கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலக்கியத் தேறல்

Page 1


Page 2

இலக்கியத் தேறல்
(கட்டுரைத் தொகுப்பு)
அகளங்கன்.
வவுனியா, முத்தமிழ்க் கலாமன்ற வெளியீடு, வவுனியா.

Page 3
பெயர் :
இலக்கியத் கே9ல்.
எழுதியவர் :
அகளங்கன்.
வெளியீடு
முத்தமிழ்க் கலாமன்றம், வவுனியா - இலங்கை.
பதிப்புரிமை
திருமதி பூ தர்மராஜா, B. A. ( Hons.)
அச்சுப்பதிவு :
உமா பிறிண்ட்டேர்ஸ்,
32, நல்லூர் குறுக்கு வீதி, யாழ்ப்பாணம்.
அட்டை :
ஒவியர் : மூர்த்தி, வண்ண அச்சாக்கம் : தவம், அச்சு : விஜயா பிறின்ரேர்ஸ், யாழ்ப்பாணம்.
முதற் பதிப்பு
ஆனி, 1988,
ଶୋଥିର) :
ரூபா. 30-00.

ஈழத்தின் இதயமாய் இலங்கும் வன்னியில்
என். . . . .
தந்தையுந் தாயுஞ் சிந்தையில் ஒன்றி நாற்பத்தி ஏழு ஆண்டுகளாகத் தாம்பத்தியத்தைத் தவமாயியற்றிய தங்கக் கிராமம்.
நிலவு ஒளியில்
என்சிறு கைவிரல்
* அ புண்ணிய மணலின் புகலிடம்.
9
எழுதிப் பழகிய
பம்பைமடு விற்கு இந்நூல்
காணிக்கை.

Page 4
பதிப்புரை
அகளங்கன் எனும் பெயருள் மறைந்து கொண்டு, இலக்கிய உலகில் தனக்கென ஒரு வழியைத் தேர்ந்தெ டுத்து, உறுதியாகக் காலூன்றி, ஆழமான கருவூலங்களைக் கட்டுரைகளாக, கவிதைகளாக, சிறு கதைகளாக, நாடகங்க ளாகப் பவனிவரவிட்டு மகிழ்ந்திருக்கும் திரு. நா. தர்மராஜா அவர்கள், வன்னிவள நாட்டின் தவப்புதல்வராவார்.
நல்லாசிரியனுக, நாவல்லோனுக, நயமுகங்காட்டும் பண்பாளனுக விளங்கும் இவர், பழந்தமிழ் இலக்கியங்க ளைக் கற்று அவையால் ஈர்க்கப்பட்டு, தான் பெற்ற இன் பத்தைப் பெறுக இவ் வையகம் எனும் கடப்பாடு கொண்டு ள்ழுதி வருகின்றர். இவரது எழுத்துக்கள் கருத்தாழம் மிக்கவை.
இவரது "வாலி' நூலுக்கு நல்ல முறையில் வெளி யீட்டு விழாவை, எமது வவுனியா முத்தமிழ்க் கல்ாமன்றம் ஒழுங்குசெய்து பெருமை கொண்டது. இப்போது அவரின் இவ் ** இலக்கியத் தேறல் ‘* நூலை முதலாவது நூலாக வெளியிடுவதில் பெருமையும் உவகையும் கொள்கிறது,
பல்வேறுவிதமான ப ன் னிரண்டு கட்டுரை களைக் கொண்ட இவ் இலக்கியத் தேறலை தமிழன்பர்கள் மாந்திக் களிப்படைய வேண்டுமென்பது எமது பெரும் விருப்ப மாகும்.
பி. மாணிக்கவாசகர் 3. 9 (56Tiffy risillo B. A.; S. L. E. A. S செயலாளர். (வட்டாரக் கல்வி அதிகாரி)
.தலைவர் . 88 ہے۔ 7۔--1
முத்தமிழ்க் கலா மன்றம், வவுனியா.

வவுனியா அரசாங்க அதிபர் திரு. கே. சி. லோகேஸ்வரன் அவர்களின்
வாழ்த்துரை
நண்பன் அகளங்கன் அவர்கள் ஆக்கிய இந்த இலக்கியத் தேறல் நூல், பத்திரிகைகளிலும், வானெலி |லும் வெளியாகிய அவரது எழுத்தையும், பேச்சையும் உள்ளடக்கியதாகும். சமயம், இலக்கியம், ஆகிய துறைக
பில் இந்த ஆய்வுக் கட்டுரைகள் அமைந்துள்ளன.
அகளங்கன் இந்த மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். இவரது புகழ் இம்மாவட்டத்தில் மட்டுமல்லாமல், எல்லா இடங்களிலும் பரவியுள்ளது யாவரும் அறிந்ததே. வவு னியாவில் நடந்த பண்டார வன்னியன் விழா வில் வெளி யிடப்பட்ட விழா மலரை ஒரு தரமான படைப் பாக்குவதில் பெரிதும் பங்கரித்தவர் திருவாளர் அகளங்கன்.
வவுனியா முத்தமிழ்க் கலாமன்றம் ' வாலி " என்ற இவரது ஆய்வு நூ லின் வெளியீட்டு விழாவை சமீப காலத்தில் வெளியிட்டதை நாம் அறிவோம். மேலும் சேரர் வழியில் வீரர் காவியம் என்ற குறுங் காவியத்தை இவர் ஏற்கனவே வெளியிட்டமையும் பலரும் அறிந்ததே.
இவரது தற்போதைய இலக்கியப் பணியாகிய இலக் கியத் தேறல் கட்டுரைத் தொகுதிக்கு எமது பாராட்டைத் தெரிவிப்பதுடன், மேலும் இலக்கியத் துறைக்கு இவர் தனது சேவையைச் செய்வதற்கு மக்கள் ஒத்துழைப்பும் , கடவுள் கிருபையும் கிடைக்க வேண்டுமென வாழ்த்து கின்றேன்.
கே. சி. லோகேஸ்வரன் அரசாங்க அதிபரும், 5-6-988 மாவட்டச் செயலாளரும்.

Page 5
பலாலி ஆசிரிய கலாசாலை அதிபர் திரு. ந. கனகேஸ்வரன் அவர்களின்
வாழ்த்துரை
உலகம் நாளுக்கு நாள் மாற்றமடைகின்றது. இலக் கியத் துறையிலும் இன்று மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதைக் காண்கிருேம். ஈழத்து இலக்கிய வரலாற்றிலே அண்மைக் காலத்தில் அகளங்கன் அவர்களின் ஊக்கத்தினல் உரு வெடுத்த இலக்கிய வெளியீடுகள் நம்மைப் பெருமிதமடை யச் செய்கின்றன, Y»
இவ் இலக்கியத் தேறலும் அத்தகையதே. சங்க இலக். "கியத்திலிருந்து, திரையிசைப் பாடல்கள் வரை அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பே இந் நூலாகும். கணிதத் துறையைச் சேர்ந்த ஒருவர் துணிந்து பழையவற்றிலிருந்து புதியன வரை ஆய்வுகளை நடாத்தி, இக் கட்டுரைகளை எல்லோரும் விளங்கிக் கொள்ளக் கூடியதாக நூல் வடிவில்
வெளியிடுவது போற்றவேண்டிய ஒன்ருகும்.
அகளங்கன் போன்ற இன்றைய இளைஞர்கள் தமது ஆக்கங்களை வெளியிடுவதன் மூலம், இலக்கியத் துறையில் ஆர்வம் காட்டாதவர்களையும் தட்டி எழுப்பிவிடுவார்கள் என்பது உறுதி. அவரின் இவ் அறப்பணி தொடரட்டும், ஆயிரம் மலர்கள் மலர்ந்து மணம் பரப்பட்டும்.
5. ast Gassia. Usil B. Sc (Load); Dip-in-Ed.
அதிபர், V 1-7-1988 பலாலி ஆசிரிய கலாசாலை.

வவுனியா உதவி அரசாங்க அதிபர் (வ. தெ. த. பிரிவு) திரு. க. ஐயம்பிள்ளை அவர்களின்
வாழ்த்துரை
கவிஞர் அகளங்கனின் கட்டுரைகள் சில இலக்கியத தேறல் எனும் பெயரில் நூல்வடிவு பெறுவது கண்டு பெரு மகிழ்வடைகின்றேன்.
கடல்போல் பரந்தும், ஆழ்ந்தும் காணப்படுகின்ற தமிழிலக்கியப் பரப்பிலே, சமயத் துறையிலே, சுழியோடி நன்முத்துக்களைக் கொணர்ந்து தானிலம் வாழ வழிகாட் டிச் சென்றனர் ஆன்ருேர், அத்தகைய அறிவுடைச் சான் ருேரது மரபிற் தோன்றி, இடைவிடாது முத்துக் குளிப்பில் ஈடுபட்டு, நன்முத்துக் குவியல்களை ஈட்டிவரும் கவிஞர் அகளங்கனின் பன்னிரண்டு குவியல்கள் சேர்ந்த கருத்துக் கருவூலங்கள் இலக்கியத் தேறல் " என்ற மகுடத்துடன் நூலுருவில் உங்கள் கைகளில் தவள்கின்றது.
பலர் படிக்கிருர்கள், ஆனுல் சிலரே படைக்கிருர்கள் தமிழிலக்கியக் கடலினுள் ஆழ இறங்கி 'அறிவு முத்துக்களை வெளிக்கொணர முடியாத இன்றைய அவசர உலகிலே, ஒரு சிலராவது இப் பணியில் தம்மை ஈடுபடுத்தித் தொடர்ந்து செயற்பட்டு வருவதனலேயே உலகம் உய்யுங் கருக்துக்கள் காலத்துக்கேற்ற வகையில், அறிவுத் துறை யி ை(ரூம் ஒப்பும் நி%லயில் வெளிவருகின்றன. அத்தகைய சிலரில் இன்று கவிஞர் அகளங்கன் மிக முக்கியமானவராக மதிக்கப்படத்தக்கவர் என்பது புகழ்ச்சிக் கூற்றல்ல.
கவிஞர் அகளங்கனின் இலக்கிய, இலக்கணப் பயிற்சி யும், புராண இதிகாச , பிரபந்தத் தேர்ச்சியும், படைப் பிலக்கிய முயற்சியும், சமகால மக்கள் வாழ்வோடு இணைந்த நுழைந்த நோக்கும் இங்குள்ள கட்டுரைகளில் மிளிர்வதை அனைவரும் அவதானிக்கலாம். ܗܝ

Page 6
இலக்கியம், சமயம் ஆகிய இரு பெருந் துறைகளைக் கொண்ட தேன் சொட்டும் கருவூலமாக அமைந்துள்ள இந்நூலுக்கு ‘ இலக்கியத் தேறல் ' என்னும் மகுடம் சாலப் பொருந்தும். வயதில் இளைஞனுன போதும், அவ ரது சிந்தனையின் முதிர்ச்சியும், இலக்கிய சமயத் துறையில் கொண்ட ஆழ்ந்த ஈடுபாடும். புதுமை காணும் அவாவும் நூலெங்கும் விரவியிருத்தலை அவதானிக்கலாம்.
பலரும் படித்துப் பயனுறும் வகையில் எளிய, இனிய நடையில் தமக்கேயுரியதோர் தனிப்பாணியில் கட்டுரை களை எழுதுவதில் கவிஞர் அகளங்கன் வல்லவர் என்பதற்கு இந்நூலும் ஒரு சான்றகும்.
செக்காலை சுற்றிவரும் காளையல்ல இவர், எல்லோரு டனும் கூடி வடம்பிடிக்கும் தன்மையும் இவருக்கில்லை. ஆனல் தனக்கெனத் தடம் பதிக்கும் தனிப்பாணி கொண் டவர். புதிய கோணத்தில் நோக்கினை நுழைத்து, நுணுகி ஆராய்ந்து, ஆராய்ந்த பொருளே அறிவியல் அடிப்படை யில் எடுத்துக் காட்டி கற்ருேர் நயக்க, மற்றேர் வியக்க, எல்லோரும் உவப்ப, இலக்கிய உலகிலே தனக்கெனத் தனி யிடம் வகுத்துக் கொண்டவர்.
துடிப்பான எண்ணங் கொண்ட இளைஞரான இப் படைப்பாளியின் பேணுவிலிருந்து வெளிப்படும் எழுத்துக்கள், நிதானமாகச் சிந்திக்கத் தூண்டுவன, நிறுத்தி நிறுத்தி வாசிக்கச் செய்வன. நினைத்து நினைத்து உள்ளத்தில் படி யுந் தன்மையன. முன்னர் படித்தவற்றேடு ஒப்பிட்டு நயங்காண வழிவகுப்பன.
கண்கவர் வண்ண முகப்பும், கருத்தாழம்மிக்க சொல் லோவியங்களும் கொண்ட இவ் ‘இலக்கியத் தேறல் தமி ழன்னைக்கு இம் மண்ணிலிருந்து கிடைத்த மற்ருெரு மணி யணியாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. அவர் பணி தொடர்ந்து மென்மேலும் தமிழன்னைக்குப் புதுப்புது அணி யணிந்து வளமூட்ட வழிவகுக்க வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி வாழ்த்துகிறேன்.
உதவி அர்சாங்க அதிபர் பணிமனை க. ஐயம்பிள்ளை" வவுனியா தெ. த. பிரிவு 15-6-1988

அறிமுகவுரை
இலக்கிய நுகர்ச்சி இன்ப வாழ்வுக்குப் பெரிதும் பயன் தருவதாகும். சொல்லோவியமாகிய இலக்கியக் காட்சிகள் கற்போர் அறிவை அகலமும், ஆழமும், கூர் மையும் பெறச் செய்யும் பெற்றியன. இலக்கியம் தரும் இன்ப உணர்வு, சீரிய வாழ்வுக்கு ஊற்ருய் அமைவதா கும். இலக்கியப் பயிற்சி, பிறரின் உணர்வுகளைப் புரிந்து பொருந்தி வாழும் திறனை வழங்க வல்லது.
இன்று அறிவியல் விருத்தியின் பயனுய், மனித வாழ் வின் முன்னேற்றம் வியக்கத்தக்கது. இம்முன்னேற்ற் வேகம் இடையீடின்றி அதிகரித்துச் செல்லக் கண்கிருேம் . ஆனல் மனிதன் தனது சூழலை அறிந்து கொள்வதில் காட்டும் அக்கறையில், ஒரு பகுதியையேனும் த ன் னை அறிந்து கொள்வதில் காட்டாமை வருந்தத்தக்கது.
** அணுவைப் பிளந்தாயிற்று, அண்டத்தை அளந்தா யிற்று, ஆணுல் ஒழுக்கத்தை இழந்தாயிற்று’’ என்னும் சிந்தனைக்கு ஏற்ப, மனிதன் ' வையத்துள் வாழ்வாங்கு வாழ "" வழியறியாது தடுமாறித் தவிக்கும் நிலை பரவலா க்க் காணப்படுகின்றது. இந்நிலைக்குக் காரணம், அவனது கடத்தையே.
விஞ்ஞான சாதனைகளின் விளைவாக, இன்று மனித வாழ்வில் ஒய்வு அதிகம். இந்த ஒய்வினைப் பயன்படுத்தி, அழகுணர் ஆற்ற விருத்தி செய்து, மன எழுச்சி முதிர்ச்சி யினையும், சமூக உணர்வு மனப்பாங்கினையும் விருத்தி செய் யும் முயற்சியில், மனிதன் ஈடுபடக் காணுேம். இன்று கல்விக் கூடங்களில் அழகியற் கலைகளின் போதனை இடம் பெற்ருலும், அவற்றைப் பரீட்சை நோக்குடன், கற்போரும் கற்பிப்போரும் அணுகுவதால், அழகுணர்வு கற்போர் வாழ்வை வளம்படுத்துவதாயில்லை. அதனல் தன்னை

Page 7
Χ
அறிந்து, சமூகத்தைப் புரிந்து, பொருந்தி வாழும் திற னில்லாது, * வாழ்வெல்லாம் பிரச்சனை ‘ என்று கலங்கி நிற்பதே இன்று மனித வாழ்வின் பொதுத் தன்மையாய்க் காணப்படுகின்றது.
அமைதி இழந்து தவிக்கும் மனித இனத்துக்கு இன்று வேண்டப்படுவது "நிறை மனித உருவாக்க நுண்முறை களே. அழகுணர் ஆற்றல் விருத்தி நிறை மனித உரு வாக்கத்துக்குப் பெரிதும் உதவவல்லது. மேம்பட்ட அழ குனர் ஆற்றலை விருத்தி செய்வதில் இலக்கியப் பயிற்சி பெரும் பங்கு வகிக்கின்றது, தமிழ்பேசும் மக்களின் பண் பாட்டு , மேம்பாட்டுக்கு அவர்களது பரந்த, காலத்தால் அழியாத இலக்கியச் செல்வமே அடிப்படைக் காரணம் எனலாம். இலக்கிய உயர்வே ஒரு இனத்தின் பண்பாட்டு ஆயர்வினைக் காட்டுவதாகும்.
* ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்னும் உயர்ந்த கோட்பாட்டின் அடிப்படையில் தமிழினம் வாழ, இலக் கியம் உதவவல்லது. இவ்வுணர்வே, "இலக்கியத் தேறல்” என்னும் இத்தொகுதி நூல் வெளியீட்டுக்கு அடிப்படை யாகும். அறிவியல்துறை, கணிதத்துறை என்பவற்றில் ஆற்றல் மிக்க ஆசிரியர் அகளங்கன் அவர்கள் இலக்கியத் துறை ஆய்விலும் பெரும் ஈடுபாடு கொண்டவராவார்.
தமிழிலக்கிய ஆய்வில் தன்னை ஆர்வத்துடன் ஈடுபடுத் திக் கொண்டுள்ள இவர், இதுவரை நூல் வடிவில் தந்த ஆக்கங்கள், தமிழிலக்கியத்தை மேலும் வளம்படுத்துவன வாகும். இவரது வாலி என்னும் ஆய்வு நூல், தமிழிலக் கியத் திறனுய்வில் புதிய பரிமாணத்தைத் தோற்றுவித்த தாக மதிக்கப்படுகிறது.
நயத்த இலக்கியக் காட்சிகளைத் தெரிந்தெடுத்து இவர் வேத தேறலை உருவாக்கியுள்ளார். இத் தொகுதியில் சங்க இலக்கியம் முதல் தற்காலத் திரைப்

xi
பட இலக்கியக் காட்சிகள் வரை இடம்பெற்றுள்ளன. இக் காட்சிகளைத் தனது இலக்கியத் திறனுல் புடமிட்டுக் கற் போர் எளிதில் நயக்க அமைத்துள்ளார். இவரது இம் முயற்சி தமிழ் இலக்கிய ஆர்வலர்க்கும், ஆய்வாளர்க்கும் பெருவிருந்தாய் அமையும், என்பதில் சந்தேகமில்லை.
வாலி என்னும் இவரது ஆய்வு நூல் போன்று, இலக் கியத் தேறல் என்னும் இத்தொகுதி நூலும், உயர்நிலை இலக்கிய மாணவருக்குச் சிறந்த பாட நூலாகப் பயன் படும் தகுதியுள்ளது. இந்நூல் தரும் இலக்கிய இன்பம் சிந்தனை. சொல், செயல், எல்லாம் வியாபித்து நின்று கற்போருக்கும், சமூகத்துக்கும் நற்பலன் நல்கும் என்ப தால் அகளங்கன் அவர்கள் தமிழ் பேசும் மக்களின் நன் றிக்கு உரியவராவார் என்பதில், இந் நூலைக் கற்றுணர் வோரிடம் கருத்து வேறுபாடு இருக்காது என்பது எனது மணிவான கருத்து.
R. S. B. J.T.3 m, M. A., Dip-in-id., S. L. E. A. S. கோப்பாய். உப அதிபர்,
பலாலி ஆசிரிய கலாசாலை 1988 --7ے

Page 8
அணிந்துரை
வித்யாபூஷணம்' நா. சுப்பிரமணியன். M. A. Ph. 9 (விரிவுரையாளர், தமிழ்த்துறை, யாழ். பல்கலைக்கழகம்.)
கலை இலக்கியம் என்பவற்றின் இன்றியமையாத பண்பு, அநுபவத்தைத் தொற்றவைத்தல் ஆகும். இந்த அநுபவம் ஒரு குறித்த காலச் சூழலின் எல்லைக்குட்பட்ட தாயின், அதைத் தரும் கலை இலக்கியங்கள் குறித்த அக் காலத்தோடு பயில் நிலையை இழந்து விடுகின்றன. கால எல்லே கடந்த அநுபவத்தை நல்குவன, நிலையான வாழ்வு பெற்றுவிடுகின்றன. இவ்வாறு நிலைத்த வாழ்வு பெற்ற கலை இலக்கிய ஆக்கங்கள் அவை பயிலப்படும் ஒவ்வொரு காலத்திலும் அவ்வக் காலச் சூழலின் தேவைகட்கேற்ப * நிகழ்கால அர்த்தங்களை'ப் பெற்றுக் கொள்கின்றன. நிகழ்கால உணர்வோட்டங்களுக்குப் புதிய பரிமாணங்க ளைத் தரும் அநுபவக் களஞ்சியங்கள் ஆகிவிடுகின்றன. இத்தகையவற்றைச் சு வைத்தல், சிந்தித்தல் ஆராய்தல் என் னும் செயற்பாடுகளினூடாகவே கலை இலக்கியக் கொள்கை திறனுய்வுகள், வரலாறுகள் என்பன உருப்பெறுகின்றன. துன், இவ்வகையில் ஒரு சுவைதேர் முயற்சியாகவும், ஆய்வுச் செயற்பாடாகவும் அமைவதே அகளங்கன் ( நா. தர்மராஜா ) அவர்களின் இந்த இலக்கியத் தேறல், தேறல் என்பது தேன் எனப் பொருள்படும். இலக்கியங்கள் என்ற மலர் களிலிருந்து பெறப்பட்ட தேன் இது, திரட்டித் தந்த தேன் வண்டாக அமைபவர் அகளங்கன். பண்டைக்கால இடைக்கால, தற்கால, இலக்கிய மலர்களில் தாம் சுவைத்தவற்றையும், நுணுகி நோக்கியவற்றையும் இந் நூலில் வடித்துத் தந்துள்ளார்.
அகளங்கன் அவர்கள் கலை இலக்கிய வளம்மிக்க வன்னி மண்ணின் மைந்தன்; புராண படனம், சோதிடம், மருத் துவம், நாட்டார் கலைகள் முதலியவற்றல் வளப்படுத்தப்

X111
பட்ட அச்சூழலிற் பயின்றவர். இச் சூழல் அவர் ஒரு 1டைப்பாளியாகவும், சுவைதேர் சிந்தனையாளனுகவும் உரு வாக வித்திட்டது. பல்கலைக் கழகத்தில் அறிவியல் பயில வந்த அவரை, அச்சூழலும், சிரித்திரன், சுடர், சோதிட மலர், போன்ற சஞ்சிகைகள், வீரகேசரி, தினகரன், ஈழ நாடு, ஈழமுரசு, முரசொலி முதலிய பத்திரிகைக் களங்
களும் சமகாலத்திலே கவனிப்பைப் பெறத்தக்க ஒரு இலக் கியகாரணுக உருவாக்கின. அவர் மேற்கொண்ட ஆசிரியப் பணி - ஆசிரியப் பயில்நிலைச் சூழல்கள், அவரது இவ்வுரு வாக்கத்துக்கு உந்து சக்தியாயின. இன்று அவர் தமிழி லக்கிய ஆர்வலர், பண்பாட்டு நோக்கினர், ஆகிய இரு சாராரதும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழத் தொடங்கி யுள்ளார். கடந்த ஆண்டில் வெளிவந்த இவரது வாலி என்ற ஆய்வு நூல் இவரது இலக்கிய அணுகு முறையின் ஒரு வெட்டு முகம். இந்த இலக்கியத் தேறல் அச்சிந்தனை யின் இன்னெரு பிரசவம்.
இன்று எம்மத்தியில் திகழும் இலக்கிய நோக்கு நிலை களை, முக்கியமானவற்றை மூவகைப்படுத்தலாம். சமகால இலக்கியங்களே மட்டுமே யின்று, அவை மட்டுமே இலக் கியம் எனக் கொண்டு, பண்டைய, இடைக்கால ஆக்கங் கஃள அலட்சியம் செய்யும் நிலை முதலாவது வகை. சம கால, பண்டைய, இடைக்கால இலக்கியங்கள் யாவற் லறயுமே பயின்று சுவைத்துச் சுவைக்க வைக்கவும், 'ஆரா 1வும் முயல்வது இரண்டாவது வகை. பண்டைய இடைக்கால, இலக்கியங்களை மட்டுமே பயில்வதோடு அவற்றைப் பூஜை மனப்பான்மையுடன் அணுகுவது மூன் (?வது வகை, இவற்றில் இரண்டாவது வகை சார்ந்த நோக்குநிலையே பண்பாட்டு வரலாற்று நோக்கில் பொருத்த :ானதும் அவசியமானதும் ஆகும். இந்த இரண்டாவது வகை சார்ந்தவர்களாக எம்மத்தியில் உள்ள சிலரில் நமது கவனத்தைக் கவர்ந்துள்ளவர்களுள் ஒருவர் அகளங்கன் அவர்கள். மேற்சுட்டிய எல்லா வகை இலக்கியங்களையும் பயின்று சுவைத்து, எம்மையும் சுவைக்க வைக்க முயல்பவ

Page 9
Xiv
ராகவும் , தமது அறிவுக்கும், அநுபவத்துக்குந் தவறு எனத் தெரிந்தவற்றைக் “குற்றம் குற்ற மே' எனச் சுட்டிக் காட்டத் தயங்காத தன்னம்பிக்கையும் துணிவும் மிக்கவராக வும் இவர் திகழ்கிறர். இவ்வகைச் செயற்பாடுகளின் வெளிப்பாடுகளே ‘இலக்கியத் தேறல்' களாகியுள்ளன.
முதலாவதாக அமையும் “காட்சியும் மாட்சியும்” என்ற கட்டுரை கவிஞனது பார்வை சாதாரண மனிதப் பார்வை யினின்று எவ்வகையில் வேறுபாடுடையதாகிறது என்ப தைப் புறநானூற்றுப் புலவர்கள், சேக்கிழார், கச்சியப் சிவாச்சாரியார், கடவுண்மா முனிவர் ஆகியோரது சில பாடல்களைச் சான்றுகளாகக் கொண்டு எடுத்துக்காட்டுவது.
'அஃறிணையும் அகத்திணையும்” என்ற கட்டுரையிலே தமிழரின் அகத்திணையிலக்கியங்களின் சுவையான காட்சிகள் மீள் பார்வைக்கு வருகின்றன. நெஞ்சை அள்ளும் சிலப் பதிகாரத்தில் கண்ணகி, மாதவி, பாண்டிமாதேவி ஆகிய மூவரும் பொருந்தி நின்ற கற்பு நெறிகளை ஆராய்வதோடு, வள்ளுவர் எப்படி இளங்கோ அடிகளுக்கு வழிகாட்டியாக அமைகிருர் என்பதை நிறுவுகிறது, மூவகைக் கற்பு என்ற கட்டுரை. ஒரு கவிஞனது ஆக்கம், அடுத்து வரும் கவிஞ னது ஆக்கத்தில் எத்தகைய ஆதிக்கத்தைச் செலுத்து கின்றது, என்பதைக் காட்டும் வகையிற் சேக்கிழாரையும், கம்பரையும் ஒப்பு நோக்குவது அடிச்சுவடுகள் என்ற கட் டுரை. மனுநீதிச் சோழன் தருமந்தன் வழிச்செல்ல ஆற்றிய முறைமையைச் சேக்கிழாரூடாக எடுத்துக் காட்டுவது மது நெறி என்ற கட்டுரை. கம்பன் காட்டும் நாட்டு வளத் தையும். பாரத இதிகாசத்தில் ( வில்லிபுத்துரருடாகப் ) புலப்படுத்தப்படும் பாரத நாட்டின் தர்ம நிலைகளைப் பற்றி யம் பேசுவன கம்பன் காட்டும் வளம், பாரத தர்மம் என்ற தலப்புக்களிலான கட்டுரைகள், கம்பர். கச்சியப்பர், வில்லிபுத்தூரர் ஆகிய மூவரும் தம் ஆக்கங்களிற் காட்டிய தாதுகளை ஒப்பு நோக்கி அவை மூன்றுமே சமரச நாட்ட மற்ற - யுத்த தந்திர (மயற்சிகள் என நிறுவுவது சமரச

XV
நாட்டமற்ற சமாதானத் தூதுகள் என்ற கட்டுரை. பரஞ் சோதி முனிவரது திருவிளையாடற் புராணத்தில் ஒரு பாத் திரமாகவுள்ள நக்கீரரின் பாத்திரப் பண்பை ஆராய்வது நக்கீரர் ஒரு விதண்டாவாதி என்ற கட்டுரை. தமிழிலக்கி யங்கள் சிலவற்றில் காணப்படும் விருந்துச் செய்திகளைச் சுவைபட எடுத்துக் காட்டுகிறது உப்பிட்டவரை, என்ற கட்டுரை. பாரதியும் பாரதமும் என்ற கட்டுரை, பாரதி யின் பாஞ்சாலி சபதம் பற்றிய பார்வையாகும். திரைப் பாடல்களில் மரபிலக்கியச் செழுமை என்ற கட்டுரையிலே சமகாலத் திரைப் பாடல்கள் பலவற்றுக்கான ஊற்றுக் கண்கள் கண்டு காட்டப்படுகின்றன.
மேற்படி கட்டுரைகளைத் தொகுத்து நோக்கும்போது, சங்க இலக்கியங்கள் முதல் இன்றைய திரைப் பாடல்கள் வரை விரிந்துள்ள அகளங்களது பார்வைப் பரப்பின் வளம் புலப்படுகிறது. சிலவற்றில் அவர் சுவை தேர்கிருர்; சில வற்றில் அவர் நுணுகி நோக்குகிமுர், சுவைதேர்தல் என்ற வகையில் அமைந்த கட்டுரைகள் இலக்கியப் பயிற்சியில் ஈடுபட விழைவோர்க்கு அருட்டுணர்வு நல்க வல்லன. நுணுகி நோக்கும் வகையில் அமைந்த கட்டுரைகள் இலக் கியத் திறனுய்வு நோக்கினர்க்கு நல்விருந்தாவன. இவற் றுட் சில, சமகாலச் சூழலுக்கேற்ப நிகழ்கால அர்த்தம் கொண்டன. குறிப்பாக, சமரச நாட்டமற்ற சமாதானத் தூதுகள் என்ற கட்டுரை கடந்த சில ஆண்டுகளில் 'ஈழத் தமிழர் தம் தலைவிதியை நிர்ணயிக்கும் நோக்கில் நடை பெற்றுவந்த தூதுகளின் உணர்வுச் சூழலில் எழுதப்பட்டது. இதனல் சமகால வாசகர் மனதைப் பெரிதும் ஈர்த்தது. கம்பன் காட்டும் வளம், பாரதியும் பாரதமும் ஆகிய கட்டு ரைகளும் நிகழ்கால அர்த்தங் கொண்டவைகளே.
நக்கீரர் ஒரு விதண்டாவாதி என்ற கட்டுரை, இந்தக் கட்டுரைத் தொகுதியின் தகுதியை நன்கு உயர்த்தி நிற்கும் ஒரு ஆக்கமாகும். நக்கீரன் என்ற புலவன் தமிழ் மரபிலே ' நெற்றிக் கண்ணேக் காட்டினுலும் குற்றம் குற்றமே **

Page 10
xvi
எனக் கூறும் துணிவுடைத் திறனய்வாளனுகக் கருதப்படு பவன். "நக்கீரப் பார்வை' என்ற தொடரும், கீரன் எனப் பெயர் புனைந்துவரும் மரபும், தமிழுலகம் அறிந் ததே. இவ்வாறு கணிக்கப்பட்டு வந்த நக்கீரன் ஒரு திறனுய்வாளன் அல்ல, விதண்டாவாதியே என்பதைத் தக்க ஆதாரங்களுடன் நிறுவுவதாக இந்தக் கட்டுரை அமைகிறது. நக்கீரர் தொடர்பாக இத்தகைய திறனுய்வுப்
பார்வை இருபதாண்டுகட்கு முன், இலங்கைப் பல்கலைக்
கழக வடமொழித் துறை விரிவுரையாளராகத் திகழ்ந்த
திரு, கோ. சுந்தரமூர்த்தி என்பவரால் முன்வைக்கப் பட்டது. (' 'வழுஉச் சொல் என்ப தறிகிலன்' இளங்கதிர் பேராதனை 1966) அதன்பின் அகளங்கனது இக்கட்டுரை யில்தான் நக்கீரர் இவ்வாறு பார்க்கப்படுகிறர். விடய
அறிமுகம், வாதங்களை முன்வைக்கும் முறைமை, நக்கீரர் விதண்டாவாத நோக்கிலேயே செயற்பட்டவர் எ ன
நிறுவும் பாங்கு என்பவற்றிலே அகளங்கனின் சிந்தனைத் தெளிவு, செயல்திறன் என்பன நன்கு புலப்படுகின்றன.
இதிலே புலப்படுத்திய அணுகுமுறையை அவர் தொடர்ந்து
மேற்கொண்டால் நமது தலைமுறையில் ஒரு சாதனையா?
ராக அவர் வளரலாம் என்பதற்கு ஐயமில்லை.
மேற்குறித்த கட்டுரை தவிர்ந்த ஏனைய கட்டுரை: ளில், அடிச்சுவடுகள், மூவகைக் கற்பு, திரைப்பாடல்களில் மரபிலக்கியச் செழுமை, என்பன குறிப்பிட்டுக் கூறக்கூடிய தரத்தில் அமைந்துள்ளன. ஒப்புநோக்கு அணுகு முறையில் இலக்கிய எண்ணக்கருக்களின் ஊற்றுக் கண்களையும், மர போட்டத்தையும் இனங்காணும் முயற்சிகளான இவை தமிழிலக்கிய வரலாற்றுப் போக்கிற் கவனம் செலுத்து: வர்களுக்கு மிகுபலன் தருவன,
ஏனைய கட்டுரைகள் அடுத்த தரத்தின. அவற்றின் உள்ளடக்கங்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பலராலும் எழுதப்பட்டும், பேசப்பட்டும் வந்துள்ளவை. அகளங்க. னது கைவண்ணத்தில் புதுப்பொலிவு பெறுகின்றன. சராசரி

XV1
வாசகனுக்கும் , தமிழ் மரபிலக்கியத் துறையில் அடி யெடுத்து வைக்க முயலும் ஆரம்ப நிலையினர்க்கும் இவை பயன் நல்க வல்லன.
மேற்படி பன்னிரு கட்டுரைகளையும் தொகுக்கும் முறையில் ஒரளவு வரலாற்று முறை பேணப்பட்டுள்ளமை தெரிகிறது. இத் தொகுதி சங்க இலக்கியங்களிலே தொடங்கித் திரைப் பாடல்களில் வந்து நிறைவுறுகிறது. சங்கச் சான்றேரிலிருந்து இளங்கோ, சேக்கிழார், கம்பர், வில்லிபுத்துரர், கச்சியப்பர், பாரதி, கண்ணதாசன் முதலிய பெரும் புலவர்கள் பலரும் இந்த வரலாற்றெல்லைக்குள் தரிசனம் பெற்றுள்ளமை இத் தொகுதியின் ஒரு தனிச் சிறப்பு எனலாம்.
நூலமைப்பில் தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அழகிய மேலட்டை அமைப்பு, ஈழத்தில் தமிழ் நூற்பதிப் புத்துறை அடைந்துவிட்ட பெரு வளர்ச்சியைப் பறைசாற்றி நிற்பது. இந்நூலைப் பதிப்பித்து வெளியிட்ட வவுனியா முத்தமிழ்க் கலாமன்றத்தினர், வன்னித் தமிழ்ப் பாரம்பரி யத்திற்கு மட்டுமன்றி, ஈழத்தின் தமிழ்ப் பாரம்பரியம் முழுவதற்குமே பயன்மிகு பணியாற்றியுள்ளனர். அகளங் கனது இலக்கியப் பார்வை எதிர்காலத்தில் மேலும் விரிவும் ஆழமும் பெற்று அவரை ஒரு சாதனையாளராக்க வேண் டும் என்ற ஆவலைத் தெரிவித்து இவ்வுரையை நிறைவு செய்கிறேன்.
விரிவுரையாளர், கலாநிதி. நா. சுப்பிரமணியன் தமிழ்த்துறை, 0-7-1988 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

Page 11
முன்னுரை
தினக்குத் தெரிந்த உலகப் புலவர்களிலே , "கம்பனப் போல். வள்ளுவர்போல் இளங்கோவைப்போல்’ பூமியிலே எங்குமே, யாருமே பிறந்ததில்லை என்று உறுதியாகக் கூறு கிருர் மகாகவி பாரதியார்.
புலவர்களிலே முதல் மூன்று இடங்களையும் தமிழ்ப் புலவர்களுக்குக் கொடுத்து அது ' உண்மை வெறும் புகழ்ச்சியில்லை' என்று பாடிய பாரதியார், மொழிகளைப் பற்றிக் கூறும்போது 'தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணுேம்' என்று பாடுகிறர். ஏனை மொழிகளுக் குத் தமிழ்மொழியோடு போட்டியிடும் தகுதிகூட இல்லைப் போலும். இரண்டாம், மூன்ரும், இடங்கள் கூட எந்த மொழிக்கும் பாரதியால் வழங்கப்படவில்லை.
அத்தகைய பெருமைபெற்ற, இலக்கிய இலக்கணச் செழுமை பெற்ற தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் நாங்கள். பாற் கடலிலே வாழும் மீன் போல அசுத்தங்களிலேயே அதிக நாட்டங் கொள்கிருேம். தாமரையோடு கூடப் பிறந்த தவளையின் நிலையில், இலக் கியத் தேனின் இனிமையை அறியா மண்டூகங்களாக வாழ்கின்றேம். பாற்கலனில் இருக்கும் பூனே யைப் போல கரப்பொத்தான் பூச்சியிலே கண்வைத்துக் காத்திருக்கிருேம்.
மனம் என்னும் மதயானையை அறிவு என்னும் அங்கு சத்தால் அடக்கி வழிநடாத்த வேண்டும். இல்லையேல் அது அழிவுகளைச் செய்யவே முயலும். மனத்தை அதன் போக்கில் செல்லவிடாது தீமையான வழிகளைத் தவிர்த்து நல்ல வழியிலே செல்லவிடுவதுதான் அறிவின் வேலை.
சென்ற இடத்தால் செலவிடாது தீதுஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு. (குறள்)

XiX
மனத்தைச் செம்மைப்படுத்தக் கூடிய சி ந் த னை ச் செழுமைமிக்க, இலக்கியக் கருவூலங் கொண்ட மொழி எமது தமிழ் மொழி. போதனை கள் மூலமும் கதாபாத்தி ரங்கள் மூலமான சாதனைகள் மூலமும் நல்வாழ்வுக்கு வேண்டிய மனவளத்தை வழங்கவல்ல இலக்கியச் செல்வம் தமிழ் மொழியின் தனிச் சொத்து,
அந்த அழியா இலக்கியங்களைக் கற்று எமது மக்கள் நிறை மனிதராக, எல்லோருக்கும் பயன்படுபவராக வாழ வேண்டுமென்பது எனது அவா. இந்தக் கல்வியை இன் றைய கல்வித் திட்டம் வழங்கவில்லை. அதனல், இப் பொறுப்பு தமிழ்கற்ற சான்றேரிடமே இன்றைய நிலையில் விடப்பட்டுள்ளது.
தமிழைக் கற்றவர்கள் அந்த இன்பத்தைத் தமக்கே ஏகபோக உரிமையாக்கிக் கொள்ளாமல், அதை மற்றை யோருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். இலக்கிய நூல்களை எழுதி மக்களை நல்லுணர்வு பெறச் செய்ய வேண்டும். தமிழின் முதிசச் சொத்தான இலக்கியம், எல்லாத் தமி ழருக்கும் கிடைக்க வேண்டும். இன்று தமிழுணர்வு வளர்ச்சி யடைந்த அளவு தமிழறிவு வளர்ச்சியடையாதது மிகவும் வேதனைக்குரியது.
கற்றவர்கள், மற்றவர்களை வழிநடாத்த வேண்டும். ஆனல் கற்றவர்களே தடம்புரளும் இன்றைய உலகில் இது பொருத்தமானதா? கற்றவர்கள் மனத்தை வளம்படுத்தும் கல்வியைக் கற்காததால், தாமும் தடம்புரண்டு, சமூகத் தையும் தடம்புரளச் செய்கின்ற நிலையே இன்று உண்டு.
வெள்ளத் தனையது மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு.
ஒருவனது உயர்வுக்கு அவனது உள்ளமே காரணம், என்கிருர் வள்ளுவர். ** மனத்துக் கண் மாசிலன் ஆதல் அறம்', அதனுல் மனத்தை வளம்படுத்தும் கல்வி எல்

Page 12
XX
லோருக்கும் வேண்டியதே. இக்கல்வியை அழகியற் கலைகள் மூலம் வழங்குவது சுலபமானது. இன்ப உணர்வுகளோடு இலக்கியங் கற்பவர்கள் இலகுவாக மனவளத்தைப் பெற்று விடுகிறர்கள்.
இந்தச் சிந்தனையின் அடிப்படையில் நான் பத்திரிகை களில் எழுதிய கட்டுரைகளில் பத்துக் கட்டுரைகளையும் , இலங்கை வானெலியில் ஆற்றிய எனது கன்னிப் பேச்சை யும், இத்தொகுப்புக்கென எழுதிய ஒரு கட்டுரையையும் சேர்த்து, பன்னிரண்டு கட்டுரைகளைத் தொகுத்து, இலக் கியத் தேறல் என்ற பெயரில் நூலாக்கி உங்கள் கைகளில் தந்திருக்கின்றேன்.
தமிழிலக்கிய ஆர்வலர்களை மனதில் கொண்டும், تارچ வாளர்களை மனத்தில் கொண்டும் நான் கடந்த எட்டு ஆண்டுகளாக எழுதிய கட்டுரைகளில் சில இவை. மிக இலகுவான, எளிய நடையில், எல்லோருக்கும் விளங்க வேண்டும் என்ற நோக்கில் பத்திரிகைகளில் எழுதினேன். அவை அப்படியே இலகுவான நடையிலேயே நூலிலும் உள்ளன. இவைகளை வெளியிட்ட வீரகேசரி. தினகரன். ஈழநாடு. ஈழமுரசு. முரசொலி ஆகிய பத்திரிகைகளுக்கு என் நன்றிகள்.
யாழ். பல்கலைக்கழக தமிழ்த் துறை விரிவுரையாளர் கலாநிதி நா. சுப்பிரமணியன் அவர்களும், பல T லி ஆசிரிய கலாசாலை உப அதிபர் திரு. R. S. நட்ராசா M.A. அவர்களும். புலவர் ஈழத்துச் சிவானந்தன் அவர்களும் எனது கையெழுத்துப் பிரதியை வாசித்து. ஆலோசனை களும், அறிவுரைகளும் வழங்கி என்னை மிகவும் உற்சாகப் படுத்தினர். அவர்களுக்கும் என் நன்றிகள் உரியன.
வவுனியா ( தெ. த. பி. ) உதவி அரசாங்க அதிபர், திரு. க. ஐயம்பிள்ளை அவர்கள் எனது இந்நூல் ஆக்கத்தில் பெரும் பங்குகொண்டு, ஆலோசனை, அறிவுரை, மற்றும்

xxi
ஆக்கபூர்வமான உதவிகளுஞ் செய்து, என்னை ஊக்குவித்து வாழ்த்துரையும் வழங்கியுள்ளார். Y
வவுனியா (தெ. த. பி. ) கூட்டுறவுச் சங்கத் தலைவர் திரு. S. ஞானப்பிரகாசம் அவர்கள் எனது இந் நூலாக்க முயற்சிக்குப் பெரும் உற்சாகங் கொடுத்து நம்பிக்கையூட்டி -ஞர். இவர்களின் தூண்டுதல்கள் இந்நூலை இவ்வளவு விரைவில் வெளிக் கொணரப் பெரிதும் உதவின. இவர் களுக்கு என் நன்றிகள் என்றும் உரியன.
இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கி, நூலை அலங்கரித்த, வவுனியா அரசாங்க அதிபர் திரு. கே. சி. லோகேஸ்வரன் அவர்களுக்கும், பலாலி ஆசிரிய கலாசாலை அதிபர் திரு. ந. கனகேஸ்வரன் அவர்களுக்கும், அணிந்துரையால் நூலை அணிசெய்த கலாநிதி. நா. சுப்பிரமணியன் அவர் களுக்கும், அறிமுக உரை எழுதிய பலாலி ஆசிரிய கலா சாலை உப அதிபர். திரு. R. S. நடராசா அவர்களுக்கும் என் அன்பு நன்றிகள்.
இந்நூலை வெளியிடும் வவுனியா முத்தமிழ்க் கலா மன்றத்திற்கும், சிறப்பாக அதன் தலைவர் திரு. ச. அரு ளானந்தம், செயலாளர் திரு. P. மாணிக்கவாசகம் ஆகி யோர்க்கும், நல்ல முறையில் இந்நூலை அச்சுப் பதிவு செய்துதந்த, நல்லூர், உமா அச்சக ஊழியர்களுக்கும் அதன் அதிபர் திரு. அ. கதிர்காமநாதன் அவர்களுக்கும், அட்டையை அழகான முறை யில் அமைத்துத் தந்தி திரு. தவம், ஒவியர் மூர்த்தி, திரு. எஸ். யோகரட்ணம் (ராதேயன்), விஜயா அச்சகத்தினர் ஆகியோர்க்கும் என் நன்றிகள்.
இந்நூலின் அட்டையின் பின்புறத்தையும், என் உள்ளத்தின் உட்புறத்தையும், தன் கருத்துக்களால் அலங் கரிக்கும், சிரித்திரன் ஆசிரியர் திரு. சி. சிவஞானசுந்தரம் அவர்களுக்கும், எனக்கு சகல் உதவிகளுஞ் செய்து தந்த நண்பன் திரு. செ. சண்முகநாதன் அவர்களுக்கும்,

Page 13
xxii
மற்றும் உதவிகள் செய்தி நண்பர்கள் திரு. சு. முரளி தரன், திரு. மு. திருநாவுக்கரசு, திரு. இ. ஓங்கார மூர்த்தி ஆகியோர்க்கும், இந் நூலை வாசித்து என்னை மேலும் உற்சாகப்படுத்தப் போகின்ற எல்லா இலக்கிய இதயங்களுக்கும் என் நன்றிகள்.
எனது இலக்கிய முயற்சிகளை நூல் வடிவில் வெளியிடு வதில், என்னிலும் பார்க்க அதிக ஆர்வங்கொண்ட என் உடன் பிறந்த சகோதரர்களின் ஒத்துழைப்பும்,
நானேயாகி என்னேடொன்றி, எல்லா வகையிலும் எனை ஊக்குவிக்கும் என் இல்லாளின் தூண்டுதலும், நூலாக்கம் எனும் முள் நிறைந்த காட்டில் வழிசமைத்து மலர் தூவி, என்னை மகிழ்ச்சியோடு, உற்சாகமாக உலா வரவிட்டு வழித் துணையாய் வரும் எ ன் த ம் பி திரு. க. குமாரகுலசிங்கம் அவர்களின் ஆதரவும், மகத் தானவை. நன்றிக்கு அப்பாற்பட்டவை.
உங்கள்
நா. தர்மராஜா
பம்பைமடு, அன்பு வவுனியா. 6-7-1988 அகளங்கன்

பொருளடக்கம்
பக்கம்
காட்சியும் மாட்சியும்.
அஃறிணையும் அகத்தினையும். 10
மூவகைக் கற்பு. s 18
அடிச்சுவடுகள். 32
மனுநெறி. 44 கம்பன் காட்டும் வளம். 56
பாரத தர்மம். 6.
சமரச நாட்டமற்ற சமாதானத் தூதுகள். 76
நக்கீரர் ஒரு விதண்டாவாதி. 86
2ů fúL6u6ð Jr. . . . . 101
பாரதியும் பாரதமும். 111
திரைப்பாடல்களில் மரபிலக்கியச் செழுமை. 117

Page 14

1.
காட்சியும் மாட்சியும்
கவிஞன்எப்பொழுதும் மற்றவர்களில்இருந்து சற்றுவேறு பட்டவணுகவே காணப்படுகின்றன். கவிஞன் தான் காணுங் காட்சிகளில் எல்லாம், ஏதாவது ஒரு அர்த்தத்தைக் காண் பதற்கேமுயல்கிறன். அல்லது காட்சிகள் எல்லாம் அவனுக்கு ஏதாவது அர்த்தங்களைச் சொல்லுவனபோலவே இருக்கும்.
அதற்குக் காரணம் அவனது நோக்கு கூர்மையாக இருப்பதும், சிந்தனை கற்பனை வளமுடையதாக இருப்பதுந் தான் என்று சாதாரணமாகச் சொல்லலாம்.
கவிஞர்களின் தனிப் பாடல்களைப் பொறுத்த வரை, ஒரு காட்சி அல்லது அநுபவம் அப்போதைய அவர்கள் மனநிலைக் கேற்றபொருளோடு கவிதையாகின்றது. ஆனல் காவியங் களிலோ அல்லது வேறு வகைப் பிரபந்தங்களிலோ அவற்றின் தேவைக்கேற்ப அவர்களது சிந்தனையில் அர்த்தங்கள் தொனிக் கின்றன.
புறநானூற்றுக் காட்சிகள்.
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்ற புலவர் வேள்ஆய் அண்டிரனைப் புகழ்ந்து பாடும் ஒரு பாடல் புறநானுர ற்றிலே வருகின்றது. இப் பாடல் ஒரு காட்சியை வியந்து அரசாேப்புகழ்ந்து பாடுவதாக அமைந்திருக்கின்றது.

Page 15
2 இலக்கியத் தேறல்
ஆய் அண்டிரனின் நாடு மலை சூழ்ந்த காட்டுப் பிரதேசம். அவனது நாட்டின் பெருஞ் செல்வம் யானைகளே. ஏராள மான யானைகள் அவனது காட்டிலே வசித்து வந்தன.
அவனைப் புகழ்ந்து பாடிவரும் புலவர்களுக்குப் பரிசி லாக யானைகளேயும் அவன் கொடுப்பது வழக்கம்.
புலவர் முடமோசியார் காட்டு வழியிலே செல்லும் போது அங்கே ஏராளமான யானைகள் நிற்பதைக் காண்கின் ருர், ஆய் அண்டிரனின் கொடைச் சிறப்பை நன்கு அறிந்த வரான அப்புலவருக்கு அந்தக் காட்சி ஒரு விசித்திரமான கற்பனையை உண்டுபண்ணுகிறது.
இந்தக் காடு வேள் ஆய் அண்டிரனிடஞ் சென்று அவனைப் புகழ்ந்து பாடித்தான் இத்தனை யானைகளைப் பரி சாகப் பெற்றதோ என்ற கற்பனைதான் அது."
மழைக்கணஞ் சேக்கு மாமலைக் கிழவன் , வழைப்பூங் கண்ணி வாய்வா ளண்டிரன் குன்றம் பாடின கொல்லோ களிறுமிக வுடையஇக் கவின்பெறு காடே.
இயற்கையாக காட்டில் நிற்கும் யானை, புலவரின் கற்பனை பில் எப்படி ஒரு சிந்தனையைத் தூண்டியுள்ளது பாருங்கள்.
இதேபோன்று புறநானூாற்றிலேஇன்னெருகாட்சி புலவர் கபிலரது கற்பனையில் வளம் பெறுகிறது. பாரி வள்ளலின் உயி ருக்குயிரான நண்பராகஇருந்தவர் கபிலர். பாரியைச் சூழ்ச்சி யிஞல் வீழ்ச்சியுறச் செய்கின்றனர் முடியுடை மூவேந்தர்.
பாரி அரசாண்ட பறம்புமலை மூவேந்தரின் படையெடுப் பால் கைப்பற்றப்பட்டு,பாரி மன்னனும் கொல்லப்படுகிருன்.
பாரியின் பிள்ளைகளான அங்கவை. சங்கவை என்ற இரு "கன்னிகளையும் அழைத்துக்கொண்டு தப்பிச்செல்கிருர் கபிலர். பாரியின் பிரிவு தாங்காமல் வடக்கிருந்து உயிர் நீக்கக் கருதிய

அகளங்கன்
கபிலர், பாரியின் பிள்ளைகளின் திருமணத்துக்காகக் காத்
திருந்தார்.
விச்சிக்கோ என்ற மன்னனுக்கு பாரியின் பிள்ளைகளை மணம்முடித்து வைப்பதற்காக அழைத்துச் சென்ருர் கபிலர். அவர்களை அரசனுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறர். கபிலர் அறிமுகப்படுத்தும்,அழகு ரசிக்கத்தக்ககற்பனையாகஅமைகிறது
பாரி முல்லைக் கொடிக்குத் தேரீந்த கொடைச் சிறப்பு அக்காலத்தில் பெரும் புகழாகக் கொள்ளப்பட்டது.
தனது இராச்சியத்தில் ஒரு முல்லைக் கொடிகூட கொழு கொம்பின்றி, ஆதரவின்றி அல்லல்படக்கூடாதே என்ற அரும் பெரும் நோக்கில், தான் ஊர்ந்துவந்த தேரை அந்த முல்லைக் கொடிக்கு ஆதரவாக, கொழுகொம்பாக நிறுத்தி விட்டு, கால்நடையாகப் பறம்புமலைக்கு வந்து சேர்ந்தான் பாரி.
துயரைக் கண்டவுடனேயே துடைத்தெறியும் முயற்சியில் ஈடுபட்ட அவனது பரிவுணர்ச்சி மிகவும் போற்றத்தக்கதே.
இயல்பாகவே தனக்குரிய கொழுகொம்பைத் தேடிப் படரும் முல்லைக் கொடியின் மேலேயே அரசனுக்கு இவ்வளவு கருணை, இரக்கம் அக்கறை, அனுதாபம் இருந்திருக்கு மால்ை,அவனிலேயே தங்கியிருக்கின்ற குடிமக்களின் குறை களைக்களைவதில் அவனது அக்கறை எப்படி இருந்திருக்கும் என் பதை எடுத்துக் காட்டும் சிறப்புடையது இந்த முல்"லக்குத் தேரீந்த கொடை.
விச்சிக்கோவிடம் கபிலர் கூறுகிருர், சாதாரணமாக எல்லா அரசர்களும் தன்னைப் புகழ்ந்து பாடும் புலவர் களுக்குத்தான் பரிசு கொடுப்பார்கள். ஆனல் பாரியோ அதற்கு விதிவிலக்கானவன்.
தன்னைப் புகழ்ந்து பாடாத முல்லைக் கொடிக்குக்கூட நெடுந்தேரைக் கொள்க எனக் கொடுத்த பெருங் கொடை ஆபாளன். அவனது மக்களே இவர்கள் என்று அறிமுகப் படுத்துகிருர் புலவர் கபிலர்

Page 16
W இலக்கியத் தேறல்
இவரே.
பூத்தலை அறஅப் புனைகொடி முல்லை நாத்தழும்பு இருப்பப் பாடா தாயினும் கறங்குமணி நெடுந்தேர் கொள்கண்ணக் கொடுத்த பரந்தோங்கு சிறப்பின் பாரிமகளிர்.
பாரி முல்லைக்குத் தேரீந்ததை கபிலரின் கவியுள்ளங் காணுங் கற்பனையே இது. தொடர்ந்து பூத்துக் கொண்டே இருக்கும் முல்லைக்கொடி, பாரி மன்னனைப் புகழ்ந்து பாடவ்ே இல்லை.அப்படித் தன்னைப் பாடாத முல்லைக்கும், சுழல்கின்ற மணிகள் பூட்டிய உயரமான தேரைக் கொடுத்த சிறப்புடை யவன் பாரி, இவர்கள் அவரின் மகளிரே.
கபிலரின் கவியுள்ளங் கண்ட அற்புதமான கற்பனை அழ கான பாடலாகியிருக்கிறது.
உதிருகின்ற பிட்டு
பாலியாறு ஒடிக் கொண்டிருக்கின்றது. அந்த ஆற்றிலே மீன்கள் ஆருேடுந் திசைக்கு எதிர்த்திசையில் ஒடிக்கொண் டிருக்கின்றன. சாதாரணமாக மீன்கள் எப்போதும் நீர் ஒடுந் திசைக்கு எதிர்த் திசையில் தான் ஒடும்:
இந்தக் காட்சியைக் காணுகிருர் கச்சியப்ப சிவாச்சாரி யார். தான் பாடத் தொடங்கி இருக்கும் கந்தபுராணத்தில் இந்தக் காட்சியைச் சேர்க்க வேண்டுமென்ற நோக்கிலே பார்க்கிருர்,
புராணக் கதைக்கேற்ப புராணக் கதைகளை உவமை யாக்கிச்சொல்ல விரும்புகிறது அவரது மனம்.
வைகையாற்றிலே திருஞானசம்பந்தர் இட்ட ஏடு எதிரே றிச் சென்றதுபோல இருக்கிறதாம்மீன்கள் எதிர்ஏறும்காட்சி.
பாண்டிய நாட்டிலே கூன்பாண்டிய மன்னனின் முன் னிலையில் சமண சமயத்தாரோடு அனல்வர்தம், புனல்வாதம்

அகளங்கன் 5
நடாத்திய திருஞானசம்பந்தர், புனல்வாதமாக 'வாழ்க அந்தணர்” எனத் தொடங்குந் தேவாரத்தை ஏட்டிலே எழுதி வைகை யாற்றிலே இட, அவ்வேடு எதிரேறிச் சென்றது. சமணரின் ஏடு ஆற்றேடு அள்ளுண்டு சென்றது. கூன்பாண்டி யனின் கூன் நிமிர்ந்து நின்றசீர் நெடுமாறனுயினன்,
இது திருஞானசம்பந்தரின் கதையில் வரும் நிகழ்ச்சி.
கச்சியப்பருக்கு பாலியாற்றில் மீன்கள் எதிரேறிச் செல்வ தைச் சொல்வதற்கு திருஞானசம்பந்தரின் கதை கிடைத்த தோடு திருப்தி ஏற்படவில்லை.
வைகை ஆறு பற்றிச் சொல்லவும் ஆசை ஏற்படுகிறது. அந்த வைகைதான் சிவபெருமான் மண்சுமந்து அணை கட்டிய பெருமைபெற்ற வைகை. அந்தக் கதையையும் சொல்லிவிடு கிருர் அழகாக,
உதிருகின்ற சிற்றுண்டிகொண் ட்ொலிபுனல் சட்ைமேல் மதுரை நாயகன் மண்சுமந் திட்ட்மா நதியில் முதிரும் முத்தமிழ் விரகர்தம் ஏடென மொய்ம்மீன் எதிர்பு குந்திட்ப் போவது பாலியாம் ஆறு. மாணிக்கவாசகர் குதிரை வாங்கக் கொண்டுபோன நாற் பத்தி ஒன்பது கோடி பொன்னையும் குருந்த மர நிழலிலே இருந்த குருவிடம் கொடுத்து அவருக்கு அடிமை பூண்டதும், பின்னல் குதிரைகள் பாண்டி நாட்டுக்கு வந்ததும், அன்றே இரவோடிரவாக பரிகள் யாவும் நரிகளானதும், அதனல் கோபங்கொண்ட அரிமர்த்தன பாண்டியன், மாணிக்கவாச கரைத் தண்டித்ததும், இறைவன் தமது அடுத்த திருவிளையா டலை ஆற்றுவதற்காக வைகையைப் பெருக்கெடுக்கச் செய்த தும், மாணிக்கவாசகரின் கதையில் வரும் சம்பவங்களாகும்.
பெருகிய வைகையை அணைகட்டப் பங்கு பிரிக்கப்பட் டது. கணவனே, பிள்ளையோ இல்லாத ஒரு நரை மூதாட் டிக்கு, செம்மனச் செல்வி என அழைக்கப்பட்ட வந்திக்கும் .பங்கு கொடுக்கப்பட்டது

Page 17
6 இலக்கியத் தேறல்
அடைப்பதற்கு ஆளின்றி ஆண்டவனிடம் முறையிட் டாள் கிழவி, இறைவனே கூலியாளாக கூடையும், மண்' வெட்டியும் கொண்டு வந்தார், இது அறிந்த கதைதான்.
பிட்டு விற்றுச் சீவியஞ் செய்யும் அந்தக் கிழவியிடம், கூவியாளாக வந்தார் சிவபெருமான், கூலி பேசப்பட்டது. சிவபெருமானுே தனக்கு முற்கூலி வேண்டும் என்று பிடி வாதம் பிடித்தார்.
கிழவிக்கோ வசதியில்லை, ஆளைவிட்டாலும் வேறு ஆள் கிடையாது. " " மகனே! இப்பொழுது வேண்டுமானுல் இனிய பிட்டுத் தருகிறேன், சாப்பிட்டுவிட்டு வைகைக் கரைக்கு அணைகட்டச் செல்லு, மாலையில் பிட்டுக்களை விற்றுப் பணம் தருகிறேன்’ என்று கூறினுள்.
கிழவியின் பேச்சுக்குச் செவிசாய்த்த சிவபெருமான் "தாயே அப்படியாயின் ஒரு ஒப்பந்தம் செய்வோம். நீ பிட்டை அவி, உதிர்ந்து போகின்ற பிட்டுக்களையெல்லாம் எனக்குச் சாப்பிடத் தந்துவிடு, உதிராத பிட்டுக்களை நீ விற்று மாலையில் பணத்தைத் தா” என்று கூறினர்.
குழலிலே அவிக்கும் பிட்டுத்தான் அது என்பது கவனிக்க வேண்டியது, சிவபெருமான் அணைகட்டச் சென்றுவிட்டார். கிழவி பிட்டு அவிக்கத் தொடங்கினர். அவித்த எல்லாப் பிட்டுக்களுமே உதிர்ந்து கொண்டே வந்ததாம்.
இதனுற்தான் சிவபெருமானைப் 'பிட்டுக்கு மண்சுமந்த பெருமான்' என்று சைவ சமயத்தவர்கள் அழைக்கிருர்கள். பிட்டு விற்ருல்தானே கூலி கொடுக்கலாம். பிட்டு உதரா மல் இருந்தாற் தானே விற்கலாம்.
அதனல் பிட்டை மட்டும் சாப்பிட்டுக் கூலியின்றி மண் சுமந்து கொட்டியபடியால் இப்பெயர் வந்தது "இறை வனுக்கு. இந்தக் கதையையும் சொல்ல வேண்டும் என்ற ஆசையில் கச்சியப்பர்,

தளங்கன் 7
திருகின்ற சிற்றுண்டிகொண்டு ஒலிபுனல் சட்ைமேல் மதுர்ை நாயகன் மண்சுமந்து இட்ட மாநதியில்.”
எனக் குறிப்பிடுகிருர், பாலியாற்றிலே மீன் ஒடும் காட்சி, கவிஞருக்கு எத்தனை விடயங்களைத் தோற்றுவித்து, பாடவைத் திருக்கிறது பாருங்கள்.
வைகையும் கடலும்
கடவுள் மாமுனிவர் பாடிய திருவாதவூரடிகள் புராணம் என்ற நூலில் இதே வைகையாறு இன்னெரு வகையில் சிறப்பாகப் பாடப்பட்டிருக்கிறது.
வைகையாறு முற்காலத்தில் ஒரு சிறு நதியாகவே இருந்திருக்கிறது. வைகையின் நீர் பாண்டி நாட்டில் வயல் களுக்கே அதிகம் பயன்பட்டது. அதனுல் இந்த வைகை மற்ற நதிகளைப் போல கடலிலே சென்று கலப்பதில்லை.
குறைந்த அளவு நீரே ஒடுவதால், நீர் முழுவதும் விவ சாயத்திற்கே பயன்பட்டு விடுகிறது. இந்நதி கடலில் சென்று கலக்காததற்கு இவைகளே காரணங்களாக இருக்க, கடவுள் மாமுனிவரோ தனது கற்பனையில் வேருெரு காரணத்தைக் கூறுகிறர்.
அவரது ஆத்மீகச் சித்தனேயில் மாட்சி பெறுகிறது அக்காட்சி.
முக்கணுெரு நான்கு புய
ஐந்துமுக முன்னுேன் சொக்க்னருள் நன்மைபெறு
தொன்மைதிகழ் நன்னூடு 'அக்கடு விடத்தை
அரனுக்கருள்வ தென்றே மைக்கடலின் வைகலொழி வைகைவள நாடு.
பாற்கடலைத் தேவர்களும், அசுரர்களுஞ் சேர்ந்துகடைந்த பேர்து அங்கே முதலில் ஆலகால விஷம் தோன்றியதும். அத

Page 18
& இலக்கியத் தேறல்
னைச் சிவபெருமான் தாமே உண்டதும், உமாதேவியார் விஷத்தை வயிற்றினுள் செல்லவிடாது கழுத்தைப் பிடித்து நிறுத்தியதும், புராணக் கதை.
கழுத்திலே விஷம் நீல நிறமாகத் தங்கியிருந்ததால் சிவபெருமானுக்கு திருநீலகண்டர் என்று பெயர். கண்டம் என்ருல் கழுத்து.
வைகையாற்றுக்கு கடல்மேல் தீராத கோபமாம். கார னம் என்னவெனில், கடல்தானே சிவபெருமானுக்கு விஷத் தைக் கொடுத்தது, அத்தகைய கொடிய கடலுடன் தான் சென்று கலப்பதில்லை என்று விரதம் பூண்டு கடலுக்குச் செல்வதில்லையாம் வைகையாறு.
வைகை கடலுக்குச் செல்லாததற்கு உண்மைக் கார ணங்கள் வேறிருக்க கடவுள் மாமுனிவர் கற்பிக்கும் கார ணம் மிகவும் சுவைமிகுந்ததாகவே இருக்கிறது.
நெய் ஆகுதி
சேக்கிழார் சுவாமிகளுக்கு ஒரு இயற்கைக் காட்சி தென்படுகிறது. வயற் குறையிலே உள்ள நீரிலே செந்தா மரை மலர்ந்திருக்கின்றது, நல்ல சிவந்த மலர், நெருப்புப் போலக் காணப்படுகிறது அவரது கண்களுக்கு.
வயல் வரம்பிலே மாமரங்கள் நிற்கின்றன. மாம்பழங் கள் பழுத்துக் கனிந்து சாறு ஒழுகுகின்றது. அந்தச் சாறு மாஇலைகளில் பட்டுச் சொட்டுச் சொட்டாகச் சிந்துகின்றது. சிந்துந் துளிகள் நெருப்புப் போலச் சிவந்த செந்தாமரை மலர்களிலே சிந்துகின்றன.
சேக்கிழார் சுவாமிகளின் பக்தி உள்ளம், அந்தக் காட்சி யைக் கண்டு பரவசம் அடைகிறது; பாடல் பிறக்கிறது,

அகளங்கன் 9
பரந்தவிளைவயற் செய்ய
பங்கயமாம் பொங்கெரியில் வரம்பில்வளர் தேமாவின்
கணிகிழிந்த மதுநறுநெய் நிரந்தரம்நீள் இலக்கடையால் ஒழுகுதலால் நெடிதவ்வூர் மரங்களும் ஆகுதிவேட்குந்
தகையவென மணந்துளதால்.
நெருப்பிலே நெய்யூற்றி, அதாவது நெய்ஆகுதி சொரிந்து வேள்வி செய்வதுபோலத் தோன்றுகிறது சேக்கிழார் சுவாமி களுக்கு இந்தக் காட்சி. s
செந்தாமரை மலர் எ ன் னும் நெருப்பில் மாம்பழச் சாருகிய நெய் மாஇலையூடாக சிந்தப்படும் காட்சி, கனிந்த பக் தியுள்ளம்மிக்ககவிஞருக்கு வேள்வியையேநினைவுபடுத்துகிறது.
கவிஞர்களின் கண்களில் as TLS3, git தென்பட்டு, அவைஎத்தனை மாட்சிகளோடு கவிதைகளாகின்றன. கவிஞன்
என்பவன் எப்பொழுதுமே ஒரு தனிப் பிறவிதான்.
(நன்றி. வீரகேசரி 4-11-1984)
鱷,2

Page 19
2.
அஃறிணையும் அகத்திணையும்
நாயிடமிருந்து நன்றியையும், எறும்பிடமிருந்து சுறுசுறுப் பையும், காகத்திடமிருந்து ஒற்றுமையையும், மானிடமிருந்து மானத்தையும் மனிதன் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மக்கள் பொதுவாகக் கூறுவர்.
இலக்கியங்களிலே மக்களுக்குச் சில கருத்துக்களைக் கூறும் போது சில சமயங்களில் நேரடியாகக் கூருது மறைமுகமாகக் கூறும் வழக்கம் நெடுங் காலமாக இருந்து வருகின்றது.
மனிதர்களுக்குஇருக்க வேண்டிய பண்புகளை, ஒழுக்கங் களை, பறவைகள், மிருகங்கள் மூலமாக அதாவது அஃறிணை மூலமாக உயர்திணைக்கு ஒழுக்கம்போதிக்கும் உத்திகள், தமிழ் இலக்கியங்களிலே அதிகம் இடம்பெற்றிருக்கின்றன.
பிற்காலத்திலும் காவியங்களிலும், தனிப் பாடல்களிலும் இந்த உத்தி கையாளப்பட்டிருப்பதைக் கவனிக்கலாம். அஃறி ணைகளுக்குள் நடைபெறும் ஒரு காட்சியைக் காட்டுவதன் மூலம் உயர்திணைக்கு அந்த ஒழுக்கத்தை விளக்குவது வெகு இலகுவான காரியம் என்று கூறலாம்.
திருமணம், குடும்ப வாழ்வு என்ற கட்டுப்பாடுகள் இல் லாத மிருகங்கள், பறவைகள் என்பன மனிதர்கள்போல காதல் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கையும் வாழ்வதுண்டு.

அகளங்கன் 翼五
அந்தக் காட்சியைக் காட்டி ஆறறிவு படைத்த நாம் இதைவிடச் சிறப்பாக அல்லவா வாழவேண்டும் என்பதை
அறிவுறுத்துவது இதன் நோக்கமாக இருக்கலாம்.
மானின் காதல் வாழ்க்கை
இது ஒரு சங்க காலப் பாடற் காட்சி. மிகுந்த வெய்யி லிலே வாடி, நீர்தேடி ஓடி, ஒரு பிணை மானும் அதன் துணைமானும் பல இடங்களிலும் அலைந்து திரிந்தன.
ஒரு பள்ளத்திலே சிறிதளவு நீரைக் கண்டு மகிழ்ச்சி யுற்று அருகிலே வந்தன. இரண்டு மான்களும் தாகத்தின் எல்லையிலே தவித்தன. ஆனல் அந்த நீரோ இரண்டு மான் களுக்கும் போதுமானதாக இல்லை.
ஆண்மான் அந்த நீர் முழுவதையும் தனது அன்புப் பெண் மானுக்குக் கொடுக்க விரும்பியது. தனது தாகத்தை விடத் தனது துணைமானின் தாகத்தையேபெரிதாக நினைத்து, அதன் துயரைப் போக்குவதே தன் கடமையென நினைத்தது.
ஆனல் தன் காதல் கலைமான் அருந்தாமல் தானே தனியாக முழு நீரையும் அருந்த அந்தப் பெண்மான் சம்ம திக்குமா? அதனல் நீரை அருந்தாமல் நிற்கும் பெண்மா னைப் பார்த்த ஆண்மான் ஒரு தந்திரஞ் செய்கிறது. தண் ணிரிலே தானும் வாயை வைத்தது. அதைக்கண்டு பெண் மானும் நீரிலே வாய்வைத்தது. பெண்மானே முழுநீரையும் குடிக்க வேண்டும் என்று விருப்பங் கொண்டுள்ள ஆண்மான்
தானும் குடிப்பதுபோல பாவனை செய்தது.
சுனைவாய்ச் சிறுநீரை
எய்தாதென் றெண்ணிப் பிணைமான் பெரிதுண்ண
வேண்டிக் கலைமான்தன் கள்ளத்தால் ஊச்கம்
கரம்என்ர காதலர் உள்ளம் படர்ந்த
நேறி.

Page 20
12, இலக்கியத் தேறல்
காதலர்களின் உள்ளம் எந்த வகையிலே இருக்க வேண் டும் என்பதற்கு இந்தக் காட்சியை எடுத்துக் காட்டாக எழுதி யிருக்கிருர் கவிஞர்.
கலைமான் " " கள்ளத்தால் ஊச்சும் சுரம் " தான் காதலர் களின் உள்ளம் படர்ந்த நெறிக்கு உவமையாகத் தெரிந்திருக் கிறது. சாதாரணமாகப் பார்க்கும்போது ஆண்மான் பெண் மானுக்காக விட்டுக் கொடுக்கும் அன்புள்ளம், காதலுள்ளம் இங்கே காட்டப்பட்டுள்ளது போல இருந்தாலும், உண்மை யில் ஆண்பெண் குடும்ப வாழ்க்கை இரகசியத்தில் இது இன் னும் ஆழ்ந்த பெயருளைக் கொடுப்பதாக சில இலக்கிய அறிஞர் கள் கூறுவார்கள்.
மான் மூலமாக மனிதனுக்கு மானத்தைத்தான் போதிப் பது வழக்கம். ஆனல் இங்கே பிணைமானும், துணைமானும் மூலமாக காதல் வாழ்க்கையின் உள்ளம் படர்ந்த உயர்ந்த ஒழுக்க நெறியைக் கற்பிக்கிருர் கவிஞர்.
காதல் மடப்பிடியோடு களிறு
இன்னுெரு காட்சி. இது யானைகளின் காதல் ஒழுக்கத் தைக் காட்டுகிறது. பொருள் தேடச் சென்ற தலைவனின் சிந் தனையில் தலைவி கலங்கிக் கொண்டிருக்கிருள். தலைவிக்குத் தோழி ஆறுதல்கூறுகிருள்.
தல்ைவன் பொருள் தேடச் சென்ற வழியிலேயானைகள் அதிகம் இருக்கிறது என்று சொல்கிறர்கள். யானைகளின் காதல் வாழ்வு தலைவனது கவனத்தைத் திசைதிருப்பி இருக் கும். உன் நினைவு மேலெழ விரைவில் வந்துவிடுவான் என்று ஒரு காட்சியைத் தோழி தலைவிக்குக் கூறுகிருள்.
"குடி அடிக்கபந்தலே கலக்கிய சின்னிரைப்
பிடியூட்டிப் பின்உண்ணும் கலிறு?

அகளங்கன் 13
தாகத்தால் வந்தது ஒரு யானைக் குடும்பம். யானைக் குட்டி அங்கிருந்த சிறிதளவு நீரையும் காலால் மிதித்துக் கலக்கிக் கூழாக்கியது. மனிதர்களுக்கு குழந்தையின் சிறுகை அளாவிய கூழ் அமுதம் ஆவதுபோல, யானைகளும் குட்டி யானை கூழாக்கிய நீரை அமுதமாக நினைத்தன. அந்த நீரை ஆண்யானை பெண்யானைக்கு முதலில் ஊட்டிய பின்பு தானும் குடிக்கிறது.
தனது மனைவியான பெண்யானைக்கு முதலில் நீரை ஊட்டி பின்னுல் தான் நீர் குடிக்கும் ஆண் யானையின் அன் புள்ளத்தைக் காதல், கடமை உணர்வுகளை தலைவன் பொருள்தேடச் சென்ற வழியில்ே கண்டிருப்பான். கண்ட தும் தனது கடமையும் காதலும் மனத்தில் எழும். உடனே வந்துவிடுவான் என்று தேற்றுகிருள் தோழி.
இதேபோல இன்னெரு காட்சியை குறுந்தொகையிலே வரும் தோழி தலைவிக்குச் சொல்லித் தலைவியைத் தேற்று வதாக பாலை பாடிய பெருங்கடுங்கோ என்ற புலவர் பாடு கிருர். .
பெண் யானையின் பசியைப் போக்க விரும்பிய ஆண் யானை யாஅம் என்ற மரத்திலே பட்டை உரித்து அன் போடு உண்ணக் கொடுக்குமாம்.
அந்தக் காட்சி தலைவன் பொருள் தேடச்சென்ற வழி யிலே காணக் கூடியதாக இருந்திருக்கும். அக்காட்சியைக் கண்ட தலைவன், தலைவியின் மேல் ஆசைகொண்டு விரைவில் வந்துவிடுவான் என்று தலைவியைத் தேற்றுகிருள் தோழி.
நசைபெரிது உடையர்
நல்கலும் நல்குவர் பிடிபசி களைஇய
பெருங்கை வேழம் மென்சினை யாஅம் v
பொளிக்கும் அன்பின தோழி
அவர்சென்ற ஆறே.

Page 21
4 இலக்கியத் தேறல்
பெண் யானையின் துன்பத்தைப் போக்குதல் தன்கடன் என நினைக்கும் ஆண் யானையைக் கண்ட உன் தலைவனும், தானும் தனது மனைவியின் துன்பத்தை உடனே நீக்க வேண்டுமென்ற எண்ணங்கொண்டு விரைவில் திரும்பிவந்து விடுவான் என்று தலைவியைத் தேற்றுகிருள் தோழி.
அன்றிற் பறவையின் அன்பு வாழ்க்கை
பறவைகளிலே அன்றிற் பறவை காதல் வாழ்வுக்கு மிக முக்கியமான எடுத்துக் காட்டு ஆகும். அன்றிற் பற வைகளிலே ஒரு பறவை இறந்துவிட்டால், அதன் துணைப் பறவை உயிர் வாழாமல் தானும் இறந்துவிடுமாம்.
ஒன்றிற்காக ஒன்று இறந்துதான் இன்று அன்றிற் பறவை இனமே இல்லாமல் அழிந்துவிட்டதோ என்று எண் ணத் தோன்றுகிறது.
இந்தப் பறவைகளின் வாழ்க்கையிலே இன்னெரு விசித்திரமுமுண்டு, இந்தப் பறவைகள் இரண்டு கண்களை யும் மூடிக்கொண்டு நித்திரை செய்வதில்லையாம்.
ஒன்ருகப் படுத்துறங்கும் இப் பறவைகள் தமது ஒரு கண்ணை மட்டும் மூடிக்கொண்டு மறு கண்ணைத் தமது துணைப் பறவையைப் பார்ப்பதற்காக விழித்துக் கொண்டு தான் நித்திரை செய்கின்றனவாம்.
தமது கண்ணுக்குள்ளே தமது காதல் பறவை எப் போதும் இருக்கவேண்டும் என்ற தாளாத காதல்கொண்ட 1றவை இனம் இது. இப்பறவையின் இந்தப் பழக்கம் பற்றி நளவெண்பாவிலே புகழேந்திப் புலவர் இப்படிக் கூறுகிறர்.
“assissi ஒருகண் துயின்ருெருகண் ஆர்வத்தால்
இன்துணைமேல் வைத்துறங்கும். 99

அகளங்கன் 15
எவ்வளவு காதலுள்ளம் அப்பறவைகளுக்கு இருக் கிறது பாருங்கள். திருவள்ளுவர் காமத்துப் பாலிலே இது போன்ற ஒரு காட்சியைக் காட்டுகிருர்.
காதலி காதலனை நினைத்துக் கொண்டு சொல்கிருள். தான் தனது கண்ணுக்கு மை எழுதுவதில்லையாம். கண்ணுக்கு மை எழுதுவதாயின் கண்களை மூட வேண்டும். தனது காதலர் தனது கண்ணுக்குள்ளே இருக்கிருராம். அதனல் தான் கண்ணை மூடுவதில்லையாம்.
கண்ணை மூடாமல் கண்ணுக்கு மை எழுதுவது எப்படி. .அதனல்தான் கண்ணுக்கு மை எழுதுவதில்லை என்கிருள்.
*கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக் கறிந்து.”
கண்ணை மூடினல் காதலன் மறைந்துவிடுவான் என்று
காதலியைச் சொல்ல வைத்த வள்ளுவருக்கு, அன்றிற்
பறவைகளின் காதல் வாழ்வுதான் ஆதாரமாக இருந்திருக்க வேண்டும்போல் தோன்றுகிறது.
குரங்குகளின் காதல் வாழ்வு
குரங்குகள் மூலமாகக் கூட குடும்ப வாழ்க்கையைக் கவிஞர்கள் காட்டியிருக்கிருர்கள். . வில்லிபுத்தூராழ்வார் தனது பாரதத்திலே மந்திக் குரங்குகளின் காதல் வாழ்வு பற்றி அழகாகக் கூறுகிருர்,
திரெளபதியின் சுயம்வரத்தின்போது வந்திருக்கும் அர சர்களை திரெளபதிக்கு அறிமுகஞ் செய்துகொண்டு வருகி றர்கள் தோழிகள். காந்தார தாட்டு, அரசனன சகுனி -யைத் தோழிப்பெண்கள் இப்படி அறிமுகஞ் செய்கிறர்கள்.

Page 22
16 இலக்கியத் தேறல்
உலைவந் தயருஞ் சூன்மந்திக்
குருகா நிலங்கிண் டுதவுகுலக் கலைவன் பலவின் களைகிறிக்
களிப்போ ட்னிக்குங் காந்தாரத் தலைவன் சகுனி இவன்கண்டாய்
தக்கோ ராட்ாச் சூதுக்கும் நிலைவஞ் சனக்குந் தரணிபரில்
யாரே இவர்க்கு நிகரம்மா.
பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் பெண் குரங்கிற்கு"உதவி செய்வதற்காக வேரில் பழுத்து மணலினுள் புதைந்து கிடந்த பலாப்பழத்தைப் பிய்த்து எடுத்து, சுளை களைக் கொண்டு வந்து தனது மனைவிக் குரங்கிடம் அன் போடு கொடுக்குமாம் கடுவன் குரங்கு. காதல் ஒழுக்கத்தில் மிக உயர்ந்த பண்பாடுள்ள நாடு காந்தார நாடு.
குரங்குகளிடம் கூட குடும்ப ஒற்றுமையும் காதல் வாழ் - வும் உண்டு என்ருல் மனிதர்களிடம் இன்னும் எவ்வளவு சிறப்பாக இருக்கும். அத்தகைய நாட்டின் அரசனன இச் சகுனி எப்படிப்பட்டவனுக இருப்பான் என்று நீயே அறிந்து கொள், என்று தோழிகள் திரெளபதிக்கு அறிமுகஞ் செய்து வைக்கின்றர்கள்.
திருமண ஒழுக்கங்கள் அஃறிணைகளிடம் இல்லாத ஒன்று, மனிதர்கள் மட்டும்தான் சில கட்டுப்பாடுகள் மூல
மாக ஒழுக்கத்தை நிர்ணயித்து ஒழுகி வருகிறர்கள்.
அஃறிணை மூலமாக உயர்திணைக்கு ஒழுக்கம் போதிக்க வேண்டிய தேவை இல்லைத்தான். ஆனல் காதல் ஒழுக் கத்தைப் பொறுத்தவரையில் அஃறிணைகளிடையே போலித் தனமில்லாத, கள்ளங்கபடமில்லாத தன்மை சில சமயங்களில் காணப்படுவதுண்டு.
புலவர்கள் இத்தகைய சில காட்சிகளைக் காட்டுவதன்
மூலம், மனித இனத்துக்கு நல்ல புத்தி புகட்டவே முயல் கின்ருஜர்கன்.

அகளங்கன் 17
ஐந்தறிவு படைத்த மிருகங்களிடம் கூட இத்தகைய அன்பு இருக்கிறது. ஆறறிவு படைத்த மனிதனிடம் இதை விட மேலாக இருக்க வேண்டும் என்று கூருமல் கூறும் காட்சிகளே இவை. ஆம், இன்றைய நிலையில் நாம் அகத் திணை ஒழுக்கத்தை அஃறிணைகள் மூலமாக கற்கவேண்டிய நிலையில்தான் இருக்கிருேம்g
( நன்றி: வீரகேசரி 17-8–1986

Page 23
3
மூவகைக் கற்பு
ஆண்டவனைப் பாட்டுடைத் தலைவனுகவும், அரசர் களைப் பாட்டுடைத் தலைவர்களாகவும் கொண்டு, புராண இதிகாசங்களும், காவியங்களும் பாடப்பட்டுள்ளன. அரச ரல்லாதோரைப் பாட்டுடைத் தலைவன், தலைவியாகக் கொண்டு பாடப்பட்டு பெருஞ் சிறப்புமிக்க ஒரு காவியம் சிலப்பதிகாரமாகும். ஐம்பெருங் காப்பியங்களில் சிலப்பதி காரமே அதிக சிறப்பு வாய்ந்தது என்பது அதன் இன்றைய் புகழ் மூலமும், அறிந்து கொள்ளக்கூடியது.
சிலப்பதிகாரக் காப்பியத்தின் தலைவன் கோவலன் ஒர் கோ - அல்லன். அதாவது கோவலன் ஒரு 'அரசனல்லன், ஒரு குடிமகனே. முடிமக்கள் காப்பியமாக அல்லாமல் குடி மக்கள் காப்பியமாகப் போற்றப்படும் சிறப்பு சிலப்பதிகா ரத்துக்குரியது.
* நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் ' என்று சிலப்பதி காரத்தின் சிறப்பையும், ' கம்பனைப் போல், வள்ளுவன்
பிறந்ததில்லை" என்று அதன் ஆசிரியர் இளங்கோவையும் போற்றிப் புகழ்ந்து பாடுகிருர் மகாகவி பாரதியார்.

அகளங்கன் 19
மூன்று காண்டம்
மூன்று கருத்து
சிலப்பதிகாரக் கதை சேர, சோழ, பாண்டியர்கள் மூவரின் நகரிலும் நடைபெறுகிறது. இக்கதையின் நாயகி யான கண்ணகி பிறந்தது சோழ நாட்டில். இது புகார்க் காண்டத்தில் இடம்பெறுகிறது, பூம்புகார் சோழநாட்டின் தலைநகராகும். கண்ணகி வழக்குரைத்துப் பாண்டியனை வென்றது பாண்டிய நாட்டில். இது மதுரைக் காண்டத்தில் இடம்பெறுகிறது. மதுரை பாண்டியனின் தலைநகராகும், கண்ணகி தெய்வமாகியது சேர நாட்டில். இது வஞ்சிக் காண்டத்தில் வருகிறது. வஞ்சி சேரனின் தலைநகராகும்.
முடியுடை மூவேந்தரின் தலைநகரங்களின் பெயரோடு, மூன்று காண்டங்களும் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பை எண்ணி, எண்ணி வியந்து மகிழ்ந்து கொள்ளலாம். இம் மூன்று காண்டத்தினுள்ளும் சேர, சோழ பாண்டிய மன்னர் களின் பெருமைகள் பெரிதும் பேசப்பட்டிருக்கின்றன. மூன்று நாடுகளின் சிறப்பும், மூன்று தமிழ் வேந்தர் பரம்பரையின் ஆட்சிச் சிறப்பும் வெகு சிறப்பாகப் பாடப்பட்டுள்ளது.
கண்ணகியின் வரலாறு மூவேந்தர்களின் சிறப்புக்களை யும் உணர்த்தக் காரணமாக இருந்ததாக சிலப்பதிகாரத் தின் இறுதியில் இளங்கோ அடிகள் கூறுகிறர்.
'அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது
பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது’
அரசன் நல்ல முறையில் ஆட்சி செலுத்தினல் மட் டுமேதான், அந்நாட்டிலே பெண்கள் கற்பொழுக்கத்துடன் வாழமுடியும் என்பதை சோழ அரசனின் ஆட்சிச் சிறப்புக் காகக் கூறுகின்றர் இளங்கோ அடிகள்.

Page 24
இலக்கியத் தேறல்
கோவலன் கண்ணகியைப் பிரிந்து மாதவியோடு குடும் பம் நடாத்தினுன். கண்ணகியோ ஒழுக்கமே உயிராகக் கொண்டு, கற்பின் தெய்வமாக சோழ நாட்டிலே வாழ்ந்து வந்தாள், கண்ணகியின் கற்புத் திண்மைக்குச் சோழ அர சனின் முறையான அரசாட்சிதான் காரணம் என சோழன் பெருங்கிள்ளியைப் புகழ்கிருர் இளங்கோ அடிகள்.
56 செங்கோல் வளைய உயிர்வா 1ழாமை
தென்புலம் காவல் மன்னவற்கு அளித்து”
அரசன் நீதி தவறி அரசாட்சி செய்து பழிகொண்டு விட்டால், அதன்பின் உயிர்வாழ்வது மன்னர்க்கு அழகல்ல என்பதை, நீதிதவறிய பாண்டியன் தன் தவறை உணர்ந்த உடனேயே தனது உயிரைப் போக்கிக் கொள்வதன் மூலம் நிரூபித்துக் கொள்கிறன். வளைந்த செங்கோலைத் தன் உயிர்கொடுத்துப் பாண்டியன். நெடுஞ்செழியன் நிமிர்த்து வதற்கு, கண்ணகி காரணமாக இருந்திருக்கிருள். இதன் மூலம் பாண்டியனின் பெருமையைக் கூறுகிருர் இளங்கோ அடிகள்,
‘வஞ்சிளம் வாய்த்தபின் அல்லதை யாவதும்
வெஞ்சினம் விளியார் வேந்தர்”
வென்று முடிப்பேன் எனச் சூழுரைத்துக் காரியத்தைத் தொடங்கும் மன்னர்கள் வெற்றியடையாமல் சினந்தனி யார் என்பதை சேரன் செங்குட்டுவன் செய்து காட்டுவ தற்கும் கண்ணகி காரணமாக இருந்திருக்கிழுள்.
வட நாட்டுத் திருமண விழா ஒன்றிலே, தமிழரின் வீரத்தைப் பழித்துக் கூறிக் கேலிசெய்த கனக, விஜயரின் கொட்டத்தை அடக்கி, அவர்கள் முடித் தலையில் கண் ண்கியின் சிலைவடிக்கக் கல்சுமந்த சேரன் செங்குட்டுவனின் வீரத்தை இந்த வடிவத்தில் புகழ்கின்றர் இளங்கேர் அடிகள்.

அகளங்கன் 2I
இவை மட்டுமல்லாமல் இக்காப்பியத்தின் உண்மைக் கருத்தாக, உயிர் நாதமாக, உயர் கருத்தாக மூன்று போதனைகளையும் மக்களுக்கு இளங்கோ அடிகள் கூறியிருப் ய்தாக இக்காப்பியத்தின் பகிகத்தில் கூறப்பட்டிருக்கின்
றது.
‘அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றுஆவதும்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்” *
அரசியல் நீதி பிழைத்த பாண்டியனைத் தர்மமே உட
னுக்குடன் தண்டித்து விடுகிறது. களவெடுக்காத கோவ லன் கள்வன் என்ற பழியோடு கொலை செய்யப்படுவதற்கு அவனது முற்பிறப்பு வினையே காரணம், அதாவது பிரா ரத்துவ வினையே, ஊழ்வினையே சூழ்வினையாகிறது, புகழ் மிகுந்த பத்தினிப் பெண்டிரை' உலகம் போற்றி வண்ங்கும் என்பதை இன்றும் நடைபெறும் கண்ணகி வழிபாடு எடுத் துக் காட்டுகிறது.
சிலப்பதிகாரத்திலே மாதவியின் நாட்டிய அரங்கேற் றத்தின்போது நாடகக் காட்சிகளை மிக அழகாகக் காட்டு கிருர் இளங்கோ அடிகள். மாதவியும் கோவலனும் யாழ் இசைத்துப் பாடும் கானல்வரிப் பாடல்கள் இசைத் தமி ழின் மேன்மையை இயம்புகின்றன. பாண்டிய நாட்டில் இடம்பெறும் ஆய்ச்சியர் குரவ்ையும், வேட்டுவ வரியும் இசையும் நாடகமும் கலந்த வகையிலே இடம்பெறுகின் றன.
சிலப்பதிகாரக் காப்பியமும் பாட்டாகவோ, உரை நடையாகவோ ஒரு தனியானதாக 'இல்லாமல் இரண்டும் கலந்தே செய்யப்பட்டிருக்கின்றது.

Page 25
22 இலக்கியத் தேறல்
மூவகைக் கற்பொழுக்கம்
மூன்று நாடு, மூன்று அரசர், மூன்று கருத்து, மூன்று காண்டம், மூன்று தமிழ் என அமைந்தது மட்டு மன்றி, மூன்று பெண்கள் மூலமாக பண்டைக் காலத்து மூவகைக் கற்பொழுக்கத்தையும் இக்காப்பியத்திலே சித் தரித்துக் காட்டும் திறமை இளங்கோ அடிகளுக்கு மட்டுமே கைவந்த கலை போலும்.
தனது கணவன் நெடுஞ்செழியப் பாண்டியன் இறந்த மறுகணமே அவனது காலடியில் வீழ்ந்து உயிர் துறக்கிருள் பாண்டிமாதேவி,
என்முதல் பிழைத்தது கெடுகளன் ஆயுள்ளன மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே; தென்னவன் கோப்பெருந் தேவி குலைந்தனள், நடுங்கி கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்என்று இனையடிதொழுது வீழ்ந்தனளே மடமொழி.
ஒன்றே உயிராக. உடல் இரண்டாகக் கொண்டு வாழ்ந்த அன்றைய உத்தமத் தாம்பத்திய வாழ்க்கையில், கணவன் இறந்த உடனே அந்த அதிர்ச்சியைத் தாங்கமுடி யாமல், மனைவியும் உயிர் துறப்பது ஆச்சரியமான நிகழ்ச் இ!ாக இருக்கவில்லை.
கணவன் இறந்த உடனே தன்னுயிரைப் போக்கிக் கொள்ளாத சில பெண்கள் தாங்களாகவே மனம் விரும்பி தமது கணவனின் உடலை எரியூட்டும்போது சிதையிலே விழ்ந்து ஒன்ருகவே எரிந்து போகும் நிகழ்ச்சிகள் பற்றி இலக்கியங்களிலே அதிகம் பேசப்பட்டுள்ளன. இதனையே "உடன்கட்டை ஏறுதல் என்றும் சகக்மனஞ்’ செய்தல் என் றும் கூறி இலக்கியங்கள் போற்றின, தாமரைப் பொய் கையிலே நீராடுவதற்கு இறங்குவதுபோல மகிழ்ச்சியோடு கணவனை எரிக்கும் நெருப்பிலே மனைவி இறங்கிளுள் என்று பழந்தமிழ் இலக்கியங்களில் இது பற்றித் தகவல்கள் இருக்கின்றன.

gyaw Yr as ir 23
இந்த ஒழுக்கமே பிற்காலத்தில் கணவன் இறந்தபின், அவனது மனைவியைப் பலவந்தமாக இழுத்துச் சென்று நெருப்பிலே தள்ளிக் கொலை செய்யும் நிலைமை அடைந்து, கொடுமையான நிகழ்ச்சி என்றும், மூடப் பழக்கம் என் றும் பெயர் பெற்று, சட்டரீதியாகத் தடைசெய்யப்பட்
• ان-س-t
இந்த வகையிலே முதன்மையானதாக, கணவனின் உயிர்போன மறுகணமே தன்னுயிரையும் போக்கிக்கொண்ட பாண்டிமாதேவியின் கற்பொழுக்கம் சிலப்பதிகாரத்திலே பெரிதும் சிறப்பாகப் போற்றப்பட்டுள்ளதைக் காணலாம்.
கணவன் இறந்தபின் விதவையாக பலவகை விரதங் களையும் நோற்று, பிறவிப் பிணியை முற்றக அறுத்துக் கொள்வதற்காக உயிர் வாழ்வதும் கற்பொழுக்கத்தின் பால்படுவதே. இவ்வகைக் கைம்மை நோன்பு நோற்கும் ஒழுக்கத்திலும், மிக உயர்ந்த ஒழுக்கமாக மாதவியின் ஒழுக்கத்தைக் காட்டுகிறர் இளங்கோ அடிகள்.
கோவலன் இறந்ததும் மாதவி தான்மட்டுமன்றி தனது மகளான மணிமேகலையையும் துறவு வாழ்க்கையிலேயே ஈடுபடுத்தி, கைம்மை நோன்பு நோற்கும் ஒழுக்கத்தையும்
அடிகள். மணிமேகலைக் காப்பியத்தில் சீத்தலைச் சாத்த ஞர் இந்த விபரத்தை வெகு அழகாகப் பாடியிருக்கிருர்,
கண்ணகி இந்த இரண்டு வகைக் கற்பொழுக்கத்துள் ளும் அடங்காதவளாகக் காட்டப்படுகிருள், கணவன் இறந்த உடன் கண்ணகி உயிர் துறக்கவில்லை, பின்பு கைம்மை நோன்பு நோற்கவும் இல்லை.
கண்ணகி உயிர் வாழ்வதற்குரிய காரணம் சிலப்பதி காரத்திலே மிக வலிமையாக வலியுறுத்தப்பட்டுள்ளது. கோவலன் கொல்லப்பட்டான் என்ற சொல்லை முதன்முதல் கண்ணகி கேட்டிருந்தால் கண்ணகியும் உடனே உயிர்

Page 26
24 இலக்கியத் தேறல்
துறந்திருக்கக் கூடும், ஆனல் கண்ணகி முதலிலே அறிந்து கொண்டது கள்வன் என்ற பெயரோடு கோவலன் கொல் லப்பட்டான் என்பதே.
அரகறை கோயில் அணியார் ஞெகிழம் கரையாமல் வாங்கிய கள்வனும் என்றே குரைகழல் மாக்கள் கொலே குறித்தனரே!
ஞெகிழம் என்ருல் சிலம்பு, தனது கணவன் கள்வன் என்ற பழிச் சொல்லைக் கண் ண கி யா ல் தாங்கவே முடியவில்லை கணவனின் உயிரைவிட அவன்மேல் ஏற். பட்ட பழிதான் அவளுக்குப் பெரிதாகப்படுகிறது. கணவன் மேல் ஏற்பட்ட பழியைத் துடைப்பதற்காக உயிர் வாழ வேண்டிய இக்கட்டுக்குள், கட்டாயத்துக்குள் ஆட்படு கிருள் கண் ைகி.
தமது உயிரினும், மானமே பெரிதாக வாழ்ந்த பரம் பரையில் வந்தவள் அவள், கணவனின் மேல் சுமத்தப்" பட்ட பழியைத் துடைக்கும் பணியிலேயே அவள் முதலில் ஈடுபடுகிருள். அக்காலத்தில் களவுத் தொழிலின் இழிவும், அது எவ்வளவு அவமானத்துக்குரிய தொழிலாக இருந்தி ருக்கிறது என்பதையும் பார்ப்போம்.
களவுக்குத் தண்டனை கொலை
கள்வன் என்ற சொல் மிக மிக ஒழுக்கங் கெட்ட ஒருவனுக்குக் கொடுக்கப்பட்ட பெயராகவே அக்காலத் தில் இருந்திருக்கிறது. கோவலனைக் கள்வன் என்று கூறி பாண்டிய நஈடே பழி கூறுவதாகக் கூறுகிருர் இளங்கோ அடிகள்.
*மன்பதை பழிதூற்ற”
*மன்பதை அலர்தூற்ற” * சவன்பழி தூற்றும் கொடியதே மாமதுரை”

அகளங்கன் 25
போன்ற வரிகளால் இதனை விளங்கிக் கொள்ளலாம் மன்பதை என்பது குடிமக்களைக் குறிக்கும் சொல். மக்கள் தன் கணவனைக் கள்வன் என்று பழிதூற்றுவதை அவ ளால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை, அதனுல் அவள் தனது கணவன் கள்வனில்லை என்பதை மக்களுக்கு நிரூபிப்பதற்காக, முதலில் சூரியனையே சொல்ல் வைக் கிருள், இதன் மூலம் கணவன் இறந்த உடனே தானும் இறக்காத கண்ணகியின் கற்புநெறியிலே எவருக்கும் சந் தேகம் ஏற்படாமல் இருக்கச் செய்வதற்கான முதல் முயற் சியைச் செய்கிருர் இளங்கோ அடிகள்.
*பாய்திரை வேலிப் படுபொருள் நீஅறிதி
காய்கதிர்ச் செல்வனே! கள்வணுே என்கணவன்”
என்று கண்ணகி சூரியனைக் கேட்கிருள். அவள் தனக் காக அன்றி தான் தங்கியிருந்த ஆயர் குலத்துப் பெண்க "ளுக்குத் தமது புனிதத் தன்மையைப் புலப்படுத்துவதற் காகவே சூரியனைப் பார்த்துக் கேட்கிருள், ‘ ஆயமடமகளிர் எல்லீரும் கேட்டீமின் ’ என ஆயர்குடிப் பெண்களை அழைத் துச் சூரியனிடம் கேட்கிருள்.
* கள்வணுே அல்லன் கருங்கயற்கண் மாதராய் ** என்று சூரியன் கூறுவதாக இளங்கோ அடிகள் கூறுகிருர்,
இரவு விடிந்தால் தனது கணவன் இறந்துவிடுவான் என்ற சாபத்தைக் கேட்டுத் துடிதுடித்த நளாயினி சூரி யனையே உதிக்காமல் செய்தாள் என்ற கதையை ஞாபகத் தில் கொண்டு, கண்ணகியும் நளாயினிக்குச் சமமானவள் என்று காட்டவே சூரியனைச் சாட்சி கூறச் செய்தார் இளங்கோ அடிகள் என்று எண்ண இடமுண்டு.
கள்வனுக்குத் தண்டனையாக கொலைத் தண்டனையே அக்காலத்தில் இருந்திருக்கிறது. பாண்டிய மன்னனிடம் கண்ணகி வழக்குரைக்க வந்தபோது பாண்டியன் இப்படிக் கூறுகிருன்,
இ. 4

Page 27
26 இலக்கியத் தேறல்
*கள்வனைக் கோதல் கடுங்கோல் அன்று
வெள்வேற் கொற்றம் காண்”
கள்வனைக் கொலை செய்வது கொடுங்கோல் ஆட்சி யல்ல, அதுவே அரசனுக்கு வெற்றிதரும் காரியம் என்று
லாம், மன்னன் தேவியின் காற்சிலம்பைக் களவெடுத்தான் என்பதற்காக அல்ல, எவரது பொருளைக் களவெடுத்தா லும் கொலையே தண்டனையாக இருந்திருக்கிறது என்பதை இது நிரூபிக்கின்றது.
கள்வனுக்குரிய கொலைத் தண்டனை கூட, ஒரு ஒதுக் குப் புறத்தில் இல்லாமல் மக்கள் கூடும் ஒரு பொது இடத் தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
கண்ணகி பாண்டிய மன்னனிடம் வழக்குரைக்கச் செல் லும்போது, வாயிற் காவலனை "" வாயிலேயே, வாயி லோயே ’ என அழைத்து தான் வந்த செய்தியை மன்ன னிடம் தெரிவிக்கும்படி கூறுகிருள். காவலன் மன்னனிடம் கூற, மன்னவன் அவளை அழைத்து வரும்படி ஆணையிடு கிருன், காவலன் கண்ணகியைக் கூட்டிச் சென்று அரசன் மூன்னிலையில் நிறுத்துகிறன், இதனை நாடகக் காட்சி போலக் காட்டுகிருர் இளங்கோ அடிகள்.
இணைஅரிச் சிலம்பொன்று ஏந்திய கையள் கணவனை இழந்தாள் கடை யகத்தாள் என்று அறிவிப்பாயே! அறிவிப்பாயே!” என்கிருள் கண்ணகி, வாயிலோன் அரசனிடம் சென்று
என்று மன்னனுக்கு உரைக்கிருன், மன்னன்
*வருக மற்று அவள் தருக ஈங்கு” என்று ஆணையிடுகிமுன் காவலன்
*வாயில் வத்து கோயில் காட்டக்
கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுN*

அகளங்கன் − 27
என்று கண்ணகி அரண்மனைக்குள் சென்றதை முறை." படி கூறுகிருர் இளங்கோ அடிகள். ஆனல் கொலை செய் யப்பட்டுக் கோவலன் கிடந்த இடத்தைக் கண்ணகி சென்றடைய எந்த அனுமதியும் தேவைப்படவில்லை.
**கம்பலை மாக்கள் கணவனைத் தாம்காட்ட செம்பொன் கொடியனையாள் கண்ட்ாள்?
என்று கண்ணகி கோவலன் வெட்டுண்டு கிடந்த இடத்துக்குச் சென்றதைக் கூறுகிருர். கம்பலை மாக்கள் என்பது ஆரவாரம் மிகுந்த மக்களைக் குறிக்கும். கள்வன் என்று கொலைத் தண்டனை நிறைவேற்றப்பட்ட ஒருவனை ஏராளமான மக்கள் சென்று பார்த்து வந்திருக்கிருர்கள்.
அதாவது களவெடுத்து அதற்காகக் கொலைத் தண் டனை நிறைவேற்றப்பட்ட நிகழ்ச்சி, மிக அருமையாகவே அந்நாட்டில் நிகழ்ந்திருக்கிறது என்பதையே இது காட்டு கிறது. அப்படி, பார்த்து வந்த ஆரவாரம் மிகுந்த மக் களே அதாவது கம்பலை மாக்களே கண்ணகிக்கு வழிகாட்டு கின்றனர்.
கோவலனின் வெட்டுண்ட மேனி புழுதிபடிந்து கிடக் கிறது என்று கண்ணகி புலம்புகிருள்,
'பொன்னுறு நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ'
*புண்பொழி குருதியிராய் பொடியாடிக் கிடப்பதோ"
பொடி என்ருல் புழுதி என்று பொருள், புழுதி படிய வெறும் நிலத்திலே கோவலனின் உடல் கிடக்கிறது என்று அழுகிருள் கண்ணகி.
**தார்மலி மணிமார்பம் தரைமூழ்கிக் கிடப்பதோ"
மாலைகள் அணியும் கோவலனின் மார்பு மண்ணிலே கிடக்கிறது என்றும், புழுதி படிந்து கிடக்கிறது என்றும்

Page 28
இலக்கியத் தேறல்
கண்ணகி கூறுவதிலிருந்து, ஒரு பொது இடத்தில் கொலேத் தண்டனே நிறைவேற்றப்பட்டு; நிலத்திலே, மண்ணியே கோவலனின் உடல் கிடந்தது என்று எண்ண இடமுண்டு
இதிவிருந்து கனவுத் தொழில் எந்த அளவுக்கு அரு வருப்பான வெறுக்கத்தக்க தொழில் என்பது தெளிவாகி தது. அதனுல் அந்தப் பழியைத் துடைக்கவேதான் கண் னகி உயிர் சுமக்க வேண்டி ஏற்படுகிறது என்று எண்ண
|FIf.
கண்ணகியிக் வழக்குரை
தனது கணவனுன சத்தியவானின் உயிரைக் காலனி டம் இருந்து மீட்டவன் சாவித்திரி, சாவித்திரியின் புத்தி சாஜித்தனமான கேள்வியை அறியாது வரங்கொடுத்தான் காவன். அதனுல் உயிர் பிழைத்தான் சத்தியவான். தனது கணவன் இறந்த கவலேயிலும் கூட நிதானமாக புத்தி சாதுரியமாகச் செயற்பட்டதால் கணவனே மீட்டவள்
சாவித்திரி,
கண்::கிபின் 3ழங்குரையும் இதோடு ஒப்பிடக் கூடி யதே. பாண்டிமாதேவியின் காற்சிலம்பும், கண்ணகியின் காற்சிலம்பும் புறத் தோற்றத்தில் சிறிதும் வேறுபாடின்றி ஒத்திருந்தது. பாண்டிமாதேவியினுல் கூட புறத் தோற்றத் இதைக் கொண்டு, கோவலனிடம் மீட்ட சிலம்பு தனது சிலம்பில்லே! என்து கண்டுகொள்ள முடியவில்லே.
கண்ணகி ஜ:து சிலம்பை அடையாளங் காட்டுவதற் காக, தனது சிவ பின் உள்ளிடு பரல்களாக மாணிக்கிங் கள் இருக்கின்றr என்று கூறு கி மு ன். பாண்டி மாதேவியின் காற்சிலம்பின் உள்ளிவி பரல்கள் முத்துக்கள் என்று பாண்டியன் கூறுகிறன்.
பாண்டிமாதேவியின் காற்சிலம்பின் உள்ளீடு பரல்: ளும், மாணிக்கங்களாக இருந்திருந்தால் சுண்ணகியின்
 
 

களங்கன்
பழக்கு தோல்வி கண்டிருக்கும், ஆனல் கண்ணகி இந்த பகையிலே நிரூபிக்க முற்படும்போதே, பாண்டிமாதேவி பின் காற்சிலம்பின் உள்ளிடு பரல்கள் முத்துக்களாகத் ான் இருக்கும் என்று நன்ருகத் தெரிந்துதான் வைத்தி நந்தாள் என்றே சொல்லலாம்.
பாண்டி நாடு முத்துக்களுக்கு பெயர் பெற்ற நாடு, ாண்டிநாட்டு முத்துக்களே வெளிநாட்டார் பல்கும் வந்து ாங்கிச் சென்றனர். பாண்டியர்கள் தமது நாட்டின் நிப்புமிக்க விளேபொருளான முத்துக்களேத் தமது அலங் ாரங்கள் அனைத்திலும் பயன்படுத்தினர்.
இந்த விடயங்களே, ஒரு பெரும் வணிகஞன மாநாய்க் னின் மகளும். மாசாத்துவானின் மருமகளும், பெரு
னிகளுன கோவலனின் மனேவியுமான கண்ணகி தெரிந்து பத்திருப்பாள் என்பது ஆச்சரியமானதல்ல. இவைகளே த்துச் சிந்திக்கும்போது பாண்டிமாதேவியின் காற்சிலம் பிலும் உள்ளிடு பரல்களாக முத்துக்களே இருக்கும் என்று ாகித்தே இந்த வகையில் வழக்குரைக்கிருள் கண்ணகி ங்று கூறலாம், அவளது எதிர்பார்ப்பு சரியாக அமைந்த ல் அவளது புத்திசாலித்தனம் பாராட்டப்படுகிறது. ஒக்கும் வெற்றி பெறுகிறது, இந்தப் புத்திசாவித்தனம் லம் சாவித்திரியோடு ஒப்பிடவும் இளங்கோ முயல்கிறர் ால் தெரிகிறது
ளுவனைப் பின்பற்றி இளங்கோ
பாண்டியன் " யாஞே அரசன். யானே கள்வன்" வீழ்ந்து இறந்ததும், பாண்டிமாதேவி மறுகணமே ர்நீத்த காட்சி, கண்ணகியின் மனத்திலே ஒரு நடுக் தை ஏற்படுத்துகின்றது. -
பாண்டிமாதேவின் கற்பொழுக்கத்திற்குத் தனது கற்பு இமை குறைந்ததல்ல் என்று நிரூபிக்கக் கண்ணகி முயல் தயே அடுத்த நடவடிக்கை காட்டுகிறது.

Page 29
இலக்கியத் தேறல்
* பட்டாங்கு யானும்ஒர் பத்தினியே ஆமாகில் ' என்ற -வரி இதனைப் புலப்படுத்துகின்றது. இங்கு யானும் என் பதிலுள்ளம் இதனே வலியுறுத்துகின்றது.
கண்ணகியின் அடுத்த நடவடிக்கையை பொருத்தமான முறையில் அமைத்து, கதாபாத்திரத்தின் உச்சத் தன் மையை நிலநாட்டுவதற்கு இளங்கோ அடிகள் வள்ளுவ ரைத் துணைக்கு அழைக்கிருர்,
"தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை"
பிற தெய்வத்தை வணங்காதவளாக, தனது கன வனேயே தெய்வமாகத் தொழுது துயில் எழும் உத்தமப் பத்தினிப் பெண், -பெய் என்று கட்டளேயிட்டால் மழை பெப்யும் என்பது வள்ளுவரின் பெண்ணின் கற்பு மேம் பாடு, அதாவது கற்பரசிகள் இயற்கையையும் ஏவல்கொள் ளும் வல்லமை படைத்தவர்கள் என்பது இதன் மறை பொருள்.
இந்த வகையைப் பின்பற்றியே கண்ணகியும் சூரிய னேச் சாட்சிக்கு அழைப்பதும், மதுரையை எரிப்பதும் ஆகும். வள்ளுவரின் பெண் 'பெய்" என்ருல் மழை பெய் யும். இளங்கோவின் பெண் "எரி" என்ருல் தி எரிக்கும். வள்ளுவரின் குறளே அடியொற்றி மதுரைக் காண்டத்தின் இறுதியில் இப்படிக் கூறுகிருர் இளங்கோ,
தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுவாளேத் தெய்வம் தொழுந்தகைமை திண்ணிதால் - தெய்வமாய் மண்ணாக மாதர்க்கு அணியாய கண்ணகி விண்ன்ாக' மாதர்க்கு விருந்து,
கண்ணகியைப் பாண்டிமாதேவியினின்றும் உயர்த்திக் காட்டுவதற்கான அடுத்த முயற்சியாக இன்னுென்றையும் காட்டுகிறர் இளங்கோ அடிகள், கற்புக் கடம் பூண்ட
惠
-
 

களங்கன்
பண்கள் வானுலகில் பெருஞ் சிறப்புப் பெறுவார்கள் ான்ற வள்ளுவரின் கருத்தையும் கதையிலே சேர்த்துக்
காள்கிருர்,
4பெற்றன் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிதப்பு
புத்தேளிர் வாழும் உலகு"
மதுரையை எரித்த கண்ணகி, பதின்நான்கு நாட்க ன்பின் தேவேந்திரன் முதலாகப் பலர் கோவலஞேடு விமான ஊர்தியிலே வந்து அழைக்க வானுலகு செல்கின்
*ள்,
'அமரர்க்கு அரசன் தமர்வந்து ஏத்தக்
கோநகர் பிழைத்த கோவலன், தன்றெடு வான2ளர்தி ஏறினள் மாதோ
கானமர் புரிகுழல் கண்ணகிதான்."
*
கண்ணகியின் மேம்பாட்டைக் காட்ட திருவள்ளுவர் இளங்கோ அடிகளுக்குப் பெரிதும் துனே செய்திருக்கிருர் ான்றே சொல்லலாம். மூவகைக் கற்பொழுக்கத்தையும் முறையாகக் காட்டி, முத்தமிழில், மூவேந்தர் புகழ்கூறி, ர் குடிமக்கள் காப்பியத்தைப் பாடி, இன்னும் பல ாலம் நிஐலத்து நிற்கக் கூடிய, நிஃலத்து நிற்க வேண்டிய வியத்தைத் தந்த இளங்கோ அடிகள் தமிழுலகில் ாற்றுதற்குரியவர். நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம், மிழ்த் தாயின் காலணி அல்ல. சுழுத்தணி என்பதே
13த்87)

Page 30
4.
அடிச்சுவடுகள்
விேச்சக்கரவர்த்தி கம்பரின் இராமாயணத்திற்குக் காலத்தால் முந்தியது சேக்கிழார் பெருமான் அருளிச் செய்த பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புரா னம்.
சேக்கிழார் பெருமான் இப்புராணத்திற்கு இட்ட பெயர் திருத்தொண்ட்ர் புராணம் என்பதே. ஆனல் “தொண் டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே' என்ற ஒளவை யாரின் வாக்குப்படி, தொண்டர்களின் பெருமைகளைக் கூறும் நூலாகிய இப்புராணம் பெரியபுராணம் என்ற பெய ராலேயே அழைக்கப்பட்டு வழங்கி வருகின்றது.
ஐம்பெருங் காப்பியங்களில் காப்பியப் பண்புகள் நிரம்பி யிருந்த சீவக சிந்தாமணி என்னும் சமணக் காப்பியம் மேலோங்கியிருந்த ஒரு காலத்தில் எழுந்ததே பெரிய புராணம் ஆகும்.
அநபாயன் என்ற பெயர் கொண்ட இரண்டாம் குலோத்துங்க சோழனது அரச அவையில் முதலமைச்சராக இருந்த சேக்கிழார் பெருமான், அரசனின் சீவக சிந்தா மணி ஈடுபாட்டை மாற்றி, சைவத்தின் மேம்பாட்டை உலகறியச் செய்யப் பாடிய காவியமே பெரிய புராணம்.

அகளங்கன் ತಿತಿ
பெரிய புராணத்தைச் சேக்கிழார் பெருமான் பாடுவ தற்கு தில்லை நடராஜப் பெருமானே 'உலகெலாம்" என்று அடியெடுத்துக் கொடுத்ததாக இதன் சிறப்பைப் புலவர்கள் புகழ்கிருர்கள், −
இந்நூலைப் பாடி முடித்ததும், ஒரு சித்திரை மாதத் துத் திருவாதிரை நாள் தொடங்கி, அடுத்த அதே சித் திரைத் திருவாதிரை நாள்வரை. சேக்கிழார் பெருமான் இதனைப் பாடிப் பொருள் விரித்துரைக்க, அதனைப் பல நாட்டுச் சிற்றரசர்கள், மந்திரிகள், பொதுமக்களோடு சோழநாட்டு மன்னனன அநபாய சோழனும் கேட்டு
கூறுகிருர்கள்.
பெரியபுராணத்தை இரு செவிகளாரப் பருகி இன் புற்று அதன் சிறப்பிலே மயங்கிய அநபாய சோழன், தனது பட்டத்து யானையின் அம்பாரியில் சேக்கிழார் பெருமானை யும், பெரிய புராண ஏடுகளையும் ஏற்றி, தான் அருகி ருந்து, சேக்கிழார் பெருமானின் வியர்வை போக்கக் கவரி (விசிறி) வீசியபடி தனது வீதிகளில் உலாவந்தான் என்ற செய்தி பெரிய புராணத்தின் சிறப்புக்கு கட்டியங் கூறுவ தாக அமைந்துள்ளது.
சேக்கிழார் பெருமானின் பின் இரண்டாம் குலோத் துங்க சோழனின் மகனன இராசராசன் காலத்தில் வாழ்ந் தவராக கம்பரை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறர்கள்.
கம்பர் தமது நூலுக்கு இட்டபெயர் இராமாவதாரம் என்பதே. இதனைக் கம்பரின் பாடல் மூலம் அறியலாம்.
நடையில் நின்றுயர் நாயகன் தோற்றத்தின் இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த் தொடை நிரம்பிய தோமறு மாக்கதை சடையன் வெண்ணெய் நல்லூர்வயிற் தந்ததே.
இ. 5

Page 31
3 é w இலக்கியத் தேறல்
கம்பர் இராமாவதாரம் என்று தனது காவியத்துக்குப் பெயரிட்ட போதிலும் அக்காவியம் கம்பராமாயணம் என்றே நிலைத்துவிட்டது. திருத்தொண்டர் புராணம் பெரியபுரா ணமாகியதும், இராமாவதாரம் கம்பராமாயணமாகியதுங் கூட இவற்றிடையே உள்ள ஒரு ஒற்றுமையேயாகும்.
சேக்கிழாரின் பெரியபுராணம் பல தொண்டர்களின் பெருமைகளைச் சொல்லும் நூலாகியதால், ஒரு கதாநாய கன், கதாநாயகியை முதன்மைப்படுத்தி நிற்கும் காவிய மாக அது அமையவில்லை.
ஆனல் கம்பரோ தமது இராமாயணத்தை முடிந்த வரை காவிய இலக்கண அமைவுக்குள் பாடவே முயன்றி ருக்கிருர், அதற்குரிய வாய்ப்பும் இராமாயணக் கதையிலே
சீவக சிந்தாமணியைத் திருத்தக்க தேவர் பாடிய பின்பே இராமாயணத்தைக் கம்பர் பாடியதால், இராமா யணத்திலும் சீவக சிந்தாமணியின் தாக்கத்தைக் காணக் கூடியதாக இருக்கிறது.
காவிய இலக்கண முறைமைக்குள் தனது இராமா யணத்தைப் பாடவிரும்பிய கம்பர், வால்மீகியின் முதல் நூலில் இல்லாத சிலவற்றையும் சேர்த்துப் பாடி மெரு கூட்டியது, இரு நூல்களையும் கற்போரின் உள்ளத்தில் தெற்றெனப் புலப்படும்.
சேக்கிழார் பெருமானின் பாடல்கள் கம்பரின் இரா மாயணத்தில் எண்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என் பதை இங்கு நோக்குவோம், விரிவஞ்சி சில ஒற்றுமை களே ஒப்பிடப்படுகின்றன,
சேக்கிழார் பெருமான் தனது பெரிய புராணத்தில் முதலாவது பாடலாக வாழ்த்துப் பாடலை இப்படிப் பாடு கிருர்,

அகளங்கன் 35.
உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன் நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
உலகு எலாம் இறைவனை அறிந்து ஒதுதல் எளிதான காரியமாக இருக்கலாம். ஆணுல் உணர்ந்து ஒதுதல் என்றும் அரிய செயலே, அதனையே சேக்கிழார் பெருமான் **உணர்ந்து ஒதுதற்கு அரியவன்” என்று பாடினர்.
இப்பாடல் நேரடியாகவே சிவபெருமான நினைத்துப் பாடியதாக அமைந்துள்ளது. ஏனெனில் நிலவும், கங்கையும் சடையில் நிலவுவதும், அம்பலத்தே திருக்கூத்திடுவதும் சிவபெருமானுக்கே உரியவை என்பது கண்கூடு.
கம்பரோ தனது காவியத்தின் தற்சிறப்புப் பாயிரத்தில்
உலகம் யாவையுந் தாமுள வாக்கலும் நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா அலகிலா விளையாட் டுடையார் அவர் தலைவர் அன்ன்வர்க்கே சரண் நாங்களே.
என்று பாடுகிருர், உலகம் யாவற்றையும் படைத்து, காத்து, அழித்து, இதனையே நீங்காத விளையாட்டாகச் செய்பவரே எமது தலைவர். அவருக்கே நாங்கள் சரண் என்பது இதன் பொருள். இங்கே தமது கடவுளை இன்னுர்
எனக் கம்பர் சுட்டிக் காட்டாததைக் கண்டு கொள்ளலாம்.
சேக்கிழாரின் அடியொற்றி * உலகம் யாவையும் * என்றே கம்பரும் தொடங்குவதைக் காண்கிருேம். **உல கம் யாவையும்' என்பதும் ‘* உலகெலாம் " என்பதும்
ஒன்றே. சேக்கிழாரின் * அலகில் சோதியன் ” என்ற சொல்லும் கம்பரின் * அலகிலா விளையாட்டு’ என்ற சொல் தும் ஒப்பு நோக்கத்தக்கது.

Page 32
36 இலக்கியத் தேறல்
கம்பர் எப்படி முத்தொழிலையும் செய்யும் முழுமுதற் கடவுளே தமது தலைவர் என்று கூறினரோ, அதனைச் சற்று மாற்றி, அவரின் பின் வந்த வில்லிபுத்தூராழ்வார் தமது பாரதத்தில் தற்சிறப்புப் பாயிரத்தில் பாடியிருக்கிருர்,
ஆக்குமாறு அயனும். முதலாக்கிய உலகங் காக்குமாறு செங் கருணையங் கடலாம். வீக்குமாறு அரணும். அவை வீந்தநாள் மீளப் பூக்குமா முதலெவன் அவன்பொன்னடி போற்றி.
படைத்தலை பிரம்மாவும், காத்தலை மகாவிஷ்ணுவும், அழித்தலை உருத்திரனும் செய்கின்றனர். அப்படி அழித்த பின் மீள இந்த உலகை எவர் படைக்கின்ருரோ அவரே முதல்வர், அவர் பொன்னடியே போற்றி என்பது இதன் பொருள்,
இது, சேக்கிழார் கம்பரில் ஏற்படுத்திய தாக்கம் வில்லிபுத்தூராழ்வாரில் கம்பரால் ஏற்படுத்தப்பட்டுள்ள தைக் காட்டுகிறது. கம்பரும், வில்லிபுத்தூராழ்வாரும் தமது கடவுளே யாரென்று கூருததை இங்கே காணலாம்.
சேக்கிழார் அவையடக்கமாகப் பாடிய பாடல்களிலும் கம்பர் அவையடக்கமாகப் பாடிய பாடல்களிலும் உள்ள ஒற்றுமை பெரிதும் வியக்கத்தக்கது.
அளவிலாத பெருமைய ராகிய அளவிலா அடியார்புகழ் கூறுகேன் அளவுகூட உரைப்பரி தாயினும் அளவில்ஆசை துரப்ப அறைகுவன்.
இது சேக்கிழாரின் பாடல். பெரிய புராணத்தைப் பாடுவதற்கு தனக்கு ஆசைதான் காரணம் என்று சேக்கி ழார் கூறுவதுபோலவே, கம்பரும் தான் இராமாயணம் ாடுவதற்கு ஆசை தான் காரணம் என்று கூறுகிருர் .

அகளங்கன் 37
ஒசை பெற்றுயர் பாற்கட்ல் உற்றெரு பூசை முற்றவும் நக்குபு புக்கென ஆசை பற்றி அறையலுற்றேன் மற்றிக் காசில் கொற்றத்து இராமன் கதையரோ.
சேக்கிழார் “ அளவில் ஆசை துரப்ப அறைகுவன் ” என்று பாடுவதும், கம்பர் ஆசைபற்றி அறையலுற்றேன்? என்று பாடுவதும் கவனிக்கத்தக்கது.
இவ் இருவரையும் அடியொற்றியே வில்லிபுத்தூராழ் வாரும், தாமும் ஆசையிலேயே பாரதம் பாடியதாகக் கூறு கிழுர்,
முன்னு மாமறை முனிவருந் தேவரும் பிறவும் பன்னு மாமொழிப் பாரதப் பெருமையும் பாரேன் மன்னு மாதவன் சரிதமும் இடையிடை வழங்கும் என்னும் ஆசையால் யானுமீ தியம்புதற் கிசைந்தேன்.
இந்த மூவரில் வில்லிபுத்தூராழ்வாரின் ஆசை சற்று வித்தியாசமானது, ‘ மா த வ ன் சரிதமும் இடையிடை வழங்கும் என்னும்ஆசையால் ” பாரதம் பாடுகிருர் அவர்,
கம்பரின் ‘* ஒசைபெற்று உயர் பாற்கட்ல் உற்று ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென "" என்ற அவை அடக்க உவமானம், அதே கருத்தில் சேக்கிழார் சுவாமிகளால் பாடப்பட்டிருப்பதை இங்கே பார்ப்போம்.
தெரிவரும் பெருமைத் திருத் தொண்ட்ர்தம் பொருவருஞ் சீர்புகலல் உற்றேன், முற்றப் பெருகு தெண்கட்ல் ஊற்றுண் பெருநசை ஒருசுணங்கனை ஒக்கும் தகைமை யேன்.
இதுவும் அவையடக்கமாகப் பாடப்பட்ட பாடலே. 'நடுக்கடலில் சென்ருலும் நாய்க்கு நக்குத் தண்ணிதான்' என்பது பழமொழி, அதேபோல பெருகுகின்ற கடலை ஒரு

Page 33
38 இலக்கியத் தேறல்
நாய் குடித்து முடிக்க எண்ணியதைப் போல, ஒப்புவமை இல்லாத பெருஞ் சீர்பெற்ற தொண்டர்தம் பெருமையை நான் பாடத் தொடங்கிய செய்கை இருக்கிறது என்பது இதன் பொருள்.
கம்பரின் பாடலை இப்போது நோக்குவோம், * பூனைக் குப் பாலென்ருல் கொள்ளை ஆசை தான், அதற்காகப் பாற்கடலை அடைந்த பூனை முற்று முழுதாக அதைக் குடித்து விடுவேன் என்று முயன்ருல் எப்படி இருக்கும்.
அதே போன்ற செய்கையே நான் இராமரின் பெரு மைகளைக் கூறும் இந்த இராமாயணத்தைப் பாடியது” என்று கூறுகிருர் கம்பர்.
இருவரது அவையடக்கப் பாடலும் ஒரே மாதிரியாக அமைந்துள்ளதை மேலே பார்த்தோம். இருவரும் தாம் பாடப்போகும் நாட்டிலுள்ள நதியின் சிறப்பைக் கூறும் போதும் ஒரே மாதிரியாகவே பாடுகிறர்கள்.
அதாவது சேக்கிழாரின் கருத்தில் நின்று கொண்டு தனது கற்பனையோடு கம்பர் மேலே செல்வதைக் காண லாம்.
பெரிய புராணத்தில் திருநாட்டுச் சிறப்புக் கூறுமிடத் தில், காவிரி நதிபற்றி சேக்கிழார் கூறுவது இப்படி அமை கிறது
சையமால் வரைப்யில் தலைமை சான்றது செய்யபூ மகட்குநற் செவிலி போன்றது வையகம் பல்லுயிர் வளர்த்து நாள் தொறும் உய்யவே சுரந்தளித் துர்ட்டும் நீரது.
காவிரி நதி, பூமி என்கின்ற மகளுக்கு நல்ல வளர்ப்புத் தாய் போன்றது என்பதையே " பூமகட்கு நற்செவிலி போன்றது *’ என்று பாடுகிறார்.

அகளங்கன் ፵ 9
இந்தக் கருத்தை இன்னும் மெருகேற்றி அழகாக, சற்று ஆழமாகப் பாடுகிருர் கவிச் சக்கரவர்த்தி கம்பர்,
இரவி தன்குலத் தெண்ணில்பல் வேந்தர்தம் புரவு நல்லொழுக் கின்படி பூண்ட்து சரயு என்பது தாய்முலை அன்னதிவ் வுரவு நீர்நிலத் தோங்கும் உயிர்க்கெலாம்.
சரயு என்கின்ற நதி நிலத்தில் உள்ள உயிர்கட்கெல் லாம் தாய்முலைபோல் அவ்வளவு அத்தியாவசியமும், பயன் ப்ாடும் கொண்டது என்று கூறுகின்ருர் கம்பர்.
* செய்ய பூமகட்கு நற் செவிலி போன்றது ? என்ற சேக்கிழாரின் கற்பனை இன்னும் மெருகோடு *சரயு என்பது தாய்முலே அன்னது இவ்வுரவு நீர்நிலத் தோங்கும் உயிர்க் கெலாம்” என்று கம்பரால் கவிதா சாமர்த்தியத்தோடு கையாளப்படுவது நயக்கத்தக்கதும் வியக்கத்தக்கதுமான வேலையே.
சேக்கிழார் எப்படி சொற்களை வைத்துக் கவிதையை” அழகு செய்கின்ருரோ அதே உத்தியும் கம்பரால் கையா ளப்பட்டுள்ளது. திருநாட்டுச் சிறப்புக் கூறும் சேக்கிழார் பெருமான் இப்படிப் பாடுகிருர்,
ஆலே பாய்பவர் ஆர்ப்புறும் ஒலமும் சோலை வாய்வண் டிரைத்தெழும் சும்மையும் ஞாலம் ஓங்கிய நான்மறை ஒதையும் வேலை ஒசையின் மிக்கு விரவுமால்.
இப்பாடலில் ஒலம், சும்மை, ஒதை, ஓசை என்ற நான்கு ஒரே கருத்துள்ள சொற்கள் அழகாக அமைந்திருப்பதைக் காணலாம்.
இதேபோன்று இன்னும் கூடுதலான ஒத்த கருத்துள்ள சொற்களை வைத்து கம்பர் நாட்டுப் படலத்தில் இப்படிப்

Page 34
40 இலக்கியத் தேறல்
பாடுகிருர், கம்பரும் ஒசை என்ற சொல்லுக்கே பல சொற்களைப் பயன்படுத்துவதும் கவனிக்கத்தக்கது.
ஆறுபாய் அரவம் மள்ளர் ஆலேபாய் அமலை ஆலைச் சாறுபாய் ஒதை வேலைச் சங்கின்வாய் பொங்கும் ஒசை ஏறுபாய் தம்ரம் நீரில் எருமையாய் துழனி இன்ன மாறுமா ருகித் தம்மின் மயங்குமாம் மருத வேலி,
இங்கு அரவம், அமலே, ஒதை, ஓசை, தமரம், துழனி என்ற ஆறு சொற்களும் ஒரே கருத்துள்ள சொ: களே.
இப்படி ஒரே கருத்துள்ள பல சொற்களை வைத்து கவிதை யாத்தது போலவே, ஒரே சொல்லில் பல கருத் துக்களை வைத்தும் சேக்கிழார் பாடியிருக்கிருர், அதை அப்படியே கம்பர் பின்பற்றியிருப்பதையும் இங்கு காண் போம்.
பரவையார் பற்றி சேக்கிழார் பெரிய புராணத்தில் பாடிய பாடல் இது.
பேர்பரவை பெண்மையினில் பெரும்பரவை விரும்பல்குல் ஆர்பரவை அணிதிகழும் மணிமுறுவல் அரும்பரவை சீர்பரவை ஆயினுள் திருவுருவின் மென்சாயல் ஏர்பரவை இட்ைப்பட்ட் என்னுசை எழுபரவை
பரவை என்ற சொல் ஏழு தடவை வருகின்றது, ஒவ் வொரு பரவையும் வெவ்வேறு பொருளைத் தருகின்றது. ஏழாவது பரவை என்ற சொல் எழுபரவை என வந்து ஏழாவது பரவை என்பதையும் பொங்குகின்ற கடல் என்ற பொருளையும் கொடுக்கும் சிறப்பு வியந்து ரசிக்கத்தக்கது.
இதன் பொருளைச் சிறிது நோக்குவோம், முதலாவது பரவை, பரவையாரின் பெயரைக் குறிக்கிறது. இது பேர் பரவை என வருகிறது, அதாவது பெயர் பரவை என் டதே இது, அடுத்து வருவது பெரும் பரவை. இது

அகளங்கன் 4
பெரு - உம்பர் - அவை எனப் பிரிபடும். அதாவது பெரிய தேவர்கள் சபை என்பது இதன் பொருள். அடுத்த-பரவை பரவு - ஐ எனப் பிரிகிறது. அதாவது வழிபடுகின்ற தெய் வம். அடுத்தது அரும்பரவை, இது அரும்பர் 2 அவை எனப் பிரிகிறது. முல்லை அரும்புகளின் கூட்டம் என்பது இதன் பொருள். அடுத்தது சீர் பரவை என்பது பரவைக் கூத்தாடுகின்ற இலக்குமி தேவியைக் குறிக்கிறது, அடுத்த பரவை என்பது பரவுதல் அதாவது பரந்து செல்லல் எனப் பொருள்படுகிறது, இறுதியாக வரும் பரவை கடலைக் குறிக்கிறது,
இதே போன்று சுந்தர காண்டத்தில் கம்பரும் ஒரு பாடலைப் பாடியிருக்கிருர், இலங்கைக் காவல் தெய்வத் தைப் பற்றிய பாடல் இது.
அஞ்சுவனத்தின் ஆட்ை உடுத்தாள் அரவெல்லாம் அஞ்சுவணத்தின் வேக மிகுத்தாள் அருளில்லாள் அஞ்சுவணத்தின் உத்தரி யத்தாள் அலையாரும் அஞ்சுவணத்தின் முத்தொளிர் ஆரத் தனிகொண்ட்ாள்.
இங்கே அஞ்சுவணம் என்பது நான்கு தடவைகள், நான்கு பொருள்களில் வருவது நோக்கக் கூடியது. அஞ்சு வர்ணம், அஞ்சும் உவணம் ( கருடன் ) அம்சுவர்ணம் (பொன்) அம் - சுவள் - நத்தின், என்ற வகையாக இந்த அஞ்சுவணம் பொருள்படுகின்றது.
இத்தகைய சொற்களை வைத்துக் கவிநயம் காட்டுதல் மட்டுமின்றி இன்னேர் உத்தியையும் கம்பர், சேக்கிழார் பெருமானிடமிருந்தே கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகிறது.
பெரிய புராணத்தில் திருநகரச் சிறப்பில் மனுநீதி கண்ட சோழனைப் பற்றிய சரிதையில் ஒரு கட்டம். பசுக் கன்றைத் தனது மகன் தேரூர்ந்து கொன்ருன், என்ற்
இ. 6

Page 35
4岛 இலக்கியத் தேறல்
செய்தி கேட்ட மனுநீதி கண்ட சோழனின் நிலையைச் சேக்கிழார் பெருமான் இப்படிப் பாடுகிருர்.
மன்னுயிர் புரந்து வையம் பொதுக்கடிந் தறத்தில் நீடும் என்னெறி நன்றல் என்னும் என்செய்தால் தீரும் என்னும் தன்னிளங் கன்று காணுத் தாய்முகங் கண்டு சோரும் அந்நில அரசன் உற்ற துயரம்ஒர் அளவிற் றன்றல்.
தனது ஆட்சியில், தான் உயிருடன் இருக்கும்போதே ஒரு அநீதி நடந்துவிட்டது, என்பதை மனுநீதி கண்ட சோழனுல் எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.
உயிர்டோப் வெறும் உடல் என்ற நிலையிலேயே அவன் காணப்படுகிருன். இதனை நன்கு விளக்கவே பாடலில் என்னும், சோரும் என்ற அஃறிணைச் சொற்கள் உயர்திணை யாகிய அரசனுக்கு பயன்படுத்தப்பட்டன.
இதே இடங்களில் ' என்னெறி நன்றல் என்பான், என் செய்தால் தீரும் என்பான். தன்னிளங் கன்றுகாணுத் தாய்முகம் கண்டு சோர்வான்’ என்று பாடக்கூடிய சந்தர்ப் பம் இருந்தும், மனுநீதிகண்ட சோழனின் உச்சமான கவலையை இந்த உத்தியினல் வெளிக்கொணர்கிருர் சேக்
கிழார் சுவாமிகள்,
அதாவது தான் உயிரோடு இருந்திருந்தால் இத் தகைய அநீதி இழைக்கப்பட்டிராது. ஆனல் அநீதி இழைக் கப்பட்டுவிட்டதால் தான் உயிரோடு இல்லை. வெறும் நடைப்பிணமாகவே இருக்கிறேன் என்பதைக் காட்டவே இந்த உத்தி பெரிதும் பயன்பட்டது.
இதே உத்தியை கம்பர் பல இடங்களிலும் பயன்படுத் துகிருர், நாகபாசப் படலத்தில் மூர்ச்சையுற்றுக் கிடக்கும் இலக்குவன, இறந்துவிட்டான் என நினைத்த இராமனின்
தன்மையை கம்பர் பாடும்போது,

அகளங்கன்
வீரரை எல்லாம் பார்க்கும் வில்லினேப் பார்க்கும் வீரப் பாரவெஞ் சிலேயைப் பார்க்கும் பகழியைப் பார்க்கும் பாரில் யாரிது பட்டாரென்போ லெளிவந்த வண்ணம் என்னும் நேரிது பெரிதென்றேது மளவையி னிமிர நின்றன்.
இங்கும் பார்க்கும், என்னும் என வரும் சொற்கள் சேக் கிழார் பன்படுத்தியதைப் போலவே பயன்படுத்தப்பட்டி ருப்பதைக் காணலாம்.
இதேபோன்ற உத்தியை இவர்களைப் பின்பற்றி கந்த புராணத்திலே கச்சியப்பர் பயன்படுத்தி இருப்பதும் இங்கே கண்டு வியக்கத்தக்கது.
வில்லினப் பார்க்கும் செங்கேழ் வேலினைப் பார்க்கும். ஏனை மல்லலம் படையைப் பார்க்கும் வாளியைப் பார்க்கும், வீரச் சொல்லினேப் பார்க்கும் வந்து சூழ்தரு பழியைப் பார்க்கும் கல்லென எயிற்றின் பந்தி கறித்திடும் கவலும் அன்றே.
தனது ஏழு தம்பியர்களை அக்கினி முகாசுரன் மாயத் தால் கொன்றதைக் கண்டு வீரவாகு தேவர் புலம்புவதாக கந்தபுராணத்தில் இப்பாடல் வருகின்றது.
இப்படியாக சேக்கிழார் பெருமானின் காப்பிய உத் திகள் பல கம்பரால் எடுத்தாளப்பட்டு, பின்னல் பலரது கவிதைகளிலும் புகுந்துள்ளன.
கம்பருக்குப் பின்வந்த புலவர்கள் பலரிலும் கம்பரின் ஆளுமை புகுந்தது போலவே கம்பரில் சேக்கிழாரின் கவி தைத் தாக்கம் ஒருவகையில் ஆதிக்கஞ் செலுத்தியிருக்கின் றது என்பது மறுப்பதற்கில்லாத உண்மையாகும்,
(இலங்கை வானெலியில் 24-9-84 அன்று ஆற்றிய உரை)
நன்றி: இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்

Page 36
5 மனுநெறி
இந்து சமயம் ஏராளமான புராணங்களைத் தன்ன கத்தேகொண்டு விளங்குகிறது. புராணங்கள் அநேகமாக கடவுளர்களின் பெயரைக் கொண்டே வழங்கப்படுவன.
திருவிளையாடற் புராணம், சிவபெருமானின் திரு விளையாடல்களை விளக்குவதால் சிவபெருமானின் பெயரி லன்றி திருவிளையாடற் புராணம் என்றே அழைக்கப்படு கின்றது.
*தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே' என்ற ஒளவையாரின் வாக்குப்படி, திருத்தொண்டர்களின் பெரு மைகளைக் கூறும் புராணமாகிய திருத்தொண்டர் புராணம் பெரியபுராணமாயிற்று. இது தொண்டர்களின் பெருமைக் கும், அதனை உரிய முறையில் புராணமாக்கிய பெருங் கவிஞர் சேக்கிழார் பெருமானின் புலமைக்கும் சான்று பகர்கின்றது.
பெரிய புராணத்தில், சிவனடியார்களைப் பற்றிய செய் திகள், சேக்கிழார் பெருமானுல் மிகச் சிறப்பாகப் பாடப் பட்டுள்ளன. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டர் தொகையையும், நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண் டர் திருவந்தாதியையும் அடியொற்றி தன் காலத்தில்

அகளங்கன் 45
கிடைத்த வரலாற்ருதாரங்களையும் ஆராய்ந்து ‘* பக்திச் சுவை நனி சொட்டப் * பெரிய புராணத்தைப் பாடினர் தெய்வமாக் கவி சேக்கிழார்.
பெரிய புராணத்திலே அரச நீதிக்குப் பெருமை சேர்க் கும் கதையாகக் கூறப்படும் மனுநீதி கண்ட சோழனின் கதையினை இங்கே நோக்குவோம். இக்கதையினைப் பொது வாக அரசனின் பாகுபாடற்ற நீதி நெறிக்குச் சான்ற கப் பலரும் எடுத்துக் காட்டியுள்ளனர். இக்கதையிலே மனு நீதிச் சோழனின் மன உணர்வை, அவனது உயர்ந்த பண் பாட்டை, நயத்தக்க நாகரிகத்தை விளக்குவதே எனது நோக்கம்.
கண்ணகி போற்றிய நீதி
அரச நீதிக்கு அத்தாட்சியாக சோழ மன்னர்களின்
ஆட்சிச் சிறப்பினைக் கூறுவதற்காக இக்கதையை இளங் கோவின் சிலப்பதிகாரத்திலே காணுகின்ருேம்.
நீதி பிழைத்த நெடுஞ்செழியப் பாண்டியனிடம் தனது நாடான சோழநாட்டு நீதிநெறி பற்றிக் கண்ணகி பெரு மிதத்தோடு எடுத்துக் கூறுகிருள். சிபிச் சோழன் ஒரு புருவுக்காகத் தன் உடலை அரிந்த கதையைக் கூறி, பின்பு மனுநீதி கண்ட சோழனின் கதையையும் கூறுகிருள்.
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுட்த், தான்தன்
அரும்பெறற் புதல்வனே ஆழியில் மடித்தோன்.
என்று பெருமையாகப் பேசுகிருள் கண்ணகி, மனுநீதி கண்ட சோழன் நீதிநெறி தவறது அரசாட்சி செய்து புக ழாட்சி படைத்தவன்.
நீதிக்காக கண்ண்கியினல் பாண்டிய மன்னனிடம் எடுத் தியம்பப்பெற்ற இக்கதையை, மானிடப் பண்புக்காக நயத் தக்க நாகரிகத்துக்காக நாம் இங்கே எடுத்து நோக்கு வோம்.

Page 37
.46 இலக்கியத் தேறல்
திருவாரூர்ச் சிறப்பு
*தெள்ளு மோசைத் திருப்பதிகங்கள் பைங்
கிள்ள்ை பாடுவ, கேட்பன பூவைகள்”
திருவாரூரிலே திருப்பதிகங்களை மனிதர்கள் பாடிப் பரவி வருவதால் அங்குள்ள கிளிகள் அத்திருப்பதிகங்களைப் பாடமாக்கிவிட்டன. கிளிப்பிள்ளைகள் தாமாகவே திருப் 1 திகங்களை இராகத்தோடு பாட, பூவைகள் எனப்படும் நாகணவாய்ப் பறவைகள் மெய்மறந்து கேட்டுக் கொண்டி ருக்கின்றன.
அத்தகை: பக்திச் சிறப்பு வாய்ந்த திருவாரூர் சோழ நாட்டிலே ஒரு பகுதி. அந்நாட்டை ஆண்ட சோழ மன் னன் மனுநீதி கண்ட சோழன், அவன் நீண்ட நாட்க ளாகப் பிள்ளே யில்லாமல் இருந்து, பின் பல தவங்கள்
செய்து ஒர் ஆண் குழந்தையைப் பெற்ருன்,
சிறந்தநற் தவத்தாற் தேவி
திருமணி வயிற்று மைந்தன் பிறந்தனன் உலகம் போற்றப் பேரரிக் குருளே யன்னு.ை
சிங்கக் குட்டி போலப் பிறந்த ஆண் குழந்தைக்கு வீதிவிடங்கன் என்று பெயரிட்டு வளர்த்தனர். வாழை யிளங் குருத்தென வளர்ந்த மைந்தன் பலகலைகளையும் கற் றுத் தேர்ந்து இளவரசுப் பட்டத்தை அடையும் பருவம் நெருங்கிவந்த நேரததில் ஒருநாள் தனது நண்பர்களோடு திருவாரூர் வீதியிலே தேரிலே வலம் வருகிருன்.
பொங்கிய தான சூழத்
தேர்மிசைப் பொலிந்து போந்தான்.
என்கிருர் சேக்கிழார் சுவாமிகள், தானைகள் குழத் தேரிலே வலம் வருகிருன் வீதிவிடங்கன் அவனுேடு கூடவே

அகளங்கன் 47
ஆடுநர், பாடுநர் எல்லோரும் வருகின்றனர். வீதியின் இருமருங்கும் மக்கள் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது.
பரசுவந் தியர்முன்; சூதர்
மாகத ரொருபாற்; பாங்கர் விரைநறுங் குழலார் சிந்தும்
வெள்வளை ஒருபான்; மிக்க முரசொடு சங்க மார்ப்ப
முழங்கொலி யொருபால்; வென்றி அரசிளங் குமரன் போதும் அணிமணி மாட வீதி.
மங்கலப் பாக்களைப் பாடிச் செல்வோரும், அரசர்க்குத் தொன்றுதொட்டுத் துயிலெழப் பாடுவோரும், பிற இடங் களில் பாடுவோரும், அரசரது வீரத்தைப் புகழ்ந்து பாடு வோரும், ஒரு பக்கத்தில் பாடிக்கொண்டு வருகிறர்கள்.
அரச குமாரனின் அழகிலே ஈடுபட்டு மனங் குலைந்து, உட்ல் மெலிந்து தமது கைவளைகளை நழுவவிடும் மங்கை யர்கள் ஒரு புறமும், முரசும், சங்கும் 'ஆர்த்தெழும் முழக்க ஒலி ஒரு புறமுமாக இப்படியே மாடவீதி கோலா கலமாக விளங்குகிறது.
அரச ஊர்வலங்கள் பற்றி இன்றைய சந்ததிக்கு அதி கம் விளக்க வேண்டிய தேவையில்லைத் தானே. இத்தனை கோலாகலத்திலும் எங்கிருந்தோ ஓடிவந்த பசுக் கன்று ஒன்று இளவரசனின் தேர்ச் சில்லினிட்ையே புகுந்து நெரி யுண்டு இறந்துவிடுகின்றது.
136th, கன்றும்
துடித்துப் பதைத்துத் துயரிலே மூழ்கிய இளவரசன்" தவறை எண்ணி நடுநடுங்கிச் சோருகிறன். கன்றை இழந்த தாய்ப் பசுவோ செய்வதறியாது கவித்து அலறுகின்றது. முகமெல்லாம் கண்ணீர் வழிய, நெருப்பென மூச்சை

Page 38
4母 இலக்கியத் தேறல்
நெட்டுயிர்த்துக் கதறுகிறது. அப்பசுவுக்கு அதுவே முதற்
கன்று.
தனது தந்தையின் அரச நீதி தன்னுல் அழிவுற்றதைக் கண்டு ஆதங்கப்பட்ட இளவரசன். பசுக் கன்றைக் கொன்ற பாவத்தைத் தீர்க்கக் கூடிய பரிகாரத்தைத் தேடிப் பிரா மணர்களைச் சேர்கிருன்.
தனது தந்தைக்கு இந்த விடயம் தெரிய முதலே தனது தவறுக்குப் பிராயச்சித்தம் - கழுவாய் - தேடப்பட்டு விடவேண்டுமென்பது அவனது விருப்பம்,
இது ஒரு புறமிருக்க, கன்றிழந்த தாய்ப் பசுவோ கதறித் துடித்து சோழ மன்னனின் அரண்மனையை நோக்கி ஒடுகின்றது, தன்னுயிர்போல மன்னுயிர் காக்கும் மனு வேந்தனின் பொற்கோயில் வாசலிலே கட்டப்பட்டிருந்த பொன்னணி மணியைத் தனது கொம்பினுலே அடிக்கிறது. என்றுமே இல்லாதவாறு அன்று ஆராய்ச்சி மணியின் ஒலி கேட்ட அரசன் அதிசயிக்கிருன், திகைக்கிறன், அஞ்சு
கிருன்
பழிப்பதை முழக்கோ, ஆர்க்கும்
பவத்தி ஞெலியோ வேந்தன் வழித்திரு மைந்த ஞவி
கொளவரு மறலி பூர்திக் கழுத்தணி மணியி ஞர்ப்போ
என்னத்தன் கடைமுன் கேளாத் தெழித்தெழு மோசை மன்னன்
செவிப்புலம் புக்க போது,
தனது செங்கோலைப் பழிக்கும் பறை ஒலியோ, அல்லது பாபம் ஆரவாரித்து தன்னைப் பார்த்துச் சிரிக்கும் சிரிப்போ அல்லது தனது மைந்தனின் ஆவியைக் கொண்டுபோக ஒருகின்ற இயமதேவனின் வாகனமாகிய எருமைக் கடா

அகளங்கன் 垒9
வின் கழுத்திலே உள்ள ஓசையோ என்று அஞ்சிய மன்னன் வாசலுக்கு ஒடோடி வருகின்றன்.
ஆராய்ச்சி மனியை அடித்துக் கொண்டிருந்த பசு வைக் கண்ட மன்னன் தனது மந்திரியைத் தனது கண்க ளால் ஆராய்ந்து, இகழ்ந்து நோக்குகிருன் நாட்டிலே ஒரு பசுவின் துயரத்தைப் போக்க முடியாமல், பசுவாக வந்து ஆராய்ச்சி மணியை அடித்துத் தன் துன்பத்தைத் தெரிவிக்கும் வரை, காத்திருந்த தனது அரசாட்சியை எண்ணிய அரசன், வெட்கப்பட்டு அமைச்சரை இகழ்ந்து நோக்குகிருன்.
மந்திரியின் மதியூகம்
Pந்திரியோ அதிவிவேகி, பசு மணியை அடிக்க முன் னரே, செய்தியை அறிந்து வைத்திருக்கிருன். அரசனுக் குச் சொல்ல அஞ்சி ஒதுங்கியிருந்த அவன் இனியும் காலம் தாழ்த்துவது நல்லதல்ல என நினைத்து நடந் சம்பவத்தைக் கூறுகிருன்.
இளவரசனில் எள்ளளவும் குற்றமில்லை என்பதைத் தெளிவாக அரசனின் இதயத்தில் பதிய வைக்க வேண்டு மென்பது அவனது நோக்கம். அரசனின் நீதிமுறை ஆட்சி பற்றி அறியாதவன மந்திரி. சிறிதளவாவது தனது மக னிலே குறைகண்டுவிட்டால் மகனைக் கொல்ல மன்னன் தயங்கான் என்பது மந்திரிக்கு நன்கு தெரியும்.
அதல்ை பசுக் கன்றுதான் முழுக் குற்றவாளி; இளவ; ரசன் நிரபராதி என்று நிரூபித்துவிட முயல்கிருன். அரசன் முதன் முதலாக நடந்த சம்பவத்தை அறியும்போது தனது மகன் குற்றவாளியில்லை என்று உணரக் கூடியதாக சம்ப வத்தைத் தன் கருத்தோடு சேர்த்துச் சொல்கிருன் மந்திரி.
இ, 7

Page 39
50 இலக்கியத் தேறல்
தவறுதலாகத் தானுக வந்து தேர்க் காலில் சிக்குண்டு இறந்த சிறு கன்றுதான் தவறிழைத்தது. பசுக் கன்றின் இறப்புக்கு இளவரசன் எந்த வகையிலும் பொறுப்பாளி யல்ல என்பதை நிரூபிக்க முயல்கிருன் மந்திரி.
சேக்கிழார் பெருமானின் கவிநயத்துக்கு இந்த இடத் தில் இடம்பெறும் ஒரு கவிதையே சான்றுபகரப் போது மானது. மிக ஆழமாக, அழகாக, ஒவ்வொரு சொல்லை யும், அர்த்தத்தோடு பயன்படுத்தி, இலக்கிய நயம் பொதிந்ததாக, மந்திரியின் மூலமாக இப் பாடலைத் தரு கிருர் சேக்கிழார்,
வளவ நின் புதல்வன் ஆங்கோர்
மணிநெடுந் தேர்மேல் ஏறி அளவில் தேர்த் தானே சூழ
அரசுலாந் தெருவிற் போங்கால் இளேய ஆன் கன்று தேர்க்கால்
இடைப் புகுந்து இறந்ததாகத் தளர் வுறும் இத்தாய் வந்து
விளைத்ததித் தன்மை என்ருன்.
ஒவ்வொரு சொல்லிலும் இளவரசனின் குற்றமற்ற தன்மையை எப்படி விளக்குகிருர் பாருங்கள். முதலில் *வளவ! நின் புதல்வன். ..." என்கிருர், அரசனே உனது புதல்வன் எப்படி இருப்பான், உன்னைப்போல ஜீவகாருண்ய சீலஞகத் தானே இருப்பான். அவன் தவறு செய்வாளு? உனது பரம்பரை குற்றஞ் செய்யுமா என்று கூறும் முக மாகவும், புத்திர பாசத்தை ஏற்படுத்துவதற்காகவும் முதன் முதலிலே நின் புதல்வன் என்றே ஆரம்பிக்கிறர் மந்திரி.
பின்பு 'மணி நெடுந்தேர்” என்று தேரைப் பற்றிக் கூறுகிருர். தேரிலே மணிகள் பூட்டப்பட்டுள்ளன. அதனுல் தேர் அசையும்போது மணி ஒலி எல்லா இடமும் கேட்கும். மணி ஒலியைக் கேட்காமல் தேர்க் காலின் இடையிலே வந்து புகுந்தது பசுக் கன்றின் குற்றம் தானே என்கிருர்,

அகளங்கன் 51
சரி, சத்தத்தைத்தான் பசுக் கன்று கேட்கவில்லை என் ருலும் தேரையாவது பார்த்திருக்க வேண்டுமே. தேர் தான் நெடுந் தேராயிற்றே, உயர்ந்த தேர் என்பதால் எங்கிருந்து பார்த்தாலும் தெரியுமே. எனவே "தேரைக் காணமலும், மணி ஓசையைக் கேளாமலும் திசை தவறி வந்தது பசுக் கன்றின் குற்றமே தான் என்று கூறியும் மந்திரியின் மனம் ஆறவில்லை.
மேலும் தொடர்கிறர் "அளவில் தேர்த்தானை சூழ” என்கிருர், அளவில்லாத தேர்த் தானைகள் புடை சூழ்ந்து வருகின்றன, இளவரசன் தனியாக ஊர்வலம் போது வில்லையே, இத்தனை கோலாகலத்திலே பசுக் கன்று வந்து தேர்க் காலிலே விழுந்தால் அது இளவரசனின் குற்றமா?
மேலும் கூறுகிருர் “அரசுலாந் தெருவிற் போங்கால்?? இளவரசன் உலாவச் சென்ற இடமோ தனிப்பட்ட வீதி யல்ல. அரச வீதி, அரசர்கள் உலாப் போ கின்ற வீதி அரச உலா வீதியிலே பசுக் கன்றுக்கு என்ன வேலை, எனவே எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால் இளவரசன் குற்ற மற்றவன் என்பது புலனுகின்றது என்று கூறியும் அத் தோடு விடவில்லை அமைச்சர். அரசே! இறந்ததோ இளங் கன்று, 'இளங்கன்று பயமறியாது” என்பார்கள். அது உண்மைதானே, என மேலும் பசுக் கன்றின் மேல் பழி யைப் போடுகிருர் மந்திரி, 'இளைய ஆன் கன்று” எனக் குறிப்பது இதனையே. அதுவாகவே வந்து தேர்க் காலிலே விழுந்தது என்பதை விளக்க “தேர்க் கால் இடைப் புகுந்து இறந்தது” என்று முடிக்கிருர் மந்திரி,
இங்கே இன்னென்றுக்கும் அரசன் கேட்காமலே மந் திரி பதில் சொல்கிருர், பசுக் கன்றிலே தான் குற்றம் என்ருல் தாய்ப் பசு ஏன் இங்குவந்து நீதிகோரி ஆராய்ச்சி மணியை அடிக்க வேண்டும் என்று கேட்கலாம். இப்பசு தனது இளங் கன்று இறந்ததால் மிகவும் மனத் தளர்வ டைந்திருக்கிறது. புத்தி ஒரு நிலையில் இல்லை, அதனல்

Page 40
52 இலக்கியத் தேறல்
செய்வதறியாது இங்கே வந்து மணியை அடித்துவிட்டது என்கிருர் அமைச்சர். “தளர்வுறும் இத்தாய் வந்து விளைத் தது இச்செய்கை” என்ற வரிகளால் இதனைத் தெளிவுபடுத் தினர். அமைச்சரின் சாதுர்யமும், அதை அமைத்த சேக் கிழார் பெருமானின் புலமையும் "எப்படி இருக்கிறது பாருங்கள்.
அந்தச் சம்பவத்தைக் கேட்ட அரசன் வெவ்விடம் தலைக்கேறியதைப்போல் வேதனை அகத்திலே மிகுந்துவரப் பெருந் துன்பமடைகிமுன். தன்னிளங் கன்றைக் காணுது உயிர்தரித்திருந்து இரங்கிவிழும் பசுவைப் பார்த்துப் பரித விக்கிருன். அரசனின் வேதனையைக் கண்ட மந்திரிகள் அரசன் ஏதாவது முடிவெடுப்பதற்கு முன்னதாகவே தாம் இளவரசனைக் காப்பதற்கு முந்துகின்றனர்.
*அரசே! மனந்தளர்ந்து கவலைப்படுவது பசுக் கன்று இறந்ததற்குப் பரிகாரமாகாது. பசுவதை செய்தவர்க்குரிய பிராயச்சித்தம் வேதங்களிலே கூறப்பட்டுள்ளது. அவ்வேத விதிப்படி இளவரசனேயும் அந்தணர்களிடத்திலே ஒப்ப டைத்து கழுவாய் தேடுவது முறையான செயல்' என்று அறிவுறுத்துகின்றனர்.
மந்திரிகளது மாற்றங்கேட்ட மன்னன் அவர்களது கூற்றை அழகாக மறுத்துக் கூறுகிறன். “பசுக் கன்றைக் கொன்ற பாதகனின் பாபத்தைத் தீர்த்துவிடுவது சுலபம். அதற்குத்தான் வேதத்தில் விதிமுறைகள் இருக்கின்றன. ஆனல், அதனல் கன்றை இழந்து தவிக்கும் பசுவுக்கு என்ன லாபம். எனது பழி தீர்ந்துவிடலாம். ஆனல் பசுவின் துயரம் தீர்ந்துவிடப் போவதில்லை.
ஓடோடி வந்து ஆராய்ச்சி மணியை அடித்த இத் தாய்ப் பசு தனது துயர்தீர்க்க அன்றே அலமருகின்றது 99. என்று அறிவுரை கூறுகின்றன்.

அகளங்கன் む3
அரசனின் நோக்கம்
அரசனின் ஒரே நோக்கம் தனது மகனின் மேல் வந்து சூழ்ந்துள்ள பழியைப் போக்குவதல்ல. கன்றை இழந்து நின்று கதறும் பசுவின் கவலையைப் போக்க வேண்டு மென்பதே. அதனுல் பலவாறு சிந்திக்கிருன், தாய்ப் பசுவின் துயர் தீர்க்க வழியறியாது தவிக்கிருன், திகைக் கிருன், துடிதுடிக்கிருன், பதைபதைக்கிறன்.
இறுதியாக, அவனல் செய்யக் கூடிய காரியம் ஒன்று தான் இருப்பதாகத் தெரிகிறது. அதுதான் நான் இங்கே குறிப்பிட்டுக் கூறவந்த மிக உயர்ந்த பண்பாடு. நயத்தக்க நாகரிகம். அதை அரசன் கூறுகிருன்,
எனமொழிந்து மற்றிதனுக்
கினியிதுவே செயலிவ்வான் மனமழியுந் துயரகற்ற
மாட்ட்ாதேன், வருந்துமிது தனதுறு பேர் இடர்யானுந்
தாங்குவதே தருமமென அனகனரும் பொருள்துணிந்தான்
அமைச்சரும் அஞ்சினரகன்றர்.
பசுவின் துயரைப் போக்க முடியாததால், அப்பசு வருந்துவதுபோல நானும் வருந்துவதே தருமம் என்று எண்ணுகிருன் மனுநீதி கண்ட சோழன்.
மற்றவர்களின் துயர் தீர்க்க முடியாத நிலையிலே, நாமும் அவ்ர்களோடு சேர்ந்து துயருறுவதே மேலான பண்பாடு என்பதை மனுநீதி கண்ட சோழன் மூலம் எமக்கு சொல்லித் தருகிருர் சேக்கிழார் பெருமான்.
ஆங்கிலப் பண்பாட்டில் இருந்து எமக்குக்கிடைத்ததாகப் பலரும் கூறிக்கொள்ளும் ஒன்று (Sorry) சொறி சொல்லுதல்

Page 41
54 இலக்கியத் தேறல்
இன்று இந்தச் சொல்லைத் தெரியாதவர்களே இங்கே இல்லை எனலாம்.
உதாரணமாக ஒருவரின் காலிலே நாம் மிதித்துவிட்டால் உடனே சொறி (Sorry) என்று கூறுகிருேம். இதன் அர்த்தம் இதுதான். எனதுகால் அவரின்காலிலேமிதித்ததால் அவருக்கு வருத்தம், நோவு ஏற்பட்டுவிட்டது. அந்த வருத்தத்தைத் தீர்க்க முடியாத நாம், அவருக்கு ஏற்பட்ட வருத்தத்தில் பங்கு கொண்டு வருந்துவதாகக் கூறிக் கொள்கிருேம் மற்றவரின் துன்பத்தில் நாம் பங்குகொள்ளும்போது துன்ப மடைந்தவருக்கு ஒரு ஆறுதல் ஏற்படுகிறது.
இன்று சொறி (Sorry) என்ற சொல்லை எந்த அர்த்தத் தோடுமில்லாமல் வெறுமனேவாயளவில் பிரயோகிப்பதையே காண்கிருேம்,
ஒருவரின் துன்பத்தில் பங்கு கொள்வது, அல்லது பங்கு கொள்வதுபோலக் காட்டிக் கொள்வது உண்மையில், துன்ப மடைந்தவருக்கு நல்ல ஆறுதலளிக்கும் என்பது உளவியல் ரீதியில் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.
கணவனே இழந்து தவிக்கும் பெண்ணுெருத்தி தன் துன்பத்தின் எல்லையிலே, தனது கைகளைத் தலையிலும், மார்பிலும் அடித்துப் புலம்புவாள். அவளது துயரம் தீர்க் கப்படக் கூடியதல்ல. அந்த மரணச் சடங்கிற்குச் செல் பவர்கள் வெறும் தேறுதல் சொல்பவர்களாக மட்டும் இருந்தால் அவளது மனம் ஆறுதல் அடையாது.
அங்கே செல்லும் உறவினரும், ஊரவரும், தாமும் அவளோடு சேர்ந்து அழுது துயரப்பட்டுக் கொள்கிருர்கள். தாமும் அவளைப் போலவே, அவளோடு சேர்ந்து மார்பி லடித்து அழுகிருர்கள். அதுதான் மாரடித்தல் என்ற வழக்கமாக வந்தது. அவளது துன்பத்தில் பங்குகொண்டு பின் ஆறுதல் வார்த்தைகள் சொன்ஞல் அவள் மனம் சிறிதளவு ஆறும், இந்தப் பண்பாடு இன்றும் தமிழர் மத் தியில் டெரிதும் காணப்படுகின்றது.

அகளங்கன் 53
ஒரு நண்பனின் வீட்டில் மரணம் என்ருல் செல்கி ருேம். எமக்கு நண்பனைத் தவிர இறந்தவரைத் தெரியா மல் இருக்கலாம். அந்த மரணத்தில் எமக்கு கவலையே இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும் நண்பனது துயரத் தைத் தீர்க்க முடியாத நாம் என்ன செய்கிருேம். நாமும் அவனேடு சேர்ந்து துயருறுகிருேம், அது ஒன்றே துயரில். மூழ்கியிருக்கும் நண்பனுக்கு அந்த நிலையில் ஆறுதலளிக்கப் போதுமானதாகிவிடுகிறது.
இவையெல்லாம் மனுநீதி கண்ட சோழனின் செய லோடு ஒப்பு நோக்கத்தக்கவையே. பசுவின் துயரைப்
போக்க முடியாத மன்னன், பசு அடைந்த துயரைத் தானும் அடைய வேண்டும் என நினைந்து தனது மகனையும் தேர்க் காலிலே இட்டுத் தானே தேரூர்ந்து கொல்கிருன்.
மனுநீதிச் சோழனின் கதையிலே நீதியும், மனுதர்ம மும், மன்னனின் கடமையும் நிறைந்திருப்பதற்கு ஒருபடி மேலாக, மற்றவர்களின் துயர்கண்டு, அதனைத் தன்னல் தீர்க்க முடியாத இடத்து தாமும் அவர்களோடு சேர்ந்து அவர்களைப் போலவே துன்பமடைந்து கொள்ளும் பண்பே என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
பசுவின் அதே துயரைத் தானும் அடைந்து பசுவுக்கு ஆறுதல் அளிக்க முன்வந்த மனுநீதிச் சோழனின் மனுதர்ம நெறி, தமிழ்ப் பண்பாட்டின் சிகரமாக விளங்குகிறது.
(நன்றி. ஈழநாடு 13, 20-7-1980)

Page 42
  

Page 43
5cs இலக்கியத் தேறல்
மன்னன் தனது நாட்டு மக்களின் உயிராக இருக்கி முன் என்ற மற்றைய புலவர்களின் கூற்றை சற்று மாற் றிப் புதுமை செய்கிருன் கம்பன். அவனது ஆளுகைக்கு உட்பட்ட உயிர்கள் எல்லாம் உறைகின்ற உடலாக விளங்கு கிருணும் தசரதன். அதாவது மன்னன் உயிராக விளங்க வில்லை. உடலாக விளங்குகிருன்.
வயிரவாண் பூணணி மடங்கன் மொய்ம்பினுன் உயிரெலாந் தன்னுயிர் ஒப்ப ஓம்பலாற் செயிரிலா உலகினிற் சென்று நின்றுவாழ் உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினுன்.
உயிரெல்லாவற்றையும் தன்னுயிருக்குச் சமானமாக மதித்துப் பாதுகாக்கிருன் தசரதன், உயிரை உடம்பு எப்படிப் பாதுகாக்கின்றதோ அப்படி எல்லா உயிர்களையும் பாதுகாக்கிருன்.
அதஞல் எல்லா உயிர்களும் தங்கியிருக்கின்ற உடலாக இருக்கிருன் தசரதன். எப்படி இருக்கிறது கம்பனின் புதுமை, உயிராக மன்னன் விளங்குவான் என்பதை மாற்றி உடலாக இருக்கிருன் தசரதன் என்று கூறுகிருனே.
ஆமாம், அப்படியாயின் தசரதன் என்கின்ற மன்ன னின் உடலை இயக்குவது அந்நாட்டு உயிர்கள் தானே. எப்படி இருக்கிறது கோசல நாட்டு ஜனநாயகம். " மக்கள் மன்னனை இயக்குகிருர்கள். மக்களுக்காக மக்களால் மன் னன் இயக்கப்படுவது எத்தனை மாண்புமிக்க ஜனநாயகம் மன்னராட்சிக் காலத்திலே முடியாட்சியும், குடியாட்சியும் கைகுலுக்கிக் கலந்துகொள்ளும் புதிய அரசியல் சித்தாத்தம் இது.
சரி, இத்தகைய ஜனநாயகத்தால் கோசல நாட்டிலே நிகழும் நிகழ்ச்சி ஒன்றை இந்த இடத்தில் கண்டுகொள்வது பயன்மிக்கது.

அகளங்கன்
நீரிடை உறங்கும் சங்கம்,
நிழலிடை உறங்கும் மேதி, தாரிடை உறங்கும் வண்டு,
தாமரை உறங்கும் செய்யாள். தூரிடை உறங்கும் ஆமை
துறையிடை உறங்கும் இப்பி. போரிடை உறங்கும் அன்னம்,
பொழிலிடை உறங்கும் தோகை,
#fക്കേ பாய்ந்து உழக்கிக் கலக்காமல் மர நிழலிலே சென்று எருமை மாடுகள் நித்திரை செய்வதால், நீரிலே சங்கு சுதந்திரமாக, நிம்மதியாக நித்திரை செய்கின்றது.
வண்டுகள் மலர் மாலைகளிலே வந்திருந்து தேனைக் குடித்து நித்திரை செய்வதால், தாமரை மலரிலே திரு மகள் நிம்மதியாக நித்திரை செய்கிருள். தாமரையில் திருமகள் உறைவதாகக் கூறுவது பொது வழக்கம். வண் டின் ரீங்காரத் தொல்லை இல்லாததால் மட்டுமல்ல, வறுமை என்ற தொல்லையும் இல்லாததால், திருமகளின் (இலக்குமி) உறக்கத்தைக் குழப்ப யாருமே இல்லை. அத ஞல் திருமகள் நிம்மதியாக, சுதந்திரமாக உறங்குகிருள்,
ஆமைகள் புதர்களிலே சென்று உறங்குவதால், நீர்த் துறையிலே முத்துச் சிப்பிகள் சுதந்திரமாக, நிம்மதியாக உறங்குகின்றன.
மயில்கள் நெற்போரிலே வந்து நெல்லைக் கொறித்து, குழப்பாமல் சோலையிலே சென்று உறங்குவதால், அன்னப் பறவைகள் தெற்போரிலே சுதந்திரமாக, நிம்மதியாக உறங்குகின்றன.
மிருகங்கள், பறவைகள் கூட ஒன்றுக்கொன்று சுதந் திரங் கொடுத்து, ஒன்றின் சுதந்திரத்தில் மற்றையது தலையிடாமல் நிம்மதியான வாழ்க்கையை நடாத்துகின் றன என்ருல், அந்நாட்டு மனிதர்களின் வாழ்க்கை எப்படி

Page 44
60 இலக்கியத் தேறல்
இருந்திருக்கும். அவர்களின் சுதந்திரத்திற்கு என்னதான் குறுக்கீடுகள், தடைகள் வரமுடியும்.
சிந்தித்துப் பார்த்தால் இன்று இந்தப் பாடல் எத்தனை மன ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது .
(நன்றி: ஈழமுரசு 29-7-1984)

7
பாரத தர்மம்
இராமாயணம், மகாபாரதம், சிவரகசியம் என்னும் மூன்றையும், இதிகாசங்கள் என எம் ஆன்ருேர் "வகுத்த னர். இம் மூன்றினுள்ளும் வாழ்வியல் சம்பந்தமான தர்ம போதனைகளை அதிகமாகக் கொண்ட நூல் மகாபாரதம் எனலாம்,
இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்றநான்கு வேதங்களோடு ஐந்தாவது வேதமாக எண்ணப்படும் பெருமை மகாபாரதத்திற்கே உண்டு,
“நீடாழி உலகத்து மறை நாலொடு ஐந்தென்று நிலை நிற்கவே” என்று தொடங்குகிறது, வில்லிபுத்தூராழ்வா ரின் பாரதத்தின் காப்புச் செய்யுள், மறை என்ருல் வேதம் என்று பொருள். நான்கு மறையோடு ஐந்தாம் மறையாக நிலை நிற்கும்படி பாரதத்தை அருளிச் செய்தவர் வியாச முனிவர்.
பாரதக் கதையைத் தமிழிலே பாடியவர் மூவர். கடைச்சங்கப் புலவர்களிலொருவரான பெருந் தேவனுர், வில்லிபுத்தூராழ்வார், நல்லாப்பிள்ளை, என்பவர்களே அவர்கள். இம்மூவர் பாடிய பாரதங்களிலும் வில்லிபுத் தூராழ்வாரின் பாரதமே அதிகச் சிறப்புப் பெற்றது.

Page 45
62 இலக்கியத் தேறல்
மகாபர்ரதம் ஏராளமான தத்துவங்களையும், போதனை களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. நேரடியான போத னைகளும் உண்டு. மறைமுகமாக, சம்பவங்களினூடான போதனைகளும் உண்டு.
குருசேத்திரத்தில் பாண்டவ, கெளரவ சேனைகளெல் லாம் போருக்கு ஆயத்தமாக அணிவகுத்து நின்றன. பாண்டவர்களில் மூன்ருவது சகோதரனும், அந்தப் போர்க் களத்திலே தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத வில் வீரனுமான அருச்சுனன், கிருஷ்ண பரமாத்மா ஒட்டிவந்த தேரிலே ஒய்யாரமாகக், கம்பீரமாக வீற்றிருந்து, போர்க் களத்தில் தன் அணியின் முகப்புக்கு வந்தான். எதிரிகளின் பலத்தை எடைபோடும் எண்ணம் அவனுக்கு. ஆனல் அவனது உள்ளம் சிறிது நேரத்தில் உருக்குலையத் தொடங் கியது.
பிதாமகர் பீஷ்மரையும், வில்லாசிரியர்களான கிரு Lirrjg rriflutri, துரோணுச்சாரியார் போன்றே ரையும், மாமன் சல்லியனையும் மற்றும் உறவினர்களையும் கொன்று அவர்களின் சமாதியிலே தனது வெற்றிக் கோபுரத்தின் சன்னிதியை அமைக்க அவனது மனம் ஒப்பவில்லை. வில்லைக் கைநழுவவிட்டான். அம்பருத் துணியும் முதுகிலே கனத் தது. தேர்த்தட்டிலே செயலற்று இருந்துவிட்டான்.
‘சத்திரியனின் தர்மம் அந்த நிலையிலே போர் செய் வதுதான். அதைவிட்டு விலக நினைப்பதுதான் பாபகாரியம் " எனத் தொடங்கி, கிருஷ்ணன் அருச்சுனனுக்கு தர்ம உப தேசம் செய்தார். அதுத்ான் ‘பகவத் கீதை' என்ற பெய ரில் இன்றும் பெரும் புகழுடன் விளங்கும் உபத்ேச் நூல். இது நேரடியாக, கிருஷ்ண் பகவர்ன் அருச்சுன்னுக்கு உப தேசித்த நூலாகும்.
கிருஷ்ண பகவானின் தேர்ச் சாரதியான உத்தவன் என்பவனுக்கு, அவனது கேள்விகளுக்குப் பதிலாக உப

அகளங்கன் 6 st
தேசித்தவைகள் • உத்தவத் கீதை’ என்ற பெயரில் விளங்கு கிறது. இவைகளைவிட தருமன் யட்சனின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதாக வருவதும் நேரடியான தர்ம உபதேசமாக மகாபாரதக் கதையிலே வருகின்றது.
நேரடி உபதேசம், எல்லா மக்களும் எளிதில் விளங் கிக் கொள்ளக் கூடியதாக இருப்பதில்லை; அதனுல் பல உபதேசங்கள், சம்பவங்கள் மூலமாகவே விளக்கப்படுகின் றன. இவ்வாறு சம்பவங்கள் மூலமாக மகாபாரதம் எமக் குக் காட்டும் வாழ்வியல் தர்மநெறிகளை அடுத்து நோக்கு G36 frub.
துரோணரின் குருதர்மம்
பரத்துவர்ச முனிவரின் மகன் துரோணுச்சாரியார். புருஷதன் என்ற பெயரில் பாஞ்சால நாட்டை அர சாண்ட மன்னனின் மகன் துருபதன். துரோணரும், துரு பதனும் சிறுவர்களாக இருந்த காலத்தில், அக்கினி கோத் திர முனிவரின் ஆச்சிரமத்திலே குருகுலக் கல்வியை ஒன் ருகப் பயின்றனர். பல மாணவர்கள் அக்கினி கோத்திர முனிவரிடம் கல்வி கற்றபோதும், பிராமணரான துரோ ணரும், அரச குமாரனுன துருபதனும் இணைபிரியா நண் பர்களாக இருந்தனர்.
தனது தந்தைக்குப் பின், தான் பாஞ்சால நாட்டுக்கு அரசனனதும், தனது இராச்சியத்தில் பாதியை துரோணருக் குக் கொடுத்து, அவரையும் அரசனுக்கி ஆயுள் பரியந்தம் இணைபிரியா நண்பர்களாக இருப்பதுவே தனது பெரு விருப்பம் என்று துருபதன் துரோணரிடம் அடிக்கடி கூறு வான். துரோணர் துருபதன் தன்மேல் கொண்டுள்ள ஆழ்ந்த நட்பில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு அவனேடு மனம் ஒன்றிப் பழகினர்.
காலம் உருண்டோடியது, துருபதனும் துரோணரும் ஆச்சிரமத்திலிருந்து கல்விகற்று வெளியேறினர். தந்தைக்

Page 46
6英 இலக்கியத் தேறல்
குப் பின் துருபதன் அரசனுனன். துரோணர் கிருபாச்சாரி யாரின் தங்கையான கிருபி என்பவளை மணந்து பிராமண தர்மப்படி குலவாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவருக்கு அசுவத்தாமா என்னும் மைந்தன் பிறந்தான். வறுமை
அவரை வாட்டியது. பிள்ளைக்குப் பால் கொடுக்கக் கூட அவரிடம் பொருளில்லை, சொந்தமாக ஒரு பசுமாடு வைத்
திருந்தால் பிள்ளையைக் காப்பாற்றலாம் என்ற நிலை.
தனது ஆருயிர் நண்பன் துருபதன் அரசனுக ராச்சிய பரிபாலனஞ் செய்வது அவரது நினைவுக்குவந்தது. யாரிடமும் யாசித்தறியாத அந்த, அந்தண சிரேட்டர், துருபதனிடஞ் சென்று நட்பு முறையில் ஒரு பசுமாடு கேட்டுப் பெற விரும்பினுர். பாதி ராச்சியத்தையே தனக்குத் தருவதாக வாக்களித்த நண்பனிடம். ஒரு பால்மாடு கேட்டுப் பெறு வது யாசகமாகாது என எண்ணிப் புறப்பட்டார்.
நீண்ட நாட்களின் பின், தனது பால்ய நண்பனை தனது உயிர் நண்பனைக் காணும் மகிழ்ச்சியில் பாஞ்சால நாட்டின் அரண்மனையை அடைந்தார் துரோணர்.
அரச போகமும், அதிகார மமதையும், துருபதனின் மனத்தைப் பெரிதும் ஆட்கொண்டிருந்தது. ஒரு நாட்டின் அரசஞன தனக்கும், சாதாரண பிராமண ஏழைக்கும் நட்பு என்று காட்டிக் கொள்வது அவமானமாகத் தெரிந்தது. அதனுல். தன்முன்னே வந்து நின்ற துரோணரைப் பார்த்து *நீ யார்” என்று கேள்வி கேட்டான். துரோணருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மிகவும் நடுக்கத்தோடு ‘என்னைத் தெரியவில்லையா? நான் உன் நண்பன் துரோ ணன்" என்ருர், "அரசனுக்கும் வறிய பிராமணனுக்கும் நட்பு என்பது பொருந்தக் கூடியதா” என்று சபையிலே துரோணரை எள்ளி நகையாடி அவமானப்படுத்தினுன் துருபதன்.
துரோணரின் கோபம் எல்லை கடந்தது. தன்மான உணர்;ெ தலைக்கேறியது. "" நீ முன்பு தருவேன் எனக்

அகளங்கன் ಲಜಿ
கூறிய பாதி ராச்சியத்தையும் கவர்ந்து, உன்னை நேர்க் காலில் கட்டி இழுக்கச் செய்து அவமானப்படுத்தி என் வல்லமையைக் காட்டுவேன்' எனச் சபதஞ் செய்து புறப் பட்டார் துரோணர்.
குருகுலத்தில் வந்து பாண்டவர்களுக்கும், கெளரவர்க ளுக்கும் வில்லாசிரியரானர். கிருபாச்சாரியாரிடம் ஆரம்ப வில்வித்தை பயின்ற குருகுலத்துச் சிருர்கள், பின்பு துரோ ணரிடம் வில்வித்தை கற்று நிறைவெய்தினர். குருவிற்கு தட்சணையை கொடுக்கும் நாள். துரியோதனன் முதலியோ >ரிடமும், பாண்டவர்களிடமும், ஒரு விசித்திரமான குரு தட்
சணையைக் கேட்டார் குரு துரோணர்.
*அகந்தை கொண்ட துருபதனை வெற்றி கொண்டு பாஞ்சால நாட்டைக் கைப்பற்றுவதோடு, துருபதனை சிறைப் பிடித்துத் தேர்க்காலில் கட்டி இழுத்துவந்து என் காலடியில் சமர்ப்பிக்கவும் வேண்டும். இதுவே குரு தட்சணை. இத னைச் செய்பவனே எனக்கு குருதட்சணை வழங்கியவனு வான்'' எனத் துரோணர் தனது மாணவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
துரோணுச்சாரியாரின் மாணவர்களில் வில்வித்தையில் முதல் மாணுக்கன் என்று புகழப்பட்ட அருச்சுண்னே துரோணர் கேட்ட குரு தட்சணையை வழங்கினன். பாஞ் சால அரசனன துருபதனை வென்று, தனது தேர்க்காலில் கட்டி இழுத்து வந்து குருவின் காலடியில் சமர்ப்பித்து வணங்கி நின்றன் அருச்சுனன்.
தேர்க்காலிலே கட்டுண்டு கிடந்த தனது பால்ய நண் பணுன துருபதனைக் காண துரோணருக்கும் மனம் சகிக்க வில்லை. அவனைக் கட்டவிழ்த்துவிட்டு அவனிடம் கூறினர், ‘பாதி ராச்சியம் தருவதாகக் கூறிய நீ, சொன்ன சொல் மாறினுய், இன்று ராச்சியம் இல்லாமல் அநாதையான ப்,
இ. 9

Page 47
SS இலக்கியத் தேறல்
அரச சபையில் என்னை அவமானம் செய்தாய், அதன் பலனை இன்று அனுபவித்தாய். நீ என்னேடு ஒரு காலத் தில் நண்பனுக இருந்ததனுல் இன்று உன்னை மன்னித்து உனக்கு நான் முழு ராச்சியமும் வழங்குகிறேன். இனி நீ சென்று பாஞ்சால அரசனுக முன்போல இராச்சிய பரிபாலனம் செய்’ எனக் கூறி துருபதனை வழியனுப்பி
வைத்தார் துரோணர்.
அவமானத்தோடு அரசுக்குத் திரும்பிய துரு ப த ன், ஒரு யாகஞ் செய்தான். தன்னை அவமானப்படுத்திய துரோ ணரைக் கொல்வதற்கு ஒரு மகனும், தன்னை வென்ற வீரனுன அருச்சுனனை மணஞ்செய்து கொள்வதற்கு ஒரு மகளும் தனக்குப் பிறக்க வேண்டும் என்பதே அவனது யாகத்தின் நோக்கம்.
அவனது யாகம் வெற்றி அளித்தது. துரோணரைக் கொல்வதற்கென்றே பிறந்தான் திட்டத்துய்ம்மன். அருச் சுனனை மணப்பதற்கென்றே பிறந்தாள் திரெளபதி. துரோ ணரைக் கொல்வதற்கென்றே பிறந்தான் திட்டத்துய்ம்மன் என்பது எல்லா இடமும் பிரசித்தமானது. துரோணருக்கும் இந்த விடயம் மிக நன்முகத் தெரியும். அப்படி இருந்தும் திட் டத்துய்ம்மன், தனக்குக் குருவாக இருந்து வில்வித்தை கற்பிக்கும்படி, துரோணரின் பாதங்களில் வந்து பணிந்தான்.
கரணமறுவற் றிலங்குதிறற் கலைசொல்பவன்பாற்
கனல் பயந்தோன் சரணமலர்தன் தலைக்கொண்டு தனுநூலெனக்குத்
தருகென்ருன் மரணமிவனுற் றனக்கென்பது உணர்ந்துங் குருவு
மருதளித்தான் அரணியிடத்திற் செறிந்தன்றே அதனைச் செகுப்ப
தழலம்மா
அரணிக் கட்டைகளை உரஞ்சும்போது அதிலிருந்து தீ உண்டாகிறது. அந்தத் தீயே, அதே அரணிக் கட்டைகளை எரிக்கவல்லது. அதே போன்றுதான் திட்டத்துய்ம்மனும் 2

அகளங்கன் 67
தான் கொல்லவேண்டிய துரோணரையே குருவாக செய்தி அவரிடம் பயிற்சி பெற்றதாகக் கூறுகிருர் வில்லிபுத்துர ராழ்வார்.
தன்னைக் கொல்வதற்கென்றே பிறந்தவன் திட்டத் துய்ம்மன் என்பது துரோணுச்சாரியாருக்குத் தெரிந்திருந் தும், தனது பாதங்களில் வந்து வணங்கித் தனக்கு வில் வித்தை கற்பிக்கும்படி வேண்டிய திட்டத்துய்ம்மனைத் தன் சீடனுக ஏற்று வில்வித்தை பயிற்றிய துரோணரின் குரு தர்மம் பாரதக் கதையிலே பெரிதும் பாராட்டப்பட்ட
ஒனறு.
சகாதேவனின் சோதிட தர்மம்
பஞ்சபாண்டவர்களில் ஐந்தாவது சகோதரன் சகா தேவன். பாண்டு மன்னனின் இரண்டு மனைவிகளான குந்தி, மாத்திரி என்பவரில் மாத்திரிக்குப் பிறந்த இரண் டாவது மகன் இவன். குந்தியின் மைந்தர்கள்; தருமன்" வீமன், அருச்சுனன் ஆகிய மூவருமாவர். மாத்திரிக்கு அசுவினி தேவர்களான இரட்டையரின் அருளினுல் பிறந்த வர்கள் நகுலனும், சகாதேவனுமாவர்.
சகாதேவன் சகல சாஸ்திர விற்பன்னன், முக்காலமும் உணர்ந்த ஞானி. மகாபாரதப் போரின் முடிவு எப்படி அமையும் என்பதை போரின் முன்பே அறிந்து வைத்திருந் தவர்கள் இருவரே. அவர்களில் ஒருவன் பூரீ கிருஷ்ணன் கிருஷ்ண பகவான் எல்லாக் காரியங்களுக்கும் காரணஞக இருந்து கொண்டு, ஒன்றுந் தெரியாததுபோல் நாடகமாடி ஞர், மற்றவன் சகாதேவன். சகாதேவனுக்கு யுத்தத் தின் முடிவு நன்ருகவே தெரிந்திருந்தது. காரணம் கிருஷ்ண பகவான் மகா விஷ்ணுவின் அவதாரம் - என்பதை அவன் ஒருவனே அறிந்து, உணர்ந்து இருந்தான்.
மகாபாரதப் போர் வராமல் தவிர்ப்பதற்கு வழி புண் டா என்று கிருஷ்ணளுேடு கூடி, 41ற்சபாண்டவரும்

Page 48
68 இலக்கியத் தேறல்
அவரது நெருங்கிய சகாக்களும் ஆலோசனை நடாத்திக் கொண்டிருந்தனர். எல்லோரது அபிப்பிராயமும், கேட்கப் பட்டது. தருமர் எந்த வழியிலும் சமாதானத்தையே விரும்பினர். வீமன் எந்த வழியிலும் யுத்தத்தையே விரும் பினுன். அருச்சுனன் ஒரளவுக்கு தருமனுேடும், வீமனேடும் ஒத்துப்போகப் பார்த்தான். நகுலனுக்கும் போரிலேதான் நாட்டம். இந்த நிலையிலே சகாதேவனிடம் அபிப்பிராயம் கேட்டார் கிருஷ்ணர்,
சக்ாதேவன் எதிலுமே நம்பிக்கை அற்றவனுக, தனக்கு ஒன்றுமே தெரியாது என்பதுபோல, பட்டும்படாமலும் பதி லளித்தான். 'பரந்தாமனே! நீ தூது போனலென்ன , போகாதுவிட்டாலென்ன. துரியோதனன் பாதிராச்சியத்தை வழங்காமல் விட்டாலென்ன வழங்கினலென்ன. விரித்த கூந் தலைப் பாஞ்சாலி முடித்தாலென்ன, விரித்தா லென்ன இந்தக் காரியங்களின் முடிவு எனக்குச் சிறிதும் தெரியாது”* என்று கூறினன். தனக்கு ஒன்றுமே தெரியாது' என்று அவன் கூறுவதற்குப் பொருள், தனக்கு எல்லாமே தெரியும் என்பது தான்.
சிந்தித்த படிநீயுஞ் சென்றலென் ஒழிந்தாலென்,
செறிந்தநூறு மைந்தர்க்குண் முதல்வன்நிலம் வழங்காமலிருந்தாலென்
வழங்கினுலென்
கொந்துற்ற குழலிவளும் முடித்தாலென் விரித்தாலென்
குறித்தசெய்கை
அந்தத்தில் முடியும்வகை அடியேற்குத் தெரியுமோ
ஆதிமூர்த்தி.
கிருஷ்ண பகவானை நன்முக அறிந்தவன் சகாதேவன். அவரை ஆதி மூர்த்தி! என விளித்துத் தன் கருத்தைக் கூறுகிருன். பூபாரம் தீர்க்கப் பிறந்தவன் கிருஷ்ணன். அவனது திட்டப்படிதான் எல்லாம் நடக்கும் என்பதை உணர்ந்த சகாதேவன், தனது கருத்தைச் சொல்லாமல்

அகளங்கன் 69
சமாளித்தான். ‘தங்களுக்கு எது கருத்தோ, அடியேனுக் கும் அதுவே கருத்து” என்ருன்.
முருகவிழ்க்கும் பசுந்துளப முடியோனே
அன்றலகை முலைப்பாலுண்டு மருதிட்ைச்சென் துயர்சகட்ம் விழவுதைத்துப்
பொதுவர்மனே வளர்ந்தமாலே ஒருவருக்குந் தெரியாதிங் குன்மாயை
யானறிவேன்; உண்மையாகத் திருவுளத்துக் கருத்தெதுவோ அதுஎனக்குங்
கருத்தென்றன் தெய்வமன்னுன்.
கிருஷ்ண பகவானை ”மாலே? என்று விளிப்பதையும்? *ஒருவருக்கும் உன்மாயைதெரியாது, ஆனல் நான் அவை எல் லாவற்றையும் ஐயந்திரிபு அற அறிவேன். அதனல் உனக்கு மகாபாரத யுத்தம்பற்றி என்ன கருத்து உண்டோ, அதுவே என் கருத்தும்’ என்று சகாதேவன் கூறுவதையும் இப் பாடலில் காணலாம். இது வில்லிபுத்தூராரின் கவிவண் ணத்தில் மிளிர்கின்ற பாடல்.
மகாபாரதத்தில் மிகவும் சிறப்புப் பெற்ற சகாதேவன். சோதிடக் கலையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனகத் திகழ்ந்தான். மகாபாரத யுத்தம் முடிவான பின் கெளரவ சேனதிபதியாக அவர்களின் மூதாதையான பிதாமகர் பீஷ் மர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிரதர், மகாரதர், சமரதர், அர்த்தரதர் தெரிவுகளும் முடிவடைந்தபின் போர்தொடங் குவதற்கு சகல ஆயத்தங்களும் செய்து கொண்டனர்.
அன்றைய யுத்த முறைப்படி யுத்தம் தொடங்குவதற்கு முன்னதாக ஒரு நல்ல முகூர்த்தத்திலே களப்பலி கொடுப் ாது வழக்கம். ** நாள் செய்வது நல்லோர் செய்யார் என்பது பழமொழி. நல்ல நாளில், நல்ல முகூர்த்தத்தில் களப்பலி கொடுத்தால், வெற்றிகிட்டும் என்பது சோதிட நம்பிக்கை. துரியோதனன் எந்த வகையிலும் வெற்றி பெறுவதிலேயே கண்ணுயிருந்தான், அதஞ்ல் "வெற்றிபெறு

Page 49
70 இலக்கியத் தேறல்
வதற்கு ஏற்ற நல்ல முகூர்த்தத்திலே களப்பலி கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்தான்.
சேனதிபதியான பீஷ்மரிடம் ஆலோசனை கேட்டான். *" சகாதேவனைவிடச் சிறந்த சோதிடன் யாருமே இல்லை. விரும்பினுல் அவனை அணுகி ஆலோசனை கேள்’ என்று பீஷ்மர் கூறினர். தனது வெற்றிக்காக எவரது உதவியை யும் பெற்றுக் கொள்ளத் தயங்காதவன் துரியோதனன்.
தனது எதிரிகளில் ஒருவனுன சகாதேவனிடமே சென்று, களப்பலி கொடுக்க நாள் வைத்துத் தரும்படி வேண்டினன்
துரியோதனன். துரியோதனன் பாண்டவர்களுக்கு அள வில்லாத துன்பங்கள் செய்தவன். வீமனுக்கு நஞ்சு கொடுத்தவன். மயக்கமடையச் செய்து தண்ணிரிலே
எறிந்தவன். பஞ்சபாண்டவர் இருந்த அரக்கு மாளிகைக்கு நெருப்பு வைத்து அவர்களைக் கொல்ல முயன்றவன். சூதாடி பாண்டவர்களின் இராச்சியத்தைக் கவர்ந்தவன். எல்லா வற்றுக்கும் மேலாக, உலகிலே அநியாயங்களுக்கெல்லாம் தலையாய அநியாயமான காரியமாக, ஆண்கள் நிறைந்த சபையிலே தனியொரு பெண்ணுகப் பாஞ்சாலியை இழுத்து வரச்செய்து, அவளது கணவன்மார்களின் முன்னிலையிலேயே துகிலுரியச் செய்தவன்.
இத்தனை கொடுமைகளின் காரணமாகவே தான் மகா பாரத யுத்தம் முடிவானது. இந்த நிலையிலே பாண்டவர் களில் ஒருவனன சகாதேவன் தமது அழிவுக்கான நாளை, துரியோதனனது வெற்றிக்கான நாளாக எப்படி வைத்துக் கெகடுக்க முடியும்.
ஆனல் சகாதேவன் மறுக்கவில்லை. தன்னை ஒரு சோதி டன் என்ற நிலையிலேயே துரியோதனன் அணுகியிருக்கிருன் என்று எண்ணிஞன். நுணுகி ஆராய்ந்தான். துரியோதனன் வெல்வதற்கு ஏற்ற நல்ல முகூர்த்தத்தையும் வகுத்துக் கொடுத்தான். இந்தச் சோதிட தர்மம் மகா பாரதக்கதை

அகளங்கன் 7.
யில் வரும் தர்மங்களுக்குள் சிறப்பாக எண்ணப்படக்கூடிய ஒன்ருகும்.
சகாதேவன் வைத்துக் கொடுத்த திதியிலே வரும் சுப மூகூர்த்தத்தில் துரியோதனன் களப்பலி கொடுத்திருந்தால், பாண்டவர்கள் குலத்தோடு அழிந்திருப்பார்கள் என்பது முற்றிலும் உண்மை. அதனை அறிந்தே கிருஷ்ண பகவான் அமாவாசைத் திதியை முதல் நாள் உண்டாக்கி, அந்த நல்ல முகூர்த்தத்தில் தமது களப்பலியைக் கொடுத்தார்.
கர்மயோகத்தை போதனையாக பகவத் கீதை புகட்டி யிருக்கிறது. சகாதேவன் எதிரியான துரியோதனனுக்கு களப்பலி கொடுக்க நாள் வைத்துக் கொடுத்ததன் மூலம், தனது கர்மத்தை நிறைவேற்றி சோதிட தர்மத்தையும் , கடைப்பிடித்துப் புகழ் பெற்றன் என்று பாரதக் கதை அவ னைப் பாராட்டுகிறது. போதனையாகவும் நடைமுறையாக வும், இரு வகையிலும் கர்மயோகம் வலியுறுத்தப்படுவதை இங்கே கண்டு தெளியலாம்.
தர்மரின் யுத்த தர்மம்
(Pற்காலத்தில் யுத்தம் புரிவதற்கு, யுத்த தர்மம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்தத் தர்மங்களை அனுசரிக் காதவர்கள் இகழப்பட்டனர். தேரில் வருபவன், தேரில் வருபவனுடனும், யானையில் வருபவன். யானையில் வருப வனுடனும், குதிரை வீரன், குதிரை வீரனுடனும், காலாள் காலாஞடனும் போர் புரியவேண்டும் என்பது முறை.
தனக்குச் சமஞன வீரனுடன், தன்னேடு போர் புரிய வனுடன் மட்டுமேதான் போர் புரிய வேண்டும். நிராயு தனுடனும், யுத்தத்தைவிட்டு விலகிச் செல்பவனுடனும், புறமுதுகு காட்டி ஒடுபவனுடனும் போர் புரிவது தர்ம மாகாது. ஒரேவிதமான ஆயுதங்களுடனேயே யுத்தம் புரி
வார்கள்.

Page 50
72 இலக்கியத் தேறல்
இப்படி பலவகையான யுத்த தர்மங்கள் அக்காலத் திலே வரையறுக்கப்பட்டிருந்தன. இராமாயண காவியத் திலே பேணப்பட்ட ஒரு யுத்த தர்மம் அக்காவியத்திற்கும், அக்காவிய நாயகனுன இராமனுக்கும் பெரும் புகழைக் கொடுத்துள்ளது. தனது மனைவியான சீதையைத் தூக்கிச் சென்று சிறை வைத்த கொடிய செயலைச் செய்தவனன இராவணனேடு இராமன் போர் புரிந்தபோது, இராவணன் ஆயுதங்கள் எல்லாவற்றையும் இழந்து கதியற்றவணுய் நிரா யுதணுக நிற்கிறன். அவனைப் பார்த்து யுத்த தர்மமுரைக் கிருர் இராமர்.
'சகல ஆயுதங்களையும் இழந்து நிற்கும் உன் அவல நிலையைக் கண்டேன். நிராயுதனேடு யுத்தஞ் செய்வது யுத்த தர்மமாகாது, அதனல், இன்று போய்ப் போருக்கு நாளை வா. சகல ஆயுதங்களோடும் சகல ஆயத்தங்களோடும். நாளை வா’ என்று கூறி இராவணனை அனுப்பி வைக்கிருர் இராமர். இந்தக் காட்சி இராமாயண காவியத்திற்குச் சிகரம் வைத்ததுபோலமைந்தது.
பாரதக் கதையில் வரும் ஒரு யுத்த தர்மம் இன்னுெரு வகையில் சிறப்பாக அமைந்துள்ளது. அதனைப் பார்ப் போம். பாரத யுத்தத்தில் மிக முக்கியமான யுத்தம் நடைபெற்ற நாள் பதின்மூன்ரும் நாள் என்று கூறலாம். கெளரவ சேனதிபதியான வில்லாசிரியர் துரோணர்கெளரவ சேனையை சக்கர வியூகமாக அமைத்திருந்தார். சக்கர வியூகத்தை உடைத்துப் போர் புரியக் கூடிய வீரர்கள் பாண்டவர் தரப்பில் இருவரே உண்டு. அருச்சுனனும், அவன் மகன் அபிமன்யுவுமே அவ்விருவர்.
அருச்சுனனை திரிகர்த்த ராஜாக்கள் வலிந்து அறை கூவிப் போருக்கு அழைத்தனர். அறைகூவலை ஏற்பதே சத்திரியனின் ஆண்மை என்பதால் அருச்சுனன் அவர்க ளோடு போர் புரியச் சென்றுவிட்டான். அதனுல் சக்கர வியூகத்தைப் பிளந்து போர்புரியக் கூடியவனுக அபிமன்யு

அகளங்கன் 73
மட்டுமே இருந்தான், அபிமன்யுவுக்கு சக்கர வியூகத்தை உடைத்து உட்செல்ல மட்டுமே தான் தெரிந்திருந்தது. சக்கர வியூகம் மீண்டும் மூடிவிட்டால் அதை உடைத்து வெளிவருந் தந்திரம் தெரியாது.
அன்றையப் போரில், தருமரின் வேண்டுகோளின்படி அபிமன்யு சக்கர வியூகத்தை உடைத்தெறிந்து உள்ளே நுழைந்தான். வியூகம் மூடப்பட்டது. தனியொருவனுக எதிரிகளின் பலமான வியூகத்தில் சிக்கினுன் அபிமன்யு இருந்தும் மனந் தளரவில்லை. தனது தந்தையின் விற்குரு வான துரோணரையும், கர்ணனையும், சகுனியையும், துரியோதனன், துச்சாதனன், சயத்திரதன் முதலியோரை யும் தனித்தனியாகப் போரிட்டு வென்முன், அபிமன்யு, துரியோதனனின் மகன் இலக்கண குமாரன், சகுனியின் மகன், சல்லியன் மகன், துச்சாதனன் மகன் முதலியோர் களையெல்லாம் கொன்று அற்புதமாகப் போர் புரிந்தான்.
கோபம் கொண்ட துரியோதனன் எப்படியாவது அபி மன்யுவைக் கொல்லும்படி தனது சேன நாயகர்களுக்குக் கட்டளையிட்டான், தனித்தனி தோற்று ஒடிய சேனே நாயகர்கள் ஒருமித்து வளைத்து அதர்மப் போர் புரிந்து அபிமன்யுவைக் கொன்றனர். யுத்ததர்மம் பேணப்படாது இந்தக் கொடூரம் நிகழ்ந்தது. அபிமன்யுவின் தலையை அறுத்து வீழ்த்தியவன் சயத்திரதன்" இவன் துரியோதன னின் ஒரே தங்கையான துச்சளை என்பவளின் கணவன்.
மாலையில் போர் முடிந்து பாசறை நோக்கி வந்த அருச்சுனன், தன் மைந்தன் இறந்ததையும், வஞ்சகமாகப் போர் நடந்ததையும் அறிந்து கோபங் கொண்டான். * நாளை பொழுது மறைவதற்குள் சயத் தி ர தனை க் கொல்வேன், இல்லாவிடில் தீயில் விழுந்து உயிர்துறப் பேன்" எனக் கடுஞ்சபதஞ் செய்தான்.
இ. 10

Page 51
74 இலக்கியத் தேறல்
அருச்சுனனின் கடுமையான சபதம்பற்றி தருமர் கவலை கொண்டார். கர்ணன். துரோணர், சல்லியன், அசு வத்தாமா போன்ற பெரும் வீரர்களின் காவலைமீறி சயத் திரதனை ஒரு பொழுதுக்குள் கொல்வது கடினம், கொல் லாது போனல் சபதப்படி அருச்சுனன் இறப்பான். தாமும் இறக்க நேரிடும். எல்லாமே வீணகிவிடும் என்று தருமர் கவலை கொண்டார்.
அன்று இரவு கிருஷ்ணர், அருச்சுனனை அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் புறப்பட்டார். சயத்திரதனை அழிப்பதற்காக மேலதிக பலம் வேண்டி சிவபிரானிடம் சென்ருன் அருச்சுனன். சிவபெருமானிடம் வலிமையுள்ள படைக் கலங்கள் பெற்றுவந்து சயத்திரதனைத் தன் தம்பி யான அருச்சுனன் கொல்வதில் தருமருக்கு அளவு கடந்த மகிழ்ச்சிதான். ஆணுல் அவர் மனத்தில் பெரும் சஞ்சலமும் உண்டாகிவிட்டது.
யுத்தம் சமமான பலங்கொண்ட வீரனுடனேயே செய் யப்பட வேண்டும் என்பது யுத்த தர்மம். அருச்சுனன் மேலதிக பலத்தோடு போருக்கு வரப்போகிருன். சயத்திர தன் வழமைபோலவே போருக்கு வரப்போகிருன் . இது நியாயமில்லை, யுத்த தர்மமில்லை என்று எண்ணிஞர் தருமர்.
அதனுல் வீமனின் மகஞன கடோற்கசனை அழைத்து துரியோதனன்ன் பாசறைக்கு உடனே செல்லும்படியும், அருச்சுனனின் சபதத்தையும், அருச்சுனன் சிவபெருமானி டம் படைக்கலன்கள் பெறச் சென்றதையும், கூறும்படியும் பணித்தார் தர்மர். கடோற்கசன் முதலில் மறுத்தும் பின்பு தருமரின் கட்டளைப்படி துரியோதனனின் பாசறைக் குச் சென்று நிலையை எடுத்துரைத்தான்.
தம்மோடு வஞ்சனையாகப் போர் புரிந்தவர்களோடும் அறப்போர் புரிய எண்ணினன், தர்மன். பகலிலே பலர்கூடி அதர்மமான முறையில், யுத்த தர்மத்துக்கு மாருண முறை

அகளங்கன் 75
யில் அபிமன்யுவைக் கொன்ற நிகழ்ச்சி நடந்திருந்தும்கூட தருமன் தர்ம யுத்தஞ் செய்யவே விரும்பினுன் என் பதையே இது காட்டுகிறது.
எதிரியும் தன்னைப் பலப்படுத்தச் சந்தர்ப்பம் கொடுத்து, யுத்தஞ் செய்யும் யுத்த தர்மம் இன்றைய நிலையில் எண் ணப்படவே முடியாத ஒன்ருக ஆகிவிட்டது. விசித்திர மான பழக்கமாக, வினுேதமான தர்மமாகக் காட்சியளிக் கின்றது.
(நன்றி: தினகரன் 20, 27-12-87)

Page 52
8
சமரச நாட்டமற்ற சமாதானத் தூதுகள்
குருதாட்டத்தில் நாடு, நகரமிழந்த பாண்டவர்கள் துரியோதனனின் வாக்குறுதியை நம்பி வனவாசஞ் சென்ற னர். பன்னிரண்டு வருட வனவாசமும், ஒரு வருட அஞ்ஞாத வாசமும் முடித்துவிட்டு அடுத்த காரியம் பற்றி ஆராய்ந்தனர்.
கிருஷ்ணன், துரியோதனனிடம் தூதுபோக வேண்டும் என்று முடிவாயிற்று. துரியோதனன் சூதிலே வென்றவற்றை கிருஷ்ணன் துரதிலே வெல்லவேண்டும் என்பது தருமனின் விருப்பம்.
தமது இழப்புக்களைத் துரியோதனன் கையளிக்கத் தவறி னல், போதிய அளவு கீழிறங்கி உண்மைத் தீர்வுக்குக் குறைந்த, தற்காலிகத் தீர்வுக்கான வழிமுறைகளைக் கடைப் பிடிக்கவும் தருமன் விருப்பங் கொண்டான்.
கிருஷ்ணன் தூது
பாதி ராச்சியத்தைத்தருவதற்கு துரியோதனன் மறுத் தால், ஆகக் குறைந்த கோரிக்கைகளாக ஐந்து ஊர்களே அல்

அகளங்கன் 77
லது ஐந்துபேரும் வாழ்வதற்கு ஐந்துவீடுகளையாவது கேட்டுப் பெற்று, சமாதானமாக - யுத்தத்தைத் தவிர்த்து - வாழ் வதற்குத் தருமன் பெரிதும் விருப்பம் கொண்டான்.
இந்தக் கோரிக்கைகளை எடுத்தியம்ப கிருஷ்ணன் தூது சென்றன். துரியோதனஞே தனதுநிலைப்பாட்டிலிருந்து சிறிதும் இறங்கி வரவில்லை.
யுத்தஞ் செய்து பாண்டவர்களை முற்ருக அழித்து விட்டு, முழு ராச்சியத்தையும் தானே ஏக சக்கராதிபத் தியஞ் செய்ய வேண்டுமென்று அவன் விரும்பிஞன்.
பாதி இராச்சியம் கேட்ட பாண்டவர்கள், வீண் உயிர் இழப்புக்களைத் தவிர்த்து, சமாதானமான முறையில் தீர்வு காண விரும்பி, ஐந்து வீடுகள் என்ற வகையிலே இறங்கி வந்த போதும், துரியோதனன் கொஞ்சமும் இரங்கி வரவில்லை. முடிந்த முடிவாக, ஒன்றுமே இல்லை என்று கைவிரித்துவிட்டான்,
*ஈ இருக்கும் இட்மெனினும் இப்புவியில்
யானவர்க்கு அரசு இனிக்கொடேன்’
ஒரு ஈ இருக்கின்ற அளவு சிறிய இடம்கூட சொந்த மாக, தனியரசாக கொடுக்க மாட்டேன் என்று துரியோ தனன் மறுத்ததாக வில்புத்தூராழ்வார் பாடுகிறர்.
முடிவில் யுத்தம் ஏற்பட்டது. குரு ஷேத்திரத்தில் குருதிகள் கலந்து நியாயத்தைத் தீர்மானித்தன.
இந்தப் பேச்சுவார்த்தைக்குக் கிருஷ்ணண் போகும் போது, கிருஷ்ணனின் உண்மை நோக்கம் எப்படி இருந் தது என்பதை இங்கே நோக்குவோம்,
தான் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தை வெற்றியளிக் கும் என்று சிறிதளவுகூட கிருஷ்ணன் நம்பவில்லை. கிருஷ்

Page 53
78 இலக்கியத் தேறல்
ணனின் நோக்கமே யுத்தஞ்செய்ய வேண்டும் என்பதுதான். சமாதானத்தில் நம்பிக்கையே வைக்காமல் - சமாதானத் தில் விருப்பமே இல்லாமல் தான் கிருஷ்ணன் சமரசப் பேச்சுவார்த்தையில் இறங்கினன்.
திரெளபதி கவலை
திருமனின் தீர்மானப்படி சமாதானப் பேச்சுக்குச் செல்வதற்கு கிருஷ்ணன் முனைந்தபோது, திரெளபதி அழுது புலம்பினள்.
தன்னைச் சபைக்கு இழுத்து வந்து துகில் உரிந்த துச்சாதனன், துரியோதனன் ஆகியோரின் இரத்தத்தைத் தன் கூந்தலிலே பூசிக் கூந்தலை முடிப்பதன்றி, இக்கூந்தலை முடியேன் என்று துச்சாதனனின் கைபட்டுக் கலைந்த கூந்தலோடு காத்திருந்தவள் திரெளபதி.
பேச்சுவார்த்தை வெற்றியளித்தால் தனது சபதம் நிறைவேருது என்று கலங்கிளுள்.
மன்றில் அழைத்தெனக்கு
மாசளித்த மன்னவன்பாற் சென்று தமக்கைந்தூர்
திறல்வீரர் பெற்றிருந்தால் அன்று விரித்த
அருங்கூந்தல் வல்வினையேன் என்று முடிப்பதினி
எம்பெருமான் என்றழுதாள்.
துரியோதனன் ஐந்து ஊர்களைக் கொடுத்து பாண்ட வர்களை ஏமாற்றிவிட்டால், அன்று சபையிலே தான்செய்த சடதப்படி தனது கூந்தலை முடித்து பழிக்குப் பழி வாங்க முடியாது என்று கூறுகிருள் திரெளபதி.

அகளங்கன் 79
திரெளபதியின் ஒரே நோக்கம் யுத்தமும் பழிவாங்க லும் தன் கூந்தலை முடிப்பதுந்தான். அதாவது துரியோதன னதியரின் வாழ்வை முடிப்பதும், தன் கூந்தலை முடிப்பதுத் தான்,
வீமன், அருச்சுனன், நகுலன் போன்ருேருக்கும் சமா தானத்தில் உண்மை நாட்டம் இல்லைத்தான். ஆனல், தரும னின் பேச்சுக்குக் கட்டுப்பட்டுச் சமாதானப் பேச்சுக்குச் சம்மதிக்கின்றனர்.
தூதுசெல்லப் புறப்பட்ட கிருஷ்ணனுக்குத் தனது தூது வெற்றியளிக்காது என்பது நிச்சயமாகத் தெரிந்துதான் இருந்தது. ஒரு சம்பிரதாயத்துக்காக பேச்சுவார்த்தையில் கிருஷ்ணன் தூதாகச் சென்ருனே தவிர உண்மையிற் சமா தான நோக்கோடு செல்லவில்லை.
திரெளபதியின் துயரத்தையும், புலம்பலையும் கேட்ட கிருஷ்ணன் அவளுக்கு ஆறுதல் கூறுகிறன்.
தொல்லாண்மைப் பாண்ட்வர்க்குத்
தூதுபோய் மீண்டதன்பின் நல்லாயுன் பைங்கூந்தல்
நானே முடிக்கின்றேன். எல்லாருங் காண
இனிவிரிப்ப தெண்ணரிய புல்லார்தம் அந்தப்
புரமாதர் பூங்குழலே
தூது சென்று மீண்டு உனது கூந்தலை முடிக்க நானே வழி செய்வேன். இனி விரிப்பது எமது எதிரிகளின் அந் தப்புர மாதர்களின் பூங்குழல்கள் தான் என்று ஆறுதல் கூறுகிருன் கிருஷ்ணன்.
துரியோதனனது அந்தப்புர மாதர்கள் தமது கூந்தலை விரிப்பதாயின் துரியோதனன் முதலியோர் இறக்க வேண்

Page 54
இலக்கியத் தேறல்
டும். அத்தோடு திரெளபதி கூந்தலை முடிப்பதாயினும் துரியோதனன் முதலியோர் இறக்க வேண்டும்.
என்வே கிருஷ்ணனின் தூது சமாதானத்தில் நம்பிக்கை இல்லாமல், உண்மை நாட்டம் இல்லாமல் நடைபெற்ற தூதே யுத்தத்தை எதிர் கொள்ள ஆயத்தங்கள் செய்வ தற்குச் சிறிது கால அவகாசத்தை ஏற்படுத்தவும், சில யுத்த தந்திர முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும் நடை பெற்ற துளதே கிருஷ்ணன் தூது.
வீரவாகுதேவர் தூது
(Pருகப் பெருமானின் தூதனுக வீரவாகு தேவர்
சூரபன்மனிடம் செல்கிருர் . சூரபன்மனைச் சந்திக்கு முன் வீரவாகு தேவர் சிறைக்குள் சென்று சூரபன்மனுல் சிறை வைக்கப்பட்டிருக்கும் இந்திரனின் மகனன சயந்தன் முதலியோரைச் சந்திக்கிருர்,
சூரபன்மனைக் கொல்வதற்கு வராமல், சமாதானம் பேசுவதற்கு வீரவாகு தேவர் வந்தது சயந்தனுக்குப் பிடிக்கவில்லை, கொடுமைகள் பலசெய்த சூரபன்மன் குலத்
தோடு அழிய வேண்டும் என்று அவாக் கொண்டிருந்தான் அவன்.
அவனது நோக்கத்தைத் தெரிந்து கொண்ட வீரவாகு. தேவர் தமது சமாதான முயற்சி பற்றி அவனிடம் கூறு கிருர்,
சூரபன்மன் தேவர்களைச் சிறை நீக்க ஒருபோதும். சம்மதியான் என்பதும் யுத்தம் அன்றிச் சிறை மீட்புக்கு வேறு வழியில்லை என்பதும், வீரவாகு தேவருக்கும் முருகப் பெருமானுக்கும் தெரிந்தே இருந்தது.
இதனைக் கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணத்தில் இட்படிக் குறிப்பிடுகிமூர்,

அகளங்கன் 8.
சுறமறி அளக்கர், வைகுஞ்
சூரபன் மாவின் மார்பில் எறிசுடர் எஃகம் விசி
இருபிள வாக்கின் அல்லால் சிறையுளிர் மீள்கி லாமை
தேற்றியும் பொருநர் செய்யும் அறநெறி தூக்கி ஒற்ருய்
அடியனை விடுத்தான் ஐயன்.
சூரபன்மனின் மார்பிலே வேலை வீசி இரண்டு துண் டாக்காமல் தேவர்களைச் சிறைமீட்க முடியாது என்பது முருகனுக்கும் தெரியும். இருந்தபோதும் யுத்தஞ் செய்யும் அறநெறிப்படி தூதுபோக வேண்டும், சமாதானப் புேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்ற சம்பிரதாயத்துக்காக என்னைத் தூதாக அனுப்பினுர் முருகப் பெருமான் என்று
வீரவாகுதேவர் சயந்தனிடம் கூறுகிருர்,
தூது செல்லும்போதே தூதின் முடிவு தெரிந்திருந்தது. முருகனுக்கோ வீரவாகு தேவருக்கோ சமாதானப் பேச்சு வார்த்தையில் நம்பிக்கை இருக்கவில்லை. அந்த அளவுக்குச் சூரபன்மனின் மனநிலையை மிக நன்ரு க அவர்கள் தெரிந்து வைத்திருந்தனர்.
அதனுல் வீரவாகு தேவர் சயந்தனிடம், சம்பிரதாயத் து:தே இது என்று கூறி துரதின் பின் நிச்சயமாக யுத்தம் ஏற்படும். சூரபன்மன் குலத்தோடு நாசமாவான் என்று உறுதி கூறுகிருர்,
' எங்கோன் நாளைவந்து இவரைஎல்லாம் நாமற முடிக பன் காண்டி" என்பது வீரவாகுதேவரின் வாக்கு.
இந்த இரு தூதுகளின் தாற்பரியங்களை இங்கு பார்த் தோம். இனி இராமாயணத் தூதைக் காண்போம்.
(, 11:
لازم )

Page 55
82. இலக்கியத் தேறல்
அங்கதன் துரது
இராமாயணத்தில், ஆரம்பத்தில் இராமனுக்கும் தாடகைக்கும் யுத்தம் ஏற்படுகிறது. இது இராமனின் கன்னிப் போர் எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்போருக்கு தூது என்ற கதையே இல்லை, தாடகையின் திடீர்த் தாக் குதலை இராமர் முறியடித்துச் செய்யும் யுத்தமே அது.
ஆரண்ய வாசத்தின்போது இராவணனுக்கும் சூர்ப் பனகைக்கும் சகோதரர்களான கர, தூஷணர்களோடு இராமருக்கு யுத்தம் ஏற்படுகிறது. மூக்கையும் முலையையும், செவியையும் இழந்த சூர்ப்பனகையின் வேண்டுதலின் பேரில் கர, தூஷணர்கள் திடீரென வந்து இராமரோடு யுத்தஞ் செய்கின்றனர், இங்கும் தூதுக்குச் சந்தர்ப்பமே இல்லை.
தூதுக்கு நிறைய வாய்ப்பும், சந்தர்ப்பமும் இருந்தது வாலி வதத்தில், தூது சென்ருல் வாலி சமாதானஞ்செய்ய முன்வருவான் என்று தெரிந்து கொண்ட இராமர், தூது என்ற மரபைப் பின்பற்ற மல் நேரடியாகக் கொலையைச் செய்கின்ருர்,
முதல் இரண்டு யுத்தமும் அவர்கள் வலிந்து வந்து ஏற்படுத்தியவை. ஆனல் வாலியின் கொலை இராமரே திட்டமிட்டு சுக்கிரீவன் மூலம் வாலியை வலிந்து போருக் கழைத்துக் கொன்றது. அதாவது சமாதானத்துக்கு வாய்ப் புத் தென்படும்போது தட்டிக் கழிக்கிறர் இராமர். ஆணுல் இராவணனுக்குத் தூதனுப்புகிருர், அதுபற்றிப்பார்ப்போம்.
இராவணனிடம் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஆயத்தஞ் செய்கிறர் இராமர். சீதையைச் சிறை நீக்கி விட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும். அதனுல் தூதுவன் ஒருவனை அனுப்பி சமாதானப் பேச்சு மூலம் பிரச்சனை யைத் தீர்க்க விரும்புகிருராம் இராமர்.

அகளங்கன் 83
தூதுவன் ஒருவன் தன்னை
இவ்வழி விரைவில் தூண்டி மாதின விடுதியோ என்று
உணர்த்தவே மறுக்கு மாகில் காதுதல் கடனென் றுள்ளம்
கருதியது. அதனும் அஃதே. நீதியும் அஃதே என்றன்
கருணையின் நிலையம் அன்னுன்.
கருணையின் நிலையமான இராமன், ஒரு தூதுவன இராவணனிடம் அனுப்பி, சீதையை சிறைமீட்க விரும்பு கிருன். அதுதான் தருமம், நியாயம். அதற்கு இராவணன் ஒப்புக் கொள்ளாதுவிட்டால் பின்னர் போர் செய்வோம் என்று கூறுகிருர்,
இராமரின் இந்தத் தூது நோக்கம் இலக்குவனுக்குப் பிடிக்கவில்லை. இராவணனுக்கு இரக்கம் காட்டுவது இழுக் கான காரியம்.
சிலவேளை இராவணன், இராமரின் கோரிக்கைக்கு இணங்கிவிட்டால் கொல்லப்படாமல் தப்பி விடுவான். ஏற்கனவே தண்ட காரண்ய வனத்து முனிவர்களிடம் இராவணனைக் கொல்வதாக இராமர் வாக்குறுதி கொடுத் திருந்தார்.
அந்த வாக்குறுதி பொய்க்கக் கூடாது என்பதனல் சமாதானப் பேச்சுவார்த்தையே அர்த்தமற்றது என நினைக் கிருன் இலக்குவன். இரக்கமது இழுக்கமென்றன் இளையவன் இனிநாம் அம்பு துரக்குவது அல்லால்வேறு சொல்லுண்டோ என்னச்
சொன்னுன்.
புத்தம் மூலம் இராவணனைக் கொல்வதன்றி வேறு சொல் எதுவும் தேவிைல்லை, ஈர்ன்பது இலக்குவனின் (Bl-t-.

Page 56
84 இலக்கியத் தேறல்
இராமரின முடிபும். இதுதான். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடையும் என்று இராமனுக்கு நிச்சய மாகத் தெரிந்தே இருந்தது. இருந்தபோதும் சம்பிரதா யத்துக்காக, உலக ஒப்புக்காக, தூதுவனுக அங்கதஃன அனுப்ப முனை கிருர் இராமர். m
அயர்த்திலன் முடிவும் அஃதே
அறிஞர் ஆய்ந்த நயத்துறை நூலின் நீதி
நாந்துறந் தமைதல்நன்றே புயத்துறை வலிஞ ரேனும்
பொறையொடும் பொருந்திவாழ்தல் சயத்துறை அறனும் அஃதே
என்றிவை அமையச்சொன்னுன்.
முடிவு போர்தான் என்பதை இராமர் மிக நன்ருகத் தெரிந்து வைத்திருந்தார் என்று தெளிவாகக் கூறுகிறர் கம்பர். இருப்பினும் அறிஞர்கள் சொல்லி வைத்த நூல் நீதிப்படி நடக்கவேண்டும் என்பதாலேயே தூதுக்கு விரும்பு கிருராம் இராமர்.
சமாதானம் ஏற்பட வாய்ப்பிருக்கும்போது அதை மேற்கொள்ளாது விடும் இராமர், அதாவது வாலி வதத் தில் சமாதான எண்ணத்தையே வெளியிடாத இராமர், இராவண வீதத்தில் 10:'ட்டும் சமாதான வாய்ப்பு இல்லை என்று தெரிந்துகொண்டு சமாதானப் பேச்சை நடாத்து கிரு. (இது சம்பந்தமாக மேலதிக விபரங்களுக்கு எனது *வாலி” நூலைத் துணைக் கொள்க.) "
இத்தப் பேச்சுவார்த்தைகள் எல்லாம், வெறும் சம்பிர தாயத்துக்காக, சமாதானம் ஏற்பட வேண்டும் என்ற உண்மை விருப்பம் இல்லாமல் நடைபெற்ற சமரசப் பேச்சு வார்த்தைகளே.

அகளங்கன் 85
இந்தத் தூதுவர்கள் செய்தவேலை ஒற்றர்வேலேதான். அங்கதன் இலங்கை வந்து, இலங்கையை அறிந்துகொண்டு போனன். வீரவாகுதேவர் வீரமகேந்திரபுரி சென்று அத் நகர்பற்றி அறிந்து கொண்டார். கிருஷ்ணன் அஸ்தினு:புரம் சென்று மித்திரபேதம், தனிப்பட்ட பலமிழப்பு முயற்சிகள் செய்து திரும்பினர்.
இத்தகைய உண்மைத் தன்மை இல்லாத போலிப் பேச்சுவார்த்தைகள் இன்றும் பல நாடுகளிடையேயும் தொடர்கின்றன. *
(நன்றி: முரசொலி 11-1-1987)

Page 57
9
நக்கீரர் ஒரு விதண்டாவாதி
"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்தமே " என்று சிவபெருமானூேடு எதிர்த்து வாதிட்டவர் நக்கீரர்.
'பாடல் புனேந்தவர் பரமசிவனுக இருந்தாலும், பாட வி:ே குற்றம் இருந்தால் குற்றம் குற்றமே" என்று தன் ம்ைபிக்கையோடு எதிர்த்து வாதிட்டவர் நக்கீரர்.
'விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, தா ன் அன்றுடம் வழிபடும் இறைவன் கூட குற்றஞ் செய்தால், அது குற்றமானதே என்று மிகவும் சாதுர்யமாக பிாதிட் டவர் நக்கீரர்."
"ஆண்டவனேவி. தமிழ்க் கவிதையின் செம்மை:ே சிறந்தது என்று வாதிட்டவர் நக்கீரர்."
இப்படியாகப் பல வகைகளில் நக்கீரரைப் பலரும் புகழ்ந்து கொண்டே இருக்கின்றர்கள், வர் தமது புஃை பீேரைக் கீரன் என்தும், நக்கீரன் என்றும் வவத்துக் கொண்டு குற்றங் கடிந்து குணத்தைப் போற்றலே ஆது பெரு நோக்கென்று கூறிக் கொள்கிமூர்கள்.

அகளங்கின் 曹高
இந்த நக்கீரனின் உண்மைத் தன்மை என்ன? இவர் எப்படிப்பட்டவர்? என்பவற்றை உரிய முறையில் அறிந்து கொள்ளச் செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நக்கீரருக்குக் கிடைக்கும் போலிப் புகழ் மூலம் எது இறைவனுன சிவபெருமானுக்கு ஏற்படும் இழிசொல்ஃப் போக்க இக்கட்டுரை பெரிதும் உதவும் என்று நம்புகின் றேன்.
நக்கீரர் ஓர் புலவர். தமிழ்ச் சங்கத்தின் நனேBப் புலவர், இதில் இரு கிருத்துக்கு இடமில்ஃ.
சிவபெருமானுேடு விவாதஞ் செய்து தெளிவு பெறுவ தற்கு முன் நக்கீரர் பொருமை பிடித்தவராக இருந்தார். அதாவது அழுக்காறு கொண்டவராக இருந்தார். விதண்டா வாதஞ் செய்வதிலே சமர்த்தராக, தற்பெரு மையும் ஆணவமுங் கொண்ட புலவராக இருந்தார்.
நக்கீரர் போதிய தமிழிலக்கண அறிவின்றி, cմ է: * சொல், வழா நிலேச் சொல் வேறுபாடு புரியாது, சிவபெரு மானுேடு விதண்டா வாதஞ் செய்தவர் என்பதை அறிந் தால் பலர் ஆச்சரியம் அடைவீர்கள்.
இந்தக் கருத்துக்களே ஃவியுறுத்த நாம் இவ்விடக் தைச் சற்று ஆழமாக "காமஞ் செப்பாது' ஆராய்வோம்.
சிவபெருமான் மதுரையிலே செய்த திருவிஃா பாடல் களேத் தமிழிலே பாடியவர்களுள் தஃlயாய புலவர் பரஞ் சோதி முனிவரே என்பது அறிஞர் கருத்து. பரஞ்சோதி முனிவர் பாடிய திருவிளேயாடற் புராணமே இக்கட்டுரை பின் ஆதாரமாகிறது.
சண்பகப் பாண்டியனின் சந்தேகம்
வங்கிய சூடா மணிமாறன் என்னும் பெயர் கொண்ட பாண்டியன் மதுரையை அரசாண்ட காலத்தி3ே,

Page 58
'S 8ች இலக்கியத் தேறல்
அவன் சோமசுந்தரப் பெருமானே மலர்களால் அர்ச்சித்து வழிபட விரும்பி ஒரு பெரிய நந்தவனத்தை அமைத்தான்.
அங்கே பலவிதமான பூமரங்களும் செழித்து வளர்ந்து பூத்துக் குலுங்கின. சண்பக மலர்களிலே பெரும் விருப்பம் கொண்ட பாண்டிய மன்னன் , சண்பக பலர்கஃளக் கொண்ட தனி " ஒரு பூஞ்சோலேனயம் அமைத்தான்.
சன் பசு மலர்கஃனக் கொண்டு மாஃகிட்டி சோமசுந்தரப் பெருமானுக்குச் சாத்தி வழிபட்டான். எாண்டு மொய்க்கு முன்பே சண்பக மலர்களேப் பறித்து இண்டை, தொடை, தொங்கல், தாமம், கண்ணி என்ற ப:வகைகளிலே மTஃi கட்டி , இறைவனுக்குச் சூட்டினூன்.
தனது மலர் மாலேயால் அலங்காரக் காட்சி தரும் சோமசுந்தரப் பெருமானின் பேரழகுக் கோலத்தைக்4ண்டு 函 (ரு 3. st - - - - ஆனந்தமவிடத்தான்.
சண்பகமலர் மாஃலயால் அழகுக் காட்சியளித்த இனற வ&னச், சண்பக சுந்தரர் என்று பெயரிட்டு வழிபட்டு மகிழ்த் தான்.
சிவபெருமானுக்கு சண்பக மலர்மாலே சாத்தி வழி பட்ட காரணத்தினுல், வங்கிய சூடாமணி'ாறன் என்ற பெயர் கொண்ட பாண்டிய மன்னன், சண்பக மாறன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றன்.
இளவேனிற் காலத்தில் ஒருநாள் சண்பக மாறன் தனது துனேவியோடு பூஞ்சோலேயிலே இருந்தபோது ஒரு திள்ளிய வாசம் அவனது மூக்கிைத் துனேத்தது.
பலரகை மலர்களேயும் கொண்ட நந்தவனத்தோடு நன்கு பரிச்சயமான பாண்டிய மன்னனுக்கு, அன்று தென்றல் கொண்டுவந்த வாசம், ஒரு புதுறையான திெப் வீ. மீள்ப் ப்ோருந்திய வாசமாகத் தெரிந்தது,

ஆகளங்கன்
வெள்ளிய வெலான் வீசும் வாசம்மோந்து ஈதுவேறு திவ்விய வாசமாக இருந்தது. தென்தல் II.It iiiii' வெளாவிய வாசமன்று. காலுக்கும் - Ira Lil ma' l
வியல் வாசமேயோ இதுவென எண்ணங் G.III in Iris.
வீசிய வாசத்தை முகர்ந்து **இது ஒரு திவ்வியமான வாச பாக இருந்தது தென்றல் பூஞ்சோலேயிலே பூக்களே அளேந்து கவர்ந்து வந்த வாசமன்று காற்றுக்கும் தனியான նiյrr:քiն
இல்ஃ. இது என்ன வாசமாக இருக்கும்." என்று எண்ணி இரஃ.
சிந்தித்த படியே திரும்பித்தன் தேவியை நோக்கினன். அவனது மனைவியான பாண்டிமாதேவியின் கூந்தலின் மன மும், காற்றிலே கலந்து வந்த பணமும் ஒன்றுக இருந் ததைக் கண்டு ஆச்சரியமடைந்தான்.
இந்தத் திவ்விய வாசம் வண்டுகளுக்குத் தெரியாகோ என்று இறும்பூது எய்திஞன். பின்பு இந்த மனம் கூத்த லுக்கு இயற்கையானதோ அன்றி, செய ற்கையானதே" என்று ஐயங்கொண்டான்.
திரும்பித்தன் தேவிதன்னே நோக்கினுன் தேவி ஐம்பால் இரும்பித்தை வாசமாகி இருந்தது, கண்டிவ்வாசல் கரும்பிற்குந் தெரியாதென்னுச் சூழ்ந்திறும்
பூது கொண்டு, F!1 தரும்பித்தைக்கு இயல்போ செய்கையோவேன்
ஐயங்கொண்டமன்"
பித்தை என்ருல் கூந்தல் என்று பொருள். ஐம்பால் என்பது ஐந்து பகுப்பாக முடிக்கப்படும் வகையைக் குறிக் கும். முடி, கொண்டை. சுருள், குழல், பனிச்சை என்று ஐந்து வகையாக கூந்தலே முடிவது அன்றைய வழக்ம்ே.
இ. 12

Page 59
90 இலக்கியத் தேறல்
இப்பாடல்களிலிருந்து அரசனது சந்தேகத்தை நாம் உணரலாம். பலவகை மலர்களையும் பற்றி நன்கு அறிந்து உணர்ந்த பாண்டிய மன்னன், அந்த வாசம் மலர்களினது அல்ல என்று நன்ருகத் தெரிந்த பின், தனது தேவியின் கூந்தல் மணமே அது எனக் கண்டு தெளிந்து, அத்த மணம் கூந்தலுக்கு இயற்கையானதோ, அன்றிச் செயற்கை
பின்பு, தனது ஐயத்தை அறிந்து, யாராயினும் பாடல் செய்து தருபவருக்கு, ஆயிரம் பொற்காசுகள் அடங்கிய பொற்கிழி பரிசு தருவதாக அறிவித்தான்.
*ஐயுறு கருத்தை யாவராயினும் அறிந்து பாடல் செய்யுந ரவர்க்கே இன்ன ஆயிரஞ் செம்பொன் என்று" என்ற வரிகளால் இதனை அறியலாம். அரசன் சந்தேகப்பட்ட கருத்தை அறிந்து பாடல் செய்தாலே போதுமானது. அவனது சந்தேகத்திற்குத் தீர்வு வேண்டியதில்லை. இதனையே “ஐயுறு கருத்தை யாவராயி னும் அறிந்து’’ என்ற வரியினல் தெளிவுபடுத்துகிறர் புலவர்.
இந்தப் போட்டியின் உண்மை நிலை, அரசனது சந் தேகத்தைத் தீர்த்து வைப்பதல்ல.
அரசனது சந்தேகம் எது என்பதே அறிவிக்கப்படாத போது, சந்தேகத்தைத் தீர்ப்பது எப்படி முடியும். சிலர் இத னைச் சரியாகப் புரிந்து கொள்ளாததால் ஏற்பட்ட விளைவே நக்கீரருக்கு இன்று பெரும் புகழைக் கொடுத்திருக்கிறது. திருவிளையாடற் புராணப்படி, அரசன் தனது சந்தே கம் என்ன என்றே, எந்த விடயத்தில் என்றே, எந்தச் சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கவே இல்லை.
கண்டசுத்தீ பாடுதல்
கிப்படியாயின் போட்டிதான் என்ன? அரசனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தைக் கண்டு பிடித்துப் பாடல் பா

அகளங்கன் 91
வேண்டும். அதாவது, அரசனது சந்தேகம் பாடலாகப் பாடப்பட வேண்டும். இதுவே போட்டி.
அப்படி இல்லாமல் கூந்தலுக்கு இயற்கை மணமா? செயற்கை மணமா? என்ற கேள்விக்கு விடை கூறுவதல்ல போட்டி.
இயற்கை மணமா ? செயற்கை மணமா ? என்பது தான் போட்டியாக இருந்திருந்தால் பலர் பல பாடல் புனைத்திருக்கச் சந்தர்ப்பமுண்டு.
இயற்கை மணம் என்றும், செயற்கை மணம் என்றும் இரு விடைகளையும் ஒரு புலவரே இரு பாடல்களில் புனைந் திருந்தால் ஏதாவதொரு பாடல் பரிசு பெற்றேயாக வேண்டுமே. இது போட்டியாக இருந்தால் இத்ற்கேன் ஆயிரம் பொற்காசுகள் பரிசு.
எத்தனையோ புலவர்கள் இருந்த பாண்டிய நாட்டில் ஒரு புலவர் மட்டுமே பாடல் புனைந்து கொண்டு வந்ததி லிருந்தே இப்போட்டியின் தன்மையைப் புரிந்து கொள்ள இTம்.
போட்டி என்ன என்பதே இன்று பலருக்குத் தெளி
வித்தியாசமான புதுமையானது தான். ஆணுல் அன்று அது நடைமுறையில் இருந்திருக்கின்றது.
ஒருவரது எண்ணத்தை மற்றவர் பாடலாக்க வேண். டும். அதாவது பாண்டியனின் மனத்திலே ஏற்பட்ட சந் தேகம் என்ன என்பதைத் தனது உள்ளு ர்வு மூலம் ஒருமுகப்பட்ட சிந்தனை மூலம் அறிந்து அதனைப் பாடலாகப் பாடவேண்டும். இதுதான் போட்டி,
இதனை முற்காலத்தில் கண்ட சுத்தி பாடுதல் என்று 365rps (.hought Reading ) fig&or 65, u

Page 60
92 இலக்கியத் தேறல்
அறிந்து கொள்ளல் என்று கூறுவதுதான் ‘கண்ட சுத்தி" என்ற பெயரால் அன்று அழைக்கப்பட்டது.
நினைத்த காரியம் சொல்லுதல் என்ற ஒரு செய்கை சோதிடத்தில் இன்றும் உண்டு. அதாவது ஒருவர் எதைக் கேட்க வேண்டுமென்று தன்னிடம் வருகிருரோ, அதைச் சோதிடர் தாமே சொல்லி, அதன் தீர்வையும் கூறுவது நினைத்த காரியஞ் சொல்லுதல் என்ற வகையாகும். இன் றும் பல சோதிடர்கள் இத் துறையிலே நிபுணர்களாக இருப்பதை நேரிலேயே காண்கிருேம்.
இதேபோல, கண்ட சுத்தி பாடுதல் என்ற பெயரில் முற்காலத்தில் இந்தப் போட்டி நடைபெற்றிருக்கின்றது.
பாண்டியன் வைத்த போட்டியும் இந்த வகையைச் சேர்ந்ததே. பாண்டியனின் மனதில் உதித்த சந்தேகத்தை அறிந்து அதனைப் பாடலாக்கித் தருவதே போட்டி என்பது இப்போது புலனுகின்றது.
நக்கீரரின் பொருமை
ாண்டியன் போட்டியை அறிவித்தான். பலரும் முயன்று பார்த்தனர். அரசனின் மனக் கருத்தை அறிய முடியவில்லே. சங்கப் புலவர்கள் தனித்தனியாக ஆராய்ந் தும் கண்டுபிடிக்க முடியாமல் ஒன்று சேர்ந்தும் ஆராய்ந் தனா.
சங்கத்தா ரெல்லாந் தம்மிற் தனித்தனி தேர்ந்து தேர்ந்து துங்கத்தார் வேம்பன் உள்ளஞ் சூழ்பொருள் துழாவி உற்ற பங்கத்தா ராகி எய்த்துப் பட்ருறு மனத்த ரானுர்.
என்ற வரிகளால் சங்கப் புலவர்கள் ஆராய்ந்து தோல்விகண்டு கவலையடைந்த விதம் சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் ஆராய்ந்தது பாண்டியனது * உள்ளஞ் சூழ் பொருள்' என்பது பாடலிலிருந்து தெளிவாகிறது.

அகளங்கன் 93
சங்கப் புலவர்கள் எல்லோரும் ஆராய்ந்தனர் என்பதி லிருந்து, சங்கப் புலவர்களுள் தலையாயவரும், தலைமைப் புலவரானவருமான நக்கீரரும் ஆராய்ந்தார் என்பது தெளிவு.
அவர்கள் எவராலுமே அறிந்து கொள்ள முடியா திருந்த சமயத்தில்தான் தருமி என்ற இளைஞன் பாடலோடு சபைக்கு வந்தான்.
தருமி மிகமிகச் சாதாரணமான ஒரு ஏழைக் கவிஞன். இவன் சிவபெருமானிடந் தனக்குப் பாடல் புனைத்து தரும்படி முறையிடும்போது,
“ஐய யாவையு மறிதி யேகொலாம்
வையை நாட்வன் மனக் கருத்துணர்ந்து
உய்ய ஒர்கவி உரைத்தெனக்கு அருள்
செய்**
என்றே வேண்டுகிருன். இங்கும் பாண்டியனின் மனக்
கருத்துணர்ந்து என்ற சொல் பயன்படுத்தப்படுவதைக் கொண்டு போட்டியின் தன்மையை நன்குபுரிந்து கொள்ள லாம். சிவபெருமான் தருமிக்குக் கொடுத்த பாடல் இது தான.
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமஞ் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின், மயிலியல் செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவு முளவோ நீயறியும் பூவே.
பாடலைக் கொண்டு சென்ற தருமி சங்கப் புலவர்க நக் குக் காட்டுகிருன், புலவர்கள் பாடலிலேயுள்ள நயத்தை வியந்து பாராட்டினர்.
சொல்லின் செல்வமும் பொருளும் துக்கியே நல்ல நல்லவென் றுவகை நண்ணிஞர்.

Page 61
94. இலக்கியத் தேறல்
சங்கப் புலவர்களுக்குப் பாடலின் சொல் வளமும், பொருள் வளமும் புரிந்ததேயன்றி, இந்தப் பாடலுக்கும் அரசனின் சந்தேகத்திற்கும் உரிய தொடர்பு தெரிந்திருக்க
வில்லை.
அதனுல் அரசனிடம் பாடலைக் கொடுத்து, பாடலைப் பற்றி விளக்கிக் கூறினர்கள். அரசனின் சந்தேகமும், பாடலும் ஒன்றையொன்று நேர்முகமாகவே ஒத்திருந்தது. அதனுல் அரசன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.
அளக்கில் கேள்வியார் அரசன் முன்புபோய் விளக்கி அக்கவி விளம்பி ஞர்கள்.தன் உளக் கருத்து நேரொத்த லாற்,சிரந்
தனது உளக் கருத்தும், பாடலின் கருத்தும் ஒன்றே என்று மகிழ்ந்து தலையசைத்த பாண்டியன் போட்டியில் வெற்றிபெற்ற தருமிக்கே அந்தப் பொற்கிழியை டடி பணித்தான்.
சந்தேகம் ஏற்பட்டது அரசனுக்கே. அரசனது சந் தேகம் என்ன என்பது அரசனுக்கு மட்டுமே தெரிந்த விடயம். அந்த அரசனே தனது சந்தேகம் பாடலிலே பாடப்பட்டுள்ளது என்று ஒப்புக்கொண்டு, மனம் மகிழ்த்து பரிசு கொடுக்கும்படி கூறிவிட்டான்.
ஆணுல், தலைமைப் புலவர் நக்கீரரின் பொழுமைக் கு:ைம் அவரைச் சும்மா இருக்கவிடவில்லை. சங்கப் புலவர் பலரிருக்க, தலைமைப் புலவராய்த் தா னிருக்க, சாதாரண சிறு கவிஞன் தங்களையும் விஞ்சிவிட்டானே என்ற அழுக் காறு அவரின் மனத்தை அரித்தது. பொறுமைக் "குணங் கொண்ட புலவரானதால் நக்கீரர், தருமியின் வெற்றியைப் பொறுக்கமாட்டாமல் புழுங்கினுர்.

அகளங்கன் り5
அதனல், பாடலிலே குற்றமுண்டு என்று கூறி பரிசு கொடுக்கவிடாது தடுத்தார் நக்கீரர்.
நக்கீரருக்கு பொருள் இலக்கணம் தெரியாதிருந்தது
படலைக் கொண்டு புலவர் வடிவோடு வந்த சிவ பெருமான் 'பாடலிலே என்ன குற்றம் கண்ட்ாய்' என்று கேட்க, நக்கீரர் 'பாடலிலே பொருட் குற்றமுண்டு* என்று
கூறுகிருர்,
பாடலின்படி, பொருளிலே குற்றம் கண்டு பிடிக்க வேண்டியவன் பாண்டியனே அன்றி வேறெவரும் இல்லை. சந்தேகம் கொண்டவன் பாண்டியனே, அவனே தனது சந்தேகமும், பாடலின் பொருளும் ஒன்றேயென்று ஒப்புக் கொண்டபின் இடையிலே நக்கீரர் எப்படிப் பொருளிலே பிழைகண்டு பிடிக்க முடியும்.
பரஞ்சோதி முனிவர் இந்த இடத்தைக் கூறும்போது, சிவபெருமான் சபைக்கு வந்து,
* யாரை-நங் கவிக்குக் குற்றம் இயம்பினுர் ” என்று கேட்க, நக்கீரர் அஞ்சாது,
நானே குற்றங் கூறினேன்" என்று கூற இறைவன் என்ன குற்றம் என்று கேட்க.
"தேராக் கீரன். . . . சொற்குற்றமின்று வேறு பொருட் குற்ற “மென்றன்' என்று பாடுகிறர்.
இங்கே தேராக் கீரன் என்பதற்கு, பொருளிலக்கணம் உசரியாகத் தெரியாத கீரன், என்றே பலரும் பொருள்
கூறுகிருரர்கள். −
நக்கீரருக்கு செய்யுளின் பொருள் இலக்கணத்தில் போதிய அறிவில்லை என்பதை இதன் மூலம் அறியலாம். அதுமட்டுமன்றி தருமிக்குப் பொற்கிழி அளித்த படலத்தின்

Page 62
9 b. இலக்கியத் தேறல்
பின் கீரனைக் கரை ஏற்றிய படலமும், அதற்கடுத்ததாக கிரனுக்கு இலக்கணம் உபதேசித்த பட்லமும் வருகிறது" இது நோக்கத்தக்கது.
நக்கீரருக்கு இலக்கணம் சரியாகத் தெரியாது என்ப தைக் கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலத்தில் சிவ பெருமான் உமாதேவியார்க்குக் கூறுகிருர்,
இலக்கணம் இவனுக்கின்னுந் தெளிகில இதனுலாய்ந்த நலத்தசொல் வழுஉச்சொல் என்பதறிகிலன்.
நலத்தசொல் என்ன, வழுச்சொல் என்ன என்ற பேதம் நக்கீரருக்குத் தெரியாது என்று சிவபெருமான் கூறி, அகத் தியரை அழைத்து நக்கீரருக்கு இலக்கணம் உபதேசிக்கும்படி பணிக்கிமூர்.
அகத்தியரிடம் நக்கீரரைப் பற்றிக் கூறும்போது இப் படிக் கூறுகிருர் சிவபெருமான்.
இருந்த மாதவச் செல்வனே எதிர்வர நோக்கி அருந்தவா! இவற்கு இயற்றமிழ் அமைந்தில, எம்பாற் தெரிந்தநீ அதை அரில்தபத் தெருட்டென. . . . .
நக்கீரனுக்கு இயற் தமிழ் சரியாக அமையவில்லை. என் னிடம் இலக்கணம் கற்ற நீ அதனை நக்கீரனுக்கு குற்றமற்ற வகையில், ஐயந்திரிபு இல்லாமற் போகும்படி சொல்லிக் கொடு என்று அகத்தியரை சிவபெருமான் வேண்டுவது கவனிக்கத் தக்கது.
அகத்தியரிடம் இலக்கணங் கற்ற நக்கீரர் தான் முன்பு செய்த கவிகளினை முற்ருக ஆராய்ந்து சொல்வழுக்களும், வழாநிலை முடிபும் உற்று நோக்கினர்.
முழுதும் உணர்ந்த சிவபெருமான் பாடிய பாடலிலே பொருள் வழுச் சொன்ன தன் அறியாமையை எண்ணி வருந்

அகளங்கன் 97
தினர். " " சிறிய கேள்வியோர் கழியவும் செருக்குடையோர் என்று அறிஞர் கூறிய பழஞ்சொல் என் அளவிலும் பலித் தது** என்று வெட்கங் கொண்டார்.
நிரம்பாத கல்வியுடையவர்கள் மிகவும் செருக்குடைய வர்களாக துருப்பார்கள் என்று அறிஞர்கள் கூறும் பழ மொழி தன்னளவிலும் உண்மையாயிற்று என்று நக்கீரர் கூறுவதாக பரஞ்சோதி முனிவர் பாடுகின் ருர்,
இதிலிருந்து நக்கீரர் போதிய பொருளிலக்கண அறி வின்மையாற்தான் சிவபெருமானின் பாடலிலே குற்றங் கண்டு பிடித்தார் என்பது தெளிவாகறது.
நக்கீரரின் விதண்டாவாதம்
சிவபெருமானின் ' கொங்குதேர் வாழ்க்கை "" என்ற பாடலில் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டென் 1y (gg5lit பிடப்படவே இல்லை. 'கூந்தலின் வாசத்தைவிட நல்ல வாசங் கொண்ட பூவை நீ பார்த்திருக்கிறயா’’ என்று வண்டிடம் கேட்பது போல்தான் பாடல் அமைந்திருக்கிறது.
அரசனின் சந்தேகமும் இதுவேதான். கூந்தல் மணமே ஏனைய மலர்களின் மணத்தைவிட மேலானது என்பதே அரசனின் கருத்துமாகும். அதனுல்தான் ‘திவ்விய வாசம்”* என்று கூறுகிருன் பாண்டியன். திவ்விய என்பது தெய்வீக என்று பொருள் தரும் சொல்லாகும்.
நக்கீரர் இதன் உட்பொருளை அறியாமல், கூந்தலுக்கு இயற்கையில் மணமில்லை என்று வாதிடத் தொடங்கினர். சிவபெருமான் எந்தச் சந்தர்ப்பத்திலும் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு என்று வாதிடவே இல்லை.
இ, 13

Page 63
98 இலக்கியத் தேறல்
நக்கீரரின் அழுக்காறு கொண்ட மனத்தை அறிந்து கொண்ட இறைவன், நக்கீரரின் போக்கிலேயே விவாதத் ைடி
பாண்டியனின் மனக்கருத்தை அறிந்து பாடல் புனைந்த பரமசிவனுக்கு நக்கீரரின் பொருமைக குணம் புரியாமலா
இருக்கும்.
அதனுல் சிவபெருமான் நக்கீரரின் தன்ம்ையை மற் றைப் புலவர்களுக்கும் காட்ட விரும்பி கேள்வி கேட்கிறர்.
'பெண்களிலே உத்தம இலக்கணம் பொருந்திய பத் மினி என்ற வகையைச் சேர்ந்த பெண்களுக்கும் கூந்தலில் இயற்கை மணம் இல்லையோ’’ என்று இறைவன் கேட்க, *அவர்களுக்கும் செயற்கையாலன்றி இயற்கைமணம் இல்லை? என்று கூறினர் நக்கீரர்.
பூமியிலே பிறந்து வளரும் பெண்களின் கூந்தல் பற்றி, அனுபவத்தாலோ, அறிவாலோ அன்றி விஞ்ஞான பூர்வ மாகவோ யாரும் எந்த முடிபுக்கும் வரலாம். அதனல் பத்மினி வகைப் பெண்கள் பற்றி நக்கீரர் கூறியதை மறுப் பதற்கில்லை.
ஆஞல் இறைவன் அடுத்ததாகக் கேட்கும் கேள்விக்கு நக்கீரர் சொல்லும் பதில் நக்கீரரின் விதண்டாவாதத்தைக் காட்டுவதாகவே இருக்கிறது.
தேவலோக மங்கையர் கூத்தலும் செயற்கை மணமே கொண்டது என்று நக்கீரரால் எப்படிச் சொல்ல முடியும். அதுமட்டுமில்லாமல், சிவபெருமானின் இடப்பாகத்தில் வீற்றிருக்கும் ஞானப் பூங்கோதையான உமாதேவியாரின் கூந்தல் பற்றிக் கூற நக்கீரருக்கு என்ன அருகதை இருக் கிறது.

ଧlt;$3: It is ! &ର୍ତt - 99
உமாதேவியாரின் கூந்தலுக்கும் செயற்கை 19ணமே என்று சாதித்தார் நக்கீரர். இதனைப் பரஞ்சோதி முனிவர் இப்படிப் பாடுகிருர்,
*வெருவிலான். சலமே முற்றச் சாதித்தான்* சலம் என்ருல் வஞ்சனை, விரகு எனப் பொருள்படும். வஞ்சனையான வார்த்தையையே கூறினர் நக்ரேர்.
நக்கீரரின் விதண்டாவாதத்தைக் கண்ட சிவபெருமான் தானே முழுமுதற் கடவுள் என்பதையும், தனது இடப் பாகத்தில் வீற்றிருக்கும் உமாதேவியாரின் கூந்தலைப்பற்றி நக்கீரரைவிட தனக்கே அதிகம் தெரியும் என்பதையும் நிரூபிக்க விரும்பி, தனது நெற்றிக் கண்ணைக் காட்டுகிறார்.
அப்போதும் நக்கீரர் " " குற்றம் குற்றமே ' என்று விதண்டாவாதஞ் செய்தார்.
நக்கீரரின் வாதம் விதண்டாவாதமே என்பதை சங்கப் புலவர்களும் ஒப்புக் கொள்கின்றனர். நக்கீரர் நெற்றித் கண் வெப்பத்தால் பொற்ருமரைக் குளத்தில் வீழ்த்து கிடந்தபோது சங்கப் புலவர்கள் இறைவனை நோக்கித் தொழுகின்றனர்.
அப்போது "நக்கீரன் விதண்டா வாதஞ் செய்தான். அவனை மன் வித்துக் கொள்க’’ என்று இறைவனை வேண்டு கின்றனர்.
அத்த! கற்ற செருக்கின் அறிவழி கீரன்நின், வித்த கக்கவி யைப்பழு தென்ற விதண்டையான்.
இறைவனே! கற்றறிந்த செருக்கினல் அறிவழிந்த கீரன், நின் கவியைப் பழுதென்று விதண்டாவாதஞ் செய்து விட்டான் என்பது இதன் பொருள்.
நக்கீரர் அழுக்காறுடையவர் என்பதை கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலத்திலும் காணலாம். அகத்

Page 64
100 இலக்கியத் தேறல்
இயர் மூலமாக நக்கீரருக்கு சிவபெருமான் இலக்கணம் கற் பித்தார்.
இதனைக் கண்ட உமாதேவியார் சிவபெருமானிடம் நீங்களே கீரனுக்கு இலக்கணம் உபதேசித்திருக்கலாமே? என்று கேட்கிருர், அதற்கு இறைவன்.
இவனெடுத்த மற்சரத்தினுல் யாமுணர்த் தாது.அத் தவனைவிட்டு உணர்த்தினம் எனச் சாற்றிஞன்.
எனக் குறிப்பிடுகிறர். மற்சரம் என்ருல் அழுக்காறு என்று பொருள். ஏற்கனவே சிவபெருமானின் கவிதையின் இறப்பிலே அழுக்காறு கொண்டவர் நக்கீரர்"
அதனல் அழுக்காறு கொண்டவனுக்கு, அழுக்காறு ஏற்படக் காரணமாக இருந்த பாடலைப் பாடிய புலவன் குருவாக இருக்கக்கூடாது என்று கூறுகிருர் சிவபெருமான். அதனுல்தான் நக்கீரருக்கு தான் இலக்கணம் உபதேசிக்கா மல், அகத்தியர் மூலமாக இலக்கணம் உபதேசித்தார் இறைவன்.
எனவே நக்கீரத் தனம் என்பது பொருமையும், விதண்டா வாதஞ் செய்யும் எண்ணமுங் கொண்ட சிறி யோரியல்பேயன்றிக் குற்றத்தைக் கண்டித்துக் குணங் காணும் இயல்பான, சான்ருேருக்குரிய சால்பு அல்ல. நக்கீரர் பொருமையின் புகலிடம். விதண்டாவாதத்தின் விளைநிலம்.
(நன்றி. வீரகேசரி 26-10-1986)

1O
உப் பிட்டவரை.
கிவியங்களையும், நல்ல கருத்துக்களை உள் கிய பல்வேறு வகை இலக்கியங்களேயும் பாடிய புலவ புகழ் பெற்ருர்கள். அவர்கள் தமது கவிதைகள் மூ நிலைத்து நிற்கிருர்கள். புலவர்களைப் பாதுகாத்து வளித்து, உற்சாகங் கொடுத்த புரவலர்களும், அப் களால் புகழ் எய்தி நிற்கிருர்கள்.
பெரியபுராணத்தைச் சேக்கிழார் சுவாமிகள் தற்குப் போதிய பொருள் உதவியும், ஊக்கமும் உ முங் கொடுத்தவன் அநபாய சோழன், அநபாய னைப்பெரியபுராணத்தில் பல இடங்களிலே போற்றி கிருர் சேக்கிழார் பெருமான். பெரியபுராணம் இப் நிலைக்கும் வரை அநபாய சோழனின் பெயரும் நீ வண்ணம் தன்னை வாழவைத்த சோழனை தனது மூலம் வாழவைத்துள்ளார் சேக்கிழார் பெருமான்.
ள்,
i í d'E
3337
Ջi/*
F Tip புகழ் யிெல் க்கும் பிதை
நளவெண்பா பாடுவதற்குப் புகழேந்திப் புலவருக்குச் சகல உதவிகளையும், செளகர் யங்களையும் செய்து கொடுத் சிவன் சந்திரன் சுவர்க்கி என்ற அரசன்? அந்த அரசனை

Page 65
. இனக்கியத் தேறல்
பும் தனது நளவெண்பா மூலம் என்றும் வாழும் நிளேக்கு நடபர்த்தியிருக்கிருர் புகழேந்திப் புலவர்.
மகாபாரதத்தைத் தமிழில் பாடிய வில்லிபுத்துாராம் எாருக்குப் பெரும் உதவி செய்தவன், வரபதி ஆட்கொண் டான் என்ற அரசன், பாரதத்தில் வரபதி ஆட்கொண் டாஃனப் பற்றிப் பல பாடல்களில் பாடுகிறர் வில்லிபுத்துர ராழ்வார்.
வடமொழியிலே ஒப்பற்ற பெருங் காவியமான சாகுத் தலம் என்னும் நூஃ: இயற்றியவர் மகாகவி காளிதாசர். காளிதாசரின் கவிதைகளிலிருக்கும் ஒவ்வோர் எழுத்துக்கும், அதாவது ஒவ்வொரு அட்சரத்திற்கும், ஒவ்வொரு லட்சம் பொன் கொடுக்க முன்வந்தான். அந்நாட்டு பன்னனுன் போஜராஜன்.
அட்சர விட்சம்பொன்
அள்ளிக் கொடுத்துக்கவி பட்சமாய்க் கேட்டுஅன்பள்
பாராண்ட போஜராஜன்.
என்று போஜராஜனப் புகழ்கிருர் ஒரு புலவர். புல வர்களுக்கு அவர்கள் வாழும் சொற்ப காத்துக்கு ஆர சர்கள் உதவிசெய்து வாழவைத்தார்கள். ஆணுல் பு:வர் கனோ தமது கவிதைகளில் அரசர்களின் பெயர்களேயும் இடம்பெறச் செய்து பல நூற்ருண்டுகளுக்கு அரசர்களே வாழவைத்திருக்கிருர்கள்.
அரசன் அல்லாத ஒரு விவசாயியான சடையப்ப வள் ளன், கம்ரை ஆதரித்து, காவியஞ் செய்வதற்கு உதவி செய்தார். கம்பர் இராமாயணம் பாடுவதற்கு மனத்திலே Eாவ்:ளவு பொருள் இருந்தாலும், சடையப்ப வள்ளலின் கரத்திலே பொருள் இல்லாதிருந்திருந்தால் இடர்ப்பட்டி
J.-F. "Tr T.

அகளங்கன் Iሀ 8
கம்பராமாயணத்தில் பல பாடல்களிலே சடையப்ப வள்ளல் பல வகையிலும் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளார். பெருங் காவியமாக இன்று போற்றப்படும் கம்ப இராr பனத்தில் இடம்பெற்ற சடையப்ப வள்ளவின் பெயர் தமிழ் உள்ளளவும் இருக்கும் என்று துணிந்து கூறலாம்.
புலவர்களுக்கு உதவிய பல புரவலர்களின் பெயர்கள் காலத்தாள்ளுண்டு போகாமல் மலேயென நிலேத்துச் சிறப்புற்றிருக்கின்றன.
நன்றியுணர்வு
"உப்பிட்டவரை உள் அளவும் நினே' என்பது பழ மொழி. உள் அளவும் என்பதை உள்ள அளவும் எங்று
பலரும் பொருள் கொள்வர்.
உள்ள அளவும் என்பது, உப்பிட்டவர் உள்ள அளவுமா, அல்லது அதனே உண்டவர் உள்ள அளவுமா என்பது கேள்விக்குரிய ஒன்று.
உப்பிட்டவர் உள்ள அளவும் என்றல், அவரது மனேவி பிள்ஃளகஃாப் பற்றிய சிந்தனேயே இல்லே. உணவு உண்ட வர் உள்ள அளவும் என்ருல், உணவு உண்டவரின் ஃபி மக்கள் அந்த நன்றியை மறந்து விடுவதா என்ற கேள்வி எழுவது இயல்பே.
உள்-அளவும்" என்பதே சரியான பாடம். இதற்கு ஏணுே வலிந்து உள்ள அளவும் என்று பொருள் கொண்டு விட்டனர். உள் அளவும் என்ருல் உண்மையில் உள்ாத் தளவும் என்றே பொருள்படும். வெறும் வார்த்தைகளால் நன்றி பாராட்டுவதாக இல்லாமல், உள்ளத்திலே அந்த நிகழ்ச்சியை நிலை நிறுத்தி, நன்றி செலுத்த வேண்டும் என்பது இதன் கருத்து.

Page 66
இலக்கியத் தேறல்
உள்ளத்திலே நன்றுகப் பதிந்தவைகள் தான் கவிதை களாக வெளிவரும். புலவர்கள் தமக்கு உப்பிட்டவர்களே, அதாவது உணவளித்தவர்களே. தமக்கு உணர்வளித்தவர் களாக மதித்து, உள்ளத்திலே நிலை நிறுத்தி நன்றி உணர்வு கொண்டவர்களாக இருந்தனர்.
அதனுல் அவர்களின் பாடல்களிலே, அவர்களுக்கு உப்பிட்டவர் பற்றிய நினைவுகளும் வெளிவந்திருக்கின்றன.
அரசர்களாகவும், பெரும் வள்ளல்களாகவும் மட்டு நன்றி, சாதாரன மக்களாக இருந்து தமக்குச் சோறிட்ட சிலர் பற்றியும் சில புலவர்கள் உள் அளவும் நினைத்துப் பாடிப் போற்றியிருக்கிறர்கள்,
ஒளவையார் உண்ட விருந்து
சங்க காலத்திலே பல பெண் புலவர்கள் இருந்திருக் கிருர்கள். காக்கைப் பாடினியார் என்ற பெண் புலவர் தொல்காப்பியரோடு ஒருங்கிருந்து அகத்தியரிடம் இலக் கனங் கற்றதாகவும், பின்பு காக்கைப் பாடினியம் என்ற பெயரில் தமிழுக்கு இவர் இலக்கணஞ் செய்ததாகவும்
്റ്റ്ര്",
அக்காலத்திலும் கலப்புக் கல்வி முறை இருந்திருக் கிறது என்பதற்கு காக்கைப் பாடினியாரும் தொல் காப்பியரும் ஒருங்கிருந்து அகத்தியரிடம் கல்விகற்றது ஒரு சான்ருகும்.
நச்செள்ளே யார், நப்பசலேயார், அள்ளூர் நன்முல்லே
யார், பொன்முடியார், நக்கண்ணேயார், ஒக்கூர்மாசாத்
தியார் போன்ற பல பெண் புலவர்கள் பாடிய பல பாடல் கள் சங்க இலக்கியங்களிலே காணப்படுகின்றன.
பெரிய புராணத்திலே பெரிதும் பேசப்படும் காரைக் காலம்மையார், பக்திக் கவி பாடுவதற்கு வழி சமைத்தவர்

அகளங்கன்
証)* என்று போற்றத் தகுந்தவர். ஆண்ட T ரி ஆன் திருப்
பாசுரங்கள் இன்றும் போற்றப்படுகின்றன.
பெண் புலவர்களிலே பெரிதும் போற்றப்படுபவர் ஒளவையார் ஆகும். மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட ஒளவையார்கள் தமிழ் இலக்கியப் பரப்பி:ே சுவடு பதித்
திருப்பதை ஆழ்ந்து கற்பவர்கள் அறிந்து கொள்ளலாம்.
ஒளனவயாருக்கு வேளூர் என்ற ஜனரிவே இருந்த பூதன் என் வன் ஒருநாள் விருந்து கொடுத்தான். அந்த விருந்தைத் தன் உள் அளவும் நினைத்து, கவிதையாக உருவாக்கினூர் ஒளவையார். மிகவும் அழகான வெண்பாவாக வெளி ந்ேதது பூதனின் விருந்துப் புகழ்.
வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் יוז. [ה IBחו முரமுரென வே புளித்த மோரும் - திரமுடனோ புல்வேளூர்ப் பூதன் புரிந்து விருந் திட்டசோறு) எல்லா உலகும் பெறும்.
வரகரிசிச் சோறும், கத்தரிக்காய்த் துவட்டலும், தன் ஜர முரமுர எனப் புனித்த மோரும் சேர்த்து, பசியோடு இருக்கிருர் ஒளவையார் என்பதைப் புரிந்து Girai.T அழைத்துச் சென்று, வேளூரில் இருக்கும் பூதன் என்பவன் விருந்து கொடுத்தானும்,
அந்தப் பூதன் கொடுத்த விருந்து, இந்த உலகம் எல் வாரு சேர்ந்தால் என்ன பெறுமதியோ அந்த அளவு பெறு மதி வாய்ந்தது என்று புகழ்ந்து பாடுகிறீர் ஒளவையார்.
சாதாரண ஒரு பூதன் புலவர் ஒளவையாருக்கு ஒரு நேர விருந்து வைத்து, இலக்கியத்தில் இடம்பிடித்து விட்
,
இ, 14

Page 67
I ሰ] [ኛ இலக்கியத் தேறல் அமுதமாக இருந்த கீரைக் கறி
(Pடியுடை மூவேந்தரின் சூழ்ச்சியால், +Tశాt_ வள்ளலும், பறம்புமலே அரசனுமான பாரி கொல்லப்படு கிருன். ஒரு இடையனின் வீட்டிலே பாரியின் பின்ஃள களான அங்கவை, சங்கவை என்ற பெண்கள் அதTவிதை களாக வந்து தங்கி இருக்கின்றனர். மழையிலே நனைத்து தடுங்கிக் கொண்டு அச்சிறு குடிலுக்குள் நுழைகிறர் ஒளவை
LITT
நனேந்த ஆடைக்கு மாற்றிடை கொடுத்து, உண்ணுவ தற்கு உணவும் கொடுத்தனர் அப்பெண்கள். "ஒளவையாரின் உள்ளத்திலே அவர்கள் கொடுத்த உணவு நீங்காது இடம் பெற்றுவிட்டது. உப்பிட்ட அவர்களே உள் அளவும் நிஃனத் தார் ஒளவையார். பாடல் உருவாகியது.
வெய்தாய் நறுவிதாய்
வேண்டளவுந் தின்பதாய் நெய்தான் அளாவி
நிறம்பசந்த-பொய்யாய் அடகென்று சொல்லி
அமுதத்தை இட்டார் கடகம் செறிந்த
FITLI u II ir ..
சூடு குறையாவண்ணம் நன்முக நெய்விட்டுத் தாழித்து கமகம என்று வாசம் வந்து கொண்டிருந்த, பச்சை நிற -மான கீரைக் கறியைச் சோற்றேடு உண்பதற்குக் கொடுத்
தார்கள்.
பசியோடு மரைக் குளிரில் நடுநடுங்கி வந்த ஒளவை யார், சூடான கீரைக் கறியோடு வயிருர், வேண்டிய அளவும் நன்முக உண்டார்.

அகளங்கள்
அவருக்குக் கீரைக்கறி சாப்பிட்டதாக நினேப்பில்லே.
இறவா நிலையை அடையத் தேவர்கள் அருந்திய அமுதத்தைச்
சாப்பிட்டதுபோல்தான் இருந்ததாம். அதனுல் கீரைக் கறி என்று பொப் சொல்லி அமுதத்தை இட்டனர் அரிவையர். என்று புகழ்கிருர் ஒளவையார், கடகம் என்பது கையிலே அணியும் ஒரு அணிகலன்.
காளமேகம் உண்ட பூசணிக்காய்க் கறி
இவைபோல, காளமேகப் புலவர் தனக்குக் கிடைத்த விருத்துகள் பற்றியும் அழகாகக் கூறியிருக்கிரர். தன் டைக்கால் அம்மை பூசணிக்காய்க் கறியுடன், கிாளமிேகக் துக்கு ஒரு விருந்து கொடுத்தார்.
கொண்டத்தூரில் வாழ்ந்த தண்டைக்கால் அம்மை சமைத்த பூசaைfக்காய்க் கறியைப் பற்றி வெகுவாகப் புகழ்கிருர் காளமேகப் புலவர்.
கீரையைப் புகழ்ந்தாலும் அது தகும். ஒரனெனில் ைேர சத்துள்ள உணவு. ஆணுல் பூசணிக்காமை அவர் புக் மும் விதம் புதுமையாக இருக்கிறது.
அன்போடு கொடுத்ததால் ஒனவையாருக்கு கீரையும் அமுதமாக இருந்தது போல, காளமேகப் புலவருக்குப் பூச ணிைக்காய், மோட்சத்தையே கொடுக்கும் சக்தி வாய்ந்த தாக இருந்ததாம்.
அண்டக்காற் கிட்டும்
கைலாயம். கைக்கொண்டுட் கொண்டக்கால் மோட்சம்
கொடுக்குமே. --- கொண்டத்தூர் தண்டைக்கால் அம்மை
சண்மத்துவைத்த பூசணிக்காய் அண்டர்க்காம் ஈசருக்கு - -
மாம்.

Page 68
108 இலக்கியத் தேறல்
பூசணிக்காய்க் கறியைக் கண்டதுமே கைலாயத்தைக் கண்டதுபோல இருந்ததாம். கையாலள்ளி உண்டதுமே மோட்சம் கிடைத்ததுபோல இருந்ததாம் காளமேகப் புல வருக்கு.
அந்தப் பூசணிக்காய்க் கறி மனிதர்களுக்கு மட்டுமல்ல தேவர்களுக்கும், ஏன் சிவபெருமானுக்குமே சிறப்பான விருந்தாக இருக்கும் என்று நகைச்சுவையாகப் பாடுகிமுர் காளமேகம். . "
அடிமனத்திலே பதிந்த எதுவும் அழிக்க முடியாதது. ஒருவர் செய்த உதவியும், அடிமனத்திலே ஆழப்பதிந்து விட்டால், பின்னுல் அது அகலவே மாட்டாது. தமக்கு உப்பிட்டவர்களின் நினைவுகளைத் தமது அடிமனத்திலே பதியவிட்ட புலவர்கள், அதாவது உள்அளவும் நினைத்த புலவர்கள், அந்தக் காட்சிகளை எமக்கும் உள்அளவும் பதிய வைத்துவிடுகிருர்கள்.
காளமேகம் உண்ட இலைக் கறி
நகைச்சுவை ததும்பப் பாடல் பாடுவதில் வல்லவர் காளமேகம். தனக்குக் கிடைத்த இன்னெரு விருந்துபற்றி மிகவும் நகைச் சுவையாகப் பாடியிருக்கிருர் காளமேகம்.
உப்பிட்ட வரை உள் அளவும் நினைக்க வேண்டும் என் பதற்காக, வெறும் உப்பை உண்ணக் கொடுத்தவர்களையும் நன்றியோடு நினைவு கூரத்தான் வேண்டுமா.
ஒரு மூதாட்டி காளமேகத்திற்குச் சாப்பாடு கொடுத் தார். இலைக்கறியோடு சோறு, ஒளவையாருக்கு அங்கவை, சங்கவை கொடுத்தது போல ‘நெய்தான் அளாவி நிறம் பசந்த' கீரைக் கறிபோல அல்ல அந்தக் கறி.
அதிகமான நீரைவிட்டு நீளக் குளம்பாக, முழு நீளக் குளம்பாக இலைக்கறியை ஆக்கியிருந்தார். நன்முகக்

அகளங்கன் 09
காய்ந்த புளியையும் அளவுக்கதிகமாகப் போட்டுப் புளிப்பாக் கிய இலைக்கறி அது.
கறிதான் அப்படி என்ருல் சோறு பற்றிச் சொல்லவே வேண்டாம். சோறும் அதனுடன் கலந்திருக்கும் கல்லும், சோற்றினுள் கல்லா, கல்லினுள் சோரு என்று கண்டு பிடிக்க முடியாதபடி 'நன்ருதக் கலந்திருந்தனவாம்.
நீச்சாற் பெருத்திடு
காவேரிஆற்றை நிலைநிறுத்திச் சாய்ச்சாள். இலைக்கறிச்
சாற்றையெல்லாம், அதுதானுமன்றிக் காய்ச்சாப் புளியும்நற்
கல்லுடன்சோறும் கலந்துவைத்த ஆச்சாளை நான்மறவேன்.
மறந்தால்மனம் ஆற்றிடுமோ.
பெருகி ஒடும் காவேரி ஆற்றை அனை போட்டுத் தடுத்து நிறுத்தி, அதனைச் சாய்த்துக் கொண்டு வந்து இலைக்கறிச் சட்டிக்குள் விட்டாளாம், அந்த மூதாட்டி,
(ஆடு மாடுகளைத்தான் சாய்த்துப் பட்டிக்குக் கொண்டு செல்வதாகக் கேள்விப்பட்டிருக்கிருேம்.) அதிகமான நீரைச் சேர்த்துக் கறிசமைத்தாள் என்று கூறுவதற்காக, காளமேகம், பெருகிவந்த காவேரி ஆற்றை அப்படியே சாய்த்து வந்து சட்டிக்குள் விட்டாள், அந்த ஆச்சாள்; என்று கூறுவது எவ்வளவு நகைச் சுவையாக இருக்கிறது.
*உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே " என்ற மணிமேகலைக் கருத்துக்கு ஏற்பத் தங்களுக்கு உணவு கொடுத்தவர்களை, உயிர் கொடுத்தவர்களாக, உணர்வு கொடுத்தவர்களாகப் புலவர்கள் போற்றிப் பாடியிருக்கி ருர்கள். -

Page 69
இலக்கியத் தேறல்
புவவர்கள் தங்கள் புலமையினுள் இன்றும் வாழ்ந்து கொண்டே இருக்கிறர்கள். புலவர்களேப் புரந்த புரவலர்க ஞர், புலவர்களின் கவிதைகளில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிருர்கள், ஆம். உப்பிட்டவர்கள், உள் அளவும்: றிஃத்து திற்கிருர்கள்.
(நன்றி. தினகரன் 20-7-1986
量
戟 , , ,
t , TT i it is "... "

1.
பாரதியும் பாரதமும்
ாேலத்தால் அள்ளுண்ட கவிஞர்களின் தொகை கணக்கில் அடங்காது. காலத்தை வென்ற கவிஞர்கள் சிலர்தான், இன்றும் ஞாத்தில் நிலைத்து நிற்கின்றனர். அவர்களுள் பாரதிக்குத் தனியானதும் தனித்துவமான: மான ஓர் நீஃலயான இடம் உண்டு.
அதற்குக் காரணம் பாரதியின் எளிய நடையும், இலகு வான சொற்பிரயோகமும், உணர்வு பூர்வமான இயல் பாகவே அமைத்த கவிதா வேகமுந் தான், என்று கூற siாம். பாரதியை நின்று நிலக்கச் செய் தி முக்கியப்ான் பாடல்கள், அவர் பாடிய சுதந்திர - விடுதலேப் Lrti;3:rr.
தனது firl நிகழ்வுகளை, தானும் பங்குகொண்ட விடுதலைப் போராட்டச் சம்பவங்களே மிகவும் ஆழமாகப் பாடி இருக்கின்றர் பாரதியார். சம்பவங்களிலிருந்து தனித் தொதுங்கி நின்று, வெறும் பார்வையாளனுக நின்று கொண்டு கவிதை பாடியவனல்லப் பாரதி தானும் ஈரி பட்டு, மற்றவர்கள்ேயும் ஈடுபடத்துண்டியவன். பார தி. பாரதியின் காலத்தில் பாரதியின் பாடல்கள், உணர்ச்சிப் பாடல்களாகவும்: சமுதாய, அரசியல்-விடுதலை, எழுச் சிப் பாடல்களாகவும் மிளிர்ந்தன.

Page 70
12 இலக்கியத் தேறல்
ஒரு காவியம் என்ற வகையில் பாஞ்சாலி சபதத்தின் சிறப்பு வியந்து போற்றுதற் குரியதுதான். அது ஒரு காலத் தால் அழியாத காவியம். ஆனல் பயன்பாட்டைப் பொறுத்த வரையிலும், சமுதாய மாற்றச் சிந்தனைகளைப் பொறுத்த வரையிலும், பாரதியின் சுதந்திரப் பாடல்கள், தமிழிலக் கியப் பரப்பிலே ஈடு, இணை இல்லாத பெருஞ் சிறப்பைப் பெற்றிருக்கின்றன.
பாரதி பாஞ்சாலி சபதம் பாடிய நோக்கங்கூட, பாரதக் கதையினைக் கூறுவதல்ல. தெரிந்த பாரதக் கதையூடாக மக்களுக்குச் சில சிந்தனைகளை ஏற்படுத்துவதேயாகும். ஆட்சி யாளர்களின் கெடுபிடிகள் அதிகரித்திருந்த காலத்தில், நேரடியாக மக்களுக்கு உணர்வூட்டுங் கவிதைகளைப் பாட முடியாத நேரத்தில், மறைமுகமாக விடுதலை வேட்கையை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் பாடப்பட்டதே பாஞ், சாலி சபதம். -
பாஞ்சாலி சபதம் என்பது பாரத நாட்டின் சபதம். அதாவது பாரத மக்களின் சபதம். பாஞ்சாலி சபதத்தில் வரும் பாஞ்சாலி இந்தியாவாக உருவகிக்கப்படுகிருள். அவ ளைப் பணயம் வைத்துத் தோற்ற பாண்டவர்கள் இந்தியத் தலைவர்களாகவும், துரியோதனன், துச்சாதனன் முதலியோர் பிரித்தானியஏகாதிபத்தியவாதிகளாகவும் பாரதியால் மறை முகமாக வெளிக் காட்டப்படுகின்றனர். அந்தப் பின்ன ணியை வைத்துக்கொண்டுதான் பாரதி பாஞ்சாலி சபதம் பாடினுர் .
அவரின் உண்மை நோக்கம் பாரதத்தின் அடிமை நிலை பையும், ஏகாதிபத்தியவாதிகளின் எண்ணத்தையும், இத்தி யத் தலைவர்களின் போக்கையும், மக்களின் செயலற்ற தன் மையைபும் வெளிக்காட்டுவதே. அதனல் பாஞ்சாலி சபத் மும் விடுதலைப் பாடல்களுக்குள்ளேயே அடங்க வேண்டியது" தான.

அகளங்கன் 113
பாஞ்சாலி சபதத்தின் மூலமாக விடுதலை சம்பந்தமான பிரச்சனைகளை, எப்படிப் பாரதி பாடுகிறன் எனப் பார்ப், போம்.
நெட்டை மரங்கள்
பாரத நாட்டு மக்களையும், அஸ்தினபுரத்து மக்களையும் எப்படிப் பாரதி ஒப்பிடுகிருன் பாருங்கள். தருமனுல் பணயம் வைக்கப்பட்டுத் தோற்கப்பட்ட பாஞ்சாலியைத் தெருவிலே இழுத்து வருகிருன் துச்சாதனன். அதனைப் பார்த்து நின்ற மக்களைக் கண்முன்னே காட்டுகிறர் பாரதி
l: 1777.
கக்கக்க என்று கனத்தே பெருமூட்ன் பக்கத்தில் வந்தேயப் பாஞ்சாலி கூந்தலினக் கையினுற் பற்றிக் கரகரெனத் தானிழுத்தான். ஐயகோ! என்றே அலறி உணர்வற்றுப் பாண்டவர்தந் தேவியவள் பாதி உயிர் கொண்டுவர நீண்ட கருங்குழலே நீசன் கரம்பற்றி முன்னிழுத்துச் சென்றன். வழிநெடுக மொய்த்தவராய் “என்ன கொடுமையிது” என்று பார்த்திருந்தார். ஊரவர்தங் கீழ்மை உரைக்குந் தரமாமோ! வீரமிலா நாய்கள். விலங்காம் இளவரசன் தன்னை மிதித்துத் தராதலத்திற் போக்கியே பொன்னே அவள் அந்தப் புரத்தினிலே சேர்க்காமல் நெட்டை மரங்கவொன நின்று புலம்பினும் பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ.
பாஞ்சாலியை இழுத்துக் கொண்டு வந்த துச்சாதன இனப் பார்த்துக் கொண்டிருந்த மக்களை மிகவும் மோசமாக
ஏசுகிருர் பாரதியார். "வீரமிலா நாய்கள்' என்று திட்டு, έδαφff. விலங்கு போன்ற இளவரசனுன துச்சாதனனை
மிதித்துக் கொன்றுவிட்டுத் திரெளபதியைக் கொண்டுபோய்
இ. 15

Page 71
இலக்கியத் தேறல்
அவளது அந்தப்புரத்திலே சேர்க்காமல், நெட்டை மரங் கிள்போல நின்று பெட்டைப் புலம்பல் புலம்பினுர்கள் மக்கள் என்று கோபிக்கிருர் பாரதியார்.
பாரத நாட்டின் அடிமை நிஃயைப் பார்த்துக் கொண்டு வெறும் பார்வையாளராக இருந்த மக்களே இக்காட்சி மூலம் காட்டுகிருர் பாரதியார்.
ஒற்றுமை உணர்வு
போராளிகளின் ஒற்றுமையே விடுதலேயைப் பெற்றுத் தரப் பெரிதும் உதவக் கூடியது என்பதையும், அந்நிய ஆட்சியாளர் எப்படிப் போராளிகளேச் சந்தர்ப்பம் பார்த்துப் பிரித்து வைக்கச் சூழ்ச்சி செய்வார்கள் என்பதையும், பாரதி இன்னுெரு காட்சி மூலந் தெளிவாகக் காட்டுகிருர்,
- தருமன் சகுனியோடு சூதாடும் போது சொத்துக்கள் அஃனத்தையும் இழந்தபின் தனது சகோதரர்களான நகு லன், சகாதேவன் ஆகிய இருவரையும் பணயம் வைத்துச் சூதாடித் தோற்றுவிடுகிறன்.
அப்போது சகுனி "நகுலனும், சகாதேவனும், உனது தாயான குந்திதேவியின் பின்ஃளகளில்லேயே. அவர்கள் உனது சிற்றன்னேயான மாத்திரிதேவியின் பிள்ளேகள் தானே. அதனுல்தான் அவர்களேப் பணயம் வைத்து ஆடி (ணுய். உனது சொந்தச் சகேதரர்களான, ஒருதாய் வயிற் றுச் சகோதரர்களான, வீமன். அருச்சுனன் ஆகியோரைப் பணயம் வைத்துச் சூதாடவுஞ் சம்மதிப்பாயோ?" என்று தருமனிடங் கேட்கிருன்.
பஞ்ச பாண்டவர்களிடையே ஒற்றுமையைக் குளிேத்து, குழப்பத்தை உண்டாக்குவதற்கான முயற்சியைச் சகுனரி மேற்கொள்கிருன் ஒரு குழுவினரிடையே அவர்களுக் குள்ளே உள்ள சமூக உறவைக் கூறிக் காட்டிக் குழப்பம் விளேவிக்குந் தன்மையை பிரிக்கப் பார்க்குஞ் சூழ்ச்சியை இதன் மூலங் காட்டுகிருர் பாரதியார்.

அகTங்கின் II 5
உடனே தருமன் மிகுந்த கோபத்தோடு பதில் சொல் கிருள்.
எங்களில் ஒற்றுமை தீர்ந்தி டோம் - ஐவர்
எண்ணத்தில் ஆவியில் ஒன்றுகாண் - இவர்
பங்கமுற்றே பிரி வெய்துவார் - என்று
பாதகச் சிந்தனே கொள்கிருய்.
எண்ணத்திலுஞ் செயலிலும் ஒன்ருக, உயிருக்குயிராக ஒற்றுமைப்பட்ட பாண்டவர்கஃனப் பிரிப்பதற்குச் சகுனி மேற்கொண்ட சூழ்ச்சி தருமனிடம் பனிக்கவில்லே என்று கூறுகிருர் பாரதியார், அடிமைப்படுத்த நினேப்போரின் լ հlմl:ք:մ է சூழ்ச்சியிஜனச் சது ஒளியின் வாய்மூலமாகவும் , ஒன்று பட்ட மக்களின் உணர்ச்சிக் குரலினோத் தருமனின் வாயிலா கவுத் தருகிறன் பாரதி.
s? I'll, si)
பின்பு திரெளபதியையுந் தருமன் தோற்றுவிட்டான். பாதர்கள் சபைக்குப் பாஞ்சாலி இழுத்து வரப்பட்டுவிட் டான். அந்த நிலையைக்கண்டு மனம் பொறுக்காத வீமன் திரெளபதியைப் பாையம் வைத்துச் சூதாடிய தருமனின் கைகளே எரித்து விடுவேன் என்று அரசுகிருன்.
இது பொறுப்பதில் -- தம்பி
எரிதழல் கொண்டுவா
கதினா வைத்திழந்தான் -- 7ண்ணன்
கையை எரித்திடுவோம்:
'அண்னன் கொடு: செய்துவிட்டான். அதனுல் அவ வது கையை எரிப்போ வா தம்பி’ என்று வீமன் #AT தேவனிடத்தில் கூறுகிரன். தருமனேடு தான் மட்டும் மாறுபடாது, சகாதேவனே யுந் தனது பக்கத்தில் சேர்த்துக் கோண்டு "எரித்திடுவோம்" என்று பன்மையில், வீமன் கூறுவது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. சகுனியின் சூழ்ச்சிப்

Page 72
இலக்கியத் தேறல்
படி பாண்டவர்கள் இரண்டாகப் பிரிய வாய்ப்பு ஏற்படு வதுபோல இருக்கிறது வீமனின் பேச்சு.
அதே வேளையில் தங்களிடையே உள்ள பிரச்சினைகளை, எதிரிகள் மத்தியில் எதிரிகள் மகிழும்படி வெளிக்காட்டிக் கொள்வது விடுதலைப் போரினைப் பெரும் பாதிப்புக்கும் , பின்னடைவுக்கும் உள்ளாக்கும் என்பதனை உணர்த்தும் பாத்திரமாக அருச்சுனனைப் படைக்கிருர் பாரதியார்.
மனமாரச் சொன்னுயோ? வீமா! என்ன
வார்த்தை சொன்னுய்? எங்குசொன்னுய்?
யாவர்முன்னே.
* மனமாரச் சொன்னயோ " என்று பாரதி பயன் படுத்தும் வார்த்தைகளும் ' எங்கு சொன்னுய், யாவர் முன்னே ‘’ என்ற வார்த்தைகளும் மிகவும் பெறுமதி வாய்ந்த வார்த்தைகள்.
எதிரிகளின் மத்தியில் அவர்களின் சூழ்ச்சிக்குப் பலி
-யானதாகக் காட்டும் வீமனின் கோபமும், அதனைச் சாந்
தப்படுத்தும் அருச்சுனனின் சாமர்த்தியமும், மிகமிக யதார்த்தமான வார்த்தைகளே.
பாரதியின் பாஞ்சாலி சபதம், மறைமுகமான விடுதலை உணர்ச்சிக் காவியமே. பாரதி பாரதம் பாடிய நோக்கம் பாரதக் கதையைக் கூறுவதல்ல. பாரத நாட்டை, அதன் அன்றைய நிலையைப் பாடுவதே.
** தர்மத்தின் வாழ்வுதனைச் சூதுகஷ்வும். தர்மம் மறுபடி வெல்லும் ' என்ற தத்துவத்தை அருச்சுனன் வாயால் சொல்ல வைத்து, மன உறுதியும் ஒற்றுமையுங் கொண்டவர்களால் நடாத்தப்படுந் தர்மப் போராட்டம் நிச்சயம் வெற்றி பெற்றே தீரும் என்பதை வலியுறுத்து கிருர் பாரதியார்.

திரைப்பாடல்களில் மரபிலக்கியச் செழுமை
வானெலியைத் திறந்தால் அங்கே சினிமாப் பாடல் களின் ஆக்கிரமிப்பே எப்பொழுதும் நீக்கமற நிறைந்துள் ளதை அவதானிக்கக் கூடியதாக இருக்கும். பலருக்கு வெறும் பொழுது போக்காகத் திரைப்படப் பாடல்கள் இருந்தபோதும், சிலருக்குச் சிலவித சிந்தனைகளைத் தூண்டுந் தூண்டு கோலாகவும், சினிமாப் பாடல்கள் அமைகின்றன.
சில சினிமாப் பாடல்கள் எனது செவிகளில் "தேன் வந்து பாய்வது' போல் அமைந்திருப்பதைப் பல தடவை களும் உணர்ந்திருக்கின்றேன். அதற்குக் காரணம், அத்த கைய பாடல்களில் பழந்தமிழ் இலக்கிய வரிகளோ, அல்லது சிந்தனைகளோ, காட்சிகளோ இருப்பதுதான்.
பழந்தமிழ் இலக்கியச் சிந்தனைகளை எளிய வடிவில்
இசையுருவிற்கேற்பப் பாடலாக்கிச் சினிமாவில் ஒலிக்கச்
செய்தவர்களில் முதன்மை வாய்ந்தவர், மறைந்த கவியரசர் கண்ணதாசன் என்பது மிகைக் கூற்றல்ல.

Page 73
118 இலக்கியத் தேறல்
கண்ணதாசன் மட்டுமன்றி ஏனைய பல பாடலாசிரி யர்களும் இலக்கியச் சிந்தனைகளை, சினிமாப் பாடல்களில் புகுத்தியிருப்பது பலருங் கண்டு, அனுபவிக்கக் கூடிய இரசனை மிகுந்த விடயமாகும்.
கவியரசர் கண்ணதாசனும் கலிங்கத்துப் பரணியும்
க்வியரசரின் காதற் பாடல்களில், பல பாடல்கள் கலிங்கத்துப் பரணியில் இடம்பெற்றுள்ள சிந்தனைகளின் எளிமைப்படுத்தப்பட்ட வடிவங்களாக இருப்பதைக் காண லாம்.
** இரவுக்கும் பகலுக்கும் இனிஎன்ன வேலை" என்று தொடங்குங் கவியரசரின் காதற் பாடலொன்றில் ஒரு வரி *ஆட்ை இதுவென நிலவின எடுக்கும் ஆனந்த மயக்கம்' என வருகிறது. இதே கற்பனையை, கவிச் சக்கரவர்த்தி யெனப் பட்டம் பெற்றவர்களில் ஒருவரான சயங்கொண் டார், தமது கலிங்கத்துப் பரணியிலே இப்படிப் பாடியிருக்கிருர். f
கலவிக் களியின் மயக்கத்தால்
கலை போய் அகலக் கலைமதியின் நிலவைத் துகிலென் றெடுத்துடுப்பீர்
நீள்பொற் கபாடம் திறமினுே.
தலைவனுந் தலைவியுங் கூடுகின்றனர். தலைவி நிலவு போன்ற மிகமெல்லிய சேலையை உடுத்திருக்கிருள். கூடல் முடிந்ததும் உடுப்பதற்குச் சேலையைத் தேடுகிமுள் தலைவி. கலவிக் களியின் மயக்கத்தால் (கலவி - கூடல்) அவளுக்குச் சேலேக்கும், நிலவுக்கும், வேற்றுமை தெரியவில்லை. நில வையே துகிலாக (சேலையாக) எடுத்து உடுக்கிருள் என்பது இக்கவிஞரின் கற்பனை. நிலவுபோன்ற ஒளிவீசும் மிக மெல்லிய ஆடையை அக்காலத்துப் பெண்கள் அணிந்தனர் என்பது இதிலிருந்து தெரிகிறது.

அகளங்கன் 119
இதே கற்பனையை இவரின் பின் வந்த அதிவீரராம பாண்டியன் என்ற அரசன், தனது நைடதம் என்ற நூலிலும் பயன்படுத்தி இருக்கிருர், நளவெண்பாவைப் புகழேந்திப் புலவர் பாட, நளனின் கதையை நைடதம் என்ற பெயரில் அதிவீரராம பாண்டியன் என்ற பாண்டிய அரசன் பாடி னன். இவனே வெற்றிவேற்கை என்ற நீதி நூலையும் பாடினன் என்பர் தமிழறிஞர். நைடதத்தில் வரும் இதே கற்பனைப் பாடல் இது.
புலவி நீக்கிப் புணர்முலை மாதர்தம் நிலவு பூந்துகில் ஆடவர் நீக்கலும் நலம் விளைத்தனர் நாணி வெண்திங்களின் கலேயை மெல்லக் கலையெனச் சேர்த்துவார்.
புலவி என்ருல் ஊடல். ஊடலை விடுத்துக் கணவனுடன் கூடல் விளேக்கிருள் தலைவி. நிலவு போன்ற பூந்துகிலைத் தலைவன் நீக்குகிமூன். அவளோ நாணங் கொண்டு வெண் ணிலவின் கலையைத் தனது கலையென (சேலையென) எடுத்து உடுக்கிருள்.
சயங்கொண்டாரின் கற்பனையையும், அதிவீரராம பாண்டியனின் அதே கற்பனையின் இன்னுெரு வடிவத்தை யும் ரசித்து அனுபவித்த எம் போன்ருேர்க்குக் கவியரசரின் **ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம் " என்ற வரிகள் மிகவும் நயமான வரிகளாகத் தென்படுவ தில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்.
கே. சி. எஸ். அருணசலமும்
சயங்கொண்டாரும் கே. சி. எஸ். அரு ண சலம் என்ற கவிஞரின் ஒரு பாடல் திரைப் படத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
* சின்னச் சின்ன மூக்குத்தியாம்' என்று தொடங்குகிறது அப்பாடல். இக்கவிஞரின் அப்பாடலிலே ஒரு வரி, காதலன்

Page 74
720 இலக்கியத் தேறல்
காதலியை வர்ணிப்பதோடு, தனது மன நிலையையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
‘அள்ளிச் சொருகிய கொண்டையிலே - எந்தன்
ஆவி சிறையுண் டிருக்குதடி"
என்று அந்தப் பாடலிலே ஒரு கற்பனை வருகிறது. காதலியின் அள்ளி முடித்த கொண்டைக்குள்ளே தனது ஆவி சிறைப்பட்டிருப்பதாகவும், அதனல், தான் அவளது கொண்டையைப் போலவே எப்போதும் அவள் பின்னு லேயே அலைவதாகவும், காதலன் பாடுவதாகப் பாடுகிருf கவிஞர்.
இதே கற்பனையை, கலிங்கத்துப் பரணியிலே வெகு அழகாகச் சொல்லியிருக்கின்ருர் சயங்கொண்டார்.
முருகிற் சிவந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் குழன்மடவீர்
செம் பொற் கபாடம் திறமினுே.
வாசனை மிகுந்த செங்கழு நீர்ப் பூவோடு, முதிராத வாலைப் பருவத்து இளைஞர்களின் உயிரையும் சேர்த்துக் கூந் தலிலே வைத்து முடித்துக் கொண்டு செல்கின்றனராம் பெண்கள். இதே கற்பனையை இன்னெரு பாடலிலும் சொல்லியிருக்கிறர் சயங்கொண்டார்.
செக்கச் சிவந்த கழுநீரும்
செகத்தில் இளைஞ ராருயிரும் ஒக்கப் பெருகும் குழல்மடவீர்
உம்பொற் கபாடந் திறமினே.
ஆலங்குடி சோமுவும், நளவெண்பாவும்.
"வெண்பாவிற் புகழேந்தி' எனப் புலவர்களால் பெரிதும் பாராட்டப்பட்டவர் புகழேந்திப் புலவர். இவர்

அகளங்கன் 19
நளனது கதையை அழகான வெண்பாக்களால், அருமை யாகப் பாடியிருக்கிருர், நளவெண்பாவிலே 1 pirahul பொழுதை வர்ணித்து இவர் பாடிய ஒரு பாடல் அக் காலத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருந்ததாம்.
மல்லிகையே வெண்சங்காய் வண்டுத வான்கருப்பு வில்லி கணைதெரிந்து மெய்காப்ப - முல்லையெனும் மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே புன்மாலே அந்திப் பொழுது.
இதுதான் அந்தப் பாடல். மல்லிகை மலரிலே வண்டு தேன்குடித்து ஊதுகின்றது. இது சங்கிலே ஊதுவதைப்போல இருக்கிறது. என்று பாடுகிறர் கவிஞர். ** மல்லிகையே வெண்சங்காய் வண்டுத’ என்பது இதனைக் குறிக்கிறது.
இந்த உவமானம் பிழையானது என்று குற்றஞ்சாட்டி ஞராம் ஒட்டக் கூத்தர். காரணம், சங்கிலே ஊதுவது பின்பக்கம். ஆனல் மல்லிகை மலரிலே வண்டு மதுவுண்டு ஊதுவது முன்பக்கம். அதனுல் உவமானம் பொருத்தமற் றது என்று குறைகண்டு பிடித்தாராம் ஒட்டக்கூத்தர்.
இந்த நேரத்திலே சபையில் இருந்த கவிச் சக்கரவர்த்தி கம்பர், வேடிக்கையான ஒரு விளக்கத்தைக் கூறிச் சர்ச்சை யைத் தீர்த்து வைத்தாராம். வண்டு மல்லிகையிலே தேனே நன்ருகக் குடித்து வெறி ஏறிய நிலையில், மதுபோதையில் முன்பக்கம், பின்பக்கம், பேதந் தெரியாமல் பின்பக்கமாக வும் ஊதுகிறது. அந்தக் காட்சிதான் புகழேந்தி சங்கோடு ஒப்பிட்ட, உவமித்த காட்சி என்று கூறினராம். இந்தக் கதை விநோதரச மஞ்சரி என்ற நூலிலே இடம்பெற்றி ருக்கிறது.
கவிஞர் ஆலங்குடி சோமு இந்தப் பாடலின் ஞாபக மாக ஒரு பாடலை எழுதியிருந்தார். நல்ல இசையோடு இப்பாடல் வெளியாகியது.
g). 16

Page 75
இலக்கியத் தேறல்
மல்லிகை மொட்டுச் சங்கெடுத்துச் சங்கெடுத்து - வண்டு மங்கல இசை பாடுதம்மா பாடுதம்மா.
அங்கே " மல்லிகையே வெண்சங்காய் ' என வருவது இங்கே "மல்லிகை மொட்டுச் சங்கெடுத்து' என வருகிறது. மல்லிகை மொட்டு, மல்லிகை மலரைவிடர் சங்கோடு ஒப் பிட்டு உவமிக்கிக் கூடியதாக இருக்கும் நயம் ரசிக்கத்தக்கது தானே.
கண்ணதாசனும், நளவெண்பாவும்.
கவியரசர் கண்ணதாசன், நளவெண்பாவிலே உள்ள ஒரு பாடலே வெகு அழகாக எளிய வடிவத்தில் எழுதியி ருப்பதை இங்கு பார்ப்போம். " நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்" எனத் தொடங்குகிறது அப் பாடல். அப்பாடலில் வரும் ஒரு கற்பண் இது.
பொன் வண்டொன்று மலரென்று
முகத்தோடு மோத - நான் வளே கொண்ட் நையாலே
மெதுவாக tւք ւ- -
வண்டு தஃவியின் முகத்தை மலர் என்று நினேத்து மொய்க்கத்தொடங்கிவிட்டது. அவள் கைகளால் முகததை மூடி வண்டைக் கலைக்கிருள். இது நளவெண்பாவிலே புகழேந்திப் புலவரின் கற்பனையின் பாதி வடிவமே,
புகழேந்தி நளவெண்பாவிலே ஒரு மலர் வனத்தைப் பாடுகிருன். அந்த மலர் வனத்திலே 'ஒரு பெண், நின்று கைகளால் வண்டுகளைக் கலேத்துக் கஃளத்து வேர்த்துவிடு கிருள். பூஞ்சோலேயில் பூக்கொப்ய வந்த டெண்ணின் முகத்தை அழகிய தாமரை மலர்'என்று நினைத்து ஏமாந்த வண்டுகள், முகத்திவே மொய்க்கின்றன. அவளோ தனது

அகளங்கன் | 35
கைகள ல் வண்டுகளேக் கலேக்கிருள். வண்டுகளோ இப் போது முகத்தைவிட்டுக் கைகளிலே மொய்க்கத் தொடங்கி விடுகின்றன. ஏனெனில் முகத்தைத் தாமரை என்று ஏமாந்த அதே வண்டுகள், கைகளேக் காந்தள் மலரென்று ஏமாந்து மொய்க்கின்றன. அவளோ கலேத்துக் கஃளத்து வேர்க்கிருள்.
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தைப் பங்கபம் என்றெண்ணிப் படிவ:ண்டைச் - பெங்கையால்க் காத்தாள்.அக், கைமலாரக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தாளேக் கானென் ருர் வேந்து,
தமயந்திக்கு நளன் இக்காட்சியைக் காட்டுவதாக ந:வெண்பாவிலே வருகிறது இப்பாடல்,
புகழேந்திப் புலவரின் இந்தக் கற்பனேக்கு ஆதாரமாக, சேக்ார் பெருமான் பெரியபுராணத்தில் TIJ ፵üü பாடல் இருந்திருக்கலாம் போல் தோன்றுகிறது. வயலிலே களே பிடுங்கும் பெண்கள் தமது கூந்தலிலே செங்குவளே மலர்கஃாப் பிடுங்கி அணிந்து கொள்கிடூர்களாம். கூந்து லிலே மலரைக் கண்ட வண்டுகள் பறந்து வந்து கூந்தலிலே மொய்க்கின்றன. வண்டுகளேத் தமது மலர்போன்ற கைகளை அசைத்துக் கஃக்கின்றனர் பெண்கள். பெண்களின் கை அசைவைக் கண்டு பக்கத்திலுள்ள வண்டுகள் எல்லாம் காந்தள் மலர்கள் அசைந்தாடுகின்றன என எண்ணி ஏராளமாக வந்து கைகளிலே பொய்க்கத் தொடங்கிவிடு கின்றன்.
செங்குவளே பறித்தனி வார்;
கருங்குழல்மேல் விதை வண்டை அங்கைமலர் களக்கொடுகைத்
தயல்வண்டும் வரவழைப்பார்.
கைகள் வண்டுகளைக் கலேக்கவில்லே, அழைக்கின்றன, எனச் சேக்கிழார் பெருமான் பாடிய கற்பனேயே புகழேந் நிக்கு உந்தலாக இருந்திருக்கலாம் போல் தோன்றுகிறது.

Page 76
இலக்கியத் தேறல்
இப்பாடல்களின் அரைவாசிக் கற்பனையை வைத்துக் கவியரசர் எழுதிய பாடல்தான் 'பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத" என்ற பாடலாகும்.
கவிச் சக்கரவர்த்தியும், கம்பரும்.
கவிச் சக்கரவர்த்தி கம்பரின் இராமாயணப் பாடல் கவில் சில, கவியரசு கண்ணதாசனின் இத்தகைய முயற்சி யில் சிக்கி இருக்கின்றன. கம்பனின் கவிதைச் சிறப்பால் ஏற்பட்ட தாக்கம், கவிஞர்கள் பலரையும் பாதித்தது உண்மைதான். கம்பனுக்குப் பின் காவியம் பாடியவர்கள் பலர் கம்பனின் கற்பனைகளேத் தாமும் பாடியிருப்பது மறுக்க முடியாத உண்மை.
கவியரசர் கண்ணதாசன் தாமே விரும்பிப் பழைய பாடல்கள் பலவற்றிற்குப் புதிய வடிவம் கொடுத்திருக்கிருர் . அதன்ே ஒப்புக் கொள்வதில் அவர் வெட்கமடையவில்லே. * " நல்லவர்க் கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ' என்று தொடங்கும் கண்ணதாசனின் பாடவில் வரும் அடிகள்
இவை.
"நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
நதி செய்த குற்றம் இல்லே
விதிசெய்த குற்றம் இன்றி
வேறு பாரம்மா"
இதே கருத்து இதே வகையில் கம்பனின் பாடலொன் றிலே வருகிறது. இராமன் காட்டுக்குச் செல்லவேண்டும், பரதன் நாடாள வேண்டும் என்று கைகேயி வரங் கேட்க, அத&னத் தசரதன் கொடுக்கிருன். இதனைப் பொறுத்துக் கொள்ளாத லக்சுமணன் வில்லும் கையுமாய், யுத்த சன் னத்தனுசு வீதியில் நின்று ஆர்ப்பரிக்கிருன், 'உலகே திரண்டு

அகளங்கன்
வந்து எதிர்த்தாலும் அவற்றை யெல்லாம் அழித்து, அண் ணன் இராமனுக்கு அரசாட்சியை அளிப்பேன் என்று குரு Eரத்து நிற்கிருன்." தந்தையான தசரதனேயும். பெரிய தாயாகிய கைகேகியையும், சகோதரனுன பரதனேயும். கடும் வார்த்தைகளால் ஏசவும் அவன் தயங்கவில்ஃ.
அவனது கோபத்தை அடக்கிச் சாந்தப்படுத்துகிரீன் இராமன். இந்த இடத்தில் வரும் ஒரு தத்துவார்த்திமான அழகான பாடல் இது.
நதியின் பிழையன்று
நறும்புனலின்மை; அற்றே பதியின் பிழையன்று.
பயந்து நமைப் புரந்தாள் ாதியின் பிழையன்று.
மகன் பிழையன்று மைந்த விதியின் பிழை; நீ
இதற்கென்னே வெகுண்டதென்றன்.
* நதியின் பிழையன்று நறும் புனலின்மை " என்ற வரியும், 'விதியின் பிழை" என்று வரும் வரியும், கவியர சரின் பாடலில் அதே கருத்தில் வருவதைக் காணலாம். நதிவெள்ளம் காய்ந்து விட்டால் நதிசெய்த குற்றம் இல்லே. விதி செய்த குற்றம்' என்று வருவதை நோக்குக.
குற்றுலக் குறவஞ்சியும், |
ம், கண்ணதாசனு
கவிஞர் கண்ணதாசனின் ஒருபாடல் குற்ருலக் குதி வஞ்சிப் பாடல் ஒன்றை அப்படியே நினைவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது. பாடலின் தொடக்கமும் அப்படியே இருப்பது இங்கு நோக்கத்தக்கது.

Page 77
26 இலக்கியத் தேறல்
ஆட்க் காண்பது காவிரி வெள்ளம்.
அசையக் காண்பது கன்னியர் உள்ளம். ஒடக் காண்பது பருவத்துக் காற்று.
உயரக் காண்பது காதலின் நாற்று.
எதுகை, இயைபு ஆகிய தொடையமைதிகள் பொருத்த எழுதப்பட்ட பாடல் இது. திரிகூட ராசப்பக் கவிராயர்" பாடிய குற்ருலக் குறவஞ்சி பழந்தமிழ் இலக்கியமல்ல. பிற். காலத்ததுதான். ஆனல் தரத்திலும், கவி இனிமையிலும் அது பழந்தமிழ் இலக்கியங்களுக்கு நிகரானது. நல்ல சந் தங்களும் சொல் வளமும் நிரம்பப்பெற்ற அந்தக் குற்றலக் குறவஞ்சியில் கண்ணதாசன் எடுத்த பாடலை இங்கு பார்ப் போம்.
ஒடக் காண்பது பூம்புனல் வெள்ளம்.
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம். வாட்க் காண்பது மின்னுர் மருங்கு.
வருந்தக் காண்பது சூலுளேச் சங்கு. போட்க் காண்பது பூமியில் வித்து.
புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து. தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி.
திருக்குற் றலத்தென் ஆரிய நாடே.
இந்தக் குற்ருலக் குறவஞ்சிப் பாடல்கூட இன்னெரு பாடலின் தாக்கத்தால் எழுந்த பாடல்தான். முக்கூடற் பள்ளு என்ற நூலில் வரும் ஒரு பாடல்தான் இப்பாட லுக்கு வழி சமைத்துள்ளது. அப்பாடலை இங்கே காண்போம்.
காயக் கண்டது சூரிய காந்தி.
கலங்கக் கண்டது வெண்தயிர்க் கண்டம் மாயக் கண்ட்து நாழிகை வாரம்.
மறுகக் கண்டது வான்சுழி வெள்ளல். சாயக் கண்டது காய்குலேச் செந்நெல்.
தனிப்பக் கண்ட்து தாபதர் உள்ளம். தேயக் கண்டது உரைத்திடுஞ் சந்தனாம். சீவல மங்கைத் தென்கரை நாடே.

அகளங்கன் I 27
முக்கூடற் பள்ளுப் பாடல், குற்றலக் குறவஞ்சியில்
மெருகேறியதையும், பின்னல் கவியரசர் கண்ணதாசனின்
கையில் சிக்கி இசைவடிவம் பெற்று அந்த இரு பாடல் களையும் நினைவு படுத்துவதையும் இங்கு கண்டோம்.
கவியரசரும், தனிப்பாடல்களும்.
கவியரசர் கண்ணதாசனின் பல பாடல்கள், தனிப் பாடல்களின் தாக்கத்தினுலும், உருவாகியிருக்கின்றன, அப்படி உருவாகிய பாடல்களில் ஒன்று.
கால வருவதற்குள்
கன்னி பலி ஆவதற்குள் காளை மணமுடிக்க
• வருவாரா - இல்லை கன்றும் குடிக்காமல்
கலத்திலும் நிறையாமல் கவிழ்ந்த பாலாக
விடுவாரா.
என்ற பாடலில் "க ன் றும் குடிக்காமல் கலத்தி லும் நிறையாமல் கவிழ்ந்த பாலாக’’ என்று வரும் வரிகள் குறுந்தொகையில் வரும் ஒரு கவிதை வரியே.
தனது தலைவனின் பிரிவை எண்ணி ஏங்கும் தலைவி, தனது அழகெல்லாம் தனது கணவன் 'அனுபவிக்காமலேயே ஏக்கத்தால், பசலை நோயினல், அழிகிறதே என்று வருந்து கிருள். தனக்கும் பயனின்றி, தன்னைத் தலைவனிடஞ் செல்.) விடாதிருக்குந்தாய்க்கும் பயனின்றி, பசலை உண்டு அழி கிறதே தனது மாந்தளிர் போன்ற அழகு பொருந்திய மேனி என்று அழுகிருள் தலைவி.
வெள்ளிவீதியார் என்ற புலவர் குறுந்தொகையில் பாடிய பாடல் அது. 'பசுவிலிருந்து பாலைக் கன்று குடிக்க வேண்டும். அல்லது கலத்திலே கறந்து மக்கள். குடிக்க

Page 78
இலக்கியத் தேறல்
வேண்டும். இரண்டும் இல்லாமல் நல்ல சுவையுள்ள பசுப்
பால் நிலத்திலே ஊற்றப்பட்டது போல, அநியாயமாக
வீணுகி அழிகிறதே என் அழகு" என்று அவன்முறுகிமூன் குறுந்தொசுைத் தஃவி,
கன்றும் உண்ணுது கலத்தினும் பட்ாது நல்ஆன் திம்பால் நிலத்து உக்காங்கு எனக்கும் ஆகாது; என்னேக்கும் உதவாது பசலே உண்ணியர் வேண்டும் திதலே அல்குல்என் மாமைக் கவி.ே
இத்தகைய பழந் தமிழ் இலக்கியக் காட்சிகளே மட்டு மின்றி, சில கவிஞர்களின் தனிப் பாடல்கஃாயும் எடுத்து திரைப்படப் பாடலாக்கியிருக்கிருர் கண்ணதாசன் ,
சிதச்காதியும் .E) ம் זהנהיHiT
சிரூப் புராணம் பாடுவதற்கு உமறுப் புலவரைத் ஆண்டி பொருள் கொடுத்து, ஆதரித்தவர் சீதக்காதி என்னும் பெயருடைய ஒரு வள்ளல். தினங் கொடுக்கும் கையையுடைய சீதக் காதியின் கொடையைப் புகீழ்ந்து பல ரும் பல பாடல்கள் பாடியிருக்கின்றனர். சீதக் காதி மறைந்த பின், சீதக் காதியின் கொடைச் சிறப்பை ஒரு புலவர் இப்படிப் பாடினூர்,
காய்ந்து சிவந்தது சூரிய காந்தி.
கலவியிலே
தோய்ந்து சிவந்தது மின்ஞர் நெடுங்கண்.
தொலேவில் பன்னூல்
ஆய்ந்து சிவந்தது பாவாணர் நெஞ்சம்.
அனுதினமும் ஈந்து சிவந்தது மால்சிதக் காதி
இருகரமே,

ஆசனங்ான் 교
இதே பாடலே. கர்ணன் படத்திற்குக் கர்ணனின் கொடைச் சிறப்பைக் கூறக் கண்ணதாசன் பயன்படுத்தினுர் . பாடல் இதே வடிவில் சில செர்ல்மாற்றங்களோடு உரு வாகியிருந்தது. அசஃவிட கண்ணதாசனின் நகல்ப் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. காரணம் இசைகட்டு மன்று. கவி அமைப்பும், கர்ணனின் கொடை பற்றி எல் லோரும் ஏற்கனவே நன்கு தெரிந்திருந்ததும் தான்.
நாணிச் சிவந்தன மாதாார் கண்கள்.
நாடுதோறும்
நடந்து சிவந்தன பாவலர் கால்கள்.
நற்பொருளேத்
தேடிச் சிவந்தது ஞானியர் உள்ளம். தினங் கொடுத்துத்
தேய்ந்து விவந்தது கர்னா மாமன்னன்
திருக்கரமே.
கண்ணதாசனின் பாடலில் பாதர்களின் கண்களும், பாவலர் கால்களும், ஞானியர் உள்ளமும், தேய்ந்த கார னங்களேர் சொல்லி, கர்ன பாான்னனின் கைகள் சிவந் 冯
"T" தற்கும் காரணம் சொல்லப்படுகின்றது.
ஆணுல் சீதக்காதி பற்றிய பாடவில் சூரியகாந்தி காய்ந்து சிவந்தது என்று சொல்வது அவ்வளவாக ஏனேய வற்றேடு ஒத்துப் போகவில்லை. மின்னூர் நெடுங்கண், Lirajst னர் நெஞ்சய் என்பவற்ருேடு சூரியகாந்தி சிவந்த விதம் சம்பந்தப்படவில்லை என்பது குறையே. இக்குறை கண்ண தாசனின் பாடலில் இல்ஃ.
கண்ணதாசன் விட்டுவைக்காதது எதுவுமே இல்லே. எல்லா இலக்கியப் பாடல்களிலும் தொட்டு வைத்துத்தான் (Ti குக்கிருர், திருநாவுகரசரின் தேவாரமான "ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே' என்ற பாடலே அப்படியே தனது
ாடபொன்றுக்கு முதலடியாக்கிருச்.

Page 79
இனக்கியத் தேறல்
திருவாசகத்தில் மாணிக்கவாசகர் பாடிய திருப்பொற் *ண்ணப் பாடல்களில் ஒன்ருன 'முத்தணி கொங்கைகள் ஆட ஆட. . . .' என்ற பாடலே "கட்டோடு குழலாட ஆட" என்ற வகையில் பாடலாக்கினர்.
பட்டினத்தார் பாடல்கள் பல கண்ணதாசனின் தத்து வப் பாடல்களுக்கு வித்தாக இருந்திருக்கின்றன.
மாதா உடல்சலித்தாள் வல்வினேயேன் கால்சலித்தேன் வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா இருப்பையூர் வாழ்சிவனே இன்னுமோர் அன்னே கருப்பையூர் பிராமற் கா.
என்ற பட்டினத்தார் பாடல் அதே கருத்தோடு கவிஞர் கண்ணதாசனுல் திரைப்படப் பாடலாக்கப்பட்டது. "தாய் தந்த பிச்சையிலே பிறந்தேன் அம்மா' என்று தொடங்கு கிறது அப்பாடல்.
பெற்றவள் உடல் சலித்தாள் பேதைநான் கால் சலித்தேன். படைத்தவன் கை சவித்து ஒய்ந்தான் அம்மா - மீண்டும் பாவியொரு தாய்வயிற்றில் பிறவேன் அம்மா.
திருப்புகழும்,
கண்ணதாசனும்.
தமிழில் மிகவும் கடுமையான சந்தங்களேயும், அதிக மான சீர்களேயுங் கொண்டு நித்திப்பான திருப்புகழைப் பாடினுர் அருணகிரிநாதர், அருணகிரி மனமுருகிப் பாடிய திருப்புகழ்ப் பாடல்களில்கூட, தனது திரைப் பாடல்களுக்குப் பாடல் தேடி எடுத்து அதேபோல அமைத்துள்ளார் கவிஞர் கண்ணதாசன். முதலில் அந்தத் திருப்புகழை நோக்கு வோம்.
/S B も 7

gyar III IM JAV ir 卫芒直
ஒhரி நக்கு மேனி பசேல் பசேலென
நூபு ரத்தின் ஒசை கலீர் கலீரென தெர விட்ட தாள்கள் செவேல் செவேலெண் - வருமார்ை செக ரத்தின் வால லோர் சிலோர்களும்
நூறு லட்ச கோடி மயால் மயால்கோடு தேடி ஒக்க வாடி ஐயோ ஐயோவென - மடமாதர் இந்தத் திருப்புகழ் இதே சந்தத்தில் செல்கிறது. இதே பாடலே ஒரு காதல்ப் பாடலாக எழுதியிருக்கிறர் கவிஞர் கண்ணதாசன், ஆசை கொண்ட மனம் அதோ அதோனா
ஆடு இன்த விழி இதோ இதோ என் பேசு கின்ற இதழ் எதோ எதோளன - உருவானேன் வாழை போன்ற உடல் சுகம் சுகம் என
வாசம் வீசும் குழல் வரும் வரும் என வாடிப் போன இடை தரும் தரும்என - கிலேயாரேன் எப்படி இருக்கிறது இந்தப் பாடல். திருப்புகழ்ப் ப71ஜோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது வியப்பாக இல்லோ" பண்டைத்தமிழ் இலக்கியங்கஃாப் படிப்பவர்ளும், ரசிப் பவர்களும், தல்வி கருத்துக்களே ஏற்றுக்கொண்டு கடைப் பிடித்து ஒழுகுவோரும் குறைந்து வருவது இக்காலச் சிறப்பு! இன்றைய இளேஞர்களின் மன உணர்வுக் கேற் ெ rெமாப் பாடல்களே மேற்படி கவிஞர்கள் எழுதி யிருந்தாஜம் அவர்களது உள்ளம் பழந்தமிழ் இலக்கியங் களுக்குள் ஊறித்திக்ளத்திருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
நிகச் சில பாடல்களேயே இங்கே எடுத்து இந்தி முயற்சியைச் செய்திருக்கிறேன். சினிமாப் பாடல்கஃா ரசிக்கும் இன்றைய இஃாஞர்கள் சற்று பழந்தமிழ் இனக் கியங்களிலும் கால்ஊன்றி ஆழங்கண்டு அனுபவித்தால் அது தமிழ் இலக்கியத்திற்கு ஒரு புதுமலர்ச்சியை உண் டாக்குவதாக இருக்கும் என்று கருதுகிறேன்.
(நன்றி. வீரகேசரி 18-3-1984)

Page 80
°২ - ৮০ 1 ܩ உடலின் கதை சொல்வதச உள்ளத்தின் கதை ஒசாப்வ திரைாப்தியின் ஆகிஉேரிப் கதை சொன்று தற்கே, ஓ.ரிந்த க9லகளாகி காக நாப்பியங்களை 3.பாரசனேன்) திவர்தனது படைப்புக்கள்ா: திங்கிலப் பக்தர்களுடன் இ ஐமீை பகிர்ந்து கொல்கினர். சிந்திரன் வாசகர்களின் இ இநீதிச் சிமித்களால் சாங் நீதிக் இவர் நல்ல இலக்கிலச் தாவிரப் பூந்சோலை சீலம் கி
F o
உள்ளத்தில் 2தறிய தினக்கி
బ్లాక్ష్" 3 கிருட்டும் , இஸ்ேேதித்தி உறுகைதரும்
品品
 
 
 

பெங்கண்,
அநrங்கள். 50 பிரசாதத்தை
நீ இலங்கியத்தேரன்
ஐக்கியத்தாகத்தை திசைஃது கொண்டிகி செழுமை மிக்கவர் தாங்கனின் : மேத்தேறல் இது.
நீதிமீ ஆறதிேகடோது.
சூானசுந்தரம். சிரிந்திரன்