கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கவிக்கற்பரசி

Page 1


Page 2

கவிக் கற்பரசி
நாவற் குழியூர் நடராசன்
காங் த ள கம்
மறவன்புலவு 4, (psób LDT, rder al-Lub aorsusč6a s 834, ogbrownø mod யாழ்ப்பாணம் சென்னை - 600 002

Page 3
முதற் பதிப்பு: அக்டோபர் 1991 உரிமை பதிவு
விலை съ 45 00
egyé6. "GLITff te
காந்தளகம், யாழ்ப்பாணம்

பதிப்புரை
நாவற்குழியூர் நடராசன் 1943 ஆம் ஆண்டு கவிதை உலகிலே பிரவேசித்தார். அப்போது அவரது கவிதைகள் ஈழத்து இதழ்களிலும் சோழத்துச் சஞ்சிகைகளிலும் வெளி வந்தன. முதற் பதினைந்து ஆண்டுகளில் அவர் எழுதிய கவிதைகள் 1960 ஆம் ஆண்டில் சிலம்பொலி" என்ற பெயரில் நூலுருவில் வெளிவந்தன. அதன்பின் அவர் எழுதிய கவிதைகள் இலங்கை வானொலியிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்தபோதும், அவை நூலுருப் பெறவில்லை. அதனால் அவரது கவிதைகள் அனைத்தையும் தொகுத்து கேவிக்கற்பரசி” என்ற பெயரில் இப்பொழுது வெளியிடு SGpITth.
நூற்றுக்கு மேற்பட்ட மேடைக் கவியரங்கங்களிலும் வானொலிக் கவியரங்கங்களிலும் பங்கு பற்றியும் தலைமை வகித்தும் கவிவளம் பெருக்கிய இக் கவிஞரது பாடல்கள், பொதுமக்கள் படித்துச் சுவைப்பதற்கும் பாடிக் களிப்பதற் கும் ஏற்றனவாகையால், அவற்றைத் தொகுத்து இந் நூலுருவில் வெளியிடுவதிலே நாம் பெரிதும் மகிழ்ச்சியடை கிறோம்.
சிலர் தமிழை முறையாகக் கற்றுக் கவிதை எழுதுகிறாரி கள் பலர் தமிழை முறையாகக் கல்லாமலே கவிதை எழுதுகிறார்கள். நாவற்குழியூர் நடராசன் கவிதை எழுதத் தொடங்கியதன் காரணமாகத் தமிழை முறையாகக் கற்கத் தலைப்பட்டவர். அவர் கவிதைகள் மட்டுமன்றிச் சில ஆய்வு நூல்களையும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி யுள்ளார். அவற்றுள் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி" என்ற அவரது ஆய்வுநூலை முன்னர் வெளியிட்டிருந்தோம். கலாநிதி (முனைவர்) தேர்வுக்காக அவர் செய்த ஆய்வின்

Page 4
1V
பலன் அந்நூலாக மலர்ந்துள்ளது. இலங்கை அரசின் இற்து கலாசார அமைச்சு 1991 ஆம் ஆண்டு நடத்திய தமிழ் சாகித்திய விழாவின்போது அதற்கு ரூபா 10,000 பரிசும் பதக்கமும் பொன்வண்ணச் சின்னமும் தந்து பாராட்டியது. இவரது ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு, அடுத்த ஆண்டு களில் நூலுருவிலே வெளிவர ஏற்பாடுகள் செய்யப்படு கின்றன.
பாழ்ப்பாணத்து நாவற்குழியூர் நடராசனின் கவிதை களை அவ்வப்போது படித்துச் சுவைத்துப் பாராட்டிவந்த சாலை இளந்திரையன் அவர்களை இக்கவிதைத் தொகுப் புக்கு முன்னுரை எழுதித் தருமாறு கேட்டிருந்தோம். முனை வரும் கவிஞருமாகிய சாலை இளந்திரையன், இப்பாடல் ஆசிரியரின் கவிதை உள்ளத்தை உணர்ந்து எழுதி உதவிய முன்னுரை, இந்நூலுக்குப் புகுமுகமாக அமைகிறது. அதற் காக அவருக்கு எமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டு, இக்கவிதைத் தொகுப்பை உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்
காந்தளகம் க. சச்சிதானந்தன் மறவன் புலவு
சாவகச்சேரி
17. 10.91

முன்னுரை
பேராசிரியர் சாலய் இளந்திரயன் பேரவை இல்லம், சென்னை-86
ஒரு காலத்தில் தமிழில் வெளிவரும் கவிதைப் புத்தகங் களை எல்லாம் தேடிப் பிடித்து வாங்கி அவைகளை வரி விடாமல் படித்துக்கொண்டிருந்தேன். இது 1980க்கும் 1970க்கும் இடைப்பட்ட காலம். அந்தக் காலத்தில் ஒரு நாள்,-1960-61இல் இருக்கலாம்-நாவற்குழியூரி நடராசன் அவர்களின் சிலம்பொலி" என் கைக்குக் கிடைத்தது. அதன் சந்த இனிமையிலும், மரபு பிறழாத பாட்டமைப்பிலும், அங்கங்கே குமிழியிட்ட கருத்து வீச்சுகளிலும் திளைத்த வாறே, 1962இல் ஈழநாட்டுச் சொற்பொழிவுச் சுற்றுப் பயணத்துக்குப் புறப்பட்டேன். அங்கே நான் நேரில் கண்ட இலங்கை வானொலி அதிகாரியான நடராசன் அவர்கள், இந்தக் கவிதைகளைப் பாடியவரி இப்படித்தான் இருப் பாரி' என்று அசலாக அடையாளம் காணும் விதமாக என் முன்னே காட்சியளித்தாரி. அதன் பிறகே, அவர் முறை யாகத் தமிழ் பயின்ற வித்தகர் என்பதை அறிந்து மகிழ்வு பூத்தேன். அதன் பிறகு, இலங்கையிலும் சென்னையிலும் சந்தித்த போதும் அவருடைய கல்விப் பெருக்கையும் கவிதை முறுக்கையும் தவறாமல் கண்டு மகிழ்ந்தேன்.
彝 崇 崇
இப்போது, பழைய பாடல்களும் புதிய பாடல்களும் இணைந்த 16 கவிக் கற்பரசி' என்னும் நூலுக்கு நான் முன்னுரை எழுத வேண்டும் என்று கேட்டுள்ளார் கவிஞர் நடராசன். தாய் நாட்டை விட்டு வேற்றுநாட்டில் வாழ்ந்து வருகிற இப்போதும், கவிதைப் பணியை மட்டுமல்லாமல் அதன் மூலமே கிடைத்த என்னுடைய தொடர்பையும்

Page 5
vi
அவர் மறக்கவில்லை என்பது அறியப் பெரிதும் மகிழ் கிறேன்.
சிலம்பொலியில் சந்தித்த குறும்பு, கவிக் கற்பரசியில் கொஞ்சம் அடங்கியிருக்கிறது. அந்த நூலின் இல்லையான காவியத்தில் இடம்பெற்ற, உத்தமரிகளும் உளர் ஒரு மணி வேளை, பத்தினிகளும் உளரி பகலினில் அங்கே" என்னும் கூர்மையான அங்கதம்,-- "வீரம் நிறைந்தியல் தீரக் கவிதை கள் வீணை இசையுடன் பாடாமல், கோரம் நிறைந்திடு காமக் கவிதை ஏன், கூறும் தமிழ் இசைவாணரிகளே?? என்னும் ஆவலாதி (புகாரீ)க் குரலாக மாறியுள்ளது. ஆனாலும், தமிழின் அறிஞரி, கவிஞரி பெருமக்களை நினைத்துக் கொள்ளும்போது அவருடைய உள்ளம் புத்தம் புதிய கவிதைச் சுனையாகப் பொங்கி வழிகிறது.
செத்தனன் என்றா இங்குச்
செப்பினர் தமிழ் வடித்த வித்தகக் கனகசுப்பு
ரத்தினக் கவிவலானை? உத்தமப் புலமை என்றும்
ஓய்வதோ?-உலகில் (ங்கு Glv5gsRui (TRJ90 gif uur
áfu acéS5 virarms
என்னும் பாடலின் கடைசி அடி, ஆயிரம் பொன்பெறும் அழகுச் சீறடி. பொருள் மணத்தைப் பூட்டி வைத்து நம் இதயத்தெதிரே ஏந்தி நீட்டும் புதுப் பூங்கொத்து அது இந்த அடியில் வாழும் காலத்திலேயே நடைப்பிணங் களாக நடமாடுவோர் எந்தப் பெரிய சாதனையையும் ஏற்ற முடியாது" என்னும் சிரிமைக் கருத்து அழுத்தம் திருத்தமாக அறைந்து சொல்லப்படுகிறது.
காலப் போக்கில் நமது நாவற்குழியூராரிடம் ஏற்பட் டுள்ள மாறுதலையும் அதனால் சிறிதும் குறைவுபடாது

vi
திகழும் அவருடைய கவியாற்றலையும் இங்கே ஒப்பிட்டு உணர்த்தியதற்குக் காரணம் உண்டு. ஒரு கவிஞனுக்கும் மற்றவர்களைப் போல வயது ஆகிறது; அவனும் புதிய புதிய கருத்துக்களை ஏற்றுத் தனது பழநடையில் சிறிய மாறுதல்களுக்கு உட்படுகிறான். ஆயினும் அவனுடைய கவிதை ஆற்றல் என்பது கனன்று கனன்று புதுப்புதிய அணற் பொறிகளை அள்ளி வீசுகிறதே தவிர, அது அடங்கி முடக்கிப் போவதே கிடையாது
t.
பழைய கவிதைகள், புதிய கவிதைகள் என்கிற வேறுபாடு இல்லாமல், புத்தகம் முழுவதும் ஒரு கண்ணோட் டம் விடுகிறேன். சந்தச் சிறப்பே இந்தக் கவிஞரின் தனிச் சிறப்பு என்பது புத்தகம் முழுவதும் பூத்துக் கிடக்கிறது.
கேட்கு துமணி ஓசை போலக் கிண்கி னிர்னன-என்னை வாட்டும் அந்த வணிதை காலின் வளைசி லம்பொலி!.
இது சிலம்பொலி என்னும் கவிதையில் ஒரு கண்ணி. புத்தகம் நெடுக, இத்தகைய பண்ணினிமை வெவ்வேறு சற்தகிகளில் நம் நெஞ்சை வருடுகிறது.
அச்சம் என்ப தென்ன என்ற
அறிவி லாத போதெ லாம் துச்ச மாகும் வாழ்க்கை யங்கு துன்ப மென்பதில்லையே வற்றெடுக்குது கவிதை-ஆறாய் ஓட்டெடுக்குது கவிதை pits nauranor Guibo Tih-air fair
றிடித்தெ ஹியுது கவிதை
TLTT T0LTT TTTTTLLL S TETT TTT LLTTLLTLLLLLLL LLLLLLLT0LL ஒரு புதிய எழுச்சியை காட்டுகிறது. கவிதை வற்று’ப்

Page 6
viii
பற்றிய இரண்டாவது கவிதை கவிப் படைப்பின் மிடுக்ை மிகுற்ற எடுப்போடு ஏற்றெடுத்து மொழிகிறது. பகைவர் தம்மை நடுக டுங்கப்
பண்ணி வைத்த பாண்டியர் பாதுகாப் பின்கீழு விர்த்த
u6in G 03 surria sir niris6Tr வகைகள் கொண்ட சேனை வந்து
வளையமிட்ட போதெலாம் வாளை வீசி வாகை பூண்ட
வம்மி சத்தார் நாங்களா?
என்று-இற்றைத் தமிழர்களை நோக்கிக் கவிஞர் கேட் கும்போது, வீரத்தால் ஓங்கிய ஒரு வேங்கைப் பாண்டியன் 70 அடி உயரத்தில் நம்முன்னே எழுந்து நிற்பது போன்ற ஓரி உணர்ச்சி நம் மனக் கண்ணில் விரிகிறது!
தமிழ்நாட்டுக் கவிமணியின் 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்" தனித்து உயர்ந்ததோர் அங்கதச் சீரேடு. அதேபோல, நமது நடராசனின் கவிதைகளில் இல்லை யான காவியம்"ஈடற்ற அங்கதப் படைப்பாக விளங்குகிறது. (இதில் வரும் செய்திகள் ஒவ்வொன்றும் இன்றைய வாழ்வோடு நேரிடைத் தொடர்பு உடையவைகளாக இருப்பதால் அவைகளுக்குத் தனித்த கவர்ச்சி ஏற்படுகிறது: அதள் சிறப்புப் பகுதிகளை மேற்கோள் காட்டுவதென்றால், அனைத்துப் பாடல் அடிகளையுமே எடுத்துக்காட்டியாக Gawadhur (9b) W
தீபாவளிக் கொண்டாட்டத்தை ஒட்டித் தமிழ்ப் பத்திரிகைக்காரர்கள் சிறப்பு மலர்களை வெளியிடுவார்கள். கவிஞர்கள், நீமை அழிக்கப்பட்டு நன்மை வளர்க்கப்படும் கருத்தைப் பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்துவார்கள். "தீமைகளை அழிக்காமல் இருக்கும் நமக்குத் தீபாவளிக் கொண்டாட்டம் ஒரு கேடா?" என்றும் கேள்விக்கணை Q35 TQ9ÚLuTf SG Går. Jopis தாக்குதல்களையும் தூற்றல்களை

影K
யும் புறக்கணித்துவிட்டு, அதிலே ஒரு புதுமை பாடுகிறார், கவிஞரி நடராசன் :
வேண்டாம் எமக்கிந்த வெறுந்தீபாவளிகள்: ஆண்டாண்டு தோறும் நெசவாளிகளின் காளிதெனக் கொண்டாடி ஆலையில்லாக் குறையைத் தவிர்ப்பேஜ் 6. T திண்டாடி வாழவொரு தேவை வில்லை.
நிலவையும் கதிரையும் நீள்விழி மாதரின் பார்வைகளையும் பாடுகிறவரிகள் என்று சொல்லப்படும் கவிஞர்களில் ஒருவர் தீபாவளியின் பெயராலேயே தொழில் வளத்துக்கு வரவேற்புக் கூறுவது புதுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக் கிறதல்லவா? இது போலவே, மாறிவரும் காலச் சுழற்சியை வருணித்து வரும் கவிஞர், வேற்றி வாடி என்புருவாகி நின்ற மரமெலாம், சற்று நாட்கள் சென்றதும், சருகுதிரிந்த கொம்பிடை-அற்று வீழ்ந்த பழமையின் அடியில் புதுமை தோன்றல்போல்,-கற்றை கற்றையாய்த் துளிர் கக்கி இன்பம் எய்தின' என்று பாடுவது, அழிவைக் கண்டு அயர்ந் திடாத புதிய நம்பிக்கைக்குக் கட்டியம் கூறுகிறது.
இவருடைய வாழ்வியல் சிந்தனைகள் புத்தகம் முழுவதும் படர்ந்து பரவிக் கிடக்கின்றன. அவைகளுள் படித்த படிப்பைக்கொண்டு வேற்று நாடு சென்று பொருள் திரட்டப் புறப்படும் ஒருவனைப் பாரித்து, அவனுடைய தலைவியின் தோழி சொல்லுவதாக இவரி பாடியுள்ளது வரவேற்றுப் போற்றத் தக்கதாக உள்ளது.
அற்புதப் பொருள்செய் விற்பனர் துணையொடு கற்பூரம்முதல் வெற்பூர் பொறிவரை கற்பல னளிக்கும் பற்பல பொருள்கள் சற்சனர் கூட்டி உற்பத்தி செய்து விற்பனை யாக்கி வேற்றுகாட் டவரின் கற்பனைக் கெட்டாக் கவின்பல பெற்றுப் பொற்புறு நல்ல பொருளாதாரம்

Page 7
உற்றுயர் வெய்தின் மற்றெக் குறையும் அற்றழிக் தோடி ஞானம் பெற்றவர் உளம்போற் பெருகிறை வுறுமே!
ஒரு கவிஞன் என்ன என்ன பொருள்களைப் பற்றிப்பாட வேண்டும் என்று அவனுக்குப் பாடம் கற்பித்திட எந்தப் பேராசானுக்கும் உரிமை கிடையாது. அதை அந்தக் கவிஞனுடைய உள்ளமும் அவள் வாழும் சமுதாயமும் மட்டுமே இணைந்து முடிவு செய்கிறார்கள். அற்த முடிவில் காய்த்துக் கணியும் கவிதைக் கணிகளைச் சுவைத்துப் பயன் பெற்றிட மட்டுமே மற்றவரிகளுக்கு உரிமை உண்டு. அந்த வகையில் பார்க்கிற போது, சிந்தைக்கும், செவிக்கும், எடுத்துப் பாடும் வாய்க்கும் இனிமை நல்கி, படிப்போரின் eaJ mtbay4lejlb aj arub Asprálá?Aug.au aser?aRoas savaWro AJ Lo degü Lumtugé தற்திருக்கிறார், கவிஞர் நாவற்குழியூரி நடராசன் அவர்கள். அதற்காக அவரை வாழ்த்துவோம்; பாராட்டுவோம். சுவைஞர்களாகிய நம்மிடமிருந்து ஒரு நல்ல கவிஞருக்குக் கிடைக்கக் கூடிய பொருள் வேறு என்ன இருக்கிறது?
87TMORO AS)MT fi géRDTuLudir

பொருளடக்கம்
s கவிக்கற்பரசி
. சிலம்பொலி
. தாமரை மங்கை
இதய ராணி
. பூங்கொடியாள்
மலர்க்குலம் கண்ணைக் கவர்ந்த ஓர் கார் எழில்
தாரகைக்கன்னி
. இராப் பகல்
. சுவர்க்கம்
படுத்துகிற பார்வை
. கவீன கோவை
எனக்கது முடியாது. கட்டழகைத் தொட்டளையோம்.
பிரிவாற்றாமை
. பெரிதும் சிறிதும் . தெரியாதா?
wo சிறை
11
12
13
15
16
17
1)
20
96.
97
29

Page 8
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32
33
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
xii
காலக் கடல்
இந்த மனிதர்கள்
வாழ்வு போர்த்தொழில் புறக்கணிப்போம் ஊர் அறிந்த கேடு. போராட்டம்
என் மனைவிக்கு என் மகளுக்கு
தீபாவளியா?
தை பிறந்தது
சுழற்சி இயங்காத காற்சட்டைக் காரீர் பாண்டியா எங்குற்றாய்? சீரழிந்து வாழ்வதா? என் முன் இருந்த தெய்வம் கேட்டியோ பாரதீ! கவிதை ஊற்று. எங்கள் பெரு நிதியம் கடக்காது அந்த நயவஞ்சம் இல்லையான காவியம் கெஞ்சின் அலைகள்
லண்டனிலே
உவெஸ்மிஸ்ரர்ப் பாலத்தே
31
32
34
36
39
41
42
45
47
50
52
55
56
58
60
63
64
66
68
70
75
7Ꮛ
80

42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
60.
61.
62.
63.
64,
xiiiiyo
somJ 6GuDnssonth
பொங்கல்
கங்கணம்
இந்தக் காதல் வேற்று மணம்
D-rfloop D
காட்டுக் கென்ன செய்தாய்? ஆருக்காக வாழ்கிறோம்?
வறுமை வேனில் விளையாட்டு புத்தாண்டுச் சித்திரங்கள்
வாரிக்கொள்
என் மகனுக்கு பொங்கிடுவீர் செஞ்சொற் சிலம்புடையாள் தாரணிக்கு ஓர் அச்சாணி மே தின நாள் பாவிலே புதுமைபூத்த பாரதிதாசன்
எங்கள் காவலன்
பண்டிதர் கோன் வான்தோய் புகழ் முடித்தோன் சிந்தைத் தெருவில்
சக்தி மயம்
8
85
86
87
89
92
93
95
97
98
100
109
10
106
108
110
112
114
116
117
119
120
129

Page 9
65.
66.
67.
68.
69.
70.
71.
72.
73.
74,
75.
76.
தேக்கம் பழிக்குப் பொறுப்பினி யார்? மாண்புயர்ந்த சிவன் அஞ்சேன்
புக்ககம் காணாத தென்னவரும் வானவஊர்தி வந்ததும் கைமேற் கிடைத்த பலன் உச்சத்தில் ஏனிருந்தாய்? திருகோணத்திலே சான்று
போக முன்னால்.
124
126
128
133
135
137
137
138
139
140
141
142

கவிக் கற்பரசி
நாவற்குழியூர் நடராசன்

Page 10

கவிக் கற்பரசி
ஆற்றருகே போனேன், பின் அங்கிருந்து யங்திரங்கள் வீற்றலறுஞ் சாலைகளின் வீதிவழிப் போனேன் கான்; யாற்றரவம் கேட்கவிலை, யங் திரச்சில் ஒசையிலை, ஏற்றசெவிப் பட்டதெலாம் என் இதயத் துள்ஒலியே.
ஆண்டொரு மா மரநிழலில் அன்றிருந்தேன், அங்கிழல்தான் நீண்டது, பின் நீண்டதுவாய் நீண்டுமறைங் தே கியதேபூண்டமனப் பான்மையொடோர் பொன்னடியின் மெல் ஒலியை வேண்டி இருள் சூழ கின்றேன், வேறெதும்கா தேறவிலை
R க.க-1

Page 11
நீாவற்குழியூர்கடராசன்
'விண்மீன்கள் யாவுந்தம் விதிவழி வந்துவிட, கண், மீன்கள் போலுடையாய் காலத்தைத் தாழ்த்துவதேன்? பண்ணோடு தென்றல் எமைப் பாடிப் பரிசுபெறக் கண்ணோடு கண்மூடாக் கருத்தாய்க் கிடக்குத'
என்றுசொலிக் கண்ணயர், எங்கிருந்து வந்தனளோ! குண்டுமணி நிறத் தாள், என் கோதை, கவிக் கற்பரசி, "அன்றுபல பேசுவதற் காசைமிகப் பட்டனடீ இன்றெனக்குன் முன்னிலையில் ஏன் எதுவும் தோன்றுதிலை?"
'வா, அடிவா, வா, அருகில் வா, இதென்ன காண மடீ ! பாவலர்கை கோடி முறை பட்டு இனியும் காணுவதா? காவியாகற் காவிலுனைக் கண்டுமனங் கொண்டபினென் ஆவி உண்ணப்பார்க்குதடீ அன்றெழுந்த கற்பனைநோய்.”
2

சிலம்பொலி
கேட்கு துமணி ஓசை போலக் கிண்கி னிர் என - எனை வாட்டும் அந்த வணிதை காலின் வளைசி லம்பொ லி. அள்ளு தென்றன் நெஞ்சை அச் சிலம்ப ரற்ற லே - மனம் கொள்ளு தந்த நூபுரத்திற் கோடி ஆசை கள். ஆடும் அங்த அமிழ்தி னல்ல ஆர ணங்க டிக் - கிசை பாடும் அந்த மங்கை காலிற் பாத சங்கி லி. கீதம் பாட வல்ல நல்ல கிண்கி னிய துன் - செம் பாதஞ் சேர என்ன டீே பாக்கி யஞ்செய் தாய்! யாவன் செய்ய வல்லன் இன்ப யாழ்த்தமிழ்கங் காய் - இளங் கோவன் செய்து னக்க ளித்த நூற்சி லம்பு போல்? தங்க மேணித் தமிழ ணங்கே தார கணிக்கெ பூழில் - உன் பொங்கு காலில் மேவும் அந்தப் பொற்சி லம்ப டி

Page 12
தாமரை மங்கை
ஆருக்கும் எட்டாத வாவியில் - நீர் ஆடிக் குதிக்கிறாள் தாமரை; பாருக்கு மேல்கின்று பார்க்கிறான் - அங்தப் பருவ மங்கையின் காதலன்.
கண்ணைச் சிமிட்டிகட் பூட்டுறாள் - ஒற்றைக் காலினில் கர்த்தனங் காட்டுறாள்; மண்ணை மயக்குதக் காதலன் - அவள் மாண்பினைக் கண்டுசெய் புன்னகை.
தன்னை மறந்துநின் றாடுறாள்-அவன் தன்திசை போகவும் ஊடுறாள்; மின்னைப் பழித்திடும் மேனியாள்-இதழ் மெல்லக் குவிப்பதும் கொஞ்சவோ? \
யாரைநீ கொஞ்சமுன் சாய்கிறாய்-அடி யாருமில் லாதஇவ் வேளையில்? ஊரைநீ ஒண்நகை காட்டிஏன்-வெறும் உன்மத்த மாக்கினாய் ஊர்வசி?
மானடி உன்னெடு நோக்குகள்-அதில் மருண்டு ப்ோகுதென் வாக்குகள்; ஏனடி இத்தனை காட்டியம்?-இதில் எத்தனை பேரைநீ வாட்டுறாய்?
4.

இதய ராணி
வண்ணக் கவிதைகளின் வாசமெனும் என்னுடைய எண்ண உலகாளும் என் இதய ராணி, அடீ உன்னைப் பிரிந்தேனர்.? ஊடல் எதற்கடி பின்.? என்னைப் புரந்திடுவாய், இங்தா, சற் றென்னைப்பார்!
என் செயினும் என் தேவி! என்னோடு நீ ஊடிக் கண்ணே புலக்காதே, கணமும் அது சகியேன்; மண்ணுலக மாந்தரைப் போல் மருட்டுதற்குச் சொல்லவில்லை; என்னரசி உன்னை விட இன்னொருத்தி எண்ணுவனோ..?
5

Page 13
நாவற்குழியூர்கடராச
உன்னோடு காணெய்தும் உல்லாசப் பேரின்பம் பொன்னோடு சாகின்ற பொற்கொடிக ளாலுண்டோ..? *கண்ணாளன்’ ‘காமன்" என்பார், ‘காதல்"கலி யாணம்’ என்பார், விண்ணாணம் மதுமயக்கழ் - விடிந்தவுடன் போங்கதைதான்.
மண்ணுலகப் பெண்மொழியை, மற்றவர்கள் கண் அழகை எண்ணித் தவங்கிடங்தே ஏங்குபவர் காமல்லர்; கண்ணிழந்து மேற்பூச்சிற் கடடுண்ணோம்; மனணுலகப் பெண்ணுலகே கேள்! இனிநின் பின் திரிய யாருமிலை

பூங்கொடியாள்
-
காத்துக் கிடக்கிற காதலி மார் உளம் கன்றிப் பசப்புறு மேனியென-இங்கு பூத்துக் கிடக்கிற பீர்க்குகளே தொலை" போய்உம் உடல்பசப் பித்தவர் ஆர்?
ஈங்கய லேபடர்ங் தேங்கி மனமுடைங் தின்நிறம் யாவும் இழந்திருக்கும்-பீர்க்குப் பூங்கொடி யேஉனைப் போலப் பசக்தலச் பூத்தும் ஒருபேதை போகுவளோ?
யாரைநீ தேடிப் படருகிறாய் உன்றன் யெளவன மேனி பசந்திடவே?-முட் காரையின் காடுகள் சுற்றிப் படர்ந்தும் உன் காதலனை இன்னும் கண்டிலையோ?
எங்கடி போயினன் உன்கண வன்? உனை ஏமாற்றிப் போயின னோ? உனக்கே-ஒளிர் தங்கமும் வெள்ளியும் தங்திட வோ? கல்வித் தர்க்கங்கள் செய்து மகிழ்ந்திடவோ?
என்றுனைக் கூடி இருந்தான டீஅவன் எங்குனை விடடுப் பிரிந்தானடீ?-பகை வென்றுனைக் கூடிக் களித்திட வேபோன வில் விற லோன் இன்னும் வந்திலனோ?

Page 14
காவற்குழியூர்கடராசன்
முல்லை இனங்கை பூக்கையிலே, முகில் முற்றும் கருத்தரித் தார்க்கையிலே,-முளை கெல்லை வயலிடைச் சேர்க்கையி லேவினை நீங்கி வருவேன்' என் றோதிலனோ?
பின்னர் மயிலினம் ஆடுவதை மட்டும் பேதைகீ கண்டு, "அவர் வங்திலரே'-என்று முன்னை இருக்தஉன் முத்தெழில் போய், உடல் முற்றும் பசப்பூரச் சோருவதேன்?
தாளுனக் கொன்றெனத் தேய்ந்ததெ லாம்பிரிக் தான்எண்ணி பேடர்ங் தோ? அவனும்-போன காளெண்ணி யோவிரல் தேய்ந்ததடி? சென்று காடெண்ணி யோ மனம் மாய்ந்ததடி?
ச்ோலையு ளேபடர் சுந்தரி யே உன்றன் சோர்வது வும்ஒரு சோபையடி-இன்று காலையில் இங்குனைக் கண்டபின் னே உள்ம்' கவலையும் வேலுமென் றெண்ணுதடி

மலர்க் குலம்
எத்தனையோ செம்புலவோர் எத்தனையோ சொல்லினுமென் எத்தனையோ சொல்லுவதற் கின்னும் இருக்குதடா எத்தனைகாள் கான் மலரை எத்தனையாய்ப் பார்த்துவிடடேன்; எத்தனையோ பார்க்க அதில் இன்னும் இருக்கிறதே!
மெத்தனழில் மேவுகிற மேலாம் மலர்க்குலங்கள் இத்தரணிக் கில்லையெனில் எங்கே அழகிருக்கும்? அத்தகைஏர் கொண்டகத்தை அள்ளிவிடும் அக்குலத்துக் கித்தகைய சிறுவாழ்வோ? ஏன், இதுவும் எம்வினையோ?

Page 15
காவற்குழியூர்கடராசன்
தாமரையைத் தையலரின் தண் முகத்துக் கொப்பெனில் அத் தாமரைதான் வாடாதோ? தாழ்குழலார் கண்களினைக் காமருசேர் காவியெனக், காந்தளினைக் கையெனவும் காமுரைக்கின் காண முறறோர் நாளிலவை வாடாவோ?
முல்லைகளே, உங்கொடியின் முகைகளை காம் பல்லென்றால் இல்லையென வாய்திறங்தெம் ஏழ்மையினை நகைக்கின்றீர்; எல்லையறு பரம்பொருளே இயற்கையது சக்திகளே! ஒல்லையிலே உம்மகிமை உணர்த்துவதற் கோ இவையும்?
0

கண்ணைக் கவர்ந்த ஓர் கார் எழில்
பாரில் வசந்தம் படர்கையில், - மலர்ப் பங்தரி னுள்ளிருந் தின்மொழி *ஆரை நீ கூவி அழைக்கிறாய் - உன்
அன்பொழு குங்குர லால் அடீ?
கடக் குறித்த இடத்தினில், - அடி கோகில மே வங்துன் காதலன் தேடித் திரிவனென் றெண்ணியோ -உன்றன் தீங்குரலாற்குறி செய்கிறாய்? மானம் பெரிதல உன்றனுக் - கொரு மாட்சி பெரிதல, உன் இசைக் கானம் பெரிதெனக் காட்ட நீ - தரும் காதற் கவிதைக ளோ அவை? தேனும் புளிக்கும் உன் தீங்கவிக் - கிணை தேசத்தி லேதடி சொல்லுவேன்? கானும் பறந்துவங் துன்னொடென் - வாழ் காளைக் கழித்திட எண்ணுறேன்.
கன்ன்ங் கரியஉன் கார் எழில் - என் கண்ணைக் கவர்ந்ததெவ் வாறடீ? வன்னங் கரியதொன் றாயினும், - உன் வார்த்தை -எனக்கது போதுமே. வாழ்வில் வசங்தமொன் றுண்டடி - அதில் வாழும் மகிழ் மரக் காவினின் சூழ்வில் இருந்துனைப் போலவே - கவி சொல்லிக் களித்திருப் பேனடீ.

Page 16
தாரகைக் கன்னி
மண்ணைப் பழிக்கும்ஒர் பார்வையால்,- இருள் மண்டிக் கிடக்கின்ற போதிலே, என்னை மருட்டிடக் கண்களை - இமை வெட்டிச் சிமிட்டுற கன்னியே!
என்வழி யான்செலும் வேளையில் - எனை ஏறிட்டுப் பார்த்திவ் இரவினில், உன்வழிக் காக்கிட, மாடியில் - நின்று உற்றுற்றுப் பார்க்கிற மங்கையே!
சொல்லடி ஏன் உனக் கிவ்விதக் - கொடும் சூழ்ச்சிகள்? உன்றனுக் கேற்குமோ? நில்லடி, என்னுளம் தொட்டபின் -ஓடும் நீசங் தனங்களேன் செய்கிறாய்?
உன்றனைப் பின்தொடர்ங் தேகிட - வழி ஒன்றையும் காண்கிலன், என்செய? என்றனை விட்டுங் போவதும் - அடி ஏன்? எவ ரேவருகின்றனர்?
காளை இரவினில் வங்துனை - இங்கு காடி யிருப்பன் என் காயகீ வேளை தவறாமல் வந்திடு - கெஞ்சு வேகும் தறுவாயிற் போகிறாய்
12

இராப் பகல்
காமன் எழில்என ஒர்கடைக் கண்ணிற் கதிர்ஒளி பட்டதும் பூமகள் பார்க்கத் திரும்பினள், புன்மை இருட்கணம் போயின. கண்டனள், காலைக் கதிரவன் காந்தியும் தண்மையும் நெஞ்சினைக் கொண்டன; கொண்டிட, வேங்தனைக் கூடக் குறுகி கடந்தனள், பொங்கின பூம்பொழில் இன்பெலாம், பூரித்தனமலைக் கொங்கைகள். அங்கங்கள் யாவும் மலர்ந்தவள் ஆசைப் பெருக்கினைக் காட்டின. பார்த்துப் பருகினன் பானுவும் பார்மகள் மேனி வனப்பெலாம்; வேர்த்துக் கிடந்தனள் பூமகள் வேட்கைமீ தூர்ந்திடு வெம்மையால். செங்கரம் ஆயிரம் டேடினான் சேர்த்து மகிழ்ந்திடக் காதலன்; மங்கையும் தாவிக் குதித்தனள், மாரனுங் கண்டு களித்தனன். கடித் திளைத்தனர், காதலன் கோலக் குறும்புகள் செய்திட, ஊடித் திரும்பினள் காதலி ஒர்புறம்; எங்கும் இருண்டது.
18

Page 17
காவற்குழியூர்நடராசன்
தாரகைச் சேடியர் வந்தனர், தண்மதித் தோழியும் வந்து, "அடீ காரணம் என்" எனக் காரிகை கண்பனி நீரை உகுத்தினாள்.
*ஏதடி, ஏதடி, உன்றனுக் கென்ன நிகழ்ந்ததென் றெங்களுக் கோதடி என்றனர்; ஓதிலள் உற்ற குறிப்பில் உணர்ந்தனர். "காதலன் ஓர்பிழை செய்திடில் காதலி நீபொறுத் தாள்வது தாழ்வல இன்பங் தருமது தான்" என ஊடல் திருத்தினார். கண்ணின் கடையினில் நோக்கினாள் காதலன் புன்னகை பூத்தெழில் வண்ணப் பரிசுடன் வங்தனன் வாட்டம் ஒழிந்தனள் பார்மகள். கண்டனர் கார்குழற் சேடியர், கண்ணைச சிமிட்டிஓர் சூழ்ச்சிமேற் கொண்டனர்; கொண்டு, ‘குழற்கலர் கொய்து வருவம்' என் றோடினர். சாலுங் தனிமையிற் காதலர் சங்தித் தனர், ஒளி சான்றது
நாளும் இவ் வாறு நிகழ்ந்திட நாமும் இராப்பகல் என்கிறோம்!
14 ,

சுவர்க்கம்
கோவல்செயும் வீரரெனக் கோட்டை யெல்லாம்
கண்கள்திறங் தேஇமையா கரையில் நிற்க, மாவலிகங் காந்தியும் மகிழ்ந்து பாடி மங்கைாகடம் பயில்வதெனச் சுழன்று சாடி, பாவல்புடற் கொடிவகையின் பங்தரோடே பழவகையுங் தினை மணியும் குலுங்க, ஊடே போவதெலாம் பார்த்துமணம் பொங்கு கின்ற போதடிநீ இங்கிலையே புதுமை கூட்ட
காவிமலர்க் கண்களொடிக் கான் உலாவும் கன்னியர்பூக் கொய்திட்ங்ற் தேன்கு லாவும்; தா விவளர்ங் தோங்குமரக் கிளைகள் ஆர்க்கும், தகர்ந்தபழங் கோபுரங்கள் தவழ்ந்து பார்க்கும்; தூவிங்கர் காட்சிமனத் தூய்மை யூட்டும், துளபமலர்க் கரைகளெல்லாம் வதுவை கூட்டும்; கூவிவருங் குயில்கிளியுன் கோலங் காட்டும், குறையுளதொன் றடி அதுஇங்கென்னை வாட்டும்.
ஈங்குளபன் மலர்களதெல் லாம்எ டுத்தே இணைப்புறவிங் கெனனிருகை யால்தொ டுத்துப் பாங்குட்னே அனுப்புகிறேன் அடிநீசூடிப் பார்; அதுன்கைக் கிடைக்கும்போ திருக்கும்வாடி! ஆங்கதை நீ ஏற்றிடு பொன் அணிகொ டுத்தும், அவையுனதன் பினைநிதமென் பாற்ப டுத்தும்; கோங்குகள் கன் றோங்கிவளம் தேங்கு மிங்கே, கடஇருங் தாயெனிலச் சுவர்க்க மெங்கே?
5

Page 18
படுத்துகிற பார்வை
நான்பார்க்கத் தான் பாராள், நான்பாரா விட்டதன்பின் தான்பார்த்து வான்ப ார்க்கும்; கான் பார்க்கில்
(தான்பார்த்த வான்பார்த்து மீன்பார்த்து வையத் துளவெல்லாம் தான்பார்க்கு மென்னைத் தவிர்த்து.
மான்பார்த்த கோக்கென்னைத் தான்பாரா
v விட்டதன்பின் கான்பார்க்கும் போதென்னைத் தான்பார்க்கில்
舵 (ஏன்பார்த்தாய் என்றென்னைத் தின்ன எனப்பார்க்கும், அங்கிலையே வென்றென்னைத் தோற்க விடும்.
கான்பாரா விடடாற்பின் தான்பாராள் போற்பார்த்தே ஏன்பாராய் என்றங் கெனை ஈர்க்கும்-ாகான்பார்த்தால் தான்பாராள் என்றவளை கான்பாரேன் போற்பார்க்கத் தேன்பாயு முள்ளத் திருந்து.
பார்த்தாலுங் துன்பம் படுத்துகிற பார்வையினை நீத்தாலும் ஆங்கே கெடுந்துன்பம்-பார்த்தால் படுத்தும் அவளை, அதுஇன்றேல் என்னை அடுத்துக் கெடுக்கும் அது
6

நவீன கோவை
arid பாயும் புலியெனத் தாவணிச் சேலைமுன் பாய்ந்தழுத்த் மாயும் இருமுக மானென விம்முமொர் கச்சணிந்தே
ஏயும் இளங்கொடி ஒன்று கவீனன் வரைமுகிலுள் தோயும் இளம்பிறை யோடெழில் சூடித் துவள்கிறதே!
காதல்
ஆகா! அனநடை மாதிவள்; யாதிவள் ஊர்பெயரோ..? பாகா யுருகிடு மென்னுளம் இங்தப் பணிமதிமுன்; மேகா யிரமென வந்த நவீனன் மலையினிடைச் சாகா மருந்திது வே, பிறி தேதிது சத்தியமே.
கடிதம் என்னுயி ரேதிரு வே! மதி ஏய்எழில் ஆரணங்கே மன்னுயிர் வாழ மருந்துத வும்மலை யென்றுகவினன்னுயி ரான மலைக்குல கேற்றும் நயனுரைகள் என்னுயிர் வாழ மருந்துனை ஈன்றதனாலியைபே,
பதில்
துள்ளுவ தென்னுயிர் ஆரறி வார்? சில தோகையர்கள் எள்ளுவதாக நினைங்தெனை உம்பெய ரோடுரைக்க; அள்ளுவ தாக அமைந்ததென் அன்பெனில்
என்னகத்தே கொள்ளுவ தள்ளி கவீனன் வரையெனக்
கொட்டுவெனே!
7 க.க-2

Page 19
காவற்குழியூர் நடராசன்
UůůL
மாதவம் எத்தனை செய்தன னோ இள மார்பினைவிண் டேதவர் ஞானமெ னா வளர் கங்கைப யோதரத்தை
ஆதவ னும்மணு காத நவீன னடர்வரையின் மீதவ ளாம்பல் இதழுடன் மேவிச் சுகித்திடவே
a-u-d08urške
தேமது ரத்தமிழ் நின்று விளங்கிய தேசமதாம் மாமதுரைப்பதி யேகுவம்; இங்கு கவீனருளம் மேது நானளி யாகிநு கர்ந்திடு தற்கியையார்; பூமது வையளியுண்பதி லின்பம் பொலிகுவரே!
Sifa
மன்றலில் கின்றது போலிள மாதர்கள் வாழ்வினிலேன் நின்றிலர் கால கடந்திட எத்தனை நிந்தனைகள் கொன்றிடல் போலெதிர் பேசிக் கொழுநரை
("ஏவல்கள் செய்" என்றலில் இன்னல்கள் ஏது? இவளோடெமக்
(கேனுறவே!
8

எனக்கு அது முடியாது
மலரதன் அழகுக் காக, மணவினை மாலைக் காகப் பலர் அதைப் புகழ்தற்காகப் பரிமள மிகுதற் காக, அலரதைப் பறித்தென் அற்ப ஆசையின் பலிய தாக்கக் குலமலர் வாட்டம், முள்ளின் குத்தல்கள் தாங்க மாட்டேன்!
செவ்விதழ் முத்துக் காகச் சிற்றிடை முயக்கிற் காகத் திவ்விய மென்று மாங்தர் செப்பிடு வாழ்வுக் காகச் செவ்வரிக் கண்ணாள் தன்னைச் செகத்தினிற் பிரியே னென்றிங் கெவ்விதம் இசைப்பேன் பொய்மை? எனக்கது முடியா தப்பா
புத்திர வாஞ்சைக்காகப் புவியினில் அதனா லெய்தும் உத்தம வாழ்வுக் காக, உருக்குலைத் தவளைப் பத்துப் பத்து மா தங்க ளாகப் பாழ்படு நிலையி லாழ்த்தி, எத்திடு வாழ்வு வாழ, எனக்கது முடியா தப்பா
9

Page 20
கட்டழகைத் தொட்டளையோம்!
காலையிளஞ் சூரியனைக் கண்டு நகைக் கின்ற எழில் மாலை யெழுஞ் சங்திரனை மாறுகொண்ட செவ்வதனம்.
முத்திருந்து பொன் நகைமேல் முறுவல் புரிவதுவும், தத்தி இதழ்ச் செம்பவளம் தன்னுள் அவை தோன்றுவதும்,
படடுடையும் கட்டழகும் பாயுமிரு நீள் விழியும் கொட்டு மழைக் கூந்தலும் அக் கோதை வனப் பேற்றிவிடும்.
கொல்லையினில் முல்லை மலர் கொய்து குழற் பெய்தவளும் முல்லையழகுக்கழகை முற்றும் அளிக்கையிலே.
சொல்லரிய சோபையினிற் சொக்கப் படைத்ததனால்,
எல்லைகடங் தென்னிருகண் ஏகி லயித்தனவே.
i
20

கவிக் கற்பரசி
கால்கிளைய, மேல் வளைய, கைதானை தான் அளைய, சேல் விழிகள் என் ஆகம் சென்றதனு ளே நுழைய.
நின்றாள், இளமங்கை; கெடுகத் தெரிந்தவள்தான்; என்றால் அவள் அழகின் றின்னல் புரிகிறதேன்.?
பெண்ணின் குலத்தினிலே பேரழகி யல்ல; எனின் கண்ணின் அசைவினிலென் எண்ணம் அசைகிறதே!
வண்ணம் சிவப்பில்லை; வாய் பவளம் போலுமிலை; எண்ணம் அதையதுவாய் எண்ணிக் களிக்கிறதே!
பள்ளிப் பருவத்திற் பலகாலுங் கண்டிருந்தும், துள்ளிக் குதிக்குதுளம் தோகையவள் சாயலிலே!
ஏதோ நலன் ஒன்றால் எடுபட்டுப் போக உளம், தீதேதுங் தேராத சித்தப் பிரமையிதோ..?
2.

Page 21
காவற்குழியூர்கடராசன்
காரிகையர் காட்சியில் ஓர் காரணமும் இல்லர்மற் பாரிளைஞர் சொக்குகிற பருவப் பிசகோதரன்.?
அண்டிப் பழகுவதால் அல்லுருவி லும் எழிலைக் கண்டு களிக்கின்ற காதல் இதுதானோ?
பல்லைப் பிறை நுதலைப் பார் என்று காட்டினளா? இல்லை; குழைந்திட்டாள்; ஏன், அழகு தான் அதுவும்
அழகேதான் அக்குழைவும், அழகேதான் அவ்வளைவும் அழகேதான்; அவ்வழகை அகப்படுத்தி விட்டாலோ
அழகை அகப்படுத்தி அதைப் பருக லாமோ காம்? அழகை அகப்படுத்தின் அழகின்மை காடடிடுமே!
இனிமை யுடைமையிலே, எய்தற் கருமையிலே, புனித மிகுதியிலே பொங்கும் அழகுணர்வு.
22

கவிக் கற்பரசி
ஆதலினால் நாமழகை அகப்படுத்த மாட்டோம், போ; காதலினால் ஆனாலும் கடடழகைத் தொட்டளையோம்
தூரத தருங் தெழிலைத் துய்த்துப் பருகி உளம் ஆரச் சுவைப்பதலால், அண்டி அழகின்மை,
காணச் சகிப்போமா? கலைஞர் குலம் அழகு மாணப் பிறந்ததலால், மாளப் பிறந்ததுவோ..?
28,

Page 22
பிரிவாற்றாமை
('பொருள்வயிற் பிரிவேன்’ என்ற தலைமகனுக்குத்
தோழி சொல்லியது)
முன்னெல்லாம் என்னோடு முறைபேசி, "உன்தோழி கண்ணல்லோ அவளென்றன் காதல்லோ’ எனவுரைத்த பொய்யெல்லாம் அறியாமற் போனேனே இழிமதியால் மெய்யல்ல "பிரியேன்” என் றுரைத்தமொழி
(யெனவோரேன்
கெடுமூங்கிற் றோள்வற்றி, நிரையிட்ட வளைவீழப் படுமூங்கில் எனவாகிப் பாடெய்த அவள் நீத்துப் புகைவண்டி பொறிதள்ள, மழையின்றி வறள்கின்ற வகைகொண்ட தருப்பற்றி வண்டிக்கு கெருப்புவைக்கும் வழிதாண்டி, நிலையாத பொருள் வேண்டி கீப்பேனென் றளியின்றி உரை செய்தோய் அமர்ந்திதைக் கேளினி:
அங்குபோய் அன்னியர்க் கடிமைபோ லேயிருங் தெங்ங்ணம் வளர்பொருள் ஈட்டலாம் எனவன்றோ, கொங்குதார்ப் பெரும கின் "கொப்பர்’ கற் கமஞ்செய்து இங்ங்ணம் பெரும்பொருள் எமக்கீட்டி வைத்தனர்!
பிறரேவ மொழிகேட்டு வழிபட்டு வாழ்தலின் பிறவேது கடையென்று பேணிநுங் தாதையர், மறமேது மறியாத திறமான முறைகோலி அறமான பொருள்தேடி அழியாது வைத்தனர்.
24

கவிக் கற்பரசி
தமதிட மகன்றுபோய்த் தனியிருங் துண்டலின் கமழ்புகை யிலைகட்டிக் கண்டியூர்க் கடைக்கனுப்பும் எமர்புகழ் வியாபாரம் இனிதினி ததனாற்றேடி கமர் இந்த காட்டினை வளமையாய் வைத்தனர்.
அதனால்.
"பொருள் பொருள்' என்றினிப் போதலும் வேண்டா; பொருளெங்கள் காடடிலே போதுமட் டுண்டு; நீருண்டு, வித்துண்டு, நிலமுமுண் டீயக் காருண்டு; பேரில்லைக் காசினைக் கொள்ள, மருளுற்றே அங்கோடி மாய்வதில், இங்கெம் பொருள்கொண்டு வாணிபம் போற்றுதல் தீதோ? சிலகற்ற சிற்றறி வோர்போல், பலகற்றும் அடிமையாய்ப் பாழ்படல் கன்றோ?
25

Page 23
பெரிதும் சிறிதும்
காற்ற டிக்குது மழை வருகுது காட்டு மரமும் விழுகுது, கேற்றெழுந்த சிறிய பூண்டு நீண்டு நிமிர்ந்து கிற்குது
அலைகு முறுது, புயல்உ றுமுது, ஆழ மான கடல் அதோ நிலைதளருது, சிறிய குட்டை நிசப்த மாக நிற்குது
உள்ளம் கடுங்க வெள்ளம் போட ஊரில் முதிஞர் கலங்குறார், துள்ளிச் சிறுவர் வெள்ளம் வழியே தோணி விட்டுத் திரிகுறார்!
அச்சம் என்ப தென்ன என்ற அறிவி லாத போதெலாம் துச்ச மாகும் வாழ்க்கை, அங்குத் துன்பம் என்பதில்லையே!
26

தெரியாதா?
خيته سنـي
கூடுகட்டி முட்டையிடும் குருவிக் குலங்களுக்கு வீடுகட்டி வாழும் அந்த வித்தை தெரியாதா?
வீடுகட்டி வாழ்ங்தொழுங்கு விதிவகுத்திங் கொற்றுமையாய்ப் பாடுபடும் எறும்புகட்குப் 'பறைய' த் தெரியாதா?
காலக் குறிப்பறிந்து காதல் செயும் விலங்குகட்கு, சீலக் குடித்தனங்கள் செய்யத் தெரியாதா?
தெரியாமல் என்ன? எலாம் தெரியுங்தான்; ஆனாலோ புரியாதாம் அவ்வவற்றின் போக்கிம் மனிதருக்கு
வாழப் பிறந்த அந்த வர்க்க உயிர்க்குலங்கள் தாழும் வகையொழிக்கத் தவிர்த்ததிவை, வேறென்ன.
送.27

Page 24
சிறை
குறையொன்றும் புரியாமுன், குணமொன்றும் அறியாமற் சிறைசெய்தா ளேனன்னைப் பிறைபத்தாய் அன்னை
தப்பிப் பிழைத்ததில் தத்தித் திரிந்தேன், அப்பிக்கொண் டான்ஏதோ செப்பிக் கொடுப்போன்
பத்தெட்டாய் வருடங்கள் பறங்தோடிப் போக, வித்திட்ட தங்தைஎன் விளை வெதிர் பார்த்து
கொத்தடி மைத்தொழில் கோதிலை என்று சித்தங்கொண் டென்னை அச் சிறைவிடுத் திட்டான்
மீளாமல் இங்கிவர்க் காளாகி மாள, வாளான கண்கொண்ட
வணிதை ஒருத்தி,
28

கவிக் கற்பரசி
பாரான என்மனப் பாறை உளக்கி, கூறாமற் கொள்ளாமற் கொண்டாள் சிறைக்கு
காரண காரியம் ஏதுமே யின்றி கார சாரவி சாரணை யின்றி,
சிறைசெய்யும் முறையென்ன? குறையென்ன செய்தேன்? அறை என்று கேட்டும் என்?" உரையொன்று சொல்லார்
காற்சுவர்க் குட்சிறைப் பட்டுள கைதி போற்சிறை மீண்டுகான் போக அவாவி,
போயினன் எங்கெங்கோ புத்திடங் கட்கே; ஆயின் என்? அங்கும் அதேசிறைக் கூடம்
ஏகிட ஏகிட எங்கும் அதுவாய்ப் போகிடப் போகிடப் போன அப் பாதை
29

Page 25
நீாவற்குழியூர் நடராசன்
மீண்டதல் லாமலோர் மீடசிய தில்லை! கூண்டது வாய்உல கும்சிறை என்னை,
கொண்டது, கொண்டது, கொண்டதே என்று கண்டது சிங்தை கலங்கிட, இந்த
விந்தைச் சிறைகளின் வேரிட மான கங்தை உடற்சிறைக் கட்டுட் கிடந்தேன்!
30

காலக் கடல்
காலக் கடல் அலையில்-வாழ்வாம் கலமும் எத்தனையோ? கோலக் குறியுடனே-எதையோ கொண்டு பறக்குதடா
நீலக்கடலுமல - கலங்கள் - நிற்கக் கரையுமிலை ஆலக் கடலதடா-அதனுள் அமுதும் பொங்குமடா!
அந்த அமிழ்தினையே - கலங்கள் அள்ளச் செல்க்ையிலே, கொங்த ளரிக்குமடா - கடல்தான் கொடுஞ் சுழிப்புடனே!
வீசிடும் அங்கெழுபல் - கோடி விங்தைப் புயல்களினால், பாசி மறைத்துவிட - கலங்கள் பாறையில் மோதுமடா!
தத்த ளிப்பதுங்தான் - சில பின் த பிப் போவதுந்தான்; இத்த ரணியிலே - இதுதான் எங்கள் வாழ்க்கையடா!
8.

Page 26
இந்த மனிதர்கள்
இந்த மனிதர்களின் - போக்கை இங்கு நினைந்து விட்டால், சிங்தை தளருதடா - வாழ்க்கை "சி"யென்று போகுதடா
வந்த விதமறியார் - இங்கு வாழும் முறைகளென விங்தை விதிவகுத்தே - ஏதோ வெட்டி விழுத்துகிறார்!
*வேண்டும் விடுதலை"யென் -றிங்கே வேதனை கொள்ளுகிறார்; கூண்டிற் குருவிகளை - ஏனோ கூட்டிவைத் தாட்டுகிறார்?
அந்த உலகமென்றும் - அதற்கும் அப்பாலு மிப்பாலுமென் றிந்த மனிதருளே-இன்னும் எத்தனை பேச் சிருக்கு
நாளை வெறுப்பதனை - இன்று காடிப் பறந்துலகில் மூளை குழம்புகிறார் - இந்த மூட மனிதரெலாம்.
82.

கவிக் கற்பரசி
ஓடித் திரிந்துழன்று-வாழ்வாம் ஒடத்திற் போகையிலே, தேடித் திரிந்ததனைக் - காலன் "திக்கென ஆழ்த்துகிறான்.
பின்னென ஆவதென்று - பலவாய்ப் பேசிப் பிதற்றுகிறார்; என், இதை எண்ணுவதால்? - இவர்க்கிதில் ஏதும் தெரிந்திடுமோ?
33

Page 27
வாழ்வு
மரம் பழுத் துதவ நன்கு மாங்திய கிளிகள் பாடி உரங்தனும் உதவா தங்த உயர்மரக் கிளையை விட்டுப் பறங்திடும்; தாங்கள் இட்ட பசளையாற் பழுத்த துண்ணா துறந்திடும் விலங்கி னங்கள் துய்க்கவொர் பழமி லாமல்.
பெடையினை மயில்கலைக்கப் பின்னொரு நரிது ரத்தப் "படை படை’ யென்று பாம்பு பயங்துமுன் கடுங்கி யோடக் "கெடுபிடி யென்று மான்கள் கிளர்ச்சிகொண் டோடி, முன்னுக் கடுபுலி கண்டு யாவும் கலைத்ததைக் கலைத்து மீளும். O ם மாடியில் மதுவ ருக்தி மாதவர்கள் கடுவி ருந்து கூடியுல் லாச மாகக் குலவுவர்; வேளை பார்த்துத் தேடிவக் துண்டி சேரத் தின்றுதின் றுலகி லென்ன கேடிழைத் தாலும் சட்டம் கிடடியு மவரைப் பாரா.
34

கவிக் கற்பரசி
வீதிகள் கட்டி நாடு வேண்டிய பணிகள் செய்யும் சாதிகள் தாழ, வேறோர் சாதியர் வாழு கின்ற நீதிகள் உடைய திங்த நீள்கிலம்; ஈங்கு வேறு சூதிகழ் கின்றார்; அங்தச் சூக்குமம் அறியோம் அப்பா
O 亡]
மரத்தினில் இலைப றித்தும் மற்றுள காய் கவர்ங்தும் சுரத்தினிற் கொடிகள் வாடச் சொரிகிழங் ககழ்ங் தறுத்தெம் உரத்தினால் மதுக ரங்கடு ஒம்புதே னபக ரித்துத் தரத்தினாற் பெரிய ராகித் தவற்றினால் வாழு கின்றோம்.
கன்றினுக்குரிய பாலைக் கவர்ந்தற வொறுத்துக் காலை முன்றில்சேர் செடியின் பூப்பை முறித்துப் பாற் குறிகெடுத்துக் கொன்றுயிர் பதைக்கப் போக்கிக் கொண்டதைத் துய்த்து, மாங்தர் நின்றுயிர் வாழ வோயா நிட்டூர நிகழ்த்து மாறே.
85

Page 28
போர்த் தொழில் புறக்கணிப்போம்
ஆதியின் பேரால் வேத ஆகம புராண நூல்கள் ஓதி, அவ் விதிக டங்தோர்க் கொருபெரு நரக மென்ற நீதியை ஊட்டி வேறு நீசர்கள் உயர்ந்தோர் என்ற சாதிகள் காட்டி, நூறு சமயமு முலகிற் கட்டி
மேதினி மக்கள் தம்மை மீட்பவர் அவர்தாம் என்று காதினி லுபதே சித்துக் கருத்தினை மயக்கி, முன்னைப் போதினி லுலகைத் தங்கள் போக்கினி லடக்கி யாண்ட சாதியி லுயர்ந்தோர் கையிற் சஞ்சரித் திருந்த தாணை.
சொல்லினால் உலகை யாண்ட சூழ்ச்சிகள் ஒழிக் து போக, வில்லினால் உலகை யாளும் வேளையும் உதித்த தாங்கு; மல்லிலே திறமை கொண்ட மன்னர்கள் படை திரட்டி வெல்வதே தொழில தாக வீழ்த்தினர் வெட்டி வெட்டி
38

கவிக் கற்பரசி
தேடரு செல்வ மெல்லாம் தேக்கிட மன்ன னுக்கு, கோடரிக் காம்பாய் மக்கள் குலத்தினை அழிக்க லுற்றார்; வீடதும் சமரிற் செத்த வீரருக் குண்டென் றந்த மாடரைத் தூண்டி விட்டான்; மதியிலா மக்கள் மாய்ங்தார்.
படைப் பலங் கொண்டு மன்னன் பாரினை ஒறுத்த அந்த மடைமையை உணர்ந்த மக்கள் மறுகினர் திரண்டொன் றாக; குடைகொடி கோலைக் கொண்ட கொற்றவன் ஆட்சி வீழ்த்தி நடைபெறு மக்கள் ஆட்சி நடத்துகின் றார்களின்று.
மக்களின் ஆட்சி தன்னில் மாபெரு படைக ளே னோ? மிக்க நல் லாயு தங்கள் மிகுதியாய்த் தேட லேனோ? இக்கணம் அவற்றை யெல்லாம் இல்லையாய்ச் செய்தா லன்றி மக்களை மக்களே தான் மாய்த்திட நேரு மன்றோ!
37

Page 29
காவற்குழியூ ர்கடராசன்
இனத்தினை இனம பூழிக்கும் இழிந்தவர் செய்கை எங்கள் மனத்தினி லிருந்து முற்றாய் மறைந்திட வேண்டும்; இன்றேல் வனத்துறு வாழ்வு கேர்ந்து வலியர்கை எளியர் மாயும் தினத்தினைக் காண்போம்; அந்தத் தீவினை ஒழிய வேண்டில்,
வஞ்சனை பொறாமை லோபம் வாழ்வினி லகற்ற வேண்டும், வெஞ்சமர் தொலைய வேண்டும், வேண்டிய பெறினும் போரை கஞ்செனக் கருத வேண்டும், கானிலத் தொருவர் போரில் துஞ்சிடில் கரக மென்ற தூமொழி பரப்ப வேண்டும்.
போர்த்தொழில் புறக் கணிப்போம், பொன்னுல காக்க வேண்டில் ஆர்த்தெழு படை யி லிங்கே ஆருமே சேர மாட்டோம் கார்த்திகைத் தீய மன்ன காந்தியின் வழிநடந்து கேர்த்தியைக் காண்போ மென்று நிச்சயம் முடிவு செய்வோம்.
38

ஊர் அறிந்த கேடு
தேறு கின்ற அறிவு கொண்டு தெரிகி லாத பொருளையும் நூறு கண்ட துண்ட மாக்கி நுவலு கின்ற வாதிகாள் ஆறு நூறு சமய மாகி ஆய்ந்து மென்ன? அறிகிலா வாறு நின்ற தென்றும் அங்த வாறு தானி ருக்குதே!
தெரிகி லாத பொருள்களுக்குத் தெரிகி லாத ஒன்றையே உரிய தான ஏது வாக உரைகள் செய்யு முறைகளைப் புரியு மறிவு கொண்ட பேர்கள் புவியி லொன்று கடியே பெரிய தொன்றைச் சிறிய தாக்கிப் பித்த லாட்ட மாடுறார்!
பொறிபு லன் அ டக்கி யாளும் புனித மான மனிதரின் அறிவொ டாற்றல் என்ப வற்றின் அளவை மீறி நிற்பதை அறிய எண்ணி ஆவ தென்ன? ஆய்ந்து காணு மொன்றுபோல் குறிய எல்லை போட்டே இங்கு கும்பிட் டுங்தா னென்னடா?
39

Page 30
காவற்குழியூர் நடராசன்
மெய்வளைத்துக் கைகு வித்து மிகவ ணங்கி நிற்பதில் ஐய னேஎன் அர்த்த மோ? இங் கதுவ ணக்க மாகுமா? செய்ய லாமிச் சிறிய செய்கை சிலரை ஏய்க்கப் புவியினில்; தெய்வ மென்ற பொருளுக் கிந்தச் சிறிய செய்கை ஏனடா?
வாயி லென்றும் தூபி யென்றும் வடிவு கொண்ட கோபுரக் கோயி லென்றும் பூசை யென்றும் கோடி நூறு பேதமே ஆயிருக்கு திங்கு பாா! அவ் வருவ ருத்த பிரிவினை கோயி ருக்கு மட்டும் தெய்வ கோக்க மெங்கு தித்திடும்?
பேரறிவு கொண்ட மக்கள் பிளவு பட்டு கிற்கிறார் ஆறறிவுக் கெட்டி லாத அகண்ட வஸ்து பேரினால் ஊரறிந்த கேடி து; எங்த ஒன்றின் பேரில் ஒற்றுமை வேர் நிலவ வேணு மோ, மா வேற்று மைசெழிக்குது
40

போராட்டம்
தாயுக்கும் சேயுக்கும் அன்பட டாக்மலை தானது போல வளர்ங் திடவும், நாயுக்கும் பூனைக்கும் போராட்டம் -இந்த கானிலத் தேனென்று காமறியோம்!
தாலிக்கும் கறைக்குங் தன்பொரு ளே -தங்து தன்மகற் கென்றொரு பெண்ணெடுக்கும் மாமிக்கும் பெண்ணுக்கும் போராட்டம் - தமிழ் மாதர் குலத்தென்று மாறிடுமோ?
புதுமைக்கும் பழமைக்கும் போராட்டம்-இளம் புருஷர்க்கும் பெண்மைக்கும் போராட்டம் -சட்ட விதிகட்கும் வீரர்க்கும் போராட்டம் -பெரும் வேங்தர்க்கும் மாந்தர்க்கும் போராட்டம்
உப்புக்கும் செப்புக்கும் போராட்டம் - இங்கே ஒன்றையொன் றுண்பதில் தான்காட்டம்; இப்படித் தான் உல கெப்போதும் - இருங் திருக்கு திங்கென்ன ஈடேற்றம்?
வில்லுக்கும் காணுக்கு மேற்பட்டுள - ஒரு விங்தைப்போ ராட்டத்தி னாலுயிர்கள் கொல்லப் படுவது போல்பிறர்க் கே - பெரும் கொடுமை செய்யுதிப் போராட்டம்
உண்டிக் குணவுக்குப் போரா டி - பின்னர் ஊருக்குப் பேருக்குப் போராடி - இன்று கண்ட தெதற்குமே போராட் டம்- அது காசுக்கும் ஓர் தொழில் ஆச்சுதடா

Page 31
என் மனைவிக்கு
மாங்தர்குல வீதி, இது மண்ணுலகம்; இங்கே சார்ந்தவர்கள் பற்பலருட் சச்சரவென் றெங்கள் ஏங்தல் இறை யோனுமெனை இங்கனுப்ப, எங்கள் காங்தருவ காடுவிட்டென் கண்மணியே இங்கே,
உன்றனுக்கும் சொல்லவில்லை ஓடிவங்து விட்டேன்; என் கவலை அவ்வளவு: ஏன் தமிழர் நாடு - செந்தமிழும் தீரமதும் தேங்கிய இத் தேசம்கொங்திழிந்து போகுதென்ற கோக்கமத னாலே.
இங்கு வந்து பார்த்தறிக்தேன் என் கிளியே நாடு மங்குகின்ற தற்குமிங்த மாந்தர்கள் தான் ஏது எங்கிருங்தோ இங்கு வங்த
இங்கிலி சைக் கண்டு, தங்கள் கடை பாஷை உடை தாமனைத்தும் விட்டார்.
42

கவிக் கற்பரசி
வேற் சண்டை செய்தவிறல் வீரர்களின் மக்கள் காற்சட்டை தொப்பிகளுள் கட்டுண்டு போனார்! காற்றண்டை யெட்டிடவும் நாணமுறு கின்றார் சோற்றுக்கும் சேலைக்கும் சீமைக்குப் போறார்
கச்சேரி கோடு கங்தோர்க் கட்டடங்கட் குள்ளே கைலஞ்சம் வாங்கவும் பொய் கள்ளமதும் ஓங்க, கச்சேறிப் போனமன கல்லபிள்ளைப் பேர்கள் காட்டிலெங்கும் கன்றாய்த்தம் பாட்டிலுழைக் கின்றார்.
அறத்துக்கும் திறத்துக்கு மாய்வாழ்ந்தோர் காட்டில், மறத்துக்கும் நிறத்துக்கும் மதத்துக்கு மாக உறுகின்ற பகைமைக்கிங் கோரெல்லை யில்லை; பெறுகின்ற பேறின்னல் பிறிதொன்று மில்லை.
A3

Page 32
காவற்குழியூர் நடராசன்
பைங்கங்தற் பெண்மயிலே, பாரில் எனைத் தேடி எங்கர்ங்து விட்டா யோ என் பிரிவால் வாடி! இங்கே இம் மங்கையர் போல் ஏட்டிக்குப் போட்டி எங்கே இட் டெம்வாழ்வை இன்னாமற் காட்டி --
விட இங்கு நீ கற்று விடுவாயோ என்றே, மட அன்ன மே! அங்கு ம்றித்துன்னை வங்தேன்; சுடவைத்த சொல்லம்பு சுறுக்கென்றே ஏற்றும் திடமுள்ள பெண்கள் வாழ் தேசம் பார், மோசம்
44

என் மகளுக்கு
மின்னொளித் தீபம் உற்ற மேகாகற் கோல மிட்ட கின்னர வீதி வைகும் என்னரு மகளே! இங்கு முன்னொரு தடவை ஏக முனைந்தனை; வேண்டாம் என்றேன்; பின்னரு முனைங்தாய்; ஈங்கு பெண்கள்பா டறியாய் போலும்
வேலையை நாடி ஆண்கள் விழுந்தடித் தோடு கின்ற காலையின் பின்ன முந்து காப்பியென் றொரும ருங்தில் பாலையும் சிறிது சேர்த்துப் பருகிட வேண்டும்; ஈங்கு. மாலையில் ஆண்கள் முன்னர் மாதர்கள் துரங்க வேண்டும்!
காதுகள் துளைக்க வேண்டும்; கண்ணிணை முதலி ருந்து பாதுகை வரையும் ஏதோ பலபல பூண வேண்டும்; ஏதுகள் எதுவு மின்றி இரைந்திரைக் தூட வேண்டும்; சாதுகள் போலி ருங்து சட்டென வெடிக்க வேண்டும்!
4ö

Page 33
நாவற்குழியூர் நடராசன்
கேரமொர் விதம தாக t நிறங்களை மாற்றி மாற்றி, ஊருள வீதி தோறும் உலவி அவ் விளைஞர் தங்கள் ஆருயிர் வாங்கும் உண்கண் அம்புகள் வீசி வீசிக் கோரமென் றுலகு (சொல்லாக் கொடுமைகள் பயில வேண்டும்!
வேறுமொன் றுளதே இந்த வேளையில் ஈங்கென் னோடு மாறுதல் கொண்டு யாரோ மாரனென் றொருவன் தன்கை வீறுகள் காட்டு கின்றான், வீழ்ந்தவன் ஒழியு மட்டும் ஆறுத லாயிரு; அன்றேல் அவன்கனைப் படுவை நீயும்.
46

தீபாவளியா?
பட்டாசு சுட்டு, இருள் போய்ப் பகலாகு முன்னாலே, சிட்டாய்ப் பறந்தடிக்கும் சிறுவர்களின் கூச்சலினால் கொட்டாவி விட்டெழுங்து *கொண்டாட்டமென்ன? வெனத் திட்டாக் குறையாகத் "தீபா வளி"யென்னார்.
தீபா வளியாஅத் திருகாளா ஓகோகோ தீபா வளியின்று திரும்பவுமே வந்ததுவா? ஆமா, அதற்கேனிவ் வார்ப்பாட்டம்? அன்றொருகாள் சாமா றகரனைமால் சாய்த்துவிட்ட தற்கோடா?
போகட்டும்; இங்கங்தப் பொல்லா அசுரகுலம் சாகட்டும்; இன்றங்தச் சாதனையைக் கொண்டாடல் ஆகட்டும்; ஆனாலின் றசுரக் கொடுமையெமை வேகட்டும் என்றிழைத்த வேதனைகள் தீர்ந்தனவா?
47

Page 34
நீாவற்குழியூர் நடராசன்
சங்கடங்கள் ஓய்ந்தனவா? சஞ்சலங்கள் தேய்ந்தனவா? வெங்கொடுமை செய்கின்ற வெறியரினம் மாய்ந்ததுவா? எங்கள் உரிமைகளிங் கெல்லாம் இயைந்தனவா? இங்கெதற்குப் பின்னிந்த ஈனத்தீ பாவளிதான்!
வஞ்சச் செயல்புரியும் வல்லரக்கர் வீழ்ந்தனரா? பிஞ்சுக் குழங்தைகளைப் பெண்களினைப் பிய்த்தெறிந்து, விஞ்சும் அனல்மூட்டி வீடுகளை வேகவிடும் நஞ்சு நரகரெலா ம் காசமுற்றுப் போயினரா?
இன்னும் அரக்கர் இருக்கின்றார்; இன்னொருமால் தின்னும் வரையவரைத் தீபா வளியெமக்கேன்? மன்னும் அசுர பயம் மக்களினைக் கொல்கையிலின் றென்னத்தைக் கொண்டாடி ஏமாற்றப் பார்க்கின்றீர்?
48

கவிக் கற்பரசி
மீண்டு மொரு கடவுள மேதினியில் வந்தெம்மை ஆண்டிவ் வசுர பயம் ஆற்றிவிடு மன்றுவரை வேண்டா மெமக்கிங்த வெறுங் தீபாவளிகள்; ஆண்டாண்டு தோறுகெச வாலைகளின் காளிதென,
கொண்டாடி ஆலையிலாக் குறையைத் தவிர்ப்போம், பின் திண்டாடி வாழ ஒரு தேவையிலை; தேவனென நின்றோடும். ஆலைகளின் கேமிகளே சேர்களைத் தின்றோடிக் கொண்டுதரும் தீபத் திருகாளே!
49
4 -سسته

Page 35
தை பிறந்தது
தைபி றந்தது, வழிபிறந்தது தமிழ்குடித்தெனக் களிபி றந்தது மெய்பிறந்தது போலு லகினில் மேவி எங்கும் ஒளிப ரந்தது!
இருள்ப றந்தது, குளிர்ஒ ழிக்ததிவ் விருங் லத்தினில் அருண தேவன் அருள் நிறைந்தது, பொருள்ப ரங்ததின் னறிவு போலத் தொழில்வி ரிங்தது
காய்கனிந்தன, கனியு திர்ந்தன, கதிர்க ளெல்லாங் தலைகு னிங்தன, வாய்தி றங்திதட் கள்வ ழங்கிடும் வணிதை யென்ன மலர்ம லர்ந்தன!
கோய்ஓ ழிந்தது, நுளம்ப பூழிந்தது, நுண்ணி டைமருட் கண்ண ழகுடை ஆய்ம லர்த்தொடை அணங்க னாருக் கவனி யெங்கும் மணமெ ழுந்தது
வீடு தோறும் முழவ திர்ந்தது, வீதி தோறும் விழவெ ழுந்தது, பாடு பட்ட மக்கள் நன்கு பருக இன்பப் பயன்வி ளைந்தது
50

கவிக் கற்பரசி
உழவர் தந்த ஊர ரிசியும் ஊற்றெடுத்திடு பாலுங் தேனும் பழவ கையொடு முன்றி லெங்கும் பாய்ந்து பொங்கிப் பரிம எரிக்குது
பொங்கல் பொங்கிடப், புவிமு முவதும் புதுமை பொங்கிடப் ப்ொதும னிதர்கள் தங்கள் வாழ்வும் தமிழும் பொங்கிட்த் தைபிறந்தது தைபிறந்தது.
5.

Page 36
சுழற்சி
மாரி வங்து போனது; மாநிலத்தாய் நீரினை வாரி வைத்துக் கொண்டனள்; வறுமை யுற்றுக் கோடையில் நீரி லாமல் உயிரெலாம் நின்று வாட, அரசினர் பாரி லுணவு தருதல் போல் பங்கு பண்ணித் தந்திட,
கோடை யின்னும் வரவிலை, கூதல் நீங்கி விடவிலை; வாடை யின்னும் வீசுது மாசி தானிப் பாகுது; ஓடை நீரும் சலசலென் றோடி யெங்கும் பாயுது; சாடை யாய்வ சங்தமும் சஞ்ச ரிக்கப் பார்க்குது.
குயிலு மொன்றி ரண்டுதான கூவி வந்து பாடல்கள் பயிலு கின்ற பாவையர் பண்பி னொத்துப் பாடுது; வெயிலும் கன்று காயுது விடியற் காலைப் பணியிலே மயிலும் நாணு மழகினை மரமுஞ் செடியுஞ் சொட்டுமே.
52.

கவிக் கற்பரசி
ஆட்கள் சொல்லி வைத்த போல் ஆத வன்புறப்பட பூக்க ளென்ன ஜாலமாய்ப் புன்சி ரிப்புக் காட்டுமே வாட்கண் மாதர் மேனியின் வர்ண ஜாலப் பொலிவெலாம் மாக்கள் நீட்டுங் தளிர்களில் மட்டுங் காட்டி நிற்குமே!
காலம் கொஞ்சம் கொஞ்சமாய்க் கட்டு மீறி யோடவே, ஞாலங் “கோடை" யென்றது; *காச காலம் வந்த தென் றோல மிட்ட இலையெலாம் ஒவ்வொன் றாயு திர்ந்தன, சீலம் கண்ணு முன்னரோர் சிதைவு கண்ணல் போலவே
வற்றி வாடி யென்புரு வாகி நின்ற மரமெலாம் சற்று நாட்கள் சென்றதும் சருகு திர்க்த கொம்பிடை அற்று வீழ்ந்த பழமையின் அடியிற் புதுமை தோன்றல்போல் கற்றை கற்றை யாய்த்துளிர் கக்கி யின்ப மெய்தின.
53

Page 37
காவற்குழியூர் நடராசன்
காற்றெழுந்த டித்தது, ககனத் தேவெண் முகில்வட பாற்ப றங்து சென்றது படையெடுத்து; பின்சில காட்கள் சென்ற தும்கில காய கிக்குத் தன்உள வேட்கை கூறத் தென்திசை விம்மி யோடி வந்தது.
பின்னும் மாரி ஆனது, பிறகுங் கோடை வந்தது; இன்னுங் கால மிப்படித் தான்சு ழன்று வந்திது முன்னிருந்த உலகுதான், முன்னடைந்து விடவிலை, என்னு முண்மை காட்டுதிங் கேற்ற மில்லை; மாற்றமே
w

கயங்காத காற்சட்டைக்காரீர்!
வெங்காயம் விலையேறிப் போச்சு - பொருள் வேறெல்லாம் அப்படியே ஆச்சு *அங்காடி" ச் சாமான்கள் இன்னும் - விலை அதிகமாய்ப் போமென்றே பேச்சு உளுந்துக்கு வலைபோட்டுப் பார்த்தோம் - மல்லி உள்ளிக்கும் அலைபட்டு வேர்த்தோம்; விருங்துக்கோர் வேளைக்குச் சோறு - போட வில்லங்கப் பட்டதைத் தீர்த்தோம்! கட்டத் துணிமணிக் காக - செட்டை கட்டிப் பறந்தடித் திட்டோம்; குட்டிச் சுவராகிக் கொண்டே - வெறும் கோழைக ளாய்ப்பிழைக் கின்றோம். நாளை நமக்கென்ன வாகும் - காலு காட்டிலு மேங்கைப் பாகும் சூளையி னுள்ளிருங் தே தீ - அதைக் சுட்டெரித் திட்டவா றாகும்! அண்டிப் பிழைத்துயிர் வாழ்ந்து - பெரும் 'ஆபீசு கட்குள் மறைந்து, தொண்டுத் தொழில்செயப் போகும் - அரைத் துரைமார்க ளே இதைக் கேளும்! மயங்காத புத்திஉண் டானால் - சற்றும் மலையா நிதானமுண் டானால், கயங்காத காற்சட்டைக் காரீர் - தொழிற் கலைகளைக் காத்திட வாரீர்
55

Page 38
பாண்டியா எங்குற்றாய்க்
பாண்டியனே, எங்குற்றாய்? பழிகாரா! உன்னுடைய தூண்டுதலி னாலன்றோ தமிழ்வளர்த்தோம் தொன்மைபோல் ஆண்டிடுவாய் எமையென்றும் அஞ்சவிடாய் என்றெங்கள் நீண்டதமிழ்ச் செல்வத்தை கின்காவல் தனில்வைத்தோம்.
நீருக்கும் கெருப்புக்கும் கீகொடுத்த தமிழ்போகப் பாருக்குள் எஞ்சியதைப் பக்குவமாய் வைத்தாயா? ஆர்கைக்கு நீ கொடுத்தின் றகன்றிட்டாய்? தமிழனையின் "வீர்' என்ற குரல் அவரை வினையாகி வீழ்த்தாதோ?
தாய்காட்டிற் றமிழினையார் தா பரிக்க வைத்திட்டாய்? சேய்ாகாட்டில் அவளினை நீ சீரழிய விட்டா யே போய்நாட்டிப் புகழினை நீ பொறித்தென்ன? புலவர்களைப் பேய்காட்டி விட்டாயே! பெருமோசக் காரனடா
56

கவிக் கற்பரசி
போர் பாடிப் புகழபாடிப் புவியெல்லாம் பரவியஉன் பேர் பாடிப் பெருநெறியிற் பிறழாமல் அன்றிருங்தோம்; ஆர்பாடிக் களிப்போமின் றணியாயம், தமிழனுயர் சீர் பாடிக் கொண்டாடத் திருகாளும் எமக்கில்லை.
தீபா வளியும் திருகாளும் என்றெல்லாம் ஒவாது வந்திங் கொழிகின்ற தெற்றிற்கோ 1 காவா லுரைக்க வழியில்லை கமதிடரை நீ பாரா யென்றாலோ நீக்கவழி யொன்றில்லை!
மீண்டும் ஒரு முறை நீ மேதினியில் வங்தெம்மைத் தூண்டித் துயர்களைக் து தொன்மை முறைகாட்ட வேண்டும், அது உன்றன் மேலாம் கடமையடா! பாண்டியா! எங்கிருந்தும் பறக்துவா, வீழ்கின்றோம்.
57

Page 39
சீரழிந்து வாழ்வதா?
பகைவர்தம்மை நடுகடுங்கப் பண்ணிவைத்த பாண்டியர் பாதுகாப்பின் கீழுயிர்த்த பண்பினோர்கள் நாங்களா? வகைகள் கொண்ட சேனைவங்து வளையமிட்ட போதெலாம் வாளைவீசி வாகைபூண்ட வம்மிசத்தார் காங்களா? தகைமைகொண்ட சேரசோழர் தங்குலத்து தித்தகாம் தாள் மடித்துக் கைகுவித்துத் தலைவணங்கி நிற்பதா? சிகைகள் போவதாயினும்ாகம் ஜென்மபூமி வேறொரு சீமையாளர் கைக்கொடுத்துச் சீரழிந்து வாழ்வதா?
அங்ரியர்கள் வந்துகாட்டை அடிமைகொள்ளப் பார்க்கையில் ஆர்த்தெழுந்த திங்குமுன்னர் ஆண்பிள்ளைகள் மட்டுமா? கன்னியர்கை வாளெடுத்துக் கட்டுமீறிச் சென்றுபோர்க் காட்டினுTடு பகைவர்தம்மைக் கண்டதுண்ட மாக்கினர்
58

கவிக் கற்பரசி
சென்னிவீழ வீழநின்று ஜென்மபூமிக் காகநம் சிறுவர் கூடச் சமர்புரிந்த சீருமுண்டி வற்றினைப் பன்னியென்ன பயனுடைத்து? பண்டை காள்தி கழ்ந்தபோற் பண்ணிவைக்க வேண்டுமிந்தப் பாரிலெங்கள் காட்டினை
கொடியர்தம்மை முடிவுசெய்யக் கொற்றவர்களில்லையோ! கோதிலாத பேரைவாழ வைக்கமற்றோர் இல்லையோ கடமையென்று காடுகாக்கக் கற்றவர்கள் இல்லையோ கடையர்தம்மை ஒட்டவலிமை உற்றவர்கள் இல்லையோ! அடிமையாக காங்களென்றும் படியிலஞ்சி வாழவோ அவர்களாள நாங்களென்ன ஆண் மையற்று மாளவோ கடவுயானை தேர்கள்கொண்ட பெருமையின்று போகவோ கடவுளே எ மக்கும் இந்தக் காலம்வந்து சேரவோ
59

Page 40
என்முன் இருந்த தெய்வம்
இஷ்ட குலக்கடவுள்-எம்முன் இருந்த தெய்வமொன்று-மனித துஷ்டத் தனத்தாலே-அதுவும் குக்குமம் ஆகிவிட,
எட்டு வரியெனினும்-அதைமுன் னிட்டுக் கவிதையொன்று கட்டித் தருக வென்ற-உங்கள் காகிதம் வந்ததுதான்.
*சொட்டுக் கவிதையுமே-அன்றென் சோக உளத்தினிலே தட்டுப் படவுமில்லை-இதுவரை தாபமும் ஆறவில்லை.
உள்ளம் தெளிந்ததிப்போ-கொஞ்சம் ஊக்கம் பிறந்தது எனின் வெள்ளம் எனப்புரளும்-கவிதை வேகம் பிறக்கவில்லை.
"ஆறாத துக்கம், இதெம்-உள்ளம்
ஆற்றாத பேரிழவு: மாறாத கேடடடா-நூறு மாமாங்கம் ஆனாலும்.”
80

கவிக் கற்பரசி
என்று வருங்கவியும்-"சன்னம் எப்படி அண்ணலினைக் கொன்றிடும்? என்ற எண்ணம்-எழவும் நின்றிடும்; நின்றுவிட sy ;
**இந்திய காட்டினுக்கா-இல்லை இத்தல முற்றினுக்கும் சொந்தம தாயஒரு-மனிதச் சொத்தினை, வித்தகனை."
என்று தொடங்கிடுவேன்-ஆனால் ஏக்க அலையினிலே ஒன்றல, ஒன்பதெனச்-சிங்தை ஓடி மறைந்துவிடும்.
செத்தனனோ அடடா-காந்தி செத்து மடிபவனோ..?-- உத்தமன் வாழுகிறான்!-என்றன் உயிரும் வாழுகுதே!
நித்தியன் வாழுகிறான்;-என்றும் நிமலன் வாழுகிறான்; சத்தியம் வாழுகுதே;-அஹிம்சைச் சாதகன் வாழானோ?
6.

Page 41
நீாவற்குழியூர் நடராசன்
பத்தி ரிகாசிரியீர்!-என்ன பாதகம் செய்துவிட்டீர் செத்தனன் என்றேதோ-என்னைச் செப்பிடச் சொன்னீரே!
வையம் அழிந்திடினும்-இந்த வாழ்வு பறந்திடினும், ஐய! அது குறித்தே-ஓர் அடியும் பாடேனே
35

கேட்டியோபார தீ!
காட்டிலே மிக்குயர் கந்தமிழ் காடது கேட்டிலே மிக்கிழி கீழ்நிலை எய்தலும், ஏட்டிலே தீட்டிய எண்ணரும் இன்சுவைப் பாட்டினா லேயதைப் பாலித்த பாரதீ!
கேட்டியோ அன்றுனைக் கீழ்மைப் படுத்திய காட்டிலே நின்கவி காதம் நிறைந்தது; ஈட்டிவேல் வாளெனத் தீட்டிங் விட்டசொற் பாட்டினால் எம்தளைப் பாரம் குறைந்தது
குறைவுறா நின்குறிக் கோளெலாம் கண்முனே நிறைவுறா முன் உயிர் நீத்தனை; ஆயின் என்? மறைவுறா நின் புகழ் மண்டிப் பரக்க அத் துறையெலாம் புலமையில் தோன்றிவிட் டோமடா!
88

Page 42
கவிதை ஊற்று
ஊற்றெ டுக்குது கவிதை - ஆறாய் ஓட்டெ டுக்குது கவிதை; ஈர்த்த ணைகளை யெல்லாம் - உள்நின் றிடித்தெறியுது கவிதை
ந்ேந்றெழுந்தஓர் புயலால் - கவிதை நிற்கு தில்லையென் கட்டில்; காற்றெழுப்பிய காட்டுத் - தீபோல் கனன்றெழுகுதென் உள்ளே.
ஆற்ற வும்வழி தெரியேன் - அதனை அடக்க வும்வகை அறியேன்; ஏற்ற வும்இடர் உண்டே - இங்கே எதனைப் பாடுவ தென்றே!
வீட்டைப் பாடு வேனோ?- எங்கள் விதியைப் பாடு வேனோ? காட்டைப் பாடு வேனோ? - மக்கள் நலிவைப் பாடு வேனோ?
வெற்றி பாட லாமோ? - எங்கள் வீழ்ச்சி பாட லாமோ? பற்றி எம்மை ஈர்க்கும் - அற்பப் பதரைப் பாடலாமோ?
64

கவிக் கற்பரசி
தொத்திக் கொண் டெம் மேலே - வயிறு தொங்தி வைக்க, எங்கள் சத்தை உண்ணும் சாதி - மேலே சரமம் பாட லாமோ?
வாய்மை மிக்க காட்டின் - அடிமை வாழ்வு பாடில் கன்றோ? தூய்மை கொண்ட பேர்கள் - அடையும் துயரம் பாடில் கன்றோ?
உரிமை பாட லாமே - அடடா! உணர்வை ஊட்ட லாமே! சிறுமை செய்கு வோரை - வெல்லும் செய்தி பாட லாமே!
அரியை முயலும் வென்ற - தென்ன ஆயுதத்தி னாலோ? கரியை கரியும் வெல்லும் - என்று கவிதை பாட லாமே!
தாழ்மை யோடி ருந்து - பெற்ற தாய் இழந்து போன, ஏழ்மை பாடி வீரக் - கனலை ஏற்றி வைக்க லாமே!
இதனைப் பாடில் என்றன் - பாடும் என்ன ஆகு மோ? வேறு எதனைப் பாடிக் கவிதை - ஊற்றை ஏற்றி ஏற்றிப் பார்ப்பேன்?
65
5 س- 5.5

Page 43
எங்கள் பெருநிதியம்
வெள்ளிக் குவைகளெங்கள் செல்வ முமல்ல - ஒளி வீசும் மணிவகையெம் செல்வ முமல்ல; அள்ளிச் சொரியினுங்குன் றாது மலைபோல் - வளர் அந்த கவாகிதி எம் செல்வ முமல்ல.
இங்கு கவிஞர்குலம் என்று பலரும் - சொல்லும் எங்கள் பெருநிதியம் எம்க விதையே; பொங்கு மனநிலத்தைக் கிண்டி, அதனுள் - கவிப் புதையல் இருப்பதனைத் தோண்டி எடுப்போம்!
தோண்டி எடுத்தனைத் துப்புர வாக்கி - ஒரு தோற்றங் கொடுத்ததனை காண யமாக்கி, வேண்டி வருபவர்க்கும் வேறெ வர்கட்கும் - காம் வேத முறைகடந்து தானமும் செய்வோம்
கொட்டிக் குவித்ததனைக் கும்பல் களாக்கி - அதில் குதித்துக் குதித்துவிளையாடி மகிழ்வோம்; கட்டிப் பிடித்துருண்டு கற்ப னைத்தேவி - உடன் கவிதை உலகினிலே காதல் புரிவோம்!
மண்ணை ஒரு கவிக்கு வாங்கி விலையாய் - அதில் மாந்தர் அனைவரையும் ஈடு கொள்ளுவோம்; விண்ணை ஒரு கவிதை வீசி அளப்போம் - அங்கு விங்தைச் சிருஷ்டிகளைச் செய்து களிப்போம்!
66

கவிக் கற்பரசி
காட்டை ஒரு கவியில் தட்டி எழுப்பி - இந்த ஞாலம் புகழ அதன் கட்டை அறுப்போம்; வாட்டி வதைத்துமுடி சூட்டு பவரைக் - கர் வாள்போல் ஒருகவிதை வீசி அறுப்போம்!
உப்புக் கொருகவிதை செப்பி விடுவோம் - இந்த ஊரை ஒரு கவியிற் கொள்ளை யடிப்போம்; : ... வெப்புக் கொருகவிதை செப்பி அணைப்போம் - இந்த விங்தைச் சிகிச்சைகளெம் சொந்த முறைகள்
இன்னும் பலபுரியும் எங்கள் தனத்துக் - கோர் ஈடும் எடுப்புமில்லை எவ்வு லகிலும்;
மின்னும் மினுங்கும் அது பொன்ம ணிகள் போல்-எங்கும் செல்லும்; அதற்குங்றை சீவ னுமுண்டே
37

Page 44
கடக்காது அந்த நயவஞ்சம்
சிந்தனையிற் சிலபலநல் லெண்ண மெல்லாம் சேர்ந்தங்கே அலையலையாய் மோதிக் கொண்டு வந்தணையும் போததனை எழுத என்றால் வழியில்லை - தடைகள் பல வக்தி ருக்கும்; முந்தி எமக் குறவென்று சொல்லிக் கொண்டு முழுங்ாளும் வந்திருந்து பேசிப் பேசித் தொந்தரவு தருகின்ற பேர்கள் ஓர்பால், தொலையாத இவ்வாழ்க்கைத் தொல்லை ஓர்பால்
கடமை, அது இது என்று ச்ொல்லி எம்மைக் கட்டாயப் படுத்துகிற சமூகச் சட்டம் மடமையது என்பதற்கு மனமு மில்லை, மகிழ்ந்ததனைக் கைக்கொள்ளுங் குணமு மில்லை! சடபுடெனப் பேசி எனக் கிப்போ நேரம் சற்றுமிலை, மன்னியுங்கள்’ என்று சொல்லித் திடமுடனே உட்சென்றென் அலுவல் செய்யும் திறமுமிலை, தமிழில்அதற் கிடமு மில்லை
இந்தவிதத் தொல்லைகள் சற் றில்லை யானால் எண்ணங்கள் மலைமலையாய்க் குவியும் போது, தந்தி என ஒருவன் வங் தலறி விட்டால் தகவல் என ஒருவன் வங் துளறி விட்டால் முந்தி, அட மூளையிலே நிறைய வந்த முழுவதும் ஓர் மூலையிலே ஒடுங்கிப் போகும்; அந்த அதைப் பின்னேபோய்த் தேடிப் பார்த்தால் அகப்படுமா..? அநியாயம் சிதைந்திருக்கும்.
68

கவிக் கற்பரசி
எண்ணங்கள் வரும்போதி லிடைஞ்ச லின்றி கழுதவுந்தான் வாய்ப்பிருந்தால், எண்ணியெண்ணிக் \கண்ணுங்தான் தெரியாமல் மூடிக் கொள்ளக்
கற்பனையில் ஆழ்ந்திட்டால் அதுவும் போச்சு இன்னொன்று, கவிதையிலே எழுத வந்தால் எதுகைக்காய் எண்ணமெலாம் ம்ாறிப் போகும்; பண்ணொன்றும் பாட்டினிலே சொல்ல வங்தால் பண்ணுக்காய்ப் பொருள் சிதைவு பட்டுப் போகும்!
வசனத்திற் சொல்ல என எடுத்துக் கொண்டால் வடிவான தமிழ்க்கவியில் வடியு மின்பம் வசனத்தில் வருகுதிலை. என்ன செய்ய.? வாழ்வினிலே இடையிடையில் வந்த டிக்கும் விசனத்தின் அலையொன்று மெல்லெ முந்து வீசிவிட்டால் எண்ணமெலாம் வேறாய்ப் போக, வசனத்திற் கவிதையினில் அல்ல, வேறே வாய்விட்டுச் சொல்லி எதற் கென்றாய்ப் போகும்!
வாய்விட்டுச் சொல்லவுந்தான் வந்து விட்டால், வந்தபடி சொல்லுவதோ அல்ல திங்தப் பாழ்பட்ட - ஏன் அது போல் - பலபேர் மெச்சப் பாருலகுக் கேற்றபடி பதமை யாக்கி ஏய்பட்டுப் பிறர் புகழை ஏந்து தற்காய் எண்ணத்தை மாற்றுவதோ..? என்றென் றெண் 600ரி காட்பட்டுப் போச்சுதடா! கடக்கா தங்த கயவஞ்சம்; அதற்கெதிராய்த் துணிந்து விட்டேன்!
69

Page 45
இல்லையான காவியம்
கடவுள் வாழ்த்து இல்லை உண்டென் கின்ற வாதம் இன்றும் அன்றும் என்றுமிங் கில்லை யாக இல்லை யாக்கும் இல்லை யான இறைவனே! இல்லை யான காவியத்துக் கெழுது கின்ற இவ்வுரை இல்லை யான தேதுங் கொண்ட தில்லை யாக வேணுமே.
அவையடக்கம்
எல்லாரு மேதோ எழுதுகிறார், அவ்வவற்றைப் பல்லாருங் கடிப் பரிகசித்துத் தள்ளுகிறார்; வல்லாரும் என்கவியை வசைகற முயல்வாரோ? இல்லாத காவியத்துக் கென்னசொல்ல இருக்கிறது
நூன் முகம்
இலக்கியமா செய்கின்றேன்? இல்லை யில்லை. எவரையும்கான் மகிழ்விக்க எண்ண லில்லை;
கலக்கியடிக் கின்றசில நீதி கூறும் கற்பனைகள் சொல்லிடவுங் கருத வில்லை; நிலத்தினிலே நடக்கின்றநிகழ்ச்சி பட்டென் நினைப்பினிலே தெறிக்கின்ற கிரணக் கற்றை புலத்தினிலே உருவங்கள் பொறிக்கு தங்கே பொத்திவைக்க இடமில்லை, போடு கின்றேன்!
70

கவிக் கற்பரசி
நாட்டு வருணனை குழி நீள்கடல் சூழ்ந்து கிடப்பினும் ஆழ நீளம் அறிந்தில வாறுபோல்,
ஆளை ஆள் அங் களங்தறி யாதது "கீழம்' என்றொரு நாடிருக் கின்றது.
வாளை தாவி வயலிடைப் பாய்வதும் பாளை மோதப் பழவகை வீழ்வதும் கூழை வாழைக் குலைகளைச் சாடலும் வாழை தேனை வழங்கலும் அங்கிலை.
ஆனை யான அடங்கிக் கிடப்பதும் பூனை யான புடைத்துக் குதிப்பதும் சேனை காயகர் சித்திரச் சிங்கங்கொண் டானை ஆள நினைத்ததும் அங்குதான்.
மந்தி சிங்க மயிரினைப் போர்த்து, 'ஒரு முந்தி வந்த முழுமுதல் தான்' என கந்தி தம்மை கவைசெயும்; இங்கிவை வெங்து கொக்து வெடித்தெழுங் தார்த்திடும்.
வானை நோக்கி வளர்ந்த பனையினைக் கானை நோக்கிக் கவிந்த பலாவினம் சேனை போலச் சிதைக்க வளர்ந்திட ஆனை போல அதுவும் உயர்ந்திடும்.
71

Page 46
காவற்குழியூர் நடராசன்
ஆதி கால அரக்கர் பரம்பரைச் சாதி யொன்று சதிசெய்தங் கேஉள வீதி யெங்கும் வெறிகொண்டு நிற்குது; நீதி மெள்ள நிலைகுலை கின்றதால்.
தொன்று தொட்டு வளர்ந்த கலையினை இன்று நேற்றிங் கெழுந்த முளை இலை
கொன்று தின் னக் குதிகொள்ளு கின்றது; வென்று செல்லும் விதியிதற் குள்ளதோ?
ஆலை தோறும் அரசியற்போர்களும் வேலை தேடி விழுங்தடிப் போர்களும் வாலை வாரி வளம்பெறு வோர்களும் சாலை தோறும் சளக்குரைப் போர்களும்
கூலி பேசிக் குழப்பஞ் செய் வோர்களும் போலி வேஷப் பொதுகலப் பேர்களும் பாலி யாற்றுப் படுமணல் தன்னிலும் காலி லொன்றுக் குயர்ந்ததங் காட்டினில்
சூழ்ச்சி செய்து சுகமெடுப் போர்களே ஆட்சி செய்யும் அரசியல் வானிடை காட்சி தந்து களிங்ட மாடுவார், வீழ்ச்சி யெய்தும் வியப்பதும் உண்டுதான்.
72

கவிக் கற்பரசி
rs as aucas Bwr RDawr, பழங்குடி யறியாப் பதி; மொழி நூறு வழங்கிடு கிழும்பு வான்ங்கர் அதனில் களங்கமொர் கோடி கன்மறை வாக விளங்கிடும், அதைாகான் விரித்திட லாமோ? எத்தனை சாதி, எத்தனை சமயம், அத்தனை யாகு மனாசா ரங்கள்; உத்தமர் களுமுளர் ஒருமணி வேளை பத்தினி களுமுளர் பகலினி லங்கே
O ■ வங்தனைகள் செய்குவது வானவரை யல்ல, தங்தமது மேலையதி காரிகளை யாகும்; சங்ததமும் அந்தவகை சாதனைகள் செய்வோர் எந்தவகை யாலுமுயர் வெய்துவது சாலும்
மிஞ்சிவழிக் தோடுவது மேல்வீதி யெங்கும் m விஞ்சு விசை வண்டிகளே,வெண்ணெய்தயிர் அல்ல; கஞ்சிகழு நீரினையும் காண்பதரி தென்றும் அஞ்சிடுவர் தண்ணிரும் அற்றுவிடும் என்று
மாடிகள் கோடி யங்கு மனைகள்முன் மலர்த்தோட் டங்கள் கோடியின் பின்னால் எங்கும் குப்பைசேர் குச்சு வீதி; பேடிகள் போல, மக்கள் பெருகிய கட்டத் தார்கள், வாடிய சிறுபான் மைக்கு வகுப்பது பிறிதோர் நீதி.
78

Page 47
காவற்குழியூர் கடராசன்
பூக்களோ அங்கு மல்கு பூவையார் ஒத்த வாகும், கோக்கவே அன்றி வேறு மோக்கவோ உதவா; என்றும் *ஆக்களோ அடிவ ழுக்கி அதிகமாய் விழுவ தெல்லாம் மாக்களின் மதத்தா லல்ல, மக்களின் மதத்தா லாகும்
Sardb
காவியமா எழுதவந்தேன்? இல்லை இல்லை, காவியத்துக் கிங்கேயோர் கதையு மில்லை; மேவியநற் றலைவனிலைத் தலைவி யில்லை; மேலான என்கவியை மெச்சி மெச்சிப் பாவினிலே உயர்ந்ததெனப் பரிச விரிக்கப் பண்புடைய வள்ளலொரு பேரு மில்லை; காவியமேன் எதற்காயிங் கெழுத வேண்டும்? கட்டிவைப்போம் ஏட்டினை இக் கணக்கி லேயே
74

நெஞ்சின் அலைகள்
கெஞ்சின் அலைகளினை, நீலத் திரைக்கடலே மிஞ்சி அடித்து, உன்றன் மேல் நான் படர்கையிலே, வஞ்சி யனையாள், இல் வாய்ந்த கிளியாளின் கெஞ்சுத் துடிப்பினை நீ நினைவு படுத்துகிறாய்.
கொஞ்சுங் குழந்தைகளின் கும்மாளங் காட்டி, அவர் பிஞ்சுத் தளிர்க்கரம் ஊண் பிசைதல் நினைவூட்டி பஞ்சு நுரைச் சோறென் பாதையிலே சிங்திவரும் விஞ்சும் அலைக்கடலே வினை முடிக்கச் செல்லவிடு.
செங்கடலே நீ யளவிற் சிறிதா யிருந்து முளம் பொங்குகிறாய் ஏனோதான் புழுங்குகிறாய் இவ்வளவாய் அங்குஆ பிரிக்கா, விங்கு அரபுக் கிடைநடுவில் தங்கா துனதுளமும் - தத்தளித்துப் போகிறதோ?
75

Page 48
காவற்குழியூர் நடராசன்
என்னேயுன் செம்மை இருங்தவா றென் ஓர்ப்புத் தன்னைத் தகர்த்திடவா தத்தளித்துக் காட்டுகிறாய்? உன்னே யனைய அலை ஒலியா லுலகளக்கும் என்னைத் தடுக்காதே இன்னும் சிலகற்க,
ஓங்கு புகழ் ஆங்கில வா னொலி நிலையஞ் செல்கின்றேன், ஆங்கவர்கள் பாங்கு செறி ஆகாச வாணி முறை தீங்ககற்றி நானறிக் தென் தேசத் தொலி பரப்பத் தேங்கு"சுவெஸ்’ கால்வாய் நீ தேற்றி யெனைச் செல்ல விடு.
வித்திட்டு நாகரிகம் விளைத்த பிரதேச மத்தித் தரைக் கடலே மாண்பு மிக வுடையாய், கத்திக் குதிக்காதென் காயங் தகிக்கா துன் சித்தக் குளிர்மையிலென் சிங்தை குளிர்கிறதே.
76

கவிக் கற்பரசி
கீன்னித் தமிழ் நூல்கள் கவ்விச் சுவைத்ததனாற் கன்னற்றமிழ் பேசக் கடலேங் கற்றிருப்பாய்; கன்னித் தில ஈழ கண்பர்க் கெனதாசி பன்னிப் படரங்தப் பக்கத்தாற் போகையிலே,
77

Page 49
லண்டனிலே
மோனக் கருமுகில்கள் மூடிக் கிடக்கின்ற வானத் திரையிடையே வருடத் தொருசிலகாள் தீனக் கதிர்ப்பரப்புங் திங்களொளிச் சூரியனைக் காணக் கிடைக்கில், லண்டன் காமன் விழாவெடுக்கும்!
சோலை வனங்களெலாம் சோடிப் படலங்கள் சாலை சதுக்கமெலாம் சதுரிதழை ஒன்றாக்கிக் காலை முதலிங்கு கட்டிப் புரள்கையிலே மாலை, கடல், மதியம் மட்டா எனைவாட்டும்?
உள்ள தெதுவும் ஒளிக்கத் தெரியாத வெள்ளை மகளிர்செயல் வேகும் உளத்திற்குக் கொள்ளியிடும், அந்தக் கொடுமை சகிக்காது துள்ளி விழுமுள்ளம் தொடுகடலுக் கப்பாலே.
ஓடும் புகைவண்டி உயரத்ததன் கீழே நீடுங் கட்ைவீதி, நிறையுஞ் சனம், அதன்கீழ் ஓடும் கதி அதன் கீழ் ஓடும் பலவண்டி, ஒடும் நகர் முழுதும் ஓடும் உளமொருபால்.
தேம்ஸ் நதியின் வெள்ளத்தே தேங்குங் கலங்களவை தாம் பிறவூர்ச் ச்ெல்வங்கள் தாங்கிவரும், லண்டனினை பூம்புகழு. ராக்கிப் பொலிவிக்கும், என்னுளத்தைக் கூம்புவிக்கு மென் செல்வம் கொண்டு குவிக்காமல்,

கவிக் கற்பரசி
எண்டிசையு மொன்றா யியைந்து மயங்குகிற லண்டன்நகர் மாளிகையின் அண்டை யிருந்தாலும் வண்டறியா இன்கமழ்சேர் வார்கந்தல் மெல்லணையிற் கண்டறியேன் கன்றாய காசினியி லொன்றேனும்.
*மேற்குக் கிழக்கொடினி மேவா, தெனவுரைத்த வாக்கென்ன? 'கிப்ளிங்" நீ வருவதறி யாதுரைத்தாய்; மேற்கோ கிழக்கொடுமெய் மே விக் கலந்திங்கு பாற்கோப்பி போலப் படர்கிறதைப் பார்க்கையிலே,
மேற்குக் கிழக்காகும், மேலான கீழாகும்; தோற்குள்ள பேதம் தொலைந்து பிறிதாகி, ஆர்க்குங் தெரியாமல் அவனி உருமாறப் பார்க்கு மென லண்டன் பாடங் தருகிறது.
79

Page 50
'உவெஸ்மிஸ்ரர்" பாலத்தே
பேரான லண்டனிலே பெரியார்கள் கூடுகிற பாராளு மன்றத்தோர் பக்கத்தா லோடும் "தேம்ஸ்" பேராற்று 'உவெஸ்மிஸ்ரர் ப் பெரும்பாலத் தேங்ண்று தீராத நல்லுழைப்பின் திறமைகளைக் காண்கின்றேன்.
காலைக் கதிராற் கலைக்க முடியாத பாலைத் திரைத்தன்ன பனிப்படலத் தூடாலே மாலைத் தொடராய் மயங்கித் தெரிகின்ற கோலப் பெருமாடக் கோபுரங்கள் எத்தனையோ
மக்கள் அரசாட்சி மன்றத்துக் கோபுரங்கள் கெக்குருகு விக்குமெனை; நீதி நிலைப்பதற்குத் தக்க தெனக் கொண்ட சனாகா யகாகங்கை புக்ககத்தைக் கண்டேன் புளகாங் கிதங்கொண்டேன்!
80

கவிக் கற்பரசி
ஒருநூறு வருடங்கள் ஓயா துழைப்பினுமுள் உருவே திரியாரில் வுலகிற் பெரியரெனப் பெரு "பென்' மணிக்கூடு பேசும் மணிக் கொருகால் அருகிருந்து பாராளு மவர்க்கு மெவர்க்குமெலாம்.
அங்கே சிலையாய் அசையாமல் நிற்கின்ற மங்கை யவளே "றோம்" மாற்றார் தமையெதிர்த்துப் பொங்கி யெழுந்த
பொடிசியா? இங்கடிமைச் சங்கடத்தைத் தீர்த்த சமர்த் தவள் பேர் வாழியவே!
81
ap6

Page 51
சாப விமோசனம்
கற்புக் கரசி கண்ணகியாள் காலின் சிலம்புக் கதையினை யென் சொற்புக் குணர்த்து மிடமெல்லாம் சொல்லு மொலியைப் பரப்புகையில்,
மற்புக் குயர்ந்து தமிழ்வளர்த்த மாறன் குலத்தைச் சபித்தெங்கள் பொற்புத் தமிழின் காவலனைப் பூண்டோ டழித்தா ளெனநோவேன்,
கம்பன் கவிதை வள மெல்லாம் காற்றின் வழிகான் பரப்புகையிற் செம்பொன் மணியிற் சிறங் தெனுயிர் செழிக்குங் தமிழை வளர்த் தெழிலார் இம்பர்க் கமுத மளித்தபெரும் s இகல்வெல் வளவன் குலத்தைச் சொல் அம்புக் கிரையாய் அழித்தானென் றலமங் துள்ளங் கலங்கிடுவேன்,
உலக முவப்ப ஒலிபரப் புகையிற் கலகம் எனக்குட் பிறப்பது காண்பேன்; தமிழால் வளர்ந்த தையலர் கற்பும் தமிழால் வளர்ந்த தகையோர் கவியும் அழியாத் தமிழின் அருங்கா வலரைப் பழிவாங்கியஅப் பாவத் தாலே, கலைகள் பலவாய்க் ககனத் திடையே அலையாய்த் தமிழில் அனுப்பும் போது தலையாங் தமிழின் தகைமை பேசாச் சிலையாய் கின்றுட் சிதைவேன் சிதைவேன்.
82

கவிக் கற்பரசி
அரசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதை உரைசெயச் சிலம்பின் ஒருகதை கொண்டு விவரணச் சித்திரம் இசையொ டு தரவே தவலரு முயற்சி தலைப்படு கையிலே "நிலமிசை யின்றதை நினைவு படுத்தச் சிலம்பேன் கதையேன் செயல்போ தாதா? கொல்லன் தெருவிலே னு சிவிற் பனை"யென் றொல்லும் வகையெலா முறுத்துமென் நெஞ்சே,
முற்பகல் பிறர்க்கே மூட்டிய கொடுமை பிற்பகல் தமக்கே பெயர்ந்திடு" மென்று செப்பிடக் குறளைச் சிந்தனை செய்தால், இப்பகல் கண்முன் இலங்குவ தொழித்து ஏட்டினிற் குறளாய்த் தீட்டிய மேற்கோள் காடடுவ தேனென வாட்டுமென் மனமே,
உலக முவப்ப ஒலிபரப் புகையிற் கலகம் எனக்குட் கணப்பொழு தொன்றாய்ப் பிறப்பது காண்பீர்; பெரும்பான் மையினர் சிறப்புற வேண்டின் சிறுபான் மையரைக் களிப்புற வைத்துக் கவின்பெறு கலனை அளிக்கும் கொள்கை அனுசரியாத கொடுங்கோ லாட்சிக் குடியர சென்னச் சுடுமென் கெஞ்சம் சுடுமப் போதே.
O O C
சொல்லார் மதுரைத் திருங்கரும் சோபை நிறைநின் திருமுலையும் எல்லா மெரித்துக் கண்ணகிரீ எமக்கே கொடுமை விளைத்திட்டாய்
83

Page 52
நாவற்குழியூர் நடராசன்
வல்லார் கவியி லென்றிங்கே வாழ்வார் தமையா தரிப்பார்கள் இல்லா வகைநீ செய்தேயெம் ஏழ்மை பெருக்கி விட்டாயே
மையார் தடங்கண்ணி மானேயுன் கற்பு மகிமையினால் உய்யா விழுமங் ஊட்டிய எங்குல முய்வதற்குன் பொய்யாத சாபமும் போகாத தாபமும் போக்கியெங்கள் கையா றறுத்தல் கடனுனக் கேசெய்ய கண்ணகியே!
மட்டுப் படாத பொருளே பொதிந்து மலிந்துசுவை சொட்டுங் தமிழை வளர்த்திட்ட சோழரையுன் சொல்வலி (யால் சுட்டுக் கெடுத்துச் சுகமென்ன கம்பங்குடினையோ? தட்டுத் தடுமாற வைத்தெம்மை யிங்குநீ தாழ்த்தினையே
தூண்டுங் துயரைத் துடைத்தெம்மை யாட்கொண்டு
(தொல்லுலகில் மீண்டுங் தமிழை வளர்க்க வளவரிம் மேதினியில் யாண்டு முதித்துக் குறித்துப் புலவோர்கள் ஆர்ப்பரிக்க, வேண்டும் கவியர சே உன்றன் சாப விமோசனமே.
84

பொங்கல்
பொங்கிட வேண்டும் உள்ளம் - பூரித்துப் பொங்கிட வேண்டும் உள்ளம்
மங்கல மான தைப் பொங்கலைப் போலமெய் எங்கும் பரங்துசுவை தங்கி நிறைந்துநிதம் (பொங்கிட)
தங்கத் தமிழ்ப்பயிரும் எங்கள் குலத்துயிரும் பொங்கப் பிறந்ததுதை பொங்கப் பிறந்ததென்று சங்கம் வழங்கமிரு தங்கம் முழங்கஇசை வங்க மெறிகடலும் மங்க ஒலித்துடலுள் (பொங்கிட)
செல்வரும் சீமான்களும் சிங்காரப் பெண்மணிகள் எல்லாரும் இன்தமிழ்கெல் ஏத்தி வளர்க்கவர்ந்தார் சொல்லாரும் சுவைநின்று சொட்டும் தமிழின்பொங்கல் அல்லாமல் உண்ணோமென்று ஆணைகள்
செய்தேயின்று (பொங்கி )

Page 53
கங்கணம்
சாதல் விளைக்கின்ற சண்டாளர் வங்தெங்கள் சத்தை உறிஞ்சுமிப் போதினிலே காதல் விளையாட நேரமில் லை யென்று கங்கணங் கட்டிக் கொள் வாய் தமிழா.
வேலையும் வாளையும் வீசிப் பொருகின்ற வெங்திறற் கைகளைத் தீட்டாமல் சேலையும் வேலையும் செற்றுப் பொருங்கண்ணை தீட்டவோ செந்தமிழ் ஓவியனே
வன்னக் கொடியையும் அன்னை முடியையும் வைத்து வணங்கி நின் றாடாமல் சின்னத் தனக்கதை தன்னை கடிப்பதோ செய்ய பசுங்தமிழ் நாடகனே!
வீரம் கிறைந்தியல் தீரக் கவிதைகள் வீணை இசையுடன் பாடாமல் கோரம் நிறைந்திடு காமக் கவிதையேன் கூறும் தமிழஇசை வாணர்களே.
!.
பண்டை யரசர்கள் கொண்ட திறமையும் பாவலர் தீரமுங் கூறாமல் வண்டை மலர் கொள்ளை கொண்ட கதைகளேன் வல்ல தமிழ் எழுத் தாளர்களே?
86

இந்தக் காதல்
காதல் எதற்கிந்தக் காதலோ - இன்று
கண்ட தெதிலுமிக் காதலேன்? காதல் சிறப்புடைத் தாயினும் - அன்ை கன்றி மடிகையிற் காதலா?
காதை கவிதையும் காதலே - சொலும் கண்ட உடன் ஒரு காதலாம்! பாதை தவறி விட் டோமடா - இனும் பாழும் வழியினிற் போவதா?
காதற் கதைஎதற் கிங்கடா? - இது காலம் அதற்கல, எங்கடா மாதர் பெருமையும் மாட்சியும் - தமிழ் மன்னர் திறமையும் ஆட்சியும்,
கோடிக் கொடிஞர்செய் கோன்மையும் - எமைக் கொன்று பிழைத் திடும் ஆண்மையும் - சொல்லி மூடிக் கிடக்கின்ற மொய்ம் பெனும் - தணல் மூட்டி விடுங்கவி காதைகள்?
வேண்டிய திங்கவை அல்லவோ - இந்த வேளையி னிற்பிற நல்லவோ? ஈண்டொரு காதலென் றின்புற - எங்கள் இன்னல்கள் யாவும் ஒழிந்தவோ?
87

Page 54
காவற்குழியூர் நடராசன்
அன்னை விலங்குகள் அற்றவோ? - இங்கு அகன் கனியர் சூழ்ச்சிகீ முற்றவோ? முன்னை யிருந்தசெல் வாக்கெலாம் - தமிழ் முற்றும் மறுபடி பெற்றதோ?
கஞ்சிக்குக் கூக்குரல் இல்லையோ! - மாறிக் கட்டத் துணிக்கிரப் பில்லையோ? - எமை வஞ்சிக்கும் மாந்தரிங் கில்லையோ? - செல்வம் வாரிச்செல் வோருமிங் கில்லையோ?
வீழந்த உணர்ச்சி விளக்கிலே - இனி வேகக் கனலினை மூட்டுவோம் - நெறி சூழ்ந்த கதைகள் பல் லாயிரம் - அதைத் தூண்ட அமைத்தொளி கூட்டுவோம்,

வேற்று மணம்
JOyar to
முன்னொருகாள் என்னிலவள் மோகமுற்றாள்
என்றுபல சொல்லினளே வேசி அவள் வேசி - இன்று புல்லினளே வேறுமணம் பேசி.
"அன்னை வலு வில் அவளை அத்தை மகற் காக்கி
விட்டாள் என்னமொழிங் தாய்இதென்ன தோழி! - தான் சொன்ன சொல்லை ஏன் மறந்தாள் மூளி?
கான் அவளைக் காத்திருங்து நாளை அவம்
போக்கினனே
ஏன் இவள் என் போன்றவரை ஆழி - வாழ்
மீனைஇரை போலிமுத்தாள் தோழி?
ஆற்றுமணல் போலொருவன் அன்பிலரி பட்டதவள் அன்றெனக்குச் சொல்லவில்லை ஏனோ - உயிர் பொன்றிவிடும் என்றுநினைத் தாளோ?
'காளை அவம் போக்கினன்'என் றோமொழிந்தேன்!
ஏன் கலைகள்
ஆளையிழுத் தேவசியம் போட-அதில்
வேளையை விட் டாரிலையோ ஒட?
அன்புளரைப் பாடுவதில் ஆண்டுபல போக்கிவிட்ட இன்புலவோர் என்னபெற்று விட்டார்? - சிலர் முன்பெருமை யாய்த்திரிதல் விட்டால்
89

Page 55
காவற்குழியூர் நடராசன்
அப்படியே கானுமட மாதர்மனப் போக்கறிந்த தெப்படிவீண் காலம்?இனிப் பொல்லா-மாதர் செப்படிவித் தைஎனிலே செல்லா !
அவள்
அன்றொரு நாள் "உன்னிலன்றி ஆசையெனக்
கில்லையடி என்றவர்தான் சொன்ன தென்ன மெய்யே? - எனக் கின்றுதான் தெரிந்ததவர் பொய்யே!
அன்னைகள வோர்வதற்கும் அம்பல் அலர் ஆவதற்கும் முன்னை மணப் பே‘ைெனவங் தென்றார்-பின் என்னை மறங் தெங்கடிதான் சென்றார்?
இன்றுவரும் நாளை வரும் என்னவர் "கார்’ மாலைவரும் என்றெதிர் பார்த் திங்கிருந்து கொங்தேன் - அன்னைக் கின்றுவரை காள்கடத்தி வங்தேன்.
"ஆற்றுவனோ நின்பிரிவை என்றவர்தான்
இன்றெனக்கு
வேற்றுமணம் என்றறிந்தும் என்னைக் - காப்
பாற்றமன மின்றிநின்ற தென்னை
90

கவிக் கற்பரசி
காவினிலே என்னையவர் கட்டியனைத் திட்டதினம் யாவினும் மேல் இன்பம்’ என்ற தேனோ? - தான் மேவிய பேர் தம்முளென்று தானே!
வேறுபல வேல்விழியார் வேண்டுமட்டும் உண்டெனவே மாறுமொழி யாலுரைத்தார் அன்றே - கான் தேறவில்லை யேயதனை கன்றே
பூவினுக்குப் பூத்திரியும் புல்லியதேன் வண்டெனவே தாவுமொரு கொள்கையிலார் ஆணோ? -என் ஆவியுனும் பாவியவர் தானோ!
91

Page 56
உரிமை
குருவி குருவி கொஞ்சம் நில் கொத்திய நெல்லைக் கீழேவை, உருவி உருவி நெல்லெல்லாம் உண்ண வயிலில் உழைத்தாயா?
காட்டை வெட்டி எரித்தாயா? கட்டை கிளறி எடுத்தாயா? மாட்டைப் பூட்டி உழுதாயா? மழையை வேண்டித் தொழுதாயா?
காற்றை வயலில் நட்டாயா? கல்ல பயளை இட்டாயா? சேற்றைத் தேக்கி வரம்பாக்கிச் சேர நீரை விட்டாயா?
களையைக் கட்டிக் காத்தாயா? காவல் இருந்து பார்த்தாயா? விளைவைக் கட் மருந்துவகை வீசி வயலிற் சேர்த்தாயா?
அருவி வெட்டி அடித்தாயா?
அளந்து கட்டி முடித்தாயா? குருவி என்ன உரிமையினால்
கொத்தி நெல்லைத் தின்கின்றாய்?
92

காட்டுக் கென்ன செய்தாய்?
காட்டுக் கென்ன செய்தாய்? தாய் காட்டுக் கென்ன செய்தாய்? உன் வீட்டுக் குள்ளி ருந்து சொந்த வேலை செய்த லன்றி இந்த - (காட்)
காடு மேடு வெட்டி கல்ல கழனி செய்து விளைவு யர்த்தப் பாடு பட்டுப் பயிர்வளர்த் தாயா? -- அதில் ஈடு பட்டிங் குயிர்வளர்த் தாயா?
ஆணி தோணி போன்ற மேன்மை ஆன கைத்தொ ழில்மு யற்சி பேணி ஏதும் செய்துவைத் தாயா? - பிறர் காணி பூமி எய்தவைத் தாயா
கல்வி கற்று யர்ந்த ஞானக் கண்கள் பெற்று நல்ல போதம் சொல்லி வைத்துத் துயர்துடைத் தாயா? - அவர் கல்வி னைக்கு வழிவகுத் தாயா?
93

Page 57
நாவற்குழியூர் நடராசன்
வறுமை யுற்ற வாழ்வு மாறி வாய்ந்த செல்வ வாழ்க்கை யாரும் பெறுதல் காணத் தான்முயன்றாயா? - துயர் உறுதல் கண்டு தான்கவன் றாயா?
பஞ்ச பாத கங்கள் விட்டுப் பாரில் கல்லொ முக்கம் ஓங்கக் கொஞ்ச மேனும் உேழைத் தாயா? - சால்பு தஞ்ச மென்றே உேரைத் தாயா?
காட்டுக் கெந்த வகையி லேனும் காமு ழைக்க வில்லை யாயின் நாடெ மக்குச் செய்யவென்ன உண்டு? - இங்கு பாடெ துவும் இன்றிப்பயன் உண்டோ?
94

ஆருக்காக வாழ்கிறோம்?
ஆருக்காக வாழ்கிறோமிங் கேதுக் காக வாழ்கிறோம்? ஊருக்காக அன்றி மற்றிவ் வுலகுக் காக இல்லை ய்ேல் - (ஆருக்)
தங்தைக் காகத் தாயுக் காகத் தனைய ராக வாழி னும், ாைநந்து கொங்த மனித ருக்கும் மைந்த ராக வாழு வோம்.
சேயுக் காகத் தாய ராகத் தங்தை யாக வாழி னும், ஏயும் ஏனை உயிர்க ளுக்கும் இனிய ராக வாழு வோம்.
அன்புக் காகத் தென்புக் காக அயலுக் காக வாழு வோம், கண்புக் காகப் பண்புக் காக கன்மைக காக வாழு வோம்,
95

Page 58
நீாவற்குழியூர் நடராசன்
பேருக் காகப் புகழுக் காகப் பெருமைக் காக இல்லை யேல், சீருக் காகச் செம்மைக் காய்ஊர்ச் சிறப்புக் காக வாழு வோம்.
சாதிக் காகச் சார்ந்த கொள்கைச் சண்டைக் காக வாழா மல், நீதிக்காக நேர்மைக் காக ஆதிக் காக வாழு வோம்.
96

வறுமை
வறுமை யென்ப தென்ன? இந்த வாழ்வில் நன்மு யற்சி யற்ற சிறுமை யென்ப தன்றி வேறு செப்பு தற்கொன் றில்லை யே!
நீரி ருக்க நிலமிருக்க நிறைய நூறு விதையிருக்கப் பாரில் ஒன்று சேர்த்த வற்றைப் பயனு றாமை வறுமை யாம்.
காரில் வேறு வகையிருக்க . காணின் தேவை பலவி ருக்க வேரின் வகையிற் பணமி ருக்க வினையி லாமை வறுமை யாம்.
வாங்கி விற்கப் பொருளி ருக்க வாக்கு காண யம்மி ருக்கத் தூங்கி நின்று, பொருளை யீட்டத் துணிவி லாமை வறுமை யே.
உயிர் நிறைந்த உடலி ருக்க உடலிற் கால்கை கண்ணி ருக்க மயல் நிறைந்த மனசில் ஓர்ம மாண்பி லாமை வறுமை யே
97 8,8-7

Page 59
வேனில் விளையாட்டு
வாடை பறந்தது கோடை பிறந்தது வசந்தம் வங்துல வும் சாடை தெரிந்தது, பேடைக் கருங்குயில் சஞ்சாரம் செய்கிற து.
ஓடை நிலத்திலும் மேடைப் புலத்திலும் ஓங்கி வளர் தருக்கள் கூடைக் கணக்கினிற் காய்கனி பூ வெனக் கொப்பளிக் கின்றன வே!
கொட்டு மழைக் குளிர் சொட்டு பனித்துளிக் கூதல் ஒழிந்தது மே தொட்டுத் தடவ உள் மொட்டு மலர்கிற தென்றல் எழுந்தது வே.
தெட்டத் தெளிந்தது, மட்டுப் படாமந்த் மாருத வீச்சினிை லே கட்டுப் படா உளக் காதல் எழுந்தது காமனின் வேனில் இது.
98

கவிக் கற்பரசி
கண்ணைப் பறிக்கிறிமின்னல் எறிகிற கார்ப்பகை தெற்கோட் டி
விண்ணை வெளுத்த விதான முகில் கட்டி வேனில் வடக்கே கும்.
வன்னி வனம் முதற் கன்னி மனம் வரை வனப்பு வாய்ப்பதெ லாம் விண்ணிலும் மண்ணிலும் வேகம் தொடுக்கிற வேனில் விளையாட் டே
99

Page 60
புத்தாண்டுச் சித்திரங்கள்
சித்திரையாள் இன்று சிரித்து மலர்ந்து வரப் புத்தாண்டுக் கவிக் கோலம் புனைந்து வரவேற்போம், கத்து குயிலோசை கட்டியங்கள் கறிஎழக் கொத்து மலர்க் கொம்பரெலாம் சித்திர காண்மலர்
துTவும்.
பூரண கும்பமிடும் பொற்றா மரைத் தடங்கள், தோரணங் கொன்றை தொங்கவிடும் திக்கெல்லாம், வாரணம் சங்கோசை வழங்கும், குருகினங்கள் ஆரணம் ஓதி அதிகாலை வாழ்த்திசைக்கும்.
செவ்வானம் சித்திரைக்குச் சிங் தூரத் திலகமிடும், சவ்வாது பூசித் தருக்கிளைகள் தாமசையும், கொவ்வை இதழ்காட்டக், கொங்கை பனைகாட்டத் தவ்வை வசந்தத்தின் தலைவாயில் வருகின்றாள்.
அசந்த மனிதருக்கும் அவனியிலே பற்றற்றுக் கசந்த மனிதருக்கும், கார் கூதிர் இடர்மாறி உசங்த நிலைவருமென் றுணர்த்துவபோற் பின்பணியை வசந்தம் தொடர்ந்ததுவே, வனப்பு மிகுந்ததுவே!
100

காவற்குழியூர் நடராசன்
பெற்றோர் குரு பெரியோர் பேணிப் பெருநெறிகள் உற்றோர் தரிசனத்தில் உவங்தே, பொருளெதுவும் அற்றோர்க் குதவி, அறவுரைகள் கேட்டொழுகி முற்றாய்ப் பகைமாற முளைத்ததொரு புத்தாண்டே,
கெற்போரை யன்றி, நிறைவு தளராத கற்போரை யன்றிக் கடும் போர் கருதாது சொற்போரை வென்றபோர்த் தேங்கா யடிப்போர்செய் கற்போரை யாரே கயவாதார் கானிலத்தே
செய்த தவறெல்லாம் சிந்தித் தொதுக்கி, இனி உய்யு நெறிகாண உவந்த முறையினிலிவ் வையத்தே புதியதொரு வாழ்வு வகுப்பதற்கிங்கு ஐய, புதிதாயோர் ஆண்டு மலர்ந்ததுவே
0.

Page 61
வாரிக் கொள்
பாலூட்டிச் சீராட்டி உன்னை-தமிழ் படியென்று சொன்னாளே பலகால்உன் அன்னை, வேல்விட்ட புண்போல் அதுன்னை-ஏனோ வேதனை செய்கின்ற தென்செல்வக் கண்ணே! ஆல் போல் தழைத்திட்ட இன்சொல்-தமிழ் அமுதுண்ண நீ ஆர்வம் கொள்ளாத தென்சொல் பால் என்று சொன்னாற் பொருந்தா-தமிழ் பாகென்று சொன்னாலோ பாதிபொருந்தா,
கால் என்று சொல்வேன் என்வாழ்வின்-ஏன் கதி என்று சொல்வேன்எத் தமிழர்க்கும் தாழ்வில், மால் கொண்டு நீயேன் மருண்டாய்?-பிறர் மாய் மாலங் கண்டா நீ தமிழாகா த்ென்றாய்! சூல் கொண்ட மேகங்கள் போலே-அறிவு சுடர்கொண்டு கவிகின்ற தெங்தமிழ் மேலே கோல் கொண்டோ கற்கணடைத் தின்ன-யாரும் கொடுப்பார்கள்? தெவிட்டாதே தமிழ் தின்னத் தின்ன, மேல் வந்து வாரிக்கொள் கன்றாய்-இங்கு மேலான புலமைக்குப் புகழுண்டு கண்டாய்
102

என் மகனுக்கு
ஆராரோ ஆரிவரோ ஆராரோ என்றுனை நான் சீராட்டித் தாலாட்டிச் செல்லம் பொழிகிையிலே, ஓராயிரம் கனவென் உள்ளத் துருண்டு வரும் வாராத காலத்துன் வாழ்வை எதிர்நோக்கி.
பள்ளிப் பருவத்துன் பாடத் திறமையிலென் உள்ளம் குளிர்ந்திடுமா? ஊரார் உனைப் புகழத் துள்ளிக் குதிப்பேனிா? தூய கலைகளினிை அள்ளிப் பருகி யென்றன் ஆவல் தணிப்பாயா?
08

Page 62
நாவற்குழியூர் நடராசன்
பொய் களவு சூதுகெறி புரையோடிப் போயிருக்கும் வையகத்தில் கேர்மை வழிகண்டு வாழ்வாயா? மையல் தருங்காம மதுவகையில் மாளாமல் உய்யும் கெறிகண்டிங் குயர்வாய் என விழைவேன்.
தக்கது தகாததெது தமிழ்மக்கள் சால்புக்கே ஒக்கதெது என்றென்றும் உணராத வேளையிலே திக்கெங்கும் புகழ்ண்ேட திருக்குறளை கேர் கோக்கி அக்கற்றுக் கொப்ப கட அறவாழ்க்கை ஆங்கமையும்,
பணமுடைமை தானிங்தப் பாரிற் பலாகலனெக் கணமும் தருமெனினும், காதலிலோ வேறெதிலோ மணமென்று வந்தாலும் மற்றெவர்கட் பென்றாலும் குணத்திற் குயர்ந்த இடம் கொடுப்பது மேல் என்மகனே.
04

கவிக் கற்பரசி
உரிமைக்குப் போராடி ஒழிந்ததனை மீட்டல் மிக் அரிய செயலேதான் ஆனாலும் அவரவர் தம் உரிய கடமைகளை உவப்ப முடித்தவரே பெரியர் எனப்படுவர், பேணும் உலகவரை
கண்ணாலே கண்டதுவும் காதாலே கேட்ட துவும் உண்மையென எப்போதும் உறுதிப் படுவதிலை; எண்ணிப் பலமுறையும் எடுத்தாய்ங்து பார்த்தாலே மண்ணொடு விண் காட்டாத மறையெல்லாம் புலனாகும்.
காணவிலை என்பதனாற் கடவுளிலை என்பது, பார் பேணவரும் அப்பொருளின் பெற்றி உணராமை; காணவளர் உடல்தோறும் காணா உயிராகும் மாணப் பெரும் சக்தி மனத்தால் உணர்வதுவே!
105

Page 63
பொங்கிடுவீர்
பொங்கலெனச் சொல்லுகிறார் இன்றா மந்தப் பொங்கல், அது சரிதான், எம் உள்ள மெல்லாம் பொங்குகிற வேளையிது, புழுங்கி ஊனும் பொங்கியெழுங் காலமிது, பொங்க லேதான்
பொங்கிடுவீர் தமிழ் பொங்கப் பிறந்த மக்காள், பொங்கிடுமும் முயிர்பொங்க உதிரம் பொங்கப் பொங்கிவிடும் உம்வாழ்வு சிதையு முன்னே, பொங்கிவிடும் எங்களினம்
புதையு முன்னே.
106

கவிக் கற்பரசி
கச்சேரிக் கடிதத்தைக் கண்டேனும் பொங்கும் அச்சான அதிலேதும் அறியாதீர் பொங்கும் எச்சாங்தி வேண்டியினும் இரவிக்கேன் பொங்கி? துச்சா தனர்தம்மைத் துடையுங்கள் பொங்கி
பொங்காத பேர், ஏழைப் பொதுமக்கள் உண் டேல் இங்கே எங் கதிகண்டுங் கண்ணிரைப் பொங்கும்; அங்கேயல் வேழைகள் அழுகின்ற கண்ணிர் சங்கார வாளாகிச் சரிக்கட்டும் பொங்கி
107

Page 64
செஞ்சொற் சிலம்புடையாள்
(பொருள் தேடிப் பிறநாடு செல்வேன் என்ற தலைவனுக்குத் தோழி சொல்லியது)
குடியாட்சி யதனாலே குமுறும் சிறுபான்மை மடிகாட்சி யெனவாட்டு கொடிதான சுறவோடப், படித்துயர்ந்த மொழிசெல்லாப் பண்டமா யாகிவிடத் துடிக்கின்ற அறிஞரெனத் தொடர்கின்ற அலைமோதும் அமைச்சர் அவையில் ஆளில்லாக் குலமென்ன இமைப் பொழுதும் அமைதியுறா ஏழ்கடற் சமுத்திரம்.
எண்ணென்ற இழையூடு இயலென்ற பாவோடிப் பண்ணென்ற துகில் மேனி படர்தமிழ்க் கலையாளைக் கண்ணென்று கூறிஅக் கடலோடிப் பொருள் செய்யும் வண்ணம் அறியேன்யான், வல்லார்க் கியைவதோ
மண்கண்ட பெருமாடல் மருவுண்ட மொழிகறு விண்கண்ட பொருளாய வக மோடு புறமேவு பண்கண்ட தமிழாளைப் படரெவ்வ முறவிட்டுக் கண்கண்ட பெருமt கடல் கடந் துழல்வையோ
108

கவிக் கற்பரசி
செஞ்செர்ந் சிலம்புடையாள சிறும்ைய்டைய இவன் வெஞ்சொற் சிலகற்று வேற்று நாட் டயர்ந்துழைக்க விஞ்சு விசையாய் விரையுங் தலைவா உன் கொஞ்சு மொழியாளின் கோலம் இனியென்னாம்
அதனால்,
அற்புதப் பொருள் செய் விற்பனர் துணையொடு கற்பூ ரம்முதல் வெற்பூர் பொறிவரை கற்பல னளிக்கும் பற்பல பொருள்கள் சற்சனர் கூட்டி உற்பத்தி செய்து விற்பனை யாக்கி வேற்றுங்ாட் டவரின் கற்பனைக் கெட்டாக் கவின் பல பெற்றுப் பொற்புறு நல்ல பொருளாதாரம் உற்றுயர் வெய்தின் மற்றெக் குறையும் அற்றழிங் தோடி, ஞானம் பெற்றவர் உளம் போற் பெரு நிறை வுறுமே,
09

Page 65
தாரணிக்கு ஓர் அச்சாணி
வாழ்க தொழில் பல வாய்மை நிறைந்தன வாழுக வாழுக வே- இசை சூழ்க அவைபுரி வோரை கலம்பல சூழுக சூழுக வே.
வையம் உயர்ங் தொரு வாழ்வு சிறந்திட வைப்பவர் ஆர்பிற ரே?-தொழில் செய்பவரின்றியிங் குய்பவர் ஆர், எவர் சேமம் அடைந்திடு வார்?
எத்தொழில் ஆயினும் மெய்த்தொழி லேயெனின் ஏத்திப் புகழ்ந்திடுவோம்-என்றும் அத்தொழி லாளர்கள் இத்தரணிக் கேபெரும் அச்சாணி யாகுவரே.
அச்சாணி யாகிய இச்சோர் வி லாதவரி யாவரும் ஒன்றுபட் டால்- 6ாமைத் துச்ச மென் றெண்ணியே தூறுகள் செய்பவர் தோற்க முன் னேறிடலாம்,
i 10

கவிக் கற்பரசி
ஏழை எளியவர் என்றிணி இங்கிலை ஏ வரும் ஓர்குல ம்ே-மனக் üiLiono கோழை நிறைந்தவ ரேகுறைங் தோர், பிறர் கோதறு மன்னர்க ளே.
ஆதலினால்தொழிலாளர்கள் யாவரும் அன்புடன் ஒன்றுபட் டே-இந்தப் பூதலத் தேகுறை போக்கிடு வோம், இதைப் பொன்னுல காக்கிடுவோம்.
எல்லாரும் தொழிலாளர் எல்லாரும் முதலாளி என்றினி வாழ்ந்திடுவோம்-எமைப் பொல்லாத வர்க்கங்கள் அல்லாத செய்வதைப் போக்கித் திகழ்ந்திடு வோம்.

Page 66
மே தின காள்
ம்ேதின நாள் இன்று மேலாங் தொழிலாளர் ஏய் பட லின்றி இயற்றுங் தொழிலுக்கு ஓய்வுடன் நல்ல ஊதியமும் பெற்றுயர ஆய்வுகள் செய்ய அமைந்த ஒருங்ாளே.
இவ்வுலகில் எல்லா ஏற்றம் அபிவிருத்தி அவ்வளவும் தொழிலாலே ஆகி முடிவதனால் எவ்வளவாய் காம் தொழிலை ஏற்றிப் புகழ்ந்தாலும் அவ்வளவில் அமையா ததன்பெருமை,
ஆதலினால்
செய்யுங் தொழிலே தெய்வமெனச் செப்பி கின்றார் அறிஞர்பலர் வையங் தொழிலால் வாழ்வதனால் வணக்கஞ் செய்வோம் தொழிலுக்கு,அத்
தெய்வம் எம்மை வாழ்விக்கும் தேசம் ஓங்குங் தொழிலாலே. உய்ய வேண்டில் என்றென்றும் உழவைத் தொழிலைப் போற்றிடுவோம்.
2

கவிக் கற்பரசி
"தொழிலாளர் குறைகளைப் போக்கிடு வோம்.அவர் தோம்று வாழ்வின்ை ஆக்கிடு வோம் தொழிலாளி தொழில்செய்து தாழ்ந்திட ஜேஅவர் தொழிலாலே பிறர்மட்டும் வாழ்ந்திட வோ? பழிகாரர் செயல்களைப் பார்த்திருக்கோம், அந்தப் பாட்டாளி மக்களை மீட்டெடுப் போம்"என மொழிகோஷம் இதுகாறும் கேட்டிருக தோம்அக்த மோசடி இன்றிங்கு மாறிய தே
நன்று கமத்தொழில் செய்தவர் கள் நிறை காணய முள்ளவர் ஆகிநின் றார், அலை கொன்று கடற்றொழில் செய்தவர்கள் இன்று கோதிலா வாழ்க்கை நடத்து கின்றார். சென்று மரத்தொழில் செய்தவ ரும்நல்ல சீமான்களாயின்று வாழுகி றார்,என் னென்று வறுமை சிலரிடம் ஒட்டியிங் கின்னு மிருக்குதென் றெண்ணு கிறீர்?
சூதில் உழைப்பைச் செலவிடுவோர்சில சூழ்ச்சிகளிட்டுச் சதிகள் செய்வோர், மாதில் மதுவிற் செலவிடு வோர்துன் மார்க்க நெறியில் உழல்ப வர்கள், வாதில் வழக்கில் திளைப்பவர்கள் பெரு வம்புக்குச் சண்டைகள் செய்ப வர்கள், தீதிற் பணத்தை முடக்கிவிட் டேஎன்றும் தீரா வறுமையில் மூழ்கி நின்றார்.
13 あ.5ー8

Page 67
பாவிலே புதுமை பூத்த பாரதிதாசன்
பாவிலே எளிமை கண்ட பாரதி பரம்ப ரைப்பூங் காவிலே மலர்ந்த செஞ்சொற் கற்பகத் தருவோ என்னப் பாவிலே புதுமை பூத்த பாரதி தாசன் தன்னைச் சாவிலே மூழ்க டிக்கச் சதுரனோ காலன் ஐயா?
வள்ளுவன் வாழ்கின் றானெம் வாழ் முறைக் காலத் திங்கே உள்வளர் ஒளியாய் என்றும் உலவுவான் இளங்கோ, செய்யுள் வள்ளலார் கம்பன், ஒளவை, வான்புகழ் சேக்கி ழார்மற் றுள்ளாகற் கவிகள் எல்லாம் ஊர் தொறும் உலவல் காண்பார்,
செத்தனன் என்றா இங்கு செப்பினர், தமிழ்வடித்த வித்தகக் கனக சுப்பு ரத்தினக் கவிவ லானை உத்தமப் புலமை என்றும் ஓய்வதோ? உலகி லிங்கு செத்தவர் எவரே ஐயா சீரிய கவிஞரானார்?
4

கவிக கற்பரசி
தென்னம் பாளை வாய்தி றந்து சிரிக்க வைத்த பாவலன், தின்னத் தமிழை அள்ளி அள்ளித் தீற்றி விட்ட பாவலன், கன்னி வாழை குலையை முதுகிற் காவி நிற்க வைத்தவன், என்ன என்ன புதுமை யெல்லாம். ஏற்றித் தமிழைத் தந்தவன்
வன்னத் தமிழை அமுத மென்று வாரி வாரித் தந்தவன், அன்னை யேனும் அதுப ழித்தால் ஆற்றே னென்றெ முந்தவன், ! சொன்ன சொற்கள் உருவெடுத்துச் சுப்பு ரத்தி னங்களாய் இன்னு மிங்கி ருக்கை யிற்பின் இறந்த தார் மறங்ததார்?
15

Page 68
எங்கள் காவலன்
ஆன்ற தமிழறிஞன் எங்கள் காவலன்-சொல் ஆற்றல் மிகவுடையோன் எங்கள்காவலன் ஈன்று வளர்த்தங்லம் பெரிதுவக்க-வையம் எங்கும் புகழ்படைத்தோன் எங்கநாவலன்.
செத்துக் கிடந்த தமிழ் காட்டினுக்குக்குயிர்-மீண்டு சேர்த்துக் கிளப்பியவன் எங்கள் காவலன் தத்தித் தடக்கிவிழப் போனதமிழை-கை தங்து மிதத்தியவன் எங்கள் காவலன்.
பித்துப் பிடித்த பிற நாட்டினர்கள் வந்து-எமைப் பேதப் படுத்தி மறப் போதனைகள் செய்து எத்திப் பிழைத்த பிழைப் பெற்றி நெறி நின்று-அறம் ஏற்றித் திகழவைத்தோன் எங்கள்ாகாவலன்.
சான்ற சிவநெறிச் சித் தாங்தமுறையும்-பொருள சார்ந்த சுவைத் தமிழின் சால்புபலவும் ஊன்றி வளர்த்துயர்யாழ்ப் பாண மதனை-தமிழ் உலகில் இலங்க வைத்தோன் எங்கள் காவலன்.
ஓங்கு மொழுக்க முறை பலவகுத்தே-புகழ் உயரும் தமிழரினம் ஓங்கவைத்தவன் ஏங்கி விழுந்திடானோ இன்றவர்கள்தாம்-படும் இன்னல் பல உணரின் எங்கள் நாவலன்
16

பண்டிதர் கோன்
"பண்டிதர்’ என் றிங்கொருவர் பகர்ந்திடிலிப் பார்முழுதும் 'திண்திறல் யாழ்ப் பாணத்துத் திருநெல்வே லிப்பதியில் பண்புறவே வதிக் துகலை பயிற்றுகண பதிப்பிள்ளைப் பண்டிதரே' எனும், அதனால் பாரறியும் அவர்புகழே.
கண்டறியேன் பண்டிதசி காமணியைக் காதுகளைக் கொண்டறியேன் பண்டிருட் கோனை; இலை, கோதுறுமென் கண்ணறியா கையறியும் காதறியா கருத்தறியும் எண்ணறியும் எழுத்தறியும் இனியசுவைத் தமிழறியும்,
முல்லையெலாங் தேமணக்கும் முற்றமெலாம் பூமணக்கும் கொல்லையெலாம் பாமணக்கும் கோதறுநற் பண்டிதரின் எல்லையெலாங் தமிழ்மணக்கும் எங்குமவன் புகழ்மணக்கும் சொல்லிலெலாம் சுவைமணக்கும சுற்றிலுநற் குறள் மணக்கும்.
17

Page 69
காவற்குழியூர் நடராசன்
ஏடுசொலும் அவன் பெருமை இலங்குதமிழ் இலக்கியத்தின் காடுசொலும்மேடுசொலும் கம்பன் அருங் கவிகள் சொலும், காடுசொலும், வேறெதற்கு கான் சொலுவேன் கேளுங்கள், பீடுடையான் பெட்புறுகற் பேறுடையான் பேருடையான்.
இவ்வண்ணம் சிறந்திலகும் இனியதமிழ்ப் பண்டிதரை எவ்வண்ணம் போற்றிடினும் ஏதுமிகை யாகாதே; பல்வண்ணப் பாமலியும் பண்டிதசி காமணியின் சொல்வண்ணம் காடறியும் சுவைதமிழர் வீடறியும்.
18

வான் தோய் புகழ் முடித்தோன்
.—
கல்லை நகர் காவலர் பின் நற்றமிழின் பொற்பயிர் யாழ் நெல்லைவதி பண்டிதசி காமணியாம்-சொல்லு தமிழ் பெய்யும் கணபதிப் பிள்ளை முகில் பேணியதால் எய்தும் பலகதிர்கள் ஈன்று.
ஈன்று வளர்த்தெடுத்த இன்தமிழ்சேர் மட்டுவிலின் தோன்ற லெனத் தொடங்கித் தொல்தமிழின்
ஆன்ற நெறிச் சான்றோன் கணபதி பிள்ளையெனச் சால்புதரு வான்றோய் புகழ் முடித்தாய் வாழ்.
வாழ்கின்றாய் வையத் தமிழருளம், வான்புக்கு நீள்கின்றாய் பேரால் நிலத்தளவு-யாழ் பல் கலைக் கழகம் உன்னைக் கலாநிதி யென் றோதி விலைக்கரிய பேர் பெற்ற வாறு.
ஆறற்ற போதும் அறிவுப் பெருக்கறாப் பேறுற்ற யாழ்சேர் பெரும்பதியின்-வீறுற்ற செங்தமிழின் ஊற்றாய்த் திகழ் பண்டிதமணி வாழ்வு? அந்தமுறு மாறில் அறி.
அறிவும் அடக்கமும் ஆன்ற ஒழுக்கச் செறிவும் திரண்டு தமிழ் தேக்கி-உருவில் கணபதிப் பிள்ளையெனக் காட்டி ஒரு சித்தாங்தக் குணநிதியைத் தக்தமைந்த வாறு
19

Page 70
சிந்தைத் தெருவில்
கங்தைத் துணியு மின்றி-கடக்கக் காலில் வலுவு மின்றிச் சிங்தைத் தெருவினிலே-தவழும் சித்தன் ஒருவனையான்
முங்தைத் தவவலியால்-கண்டு ஓர் மோனத் தனிமையிலே "எங்தை எனக்கருள்’ என்று-அவனை ஏத்திச் சரணடைங்தேன்.
"மைந்த அருகிரடா-உலக மாயம் உரைக்க” என்றான் "என்றன் அதிஷ்டம்" என்றேன்-"அதுதான் இல்லை" எனவுரைத்தான்.
பாடு சிறிதுமின்றிப்-பெரிதோர் பயனை இவ்வுலகில் காடி நிற்பவர்தாம்-அதிட்டம் கல்ல ஒர் கண்பனென்பார்.
120

கவிக் கற்பரசி
கட்பென் றுரைப்ப தெலாம்-இந்த ஞாலத் தொருவெறும் பேர்,  ே தட்ப மெனத் தோன்றிப்-பின்னே தகிக்க வல்லதடா.
பொங்கும் பணம் புகழின்-பின்னால் போகும் நிழலது, அவை மங்கிக் கிடந்திடிலோ-காதல் மாதரைப் போலகலும்.
காதல் எனப் பகர்வார்-இங்கோர் கற்பகப் பூவதடா, மாதர் செயும் பெரிய-கேலி மண்ணிற் கிடையாது.
ஏதும் எதிர்பார்ப் பிங்கு-இருவர்க் கிடையி லில்லெனில் ஓர் போதும் உறவேதும்-வந்து பொருங்தல் இல்லையடா!'
2.

Page 71
சக்தி IDLLJib
எல்லாம் எப்பொழுதும் எங்கும்-ஆகி இயங்கும் பெரிய சக்தித் தாயே-உனைக் கல்லால் உருச்சமைத்துக் காட்டும்-இந்தக் காசினி யோர் அறிவைப் பாரேன்-மன கல்லார் எதிலுமுனைக் காண்பார்-ஒடு கதியில் மதியிற் கண்டு களிப்பார்-அது அல்லார் அகம்புகுந்து காளும்-பெரும் அல்லற் படுத்துவதும் நீயே.
பொன்னால் உருச்சமைத்த போதும்-அதிற் பொலியா தடி உனது கோலம்-ஒளிக் கண்ணாடி யால் உருச்செய்தாலும்-உனைக் காணார் அறிவு தெளிவற்றோர்-ஒரு மின்னாள் உருவம் அது என்பார்-அவள் மேலாம் சிவன் மனைவி, கங்தன்-அனை, கண்ணா! அவள் உனக்குத் தங்கை-என்று கனக்க உறவுமுறை சொல்வார்.
உருவம் ஒன்றிலையிங் குணக்கு-என்ற உறுதி மிகவு முண்டிங் கெனக்கு-அதிற் கருவம் சிறிது மில்லைக் காணேன்--ஞானக் கண்ணால் உனையுங் காணலாமே-தக்க பருவம் வந்ததனால் எனக்கும்-உன்னிற் பாசம் பிறந்ததடி கினைக்கும்-தோறும் உருவம் அற்ற உன்றன் சொரூபம்-கண்முன் ஓடி வருவதும் உன் கிருபம்.
122

கவிக் கற்பரசி
சக்திப் பொருளினையே என்றும்-மக்கள் தம்முள் உணரில் துயர் பொன்றும்-பெரும் பக்திப் பரவசமும் பொங்கும்-இன்பம் பரவிப் பொலியும் உலகெங்கும- சீவன் முக்திப் பேறும் அதனாலாம்-மற்றும் மூர்த்தி அனைத்தும் அதில் தானாம்-ஏதும் சக்தி நிலையமன்றி வேறில்-யாதும் சக்தி மயம் அறிவால் தேரில்.
123

Page 72
தேக்கம்
கம்பனுக் கன்று நீ காட்சி கொடுத்ததெல்லாம் நம்பத் தகுந்ததெனில் நாமகளே-வெம்புகிற தங்கத் தமிழ்வளர்க்கத் தாரணியில் உன்கருணை எங்கட் குதவிலையேன் இன்று!
சங்கத் தமிழ்ப்புலவர் சந்ததியி லேயுதித்த துங்கக் கவிகாள மேகத்தின்-அங்கத்தில் தாம்பூல மிட்டுத் தமிழ்வளர்த்த துண்டானால் தேம்புவதேன் இன்றுதமிழ் தேய்க் து
அரியா சனத்தில் அரசரோ டன்று சரியா சனத்தே கவியைப்-பெரிதாய் வளர்த்தா யெனிலின்றம் வாய்மையினை ஒட்டித் தளர்த்தியதேன் எம்மையெலாம் தான்!
24

கவிக் கற்பரசி
வீரத் திருவுருவாம-சக்தி வேண்டும வரமருள வாய்-உன் சூரத் தனங்களெல்லாம்-இன்று சோர்ந்து மடிந்தனவா? கோரத் திருவடிவாம்-காளி கொற்றவை யாய்வருவாய்-உன் தீரச் செயல்களிலேன்-இன்றோர் தேக்கங் தெரிகிறது?
சிங்கத் திவர்ந்து முன்னாள்-நீதான் சீறிக் கிழித்தசுரன் பங்க முறச் செய்தே-துர்க்கா பாரில் அறம் வளர்த்தாய்;. இங்கு மறம் அசுர-வேகத் தேறி எமை வாட்ட தங்கி இனும் கோயில்-வாழை தறித்து நிற்பாயோ
25

Page 73
பழிக்குப் பொறுப்பினி யார்?
காலைக் கதிரவனே காலும் ஒளிமுடியாய்க் கோலச்செவ் வானம்நின் கொவ்வையிதழ்ச் செம்முகமாய் மாலை ஒயிலேயுன் மஞ்சட்பீ தாம்பரமாய் நீலத் திசையுருவில் கின்ற நெடுமா லே!
பாரைப் படைத்திங்கு பாதகத்தை யும்படைத்து கேரைப் படைத்திங்கு நீசத் தனம்படைத்துப் போரைப் படைத்துப்பின் பொல்லாப்பை நின்றறுக்கும் சீரைத் தெரியோம்உன் செய்கை வியப்பன்றோ!
வேண்டாத மாவலியை வீணாய உருவாக்கிப் பூண்டோ டழித்துப்பின் புதுயுகத்தை ஆக்கியதை ஈண்டு தீபாவளியென் றெடுத்தோம் ஒருகோடி ஆண்டாயிங் கானாலும் அநியாயம் ஓய்ந்ததுவா?
126

கவிக் கற்பரசி மீணடுநர காசுரனும் மேலாகி கல்லவெலாம் மாண்டு மடிங்தொழிய மற்றவ் வசுரகுலம் கூண்டோ டொழித்தாயிக் குவலயத்தி லிவ்வாறே மீண்டுமீண் டாகுமெனில் மேலவரார் கீழவரார்?
அழிக்கத் தகுந்தனை ஆக்கிப் பிறவினையேன் பழிக்குட் புதைத்தாய்? நீ படைத்தமும் மலவசுரக் குழிக்குட் புதைத்துயிரைக் கூத்தாட்டு வித்தாலுன் வழிக்குச் சரியோ அப் பழிக்குப் பொறுப்பினியார்?
27

Page 74
மாண்புயர்ந்த சீவன்
ஆறறிவு கொண்டவர் பல் லாயிரமாய்க் கொல்கிறார், அயலவரின் உரிமைகளை அபகரித்து வெல்கிறார்; கூற்றங்கள் நூறுகற்றும் கொடுமைசெய்து வாழ்கிறார், கூர்த்தெழுக்த அறிவழிக்கும் குடிவகையில் மூழ்கிறார்.
மாறவில்லை வேஷம்போ டும் மர்மவாழ்க்கை, இன்னுமே மறையவில்லைப் பொய்புரட்டு ஏமாற்றுவித்தை மண்ணிலே; தேறவில்லை யுகயுகமாய்த் தெளியவில்லைப் புனிதராய், திகழவில்லை அறிவிருங்தும் தெய்வஞான மனிதராய்.
28

கவிக் கற்பரசி
ஐயறிவு மாக்கள் என்றும் அநியாயங்கள் செய்யுமா? அளவுமீறிக் கொன்றபாவம் அவ்வினத்துக் கெய்துமா? மெய்யறிவு பெற்றவர்போல் மிகவொதுங்கி வாழ்ந்திடும், மேல்கீழ்என்ற பேதமின்றி மேவியொன்று சேர்ந்திடும்;
பொய்களவு சூதுவாதோர் போதுமற்றுத் தாழ்விலும் பொருளையீட்டிப் பொத்திக்காவல் புரிவதில்லை வாழ்விலும்; செய்கையாவும் ஆறறிவுச் சீவனுக்கிங் குற்றதிற் செம்மையான வாகுமென்று செப்பிலென்ன குற்றமோ? -
Bாலறிவுச் செங்துவகை காதவாதை யற்றதால் நானிலத்துக் கொடிய ஓசை கச்சதனைப் பற்றிடா; ஆலகால மென்றுபாயும் ஆபாசங்கள் சென்றுளே அதிரவைத்துள் வளருகின்ற ஆற்றல்தன்னைக் கொன்றிடா;
129 6.5ー9

Page 75
நீாவற்குழியூர் நடராசன்
சிலமற்ற சிற்றஒசை சிங்தையுட் புகுந்தொரு சினமதுாட்டிப் பகைமைகட்டச் செய்யவுங் தகுந்ததோ? சாலாகற் சமாதிகட்டும் சாங்தியுள் மிதந்திடச் சத்தமற்ற வாழ்வுபோலச் சாலுமோ விதங்திட
மூவறிவுச் சீவராசி முன்னவற்றில் ஓர்படி முன்னடைந்த சீவனென்று மொழியலாகும் நேரடி; பாவமான செய்கையேதும் பார்ப்பதில்லை அவ்வினம் பழிகள் சூழும் வார்த்தைகேட்டுப் பழகவில்லை; இவ்விதம்
தேவகான ஓசையோடு தேர்ந்த சித்தத் திரையிலே திருவருளின் உருபதியச் செப்பனிடும் தரையிலே; ஏவ ஏவக் காதுகண்கள் இன்பம்காடி அலைகிற இன்னலேது மில்லையான ஏற்றமுள்ள நிலையிதே
180

கவிக் கற்பரசி
ஈரறிவுப் பிறவிகளோ இத்தனைக்கும் மேலவாய் எதனையுமே மோப்பதில்லை இனியமணம் போலதாய்; ஆரறியார் கற்சுகங் தம் ஆசையினைத் தூண்டியே
அதிலிருந்து கோபதாபம் அத்தனையும் தோன்றியே,
வேரறுத்தீ டேற்றமென்ற விதைகெடுக்கும்; ஆதலால் வீடுகாடி மோப்பமேதும் வேண்டவில்லைக் காதலால்; சேரவைத்துப் பார்க்கில் இங்கு செம்புல னொடுக்கமே சென்மபேத மாகமாறிச் சேர்த்திடும் துறக்கமே.
உற்றறியும் புல், மரங்கள் ஓரறிவு கொண்டு, மேல் ஒழிந்தவெலாம் விட்டகலும் உயர்ஞானம் கண்டபோல்; பெற்ற பேற்றிற் பன்மடங்கு பிறர்க்கீயும் அன்னமாய், பெருங்கொடைக்கிப் பிறவிகட்குப் பின்னர்தானக் கன்னனும்
18

Page 76
நீாவற்குழியூர் நடராசன்
செற்றவர்க்குங் துன்பமேதும் செய்வதில்லை, இன்பமே சேர்க்குமெல் வுயிர்க்கும், என்ன சீலமிந்தச் சென்மமே! மற்றவற்றின் கற்பொறுமை மனிதருக்கும் இல்லையால், மாண்புயர்ந்த சீவனங்த மரமதென்றல் தொல்லையா?
ஏறஏற அறிவு, ஞானம், இறங்குகின்ற ஓடியே, இன்பபோதை, ஆசை,ஏறி ஏறிவளருங் கோடியே; கூறவேண்டிற் புலனனைத்தும் கூத்தடித் தலைக்கிற கொடுமைதானிம் மனிதசாதிக் குள்ள மிச்ச முலகிலே;
ஆறஅமர ஓர்க் துபார்க்கில் ஆறறிவுப் பிறவியில் ஐந்து, காலு, மூன்றிரண்டோர் அறிவினவை,"துறவியின் வேறுவேறு நிலைகளென்று விளம்பலாமிங்கு, அவற்றுள்ே மேலதான தற்கடுத்து மேன்மைகொள் சுவர்க்கமே!
132

அஞ்சேன்
ஏதையும் அஞ்சேன்-இனி யாதையும் அஞ்சேன் இன்பதுன்பத் தோடுவரும் வாதையை அஞ்சேன் பேதையை அஞ்சேன்-ஒரு மேதையை அஞ்சேன் பெரும்பண ஆதிக்கப் போதையை அஞ்சேன்.
சாவையும் அஞ்சேன்-ஒரு தேவையும் அஞ்சேன் சாதிமத குலம்பிறப் பேதையும் அஞ்சேன் பேயையும் அஞ்சேன்-ஒரு கோயையும் அஞ்சேன் பெண் அணங்கு, காமன், அரி மாவையும் அஞ்சேன்
33

Page 77
கவிக் கற்பரசி
கத்தியை அஞ்சேன்-அப சித்தியை அஞ்சேன் காய்கதிரோன் உள்ளடங்கும் எத்தையும் அஞ்சேன் நித்தியம் ஆனேன்-சக்தி நித்தியம் ஆனாள் நினைப்பும் மறப்புமின்றிக கூடிநிற் கிறோம்.
அஞ்சுவ தென்னே-இனி அஞ்சுவ தென்னே! ஆர்இவர் என்றோர்க்தபினும் அஞ்சுவ தென்னே! கெஞ்சுவ தென்னே-இனி மிஞ்சுவ தென்னே கேடெதுங்ல் லாக்கமெது? எஞ்சுவ தென்னே!
134

புக்ககம்
கோடானு கோடிமலை குவலய மெல் லாமிருக்க காடான காடிலங்கை நாடிக் கிழக்குயரும் கோடான கோணமலை கோணேச நாதருக்கு வீடான விங்தையது விளக்கப் படுவதுவோ!
மலையரச மாமனவன் மதிப்பை இழந்ததன்பின் சிலை செறியு முயராட்சிச் செம்பொன் மால் வரை
நீங்கிக் கலைசெறியும் இயல்இசையின் களிநடன மிளிர் ஈழத்து அலைசெறியு மலைதேடி அருங்கோணா
மலைசேர்ந்தான்.
மலையரசன் தன் மகளென் மணமகளின் சீதனமாம் கலைமதியம் முடிதடவும் கயிலைமலை பலவருடம் நிலைகொளல்ாகன் கெறியலவென் றலைதடவு
திருகோண மலைமருவிப் புதுமனை கொள் மணமகனின்
மாண்பென்னே!
கடமிடுதல் காணவரு நல்லவர்கள் செறிவாலவ் வட கயிலை தாழுமென வதந்திகளை உண்டாக்கி, இடமமர்வாள் தன்னோடும் எழுங்துயர்தென்
கயிலையெனப் படர்கோண மலைப்பதியிற் பதிவான்தன் பண்பென்னே!
35

Page 78
காவற்குழியூர் நடராசன்
பார்வதியாள் உற்பவித்த பர்வதத்தி லேயிருந்து பேர் பெரிய தேவர் குலப் பிணக்குகளுட் பட்டதுவும், கார்கரிய கஞ்சுண்டு கண்டத்துட்பட்டதெலாம் தீர்வுதரு மென்றரனார் திருகோண மலைசார்ந்தார்.
கார் மருவு கயிலையிலே கங்கையவள் தொடர்பரனைச் சீர்கெடுக்க லாகுமெனச் சித்தத்துட் கொண்டதனால் பார்வதியும் தான் பிறந்த பர்வதத்தை விட்டகன்றிவ் ஆர்கடல்சூழ் கோணமலை அமரவொருப்
பட்டெழுந்தாள்
தக்கன் மலையகத்தைத் தாம்துறந்து வந்திந்தப் புக்ககமாம் கோணமலை புகுந்துகளி யாடுகிற முக்கட் சுடர்சோம சுந்தரனும் மாதுமையும் திக்கெட்டும் பாலிக்கத் திருவுள்ளம் கொண்டமர்ந்தார்.
136

காணாத தென்னவரும்
காணாத தென்னவரும் கண்டு களிப்பதற்குக் கோணா மலையமர்ந்து கோயில் கொண் டானே யருள் (காணாத)
ஆணாகிப் பெண்ணாகி அதுவாய் இது
உதுவாய்ப்
பூணா தனவின்றிப் பொதுவில் இடு நடனம்
(காணாத)
எட்டா மலைக்கயிலை ஏறி இருந்து உயரச் சிட்டாய்ப் பறப்பவர்க்கே செய்யும் அருட்கருணை கிட்டா தவர்க் கருளக் கீழ்இறங்கி யாவருக்கும் எட்டும் ஈழமலை ஏறி அமர்ந்த பிரான் (காணாத)
வான ஊர்தி வந்ததும்
எரு தேறித் திரிகின்ற தேனையா இட பா ரூட ரே-இன்னும் (எரு)
பருவதம் ஏற ஏ றேற்றதென் றோஅது பக்குவ மாயுமைப் போற்றும் என்றோ? (எரு)
உருகாப் பணிமலைக் கேற்றதென்றால், கோணை உற்ற பின் னும் வான ஊர்தி வந்தும் (எரு)
உயிரேறும் உடலும்மை ஏற்றிவிட் டால், அது கயிலைக்குப் போமென்று காட்டு தற்கோ? (எரு)
87.

Page 79
கைமேற் கிடைத்த பலன்
கண்டத் தடக்கியதேன்?-ஆல கால விடத்தினை நீ
கயிலை யிருந்தமரர்-பெரும் கலகங்கள் தீர்த்ததிலே
கைமேற் கிடைத்த பலன்-இக் காசினி காண்பதற்கோ?
தேவர்கள் தங்த விடம்-இத் தெற்குக் கயிலையிலே யாவரும் தாரார் என்றே-கோணை அமர்வு கொண்ட பின்னும்
மண்டலத் தோர்களெல்லாம்-ாகஞ்சில் மாண்டு மடியாமலே உண்டனை என்பதி லோர்-பெரும் உண்மை உணர்த்திடவோ?
அமுதம் எழுமிடங்தான்-கடும் ஆல முங் தோன்றும், அதை அமலன் போக்கிலனேல்-அமுதம் அருங்தல் இல்லையென்றோ?
138.
(கண்)
(கண்)
(கண்)
(கண்)

உச்சத்தில் ஏனிருந்தாய்?
உச்சத்தில் ஏனிருந்தாய்? அரனே எங்கள் அச்சத்தைப் போக்காமல் ஏறித் திருமலை (உச்)
இச்சகத் தேயுள ஈனக் குணம்எனும் கச்சை உணஇனும் காட்டம் இலாமலோ? (உச்)
பச்சை வளநில இச்சை தவிர்த்துயிர் உச்ச மலையேறில் உன்னை உணருமென்றோ?
(alë)
உச்சியில் ஊறும் அமுதம், அதைஉண உச்சத்தை காடென் றுணர்த்திட வோங்தம் (உச்)
189

Page 80
திருகோணத்திலே
பாணத்தி னாற்புரம் மூன்றெரித் தேதிரு கோணத்தில் நீய மர்ந்தாய்-ஒரு (பாண)
காணத் தகாதவர் கண்டுகொண் டால் அதன் காரணம் கேட்பரென்றோ?-மூன்று பூணத் தகாமலம் முப்புர மாமெனப் புகலுத லாகாதென்றோ? (பாண)
மாணத் தகாதவன் ஆயினும் பெண்தரு மாமனைக் கொன்றுவிட்ட-பெரு நாணத்தி னாற்சுரர் காடு துறந்திந்த ஞாலத் தொதுங்கிடவோ? (பாண)
40

சான்று
r
மங்கையைப் பாகம் வைத்தே-கோண மலை யமர்ந்த பின்னும் கங்கையை நீ தலைமேல்-கொண்டால் கருத்திங் கென்னாகும்? (மங்கை)
எக்கணமும் துதித்தே-உனை
ஏத்திப் பணிபவரும் வக்கணம் சொல்பவர்க்கே-ஒரு வகை சொல்ல மாட்டாரே! (மங்கை)
பார்வதி என்பதுவும்-மலை
பாயுர்ேக் கங்கையதும் சார் இறை சக்திகளே-எனச் சான்று பகர்வனவோ? (மங்கை)
14

Page 81
போக முன்னால்.
போகமுன் னாலொன்று புகல்கின்றேன், பூவுலகில் ஏக முன் னாலங்கு இரண்டற் றிருங்தோம், இத் தேகமென் றொன்றொன்றாய்த் திரளத் தருமாயை பாகம்பல் லாயிரமாய்ப் பகுத்துயிரை வகுத்ததுவே.
நீரை நிலங்கேணி நீள்கடலா றுாற்றோடை தாரை குளங்குட்டை தடாகம் மடு அருவிப் பேரைப் பெறவேறு பிரித்துப் பிரித்துப்பின் சீரைத் திரித்ததெனத் திரோதானம் பகுத்ததுயிர்.
142

கவிக் கற்பரசி
உள்ளதெலா மோருயிரும் ஒருடல மாயையுமே; கொள்ளையுரு வாக்கிப்பல் கோடிவகை பெருக்கியெழு வெள்ளமள வுயிருடலாய் வெவ்வேறு குணங்கட்டித் துள்ளிவரு பகையுறவு தோயகடித் தோய்வனவே.
நடிப்பவரும் பார்ப்பவரும் நாடகத்தி லேவசனம் படிப்பவரும் அலங்காரப் பாவனைகள் செய்து துடி அடிப்பவரும் மேடையிற்கூத் தாட்டுவித்து நாடகத்தை முடிப்பவரும் எடுப்பவரும் முன் தொட்டுள இணையே.
கானென்றும் நீயென்றும்
கம்மவர்நும் மவரென்றும்
ஊனொன்று முக்குணத்தை
ஊட்டிப் பிரிப்பதெலாம்
ஏனென்று கேட்கினதன்
இயற்கை, அது மாயை
தானென்று முள்ளததைத்
தாண்டி னுயிரொன்றாம். உயிர்க்கூறாய் ஆவியும் (Spirit) உடற்கூறாய் மூலப்
Taos to Fraunh(Primodial matter).
148

Page 82
ாவற்குழியூர் (5LJ T F6T
நிலத்தது தன்மையாலே நீர்க்குண மாறும், அந்த நிலத்தினி னுயர்ந்தாலெல்லா நீர்களு மொன்றாம், ஆவிக் குலத்தினிற் பாகுபாடு கூறுதற் கில்லை, மாயை மலத்தினி லகன்றாலங்கு மன்னிறை உயிருமொன்றே.
ஆவியென நீரொன்றா யாகாயத் துறைய, வாயு தாவியதைக் குளிர்வித்துத் தரைக்கிறக்கு மால், மாயைத் தேவியவள் வாடைக்குஞ் சிக்கா துயர்ந்தாலே மேவியுறு பரமாய்நல் மெய்மை யுணர்ந்திடலாம்"
உத்தமாகற் றத்துவத்தின் உட்பொருளைக் கண்டுணர்ந்த வித்தகங்ல் ஞானத்தின் மேம்பாட் டொளியோட்டும் மத்தமத மாயையிருள் மறையமற் றீர்மலமும் சத்தழியும்; காலதற்குச் சித்தத் துறுதியதே.
★★


Page 83
நாவற்குழியூர் நடராசன்
சிவர் தமிழை முடிாறயாகக் கற்றுக் கவிதை எழுதுகின்றனர். பவர் தமிழை முறையாகக் கற்காமவே தவிாத எழுதுகின்றார் நாவற் குழியூர் நடராசன் விவாத எழுந்த் | தொடங்கியதன் காரணமாகத்
தமிாழ முறையாகக் கற்கத்
தடிப் II I Liti -
முனனவர் தேர்வுக்காக, அவ செய்த ஆய்வின் பன், 'ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி' என்ற நூலாக மலர்ந்தது. இலங்கைப் சாரித்திய படிங்டம், 14 ஸ் அந்நூலுக்கு ரூ. 1 , 11 பரிகம், பதக்கமும், Fl i for går glostrgs II i சின்னமும் வழங்கிப் L i rTTF T i" tվ 1ւմ:Այl: 'கவிக்கற்ப சி' என்ற இந்நூலில் | நாவற் குழியூர் நடராச விரிகள் கவிதைகள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன. அவர் தொடர் தும் எழுதிக் கொண்டிருக்கிறார் ஈழநாடு ஈன்றெடுத்த தமிங் கவிஞர்களுள் தனடிய சிறந்தவர் களுள் நாவற்குரியூப் நடராாறு ஒருவர்