கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கதா காலம்

Page 1
|-
|
 


Page 2

கதா காலம்
(மகாபாரதத்தின்மறுவாசிப்ட

Page 3

கதாகாலம்
(மகாபாரதத்தின் மறு வாசிப்பு)
தேவகாந்தன்
காலம் வெளியீடு
ഖിനLങ്ങിങ്ങ്
பூபாலசிங்கம் புத்தகசாலை

Page 4
KATHAA KAALAM
Z1 Rezeading ob Wahabazatham by DEVAKANTHAN
edition
JANUARY 2005.
@ AUTHOR
Published by KALAM 16, HAMPSTEAD COURT ONTARIO L3R 357, CANADA
Sales by POOBALASINGHAM BOOK DEPOT 340, SEA STREET COLOMBO - 13 SRI LANKA
Printed by E-KWALITY GRAPHICS 315, JAMPETTAH STREET, COLOMBO - 13, SRI LANKA. Tel : O094-011 2389848
Price SL RS : 200 00 IND. RS i 150.00 CAN. S : 14.99

உரை - 1
பாரதம் தன் உள்ளும் புறமும் கொண்டுள்ள பிரமாண்டத்தை எண்ணி பலைக்கும் போதுதான் 'மகா என்ற சொல்லின் முழு அர்த்தமும் எமக்குப் பிரத்தியட்சமாகின்றது.
மகாபாரதத்தின் மிக ஆதியான பிரதி இரண்டு இலட்சம் எண்ணிக்கை யில் அமைந்த சமஸ்கிருதச் சுலோகங்களால் ஆனது.
அதன் மிகச் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பு ஏறத்தாள 14000 பக்கங்கள் கொண்டதாக பூரீ ராமானுஜாச்சாரியாரினால் ஆக்கப்பட்டதாகவும் தகவல்கள் உள்ளன.
எவராலும் முழுமையாகப் படித்தறியப்படாத ஒன்றாக விளங்குகின்ற அதேசமயத்தில், ஒவ்வொருவராலும் ஏதோ ஒரு விதத்தில் அறியப்பட்ட தாகவும், அணுகத் தக்கதாகவும் பாரதம் விளங்குகின்ற விந்தையை எண்ணி வியக்கின்றார் எஸ். ராமகிருஷ்ணன். (உபபாண்டவம் - முன்னுரை)
குறுக்கு நெடுக்காக ஈரானில் தொடங்கி பர்மா ஈறாகவும், ஆப்கானிஸ் தானிலிருந்து இலங்கை வரையிலும் பரந்திருந்த பெருநிலப்பரப்பின் வரலாறுகளுள் ஒன்றாக தொகுக்கப்பட்டுள்ள மகாபாரதத்தின் கதைக் களத்தின் மையப் புள்ளிகளுள் முக்கியமானது டில்லி மாநகரம் (இந்திரப் பியஸ்தம்)
குருஷேத்திரப் போர் டில்லிக்கு அருகாமையில் நிகழ்ந்ததாகவே கருதப்படுகின்றது. எனினும், கதாகாலம் என்னும் இந்நூல் எழுதப்பட்டு அச்சாகும் இந்தப் பொழுதுகளில்கூட பூவுலகெங்கும் பல்கிப் பரவிக் கொண்டேயிருக்கிறது குருஷேத்திரம்.
இன்னும் முடிவுறாமல் தொடரும் தொல் காவியமொன்றை முழுமையாக தெரிந்து கொள்ளலும், புரிந்து கொள்ளலும் எவருக்காயினும்
சாத்தியமானதா?
(v)

Page 5
பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த பலநூறு மனிதர்களின் கூட்டுச் சிந்தனையினாலும், உழைப்பாலும் தொடர்ந்து கைமாறிக் கைமாறி, உருமாறி பெருவிளைச்சல் கண்டவை இதிகாசங்கள்.
அதனால்தான் போலும், பெரும்பாலும் தனிமனித உழைப்பினாலேயே நிறைவு செய்யப்படும் நவீன இலக்கிய வடிவங்களுக்குள் எவ்விதத்திலும் முழுமையாகக் கட்டுப்படாது திமிறுகின்றன இவை.
காவியமொன்றை சுருக்கி மீளுருவாக்கம் செய்ய ஒரளவு வசதியான உரைநடைவடிவம் நாவலே.
நாவல் பெரும்பாலும் ஒற்றை மையத்திலிருந்து (சில சமயங்களில் ஒருசில மையங்களிலிருந்து) விரிந்து பல்வேறு பரிதிகளை சென்றடை கின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட மையங்களிலிருந்து விரிந்து பல்வேறுபட்ட பரிதிகளை சென்றடையும் நாவல்களே மிகச் சிறந்த நாவல்களாக எம்மால் கொண்டாடப்படுகின்றன. (தகுந்த உதாரணமாக லியோ டால்ஸ்டாயினு டைய படைப்புக்களைக் குறிப்பிடலாம்)
ஒற்றை மையத்திலிருந்து விரிவனவாயும், ஒருசில பரிதிகளை மட்டுமே உடையனவாயும் தமிழ்நாவல்கள் பெரும்பாலும் அமைகின்றன. இதையே தமிழ் நாவல்கள் இன்னும் உலகத் தரத்தை எட்டவில்லை என்னும் எமது அங்கலாய்ப்புத் தொனி புலப்படுத்துகின்றது. அண்மைக் காலத்தைய சில முயற்சிகள் இச் சிறையிலிருந்து விலகிச் செல்ல முனைவதையும் நாம் குறிப்பிட வேண்டும் (உ+ம் ஜெயமோகனது விஷ்ணுபுரம்)
ஒற்றை மையத்திலிருந்து விரிய முயன்று ஒற்றைப் பரிதியினுள்ளேயே ஒடுங்கி விட்டன ஈழத்து தமிழ் நாவல் முயற்சிகள். அதனாலேயே ஈழத் தமிழிலக்கியத்தில் நாவல்களே இல்லை என நாம் பிரலாபிக்க நேர்ந்துள்ளது.
தேர்ந்த சிறுகதையொன்றானது குறுகிய ஒற்றைப் பரிதியிலிருந்து ஒற்றை மையத்தை நோக்கி ஒழுங்காகக் குவியப்படுத்தப்படுகின்றது.
ஆனால், காவியமானது பல்வேறு மையங்களிலிருந்து விரிந்து செல்லும் பல்வேறு பரிதிகளைக் கொண்டிருக்கும் அதே வேளையில், பல்வேறு பரிதிகளிலிருந்து பல்வேறு மையங்களை நோக்கிக் குவிவனவாயும் தனது வடிவத்தைக் கொண்டமைந்திருக்கும்.
அதனாலேயே கதைக்குள் கதையாகவும் அதற்கொரு உபகதையாகவும், கதைக்கு மேல் கதையாகவும் அதற்கொரு கிளைக்கதையாகவும் தம் புறவுருத் தோற்றங்களை எமக்குக் காண்பிக்கின்றன காவியங்கள்.
(vi)

மேலும், தமக்குப் பிரியப்பட்ட பகுதிகளையெல்லாம் கொய்து கொய்து சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் உருவாக்க நவீன இலக்கிய வதிகளுக்கு இயைபுடையதாகவும் அமைவன அவை.
மகாபாரதத்தின் ஈர்ப்பு மிக்க பகுதியொன்றை, தனது கவி வலி மயால் புதிதாய் பாஞ்சாலி சபதமெனப் பாடிக் காட்டியவர் பாரதி.
இராமாயணத்தின் முழுஅமைதியும் தனது சாபவிமோசனம் என்னும் கதையினுள் அடங்கியே விட்டதாக நியாயமானதொரு இறுமாப்புக் கொண்டவர் புதுமைப்பித்தன்.
மகாபாரதத்தின் எண்ணற்ற விதமான பெண் பாத்திரங்களை தனது பார்வையில் மீள்சிருஷ்டி செய்து பல சிறுகதைகளை எழுதினார் எம்.வி.
வெங்கட்ராம்.
வியாசர் விருந்து என்ற மகுடத்தில் சக்கரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் மிகச் சுருங்கிய வடிவத்தில் மகாபாரதத்தின் நிகழ்வுகளைச் பித்திரித்து பல தரப்பட்டோரும் படித்துப் பயனுறும் வகையில் வழங்கினார்.
இவ்வரிசை ஜெயமோகனின் பத்ம வியூகம், எஸ். ராமகிருஷ்ணனின் ம பாண்டவம் என நீண்டு இன்று தேவகாந்தனின் கதாகாலமாக பரிணமிக் கின்றது.
தவிரவும், மார்க்சியர்கள் பலரும் மகாபாரதத்தின் தோற்றம், பின்னணி என்பன குறித்து ஆய்வுகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் யாவரும் ஏதோ ஒரு வகையில் தமது ஆற்றல்களுக்கும், கோட்பாடுகளுக்குமமைய மகாபாரதத்தை மறுவாசிப்பு செய்தவர்களே.
மறுவாசிப்பு என்னும் பதம் காதில் விழுந்த உடனேயே பழமைவாத மார்க்சியர்களில் சிலர் முகஞ் சுழிக்கின்றனர். ஆனால் மறுவாசிப்பின் மீது கட்டமைக்கப்பட்டவற்றுள் மார்க்சியமும் ஒன்று என்பதை அவர்கள் வசதியாக மறந்து விடுகிறார்கள்.
தொன்மங்கள், இதிகாசங்கள் மீதான மறுவாசிப்பு என்பது, பின் நவீனத்துவவாதிகளின் மறுவாசிப்பை விடவும் வேறுபட்டது. பழமை யானது. பற்பல மறுவாசிப்புக்களின் பின்னரே இன்றைய உலகில் நாமறியும் இதிகாசங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.
(vii)

Page 6
இவ்விடத்தில்; தேவகாந்தனின் கதாகாலம் என்ற இந்த மறுவாசிப்பு ஏனையவற்றை விட எவ்வகையில் வேறுபட்டது, ஏனையவற்றுடன் எவ்வகையில் ஒத்திசைகின்றது என ஒரு வாசகன் தேடமுயல்வது இயல்பே.
கதாகாலத்தை இனிமேல் வாசிக்கப் புகும் வாசகர்களை விடவும் ஒருசில நாட்கள் முன்னராக இப்பிரதியை வாசித்தவன் என்னும் ஒரேயொரு தகுதியில் மட்டும் என்னால் கூற இயலுமானவை மிகச் சில மட்டுமே.
மறுவாசிப்பு என்றும் வழக்கமே அருகியிருக்கும் ஈழத்துத் தமிழ் இலக்கியச் சூழலுக்கு, தேவகாந்தனின் இம் முயற்சி நல்லதொரு ஆரம்பமாக அமைந்திருக்கின்றது.
இவ்வாறான நூல்களை வாசிக்கப் புகும் வாசகர்களுள் முதன்முதலாக இக்கதையை வாசிப்பவர்களும், திரும்பத் திரும்ப வாசிப்பவர்களும் அடங்குவர்.
முதன்முதலாக வாசிப்பவர்களைப் பொறுத்தமட்டில் இவ்வாறான நூல்களின் மொழிநடையை அவர்கள் உள்ளது உள்ளபடியே தயக்கமின்றி ஏற்றுக் கொள்வர்.
ஆனால், ஒரு சமூகத்தின் இதிகாசமானது அச்சமூக மாந்தரின் ஊனிலும், உள்ளத்திலும் ஊறிப்போய்விட்ட ஒன்று. அது அம் மாந்தரின் உள்ளத்தில் எழுத்தில் வடிக்கப்படாத ஒரு விதமான மொழிநடையை வளர்த்து விட்டி ருக்கும். அத்தகைய வாசகர்களின் மனதுள் உள்ளோடும் அம்மொழி நடையை ஒத்ததாக, அல்லது மேவியதாக நூலின் மொழிநடை இருத்தல் வேண்டும் என அவர் அவாவுறுவர். அவ்வவாவை எவ்வளவு தூரம் நூலாசிரியர் தணிக்க முயல்கிறார் என்பதிலேயே நூலின் வெற்றி தங்கி யிருக்கும். நண்பர் தேவகாந்தனும் இச் சவாலை உணர்ந்து செயற்பட்டிருக் கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
தமிழில் மகாபாரதத்தை நாவல் வடிவில் கொண்டுவந்தவர்கள் இருவரே. ஒருவர் எஸ். ராமகிருஷ்ணன் (உபபாண்டவம்). மற்றவர் தேவகாந்தன். தேவகாந்தன் சம்பவங்களைக் கோர்த்துத் தரும் ஒழுங்கு பெரும்பாலும் வியாசர் விருந்தை அடியொற்றியதாக அமைந்துள்ளது.
உபபாண்டவம், தன் கதைகூறும் முறைமையில் வேறொரு உத்தியைக் கையாளுகிறது. தம்முள் ஒன்றுடன் ஒன்று இசையும் மையங்களை ஒன்றாகத் தொகுத்தும், வகுத்தும் அந் நாவல் நகர்ந்து செல்கிறது.
(viii)

மிகப் பெரும்பான்மையினரால் படிக்கப்படும் வியாசர் விருந்தில் முக்கிய மையங்களாக பீஷ்மரும், பஞ்சபாண்டவர்களும், கிருஷ்ணனுமே அமைகின்றனர். சத்தியவதி, குந்தி, காந்தாரி, திரெளபதி ஆகிய முக்கிய பெண் பாத்திரங்களை மையங்களாகக் கொண்டு கதாகாலத்தின் இம்மறு வாசிப்பு அமைகிறது.
சகாதேவனை மையமாகக் கொண்டெழும் பகுதிகளும் ஏனைய வாசிப்புகளில் அதிகம் காணக் கிடைக்காதவை. குந்தி புத்திரர்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் மாத்ரி புத்திரர்களுக்கு முன்னைய வாசிப்புகளில் தரப்பட்டிருக்கவில்லை.
குருஷேத்திரத்துக்குப் பின்னரான பாரதம் சற்றே அழுத்தியுரைக்கப்படு வதையும் கதாகாலத்தில் நாம் காணலாம். குறிப்பாக அசுவத்தாமாவைச் சுட்டிக் காட்டலாம். சாவின்றி உழலும் அசுவத்தாமன் புதுப்புது அவதாரங்களெடுத்து ஈழத்தின் படுகொலைக் களங்களில் திரிவதை நிதமும் காணும் சாட்சியங்களாக நாம் உள்ள இத் தருணத்தில்.
கல்கியின் அவதாரத்துக்காக நாம் காத்திருக்கும் இத் தருணத்தில்.
ஈழத் தமிழிலக்கியத்துக்கு பங்களிப்புச் செய்து கொண்டிருக்கும் முக்கியமானவர்களில் ஒருவரான தேவகாந்தன் அதிகம் கண்டு கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்படுவது மனவேதனை தருகின்றது.
எஸ். ரஞ்சகுமார் கொழும்பு
28.02.2005
(ix)

Page 7
உரை - 2
ராஜகோபாலாச்சாரியின் "வியாசர் விருந்தில் மகாபாரதப் பெருங் கதையாடலை வாசிப்பதற்கு முன்பே, என் தாயின் வாய்வழியாய் அதன் பெரும்பங்கு கதையையும் சிறுவயதிலேயே கேட்டிருந்தேன். பாரதக் கதை பற்றிய பல்வேறு கட்டுரைகளையும் நூல்களையும் வாசித்துள்ள இப்போது கூட, கதை சொல்கையில் சிலவேளைகளில் என் தாயார் குரல் காட்டிய ஒருவகை நகைமுரண் (Irony) தொனிப்பு என்னை வியப்பிலாழ்த்திக் கொண்டேயிருக்கிறது. முப்பதாம் ஆண்டுகளில் ஆறாம் வகுப்புவரை படிந்திருந்த அவளால் ஒரு பெருங்கதையாடலிலிருந்த முரண்களைப் புரியும் சூட்சும அறிவினை எங்கிருந்து பெற முடிந்ததோ. மகாபாரதத்தி லுள்ள என் ஈடுபாட்டுக்கு இதைவிட வேறு காரணம் இல்லையென்றே சொல்லத் தோன்றுகிறது.
உடனடியான இந்த மறுவாசிப்புப் படைப்பாக்கத்துக்கும் என்னால் காரணம் சொல்ல முடியாமலேயிருக்கிறது. ஒன்றை வேண்டுமானால் குறிப்பிடலாம். சென்னை லோங்மன் வெளியீடாக அய்ராவதி கார்வேயின் *யுகாந்தா', தமிழ் மொழிபெயர்ப்பில் வந்ததை வாசித்ததே அது. மகாபாரதத்தின் கதாமாந்தர்களது மனநிலை செயல்பாடுகளும், அக் காலத்திய வாழ்முறை பொருளாதாரமும் குறித்து இரண்டு லட்சம் சுலோகங்களில் மகாபாரதம் தெரிவித்த செய்திகளில் நான் கொண்டிருந்த அய்யங்கள் யுகாந்தாவுக்கு இணையாகச் சென்றிருந்தன. அது இன்னும் என் மனத்திலிருந்த கதைக்களம் சார்ந்த கூறுகளைச் செழுமைப்படுத்தியும் விட்டது. மேற்கொண்டு ஏ. கே. இராமானுஜனின் ஒரு பேருரையின் s' Gaou Gulgoul DITGOTThree Hundred Ramayanas: Five Examples and Same Thoughts on Translations இன் தமிழ் மொழிபெயர்ப்பிலான வாசிப்பு என்னில் ஏற்படுத்திய தாக்கத்தைக் கூறவேண்டும். ஆசியா, குறிப்பாக தென்னாசியா, முழுவதும் பலபல மாறுபாடுகளுடன் இராமாயண இதிகாசம் வெவ்வேறு இனக்குழுக்களின் கதைகூறு மரபில் வளர்ந்துள்ள வரலாற்றை அது தெரிவித்தது. அந்த அறிகை மகாபாரதம் பற்றிய என் அக்கறையை
(x)

மேலும் ஆழ்வித்தது. இராமாயணம் குறிப்பிடும் முதல் கதை சொல்லியான சுமத்திரன்போல் மகாபாரதத்திலுள்ள கதை சொல்லிகளை அதில் தேடத் துவங்கினேன். உக்கிரசிரவஸ், வைஸம் பாயன், ஜைமினி, சஞ்சயன் என அது வெகுவான கதைசொல்லிகளைக் கொண்டிருந்தமையைக் காணக் கிடைத்தது.
ஆனாலும் மகாபாரதக் கதைநிகழ் காலத்திலிருந்து அது முதல் எழுத்துருப் பெற்ற காலவரையான இரண்டாயிரம் மூவாயிரம் வருஷங்களாக அதைத் தமது கலையாக, வாழ்வின் ஆதாரமாகக் கொண்டு திருந்த சூத கதைசொல்லிகளும் அவ்வாறேதான் கதை சொல்லினரா என்ற சந்தேகம் என்னுள் இருந்துகொண்டேயிருந்தது. சூதன், மாகதன், பாணன், நடன் என்று பலரும் பல விதமாகவே அக் கதையை விரித்திருக்கக்கூடிய சாத்தியத்தை சில ஆய்வு இணையத் தளங்களினூடான தகவல்கள் எனக்குத் தரவே, முதலில் கதைசொல்லிகளை ஆதி-இடை-நவீனம் என்ற முக்காலகட்டங்களில் வைத்து மனத்துள் சிருஷ்டி புரிந்தேன். மேலே கதா புனைவு ஊற்றெனக் கிளர்ந்தெழுந்தது. கதைசொல்லிகள் வாயிலாகக் கதையை நகர்த்தியதில் பாரதக் கதை உண்மையில் எப்படி நடந்திருக்கும் என்ற கணிப்பீடு மிகச் சுளுவாய் எனக்குள் விளங்கியிருந்தது. அதன்மேல் படைப்பு தவிப்பானது தவிர்க்கமுடியாது போனது. என் உக்கிர தவிப்பைத் தணிக்க நானறிந்த ஊடகத்தையும் உருவத்தையும் அணுக பரமசுகத்தோடு 'கதாகாலம்’ பிறந்தது.
"மறுவாசிப்பு” என்பது ஈழத் தமிழிலக்கியத்தில் தமிழ்நாட்டில்போல் இல்லை. தமிழ் நாட்டிலும் மேற்குலகுபோல் இல்லை. கிறித்து பற்றிய மறுவாசிப்புக் கலைச் சினிமாக்களும், நாவல்களும், சிறுகதைகளும் அங்கு அதிகம். ஜெபரி ஆர்ச்சரின் The First Miracle அற்புதமான சிறுகதை. மனத்தை அதிர வைக்கும் புனைவு அதில் இருக்கும். அதை எனக்கு அறிமுகம் செய்து நூலையே வாங்கித் தந்து வாசிக்க வைத்த காலம் சென்ற கணித ஆசிரியன் தமிழ்நாட்டு நண்பன் பூரீரெங்கனை இப்போது நினைக்காமலிருக்க என்னால் முடியவில்லை. "புதியன” என்ற சிற்றிதழைக் கொண்டுவந்த அந்த நண்பனே ஒரு பத்தாண்டுக் காலத்துக்கு ஆங்கிலத்தி லிருந்து மார்க்ஸின் "மூலதனத்தை வரிவரியாக வாசித்து எனக்கு விளக்கிய தையும் நான் சொல்ல வேறிடம் வராது. இவ்வாறான சிறுகதை, நாவல், சினிமாக்களின் பரிச்சயத்தில்தான் இந்த மறுவாசிப்புப் படைப்பாக்கத்தை நான் சுலபமாக முடித்தேன் எனல் வேண்டும்.
தென்மராட்சியின் மின்சாரமற்ற இரவில், மனித அருகுகையுள்ள சூழலில், பிறவிடப் போக்கும் வரத்தும் வசதியீனங்களால் மட்டுப்பட்டிருந்த
(xi)

Page 8
நிலைமையில், வானமும் நக்ஷத்திரங்களும் வெளியும் பார்த்திருந்து சுமார் நாற்பத்தைந்து நாட்களில் இப் பிரதியின் பெரும்பாகத்தை நான் முடித்தேன். அந்த நிலம் சகல நவீனங்களையும் மறந்து ஒரு புராதன பூப்பகுதியை நான் உணர, உருவகிக்கச் செய்ததில் பெரும்பொறுப்பை வகித்தால் அதற்கு நான் நன்றி சொல்லி ஆகவேண்டும். கடந்த இரு தசாப்தங்களிலான எந்தப் போரிலும் தென்மராட்சிபோல் பாதிக்கப்பட்ட இடம் வேறெதுவுமில்லை யெனலாம். ஷெல் துளைத்த பனை தென்னையாகிய நெடுமரங்கள் விசைக் காற்றுக்குத் தப்பிப் பிழைத்தலரிதாய் முறிந்து முறிந்து இன்னும் விழுந்துகொண்டிருக்கிற கொடுமைகளின் சாட்சியம் அங்கே விளைந்து கொண்டிருக்கிறது. இந்த நன்றி செலுத்துகை அதன் நோவு தணித்தலுக் காயேனும் அவசியம்.
என் பல படைப்புக்களினதும் முதல் வாசகனாகவும், விமர்சகனாகவும் இருக்கும் ஊடகவியலாளன், நண்பன் கேதாரி (ஜி.ரி. கேதாரநாதன்)க்கு முக்கியமாய் நான் நன்றி கூறவேண்டும். கூட, ஈழத்தில் வெளியான என் முதல் நூலுக்குப்போல் இதற்கும் அட்டைப் படத்தை ஒவியமாகவே வடித்துத் தந்த கேதாரியின் சகோதரன் கைலாஷ் (கோ. கைலாசநாதன்)க்கும் என் நன்றி.
சம்பிரதாயமாக, ஆனாலும் ஆழமான மன நெகிழ்ச்சியுடன், இப் படைப்பை என் பிள்ளைகள் பிரேமி, நிம்மி, ஷியா, டிலா, குயினாவுக்குச் சமர்ப்பணமாக்குகிறேன். என் இலக்கியதாகத்தைத் தணிக்க நான் எழுதியும், வாசித்தும், சிறுபத்திரிகை நடத்தியும், சொந்த பதிப்பகம் நிறுவியுமான தெல்லாம் அவர்களின் வசதி வாய்ப்புக்களை நசுக்கியே எனபதை இப்போது என்னால் உணர முடிகிறது. ஒரு முணுமுணுப்பைக்கூடச் செய்யாமல் என் இலக்கியத் தீவிரங்களைப் புரிந்தோ புரியாமலோவான அவர்களின் அந்த இசைவுக்கு வேறு பரிகாரம் என்னிடம் இல்லை.
தேவகாந்தன் கொழும்பு - 13 devakanthan Grediffmail.com 2004 - 11-21 bdevakanthan @ yahoo.com
(xii)

Zo.
Peemi, Mimmi, Shiya, Di2a and оиeепа

Page 9

பகுதி1

Page 10

ஒன்று
இந்திய உப கண்டம் வடதிசைத் தேசமொன்றின் ஒரு நகர் (முற்காலம்)
இருள் விழுந்தாயிற்று வெளி நிறைத்து. புதிய சூதர்களின் வருகை குறித்து அந் நகரில் நிலவியிருந்த ஆர்வப் பேச்சுக்கள் கூட, அந்நேரமளவிலும் மிகக் குறைந்த தொகையிலேயே சனங்களை அக் கதா மண்டப முன்றிலில் கூடச்செய்திருந்தமை கண்டு அம் முதுசூதன் மனம் சலிக்கப் பார்த்தது. அந் நகர்ப் பகுதிக்கு இளையோனும் முதியோனுமான இரு சூதர்கள் கதாகாலத்துக்காய்க் கதை விரிக்க பத்துத் தினங்களின் முன் வந்தபோது, அந் நகரே கிளர்ந் தெழுந்து தன் ஒய்வினதும் கேளிக்கையினதும் பொழுதெல்லாம் அது குறித்துப் பேசியது. அம் முதுசூதன் கண்களுக்குள் இரத்த அலைகள் அடித்துக் கொண்டிருப்பதைக் கண்டதாய்ச் சொன்னாள் ஒருத்தி. அது குருக்ஷேத்திரத்தின் அடையாள மென்றாள் அக் குழுவிலிருந்த இன்னொருத்தி. விசேஷ புனைவில் கதை அம்முறை வெளிப்பாடடையலாம் என்றாள் வேறுமொருத்தி. பெண்களால் அக் கங்கைக்கரை நகரெங்கும் புதிய சூதர்கள் பற்றித் தகவல்கள் நிறைந்து போயின. அத்தனை ஆர்வ எழுச்சிப்பட்ட அந் நகர் ‘ஜெயக் கதை விரிப்பின் முதல் நாளில் பெருந் தொகையாய்க் குழுமாதது ஆச்சரியமாகத்தான் அங்கே கூடியோருக்கும் இருந்திருக்க வேண்டும். நிச்சயமாய்
கதா காலம்
1ዘ

Page 11
தேவகாந்தன்
வருவோமென்றவர்களின் முகங்களும் இல்லாதிருப்பதை திரும்பிச் சுழன்று கண்டு அவர்கள் பட்ட ஆயாசத்தில் அது தெரிந்தது.
அன்று மாலையில் சடுதியில் வந்து விழுந்த வானிலை மாற்றங்களையும் அவர்கள் யோசியாமலில்லை. திடீரென அந் நிலப் பரப்பில் எழுந்து கவிந்த கருமேகங்களும், பெருக வீசிய குளிர்காற்றும் மெதுவாகத்தான் கேட்போரை அங்கே கூட வைக்குமென சற்று எட்டவிருந்த இளைய சூதன் சைகையில் தெரிவித்த கருத்தை முதுசூதன் ஏற்றான்போல் தோன்றிற்று. அவன் சிறிது நேரத்தில் அமைதியானான். உபசூதனின் கருத்தை உறுதியாக்கி அப்போதே விரிந்த வெளியில் மனித நிழலுருவங்களின் கதா மண்டபம் நோக்கிய நகர்வு தூரத்தில் தெரிந்தது.
கருமை திரண்டுருண்டு பொங்கிக்கொண்டிருந்த கீழ்வான் மூலையில் அவ்வப்போதாய் வெட்டியெழும் மின்னலின் வரிகளை, கதா மண்டபத்தின் முன் திரண்டிருந்த சிறு கூட்டம் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தது. சூழல் மறந்து பிரதம கதைசொல்லி தன் கதைகூறலின் தொடக்கப் புள்ளியினை, விவாதத்திலும் விசாரிப்பிலும் கண்டடைந்த புதிய தகவல்களையும் முடிவுகளையும் மனத்துள் கிரமப்படுத்திய படி, சுழன்று சீறியெழும் காற்றின் ஆவேசத்துள் அடங்க மறுத்துக் கொண்டிருந்த பந்தச் சுடரினை நோக்கியவாறு ஒர் உறைநிலையில் போல் அமர்ந்திருந்தான். காற்றின் ஊதலொலியை, "ஜெய'மென அழைக்கப்பட்டு விருத்தியாகிக் கொண்டிருந்த அக் கதா மங்கையரின் ஒருவகைச் சோகக் குரலெடுப்பாய் அவன் உணர்ந்து கொண்டிருந்தான். அக் காதை நெடுகிலும் பிரதம பெண் பாத்திரங்கள் எல்லாமே எதற்காகவோ மவுனமாய் அழுது கொண்டும், அதன் நிவர்த்தியறியாது கலங்கிக் கொண்டும், மூலங்கள் வெளிக்கிற தருணங்களில் வெளியாகவோ உள்ளாகவோ சீறிக்கொண்டும் தான் இருந்திருக்கிறார்களென்று பட்டது அவனுக்கு.
யயாதியே மகாவம்சமான குருகுலத்தின் பிதா, சூரியன், சந்திரன், அக்கினி எனப்பட்ட முக்கியமான முக் குலங்களில் மிகச் சிறந்ததாகக் கருதப்பட்ட சந்திர குலத்திலிருந்து உதித்தது
கதா காலம்

தேவக ாந்தன்
அது. அசுர குல குருவான சுக்கிராச்சாரியின் மகள் தேவயானியை மணம் முடித்த யயாதி, தேவயானியுடன் பிணங்கி பின் தாதியாய் அவளோடிருந்த கூடித்திரியப் பெண்ணான சர்மிஷ்டையையும் பின்னாளில் களவுக் கூட்டங்களால் மூன்று பிள்ளைகளின் தாயாக்கினான். இவர்களில் இளையவனே புரு என்ற புகழ்பெற்ற புருஷன். மகளுக்குத் துரோகமிழைத்த யயாதியை காமவின்பங்களைச் சுகிக்க முடியாதபடிக்கு பெருமுதுமையில் விழுத்தியது சுக்கிராச்சாரியின் சாபம். தம் இளமையை யாராவது விரும்பி யயாதியின் முதுமைக்கு மாற்ற முன்வந்தால் அவ்வாறு செய்யலாமென்பது அதன் விமோசனம். யயாதி காம சுகங்களை அனுபவிக்க முடியாது பெருந்துயருழன்றான். மனத்தில் காம விழைச்சு உந்தியெழுந்தும், பாறாங் கல்லாய் அசைவற்றுக் கிடந்தது முதிய தேகம்.
யயாதி பிள்ளைகளிடம் ஒடினான். பிள்ளைகள் முதலிருவரும் தந்தையின் முதுமைக்கு தம் இளமையை மாற்றீடு செய்ய முன்வராத நிலையில், தந்தையின் பேரிச்சையைத் தீர்க்க தன் இளமையைக் கொடுத்தவன்தான் மூன்றாம் மகனான இப் புரு.
சாபமென்பதுதான் என்ன. முதுசூதன் தன் நோக்கின் கூர்மை குறையாதிருந்து மனத்துள் வினாவெழுப்பினான். அது சதியிலும் சாதுர்யத்திலும் ஒன்றைச் சாதித்தலேயென்பதைச் சூதன் விளங்கினான். சுக்கிராச்சாரியின் சாபமென்பது, அவன் கோபத்தின் சாதிப்பு மட்டுமே. யயாதி பெளருஷமிழந்து பெருநோயில் விழும்படி ஆக்கப்பட்டானென்று இதற்கு அர்த்தம் கொள்ளலாம். யயாதி நோயிழக்கும் வழி நாடிச் செல்ல, புரு ராஜ்ய காரியங்களை நடத்தியதே மெய்யில் நடந்திருக்கக் கூடும். அழகில் சிறந்தவர்களும், காம விழைச்சும் வசீகரமும் மிக்கவர்களுமான யயாதியின் ராணிகளையும் காதலியர்களையும் புரு தன் ஈர்ப்பறுத்து புரந்தான் என்பதே அவனது கியாதியின் காரணமாகவும் கூடும்.
சூதன் தொடர்ந்து எண்ணினான்: ஒருவேளை அதுகால வரையான அரண்மனை, அந்தணர் வட்டச் சூத கதை சொல்லிகளின் விளப்பப்படியே, தந்தையாகிய யயாதி தன் மகனாகிய புருவின் யெளவனத்துக்குத் தன் வயோதிபத்தை மாற்றிக்கொண்டானென்று வைத்தால், அதுவே குருகுலப்
கதா காலம்
3

Page 12
தேவகாந்தன்
பெண்களின் நெஞ்சுகளுள் குமுறி எழுந்த மவுன அவலவோசைகளின் தருணமாகி விடுகிறது. மகனின் இளமையைக் கொண்டு காம இச்சைகளைத் தணிக்க ஒடிவந்த யயாதியை, சர்மிஷ்டை யாராக உணர்ந்திருப்பாள். பெரியன்னையாகிய தேவயானிகூட எவராய்ப் பாவித்தி ருத்தல் கூடும். யயாதியின் இயல்பான வயதுக்கும் குறைந்த பெளருஷத்தின் தழுவலில், தமது தோள்களிலும் முலைகளிலும் இடையிலும் நிதம்பத்திலும் காமம் கனலாய் உதித்தெழுந்தபோதிலும், அவ் யெளவனம் தம் மகனுடைய தென அத் தாயர் பிரக்ஞைப்படுகையில் அவர்கள் உணர்வு நீர்த்தும், பனியாய் உறைந்தும் போயிருப்பரல்லவா. அடங்காக் காமத்துடன் தன் வீறடக்க யயாதி முனையும் ஒவ்வொரு வேளையிலும் மனத்தில் அவலம் நிரம்பி அவர்கள் வேகியிருக்க முடியும்.
பராசரனென்ற பிராமணனுடனான கன்னிமை காலக் கலவியில் பிறந்த கிருஷ்ண துவைபாயனை தவ்வலாயிருக்கும் போதே காடேறியாய் அலைய யோஜனகந்தி என்பவள் கைவிட்ட போது எவ்விதம் ஒர் அன்னையாய்த் துடித்திருப் பாள். பின் சந்தனுவை மணந்து சத்தியவதி எனும் நாமத்தில் அரசியாய் வீற்றிருந்த காலத்திலும் தான் தன் பாவத்துக்கான அழுகுரல் அவளுள் அடங்கியிருக்குமா.
இது 'ஜெயத்தின் கதை'யெனப்படுகிறது. ஆம், பெண்களின் ஜெயக் கதை. சத்தியவதியின் காய் நகர்த்துதலிலிருந்து இது பிறக்கிறது. கதை நெடுகிலும் ஒருத்தியினதோ பலரினதோ உள்ளுள்ளான குமுறல்களும், மவுன ஒலங்களும், தவிர்க்க வியலா முனகல்களும் எழுந்துகொண்டே யிருக்கின்றன. ஆனாலும் தீர்க்கமாய் இருப்பதின் மூலம் அவர்கள் சாதகத்திலேயே எந்தவொரு நிகழ்வின் முடிவும் நிர்மாண மாகின்றது. அழிவே பெறுபேறென்றாலும், அதி நுட்பமாய் செயல் வடிவங்களைப் புனைவதின் வழி அவர்களது இலக்குகள் அடையவே படுகின்றன. அது காரணமாய் முற்பகுதிக் கதையை அவர்களின் செயற் குரூரத்தின் வழியான பாவ விதைப்பெனக் கொண்டால், பிற்பகுதியைப் பாவ நிவர்த்தியெனக் கொள்ள முடியும். குறைந்தபட்சம், அந்த நினைவுகளிலிருந்து தப்பியோடுகையாகவாவது அவர்கள் செயற்பாடு அமைந்திருந்திருக்கிறது.
கதா காலம்
4

தேவகாந்தன்
சத்தியவதி. அம்பை . காந்தாரி. மாத்ரி . குந்தி. துரோபதி . யாரின் கதையும் அவ்வாறே.
மறைக்கப்பட்டு வரும் அச் சோகக் குரல்களின், கலகக் (குரல்களின் பெருவுடைப்பாயே அவ்வருஷத்திய கதாவிரிப்பு அமையப்போகிறதென்பதில் சூதனுக்கு அய்யமிருக்க வில்லை. அரசன். ஆண்டி. சித்தன். அசித்தன். யோகி. போகி. என எவர் வாழ்விலும் இடையறாது தொடர்ந்து ஒரு வடுவின் வலி இருந்து கொண்டிருக்கவே செய்கிறது. ஆனாலும் பெண்களின் வாழ்வில்போல் அது ஆழமாக விழுவதில்லை. பீமன், அர்ச்சுனன், யுதிஷ்டிரன், சகாதேவன் ஆகியோர் மனங்களிலும் வலி இருந்தது. குந்தி, காந்தாரி, துரோபதி போன்றோரே அவ் வலியில் கலங்கி யழிந்தார்கள். திரேத யுகத்தின் வேறு சம்பவங்களும் அதையே அறுதியாய் மெய்ப்பித்திருக்கின்றனவென ஒரு மெல்லிய துயரத்தோடு திண்ணப்பட்ட சூதன், தன் நோக்கினை பந்தச் சுடரினின்று மீட்டான்.
பணியினதும் மேகத்தினதும் திவலைத் தெறிப்பிலும், காற்றின் கடும் வீச்சிலும் கூட கணிசமாய்த் திரண்டுவிட்டிருந்த சனங்களின் நிழலுருவங்களின் மேல் முதுசூதன் கண்களைச் சுழல விட்டான். சற்றுத் தள்ளி இரண்டு மாட்டு வண்டிகள் நின்றிருந்தமையும் அலையும் பந்தச் சுடரின் வறிய வெளிச்சத்தில் சூதனுக்குத் தெரிந்தது. சூதன் கலைக் கிளர்ச்சி மேவினான். கதா பெருக்கெடுக்கத் துவங்கியது.
"கேளுங்கள்.
நதியின் ஜீவ சிலிர்ப்புடன் அவள் நடந்துகொண்டிருந்தாள். அவளது இடை எ மலிந்தும், மார்புகள் கொழுத்தும், நாரி பரந்துமிருந்தன. கங்கையே பெண்ணாய் உருவெடுத்ததுபோல் சந்தனு மகாராஜன் மனத்தில் கற்பிதம். ஆழ ஆழமாக அவன் அடி மனம் வரை அவளது பேரழகு வேர்விட்டுச்
கதா காலம் 5

Page 13
தேவகாந்தன்
சென்று கொண்டிருந்தது. பரவெளியில் ஒரு நக்ஷத்திரச் சங்கிலி போன்ற அவள் ஜொலிப்பின் பின்னாலேயே அவன் போய்க்கொண்டிருந்தான். அவனது தோற்றத்தின் பொலிவு, அஞ்சாமைகளில் அவளும் தன்நுட்பமான மனதினோரிடம் தகர்வதாய் உணர்ந்து கொண்டிருந்தாள். அவளை மேலும் நெருங்குகிறவன் காம பரவசனாகிப் போனான். தன் இதயம் பெயர்ந்து அவளிடம் போய் உறைந்துவிட்டதாய் உணரும் சந்தனு ராஜன், மேலும் அந்நோய் பொறுக்க முடியாமல் கல்யாணத்துக்கு அவள் சம்மதம் கேட்டுவிட்டான். தானும் அவன் போலாகி நின்றிருந்தாலும், தன் செயல்களை அவன் எப்போதும் தடுக்கவோ, அவற்றின் காரணத்தைக் கேட்கவோதானும் கூடாதென்று அவள் நிபந்தனைகள் போட்டாள். ஆசை வயப்பட்டிருந்த சந்தனு மறுபேச்சின்றி அவற்றை ஏற்று அவளை மணம் முடித்துக் கொண்டான்.
வம்சத்தின் அம்சம் சந்தனுவில் இருந்தது. குருவம்ச மூலவன் யயாதி எனில், அதன் வரலாற்றுப் புள்ளியாய் இருப்பவன் இச் சந்தனு. யயாதி இரு தாரகாரன். மட்டுமில்லை, வேறு வழியில் காமாந்தகாரனும். சந்தனு கங்கையோடாயினும் கண்ணிழந்தே வாழ்வை அனுபவித்தான். அவளே தேவையென்றாகியிருந்த வகையில், வேறு தேவைகளை அவன் எண்ணவும் இல்லை. அதனால்தான், பிறக்கும் ஒவ்வொரு சிசுவையும் ஆற்றில் வீசி கங்கை கொல்ல பார்த்திருக்க நேர்ந்தது சந்தனுவுக்கு. அது சிசு மட்டு மில்லை, அவன் சந்ததி. ராஜதர்மம் சந்ததி விருத்தியுமாகும். பொறுதி நொருங்கிக்கொண்டிருந்தான் சந்தனு. எட்டாவது சிசுவையும் அவள் ஆற்றில் வீசப்போக சந்தனு தடுத்துக் காரணம் கேட்டான். அதுதான் விதி. விதிப்படியே நடந்தேன். ஆனால் நான் விதித்த நிபந்தனைகளை நீ மீறினாய். சந்ததி பற்றிய கவலையுற்று என் செயலைத் தடுத்தாய்; காரணமும் கேட்டாய். என் மணபந்தத்தின் கட்டறுப்பு அக் கணத்தில் நிகழ்ந்தது. நான் உன்னை நீங்குகிறேன். ஆனாலும் உன் சந்ததியினை வளர்த்து உன்னிடம் ஒப்படைக்க மீண்டும் ஒருநாள் வருவேன்' என்று கூறி கங்கை நீங்கிப் போனாள்.
சந்தனு துடித்தான். தனிமையில் கிடந்து விரக தாபத்தில் உழன்றான். பல வருஷங்களின் பின் திரும்பி வரும் கங்கையிடமிருந்து தேவவிரதனென்ற நாமத்தில் கல்வியிலும் போர்க் கலையிலும் சதுர்த்தனாய் தன் மகனை அடையும் சந்தனு முடிவாயும் நிச்சயமாயும் கங்கையை இழந்து தணிக்கவிய லாச் சோகவானானான்.
அசையும் உடலின் நிழல் நகர்ச்சி போல், ஒடும் குருதியில் காமமும், பிரிவும், தனிமையும் செறிந்து இயக்கமறுந்தான் அவன். ஆயினும் மகனது
கதா காலம்
6

தேவகாந்தன்
உடனிருப்பில் கங்கை மீதான காதல் நாளாக ஆக அடங்கி, மந்திரச் சுற்றம் மகிழ தேசபரிபாலனத்தில் கவனமாகினான். ஒருநாள் வேட்டைக்குச் சென்றவிடத்தில் மீண்டும் தன்னிலை இழக்க நேர்ந்தது அவனுக்கு. ஆற்றங்கரையொன்றில் அம்சங்களாய் அங்கங்கள் படைத்திருந்தவளும், அபூர்வமான மதுரகந்தமொன்று எந்நேரமும் தன்னில் வீசப் பெறுபவளுமான யோஜனகந்தியென்னும் பரிசலோட்டிப் பெண்ணைக் கண்டு அவனது காமம் கட்டுடைத்தது. வாழ்வியலில் கலைகளும், மொழியும் கூட, அரும்பிக்கொண்டிருந்த காலமது. கல்வி செவியறிவுறுரஊ ஆகவே இருந்தது. சமூகம் வல்லாசாரங்கள் களைந்து ஒரு ஸ்திரத்தில் நிலைகொள்ள ஆரம்பித்திருந்தாலும், அதன் பொழுதுபோக்கும் கேளிக்கையும் உடல் சார் இன்பங்களாகவே இருந்து கொண்டிருந்தன. பேரின்பம் அல்லது சிற்றின்பத்தில் வாழ்வின் நகர்ச்சி. போரும் காமமும் க்ஷத்திரிய குலத்தின் ஒழுக்கமாய்க் கட்டிறுக்கம் பெற்றிருந்தன. தேசங்களுக்கிடையில் முரண் இல்லாத நிலையில் போர் பயிற்சி செய்யப்பட்ட இடம் வேட்டைக் களமாக இருந்தது. ஒரு பாதிப் பயில்விலிருந்த சந்தனு மறு பாதி உணர்வில் விழல் தவிர்க்கவியலாதது. வளர்ந்த மகன் இருப்பதும் பாராமல் சந்தனு பெண் கேட்டுத் தூதனுப்பியவிடத்தில், சந்தனுவின் குடும்ப நிலை தெரிந்ததால் தன் மகள் வயிற்றில் பிறக்கும் பிள்ளைக்கு அரசுரிமை கிடைக்காதென எண்ணும் செம்படவ குல ஆட்சித் தலைவனான அவளது அப்பன் இரண்டாம் தாரமாய் அரசனுக்குப் பெண் தர மறுத்தான். துக்கமும் வெட்கமும் விரகமும் என்ற முக்கலப்பில் சந்தனு. அதன்மேல் அவன் ஹினம் காட்சியாவது தவிர்க்க இயலாதது. தந்தையின் வேதனையின் காரணமறியும் தேவவிரதன் உடன் தேர் ஏறினான். யோஜனகந்தியின் தந்தையிடம் சென்று தனது பட்டத்துரிமையை மறுப்பதாகவும், பின்னாளில் வாரிசு குறித்த பிரச்சினைகள் தோன்றாதிருக்க மணவினையையே தான் விலக்குவதாகவும் வாக்குத் தத்தம் செய்து, யோஜனகந்தியை சடங்காசாரப்படி தன் தந்தைக்கு மனைவியாக்கினான். தேவவிரதன் பீஷ்மன் ஆன நாள் அது.
'காலகாலக் கதையுரைப்பில் அற்புதமான வளர்ச்சி கண்டதுதான் யோஜனகந்தியின் புனைவு’ எனவுரைக்கும் முதுசூதன் தானே பரவசப்பட்டவன் போல் ஒருமுறை உடல் சிலிர்த்துத் தொடர்ந்தான்: 'வசு எனும் க்ஷத்திரியன் தனக்குக் கிடைத்த பறக்கும் பொறியொன்றில் வானில் அலைகையில், உடலும் உள்ளமும் சிலிர்ப்படைந்து ஸ்கலிதமாகிறான். சியேனப் பறவையொன்றால் எடுத்துச் செல்லப்படும் ஆலிலை மீதிலான அவன் விந்து ஆற்றில் விழ, அதையுண்ணும் மீனிடம் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அவளது மேனியில் வெடித்தெழும் மச்ச வாடை காரணமாய் அவள் மச்சகந்தியென அழைக்கப்பட்டாள். மச்சகந்தியே யோஜன
கதா காலம்
7

Page 14
தேவகாந்தன்
கந்தியாவது. அதற்கான கதையும் மிக்க கலாநேர்த்தியுடையது.
"கதையா எல்லாமே கற்பனைதானா. நடந்த கதை யில்லையா. கிரீச்சிட்டது சபையிலிருந்து ஒரு குரல்.
"ஆம், இது கதைதான். நடந்ததும், புனைவு கலந்ததுமே ஜெயக் கதை. கதை விரிப்பது எங்கள் உரிமை. அதையே ஒரு சூதன் தன் வாழ்நாளின் கடமையாகவும் கொள்வான். செவிநுகர் கனிகளாய்ச் சொரிவதே காதைகளின் முதலும் முடிவுமான நோக்கம். வெவ்வேறு தேசங்களிலும், அரச கூடம். கோவில் மண்டபம். கதா மன்றுகளிலெல்லாம் சொல்லப்படும் கதைகளுக்கு வெவ்வேறு போக்குகளும், நோக்குகளும் உண்டு. ஆனால் சூத இனத்து எங்கள் கிளைக் குழுவினருக்கு கதைகளில் கதை சொல்லல் தவிர வேறு நோக்கமில்லை. நிஜமில்லையென்று தெரிந்துகொண்டுமே ஒரு புனைவை யதார்த்தத்தில் செய்ய - உலகியல் சார்ந்து செய்ய - நாங்கள் தயங்குவதில்லை. ஆனால் பொய்யை முடைவதில்லை. நன்மை கெட்டதும், தீமை வாழ்ந்ததும் எப்படியெப்படி நிகழ்ந்ததோ அப்படியப்படியே சொல்வதுதான் எங்கள் மரபு. ஜெயக் கதை விரிப்பை நீங்கள் முன்னரும் கேட்டிருப்பீர்கள். இரு குடும்பங்களுக்கிடையிலான போட்டியும் பொறாமை யுமே பெருநிலையெடுத்து அதன் இறுதிக் காலத்தில் மகாயுத்தமாய் வெடித்ததாய்ச் சொல்லப்பட்டிருப்பீர்கள். ஆனால், இது அந்தமாதிரிகளாய் இருக்காது என்பதை, மகாஜனங்களே, இப்போதே நான் தெரிவித்துக் கொள்கிறேன். அடங்கிய குரல்களை நான் ஓங்கியொலிக்கச் செய்யப்போகிறேன். மவுன அழுகைகளை உடைப்பெடுத்து விரியவைக்கப் போகிறேன். ராஜ சூதர் மறைத்தவைகளை இந்த போக சூதன் வெளிக்கொணரப் போகிறான். மய்யங்கள் விளிம்பு நிலைக்கும், விளிம்பு நிலைகள் மய்யத்துக்கும் நகர வைக்கப்படப் போகின்றன. என் கதை விரிப்பே வேறு
மாதிரி.
கதா காலம்
8

தேவகாந்தன்
சூதன் உரைத்தது கேட்டு சபை சிறிது சலசலத்தது. ஆனாலும் அவன் குரலில் புதியனவற்றின் ஊற்றுக் கண் கண்டு அடங்கியது. எதிர்ப்பை, உடன்பாட்டை வெளியிடா விட்டால் அது சபையே இல்லையல்லவா. அதனால் அதன் சலசலப்பை யொதுக்கும் சூதன் தன் தோளில் கிடந்த துண்டினால் தலையில் பாகை சுற்றிக்கொண்டு தொடர்ந் தான். 'அது எவ்வாறாயினும், கதைக்குப் பிரதானமான நிகழ்வுகள் சந்தனுவுக்கும் யோஜனகந்திக்குமிடையே பிறக்கும் இரு மகன்களில் இளையவனான விசித்திரவீரியனிலிருந்தே தொடங்குகின்றன. குருகுலப் பெண்களின் அழுகுரலெழும் தளமும் இதுதான். முதலில் அம்பா கதை சொல்கிறேன், கேளுங்கள்."
அப்போது காற்று சற்று அடங்கியிருந்தது; மேகக் குமுறல் தணிந்திருந்தது; கருமையின் திணிவு நெகிழ்ந்திருந்தது; மின்னல் தொலைதொலைவில் அப்போதும் வெட்டியது. அது கதை சொல்லும் சூதனின் நாவிலிருந்துபோல் சபை ஒரு பிரமிப்பில் ஆழ்ந்திருந்தது.
சொல் பிறந்து கொண்டிருந்தது.
இன்னும் கேளுங்கள்.
சிந்தனு இறந்து போக தன் இரண்டாம் கட்ட வாழ்வு இருளடைந்த சத்தியவதிக்கு மூத்த புதல்வன் சித்திராங்கனின் கொலை பெரும் சோகமாய் வந்து வீழ்ந்தது. சித்திராங்கன் வீரனாயிருந்தான். எதிரிகளுக்கு வெல்லல் அதனாலேயே இயலாததாயிருந்தது. அதனால் தூக்கத்தில் அவன் படுக்கையறையை ஊடறுக்கும் எதிரிகளால் கோழைத்தனமாயே அவன் கொல்லப்பட்டது. எதிரிகளின் சூது புனைதல் வித்தையை மகனையிழந்த சோகத்துள்ளிருந்தே புரி புரியாய் அவிழ்த்து விளங்கினாள் சத்தியவதி. சrத்திரிய வரலாறு இதுமாதிரிச் சம்பவங்களை நிறையவே சொல்லி யிருக்கும். குரோதத்தினதும் குரூரத்தினதும் கோழைத்தனத்தினதும் இவ்வாறான பழிவாங்கல்களுக்கு ஜெயக் கதையுரைக்கும் முதல் சம்பவம்
கதா காலம்

Page 15
தேவகாந்தன்
கொதித்தெழும் பீஷ்மன் எதிரிகளை யுத்த களத்தில் அழித்து விட்டு, சிறு வயதோனாயிருந்த சித்திராங்கனின் தம்பி விசித்திரவீரியனை முடிசூட்டி, தான் ராஜ பிரதிநிதியாயிருந்து ராஜ்ய பரிபாலனம் செய்தான். ஒரு சொல் தத்தத்துக்காய் தன் வாழ்நாளை அர்ப்பணமாக்குகிறவன் பீஷ்மன். அத்தினாபுரத்து அரசு அதன் விரிந்த நிலவெல்லைகளிலும், கட்டிடத் தொகுதிகளிலும், ஜனத் திரளிலும், செல்வச் செழிப்பிலுமில்லை, பீஷ்மன் மேலேயே கட்டமைக்கப்படுகிறது என்பதுதான் சரி. பீஷ்மன் இல்லையேல் அத்தினாபுரம் இல்லை; குருகுலமும் இல்லை.
விசித்திரவீரியன் அதீத போக விழைச்சல்காரனாய் வளர்ந்திருந்தான். அரண்மனையில் இரவிலெழும் மலர் வாசம், அங்கு சுழித்தெழும் காம நதியினை நுகர்பொறியில் உணர்கையாக்கிற்று. பீஷ்ம பிரமச்சாரியம் தன்னைக் காத்தது. விசித்திரவீரியனைக் காக்கத் திறனற்றிருந்தது. விசித்திர வீரியனுக்கு அதனால் பெண்ணெடுப்பது சுலமாயிருக்கவில்லை. குருகுலத்துக்கு சந்ததி முக்கியம். அது அறுவதை சத்தியவதியால் எக்காலத்திலும் தாங்கிவிட முடியாது. அவளின் ஆளுமைக்குட்பட்டிருந்த பீஷ்மன் பல்வேறிடங்களிலும் விசித்திரவீரியனுக்குப் பெண் தேடித் தோற்றான். இந்நிலையில் காசிராஜன் தன் அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று குமாரத்திகளுக்கும் சுயம்வரம் நடத்தவிருப்பது பீஷ்மனுக்குத் தெரியவந்தது. பீஷ்மன் சற்றுக் கோபத்துடனேயே புறப்பட்டான். சுயம்வரத்துக்கு காசிராஜன் அத்தினாபுரத்தை அழைக்காததில் அக் கோபமோ, அதனால் காசியில் பெண் கவர்தலே நிகழ்ந்தது. சுயம்வரத்துக்கு வருகை தந்திருந்த கூடித்திரியர்களெல்லோரும் ஒன்றுகூடி சாலுவ அரசன் பிரம்மதத்தன் தலைமையில் போர் தொடுத்திருப்பினும், பீஷ்மனின் வில்லாற்றலின் முன் தோல்வியையே சந்தித்தனர். பீஷ்மன் வெற்றிக் களிப்புடன் தேரை நடத்தினான்.
அம்பிகா, அம்பாலிகா இருவரும் பீஷ்மனே கணவனாக வரப்போகிறா னென எண்ணி அடங்கியிருக்க, அம்பா மட்டும்தான் எதையோ தொலைத்தவளாய் வந்த வழி பார்த்து ஏங்கி அமர்ந்திருந்தாள். மனத்து நுண்ணுணர்வுகளின் எறிகைகளை அவள் முகரேகைகளிலிருந்து எளிதில் புரிந்துகொண்ட பீஷ்மன், விசாரிப்பில் அவள் சாலுவ நாட்டரசன் பிரம்மதத்தனை விரும்பியிருந்தமையைத் தெரிந்தான். தன் குலப் பெருமையே அவசரத்தில் காயப்பட்டுவிட்டதை உணர்ந்தான். தேர் அத்தினாபுர எல்லையுள் நுழைந்திருந்த அக் கணமே அம்பாவைச் சாலுவனிடம் செல்லவிடுத்து பயணம் தொடர்ந்தான்.
கதா காலம்
O

தேவகாந்தன்
அம்பா கதை பெரும் சோகம் கொண்டது. ஒருவகையில் அவளே குருக்ஷேத்திரப் போரின் முடிவுத் திசையின் முன்னறிவிப்புமாவாள். சாலுவ நாடு செல்லும் அம்பையை, இன்னொருவரால் வென்றெடுத்துச் செல்லப்பட்டவளை மணம் முடித்தல் தனக்கொவ்வாதெனக் கூறி பியம்மதத்தன் திருப்பியனுப்பி விட்டான். துயரம் ஏறியவளாய் காதலை அழித்துக்கொண்டு அத்தினாபுரம் வரும் அம்பை, தன் காதலின் அழிவிற்கும், நிலையுறாது அலைதலுக்கும் காரணமான பீஷ்மனையே தன்னை மணந்துகொள்ளும்படி வற்புறுத்தினாள். அது, தன் விரதத்தைக் கூறி பீஷ்மனால் மறுக்கப்பட, தந்தையிடம் ஒடி தன் நிலை விரித்து நின்றாள் அம்பை. காசிராஜனின் தூதுக்கும் பீஷ்மனிடமிருந்து சாதகமான பதில் கிடைப்பதில்லை. அதனால் இறுதி வழியொன்றை அம்பைக்குக் காட்டினான் காசிராஜன். அதன்படி அவள் பீஷ்மனின் குருவானவனும், மகாபலவான் கார்த்தவீரியார்ச்சுனனைப் பலபட வெட்டிக் கொன்றவனு lன பரசுராமனிடம் சென்று முறையிட்டாள். அம்பையையும் அழைத்துக் கொண்டு நியாயம் கேட்க பரசுராமன் அத்தினாபுரம் வந்து பீஷ்மனைக் கண்டான். ஆராயாது பெண் கவர்ந்து அவள் காதலழியக் காரணமான பீஷ்மனே அவளை மணம் முடிக்கக் கடமைப்பட்டவன் என்றான். தன் விற்றன்னையின் தந்தைக்குக் கொடுத்த சத்தியத்தைக் கூறி பீஷ்மன் குருவின் நியாயத்தையும் மறுத்தான். அதன்மேல் யாரும் கண்டுகேட்டறியாத தனிப் போர் பரசுராமனுக்கும் பீஷ்மனுக்குமிடையே மூண்டது. பத்து நாள் தொடர்ந்த அந்த யுத்தத்தில் பீஷ்மன் குருவை விஞ்சிய மகத்தான சம்பவம் ந நதது.
அம்பை குமுறத் துவங்கினாள். அவளுள் அக்கினிப் பிழம்பு பொங்கிப் பெருக்கெடுத்தது. தன் பெண்மையின் அவமானத்துக்கு இறுதியில் தானே பீஷ்மனை வஞ்சம் தீர்க்க தீர்மானமெடுத்தாள். வெடித்துச் சிதறும் எரிமலையாய்க் காடடையும் அம்பை, தபோ கிருத்தியங்களாலும் அசுர அஸ்திர சாதகத்தாலும் தன் பெண் தன்மையையே அழித்தாள். மிருதுவான மேனி வன்மை கண்டது. பெண்மை பெருகியிருந்த அவயவத்தில் பெளருஷத்தின் அகற்சி. நாண் தழும்பேறிக் காய்த்தன கைகள். பெண்ணின் மாறா அவயவத்துடன் ஆணாய் ஒர் அபூர்வ அடைதல், நாடு திரும்புதலை மனம் முற்றாய் நிராகரித்தது. ஒரு மறைவுக்குள் கருவின் புரள்வுபோல் அமைதியடையாது இயங்கிக்கொண்டு நதியாய், காற்றாய், மேகமாய் அலைந்தாள். அவள் விழியோ பீஷ்மனின் மரண திசை வாசலில் மய்யம் கொண்டபடி, ஒருநாள் யதுசேனன் என்ற அரசனின் அரண்மனையை அடைகிறவளை அவன் தன் பிள்ளையாகவே ஏற்றுக்கொள்ள,
கதா காலம்

Page 16
தேவகாந்தன்
சிகண்டியெனும் மறுநாமமெடுத்து தன் காத்திருத்தலைத் தொடர்ந்தாள் அம்பை.
அம்பிகா, அம்பாலிகா இருவருக்கும் தவிர்க்க முடியாதபடி விசித்திர வீரியனைக் கல்யாணம் செய்யவே நேர்ந்தது. அவர்கள் இருவரே மனைவியரெனினும் விசித்திவீரியனின் அந்தப்புரம் பல சிற்றரசுகளின் இளவரசிகளாலும், அரசகுல அழகிய நங்கையராலும், மோகமூட்டும் இளம் தாதியராலும் நிறைந்தது. அமித போகம் அழிவின் வாசலைத் திறந்தது. ராஜயோகம் போகமில்லாமலா என நினைத்திருந்த விசித்திரவீரியன் ராஜயசஷ்மா ரோகத்தால், பெண் சீக்குத் தீர்ப்பதில் விண்ணர்களான ராஜ வைத்தியர்களாலும் பரிகாரம் காணப்பட முடியாது அற்பாயுளில் மரணித்தான்.
பொன் மழை சொரியும் மேகங்களை நிகர்த்த ஹஸ்தியினால் நிர்மாணம் பெற்று செல்வச் செழிப்பு மிக்கிருந்த அத்தினாபுர அரசுக்கு முதன்முதலில் வாரிசுப் பிரச்சினையெழுந்தது. பீஷ்மனால் மட்டுமில்லை, யாராலும் ஏதுசெய்யவும் ஒன்றுமிருக்கவில்லை. அவன் வதங்கிப் போனான். அத்தினாபுர அரசையும், குருகுலத்தையும் காத்தலின் மார்க்கமறியாது கலங்கிப் போனான். அவனே முடிசூட்டிவிட முடியாது. கல்யாணம் செய்து வாரிசுகளையும் உருவாக்கிவிட இயலாது. வாக்கு என்பது வெறும் ஒலித் திரளாக மட்டும் நிற்பதில்லை. அதுவே சத்தியம். அதனால் வழியறியாது பீஷ்மன் அவதியும், மனக் குலைவும் அடைந்து குழம்பிநின்ற வேளையில் மிகுந்த சாமர்த்தியமாய் மாற்று ஒன்றைக் கண்டுகொண்டு வந்தாள் சத்தியவதி. •
வம்சமற்றுப் போகும் அரச குலங்களிடையே நியோக முறை இருந்தது' என்றாள் சத்தியவதி. நீயே அம்பிகா, அம்பாலிகா இருவருக்கும் கருத்தானம் அளிக்கவேண்டும்’ என்றாள். தன் பிரமச்சாரிய விரதம் மீறப்பட முடியாதது என மறுத்துவிட்டான் பீஷ்மன். சத்தியவதி சாமான்யை அல்லள். அவளிடத்தில் அதற்கும் வழி இருந்தது. அவள் தன் கன்னிகாதனத்தில் பெற்ற மகனை நியோகத்துக்கு அழைக்கும் முடிவுக்கு பீஷ்மனிடம் ஆட்சேபம் இல்லை.
கிருஷ்ணதுவைபாயன் வந்தான். 'உன் மைத்துணிகளுடன் நியோகம் செய்து அவர்களுக்குப் பிள்ளைத் தானம் அளி’ எனக் கட்டளையிட்டாள் தாய். நிலைமை தெரிந்த மகன் மறுக்காது, நல்ல நாளில் வருவே"னெனக் கூறிச் சென்றான்.
கதா காலம்
2

தேவகாந்தன்
சஞ்சலமறுத்து சத்தியவதி தனிமையிலிருந்த ஒரு வேளை அவளுக்கு பராசரன் ஞாபகத்தில் வந்தான்.
அது ஒர் அந்தி வேளை. சூரியப் பிரபை மின்னலடிக்க சலசலத் தோடுகிறது யமுனை. யமுனைக் கரையில் நடந்துகொண்டிருக்கிறாள் மச்சகந்தி. பெண்மையின் வளைவு நெளிவுகளிலெல்லாம் பரிசலோட்டி வந்தபோது பட்ட ஈரத்தில் துகில் அப்பிக் கிடக்கிறது. பெண்மையின் பதர்ப்பு துல்லிய வெளிப்பாடுற்றுக் கிடந்தது. திடீரென நதியின் ஒளிப் பாளங்கள் கிழித்து மேலெழுகிறான் பராசரன். பொன்னொளிர்கிறது மேனியில். மார்பில் வெண்நதியாய்ப் புரிநூல். கண்களிலோ அவதாரி போல் அழகுத் தசைப் பதுமை கண்டதினாலான பரவசம். மெல்ல மெல்ல மடல் பூராய் வெடிக்கிறது காம வேட்கை. அது அவளிடத்திலும் தான். அச் செம்படவப் பெண் கண்டதில்லைதான் அப்படியொரு பெளருஷத்தை அத்தனை காலத்தில், அடங்கி அடங்கிக் கிடந்த பராசரனின் நீடிய வேட்கையின் வலிதைத் தாங்க இயலுமா அப் பெண் கொடியால், கொடி வளைவுக்கேற்ற திசும நார்களாலானது. புயலடித்தாலும் சாய்ந்து நிமிர்ந்து சுழன்று தப்பும் விந்தை கொடியின் வாழ்வும் அனுபவமுமாகும். பராசரன் கரையேறினான். மச்சத்தின் வெடுக்கு அவனை விரட்டுகிறது. அவள் மேனியிலிருந்து கிளர்ந்து உடனே ஒரு யோஜனை தூரத்துக்கு வியாபிக்கக் கூடிய பரிமள கந்தத்தை அவள் உடல்பூராய் கிளர்ந்தெழச் செய்கிறான் பராசரன். மச்சகந்தி, யோஜனகந்தியாகிறாள். நன்றியாயும், புதிய அனுபவத்துக்காயும் அவள் அவனைப் பணிய, மூடுதிரையாய்ப் பணிப் புகார் படிந்துகொண்டிருக்கும் ஆற்றங்கரைப் புல்வெளியில் அவளைக் கூடி வேட்கை தணிகிறான் பராசரன். யோஜனகந்தி அப்போது உதரத்தில் கருவாயேற்றுப் பெற்றெடுப்பவனே கிருஷ்ணதுவைபாயன்.
சந்தனுவின் பெளருஷம் கேள்விக்கப்பாற்பட்டதுதான். ஆனாலும் பராசரன் எழுச்சிக் காலத்தில் அவளுக்குப் போகத்தின் போதம் கொடுத்தவன். அவன் மறக்கப்பட முடியாதவன். மரணம் வரையும். நாளும் கோளும் நக்ஷத்திரங்களும் நல்லனவாய் நின்றிருந்தன அன்று. வானில் பவுர்ணமி நிலா வர நேரமிருந்த பொழுது. கிருஷ்ணதுவைபாயன் வந்தான். மகிழ்வடைந்த சத்தியவதி, நியோகத்துக்கு வந்திருக்கும் தம் மைத்துனரை வரவேற்கத் தயாராகும்படி அம்பிகா, அம்பாலிகா இருவருக்கும் சேதி கூறச் சேடியை அனுப்பினாள்.
விஷயமறிந்தவர்களுக்கு கிளர்ச்சி மனவுச்சம் சென்றது. தேகமெங்கும் ஒரு தினவு. ஆங்காங்கே ஆசையின் சுரப்பு. இந்தா. பீஷ்மன்
9:25 காலம் 13

Page 17
தேவகாந்தன்
வரப்போகிறான். பீஷ்மன் வரப்போகிறான். என்ற மனக் கூப்பாடுகளுடன் அவர்கள் அவசர அவசரமாய்த் தம்மை அணி செய்தனர். விசேஷ புனைவுகள் மேற்கொள்ளப்பட்டன. ۔۔۔۔
வட்ட வடிவ நிலா உப்பரிகையில் வந்து இறங்கப் போவதுபோல் அத்தனை அண்மித்தாய், அத்தனை பெரிதாய் நின்றிருந்தது. அப்போது திண். திண்ணென நிலமதிர குண்டுக் குறுமுனியொருவன் அந்தப்புரம் நுழைந்தான். யாரிவர்? என்ற கேள்வி எழுமுன்னரே, 'உங்கள் மூத்த மைத்துனர். கிருஷ்ணதுவைபாயனர் இவர்தான்' என அறிமுகம் செய்து பின்வாங்கினாள் பின்னால் வந்த சேடி,
பீஷ்ம கனவு சிதறிக் குலைவுற்றனர் அம்பிகாவும் அம்பாலிகாவும், மட்டுமில்லை. ஜடா முடியுள், நீண்ட தாடியுள், வன வாழ்வின் சிரமம் கழித்த உடலுள் வெடித்துக் கிளர்ந்த கந்தம் அவர்கள் கிளர்வுகளை ஒரே மூச்சில் நசுக்கியது. கிருஷ்ணதுவைபாயன் முனிவன். ஞானி. நன்கறியப் பட்டவன். ஆனாலும் சம்போகத்தின் முதல் விதி காட்சியின் பரவசத்தில் இச்சைகள் குதித்தெழ வேண்டுமென்கிறது. முனிவன் அறிவானா அதை. அம்பிகாவின் மனையடைந்த முனி, அவள் படுக்கையை வியர்வை சொட்டும் அக் கொடு இரவில் நிர்வாணியாய் அழுக்கின் வீச்சமுடன் அணுக, கண்களை இறுக மூடி அவன் தர்சனம் மறுத்து ஒரு எந்திரப் பொறியாய் தன்னைக் கருவேற்ற அவள் இடம்விட்டுக் கிடந்தாள். போகம் முடித்து வெளிவந்த கிருஷ்ணதுவைபாயன், 'குருட்டுக் குழந்தை பிறக்கப் போகிறது' என்றான். பின் அம்பாலிகா படுக்கையை அடைந்தான். அவள் பயத்தில் வெளிறி, இச்சைகள் அவிந்து அவன் கூடலை அனுமதித்துக் கிடந்தாள். கடமை முடித்து அங்கிருந்து மீண்டவன், ‘வெளிறியதும் பலஹினமானதுமான ஒரு பிள்ளை இவளுக்குப் பிறக்கும்’ என்றான். பிறகு சத்தியவதியிடம் சென்று விபரம் கூறிவிட்டு அரண்மனை நீங்கினான்.
சத்தியவதி, பிறக்கப் போகும் பேரச் சிசுக்கள்பற்றித் தெரிந்திருந்த, போதும், ஏமாற்றம் தாங்கமுடியாதவளானாள். மீண்டும் மகனை அழைத்து அம்பிகா மேல் ஏவினாள். கிருஷ்ணதுவைபாயனின் கூட்டத்தை தாங்க மறுத்த அம்பிகா, தன் சேடியொருத்தியை அலங்காரம் பண்ணுவித்து முனியை எதிர்கொள்ளுமாறு அறிவுறுத்தி தன் படுக்கையில் கிடக்கவைத்து விட்டாள். பஞ்சணையில் பரவசப்பட்டுக் கிடந்திருந்தாள் சேடி. திசை குலுங்க வந்த முனி சேடியைச் கூடி கருவேற்றிச் சென்றான். சேடி பெற்ற பிள்ளையே ஞானவானான விதுரன். அம்பிகா, அம்பாலிகா பெற்றவர்களே முறையே திருதராஷ்டிரனும், பாண்டுவும்.
கதா காலம்
14

தேவகாந்தன்
விசித்திரவீரியனின் வம்சத் தொடர்ச்சி இவ்வாறாக அடையப்பட்டும் பீஷ்மன் பெரிதாய் நிம்மதி கொண்டுவிடவில்லை. மூத்தவன் அந்தகனா யிருந்தான். இரண்டாமவன் பலஹினனாயும் எந்நேரமும் நோயாளி யாகவுமிருந்தான். மூன்றாமவன் சகல அம்சங்களும் வாய்ந்தவெனினும் அரசாட்சிக்கு அவனை உரியனல்லனென அவர்கள் வழிமுறை சொல்லியது. சவுத்திரிய வேதம் அனுலோமம், பிரதிலோமம் என வர்ணம் மாறுபட்ட இரு பணமுறைகளைக் குறிக்கிறது. இரண்டையும் சமூகம் ஏற்றது. ஆனால், பெண் வழியாகவே குலமுறை கண்ட வமிசம் அது. பெண் கூடித்திரியை யாயிருந்தால் மட்டுமே பிள்ளை கூடித்திரிய குலத்ததாகும். இல்லையேல் சூத்திர குலத்ததாய் ஒதுக்கப்பட்டு விடும். இந்தவகையில் சேடியின் மகன் சூத்திரன். விதுரன் அரசு கட்டிலேறுவதை பீஷ்மனே தடுப்பான். நாடும், குருகுலமும் அவனின் இரு கண்கள். அதனால் பலஹினனும் அடிக்கடி நோய்வாய்ப்படுபவனுமான பாண்டுவை இளவரசுப் பட்டம் கட்டவைத்து, தான் பிரதிநிதியாய் நிர்வாகத்தை நடத்தினான்.
கதா காலம்
15

Page 18
இரண்டு
உப கண்டத்தின் தென்மேல் புற தேசமொன்று சிறு கிராமம் (முற்காலம்)
வெளியாடிய இளங்காற்றின் இத வருடலில், காஞ்சுணையென எரிசெய்யும் கோடை வெகிர் படர்ந்த மேனியது வேதனையடங்க, கிராமத்தின் குளத்தங் கரையில் நின்றிருந்த விழுது தொங்கும் மதமதத்த ஆலின் கீழுள்ள மேடையில் தன் அங்கவஸ்திரத்தைப் பணிய விழவிட்டு சற்றே கிறங்கிய கண்களுடன் இளம் மாகதனொருவன் காற்றுப் பரப்பில் அலையும் கதை நார்களெடுத்து தன் களம் காணத் தயாராகிக் கொண்டி ருந்தான்.
வெளி கறுத்திருந்தது. ஒரு கண்ணாடிக் கூண்டு விளக்கு எதிர் நாற்சந்தியில் அடித்த வெளிச்சம் பக்கப்பாட்டில் சபையில் விழுந்திருந்தது.
சற்றுத் தொலைவில் ஒரு புறமாய் கதா கனியுண்ணத் தவனம் பெற்ற ஒரு ஆண் - பெண் ஜோடி தம் கவனமி ழந்து அவ்வப்போது ஒருவரை யொருவர் தள்ளியும் இடித்தும் கரலிலைகள் புரிந்து கொண்டிருந்தது. இன்னொரு புறத்தே அக்கம்பக்கமாய் இரு புருஷர் களோடு பவ்யமாய் அமர்ந்திருந்தாள் ஒர் அழகிய பெண். அவள் உடலொடுக்கி அமர்ந்திருந்தும் அதன்
கதா காலம்
16

தேவகாந்தன்
அழகு அரைகுறை ஆடைகளில் தெளிவாய்த் தெரிந்தது. அவ்வப்போது அட்டகாசமாயெழுந்த ஒரு பெண் சிரிப்பு அவளிடமிருந்தே எழுந்ததென்பது தெரிந்தபோது, அவளது பவ்யம் அந்த இடத்துக்கான அவளது மரியாதையென்பதைச் சபை புரிந்தது. அவ்வப்போது அது அவள் புறம் திரும்பியது அவளது சிரிப்பினால் மட்டுமில்லை.
கதா காலம் துவங்கியபோதே பெண்கள், ஆண்கள், முதியோர், இளையோரென்று குளத்தங்கரையின் அந்த ஆலம்மேடை சூழ ஏக கூட்டம். கூட்டத்தில், என்றுமே மது அருந்தாதவர் இருந்தனர், அருந்துபவர் அருந்தி வந்திருந்தனர்; விழாக் காலத்துக்காய் அருந்தும் சிலர் மெல்லிய போதை ஏற்றியிருந்தனர். கதா விரிக்கும் மாகதன் முதியோனல்லன்; இளவல். சில வருஷங்களின் முன் அக் கிராமத்தில் ஜெயக் கதை விரித்த முதுமாகதனின் மகனே அவனென்று கிராமத்து முதிசுகள் அவன் ஆகிருதியிலும் முகத்திலும் ஒடிய அறிமுக ரேகைகளைக் கொண்டு அறுதியிட்டுக் கூறின. இரு இளம் பெண்களும், ஒரு மூதாட்டியும், ஒரு சிறுவனுமடங்கிய மாகத கூட்டமொன்று ஒரு கிழமைக்கு முன்னால் அக் கிராம நாற்சந்தியில் வந்திருக்கக் கண்டதுமே ஊரில் அப் பேச்சாயே இருந்தது. கதாகாரன் கிராமக் குடிலெங்கும் திரிந்து மது இரந்து குடித்தும், மாகதக் குறுங்கதைகளினால் அவர்களைக் குதூகலப்படுத்தியும் அம் மன்மத காலத்தைப் பெருவிளப்பம் செய்திருந்தான். அவன் மேல் கிராமக் கறுப்பழகியர் சிலர், மணமாகி குழந்தை பெற்றவர்கள் கூட, கண் போட்டிருந்தமை வெளிப்படையாயே தெரிந்தது. இன்னும் மது தருவேன்; நாளையும் வா; முடிந்தால் இருட்டு விழ வா! என்றுரைத்தார் சிலர். மேலாடையை நழுவவிட்டு, அதைத் தாமதித்து எடுத்து வீசி அவனின் ஆசையைக் கிளரச் செய்வோராய்ச் சிலர் தேச நடைமுறைகள் பற்றி, ஊர்க் கட்டுப்பாடுகள் பற்றி தன் நீண்ட பாத சஞ்சார வாழ்க்கையில் அவ்விளமாகதன் நிறையவே கற்றிருந்தான். அவன் ஆசைப்பட வைத்து, தான் ஆசைப் படாமல் ஒதுங்கியே நடந்தான்.
பெரு ஆலமரத்தைச் சுற்றி களிமண் திண்ணை. அது செம் மண்ணால் மெழுகப்பட்டு அவ் வருஷத்திய கதா காலத்துக் காய் வெகு நேர்த்தியாய் வைக்கப்பட்டிருந்தது. இளமாகதன்
கதா காலம்
17

Page 19
தேவகாந்தன்
அதன் மேல் சப்பாணி கட்டி மவுனமாய் அமர்ந்திருந்தான்.
அவன் செரும சபை அசைந்தடங்கியது. திடீரென எட்ட விருந்த யாரோ ஒருத்தியின் கெக்கட்டச் சிரிப்பு அலை அலையாய் எழுந்தது. மறுகணம் அதை அடக்கி எழுந்தது மாகதன் குரல்.
"கேளுங்கள்.
பீஷ்மனின் முடிவு, பாண்டுவே முடிசூட்டப்பட்டிருந்தாலும் திருதராஷ்டிரன் மூத்தோனாகையால் அவனுக்கே முதலில் மணம் முடிப்பது என்பதாக விருந்தது. அதனால் தூதனுப்பி பல்வேறு தேசங்களிலும் விசாரிப்புச் செய்து குருகுலத்துக்குப் பொருத்தமான நங்கையொருத்தி கண்டடையப்பட, அவள் தேசமான காந்தாரத்திற்கு சொர்ணம், வெள்ளி களினாலான பலபட்ட வெகுமதிகளுடன் தூதரும் உற்றாரும் உறவினரும் கொண்ட ஒரு பெருங்கூட்டத்தை மணத்தைப் பேசிமுடித்துப் பெண்ணை திருமணத்துக்கு அழைத்துவரவென்று பீஷ்மன் தாமதிக்காது அனுப்பி வைத்தான். நாலு பொய் சொல்லியும் நல்ல ஒரு கல்யாணத்தை நடப்பிப்பது தர்ம மென்பது அவன் தீர்மானம். அதுபற்றி அறிவுறுத்தப்படாதே அனுப்பப்பட்டிருந்தும் மணப் பேச்சுக் குழாத்துக்கும் அதுவே திட்ட மாயிருந்தது.
காந்தாரம் சென்றவர்கள் வெகுவாக வரவேற்கப்பட்டார்கள். அத்தினாபுர அரசனின் மூத்தோனுக்குப் பெண் கேட்டு வந்ததில் அவர்கள் மகா கவுரவமும் களிப்பும் அடைந்தமை காந்தாரமெங்கும் எதிரொலித்தது. அத்தினாபுரத்தில் மூத்தோன் ஏன் அரசனாகவில்லையாமென்று ஒரு முதுமைக்குக்கூடத் தோன்றவில்லை. அது வெகுமதிகளின் சொர்ண, வெள்ளி ஒளிவீச்சுக்களில் குருடுபட்டுப் போனது.
திருமண சம்பந்தத்துக்கு சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே சம்மதம். யானை, பசு மந்தை, வீட்டுப் பறவைகளென பிரதி வெகுமதிகளும், மணப்பெண்ணுக்கான ஆடை ஆபரணங்களும் எடுத்துச் செல்லப்படத் தயாராகின.
கதா காலம்
8

அதவகாந்தன்
குறித்த நாளில், குறித்த நேரத்தில் தலைவியை விடவும் வயதில் மூத்தவளான தோழியும், உடன்பிறந்த சகோதரனான சகுனியும் கூடச்செல்ல, தாய், தந்தையர் மற்றைய உறவினர் சிலரும் சகிதம் இளவரசியான காந்தாரியின் அத்தினாபுரம் நோக்கிய பெரும் பயணம் துவங்கியது. சகுன சாஸ்திர நம்பிக்கை அப்போதும் கூடித்திரிய வாழ்முறையில் நிறையவிருந்தது. துர்சகுணமே சகுனியாக வந்ததே, அப்போது அது ஏன் கவனிக்கப்பட வில்லை.
வழி நெடுக காதல் கனவுகள் வெடித்தெழுந்தன காந்தாரத்தின் பூரண கன்னிக்கு. நாட்டைவிட்டுப் புறப்பட்ட ஆரம்பத்தில் அவளது மனது சஞ்சலப்பட்டு சொந்த அரண்மனை, நந்தவனம், விளையாடிய தோழிகளை நினைத்து வதைந்ததுதான். காந்தாரம் பேரழகு வாய்ந்ததுமில்லை; பெருஞ்செல்வம் பெற்றதுமில்லை. மட்டுமன்றி, பூகர்ப்பத்தில் நெருப்புக் குழம்பு பொங்கிப் பெருகி வெடிக்கத் துடிப்பதாயும், மண் மடியுள் கந்தக ஊற்றுக்கள் கொதித்து கொப்பளிக்கத் தயாராயிருப்பதாயும் அவள் சொல்லக் கேட்டிருந்தாள். இருந்துமே அதை நீங்குகையில் அந்த வதை அவளிடத்தில் ஏற்பட்டிருந்தது. தூரம் கழியக் கழிய அத்தினாபுர நெடும்பாதையின் அழகிய நிலவரைக் கோலங்கள் அவளை மெய்சிலிர்க்க வைத்து துயரைப் பறத்திவிட்டன. உதய சூரியன் அவள் நோக்கிலே அந்தளவு பெரிதாய் என்றும் பட்டதில்லை. காலிக்கும் நிலவும் அப்படியே. வானடர்ந்த நக்ஷத்திரங்கள் வேறு பெரிது பெரிதாய்.
வதைக்கும் பெரும் பயணம் முடிந்து அத்தினாபுர அரண்மனை யடைந்த காந்தாரி ஒய்வில் விழுந்தாள்.
விவாக காரியங்கள் தடல்புடலாய் நடந்தன.
அரண்மனையில் மட்டுமன்றி, நகரெங்குமே கோலாகலம்.
காந்தாரத்து அரண்மனையை விட அத்தினாபுரத்தது பன்மடங்கு பெரிதானது. அரண்மனையின் எந்தெந்த இடத்திலும், மூலைமுடுக்கிலும் ஒரு விசையில்போல் தோன்றிக்கொண்டிருந்தாள் காந்தாரியின் முது தோழி. திரும்பி காந்தாரியின் மனையடையும் ஒவ்வொரு பொழுதிலும் அவளுக்குச் சொல்ல நிறைய விஷயங்களிருந்தன. அரண்மனையின் பிரமாண்டம், அதன் செல்வச் செழிப்பு, ஆயுதங்களின் முழு உடம்பும் அங்கே உலோகத்தினால் அமைந்திருந்த சிறப்பு, அவற்றின் பளில் உலோகத்தின் தரம், இருக்கை, படுக்கை, பாத்திரமென்று எல்லாமே பொன், வெள்ளிகளினாலான வளம் யாவும் சொல்வாள் கண்டு. காந்தாரி அந்தரத்தில் இருக்கையிட்டாள்.
கதா காலம்
I9

Page 20
தேவகாந்தன்
வான்வெளியில் குதூகலத்தால் பறந்தாள். ஜாதகப் பறவையாகவே ஆகிவிட்டாள். இந்நிலையில் ஒருநாள் மூச்சிரைக்க தும். தும்மென்று மணமகள் மனை வந்தாள் தோழி. எட்டி அடி வைத்த அவள் வரத்தே காந்தாரியைப் புருவமேற வைத்தது. கிட்ட வந்தவளின் முகம் ஏறிட்டாள். பதற்றம். பயம். துக்கம். கோபம். இவையெல்லாமே கலந்து வழிந்தன முகத்தில், ‘என்னடி’ என்று கேட்டாள். "மோசம் போய்விட்டோமே இளவரசி" என்று தலையடித்தாள் தோழிப் பெண். விளக்கமாய்ச் சொல்லு, என்ன நடந்தது' என மறுபடி காந்தாரி தூண்ட, ‘செல்வச் செழிப்பைக் காட்டி அங்கஹரீனத்தை அத்தினாபுரத்தார் மறைத்து விட்டார்களம்மா’ எனப் பிரலாபித்தாள் அவள். அங்கஹlனமா. அத்தினாபுரத்தார் மறைத்தார்களா. யாருக்கு’ என்று காந்தாரி குழம்பி நிற்க, 'உனக்குக் கணவனாக வரப்போகிறவன் அந்தகப் பிறவி என்றாள் தோழி
விளக்கமாய்.
மறுகணமே மறு வார்த்தையின்றி நினைவிழந்து நிலம் சரிந்தாள் காந்தாரி. காதல் கனவுகளோடும், காம ஏக்கங்களோடும் வந்தவள், அத்தினாபுர அரண்மனை வெறுநிலத்தில் அவலட்சணமாயும் பரிதாப மாயும் விழுந்து கிடந்தாள்.
சிறிது நேரத்தில் பிரக்ஞை தெளிந்து எழுந்தவள் கண்களில் செவ்வரிகள். மெதுமெதுவாய் அவை கரையலாயின. கண்ணிருமற்ற அவள் நோக்கில் அமைதி இழைந்தது. ‘என்ன, என்னாயிற்று உனக்கு. ஏன் இப்படி இன்னுமே அமைதி காக்கிறாய்' எனத் தோழி உலுப்ப, ‘எல்லாம் முடிந்துவிட்டதடி, இனி என்ன” என்று அவளை விலக்கினாள் காந்தாரி. அவளது விழிகளின் செம்மை நேரே இதயத்துள் சென்று உறைந்து கொண்டதென்பதைத் தோழி புரிந்துகொண்டாள். வெளிப்பட வெடித்திருந்தால் அதன் வேகம் தணிந்திருக்கும்; வன்மம் குறைந்திருக்கும். ஆனால் தலைவி உள்ளடக்கிய நெருப்பு என்றோ ஒருநாள் சகலதையும் பஸ்மமாக்கும் தீவிரம் பெறுமென்று தோழி திண்ணமாய் உணர்ந்தாள். தோழிக்கும் தலைவிக்குமான அவ்வுரையாடற் கணத்தை யாரும் கண்டிலர். கண்டிருந்தால் அத்தினாபுர அரண்மனையே உறைந்து போயிருக்கும். பீஷ்மன் அறிந்திருந்தால் கதிகலங்கிப் போயிருப்பான். ஆனால் ஏது விக்னமு மற்று விவாக நாள் வந்தது. மணப்பெண் மணவறை வரக் கண்ட சபை ஹா! என்றது. திருதராஷ்டிரன் நெஞ்சுள் திடுக்கிட்டான். தனக்கு விழியாக நின்றிருக்கும் ஏவலாளைத் தட்டி அந்த ஹாங்காரத்தின் காரணம் கேட்டான். இளவரசி தன் பார்வை மறைத்து துணியால் கண்களைக் கட்டிக் கொண்டிருக்கிறாள்' என அவன் சொல்லக் கேட்ட திருதராஷ்டிரன் சாம்பிப்
கதா காலம்
20

தேவகாந்தன்
போனான். அவள் தன்னையோர் அபாக்கியவதியாய்ச் சபையில் அடையாளப்படுத்தியதாய் அவன் எண்ணிப் புழுங்கினான். ஆனால் சபையோ அவளின் பதிபக்தியாய் அதைக் கண்டு மெய்மறந்திருந்தது.
காந்தாரி பெருமுக விலாசத்தவளாய் திருதராஷ்டிரன் அருகில் தவிசமர்ந்தாள்.
மணவினைகள் முடிந்தன.
முதலிரவுப் படுக்கையறையின் வாசல் வரை ஏவலாள் துணையாய் வந்த திருதராஷ்டிரன் அவனை அனுப்பிவிட்டு கபாடமடைத்து தாழிட்டுக் கொண்டு, தளபாடங்களில் சற்று நிதானமிழந்து இடித்து தடுமாறி இடறிக்கொண்டு பஞ்சணையை நெருங்கினான்.
தன்னை நெருங்கும் பாத அரவத்தில் திருதராஷ்டிரன் கிட்ட வந்துவிட்டதைத் தெரிந்தும் காந்தாரி அசைவற்றிருந்தாள். காற்றசைந்ததை அவன் கேட்டான். ஆனால் பட்டின் கூறை ஒரு சிறிய மொரமொரப்புத் தானும் செய்யாதிருந்தது அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. அவளைத் தேடுவது அவனுக்கு பெருமைக் குறைவு. அதனால் அவளின் இருப்பை அறிய, "காந்தாரி' என்றான்.
நிசப்தத்தில் மெளன விடை
அவளின் இறுக்கம் அதில் விளங்கியது.
அவன் உள்ளுள்ளாய் உடைந்து கட்டிலில் பொத்தென அமர்ந்தான். சிறிது நேரத்தில் தன்னைத் தெளிவித்துக்கொண்டு, 'நீ எனக்கு விழியாயி
ருப்பாயென்று நினைத்தேன். இவ்வாறு நீ கண்களைக் கட்டி பார்வையை மறுத்துக்கொண்டது எனக்கு உவப்பில்லை' என்றான்.
அப்போது காந்தாரி சத்தமற்றுச் சிரித்தாள். உள் கிடந்து உந்தியெழுந்த நெருப்பு அதில் இருந்தது.
திருதராஷ்டிரனால் அதை உணர்ந்து கொள்ள முடியவில்லை.
கதா காலம்
ol

Page 21
தேவகாந்தன்
குழவும் மவுனம் வெடித்துக் கிடந்தது. நிலைபெயராதி ருந்தும் காற்றிலான தருக்களின் அசைவுகள் அதை அதிர்வுறுத்தும் ஒசையாய்க் கிளர்ந்தன. சருகுகளின் உருள்வு. தடித்த ஆலமிலைகளில் காற்று ஊடறுத்தபோது ஸ். ஸ்ஸ். ஒலி எழுந்தது. விழுதுகள் அசைந்து மாயத் தோற்றம் செ'தன.
அத்தினாபுர அந்தப்புரத்தின் படுக்கையறை நிசப்தமே அங்கே படியெடுத்தாற்போல் விழுந்திருந்ததா. அசலனமாய் மனிதர்கள். ஒரே உணர்வில் உறைநிலை அனைவரிலும்,
துரத்து ஆற்றுப் பரப்பில் திசைமாறிய பறவையொன்றின் கிரீச்சொலி எழுந்தது. சிலர் மனமதிர்ந்தனர். சிலர் தேகங்களே.
இடைவெளியறுத்த மாகதன் தன் கதா திரிப்பைத் தொடர்ந் தான்.
இன்னும் கேளுங்கள்.
குந்தி போஜத்து ராஜாவுக்கு வம்சமற்றுப் போனது. விதியின் பின்னலிழைகள் எவ்வளவு துல்லியமாயும். தீர்க்கமாயும் விழுந்து இறுகுகின்றன என்பதற்கு இன்னோர் உதாரணம் இப்போது நடக்கவிருந்தது. தம் சிநேகிதத்தைக் கருத்தில் கொண்ட யாதவ குல சிரேஷ்டனான சூரன் என்பவன், பிருதை என்ற தன் பெண் குழந்தையை போஜனுக்குத்
தத்துக்கொடுத்தான். போஜன், பெற்ற பெண்ணேபோல் அவளுக்கு குந்தி
என்று மறுநாமம் கொடுத்து பேரன்போடு வளர்ந்து வந்தான்.
இருந்தும் ஏன் விழுந்தது அக் குழந்தையில் அப்படியொரு பூடக மூட்டம். தாய், தந்தையராய் உணரப்பட்டிருந்தவர் சடுதியில் மாறியதின் தாக்கம்ோ. அல்லது, அதுவேதான் அக் குழந்தையின் இயல்பின் குணமோ, நெருங்கிய சுற்றத்தார் மத்தியில் விடையறியாக் கேள்விகள். விதி பின்னால் பின்னவிருந்த பெரும் வலைக்கு மேலும் ஒரு இழை விழுந்தாயிற்று. எது எப்படியோ, அப் பூடக மூட்டத்துள்ளும் தனக்கான உணர்கைகளில், அறிகைகளில், செயற்பாடுகளில் அது அதிவிவேகம் காட்டியது.
கதா காலம்
22

தேவகாந்தன்
வெகு காலமாயிற்று.
ஒருநாள் பெருங் கோபத்துக்கும், கடும் சாபத்துக்கும் பெயர்போன துர்வாச முனி போஜம் வந்தான். போஜத்தைச் சேர்ந்த மகாவனத்தில் வல்லிய தபசு மேற்கொள்ள விருப்பது சொன்னான். முனிவனின் குறிப்பறிந்து தபசுக்கு காவலேற்பாடு செய்ய தானே முன்வந்து அனுசரிப்பதோடு, தன் மகள் குந்தியையும் அவனது பணிவிடைக்காய் அவனுடன் வனமனுப்பி வைத்தான் போஜன்.
தபசுக் காலங்களில் அரக்க மனம் படைத்த சில வன குழுவினங்களால் தபசிகளுக்கு மகாதுன்பங்கள் விளைந்து வந்தன. காட்டு விலங்குகளும் பெருவூறு செய்யும். அதனால் அவ்வகையான காவற்பணிகளின் உதவிபெற அவர்கள் மன்னர்களை அணுகி ஆதரவு பெறுவர். இலங்கை அரக்கியர் பற்றி பெரும்பெரும் செய்திகள் சொல்லப்படுகின்றன. புவி தன்னிலை திரிவதன் முன்னால் நடந்த பெருயுத்தம் பற்றிய கதையில் அவை வரும். மனிதர்களை உயிரோடு தின்னும் குணமுடையோராய் அவர்கள் இருந்ததைச் சொல்லும் கதைகளை நம்பாமல் ஏன் விடவேண்டும். அதனால் தான் அரச அனுசரணை வேண்டி துர்வாசன் போஜம் வந்தது. போஜன் குந்தியை அனுப்பியது, பெருங்கோபம் படைத்த மகா முனியைத் திருப்திப்படுத்த வேண்டியே. வசிட்டனுக்கு தசரதன் போல், துர்வாசனுக்கு தானாகும் ஒரு கற்பிதம் அவனுள் எழுந்திருக்கவும் கூடும்.
துர்வாசனின் தபசு நேர்த்தியாய் முடிந்தது. அவனும் திருப்தியுடன் போஜத்திலிருந்து நீங்கிப் போனான்.
இதுதான் அய்யங்கள் சடைத்துக் கிளம்பும் இடம். தபசிக்கான பணி பூரணப்பட்ட பின்பும் குந்தி ஏன் தங்கினாள் துர்வாசனின் பர்ணசாலையில், அதுவும் தனியாக?
அவற்றின் விடை இனியதில்லை.
ஊண் அடங்கல் பெண்டிர்க்கு தர்மமாகியிருந்த காலம் அது. உண்டி சுருக்குதல், உடலின் மதர்படக்கலும் என்றாகும். அதைக் கடைப்பிடிக் காதிருக்கும் ஆணைச் சரி, பெண்ணைச் சரி தசைத் தினவு தின்று தீர்த்து விடும். இல்லையேல் அதர்மங்கள் நடக்கும். குந்தியின் அதர்மம் அது காரணமாய் விளைந்ததா. அந்த அதர்மத்தில் குந்தி மட்டு மேன் பாதிக்கப்பட்டாள். சக பாத்திரவாளி எவ்வாறு மறைய முடிந்தது.
வினாக்கள் விடை தேடட்டும்.
கதா காலம்
23

Page 22
தேவகாந்தன்
குந்தி பத்துத் திங்கள் பாடாய்ப் பட்டாள். இறுதியில் அவளுக்கோர் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் முதல் தரிசனமே குந்தியிடத்தில் அளவில்லாத பிரியத்தை உருவாக்கி விட்டிருந்தது. விரிந்து நீண்ட செவிகளும், கவசம் பூண்டதுபோல் புடைத்தகன்ற மார்புமாய் அவ் ஆண் குழந்தை. இரட்டைச் சூரியன்களாய் அதன் கண்கள். கதிர் வீச்சுக்களாய் இமையின்தூவி மயிர்கள். கூடவே வைத்திருக்கத்துடித்தது வெட்டுப்படாக் கொடித் தொடர்பு. ஆனால் அபவாதமாகி விடுமே. கீழ்மக்கள் குலங்களிடையே அவ்வாறு நடந்துகொண்டிருந்ததுதான். அவளது ராஜகுலம். துறப்பது தவிர வேறு வழி இருக்கவில்ல்ை குந்திக்கு. அதுவொன்றும் மகா சங்கடத்தையும் அவளிடத்தில் விளைப்பதுமில்லை. அவளே இன்னொரு தாய் தந்தைக்கு தன் சொந்த தாய் தந்தையரால் தத்தளிக்கப்பட்டவள்தானே. பெற்ற பாசம் தத்து அளிப்பதிலிருந்து அவர்களைத் தடுக்கவில்லையே. சூரன் தத்துக் கொடுக்க விரும்ப, தாய் சம்மதித்துத்தானே இருந்தாள். அவள் மட்டுமேன் சிசுவின் பிரிவு குறித்து பெரியதோர் அல்லலைச் சுமந்து துன்புறவேண்டும்.
குழந்தையும் தெய்வீகக் குழந்தை போல, பிரிவுக்கு இலகுவாய் இணங்கிய மாதிரி மவுனமாய்க் கிடந்தது. தாயின் முலைக் காம்புகளைச் சப்பியாவதிருக்குமா அது. பாலின் சுவை தெரிந்திருக்குமா. அமிர்த மெனப்படுகிறதே தாயின் பால், அந்த அமிர்தத்தின் ஒரு துளியையேனும் தன் சிசுவின் தொண்டைக் குழிக்குள் இறக்கிவிட்டிருப்பாளாகுந்தி, தன் மீது ஒட்டிய தூசியைத் தட்டி விடுவதுபோல் அதைத் துறந்துவிடப் போகும் இறுதிக் கணத்தில் அந்த உயிர்ப் பரிவுகள் மேலெழுந்திருக்க வாய்ப் பில்லைதான். தகாப் புணர்ச்சியின் விளைவுகளை தாய் தன் குழந்தையில் சுமத்திவிட்டு தான் தப்பிக்கொண்ட தருணம் அது.
குந்தி குழந்தையைப் பேழையொன்றில் இட்டாள். கங்கையில் மிதக்கவிட்டுக் கை கழுவினாள். பின் அரண்மனை சென்றாள்.
கங்கையில் மிதந்து சென்ற பேழை ஒருநாள் அத்தினாபுரத்து தேர்ச் சாரதி அதிரதனின் கைகளில் சேர்ந்தது. வசுசேனன் என நாமம் சூட்டி மிக்க வாத்சல்யத்தோடு குழந்தையை வளர்த்து வந்தான். அவன் மனைவி ராதைக்கும் அதன்மேல் பெரும் பிரியம். அதனால்தான் தனக்கே சொந்தக் குழந்தைகள் பிறந்தபோதும் அந்த அன்பு அசைவற்றிருந்தது.
ஆயிற்று. எல்லாம் ஆயிற்று. ராஜகுலக் கேவலமொன்று வெளிவராமல் புதைந்தே போயிற்று.
வருஷங்கள் சில கழிந்தன.
கதா காலம்
24

தேவகாந்தன்
ஊணிலும் ஒய்விலும் தேகம் மறுபடி மதர்க்கத் துவங்கியது குந்திக்கு. குழந்தைப் பேற்றின் உதரத்து வரி அடையாளங்களும் மறைந்தன. குழந்தையொன்று பெற்றதாய், அதை ஆறேற்றிவிட்டதாய் குந்தியிடத்தில் கூட ஞாபகங்கள் அரிதாகின. போஜன் அதற்கு மேல் காத்திருக்கவில்லை. அண்டை அயல் தேசங்களுக்கெல்லாம் அவளது சுயம்வரத்துக்கான அழைப்புக்களைப் பறத்தினான். அத்தினாபுரத்துக்கும் அழைப்பு சென்றது.
அத்தினாபுரம் பெரும் பெயர் பெற்ற தேசம். பீஷ்மன் வில்லாளி யாயிருந்து அதன் கீர்த்தியைப் பெருக வைத்திருந்தான். அதனாலேயே சுயம்வரத்துக்குச் சென்றிருந்த பாண்டுராஜனுக்கு ஏது தயக்கமுமின்றி மாலையிட்டாள் குந்தி. சுயம்வரத் தேர்வில், குருகுலம் பார்க்கப்பட்டதே தவிர, பெளருஷம் பார்க்கப்படவில்லை.
குந்தி பட்டத்தரசியாய் அத்தினாபுரம் வந்தாள்.
பலஹினி தன் முதலிரவைக் கழித்தான். பாண்டு அன்று தன்னில் தானே வெட்கமும் வேதனையும் அடையும்படியாகவே எல்லாம் நடந்தன. குந்தி காமமடங்காது விரக வெளியில் விழுந்தாள்.
வருஷங்கள் உருண்டோடினாலும் குந்தி கர்ப்பமாகும் சாத்தியம் ஏற்படவேயில்லை. திருதராஷ்டிரன் - காந்தாரி நிலையும் அதுதான். மீண்டும் குருகுலத்துள் வாரிசில்லாப் பிரச்சினை எழுந்துவிடுமோவென பீஷ்மனில் விசனம் பிடித்தது.
மத்ர தேசத்துக்குப் பெண்கேட்டு தூதுவர் விரைந்தனர். பீஷ்ம தூதுவரை மத்ர தேசம் மறுத்துவிடுமோ. அதுவே வீரம் விளைக்கிற பூமி. விரைவில் பாண்டுவுக்கும், மத்ர தேச அரசிளங்குமரி மாத்ரிக்கும் திருமணம் நடந்தது.
அத்தினாபுரத்து அரண்மனை அந்தப்புரத்தில் விரகதாபத்தின் இன்னோர் உயிரின் மூச்சும் இரவுகளை அதிரவைக்க ஆரம்பித்தது. அதன் இருண்ட மூலைகளில் வவ்வாலோ, ஆந்தையோ, கோட்டானோ இல்லாதிருந்திருக்கலாம். ஆனால் அடங்கா ஆசைகளின் அவலம் இருளில் அலைந்துகொண்டிருந்தது. அவ் அவலமே ஒளியிலும் இருளை உமிழ்ந்து கொண்டிருப்பது. பெருங்கனவழிந்த மாத்ரியின் உயிர்க் குரல் யாருக்குக் கேட்காவிட்டாலும், பாண்டுவுக்குக் கேட்டது. செய்வதறியாது இரவுகளை ஏங்கிக் கழித்தான் அவன். சத்தியவதியின் தீக்ஷண்யமான கண்கள் குந்தியினதும் மாத்ரியினதும் உதரங்களில் தீவிரமாய்ப் படிகிறபோது பாண்டு உள்ளுக்குள்ளாய் வதங்கிக்கொண்டிருந்தான். வெட்கம் ஒரு
கதா காலம் 25

Page 23
தேவகாந்தன்
பொழுதில் அவனுக்குப் பயமாக உருவெடுக்கத்துவங்கியது. தன் பலஹினம் தன் மனைவியர் இருவர் தவிர மற்றப் பேருக்குத் தெரிந்துவிடக் கூடாதென்பதில் அவன் உறுதியானன். அப்போது அவன் அவமானத்தின் வெளிப்படச் சிதறுதல் தவிர்க்க முடியாதபடி ஏற்படும். அந்தப் பயம் அவனை மேலும் நலிவாக்கியது. பிறர் யாரையும் வெறுத்து, வெளிச்சத்தை வெறுத்து அவன் ஒதுங்கிப் போய்க்கொண்டிருந்தான். இனி நாடு, நகர், பட்டம் எல்லாம் எதற்காக. ராஜ்யப் பொறுப்பைத் தன் திரும்புகைவரை தன் அந்தக அண்ணனிடமும், ஆலோசனைப் பொறுப்பைத் தம்பி விதுரனிடமும் ஒப்படைத்துவிட்டு குந்தியையும் மாத்ரியையும் அழைத்துக்
கொண்டு பாண்டு வனமோடினான்.
வான் மறைத்த பசுமைத் திரைக்குள் தன் பலஹினங்களின் அவமானத்தைப் புதைத்தான் பாண்டு. கானகக் காற்றின் நிரந்தரவோசையில் அவன் இதயத்தின் அழுங்குரல் அழுந்திக்கொண்டு வந்தது. மனக் கருக்கில் நினைவுகளின் காயம்பட்டுப் போனவன், காணாத சுகம் கண்டு அவை ஆறத் துவங்கினான். தானறிந்தும் தன்னையறிந்துமான இரு முகங்களே தன்னைச் சூழ்ந்ததாகவும், தளிரும் கொடியும் பூவும் குளமும் மலையும் அருவியும் ஆறும் மட்டுமே நோக்கில் படுவனவாயும் வாழ முடிந்ததில் அவன் புழு நிலையிலிருந்து நிமிர்ந்தான். குருவிகள் கலகலத்து மெளனம் கற்பித்தன. அருவிகள் இழிந்து ஒசையை அனுபவமாக்கின. தளிர்கள், கொடிகள், அசைந்து பாவங்கள் படிப்பித்தன. அதுவே தவம், பாண்டு தவமியற்றினான்.
தன்னைப் பிறர் முன்னிலையிலும் நிறுத்தி நிற்க இப்போது அவனுக்குள் எண்ணச் சுழற்சி. ஏது உபாயமென நாள் நாளாய் யோசித்தான். அவனது இருண்ட சிந்தனையுள் ஒருநாள் வெளிச்சம் தெரிந்தது. மறுநாள் குந்தியை அழைத்து கொடு விலங்கினங்களற்ற புறவன எல்லைக்கு அவள் வன உலா போய்வர வேண்டுமெனச் சொன்னான். குந்தி தயங்கினாள். அவள் வனத்தின் விகற்பங்கள் அறியாதவளல்ல. வன உலா அந்நிய முகங்கள், அறிமுகங்களின் தரிசிப்புக்கானதென அவள் அறிந்தே இருந்தாள். கானகம் மிருகங்களை மட்டுமில்லை, மிருக பலம் கொண்டவர்களையும் உடைத்தது; அழகுகளை மட்டுமில்லை, அழகர்களையும் கொண்டது; வில் வீரர்கள், வேல் மறவர்கள், கல்லெறி வல்லர்கள், பெருந்தோள் புஜபலத்தார் என்று அது தன் மக்களாய் அனைவரையும் புரந்தது. கூடித்திரிய வன விளையாட்டுக்களின் பயில்வும் அங்கே நிகழ்ந்தது. அவர்களின் வக்ர விளையாட்டுக்களுக்கும் வனம் பெரும் களமமைத்துக் கொடுத்திருந்தது. பெளருஷங்களில் மயங்கி வன மகளிர் காம சுகம் அடைவதும், அடைவிப்பதும் கூட அங்கே நடக்கும்.
கதா காலம்
26

தேவகாந்தன்
ஆனால் அது குந்தியால் முடியாது. அவள் காயம் பட்டவள். சூடு கண்ட பூனை. அந்த அனுபவம் தேவையேயாகியுள்ளது. அதற்கான பாரங்கள் அதில் அதிகம். அவளால் முடியாது. தன் வெல்லும் வழியை பாண்டு அதுவாகவே கண்டதால் குந்தியின் தயக்கத்தை இரங்கி மாற்ற முயன்றான். இது வம்சவிருத்திக்காக, என் மனநோயைத் தணிப்பதற்காக, நியோகம் க்ஷத்திரிய குல தர்மம். இதுவும் ஒருவகையில் நியோகமே. நிகழ்த்தி என்னைக் காத்தருள்' என்றும், இன்னும் பலபடவும் இறைஞ்சியதில் குந்தி தன் இறுக்கம் உடைந்தாள்.
காட்டில் இவை நிகழ்ந்து கொண்டிருக்க, தன் இளைய அண்ணனைக் காண சடுதியில் ஒரு தனிப் பயணத்தை மேற்கொண்டான் விதுரன். பாண்டு அண்ணனில் விதுரனுக்குப் பெரும் பாசம். மூத்தவனில் ஒருவித பயம்தான் அதிகம். அவன் அங்கக் குறைபாடு காரணமாக இயல்பிலேயே எப்போதும் சீறுபவனாகவே இருந்தான். கையில் அகப்படும் எதையும் நொருக்கிக் கொண்டிருந்தான். கல்யாணத்தின் பின் அது இன்னும் அதிகரித்திருந்த தாகவே தோன்றிற்று. அதனால் சொந்த அரண்மனை வேற்றிடமாகிப் போனது விதுரனுக்கு. காந்தாரி கண் கட்டியபடியிருந்து அனைத்தையும் அசைத்துக் கொண்டிருந்ததாய்ப் பட்டது. திருதராஷ்டிரனது கடிவாளம் தன் கையில்போலான பாவனை அவளுக்கு. அதனாலேயே சத்தியவதியும் சற்று அடங்கியதாய்க் காணப்பட்டாள். திருதராஷ்டிரன் - காந்தாரி திருமணம் நடந்து முடிய உற்றம் சுற்றமெல்லாம் வரிசைகளைச் சுமந்துகொண்டு திரும்பின காந்தாரம். ஆனால் காந்தார இளவ்ரசன் சகுனி மட்டும் அங்கேயே தங்கிவிட்டான். கூட அந்த முது வயதுத் தோழி. சகுனி சகல இடமும் காணப்பட்டான். முதுதோழி எங்கும் தன் நோக்குகைகள் எறிந்து திரிந்தாள். பாண்டு அண்ணனைப் பார்த்தால் ஆறுதலாகவிருக்கும்; அவன் இனி எப்போது நகர் திரும்புவானென அறிவதும் நல்லது; அவனின் அங்குள்ள தேவைகளை விசாரித்தும் வரலாம் என எண்ணியதால் விதுரனின் அப் பயணம். விதுரன் இஷ்டங்களை அடக்கியவன். தேவைகளைக் குறைத்த வன். அரண்மனையில் தூர ஒரு மனையிலிருந்து ராஜகாரியங்களின் மூலங்களையெல்லாம் தன் ஞானத்தில் தெரிந்துகொள்ள பயில்வு செய்து கொண்டிருந்தான். ஆனாலும் ஒரொருபொழுதில் அன்னவரிடத்திலும் நெறி கடந்த காமம் சுரக்காது போகாது. வனமே காமத்தைச் சுரப்பிக்கும். காமம் அந்தகாரமெனில், வனத்தில் அந்தகாரமே அதிகமாயிருக்கிற வகையில், வனமே காமம்தான்.
காடலைந்த விதுரன் கடைசியில் அண்ணனைப் பார்க்காமலே அரண்மனை திரும்பினான்.
கதா காலம்
27

Page 24
தேவகாந்தன்
னெவுலாவிலிருந்து மீண்ட குந்தி கருவுற்றிருந்தாள். அதில் அவள் பெற்றெடுத்த மகவே முதல் பாண்டவனான யுதிஷ்டிரன்.
அரண்மனையில் அவ்வேளை காந்தாரியும் கர்ப்பிணியாயிருந்தாள். குந்திக்கு மகன் பிறந்த செய்தி அத்தினாபுர அரண்மனையை அதிர்வாயே அடைந்தது. பீஷ்ம பிரமச்சாரியே யோசனையிலாழ்ந்தான். காந்தாரியால் பொறுக்கவே முடியவில்லை. கரு பலமே ஒரு பெண்ணின் முக்கிய பலமாய் க்ஷத்திரிய வம்சம் கருதியிருந்தது. முதலில் விவாகமானவள் பிந்திப் பிரசவிக்கிறதென்றால் அவளது கரு பலம் அங்கே மதிக்கப்படுமா. கட்டிய கண்களுடன் வெறிபிடித்தவளாய்க் காந்தாரி குறிப்பில் ஓடினாள். அலங்கார கூடத்தில் சந்தனம் அரைக்கும் குளவியை எடுத்து ஓங்கிக் குத்தினாள் கர்ப்பத்தில்,
கண்ட சேடியர், 'அம்மா. அம்மா." என்றலறி ஒடிப்போய் அக் கருங்கல் குளவியைப் பறித்தெறிந்தனர்.
சந்தடியில் பதறியபடி தட்டுத்தடுமாறி சப்த திசையடைந்தான் திருதராஷ்டிரன். 'என்ன. என்ன நடந்தது' என அவலமாய் அலறினான். சேடியர் விஷயம் சொல்லக் கேட்ட அந்தகன் நடுங்கிப் போனான். அனைவரையும் அகலச் சொல்லிவிட்டு, 'காந்தாரி. என் கண்ணே. நீ இது இவ்வண்ணம் செய்ததெவன்' என்று ஆதரவாய்க் கேட்டான்.
நீறாக. நீறாக." எனக் கூவினாள் அவள்.
நூறாக. நூறாக. நூறாக வேண்டும்’ என்று அக் காரிகையிடம் இரந்தான் அவன்.
யுதிஷ்டிரன் நடை பயிலத் துவங்க, இன்னும் தன் பெளருஷத்தை ஊரும் உலகும் நம்பவைக்க வேண்டி மேலும் பிள்ளைத் தவிப்பு எழுந்தது பாண்டுவுக்கு. குந்தியை மேலும் மேலும் வேண்டுதல் செய்து மறுபடி வனவுலா அனுப்பியதில் அவள் இரண்டாம் குழந்தையும் பெற்றாள். பெரும் பசி காட்டியும், பெரும் குரலெடுத்து அழுதும் முரட்டுத் தனம் காட்டிய அக் குழந்தைக்கு பீமசேனன் எனப் பெயரிடப்பட்டது. வனவுலா வழியில்
கதா காலம்
28

தேவகாந்தன்
அடுத்துப் பிறந்தவனே அர்ச்சுனன். அவன் அழுதான் அளவாக, புசித்தான் அளவாக, சிரிப்பதைத் தான் குறைவாகவும் செய்யாது விட்டான்.
‘எப்படி இது." என்று பாண்டுவிடம் அதிசயித்து வினவினாள் மாத்ரி.
"பேசாமலிரு. எல்லாம் ஒரு மந்திரத்தின் மகிமை' என்றான் அவன்.
மந்திரம் மறைபொருள் உடையதென்பது ஏதோவகையில் சரியாகவே இருக்கிறதுதான். மந்திரத்தில் தானும் மகவு பெற அடியுந்திக் கிளர்ந்து அவா எழுந்த மாத்ரிக்கும் அம் மந்திரத்தையுரைக்க பாண்டு குந்தியை ஏவினான். மந்திரம் செய்த மாத்ரிக்கு ஒரே சூலில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு நகுலன், சகாதேவனென முறையே பெயரிட்டான் பாண்டு. சகாதேவன் ஒரு தேவன் போலவே இருந்தான். பேரழகாயிருந்தது குழந்தை. அதன் கண்களில் ஒரு ஞான ஒளிவீச்சு. நக்ஷத்திரம் விண்ணிலிருந்து இறங்கிவந்து தன்னுடன் கலந்ததுபோலவே அவன் கருப்பொழுது இருந்ததை மாத்ரி நினைத்துப் பார்த்தாள்.
அனைவரையும் பாண்டு தன் பிள்ளைகளெனவே பாராட்டினான். அவர்களும் பஞ்சபாண்டவரென தம்மை அடையாளப்படுத்தி நின்றனர்.
பாண்டு மனநிலை கொண்டு பொதுஜனங்களில் கூட இப்போது யாருமில்லை. குடியானவன் கூட தன் விதையிலேயே கருப் பயிர் விளைவிக்கிறான். அவனது விதையில்லாமல் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பயிர் வளர்ந்துள்ளதென்றால் அவன் வயல் நிலத்தையே துறந்து விடுவான். சீதா கதையில் இப்படியெல்லாம் நடக்கும். கணவன் மனைவியில் மிக்க பரிசுத்தம் பார்ப்பான். அய்யம் எழுந்ததென்றால் அதைத் தீர்க்க அவளை அக்கினிப் பிரவேசமும் செய்ய வைப்பான். ஆனால் ஜெயக் கதை வித்தியாசமானது. அது மனிதத்தனங்களின் கதை. அச் கூடித்திரியக் கதையை ஜனங்களுக்கான மானிடக் கதையாய் மாகதர்களும் சூதர்களும் ஜெகமெலாம் விரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அச் கூடித்திரியர்கள் தம் நடத்தைகளை - ஒழுக்கங்களை - தர்மமென்றே சொல்லினர். ஜெயக் கதை சொன்ன முதல் சூதனான உக்கிரவசுவுக்கும் அந் நடத்தைகள் - ஒழுக்கங்கள் - தர்மமென்றே தெரிந்திருக்கின்றன. ஆனால் மாகதன் எந்த தர்மத்தையும், எந்தக் காலகட்டத்துக் கருதுகோளையும் கேள்விக்குட்படுத்துவான். தர்மமே அவன் குறியில்லை. ஆனால், தடைச் சுவராகும் எதுவும் கவனமாகி அதன் சிதைப்பு அவனுக்குக் கரிசனமாகும்.
கதா காலம்

Page 25
தேவகாந்தன்
வனத்தில் மறுபடியும் ஒரு வசந்தம் வந்தது. பாண்டுராஜன் சற்று உடல் தேறியிருந்தான். அவ் வசந்தத்தில் என்றுமில்லாதவாறு பூக்களை வெகுவாய்ப் பூத்து மரங்கள் விளங்கின. தளிர்களை நிறையப் பிறப்பித்து கொடிகள் தம் ஜாலங்களை வர்ணத்தில் காட்டின. வெளியெங்கும் வாசமும், தேனெடுத்த தும்பிகளின் ரீங்காரமும். பாண்டுவின் குடும்ப பிரசன்னம் பழக்கமாகி அயலின் மிருகங்கள் தேக எழுச்சி பெற எதுவித கலக்கமுமற்றுக் கலவி செய்தன. குருவிகளும் சிறகு கோதி, செட்டைக்குள் அணைத்து, ஒன்றுக்கொன்று செல்லக் கொத்துகைகள் புரிந்து இன்பங்கள் அனுபவித்தன.
பாண்டு நரம்பெழுச்சி பெற்றான். குறியில் காமத்தின் திமிர்வு கைகளில் முலை இடை தழுவ, தலையில் தோள் தொடை சாய இச்சைகள் குதித்தன. தலைக்கேறிய விஷம்போல் ஒரு கிறுகிறுப்பு தேகமெங்கும். மூத்தவள் குந்தியிடம் ஒடினான். அவனது பலஹினத்துக்கு புணர்ச்சி அபாயமென்று தெரிந்திருந்தவள், அவனது ஆசை தவிர்த்து ஒதுங்கினாள். மாத்ரியிடம் சென்றான். இணங்கினாள். அவளும் தேக எழுச்சி பெற்றிருந்தாளோ,
பூமரப் புதர்கள் கூடு செய்திருந்த புல்தரையில் சென்று சரிந்தாள் மாத்ரி. தழுவி, இதழ்ச் சுவை கண்டு, ஆடைகள் விடுத்துப் புணர்ச்சி மேவினர்.
கவிந்து நிர்வாணத்தால் நிர்வாணத்தை மூடி, காரியத்தில் இறங்கியிருந்தவன், பரவசம் வெடித்துச் சிதறும் கணத்தில் இயக்கமற்றுக் கிடப்பதேன். மேலும் மேலும் இறங்கிக்கொண்டிருந்த அவனது பாரம் அவளின் உணர்ச்சிகளை எரித்துக்கொண்டு பயமாய் ஊற்றெடுத்தது. மாத்ரி திடுக்கிட்டாள். அவனை உதறிக்கொண்டு எழுந்தாள். அசைவற்றுக் கிடந்தது அவனுடல், அவள் அலறினாள்.
மாத்ரி கிளப்பிய நெடித்த ஒலம் காதில் விழ, துடித்தோடி வந்தாள் குந்தி. கட்டையாய்க் கணவன் கிடப்பது கண்டாள். அவர்களிருந்த கோலத்தில் அவனது மரணத்தின் காரணம் அவளுக்குப் புரிந்தது. அவள் விழி தழலேறினாள்.
அப்போதுதான் மாத்ரி தன் நிர்வாணம் உணர்ந்தாள். அவசரமாய்த் துகிலெடுத்துத் தன்னை மூடினாள். நான் முதலில் மறுத்தேன். மறுக்கவே
செய்தேன்." என்று புலம்பினாள்.
அத்தனை சோகத்திலும் அவளது தேகத்தின் சிலையழகு குந்தியை ஒரு கணம் திகைக்கச் செய்தது. அடுத்துப் பிறந்த சீற்றத்தில் அதன் பங்கும் இருந்தது.
கதா காலம்
30

தேவகாந்தன்
குந்தி கணவனின் சாவுக்காய் அழுது அரற்றியதைவிட, மாத்ரியை வைததே அதிகம். அவளை ஒரு காமாக்னியாய்த் திட்டித் தீர்த்தாள். 'தவிர்த்தேன் கலவி. தவிர்த்தேன் அணைதல். என் காயம் காய்ந்து போயில்லை. கணவனுயிர் காக்க வேண்டியே அனைத்தும் செய்தேன். கடைசியில் உன் காமத்தீக்கோ என் பதி பலி.
விறைத்தபடி பாண்டவர் எட்டத்திலேயே. இன்னும் தவ்வலான சகாதேவன் சற்று முன்னே வந்து எதுவும் விளங்காமல் எல்லாம் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். மரணம் புரியவில்லை; ஆனால் சோகமும் பதைப்பும் புரிந்தன. அதைவிட, பொருள் புரியாவிட்டாலும் பெரியன்னை தாயை வைகிறாள் என்பது தெரிந்தது. அவையும் விஷ ஈட்டிகளென்பதை தாய் துடித்த துடிப்பில் கண்டான்.
சிறிது நேரத்தில் மாத்ரி குந்தியை அணுகி, ‘நீயே இனி என் பிள்ளைகளதும் தாய்' என்று மட்டும் சொல்லிவிட்டு விலகினாள். அதன்பின் பெரியன்னை தாயாரை வையவில்லை என்பதை அவன் கவனித்தான்.
சிதை அடுக்கியானது.
அதன்மேல் பாண்டுவின் சடலத்தைக் கிடத்தினார்கள்.
தீ மூண்டது.
மாத்ரி சகாதேவனைப் பார்த்தாள். பார்த்தபடியே சிதைத் தீ நோக்கி நடந்தாள். ஏதோ பிரிவை உணர்ந்தவன்போல் பயந்து, 'அம்மா. வா.
வா...' என்று கைகாட்டிக் கதறினான் புத்திரன். மாத்ரி ஒரு கணம் தயங்கினாள். கண்ணிர் சிதறி குலுங்கி அழுதாள். பிறகு திரும்பி சடுதியில்
தீயில் பாய்ந்தாள்.
தாயின் அந்தக் கடைசிப் பார்வை, அதுவுரைத்த சேதியாவும் சகாதேவன் மனத்திலே ரணமாய் விழுந்தன. அன்றிலிருந்து ஒரு வெறுப்பு தன் பெரியன்னை மேல் அவனுக்குச் சுரந்துகொண்டேயிருந்தது.
பாண்டுவின் மரணம் அரண்மனைக்குச் சொல்லியனுப்பப்பட்டது. சில நாட்களின் பின் யாரோ ஒரு வழிப்போக்கிலிருந்த முனிவன் அவர்களை அழைத்துக்கொண்டு போய் அரண்மனை சேர்த்தினான். மிகுந்த வாரப் பாடாய் சகாதேவனைக் கைப்பிடியில் கொண்டு அவர்களுக்கு ஒதுக்கிய மாளிகையுள் புகுந்தாள் பெரும் சோகதாரியான குந்தி.
கதா காலம்
31

Page 26
தேவகாந்தன்
மூவராய்ச் சென்று தலையை இழந்தெனினும் அறுவராய்த் திரும்பி யிருந்தது அக் குடும்பம். தங்கள் திரும்புகை அங்கே பெரிதாய்க் கொண்டாடப் படவில்லையென்பது குந்திக்குத் தெரிந்தது. தன் மனையில் அவள் இருளின் போர்வைக்குள் கிடந்து பலவும் எண்ணினாள். அவள், தான் ராணியென்பதை மறந்தாள். யாரின் பாவனையும் அவ்வாறில்லை யென்பதையும் அவள் பல சந்தர்ப்பங்களில் கண்டிருந்தாள். அதனால் அந்த அரசியல் இருட்புலத்தில் தான் உஷாரடைந்தாக வேண்டுமென்று அவளுக்குத் திண்ணமாகியது. அவர்கள் அப்பனில்லாத பிள்ளைகள், தானேதான் கரிசனமெடுத்து அவர்களைக் கவனித்தாகவேண்டுமென்பது புரிந்தது. அத்தினாபுரத்து அரண்மனை விஸ்தாரமானது. விதவிதமான குணவியல்பின் மனிதர்களை அது கொண்டிருந்தது. தீவுகளாய் அத் தனி மனிதர்களும். ஒருவேளை சகுனிக்கும் காந்தாரிக்கும் கூடுதலான அய்க்கியம் இருந்திருக்கலாம் போலத் தென்பட்டது. அவன் பார்வையே குந்திக்குப் பிடிக்கவில்லை. அதைப் புரிய குந்திக்கு இயலுமாயிருந்தது. அவன் தன் சகோதரி பிள்ளைகளின் நலனே குறியாய்க் கொண்டவன். தன் பிள்ளைகளே இளவரசர்களான போதும், குறிப்பாய் யுதிஷ்டிரனே பட்டத்துக்குரியவனாய் இருந்தபோதும், அதுமாதிரியான நினைப்போடு யாரும் இல்லாதிருந்தமை அவளைப் பயமுறுத்தியது. அவள் மட்டும்தானே அவர்களுக்கு. இன்னும் சத்தியவதி அரண்மனையிலேயே இருந்தாள். பீஷ்மன் அவள் உருட்டிய கவறு கட்டை போல்தான் சுழன்று கொண்டிருக்கிறானா. நடப்பதெல்லாம் சரியென நினைக்கிறானா. அவன் பூமகள் அடிவயிற்றிலெழும் குலுக்கம் போன்றவன். எப்போதும் ஒரு கொதிப்பில்போலவே காணப்பட்டான். அவன் சத்தியவதியின் சுழற்சியெனில் அப்படித்தான் இயங்கவும் முடியும். வேறு யாருளர். கிருபன் இருக்கிறான். அவன் குரலற்றவன். எதிர்நின்று சொல்பவரின் எதிரொலியாபவன். விதுரனோ அரண்மனையில் அந்நியன். அவனது ஞானத் தேடலால் அவ்வாறு ஆனதா அல்லது தீவு தீவான மனிதராய் அவ்வரண்மனை பிரிந்து கிடப்பது கண்டும், அவரவரின் நாறிய மனவோட்டங்கள் அறிந்தும் ஒதுங்கினானா தெரியவில்லை. ஆனால் எதுக்காவோ ஒதுங்கிக்கொண்டானென்றே தோன்றியது. இருந்தும் திருதராஷ்டிரனோடு இன்னும் ஒர் தொடுப்பினையைத் தக்கவைத் தேயிருந்தான். பின்னே அவள்தானே பாண்டவர்க்கு. அவளுக்குத் தீர்மான மிருந்தது. அந்த அரசு அவள் பிள்ளைகளது. பாண்டுவே அரசன! யிருந்ததால் பாண்டு புத்திரனே இளவரசுப் பட்டம் கட்டப்பட்டாக வேண்டும். நடக்குமா. நடக்க வைத்தாக வேண்டும். முடியுமா அவளால் முடிந்தாக வேண்டும்.
கதா காலம்
32

தேவகாந்தன்
தன் நிதானமும் சாதுர்யமுமே பலங்களாய்க் கொண்டு அவ்வரசியல் ாட்டக் களத்தில் அவள் இறங்கத் தயாரானாள்.
பஞ்சபாண்டவர் வளர்ந்து வந்தனர்.
325i காலம் 33

Page 27
மூல்று
அத்தினாபுர அரண்மனையின் கலாமண்டபம்
(கதை நிகழ் - காலம்)
பொறிகள் உள்ளடக்கி சிந்தனை ஒருமுகப்பட்டிருந்த வைசம்பாயனன் கலாசபையில் ஏற்பட்ட திடீர்ச் சந்தடியில் பிரக்ஞை மீண்டான். நிமிர்ந்து, எதிரே ஜனமேஜய ராஜன் தவிசில் கம்பீரமாய் அமர்ந்திருந்தது கண்டான். ராஜ மரியாதை செலுத்த தான் சில கணங்களின் தாமதத்தைச் செய்து விட்டதை உணர்ந்தான். ஆனாலும் பதற்றமின்றியே எழுந்து வணக்கத்தைச் செலுத்திவிட்டு தன் இருக்கையில் மறுபடி அமர்ந்தான்.
அது ராஜ சபையில்லை. கலா சபை, பெரும்பெரும் பாடகர், நடனகாரர், வித்துவம் நிறைந்த இசைக் கருவிகள் மீட்போரெல்லாம் தத்தம் திறமை காட்டிய சபை அது. அவனது சொல் வரிகளைக் கிரகிக்க வந்தவர்களே அவர்களும். கற்றறிந்தோரின் அச் சபை யில் அவனே ராஜா. ஆனாலும் ஏதோவோர் இடைஞ்சல் -சஞ்சலம்- அந்த நினைப்பை உலுப்பிக் கொண்டிருந்தது. கர்ணனின் துடை துளைத்த புழு போல் உள்ளிருந்து குடைந்தவோர் எண்ணம் அவனை வலியடையச் செய்து கொண்டிருந்தது. ஜனமேஜயன் அன்றுகூட மாறியிருக்கவில்லையென்று தெரிந்ததால் ஏற்பட்ட உளைச்சலா அது.
கதா காலம்
34

தேவகாந்தன்
அரசன் சாயங்கால வழிபாட்டை முடித்துக்கொண்டு கிரீடம், உடை வாள், பலபட மார்பில் விளங்கும் ஆபரணங்கள் அற்றவனாய்க் கலா சபை வந்திருந்தான். முதல் நாள் மாலை கதாகாலப் பொழுதின் பிற்பகுதியில் பொறுமையிழந்தும் ஆர்வங்குறைந்தும் தன் முகத்தில் காட்டிய அதிருப்தியின் வெடிப்பலைகள் அப்போது மறைந்திருந்தன. அதுவே அவன் அன்று ஈடுபாடு காட்டுவான் என்பதின் அறிகுறியுமில்லைத் தான். ஊன்றிய ஒரு நோக்கில் ஒர் இகழ்வின் மெல்லிய கீறுகள் இன்னும் அவனது கடையிதழில் காணவும் பட்டன. அம் மகாசூதன் தன் கதையுரைப்பின் காலத்தில் அப்படியோர் அவமானத்தை என்றும் அடையக்கூடுமென எண்ணியதே யில்லை.
அமைதியிழந்திருந்ததில் தூக்கமற்றுப் போன முதல் நாளிரவு அதுகுறித்து அவன் யோசித்தவேளையில் ஜனமேஜயனது அதிருப்தியின் நியாயத்தை அவன் ஒரளவு உணரவே செய்தான்.
அவன், பெரிதுபடத் துவங்கிய மகாயாகத்தை தன் நோக்கம் பூரணப்படாமல் முடித்திருப்பவன்.
பரீக்ஷத்து ராஜா நாகம் தீண்டி இறந்ததான செய்தியில் அத்தினாபுரமே திடுக்காடடைந்தது. குருக்ஷேத்திர மகாயுத்தத் தில் பாண்டவருக்கு ஒரே வாரிசாக எஞ்சி, யுதிஷ்டிரன் பின் அரசுக்கட்டிலேறியவன் இந்த பரீக்ஷித்து. அபிமன்யுவுக்கு உத்தரையிடத்தில் பிறந்தவன். தன் தந்தையான அவனது மரணத்தில் நாக இனத்தின் மேலேயே பெருந்துவேஷம் கொண்டான் ஜனமேஜயன். நாக யாகம் ஒன்றைத் தொடங்கி, ஒரு வெறியிற்போல் சகல நாகங்களையும் யாகத் தீயிலிட்டு அழிக்கவாரம்பித்ததின் மூலம் அதுதான்.
அந்த யாகம் கண்ட அஸ்திகா மிகத் துணிச்சலாய் அரசனோடு வாது புரிய வந்தான். "சிருஷ்டி தத்துவம் மிக அற்புதமானது, அரசே, பிரும்ம சிருஷ்டியில் மானும் மயிலும் உடும்பும் பூனையும் ஆடும் மாடும் போலவேதான் புலியும் சிங்கமும் நாகமும். சகல உயிரினங்களுக்கும் இப் புவிப் பரப்பு சொந்தமானது. இதில் எந்த உயிரினத்தையும் அழிக்குமுரிமை
கதா காலம்

Page 28
தேவகாந்தன்
எந்த அரசனுக்குமில்லை அசுவமேத யாகம் செய்தவர்களுக்குக்கூட, இல்லை. நாடு மனிதர்களுக்குப் போல், காடு அவைகளுக்கானது' என்று பலபட எடுத்துரைத்து ஜனமேஜயனின் நாக இன அழிப்பை அவன் நிறுத்தினான்.
சில நாட்களின் பின் அத்தினாபுர அரண்மனை வந்த கிருஷ்ண துவைபாயன் என்ற வியாசன் நடந்தவை அறிந்தான். ஜனமேஜயனது பரம்பரையது சங்கிலித் தொடுப்பாய் நீண்டுவரும் நிகழ்வுகளின் விதித் தொடர்பறிந்து அரசனுக்கு இதங்கள் எடுத்தோதினான். ஒரு செயலானது தன் பலனை, அது நன்மையானதோ தீமையானதோ, விளைப்பதிலிருந்து ஒருபோதும் தவறி விடுவதில்லை. முன்னொருபோது உன் பாட்டனான அர்ச்சுனனும், அவன் தோழனான கிருஷ்ண வசுதேவனும் சேர்ந்து பாண்டவர்க்கான எழில் நகரொன்றை நிர்மாணிப்பதற்காக சகல ஜீவராசிகளதும் சரணாலய மாயிருந்த காண்டவ வனத்தை எரியூட்டி அழித்தார்கள். அப்பொழுதெழுந்த பெருநெருப்பில் சாட்டு விலங்குகளும், பறவைகளும், ஊர்வனவுமான ஜீவராசிகள் பலவும் கருகியழிந்தன. நாகராஜனின் பெண்ணும், அதன் வம்சமும், இனசனங்களும் கூட அழிந்து போயின. அதன் வஞ்சத் தீர்ப்பாகவே நெடுங்காலம் காத்திருந்து அர்ச்சுனனின் எஞ்சியுள்ள சந்ததியான அவன் பேரன் பரீக்ஷித்தை நாகராஜன் விஷம் பாய்ச்சிப் பலியாக்கினான். நடந்தவையெல்லாம் ஒரு வினையின் தொடர்ச்சியே."
இவ்வாறு காரியங்களின் ஒன்றுக்கொன்றான தொடர்பு பற்றிய விளக்கத்தைக் கொடுத்ததுமன்றி, ஜனமேஜயன் தன் மூதாதையர் வரலாற்றினை அறிந்திருக்கவே வேண்டுமென்று வற்புறுத்தி, தனது சிஷ்யர்களில் ஒருவனான இவனைக் கதைசொல்லியாய் அனுப்பியும் வைத்தான்.
அஸ்திகாவின் தர்க்க முறையை மறுதலிக்க முடியாமல் அடங்கி நாக யாகத்தை நிறுத்தினாலும், அவனோர் உள்சினத்தைக் கொண்டிருத்தல் முடியும், தன் மூதாதையர் வரலாறெனினும் அதில் பெரும் ஈர்ப்புமோ, அக்கறையுமோ கொண்டுவிடாமல் அந்த உள்சினம் அவனை விலகியிருக்கவே செய்யும்.
கதா காலம்
36

தேவகாந்தன்
திரேத யுகம் கிருஷ்ணன் மறைவோடு முடிய, அப்போது தொடங்கியிருந்தது கலியுகம். கலி தன் யுகத்துக்கான தர்மங்களைக் கொண்டது, எந்த யுகமும் தன்தன் யுக தர்மத்தைக் கொண்டிருப்பதுபோல. ஆனாலும் இவற்றிற் கிடையேயான ஒர் ஊடாட்டமும் இருக்கவே செய்யும். ஒரு மகாவம்சத்தின் வழியில் வருபவன் இவ் வரலாற்றுத் தொடர்ச்சியை அறியாத நிலையில் இவ்வூடாட்டத்தைக் காண முடியாது ஈடாடியே போவான். அவனிடத்தில் ஒர் ஈடுபாட்டை ஏற்படுத்துவது இலகுவான காரியமில்லைத்
தான.
இப் புரிதலில்தான், மாலையில் ஜனமேஜயனின் அதிருப்தி வெளிப்பாட்டைப் பாரதூரமாக்காமல் வைசம்பாயணன் அந்த
இரவில் அடங்கினது.
பெரும்பெரும் ராஜாக்களெல்லாம் அவமானம் காரணமாய் பழிதீர்ப்பில் இறங்கிய பல சம்பவங்களை அவன் அறிவான். அவன் விரிக்கும் ஜெயக் கதையிலேயே அதற்கான பல உதாரணங்கள் உண்டு. அதுபோல் சூதனுக்கும் பழி தீர்க்கும் ஆவேசம் வரும். ஆனால் அது ராஜாக்களின் வழியிலில்லை. அவனுக்கு மார்க்கம் வேறு. அவன் தன் கதையுரைப்பில் கலாஅம்சத்தின் உச்சபட்சம் அடைவதின் மூலம் அது எய்தப்படுகிறது.
அவனுக்கு ஒர் அவமானம் இழைக்கப்பட்டிருக்கிறது, மூன்றாவது பேர் அறியாமல், அதை அவன் தன் வழியிலேயே தீர்ப்பான். வைசம்பாயனனுக்கு அன்று தீர்மானமிருந்தது.
கதா பிரவாகமெடுத்தது.
கேளுங்கள்.
சாரியன் தன் புகழை சிஷ்யன் மூலம் தாபிக்கிறான். சிஷ்யர்களின் ஆயுதப் பிரயோகத் திறமையில் வளரும் மலையென பெரும் கம்பீரம்
கதா காலம்
37

Page 29
தேவகாந்தன்
பெற்று நின்றிருந்தான்துரோணன். திருதராஷ்டிரனாலும் சாமர்த்தியங்களை அனுபவிக்க முடிந்திருந்தது. 'அதுபோலவே இதுவும் மின்னலாய். மின்னலாய். சபை ஆர்ப்பரிக்கும் பொழுதில், மின்னல் ஓர் ஒளியின் விசையென்று தெரிந்திருந்த அவனால், மின்னலினிடத்தில் தன் வலிமையின் வேகத்தைப் பொருத்தி அந்த அனுமானம் பெறப்பட்டிருந்தது. அந்தகன் ஒருவன் அத்தகு கணிப்பிலேயே மின்னலையும் காண்கிறான். கட்டிய கண்களுக்குள் அனுமானங்கள் அற்றவளாய் நட்ப்புகளை அறிந்து கொண்டிருந்தாள் காந்தாரியும். பீஷ்மன், விதுரன், கிருபன் யாவரும் இமைக்க மறந்த விழிகளுடன். அப் பயிற்சித் திறன் அரங்கேற்று களத்தில் ஜனங்களின் பிரிவில் இரண்டு கண்களில் மட்டுமே இகழ்ச்சியின் வரிகள்.
அப்போது அர்ச்சுனன் தன் ஆசானையே பிரமிப்பில் ஆழ்த்திக் கொண்டிருந்தான். அவன் தன் பிரதாபத்தின் கடைசி ஆணியை அடிக்கவென அய்ந்து சரங்களைத் தெரிந்துகொண்டு, ஒன்றன் பின் ஒன்றாய் அவற்றைச் சர். சர். என மூன்று துளைகளினூடாய்ச் செலுத்தி அவற்றின் பின்னாலிருந்த ஒர் இலக்கினில் தைக்கச் செய்து காட்டினான்.
சபையில் பெருத்த கரகோஷம். குந்தியினால் பெருமிதத்தைத் தாங்க முடியவில்லை. புளகம் மேலிட்டு ராஜகுழாம் நோக்கித் திரும்பினாள். மறுகணம் திடுக்கிட்டுப் போனாள். திருதராஷ்டிரன் முகம் கறுத்திருந்தான் சரி, பீஷ்மனின் முகம் உவகையற்றிருந்ததேன்.
அப்போது வேறொரு விஷயம் அவளது ஞாபகத்துக்கு வந்தது. பயிற்சி காட்டு களத்தில் திருதராஷ்டிரன் மக்கள் கவுரவர்களென்றும், தன் மக்கள் பாண்டவர்களென்றும் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தனர் என்பதே அது. அவை எதேச்சையான பிரயோகங்களில்லைப் போல் மனத்துள்ளிருந்து எதுவோ சொன்னது. அது மெல்லமெல்லமாய்க் கட்டியமைக்கப்பட்டிருக்கிறது. யாரால். பீஷ்மனாலா திருதராஷ்டிரனாலா அல்லது இன்னும் தன் சகோதரி வாழ்க்கைப்பட்ட அரண்மனையிலேயே தங்கியிருக்கிறானே அந்தச் சகுனியினாலா. அவள் பிள்ளைகள் கவுரவர்களில்லையெனில், குருவம்சத்தவர் இல்லையென்றுமாகும். அவர்கள் பாண்டு புத்திரர்களெனில், பாண்டு யார். தான்தோன்றியா. சத்தியவதியின் பேரனில்லையா அவன். அவன் தாய் அம்பாலிகா அதற்கு என்ன சொல்வாள். திருதராஷ்டிரன் சத்தியவதியின் பேரன், பாண்டு பேரனில்லையெனவாதல் வேறு அளவீடுகளில் நிகழ்ந்ததா. ஒருவேளை. ஒருவேளை. தன் வனவுலாவின் ரகசியங்கள். அவள் திகைத்தாள். பின், அவை வெளிப்பட முடியா அறுதியானவையென்று தெளிந்தாள். இன்னும் ஒரு காரணத்தின் சாத்தியம் இருந்தது அவளுக்குத் தெரியும். தான் சூரன்
கதா காலம்
38

தேவகாந்தன்
மகளாய்ப் பிறந்த பிறப்பின் இரகசியம் தெரிந்து, பெண் வழியில் வம்சம் தேரும் குடும்பமாய் அது தன்னைச் கூடித்திரியை இல்லையென்றும், அதனால் தன் பிள்ளைகளின் பட்ட உரிமையை மறுக்கிற முயற்சியிலும் இறங்கியிருக்கிறதோ. யாரும் எதையும் வெளிப்படுத்தியதில்லை. ஆனால் எப்படியோ, எது காரணத்தாலோ தன் பிள்ளைகளுக்கும், திருதராஷ்டிரன் பிள்ளைகளுக்குமிடையே ஒரு வெளி நிறுவப்பட்டாயிற்றென்று மட்டும் அவளுக்குத் திண்ணமாய்ப் புரிந்தது.
அவள் மறுபடி பயிற்சி காட்டு களம் திரும்பியபோது, ஒன்றன் பின் ஒன்றாக மூன்று துளைகளினூடும் புகுந்து சென்ற அய்ந்து அம்புகள் பின்னாலிருந்த இலக்கில் அர்ச்சுனனின் அம்புகளில் சிலதை இடறிவிழுத்திக்கொண்டு தைத்தபடியிருந்தன.
சபை பிரமிப்பில் மவுணித்தது. கரகோஷமும் மறந்தது. அர்ச்சுனன் சமீபத்திலிருந்து செய்ததை, அத்தனை தூரத்திலிருந்து செய்துகாட்டியவன் மெய்யாகவே அஸ்திர பிரயோகத்தில் மிகுவல்லுநன் தானென்று ஆங்காங்கே பேச்செழுந்தது. ‘என்ன நடந்தது. என்ன நடந்தது. தவித்தான் திருதராஷ்டிரன். அருகே நின்றிருந்த ஏவலாள் விபரம் சொன்னான். அப்படியா. அப்படியா...' என்று மலர்ந்தது அவன் முகம்.
என்று கேட்டுத்
அது கண்ட குந்திக்கு ஏறக்குறைய எல்லாமே புரிந்தது. அரண்மனையிலுள்ளோரின் அபரிமிதமான கரிசனத்தில் கொஞ்சக் காலம் தான் மெய்மறந்து போய்விட்டிருந்தமையை அப்போது துக்கத்தோடு நினைத்தாள்.
அதேவேளை கிருபன் குரல் களத்தில் ஒலித்தது. இந்த அம்புகளை எய்தது யார்.'
வில்லும் கையுமாய் ஒரு சூரியக் குஞ்சு வந்தது. நான்தான் எய்தேன்."
"யார் நீ."
நான் வசுசேனன். கர்ணன் என்றும் அழைப்பார்கள். இங்கே அர்ச்சுனன் செய்துகாட்டிய அஸ்திர வித்தைகளைவிட என்னால் நன்றாகவே செய்துகாட்ட முடியும். சபை அனுமதித்தால் இங்கேயே, இப்போதே செய்தும் காட்டுவேன்."
கர்ணன், சொல்லியபடி நன்றாகவே அஸ்திரங்களைப் பிரயோகித்துக்
காட்டினான். அர்ச்சுனனிடமில்லாத லாவகம் கர்ணனின் கைகளிலிருந்ததை சபை கண்டு பெரு ஆரவாரம் எழுப்பியது.
கதா காலம்
39

Page 30
தேவகாந்தன்
கர்ணன் சொன்னான்: "நான் அர்ச்சுனனுடன் சண்டை செய்ய
விரும்புகிறேன்."
நீ யார். உன் தாய் தந்தையர் யார்."
‘தேரோட்டி அதிரதனின் மகன் நான். அவன் மனைவி ராதை என் அன்னை."
கிருபன் மெல்லச் சிரித்துவிட்டுச் சொன்னான்: ‘அர்ச்சுனன் கூடித்திரியன். கூடித்திரியர்கள் சம அந்தஸ்தில்லாதவர்களுடன் சண்டை செய்வதில்லை. நீ போ."
அது போதாது குந்திக்கு. ஏனெனில் சொன்னவன் கிருபன்; பீஷ்மனில்லையே.
பின் நகுலனும், தொடர்ந்து சகாதேவனும் கற்ற வித்தைகளை பிசகில்லாது செய்து காட்டினர். அவளுக்கு அது முக்கியமில்லை. அவளுக்கு அதைவிட முக்கியமான விஷயம் கரிசனைப்பட இருந்தது. அத்தினா புரத்தின் அரசு கட்டிலில் ஏறப்போவது துரியோதனனா, யுதிஷ்டிரனா.
ஒரு பழகிய கோரம் விஸ்வரூபமெடுத்து அவள் புறம் கிழித்து உள் நுழைவதுபோல், அவ்விசனம் பெருக்கிய வினா அவளது மனத்தைப் பிளந்துகொண்டு உள்ளே சென்று தங்கியது.
இருள் எழுந்தது.
U7ஜ்யங்களை நிர்வகிப்பவர்களுக்கு ஒரொரு பொழுதில் தர்மங்களை மீறி, சத்தியங்களைத் தவறி நடந்துகொள்ளவேண்டிய சந்தர்ப்பங்கள் சகஜமாகவே சம்பவிக்கின்றன. சில குறிகளை நோக்கிய நகர்வுகளில் அவற்றைத் திட்டமாய்ச் செய்பவர்களும் உண்டு. அதனால்தான் தம் விருத்தாப்பியத்தில் காடு நோக்கி ஒட மனஉந்துதல் பெறுகிற்ார்கள். காட்டின் இருள், சூரியப் பிரவேசத்தின் தடைகளால் மட்டுமில்லை, பாவங்கள் அங்கே கழித்துவிடப்படுவதினாலுமே உறைகிறது. பாவங்களின் திரட்சியே அதன் பயங்கரம். ஜந்துகளின் விஷம்கூட, கழித்துவிடப்பட்ட
கதா காலம்
40

தேவகாந்தன்
அவ்வாறான பாவங்களின் நிர்க்கதியில் அவை உயிர் சிநேகிதத்துக்காய்க் கொள்ளும் பற்றுதலிலிருந்தே பிறக்கிறது.
பாண்டுவையும் மாத்ரியையும் இழந்துவிட்டு, குந்தியும் அவள் புத்திரர்களும் அத்தினாபுர அரண்மனை திரும்பிய சிறிது காலத்துள் சத்தியவதியும், அவளது மருமகள்களான அம்பிகாவும் அம்பாலிகாவும் நெஞ்சத்து அமைதி வேண்டி காடு போய்விட்டிருந்தனர். பாவத்தினதும் மோகத்தினதும் அடங்கா மூச்சின் அலைகள் கேட்டு, சோகம் வடித்துக்கொண்டிருந்த அரண்மனை அதன்பின் ஒரு சுதாரிப்பைச் செய்து கொண்டது. ஆனாலும் வேறு உணர்வுகளின் முனங்கல்களையும், இரகசியங்களின் மொறுமொறுப்பையும், திட்டங்களின் எரி வாடையையும் அது கொண்டேயிருந்தது. குந்தி, காந்தாரியென்ற மய்யங்களில் அவற்றின் சுழற்சி நிலைநிறுத்தப் பெற்றிருந்தது.
காலம் தன் கருத்தினை நிலைவேற்ற கருவிகளை உண்டாக்கும். அக் கருவிகளாகும் மனிதர் நிகழ்வுகளை மாற்றிப் போடுவர்.
அஸ்திர பயிற்சியின் அரங்கேற்றத்தின் பின் முதல் பாண்டவன் யுதிஷ்டிரனுக்குப் பட்டங்கட்டவேண்டுமென்ற ஒர் அடங்கிய குரல் மெல்ல மேலெழுந்தது. பாண்டு ராஜனை விரும்பியிருந்த பொதுமக்களும், காட்டில் அவனை அறிந்திருந்த முனிவர்களும் அக் குரலை எதிரொலிக்கத்துவங்கினர். மெதுமெதுவாய் அக் குரல் திண்மை பெற்றது. விதுரன் அதை விவேகமான முறையில் திருதராஷ்டிரனிடம் எடுத்துரைத்தான். தர்மத்தின் பெரிய விசேஷ மென்னவெனில், அது தனக்காய்ப் பேச மிகுந்த சத்தியவான்கள், ஞானிகளில் சிலரையேனும் தன்னோடு கொண்டிருப்பதுதான். சிறு பான்மையரெனினும் அவர்கள் குரல் ஒர் அசைத்தலைத் துவங்கியே விடுகிறது.
காந்தாரியின் மய்யத்திலிருந்து எழுந்த மாற்றலைகள் திருதராஷ்டிரனை வாரியிழுத்துக் கொண்டன. அவன் தன்பொருட்டாய் பிரபஞ்சத்தின் காட்சி மறுத்த காந்தாரியின் குரலானான். காந்தாரி அப்போதும் கருத்தரித்துக் கொண்டேயிருந்தாள். ஒவ்வொரு கருத் தரிப்புக் கணத்திலும் பிரியம்மேவி தான் கொடுத்த வாக்குறுதிகளின் சுமையும் அவன் ஏறியிருந்தான். அதன்மேல், சிறுபிராயத்திலிருந்து கவுந்தேயர்களின் மீது குரோதத்தை வளர்த்திருந்த மகன் துரியோதனனின் சார்பில் திருதராஷ்டிரன் பேசுவது தவிர்க்க முடியாதது. அதனால் நியாயங்களின் நிர்ப்பந்தத்தில் ஒரு பேச்சுப் பேசினாலும், வாக்குறுதிச் சுமைகளாலும், உறவுகளின் அபிலாஷைகளின்
கதா காலம்
41

Page 31
தேவகாந்தன்
நிறைவேற்றுதல் இஷ்டத்தினாலும், தன் சொந்த விருப்பினாலும் பேசியதின் எதிர்மறையாக நடப்பதற்கே அவனால் முடிந்தது. பல நாள் யோசனையில் அவனிடம் திட்டம் உருவானது. அதை சகுனி, புரோசனன் ஆகியோரிடம் விபரித்து அதற்கான செயல் வடிவத்தையும் அமைத்தான். மறுநாள் விதுரனை அழைத்து கவுரவர்க்கும் பாண்டவர்க்குமிடையே நிலவும் போட்டி, பொறாமை, குரோதங்கள் காரணமாக பாண்டவரை பிறிதோரிடத்தில் சில காலம் தங்கவைத்து அரசகுலக் கேவலங்களாய் அவை வளராமல் தான் செய்ய எண்ணியிருப்பதாய்க் கூறி, அதைப் பக்குவமாய்க் குந்தியிடத்தில் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டான்.
செவிகளைத் தன் தூக்கத்திலும் மூடிவிடாக் காந்தாரி அதுவறிந்து பூரண திருப்தியில்லையெனினும் ஆறுதலடைந்தாள். குருகுலத்தின் அரண்மனையைத் தன் மக்களுக்காய்க் காப்பாற்றும் முதல் திட்டம் நிறைவேற்றமாகும் திருப்தி அவளுக்கு. திருதராஷ்டிரன் தன் அழகின் கனவழித்தவன் என்பதிலும், தன் காதல் ரசனைகளின் குறைக்கான காரணஸ்தன் என்பதிலும் அவள் தன் மூலக்கணல் அழியாதேயிருந்தாள். அத்தனை காலத்துக்குப் பின்னரும்கூட. ஆனாலும் அவன் தனது வாரிசுகளின் நலன்களுக்காகத் தவிர, தர்மம், நீதியென்று வேறுமாதிரி எண்ணி நடந்து விட மாட்டான் என்று அவள் நம்பினாள். மட்டுமில்லை. அவன் அவளுக்கான வாக்குறுதிகளின் சுமைகளில் இருப்பவனும். அவற்றை இன்னும் பலுகிப் பெருக்கிவிட அவள் இன்னும் எத்தனை கருச் சுமப்புக்கும் கூடத்தயாராக விருந்தாள்.
பீஷ்மன் மவுனமாய் யாவும் பார்த்திருந்தான்.
துரோணனுக்கு அது குறித்து அபிப்பிராயமேதுமில்லை. அவர்கள் இரு பகுதியாருமே அவனுக்குச் சிஷ்யர்கள். அவன் பெருமையைப் பயிற்சி காட்டு களத்தில் உயர்த்தியவர்கள். மட்டுமில்லை. குருதக்ஷணையாய் பாஞ்சால ராஜனை உயிருடன் பிடித்துக் கொண்டுவர இட்ட ஆணையைச் செய்தும் முடித்தவர்கள். பாஞ்சாலத்தில் நடந்த போரில் துருபதனைத் தேர்க்காலில் கட்டி வந்து அர்ச்சுனனே ஒப்படைத்தானெனினும் அவ் வெற்றியில் கவுரவ, பாண்டவர் அத்தனைபேரினதும் வில் பலம் இருந்ததை அவன் உணர்ந்தே யிருந்தான்.
வாரணாவதம் என்ற பதம் விதுரனுக்கு முன்னாலேயே பயணம் செய்து குந்தியை அடைந்திருந்தது. அதுவறிந்தவள் முதலில் மேலோட்டமாய் அதிலிருந்த நன்மையின் தோற்றத்தைக் கண்டு ஏமாறிவிடவேயிருந்தாள்.
கதா காலம்
42

தேவகாந்தன்
பிறகுதான் அதிலிருந்த திருதராஷ்டிரனின் சூழ்ச்சி அவளுக்கு அனுமான மானது. ஒடினாள் விதுரன் இடம். 'என் பிள்ளைகளை அத்தினாபுரத்தி லிருந்து வெளியேற்றுகிறார்களே' எனப் புலம்பினாள். ஞானி கனிவோடு சொன்னான்: "அவர்கள் தகுந்த காலம் வரை அங்கேயிருப்பது தான் நல்லதென எனக்குப் படுகிறது. யுதிஷ்டிரனே பட்டத்துரியவன் என்று சாதிக்க இப்போது நாம் பலமற்றவர்கள். அரண்மனையே புரோசனன் களாலும் சகுனிகளாலும் நிரம்பிக் கிடக்கிறது. காலத்தில் எல்லாம் நலமாக முடியும், நீ கலங்காமல் அவர்களுடன் செல்.’
புது மாளிகையின் நிர்மாணம் முடிந்ததான தகவலோடு புரோசனன் வந்தான். பாண்டவர் அங்கு செல்ல நாள் குறித்தானது. அதற்கு ஒரிரு நாட்கள் முந்தி, திருதராஷ்டிரன் புரோசனன் சகுனியாதியோரின் ஒரு திட்டத்தின்மேலான முக் கூட்டை எதிர்பாராத விதமாகத் தெரிய வந்தான் விதுர ஞானி. அதன் பின்னால், "வாரணாவதம். சிவம். பாண்டவர். சாம்பல்..' என்ற சொல்களை கூர்த்த செவிப்புலனோடு திரிந்த அவனிடம் காற்று வந்து ஒருபொழுது அவன் கிரகிக்கும்படியாய்ப் பெய்தும் போனது. விதுரன் அவசரமெடுத்து ஒர் இரகசிய விசாரணையைச் செய்தான். அவனைத் திடுக்கிட வைத்து விடுகிறது அவனது கண்டடைவு. உடனேயே ஒடினான் விதுரன். பாண்டவரும் குந்தியும் வாரணாவதம் புறப்படுவதற்கிருந்த இறுதிக் கணத்தில் அவர்களைச் சென்றடைந்தான். பெரியப்பா, பெரியம்மாவையும், துரோண பீஷ்மர்களையும் வணங்கி அவர்கள் விடைபெற்றுக் கொண்டிருந்தார்கள். அந்நிலையில் பாண்டவரைத் தனியே அழைத்து இரகசியத்தில் அந்தப் பயங்கரத் திட்டத்தைத் தெரிவிக்க விதுரனுக்கு வழியேதும் காணப்பட முடியாதிருந்தது. குந்தியை, யுதிஷ்டிரனை, பீமனை, அர்ச்சுனனை, நகுலனை தர்சனத்திலேயே வாழ்த்தி விடைகொடுத்தவன் சகாதேவன் பக்கம் திரும்பினான்: 'பஞ்ச பூதங்களை, கிரகங்களைப் பற்றியெல்லாம். வெகு ஆர்வத்தோடு ஆய்ந்து வருபவன் நீ. அப் புதிய ம்ாளிகையில் உன் கற்கைகளுக்குப் பெரிய வளங்கள் கிடைத்துவிடப் போவதில்லையெனினும், மனித செயற்பாடுகளின் பூர்த்திகளைக் காலமே தீர்மானிக்கிறது என்றறிய விழையும் உன் முயற்சியை என்றும் கைவிட்டு விடாதே. சாஸ்திரங்கள் கூடவில்லையெனில் என்ன, பஞ்சபூதங்களாய் - பிரபஞ்சமாய்- அவை விரிந்து கிடக்கின்றன. பஞ்ச பூதங்களில் கொடியது நெருப்பு என்றறி. காற்று எங்கும் அலையும் சிறகுகள் கொண்டது. அதுவே பெரிய அழித்தலைச் செய்து விடாது. நெருப்பு பட்ட இடத்தைத் தீய்க்கும். காற்று சேர்ந்தால் அதிலேறிப் பறந்து படர்ந்து அது தூரங்களையும் பஸ்மமாக்கும். அது கண்ணில் படாமலும் இருக்கும். ஒரு மாளிகை
கதா காலம்
43

Page 32
தேவகாந்தன்
போலவே மனிதனும், அவன் தசைகளில் கூட தீயை ஒளித்து வைக்கலாம். நான் நீர். நீ நீர். பீமன் காற்று. புரோசனன் தீ. எல்லோரும் இப்படியே. செல்லுங்கள். கவனமாயிருங்கள்."
வாரணாவதம் செல்லும் வழி நெடுக சகாதேவன் மறைபொருள் கொண்ட விதுர வாக்கியங்களையே எண்ணிக்கொண்டிருந்தான். பொருள் விளங்கியபோது அவன் அதிர்ந்தான். சிற்றப்பன் உள் பொதிந்து வைத்திருந்த விஷயத்தைச் சொன்னபோது, மெய்தான் சகாதேவா, சித்தப்பாவின் பேச்சில் ஆழமான ஏதோ மறைபொருள் இருப்பதை உணர்ந்து அதுபற்றியே நானும் இதுவரை யோசித்துக்கொண்டிருந்தேன்’ என்றான் யுதிஷ்டிரன். நீ சொன்னது சரியாகவே இருக்கும்.'
புரோசனன் முன்னால் எட்டவாய்ச் சென்று கொண்டிருந்ததில் சகோதர்களின் உரையாடல் விரிவாக நடந்தது.
அவன் கழுத்தை முறித்துவிடப் போவதாக பீமன் பரபரத்தான். குந்தி அவனை அடக்கினாள்: 'புரோசனனைவிட்டுப் பார்வையை அகற்றாதீர்கள். அவன் உங்கள் எச்சரிக்கையை அறிந்துவிடவும் கூடாது. இதற்குத் தீர்வு நான் காண்கிறேன்."
பாண்டவர்கள் வாரணாவதம் வந்து சேர்ந்தார்கள். அவ்வழகிய மாளிகையின் சுவர்கள், தூண்கள், கூரைகள், தளங்கள் யாவும் தீயின் நாக்குகளை மர்மமாய் ஒளித்து வைத்திருந்ததைக் கண்டார்கள். குந்தியின் கட்டளைக்குப் பிறகு பீமன் தன் குமுறலை அதிசயமாய் அடக்கியிருந்தான். தான் நதியில் விஷ அம்புப் படுக்கையில் வீசப்பட்டதும், விஷப் பாம்புகளால் கடிக்க வைக்கப்பட்டதும், கைகள் கட்டப்பட்டு மீள முடியா நதி வயிற்றுள் அமிழ்த்தப்பட்டதுமான கவுரவர்களின் அத்தனை கொடுமைகளதும் உச்சமாய் முழுப் பாண்டவரையுமே அழித்துவிடும் அத் திட்டம் கொண்டுள்ள உட்காரணம் குறித்து அதிகம் யோசிப்பதை பொதுவில் விரும்பாத பீமனே யோசித்தான்.
அதை பொறாமையின் வளர்நிலைக் குரூரமாயன்றி, அரசபீட அபகரிப்பாய் மட்டுமே கண்டு உள் கனன்றுகொண்டிருந்தாள் குந்தி. அப்போதுதான் தன் பிள்ளைகள் அய்வருமே கூட ஒரே கட்டில் இல்லைப் போன்ற ஒர் அய்யம் முதன்முறையாக அவளுள் எழுந்தது. எப்போதும் சகோதரர்களைக் கடிபவனாயும், குற்றம் காண்பவனாயுணமிருந்தான் யுதிஷ்டிரன். பீமன் அதிகோபக்காரனாய். அதேவேளை குழந்தைத்தன முடையோனாயும். இரண்டு மனிதர்களாய் அவன் பிளவுண்டிருந்தமையைத்
கதா காலம்
44

தேவகாந்தன்
தெளிவாயே குந்தி கண்டாள். அந்தக் கோபத்தின் அடிநாதமாய் எது இருந்ததென்று எப்போதுமே அவளால் அனுமானிக்க முடியாததாய் இருந்தது. அவனது அளப்பரிய வலிமை, அவனைச் சக மனிதர்களால் அணுகமுடியாதவனாய் அந்நியப்படுத்தியதே அதன் காரணமோவென்றும் நினைத்தாள். குழந்தைத்தனம் அவனிடத்தில் அவ்வப்போது யெளவனத்தன மாயும் வளர்ந்து காணும். அப்போதெல்லாம் தனிமை நாடிப் போயிருந்து அவன் பாட்டுப் பாடினான். அவள் முன்பின் கேட்டிராதவைகளாய் இருந்தன அவை. அவனே இயற்றினானோ என்றுகூட எண்ணினாள். மிக்க சிருங்காரக் கனவுகளின் வெளிப்பாடாய் அப் பாடல்கள். குன்றனைய மேனியில் பெரும் தனங்கள் அசையும் ஒரு கன்னியின் வர்ணிப்புக்களாயே அவை இருந்தன. அவளது அழகினை நீள விழிகளில், சிவந்த அதரங்களில், சங்குக் கழுத்தில், மூங்கிலின் வாளிப்புத் தோள்களில், பங்கஜ மொட்டு முலைகளிலில்லாமல் பெருமுலைகளிலும், பெருத்த இடுப்பினிலும், தடித்த தொடைகளிலும், வலிய தோள்களிலுமாய் அவன் தேடிய ரகசியம் அவள் அறியவில்லை. கனவில் அவள் வந்ததை, இனி அவள் வரப்போவது எந்நாளென வினவுவதாய் அவன் பாடல்கள் இருந்தன. ஏனோ அத்தகைய கனவு. அங்க ஆலாபனை அவனது விரகத்தைத் தணித்ததா, பெருக்கியதா. அவன் பெரும் தீனிக்காரன். அவன் பஞ்சபாண்டவரில் மீதி நால்வரின் அளவுக்குத் தனியே உண்டான். அத்தினாபுர அரண்மனையிலிருந்தபோது மடப்பள்ளி சென்று அடிசிற்காரரிடம் தானே பக்குவங்கள் சொல்லி செய்வித்துண்ணும் ருசிகாரனாயுமிருந்தான். யுதிஷ்டிரன், சகாதேவனாதி யோருக்கு தாவர உணவு பிடித்திருக்க, விலங்குணவில் மற்ற இருவரையும் விட அதிக பிரியனாயிருந்தான். அவன் பலத்தைக் குந்தி விரும்பினாள். அது அவளின் கனவு நிறைவேற்றத்துக்கு ஒரு காலத்தில் கைகொடுக்கக் கூடியதுதான். ஆனால் அவன் அவ்வாறு அகோரப் பசியோடு உண்பதை மற்ற நால்வரும் பழகிய அருவருப்பாயே கண்டுகொண்டிருந்தார்கள் என்பது குந்தியின் விசனம்.
அர்ச்சுனன் பழக்கத்திலும் வெகு சகஜம் இருக்கவில்லை. எங்கோ அடிபட்டுப் போயிருந்தானோவென்று அவளுக்கு அய்யமாயிருந்தது. ஏகலைவன் என்ற காணவேடனின் வில்வித்தை கண்ட நாள் முதலேதான் அப்படியென்று யோசிக்கப் புரிந்தாள் குந்தி. வசுசேனனாகிய கர்ணன் அவனளவே அன்று பயிற்சி காட்டு களத்தில் வித்தைகள் காட்டியிருந்தா னென்று பலரும் பின்னர் சொல்ல அவள் கேட்டிருந்தாலும், அவனது வில்லாளும் அனாயாசத்தில் அர்ச்சுனன் மனப்பொருமல் அடைந்திருத்தலும் கூடும். அசுவத்தாமனிலும் ஒர் உள்வெறுப்பு அவனுக்கிருந்தது. பிராமணனா
கதா காலம்
45

Page 33
தேவகாந்தன்
யிருந்தும் க்ஷத்திரியத் தபசியாயும், ஆச்சாரியன் மகனானதால் கூடுதலான அஸ்திரப் பிரயோக நுட்பங்களைத் தெரிந்திருப்பானோவென்பதனாலும் அவ் வெறுப்புத் தோன்றியிருக்க முடியும். ஆனால் ஏகலைவன் மரங்களின் வைரங்களிலிருந்து செதுக்கியெடுத்த கூரம்புகளில் அர்ச்சுனன் பட்ட வலிகளிலிருந்து மீளாமலேதான் இருந்திருக்கிறான். அவன் அப்படியொரு மகாசிரத்தையுடன் அஸ்திரப் பயிற்சி மேற்கொள்வதெல்லாம் அவ் வலி நிவாரணியாகவே என்பதை அப்போது குந்தி புரிந்தாள்.
நகுலன் அதிகமும் மிருகங்களோடேயே பழகினான். மாலைகளில், சில தினங்களில் இரவுகளிலும், குதிரைக் கொட்டகையடியிலேயே அவன் பொழுது கழித்தான். ஏனென்று அவள் எப்படி அறிவது. அந்த அழகன் சகாதேவன் இரவுகளைப் பெரும்பாலும் உறங்காமலே கழித்தான். வானம் நோக்கியிருந்து நக்ஷத்திரங்களின் நகர்வுகள் கண்டான். கோடுகள் கீறி வைத்துக்கொண்டு கிரகங்களைப் பந்தாடினான். கணக்குகள் போட்டு அவன் செய்த காரியங்கள் அவளுக்கு விந்தையாயிருந்தன. அந்தப் பிள்ளையில் அவளுக்கு அபரிதமான வாஞ்சை மாத்ரியை உரித்துவைத்து ஆணாய்ப் பிறந்திருந்தான். யுதிஷ்டிரனும் பீமனும் அர்ச்சுனனும் பேசப்பட்ட போதெல்லாம், நகுலனை இருதயத்தில் ஏற்றிக்கொண்டு தன்னைத் தனியனாய் உணர்ந்தானோ அவன். அதனால்தானோ தன் அன்னையின் சகோதரன் சல்லியன் அரண்மனை வந்தபோதெல்லாம் கூடவே ஓடிவிடுவது போல் துடித்தானோ. அவனது அதிக கல்வியீடுபாடு அது காரணமாயும் சம்பவித்திருக்கலாம் தான். அவனும் எங்காவது உடைந்துமிருக்கலாம். அவள் அவர்களது எதிர்கால நலன் பார்த்தாள். நிகழ்கால அக்கறையின் அவசியம் காணவில்லை. அந்த அய்வரையும் கவுரவரின் எதிர்ப்பும் பொறாமையுமே மேலோட்டமாகவேனும் ஒன்றாய்க் கட்டிப்போட்டி ருந்தன. இனி.? அவள் திட்டமிட்டாக வேண்டும்.
புரோசனன் அய்யுறாதவாறு பாண்டவர் அவனைக் கண்காணித்து வந்தனர். குறிப்பாக தாங்கள் அனைவரும் பாளிகைக்குள்ளே இருக்கும் போது. குந்தி தன் மதியை வேகமாய்ச் சுழல விட்டிருந்தாள். ஒருநாள் அயல் கானகத்திலிருந்து தன் அய்ந்து பிள்ளைகளோடும் காட்டுவாசிப் பெண்ணொருத்தி அச் 'சிவம் மாளிகைக்கு யாசகத்துக்கு வந்தாள். குந்தி மதியூகியானாள். அவர்களை புரோசனன் அறியாதவாறு மாளிகையின் ஒர் அறையில் தங்கவைத்தாள். மதுவும் மாமிசமும் வேறு பல உணவுகளும் அவர்களுக்கு நிறையக் கொடுத்தாள். அன்று நள்ளிரவில் தன் பிள்ளைகள் அய்வரிடமும், நாம் தப்பிப் போய்விடலாம்' என்றாள். பீமனை மாளிகைக்கு எரியூட்டச் சொன்னாள்.
கதா காலம்
46

தேவகாந்தன்
புரோசனனும், வேட்டுவிச்சிப் பெண்ணும் அவள் அய்ந்து பிள்ளைகளும் மூடித் தீ விரித்த நாக்குகளுள் அலறிப் பஸ்மமாவதைப் 1lத்துக்கொண்டு தூரத்தே ஒரு புதர் மறைவில் பாண்டவர்களுடன் நின்ற குந்தி, இனிப் போகலாம்’ என்றாள்.
அவர்கள் அக் காரிருளில் திசையற்ற வனம் பிளந்தேகினர்.
மறுநாள் இருள் கிழிக்க சூரியன் ஆயத்தமாகிக் கொண்டிருந்த அதிகாலையிலேயே பாண்டவர் இறந்த செய்தி அத்தினாபுர அரண்மனை யை அடைந்தது. விடிந்ததும் தேசமெங்கும் அறிந்தது. விடியலில் ஒரு இருள் பூமியில் துக்கமாய் இறங்கியது.
ಚಿàನಿ. காலம் 47

Page 34
நான்கு
உபகண்டம் - வடகீழ்த் திசையின் இன்னோர் தேசம் (இடைக்காலம்)
சித்தியம்மன் ஆலயத்தின் பின்புறக் குளத்துப் படித்துறையில் நிழல்கள்போல் அசைவற்றிருந்தது மக்கள் கூட்டமொன்று. ஆடை ஆபரணங்களிலிருந்து மினுக்குகள் தோன்றிக் கொண்டிருந்தன. ஆனாலும் அது சப்த அலைகளடக்கி ஒர் இரகசியக் கூடுகை போன்ற இறுக்கத்தில் உறைந்திருந்தது. அதை எந்த நேரத்திலும் இழந்துவிடவே சூழ்நிலை உருமாறிக் கொண்டிருந்தது.
நீர்ப் பரப்பின் சலசலப்பில், நிலவுலகமே சப்த ஸ்மரணை யற்றிருந்ததோவென எண்ணக்கூடியதாகவிருந்தது. அது அவ்வப்போது திடுக்கிடவும், தன்னாழ்ச்சி மறந்து பயமடையவும் செய்வதாயிருந்தது. வரலாற்றுப் புலத்தி லிருந்து அவை விரிந்தெழுந்தமை தெளிவாயே தெரிந்தது.
முகம்மதியர் கையில் பெரும்பாலும் வடதேசங்க ளெல்லாம் வீழ்ந்திருந்தன. இமயத்தின் கணவாய்கள் கடந்து துருக்கியும், யவனமும், ரோமமும் தம் விசை யொடு எடுத்துவந்த படைகளுக்கும் யுத்தத்துக்குமாய் வடதிசை ஏற்கனவே தோற்கத் துவங்கியிருந்தது. பெருஞ் செல்வங்களோடு அவை தம் திசை பெயர்ந்த பின்பு, அடிமை அரச வமிசம் என்ற ஒன்றே புதிதாய்
கதா காலம்
48

தேவகாந்தன்
ஜனனமாகிதம் எஜமானர்கள் வழியில் நாட்டை நிருவகித்தது. ஒரு புதிய கட்டமைப்பை மதங்களில், சமுதாயத்தில், அரச நிருவாகத்தில் அது தீர்க்கமாய் இறக்கியது. ஒரு முகம்மதிய சாம்ராஜ்யத்துக்கான விதை தூவப்பட்டிருந்தது. ஆனாலும் அதன் எல்லைகளுக்கப்பாலும் ஸுனி மதம் விசையொடு இறக்கை விரித்துக் கொண்டிருந்தது. பாரசீக மொழியைப் பயில்வாக்கியிருந்தது. அக் காலம் விழுத்திய பயங்களின் பதிவு மனங்களிலிருந்தது. நான்கு வருஷங்களுக்கு முந்தி வரை மகத கலாம்சங்களுடனும் குப்த கலா கூறுகளின் சேர்த்தியுடனும் பிரமாண்டமாய் நின்றிருந்த கோவில்தான் அது. ஆனால் டில்லிகத்திலிருந்து சூறைபோல் வந்த முகம்மதியப் பெரும் படையொன்று நாட்டைக் கைப்பற்றியதோடு, கர்ப்பக்கிருஹம் வரை சென்று கோவிலைச் சின்னா பின்னமும் செய்தது. சக்தியம்மன் சகல ஆபரணங்களும் இழந்தாள். கோவிலே பொக்கிஷ அறை கொண்டது. அத்தனை பொன்னும் மணியும் கொள்ளை போயின. கஜுராஹோ நளினங்களுடன் தூண்களில் விளங்கிய சிற்பங்களின் சிதைவுள் அம்மனே பெருந்தனங்கள் காட்டி நிர்வாணமாய் நின்றிருந்தாள்.
போன வருஷத்தில்தான் ஒரு சிறிய கோவிலை நிர்மாணித்து அம்மனைப் பிரதிஷ்டை செய்திருந்தனர் அப்பகுதி மக்கள். இந்தச் சமுதாயம் ஒரளவு மூர்ச்சை தெளியவாரம்பித்த காலமாகவும் அதைக் கொள்ள முடியும். அம்மனின் பிரதிஷ்டையின் பின் கதா படனத்துக்கும் ஏற்பாடானது. கதா படனம் நிகழ்த்த வந்தவன் தன்னைப் பிரம்மநந்தனென்றான். உத்தாலகர் வழி ஞானத் தேடல் புரிபவன் என்றான். வேதங்கள் அறிந்திருந்தும் உபநிஷதங்கள் வழியில் தத்துவப் பார்வை கொண்டிருந்தான் அவன். அவனது படன வித்தாரத்தில் சபை பக்தி பரவசத்துள் மூழ்கி வெளியுலகு மறந்திருந்தது. மகாபாரதம் அய்ந்தாம் வேதம் எனப்பட்டிருப்பினும் தத்துவப் பலஹினங்கள் உடையதென்பதை அவன் படனம்தான் அவர்களுக்கு அறிவுறுத்தல் செய்தது. கீதையை அவன் வெகுவாய்ச் சிலாகித்திருந்தான். அதுவே அதுவரை காலத்திய உபகண்டத்தின் வடதிசைச் சிந்தனைப் போக்கைத் தகர்த்தமைத்திருந்ததை அற்புதமாக அவன் விளக்கினான். ஆன்மவாத சிந்தனையானது உடைந்து, கரும வாத சிந்தனையின் தாபிதப் புள்ளி அதுவாகவே இருந்ததைச்
gigst காலம்
49

Page 35
தேவகாந்தன்
சொன்னான். ஆனாலும் தொகுப்புக்கு வெளியே அவனால் வெகு தூரத்திற்கு கதாபடனத்தை விரித்தெடுத்துச் செல்ல முடியவில்லையென்றே பட்டது.
அந்த வருஷத்தில் ராஜாங்கக் கெடுபிடிகள் சற்று அதிகமாக விருந்ததில் கதா காலம் நிகழுமாவென்றே அவர்களுக்கு அய்யமாகவிருந்தது. அப்போது பவுர்ணமியின் முதல் நாளில் பாணனொருவன் தேச சஞ்சாரியாய் அங்கே வந்து சேர்ந்தான். மகாபாரத கதா படனத்துக்கு மக்கள் இரகசியத்தில் தயாராகினர்.
ஏற்கனவே சொல்லப்பட்டிருந்ததின் சகல வரம்புகளையும் பாணன் கதையில் உடைத்தான். எப்படி நடந்ததோ, அவ்வாறே! என்ற பிரகடனத்துடனேயே அவன் கதா படனத்தைத் துவக்கினான். அவன் குரலில் கணிரிட்ட கர்வமும் புலமையும் கண்டு சபை கருத்து முரண்களின் முறுகலை அடக்கியது. கதா படனத்தைக் கருத்துப் பலத்தில் நின்று சொற்களில் புரிவேன்! எனச் சொன்னபடி பாடலும் உரையுமாய்ப் பாணன் கதை விரிக்க சபை சகலதும் மறந்தது.
பாணன் வழியில் தடைகள் தகர்வது, அல்லது அவனே தகர்வது தவறாமல் நிகழவேண்டும். அதை அவன் செய்யவே செய்தான்தான்.
அன்றைய கதா துவங்கியது. கேளுங்கள்.
விடியலாயிற்று. வனமோ நடக்க நடக்க நீண்டு சென்று கொண்டிருந்தது. எதிர்ப்பட்ட ஒரு தபசியிடம் வனவெல்லை கேட்டார்கள் பாண்டவர்கள். தபசியால் அதன் தொலைவு குறைந்த எல்லைத் திசை மவுனமாய்ச் சைகையில் சுட்டப்பட, தொடர்ந்து நடந்தார்கள். பாதரட்சைகளைப் பிளந்தும் முட்கள் ஊறு செய்தன. சிலவேளைகளில் குந்தியை பீமன்தூக்கிச்
சென்றான்.
கதா காலம்
50

தேவகாந்தன்
மேலே வனவிருள் இறுகி வந்து இரவாகிறதென்பதைத் தெரிவித்த போது பாண்டவரும் குந்தியும் களைப்பு மேலீட்டால் ஒரு புற்பரப்பில் விழ்ந்து ஆசுவாசம் பெற்றனர். வானத்து நகூடித்திரங்கள் இறங்கிவந்து காற்றுவெளியில் பறந்தன. சரசர இலைகளின் சப்த வெளியை அவ்வப்போது ா றுத்து மிருகங்களின் தூர தூரத் தொனிகள். இரவை அங்கே கழித்து, புறுநாள் காலை பயணம் துவங்கினர். மதியத்தின் மேல் இன்னொரு பசுந்தரை எதிர்ப்பட அவர்கள் சிறிது ஒய்வினை மேற்கொண்டனர்.
சரிந்து படுத்த குந்தி உடனேயே தூங்கிப் போனாள். மற்றவர்களும் தாக்க ஆழ்ச்சிக்குத் தப்ப முடியாது போயினர். அவ்வேளை வனம் சரசரத்து நறுநொறுத்தது பெரிதாய். நிலம் அதிர்ந்தது தெரிந்தது உடல்களின் கீழ். ப்னே உஷாரடைந்து முதலில் எழுந்தான். அம் மிருக எச்சரிக்கைக் குணம் 'யல்பாயே அவனிடத்தில் இருந்தது. ஒர் ஆகிருதியின் அசைவை அவனால் அதிர்வுகளினூடாகவே உணர்ந்து கொள்ளவியலும்.
சிறிது நேரத்தில் ஒரு காட்டுவாசிப் பெண் அவன் கண்ணெதிரில் வந்து வெளித்தாள்.
எழுந்து அமர்ந்திருந்த பீமனைக் கண்டதுமே பெருவிழிகளில் ஆச்சரியமும், அப் பெருவுடம்பில் எச்சரிக்கையுணர்வும் கொண்டாள். அந்நேரமளவில் எழுந்துவிட்டிருந்த மற்றைய அய்வரும் அச்சமடைந்தனர். (ஆந்தி 'ஆ' வென்றொரு அவலவொலி எழுப்பினாள். அர்ச்சுனன் அம்பு-வில் எடுக்க கைகளைப் பரத்தித் துழாவினான். பீமன் அவர்களைக் கையமர்த்தி ஆறுதல் படுத்திவிட்டு எழுந்து அவள் முன்னே சென்றான்.
அவனது பார்வை அவள் மேனியெங்கும் அலைந்தது. அவள் பெருந்தனக்காரி. அவள் வன்தோளாள். அவள் வலிய இடையாள். மேனியில் போர்த்தியிருந்த தோலாடை விலகியபோது வாளித்த கருங்காலித் தொடை தெரிந்தது. அவன் கவிதை பாடிய திண்ணிய அழகி அவள்தானே. அவளது கண்ணில் வியப்பு மென்மேலும் விளைந்து, விருப்பாய் ரஸமாற்றம் பெறுவதையும் அவன் கண்டான்.
அவள், பிரமிப்பிலிருந்தும் மோகத்திலிருந்தும் தன்னைச் சுதாரித்து, 'யார் நீ" என்றாள். 'மனித வாடை இல்லாப் பிரதேசமிது. மனிதக் குடியிருப்பு களுக்கு வெகு அப்பாலான இவ் இடும்ப வனத்தின் நடுவில் எப்படி வந்தாய். உன் கூடவிருப்போர் யார்."
கத 35 farsavh
51

Page 36
தேவகாந்தன்
பீமன் பதிலளிக்காமல் அவளை யாரென்று அறிய முனைந்தான். நீ யார். மனித வாடை இல்லாத இவ்வனத்தில் நீ என்ன செய்கிறாய். நீ மனிதி இல்லையோ.
நான் காட்டுவாசி" என்றாள் அவள். 'என் பெயர் இடும்பி. எவன் பெயரைக் கேட்டால் இந்த வனமே நடுங்குமோ அந்த இடும்பனின் தங்கை நான், நாங்கள் மனித இறைச்சியும் புசிப்போம்.
'அரக்க இனமா."
அதென்னவோ. அப்படி எப்போதாவதுதானே இவ்வனத்தில் மனித மாமிசம் கிடைக்கிறது. நான் மிருக இறைச்சி உண்பேன். அது இல்லாத வேளை கிழங்கு. கனி. காய். என்று இப்படி.
‘என்னைத் தின்னவேணும்போல உனக்குத் தோன்றுகிறதா. நான் எதிர்க்கத் தயாரானால் என்ன செய்வாய். என்னோடு சண்டை போடுவாயா.
'எவரோடும் செய்வேன் சண்டை. ஆனால் உன்னோடு அப்படிச் செய்யத் தோன்றவில்லை."
'நீ சும்மா சொல்கிறாய். முடிந்தால் என்னோடு சண்டைபோட்டுப் பாரேன். நான், நீ இதுவரை சந்தித்த எவர்போலும் இருக்க மாட்டேன். நான் புயலின் புத்திரன்."
இடும்பி சிறிது நாணினாள் போலத் தெரிந்தது. பின் அதை ஒதுக்கிக்கொண்டு, நான் சிங்கம், புலி, கரடியுடன்கூடச் சண்டைபோட்டுக் கொன்றிருக்கிறேன். உன்னைக் கொல்ல மாட்டேன், நோக அடிப்பேன் வா' என்றாள். தொடர்ந்து சண்டை பிடிக்கத் தோதான இடம் தேடிப் போல் அப்பால் சென்றாள். பீமன் கூடி நகர்ந்தான்.
சண்டை ஆரம்பமாயிற்று. அவள் மலைபோலவே மோதினாள். அப்போதெல்லாம் குன்றனைய அவள் முலைகள் அவனது மார்பைக் குத்தி மனத்தைக் காயப்படுத்தின. அவன் தன் வாகுகளில் ஆட்பட்டது தெரிந்தவள், மெல்லமெல்லத் தானுமே அவனுக்கு ஆட்படத் தயாராவதை உணர்ந்தாள். அதற்கு மேல் துவந்த யுத்தமாயில்லை அது. இரு பெரு மேகங்கள் மோகத் தவிப்பில் மோதி, விழுந்து, கீழ்மேலாய்ப் புரண்டு, ஒன்றோடொன்றாகும் சங்கமப் போராகப் போனது. பீமன் தான் காற்றில் வரைந்தும், கனவில் கண்டும் புணர்ச்சிக்குத் தவித்த காம சொரூபத்தில் இணையவிருந்த இணக்கத் தருணத்தில் இடும்பி சொன்னாள்: இங்கே
கதா காலம்
52

தேவகாந்தன்
வேண்டாம். அதோ, அங்கே ஒரு மலையிருக்கிறது, பார். அங்கே போய் விடுவோம். இடும்பன் என்னைத் தேடி இங்கே வரவும் கூடும். அவன் ஆகிருதி நீ இதுவரை கண்டிராதது. அவன் மாய்க்க முடியாதவன். ஆனாலும் அந்த மலையிலெல்லாம் அவனால் அந்தளவு தேகத்தோடு ஏறிவிட முடியாது."
அப்போது மேகமொன்று பூமியில் நடப்பது போல் மலைக்குன்றின் கால்களைப் பெயர்த்து வைத்து இடும்பன் பதுங்கி வந்தான்.
இடும்பியின் நிலையில் பெருங்கோபமடைந்து அவன் சீறிய சீற்றத்தில் நெடுமரங்களெல்லாம் கூட நடுங்கின. அவற்றின் கிளைகள் உடைந்தன. பீமன் உணர்வு சுதாரித்து எழுந்து எதிரே நின்ற மாமிச மலையை எதிர்க்கத் தயாரானான். அவன் இடும்பியை மெல்ல நெருங்கி, 'இவனைக் கொன்றால் மனக்கொன்றுமில்லையே' என்று வினவினான். 'இல்லை, கொன்றுவிடு' என்றாள் அவள்.
மேலே இடும்பனுக்கும் பீமனுக்குமிடையே பயங்கரமான சண்டை நடந்தது. பீமன் எதிர்பார்த்திருந்ததைவிட இடும்பன் பன்மடங்கு பலசாலி யாகவிருந்தான். அவன் தன் முழு வலிமையையும் வெகு சாமர்த்தியமாய்ப் பயன்படுத்த வேண்டி நேர்ந்தது. சாமர்த்தியம் இடும்பனுக்கில்லை. அதனால் குத்துகளும் உதைகளும் வாங்கி இரத்தம் கக்கவாரம்பித்தான். பின் இடும்பி விழித்த விழிகள் பார்த்திருக்கவே பீமன் இடும்பனின் கழுத்தை முறித்துச் சாய்த்தான்.
தமையன் கொல்லப்பட்ட தங்கை போலவா இடும்பி நின்றாள்.
தன் முன்னால் பணிந்து நின்றிருந்தவளைக் கண்டு குந்தி ஆச்சரியம் மேவினாள். இடும்பனே அவள் குணங்களும் விசைகளுமாய் இருந்ததுபோல், அவள் சடுதியில் ஒர் மாற்றத்துக்குள்ளாகியிருந்தாள். அவளது அடிமனத்துள் அடங்கியிருந்த சில நகர மக்கள் பண்புகளின் அடையாளத்தைக் குந்தி கண்டாள். பீமனின் இச்சையை அறியவும் அவளால் முடிந்திருந்தது. தாம் இனிச் செல்லவேண்டிய இடம் குறித்து யோசித்து முடிவெடுக்கவும், பெரும் காரியத்துக்கு முன்னால் சிறிய ஒய்வொன்றை எடுக்கவும், அவ்விடும்ப வனத்தின் வசதியான சூழலில் தாம் சிறிதுகாலம் தங்கிச் செல்லத் தான் தீர்மானித்திருப்பதை குந்தி பாண்டவரிடம் தெரிவித்தாள்.
யாரும் அதை மறுக்காத வேளை யுதிஷ்டிரன் மட்டும் ஏதோ தெளிவற்ற வார்த்தைகளை முணுமுணுத்தி தன் அதிருப்தியை வெளிப் படுத்தினான்.
கதா &irålაth 53

Page 37
தேவகாந்தன்
பீமன் காதல் சாகரத்தில் வீழ்ந்திருந்தாலும் அவ்வப்போது வெளியேறி தாய்க்கும் சகோதரருக்குமான உணவு, நீர் முதலியன இடும்பியோடு சேர்ந்து தேடிவந்து கொடுத்துப் போஜித்தான். இடும்பி தன் மீது காட்டிய அத்தனை நாள் கரிசனையில் குந்தியின் மனம் வெந்தழிந்தது. அவளையும் ஒருசில தினங்களில் அங்கே விட்டுத்தானே போகப்போகிறாள்.
ஒருநாள் அவர்கள் தீர்மானித்திருந்தபடி வேத்திரகீய நகர் செல்லத் தயாராகி இடும்பியிடம் விடைபெற்றனர். இடும்பி அப்போது பீமனின் கருத்தாங்கியிருந்தாள். அந்நிலையிலும் அழுதபடி வன எல்லை வரை கூட வந்தாள். பீமன் எப்படி உணர்ந்தானோ, குந்திக்குப் பொறுக்க முடிய வில்லை. கண்ணிரே வந்தது. நாங்கள் போகத்தான் வேண்டும், பீமனும் வரவேண்டியவனே, நான் ஒர் இலக்கு நோக்கி இவர்களை அழைத்துப் போய்க்கொண்டிருக்கிறேன், ஒரு கொடுமையை உன் மீது புரிவதிலேயே இதைச் செய்யவேண்டியிருப்பது எனக்கும் வலுவாய் மனத்துள் இறங்கும் வலிதான், ஆனால் இதை எந்தக் கொடுமையிலும் நான் செய்தே ஆகவேண்டும்! என வெளிவரா வார்த்தைகளைக் குந்தி பின்னினாள்.
அந்தப் பிரிவு தவிர்க்க முடியாததுதான். அவர்களுக்கு வேறு நோக்கு களும், போக்குகளும், தீர்மானங்களும் இருந்தன. மீண்டும் சந்திப்போம்" என மட்டும் கூறி, பீமன் மறுபடி திரும்பிப் பாராது நடந்தான்.
கெச்சக்ரபுரம் வேத்திரகீயத்தை விட வளம் நிறைந்தது. பல் சமூகங்கள் நிறைந்த நகர் கூட. அந்தண கோலத்திலேயே அங்கும் இருந்ததில் பீமனால் விரும்பியவாறு மதுவும் மாமிசமும் உண்ண முடியாது போய்விட்டது. பகாசுரவதத்தைப் பீமன் நிகழ்த்திய பிறகு மேலும் வேத்திரகீயத்தில் தங்கினால் பாண்டவர்களாய் அவர்கள் அறியப்பட்டு விடுவார்களோ என நினைத்தே குந்தி அவசரமாய் ஏகச்சக்ரபுரம் வந்தாள். அங்கே ஒரு குயவன் குடிலில் அவர்கள் ஆசாரமாய், உண்டி அவர்கள் பொறுப்பாயிருக்க, தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் உஞ்சவிருத்தி செய்து அதை நிறைவேற்றினார்கள். பீமன் பசிக் களையோடேயே எந்நேரமும் காணப்பட்டதாய்த் தோன்றியது. அது அவளுக்குப் பெரிய விஷயம். அவன் அவர்களது பலத்தின் முதல் ஆதாரம். அவனை ஒரு பலமாய் எண்ணியிருந்ததில் தாயாய் ஓர் அரக்கத்தனத்தின் புரிதல் அவளிடம்
கதா காலம்
54

தேவகாந்தன்
இருந்தது. ஆனாலும் அது அவளுக்கு, அவளின் பிள்ளைகளுக்கே கூட அவசியம். அவள் மகாசக்திகளின் ஒரு கூட்டிணைவுக்கெதிராய்க் காய் நகர்த்த ஆரம்பித்திருப்பவள். அவள் பலங்களில் நின்று கொண்டே தன் நியாயத்தின் குரலை ஒலிக்கச் செய்ய முடியுமென்று சரியாகவே கருதி யிருந்தாள். எதுவொன்றைப் பறித்தெடுத்தவர்களிடமிருந்தும் அதை அதை வெறும் கோரிக்கைகளால் திரும்பப் பெற்றுவிட முடியாதென்று அவள் அறிந்திருந்தாள். அவளுக்கு பீமபலம் வேண்டும். அவன் இளைப்பு அதனா லேயே அவளுக்குக் கவலையாயிற்று. பீமன் எதுவும் சொன்னதில்லை தான்.
ஆனாலும் அவளுக்கு அது இடையறா உறுத்தலாகவே இருந்தது.
ஒருநாள் ஏகச்சக்ரபுரத்துக்கு காற்று வழியில் வந்தது, பஞ்சால ராஜனின் மகள் துரோபதிக்கு சுயம்வரம் நடக்கவிருப்பதான செய்தி. குந்தி உஷாரானாள். ஏகச்சக்ரபுரம் வந்தது நல்லதுதானென்று அப்போது தோன்றப் பெற்றாள். அவள் பாண்டவரையும் சுயம்வரம் போய்வரச் சொன்னாள். 'அந்தணர் கோலத்திலிருக்கிறோம். சுயம்வர மண்டபத்தில் அந்தணர்க்கு என்ன வேலையிருக்கிறது' என்றான் யுதிஷ்டிரன். மற்றவர்கள் ஆமோதித்துத் தலையாட்டினர். 'சொல்லைத் தட்டவேண்டாம். அந்தக் கோலத்தில் இருந்தவர்களால்தான் பெரும்பெரும் சபைகளிலெல்லாம் வெற்றிக் கனிகள் அடையப்பட்டிருக்கின்றன’ என்று தீர்க்கமாய்ச் சொல்லி அப்பால் நகர்ந்துவிட்டாள் குந்தி. அவள் எவரைக் குறிப்பிட்டாளென்று அக் கணத்தில் தோன்றாதிருந்தாலும், மேலே எதுவும் முணுமுணுக்காமல் விட்டு விட்டான் யுதிஷ்டிரன்.
அய்வரும் பாஞ்சாலம் புறப்பட்டனர். பாதசாரிகளாகவே. பாஞ்சாலம் பெரிய தேசமில்லையெனினும், வளப்பம் மிக்கது. பாண்டவ கவுரவர் களிடத்தில் சில வருஷங்களின் முன் அவர்கள் தோற்றிருந்தாலும் விறல் மிக்கவர்கள். பாதி ராஜ்யத்தைத்துரோணர் அபகரித்துக் கொண்டிருந்தாலும் அந்த இழப்பிலிருந்து அவர்கள் சுதாரித்தது பெரிய விசேஷம். சுயம் வரத்துக்கு ஒரிரு தினங்கள் முந்திய காலமானதால் நகர் அலங்கரிப்புக்களால் விளங்கிக்கொண்டிருந்தது. வீதிகளிலெங்கும் ஜனங்களின் குதூகலச் சந்தடிகளும் போக்குவரத்து நெரிசல்களும். வீரத்தின் பரிசெடுக்க காதல் சிறகு விரித்தவர்களாய் நெடுந்தேர்களேறி விரைந்து மாளிகையை அடைந்துகொண்டிருந்தார்கள் ராஜகுமாரர்கள். தம் வரவு குறித்த சேதிகளுடன் தமக்கு முன்னராய்த் தம் தூதுவர்களை அனுப்பியிருந்தார்கள் சிலர். அத் தூதுவர்களின் வேக புரவிகள் காற்றைத் துளைத்து வந்து நகர் புகுந்து கொண்டிருந்தன.
கதா காலம்
55

Page 38
தேவகாந்தன்
பாண்டவர் நகருள் பிரவேசித்தனர். தாம் அந்தண கோலத்தில் இருப்பதே அங்கே பிரவேசித்தலில் அடையாள மறுப்பாய்ச் சாத்தியமான தென்பது அய்வர் மனத்திலும் நிழலாய் நகர்ந்து மறைந்தது.
மாடத்தில் பாஞ்சாலி ராஜ வீதிகள் நோக்கி நின்றிருந்தாள். கூட, அவள் போலவே நன்கு அலங்காரம் ஆடையணிகள் அணிவிக்கப்பட்டிருந்த சேடியர் சிலர். பாஞ்சாலி தன் செளந்தர்யத்தை விட மேனி வர்ணத்தாலேயே வட தேசங்களெங்கும் பெயர்பெற்றிருந்தாள். அவளின் தீயின் உள்ளொளிரும் நீலம் அவள் கண்களில் சமுத்திரமாய் அலையடித்தது. அவள் பிறந்தபோது தங்கத் தொட்டிலில் கிடந்து தகத்கவென சொர்ண ஒளிகளுக்கிடையில் எரிந்துகொண்டிருப்பதாய்க் கதிர் வீசிக்கொண்டி ருந்தாள். குழந்தையே எரிகிறதோவென்றுதான் திடுக்கிட்டுப் பாய்ந்து துருபதன் மகளைத் தூக்கியது. பின் அவள் பேரதிசயம் கண்டு மகிழ்ந்தான். தன் மனத்தில் விழுந்துள்ள சுமையின் எரிதழலாய் அவள் விளங்குவாளென்று அப்போதே அவன் மனத்தில் எண்ணம் விழுந்தது. பார்த்தோரெல்லாரும் கூட அவளைத் தீயின் குழந்தையோவென்றே அதிசயித்தனர். அச் சுடரொளியைக் காலம் கரைக்காமலே தக்கவைத்திருந்தது. அவள் எவனையும் ஆசைப்பட்டுவிட முடியாது. எவனும் அவளை ஆசைப்பட்டு விடவும் முடியாது. சுயம்வர களத்தில் வீரம் மட்டுமே அவளது மாலையை ஏற்க முடியும். அத்தனை தீர்மானமிருந்தது, துருபதனிடத்தில், சோதரன் திருஷ்டத்யும்னனும் அவ்வெண்ணத் தீர்க்கத்தில் குறையாதேயிருந்தான். ஆனாலும் ஒரு கன்னியின் கனவுகள் பறப்பவையாயே இருக்கின்றன. தான் மாலையிடப் போபவன் யாரென அவை முன்கூட்டிய அனுமானமடைய முனைகின்றன. சிந்து தேச புரவிகளின் மேல் ஆரோகணித்து, விசைத் தேர்களில் வீற்றிருந்து என பல தேச ராஜகுமாரர்களையும்தான் அவள் ஒரு பராக்கில்போல் நோக்கில் விழுத்தியிருந்தாள். ஆனால் அவளது மனம் விசைகொள்ள வைக்குமளவு கம்பீர புருஷன் யாரும் அதுவரை அவளது கண்ணில் படவில்லை. அந்த வருஷ வீர சுயம்வரத்தில் கணவன் அமையாது போகவும் கூடுமோவென மனத்தில் ஒர் ஏக்கத்தின் வலி படர்ந்தது. ராணிகளுக்கும், இளவரசிகளுக்கும், பெருந்தனம் படைத்தோர் குலப் பெண்களுக்கும் கிடைக்கும் வசதிகளில் ஒரு மதர்ப்பு என்றும் ஊனில் ஊறிக் கொண்டேயிருக்கும். பாஞ்சாலி கனவுகள் காணாதவளென்று யார் சொல்ல முடியும். தன் தினவுகள் மேலும் ஒரு வருஷம் அடங்கிநிற்கச் சம்மதிக்குமா வென்று அவளுக்கு அய்யம். அவள் துருபதனின் தளராத விருப்பத்தை உதறிவிட மாட்டாள்தான். ஆனாலும் தேக வதையை ஓராண்டு தாங்குவது சாதாரணமானதில்லை. அப்போதே இடையில் ஒரு நலிவு வந்து விழுந்ததே.
கதா காலம்
56

தேவகாந்தன்
தொடைகளும் துவள்வனபோல் ஒரு பலஹினம். அவள் உற்சாகமிழந்து அந்தப்புரம் திரும்பினாள், சேடிப் பாஞ்சாலியர் பின் தொடர.
மறுநாள் காலை சுயம்வர மண்டபம் நிறைந்திருந்தது. ராஜகுலம் ஒரு புறம், அந்தணர் ஒரு புறம், பொதுஜனங்கள் ஒரு புறம், பாஞ்சால அரசகுலம் நாயகமான இடத்திலென்று அந்நிறைவின் பரப்பு. எங்கும் மூச்சுக்களின் பெருங்காற்றுச் சுழற்சி. அந்தணர் மந்திரம் அமைதியாய் ஒருபாலெழுந்து கொண்டிருந்தது. நெய்யிடாத தருணங்களில் ஓம குண்டத்திலிருந்து கரிக்கும் புகை விரிந்தெழுந்தது.
ஆயிற்று. சடங்காசாரங்களெல்லாம் பூரணமாயின. துரோபதி தோழியர் சூழ மணமாலை ஏந்தி சுயம்வர மண்டபம் நுழைந்து மணப்பெண் தவிசில் அமர்ந்தாள். விழிகள் மறைந்தன இமைப்பு. அதிகாலைச் சூரியனின் செந்நிறச் செழுமை விரிந்ததில் மூச்சுக்களும் அடங்கின. சபை நிசப்த மாயிற்று.
ஒருபோது யுதிஷ்டிரனை மெதுவில் விளித்து அர்ச்சுனன் ஒரு திசையைச் சுட்டிக்காட்டினான். அங்கே துரியோதனன். கூட துச்சாதனன், விகர்ணன் போன்ற சில சகோதரர்களும் கர்ணனும். பிறகு யுதிஷ்டிரன் அவர்கள் பின்னால் நோக்குச் செறித்து மீண்டு, 'யாராயிருக்கும் அந்த விசித்திர வேடதாரி' என்று தன்னையேபோல் கேட்டான். சகாதேவன் அது செவியில் விழ, யதுகுல கிருஷ்ணனாயிருக்கும். அவன்தான் ஆடை ஆபரணங்களில் பெண்கள்போல் அத்தனை பிரியம் கொண்டவனாம்’ என்றான்.
சிறிதுநேரத்தில் போட்டியின் விபரம் தெரிவிக்கப்பட்டது.
மூடியிருந்த திரை விலத்தத் தெரிந்தது சிவதனுசென ஒரு வல்வில்.
ராஜகுமாரர் ஒவ்வொருவரும் குலம், தேசம், பெருமைகள் அறிவிக்கப் பட ஒவ்வொருவராய் வந்து லக்ஷரியத்தை அடிக்க முடியாது பாஞ்சாலி யெனும் தம் இலட்சியம் சிதறி இருக்கை திரும்பினர். துரியோதன கவுரவன் வந்தான். முயல்வு தோற்று அவனும் பின்னடைந்தான். விகர்ணனுக்கும் துச்சாதனனுக்கும் கூட அவ்வாறே நேர்ந்தது.
அவர்கள் முகத்தில் வலிதாய் விழுந்த தோல்வியின் கருமைகளைக் கண்டு அடங்கிய களிப்படைந்து கொண்டிருந்தான் யுதிஷ்டிரன். பீமனோ ஒருபோது முகத்திரை விலகித் தெரிந்த செஞ்சோதி நிலவொன்று கண்ட கிறுகிறுப்பில். அவனுக்குத் தாளமிட்டு ஆடிப் பாடவேண்டும்
கதா காலம் 57

Page 39
தேவகாந்தன்
போலிருந்தது. அவன் தன் சந்தோஷங்களை அவ்வண்ணமேதான் வெளிப்படுத்தியும், தீர்த்தும் கொள்வது. அது இயலாத அச் சூழலில் அவன் விழி கிறங்கி வெளி மறந்தான். அர்ச்சுனன்தான் அவ் வில்லின் திறம் பார்க்கப் பரபரத்துக் கொண்டிருந்து. அவன் பயிற்சியின் காட்சிக் களத்திலேயே அதுபோல் செய்திருந்தவன். அதன் பின்னான அவனது தனுரப்பியாசங்கள் அவனை இன்னும் நம்பிக்கை கொள்ளச் செய்திருந்தன. ஒருபோது, சகோதரர் யாரையும் ஆலோசியாமலே விறுவிறுவென போட்டிக் களம் புகுந்து வில்லை அணுகிவிட்டான் அவன். துருபதன் திடுக்கிட்டான். திருஷ்டத்யும்னன் ஆச்சரியப்பட்டான். சூழ்வினைச் சுற்றம் சலசலத்தது. சபையோ ஒரு மவுன உறைவில். யார் இந்த அந்தண இளைஞன் என்ற வினாவுதிர்த்தனவாய் அனைவர் நெஞ்சும். அரச குல யுவர்களெல்லாம் தோற்றுப்போயிருந்த அக் கணத்தில், அந்தணன் இலச்சினை அடிக்க வில் எடுப்பதைத் தடுக்க எவ்வகைச் சக்தி பெற்றிருப்பர். நான் முயற்சிக்கலாமா' என்று கேட்டான் அர்ச்சுனன் சபை நாயகத்தை நோக்கி. முயற்சிக்கலாமே. வென்றால் தங்கையும் பரிசாவாள்' என்றான் திருஷ்டத்யும்னன். அர்ச்சுனன் வில்லை எடுத்தான். அநாயாசமாகவே எடுக்க முனைந்திருந்தாலும் வில்லின் வலிது அவனைச் சிறிது தடுமாற வைத்துவிட்டது. அது விசை கொண்டிருந்தது. தன் திசையில் சீறிப் பாய முனையும் ஒரு முரட்டுக் குதிரை போல் அது தன் கைகளில் திமிறுவதாய் உணர்ந்தான் அர்ச்சுனன். ஆனாலும் மிக நிதானமாக அஸ்திரமெடுத்து நாணில் பூட்டினான். விசையை உருவாக்கினான். குறியில் கவனம் குவித்தான். லக்ஷயம் ஒரு புரி கயிறில் தொங்கிக்கொண்டிருந்தது. லக்ஷயத்தை அடிப்பதல்ல, புரிகயிறை அறுக்கவேண்டும். அதுதான் அர்ச்சுனனின் இலக்கு. சபையும், லக்ஷயமும் மறைந்து கண்ணில் கயிறு மட்டும் பட்டுக்கொண்டிருந்தது. அர்ச்சுனன் பாணத்தை விட்டான். லக்ஷரியம் சளாரெனக் கீழே விழுந்தது.
துருபதனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. ஆச்சரியம் அவன் மகன் திருஷ்டத்யும்னனுக்கும்தான். அவனே துரோணனை ஆச்சாரியனாய்க் கொண்டிருந்தவன். அது அத்தனை சாத்தியத்தில் கூடுமென்ற கருத்து அவனிடமே இருக்கவில்லை. அது சமநிலை குலைக்கும் திட்டமுடன் வார்பட்ட தனுசு, துரோபதிக்குச் சொல்ல முடியாத ஆச்சரியம். அது திடுமென அவன் மேலான விருப்பாய்ச் சேதனமாயிற்று. அர்ச்சுனன் மணத் தவிசை நெருங்கினான். துரோபதி மாலையை அணிவித்தாள். மந்திர முழக்கம், வாழ்த்துக்கள் எதுவுமில்லை. மலர்தூவுகைகள் இல்லை.
ராஜகுலம் அமர்ந்திருந்த பகுதியிலே பெரும் அதிருப்தி, அமளியாக வார்த்தைகள் உதிர்ந்து சிதறின. இதைவிட லக்ஷயம் வீழ்த்தப்படாமலே
கதா காலம்
58

தேவகாந்தன்
போயிருக்கலாம். கூடித்திரியைக்கு அடுத்த வருஷத்தில் இன்னொரு சுயம்வரம் வைப்பதொன்றும் புதுமையில்லை."
அர்ச்சுனனுக்கு உதவியாய்ப் பீமன் பாய்ந்து முன்னே வந்தான். கிருஷ்ணன் சில க்ஷத்திரியர்களை அமைதிப்படுத்தினான். அர்ச்சுனன் துரோபதியின் கையைப் பற்றினான். மறுகணம் அப்படியே மண்டபத்தை விட்டு வெளியே நடந்தான்.
கிருஷ்ணன் பலராமனோடு வெகுநேரமாய்க் குசுகுசுத்துக் கொண்டி ருந்ததைப் புரிந்துகொள்ள முடியும். அவன் ஏற்கனவே அந்த அய்ந்து அந்தண யுவர்களையும் பஞ்சபாண்டவரென யூகித்திருப்பான் போலவே தோன்றியது. தான் முடிசூட்டிக் கொண்டு ஒரு தேசத்தை ஆள்தலென்பது அவனுக்கு என்றும் பிடித்திருந்ததில்லை. வெகு கலா உபாசகனான அவன் தானே இசைக்கருவிகள் சிலவற்றை இசைக்கும் வல்லபமும் வாய்ந்தி ருந்தான். அவன் புல்லாங்குழலெடுத்து ஊதவாரம்பித்தால் அண்ட சராசரங்களும் தம் அசைவு நிறுத்திநின்று கேட்குமென மதுராபுரி யாதவ குலத்தின் தலைநகராகவிருந்த காலத்திலேயே அவன் பற்றிப் பெரிய பேச்சிருந்தது. அவன் சாமர்த்தியங்களின் நிலைக்களனாயிருந்தான். அதன்மூலம் அவன் தேசங்களின் போக்கு, மாற்ற விதிகளை நிர்ணயம் செய்பவனாக இருக்கவே விரும்பினான். அவனும், அவன் குலமும் மதுராபுரியை ஜராசந்தனிடம் தோற்றுவிட்டுத்தான் தூர ஓடிப்போய் மாதிரிகளின் தாக்குகைக்கு வலுவாய் நிற்கக்கூடிய நிலப்பரப்புடைய துவாரகாபுரியில் கோட்டையை நிர்மாணித்தார்கள். அவனது குல விரோதியாய் அழிக்க முடியாத ஆற்றலோடு இருந்தவனே ஜராசந்தன். ஜராசந்தனை அழிப்பதற்கான உத்திகளில் முதலாவதாய் அவன் ஆற்றிய கருமமே அப்போது கூடித்திரியர்களின் கோபத்தை ஆற்றுப்படுத்தியதாய்க் கொள்ள முடியும்.
பாண்டவர்துரோபதியை அழைத்துக்கொண்டு தாயாரிடம் சென்றனர்.
யுதிஷ்டிரன் பதற்றமாகியிருந்தான். இடும்பவனத்தில் மூத்த தம்பியான பீமன் இடும்பியோடு வாழ்ந்தான். இப்போது பாஞ்சாலன் புத்திரியை அர்ச்சுனன் வீரப்பரிசாய் அடைந்திருக்கிறான். அவனுக்கு ராஜ்யமுமில்லை; தாரமுமில்லை. அவன் மனத்தில் ஒரு தவிப்பாய் அந்த நினைப்பு பெருகிக் கொண்டிருந்தது. கூட, சுயம்வரத்துக்குப் போய்வரவென அனுப்பிய அன்னை, துரோபதியோடு செல்கையில் என்ன சொல்லுவாளோ என்ற லுக்கமும்,
35i காலம்
59

Page 40
தேவகாந்தன்
அவன் விறுவிறுவென நடக்க நகுல சகாதேவர்கள் அவனைப் பின் தொடர்ந்தனர்.
இருட்டியாகி விட்டது.
குடிலின் சிறு விளக்கொளியில் குந்தி உள்ளே அமர்ந்திருந்தாள். அவள் புனைந்த கனவுகளின் எல்லை பெரிது. அவள் தன்னுள் உருட்டிய காய்களின் சுழற்சியில் லோகலோகங்களையே தலைகீழாக்கி விட முடியும். அவள் ராஜகுருத்தினி போல் தன் பிள்ளைகள் நலன், கணவனின் பெயர் என்கிற இரு சமாந்தரங்கள் குறித்த ஒர் இடையறாத் தேடலிலேயே காலத்தை நகர்த்திக் கொண்டிருந்தாள்.
அப்போது வெளியே பாத சத்தங்கள் கேட்டன. சாதுவான முதலடிகளை யுதிஷ்டிரனது என இனங்காண முடிந்தது அவளால். பின்னேயானவை நகுல சகாதேவர்களதென்று சரியாகவே கணித்தாள். அப்படியானால் இன்னும் பின்னேதான் பீமார்ச்சுனர்கள்.
அது இயல்பில்லை.
குந்திக்கு மின்னலாய் அனுமானம்.
யுதிஷ்டிரன் முற்றத்தில் வந்துநின்று, 'அம்மா, அர்ச்சுனன் வெற்றிக் கனி பறித்து வருகிறான்' என்றான்.
அவள் அனுமானித்தது சரிதான். மீண்டும் காய் நகர்த்தல். அவள், 'சந்தோஷம். அய்வரும் வழக்கம்போல் பகிர்ந்துண்ணுங்கள்' என்றாள்.
திகைத்தான் யுதிஷ்டிரன். திகைத்தனர் நகுல சகாதேவர்கள். அப்போது பீமார்ச்சுனர்கள் துரோபதியுடன் வந்து சேர்ந்தனர்.
'அம்மா வெளியே வந்து எந்தக் கணியென்று பாரம்மா’ என யுதிஷ்டிரன் மறுபடி வற்புறுத்தி அழைக்க, குந்தி வெளியே வந்தாள். அவளுக்கு ஆச்சரியமில்லை. பாவனையும் அப்படிக் காட்டவில்லை. அவள் ஒரு நூலிழைக்காகக் காத்திருந்தவள். யுதிஷ்டிரன் வெற்றியின் கன்னியைக் கனியெனச் சொன்னது அந்த இழையாகிப் போனது அவளுக்கு,
'இதுதானம்மா அந்தக் கணி. பாஞ்சாலன் புத்திரி. துரோபதியென்று பேர். இதையா வழக்கம்போல் அய்வரையும் பகிர்ந்து சாப்பிடச் சொன்னாய்."
அதிர் வினாவல்ல அது. ஆசை வினா. அதையும் குந்தி காணவே செய்தாள். தன் மக்கள் மூவரையும், தன் மக்களாய்க் கொண்ட மாத்ரியின்
கதா காலம்
60

தேவகாந்தன்
புத்திரர் இருவரையும் சேர்த்து பாண்டவராயுள்ள அந்த அய்வருக்குள் மிக மென்மையாய் விழுந்துள்ள இடைவெளிகளை நீக்கி ஒன்றாய்க் கட்டிவைக்க பாஞ்சாலன் புத்திரியைக் கயிறாக எடுப்பதில் எந்த விக்னமும் வந்துவிடப் போவதில்லை. தர்மமென்பது யுகத்துக்கானது. அது மாறும் காலத்தில் மாறவிருக்கும் யுகத்தின் எறிவிசைத் தர்மம் அதுபோல சற்று கூர்மையாகவே தான் இருக்கும். அவள் எண்ணத்தை மாற்றத் தயாரில்லை.
குந்தியின் முடிவு அர்ச்சுனனை ஊமையாக்கிற்று.
அது பீமனிலும் சிறிது மகிழ்ச்சியை விளைத்தது போலிருந்தது. அவன் மணவில் மற்ற நால்வருக்கும் சமமான பங்கு பெறுபவன். துரோபதி கனியெனில், அதில் அவனுக்குப் பெரும் பங்கா.
யுதிஷ்டிரன் தொடர்ந்து, துரோபதியின் தந்தை தாயரின் சம்மதம், இந்தச் சம்பிரதாயமில்லா முடிவுக்கு எப்படியிருக்குமோ என்றான்.
இப்படி எங்குமே நடக்கவில்லையென்று யாரால் அறுதியாகச் சொல்ல முடியும். உலகத்தில் இரகசியமாகவேனும் இது நடக்கிறதுதானே. நான் சொன்னது சொன்னதுதான். குந்தி கூறிவிட்டு சட்டெனத் திரும்பி உள்ளே போய்விட்டாள்.
வெகுநேரமாய் வெளியே அடங்கிய பேச்சுக்களின் குரல்கள். பின்
மறுபடி யுதிஷ்டிரன் பேசினான்: ‘உன்னுடைய முடிவுக்கு நாங்கள் சம்மதிக்கிறோம் அம்மா."
அப்படியானால் அய்வரும் மாலையிட்டு அவளைக் கூட்டிவாருங்கள். அய்ந்து மாலைதாரிணியாய் அவள் உள்ளே வரட்டும்.'
துரோபதி திசை தெரியாதிருந்தாள். எனினும் தாமே பஞ்ச பாண்டவரென அர்ச்சுனன் சொல்லியிருந்ததில், அத் திசை தெரிவின் மையில் அவள் பெரிய கலக்கமும் அடையவில்லை.
கிந்தாரி ஊண், உறக்கம் யாவும் மறந்து தணியாப் பொருமலில் இருந்த ஒர் நாள், அய்ந்தாலி சுமந்தவளான துரோபதியோடு குந்தியும் பாண்டவர்களும் அத்தினாபுர அரண்மனை நுழைந்தனர்.
கதா காலம்
6

Page 41
தேவகாந்தன்
துருபதனைத் தேர்க்காலில் கட்டி தன்னிடம் இழுத்துவரச் செய்தவன் துரோணன். அவ்வாறு கட்டி வந்தவன்தான் அர்ச்சுனன். இன்று அந்த அர்ச்சுனனுக்கே உறவாகியிருக்கிறான் துருபதன். அவனது வட பஞ்சாலத்தை இன்னும் தன்னிடம் வைத்திருக்கும் துரோணன் அதை எவ்வாறு எடுத்துக்கொள்வானென்று காந்தாரியால் அனுமானிக்க முடியவில்லை. சத்தியவதி காடு சென்ற பிறகு அவளது இழுவிசையில்போல் இயங்கிக்கொண்டிருந்த பீஷ்மன் பெரிதும் வேகமடங்கி விட்டான். விதுரனது பேச்சுக்கு இன்னும் திருதராஷ்டிரன் மதிப்பு வைத்திருந்ததாயே பட்டது. இனி அவள் யாரை நம்பியும் பேசாமல் இருந்துவிட முடியாது. அவள் அவசரமாய்ச் சேடியை அனுப்பி சகுனியை அழைத்துவரப் பணித்தாள்.
சகோதரங்களின் காரசாரமான சம்பாஷணை திருதராஷ்டிரனின் செவியின் செவியும் எட்டாத் தொலைவில் ரகசியமாய் நிகழ்ந்தது. சகுனி யாலும் அப்போது அவளை ஆறுதல் படுத்தத்தான் முடிந்தது. "பொறுத்திரு. பொறுத்திரு." எனப் பன்னிப் பன்னிச் சொன்னான். 'கையாலாகாக் கணவன், கருத்தோத முடியாத சகோதரன். சகுனி, நீ எதற்காகத்தான் பின்னே இங்கே இருந்துகொண்டிருக்கிறாய். மாண்டு போனாளே முது தோழி, அவளினிடத்தில் நீ போயிருந்து, அவள் உயிரோடிருந்திருந்தால் இப்போது நான் நிம்மதியடையும்படி ஏதாவது உபாயம் உரைத்திருப்பாளே. அய்வரின் தாலிகளை ஒருத்தி சுமக்க வைத்து அவளை ஒரு பொதி கழுதை போல் அரண்மனை கொண்டுவந்த குந்தியின் சூட்சுமத்தில் பாதி நீ தெரிந்தவனில்லையே. உன்னால் எனக்கு என்ன நன்மை ஏற்பட்டது இதுவரை. இனிமேல்தான் என்ன நன்மை ஏற்படக்கூடும்’ என பலவாறு வைதாள் காந்தாரி. w
அசையா மரமென நின்று அப்போதும் அவளைச் சமாதானப்படுத்தவே முனைந்தான் சகுனி, அவன் பரிதாபமாய்த் தோன்றினான். பாவப்பட்ட ஜென்மமாய்க் காணப்பட்டான். நாடு, அரண்மனை, மனைவி, பிள்ளைக ளென்று எல்லாம் விட்டுவந்து அங்கே சகோதரியின் பாசத்தால் வதிந்து கொண்டிருப்பவன் அவன். என்றாலும் பட்ட சூட்டிலே வார்த்தைகளும் சூடாய்ப் பிறந்தன: "நீ நினைப்பதுபோல் நானொன்றும் சூது புரிவதில். எந்தச் சூதிலும்தான். யாருக்கும் சளைத்தவனில்லை. நீ என் சகோதரியான தால் இத்தனை சொல்லவும் பொறுத்தேன். இனி எப்போதும் இம்மாதிரி உரைத்துவிடாதே. உன்னை உன் குருட்டுக் கணவனோடு விட்டுவிட்டு காந்தாரம் செல்ல எனக்கு என்ன தடை இருக்க முடியும். ஒன்றையே
கதா காலம்
62

தேவகாந்தன்
நினைத்திருக்கிறேன். நீ உன் வாழ்வில் இழந்தவைகளுக்கான பரிகாரத்தைப் பெற்றுத்தரவே இங்கு இருந்துகொண்டிருக்கிறேன். நீ இவ்விதம் பதற்றமும் கலக்கமும் அடைந்தால் தெய்வம்கூடச் செய்ய ஏதுமிருக்காது. நீ நம்பிக்கையோடிரு. தெளிவாய் இரு. இன்னுமொன்று சொல்கிறேன் கேள். துருபதனின் வலிமையில் பாண்டவர் அரசுரிமைப் பேச்செடுப்பர். அப்போது, தீர்க்கதரிசனமாய்ச் சொல்கிறேன், பாதி ராஜ்யம் கொடுக்கவே நேரும்.'
‘சகுனி
அலறாதே. நீ கண் கட்டை அவிழ்த்தெறிந்துவிட்டு, இதோ எல்லா வற்றையும் ஒருகை பார்க்கிறேனென்று எழுந்துவிட்டால் கூட எதுவும் ஆகிவிடாது. சூழ்நிலைமை அப்படி எப்படி அது என்ற வினா இப்போது முக்கியமா. ஆனால் நீ கலங்கிவிடக் கூடாது. உன் கண்கள் பார்வையைப் புரியாமலேதான் இருக்கவேண்டும். ஒருவேளை துரியோதனன் ஏக அத்தினாபுரத்துக்கும் ராஜனாய் முடிசூட்டுகிறபோது, அது காண விரும்பினால் கண்டுகொள். அதுவரை அதைச் செய்துவிடாதே. அதுதான் ம ன் ஆயுதம். நடப்பதெல்லாமும் நடக்கட்டும். நானும் இப்போது இங்கிருந்து நடக்கிறேன். ஒரு நாளைக்கு நீ என் சூதின் திறனை அறிவாய். நான் அந்தத் துவாரகைக் கிருஷ்ணனுக்கே மேலானவன் என்பதை நிரூபிக்கிறேன், இருந்து பார்.
சகுனி விரைந்து நடந்தகன்றான் காந்தாரி முன்னிலை,
போகும்போது நந்தவனப்புறம் திரும்பிக் கூவினான்: 'ஏய், சேடி. யாரடி அங்கே. போ காந்தாரியிடம்.' པ་
சகுனி சொன்னபடியேதான் எல்லாம் நடந்தன. யுதிஷ்டிரனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பெற்றன. அதுவும் ஒருநாள் நடைபெற்று முடிந்தது. காந்தாரிக்கு நினைக்க ஆச்சரியம் ஆச்சரியமாக வந்தது. சகுனி சிந்தித்துக்கொண்டுதானிருக்கிறான் என்று அவளுக்கு நம்பிக்கை வந்தது.
ஒரு புதிய ராஜ்யத்தின் அமைவுக்கு திருதராஷ்டிரன் தவிர்க்க வியலாதவாறு சம்மதித்தான். அதுவே துரோண, பீஷ்மர்களின் ஆகக்கூடிய இளக்கத்தின் எல்லையாகவும் இருந்தது. திருதராஷ்டிரன் தன் புதிய வேவுகாரனோடும் சகுனியோடும் யோசனை செய்து காண்டவப் பிரஸ்தத்தை ராஜதானியாக்கும்படி யுதிஷ்டிரனுக்கு அறுதியாக உரைத்தான்.
கதா காலம்
63

Page 42
தேவகாந்தன்
'காண்டவப் பிரஸ்தமா. காண்டவப் பிரஸ்தமா. அழிந்த அந்த நகரமா என் பிள்ளைகளுக்கு. நித்திரையிலும் புலம்பினாள் குந்தி. அத்தினாபுரம் முடிவாய் திருதராஷ்டிரன் பிள்ளைகளுக்கே போய்விட்டதே என்பதை அவளால் தாங்க முடியவில்லை. தன் பிள்ளைகள் குருகுலத்தார் இல்லையென்பதை பீஷ்மனும், திருதராஷ்டிரனும், காந்தாரியும் சாதித்து விட்டார்களேயென்று அவள் உள்ளுள் புழுங்கினாள்.
கதா காலம்
64

அய்ந்து
உபகண்டத்தின் கீழ்ப் புறத் தேசமொன்று (முற்காலம்)
LDலை மெல்ல மறைந்து கொண்டிருந்தது. முது காலையில் புறப்பட்டிருந்த மாகதன் இன்னும் இருப்பிடம் திரும்ப வில்லை. அவனுடன் உடனுறைந் திருந்த ஒரு மூதாட்டி, ஒரு நடுத்தர வயது மாது, ஒரு சிறுவன் ஆகிய மூவர் மனத்திலும் பரபரப்பு குடியேறியது.
ஜெயக் கதை கேட்க அதுநாள் வரை வழக்கமாய் வந்து கொண்டிருந்தவர்கள் ஒன்றிரண்டு பேராய்க் கூட வாரம்பித்து விட்டிருந்தார்கள். மாகதன் இருந்தால் தனித்துத் தெரிவான். அவனில்லாதது தெரிந்ததில் அதிருப்தி மேலிட அவர்கள் இயல்பான கலகலப் பிழந்தனர். தூரத்தே நிழல் அசைவது போலிருந்தது. புயலில் சுழலும் சருகாக மாகதன் நிலையிழந்து வந்தான். அவனுக்கு முன்னேயே காடிமதுவின் மணம் குதித்து வந்தது. ஆலமரத்தடியை அணுகுகிற அளவில் குனிந்து குடல் தொகுதியையே வெறுமையாக்குகிற மாதிரி ஓங்கியெடுத்தான் ஓங்காளம். ஒரு தரம். இரண்டு தரம். சிறுவன் ஒடிப்போய் அவனைத் தாங்கி ஆலமரப் பக்கமாய் அழைத்துவந்து அமரவைக்க முயற்சிக்கையில் அவனெடுத்த மூன்றாவது வயிற்றுப் பிரட்டலில் இரத்தம் கக்கியது. கண்ட நடுத்தர வயது மாது அலறிவிட்டாள். கூடியிருந்த கடற்புறக் கிராமத்துக் கதை கேட்போர் கூட்டத்திலிருந்து இரண்டு மூன்று ஆண்கள் விரைந்து வந்து இரத்தம் வாயிலிருந்து வழிய அடிமரத்தோடு சாய்ந்து கிடந்த மாகதனைப் பார்த்து பயந்து பின் வாங்கினர். மாகதன் உயிர்க் கயிறறுத்து விடுபட்டு
கதா காலம்
65

Page 43
தேவகாந்தன்
விடுவான்போலக் காணப்பட்டான். சிறுவன் மெல்ல அவனது கால்களை நீட்டி, தலையைப் பொறுத்தி வசதியாகச் சரிய வைத்தான். சரிந்தவன் கண்ணை ஒருமுறை திறந்து இருளைத் துளாவிவிட்டு சிறுவனின் பார்வையில் நிலைகுத்திச் சொன்னான், நீயே இன்றைக்கு கதை உரை என்று. பின் அப்படியே மயங்கினான். சிறுவன் காற்றில் படியமைத்து வானம் ஏறுவதாய் உணர்ந்தான். மாகதன் கூற்று நம்ப முடியாதிருந்தாலும், மாகதனின் நிலைமை அதை நம்ப வைத்திருந்தது. மாகதன் கூறினது கேட்ட சபையோர் இரண்டு மூன்று பேரும் திரும்பி மற்றையோருக்கு விபரமுரைக்க, அது சிறிது சலசலப்புக் காட்டியது. ஆயினும் அது கிளம்ப முயலாததில் சிறுவன் நிம்மதியடைந்தான். மாகதனின் தலைப்பாகையை எடுத்து தன் தலையில் பொருத்தினான். அவனது சிவப்பு மேலாடையை அவசரமாய் உருவியெடுத்து மார்பைச் சுற்றி எறிந்தான். திரும்புகையில் கீழே விழுந்து கிடந்த அவன் கைத்தடியையும் எடுத்துக்கொண்டு முன்புறம் வந்தான். ஆலமரத்தின் கீழே ஒரு சிற்ப வேலைப்பாடமைந்த பெரிய கல் தூணொன்று சரிந்து கிடந்தது. வெகுகாலத்துக்கு முன் ஏதாவதொரு கோவிலுக்கோ, அரசர்களுக்கான மாளிகைக்கோவாக அவ்விடத்தில் சிற்பிகள் கூடித் தொழில் புரிந்திருக்கலாம். அவர்கள் வேலைப்பாட்டில் மேலதிகமாகி அல்லது குறைபாடடைந்து ஒதுக்கப்பட்டதாய் அது அங்கே கைவிடப்பட்டிருக்கலாம். அக் கல் தூணில் ஏறி கால்கள் மடித்தமர்ந்து சபை நோக்கி நிமிர்ந்தான் சிறுவன்.
அவன் முகம் கம்பீரம் கொண்டிருந்தது. மாகதன் இயல்பாகவே அக ஒழுக்கங்கள் மீறுபவன். ஜெயக் கதை கூறும் காலத்தில் அதை அடக்கியே செய்தாலும், என்றாவது ஒருநாள் அதுபோல் கதை கூற முடியாமல் விழுந்துவிடுகிறதும் நடக்கவே செய்தது. அப்போதெல்லாம் கதை சொல்லல் தொடராமல் போவதுதான் வழக்கம். அன்றைக்கு மாகதன் தன் மகன் முறையான சிறுவனைக் கதைவிரிக்க அனுமதித்தி ருக்கிறான். அது சிறுவனின் வேண்டுகோளுக்கான அனு மதியில்லை; ஒரு பணித்தல், அவனது திறமையில் மாகதன் வைத்திருந்த நம்பிக்கையின் அம்சம்தானே அது. முன் சபைபோல் தானேயொரு தனிச் சபையாய்ப் பின்புறமிருந்து கதா சாகரத்துள் மூழ்கித் திழைத்திருந்ததை மாகதன் அக் கதை
கதா காலம்
66

தேவகாந்தன்
கூறும் கவனப் பொழுதுகளிலும் கவனித்திருந்திருக்கிறான். அவனது கருத்துக்களின் மேல் அய்யமும் மாறுபாடும் கொண்டு தான் காட்டிய உணர்வுகளை வெறுப்பில்போல் பார்த்தாலும் விரும்பியேயிருந்தான் மனத்துள்ளென்பது சிறுவனுக்கு அப்போது தெரிந்தது. தன் தகுதியில் தானே அவன் உறுதிப்பட்ட கணம் அது. தன் அன்னையின் புருஷனாய் வந்துசேர்ந்த அம் மாகதனின் தலைப்பாகை பொருந்தியது போல அந்த மேடைக்குத் தான் பொருந்தி யுள்ளதாய்ச்சபையும் கண்டிருப்பதை அவன் தெரிந்தான். அது அவனின் அவர்களுக்குள் பிரவேசிக்கும் கணம்.
வெளி இருண்டிருந்தது நன்கு. நிலா நேரத்தோடேயே தோற்றம் காட்டி, மரங்களுள் மறைந்து மறைந்துபோய், இறுதி வீழ்ச்சியை அடைந்திருந்தது. காற்று கடல் தாண்டி வந்து ஆலமரத்தில் மோதிச் சலசலக்க வைத்தது. தூரத்தே, இடுகாட்டு நரிகளின் பசித் தொனிகள்.
கேளுங்கள்.
'பிராமணனாய்ப் பிறந்து கூடித்திரிய தர்மங்களைத் தனதாக்கிக் கொண்டு வாழ்ந்த அசுவத்தாமன், சபிக்கப்பட்ட ஒரு ஆன்மா. கிருஷ்ண சாபத்தால் மரணமழிந்தவன். மரணம் ஒரு மனிதனின் வாழ்வின் முற்று. வாழ்வு முற்றுப் பெறுவதாலேயே அதன் வசீகரங்களைக் கொண்டிருக்கிறது. பீஷ்மன் விரும்பிய நேரத்தில் மரணிக்கும் வரபலம் பெற்றிருந்தவன். அது விரும்புதற்குரிய வரம். ஆனால் மரணமறுத்தல் சாபம். அதுவும் விமோசனமின்றி மரணம் கடந்திருக்கும் சாபமானது பாவங்களுக்குள் பாவம். அத் துன்பத்துக்கும், துயரத்துக்கும், சீரழிவுக்கும், அழுந்துதலுக்கும் நிகராய் இந் நிலவுலகில் எதுவுமே இல்லை. அவன் கொடும் பாவம் புரிந்தவன். ஒரு முறை வியாஸ் சீடர்களில் ஒருவனான ஜைமினி வழி கதைகூறும் சூதனொருவனின் கதை கேட்டேன். அசுவத்தா மன் விதியில் இயங்கியவன்; அவரவர் வினைகளே
57 காலம்
67

Page 44
தேவகாந்தன்
உருத்தெழுந்து விளைவுகளை நிறைத்தன; அவன்மேல் இடப்பட்ட சாபம், கிருஷ்ணன் தன் சாமர்த்தியத் தோல்வியில் வெடித்த கோபாக்கினியின் வெளிப்பாடு என அவன் கூறினான். அது எப்படியோ போகட்டும். சாபமடைந்த அசுவத்தாமன் பூமியின் நிகழ்வுகளெல்லாம் கண்டான். மனிதரை அடைந்தான். ஆதரவளிப்பார் எவருமில்லாததை அறிந்தான். வாழ்தல் கசந்து தேசதேசமாய் ஓடினான். எந்த க்ஷேத்திரமும், எந்தப் புண்ணிய நதியுமோதான் அவனுக்கு மனவமைதி கொடுக்கவில்லை. தன் பாவங்களை எண்ணி யெண்ணி வருந்தி, பாவங்களே மறைந்த நிலையிலும் அவற்றின் நினைவுகள் மறையாமல் பெருவோலமெடுத்து அழுதுகொண்டிருப்பவன்.
அவனுக்கு அளிக்கப்பட்ட கூtணிக்கா இளமையும் தண்டனை யாகவே ஆனது. மரணம் வேண்டி அவன் தவம்கூடச் செய்தான். விமோசனமில்லாச் சாபம் மேலும் மேலுமாய் அவனை வருத்தியது. பின் அழுவதற்கே பிறந்தவன் போல் அழுதழுது அதிலேயே சுகம் கண்டுகொண்டிருப்பவன். அவனது ஞாபகங்களைக் காலம் ஒருபோது உண்டது. வாழ்வு மறுபடி அர்த்தமற்றதானது. அழ அலின் விரும்பியபோது பாவங்களின் நினைவு வரவில்லை. அதனால் ஜெயக் கதையுரைப்புக் களங்களுக்கு வந்து, தன நினைவுகளைப் புதுப்பித்துப் புதுப்பித்து வாழ்தலின் அர்த்தமாயும், சுகமாயும் கொண்டிருந்த அழுதலை அவன் செய்துகொண்டிருக்கிறா னெனச் சொல்வார்கள். அவனது ஒலமே இச் சூழலின் பின்னணியிலெழும் செஞ்சதிரும் ஊதலொலியாய், ஊளை யொலியாய் நினைத்துப் பாருங்கள். அவனது மரணத்தின் மீதான அவாவே இங்கு நிழல்களாய் அசைகின்றன எனக் கொண்டு ஒரு கணம் யோசியுங்கள். இங்கேதான் எங்கோ வோரிடத்தில் அவன் மறைந்திருக்கிறானெனவே நான் கருது கிறேன். இன்னும். உங்களில் ஒருவராகக்கூட அசுவத்தாமன் ஏன் இருக்கக்கூடாது. ஆனால் அசுவத்தாமன் பொல்லாதது செய்ய வரவில்லை. அழவே வந்திருக்கிறான். அழுது கொண்டேயிருக்கட்டும். அது அவனுக்கான விதி.'
இருளில் விழுதுகள் அங்குமிங்குமாய்க் காற்றில் அலைக் கழிந்தன. அசுவத்தாமனின் கற்பிதத்தில்போல் சபை உறைவு
கதா காலம்
68

தேவகாந்தன்
நிலையிலிருந்தது. திகிலாய் ஒர் உணர்வின் படர்வு
உள்ளங்களில்,
சரிந்து கிடந்த சிற்பத்தூணின் மேலிருந்து, செங்கோல் போல் ஊன்றுகோலைக் கம்பீரமாய் ஊன்றியிருந்து கதை சொல்லிக் கொண்டிருந்தவன் சபை பார்வையில் வாலிபனாய் மாறியிருந்தான். அவனின் சொல் தேர்ந்து கதை புனைதல் தொடர்ந்தது.
இன்னும் கேளுங்கள்.
கிTண்டவப் பிரஸ்தம் இந்திரப் பிரஸ்தமென்ற புதுநாமம் பெற்று வியன் பெருநகராய் விளங்க, பாண்டவரும் துரோபதியும், குந்தியும் அதில் பெரிய மன உளைச்சலின்றி வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருந்தார்கள். காலம் தன் நகர்ச்சியைப் பகலிரவாய், கோடை, மாரி, வசந்தம், இலையுதிர்ப் பருவங்களாய்க் காட்சிப் புலப்பாடு செய்துகொண்டிருந்தது. பாண்டவர் கிடைத்தளவில் திருப்தியுற்றிருந்தாலும், குந்தி அடங்கவில்லைப் போன்றே தோன்றியது. பாதி ராஜ்யம், குறிப்பாக அத்தினாபுரப் பெருநகர், தன் பிள்ளைகளிடமிருந்து திருதராஷ்டிரனாதியோரால் பறிக்கப்பட்டதாயே னர்ந்துகொண்டிருந்தாள். அவளைப் பொறுத்தவரை அத்தினாபுர 1ாஜ்யம் அவளது கணவனது. அவன் பின்னால் அவனது பிள்ளைகள் அடையவேண்டியது. ஆனாலும் இனிச் செய்ய ஏதுமில்லை. விதுரனே சொல்லி விட்டான், அடங்குவது தவிர வேறு வழியில்லையென்று. ஆனால் அதுவே அறுதியான முடிவாயிருக்குமென்பதற்கு என்ன நம்பிக்கை. திருதராஷ்டிரனின் புத்திரர்கள் அடங்கிப்போகிறவர்கள் இல்லை. தன் பார்வை மறைத்தவளாய் உள்ளே வெய்துயிர்த்துக் கொண்டிருக்கும் காந்தாரி யும், அவள் சோதரன் சகுனியும் இருக்கும்வரை இன்னொரு சதி நடக்கவே செய்யும். அதனால் கிடைத்த பாதியையாவது விழிப்போடிருந்து அவள் தன் ஆலத்துக்காய்க் காத்தாகவேண்டும்.
காலம் பெரும் சம்பவங்களின்றிக் கழிந்து கொண்டிருந்தது.
அன்று வெளியில் வெப்பத்தின் ஆட்சி வலிதாகவிருந்தது. அதனாலே தான் காற்றும் சுமையேறி ஆடவும் இயலாதிருந்ததோ. கோடையில்
கதா காலம்
69

Page 45
தேவகாந்தன்
மேனிகள் வியர்த்து பிசுபிசுவென்றிருக்கும். இரவுகளிலும், கோடை வலிது அங்கே, நிலப்பரப்பிலிருந்தும், அதன் மேலிருந்த கட்டிடத் தொகுதிகளி லிருந்தும்கூட வெப்ப வியாபிகை இருக்கும். விரிவு பெற்ற தமனிகளுள் குருதி வேகமாய் ஒடிக் கொண்டிருக்கும். குறியெழுச்சியும் ஆசைச் சுரப்பும் விரைவில் சாத்தியமாகிற காலம் அது. அது காரணமாகவே அது காமன் காலம் எனவும் பட்டது.
அர்ச்சுனன் அன்றைய நிசியில் பெருவியர்ப்பெடுத்து தூக்கமின்றித் தவித்துக் கொண்டிருந்தான். மேலே, நினைப்புகள் சுழற்பெடுத்தன துரோபதியின் செவ்வொளி மேனியில். அவள் யுதிஷ்டிரனோடு வாழும் முறை வருஷம் அது. எதுவொன்றையும் யோசியாமல், என்ன செய்கிறோ மென்றும் உணராமல் எழுந்து அவன் யுதிஷ்டிரன் மனைக்கு நடந்து விட்டான். காமுகனாகிவிட்டதால் கள்வனுமாகிப் பதுங்கி நெய் விளக்குகள் சில விழுத்தியிருந்த நிழல்களுக்கூடாய் நடந்து அவன் மனை வாசல் அடைந்தான். அர்ச்சுனன் கதவைத் தள்ள, வாவெனபோல் அது விரியத் திறந்த வெளியினூடே அவன் திடுமென உள்ளே புகுந்தான்.
மஞ்சத்தில் நிர்வாண உடல்கள் புணர்ச்சி மேவிப்பில் கிடந்தன. கதவு திறபட்ட சத்தத்தில் திடுக்கிட்டு விலகினான் யுதிஷ்டிரன். அவனது ஆணுடம்பின் வீறு, நரம்பறுந்தாலென வீழ்படிவாயிற்று. தோள்களை, முலைகளை, தொடைகளை, நிதம்பத்தட்டை சட்டென மறைக்கத் துகில் அகப்படாத துரோபதி அவமானமடைந்து கண்மூடினாள். அவன் கண்டுணர்ந்த மேனிதான். ஆனாலும் அந்த வருஷம். அந்த நாள். யுதிஷ்டிரனுக்கானது. அவனவனுடையவளாக இருப்பதான பாவனை யாலேயே அய்ந்து கணவர்களையும் ஒரேபோல் அனுசரிக்கும் வித்தையை அவள் சாத்தியமாக்கியிருந்தாள். Y
சுயம்வர மண்டபத்தில் கூடித்திரியர் யாராலும் அடிக்க முடியாதிருந்த இலக்கினை அந்தணவுருவில் வந்து அர்ச்சுனன் அறுத்து வீழ்த்தியபோது, அவனிடத்தில் பெருமதிப்பும், காதலும் அவளிடத்தில் தோன்றியதுதான். பின்னால் அய்ந்தாலி சுமப்பவளாய் ஆன நேரத்திலும் அவனில் விசேஷ விருப்பமே அவளிடத்திலிருந்தது. அந்தக் கணத்தில் அதை அவள் எரித்தாள்.
ஏதோ அவசர காரியமாய் வந்ததாய்க் காட்டி அர்ச்சுனன் மெல்ல பின்வாங்கி கபாடமடைத்துப் போனாலும், யுதிஷ்டிரன் துரோபதியிடையே அவன் போட்ட வெட்டு அகலாமலே அன்றிரவு கழிந்தது அவர்களுக்கு.
கதா காலம்
70

தேவகாந்தன்
யுதிஷ்டிரனுக்கோ துரோபதிக்கோ முகம் காட்ட முடியாமல் தவிப்பில் நாட்களைக் கழித்த அர்ச்சுனன், தேசசஞ்சாரத்தை முகாந்திரமாய்க் கொண்டு இந்திரப்பிரஸ்தத்தைவிட்டு சிறிதுகாலம் விலகியிருக்கத் தீர்மானித்தான். அதைத் தாயிடம் சொன்னான். செவி விழுந்த குந்தி பெருமகிழ்ச்சி படைந்தாள். ஒரு போரின் வெற்றி தோல்வியில் அவரவர் நெஞ்சுரமும் திறலும் வித்தையும் மட்டுமில்லை, ஆயுதங்களின் நேர்த்தியும் பெரும் பங்கு வகிக்கும். அரச ஆயுதச்சாலைக் கொல்லர்கள் செய்திறன் வாய்ந்தவர்கள் மட்டுமே என்பதைத் தெரிந்துகொள். தொழில் கலைஞர்கள் வெகுவாயும் இனக்குழுக்களிடையே இருக்கிறார்களென்பதை நான் அறிந்துள்ளேன். அடிக்கவேண்டிய இடத்தைச் சொல்லி ஏவவும், குறியை அடிக்காவிட்டால் திரும்பவும் கைவந்து சேரவும் கூடியதான ஆயுதங்களேயுண்டு. அவர்களி டையே நீ உனக்கான ஒர் ஆயுதத்தைக் கண்டடைய வேண்டும். செய்நேர்த்தியால் ஆயுதங்கள் அவ்வாறு தாமே இயங்குகின்றன. அவை உருவாக்கப்படும் உலோகத்தின் தரமும் வித்தியாசமாகவேயிருக்கும். அத்தகு வல்லாரைத் தேடியடைய இந்தக் காலத்தை உன்னால் பயன்படுத்த முடியும், கவனமாகப் போய் வா’ என்று விடையளித்தாள்.
அந்த தேசசஞ்சார காலத்தில் தாய் சொல்லையும் மறந்து காமாதீதம் கொண்டு அலைந்தான் அர்ச்சுனன்.
பயணத்தில் அவன் முதலில் காமவயப்பட்டது ஒரு நாக கன்னியில், காட்டிடையேயுள்ள ஒரு பிலத் தடாகத்தில் உலூபியும், அவளது தோழியரும் ஆடை களைந்து தன்னிச்சையாய் நீராடிக் களித்துக் கொண்டிருந்தார்கள். அவளது மேனி நாட்டங்களைப் பொதிந்திருந்தது. அவள் அங்கமெல்லாம் தன் நாட்டம் பதித்தவன், அவனை அங்கே கண்டதில் தோழியர் வெட்கி ஓடிவிடத் தனியே ஒரு லயத்துக்கு அடங்கினால்போல் நின்ற உலூபியைப் புணர்ந்து, எரியாய்த் தொடர்ந்துகொண்டிருந்த காமம் தணிந்தான். அவளிடத்தில் அர்ச்சுனனுக்குப் பிறந்தவனே அரவான்.
தென் மத்திய தேசங்கள் வரை சென்று தன் மேனி தீய்த்த காமத்தை விந்து கொட்டி அர்ச்சுனன் தீர்த்ததில் மிக்க இயல்பிருந்தது. அதைச் சகோதரன் துரோபதி மேலான ஒரு வஞ்சத் தீர்ப்பாயெண்ணி அவன் செய்திருக்கவும் முடியும். மேலும் பயணித்து நந்தவனத்தில் மலர் கொய்து கொண்டிருந்த ஒரு ராஜகுமாரியைக் கண்டு அவன் காமவயப்பட்டான். அவளை நெருங்கிச் சென்று தன் தாபம் எடுத்துரைத்தும் அவளைக் கலவி செய்ய முடியாது போகிறவன், ஒர் உத்தி புரிந்தான். ஒரு பளிங்குக்கல் இருக்கை அருகிலிருக்கக் கண்டு அதன் மேலேறித் தன் மேனியைக்
கதா காலம்
71

Page 46
தேவகாந்தன்
காட்சிப்படுத்தினான் ஆண்கோலம் கண்ட அந்த ராஜகுமாரி அக் கணமே மய்யலடைநது அவனுக்கு ஆட்பட்டாள். அவளிடத்தில் அர்ச்சுனனுக்குப் பிறந்தவனே பப்புருவாகன்.
அங்கிருந்து திரும்பி கங்கைக் கரைவழி சென்று யமுனையை அடைகிற வன் துவாரகையில் கிருஷ்ணன், பலராமனின் தங்கை சுபத்திரையைக் காணநேர்ந்தான். அடங்கிய காமம் திமிர்ந்தெழுந்தது. அவள் விருப்பறிந்த பின்பும் கூடிக்களிக்கவியலாது போனான் அர்ச்சுனன். இறுதியில் அவளைக் களவில் கூட்டிக்கொண்டு இந்திரப் பிரஸ்தம் ஓடினான். விஷயமறிந்து சினந்து யுத்த சன்னத்தமாகும் பலராமனையும், யதுகுலத்தாரையும் கிருஷ்ணன் அமைதியடையச் செய்துவிட்டு இந்திரப் பிரஸ்தம் வந்து அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தான்.
அது தளிர்களும், பூக்களுமாய்ப் பூமி சிரிக்கும் காலமாயிருந்தது. அர்ச்சுனனும் சுபத்திரையும், கிருஷ்ணனும் சத்தியபாமாவும் காண்டாவனப் பகுதியிலிருந்த ஒரு பேரெழில் இடமடைந்து அங்கே காதல் செய்து மகிழ்ந்தனர். பின் சத்தியபாமையின் மடியில்ே அர்ச்சுனனும், சுபத்திரா மடியிலே கிருஷ்ணனும் கால்களைப் போட்டிருந்து இளைப்பாறியும் பேசியும் பொழுதுபோக்கினர்.
அவர்கள் அங்கிருந்து திரும்பிய சில நாட்களில் முதுவேனில் வந்தது.
கிண்டவ தகனம் முற்றுப்பெற்றிருந்தது. இரக்கம், கருணை, மனநளினம் என்பனவெல்லாம் கைவிடப்பட்ட ஒரு பெருவழிப்புக்குச் சான்றாக அவ் வனவழிப்பைச் செய்தார்கள் அர்ச்சுனனும் கிருஷ்ணனும், வனம் அக் கடு முதுவேனிலில் சருகுகளாய், சுள்ளிகளாய், தடிகளாய்க் காய்ந்து உலர்வுபட்டிருந்த ஒரு வேளையிலே, அர்ச்சுனன் கணைகளில் அக்கினி சொருகி வில்போலத் தானும் பின்வளைந்து பின்வளைந்து தூர தூரமாய்ச் சென்று விழ அவற்றை எய்தான். காற்றுச் சுழன்று திசை மாறுகிறது அர்ச்சுனா, இப்போது இந்தப் பக்கமாக எய்! இனி அந்தப் பக்கமாக எய்! என கிருஷ்ணன் அக்கினியின் வழியை ஒடியோடிச் சொன்னான். அறுபது யோஜனை விஸ்தீரணமுள்ள அப் பெருவனம், தகனம் முடிவுற்ற வேளையிலே, அடர் சாம்பல் காடாய்க் கிடந்தது. கோடிக்கும் மேலான
கதா காலம்
72

தேவகாந்தன்
ஜீவராசிகள் தீயில் வெந்தழிந்தன. வனத்தில் ஒரேயொரு மரம் மட்டும் தீ நெருங்காது எஞ்சியிருந்ததாய் முதல் சூதன் உக்கிரசிரவா சொன்னதாய்ச் சொல்லப்படுகிறது. வேதமறிந்த சூதன் லோமஹர்ஷனாவின் மகன் அவன். காதல் பறவைகள் இரண்டின் மூலம் வேத தத்துவமொன்று வெளியிடப்படு வதற்காய் அப் புனைவு.
காண்டவ வனத்திலே ஒரு மரத்தில் பெண் சாரங்கப் பறவையொன்று செட்டை முளைக்காத தன் குஞ்சுகளை நிராதரவாயிருந்து பராமரித்து வந்ததாம். ஆண் சாரங்கம் வேறொரு பெண் பறவையோடு சேர்ந்து போகமனுபவித்துத் திரிந்தபோதுதான், கள்வரையும் தீயோரையும் கொடுவிலங்குகளையும் அழிக்கப்போவதாகச் சொல்லிக்கொண்டு அர்ச்சுன கிருஷ்ணர்கள் தகனத்தைத் துவங்குகிறார்கள். மெய்யாகவே கள்ளரும் தீயோரும் கொடிய விலங்கினமுமில்லை, அர்ச்சுனனின் மணவாழத்திலிருந்த டிரதோ வடுவின் தணியாச் சீற்றமாகவே யோசிக்க அச் செயல் புரியும். அஸ்திர பயிற்சி முடித்த பாண்டவர்கள் வேட்டைப் பயிற்சிக்காக வனவடர்த்தியை ஊடறுத்த ஒரு நாள், மானொன்று அரவங்கேட்டுப் பாய்ந்தோட, திரும்பிக் கண்ட அர்ச்சுனன் அதன் பின்னாலே ஒடி அம்பை விட்டான். மான் பொத்தென விழுந்தது. கிட்டவாய் ஒடிப்போக மானிலே தாம்தாமும் வீழ்த்தியதாய்க் கூறிக்கொண்டு இரண்டு அம்புகள் குத்திட்டு நின்றிருந்தமை தெரிந்தது. அதேவேளை ஏகலைவன் என்ற வேடனும் குதித்தோடி அங்கே வந்தான். மானை வீழ்த்தியது நான்! என்றான் அர்ச்சுனன். தான் என்றான் ஏகலைவன். அதன்மேல் இருவருக்குமிடையே பாரிய விவாதம் நடந்தது. கூடித்திரியனே, வனம் என் இடம்; வேட்டை என் தொழில்; அதுவே என் வித்தையுமாகும்; நீ எய்த அம்பு மானில் தைக்கும் ஒரு இமைப்பொழுதின் முன் என் அம்பு மானைக் கொன்றது; வேடன் கண்ணில் புலப்படும் விலங்கின் தூல உடலையல்ல, உயிர் நிலையையே குறிவைப்பான், மானில் நீ உரிமை கொண்டாடுவது விபரீதம்! என்றான் ஏகலைவன். நான் தூல உடலையே குறி வைப்பவன், கணையின் இலக்கு தூலமாகத் தவிர வேறெதாகவும் இருப்பதில்லை; என் உலோக அம்பு வேகத்துடனானது; அது இலக்கின் வேகத்துக்குச் சமானமாய்ச் செலுத்தப்படக் கூடியது! என்றான் அர்ச்சுனனும், அதற்கு ஏகலைவன் வெகு கர்வத்தோடு சொன்னான். கூடித்திரியனே கேள் இதை என் அம்பு விலங்கின் உயிரையும், உயிரின் மீதியையுமே கொல்லுமாற்றல் படைத்தது. பார் க்ஷத்திரியனே, நன்றாகப் பார்! அர்ச்சுனன் திரும்பி நோக்கினான். மறுகணம் நொருங்கிப் போனான். திண்ணிய மரப் பாணம் முதலை போல் வாய் பிளந்து விலங்கின் இதயத்தில் ஈரம்பாய்ப் பாய்ந்திருந்தது. அர்ச்சுனன் உறைந்து நின்றிருந்த நிலையில் பின்னால் ஓடிவந்த சேவகர்கள் ஒரு கலகத்தை
கதா காலம்
73

Page 47
தேவகாந்தன்
உணர்ந்துகொண்டு தாம் கூடக் கொண்டு வந்திருந்த வேட்டை நாயினை ஏவி விட்டனர். திமிர்த்திருந்த அம்மிருகம் ஆக்ரோஷமாய் ஏகலைவன் மேல் குபிரெனப் பாய்ந்தது. ஒரு தாக்குதல் விசையை அனுமானித்தவன் போல் வெகு லாவகமாய் விளைந்து விலகித் திரும்பிலான் வேடன். அதே கணம் அச் செம்மிருகத்தில், அவன் உருவித் தொடுத்த அம்பு விசையுடன் இலக்குக் கொண்டிருந்தது. ஏகலைவன் அம்பை விட்டான். நாய் அலறிச் செத்து விழுந்தது. அது அர்ச்சுனனின் பிரியத்துக்குரிய நாய். அர்ச்சுனன் சினமடைந்தான். அந்நேரமளவில் ஏகலைவனின் இனத்தாரும் ஏகமாய்க் கூடிவிடவே, அர்ச்சுனன் சண்டை துவக்காவண்ணம் சேவகர் அப்பால் அவனை நகர்த்திச் சென்றுவிட்டனர். அவனது இடத்தில், அவனது தொழில் திறத்தோடு அர்ச்சுனனால் என்ன செய்திருக்க முடியும்.
அந்த வடு அர்ச்சுனன் மனத்தில் காலத்துக்கும் மறையாமல் நின்றிருக்கிறது. வனவிலங்குகளின் இடமே, வேடர்களின் இடமும், விலங்குகளை அழிக்கும்வேளை, வேடருமே அழிவர். வில் வித்தையினையே தொழிலாய்க் கொண்ட வேடுவர் குலத்தையே அழித்து இனிமேலும் ஒர் ஏகலைவன் உருவாகிவிடாதபடிக்கே அர்ச்சுனன் இயங்கினானெனக் கொண்டால் என்ன பிழை.
அர்ச்சுனனின் கணைகள் கக்கிய அக்கினி வனத்தைப் புசு. புசு. புசுவெனப் பொசுக்கி வந்தது. அப்போது, நான் என்ன செய்வேன்; சிறகு முளைக்கா இக் குஞ்சுகளை எப்படிக் காப்பேன்; கூடவிருந்து இவர்களோடு சேர்ந்தழிதலே செய்யத் தக்கது! எனப் புலம்பியபடி இருந்ததாம் தாய்ச் சாரங்கம். அது கேட்ட மூத்த சாரங்கக் குஞ்சு, நீ தப்பிப் போய்விடு; நீ உயிர்தப்பியிருந்தால் இனியும் வம்சத்தைப் பெருக்கிக்கொள்ள முடியும்! என்று வற்புறுத்திக் கூறியதாம். இளைய குஞ்சுகளும் கூட அதையே சொல்லவே, தாய் தயக்கத்தோடு வானெழும்பிப் பறந்து மறைந்ததாம். தீ நெருங்கி அம் மரத்தைச் சூழ, புகையைக் கொடியாகவுடைய மூலக் கனலே, தந்தையோ தாயோ இல்லாதிருக்கும் சிறகும் முளைக்காத சிறிசுகள் நாம்; நீயே சரணம்! என நான்கு சாரங்கக் குஞ்சுகளும் பிரார்த்திக்க, அக்கினி அம் மரத்தை விழுங்காது விட்டுச் சென்றதாம். தாய்ச் சாரங்கம் அனல் அடங்கத் திரும்பிவந்து தன் குஞ்சுகள் கூேடிமமாய் இருப்பது கண்டு மகிழ்ந்ததாய் அக்
கதை.
திசையளாவி விரிந்த தீயின் செந்நாக்குகளுக்கு முழு நாக இனமும் கூடப் பலியானது. நாகராஜன் மட்டுமே சூடுபட்ட மேனியோடும் ஒடித் தப்பியது. ஒடு வழியில் அதன் விஷச் சீற்றத்திலேயே தாவரங்கள் தீ சுடுமுன் பொசுங்கிப் போயின.
கதா காலம்
74

தேவகாந்தன்
எந்தச் செயலுமே வினைப்பயனைக் காலடிச் சுவடாய்ப் பதித்து நடக்கிறது. ஒருவன் எங்கேதான் ஓடினாலும், தன் காலடிச் சுவடுகளுக்கே ஒழிவதெங்ங்ணம்.
காண்டவ தகனம் பூர்த்தியானபின் அங்கே புதுப் புதுக் குடியிருப்புகள் தோன்றின. புதிய புதிய மனிதர்கள் அங்கே வாழ்க்கை தேடி ஓடிவந்தார்கள். மண், காற்றில் வாசமனுப்பி குடியானவர்களை வாருங்களெனக் கூவி யழைத்தது. படைபடையாய் காலகாலத்துக்கும் உக்கிக் கிடந்த இலைப் பசளையுடன், கோடிகோடியான ஜீவராசிகளின் எலும்புப் பொடியும் கலந்து ஒன்றுக்கு நூறாய்ப் பயிர்களை விளைச்சல் காண வைத்தன. செல்வம் பெருகிற்று. இன்பக் கலைகள் ஊற்றெடுத்தன. பாணரும் விறலியரும் கூத்தரும் சூதரும் மாகதரும் பெருமளவில் கூடி, இசையும் கூத்தும் கதையும் மழையாய்ப் பொழிந்தனர். வாழ்க்கை எவர்க்கும், எங்கெங்கும் இன்பமய LDIT607g|51.
பாண்டவர் ஆட்சி இனிதாய்த் தொடர்கையில் துரோபதி யுதிஷ்டிரனுக்காய் பிரதிவிந்தனையும், பீமனுக்காய் சுதசோமனையும், அர்ச்சுனனுக்காய் சுருதகர்மாவையும், நகுலனுக்கு சதாநீகனையும், சகா தேவனுக்கு சுருதவேபனஸையும் பெற்றாள்.
காண்டவ வனமிருந்த பிரதேசத்தில் வெகு கலைத்துவம் படைத்த மயன் என்பவன் அற்புத மாளிகையொன்றைக் கட்டியெழுப்பினான். பாண்டவர் அங்கே குடியேற ஆயத்தமாகினர்.
U7ஜசூய யாகம் நடத்தி ராஜராஜனாகவே அவன் ஆகவேண்டுமென்ற தம் விருப்பத்தை சூழவிருந்த நண்பரும் சுற்றத்தாரும் புகல, அது குறித்து கிருஷ்ணன் வர அவனுடன் ஆலோசனை செய்வதாகக் கூறி யுதிஷ்டிரன் காத்திருந்தான். ஒருநாள் இந்திரப்பிரஸ்தம் வந்த கிருஷ்ணனிடம் அவன் தன் நண்பர், சுற்றத்தாரின் விருப்பத்தைச் சொன்னான். தனதும் யதுகுலத்தவர தும் முழுமுதல் எதிரியான ஜராசந்தனை ஒழிக்க அதுவே தகுந்த தருண மெனக் கணித்த கிருஷ்ணன், "மகத நாட்டரசன் ஜராசந்தன் உயிரோடிருக் கும் வரை உன்னால் அது முடியாத காரியம். அளவிட முடியாச் சைன்யமும், பேராற்றலும் வாய்ந்தவன் அவன். எண்பத்தாறு தேசத்து ராஜாக்களைப்
கதா காலம்
75

Page 48
தேவகாந்தன்
போரில் புறங்கண்டு அவர்களைப் பிடித்துப்போய் கைதியாய் சிறையில் அடைத்து வைத்திருக்கிறவன்; இன்னும் பதின்நான்கு அரசர்களை வென்றுவிட்டு மொத்தமாய் நூற்றுவரையும் யாகப் பலியாகக் கொன்று பெரும் நரமேத யாகம் நடத்தவிருப்பவன்; மதுராபுரியை விட்டு நானும் என் கிளைஞரும் துவாரகாபுரியில் கோட்டையமைத்திருப்பதும்கூட அவன் பொருட்டாய்த்தானே. அதனால் அவனை வென்றால்தான் உன்னால் ராஜசூய யாகத்தை நடத்த முடியும். மட்டுமில்லை. அதனால் எண்பத்தாறு தேசத்து ராஜாக்களின் தலைகாத்த புண்ணியமும் உன்னைச் சேரும் என்றான்.
அது யுதிஷ்டிரனுக்கு உவப்பில்லை. போர், அழிவு, இன்னல்களுக்கு அவன் அந்நியப்பட்டுக் கொண்டிருந்தான். இந்திரப் பிரஸ்தத்தோடு அடங்கி வாழ்வின் சுகங்களை அனுபவித்து அவனுக்குப் பழக்கமாகிப் போயிருந்தது. அந்த நொய்மை கூத்திரியனுக்கு இயல்பும், நன்மையும் இல்லாதது. ஆனால் பெரும் அழிவின்றி அவனுடன் தனிப் போர் செய்து அவனைக் கொல்ல முடியுமென பீமனும், அர்ச்சுனனும் எடுத்துக் கூறி அவன் மனத்தை மாற்றினர். ஒருநாள் அந்தண உருவுகளுள் ஒளிந்துகொண்டு தனிப்போருக்கு ஜராசந்தனை அழைக்க மகதம் சென்றார்கள். சூழ்ச்சி என்பதென்ன. எதிராளி அறியாதபடியான செயற்பாடுதானே. அது தந்திர மெனவும் படும். அதிலிருந்து தந்திரமே சூழ்ச்சி என்றுமாகும். மூவரின் இந்தக் கபடம் கூடித்திரிய நிலைப்பாட்டில் தந்திரம். நடந்த தனிப்போரில் பீமன் ஜராசந்தனைக் கொல்ல, ராஜசூயத்துக்கான ஏற்பாடுகள் இந்திரப் பிரஸ்தத்தில் வெகு சிறப்பாய்ச் செய்யப்பட்டன. சகல தேசங்களுக்கும் அழைப்புத் துதுகள் அனுப்பப்பட்டன. திருதராஷ்டிரனுக்கும் அழைப்புச் சென்றது.
யாக நாளுக்கு துரியோதனனாதியோர் வந்தார்கள்.
இந்திரப் பிரஸ்தத்தின் செழிப்பும், யாகத்தில் யுதிஷ்டிரன் அடைந்த கவுரவமும் கண்டு துரியோதனன் மனமெரிந்து போனான். ஏறக்குறைய இருபது வருஷங்களுக்கு மேலான பாண்டவன் ஆட்சியில், பெருங்காடழி பட்டதால் மெல்ல விளைந்த மழை வரட்சியை மீறியும் அது வளத்தில் பொலிந்து கொண்டிருந்தது. கண்டவன் காட்சிகளையே நம்ப முடியாது போனான்.
அது மயன் அமைத்த மாளிகை. காண்டவப் பிரஸ்தத்தை பலரும் வியக்கும்படியான மாநகராக்கியவன் விஸ்வகர்மா. அவனது விந்தில் விளைந்தவன் மயன் தந்தையை விஞ்சுபவனாக ஆகுவாவென தந்தையால்
கதா காலம்
76

தேவகாந்தன்
அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாயிருந்தான். தன் திறமையனைத்தையும் கூட்டி பிரமாண்டங்களையும், வியப்புகளையும், அழகுகளையும் பொதிந்து பொதிந்து அம் மாளிகையை அவன் நிர்மாணித்திருந்தான்.
நவமாளிகையின் ஒருபுறக் கூடத்தில் அதன் வியன் காட்சிகளில் மனப் புழுக்கமடைந்து வந்துகொண்டிருந்த துரியோதனன், ஒரிடத்தில் நீர்நிலை கண்டு ஆடையொதுக்கி அவதானமாய் நடக்கையில், அது நீரல்ல நீருருவென்று தான் தெளிந்ததை யாரும் காணாதபடி வெகுசாமர்த்தியமாய் நடந்துகொண்டிருந்தாலும், மேல் மாடத்தில் நின்றிருந்த துரோபதி கண்டாள். பின் வேறோர் இடத்தில் நீருருக் கண்டு நீரல்ல என எண்ணி நடக்கையில் அது நீராகவே இருந்து அவன் ஆடைகள் நனைந்து போனான். அப்போது பீமனுடன் நின்றிருந்த துரோபதி அக் காட்சியில் கொல்லென்று சிரித்துவிட்டாள். கூடநின்ற பீமனும் சிரித்தான். துரியோதனனுக்குப் பெரிய அவமானமாய்ப் போனது. பெருவில்லில் அம்பு தொடுத்து இலக்கினை அடிக்க முடியாது சுயம்வரத்தில் தோற்றபோதுகூட கம்பீரமிழந்து திரும்பினானே தவிர அவமானமடையவில்லை. பீமனும் துரோபதியுமோ அவமானப்பட வைத்துவிட்டார்கள்.
அத்தினாபுரம் திரும்பிய துரியோதனன் மனத்தில் நெருப்பு சுவாலை விட்டெரிந்துகொண்டிருந்தது. அவன் ஊண், உறக்கம், ஒய்வு, குடும்பக் கூடல் யாவும் மறந்து அத் தீயின் எரிவில் கருகினான்.
கதா காலம் 77

Page 49
அதே தேசம்- அதே இடம் (அதே காலம்)
முதல் நாள் நள்ளிரவுக்கு மேலேதான் கதை முடித்திருந்தான் மாகத வாலிபன். விழுது நிழல்களின் அசைவுகளில் தான் உருவாக்கிய அரூப சக்திகளின் கற்பிதம், பின்னிரவைக் காரணம் காட்டி சிலரையேனும் அங்கே தங்கவைத்தது. அதிகாலையிலேயே அவர்கள் வீடு திரும்பியிருந்தார்கள். நெய்யற்று அணைந்த தீப்பந்தத்தின் புகையிழைகள் அப்போதும் ஒர் மர்ம சக்தியாய்ப் பின் தொடர்வதாய் அவர்கள் உணர்ந்திருக்க (Մւգամ,
முதல் நாளில் தான் எடுத்து விரித்த கதா நிகழ்வுகள் கதைத் தொடர்ச்சிக்கானவை மட்டுமே என்பதை அவ் வாலிபன் அறிந்தேயிருந்தான். கேட்போரில் அவை பெரும் பாதிப்புக்களைச் செய்ய முடியாதவை. ஆனாலும் முந்திய நாளைவிட அன்று கூட்டம் பெருமளவில் திரண்டு வந்திருந்தது. அவனது புனைவின் விதமும், சொல்லின் திறமும் கண்டிருந்த அவன் வளர்ப்புத் தந்தை காலையில் அவனைப் பாராட்டிச் சொல்லியிருந்ததில், அக் கூட்டம் அவனிடத்தில் ஆச்சரியமெதையும் விளைக்கவில்லை. ஆனாலும் ஒன்று நிச்சயம். அவன் பேசப்பட்டி ருக்கிறான், அச் சுவையற்ற நிகழ்வுகளின் கதை யுரைப்பிலேயே. அன்று அவன் ஜெயக் கதையின் முக்கிய கூறுகளுள் நுழையப் போகிறான். சபை
கதா காலம்
78

தேவகாந்தன்
மெய்மறக்காவிட்டால் கதைசொல்லியில் வேலையில்லை யென்று அர்த்தமாகும்.
அவன் நிமிர, தழல்களெனக் கதிர் வீசிக் கொண்டிருந்த இரு விழிகள் கண்டான். கதை தொடக்கிய நாளிலிருந்தே அவளை அங்கே கண்டதாய் ஞாபகம் அவனுக்கு. முதல் நாளில் எங்கோ தொலைவிலிருந்து, பின் நடுப்பகுதிக்கு வந்து, அன்றைக்கு முதல் வரிசையில் அவள் அமர்ந்திருந்தாள். அவள் கண்களிலிருந்து எச்சரிக்கைகள் விரிந்துகொண்டிருப்பதாய் அவனுக்குப் பட்டது. மீறுகிற கணத்தில் அவள் எரிக்கத் தயாராயிருப்பதும் அவன் புரிந்தான்.
சிறிதுநேரத்தில் எல்லாம் மறந்தான் வாலிபன், கதை அவனுள் நடக்கத் துவங்கியது.
"கேளுங்கள்.
அத்தினாபுர அரண்மனை பல பெண் இதயங்கள் வெளிப்படுத்திய துக்கங்களதும் விரகங்களதும் கோபங்களதும் குமுறும் நிலைக்களனாயே காலகாலத்துக்கும் இருந்து வந்திருக்கிறது. ஒருபோது சத்தியவதி, அம்பிகா, அம்பாலிகா, பின்னால் காந்தாரி, குந்தி. அதன் பிறகு துரியோதனன் மனைவி பானுமதி. திருதராஷ்டிரனே இன்னும் முடிசூடாத அரசனாய் அத்தினாபுரத்தில் இருந்துகொண்டிருந்தான். அதனால் தன்னை வலுவுள்ளவளாய் காந்தாரி ஆக்கிக்கொண்டிருந்தமை சுலபமாய் முடிந்தது. வலுவுமில்லாமல், பெரு ஆதரவுமில்லாமல் இருந்த பானு ஆகப்பெரும் சோகம். தந்தைபோல் வலிதாக இருந்தான்துரியோதனன். கோபம் வந்தால் கத்துவான். அகப்பட்டதையெல்லாம் தூக்கி நிலத்திலடித்து நொருக்கு வான். காரணமும் அவள் அறிய முடியாததாய் இருக்கும். அதை அறியவோ, அவனை ஆறுதல்படுத்தவோ கூட அவள் இயலாதவளாயிருந்தாள். குரலும் மனமும் உடல் போல் மென்மைப்பட்ட பானுவுக்கு, காந்தாரிபோல், குந்தி போல் குறியிருக்கவில்லை. அதனாலேயே காய் நகர்த்தல்களின் அவசியங்கள் இல்லாதவள். ஆனால், நெருங்கவேண்டிய இதயத்துக்கு அந்நியளாயிருந்ததைக்கூட மாற்றியமைக்கும் இல்லறத் தந்திரங்களும்
கதா காலம்
79

Page 50
தேவகாந்தன்
தெரியாதவளாயிருந்தாள். குழந்தைக்காக மட்டுமே அவன் அவளைக் கூடினான். ஒவ்வொரு கூடலுக்கும் அவள் குழந்தை பெற்றாள். அவளுக்கு அவனின் ஒழுக்கங்கள் குறித்து அய்யமில்லை. எனில் அவனது எழுச்சிகளை எது தின்றது. சூழ்ச்சிகளுள் அவன் அழுந்திக்கொண்டிருந்தது காரணமா.
அவனுக்கு அங்க தேசத்தரசன் கர்ணனோடு நெருங்கிய சிநேகித மிருந்தது. சகுனியோடும் அத்யந்த உறவு கொண்டிருந்தான். அவையே அவளது பயங்களாகவும் முகிழ்த்திருந்தன. அவர்கள் பேசும் பேச்சுக்களும் இடும் திட்டங்களும் அவளைத் திடுக்கிடச் செய்து கொண்டிருந்தன. அவன் எப்போதும் காதலின் இளகல் இல்லாதவனாயே ஏன் இருந்தான். சதிகளுள் மூழ்கி அவன் காமத்தை வறட்டிவிட்டிருந்தானோ. அது அவள் வறளாத வளாயிருந்தாள்.
இந்திரப்பிரஸ்தத்திலிருந்து திரும்பியதுரியோதனன் அளவிட முடியாத சோகத்தோடும், குமுறலோடுமிருந்தான். அவள் அஞ்சினாள் அணித்தாகச் செல்லவும். குழந்தைகளோடு, விலகி ஒதுங்கியிருக்கவும் அவளால் இயலாதி ருந்தது. உதிரக் குளிப்பில் மகவை ஈன்று, பால் சுரந்து புரத்தல் கூட ஒரு பதிக்கான கடமையாகவே அவளுக்குப் போதம் செய்யப்பட்டிருந்தது. அவள் மாறி நினைக்கவேயில்லை. அதனாலேயே அவன் நிலை அவளது கரிசனமும் வதையும் என்றானது.
அத்தினாபுர அரண்மனையின் ஒருபுற மூலையிலிருந்து இரவுகளில் துயரத்தின் அழுங்குரல் இடையறாது எழுந்து கொண்டிருந்தது.
அரண்மனையில் சகுனியோடு அவனது ஆலோசகனும் உதவியாளனு மான கனிகன் என்பவன் உடனுறைந்திருந்தான். அவன் துரியோதனனின் நிலையைக் கண்டுவந்து உடனடியாகவே சகுனியை உலுப்பிவிட்டான். இருபத்திரண்டு வருஷங்களாயிற்று. எல்லோரும் ஆறிவிட்டனர். நான் மட்டும் உஷாரடைந்து இனி ஆகப்போவதென்ன' என்று சலித்தான் சகுனி. 'வருஷங்கள் இளமையைப் பறிப்பதை மட்டுமில்லை, பொறுமையை நிறைக்கவும், மன ஆக்ரோஷங்களை அகற்றவும் கூடச் செய்துவிடுகிறது தான்."
'இல்லை. காலம் துரியோதனனின் காயத்தை ஆற்றாது. மட்டுமில்லை. இந்திரப்பிரஸ்த விஜயம் அவனில் ஒரு பெருமாற்றத்தை ஏற்படுத்தி யிருக்கிறது. பாண்டவரின் செல்வமும் செல்வாக்கும் அவனை இம்சைப் படுத்த ஆரம்பித்திருக்கின்றன. கூட, இன்னும் ஏதோவோர் நிகழ்வும் கறையானாய் அவனை அரித்துத் தின்றுகொண்டிருக்கிறது. பாண்டவ
கதா காலம்
80

தேவகாந்தன்
ராஜ்யத்தைப் பொறுக்காத அளவு அவன் வன்மம் கொண்டுவிட்டான். அது அவன் கண்களில் தெரிகிறது. நீ போய் அவனுடன் பேசு' என்றான் கனிகன்.
சகுனி துரியோதனனிடம் போனான்.
துரியோதனன் அதையே பேசினான்.
அவன் மனவலிக்கு மருந்து, ஏற்கனவே சகுனியால் திட்டமிடப் பட்டிருந்தது. மயன் அமைத்த இந்திரப்பிரஸ்த மாளிகையை விட அதியற்புதமான மண்டபமொன்று அமை. அதற்கொரு புகுமுக விழா ஏற்பாடு செய்து, யுதிஷ்டிரனுக்கு அழைப்பனுப்பு. அம் மண்டபத்தை கவறாட்டு மண்டபமென அறிவி. விழாவுக்கு வரும் யுதிஷ்டிரனை சூதுக்குக் கேட்போம். அவனில் ஒர் பிரியம் சூதாட்டத்தின் மேல் என்றும் இருக்கிறது. மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்றான் சகுனி.
நடக்குமா மாமா, இதெல்லாம் நடக்குமா' என்று ஏங்கினான் துரியோதனன். 'ஏன் நடக்காது. துரியனே, சூழ்ச்சியை நான் என் சிந்தனையில் புனைகிறேன். சூதின் வெற்றியை விரல்களில் புரிகிறேன். நான் கேட்கும் எண்களில் காய்களே நகரும். ஆனால் இத் திட்டத்திற்கு திருதராஷ்டி ரனிடம் சம்மதம் வாங்குவது உன் பொறுப்பு. நான் காந்தாரியிடம் இதுபற்றிச் சொல்வேன். அவள் இன்னும் தன் குறைகளின் நிவர்த்தி காணாமல் முறுகுபவளாயே இருக்கிறாள்' என்று அவனை அமைதிப்படுத்தி செயலுக்கூக்கினான் சகுனி.
அவர்கள் திட்டத்தை இரகசியத்தில் விரும்பி பலர் முன் மறுதலித்த திருதராஷ்டிரன், பின் அதைத் தன் மூர்க்கனான மகனின் பிடிவாதத்தின் முன் தவிர்க்கவியலாதவன் போல் அமைதியானான். பாண்டவரை புதுமண்டபம் காண வரும்படி அழைக்க விதுரன் அனுப்பப்பட்டான். அதில் தீய நோக்கங்களை பாண்டவர் யோசித்தாலும் பெரிய தந்தையின் அழைப்பைத் தவிர்க்காமல் புறப்பட்டனர். துரோபதியும் குந்தியும் கூடிச் சென்றனர்.
வியாசன் மனை சென்று தங்கிய பாண்டவர், மறுநாள் துரோபதியை காந்தாரி மனைக்கு அனுப்பிவிட்டு, குந்தி அங்கேயே இருக்க ஆட்ட மண்டபம் காணச் சென்றனர். திட்டமிட்டபடி விழா வைபவங்கள் முடிய, ஒய்வுநேரத்தில் யுதிஷ்டிரனைச் சூதாட்டத்துக்கு அழைத்தான் துரியோதனன். இந்திரப் பிரஸ்தத்தில் வைத்து தம்பியர் செய்த எச்சரிக்கையெல்லாம் மறந்தான் அவன் தீயது எதுவும் தன்னைத் தீண்டக் கூடியவிதமாய் மிகுந்த ஆதர்ஷமாகவே இருக்கிறது. யுதிஷ்டிரன் மயங்கினான். ஜெயக் கதையின் மய்ய அச்சு இங்கேதான் சுழற்பின்
கதா காலம்
8.

Page 51
தேவகாந்தன்
பாரமேற்கிறது. துயரத்தின் ஒரு பெரும் குரலாய் துரோபதியின் இருப்பு ஆவதும் இங்கிருந்தே துவங்குகிறது.
சூதில் துரியோதனனுக்காய் ஆடவந்தான் சகுனி என்ன பார்க்கிறாய். நான் பணயம் வைப்பேன்; மாமன் தாயமுருட்டுவான்' என்று சிரித்தான் துரியோதனன். யுதிஷ்டிரன் மறுப்பதற்கான தனது இன்னொரு சந்தர்ப் பத்தையும் கைநழுவினான்.
சகுனியும் யுதிஷ்டிரனும் பாய்ச்சிகை உருட்டத் தயாராய் ஆட்ட மேடையில் அமர்ந்தனர். 'அம்மா, ஆட்டம் தொடங்கிவிட்டது' என்று ஒடிப்போய் காந்தாரியின் காதில் மெதுவாய் உரைத்தாள், அவள் சூது மண்டபம் அனுப்பியிருந்த சேடி ஒருத்தி.
யுதிஷ்டிரன் தன் அதிர்ஷ்டத்தில் எண்களைக் கேட்பவன். சகுனியோ தன் வித்தையில் எண்களை ஆள்பவன். முதலில் தன் பொன், பொருளை, பிறகு தன் சதுரங்கப் படைகளை, அடுத்து தன் புவிப் பெருமை பெற்ற ராஜ்யத்தையென்று ஒவ்வொன்றாய்ப் பறிகொடுத்து வந்தான் யுதிஷ்டிரன். சகுனியின் விரல் நுனிகளில் அன்று வெற்றி அடங்கியிருந்தது. யுதிஷ்டிரன் முழுச் சூதாடியாகி, தோல்வியில் அடங்க மறுத்தான். பணயம் மேல் பணயம் வைத்தான். இறுதியில் தம்பியர், தான் என்று அனைத்துமிழந்தான். 'எல்லாம் இழந்துவிட்டாயா யுதிஷ்டிரா என்று துரியோதனன் சிரித்துக் கேட்க, 'இல்லை. இதோ பொன்னனையதுரோபதியை வைக்கிறேன், ஆடு”என்றான் அவன். சபை திடுக்கிட்டது. ஒரு வரம்பு மீறப்படுகிறதோ, தீமைக்கும் வரம்பு உண்டு. அடுத்த தாய உருட்டுகையில் துரோபதியும் பறிபோனாள். தலை குனிந்தமர்ந்திருந்தான் தருமன்,
யுதிஷ்டிரனை இனி நான் தருமன் என்பேன். தர்மத்தின் வழி மறந்தவன் தருமனெனப்படுதல், அதை மறந்தவனைத் தொடரக் கூடிய தண்டனையினதும், அபகீர்த்தியினதும் அடையாளத்தின் கீறு. காலத்தால் அனைத்தையும் புதைக்க முடிந்து விடுவதில்லை. கதைகள் அவற்றைக் காவிச் சென்று கரையேற்றி விடுகின்றன. சூதரும் மாகதரும், இன்னும் எங்கெங்கோவிருக்கும் கூத்தரும் விறலியரும் அக் கருவூலங்
கதா காலம்
82

தேவகாந்தன்
களின் காப்பாளராய் இருக்கிறார்கள். நேற்று இந்த முதிய மாகதன் நோயில் விழுந்துபோனான். அவனது கூட்டத்தி லிருந்து நான் கதை சொல்ல வந்தேன். நான் இல்லாதிருந்தால், அதோ ஆலின் புடைத்த வேரில் சாய்ந்தி ருக்கிறாளே, அவள் கதை சொல்லியிருப்பாள். கதையெடுத்தல் எங்கள் குலவித்தை. அதுவே எங்கள் கலாவொழுக்கமும். சுமந்து திரியப்படும் கதைகள் ஜீவனோடேயே இருக்கின்றன. அவற்றில் எழுதப்பட்டன, எழுதப்படாதன எல்லாமுமே அடங்கும். எழுதப்பட்டதையும் கூட மாகதன் கதைக் கெடுப்பான். அதைத் தன் நோக்கிலே விரிப்பான். யாருக்குத் தெரியும், அதுவுமே ஒரு காலத்தில் எழுதப்படக் கூடும். அதை எழுத மாகத வலிவும் உண்மையுமான ஒரு கதையெழுதி வருதல் எப்படிப் பார்த்தாலும் சாத்தியமே.
இனி கேளுங்கள்.
லிெ கெழுமி மனத்தையிறுக்க தாம் துரியோதனனுக்கு அடிமை யென்பதன் அடையாளம் காட்டி தம் அங்கவஸ்திரம் களைந்து நின்றார்கள் பஞ்சபாண்டவர். கவுரவ முகங்கள் மலர்ந்தன. பார்வையில்லாத் திருதராஷ் டிரனும் விஷயமறிந்து கண்ணடைந்த ஆனந்தம் அடைந்தான். உணர்ச்சி யின் குறி காட்டுதலின்றி பீஷ்மன், துரோணன், கிருபன். விதுரன் போல் வாடிய முகத்துடன் விகர்ணன், யுயுத்ஸ".
‘எங்கே துரோபதி என அதிகாரமெழுப்பினான் துரியோதனன். 'என் புதிய பணிப்பெண்ணை என் முன் கொண்டு வா."
அப்போது மனையொதுக்கில் இருந்தாள் துரோபதி. நீண்ட ஆடை சுற்றி உதிரப் பெருக்கின் நிறம் மறைக்கப்பட்டிருந்தது. இயல்பலாத விதமாக அன்று அவளிடத்தில் நெஞ்சதிவுகள் எழுந்துகொண்டிருந்தன. ஏன். ஏன். ஏன். எனத் தனக்குள் கேட்டுத் துடித்தாள். ஒருவேளை. ஒருவேளை. அப்படியோ? எனப் பதைத்தாள். காரியங்களின் பெறுமானங்களை முன்னதிர்வுகளாய்ச் சிலரேனும் அடைகிறார்கள்தான்.
கதா காலம்
83

Page 52
தேவகாந்தன்
சிறிது நேரத்தில் பிரதிகாமி வந்தான். சூதும், சூது முடிவின் விபரமும் தெரிவித்து அவள் கூடவரவேண்டுமென்றான்.
துரோபதி அது கேட்டு வெடித்தெழுந்தாள். "கவுரவர் தாதியா நான். ஏன் வரவேண்டும் சூது சபை. தன்னையிழந்த பின் பாண்டவனுக்கேதுரிமை என்னைப் பணயமாக்க, சரி/பிழை சென்று சபையில் மூத்தோரைக் கேள்' என்றாள்.
பிறகு வந்தவன் மந்த மதி படைத்த பலவான் துச்சாதனன். துரோபதியின் மறுப்புகள் அத்தனையையும் நிராகரித்து, 'வா, இல்லையேல் இழுத்துச் செல்வேன்' என்றான். அவள் மறுக்க, அவள் விரிகூந்தல் நிலமரைய மயிர்ப் பிடியில் அவளைச் சபைகொண்டு சேர்த்தான்.
விதுரன் திருதராஷ்டிரனை அணுகி, 'இவ்வளவும் நடக்கிறதே" என்று
சொன்னான்.
‘நான் என்ன செய்வேன். இது அரச சபையுமில்லையே' என்று புலம்பினான். அவன்
மண்டபத்தில் இருள் கவிந்து வந்தது.
சூரியன் மலை வாயுள் விழத் துவங்கியது.
அவள் அன்றொருநாள் இந்திரப்பிரஸ்த புது மாளிகையில் விரியவிட்ட கலீர்ச்சிரிப்பின் ஞாபகத்திலிருந்தான்துரியோதனன். அவமானத்தை அவள் மீது சுமத்தாமல் ஏன் அந்த ஜெயம், அழகியே, வா. வந்தென் மடி அமர் என்று தன் பெருந்தொடை தட்டிக் காட்டினான். அடிமையானவர் குரலும் இழப்பர். பாண்டவர் குரலிழந்திருந்தனர். பீமனாலும் அப்போது உள்ளுக்குள்ளாயே குமுற முடிந்தது.
'உனக்கேன் ஆடை வஸ்திரம் உட்பட அடிமையின் அனைத்தும் எஜமானனது சொந்தமாகி விடுகின்றன. உன் கணவன்கள் செய்திருப்பது நீ காணவில்லையா. அணிந்துள்ள ஆடை எடுத்து வை இதில்" என்றான் கர்ணன்.
விஷ நாகம் வெட்டியது போல் துடித்தாள் துரோபதி. நட்ட நெடுமரங்களென ஒன்றுக்கு அய்ந்தாய் நின்ற கணவர்களை நோக்கினாள். அவள் விழி தீயில் எரிதல் தவிர்க்க அவர்கள் நிலம் நோக்கித் தலைகள் கவிழ்த்தனர். தன் சுயமெழுந்து பேசாவிட்டால் தனக்கான குரல் அங்கே
கதா காலம்
84

தேவகாந்தன்
இல்லையென்பது கண்டு சபையில் நியாயம் பேசி நீதிக்கு அவள் மடியேந்தினாள்.
ஏன் சபையில் அந்தளவு மவுணத்தின் அடர்த்தி. பீஷ்மன், துரோணன், கிருபனின் குரல்கள் எங்கே, யுயுத்ஸ"வும் விகர்ணனும் கவுரவர் பக்கத்தில் அதிருப்தியாளர்கள். அவர்கள் சொல் சபையேறாது. மற்றவர் ஏன் மவுணித்தார். இயல்பலாதன செய்தலில், இயல்பலாதன காண்டலில் அச் சபை வக்கிரம் பெற்றிருந்ததோ. ராஜ குரூரம் ஒரொரு பொழுதுகளில் அவ்வாறும் செயல்படுமோ,
அவள் முறையீட்டில் வெறிகொண்ட துரியோதனன், துச்சாதனா, அவிழ்த்து வை அவள் ஆடை' என உத்தரவைக் கக்கினான்.
குமுறிப் பிளவுறும் நிலத்தில்போல் நின்று துரியோதனனின் வார்த்தை களில் நடுங்கினாள் துரோபதி. இனி அவள் செய்ய ஒன்றுமில்லை, கேட்க ஒன்றுமில்லைபோல. ஒடவும் கால்கள் மரத்திருந்தன. அவமானமெல்லாம் இந்தப் பாண்டவனிலேயே! என எண்ணிக்கொண்டு அசைவியக்கமழிந்து சிலையானாள். அவள் மேனித் திசுமங்கள் கல்லாய் மாறி வருகையில், துச்சாதனனின் கரிய பெரியவுரு தன் துகில் பற்றுவதை உணர்ந்தாள். 'தெய்வமே!’ ஓங்கிக் கதறி அடங்கினாள்.
துச்சாதனன் அவளது ஆடையை இழுத்தான். நிலையில் பெயராது நின்று அவள் சுழன்றாள். அவிழ்ந்து நிலம் புரண்டு கிடந்த கூந்தல் மேலிருந்து கீழ்ப் புரியாய்ச் சுற்றி அவள் அவயவங்கள் மறைத்து வந்தது. அவமானத்தைச் செறிவாய் இறக்க வெறிபிடித்து நின்றதுச்சாதனன்துகிலை விட்டுவிட்டு அவளது கூந்தல் பிடித்திழுத்தான். கீழிருந்து மேல்புரியாய் துகில் அவளது நிர்வாணம் மறையச் சுற்றியது. திரும்ப அவன் துகில் பற்றியிழுக்க கூந்தலும், கூந்தல் பற்றியிழுக்கத் துகிலும் அவள் செந்நிற மேனியார் கண்ணும் காணாது மறைத்துவர, மவுணித்திருந்த சபை சலசலக்கத் துவங்கியது. அமானுஷ்யமொன்றின் செயற்பாடாய் அதைக் கணித்து அது அச்சமடையவாரம்பித்தது. மத்தின் மய்யச் சுழற்சி போன்ற பொறிமுறை அது. ஒரு பொறிமுறையில் அவள் மானம் அன்று காக்கப்பட்டது. அவள் பிருஷ்டம், நிதம்பம், தொடைகளும் முலைகளும் கண்டு களியாற நின்ற சபை, 'ஆ' வென்றலறியது ஒருபோது.
துச்சாதனன் களைத்து வீழ்ந்தான்.
அனைவர் மனத்திலும் துரோபதி 'தெய்வமே' என்று கூவிய சொல் ஒரு உருவாய் நின்றிருந்தது.
கதா காலம்
85

Page 53
தேவகாந்தன்
சுயம் மீண்ட துரோபதி சபதமிட்டாள். 'என் கூந்தல் பற்றியிழுத்து ஆடைகளைய முயன்ற இக் கொடியதுச்சாதனனின் செவ்விரத்தமெடுத்துத் தடவியல்லால் இனி என் குழல் நெய் பூசி வாரி முடிப்பது செய்யேன்."
'ஏய் துரியோதனனே, துரோபதியை மடியமரக் கைதட்டிய உன் நாபியை என் கதாபுதத்தால் அடித்து நொறுக்குவேன். அவளது குழல் பற்றியிழுத்த இப் பாவி துச்சாதனனின் விரல்களை முறிப்பேன். இவனது நெஞ்சைப் பிளந்து குடிப்பேன் மதுபோல் இவனின் ரத்தம். இது என் வல்லப மீதினில் ஆணை’ என்று கர்ஜித்த பீமன், காற்றிலே இரண்டு சொடுக்குகள் கையுயர்த்தி விட்டான். அந் நிசப்த மண்டபத்துள் பெருவோசை பிறப் பித்தன அவை. தூலமாய் இடிகளே இறங்கின போல் சபை நடுக்க மெடுத்தது. அவனது கட்டை- சுட்டு விரல்களின் நெரிப்பில் அவ்விருள் படிந்தவிடத்தில் மின்னல்கள் சுழித்தன. அந்த இரண்டு கணங்கள் மட்டும் திருதராஷ்டிரர்களாய் அனைவரும் ஆயினர்.
தொடர்ந்து கர்ணனைக் கொல்வேனென அர்ச்சுனனும், சகுனியைக் கொல்வேனென்பதாக சகாதேவனும் சபதமிட்டனர்.
அப்போதுதான் திருதராஷ்டிரன் விழித்தான். இவ்வளவு தூரம் போயிருக்கக் கூடாதோவென்று நினைத்தான். ஆறடித்த வேரின் மரமசைந்த கணக்காய் நடுங்கியது அவன் மனம். பெரும் பிரியம் வைத்திருந்த காந்தாரியை அப்போது உள்ளுள்ளாய்த் திட்டவும் செய்தான். விடுபட வழி தெரியாது தடுமாறி, பின் சடுதியிலோர் உபாயமெடுத்து, துரோபதியை விளித்து உரை பன்னிப் பன்னிச் சொன்னான்: "நீயும் எனக்கு ஒரு மருமகளே. நடந்தது காணக் கண்களும், நடப்பது தடுக்கச் சக்தியும் அற்றுப்போன விருத்தாப்பியன் நான். என் மக்களின் மூடத்தனமான தீச் செயல்கள் எல்லாவற்றையும் மறந்துவிடு. இப்போதே நான் உனக்கு மூன்று வரங்கள் தருகிறேன். நீ இழந்த எதையும் இவற்றால் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். கேள் மருமகளே, கேள்."
துரோபதி தன் மேனியின் கதிர்வீச்சிழந்த தனி நெருப்பாய் நின்று கொண்டிருந்தாள். 'என் அவமானத்தில் கிஞ்சித்தளவும் அக்கறையற்று அந்நியனாய் எல்லாம் நடக்க அனுமதித்திருந்த மாமனே. இப்போது என்னை மருமகளேயென்று விளிக்கிறாய். எங்கிருந்து, எப்படிப் பலம் பெற்றோ, மூன்று வரங்களும் தந்திருக்கிறாய். நீயே கெட்டவனில்லை, கெட்டதுகளை யும் உனக்காகவே செய்யவில்லையென்பதால் அந்த வரங்களை நான் ஏற்றுக்கொள்ள முடியும்' என்றாள்.
கதா காலம்
86

தேவகாந்தன்
சபை நிம்மதி பெற்றது. அதிகப்படியான பாதிப்புக்களை அச்சபையில் அடைந்திருக்கும் அவளது அவ் வரங்களின் ஏற்பு, நிச்சயமாகவே பீமனது குருதி வெறிகொண்ட சபதத்தையும், அர்ச்சுன நகுல சகாதேவர்களது சபதங்களையும் வீரியம் குறையச் செய்யுமென்று அது நம்பி அச்சவுயர்ச்சி இறங்கியது. அந் நிகழ்வில் நிம்மதி பெற்றுவிட முடியாத காந்தாரியிடம் சேதி சொல்ல அதேபோதில் அந்தப்புரம் விரைந்து கொண்டிருந்தாள் அவளது ஒரு சேடிப் பெண்.
"கேள், இப்போதே தருகிறேன்' என்று பரபரத்தான் திருதராஷ்டிரன்.
மவுனமும் அசலனமும் உருவெடுத்தது போல் சில கணங்கள் நின்றிருந்தாள் துரோபதி. பின், 'ஒன்றால். என் விடுதலையையும், இரண்டாவதால் என் கணவர்களது விடுதலையையும் விரும்புகிறேன்" என்றாள்.
தந்தேன். தந்தேன். மூன்றாவது வரத்தால்..?
அவளது அறச் சினத்தின் வெம்மையில் தகிக்கப்பட்டதுபோலிருந்த சபை ஆவலில் நெளிந்தது. மூன்றாவது வரத்தால் இந்திரப்பிரஸ்தத்தைத் தான் கேட்கப்போகிறாளென்று துரியோதனனாதியோர் ஏங்கினர். தருமன் கூட அப்படித்தான் நினைத்தான். ஆனால் அவள், 'மூன்றாவது வரத்தால் பாண்டவ மூத்தோனுடன் கவுரவர்கள் இன்னொரு முறை தாயமுருட்ட அனுமதிக்கவேண்டும்’ என்றாள்.
மறுபடியும் தாயம்.!
அனைவரும் ஒரு ஸ்தம்பிப்பில்.
தருமனும் சகுனியும் தாய மேடையில் அமர்ந்தனர்.
அப்போது துரியோதனன் கேட்டான்: "பணயம் என்ன வைக்கிறாய்."
சகுனி தன் சாமர்த்தியத்தின் உச்சமடைந்தான். ‘வைக்க என்ன இருக்கிறது அவனிடம். மீண்டும் தங்களையே பணயம் வைக்க அவன் தயங்கினால் அது நியாயம்தானே. அதனால் பாண்டவன் இவ்வாட்டத்தில் வென்றால் அவன் முதலில் இழந்த இரத்தினமாலை, பொன், மணி
சகலவற்றையும் திரும்பப் பெற்றுக்கொள்ளட்டும். ஆனால் ஒருமுறைதான் தாயமுருட்டுவேன். உன் அதிர்ஷ்டத்தைப் பரீட்சித்துக் கொள்'
தோற்றால்..?’ என அவசரமாய்க் கேட்டான் கர்ணன்.
கதா காலம்
87

Page 54
தேவகாந்தன்
'கர்ணனின் கேள்வியும் நியாயமானதுதான். பணயம் இரண்டு பக்கத்திலும் வைக்கப்படவேண்டும் என்பதுதான் ஆட்டமுறைமை. ம். சரி, பன்னிராண்டு பாண்டவ வனவாசத்தையும், ஒராண்டு அஞ்ஞாதவாசத்தை யும் இவன் பணயமாக வைக்கட்டும்’ என்றான் சகுனி.
தருமன் தலையசைத்தான்.
ஒன்று ஞாகமிருக்கட்டும், யுதிஷ்டிரா, அஞ்ஞாதவாச காலத்தில் நீங்கள் அடையாளம் காணப்பட்டால் மறுபடி பன்னிரண்டு வருஷ காலம் வனவாசம் போகவேண்டும். இவ்வாறு துரியோதனன் சொல்லி முடித்ததும் சகுனி காயுருட்டினான். எண்கள் அப்போதும் அவன் விரல்களின் நுனியில் அடங்கியிருந்து ஏவல் கேட்டன. தருமன் தோற்றான்.
அறுவரும் மவுனமாய் மண்டபத்தை விட்டு வெளியேறினர்.
கவுரவர் கெக்சலிகொட்டிச் சிரித்தனா.
விதுரனது மனையிலிருந்த குந்தியை யாரும் சென்று பார்க்கத் துணிய வில்லை. விதுரனிடம் மட்டும் தாம் திரும்பிவரும் காலம் வரை அவள் அங்கேயே இருக்கட்டுமென்றும், இந்திரப் பிரஸ்தத்திலுள்ள தங்கள் புதல்வர்களை பாஞ்சாலம் சேர்க்கும்படியும் கேட்டுக்கொண்டு அத்தினாபுர வீதியில் இறங்கினார்கள். -
அழிவுக்காய் விதி இட்ட பொறியில் அத்தினாபுரம் அகப்பட்டுக் கொண்டதை உணர்ந்த மக்கள் சோக மூச்சு விட்டனர். எங்கும் மவுன ஒலியாய் அச் சோகம் பற்றிப்படர்ந்து பயணித்தது.
காமிய வனம் நோக்கி நடந்த வழியெங்கும் சகாதேவனை ஒரு வினா அரித்துக்கொண்டிருந்தது. துரோபதி மூன்றாவது வரத்தால் ராஜ்யத்தையே இலகுவாகப் பெற்றுக்கொண்டு போயிருக்க முடியும். கவுரவர்களின் பயம் அதுவாகவே இருந்தது. இருந்தும் அவளேன் மறுபடி சூது கேட்டாள். அவனுக்குப் புரியவேயில்லை.
அவள் சூதாட்டக் களத்தில் நிறுத்தப்பட்டபோதே மாறி விட்டிருந்தாள். இனி அவளை, அவளின் செயல்பாடுகளை அத்தனை இலகுவில் புரிந்துவிட முடியாதுதான்.
கதா காலம்
88

LuGg556)III

Page 55
தேவகாந்தன்

தேவகாந்தன்
உபகண்டம் வட புறத்தின் அதே தேசம் (அதே இடம்)
கிதா மண்டபத்தின் முன் கூடிய சபையின் ஒரத்தி லிருந்து பாண்டவர் சகலதுமிழந்து அநாதைகளாய் வனம் சென்றது கேட்டுக் குமுறியழுத குடியானவப் பெண், அன்று சபையில் காணப்படாததை முதுசூதன் கவனித்தான்.
கதைகள் கேட்பது வெறும் பொழுதுபோக்காய், கேளிக்கையாய் மட்டும் எல்லோருக்குமே இருந்து விடுவதில்லையென்பது அவன் அறிந்ததுதான். சிலர் தம்மையே அடையாளம் காண வருவார்கள். பூவுலகில் பொய் பிந்தித் தோன்றியதில்லை. அதன் ஜனனம் உண்மை பிறந்த அதே கணத்திலேயே நிகழ்ந்தது. அநீதி, நீதியின் முன்னதாகக் கூடத் தோற்றம் பெற்றிருக்கக் கூடும். கொடுமையும் கருணையும் ஒரு செப்புக் காசின் இரு புறங்கள் போல், ஒருபுறம் மனித அடையாளமாகவும், மறுபுறம் சமூகத்தின் அவசியமாக வும். அதனாலேயே யாரின் அனுபவமும் ஒன்றுபடுதல் சாத்தியமாகிறது. நிகழ்வுகள் வேறுவேறாவது அக்கறைக் குரிய விஷயமில்லை. ராஜ குலம் போலவே குடியானவ ஒரு குடும்பமும் சூதிலும் மதுவிலும் பலதார விழைச்சலி லும் அழியச் செய்கிறது. இருவருக்குத் தாரமாயிருந்த ஒரு வைஷ்ஷியப் பெண்ணை அவனே அறிவான். இவர்களை ஜெயக் கதையின் பாத்திரங்களுடன் வெகு
கதா காலம்
9.
9J(Լք

Page 56
இலகுவில் இனம்காண முடியும். அழுபவர்களும் சிரிப்பவர் களும் கோபிப்பவர்களுமாய்க் கேட்போர் அதனாலேயே ஆகிறார்கள்.
சூத திறமையில் மனம் லயித்து பாத்திரங்களைச் சிலர் வெகு அந்நியோன்யமாய்க் கொண்டுவிடுவதும் உண்டு. அப்போதும் தம் இயல்பொத்த பாத்திரங்களிலேயே அப்பிரிதி விளைகிறது. அதுபோல் மறுதலையான இயல்பின் பாத்திரங்களில் வெறுப்பு அல்லது கோபம்.
இனிமேல் அவன் கதை விரிக்கப்டோகும் களம் மகா சிக்க லானது. அவன் கருதியிருந்தபடி கதை நிகழ்வுகளின் மய்யத்தை அல்லது உந்து விசைகளை அவன் பெண் பாத்திரங்களி னுரடாகவே காணவேண்டியவனாயிருந்தான். இனி வரப் போகிற பிரதம பெண் பாத்திரம் துரோபதியே. அவளே அரசியல் காய் உருட்டுகிறாள். அவரவர் விதிகளும் கலந்து நாசம் நிச்சயமாகிறது.
அவன் நாசங்களைக் காட்டப் போகிறான்; அநியாயங்களைக் கோடிழுக்கப் போகிறான்; பழிவாங்கல்களையும் பழிகளையும் எடுத்துரைக்கப் போகிறான்; ஜெயம் யாரின் கதை யென்பதையும் அவன் புலப்படுத்தியாக வேண்டும். முதுசூதன் அவதானமாய்ச் சொல்லெடுத்தான்.
"கேளுங்கள்.
கிIலதருடு வெளி பார்த்துக் கிடந்திருந்தாள் நீல விழியாள் துரோபதி. ஆர்த்து ஆர்த்துச் சமுத்திரம் அலையடிப்பதுபோல், குமுறிக் குமுறி மனத்தெழுந்த நினைவுகள் அவளது கண்களில் உணர்வுகளை எறித்துக் கொண்டிருந்தன. அந்த அவசரக்கார அர்ச்சுனனால் அத்தனை காலக் காத்திருப்பும் வீணானதோவென்ற துக்கம், ஒரு திரணையாய் அவளது ஜீவனுக்கும் ஜீவாதாரத்திற்குமிடையே பொறுத்திருந்து அவளைத் துடிக்கச் செய்துகொண்டிருந்தது. பதின்மூன்றாவது வருஷத்தில் ஒரு வருஷ கால
கதா காலம்
92

தேவகாந்தன்
அஞ்ஞாதவாசப் பூர்த்திக்கு ஒரு சில ஒரைகளின் முன்பாகவேனும் அர்ச்சுனன் யுத்த சன்னத்தனாய்த் தேரேறி நின்றமை கவுரவரால் காணப்பட்டதென உறுதியாகுமானால், மீண்டும் பன்னிரண்டு வருஷ கால வனவாசம் அவர்களுக்குத் தவிர்க்க முடியாதது. துரியோதனன் அதை அஞ்ஞாத வாசத்தின் நிபந்தனையாக்கியிருந்தான்.
அதை அவளால் சகித்துவிட முடியாது.
அன்றைய நிகழ்வுகளுக்கு அவள் மனத்தைத் திருப்பினாள்.
விராடத்தின் ஆநிரைகளைக் கவர்ந்து சென்ற கவுரவர்க்கான போரில், உத்தரகுமாரன் வெற்றிவாகை சூடி வருவதான முன்னணித் தூதரின் செய்தியறிந்ததும் அவளுக்குக் கூட மனத்தில் சந்தோஷம் கெழுமியது. அர்ச்சுனன் பிருகன்னளை வேஷத்திலிருந்தபடியே உத்தரனுக்குச் சாரதியம் செய்ய அனுப்பப்பட்டது அவளது பரிந்துரையின் பேரில்தான். அதை அவன் விரும்புவானா மாட்டானா என்ற கருத்தின்றியே ஏதோவோர் மனவூக்கத்தில் அவள் செய்தது. அப்போது வந்த செய்தியின் வெற்றி, அர்ச்சுனனின் சாரதீய உதவியுடன் உத்தரன் அடைந்ததென்றே அவள் நம்பியிருந்தாள். ஆனால் அரண்மனை பிரவேசித்த உத்தரன் கங்கனாயிருந்த யுதிஷ்டிரனின் முகத்துக் காயம் கண்டதுமே அதிர்ந்து போனான். விராடன் நடந்தது சொன்னான்; உன் மாபெரும் வெற்றியை நான் கொண்டாடி நிற்கும் தருணத்தில், உன்னையல்லாமல் உனக்குச் சாரதியாய் வந்த பேடியைப் புகழ்ந்தால் நான் என்ன செய்வேன். அதனால் தாயக் காய்கள் பற்றியிருந்த கையால் அடித்து விட்டேன்! உத்தரன் உண்மையைத் தெரியப்படுத்தவேண்டாமென்ற அர்ச்சுனனின் கண்டிப்பையெண்ணி உள்ளதை அடக்கினாலும், அவர் சொன்னதில் எந்தப் பிழையுமே இல்லை; ஒரு தேவகுமாரனின் உதவியினாலேயே இன்று இவ்வெற்றி நமக்குச் சாத்தியமானது; வெற்றியின் முழு உரித்தாளியும் அவனே, நான் சாரதியம் மட்டுமே செய்தேன்; நாளை அவன் அரண்மனை வருவதாய்ச் சொல்லி யிருக்கிறான்! என்றான்.
அப்போது சிதறியவள்தான் துரோபதி. இன்னும் சில நாழிகைகளே அஞ்ஞாதவாசப் பூர்த்திக்கு இருந்த வேளையில், அர்ச்சுனன் சாரதியத்தை விட்டுவிட்டு காண்டீபமேந்தி தானே போர் புரிந்ததை அவளால் உள் வாங்கவே முடியவில்லை.
வெகு பிரசித்தம் பெற்றிருந்த விராடத்தின் பிரதம தளபதி கீசகன் அவளது சொரூபத்தில் மயங்கி, அவளை அனுபவிக்கத் தன் சகோதரியும்
கதா காலம்
93

Page 57
தேவகாந்தன்
விராடன் மனைவியுமான சுதோஷ்ணையின் அனுசரணையுடன் பெரு முயற்சிகள் செய்தான். அவை கைகூடாமல் போக பெரும் தொந்திரவுகள் கொடுத்தான். ஒருநாள் ஒரு தந்திரத்தை மேற்கொண்டு அரண்மனையின் சிறந்த மதுவை ஒரு ஜாடியில் நிறைத்து கீசகனிடம் சேர்ப்பிக்க ஸைரந்திரி யாயிருந்த துரோபதியிடம் கொடுத்துச் சொன்னாள் சுதோஷ்ணை. மறுப்பு பலிதமின்றியாக கீசகன் மாளிகைக்கு, அதுவும் ஒரு மம்மர்ப் பொழுதில், தன்னந்தனியனாய்ச் செல்ல நேர்ந்தது துரோபதிக்கு.
கீசகன் ஆசையுரை பகன்றான். நீயின்றேல், உயிர்தரிக்கலாற்றேன்! என்று காமம் தீர்க்க அவளை இறைஞ்சினான். ஆவியைத் தீ தீண்டியதெனத் துடித்து துரோபதி தற்காக்க அங்கிருந்து ஓடினாள். விராடனும் கங்கனும் தாயமாடிக் கொண்டிருந்தார்கள் மாளிகைக் கூடத்தில், அரச முன்னிலை யென்றுகூட யோசனையின்றிதுரோபதியை அங்கேயே காலால் உதைத்தான் கீசகன். கங்கன் முகம் திருப்பவில்லை. அதுபோலவே விராடனும். அவர்களைப் புரிந்துகொள்ள முடியும். துரோபதி அப்போது பீமனிடம்தான் ஒடினாள். தாமக்கிரந்தி என்ற பெயரில் தன்னை ஒளித்து மடைப்பள்ளியில் வேலை செய்துகொண்டிருந்தான் அவன். இனி என்னால் பொறுக்க முடியாது; கீசகன் இம்சை தாங்க முடியவில்லை; நீதான் இதற்கு ஏதாவது பரிகாரம் காணவேண்டும்! என முறையிட்டாள்.
அந்தப் பெரிய ஆகிருதியாளன் அப்போது நிதானமாகச் சிந்தித்தான். பிறகு சொன்னான். கீசகனுக்கு இணங்குவதுபோல் நடித்து இரவில் நடமாட்டமறும் நடனசாலைக்கு நாளை நள்ளிரவில் அவனை வரச்செய்து விடு; மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன்; நீ அங்கே வரவேண்டியதில்லை.
பீமன் அவ்வளவு பொறுதிகாட்டி நடந்த சந்தர்ப்பம் அவள் வேறறியாள். அவனுக்குச் சட்டெனக் கோபம் வரும், கசக்கி உருட்டி மனித தேகங்களைத் தசைப் பிண்டமாக்கி எறியுமளவு உக்கிரமாயும் வரும். கொஞ்சம். மந்த புத்தியும்தான். அவனே கீசக வதத்தை அற்புதமாய்ச் செய்து முடித்தான்.
ஆனால், இந்த அர்ச்சுனன்.?
அவளது முதுகின் கீழும், அரையின் கீழும், தலையணை மறைத் தென்றும் முகிலாய் அடர்ந்து கிடக்கும் கூந்தல் நிறைவேற்றப்படவேண்டிய சபதத்தின் அடையாளமாய் பதின்மூன்றாண்டுகளாய்க் காய்ந்தும், வெடித்தும், புரிபடவாரம்பித்தும் கிடந்தது. அதுவே சொல் எடுத்து தனக்கு துச்சாதனனின் இரத்தம் வேண்டுமாய்க் கேட்பதாகவும், அழுவதாகவும்,
கதா காலம்
ᎤᏙf

தேவகாந்தன்
புலம்புவதாகவும் அவளுக்குப் பிரமைகள் வர ஆரம்பித்திருந்தன. அவளால் அளகத்தின் மேலுள்ள அவளது சபதத்தின் சுமை மறக்கப்பட முடியாதது.
அதனால் அளகமே சுமையாகவிருந்தது.
அந்தச் சுமையைச் சுகமென எண்ணிய சில தருணங்கள் அவள் மனத்தின் இரகசிய உண்மைகளாய்க் கிடந்து அப்போது ஞாபகம் வந்தன. அவளது புருஷர்களில் முரடனான பீமனுக்கு அந்தக் கவனிக்கப்படாத கூந்தலின் வீச்சங்களும் திணிவுகளும் தீரா எழுச்சியைக் கொடுத்தன. அவனுடனான வாழ்வின் முதல் நாள் போலவே, வனவாசத்தில் அவனுடனிருந்த கடைசி நாளிலும் அற்புத காதலனாயிருந்தவன் அவன். அந்தளவு வலிமையால் எப்படி அவளைக் கசக்காமல் இதமாய் நுகர முடிந்ததென்று அவள் பலமுறையும் வியந்திருக்கிறாள். இடும்பியைக் காணும்போதும், பலந்தரையை அணுகும்போதும் வல்லெழுச்சியும், தன்னிடத்தில் மெல்லெழுச்சியும் கொள்ளும் காதல் விந்தையை பீமன் எங்கு கற்றானென்பது அவளது இன்னுமாயிருக்கும் அதிசயங்களில் ஒன்று.
அவளுக்கு வனவாச காலத்தின் சம்பவ மொன்று வாசமெடுத்து எண்ணத்தில் படர்ந்தது. இமயமலை சார் வன வேடரிடையே கொடிய பாசுபத என்ற சரவகையொன்று புழக்கத்தில் இருப்பதாய்க் கேள்விப்பட்டு அதன் உலோகத் தன்மை, வார்ப்பு முறை, பிரயோக நுட்பங்களை அறியவென அர்ச்சுனன் கடும் பயணம் மேற்கொண்டு போய் திங்கள் பல ஆகியிருந்த நிலையில், தெளமியன் என்ற ஒரு புரோகிதன் யுதிஷ்டிரனைக் காண வந்திருந்தான். அவனது ஆலோசனையில் அசைவற்றதுபோல் இறுக்கம் பெற்றிருந்த காலம் கருதி நால்வரும் துரோபதியும் சிறப்புறு தலங்கள் தரிசித்தும், புனித நதிகளில் நீராடியும் வரப் புறப்பட்டனர். ஏற்கனவே மிடுக்குக் கொண்டிருந்த வன பகுதி மேலே கடக்க அரிதாய்ப் போனது. துரோபதி நடக்க முடியாது சோர்வுற்றுச் சிரமப்பட்டாள். அவள் வருத்தம் கண்ட யுதிஷ்டிரன் குந்தலி நாட்டின் அவ் வனப் பகுதியிலேயே அவளைத் தங்கவைத்து, பீம சகாதேவர்களையும் துணைக்கு விட்டுவிட்டு நகுலனுடன் க்ஷேத்திராடனத்தைத் தொடர்ந்து போனான்.
அங்கிருந்த காலத்தில் அற்புத வாசனையுள்ள மலரொன்று காற்று வழியில் வந்து அவளது கையகப்பட்டது. மஞ்சள் வரிகளோடிய அம் மலரின் அழகு அவள் மனத்தை வெகுவாய்க் கவர்ந்தது. அதன் கந்தம் மர்மக் கரங்கள் கொண்டு தன் ஜீவனையே வருடுவதாய் உணர்ந்தாள். மேனி பிலிர்த்தது அவளுக்கு. ஜீவனோடு உடல் மேலே கிளம்புவதான பரவசம். அப்போதும், பீமசேனா, இதோ பார் ஒரு அற்புதமான பூ என அவனிடம்
கிதா காலம் 95

Page 58
தேவகாந்தன்
தான் ஓடினாள். இதில் இன்னும் சிலதும், இதன் இளஞ்செடியொன்றும் எனக்கு வேண்டுமே! எனக் கெஞ்சி நின்றாள்.
அரிதினும் அரிதானது பாரிஜாதம். அது பெறுதலின் அசாத்தியம் காரணமாகவே அது தேவலோகத்து மலரென்றும், இந்திரலோகத்துப் பூவென்றும் திறலரிதானவர் கதை பல செய்துவைத்தனர். ஆனால் அரிதுகள் நிகழ்த்துபவன் அவன். கடுவனங்கள், காட்டாறுகள், கொடும்சுரங்கள், உயர் வரைகள் யாவும் இறக்கை பெற்று விண்வெளியில் தாண்டிப்போல் போய் அவள் கேட்டவை கொண்டுவந்து கொடுத்தான். திறலினால் மட்டுமில்லை, காதலினாலுமே அது சாத்தியமாயிற்றென்பதை அவள் அறிவாள்.
யுதிஷ்டிரன் அன்றுவரை பறிகொடுத்த ராஜ்யம், தன் விரித்த கூந்தலின் அலங்கோலமென்று எதையும் நினைந்தில்லை. அஞ்ஞாதவாசம் மேற்கொள்ள விராட தேசத்தைத் தேர்ந்து வனம்விட்டுப் புறப்படவிருந்த கடைசிவேளையிலும், வனவாழ்வு பேரினிது; இனி எப்போது இங்கே வருவேனோ? என்று சொல்லிப் பெருமூச்சு விட்டவன் அவன். அவன் சிரமமற்ற, நிச்சயமுள்ள வாழ்வின் சுகிப்பாளன். வனவாச காலத்தின் பெரும் பகுதியிலும் அவளைத் தன்னோடேயே வைத்திருந்தான். அவனுக்கு அந்த ஏகபோகமே போகத்தைவிடப் பெரிதும் இனித்திருந்ததை அவள் பல தருணங்களிலும் கண்டிருந்தாள். அந்தணர், முனிவர், துறவியரென பலரும் எப்போதும் வந்தும் போயும் சூழ்ந்துமிருந்த அவ்வேளையில் காமிய வனத்தையே ராஜதானிபோலும், அங்கே மாயமாய் ஒரு இருக்கையமைத்து ராஜாவாக இருப்பதுபோலும் கற்பனை செய்துகொண்டு துரோபதியை அருகே வைத்திருக்க அவனுக்குச் சர்த்தியமாகிப் போனது. மூத்தோனான தால் அரசனாகி, அதனால் அவளைப் பட்டமகிஷியாய்க் கொண்டது போலவே அங்கேயும் அமைத்துக் கொண்டான்.
அதில் மீறல்கள் செய்தவன் பீமன் மட்டுமே. போதையேறியது! ஏதாவது சிருங்காரப் பாடலைப் பாடிக்கொண்டு நேரே யுதிஷ்டிரன் குடில் புகுந்து அவளைக் கைப்பிடியில் தன் குடில் கொண்டுபோய் விடுவான். யுதிஷ்டிரன் அதைக் காணவும் செய்யான். அர்ச்சுனன் கூட அவ்வப்போது அவளோடு வாழ்ந்தான். வாழாதவர்கள் நகுலனும் சகாதேவனுமே. இவர்களில் சகாதேவன் மீது இவளுக்கும் பிரியம். அழகன் அவன். அது பெண் தன்மை சேர்ந்ததாய் இருந்தது. அவனது அறிவு அவனுக்கு இன்னுமோர் அழகாய் இருந்தது. அவனுக்கே சபதமிருந்தது. அர்ச்சுனன் கர்ணவதம் செய்ய இருந்தவன். துரியோதனனை, துச்சாதனனை மாய்க்க பீமன் பெரும் சபதம் செய்தவன். சபதமில்லாதவன் யுதிஷ்டிரன் மட்டும்
கதா காலம்
96

தேவகாந்தன்
தானே. அவன், மீண்டும் வனவாசமெனில், தம்பிகளா! துரோபதி புறப் படுவோம் வனம்! எனக் கூறக் கூடியவன்.
மொத்தத்தில் எல்லோருமேதான் எல்லாமும் மறந்துவிட்டதாக அவள் உணர்ந்துகொண்டிருந்தாள்.
கவுரவரின் அவமதிப்பு அவள் மீதுதானே விழுந்திருக்கிறது. அதனால் அவளுக்குப் பொறுப்புகளும் அதிகமிருக்கின்றன. அவள் அதற்கான திட்டங்களைப் புனைந்து ஒரு தனிச் சக்தியாய் நின்று செயற்படுத்தா விட்டால் சபத நிறைவேற்றம் நடைபெறப் போவதேயில்லை. அவள் சாதாரணப் பெண்ணில்லை. கூடித்திரியை. சூதும் வாதும் அவளது குலத்தின் hfTLDLD.
அவளுக்கு முதலில் அர்ச்சுனன் வெளிப்பட்டது பற்றிய காலப் பிரச்சினை தெளிவாக வேண்டும். உத்தேசங்களிலிருந்து வருந்திப் பயனில்லை.
அவள் களமிறங்கத் தயாரானாள்.
புலர் காலையிலேயே சகாதேவனைக் கண்டு அதுபற்றித் தீர்க்கமாய் அறிந்துகொள்ள வேண்டுமென்று தீர்மானம் கொண்டாள்.
பணிப் பெண்கள் தங்கும் கூடத்தில் உருளுகைகள், புரளுகைகள், முனங்கல்கள், பிதற்றல்கள், கலைந்த ஆடைகளை இழுத்து விடுதல்கள் நடப்பது தெரிந்த துரோபதி, விழிப்பின் முன்னான சிற்றசைவுகள் அவையென்பதைத் துணிந்துகொண்டு மெல்ல எழுந்து சகாதேவன் இடம் சென்றாள்.
சகாதேவன் துயிலுணர்ந்திருந்தான்.
துரோபதியை அங்கே, அந்தநேரத்தில் கண்டவனுக்கு ஆச்சரியமாகப் போனது. அவள் அண்மிக்கவும் அவளது முகத்தின் சஞ்சல ரேகைகள் நோக்கில்பட அவன் . குழம்பினான். அவன் மனம் சலனமுற்றது. தன்போலவே ஏதோவொரு துயரத்தில் அவளும் உழன்று கொண்டிருப்பதை அவன் புரிந்தான். தனக்கு அய்யத்தை எழுப்பியுள்ள அதே காரணமே அவளில் துயராய் வெளிப்பட்டிருக்கக் கூடுமோ, குரல் அமிழ்ந்தவனாய், 'என்ன துரோபதி என்றான்.
தூங்கா விழிகளின் நோக்கலைச் செறிவாய் அவன் முகத்தில் பதித்து, 'எனக்கு உண்மை தெரியவேண்டும்’ என்றாள்.
கதா காலம்
97

Page 59
தேவகாந்தன்
'எந்த உண்மை."
‘என்னைச் சமாதானிக்க முயலாதே. அர்ச்சுனன் தேரேறி நின்ற
கணத்தில், அஞ்ஞாதவாச காலத்தின் ஒரு வருஷமும் பூரணமாகியிருந்ததா, இல்லையா.
"உனக்கேன் அந்தச் சந்தேகம்."
"என் கேள்விக்குப் பதில் சொல்."
"சரியாக ஒராண்டும் பூர்த்தியாகியேயிருந்தது." "ஏற்கனவே காலக் கணக்கைப் போட்டுப் luntriggsstunt.'
'பார்த்தேன்."
அதிலொன்றும் சந்தேகமில்லையே."
'இல்லை."
"கவுரவரோடு போர் புரியச் செல்லுமுன் அர்ச்சுனன் வருஷம் முடிவுறும் நாள், நாழிகை பற்றி உன்னோடு பேசியிருந்தானா."
'இல்லை."
பிறகெப்படி அவ்வளவு துல்லியமாக ஓராண்டும் முடிகிற நேரத்தை அர்ச்சுனன் தெரிந்திருந்தான்."
‘ஒரு சில தினங்களின் முன் பேச்சிலே அதுபற்றி நான் சொல்லியிருந்தேன்."
மேகம் நகர வெளித்தெழும் நிலாப்போல் அவள் இருண்டிருந்த முகம் பிரகாசமாகி வந்தது. பின்னர் அவள் கேட்டாள்: 'பின் எதற்காக நீ யோசனையும் துக்கமுமாய் இருந்துகொண்டிருந்தாய் நான் வந்த வேளை.'
துக்கப்படக் காரணமேன் தனியாக, எப்போதும் கடைசித் தம்பி துக்கத்துக்குரியவனே.
AV
அவனது பேச்சில் அவள் புதிரடைந்தாள். 'வெகுவாய் வாஞ்சை பாராட்டப்படுவதும் உண்டு.'
அது மாற்றாந் தாயின் புதல்வரைப் பொறுத்தவரையில் இல்லை."
கதா காலம்
98

தேவகாந்தன்
y
‘சகாதேவா. என்று இரைந்தாள் துரோபதி. அவனுடைய மனம் எங்கோ தாங்குப்பட்டிருந்ததென்பது அவளுக்குத் தெரிந்தது. ஆனாலும் அதை நினைக்கவும், அதுபற்றி விசாரணை நடத்துவதற்குமான காலமில்லை அது. அவள் அவனை ஆறுதற்படுத்தியாக வேண்டும். நீ என்ன சொல் கிறாய். பாண்டவ சிரேஷ்டர்கள் உன்னில் எவ்வளவு அன்பு பாராட்டு கிறார்கள் என்பது உனக்குத் தெரியாதா. அத்தை குந்திகூட உன்னில்தானே அதிக பிரியம் வைத்திருக்கிறாள்.'
"நீ சொல்வது ஒரு விதத்தில் சரிதான். ஆனாலும் பிரியங்களே தடைகளும், விலங்குகளுமாக ஆகிவிடுவதுண்டு. சுயாதீனம் மறுக்கப் படுவது பெருந்துன்பம், கனிஷ்டனாகையினாலேயே அடக்கப்படுவது பெரும் துன்பம். என் கனவுகளிலிருந்தும், தூக்கமற்ற இரவுகளின் வதைகளிலிருந்தும் எனக்கு விடுதலை வேண்டும்.'
'கனவுகள். வதைகள். எப்போதும் நீ அவை பற்றிச் சொன்ன தேயில்லையே."
'என்னோடு நீ இருந்த இரவுகளை நான் கணக்கிட்டுச் சொல்லும்படி அவை அத்தனை சொற்பமானவை, துரோபதி. அவை நீ எனக்கான ஒரு குழந்தையைப் பெறுவதற்கு மட்டுமேயான மட்டுப்பட்ட தொகையே. என்னை நீ உணர்ந்து கொள்ளும் வகையில் எதை நான் பேசியிருக்க முடியும்.'
இரவுகளின் தொகை என் அன்பின் அடிப்படையிலானவையல்ல."
தெரியும்.
'சரி உன் கனவுகளும் வதைகளும் எவற்றின் மூலத்தில்.’
'பரிதாபங்களின் கொள்கலனாகிய என் அன்னையின் பார்வையும், பெரும் தீச் சுவாலைகளும் என் அகத்தெழு காட்சிகளாகவே இதுவரை இருந்தன. சிலகாலமாய் அவையே என் கனவுகளாகி வருகின்றன. என் பால்ய பருவம் படுபயங்கரமானது துரோபதி, தந்தையின் உடல் வேகும் சிதையில் என் கண் முன்னாலேயே பாய்ந்து உயிர்மாய்த்தாள் என் தாய் மாத்ரி. அவளை. அவளின் கடைசிப் பார்வையின் பரிதாபம் வெடித்த எறிவு களை. பதிவுகொண்ட ஒரு குழந்தையின் மனம் இலேசுவில் அமைதியடைந்து விடாது. இதை நீ அறிவாயல்லவா."
ஆனாலும் இத்தனை காலத்தின் பின்.?
கதா காலம்
99

Page 60
தேவகாந்தன்
அவற்றின் வதை என்னில் இப்போதுதான அதிகமாகியிருக்கிறது."
'யாரிடத்தில் வதையில்லை. ஏதோவோர் காரணம்சுட்டி ஒவ்வொரு வரும் வதைபடுபவராகவே இருக்கிறார்கள்."
"என் வதை நான் காரணமில்லாதது.'
அன்று விராட ராஜசபை கூடவிருந்தது. சுதேஷ்ணைகூட இந்நேர மளவில் எழுந்துவிட்டிருப்பாள். அவனோடு பேசி விவாதத்தை வளர்த்துக்கொண்டிருப்பதற்கான வேளையல்ல அது. அவள் அவனைத் தேற்றும் வார்த்தைகளைச் சொன்னாள்: 'சகாதேவ, நீ மர்மமாயே இருக்கிறாய் எப்போதும். உன் கலக்கத்தை நீக்கு. காரியங்கள் வேகமாக ஆகவேண்டிய காலமிது. உட்பக்ை அழிக்கும். எவரையும்தான். உங்கள் அய்வரின் ஒற்றுமையைக் கருதித்தானே குந்தி என்னை உங்கள் அய்வரதும் மனைவியாக்கினாள். உனக்கும் சபதமுண்டு என்பதை மறக்காதே. என்னால் சுமக்கப்பட முடியாதபடி என் சபதம் கனதியாய்ப்போய் இருக்கிறது. எனக்கு உன் துணையும் வேண்டும். அதனால் உன் குறைகளிலிருந்து நீ தெளவுபட வேண்டும். அடுத்த முறை சந்திக்கும்போது உன்னை இன்னும் நான் ஆறுதல் படுத்துவேன். இப்போது நேரமாகிறது. சபை செல்லத் தயாராகு."
மேலே தாமதிக்காமல் அவள் திரும்பி விரைந்தாள்.
விராடன் சபையில் பாண்டவர்கள் வெளிப்பட்டாயிற்று. சபை இன்ப அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாமல், பாண்டவர் விராடத்தில் தமது அஞ்ஞாதவாச காலத்தை முடித்ததும், அர்ச்சுனன் மகன் அபிமன்யுவுக்கும் விராடன் மகள் உத்தரைக்கும் திருமணம் செய்ய நிச்சயித்திருக்கும் செய்தியும் காற்றிலேறி உயிர்க் கானம்போல் விராட தேசமெங்கும் கணத்தில் பறந்தன.
அப்போது அத்தினாபுரதூதர்கள் வந்தார்கள்.
கண்ட சகாதேவன் மனம் அதுவரை கொண்டிருந்த அமைதியழிந்து கலக்கமடைந்தது. மறுபடி அய்யங்கள் சுழித்துக் கிளர்ந்து கொண்டிருந்தன. அன்று காலை துரோபதியுடனான பேச்சால் அவன் தன் குறைபாடுகளைத் தான் நீக்கினான். அய்யங்களையுமில்லை. அதுவே அத்தினாபுரத்தாரது செய்தியாகவுமிருந்தால், பதில் சொல்ல அவனால்கூட முடியாது போகலாம்.
கதா காலம்
100

தேவகாந்தன்
அரச முன்னிலையில் தம் வருகையின் காரணத்தை தலைமைத் தூதன் எடுத்துக் கூறினான்.
அப்பொழுது சபை சலசலக்க ஆரம்பித்து விட்டது. தூதனுரை செவி விழாதுபோன பீமன் யுதிஷ்டிரன் பக்கம் மெல்லச் சரிந்து, என்ன சேதி? என்று கேட்டதற்கு, "எதிர்பார்த்ததுதான். அர்ச்சுனன் அஞ்ஞாதவாச காலம் முடிவதன் முன் அறியப்பட்டானாம். அதனால் நாம் மீண்டும் வனவாசம் செல்லவேண்டுமாம். துரியன் சொல்லியனுப்பியிருக்கிறான்' என்றான்
9667.
சுதேஷ்ணையருகில் அமர்ந்திருந்த துரோபதிக்கும் தூத வார்த்தை கேட்காதபோதும், அதை அவள் எதுவாகவிருக்குமென்று சரியாகத்தான் அனுமானித்திருந்தாளென்பதை பீமனின் குமுறலிலிருந்து புரிந்தாள்.
y
கிழியடா வாய். காற்றில் உருட்டடா தலை. கர்ஜித்தெழுந்தான் பீமன். 'கணிதம் வல்லான். காலமறிந்தோன். எம் சகாதேவன் கணித்ததே சரி. அஞ்ஞாதவாச காலத்தின் இறுதிச் சொட்டு நேரமும் கழிந்த பின்பே அர்ச்சுனனது காண்டீபம் கவுரவர்க்கெதிராய் அம்பு மழை தூவிற்றென்று, ஏய் தூதனே, போய் அந்த மூர்க்கனிடம் கூறு. துரியனின் விருப்பத்துக்கு கோள்கள், நக்ஷத்திரங்கள் செவி சாய்க்கா என்றும் சொல்லு. அத்துடன் அடங்குவதாயில்லை அவன். யுதிஷ்டிரன் பக்கம் திரும்பி அவனையும் சாடினான். ‘அண்ணா, அன்று நெடும் பயணம் மேற்கொண்டு நாம் வனத்தில் படும் அவலம் காணவென பெருவிருப்போடு துரியனாகியோர் வந்திருக்கையில், ராஜன் சித்திராங்கனுடன் ஏற்பட்ட தகராறு சண்டையாய் மூள, அவன்துரியனைச் சிறைப்பிடித்துத் தேர்க்காலில்
என்று
கட்டிச் சென்றபோது நாம் பார்த்துக்கொண்டு இருப்பது சரியல்ல என நீ கூறித்தான் அர்ச்சுனனும் நானும் தம்பியரும் யுத்த சன்னத்தம் பூண்டோம். நாம் அவ்வாறு வருவதறிந்து, எங்கள் துன்பத்தைக் கண்டு களிக்க வந்த துரியனுக்குத் தண்டனையாகவே ஒரு சண்டையை தான் துவக்கி அவனைச் சிறைப்பிடித்ததாய்க் கூறி சித்திராங்கன் அவனை விடுவித்தான். சித்திராங்கன் செய்கை சரியானது. அதை அன்று நாம் கண்டும் காணாமல் விட்டிருந்தால் இப்படியொரு செய்தியோடு தூதனுப்பும் நிலை இன்று அவனுக்குக் கிடைத்திருக்காது. பொறுமை. விட்டுக்கொடுப்பு. என்று நீ எப்போதும் தப்பாகவே செய்துகொண்டிருக்கிறாய்."
அப்போது விராடன் தலையிட்டான்: "பீமசேன, பொறுதி கொள். தூதனே, அஞ்ஞாதவாச காலத்தின் ஒரு வருஷம் நாள், நாழிகை, திதி, ஒரை கணக்கில் முற்றாகப் பூர்த்தியான பின்னரே அர்ச்சுனன் தேரேறிக் காட்சியானான். இதை உன் அரசனிடம் தெரிவி.
கதா காலம்
101

Page 61
தேவகாந்தன்
யுதிஷ்டிரனை விட தூதனுக்கான பதிலை விராடன் சொன்னதே துரோபதிக்குச் சரியாகப் பட்டது. யுதிஷ்டிரனாயிருந்தால், காலத்தை இன்னொரு முறை சரியாகக் கணித்துப் பார்த்து பதில் அனுப்புவதாகக் கூடக் கூறிவிட்டிருப்பான்.
துரோபதி தனக்குள்ளாய்ச்சிரித்தாள் எரிச்சலுடன்.
LTண்டவரும் துரோபதியும் விராடனின் இன்னொரு சிறந்த நகரான உபப்பிலாவியம் சென்று சேர்ந்தார்கள். நெருங்கிய உறவினர்க்கும், நண்பர்களுக்கும் சேதி அறிவித்தார்கள். துவாரகைக் கிருஷ்ணனுக்கும் செய்தி அனுப்பப்பட்டது. அவன் துரோபதியின் புத்திரர்களை அழைத்துக் கொண்டு வருவதாகச் சொல்லி சுபத்திரையையும் அபிமன்யுவையும் முன்னதாக அனுப்பிவிட்டு பாஞ்சாலம் சென்றான்.
ஒரிரு நாட்களாய் உபப்பிலாவியம் வெகு களேபரப்பட்டிருந்தது.
துரோபதி ஒர் அடக்கத்தில் நடப்பவையெல்லாம் கண்டுணர்ந்து கொண்டும், சொல்பவையெல்லாம் செவி விழுத்திக்கொண்டுமிருந்தாள். அவள் கண்ணிலும் செவியிலும் தப்பி எதுவும் ஊசாட முடியாததாயிருந்தது. அத்தனை காலம் பிரிந்திருந்த பிள்ளைகளைப் பார்க்கும் ஆவல் ஒருபுறத்தே பீறிக்கொண்டிருந்தது. அவளுக்கே தன் தாய்மையின் தரத்தில் பெரும் துக்கம் விளைந்தது.
அய்ந்து கணவர்களெனினும் அவளடைந்தது அளப்பரும் போக மில்லை. வேட்கை பெற்றெழுந்த பொழுதுகள் இருந்தனவெனினும் அவள் விழைந்து ஓடியவளல்ல. இருந்தும் பிள்ளைகளை அருகிருந்து வளர்த் தெடுக்கும் பாக்கியமும் வாய்க்காது போய்விட்டது. வனவாசம் பாண்ட வர்க்கானதுதானே, அவளேன் கூட ஒடியிருக்கவேண்டும்? என ஒரு முனியின் மூட பத்தினியொருத்தி ஒருநாள் கேட்டாள். அவளே பதி சேவைக்காய் தான் வனவாஸியானதை மறந்து தன்னிடம் அவ்வாறு கேட்டாளேயென அப்போதே துரோபதி மனத்துள் சிரித்திருந்தாள். ஆனாலும் அவளது காரணம் வேறாகவேயிருந்தது. அவள் யுதிஷ்டிரனால் பகடையில் பணயமாக்கப்பட்டவள். தன் சொத்து, நாடு, மாளிகை போல அவளை அவன் கருதியிருந்ததின் அர்த்தம்தானே அது. தன்னை இழந்த பின்பும்
கதா காலம்
O2

தேவகாந்தன்
வைத்தான். அவள் சபையில் அடிமையாய் அவமதிப்புச் செய்யப்பட்டவள். அவள் சாதாரண பெண்ணில்லை. ஷத்திரியை. அவளது நியாயங்கள் ரிஷி மனைவிக்குப் போல் அமைந்திரா. பட்ட அவமானத்தை அவள் அழித்தாக வேண்டும். நீங்கள் அய்வரும் வனவாசத்தையும் அஞ்ஞாத வாசத்தையும் முடித்து வாருங்கள்; நான் என் சபதத்தைப் பற்றி அதன்பின்பு பேசுகிறேனென்று அவளால் கூறிவிட முடியாது. அவளே அதன் முயல்புகளைச் செய்தாக வேண்டும். அவர்கள், குறிப்பாக யுதிஷ்டிரன், தன் தீர்க்கத்தில் இளகிவிடாதவாறு அண்மியிருந்து அதை அகல்வித்தாக வேண்டியிருந்தது அவளுக்கு. அதனால்தான் பிள்ளைகளைப் பாட்டனிடம் சேர்ப்பிக்கச் சொல்லிவிட்டு அவள் வனம் கூடிப்போனாள். குந்தி விதுரன் வீட்டில் தங்கியதுபோல், அவள் தன் நாட்டில் போய்த் தங்கியிருந்தால் யார் என்ன சொல்ல முடியும்.
பாஞ்சாலத்திலிருந்து கிருஷ்ணனும் பாண்டவர் மக்களும் ஒரு அதிவிடி காலையில் உபப்பிலாவியம் வந்து சேர்ந்தார்கள். உடனேயே எழுந்தோடிப் போய் பிள்ளைகளை வாரியணைத்து துரோபதி மகிழ்ந்தாள். அவர்களது சுகங்கள் விசாரித்து அளவளாவிக் கொண்டிருந்தாள்.
கிருஷ்ணன் உற்சாகமாய் பாண்டவரைச் சந்தித்துப் பேசினான். இனி எல்லாம் நலமென்று அவன் அவர்களைத் தெம்பு செய்தான். இனி எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்துத் திட்டமிட ஒரு மந்திரா லோசனைச் சபையைக் கூட்டவேண்டுமென அபிப்பிராயம் சொன்னான். பின்னர்தான் தெரிந்தது சகாதேவன் சொல்லாமலே அங்கிருந்து நழுவி விட்டிருந்தமை. மாளிகைப் பின்புறமாய் நடந்து நந்தவனம் வந்தான். சகாதேவன் ஆழ்ந்த சிந்தனையிலிருந்தான். "சகாதேவா."
சகாதேவன் திரும்பினான்.
‘உன்னை முதலிலேயே கேட்க நினைத்தேன். ஏன் உன்னில் இந்த விசனம். இப்போதைய சந்தோஷமான நிலைமைக்கு ஏற்றதாயில்லையே."
‘விசனமா. இல்லையே.
'மறைக்காதே. உன் மனத்தில் விழுந்திருக்கும் விசனம் உன் கண்களினூடு இப்போதும் தெரிகின்றது."
இனி மறைப்பது பிரயோசனமில்லை; மேலாக, அவனிடமேனும் தன் அய்யத்துக்கு விளக்கம் கிடைத்தால் நல்லதுதானென நினைத்து, "மெய்தான். கடந்த சில தினங்களாக நான் குழம்பித்தான் போயிருக்கிறேன், கிருஷ்ணா.
கதா காச
O3

Page 62
தேவகாந்தன்
இது நானே குழம்பி, நானே தீர்த்துக்கொள்ள வேண்டிய விஷயம்தான். ஆனாலும் உன்னிடம் கேட்பதில் பிழையில்லை. பதிலின் ஒரு சிறுதுணிக்கை கிடைத்தால்கூடப் போதும். முழுமையான பதிலை நான் கண்டடைந்து விடுவேன். இப் புதிரை உன்னால் விடுவிக்க முடிகிறதா பார் என்றான் சகாதேவன்.
சகாதேவன் அமர்ந்திருந்த மேடையை விட்டெழுந்து மெல்ல நடந்தான். பேச்சின்றிப் பின்தொடர்ந்தான் கிருஷ்ணன். விதியையும் முன்னறியும் சகாதேவனின் வித்தகத்தில் பெரும் மதிப்பு கிருஷ்ணனுக்கு. அர்ச்சுனனோடு களியாடும் தோழமையும், யுதிஷ்டிரனில் அன்பும் அவனுக்குண்டு. ஆனால் அவன் மதிக்கிற ஒருவன் பாண்டவரில் சகாதே வன் மட்டுமே. அவன் கிருஷ்ணனைக் கட்டிப்போட்டவன். என்னைக் கட்டிப்போடு பார்க்கலாமென்று ஒரே போன்ற தன்னின் நாலைந்து பிரதிமைகளுக்கிடையில் நின்றுகொண்டான் கிருஷ்ணன் ஒருநாள். மலைத்த சகாதேவன், உன்னை ஏற்கனவே கட்டிவிட்டேன்! என்று கூவினான். எப்படி? என கிருஷ்ணன் வெளிவர, உடனே சகாதேவன் அவனைக் கட்டினான். பிறகு, ஏற்கனவே கட்டியதெப்படி? என்று கிருஷ்ணன் வினவ, அன்பினாலேதான்! என்று விளக்கமளித்தான் சகாதேவன். அப்போது அந் நிகழ்ச்சி நினைவாகியது கிருஷ்ணனுக்கு.
‘என்ன யோசிக்கிறாய் கிருஷ்ணா” என்று கேட்டு சகாதேவன் உலுப்பத்தான் சூழ்நிலைக்கு நினைவு திரும்பினான் கிருஷ்ணன். 'எல்லாம் உங்களைப் பற்றித்தான். நீ சொல்லு' என்றான்.
"வேஷதாரியொருவன் கூத்தாட்டுக் களத்தில் என்னவாகவிருக்கிறான்."
'சந்தேகமென்ன. அணிந்துள்ள வேஷத்துக்குரிய பாத்திரனாய் இருக்கிறான்."
"அப்போது அவன் மனத்தில் எழக்கூடிய எண்ணங்கள், அபிலாஷை கள் வேஷத்தினுடையவையா, வேஷதாரியினுடையவையா.
அவை வேஷதாரியினுடையவையே.
அப்படியானால் ஒரேநேரத்தில் அவன் உள்ளேயொன்றும், வெளியே யொன்றுமாய் இரண்டாகப் பிளவுபட்டிருக்சிறான் என்பது சரிதானே.”
கிருஷ்ணனின் நெற்றியில் ரேகைகள் இறங்கின. அவன் ஜாக்கிரதம் இழந்து சொன்ன பதிலாகி விட்டதா அது. சகாதேவன் சுளுவாக ஒரு
கதா காலம்
104

தேவகாந்தன்
வியூகத்துள் அவனை விழுத்திவிட்டானா. இருந்தும் பதிலைச் சொல்லி வைத்தான் சமாளிப்பாக: அப்படித்தான் கொள்ளவேண்டும்.'
ஆக, பாத்திரத்தைக் கண்டிருப்பவன் நாடகனை இனங்காணும்போது வேஷம் அழிந்து போகிறது, இல்லையா.
அதனால்...?"
'அஞ்ஞாதவாச காலம் முடியுமுன் அர்ச்சுனன் அடையாளம் காணப்பட்டானெனதுரியோதனன் சொன்னது உன் கருத்தால் சரியாகிறது."
‘எப்படி.
‘அர்ச்சுனன் பிருகன்னளை வேஷத்தில் சாரதியம் செய்கையில் உத்தரகுமாரனுடன் நேர்ந்த பிரச்சினைப்பாட்டின்போதே அது அர்ச்சுனன் தானென கவுரவரால் அடையாளம் காணப்பட்டிருக்கிறான். இது காண்டீபம் ஒலிப்பதற்கான சரியான காலப்பொழுதுக்கு ஒரிரு திதிகள் முன்னதாக நடைபெற்றிருக்கிறது. வெளிப் பிருகன்னளைக்குள் உள் அர்ச்சுனன் அடையாளம் காணப்பட்டாயிற்று என்கிறான் துரியோதனன். அவன் தர்க்கம் உன் வரையறைப்படி சரியாகத்தானே வருகிறது.
நீ யார் பக்கம் பேசுகிறாய்."
'யார் பக்கமும் இல்லை. எனக்கு என் மதிப்பீடுகளின் சரி/பிழையே முக்கியம். என் பக்கத்துக்கு நான் பொய்யும் உரைப்பேன். அது வேறு விஷயம். இங்கே மதிப்பீடுகளையே நான் மதிக்கிறேன்."
கிருஷ்ணன், 'ம்' என்றான். வானத்தில் எதையோ தேடுவதுபோல் கூர்ந்து நோக்கினான். இரவு ஜொலித்த நக்ஷத்திரங்களை கிருஷ்ணன் அப்போது கண்டானா, ஆம், பூஜ்யங்களாய் அவற்றை அவன் உருவகித்துக் கண்டான். பூஜ்யங்கள் இன்மையின் அடையாளங்களாகும். மட்டுமில்லை. பதின்ம அடுக்காகவும் அவை கொள்ளப்படும். அவன் நினைவில் உத்திகளின் சாரல், அவனால் சகாதேவனை மடக்கிவிட முடியாது. ஆனால் குழப்பிவிட முடியும். தன் நோக்குதல் விலக்காமலே கிருஷ்ணன் கேட்டான்: "சரியாகக் கணித்தாயா, சகாதேவா."
இரண்டு தடவைகள் கணித்தேன்."
"முக்கியமான ஒரு விஷயத்தில் நீ ஏன் ஒரு மூன்றாவது முறைக் கணிப்பைச் செய்யக் கூடாது."
கதா காலம்
105

Page 63
தேவகாந்தன்
மாயனாய் அறியப்பட்டிருந்தவன் கிருஷ்ணன். அவனது சிரிப்பின் பின்னே சுழன்றுகொண்டிருக்கும் ஒரு வலைவிரிப்பு. எல்லாம் சகாதேவனுக்குத் தெரியும். அப்போது கிருஷ்ணனின் முகத்தில் அழிந்திருந்த சிரிப்பு மறுபடி தோன்றியிருந்தது. சகாதேவன் அவனில் உஷராகவே இருக்கவேண்டும்.
சகாதேவன் காலக் கணக்கிட்டான். பின், 'முந்திய விடையே வந்திருக்கிறது" என்ற்ான்.
இது என்ன. சகாதேவன் போட்ட கீறுகளின் பக்கமாயிருந்த ஒரு எண் வரிசையைச் சுட்டி கிருஷ்ணன் கேட்டான்.
'கழிய வேண்டிய காலத்தின் பொழுது."
இது?
'கழிந்த காலத்தின் பொழுது."
'நீ வருஷ முழுமையை அடைய மாசம், நாள், நாழிகை, திதி, ஒரைகளைப் பூஜ்யமாக்குவாய். அதாவது அணில் பூஜ்யமாக ஆவதின் மூலமே வருஷ முழுமையை நீ அடைகிறாய்; இல்லையா.'
ஆம், கணித சாஸ்திரம் அதையே சொல்கிறது. பாரசீகமும் அராபியாவும் பூஜ்ய முறையை ஏற்று உள்வாங்கியிருக்கின்றன.'
இருக்கட்டும். கழித்தல் கணிதத்தில் பூஜ்யம் என்றும் வராது போதல் நிகழும் சந்தர்ப்பங்களும் உண்டு, சகாதேவா. கணித்தலிலிருந்தே கணிதம் வந்தது. கணிப்பில் நிச்சயமற்றதின் அடைதலே சாத்தியமாகிறது. என்றும் கணிதமும் ஒருவகை ஆரூடம்தான். என்ன வித்தியாசமெனில் கணிதம் ரூபமாயிருக்க, அரூடம் அரூபமாயிருக்கிறதுதான். இதை வைத்து நீ குழம்பவேண்டியதில்லை. ஒரு கணக்கால் இதைப் புரிவிக்கிறேன், பார்.
சகாதேவன் திரும்பத் திரும்ப கணக்கைப் போட்டுப் பார்த்தான். ஒரு சரம் மீதமாகவே வந்துகொண்டிருந்தது. பூஜ்யம் அங்கே ஒன்றாக ஆகியிருந்தது விந்தையாய். கிருஷ்ணன் தன்னோடு விளையாடிவிட்டது ெேதரிந்தது சகாதேவனுக்கு. கவசதாரிகளை அவன் அறிவான். கர்ணன் என்றுமே கவசம் கழற்றுவதில்லையென்று கேள்விப்பட்டிருக்கிறான். அதுபோல் என்றுமே கழற்றாத கபடதாரியா கிருஷ்ணன்.
கதா காலம்
O6

தேவகாந்தன்
சகாதேவனின் அவ் உறைநிலையைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு, இதில் சரம் என்ற இடத்தில் நாழிகையென்ற காலப் பகுப்பினை வைத்துப் பார். அவ்வாறு மிச்சமாக வருகிற பொழுது அர்ச்சுனனுக்கானது சகாதேவா. அதை அவன் எடுத்ததில் தப்பேயில்லை' என்றுவிட்டு கிருஷ்ணன் விறுவிறுவென நடந்து மாளிகையுள் மறைந்தான்.
அப்படியான விடைகள் தவறான கேள்விகள் மூலமே அடையப்பட முடியும். நில், கிருஷ்ணா உன் தவறை நான் எதுவென்று சொல்கிறேன்! எனக் கூவத் தயாராய் சகாதேவன் திரும்பினான். கிருஷ்ணன் அகன்ற இடத்தில் துரோபதி நின்றுகொண்டிருந்தாள். அவர்களது உரையாடலை அவள் கேட்டிருந்தாளென்பதை தெளிவாயே அவள் முகத்தில் கண்டான் அவன். அவனது மனத்தில் கலவரம் படர்ந்தது.
'சகாதேவா."
என்ன.
"கிருஷ்ணன் சொன்ன கணக்கு சரிதானே."
"கிருஷ்ண கணக்குத்தான் சரி,
'அந்த மீதிப் பொழுதை அர்ச்சுனன் எடுத்ததில் தப்பில்லையல்லவா." 'தப்பேயில்லை." -
நன்றி சகாதேவா. மனம் ஒருநிலைப்பட்டிரு. தளும்பாதே. மாலையில் உன் மனைவருவேன். உன்னோடு பேச என்னிடம் எவ்வளவோ இருக்கிறது’ என்றுவிட்டு திரும்பிச் சென்றாள் துரோபதி.
துரோபதியின் நிலை காண அவளது பிள்ளைகளுக்கும் சஞ்சல மாயிருந்தது. அவர்கள் உபப்பிலாவியம் வந்த நாள் மாலையில் வெளியே போனவள் இரவு வெகுநேரம் கழித்தே திரும்பி வந்திருந்தாள். அவள் முகமெங்கும் ஒரு மந்தகாசம் பொங்கிக்கொண்டிருந்தது. இரண்டாம் நாளில் அவளின் அந்நிலைமை முற்றாக மாறிப் போனது. பிள்ளைகளுக்குக் காரணம் தெரியவில்லை. விராட தூதுவன் உலூகன் ஒரு சமரசத் திட்டத்தோடு அத்தினாபுரம் புறப்பட்ட நாளிலிருந்துதான் அவளில் அந்நிலை ஏற்பட்டதாய்ப். பட்டது.
பாண்டவரும் சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் இன்னும் பலரும் வெளியே போவதும் வருவதுமாய்ப் பறந்துகொண்டிருந்தார்கள்.
கதா காலம்
107

Page 64
தேவகாந்தன்
குதிரைகளும் தேர்களும் நட்பு நாடுகளுக்குச் சேதிகளும் அழைப்புகளும் எடுத்து கடுகதியில் பறந்துகொண்டிருந்தன. ஒரு அணி சேர்த்தல் முயற்சி அப்போதே நடந்துகொண்டிருந்ததில் அவள் சிறிது ஆறுதல் கொண்டா லும், தூதனுப்பியதில் அவளுக்குக் கொஞ்சம்கூட விருப்பமில்லை. அதில் விராடராஜன் மும்முரம் காட்டியதாய்த் தெரிந்ததிலிருந்து அவளுக்கு வெறுப்பு வெறுப்பாய் வந்துகொண்டிருந்தது. ஆனால் காரிய ஜெயமின்றி உலூகன் திரும்ப அவள் மனது அடங்கினாள்.
பிறகு சஞ்சயன் என்பவனைத் தூதனுப்பினர் பாண்டவர். அது கேட்டு அவள் பெரிதும் அதிர்வடையவோ, ஆத்திரமடையவோ இல்லை. கவுரவர்களின் பதில் நிச்சயிக்கப்பட்டாயிற்றென்று உலூகனுக்கு அவர்கள் அளித்திருந்த பதிலிலிருந்தே புரிந்துகொண்டிருந்தாள். அவ்வாறான சூழ்நிலையில் சஞ்சயனும் தூது வெற்றியின்றித் திரும்ப, துரோபதி பழையபடி இயல்பு நிலைக்குத் திரும்பினாள். ஒருநாள் பகலில் கூடிய மந்திராலோசனை மாலையில் முடிந்தவேளை கிருஷ்ணனே தூது செல்ல விருக்கிற சங்கதி தெரியவர துரோபதி துடித்துப் போனாள். சஞ்சயன் தூதுபோல் அதை அவளால் எண்ணிவிட முடியாது. அத்தினாபுரத்தார் தெரிந்தவனாய் மட்டுமில்லை, அத்தினாபுரத்தாரைத் தெரிந்தவனாயும் அவனிருந்தான். பீஷ்மன், துரோணன், கிருபன், விதுரன், இன்னும் திருதராட்டிரன் கூட அவனில் ஒரளவு மதிப்பு வைத்திருந்தனர். அவன் தன் சாதுர்யங்களால் கீழை மேலாய்ப் புரட்டுபவன்; உண்மையைப் பொய்யாய், அநீதியை நீதியாய் மாற்றக் கூடியவன். அவன் தூது செல்வது யுத்த முனைவுகள் அனைத்தையும் நிர்மூலமாக்கக் கூடியது.
அவள் கிருஷ்ணன் தங்கியிருந்த இடம் ஓடினாள்.
மனையில் தனியே நின்றிருந்தான் கிருஷ்ணன். அவள் வருவது கண்டு, 'வா, துரோபதி என்று அவளை வரவேற்றாள்.
"கிருஷ்ணா, கவுரவரிடம் தூது போக நீ எப்படிச் சம்மதிக்கலாம்" என்று வந்ததுமே வெடித்தாள்.
கிருஷ்ணனுக்கு அவளது வெடிப்பின் காரணம் விளங்கவில்லை. 'ஏன், துரோபதி என்றான்.
'சந்து பேசிப் போவதற்கு, போகிற பக்கத்திலிருந்து ஒரு நியாயமாவது
இருக்கவேண்டும். ஒரு நியாயமுமற்ற தளத்தில் நின்று பேசப்போக எப்படித் துணிந்தாய்."
கதா காலம்
108

தேவகாந்தன்
'எதை நியாயமில்லையென்கிறாய்."
'சூதில் மூத்த பாண்டவன் தோற்ற ராஜ்யத்தை, திருப்பித் தா என்று கேட்பதற்கு என்ன நியாயம் இருக்க முடியும்.'
இதிலுள்ள நியாயம் இழந்த ராஜ்யத்தைத் திருப்பிக் கேட்பதில்லை, போரைத் தடுப்பதற்கான ஒரு முயற்சியாக இருப்பதால் இருக்கிறது.
"போரை பதின்மூன்று வருஷங்களின் முன்பாய் துரியோதனன் மிச்சயித்துவிட்டான். அது துச்சாதனனின் மூர்க்கத்தால் உறுதிப்பட்டா Whit).p!. ”
"போர் பெரும் அழிவுகளுடன் கூடியது, துரோபதி. இதுவரை நீ கண்டு கட்டறியாத பெரும் போராய் அது இருக்கும். மனிதர், விலங்கு, வளங்களெல்லாம் நாசமாகும். போரின் பின் வரப்போகும் பூமி சிபிக்கப்பட்டதாயிருக்கும்.'
அதை முடிவுகட்டியது நிச்சயமாக நானில்லை."
இருக்கட்டும். அதற்காகப் பேரழிவை அனுமதித்துவிட பெரி யோருக்கு மனதில்லை."
அதுதான் உன் யோசனையுமா."
"என் யோசனைக்கு இதில் எங்கே இடமிருக்கிறது. அது போகட்டும். அய்ந்து ஊர், இல்லையேல் அய்ந்து வீடுகளாவது யுதிஷ்டிரன் கேட்கச் சொன்னானே, அதற்கு என்ன சொல்லப்போகிறாய். என்னை நீ சீறுவதில் ந்ேத அர்த்தமுமில்லை. பாண்டவர்க்கு எது நன்மையோ, அதை மட்டுமே செய்ய நான் முனைகிறேன்."
அப்போ. நான் உனக்கு எதுவுமில்லையா. இந்திரப்பிரஸ்த காலத்தில் தங்கை தங்கை யென்று ஒடிவந்து, எனக்கு உடன்பிறந்தாளில்லாத குறையைத் தீர்த்து வைத்தாயென்று கூறி இதம்பதமாக வாங்கி வாங்கித் நின்றாயே, அதெல்லாம் பொய்யா. ஏன் கிருஷ்ணா, உன்னாலோ அந்தப் பாண்டவ மூத்தோனாலோ பெண்ணை அவள் அங்கங்களாகவன்றி, இதயமாய். ஒரு மனித ஜீவனாய்ப் பார்க்க என்றுமே முடிந்ததில்லையா. யுதிஷ்டிரன் தவிர ஏனைய பாண்டவர்களுக்குச் சபதமுண்டு. அவர்களும் அது நிறைவேறாவிட்டால் பெரிதாக அல்லல்படுகிறவர்களாய் இல்லை. ஆனால் நான்.? இந்த மாதிரி தானமாகக் கிடைக்கக்கூடிய பாதி ராஜ்யத்தில்
கதா ଐstratotb 109

Page 65
தேவகாந்தன்
அல்லது அய்ந்து ஊர்களில் என்னால் வாழ்ந்துவிட முடியுமா. சொல். என் அவமானம் என் உடம்பில் எழுதியிருக்கிறதே, யாருமேன் யோசிக்க வில்லை. துரோபதி பேசிக்கொண்டிருக்கையிலேயே அவள் கண்ணணை உடைந்தது.
கிருஷ்ணன் கலங்கிப் போனான். 'அழாதே, சகோதரி. நான், நீ நினைப்பது போல இல்லை. யுதிஷ்டிரனுக்காகவேதான் இப்போது தூது போகிறேன். என்னளவில் தூது ஒரு போலி. யுத்தமே நிச்சயம், கலங்காதே."
அதற்குமேல் துரோபதி பேசவில்லை. அவ்விடத்தில் தரித்து நிற்கவுமில்லை. விறுவிறுவெனத் திரும்பி நடந்தாள்.
கூந்தல் அவளைச் சிறைப்படுத்தியுள்ளதாய்க் கண்டுகொண்டிருந்தான் கிருஷ்ணன்.
கதா காலம்
10

தேவகாந்தன்
எட்டு
இலங்கை - கிழக்கு மாகாணம்
(நவீனகாலம்)
(மேடையில் மின்விளக்குகள் அணைக்கப் பட்டிருக்கின்றன. திடீரென ஒளிப்புள்ளி யொன்று முன்புறமிருந்த மேடையில் ஒரமாய் அய்ந்தரை அடி உயரமுள்ள ஒரு செஞ்சேலை சுற்றப்பட்டு நின்றிருக்கும் தூணில் பாய்கிறது. தன்னில் பிளந்து இரு பாதியாகும் அத் தூண், ஒரு பாதி தன்னச்சில் சுழன்று மேடையின் குறுக்காய் விலகி, செந்துணித் திரையாய்த் தொங்க வழியாக்குகிறது. அத் திரைமறைவில் நடிகன் சலங்கைம்ெபாலிக்க, திரையின் மேலாய் சுருண்டு நீண்ட கருமூடி தெரிய நகர்ந்து மேடை நடுவில் நின்று காற்சலங்கை குலுக்குகிறான்.)
அண்ணாவியின் குரல் பின்னணியில் தத்தோம் தகதோம் தகதிமி தித்தோம்.
(பாத அதைப்பும், சலங்கையொலியும் ஜதிக் கேற்ப எழுந்து அடங்குகின்றன. மேடையின் வலதுபுறத்தில் அசைவற்றிருந்த தூணின் ஒரு பாதி (உண்மையில் இரு பாதிகளும் சம உயரமுள்ள இருவரே) தன்னச்சில் சுழன்று பிரிந்த பாதியோடு மீண்டும் ஒன்றாகி நிலை பெறுகிறது. அதுவரை நாடக பாத்திரம் அசை வறுத்தும் மேடையின் பக்கத்தை நோக்கிய
கதா காலம்

Page 66
படியும் தலைநிமிர்த்தி நின்றிருக்கும். பிளந்த தூண் பாதிகள் ஒன்றாக நாடகன் அங்க அசைவுகளுடன் கதையுரைக்கத் துவங்குவான்.)
கணிதன்-காலமுரைப்போன் - வருவதோர்வோன் ஆகிய இச் சகாதேவனிடம் சற்று முன்னர்தான் துரோபதி வந்து போனாள். நீலமும் செம்மையுமாய் விளங்கி நெருப்பு மகள் போலவே வந்தாள். என்னை-அவளது கடைசிப் பதியைநான் செய்தது சரியோ முறையோ எனக் கேட்க வெஞ்சினத்தோடு வந்திருந்தாள். காலமுரைப்போனே..! என அந்நியனாய் என்னை விழித்தாள். பாஞ்சாலன் புத்திரிக்குக் கணவனாய் இருந்ததில் ஒரு நாள் கூடவா உனக்கு நினைப்பிலின்றி மறந்து போயிற்று? என்றாள். என் கட்டவிழ்ந்த சுந்தலைப் until 6T60T நிலம் அரய அரய v முகில் வலிப்பதுபோல் இழுத்துக் காட்டினாள். இதன்மேலுள்ள சபதம் எப்படி மறந்தாய்? என பெண்புலியாய் உறுமினாள். நீயும் சபதமுடையவன் அல்லவோ? உன் செய்கையின் பிரதி விளைவு எப்படியாகுமென உணர்ந்துதான் அதைச் செய்தாயா? என பெரு முழக்கமிட்டாள்.
(நாடகன் இடமும் வலமுமாய் நடந்தும் நின்றும் உரை நிகழ்த்துவான்.)
எதையென்று நான் கேட்கவில்லை. பொழுது விடி காலையில் துரியோதனன் என்னிடம் வந்திருந்ததைக் கண்டோ கேட்டோதான் அப்படி அவள் வினா விடுத்தாளென்று எனக்குத் தெரியும்.
நான் திரும்பி அவள் முகம் நோக்கினேன்.
கதா காலம்
112

தேவகாந்தன்
அக்கினியாஸ்திரங்கள் சீறிப் பாயும் விழிகள்தான் முதலில் கண்டேன். காணுதல் என்ற செயல் எப்போதும், எவருக்கும் கண்களிலேயே மய்யம் கொள்வதேனென்பது பல காலமும் நான் யோசித்ததுதான். டின் முருக்கம் உதடுகளை, விரிய தெரியும் பளிர்ப் பற்களை, சிலவேளை துடிக்கும் நாவினை, பயிர்ப்பின் அளவு காட்டும் நெஞ்சாம் பகுதியைப் பார்க்கப்படாதோவென்று தொடர் சிந்தனை வரும். முடிவறியா அக் கேள்விக்கு அன்று
முடிவு கிடைத்தது.
அவள் அதரம் பார்த்தாலும் ஆபத்துத்தான். இரண்டு தினம் முன்னர் அந்த அனுபவம் எனக்கு.
1லை வருவேனென்று ஒரு காலை சொல்லிப் போனவள் சொல்லியபடியே வந்திருந்தாள். உன் தாய் மாத்ரியை மறக்க ஏன் முடியவில்லை? என மிக அணுக்கத்தில் வந்து கேட்டாள். சொன்னேனே காலை! என்றேன். மெய்தான். ஆனாலும் அதற்கு மாற்று இல்லையோ? என்றுசாவினாள். வணில்லை? அவள்போல் பெண்ணொன்று பெற்றுத் தந்திருந்தால் நெருப்புத் தணிந்திருப்பேன்; 1ணங்கள் ஆறியிருப்பேன்! என்றேன். காலம் கடந்த கதை தாயின் நினைப்பின் நெருப்புப்போல் ான் நினைப்பின் மேலாயும் உனக்கொரு நெருப்புண்டு! முன் நெருப்பை ஆற்ற குடும்ப நிலை தக்கதாயில்லை! ஆனால் பின்னெருப்பை ஆற்ற அட்டியும் தயக்கமில்லை! என்று செவ்விதழ் துடித்து நின்றாள்.
கண்டேன் இதழ்.
காலம் இடம் எல்லாம் மறந்து நந்தவனச் செடி மறைப்பில்
ஒரு கூடல் ஆயிற்று. அர்ச்சுனன் வெளிப்பாட்டில் காலக் குறைபாட்டை நான் மடுத்துக் கட்டுதற்கே தன்னை எனக்குத் தந்திருந்தாளென்று ராணக்குத் தெரியாதோ.
கதா காலம்
113

Page 67
தேவகாந்தன்
ஆனாலும் செம்மை இதழ்களால்தான் நான் துடித்து விழுந்தது. மெய். அதைவிடத் தவறுதான் அப்போது அவள் கண்களை நான் நோக்கியது,
என் மேனியே எரிவது போலாயிற்று.
படைகளெல்லாம் ஈரணியில் குவிந்துவிட்டன! கொழுமுனை உலோகங்களும் ஆயுதமாய் வார்பட்டு அம்பாரம் ஆகின்றன! குருக்ஷேத்திரமே யுத்த களமென்று ஈரணித் தலைமைகளும் நிறைவேற்றியுள்ளன ஒருமித்த தீர்மானம்! இந்த நிலை நிலவுகையில், எந்த அர்த்தத்தில் துரியனுக்கு நீ யுத்தம் துவங்க நல்லநேரம் குறித்துக் காட்டினாய்? என்றாள், அடர் குரலில், பஞ்சணையும், ஒருபோது பன்பாயும் உன்னோடு பகிர்ந்த நாளெல்லாம் எனக்கு அருவருப்பாய் நினைவாகிறது சகாதேவா! உனக்குப் பிள்ளை சுமந்த வயிறு எனக்குப் புழுக் கிடங்காய்த் தோன்றுதையோ! ஒன்று கேள், மறவாதே எந்நாளும்! பாண்டவர் வென்று சபதம் முடிக்கிற்பிலரேல் வாழேன் அவரோடு ஒருபோதும். ஒருபோதும்; போவேன் கொடிய வனம்; அங்கே மாய்வேன் தமியளாக! கொடுங்கணைகள் பெற்றுள்ளான் கர்ணனாம் அவ் அங்கத ராஜா! அர்ச்சுனன் உயிர்கொளவே காத்திருப்போன்; அதற்காகவே நாகாஸ்திரம் பெற்றிருப்போன்! சுப்ரதீப கஜம் பகதத்தன் ஆயுதம்! அவனுக்கும் முன்னமே சூழ்நிலை அறிந்துபோல் செயலாற்றும் பேராற்றல் அதற்கு! பீமன்மேல் ஏவ துரியோதனனுக்கெண்ணம்! இவர்கள் அழிவதற்கோ அக் கவுரவனுக்கு நற்பொழுது எடுத்துச் சொன்னாய்? என்றெல்லாம் சீறினாள்.
கதா காலம்
114

தேவகாந்தன்
யார் இருந்தென்ன? யார் போய்த்தானென்ன? கான் சபத நிறைவேற்றமின்றேல் வாழேன். வாழேன்! என்றுவிட்டு கண்ணிராய்க் கொட்டினாள். பறுகணம் மறைந்துவிட்டாள்.
துரோபதியின் கொஞ்சுமொழி, இதவுரைகள் கூறுகின்ற மென்மொழியே நானறின்ே.
அப்போது அவளுதிர்த்த வல்லுரையோ நான் எக்காலத்தும் அறிந்ததில்லை.
அவள் குழலில் சில வெள்ளிழைகள் அருவிபோல் ஒடியிருந்தன. நரைக்கின்ற வயதா அது. தவித்திருந்தாள் காலமெல்லாம். பாவம்தான், ஆனாலும் என் பதில் கேட்காமலே தானெடுத்த பதில்கொண்டு புயல்போலப் போய்விட்டாள்.
கன்னிடம் அதற்குத் தெளிவான பதிலுண்டு. மாத்ரிக்கு மைந்தனாய், துரோபதிக்கு ஒர் பதியாய் வாழ்தலுக்கு மட்டுமில்லை, கான் பவம் கணித்தலுக்கேயானது.
ஆயுதம் எடுத்தால் போராளி; எழுத்தாணி எடுத்தால் கணிதன். நான் சுழலும் பாதை போட்டால் கிரகம் எதுவும் தப்பாது. நாளைய விதியை நேற்றே உரைத்திருப்பேன். யார் சதுரர் என்போல. துரோபதிக்கும் இது தெரியும். இருந்தும்தான். எனது பதிலின்றி தானேயொரு பதில்கொண்டு
அந்நியளாய்ப் போய்விட்டாள்.
3:25 காலம்
115

Page 68
தேவகாந்தன்
காமிய வனத்தினிலே முனிவர்கள் அந்தணர்களிடம் ஒடியோடிக் கதை கேட்டாள். இந்தக் கதை. கேட்டாளோ, கேட்டும் மறந்தாளோ,
(வலதுபுறமாய் ஒருங்கிணைந்திருந்த செந்தூண் தன் அச்சில் சுழன்று மேடையின் மய்யத் திசையில் சிறிது நகர்கிறது. பின் நிலைத்து நின்று விறைப்புக் கலைந்து நடுங்கத் துவங்குகிறது. பாரம் தாங்குவதன் இயலாமையின் அவலத்தை வெளியிடுகிறது.)
கோடி கோடியாய் மனிதரும் விலங்குகளும் பிரம்ம வித்தையினால் பெருக்கம். புவி பொறை தாங்க மாட்டாமல் உயிர் நடுங்கி அவலமுற்றாள். மனிதரும் விலங்குகளும் மேலும் பெருக பூமித்தாய் நசுங்கி உயிர்வதை ஏற்பட்டு ஒடி ஒருநாள் முறையிட்டாள் விஷ்ணுவிடம். சாகா உயிரினத்தால் புவிப் பாரம் தாங்கலாற்றேன்! காப்பாய்! என்று கண்ணிர் விட்டழுதாள். அவள் அழுத கண்ணிரே மரணமாய் ஆகிற்று.
(மறுபடி பிளவெடுத்து செந்தூண் பாதித் துணி படர சுழன்று விலகுகிறது. பின் துணியைத் தளர்த்தி காற்றில் அலைபோல் அலைய விட்டபடி இரு பாதிகளும் மேடையில் மெல்ல மெல்லமாய் வட்டமாகச் சுற்றி வருகின்றன. மரணத்தின் படிமம் விழுத்தப்படுகிறது.)
பூ பாரம் பெருகிற்று இற்றை நாளும். திரேத யுகம் ஆனதினால் " و ما அறத்தின் இருப்புக்கு இன்னுமிடம் இருக்கிறது. மன்பதையோ அதனால் மரணத்தின் கசப்பைக் குறைவாயே ருசிக்கிறது.
கதா காலம்
16

தேவகாந்தன்
பூ மாதா கதறலினை அப்பப்போ கேட்கின்றேன். பூ பாரம் இழத்தல் விதியெனவே நிற்கிறது. வரப்போகும் யுத்தம் அதனைச் சாதிக்கும். நூறாயிரமாய். நூறு நூறாயிரமாய். மக்கள் அழிவார்கள். யானன குதிரையென்று விலங்குகளும் அழிந்துபடும். தன் பாரம் குறைந்து பூமித்தாய் மூச்சடைவாள். விதியை நிலைநிறுத்த வேறு மார்க்கம் ஏதுமில்லை. இந்த யுத்தம் பெருவம்சத்தை வேரறுக்கும். கவுரவர் தோற்பர்; நாமே ஜெயம் பெறுவோம்.
ஆனாலும் ஒரு தோல்வி அதிலே இருந்துவிடும். வெறுமை நமைக் கவ்வும்.
ஆனாலும் வாழ்வோம் சில காலம். . அன்பர்கள் எல்லாம் சாவர். கடற்கரையின் வடபெரும் நகராய் விசை பெறும் நாடும் நீரால் அழிவு பெறும். புலப் பெயர்வு நிகழும்.
வெறுப்பும் விரக்தியுமாய் நாமே நமைக் கொண்டு மரணத்திடை சேர்ப்போம். விதி வழி அனுசரித்தே கவுரவனுக்கு நற்பொழுது அளித்தேன் நான்.
(மரணத்தின் வியாபிப்புப்போல் பெருவீச்சாய் அலைகிறது செந்துணி காற்றில், அது அலை யாய் அலைவுறும் பொழுதில் சகாதேவன் நின்றும், அது அசைவறுத்து நிற்க அவன் அங்குமிங்குமாய் அலைந்துகொண்டும் உரை பகர்வான். செந்துணியை வேகமாகவும் மெதுவாகவும் அலைய வைக்க ஒரு ராட்சத மின்விசிறி பாவிக்கப்படலாம்.)
கவுந்தேயனென்றே கிருஷ்ணன் எனை
அவ்வப்போதழைப்பான். என்னை வம்புக்கிழுக்க அது. நான் மாத்ரேயனென்று பலமுறையும்
325i காலம்
117

Page 69
தேவகாந்தன்
அவனுக்கு எடுத்துச் சொல்லியுள்ளேன். இருந்தும் கேட்கின்றானில்லையவன். அவ்வாறழைத்தால் ஆறுதல் வருமெனக்கு. பெற்ற தாயார் சதிநெருப்பில் விழக் கண்டும் அதற்குக் காரணமாய் நின்ற பெருந்தாயை தாயாய் அழைத்திடுதல் எவருக்கும் மகாதுக்கம், ஒர் எரிதல் என்னுள்ளே நெடுங்காலம் இருக்கிறது. அது ஆறும் உபாயத்தின் தேடலிலே வாழ்ந்திருந்தேன். அனைத்து அரசியல் சூழ்ச்சிகளும் அழிப்பனவென்பதே என் கண்டடைவு. பழ வம்சம் போக, புது வம்சம் பிறப்பெடுக்கும். ஒரரசு தாழ, இன்னொன்று உயர்வடையும். அத்தினாபுரம் போகும், துவாரகை அழிந்துபோகும், மகதம் எழுந்து வரும்.
மரணத்தின் மாற்றுருவாம் யுத்தம் இதை நிகழ்த்தி நிற்கும். மாத்ரேயனாய் நானும்
அதையே முடித்துள்ளேன்.
ஏ, துரோபதி,
நீகூடப் பாதிக்கப்பட்டவள். அய்வர் படுக்கையைப் பங்குபோட்டு எவ்விதம் நீ துயருழன்றாய் என்பதெல்ாலாம் அறிவேன் நான். ஒருத்தன் கருவை மடிசுமந்து இருக்கையிலே இன்னொருவன் படுக்கைக்கு உனக்குக் காலம் வந்திருக்கும். அந்தப் படுக்கையிலே நரகம்தானே கண்டிருப்பாய். எல்லாம் ஒரே மூலம். குரு வம்சத் தலைமையென்ற முட்பரவலில் பிறப்பெடுத்ததிவ் அவலம். குரு வம்சத் தலைமை சத்தியவதி தீர்மானம். தாயின் வழியைப் பிசகாமல் இயங்கியவன் பீஷ்மன். பதி வம்சத் தலைமை குந்திக்குப் பிரதானம். அதனால். 3. நீ அழிந்தாய். நான் அழிந்தேன். யார்தான் நிம்மதியில்,
கதா காலம்
118

தேவகாந்தன்
போரை அழித்தாலும் மரணம் வாழும்.
ஆனால் அப்போது மனிதன் இறக்கின்றான். புத்தத்தில் அவன் அழிவே அடைகின்றான். நாசமாய்ப் போகின்றான். யுத்தம் மரண தேவதையின் செயல் வடிவம்.
ஆயுதம் அதன் கருவி. அழிவு அதன் பெறுபேறு அழிவே அதன் பெறுபேறு. அறத்தின் ஸ்தாபிதம். நீதிக்கான என்பதெல்லாம் பின்னால் நிறுவப்படுபவை. யுத்தத்தின் ஒரே நோக்கம் அழிப்பு.
இவ்வளவும் உணர்ந்தேன். உணர்ந்த வழியைச் செயலிட்டேன். யுத்தங்கள் நடந்தன; இனியும் நடக்கும்.
ஆனால் இதுவோ. மகாயுத்தம். கவுரவர் அழிவர், பாண்டவரின் நற்பொழுதால், பாண்டவரும் அழிவர், கவுரவரின் நற்பொழுதால், அதற்கான சூட்சுமத்தைத்தான் உருட்டிவிட்டுள்ளேன். இதை விளக்க நீ நிற்கவில்லை. இனியும் வரமாட்டாய். இனிமேல் இதற்கு அவசியமும் இருக்காது. யுத்தத்தை நீ விரும்பினாய். உனக்காக பீமன் விரும்பினான். தனக்காக அர்ச்சுனன். அவனின் எஞ்சியுள்ள எதிரி கர்ணன். தனக்காக யுதிஷ்டிரன்.
தனக்காகவே குந்தி. நகுலன் எதற்காக விரும்பினானோ. சபதத்துக்காயிருக்கும். யார் இறப்பர். யார் பிழைத்திருப்பர். காலம் மட்டுமே அறியும். சத்தியவதி உருட்டி, பீஷ்மன் உருட்டி, குந்தி உருட்டி, பிறகு நீ உருட்டிய காய் வேகவேகமாய்ச் சுழன்று கொண்டிருக்கிறது, துரோபதி.
கதா காலம்
119

Page 70
தேவகாந்தன்
அதை மேலும் உருட்டினேன் நான். அதனால் உயிர்த்திருப்போர் தங்களின் இறந்தோருக்கழத் தயாராவோம்.
ஒரு பெரும் நாசத்தின் கதை நிகழப்போகிறது. பெண்ணே, இருந்து பார், நாசம். நாசம். நாசமே விளையும். அப்போது நீ என்னைப் புரியும் பொறி உன்னில் அடித்தால் அப்போது வா, பேசுவோம்.
(தூண் பிளவைகள் இரண்டும் மேடையில் முன் பகுதியில் குறுக்காய் வந்து செந்துணியைத் திரையாய் மறைக்கப் பிடிக்கின்றன. ஆரம்பத்து ஜதி ஒலிக்கிறது அண்ணாவியார் வாயில்.)
அண்ணாவியார் : தத்தோம் தகதோம் தகதிமி தித்தோம்.
(சலங்கை ஒலிக்கிறது. சீமெந்து நில மேடை அதிர்கிறது, சகாதேவ வேஷதாரியின் உதைப்பில், அது நிறைவுற மின்விளக்குகள் அணைகின்றன. மேடை இருள்கிறது.)
'சகாதேவ வாதம்' என்கிற ஒரு பாத்திர ஓரங்க நாடகம் முற்றுகிறது.
கதா காலம்
120

தேவகாந்தன்
ஒன்பது
உபகண்டத்தின் வடமேல் புற தேசமொன்று
(இடைக்காலம்ル
குழ்ந்த மணல் வெளியுள் அச் சிறு நகர். கோடையாகி யும் தண்ணிர் இன்னும் அலையடித்த ஒரு பெரும் குளக் கரையோரம் அது. மணல் வெளியில் அனல் எடுத்து வரும் காற்று, அக் குளத்தில் மூழ்கி குளிர்ந்துதான் வீசும் அங்கே,
வலிய அரசுகளை அமைத்தது அப் பூமி. வீரமும், மானமும், மாதர் கற்பும் பற்றி எழுந்த அதன் பழைய வரலாறு காலத்தால் விழுங்கப்பட்டிருந்தது. ஆனால் அதை மீள எடுப்பதுபோல் வாழ்வு நிலை தளம்பாமல் மக்கள் மறுபடி மறுபடி வரலாற்றை வாழ்ந்து கொண்டிருந்தனர்.
அங்கே மதமாகிய கதைகள் அவ்வப்போது சொல்லப் படும். பண்டிதரும், உரைகாரரும் அவற்றைப் பல தரங்களில் செய்திருக்கிறார்கள். ஆனாலும் கதா காலத்தில் அது புனை வின் ருசிகளை அடைய சூத கதை சொல்லிகளின் இடம் தேடி ஓடிவிடும்.
நகர்ப் புறத்தின் அவ் உண்ணிர்க் குளத்தங்கரையில் காயுதிர்த்து நின்றது ஒரு பெரிய மருத மரம். எப்போதும் தன் சிவந்த தளிர்களால் அழகோடி நின்றிருக்கும் அது.
கதா காலம்
121

Page 71
அதன் கீழ் அர்த்த சந்திர வடிவில் தன்முன் கூடியிருந்த கூட்டத்தின் முகங்களையே ஊடுருவிக்கொண்டிருந்தான் கதை சொல்லி. தன் கதையுரைப்பால் அவர்களுள் நுழைய முடிந்திருந்ததை அவன் தெரிந்தன். அவர்கள் விழிகளினூடு அவர்களது ஆர்வங்களும், அச்சங்களும், சோகங்களும் தெரிந்துகொண்டிருந்தன அவனுக்கு. முந்திய நாள், போரின் அழிவுகளும் அதன் செயற்பாட்டுப் பிரமாண்டங்களும் என்று பலவுமே சொல்லியிருந்தாலும், பாரதக் கதையிலேயே மிகச் சோகமாய் அவனுணர்ந்த அரவான், அபிமன்யு, கடோத்கஜன் கதைகளில் அரவான் மரணத்தை அதற்கும் முந்திய நாளில் விவரித்த வேளை கொண்டிருந்த சோகத்தை அது இழக்காமலேதான் அன்றும் கதை கேட்க வந்திருந்ததை அவன் அதிசயமாய்க் கண்டுகொண்டிருந்தான். அரவான் கதை கேட்டு அழுத ஒர் அர்த்தநாரி அன்றும் கதை கேட்க வந்திருந்தாள். புல்லடத்திலிருந்து அழகிய மெல்லிய அய்ம்பொன் சங்கிலியொன்று செவியேறியிருந்தது. காதின் பெரும் தொளைகளில் வெளிரித்தன காதணிகள். எதுவாகத் தான் ஆகத் தீர்மானமிருந்ததோ, அதுவாகவே தன் பார்வை, உணர்வுகாட்டும் விதங்களை அமைத்திருந்தது ஒரு ஊன்றிய நோக்கில் தெரிந்தது. அவள் சிலவேளைகளில் அதில் தோற்றாள் என்பதை வேறுவேறு பார்வைகளின் வித்தியாச மான பதிவு வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.
அரவான் அவள் வாழ்வில் ஓர் அனுபவமாய் ஏறியிருக்க
முடியுமென்று ஏனோபட்டது அவனுக்கு. அன்றைய கதையை நொந்த உள்ளத்தோடு அனுபவித்துத்தான் அவனே சொல்லியிருந்தான்.
அரவானுக்குச் சொன்னான் கிருஷ்ணன், வீரன் தீரன் அதிரதன் மகானுபவன் யாரிலும் பெரும்பேறு பெற்றவன் நீ!
கதா காலம்
122

தேவகாந்தன்
என்று. வாளால் வெட்டப்பட்டு, ஈட்டியால் குத்தப்பட்டு, பாணத்தால் துளைக்கப்பட்டு, கதையால் நொருக்கப்பட்டு, யானைகளின் குதிரைகளின் தேர்களின் கால்களில் நசுக்கப்பட்டுச் சாகத் தயாராயிருந்தவர்களில் ஏன் ஒருவர்கூட தம்மைக் களப் பலியாக்க முன்வருவதில்லையென்று பல காலமாய்ச் சுழன்று கொண்டிருந்தது அவன் சிந்தனையுள் ஒரு வினா. அரவானின் கதை விரிப்பில்தான் கதைசொல்லியே மின்னல் போல் ஒரு விளக்கத்தை அடைந்தது. களப்பலி, யுத்தத்தின் முதல்நாளில் அதன் படை நகர்ச்சிக்கு முன் நிகழ்த்தப் பெறுவது. அவர்களுக்கு மரணமே விதியெனில், அது யுத்தம் துவங்கிய பின்னரே வர முடியும். ஒர் அழிவின் பெரும் பரப்பிலும் மனிதன் சில கணங்களையேனும் வாழஉயிர்தரித்திருக்கவே - இச்சித்து நிற்கிறான். மட்டுமில்லை. போரில் ஈடுபடுபவர்கள் மரணத்தை எதிர்பார்த்தில்லை, அதை மற்றவர்களிடத்தில் விளைவித்து தாம் பிழைத்தவர் களாய் இருக்கவே வருகிறார்கள்.
அக் கதையெடுக்க கதை சொல்லிக்குப் புதிய சொல்களும், தன் நிலைப்பாடு மீறிய நம்பிக்கையுமே தேவைப்பட்டிருந்தன. வியாஸனைக் குறைந்த அளவுக்கேனும் பின்பற்றாமல் அவன் கதைசொல்ல முடியாதவனாகவிருந்தான். அவன் இவ்வாறு தான் அன்று கதை துவங்கியிருந்தான்:
அர்ச்சுனனின் பேரெழிலில் ஈர்ப்பாகிய நாக இன கன்னிகையொருத்தி அவனது ஆவேச கூடலில் பெற்றெடுத்த புதல்வனே அரவான். வயது இரு பதின்ப வருஷங்களில், நிஜமென்று ஒப்ப மறுத்தவர் மாயமென்று சொன்ன நாக இனத்தின் அற்புத வில்லாற்றல் அவனது சொத்து. சிரித்துக் கொண்டே அம்பு ஏவுபவன். அம்பினால் ஏற்படும் உயிரவஸ்தை உண்டாகாதபடிக்கு குறி உயிர்நிலையைத் தாக்கிய கணத்தில் அறுத்துவிடும் திறல். யார் அவனைப் பலிக்குக் குறி வைத்திருக்கக் கூடும். அவனே மனதுவந்து ஈகத்துக்குத் தயாரானானா, அந்தத் திறலும் அழகுமா பலியாவதென எண்ணி கிருஷ்ணன் வேதனையே அடைந்தான். காமம் நன்றெனில் நன்றாம்; அன்றெனில் அன்றாம்! என அர்ச்சுனனுக்கு ஒருமுறை சொன்னது அவன்தான். வாரிதியில் நீந்த வேண்டாம், காமத்தை
கதா காலம்
123

Page 72
தேவகாந்தன்
ஒருமுறையாவது அனுபவித்த பின்பே மரணம் ஒரு இளைஞனுக்கு நேரவேண்டுமென அவன் எண்ணினான். அன்றே விவாகத்தை நடத்தி, அன்றிரவே கூடலை முடித்து, மறுநாள் காலையில் அரவான் களப்பலியாகட்டும் என்று விட்டான் அவன். அரவானோடு ஒருநாள் வாழ்ந்துவிட்டு மறுநாள் தாலியறுக்கத் தயாராகவுள்ள கன்னியர் சிலரேனும் இருந்திருக்க முடியும். ஆனால், குருக்ஷேத்திர களமுனையில், அந்த அரும்பட்டுப் பொழுதில் பெண் அகப்படாது போனது. அந்த இக்கட்டான நிலைமையைப் போக்க கடவுளே பெண்ணவதாரமெடுத்து வந்தது. அரவானின் கம்பீர அழகில் விஷ்ணு ஆதர்ஷமாகியிருக்கக் கூடுமோ. பெருவனப்புடன் மாயமோகினி போல் வந்த பெண்ணை அரவான் மனைவியாய்க் கொண்டு அன்றிரவில் சம்போகத்தையும் முடித்தான்.
ஓரினம் என்ற தகிப்பு உள்ளுள் ஒரு சொந்தளவாய் இருந்தும்,
அரவான் வாழ்வின் உச்சபட்ச உடலின்பத்தை அடைந்து முடித்தமையே அவன் கதை தேசதேசமெங்கும் சிறகு விரிக்கக் காரணமாயிற்று. அந்த உறவு மனித இயல்பில்லை. ஆனாலும் மரணத்தின் முன்னான பொழுதை வாழ வேறு மார்க்கமு மில்லை. ஒரு நாளேனும் தான் விரும்பும் ஒருபாலாய் வாழ்ந்து விட தவனம் கொள்ளும் எந்த உயிர்க்கும் அரவான் அன்றே எடுத்துக் காட்டானான். வாழ்தல் இனிது, வாழ்தல் அறமென்ற லோகாயத விதிகளின் அத்தாட்சி அவன். மறுநாள் அவன் களப்பலி ஆக, அலறி அரற்றி கைம்மை கொண்டாள் அரவானி அரவானினம் இனி உண்டாகும்!
அக் கதையின் சோகத்தை முதல் நாள் போரழிவுகளின் விஸ்தரிப்பில் கேட்போரிடையே தொடர்ந்தும் இழுத்துச் செல்வது கதை சொல்லிக்குச் சிரமமாயேயிருந்தது. அன்றைக் குக் கதைவிரிப்பு சிரமமிருக்காது. போரின் பத்தாம் நாள் நிகழ்வுகளை அன்றைக்கு அவன் எடுத்துரைக்கவிருந்தான். பாரதக் கதையில் அது மிக முக்கியமான நாள். சிகண்டியாயி ருக்கும் அம்பை அன்றைக்குத்தான் தன் சபத ஈடேற்றம் காண்கிறாள்.
கதா சரஸ் ஊற்றெடுத்தது அவனுள்.
"கேளுங்கள்.
கதா காலம்
124

தேவகாந்தன்
அத்தினாபுரத்தில் பகலில் புழுதிப் புயல் அடித்தது. திசையளாவி தூசிப் படலம் விரிந்து சென்றது. லட்சம் லட்சம் காலாள், குதிரை, யானைப் படைகளின் காலடி பதிப்பில் அது எழுந்தது. வளி மண்டலத்தில் அதன் செறிவு சூரிய ஒளியாட்சியைக் குறைத்தது. அத்தினாபுரத்து மரங்கள், வீடுகள், மாளிகைகள், அரண்மனையென்றும், அரசி அரசன் பணியாட்கள் என்றும் எதிலும் எவரிலும் தூசிப் படிவு. அரண்மனைத் தளத்தில் தூசி ஒரு படையாயிற்று. அதில் காலடிச் சுவடுகள் அழுந்திக் கிடந்தன. சுவர்கள், தூண்கள், கதவுகள், சிலைகளெல்லாம் தூசியில் ஒளி மங்கிப் போய். பத்து நாள் பாரத யுத்தத்தில் உயிர்களின் பலி கணக்கிலாத் தொகை ஆகிவிட்டி ருந்தது. மலைப்புறக் கணவாயில் இறந்த காலாள்கள், குதிரைகள், யானை களின் உடல்கள் கொட்டப்பட்டுக் கொண்டிருந்தன. ஒரு பகுதியை எரித்தழித்தார்கள். பருந்தும் கழுகும் வல்லுறும் ஆகிய பிணந்தின்னிகள் தங்கும் மலைப் பிராந்தியமாயிற்று அது.
இரண்டு அடிவான்களுக்கு இடைப்பட்ட ஒரு பெரும் பரப்பு யுத்த பூமியாய்த் தேர்வாகியிருந்தது. ஆயிரமடிக்கு மேல் மலைக் கல் காணும் மண் நிறைந்த தரை அது. கொட்டிய இரத்தத்தில் மண் நனைந்து நனைந்து அப்போது இரத்தச் சேறு உண்டாகியிருந்தது. குதிரைகளின் குளம்புகள், யானைகளின் பாதங்கள், தேர்களின் சில்லுகள் அச்சேற்றில் இனி புதைபடும்.
படைத் தலைவர்களதும், அரசர்களதும் பாசறைகளுக்கு அப்பால் உள்ள வைத்திய முகாமில் அன்றைய தினப் போரில் காயம்பட்டோர் சேர்க்கப் பட்டிருந்தனர். வலியில் அவரெடுத்த தீனக்குரல் எந்நேரமும் கேட்டுக் கொண்டிருந்தது. முந்திய நாட்களில் காயம்பட்டோர் ஊர்களுக்குள் நகர்த்தப்பட்டிருந்தனர். இரவு, அவர்களது முனங்கல்களை எங்கெங்கும் சுவறவிட்டு தேகம் பதைக்க வைத்தது.
திருதராஷ்டிரன் இயல்பான இயக்கமுமற்று தூசி படிந்த தேக்குமரச் சிலையாய் உறைந்து போயிருந்தான். முதல் போர் நாளிலேயே பாண்டவர் விராட இளவரசன் உத்தரனை இழந்ததற்கு ஈடாய், அவனின் சில மைந்தர்களை பீமன் கொன்றிருப்பினும், வெற்றி தோல்வி பற்றிச் சொல்லமுடியாததாகவே களநிலை இருப்பதாய் முதல் நாளிரவு சஞ்சயன் தெரிவித்துப் போயிருந்தான். இருந்தாலும் திடீரென ஒரு கலக்கம் வந்து அவனைக் கவிந்துவிட்டிருந்தது. எப்போதும், காந்தாரி. காந்தாரி.! என பெரும் கரிசனங்கள் காண்பிப்பதில் அப்போதும் குறைவுபடாதிருந்த திருதராஷ்டிரன், 'கந்தாரி என்றான் ஒருபோது. அந்தப் பகலிலும் அரண் மனையில் விழுந்திருந்த நிசப்தத்தை வெறுத்திருந்த சுவர்களும் முகடுகளும் அவன் குரோலோசையைப் பலபலவாய் எதிரொலித்தன.
கதா காலம்
125

Page 73
தேவகாந்தன்
'ம்' என்றாள் காந்தாரி.
சேதியையோ கேள்வியையோ எதிர்பார்த்தவள் ஏமாந்து போனாள். மூச்சையும் அடக்கினாற்போல அமைதியாயிருந்தான் திருதராஷ்டிரன். காந்தாரி மனத்தை அது அதைத்தது. பேசுவதை அல்லது கேட்பினை மறுத்த அந்த விருப்பின்மை ஏன் அவனில் விழுந்ததென்று குழம்பினாள். அவனது மவுனத்தை ஒரு நிராசையின் அடையாளமாய்க் காண, அவள் மனது கலக்கத்துக்குத் தயாரானது. அவ்வேளை குளம்பொலி கேட்டது தூரத்திலாய்.
'சஞ்சயன்' என்றான் திருதராஷ்டிரன் தனக்கேபோல்,
அவன்தா னென்றாள் காந்தாரியும். தனக்கேபோல்தான்.
இருவர் மனங்களும் வெளிக் காரணங்களின்றி பதற்றமாயின. வேகவேகமாய் இருதய அதிர்வுகள்.
சஞ்சயன் வெகு அவசரமாய் வந்தான் போலிருந்தது. ஒட்டமும் நடையு மாய்க்கூட இருக்கலாம். குதிரையின் குளம்பொலி அரண்மனை வாயிலில் நின்றதிலிருந்து பாத ஒலிகள் விசை மாறிக் கேட்டுக்கொண்டிருந்தன. கூடங்கள் எதிர்வொலிகளில் அதிர்வுற்றன. கடந்த நாள்களிலும் இல்லாத விசேஷ செய்தி எதுவாயிருக்கும்? விசேஷமின்றி விஷமான செய்தியோ ஒருவேளை? என்று இருக்கையில் பரபரத்தான் திருதராஷ்டிரன்.
காந்தாரி அசையவுமில்லை. ஒலி வந்த திசைக்குச் செவி திருப்பிவிட்டு நிர்சலனமாய் அமர்ந்திருந்தாள்.
சஞ்சயன் காலடிகளைக் காத்துக் காத்துக் கேட்டு, தன் சொந்த பாத சப்தங்களாயே பதிவாக்கியிருந்தான் திருதராஷ்டிரன். எட்டத்தில் அவன் வந்துகொண்டிருக்கும்போதே, "என்ன சஞ்சயா என்றான். அதிரும் அவன் குரல் அப்போது அவலமாய் ஒலித்தது.
நடையின் வேகம் தணித்து திருதராஷ்டிரனை நெருங்கிய சஞ்சயன்,
யுத்தம் நிறுத்தப்பட்டு விட்டது. காந்தாரியின் மனம் ஆர்ப்பரித்த வேளை, சஞ்சயன் தெடர்ந்தான்: 'இன்று
y
என்றான். நிறுத்தப்பட்டுள்ளதா? என
நேரத்தோடேயே. பீஷ்மர் வீழ்ந்து விட்டார்.
சிதறினாள் காந்தாரி தனக்குள்ளாய். அவளது வல்லபமான நம்பிக்கை
பீஷ்மன். நூறாம் அந்த வயதிலும் அசையா உடல், மன, திருஷ்டிகளின் உறுதி
கொண்டவன். தன் மக்கள் பக்கத்தில் பீஷ்மனும் துரோணனும் கர்ணனும்
கதா காலம்
26

தேவகாந்தன்
அசுவத்தாமனும் இருக்கிற பெரும் பலத்திலேயே அவள் போரை வரவேற்றவள். அவனா. பீஷ்மனா. வீழ்ந்தான்."
ஆம், அரசியாரே. போர் அழிவுகளினது மட்டுமில்லை, எதிர்பாராத நிகழ்வுகளின் களமுமாகும். நாம் பிறரிடத்தில் எதிர்பார்க்கும் மரணங்கள் நம்மவரிடத்திலும் விளையும்."
நடந்தது சொல். கட்டளையிட்டான் திருதராஷ்டிரன்.
சஞ்சயன் நிகழ்வுரைத்தான் "நேற்று தினப்போர் முடிந்த பிறகு பாசறை சென்று பீஷ்மாச்சாரியாரை கடுஞ்சொற்களால் துரியோதனர் மனம் நோகச் செய்தார். இன்று காலை யுத்தம் ஆரம்பித்ததிலிருந்தே பாண்டவ சேனையைக் காய்ந்த நாணற் புதரைத் தீயானது பொசுக்குவது போல் அழித்துக் கொண்டிருந்தார் பீஷ்மர். கடந்த ஒன்பது தினங்களிலும் இல்லாத உக்கிரம் இன்று அவரது போர்த் தொழிலில் இருந்தது. பீமன், அர்ச்சுனன் திருஷ்டத்யும்னன் என்று மகாரதர் பலர் கூடிநின்று எதிர்ப்பைக் காட்டிய போதும் பீஷ்மரின் உக்கிரத்தைத் தடுத்தல் அரிதாகிப் போனது. பாண்டவ பகுதியில் நூறாய். பலநூறாய். படையினர் பலியாகிக் கொண்டிருந்தனர். யுதிஷ்டிரன் அர்ச்சுனனை வைதான். மதியத்தின்மேல் காண்டீபம் அசுரத் தனமாய் இயங்கியது. சாரதியம் செய்த கிருஷ்ண வசுதேவன் அர்ச்சுனனைத் தூண்டிக்கொண்டிருந்தான். சாமர்த்தியமாய் அவன் தேர் நடத்திய விதம் அர்ச்சுனன் கணைவிட வெகு உதவியாய் இருந்தது. ஒருபோது பீஷ்மர், அர்ச்சுனன் இருவருமே தேரிழந்து களபூமியில் நின்றுகொண்டிந்தார்கள். அப்போது இரு தரப்பிலிருந்தும் திடுமென வந்த இரண்டு தேர்கள் அவர்களை ஏற்றிக்கொள்ள யுத்தம் மீண்டும் ஆரம்பமாயிற்று. பீஷ்மர் நிதானமாகவும், அநாயாசமாகவும் துரித அம்புகளை ஏவினார். அர்ச்சுனன் கோபம் கொண்டவனாயும், வென்றுவிடும் வெறி பிடித்தவனாகவும் கொடிய கணைகளைச் செலுத்திக் கொண்டிருந்தான். ஒருபோது பீஷ்மர் வென்றார்போல் அர்ச்சுனன் களைத்தான். மறுபொழுது அர்ச்சுனன் வென்றான்போல் பீஷ்மர் நிராசையடைந்தார். பிறகு பீஷ்மர் சுதாரித்து பலமடைந்து விட்ட அம்புகள் அர்ச்சுனன் மேல் முகில்போல் கவிந்து விட்டன. அப்போது கிருஷ்ணன் கேட்டான், அர்ச்சுனா, உயிரோடி ருக்கிறாயா?" என்று.
'திடீரென விசைபெற்று காண்டீபம் இருமடங்காய்க் கணைவீசத் துவங்கிற்று. பீஷ்மர் திகைத்தாற்போல் சிறிது தடுமாறி நின்றார். அப்போது தன் கடுதேரில் அர்ச்சுனனைத் தாண்டி சிகண்டி வந்து கொண்டிருந்தது தெரிந்தது. ஒரு கையில் பிரமாண்டமான வில்; மறு கையில் அம்பு;
கதா காலம்
27

Page 74
தேவகாந்தன்
முதுகில் அம்பறாத்துரணி. அவனது அம்புகள் விசைபெற்றுக் காற்றைத் துளைக்கத் துவங்கின. சிகண்டிக்குள் அம்பையைக் கண்டிருப்பார் பீஷ்மர் நெஞ்சுக்குள் எங்கோ ஒரு மூலையில் கிடந்திருந்த வலி மறுபடி எழுந்திருக்கும். பீஷ்மர் விலக எண்ணினார். ஆனால் இன்னும் விலகிவிடாதிருந்த இறுதிக் கணத்தில் சிகண்டியின் அம்புகள் பத்தாய். இருபதாய். முப்பதாய் பீஷ்மர் உடலெங்கும் பாய்ந்தன. பீஷ்மாச்சாரியார் தேர்த் தட்டிலிருந்து தளிர் கால செவ் அசோகம்போல் மண்ணில் வீழ்ந்தார். அத்துடன் இன்றைய போர் சூரியன் மறையாதிருந்த வேளையிலேயே நிறுத்தப்பட்டது.'
காந்தாரியும் திருதராஷ்டிரனும் சஞ்சயன் சென்ற பின்பும் வெகு நேரமாய்க் கன்னிலையில், திரும்பவும் நாளை ஒரு சஞ்சயன் வரும்வரை கூட அப்படியே இருந்துவிடுவார்கள் போலிருந்தது. கூடத்துக்கப்பாலுள்ள நடைபாதையில் தூண்களோடும் வாயில்கவோரமும் ஒட்டியபடி நின்று களநிலை தெரியக் கூடும் அரண்மனைப் பெண்டிர் சிலரும் வெகுநேரமான தம் ஸ்தம்பிப்பிலிருந்து ஒருவரையொருவர் உசுப்பிப் பிரக்ஞை மீண்டு தம்தம் அந்தப்புரங்கள் அடைந்திருந்தனர்.
அரண்மனை மறுபடி மவுணத்தின் ஆக்ரகாரத்துள் அடங்கிப் போயிற்று. காற்றில் ஒரு சோக செய்தி ஏறியிருந்து அதை அசைவறச் செய்திருந்தது. எவர் மனத்திலும் பீஷ்ம வீழ்ச்சி அதுவரை நிலவிய நம்பிக்கையின் வே1ை ஈடாட்டியிருந்தது. அச்சமுறைந்த முகங்களாயிற்று அத்தினாபுர அரண் மனையாரது. காந்தாரியும் திருதராஷ்டிரனும் அவரவர் மூட்டங்களுள். முதல்முறையாய் ஒரு பய அதைப்பு காந்தாரி மனத்தில். பீமனின் சொடுக்குப் சபத வரிகளும் அப்போதே கேட்டதுபோல் நடுங்கினாள் அவள். நாள் முழுக்க உள்ளுள்ளாய் ஊறிக்கொண்டிருந்த சஞ்சலவுணர்வு, நாளின் முடிவில் வலிய சேதியாய் வந்திருந்ததில் திருதராஷ்டிரன் ஆடிப் போயிருந்தான். எங்கோ ஒரு பிழை ஆரம்பம் முதல் இருந்திருக்கிறது. அதை அவன் தெரிய முனைந்து கொண்டிருந்தான்.
ஒருவர் மூச்சை ஒருவர் உணர்ந்து உன்ரயெடுத்து தம் தனிமை போக்கியிருநதவர்கள் நெடுநேரம் வாளாவிருந்தனர். காந்தாரி தன் கணவனின் மனம் வெகுதூரம் தன்னிலிருந்து விலகிச் சென்றுவிட்டதை அப்போது புரிந்தாள். ஆனால் அது முக்கியமில்லை இனிமேல். அவள் விழி அடைத்தாள். அல்லாதிருந்தாலும் இனி அவளால் எதுவும் முடியாது. முடிவது, நடப்பவைகளைக் கேட்பது மட்டுமே. ஒருவரின் உள விருப்பத்தின் படியே சம்பவங்களின் முடிவும் அமைவதில்லை. குந்தி வெல்வதே நடக்கப்
கதா காலம்
128

தேவகாந்தன்
போகிறதா. அதை அவளால் தாங்கிவிட முடியுமா. முகம் காணா அந்தப் பெண் துரோபதி ஏது குற்றம் செய்தவளுமில்லை. இருந்தும் அப்படியொரு வைரம் அவள் மீது பாய்ச்சியிருந்தாள் காந்தாரி. அவளது வெற்றிதான் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறதா.
இன்னும் கர்ணன், துரோணன், கிருபன், அசுவத்தாமன், சல்லியன், ஜயத்ரதன், பகதத்தன். இருக்கிறார்கள் என்றெண்ணி மனம் தேற முனைந்தாள் அவள்.
வெனொருவன் தன் திறமையில் கர்வங்கொண்டிருக்கிறானோ, அவன் அது பங்கப்படும்படியான ஒரிரு சம்பவங்களையேனும் சந்தித்தேயிருப்பான். . அந்த வலி விழுந்திருந்த இடங்களில் அன்று வலு நோவுபட்டான்
அர்ச்சுனன். அன்று காலையிலிருந்தே அந்த மனவிருள்க் கவிவு.
பதினைந்தாம் தினப் போர் அன்று ஆரம்பித்த வேளையிலிருந்து யுத்த அரங்கை முழுவதுமாய் ஆக்ரமித்திருந்தவன் கடோத்கஜன்தான். பீமனின் முதல் காதலில் இடும்பியிடத்தில் பிறந்த பிள்ளை அவன். அவன் பலம் வனவேடர்களுக்கே மலைப்பு. அவனன்னை, அவனது தந்தையாகிய பீமசேனன் அவனது மாமனாகிய இடும்ப பர்வதத்தையே நொருக்கிய பலசாலியென்று சொல்லிச்சொல்லி அவனை வளர்த்திருந்தாள். அப்போ தெல்லாம் அவள் படும் பரவசத்தில் அவள் காதலைத் தெரிந்த பிள்ளை, தந்தையைக் காண வேண்டும் மென்று அடம்பிடித்து அவளோடு இந்திரப் பிரஸ்தத்திலுள்ள ஒரு காடடைந்து அங்கே அவளைத் தங்கவைத்துவிட்டு மாளிகை அடைந்து பீமனைத் தனியே கண்டான். ஒரு படிமத்தின் இரு பிரதிகளான மனிதர்களாயிருந்ததில் அவர்களது ஆகிருதிகளும் அமைப்புகளுமே அறிமுகத்தைச் செய்தன. மகனைக் கண்டு மகிழ்ந்த பீமன், இடும்பியும் கூடவந்திருக்கிறாளென்று அவளிருந்த வனமோடிக் கண்டு களித்தான். பெரும் காலமான அன்னையின் தவனமாற்றிய அப் பிள்ளைக்கு இடும்பி முலை கொடுத்தபோதே அன்பையும் அறிவையும் கொடுத்திருந்தாள் போலும், வேடுவ இளைஞர்களையே கூட்டாளிகளாய்க் கொண்டிருப்பினும், தன் ஆளுமையினாலும் பலத்தினாலும் தலைவ னாகவே இயங்கினான். அபிமன்யு இறந்த பிறகு, பாண்டவ சைன்யத்தின்
கதா காலம்
129

Page 75
தேவகாந்தன்
தலவிருட்சம் அவன்தான். அன்று இறக்கை முளைத்து களமெங்கும் பறந்து திரிந்தது கடோத்கஜன் தேர். துரியோதனன் அப்போது பெரும் பலமாய் எண்ணியிருந்த ஒரு யானைப் படையையே சிதறடித்து, அவை திரும்பி கவுரவ சேனையையே ஹதம் செய்யும் நிலைமையை உருவாக்கிய பின், மீண்டும் தேரேறி வில்லெடுத்தான் கடோத்கஜன். அவன் நாணிமுத்த திறன், அம்பெடுத்த லாவகம், குறியணைத்த தீவிரம், இலக்கடித்த வேகமெல்லாம் கண்ட அர்ச்சுனனைத் திகைத்துப்போகச் செய்துவிட்டன. வனம் என் இடம்! வேட்டை என் தொழில் தொழிலே என் வித்தையுமாகும்! நீ என் திறமையை உன்னதற்குச் சமனாய்க் கொள்வது சிரிப்பு என்று சொன்ன ஏகலைவன் கடோத்கஜனில் அவனுக்குத் தெரிந்தான். அப்படியே வாடிப் போனான்.
கடோத்கஜனது சர மழையில் கவுரவ சேனை சிதறி புறுமுதுகிட்டு ஒடிக்கொண்டிருந்தது. காலனாய்க் களத்தில் நின்றிருந்தான் அவன். அவனை ஜெயம் தஞ்சமடைந்து கொண்டிருந்தது. அதைத் தடுக்குமாற்றல் யாருக்கும் இல்லையென்றிருந்தது. 'கொல்லுங்கள் அந்தக் காட்டானை!' எனறு கத்தினான் துரியோதனன்.
கடோத்கஜனின் பீம ருத்ரம் கண்டு பாண்டவ சேனை கூவிப் பெருமகிழ்ச்சி காட்டியது. மதியத்துக்கிடையில் அதை வெட்டி வீழ்த்தியது போன்ற செய்தி பரவிற்று.
கடோத்கஜன் இறந்தானென்று தப்பிப்பிழைத்த கவுரவ சேனை களிப்படைந்தது.
வெண்கொடி பிடித்து களநிலை கண்டுகொண்டிருந்த சஞ்சயனே கண்ட காட்சியில் மனம் சிதிலப்பட்டுப் போனான்.
ந்ெதுகொண்டிருந்த கள நிலைவரங்கள் மற்றவரினது பிடிவாதம், மூர்க்கம், தீர்க்க தரிசனமின்மை ஆகியவற்றின் வெளிப்பாடுகளாக காந்தாரி, திருதராஷ்டிரன் இருவருமே எண்ணியிருந்த வகையில் அவர்களுள் பேச்சறுந்து நாட்களாகியிருந்தன. திருதராஷ்டிரனது எட்டத்துத் தனிமைக் குள் சென்று காந்தாரி முடங்கவாரம்பித்திருந்தாள்.
கதா காலம்
130

தேவகாந்தன்
சூரியன் இரத்த நிறம் பெற்று அடிவானில் அழுந்திக் கொண்டிருந்தது. சிறிதுநேரத்தில் இருளும் மெல்ல விழுந்தது. சஞ்சயன் வருகிற நேரமது.
வழக்கம்போல் தூரத்திலேயே, பறந்துவந்த புரவியின் குளம்படிகள் அரண்மனைக்குக் கேட்டன. பெண்கள் கூட்டமாகவே பெரும்பாலும் ஆகிவிட்டிருந்த அத்தினாபுரத்து அரண்மனை அது கேட்டுச் சிலிர்த்தது. காந்தாரியும் அசுவ குளம்பொலி கேட்டாள். மனம் பரபரக்க, பணிப் பெண்ணின் கையை இறுகப் பற்றினாள். கடந்த சில நாள்களாக துக்கம் துக்கமாயே செய்திகள் வந்துகொண்டிருந்தன. அபிமன்யு மட்டும் தான் பாண்டவர் பக்கத்தில் விழுந்த பெரும் போர்ப் பலி. மறுநாள் அதற்குக் காரணனான ஜயத்ரதனை அர்ச்சுனன் கொன்றதோடு, அபிமன்யு வதத்தில் மகிழ்ச்சிப்பட எதுவும் மிச்சமில்லாமல் போய்விட்டது காந்தாரிக்கு.
உயிருடன் யுதிஷ்டிரனைப் பிடிப்பேனென்று படைத் தலைமை யேற்ற நாளில் துரோணன்துரியோதனனுக்குக் கொடுத்த வாக்குறுதி கடந்த நான்கு நாட்களிலுமே நிறைவேற்றப்படவில்லை. வீழ்ந்த பீஷ்மன் இன்னும் உத்தராயணம் காத்துக் கிடந்தான் அம்புப் படுக்கையில், அவனது வீழ்ச்சி அவளுக்குப் பெரிய பாதிப்பு. ஆனாலும் அதைக்கூட அவள் தாங்கியது துரோண சபதம் கேட்டுத்தான். அழிவின் அவதாரமாய் துரோணன் பாண்டவ சைன்யத்தை ஹதம் செய்வதை சஞ்சயன் மாறி சஞ்சயனாய் வந்துரைப்பது கேட்டபோது, பீஷ்மன் வீழ்ந்தது நல்லது என்றுகூட ஓரிரு முறை அவள் நினைத்துச் சங்கடத்துடன் சந்தோஷப்பட்டாள். கர்ணன் களம் புகுந்தும் பெரிதாய் எதுவும் நடக்கவில்லையென்பது அவளுக்கு ஆச்சரிய மாக இருந்தது. அவன் வல்லபத்தை ஒன்றுக்குப் பத்தாய்த் துரியோதனன் நினைத்திருந்துவிட்டானோ என்றுகூட அவளுக்கு எண்ணம் வந்தது.
அவள் திருதராஷ்டிரன் அமர்ந்திருந்த கூடம் அடைய, சஞ்சயன் வந்து சேர்ந்தான். அவன் காலடியே கனத்த சேதியைத் தெரிவித்தது. அது துக்கமான செய்தியே என்பதையும் அவளால் உணர முடிந்தது. தன் மக்களில் பாதிக்கு மேல் அவள் இழந்தது அறிந்து விட்டாள். இனியும் சோக செய்திகளை அவளால் தாங்க முடியாது. கண்களை மறைத்ததுபோல் செவிகளையும் அடைத்திருக்கலாமோவென அவள் அப்போது எண்ணி
fo.
சஞ்சயன் நிகழ்வுகள் கூறத் தொடங்கினான்: ‘ராசாவே, துக்கம் ஒருபுறமெனில் சந்தோஷம் மறுபுறமாய்ச் சம உணர்வுகளாகவே உலக நிகழ்வுகள் சுழற்றிவிடப்படுகின்றனவென நான் பெரியோர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இன்று விசேஷமான இரண்டு மரணங்களிலும் இந்த
கத காலம்
131

Page 76
தேவகாந்தன்
உண்மையைக் கண்டேன். மதியத்தின் முன்னே கடோத்கஜன் மாண்டான். மாலை முடியுமுன் துரோணர் மறைந்தார்."
துரோணரா. கேட்டான் திருதராஷ்டிரன் தன் குரலற்ற குரலால்,
ஆம், ராசாவே."
'கடோத்கஜ வதத்தைப் புரிந்தது யார்
"அங்க தேசத்து அரசர் கர்ணன் தன் சக்தியாயுதத்தைச் செலுத்தி கடோத்கஜனை மாய்த்தார்."
இடிந்தாள் காந்தாரி.
அர்ச்சுனனைக் கொல்வதற்கென்றே கர்ணன் வைத்திருந்த குறிதவறாச் சக்தியாயுதம் பீம புத்திரனை மாய்க்கப் பயன்பட்டதில், அர்ச்சுனன் மீதான குறியின் கொல்விசை குறைந்ததாய் எண்ணினாள் அவள். அத்துடன் துரோணரும் மாண்டு போனார். இனி கவுரவ படைத் தலைமை ஏற்பது யார். கர்ணனா. சக்தியாயுதத்தை இழந்துள்ளவன் இனி என்ன போய்ச் செய்யப் போகிறான்.
அவள் தெளிந்தபோது போர்க் கள விவரிப்பை முடித்துக்கொண்டு சஞ்சயன் போய்க்கொண்டிருந்தான்.
மறுநாள் நடைபெறவிருந்த குருக்ஷேத்திரத்தின் பதினெட்டாம் நாள் போர் பெரும்பாலும் வெற்றி-தோல்வியை நிச்சயமாய்த் தீர்த்துவைத்து விடுமென்று படைமுகாமெங்கும் அன்றைய இரவில் பேச்சாகவிருந்தது. கர்ணன் மரணம் பெரும் வீழ்ச்சி கவுரவர்க்கு. தோல்வியின் வரிகள் கவுரவரில் தீர்க்கமாய் எழுதப்பட்டனபோல் இருந்தது. அது பாண்டவர்க்குப் பெரு இகழ்ச்சியின் நாளும். ஆயுதங்கள் கைவிட்டு புதைந்த தனது தேரின் சக்கரங்களைக் கிளப்ப முயன்றுகொண்டிருக்கையில் அர்ச்சுனன் அவனைக் கொன்றான். இது எவர் கவனத்திலும் இல்லை. பாண்டவர் வெற்றி பெறப்போகும் களிப்பில், இனி நம்பிக்கைக்குரியவர் யாரும் இல்லைப் போல் கவுரவ சேனையில் கலக்கம். துரியோதனன்
கதா காலம்
132

தேவகாந்தன்
கலக்கத்தின் எல்லை கடந்து போயிருந்தான். இனிமேல் போர் மீதி கவுரவ அணியின் மரணங்களில் முடிவுறுவது தவிர வேறு வழியில்லை.
பதினெட்டு அக்குரோணி சேனை போரில் ஈடுபடுத்தப்பட்டதாய்க் கதை நிலவியது. ஏறக்குறைய நாற்பது லட்சம் உருப்படிகள். ஒரு மடங்கு தேர், ஒரு மடங்கு யானை, மூன்று மடங்கு குதிரை, அய்ந்து மடங்கு காலாள் என்று இதில் கணக்கு தனித்தனியாக எடுக்கலாம். முதல் நாள் போர் துவங்கவிருந்த வேளை ஏழு அக்குரோணி கொண்டிருந்த பாண்டவ அணியில் நின்றிருந்த அர்ச்சுனன் பதினொரு அக்குரோணி கொண்டிருந்த கவுரவ சேனையின் பிரமாண்டத்தைக் கண்டு கலங்கிப்போனானென ஒரு முது சூதன் விரித்த கதையும் இந் நிலவுலகில் தொகுக்கப்படாமல் காற்றில் திரிந்து கொண்டிருக்கிறது. ஆசான், மதிப்பு மிக்கோர், உறவினர்க்கெதிராக யுத்தம் செய்ய மறுத்து அர்ச்சுனன் தேரைவிட்டிறங்கினானென்றும், அவனைக் கீதையுரைத்து கண்ணன் கருமத்துக்கு மறுபடி தயாராக்கினா னென்றும் வியாஸ் தொகுப்பு தெரிவிக்கிறதாம் இப்போது. தொகுப் பாசிரியன் பார்வையில் கதை தொகுக்கப்பெறுதல் தவிர்க்கப்பட முடியாதது. சூதன் அங்கேயெல்லாம் செல்லமாட்டான். வழிவழியாய் வந்த கதையும் நோக்கமும் முடிவுமே அவன் குறி. ஆனால் அவன் கதையும் மாறும். சூதனின் தந்தை சொன்னதுபோல் சூதன் கதை விரிக்கமாட்டான். அவன் தன் அனுபவ பயணத்தினூடான வளர்ச்சியைக் கொண்டேயிருக்கிறான்.
பதினேழாம் நாள் போருடன் பெரும் பகுதி கவுரவப் படை அழிந்து போனது. அதே விகிதத்தில் அழிவு பாண்டவர் பகுதியிலும். பதினெட்டாம் நாள், இரு சிற்றரசர் யுத்தம் போலவே தோற்றம் காட்டும். அர்ச்சுனன், நகுலன், சகாதேவனாகியோர் சபதம் முடித்து நிறைவுற்றிருந்தனர். பீம சபதமும், துரோபதி சபதமும் இன்னும் நிறைவேறவிருந்தன. பீம சபத நிறைவேற்றத்தில் துரோபதி சபதமும் நிறைவேற முடியும். பதினெட்டாம் நாள் பீமனுக்கானது.
காலையில் சல்லியன் தலைமையில் மீதிக் கவுரவப் படை அணிவகுத்து நின்றது. எதிரே பாண்டவ சைன்யம். யுத்தத்தை முடித்து வைக்கும் மாறாச் சேனாதிபதியாய் திருஷ்டத்யும்னன் நின்றிருக்கிறான். கவுரவ சேனாதி பதியருகே நின்ற அசுவத்தாமன் கண்கள் கதகதவெனச் சிவக்க, அனல் மூச்சு விட்டான். துரோண மரணத்தை விளைத்தவன் அவன். இரட்டைக் கருவில் துரோபதியுடன் முன்னால் பிறந்தவன். துரோண மரணத்தைக் குறியாக்கும் படி வளர்க்கப்பட்டவன். அசுவத்தாமாவென்ற யுத்த கஜமொன்றைக் கொன்ற பீமன் அசுவத்தாமனைக் கொன்றேன்! எனப் பெரும் தொனி
கதா காலம் 133

Page 77
தேவகாந்தன்
யெடுத்துக் கூவுவது கேட்டதுரோணன், தன் வீறெல்லாமிழந்து சட்டெனத் தளர்ந்தான். பிறகு எதிரே யுதிஷ்டிரன் இருப்பது கண்டு, அது மெய்யா? எனக் கேட்க, அது மெய்தான்! எனக் கூசாமல் பொய் சொன்னான் அவன். துரோணன் கையிலிருந்து வில் நழுவி விழுந்தது. புத்திர பாசம் மட்டுமில்லை, விதியும் தன் வழி இழுக்க, துரோணன் எல்லாமிழந்த நிர்க்கதியில் அப்படியே தேர்த் தட்டில் டொத்தென அமர்ந்தான். தன் தந்தையின் அவமானத்துக்குப் பழி வாங்கக் காத்திருந்த திருஷ்டத்யும்னன் வாளெடுத்துக்கொண்டு அவன் தேரில் தாவி துரோணனை அந்த இடத்திலேயே வெட்டிக் கொன்றான். அவன்தான் அப்போது அசுவத்தாமன் முன்னால் நின்றுகொண்டிருந்தான். அசுவத்தாமன் கரம் வில்-அம்பு எடுத்து நாணிமுக்கப் பரபரத்தது. அவன் யுத்தம் துவங்கக் காத்திருந்தான்.
போர் ஆரம்பமாயிற்று.
மதியத்தின் முன் சல்லியன் மாண்டான்.
சேனாதிபதியற்ற நிலையிலும் தொடர்ந்த யுத்தத்தில் கவுரவர் பக்கத்தில் மாலைக்கு முன்துச்சாதனன் மாண்டான். அவனை கதாயுதத்தால் அடித்தடித்தே சிதறவைத்தான் பீமன். நெறியில்லை. ! யுத்த நெறியில்லை. ! என்று கவுரவ படை கூவியது. பீமன் மதம் பிடித்தவன் போலிருந்தான். நொருங்கிய துச்சாதனன் உடலில் விழுந்து அவன் இரத்தத்தைக் குடித்தான். மேனியெங்கும் பூசி வெறியாடினான்.
அப்போது பெண்ணொருத்தி பாண்டவ பாசறைப் பக்கமிருந்த கூடாரத்திலிருந்து ஒரு ராக்ஷதப் பெண் பறவை போல் பறந்துவந்து துச்சாதனனின் உடலருகே வீழ்ந்ததைப் பலர் பார்த்தார்கள். வழியும் அவன் செவ்விரத்தம் கைகளில் தோய்த்து நெய்போல் அதைப் பதனமாய் தன் விரி கூந்தலில் பூசி, நிமிர்ந்து நின்று சுற்றிச் சுற்றி முடிந்தபோதுதான் துரோபதியென்று தெரிந்தது.
ஆயிற்று. துரோபதி சபதம் முடித்தாயிற்று.
இனி, பீம சபதம் பூரணப்பட துரியோதன வதம் நிகழ வேண்டும். வெறிகொண்டிருந்த பீமன் திரும்பி தன் அழல் விழி சுழலவிட்டான் களத்தில், துரியோதனன் எங்கேயென்று தேடுவது போலிருந்தது அது.
துரியோதனன் இல்லை.
கிருபன், கிருதவர்மன், அசுவத்தாமன் யாருமில்லை.
கதா காலம்
34

தேவகாந்தன்
கவுரவ சேனை பாதி களம்விட்டு ஒடியிருந்தது. மீதி நிராயுதபாணியாய் நின்றிருந்தது.
இனி யுத்தமில்லை.
ஆனாலும் துரியோதன வதம் நிகழ்ந்தாக வேண்டும்.
சிடடாரமடைந்த துரோபதி துரியோதன வதம் நடைபெற்றது கேட்க இன்னும் உக்கிரமடங்காது காத்திருந்தாள். மாலையாகிக் கொண்டிருந்தது. அந்தளவில் உபப்பிலாவியத்திலிருந்து அவள் பிள்ளைகள் வந்து சேர்ந்தார்கள். அவர்களை அணைக்கவோ, அழைக்கவோ, பேசவோ, காணவோதானும் செய்யாமல் எதுவும் கவனமிழந்தவளாய் கதகதவென ரத்த நாற்றம் வீச வெய்துயிர்த்தபடி பாசறை நிலத்திலிருந்த விரிப்பொன்றில் விழுந்து கிடந்திருந்தாள்.
பாண்டவ சேனா வீரர்கள் நாலா திசைகளும் சென்று தேடியிருந்தனர். குருக்ஷேத்திரத்துக்குச் சூழவிருந்த சிறு காடு, சிறுமலைப் பரப்பென்று எங்கு தேடியும் துரியோதனன் அகப்படாது மாயத்தில் போல் மறைந்து போயிருந்தான்.
இருள் விழு முன் வேடுவர் சிலர் வந்து துரியோதனன் ஒளிந்திருக்கு மிடம் தெரிவித்தனர். பாண்டவர் உடனே குறிப்பிடம் விரைந்தனர். அங்கேயுள்ள தடாகத்துள் அசுவ குளம்பொலிகள் கேட்டுப்போலும் அப்போது தான்துரியோதனன் நீருள் அமுங்கி மறைந்து கொண்டிருந்தான்.
அவன் கண்டுபிடிக்கப்படுவது இல்லை முக்கியம். அவன் போர் செய்யத் தயாராகவும் வேண்டும். அந்த யுத்த நெறிகள் பாண்டவர்களுக்கு அவசியமில்லை. ஆனால் ஒரு தனிப் போரில் அந்த நெறிமுறை மீறல்கள் வெகுவானவர்களின் வெகுகவனத்தைக் கவர்ந்துவிடும். கதாயுதம் பீமனின் தோளில் கிடந்து உறுமியது. பீமன் அவனை வெளிவரச் செய்ய செய்த நிந்தனையில் ஆக்ரோஷமாய்க் கிளர்ந்தெழுந்தான் துரியோதனன், நீர் மட்டத்துக்கு மேலாய். கதாயுத தனிப்போரின் முறைமைகளை அனுசரித்து பீமனின் உயிர்நிலை கேட்டான் துரியோதனன். பீமன், 'பிடரி என்றான்.
as;25t காலம் 135

Page 78
தேவகாந்தன்
அவ்வாறே பீமன் கேட்டதற்கு, 'பழு' என்றான் துரியோதனன். அது கவனமாகிய கிருஷ்ணன் துரியோதனனின் உயிர்நிலை நாபிக்குக் கீழேயென்று சைகையில் தெரிவித்தான். பீமனுக்கு இரண்டு காரணங் களுக்காய்த் துரியோதனன் பெருந்தொடைகளைப் பிளக்க வேண்டி ஏற்பட்டி ருந்தது. அவன் தட்டிக் காட்டி துரோபதியை அமரச் சொன்ன இடமும், உயிர் நிலையின் தரிப்பும் அவை.
பீமனுக்கும் துரியோதனனுக்குமிடையே பயங்கரமான சண்டை நடந்தது. இறுதியில் தொடைகளைக் குறிப்பாய்த் தாக்கி அவற்றை நொருக்கினான் பீமன். அலறி மண்ணில் சாய்ந்தான்துரியோதனன். பீமனின் ஆவேசம் அப்போதும் தணியவில்லை. அவன் உடலில் ஏறிக் கூத்தாடினான் தலையைக் காலால் உதைத்தான். துரியோதனன் மூர்ச்சையானான்.
பீமன் விரைந்து துரோபதியின் கூடாரம் சென்று, வாசலில் நின்று கூவினான். துரோபதி, சபதம் முடித்து விட்டேன். துரியோதனனைத் தொடைகள் நொருக்கிக் கொன்றாயிற்று."
கதா காலம்
136

தேவகாந்தன்
பத்து
இலங்கை வடபகுதியில் தென்மராட்சி (நவீனகாலம்)
கிதை சொல்லி தீவிரங்களிலிருந்து புனைந்து கொண்டி ருந்த தன் பிரதியாக்கத்தின் இறுதிப் பகுதிக்குள் நுழைந்திருந்தான். பதினெட்டாம் நாள் துரியோதன வதத்தோடு பெரும்பாலும் மகாபாரதக் கதை முடிந்து விட்டதாக நம்பியிருந்த தன் நண்பனுக்கு போதை யேறிய ஒருநாள் அதன் பின்னிகழ்வுகளை அவன் அதிசயம் சொட்டச் சொட்ட விவரித்திருந்தான். நண்பன், இவ்வளவும் பாரதத்திலே சொல்லப்பட்டி ருக்கிறதா? என்று கேட்டதற்கு, அதன் ஊடுகளில் சொல்லாமல் விடப்பட்டனவற்றின் தொகுப்பே இதுவெனச் சொன்னான் இவன். நண்பன் சிரித்து விட்டுப் போனான். இவன் சீறி, வில்லியானும் நீயும் வேறில்லை! அவன் பத்துப் பருவங்களோடேயே பாரதத்தை முடித்தான்! யுத்தத்துக்குப் பிறகுதான் எனக்குப் பாரதமே துவங்குகிறது! என்று அகப்பட்டது எதையோ எடுத்தெறிந்து கத்தினான்.
மூன்றாம் நாள் வெகு சிந்தனை வயப்பட்டிருந்து தமிழ்ப் புலம் அதுவரை அறியாதிருந்த 'சூத பாரதம்' எழுதத் துவங்கினான். மாலையில் கள் குடியும், காலையில் எழுத்தும், மதியத்தில் உணவு தயாரிப்புமாய் அவன்
கதா காலம்
137

Page 79
தீவிரம் கொண்டிருந்தது கண்டு, பக்கத்து வீட்டு விதவை செல்லப்பாக்கியம் வந்து சட்டி பானை கழுவி உதவிசெய்து கொடுத்தாள். பிரதியுபகாரமாய், இருட்டிய பிறகு வரும் அவளுக்கு மண்ணெண்ணெய் விளக்கைக் கொளுத்தி வைத்துக்கொண்டு நாளாந்தம் எழுதியவற்றில் முக்கியமான பகுதிகளை அவன் வாசித்துக் காட்டினான். அவள் கதை கேட்க ஆர்வமோடு வந்து, அது தணிந்து திருப்தியோடு போய்க்கொண்டிருந்தாள். நண்பன் ஒருநாள் வந்தபோது அவன் சூத பாரதம் பற்றி தெரிவிக்கக்கூடவில்லை.
அன்று அதன் இறுதி அத்தியாயத்துள் கதை சொல்லி பிரவேசித்திருந்தான்.
கதை விரிந்தது:
இருள் கவிந்து வரும் ஒரு நேரத்தில் துரியோதன வதம் நிகழ்ந்தது. பாண்டவர்கள் இறுதியாய் இயற்றிய வலிய சூதின் மரணம் அது. எப்படியோ அவர்களது வெற்றி பூரணமானது. இங்கிருந்துதான் மகா நிகழ்வுகளின் உடைப்பு நிகழ்கிறது.
போர் நல்லதில்லையென்பது அதிலிருந்து பிரியும் இரண்டு கிளைகளின் தன் அர்த்தங்களை அடக்குகிறது. மனித அழிவுகள், ஊனங்கள், மாறா வடுவாய் விழும் இழப்பின் சோகங்களாய் ஒரு கிளை அடையாளமாகிறது. மறு கிளை குதுகளும், அநீதிகளும், அக்கிரமங்களும் போரின் தர்மங்களாய் நிலைநிறுத்தப்படுவதில் அடைய்ாளமாகிறது. யுகம், வேறு பிறக்கிறதென்பது வேறெப்படியும் நிகழ்ந்து விடுவதில்லை. அதன் வாழ்முறைப் பெறுமானங்களின் மாற்றத்திலேயே அது நிகழ்வதாய்க் கொள்ள வேண்டும்.
பதினெட்டாம் நாளின் போர் பகலோடு மட்டும் முடியவில்லை. அதன் இறுதியும், முக்கியமானதுமான பாதிப்பு இரவிலேதான் நடக்கவிருந்தது. - எல்லார் நெஞ்சின் நெருப்புகளும் அடங்கிவிட்டிருந்தன. துரோபதியும்
தன் வெறியடங்கி குளத்தில் சென்று நீராடி புனித அம்மனாகி விட்டாள். பிள்ளைகளுடனிருந்து அன்பு மொழிகள் பேசி மகிழ்ந்துகொண்டிருந்தாள்.
கதா காலம்
138

தேவகாந்தன்
போரின் முடிவு சஞ்சயன்களால் திருதராஷ்டிரனிடம் கொண்டு சேர்க்கப்பட்டிருந்தன. அத்தினாபுர அரண்மனை சோகத்தின் காடாயிற்று. பானுமதி விழுந்து கதறினாள். பிள்ளைகள் அழுதன. காந்தாரி தான் எடுத்த நெருப்பை விழுங்கி எரிந்து கொண்டிருந்தாள். ஆனால் அசுவத்தாமனின் மனத்தில் அக்கினி சுவாலித்துக்கொண்டிருந்தது. தர்மமற்ற வழிகளில் அடைந்த பாண்டவ வெற்றியை அவனால் ஒப்புக்கொண்டுவிட முடியாது. அந்தணனாய் ஜனனம் கண்டு, கூடித்திரியனாய் வளர்க்கப்பட்டிருந்த அவனிடம் அந்த இரு வர்ணக் குணாம்சங்களுமே இருந்தன. இப்படியான வர்களுக்கு மாறுகிற வர்ணத்தின் மேலெழும் தாஸ புத்தியின் செயற் பாட்டம் சங்கள், ஈனர்களிடத்தில் கூட உண்டாகி விடுவதில்லை. அந்த தாஸ் புத்தியே அவனை ஒரு பெரு நெருப்பாய் மூள உந்திக் கொண்டிருந்தது. அவன் அதர்மத்தின் மூலமான ஜெயத்தை அதர்ம வழியிலேயே அழிக்க வன்மம் கொண்டான்.
ஒரு காட்டில் ஒடி மறைந்திருந்த அசுவத்தாமன் தன் திட்டத்தை கிருபன், கிருதவர்மன் இருவருக்கும் விபரித்தான். பகல் சக்தியெனில் இரவும் சக்தியேயென்று வாதித்தான். திட்டத்தை அன்றைய இரவினில் நடத்திச் செல்லாவிட்டால் அது கூகைபோல் பகலினில் குருடுபட்டு விடும் என்றான். மகாபாரதப் போர் முடியவில்லையென அறைந்தான். அதை முடித்து வைக்கும் பொறுப்பு கவுரவருடனோ பாண்டவருடனோ நேரடித் தொடர்பற்ற தங்கள் மூவர் மீதும் காலம் சுமத்தியுள்ளதை எடுத்துரைத்தான். கிருபனிடமிருந்துகூட பெரிதான மறுப்பெழவில்லை. அவன் சேனாதீபதியம் செய்ய சல்லிய மரணத்தின் பின் துரியோதனனால் பொறுப்பு தத்தம் செய்யப்பட்டிருப்பவன். கவுரவ படையாளியாய் இருக்கும்வரை கிருபனுக்கு அவன் சொற்கீழ்ப்படியும் கடப்பாடுண்டு. கிருத வர்மனுக்கும் அதே கடப்பாடுதான்.
அவர்கள் காடுகளிடை மறைந்து மறைந்து நடந்து நள்ளிரவாகிற நேரத்தில் பாண்டவர் படுத்துறங்கும் பாசறையை அடைந்தனர். பாசறைப் பகுதியில் அதிசயமாய்க் காவல் வலு குறைந்திருந்தது. மூவர் கைகளிலும் உருவிய வாட்கள். அசுவத்தாமன் கையில் சிறந்த போராயுதக் கலைஞன் உருத்திரன் வார்த்த வாள். ஒருபோது சில உலோகங்களின் அற்புதமான சேர்க்கையில் அதுவரை அறியப்படாத வலுகொண்ட ஒர் உலோகம் அவனால் கண்டடையப்பட்டிருந்தது. அவ்வுலோகத்தில் ஒரு வினைத் திறன் மிக்க வாளொன்றையும், மார்புக் கவசமொன்றையும் உருத்திரன் உருவாக்கினான். கவசத்தைத் துரோணருக்கும், வாளை அசுவத்தாமனுக்கும் வழங்கினான். எத்தகு கூரிய அம்பினாலும் பிளக்கப்பட முடியாததாய்க்
கதா காலம் 139

Page 80
தேவகாந்தன்
கவசம் இருந்தது போல், எதனையும் நறுக்கித் தள்ளும் கூர் மழுங்காத் திறனுடனிருந்தது வாள். அப்போது அசுவத்தாமன் கையிலிருந்தது உருத்திரனின் வாள்தான்.
முன்னிரவில் நடந்த வெற்றிவிழாக் கொண்டாட்டத்தில் போதை யேறிய காவலர் ஆழ்ந்த உறக்கத்தில். களிகொண்ட படையினர் விட்ட அவ்வப்போதைய கூச்சல் அரவங்களை விழுங்கிவிடும்படிக்கிருந்தன. பாசறைக்குள் இருள் உறைந்திருந்தது. எனினும் அதுவே தன்னுள் அடங்கியிருந்த மிகச் சிறு வெளிச்சத்தை வெளிவிட்டுக் கொண்டுமிருந்தது. அசுவத்தாமன் வர்ள் காற்றில் ஏறி இறங்கியது. காவலர்களின் எலும்புகள் பிளவுண்ட சப்தமும் எழவில்லை. அவர்கள் உள்ளே நுழைந்தனர். அசுவத்தாமன் பார்வையில் முதல் பட்டது திருஷ்டத்யும்னன்தான். ஆயுதத்தை நழுவவிட்டு தேர்த் தட்டில் உறைந்தமர்ந்திருந்த துரோணனை ஈவு இரக்கமின்றித்தானே கொன்றான். இதுவும் திருஷ்டத்யும்னனின் துரோண நிலையே. அசுவத்தாமன் தயங்கவில்லை. உருத்திர வாள் நித்திரை கலையுமுன் உயிரை வகிர்ந்தது. பாண்டவர்கள் அங்கேயில்லையென்பது தெரிந்த கணத்தில் உள்ளே களேபரத்தின் அறிகுறிகள், பஞ்பாண்டவராய் அவர்களின் புதல்வர்கள் எழுந்து தடுமாறினர். பாலகர்களில்லையெனினும் அவர்கள் யுத்த வாளிகளில்லை. ஆனாலும் அதர்மம் விளைக்க வந்தவன் அசுவத்தாமன். மகாபாரதப் போரின் முடிவு அந்த இரவில் திசைமாறியாக வேண்டும். அசுவத்தாமனின் உத்தரவு பெற்றதுபோல் வீசித் தள்ளியது அவன் கை வாள். அவனுக்குச் சளைக்காத தீர்க்கத்தில் மற்றைய இருவரும். பாசறையுள் இரத்த நதி பெருக்கெடுத்தது.
இனி மீதமில்லையென்ற நிலையில் காடு நோக்கி ஓடினான் அசுவத்தாமன். பின்னால் அவன் சுவடிழந்து கிருபனும், கிருதவர்மனும்,
இரவில் வழமைபோல் குருக்ஷேத்திர கள பூமி குறைந்தளவில் மயானமாகியிருந்தது. ஒரங்களில், இறந்தோரின் உடல்களைக் குவித்து ஆங்காங்கே தீ மூட்டியிருந்தார்கள். முன்னிரவில் எழுப்பியிருந்ததனால் சிதைத் தீக்கள் உள்ளடங்கியும் அணைந்தும் விட்டிருந்தன. வீசிய காற்றுக்கு மறுபடி சில சிதைகள் தீப்பிடித்தெரிந்தன. தீகளை காற்று தன் வளத்தில் பாசறைகள் நோக்கி எடுத்துச் சென்று கொண்டிருந்தது.
விடிகிற தருணத்தில் பாசறைகள் தீப்பிடித்தன.
கதா காலம்
140

தேவகாந்தன்
(முழுமையான அழிப்பினை ஸ்தாபித்துவிட்டு வந்த அந்த விடியல் மாளாத ஓர் அழுகையின் ஒலியைத் தன்னகத்தே கொண்டிருந்தது. கூடித்திரியையாய் வென்று, தாயாய்த் தோற்றுப்போன துரோபதி துடித்துக்கொண்டிருந்தாள். குந்தி நிர்சலனமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளால் துரோபதியைத் தேற்றுவதற்கு முனையவும் முடியவில்லை. அவள் தன் ஆறு மக்களில் ஒருவனை மட்டுமே இழந்திருப்பினும், அவனுக்காய் ஒரு சொட்டுக் கண்ணிரைத்தானும் உகுத்து அழமுடியாத சோகத்தால் அவள் தன்னுள்ளேயே துடித்துக் கொண்டிருந்தாள்.
அத்தினாபுரத்தில், மகாயுத்தத்தில் சம்பந்தப்பட்ட தேசங்களி லெல்லாம் எழுந்திருந்த பெரும் சோகத்தின் தலைமகள் அவள். ஏன், காந்தாரி இல்லையா. நூறாய் வேண்டுமென்ற திருதராஷ்டிர இச்சைக்காய் நிறையப் பிள்ளைகள் பெற்றவள் அவள். ஒன்று, துச்சளை தவிர மற்ற தெல்லாம் ஆண்கள். ஒரு பிள்ளையைக்கூட பீமன் உயிரோடு விடவில்லை. அவள் சோகமும் பெரிதுதான்.
யுத்தம் முடிந்து வந்த அந்த முதல்நாள் போரில் இறந்தோருக்கான பிரார்த்தார்ப்பண நாளாகும். கங்கைக் கரை நெடுக, பதி இழந்தவர்களாய், பிள்ளைகளை, தந்தையரை, சகோதரரை இழந்தவர்களாய் குரலறுந்தும் கண்ணிர் அறா ஸ்திரீ கூட்டம் கூடிக்கொண்டிருந்தது.
யுத்தத்தில் சோகமும் இழப்புகளும் அறியாதவளல்ல குந்தி. இருந்தாலும் அப்படி ஒரு சோகத்தையும், இழப்புகளையும் அவள் எதிர் பார்த்ததேயில்லை. எப்படி, யாரால் விளைந்தன அத்தனை சோகமும், அத்தனை இழப்பும். குந்தி அதிர்வின் அலைகளில் திக்குமுக்காடிக் கொண்டிருந்தாள்.
மேலும் விடிந்தது.
குந்தி சுதாரித்து மெதுவாய் கீழே வீழ்ந்து கிடந்த துரோபதியின் தோள்களில் கை வைத்தாள். துக்கத்தில் தொட்டதுபோல் நடுங்கினாள். பிறகு, நீ சிறிது தெளிந்து எழவேண்டும். தகன காரியங்களையெல்லாம் ஆண்கள் முடித்திருப்பார்கள். இனி இறந்தோருக்கான சிரார்த்தார்ப்பணம் செய்யவிருக்கிறது. எழும்பு. அவ்வளவு பிள்ளைகளைப் பறிகொடுத்த காந்தாரிகூட வந்துவிடப் போகிறாள்' என்றாள் மெல்ல.
துரோபதி திடுக்கிட்டது போல நிமிர்ந்தாள். குந்தியை நோக்கிப்
பார்வையை உயர்த்தினாள். நான் அய்ந்து குமாரர்களைத்தானே இழந்தேன்
ši காலம்
14

Page 81
தேவகாந்தன்
என்கிறாயா? எனக் கண்கள் வினாவெழுப்பின. குந்தி அவள் தீக்ஷண்யம் தாங்க முடியாமல் சிரம் கவிழ, அவள் தோற்றவள். தோல்வியில் அவளது பிள்ளைகளின் மரணம் எழுதியிருந்தது. நான் வென்றவள். என் பிள்ளை களுக்கு மரணம் எப்படி நேர முடியும்" என்றாள் துரோபதி. 'வெற்றியே இல்லாமல் ஆகிவிட்டதே, அத்தை. எப்படி இது நேர்ந்தது. வெற்றி மயக்கத்தில் பாண்டவர் தம் நிலை மறந்ததே காரணமா. அல்லது அந்தப் போலி வேஷதாரி கிருஷ்ணனின் தந்திரப் பிழைகளால் இது நிகழ்ந்ததா. அல்லது இறுதி நிமிஷத்தில் பாண்டவரைக் காத்து, அவர்கள் குமாரர்களைப் பலிகொடுத்தது அவனது ராஜதந்திரத் தோல்வியின் அடையாளமா. அந்த அந்தணப் பிரமச்சாரி அப்படியொரு நீதிவானாயே தென்பட்டுக் கொண்டி ருந்தான். பின்னால் களத்திலிருந்து அவன் படிவறந்தபோது மனதுக்குள் ஒரு சஞ்சலம் விழுந்து அறுத்ததுதான். அதைக் காந்தாரியையும், திருதராஷ்டி ர ையும் எதிர்கொள்ளும் கலக்கத்தோடு குழம்பிக் கொண்டிருந்து விட்டேன். இப்போது பெற்ற அய்ந்தையுமே பரிகொடுத்துவிட்டு இருக்கிறேனே. அவர்களைவிடவும் சோகதாரி நானல்லவா. சொல் அத்தை, ஏன் இப்படி ஆயிற்று."
குந்தியால் எதுவும் சொல்ல முடியவில்லை.
கூடித்திரியையானால் என்ன, இழப்பு எவரையுமே வதைக்கிறதுதான்.
குந்தியின் சிந்தனை வேறொரு முனையில் திரும்பியது. அத்தனை அழிவுகளும் அரசியல் சூதிகளான சத்தியவதியாலும் காந்தாரியாலும் தன்னாலுமேயென எண்ணியிருந்தாள் அவள். துரோபதியும் தன் சபதத்துக்காய் காய் நகர்த்தியிருக்கிறாள்தான். நான் வென்றவள் என அவள் சொல்லியதில் எல்லாம் வெளியாகி விட்டிருக்கிறது.
துரோபதி தோற்றாளெனில், காந்தாரி தோற்றாளெனில். வென்றது யார். குந்தியா.
துரோபதி மீண்டும் சரிந்து கிடக்கவில்லை. ஒடிவிட்ட அசுவத்தா மனைச் சுற்றியே அவள் நினைவு படர்ந்து கொண்டிருந்தது.
ஒருவன் தன்னை அறியும் கணத்திலிருந்து மரணம் அவனுள் உறையத் துவங்குகிறது. அன்றிலிருந்து அவன் மரணத்தோடேயே கூடவாழ்கிறான். அதை வெல்வதே வீரமெனப்பட்ட காலம் அது. அது இகத்தில் பயத்தை வெல்வதின் மூலமும், பரத்தில் சுவர்க்க அடைவின் மூலமும் பூர்த்தியாக்கப் படுகிறது. மகாபாரத காலம் இந்த வாழ்முறையையே கொண்டிருந்தது.
கதா காலம்
142

தேவகாந்தன்
பயத்தை தன் பிழைகளிலிருந்து அடைந்தான் அசுவத்தாமன். மிக்க தனுர்வித்தை தெரிந்திருந்த ஒர் ஆசானின் பிள்ளையாகிய அவன், பிறரெவரும் கற்றிராத ஆயுத வித்தைகளைக் கற்றிருந்தான். இருந்தும் ஒடும்படியேயாயிற்று. ஒவ்வொரு தீய செயலும் இழைகளாகி, மரணத்தின் ஆடையை நெய்கிறது. அசுவத்தாமனின் பாசறை அழிப்பு, அவனது மரண ஆடையானது. தமது பிள்ளைகளின் ஈவிரக்கமற்ற கொலையில் பாண்டவர் பினமடைந்து தன்னைத் தேடிவந்து அந்த ஆடையைத் தன் மீது எறிவர் என அவன் அறிந்தேயிருந்தான். அதனால் காடு, மலையென்று எல்லாம் கடந்து அவன் ஓடினான். அவனது சுவடுகளின் வழியிலேயேபோல் பாண்டவரும் பின்தொடர்ந்து கொண்டேயிருந்தனர். இறுதியாக கங்கைக் கரையை அடைந்த அசுவத்தாமன், தன் பிராணாபயத்தின் இடம் தெரிந்தான். வியாஸ முனியைத் தஞ்சமடைந்தான்.
அவனை, வியாஸ் முனியின் உடலின் பின் பதுங்கியிருக்கக் கண்டு வெகு கொடிய சரமொன்றினை எடுத்து அவன் தலை அறுபட்டு விழும்படிக்கு இலக்கணைக்க, இனி மீட்சியில்லையென்று நினைத்த அசுவத்தாமன் அர்ச்சுனனை எதிர்க்கத் தயாராகி தானும் அம்பெடுத்தான். அர்ச்சுனனுடை பது ஒரு சாமர்த்தியத்திலும் எய்யப்படவிருந்த கணை. அதற்கு மாற்று அசுவத்தாமனிடம் இருந்தது. அசுவத்தாமனும் அர்ச்சுனன் கழுத்தைக் குறி வைத்தான். ஆனால் வியாஸ் முனி இருவரையும் தடுத்தான். அம்புகள் விசையிலிருந்து பெரும்பாலும் விடுபட்டிருந்த தருணம் அது. அம்பைத் திரும்ப எடுத்து நாணைத் தளர்த்த அர்ச்சுனனால் மட்டுமே முடிந்தது. அசுவத்தாமனால் விடுபடுவதற்கும் விடுபட்டதற்குமான அந்த இடைப் பொழுதில் அதுமாதிரி அம்பினைத் தடுக்கும் திறல் அரிதாகிப் போனது. அவனது வில்லிலிருந்து அம்பு பறந்தது.
கிருஷ்ணனின் கவனிப்பு அவ்வேளையில் அற்புதமாயிருந்தது. துரோபதியின் புதல்வர்களது மரணம் கேட்டு அதிர்ந்து பாசறை நோக்கி ஓடியவன், அடங்கும் தீயின் எரிந்த கூறுகளைக் கண்டு நொருங்கினான். டிற்கனவே அவ்விடம் சேர்ந்துவிட்ட துரோபதி நிலத்தில் புரண்டு அழுதரற்றிக் கொண்டிருந்தாள். அவளது நீள் கூந்தல் அப்போது விரிந்து பந்து கிடந்தது. அவள் பேசாமல் அவனைப் பார்த்தாள். தீயது சூழக்கூடிய சூழ்நிலையொன்றை அனுமானித்து பாண்டவர்களை வேறு கூடாரத்தில் தங்கவைத்தவன், தன் முன்னனுமானிப்புக் குறைபாட்டால் பாண்டவ புத்திரர்களைக் காக்கத் தவறினானென்ற குற்றச்சாட்டினை அவனது உள்ளம் *ற விழியெறிகின்றமையை அவன் உணர்ந்தான். தனது பீடு பெருமையெல்லாம் அக் கணம் அடிபட்டுச் சிதறின. ராஜதந்திரி போல் ஒரு
கதா காலம்
143

Page 82
தேவகாந்தன்
கோமாளித்தனமான வேஷத்திலும் எத்தகு சூழ்நிலையிலும் தன் முகத்தில் குறுவல் வரண்டுவிடாதிருக்கும் கிருஷ்ணன் எரிந்தது போல் சிரிப்பிழந்து முகம் கறுத்தான். அவனது அசைவுகளும் இறுகின. அசுவத்தாமனைத் தேடி பாண்டவர்கள் அசுவங்களேறிய பொழுது, அப் பாதிப்புக்களிலிருந்து அகலாமல் அங்கே தான் மட்டுமே நிற்கவேண்டாமென்றே கிருஷ்ணனும் கூடிப் புறப்பட்டான். அவன் மலர்வுகளை இழந்திருந்தாலும் அந்த வேகத் தையும், கவனிப்பையும் இழந்து விடாதேயிருந்தான். அதனத்தாட்சியாகவே சட்டெனப் பாய்ந்து அவன் அர்ச்சுனனை அம்பின் குறியிலிருந்து விலக்கியமை தென்பட்டது.
அம்பு விசையுடன் பறந்து சென்று கங்கைக் கரையில் பதிக்கான தர்ப்பணம் செய்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த அபிமன்யுவின் மனைவி வயிற்றின் கருவைத் தாக்கியது. ‘மூடனே இன்னும் விடுபடா விசையம்பைத் தடுக்குமாற்றல் அற்ற நீயும் ஒரு வில்லாளியா. ஆச்சாரியார் துரோணரின் மகன் என்று சொல்லவே நீ அருகதையற்றவன். நீ சூத்திரன். சூத்திரனிலும் கேவலமான ஈனன். அதோ, உன் அம்பு விளைத்த செயல் பார். பாண்டவரின் இரண்டாம் தலைமுறையின் அந்த ஒரேயொரு வம்சத்தையே அழிக்கப் பார்த்ததே அது. நீ இறந்துவிடவும் கூடாது. மரணமற்ற ஜீவனாய் உன் கொடும் செயல்களின் அழுத்தத்தில் நீ உழன்று உழன்று, தாங்க முடியாத ஜீவபாரத்தில் மரணம் தேடி அலைவாய்' என்று சபித்தான் கிருஷ்ணன்.
மரணமற்ற ஜீவனாய் அவன் காலகாலமும் இந் நிலவுலகில் அலைந்து கொண்டிருப்பதாய் பவுராணிகர் கூறுவர்.
அசுவத்தாமனின் நினைவே அவனது ஜீவன்.
அவன் மரணமற்றிருந்த முறைமை அதுதான்.
அவன் தீராப் பழியின் நினைவு.
A JITGřoT Gurfasör துரோபதியுடனான அத்தினாபுர நகர் புகுகை நல்ல ஒரு நாளில் நடைபெற்றது. அப் பழைய மாளிகையின் தூண்கள், சுவர்கள், தளங்களெல்லாம் அடக்க முடியாதபடி உறுமிக் கொண்டிருந்தன டோல் பட்டது. துரோபதி, குந்தி, காந்தாரியென முச் சக்திகளின் ஒரு மய்ய
கதா காலம்
144

தேவகாந்தன்
இணைவில் அது என்ன உணர்வு கொண்டிருக்க முடியும். ஒரு காலத்தில் அவர்கள், குறிப்பாய் குந்தியும் காந்தாரியும், மவுனக் குரலெடுத்து தனித் தனிக் கோள்களாய் இயங்கிக்கொண்டிருந்தார்கள். அழிநிலை அடைந்து கொண்டிருந்த இந்திரப் பிரஸ்தம் முற்றாகக் கைவிடப்பட்டது. மயன் தன் கலா திறமைகளெல்லாம் கூட்டி அமைத்த பளிங்கு மண்டபம், அதன் முன்னால் வியன்பெரு நகராய் தேவதச்சன் அமைத்ததுமான இந்திரப் பிரஸ்தம் எல்லாம் ஏன் உதாசீனப்படுத்தப்பட்டன. யாரினதும் குறி அத்தினாபுரமாகவே இருந்ததென்பதே நிஜம். அத்தனை போரழிவுகளும், அத்தனை போரவலங்களும் அப் புராதன நகரான அத்தினாபுரம் குறித்தேதான் நடந்திருக்கின்றன. ஆனாலும் யுத்தத்தை நடத்தியவர்கள் பெண்களாகவே இருந்திருக்கின்றனர் என்பதுதான் இங்கே விசேஷம். கவுரவர், பாண்டவர்க்கிடையிலான யுத்தத்தில் பாண்டவர் வென்றன பென்பது ஒரு மாயை. இரு பகுதியாரும் தோற்றதே உண்மையில் நடந்தது. ஆனால் ஒரு வெற்றி விளைந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாய்ப் பார்த்தால் அது குந்தியின் வெற்றியேயாகும். பஞ்சபாண்டவரும் தம்பியரென்பதைக் கணனிடம் சொல்லி அவனை அவர்கள் பக்கம் சேர நிர்ப்பந்திக்கையில் அவன் நியாயங்கள் காட்டி மறுத்தபோது அர்ச்சுனன் மீதான அவனது காட்டமானதுவேஷத்தில் வலிமை வாய்ந்த அஸ்திரப் பிரயோகங்களுக்குத் தடை வாங்கியவளான குந்தி, கர்ணன் அவர்களது மூத்தோன் என்பது குறித்து அவர்களிடமே ஏன் சொல்லாது விட்டாளென்று ஒரு பெரிய வினாவிருக்கிறது. அதற்கான காரணம் அவளது குறி அத்தினாபுரமாக இருந்ததென்பதுதான். ஆக, மூவருமே விளைந்த அழிவுகளின் மூலிகளாக இருந்திருக்கிறார்கள். மாளிகை அதிருப்தி காட்டி உறுமாமல் என்ன செய்யும்.
யுதிஷ்டிரனின் பட்டாபிக்ஷேகம் விரைவில் நடந்தது. துரோபதி பட்ட மகிஷியானாள்.
மீண்டும் அதனால் அரண்மனையின் இரவுகள் குமுறுமோர் இதயத்தின் சாட்சிகளாயின. விரகம் அதன் ஈடுஇடுக்குகளெல்லாம் நிறைந்து வழிந்தது. பீமன் போதையேறிய ஓரிரவில் தனியே குதிரையேறிச் சென்று வனவாசிகளோடு வனப்பகுதி தங்கி மறுநாள் வந்தான். காசியிலிருந்து லந்தரை வந்து கூடவிருந்தும் பீமன் அடங்காக் கோபத்திலும் விரகத்திலும் செய்தது அது. தன் காதல் காரணமாய் எவளது சபதங்களை முடித்து வைத்தானோ, அவள் யுதிஷ்டிரனின் ஏகபோகமாய் ஆனதில் கோபமேறி
அவன் அதுமாதிரியே தன் முரணினைக் காட்ட முடிந்திருந்தான்.
ஒருநாள் அவன் திருதராஷ்டிரன் மனை முன் நின்று கவுரவ நிந்தனை செய்தான். அப்போது எதிர்வந்த திருதராஷ்டிரனின் முது பணியாள் ஒருவன்
ቃቇT காலம் 45

Page 83
தேவகாந்தன்
பீமனின் கோபத்தைப் பொருட்படுத்தாமல், அரச இளவலே, குலமறுத்திருக் கிறார்கள் திருதராஷ்டிரனும் காந்தாரியும். இவ்வண்ணம் நீ பேசுவது தகாது. அவர்கள் மரணங்களை எண்ணியெண்ணி நைந்து கொண்டிருக்கிறவர்கள்' என்றான்.
'ஏன், அவர்களது எல்லாக் குமாரர்களையும் நான் கொன்று விட்டேனென்று என் மீது சீற்றமும் கொண்டிருப்பார்களே. ஏன் அது. ஒரு குமாரன் யுயுத்ஸ" இன்னும் உயிருடன்தானே இருக்கிறான். அவனைச் சீராட்டி மகிழ்வதற்கென்ன ஒ. அவன் தாதி பிள்ளையல்லவா. குருகுலம் சூத கலப்பை அறவே வெறுக்கும். தசையை விரும்பி, உறவை வெறுக்கிற இது எவ்வகை நியாயம் பணியாளே. சரி, யுயுக்ஸுவை வேண்டாமென்றால் விட்டுவிடுவோம். சத்தியவதியின் பேரன்தானே திருதராஷ்டிரன். நியோகம் பற்றி அவனுக்குத் தெரியாமல் போயிருக்காது. காந்தாரி கண்ணை மட்டும்தானே கட்டியிருக்கிறாள், கர்ப்ப வாயை அல்லவே. பீமன் வாயில் வந்தபடி வைதான்.
பணியாள் கூசி மறுவார்த்தையின்றித் தன் வழி நடந்தான். உள்ளேயிருந்து கேட்ட திருதராஷ்டிரன் காதுகளைப் பொத்திக் கொண்டான். அரண்மனையில் என் சிறை அமைந்துவிட்டது. எனக்கேன் பாலன்னம், நெய்ச் சோறு, பஞ்சணை, உடனிறைச்சி, மது' என்று வாய்விட்டரற்றிப் புழுங்கினான். காந்தாரி தான் வளர்த்த தீயில்போல் விழுந்து கிடந்து முடிவுறாமல் எரிந்தாள். அந்த வெறுக்கப்பட்டிருந்த திருதராஷ்டிரன் அப்போது அவள் விரும்பத்தக்க வார்த்தைகளைச் சொல்லியிருந்தான் தான். அவர்கள் சிறை அரண்மனையிலேயே அமைந்து போயிற்று.
Lதிஷ்டிரன் ஆட்சியின் பதினைந்தாவது வருஷம் அது. அருகே ஒருநாள் காந்தாரி வர, திருதராஷ்டிரன் கூப்பிட்டான். 'காந்தாரி. என் கண்ணே.
‘என்ன” என்று அவள் கிட்ட வந்தாள்.
'உன்னோடு தனியே பேசவெனக் கனநாளாய்க் காத்திருந்தேன். இப்படி அமர்.'
காந்தாரி அருகே அமர்ந்தாள்.
கதா காலம்
146

தேவகாந்தன்
அவள் அமர்ந்துவிட்டதை இருக்கையின் நசிவுகளில் தெரிந்து கொண்டு, அரசாட்சியென்பது பொருளின் அதிகாரத்துக்கான பதவியே. அது இத்தனை வருஷங்களின் பின் இப்போதுதான் புரிய நேர்ந்தது துர்பாக்கியம். அரசதிகாரத்தை இழந்தபோது நாம் பொருளதிகாரத்தையும் இழந்த அனுபவத்திலிருந்து இந்த அறிதலை நான் பெற்றேன். நம் வாழ்தலுக்கான பொருளைக் கூட நாம் தானம் போலவே யுதிஷ்டிரனிட மிருந்து பெற்றுக்கொண்டிருக்கிறோம். யாருக்கும் அன்பில்லை. யாரிடத்திலும் கரிசனமில்லை. இது மட்டுமில்லை என் விசனம். நம் பாவங்கள், நமது கூடித்திரிய இருப்புக்கானவையேயெனினும், உயிரின் கடைசிப் பயணத்தில் அதை ஒரு சுமையாகச் சுமந்து செல்லவேண்டிய நிர்ப்பந்தம் எமக்குண்டு. வேறு மார்க்கங்களில் அவற்றை நாம் கழித்து விட்டாக வேண்டும். நான். நான் வனமேக நினைத்திருக்கிறேன். உன் எண்ணம் என்ன என்றான் திருதராஷ்டிரன்.
நானும் இவை பற்றிக் கடந்த சில காலமாய் யோசித்தேன். அந்தப் பீமனின் நிந்தனை இன்னும் எரியிலேயே என்னை நிற்க வைத்திருக்கிறது. வனமேகுதல் தக்க தீர்வென்பதே எனது எண்ணமும்’ என்று பதிலளித்தாள் காந்தாரி.
பிறகு அவர்கள் பேசவில்லை.
வெகுநேரம் கழித்தே அங்கிருந்து காந்தாரி எழுந்து சென்றாள்.
ஒரு நாளிரவு விதுரனிடம் சொன்னாள் குந்தி: திருதராஷ்டிரனும் காந்தாரியும் வனம் சென்று தங்க உத்தேசித்திருக்கிறார்கள். அவர்களைச் சொல்லால் நிந்தனை செய்கிறான் என் பிள்ளை பீமன். அதுமட்டுமே காரணமில்லையென்பது எனக்குத் தெரியும். அப்படிப் பார்த்தால் அவர்களது பாவங்களுக்கு என் பாவங்கள் குறைந்தவையல்ல."
ஒரு காலத்தில்தான் இந்த அத்தினாபுர மாளிகை நிறைந்த இன்பங் களதும் சந்தோஷங்களதும் நிம்மதிகளினதும் நிலைக்களனாய் இருந்தது. இப்போது அப்படியில்லை. நீ அவர்களோடு செல்ல முடிவுகட்டி விட்டாயா."
இருவருமே வெளியுலகு காணாதவர்களாயிருக்கிறார்கள். காந்தாரியும் திருதராஷ்டிரனும் எனக்குத் தாயும் தந்தையும் போல். என் பணிவிடைகளை அவர்கள் தேவைப்படுவார்கள்."
"செய். என் மீதி வாணாள் பற்றி நான் இனித்தான் யோசிக்க வேண்டும்.
கதா காலம் 147

Page 84
தேவகாந்தன்
'சரியான முடிவை எடு, விதுரா என்றுவிட்டு குந்தி மேலும் அங்கே
தாமதிக்காமல் அகன்றாள்.
னெமேகுதல் நிகழ்ந்தாயிற்று. எந்த கூடித்திரிய குலத்துக்கும் வன பரிச்சயம் இருக்கும். குந்தி அதை நன்கறிந்திருந்தாள். காந்தாரியும், திருதராஷ்டிரனும் கூட அதைத் தெரிந்தேயிருந்தனர். ஆனாலும் அவர்களுக்குப் பிடிபட மறுத்து அந்த வனம் சில விசேஷித்த அம்சங்கன்ள உடையதாயிருந்தது. அது சில சில நிசிப் பொழுதுகளில் அழுவது போன்ற அனுக்கமொன்றை வெளிப்படுத்துவதை அவர்கள் கேட்டார்கள். அது நொறுநொறுக்கும் வனமாயுமிருந்தது. நீண்ட காலத்திய தம் இருப்பில் தருக்கள் வெளி நிகழ்வுகளைக் கேட்டும், உள் நிகழ்வுகளைக் கண்டும் மனக் கொதிப்படைந்து மொறுமொறுக்கச் செய்யலாமென அவர்கள் கருதினார் கள். சோகங்களுக்காய் அவை அழுது நீர் உகுத்ததின் அடையாளமோ சருகுகள். அவை நிறைய அழுதிருக்கின்றன. வனப் பரப்பெங்கும் படை படையாய்ச் சருகுகள் காணக்கிடந்தன. பகலிலும் அதனுள் இருண்மை நிறைந்து கிடந்தது. குந்தி அவ் இருண்மை கண்டாள். காந்தாரியும் திருதராஷ்டிரனும் அதை உணர்ந்தனர்.
குந்தி பார்வையில்லாதவனுக்கும், பார்வை மறைத்தவளுக்கும் வேண்டியவற்றைச் செய்து கொடுத்தாள். அப்போதும் பொழுது நிறைய மீதமாயிருந்தது. தனியேயிருந்து எல்லாம் யோசித்து வருந்தி வருந்திப் பாரமிறங்கினாள். சிலபோது வனத்துள் நடந்தாள். பாண்டு தன்னை வனவுலாவுக்கு விடுத்த முதல்பொழுதை ஒருநாள் ஞாபகமானாள். ஒரு தேவன் வந்ததுபோலத்தான் அந்த ஞானி அவள் முன் திடீரென்று தோன்றினான். பேசமுடியாததாய்ப் பொழுதுகள் கழிந்த பின்தான் அவர்கள் தாம் நெருங்கி நின்றிருப்பதை உணர்ந்தனர். இருந்தும் ஆகர்ஷத்தை ஒதுக்கிக்கொண்டு, எங்கே வெளிக்கிட்டாய்? என்றான் ஞானி வனவுலா! என்றாள் அவள். வா! என்று அவன் அவளை அணைத்து அவளது நோக்கத்தை இனிமை பொங்கப் பொங்க நிறைவேற்றி வைத்தான். அவள் தாங்காத தாகத்தினளாய் மறுமுறையும் அவனைத் தாவினாள். நியோகம் மூன்று முறை; ஒருவருடன் ஒருமுறை மட்டுமே! என விதி சொல்லி விலகிப்
போனான். கருவுக்கானது மட்டுமே வனவுலாக் கூட்டமென அவன்
கதா காலம்
148

தேவகாந்தன்
சொன்னது அவளை வெகுகாலம் உணர்ந்திருக்க வைத்தது. தர்ம தேவதை யாகவே அவள் அவனை அதன்பின் மதித்து வந்தாள்.
திடீரென, தொலைவில் ஒரு மானிட உரு. பொறி போல் தோன்றி மறைந்தது. ஞானியும் வந்துவிட்டானா வனம். மறுநாளிலும் அதேபோல் ஒரு பொறிக் காட்சி. அவன் அங்கே வந்துவிட்டமையை அவள் அறிந்தாள். இல்லற தர்மத்துக்கு மாறாய் அவன் கிருபியைவிட்டுத் தனியே வன மேகியது அவளுக்கு உடன்பாடாயில்லை. அவனே அப்படி நடந்திருக்கக் கூடாதெனக் கருதினாள். ஆனாலும் இனி அவளிடத்தில் சலம், சபலம், சஞ்சலம் எதுவும் ஏற்படாது.
இன்னுமொரு நாள் சமீபத்தில் அவனைக் கண்டாள். சித்தனாய் வாழ்ந்துகொண்டிருந்தவன் அப்போது பித்தனாகியிருப்பது கண்டாள். விரிந்த சடை, நீண்ட தாடி, அரையில் நிர்வாணமென தனக்குள்ளாய் எதையோ புலம்பியபடி அப்படியே ஒடி மறைந்து போனான். சில நாட்களின் பின் வேடுவர் சிலர் மெலிந்த, நிர்வாண மனிதனொருவன் தூரத்து வனச் செறிவுள் சடலமாய்க் கிடப்பதாகத் தெரிவித்தார்கள். விதுரா, உன் கதை இப்படியா முடிந்தது? என ஒரு கணம் வருந்தித் தெளிந்தாள் குந்தி.
காற்று பகலிலும் வனத்தின் மொறுமொறுப்பைத் தூரத்திலிருந்து கூட காவிவந்து அந்த இடத்தில் சேர்ப்பித்துக்கொண்டிருந்தது. வனம் இன்னும் வெகுகாலம் பொறுக்காதென்று காந்தாரிக்குத் தெரிந்தது. அவள் திருதராஷ்டிரனோடான சொல்லை முறித்து வெகுகாலமாகியிருந்தது. அவனும் அதைச் சாதகமாய்க் கொண்டான்போல ஒதுங்கியிருந்து விட்டான். அந்த நினைவின் கீறல் அவளை அதிரவைத்தது. தன்போல் அவனும் ஒரு குறையோடேயே வாழ்வு பரியந்தம் இருந்திருக்கிறானா? என்று அவள் மீண்டும் மீண்டும் தன்னுள் கேட்டுக்கொண்டாள். அப்போது அந்தப் பிறவி அந்தகனில் லேசான இரக்கம் உண்டானது. வனகாலம் அது. சலம், சபலம், சஞ்சலங்களை அறுப்பதற்கானது. அங்கே தங்கள் பாவங்களையும் களங்கங்களையும் உதிர்த்து அவர்கள் புனிதமும் நிஷ்களங்கமும் அடைய வேண்டும். அவள் திருதராஷ்டிரனை மெல்ல அணுகி அருகே அமர்ந்தாள்.
காந்தாரி என்றான் திருதராஷ்டிரன்.
ஆ, கடவுளே! அவன் ஒரு சொல்லுதிர்க்க எவ்வளவு தவத்தோடு காத்திருந்திருக்கிறான்! என எண்ணமெழ அவள் நெஞ்சு முறுகியது. விசும்பல் மின்னலாய் வெடித்தது.
கதா காலம் 149

Page 85
தேவகாந்தன்
'ஏன், காந்தாரி' என்று திடுக்கிட்டான் அந்தகன்.
சிறிதுநேரம் மவுனமாயிருந்த காந்தாரி, ‘என்ன சொல்ல. எப்படிச் சொல்ல. வாழ்க்கையை ஒருபோதும் வாழவேயில்லைபோல நெஞ்சு எனக்கு வெறுமையாக இருக்கிறது. ஏன் திருதராஷ்டிரா, உனக்கு இப்படியொரு எண்ணம் எப்போதாவது ஏற்பட்டிருக்கிறதா. அப்போதெல்லாம் என்ன எண்ணி நீ உன்னை ஆற்றுவாய். ஒருவேளை. விரும்பாத நிலையில் நான் அதிகமாகப் பேசிக்கொண்டிருக்கிறேனா என்றாள்.
இல்லை. இனி எல்லாவற்றையும் பேசியே தீரவேண்டும். நீ உணர்ந்தது போலன்றி நான் பெரும்பாலும் நிறைவாக வாழ்ந்ததாகவே எண்ணிக் கொண்டிருக்கிறேன். நீ என் விருப்பத்துக்கும் இன்பத்துக்கும் ஏற்றவளாகவே தான் வந்து சேர்ந்தாய். நான் உன்னை முழுமையாகப் பார்த்தேன். அந்தகனொருவன் தன் கைகளாலேயே காண்கிறான். உன் தேகம் பூராவினதும் ஸ்பரிஸ அனுபவம் என் மனத்தில் ஆழமாகவே இருக்கிறது. மீண்டுமொரு முறை உன்னைத் தொடுதலின்றியே மிக இசைவாய்ப் பிணையப்பட்ட மண்களியில் என்னால் உன் உருவத்தை அதே அளவுகளில் வணைந்துவிட முடியுமென்று சொன்னால் உனக்கு வியப்பாக இருக்குமா. அவ்வளவு ஆழமாய் நீ என்னுள் இருக்கிறாய். எதற்காக என்னை நீ அணுகியிருந்தாலும், அன்பு, ஆசைகள் காரணமாக மட்டுமே நான் உன்னை அணுகினேன். நீ மனையொதுக்கிலிருந்த ஒருநாளில் என் போதை பணிப்பெண்ணொருத்தியுடன் கூடச் செய்தது நிஜமேயெனினும், அவளையும் நீயாகப் பாவித்ததாலேயே என்னால் அது முடிந்திருந்ததைப் பின்னர் நினைத்து என் அன்பில் நான் ஆனந்தமேயடைந்தேன். நீ கந்தக பூமியிலிருந்து வந்திருந்தாய். உன் சிடுசிடுப்புகளையும் சீற்றங்களையும் பிடிவாதங்களையும் நான் அது காரணமானதாக எண்ணி அடங்கினேன். நீ நிறைய விஷயங்களைத் தெரிந்திருந்தாய். குறிப்பாக, மனித மெய்ப் பாடுகளை. அதனால் நீ சொன்னவைகளை நான் தட்டாது நிறைவேற்றி னேன். பாதகமான விளைவுகளே தோன்றுமெனத் தெரிந்தும் மறுக்காமல் செய்தேன். நிகழ்வுகள் எப்படியெப்படிப் போய் இப்போது அனைத்தும் முடிவுற்று விட்டன. குருகுலமே அழிந்து போயிற்று. இனி அத்தினாபுரம் பற்றி என்ன பேச்சு. ஆனாலும் எனக்குள் இவை பற்றி ஒரு திருப்தியும் இப்போதெல்லாம் சுரக்கவாரம்பித்திருக்கிறது. கருமங்கள் சரிவரச் செய்யப்படாவிட்டால் அதன் மறுதலையான விளைவுகளை ஒருவர் ஏற்கத் தயாராகவே இருக்கவேண்டும். வனம் என்னை உணரவைத்திருக்கிறது, காந்தாரி.
கதா காலம்
150

தேவகாந்தன்
குறையேயில்லாமல் இருந்தாய்..? அதெப்படி, மனித ஜனனங்களின்போதே குறைகளினதும் நடக்கிறது. அதை மாயை என்கிறார்கள் ஞானிகள். என் அறிவை மாயை பாறைத்துள்ளதென முன்பெல்லாம் விதுரன் சொல்வான்.
நான் என்னைத் தெரிந்தபோது பார்வையற்றிருப்பது பெரிய குறையாக விருந்தது. நான் விரல்களினூடும் செவிகளினூடும் பார்க்கப் பழகினேன். அசலனங்களை என் விரல்களாலும், சலனங்களைச் செவிகளாலும் துல்லியமாகவே என்னால் காண முடிந்தது. சூரியனை, சந்திரனை, hrத்திரங்களை, வானத்தை, மேகத்தையென்று எல்லாவற்றையுமே கன்னால் பார்க்க முடிந்திருந்ததுதான். எனக்கு அவற்றைச் சொல்லில் காட்டிய சில பணியாட்களையும், சில சூதர்களையும் நான் இதற்காக என்றும் ஞாபகம் கொண்டிருப்பேன். நிறங்களைக் காண்பதிலேயே நான் ஆழம்பினேன். அதைக்கூட குறையாய் நான் உணர்ந்ததில்லை. என் குறை. ய என்னால் விளைந்தது.'
"என்னாலா."
ஆம். நீ மணப்பெண்ணாய் அத்தினாபுர அரண்மனை வரும் செய்தி துதுவனால் சொல்லப்பட்டதுமே எனக்குக் கனவுகள் பிறக்க ஆரம்பித்து விட்டன, காந்தாரி. அவற்றின் உச்சமாய் என் சதியின் கைப்பிடியில் உலகம் காரணுவது என் விருப்பம். ஆனால் நீயோ பதியில் பக்திவைத்து உன் பார்வை பறுத்தாய். நான் யோசனை மிகுந்திருந்த நேரங்களின் பின் திசையழிந்தேன். பொருள்களின் இருப்பிடக் கணிப்புத் குழம்பி நான் இடறிக் தடுமாறிய வளைகளிலெல்லாம் பணியாட்களே ஒடிவந்து என்னைத் தாங்கினார்கள். அதை நீ செய்யவேண்டுமென்றே நான் விரும்பியிருந்தேன்."
அவளுக்கு, சொல்லே அவனது வெளிப்பாட்டின் ஒரே ஊடக பாயிருந்த வகையில் அவன் தன் உணர்ச்சிகளை முழுவதுமாய்க் காட்டிவிட
மிகுமுயற்சியுடன் சொல் தேர்ந்து பேசினான். காந்தாரியின் இதயம் மெல்ல இனையத் துவங்கியது.
அப்போது பறவைகள் மிரண்டு பெருங்குரலில் கிரீச்சிட்டு வானி லெழும்பிப் பறந்த சிறகடிப்பின் ஒசை வெகுவாய்க் கிளர்ந்தது. தீயின் 4 சடப்புக் கேட்டது. காற்று காவிவந்த தீ வாசம் மணத்தது. அப்போது அவசரமாய் அங்கே வந்தாள் குந்தி. 'வனத்துக்கு யாரோ தீ மூட்டி விட்டார்கள். வனம் எரியத் துவங்கிவிட்டது. கரும்புகைச் சுருள்கள்
é52517 காலம்
51

Page 86
தேவகாந்தன்
வடதிசைத் தொங்கலில் சுருண்டு சுருண்டு மேலே கிளம்பிக்கொண்டிருக் கின்றன என்றாள்.
'வனம் தானே தீயைப் பிறப்பித்தது. அது கண்ட கேட்ட பாவங்களால் சினப்பட்டிருந்தது. வனத் தீயை நான் முன்னமே அனுமானித்துவிட்டேன். குந்தி, நீ மேற்குப் புறமாய் ஒடித் தப்பிவிடு. தீயை அனுபவிக்கிற தாகம் எனக்குள் எழுந்துவிட்டது. வேண்டுமானால் இவளையும் கூட்டிப் போ' என்றான் திருதராஷ்டிரன்.
இல்லை. நான் உன்னுடன் கூடவேயிருப்பேன்’ என்றாள் காந்தாரி.
குந்தியும் அதையே சொன்னாள்.
எல்லோரும் மரணத்தை ருசிக்கத் தயாராகி விட்டதை அவன் உணர்ந்தான். நல்லது' என்றான். " -
'உனக்கு இன்னும் என் கைப்பிடியில் நடக்கும் ஆசை இருக்கிறதா, திருதராஷ்டிரா. காந்தாரி கேட்டாள்.
இருக்கிறது."
சிறிதுநேரத்தில் காந்தாரி சொன்னாள்: "இதோ, கண்கள் மறைத்துக் கட்டிய துணியை அவிழ்த்து விட்டேன். எனக்கு உலகம் மங்கலாய்த் தெரிகிறது. அது தெளிந்துவிடும். தெளிந்ததும் நான் உன்னைக் கூட்டிச் செல்வேன். கண்கட்டு என் கோபத்தின் அடையாளம், அதனால் உன்னையும் காணாதேயிருந்தேன். உனக்காக நான் இப் பிரபஞ்சத்தைப் பார்க்கத் துவங்குகிற வேளையில் எனக்காகவே உன்னை நான் பார்ப்பேன்."
எவ்வளவு இனிமையான பொழுது அது. குந்தி பார்த்தபடி நின்றிருந்தாள். முகத்தில் மனதின் விகாஸம்.
காலம் கரைந்துகொண்டிருந்தது.
'பிடிக்குள் காட்சிகள் அடங்கி வருகின்றன. உன்னையும் நான் காணத் துவங்கி விட்டேன். இக் கணத்துப் பேரின்பத்துக்கு மேல் எனக்கு வாழ்வே வேண்டாம்போல் இருக்கிறது. நான் இப்போதைய குழந்தைத் தனத்தி லிருந்து மறுபடி மனுவியாக மாற விரும்பவில்லை. ஏன் திருதராஷ்டிரா, அக்கினியை நோக்கி நாமே நடந்தாலென்ன, ஏன் ஒரு காத்திருப்பு. ஏன் காலத்தின் வீணடிப்பு. காந்தாரியின் கேள்வியில் திருதராஷ்டிரன் பெருமகிழ்ச்சியடைந்தான். அதுதான் சரி’ என்றான்.
கதா காலம்
152

தேவகாந்தன்
காந்தாரி எழும்பி, அவன் கை பற்றினாள்.
திருதராஷ்டிரன் எழும்பினான்.
பாவம் உதிர்த்தாயிற்று. பவம் மட்டுமே உதிர்க்கவிருந்தது.
காந்தாரி அவனை அக்கினி நோக்கி அழைத்துச் சென்றாள்.
திருதராஷ்டிரன் உற்சாகமாய் நடந்தான். பின்னே குந்தி நடந்தாள்.
புனைவின் உச்சமடைந்தவர்கள் ஆதிசூதர்கள். பாரத காலத்தில் மொழியானது ஒலியில் மட்டும் வாழ்ந்ததாய்ச் சொல்லப்படுகிறது. சூத பரம்பரைக் கதைகளை அடி அடியாய்த் தொடர்ந்தும் எடுத்துக் கொண்டிருந்தது. உள்ளது உள்ளபடியாய் அவர்கள் கதையுரைப்பு. புனைவு, அவர்களது அறிவு சாகரத்தில் சுழித்தெழும் வினாக்களுக்கு அனுபவங் களை இணைத்து அவர்கள் கொண்ட விளக்கங்களில் மட்டுமே இருந்தது. நேர்த்தியும், பொருத்தப்பாடும் அவர்களது அடுத்த கரிசனையாயிருந்தன. பிருகு முனிவர்களின் காலத்திலிருந்து இப் பரம்பரைக் கதை சொல்லிகளான சூதர்களிடமிருந்து பாரதக் கதை அல்லது ஜெயக் கதை அந்தண குலத்திடம் சென்று அடங்கிவிட்டதாய்க் கொள்ள முடியும். அவர்கள் வெகு அனாயாசமாய் பாத்திரங்களதும் சமூக நெறிகளதும் தோற்ற, இருத்தல் நியாயங்களை தோற்றங்களுக்கு ஒரு மர்ம முடிவையும், முடிவுகளுக்கு ஒரு மர்ம தோற்றத்தையும் கொடுத்து நியாயப்படுத்தி விட்டார்கள். அவ்வாறு இட்டுக் கட்டப்பட்டவை ரஸமாக இருந்தன. மகாபாரதத்தின் இருத்தல் காரணிகளில் பிரதானம் அதுதான்.
மகாபாரதத்தில் யாதவ குலம் பற்றிய கதை சிறிதெனினும் அற்புதமானது. செய்யுள்தனத்தால் அது சிறப்புற்று விளங்குகிற பகுதியும். அதில் யாதவ குலத்தின் முடிவும், கிருஷ்ணனின் மறைவும் கவனிக்கப்பட வேண்டியவை.
கதா காலம்
153

Page 87
தேவகாந்தன்
கிருஷ்ணன் சிரிக்க மறந்து போனான். அவனது முக விலாசமே காணாமல் போய்விட்டது. துரோபதி புத்திரர்களின் மரணம் தன் அரசியல் தந்திரங்களின் குறைபாட்டின் விளைவேயென்பதை யார் சொல்லியதாலு மில்லை, தானே நம்பினான். அதிலிருந்து அச் சுtணத்தின் பிடியுள் அவன் தவிர்க்கவியலர்தவாறு விழ நேர்ந்தது. كم
பலராமன் முடி துறந்து தேச சஞ்சாரம் செய்யப் புறப்பட்ட பின்னர், துவாரகையின் அரசு கட்டிலில் ஏறினான் கிருஷ்ணன். அதிலிருந்து கூட ஒரு பயமும் உள்கிடந்து அவனை வாட்ட ஆரம்பித்திருந்தது. யுத்த முடிவின் பின் காந்தாரியை அவன் சந்திக்க நேரிட்ட வேளையில் அவள் தம் குடும்பம் போல் யாதவ குடும்பமும் ஒருநாள் அழிந்து போகுமென்று சாபமிட்டி ருந்தாள்.
யாதவ குலம் விருஷ்ணி, அந்தக, போஜ என்று பல பிரிவுகளை உடையதாயிருந்தது. பாரதப் போரின் முன்னால் அப் பிரிவுகளை தன் வல்லமை மூலம் ஒன்றாகக் கட்டி வைத்திருந்தது கிருஷ்ணன்தான். ஆனால் போரின் பின்னால் கவுரவரை ஆதரித்தோர், பாண்டவரை ஆதரித்தோரென தெளிவான பிரிவுகள் ஏற்பட்டு விட்டிருந்தன. காந்தாரியின் சபதம் ஞாபகமாகிற வேளையில் அவன் அதனாலேயே துடித்துப்போவது.
யாதவ குல இளைஞர்கள் கேளிக்கைகளிலும் சிற்றின்பங்களிலும் அதீத ஈடுபாடு கொண்டு வாழ்ந்த காலமது. ஒருநாள்துவாரகையின் தரிசனத்துக்கு ரிஷிகள் சிலர் வர, அவர்களைக் கேலி செய்ய எண்ணிய யாதவ குல இளைஞர்கள் கிருஷ்ணன் மகன் சாம்பனுக்குப் பெண் வேடமிட்டு அவனைக் கர்ப்பவதிபோல் காணச் செய்து ரிஷிகளிடம் கொண்டுபோய், இவளுக்கு என்ன குழந்தை பிறக்கும்? என்று கேட்டுக் கலகம் செய்தார்கள். உண்மையை அறிந்த ரிஷிகள் கோபம் கொண்டு, இவனுக்கு உலக்கை பிறக்கும்! அதனால் அடித்துக்கொண்டு உங்கள் குலமே நாசமாய்ப் போகும்! என்று சபித்தார்கள்.
வினோதமாய் ஒருநாள் சாம்பனுக்குப் பிரசவமானது. அதுவும் உலக்கை யாக இருந்தது. யாதவ குல ஆண்கள் விஷயமறிந்து பயந்து போனார்கள். வேடிக்கை வினையானதை எண்ணி வருந்தினார்கள். எனினும் இனி செய்ய ஏதுமில்லையென்று துணிந்து, அவ் உலக்கையை எரித்து சாம்பலைக் கொண்டுபோய் கடலிலே கலந்துவிட்டார்கள். அலையடித்த சாம்பர் கரையொதுங்கி நிலம் சேர அம் முறை மழைக்கு அந்த இடத்திலே உலக்கை எரித்த சாம்பரையே உரமாகக்கொண்டு ஒருவித நீண்ட இதழுள்ள கோரையினப் புற்கள் முளைத்தன.
கதா காலம்
154

தேவகாந்தன்
ஒருமுறை ஒரு விழாவின் பொருட்டு யது குலத்தாரைக் கடற்கரை அழைத்துச் சென்றான் கிருஷ்ணன். சாத்யகியும் கிருத வர்மனும் கூட அதிலிருந்தனர். விழாவில் போதையேறிய நிலையில் கிருதவர்மனுக்கும் சத்யகிக்கும் வாக்குவாதம் தொடங்கியது. தூங்கும் பாண்டவ புத்திரர்களை வெட்டிக்கொன்றதற்காய் சாத்யகியும், கையறுபட்டிருந்த பூரிசிரவசுவைக் கொன்றதற்காய் கிருதவர்மனும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டினர். ஒருபோது வாளையெடுத்து தூங்குகிறவர்களைக் கொன்ற வனுக்கு இதுதான் தண்டனையென கிருதவர்மனை வெட்டிக் கொன்றான் சாத்யகி.
கூட்டம் இரண்டு பிரிவாயிற்று. ஒருவரையொருவர் அடித்தும் கடித்தும் சண்டை துவங்கிற்று. அந்நேரமளவில் சிலர் கையில் உலக்கைச் சாம்பலில் மதாளித்து வளர்ந்த புல்லிதழ் அகப்பட அதைப் பிடுங்கிச் மண்டை செய்தனர். ரிஷிகளின் சாபத்தால் பிடுங்கிய புல்லிதழ்களும் உலக்கைகளாக மாறின. அதனால் அடிபட்டுக்கொண்டு யாதவ குலத்தின் மிகப் பெரும் பகுதியும் அழிந்தது.
கிருஷ்ணன் மிகவும் உடைந்து போனான்.
தன்னினத்தினதுபோல் துவாரகையின் அழிவினையும் அவன் மனத்தே Aguur trait.
இனி செய்வதை அவன் மனம் திட்டமிட்டது.
அதன்படி அர்ச்சுனனுக்கு தன் அந்தப்புர ராணிகளையும் பிள்ளை கரளயும் காப்பாற்றும்படி செய்தி அனுப்பிவிட்டு, காடு சென்று ரிஷ்டை கடினான் கிருஷ்ணன். அவன் மகா நிஷ்டை கூடியிருந்த நிலையை பானென நினைத்து வேடனொருவன் விடும் அம்பு கிருஷ்ண உயிரைக் நடித்தது.
செய்தி கிடைத்துதுவாரகை வரும் அர்ச்சுனன் கிருஷ்ண மரணத்தையே அறிகிறான். கிருஷ்ணனுக்கும், கிருஷ்ண மரணம் கேட்டு உயிர் விடும் அவன் தந்தை வசுதேவனுக்கும் கிரியைகள் செய்வித்த பின், அந்தப்புரப் பெண்களையும் மீதி உறவினரையும் அழைத்து வந்து இந்திரப் பிரஸ்தத்தில் குடியேற்றினான். கிருஷ்ணனின் உறவாக எஞ்சிய பேரனின் மகன் வஜ்பனையும் அதற்கு முடிசூட்டி அரசனாக்கினான்.
சில காலத்தின் பின் கிருஷ்ணன் எண்ணியபடியே துவாரகை வெள்ளத்துள் மூழ்கி அழிந்தது.
325i காலம்
155

Page 88
தேவகாந்தன்
கிருஷ்ண மரணத்துக்குப் பிறகு ஏற்கனவேயிருந்த வாழ்தலின் அலுப்பு பல மடங்காய்ப் பெருகி பாண்டவர்க்கு வாழ்வியல் விசாரம் ஏற்பட்டு விட்டது. துரோபதி தனித்தே போனாள். அபிமன்யு, கடோத்கஜன், அரவான் என்று பீம அர்ச்சுனர்களின் ஏனைய பிள்ளைகள் போரில் பங்குபற்றி மடிந்தார்கள். துரோபதி மக்கள் போரில் பங்குபெறக் கூடவில்லை. ஆனாலும் போர் அனர்த்தத்தில் இல்லாமல் போனார்கள். அவல காலத்தில் அவள் ஒட ஒரு இடமே இருந்தது. ஆனால் அவன் பெரும் பொழுதைப் போதையில் கழித்துக் கொண்டிருந்தான். மீதிப் பொழுதை வனங்களில், நதிக்கரையில் கழித்தான். மிகச் சொற்ப பொழுது தூங்கினான். அவன் நல்ல நண்பனும் காதலனாயும் சிறந்தவன்தான். ஆனால் காமம்தான் இப்போதெல்லாம் எழுவதில்லை. எதை நினைத்து அவன் அப்படித் திரிந்தானென்று அவளுக்கு ஊகமெடுக்கச் சிரமமாயிருந்தது. திருதராஷ்டிரனும் காந்தாரியும் குந்தியும் வன நெருப்பில் மாண்ட பின்னர், அவனது போதையேற்றத்தில் ஒரு சீர் இருந்தது கண்டாள் அவள். ஆனாலும் அணுக முடியாதவனாகவே இருந்துகொண்டிருந்தான்.
அத்தினாபுரம் பெரும்பாலும் விதவையர் நாடாகியிருந்தது. மாளிகையும் பெரிய விதிவிலக்காயில்லை. அழுகையின், அவலத்தின் மவுன ஒலங்கள் எழும் இரவுகளை இன்னும் அது உடைத்ததாயே இருந்தது. எப்படியிருந்த அரண்மனை. இப்போது.? யார் இதன் காரணம். தருமனா, துரியோதனனா, காந்தாரியா, குந்தியா அல்லது பீஷ்மனா, சத்தியவதியா, இனி பிரயோசனமில்லை. என்ன எண்ணி என்ன ஆவது. வாழ்க்கை பெரும்பாலும் வேக்காடுகளிலேயே கழிந்துவிட்டது. இப்போதும் வெம்மை தணியாமலேதான் இருந்தது. ஆனாலும் இறுதிக் கட்டத்தை நிதானமாய் வாழ்ந்து கழிக்க அவளுக்குள் ஆசை எழுந்தது. ஓரிரவு அவள் நினைத்துப் பார்த்தாள் என் பாவத்தின் பங்கு எவ்வளவு.
எல்லாம் மறக்கவேண்டும்.
ஆனால் எப்படி.
'அபிமன்யு மகனுக்கு முடி சூட்டிவிட்டு மஹா பிரஸ்தானத்தைத் தொடங்கலாமோ என்று கொஞ்ச நாளாக யோசனை தோன்றிக் கொண்டிருக்கிறது எனக்கு. யுதிஷ்டிரன் ஒருநாள் சொன்னான்.
நல்லதுதான்! என்று நினைத்தாள். ஆனால், எதுவும் சொல்லாமல் கிடந்திருந்தாள்.
கதா காலம்
156

தேவகாந்தன்
'யாரைக் கேட்க, யார் உயிருடன் இருக்கிறார்கள் ஆலோசனை பெறக் கூடியவர்களாய். எல்லாரையும் அழித்துவிட்டு, வெறுமனே அரசாட்சியை மட்டும் பெற்றுவிடுவது உண்மையாகவே யுத்தத்தில் வெற்றியில்லை யென்பது இப்போது எனக்குப் புரிகிறது." கொண்டே போனான்.
என்று அவன் சொல்லிக்
சுவர்க்கத்துக்கு ஏறுதல் துவங்க இனி கனகாலமாகாது என அவள் கண்ணினாள்.
ஒருநாள் பரீக்ஷரித்துவுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அடுத்த சில நாட்களில் பாண்டவரும் துரோபதியும் மஹாபிரஸ்தானம் துவங்கினர். இமயம் நோக்கிய திசையில் அவர்களது நெடும் பயணம் இருந்தது.
மரணத்தின் கைகளில் தம்மைக் கொண்டுபோய்ச் சேர்த்தல் என்பது மனவுறுதியோடு அளப்பரிய துன்பங்களுக்கிடையிலேயே சாத்தியமாகக் கூடியது. ஆனால், எல்லா உலகியல் பொருள்களையும் இழந்து விட்டு, தன்னுடன் வந்தோரையும் ஒவ்வொருவராய் இழந்துகொண்டு, தன்னை யிழக்கும் உத்வேகத்தில் தன் சுவடுகளையும் காணத் திரும்பாமல் சென்று கொண்டேயிருத்தலென்பது ஒருவகையில் இன்பமுமாகும். இழத்தலில் இன்பம் காண்பவனுக்கு மட்டுமே மஹாபிரஸ்தானம் கைகூடுகிறது.
காடுகள், பேராறுகள், மலைத்தொடர்களெல்லாம் கடந்து இமய மலையின் அடிவாரம்வரை வந்துவிட்டிருந்தார்கள் அவர்கள். மேலே வெண்பனி பரவிக் கிடக்கிறது. மலை வெண்மையாய் வெளியில் கலந்து. யுதிஷ்டிரன் முன்னே போய்க்கொண்டிருந்தான். பின்னே பீமன். அவன் பின்னால் அர்ச்சுனன். அவனுக்கும் பின்னே நகுல சகாதேவர்கள். இறுதியாய் துபோபதி. வாழ்கிற காலத்தில் தன்னருகே வைத்திருக்க யுதிஷ்டிரன் எவளை விரும்பினானோ, அவளை அப்போது நினைத்தாவது இருப்பானாவென்று செல்ல முடியாதிருந்தது. அவனுக்கு தன் குருக்ஷேத்திர பொய்யை பறக்கவே முடியவில்லை. தேவனாய் ஆகிக்கொண்டு போனவன். அக் க்கணத்தில் மனிதனின் பொய்மைப் புவியில் பொத்தெனத் தூக்கி வீசப் பட்டான். அந் நியாயத்தின் கொலைத் தருணத்தை மறப்பதே அவனது மஹாபிரஸ்தானத்தின் முக்கிய நோக்கமாகவிருந்தது. அர்ச்சுனன் Alணனைக் கொன்றுவிட்டு அவன் அண்ணனென்று தெரியவந்த பின்னால், அண்ணனைக் கொன்றேன்! அண்ணனைக் கொன்றேன்! என இரவெல்லாம் அலறிக் கழித்தவன். அவன் இழக்க இன்னுமிருப்பது அந் நினைவாயே இருக்க முடியும். பீமன் எக் கொலைக்குமே வருத்தப்பட்டிருக்க முடியாது.
கதா காலம் 157

Page 89
தேவகாந்தன்
கொலையையும் ரசித்துச் செய்பவன் அவன். ஆனால் இரக்கப்பட அவனாலும் முடியும். அதை திருதராஷ்டிரன் புதல்வர்களின் கொலைக் காகப் பட்டுவிடமாட்டான். நகுல சகாதேவர்களுக்கு நினைவுப் பொறை இல்லை. பிரக்ஞையே அவர்கள் பொறை, துரோபதி கொஞ்சம் கொஞ்சமாய் தன் பாவங்களை எண்ணிக் கழித்துக்கொண்டே வந்தாள்.
மேலே கடுங்குளிரின் ஊசிமுனை அழுத்தங்கள். விரிந்து பரந்து வெண்பனி தூவிக் கிடந்தது வெளி. நடை சிறிது கடுமையானது. சீவன் நழுவத் தயாராயிருந்தார்கள் பாண்டவர்கள். ஆனாலும் நடை தொடர்ந்தது இடையீடிட்ட வெளி அதிகரிக்க அதிகரிக்க,
ஒருபோது கீழே யாரோ விழுந்த சத்தம் கேட்டது பீமனுக்கு. திடுக்கிட்டுத் திரும்பிதுரோபதி கீழே விழுந்து கிடந்தது கண்டான். பதைத்து ஒடிப்போய் அவளைத் தூக்கி மடியில் போட்டான். தனது நெடுங்காலக் கனவுகளில் அதுவொன்றுபோல் அவளது முகத்திலும் விழிகளிலும் ஒரு திருப்தி படர்வது கண்டான் பீமன். அடுத்த கணம் அவளது உயிர் பிரிந்தது. பனி மூட அப்படியே விட்டுச்செல்வது தவிர வேறு வழியில்லை. எது காக்கப்பட வேண்டுமோ அதுவே - அது மட்டுமே - காக்கப்பட்டாக வேண்டுமென்று மஹாபிரஸ்தான விதி கூறுகிறது. துரோபதியின் உயிர் காக்கப்பட்டாயிற்று. இனி அவளுக்குத் துன்பமில்லை. பீமன் எழுந்தான்.
யுதிஷ்டிரன் நேரே பார்த்தபடி போய்க்கொண்டிருந்தான். மற்றவர் களும் அப்படியே. அப்போது அருகில் சென்றுகொண்டிருந்த ஒரு கரு நாயைக் கண்டான் பீமன், ஒ, தர்மதேவதையின்துணையோ? என்று உடனடி யாக எண்ணமெழுந்தாலும், பிறகொரு சிந்தனையில் அவ் வெண்ணத்தை மாற்றிக்கொண்டான். தர்மதேவதையே துணையாக வந்திருக்குமெனில் முதலில் யுதிஷ்டிரனே ஜீவன் உடல் பிரித்துச் சொர்க்கம் புகுந்திருக்க வேண்டும்.
பீமன் இறுதியாய் பணியுள் அழுந்திக்கொண்டிருந்த அத் தீக் கொழுந்தின் உடலைப் பார்த்தான். பின் தொடர்ந்து நடந்தான். சோகமே தாவது துரோபதி குறித்து தன் மனத்துள் இருக்கிறதாவென்று யோசித்துப் பார்த்தான். இருப்பதுபோலவே இருந்தது. மஹாபிரஸ்தானம் அவனுக்குப் பிடிபடவேயில்லை. s
பின்னர் அப் பேரழகன் சகாதேவனும், பிறகு நகுலனும், தொடர்ந்து காண்டீபம் கண்டடைந்தவனுமான அர்ச்சுனனும் விழுந்திறந்தனர். பீமனே அவர்களைத் திரும்பிக் கண்டும் வருந்தியும் கொண்டு சென்றபடியிருந்தான்.
கதா காலம்
158

தேவகாந்தன்
கருநாய் இன்னும் யுதிஷ்டிரன் கூடவே சென்றுகொண்டிருந்தது.
பின்னாலெழுந்த சத்தங்களில் தம்மில் நால்வர் பிரஸ்தானம் அடைந்துவிட்டமை தெரிந்தான் யுதிஷ்டிரன். பெரிய உருவத்தின் அசைவு நிழலாய் பக்கப் பார்வையில்பட பீமன்மட்டும் தொடர்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. பக்கத்தில் கருநாயொன்று கூடவே வந்துகொண்டிருப்பதும் கண்டான். அதை அவனால் விரட்டிவிட முடியாது. தன் பாவம் துரத்திக் கொண்டிருக்கிறதெனத் தெரிந்தான். வாழ்க்கையை முயன்றிருந்தால், மஹாபிரஸ்தானத்துக்கு அவசியமில்லாமல் அழகாய் வாழ்ந்திருக்கலாமென அப்போது அவனுக்குத் தோன்றியது.
பின்னால் பெரிதாய்ச்சத்தமொன்று கேட்டது. நிசப்தம் தொடர்ந்தது. சரி, பீமனும் போய்விட்டான்! என நினைத்துக்கொண்டு இன்னும் கழல்படாத ஜீவ அவஸ்தை கொண்டான் யுதிஷ்டிரன்.
கருநாய் கூடவே சென்றுகொண்டிருந்தது.
(முற்றும்)
கதா காலம்
159

Page 90
நமது சமூகத்தின் உயிர்த் ஒன்றான மகாபாரத இதிகாக் யும் உள்வாங்கி அதை உசு செய்து, சுருள்வில்லைப் ே
நடையுடன் மறுவாசிப்புச் ே
தமிழில் மறுவாசிப்பு தொடர் வரும் இத்தருணத்தில் ஈ பங்களிப்பாக கதாகாலம் ெ
மறுவாசிப்பு முயற்சிகள் : தமிழிலக்கியச் சூழலுக்கு மதி அமையும் கதாகாலம் என்
படைப்பு நல்லதொரு ஆரம்
நவீன ஈழத்துத் தமிழிலக் பங்களிப்புச் செய்பவர்களு தேவகாந்தன், வாசகர்கள் மேலும் ஊக்குவிக்கப்பட
எதிர்பார்ப்பு.
E5TEOLD GI
 
 

")
துடிப்புள்ள அம்சங்களில் சத்தின் சாரத்தையும், ஜீவனை ந்த முறையில் மீள்சிருஷ்டி போன்ற விசைமிகு மொழி செய்யும் முயற்சி இது.
ர்பான பிரக்ஞைகள் உருவாகி ழத்துத் தமிழிலக்கியத்தின் வளிவருகின்றது.
அறவே இல்லாத ஈழத்துத் ாபாரதத்தின் மறுவாசிப்பாக ானும் தேவகாந்தனின் இப்
பமாக அமைகிறது.
க்கியத்துக்கு தற்காலத்தில் ள் முக்கியமான ஒருவரான ாலும், விமர்சகர்களாலும்
வேண்டும் என்பதே எமது
|ഖണിuീB