கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1990.04

Page 1
|-!-! > sae Lae 七 刀长 瓯 及代 so
MALLIKA
 

上 2 ア』 

Page 2
メ〜。く*メ* 〜、「}くく〜?(~~~~~^~~~~^~~~~~~~~)~~~~) .
L. L. Ɛ sƆ z ; uoues “VX NVT IJS – VN4+yp ‘CIVO}} }}VNV AV Tvg|Wy o 1g
N\/dOOdvojvyłONvw "ym os ouw : Suəuļued 6u16eue.W
|
}
|o 90}}40 ųɔueig
|· aaaawnnwww (w "sww {
|SHOJLOVNIJLNOO – SYISIJ NIÐNȚ |
}
}
~^^ ~~~~ ~~~~~~) •^_^) )_J 0 L 8 £ z : uoud|
“VX NVT IMS – VN-Hwp * CJVO}} ÅCINwysog :əɔŋgo peəH
{
*_
 

w ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி
P யாதியிணைய, கலைகளில் உள்ளம்
27 65555 ஈடுபட்டென்றும் நட்ப்பவர் பிறர்
N ஈனநிலை கண்டு துள்ளுவார்" Mallikai' 'Progressive Monthly Magazine
228 ஏப்ரல் - 1990 25-வது ஆண்டு
தொலை தூரக் களங்கள்
மல்லிகை தனது தளத்தை வியாபித்து வருகின்றது. ஐரோப்பிய நாடுகளில் இன்று வாழ்க்கையை ஆரம்பிக்கத் தொடங்கியிருக்கும் நமது நாட்டைச் சேர்ந்த பலர் மல்லிகையை குறிப்பாக - ஈழத்து இலக்கியத்தைவிரும்பி வரவேற்கும் மனப்பான்மையுடன் எம் முட ன் தொடர்பு கொள்ள முனைந்துள்ளனர். •
சமீபத்தில் கொழும்பு சென்றிருந்த சமயம் சில அமைப்புக்களுடன் எம்மால் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. அவர்கள் எமது ஈழத்துப் படைப்புக்களை ஐரோப்பிய நாடுகளுக்கு வியாபார ரீதியாக அனுப்பி உதவக்கூடிய திட்டத்தைச் செயல் படுத்தும் வழி வகை களை எமக்கு விளங்கப்படுத்தினர்.
நடைமுறைச் சாத்தியமான இந்தப் பரிவர்த்தனை வழி முறைக ளைப் பரீட்சார்த்தமாக நாம் இன்று மல்லிகை மூலம் ஆரம்பித்து வரு இன்றோம். இந்த ஆரம்பம் நிச்சயம் வெற்றி பெறும் எனவும் நம்பு இன்றோம்.
இந்த இலக்கியப் பரிவர்த்தனை வழிமுறைகள் வெற்றியளிக்கும் பட்சத்தில் சகல படைப்பாளிகளுடனும் இது பற்றிக் கலந்துரையாட எண்ணியுள்ளோம். நமது மண்ணின படைப்புகளைச் சுவைப்பதற்கு கனடா, ஜெர்மனி, நோர்வே, அவுஸ்திரேலியா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற தொலை தூாப் பிரதேசங்களிலிருந்து பலர் அடிக்கடி நம் முடன் தொடர்பு கொள்ளுகின்றனர். பாரிய வேலைப் பளுவின் காரண மாகவும் வெளிநாடுகளுடன் தொடர்பு கொள்ளத்தக்க வசதிக் குறைவு காரணமாகவும் நாம் அத் தொடர்புகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியாமல் தயக்கம் காட்டி வந்துள்ளோம்.
இன்று ஏற்பட்டுள்ள இந்தப் புதிய தொடர்பு உறவு நமக்கு எந்த விதச் சிரமங்களையும் ஏற்படுத்தளில்லை. கொழும்பில் நமது சஞ்சிகை, புத்தங்களை அவர்களிடம் ஒப்படைப்பதுடன் நமது வேலை முடிந்து விடுகிறது. அதற்குரிய பணத்தையும் கைமேல் தந்து விடுகின்றனர். தொடர்புகளை அவர்களே வியாபார ரீதியாகப் பலப்படுத்துகின்றனர்.
இந்த யோசனையை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம். தொடர்ந்து இது சம்பந்தமான கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வோம்.
- ஆசிரியர்,

Page 3
இலக்கியச் சாளரம்
சமீபத்திய இலக்கிய நிகழ்வு களில் 95 ஆண்டுகளாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக் கும் இலக்கிய சஞ்சிகை மல்லி கையின் வெள்ளி விழா மலரின் வருகையைக் கட்டாயம் குறிப் பிடத்தான் வேண்டும். அந்த வகையில் இரண் டரை சகாப் தங்களாக ஈழத்து இலக்கியப் பரப்பில் பல்வேறு பரிமாணங் களில் தாக்கங்களையும், பாதிப் புக்களையும் உண்டு பண்ணி முற்போக்கு இலக்கியம் என்னும் பெரும் தேரை இடை விடாது வடம் பிடித்து இழுத்துச் சென்ற பெருமை மல் லி கை யையும், அதன் ஆசிரியர் டொமினிக் ஜீவாவையுமே சாரும்.
மல்லிகை பற்றிய 'இனிய அதிர்ச்சி பற்றிய அறிவிப்புகளை அவ்வப்போது இலக்கிய சாளர பத்திகளில் நாம் *கட்டியம்" கூறியிருந்ததனை இலக்கிய ஆர்வலர் கள் மறந் திருக்க மாட்டார்கள். 'யானை வருகிறது!.. யானை வருகிறது!" என்று கூறினால் ஆவலோடு எதிர் பாருங்கள் என்றுதான் அர்த்தம். இப்போது யானை
வந்திருக்கிறது. (விலை 75 ரூபா.
யானை என்றால் விலை அதிக
மாகத்தானே இருக்கும். ஆனால்
இது பெறுமதி மிக்க யானைதான் என்பதில் சந்தேகம் இல்லை).
மல்லிகை மலரில் காணப் படுகின்ற ஆக்கங்கள் பற்றிச் சில வரிகளில் இங்கே குறிப் பிட்டு விடுவதென்பது சாத்திய
* மலரின்" வரவு"
மில்லை. அப்படிச் செய்வது அவற்றின் தரத்தைக் குறைத்து ம தி ப் பி ட் டு விடுவதாகவும் அமைந்து விடுதல் கூடும். சுமார் 160 பக்கங்களில் மொத்தம் 33 படைப்பாளிகள் தமது ஆக் கங்களை நிர்மாணித்திருக்கின் றார்கள். அத்தகையதொரு முக் கியத்துவத்தினையே மேற்படி மல்லிகை மலரின் அட்டைப் படம் சித்திரிக்கின்றதென்று கருதுகிறேன்.
பல்வேறு சிக்கல்கள், பிரச்
சினைகள், வரையறைகள் என்ற முள் வேலிகளுக்குள் இருந்து
கொண்டு இ லக் கி யம் என்ற
பெரும் பாற்கடலினை இலக்கிய கர்த் தாக்களின் பேனை என்ற மத்துக் கொண்டு கடைந்து 25 ஆ" டுகளுக்குப் பின்னர் இந்த "மல்லிகை மலர்“ என்ற "முத் தினை" அடையப் பெற்றிருப்ப தாக அட்டைப் படம் அமைந் துள்ளது போல் எனக்குப் பட் டது. இதனை வரைந்திருப்பவர் பிரபல ஒவியர் 'ரமணி அவர் di 65" - . '
மல்லிகை மலரின் வெளி யீட்டு விழாக்கள் சமீபத்தில் யாழ்ப்பாணத்திலும், தமிழ்
நாட்டின் தலை நகரிலும் சிறப் பாக இடம் பெற்றன. மலரில் காணப்படுகின்ற விடய தானங் களின் கனம் கருதி அதனை இலக்கிய ஆர்வலர்கள் வாங்கி வைத்திருப்பது அவர்களின் இலக் கிய ஆர்வத்துக்குப் பயனுடைய தாக அ மை யும் என்பதில் சந்தேகமில்லை.
Gary Isr
வீரகேசரி, வார இதழ் 13-5-90

மக்களிடம் சென்றடைய
மார்க்கமொன்று தேவை
இன்று வாரத்திற்கு ஒரு புதிய நூல் என்ற விகிதத்தில் வட மானிலத்தில் புத்தகங்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. கிழக் கிலங்கை, மலையகம் கொழும்பு போன்ற பிரதேசங்களிலும் ஏராள மான புத்தகங்கள், மாதா மாதம் நிறைய நூல்கள் வெளிவருகின்றன.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் பல இலட்சக் கணக்கான ரூபாக்கள் இந்தத் துறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதுவரையும் இது ஒரு தொழிலாகப் பரிணமிக்கவில்லை, ஆர்வமும் எழுச்சியு முள்ள எழுத்தாளர்கள் பலர் தமது கைப் பணத்தை முதலீடு செய்தே தமது படைப்புக்களை வெளியிட்டு வருகின்றனர். விற்பனைச் சந்தை மிகக் குறுகியது. அத்துடன் ஈழத் திருநாட்டு மக்களின் அக்கரை மோகம் குறுக்கே நிற்கின்றது. அரசு நிறுவனங்களின் அலட்சியப் போக்கு, கல்வி, பொது நூலக நிலையங்களின் கண்டுகொள்ளாமை ஆகிய அலட்சியத் தனங்களனால் எழுதி வெளியிட்ட நூல்கள் அவர்க ளிடமே பெருமளவில் முடங்கிக் கிடக்கும் தேக்கநிலை காணப்படுகிறது,
இன்று சற்றே - மிகமிகச் சிறிதாக - வெளிச்சும் ஒன்று காணப்படு கின்றது. உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு. எஸ். டிவகலாலா அவர்களின் முன் முயற்சியால் ஒவ்வொரு வெளியீடுகளிலும் நூறு புத்தகங்களை வாங்கக்கூடிய நடைமுறைச் சாத்தியமான விற்பனைக் சந்தை ஒன்று திறந்து விடப்பட்டுள்ளது. கெளரவ ராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்களின் நேரடிப் பணிப்புரையில் ஐம்பது புத்த கங்கள் வாங்கப்படுகின்றன.
இந்த நாட்டுப் படைப்பாளிகளுக்குச் சிறிது ஆறுதல் தரும் செய்தி தான் இது. ஆனால் முழு மகிழ்ச்சி அடைய முடியாத நிலை இது. குறைந்த பட்சம் 500 பிரதிகளையாவது இவர்கள் கொள்முதல் செய் தால்தான் தரமான புதிய நூல்கள் சுடச் சுடச் சந்தைக்கு வரும். தமது ஆக்கங்களை வெளியிடுவது கையைக் கடிக்காது என எதார்த்தமாக நம்பும் ஒவ்வொரு படைப்பாளியும் துணிந்து தம்மிடமுள்ள ஆகச்சிறந்த சிருஷ்டிகளை மக்களுக்குத் தருவார்கள்.
கேரளத்தைப் போல எழுத்தாளர்களே ஒருங்கு சேர்ந்து எழுத்தா ளர் கூட்டுறவுப் பதிப்பகங்களை நடத்த முன்வரவேண்டும். இந்த மண் னில் கலைஞர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் தனி ஒரு மெளசு வளர்ந்து வருகின்றது. அவர்கள் நீண்ட காலமாகப் போராடியதன் பெறுபேறே இது.
மக்களிடம் செல்வதற்கு சிறிய வழிதான் இன்று திறந்து விடப் பட்டுள்ளது. அதைப் பெரு விதியாக மாற்றியமைப்பதற்குச் சகல எழுத்தாளர்களும் முன் வர வேண்டும். − O
.

Page 4
அயர்லாந்தின் யாழ்ப்பாணத்தான்
அதிவண. லோங் அடிகளார் பற்றிய நினைவுக் குறிப்பு
வண. பிரான்சிஸ் யோசவ் அடிகள்
இவ்வருடம் தேசிய வீரர் தினத்தன்று அதிவண. லோங் அடிகளார் நினைவாக முத் திரை யொன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது, வெளி நாட்டவர் ஒருவர் நமது நாட்டின் தேசிய வீரராகக் கணிக்கப் படுகின்றாரெனின் அவர் எமது நாட்டு மக்களுக்கு ஆற்றிய சேவை அளப்பரியதாக இருக்கவேண்டும். அடிகளார் அவர்கள் புனித பத்திரிசி யார் கல்லூரியின் ஆசிரியராகவும், பின்னர் அதிபராகவும் இருந்து கொண்டே இத்தகு சேவையை வழங்கினாராதலின், அடிகளாருக்கு வழங்கப்படுகின்ற இக் கெளரவம் குறித்து, இக்கல்லூரியின் தற்போ தைய அதிபர் என்ற வகையில், பெருமிதம் அடைகின்றேன்.
அடிகளாரை எண்ணும்போதெல்லாம் என் நினைவுக்கு வருபவற் றுள் முதலிடம் வகிப்பது அடிகளாரின் சமய வாழ்வுதான், நான் மாணவ னாக இருந்த காலத்தில் கல்லூரியில் நடைபெறும் பூஜைகளின்போது பாடல்கள் பாடும் பாடகர் குழாமில் நானும் ஒருவனாக இடம் பெற்றிருந் ததனால் அடிகளாருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிட்டியது. தனிப்பாடல் வரிகளை நான் பாடிய வேளைகளில் என் குரலினிமையை மெச்சி 'யார் இந்தத் சிறுவன்?" என ஏனையோரிடம் விசாரித்து என் னைப் பாராட்டி ஆர்வமூட்டியமையும் இன்றும் என் மனக்கண்ணில் நிர் கின்றது. "ஆண்டவனின் தொண்டன் நான், அவரின் கட்டளைப்படியே நடப்பேன்’ என்ற அவரின் கூற்று இன்றும் அவரின் இறைபக்தியை முரசறைவித்து, ஒலித்துக்கொண்டிருக்கிறது. சமய வாழ்வினூடாக்வே மக்கள் தொண்டாைகவும் விளங்க முடியுமென அவர் வாழ்ந்து காட் டிய முறைமை இறைபக்தியில் மேலும் மேலும் பற்றுக்கொள்ளச் செய் கின்றது.
 

அக்காலம் யுத்தகாலம். வந்த யுத்தகாலத்தில் பாதுகாபபுப் படை யில்சன் ஆன்மீக ஆலோசகராகவும் அடிகளார் விளங்கினார். பலாலி விமானத்தளத்திற்கு திருப்பூஜை நடாத்தச் சென்ற வேளைகளில். திருப் பாடல்களைப் பாடவென என்னையும் இன்னும் ஒரு சிலரையும் பல சமயங்களில் தம்முடன் அழைத்துச் சென்றமையும், திருப்பூஜை வேளை தவிர்ந்த ஒய்வு நேரங்களில், மாணவர்களான நாம், றோயல் விமா :ப்படையின் ஒடுதளமாகப் பாவிக்கப்பட்ட பலாலி விமான நிலையத் தைப் பார்த்து வியந்து நின்றமையும், அங்கே பொருத்தப்பட்டிருந்த 'ரேடர்". மற்று சமிக்ஞைக் கருவிகளையும், பேரிரைச்சலுடன் அங்கே வந்திரங்கும் யுத்த விமானங்களையும் ஆர்வம்மீதுர்ரக் கண்டு களித்த மையும் இன்றும் பசுமையாகவே என் நினைவிலுள்ளன. அடிகளார் வழங்கிய ஆன்மீக வழிகாட்டல் காரணமாகப் படைத்துறையினர் பலர் அவருக்கு நண்பர்களாயினர். இவ்வகையில் அன்று விமானப்படைத் தளபதியாக விளங்கிய ஏ. ஆர். வாட்லி என்பவர் அடிகளாரின் அரிய நண்பனாக இருந்ததனாலேயே யாழ் மக்களுக்கு விமானசேவை அவசி பம் என்பதை உணர்த்தி அவர் மூலமாகத் தமது விடா முயற்சியினால் இரண்டாம் உலகப் ாேருக்குப்பின் பலாலி யுத்த விமானத்தளத்தைச் சிவில் போக்கு வரத்து விமான நிலையமாக மாற்றிப் பெற்றுத்தர முடிந்தது.
அயர்லாந்திலுள்ள "லிமெரிக்" என்னுமிடத்தில் 1896-ல் பிறந்து அடிகளார், இளமையிலேயே பக்திமையில் நாட்டம் கொண்டிருந்தார். 1910-ல் யேசு ச6:பக் கல்லூரியில் கல்வி பயிலு:ங்காலத்தில், யாழ். புனித பத்திரியார் கல்லூரியின் அதிபராக விளங்கிய அதிவன. மத்தி பூஸ் அடிகளாரால் தெரிந்தெடுக்கப்பட்டு அமல மரித்தியாகிகளின் நவசந்நியாசத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். குருத்துவப் படிப்பு களை முடித்துக்கொண்டதும் 1920-ல் திருநிலைப்படுத்தப்பட்ட அடிக ளார் யேசுவின் திராட்சைத் தோட்டத்தில் சேவையாற்றவென வர வழைக்கப்பட்டார். அடிகளார் கல்லூரித் தளத்தில் பணிக்கு அமர்த்தப் பட்டதினால் 1921-ல் யாழ். புனிதபத்திரிசியார் கல்லூரியின் ஆசிரியர் குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, விளையாட்டுத் துறைக்குப் பொறுப்பாளருமாக நியமிக்கப்பட்டார். இவரின் வழி காட்டலில் விளையாட்டுத் துறையில் கல்லூரி முன்னேற்றம் கண்டதுடன் பல சிறந்த விளையாட்டு வீராகளையும் உருவாக்கிற்று. இக்காலத்தில் தமது பட்டப் படிப்பை கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தில் முடித்துக் கொண்டு, பின்னர் கலை முது மாணிப் பட்டத்தையும் (எம். ஏ.) பெற்றுக்கொண்டார். சிறந்த கல்விமானாகவும் தன்னை உயாத்திக் கொண்டு புனித பத்திரிசியார் கல்லூரிக்குத் திரும்பிய இவர் தெர்டர்ந்தும் நிர்வாகத்தோடு ஒத்துழைத்து கல்லூரியில் ஆசிரியப் பணி புரிந்தார். இவரது சிறந்த சேவையினாலும், ஆர்றலினாலும் அடிகளார் அவர்கள் 1936-ல் புண்த பத்திரிசியார் கல்லூரியின் அதிபராக உயர்த்தப்பட்: ஈர். 1936 தொடக்கம் 1954 வரை தொடர்ந்து 18 வருடங்களாக இக் கல்லூரியின் அதிபராக இருந்து இக் கல்லூரி

Page 5
யைத் திறமையாக நிர்வகித்ததோடு, இப் பதவிக் காலத்தில் urýů பாண மக்களுக்கு ஆற்றிய சேவைகளினூடாக அம் மக்களின் மனங் களில் நிறைந்தார்.
அதிகாரம் பன்முகப் படுத்தப்படும்போது, பலரின் ஒத்துழைப்பை யும் பெற்று நல்ல பல செயற்றிட்டங்களையும் நிறைவேற்ற முடியும் என்பதை உணர்ந்த அடிகளார் அதிகாரப் பன்முகவாக்கல் மூலம் ஆசிரியர்களையும், மாணவர்களையும் 'கல்லூரியின் பங்காளராக" மாற்றியதோடு அனைவரிடையேயும் புரிந்துணர்வை வளர்த்து வந் தார். சிறந்த நிர்வாகி என்ற சிறப்பும் பெற்றார். ஒரு கல்லூரியின் வளர்ச்சி என்பது அக் கல்லூரிச் சூழலிலுள்ள மக்களின் உண்மை யான வளர்ச்சியுமாகும் என்பதை உணர்ந்துகொண்ட அடிகளார், யாழ், மக்களின் அறிவு வளர்ச்சிக்கென பொது நூல் நிலைய மொன்றை உருவாக்கும் முயற்சியிலீடுபட்டு, அதற்காக நிதிய மொன்றை ஈட்டும் பொருட்டு, உலகின் பல பாகங்களுக்கும் சென்று பணம் திரட்டிவந்து, தென்கிழக்காசியாவிலேயே சிறந்த நூல் நிலைய மெனப் போற்றப்படும் அளவுக்குச் சிறந்த நூல் நிலையமொன்றின் உருவாக்கத்தின் பிரதான பங்காளியானார்.
யாழ். மாணவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளைத் தமது பரிசளிப்பு விழா அறிக்கைகளினூடாகவும் பத்திரிகைகளுக்கு எழுதிய கட்டுரைகளினூடாகவும் தேசிய மட்டத்தில் முன் வைத்த தோடு, அப் பிரச்சினைகளுக்கான தீர்வையும் தமது அறிக்கைகளி னுரடு கோடி காட்டினார். யாழ். நகரில் முதன் முறையாக மாபெ ரும் கைத்தொழில் களியாட்ட விழாவை நடாத்தியும், "யாழ்ப்பா னத்தின் விடை’ என்ற பெயரால் க ளி யா ட் ட ம் நிகழ்த்தியும், யாழ்ப்பாணத்தின் மீதும், அதன் மக்கள் மீதும் தாம் கொண்ட நேயத்தை வெளிப்படுத்தினார். அடிகளார் யாழ்ப்பாணத்தின் மீதும் தமிழ் மக்கள் மீதும் கொண்ட ஆழமான அன்பை வியந்த பிரபல நகைச்சுவை ஓவியர் கொலெற்’ அவர்கள் அடிகளாரைத் தமிழராக உருவகப் படுத்திப் பல கேலிச் சித்திரங்களையும் வரைந்திருந்தார்.
சிறந்த ஆன்மீக வழிகாட்டியாகவும், சிற்ந்த நிர்வாகியாகவும், சிறந்த செயல் வீரனாகவும் திகழ்ந்து வந்த அடிகளார் ஆஸ்திரேலி யாவுக்குச் சேவை புரியவென அழைக்கப்பட்ட போது, யாழ்ப்பா ணத்து மக்கள் அனைவருமே கண்ணிர் மல்க விடை பெற்றுக் கொண்ட சிறப்பும் பெற்றார். இதனாலேயே இவர் "அயர்லாந்தின் யாழ்ப்பாணத்தான்’ எனப் பலர்ாலும் குறிப்பிடப்பட்டார்.
30 - 04 - 1961-இல் லண்டனில் இறைபதமடைந்த அடிகளாரின்
உடல் அயர்லாந்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கேயே நல் லடக்கம்" செய்யப்பட்டது.

கொழும்பில்
மல்லிகை வெள்ளி விழா Leavit
விமர்சன அரங்கும்
கலந்துரையாடலும்
22-5-90 அன்று கொழும்பு மெயின் வீதியில் அமைந்துள்ள அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி மண்டபத்தில் "மல்லிகை வெள்ளி விழா மலர்' விமர்சன அரங்கும் கலந்துரை யாடல் ஒன்றும் நடைபெற்றது. S. M. கமாலுத்தீன் அவர்கள் தலைமையில் நடந்தேறிய இவ் விழாவில், பரிமாறப்பட்ட கருத் துக்களில் சிலவற்றை தொகுத்து இங்கு தருகிறோம் மல்லிகை வாசகர்களுக்கு.
S. M. கமாலுதீன் (தலைமையுரையில்)
டொமினிக் ஜீவா அவர்களை பல்வேறு நிலைகளில் பல்வேறு கால கட்டங்களில் நான் அறி வேன். துன்பப்பட்ட, நசுக்கப் பட்ட மக்களுக்காக மல்லிகை மூலம் குரல் எழுப்பி வருபவர். இவரது அயராத முயற்சியினால் உருவாகிவரும் மல்லிகை இந்த நாட்டின் எல்லா நூலகங்களிலும் இடம்பெற வேண்டும்.
- surveys
எம். வாமதேவன் (தனது ஆய்வுரையில்)
மல்லிகை வெள்ளி விழா மலர் "கணிசமான" பல கட்டுரை களைத் தாங்கி வந்துள்ளது. 80 வீத கட்டுரைகளைத் தாங்கி வந்துள்ள மலரில் இடம் பெற் றுள்ள கட்டுரைகள் பல்வேறு கருத்து நிலைகளாகப் பிரிக்க லாம். இதில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் சமகால வாழ்வு நிலையினை எடுத்து இயம்புகின் றன. இன்றைய காலகட்ட சமூக அரசியல் பிரச்சினைகளை எடுத் துரைக்கும் கட்டுரைகளும் இடம் பெற்றிருக்க வேண்டும்.
அடுத்து இடம் பெற்ற கலந் துரையாடலில் எடுத்துரைக்கப் பட்ட கருத்துக்கள்.
எஸ். குணரத்தினம்
அன்று துடிப்பான இளைஞ னாக நான் கண்ட ஜீவா இன்றும்
அதே துடிப்புடன் மல்லிகையினை 25 வருடங்களாகச் சா த னை

Page 6
கண்டுள்ளார். அந்த வளர்ச்சியில் மனம் மயங்கி இன்று நான் ஒரு மல்லிகை வாசகனாக மலர்ந் துள்ளேன்.
சுவாமிநாதன்:
சமூக பொருளாதார தகவல் களை கலைப் படைப்புகளுடாக மல்லிகை தருகிறது.
ஜெயசிங்கம்:
சுதந்திரனுக்குப்பின் ஈழத்து இ லக் கி யப் பணியில் தன்னை முழு நிலையாக ஈடுபட்டதில் மல் லிகையின் பங்கு குறிப்பிடத் தக்கது,
எஸ். ஐ. எம். பைஸ்தீன்:
இதுவரை விமரிசனம் என்ற பேரில் என்ன செய்தோம். மல் லிகை இன்னும் பரவலாக மக் களை அடையவேண்டியுள்ளது. இத்தகைய கலந்துரையாடல் மூலம் மல்லிகையின் வாசகர்க ளின் கருத்துக்களை அறிந்து கொள்ள முனையவேண்டும்.
ப. ஆப்டீன்:
மல்லிகை தேசிய சஞ்சிகை அல்ல. சர்வ தேசிய சஞ்சிகை. தமிழ் எங்கெல்லாம் பேசப்படு கிறதோ - அங்கெல்லாம் மல் லிகை பேசப்படுகிறது; பேசப் படும். இந்த மலர் வெறும் ஒரு சஞ்சிகையின் மலர் அல்ல. இம் மலர் ஒரு பாடத்திட்ட நூலாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
அந்தனி ஜீவா:
வெகுசன தொடர்புச் சாத னங்கள் தமிழ் எழுத்தாளர்க ளின் வளர்ச்சியில் அதிக அக்கை கொள்ள வேண்டும்,
அப்பண்பை மல்லிகையிடம் பயில வேண்டும்.
சிவபாலன்:
"மல்லிகை வெள்ளி விழா மலர்'கதைகள் தனித்துவ நடையு டன் யதார்த்த சித்திரிப்புகளாக அமைந்துள்ளன.
கோவை அன்சார்:
மூன்றாந்தர பேர்வழிகளை இனங்கண்டு கொள்ள வேண்டும். மல்லிகையில் அத்தகையவர்க ளின் பபைப்புகள் வெளிவராமல் கவனித்துக் கொள்ள வேண்டும்*
இறுதியாக பதிலுரை வழங் கிய மல்லிகை ஆசிரியர்
டொமினிக் ஜீவா:
இலங்கையின் சிறு சஞ்சிகை வரலாற்றில் தனக்கெனச் சொந் தமாக ஒரு காரியாலயத்தைப் பெற்றுக் கொண்டதோடு, மல் லிகை போன்ற சஞ்சிகை ஒரு கிளையும் விட்டிருக்கிறது. அது "மல்லிகைப் பந்தல்" என்ற பதிப் பகம் ஆகும். இந்த வளர்ச்சிக்கு எனது நெஞ்சுக்கு நெருக்கமான மனிதர்களான, ஒட்டபிடாரம் குருசுவாமி, ரங்கநாதன், கிஸார், துரை விஸ்வநாதன் போன்றவர் களை நான் நண்பர் க ளா க அடைந்தமையே!
மல்லிகையின் விலை அதிகம்
என்கிறார்கள். 25 வருடங்களாக
வெளிவரும் மல்லிகை உங்களி டம் மலரின் மூலம் சிறு தொகை அளவிலேயே கேட்டுள்ளது.
மேமன்கவியின் வரவேற்புரை யுடன் தொடங்கி, அந்தனி ஜீவா வின் நன்றியரையுடன் "விழா"
நிறைவு பெற்றது.
S. O

QILjÕd 66)If(III...
ப. ஆப்டீன்
திருமலைப் பிரதேசம் இருட் போர்வைக்குள் ஆள் நட மாட்டமின்றி. ஒரு பிரகடனப் படுத்தப்பட்ட ஊரடங்கு போல் காட்சியளித்தது.
அந்த நேரத்தில், அது
அனு ரா த புரத்திலிருந்து
ஹொரவப்பொத்தான ஊடாக வந்த கடைசி பஸ்.
நிலையத்திற்குப் போய் ஆறு தலாக நிற்க முன்னமே மூட்டை முடிச்சுகளுடன் விழுந்தடித்துக் கொண்டு இறங்கிய அந்த விரல் விட்டு எண்ணக் கூடிய பிரயா ணிகளுக்கு எப்படித்தான் இறது கள் முளைத்தனவோ!
அப்படி என்ன அவசரம்?
பஸ்ஸை விட்டு இறங்கிய முனாஸ் மாஸ்டர் "கிட்பேக்" சு  ைம யு ட ன் கடைத்தெருவை நோக்கி நடந்து கொண்டிருந் 5 (Tit.
அவரால் வேகமாக நடக்க முடியவில்லை.
வானத்திலிருந்து இலேசான
தூறல். தொடர்ந்து ஒரு மின் வெட்டு, பாதைக்கு டோர்ச்" அடிக்க, மறுகணம் எ ங் கோ
இடி முழக்கம். அது இடி முழக் கமா அல்லது வேறு எதுவுமா?
ஆசிரியருக்குப் பிரமை தட்டியது.
இடி முழக்கம்தான் என்பதற்கு மி ன் ன ல் சாட்சியமளித்துள்ள தால், அவர் உள்ளத்தில் எழுந்த
ஐ யத் தை அந்தக் கண மே பொசுக்கிக் கொண்டார்.
எனினும் ஜன சந்தடியற்ற GuntG).
உள்ளம் பதட்டப் படாமல் இல்லை;
ய் . . . " என்ற . . . . . . וישי מ6u" இரைச்சலோடு சுகாதாரப் பகு தியின் அவசரச் சிகிச்சைக்குச் செல்லும் வண்டியின் திகிலோசை வேறு.
இனம் புரியாத ஒரு “டென் ஷன்" தான்.
மூடியிருந்த கடையோரங்க ளில் சற்று நின்று, நிதானித்து, தூறல் நின்றவுடன் போக அவ ருக்குத் தைரியமில்லை.
நிலைமை சூழலை மாசடை யச் செய்து விட்டிருந்தது.
நடையில் சற்று வேகத்தைக் கூட்டி விட்டோம் என்ற நினைப் பில் அதே வேகத்தில்தான் நடக் கிறார், நனைந்து கொண்டே.
நிலைமை இப்படி ஆளைக் கொல்லும் எ ன் றி ரு ந் தா ல் நாளைக்குக் காலையில் ஆறுத லாகப் புறப்பட்டிருக்கலாமே!
இப்படியும் அடிமணம் குத்திக் காட்டுகிறது. அத்தோடு "இனி மேல் ஊருக்குப் புறப்படுவதாக இருந்தால், இரண்டுங் கெட்ட நேரத்தில் புறப்படக் கூடாது. காலங் கெட்டுப் போயிருக்கிற சங்கட வேளையில்,

Page 7
ஒரு தீர்க்கமான முடிவையும் எடுத்தாகி விட்டது.
என்ன செய்வது காசோலை மூலம் ஆசிரிய வேதனம் என்ற நிலை வந்ததும், மூனாஸ் மாஸ் டரின் பாடு படு சிக்கல்தான். பெரும் அலைச்சல்களுக்குள்ளும் ஆக்கிவிட்டிருந்தது.
பாடசாலையிலிருந்து பல மைல் தூரத்திலுள்ள வங்கியில் தமது சேமிப்புக் கணக் கில் காசோலையைப் போட்டுவிட்டு "இன்றுபோய் நாளைவா’ என்று எத்தனை அலைக்களிப்பு
இருபது வருடங்களுக்கு மேலாக இருபதாம் திகதியையே மையமாக வைத்து, சம்பளப் பணத்  ைத ப் பெற்று தமது பொருளாதாரப் LSprej 6 so suras ளுக்கு முகம் கொடுக்கும் அவ ருக்கு, ஊரில் உள்ள கொடுக்கல் வாங்கல் உட்பட எதையுமே திட்டமிட்டுக் கருமமாற்ற முடி யாத சங்கடங்கள்.
*ஹொரவப்பொத்தான சத் தியிலிருந்து சில மைல் தொலை வில் ஒரு கிராமிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில், ஒரேயொரு விசேஷ பயிற்சி பெற்ற கணித ஆசிரியரே முனாஸ் மாஸ்டர்,
பயிற்சி முடிந்ததும் சொந்த மாவட்டத்திற்கு வந்த மாற்றல் கடிதத்தை ரத்துச் செய்து, நாட் டின் எப்பகுதியாயிருந்தாலும் பரவாயில்லை. த ன க் கு ஒரு "முஸ்லிம் பாடசாலை மட்டுத் தான் வேண்டும் என்று கார சா ர மாய் நின்று வெற்றி கொண்ட மகாவித்தியாலயம்
2g!:
lo6875lii Su Soprintuco urt u சாலைகளில் விசேஷ தராதரம் பெற்ற ஆசிரியர்களின் சேவையை பெற்றுக் கொள்வது கடினமாத லால், அதிபரின் பூரண அனுசர ணையும், ஏனைய ஆசிரியர்கள்,
ஊர்மக்கள் போன்றோரின் ஒத் துழைப்பும் உதவிகளும் அவருக்கு எப்போதும் காத்திருந்தன.
அதே கிராமத்தைச் சார்ந்த அதிபருக்குப் பெரிய கல்வீடு இருப்பதால் விடுதியை இரு ஆசி ரியருக்கு ஒர் அறை என்ற விகி தத்தில் பகிர்ந்தளித்திருந்தார். ஆனால் முனாஸ் மாஸ்டருக்கு வசதி கூடிய ஒரு தனி அறை.
இரு த ஸாப் தங்களுக்கு மேலாக அதே ஊரில் காலம் கடத்தியதற்கு மற்றுமொரு கார ணமும் இருந்தது.
வருடாந்தம் இரண்டு ஏக்கர் வயல் உழுவதற்கு நெருக்கமான சிலர் கைகொடுத்து உதவுகின் றனர்.
வருடத்திற்கு ஒரு முறை மேலதிக வயல் வருமானம் அவ ரைப் பொறுத்தவரையில் ஒரு வரப்பிரசாதம்.
ஆனால், முனாஸ் மாஸ்டர் வயலுக்குப் போனதாகச் சரித்தி ரம் இல்லை. உரிய முதலீடு செய்துவிட்டால் எல்லாமே அவ ரது நம்பிக்கைக்குரிய நண்பர்க ளின் உதவிகளால் வெற்றிகர மாக நடந்து முடியும்.
விதை நெல், கிருமிநாசினி, உரம், உழவு இயந்திரம் அது இதுவென்று வெறுமனே ஒரு மனக்கணக்குப் போட்டுப் பார்ப் பதோடு சரி. ஒரு காலத்திலும் நட்டம் போனதில்லை.
ஒரே வித்தியாலயத்தில் இரு தஸாம் தங்களுக்கு மேலாக கட மையாற்றுவதற்கு அவர் எந்த வித யுக்திகளையும் கையாள வில்லை. அவரிடம் ஓர் ஆசிரிய னுக்கேயுரிய, மிக நேர்மையான யுக்தி, பிறவிப்பலனாக அமைந் திருந்தது.
ĝ56arĝ5 ds gafas Lunrl - Gourrázs  ைன  ைய மிக அற்புதமாகச்
10

செய்து, ஒவ்வொரு வருடமும் நல்ல பெறு பேறுகளை ஈட்டிக் கொண்டிருந்தார். இது அவ ருக்கே உரித் தா ன ஓர் சிறப் ամհժմ :
பிறந்த ஊருக்கு Lorra போக வேண்டும் என்ற எண்ண்ம் துளிகூட இல்லை.
சொத்த ஊரில் போட்டியும் பொறாமையும், இன சன விரோ தங்களும் தவிர வேறு என்ன இலாபம்.
சொந்த விடும். வீட்டைச் சுற்றிய வளவும்தான் அவரு டைய பரம்பரைச் சொத்து.
இதுபோன்ற பின் தங்கிய கிராமங்களில் ஆசிரியனுக்கு எப் போதும் மந்திரிக்குரிய கெளரவம் தான்.
கல்வி முடிந்ததும் வெறு மனே இரண்டு வருடங்கள்தாம் சொந்த ஊர்ப் பாடசாலையில் சேவை செய்துள்ளார். பின்னர் இரண்டு வருடங்கள் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் முடங் கிக் கிடந்த பின்னர் கிடைத்த இற்தக் ஹொரவப்பொத்தான மாற்றத்தைத்தான் அவர் வாழ்க் கையில் விமோசனம் கருதி வரு கிறார். அது தவிர மாஸ்டருக்கு வெளியூர் அனுபவங்கள் கிட்ட வில்லை.
பல இன மக்கள் வாழும் இடங்களில் சேவை செய்து அனு பவங்களைப் பகிர்ந்து கொள் ளும் சந்தர் ப் பங்கள் கிட்ட வில்லை. அவருடைய ஆசிரிய
உள்ளம் ஒரு சிறு வட்டத்தினுள்
ளேயே அமிழ்ந்து விட்டது. இது துரதிர்ஷ்டம் தான்.
சூழல் அவரை அப்படி ஆளாக்கி விட்டிருந்தது.
சுமையோடு நடந்து கொண் டிருந்தவருக்கு மீண்டும் ஒரு மின் வெட்டு அவர் பாதையைத் தெளிவாக்கியது. எங்கேயோ இடி முழக்கம் கேட்டது,
ஒரு சிறுவன் அரைக் குடை யில் வந்து கொண்டிருந்தான்.
'தம்பி மெடினா ஒட்டல் திறந்திருக்கr??
"நான் காணல்ல ஐயா, பக்
கத்தில் சைவக் கட்ை திறந்
திருக்கு.
 ைப யன் எதிர்த்திசையில்
நடந்துவிட்டான்,
"சைவ ஓட்டல் திறந்திருந் , தால் நிச்சயம் மெடீனாவும் திறந்திருக்கும்.
சில நிமிடங்கள் நடை: அவர் எதிர்பார்த்ததுபோல் மெடீனாவும் திறந்திருந்தது.
மிக நீண்ட தேநீர்க் கடை அவருக்குப் பழக்கப்பட்டதால், உள்ளுக்கே நுழைந்து, ஈர கிட் பேக்கை" மேசை மீது வைத்து களைப்பாறினார். முகம் கை களைக் கழுவி, நனைந்த பாகங் கிளைத் துடைத்து விட்டு தலை யைச் சீப்பினால் வாரிவிட்டார். வெயிட்டர் வந்து என்ன சாப்பிடப் போறிங்க..?" என்ற தோ ர  ைண யில் முன்னால் நின்றான்கு
வயிற்றுக் குள் கர்முர்" ரென்று போர் தொடுத்த கோரப் பசிக்கு, கோதுமை ரொட்டியும், மீன் கறி யும் கொடுத்து சமாதானப் படுத்தி தேநீரும் அரு ந் தி இராப் போசனத்தை முடித்துTவிடிடு, பணம் செலுத்த வந்தபோதுவெளியில் முற்றாக ஓய் வெடுத்திருந்த தூறல் மீண்டும் மாஸ்டருக்குப் பன்னீர் தெளிக்க ஆரம்பித்தது. மட்டக்களப்பு மெயில் ரெயில் இன்றைக்கு.?
காசாளராக இருத்த இளை ஞனுக்கு எந்தவித அக்கறையு மில்லை. ‘தெரியாது' என்ற சொல்லை மட்டும் உதிர்ந்தான். மேசையின் பக்கத்தில் டெவி போன்’ பூட்டப்பட்டுக்கிடந்தது.
11

Page 8
முனாஸ் மாஸ்ரர் புகை வண்டி நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தார்.
மீண்டும் ஒரு மின் வெட்டு, வான ம் "சோ" வென்று கதற ஆரம்பித்தது சோகமாக. நிலையத்தை அடைவதற் குள் தூறலில் ஊறித் தெப்ப மாகி விட்டார்.
. ۰۰۰ இரவு ரெயில் இன் றைக்கு இல்லை. நாளை காலை
ஐந்து முப்பதுக்கு ஒரு எக்ஸ் பிரஸ் இருக்கு. 劃
ஸ்டேஷன் மா ஸ் டரின்
அழுத் தம் திருத்தமான மறு மொழியால் நிலை குலைந்து நின்றவர். மேலும் தாமதிக்க வில்லை.
இர ரத் தொழுகைக்கும், இராத் தங்கலுக்காகவும் "தக் கியா" என்னும் பள்ளி வாசலை நோக்கி நடந்தார்.
அந்தச் சிறு ஆலயம்தான் இப்போதைக்குத் தஞ்சமளிக்கக் கூடிய ஒரேயொரு இடம்.
முனாஸ் மாஸ்டருக்கு என் றால் இன்றைய பிரயாணம் "சீயென்று வெறுத்து விட்டது.
ஆனால், அடுத்த மாதத்தி லிருந்து இந் த ப் பிரச்சினை இருக்காது. "கரன்ற் அகவுன்ற் லைத்திருப்பவர்கள் அ டு த் த மாதம் தொடக்கம் உதவுவ தாக வாக்களித்துள்ளார்கள் "செக்  ைக" ஒப்படைத்த மறு கணமே பணத்தைத் த்ருவார்
Semmh.
அப்படியே அவர்கள் தந்தா ம் இனி யும் இப்படியான ຮີ່ கெட்ட நேரத்தில் புறப்பட்டு வந் து மாட்டிக் கொள்ளக் கூடாது
முன் யோசனையற்ற மடத் தனமான தன்னுடைய அவசரச் செய்கைக்காக மனம் இடித்துக் கூறியது.
வானத்தின் சோக கீதம் சற்று அடங்கியிருந் 53
தன் றா க தனைந்தாலும் , நிறைய நடந்தாலும் களைத் துப் போய் அந்தப் புனித மா ன வணக்க ஸ்தலத்தை அடைந்தார்.
கூட்டுத் தொழுகை முடிந்து நீண்ட நேரமாகி விட்டிருந்ததை பள்ளிவாசலின் சுவர்க் கடிகாரம் படீரென்று அறைந்து உறுத்தியது
தன்னைத் தொழுகைக்காக சுத்திகரித்துக் கொண்டு, உள்ளே நுழைந்தார்.
தொழுகைகளை செவ்வனே நிறைவேற்றிவிட்டு சுவரில் சாய்ந் தவர், இலேசான நித்திரையில் சில கணங்கள் தன்னை மறந்து விட்டார்
அதற்குள் அந்த மனிதன் வந்து அந்த ஆட்டம் ஆடுமென்று
Sy erau NT எதிர்பார்க்கவில்லைத் தான்
வார்த்தைகளைப் பிரயோ
கிப்பதற்கும் ஒரு இங்கிதமான
முறை இருக்கிறதுதானே!
இது. யார் இங்க.. எழும்புங்க.. எழும்புங்க.. பத்து மணிக்கு ஊரடங்குச் சட் Lம், நேர காலத்தோடை இடத்
க் காலி பண்ணுங்க.."
தொழுது போட்டு, விறாத் தையில் தங்கி காலையில் போகத் தான் வந்தன் முந்தியும் இப்ப் டித் தங்கிப் போறது வழக்கம்"
"இந்தாங்க... அந்தக் கால மெல்லாம் இப்ப இல்ல. யாரை யும் தங்கவிட வேண்டாமென்று
ரஸ்டிமார் முடிவு சுணங்காம போங்க..
*மரியாதையாக வெளியே
போ. ப்லீஸ் கெட்டவுட்" என்று
சொல்லாமல் சொல்கிறான்.
முனாஸ் மாஸ்டரின் உள்
ளத்துள் எரிமலை வெடித்தது

缘 டம்; இதனி Lడి u ఇవీడిన இவன்களெல்லாம்.
முனாஸ் மாஸ்டரின் உள் மனம் முத ன் முறையாகக் கேள்வி எழுப்பியது.
மீண்டும் ஒரு மின் வெட்டு,
பாதை தெளிவு. இலேசான
தூறல். சமீபத்தில் எங்கே 1ா இடி முழக்கம்தான். கால்போன போக்கில், அவருடைய நடை யின் முடிவு. மீண்டும்பு  ைக வண்டிநிலையத்திற்கே கொண்டு வந்து விட்டிருந்தது.
இரண்டொரு உத்தியோகத் தரைத் தவிர நிலையம் வெறிச் சோடிக் கிடந்தது. போனதும் முன்னால் போடப்பட்டிருந்த நீண்ட இருக்கை ஒன்றில் "கிட் பேக்கை" வைத்துவிட்டு, கால் களை நீட்டி அமர்ந்து கொண் டார். தல்ையில் உடைகளிலிருந் தெல்லாம் மழை நீர் வடிந்து கொண் . த  ைல  ைய நீவி விட்டுக் கொண்டார்.
தற்செயலாக ஸ்டேஷன்
மாஸ்ட்ரின் கண்களில் பட்டு விட்டார்
“ga . . . . . நீங்களா? நல்லா
நனஞ்சிப் போட்டீங்கள் போலி ருக்கு. சாப்பிடப் போனிங் களே?"
"சாப்பாடும் முடிந்துவிட் டது, குளிப்பும் முடிந்துவிட்டது" என்று நகைச்சுவையாகக் கூறிய முனாஸ் மாஸ்டர், துவாயை இழுத்தெடுத்து மீண்டும் தலை யைத் துடைத்தார்.
இருவரும் சற்று நேர ம் உரையாடிக் கொண்டிருந்தனர். இருங்க மாஸ்ரர் ஒரு நிமி ஷத்தால் வாறன்" என்று அப் பால் நகர்ந்தார் எஸ். எம்.
நெந்து போன மூனா ஸ் மாஃகுே எரிச்சலாக இருந்
18
凸5 · மீண்டும் வெளியேற்றினால் எங்கே போவது என்ற யோச னையில் ஆழ்ந்தார்.
*மாஸ்ரர் வாருங்கோ. ஒன்றும் புரியாமல் அவர் பின்னால் நடந்தார்.
வெளியில் மின் வெட்டு.
"மாஸ்ரர் இதைக் கவனமா வைத்திருங்க இது முதலாம் வகுப்புப் பிரயாணிகள் தங்கும் அறைத் திறப்பு. உள்ளே உங்க ளுக்கு எல்லா வ ச தி களும் கிடக்கு. உடுப்பை மாற்றி பய மில்லாம நித்திரை கொள்ளுங்க. விறாந்தையில் குளிர், பாதுகாப் பும் இல்லை. காலையில் அறை யைப் பூட் டி திறப்பைத் தர மறந்துவிடாதீங்க"
அந்தக் குளிரிலும் முனாஸ் மாஸ்டருக்கு வியர்த்துவிட்டது.
நிம்மதியான நித்திரைக்குப் பின் விடியல் பிறந்தது,
புகைவண்டி நிலையக் கன் நீனில் ஆள் நடமாட்டம் காணப் பட்டது. பிரயாணிகள் மிக ச் சிலரே.
torfbpso-ud (y) sar freð மா ஸ் டர் தூய்மையாக புது மலர்ச்சியுடன் காணப்பட்டார்.
எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வந்து, ஸ் ரே ஷ ன் மாஸ்டருக்குத் தமது மனம் நிறைந்த நன்றியைச் சமர்ப்பித்து திறப்பை ஒப்படைத்து, தயங்கித் தயங்கி
*உங்களது பெயர்...? “ Sunrisprimr sonr” வானம் தெளிவாக இருந்தது.
விசேஷ கடுக திப் புகை வ ண் டி முனாஸ் மாஸ்டரைச் சுமந்து கொண்டு ஒரு புதுப் பொலிவுடன் கிழக்கு மாகாணம் நோக்கி ஊர்ந்து கொண்டிருந் 53. O

Page 9
}
ďpIQIŤ QITG6)ITGö ாம்ே
പ്രീച്ചു ിലു*ിജ്ഞl( 'u:'ഥൂ'ഥൂ'ഝേം:ആ
QJ. 9JTGongfurr
இ லக் கி ய வடிவங்கள், கலை வடிலங்கள் என்பன சிறு வர்களுக்கும் வயது வந்தோருக் கும் ஒரே மாதிரியாக இல்லை என்பதை நாங்கள் அறிவோம் குழந்தைக் கவிதைகள், சிறுவர் கதைகள் எனச் சிறுவர்க்குரிய தனித்துவமான இலக்கிய வடி வங்கள் இருக்கின்றன, இவ் வாறே இசை, ஓவியம், நாட்டி யம், சிற்பம் முதலிய கலை வடி வங்களிலும் உண்டு. உதாரண மாக சிறுவர் வரைகின்ற, சிறு வர்க்கெனத் தீட்டப்படுகின்ற ஒவியங்களைக் குறிப்பிடலாம். இவை வளர்த்தோர்க்கு உரிய ஒவியங்கள்போல இருப்பதில்லை; இருக்கவும் கூடாது.
வானொலி நாடகம் இந்த்ப் பொதுவிதிக்கு உட்பட்டதுதான். இத் துறை யில் சிறுவர்களுக் கென்றே நாடகங்கள் எழுதப் படுகின்றன. சிறுவர்களாலேயே அவை நடிக்கப்படுகின்றன. அந் நாடகங்கள் சிறுவர்களது வயது அறிவு அனுபவம் சிந்தனை, கற்பனை, தேவைகள் என்பவற் றுக் கேற்ற சிறப்பியல்புகள் பொருந்தியவை. உள்ளடக்கத்தி லும், உருவிலும். கருத் து உணர்வு என்பவற்றின் வெளிப் பாட்டிலும் தனியான ஒரு தடத் தில் செல்பவை.
ஒரு தனிக் கிளை
மேடை நாடகம்கள் கண் வழியாகவும், செவிவழியாகவும் மனிதனது சிந்தையைச் சென்ற ஐ டகின்றன: உள்ளத்தைத் தொடுகின்றன. வானொலிராட கத்தில் இப்படியான இருபுலன் நுகர்வு இல்லை. இங்கு" ச்ெவிப் புலன் ஒன்றே தொழிற்படுகின் றது. இது காரணமாக, மேடை prL-astb uTito Gunti du LLeodor மூலமாகப் பெறுகின்ற அணுப வங்களையும், வானொலி நாட கம் கேட்போர் செவிப்புலன் மூலம் மாத்திரமே பெற்றுக் கொள்ளத் தக்கவாறு, ந்த நாடகங்களைப் படைக்க வேண் டிய ஒரு நிர்ப்பந்தம் வானொலி நாடக எழுத்தாளனுக்கு ஏற்படு கின்றது.
இவ்வாறு அவனது படைப் புத் தளம் - செயற்பாட்டுப் பரப்பு - சுருக்கமடைவதால், அவனது படைப்பாற்றல் மேலும் மேலும் கூர்மையட்ைய வேண் டியிருக்கிறது. புதிய - வேறான உத்திகளை வானொலி நாடகம் களிற் கையாள வேண்டி ஏற் படுகிறது. இவ்வாறு, செவிப் புலனாகிய ஒன்றையே நுகர்வு ஊடகமாகக் கொண்டு படைக் கப்படுவதாகிய வானொலி நாட கம் மேடை நாடகத்தினின்றும் வேறுபட்டதாகவும் தனித்துவம்

உடையதாகவும் அமைகின்றது. இது வானொலி நாடகம் அனைத்துக்கும் பொருந்தி வரும் பொதுப் பண்பு.
வானொலி நாடகத்திலும்
சிறுவர் நாடகம் ஒரு தனி க்
கிளையாக வளர்ந்திருக்கிறது. இதற்கெனச் சிறப்பான சில நெறிமுறைகள், வரையறைகள் உண்டு. கையாளப்படும் கரு, நாடக வடிவமைப்பு, பிரயோ கிக்கப்படும் மொழிநடை முதலி
யவை சிறுவர்களுக்குப் பொருத்
தமான வகையில் இந்நாடகங் களில் அமைவது முக்கியமாகும்.
வயதெல்லை
வானொலி நாடகம் கேட் கும் சிறுவர்கள் என்றால் அந்த வானொலி நேயர்களது வயது எல்லைகள் எவை? ஆறு வயது தொடக்கம் பன்னிரண்டு வயது முடிய என்று கொள்ளலாமா? இந்த வயதெல்லை அவர்களைச் சிறுவர்கள் என்று ஒரு தொகுப் பாகக் குறிப் பி டுவதற்கு ப் பொருத்தமாயிருக்கும். ஆனால் 6unrCsermeó) C 5 L. G. L. m titவானொலி நேயர் என இவர் களை நோக்கும்போது பொருத் தமானதாக இல்லை. ஒரு பெரும் படியான பகுப்பாகவே இது அமைகிறது.
நாட்டங்கள், கிர கிக் கும் திறன், பெற்ற மொழியறிவின் வளம், ரசனையின் தன்மை, அனுபவ வளர்ச்சி முதலியவை சிறுவரிடையே எல்லோருக்கும் ஒரே தரமாகவும், ஒரே வகை யாகவும் இருப்பதில்லை. ஆகவே இவற்றையெல்லாம் மனத்திற் கொண்டு, சிறுவர்களை வய தெல்லைகள் இர ண் டி னு ள் நிறுத் தி வகைப்படுத்துவது பொருத்தமாயிருக்கும். 6 - 9 வயதினர் ஒரு பிரிவினர். 10 - 12 இன்னொரு பிரிவினர். சிறு வர்க்கான வானொலி நாடகம்
எழுத முற்படும் போது. அது 6- 9 வயதினராகிய இள நிலைச் சிறாருக்கா, 10 - 12 வயதின ராகிய வளர் நிலைச் சிறுவருக்கா என்பதை மனத்தில் வரையறுத் துக் கொள்ளல் வேண்டும். இத் தகைய தெளிவு நாடகச் சிறப் புக்கும் மிகு பயன்பாட்டுக்கும் உதவும். so - sir 6nt Läasio 6'r sêr arwr ?
சிறு வர் க்கு எழுதப்படும் நாடகத்துக்குரிய கதைக் கரு வைத் தெரிவு செய்வதில் நாட கப் படைப்பாளி மிகவும் விழிப் புடன் இரு த் த ல் அவசியம். ஒவ்வாத உணவு சிறுவரின் உட லுக்குத் தீங்கு லிளைக்கும் பொருந்தாத கதைக் கரு சிறு வரின் உள் ளத் துக்கு ஊறு விளைக்கும். இராசகுமாரன் ஒரு வன் தனது தந்தையைச் சுவ ருக்குள்ளே வைத்துக் கட்டினான் என்ற கதையோ, ஒரு குடிகா ரத் தந்தையினது அடாத செயல் களைக் காட்டும் சித்திராே. ஓர் அரசன் தனது அமைச்சரு டன் அமர்ந்து உணவருந்தும் போது, அவரது தவைக்கு மேலே உயரத்தில் வாள் ஒன்றை மயி ரில் கட்டித் தொங்க விட்டிருந் தான் என்ற செய்தியோ சிறு வர் நாடகங்களில் இடம் பெற் றால், சிறாரிடம் அதன் விழைவு எவ்வாறிருக்கும் சிறுவர்களு டைய உள வளர்ச்சியை வக்கிர மாக்கக் கூடியவற்றை, அவர்க ளால் சீ ர னி க்க முடியாதன வற்றை ஒதுக்கிவிடல் வேண்டும்: சிறுவர்களுக்கு வானொலி நாடகங்கள் மூலம் எவற்றைக் கொடுப்பது என்பதும், அவர்கள் இந்நாடகங்கள் மூலம் எதனை எதிர்பார்க்கிறார்கள் என்பதும் பற்றிய தெளிவு சிறுவர் நாடகப் படைப்பளிக்கு இருத்தல் இன்றி யமையாதது. இத்தெளிவு இல் லாது சிறுவர்க்குப் படைக்கப் படும் வானொலி நாடகம் மாத்
15

Page 10
திரமல்ல, வேறெந்த இலக்கிய வடிவமும் சிறப்பான சிறு வர் இலக்கியமாக அமையாது.
ஒழுக்கநெறி புகட்டும் நாட கங்களையே சிறு வர் களு க்கு வழங்க வேண்டும் என்பது சில ரது இறுக்கமான கோட்பாடு. களிப்பூட்டும் பண்பு கொண்ட வானொலி நாடகங்களே அவர் களுக்கு உகந்தவை எ ன் பது வேறு சிலரது எண்ணம். நீதிப் போதனைக்கென்றோ, குதூக லிப்புக்கென்றோ மாத் திர ம்
படைப்பது, சிறுவர் நாடகங் களைத் தவறான வழிக்கு இட் டுச் செல்வதாகிவிடும். சிறுவர் வானொலி நாடகம், சிறுவர்
களை எதிர்கால வாழ்க்கைக்குவளமான ஒரு சமுதாயத்துக்கு இட்டுச் செல்லக் கூடிய ஒரு கலை வடிவம் என்பதைப் படைப் பாளி மனதிற் பதித்துக் கொள் ளல் லேண்டும், இந்த உணர் வோடு, சிறுவர்க்கு ஏற்ற உள் ளடக்கம் கொண்ட ஒரு கதை யைத் தேர்ந்தெடுத்து அதற்குக் கலைத்துவம் மிளிரும் வண்ணம் நாடக வடிவம் கொடுத்தால் இயல்பாகவே அதன் மூலம் சிறு வர்களது அறிவுக்கு விருந்து கிடைக்கும்; ரசனை நெறிப்பட்டு வளரும்; அவர்களுக்கு நன்னெ றியில் நாட்டம் பிறக்கும் நல்ல இலட்சியங்கள் உள்ளத்தில் ஊன் றப்படும்.
வானொலி நாடகங்கள் சிறு வர்களுடைய பொழுது போக் குக்குப் பயன்படுகின்றன என் னும் வண்ணம் சிலருக்கு உண்டு. பொழுது போக்கு என்னும் நோக்கம் சிறுவர் இலக்கியம் எதி லும் புகுந்துவிடக் கூட து. *வ ஈ ழ் க் கை யி லே மனிதன் அடைய வேண்டிய எல்லா வசதி களும் பேறுகளும் அவனுக்குக் கிடைத்துவிட்டன; இப்போது நேரத்தைக் கழிப்பதற்கு வழி தெரியாதிருக்கிறான்" - என்பது
போன்றதொரு மாயை பொழுது போக்கு என்னும் இந்தச் சொற் றொடரில் தொணிக்கிறது. ஆதலால், கண்மூடித்தனமாக பொழுது போக்குக்கு என்று சிறுவர்க்கான வானொலி நாட கங்களைப் படைத்தல் கூடாது; சிறுவர்களது கலாரசனையைத் தவறாக வளர்க்கக் கூடாது
பயன்பாட்டு வெற்றி
*மனிதன் சிந்திக்கவும் செயற் படவும், முயலவும் முன்னேற வும் அமைந்திருக்கும் தளம்தான் வாழ்க்கை" என்னும் உணர்வை இந்த நாடகங்கள் இளஞ் சந்ததி யினருக்கு ஏற்படுத்தல் வேண் டும்.
தமது எதிர்காலத்தைப் பற் றிச் சிறுவர்கள் தங்களுடைய மனத் தி லே கட்டியெழுப்பக் கூடிய நடைமுறைச் சாத்திய மான கற்பனைகள், அவற்றிற் குத் தளமாக அமையக் கூடிய மனித வரலாற்றுச் சான்றுகள், அவர்களது கணிப்புக்குள் அகப் படக் கூடிய சமுதாயப் சீர்மை களும், சீர்கேடுகளும், பன்முகப் யட்ட கலாரசனை- இப்படிப் பலவகையான செய்திகழையும் படைப்பாளி சிறுவர்களுக்குத் தனது வானொலி நாடகங்கள் மூலம் வழங்கலாம்: V−
தன்னம்பிக்கை, சுயமுயற்சி" சிந்தித்துத் திட்டமிட்டுச் செயற் படல், தோல்விகண்டு சோராமை இன்மொழி, கூட்டுறவு மனப் பான்மை, பிறரது உரிமைகளை மதித்தல், சுற்றம் தழுவுதல், இன மொழி நாட்டுப் பற்றுகள், மானுட நேயம் என்பனவற்றை யும் இவை போன்ற ஏனைய பண்புகளையும் இந் நாடகங்கள் மூலம் ஒரு துளியளவேனும் சிறு வர் பெற முடி யு மா னா ல், அதுவே இவற்றின் பயன்பாட்டு வெற்றியாகும்.
16

ஆண்டான் அடிமை என் னும் வழக்கு, நலிந்த மக்களைத் துன்புறுத்துதல், பிறரது உழைப் பின் பயனை உறிஞ்சுதல் முத லிய சமூக ச் சீர்கேடுகளைக் கண்டு சீறக்கூடிய மனப்பாங்கை வானொலி நாடகங்களால் சிறு வரிடம் ஏற்படுத்துதல் முடியும்.
ஒவ்வொரு நாடகத்தில் ஒவ் வொரு கருத்து மேலோங்கி நிற் கும். அது நாடகப் போக்குடன் இழைந்து நின்றால் போதும். அதனைத் தூக்கிச் சொல் லி அழுத்தம் கொ டு க் து விட வேண்டிய அவசியம் இல்லை.
நேற்று - இன்று - நாளை
சிறுவர்களுக்கு இலக்கியம் படைப்பவன் தனக்கு முன்பு வாழ்ந்தது போன்ற அ ல் ல து தான் வாழுகின்றது போன்ற ஒரு சமுதாயத்தை மீண்டும் உரு வாக்குபவனாக இரு த் த ல் கூடாது. அவன் பழைய சமுதா யத்துக்குப் புதிய பிரதி எடுப்ப வன் அல்லன். இனி வி ரவேண் டிய ஒரு நவமான சமுதாயத் தின் சிற்பி அவன், நேற்றிலும், இன்றிலும் காலூன்றி நின்று நாளைய சமுதாயத்தைக் கற்ப னையில் கண்டு கொண்டிருப்ப வன். சிறுவர்க்கான வானொலி ந எ ட கம் படைப்பவனிடமும் இந்த உணர்வு இருத்தல் வேண் (St. இவ்வாறிருக்குமானால், இன்று பலர் செய்வது போல. முன்னைய அறியாமை சளையும் மூட நம்பிக்கைகளையும் புதிய சந்ததியினராகிய சிறுவருக்கு வழங்கிக் கொண்டிருக்க மாட் ւ-fr6նr .
சிறுவர்களுக்குக் கதை கேட் பதில் தீராத வேட்கை உண்டு. இது அவர்களுக்குள்ள அறிவுப் ப சி யின் மறைமுகமான ஒரு
வெளிப்பாடு கலாரசனையின் வி சு சிப் பு: இது காரணமாக அவர்கள் வானொலிநாடகத்தில் கதையம்சத்தைத் தேடுகிறார் கள், கதை நாடகத்தின் பல வகை அம்சங்களும் நிலைகொள் ளும் ஆதாரமாக இருக்கிறது. பூமாலையின் ஊடேயிருக்கும் நார்போல, வானொலி நாடகங் களில் உள்ள கவர்ச்சியான கதையோட்டம் "எப்பொழுதும் சிறுவர்களைக் கவரும். இள நிலைச் சிறுவரிடம் நாம் இதை துல்லியமாகக் காண லா ம், நாடக எழுத்தாளன் சிறுவர் களுக்குப் புக ட் ட விரும்பிய க ரு த்  ைத - விழுமியத்தைஅவர்களது ம ன த் தி ல் சுவற. வைக்க கதையிலும் சிறந்த ஊட கம் வேறில்ளை.
கவர்ச்சி கொண்ட கதையாக்கம்
சமுதாயத்தில் சந்ததி சந்ததி யாகச் சொல்லப்பட்டு வரும் பழங்கதைகள், வ ர லா ற் று க் கதைகள், இலக்கியங்களில் பளிச் சிடும் கதைகள். நவீன அறிவி யல் சார்ந்த கற்பனைக் கதை கள் ஆகியவற்றையெல்லாம் சிறு வர்கள் விரும்புவார்கள். வீர தீரச் செயல்கள், அதீதமான திறமை கொண்ட மனிதர்கள் வருகின்ற கதையம்சம் என்பன 6 - 10 வயதினருக்குப் பெரு விருந்தாகும். விண்வெளிப் பய ணங்கள், பிறகோள்களில் சஞ் சரித்தல், றோபோ முதலிய பொறிமனிதரின் செயற்பாடுகள் முதலியவற்றை உள்ளடக்கிய நாடகங்களை 10 12 வயதி னர் நன்றாக இரசிப்பார்கள். புது  ைம க ள், வேடிக்கைகள் எல்லா வயதினருக்கும் ஏற்றவை.
17

Page 11
விலங்குகள், பறவைகளும் பேசமாட்டா என்பது சிறுவர்க் குத் தெரியும். மனிதர்களுக்குரிய செயற்பாடுகள் அவைகளிடம் இல்யை என்பதையும் உணர் வார்கள். ஆனால், வானொலி நாடகங்களில் மனிதன் அல்லாத உயிரினங்கள் மனித ர் போல நடந்து கொள்வது பொருந்தாத காரியமா அவர்களுக்குத் தெரி வதில்லை. குறைந்த பட்ச ம் நாடகம் முடியும்வரையாவது இந்த முரண்பாடுகளைச் சிறுவர் கள் கவனிக்க மாட்டார்கள்,
சிறுவர்களுக்கான வானொலி
நாடகங்களுக்குக் கன தியான கதைக் கரு ஏற்றதல்ல. சிக்க
லான கதைப் போக்கும் பொருந் தாது. நாடக வடிவமைப்பிஓ:ம் 6 . . 6 6 ஜ.ண் .ாக்கிவிடக் கூடாது. பழைய நி3 : ;ை 6: மீண்டும் தருதல் முதலாம் உத் திகள் சிறுவர்களுக்கு விளக்கக் குழப் பத் (9 த ஏற்படுத்தாது பார்த்துக் கொள்ளல் வேண்டும். எளிமையான ஒரு கதைக் கரு இந்த நாடகங்களுக்குப் போதி Lélo
பாரதியின் "கண்ணன் என் சேவகன்" என்னும் பாட ைத் தழுவி எழுதப்பட்ட சிறு வர் நாடகம் ஒன்றை ஒலிபரப்பிய போது, சிறுவர்கள் அதனை நன் றாக ரசித்தார்கள் என்பதைக் காணமுடிந்தது.
ஒரு விகடத் துணுக்கே ஒரு சிறுவர்_நாடகத்துக்குப் போதிய கருவாகப் பொருந்திவரல் கூடும். ஒருவர், தமது வேலைக்காரனி டம், எறும்பு மொக்காத ஓரிட மாகப் பார்த்து வைக் கேக் துண்டு ஒன்றைக் கொடுக் கிறான். பின், அடுத்த நான் அதனைக் கொண்டு வருமாறு
18
அவனிடம் சொல்கிறார். அவன் அதனைத் தான் சாப்பிட்டு விட் டதாகச் சொல்கிறான். அவர் கோபித்து "ஏனடா அதைச் சாட் பிட்டாய்?" எ ன் று மிரட்டிய போது, "இந்த விட்டிலே எறும்பு மொய்க்காத ஒரேயொரு இடம் என் வயிறுதான் ஐயா" என்கி றான். இந்தத் துணுக்கை ஒரு நகைச் சுவை நா ட க ம 1ா க கு. இராமச்சந்திரன் எழுதியிருந் தார். அந்த வானொலி நாட
கத்தைச் சிறுவர்கள் ஒகோ" என்று ரசித்தார்கள்.
பழைய இந்திய கிரேக்க
இதிகாசங்களில் சிறுவர்களுக்குப் பரிச்சயம் உண்டாக்குவதற்கு, அவற்றிலிருந்து பொருத்தமான திகளை - க  ைத சு  ைளத் எடுத்து, வானொலி நT.3ங்களாகச் சிறுவர்களுக்குத் 5 ceTh.
கிறுவர்களது அறிவு அனு பவங்களின் வளர்ச்சிக்கு அச்சிறு வர்கள் வாழும் சூழல்தான் முக் கிய த ள மாக அமைகின்றது. ஆதலால், அவர்களுக்கான சமூக நாடகங்கள் அந்த ச் சூழலில் நிகழ்வதாக அமைக்கப்படுதலே பொருத்த 12ானது. அவர்களது குடும்பம், அயல், பாடசாலை என்று இவ்வாறாக, சிறு வர் வானொலி நாடகக் கதை சிறு வர் க 63 வளப் டறியதாகவும் நா ட க ம் சிறுவர்களிடையே நடைபெறு:தாகவும் இருந்தால் அந்த நா ட க ம் அவர்களுக்கு நிர ம் பி ய அர்த்தமுள்ளதாக யதார்த்தப்ாகவும் :ம். சிறுவர்களை $8தை மாந்தர்களாகக் கொண்டு புனை
யப்படும் நாடகங்கள் நிறைய உருவாதல் வேண்டும்.
(தொடரும்)
 
 
 
 
 
 

நிமத்தின் "எரிகொள்ளி
ஈழத்து இலக்கிய உலகில்
முஸ்லிம் எழுத்தாளர்களின் பங் களிப்பு அண்மைக் காலமாக அதிகரித்துள்ளமையை அவதா னிக்க முடிகிறது. எனினும் கவிதைத் துறையில் தான் பல ரும் தமது முத்திரையைப் பதித் துள்ளனர். சிறுகதை, நாவல் வடிவங்களைப் பொறுத்த:ரை அறுவடை குறைவாகவே இருக் கின்ற போதிலும் ஒரு சில காத் திரமான படைப்புகளைத் தசி சிக்க முடிகிறது. அந்த வகையில் அண்மையில் Goo aj iiiño i j tro 6şar எஸ். எச். நிஃமத் அவர்களின் எரிகொள்ளி" என்ற சிறுகதைத் தொகுதி குறிப்பிட்த்தக்க ஒன் றாகும்.
நாடறிந்த எழுத்தாளரான ஃமத் கடந்த பத்து வருடங் ժr:}}; ծ துக்க மேற்பட்ட :ெறுகதைகளை எழுதியுள்:ார். ஒரு விஞ்ஞான ஆசிரியரான கதாசிரியர் தான் வாழும் சமூ
கத்தை நுணுக்க:க அவதா வித்து அசைபோடும் ஆற்றல் பெற்றுள்ளமையை ;ே & ர து
படைப்புகளில் அவதானிக்க Փւգ, கிறது. பல கதைகளில் இழ்ை யோடும் நுணுக்கமான உணர் வோட்டங்கள் வாச க  ைன க் கதைகளோடு ஒன்ற வைக்கிறது. கதாசிரியரின் இலகுவான சர்ள நடையும் , உரையாடல்களும், கதாபாத்திரங்களின் 2. GOT fih வோட்டங்களும், இறுக்கமான கட்டமைப்பும் அவரை ஒரு தர மான எழுத்தாளராக இனம்
ச. முருகானந்தன்
காட்டி நிற்கின்றன. வாழ்க்கை அனுபவங்களும், வலிந்து இழுக் காத முடி;ெகளும், வளமானி நடையும், ரசமான சம்பவங்கி ளும், சிந்திக்க வைக்கும் கதைப் போக்கும் ததைகளின் வெற்றிக்கு துணை நிற்கின்றன. காலத் தோடு ஒன்றிய பல கதைகள் இத்தொகுதியில் இருந்தும் இன் றைய எரியும் பிரச்சனையாக இருக்கின்ற இனப் பிரச்சினை தொடர்பான கதைகள் இல்லா திருப்பது ஏ மாற்றத்தைக் கொடுக்கிறது. கட்ந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக நாட் டையே சின்னாபின்னப்படுத்திய இனப் பிரச்சினை தொடர்பாக முஸ்லிம் எழுத்தாளர்கள் அதி
絮
கம் எழுதவில்லை. நற்பிட்டி (a) Goor L. Gif esio, நாகூர் கணி போன்ற வேகு சிலரே இனப் பிரச்சினைப் பக்கம் திரும்பிப் பார்த்துள்ளனர்.
இனி நிஃமத்தின் கதைகளுக் குள் வருவோம். எரிகொள்ளி' தொகுதியில் இடம் பெற்றுள்ள பன்னிரண்டு சிறுகதைகளில் வர்க்க முரண், ஆசிரிய உலகப் பிரச்சினைகள், பெண்விடுதலை. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரச்சினைகள், காதல் - கண வன் மனைவி உறவுகள் போன்ற பல்வோறு விடயங்கள் அலசப் பட்டுள்ளன. ஆனந்த விகடன் கதை உட்பட ஓரிரு கதைகள் வெறும் வாசனைச் சுவைக்காகப் படைக்கப்பட்டுள்ளன.
19

Page 12
"விதிக்கு ஒரு சவால்" என்ற முதலாவது சிறுகதையில் ஏழை பணக்கார வர் க்க முரணும் அதைச் சமாளிக்க சுயதொழில் முயற்சி மூலம் சவால் விடும் ஒரு தொழிலாளியின் மன வைராக்கியமும் அழகாகச் சித் தரிக்கப் பட்டுள்ளன. "குருதிச் சடங்கு? கதையிலும் காதலர் கள் ஊடாக வரிக்க பேதம் அலசப்படுகின்றது. தற்கொலை முடிவு முன்னைய க  ைத க்கு நேர்மாறாக அ  ைம ந் துள் ள போதிலும் வாசனைச் சு  ைவ மிக்கதாக உள்ளது.
மனித வாழ்வின் ச பல ங் களை "சபலம்" கதையில் பக்கு வமாக அலசியுள்ளார். ஆசிரிய சமூகத்தில் அவ்வப்போது காண முடிகின்ற பாலியல் சபலங்கள் அர்த்தமற்றவை என்ற கருத்தை வலியுறுத்துகிறார். "ஏ னோ அழுதான்" என்ற சிறுகதையில் வறுமையுடன் போராடும் ஆசி ரிய சமூகத்தையும், அவர்களைப் பந்தாடும் கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்களையும் படம் பிடித்துக் காட்டுகின்றார். "நரி களின் நடுவே ஒரு முயல் ஆசி ரியர்கள் மத்தியில் மேலோங்கி நிற்கின்ற பொறாமை உணர்வு களையும், சின்னத்தனங்களை யும் அலசும் ஒரு நல்ல சிறுகதை, சிவானந்தன் மாஸ்ரர், நரேன் மாஸ்ரர் போன்ற சுயநலமிகளி னால் தான் ஆசிரிய சமூகத்தின் மதிப்பு தாழ்ந்து போவது தரிச னமாகிறது.
அடுத்து, வெ ளி நா ட் டு வேலைவாய்ப்புப் பற்றிய கதை கள் நல்ல அனுபவ முத்திரைக ளாக தரிசனமாகின்றன. "விதி விரட்டிய போது" கதையும், "ஒரு மனைவி, ஒரு கணவன். ஒரு டயறி போன்ற வாசகர்னச் சுவை மிக்க கதைதான். எனி ணும் வெளிநாட்டு வேலை
வாய்ப்பினால் குடும்பத்தில் ஏ படக் கூடிய குழப்பங்கள் அ சப்படுகின்றது. சரசாவுக்கு ஒரு சவூதிக் கடிதம்" வெளிநாட்( வேலைவாய்ப்பில் உள்ள மோ டிகளைப் பற்றி வாசகனுக்கு உணர்த்துகிறது. எ னினும் இவற்றைவிட "பரீதா வெளி நாடு போகிறாள்" என்ற கை நன்றாக வந்துள்ளது. பண்பாட டுப் போலிகளும். சீதனக் கொ( மைகளும் அலசப்படுகின்றன முடிவில் பெண் விடுதலை ஓங்கி ஒவிக்கிறது. "அவள் ஒரு பீ. ஏ சிறுகதையில் கலியாணச் சந்ை யில், படித்த பெண்களின் ப
தாப நிலையைச் சித்திரிக்கிறது
தனக்கேற்ற கணவனைத் தேடு வதில் எதிர்நோக்கும் சிக்கல்கள் மனதைத் தொடும் வண்ணட சித்திரிக்கப் பட்டுள்ளது.
தலைப்புக்கதையான "எn கொள்ளி" பெண் விடுதலையின் உச்சத்திற்கே போய்விடுகிறது சமூகத்தில் பயந்தாங்கொள்ள யாக வாழ்கின்றவன் கூட வீட் டில் மனைவியை அடக்கி ஆழ
வதும், பொறுமையின் சின்ன மாக விளங்கிய மனைவி இறு தியில் ஆவேசமாக எரியும்
கொள்ளிக் கட்டையுடன் கண வனை அணுகுவதும் பெண்ணடி மைத்தனத்திற்கு தீமூட்டுவது போலவும், விடுதலையின் பாை திறக்கப்படுவது போலவும் மி வும் கிற ப் பா க இக்கதையில் வந்துள்ளது.
*எரிகொள்ளி" என்ற இ தலைப்புக்கதை ஒன்றே கதாசி ரியரின் திறமையை எடைபோட போதுமானது. இப்படியான காத்திரமான க  ைத கள் பல வ ற் றை மேலும் நீஃமதி படைத்து தமிழ்ச் சிறுகதை உ6 கில் தனக்கென ஒரு இடத்தைட பெற்று க் கொள்வார் என்று தம்பலாம்
BO

தமிழ் வளர்த்த தவச் செல்வர்
கத்தோலிக்க பாரம்பரியம்
மறை பரப்புப் பணியின் சிறப்புக் கூறுகளில் ஒன்று முழு மனிதனையும் அருள் நிலைக்கு உயர்த்த வேண்டும் என்ற கொள்கை. அதில் உறுதி பூண் டது கத்தோலிக்க சமயம். ஆன வேதான் கத்தோலிக்க சமயப் பணிபுரியும் பலர் தமது மறை யுடன் நேரடித் தொடர்பற்ற பல துறைகளிலும் புகுந்து மக் கள் வாழ்வின் முன்னேற்றத்திற் காக அரும்பாடு படுகிறார்கள். உலகியல் வளர்ச்சிக்குத் தூண்டு கோலாயும், ஊன்று கோலாயும் இருந்து பணிபுரிந்து வருகிறார் கள். அதன் மூலம் தமது துற வறத்தின் குறிக்கோளை எய்து வதாக மகிழ்ச்சி கொள்கின்றார்
ssir -
முன்னோடிகள்
தமிழ் மக்கள் மத் தி யில் பணிபுரிய வந்த வெளிநாட்டுத் துறவியர் பலர் இக் கொள்கைக் கும், செயல் முறைக்கேற்பவும் ஒழுகினர். தமிழ் மொழி மீது தணியாத பற்றுப் பாசம் வைத்த னர். தமிழ் மறைப் பணியால்
தமிழுக்கும், தமிழ் பணியால் மறைக்கும் பெருமை தேடித் தந்தனர்.
உரை நடையின் தந்தை எனப் பலராலும் போற்றப்ப டும் தைரிய நாத அடிகள் (டி. நொயிலி) இந்தப் பாதை யில் சென்று பணி செய்த ஒரு
S. மரியசேவியர் Քւգ366ir
வர். தமிழ் எழுத்தில் சீர்திருத் தம் செய்து தமிழ் அன்னைக்குப் பல தே ம் பாத அணிகளைச் சாற்றிய வீரமாமுனிவர் (பெஸ் கி) அதே வழியைக் கடைப்பிடித்த இன்னும் ஒருவர்.
இத்தப் பரந்த பக்குவ மர பில் நின்று 20ம் நூற்றாண்டில் தமிழுக்குத் தொண்டு செய்த தனையர்களுள் மூ வர் ஈழத் தமிழ் வரலாற்றில் இடம் பெற் றவர்கள். தவத்திரு நல்லூர் தானப்பிரகாச அடிகள், தவத் திரு தாவீது அடிகள், தவத்திரு தனிநாயகம் அடிகள்
நல்லூர் ஞானப்பிரகாசர்
"அமிழ்தினும் இனியது என அறிஞர் போற்றும் "எம் "அரிய தமிழ் மொழி" என்று தமது தமிழ்ப் பற்றை பறைசாற்றிய நல்லூர் ஞானப்பிரகாசர், தமிழ் மொழியிலேயே மொழி இயல் பற்றி எழுதிய ஓரி முன்னோடி. திராவிட மொழிகள் புறக்கணிக் கப்பட்டு, வட மொ ழி யின் (ஆரிய) சிறப்பே சிறப்பு எனப் பேரறிஞர் பலர் கருத்துத் தெரி வித்த அந்நாளில், ஆதிச் சொற் களாகிய தமிழ் அடிச் சொற்க விலிருந்துதான் ஆரிய (இந்தோஐரோப்பிய) மொழிச் சொற்கள் பிற ந் தன என வாதிட்டவர் ஞானப்பிரகாசர். st sir G er திண் மை பல்கலைக் கழகம் செய்ய வேண்டிய பணியாகிய சொற்பிறப்பு ஒப்பியல் அகரா

Page 13
தியை ஆக்குவதில் தொடக்க வெற்றியைக் கண்டார். தன் G F r 55 உழைப்பினாலும், முயற்சியாலும் வேறு பல چرا که மைகள் மத்தியிலும் இதைச் சாதித்தார். நடமாடிய பல்க லைக் கழகம் அன்றோ, நல்லூர் சுவாமி. அவர் உயிருடன் வாழும் போதே ஜேர்மன் நாடு அவரது உருவம் த்ரித்த முத்திரையை வெளியிட்டுக் கெளரவித்தது
தாவீது அடிகள்
நல்லூர் சுவாமியின் மாண வன்’ என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டவர் தாவீது அடிகள். ஏறத்தாழ 32 மொழி களை அறிந்த வர். 'சொற் பிறப்பு - ஒப்பியல் - தமிழ் சிங் கள இலக்கண - அகராதியை ஆக்கியவர். “தாமிழம்" என்னும் தொல் தமிழ் மொழி கி. மு. 3600 ஆண்டுகளுக்கு முன் வழக் கில் இருந்தது என்றும், அச் சொல்லைத் தொட்டு உருவா கியதே சமஸ்கிருதச் சொல்லா கிய 'திராவிடம்" என்றும் எடுத் துரைத்தவர். வடமொழிகளான சமஸ்கிருதம், பாளி, பிரக்கிருதி போன்றவைகளும் ஏறத்தாழ 30 விழுக்காடு "தாமீழத் திலி ருந்து பிறந்தவை என வாதிட் டவர். தற்காலத் தமிழ் மொழி யும் சிங்கள மொழியும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந் தவை: "தகப்பன் வழி உறவு போன்று இந்து - ஐரோப்பிய தொல் மொழியையும், தாய்வழி உறவு போன்று திராவிட - தொல் மொழியையும் கொண் L-Bray 676073 dy60fiayasJurer கொள்கையை வெளியிட்டவர். தமது ஆய்வுகளின் விளைவாக தமிழ் - சிங்கள மக்களது உறவு பகையானதொன்றாக அல்ல, அக்கா ~ தங்கை உறவு போன்ற தாக மலரும் எனவும் கருத்துத் தெரிவித்தவர் தனது ஆழ்ந்த
கருத்துகளை ஒழுங்கு படுத்திச் சொல்லாலும், எழுத்தாலும் பல ரும் கவரும் வண்ணம் எடுத் துரைக்கும் ஆற்றல் அவரிடம் இருக்கவில்லை. அதனால் அவ ரது ஆய்வுகள் பலவற்றை வருங் காலத் தலைமுறைக்கே பணி யாக விட்டுச் சென்றுள்ளார்: யாழ் நூலகம் எரிந்த செய்தி கேட்டு உயிர் விடுத்த தவத் தோன். தமிழ் உலகால் இன்றும் போற்ற ப் பட் டு வணக்கம் செலுத்தப்பட வேண்டிய நிலை யிலுள்ளவர்.
தனிநாயகம் அடிகள்
தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளை இன்று நன்கு அறிந் தவர் பலருண்டு. "மறைவாக நமக்குள்ளே பழங் க  ைத க ள் சொல்வதிலோர் மகிமையில்லை. திறமான புலமையெனில் வெளி நாட்டார் அதை வ ண க் கம் செய்ய வேண்டும்" என்ற பாரதி யின் சவாலுக்கும், வேண்டு கோளுக்கும் பதிலளித்தவர் தனி நாயகம் அடிகள். அவரது சிறப் புப் பணிகளுள் ஒன்று தமிழை உலகறியச் செய்வித்தது என் றால் அது மிகை அன்று. ஆங்
கிலத்தில் 'தமிழ்ப் பண்பாடு" என்ற ஆய்வுச் சஞ்சிகையைத் தொடக்கி, பல்லாண்டு காலம்
வெளியிட்டதும், உலகத் தமிழா ராய்ச்சி மகாநாட்டை நிறுவிய தம் அவரது அகில உலக தி தமிழ்ப் பணியின் சான்றுகள் பல மொழிகளில் நிகரற்ற புல
மையும், தான் நன்கு அறிந்த மேல்நாட்டு கலை, இலக்கிய கலாசாரங்களுடன், இந் தி ய தமிழ் இலக்கியக் கலாசாரங் களை ஒப்பிட்டுப் பொதுமை களையும் வேறுபாடுகளையும் சு ட் டி. க் காட்டும் திறமையும்
அவரது தமிழ்த் தொண்டிற்கு மதிப்பையும் ஈற்றில் புகழையும் பெற்றுக் கொடுத்தன.
A.

எதிர்காலம்
தமிழால் சமயத்திற்கும், சம ய த் தா ல் தமிழிற் கும் தொண்டு செய்யும் கத்தோலிக் கப் பாரம்பரியம் இ ன் னு ம் வாழ்ந்து வளர்ந்து கொண்டு தான் வருகிறது. மேலை நாடு களில் இன்று அகதியாக அலைநது கொண்டிருக்கும் தமிழர்கள் மத் தியில் வாழ்ந்து, தமிழ்க் கலை காளை வளர்த்தும் நமது கலா சாரத்திற்கு குரல் கொடுத்தும் முன்னணியில் நிற்பவர்கள் நமது கத்தோலிக்கக் கு ர வ ரா வர். யாழ் மாவட்டத்தில் தமிழ் க் கலைகளைப் பேணி வளர்க்கும் சேவையைச் செய்ய ஒரு கத்தோ
அட்டைப் பட ஓவியங்கள்
லிக்க குரவரைத் தேர்ந்து நிய மனம் செய்திருக்கின்றார் கத் தோளிக்க ஆயர் தீயோகுப் பிள்ளை ஆண்டகை, இது கத் தோலிக்கத்தின் கலை, சாரப் பற்றைச் சுட்டிக் காட்டு கின்றது. தமிழ் மக்களினதும் அ வர் களது மொழியினதும்
சிறப்பை அகில உலகிற்கு ம்
எடுத்தியம்பும் ஆற்றலையும் ஆர் வத்தையும் உடைய இளம் குர வர்களையும் இன்று ஈழத்துக் கத்தோலிக்கம் உருவாக்கி க் கொண்டு நிற்பதில் தமிழர் அனைவரும் பெருமிதம் அடைய வேண்டும்.
()
*
வெளியீடுகள்
20 - 00
:
(35 ஈழத்து பேணு மன்னர்கள் பற்றிய நூல்)
ஆகுதி
25- 09
(சிறுகதைத் தொகுதி - சோமகாந்தன்)
என்னில் விழும் நான்
9 - 0
(புதுக் கவிதைத் தொகுதி-வாசுதேவன்)
மல்லிகைக் கவிதைகள்
15- 00
(51 கவிஞர்களின் கவிதைத் தொகுதி)
இரவின் ராகங்கள்
... 20 - 0
(சிறுகதைத் தொகுதி - ப. ஆப்டீன்)
துாண்டில் கேள்வி-பதில்
20 - 00
- டொமினிக் ஜீவா ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள்
(சிறுகதைத் தொகுதி - சுதாராஜ்)
30 - 00
வியாபாரிகளுக்குத் தகுந்த கழிவுண்டு.
மேலதிக விபரங்களுக்கு:
"மல்லிகைப் பந்தல்" 224 B, காங்கேசன்துறை வீதி யாழ்ப்பாணம்.
M
ይቆ..
ò6ህ fኞ .

Page 14
எதிர்கால நல்வாழ்விற்குவழிகாட்டும் பெரிஸ்த்ரோயிக்கா
ஏப்ரல் 9 லிருந்து 15 வரை மாஸ்கோவில் 11 ஆவது உலகப் பத்திரிகையாளர் மாநாடு நடைபெற்றது. இதில் 500 க்கும் மேற் பட்ட 60 நாடுகளைச் சேர்ந்த அரசியல், சமூக, சமயப் பிரமு கர்கள் பங்கு கொண்டனர். பிரதமமந்திரி, ஜனாதிபதி போன்ற உயர் பதவிகள் வகித்துள்ள 40 பிரமுகர்களும் இதில் பங்கு கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
துருக்கிய தேசத்தின் முன்னாள் பிரதம மந்திரியும், ஜனநாய இடதுசாரிக் கட்சியின் தலைவருமான புருவென்ட் எஸெலித் இ மாநாடு குறித்து நோவஸ்தி செய்தி நிறுவனத்திற்கு அளித் பேட்டியில் கூறியதாவது.
பெரிஸ்த்ரோயிக்கா தோன்றுவதற்கு முன்பே பல நாடுகளும் சோவியத் யூனியன் மீது அக்கறை கொண்டிருந்தன. பெரிஸ்த் ரோயிக்கா தோன்றியவுடன் இது பன்மடங்கு அதிகரித்துள்ளது"
"உலக நிலைமையில் கணிசமான அளவு முன்னேற்றம் கண் டுள்ளது. கிழக்கு - மேற்கு நாடுகளின் உறவுகளின் வளர்ச்சியி லும், பொதுவாக உலக அரங்கில் பெரிஸ்த்ரோயிக்காவின் தாக் கத்தைப் பல நாடுகளும் ஆராய்ந்து வருகின்றன"
பல ஆண்டுகளாக சோவியத் யூனியனுக்கும் துருக்கி நாட் டிற்கும் இடையிலுள்ள ஒத்துழைப்பைக் குறிப்பிட்டு எஸெலித் பின்வருமாறு கூறினார். இப்பொழுது துருக்கி சோவியத் யூனிய னிடமிருந்து எரிவாயு பெற்று வருகிறது. வர்த்தகம் (டிம்மடங்கு உயர்ந்துள்ளது. இது வெகுவிரைவில் மேலும் அதிகரிக்கக் கூடும் என நம்பலாம்.
மேலை நாடுகளுக்கும் கீழை நாடுகளுக்குமிடையே செய்திப் பரிமாற்றம் மிக முக்கியமானது. செய்தியை இருட்டடிப்புச் செய் யும் நாடுகள் தங்களையே ஏமாற்றிக் கொள்கின்றன"
"இவ்வளவு வேகமாக திறந்த மனப்பான்மையும், புனர் சீர மைப்பும் வளரும் என நான் எதிர்டார்க்கவில்லை. பொருளாதா ரத்தில் புனர் சீரமைப்பு என்பது எளிதான காரியமல்ல'
"இப்பொழுது சோவியத் மக்கள் குறைந்த அளவு குடியிருப்பு வாடகை, விலை அதிகமற்ற நுகர் பொருள்கள் போன்ற பல சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். ஆனால் சந் (9 த ப் பொருளாதாரத்திற்கு நாடு செல்லும் பொழுது இந்தச் சலுகை களை இழக்க வேண்டி வரும். புதிய முறைக்கு மாறிச் செல்லும் கால கட்டம் கஷ்டமானதாகத்தான் இருக்கும்"
ஆனால் மனம் தளர்வதற்கு ஒன்றுமில்லை, சோவியத் பெரிஸ்த் ரோயிக்காவின் வெற்றியைப் பொறுத்துத்தான் 21 ஆம் நூற்றாண் டில் உலக முன்னேற்றம் இருக்கும் எனக் கூறலாம் என்று மேலும் எஸெலித் கருத்துத் தெரிவித்துள்ளார் @
盈鑫

நீர்கொழும்பு முதல் சிலாபம் வரை
தமிழ்க் கலாசாரமும் தற்காலக் கிறீஸ்தவத் தவத்திருவோர் மூவரும்
ஒரு கிறீஸ்தவ சமயத் துறவி யாக இருந்த போதும், தேசியக் கலைகளிலும், கலாசாரத்திலும்" மொழிகளிலும் புலமையும் மேம் பாடும் பெற்றிருந்தவர் தவத் திரு எட்மண்ட் பீரிஸ் அடிகள். அத்துறைகளில் அவரது சேவை களுக்காகவே களனிப் பல்கலைக் கழகம் அவருக்கு இலக்கியத்திற் சிறப்புக் கலாநிதிப் பட்டம் வழங் கித் தான் கெளரவம் பெற்றுக் கொண்டது. ஒருவரது வாழ்வுக் காலத்தில் நூற்றாண்டுகள் கணி சமான கணிப்புக்குரியவை என நூற்றாண்டுக் கொண்டாட்டங் கள் பரக்கக் காணப்படும் சூழ லில், பீரிஸ் அடிகள் தமது இறுதி மூச்சுவரை முற்குறித்த பணிகளி லேயே ஆழ்ந்து, 1989 ஆம் வரு டத்தில் தமது தொண்ணுாற்று இரண்டாவது வயதிற் காலம் எய்தியமை ந ம து கவனத்திற் குரித்தாகும். ஐரோப்பிய குறிப் பாக ஆங்கில ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கு முன்பும் பின்னு முள்ள காலப் பகுதிகளில் அவர் வாழ்ந்தார். ஆனால் அவரது வாழ்நாள் முழுவதும் தேசீயத்
எஸ். எம். ஜே. பைஸ்தீன்
து வத்  ைத ப் பேணுவதிலேயே விஞ்சியது.
கிறீஸ்தவத் துறவிகளுக்கு லத்தீன் மொழியில் இயல்பாகவே பரிச்சயம் ஏற்படுகிறது. அது G8 L1 it a C at 667 Lair, Girnt th ஆகியவற்றிலுள்ள அருங்காட்சி யகங்களிற் பயிலவும் சந்தர்ப்பங் கள் உள்ளன; பீரிஸ் அடிகள் லத்தீனுடன் ஆங்கிலம், சிங்க ளம், தமிழ் மொழிகளையும் அறிவார். பிரிட்டிஷ் மியூசியத் தில் போர்த்துக்கீசரதும், ஒல் லாந்தரதும் ஆதிக்க காலத்தில் எழுந்த அருஞ் சுவடிகளைத் தேடியறியவுஞ் செய்தார். ஒரு சாதாரண கிறிஸ்தவத் துறவி யினும் வேறுபட்டிலங்க இப்பின் னணியே அவருக்கு வாய்ப்புக் களை வழங்கியிருக்க வேண்டும்.
சிலாபம் நகரத்திற் பிறந்த பீரிஸ் அடிகள், 1940 ஆம் வரு டத்தில் சிலாபம் மறைமாவட் டம் புதிதாக் உருவாக்கப்பட்ட போது, அகன் முதலாவது மேற் றிராணியாராகத் தமது நாற் பத்தி மூன்றாவது பராயத்தில்
25

Page 15
நியமனம் பெற்றார். இவரே இலங்கையரான முதலாவது மேற்றிராணியாராக இருத்தல் வேண்டும். எனினும், இவர் சிங்களவரான முதல் மேற்றி ராணியார் என்றே பிரசித்தப் படுத்தப்பட்டார். பீரிஸ் அடிகள் சுமார் ஐம்பது ஆண்டுகள் இக் கொடுமுடியிற் பணி பரந்தார். இப்பரப்பு சிங்கள இலக்கியத் தையே பெரிதும் அளாவிச் சென் றது. "சிங்களவர்களது மொழி யும், இலக்கியமும்" என்ற இவ ரது நூல் இ வ. ரா ல் எழுதப் பட்ட பதினெட்டுக்கும் மேற் பட்ட நூல்களுள் ஒன்றாகும். இலங்கையில் மிகவும் பழம்பட்ட கத்தோலிக்கச் சஞ்சிகையான "பக்தி பிரபோதன ய' வின் ஆசி ரியராகப் பணிபுரிந்திருக்கிறார். பிரிட்டிஷ் மியூசியத்தில் கண்டெ டுத்த முற்றிலும் வித்தியாசமான "மார சலக்குண" என்ற தூதுக் காவியத்தைப் பதிப்பித்து வல பொல ராகுல தேரர், டபிள்யூ. டீ . ரதன சூரிய போன்ற பேரா சிரியர்களது பாராட்டுக்குரித்தா 6V TT"
அவ்வாறாயின் பீரிஸ் அடி கள் தமிழ்க் கலாசாரத்துடன் தொடர்பு படுமாறு பற்றி ய கேள்வி எழும். தவத்திரூ தனி நாயகம் அடிகள், ஞானப்பிர காச சுவாமிகள் ஆகிய இருவ ரையும் தொடுத்து இது அமை வது ஒரு விந்தையான செய்தி யாகும். பீரிஸ் அடிகள் மேற்றி ராணியாராகப் பொறுப்பேற்ற போது . தனிநாயகம் அடிகள் இருபத்தொரு வயது இளவல். அக்காலத்தில் சிலாபம் மறை மாவட்டப் பகுதியிற் செயலாள .கடமையாற்றிய வர் 35 96, זח "ש "தமிழ்க் கலாசாரம்" எனும் ஆங்கிலச் சஞ்சிகையை அவர் நடாத் கத் தொடங்கியதும் இக் காலத்திலேயேயாகும். உள்நாட் டிலும் வெளிநாட்டிலும் 250 க்கு
கொன்சல் வாஸ்
மேற்பட்ட கட்டுரைகளை எழுதி யுள்ளார். பீரிஸ் அடிகள் தமிழ்க் கலாசாரத்தைப் போஷிக்கவும் தவறவில்லை. அத்தகைய கட்டு ரைகளுள் ஒன்று ஞானப்பிரகாச சுவாமிகளுடன் மேற்கொண்ட பேட்டியை அடிப்படையாகக் கொண்டமைந்தது. இத் தவத் திருவோர் மூவரையும் பற்றிய விரிவான ஆய்வுகள் பல பய னுள்ள தகவல்களைத் தரும்.
மேலும் பீரிஸ் அடிகள் கலை களின் வாயிலாகவே ச ம ய |h மக்களை எளிதாக அணுக முடி யும் என உணர்ந்திருந்தார். அதி லும் மக்கட் பாரம்பரியத்தையே அ  ைச ர  ைண கொண்டார். கிறீஸ்தவர்களது வழிபாட்டில் சுவாமிகளில் தோத்திரங்கள் முக்கிய இடம் பெறும். அடிகள் இவற்றைத் தமிழிலும், சிங் களத் தி லும் தொகுத்தார். தோத்திரங்கள் சிங்களத்திலும், த மிழிலும் அடுத்தடுத்து அமைந்த ஒரு பிரதி ஒர் அரும் பாக்கிஷமாகும். இசை வல்லுனரான அவர் அத் கோத்திரங்சளுக்குக் கர்னாடக (: சை மரபிலும், கிராமிய இசை மரபிலும் மெட்டுக்கள்ை அமைத் தார். தாமே பல தோத்திரங் களையும் இயற்றி இசை அமைத் துக் கொடுத்தார்.
பீரிஸ் அ டி க ள்
நாடகம், துணை கொண்ட மற்றுமொரு துறையாகும். நீர்கொழும்பு
முதல் சிலாபம் வரையுமுள்ள பகுதி அதியுயர்ந்த நாட கப் பாரம்பரியத்தையுடையது. அதி லும் தமிழ் நாடகங்களே அதற்கு அடிநாதமாக திகழ்ந்துள்ளன. ஏசுநாதரது லுவைப் பாட்டி னது துயரங்களைக் கா ட் டு Lh பெஷன் பிளே (பசன் நாடகம்) எனும் பாங்கு காலக் காட்சி களும். நாட்டுக் கூத்துக்களும் இவற்றில் இடம் பெற்றன. தாவ், குடாப்பாடு போன்ற
26

ஊர்களில் விசேடமாயும், அநே கமான கிறிஸ்தவ தேவாலயங் களிலும் பாஸ்குக் காட்சிகள் இன்றும் தவறாது நடைபெற்ற போதும், நாட்டுக் கூத்துக்கள் ஏட்டளவில் ஒடுங்கிவிட்டன. ஏடுகள் தாமும் நசிவுத் தசை யில் உள்ளன. பீரிஸ் அடிகள் "ரஜதுன் கட்டுவ" என்ற நாட கம் தொடர்ந்து ந  ைட பெற ஊக்கமளித்தார். இந் நாடகம் 1716 இல் சிங்கள வடிவம் பெற் றதாகவும் 1882 இல் திருத்தி அமைக்கப்பட்ட பிரதியே தற் போது கைக்கொள்ளப்படுவதா யுந் தெரிகிறது.
ரஜதுன் கட்டுவவின் மூல வடிவம் "மூவிராசாக்கள் வாசாப் பு' வாக உள்ளவை. இப் பிரதே சத்தின் நாடக மரபினது பழ மையை எடுத்துக் காட்டுவதா கும். மூவிராசாக்கள் வாசாப்பு டன் ஞான செளந்தரி நாட கம் தடிக்கப்பெற்று வந்துள்ளது: தேவசகாய நாடகம், ஞான செளந்தரி, மூ வி ரா சாக்கள் வாசாப்பு, மெய்ஞ்ஞான ஞானப் பிரகாசம் முதலி ய வ ற் றின் கையெழுத்தேடுகள் இ ன் னு ம் பாதுகாக்கப் பெற்றுள்ளன. இஸ்தாக்கியார் நாடகம், சூசை யப்பர் தாடக்ம் முதலியவற்றின் ஏடுகள் அழிந்துள்ளன. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இத்தகைய தமிழ் நாடகங்கள் எவையும் நடிக்கப் பெற்றதாகத் தெரியவில்லை.
தமிழில் மட்டுமன்றி சிங்க ளத்திலும் நாட்டுக் கூத்துக்கள் செல்வாக்கிழக்க வைத்த கார ணங்களுள் தலையாயது மேடை நாடகங்களின் எழுச்சியாகும். பீட்டர்" எனச் சாதாரண மக் கள் இவற்றையறிவர். "நுர்த்தி" (நிருத்தியம்) எனப் பரவலாக அறியப் பறும் பத்தொன்ப தாம் நூற்றாண்டின் நடுப்பாகத் தில் இலங்கைக்கு அறிமுகமான
இது, சிலாபப் பிரதேசத்தை இருபதாம் நூற் றா ண் டி ன் இரண்டாவது தசாப்தத்தில் அரிக்கத் தொடங்கியது. எனி னும் பாஸ்குக் கா ட் சி க  ைள இவை பாதிக்கவில்லை. குவோ வாடில், அலாவுதீன் போன்ற புதிய நாடகங்களுடன் ஞான செளந்தரி போன்ற நாட்டு க் கூத்துக்களும் மேடை வடிவம் பெறலாயின என்றும், "ரஜதுன் கட்டுவ" மட்டும் பழைய வடி வத்திலேயே பாதுகாக்கப்பட் டது. தூவவில் இன்றும் இது நடிக்கப்பெறுகிறது.
கிறீஸ்தவத் தமிழ் நாடகக் கலைஞர்கள் ஏ  ைன ய தமிழ் நாட்டுக் கூத்துக்களில் ந ல் ல பரிச்சயமுடையோராக இருந்த னர். வானபிமன் நா ட கம், அல்வி அரசாணி நாடகம் முத லியன இவற்றுட் சில. அணி நலமும், இலக்கண ந யமும் வாய்ந்த "அலங்கார ரூபன்" நாடகம் இப்பகுதியில் வெகுவா கப் பயிலப்பட்டது. மட்டக்களப் பிற் சிறப்பாக ஆடப்பெறும் "அலங்கார ரூபன்" நாடகத்தை அச்சுருவேற்றிய போராசிரியரி . வித்தியானந்தன், சில எ பப் பகுதியிலும் நாடக ஏடுகளைத் திரட்டிய தமது முயற்சியைப் பற்றி விவரித்த போது (பேராசி ரியர் அ. சின்னத்தம்பி நினை வுப் பேருரை) வெளிப்படுத்திய தகவல் இங்கு பொருத்தமுடை ய தா கும். "முன்னேஸ்வரம் கோயில் உற்சவகாலத்தில் இராப் பூசை முடிந்த பின்னர் நாடக பூசை நடைபெறும். கோயில் முன்றலிற் கூடியிருக்கும் நூற் றுக் கணக்கான மக்கள் முன்னி லையில் விடியும்வாை கூத்துக்கள் நடைபெறும் இந்துக் கோயில் களிற் போலவே கிறிஸ் த வ தேவாலயங்களிலும் முன்குறித்த நாட்டுக் கூத்துக்கள் விடிய விடிய நடை பெற்றுள்ளன. ஆனால்
ይ7

Page 16
8000000000000000000-8806
DSUSSEISOES
புதியஆண்டுச் சந்தா
1990-ம் ஆண்டு ஜனவரி
மாதத்திலிருந்து புதிய சந்தா விபரம் பின் வருமாறு:
6 - 00
80 - 00
தனிப் பிரதி ரூபா ஆண்டு சந்தா ரூபா
(ஆண்டுமலர் தவிர,
தபாற் செலவு உட்பட)
தனிப்பிரதிகள் பெற விரும்பு வோர் தகுந்த தபாற் தலைகளே அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம். மல்லிகை
234 ,ே காங்கேசன்துறை வீதி
unrþůLunrawurd. °必令●●令令令令°●●●令冷令令令必令《
அவை உற்சவ காலங்களில் நடாத்தப் பெறவில்லை, அப் போது ஆலயத் திருப்பணிகளைச் செய்வதற்கு ஆட்களைத் தேடு வது கஷ்டமாகி விடுமென்று உற் ச வ கால ந் தவிர்க்கப்பட்டது. ஆகவே இந்து ஆலயங்களிலும் கிறீஸ்தவக் கோயில்களிலுமாகத் தமிழ்க் கூத்துக்கள் நடைபெற்ற காலம் இருந்துள்ளது. இப் போது இவற்றுள் எதுவுமே நடிக்கப் பெறுவதில்லை. மேடை நாடகங்களின் பாதிப்பு மட்டுமே இதற்குக் காரணம் என்று கூற (Ա, էգ Ամո gն:
பழைய கூத்துக்களுக்குப் புத்துயிரூட்டும் மு ய ஹ சி என 1960 களில் ஆரம்பமாகி இருந் தது. ஏடுகளை அச்சுருவிலேற்
பப் பகுதியிலேயே
றுதல் அதில் ஒரங்கமாகும். சிலா *வாளபிமன் நாடகம், மார்க்கண்டன் நாட கம்’ என்பன தேடிப் பெற்றுப் பதிப்பிக்கப் பெற்றிருக்கின்றன. அடுத்தது மேடையேற்றமாகும் இதன் பெயரால், விடிய விடிய நடந்த கூத்துக்கள் இரண்டு அல் லது மூன்று மணித்தியாலங்க ளில் முடியக் கூடிய வகையில் தொகுத்தமைச்கப் பெறுதலே நடைபெற்றது. இவ்வாறு ரஜ துன்கட்டுவ" 1961 ல் மீள தி தயா ரிக்கப் பெற்றிருந்தது. பீரிஸ் அடிகளது அணுக்கிரகம் இதற்கு மிகவும் கிண்டத்தது. ஒரு நாடகத்துச்குச் சாதாரண மாக 18 தாளக்கட்டுக்களும் 448 ராகங்களும் இருக்கும். இட் புத்துயிரூட்டல் இந் நயங்களை யெல்லாம் முழு ைம யாக ச் கொணர மாட்டாது. பழைய கூத்துக்களைப் பட்டியல் போட வும், நினைவூட்டவும் மட்டுபே உதவும். எனவே இத் துறையில் நவீன தொழினுட்ப முன்னேற் றங்களைத் துணை கொண்டு ஆக்க பூர்வமான மாற்று 5. வடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பீரிஸ் அடிகள் மக்களை ஒன்று சேர்ச் : ஒரு சக்திய கச் சமயததுக்கு வலுவூட்ட ஆருதியிருக்க வேண்டும். எனினும் நீர் கொழும்பு முதல் சிலாபப் வரையுமுள்ள பகுதியில் இரு பி தான மொழிப் பி. வாகங்கள் இணை வரையாகச் சென்றுள்ள மையால் ஒரு பக்க விளைவை யும் அவதானிக்க முடிகிற து "தமிழ் பேசும் சிங்களக் கிறீஸ் தவர்கள்" எனும் ஒரு பிரிவினரை இங்கு நாம் சந்திக்க முடிவதுப் இதனாலேயேயாகும். இது சமூக வியல் ஆய்வாளர்களது ஆர்வத் துக்கு உரிய ஒரு விடயமாயுப் அமையலாம்
盛8
 
 

தமிழகக் கவிஞர்
ஹெச். ஜி. ரசூலின்
“ஜனகணமன?
ந வீன தமிழ்க் கவிதைப்
பா  ைத யில் நின்று நோக்கு மிடத்து "வானம்பாடி' குழுவின் தாக்கமும், அதன் வளர்ச்சியில் உருவாக்கப் பெற்ற நவீன தமிழ் கவி  ைத ப் புனையாளர்களின் படைப்பாக்கத்திறனில் ஏற்பட்ட மாற்றமும் பலராலும் ஜனரஞ் சகத்தன்மை வாய்ந்தது என இனங் காணப் பெறுகிறது.
இக்கூற்றில் உண்மை இருப் பினும் தமிழ்க் கவிதைப் படைப் பாளிகளின் தொகையைக் கூட் டியதன் காரணமாக, இக் கூற்று முன்வைக்கப்பட்ட பொழுதும், "வானம்பாடி" குழுவின் நவீன தமிழ்க் கவி  ைத உலகில் நல் விளைச்சல்களை a 67-rris இருப்பதும் மறுக் க முடியாத allowupubling5 lb.
*வானம்பாடி குழுவின் தாக் கத்திற்குப் பின்வந்த காலகட் டங்களில் புதிய போக்குகளை தமதாக்கிக் கொண்ட புதிய கவிஞர்களின் குழாம் ஒன்று உரு வாக்கம் பெற்றது.
அதிலும், குறிப்பாக முற் ம் முழுதுமான முற்போக்குச் ந்தனை நின்று சிந்தித்தவர்க ளின் கையில் நவீன சமூக பிரக் ளுைமிக்க ஒரு கலை, இலக்கிய ஊடகமாகக் கலிதை பரிமாறப்
- மேமன்கவி
பெற்றது. (அப்புதிய போக்கின் தாக்கம் "வானம்பாடி’ குழுவை உருவாக்கி கவிஞர்களின் கவிதை யிலும் சமீப காலமாக காணப் படுகிறது. இதற்கு உதாரண மாக மல்விகை வெள்ளி விழா மலரில் வெளிவந்த மு. மேத்தா அவர் களின் கவிதையினைச் சொல்லலாம்)
அப் புதிய போக்கானது *Gun’sự tồLumug.”ả (o Qp sớì cơ từ கையாண்ட புனைவியல் பார் குத் தன்மையினைத் துறந்து எளிமையான சொற்களின் இறுக் கத்தில், சூழல் தரும் அனுபவத் தின் வெளிப்பாடாகக் கவிதை மாற்றம் பெற்ற தன்மையினைக் கொண்ட தாக இருந்தது. (இதற்கு ஈழத்து தவீன தமிழ்க் கவிதையின் தாக்கமூம் ஒரு முக் கிய காரணமாகச் சொல்லலாம்) மேற் குறிப்பிட்ட போ க் கினை எடுத்துக் காட்டும் ஒரு கவிதைத் தொகுதியாக NCBH வெளியிட்டுள்ள தமிழகக் கவிஞர் ஹெச். ஜி. ரசூலின் ஜனகன மன" திகழ்கிறது.
ஹெ. ஜி. ரசூல் தமிழகத்து சிறந்த இலக்கியச் சஞ்சிகையான *தாமரை' யினூடாக இலக்கிய 6/6Trias a Giorg nigluaint. Ludi துறைகள் மீதான இவரது
9

Page 17
தேடல் - ஹைக்கூ கவிதையின் வரலாறு சர்ரியலிசக் கொள்கை யின் தாக்கம் நவீன தமிழ் க் கவிதையினைத் தாக்கிய முறை மற்றும் புதுக்கவிதையில் படிம த்தின் பங்கு போன்ற பல விட யங்கள் மீது இவரது பார்வை யும் கவனமும் விரிந்துள்ளன. இதற்கு ஆதாரங்களாக சமீப காலத் தாமரை' இதழ்களில் ஹெ. ஜி. ரசூல் எழுதி வரும் கட்டுரைகள் திகழ்கின்றன.
இத்தகைய தேடலுடன்
இவர் கொண்டிருக்கும் தத்து 6.Ju Lurrrif senenuu î6ör sntig syeronra இவரது கவிதைகள் சமூகத்தின் பலதரப்பட்ட பிரச்சினைகளை கருவாக்கியுள்ளன,
காந்தியம் முதற் கொண்டு இன்றைய சினிமா வரையிலான நிகழ்வுகள் மீது இவர் தனது கவி  ைத ப் பார்வையை முன் வைக்கிறார். அதனால் ரசூலின் கவிதைகள் வெறுமனே அழகி யல் புலம்பல்களாக அமையாது ஆழமான சமூக உணர்வுமிக்க படைப்புகளாக மலர்ந்துள்ளன
இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் காந்திய வகித்த பங்கும் அது இன்று மாற்றம் பெற வேண்டிய அவசியத்தை யும் இவர் உணர்கிறார்,
"ஊன்றி நடப்பதற்கல்ல. காந்தியின் கைத்தடி இனி நாம் ஓங்கிப் பிடிப்பதற்கு?
என இனங் காட்டுகிறார்:
தமிழ்ச் சமூகச் சூழலின்குறிப்பாக தமிழக மக்களின் உணர்வுகளை மழுங்கடித்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா ஒரு கலாசாரத்தின் மீதான
நோயாக காணும் பொழுது பின்வருமாறு கூறுகிறார்.
* 'L 1/riføsolaðuGu குருடாக்கும் - இந்த வெளிச்சங்கள்" என "பொய்முலாம் பூ சிய பெளர்ணமிகள்" எனும் கவிதை யைத் தொடக்கி இடையில்
*"அறிவியல் வெளிச்சத்தில் ஆவியாய்ப் போன மூட நம்பிக்கைகளுக்கு பல்லாக்குத் தூக்கும் படவியாபாரிகள்'
எனத் தொடர்ந்து
oetissir கலாச்சாரத் தேவியோ இப்பொழுது காலராக் காய்ச்சவில்
என முடிக்கிறார்;
இவ்வரிகள் முதலாளித்துவ
சமூக வெகுசன கலாசார வடி
வம் ஏற்படுத்தியுள்ள dF eup a di சிதைவைக் காட்டுகின்றது.
உலகம் அணு ஆயுதப் போரி னைப் பற்றிக்கொண்டிருக்கும் பயத்தினைப் போன்று இந்திய தேசியமும் இன்று தனது உள் வட்டத்தில் எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் மத -இன. மொழி வெறி கொண்டுTவரப் போகும் ஆபத்தினை எண்ணி பயந்து கொண்டிருக்கும் நிலை யினையும் ர குல் உணர்ந்துள் ளார்; அதனால் "மூக்குத்தி அழகி" எனும் கவிதையில் இவ் வாறான வ ரி களைச் சபைக் Somitt
"חLjub) u מLז326% משחק" பாபர் மசூதியா
பட்டி மன்றங்கள்

தென்னை மர மனிதன் வெட்டி எறியும் தேங்காய்க் குலைகளாய் பட்டப் பகலில் வெட்டி வீழ்த் கப்படும் மனிதத் தலைகள்"
இவ்வரிகள் இந்திய தேசியத் திற்கு வரப்போகும் ஆபத்தினை உணர்ந்து வந்துவிட்ட பயங் கரத்தைப் படிமம் செய்கின்றன. (ரசூலின் இவ்வுணர்வுக்கு ஆதா ரமாகிறது இவரது இத் தொகு திக்கான தலைப்பு)
தோழர் ரசூலின் படிமங்கள் வார்க்கும் பண்பில் ஒர் இறுக்க மும் கலித்துவமும் கலந்து சமூக படப் பிடிப்புகளாகத் திகழ்கின் றன. (எனது கூற்றினை நிரூப ணம் செய்கிறார், இத் தொகு திக்கு முன்னுரை வழங்கியுள்ளன தோழர் பொன்னீலன் அவர்கள்)
ஒரு கவிதைப் படைப்பாளி கொண்டிருக்க வேண்டிய சொற் சிக்கனத்தின் வீ ச்  ைச நன்கு இவர் உள்வாங்கியுள்ளார் என் பது நமக்கு அப் படப்பிடிப்புகள் உணர்த்துகின்றன. அதனால் தான் இவர் படைத்தளித்துள்ள ஹைக்கூகளும் இன்றைய தமிழ்க் கவிதை உலகில் எழுதப்படும் பெரும்பான்மையான ஹைக்சு கள் போல் அழகியல் தாலாட்
டுகளாக அமையாது விமூகத்தில்
மலிந்து கிடக்கும் முரண்பாடு களை பிரகடனப் படுத் து! ம் படைப்புகளாக ஆக்கம் பெற் றுள்ளன.
இக் சுற்றுக்கு உதாரணங் கள் பின்வரும் மூன்று ஹைக் பேசுகின்றன.
'பலன் பார்க்கும் ஜோசியக்காரன்
31
கூண்டுக்குள் கிடந்தது பசியோடு கிளி"
*கூடை நிறையப் பூக்கள் கூவி விற்றாள் பூக்காரி பரட்டைத் தலையோடு'
*கைகளில் முறுக்கு பொக்கை வாய்களோடு வாக்காளர்கள்'"
இவ் வா றாகத் தோழர் ஹெச். ஜி. ரசூலின் ஒவ்வொரு படைப்பும் இந்திய சமூகத்தின் முரண்பாடுகளையும் பிரச்சினை களையும் சொல்லுகின்றன. இத் துணை சிறப்புமிக்க படைப்புகள் அடங்கிய தொகுதியில் தொழில், நெற்றி, மத்தாப்புப் போன்ற கவிதைகளைத் தவிர்த்திருக்க லாம். ஏனெனில் இவற்றில் சில சவிதைகள் பல புதுக்கவிதையா ளர் ஏற் கன வே முன்வைத்த கருத்துச்களை முன்வைக்கின் றன. வேறு சில கவிதைகள் துணுக்குகளாக வெளிப்பட்டுள் Of
இவ்வாறான சிற்சில குறை களைக் கொண்ட சில கவிதை களை உட்கொண்டிருப்பினும்கவித்துவமிக்க - கலைத் துவம் மிக்க சமூக ப் பிரச்ஞைமிக்க நல்ல பல கவிதைகளை உள்ள டக்கிய ஒரு தொகு தி யா க 'ஜன கண மன தொகுதி நமக்கு கவிதா அனுபவத்தைத் தருவ
தன் மூலம் ஹ்ெச். ஜி. ரசூல்
என்ற ஆரோக்கியமான சிந்தனை கொண்ட கவிஞரை நமக்குத் தந்துள்ளது என்பது மறுதலிக்க முடியாத கலை, இலக்கிய நிகழ் வாகிறது.
()

Page 18
சோவியத் யூனியனிலிருந்து வெளிவரும் தமிழ், ஆங்கில நூல்கள், சஞ்சிகைகள்
எம்மிடம் கிடைக்கும்.
1. தத்துவார்த்த சோஷலிஸ் அரசியல் நூல்கள்
2. உயர் கல்விக்குத் தேவையான விஞ்ஞான, தொழில் நுட்ப,
அறிவு சார்ந்த பாட புத்தகங்கள். 3. ரளித்துச் சுவைக்கத் தகுந்த தரமான இலக்கிய நூல்கள்
4. சோவியத் யூனியன உள்ளும் புறமுமாய் அறிந்து வைக்கத்
தக்கதான மாதாந்த சஞ்சிகைகள்.
- இவை அனைத்தையும் எம்மிடம் பெற்றுக் கொள்ளலாம்.
உலகப் புகழ்பெற்ற படைப்பாளிகளான டால்ஸ்டாய், மாக்ஸிம் கார்க்கி, ஆண்டன் செகாவ் போன்ற எழுத்தாளர்களின் ஆக்கங்களும் நம்மிடம் உண்டு.
IfjöổỉI IÎTỡíJT6ùIIIÎ 6üIff. புத்தகசாலை. 15/1, பலாலி வீதி, யாழ்ப்பாணம்.
93,000? Youwasth :
124, குமரன் ரத்தினம் வீதி, கொழும்பு-2.
32
 

எழுத்து, எண்ணம், இயக்கம் - சில
சிந்தனைகள்
இந்தக் கட்டுரையை ஒரு குறிப்பிட்ட விஷயதானம் பற் றியதாக அடக்க நான் விரும்ப வில்லை. ஆகவே சுட்டுரைக்குரிய கட்டுக்கோப்புக்கள், வரையறுப் புக்குள் இது முடங்கி விடாது சுதந்திரமான எண்ணக் கோலங்க
ளாக விரிகிறது.
எழுத்துக்கு, எண்ணத்துக்கு, இயக்கத்திற்கு ஒரு வரைவிலக்க ணம், வரையறுப்பு, பொது விதி இருக்கவேண்டும். இவை காத்திர மானதாக, பயன்பாடுள்ளதாக இருக்கஇது தேவைதான். ஆனால்
இந்த வரைவிலக்கணங்களும், வரையறுப்புகளும் நியதிகளுமே ஒரு விலங் காக, சுமையாக,
தடைப் பொறியமைவாக மாறி விடப்படாது. பொதுத் தேவை யைப் பொறுத்து இந்த நியமங்கள் பேணப்படும் அதே போதில் இதே தேவையைப் பொறுத்து இவை வளர, விரிவடைய, மாற, மாற் றுப்பெற, சுயமான - கட்டுப்பா டற்ற வெளிப்பாட்டைப் பெற லாம்; பெறவும் வேண்டும்.
இதுபோலத்தான் இலக்கியம், சமூகம், வாழ்வு பற்றிய தத்துவங் கள், சித்தாந்தங்கள், கருத்துரு வங்கள் எக்காலத்திற்கும் ஒரே சூத்திரமாக, வாய்ப்பா டாக அமைய முடியாது; அமையவும் கூடாது. இதன் அர்த்தம் பழைய வரையறுப்புகள், சருதுகோள்கள், எண்ணட்டடி மங்கள் சைவிடப்பட
- பிரேம்ஜி
வேண்டும் என்பதல்ல; பதிலாக இவை இன்றைய தேவைக்கு ஏற்ப வளர்க்க, மாற்ற, புதுப்பிக்கட்பட வேண்டும்
பழையவற்றைப் போக்குவது புதியவற்றை புஷ்பிப்பது என்ற இந்த இயங்கியல் நிகழ்வின் முழுத் தேவையையும் முழுமையான அர்த்தமும் மனிதப் பெறுமானங் களை, மனித விழுமியங்களை முன்னெடுப்பதாகும், மனித சமு தாயத்தை கலாசாரத்தின். பண் பாட்டின், வாழ்க்கைத் தர்மத் தின், சமூக நெறியின் புதிய சிக ரங்களுக்கு, தொடுவானததுக்கு எடுத்துச் செல்வதாகும்.
இந்த வெளிச்சத்தில் புதிய நிகழ்வுகளை, புதிய மாற்றங் கிளை, புதிய திருப்பங்களைப் பார்க்கும்போதுதான் அவற்றின் தர்க்க நெறி, வரலாற்று நியதி தென்படுகிறது.
இன்று ஸ்தாபிதமான தத்து வங்கள் -மிகமிக முற்போக்கான, புரட்சிகரமான, விஞ்ஞான பூர்வ மான தத்துவங்கள் கூட அவற் றின் மாமூல் கட்டுமானங்களை, வரையறுப்புகளை, வரம்புகளை உடைத்துக்கொண்டு வெளிவரு கின்றன, பழைய சித்தாந்த முடி வுகள் மாற்றப்படுகின்றன, முன் னைய நடைமுறைகள் அடியோடு, திருத்திய மைக் கப்படுகின்றன
33

Page 19
புதிய சித் தனை புதுக்காற்று வீச ஆரம்பித்துள் ளன. பழையன கழிதலும் புதியன புகுதலும் புதுமைச் சித்தாந்தங் களுக்குக்கூட பொது நியதியாகி றது, பொதுத் தேவையாகிறது. புதிய சமுதாய அமைப்புகள்கூட காலப்போக்கில் ஒரு நிறுவனமாக மாறும்போது ஏற்படும் தேக்கங் களினாலும் ஸ்தம்பிதங்களாலும் மீண்டும் புரட்சிகர மாற்றங்களுக் குட்படும் தேவை தோன்றுகிறது.
இவை அனைத்தும் ஸ்தாபித மாகிவிட்ட பல கோட்பாடுகளை புதிய அனுபவ வெளிச்சத்தில் மீளாய்வு செய்யவேண்டியதன் அவசியத்தை முன்வைக்கின்றன. சமூக, அரசியல் கருத்துருவங்கள் மட்டுமல்ல, இலக்கியக் கோட் பாடுகளும் இந்த இயல்நெறிக்கு விதிவிலக்காக இருக்க முடியாது.
இவற்றுள் எழுத்தாளனின் நிலை, எழுத்தின் நிலைபாடு முக்கியத்துவம் பெறுகிறது. எந்த ஒரு இலக்கியமும், எந்த ஒரு எழுத்தாளனும் அடிப்படையில் வர்க்கச் சார்பு நிலையை எடுட்ப தும், ஏதாவதொரு வர்க்கத்தின் பக்கத்தில் கன் னை பிரித்துக் கொள்வதும் வர்க்க பேதமுள்ள சமுதாயத்தில் தவிர்க்கப்பட முடி யாத நியதிதான். இந்த வகை மாமூல் தத்துவத்தில் பிசகிருக்க முடியாது. ஆனால் இதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் அதே வேளையில், இதை ஒரு சூத்திர மாகவோ, வர்க்கரித்த பார்வை யாகவோ கொள்ளக் கூடாது. அப்படிக் கொள்வது ஆரோக்கிய மான சிந்தனை வளர்ச்சிக்கு, ஆக்கபூர்வமான இலக்கிய வளர்ச் சிக்குக் குந்தகத்தையே ஏற்படுத் தும். பாட்டாளி வர்க்கத்தின் உலகப் பார்வையை ஏற்றுக் கொள்ளாத, தம்மைப் புரட்சிகர வர்க்கத்துடன் இணைத் துக் கொள்ளாத ஏராளமான நல்ல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.
புஷ்பிதமாக , நல்ல கலைஞர்கள் இருக்கிறார்
கள். இவர்கள் புரட்சியின் பக்கம், தொழிலாளி வர்க்கத்தின் பக்க: வெளிப்படையாகவே தம் மை நிறுத்திக் கொள்ளவில்லை என்ப தால் இவர்கள் ஒன்றும் பெரிய தவறைச் செய்துவிடவில்லை, இவர்கள் படைக்கும் இலக்கியங் களோ - கலைகளோ த ர ம குறைந்து போய் விடவில்லை. உண்மையில் இத்தகைய எழுத் தாளர்கள், கலைஞர்கள் பலர் அற்புதமான கலைப் படைப்பு களைச் சிருஷ்டிக்கிறார்கள். இந்த ஆக்கங்கள் உயர் இலக்கி யப் பெறுமானங்களை உடைய வையாக இருப்பதுடன், உன்னத மான மானுட விழுமியங்களைக் கொண்டவையாகவும் உள்ளன, இவர்களின் படைப்புகளின் இலக் கிய நயமும் தரமும் உயர்ந்து நிற்பதுடன், இவற்றில் மானு டத்தை அதன் சகல கோலங்களி லும் தரிசிக்கவும் முடிகிறது. இத்தகைய படைப்பாளிகள் உயர் மதிப்புக்குரியவர்கள், பாராட் டுக்குரியவர்கள். இவர்களுடன் நெருக்கமான சிநேகிதம், நல்லு
ற்வு, ஒத்துழைப்பு எல்லா நிலை
களிலும் பவ்வியமாகப் பேணப் பட வேண்டும், வளர்க்கப்பட வேல் டும்.
பாட்டாளி வர்க்க நிலைப் பாட்டை எடுப்பவன்தான் மெய் யான படைப்பாளி, அத்தகைய இலக்கியங்கள் மட்டும்தான் உண் மையான இலக்கியங்கள் என்ற பத்தாம் பசலித்தனமாகிவிட்ட இலக்கியப் பார்வைகள் கைதுறக் கப்பட வேண்டும்,
இதனால் சுரண்டல் சமூ கத்தை எதிர்த்த வர்க்கப் போராட்டம், தொழிலாளி வர்க் கப் புரட்சி, இவற்றை அடிச்சர டாகக் கொண்ட புரட்சிகரமான, வர்க்க நிலைப்பட்ட இலக்கியங்க ளும் இலக்கியக் கோட்பாடுக ளும் கைவிடப்பட வேண்டும்
A.

என்று அர்த்தமாகாது. உண்மை யில் இவை மேலும் வலுப்படுத் தப்பட வேண்டும், கூர்மைப் படுத்தப்பட வேண்டும். ஆனால் அதே வேளையில் நல்லிலக்கியங் கள், இலக்கியப் பெறுமதியுள்ள படைப்புகள் எந்தக் கன்னையி லிருந்து வந்தாலும் அவை வர வேற்கப்பட வேண்டும். போற்றப் படவேண்டும் அவற்றின் சமூக இலக்கியப் பெறுமானங்களைச் சமுதாயம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இந்தப் பரந்த பண்பு, நலல தைப் போற்றும் உயர் உளப் பாங்கு பவித்திரமாகப் பேணப் படுவதும் விருத்தி செய்யப்படுவ தும் ஆரோக்கியமான கலை - இலக்கிய வளர்ச்சிக்கு இன்றி
யமையாத முன்தேவையாகும்.
பல அணிகளையும் சேர்ந்த எழுத்தாளர்களை அல்லது எந்த அணியையும் சேராத நல்ல எழுத் தாளர்களை மதிப்பது, கெளர விப்பது என்ற மேற் சொன்ன நிலைப்பாடு தர்க்க ரீதியாக எழுத்துச் சுதந்திரம், எழுத்தாள னின் படைப்புச் சுதந்திரம் என்ற கருத்துருவத்திற்கு இட்டுச் செல் கிறது.
எழுத்தாளனுக்கும் இலக்கி யத்துக்கும், கலை ஞ னு க் கும் கலைக்கும் சமூகப் பொறுப்பும் கடமைப்பாடும் உண்டு. இந்த அடிப்படை நியதி ஒரு படைப் பாளி - ஒரு கலைஞன் சுயபிரக் G0)(GHLII - SOILD 'து'நிறைநீேட் வேண் டும். எதை எழுதுவது, எபபடி எழுதுவது, என்ன கருப் பொருட் களைக் சுையாள்வது, @了@ST%öT மையக் கருத்தை முன்வைப்பது, ஆகிய இவை அனைத்தும் எழுத் தாளன் மீற முடியாத உரிமை கள், சுதந்திரங்கள். படைப்பாளி விமர்சகனுக்கோ, எந்த ஒரு அதி கார வர்க்கத்திற்கோ, சமுதாயத்
8.
பூரண சுதந்திரத்
தில் மேலதிகம் வகிக்கும் சக் திக்கோ கட்டுப்பட்டவனல்ல, அடங்கியவனல்ல. அவன் சுதந் திரமாகச் சிந்திக்க வேண்டிய வன். சுயமாகத் தன் படைப் பாற்றலை வெளிப்படுத்த வேண் டியவன். அவன் தர்மத்திற்கு மட்டுமே, தன் சொந்த மனச் சாட்சிக்கு மட்டுமேதான் கட்டுப் L-L-1-6Al aðI •
இத்தகைய எழுத்தாளனின் படைப்புகளில் முரணான கருத் துக்கள் இருக்கலாம், சில வேளை சமுதாயத்தின் முன்போதலுக்கு சாதகமற்ற சிந்தனைகள் இருக்க லாம். இவற்றை விமர் ச கன் விமர்சிக்கட்டும், படைப்பாளிக் குள்ள அதே சர்வ சுதந்திரத்து டன் விம்ர்சிக்கட்டும். ஆனால் எழுதுவதற்குள்ள, தன் மனச் சாட்சிப் பிரகாரம் தன் கருத் துக்களைப் பூரண சுதந்திரத்து டன் வெளிப்படுத்துவதற்குள்ள உரிமை யை யாரும் மறுக்கப் படாது, மறுக்கவும் கூடாது.
ஒரு படைப்பு உயர்ந்ததா இல்லையா என்பதை, சமுதாயத் தால் ஏற்கப்பட வேண்டுமோ இல்லையா என்பதைச் சமுதாயம் தான் தீர்மானிக்க வேண்டும், ரசிகர்கள் (மக்கள்) தான் முடி வெடுக்க வேண்டும், காலம்தான் தீர்ப்பளிக்க வேண்டும். இந்தக் கை ங் க ர் யத்தை அதிகாரிகளி டமோ (அவர்கள் யாராக இருந் தாலும்) விமர்சகர்களிடமோ விட்டுவிட முடியாது.
ஏனென்றால் விமர்சகர்களின் இ லக் கி யக் கோட்பாட்டார்க ளின், அதிகாரிகளின் கருத்து நிலைகள் மாறும்போது அவர்க ளின் 'மதிப்பீடுகளும" மாறுகின் றன. கோமோறா முதல் பஸ்டர் நாக் வரையிலான எழுத்தாளர் கள் பற்றிய "கணிப்புகள் மாறி யமை இதற்கு நல்லசாட்சியங்கள்.

Page 20
செழுமையான இ லக் கி ய வளர்ச்சிக்கு எழுத்தாளனின் படைப்புச் சுதந்திரம் அத்தியா வசிமா ன முன் தேவையாகும்.
எல்லாவற்றிற்கும் மேலாக நீதிக்காக, தர்மத்திற்காக உண் மைக்காகப் போராட அதாவது இலக்கியத்தின் ஆத்மாவான இந்த இலட்சியங்களுக்காகப் போரட இது அத்தியாவசியமான தாகும்.
எழுத்துச் சுதந்திரம் துஷ் பிரயோகம் செய்யப்பட்டால், கெடுதியான கருத்துக்கள் எழுத் துச் சுதந்திரத்தின் பேரில் முன் வைக்கப்பட்டால் அவற்றை நல்ல
கருத்துக்கள், உயர்ந்த கருத்துக்
கள் மூலம் எதிர்த்துப் போரட வேண்டுமேதவிர எதேச்சாதிராக முறைகளைக் கொண்டல்ல.
எதேச்சாதிகாரம் எந்தச் சமூக அமைப்பின் பேரில் செயற் பட்டாலும் அது இலக்கிய வளர்ச் சியின் எதிரி, சமூக சிந்தனையின் சத்துராதி.
“எனக்கு எழுதுவது என்பது உயிர்வாழ சுவாசிப்பது போன் றது" என்றார் றொமெ யின் றோலத்து. எழுத்தாளனுக் குச் சுதந்திரம் என்பது வாழ்வது போன்றது, இலக்கியத்திற்கு ஜீவிட்பது போன்றது.
எழுத்துச் சுதந்திரம் என்ற இந்த நிலை தர்க்க ரீதியாகவே கருத்துப் பன்மைக்கு இட்டுச்செல் கிறது. வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏதாவதொரு கருத்து மேலாதிக்கம் செலுத்துவ தாக இருக்கலாம். எந்த வர்க்கம் சமுதாயத்தில் மே லா தி க்க ம் செலுத்து கிற து என்பதைப் பொறுத்து இது அமைகிறது. ஆனால் எந்த வர்க்கம் ஆதிக்கம் செலுத்தினாலும் அந்த வர்க்கத் தின் அல்லதுஆளும்வட்டாரத்தின் கருத்துக்களுக்கு எதிராக மாற்
36
றுக் கருத்துக்கள் இருக்கவே செய்
கின்றன. எதிர் எதிர் வர்க்கங்க ளுக்கு இடையில் மீண்டுமல்ல, ஒரே வர்க்கத்திற்குள்ளேயே எதி ரான கருத்துக்கள் இருக்கின்றன. ஏனென்றால் வர்க்க வார்ப்பி லிருந்து மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாகச் சிந்திக் கிறான், பிரச்சினைகளைச் சுய மாக அணு கு கிறான். இது இயல்பு, மானுடத்தில் இயல்பு. அதுவே சிந்தனை ஜீவிகளால் எழுத்தாளர்களுக்கு, கலைஞர்க ளுக்கு மத்தியில் பல்வேறு கருத் துருவங்கள் இருப்பது தவிர்க்கப் பட முடியாதது, தவிர்க்ப்படக் கூடாதது. ஏனென்றால் பல்வேறு கருத்துகளுக்கு மத்தியிலிருந்து தான் நல்ல கருத்து முகிழ முடி யும். ஆகவேதான் சுதந்திரமாக வும் ஆக்க பூர்வமாகவும், சிந்தி யுங்கள் என்ற லெனினின் அழைப் பைச் செயற் படுத்துவதற்கு கருத்துப் பன்மை அவசியமாகி றது. ஆனால் இந்தக் கருத்துப் பன்மை கருத்துக் குழறுபடிக்கும், தேவையற்ற கருத்துச் சண்டைக் கும் இட்டுச் செல்வதாக இரா மல் உயர்ந்த - மேலும் உயர்ந்த கருத்துக்களின் தேடலுக்கான சமுதாயத்தின் கூட்டு முயற்சிக்கு களம் அமைத்துக் கொடுப்பதாக இருக்க வேண்டும்.
ஒரே கருத்துத்தான் சரியா னது என்பது மனித இயல்புக்கு மாறானது. முயன்றால், தேடி னால் மேலும் உயர்ந்த கருத்து முகிழமுடியும் என்பதுதான் அனு பவ உண்மை. இதனால்தான் காலம் ஒரே கருத்துருவத்தை நிராகரித்து வருகிறது. கருத்துப் பன்மை என்ற கருது கோ ள் காலத்தால் வாழ்வால் அனுப வத்தால் முன்வைக்கப்டுகிறது.
சமூகத்தால், அரசியல் உல கால் இன்று ஏற்படும் இந்தக்
கருத்துப்பன்மை என்ற கோட்
பாடு இ லக்கியக் களத்திற்கு

மேலும் கூடுதலாகத் தேவையான தாகும். நல்ல இலக்கியங்கள் - உயர்ந்த கலைகள் தோன்ற இது அவசியமானதாகும். ஒரே அச்சுப் படிய முறையை, சலிப்பும் வெறுப் பும் தரக்கூடிய இந்த முறையை விட்டு இலக்கியம் மானுடத்தின், மானுட உணர்வுகளின் முழுமைத் தோற்றங்களுடன் பூத்துச்சொரிய இது அத்தியாவசியமானதாகும்.
கருத்துப்பன்மை தன்னியல் பாகவே இன்னொரு நிலைக்குச் செல்கிறது. பல்வேறு கருத்துக் களைக் கொண்டவர்கள், கோட் பாடுகளை வரித்துக் கொண்ட வர்கள் ஒருவரை ஒருவர் மதிப்
Լմ:51, பரஸ்பரம் நல்லெண் ணத்தை, ந ல் லு ற  ைவ நல்லி சைவை, ஆத்மார்த்த பூர்வமான
ஒத்துழைப்பை வளர்த்துக்கொள் வது அவசியம்.
இந்த ஒத்துழைப்பு தனிப் பட்ட எழுத்தாளர்கள் கலைஞர் களுக்கு இடையில் மட்டுமல்ல, எழுத்தாளர் - கலைஞர் களின் நிறுவனங்களுக்கு இடையிலும் வியாபிதமுறை வேண்டும். தனித் தனி இலக்கியக்காரர்கள் இலக்கி யம்பற்றி, சமூகம்பற்றி, அரசியல் பற்றி தத்தம் சொந்தக் கருத்துக் களைக் கொண்டிருக்கட்டும். ஆனால் அதே நேரத்தில் தம்மை இணைக்கக்கூடிய பொதுப்பரப்பு களில் ஒன்றுபடட்டும். அதே போல எழுத்தாளர் ஸ்தானங்கள் இலக்கியம் பற்றி, சமூகம் பற்றி, அரசியல் பற்றி தத்தம் சொந்தக் கருத்துக்களைக் கொண்டிருக்கட் டும்; தம் சொந்த இலட்சியங் களை அடைய, இலக்குகளை ஈட்ட, வேலைத் திட்டங்களைச் செயற்படுத்தச் செயற்படட்டும். ஆனால் அதே வேளையில் பொது நோக்கங்களுக்காக, பொது நலன் களுக்காக, பொதுத் தேவைகளுக் காக புரிந்துணர்வுடன் ஒன்று பட்டுச் செயற்படட்டும். பிரிக்கும்
கரங்களுக்குள்ளே அல்ல, ஒன்று படுத்தும் கா ர னிங் க ரூ க்கு முதன்மை அளிக்கட்டும். ஆகவே தான் எழுத்தாளர்களினதும், இலக்கியக் காரர்களினதும், இலக் கிய ஆர்வலர்களினதும் அமைப்பு கள், சுதந்திரமான நிறுவனங்கள் பெருகட்டும். அப்போது இலக்கி யச் செயற்பாடுகள் நிச்சயம் அதி கரிக்கும். இது ஆரோக்கியமானது. ஆனால் இதற்காகப் போட்டிகள். பூசல்கள், சச்சரவுகள் காழ்ப் புணர்வுகள் அதிகரிக்கத் தேவை யில்லை.
எழுத்தாளர்கள், இலக்கிய அமைப்புகள் சு த ந் தி ர மா கச் செயற்படுவதும் ஒத்துழைப்பதும் சில பொதுப் பண்புகளைக் கோரி நிற்கின்றன. உயர்ந்தபட்ச சகிப் புத்தன்மை, மாற்றுக் கருத்துக் களைச் சில வேளைகளில் கண்ட
னங்களையும் மதிக்கும் மனப் பக்குவம், ஜனநாயகப் பண்பு, பரஸ்பரம் கெளரவித்தல், விட்
டுக் கொடுத்தல், இன்னிசைவான உறவு ஆகியனவே இவை.
இந்த ஆரோ க் கி ய மா ன நிலையை ஏற்படுத்த ஒரளவு சித் தாந்த சகவாழ்வு அவசியமாகி றது. இங்கு வர்க்க சமரசத்தைப் பற்றி யாரும் பேசவில்லை. சுரண் டல் வர்க்கத்திற்கும் சுரண்டப் படும் வர்க்கத்திற்குமிடையில் வர்க்க சமரசம் மட்டுமலல, சித் தாந்த சமரசமும் கூட இருக்க முடியாது.சுரண்டல்வர்க்கத்திற்கு தம்மை, தமதுஆத்மாவை வாட கைக்கு விடும் ஒரு சில எழுத்தா ளர்கள் இருக்கலாம், ஆனால் பெரும்பாலான எழுத்தாளர்கள் அவர்கள் உழைக்கும் வர்க்கத்தின் பக்கத்தில் அணிவகுத்து நிற்கா விட்டாலும் கூட சில பழ்மை வாதக் கருத்துகளைக் கொண்ட வர்களாக இருப்பினும்கூட இவர் கள் எந்த நிலையிலும், எந்தக் காரணத்திற்காகவும் எதிரிகள் அல்ல, மாறாக நண்பர்கள்,
37

Page 21
ஆத்மார்த்த நண்பர்கள். ஏனென் றால் இவர்கள் இலக்கியத்தை
நேசிப்பவர்கள், கலையை நேசிப்ப
வர்கள். இவர்களுடன் நிச்சய மாக சித்தாந்த சகஜ்வனம் அவ சியம். இவர்களின் கருத்துக்களில் சிலவற்றுடன் நாம் இம்போ தைக்கு உடன்படாவிட்டாலும் அவை சரியானவையாக இருக்க லாம். பின்னர் அனுபவத்தில் அவற்றை நாம் ஏற்றுக் கொள்ள வும் செய்யலாம். அதேபோல எமது கருத்துக்கள் பலவற்றுடன் அவர்கள் இப்போதைக்கு உடன் படாதிருக்கலாம். ஆனால் எமது கருத்துக்கள் ச ரி யா ன வையாக இருக்கும்பட்சத்தில், உயர்ந்த வையாக இருக்கும் பட்சத்தில் நாளைக்கு அவர்கள் அவற்றை ஏற்றுக்கொள்ளலாம். இந்த நிலை உருவாக ஒருவரை ஒருவர் மதிக்கவேண்டும். ஒருவர் கருத் துக்கு மற்ற வர் மதிப்பளிக்க வேண்டும். அது மட்டுமல்ல ஒரு வரிடமிருந்து மற்றவர் கற்றுக் கொள்ளவும் வேண்டும்.
இது பிறிதொரு நிலைக்கு இட்டுச் செல்கிறது. நாம் ஏற் றுள்ள தத்துவங்களோ அல்லது மற்றவர்கள் வரித்துக்கொண் டுள்ள தத்துவங்களோ வெறும் ஏட்டுச் சுரக்காய்கள் அல்ல, மன னம் செய்து ஒப்புவிப்பதற்கான வாய்ப்பாடுகள் அல்ல. கண்மூடித் தனமாகக் கடைப்பிடிப்பதற்கான வறட்டுச் சூத்திரங்கள் அல்ல. உண்மையில் நாமோ அல்லது பிறரோ ஒரு புதுவித அடிமைத் தனத்திற்கு - சித்தா ந் த அடி
மைத்தனத்திற்கு ஆளாகப்ப L-es Tigël • ஏனெனில் சித்தாந்தம் தேங்கிப்போவதில்லை, வாழ்வு
ஸ்தம்பிப்பதில்லை. அது வளர்கி றது, மாறுகிறது. புத்தாக்கம் பெறுகிறது. சித்தாந்தங்களும் இந்தப் பொது விதிக்குட்பட்டன வையே, வாழ்வின் எஜமானனாக
இருக்கவேண்டிய மனிதன் சித்
88
தாந்தத்தின் எஜமானனம்ாகவு இருக்க வேண்டும். இதுதான் புதிய சிந்தனை - புதிய அரசியல் சிந்தனை. முதலாவது சுதந்திர மாகச் சிந்திக்கவேண்டும். இரண் டாவது, ஆக்கபூர்வமாகச் சிந் திக்கவேண்டும். மூன்றாவது, புதிய அணுகுமுறைகளுடன் முழு மையாகச் சிந்திக்க வேண்டும்.
இலக்கிய உலகில் இந்த புதிய சிந்தனையின் ஒளியைப் பாய்ச்சி சில தரிசனங்களைப் பார்க்கலாம்.
ஒன்று; இலக்கியத்தில் உள் ளடக்கம் முக்கியமானதா உருவம் முக்கியமானதா என்பது.
இலக்கியங்கள் எல்லாம், உயர்ந்த இலக்கியங்கள் எல்லாம் ஏதோ ஒரு செய்தியைச் சொல்லு பவையாகவே உள்ளன. கம்பநாட் டாள்வானின் இராமாயணம் முதல் இளங்கோ அடிகளின் சிலப் பதிகாரம்வரை, கார்க்கியின் அன்னை முதல் பாஞ்சாலி சபதம் வரை எல்லா நல்லிலக்கியங்களி லும் இது பொதுப் பண்பாக மிளிர் கிறது. ஆனால் இவை இவற்றின் உள்ள டக் கத் தால் மட்டும் உயர்ந்து நிற்கவில்லை. அதியற் புதமான உருவச் செழிப்பும் இவற் றிற்குச் சிறப்புச் சேர்த்துள்ளன. இவை இரண்டுமே (உள்டக்கம் -- உருவம்) இவற்றின் மகோன்னத் துவத்தின் அடிக்கற்கள். இவை ஒன்றை ஒன்று நிராகரிப்பதில்லை. மாறாக ஒன்றுக்கு ஒன்று உறு துணையானவை. ஒன்று ஆத்மா, மற்றது உடல். உன்னதமான ஆத்மா மட்டும் போதாது. அந்த உன்னதமான ஆத்மா உறையும் உ ட லும் உன்னதமானதாக இருக்கவேண்டும், அப்போது தான் இலக்கியம் அதன் சமூக கடமையை, வரலாற்றுப்பணியை நிறைவு செய்யும் கருவியாக முடி ԱվւՔ.

இரண்டாவது: பழமையும் புதுமையும் பற்றியது. பழைய வற்றை, காலாவதியாகிவிட்ட வற்றை, பழைய சமூக அமைப்பை அப்படியே பேண விரும்புவர்க ளுக்கும் புதியனவற்றை, புதிய சமுதாய அமைப்பை ஜனிக்கச் செய்ய விழைப்பவர்களுக்குமிடை யில் நீண்ட, உக்கிரமானபோராட் டம் காலா காலமாக நடந்து வந் திருக்கிறது. காலத்துக்கொவ்வா தவை, காலத்தின் ஒட்டத்தைத் தடுத்து நிற்பவை நிச்சயம் தகர்க் கப்படவேண்டும். புதியன புக வேண் டும். இதில் இரு கருத்துக் துக்கள் இருக்க முடியாது. ஆனால் பழயவை எல்லாம் காலாவதியாகி விடுவதில்லை. பிற்போக்கான வையாகிவிடுவதில்லை. அவை ஒழிக்கப்படவேண்டியவை அல்ல. அதேபோலப் புதியனவெல்லாம் முற்போக்கானவையாகி விடுவ தில்லை, நல்லவையாகி விடுவ தில்லை. ஆக வரவேற்கப்பட வேண்டியவை அல்ல. மார்க்ஸி ஸத்தை காலாகாலமாக வரும் மனித அறிவின் ஒட்டு மொத்தம் என்றார் லெனின், இந்த மனித அறிவு தன்னுள் ஒப்பரிய விழுமி யங்களைக் கொண்டு ஸ் ளது, நிகரற்ற பெறு மா ன ங் களைக் கொண்டுள்ளது. இவை அனைத் தும் கையேற்கப்பட வேண்டும். நல்லதனைத்தும் வாழவேண்டும். அதேவேளையில் புதியனவற்றுள் உள்ள தப்பானவை, சமூகச் சீர் கேடானவை (தனிநபர் வழிபாடு முதல் அரசியல் எதேச்சாதிகாரம் வரை) ஒழிக்கப்பட வேண்டும். பழமையிலும் புதுமையிலுமுள்ள மானுடப் பெறுமானங்கள், ஜன நாயகப் பண்புகள், சீ ரா ன வாழ்க்கை முறைகள் முன்னெடுத் துச் செல்லப்பட வேண்டும்.
இலக்கியத்திற்கும், இலக்கிய மரபுகளுக்கும் இது பொருந்தும், மூன்றாவது: இனத் தேவை களில், தேசியத் தேவைகளில்
89
மானுடத் தேவைகளில் எதற்கு மு த லிட ம் அளிப்பது என்பது. இனத்தையும் தே ச த் தை யும் (நேஷன்) மானுடத்தையும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாது, ஒரு இனம் ஒடுக்கப் படும்போது அங்கு அந்த இனம் மட்டுமல்ல, முழுத் தேசமுமே, முழு மானுடமுமே ஒடுக்கப்படு கிறது. தேசம் நசியும்போது இன மும் மானுடனும் ந லி கிற து. மானுடம் அழியும்போது இனமும் தேசமும் பாழாகிறது. ஆக, இனத் தின் உரிமைக்காகக் குரல் கொடுக்
கும் இலக்கியம் உண்மையில் மானுடத்தின் குரலையே ஒலிக்கி றது. மானுடத்திற்காக குரல்
எழுப்பும் இலக்கியம் ஒவ்வொரு இனத்தினதும் ஒவ்வொரு தேசத் தினதும் சுதந்திரத்திற்காக, சமத் துவத்திற்காக, சகோதரத்துவத் திற்காகவே கு ர ல் தருகிறது. அனுபவம், போராட்ட அனுபவம் அதை ஊர்ஜிதம் செய்கிறது.
நான்காவது; வர் க்க மு ம் வர்க்கப் போராட்டமும். இது பற்றிய பிரஸ்தாபம்தான் பெரு வாரி எழுத்தாளர்களை, ஜனங் களைப் பிரித்து நிற்கிறது, வர்க் கப் பிரிவினை யு ள்ள. ஆகவே வர்க்க முரண்பாடுள்ள ஒரு சமு தாயத்தில் வர்க்க நிலைப்பாடும் வர்க்கப் போராட்டமும் தவிர்க் கப்பட முடியாதவை. ஒடுக்கப் படும் வர்க்கம் ஒடுக்கும் வர்க்கத் தைக் தூக்கியெறிந்துவிட்டு தனது விடுதலையை, விமோசனத்தை ஈட்டிக்கொளஞம். இது வரலாறு= சமுதாய விதி.
ஆனால் இந்த வர்க்க நிலை, வர்க்கப் போராட்டம் காலத்திற் குக் காலம் தே  ைவ  ைய ப் பொறுத்து புதிய அர்த்தத்தை, புதிய பரிமாணத்தைப் பெறுகி றது. முழு மனிதகுலமும், அதன் நாகரிகமும் பூண்டற்றுப் போகக் கூடிய நியூக்கிலியர் சகாப்தத்தில் வர்க்கப் போராட்டம் அதன்

Page 22
முன்னைய வீச்சைச் சற்றுத்த ளர்த்தி மானுடத்தை - மானுட இனத்தைக் காக்கும் பணி க்கு முதன்மை முக்கியத்துவம் கொடுக் கிறது. சர்வாதிகாரத்தை, எதேச் சாதிகாரத்தை, அகற்ற, தவிர்க்க ஜனநாயகப் போராட்டத்திற்கும், ஜனநாயக சக்திகளின் ஐக்கியத் திற்கும் அது முதவிடம் தருகிறது. தேசிய, தேசிய இன ஒடுக்குமுறை களை எ தி ர் த் த போராட்டம் நடக்கும் இடங்களில் அது விடு தலைப் போராட்டத்திற்கு வழி விட்டு நிற்கிறது. LIDIT 63)) | -- Li பெறுமானங்கள், மனித மதிப்பு கள், மானுடத்துவப் பொதுத் தேவைகள் காக்கப்படும் தேவை அவசியமாகும் போது அது இவற் றிற்கு முன்னுரிமை வழங்குகிறது. ஆக, காலத்தின் தேவையைப் பொறுத்து வர்க்க நிலைபாடுகள் வறட்டுத்தனமாகத் திணிக்கப் படாமல் பொதுத் தேவைகள் முன் வைக்கப்படுவதும், இவற்றிற் காக எல்லாச் சமூக - அரசியல் இலக்கிய சக்திகள் ஐக்கியப்படுவ தும், இன்று சாத்தியமாகியுள் ளது. எனவேதான் பொதுத் தேவைகள் முகிழும் இடங்களில் வர்க்கப் பார்வை, வர்க்க நிலை பாடு ஆரோக்கியமான சக்திகனை தொடர்ந்தும் பிரித்து வைக்கத் தேவையில்லை.
இந்த கோட்பாட்டு நிலை அல்லது புதிய அரசியல் சிந்தனை மார்க்ஸிஸ்ட்டுகள் மார்க்ஸிஸ்ட் அல்லாதவர்கள், மார்க்ஸியத்தை ஏற்கும் எழுத்தாளர்கள், அதை
ஏ ற் கா த எழுத்தாளர்களுக்கு மிடையிலான உ ற வு களு க் கு மிடையிலான உறவுகளுக்கும்
இடைச் செயற்பாடுகளுக்கும் முற் றிலும் பொருந்தும்.
எழுத்தாளர்களை அண்மைக் காலத்தில் பிரித்துநிற்கும் காரணி களுள் ஒன்றாக ஒரு புறம் படைப் பாளிகளுக்கும் மறுபுறம் விமர்ச கர்கள் ஆய்வறிவாளிகளுக்குமி
திரத்துடனும்,
டையிலான ஆரோக்கியமற்ற உறவு தலைதூக்கியுள்ளது. உண் மையில் இது பிரச்சினையே அல்ல. படைப்பாளிக்கும் விமர்சகன் ஆய் வறிவாளிக்கும் இடையில் அடிப் படை மு ர ண் பா டு எதுவும் இல்லை. அப்படி சில இரண்டாம் பட்ச முரண் நிலைகள் உதித்தா லும் அவை நேசபூர்வமாகத் தீர்க் கப்படவேண்டியவை. படைப் பாளி விமர்சனர்களுக்கோ அல் லது வேறு யாருக்குமோ கட்டுப் பட்டவனல்ல, அவன் எவருக்குமே பயப்படத் தேவையில்லை. அவன் விமர்சனர்கள் பற்றிய பிரக் ஞையே இல்லாமல், தனது படைப்பு தனது மக்கள் பற்றிய ஒரே பிரக்ஞையுடன் தன் படைப் புகளை சிருஷ்டிக்க வேண்டியவன். தனது படைப்புகளின் உள்ளடக் கத்தை, உருவ அமைப்பைத் தீர் மானிப்பதில் அவன் யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை - நற்சான்று பெறத் தேவையில்லை. அவன் சுயமாகவும், சர்வ சுதந் ஆனால் இதயத் தூய்மையுடனும் ஆத்ம சுத்தியுட னும் தனது படைப்புகளை ஆகக வேண்டியவன்.
அதேபோல விமர்சகனும் யாருக்கும் அ ஞ் ச த் தேவை யில்லை, யாருக்கும் இசைந்து போகத் தேவையில்லை, ஒரு இலக்கியப் படைப்புப் பற்றி, அதன் உள்ளடக்கம் - உருவப்
பெறுமானங்கள் பற்றி சர்வ சுதந் திரத்துடனும் தனது கருத்துக் களைத் தெரிவிக்க கடமைப் பட்டவன். அவனது நோக்கம் இலக்கியத்தின் தரத்தை உயர்த்து வது, உள்ளடக்கத்திற்கு வலு வூட்டுவது, திறமை அது எங்கிருந் தாலும் - எந்த அணியில் இருந் தாலும் அதை இனம்கண்டு அதன் பூரண மலர்ச்சிக்குத் துணை நிற் L-1ğ5I , எழுத்தாளனதும் அதே போல வாசகனினதும் அறிவுப் பரப்பை விசாலிக்கச் செய்வது,
40

படைப் பா ஸ்ரீ பெரும்பாலும் உணர்வுஜீவி. விமர்சகனோ அடிப் படையில் அறிவு ஜீ வி. இந்த இரண்டு நிலையும் மு ர ணா ன தல்ல. மாறாக ஒன்றுக்கொன்று உடன்பாடானது, உறுதுணையா னது. மானுடத்தின் அக உலகைத் தரிசிக்கப் படைப்பாளி உதவு கிறான். மனித வாழ்வின் சிக்கல் களை, பிரச்சினைகளை, தீர்வு மார்க்கங்களை அறிய விமர்ச கன் உதவுகிறான். இதில் பெரிது சிறிது என்பதற்கிடமில்லை. இரு சாராரும் சமுதாயப் பணியில் - இலக்கியப்பணியின் இருவேறு கட மைகளை நிறைவேற்றுகிறார்கள்.
ஆனால் எவ்வாறு படைப் பிலக்கியம் தனிப்பட்ட கோப தாபங்களை, குரோதங்களைக்
கணக்குத் தீர்க்கப் பயன்படுத்தப் படாதோ அதேபோல விமர்சன மும் கோஷ்டி நோக்கங்களுக் காக, தனிப்பட்ட குரோத விரோ தங்களுக்காக உபயோகிக்கப்படக் கூடாது. இ லக்கிய த் தைப் போலவே விமர்சனக் கலையும் தர்மம், நேர்மை, சத்தியம் என்ற பண்புகளை பவித்திரமாகப் பேண வேண்டும். நடு நிலை ப் பண்பு தனிப்பட்ட குரோ த ங் கள், காழ்ப்புகள் அற்ற) பேணப்படு வது அவசியம். இந்த நல்லிலக்கி யப் பண்புகள் பேணப்பட்டால் இந்தச் சச்சரவுகளுக்கு, முரண் பாடுகளுக்கு இடமிருக்காது
ஒட்டுமொத்தமாக, முக்கிய மானது, பிரதானமானது, முதன் மையானது மனிதப் rொறுமானங் களாகும். மனித விழுமியங்களா கும், மானுடத்தின் வாழ்வும் வெற்றியுமாகும்.
இந்த மானுடப் பதாகை மனிதத்துவ வாதம் எல்லா நல்ல எழுத்தாளர்களினதும் கலைஞர் களினதும், மனிதர்களினதும் பொதுத் துவஜமாக - பொதுப் பதாகையாக மாறலாம், மாற வேண்டும். ()
41
காடு
- ീഖ്
ஆம் மனதில் வேரூன்றிவிட்ட அடர்ந்த காடுகள் அங்கே அவை அடிக்கடி உன்னை நினைவூட்டும்.
அந்த -
மரஞ்செடிகள் மலர்கள் அனைத்திலும் என் காதலில் பதிவு
என் உச்சி முகர்தலின் சுகானுபவமாக காட்டு மண்ணின் சுகந்தம்.
உன்னிலிருந்து பிரித்துப்பார்க்க முடியாத ஓர் நேசப் பிணைப்பு
ஞாபகங்களை வாழவைத்த அவற்றிற்கு நன்றி கூறி மெளனத்தை முடித்துக்கொள். மீண்டும் ஒருமுறை பேசிக்கொள்வோம் ,
தாமதத்தை தவிர்த்துக்கொள் பின்னால் வருந்த நேரும் நிமிஷங்களின் கரைவும் இடை வேளையின் இடைவெளியும் எனக்கு மட்டுமே புரியும்.

Page 23
சோவியத் யூனியனில் தமிழ் ஆராய்ச்சி
கே. நீலகண்டன்
இந்திய மொழிகளின் பாலும், இந்தியக் கலை, கலாசாரத் தின்பாலும் சோவியத் யூனியன் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதை நாம் அறிவோம். இதில் தமிழ் ஆராய்ச்சி முக்கிய இடம் வகிக்கிறது. தமிழ் எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் ரஷ்ய மொழியிலும் இதர சோவியத் மொழிகளிலும் வெளிவந்துள்ளன.
சோவியத் நாடு முழுவதிலும் பாரதி நூற்றாண்டு விழா மாபெ ரும் அளவில் கொண்டாடப்பட்டது. மாஸ்கோ அரசினர் பல்கலைக் கழகத்தின் ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் ஆய்வுக் கழகத்தில் தமிழ்மொழி கற்பிக்கப்படுகிறது. நெடு நாட்களுக்கு முன்பே தமிழ்-ரஷ்ய, ரஷ்யதமிழ் அகராதிகள் வெளியிடப்பட்டன. காலஞ்சென்ற சோவியத் தமிழறிஞர் டாக்டர் ரூதின் அவர்கள் தமிழ் ஆய்வுகளுக்கு ஆற்றிய பங்குப் பணியை தமிழ் நாடும், உலகமும் நன்கறியும். மாஸ்கோ வானொலி நாள் தோறும் தமிழ் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகிறது. மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகம். ராதுகா பதிப்பகம் ஆகியவை தமிழில் வெளியிடும் நூல்கள் தமிழ்நாட்டில் புகழ்பெற்று விளங்கு கின்றன.
தமது வாழ்க்கையை தமிழ் மொழிக்கு அர்ப்பணித்துக் கொண் டுள்ள சோவியத் தமிழறிஞர் டாக்டர் அலெக்சாந்தர் துபியான்ஸ்கி தற்போது தமிழகம் வந்திருக்கிறார். தமது ஆய்வுப் பணிகளைத் தொடர சென்னைப் பல்கலைக் கழகத்துக்கு அவர் வந்திருக்கிறார். சோவியத் யூனியனில் நிகழ்ந்து வரும் தமிழ் ஆய்வுப் பணிகள் குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:
* 196 -ல் தான் நான் முதலில் தமிழ் பயில ஆரம்பித்தேன். தமிழ் பக்திக் கவிதைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தியத் தத்துவம் பற்றி இவர் ஒரு நூல் எழுதியிருக்கிறார். அங்கு பயின்ற பிறகு 1970ல் இவர் பிஎச்.டி வகுப்பில் சேர்ந்தார். பழந்தமிழ் இலக்கியத்தை ஆராய்வது என்று முடிவுசெய்தார். "எனது ஆய்வுரைக்கு அகநானுாறு இலக்கியத்தை குறிப்பாக முல்லைத் திணையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். தமிழர்களின் கலாசாரப் பின்னணியுடனும், சடங்கு களுடனும், புராண வாழ்க்கையுடனும் இலக்கியத்துக்குள் உறவை நான் ஆய்வு செய்தேன். பழந்தமிழ்ப் படல்களின் சடங்கு மற்றும் புராண இலக்கிய வேர்கள் என்ற தலைப்பில் அண்மையில் நான் எழுதி வெளிவந்துள்ள நூலில் இந்தக் கருத்தைவிளக்கிக் கூறியிருக்கிறேன்". எனது தமிழ் ஆராய்ச்சிக்கு மறைந்த டாக்டர் ரூதின் அவர்கள் பேருதவி புரிந்தார். அவரிடத்திலும் நான் சிறிது காலம் பயின்றேன். எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களுடனும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துடனும் அதிக ஒத்துழைப்பு வள ரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். «
"தமிழ்த் தென்றலை சுவாசிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இங்கு தங்கியிருக்கும்போது எனது பேச்சுத் தமிழ் ஆற்றலை வளர்த் துக்கொள்ள முடியும் என்று நம்புகி றன்" எனத் தனது தமிழக வருகை குறித்து டாக்டர் துபியான்ஸ்கி கூறினார்.
(மாஸ்கோவில் எனக்கு மொழி பெயர்ப்பாளராக இருந்து பேருதவி புரிந்தவர் இவர். - டொமினிக் 6بعIT . ( 42

நானும் எனது நாவல்களும்
7
ஆக்கவிலக்கியங்கள் பொது வாக இரு பண்புகளைக் கொண் டனவாக அமைந்திருக்கின்றன வென இலக்கிய விமர்சகர்கள் கணிப்பர். சமூகக் கட்டுப்பாடுக ளுள் நின்று, கலாசாரம், விழு மியங்கள் என்பனவற்றிற்குக் கட் டுப்பட்டு, ஆக்கப்படுவன. ஒரு வகை சமூகக் கட்டுப்பாடுகளி லிருந்து விலகும் வேட்கையோடு கதாமாத்தர்களைப் படைத்து ஆக்கப்படுவன இன்னொரு வகை யானவை. முன்னவை சமூக வாழ் க்  ைக எப்படியிருக்கிறது என்பதை யதார்த்தமாக விபரிப் பன. பின்னவை சமூக வாழ்க்கை இப் படி யிருக்கவேண்டுமென இலட்சியம் பேசுவன. எனது நாவலான 'வாடைக்காற்று" முன்வகையினதாக அமைந்ததால் தான், திரைப்படமாக்கத் தக்க கதையென நாடகக் கலைஞர் ஏ. ரகுநாதன் முடிவுசெய்தார் போலும்.
அவர் எ ன் னை த் தே டி ச் செட்டிகுளம் வந்தார்.
"தங்களது அபூர்வப் படைப் பான (நான் சொல்லவில்லை) வாடைக்காற்று நாவலை த் திரைப்படமாக்கும் உரிமை எங் கள் சந்திரோதயா பிலிம்ஸ்சிற் குத் தரவேண்டும், நாவலின் கதைக்கும், பாத்திரங்களுக்கும் ஊறு விளைவிக்காத விதத்தில் படமாக்கித் தருவேன்." என்றார் ரகுநாதன். அவ்வேளை செம்பி யன் செல்வனும் அங்கு கூட என்னுடன் இருந்தார்.
A8
செங்கை ஆழியான்
அது ஒர் ஒய்வு நாள் என நினைக்கிறேன். செட்டிகுளத்தின் காரியாதிகாரியாக அவ்வேளை நான் இருந்தேன், அப்பிரதேசம் பொலீசார் கடமையாற்றாப் பகு. தியாகையால் நானே பொலிஸ் அ தி கா ரம் கொண்டவனாக இருந்தேன். குற்றம் செய்தவர் களைக் கைது செய்வதும், நீதிபதி முன் கொண்டு சென்று வழகு நடத்துவதும், நிர்வாகக் கடமை யோடு இணை ந் த அதிகாரக் கடமையாகவிருந்தது. திரு. ரகு நாதன் வந்த அன்று, காட்டு யானை ஒன்றினை எவனோ துப்பாக்கியால் தட்டுக் கொன்று விட்டதாகவும், யானையின் சடலம் காட்டில் கிடப்பதாகவும் தகவல் வந்தது. நான் எனது அலுவலர்களுடன் ஜீப்பில் ஏறிச் சம்பவம் நடந்த இடத்திற்கு விசாரணைக்காகச் சென்றேன். கூடவே அன்பர் ரகுநாதன், நண் பன் செம்பியன் செல்வனும் வந் தனர்.
காட்டினுTடாகப் பயணம் செ ய் யு ம் போது, 'வாடைக் காற்றை எப்படிப் படமாக்குவ தென ரகுநாதன் விபரித்தார்." அவருடைய கற்பனையும் திறனும் எனக்குத் தி ரு ப் தி தந்ததால், வாடைக்காற்றினைப் படமாக் கும் உரிமை அவருக்குத் தர நான் சம்மதித்தேன். வாடைக்காற்
றிற்குக் கதை வசனம் எழுதும்
பொறுப்பினைக் கூட்டாக செம். பியன் செல்வனும் நானும் ஏற் றுக்கொண்டோம்.

Page 24
வாடைக்காற்றின் திரைக் கதை வசனத்தைச் செம்பியன் செல்வன் எழுதினார். நான் அவற்றினைப் பார்வையிட்டு, எனது நாவலில் இடம்பெற்ற சம்பாசணைகளை இடை யி ல் பொருத்தமாகச் சேர்த்தேன். "திரைக் கதை வசனம்" என்று அந்தப் பிரதியைச் சொல்வதி லும், திரைப்படத்தின் ஒவ் வொரு காட்சியையும், அமைப் பையும் இயல்பான பாத்திர அசைவையும் தத்ரூபமாகச் சித்தி ரித்த, அற்புதமான "ஸ்கிரிப்ட்” ஆக அதனைச் செம்பியன் செல் வன் தயாரித்திருந்தார். இந்த * ஸ்கிரிப்ட்'டின்படி தயாரிக்கில் இயக்குநருக்கு அவ்வளவு பாரிய வேலை இல்லை எனலாம்,
திரைக்கதை வசனம் ரகு நாதனிடம் கையளிக்கப்பட்டது. திரைப்படக் கூட்டுத்தாபனத் திடம் அனுமதிக்காக விண்ணப் பிக்கப்பட்டது. அப்படத்தின் தயாரிப்பாளர்களக ரகுநாதன் இருவரைத் தேடிப்பிடித்தார். நடிக, நடிகைகளை ஒப்பந்தம் செய்துகொண்டார். கலையரசு சொர்ணலிங்கம் அப்படத்தில் "பொன்னுக் கிழவராக நடிப்ப தாகவிருந்தார்.
இருந்தாற்போல ஒருநாள் *கமலாலயம் மூவிஸ்" என்ற படக் கம்பனியின் உரிமையாளர் ஏ, சிவநாதன், மற்றவர் அக் கம்பனி
யின் இன்னோர் உரிமையாள
ரான பொ. சிவசுப்பிரமணியம்.
"திரைப்படக் கூட்டுத்தாப னம் உங்களுடைய வாடைக் காற்று ஸ்கிறிப்ட்டிற்கு "ஏ" கிறேட் இட்டுள்ளது. இதுவரை த ங் களு க் கு வந்த எல்லா ஸ்கிரிப்ட்டிலும் பார்க்கச் சிறந்த தெனப் பா ரா ட் டி யு ள் ளது. கூட்டுத்தாபனம் முழுக்க இதுவே கதை, நிச்சயம் நீங்கள் பெரு மைப்படலாம்." என ரகுநாதன் அறிவித்தார்.
- "அப்பெருமை செம்பியனுக்
குரியது," என்றேன்,
கலாலய மூவிஸ் சிவதாசன், தான் வாடைக்காற்றினைத் தயாரிப்பதாகக் கூறி னா ர். ர கு நா த ன் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் தெரிவித் தார். அதனால் என்னுடன் கதைக்காக புதிய ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள வந்திருப்பதா கத் தெரிவித்தார். ரகுநாதன் முன்னிலையில் செய்து கொண் டோம்.
ஆறுமாதங்கள்கழிந்தன. ரகு நாதனின் கவலைக்குரிய கடிதம் வந்தது. அதில் 'கமலாலயம் பிலிம்சாருக்கு வழங்கவேண்டா மென எழுதியிருந்தார். பின் னர்தான் எனக்குக் காரணம் புரிந்தது. வாடைக்கர்ற்றின் கதாபாத்திரங்கள் தெரிவில் ரகு நாதன் விலக்கப்பட்ட சங்கதி. என்னால் எதுவும் செய்ய முடிய வில்லை.
கமலாலயம் மூவிசாரே பட
மாக்கினர். ஏ. இ. மனோகரன், ச ந் தி ர க லா, இந்திரகுமார், 5。 எஸ். பாலச்சந்திரன்,
ஆனந்தராணி, ஜவாகர் போன்ற
நடிகர்கள் நடித்தனர். படம் பேசாலையில் படமாக்கப்பட் l-gil
படம் திரையிடப்பட்டபோது, கதை: செங்கை ஆழியான். திரைக் கதை: கே.எம். வாசகர், வசனம்: செம்பியன் செல்வன் என அதில் இடப்பட்டிருந்தது. வானொலி நாடகத் தயாரிப்பில் அக்கால கட்டத்தில் கே. எம். வாசகர் புகழ் பெற்றிருந்தார். "ஏ" தகுதிபெற்ற திரைக் கதைக்கு அவர் பெயர் செருகப்பட்டதைப் பெரும் சந்தர்ப்பமாகக் கருது வோம்.
ஈழத்துத் திரைப்பட வர
லாற்றில், குறிப்பாகத் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் வாடைக்
44

காற்று பெரிதும் வித்தியாசமான படமாக அமைந்தது. பலரினதும் பாராட்டைப் பெற்றது. இலங் கையில் பல தடவைகள் திரைப் பட விழாக்களில் கலைஞர்களுக்
குக் காட்டப்பட்டது.
அ வ் வேளை இந்தியாவி லிருந்து இலங்கைக்குத் தனது நாடகக் கம்பனியுடன் வந்திருந்த தென்னிந்தியத் திரைப்பட நடிகர் “மேஜர் சுந்தரராஜன் இந்தத் திரைப் படத்தினைக் கொழும் பில் பார்க்க நேர்ந்தது. அவர் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது என்னைச் சந்திக்க வேண்டுமென வி ரு ப் ப ம் தெரிவித்திருந்தார், அவரைச் சென்று சந்தித்தேன். 'வாடைக்காற்றினை'த் தான் இந்தியாவில் மீண்டும் தயாரிக்க முயலப்போவதாகக் கூறினார், அந்தப் புத்தகத்தில் ஒரு பிரதி தருமாறு கேட்டுக்கொண்டார். கதையையும், யும் பாராட்டினார்.
மேஜர் சுந்தரராஜன் எடுத் துச்சென்ற நா வ லை என்ன செய்தார் என்பதோ, அவர் பார்த்து ர சித் த ரசனையை என்ன செய்தார் என்பதோ எனக்குத் தெரியாது. ஆனால், தென்னிந்தியப் படவுலகில் முன் னணி இயக்குநர் கே. பாரதி ராஜாவின் கல்லுக்குள் ஈரம்" என்ற படத்தைப் பார்க்க நேர்ந் தது. எவ்வளவு அற்புதமாக வாடைக்காற்று திருடப்பட்டி ருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. வாடைக் காற்றில் இரண்டு மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக ஒரு கிராமத் திற்கு வருகிறார்கள். கல்லுக்குள்
ஈரத்தில் இரு வாலிபர்கள் ஒரு கிராமத்திற்குத் திரைப்படம் பிடிப்பதற்காக வருகிறார்கள். அக்கிராமத்தில் வாடைக்காற்
றில் வருவதுபோல இரு பெண் கள். வாடைக்காற்றின் வித்தி யாசமான பாத்திரமான கையில்
திரைப்படத்தை
கூர் ஈட்டி ஏந்திய விருந்தாசலம், கல்லுக்குள் ஈரத்திலும் கூர்ஈட்டி யுடன் வருகிறான். பால் உணர்வு பிறழ்ந்த சண்முகம் இங்கும் வரு கிறான். அதே கதை. அதே சம் Gib5 G. ܫ - பாரதிராஜா தயாரித்தி ருந்தார்.
யாரிடம் முறை யி டு வ து இந்த மோசடியை?
வாடைக்காற்று நாவல் அப் படியொன்றும் அற்புதமான படைப்பு அன்று. ஆனால் அது விபரித்த சம்பவங்கள், அது விப ரித்த மீன்பிடி விபரங்கள், அது விபரித்த இயல்பான சமூக விழு மியம், அது விபரித்த பகைப் புலம், அது விபரித்த மனித நடத் தைகள் அந்த நாவலிற்கு வாசக ரிடையே விதந்துரைக்கப்படும் புகழ் ச்சியினை ஏற்படுத்தின. அ த னா ல் தா ன் போ லும், 17 - 10 - 79.6) உடுகம்பொல விகாராதிபதி வணக்கத்திற்குரிய எம். ரத்னவன்ஸ் தேரோவிடமி ருந்து எனக்கொரு கடிதம் வந் திது.
*.என்னைப்பற்றி நீங்கள் ஏ ற் கன வே அறிந்திருப்பீர்க ளென நினைக்கிறேன். என்னைப் பற்றிய மேலதிக விபரங்களை திரு. டொமினிக் ஜீவாவிடம்
அறிந்து கொள்ளலாம். இதனை
தற்போது நான் உங்களுக்கு எழுதும் நோக்கம், தங்கள் 'வாடைக்காத்று' நாவலை நான் சிங்களத்தில் மொழி பெயர்ப்ப தற்கும், வெளியிடுவதற்குமான அனுமதியைப் பெறுவதற்குத் தான், எனவே தயவுசெய்து இது பற்றி உடன் பதில் எழுதவும்."
மகிழ்வோடு நான் அனுமதி தந்தேன். வாடைக்காற்று சிங்க ளத்தில் வணக்கத்துக்குரிய எம். ரத்னவன்ஸ் தேரோவால் மொழி பெயர்க்கப்பட்டது. ஆனால்
40

Page 25
இன்னமும் வெளி யி டப் பட வில்லை. தகுந்த வெளியீட்டா ளர் கிடைக்கவில்லை; வெளியிட முயல்வதாக அவர் எழுதியிருந் தார்.
சிங்களத்தில் வெளிவருமோ இல்லையோ அதுவல்ல முக்கியம். ஒரு விகாராதிபதியின் மனதை வாடைக்காற்று கவர்ந்திருக்கி றது என்பதுதான் முக்கியம்.
இவ்வளவையும் பார்க்கும் போது, சிறந்த நாவலின் இலக்க ணம் என்ன? வாடைக்காற்றல்ல என்பது எனக்கு நன்கு தெரியும்,
-இலக்கியம் என்பது வாசிக் கப்பட வேண்டும் .
வாசகர்கள் இப்படி எழுதி னால்தான் படிப்பார்கள். அவர் களின் ரசனை மட்டமானது. ஒரு எழுத்தாளனின் ஆக்கங்கள் ப ர வ லா கப் படிக்கப்பட்டால் அவன் ஜனரஞ்சக எழுத்தாளன் என்றெல்லாம் கூறுபவர்களைப் பற்றி நான் அதிகம் எப்போதும் அலட்டிக் கொள்வதில்லை.
ஏனெனில் என்னால் வாடைக் காற்றினையும் எழுதமுடியும், காட்டாற்றையும் எழுதமுடியும். அவை பல்லாயிரக்கணக்கான வாசகர்களால் படிக்கப்படுகின் றன என்பதுதான் இங்கு முக்கிய மாக நோக்கப்பட வேண்டியது. (தொடரும்)
சோவியத் யூனியன் சோவியத் யூனியன் சோவியத் வுமன் மீசா சிறுவர் இதழ்
தொடர்புகளுக்கு :
usrþúursIðrúb. தலைமையகம்
நீங்கள் விரும்பினுல் மாதத்தில் முதல் வாரமே பெற்றுக் கொள்ளலாம்.
சோவியத் ஸ்போட்ஸ்
இந்த ஐந்து இதழ்களில் ஒன்றுக்கோ
அல்லது முழுவதற்குமோ ஆண்டுச் சந்தா கட்டினுல் சுடச் சுட நேரடியாக சோவியத் யூனியனில் இருந்தே தபால் மூலம் பெறலாம்.
மக்கள் பிரசுராலயம் லிமிட்.
15/1, பலாலி வீதி,
(ஆங்கிலம்) (தமிழ்)
(ஆங்கிலம்) (ஆங்கிலம்) (ஆங்கிலம்)
124, குமரன் ரத்தினம் வீதி,
கொழும்பு-2
A6

சிந்தனையின் மூன்று அடிப்படைக் கூறுகள்
கி. க. சிவசங்கரன்
அழகியலும், அறிவியலும், அறநெறிப் பண்புகளும், நவீன சிந்தனையின் மூன்று அடிப்படைக்கூறுகள் என்று அறிஞர்கள் மதிப் பிடுகின்றனர், -
இதற்கு மிகச் சிறந்த சான்றாக, மகாகவி பாரதியும் அவரது இரண்டு முக்கிய சீடர்களும் திகழுகின்றனர்,
அவர்களில் ஒருவர், வ. ரா. என்று சுருக்கமாக அழைக்கப் பெறும் வ. ராமஸ்வாமி. மகாகவி பாரதியார்" என்னும் அருமை யான வாழ்க்கை வரலாறு நூலை எழுதியவர்; தன்னிகரற்ற முறை யில் தமிழ் மறுமலர்ச்சிக்குத் தொண்டாற்றிய ‘மணிக்கொடி" பத் திரிகையின் ஆசிரியர்; சமூக சீர்திருத்தமும், பாரதி வகுத்த வழியில் தமிழை வளப்படுத்தி, இளைஞர்களை இலகியப் பணியில் ஈடு படுத்துவதும், இவரது வாழ்க்கைத் தத்துவம்; இதன் பொருட்டுத் தமது இறுதிமூச்சு உள்ளவரை பாடுபட்ட மாபெரும் சிந்தனையா @ITIT Gu. JIT.
* சுந்தரி", "மழையும் புயலும்", "நடைச் சித்திரம்", "கோதைத் தீவு" முதலிய படைப்புக்களின் ஆசிரியரான வ. ரா.வின் நூற்றாண்டு விழா அண்மையில் சிறப்பாகக் கொண்டாடப் பெற்றது.
வ. ரா.வின் சிந்தனை மணிகள், ஏராளம். அவரது அடிப்படைச் சிந்தனைகளில் ஒன்றை இங்கு காண்போம் :-
‘சமுதாயமும் தனி மனிதனும் மிகவும் நெருக்கமாகப் பின்னிக் கொண்டு கிடப்பதை, எந்த நிகழ்ச்சியிலும் காணலாம். சமுதாயம் முற்போக்கு அடைந்தாலொழிய, தனி மனிதன் மேம்பாடு அடைய முடியாது. தனி மனிதன் மிகப் பெரிய மனிதனாக ஆனாலொழிய, அவன் சமுதாயத்தை முன்னேறச் செய்ய முடியாது. இந்த ரகசி யத்தை எழுத்தாளர்கள் அனைவரும் துவக்கத்திலேயே தெரிந்து கொள்ள வேண்டும்."
இவ்வாறு கூறும் வ. ரா.வின் சமுதாயச் சிந்தனைகள், இன் றும் என்றும் முக்கியமானவை; பயனுள்ளவை.
இனி, பாவேந்தர் பாரதிதாசன் சிந்தனைகள் பற்றி, ஒன்றி ரண்டு வார்த்தைகள்.
“பாரதி நமக்கு விட்டுச் சென்றுள்ள மாபெரும் செல்வங்ளில் ஒன்று பாரதிதாசன்" என்று புதுமைப்பித்தன் கூறியது மிகப் பொருத்தமே.
தமிழும், தமிழர்களும், தமிழகமும் தலைநிமிர்ந்து நிற்பதற்கும் மேன்மை அடைவதற்கும் பாரதிதாசனின் படைப்புக்களும் சிந்தன்ை யும் பெரும் பங்காற்றியுள்ளன என்பதை எவரும் மறுக்க இயலாது.
'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்' என்று பாரதியார் பாடினார் என்றால்,
47

Page 26
3°தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்" என்று பாரதிதாசன் பாடுகிறார்.
"மண் பயனுற வேண்டும்; வானகமிங்கு தென்பட வேண்டும்?
- இது பாரதியின் ஆசை.
அறிவை விரிவு செய் ! அகண்டமாக்கு 1 விசாலப் பார்வையால் விழுங்கு! மக்களை அணைத்துக் கொள் ! உன்னைச் சங்கமம் ஆக்கு ! மானுட சமுத்திரம் நானென்று கூவு! பிரிவிலை, எங்கும் பேத மில்லை; உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய் ! புகல்வேன்; உடமை மக்களுக்குப் பொது; புவியை நடத்து; பொதுவில் நடத்து வானைப் போல மக்களைத் தாவும் வெள்ள அன்பால் இதனைக் குள்ள மனிதர்க்கும் கூறடா தோழனே!" - இது பாரதிதாசனின் மனித நேயப் பிரகடனம் !
கடந்த ஐம்பதாண்டுக் காலத்தில், தமிழ் இயக்கம், அறிவியக் கம், தன்மான இயக்கம், தொழிலாளர் இயக்கம், பெண் விடுதலை இயக்கம், சமதர்ம இயக்கம் ஆகியவற்றுக்குப் பாரதிதாசன் வழங்கி யுள்ள சிந்தனைகள், எழிலும், ஏற்றமும் எழுச்சியும் மிக்கவை.
தமிழக கலை இலக்கியத்துறையில் 'பாரதிதாசன் பரம்பரை' என்னும் ஒரு புதிய பரம்பரை தோன்றியிருப்பதே இதற்குச் சான்று. பாரதியைப் போலவே பாரதிதாசனின் அற்புதச் சிந்தனை களிலும், உண்மையும், சமூக நீதிக்கான ஆர்வமும், அறச் சீற்றமும் அழகாகப் பொதிந்து கிடக்கின்றன.
பாரதியைப் போலவே பாரதிதாசனும், புது நெறி காட்டிய புலவன், *சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" என்னும் பிரெஞ்சுப் புரட்சியின் லட்சியங்களை இருவரும் உளமார ஆதரித் தனர். "யுகப் புரட்சி" என்று பாரதி வருணித்த ரஷ்யப் புரட்சியும், பாரதிதாசனின் இதயத்தைக் கவர்ந்தது.
பாரதியின் மறைவுக்குப் பின் 1930-ம் ஆண்டுகளிலிருந்து, சமூ கப் புரட்சி, மொழி உரிமை, இன உரிமை போன்ற பிரச்சினைகளில், பாரதிதாசன் மிகுந்த கவனம் செலுத்தினார். வரலாற்றுத் தேவைக ளுக்கு ஏற்றமுறையில், அவரது சிந்தனைகள் அமைந்திருந்தன. தமிழ் மக்களிடையே மண்டிக்கிடந்த மடமை, அர்த்தமற்ற பழக்க வழக்கங் கள், அடிமைத்தனங்கள், ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்படவேண்டும் என்ற சமுதாயப் பொறுப்புணர்ச்சியுடன் சிந்தித்தவர், பாரதிதாசன்"
பாரதிதாசன், நூற்றாண்டு விழா நடக்கும் இச்சமயத்தில், அவ ரது முக்கியமான சிந்தனை ஒன்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். *புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்" என்ற அவரது முழக்கம், இன்றைக்கு எவ்வ ளவு தேவையாக உள்ளது. புதிய மனிதன், புதிய உலகம், புதிய பண்பாடு இவற்றைப் படைப்பதற்கான சிந்தனைகளை வழங்கியுள்ள பாரதிதாசனும், வ. ரா.வும் தமிழ் நெஞ்சங்களில் என்றென்றும் வாழ்வது திண்ணம். ()
48

LALAALLLLLAALLLLLALALLLL LLLLLLLAALLLLLALALA LLATLT TLALAL LLLLSLLLMLAL AALLL
2 (6) -
t AMLA LAL A LLLLLLLLMALLL ALLLLL LLMAL AAASMLMLMLAMALLAAAAA AALLLLAALLLL ASLSALLAALLLLLAL 0یسحمحبت سحسم
கே. ரி. தவராஜா
லவனோடு தர்க்கப்பட்டதை நினைக்க நினைக்க சிவாவுக்கு வருத்தமாக இருந்தது. இந்த விஷயத்தில் சிவாவுக்கு தன்னை மட்டுமே குற்ற வாளியாகப் பார்க்க முடியவில்லை. லவனி லும் பிழை இருக்கிறது ஆனால் அவன் அதை ஒப்புக்கொள்ள l f) fT L .TT6öi,
"லவன் நீ வைச்சிருக்கிறது சரியா? என் குடை மாதிரி இருக்கு" என்றுதான் சிவா சொன் னான். அதற்கு அவன் ‘என்னை யென்ன கள்ளன் 35T60) L.t. னெண்டு நினைச்சியா?" என்று முகத்திலடித்தாற்போல் கூறி யிருக்கக் கூடாதுதான்.
விலங்கியல் ஆய்வுகூடத்தி லிருந்து அவனுடைய வகுப்பு மாணவ மாணவிகளோடு செய் முறை வகுப் பை முடித்துக் கொண்டு இரண்டாம் மாடியிலி ருந்து கூட்டம் கூட்டமாக இறங் கிக்கொண்டிருந்தபோது லவன் சிவாவுக்கு அருகில் வந்துகொண் டிருந்தான். அப்போதுதான் சிவா அந்தக் குடையைக் கண்டு விட்டு திடீரெனக் கேட்டான்.
முந்தநாள் பல்கலைக் கழக
நூல் நிலையத்திலிருந்து சிவா வின் குடை காணாமல் போய்
விட்டது. சிவாவின் நினைவெல் லாம் அந்தக் குடையைச் சுற்றிச் சுற்றி ஒடிக் கொண்டிருக்கிறது. புத்தம் புதுக் குடை! போன வாரந்தான் வாங்கியது.
மழை காலங்களில் சிவாவுக்கு குடை இல்லாவிட்டால் சரிப் பட்டு வராது. சிவாவினுடைய தேகவாசியோ என்னவோ தெரி யாது. மழை நீரின் ஒரு துளி தலையில் பட்டாலே போதும் அன்று முழுவதும் அவனால் ஒழுங்காக நித்திரை கொள்ளவே இயலாது.
படுக்கையிலிருந்து அடிக்கடி எழுந்து மூக்குச் சீற வேண்டும்; சீறினால் சளிசளியாய் கொட் டும். அத்துடன் தும்மல் வேறு.
அன்றொருநாள் இரசாயன வியல் விரிவுரையொன்றின்போது பேராசிரியர் தான் அன்று படிப் பித்த விடயம் சம்பந்தமாக மேல திக தகவல்களுக்குக் குறிப்பிட்ட ஒரு புத்தகத்தில் சில தகவல் நோட்டம் செய்யும்படி கூறிவிட் டார்கள்.
விரிவுரை முடிந்து சிவா நேரா கவே நூல் நிலையம் போனான்.
நூல் நிலையத்தினுள் குடை, கைப்பை போன்ற எதுவும் உள்ளே
49

Page 27
கொண்டு செல்ல அனுமதிக்கப் பட மாட்டாது. இவற்றையெல் லாம் வெளியேயுள்ள ராக்கியில் வைத்துவிட்டுச் செல்லவேண்டும்.
ஒரு அடி நீள, அகல, உயரத் தில், தேன்கூடு போல் பல அறை கள் கொண்ட ராக்கிகள் நான்கு உண்டு. அவற்றில் முதலாவது ராக்கியின் இரண்டாவது தட்டி லுள்ள நடுக்கூட்டில் கைப்பை யையும், குடையையும் வைத்து விட்டுச் சென்றது சிவா வுக்கு நல்ல ஞாபகம். ஆனால் திரும்பி வந்து பார்த்தபோது கைப் பை இருந்தது. குடை இல்லை.
நூற்றியிருபது ரூபாய் குடை காணாமல் போய்விட்டதல்ல சங் கடம். இந்த முறை வீட்டில் அவ னுடைய அக்காவுக்கு என்ன பதில் சொல்வதில்தான் பிரச்சினை.
ஒவ்வொரு வருடமும் மழை காலம் நெருங்கும்போது சிவா வுக்கு ஒரு குடைவாங்கிக் கொடுப் பது வழக்கம். அப்படி வாங்கிக் கொடுக்கும் குடையை ஒவ்வொரு வருடமும் எங்காவது வைத்து விட்டு மறந்துபோய் வந்துவிடு வது சிவாவின் வழக்கம்; கார ணம் மறதி,
ஆனால் இந்த முறை கதை வேறு. சிவா குடை விசயத்தில் மிக விழிப்பாக இருந்தான். எங்கு கொண்டு சென்றாலும் அதை மீண்டும் கையுடன் எடுத்து வர மறக்கவேயில்லை! ஆனால் இதை வீட்டில் எப்படிப் புரியவைப்பது என்பதில்தான் சிக்கல்,
நூல் நிலையத் தி லிருந்து படித்துவிட்டு வெளியே வந்திருக் கிறார்கள். மழைபெய்து கொண் டிருக்கிறது. மழை விடும் வரை நீண்ட நேரம் பார்த்துக்கொண் டிருக்கவா முடியும்? குடையில் லாத யாரோ ஒருவன் குடையை எடுத்துக்கொண்டு மழை யில் நனையாமல் போயிருக்க வேண்
டும்; இதுதான் நடந்திருக்கும். அல்லது வேண்டுமென்றே திருடிக் கொண்டுதான் போனார்களா? யாருக்குத் தெரியும் ?
குடை காணாமல் போனா லும் போனது. ஆனால் சிவா விட்டபாடில்லை. இந்த முறை அந்தக் குடையை எப்படியாவது கண் டு பிடித்துவிட வேண்டு மென்று திடசங்கற்பம்.
அந்தக் குடை எங்கேயோ இந்தப் பல்கலைக்கழகத்தில்தான் உலாவுகிறது அல்லது எப்படியா வது அது மீண்டும் இந்தப் பல் கலைக்கழகத்துக்கு வரும் என்பது சிவாவின் ஊக்கம். இந்த ஊக் கம் தோன்றிய பின்னர் ஒவ் வொருவரைக் காணும் போதும் சிவாவுக்கு அவர்கள் வைத்திருக் கின்ற கு டை யி ன் மீது தா ன் பார்வை செல்லும்.
இது மழை காலமாகையால் இங்கு பெரும்பாலானோர் குடை வைத்திருக்கிறார்கள்.
நிலைமை இவ்வாறு இருந்த போதுதான் லவனோடு தர்க்கப் பட வேண்டி ஏற்பட்டது.
லவன் வைத்திருந்த குடை யும் சரியாக சிவாவின் குடையைப் போன்றதுதான், கறுப்பு சேலை, கறுப்பு பிாளஸ்டிக் பிடி, பிடியிலி ருந்து தொங்கும் கடும்பச்சை நிற நைலோன் கயிறு, பளபளப்பான உச்சிமுடி நட்டு. ஆனால் ஒரே யொரு வித்தியாசம் என்னவென் றால் பிளாஸ்ரிக் பிடியின் அடியி லுள்ள அந்த மூன்று மில்லி மீற் றர் அகலமான பளபளப்பான சில்வர் பூண்.
சிவாவினுடைய குடைக்கு இந்தப் பூண் பொன்னிறமானது. அதுதான் ஒரேயொரு வித்தியா சம். அல்லது அது சிவாவினு டைய குடையேதான்.
★一
50

தன்னுடைய அக்காவைப் பார்த்தான் சிவா. அக்கா வீட்டு விறாந்தையிலிருந்து தையலூசி யால் சட்டை தைத்துக் கொண் டிருந்தாள்.
குடை தொலைந்து போன விசயத்தை அக்காவுக்குச் சொல் லியே ஆக வேண்டும். ஆனால் சொன்னால் எப்படியும் பேச்சு வாங்கியே தீரவும் வேண்டும். என்ன செய்வதென்று அறியாது தவித்துக்கொண்டிருந்தது மனம்,
முன்பொருநாள் சிறு வயசில் நனைய வைத்த சிவப்புப் பச்சை அரிசியைத் தந்து மில்லுக்குக் கொண்டுபோய் அரைப்பித்து, மாவாக்கிக் கொண்டுவா என்று சொல்லி அனுப்பினாள் அவனு டைய அம்மா. (அப்போது சிவா வினுடைய அம்மா உயிரோடு இருந்தாள்.) மில்லுக்கு வந்தா யிற்று, ஆனால் அரிசியை தீட்டி வரச் சொன்னதா அல்லது அரைத்துவரச் சொன்னதா என் பது மறந்து போயிற்று. தீட்டல்: அரைத்தல் - இந்த இரண்டில் ஏாதவது ஒன்று.
இவா அ ரிசி யைத் தீட்டிக் கொண்டுவந்து எல்லோரிடமும் பேச்சு வாங்கிக் கட்டினான்.
அது மட்டுமா பின்பொரு நாள், பாட்டா சிலிப்பர் வாங்க யாழ்ப்பாணம் நியூ மார்க்கற் றிற்குச் சயிக்கிளில் வந்து, சயிக்கி ளைப் பூட்ட மறந்து போனான். செருப்பை வாங்கிக் கொண்டு, நியூமார்க்கற் நடுவிலுள்ள அந்த விட்ட வடிவமான தேநீர்க் கடை யில் f குடித்து, வடையும் சாப் பிட்டுவிட்டு வெளியில் வந்து பார்த்தபோது ச யி க் கி ளை க் காணவில்லை.
இந்தப் பழைய சம்பவங்க ளெல்லாம் நினைவுக்கு வந்து மனசை வேறு கலக்கிக் கொண் டிருந்தன. ஆனால் என்ன செய்
வது எப்படியோ சொல்லி ஆக
வேண்டுமே. எனவே தயங்கித் தயங்கி இறுதியில் ஒருவாறு சொன்னான்.
“ gji35IT '
* ଘTର୍ତtଙt ? ''
“நீ, அண்டைக்கு வாங்கித் தந்த புதுக் குடய..."
‘துலைச்சுப் போட்டாய், என்ன ? சரி துலைச்சா துலைச் சுப்போட்டு இரு ஆனால் இனி, புதுக்குடை வாங்கித்தா என்று மட்டும் கேட்காதை. உனக்கு கண்டறியாத ஒரு மறதி, வளர்ந் தும் என்ன செல்லமா விளை யாடுறாய்?
'அக்கா, சத்தியமா நான் மறந்துபோய் விட் டி ட் டு வரேல்லை. எனக்கு இப்ப அந்த மறதிக்குணம் இல்லை; ப்ளீஸ். என்னை நம்பு"
"இவ்வளவு வளர்ந்தும் அவ ருக்கொரு கண்டறியாத மறதிக் குணம். இப்ப நான் கொடுக்கிற இடம்."
'அக்கா ப்ளீஸ்..."
சிவா கெஞ்சிப் பார்த்தான் அதுவும் சரிவரவில்லை.
அவனுடைய அக்கா, அக்கா என்றில்லாமல் ஒரு தாயைப்போ லிருந்து அவனுடைய தேவையை நிறைவேற்றி வருகிறாள் அந்த அக்கா கோபித்துக்கொண்டால் இந்த உலகமே இருண்டு விடுகி றது போல் அவனுக்கு.
போதாக் குறைக்கு முற்றத்தி லிருந்து கரப்புப் பின்னிக்கொண் டிருந்த அவனுடைய அப்பாவும் வந்து சேர்ந்துகொண்டார்.
"எனனவாம் தங்கச்சி இவன்" புதுக் குடயயும் துலைச்சுப் போட்டானாம்
51

Page 28
"சரி, துலச்சரத் துலச்சுப் போட்டு இருக்கட்டும். sg,607 IT, உவனுக்கு ஆரும் இனி 鷲 வாங்கிக் குடுத்தீங்களோ நடக் s றது வேறை. மண்டப் பீனிசம் படிச்சவன் மழைக்னக நனைஞசு கொண்டு தும்மிக்கொண்டும், சீறிக்கொண்டும் திரியட்டும்
Sr
குடையொன்று இல்லாமை யால் நேற்று முழுதும ನಿಮ್ಟಿ யில் நனைய வேண்டியதா பறறு: மழை வருமென்று பார்த்துக் கொண்டிருந்ததால் நேரத்திற்கு விரிவுரைக்குப் போக முடியாது. எனவே நனைய வேண்டிதா யிற்று. 0 ITG) Մ ழுவதும அவனால தூஃே ಆ: oಿ தனை தரம் எழுந்து மூக்குச்சிறிக் கொட்டியிருப்பானென்று għol IT கணக்கிட்டு வைக்கவில்லை.
A s வேறு. அததுடன துமமல இடையிடையே மூக்கு அடைத துக்கொண்டும் விடுகிறது, அப போதெல்லாம் வா யா ல் தா ன் சுவாசித்தான்.
விடியப்புறம் எழுந்ததும் சற்று லைஃாக இருக்கவே இரண்டு பனடோல் எடு துவிட்டு சாரத்தால் போர்த்த கொண்டு
வீட்டுப்படியில் குந்த ககொண்டி
ருந்தான். (βΠτΠτι
冷,始 லையில் குரோட் தேற்று இரவு முழுவதும் சிவா றிேக் கொட்டியிருந்த சளியை விட்டுக் கார அன்ரி கண்டிருக்க வேண் டும். அது அவவுக்கு அருவருப்பை ஊட்டியிருக்க வேண்டும். மண வெட் டியால் மண்ணை அள்ளிப் போட்டு சளியை மூடினா அன்ரி.
‘என்ன சிவா உனக்குத் 受母 மன் வந்தா யானையின் மூக்கில தடிமன் வந்த மாதிரி"
'ஜிம் அன்ரி இந்த வருத்தம் கன காலமாயிருக்கு. வைத்தி யமே இல்லை அன்ரி?
நேற்று முழுதும் நல்லா நனஞ்சிருக்கிறீர் போல. அதுசரி புதுக்குடையொண்டு வ T ங் இ வைச்சிருந்தீர்,
*அன்ரி, அது முந்த நாள் துலஞ்சு போச்சு.
*அடப் பாவமே, அப்ப நீயொரு அறணைப்பிற்வி, அப் பிடியெண்ட் எப்பிடி உனக்கு நம்பி குடை வாங்கித் திருலினம்?
தொடர்ந்து தன் கதையை சிவா விளக்கமாகக் கூறினான், ஆதிலிருந்து அன்ரிக்கு அவன்மீது இரக்கம் தோன்றியிருக்க வேண்
டும்.
அன்று காலை பல்கலைக் கழகத்துக்குப் Hறப்பட்டபோது ஒரு பழைய குடையைக் கொண்டு வந்து சிவாவுக்கு கொடுத்தா அன்ரி, ஒரு தாயின் பரிவோடு, தன்னிடம் வேறு குடை இல்லை யாம். உள்ளது ஒன்றே ஒன்று தானாம். அது தனக்குத் தேவை யாம். இது போனவருசம் கென் டன் பண்ணின பழைய குடை யாம். இவ்வளவு நாளும் ஸ்ரோ றுாழுக்குள் டெந்ததாம். திருத்தி பாவிக்கலா , என்றும் சொன்னா அன்ரி,
கிவா குடையை வாங்கி லில் தூசியை உதறித் தட்டி னான். பின்பு விரித்துப் பார்த்
“ந்த்ப் பிழுப்பு நிறச் லையில் மூன்று அங்குல் நீளத் திற்கு ஒரு கிழிவு இருந்தது. அத்துடன் கம்பிகள் இரண்டு நடு வில் முறிந்து போயுமிருந்தன. கம்பிகள் இரண்டையும் நிமிர்த் திக்கட்டி (அல்லது 'புதுக்கம்பி போட்டு சேலையையும் தைத்து விட்டால் பழ செண்டாலும் பாவிக்கக்கூடிய குடைதான்.
53

குடை கிடைத்தவுடன் சிவா செய்த முதல் வேலை என்னவென் றால் கலட்டிச் சந்தி றெயில்வே கடவைக்கு அருகில் குடை திருத் துகிற ஐயா ஒருவர் இருக்கிறா ரல்ல்வா, அவரிடம் கொடுத்து ரிப்பேர்செய்வித்தமைதான் புதுக கம்பிகள் போட்டு, கிழிசலைத் தைத்தும் கொடுத்தார்.
'r
விலங்கியல் ஆய்வுகூடத்தில் ஒரு நன்னீர் நத்தையை வெட்டிக் கொண்டிருந்தான் சிவா. ஒரு விலங்கின்னவெட்டி அதன் பகுதி களைக் காண்பிப்பதென்றால் சும்மா லேசுப்பங்ட காரியமல்ல, இந்த நத்தையின் குண்டுமணிய ளவு இதயம் தொடக்கம், குண் டூசிமாதிரி மெல்லிய குடல் ஈறாக மொத்தம் முப்பது பகுதிகள் காண்பிக்கப்பட வேண்டும்.
அன்ரி கொடுத்த அந்தக் குடை ஆய்வுகூடத்திற்கு வெளி யேயே இருந்தது, இங்கும் நூல் நிலையத்தைப்போல் பொருட் கள் உள்ளே கொண்டுவர முடி, யாது. குடையைப்பற்றி சிவா வுக்குக் கவலையே இல்லை ஏனெ னில் இங்கு யாரும் அதை எடுக் கப்போவதில்லை.
நூல் நிலையத்தோடு ஒப்பிடு கையில் இங்கு சனப் புழக்கம் இல்லையென்றே கூ ற்லாம். மாண வர் கள் கூடத்தினுள் நுழைந்தால் ஆகக்குறைந்தது மூன்று மணித்தியாலங்களின் பின் னர்தான் வெளியே வருவார்கள். அப்படி மாணவர்கள் வரும்போ தும் - போகும்போதும் கொஞ் சம் சந்தடியாய் இருக்கும். மற் றப்படி வழமையான விரிவுரை யாளர்கள், பேராசிரியர்கள், செய்முறை செய்து காட்டுநர் களைத் தவிர யாராவது ஓரிருவர் வந்து போவார்கள். அவ்வளவு தான் சணம்.
5.
மற்றது வெயிலில் காய்ந்து அதன் சுயநிறம் மாறி வெளிறிப் பளுப்பு நிறமாகிப்போன அந்தப் பழை ய கு டை  ைய யாரும் எடுப்பார்களா? எனவே சிவா குடையை மறந்து நத்தையில்
மூழ்கிப்போயிருந்தான்.
நேரம் மாலை நாலு மணி
யாகி விட்டது. - பரிசோதனை முடிந்து எல்லா
மாணவ - மாணவியரும் ஆய்வு கூடத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். சிவா எல் லோருக்கும் க டை சி யா க வே வெளியே வந்தான். கையில் மச்சம் மணக்கு மென் ப த ர ல் எல்லோரும் சோப்புப் போட்டுக் கை கழுவிக்கொண்டே வெளியே றினர். சிலர் கழுவாமலும் வெளி யேறினர். கடைசியாகக் கை கழு வியது சிவாதான். ஒரேயொரு லைப்போய் சவர்க்காரத் துண்டு தான் இருந்தது, எல்லோரும் முண்டியடித்துக்கொண்டு ஒருவர் மாறி ஒருவராகக் கழுவி முடித்து விட்டனர். சிவாவினால் இப்படி யெல்லாம் முண்டியடிக்க முடிய வில்லை. அதனால்தான் கடைசி.
லேஞ்சியால்  ைக  ைய த் துடைத்துக்கொண்டு ஆய்வு கூடத்திலிருந்து வெளியேறி குடை வைத்த அந்தச் சிறிய ராக் கிப்பக்கம் போனான்.
மறுகணம் நெஞ்சு திக்கென் றது. காரணம்: குடையைக் காணவில்லை !
அருகிலுள்ன விலங்கியல்ப் பிரிவு அலுவலகத்திலிருந்து ரைப் அடிக்கும் ஓசையும், றோனியோ மிஷின் இயக்கப்படும் ஒசையும்
கேட்டுக்கொண்டிருந்தது.
O

Page 29
இப்பகுதி பலராலும் விரும் பிப் படிக்கப்படுவது. கேள்வி - ப்தில் என்ற மாமூல் சஞ்சிகைப் பகுதியல்ல இது. உங்களுடன் மனம் விட்டுக் கதைக்க இது ஒரு தளம் பரஸ்பரம் மல்லிகைச் சுவைஞர்களின் கருத்துக்களை விவாதிப்பதற்குமான ஒரு சந் தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு களமே தூண்டில். நம்மைச் சுற்றி ஏராளமான சம்பவங்கள் நிகழு கின்றன. இவை பற்றி அறிந்து கொள்வதற்கும் கருத் துக்களை ஒரு வ ரை ஒருவர் பகிர்ந்து கொள்வதற்குமான இந் தப் பகுதியை இளம் இலக்கியத் தலைமுறையினர் பயன்படுத்த முன்வர வேண்டும்.
தூண்டில்
ச இலக்கியத்தில் முதல் இடம்
கவிதைக்குத்தானே?
முருங்கன், ஜெயா பாலாஜி
தொழிற் புரட்சிக்கு முன் னைய கட்டங்களில் கவிதை ஆதிக்கம் செலுத்தியிருக்கலாம். ஆனால் கவிதையின் இடத்தை இன்று வசனம் கைப்பற்றிக் கொண்டுள்ளது. காவியங்கள் தோன்றுவதற்குப்பதிலாக இன்று நாவல்களும், சிறு கதைகளும் உலக மொழிகளில் தோன்றி வளர்ந்து வருவதே இக்கூற்றை நிரூபிக்கின்றன. அதே சமயம் கவிதையும் தனது வீரியத்தை இழந்து விடவில்லை என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்
டும்.
இ விமர்சகர்களின் ஆதிக்கம் ஈழத்தில் படைப்பாளிகளை மிரட்டும் அளவிற்கு வளர்ந்து விட்டதற்கு யார் காரணம் ? சுதுமலை, எம். ரங்கராஜள் படைப்பாளிகள்தான் கார ணம். விமர்சகர்கள் என்றால் ஏதோ தேவதூதர்களைப் போல எண்ணிக்கொண்டு, அவர்களை வழிபாடு செய்ததின் நிமித்தம் தான் இந்த ஆரோக்கியமற்ற நிலைபாடு இன்று நிலவுகிறது, இந்த மண்ணில் படைப்பவன் தான் - அவனிடம் குறைபாடுகள் இருந்தாலும் - பிரம்மா! மற்ற வர்கள் அவனுக்குப் பின்னால் தான். விமரிசகர்களும் தத்தமது கருத்துக்களை வலிமையாகக் கூறட்டும்; ஆனால் ஆசீர்வதிக் கும் மனப்பான்மையைக் கொஞ்
A.
 

சம் ஒதுக்கி வைத்துவிட்டு வரட் டும். தாங்கள்தான் அதிமேதாவி கள் என்ற கணக்கில் கணிப்பு களை வெளியிடும்போது எரிச்சல் தான் ஏற்படுகிறது. என்ன இப் படியான ஒரு கருத்து வருகிறதே எனக் கேட்கலாம், நான் எனது எந்த நூலுக்குமே பிரபல விமரி சர்களைக் கொண்டும் இதுவரை முன்னுரை எழுத முயன்றவ னல்ல. எனக்கு முன்னரே தெரி யும்; இப்படியாக விமரிசர்களுக் குப் பின்னே போனால் படைப் பாளிகளுக்கு இந்தக் கதிதான் கடைசியில் வரும் என நான் பயந்ததுண் டு. நான் விமரிசர்க ளுக்கு எதிரி அல்ல; அவர்களு டைய இலக்கியச் சண்டித்தனத் தைத்தான் என்னால் அங்கீக ரிக்க முடியவில்லை.
9 சென்னையில் மல்லிகை மல
ரின் அறிமுகவிழா பற்றிக் கொஞ்சம் விரிவாகவே தகவல் தந்திருக்கலாம் போல எனக்குப்
படுகிறது,
கோப்பாய், ச. மயிலவன்
எனக்கும் அந்தக் கருத்துத் தான். ஆனால் அவசர அவசர மாகச் சென்னையில் இருந்து எழு தித் தந்துவிட்டுப் போனார், பூபதி. அதை உடனே வெளியிட வேண்டும் என்ற தேவையும் ஏற் பட்டுவிட்டது. எனவே முழு வடி வமும் அக் கட்டுரையில் வரவில் லையே என்பது எனக்கும் விளங்கு கின்றது, தூண்டில் பகுதியில் இதைப்பற்றி விரிவாக ஆராய் வோம்,
0 சமீபத்தில் தமிழகத்திற்குச் சென்று வந்தீர்களே, எல்லா எழுத்தாளர்களையும் சந்தித்துப் பேசினீர்களா ?
எம். புவனன் ஆனைக்கோட்டை,
மூன்று கிழமைகளுக்கு மேலா கத் தமிழ் நாட்டில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். அநேகமாக எல்லா எழுத்தாளர்களையும் - ஒரு சிலர் தவிர - சந்தித்துக் கலந்துரையாடி னேன்,
இ எல்லாம் எழுத்தாளர்களை
யும் நேசிக்கிறேன் என எழுத் தில் சொல்லும் நீங்கள் சில எழுத் தாளர்களைப் புறத்திக்கிடம் பண்ணுவதாகச் சொல்லப்படுகி றதே, இது பற்றி என்ன சொல் லுகிறீர்கள்?
சிலாபம், ச. பெனடிக்ற்
எல்லா என்பது மிகைப்படுத் தப்பட்டது. நேசிக்கப்படத்தக்க வர்களை நேசிக்கிறேன். என்பது தான் சரி. மற்றும் என் மனசுக் குப் பிடிக்காதவர்களைக் கண்டு ஒதுங்கிப் போய் விடுகிறேன் என் பதுதான் சரி. அதே சமயம் அவர்களிடமும் நல்ல இயல்புகள் இருக்கலாம். எக் காரணத்தைக் கொண்டும் என்னால் ஒதுக்கப் படும் சகோதர எழுத்தாளர்க ளைப்பற்றிப் புறணி கூறுவதோ கொச்சைப் படுத்துவதோ மஞ் சள் பூசுவதோ இல்லை. எனக்கு அவர்களது நெருக்கம் பிடிக்க வில்லை. நானே ஒதுங்கிக் கொள் ளுகின்றேன்; அவ்வளவுதான்!
இ இலக்கிய உலகில் சிலர் இருக் கிறார்கள் கொண்டோடிச்
சுப்பர்கள் இவர்களில் யாராவது
உங்களை அணுகுவதுண்டா ?
மானிப்பாய், எஸ்.மனோகரன்
ஆரம்ப காலங்களில் நான் ஆட்களைப் படித்துத் தெரிந்து கொண்டவனல்ல. எனவே எல் லோரும் சிநேகிதம்; எல்லோருக் கும் சிநேகிதம்! நாட்கள் போகப்
55

Page 30
போகச் சிலரை ஆழமாகப் புகுந்து பார்த்தபொழுது இது ஒரு மன நோய் போல எனக்குப் பட்டது. அந்த நோய் என்னை யும். பீடித்து விடுமோ என அஞ்சி னேன். இப்படியானவர்களின் உ ற வைக் கத்தரித்துக் கொண் டேன். எனக்கு நிறையச் சோலி கள் உண்டு. எனவே இப்படியா கப் பொழுது போக்க எனக்கு வழியும் இல்லை. இளந் தலை முறைப் படைப்பாளிகளுக்கு ஒன்று சொல்லிக்கொள்வேன். இது ஒரு தொத்துநோய். நோய் தொற்றிக்கொள்வது கூட விளங் காது. இது பற்றிப் பீடித்தால் நல்ல நட்புக்களே நாசமாகிப் போய் விடக்கூடும். இதைத் தடுப்பதற்கு ஒரேயொரு வழி தான் உண்டு. நம்மை ஒப்புக்கொ டுத்த பணியில் நம்மை மறந்து
மூழ்கி விடுவதுதான் சரியான பாதை.
D சில ஆண்டுகளாக நூல்
வெளியீட்டு விழாக்களுக்குப் போய் வருகிறேன், ஒரே முகங் கள்தான் கூட்டத்திற்கு வருகின் றன; ஒரே முகங்கள்தான் புத்த கங்களை விலை கொடுத்து வாங் குகின்றன, இதில் என்ன பெரிய சாதனை உள்ளது ?
நீர்வேலி, க. கணேசநாதன்
நீங்கள் சொல்வது போலத் தான் இலக்கிய உலகில் ஒரு கதை அடிபடுகின்றது. இது முழுவதும் சரியான பார்வையல்ல. இப் பொழுது வாரத்திற்கு ஒரு புதுப் புத் த கம் வெளிவருகின்றது, இவைகளில் அநேகமானவை மக் கள் மத்தியில் சென்றடைகின் றன. இது ஒரு முன்னேற்றம். கற்பனை உலகில் கனவு கண்டு கொண்டிருந்த எம் மக்கள் இன்று தமது பிறந்த மண் ணை க் குனிந்து பார்க்க முற்பட்டுள்ள னர். வாழ்க்கை அவர்களுக்கு இந்த ஞா ன த் தை க் கற்றுத் தந்துள்ளது. இதற்காக நாம் கொடுத்த விலை ஏராளமானது. கடந்த கால் நூற்றாண்டுக் கால மாக மல்லிகையை நான் வெளி யிட்டு வருகின்றேன். அச்சடித்து
வீட் டி ல் கட்டுக் கட்டாகக் கட்டியா வைத்திருக்கின்றேன்? மல்லிகைப் பதிப்பகத்தினால்
ஏழு நூல்களை வெளியிட்டு விட் டேன். சில புத்தகங்கள் கைவசம் இல்லை. எனவே மக்கள் நம்மை நம்புகின்றார்கள். நாம்தான் இன்னமும் மக்களை நம் பத் தயாராகவில்லை; அவர்களிடம் திரும்பத் திரும்பச் சென்று வரு வோமானால் நமது புத் த க விற்ப்னைக்கு நல்ல எதிர்கால முண்டு.
O.S.)
இச் சஞ்சிகை 234 பி, காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம்
முகவரியில் வசிப்பவரும், ஆசிரியரும், வெளியிடுபவருமான டொமினிக் ஜீவா அவர்களினல் மல்லிகை சாதனங்களுடன் பூரீ லங்கா அச்சி கத்திலும், அட்டை யாழ் புனிதவளன் கத்தோலிக்க அச்சகத்திலும்
அச்சிட்டு வெளியிடப்பட்டது,
56

ASLAL LqALAL LALASLLA LLS LLS LLLLLLLASLLALLLLLAAS LMLMS LALASLLASMS SqLSMqSASMLSMSSSLLLLSLLASSASAqALMSSSLASAASALAMA ALASLMMSLAMASA SLqqALSMSLqSAALSALSLMLAASMqMAeqSASLMMMASLLM ASASMLMASLSML MeSMLL LSLSLLSLLAASLMMS AMS
ESTATF SU PPLERS (COMMISSEGON AGENTS
VARIETIES OF CONSUMER GOODS OLMAN GOODS TIN FOODS GRANS
THE EARLEST SUPPLERS
FOR ALL YOUR :
NEE DOS
Wholesale & Retail
Da: 26587
E. SITTAMPALAM & SONS,
223, FIFTH CROSS STREET. COLOMEBO- T T .
-wn,/n/r بترسی - عصر"

Page 31
■ ± 聽 * 情 眼
|-| _|
:
T | .- - - | +4 |-| |- |- |-|-- |
;------
|- ( **
 

as a News Paper at G. P. O. Sir Lanka
kvy.75/NEWS/89
Dealers in:
Timbar Plywood & Kempas)
OUR STREET