரச்சினைக்கு ஒர் அணு ஆயூதப் போரைத் தடுக் கும் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற் கான முயற்சிகளோடு நமது சண டைகளை இணைக்கக் கூடாது என LGB ன் அர்த்தமாகும். நாம் நீே ತಿಣ್ವ ଥିବot ಕೃತಿ பிரச்சினைகளை ஒதுக்கி வைத்துவிட வேண்டும். அவற்றைப் பற்றி விவாதிக்கவும்
கூடாது என்பதும் இதற்கு அர்த்தமல்ல. இந்தப் பிரச்சினை களைப் பரிசீலிப்பதற்கென்றே
உருவாக்கப்பட்ட பல உறுப்புக் களை நாம் பெற்றிருக்கிருேம்.
விஞ்ஞானிகள் யே గ్లా తా డి கூறும் விமோசன மார்க்கம்தான் என்ன? பக்வாஷ் இயக்கத்தின் 25 ஆவது ஆண்டு விழாவின் போது நிறைவேற்றப்பட்ட பிர கடனம், பதற்றத் தனி வின் அனுகூலமான பாத்திரத்தை வலியுறுத்துகிறது: சர் வ தேச அரசியல் ಅಜ್ಜೈ நிலவிய
க்கம் ளர்ந்ததால் ஏற் ಙ್ಗಹಿ "...? விளைவுகளை யும் தொகுத்துக் கூறுகின்றது. இந்தச் சாதனைகளை மறபபது தவருக முடியும்
ஒர் அணு ஆயுத யுத்தம் கூட வெடிக்காமலே நமது உலக மானது உயிரிழந்த பாலைவன மாக மாறிவிடக் கூடிய அபாயம் முற்றிலும் எதார்த்தமாக மாறிய அளவுக்கு, 1960 ஆம் ஆண்டு களின் தொடக்கத்தில் அணு வெடிப்புப் பரிசோதனைகளின் விளைவாக ஆகாய மண்டலமும் பூமிப் பரப்பும் கதிரியக்கத்தால் நச்சாக்கப்படுவது அத்தனை வேகத்தில் நிகழ்ந்து வந்ததை யும் நாம் இங்கு நினைவு கூரலாம்.
ஆகாய மண்டலத்திலும் பூமிப் பரப்பிலும் நீருக்கடியிலும் அணு வெடிப்புச் சோதனைகள்
89
துள்ளன என்றும்,
தடத்துவதைத் தடை செய்த மாஸ்கோ ஒப்பந்தம், தரப்புக்
களிடையே நல்லெண்ணம் நில
வினல், முக்கியமான உடன் t 19. iš Googstair ஏற்பட முடியும் என்பதையும், உலக ளாவிய
ஆபத்தை உணர்ந்து, பேச்சு வார்த்தைகளின் போது நாம் ‘மனிதன்” என்ற உயிரினத்தின் உறுப்பினர்கள் என்ற முறையில் நடந்து கொள்ள முடியும் என் 4தையும். நமது அ ப்படையான பிரச்சினைகளைச் காக அந்த அறிக்கையில் வகுத் துக் கூறப்பட்டிருந்த முறைகள் ஒன்றும் கற்பனையல்ல. LDfTops முற்றிலும் எதார்த்த பூர்வம்ானவையே என்பதையும் 4லப்படுத்தியது.
அதே சமயத்தில் அந்தப்
பிரகடனமானது, கடந்த சில
எதிர்நோக்கியுள்ள <9 LITLJћ467 கணிசமான அளவுக்கு அதிகரித் “வரம்புக்குட் !ட்ட'நீடித்து நடக்கக்கூடிய
இவற்றிபெற்க்கூடிய அணு «Չեեւվ தப் போர் என்பன போன்ற -9|ւմո սա ՖՄլ քո 6նr தவமுன கருத் துக்களையும் ஒல அரசாங்கத் தலைவர்கள் தழுவத் தொடங்கி
受万g560).5L போர் ஒன்று வெடிநீரை உண்மையான தொழில் துட்பச் சாத்தியப்பாடுகளையும் அமெரிக்க T II SO) af – தொழில்துறைத் தொகுதி உருவாக்கியுள்ளது. சாதாரண அணு ஆயுதங்கள் எனப்படும் ஆயுதங்கள் பலவற் றை அது உருவாக்கியுள்ளது. உண்மையில் அவை 9-6.56minst <99901 sugegoufié5 GB urri- ஒன்றைக் கட்டவிழ்த்து விடுவதற்கான தொழில்நுட்பவியல் அடிப்படை யாகவே உள்ளன:

Page 22
உலகளாவிய அணு ஆயுதப் போரைக் கட்டவிழ்த்து விடுவது என்ற சொற்களையே நான் பயன் படுத்தியுள்ளேன். ஏ னெனில் அளவு ரீதியான கண்ணுேட்டத் திலிருந்து பார்த்தால் "வரம்புக் குட்பட்ட" என்ற பதமே அபத்த மானது. அணு ஆயுதப் போர் என்பது பல நூற்ருண்டுகளுக்கு முன்னுல் உடைவாள்கள் அல்லது கைத் துப்பாக்கிகளைக் கொண்டு நடத்திய சண்டை அல்ல. அதனை ஆதரித்து நிற்பவர்களும் கூட போராடுபவர்கள் ஒரே விதமான ஆயுதங்களையே பயன்படுத்து மாறு பார்த்துக் கொண்டனர். இருபதாம் நூற்றண்டின் இறுதி யில் "வரம்புக்குட்பட்ட அணு ஆயுதப் போரில் அவ்வாறு ஆத ரித்து நிற்போர் எவரும் இருக் கப் போவதில்லை. அத்தகைய போருக்கு எல்லையே கிடையாது. அது உலகப் பேரழிவின் த்ொடக் கமாகவே இருக்கும்.
ஆயுதப் போட்டியைப் பின் னேக்கித் தள்ளுவதற்கு முன்னல் முத வில் அதனை நிறுத்தியாக வேண்டும் என்று அந்தப் பிரகட னம் கூறுகிறது. ஆயுதங்களின் தற்போதைய அளவை முடக்கு வது, புது ரகமான ஆயுதங்களை உருவாக்குவதைக் கைவிடுவது என்ற கருத்தானது. இந்த நோக் கத்தை எய்துவதற்கான பயன் மிக்கதொரு சமாதானமாகும் என்று அது வலியுறுத்துகிறது. இதில் இரண்டாவது கோரிக்கை மிக மிக முக்கியமானது என்ப தையும் குறிப்பிட்டாக வேண்
டும்.
ஏற்படக்கூடிய ஒரு மோத லில் அணு ஆயுதங்களைப் பயன் படுத்துவதை நாடுகள் கைவிட வேண்டியதன் முக்கியத்துவத் தைப் பிரகட்னம் வலியுறுத்து கிறது. 27 ஆண்டுகளுக்கு முன்
ஞல் ரஸ்ஸல்- ஜன்ஸ்டீன் அறிக் கையில் இடம் பெற்றிருந்த யோசனைகளையும் இன்று நினைவு கூர்வது பொருத்தமாகும். பின் வரும் தீர்மானத்தை ஏ ற் று க் கொள்ளுமாறு நாங்கள் உலக விஞ்ஞானிகளையும் பொது மக்க ளையும் அழைக்கிருேம். வருங் காலத்தில் ஏற்படக் கூடிய எந்த வோர் உலகப் போரிலும் அணு ஆயுதங்கள் நிச்சயம் பயன்படுத் தப்படும் என்ற உண்மையையும் அத்தகைய ஆயுதங்கள் மனித குலம் தொடர்ந்து வாழ்ந்து வரு வ  ைத யே அச்சுறுத்துகின்றன என்ற உண்மையையும் கருத்தில் கொண்டு, உலக அரசாங்கங்க ளின் நோக்கமானது ஒர் உலகப் போரின் மூலம் முன்கொண்டு செல்லப்படக் கூடாது என்பதை அவை உணரவும், பகிரங்கமாக ஒப்புக் கொள்ளவும் வேண்டும் என்று நாங்கள் கோருகிருேம். இதன் விளைவாக, அவை அவற் றுக்கிடையிலான தகராறுக்குரிய விஷயங்கள் அனைத்துக்கும் தீர்வு காண்பதற்குச் சமாதான பூர்வ மான மார்க்கங்களைக் கான வேண்டும் என்றும் நாங்கள் கோருகிருேம் .
இது சாத்தியமானகாரியமே. மேலும் அணு ஆயுதங்களை உப யோகிப்பதில்தான் முதலாவதாக இருக்கப் போவதில்லை என்ற பவித்திரமான உறுதி மொழியை எடுத்துக் கொண்டதன் மூலம் சோவியத் யூனியன் ஏற்கெனவே ஒரு நல்வ உதாரணத்தை முன் னிறுத்தியுள்ளது. அதன் வழியை ஏனைய அணு ஆயுத வல்லரசு களும் பின்பற்றினல் மனிதனின் அடிப்படையான விருப்பத்தை பூர்த்தி செய்வதில் மற்ருெரு பெரும் முன்னேற்றம் ஏற்படும்
崔0

லெனின்: மார்க்சின் உண்மையான வழித்தோன்றல்
வி. கோர்துணுேவ்
கோடிக் கணக்கான மக்களின் மனத்தைக் கவர்ந்த பல சித் தர்ந்தக் கொள்கைகளை உலக சமுதாயச் சிந்தனையின் வரலாற்றில் காண்கிருேம். அவற்றுள் சில, அந்தக் காலகட்டத்திற்கு மட்டுமே உரித்தாயிருந்தன; மற்றவை காலம் கடந்து நின்று. நாடுகளில் வாழ்வில் இன்றளவும் முக்கிய பங்காற்றி வருகின்றன. உலக வர லாற்று வளர்ச்சி அனைத்திலும் மார்க்சிய - லெனினியத்தைப் போல் தீர்மானகரமான செல்வாக்குச் செலுத்திய சித்தாந்தப் போக்கு கள், கடத்தகாலம் மற்றும் நிகழ்காலத்தில் எதுவுமில்லை. நம் காலத்தில் விஞ்ஞான கம்யூனிசக் கருத்துக்கள் அமுல் நடத்தப்படு வது இதற்கொரு சான்ருகும்; அதாவது, சோவியத் யூனியனில் சோஷலிச நிர்மாணம், உலக சோஷலிச அமைப்பின் தோற்றம், வளரும் உலக மக்களில் பலர் சோஷலிசக் கண்ணுேட்டத்தைத் தேர்ந்தெடுத்தல், இவை உதாரணமாகும்:
லெனினது வழியில்தான் சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சி @ld போது இயங்குகிறது. ரஷ்யாவில் சோஷலிசப் புரட்சியின் வெற்றி யானது, “போரை ஒழித்துக் கட்டுவதற்கான போராடடத்தில் முதல் வெற்றியாகும்" என்று லெனின் கூறினர். உலக சமாதா னத்திற்கான போராட்டத்தைச் சோவியத் அர்சு வீறுடன் தொடங் குகிறது என்பது. இதன் கருத்தாகும். இவ்வாறு கூறிய ஆதே வேளையில், சோஷலிச சக்திகளுக்கும் முதலாளித்துவ சக்திகளுக்கும் இடையேயான அணிச் சேர்க்கையின் விலைவாக, அந்த நாட்களில் இந்தச் சக்திகளிடையே ராணுவ மோதல்கள் தவிர்கி (UAbLg?. யாதவை என்ருர். இருபதாம் நூற்ருண்டின் இரண்டாம் பாதியில் சக்திகளின் அணிச் சேர்க்கையானது சோஷலிசத்திற்கு ஆதரவாக மாறியுன்ளது; எனவே மற்ருெரு திலகப் போர் தவிர்க்கப்பட முடியாதது என்ற கருத்தை அகற்றுவது பற்றிய முடிவுக்குச் சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சி வந்தது.
உலக நாகரிகத்தின் வரலாறு முழுவதிலும் மிகச் செல்வாக்கு மிக்க சித்தாந்தப் பிரவாகமாகிய மார்க்சிய - லெனினியத்தின் பகுதியாக இருப்பது பற்றிச் சோவியத் கம்யூனிஸ்டுகளாகிய fbirth பெருமைப்படுகிருேம். நவீன விஞ்ஞானம், கலாசாரத்தில் காணப் படும் மிகச் சிறந்த மிக முன்னேற்றமான அனைத்தையும் திறந்த மனத்துடன் வரவேற்கும் அது இன்று உலக ஆன்மிக வாழ்க்கை யின் மையமாக உள்ளது: அது கோடானு கோடிக் கணக்கான மக்களின் சிந்தனைகளைக் கவர்ந்து உள்ளது. எழுச்சி பெற்று வரும் வர்க்கத்தின் சித்தாந்த ஆயுதமாகும் இது. இது மனித குலம் முழுதையும் விடுதலை செய்து வருகிறது." இது சமூக நன்னமபிக் கையின் தத்துவமாகும்; தற்காலம் மற்றும் எதிர்காலத்தின் தத்து வமாகும்” என்று சோவியத் கம்யூனிஸ்டுக் கட்ஓடின் பொதுச்
செயலாளர் யூரி ஆந்திரபோவ் கூறியது குறிப்பிடத்தக்கதாகும், O

Page 23
தமிழ்ப் பல்கலைக் கழகம் தஞ்சாவூர்
நடராசர் இல்லாத சிதம்பரம்
தஞ்சாவூர் மாவட்டம் திருவாரூரில் கிடைத்த மூன்று வட மெகழிச் செப்பேடுகளில் சிதம்பரத்தைப் பற்றிய அரியதொரு வர லாற்றுச்செய்தி கிடைத்துள்ளது. அவைகளின் மூலம் 24-12-1848 முதல் 14 - 11 - 1888 முடிய 37 ஆண்டு பத்து மாதம் இருபது நாட்கள் சிதம்பரமாகிய தில்லையில் நடராசப்பெருமான் இல்லை என்ற புதிய தகவல் கிடைத்துள்ளது. -
தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் கல்வெட்டுத்துறை சார்பில் புல வர் செ. இராசு திருவாரூர் தியாகராசர் கோயிலுக்குச் சென்று அ ங் கு ஸ் ள செப்பேடுகளைப் படியெடுத்துக் கொண்டு வந்தார் மொத்தம் 11 செப்பேடுகள் படியெடுத்து வரப்பெற்றன. இவை களில் வடமொழிச் செப்பேடுகள் உள்ளன. வடமெழிச் செப் பேடுகள் மூன்றில் இதுவரை சைவசமய வரலாற்றில் இடம் பெருத அரிய இந்த புதுத்தகவல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சுமபர் 40 மாதங்கள் குடுமியாமலைக்கும், பின்னர் மீதியுள்ள காலம் மதுரைக்கும் தில்லை நடராசப் பெருமான் சென்றிருந்தார். சிதம்பரத்தில் நடராசர் இல்லாத நாட்க்ளில் தில்லை நடராசருக் குக் குடுமியாமலையிலும், மதுரையிலும் பூசை நடைபெற்றது. நடராசர் இல்லாத காலத்தில் சிதம்பரம் மிகவும் அழிந்த நிலையில் இருந்ததாகவும், சிறப்புக் குன்றி இருந்ததாகவும் அச்செப்பேடுகள் கூறுகின்றன5
நடராசர் தில்லையைவிட்டு ஏன் சும்ார் 36 வருடம் சென்ருர்? நடராசர் இல்லாத சிதம்பரமாகத் தில்லை ஏன் ஆயிற்று என்ப தற்கு அச்செப்பேடுகளில் காரணம் கூறப்பெறவில்லை ஆளுல் அக் கால சூழ்நிலயை ஆராய்ந்து பார்க்கும்போது பீஜப்பூர் சுல்தான் படையெடுப்புக்குப் பயப்பட்டோ அல்லது 6, 7 ஆம் ஆண்டு தமி ழகத்தின் வடக்குப்ற்குதியில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தின் காரண மாகவோ பாண்டிய நாட்டுக்குப் பாதுகாப்பாக அடியார்களால் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று கருதலாம். நடராசரை மீண்டும் சிதம்பரத்துக்குக் கொண்டுவந்து எழுந்தருளச் செய்தது மராத்திய மன்னர் சகசி காலத்திலாகும்.
இத் தகவல்கள் அழகிய தமிழ்ப் பாடல் வாயிலாகச் செப்பேட்
டில் அளிக்கப்பெற்றுள்ளன. நடராசர் "வீடுடைய மூதலியார்”, "செம்பொன் அம்பலத்தான்" என்றும் குறிக்கப்படுகின்ருர், O
A2

கைலாசபதிஒர் இலக்கியப் போராளி
5ெலாசபதியை முத ன் முதல் 1957 ல் கொழும்பில் நடைபெற்ற அனைத்துலக சமா தான மகாநாட்டுத் தயாரிப்பு வேலைகளின் போது சந்தித்தேன்.
பல்கலைக் கழகத்தில், தனது பட்
டப் படிப்பை முடித்துவிட்டு வெளியேறியிருந்தார் அ வர். தனது கன்னி விமர்சனங்களை
எழுதத் தொடங்கி, அவற்றில்
ஒன்றிரண்டை வாசித்திருந்தா
லும், நேரில் சந்தித்தது அப்
போதுதான்!
அந்நிய ஆதிக்கத்லிருந்தும்
உள்நாடு ஆடிமை நுகத்தடியி ருந்தும் - விடுதலை பெற்ற நாடு களிலிருந்தும் விடுதலை பெறப் போராடிக் கொண்டிருக்கும் நாடு களிலிருந்தும் பல்வேறுபட்ட மக் களின் பிரதிநிதிகளோடு எழுத்தா ளர்கள், கவிஞர்கள், கலைஞர் கள் போன்ற விடுதலைப் பிரேமி
கள் இந்த மகாநாட்டில் பங்கு
பற்ற வந்திருந்தார்கள். அவர் களைச் சந்திப்பதிலும், அந்தந்த நாட்டு விடுதலை யக்கங்கள் பற்றித் தெரிந்து கொள்வதிலும் கைலாசபதி மிகுந்த ஆர்வமுடை யவராயிருந்தார். சிலி நாட்டிலி ருந்து வந்திருந்த கவிஞர் பப் லோ நெருடாவின், "மரகத் முத்தாய் தீவுகளுக்குள் தாமரை
என். கே. ரகுநாதன்
யாய், அழகின் சிகரமாய் விளங் கும் எழில் மிகு இலங்கையே நீ
வாழ்க!"- என்று தொடங்கும் கவிமயமான சமாதான மகா நாட்டு வாழ்த்துச் செய்தியைப் பேருவகையோடு மொழிபெயர்த்
துவிட்டு, ஒரு சர்வதேசப் புகழ்
வாய்ந்த மக்கள் கவிஞனுக்கு
மொழிபெயர்ப்புச் ச ய் து கொடுத்து மகிழ்ச்சிப் பெருக்கு
டனும் கர்வத்துடனும் காணப்
பட்டார் கைலாசபதி
பப்லோ நெருடா, ஆறடிக்கு
மேல் உயரமுடைய, ஆகிருதி படைத்த உடல்வாகு கொண்ட கவிஞர். கைலாசபதி, நெருடா வின் ஆகிருதியை அப்படியே எடுத்துக் கொண்டவர் போல் நிமிர்ந்து நடை பயின்ருர் அப் போது மக்களுக்க்ாக்ப் பேணு ஓட்டத் தொடங்கிய கைலாச பதிக்குப் பல மக்கள் எழுத்தா ளர்கள். கவிஞர்களைச் சந்தித்த தனல் ஏற்பட்டது அந்தப் பீடு p56) ll
24 வயதே நிரம்பிய கைலா சபதி அப்போது எவ்வளவு உற் சாகத்துடனும் கர்வத்துடனும் பேணுவை ஒட்டினரோ, அப்ப டியே தன் இறுதி மூச்சுவரையும் ஒட்டினர் எதிர்ப்புகள் தோன் றிய வேளைகளில் ஆக்ரோஷத்
40

Page 24
துடனும் திட சித்தத்துடனும்
ஒட்டினர்; மக்களுக்காக ஓர் இலக்கிய இயக்கத்தைக் கட்டி வளர்க்கும் பணியில் நிதானத்
துடனும் தீர்க்கத்துடனும் ஒட் டிஞர். இது. அவர் வாழ்க்கை யையும், ஆளுமையையும் நிர்ண யித்த ஆதார் சுருதியாகும்.
இலக்கியம் தொட்டு பல்க லைக் கழகம் வரை, ாைலாசபதி யின் பணிகள். இந்த நாட்டு மக்களுக்குப் பரதரப்பட்ட வகை யில் விரிந்து பரந்தது. விரிவுரை யாளராய் இருந்து, மாணவரை எதிர்கால உலகத்துக்கு வளர்த் தெடுத்ததிலிருந்து, tumrpu unr ணப் பல்கலைக் கழகத்தைக் கட்டி யெழுப்ப பக்கபலமாய் நின்று ஆற்றிய பெரும் பணிவரை அவ ரது பங்களிப்பு மகத்தானது. எனினும் இலக்கியம்ே அவர் உயிர் மூ ச் சா ய் அமைந்தது. இலக்கியத்தில். விமர்சன த் துறையைத் தெரிந்தெடுத்துக் கொண்டு அதற்கூடாக (Ipsi) போக்குச் சிந்தனைகளை வெளிப் படுத்தி, ஓர் இலக்கிய இயக்கத் தைக் கட்டி வளர்ப்பதில் அவர்
பெரும் பங்காற்றினர். தன் வாழ் நாள் முழுவதையும் ஓர் இலக்கியப் போராளியாகவே
வாழ்ந்து பயனுள்ளதாக்கிஞர்.
பல்கலைக் கழகத்திலிருந்து வெளிவந்ததும், அவர் தினகரன் பத்திரிகை ஆசிரியர் குழு வில் சேர்ந்து பணியாற்றினர். விரை வில் அவர் அதன் பிரதம ஆசிரி u u tur nr i அமர்த்தப்பட்டதும். ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் ஒரு துரிதகதி ஏற்படத் தொடங் கியது. அதுகாலவரை, நீ ம் து தேசிய இதழ்களில் தென்னிந்திய மூன்ருந்தர நான்காந்தர எழுத் தாளர்களின் விஷயதானங்க ளுக்கே கெளரவமளித்துப் பிரசு ரிக்கப்பட்ட நிலைமை மாற்றப் வட்டது. ந ம து எழுத்தாளர்
களுக்கு முக்கியம் கொடுக்கப் பட்டதுடன், வீச்சுள்ள புதிய முயற்சிகளுக்கெல்லாம் களம் அமைக்கப்பட்டது.
இலங்கை முற்போக்கு இலக் கிய இயக்கம் கட்டியெழுப்பிய தேசிய இலக்கியம், பிரதேச இலக்கியம், மக்கள் இலக்கியம், மண்வாசனை என்றெல்லாம் பல தரப்பட்ட பரிமாண வளர்ச்சி யின் முக்கிய பங்குதாரர் கைலா சபதியே. இவற்றை வளர்த் தெடுப்பதில் காலத்துக்குக் காலம் தோன்றிய விதேச இலக்கிய ஆதிக்கம் பத்து வருடம் பின் தங்கிய இழிசொல், இழிசனர் வழக்குப் போராட்டம் போன்ற எதிர்ப்புக்களையெல்லாம் கைலா சபதியின் பேணு, சற்றேனும் சலிப்படையாமல் ஈ விரக்கமின்றி எதிர்த்துப் போராடியது; வெற் றியும் ஈட்டியது.
மார்க்ஸியப் போர்வையில் உலவும் அழகியல் மாரீசர்கள், மக்களது பிரச்சினைகளை முன் வைத்து எழுதும் முற்போக்கு அணியினரைத் தாக்கும் பாங்கில் தொடர்ந்து தாக்கப்பட்டவரும் கைலாசபதியே. இத்தனைக்கும் அவர் ஒர் ஆக்க இலக்கியகாரர் அல்லர்” இந் நாட்டில் உள்ள சகல முற்போக்கு எழுத்தானர் களினதும் பாதுகாவலர் போல. மார்க்ஸிய நோக்குடன் கூடிய ஆய்வுத் திறன். விமர்சன ஆற் றல் ஆகியவற்றின் அசைக்க முடியாத வலிமையிஞல், அவர்
களைப் பாதுகாக்கும் > பணியில்
தனது பே ஞ  ைவ ஒரு பலம்
வாய்ந்த கேடயமாகப் பயன் படுத்தினர். '
நிதர்சனமான இந்த உண்
மைகளுக்குப் பிறகும், சில சில்ல றைகள், மிகவும் சின்னத்தன மாக நடந்து கொள்வதையும் நாம் காணக்கூடியதாகவுள்ளது:
46.

கைலாசபதிக்குக் கிடைத்த இந்த விழுப்புண்கள் எல்லாம் தமக்குக் கிடைப்பதற்காக கூலிக்கு ஆள் வைத்து எழுதுவிக்கும் அற்பத் தனத்தையும் நா ம் காண்கின் ருேம்.
O
கைலாசபதி மறைந்த பின்பு, துரதிருஷ்டவசமாகச் சின்னபின் னப்பட்டுக் கிடக்கும் இடதுசாரி அரசியல் குழுக்களிடம் ஒரு சல சலப்பு ஏற்பட்டுள்ளதையும் நாம் அ வ தா னிக்க முடிகின்றது. * கைலாசபதி உயிரும் பிராண. னுமாக எங்களுடன்தான் நின் முர். எங்க ள் பத்திரிகைக்கு மட்டுமே அவர் மறைமுகமாக எழுதினர்!" எ ன் றெ ல் லாம் உரிமை கொண்டாட முற்பட் டுள்ளனர்.
கைலாசபதி, மார்க் ஸிய சித்தாந்தத்தை ஐயந்திரிபு இன்றி ஏற்றுக் கொண்டவர். ஆணுல், கட்சி அரசியல் வாதியாகத் தன்னை ஒருபோதும் காட்டிக் கொண்டவரல்லர். பல்கலைக் கழ கத்தில் படித்த காலத்திலும், பின் னர் விரிவுரையாளராய்ப் பணியாற்றிய காலத் தி லும் மார்க்ஸியத்தைக் கற்றுத் தெளி வதிலும், அதை மாணவரிடையே பரப்புவதிலும் பெரும் ஆர்வம் காட்டினர். பின்னர் அவர் பல் கலைக் கழகத்தில் வகித்த பெரும் பதவிகள் காரணமாக முன்னைய பணிகளுக்கு ஈடாக, மார்க்ஸி
யக் கருத்துக்களை இலக்கியத்துக்
கூடாகப் பரப்புவதையே தனது பணியாகக் கொண்டிருந்தார்.
கைலாசபதி ஒரு படிப்பாளி: கல்விமான் இன்னும் சொல்லப் போனல் வசதியான குடும்பத் தைச் சேர்ந்தவர். பல்கலைக் கிழ கத்தில் பெரும் பதவிகளை வகித் தவர். "இடது பக்கம். திரும்பிப் பார்க்சுாம்லே அவர் பேரோடும்
புகழோடும் வாழ்ந்திருக்கலாம். ஆனல் சமுதாயத்தின் மனச் சாட்சிக்குத் தன்னை அப்பழுக் கின்றி அர்ப்பணித்தமையால், தான் வகித்த பதவிகளின் கார ணமாக பகிரங்கமாக நிறை வேற்ற முடியாத அரசியல் பணி களை இலக்கியத்துக்கூடாக நிறை வேற்றினர்.
எங்கள் நாட்டு இடதுசாரி அரசிய லில் ஒரு சாபக்கேடு; யாராவது ஒரு படிப்பாளியை
அல்லது உயர் பதவியிலிருப்ப வரை, அவர் எங்களோடுதான் நிற்கிருர்! என்று சாயம் . பூச
முற்படும் சாபக்கேடு. அவரைக் காட்டி ஆள் பிடிக்கக் கையா" ளும் தந்திரோபாயம். கைலாச பதியின் மார்க்ஸிய நிலைப்பாட் டினைக் களங்கப்படுத்துவதற்கு இப்படியும் இடையூறு கள், "கைலாசபதி போஸ்டர் ஒட்ட வரவில்லை, எங்களுடன் வாங்கி லில் இருந்து பிளேன் டீ குடிக்க வரவில்லை" என்று அவரைச் சிறு மைப்படுத்தக் கூடாது. அது உரைகல் அல்ல. மார்க்ஸிய அணி பெரும் பரப்பைக் கொண் டது. தொழிவாளர், விவசாயி கள், புத்திஜீவிகள், நடுத்தர வர்க்கித்தார் இப்படி, கைலாச பதி, ஒரு புத்திஜீவியின் பங்குக்கு அதிகமாகவே தன் பணி யை ஆற்றியவர். Y
"கைலாசபதி சீ ஞ வுக் குப் போய் வந்தாராம். டெங் லியாஒ பிங் கின் வலை யில் வீழ்ந்துவிட்டாராம். டெர் வியாஒ பிங் கின் ஆதரவாளர் கள் கைலாசபதிக்குக் கைலாகு கொடுத்தார்கள். சீனக் கொள் கையை ஏற்காதவர்கள் புறஞ் சொன்னுர்கள். சீன அரசாங் கம், ஒருமாத காலம் கைலாச பதியையும் அவர் மனைவி மக்க ளையும் தனது விருந்தாளிகளாக வைத்திருந்து பல இடங்களுக்

Page 25
கும் அழைத்துச் சென்று காட்டி யது. கைலாசபதி சீனுவிலிருந்து திரும்பி வந்து, "மக்கள் சீனம்காட்சியும் கருத்தும்" என்று ஒரு நூலை எழுதினர். காட்சியும் கருத்தும்தான்! வேறு ஒரு அபிப் பிரா யமும் சொல்லவில்லை. ஆஹா ஒஹோ என்ற புகழ வில்லை. சீனுவில் ஏற்பட்ட மாற்
றங்கள். அவர் மனதைப் பெரி
தும் சஞ்சலத்தில் ஆழ்த்தின என்பது, அவருடன் நெருங்கிப் பழகிய நண்பர்களுக்குத் தெரி யும்.
பத்துப் பதினைந்து வருடங் கிள் சீனுவிலிருந்து வயிறுவளர்த் துப் பிழைத்தவர்கள் திரும்பி வந்து சீன க் கொள்கையைத் தாக்கிப் பேட்டி எழுதுகிருர்கள். கொள்கை பிடிக்காத இடத்தில் பிழைப்பு எதற்கு? உதறி எறிந்து விட்டு வந்து விமர்சித்திருக்க லாமே! கைலாசபதி மானங் கெட்டுப் பிழைக்கவில்லை.
ஓயாத எழுத்தார்வம் மிக்க
கைலாசபதி, எப்பொழுதும் எழு
திக் கொண்டே இருப்பவர். போய்க் கேட்கும் பட்சத்தில்,
சிறு அரசியல் குழுக்கள் நடத்தும்
பத்திரிகைகளாளூலும், Fij60) L முறை அரசியல் சீர்கேடுகள், கருத்துக்கள் பற்றிக் குறிப்புகள் எழுதிக் கொடுப்பார். இலக்கி யப் பத்திரிகைகளானுல் மேலும் உற்சாகத்தோடு எழுதுவார். "எங்கள் பத்திரிகைக்குத்தான் அவர் எழுதினர்" என்று யாரும் பெருமைப்பட்டுக் கைலாசபதி யைக் கூண்டுக்குள் அடைக்கத் தேவையில்லை, அப்படிப் பிரகட னம் செய்தவர்களுக்கு. அவர்
களின் எதிர்க் குழுவினர் நடத்த,
இருந்து இடையில் கைவிடப் பட்ட பத்திரிகைக்கு அவர் எழு திக் கொடுத்த கட்டுரையொன்று அவர் மறைந்த பின் வெளியிடப் பட்ட "இலக்கியச் சிந்தனைகள்"
என்ற நூலில் பிரசுரம் பெற்றுப் பெ ருத்த சாட்சியாக இடம் பெற்றிருப்பதைச் சுட்டிக் காட் L-6DIT Lb.
தமது பிள்ளைகளைத் தனி யார் கல்வி நிறுவனங்களில் பெரும் பணம் செலவு செய்து பகிப்பித்து, பின் லஞ் சம் கொடுத்து அவர்களுக்கு உத்தி
யோகமும் தே டி க் கொண்டு கைலாசபதி தம்மைத் தூக்க வில்லை என்பதத்காக, படிப்பை
யும். அறிவையும், பல்கலைக் கழ கத்தையும் நையாண்டி பண்ணித் தமக்குப் புகழ் தேட முற்பட்ட வர்கள் கைலாசபதியின் அஞ்ச லிக் கூட்ட செயற்குழுவிலும் இடம் தேடிக் கொள் வேண்டிய அளவுக்கு அவரது மேதாவிலா சம் மேலோங்கி நின்றது மகத் தான விஷயம்தான் 'கயவர் சில பேரும் கண்ணிரை விடுகின் முர். உன் இறப்பை ஏணியென உயர்த்தி அதில் ஏற முன்னிற் போர், இப்போ முழு மூச்சாய் நிற்கின்ருர்’ என்று புதுவை இரத்தினதுரை அழகாய்த்தான் பாடியுளளாா. ܫ
இத்தகைய சின்னத் தனங் களுக்கெல்லாம் ஆட்பட்டாலும், அசைந்து கொடுக்காமல் அவற் றைப் புறங் கண்டு - எத்தனை பணிகள் செய்தாலும் அந்தப் பணிகளுக்கூடாகவும், அந்தப் பணிகளுக்கு மேலாகவும் தனது இலக்கியப் பணியை - மார்க் விய இலக்கியப் பணியைத்
தனது உயிர் மூச்சாகக் கொண்
டிருந்தவர் கைலாசபதி.
ஒரு பிரச்சினையைக் கேட்டுக் கொண்டிருக்கும் போ தே, மீசையை மேல்நோக்கி முறுக்கிய படி. அப்பிரச்சினையின் சக ல அம்சங்களையும் கிர கித் துக் கொள்ளும் அதே கணத்தில், அதற்கான தீர்வையும் கண்டு
A

கொள்ளும் நுண்ணறிவு, நேரத்தை அவமாக்காத கடின உழைப்பு, எத்தகைய இடர்களி லும் முன்னேறிச் செல்லும் திட சித்தம் ஆகிய பண்புகளைக் கொண்ட கைலாசபதி. குழுவாதி களினதும். விரக்தியாளர்களின தும் பொச்சரிப்புகளைப் பொருட் படுத்தாமல் தேசிய, சர்வதேகிய இயக்கங்களுடன் உணர்வு பூர்வ மாகத் தன்னை ஐக்கியப் படுத் திக் கொண்டு பணியாற்றினர். "மக்கள் இலக்கியப் பண்பு" என் றும் கட்டுரையில் பப்லோ நெரு டாவின் இலக்கியப் பணியைப் பற்றிக் கூறவந்த கைலாசபதி, பின்வருமாறு குறிப்பிடுகின்ருர்
சோஷலிஸம், ஜனநாயகம், தேசியவிடுதலை முதலியவற்றுக் கான போராட்டத்தில் உலகின் பல பகுதிகளில் ஈடுபட்டுள்ள சமுதாயங்களில் இயக்க ரீதியான இலக்கியமானது முற்போக்கு அணியைச் சார்ந்தவர்களால் தேசிய - சர்வதேசிய உணர்வு களுடன் உருவாக்கப்பட்டு வந் துள்ளன; வருகின்றன. இந்த முற்போக்குப் படைப்புகளுக்கும் ஒரு வரலாறு உண்டு வளர்ச் சிப்படிகள் உண்டு; பொதுப் பண்புகள் உண்டு; போராட்ட மரபு ஒன்றுண்டு. அந்தவகையில்
எந்த ஒரு மூலையில் மக்கள்
எழுத்தாளன் ஒருவன் எழுதிக் கொண்டிருக்கிருன் எ ன் ரு ல் அவன் தனித்தவன் அல்லன்
மேலும் அவர் எழுகிேருர்:
அமெரிக்காவிலே கறுப் பு இன மக்களும், மாணவர்களும். செவ்விந்தியர்களும், மற்றும் பல சிறுபான்மையினரும் கிளர் ந் தெழுந்து நடத்தும் உரிமைப் போர்களின் மத்தியில் இலக்கி யம் படைக்க முற்பட்டதும் அதன் எதிரொலி உலகெங்கும்
கேட்கிறது. பலஸ்தீன விடுதலை
வீரர்கள் களத்தில் நின்று கவிதை களும் சிறுகதைகளும் சிருட்டிக் கும் பொழுது அவை உலகின் பல பாகங்களில் பேணு பிடிப்ப வர் க ளின் இதய ஒலி யாக அமைந்து விடுகின்றன. தென்ன பிரிக்காவில் மிருகங்களிலும் கேவ லமாக மக்கள் நசுக்கப்படுவதை எ தி ர்த் துப் போரிடுவோரின் கீதங்கள் வேறுபல நாடுகளில் மக்களின் ஆத்ம ராக்ங்களாக அமைந்து விடுகின்றன.
கைலாசபதியின் இலக்கியப் பணி. இந்த நாட்டிலும், தமிழ் கூறும் நல்லுலகத்திலும் ஏன் சர்வ தேசம் முழுவதுமுள்ள உலகைப் புதுக் அமைப்பதற் காய்ப் பேணு பிடித்த சகல முற் போக்கு எழுத்தாளர்களினதும் இதய ஒலியாக, ஆத்மராகமாக அமைகின்றது.
கைலாசபதி தனது கலா நிதிப் பட்டத்துக்காகப் பர்மிங் ஹாமில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது, * யாழ்ப் பாணக் கவிராயர் என்ற புரட்சி யாப்புக்குள் கவி செய்த தோழ ரான பசுபதி தனது வாழ்க் கைக்கு முற்றிட்டுச் சென்ருர்,
அவரது கவிதை களை த் தொகுத்து வெளியிடப்பட்ட "புது உலகம்" என்ற நூலுக்கு
தோழர் மு. கார்த்திகேசன் எழு திய முன்னுரையில்
"கொடூரமான புற்றுநோய் யாழ்ப்பாணத்திலுள்ள கம் யூனிஸ்டுகளின் அணியை இருமுறை ஊடுருவிச் சென் றுள்ளது. முதன் முறை அது இராமசாமி ஐயரின் உயிரை அ வ ர து 46 ம் வயதில் கவர்ந்து சென்றது. இப் பொழுது அவரிலும் இளமை
47

Page 26
ሠrso பசுபதியை அவரே 40 ம் வயதில் பறித்துச் சென் றுள்ளது" என்று ஆற்ருது எழுதினர்:
கைலாசபதி பர்மிங்ஹாமிலி ருந்து திரும்யியதும்
பாரதி, புதியதோர் உலகம் செய்வோம்" என்றுதான் பாடினன். ஆனல் காலஞ் சென்ற யாழ்ப்பாணக் கலி ராயர் என்ற பசுபதியோடி புது உலகம் காண்பதற்குப் புர்ட்சி வேண்டும்.
உலகம் எமக்களித்த பாடம்" என்றும்,
விடிவுகாலம் இங்கு எம்க் காம் - இதை வெற்றியோ டீட்டித்தருவோம்’ என்றும் புதுக்குரலிற் பாடினு' என்றும் கவிஞரின் இதய ஒலியில் தெறித்த ஆவேசத் தொனியை வியந்து எழுதி ஞர்.
மக்களை
கார்த்திகேசன், கைலாசபதி யைப் படிப்பித்த நல்லாசிரியர். கைலாசபதி, தன் பே ஞ  ைவ வழிநடத்திச் செல்ல வழி காட்டும் போராயுதமாக வும், தன் எழுத்துக்களை, மக்க ளின் இதய ஒலியாகவும் மாற்றி ம’கத் தா ன பணி சமைக்கத் திசை காட்டியவர்: இளம் நெஞ் சிலே சிறு பொறியை இட்டவர்.
கைலாசபதியின் அன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய ஆசான் கார்த்திகேசன் எழுதியதுபோல, இப்போது கொடூரமான புற்று நோய், யாழ்ப்பாணத்திலுள்ள கம்யூனிஸ்டுகளின் அணி யை மூன்ரும் முறை ஊடுரு விச் சென்றுள்ளது.
நன்ருய்ச் செழித்து வளர்ந்று பூத்துக் குலுங்கி காய்த்துக் கனிந்து கொண்டிருந்த கைலாச பதியை அவரது 49 ம் வயதில் பறித்துச் சென்றுள்ளது. O
இலக்கியப் பணிக்கு உ றுதுணை
பேராசிரியர் கைலாசபதி
அவர்களின் இலக்கியப் பணி
திறந்து விளங்க உறுதுணையாயிருந்தவர் அவரது அருமைத்
துணைவியார் சர்வமங்களம் அவர்கள்
விட்டோடு தொடர்பான எந்தப் பிரச்சி
குடும்ப நிர்வாகி.
அவர் ஒரு சிறந்த
னைக்கும் பேராசிரியரை உள்ளாக்காமல் தானே நிர்வகித்து
வந்ததால், பேராசிரியர்
வுடன் ஈடுபடுவதற்கு வாய்ப்பாயிருந்தது. எழுத்துக்களையும் அவா பிரதி எடுத்துக்
வந்தார்.
இப்படி கெலும்பில் ஏற்பட்ட
இலக்கியப் பணியில் முழு நிறை
பேராசிரியரின் கொடுத்து உதவி
உறுதுணையாயிருந்த சர்வமங்களம் அவர்கள், முது
(5 நோயின் காரணமாக,
ஆறு
வார காலம் படுத்த படுகையாக இருந்து சிகிச்சை பெற
வேண்டி ஏற்பட்டது அக் பெண் குழந்தைகளது ம் உ
வந்ததுடன் சமையல் வெளிப்படுத்தியதுடன் யைக் காட்டினா "
காலத்தில் பேராசிரியர் தன் இரு தவியுடன் அவரைப் பாரமரித்து வேலையையும் கவனித்து, தன் அன்பை சமையல் கலையிலும் தன் திறமை
48

›››››››››››ዱጵጎዱእጎዱአጎ›አጎዱፅቅዱ››››ጎ››ጎዱእጎኳሕጎ››››››››››
அருமைக் கைலாஸ்
நீ இறக்கவில்லை நிறைந்து நிலைத்து வாழ்கிருய்
ફ્લefલ્લામાં ક્લફ્ફલ્ડ્રિ
ஐந்து மாதத்துக்கு முன்னர் எம்மையெல்லாம் விட்டுப் பிரிந்த அருமை நண்பர் கைலாசபதியை இன்று நிகினத்துப் பார்க்கும் போது . . * சுதந்திரன்' துணை ஆசிரியராக நான் பணியாற்றிய சமயம் இளம் இலக்கியகாரர்களை யும் கலைஞர்களையும் அறிமுகப் படுத்துவதற்கான பகு தி யில் எழுதுவதற்காக நண்பர் செ. கணேசலிங்கனுடன் அ வ  ைர 42 ம் ஒழுங்கை இல்லத்தில் முதல் முதலில் சந்தித்த அந்த முதற் பரிச்சயம் தொட்டு, அதே நண் பர் கணேசலிங்கனும் நானும் ஆஸ்பத்திரியில் ஐந்தாம் மாடி அறையில் அவரின் கால்மாட்டில் நிலைகுலைந்து நிற்க, 'அத்தான். அமைதியாகப் போய்வாருங்கள்" என்று கைலாசின் அருமைத் துணைவி ச ர் வம் அசாதாரண மனப் பக்குவத்துடன் (கைலாஸ் கொடிய நோய்க்கு இலக்கானது முதல் இறுதி மூச்சுவிடும் வரை நடக்கவிருப்பதன் சில ரேகைக் கோடுதானும் தன் முகத்தில் விழுந்துகாட்டிக் கொடுத்துவிடா
மல் இருப்பதற்காக மெல்லிா உணர்வுகளின் பெட்டகமான @占 Q} T @ 于 பவித்திரமாகப்
பார்த்த வீரம் தமிழ்க் காவியத்
உரையை நிகழ்த்தினர்.
“பிரேம்ஜி
தில் வீரம் கண்ட கணவனுக்கே வாய்த்த ஒரு தமிழ்ப் பெண் ணின் வீர காவியம்தான்) மென் குரலில் இறுதிப் பிரியாவிடை கொடுத்துக் கொண்டிருக்கும் போது ஒரு மேதையின் சிந்த னைத் துடிப்பு நின்று மெல்ல மெல்ல ஆவி அடங்கிய அந்தக் கடைசி நிகழ்வு வரை எண்ணி றந்த எத்தனையோ சம்பவங்க ளின் நினைவுக் காட்சிகள் மனத் திரையில் மாறி மாறி ஒடிக் கொண்டிருக்கின்றன.
நண்பர் கைலாஸ்"டனன எனது இரண்டாவது முக்கிய சந்திப்பு, முற்போக்கு எழுத்தா ளர் சங்கத்தின் கண்டிக் கிளை யின் அங்குரார்ப்பணக் கூட்டத் திற்காக நான் கண்டி சென்ற போது நிகழ்ந்தது. ஆரம்பம் முதல் கடைசிவரை கூட்டத்தில் பங்கு கொண்ட கைலாஸ். முற் போக்கு இலக்கியம் பற்றியதோர் அருமையான, கருத்தாழம்மிக்க 9 GJITT பேச்சை நான் முதல் கேட்டது அன்றுதான். ஒரு தலையாய பேச் சாளராக ம ட் டு ம ல் ல, முற் போக்கு இலக்கியத்தின் முதன் மைச் சித்தாந்தியாகவும் கைலாஸ் உயர்ந்து செல்வார் என்று நான்
49

Page 27
என் மனத்தினுள் அன்று போட்ட வி"ைகாலம் மெய்ப்பித்து விட்டது.
அதன் பின்னர் 1957 இல் கொழும்பில் நடந்த உலகசமா தான இயக்க மாநாட்டு ઉ6vટ%) களில் நான் மும்முரமாக ஈடு பட்டிருந்தேன். நண்பர் கைலாஸ் அடிக்கடி வந்து பணிகளில் பங் கேற்ருர், புரட்சிக் கவி நெருடா வின் உரையை அவர் அழகு தமிழில் மொழியாக்கம் செய்து தந்தார். அந்த வாச சங்கள் பின் னர் திருமண வாழ்த்து 1) L-6) கள் உட்பட எண்ணிறந்த பல எழுத்தோவியங்களில் Gର & Int @) வ்ேறின.
அதே காலத்தில் நடை பெற்ற g?). (p. 67. af: முதலா வது மாநாட்டைத் தொடர்ந்து கைலாசபதி முற்போக்கு எழுத் தாளர் சங்கத்துடன் முழுமை யாகச் சங்கமமானர்
இ. மு. எ.சவில் தலைமைக் குழுக் ஆட்டங்கள், அது அபி. தொடியாக நடத்திய கணக்கற்ற கருத்தரங்குகள் இலக்கியக் கூட் டங்கள், எழுத்தாளர் சந்திப்புக் கள், விழாக்கள் ஆகியவற்றில் கைலாசப்தியுடன் மிக நெருக்க மாகப் பழகுவதற்கும் இணைந்து செயற்படுவதற்கும் எ ன க் கு வாய்ப்புக் கிடைத்தது*
நான் சுதந்திரனிலிருந்து வெளியேற்றப்பட்டும் கைலாஸ் தினகரன்' பத்திரிகையின் i Syr 5 D ஆசிரியராகப் பதவி ஏற்றும் இருந்த அந்தக் காலப் பகுதியில் தான் எத்தனை சந்திப்புகள் ஆலோசனை அமர்வுகள் திட்டLEL6) as 6it
நண்பர் கைலாசபதி கலா நிதிப் பட் ப- ப் படிப்பிற்காக இங்கிலாந்துக்குப் பிரயாணமான போது அவரைக் கொழும்புத் துறைமுகத்தில் வைத்து வழிய
னுப்பச் சென்ற இ. மு: ст. i. வைச் சேர்ந்த நாங்கள் முற் போக்கு இலக்கிய அணி ஈழத்து இலக்கியத்திற்கும் பொதுவாக தமிழ் இலக்கியத்திற்கும் ஒப்பற்ற ஒரு மேதாவிலாசத்தை அளிக் கப் போகிறது என்று அப்போதே பெருமையில் பூரித்து நின்ருேம்.
பின்னர் 1971 ல் முற்போக் அணியின் வெற்றி ை #ಣ್ಣೆ தொடர்ந்து தமிழ் ஆலோசனைக் குழுவின் செயலாளராகப் பணி ப்ாற்றிய போது கைலாசபதி உட்பிட எமது அணி யைச் சேர்ந்த பல நண்பர்களைப் புல் வேறு அமைப்புகளுக்குத் தெரிவு செய்வதில் பங்கு கொள்ளும் நல் வாய்ப்பு எனக்குக் கிடைத் 5@·“
இலங்கை ஒலிபரப்புக் கூட் டுத்தாபன தமிழ்ப் பகுதிக்கான ஆலோசனைக் குழுவில் கைலாஸ
Tன் பணியாற்றிய அந்த நாட் கள் சுவாரஸ்யமானவையாகும்.
இலங்கைப் பல்கலைக் கழக
யாழ் வளாகத் த லே வரை த்
தெரிவு செய்யும் விடயத்தில் இறுதி முடிவு எடுக்க வேண்டி
FTம், அப்போதுதான் வெளி நாடு சென்று திரும்பிய எனது இனிய நண்பரான ஒரு அமைச் ரும் நானும் சந்தித்த போது பல பெயர்கள் பரிசீலனைக்கு வந் தன. நண்பர் கைலாசபதிக்கு எதிரான ஒரு நீண்ட மொட் Lக் கடிதத்தை அமைச்சர் என்னிடம் தந்தார். 6 LD gi அணிகளிலிருந்தே கடும் எதிர்ப் புகள். இத்தனைக்கும் மத்தியில் அன்று நாம் நிர்ப்பயத்துடன் எடுத்த முடிவு நிச்சயம் பிசகற் றது"என்பதை காலம் நிரூபித்து விட்டது. கைலாசபதி ஒப்பற்ற ஒரு இலக்கிய விற்பன்னர் மட்டு மல்ல, அவர் தன்னேரில்லா ஒரு நிர்வாகியும் கர்ம் வீரனும் கூடி என்பதை யாழ்ப்பாணத்தின்

கல்விக் கோயிலான யாழ் பல்க லைக் கழகத்தை அவர் கட்டி யெழுப்பிய வரலாறு எடுத்து நிறுவிவிட்டது.
1978 இல் பண்டாரநாயக்க
சர்வதேச மாநாட்டு மண்டபத்
தில் இ. மு. எ. ச. கூட்டிய தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிங்கள - தமிழ் எழுத்தாளர்
மாநாடு நடைபெற்றுக் கொண் டிருந்தது. 12 அம்சத் திட்டத்தை அங்சீகரிப்பதற்கான அமர்வுக்கு கூட்டுத் தலைவர்களுள் ஒருவராக கைலாஸையே எமது தலைமைக் குழு நியமித்திருந்தது: மாநாட்
டுக்கு எதிராக பயங்கரச் சூழ்ச்சி கழுத்த
கள். குழிபறிப்புகள், றுப்புகள் "உள்ளிருந்தே" மேற் கொள்ளப்பட்ட பகைப்புலத்தில் ஒவ்வொரு கட்டத்திலும், வொரு கூடிணப் பொழுதிலும் இச் சதிகளை எதிர்த்துப் போராடி
முறியடித்துக் கொண்டிருந்த நாம், மிக மிக முன்னெச்சரிக் கையாகவும் முன்யோசனையாக
வும் கைலாஸையே அந்த முக் கிய அமர்வுக்குத் தலைவராகச் செயற்படப் பணித்தோம். எந் தக் குழுவிலும் எந்த நிலைமை யையும் ச மா விக்க க் கூடிய பேராற்றலும் மதிநுட்பமும் கைலாஸளக்கு உண்டென்பதில் நாம் ஒரு மனத்தினராக இருந் தோம். அவரும் மிகத் திறமை யாகவும் வியத்தகு சாதுரியத் துடனும் செயற்பட்டு 12 அம் சத் திட்டத்தை மாநாடு ஏற்கச் செய்த தி ல் வெற்றியீட்டித் தந்தார்.
முற்போக்கு இ லக் கி ய க் கோட்பாடுகளை ஈழத்து இலக்கி யத்தின் செல்நெறியாக்குவதி லும், இக் கோட்பாடுகளை தமி ழக இலக்கியப் பரப்பில் மீள் நிறுவுவதிலும் இலக்கியப் பேரா சான் கைலாசபதி ஆற்றிய பங் குப் பணி உண்மையிலேயே ஒரு
ஒவ்
வரலாருகி விட்டது. இது நீண்ட வரலாற்றியல் ரீதியில் ஆய்வுக் குட்படுத்தப்பட G3 ou GöT ış u தமிழ் இலக்கியத்தின் ஒரு மதிப் பார்ந்த பகுதியாகிவிட்டது5
ஆனல், தான் இலக்கிய உலகில் காலடியெடுத்து வைத்த நாள் முதல் தனது க்  ைட சி மூ ச் சு அடங்கும்வரை தான் சார்ந்து நின்ற முற்போக்கு இலக்கிய அணியை காத்திரமான சக்தியாகக் கட்டியெழுப்புவதில் கைலாஸ் ஆற்றிய பங்குப் பணி மகத்தானது. அது வே ஒரு வாழும் மரபும் பாரம்பரியமும் ஆகும். இ. மு: எ ச. வில் தொடர்ந்து செயற்பாட்டிற்கு ஆபத்தும் அச்சுறுத்தலும் அகக் காரணிகளால் ஏற்பட்ட போது தான் ஒரு அரசியல் அணியைச் சேர்ந்திருந்த போதிலும், அந்த அணியினரின் கர்னகடுரமான எதிர்ப்புகளை உள் வாங் கி க் கொண்டும், இ. மு. எ. ச வின் ஸ்தாபன ஐக்கியத்தைக் கட்டிக் காக்க நண்பர் கைலாஸ் எடுத்த கோட்பாடு பூர்வமான முயற்சி களையும், இதில் அவர் கொண் டிருந்த பிசகற்ற, பற்றுறுதியான தொலை நோக்கு நிலைபாட்டினை யும் முற்போக்கு எழுத்தாளர் கள் என்றென்றும் நினை வில் வைத்துப் போற்றுவர்.
இரண்டரை தசாப்தங்க ளாக நான் கைலாசபதியுடன் நெருங்கியிருந்த போ தி லும், நண்பர்கள் இளங்கீரனைப் போல, பொன்னையனைப் போல நான் அவருடன் "இரண்டறக் கலந்து" நிற்கவில்லை. கண்ணுடிப் பிரே முக்கு ப் பின்னல் கைலாசின் கண்களில் காணப்பட்ட "கடுமை" யினை அவதானித்திருந்த நாள் அவர் சுபாவத்திலும் "கடுமை? யாக இருக்கலாம் என்று அவ் வப்போது நினைத்ததுண்டு. கடு

Page 28
மையான கோலம் காட்டிய ஒரு சித்தாந்தப் பிடியின் ஆளும்ைக் குட்பட்டிருந்த அவர் அந்த வீச் சின் வயப்பட்டோ என்னமோ இலக்கிய விமர்சனத்திலும் சிற் சில சந்தர்ப்பங்களில் "கடுமை" யாகத்தான் தோற்றம் காட்டி னர். ஆளுல் அவர் பச்சிளம் குழந்தைக்கே உரிய இளகிய, மென்மையான பண்பினர் என் பதை இறுதித் தினங்க்ளில்தான் என்னுல் நேரில் தரிசிக்க முடிந் திதிக
அவர் ஆஸ்பத்திரியில் "அட் மிட்" டான நாள் முதல் அவ ரது ஆவி பிரிந்த அந்தக் கடைசி நிமிடம் வரை கைலாசபதியை பல நாட்கள் நான் பார்த்தேன். ஒரு பிற்பகல் முழுவதும் அவர் அருகில் இருக்கும் அரிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அவரது உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வநத துரிய அண்பை ஆழதத இதயத்தை, பர மதிப்பை அந்த ஒவ்வொரு நிமிடமும் எ ன் ஞ ல் உணர முடிந்தது. சில சொற்களில் (அவர் கூடுதலாகப் போச க் கூடாது என்பதால்) பாரிய விஷயங்களை மனம்விட்டுப் பேசி ஞர். அவற்றுள் முக்கியமான epGör gp : 1. எழுத்தாளர்கள் மத்தியில் தலைதூக்கிய பூ ச ல் களும் பொச்சரிப்புகளும் நீங்கி நல்லுறவு நிலைநாட்டப்பட வேண்டும். 2. அரசியல் அ ரங் கில் முற் போக்குச் சக்திக்ளுக்கிடை
யிலான பிளவுகள் அகன்று,
பொது எதிரியை எதிர்த்த போராட்ட ஐக்கியம் தோற் றுவிக்கப்பட வேண்டும்.
3. இனப் பிரச்னையில் எனது அரசியல் அணி கூ டு த ல் சிரத்தை கொள்ள வேண் டும்.
புனிதமான பரஸ்,
ஆம் கைலாஸ், கருத்துப் போராட்டம் என்ற உன்னதம் கேட்டு தனிப்பட்ட பூசல்சள் தலையெடுட்பதைத் தவிர் க் க வேண்டும் என்ற உன் விருப் பத்தை ஈழத்து இலக்கிய உல கம் விடுத்த இறுதி ஆக்ஞையாக ஏற்று தனது அணிக ளில் ஆரோக்சியமான உறவுகளை வளர்க்கும் என்பது உறுதி.
முற்போக்கு அணியின் ஐக் கியத்தை மீண்டும் கட்டியெ ழுப்ப வேண்டும் என்ற உன் விருப்பத்தை முற்போக்குச் சக் திகள் நீர் விடுத்த இறுதி ஆணை யாக ஏற்றுச் செயற்பட உறுதி கொள்ளும் என்பது திண்ணம்.
தேசிய இனப் பிரசினையில் வர்க்க நிலைப்பட்ட, தர்ம நிலைப் பட்ட ஒரு நிலையுறுதியாக நிலை பாட்டினை முனைப்பாக எடுக்க வேண்டும் என்ற உனது விருப் பத்தை நீர் விடுத்த கடைசிக் கட்டளையாக பாட்டாளி வர்க்க சர்வாதிசியத்தை விசுவாசிக்கிற அனைவரும் ஏற்றுக் செயற்படு வர் என்பது சத்தியம்.
இறுதியாக, அரு  ைம க் கைலாஸ்: நீர் இறக்கவில்லை. இறக்கவும் முடியாது. உனது ஆத்மா உனது ஆருயிர்த் துணை வியில், உனது பிள்ளைச் செல் வங்களில், உ னது அருமைத் தோழர்களில், இறுதி வெற்றியை வரலாற்று நியதியாகக் கொண்ட உனது உன்னத இலட்சியங்களில் நிறைந்து நிலைத்து வாழ்கிறது.
எ ங்க ள் எல்லோரினதும் உயிர்த் துடிப்புள்ள எண்ணங் களில், வெப்பமான மூச்சுக்களில் முன்னேறிச் செல்லும் வரலாற் றின் முடிபற்ற அணி வகுப் பு ஒசையில் நீ வாழ் கி ன் ரு ய் வாழ்ந்துகொண்டேயிருப்பாய்.

BFو டாஸ்கரன் சொன்ஞர் இலங்கை மிலிருந்து கைலாசபதி வந்திருக் கிருர், உங்கள் விஷயமாக் அவர் என்னிடம் சண்டை' பிடித்தார்.
என்ன விஷயம்? சுேட்டேன்.
ரஸ்வதி ஆசிரியர் விஜய
என்று
"சரஸ்வதி அட்டைப் படம் விஷயமாகத்தான். வ ல் விக் கண்ணனின் தற்போதையத் தோற்றத்தை படம் பிடித்துப் போடாமல் அவருடைய சின்ன வயசுப் போட்டோவை அச்சிட் டிருக்கிறீர்களே; அது சரியல்ல. அவர் இன்று எப்படி இருக்கிருர் என்று தெரிந்து கொள்வதில் தான் இலக்கிய ரசிகர்கள் அதிக விருப்பம் உடையவர்களாக இருக் கிமுரிகள். நீங்கள் அவருட்ைய சின்ன வயசுப் படத்தை அச்சிட் டிருப்பது வாசகர்களை ஏமாற்று வது போலாகும் என்று கைலாச பதி சொன்னூர். சரஸ்வதி அட் டையில் வந்திருப்பது வ. க. வின் இன்றையத் தோற்றம்தான்; சரஸ்வதியில் வெளியிடுவத ற் கென்தே சமீபத்தில் பாண்டியன் ஸ்ரூடியோவில் எடுக்கிப்பட்ட படம்தான் அது என்று நான் சொல்லியும் அவர் நம்பவில்லை, வல்லிக்கண்ணன் பெரிய ஆளாக
இருக்க வேண்டும்; இது சின்னப்
solinutilinii liniigehulgaritiivinanırsınırlık
“ካዛuዞዞማካዛዛ፡ዞዞ። LtttLMEELLEELEELLLEEELLLLL
நட்புணர்வை வளர்த்த நல்ல மனிதர்
வல்லிக்கண்ணன்.
பையள் உருவம்போல் தோன்று கிறது என்று அவர் தெரிவித் தார். வ. க. இப்படித்தான் இருப்பார்? நீங்களே நேரில் பார்த்து தெரிந்து கொள்ளுங் கள் என்று சொல்லியிருக்கிறேன்.
சாயங்காலம் அவர் வருவார். அதுவரை நீங்கள் இங்கேயே ருங்கள்" என்று விஜயபாஸ்
கரன் கேட்டுக் கொண்டார்.
19 8 பிற்பகுதியில் ஒருநாள் நிகழ்ந்தது இது. அந்த வருஷம் ஆகஸ்ட் மாத சரஸ்வதி இத ழில் என் போட்டோ அட்டைப் படமாக வந்திருந்தது. அதைப் பற்றித்தான் கைலாசபதி அவ் வாறு அபிப்பிராயம் கூறினர்.
சிறிது நேரத்திலேயே கைலா சபதி அங்கே வந்துவிட்டார். என்னை அறிமுகம் செய்து வைத்த வி. பா. சிரித்துக் கொண்டே கேட்டார், "இப்ப என்னப்யா சொல்கிறீர்? இப்பவாவது நம்பு கிறீரா இல்லையா?? என்று.
கைலாசபதியும் சிரித்த்ார். *வல்லிக்கண்ணன் பெரிய ஆளாக இருக்க வேண்டும் என்று என் மனசில் ஒரு கணிப்பு. 942 - 47 வருஷங்களில் கிராம ஊழி யன் பத்திரிகை இலங்கையில் மிகுந்த தாக்கம் ஏற்படுத்திக்

Page 29
கொண்டிருந்தது: இலக்கிய ஆர் வமுடைய எல்லோரும் Horn LD ஊழியனைப் படித்து ரசித்தார் கள். அது பற்றிப் பேசினர்கள். உற்சாகமுள்ள இளைஞர்கள் சிலர் அந்த உந்துதலால் என்ற பத்திரிகையை ஆரம்பித் தார்கள். அந்த க் காலத்தில் வி. க. எமுத்துக்களால் கவரப்
டவர்களில் நானும் ஒருவன்
அப்பவே அவருக்கு வது அதிக மிருக்கும் என்று எண்ணியிருந் தேன். இத்தனை வருஷங்களுக்
குப் பிறகு சரஸ்வதியில் மிக் இளமைத் தோற்றம் கொண்ட உருவத்தைப் பார்த்ததும், இது சின்னவயசுப் போட்டோ தான் என்று எண்ணினேன். நீங்கள் நேரில் பார்க்கையிலும் சின்னப் பையன் மாதிரித்தான் தோன்று இறீர்கள்" என்று ഷെ ബ ♔ | கூறினர்.
பல விஷயங்களைப் பற்றியும் பேசிளுேம். நீங்கள் தினகரனில் தொடர்ந்து எமூத் வேண்டும். தமிழ் எழுத்தாளர்களை அறிமு கம் செய்யும் கட்டுரைகள் எழு துங்களேன் என்ருர்,
நானும் எழுத ஒப்புக் கொண்டேன்.
பத்துக் கட்டுரைகள்
போதும். முக்கியமான பத்துந்
பேரைப் ப்ற் றி எழுதுங்கள்" என்ருர் ܗܝ
அவ்வாறே எழுதினேன் அந்த வரிசை முடிந்ததும் அல்லது ஏடு வாரங்கள் வரும் பான ஒரு குறுநாவல் எழுதி அனுப்புங்கள் என்று அவர் கொழும்பிலிருந்து கடிதம் எழுதி னர். அப்படி ஒரு கதை அனு
GGGGGT Gör.
என க்கு அதிகபட்சமான பணம் கிடைக்கி வேண்டும் என்று எண்ணி, அதை பத்து வாரங்
மறுமலர்ச்சி
கள் வரும்படி பிரித்துப் பிரித் துப் பிரசுரித்தார். நல்ல தொகை ஒன்று சன்மானமாகக் கிடைக்க ஏற்பாடும் செய்தார்.
அடுத்த முறை சென்னைக்கு வந்தபோது க்ைலாசபதி என் னைத் தேடி.எனது அறைக்கு வந்து க்ாத்திருந்தார். அதே சமயம் நான் வெளியே G3untui? ருந்தேன். கிருஷ்ணும் பேட்டை யில், நகரச் சந்த்டி - பரபரப்பு ஐ விட்டு ஒதுங்கி உட்புறமா? அமைந்திருந்த ஒரு தோ!.
வீட்டில் என் அண்ணுவும் நானும் அப்போது வசித்து வந்தோம்.
நான் வந்ததும், "இன்று நீங்கள் என்னேடு சுற்ற வேண் டும். புத்தக விற்பனை நிலையங்
களுக்குப் போக வே ண் டும்" என்ருர்.
நானும் உடனே கிளம்பி னேன்.
"தோற்றத்தில் எ ன க்கு
ஏமாற்றம் தந்ததுபோல, எழுத் திலும் ஒருவகையில் நீங்கள் ஏமாற்றம் அளித்து ςθι ιο, ή 456ίτ' என்று கைலாசபதி சொன்ஞர்.
என்ன விஷயம்?" என்று G3s LGB L-6r.
முக்கியமான பத்து எழுத் தாளர்கள் பற்றி எழுதச் சொன் னேன். நீங்களும் எழுதினீர்கள். பத்தாவது கட்டுரையில்தான் ஏமாற்றி விட்டீர்கள். பத்தாவ "வல்லிக்கண்ணன் தன்னைப் பற்றியே எழுதுவார் பாருங்கள் என்று நான் ஒரு நண்பரிடம் கூட சொல்லிவைத்தேன். ஆனல் ங்கள் கல்கியைப் பற்றி எழுதி விட்டீர்கள்" என்று சொல்லிச்
ஒரித்தார் அவர்
முதலில் மவுண்ட் ரோடில் ஹிக்கின் பாதம்ஸ் புக் ஸ்டா
4.

அலுக்குப் போளுேம். கைலாசபதி அங்கே நூல்களைப் பார்வையிட் டார். சில புத்தகங்கள் வாங் கினர்.
வெளியே வந்து சிறிது துரம் நடக்கையில் க. நா. சுப்ர மண்யம் எதிர்ப்பட்டார். சேம லாபங்களை விசாரித்து முடித்த ததும், "இப்போ இரண்டு
பேரும் எங்கே கிளம்பினீர்கள்?*
என்று கேட்டார்.
*சும்மா சென்னையை சுற்ற லாம் என்றுதான். இன்று வல் லிக்கண்ணன் எனக்கு வழிகாட்டி" என்று சிரித்து க் கொண்டே கைலாசபதி கூறிஞர்.
*வல்லிக்கண்ணன் நல்ல வழி காட்டி ஆகமாட்டார். அவர் வழியைப் பின்பற்றினுல் சிரமப் பட நேரும்’ என்று "க. தா சு. சொன்ஞர். *
"பரவால்லே. எதிர்ப்படுகிற சிரமங்களை என்னல் சமாளிக்க முடியும்" என்று கைலாசபதியும் தமாஷாகவே சொன்ஞர்.
க. நா. சு. விடைபெற்றுச் சென்றபின் நாங்கள் நியூ செஞ்
சரி புக் ஹவுசுக்குப் போஞேம்.
கைலாசபதி தி னகர னில் தான் செய்துள்ள அபிவிருத்தி கள் பற்றியும், சிறுகதை எழுத் தாளர்களை ஊக்குவித்து வருவ தையும் அறிவித்தபடி வந்தார். சிறுகதை எழுதுவதில் 'பலர் வெற்றி பெற்றிருச்கிருர்கள். அண்மையில் நிகழ்ந்த சிறுகதைப் போட்டியில், ஐந்து பரிசுகள்ல் மூன்று பரிசுகளைப் பெற்றவர் கள் தின கர ன் வாயிலாகத் தெரியவந்தவர்களே" GT Går spy அவர் சொன்னுர்,
*நல்ல ரிசல்ட்தான்" என்று நான் கூறவும். அவர் ம்றுப்பா கத் தலையசைத்தார்.
'ஐந்து பரிசுகளையும் தனக ரன் எழுத்தாளர்கள் பெற்றிருக்க
வேண்டும். அதுதான் நல் ல ரிசல்ட் ஆகும். ஐந்தில் மூன்று மட்டும் வெற்றி” என் தில்
எளக்கு மனக்குறைதான்" என்று கைலாசபதி தெரிவித்தார்.
அவருடைய லட்சிய நாட் டம் எனக்குப் புரிந்தது.
இறுதியாக நாங்கள், தென் னிந்திய சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகம் சேர்ந்தோம். அங்கே வெகு நேரம் செலவிட் டார் அவர். தேடித் தேடிக் கண்டு பல பழம் நூல்களை வாங்கினர்.
திரும்புகையில் அவர் சொன்
னர்: "எனக்கு ஒரு ஆசை,
ராஜவல்லிபுரம் வந்து வல்லிக்
கண்ணனின் நூல் நிலையத்தைப் பார்வையிட வேண்டும் என்று விரும்புகிறேன். அரிய நூல்கள் பல ஆங்கே இருக்கும் என்று நினைக்கிறேன்?
"அப்படி எதுவும் இராது. நான் உங்களைப் போல் அலைந்து தேடி நூல்கள் சேகரிக்கவுமில்லை; சேமிக்கவுமில்லை" என்றேன்.
*உங்கள் எழுத்துக்களைப் பார்க்கிம்போது உங்களிடம் மதிப்பு மிக்க நூல்நிலையம் உண்டு என்ற எண்ணம் எனக்கு ஏற்படு கிறது. ஒருநாள் அதைப் பார்க்க வேண்டும் Tஎன்ற விருப்பமும் எழுகிறது" என்று கைலாசபதி குறிப்பிட்டார்,
அவர் தேர்ந்த கல்விமான். நூ ல் களைத் தேர்ந்து கற்று மேலும் மேலும் தினது அறிவை வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட அறிஞர். பலருச்குப் பயன்படக் கூடிய நூல்கள் பல வற் றை அவர் எழுதினூர்,
ஒரு சந்தர்ப்பத்தில் அவர்
எனக்குக் கடிதம் எழுதினர்.

Page 30
வல்லவரும் நல்லவரும் என்
ருெருநூல் எழுதத் திட்டமிட் டிருக்கிறேன். எழுத்துத் துறை
வல்லவர்களான இலரோடு
பெயர் சிலரைப் கட்டுரைகள் எழுத தமிழ் உலகம் மறந்து TL கவிஞர் ச. தி: சுப்பிர யோகியார் பற்றி சில ഖയ്ക്കേr (5ഞഖ • உங்களுக்குத் தெரிந்ததை எழுதுங்கள்’ என்று பேட்டிருந்தார்
எழுதி அனு பி னே ன் " ஞ ல் அந்த dio 2 G56) is
இக்ல. ஏனே அவர் அத்திட்டத்
தைக் விட்டு விட்டார்.
மறுமூறை சென்னையில் அவ aoTá 夺画留学受 போது அந்தப் புத்தகம் குறித்து விசாரித்தேன் “6፣(ሡቧዽj ண்ேடும் என்று வி நிள்ே எல்லாம் சேகரித்தேன்: சில ாரணங்களால் அது செயற் படாமலே ாேய்விட்டது' என்று மட்டுமே அவர் குறிப்பிட்டார். வல்லவரும்
g/T 8b)
p
பிரசுரித்திருந் இலக்கியத்துக்கு
கைலாசபதி
என்
மாணவர்களுக் பயனுள்ள விளங்கியிருக்
நான் ஏழுதுவதற்கு
is இருந்தவரே கைலாசபதி தான்.
தீபம்" பத்திரிகையில் நான் சரஸ்வதி காலம்" என்ற தலைப் Gá • #ffff) ରାଞ୍ଜି’ பத்திரிகை வர வாற்றை எழுதி வந்தபோது:
அக் கட்டுரைகளைப் பாராட்டி எழுதிய கலாசபதி ஒரு யோச னையையும் வெளியிட்டிருந்தார் புதுக்கவிதை பற்றிப் பலரும் ப்லவிதமாகப் ப்ேசுகின்றர்கள். அது சம்பந்தமாக நடந்த விவர தங்கள் அதன் வளர்ச்சி பற்றி எல்லாம் நீங்கள் நன்ருக அ விர்கள். புதுக் கவிதையின் வர லாற்றை நீங்கள் எழு துவது பொருத்தமாக இருக்கும். இக் ட்டுரைத் தொடரை அடுத்து * எழுதலாம்ே என்று எழுதி ஞா
அவ்வாறே நான் எழுதலா
னேன். புதுக் கவிதை வளர்ச்சி
"ழத்தின் பங்கு குறித்து உரிய முறையில் என்னுல் எழுதி இயலவில்லை. தேவையான தக ள் கிடைக்க் வழி இல்லாது போகவும் கைலாசபதிக்கு எழுத நேர்ந்தது. அவரும் தம்மாலான உதவி புரிந்தார். 96 (D.6) மாணவர் ஒருவரைக் கொண்டு ஒல தகவல்கள் தயாரித் து அனுப்ப ஏற்பாடு செய்தார். '
அவரே நல்ல தி ல் கள் எழுதுவதில் fibertas LDITs ஈடு பட்டதுடன்: தக்கவர்கள் தக்க
விஷயம் பற்றி தகுந்த யில் நன்கு எழுதி ഖ ഒ് G b என்பதிலும் லாசபதி ஊக்கம் காட்டினர்.
இலக்கிய ஆய்விலும் விமர் சனத்திலும் லாசபதி புதிய தடங்கள் பதித்திருக்கிருர்: அது றிப்பிடத் தகுந்த பெரும் னியாகும்; அதைப் போலவே முக்கியமானது கைலாசபதியின் னித நேயமும் நட்புணர்வுடன் 母°ó எழுத்தாளர்களே அரவணைக் கும் அன்பும் அவர் நல்ல மனி தர் இனிய நண்பர். அவர் நினைவு என்றும் தமிழ் உள்ளங் களில் நிலைத்து நிற்கும்.

கிலாநிதி மறைவு, ஈழத்திற்கு மட்டுமல்ல,
கைலாசபதியின்
தமிழ் கூறும் நல்லுலகம் அனைத் துக்கும் ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும். இது முக்காலும் S2-6ððf6) LD -
சுமார் முப்பது ஆண்டுக ளுக்கு மேலாக நான் அறிவேன்; கல்லூரி மாணவராக இருந்த பொழுது, நண்பர் ரகுநாதனின் விருந்தினராக அவர் திருநெல் வேலி வந்திருந்தார். அப்பொ ழுது அவருடன் பலமணி நேரம் பழகும் வாய்ப்புக் கிடைத்தது, பாரதியிடமும் புதுமைப்பித்தனி டமும் பெருமதிப்புக் கொண்டி ருந்த அந்த இளைஞர், படிப்படி பாக மார்க்சீய போதம் பெற்று உண்மையிலேயே ஒரு கலாநிதி யாக, பேராசிரியராக, கல்வித் துறை நிபுணராக, மாபெரும் மார்க்சீய விமர்சகராக முற் போக்கு எழுத்தாளர்களின் வழி காட்டியாக, அருமைத் தோழ ராக வளர்சபியுற்றதைக் கண்டு அகம் மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன். அவர் . றுதிக்காலம் வரை, எங்ாள் நட்பும் தோழமை உணர்வும் நீடித்தது. கடந்த 18 ஆண்டுகளில் அவர் பல தடவை சென்னை வந்துள்ளார். நண்பர்கள் விஜயபாஸ்கரன்,
திறனுய்வுத் துறையில் ;
SESLLLLLLLAL AA LLLAALLLLLAAAAALLAAAALLAA LAL AAA LALALALALLAALLLLLAALLLLLALALALALALALALAz
விளக்கு
தி. க. சிவசங்கரன்
ரகுநாதன் ஆகியோரைச் சந்திக்க நேரும் போதெல்லாம், என்
யும் சந்திக்கத் தவறுவதில்லை. கலை - இலக்கியப் பிரச்னைகள் பற்றி விவாதிக்க மறப்பதில்லை.
சென்னையில் அவருக்கு பல் வேறு மட்டங்களில் ஏராளமான நண்பர்கள். எல்லோருடனும் அன்பாக, பண்பாகப் பழகுவார் அறிவாற்றலுடன் உரையாடு வார். அவரது புகழுக்கும் பெரு மைக்கும் காரணம், அ வ ர து படைப்புக்கள் மட்டுமன்று. அவ ரது பரந்த அறிவாற்றல் மட்டு மன்று. அவரது பேச்சுத் திறன் மட்டுமன்று, அவரது மார்க்சி யக் கொள்கைகள் மட்டுமன்று, எல்லாவற்றுக்கும் மேலாக, அவ ரது சமத்துவ நோக்கும் மனித நேயமுமே அனைவரையும் அவர் பால் ஈத்தன.
அவரிடம் எனக்குப் பிடித்த மற்ருெரு அம்சம், மா ற் று க் கருத் து க் க ரூ க்கு மதிப்புக் கொடுப்பது. அக் கருத்துக்களை அலட்சியம் செய்யாமல், ՔԵէք மாகப் பரிசீலனை செய்வது. அவற்றில் உண்மையும் நேர்மை யும் இருந்தால், அவை மக்கள் நலனுக்கும் சமுதாய வளர்ச்சிக் கும் உகந்தவையாக இருந்தால்,
57

Page 31
ஏற்றுக் கொள்வது. இது மிகச் சிறந்த ஜனநாயகப் பண்பாகும்
சுைலாசபதிக்கு மார்க்சியக் கோட்பாடுகளில் ஆழ்ந்த பற் றும் பிடிப்பும் உண்டு. ஆனல் அவர் வறட்டு மார்க்சிய வாதி யல்ல. அராஜகவாதியுமல்ல: உயிர்த் துடிப்புள ள படைப்பாற் றல் மிக்க மார்க்சியத்தை அவர் விரும்பினர்: பின்பற்ற முயன் முர். அவர் தேசியவாதியாக மட்டுமல்ல, சர்வதேசியவாதியா கவும் விளங்கினர். அவரது வாழ்வும் பணிகளும் இதற்குச் சான்ருகும். இலங்கையில் கடத்த 25 ஆண்டுசளில் முற்போக்கு எழுத்தாளர் இயக்கம் ஒரு மக்த் தான சக்தியாக வளர்ந்துள்ளது என்ருல், அரசியல் வேற்றுமை களைக் கடந்து அனைத்து எழுத் தாளர்களையும் ஈர்க்கும் ஆற்றலை அது பெற்றுள்ளது என்ருல், அதற்குக் கைலாசபதியின் பங்க ளிப்பும் ஒரு முக்கிய காரணம் என்பதில் ஐயமில்லை.
இளம் முற்போக்கு எழுத் தாளர்களை வளர்த்து முன்னுக் குக் கொண்டு வருவதில் கைலா சபதி மிகுந்த அக்கறை கொண் டிருந்தார். எத்தனையோ சிறு கதை ஆசிரியர்களும் நாவலாசி யர்களும் கவிஞர்களும், திற ஞய்வாளர்களும் பிற படைப் பாளிகளும் அவ ரா ல் utiloit பெற்றுள்ளனர் என்பதை ஆதார பூர்வமாக நான் அறிவேன்.
எந்தப் பிரச்னையை எடுத் துக் இதாண்டாலும், அ ைகி வரலாற்று அடிபபடையிலும் சமூகவியல் நோக்கிலும் ஆராய வேண்டும்; எந்த ஒரு ஆய்வாள னும் பெருமைப் படத்தக்க வகையில் சான்றுகளைத் துருவி ஆராய்ந்து, தருக்கத்தின் عےy Lq Li படையிலும் தகவுடைமையின்
அடிப்படையிலும் உண்மையை நிறுவ வேண்டும் என் து கைலாசபதியின் கோட்பாடு.
"வரலாறு, அரசியல், பொரு ளியல் அழகியல், உளவியல், சமூகவியல் முதலிய துறைகளின் உதவியுடன் தமிழில் ஆய்வுப் பரப்பு உருவிாக வேண்டும் என் பது அவரது குறிக்கோள்.
குறுகிய வரம்புகளிலிருந்து வி டு பட்டு, தேசிய - சர்வ தேசிய நோக்கிலும், ஒப்பியல் அடிப்ாடையிலும் அணு கும் பொழுதே ஆய்வுகள் அர்த்த முள்ளவையாகின்றன என்பது, து வ ர து அசைக்க முடியாதி கொள்கை
திறனய்வுத் துறையில்,ஆழி பாட்டு முறையோ, எதிர்நிலை முறையோ, உரிய பயனைத் தர ாட்டா" என்பது, அவர் கண்ட(Ա)ւգ tվ. w
இத்தகைய கொ ள் கை வழியை அவர் தமது வாழ்நாள் முழுதும் பின்பற்றினர் என்று துணிந்து கூறலாம்: இதுவே அவரது சாதனைகளுக்கு அடிப் t_Jøð) t-tt I * G5 D • 1. இரு மகாகவிகள், 2. பண்டைத் தமிழர் வாழ்
வும் வழிபாடும், 3. தமிழ் நாவல் இலக்கியம்
. ஒப்பியல் இலக்கியம், 5. அடியும் முடியும், ,ே இலக்கியமும் திறனய்வும்,
7. பாரதி நூல்களும் Gug, ஆராய்ச்சியும்
Life
8. திறனுய்வுப் பிரச்னைகள் g. சமூகவியலும் இலக்கிய
(Uptib,
59

10. கவிதை நயம் (இணையாசி
fuusi) 11. இலக்கியச் சிந்தனைகள், 12. ரமில் ஹீரோஸ்ற்
பொயற்றி.
இ  ைவ கைலாசபதியின் இலக்கியத் திறனய்வு நூல்கள். இவை ஒவ்வொன்றும் கைலாச பதியின் இ லக் கி யக் கோட் பாட்டை, தத்துவ நிலையை மிக ஆழமாகவும், தெ ஸ் ள த் தெளிந்த நடையிலும் பிரதிபலிக் கின்றன. திறனய்வுத் துறையில் ஒளி விளக்காய்த் திகழுகின்றன.
1950ஆம் ஆண்டு களி ல் அவர் எழுதத் தொடங்கினர். 1960 ஆம் ஆண்டுகளின் போது தமிழ் த் திறனுப்வுலகில் ஒரு
புதிய போக்கின் - சக்திவாய்ந்த
பிரதிநிதிகளில் ஒருவராகத் தமது முத்திரையைப் பதித் தா ர்; 1982 டிசம்பர் 6 ஆம் தேதிவரை அவரது இறுதி மூச்சுள்ளவரைமுற்போக்கு இலக்கியம் பற்றி யும், அதன் வளர்ச்சிக்கான பணிகள் பற்றியும், அவர் ஒயாது சிந்தித்துச் செயல்பட்டு வந்தார். குறிப்பாக, தமது இறுதிக் காலத் தில் மகாகவி பாரதி பற்றிய ஆராய்ச்சியாலும், பாரதி நூற் ருண்டைச் சிறப்பாகக் கொண்
டாடுவதற்கான திட்டங்களிலும் ,
அவர் இருந்தார். அவ் வேளையில் அவர் நம்  ைம விட்டுப் பிரிய
நேர்ந்தது. மிகவும் துன் பம் தரும் நிகழ்ச்சியாகும்.
தமிழ் இலக்கியப் படைப்
பாளிகள் பலருக்கும், அதுபோல் முற்போக்கு இலக்கிய விமர்சகர் களுக்கும் ஆதர்சமாக விளங்கிய கைலாசபதி, ஒப்பியல் ஆய்வின் முன்னுேடிகளில் ஒருவர் ஆவார்; இதுவே அவரது தனிச் சிறப் பாகும்.
கல்வித்துறை நிபு ண ர், பத்திரிகையாளர், எழுத்தாளர்,
ஆய்வாளரி, கட்டுரையாளர்' விமர்சகர், பேச்சாளர் என்ற வகையில், கைலாசபதியைப்
பற்றி எவ்வளவோ எழுத இட
முண்டு. புது மை ப் பித் தன் வாழ்க்கை வரலாற்றை ரகு நாதன் எழு தி யது போல,
கைலாசபதியின் வ ர ல |ாறும் தக்க ஆதாரங்களுடன் எழுதப் பட வேண்டும் என்பது என் ஆசை. இதை ஓர் இலங்கை எழுத்தாளர் அல்லது எழுத்தா ளர் குழுவினர்தாம் செய்ய முடி யும் தமிழ்த் திறஞய்வுத் துறை யில் ஒரு புதிய பரம்பரையை உருவாக்கியுள்ள கைலாசபதியின் மரபை முன்னெடுத்துச் செல்வ தற்கு இது ஒரு தூண்டுகோலாக விளங்கும் மேலும், இதுவரை நூல்வடிவில் வராத கைலாசபதி யின் படைப்புக்கள் யாவும், அச்சேற்ற வேண்டும்.
கைலாசபதின் ஆய்வில், வர லா ற் று நெறியும், ஒப்பியல் நெறியும், சமூகவியல் பார்வை யும் பிரதான அம்சங்கள்; அவ ரது ஆய்வு முறை, பல்கலைக் கழகங்களிலும் பல்கலைக் கழகங் களுக்கு வெளியேயும் பழமைவாதி களை உலுக்கி வருகிறது. புதுமை வாதிகளுக்கு ஆக்கமும் ஊக்க மும் அளித்து வருகிறது: இதன் விளைவுகள், நீண்ட நெடுங்காலம் நீடிக்கும் என்பது உறுதி.
தமிழகப் பத்திரிகைத் துறை யைப் பொறுத்தவரை தாம்ரை சாந்தி, சரஸ்வதி, செம்மலர், தீக்கதிர், ஜனசக்தி, பேராசிரி யர் நா. வா ன மா மலை யின் *ஆராய்ச்சி" மற்றும் பிற இடது சாரி ஏடுகளில் அவ்வப்போது அருமையான கட்டுரைகளைக் கைலாசபதி எழுதி வந்துள்ளார். ஈழத்தைப் போலவே, தமிழக் முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்
59

Page 32
கும் அவர் அருந்தொண்டு ஆற் றியுள்ளாச்.
என். சி. பி. ஹெச் சென்னை
புக் ஹவுஸ் முதலிய பதிப் பகங்கள், அவரது நூல் களை வெளியிட்டுள்ளன. முற்போக்கு
இ லக் கி ய வாசகர்களிடையே கைலாசபதியின் நூல்களுக்குப் பேராதரவு வளர்ந்து வருகிறது.
சென்னையில் கலை இலக்கியப் பெருமன்றம், முற்போக்கு எழுத் தாளர் சங்கம். "இலக்கியச் சிந் தனை", "நண்பர் வட் டம்" (கிறிஸ்தவ இலக்கியச் சங்கம்) ஆகியவற்றின் மே  ைட களி ல் கைலாசபதி ஆற்றியுள்ள உரை கள், சிந்தனேக்கு லிருந்தாகவே எப்பொதும் இருந்து வந்துள்ளன
இலங்கையின் தலைசிறந்த முற்போக்கு ஏடான "மல்லிகை"க் கும் கைலாசபதிக்கும் இடையே யுள்ள 18 ஆண்டுத் தொடர் பும் அதனல் ஈழத்து இலக்கியத் தில் ஏற்பட்டுள்ள தாக்கங்களும் மிகப் பெரியவை, சிறப்பானவை . என்று கூறலாம்.
"விமர்சன ஆளு  ைம யி ன் தற் கால சகாப்தம்" என்ற தலைப்பில், கலாநிதி கைலாசபதி பற்றி மல்லிகை (1982 டிசம்ப ரில்) வெளியிட்டுள்ள கட்டுரை யின் ஒவ்வொரு வரியும் மிகப் பொருத்தமானது; மிக உண்மை யானது
"வந்தான், வந்தது போல் போனன் காண்’ என்பதுபோல, அவரது வாழ்வு பாமரக் கதை போல முடிந்து விடவில்லை. அவர் முழு வாழ்வு வாழ்ந்தவர். எத்தனையோ ஆண்டுக் காலமா கச் செய்து முடிக்க வேண்டிய பல வேலைகளைத் தனது உழைப் புச் செயலூக்கத்தின் மூலம் வெகு சீக் கிர மாக ச் செய்து முடித்து விட்டவர். அவர் எமக்
si:
கெல்லாம் கற்றுத்தந்த - விஞ் ஞான அணுகுமுறை - சோவு லிஸ் எதார்த்தவாத நோக்குவிமரிசனப் பார்வை சத்தியத்
தைப் போல் என்றும் எப்பொழு
தும் நின்று நிலைத்துத் தமிழுக்கு வழி காட்டும்."
"பலருக்கு அவருடன் கருத்து வித்தியாசம் உண்டு. மல்லிகைக் கும் சில பிரச்னைக்ளில் அப்ப டியே. இருந்தும் தனிப்பட்ட முறையில் சகலரையும் சேர்த்து அணைத்துச் செல்லக் கூடிய பண்பு அவரிடம் கடைசிவரை மிளிர்ந்த துண்டு. அனைவரையும் கவரத் தக்க ஆற்றல் அவரிடம் நிரம்பி யிருந்தது"
ஆம்; கருத்து வித்தியாசங் களை மறந்து, முற்போக்கு எழுத் தாளர் அனைவரும் (இந்தியாவி லும் இலங்கையிலும்) ஒன்றுபட வேண்டிய காலகட்டம் இது. சித்தாந்தத் துறையில் நமது பொது எதிரிகளுக்கு எதிராக, உறுதியுடன் போராட வேண்டிய கட்டம் இது,
பேராசிரியர் நா. வானம்ா மலையின் வாழ்வைப் போலவே, கலாநிதி கைலாசபதியின் வாழ் வும் பணிகளும் இதைத்தான் வலியுறுத்துகின்றன.
இந்தியர்களாகிய, தமிழ் நாட்டினராகிய எ ங் க்ளை ப் பொறுத்தவரையில், (2).sögum வுக்கும் இலங்கைக்கும் இடையே ஒரு சீரிய நட்புறவுப் பாலமாகத் திகழ்ந்த - கலாசாரக் கருவூல மாக விளங்கிய - அறிஞரி கைலாசபதியை எங்களால் என் றும் மறக்க இயலாதுg அவர் விட்டுச் சென்ற முற்போக்கு இலக்கியப் பணிகளை உங்களு டன் கரம் கோர்த்து நாங்களும் செய்து முடிப்போம் என்று
உறுதி கூறுகிருேம்.

'பயில்தொறும் பயில்தொ றும் பாரதியிற் புதுமையையே காண்கிறேன்" என அடிக்கடி சுறும் பேராசிரியர் கைலாசபதி, புது நெறி காட்டிய மகாகவிஞ ஞஜனபாரதியாரின் ஆக்கங்களில் மிகுதியான ஆர்வம் கொண்டு அவற் றைத் துருவித் துருவி ஆராய்ந்தவர்; பாரதியாரின் ஆக்கங்களினற் பல்வேறு வகை யிலும் பாதிக்கப்பட்டவர்; பார தியாரை பின்பற்றித் தமிழ்த் திறனய்வு உலகுக்குப் புதிய நெறியைக் காட்டியவர்: செழு னம்யையும் தெம்பையும் ஏற் படுத்தியவர் உயிரோடிருந்த போதும் மறைந்த பின்பும் இளம் திறனய்வாளர் பலருக்கு ஆதர் ஷமாக விளங்கிக் கொண்டிருப் பவர்.
இருபதாம் நூற்றண்டுத் தமிழ்க் கவிதையுலகிற் பாரதி யாரைப் போன்றும், சிறுகதை யுலகிற் புதுமைப்பித்தனைப் போன்றும், திறனுய்வு உலகிற் கைலாசபதி முதன்ம்ையிடம் வகிக்கின்ருர், கடந்த கால் துாற் ருண்டுக்காலமாக அவர் இடை யருது மேற்கொண்ட பணிகள் வியப்பினையூட்டுபவை. கைலாச பதியை மறந்ததொரு திறனய்வு வர்லாறே இல் என்று கூறத்தக்க அளவிற்கு *வரது திறனய்வு முயற்சிகள்
வின்
புதுநெறி காட்டிய திறனுய்வாளன்
க அருணுசலம்
அதி உன்னத இடத்தை வகிக் கின்றன.
மகாகவி பாரதியாருக்கு நிக ரானவர் கைலசகபதி என நாம் கூறவில்லை. ஆயினும் இருவருக் குமிடையிற் பல நெருங்கிய ஒற் றுமைகளும் உள. இருவருமே தத்தம்து குறுகிய கால வாழ் நாளில் அளவுக்கு மீறி உழைத் தவர்கள்; தாம் மேற்கொண்ட பணிக்காகத் தமது வாழ்வை அர்ப்பணித்தவர்கள்; கவிதையுல கிலும் திறனுய்வு உலகிலும் புது நெறி காட்டியவர்கள் பத்தி ரிகை ஆசிரியர்களாகப் பணி ஆற்றியவர்கள்: புதுமை நாட் டம் உடையவர்கள் திடமான முற்போக்கு உள்ளம் படைத்த வர்கள் எத்தகைய எதிர்ப்புக் களையும் அவதூறுகளையும் சிறிய மனிதர்களின் சின்னத்தனங்களை யும் கண்டு சிறிதும் சளைக்ககாது மனம் துவளாது தமக்குச் சரி யெனத் தோன்றிய்படி " இறுதி மூச்சுவரை செயற்பட்டவர்கள். இருவரும்ே மிக்க இளம் வயதி லிருந்தே இலக்கியத் துறையில் மிகுதியான ஈடுபாடு கொண்டு உழைத்தவர்கள். தொட்டதெல் லாம் புதுமை மணம் கமழும் வகையில் எழுதிக் குவித்தவர் கிள் இருவருக்கும் பெண் மக்கள் இருவர்.
கைலாசபதியினது திறனய் சிறப்பம்சங்கள் எல்ல்ாவற்

Page 33
றையும் பற்றி இச்சிறு கட்டுர்ை யில் விளக்க முடியாது. எனி னும் ஒரு சிலவற்றைச் சுருக்கமா கச் சுட்டிக் காட்டலாம். பாரதி யார் தமது ஆக்கங்கள் யாவற் றிலும் புதிய பொருளைக் கை யாண்டபோது அதற்கேற்ற வகையிற் புதிய சொற்களையும் உருவாக்கினர். புதிய நடையிலே Lung-60) if: எழுதினர். அது போன்றே கைலாசபதியும் தமிழ்த் திறனுய்வு வரலாற்றைத் திசைதிருப்பி ட்டதுடனமை யாது நவீன திறனய்வுக்கேற்ற வகையிற் புதிய சொல்லாட்சி கயஜயும் நடையையும் கையாண் L-ITsi.
பாரதியார் கையாண்ட , ஞானதானம்", "விடயதானம்" * பரிபாஷை", "துல்லியம்", "தீட் சண்யம்" முதலிய சொல்லாட்சி களைப் பெருமித உணர்வுடன் பயன்படுத்திய  ைக லா சபதி, அத்துடனமையாது நூற் று க் கணக்கான புதிய வலுநிறைந்த சொல்லாட்சிகளைத் தாமாகவே உருவாக்கிஞர். குறிப்பாக ப் பொதுவுடைமைத் தத்துவம், சமூகவியல் அணுகுமுறை முதலி யன சம்பந்தமான பிறமொழிச் சொல்லாட்சிகளுக்கு நிகரான காத்திரம் மிக்க சொல்லாட்சி களைத் தமிழிலே உருவாக்கினர். அச்சொல்லாட்சிகள் இன்று தமிழ்த் திறனுய்வு உலகிலே பல ராலும் தாராளமாகப் பயன் படுத்தப் படுகின்றன,
தமிழ் இலக்கியத்தின் அடி தொடங்கி முடிவரை புது நெறி யிலே துருவித் துருவி ஆராய்ந் துள்ள அவரது திறனுய்வுப் பார்வை சங்க இலக்கியங்கள் தொடக்கம் தற்காலச் சினிமா வரை, சித்தர்கள் தொடக்கம் சிறுகதை நாவலாசிரியர்கள்வரை நாவலர் தொடக்கம் நாடகம் வரை, கபிலபரணர் தொடக்கம் பாரதியார், பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம் வரை. ஷெல்லி தொடக்கம் தாகூர் வரை, கிரேக்க இலக்கியங்கள் தொடக் கம் வங்காள இலக்கியங்கள் வரை, அரசியல் தொடக்கம் சமயம் கலைகள் வரை சென்றுள் ளதை அவதானிக்கலாம்.
அரசியல், சமூகம், பொரு ளாதாரத் துறைகளில் அவர் பெற்றிருந்த அறிவும் தெளிந்த வரலாற்றுக் கண்ணுேட்டமும் பிற மொழிகளினது- குறிப்பாக ஐரோப்பிய, அமெரிக்க இலக்கி யங்களில் அவருக்கிருந்த பரிச்ச யமும் தமிழ் இலக்கிய இலக்க ணப் பரப்பில் அவர் பெற்றி ருந்த பரந்த அறிவும் நிறைந்த சொல்வளமும் விடயங்களைக் கோவைப்படுத்தி அவற்றின் குறை நிறைகளைச் சுட்டிக்காட் டித் தர்க்க ரீதியாக விளக்கிச் செல்லும் திறனும் சமூகவியற் பார்வையும் அவரது திறனய்வுக் குத் தனிச் சிறப்பையளிக்கின் றன. இவை யாவற்றுக்கும் மேலாக அவர் வரித்துக்கொண்ட மார்ச்சியத் தத்துவம், அது வற் றிய தெளிந்த அறிவு ஆகியன அவரது திறனுய்வு முயற்சிகளுக்கு ஒப்பற்ற ஒளியைப் பாய்ச்சின. அவரது நூல்கள், கட்டுரைகள், சொற்பொழிவுகள், தலைமை யுரைகள் யாவற்றிலும் மேற் கூறப்பட்ட பண்புகளை அவதா னிக்கலாம்.
ஏறத்தாழ 1950களின் பிற் பகுதிவரை தமிழ் இலக்கிய உல கில் ஆராய்ச்சி, திறனய்வு என் னும் பெயர்களில் வெறுமனே ரசனை வெளிப்பாடுகளும் நயம் காணும் முயற்சிகளும் வெறும் புகழாரங்களும் நிந்தனைகளுமே வெளிவந்து கொண்டிருந்தன. டி. கே. சி, முதல் க்னக செந்தி நாதன் வரை, க. நா. சு. முதல் பண்டிதமணி கணபதிப்பிள்ளை வரை, மறைமலையடிகள் முதல் அ. ச. ஞானசம்பந்தன் வரை

இத்தகைய பண்புகளைக் காண லாம். இத்தகைய நிலையிலிருந்து தமிழ் இலக்கிய உலகினை மீட் டெடுத்து உண்மையான ஆராய்ச் சிக்கும் திறனுய்வு வளர்ச்சிக்கும் உறுதியான வழிசமைத்து விட்ட ஒரு சிலருள் முக்கியமானவர் கைலாசபதி,
திறனுய்வாளன் வெறுமனே இலக்கிய அறிவுடையவனுக மட் டும் இருந்தால் அவன் இலக்கி யத்தைச் செம்மையான முறை யிற் திறனுய்வு செய்ய முடியாது. றணுய்வு பற்றிய தீர்க்கமான கண்ணுேட்டமும் இ லக் கி யம் எழுந்த காலச் சூழல் பற்றிய அறிவும் திறனுய்வு முயற்சிக்கு மிக இன்றியமையாதன. இது பற்றிக் கைலாசபதி அவர்கள் அடிக்கடி வற்புறுத்தியதுடனமை யாது இவற்றின் அடிப்படை யிலே தமது திறனுய்வுகளை மேற் கொண்டு ஏனையோருக்கும் வழி காட்டினர். இலக்கியம் எழுந்த காலப் பின்னணி பற்றிய விளக் கத்துக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தமை காரணமாகச் சிலர், அவரைக் காணும்போதும் அவரைப் பற்றிக் குறிப்பிடும் போதும் "பின் ன னரி" என நையாண்டி செய்வதும் உண்டு. இது அவர்களின் அறிவுச் சூனி யத்தையே காட்டுகின்றது.
காலச் சூழல் மட்டுமன்றி ஒரு மொழியிலே திற ஞ ய் வு இலக்கியம் செம்மையாக வளர வேண்டுமானுல் மொழி, இலக் கியம், பண்பாடு, வரலாறு, சமூகம், சமயம், மெய்யியல் முதலிய ஏனைய துறைகள் பற் றிய ஆய்வுகளும் வளர வேண் டும். அவை பற்றிய அறிவினைத் திறனு ய் வா ள ன் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பல இடங்களிலே அழுத்தமாக வற்புறுத்தியுள்ளார், "...ஒரு மொழியில் விமர்சன இலக்கியம்
தன்னளவிலே செழித்து வளர்ந்து விட இயலாது. மொழி, இலக்
கியம், பண்பாடு, வரலாறு, மெய்யியல், சமயம் முதலிய ஏனைய துறைகளிலே நிகழும்
ஆய்வுகளுக்கு இயைந்த முறை யிலேயே இலக்கிய விமர்சனமும் இடம் பெறும். . " என அவர் ஒரிடத் தி லே கூறியுள்ளமை அவதானிக்கத்தக்கது.
அவரது திறனுய்வு முயற்சி
களிற் குறிப்பிடக் கூடிய இன்
ஞேர் அம்சம் ஒப்பியல் நோக்கா கும். தமது "ஒப்பியல் இலக்கி யம்" என்ற நூலின் மூலம் தமி ழில் ஒப்பியல் இலக்கிய ஆய்வு முறைக்குக் கால்கோள் நாட்டிய பெருமைக்குரியவரானர். மார்க் சியத்தைத் தனச்குகந்த தத்துவ மாக வரித்துக் கொண்ட கைலாசபதியின் ஆரம்ப கால ஆக்கங்களிலும் பார்க்கப் பிற் கால ஆக்கங்களிலே தெளிந்த கண்ணுேட்டத்தையும் ம்ேதா விலாசத்தையும் அவதானிக்க முடிகின்றது. அவரது ஆரம்ப கால முயற்சிகளில் மார்க்சியத் தின் நேரடி வீச்சு முனைப்பாக இடம் பெற்றுள்ளது. ஆயினுன் பிற்கால ஆக்கங்களில் மார்க்சீய தத்துவத்தை உள்வாங்கி அதனு டன் தமிழ் இலக்கிய மரபினை நன்கு கலந்து சிறந்த முறை யிலே திறனய்வு செய்துள்ளதை அவதானிக்கலாம். "இலக்கியச் சிந்தனைகள்" என்ற நூலில் இடம் பெற்றுள்ள அவரது கட்டுரை கள் பலவும் இவ்வகையில் விதந்து கூறத்தக்கவை. அவர் சிந்தித் தவை பலவும் தமிழ்த் திறஞய்வு உ லகு க் குப் புதியனவாகவும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வும் விளங்குகின்றன.
அவரது ஆக்கங்களிற் சிற் சில இடங்களில் கருத்து முரண் பாடுகளும் பலத்துடன் கூடவே பலவீனங்களும் தென்படுகின்

Page 34
றன அறிவுப் பரிணும வளர்ச் au?Gay g)606 356artias (ypigurt தவையே எனலாம். வள்ளுவன், இளங்கோ, கம்பன், பாரதி முதலிய தலைசிறந்த இலக்கிய கர்த்தாக்களிடமும் எஸ். வையா புரிப்பிள்ளை, ரகுநாதன். நா. வானமாமலை, வி. செல்வநாயகம் முதலியோரிடமும் இவற்றைக் காண முடிகிறது.
கடந்த கால் நூற்ருண்டுக் காலத் தமிழ் இலக்கிய உலகில் வேறு யாருக்கும் ஏற்படாத அளவிற்குப் பலத்த எதிர்ப்பு களும் கண்டனங்களும் அவருக் குக் கிடைத்தன. பொருமைக் காய்ச்சலாலும் வக்கிர LDGOST பான்ம்ையாலும் அவர் மீது பொழியப்பட்ட அவதூறுகளும் சுமத்தப்பட்ட பழிச் சொற்க ளும் அளப்பில. பொதுவுடை மைக் குஞ்சு நாஸ்திகன், இனத் துரோகி, தமிழ்த் துரோகி என்
னும் நாமகரணங்களும் அவருக் குச் சூட்டப்பட்டன, அவற்றைக் கண்டு வெகுண்டெழாது புன்ன கையுடன் த மது சாதனைகள் மூலம் அவற்றுக்குப் பதிலிறுத்த அவர் ஓரிடத்தில், "தலைகுனிய வேண்டிய தனிமனிதச் சண்டை களினலும் எழுத்தாளரைத் தனி மைப்படுத்தித் தாழ் நிலைக்குக் கொண்டு செல்லும் (350ւք ւD6ծrւն பான்மையினலும், தத்துவ வரட் சியினலும் பாதிக்கப் பெற்று வலுவிழந்து கிடக்கும் நவீன விமர்சன இலக்கியம் முற்போக்கு இலக்கி இயக்க அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டால், எழுத் தாளருக்கு மாத்திரம்ல்லாது இலக்கிய உலகிற்கே பயன்தரும் ஒர் ஆய்வறிவுத் துறையாக மிளி ரும் என்பதில் ஐயமில்லை" எனக் கூறியிருப்பது இலக்கிய ஆர்வலர் ஒவ்வொருவரும் மனதிற் பதித் துக்கொள்ள வேண்டியதாகும். கு
35422
அச்சுக்கலை ஒரு அருமையான கலை அதை அற்புதமாகச் செய்வதே. எமது வேலை
கொழும்பில் அற்புதமான அச்சக வேலைகட்கு எம்ம்ை ஒரு தடவை அணுகுங்கள்
நியூ கணேசன் பிரிண்டர்ஸ் 22, அப்துல் ஜப்பார் மாவத்தை,
கொழும்பு . 12
 

சிரு பிற்ப கல். 1975 ஆண்டு என்று தினைக்கின்றேன் நண்பர் தி. க. இ. விரும்பியதின் பேரில் நானும் அ வருட ன் சென்னை அண்ணு சாலையிலுள்ள 9 gas எஸ்டேட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். ஏழெட்டுப் பேர் ஏற்கனவே அந்த "அே ற யில் காத்திருந்தனர். சுமார் அரை மணி நேரத்தில் பேராசிரியர் கைலாசபதி அங்கு வந்து சேர்ந் தார்.
இலங்கை தமிழ் எழுத்துல கிம் பற்றி விரிவ: உரையாற் றிஞர். அன்று எங்கள் இருவர் சந்திப்பு வணக்கம் கூறிக் கொள் வதோடு முடிந்து விட்ட்து.
இலங்கைப் பல்கலைக் கழக்த் தின் யாழ் வளாகத்தில் g77 பெப்பிரவரியில் நடைபெறவிருந்த தமிழ் நாவல் நூற்றண்டு விழா வுக்கு ஒரு தமிழ் நாட்டு நள்வ 6) Tigrif சி. ஆர். என்னும் இத்திய マ受sseテ கலாசார உறவுகள் பொறுப்பில் விடப்பட்டிருந்தது. கிழகம் என் பெயரை விழாக் குழுவினருக்கு அனுப்ப அவர்கள் மறுப்பு ஏதும்
m கிருததrல்
கேள்விப்ப்ட்ட
தாரை நினைத்துத்தான்
பரை அனுப்புவது ஐ. சி.
நானறிந்த பேராசிரியர் கைலாசபதி
அசோகமித்திரன்
நான் இலங்கை சன்றேன். போய்வர பயணச் * செலவு ஐ. சி. சி. ஆரு டையது. யாழ்ப்பாணத்தில் இரு நாட்கள் நான் தங்குவது வளர் கத்தின் பொறுப்பு. அந்தச் சந் தர்ப்பத்தில்தான் தான் கைலாச பதி அவர்களுடன் அந்தரங்க மாகப் பழக வாய்ப்பேற்பட்டது. நான் போனதும் தங்குவதற்கு ஓரிடம் ஏற்பாடு செய்யப்பட்டி ந்ேதாலும் அடுத்த கைலாசபதி அவர்கள் இவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார். அவரும் அவ CD566) titly குடும்பத்தாரும் என் மீது மிகுந்து அன்பு காட்டினர். கைலாசபதி மறைந்தார் என்று ell-ଜfit ଖtଜst மனம் உடனே அவருடைய குடும்பத் பெரும் துக்கம் கொண்ட்து.
கைலாசபதி அப்போது என் டைப்புக்களைப் -டித்திருக்க வில்லை என்பது என் e2/gğ)/Lorr னம், அதற்குப் பின்பும் Ilgië தாரா என்பதும் ஐயமே. ஆளுல் இலக்கிய வரலாறு, தமிழ் இலக் கிய மைல் கல்கள், இலக்கியப்
65 ”

Page 35
போக்குகள், எழுத்தாளர்கள் குறித்துப் பலமணி நேரம் தீவிர *விவாதித்தோம், நீண்டகால நண்பன் போல அவரது ஆராய்ச்சிக் குறிப்புகள், அவரு டைய நூல்கள். பல சிறப் பு மலர்களில் அவர் எழுதிய கட்டு
ரைகள், gyalu (56ő L–41 அணிற் துரை கொண்ட எழுத்தாளர் களது நூல்கள் அனைத்தையும்
என்னுடன் பகிர்ந்து கொண் டார். அவருடைய உழைப்பும், அக்கறையுடன் அவர் என்ணுேடு பழகிய எளிமையும் அ ன் பும் கொண்ட தன்மை இன்றும் என்
நெஞ்சில் பசுமையாக இருக் கிறது,
தற்கால த மி ழ் லக்கிய
உலகில் கைலாசபதியின் ld Go சத்தின் முக்கியத்துவம் அன்று தமிழகத்திலும் இலங்கையிலும் நிலவிய சூழ்நிலையை மனதில் கொண்டு அளவிடப்பட வேண் டியதொன்ருகும். அன்றிருந்த இலக்கியத் தலைவர்களது வ காட்டல் ஒரு சாதாரண வாசக னுக்கு எட்டாததாக இருந்தது என்று தான் கூறவேண்டும். கைலாசபதி 'தினகரன்' என் னும் ஒரு தினத்தாளை தமிழ் இலக்கிய விமர்சனத்தை மக்க ளுக்கு எடுத்துச் சொல்ல பயன் படுத்தியது குறிப்பிடத் தக்கது. படிப்படியாக தமிழ் நாவல் வர லாறு பற்றி ஓர் ஒருங்கிணைந்த வரைபட முறையாக வரைய அதுவரை யாரும் முயற்சி செய்ய வில்லை.
கைலாசபதி அவர் க 6f? Går "தமிழ் நாவல் இலக்கியம்’ திட் ட மான கோட்பாடுகளுடன் கூடிய இலக்கிய விமர்சனத்திற்கு இன்றும் ஒரு நல்ல எடுத்துக் காட்டாக இருக்கிறது. குறை களே அற்ற நூல் என்று கூற முடியாது. சில தகவல் பிழைகளு
டன் சிற்சில இடங்களில் அது வாக்குவாதங்கள் தளத்துக்கு இறங்கி விடுகிறது. ஆலுைம் அணுகுமுறை நவீனமானதும், விஞ்ஞான பூர்வமானதுமாகும்g சூழ் நிலை காரணமாகவும் சமுதாயத் தத்துவச் சார்பினு லும் கைலாசபதி அவர்கள் Gau சந்தர்ப்பங்களில் ஒரு மிகை வாதக்காரராகச் செயல்பட்டி ருக்க வேண்டும். உதாரணமாக அவர் க. நா. சு. அவர் கள் பற்றி என்றே எழுதிய பிழைகள் மலிந்த கட்டுரைகளைத் திரட்டிச் சமீப காலத்தில் நூல் வடிவமாக அனுமதித்தது கைலாசபதியின் மொத் த த் தோற்றத்துக்கு பெருமை சேர்க்காது. நானறிந்த வரை கைலாசபதி தன்னுடைய அந்தரங்கமான கருத்துக்கள் பல வற்றை அவர் சார்ந்த அணி யின் நலன் க்ருதியே பகிரங்க்ப் படுத்தவில்லையென்று நினைக்கின் றேன். ஆனல் இவையெல்லாம் வளர்ச்சியுறும் மனிதர்களுக்கு ஏற்படும் குறைபாடுகள்.
இதையெல்லாம் தவிர்த்து அவர் உன்னத நிலையை அடை யும் தறுவாயில் அவர் மறைவு நேர்ந்துவிட்டது. அவருடைய ஊக்கத்தால் பயன் பெற் ற எழுத்தாளர்கள் பலர். அவர் நாற்பதுக்கும் மேற்பட எழுதித் தந்த அணிந்துரைகள் மனப்பூர் வமாகத் தரப்பட்டவை. ஒவ் வொன்றும் தமிழ் இலக்கியத்தை ஒருங்கிணைத்துப் பார்த்த அவரு டைய தன்மையை எடுத்துக் காட்டுவதாகும். அவர் வேகமும் தீவிரமும் கொண்டதொரு நல்ல தலைவர். அத்தகைய இயல்பான தஜலமைப் பண்பு எளிதில் காணக் கூடியதல்ல.

LTரதி நூற்றண்டில். பாரதி வாரிசாக, பாரதி ஆப் வாளனுக, தமிழிலக்கியத்தின் சிகரமெனத் திகழ்ந்த பேராசிரி யர் கைலாசபதி மறைந்துவிட் டார். ஆனல் அவரின் இலக்கி யச் சாதனைகள் என்றென்றும் இலக்கிய உலகில் நந்தா விளக் காகத் திகழும்.
GBurmréGifuurit கைலாசபதி அவர்களைப் பற்றி நினைக்கையில் மறக்க முடியாத சில நினைவுகள் நெஞ்சில் பூக்கின்றன.
நெஞ்சில் கனல் மணக்கும் அந்தப் பூக்களின் மணம் என் றும் மணந்து கொண்டேயிருக் கும். அந்தப் பென்னம் பெரிய பேரறிஞன் என்னைப் போன்ற இலக்கிய உலகின் சின்னஞ் சிறிய உதிரிப் பூக்களைக் கூட வர்வேற்று உபசரித்தார். இது அவரது வழக்கம்.
நல்லாசிரியணுய், நண்பனுய் நல்ல வழிகாட்டியாகத் திகழ்ந்து வந்துள்ளார். இன்றைய ஈழத்து இலக்கிய உலகு ஆரோக்கியமாக திகழ, துடுப்பெடுத்து விமர்ச னத் தோணியைச் செலுத்திய விஞ்ஞானி கைலாசபதி.
இன்றும் என் நெஞ்சில் பசு மையாக இருக்கிறது. பேராசிரி யர் கைலாசபதி தினகரன் ஆசி
A
பேராசிரியர் கைலாசபதி சில நினைவுகள்
Ea
அந்தனி galar
ரியராக இருந்த பொழுது, நான் ஏடு தூக்கி பாடசாலை செல்லும் சாலைச் சிறுவன்.
'தினகரன்" நிறுவனம் தலை நகரில் தமிழ் விழா எடுத்த பொழுது எழுத்தாளர் அகிலன் இலங்கைக்கு வருகை தந்திருந் தார். அகிலனைப் பார்க்க வேண் டும் என்ற அவா. படைப்பா ளியைச் சந்தித்து உரையாட வேண்டும் என்ற எண்ணம்.
முன்பின் அறிமுகமில்லாத பேராசிரியர் கைலாசபதி அவர் களிடம் சென்று 'அகிலனைச் சந்திக்க வேண்டும்" என்ற அடி மனது ஆசையை வெளியிடுகின் றேன். அ  ைரக் காற்சட்டை அணிந்த எ ன் னை ஆவலுடன் அகிலனைப்பற்றிக் கேட்கின்றர். நான் படித்த அகிலனைப் பற்றி கதைகளைக் கூறுகிறேன். புன் னகை பூத்தவாறு "நாளை பம்ப லப்பிட்டி கிறீன்லண்ட் ஒட்ட வில் சென்று அகிலனைச் சந்தியுங் கள், நான் தகவல் சொல்லி விடுகிறேன்" என்கிருர்,
மறுநாள் அகிலனைச் சந்திக் கிறேன். கைலாசபதி எங்கே சொல்லியிருப்பா ரோ" என்ற சந் தேகம். ஆனல் நேற்றே கைலா சபதி உங்களைப் பற்றி தெரிவித் தார்" எனக் கூறி அன்புடன்
உரையாடினுர் அகிலன்:

Page 36
இப்படித்தான் எனது அறி முகம் பேராசிரியர் கைலாசபதி யுடன் ஏற்பட்டது. அது இறுதி வரை தொடர்ந்தே வந்தது.
எனது "அக்கினிப்பூக்கள்? நாடகத்தைப் பார்த்து மனந் திறந்து பாராட் டி னர். தொடர்ந்து நாடக முயற்சியில் ஈடுபடுங்கள் என வாழ்த்தினர்.
பேராசிரியர் கைலாசபதி வழியில் எங்கு சந்தித்தாலும் "எப்படி ஜீவா" என்று அன் பொழுக அழைத்து Lint sog
யோரம் என்பதையும் மறந்து சில நிமிடங்கள் என் னே டு உரையாடாமற் சென்றதில்லை. மலையகம் தந்த கவிமணி சி. வி. வேலு ப் பிள் ளை க்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்ய விரும்பி கைலாசபதி அவர்க ளுக்குக் கடிதம் எழுதிய பொழுது நிச்சயம் கெளரவிக்கப்பட வேண் டியவர், உடனே செயல்படுங் கள் எனக் கூறி உற்சாக மொழி களை வரைந்தவர். "மக்கள் கவி மணி" என்ற பட்டத்தையும் அவரே தெரிவு செய்து தந்தார். அத்துடனில்லாது விழா வில்
கலந்து கொண்டு கவிஞர் சி. வி. யின் இலக்கியப் பணி களை ப் பற்றி சிறப்புரையாற்றினர்.
இலங்கை முற்போக்கு எழுத் தாளர் சங்கம் நடத்திய பாரதி விழாவில் ஜனசக்தி ஆசிரியர் தா. பாண்டியன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய பொழுது அந்த விழாவில் பேராசிரியரும் கலந்து கொண்டு பேசினர். விழா சம்பந்தமாக வெளியிடப் பட்டிருந்த வர்ண போஸ்டரைப் பார்த்து திரு. சபா ஜெயராசா விடம் பாராட்டிய பேராசிரியர் அந்த முயற்சிக்குக் காரணமாக இருந்தவர்களை அழைத் துப் பாராட்டிய அந்த ப் பெரிய மனதை நினைத்துப் பார்க்கின் றேன்.
பேராசிரியர் கைலாசபதி அவர்களின் நினைவுகளை எண்ணி எண்ணி அசைபோடலாம், அவ ரது எழுத்தும் பேச்சும் இலக்கி யத்திற்கு வலுவூட்டின. இத்த கைய பேரறிஞனின் வாழ்க்கை வரலாற்றை எழுத யாராவது முன்வர வேண்டும். இது எனது இதயதாகமாகும். O
கைலாசபதியின் நுண்ணறிவு
எந்தப் பிரச்சினையையும், அதைச் சொல்லுகிறவருக்கு முழு ஊக்கம் கொடுப்பதில் கைலாசபதிக்கு நிகர் கைலாசபதிதான். கண்
களில் ஒளியைப் பாய்ச்சிக் விஷயத்தைக் கிரகித்துக்
மீசையை மேல் நோக்கி முறுக்கிக்
கொண்டிருப்பார் அவர்.
காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு
ர். ஒரு பக்கத்து கொண்டிருந்தாராணுல் - அந்
தப் பிரச்சினையின் சகல நாடி நரம்புகளையும் புரிந்து கொண்டு,
அந்தக் கணத்திலேயே, அதற்கான
தீர்வினையும் கண்டு விட்டார்
என்பதுதான் அர்த்தம். அத்தகைய நுண்ணறிவு படைத்தவர்.
இலக்கிய எதிரிகள் சம்பந்தப்பட்ட விவகாரமாய் இருந்தால், அவரைத் தாக்குவதற்கான தருணத்தையும் அவர் அப்போதே
நிர்ணயித்து விடுவார்.
g

Fas6apańi?as LDmr67 ஆங்கிலம், தமிழ் இலக்கியப் புத்தகங்கள்
க. பொ. த. பரீட்சைக்குத்
தேவையான நூல்கள் தொலைபேசி 34529
தந்தி "கென்னடிஸ்" மொழி பெயர்ப்பு நூல்கள்
தமிழகத்தில் வெளிவந்துள்ள இலங்கை எழுத்தாளர்களின் புத்தகங்களும்
குழந்தைகளுக்கான புத்தகங்கள்
O போன்றவைகள் கிடைக்குமிடம்
ஆல் சிலோன் டிஸ்ரிபியுட்டர்ஸ்
371, டாம் ஸ்ரீட், கொழும்பு 12
கிாே கே. கே. எஸ் வீதி,
யாழ்ப்பாணம்.

Page 37
மணிப்புரி சேலைகள் நூல் சேலைகள் வோயில் சேலைகள்
一、 சேட்டிங் - சூட்டிங்
வகைகள்
சிறர்களுக்கான சிங்கப்பூர் றெடிமேட் உடைகள்
தெரிவு செய்வதற்குச் சிறந்த இடம்
லிங்கம்ஸ் சில்க் ஹவுஸ்
18, நவீன சந்தை,
மின்சாரநிலைய வீதி, யாழ்ப்பாணம்.
 
 
 

சிறிய இலக்கிய ஏடுகளின் வளர்ச்சிக்கு ஒரு பெரிய மனிதனின் பங்களிப்பு
அரசியல் விவாதங்களை விட, இலக்கியப் பிரச்சினைகள் பற்றித்தான் இளம் வ ய துக் குருத்துக்களான நாம் அவரிடம் நேரிடையாகவே விவாதிப்போம். அவரும் தான் கற்றறிந்த ஆங் கில இலக்கியங்களின் உள்ளீடு பற்றியும் அதன் நுணுக்க விவ காரங்கள் குறித்தும் ரசனை மட் டத்தில் அவைகளின் அடி ஆதா ரமான சிறப்பம்சங்க ள சிலா கித்தும் எங்களுக்கு விரிவாக எடுத்துக் கூறுவார்:
தோழர் கார்த்திகேசனை எங்களது அரசியல் குருநாதர் என்று சொல்வதை விட, எங்க ளது உள்ளுணர்வில் பொங்கித் ததும்பின இலக்கிய உத்வேகத்தை இனங் கண்டு வழி சமைத்து, நெறிப்படுத்தி எம்மை உருவாக்கி ஆளாக்கியவர் என்று சொல்வதே சரியானதும் ι ο πΘ th. என்னைப் போலவே இன்று பிரபலமாகி விளங்கி வரும் பல எழுத்தாளர்களை உரு வாக்கியவர் அவர்.
இப்படியான இலக்கியச் சம்பாஷணைகள் அவரது இல்லத் தில் அடிக்கடி நிகழும். இரவு நெடு நேரம் சென்ருலும் கூட, எம்மைப் போன்ற இலக்கிய ஆர்வ இளைஞர்களுடன் நட்பு நெருக்கத்துடன் கதைப்பதில் அவர் என்றுமே ஆர்வம் குன்றி யவரல்லர். அதே சமயம் அவர் மார்க்ஸிஸ் உபதேசியுமல்லர்.
7.
பொருத்தமானது
டொமினிக் ஜீவா
யாழ்ப்பாணம் விக்டோரியா வீதியில் அவர் அந்தக் காலத்தில் குடியிருந்தார். இந்துக் கல்லூரி யில் ஆசிரியுராகக் கடமையாற்றி வந்தார்.
இதே விதமாக ஓர் இலக் கிய நேர் ச் சம்பாஷணையின் போதுதான் கைலாசபதியின் பெயரைத் தோழர் கார்த்திகே சன் உச்சரித்ததாக எ ன க் கு இ ன் று ஞாபகம். "என்னைப் போலத்தான் அந்த மாணவ
னும். மலேசியாவில் இருந்து வந்திருந்தவன். வலு கெட்டிக் காரன். இலக்கியத் துறையில்
அதீத ஈடுபாடு. எங்கள் கல்லூ ரியில் படிப்பை முடித்துவிட்டு இன்று கொழும்பு ருேயல் கல் லூரியில் படிப்பதாகக் கேள்வி. சந்தர்ப்பம் கிடைத்தால் அந்த மாணவனை அவசியம் சந்திக்க் வேண்டும், நீர், அவரது பெயர் கைலாசபதி" - என்னுடன் ஒரு நாள் கதைத்துக் கொண்டிருக் கும் போது இடை நடு வில் சொல்லிவைத்தார் மா ஷ் டர் கார்த்திகேசன்.
கார்த்தி ஒர் அற்புதமான பிறவி. ரொம்ப ஆழமான ஆள். பாரையும் சட்டென்று புகழ்ந்து விட மாட்டார். ஆனல் ஆட் களைப் பார்த் த உடனேயே எடை போட்டு ஒரு முடிவுக்குத் தனக்குள் தானே வந்து விடு வார். பொது வாழ்வில் ஆர்வ முள்ள வாலிபர்களையும் இளைஞர்

Page 38
களையும் கவர்ந்து அவர்களிட முள்ள சிறப்பம்சங்களை சிலா "கித்து வளர்த்தெடுப்பதில் சூரன்.
அவரது வாயினுல் கைலாச பதியின் பெயரைக் கேட்டதிலி ருந்து எப்போதாவது ஒரு சமயம் கைலாசபதியைப் பார்த்துவிட வேண்டுமென்ற ஆர்வம் என் மனதில் இடம்பெற்று விட்டது.
ஒரு ஞாயிறு வார வீரகே சரி இதழில் க. நா. சுப்பிரமணி யத்தின் ஒரு நாள்" நாவலை விமரிசித்திருந்தார் கைலாசபதி. அதுதான் நான் அவரது எழுத் தைப் படித்த முதற் சந்தர்ப்பம். அந்த விமரிசனத்தில் நாவலாசி ரியர் க. நா. க. பற்றிய எனக்குத் தெரியாத பல தகவல்களையும் இடையிடையே குறிப்பிட்டிருந் தார். அக் கட்டுரை வழக்கத் திற்கு மாருக ஒரு புதிய கோணத் துடனும் ஒரு புதிய கண்ணுேட் டத்துடனும் எழுதப்பட்டிருந் திதி ' .
அப்பொழுது அவர் பல்கலைக் கழக மாணவனுக உருவா கி
இருந்த காலம்.
கஸ்தூரியார் வீதியில் எனது நண்பன் முத்துமுகம்மது இருக் கிருர், அவருடைய செருப்புக் கிடையில் உட்கார்ந்து அவருடன் பல்வேறு விவகாரங்கள் பற்றி யும் கதையடிப்பது அப்போது எனது தினசரி வழக்கம். இப்ப டியாக அவருடன் கதைத்துக் கொண்டிருந்த ஒரு நாள் சாயங் கால" வேளையில் அக் கடை வாச லைக் கடந்து வெள்ளை நிற நீட் டுக் காற்சட்டையுடன் ஓர் உரு வம் செல்வதை நான் திடீரென அவதானித்தேன்.
உள்ளுணர்வு விழிப்புற்றது: இது நிச்சயம் கைலாசபதியாகத் தான் இருக்க வேண்டும் என
அது அறுதியிட்டுச் சொன்னது. வெளியே வந்து பார்த்தால் அந்த உருவம் தூரத்தில் போவது தெரிந்தது.
அடுத்த நாளுக்கு அடுத்த நாள.
சொல்லி வைத்தாற் போல, அதே உருவம் எங்களைக் கடந்து சென்றது. நான் பேச்சை இடை நிறுத்திக் கொண்டு அ வ ச ர வேகத்துடன் வீதியை நோக்கி நடந்தேன். சில அடிகள் தூரத் திற்குள் அந்த உருவத்துக்குரிய வரைச் சமீபித்து விட்டேன்.
மாட்டு வண்டில் ஒன்று ஒர மாகிக் குறுக்கிட்டது. அதைத் தவிர்ப்பதற்காக அந்த உருவத் துக்குரியவர் சற்று ஒதுங்கிப் தரித்து நின்ருர். நான் நெருங்கி
விட்டேன். தொண்டையைக் கனத்தபடி, "தயவு செய்து மன்னிக்கவும். நீங்கள்தானே
கைலாசபதி?" என்று கேட்டேன். "ஒமோம்! என்ன சங்கதி??
நான் எ ன து பெயரைச் சொன்னேன். சேர்த்துத் தோழர்
கார்த்திகேசனின் பெயரையும் குறிப்பிட்டேன். கார்த்திகேச னின் பெயரைக் குறிப்பிட்ட
அந்தக் கணத்தில் இருந்தே நாங் கள் மிக மிக நெருக்கமானவர் கள் என்பதைப் ப ர ஸ் ப ர ம் புரிந்து கொண்டோம்.
கஸ்தூரியார் வீதி திரும்பம் வரைக்கும் அவருடன் பேசிக் கொண்டே சென்றேன். பல்கலைக் கழக கோடை விடுமுறைக்கு ஊருக்கு வந்திருப்பதாகவும், வீடு மானிப்பாய் வீதியில் இருப்பதா கவும், சாயங்காலங்களில் யாழ்ப் பாண நூலகத்திற்குச் சென்று வருவது தனது தினசரி வழக்க மென்றும் அவரது பேச்சிலிருந்து கிரகித்துக் கொண்டேன்;
7.

&
டன் - அவரது
இந்த அறிமுகத் தொடர் ತಿ? ஏற்பட்ட நட்பு, பின் னர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து செயல்படும் உறவாக மலர்ந்து தொடர்ந்து ஈழத்து இலக்கியத் திசைவழியை நிர்ணயிக்கும் இலக்கியத் ததது வார்த்த பிணைப்பாகவும் மிளிர்ந் g5g.
இத்தனைக்கும் சர்வதேச அரசியல் விவகாரமாக இருந்தா லும் சரி, அல்லது விமரிசன அழகியல் சம்பந்தமான கலைக் கருத்தோட்டமாக இருந்த போதிலும் சரி, பல்வேறு பிரச்சினைகளில் நான் அவரு கருததுடனபல சமயங்களில் முரண்பட்டு வந்திருக்கின்றேன். சில பிரச்சி னைகளில் கடைசி வரையும் நாம் இருவரும் உடன்பாடு கொண்டி ருக்கவில்லை.
'தினகரன் ஆசிரியருக்கு"
என முகவரியிட்டு எனது படைப்
பாக்கங்களை நான் ஒரு காலத் தில் தினகரனுக்கு அனுப் t வைத்ததுண்டு. காலம மாற, ம ல் லி கை ஆசிரியருக்கு என அவர் என து முகவரியிட்டுத் தமது விமரிசன ஆக்கங்களையும் கட்டுரைகளையும் எனக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த இரு நிலைப்பட்ட காலத்தில் கூட கைலாசபதி
அவர்கள் ஒரு முதிர்ந்த இலக்கி
யகாரணுகவே நடந்து கொண் டுள்ளார்.
ஈழத்தில் வெளிவருவதும்வெளி வந்து மறைந்ததுமான பல இலக்கியச் சிற்றேடுகளில் அவரது பாரிய கருத்துத் தாக் கங் கொண்ட பல்வேறு கட்டுரை கள் வந்ததுண்டு. அதிகமாக அவர் நிறைய of 6. யுள்ளாா. சர்ச் யே ఆ கட்டுரைகளை
அவர் இதில்தான் எழுதியுள் ளார். அதுமாத்திரமல்ல, ஒரு சில இதழ்களே வெளிவந்து நின்று போயிருக்கும் பல சிற்றே டுகளிலும் அவர் எழுதியுள்ளார்.
இலங்கை எழுத்தாளர்களில் சிற்றேடுகளை மனதார மதித்த ஒர் இலக்கியக் கனவான் என் பதை அவர் பல சந்தர்ப்பங்க ளில் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
பல சிரமங்களுக்கு மத்தியி லேதான் இந்த மண்ணில் இலக் கியச் சிற்றேடுகளை வெளியிடு கின்றனர், பலர். ஆனல் வாய் கிழிய ஒத்துழைப்புப் பேசும் பலர் குறிப்பிட்ட பல சந்தர்ப் பங்களில் காலை வாரிவிடுவார்கள். இந்த அநுபவம் எனக்குப் பல் வேறு.சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட துண்டு. குறிப்பிட்ட இதழுக்குக் கட்டுரை தருலதாக வாக்குப் பண்ணுவார்கள் காவல் இருந்து பக்கம் ஒதுக்கி வைத்து க் கொண் டு எதிர்பார்ப்புடன் காத்திருந்தால் கடைசியில் கட்டு ரையே வந்து சேராதுg
மல்லிகை வரலாற்றில் இப் படியானவர்களை நான் என்றுமே மதித்துக் கனம் பண்ணுவது மில்லை. இப்படியான நெருக்கடி நாயகர்களுக்காக நான் எனது உழைப்பு நேரத்தை வீணடிப்பது மில்லை.
ஆளுல்ை கைலாசபதி அவர்க ளிடமுள்ள பெருங் குணங்களில் ஒன்று, சொன்ன தவணைக்குக் கட்டுரைகளைத் தந்துதவும் நேர் மைப் பண்பு. நம்பியிருக்கலாம். கட்டுரை தருவதாகச் சொன்ன திகதிக்குக் கண்டிப்பாகக்கட்டுரை வந்தே தீரும். சிற்றிலக்கிய ஏடு களை மதிக்கும் இந்தப் பண்புதான் என்னை அவர் மீது தனிப் பிரியம் கொள்ள வைத்தது.
எத்தனை வேலைப் பளுவாக இருந்த போதிலும் கூட பல்
73

Page 39
கலைக் கழக நிமித்தம் அடிக்கடி பிரயாணம் செய்யும் அலுப்பு நிரம்பிய தினசரிக் கடமைகள் அழுத்தி அவரைச் சிரமப்படுத் திய வேளைகளில் கூட, அவர் சொன்ன தவணைக்குக் கட்டுரை தந்தே தீருவார்.
ஸ்கூட்டரை உதைத்துக் கொண்டு, மல்லிகை இயங்கி வரும் அந்தக் குச்சொழுங்கைக் குள் அவர் படிக்கட்டுகளில் ஏறும் போது நான் அவரைக் கண்டு வியந்து போவதுண்டு அத்தனை பொறுப் புணர்ச்சியுடன் அவர் சிற்றிலக் கிய ஏடுகளுடன் தொடர் பு கொண்டு வந்துள்ளார்.
ஒகு சமயம் நடந்த விவா தத்தில் அவரே சொன்னர்: *புதுமைப் பித்தன் எந்தப் பிர பல வியாபாரச் சஞ்சிகைகளி லும் அந்தக் காலத்தில் எழுதிய தில்லை. அதே சமயம் அவர் அக் காலத்தில் வந்த பிரபலமல் லாத சிற்றேடுகளில்தான் தனது கருத்துக்களையும் படைப்புக்களை யும் எழுத்தாக எழுதி வந்தவர். இன்று அவரது படைப்புக்கள் தான் வாழுகின்றன. அவர் காலத்தில் பெரும் பேருடனும் புகழுடனும் வாழ்ந்த பிரபல பத்திரிகைகளல்ல. இதை நாம் மறந்துவிடக் கூடாது."
தனது கட்டுரைகளில் அவர் பெரும் பெரும் சங்கதிகளைத் தான் சொன்னவர். பல நுட்ப மான, நுணுக்கமான, பாரிய தாக்கமான கருத்துக்களைத்தான் தனது எழுத்தின் மூலம் விமரி சன ரீதியாக வைத்தவர். அதே சமயம் அவரது எழுத்து நடை தெளிவாகவும் எளிமையாகவும் கூரிய ராம பாணம் போன்று விளங்கி வந்ததைப் பலரும் அக் காலத்திலேயே பாராட் டி ப் போற்றியுள்ளனர். கனமான
74
வந்து மல்லிகைப்
விஷயத்தைக் éia L- விளங்கும்படி தெளிவான தமிழில் எழுத முடி யும் என நிரூபித்துச் காட்டிய வர் அவர்.
யாழ்ப்பாணம் பெரியகடைப்
பகுதிக்கு ஏதாவது அலுவல் நிமிர்த்தமாக வந்தால், நேரமி
ருந்தால், மல்லிகை அலுவல கத்தை ஒரு தடவை எட்டிப் பார்ப்பார். அக் கெளரவிப்பு
எனக்குக் கொடுப்பதற்காகவல்ல. மல்லிகையின் இலக்கியத் தாக் கத்தையும் அது எதிர்காலத்தில் எத்தகைய வீச்சுடன் பேசப்படப் போகின்றது என்பதைப் புரிந்து கொண்டஞானத்துடனுமேஅவர் மல்லிகையின் எதிர் காலம்பற்றி என்னுடன் சில சந்தர்ப்பங்க ளில் நிறைய விவாதித்துள்ளார்
இப்படியான நேர்ச் சம்பா ஷணைகளிலிருந்து ஒன்றை நான் தெளிவாகப் புரிந்து கொண் டேன்.
சிற்றிலக்கிய ஏடுகள்தான் இங்கும் தமிழகத்திலும் காத்திர மான சர்ச்சைகளை நடத்த முடியு மென்றும் துணிச்சலாகப் பல கருத்துக்களை மக்கள் மத்தியில் வைக்க முடியுமென்றும் அதனல் ஆரோக்கியமான திசைவழியில் தமிழ் இலக்கியம் வளர்ச்சி பெற முடியுமென்றும் மெய்யாகவே அவர் நம்பினர்:
அவர் சிற்றிலக்கிய ஏடுகளை நேசித்ததற்கும் அவற்றுடன்
மனப்பூர்வமாக ஒத்துழைத்ததற் கும் அவை செய்து வந்த சேவை
யைக் கனம் பண்ணிக் கெளர
வித்ததற்கும் அடிப்படைக் கார னங்களே இவைகள்தாம்.
அத்துடன் இலங்கையில் சிற் றிலக்கிய ஏடுகளை நடத்துகின்ற வர்களில் சிலர் அவரது தத்து வார்த்த நண்பர்கள். இலக்கி

யக் கருத்தோட்டங்களில் இயக் கப் பாதையில் உடன் பயணம் செய்தவர்கள். ஈழத்து இலக் கிய வளர்ச்சிப் போராட்டங் களில் தோழமைப் பங்கு கொண் டவர்கள். இன்னும் தெளிவா கச் சொல்லப் போனுல் கருத் துப் போராட்டங்கள் Lo65jš துள்ள கால கட்டங்களில் பொது இலட்சியங்களை முன் நிறுத்தி, இயக்க பூர்வமாகச் சிந்தித்து, ஒருங்கிணைந்து சோ ஷ லி ஸ் எதார்த்த இலக்கிய வளர்ச்சியை எதிர்கால நோ க்க மாக க் கொண்டு இயங்கி வந்தவர்கள்.
எனவேதான் கைலாசபதி அவர்கள் இத்தகைய சிற்றிலக் கிய ஏடுகளை ஏதோ சிறிய சஞ் சிகைகள் என எண்ணுமல் எதிர் காலத்தில் இப்படியான சஞ்சி கைகள் மூலம்தான் சரியான கருத்து வடிவங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடி யும் என நம்பினர். ஆழமான நம் பிக்கையுடன், இத்தகைய சிற்றி லக்கிய ஏடுகளில் தமது பெரு வாரியான கட்டுரைகள் வெளி வர வேண்டுமென விரும்பினர்.
"கைலாசபதி கண்ட நிண்ட
வர்களுக்கெல்லாம் முன்னுரை வழங்கியுள்ளார். இது அவரது
ஆளுமைக்கு அழகல்ல!" என் ருெரு குற்றச்சாட்டு இங்கும் குறிப் பாகத் தமிழ்கத்திலும் கூறப்பட்டு வருகின்றது. இலங் கையிலுள்ள விமரிசகர்களில் அதி கமான புத்தகங்களுக்கு முன் னுரை எழுதியவர் கைலாசபதி தான், சிற்றிலக்கிய ஏ டுக ஃா அணுகிய மனநிலையில் இருந்கே அவர் பல இளம் எழுத்தாளர் களுக்கு முன்னுரை வழங்கியுள் ளார். அதிலும் ஒன்றை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். முன்னுரைக்ளில் அந்தந்த நூலா சிரியர்களை அவர் ஓகோ வென்று
புகழ்ந்து விடவில்லை. பல தீர்க்க மான இலக்கியக் கருத்துக்களைச் சொல்வதற்கு அவைகளையும் ஒரு தளமாக்ப் பாவித்து வந்துள் ளார் எ ன் ப ைத இப்போது நோக்கும் பொழுது தெளிவாக உணர முடிகிறது. இந்த மண் ணில் போதிய களமில்லை. கருத் துக்கள் வெகுசன மத் தி யில் சென்றடைய வாய்ப்பிய்லை. என வேதான் முன்னுரைகளைத் தமது கருத்துக்களைச் சுமந்து செல்லும் தற் காலிக வாகனங்களாகப் பயன் படுத்தினர் மூல ஆசிரியர் களின் படைப்புக்கள் மறைந்து போகலாம். ஆனல் கைலாசபதி யினுடைய முன்னுரைகள் என் றென்றும் ஆழமான இலக்கியப் பிரச்சினைகள் பற்றிப் பேசிக் கொண்டேயிருக்கும்3
ஈழத்துப் பூதந் தேவனுர் எனச் சங்க இலக்கிய காலத்துப் பழம் பெருமை பேசிக் கொண் டிருந்தோம். ஆறுமுக நாவலர் என அந்நிய ஆட்சிக் காலத்தில் தமிழ் பாதுகாக்கப்பட்டதைப் பற்றியும் தமிழர் கலாசாரம் பேணப்பட்டது பற்றியும் கதைத் துக் கொண்டிருந்தோம். இவர் கள் இருவரையும் த விர்த் து நவீன காலத்துத் தமிழ் பற்றி யும் விஞ்ஞான யுகப் பார்வை பற்றியும் சர்வதேசக் கண்ணுேட் டத்தில் இன்றைய தமிழ் பற்றி யும் நாளைக்கு நமது சந்த தி பேசத்தான் போகின்றது.
அப்பொழுது நாம் இன்று காணும் போாசிரியர் கைலாசபதி யைவிட செழுமையும் முழும்ை யும் நிரம்பிய ஆளுமை மிக்க கைலாசபதி பற்றி அந்தத் தலை முறையினரி முழுமைப்படுத்திப் பொதுமைப்படுத்துவார்கள்.
-அப்பொழுது கைலாசபதி அவர்களுடைய நாம ம் தா ன் முன்னணியில் திகழ்ந்து ಶಿಖಿಅಕ್ಕಿ

Page 40
இமய மலைச் சாரலிலே கைலாசம் எனப்படும் சிகரமொன்று இருக்கிறது என்று நான் நூல்களிலே வாசித்திருக்கிறேன் அழகுடனே கம்பீரம் தோற்றும் அந்தச் சிகரம் எல்லாம் வல்ல ஈசுவரனின் வாசமென்று அறிந்தேன் ஆணுல் இவ் வாழ்விலே என் கண்ணுல் அப்புதுமையை இன்னும் காணவில்லை குமரிமுனைக்கு அப்பால் எமது புனித நாட்டிலே தமிழிலக்கிய இமயத்தில் நாற்பத்தொன்பது ஆண்டுகளாக ஒரு கைலாசம் இருந்தது பாவருமறிந்த உண்மையே.
தமிழிலக்கியத்திற்கு மட்டுமின்றி நாட்டிலெல்லாக் கலைத்துறைகளிலும் இருளகற்றிய ம்ணிவிளக்குப் போன்று நாடு முழுவதையும் ஒளி வீசிக் கொண்டு நின்ற எமதன்புக் கைலாசம் திடீரெனத் தாக்கிய கடும் மின்னலாலே
بر
கே. ஜி. அமரதாச
சாய்ந்து விழுந்ததை நினைத்து
பெரும் துயரமடைகின்றேன்.
பூவுலகத்துக்கிரண்டு கைலாசங்கள் எதற்கு கைலாசத்துப் பதியாய என் போன்ற மானிடர் என் பெயரைத் தோற்கடித்து வாழ்கிறது பொருத்தமல்ல எல்லாம் வல்ல ஈசுவரனுக்கு திடீரென்று இக் கற்பனை வந்ததஞல் இச் செயலோ? நேசமிக்க கைலாசா எதிர்பாரா நேரத்திலே எங்களை விட்டேன் போஞய்? ஆனல் ஒன்று கூறுகின்றேன் எங்கு நீ போனலும் கைலாச (அதி) பதிக்கண்மையிலே போகவே வேண்டாம் நீ ‘எமதருமை நாடான சிறிலங்க தீவினிலே கலையிலக்கியம்
பிரகாசிக்க ஆயிரம் பிறவிகள். எடுத்து பணியாற்றும் நண்பரே அடுத்தமுறை சந்திக்கும் வரை என் மனம்ார்ந்த வணக்கம்!
ஆயுபோவன் சகோதரரே O
 

சி. வன்னியகுலம்
பேராசிரியர் கைலாசபதி யின் ஆளுமையைப் பலர் அவ ரது எழுத்துக்களின் மூலமாகவே தரிசித்திருக்கின்றனர். Ló) s ji சிலரே அவருடன் நெருங்கிப் பழகியவர்களென்ற ரீதியிலேஅவரது தனிப்பட்ட சிறப்பான குளும்சங்களை அறிந்திருக்கின் றனர். கைலாசபதியின் எழுத் துக்களைப் படிக்கின்றபோது பிர மிப்பாகவிருக்கும், அவர்பற்றிய மதிப்பார்ந்த ஒர் அபிமானம் வாசகன் மனதிலே தோன்றும். அவருடன் பழகும்போது, அபி மான த் தி ற்கு ப் பதிலாக தோழமை உணர்வே மிக்குவரும். நல்ல ஒரு நூலைக் கற்கும்போது அடையும் உள்ளப் பரவசத்தை அவருடன் பழகும்போது அடைய முடிகிறது.
1975ம் ஆண்டு யாழ்ப்பாண வளாகத்தின் முதலாவது தலைவ ராகப் பேராசிரியர் கைலாசபதி நியமிக்கப்பட்டிருந்தார். முற்றி லும் புதியதான ஒரு ப ா ரிய பொறுப்பை அவர் கையேற் றிருந்த்ார். அடிப்படை வசதி கள் கூட அற்ற நிலையிலே ஒரு வளாகத்தின் நிருவாகத்தைக் கொண்டு நடத்வதுதென்பது கண்ணைக் கட்டிக் காட்டில் விட்
பேராசிரியர்
கைலாசபதியுடன்
- ஒரு கருத்தரங்கில்
டது போன்றதுதான். வளாகத் தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற உந்துதலினுலே ஊண் உறக்கமின்றி அவர் உழைத்தார். இந்த நிலையிலும் கலை இலக்கிய மென்று கதைக்கத் தொடங்கி விட்டால் பாரிய இந்தப் பொறுப் புக்களெல்லாம் பஞ்சுமெத்தை யாக அவருக்குத் தோன்றும் . கலை இலக்கியம் பற்றிக் கதைப் பதற்கு நேரகாலமென்று ஒன்று
அவருக்கிருந்ததில்லை. அலுவலக நேரத்திலுஞ் சரி. நிர்வாகஞ் சார்ந்த கூட்டங்களிலுஞ் சரி
இலக்கியமென்று தொடங்கிவிட் டால் போதும், புதிய தெம்பு டன் கதைக்கத் தொடங்கிவிடு GITI
1977 ம் ஆண்டளவில் யாழ்ப் பாண வளாகத் தமிழ்த் துறை யினர் "ஆக்க இலக்கியமும் அறிவி யலும்’ என்ற தலைப்பிலே கருத் தரங்கத் தொடர் ஒன்றினை நடாத்தி வந்தனர். இக் கருத்த ரங்கிலே கட்டுரை படிப்பதற் ரும் உரையாடல்களிலே பங்கு பற்றுவதற்குமாக ஈழத் தி ன் படைப்பிலக்கிய கர்த்தாக்கள், விமர்சகர்கள், இலக்கிய ஆர்வ லர்சுள் பலரும் அழைக்கப்படு வது வழக்கம். அப்போது நான் யாழ்ப்பான வளாகத்திலே
.
77

Page 41
எம். ஏ. பரீட்சைக்காகத் தயார் செய்து கொண்டிருந்தேன். அத ஞல் ஒவ்வொரு கருத்தரங்கிலும் பங்கு கொள்ளும் வாய்ப்பு எனக் குக் கிட்டியது. எவ்வளவுதான் வே லை கள். கடமைகளென்று குவிந்து கிடந்தாலும் எந்தக் கருத்தரங்கையுமே தவறவிாடது ழதமளித் திருபபார் Guptrrg
f
கருத்தரங்கிலே முற்போக்கு அணியினரின் குரலே மிக்கொலிக் கும். கட்டுரை படிப்பவர்களும் உரையாடலிலே பங்கு கொள்ப வர்களும் பெரும்பாலும் முற் போக்கு இலக்கிய அணியினரா கவே இருப்பர். கட்டுரை படிக் கப்பட்டதன் பின்னர் உரையா டல் தொடங்கும். ச  ைபயின் ஒரு கோடியிலே பேராசிரியர் மிக அமைதியாகத் தமது செவி
களைத் தீட்சண்யப்படுத்திக் கொண்டிருப்பார். தன்னிச்சை யாகவே அவரது கைவில்கள்
அடர்ந்திருக்கும் மீசையை நீவிக் கொண்டிருக்கும். கண் மூ டி ய நிலையில் மெளனமாக, அடக்க மாக அவர் வீற்றிருப்பார். ஒவ் வொருவரின் கருத்துக்கும் உரை யாடலின்போது சந்தர்ப்பமளிக் கப்படும். விஞக்களுக்கு விளக் கங்களளிக்கப்படும். இனிமேல் பேசுவதற்கு யாருமில்லை என்ற நிலையிலேயே பேராசிரியர் எழுத்து நிற்பார். சபையில் அமைதி கனக்கும்.
மிகத் தீட்சண்யமாக வாசிக் கப்பட்ட கட்டுரை, நடைபெற்ற உரையாடல் பற்றிய தமது கருத்துக்களைப் பேராசிரியர் எடுத்துச் சொல்வார். அவரு டைய பேச்சைக் கேட்கும்போது வியப்பே மேலிடும். நடைபெற்று மு டி ந் த வாக்குவாதங்கள். வாதப்பிரதிவாதங்கள் யாவும் அர்த்த மற்றவையாகிவிடும்.
அடக்கத்தோடு வரும் வார்த்தை களில் ஆழம் செறிந்திருக்கும் சிக்கற்படுத்தப்பட்ட சித்தாந்தங் கள் தாஞகவே நெகிழ்ந்து தன் வசமிழந்து நிற்கும். விளக்கமுடி யாத பிரச்சினைகளுக்கு ஆதாரங் களுடன் பதில் கிடைக்கும். கருத்தரங்கின் முடிவிலே, மனம் இலேசாகி காற்றிலே மிதக்கும். குதுரகலிக்கும் - எத்தளேயோ புது  ைம் களைக் கேட்டோம்ே யென்று
அன்றும் அப்படியான ஒரு கருத்தரங்குதான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஈழத்தின் தலை சிறந்த, முற்போக்கு இலக்கிய அணியைச் சேர்ந்த விமர்சகர் ஒருவர் கட்டுரை படித் துக் கொண்டிருந்தார். "ஆக்க இலக் கியமும் அழகியலும்" என்பது அந்தக் கட்டுரை. சோஷலிச, யதார்த்தவாத புரட்சிகர, பாட் டாளி வர்க்க இலக்கியங்களின் இயல்பு ஆக்கம், அவற்றிலே அழகியலின் தாக்கம் என்பன பற்றி வரைபடத்துடன் பேச்சா ளரி விளக்கம் கொடுத்தார். வேண்டுமெனில், முற்போக்கு இலக்கியத்தையே அவர் விபரித்த அச்சிலே வார்த்து எடுத்துவிட முடியும்
"கருவின் தரத்தைக் கலைஞ னின் அனுபவமும் பங்குபற்ற லும் தீர்மானிக்கின்றன. அவ னது சமூகப் பார்வையும் வர்க்க நிலைப்பாடும் அவனது ஆய்வுத் திறனைத் தீர்மானிக்கின்றன. அவனுடைய அனுபவம் பங்கு பற்றும் வரிக்க நிலைப்பாட்டிற் கமைந்தவையே. பாத்திர வார்ப் பின் வெற்றிக்கு இவை அவசி யம். தான் படைக்க முற்படும் பாத்திரத்தோடு போதியளவு பரிச்சயமில்லாத கல்ை ஞ ணி ன்
fe

(படைப்பு) வகைப்பாட்டுக்குப் பலியாவது இயற்கை. போதிய ளவு பங்குபற்றல் இன்மையின் விளைவாகப் பாத்திரப்படைப்பு இயந்திரவியல் தன்மை கொண்ட தாகிவிடுவதால், இதில் அழகி யல் குறைந்தும், கலைப்பண்பு இன்றியும் போய்விடும்"
பேச்சாளர் இவ்வாறு அடுக் கிக் கொண்டே போனர். பேச் சின் இறுதியிலே கலந்துரையா டல் தொடங்கியது, கருத்துச் சொன்ஞேர்கள் பலரும் ஊமைக் குழலையே ஊதினர். முற்போக்கு இலக்கண விளக்கத் துக்கெதிராக விஞத் தொடுக்க யாருக்குத் துணிவு வரும்? அது வும் பேராசிரியர் கைலாசபதியை வைத்துக் கொண்டு முற்போக்கு இலக்கணத்திலேகு ைறகூற முடி цић?
எனக்கு அமைதி கசந்தது. எ ன து இருக்கையினின்றும் எழுந்து நின்றேன். சில முகங் கள் லியப்புடன் திரும்பிப் பார்த் தன. சில மனங்கள் அனுதாபப் பட்டன. சிலர் நமட்டலாகச் கிரித்துக் கொண்டனர். "குறைந் தது ஒரு பல்கலைக்கழக விரிவு ரையாளராகவாவது இருக்க வேண்டாமா? வாங்கிக் கட்டப் Gurrorii
ஏதோ சொல்ல வாயெடுத் தேன். வார்த்தைகள் ஒழுக்கின் றிக் குழம்பின. மீண்டும் முயற் சித்தேன். ‘அனுபவம் பங்குபற் றல் ஆகியன இன்றியே தரமான
அ வ ர து
பாடியிருக்கின்ருன்?
தலையை நிமிர்த்திப் பார்த்தார். கேள்விக் குறியோடு. "தொடரு” என்பது அதன் அர்த்தம் எனக்கு
நம்பிக்கை தளிர்த்தது. நான் தொடர்ந்தேன்.
“அனுபவம் இரண்டு வகை
யானது. ஒன்று, ஒருவன் நேரடி யாகப் பெறுகின்ற அனுபவம் இது பங்கு பற்றலுடன்தொடர் பானது. மற்றது மறைமுகமாக வாசனை, கேள்வி, உள்ளுணர்வு மூலம் பெறப்படுவது. இவற்றிலே பங்குபற்றல் அனுபவமே தர மான இலக்கிய ஆக்கத்திற்கு அவசியமானது என்பது அர்த்த மற்றது. பங்குபற்றல் -959): Լյ6ն முடையோர் யாவரினலும் சிறந்த இலக்கியங்களை ஆக்க (p19.65 ல்லை. கம்பராமாயணத்தில்ே, போர்க்களக் காட்சியை கம்பன் எ வ் வள வூ கலையம்சத்துடன் க் ம் பன் போரிலே பங்கு கொண்டவ னல்ல, போர்க்களத்தைக் கண்ட வனென்பதற்கும் சான்றுகளேது மில்லை. வியட்நாமிலே ந  ைட பெற்ற கொடுமைகளின் உக்கி ரத்தை அமெரிக்காவின் மிருகத் தனங்களை வியட்நாம் உன் தேவதைகிளின் தேவ வாக்கு" என்ற தமது கடைசிச் சிறுகதை யிலே செ. கதிர்காமநாதன் எத் துணை அற்புதமாகப் படம்பிடித் துள்ளார்? அவர் வியட்நாமுக் குப் போய் வந்தவரல்ல, விய்ட் நாமியக் கொடுமைகளுக்கு உட் tilt-6) CLDáia.
எனவே தரமான இலக்கியத்
இலக்கியங்களைப் படைக்க முடி துக்கு அனுப்வம் பங்குபற்றல் யும்" என்று ஏதோ குளறினேன். ஆகியன மட்டும் போதுமான உடலெல்லாம் தெ ப்ப மாகப் வையன்று. தான் எழு த ப் போய்விட்டது. பேராசிரியரைத் போகின்ற விடயம் ெg5 frt-fi திரும்பிப் பார்த்தேன். அவரது பாண உள்ளுணர்வு உந்தலும் மூக்குக் கண்ணுடி கை க்கு கற்பனையும் பிரதானமானவை
மாறிற்று. நெற்றியில் சுருக்கங் கள் நெளிந்தன. உசாரடைந்த வராக நிமிர்ந்து உட்கார்ந்தபடி
யாகின்றன" என்று நான் எனது பேச்சை முடித் து க் கொண் டேன்.
7 a.

Page 42
என்னைத் தொடர்ந்து பேராசிரியர் கைலாசபதி எழுந் தார். சபை "கப்சிப் பென்றிருந்
தது. முதல் வார்த்தையே என் னில் தொடங்கியது. "வன்னிய குலம் கூறுவதில் உண்மையிருக் கிறது. வெறும் அனுபவமும் பங்குபற்றலும் மட்டும் தரமான இலக்கியத்தை நிர்ணயிப்பதல்ல. படைப்பிலக்கிய கர்த்தா, தான் எழுதப்போகின்ற விடயம்பற்றி நேரடியாக மட்டுமன்றி யத்தி ரிகை வாயிலாகவும், வானெலி மூலமாகவும், மூலமாகவும் எத்தனையோ விட யங்களை அறிந்து கொள்கிருன். அந்தக் கருவினைப்பற்றி எழுது மாறு உள்ளுணர்வு அவனை உந் துகின்றவரையிலே அவன் விட யங்களைக் கிரகித்துக் கொள்கி
ருன் . அந்த உள்ளுணர்வு உந்து,
தலே இலக்கியத்தின் சத்தியத் தையும் தரத்தையும் தீர்மானிக் கின்றது, கம்பனின் காவியத்தி லும் கதிர்காமநாதனின் கதை யிலும் உயிர்த்தன்மை தழும்புவ தற்கு இதுவே காரணம்’ நான் லை த்துப் போனேன். ஒர் இலக்
உரையாடல்கள்
கியத் தவ்வ"லின் கருத்துக்கு
அவர் இவ்வளவு அழுத்தம் கொடுத்திருக்கிருரே என்பதை நினைக்கையில் வியப்பாக இருந்
g5gil.
பேராசிரியர் கைலாசபதியின் தனித்துவமே அதுதான். கருத் துக்கள் எங்கிருந்து வருகின்றன என்பதைப் பெரிதுபடுத்தாதவர் அவர். சொல்லப்படும் கருத்துக் கள் நியாயமானவையா, சத்திய மானவையா என்பதையே அவர் கருத்தூன்றிக் கவனிப்பவர். கட்சிக்காக உண்மைகளைக் குழி தோண்டிப் புதைக்கும் பண்பு அவரிடம் என்றுமே இருந்த தில்லை. அதேவேளை தான்”*ண்  ைம யெ ன விசுவாசிக்கின்ற கருத்தை ஒருவர் எ டுத்துச் சொல்வதற்கு தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, பொது வாழ்க்கையிலும் சரி என்றுமே அவர் தடையாக நின்றவரில்லை. அதற்காக அவர் எவரையும் எள்ளி நகையாடியதுமில்லை. அத் தகைய உயர்ந்த பண்புகளின் உறைவிடமானவர் பேராசிரிய கைலாசபதி.
பேராசிரியரின் மனித நேயம்
திருநெல்வேலிச் சந்தையிலிருந்து ஒரு நண்பர் அதிகாலையில்
மரக்கறி வாங்கிக் கொண்டு திரும்பினர். பள்ளத்தில் சைக்கிள் சில்லு விழுந்து ஏகிற, தொங்கிக் கொண்டிருந்த கூடையிலிருந்த கத்தரிக்காய் துள்ளி எழுந்து நடுவிதியில் விழ, அதை எடுக்கும் முயற்சியில் நண்பர் பின்பக்கம் பாாகக. பெரிய காா ஒன்று வரு வதைக் கண்டு அதைச் சற்று விலகிச் செல்லும்படி 60,568)t is காட்ட, கார் அருகில் இருந்த ஒழுங்கையில் நன்ருகவே ஒதுங்கி மெதுவாகத் தரிக்க, ஆதிலிருந்து இறங்கிப வளாகத் தல்வர் பேராசிரியர் கைலாசபதி, நண்பரைப் பெயர் சொல்லி அழைக்க, நண்பர் திடுக்கிட்டு, பரவசத்துடனும் வெட்கத்துடனும் சைக்கிளி லிருந்து இறங்கி, ‘கத்தரிக்காய் விழுந்துவிட்டது. !" என்று தடு மாற, "நான் அதைக் காணவில்லை. உம்மைக் கண்டு காரை மறித்தேன்!" என்று சொல்லி. பேராசிரியர் பல காலம் காளுத அந்த நண்பருடன் சில நிமிஷ நேரம் அளவளாவினர்.
பலாலி வீதியிலிருந்து, பல்தலைக்கழக வளவுக்கு பின்பக்கமாகச் செல்லும் ஒழுங்கை முகப்பில் இது நடைபெற்றறு.

ESTATE SUPPLIERS CoMMISSION AGENIS
A VARE OS OR
CONSUMER GOODS OLMAN coops
TN FOODS
GRANS
fs PLIERs ് 注 ʼv. S ۔ ۔ ۔ ۔ e 6 . . . ܊ ܬ . uni C QDial 莎 NEEDs O
9. ~ 2 6 5 87 勾 .. . ܟ݂ܢ*
1. 3. .
oesAl: s'
E. SITTAMPALAM & SONS
* ■ % 223, Fifth Črosistreet,
Colombo-11.
la طعات

Page 43
| Man Rikai
尋巨工間壘鬥巨真匿口 蟲■■ ■E*
FPB Re: 24Éĝo
இப்பத்திரிகள் 54. யானோவினார வெளிவிடுங்குகளின் விடிநேவிக்:
 
 

sa is sa lala 蠶蟲置 [9器3
sjef i'r
ALL PANELLUNG
CFIPECARE : "
PENELLING , .
K), Mg. J. SigEĒ". CoY_{k-1}{T-17,
ாழ்ப்புளவும் முதனவரியின் வசிப்பவரும் ஆசிகோரும்
து தந்தை நாதர்ங்களுடன் விற்ப்பகம் S S AAA AA SAAS S S S S S Z uu S u Lut TTTTTYYYS