கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரசு பற்றிய மார்க்சிச கோட்பாடு

Page 1
மார்க்சிச கற்கைகளுக்க
 

ਲ
ன சண்முகதாசன் நிலையம்
|

Page 2

அரசு பற்றிய மார்க்சிசக் கோட்பாடு
நா. சண்முகதாசன்
மார்க்சிச கற்கைகளுக்கான
சண்முகதாசன் நிலையம்
1

Page 3
நூலின் பெயர்
ஆசிரியர்
பொருள்
முதற்பதிப்பு
இரண்டாம் பதிப்பு
கணனி/அச்சுப்பதிப்பு :
வெளியீடு
: அரசு பற்றிய மார்க்சிசக் கோட்பாடு
: நா. சண்முகதாசன்
: மார்க்சிச விளக்கம்
: 1973 சித்திரை
: 2001 மாசி 18 ஆம் திகதி
“LDuff JITLfái6nio”
; மார்க்சிச கற்கைகளுக்கான
சண்முக்தாசன் நிலையம்
59/3, வைத்தியா விதி,
தெகிவளை, இலங்கை,
2

பதிப்புரை
'அரசு’ என்பது எவ்வாறு தோற்றம்பெற்று வளர்ச்சியடைந்தது என்பதற்கு வெவ்வேறு கோட்பாடுகளின் மூலமாக பல்வேறு விளக்கங்கள் முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. வரலாற்று வளர்ச்சியின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசு பற்றிய கோட்பாடு ஆளும் வ்ர்க்கங்களுக்குச் சார்பானதாகவும் அத்தகைய வர்க்கங்களின் ஆட்சி உரிமையை நியாயப்படுத்துவதாகவும் இருந்து வந்துள்ளதைக் காணமுடிகிறது. அரசு தனித்தன்மை வாய்ந்த ஒன்று என்றும் அது தெய்வீகத்துடன் தொடர்புடையது என்றும் மக்கள் அனைவரும் அதற்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்றும் பயபக்தியுடன் பரப்புரை செய்யப்பட்டு வந்துள்ளதையும் நாம் கண்டிருக்கின்றோம். மேலும் அரசு அனைத்து மக்களினதும் தேவைக்கும் நன்மைக்கும் உரிய நடுநிலையானதும் நீதியை பாதுகாக்கும் தூய்மையான நிறுவன வடிவமென்றும் கருத்துருவக்கட்டமைப்பு
தொடர்ந்து பேணப்பட்டுக்கொண்டே வருகிறது.
ஆனால், அரசு நிறுவனத்தின் உள்ளார்ந்த ரீதியில் காணப்படும் அதன் பக்கச்சார்பையோ அல்லது அதன் பலாத்கார சாராம்சத்தையோ
எவரும் கோட்பாட்டு ரீதியான கேள்விக்கு உட்படுத்தவில்லை.
அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பாரிய கேள்வியை வரலாற்றில் முதற்தடவையாகக் கிளப்பி, அதற்கு கோட்பாடு ரீதியான உறுதிமிக்க பதிலை வழங்கியவர்கள் மகத்தான மேதைகளான கார்ள் மார்க்ஸும் பிரடெரிக் ஏங்கெல்ஸுமே. இவ்விருமேதைகளும் விஞ்ஞான அடிப்படையிலான வரலாற்றுப் பொருள் முதல்வாத ஆய்வின் மூலமாக அரசு பற்றிய தெளிவான
கோட்பாட்டை முன்வைத்தனர்.
3 L

Page 4
மனித குலத்தின் வரலாற்று வளர்ச்சியில் தனிச்சொத்துடமையின் தோற்றம் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வினையும் வர்க்கங்களையும் உருவாக்கியது. இத்தகைய வர்க்கங்களிடையிலான முரண்பாடுகளும் போராட்டங்களும் சர்வவியாபகமாகின. மனித குலத்தின் வரலாறு வர்க்க
போராட்டங்களின் வரலாறாகிக் கொண்டது.
இந்த வர்க்க முரண்பாட்டுச் சூழலில் (ஒருவர்க்கம் மற்றைய வர்க்கத்தை அடக்கியாள வேண்டிய தேவை ஏற்பட்டது. அத்தேவையை நிறைவு செய்வதற்கு ஒரு 'கருவி அவசியமாகியது. அதுவே அரசு
எனும் வடிவில் உருவாக்கப்பட்டது.
இதனையே, மார்க்சிசக் கோட்பாடு ஒருவர்க்கம் மற்றைய வர்க்கத்தை அடக்கியாளுவதற்கான கருவியே அரசு என்று நிறுவிக்காட்டியது. மேலும் அரசு வேறு அரசாங்கம் வேறானது என்பதையும் அரசு வடிவத்தின் பிரதானஅங்கம் பலாத்காரம்தான் என்பதையும் அது ஆளப்படும் வர்க்கத்தினருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுவருவதையும் மார்க்சிசக் கோட்பாடு தெளிவுபடுத்திக் கோடிட்டுக் காட்டியது.
இத்தகைய அரசு பற்றிய மார்க்சிசக் கோட்பாட்டை தெளிவாக விளக்கிக்கூறும் பயனுறு நோக்குடனேயே இந்நூல் எழுதப்பட்டது. இலங்கையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் முக்கியமானவரான என் சண்முகதாசன் இலங்கை இடதுசாரி இயக்கத்தில் மார்க்சிசம் - லெனினிசம்-மாஓசேதுங் சிந்தனையை உறுதியுடன் முன்னெடுத்துச் சென்று வழிகாட்டுவதில் இறுதிவரை போராடியும் செயற்பட்டும் வந்த ஒரு தலைவர். அவர் தனது காலத்தில் எண்ணற்ற தத்துவர்த்த அரசியல் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியதுடன் மாத்திரமல்ல, இலங்கையின் எந்தவொரு இடதுசாரித் தலைவருமே செய்யாத அளவுக்கு அரசியல் வகுப்புகள் மூலமாக மார்க்சிசத்தை சமூகவாழ்வின் யதார்த்த நடைமுறைகளுடன்
இணைத்து விளக்கிய தலைவராவார்.
| 4 |

சண்முகதாசன் இன்று எம்மத்தியில் இல்லாவிடினும், அவர்விட்டுச் சென்ற மகத்தான பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டே வருகின்றன. மார்க்சிசம் - லெனினிசம் மாஓசேதுங் சிந்தனைப்பாதையில், முன்னெடுக்கப்பட்டுவரும் பன்முகப்பணிகளில் ஒன்றாகவே மார்க்சிச கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையம் (Shanmugathasan Centre for Marxist Studies) 95Jhidd, LI (66f 6ft.g5).
இந்நிலையம் இதன் வரையறைக்குப்பட்ட நிலை நின்று மார்க்சிச தத்துவார்த்த அரசியல் ஆய்வு முயற்சிகளையும் அறிவூட்டல்களையும் நூல் வெளியீடுகளையும் தொடர்பணியாக செய்ய உத்தேசித்திருக்கிறது.
சண்முகதாசன் எழுதிய கட்டுரைகளையும் நூல்களையும் மற்றும் மார்க்சிச - லெனினிசத்துக்கு பங்களிப்புச் செய்தவர்களின் ஆக்கங்களையும் நூலுருவில் கொண்டு வருவதை ஒரு பிரதான முற்போக்கு சமூகப்பணியென்று நிலையம் கருதுகின்றது. அவ்வகையில் சண்முகதாசன் எழுதிய அரசு பற்றிய மார்க்சிசக் கோட்பாடு’ எனும் நூலினை நிலையத்தின் முதலாவது வெளியீட்டு முயற்சியாக அவரது 8வது நினைவு தினத்தை (8 பெப்ரவரி 2001) முன்னிட்டு வெளியிடுகின்றோம்.
இந்த முயற்சிக்கு அக்கறையுடைய அனைவரதும் ஒத்துழைப்பை மார்க்சிச கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையம் தோழமையுடன் வேண்டிநிற்கிறது.
நூல் பற்றிய வாசகர்களின் கருத்துக்கள் எமது அடுத்த நூலை வெளியிடுவதற்கு உற்சாகம் தரும் என்று நம்பிக்கையுடன் எதிர்ப் பார்க்கின்றோம். இந்நூல் சிறப்புற வருவதற்கு பல்வேறு வழிகளிலும் உதவி புரிந்தவர்களுக்கு எமது நன்றிகள்.
மார்க்சிச கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையம் கொழும்பு " 2001 பெப்ரவரி 18
5

Page 5

ார்க்சிசம் - லெனினிசம் - மாசேதுங் சிந்தனையால் Dமு. பொது உண்மைகள் எல்லாவற்றிலும் அரசைப் பற்றிய கோட்பாடே மிகவும் அடிப்படையானதாகும். மிகவும் முக்கியமான கோட்பாடுகளில் ஒன்றான இது முதலில் கார்ள் மார்க்ஸினால் முன்வைக்கப்பட்டது. சமுதாயத்தில் ஒரு புரட்சிகர மாற்றத்தை வெற்றிகரமாக ஏற்படுத்தி, சுரண்டலை முடிவிற்குக் கொண்டுவர வேண்டுமானால், ஒவ்வொரு புரட்சியாளனும் இதைக் கட்டாயமாகக் கிரகித்துக் கொள்ளவேண்டுமென பின்னர் லெனினும் மாசேதுங்கும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
“அரசு’ என்ற எண்ணத்தினால் நாம் என்ன விளங்கிக் கொள்கின்றோம் என்பதற்கு முதலில் வரைவிலக்கணம் கூறுவோம். ஆயுதப் படைகள் என்ற பிரதான உருவிலுள்ள அரசு இயந்திரத்தையே அரசாங்கம் என நாம் விளங்கிக்கொள்கின்றோம். நீதி பரிபாலனம், சிறைச்சாலைகள், கொழுத்த சம்பளம் பெறும் அதிகாரத்துவம் ஆகியனவே அரசு இயந்திரத்தின் மற்றைய வடிவங்களாகும். இவற்றையெல்லாம் ஒன்று சேர்த்தே அரசு அல்லது அரசு இயந்திரம் எனக் கூறுகின்றோம்.
அரசு எவ்வாறு தோன்றியது? அதன் தன்மையென்ன? நினைவிற் கெட்டாத காலமாக அது இருந்துவந்ததா? இது வர்க்கப் போராட்டத்தில், பக்கம் சாராமல் சமுதாயத்திற்கு மேலேயுள்ள ஒரு நடுநிலைப் பொருளா? அல்லது அது சமுதாயத்தின் ஒரு சேவகனா? அரசின் குறிப்பான தன்மையை அறிந்து கொள்ளவேண்டுமானால், இவை நாம் கட்டாயமாக விடைகாண வேண்டிய கேள்விகளில் சிலவாகும்.
முதலாளித்துவத்திற்காக வக்காலத்து வாங்குபவர்கள் மனித நாகரிகத்தின் பரிணாமத்தோடு அரசாங்கம் இருந்து வந்ததாகவும் அது சமுதாயத்திற்கு மேலே, வர்க்கங்களுக்கு மேலே உள்ள ஒரு நடுநிலைப் பொருளெனவும், பக்கம் சாராததெனவும் எம்மை நம்பச் சொல்கின்றனர். ஓர் உதைபந்தாட்டத்தின் அல்லது குத்துச் சண்டைப் போட்டியின் மத்தியஸ்தரைப் போல வெவ்வேறு போட்டியாளர்கள் அதாவது வர்க்கங்கள்
7

Page 6
தமது பலத்தைப் பரீட்சிப்பதற்கான வளையத்தை அரசாங்கம் கொண்டுள்ளதாகவும் மேலும் அவர்கள் கூறுகின்றனர்.
அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அல்லது வேறொரு நேரத்தில் சமுதாயத்தினால் சுயமாகவே அரசாங்கத்திடம் சரண்வைக்கப்பட்டதெனக் கூடச் சிலர் வாதிக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் சகல மனிதர்களும் ஒன்றுகூடி தத்தம் உரிமைகளில் ஒரு பகுதியைச் சுயமாகவே சரண்வைத்து அந்த அதிகாரங்களுடன் அரசாங்கத்தை அமைத்ததாகக்கூட அவர்கள் கூறுகின்றனர். இந்தத் திரிக்கப்பட்ட தர்க்கத்தை விளங்கிக்கொள்ள வேண்டியவர்களுக்கு வாகனப் போக்குவரத்து பொலீசாரின் உதாரணம் சிறந்ததொன்றாகும். ஒரு கால கட்டத்தில் நாம் வீதியின் இருபக்கத்தாலும், அதாவது வலது பக்கத்தாலும் இடது பக்கத்தாலும் செல்லும் உரிமையைப் பெற்றிருந்தோமென வாதிக்கலாம். ஆனால், இது விபத்துக்களுக்கு ஏதுவாகலாம் என்பதை உணர்ந்து நாம் சுயமாகவே வலது பக்கத்தால் போகும் உரிமையைக் கைவிட்டு இடது பக்கத்தால் மட்டுமே செல்வதற்கு நம்மை மட்டுப்படுத்திக் கொண்டோம். மேலும் நாம் ஒரு பொலீஸ்காரனை நிறுத்தி சட்டத்தை மீறும்போது எம்மைத் தண்டிக்குமாறு அவனுக்கு அதிகாரத்தையும் கொடுத்தோம்.
முதலாளித்துவத்திற்காக வக்காலத்து வாங்குபவர்கள் இவ்வாறே அரசாங்கம் அதன் அதிகாரங்களைப் பெற்றதென விவாதிக்க விரும்புகின்றனர்.
இந்த வாதத்தை முறியடிப்பதற்கு அதிக நேரம் பிடிக்காது. முதலில், இவ்வாறான கூட்டமொன்றை மக்கள் கூட்டவில்லை. இரண்டாவதாக, சமுதாயத்தின் ஆரம்பத்தில் அரசாங்கம் இருக்கவில்லையென்பது மிக முக்கியமானது. சமுதாயத்தின் வளர்ச்சிப்போக்கில் ஒரு குறிப்பிட்ட கட்டத்திலேயே அரசாங்கம் வளர்ந்தது. இதைச் சுலபமாக நிரூபித்துவிடலாம். இன்றைய அரசாங்கத்தின் இரண்டு முக்கிய
8

அங்கங்களாக விளங்குவது நிலையான இராணுவமும் பொலீசுமாகும். இந்த அமைப்புக்கள் எப்போது தோன்றியதென்பதை பார்ப்போம். உலகில் முதலாளித்துவத்திற்கு மாறிய முதலாவது நாடாகிய இங்கிலாந்திலேயே இரண்டும் முதலிற் தோன்றின.
நோமண்டியிலிருந்து இங்கிலாந்திற்கு 3 வது வில்லியம் திரும்பியபின்னர் இங்கிலாந்தில் நிலையான இராணுவம் ஸ்தாபிக்கப்பட்டது. அதற்கு முன் உலகில் எந்தப் பகுதியிலாவது நிலையான இராணுவம் இருக்கவில்லை. அரசர்களும், பிரதானிகளும் யுத்தத்திற்குச் சென்றபோதெல்லாம் கூலிப் படையினரைத் திரட்டினர். யுத்தத்தின் முடிவில் படைவீரர்கள் தமது முன்னைய தொழிலுக்குத் திரும்பினர். இவ்வாறே இங்கிலாந்திற்கும் பிரான்சுக்கும் இடையேயான நூற்றாண்டு யுத்தம் அல்லது புனித யுத்தம் நடத்தப்பட்டது. இலங்கைச் சரித்திரத்தைப் பார்த்தால் இதேபோலவே மொகல்லானன் தனது சகோதரனான சிகிரியா புகழ் காசியப்பாவுக்கு எதிராக இந்தியாவிலிருந்து கூலிப் படையினருடன் அணிவகுத்தான் என்பதைக் காண்கின்றோம். படைக்கு ஆள் திரட்டும் அதிகாரி முரசுடன் சந்தைகளில் போர் வீரர்களைத் திரட்டும் காட்சிகளை திரைப்படம் பார்ப்பவர்கள் கண்டிருப்பார்கள். மூன்றாவது வில்லியத்திற்கு முந்திய காலத்தில் நிரந்தர இராணுவம் இல்லையென்பதை இது திட்டவட்டமாக நிரூபிக்கின்றது. இன்று நிலையான இராணுவம் இல்லாத நாடே கிடையாது.
அவ்வாறே பொலீஸ் படை இல்லாத நாடே இல்லை. அப்படியானால் எப்பொழுது இது முதன் முதலில் தோன்றியது? சென்ற நூற்றாண்டில் முன் அரைப் பகுதியில் பிற்காலத்தில் இங்கிலாந்தில், சேர் றொபேர்ட் பீல் உள்நாட்டு மந்திரியாக இருந்தபோது தோன்றியது. ஒரு பொலீஸ் படையை ஸ்தாபிப்பதற்கான மசோதாவைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது அவரேயாகும். றொபேர்ட் என்பதற்குச் சுருக்கமாக “பொயி’ என இன்று இங்கிலாந்தின் பொலீஸ்காரர்கள் அழைக்கப்படுவதற்கு இதுவே காரணமாகும். இதனால் நாம் சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு
9

Page 7
முன்னர் உலகில் பொலீஸ் படை இருக்கவில்லை என்றும் மூன்றாவது வில்லியத்திற்கு முன்னர் உலகில் நிலையான இராணுவம் இருக்கவில்லை எனவும் தெளிவாகக் காண்கின்றோம். நாம் இன்று காணும் அரசானது நினைவிற்கு எட்டாத காலத்திற்கு முன்னர் இருக்கவில்லை என்பதை இது தெளிவாக நிரூபிக்கின்றது.
இதைத் தெரிந்துகொண்ட பின்னர் சமுதாய ஆரம்பத்தின் முன் நாட்களை அல்லது குறைந்தது ஆரம்பகால மனித நாகரீகத்தை பின்னேக்கிப் பார்ப்போம். இன்றுவரை உலகம் புராதனப் பொது உடமை, அடிமை, நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ, சோசலிஸ் சமுதாயங்கள் ஆகிய ஐந்து வகைச் சமுதாயங்களைக் கண்டிருக்கிறதென இயக்கவியல் சரித்திரம் நமக்குப் போதிக்கின்றது. நாகரிகத்தின் மிக ஆரம்பக் காலத்தில் புராதனப் பொது உடமைச் சமுதாயம் இருந்தது. உற்பத்திச் சாதனங்கள் சீராக வளர்ச்சி அடையாதிருந்த காலத்தில் இந்த அமைப்பு இருந்தது. வளர்ச்சியின் அந்தக்கட்டத்தில் மக்கள் பெரும்பாலும் காட்டு மிருகங்களை வேட்டையாடுதல், மீன் பிடித்தல் ஆகியவற்றிலேயே சீவித்துவந்தனர். இதற்காக அவர்கள் உபயோகித்த உபகரணங்கள் அம்பு, வில்லு போன்ற புராதனமானவை. இவை யாவும் பொதுவில் உடமை கொண்டிருக்கப்பட்டது. இவை யாவும் எவராலும் செய்து கொள்ளக் கூடியவையாக இருந்ததால் உற்பத்திச் சாதனங்களைத் தனி நபர் உடமை கொள்ளும் நிலை ஏற்படவில்லை.
அதே நேரத்தில் சிறு உணவைப் பெற்றுக் கொள்வதற்குச் சகலரும் கூட்டாக உழைக்கவேண்டி இருந்தது. உதாரணத்திற்கு, பெண்கள் வீட்டு வேலைகளை கவனித்தபோது சகல ஆண்களும் காட்டு மிருகங்களை வேட்டையாடச் சென்றனர். அப்படிச் செய்யாவிடில் காட்டு மிருகங்கள் மனிதரை வேட்டையாடிவிடுமாதலினால் இது அத்தியாவசியமாயிற்று. இப்படி இருந்தும் இந்த வேட்டையாடுவோரின் கூட்டு உழைப்பு அந்த பூர்வீகக்குடியினர் சகலரும் உண்பதற்கு மட்டுமட்டான உணவையே கொடுத்தது. இது பெரும்பாலும்
10

போதாதிருந்தது. இந்தச் சூழ்நிலைகளில் உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சி மிக அடித்தளத்தில் இருந்தபோது மக்களை எதிர் எதிர்வர்க்கங்களாகப் பிரிக்கும் அடிப்படை ஏற்படவில்லை. தான் உண்பதற்கு வேண்டிய உணவை மட்டுமே உற்பத்தி செய்யத் கூடிய நிலையில் உள்ள ஒருவன் வேறு ஒரு சக மனிதனை அடிமைப்படுத்துவதில் எதுவித அர்த்தமுமில்லை. அன்று நிலவிய வர்க்கங்களற்ற சமுதாயத்திற்கு இதுதான் அடிப்படையாகும்.
சில குறிப்பிட்ட ஆறுகளில் மீன் பிடிக்கும் உரிமைக்காகவும், சில குறிப்பிட்ட காடுகளில் வேட்டையாடுவதற்கான உரிமைக்காகவும் வெவ்வேறு பூர்வீகக்குடிகளுக்கிடையே யுத்தங்கள் இடம்பெற்றன. அவ்வாறான யுத்தங்களில் தோல்வியுற்ற பூர்விகக் குடிமக்கள் சிறைப்பிடிக்கப்படவில்லை. அவர்கள் சிரச்சேதம் செய்யப்பட்டனர். இது காட்டுமிராணிடித்தனமானதாக எமக்குப் படக்கூடும். தலையை வெட்டிவிடுவது அதற்குச் சாப்பாடு போடும் தேவையை இல்லாமல் செய்துவிடுகிறதென்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு பிந்திய காலகட்டத்தில் உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சியால் ஒரு மனிதன் தனக்குப் போதிய உணவை உற்பத்தி செய்யக் கூடிய நிலை ஏற்பட்டதோடு அல்லாமல் மற்றையோருக்கும் உற்பத்தி செய்யக்கூடிய நிலை ஏற்பட்டதுமே வர்க்கங்களாக சமுதாயத்தைப் பிரிப்பதற்கான அடிப்படை தோன்றும் கட்டத்தை அடைகின்றோம். இப்பொழுது தோற்கடிக்கப்பட்ட பூர்விகக் குடியினர் வாளுக்கிரையாக்கப்படுவதில்லை. செல்வத்தை உற்பத்தி செய்வதற்காக அவர்கள் அடிமைகளாக்கப்பட்டனர். அடிமையை வைத்திருப்போன் - அடிமை என்ற பிரபுத்துவத்திற்கு முந்திய அடிமைச் சமுதாயத்தின் மூலம் வர்க்கச் சமுதாயம் முதன் முதலாகத் தோன்றுகிறது.
உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சிதான் புராதன பொதுஉடமைச் சமுதாயத்திலிருந்து அடிமைச் சமுதாயமாக மாறுவதற்கு ஏதுவாக இருந்தது என்பதை நாம் குறித்துக்கொள்வோம். ஒரு அடிமை தனக்கும்
11

Page 8
தனது எசமானுக்கும் வேண்டியதை உற்பத்தி செய்யக்கூடிய நிலைக்கு உற்பத்திச்சாதனங்கள் வளர்ச்சியடையும் வரை அடிமைத்தனத்திற்கான அடிப்படை தோன்றியிருக்கமுடியாது. ஒரு வர்க்க சமுதாயத்தின் வருகையோடு ஒரு வர்க்கம் மற்ற வர்க்கத்தை அடக்குவதற்கு ஒரு சாதனம் தேவைப்பட்டது. இதுதான் பிற்காலத்தில் அரசாங்கமாக வளர்ச்சியடைய இருந்தது.
வர்க்கங்களற்ற புராதன பொதுவுடைமைச் சமுதாயத்தில் அரசாங்க இயந்திரம் இருக்கவில்லை. அப்பொழுது வர்க்கங்களற்ற சமுதாயம் இருந்தமையால் ஒரு வர்க்கத்தை வேறோரு வர்க்கம் அடக்கி வைத்திருப்பதற்குத் தேவையான காரணம் ஏற்படாததேயாகும். அவ்வாறானால் ஒழுங்கு எவ்வாறு நிலை நாட்டப்பட்டது? ஒவ்வொரு பூர்வீகக்குடியும் தம்முள் ஒருவரைத் தலைவராக அல்லது முக்கியஸ்தராகத் தெரிவுசெய்தனர். பொதுவாக அவன் வேட்டையாடுவதற்கும், யுத்தத்திற்கும், அவர்களைத் தலைமைதாங்கும் உடல் வலிமை பெற்றவனாயிருந்தான். ஆனால், அவன் தனது அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு அவனிடம் அரசாங்க இயந்திரமான ஓர் இராணுவத்தையோ அல்லது பொலீஸ் படையையோ கொண்டிருக்கவில்லை. சுயமாகவே மக்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்தனர். ஒவ்வொருவரும் அவனது சொல்லை ஏற்றுக் கொண்டனர். ஒரு பூர்வீகக்குடியில் தலைவனுக்குக் கிடைத்த மனப்பூர்வமான மரியாதையும் கீழ்ப்படிவம், முதலாளித்துவ சமுதாயத்தில் எந்தவொரு சக்திவாய்ந்த தலைவனுக்கும் கிடைத்ததில்லை.
புராதான பொதுவுடைமைச் சமுதாயத்தின் கால கட்டத்தில் அரசாங்க இயந்திரத்தைச் சிறிதளவாவது ஒத்ததாக ஏதும் இருக்கவில்லையென்பது மிகவும் தெளிவாகின்றது. எதிர் எதிர் வர்க்கங்கள் ஒரு வர்க்கத்தை ஒரு வர்க்கம் தனக்குக் கீழ்க் கொண்டுவரும் நிலைக்கு வளர்ச்சியடையும்போதே ஓர் அடக்குமுறை அரசு இயந்திரத்தின் தேவை ஏற்படுகின்றது. அவ்வாறான முதற் சமுதாயம் அடிமைச் சமுதாயமாகும். அதன் சிறந்த உதாரணங்களை கிரேக்கத்திலும் உரோம சாம்ராஜ்யத்தின்
12

காலப்பகுதியிலும் காணலாம். இந்த சமுதாயம் அடிமையை வைத்திருப்போன் - அடிமை என்ற எதிர் எதிர்வர்க்கங்களாகப் பிளவுபட்டிருந்தது. வல்லமைமிக்க உரோம சாம்ராஜ்யத்திற்கு எதிராக ஸ்பார்ட்டகஸ் தலைமை தாங்கிய மிகப் பிரபல்யம் வாய்ந்த கிளர்ச்சிகள்
உட்பட பல அடிமைக் கிளர்ச்சிகளை இந்தச் சமுதாயம் கண்டது.
இக்கட்டத்தில் அடக்குமுறை இயந்திரம் பெரிய அளவில் வளர்ச்சியடையவில்லை. அடிமைகள் மிகக் கடுமையான கசையடி மூலமும், பிரமாண்டமான சுதந்திர மனிதர்களின் படையுடனும் கோரமாக அடக்கியாளப்பட்டனர். ஆனால், வர்க்க முரண்பாடுகள் கூர்மையடைந்து சமுதாயம் அடுத்த கட்டமான பிரபுத்துவத்திற்கு வளர்ச்சியடைந்ததும் மேலும் மோசமான அடக்குமுறை அரசு இயந்திரத்தின் தேவை உணரப்பட்டது. நிலையான இராணுவம் ஸ்தாபிக்கப்பட்டது. ஒரு நீதித் துறையும் சிறைச்சாலைகளும் தோன்றின. சிறிது சிறிதாக அரசு இயந்திரம் வளர்ந்து வர்க்க முரண்பாடு மிக உச்சக் கட்டத்தில் கூர்மையடைந்துள்ள முதலாளித்துவ சமுதாயத்தில் உயர் இராணுவ மயமாக்கப்பட்ட இன்றைய அரசாங்கம் தோன்றியது.
இதிலிருந்து வர்க்க முரண்பாடுகளின் வளர்ச்சிப் போக்கின் விளைவுகளால் அரசாங்கம் தோன்றியது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.
மார்க்ஸ் விளக்கியது போன்று அரசாங்கமென்றால் ஒருவர்க்கும் வேறு ஒரு வர்க்கத்தை அடக்குவதற்கான ஒரு சாதனமாகும். அது வர்க்கங்களுக்கு மேலே, சமுதாயத்திற்கு மேலே உள்ள ஒரு நடுநிலை அமைப்பல்ல. சுரண்டும் வர்க்கங்கள், சுரண்டப்படும் வர்க்கங்களை அடிமைத்தனமாக வைத்திருப்பதற்கான ஓர் அடக்குமுறைச் சாதனமே அரசாங்கமாகும். சுரண்டும் வர்க்கங்கள், சுரண்டப்படும் வர்க்கங்களை
கீழே வைத்திருப்பதற்காகப் படிப்படியாகக் கட்டப்பட்ட சாதனமே அது.
13

Page 9
வர்க்க சமுதாயத்தில் ஆட்சி செலுத்துவது உண்மையில் அதுவே. கட்சிகள் வரலாம் போகலாம். ஆனால் சுரண்டும் அமைப்புமுறை இருக்கும்வரை அரசு இயந்திரம் அவ்வாறே இருக்கும்.
இலங்கையைப் பொறுத்தவரையிலும் இந்த விடயதைச் சில உதாரணங்களுடன் விளக்கலாம். 1965-70 வரையிலான ஐந்து வருட பிரதம மந்திரிப் பதவிக் காலத்தில் டட்லி சேனநாயக்காவின் நிரந்தரக் காரியதரிசியாக இருந்தவர் முன்னைய ஆட்சிக் காலத்தில் மைத்திரிபால சேனநாயக்காவின் நிரந்தரக் காரியதரிசியேயாகும். 1962இல் பூரீமாவோ நியமித்த கடற் படை தளபதியை அதே ஸ்தானத்தில் 1970இல் டட்லி ஊர்ஜிதம் செய்தார். உண்மையில் முகங்கள் மாறுகின்றன. ஓர் அதிகாரி மாத்தறையிலிருந்து கொழும்புக்கும், அல்லது கண்டியிலிருந்து பதுளைக்கும் மாற்றப்படுகின்றார். ஆனால், கொழுத்த சம்பளம் பெறும் அதிகாரத்துவமும் இனிறுமி சாண ட் ஹேர்ஸ் டிலும் , நியூஸ் கொட்லண்ட்யார்ட்டிலும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தால் பயிற்றுவிக்கப்படும் இராணுவ, பொலீஸ் அதிகாரிகளும் அடிப்படையில் அவ்வாறே இருக்கின்றனர். அவர்கள் அதே எஜமானர்களுக்கு, அதே நலன்களுக்குச் சேவை செய்கின்றனர். அந்த மனிதர்கள் தான் உண்மையில் ஆட்சி செய்கிறார்கள்.
இவ்வாறான ஓர் ஒடுக்குமுறை முதலாளித்துவ அரசாங்க இயந்திரம் இல்லாமல் சுரண்டல் ஒரு நிமிடத்திற்குமேல் நிலைக்காதென்பது நிச்சயமாகத் தெளிவாகின்றது. ஆயுதப் படையினரதும், பொலீஸ் படையினரதும் கரங்களில் துப்பாக்கியில்லாவிட்டால் சுரண்டும் வர்க்கங்கள் சுரண்டப்படுவோரைக் கீழே போட்டு மிதிக்க முடியாது. ஒரு வேலைநிறுத்தத்தில் பங்குபற்றிய எவருக்கும் இது தெரியும். ஒரு வேலைநிறுத்தம் ஆரம்பமானவுடன் முதலாளி தொலைபேசியை எடுத்ததுதான் தாமதம் வேலைநிறுத்தம் நடைபெறும் தொழிற்சாலையை நோக்கி ஒரு வான் நிறையப் பொலீஸ்காரர்கள் வருவார்கள்.
| 14 | | l 14 |

அவர்கள் முதலாளியின் உயிரையும், உடமையையும் பாதுகாக்க வந்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் ஆயுதந்தாங்கியவர்களாக வந்திருக்கின்றார்கள். அவர்களின் கரங்களில் உள்ள துப்பாக்கிகளே முதலாளியையும், அவனது வர்க்கத்தையும் பாதுகாக்கின்றது. அந்தத் துப்பாக்கிகள் இல்லாவிட்டால் தொழிலாளர்கள் சுரண்டலுக்கு ஒரு நாள்கூட இடங்கொடுக்கமாட்டார்கள். எவ்வாறாயினும், பெரும்பாலான தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் முதலாளிகளுக்கு நூறுக்கு ஒன்று என்ற விகிதாசாரத்தில் இருக்கிறார்கள். இந்த நிலைமைகளில் எவ்வாறு அவர்களால் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் உள்ளவர்களைப் பலவந்தப்படுத்திச் சுரண்ட முடிகின்றது. அவர்களின் காவல் நாய்களான இராணுவம், பொலீஸின் கரங்களில் உள்ள துப்பாக்கிகளின் சக்தியே அது. அதனாலேயே தோழர் மாசேதுங், அரசியல் அதிகாரம் துப்பாக்கிக் குழலிலிருந்து பிறக்கின்றது என்பதை ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் உணர்ந்துகொள்ள வேண்டும் என நமக்குக் கற்றுத்தந்தது நூறுவீதம் சரியாகின்றது. அரசாங்கத்தைப் பற்றிய மார்க்சிசக் கோட்பாட்டை இது இரத்தினச் சுருக்கமாகத் தருகின்றது. மார்க்ஸிச - லெனினிசத்தின் சாரம் அதுவே.
இந்தக் துப்பாக்கிகள் கைமாறும் போதே, சுரண்டப்பட்ட வர்க்கங்கள் புரட்சிகரப் பலாத்காரத்தினால் இந்தக் துப்பாக்கிகளைப் பறித்துத் தொழிலாளர்களினதும் அவர்களினது நேச அணிகளினதும் கைகளில் அவற்றை ஒப்படைக்கும்போதே அவர்கள் தம்மை விடுதலை செய்து கொள்வார்கள். வேறு எந்த மார்க்கமும் இல்லை. மற்றவை யாவும் தொழிலாள வர்க்கத்தை ஏமாற்றும் ஒரு திட்டமிட்ட முயற்சி அல்லது போலியாகும்.
இந்த உண்மையை மறைப்பதற்கும், மக்களைக் குழம்பச் செய்து அவர்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவுமே முதலாளிகளும் மற்றைய பிற்போக்குச்சக்திகளும் பாராளுமன்றம் என்ற ஏமாற்று வித்தையைக் கண்டுபிடித்தனர். பாராளுமன்றம் வெறுமனே கதைக்கும்
15

Page 10
கதையைத் தவிர வேறொன்றும் இல்லை. அது மூலதனத்தின் வெளிப்படையான சர்வ திகாரத்தை மறைப்பதற்கான ஒரு திரை, ஒரு அணிகலனுமாகும். அது மக்களை மடையர்களாக்குவதற்கும், பிளவு படுத்துவதற்கும், பாராளுமன்றம் மூலம் சோஷலிசத்தை அடையலாம் என்ற மாயையைப் பரப்புவதன் மூலம் அவர்களின் வர்க்க உணர்வுகளை மழுங்கடிப்பதற்கும், ஆயுதப் படையிற்தான் உண்மையான அதிகாரம் இருக்கிறதென்பதை மக்களிடமிருந்து திசைதிருப்புவதற்கும் முயற்சிக்கின்றது. ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்குப் பதில் வெறும் சொற்களால் போராட்டம் நடத்தும் மாற்று யோசனையை கூற முயற்சிக்கின்றது.
1931 இல் இருந்து 40 வருட காலமாக இலங்கை அனுபவித்ததுவந்த சர்வஜன வாக்குரிமையால் பெற்ற நற்பலன்கள் சந்தேகத்திற்குரியதே. பிரெஞ்சுப் பெண்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிராதபோது எமது பெண்கள் அந்த உரிமையைப் பெற்றிருந்தனர். சுவிஸ் பெண்கள் அண்மையில்தான் அந்த உரிமையைப் பெற்றனர். ஆனால், எமது பெண்கள் 1931 இலேயே அந்த உரிமையைப் பெற்றிருந்தனர். நாம் கேட்காதிருந்தும் எமக்கு இந்த உரிமை எனப்பட்டதைப் பெற்றோம். ஏ. ஈ. குணசிங்காவைத் தவிர எந்த ஒரு கட்சியோ, தலைவரோ சர்வஜன வாக்குரிமையை கேட்கவில்லை எனினும் டொனமுர் விசாரணைக் குழு எமக்கு இதை வழங்கியது. இது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எம்மீது கொண்டிருந்த பெரும் அன்பினால் வழங்கப்பட்டதா? இல்லை. தாம் என்ன செய்கின்றன்ர் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்தனர். சர்வஜன வாக்குரிமையைக் கொடுப்பதன் மூலம் வளர்ந்து வரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஐக்கியத்தை இன ரீதியிலும், சாதி ரீதியிலும், வேறு வழிகளிலும் பிளவுபடுத்த அவர்கள் எண்ணினர். அவர்களின் எண்ணங்கள் பொய்ப்பிக்கப்படவில்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் அவர்களது அடிவருடிகளும் சகல மக்களையும் ஆட்சி செய்து வருகையில் அவர்களோ சாதி, மத இன ரீதிகளிற்
பிளவுபட்டிருந்தனர்.
16

எமது நாட்டுமக்கள் மொத்தம் ஒன்பது தடவைகள் அதாவது 1931, 1935, 1947, 1952, 1956, 1960 (இரு தடவைகள்) 1965, 1970 ஆகிய ஆண்டுகளில் வாக்களித்தனர். இந்த முறைமூலம் சட்டமியற்றும் ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ், இலண்டன் முதலான சர்வகலாசாலைகளில் கற்ற திறமைமிக்கோரைப் பாராளுமன்றம் அனுப்பினர். இந்த மனிதர்களும் பாராளுமன்றத்திற்குள்ளேயும் வெளியேயும் கெட்டித்தனமான சொற்பொழிவுகளை நிகழ்த்தினர்.
ஆனால், இறுதி முடிவுதான் என்ன? 1931 இல் பாராளுமன்றத்திற்கு வெளியே நிலவிய உழைக்கும் மக்களைச் சுரண்டும் முறையானது எந்த அளவிலாவது குறைக்கப்பட்டுள்ளதா? திட்டவட்டமான பதில் இல்லை என்பதேயாகும். ஏனெனில் சுரண்டலைப் பாராளுமன்றம் பாதுகாக்கவில்லை. பாராளுமன்றத்திற்கு வெளியே சுயேச்சையாக இயங்கும் முதலாளித்துவ அரசாங்க இயந்திரமே சுரண்டலைப் பாதுகாக்கின்றது. பாராளுமன்றத்தில் நடைபெறும் நாடகமாவது சேனநாயக்கா-பண்டாரநாயக்கா குடும்பங்களுக்கிடையே நடைபெறும் சங்கீத நாற்காலி விளையாட்டை ஒத்திருக்கின்றது. 1947-58 வரையிலான ஒன்பது வருடங்கள் சேனநாயக்கா குடும்பம் ஆட்சி செலுத்தியது. 1956-65 வரையிலான அடுத்த ஒன்பது வருடங்கள் பணிடாரநாயக்கா குடும்பம் ஆட்சி செலுத்தியது. 1965இலிருந்து மீண்டும் ஐந்து வருட காலங்கள் சேனநாயக்காக்கள் ஆட்சி செலுத்தினர். 1970இலிருந்து சோசலிசத்தின் துரோகிகளான லங்கா சம சமாஜக் கட்சியுடனும், கெனமன் திரிபுவாதிகள் கும்பலுடனும் சேர்ந்து மீண்டும் பண்டாரநாயக்காக்கள் பொறுப்பேற்றுவிட்டனர்.
ஆனால், சொத்து உறவில் என்றாலும் அல்லது சுரண்டலின் தரத்திலென்றாலும் ஏதாவது மாற்றம் ஏற்பட்டதா? இல்லை. அதே சுரண்டல் தொடர்கின்றது. செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்ற அதே வேளை ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகின்றனர். ஏனெனில்,
17

Page 11
முதலாளித்துவப் பராரளுமன்ற ஜனநாயகத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட அரசாங்க மாற்றங்கள் பொருளாதாரக் கட்டுக்கோப்பில் அல்லது அதைப் பாதுகாக்கின்ற முதலாளித்துவ அரசாங்க இயந்திரத்திலோ எந்தவித அடிப்படைமாற்றமெதுவையும் கொண்டுவரவில்லை.
அதனால்தான் ஒவ்வொரு புரட்சியாளனும் இப்போதுள்ள ஏகாதிபத்திய - பிரபுத்துவ - பெரும் முதலாளித்துவ பொருளாதாரக் கட்டுக்கோப்பை நொருக்காமலும், அத்துடன் அதன் காவல்நாயாக விளங்கும் ஒடுக்குமுறை அரசாங்க இயந்திரத்தைப் பலாத்காரத்தினால் உடைக்காமலும், முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயக நாடகத்தின் மூலம் பதவிக்கு வரும் எந்த அரசாங்கமும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கமாட்டாது என்ற உண்மையை
கவனத்தில் கொள்ளவேண்டும்.
அதனால்தான் ஏகாதிபத்தியம் முழுஅழிவை நோக்கிச் செல்லும் சகாப்தத்தில், சோசலிசம் பரந்த ரீதியில் உலகில் வெற்றி பெறும்போது தோழர் மாசேதுங் குறிப்பிட்டதுபோல, உலகின் பிரதான போக்கு புரட்சிதான். அத்துடன் விசேடமாக புரட்சிப்புயல் ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளைத் தாக்குகின்றபோது, பங்கலோட்டுத்தனமான பாராளுமன்றப் பாதையை நிராகரித்து, மாசேதுங் சிந்தனையால் ஒளியூட்டப்பட்ட புரட்சிப் பாதையை ஏற்றுக் கொள்வது உண்மையான புரட்சியாளன் ஒவ்வொருவரினதும் திட்டவட்டமான முன் தேவையாகும்.
தொழிலாளி வர்க்கமும் அதன் நேச அணிகளும் தற்போதுள்ள முதலாளித்துவ அரசாங்க இயந்திரத்தை உள்ளவாறே எடுத்துத் தமது நலன்களுக்காக உபயோகிப்பதும் சாத்தியமில்லை. அரச இயந்திரம் முதலாளித்துத்தின் நலன்களைப் பாதுகாக்கக் கட்டப்பட்டது. அதைத் தொழிலாள வர்க்க நலன்களைப் பாதுகாக்கப் பாவிக்க இயலாது. அதனால் தான் மார்க்ஸ், லெனின், மாசேதுங் ஆகியோர் முதலாளித்துவ அரசாங்க இயந்திரம் நிச்சயமாத நொருக்கப்படல் வேண்டும் என வலியுறுத்திக்
[18]

கூறினர். அதனைச் சீர்திருத்தம் செய்யவோ அல்லது அதன் வரையறைக்குள் அமைப்பில் சீர்திருத்தம் செய்யவோ முடியாது. முதலாளித்துவ அரசு இயந்திரம் இருக்கவேண்டும் அல்லது பாட்டாளிவர்க்க அரசு இயந்திரம் இருக்க வேண்டும். இவற்றிற்கு இடைப்பட்டதாக ஒன்றும் இருக்க முடியாது. அதனால்த்ான் முதலாளித்துவ அரசு இயந்திரத்தை பலாத்காரத்தினால் நொருக்கி அதனிடத்தில் பாட்டாளிகளின் அரசு இயந்திரத்தை தொழிலாளிவர்க்கமும் அதன் நேச அணிகளும் ஏற்படுத்தவேண்டியது பொறுப்பென மார்க்சிசம் - லெனினிசம் - மாசேதுங் சிந்தனை போதிக்கின்றது. பாட்டாளிகளின் அரசாங்க இயந்திரத்தை மார்க்ஸ் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என விபரித்தார்.
இந்தக் கடமையைச் சரிவரச் செய்த புரட்சிகள் வெற்றி பெற்றன. ஒக்டோபர் புரட்சியும் சீனப் புரட்சியும் இதற்கு உதாரணங்களாகும். இந்த இரண்டிலும் பழைய அரசியல் அதிகாரத்தின் அழிவில் புதியது பெறப்பட்டது. பழைய அரசு இயந்திரத்தை அல்லது அதன் ஒரு பகுதியையாவது உபயோகிக்கும் முயற்சி நடைபெறவில்லை. ஜேர்மன் ஏகாதிபத்தியவாதிகளின் ஆக்கிரமிப்புக்கெதிராகப் போராடி நகரத்தைக் காப்பாற்றுமாறு லெனின் கிராட் தொழிற்சாலைகளிலிருந்த தொழிலாளர்களுக்கு லெனின் அறைகூவல் விடுத்து துப்பாக்கிகளை அவர்களுக்கு வழங்கியதன் மூலமே சோவியத் செஞ்சேனை உருவாகியது. அவர்கள் பழைய நீதி பரிபாலனத்தைத் தொடர்ந்தும் வைத்திருக்கவோ அல்லது நீதி பரிபாலனத்தின் சுதந்திரத்தைப் பற்றியோ அதிகம் புலம்பிக்கொண்டிருக்கவில்லை. சோஷலிச சட்டத்தைப் பரிபாலிக்கப் புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.
சீனாவைப் பொறுத்தமட்டில் விடயம் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகவுள்ளது. சீனாவை முழுமையாக விடுதலை செய்யுமுன்னர் சீனக் கம்யூனிஸ்டுகள் சீனப் புரட்சியின் தொட்டில் என இன்று அழைக்கப்படும் யெனானில் 13 வருடங்கள் தோழர் மாசேதுங்
19

Page 12
தலைமையில் இருந்தனர். புதிதாக விடுதலை செய்யப்பட்ட பிரதேசங்களின் பரிபாலனத்தை மேற்கொள்ளும் பொருட்டு மக்கள் விடுதலைச் சேனையின் பின்னால் செல்வதற்காக ஒரு புதிய பாட்டாளி வர்க்க பரிபாலன அமைப்பை இங்கே பயிற்றுவித்துக் கட்டி அமைத்தனர். இது ஒரு முழுமையான புதிய பரிபாலன அமைப்பு. அது பழைய அமைப்புடன் எதுவித தொடர்பையோ, உறவையோ வைத்துக்கொளாதது மட்டுமல்ல, பழைய ஒடுக்குமுறை அரசாங்க இயந்திரத்தை அடித்து நொருக்குவது என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டது.
இது நடைபெறாத பட்சத்தில், 1919இன் ஆரம்பத்தில் ஜேர்மனியப் புரட்சியைப்போல், புரட்சியை எதிர்ப்புரட்சி சுலபமாக அடக்கிவிடும். அதனால்தான் சம சமாஜக் கட்சி, கெனமன் திரிபுவாத கும்பல்களின் போலி மார்க்சிஸ்டுகள் ஏகாதிபத்தியவாதிகளால் உரு அமைத்து ஐக்கிய தேசியக் கட்சியிடம் கைமாற்றப்பட்டுத் தற்போது ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினால் வாரிசாகப் பெறப்பட்ட முதலாளித்துவ அரசாங்க இயந்திரத்தின் உதவியுடன் சோசலிசத்தை கட்டி எழுப்புவோமென பிரகடனம் செய்வது அவர்களின் முதல்தர பிதற்றலைக் குறிக்கின்றது.
புரட்சியின் வெற்றிக்கு முதலாளித்துவ ஒடுக்குமுறை அரசாங்க இயந்திரம் அடித்து நொருக்கப்படுவது எவ்வளவு அவசியமோ, அதே போல புதிய பாட்டாளி வர்க்க அரசதிகாரம் நிலைத்து நிற்பதற்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அவசியமாகும். லெனின் காலத்தில் அராஜக வாதிகள் எனப்பட்ட ஒரு பகுதியினர் முதலாளித்துவ ஒடுக்குமுறை அரசு அதிகாரத்தை புரட்சிமூலம் நிர்மூலமாக்கியபின் ஒரு பாட்டாளி வர்க்க அரசதிகாரம் வேண்டியதில்லை எனக் கூறினர். இந்தக் கோட்பாட்டின் பிரயோசனமற்ற தன்மையை லெனின் தனது பிரசித்தி பெற்ற “அரசும் புரட்சியும்” என்ற நூலின் ஒரு பகுதியில் விமர்சித்திருக்கின்றார். சந்தேகத்திற்கு உரிய வகையில் இந்தக் கோட்பாட்டை ஆதரிப்பவர்கள்
கிட்டத்தட்ட ஒருவருமே இல்லையெனக் கூறலாம். ஆனால், நாம்
20

பாட்டாளி வர்க்க அரசியல் அதிகாரம் பாட்டாளி வர்க்க சர்வாதிகார உருவத்தில் முதலாளித்துவ சர்வாதிகாரத்தின் இடத்திற்கு வர வேண்டும் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.
லெனின் குறிப்பிட்டதுபோல, வெற்றியடைந்த சகல புரட்சிகளும் சர்வாதிகாரத்தால் பின் தொடரப்பட்டன. ஏனெனில் தோற்கடிக்கப்பட்ட வர்க்கம் தனது தோல்வியை ஒப்புக்கொண்டதும் இல்லை அல்லது இசைந்து போனதும் இல்லை. அது எப்பொழுதும் அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்காக சதி செய்தும், சூழ்ச்சிகளில் ஈடுபட்டுக்கொண்டும் இருக்கும். இம்மாதிரியான சகல முயற்சிகளும் ஓர் உருக்குப் போன்ற சர்வாதிகாரத்தினால் மட்டுமே அடக்கப்பட முடியும். அதனால்தான் தொழிலாளி வர்க்கமும் அதன் நேச அணிகளும் முதலாளித்துவ அரசாங்க இயந்திரத்தை அழித்ததும் அதைத் தொடர்ந்து பாட்டாளி வர்க்க அரசியல் அதிகாரத்தை நிறுவுவதன் மூலம் தோற்கடிக்கப்பட்ட வர்க்கங்களினால் தூக்கியெறியப்படாமல் இருக்கவும், புரட்சியைப் பாதுகாக்கவும் முடியும். இதைச் செய்யத் தவறினால் புரட்சியின் வெற்றி குந்தகமடையும்.
1848 இல் கம்னியூஸ்ட் அறிக்கையை எழுதியபோது மார்க்சும், எங்கெல்சும் கூட முதலாளித்துவ அரசியல் அதிகாரத்தின் இடத்தை எவ்வாறு நிரப் புவது என்பதில் ஓர் இறுதி முடிவை எடுக்கமுடியாதிருந்தனர். 1871இல் பாரிஸ் கம்யூன் தோல்வியடைந்து இரண்டு நாட்களுக்குள் 'பிரான்சில் உள்நாட்டு யுத்தம்’ என்ற தலைப்பையுடைய அவரது பிரசித்தி பெற்ற நூலில் மார்க்ஸ், இதனை ஆராய்ந்த அனுபவங்களைக் கொண்டே, அவரால் ஒரு தீர்மானத்திற்கு வரக்கூடியதாயிருந்தது. மார்க்ஸ் இறப்பதற்கு முன் இறுதிக்கூட்டு முன்னுரையாக கம்யூனிஸ்ட் அறிக்கைக்கு செய்யப்பட்ட ஒரேயொரு திருத்தத்தை அவர் சேர்த்துக் கொண்டார்.
வேறு ஒரு கேள்வியெழுகின்றது. அரசாங்கம் எந்தக் காலத்திலும் இருந்து வருமா? வர்க்கங்களும், வர்க்கமுரண்பாடுகளும் தோன்றியதன் விளைவாக அரசாங்கம் தோன்றியதுபோல வர்க்கங்களையும் வர்க்க
21

Page 13
முரண்பாடுகளையும் அழிப்பதோடு உருவாகும் வர்க்கங்களற்ற சமுதாயத்தில் அரசாங்கம் இறுதியில் ‘உதிர்த்து’ விடும் என ஏங்கெல்ஸ் பதில் கூறுகிறார். அதாவது ஒடுக்குமுறை என்ற செயல் தேவையற்றது ஆகிவிடும்போது அது இல்லாமல் போய்விடும்.
இது மிகவும் சரியானதே. ஆனால், ஒரு வர்க்கபேதமற்ற சமுதாயத்தின் சூழலில் மட்டுமே அரசாங்கம் ‘உதிர்ந்து” விடும். அதற்கு முன்பு அல்ல. ஆனால் வர்க்கங்களும், வர்க்க முரண்பாடுகளும் சோசலிசப் புரட்சி நடைபெற்றவுடன் மறைந்து விடுவதில்லையென்று தோழர் மாசேதுங் குறிப்பிட்டுள்ளார். முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கான மாற்றத்தின் சரித்திரக் கால கட்டம் ஒரு கணிசமான நீண்டகாலமாகும். இந்த முழுக் கால கட்டத்தில் வர்க்கங்களும், வர்க்க முரண்பாடுகளும் இருக்கும். ஆகவே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இருப்பது மட்டுமல்லாமல் பலப்படுத்தப்படவும் வேண்டும். சோசலிச அரசாங்கம் உள்நாட்டு, வெளிநாட்டு எதிரிகளுக்கெதிராகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தேவைப்படும் இக்காலகட்டத்தில் வர்க்கப் போராட்டங்கள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரச்
சூழலில் இடம்பெறும்.
சீனாவின் மகத்தான பாட்டாளி வர்க்க கலாசாரப் புரட்சி ஒன்றுதான் இதற்கு ஒரேயொரு உதாரணமாகும். தோழர் மாசேதுங் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, தலைமை தாங்கப்பட்ட இந்தக் புரட்சி மூலம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரச் சூழ்நிலைகளில் எவ்வாறு வர்க்கப் போராட்டங்களை நடத்தி தலைமை தாங்குவது எனக் கண்டோம். கலாசாரப் புரட்சி சீனாவில் பாட்டாளி வர்க்க சர்வதிகாரத்தைப் பாதுகாத்துப் பலப்படுத்தி, சோவியத் யூனியனில் இடம்பெற்றதுபோல் சீனாவில் முதலாளித்துவம் மீண்டும் புகுத்தப்படுவதைத் தடுத்து, அதை உலகப் புரட்சியின் தளமாக்கியது. இது சீனாவை சோசலிசப் பாதையில் மேலும் ஒரு அடி முன்தள்ளியது. வர்க்கங்கள் அற்ற கம்யூனிச சமுதாயத்தை அடையுமுன் நாம் இதுபோன்ற பல புரட்சிகளை அநேகம் காண்போம். அப்போதுதான் அரசாங்கம் உதிர்ந்து போவதை எதிர்ப்பார்க்கலாம். நாம்
22

மீண்டும் அதே இடத்துக்கு திரும்புவோம். ஆனால், இது சுற்று வளர்ச்சியின் மிக உன்னதமான உயர்ந்த கட்டமாக அமையும்.
இதிலிருந்து நமக்குத் தெரிந்த அரசாங்கமானது ஒரு குறிப்பிட்ட சரித்திரச் சூழலில் தோன்றி அந்தச் சூழல் அற்றதும் மறைந்துவிடுகிறது. அரசாங்கமென்பது எப்பொழுதும் இருந்ததுமல்ல அல்லாவிடில் முடிவில்லாததுமல்ல. சரித்திரத்தில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஒரு வர்க்கத்தைப் பிறதொரு வர்க்கம் அடக்கியாள்வதற்காகத் தோன்றி பின்னர் தேவையற்றதும் இல்லாமல் போய் விடுகிறது. ஆகவே, அரசாங்கமென்பது ஒரு வர்க்கத்தைப் பிறதொரு வர்க்கம் அடக்குவதற்கான கருவியாகுமென்று குறிப்பிட்டால் அது சரியானதே. அவ்வாறான ஒரு அரசு இயந்திரம் இல்லாவிடில் இக்காவல் நாய்களின் கரங்களில் துப்பாக்கிகள் இல்லாமல் எந்த ஒரு சுரண்டும் வர்க்கமாவது சுரண்டப்படும் மக்களைத் தொடர்ந்தும் சுரண்டமுடியாது.
அதனால்தான் சுரண்டப்படும் வர்க்கங்களின் விடுதலைக்கான ஒரேயொரு மார்க்கம் சுரண்டும் வர்க்கங்களின் ஒடுக்குமுறை அரசு இயந்திரத்தை நொருக்கிவிட்டு அதனிடத்தில் தொழிலாள வர்க்கத்தினதும் அதன் நேச அணிகளினதும் அரசு இயந்திரமான, மார்க்சின் வார்த்தைகளில் கூறுவதனால், பாட்டாளி வர்க்க சர்வாகாரத்தினால் நிரப்படுவது ஒன்றேயாகும், அரசாங்கத்தைப் பற்றிய மார்க்சியக் கோட்பாடு இதுவாகும். இதை ஏற்றுக்கொள்பவர் மார்க்சிச - லெனினிச புரட்சிவாதிகளாவர். இதை நிராகரிப்பவர்கள் நவீன திரிபுவாதிகளும் சீர்திருத்தவாதிகளும், மற்றும் பலவகைப்பட்ட துரோகிகளும் ஆவர். அரசாங்கத்தைப் பற்றிய மார்க்சியக் கோட்பாட்டை முழுமையாக ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாது விடுவதுமே புரட்சிவாதிகளை திரிபுவாதிகளிடமிருந்தும் சீர்திருத்தவாதிகளிடமிருந்தும் பிரிக்கும் எல்லைக்கோடாகும்.
தனது காலத்துத் திரிபுவாதிகளுக்கு எதிராக நடத்திய மிகப்பெரிய அளவிலான தத்துவார்த்தப் போராட்டத்தின் போக்கில் இந்தக்
23

Page 14
கோட்பாட்டிற்கு லெனின் கொடுத்த முக்கியத்துவத்தின் காரணமாக திரிபுவாதத் தலைவர்களான காட்ஸ்கீயும், பேன்ஸ்டீனும் திரித்தும், மாற்றியும் கூறிய இந்த விடயத்தைப் பற்றிய மார்க்ஸ், ஏங்கெல்சின் கருத்துக்களைத் தனது மிகப் பிரபல்யம் வாய்ந்த “அரசும் புரட்சியும்” என்ற நூலில் ஆணித்தரமாக மீண்டும் கூறியுள்ளார்.
அரசாங்கத்தைப் பற்றிய மார்க்சியக் கோட்பாட்டை மேலும் வளர்த்த தோழர் மாசேதுங்கின் விசேட பங்கை இப்பொழுது ஆராய்வோம். மக்கள் படையும் மக்கள் யுத்தமுமே இந்தக் கோட்பாடாகும்.
எதிர்வரும் சமூகப் புரட்சியைக் கருதி முதலாளித்துவ அரசு இயந்திரம் மிக வேகமாக இராணுவ மயமாக்கப்படும் ஏகாதிபத்தியக் கட்டத்தை உணர்ந்ததன் விளைவாலேயே, மக்கள் படையென்ற கோட்பாடு தோன்றுகின்றது. சகல நிராயுதபாணியான பொது எதிர்ப்பெல்லாம் கிட்டத்தட்ட முழுமையாகவே இயலாததாகிவிடும் அளவிற்கு அரசாங்கத்தின் பலம் மிக உயர்மட்டத்திற்குச் சென்றுவிட்டபடியால் அது சகல நிராயுத எதிர்ப்புக்களையெல்லாம் சுலபமாக அடக்கிவிடக் கூடியதாயுள்ளது. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் பிரான்சில் 1968 மே மாதத்தில் இடம்பெற்ற குட்டிப் புரட்சியாகும். சரித்திரத்தில் முன் என்றுமே கண்டிராத நிகழ்ச்சியாக ஒரு கோடி நாற்பது இலட்சம் தொழிலாளர்களில் 905 கோடி தொழிலாளர்கள் டீகாலிக்கு எதிராக இரண்டு வாரங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த போதிலும் டீகாலே வெற்றிபெற்றார்.
மிகச் சிறந்த முறையில் இராணுவ மயமாக்கப்பட்ட டீகாலின் அரசு இயந்திரத்தினாலும், குறிப்பாக இந்த நோக்கத்திற்காக ஏற்கனவே அமைக்கப்பட்ட அவரது கலகப் பொலீஸ் படைப் பிரிவினாலும், இது சாத்தியப்பட்டது.
இலங்கையில் இடம்பெற்றது உட்பட இதேபோன்ற பல
உதாரணங்களைக் காட்டலாம். இந்த வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு
சுரண்டப்படும் வர்க்கங்கள் என்ன செய்ய வேண்டும்? எதிரிகள் தமது
|24」

கரங்களில் வாள்கள் வைத்திருக்கும்போது சீன மக்களும் தமது கரங்களில் வாள்களை வைத்திராவிட்டால் அவர்கள் எதிரிகளுடன் போராட முடியாது எனத் தோழர் மாசேதுங் குறிப்பிட்டார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் எதிர்ப் புரட்சிகரப் பலாத்காரத்தை எதிர்நோக்கி வெற்றிகொள்ள வேண்டுமானால் புரட்சிகரப் பலாத்காரத்தினால் மட்டுமே சாதிக்க வேண்டும். ஆகவே, சுரண்டப்படும் வர்க்கங்கள், சுரண்டும் வர்க்கங்களின் சிறந்த ஆயுதப் படைகளைத் தூக்கியெறிய வேண்டுமானால், அவர்கள் தமது சொந்த ஆயுதப் படையான மக்கள் படையை அமைத்து எதிரியின் ஆயுதப் படைகளை எதிர்நோக்கி, நீண்ட மக்கள் யுத்தத்தின் மூலம் படிப்படியாக அவர்களைத் தோற்கடிக்க முடியும்.
புரட்சிகரத்தளப் பிரதேசங்களைக் கட்டியமைப்பதன் தேவையோடு மக்கள் படையின் கோட்பாடும் இணைந்துள்ளது. இந்தத்தளப் பிரதேசங்களில் மட்டுமே மக்கள் படை பயிற்றப்பட்டு, அமைக்கப்பட முடியும். அந்த மாதிரியான தளப் பிரதேசங்கள் எதிரியின் அதிகாரப்பலம் குவிந்துள்ள நகரப்புறத்திற்கு அப்பாலுள்ள பரந்த கிராமப் புறங்களில் அமைக்கப்படலாம்.
பிற்போக்குச் சுரண்டும் வர்க்கங்களின் பலம் நகரங்களில் குவிந்துள்ளதாக தோழர் மாசேதுங் குறிப்பிட்டுள்ளார். இலங்கையை எடுத்துக்கொண்டால் வானொலி நிலையம், புகையிரதமத்தி, ஆயுதப படைகளின் தலைமைக் காரியாலயம், மத்திய அரசாங்கம், மத்திய தபாற் தந்திச் சேவைகள் போன்றன கொழும்பிலேயே மையங்கொண்டுள்ளன.
ஆரம்பத்தில் எமது பலம் எதிரியின் பலத்திலும் பார்க்க பலவீனமுடையாதாயிருக்குமானால், எதிரியின் பலம்மிக்க இடத்தில் நாம் குறிவைப்பது பலனற்றதாகுமென்று தோழர் மாசேதுங் குறிப்பிட்டுள்ளார். எமது தலைகள் நொருக்கப்படுமென்பது பெரும்பாலும் சாத்தியமாகும்.
மறுப்றத்தில் சரியான் தந்திரோபாயத்தைப் பின்பற்றி எந்தக் காலனி அல்லது அரைக் காலனி நாட்டிலும் பெரிய அளவில் மக்கள் வசிக்கும் கிராமப் பகுதிகளுக்கு நகரங்களில் இருந்து சென்று தமது
25

Page 15
தலைமையின்கீழ் மக்களை அணி திரட்டுவது என்ற அடிப்படையில் புரட்சிகரத்தளப் பிரதேசங்களை அமைத்து, மக்கள் படையை அமைத்தும் பயிற்றுவித்ததும் நிலைமை வேறொரு திருப்பத்தையடைகின்றது. இப்பொழுது எதிரிதான் நம்மைத் தேடி வரவேண்டியுள்ளது. அவன் தனது முழுப்பலத்தையும் தன்னோடு கொண்டுவர முடியாது. அத்துடன் நாம் அதிக எண்ணிக்கையில் புரட்சிகரத் தளங்களை அமைக்க எதிரி தனது படைகளைப் பிளவுபடுத்த வேண்டி ஏற்படும். இவ்வாறு எதிரிக்குச் சாதகமானதாகவும், மக்களுக்குச் சாதகமற்றதாகவும் இருந்த நிலைம்ை எதிரிக்குச் சாதகமற்றதாகவும், மக்களுக்குச் சாதகமானதாகவும் மாற்றப்படுகின்றது.
அதன் பின்னர் எமது கரங்களில் ஆரம்ப நடவடிக்கைகளை வைத்துக்கொண்டு மக்கள் மட்டுமே செய்யக்கூடிய கெரில்லாப் போராட்டங்கள் மூலம் எதிரியைத் தொந்தரவு செய்து எதிரியின் படைகளுடன் நீண்ட போராட்டங்களில் ஈடுபட்டு மக்களின் படைகள் பலத்தின் தரத்தில் எதிரியின் படைகளைப் பலவீனப்படுத்த வேண்டும். இந்த நிலைமை வளர்ச்சியடைந்து ஒரு கட்டத்தில் மக்கள் படைகள் கிராமப் பகுதியிலிருந்து நகரங்களைச் சுற்றி வளைத்து அவற்றை விடுதலை செய்யும்.
இந்தக் கோட்பாடுதான் மக்கள் யுத்தமெனப்படும். இது மக்களை இலட்சோப இலட்சக் கணக்கில் அணிதிரட்டி மக்கள் யுத்தத்தின் நீண்ட போராட்டத்தின்போது எதிரியின் தற்காலிகப் பலத்தை அகற்றிவிட வேண்டுமென்பதைக் கோருகின்றது. ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் தலைமைப் பாத்திரத்தை வகித்து வெற்றிக்கு வழிவகுத்த சீனப் புரட்சியின்அனுபவங்களிலிருந்து பெறப்பட்டதே இந்தக் கோட்பாடாகும். சீனாவில் ஆயுதம்தாங்கிய புரட்சி ஆயுதம்தாங்கிய எதிர்ப்புரட்சியை எதிர்த்துப் போராடுகின்றது. இது குறிப்பான முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். அத்துடன் சீனப் புரட்சியின் சாதகமானவற்றுள் ஒன்றாகும் என ஸ்டாலின் சரியாகக் குறிப்பிட்டார்.
26

இதனால்தான் சீனாவின் பிரச்சினைகளை ஆயுதப் படையில்லாமல் தீர்த்து வைக்க இயலாது என அனுபவம் புகட்டுகின்றது எனத் தோழர் மாசேதுங் குறிப்பிட்டார். ஆயுதப் போராட்டமில்லாமல் பாட்டாளிகளும் கம்யூனிஸ்ட் கட்சியும் சீனாவில் எதுவித அந்தஸ்தையும் கொண்டிருக்க முடியாததுடன் எந்த ஒரு புரட்சி நோக்கையும் சாதிப்பது இயலாத காரியமாகும் என மேலும் கூறினார். அதே காரணத்திற்காகத்தான் மக்கள் படையில்லாவிட்டால் மக்களுக்கு ஒன்றுமே இல்லையென்று அவர் பிரகடனம் செய்தார். ஆயுதப்படை மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது, பிரச்சினையை யுத்தத்தின் மூலம் தீர்த்துக்கொள்வது முக்கியமாக கடமையும் புரட்சியின் அதியுயர்ந்த தோற்றமுமாகும். புரட்சியின் இந்த மார்க்சிச-லெனினிச கொள்கையானது உலகம் முழுவதற்கும், அதாவது சீனாவிற்கும் மற்றைய சகல நாடுகளுக்கும் பொருந்துவதாகும் என இந்தக் கோட்பாட்டுக்கு அந்த அறிக்கையில் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
கிட்டத்தட்ட சகல ஏகாதிபத்திய, முதலாளித்துவ நாடுகளிலும் அரசாங்க பலம் பெரிய அளவில் இராணுவ மயமாக்கப்பட்ட ஏகாதிபத்தியக் காலகட்டத்தில், சுரண்டலைப் பாதுகாத்து, அதன் காவல் நாயாக விளங்கும் முதலாளித்துவ அடக்குமுறை அரசு இயந்திரத்தைத் தொழிலாள வர்க்கமும், அதன் நேச அணிகளும் ஆயுதந்தாங்கிய போராட்டத்தின் மூலமே அடித்து நொருக்க முடியும். விசாலமான கிராமப் புறங்களில் புரட்சிகரத் தளங்களைத் தோற்றுவித்து, இந்தத்தளப் பிரதேசங்களில் மக்கள் படையை பயிற்றுவித்து நீண்ட மக்கள் யுத்தத்தில் ஈடுபடுவதன் மூலமே தொழிலாள வர்க்கமும் அதன் நேச அணிகளும் இறுதி விடுதலையைப் பெற முடியும்.
స్ట్రీ థ్రెస్ట్రీ స్టీ స్ట్రీస్ట్రీ #ట్టి స్టీళ్కీ
27

Page 16
nevery Third World country there is
quite make to revolution, but who, in
and inequality, embodies the Iones, the andlergin sets thE FErling 5ncialism t.
Shan Was such a Llap, FOI İTTI, ESTE WR35 road, no compromise between Ileans an so he never attained to power, leye LLLLLL LLLLL S LLLLL LLL LLLL LLLLLL L SLLLLLLL
Mathg was a man of the people, a servan Cane across Marx at University in 1939 the cause of the proletarian revolution following first in the path of Lenin and turning to Mao's China for guidance. I
activist, pamphleteer and politicist, so
He was too, a great chart pion of what then hope. When the D. S. Serlin dispossessed Indian plantation wo LLLLLL LL LL LLL LLL S L LLLL LL LLL LL Union and brought LielI : SISE oli VI Society, in its Tost wirulent caste-riddef but the doors of public places on the dep LLLLLL LL LLLLaa LLL LLL LLLLLLLLSK LLLLLL LLLS drove the priests from the terTiples
Shan was a guru in the traditional sers exemple bothin public and private life. become totally corrupt. he realmained L. LLLLLLLLL LLLL LLLLLLJLLLLLLLS retained an intellectual probity which sh Te When The Whole of the Country has carriage, Shan camoured for justice for
The distinction he made between pero Sophistication but a deeply felt sensibility
SIEn lata Ianialectical That SEET ft and a politicilinistinct Which SEW In a sensa, he was not Only before his timT alone on a peak in Darian
 

Filii Dr El Cabral or a Giap Who do 5 TO Is ar har fight againstinjustica, intolgfa CE ILIESS, the dedication Oll The FEVEllionlar y TE
O shortcut to socialSIT, IU parla Enillä W ends the means predicalled the eld, And became an MP though, in a Timent of , lewer reduced his politics to populis III.
of the working classi, FrinnTI thE T Tieni li hie the day, he died, Shan devled in Stellt and the purgLiit of Eg El Sisle SS SOCİELY Soviet communism and then, Eller 1963) al lung, he was trada uniuII leader ant ET TIL SEWEL
De Tigd to be hopelless Cause:S t|The gave yake government dis Entrarchised a III Eg End rendered the III Ulu CC Fall||W
took up their cause through the Red Flag
and light and Tilitancy. When Hildt hase, had closed not only its LCIple doors essed castes, it was Shan, the high-case a very halls of the Brahmins and virtually
E3, El Leacher by Example and precepti, EII Al i time When the Sri Lankan pull" His touched by wenality or power. At a tile nie unifornTilly sordid and despicable, ShEIF, neke a beacon in a darkening World. At a sIl It I. Ilus glis III Sinhales, Tamil and Muslin peoples alike tle and govement was not theoretical
asped a situation before EmyDIE EISE EI hings ahead of the people he led And so a, but alas, before his people, so to Speak
A. Siva Tanda, Director, Institute Race Relations Editor Race E class 1993