கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மனித மாடு

Page 1
ক্ৰমত্ত
■
}
교軍國를
 
 
 
 


Page 2

wöwImüš iarraitias
மனித மாடு
(சிறுகதைகள் )
★ - அ. செ. முருகானந்தன் -
݂ ݂
யாழ்-மாவட்டக் கலாசாரப் பேரளை இலக்கியக் குழு வெளியீடு. 1986

Page 3
Title ; Manithamadu
Author: A. S. Muruganandan Copyright: Jaffna District Cultural Council Publication; Literary Committee of J. D. C. C.
Date of Publication: 28-2-86 Size of the book ; Cmx cm Printiag types used : 10 point No of Copies : 1000
Fo of Pages : i-xx + 164 "Binding: Paper back
Subject : Short Stories (Tamil) Cover Design : V. Kanagalingana (V. K.)
Printer : Aseervatham Press, Kandy Road, Jaffna. Price: 251 -
நூற்பெயர் : மனித மாடு
-சிறுகதைத் தொகுதி
ஆசிரியர் : அ. சே. முருகானந்தன்
பதிப்புரிமை : யாழ் மாவட்டக் கலாசாரப் பேரவை
வெளியீடு : யாழ் மாவட்டக் கலாசாரப் பேரவையின்
இலக்கியக் குழு
அட்டை ஓவியம் : வீ. கனகலிங்கம் (வீ. கே.) அச்சுப் பதிவு ஆசிர்வாதம் அச்சகம், யாழ்ப்பாணம் வெளியீட்டுத் திகதி : 28.1286 விலை : ரூபா 25/=

வெளியீட்டுரை
திரு. வை. மு. பஞ்சலிங்கம் தலைவர், மாவட்ட கலாசாரப் பேரவை செயலாளர், மாவட்ட அபிவிருத்திச் சபை அரச அதிபர், யாழ்ப்பாண மாவட்டம்,
மனித மாடு என்னும் இச்சிறுகதைத் தொகுப்பு Anna) u rybutu Gor மாவட்டக் கலாசாரப் பேரவை 100.ஆம் ஆண்டில் வெளியிடும் இரண்டாவது நூலாகவும் பேரவையின் உப குழுக்களில் ஒன்ருகிய இலக்கியக் குழுவின் முகம் பிரசுரமாகவும் அமைந்துள்ளது.
1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் யாழ். மாவட்டத்தில் விலாசாரச் செயற்பாடுகள் மறுமலர்ச்சியடைந்த காலமாகும். இம்மாவட்டத்திற்குக் கலாசார நிகழ்வுகள் எவ்வாற்ருனும் புதியன அல்ல. எனினும், அரசாங்க நிதியுதவியோடு கல வளர்ச்சி இம்மாவட்டத்தில் வளர்ந்தும் வளர்ச்சி குன்றியும், உத்வேகம் பெற்றும், மந்த நிலையடைந்தும் வந்துள்ளமை வரலாற்றுண்மை. 1959 ஆம் ஆண்டு பிரதேச கலா மன்றம் என்னும் பெயரோடு இம்மாவட்டத்தில் ஆாம்பிக்கப்பட்ட கலை அபிவிருத்திச் செயற்பாடுகள், முதன் முன்முண்டுகளில் அக்கால அரசாங்க அதிபர்,

Page 4
ii
ஏனைய உறுப்பினர்களின் அரவணைப்பில் சிறப்புற மேலோங் கின. இவை தொடர்ந்த சில ஆண்டுகளில் பின்னடைந்து, மறுபடியும் 1965-1966 இல் மிக உன்னத நிலையில் இயங்கி யிருக்கின்றன. அதற்குப் பின், காலவோட்டத்தோடு மாவட்டத்தில் ஏற்பட்ட பல நெருக்கடி நிலைமைகளினல், கலை வளர்ச்சி நிகழ்ச்சிகள் பின்தங்கிய நிலையிலேயே வெளிக் கொணரப்பட்டுள்ளன. இக்காலகட்டத்தில் நிதி ஒதுக் கீடும் குறைவானதாகவே வழங்கப்பட்டுள்ளது.
அரச நிதி உதவியோடு, வருட ரீதியாக, நிகழ்ந்த கலை நிகழ்வுகளையும் அவற்றிற்குத் துணைசார் உறுப்பினர் விபரங்களையும் கொண்ட வரலாற்றுக் குறிப்பை விபரமாகக் குழிகிய காலத்தில் பதிப்பிட எண்ணியுள்ளோம். இது எதிர்காலத்துக்குத் துணையாகும்;
1981ஆம் ஆண்டில், இல. 35-1980 சட்டத்தால் நடை முறைக்கு வந்த மாவட்டசபைச் சட்டத்தின் 15 விடயங் களுள், கலாசாரத்துறை ஐத்தாவதாகக் குறிப்பிடப்பட் டுள்ளது. அச்சட்டம், செயன்முறைப் படுத்தப்பட, 1984 ஆம் ஆண்டிலிருந்து, தேர்தல் தொகுதி ஒவ்வொன்றிற் கும் ரூபா இருபத்தைந்து இலட்சம் எனும் கண்க்கில் நிதி ஒதுக்கீடும் வேருக வழங்கப்பட்டது. இந்நிதி, மாவட்டத் தின் அத்தியாவசிய தேவைகட்குச் செலவிடப்பட்ட அதே நேரத்தில், 1983 இல் சில கலை நிகழ்ச்சிகள் வீரசிங்கம் மண்ட பத்தில் நடைபெற்றன. 1986 ஆம் ஆண்டு மத்தியில் கலா சாரத்துறைக்குப் புத்துயிர் அளிக்க வேண்டி யாழ் மாவட் டத்திலேயுள்ள பல பேராசிரியர்கள், பேரறிஞர்கள், S§). T மேதைகள், மத குருமார், வரலாற்று-தொல் பொருட்டுறை வல்லுநர் ஆகிய பலரையும் அழைத்து, சிந்தித்து, அவர் களது ஆலோசனையுடன் உருவானதே இக் கலாசாரப் பேரவையாகும். பேரவை,அதன் உபகுழுக்களாக இலக்கியம், இசை, நாடகம், நடனம், ஓவியம், சிற்பம், தொல்பொருட்

iii
கலே, சமய கலாசாரம், புகைப்படம்-திரைப்படம்-தொலைக் «d mT u "6f), நாகசுரம்-தவில், நாட்டார்கலை ஆகிய பதிைெரு துறைகளை இனங்கண்டது. அவ்வக் கலைத்துறை அறிஞர்கள் உப குழுக்களாகத் தனித்தனியாகச் சந்தித்து. ஒtவொரு குழுவிலிருந்தும் ஒவ்வொரு வருடத்திற்கும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு இரு பிரதிநிதிகளை ஏகமன தாகக் தெரிவு செய்தனர். அவர்கள் வாயிலாக 1986 ஆம், 1987 ஆம் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்படலாமென முன்வைத்த திட்டங்களுள், பேரவையின் அங்கீகாரம் பெற் தவையே இல்வாண்டில் செயன்முறைப்படுத்தப்படுகின்றன. இதற்கமைய, இவ்வாண்டில் இலக்கிய நூல் வெளியீடாக, 'மனித மாடு" வெளிவருவது மகிழ்ச்சிக்குரியதே.
இலக்கியக் குழுவின் ஏகோபித்த ஆர்வம், ஆசை. கடமையுணர்வு என்பனவற்றின் பிரதிபலிப்பே 'மனித மாடு." இச்சிறுகதைகளுட் பல பல்லாண்டுகட்க்கு முன்னரே பத் திரிகைகள் வாயிலாக வெளிவந்துள்ளன. இவற்றின் ஆசிரியர் அ. செ. முருகானந்தன் அவர்கள், சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர் இலட்சிய புருடர், எதையும் கண்ணியமாகவும் கடமையுணர்வோடும், செய்திறனுே நிம், இறை பக்தியோடும் செயற்படும் பண்பாளர். இவர்களின் எண்ணக் குவியல்கள் ஒன்று சேர்க்கப்பட்டமை இலக்கிய உலகு பெருமைப்படக் கூடியதே.
கதைகள் உருவாவதே ஒரு கதை. ஒவ்வொரு கதை யிலும் ஒர் அல்லது பல கருக்கள் அமையக் காண்கின்ம்ே. இக் கருக்கள் வாழ்க்கை அநுபவங்கள், கண்டு கேட்டறிந்த் நிகழ்வுகள், சூழல், உளவியல் நோக்குகள் பல்லாற்ருனும் உருவாகலாம். இவற்றை உள்ளே வைத்து, கற்பனே வளத்தையும் சேர்த்துப் ப்டைத்ததே கதை. ஒர் இலட் சியப் பிறப்பு இது.

Page 5
இத்தகைய, இந்நூலைப் பிரசுரிக்க வேண்டுமென்று இலக்கியக் குழு கலாசாரப் பேரவை முன் எடுத்துரைத்த போது, அங்கு நிலவிய ஏகோபித்த ஒற்றுமையின் வெளிப் பாட்டையும் புரிந்துணர்வையும் உரிமைப்பாட்டையும் பேரவையினர் புரிந்து கொண்டனர். இத்தனையையும் ஓர் புனிதப் பணியாகக் கொண்டு, பல சிரமங்கள் மத்தியில் முன்னின்றுழைத்த வண்ணை. வைத்தீஸ்வர வித்தியாலய அதிபர் திரு. சி. சிவசரவணபவன் (சிற்பி) அவர்கட்கும் நல்லூர் வட்டாரக் கல்வி வள நிலையச் செயலாளர் மயிலங் கூடலூர் பி. நடராசன். அவர்கட்கும், மல்லிகை" ஆசிரியர் திரு. டொமினிக் ஜீவா அவர்கட்கும் பேரவையும் நானும் கடப்பாடுடையோம். அவர்கட்கு எமது நன்றி என்றும் உளது. இன்னும் இவர்களோடு, இக்கதைகளைத் தேர்ந் தெடுக்கவும், சீரமைக்கவும் பலவாறு உதவி புள்ள பேரா சிரியர்கள், கலாநிதிகள், பிரதியாக்கம், தட்டச்சு முதலிய உதவிகளைச் செய்த அன்பர்கள் அனைவருக்கும் கலாசாரப் பேரவையின் நன்றியையும் அன்புணர்வையும் அளிக் கின்றேன்.
இலக்கிய உலகிற்கு இந்நூல் ஒரு துளி. பல்துறை நூல்கள், இலட்சிய ஊற்றுக்களாக, அருவிகளாக முனைந்து வெளிவர வேண்டும் என்பது என் வேணவா. வாசகப் பெருமக்கள் இதற்குப் பெருமளவு ஆக்கமும் ஊக்கமும் அளிக்க முன் வருவார்களென்பது எமது நம்பிக்கை.
வை. மு. பஞ்சலிங்கம் I-12-85.

என்னுரை
சிந்தனைச்செல்வர் அ. செ. முருகானந்தம்
பத்திரிகைக்குக் கதை எழுதத் தொடங்கி ஐம்பது ஆண்டு கிளின் பின் எனது சிறுகதைத் தொகுதி ஒன்று வெளிவருகிறது. அநற்கு ' என்னுரை' என்று மகுடமிட்டுச் சில வரிகள் நல்வாக்காக நயம்பட உரைத்து எழுதும் படியும் ஆகியிருக்கிறது. ஆண்டவன் சித்தம்.
பத்திரிகைத் தொழிற் பணிமனையில் மன நாட்டமாகப் பத்திரிகாலயமொன்றில் பத்தொன்பதாம் ஆண்டுப் பரா யத்தில் கால்வைத்து இன்றைக்கு நாற்பத்தைந்து ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன. ஆம் , நெடுவழியும் நெடுத் தூர முமாக நீண்டதொரு யாத்திரை மார்க்கந்தான். திரும்பிப் 1ார்த்தால் அந்தக் காகித ஒடதீபம் எங்கே வெகு தூரத்தே இன்னமும் அணந்துபோய் விடாமல் காற்றில் அசைந்தாடி அலமோதிக் கொண்டே நின்றெரிவது என் கண்களுக்குத் தோற்றப்படுகிறது. நான் எழுதிய பழைய காகித ஏடுகள் ஏதொன்றையும் தொட்டும் பார்க்காமல் அச்சாபீஸ் பக்கம் எட்டியும் பாராமல் அப்படி அசந்து ஓய்ந்து போனதொரு நிலையது வாய், தொழிற்களம் பணிமனை என்பதெல்லாமே மெத்தத் தூரம் தொலைவாக எட்டப் போய்நின்று கண் சிமிட்டும் அந்தவித துறவு ஏற்று, காவி பூண்டதொரு நெடுநாள் நிலைபேருகக் கதைப் புத்தகம் ஒன்று கண்கவர் வனப்புடனே என் மடிமீது வீழ்ந்து கையில் தவழ்கிறது.

Page 6
vi
தமிழ்த்தாயின் திருவருள். தமிழ்த் திருநாடுதனேப் பெற்ற தாயென்று நாளது காலமாகக் கைதொழுது கும்பிட்டு உபாசித்த பூஜாபலன் தானே ஒருவேளை என்னவோ, அப்படியுமிருக்கலாந்தான்.
பத்திரிகைக்குக் கதை எழுதத் தொடங்கி அதன் பின் சில ஆண்டுகளில் அந்த எழுத்து ஆர்வமே ஒரே நற்சான்ருகப் பத் திரிகாலயத்தில் பணிபுரியப் புகுந்த அன்றெல்லாம் தமிழ்த் தாய்க்கு அடுத்தபடி பெற்றவள் வளர்த்தவளாக ஒரு தாய் என்கூட இருந்தாள். மற்றும் தாயாதிகளும் தமர் சுற்ற முமாய் என்தாயும் தந்தையுமாய், ஈசனுமாய் அவர் கூட ஒரு பாட்டியுமிருந்தாள். இரு பேருமே முதலாம் இரண் டரம் உலகப் போர் இரண்டிஃனயும் கண்டும் கேட்டும் உற்றும் உணர்ந்தும் தீர்க்காயுளுடனே வாழ்ந்திருந்தவர்கள். இன்றைக்கெல்லாம் நம்மூருக்குள்ளாகவே மூன்ரும் உலகட் போராகவே ரணகளப்படும் பயங்கரத்தையும் கூட அதன் தொடக்க நாள் முதலே அதன் வருநாள் விசுவரூபம் மனதுக்குள்ளாகக் கணித்து அதற்குரித்தான போர்ப் பறையும் முரசு முழக்கமுமாக அதைக் கேட்டிருந்து அண் மித்த காலம் வரை உயிர்த்துடிப்பு நின்றுவிடாமல் தற் காத்துக் கொண்டவர்கள்தாம்.
ஜெர்மன் சண்டை என்று பெயர்பெற்ற முதலாம் உலகப் போரின் பொல்லாங்கு என்றதெல்லாமே தவிர்த்து அத்தனைக்கும் ஒதுங்கி ஒடுங்கி அந்நாள் சூழ்ந்து வளைத்த கெடுபிடி கேடு துன்பம் துயர் அனைத்திலும் தோய்ந்து திளைத்துத் தலை நிமிர்ந்தெழுந்த கலங்காத சித்தத்தினராகத் தாயும் மகளும் ஒரு கால் நூற்ருண்டுகளுக்குள்ளாக மறு காலும் புவி அதிர வெடித்த இரண்டாம் உலகப் போர் ஒன்றினையும் மனம் ஒறுத்து "வரவேற்று' அது தோற்று வித்த பொல்லாத் தீதனத்தையும் நெருக்கடிகளையும் *எல்லாம் தெய்வ சித்தம்" என்றே ஏற்று வானம் துளங் கிகிலன் மண் கம்பமாகிலென் தானம் துளங்கித் தடுமா றிலென்! என்று மெய்யடியார் சங்கம் முழங்கினுற் போல் இனிதே வாழ்வாங்கு வாழ்ந்திருந்தார்கள்.

vii
வல்லரசு ஆதிக்கக்கொடி நம் நாட்டில் பறந்த புண்ணிய வசமாக வாராந்தம் அரைப்படியும் காற்படியுமாய் அருளப் பெற்ற அரைவயிற்று கால்வயிற்றுக் கஞ்சியில் - அதற்குரிய தான தான்ய நிதியத்தில் சமர்த்தாக இனிதுரண் ஆக்கி "நம்மாத்திலே பல்லாண்டுகளுக்குப் பின் பசுமை துளிர்த் தாற் போல் அரிதானதொரு நல்வரவும் புதுவரவுமாய்த் தோற்றி ஓடிவிளையாடிய சின்னப்பயலுக்கும் எனக்குமாய் அதனைப் பகிர்ந்தளித்துவிட்டு அதற்குமேல் எஞ்சியதாய் கையில் ஒட்டிய மாவையும் மண்ணையும் வாயில் போட்டு அதளுேடு தண்ணிரையும் காற்றையும் உட்செலுத்தி எப் படியோ வயிற்றை ரொப்பி இறைவனைத் தியானித்துக் கொண்டே உறங்கி எழுந்தார்கள்.
இன்றைக்கெல்லாம் அவ்விருபேருமே என்கூட இல்லே. உலக வாழ்வுச் சிறைக் கூண்டிலிருந்து விடுதலே பெற்றுப் பறந்தோடி மறைந்தேகினர்.
இருபேரும் சில ஆண்டுகள் - சில காததுரரம் முன்னும் பின்னுமாக எங்கோ ஒரு கரை ஒதுங்கி அங்கங்கு அந்தந்தக் கலங்கரைக் சேர்வில் தரித்து நின்று விட, காகித ஒடம் அவர்கள் இல்லாமலே மீண்டும் அதன் வழியே .
ஒடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே .
அந்த ஒருத்தி யார், சொல்லுங்கள் பார்க்கலாம். கதை எழுதுகிறவர் மனங் கலங்காமல், கண்கள் பணித் திடாமல், மனதுக்குள்ளாகத் திருவருளை வேண்டித் துதித்து வழிபட்டுக்கொண்டு எங்கே சமர்த்தாகச் சொல்லுங்கள் பார்க்கலாம், என்னருமை நேயர்களே!
எந்நாளும் என் நன்மதிப்புக்குரிய இலக்கிய நண்பர் களும், அரச நிர்வாக மேலவர்களும் கற்றறிந்த யாழ். பல்கலேக் கழகப் பேராசான்களும் துணைவேந்தரும் நம்மவ ரான ஓவியக் கலைஞர் ஒருவரும் கூடப் பெரிதளவினதாகவே

Page 7
viii
உழைப்பும் உயிர்ப்பும் ஊட்ட யாழ் மாவட்டக் கலாசாரப் பேரவையின் இதயம் கனிந்த சண்பகமும் சம்பங்கியுமாக இந்நூல் அரிதாக மலர்ந்து மணம் பரப்பும் என்று அது சேதி தெரியவந்த போது தலையும் காலுமாய் எழுந்து குதித்தாடினேன் என்றே சொல்லலாம்.
அல்லியங் கோதை மாதர் அன்பொடு வளர்த்த மூல்லை மெல்ல ஒர் அரும்பு ஈந்து சிலிர்த்து நிற்ப, அம் மென் னரும்பு சண்பகமும் சம்பங்கியுமாகத் திவ்ய மணம் பரப்பும் விந்தைத் திறனை அதன்பால் சாதித்திட இவ்விதமாக மன மார உளமார உவந்து உபகரித்திட்ட நல்லோர் நயத்தக்கார் தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டு இங்கு அமரர் சிறப்பு எய்திய மேலவராய் என்றும் அமரவாழ்வின் சிறப்பு அகத்தும் பெற்று இல் புற்று வாழ்வராக
அவர் தம் பணியும் ஓங்கி வளர்வதாக !

சமர்ப்பணம்
sæso
கருவேல மரத்தைச் சுற்றிப் படர்ந்தது காட்டு மல்லிகை
%ங்கு கவிந்த தண் நிழலில் கவரி வீசிணுற்போல் " . குளுவென நம்மேனி வருடியதொரு மென் காற்று பலரின் திவ்ய சுகந்தத்தினையும் சுமந்து வந்து
ஒரு சிவப்பு ரோஜா மலர, கோகிலப்புள் ஒன்று நன் இன்னுயிர் ஈந்து கூவி மாய்கிறது
சஞ்சிவிக் குன்றத்தின் சாரலோ?
உள்ளமெனும் பசும்புற் பாய்மீதே ஒரு கோடி நல்முத்து, பவள மணிகள் நாள் பூத்த நன்மலர்கள் கள்ளமிலா எண்ணக் கரங்களிளுல் ஆங்வொன்ருய் எடுத்தடுக்கிப் புனைந்து டி ரு நற்கருணை வாசக மாலேயதாய்
1). Реал , நாளும் நெஞ்சங் குலவி இன்புற்று ான்னகத்தே அரசோச்சும் நேயர் om fG செஞ்ஞாயிற்றுச் சேயோன் ஒருவன்

Page 8
X
கண்டுச் சுவையாய், கன்னற் பாகாய் கண்ணுமாய், கண்விழிச் செல்வமுமாய்த் திகழ்ந்து ஒளிர்ந்தாள் ஒரு செல்வக்கண்ணு ஆச்சி அவர் அன்புத்தமிழ் இதயத்தின் அழியா நினைவாக அன்னதொரு ஆயி கதிராயி மாரி மகமாயித் தாயன்பும் தவிப்பும் தணியாத் துடிதுடிப்பும் வாழ்விக்கும் வாஞ்சையுமாய் நாளும் என்புருகத் தியானித்து அது நினைவைக் கண்ணிரால் காத்து கரக்குவித்து, சிரம் தாழ்த்தி, சமர்ப்பிக்கும் பூஜா மலர்கள் புஷ்ப திரவியங்கள் மற்றும் கேழில் விழுப்பொருள்கள் அத்தனையுமாம் இவை,
தூபதிய ஆராதனைகளுடன் "முத்துச் செல்வம்", அ. செ. மு.
அளவெட்டி வடக்கு, அளவெட்டி.

அணிந்துரை
துணைவேந்தர், பேராசிரியர், கலாநிதி சு. வித்தியானந்தன்
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்
ஈழத்தின் தமிழ்ச் சிறுகதை ஏறத்தாழ ஐப்பதாண்டுக் கால வரலாறுடையது. 1930 ஆம் ஆண்டுகளின் பிற் பகுதியில் இலங்கையர்கோன், சம்வந்தன், சி. வைத்திலிங்கம் ஆகியோர் இத்துறையில் முதல் முயற்சிகளை மேற் கொண்டனர். இம்முதல் மூவரை அடுத்த இரண்டாவது தலைமுறையொன்று 1940 ஆம் ஆண்டுகளின் தொடக்கத் திற் சிறுகதைத் துறையிற் கவனம் செலுத்தத் தொடங் *)и 1,5] . இவ்விரண்டாம் காலகட்ட எழுத்தாளர்களில் இன்றும் எம்முடன் வாழ்பவர்களில் முக்கியமான ஒருவர் அ. செ. முருகானந்தம் அவர்கள். அவர் எழுதிய பெருத் தொகையான சிறுகதைகளில் இருபத்து நான்கு கதைகள் மனிதமாடு என்ற தலைப்பில் இந்நூல் வடிவம் பெறுகின்றன.
1921 ஆம் ஆண்டிலே மாவிட்டபுரத்தில் பிறந்த முருகானந்தம் அவர்கள் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி யிற் பயின்றவர். மஹாகவி, அ ந கந்தசாமி ஆகிய படைப் ப1ளிகளின் இலக்கியச் சூழலில் வாழ்ந்தவர். ஈழகேசரி, மறு மலர்ச்சி. சுதந்திரன், வீரகேசரி, ஈழநாடு முதலிய பத்திரிகை களினூடாக இலக்கியப்பணி செய்தவர். எரிமலை என்ற பத்திரிகையைச் சில காலம் வெளியிட்டவர். இவரது படைப்புகளில் புகையில் தெரிந்த முகம் என்ற குறுநாவல்

Page 9
xii
மட்டுமே இதுவரை தூல்வடிவம் பெற்றது. இப்பொழுது இச்சிறுகதைத் தொகுதி வெளிவருகின்றது. இத்தொகுப் பின் முக்கியத்துவம் பற்றியும் இதில் இடம் பெற்றுள்ள கதைகளின் தகுதி பற்றியும் கணிப்பதற்கு ஈழத்துச் சிறு கதை வரலாற்றில் அ. செ. மு. காலகட்டத்தின் போக்கை யும் அ. செ. மு. சார்ந்து நின்ற இலக்கிய அணியையும் நாம் கவனத்திற் கொள்ளவேண்டும்.
ஈழத்துச் சிறுகதையின் முதல் மூவர் எனப்படும் இலங் கையர்கோன், சம்பந்தன், சி. வைத்திலிங்கம் ஆகியோர் தமிழ் நாட்டு மணிக்கொடிக் குழுவினரின் இலக்கிய ஆளுமையாற் கவரப்பட்டும், மேலை நாட்டுச் சிறுகதை களாற் பாதிக்கப்பட்டும் சிறுகதைகள் படைத்தோராவர். புராண இதிகாச நிகழ்ச்சிகள், வரலாற்றுச் சம்பவங்கள், மனிதரின் மென்மையான உணர்வுகள், உணர்ச்சிப் போராட்டங்கள் முதலியவற்றை அடிப்படைகளாகக் கொண்ட கதைக் களுக்களுக்கு இவர்கள் சிறுகதை வடிவம் தந்தனர். இவர்களது கதைகளிற் கலையழகு காணப்பட் டாலும் ஈழத்து மண்ணே களமாக அமைந்திருந்தாலும் ஈழத்துத் தமிழ் மக்களுக்கே சிறப்பாகவுரிய பிரச்சினைகளை நோக்கும் பண்பு காணப்படவில்லை. இலங்கையர்கோன், வைத்திலிங்கம் ஆகியோர் கதைகளில் ஈழத்துத் தமிழரின் சமூக உணர்வு சிறிதளவு புலப்படுகின்றதெனினும் ஆழ மாகப் புலப்படவில்லை. இந்த நிலையிலிருந்து குறிப்பிடத் தக்க அளவு மாறுபட்டு ஈழத்து மக்களின் வாழ்க்கையை மண்வாசனையுடனும் சமூக உணர்வுடனும் படைக்க வேண்டும் என்ற ஆர்வம் தலைதூக்கிய காலகட்டமே அ. செ. மு. அவர்கள் சிறுகதையுலகிற் புகுந்த கால கட்ட மாகும். இக்காலகட்டம். ஈழத்து நவீன தமிழிலக்கிய வரலாற்றில் மறுமலர்ச்சிக் காலகட்டம் எனக் கொள்ளப் படுகின்றது.
மறுமலர்ச்சிக் காலகட்டம் என்பது 1940-50 காலப் பகுதியைக் குறித்து நிற்பது. இக்காலப் பகுதியில் மறு மலர்ச்சிச் சங்கம் என்ற பெயரில் ஒர் இலக்கிய இயக்கம் உருவாகியது. இவ்வியக்கத்தை உருவாக்குவதில் முன்னின்று

xiii
செயற்பட்டவர் என்ற வகையில் அ. செ. மு. குறிப்பிடத் நக்க பணியாற்றியவர். காலஞ் சென்ற கனக. செந்தி நாதன் அவர்களும் இப்பொழுது எம்மத்தியில் வாழும் பழம்பெரும் எழுத்தாளரான தி. ச. வரதராசன் (வரதர்) அவர்களும் வேறு பல எழுத்தாளர்களும் இணைந்து செயற் பட்ட இவ்விலக்கிய இயக்கம் 1943-46 காலப் பகுதியிலே தீவிரமாக இயங்கியது; மறுமலர்ச்சி என்ற சஞ்சிகையையும் வெளியிட்டது.
இலக்கியமானது சமூகத்துக்குப் பயன்படுவதாகவும் சமூக பண்பாட்டு அம்சங்களின் பதிவேடாகவும் அமைய வேண்டும் என்ற கருத்துநிலை மறுமலர்ச்சிச் சங்கத்தின ரிடம் நிலவியது. இலக்கியத்தின் சமுதாயப் பயன்பாடு தொடர்பாக அவர்கள் கொண்டிருந்த கருத்து நிலையை விளங்கிக் கொள்வதற்கு அ. செ. மு. அவர்கள் 1942 ஆம் ஆண்டு ஈழகேசரி இதழொன்றில் (17-05-1942) தமிழில் கதை இலக்கியம் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை இங்கு நோக்கலாம் :
'..தமிழிலுள்ள கதை இலக்கியத்தில் இப்போது காணப்படும் முக்கிய குறை இதுதான். அதாவது இலட்சியக் கதைகள், சீர்திருத்தக் கதைகள் மிகவும் குறைவு. அத்தியாவசியமாக வேண்டப்படுவனவும் அவைதாம். பொழுதுபோக்குக் கதைகள் போது மென்றபடி ஏராளமாகச் சேர்ந்துவிட்டன. இனி அவற்றுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு எமது நாட்டை அப்படியே தூக்கிக் காட்டும் தேசத்தின் வறுமை, துன்பம், அரசியல் நிலைமை முதலியவற்றை உணர்ச்சியூட்டக் கூடிய முறையில், மாற்றக் கூடிய முறையிற் சித்திரிக்கும் இலட்சியக் கதைகள் பெருக வேண்டும், "'
இவ்வாறு அ. செ. மு. அவர்கள் தெரிவித்துள்ள கருத்து
நிலையே அவரது கதைகளின் இயல்பையும் போக்கையும்
கண்டுணர்வதற்குப் பொருத்தமான அடித்தளமாக அமை
iii

Page 10
Χίν
கின்றது. இத்தொகுதியிலுள்ள கதைகளிற் குறிப்பிடத் தக்க தொகையின மேற்படி நோக்கத்திற்குப் பொருந்து
வனவாக உள்ளன எனலாம்.
இத்தொகுதியின் தலைப்பைத் தந்து நிற்கும் "மனித மாடு" என்ற கதை 'ரிக்ஷா வண்டியோட்டிப் பிழைக்கும் ஏழை முதியோனின் அவல விவரணமாகும்; மனித மாடாக உழைக்கும் அவனது உழைப்புக்கேற்ற கூலி தராத ஒருவர் அவன் அவல மரணம் எய்தியபோது கழி விரக்கமும் குற்ற உணர்வும் கொள்வதை இக்கதையிற் காணலாம். இக்கதை தமிழகத்தில் "அல்லயன்ஸ் கம்பெனி' யார் வெளியிட்ட கதைக் கோவையில் இடம்பெற்று அ. செ. மு. வுக்குப் புகழீட்டிக் கொடுத்ததாகும். 'எச்சில் இலை வாழ்க்கை" என்ற கதை பசிக் கொடுமை காரணமாக எச்சில் இலைக்காக நாய்களுடன் போட்டியிடும் ஒரு சமூகத் தைக் காட்டுகிறது, " விளம்பர வாழ்வு’ என்ற கதை ஒரு பிரதேசத்திலே ஒரு சமூகம் தண்ணிர்த் தாகத்திலே தவிக்க, இன்னெரு சமூகம் தண்ணிரை வீண் விரயம் செய்யும் முரண்பாட்டைத் தொட்டுக் காட்டுவது. ‘வெயி லும் மழையும்’ என்ற கதை தாழ்ந்த சாதிப் பெண் உயர் சாதிக் குழந்தைக்குப் பாலூட்டும் கதை. மாடு சிரித்தது", ஒரே ஒரு வோட்’ ஆகிய கதைகள் தேர்தற் காலத்தில் நிகழும் "தில்லுமுல்லுகளைச் சித்திரிப்பன. காளிமுத்து வின் பிரஜாவுரிமை' என்ற கதை குடியுரிமை பறிக்கப் பட்ட மலையக மக்களது அவல நிலையின் சித்திரமாகும். "தந்தை மொழி என்ற கதை தமிழர் சிங்களவர் என்ற இனப்பிரச்சினைப் பின்னணியில் எழுதப்பட்டது.
இவை தவிர ஏனைய கதைகள் பொதுவாகக் காதல், கலையுணர்வு, நகைச்சுவையுணர்வு, சமயவுணர்வு முதலிய அடிப்படைகளில் அணமந்தன. ‘அம்பிகை சந்நிதியில்","காதற் பைத்தியம்’, ‘இன்னமும் சோதனையா?, "தளரா வளர் தெங்கு என்பன காதற் கதைகள், ‘கலைஞனின் சொர்க்கம்", ‘நேற்று இன்று வந்த உறவல்லடி ஆகிய கதைகள் நாதஸ் வரக் கலைக் குடும்பச் சித்திரங்கள். ‘அம்பிகை சந்நிதியில் என்ற கதையும் இத்தகைய ஒரு கலேக் குடும்பத்தில்

Xw
அமைந்ததேயாகும். 'பாடுபட்டுத் தேடி" என்ற கதை பணம் சேர்க்கும் ஒரு குடும்பம் அதைக் கொள்ளை கொடுத்து அடையும் அவலத்தை நகைச்சுவையுணர்வுடன் வெளிப்படுத்துகிறது. ‘ஏழை அழுத கண்ணிர்" என்ற கதை திக்கற்றவர்களுக்குத் தெய்வம் துணை என்ற சமய நம் பிக்கை அடிப்படையில் அமைந்தது. ‘வெளிச்சம்" என்ற கதை ஆலயத்துக்கு மின்விளக்குப் பொருத்துவதை ஏற்காத ஒரு காலகட்ட நிலையைப் புலப்படுத்திநிற்கிறது.
இவ்வாறு அமையும் மேற்படி கதைகளினூடாக அ. செ. மு. அவர்கள் தமது காலகட்ட சமுதாயத்தின் பல்வேறு பிரச்சினைகளையும் பண்பாட்டம்சங்களையும் பதிவு செய்ய முயன்றுள்ளார். சமூகப் பிரச்சினைகள் என்ற வகையிற் பொருளாதார ஏற்றத்தாழ்வும் இனப்பிரச்சினை என்ற வகையில் குடியுரிமைப் பறிப்பும் அவர் கதை களுக்குப் பொருள்களாக அமைந்துள்ளன. சாதி ஏற்றத் தாழ்வு, மொழியுரிமை என்பவற்றின் சாயலும் அவரது சில கதைகளிற் புலணுகியுள்ளன. மேற்படி பல்வகைப் பிரச்சினைகள் தொடர்பாகவும் அ. செ. மு. தீர்வுகள் எதனையும் முன் வைக்காதபோதும் மனிதநேய அடிப்படை யில் தமது விருப்பு வெறுப்புக்களை ஒரு கலைஞனுக்குரிய உளப்பாங்கோடு வெளிப்படுத்துகிருர், நாதஸ்வரக் கலைக் குடும்பக் கதைகளில் பண்பாட்டுப் பதிவு பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது. பொதுவாக ஒரு விவரணத் தன்மையும் மெல்லியதாக ஒரு நகைச்சுவையுணர்வும் இவரது கதைகளில் ஆங்காங்கே புலப்படுகின்றன.
w
இத்தொகுப்பில் அமைந்த இக்கதைகள் 1941 தொடக் கம் 1980 வரையான நாற்பதாண்டுக் காலப்பகுதியில் எழுதப்பட்டன. பல்வேறு கால கட்டங்களில் எழுதப்பட்ட இக்கதைகள் யாவும் உருவ அமைதியிற் சிறந்தன என்று கொள்வதற்கில்லை. ஏனெனிற் சிலவற்றில் விவரணப் பண்பும் கட்டுரைப் பாங்கும் உண்டு. "அருவியின் அழைப்பு’, பசுந்தளிர்" என்னும் தலைப்புக்களில் அமைந்த கதைகள் இத்தகையனவே. பத்திரிகைத் துறையில் பணி புரிந்தமை காரணவாக அவரது கதைகளில் இப்பாதிப்பு நேர்ந் நிருக்கலாம்,

Page 11
xvi
நூற்றுக்கு மேற்பட்ட கதைகளை எழுதியுள்ள அ. செ. மு. வின் மேற்படி இருபத்து நான்கு கதைகளையும் தொகுத்து நோக்கிப் பார்க்கும்போது ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் இதுநாள் வரை நிரப்பப்படாதிருந்த ஒரு பகுதி நிரப்பப்படுவதை உணர முடிகிறது. பொதுவாக ஈழத்துச் சிறுகதை வரலாறு எழுதுபவர்கள் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தோற்றத்துடனே:ே (1946 இன்பின்) சமூகப் பார்வையுள்ள படைப்புக்கள் எழுகின்றன என்று கருதுவதுண்டு. அன்றியும் அவர்க ளுக்கு முற்பட்ட மறுமலர்ச்சி எழுத்தாளர்களே,
"கனவுலகின் மயக்கத்திலே "மின்னலோடு
உரையாடவும் தென்றலோடு விளையாடவும்" விரும்பிய மறுமலர்ச்சி இலக்கிய கர்த்தாக்கள்"
என ஈழத்து விமர்சகரொருவர் கணித்துள்ளார். (க.கைலாச பதி, புதுமை இலக்கியம். மாநாட்டு மலர்-1962, ப. 7) இக்கணிப்புக்கள் எவ்வளவு தவருனவை என்பதை நிறுவு வதற்கு அ. செ. மு. அவர்களின் இத்தொகுப்புப் பயன் பாடுடையதாகிறது,
அ. செ. மு. அவர்கள் மிகவும் வறிய நிலையில் வாழ் பவர். அவரால் இத்தகையதொரு நூலாக்க முயற்சியை மேற்கொண்டிருக்க முடியாது. யாழ். மாவட்டக் கலா சாரப் பேரவையின் முயற்சியாலேயே இத்தோகுப்பு வெளி வருகிறது, அப்பேரவையின் இப்பணி விதந்து பாராட்டப் படுவதற்குரியது. இத்தகைய பணிகளை அது தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். ஈழத்துச் சிறுகதையின் முதற் பரம்பரையினரான சம்பந்தன், சி. வைத்திலிங்கம் ஆகியே! ரது கதைகளும் பின்னர் எழுதிய அ. ந. கந்தசாமி அவர் களின் படைப்புக்களும் இற்றைவரை நூல்வடிவம் பெற்றில. அவை நூல்வடிவம் பெறுவது இலக்கிய வரலாற்றுத் தேவையாகும். எனவே யாழ் மாவட்டக் கலாசாரப் பேரவை தொடர்ந்து இத்தகைய கலாசாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும், இவ்வாறு மேற்கொள்வதற்கு ஊக்க சக்தியாக வாசகர்கள் இவ்வெளியீட்டை ஆதரித்து வரவேற்பார்களாக,

பதிப்புரை
திரு. வெசரவணபவன் (சிற்பீ) உறுப்பினர், தமிழிலக்கியக் குழு, யாழ். மாவட்டக் கலாசாரப் பேரவை.
யாழ்ப்பாண மாவட்டத் தமிழ் பேசும் மக்களின் கலாசார மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு இலக்கியம், நடனம், நாடகம், இசை, சிற்பம், ஓவியம், கிராமியக் கல, நாதசுரம், தவில், சமயம், தொலைக்காட்சி, புகைப் படம், திரைப்படம் , தோல்பொருட்கலை முதலியவற்றை வளர்க்கவும் இத்தகைய துறைகளில் ஈடுபட்டுள்ள எழுத் தாளர்களையும் கலைஞர்களையும் ஊக்குவிக்கவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசிப்பதற்காக யாழ். மாவட்ட அரச அதிபர் திரு. வை. மு பஞ்சலிங்கம் அவர்களின் தலைமையில் யாழ் செயலகத்தில் கலைஞர்கள், ! வாழத்தாளர்கள், இரசிகர்கள் கலந்து கொண்ட கூட் டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி யாழ்ப்பாண மாவட்டக் கலாசாரப் பேரவை உரு வாக்கப்பட்டது. பேரவையின் பதினெரு உப குழுக்களுள் ஒன்ருண இலக்கிய உப குழுவின் உறுப்பினராகத் திரு. டொமினிக் ஜீவா (ஆசிரியர், மல்லிகை, யாழ்ப்பாணம்.), இரு மயிலங்கூடலூர் பி. நடராசன் (பொறுப்பாளர், நல்லூர்க் கல்வி வட்டாரக் கல்வி வள நிலையம், இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம்), திரு. சி. சிவசரவணபவன் (அதிபர், யா. வைத்தீஸ்வர வித்தியாலயம், யாழ்ப்பாணம்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

Page 12
xviii
யாழ் மாவட்டத்திலுள்ள எழுத்தாளர்களை அழைத்துக் கலந்துரையாடிய இலக்கியக் குழு, 1986 - 1987 ற்கான செயற்றிட்டத்தைத் தயாரித்துக் கலாசாரப் பேரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
பழம்பெரும் எழுத்தாளர்களான அ.செ. முருகானந்தன், க. தி. சம்பந்தன், சி. வைத்தியலிங்கம், அமரர் அ. ந. கந்தசாமி ஆகியோரின் சிறந்த சிறுகதைகளைத் தெரிவு செய்து அவற் றைத் தனித்தனித் தொகுதிகளாக வெளியிடுதலும் எழுத் தாளர் விபரக் கொத்து ஒன்றை வெளியிடுதலும் திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும். -
கலாசாரப் பேரவையின் முதலாவது வெளியீடாக திரு. அ. செ. முருகானந்தன் அவர்களின் மனிதமாடு என்ற இந்தச் சிறுகதைத் தொகுதி மலர்கின்றது.
O o Ο OO OO OO
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை முன்னேடிகள் என்ற பெருமைக்குரியோர் சி. வைத்தியலிங்கம், அமரர் இலங்கை யர்கோன், க. தி. சம்பந்தன் ஆகிய மூவர், ஈழகேசரி வாயி லாகத் தமிழ் இலக்கிய உலகிற் கால்பதித்த இவர்கள், ஈழத்திலும் தமிழ் நாட்டிலும் வெளியான தரமான சஞ் சிகைகளிலும் பத்திரிகைகளிலும் தமது ஆக்கங்களை வெளி யிட்டுத் தமிழ்த் தாயை அணிசெய்து தாமும் புகழ் சேர்த்தனர். தலைசிறந்த தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப் புக்களான கதைக்கோவை (அல்லயன்ஸ் கம்பணி, மைலாப் பூர், சென்னை), "ஈழத்துச் சிறுகதைகள்’ (தமிழருவிப் பதிப்பகம், சுன்னகம்) ஆகியவற்றில் இவர்களுடைய சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவர்களை அடியொற்றி இலக்கியஞ் செய்ய விழைந்த இளைஞர் சிலர் 1943 ஆம் ஆண்டிலே யாழ்ப்பாணத்தில் மறுமலர்ச்சிச் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி மறுமலர்ச்சி மாத இதழையும் வெளி யிட்டனர். மறுமலர்ச்சிச் சங்கத்தின் தலைவராகவும் ԼDց மலர்ச்சி இதழின் இணையாசிரியராகவும் பணி புரிந்தவர் திரு. அ. செ. முருகானந்தன்.

xix
பழைமையின் நல்ல அம்சங்களை உள்வாங்கிக்கொண்டு, அவற்றை அடித்தளமாக்கிப் புதுமை புனைந்த அ செ. மு. நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை ஆக்கியுள்ளார். அவற் றுட் பல, உருவத்தாலும் உயிரான உள்ளடக்கத்தாலும் நடையாலும் நகர்த்தும் சம்பவங்களாலும் சிறப்புப் பெற்றவை.
வெவ்வேறு உத்திகளைக் கையாண்டு சுவையாகக் கதை சொல்லும் அவர், பிரசார வாடை சிறிதும் இன்றி, அழகான உண்மைகளே மிக நளினமாக வாசகர் நெஞ்சிற் பதித்து விடுகிருர், சாதாரணமான சம்பவங்கள், அவர் சொல்லும் முறையால் இலக்கியமாகின்றன. அவருடைய தமிழ் நடை தெளிவான இலகு நடை, தேவையான இடல் களில் அவர் கையாளும் பேச்சுத் தமிழ் அதற்கு உயிரூட்டு கின்றது; இலக்கியத் தொடர்களும் அளவான பிறமொழிச் சொற்களும்மெருகூட்டுகின்றன. மெல்லிய நகைச்சுவையும் "நாசூக்கான கிண்டலும் இடையிடையே உண்டு; தனித்துவம் மிக்க அவருடைய வர்ணனைகள், அழகுமயிலின் ஆனந்த நடனமாய்க் கதைகளுக்கு எழிலூட்டுகின்றன. கதைகளில் வீசும் கிராமிய மணம் வாசகர்களை இதமாக வருடுகின்றது.
ஈழகேசரி, மறுமலர்ச்சி, கிராம ஊழியன், எரிமலை, நவ ஜீவனம், சுதந்திரன், வீரகேசரி, தினகரன், ஈழநாடு, சிந்தா மணி, மாருதம், விவேகி, புதிசு, சிலம்பொலி முதலிய பத் திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் அவருடைய சிறு கதை கள் வெளிவந்துள்ளன. கதைக் கோவையில் மனித மாடு சிறுகதையைச் சேர்த்ததன் மூலம் தமிழ் கூறும் நல்லுலகு அ. செ. மு. வின் இலக்கிய ஆற்றலையும் ஆளு மையையும் அன்றே அங்கீகரித்துவிட்டதெனலாம்.
தமது இலக்கிய சிருஷ்டிகள் மூலம் ஈழத்தின் புகழை ஓங்கச் செய்த அ. செ. மு. அவர்களின் சிறுகதைத் தொகுதியொன்றை வெளியிடுவதற்கு இலங்கைத் தமிழ் ாழுத்தாளர் சங்கம் பல்லாண்டுகளுக்கு முன்னர் முயற்சி கர்ள மேற்கொண்டது; ஆஞல் அவை பலனளிக்கவில்லே.

Page 13
ΧΣ.Κ.
அ. செ மு. அவர்களின் மணிவிழாவையொட்டி மீண்டும் ஒரு முயற்சி அவருடைய நண்பர்களால் மேற்கொள்ளப் பட்டது; அதுவும் கைகூடவில்லை. இத்தொடர்பில் யாழ்ப் பாண மாவட்டக் கலாசாரப் பேரவையின் இலக்கியக் குழு எடுத்த முயற்சியே இன்று வெற்றியைத் தரிசிக்கின்றது; மனித மாடு எழிலோடு மலர்கின்றது.
இலக்கியக் குழுவினர் முன்வைத்த முதலாவது செயற் றிட்டத்தை அங்கீகரித்து இலக்கிய நெஞ்சங்களின் நீண்ட காலக் கணவு நனவாக வழி சமைத்தோர் யாழ். அரச அதிபர் திரு. வை. மு. பஞ்சலிங்கம் அவர்களும் அவர்களின் தலைமையில் இயங்கும் யாழ் மாவட்டக் கலாசாரப் பேரவை யினரும் பேரவையின் செயலதிபரும் உதவி அரசாங்க அதிபருமான திரு. ச. பொ. பாலசிங்கம் அவர்களுமாவர்.
சிறுகதைகளை வாசித்தபோது தாம் அடைந்த இனி ! அநுபவங்களை நயம்படவுரைத்து இத்தொகுதியை அ ை செய்கின்ருர் யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேரா சிரியர் சு. வித்தியானந்தன்.
கோண்டாவில் இந்து மகா வித்தியாலய அதிபரும் பிரபல எழுத்தாளருமான சொக்கன், அ. செ. மு. அவர் களின் பன்மு கப்பட்ட இலக்கியப் பணிகளை விவரித்து விமர்சிக்கின்ருர், கதைகளைத் தேர்வதிலும் அச்சுப் படி களேத் திருத்துவதிலும் அவர் பெரிதும் துணைநின்முர்,
அ. செ. மு. அவர்கள் தமது கதைகள் வெளிவந்த ஏடுகளை, 'நூல் வெளியிடப் போகிழுேம், தாருங்கள்" என்று கேட்டவர்களுக்கு வரையாது வழங்கி வறிஞரானர். எனினும் தம்மிடமிருந்த ஈழநாடு இதழில் வெளியான சில நல்ல சிறுகதைகளை எமக்குத் தந்துதவிஞர். •
கதைகளை ஈழகேசரியிற் பிரதி செய்ய முயன்றபோது குரும்பசிட்டி சன்மார்க்க சபையினர், சிறப்பாக திரு. மு. சபாரத்தினம், திரு. த. இராசரத்தினம், திரு. ஏ. ரி. பொன் னுத்துரை, திரு. வி. ச. சுப்பிரமணியம் ஆகியோர் காலத் துக்குக் காலம் செய்த உதவி அளப்பரியது. இவ்வகையில்

ΧΧί
அ. செ. மு. வின் சக பாடியும் பத்திரிகையாளருமான தேல்லி பூர் செ. நடராசன் வழங்கிய ஒத்துழைப்பும் குறிக்கத்தக்கது. யாழ். இலக்கிய வட்டச் செயலர் திரு.ச. பத்மநாதன், பிரபல எழுத்தாளர் திரு. எஸ் அகஸ்தியர், திரு இ. பத்மநாப ஐயர், கலாநிதி நா. சுப்பிரமணியம் ஆகியோர் செய்த உதவி
யும் மறத்தற்கரியது.
மறுமலர்ச்சிக் கால முன்னுேடிகளில் ஒருவர் திரு. ச பஞ்சாட்சர சர்மா: அ. செ. மு. அவர்களின் பின் வரதர் அவர்களுடன் மறுமலர்ச்சி இதழ் இணையாசிரியராய் இருந் தவர். அவர் மறுமலர்ச்சிப் பிரதிகளைத் தந்துதவினர்.
பத்திரிகைப் பரவையுள் அ செ. மு. வின் கதை முத் துக்கள் மூழ்கியிருந்தன. கடலில் மூழ்கிக் கதை முத்துக்களை ஒவ்வொன்ருகத் தேடிக் கண்டெடுத்து, பொறுமையோடு அவற்றைப் பிரதி செய்து தந்த பெருமை மூவர்க்குரியது. செல்விகள் சுரநுதா சுப்பிரமணியம், நாமகள் பரநிருபசிங்கம், திருமகள் பரநிருபசிங்கம் ஆகியோரே அம்மூவர். அ. செ. மு. வின் கதை முத்துக்களுள் கிடைத்தவை அனைத்தையும் பிரதி செய்து, அவற்றுள் தரமுயர்ந்தவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து வெளியிடும் முயற்சி இவர்களின் துணை யின்றிச் சாத்தியமாகியிருக்காது என்பது மிகையல்ல.
கதைகளைத் தேர்ந்தெடுக்கும் கடினமான பணியினை இலக்கியக் குழுவுடன் இணைந்து துணைவேந்தர் சு. வித்தி பானந்தன், பேராசிரியர் அ. சண்முகதாஸ், கலாநிதி வி. மெளனகுரு, திரு. எஸ். திருச்செல்வம் ஆகியோர் சிறப் பாக நிறைவேற்றியுள்ளனர். இவர்களுள் பேராசிரியர் அ சண்முகதாஸ் அவர்களது அயரT உழைப்பினுலும் செயற்பாட்டினுலுமே இந்நூல் மிகக் குறுகிய காலத்தில் கலாசாரப் பேரவை-இலக்கியக் குழுவின் வெளியீடாக மலர்ந்துள்ளது என்பது இங்குக் குறிப்பிட்டுக் கூறப்பட வேண்டியதாகும்.
கதைகளைத் தேடிப் பெறுதல், அவற்றைத் தெளிவாகப் பிரதி செய்தல் ஆகியவற்றை ஊக்குவித்ததோடு, அச்சுப்
ν

Page 14
XXii
படிகளை ஒப்பு நோக்குதல் முதலிய ஒவ்வொன்றையும் தம் சொந்த வேலையாகக் கருதி அயராது பாடுபட்டு இச்சிறு கதைத் தொகுதி இத்துணைச் சிறப்பாக வெளியாவதற்குக் காரணர் மயிலங்கூடலூர் பி. நடராசன், .ܶܐ
தேர்ந்தெடுத்த கதைகளை இத்தொகுதியிற் சேர்ப் பதற்குத் திரு. அ. செ. மு. அவர்களிடம் அநுமதி கோரிய போது, அதை அளித்துடன், நூலாக்கம் சம்பந்தமான பயன்மிக்க ஆலோசணைகள் பலவற்றை வழங்கியும் அவர் எம்மை உற்சாகப்படுத்தினர்; நாம் கேட்டுக் கொண்டதற் கிணங்கத் தம் கருத்துக்களே ' என்னுரை' யாக்கியும் தந்தார்.
புகழ்பெற்ற ஒவியரான திரு. வீ. கனகலிங்கம் (வீ. கே.) அட்டைப் படத்தை அழகாய் வரைந்துள்ளார், அதைக் கலைநுணுக்கத்துடன் "ஆப் செற் புளக்காக்கியுள்ளார் தவம் அவர்கள், குறைந்த செலவிலும் குறுகிய காலத் திலும் "புளக் தயாராவதற்கு இலக்கியக் குழு உறுப் பினரும் மல்லிகை ஆசிரியருமான திரு. டொமினிக் ஜீவா பெரிதும் உதவியுள்ளார். மிகவும் அழகான முறையில் மிகக் குறுகிய காலத்தில் யாழ். ஆசிர்வாதம் அச்சகம் இத் தொகுதியை அச்சிட்டுள்ளது. விஜயா அழுத்தகத்தினர் அட்டையை அச்சிட்டுதவினர்.
இவர்கள் ஒவ்வொருவரின் சேவையையும் நன்றியுணர் வுடன் பாராட்டுகின்றேன்.

சிந்தனைச் செல்வர் அ. செ. முருகானந்தன் வாழ்வும் பணியும்
க. சொக்கலிங்கம் (சொக்கன்) எம். ஏ. அதிபர், கோண்டாவில் இந்து ம. வி.
ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிலே 1956 க்குப் பின்னுள்ள காலப்பகுதியினைத் தேசீய உணர்வின் எழுச்சிக் காலமாகவும் முற்போக்குக் கருத்துக்கள் கருவாகி உருக் கொண்ட காலமாகவும் இலக்கியத் திறனய்வாளர்கள் விதந்து போற்றுவதுண்டு. 1961 தொடக்கம் பல்கலைக் கழகக் கலைத்துறைக் கல்வி தாய்மொழி மூலம் வழங்கப் படும் நிலை ஏற்பட்டதால், விசாலமான அறிவும் உயர் கல்வித் தரமும் வாய்ந்த எழுத்தாளர் பரம்பரை தோன்றி, ஈழத்துத் தமிழ் இலக்கியம் வீறு பெற்று முன் எக்காலத் திலும் பார்க்கப் புதுமையும் ஆழமும் பெற்று வளர்ந்த தாகவும் கருதப்படுகின்றது. இயக்கரீதியாக எழுத்தாளர் டின்று திரண்டு தமது கருத்துக்களை வன்மையாக உரைத் தும் மரபு வாதத்தைப் புறங்கண்டும் ஆக்க இலக்கியத் துறையினை முன்னெடுத்துச் சென்ற வகையில் 1956 க்குப் பின்னுள்ள காலப்பகுதி குறிப்பிடத்தக்கதே. எனினும் பழைமையிலிருந்து விடுபட்டுப் புதுமையை வரவேற்கும் வேட்கையும் அதனை நிறைவு செய்ய எழுத்தைப் பயன் படுத்தலும் ஈழத்திலே இந்நூற்ருண்டின் நாற்பதுகளிலேயே ஆரம்பித்து விட்டதை நடுவுநிலை நின்று நோக்குவோர் 1றுக்கார் என்பது திண்ணம்.

Page 15
xxiv
தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் 13-6-43 இல் யாழ்ப்பாணத்திலே தோற்றுவிக்கப்பட்டது. இச்சங்கத்தின் தலைவராய்த் தெரிவு பெற்ற திரு. அ. செ. முருகானந்தன் 11-7-43 இல் நிகழ்ந்த அதன் கூட்டம் ஒன்றிலே குறிப் பிட்ட சில கருத்துக்கள் இங்குக் கருதத் தக்கன:
காலப்போக்கை அனுசரித்து மனித சமுதாய வாழ்விலும் கலைகளிலும் இப்படி மறுமலர்ச்சி இடை யிடையே ஏற்படுகின்றது. பாஷை சம்பந்தமான வரையிலும் இந்த மறுமலர்ச்சி நடைபெறுகிறது; நடைபெற வேண்டியதுதான்.
பாஷை எப்படி உற்பவித்தது? ஒரு சில பண்டி தர்கள் சொற்களைச் சிருஷ்டி செய்து "வழக்கில் கொண்டுவா’ என்று சொல்லி வந்ததல்ல, இயல்பாக ஜனங்களிடையே தோன்றி வளர்ந்ததாகும். அதுதான் பாஷை, இதை விட்டு ஒரு மறைமலையடிகளும் ராஜாஜியும் சொற்களை வகுத்து "இதை வழக்கில் கொண்டுவா’ என்ருல் வரப்போவதுமில்லை. e3!gil பாஷையாகவும் மாட்டாது. சமூகத்துக்குப் பொது வுடைமையான பாஷையில் அங்கனம் விசேஷ உரிமை செலுத்துவது சர்வாதிகாரத்தனமாகும். அதை நாம் ஒருபோதும் ஆதரிக்க முடியாது.
அன்ருெரு காலத்தில் செழித்து மலர்ச்சி பெற் றதைப் போல இனிமேலும் மலர்ச்சி-பூரண மறு மலர்ச்சி-பெறவேண்டும். பெறத்தான் போகிறது அதை வளர்க்கத் தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் கூடிய மட்டிலும் பாடுபடும்.
(ஈழகேசரி-18-7-43)
மிக இளமைக் காலத்திலேயே எழுதத் தொடங்கி, தம்மையொத்த இளைஞர்களோடு தம் ஊரான அளவெட்டி யில் வாசிகசாலையை நிறுவி இளைஞரிடையே வாசிப்பார்வத் தைத் தூண்டி வளர்த்ததோடு நில்லாது மறுமலர்ச்சி என்ற கையெழுத்துப் பிரதிச் சஞ்சிகையையும் நடத்திய அ. செ. முருகானந்தனின் கூற்றுக்கள் நாற்பதுகளில் ஈழத்திலே நிலவிய இலக்கிய சிந்தனையைக் கோடிட்டுக் காட்டுகின்றன.

XXM.
அ. செ. முருகானந்தன் அ. செ. மு. என்ற மூன்று எழுத்துக்களால் தமிழ்கூறும் நல்லுலகிற்கு நாற்பதுகளி லேயே அறிமுகமான எழுத்தாளர். பீஷ்மன், யாழ்ப்பாடி, யாழ்தேவி, முருகு, நீலாம்பரி, காங்கேயன், கதிரவன், மயிற் புறவம், சோபனு, இளவேனில், பூராடன், தனுசு, மேகலை, கூத்தரிக்குறளி, போர்வீரன், வள்ளிதாசன் என்ற இத்தனை ஃெேபயர்களுள்ளும் மறைந்து நின்றும், அ செ.மு. ஆக வெளிப்பட்டு நின்றும் எழுபதுகள் வரை இவர் ஆற்றிய பூலக்கியப் பணியை, தெல்லிப்பழைக் கலைப் பெருமன்றம் 1973 இல் தான் வெளியிட்ட உழவர் விழா மலரில் (மறு மலர்ச்சிக்காலம், இலக்கியச் சிறப்பிதழ்) அட்டவணைப்படுத்திக் கட்டி யுள்ளது. அவ்வட்டவணை பின்வருமாறு :
முழுநாவல்-1
கட்டுரை -- ចp០
மொழிபெயர்ப்பு-5
சிறுகதைகள்-100
இலக்கிய நாடகம்-10
குறுநாவல் -1 (புகையில் தெரிந்தமுகம்) நூல்
வானெலியில் ஒலிபரப்பான நிகழ்ச்சிகள்-10
நடத்திய பத்திரிகைகள் -2 (எரிமல, மறுமலர்ச்சி)
கடமையாற்றிய பத்திரிகைகள்--ஈழகேசரி. சுதந்திரன்,
வீரகேசரி, ஈழநாடு
இவற்றை அடிப்படையாகக் கொண்டு அ. செ. மு. அவர்களை மதிப்பீடு செய்தால், அவர் கட்டுரையாசிரியர், *று கதையாசிரியர், பத்திரிகையாளர், நாவலாசிரியர், வாறெலிக் கலைஞர், நாடகாசிரியர் என்ற பல முகங்க கொடு உலா வந்தவர் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
1945 தொடக்கம் இணையாசிரியராயிருந்து "மறு படம்விச் சஞ்சிகையை நடத்திய காலத்தில் பழைமை  ை களுக்குச் சாட்டையடி கொடுத்துப் புதுமைக் கோஷம் சாழப்பிய போராளியாகவும் அவர் விளங்கினர். பண்டிதத்

Page 16
XXνι
தனத்தினை நாசுக்காகக் கிண்டல் பண்ணிய வகையில் அ. செ. மு. அக்காலகட்டத்துப் புதுமை எழுத்தாளரின் மனப்போக்கினை நன்கு பிரதிபலித்தார் என்பதும் குறிப் பிடத்தக்கதே :
. அவன் என் சிநேகிதன். இருவரும் ஒன்ருக ஒரே இடத்தில் வேலை பார்த்திருக்கிருேம். ஒன்ருக ஒரே கூரையின் கீழ் நீண்டகாலம் வசித்திருக்கின்முேம், தலைமையின் கீழ் என்று எழுதுவது பிழையாம்; தலை மையில் என்று எழுத வேண்டுமாம். இலக்கணப் புலவர்கள் சொல்லுவார்கள் அதன்படி ஒரே கூரையில் வசித்தோம் என்று எழுதினுல் எப்படியிருக்கும்? வீட்டுக்காரன் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பாணு?
(ஈழநாடு 12 - 02 - 69)
(Under the chairmanship at aird griisa) j (). Frt ருெடரைத் தமிழாக்கிக் கையாள்பவர்கள் தலைமையின் கீழ் என்று கையாண்டதைப் பண்டிதர்கள் தலைமையில் எனத் திருத்தியதை, இங்கு அ. செ. மு. கிண்டல் பண்ணு திருர், தடித்த எழுத்திலுள்ளவை கட்டுரையாளர் உபயம்)
பேராசிரியர் க. கைலாசபதி இலங்கைக் கலாசாரப் பேரவையின் தமிழிலக்கிய விழா மலரில் ( ) லாசாரப் பேரவை அவ்வாண்டில் கெளரவித்த எழுத்தாளர்கள், கவிஞர்களில் அ. செ. மு. வும் இடம் பெற்றர்) 'தேசிய இலக்கியம் என்ற குரல் எழுந்ததும் அதையொட்டி நடந்த கார சாரமான சர்ச்சைகளும் புதுமை இலக்கியத்துக்கும் பண்டித மரபிற்கும் நடந்துவந்த யுத்தமும் அதுகாலவரை தொடப் படாத பிரச்சனைகளாய் இருந்த பலவற்றைச் சந்திக்கு இழுத்து விட்டன" (டிெ மலர்) என்று கூறும் கூற்று அ. செ. மு , இலங்கையர்கோன், வேந்தனர் முதலான 'மறுமலர்ச்சி' எழுத்தாளர்களின் ஆக்கங்களை முழுமையாக நோக்கு கையில் பொருந்தாது என்றே கூறத் தோன்றுகின்றது. சிறப்பாகப் பண்டித வர்க்கத்தின் நோக்கையும் போக் கையும் நாற்பதுகளிலேயே எதிர்த்துப் போராடி யவர்கள் இவர்கள் என்பதை நாம் நினைவிற் கொள்வது

Xxvili
நன்று. இலங்கையர்கோனின் "அனதை’ சிறுகதை பண்டித வர்க்கத்துக்கும் புதுமைக் கவிஞனுக்கும் இடையே நிகழும் கருத்துப் போராட்டத்தைச் சித்திரிப்பது, அ. செ. (p வின் மறுமலர்ச்சிச் சங்கப் பேச்சில் பண்டித மனப் rன்மை சாடப்படுவதை முன்னரே சிறிது காட்டியுள்ளேன். பித்துவான் வேந்தனர் பண்டிதவர்க்கத்தினராயினும் 'பாட் டன்ருல் பண்டிதர்க்கே சொந்தம் அல்ல" என்று குரல் 1ெ.ாடுத்தவர், சமுதாய ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முற்போக்கு எழுத்தாளர்கள் மரபுப் போராட்டத்தைக் கூர்மையாக்கி இறுதி வெற்றி கண்டனர் என்று வேண்டு மானுல் சொல்லலாம்.
நிற்க, தெல்லிப்பழை மகாஜனுக்கல்லூரியில் உற்ப வித்த மூன்று முத்துக்கள் எனவும் ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிலே மூன்று கலங்கரை " விளக்கங்களெனவும் அ. ந. கந்தசாமி, மஹாகவி, அ. செ மு. g, 63 u Trif போற்றப்பட்டு வருவதை யாவரும் அறிவர். சிறுகதை, கட்டுரை, கவிதை, நாவல், நாடகம் ஆகிய துறைகளின் மூலம் தமது உரத்த சிந்தனைகளேத் திறம்பட வெளிப்படுத்திய சிறந்த எழுத்தாளர் அ. ந. கந்தசாமி, பேச்சோசைப் பண்பமையக் கவிதையிலே பெரும் சாதனை புரிந்தவர் மஹாகவி, கவிதை தவிர்ந்த மற்றைத் துறைகளில் தம் கைவண்ணத்தைக் காட்டியவர் அ. செ. மு.
ஈழத்தின் இருபதாம் நூற்றண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே மிகவும் காத்திரமான இடத்தை இம்மூவரும் கூகிக்கின்றனர் என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள். ஒரே மாரிலிருந்து ஒரே காலத்தில் இலக்கியத்துறைக்கு வந்து தமது தனித்துவங்களை வெளிப்படுத்திய ஒரே சமூகத்தினர் இம்மூவரும் என்பதும் குறிப்பிடத்தக்கதே.
இந்த ஒற்றுமைகளுக்கிடையிலும் சில நுட்பமான வெற்றுமைகளையும் நாம் அவதானிக்கலாம் 'மஹாகவி' யின் வாழ்க்கை மத்தியதரவர்க்கத்திற்கேயுரிய தொழிற் பாதுகாப்போடு கூடிய கட்டுப்பாடான வாழ்க்கை, மண் ஃாணயும் மக்களையும் கலைகளையும் நேசித்த ஒரு கவியுள்ளம் 'திருத்தக் கருத்துக்களுக்கும் தாராள இடமளித்தபோதும்

Page 17
xxviii
சமுதாயத்தை உடைத்துக் கொண்டு சீறிப்பாயும் காட் டாற்று வெள்ளமாக மஹாகவியின் கவிதைகள் பாய்ந்து செல்லாமைக்கு அவரின் மத்தியதரவாழ்க்கை அமைப்பே முதன்மைக் காரணமாகும்.
அ. ந. கந்தசாமி கிடைத்த தொழில்களையும் உதறித் தள்ளிவிட்டு இலட்சிய வேட்கையோடு அலைந்த புரட்சி எழுத்தாளர். சமுதாய பேதங்களையும் வக்கிரங்களையும் மிகுந்த துணிவுடன் நேருக்கு நேர் தாக்கி எரிமலையாகக் கக்கிய எழுத்துப் போராளியாகவே அவரை இனங் காணமுடிகிறது. அ. ந. கந்தசாமி தமது வாழ்க்கையை அக்கினியிலே இட்டுக் கொண்டபோதிலும் அதனைப் புடம் பூோட்ட பொன்னக ஏற்றுப்போற்ற அவருக்குப் பின்ன னியில் அரசியல் இயக்கம் ஒன்று இருந்தது.
அ. செ. மு. விற்குத் தொழிற்பாதுகாப்பு என்றைக்கும் இருந்தது என்று சொல்ல முடியாது, பல பத்திரிகைகளிலே ஈடமையாற்றிய பொழுதிலும் அவருடைய திறமையைப் பயன்படுத்திய அளவிற்கு அவரின் பொருளாதாரத்தைப் பலமுடையதாக எந்த நிறுவனமும் ஆக்கிவிடவில்லை, அன்றியும் எந்த இயக்கத்துக்கும், ஜெயகாந்தனின் வார் த்தையிலே சொல்வதானுல் அவர் தாலிகட்டிக் கொள்ளவும் இல்லை. ஆனல் இலட்சியவேட்கையும் புதுமைக்கிளர்ச்சியும் எழுத்தாற்றலும் மிதமிஞ்சிய நிலையில் அவரை வழிநடத் தின, முற்கூறிய இருவரிலும் மிகப்பெருமளவு (பத்திரிகை யாளராய் இருந்தமை காரணமாகலாம்) எழுதியவர் அ. செ. மு. ஆக இருந்தபோதிலும் Off-Print ஆக வெளி யான புகையில் தெரிந்த முகம் தவிர வேறு எந்த நூலும் வெளிவராததால் இலக்கியத்திறனய்வாளருக்கு அவரின் ‘விசுவரூபம்’ தெரியாமலே போய்விட்டது
துரதிருஷ்டந்தான்.
மறுமலர்ச்சியோடு தொடர்பிருந்தபோதும் விரைவி லேயே "கட்டறுத்த புரொமித்தியஸ்' என்று கருதப்படும் வகையில் முற்போக்கை முழுமூச்சாகத் தழுவிக் கொண்ட வரும் முற்போக்கு இலக்கிய அணியின் மூத்தபிள்ளைகளுள்

xxix
ஒருவருமான அ. ந. கந்தசாமி ..." என்று பேராசிரியர் க. கைலாசபதி வருணிக்கும் அளவு மகத்துவத்தை அ. செ. மு. அவர் பார்வையிலே பெருமற் போனமைக்குக் கைலாசபதியை நாம் குற்றம் கூறமுடியாது, அ. செ. மு. இயக்கம் சாராதவராயும் நூல்கண் வெளியிடமுடியாத 'கையாலாகாதவராயும்? இருந்தமையே குற்றம்!
அ. செ. முருகானந்தனின் படைப்புக்களை ஒட்டு மொத்தமாக வைத்து நோக்கும் பொழுது அவற்றில் அ. ந. கந்தசாமியின் தீவிர சிந்தனைப் போக்கினையும் மஹா கவியின் கலையழகுணர்வையும் ஒருசேரக் காணலாம். லாக சமான ஒட்டமும் கருத்துச் செறிவும் அதேசமயம் அழகியல் ஃணவும் அமைந்த நடை ஒன்று அவருக்குக் கைவந்திருக் 'றது. பழைய இலக்கியங்களில் ஆழமான அறிவுடையவர் ான்று சொல்ல முடியாவிட்டாலும் அதனைத் தமது சிறு பாாயத்திலிருந்து புராணபடனங்கள், சமயப் பேச்சுக்கள், கல்லூரியிற் கற்ற தமிழ்க் கல்வி என்பவற்ருல் கணிசமான அளவு அவர் அறிந்தேயிருக்கிருர் என்பதை அவரின் சிறு 1.தைகள், கட்டுரைகள், நாவல்கள், நாடகங்களில் வரும் மேற்கோள்கள், வாக்கிய அமைதி என்பவற்றைக் கொண்டு அறியக் கூடியதாயிருக்கிறது. தமது சமகாலத்திலும் முன் கனரும் வெளியான நவீன தமிழ் இலக்கியங்களிலே மிகுந்த பரிச்சயம் உடையவர் அ. செ. மு. என்பதற்கு அவரின் எழுத்துக்களிலே போதிய சான்முதாரங்கள் காணக் கிடக் சின்றன. பத்திரிகையாளராய் இருந்த காரணத்தினுல் தமது அடிப்படை ஆங்கில அறிவைத் துணைகொண்டு மொழி பெயர்ப்புக்கள் பல செய்ததோடு ஒரளவு ஆங்கில இலக் கியச் சிந்தனைகளையும் அ. செ. மு. உள்வாங்கியேயுள்ளார். எழுத்தின் பல துறைகளிலும் ஈடுபடவும் புதிய ஆக்கங் களே உருவாக்கவும் இந்த அடிப்படை அறிவுப் பின்னணி அவருக்குக் கைகொடுத்திருக்கின்றது.
அ செ. மு. வின் குடும்பப் பின்னணியும் அவரின் எழுத்தாற்றலுக்கு இளமையிலேயே வித்திட்டமையைப் பின்வரும் கூற்றல் அறிந்து கொள்ளலாம் :
V

Page 18
XXX
தான் பிறந்து வளர்ந்த குடும்பம் ஒரளவு பெரியது. அக்குடும்பத்திலுள்ளவர்கள் எல்லாரும் கலையார்வம் கொண்டவர்கள். இதனல் நான் இளமையைக் கழித்த அந்தமனை எந்தவேளையிலும் கலகலப்பாக இருக்கும். இசையும் ஓவியமும் அக்குடும்பத்தின் பரம்பரைச் சொத்துக்கள். என் பாட்டியாரும் அன்னையும் ஒய்வு நேரங்களில் புராண இதிகாசக் கதைகளே வாசிப்பார் கள். கல்லூரிக் கல்வி பெற்றுக்கொண்டிருந்த அந்தக் குடும்பத்து இளைஞர் ஒருவர் தாம் கற்றுவந்த பாடத் திலுள்ள கதைகளே அழகாக எடுத்துக் கூறி என்போன்ற இளைஞர்களைக் களிப்பூட்டுவார். இத்தகைய சூழலிலே நான் வளர்ந்தேன். இதனுல் என்னிடத்தே கதைகளைக் கற்பனையில் எழுதவேண்டும் என்ற ஆவல் முளே கொண்டு விட்டது.
-மறுமலர்ச்சிக்காலம்-சிறப்பிதழ், அ செ முருகானந்தன் வாழ்வும் பணியும், கவிஞர் செ. கதிரேசர்பிள்ளை
இன்று அறுபத் ைதந்து வயதை எட்டிக்கொண்டிருக்கும்
அ. செ. மு. (1921) சூழலையும் கற்ற கல்வியையும் திறமை யையும் தமது ஆர்வத்தோடு இணைத்து மிக இளம் வயதி லேயே எழுத்துத் துறையிலே அடிஎடுத்து வைத்த பின்னணி இதுதான், 'மறுமலர்ச்சிக் காலத்திலும் முன்னரும் எழுத்துத் துறையிலே ஈடுபட்டோர் மண்வாசனை உணர்வின்றி "ஈழம் என்ற இடவரையறைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்" பொதுப்பகைப்புலத்தில் அல்லது தமிழகப் பகைப்புலத்தில் தமது ஆக்கங்களைச் செய்தனர் என்ற பரவலான குற்றச் சாட்டுக்கு அ செ. மு. வை உள்ளாக்க முடியாது என்றே அவரின் கதைகள் கட்டுரைகளைப் படிக்கும்போது சொல்லத் தோன்றுகின்றது. அவர் கல்லூரியிற் படித்துக்கொண்டிருந்த காலத்திலே எழுதிய முதற் கட்டுரை கண்டிக் கடைசி அரசன் (உரைச்சித்திரம்) என்பதும் அது வெளியான சஞ்சிகை ஆனந்தபோதினி (தமிழகத்தில் வெளியான சஞ்சிகை) என்பதும் குறித்துக் காட்டவேண்டியன.

XXXί
ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் - சிறுகதை, நாவல், கவிதை வடிவங்களில்-பிரச்சினைகளைத் தோட்டு எழுதத் தொடங்கிய காலத்தையும் 1956க்குப் பின் கொண்டுவரும் ஒரு மரபு உண்டு. ஆஞல் அ. செ. மு. வின் படைப்புக்களில் தேசிய, சமூக, அரசியற் பிரச்சினைகள் ஐம்பதுகளுக்கு முன்பே இடம் கொண்டு விட்டன என்பதை அவரின் இந்தத் தொகுப்பி லுள்ள சிறுகதைகளே சான்றுகளாக நின்று நிலைநிறுத்த வல்லன என்பேன்.
நாசுக்கான கிண்டல், அழகானதும் மிதமானதுமான வர்ணஃன, ஆழமான நோக்கு, சிறந்த உவமைகளைப் பொருத்தமாகவும் சுவையாகவும் கையாளும் திறன், உருவ அமைதி என்பன அ. செ. மு. வின் சிறுகதைகளிலே சிறப்பாகக் காணத்தக்கவையாகும். எனினும் இடை யிடையே கதாசிரியரே புகுந்து நின்று தமது கருத்துக்களை வெளியிடுகின்ற பலவீனமும் தலைதூக்குவதையும் எடுத்துக் கூருமல் விடல் இயலாது. 'கல்கி யில் பெருமளவும் புதுமைப்பித்தனில் சிறிதளவும் வெளிப்பட்ட இந்தப் பலவீனத்தின் பாதிப்பை அ. செ. மு. விலும் காணக் கூடியதாய் இருக்கிறது என்ற உண்மையை மறைத்தற் ல்ெலே. எனினும் அவை பழைமையிலிருந்து விடுபட்டுப் புதுமையை வேட்டு அதனைச் சொல்லியேயாகவேண்டும் சான்ற அவசரத்தினலேயே எழுந்தவையாகத் தோற்று கின்றன.
வானெலி நாடகப் போட்டியில் பரிசுபெற்றுத்தாம் டிர நாடகாசிரியருமாவார் என்பதை நிறுவிய அ. செ. மு. அந்தத்துறையில் எந்த அளவிற்குச் சாதனை புரிந்துள்ளார் என்பதனை அறிவதற்கு அவையும் நூலுருப்பெறுவ தொன்றே வழி.
பத்திரிகையாளராக மட்டுமன்றி எரிமலை என்ற பத்திரிகையையும் தொடங்கி விஷப்பரீட்சை செய்து கை ாயைக் கடித்துக்கொண்டவர் அ. செ. மு. ஆனலும் இப் பத்திரிகை குறுகிய காலத்தில் ஏற்படுத்திய தாக்கத்தையும் அதன் உள்ளடக்கத் திறன்களையும் "அபேதன்" என்பவர் செய்த விமர்சனம் நன்கு புலப்படுத்துவதாய் உள்ளது :

Page 19
xxxii
மேலும் இது எல்லோருக்கும் உஷ்ணமா, இராது, எத்திப்பிழைக்கும் ஏமாற்றுக்காரர்களை மட்டு தகித்துச் சாம்பராக்கும் உஷ்ணம் அதனிடம் கான படும்.
கன்னியாவைப் போல இது வெந்நீரைத் தராது ஆனல் கன்னியாவின் வெந்நீர் முடக்கு வாதத்தையு துடக்குப் பேதத்தையும் மாற்றுவது போல் இது முடக்கு வாதத்தையும் மூடப் பிடி வாதத்தையும் அகற்றி தொலைக்கும்.
ஏழை மக்களின் எளிய குடிசைகளுக்கு இது நெருப்பு வைக்க முனையாது. ஆனல் பணத்திமிரிே சிக்குண்டு அரசியல் விபசாரம் நடத்தும் போலி தலைவர்களுக்கும் கேலிக் கும்பல்களுக்கும் அவர்கள் கூடாரத்துக்கும் அணைக்க முடியாத அக்கினிச் சுவா லையை மூட்டும் என்று சொல்லிவைக்க விரும்புகிறேன்
(மறுமலர்ச்சிக் காலம்-இலக்கியச் சிறப்பிதழ், ‘இலக்கி மேடு-சில நினைவுகள், அ. செ. முருகானந்தன்
இலக்கியத்துறையிலே பல முகங்கள் கொண்ட அ.செ.மு, தமது சொந்த வாழ்க்கையில் ஒரே முகம் கொண் டவராகவே தம் அறுபத்தைந்து ஆண்டுகளையும் கழித்து வந்திருக்கிருர், குடும்ப உறவில் அவரின் உள்ளம் முழுவது திறைந்து கனிந்து கிடப்பது தாயன்பு என்ற ஒன்றே ஒன்று தான். அந்தத் தாய் என்ற தெய்வம் பற்றி அவர் எழுதிய பின்வரும் சொல்லோவியம் எவரினது நெஞ்சையுட தொட்டுக் கசக்கிப் பிழிய வல்லது :
ஆயுள் முதிர்ந்த நாகபாம்பு இறக்கை முளைத்து பறக்குமாம். அதன் வாய்க்குள்ளே இருப்பதுதாஞ நாகரத்தினம் என்றெல்லாம் கூட ஐதிகமுண்டு அதெல்லாம் எப்படி எப்படியோ? நான் தெரிந்து கொண்டிருக்கும் வானதேவன் பூமாதேவி எல்லாபே என் ஒரே அன்னையார்தான். அந்தப் பிரபஞ்சம் இன்

:
XXXίίi
றைக்கெல்லாம் நலிவுற்று வாடி மிகநொந்து புலனெ டுங்கிப் போய் இருக்கிறது. அதுவே என் ஒரே கவலை; விசாரம்
(அ. செ. மு. நன்றி தெரிவிக்கிறர், ஈழநாடு)
தேல்லிப்பழைக் கலைப்பெருமன்றம் 1973இல் அ செ. மு. விற்குச் சிந்தனைச் செல்வர்" என்ற பட்டத்தினை வழங்கிக் கெளரவித்தது, சிந்தனையாளர்களுக்கே உரிய உள்ள விசாலத்தோடு உடல் மெலிவும் வாய்க்கப் பெற்ற அ. ச்ெ. மு. ராஜாஜி போன்ற பெரியமனிதர்களுக்கே பெரிதும் உரித் தான ஆஸ்மா' வியாதியாலும் பீடிக்கப்பட்டவர். ஆனல் வியாதியாளருக்குரிய நோய்க்குறியேயில்லாத ஆரோக்கிய மான எழுத்து அவருடையது, அதனை நிரூபிக்கும் வகை யிலே வெளியாகும் சிறுகதைத் தொகுதிதான், மனிதமாடு.

Page 20
அ. செ. முருகானந்தனின் மனித மாடு
கதைகள்
1 அம்பிகை சந்நிதியில் 2 சித்தக் குழப்பம் 3 தீபாவளிக் கனவு 4 எச்சில் இலை வாழ்க்கை 5 ஏழை அழுத கண்ணீர் 8 மணித மாடு 7 விளம்பர வாழ்வு 8 கிழவி 9 பழையதும் புதியதும் 10 மாடு சிரித்தது 11 பாடுபட்டுத் தேடி 12 இன்னமும் சோதனையா 13 மனம் பொங்கவேணும் 14 தந்தை மொழி 15 பரிசுபெற்ற கதை
8
13
17
21
37
33
37
4品
5.
54
61
68
72
80

XX凉y
16 வெயிலும் மழையும் 87 17 அருவியின் அழைப்பு 92 18 கலைஞனின் சொர்க்கம் 105
19 ஒரே ஒரு வோட் 109
20 வெளிச்சம் 1 15
21 தளராவளர் தெங்கு 121
22 நேற்று இன்று வந்த உறவல்லடி 134
23 பசுந்துளிர் 140 24 காளிமுத்துவின் பிரஜா உரிமை 152
கருத்துரை
மறுமலர்ச்சித் தமிழ் 158

Page 21
பழைய தமிழ் இலக்கியங்கள் தமிழ் நாட்டின் உயிருக்குயிரான பொக்கிஷங்க ளென்றே நாம் கருதுகிருேம், அவற்றை அஸ்திவாரமாகக் கொண்டே ரவயுக இலக் கியங்கள் சிருஷ்டிக்கப்பட வேண்டுமென்று நாம் விரும்புகிருேம். புதிய கருத்துக்கள், இனிய கற்பனைகள், ஆழமான தத்துவங்கள் இவையெல்லாம் எளிய இனிய நடையிலே புதிய வசன இலக்கியங்களிலே சிருஷ்டிக் கப்பட வேண்டுமென்று விரும்புகிருேம் .
பழைமையைப் புதுப்பிப்பதாலும் பிற நாட்டு நல்ல இலக்கியங்களைத் தமிழ் மொழிக்குக் கொண்டு வருவதாலும் புதி தாகவே இலக்கியங்களைச் சிருஷ்டிப்பதா லும் தமிழுக்குப் புத்துயிரை அளிக்க விரும் ! கிருேம். இன்று தமிழ்மொழி மறுமலர்ச்சி யடைந்து வளர்ந்து வருகிறது, பிற்போக் காளர் வெறும் கூச்சல் இடுவதணுல் இதைத் தடைசெய்துவிடமுடியாது.
-மறுமலர்ச்சி, விய, சித்திரை
இதழ் 2. 'முகத்துவாரம்
(ஆசிரியர் குறிப்புரை)

அம்பிகை சந்நிதியில்
பக்கத்திலிருக்கும் அம்மன் கோவிலில் ஆலாட்சிமணி அடிக்கும் வேண்களில் அவன் உள்ளத்தில் உறைந்து போயிருக்கும் ஒரு பழைய ஞாபகம் உயிர் பெற்று எழும்.
| ძზ ძზ &
அன்று வெள்ளிக்கிழமை, பூசைக்குப் பூசகர்கள் ஆயத் தஞ் செய்து கொண்டிருந்தார்கள், மேளகாரர்கள் பயபக்தி யுடன் நின்று சேவித்தனர். நாதஸ்வரக்காரருக்கு அன்று சமயமாக என்ன குஷி பிறந்ததோ, மோகன ராகத்தை வெகு அற்புதமாக வாசித்துக்கொண்டிருந்தார். மணரம்ய மான அந்த நேரத்திற்கு நாதஸ்வரகாரரின் ராகமும் கீதமும் அடியார்களின் இதய கமலங்களை மலர்வித்து அம்பிகையின் திருவடிகளில் நறுமலர்களாகச் சொரிந்தன. அந்த இசைப் பெருக்கில் அவர்கள் மயங்கி நின்றனர்.
கையில் ஓர் அழகிய மலர்மாலையுடன் நின்று கொண் டிருந்தான் ஓர் யுவதி. வயது இருபது வரையில் இருக்கும். நாதஸ்வரக்காரர்மேல் வைத்த கண் எடுக்காது அப்படியே அசைவற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்களி லிருந்து நீர் பெருகி ஓடியது. ஆஞல், அவள் முகம்மட்டும் வாடாது ஒருவித மந்தஹாசத்துடன் பிரகாசித்தது. ாதஸ்வரகாரரின் வித்வத்தில் லயித்துப்போய்த் தேன் முடித்த வண்டுபோல மயங்கி நின்ருள்.
LD 1

Page 22
2 மனித மாடு
திடீரென்று, அந்தப் பெண் வெறிபிடித்தவள் போலப் பாய்ந்து சென்று கையில் வைத்திருந்த புஷ்பஹாரத்தை நாதஸ்வரகாரரின் கழுத்தில் அணிந்தாள். "கலீ*ரென்ற மணி ஓசையுடன் மூலஸ்தானக் கபாடங்கள் திறந்தன. அம்பிகையின் திருவுருவத்திற்கு முன்னுல் பூசகர் பஞ்ச ஹாரத்தியை மெய்ம்மறந்து சுழற்றிஞர். ஆலாட்சிமணி டாங் டாங் என முழங்கியது.
O Ο O GQ OO OO
ராஜப்பன் யாழ்ப்பாணத்தில் பிறந்தவன். இளம் வயதிலேயே வெகு புத்திசாலியாயிருந்தான். அவனுடைய புத்திசாலித்தனம் கல்வித்துறையில் செலவிடப்பட்டிருந் தரல், பிற்காலத்தில் அவன் ஒரு பெரிய மேதாவி யிாகியிருப்பான். ஆனல் அதற்குப் பணமும் வேண்டும் அல்லவா ? பள்ளிக்கூடங்களில் ஏதோ சொற்பமாகப் படித்தான். அப்பொழுது ஏற்படும் சில்லறைச் செலவு களுக்கு அவன் தாளக்காரணுய்ப் போய்ச் சம்பாதித்து, வந்த வரும்படியைக் கொண்டு ஒருவாறு சமாளித்து வந்தான். இந்த நிலையில் அவன் மேதாவியாக வரவேண்டு GLDéiroyd.........?
ராஜப்பணுக்குச் சிறந்த லயஞானமிருந்தபடியால் பெரிய மேளக்கோஷ்டியினர் எல்லோரும் எனக்கு "உனக்கு" என்று அடிபட்டுக்கொண்டு வந்தனர். என்று மில்லாத நடப்பு அவனுக்கு.
இந்த முறையிலே இருந்துவந்தால் ராஜப்பன் ஒரு பெரிய குடும்பத்தைக் கூட ஆதரிக்க முடியும். அவ்வளவு வருவாயிருந்தது. ஆளுல், அவனுக்கு இந்தப் போக்குப் பிடிக்கவில்லை. சதாகாலமும் சீவியத்துக்குத் தாளம் போடு வதை அவன் அடியோடு வெறுத்தான். அதற்குக் காரணங் களுமில்லாமலில்லை.
M
தாளக்காரளுயிருப்பதில் சில சமயங்களில் சகிக்க முடி
யாத அவமானங்களும் ஏற்படுகின்றன. நாதஸ்வர காரர் களும் தவில்காரர்களும் சில வேளைகளில் தாங்களே லயக் கணிதத்திலிருந்து தவறிவிட்டு, தாளக்காரரின் மேல்தான்

அம்பிகை சந்நிதியில் 3
சீறி விழுவார்கள். ஒன்றையும் யோசியாது பெரிய கூட் டங்களில்விட்டு அவர்கள்மேல் கைவைக்கவும் ஆரம்பித்து விடுவார்கள்.
இத்தகைய அநுபவம் ஒன்றுதான் ராஜப்பனுடைய வாழ்க்கை மாறுதலுக்கு ஒரு காரணமாகவுமிருந்தது. ஒரு முறை, சிறந்த மேளக் கச்சேரி வெகு மும்முரமாக நடை பெற்றுக்கொண்டிருந்தது. ஏராளமான ஜனக்கூட்டம், கோவில் வீதியில் தவில் கச்சேரி ஆரம்பமானதும் ராஜப்பன் தான் தாளம் போட்டான். எல்லோருக்கும் ஒத்துவரக் கூடியவன் அவன் ஒருத்தன்தான். தவில்காரர்கள் எல்லோ ரும் தங்கள் தங்கள் கைவரிசைகளை எடுத்து விட்டுக் கொண் டிருந்தார்கள். VA
ஒரு வித்துவான் விநோதமான புதிய தவில் பாடம் ஒன்றை 19ற்றவர்களுக்குக் காட்டுவதற்கு எவ்வாவோ பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தார். ஒருமுறை அடிக் கும்போது பார்த்தால் தாளம் விளம்ப காலத்திலிருந்து இழுபடும்போல் தோன்றும். இன்னெருமூறை பார்த்தால் துரித காலத்தில் ஒடுவதுபோல் தெரியும். ஒவ்வொரு முறையும் தாமே தாளத்தைத் தவறவிட்டு ‘ஏண்டா கழுதை ஒட்றே", "என்னடா பெரிய இழுவலாயிருக்கே" என்று தாளக்காரன் மேல்தான் பாய்வார். ராஜப்பன், கவில்காரருடைய ஞான சூனியத்தைப்பார்த்து உள்ளூர தககத்தானேயொழிய ஒன்றும் பேசவில்லே. ஆனல், கடைசி முறையாக அந்த "வடக்கன் மாடசாமி தோலில் நாதம் மூட்டும் தவில் கழிக் கையினல் உச்சி மயிர் சிதைய தபேலா கும்மிய சம்பவம் ஆற்ருெணக் கொடூரமான மனத் தாக்க மாகிவிட ராஜப்பன் அன்றைக்கே அந்நாள் அத்தருணமே 'இணி உம்முடைய வாசிப்புக்கு நீரேதான் தாளம்போட்டுக் கொள்ளவேணும்' என்று ஆத்திரமாகப் பேசிவிட்டுத் தாளங்களை அவருக்கு முன்ஞலேயே எறித்துவிட்டுப் போய் விட்டான்.
இந்தச் சம்பவத்தினுல் ஏ ற் பட்டு வளர்ந்துவந்த
ரோசத்தையும் அவனுடைய மனமாறுதலுக்கு ஒரு காரண மாகச் சொல்லலாம். இதைவிட இனம் வயதுதொட்டே

Page 23
4 மனித மாடு
அவன் உள்ளத்தில் குடிகொண்டிருந்த கலைஞானமும் அதி லிருந்த பிரேமையும்தான் அவனை ஒரு புதுமனிதளுக்கு வதற்கு முக்கிய காரணமாகவிருந்தது.
தென்னிந்தியாவில் நன்கு மதிக்கப்பட்ட ஒரு நாதஸ்வர வித்துவானிடம் ராஜப்பன் சிகூைடி பெற்றுக் கொள்வதற்குப் போய்ச்சேர்ந்தான். அவருடைய குற்றேவல்கள் யாவை யும் சிறிதும் மனங்கோனது செய்துவந்தான். குருவினு டைய நிர்த்தாட்சணியமான செய்கைகள் அவருடைய மகள் மோகனங்கிக்கே பெரிதும் கவலையைக்கொடுத்தன. அவன் மேல் அவளுக்கு ஒரு அநுதாபம் உண்டாயிற்று. ராஜப் பனுடைய புத்திசாலித்தனத்திலும் குணநடைகளிலும் கலைஞானத்திலும் அவளுக்கு ஒரு பிரேமை ஏற்பட்டது.
ராஜப்பன் வித்தை பயின்ற இடத்தில் அனைவரின் நன் மதிப்பையும் பெற்றிருந்தான். இதஞல் அவன் ஊருக்குப் புறப்படுஞ்சமயம் எல்லோரும் மிகவும் கவலைப்பட்டார்கள். மோகனங்கியின் துயரத்தை ஆற்றி அவளிடம் விடைபெறு வதற்கு அவன்பட்ட வேதனே சொல்லிமுடியாது.
யாழ்ப்பாணத்திற்கு வந்த பிற்பாடும் அடிக்கடி மோக ஞங்கியும் அவள் பெற்ருேர்களும் அவன் மனக்கண்ணின் முன் தோன்றிப் பழைய ஞாபகங்களையெல்லாம் தட்டி எழுப்பிவிடுவார்கள். மோகஞங்கிக்குள்ள சங்கீத ஞானத் தையும் அவள் அவனுக்கு வேண்டிய வேண்களில் செய்த பேருதவிகளையும் நினைத்து நினைத்து உருகுவான்.
இந்தியா சென்றுவந்த ராஜப்பணுக்கு யாழ்ப்பாணத்தில் நல்ல மதிப்பு ஏற்பட்டு அவனுடைய வித்துவத்திற்கு நல்ல கியாதி, யாழ்ப்பாணத்தில் ஒரு திற மா ன நாதஸ்வர வித்துவானக அவன் கருதப்பட்டான். நல்ல வரும்படி. உண்ண உறங்க நேரமில்லை.
இன்பமும் துன்பமும் சகடக்கால் போலச் சுழன்று கொண்டே இருக்கின்றனவல்லவா ? ராஜப்பனுடைய கீர்த் திக்கும் செல்வத்திற்கும் திரிவைக்கத் தொடங்கிவிட்டனர். ஊரில் அவனுக்கு எதிரிகள் முளைத்துவிட்டனர்.

அம்பிகை சந்நிதியாலய 5
ராஜப்பன் "எங்கேயாவது ஒடிப்போய்விட வேண்டும்" என்று நினைத்தான். தன்னுடைய உறவினர்களே தனக்கு விரோதிகளாக இருக்கும்போது அந்த ஊரில் அரை நிமிட மும் தங்கலாகாது எனத் தோன்றியது. அதற்கேற்ற தரு ணமும் ஒன்று கிடைத்தது.
கண்டிநகரில் கதிரேசன் கோவிலிலிருந்த மேளக்கோஷ்டி யினர் கோவில் முதலாளியுடன் ஏதோ தகராறுப்பட்டு விலகிவிட்டனரென்றும் அந்த இடத்திற்கு நல்ல மரியாதை யான ஒரு யாழ்ப்பாண மேளக்கூட்டம் வேண்டுமென்றும் ஒரு செய்தி ராஜப்பனுக்கு எட்டிற்று.
கோவில் முதலாளி ஒரு சிறந்த கலாரசிகராகையால் ராஜப்பனில் நல்ல மதிப்பு வைத்திருந்தார். அவனுடைய ஒழுக்கமும் அவருக்குப் பிடித்துக்கொண்டது. சம்பளத்தி லும் சிறிது கூட்டிவிட்டார்.
ராஜப்பனுக்குப் பரமதிருப்தி. அவனுக்குகந்த இடமாக அது அமைந்திருந்தது. வெகு சந்தோஷமாகக் காலங்கழித்து வந்தான். ஆணுல், அடிக்கடி மோகளுவின் நினைவுகளும் மனதில் தோன்றி மறையும்.
கோவில் முதலாளியார் ஒரு சீவகாருண்யப் பிறவி, ஒரு முறை இந்தியாவிற்குச் சென்றிருந்த பொழுது ஒரு {ரரச்சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாது தெருத்தெருவாக அலேந்து கொண்டிருத்த ஒரு இளம் பெண்ணைக் கண்டார். அவளுடைய இன்னிசையும் பார்வையும் முதலாளியாரை பயக்கிவிட்டன. அவளைத் தன்னுடன் அழைத்துவந்தார். காவில் துப்பரவு செய்தல், மரங்களுக்குத் தண்ணிர் இறைத்தல், மாலை தொடுத்தல் முதலிய கைங்கரியங்களில்
அவளை ஈடுபடுத்திஞர்.
ராஜப்பன் கோவில் சேவுகம் ஏற்றுக்கொண்டதுமுதல் வாத்தியத்தில் அதிகம் கவனம் செலுத்துவது கிடையாது. காவில் மேளம் தானே" என்று ஒரு அலட்சியம், ஆஞல், சாப்போதாவது ஒருமுறை தன்னேயும் மறந்து ஒருவித உற் சாக்த்தோடு வாசிக்க ஆரம்பித்துவிடுவான். அச்சமயம்

Page 24
6 D Grafas LD 7 {
அது தேவகாணமாகத்தானிருக்கும். பூசகர்முதல் அட யார்கள் வரை அந்தக் காணவெள்ளத்தில் பரவசப்பட்( மெய்ம்மறந்து நிற்பர். எல்லோரையும்விட ராஜப்பனுடைய இன்னிசையை இருதயபூர்வமாக அநுபவித்து ஆனந்த படுவது ஒரே ஒரு ஆத்மாதான். அது வேறுயாருமில்லே அந்தக் கோவில் பெண்தான்.
அந்தப் பெண்ணினுடைய சங்கீத ஞானத்தைப் பற்ற ராஜப்பனே பெரிதும் ஆச்சரியப்பட்டிருக்கிருன். கோவி லில் மூன்று வேளைகளிலும் மேளம் சகிதமாகப் பூஜை செய வார்களல்லவா? அப்பொழுது எல்லாம், அந்தப்பெண்ணுட அழகிய மாலை தொடுத்துக்கொண்டு அம்பிகையின் ச நிதியை அடைவாள். நாதஸ்வரக்காரரின் இன்னிசையில் திளைத்து நிற்பாள்.
ராஜப்பன் இதைக் கவனிக்காமலில்லை. 'இவள் யாராயிருக்கலாம் ?' என்ற சந்தேகம் அவன் உள்ளத்தில் ஊறத் தொடங்கியது. எத்தனையோ பேர்களை F r சித்துப் பார்த்தான். ' தெரியாது' என்ற மறுமொழி தான் கிடைத்தது. அவள் மேல் அவ்வளவு கவலை எதற்கு அவள் யாராயிருந்தால்தான் என்ன ?
o o Ο C0CQ go OO
மோஹன ராகத்தில் நீத்தி, சுவர்க்க இந்திரலோகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் போது கழுத்தில் ஏதோ விழுந்தது, நம்பமுடியவில்லை. இலர்மாலை. எதிரே அந்தட் பெண் கைகூப்பியபடி ஸ்தம்பித்து நின்ருள். ராஜப்பன் தேகம் சிலிர்த்தது. சுற்றும் முற்றும் பார்த்தான். பூசகர் பஞ்சதீபத்தையே காட்டிக்கொண்டு நின்ருர், Ꭵ £b ᏣᏑᏈ யோசை காதைத் துளைத்தது. சுபசகுனம்தான். ஆனல்.
'அம்பிகையின் சந்நிதியிலா இப்படிச் செய்வது ?"
என்முன், கோபமாக.
'இது ஒரு பொழுதும் குற்றமாகாது. பாருங்கள்
சுபமுகூர்த்தத்தை. தேவியின் ஆணையல்லவா இது ?"
என்ருள் வாடிய முகத்துடன் அந்தப் பெண்

s
அம்பிகை சந்நிதியில் 7
'ஒன்றும் விளங்கவில்லையே'. * உங்கள் வாத்தியம் என்னை அடிமையாக்கிவிட்டது.'
‘என் சலையை அநுபவிக்க உனக்குச் சக்தி எப்படி வந்தது ?"
"என்ன, மறந்துவிட்டீர்களா ? இந்தக் கலையைத் நாங்கள் உணருவதற்கு நான் ஒரு காரணம் என்பதை ஞாபகப்படுத்துகிறேன்"
* ‘அப்படியாளுல் ..?’’
*"தங்கள் குருவின்.
'என்ன மோகனவா ? ஐயோ பெருந்தவறு நேர்ந்து பிட்டதே'
* 'இல்லை. நான் உங்கள் கலையையும் உங்களையும் மனமார நேசிக்கிறேன். என்னை நிராகரிக்க வேண்டா மென்பது தெய்வ ஆக்ஞை"
"தெய்வ ஆக்ஞை. தெய்வ ஆக்ஞை" என்று ராஜப் பன் உதடுகள் விடாமல் உச்சரித்தன.
கற்சிலேபோல் நின்ற அவன் கழுத்திலிருந்த மலர் மாலையில் ஒரு புஷ்பம் மோஹனவின் தலேயில் விழுந்தது.
-ஈழகேசரி, 17-08-1941

Page 25
சித்தக் குழப்பம்
“மெத்த வருந்துகிறேன். எங்களுடைய நட்பிற்குப் பங்கம் ஏற்படலாகாதென்று இறைவனைப் பிரார்த்திப்பதை விட என்னூல் வேறு ஒன்றுஞ் செய்யமுடியாது. உங்க ளுடைய கோரிக்கை என்னைக் கொலைக்களத்திற்குக் கொண்டு செல்கிறது."
"சரி, உன்னிஷ்டம். என்னைவிட அந்த வெண்கல விக்ரஹம் உனக்குப் பெரிது. அவ்வளவுதானே ?
"ஐயோ.. அப்படி. ஏன் ?’’
o o O Ο Ο OO Ο Ο
நடுநிசி. உலகம் மிகவும் நிம்மதியாகத் துயின்று கொண்டிருந்தது. அந்த ஆழ்ந்த அந்தகாரத்திலும் ஒர் உருவம் மட்டும் மிகவும் நிதானமாக ஓர் வீட்டுள் நுழைந்து எதையோ ஒன்றைத் தூக்கிக்கொண்டு வெளியே ஒடிற்று.
d o Ο Ο Ο OO CO
பலபலவென்று பொழுது விடிந்தது. செல்வி தந்தாவதி படுக்கையில் புரண்டு விழித்தாள். நித்திரையில் ஏதோ கெட்ட சொப்பனங்கண்டு -9](ԼքՖ] அழுது அவள் முகம் வாடியிருந்தது. கண்களைக் கசக்கிக்கொண்டு நேரே நிமிர்ந்து பார்த்தாள். தினந்தோறும் தூக்கத்தினின்று விழித்ததும் அந்தத் திசையைத்தான் அவள் பார்ப்பது

விக்கக் குழப்பம் 9
வழக்கம். தணலில் மிதித்தவன்போலத் திடுக்குற்று ாழும்பி விரைந்து சென்றவள் அப்படியே மரம்போல அசைவற்றுச் சிறிது நேரம் நின்ருள். அவளது அழகிய தோற்றம் ஒரு பயங்கரக் காளி ரூபமாக மாறியது. அடுத்த கdனம் "படீர்" என்ருெரு சத்தம். சுக்கு நூருகச் சிதறுண்டு கிடந்தது ஒரு சிலா விக்கிரஹம். பைத்தியக்காரிபோல, இல்லை, நிஜ பைத்தியக்காரியாகவே தெருவில் ஒடி மறைந்தாள் .
O Ο O Od OO OO
மனித வாழ்க்கையின் மகா பரிதாபமான நிலைகளை நாம் பிரத்தியட்சமாகப் பார்க்கவேண்டுமாஞல் ஒரு பைத் இயக்கார ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டும். இத்தகைய அபாக்கியமான இடமொன்று இலங்கையிலும் அரசினரால் அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அங்கு வந்து சேர்ந்த இரு பைத்தியங்களைப்பற்றியே ஆஸ்பத்திரியெங்கும் பெரிய பரபரப்பாகவிருந்தது.
"இன்ப வாழ்க்கையின் உச்சஸ்தானத்தை அநுபவிக்க வேண்டிய இந்தப் பருவத்திலா இப்படிக் கொடூரம் சம்ப விக்க வேண்டும் ?" என்று பைத்திய அதிகாரிகளெல் லோரும் பெருங் கவலைப்பட்டனர்.
ஆஸ்பத்திரியின் முன்பக்கத்து அறைச் சுவரில் ஒர் அருமையான புத்த விக்கிரஹம் சிறிது நாட்களாகக் காணப்படுகிறது. அந்த உயிர்ச்சிலை ஒரு பைத்தியகார mரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதென்றல் ஆச்சரியமா யிருக்கிறதல்லவா ? ஆஞல், உண்மையில் அந்தப் பைத்தி பத்தின் வாழ்க்கைச் சிதைவுக்கும் அந்தப் பெளத்த சிலைக்கும் எதோ நெருங்கிய தொடர்பு இருக்கவேண்டும். அல்லா விடில் அந்தச் சிலாதரிசனம் கிடைத்த வேண்களிலெல்லாம் அவனுடைய கண்கள் நீர்த்துளிகளுடன் ஏன் ததும்ப வேண்டும் ?
சிற்பக்கலேயின் நுட்பத்தைக் காட்டுவதற்காக அந்தப் பெளத்த சிலையை வெளியில் வைத்தார்கள் அதிகாரிகள். ஆணுல், அந்தச் செய்கை அங்குள்ள இரண்டு பைத்தியங்
Lid 2

Page 26
Η Ο LDøöflg; Lðfr(6)
களின் உள்ளங்களைக் கிளறி எத்தனையோ மாற்றங்களை அடிக்கடி உண்டாக்குகிறதென்பது அவர்களுக்கு எப்படித் தெரியப்போகிறது ? தெரிந்துதான் என்ன பிரயோஜனம் ? * பைத்தியச் சேட்டை' என்றுதான் முடிவுகட்டுவார்கள். பைத்தியகாரர் ஜாபிதாவில் புதிதாகச் சேர்ந்திருக் கும் அந்தச் சிங்களச் சிறுமியையும் அநேகமாக எல்லோ ருக்குந் தெரிந்திருக்கும். அவளுடைய இளமை மட்டுமல் லாது வசீகரமான தோற்றமும் எவருடைய கவனத்தையுங் கவர்ந்திழுக்குமென்பதில் சந்தேகமில்லே. அன்பும் ஆசையுங் கலந்த ஒருவித அநுதாபம் அவள்மேல்
o O Ο Ο od Ο Ο
கோவிந்தன் தென்னிந்திய ஹிந்து, ஏதோ படித்தான். ஆஞல், அதுவும் அவன் வாழ்க்கை நடைமுறைக்கு எதுவும் பலன் தரவில்லை. இப்போதைய கல்வி முறையே அப்படித் தான் அமைந்திருக்கிறதல்லவா ? இலங்கை விஜயம் ஏதாவது மாறுதல் செய்யுமென்று நம்பிஞன். மனவேதனையில் முளேத் தெழுந்த அந்த ஏழையின் நம்பிக்கை வீண்போகவில்லை,
சிங்கள நாட்டில் ஒரு மூலையிலுள்ள பெரிய கடை ஒன் றில் அவனுக்கு வேலை கிடைத்தது. சிங்களவருடைய கடை தான்; ஆஞல் அவனுடைய குடும்பத்தினர் எல்லோருமே நன்ருகத் தமிழில் பேசுவார்கள். தமிழர்கள் என்ருஸ் அவர்களுக்குப் போதும். பெரிய ஆசை. குறுகிய மணப் பான்மையுடைய சிங்களர் சிலரின் துஷ்பிரசாரத்தினுரடே யும் இப்படி அபூர்வமானவர்களைக் காண்பது ஆச்சரிய மல்லவா ?
குண நடைகளில் ஒரு அப்பழுக்குக் கூடக் கண்டு பிடிக்க முடியாத கோவிந்தனிடம் அவர்கள் நம்பிக்கை யும் விஸ்வாசமும்கொண்டு தங்கள் சொந்தப் பிள்ளை போலவே பராமரித்து வந்தார்கள்.
காதலேப்போல நல்லதுமில்லை; கெட்டதுமில்லை. எத் தனையோ உயிர்களை மிக உன்னத நிலைக்குக் கொண்டு வருவதும் இதுதான். அதன் சுழலில் அகப்பட்டுச் சிதைந்த உயிர்கள்தான் எத்தனை ? பாவம் 1 வயிற்றுப் பிழைப்பு

வித்தக் குழப்பம் Il
ஒன்றையே நாடிவத்த 'அப்பாவி கோவிந்தனிடமும் காதல் தனது திருவிளையாடல்களை ஆரம்பித்தது. கடை முதலாளி யின் செல்வப் புதல்வி நந்தாவதிக்கும் கோவிந்தனுக்கு மிடையில் வளர்பிறைபோல வளர்ந்துகொண்டு வந்தது காதல், அவர்களுடைய இன்பமும் குதூகலமும் தேய்ந்து இருள் கவியும் நாள் சமீபத்திலிருக்கிறதென்பதை அவர்கள் எப்படி அறிவார்கள் ?
o O c do Od ? Cز
ஹிந்து மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும் அறிவும் கோவிந்தனுக்கு உண்டு. அவனது அந்தரங்கச் செல்வி நந்தா வதியோ பெளத்த மதத்தில் ஊறினவள். அவளுடைய கண்கண்ட தெய்வம் புத்தபிரான்.
அவள்மேல் கோவிந்தன் கொண்டுள்ள உண்மைக் காத
லுக்கு மூட்டுக்கட்டையாக நின்றது இந்த ஒரே வித்தியா அந்தான். கோவிந்தன் ஒரு முன்கோபக்காரன். நந்தா வின் பிடிவாதக் குணமும் அவனுக்கு ஒரு முரட்டு வைராக் கியத்தை உண்டாக்கியிருக்கலாம். ஆனல், முக்கிய காரணம் அவனுக்கு உள்ளூர விருந்த ஒரு பயந்தான். எத்தனையோ காலமாக அவர்களிடை ஏற்பட்டு வளர்ந்த உண்மையான இருதயபூர்வமான காதலுக்கு இந்த மதபேதம் ஓர் இடை பூருகவிருந்துவிட்டால்...? நந்தாவின் தாழ்மையான கோரிக்கைகளையெல்லாம் அவன் நிராகரித்துக் கடைசி வரையில் ஒரு முரட்டுப் பிடிவாதத்துடன் நின்றதின் உண் மையான காரணம் இதுதான் :
அவளது உயிர் போன்ற புத்த தேவனின் விக்கிரஹம் போனதிலிருந்தே நந்தாவதிக்குச் சித்தங்கிலங்கிவிட்டது. இந்த ஏக்கம் உண்மையாக அவளை ஒரு பைத்தியக்காரி யாக்கிவிட்டது.
ஆஞல், அன்றைக்கு அவளுடைய அதே "தெய்வச் விலை யை ஆஸ்பத்திரியில் கண்டதும் பிரமித்துப் போஞள். போன உயிர் மீண்டது போலிருந்தது அவளுக்கு. அவளு டைய பைத்தியக் குணங்கள் யாவும் அந்த நிமிஷமே

Page 27
2 மனித மா
அவளிடம் விடைபெற்றுக்கொண்டன. ஆனல். பைத்தியம் குணமானவர்களுக்கு அப்புறம் ஆஸ்பத்திரியி இடமேது ? "அப்படியாயின் எனது செல்வத்தை மீண்டு விட்டுப் பிரிவதா ? ஐயோ வேண்டாம். எனது ஆயுட்கால முழுவதும் விசரியாகவே காலங்கழிப்போம். 53). னுடைய முகதரிசனம் ஒன்று மட்டும் போதும்' -இப்ப ஒரு யோசனையும் தீர்மானமும்.
அந்தப் பொய்வேடம் சீக்கிரத்தில் வெளிப்பட்டுவிடு என்று அவளுக்குத் தெரியாது,  ைபத் தி ய கா ர வைத்தியசாலை என்ருல் பிரபல வைத்திய நிபுண களும் இருப்பஈர்களல்லவா ? ஒரு தடவை மட்டும் பரீசுை செய்ததில் நந்தாலின் நடிப்பு வெளியாகிவிட்டது. எல்லே ரும் ஆச்சரியப்பட்டார்கள். அவள்மேல் ஒரு அநுதாபமு. பிரியமும் வைத்திய அதிகாரிகளுக்கு ஏற்பட்டன.
தந்தாவதி பெண் பைத்தியங்களுக்குத்தான் பராபரி புக்காரியாக இருக்கிருள் என்று எல்லோருங் கதைத்துக் கொண்டார்கள். ஆணுல் ஒரு இளம் ஆண் பைத்தியத் தையும் அவள், அன்னைபோலப் பராபரித்து வருகிருள் என்று அவர்களுக்கு எப்படித் தெரியப்போகிறது ?
o O O Oo Ο Ο O
ஒரு நாள் சூரியோதயத்திற்கு முன்னராக நிகழ்ந்து சம்பவம் :
புத்தபிரானுக்கு முன்னுல் முழந்தாளில் நின்றுகொண்டு தன்னே மறந்து தியானத்தில் அமிழ்ந்திருக்கிருள் ஒரு பெண் சற்றுத் தூரத்திலிருந்து,
*மாதர் பிரபஞ்ச மயக்கத்திலே விழுந்து
போத மயங்கிப் பொறியழிந்தேன் பூரணமே”* என்ற பட்டினத்தடிகளின் அருமையான வாக்கியங்கள் அந்தக் காலை நேரத்தின் குளிர்ந்த தென்றலில் மிதந்து வந்துகொண்டிருந்தன.
-ஈழகேசரி, 14.09.1941

தீபாவளிக் கனவு
“தீவாளி கிட்டிவிட்டது. இந்த முறை அடுத்தவீட்டு இராமனுடன் போட்டி போடப்போகிறேன். கணக்கப் பட்டாசு வாங்கித்தரவேணும்” என்று கெஞ்சிஞன் கோபால்.
"அதெல்லாம் முடியாது.” அதற்குமேல் சின்னம் மாவிஞல் ஒன்றுஞ் சொல்லமுடியவில்லை. துக்கம் அவள் நெஞ்சை அடைத்துக்கொண்டது.
**ஏனம்மா, எங்க வீட்டுக்குத் தீவாளி வராதா இந்த முறை ?’’
இல்லை என்று அவள் சொல்லவில்லை, தலையை மட்டும் அசைத்தாள். கண்கள் நீர் துளித்தன.
'ஏனம்மா அப்பாதான் எப்பவோ செத்துப்போயிட் டாராமே. தீவாளி கொண்டாடிஞல் வந்து அடிப்பாரா
guau pfr ?” ”
அவள் மெளனத்தில் ஆழ்ந்திருந்தாள் "ஏ ! பாழுஞ் சமூகமே" என்று மாத்திரம் அவள் மனம் திட்டிற்று.
* ஏனம்மா அழுகிறே ??
*சும்மா பேசாதே ! இந்த முறை தீவாளி கொண்டா டப்படாது" என்ருள்.

Page 28
4 மனித மr(
“எண்பது, நூறு பவுணைக் கொட்டி வாத்திச் சோதனை பாஸ் செய்த து தா ன் மிச்சம். வீட்டிலிருந்துகொண்டு கொட்டாவி விடத்தான் கடைசியாகக் கண்டுபிடித்தீர்கள் ஒரு நல்லநாள் பெரியநாள் என்ருவது கிடையாத எங்க வீட்டில்?’’
இது நடந்தது ஒரு வருடத்துக்கு முத்திய தீபாவளியன்று சாதாரணமாக இப்படிப் பேசக்கூடிய சுபாவமுடையவளல்ல சின்னம்மா. ஆணுல், அன்றைக்குக் குழந்தை கோபாலனைட் பார்க்க அவளுக்கு வயிறெரிந்தது. பேசிவிட்டாள்.
பெரிய ஆச்சரியமாயிருந்தது வேலாயுதத்துக்கு. பூ% புலியாகிவிட்டது. நொந்துபோயிருந்த அவன் உள்ளத்தில் மிக ஆழமாகக் குத்தின அவளுடைய சொற்கள் . குழந் தையைப் பார்க்கமுடியவில்லை. அடுத்த வீட்டில் வெடிக் கும் ஒவ்வொரு பட்டாசுக்கும் அவன் முகத்தில் படரும் வேதனையைப் பார்த்துச் சகித்துக்கொண்டிருக்க முடிய வில்லை. சால்வையை உதறித் தோளில் போட்டுக்கொண்டு வெளிக்கிளம்பியவன்தான்.
அடுத்த தீபாவளியும் வந்துவிட்டது. சிங்கப்பூரில் அவன் ஆஸ்பத்திரியில் கிடந்து செத்துப்போய்விட்டான் என்று எங்கும் ஒரேகதை. செத்தவீடும் கொண்டாடி எல்லாம் முடித்துவிட்டார்கள், சின்னம்மாவும் ஊர் சனங்களும்.
ஃ % ஃ அடுத்த நாள் தீபாவளி. அமாவாசைக்கு முத்தின இரவு குழந்தை கோபாலனுக்கு எவ்வளவோ சமாதானஞ் சொ லித்தான் அவனை நித்திரையாக்க முடிந்தது.
அவள் படுக்கையில் புரண்டுகிடந்தாள். எத்தனையே மாதங்களாகத் தான் அவள் அப்படிக்கிடந்து உழன் கொண்டு வருகிருளே !
அடிக்கடி குழந்தையின் பக்கம் திரும்பிப் பார்ப்பாள் அன்று மாலையில் நிகழ்த்த சம்பவம் ஒன்று அவள் ஞா

தீபாவளிக் கனவு 5
*த்துக்கு வந்தது. படுத்திருக்க முடியவில்லை. எழும்பி உட்கார்ந்திருந்தாள். s
ძზ ஃ குழந்தையைக் கனநேரமாகக் காணவில்லையென்று தேடிக்கொண்டு பூஜை அறைக்குள் போய்ப் பார்த்தாள். அங்கே அவள் கண்ட காட்சி அவளைப் பிரமிக்கச் செய்து விட்டது.
குழந்தை கோபாலன் அம்பிகையின் விக்கிரகத்துக்கு முன்னுல் முழந்தாளில் நின்றுகொண்டு பின்வருமாறு புலம்புவது சின்னம்மாவின் செவிகளில் விழுந்தது :
* 'அம்பிகே, எங்க அப்பா எங்கே ? இந்த முறை தீபாவளி இல்லையாமே எங்க வீட்டில். அடுத்த வீட்டு இராமன் என்னைப் பகிடிபண்ணப்போருனே. அம்மா ஒயா மல் அழுதுகொண்டிருக்கிருளே !?"
சின்னம்மாவுக்குத் துக்கம் தாங்கமுடியவில்லை. சிறிது நேரம் செல்ல எங்கேயோ போய் நின்றுகொண்டு 'கோபா லன்' என்று சத்தம் வைத்தாள்.
oზ ძზ நித்திரையில் மூழ்கிக் கிடந்த குழந்தையின் முகம் அடிக் 'கடி அடையும் மாறுதல்களை வெகு ஆவலாகக் கவனித்துக் கொண்டிருந்தாள். அந்த மங்கல் வெளிச்சத்தின் ஒளியில் குழந்தையின் முகம் மிகவும் ஆனந்தமாகப் பிரகாசித்தது.
*அம்மா !' என்று குழறிக்கொண்டு எழுந்தான் கோபால். தாய் அவனை மார்போடு அனத்துக்கொண்டு "என்னடா கண்ணே" என்று அன்பாகக் கேட்டாள்.
"ஒன்றுமில்லையம்மா, கனவு கண்டேன்' என்ருன் ாமாற்றம் திறைந்த முகத்துடன். "என்ன கனவு ? ஏன் அழுதுகொண்டு எழும்பினுய் ?"

Page 29
16 மனித மாடு
'அம்மா ! தான் தீவாளி கொண்டாடிவிட்டேன். இராமனை வென்றுவிட்டேன். எவ்வளவு பட்டாசு சுட்டேன் தெரியுமா? பட்டுவேட்டி சால்வை எல்லாம் அப்பா கொண்டு வந்து கொடுத்தார். இனி எனக்கு ஒன்றும் வேண்டாம். எப்படியோ எனக்குத்தானே அம்மா வெற்றி"
"உனக்குத் தீபாவளி நினைவுதான் எப்பொழுதும். பேசாமல் படுத்துத் தூங்கு. ’’ என்று அதட்டி அவனை மீண்டும் நித்திரையாக்கினுள். அவள் உள்ளத்தில் ஒரே குழப்பம்; ஏக்கம்; சந்தேகம்.
ძზ ძზ ძ%
பொழுது புலர்ந்தது. எங்கும் ஒரே அமளி துமனி. வெடிச்சத்தமும் சிறுவர்களின் கூக்குரலும் காதைத் துளைத்தன.
ராமு வீட்டுப்பக்கமாக அந்தப் பேரிரைச்சல் கேட்டது. கோபாலன் தெருவில் தலையை நீட்டிப் பார்த்தான். ஒரு மனுஷ்ணைக்கண்டு எல்லோரும் வெருண்டு "அடே’’ என்று கூவிக்கொண்டு வீட்டுள் நுழைகிருர்கள்.
அவனுக்குப் பயம். ஓடிவந்து அம்மாவிடம் GoIF frøðir ஞன். அதற்கிடையில் அந்த மனுஷன் கோபாலன் வீட்டுக் குள் நுழைந்துவிட்டான்.
சின்னம்மாவால் அதை நம்பமுடியவில்லை.
ஒருவரும் அல்ல, வேலாயுதந்தான். ஒருகணம் கண் கலங்கிக் கல்லாகச் சமைந்துநின்றன் அந்த மனுஷன்.
பின்னர் குழந்தையைத் தூக்கிக்கொண்டு கூத்தாடினன் பைத்தியக்காரன் போல,
-ஈழகேசரி, 19.10.1941

எச்சில் இலை வாழ்க்கை
(Pதல் நாள் படம் பார்த்த அலுப்பு. அலுப்பு ஏற்பட ஞாயமில்லை. எங்கள் வீட்டுக்கும் சினிமாத் தியேட்ட ருக்கும் அரை மைல் தூரம். அதற்கும் நாங்கள் நடந்து போகவில்லை. கார் இருந்தது. எங்களில் ஐந்து பேர்கள். சந்தோஷமாக எல்லோரும் படம் பார்த்துவிட்டு வந்தோம். இரண்டு ரூபா "ஸ்பீட்டில்?, மெத்தைபோட்ட சோபாவில் 1உட்கார்ந்து படம்பார்த்துவிட்டு வந்தோம். என்ருலும், பெரிய அலுப்பாகவிருந்தது 1 ஒருவன் வந்தான். ' என் னடா ? பெரிய சோம்பேறித்தனமாக இருக்கிறது. கீரி மலே க்குப் போவமா ?’ என்ருன்.
அலுப்புத் தீர ஒரு யோசனை எல்லோரும் புறப்பட்டு விட்டோம். "கூப்பன் பெற்றேல் எப்போதோ எரிந்து போய்விட்டது. அதைப்பற்றிக் கவலையில்லை. கலன் மூன்று ருபா வீதம் மூன்று கலன் எண்ணெய் ஒரு "பொதுநலமி யிடம் வாங்கினுேம். இன்னுமொரு யோசனை, தண்ணி ருக்குள் நின்றபடி கொஞ்சப் படங்கள் பிடிக்கவேண்டும்' இரண்டு "பிலிம் சுருள்கள், கமெரா எல்லாம் உடனே தயார். புறப்பட்டுவிட்டோம்.
குளித்துவிட்டுப் பதினைந்து நிமிடத்தில் வீடு திரும்பி யிருக்கலாம். ஒரு தடையுமில்லை. ஆனல் ஒரு விடுதியில், சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். ‘ஐந்து பேருக்கு
iO 3

Page 30
18 மனித மாடு
'ஸ்பெசல் சாப்பாடு. காசு எவ்வளவு என்ருலும் காரிய மில்லை" என்று ஒரு அறிவித்தலுங் கூட.
கடலுள் எல்லோரும் இறங்கினுேம், "கமெராவும் வேலைசெய்தது. குஷி போதவில்லை. கு ளத் து க் கு வந்து சேர்ந்தோம். நான்கு மணி நேரம்வரை குளத்தில் கும் 2ாளம். ஒரு பக்கத்தில் படப்பிடிப்பும் நடந்துகொண் டிருந்தது. குளத்து நீர் கலங்கிச் சேருக மிதக்கத் தொடங் கியது. எத்தனையோ பேர்கள் வந்து பார்த்துவிட்டுத் திரும்பினர்கள், சிலர் கடலுக்குச் சென்ருர்கள். வேறு சிலர் நேரே வீட்டுக்கே போய்விட்டார்கள். ஒருவன் சொல் லிக் கொண்டு போனது என் காதில்விழுந்தது. ‘எருமை கள் குளிக்கிறது. தண்ணீர் கூடாது." அதிகம் சொல்ல வேண்டியதில்லை. நாலு மணி நேரம் கீரிமலைக் குளத்தில் எங்க்ளுடைய எதேச்சாதிகாரம் நடந்துகொண்டிருந்தது. ஸ்நானம் முடிந்தது. கடல்நீர்க் குளிப்பு: பசி வயிற்றைப் பிடுங்கத் தொடங்கிற்று.
சாப்பாட்டு விடுதிக்குப் போனுேம். சமையல் முடியப் பதினைந்து நிமிஷம் செல்லும் என்று தெரிந்தது. பொறுக்க முடியவில்லை! ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தோம். காய்ந்த மாடு கம்பிலே விழுத்ததுபோலக் கண்ட பண்டங்களையும் எடுத்து வாயில்போட்டோம். இந்த நேரத்தில் ஓடிவந் தான் சாப்பாட்டு விடுதிக்காரன். எவ்வளவோ கெஞ்சி மன்ருடினன். பசி அகோரம் அடங்கிப்போயிருந்தது எங் களுக்கு. பின்னர் வருவதாகத் தெரிவித்தோம். ஹோட்டல் காரணுக்கும் நோட்டுகளாக எடுத்துக் கொடுத்துவிட்டு வெளிக்கிட்டோம். வீ ட் டி லி ருந்து போகும்பொழுதே இரண்டு "சிகரெட் டின்கள் வாங்கிக் கொண்டு போயிருந் தோம். அவை காலியாகும் வரைக்கும் கீரிமலைப் பிரதசுFணம் நடந்துகொண்டிருந்தது.
இரண்டரை மூன்று மணியிருக்கும். சாப்பாட்டு விடு திக்குப் போய்ச் சேர்ந்தோம். அவர்கள் எங்களைக் காத்துக் சொண்டிருந்தார்கள். சாப்பிட உட்கார்ந்தோம். ஒவ்வொரு பெரிய தலைவாழையிலை நிறையப் பண்டங்கள் பரிமாறப்

ராச்சில் இலை வாழ்க்கை 19
பட்டிருந்தன. அவைகளின் பெயர், ரகம் ஒன்றும் தெரியாது. தெரிந்துகொள்ளமுடியாது. நாங்கள் தெரிந்துகொள்ள முயற்சிக்கவுமில்லை. ஏதேதோ திணிசு திணிசாக மாறி மாறிப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள். 'ஸ்பெசல்’ சாப் பாடல்லவா ? ஆணுல், நாங்கள் "ஸ்பெசலாகச் சாப்பிட வில்லை. சாப்பாட்டில் அவ்வளவாக மனம் ஈடுபடவில்லை. கதைத்தும் சிரித்தும் அலம்பியும் கொண்டிருந்துவிட்டு ஒருபடி இலைகளைச் சுருட்டி வாரிக்கொண்டு எழுந்தோம். ஒவ்வொருவருடைய இலையும் ஒரு இருத்தல் சனம், பத்து ரூட கொடுத்து ஸ்பெசலாகத் தயாரித்த அந்தச் சாப்பாடு ஐந்து பங்காக ஒவ்வொருவருடைய இலையிலும் கனத்திது. மண்ணுேடு மண்ணுகிக் கலந்துபோவதற்கு அந்தச் சாப் பாடு போய்க்கொண்டிருந்தது. கடித்த மிச்சம், சப்பித் துப்பின கழிவுகள், எச்சில்கள் எல்லாவற்றுடனும் தூக்கிக் கொண்டு போனேம்.
5ான்னுடைய எச்சில் இலையைத் துரக்கிக்கொண்டு நான் முன்னுல் போனேன் எச்சில் இலைகள் குவிந்து கிடந்த ஒரு கிடங்குப் பக்கமாகப் போனேன்
பத்துப் பன்னிரண்டு பேர்கள், பெண்களும் குழந் பதைகளுமாக எங்களே நோக்கி ஓடிவந்தார்கள். ஒருவரை யொருவர் தள்ளியும் இடித்தும் ஒடிவந்து 'ஐயா இங்கே தாருங்கள் என்னிடம் தாருங்கள்’’ என்று வாயைப் பிளந்துகொண்டு கையை நீட்டினர்கள். சிலர், போட்டியில் இ?லகளைப் பிடுங்கினர்கள். நெருக்கடியில் இலைகள் சில Fழிந்து உள்ளேயிருந்த "கழிவுகள் கீழே சிதறுண்டன, குழந்தைகள் போட்டி போட்டுக்கொண்டு அவற்றைக் கூட்டி அள்ளிக்கொண்டு ஒடிஞர்கள், ஐயோ, அப்போது அவர்கள் முக த் தி ல் வீ சி ய அந்தப் பேரானந்தப் பிரவாகம் இப்போதும் கண்முன்னே வந்து உள்ளத்தை மாடுருவிக் கொண்டிருக்கிறது. இலைகளை உருப்படியாக வாங்கிக்கொண்ட அதிர்ஷ்டசாலிகள் ஓடோடியுஞ் சென்று அவற்றைத் தங்கள் ஒலைப்பெட்டிகளில் வைத்து மூடினுர்கள். குழந்தைகள் எவ்வளவு ஆவலுடன் அவர்களைச் சுற்றி உட் கார்ந்து கொண்டன இந்த அமளியில் என்னேடு வந்த

Page 31
20 மனித மாடு
வர்கள் சிலர் இலேகளை எறிந்தே லிட்டார்கள். நாய்கள் பாய்ந்துவந்தன ஆளுல், அவற்றை விரட்டிவிட்டு இலை க3ள எடுத்துக்கொண்டு ஒடிஞர்கள் சில பெண்கள். அவர்களைத் தொடர்ந்து ஓடின சில குழந்தைகள். நாய்கள் குரைத்துக்கொண்டு நின்றன. அவசர அவசரமாக அவர் கள் சாப்பிட்டார்கள். சாப்பிடுதலைச் சிலர் பார்த்துக் கொண்டு நின்ருர்கள். அவர்கள் முகத்தில் துக்கமும் கோபமும் அவமானமும் ஏமாற்றமும் வெடித்துக் கொண் டிருந்தன.
ஒருவன் திரும்பி என்னைப் பார்த்தான். அந்தப் பார் வையில் ஆ! சான்னென்ன உணர்ச்சிக் கோடுகள். அதைப் பார்க்க என்னல் சகிக்கமுடியவில்லே. திரும்பிவிட்டேன்,
இந்தக் காட்சி அடிக்கடி என் மனதில் வந்துபோய்க் கொண்டிருக்கிறது. அநேகமாகச் சாப்பிடும் வேளைகளில் உண்மையில் என்னல் சிலவேளைகளில் சாப்பிடவே முடிகிற தில்லை. இலையைத் தூக்கிக்கொண்டு வெளியே போனதும் எங்கள் வீட்டு நாய் வந்துவிடும். ஆனல், அதை அடித்துக் கலைத்துவிட்டு அந்த இலையை எடுத்துக்கொண்டு ஒடும் மனுஷர்களைக் காணுேம். நாய்க்கு எறியும் எச்சில் இலேயை, நான் சாப்பிட்டுவிட்டுப் போன எச்சில் இலையின் "அழகைப் பார்த்து எனது உயிருக்குயிரான மனேவியே அருவருப் படையும் அந்த எச்சில் இலையை எடுத்து அதிலுள்ளதை உண்டு வயிறுவளர்க்கும் அந்த ஏழைப் பிறவிகளை நினைத் தவுடன் சாப்பிட்ட உணவு அப்படியே எரிந்துபோய் விடுகிறது. ォ
தான் இப்போது கீரிமலைக்குப் போவதில்லை. போனுலும் அந்தச் சாப்பாட்டு விடுதிப் பக்கம் தலைகாட்டுவதேயில்லை
-ஈழகேசரி, 24-05-1 944

ஏழை அழுத கண்ணிர்
முன்ருஞ் சாமக் கோழி ஒன்று கூவிற்று. அதைத் தொடர்ந்து மற்றைய கோழிகளும் ஒவ்வொன்ருகச் சிற கடித்துக் கூவ ஆரம்பித்தன.
மெய்ம்மறந்த தூக்கத்தில் ஆழ்ந்திருத்த பொன்னுச்சாமி மெதுவாகப் படுக்கையில் புரண்டான். அரைத் தூக்கமாக விழித்தபடி **கந்தா. கந்தா. எழும்படா' என்று சத்தம் வைத்தான். சமீபமாக ஒரு தென்னுேலைக் கிடுகில் நீட்டி நிமிர்ந்துகிடந்த சுந்தன், உடனே துடித்துப் பதைத்து எழும்பிச் சோம்பல் முறித்தான்.
அந்தப் பக்கத்தில் உள்ள சேவல்கள் எல்லாம் கூவி ஒய்ந்தன. மீண்டும் அமைதி.
"இன்னும் எழும்பியபாடில்லையாக்கும். அவசரப்பட்டு ான்னே மட்டும் எழுப்பிவிட்டுத் தான் குறட்டைவிடுகிறர்.” ான்று முணுமுணுத் தான் கந்தன். அவனுக்கு நித்திரைக் wலக்கம் இன்னும் சரியாகத் தெளிந்தபாடில்லை.
"தொபுகடீர்” என்று ஒரு பனங்காய் பக்கத்தில் விழுந் கது. பொன்னுச்சாமி திடுக்குற்று விழித்தான். எதிரே சுந்தன் குந்திக்கொண்டிருப்பது அந்தப் பாதிச் சந்திரன் வெளிச்சத்தில் நன்முகத் தெரிந்தது. கை கால்களே ஒரு தரம் நீட்டி மடக்கிக்கொண்டு எழுந்திருக்கமுயன்ருன்.

Page 32
名圣 மனித மாடு
எழும்ப முடியவில்லை. பெரிய வேதனையாயிருந்தது. முதல் நாள் முழுவதும் வயலில் அந்த வேகிற வெயிலில் நின்று வேலே செய்தது அவனை அப்படியே நித்திரையில் ஆழ்த்தி விட்டது; படுக்கையிலிருந்து எழும்பவொட்டாமல் அமுக் கியது.
'வீட்டில் சுகமாக நித்திரை கொண்டால் புகையிலேக் கன்றுகள் எப்படிப்போகும் ? போன வருஷம் பட்ட கடன் தொலைவதுதான் எப்படி ?"
இந்த யோசனைகள் பொன்னுச்சாமியை ஒருகணம் உலுப்பிவிட்டன. தணலில் மிதித்தவன்போல் திடுக்கேன்று எழுந்தான். சோம்பல், அலுப்பு எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு எழுந்து வெளியேவந்தான். முதல் நாள் புகைத்துவிட்டு வேலியில் சொருகிவைத்த பாதிச் சுருட்டை அந்த நிலவு வெளிச்சத்தில் தேடி எடுத்துப் பற்றவைத்தான். மண்வெட்டியையும் கொடியையும் கந்தனிடம் கொடுத்து விட்டுப் பட்டையைத் தன் தோளில் மாட்டிக்கொண்டு இரண்டுபேரும் வயலுக்குப் புறப்பட்டனர்.
பொன்னுச்சாமி முன்ஞலே நடந்தான். அவனைப் பின் தொடர்ந்து கந்தன் சென்ருரன். தெருவில் ஏறி ஒரு அரை மைல் தூரம் நடந்ததும் இருவரும் வயல் வெளியில் பிர வேசித்தார்கள். சிண்டைப் பிடுங்கிக்கொண்டு போயிற்று காற்று. பொன்னுச்சாமியின் சுருட்டு "பக்" என்று அணைந் தது. வயலில் இறைப்பவர்களின் பாட்டுக்கள் காற்றில் மிதந்து வந்து கந்தனின் காதுகளில் அலறின. தூரத்தில் கூட்டங் கூட்டமாக நின்ற பூவரச மரங்கள் சேர்ந்தாற் போல் அசைந்தாடின.
\ "சீ, இன்றைக்கு நாங்கள் கணக்கப் பிந்திப்போனம்'
என்று முணுமுணுத்தான் பொன்னுச்சாமி,
'நான் எழுப்பிய நேரத்துக்கு வந்திருந்தால் சரியா யிருக்கும்" என்று கந்தன் தான் நிரபராதி என்பதை வற்புறுத்தினன்.

ாழை அழுத கண்ணிர் 23
மெளனம். இருவரும் கொஞ்சம் வேகமாக நடக்க ஆரம்பித்தார்கள்.
பின்னும் அரை மைல் கழிந்திருக்கும். தெருவோரமாக உள்ள ஒரு சிறு வயற்காணி. ஒரு ஐந்நூறு புகையிலைக் ான்றுகள்வரை நின்றன; நிற்கவில்லை, வாடிச் சோர்ந்து தலகவிழ்ந்து சாய்ந்திருந்தன.
கந்தன் அசைவற்று அப்படியே நின்றுவிட்டான். தலிை நிமிர்த்தி உற்சாகமாகத் தென்றலில் ஆடிநிற்கும் புகையிலைக் கன்றுகளுக்கு நடுவே தன்னுடைய கன்றுகள் தலைகவிழ்ந்து வாடி நிற்பதைக்காண அவனுக்கு வயிறெரிந்தது. கொஞ்ச நேரம் அப்படியே நின்று பார்த்துக்கொண்டிருந்தான். பொன்னுச்சாமி திரும்பிப்பார்க்கவில்லை. ஒரு கூப்பிடு தூரத்திற்கு அப்பால் அவன் போய்விட்டான். கந்தன் நினைவுவந்து திரும்பிப்பார்த்து ஒடிஞன்.
இரண்டுபேரும் சேர்ந்து நடந்தார்கள்.
**பாத்தியளோ நயினர் போயிலைக் கன்றுகளை. இன்றைக்காவது ஒரு இறைப்பு இல்லாவிட்டால் இந்த முறை என்ர வாயிலே மண்தான்'
"ஒமடா, ஒமடா பெரிய போயிலைக் கன்றுகள். ஐந்தாறை நட்டுவிட்டு என்ன பாடுபடுகிருப் ? இந்த முறை எனக்கு எவ்வளவு தொல்லைகள் இருக்குது தெரியுமே. போனமுறையும் காற்று மழையால் எல்லாம் நாசமாய்ப் போய்விட்டது. இந்தமுறையாவது கொஞ்சம் கவனமா யிருந்தால்தான் ஏதோ போனமுறைக் கடன், இந்த முறைக் கடன், குடும்ப அலுவல்கள் எல்லாவற்றையும் ஒருமாதிரிச் சமாளிக்கலாம். இதுக்கிடையில் நீ உன்ரை போயிலைக் கண்டைப் பற்றி .”*
"ஐயோ நயிஞர், இந்த ஐந்நூறு கண்டுகள்தானே எனக்கு இந்த வருஷம் சோறு தாறது, என்னை நம்பி முன்று சீவன்கள் வீட்டில் கிடக்குதுகள். நான் இந்தப் புகையிலைக் கண்டுகளைத்தானே நம்பியிருக்கிறன். அதுக்கு

Page 33
24 D Gofs LorrGE)
இண்டைக்கு இறைக்காமல் விட்டால் இவ்வளவும் பட்ட பாடும் செலவும் நட்டமாகி ஐயோ, என்ரை கதி எப்படி முடியும் ?"
"ஒமடா, ஒமடா அலட்டாமல் வாடா எல்லாம் பிறகு பாப்பம்."
கந்தனுக்கு என்ன செய்வதென்பது தெரியவில்லை. மேலே அண்ணுந்து பிறைச் சந்திரனைப் பார்த்தான். அந்த நிலவொளியில் அவன் கண்கள் நீர் நிறைந்து பிரகா சித்தன. வாடிய புகையிலேக் கன்றுகளேத் திரும்பிப் பார்த்துப் பார்த்துச் சென்ருன்.
3 ஃ ძზ
இறைப்பு ஆரம்பமாயிற்று. கந்தன் துலாவில் முன் லுக்கும் பின்னுக்கும் ஒடிஞன். பொன்னுச்சாமி கொடி பிடித்து வாரி வாரித் தண்ணிரை அள்ளி ஊற்றினு ை. ஒடிய நீர் வாய்க்கால் வழியே நின்ற புல்லுக்கும் பொசித் 5Shl - காற்றில் அடிபட்டுச் சாய்ந்து உலர்ந்து கிடந் " புல்லுகள் சிலிர்த்து எழும்பின.
பகல் பதிளுெரு மணியாயிற்று. ஒருபடி இறைப்பும் முடிந்தது. கந்தன் துலாவிலிருந்து இறங்கினன். நன்ருகக் கண்ாத்திருந்தான். அந்தத் தென்னைமரப் பாத்தியில் அப் படியே சோர்ந்து விழுந்துகிடந்தான்.
சிறிது நேரம் சென்றதும் அவனுக்கு உயிர் வந்தது. எழுந்து பொன்னுச்சாமியைத் தேடிச் சென்றன். ஒரு மர நிழலிலிருந்து ஏதோ சாப்பிட்டுக்கொண்டிருந்தான் அவன். சிறகடித்துப் பாடும் பட்சியைப் போலப் புகையிலைக் கன்று கள் காற்றில் பட்டு அலைவதைப் பார்த்துப் பரவசப்பட்டுக் கொண்டிருந்தான். முகத்தில் பூரண திருப்தி குடிகொண் டிருந்தது.
‘நயிஞர், பட்டை கட்டட்டோ நயிஞர் ?"

ஏழை அழுத கண்ணிர் 25
"பேடா போ பைத்தியக்காரா ; இந்த நெருப்பு வெயிலிலா மலீைசன் இறைப்பான். சந்திச்சால் பின்னேரம் பார்ப்பம், போ”*
கந்தன் எவ்வளவோ மன்றடினன். ‘முடியாது’ என்று தான் முடிந்தது.
உள்ளம் உடைந்து போய்த் திரும்பிஞன் கந்தன். அவன் வைத்திருந்த அற்ப சொற்ப நம்பிக்கைகளும் இடிந்து போயின. குழந்தைப்பிள்ளைபோலத் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். ஆணுல், அந்த அழுகையை யார் கவனிக்கப் போகிருர்கள்? கவனித்தாலும் " " என்னடா (கழந்தைப் பிள்ளையாயிருக்கிருயே’ என்று பரிகாசஞ் செய்யமாட்டார்களா?
வீடு திரும்பிக் கொண்டிருந்தான். வழியில் அத்தப் புகையிலேக் கன்றுகள். ஆண்கள் சபையிலே வெட்கித் தலை குனிந்து நிற்கும் ஒரு பெண்ணைப்போல அவனுடைய புகை (பிலக் கன்றுகள், தலைதுாக்கி ஆடிய அந்தப் பயிர்ச் சூழல் நடுவிலே தலைகவிழ்ந்து நின்றன.
ஒருவாறு அடக்கி வைத்திருந்த அழுகை இந்தக் காட் சியைக் கண்டதும் மறுபடியும் பீறிட்டெழுந்தது. கந்தன் அழுதான். உள்ளம் கரைந்து உயிர் கரைந்து வந்த அழுகை அது.
O O o ζ Ο OO o
மால் ஆறு மணி. காற்றுக் குளிர்ந்து வீசியது. நாரைக் கூட்டங்கள் ஆகாயத்தில் பறந்தன. வானத்தில் இருட்படலங்கள் கொஞ்சங் கொஞ்சமாகக் கவிந்து வந்தன. தூரத்தில் ஒரு தவளை சுருதி கூட்டிற்று.
இரவு ஒன்பது மணி. மழை பொழிய ஆரம்பித்து விட்டது. அத்துடன் சேர்ந்து காற்றும் கொஞ்சம் வீசத் தொடங்கிற்று. பொன்னுச்சாமி வீட்டிலிருந்தான். விளக்/ கில் வந்து விழும் விட்டில்களை அவன் கவனித்துக் கொண் டிருந்தான். இல்லை, அப்படியே ஆழ்ந்து யோசித்துக் கொண்
un 4

Page 34
26 மனித மாடு
டிருந்தான். அன்றைய காலநேரத்தில், களங்கமற்ற வானத் தைப் போன்றிருந்த அவன் முகம் அப்போதைய வானத் தைப் போல இருளடைந்திருந்தது.
புயலும் மழையும் இரவு முழுவதும் எதேச்சாதிகாரம் நடத்தின.
O O O Ο Ο GO . Q Q)
விடிந்தது.
வயலை நோக்கி எல்லோரும் ஒடுகிருர்கள், தெருவில் வீழ்ந்துகிடந்த பாரிய விருட்சங்களைக் கடந்து பாய்ந்து விட்டு ஒடுகின்றனர்.
வயலில் ஒரு கோடியிலே, பொன்னுச்சாமி இடிந்து போய் உட்காந்திருந்தார். அவருக்கு முன்னல், முதல் நாள் தலே நிமிர்த்திக் கூத்தாடிய புகையிலைக் கன்றுகளைக் காண வில்லை. நீண்டு பரவிய ஒரு ஜலப்பிரதேசம் காணப்பட்டது.
வயலில் இன்னுமொரு கோடியில், ஒரு மேட்டு நிலத் தில் ஒரு ஐந்நூறு புகையிலேக் கன்றுகள் வரை, உயிர் பெற்றுக் காற்றில் உல்லாசமாக ஆடின. ஒவ்வொரு இலை யிலும் பசுமை கொட்டிற்று.
தெகுவில் வீழ்ந்து கிடந்த மரக்கொப்புகளை அகற்றிக் கொண்டு நின்றன் கந்தன்.
-ஈழகேசரி, 12-7-1942

மனித மாடு
அவனுக்கு எழுபத்தைத்து வயது இருக்கும். எனது பாட்டளுரின் வயசு, அவருக்குள்ள கூன் முதுகு, வெண் தலை, ஒல்லித் தேகம், தளர்ச்சி எல்லாம் அவனிடமும் காணப்பட்டன. தெருவோரமாக ஒரு வயதுபோன பூவ ரசின் கீழ் "ரிக்சோ'வும் கையுமாக நின்ருன் தெருவில் போகும் "மகாராஜா'க்களின் வண்டிகளும் வாகனங்களும் கிளப்பிய புழுதியைக் குடித்துக்கொண்டு, வருகிறவர் போகி றவர்களின் முகத்தை அண்ணுந்து பார்த்தபடி அவன் நின்றன்.
தெருவோரம் போய்க்கொண்டிருந்தேன். கிழவனின் ஒளி மங்கிய கண்கள் என்னையும் தப்பவிடவில்லை. எனக்கும் ஒரு ஆவர்த்தனம் அழுதுவைத்தான். 'சாமி, ஏறுங்க சாமி. உங்களுக்குக் கோடி புண்ணியம் கிடைக்கும் சாமி. பிள்ளை குட்டிகள் இரண்டு நாளாகப் பட்டினி சாமி, நீங்கள் எல்லாம் இப்படி நடக்க ஆரம்பித்தால் நாங்கள் போகும் கதி என்னவோ சாமி ?*
எனக்கு வயசு இருபது. அவனுக்கு எழுபத்தைந்து கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். படம் ஆரம்பிக்க
இன்னும் ஒருமணி நேரம் இருந்தது. மூன்று மைல் போக வேண்டும். நடந்து போவது என்ருல் முடியாத காரியம்,

Page 35
28 மனித மாடு
"சரி. சினிமாக் கொட்டகைக்குப் போக என்ன கேட் கிருய்?" •
ஒட்டி உலர்ந்த அவன் முகத்தில் ஒரு பிரகாசம் உண் டாயிற்று. "ஐயோ சாமி ! உங்களிடம் எல்லாம் கூலி பேசுவதா? புண்ணியவான்கள் மனமிரங்கி ஏதோ கொடுத் ததை வாங்குகிறேன். y P.
அவனுடைய வயதில் பாதி அந்த வண்டிக்கும் இருக்கும், அப்பழுக்கற்ற முதல்தர கர்நாடகம். ஆளுல் எனக்கு, இருபது வயசுக் குமரனுக்கு மூன்று மைல் நடந்து போவ தற்கு இந்தக் கிழட்டுக் கர்நாடக ஜோடியின் உதவிதானே வேண்டியிருந்தது!
இரண்டு நாளாகப் பட்டினி கிடந்த குடுகுடு கிழவன் மேல் அவனுடைய வலியிழந்த தேகத்தில் ‘ரிக்ஷோ" ஏறியது. ரிக்ஷோவின்மேல் நான் ஏறினேன், கலப்பையில் பூட்டிய மாடுபோல அவன் ஒடுங்கி நின்ருன். சவாரி ஆரம்ப மாயிற்று. ஆகா ! எத்தனை உல்லாசத்தோடு, பெருமிதத் தோடு உட்கார்ந்திருந்தேன் அப்போது, ஆமாம், அந்த எழுபத்தைந்து வயதுக் கிழவன்மேல் !
பட்டினிக் களை வீட்டில் அவனுடைய அன்றைய சம்பாத்தியத்தை எதிர்பார்த்துக்கிடக்கும் நாலைந்து ஏழைச் சீவன்களைப் பற்றிய கவலை. நான் என்ன கொடுப்பேனுே என்ற ஏக்கம்- எல்லாம் சேர்ந்து கிழவனுக்குப் பெரும் யோசனையையும் சோர்வையும் கொடுத்திருக்க வேண்டும். வண்டி மெள்ளமாக ஊர்ந்து சென்றது.
"ஆமாம், இந்த ஞானேதயம் எல்லாம் அப்போது எங்கே போயிருந்தனவோ ? அடடா எவ்வளவு குரூரப் பிராணியாக, ஈவு இரக்கமற்ற மிருகமாக மாறி யிருந்தேன் அன்றைக்கு !”
மாட்டுச்கும் மெஷினுக்கும் விலகி விலகி மனித வண்டி போய்க்கொண்டிருந்தது. குறுக்கும் மறுக்குமாக ஒடித் திரியும் இயந்திர பூதங்களுக்கூடாக-அந்த உணர்வற்ற

ரித மாடு ፰ 9
சடலங்களில் ஒன்ருக மனிதன், பகுத்தறிவுள்ள மனிதன்நாகரிகமடைந்த மனிதன்-பெறற்கரிய மனிதப்பிறவி" போய்க்கொண்டிருந்தது. சவாரி சுகப்படவில்லை. வயது போன கிழட்டு மாடு ஊர்ந்து ஊர்ந்து போயிற்று, அக்கம் பக்கத்தில் எல்லாம் வேகம் வேகமாகப் பறந்துகொண் டிருந்தன. போகும்போது என்மேல், என் வண்டியின்மேல் ஒரு ஏளனப் புன்னகை, ஐயோ, என்மானம் போயிற்று ! இரண்டு மைல் கடந்து வந்துவிட்டோம்.
"என்னப்பா, வண்டிச் சக்கரங்களில் கறையான் பிடிக்கப்போகிறது !' என்றேன் சற்று உரமாக, கோபமும் ஏளனமும் கலந்த இந்த அதிகாரத் தொனியில் அந்த மனிதன் எவ்வளவு மிரண்டு போய்விட்டான் ! நாகரிகத் தையும் கொஞ்சம் நகைச்சுவையையும் அனுசரித்து இந்த வார்த்தையைச் சொல்லிவிட்டேன். "எவ்வளவு விபரீதமாக முடிந்து விட்டது !
மனிதனுக்குக் கழிவிரக்கம், பச்சாத்தாபம் சால்லாம் அவன் அதர்மத்தின் ஒரு எல்லேயைத் தாண்டிய பிறகுதான் !
தலையைக் கீழே போட்டுக்கொண்டு தனது எலும்புக் கோவையினுல் சுமார் 'இருநூறு இருத்தல் பாரத்தை இழுத்துக்கொண்டு ஓடிய கிழவன் நான் சொன்னதைக் கேட்டதும் திடுக்கிட்டுப்போய்த் திரும்பிப்பார்த்தான்.
அந்த முகம்தான் அச்சமயம் எப்படி மாறிவிட்டது ! எவ்வளவு கெஞ்சிற்று 1 எனக்கு அப்போதுதான் அறிவு வந்ததா ? "ரிக்ஷோ"வை விட்டுக் குதித்து ஒடிப்போய் அவன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டேனு ? அல்லது அவனைத் தூக்கி “ரிக்ஷோ"வில் வைத்து என்தேகம் ஒடியும்படி இழுத்துக்கொண்டு ஒடினேனே ? கற்றுாணைப் போல அசையாமல் இருந்தேன்.
அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் சோறு கொடுக்கும் 'ரிக்ஷோவைப் பற்றி இழிவாகக் கூறியது கிழவன் மனத் தில் 'சுருக்கென்று தைத்துவிட்டது. அந்த ரோசத்துடன் நான் எங்கே இடையில் இறங்கிப் போய்விடுகிறேணுே என்ற் அச்சமும் சேர்ந்து கொண்டது.

Page 36
30 மனித மாடு
வண்டி ஒருதரம் குலுங்கி எழுந்தது. அடுத்தகணம் மாயா சக்தி பெற்று அது பறக்கத் தொடங்கிற்று. எழுபத் தைந்து வயசுக் கிழவனுக்கு இந்த ஆவேசம் திடீரென்று எங்கிருந்து வந்துவிட்டது? தூக்கிய கால்கள் நிலத்தில் படாமல் விலா எலும்புகள் வெளியே தெறித்துவிடும் போல் இரைக்க இரைக்கத் தலையும் காலும் ஒன்ருகக் கூனிக் குறுக, மனுஷன் தாவித்தாவி ஓடத் தொடங்கிவிட்டான். தெருவில் போகும் "சோடி’ வண்டிக்காரர்கள் கிழவனையும் *ரிக்ஷோவையும் பார்த்துப் பிரமித்துப் போஞர்கள்.
எழுபத்தைந்து வயசுக் கிழம். இருநூறு இருத்தல் பாரத்தோடு அடடா, என்ன ஓட்டம் ஒடுகிறது! அந்தச் சமயம் கிழவனை என்னவோ ஒன்று ஆட்டிவைத்தது. அவன் தன் உயிரை வெறுத்து ஒடிஞன். கிழவனும் "ரிக் ஷோ”வும் நானும் அடுத்த நிமிஷம் சுக்குநூருகப் போய் விடக்கூடும். ஆனல், இவை ஒன்றுக்கும் நான் தயாராக வில்லை. சினிமா பார்க்க வேண்டுமே மனதில் கலவரம் தொட்டுவிட்டது. தன்னை மறந்து தொழில் செய்யும் கிழ வனைப் பார்த்து, ‘என்னப்பா ! வண்டிச் சக்கரங்களில் கறையான் பிடிக்கப் போகிறது!" என்று கூறிய அதே திருவாயினுல் கொஞ்சம் நிதானமாகப் போ அப்பா' என்றேன்.
நேரத்துக்கொரு குணம், சமயத்துக்கொரு பேச்சு, இப் படியாக நான் மாறிக்கொண்டிருந்தேனு? ஆனல், கிழவனே மகா ரோசக்காரன் பிடிவாதக்காரன்; எடுத்த காரியத்தை எப்படியும் முடித்துவிடும் மனத்திடமுள்ளவன். நான் கூறி யதைக் கொஞ்சமும் மனதில் போட்டுக்கொள்ளாமல் தான் ஆரம்பித்த அதே வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தான். படம் ஆரம்பிக்க கால்மணி இருக்க என்னை அங்கு கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டான்.
'ரிக்ஷோவில் இருந்து இறங்கிச் சட்டைப்பையிலிருந்து கால் ரூபாவை எடுத்து அவன் கையில் வைத்தேன். ரிக் ஷோவின் கைப்பிடிகளைப் பிடித்துப் பிடித்து மரத்துப் போன அந்தக் கைகளே ஒன்றன்மேல் ஒன்று வைத்து

1\ணித LDrrG6) 3.
சுருக்களிடம் விபூதிப் பிரசாதம் வாங்குவது டோல, மரியாதையாக வாங்கிக் கண்ணில் ஒற்றிக்கொண்டு திரும் பினன். புகைப்படலம் எழும்புவதற்கும், எச்சில் துப்புவ தற்குமாக ஒரு ரூபாவரை மேலதிகமாகப் பையில் கிடந் கது. உயிரும் உடலும் தேய்ந்துபோக என்னைச் சுமந்து வந்த கிழவனுக்குக் கால் ரூபாவிற்கு மேல் கொடுப்பதற்கு இந்த மனம் இசையவில்லை. அவன் திரும்பிப் போகும் போது பார்த்தேன். சுகமாக மூச்சுவிடக்கூட முடியாமல் மிகவும் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தான். ஓர் அடிகூட எடுத்து வைக்கமுடியாமல் தள்ளாடிக் கொண்டிருந்தான். இவற்றையெல்லாம் பார்த்து ரசிப்பதற்கு அவக்ாசம் ஏது?
தியேட்டரில் மணி அடித்தது.
ஒரு ரூபா கொடுத்து உள்ளேபோய்க் கதிரையில் உட் கார்ந்து கனவு காண ஆரம்பித்தேன். மூன்று நாலு மணி நேரம் நீடித்த கனவு ! "ரிக்ஷோ"வையும் கிழவனையும் ஏன் வெளியுலகத்தையுமே மறந்து கனவு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்துவிட்டு இரவு சுமார் பத்து மணியளவில் நிஜ உலகத்துக்கு வெளியேறித் தெருவழியே திரும்பி வந்து கொண்டிருந்தேன். ஆமாம், கால் நடையில்தான்.
சினிமாக் கொட்டகையிலிருந்து அரை மைல் தூரத்தில் ஒரு சாவடி மிகவும் பழைய காலத்தியது. மனித வாழ்க் கையின் ஒட்டைகளைப்பற்றி அதனிடம் கேட்டால் அது நன்ருகச் சொல்லும். அது விஷயத்தில் அவ்வளவு அநுப வம் அதற்கு!
அந்தச் சாவடிப் பக்கமாகப் போய்க்கொண்டிருந்தேன். அதற்குப் பக்கத்தில் தெருவோரமாக ஒரு சிறு சனக்கூட்டம் தென்பட்டது. சிறிது தூரத்தில் எரிந்து கொண்டிருத்த நகரசபை வெளிச்சத்தில் அந்தச் சனக்கும்பல், நடுவே எதையோ வைத்துவிட்டுச் சுற்றி நிற்பதுபோல் மங்கலாகத் தெரிந்தது.
சனக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு உள்ளே தலையை நீட்டிப் பார்த்தேன்.

Page 37
32 மனித மாடு
ஒரு கிழவனுடைய பிரேதும். அதற்குப் பக்கத்தில் 'ரிக்ஷோ ஒன்று சரிந்து கிடந்தது. பிரேதத்தின் வாயிலி ருந்து ரத்தம் வடித்து காய்ந்துபோயிருந்தது.
அன்று மாலை நான் ஏறிவந்த அதே “ரிக்ஷோ”வும் கிழவனும் !
கிழவனுடைய உடல், "ரிக்ஷோ’, சுற்றிநின்ற சனக் கூட்டம் எல்லாம் சுழல ஆரம்பித்தன.
அப்படியே உட்கார்ந்து விட்டேன். பகவானே! அவன் உயிரைக் குடித்த பழி கடைசியில் என் தலையில்தான் பொறுக்க வேண்டுமா?
சனங்கள் வந்தார்கள், வந்து கூட்டமாக நின்று பார்த் தார்கள், பார்த்துவிட்டுப் போஞர்கள்.
மனிதனைச் சுமந்து திரிந்த மனித தேகம் தெகுவில் புரண்டுபோய்க் கிடந்தது.
அதன்மேல் ஏறித்திரிந்து சவாரி செய்தவர்கள் வந் தா ர் கள். நின்று பார்த்தார்கள். பார்த்துவிட்டுப் போஞர்கள்.
-ஈழகேசரி, 25-04-1843,

விளம்பர வாழ்வு
மேற்குப் பக்கமாகச் சொற்ப தூரத்தில் பிரமாண்ட மான கட்டிடம் ஒன்று எழும்புகிறது. நூற்றுக் கணக் :ான வேலைக்காரர்கள், வியர்க்க விறுவிறுக்க நின்று வேலை செய்கிறர்கள். ஏவல், அதட்டல், இளைப்பு, பெருமூச்சு எல்லாம் சேர்ந்து ஒரே இரைச்சல், ஆர்ப்பாட்டம், வானே யளாவும் கோபுரங்கள், மணிக்கூண்டுகள்--சூ! அதெல்லாம் பெரும் பெரும் காரியங்கள், புனித கைங்கரியங்கள்.
இங்கே வலது புறமாகக் கிழக்குத் திசையில் இன்ஞெரு 5ட்டிடம். அதைப்போலப் பிரமாண்டமல்ல. ஆனல், பெரியதுதான். எடுப்புக்கும் ஏற்பாட்டுக்கும் குறைவில்லை. இரண்டடுக்கு மெத்தை மாளிகை. முக்கால் பருவத்துக்கு வந்துவிட்டது. இது சமீபத்தில் "பென்ஷனில் ஊர் திரும்பிய ஒரு "பெரிய மனுஷனுக்கும் அவர் மனைவிக்கும், இரண்டு பேருக்கு 1
எதிர்ப் பக்கத்தில், நேர்முகமாக ஒரு கிணறு, பளிங்குக் கற்கள் பதித்து ‘லிமெண்டினல் வெகு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது, இரண்டு 'அம்மாப் பெண்டுகள்" (அங்கே எழும்பி வருகிறதே நீட்டி முழக்கிக் கொண்டு ஒரு கோவில், அதன் அத்திவாரத்திற்கு முன்னரே எப்பொழுதோ அந்தப் பிரதேசத்திற்கு வந்து குடியேறி விட்டவர்கள்.) அந்தக் கிணற்றில் இரண்டு மணித்தியாலமாக நின்று தங்கள் ‘ஸ்நானுதிகளை நிறைவேற்றுகிருர்கள்.
5 מL

Page 38
34 மனித மாடு
கிணற்றடி மதகுள் நுழைந்து வாய்க்கால் வழியே தண்ணீர் வெளியே வருகிறது. அதென்ன வெள்ளை வெளே ரென்று நுரை நுரையாக இருக்கிறது ? ஆமாம், வாசனை "சோப் கரைந்த நீர், தண்ணிர்கூட "கம கம" என்று வாசனை அடிக்கிறதா ? விலையான "சோப்" !
அந்த வெள்ளைத் தண்ணிர், வாசனைத் தண்ணிர், அழுக் குத் தண்ணிர் வாய்க்கால் வழியே வருகிறது. .
% ძზ ძზ
மழையுடன் சேர்ந்த சூறைக்காற்றுப் பிய்த்து எறிந்து உக்கிய, உருக்குலேந்த பனை ஒலைகளை ஒருவாறு சேர்த்து மெல்லிசாகத் தொடுத்திருந்தான், அவன்.
மாட்டுக் கொட்டிஃலவிடக் கொஞ்சம் பெரிதான அந்த ஒட்டைக் கொட்டிலில் எட்டுச் சீவன்கள். மனிதஜன்மம் ஐந்து, ஆடும் மாடுமாக மூன்று. நல்லவேளையாக அவை யெல்லாம் குளிரில் விறைத்துச் செத்துப் போய்விட்டன. செத்தபிறகும் அவைகளால் இடைஞ்சல் ஏற்படாதவாறு வெள்ளம் அவற்றின் உடல்களை அடித்துக்கொண்டு போய் விட்டது.
இரண்டு நாட்களுக்கு முன் தண்ணிரில் மூழ்கியிருந்த அந்தக் 'குடில்" இன்றைக்குச் சிறிது தலை நிமிர்த்திற்று. சுற்றிலும் கடல்போல நின்ற மழைவெள்ளம் பெரும் சிரமப்பட்டுச் சிறிது சிறிதாக வற்ற ஆரம்பித்தது.
o O o OO Oo od
'தண்ணீர் ஐயோ கொஞ்சம் தண்ணீர் 171
தண்ணிர் இல்லை. ஒருமைல் தூரம் போகவேண்டும். சாக்ஷாத் பிசாசுமயம். ஒருத்தி ஒரு சொள்ளை மண்குடத் தையும் எடுத்துக்கொண்டு வெளியே ஒடுகிமுள் தண்ணிருக்கு. அடுத்த நிமிஷம் சாகப்போகிற உயிர் ஒரு சொட்டுத் தண்ணிர் குடித்துவிட்டுச் சாகக் கிடந்து துடிக்கின்றது. தண்ணிர் கொண்டுவர ஒரு கட்டை தூரத்திலுள்ள கிணற்

விளம்பர வாழ்வு 35
றடிக்கு, ஒருத்தி-அந்த ஜீவனைப் பெற்றெடுத்த பாவி- 7 ஒடுகிருள். எதிரே கிணற்றடி 1 ஆளுல் புனிதம், புனித
ԼՈ Այւb !
* "ஐயோ தண்ணீர் ??
குழந்தையின் தவிப்பை, துடிப்ண்ப அதன் அப்பஞல் சகிக்க முடியவில்லை. "இதோ அடுத்த நிமிஷம் சாகப் போகிறது. ஒருசொட்டுத் தண்ணிர்கூட ஆகிாமலா ?" இந்த எண்ணம் ஒரு மரக்கட்டையில் சுருண்டு கிடந்த அந்தக் “குன்மவியாதி'யை ஒருதரம் உலுப்பிவிட்டது. பைத்தியக்காரன்போல எழுந்து முற்றத்துக்குப் போஞன். சமுத்திரம்போல் வெள்ளம் பரந்து கிடந்தது. ஒரு கை அள்ளிக் கொண்டு வந்து குழந்தையின் வாயில் விட்டான்.
2ஊரில் உள்ள முழு அழுக்கும் கலந்த அந்த ஒரு சிறங்கை தண்ணிரை, தாகத்தில் தவித்துக் கொண்டிருந்த எட்டு வயசுக்குழந்தை ஆவலோடு விழுங்கியது. அடுத்த கணம் வாந்தி. தண்ணிரும் பிராணனும் இரண்டும் வாந்தி !
அரைமணி கழித்து, தண்ணிருக்குப் போனவள் வந்தாள் துண்ணிர்கொண்டு. இன்னுமொன்று கூட, மண்டையில் ஒரு காயம்.
"தண்ணிர் பட்டபாடு’ என்ற பழமொழி இவர்களுக் இல்லை, கட்டுப்பாட்டு அளவு. நாலு ஐந்து குடம் தண்ணிர் ஒரு நாளைக்கு. அதற்குமேல் போஞல் ஊற்றமாட்டார்கள். அன்றைக்கு ஆருவது முறையாகப் போய்விட்டாள். மண்டையை உடைக்காமல் வேறு என்ன செய்வார்கள் ?
பெற்ற மனம் சிறிது நேரம் கரைந்தது. அப்பன் அதை விட அதிகமாகத் துடித்தான், தான் செய்ததை நினைந்து நினைந்து.
பிறகு எல்லாம் சரியாய்ப் போய்விட்டது. இது அவர் ஆளுக்கு வருஷா வருஷம் ஒவ்வொரு மழைக்காலத்திலும் நடக்கும் சம்பவம் ! ஆடுமாடுகளுடன் குடும்பத்திலும் ஒன்று பலி. இது ஆருவது இடம், நான்காவது பலி !

Page 39
36 மனித மாடு
ஒரு குன்ம வியாதியையும் தாஃலந்து பிள்ளைகளையும் வைத்து அவள்-ஒரு பெண்-சம்ரகூரிக்க வேண்டும். அத் துடன் இயற்கையின் வெறிக்கும் விபரீதத்துக்கும் வகை சொல்ல வேண்டும். எல்லாவற்றையும் ஒருவாறு கொண்டு நடத்தித்தான் வருகிருள் அவள் தன்னந்தனியாக, எப்படி என்று கேட்கிறீர்களோ? வாயை மூடுங்கள் ! நீங்கள் யார் அதைப்பற்றிக் கேட்க ?
சரி, இப்போது ஏழாவது இடத்துக்குக் குடிபோகப் போகிருர்கள். மூட்டை கட்டுகிருர்கள். தங்க விக்கிரஹம் போன்ற அழகான குழந்தை ஒன்று. அது சரி, தகப்பன் அப்படி ஒரு அழகனல்லவே! அவலக்ஷணம் பிடித்த குன்ம வியாதி.
அதையெல்லாம் ஆராய்ச்சி செய்வதற்கு உரிமையில்லை. எனக்குமில்லை, உங்களுக்குமில்ஃல.
அவர்கள் மூட்டை கட்டுகிருர்கள். அதைப் பாருங்கள்.
வேண்டுமானுல் இதையும் கொஞ்சம் கவனித்து வையுங்கள் :
*கோவில் கும்பாபிஷேகம் அடுத்தமாதம் நடத்தியாக வேண்டும். வேலே கெதியாகப் போகட்டும்" என்று அதட் டிஞர் கோவில் மனேஜர்,
** இன்னும இரண்டு வாரத்தில் இந்த வீட்டுக்குக் குடி வந்துவிடலாமல்லவா?’ என்று பென்ஷ்னர் மனைவி தன் புருஷனைக் கேட்டாள்.
கிணற்றடியில் அம்மாக்கள் மூன்ருவது தடவையாக முகத்துக்கு "சோப் போடத் தொடங்கினர்கள்.
;ழகேசரி, 06-06-1943

கிழவி
“எல்லா வைத்தியர்மாரும் ‘முடியாது” என்று சொல்லிவிட்டார்கள். பெரிய ஆஸ் பத்திரியில் கூடக் கொண்டுபோகச் சொல்லிவிட்டார்கள். '
"சாதகத்தை யாரிடமாவது காட்டிப் பார்த்தீர்களோ?? *"பார்ப்பித்தோம். இன்னும் மூன்று நாட்கள் போக வேண்டுமாம்"
o O o oo Go Oo
இந்தச் சம்பாஷணை மெள்ளமாகத்தான் நடைபெற்றது. இருந்தும் எப்படியோ அடுத்த அறையில் படுக்கையில் சோர்ந்து சுருண்டுபோய்க் கிடந்த கிழவியின் காதுகளுக்கு எட்டிவிட்டது. காற்றுப்போன "பலூனைப் போலச் சுருங் கியிருந்த கிழவியின் உடலை ஒரு தரம் உப்பி உலுக்கிவிட்டு ஒரு நீண்ட பெருமூச்சு எழுந்தது.
“உம். என்னுடைய வாழ்வும் ஒருபடி சமகடை பாகுறதா ? இன்னும் மூன்று நாட்கள். பிறகு ? பிறகு பிரயாணம். இந்த உலகத்தை, என்னுடைய பிள்ளை குட்டி களை எல்லாவற்றையும் விட்டுவிட்டு எங்கேயோ ஒரு உல கத்துக்குப் பிரயாணம். என்னமாதிரி உலகம் அது ? என்ன udrt gih ?''

Page 40
38 மனித மாடு
பத்து வயசுச் சிறுமி ஒருத்தி "பாட்டி 1' என்று கூப்பிட்டுக்கொண்டு உள்ளே வந்தாள். அரை உறக்கத்தி லிருந்த கிழவி திடுக்கிட்டு விழித்தாள். அவளுடைய அரு மையான ஒரே பேத்தி லட்சுமி பள்ளிக்கூடத்துக்குப் புறப்படுகிருள். போகுமுன்பு பாட்டியை ஒருதரம் பார்த்து விட்டுப் போகவந்தாள். பள்ளிக்கூட வேஷத்தோடு வத்து நிற்கும் குழந்தையைப் பாட்டி நிமிர்ந்து பார்த்தாள்.
*பாட்டி பள்ளிக்கூடம் போகிறேன். போட்டு
வரட்டுமா ?’’
மறுபடியும் பெருமூச்சு.
*ம். பள்ளிக்கூடம். ஒ, நானும் ஒரு காலத்தில் Li gir ளிக்கூடம் போனேன். இப்படித்தான் சீவிச் சிங்காரித்துக் கொண்டு, வழியில் ஒவ்வொரு இலந்தை மரத்தின் கீழும் பொடியளும் பொட்டையஞம் எத்தனே கும்மாளமடித் தோம் ! அந்தக் காலம். ஆ ! எவ்வளவு அருமையானது, எவ்வளவு சந்தோஷமானது. இனிமேல் அது வரப்போகிறதா? இன்பம் நிறைந்த அந்தப் பால்யம் போயே விட்டது. நான் கிழவியாகிவிட்டேன். எண்பத்தி நாலு வயசு, இன் னும் மூன்றுநாள் 1 பிறகு ? மரணம் ! சுடுகாடு, மரணம்! அதற்குப் பிறகு நான் எப்படியிருப்பேன்.?’’
"நான் போகிறேன் பாட்டி. '' என்று சொல்லிவிட்டு அவள் பேத்தி ஓடிவிட்டாள். கிழவியின் மனுேயாத்தி ரைகள், பயங்கரமான சிந்தனைகள் எல்லாம் அவளுக்கு, அந்தக் குழந்தைக்குப் புரியப்போகிறதா? கிழவியின் புலம்பல் அவளுக்குப் பெரும் திகிலைத்தான் உண்டுபண்ணியது.
கால் மைல் தூரத்தில் எங்கேயோ ஒரு கலியான வீட்டில் மேளச்சத்தம் கேட்டது. தாலி கட்டும்போது முழங்கிய கொட்டுமேள' கோஷ்ம் காற்றேடு அள்ளுப் பட்டு வந்து கிழவியின் காதில் அறைந்தது.
பெருமூச்சு !

'கிழவி 39
'கலியான வீடு. கோட்டுமேளம் ! ஒ, எனக்கும் ஒரு
காலத்தில் கலியாணம் நடந்தது 1 கொட்டுமேளமும் அடித்தார்கள். அப்போது, அவர் என்னைத் தொட்டு f ன் கழுத்தில் தாலியை மாட்டும்போது ஆ ! என்ன
மாதிரி இருந்தது எனக்கு ! நான் முகத்தை ஒருபுறமாகக் கோணிக்கொண்டு திரும்பியிருந்தேன். அந்தக்காலம், அது இனிமேல் இல்லை ! அப்போது நான் குமரி. பத்தொன்பது பயசு. பம்பரம்போல ஆடிக்கொண்டு நின்றேன். இப் போது கிழவி. சாண்பத்திநாலு வயசு, இன்னும் மூன்று நாள் வாழ்வு. பிறகு செத்துப் போய்விடுவேன். அவர் பாய்ச் சேர்ந்த இடத்துக்கு நானும் போகப்போகிறேன். அங்கே அவரைப் பார்க்கலாமோ ? என்னமாதிரி இருப் பார் ? என்னைக் கொளுத்திச் சாம்பலாக்கி விடுவார்கள். சுடலையில் கொண்டுபோய்த் தனியே போட்டுவிட்டு வந்து விடுவார்கள். நெருப்பு, ஐயோ! அது என்னைச் சுட்டுப் பொசுக்கிவிடுமே.”*
கிழவிக்குப் பிரக்ஞை நின்றுவிட்டது. பிறகு மறுபடியும் அவளுக்குப் பிரக்ஞை வந்து விழித்தபோது அவளுடைய அருமையான பேத்தி பள்ளிக்கூடத்தால் வந்து பாடம் படித்துக்கொண்டிருந்தாள்.
* பிள்ளைகளே! பொய் சொல்லுதல் பஞ்சமாபாதகங் களுள் ஒன்று. பொய் சொன்னவர்கள் இறந்தபின் நரகத்துக் ரூப் போவார்கள். பொய் சொன்னவர்களின் வாயில் நெருப் 1ால் சுடுவார்கள். இன்னும் அநேக தண்டனைகளைக் கடவுள் அவர்களுக்கு அளிப்பார். உண்மை பேசியவர்கள் மோட்சத் துக்குப் போவார்கள். கடவுள் அவர்களைக் காப்பாற் руашгтгѓ... ””
கிழவி காதுகொடுத்துக் கேட்டாள். அவளுக்குத் தலை சுழன்றது. "...பொய் சொன்னவர்கள் இறந்த பின் நரகத் துக்கு அவர்கள் வாயில் நெருப்பால் சுடுவார்கள். நான் ாந்தினை பொய் சொல்லியிருக்கிறேன். என்ன நரகத்துக்குக் கொண்டுபோய் நெருப்பால் சுட்டு. ஐயோ 1. நான் சாகப்போகிறேன, மூன்று நாட்களுக்கிடையில் ? செத்த பின் நரகத்துக்குப் போய். ஐயையோ."

Page 41
40 மனித மாடு
கிழவி குளறுவதைக் கேட்டு மகள் ஓடிவந்தாள்.
* "என்ன செய்கிறது அம்மா ?"
'ஒண்டுமில்லைப் புள்ளை. பயமாயிருக்கு. இன்னும் மூண்டு நாட்களில் உங்களேயெல்லாம் விட்டுவிட்டுச் சாகப் போகிறன். செத்தபின் எங்கேயோ நரகத்துக்கு "
'சீ. இதென்ன பயம் அம்மா? யார் சொன்னது சாகிற கதையை? அதெல்லாம் ஒன்றுஞ் செய்யாது. கெதியில் எல்லாம் சுகமாய்விடும் என்று பரியாரியார் சொல்லுகிருர், பயப்படாதேயம்மா. எல்லோரும் கனடசியில், ஒரு நாளைக் குச் சாகிறதுதானே.”
" "மெய்தான், எல்லோரும் சாகிறதுதான். புள்ளை அப்படியெண்டால் என்னைத் தனியே அனுப்பப்போறி யளோ? உங்களோடு என்னையும் கூட்டிக்கொண்டு..."
பாட்டியின் பிதற்றலும் பயமும் வீட்டில் ஒரு பர பரப்பை உண்டாக்கிவிட்டது.
லட்சுமி ஒடிப்போய் அவள் அப்பாவிடம் 'பாட்டிக்கு ஒருமாதிரி இருக்காம் வரட்டாம். ’’ என்று சொன்னுள்.
அவர் ஒடிவந்தார். வீட்டிலுள்ளவர்கள். அக்கம் பக்கத்தவர்கள் ஒவ்வொருவராக வந்து கூடினர்கள்.
கிழவி சுற்றிப்பார்த்தாள். 'இதென்ன? ஏன் இவ்வளவு பேரும் என்னைச் சுற்றி மொய்த்துவிட்டார்கள்? சரிதான், என்னமோ அவர்களுக்குத் தெரிந்துவிட்டது. என் வாழ்நாள் முடியப்போகிறது. இத்தனை பேரையும் உலகத்தையும் விட்டு நான் ஆகாசத்தில் பறந்து போகப்போகிறேன். ' கிழவி எல்லோரையும் முழுசி முழுசிப் பார்த்தாள். பெரு மூச்சுப் பலமாக எழுந்தது.
"யாராவது தேவாரம் படியுங்கோவன்' என்று ஸ்திரி கோஷ்டியுள் ஒருத்தி மெள்ளமாகச் சொன்னுள்.

கிழவி 41
ஒருத்தன் படிக்க ஆரம்பித்தான். 'ஓகோ தேவாரமும் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். சரிதான். அவர்கள் வரும் சமயமாய்விட்டது. அவர்கள் எப்படியிருப்பார்கள்? நீண்ட பல்லு, பெரிய முழிகள், கறுப்பு மேனி, கையில் சூலாயுதம், பாசக் கயிறு-இப்படித்தானே 1 மூதேவிகள்,
இப்ப வந்து விடுவார்கள். பார்த்துவிடலாம். சூலாயுதத் தால் குத்துவார்களோ? இல்லை. நான் போகமாட்டே னென்ருல்தானே அப்படியெல்லாம். அவர்கள் வந்த
வுடன் போய்விடவேண்டும். ஆமாம், எனக்குத்தான் இங்கே என்ன? காடு வா வr என்கிறது; வீடு போ போ என்கிறது. வ்வளவு நாளும் அனுபவித்தது போதும் போய்விடு
வோம்.'
லட்சுமி கிண்ணத்தோடு இருந்த பாலை எடுத்துக் கிழவி யின் வாய்க்குள் ஊற்றினுள்.
கிழவி கண்களைத் திறந்து பார்த்தாள். லட்சுமி, அவள் தாய் எல்லோர் கண்களிலும் நீர் ததும்பி வழிந்தது.
"ஐயோ! அழுகுதுகள் நான் சாகப்போகிறேனென்று அழுகுதுகள். நான் போய்விட்டால் அதுகளுக்கு ஆதரவு சொல்லப் பிறகு ஆர் இருக்கிருர்கள். ? கிடந்து கத்தப் போகுதுகளே ! தங்கச்சி, புள்ளை அழதேங்கோ அழா தேங்கோ !”*
"அம்மா !' என்று ஒரு குரல் மெள்ள எழுந்தது. அதைத் தொடர்ந்து 'பாட்டி' என்று இன்னுமொரு கீச்சுக்குரலும் கூட எழுந்தது. இதற்கிடையில் ஒரு வேதாந் தியின் அதட்டல் : 'சீ இப்போ அழக்கூடாது. ஏன் அழுகிறியள் ? எல்லோரும் சாகிறது தான் ஒரு நாளைக்கு, நெடுக இருக்கவா வந்தோம் ? ஒருத்தரையொருத்தர் நம்பி வாழச் சொல்லித்தான் கடவுள் எல்லோரையும் படைத் ததோ ? சாகிறவையைத் தொந்தரவு படுத்தக் கூடாது.'
'நாமார்க்கும் குடியல்லோம் நமனே யஞ்சோம்.' என்று ஒருத்தன் ஆரம்பித்தான்.
tp 6

Page 42
42 மனித மாடு
*1. மெய்தான், என்னை நம்பி என் பிள்ளைகுட்டிகளைக் கடவுள் படைக்கவில்லே, படைத்தவன் காப்பாற்றுவான். சாகிற சமயத்தில் எனக்கேன் இந்தப் பாழும் நினைவுகள் . பாசம் கொடியது. தான் தான் தப்பும் வழி பார்க் , Gav6ö (Sui. (UPC55|T...... (UPC 56ff..., ... (!p(56 fr...... p
கிழவியைத் துரக்கித் தெற்கு வடக்காகக் கிடத்தி ஞர்கள். குத்துவிளக்கை ஏற்றிக் கிழவியின் தலைமாட்டில் வைத்தார்கள். சாம்பிராணிப் புகைப்படலம் சுருள் சுரு ளாகக் கிளம்பிற்று,
"நாமார்க்குங் குடியல்லோம் ஒருபடி முடிந்தது. கிழவி அவனைப் பார்த்துத் தலையை அசைத்தாள். அவன் மேலும் ஒன்று ஆரம்பித்தான். கிழவியின் கைகள் கும்பிட்டன. வாய் புலம்பியது. 'முருகா. முருகா.'
தெருவில் ஒரு நாய் குரைத்தது,
*சரிதான். நாய்குலைக்கிறது. அவர்கள் வந்துவிட் டார்கள். யார் வருவார்கள் என்னைக் கொண்டு போக? யமதர்மராசா இப்படிச் சாமான்யர்களிடம் வரமாட்டார். தூதுவர்கள் தான். வருகிருரர்கள். முருகா. முருகா.'
கிழவிக்குப் பிரக்ஞை தவறிற்று. "ஹோ' வென்ற) பேரிரைச்சல் முகட்டைப் பிளந்து கொண்டு கிளம்பிற்று
சாம்பிராணிப்புகை சுருள் சுருளாகப் பிணத்தின் தலைமாட்டிலிருந்து எழும்பி மேலே போனது.
-ஈழகேசரி, 22-8-1943

பழையதும் புதியதும்
“ஏய்! ஏய் ' என்று இரண்டு அதட்டல் போட்டு மாடுகளைத் தட்டிவிட்டான் கார்த்தீகேசு. ஒரு நிலையில் நின்று அலுத்துப்போன மாடுகள் உற்சாகத்தோடு முதலில் கொஞ்சத் தூரம் ஓடின. இந்தச் சமயம் கார்த்திகேசு என்பக்கம் திரும்பி, பெருமை பொங்க ஒரு கம்பீரப் பார்வை பார்த்தான். அதற்கு ஒன்றும் சொல்லாமலிருந்தால் நல் லாயிருக்காதல்லவா ?
"அவசரமில்லை, அண்ணே1 ரயிலுக்கு நேரமிருக்கு. மாடுகள் மெள்ளப் போகட்டும். ஏது சோடி வாய்த்து விட்டதுபோலிருக்கே உனக்கு!" என்று சும்மா சொன் னேன். கால்மைல் தாண்டியதும் நடக்கும் சங்கதி எனக்குத் தெரியாதா? ஆனல், மனுஷன் பாவம், நான் கூறியதை மெய்யென்றே நம்பிவிட்டான், முகஸ்துதியிலே பழைய காலத்து வெள்ளே மனம் தன்னை மறந்துபோய்விடுகிறது.
ஆசனப் பலகையில் நேர்ாக இருந்த மனுஷன் திரும்பி ஒரு கோணமாக இருந்துகொண்டு, '"ஹ"சம் இதெல்லாம் என்ன மாடுகள் தம்பி. முன்னே முன்னே எப்படி எப்படி மாடுகள் என்னிடம் நின்றன தெரியுமே? உனக்குத் தெரியாது உனது பெரியப்பாவுக்குத் தெரியும், வேறென்றுமில்லை, எதற்கும் கைராசி வேண்டும். எல்லாம் மாடுகளேப் பழக்குகிற விதத்திலிருக்கு, எப்பேர்ப்பட்ட சண்டி மாடுகளும் கார்த்தி

Page 43
44 மனித மாடு
கேசனின் கைக்கு வந்துவிட்டால் சுட்டியன்களாகிவிடும் என்று முன்னெல்லாம் பேசிக்கொள்வார்கள்.’’ இப்படி ஆரம்பித்துப் பேசிக்கொண்டு போனவன் இடையில் ஒரு கணம் நிறுத்தி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுவிட்டு மது: படியும் சொன்னன் : ۔۔۔۔
'.ம். அந்த நடப்பு எல்லாம் முன்னுெரு காலத்திலே, அந்தக் காலம்தான் மலையேறிவிட்டதே. இப்போ தம்பி மார்களுக்கு எடுத்ததற்கெல்லாம் வீட்டு வாசலிலே கார், அதிலே அவசர அவசரமாய்ப் பறந்தடித்துக்கொண்டு ஒடித் திரிந்தால் நாகரிகமாம்-'
கார்த்திகேசுவின் மாடுகள் காற்கட்டை தூரம் நடந்து வந்துவிட்டன என்று இப்பொழுது தெரிந்தது, காரியத்தில் கட்டையான மனிதன் வாய்ப் பேச்சிலே அட்டகாசம் போடுவதுபோலக் கடகடவென்ற முழக்கத்தோடு குலுக்கி அடித்துக்கொண்டு வண்டி ஊர்ந்தது. கொழுப்பு ரயிலுக்கு அதிகம் நேரமிருந்தபடியால் மாடுகளை அவற்றின் போக்கில் போகவிட்டு, நான் கார்த்திகேசுவின் வாயை மெள்ளக் கிளற ஆரம்பித்தேன். ஆனல். அடடா, என்ன செய்து விட்டேன்! இந்த விளையாட்டுக் குணத்தினல் கடைசியில் மனுஷனுடைய நொந்துபோன இதயத்தையே அல்லவா கிளறிவிட்டேன் !
கார்த்திகேசு தொடர்ந்து பேசிக்கொண்டே போனுன் :
• உலகம் கீழ் மேலாகப் புரண்டுகொண்டு வருகிறது தம்பி. அதில் எல்லாம் எனக்குக் கவலையில்லை. மரம் வளருறதுக்கு காவோலைகள் விழுந்து, புதிதாக வரும் குருத்தோலைகளுக்கு இடம்விட்டுக் கொடுக்க வேண்டியதுதான். ஆணுல் ஒன்று, காவோலைகள் விழுந்த பிற்பாடும் அவை இருந்த அடை யாளமாக மரத்தில் வரைகள் இருக்கோ இல்லையோ அது போல, காலம் எப்படி எப்படி மாறிவிட்டபோதிலும் மனிதன் வாழ்ந்த வாழ்க்கைத் தளும்புகள் இலேசில் அவன் மனத் ை" விட்டு மறைந்துபோவதில்லை. உன்னுடைய வீட்டு: கார்கள் என்னை மறந்துவிட்டபோதிலும், எப்படிப் புறக் டிரளித்து விட். சமயத்திலும் அவர்களுக்கு வண்டில் விட்

பழையதும் புதியதும் 45
அந்தப் பதினைந்து வருஷ காலத்தைச் சாகும்வரை என்ஞல் மறக்கவே முடியாது. தாய் பிள்ளையைப்போல உங்கள் குடும்பத்தில் ஒருவனுகவே இருந்து வந்த எணக்கு என்ன வினை வந்தது கடைசியில் ! உனக்குப் பெயர் வைத்தது யார் என்று தெரியுமோ ? உனது பெரியம்மாவைக் கேட்டுப் பார், யார் என்று சொல்லுவா. இருபது வருஷங்களுக்கு முன்பு உங்கள் வீட்டில் எந்த நேரமும் ‘காத்தி அண்ணே காத்தி அண்ணை' என்ற சத்தமாகவேதானிருக்கும். உங்கள் வீட்டில் என்ன நடந்தாலும் காத்தியண்ணையை அறியாமல் நடக்காது. இந்த வண்டிக்காரனுக்கு உனது பெரியம்மா கையிலே பிசைந்து தந்த சோற்று உருண்டை, இதோ வயிற் றில் ஒரு பக்கத்தில் இன்றைக்கும் இருக்கிறது, தம்பீ!...”*
இவ்விதம் உணர்ச்சி வசப்பட்டுப் பேசிக்கொண்டு போன கார்த்திகேசு எதிரே ஒரு கார் வருவதைக் கண்ேடதும் "சட்" டென்று வண்டியை ஒரமாக ஒதுக்கிஞன், கார் சமீபமாக வந்து வண்டியை விலத்திக்கொண்டு போயிற்று அப் பொழுதுதான் கார் இன்னுருடையது என்று அவனுக்குத் தெரிந்தது போலிருக்கிறது, கார் வண்டியைத் தாண்டும் போது அதன் டிரைவரை எரித்துவிடுவான் போல முழித்துப் பார்த்தான். கார் அப்பால் போய் மறைந்த பிற்பாடு நெடுமூச்சு ஒன்று எழுந்தது, அவனது நெஞ்சைப் பிளந்து கொண்டு.
இவ்வளவுக்கும் நான் அவனையே கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்ததை அவன் கவனித்தாணுே என்னவோ, சட்" டென்று என்பக்கம் திரும்பி, 'இப்போ போச்சுதே பசாசு ஒன்று, இதுதான் என் வாழ்விலே மண்ணே அள்ளிப் போட்டது. ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியைக் கலைக் சப் பார்த்ததாம். முந்தி வந்த செவியைப் பிந்தி வந்த கொம்பு மறைக்கப் பார்த்ததாம், நேற்று வந்த மலையாளத் தானும் அவனுடைய காரும் இந்த ஏழை வண்டிக்காரனை ஒழித்துவிடப் பார்த்தார்கள். ஆனல்..' என்ருன்.
கார்த்திகேசு இப்படித் தொட்டுத்தொட்டுப் பேசியது விஷயத்தை முழுக்க அறியும்படி என்னத் தூண்டிற்று.

Page 44
46 மனித மாடு
"என்ன நடந்தது, அண்ணே ? தயவுசெய்து எல்லா வற்றையும் விபரமாகச் சொல்லு' என்று கேட்டேன்.
வெறும்வாயை மெல்லுகிறவனுக்கு அவல் வேறு கிடைத்துவிட்டால் பேசவேண்டுமா ? கார்த்திகேசு சற்று விபரமாகக் கதையைச் சொன்னன். 'நடந்தது என்ன தம்பி, எல்லாம் கால வித்தியாசம், அவ்வளவுதான். கார் வந்தது வண்டி போயிற்று. புதியதைக் கண்டதும் பழை யதைக் கைவிட்டார்கள், புதுப் பெண்டாட்டியைக் கண் டதும் வயசான தாய்க் கிழவியைச் சாகக் கொன்றுவிடு கிறதா ? ஊர் ஊராகக் கார்கள் வந்து நின்ற அந்த நாட்களில் என்னைப்போலக் கூலிவண்டி வைத்துப் பிழைத் தவர்கள் எத்தனைபேர் பெரும் கஷ்டத்துக்குள்ளானர்கள். தெரியுமோ ? தளுக்கி மினுக்கித் திரியும் இந்த மோட்டார்க் கார்களேக் காணும்போது எனக்கு உடம்பெல்லாம் பற்றி எரிகிறது. அரிச்சந்திர மகாராசாவின் பூச்சக்கரக் குடையை அபகரித்து வரும்படி விசுவாமித்திர முனிவர் அனுப்பினரே தாட்டியப் பெண்கள் - அவர்களுடைய ஞாபகம் வருகிறது தம்பி, இந்த அந்நியப் பசாசுகளேப் பார்க்கும்போதெல்லாம் ! ஆனல், எங்களுடைய மாட்டு வண்டிலோ அந்நிய முதலு மல்ல; அந்நியர் சொத்துமல்ல. அதற்குக் கொடுக்கும் பணத்தில் ஒரு செம்புச் சதமும் வெளியே போவதுமில்லை. இதையெல்லாம் யார் சிந்தித்துப் பார்க்கிருர்கள் ? மனித னுக்குச் சிந்தனை இருந்தால் உலகத்தில் தாசிகள் ஏன் இருக்கிருர்கள் தம்பி ? ஏதோ கண்டதே காட்சி கொண் டதே கோலம் ! இந்த மனப்பான்மை-ஊரெங்கும் பரவிக் கொண்டு வந்த இந்த அந்நிய மோகம் - உனது பெரியப்பா வையும் போய்ப் பிடித்துவிட்டது.
அந்தச் சமயம் இந்தியாவிலிருந்து ஒரு பெரிய தவில் வித்துவானக் கூப்பிட்டிருந்தார் அவர், ஒருநாள் என்னைக் கூப்பிட்டுச் சொன்னர் : "கார்த்திகேசு, இப்போ எனக்கு வத்திருக்கும் தவில்காரர் மாட்டு வண்டியில் ஏறிப் பழக்க மில்லையாம், என்ன செய்வது ? இந்த வருஷம் போகட்டும். அடுத்த வருஷம் பார்த்துக் கொள்ளலாம்.'

பழையதும் புதியதும் h− 47
எனக்கு எண்ணமாதிரி இருந்திருக்கும் என்று நினைக்கிருய் நம்பி ? உனது பெரியப்பா வெளிப்படையாகச் சொல்லT விட்டாலும் நான் அவரது உள்ளப்போக்கைத் தெரிந்து கொண்டுவிட்டேன். இருந்தும், இதை ஒரளவுக்கு எதிர் 1ார்த்திருந்த்வன்தான் நான். எப்படியானபோதிலும் பதினேந்து வருஷத் தொடர்பு அல்லவா ? இங்கிருந்து காரைதீவுக்கோ, மட்டுவிலுக்கோ இன்னுமதற்கப்பாலுமோ பெரியப்பா சேவுகம் போகும் வனம், வனந்திரங்களுக்குச் சாமம் சாமமாக, இரவு இரவாக, இருட்டோ நிலவோ, வெய்யிலோ மழையோ, பனியோ காற்றே ஒன்றையுமே சட்டைபண்ணுமல் வண்டி ஒட்டியவனல்லவா ? உற்சவங் கிளிலே நடைபெறும் மேளக் கச்கசேரிகளில் உனது பெரி யப்பா மேளத்துக்குக் கிடைக்கும் புகழிலும் கீர்த்தியிலும் நன்மை பிலும் தீமையிலும் நானும் அவர்களில் ஒருவளுக நின்று பங்குபெற்றவன் அல்லவா ?
எனது வண்டி ஏற்றிச் சென்ற வடிவேலு நாயனக் காரரை எங்கேயோ இருந்து வந்த மலையாளத்தானும் அவனது காரும் ஏற்றிச் செல்கிறது என்பதை எண்ணவே எனக்கு வயிறு எரிந்தது. அடக்க முடியாத ஆத்திரமும் கோபமும் உண்டாயின. வயிற்றெரிச்சலிலும் ஆத்திரத் திலும் நான் செய்த விசர் வேலைகளை இப்பொழுது நினைத் தால் சிரிப்புத்தான் வருகிறது. ஆனல் அப்பொழுது அவை எனது உள்ளக் குமுறலை ஒரளவு ஆற்றி வைத்தன.
ஒருநாள் காரோடு என் வண்டியைச் சவாரி விட்டுப் பார்த்தேன். மாடுகள்மேல் தொட்டு அறியாதநான் அன் றைக்கு அவற்றிற்கு அடித்த அடிகளை நினைத்தால் இன்ன மும் தேகம் நடுங்குகிறது தம்பி !
இன்னெரு நாள் வேருெரு காரியம் செய்தேன். தெருவில் என் வீட்டுக்குப் பக்கத்தே ஒரிடத்தில் ஒருநாள் ஒளித்திருந்து அந்தக் கார் போகும் சமயத்தில் இரண்டு கல்லே அதன்மீது விட்டெறிந்தேன். யாருடைய நல்ல காலமோ இரண்டு எறியும் கார்மீது படவில்லே, ஒடுகிற கார்மீது கல்லெறிவதற்கும் அநுபவம் வேண்டும் என்று அப்பொழுதுதான் அறிந்துகொண்டேன்.

Page 45
48 மனித மாடு
கடைசியில் இந்த அற்ப காரியங்களினுல் ஒரு பலனும் ஏற்படவில்லை. ஊர் முழுவதையும் மலையாளத்தான் தனது வசமாக்கிக்கொண்டான். அவனுக்கிருந்த ஒய்வு ஒழிச்சல் இல்லாத சவாரி'யைப் பார்த்து மேலும் கார்கள் ஊரிலே வந்து குவிந்தன.
நிலைமையைப் பார்த்துவிட்டு நான் மண்வெட்டியைக் கையில் தூக்கினேன். V
எது எப்படியான போதிலும் நீதிக்கு ஒரு இடம் உலகில் என்றைக்கும் இருக்கவே இருக்கிறது தம்பி!
பதினைந்து பதினறு வருஷங்களுக்குப் பிறகு இப்போ சண்டை தொடங்கி, பெட்ரோல் இறக்குமதி குறைந்து அது கட்டுப்பாடு ஆய்ச்சோ இல்லையோ, வண்டிக்காரர்களும் "மலுமலர்ச்சி அடைந்தார்கள். அவர்களுக்கு நல்ல காலம் பிறந்தது. வயலுக்கு எரு இழுத்த மாடுகளும் வண்டிகளும் சலங்கைச் சத்தத்தோடே பெரிய முேட்டில் ஒட ஆரம்பித் தின. வடிவேலு நாயனக்காரரே வலியக் கூப்பிட்டு என் னிடம் கேட்டிருக்கும்போது நான் ஏன் சும்மா இருக்கப் போகிறேன். இருபது வருஷங்களுக்கு முன்னே வண்டி ஒட்டிய அந்த இனிய நாட்கள் திரும்பவும் ஒருமுறை என் சீவியத்தில் மீண்டும் கிட்டுமா என்று ஏங்கியிருந்த எனக்கு இது எவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கும் என்பது
நான் சொல்லிக்கொள்ளக் கூடியதல்ல. "கார்த்திகேசு, இந்த வருஷம் எனது மேளத்துக்கு நீதான் வண்டிக்கா ரன்’ என்று வடிவேலு நாயனக்காரர் சொல்லிய
வார்த்தைகள் எனக்குத் தேன்போல இனித்தன. பால் போன்ற வெண்ணிலவில் வெள்ளை வெளேரென்றிருக்கும் தெரு வழியே எனது வண்டி மறுபடியும் மேளம் ஏற்றிச் செல்வதை எண்ண எனக்கு ஆனந்தம் பொங்கியது. ஆன: போதிலும் .' என்று கார்த்திகேசு சட்டென்று பேச்சை மழுப்பிஞன்.
**அது என்ன காத்தி அண்ணே?' என்று கேட்டேன்.

பழையதும் புதியதும் 49
“ஒன்றுமில்லை, ஒரு சின்னச் சந்தேகம், தம்பி இந்தச் சண்டை இருக்குதோ இல்லையோ, இது முடிந்த பிற்பாடு * பெட்ரோல் கிட்ரோல் எல்லாம் வந்து கார்கள் பழையபடி ஒட ஆரம்பித்து விட்டால் வண்டிக்காரர்கள் பாடு பழைய படி கறுப்பன் கதைதானும், மெத்தானே?"
இதைக் கேட்கும்போது அவனுடைய குரல் சோர் வடைந்து காணப்பட்டது.
"பயப்படாதே அண்ணே அணுக்குண்டு கண்டுபிடித்
இருக்கிருர்களாம் ' என்றேன் நான். வேறு எதைச் சொல்ல?
-மறுமலர்ச்சி, பங்குனி 1945

Page 46
10
மாடு சிரித்தது
*பல நாட்களுக்குப் பிறகு வண்டிக்காரக் கார்த்தி கேசுவை மறுபடியும் சந்தித்தேன். ரயிலடிக்கு யாரையோ கொண்டுபோய் விட்டுவிட்டு வெறும் வண்டியோடு வீடு திரும்பிக் கொண்டிருந்தான். வழியில் என்னைக் கண்டதும் வண்டியை நிறுத்தி என்னை ஏறிக்கொள்ளச் சொன்ஞன் . நாலரை மைல் தூரத்துக்கும் கால்-கோச்சில் போ: நடந்துகொண்டிருந்த நான் இந்த வசதியைத் தப்ட விடுவேனு? ஏறிக் கொண்டேன்.
கார்த்திகேசுவின் வண்டியில் ஏறினல் என்னுல் பேசா லிருக்க முடிவதில்லை. வண்டியில் உட் கூடாரத்திலே ஒரு ஒர மாக ஒட்டியிருந்த எலக்ஷன் நோட்டீஸ் ஒன்று கண்ணில் பட்டதும் பேச்சைத் தொடங்கினேன்.
* "ஒஹோ! கெளன்சிலுக்கு ஆள்பிடி வேலை வெகு மும் முரமாக நடக்கிறது போலிருக்கிறதே! நீ யார் பக்கம் அண்ணே? உன்னுடைய குறிச்சியில் இந்த அமளிகள் எப் படியிருக்கிறது?’ என்று இரண்டு மூன்று கேள்விகளோடு பேச்சை ஆரம்பித்து வைத்தேன்.
மடியிலிருந்த புகையிலையில் ஒரு துண்டைக் கிள்ளி உருட்டி வாய்க்குள் குதப்பிக்கொண்டு ஒர் அலட்சியமான சிரிப்போடு, ' பக்கமாவது, பரிசாவது தம்பீ, எங்களுக்கு இதைப்பற்றியெல்லாம் என்ன தெரியும்? பரியாரியார் என்ன

மாடு சிரித்தது 51
சொல்லுகிறரோ அந்தப்படி செய்கிறதுதான். அவர்தான் இந்த நோட்டீஸைக் கொண்டுபோய் ஒட்டச் சொல்லித் தந்தார். அவர் எனது நெற்றியிலே ஒட்டச் சொன்னுலும் ஒட்டிக் கொள்வேன். புண்ணியவான் கனகாலம் இருக்க வேண்டும்!' - என்று இரண்டு கையும் எடுத்து மேலே பார்த்துக் கும்பிட்டான்.
அவன் பராக்காயிருப்பது அவனுடைய மாடுகளுக்கு எப்படியோ தெரிந்து விட்டது. அவை சற்றே உல்லாச நடை போடத் தொடங்கின. கார்த்திகேசு எனக்குப் பதில் சொல்லிவிட்டு முன்னே குனிந்து அவைகளுக்குச் சத்தம் காட்டி மறுபடியும் மூறுக்கி விட்டான். வ8ண்டி கடகடத் துக்கொண்டு சென்றது. -
* யார் அது, கந்தையாப் பரியாரியார்தானே? உனக் கும் அவருக்கும் அதிகம் கடமை உண்டு போலே" என்று மெல்லக் கிளறினேன். "கடமையாவது கடமை, தம்பி நீங்கள் எல்லாரும் சின்னப் பிள்ளைக்ள். உங்களுக்கு அந்த மனுஷரைத் தெரியாது. பூலோகத்திலே பரியாரியாரைப் போல ஒருத்தர் இரண்டு பேர் இருக்கிற படியால்தான் மழை பெய்கிறது என்று நினைத்துக்கொள். கார்த்திகேசு இன்றைக்கு உயிரோடு இருக்கிறது அந்தப் பிரபுவாலே தான். இல்லாவிட்டால் இவ்வளவுக்குச் செத்த இடத்தில் புல்லுக்கூட முளைத்துப் போயிருக்கும்--!’
*ஒகோ. அப்படியோ ? அவ்வளவு பெரிய காரியமா ? அதென்ன ???
| "எனக்கு ஒன்றுமில்லை. தம்பி, என்னுடைய பெண் சாதிக்குத்தான் ஒருமுறை ஒரு வருத்தம் வந்தது. வருத்த மாவது வருத்தம். இரண்டு வருஷத்துக்கு முன்னம் என் பெண்சாதிக்கு வந்த வருத்தத்தைப் போல உலகத்திலே ஆருக்கும் வந்து நான் பார்க்கவில்லை. வைத்தியர்மார் எல்லோருமே கைவிட்டுவிட்டார்கள். மானிப்பாயிலேகூட வீட்டுக்குக் கொண்டுபோகச் சொல்லிவிட்டார்கள். வீட் டிலே ஏழுநாளாய் அடுப்பு மூட்டவில்லை. பிள்ளை குட்டிகள்

Page 47
52 மனித மாடு
எல்லாம் ஏங்கிப்போய்க் கிடந்தன. வீட்டுக்கு லட்சுமிபோல இருந்தவள். அவளுக்கு இப்படி ஒன்று என்ருல் எனக்குப் பாதிப் பிராணனே போய்விட்டது போலிருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போயிருந்த சமயத் தில்தான் இந்தப் புண்ணியவான் வந்து சேர்ந்தார், அப்பா. ஒருநாளை மருந்து. ஒரே ஒருநாளை மருந்து தம்பி. ஒரு கிழமை அறிவு நினைவில்லாமல் கிடந்த என் பெண்சாதி அந்த மூன்று நேர மருந்துக்குப் பிறகு கண் முளித்துப் பார்த்து என்னைக் கூப்பிட்டாள், தம்பி 1 ஆகா !! அ5ை மறக்கமுடியாது. தெய்வந்தான் வந்துவிட்டது போலிருந் தது. எனக்கு இருந்த ஆனந்தத்தில் மற்றநாள் பரியாரியார் வீட்டுக்கு வந்தபோது அவரை விழுந்து கும் பிட்டேன். தம்பி, சான்ன இருந்தாலும் அந்தக்காலத்துப் பரியாரி மார்கள் தெய்வப் பிறவிகள்தான். செத்துப்போனலும் அவர்கள் பூங்காவனத்தில்தான் இருப்பார்கள்.'"
அவனது நா தீழதழத்தது; கண்கள் கலங்கின. பழைமை உணர்ச்சியில் ஆழ்ந்துபோய்விட்டான். பாவம் !
எனக்கு அவனைப் பார்க்க ஒருபக்கம் வருத்தமாயு மிருந்தது. அவனைப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாலோ, சிரிப்புப் பொங்கிக்கொண்டு வந்தது.
கொஞ்சத் தூரம் வண்டி போனபிற்பாடு பேச்சைச் சாவகாசமாகத் தொடங்கினேன்;
**அப்போ, இந்தக் கெளன்சில் அடிபிடியிலே நீ பேரம் பலம் பக்கமுமில்லை, பெரியண்ணர் பக்கமுமில்லை, பரியா ரியார் பக்கம் என்று சொல்லு' என்று துரண்டினேன்.
"ஏன் பரியாரியார் பெரியண்ணர் பக்கம்தானே வேலை செய்கிருர் தெரியாதோ ?’ என்று திருப்பிக் கேட்டான் அவன்.
'அந்த நோட்டீஸைப் படித்துப் பார்த்தால் அவர் யார் பக்கமென்று தெரியும்' என்றேன்.

மாடு சிரித்தது 53
'அதை நான் படித்துப் பார்க்கவில்லைத் தம்பி. எனக்குத் தெரியும், எப்படியும் பரியாரியார் பெரிய னர் பக்கம்தான் வேலை செய்வார் என்று.”*
"அதெப்படி?’ என்று வெகு ஆவலோடு கேட்டேன்.
'நீ என்ன தம்பி எடுத்ததுக்கெல்லாம் கேள்வி கேட்டுக் கொங் டிருக்கிருய்? உலகத்திலே நடக்கிறது ஒன்றுமே உனக்குத் தெரியாது போலிருக்கு. கொஞ்ச நாளைக்கு முந்தி நடைபெற்ற அந்த வேலைக்காரப் பெண் கொலை வழக்கில் பெரியண்ணர் அப்புக்காத்து, அவ்வளவு பாடுபட்டுச் சட்ட வித்தை பேசி வெல்லாவிட்டால் பரியாரியர் செய்த வேலைக்கு அவர் கழுத்தில் கயிறு அல்லவா மாட்டியிருப் பார்கள் கோட்டில்! "
**ஓகோ , அதற்காகவா? அப்படியானல் அவர் நிற்பது சரிதான். பெரியண்ணர் செய்த உதவிக்கு இதுவும் செய்ய லாம். இன்னமும் செய்யலாம்’ என்று அவனேடு சேர்ந்து பாடிவிட்டேன்.
இப்படி நான் சொன்னபோது என்னுடைய முகத்தில் எதைக் கண்டு கொண்டானே தெரியாது, தன்னுடைய பிரசாரத்தை என்னிடமும் கொஞ்சம் காட்டத் தொடங்கி
6f "LTøóT.
"ஏன் தம்பி, ெேபரியண்ணர் மகா கெட்டிக்காரரும் நல்ல வரும் என்று சொல்லுகிருர்களே, நீ அறியவில்லையா? யுத்த தா லத்திலே ஏழை மக்களுக்கு அநேகம் உதவிகள் செய் திருக்கிருராம். தீணி இல்லாமல் சாகக்கிடந்த மாடுகளுக்குச் சீமையிலேயிருந்து பருத்திக் கொட்டையும் பிண்ணுக்கும் எடுப்பித்துக் கொடுத்தாராம். நாங்கள் அவருக்கு எவ்வளவோ கடமைப்பட்டிருக்கிருேம். பரியாரியாருடைய மகனுக்குக் கொழும்பில் வேலையாக்கிவிட்டது யார் என்று நினைக்கிறீர்? என்னுடைய பொடியனையும் நெடுகப் படிப்பிக்கச் சொல்லி யிருக்கிருர் பரியாரியார்.’’ என்று மேலும் பேச இழுத்தான்.

Page 48
54 மனித மாடு
"அடடே, உனக்கும் இதெல்லாம் தெரிந்துவிட்டது
போலிருக்கே. எங்கே அந்த நோட்டீஸை எடு பார்ப்
போம்.’’ என்று அதைக் கேட்டு வாங்கிப் பார்த்தேன். எனக்குப் பெரும் வியப்பாயிருந்தது.
@J Gör... ... ?
அது பெரியண்ணருக்கு மாருக அவரது எதிர்க் கட்சி யினர் அவர்மீது வசைபுராணம் பாடி, வெளியிட்ட நோட்டீஸ்
*" என்னப்பா இது? யார் பக்கத்து நோட்டீஸை நீ கொண்டுதிரிகிருய்?" என்று கேட்டதும் கார்த்திகேசு திடுக் கிட்டு விட்டான். நான் விஷயத்தைச் சோன்னேன்.
'அடடா, மாறிவிட்டேன் போலிருக்கிறது! வண்டியில் இதை யாரோ கொண்டுவந்து விட்டுவிட்டுப் போயிருக் கிழுர்கள். அதைக் கிழித்து எறிந்துவிடு தம்பி!' என்று பரபரப்பாக சான்னிடம் அதை வாங்கித் தூள்தூளாகக் கிழித்தெறிந்தான்.
**கார்த்தி அண்ணே! நீ பள்ளிக்கூடம் போனதில்&லயா சிறுவயசில்?’ என்று அவனை நான் கேட்கவில்லை. மாட் டின் கழுத்திலிருந்த சலங்கைகள் கலகலத்தன. அது மாடு சிரித்தது போலிருந்தது எனக்கு!
ஏன் சிரித்தது?
- மறுமலர்ச்சி, பங்குனி 1946

11
பாடுபட்டுத்தேடி
ஒன்று கிளறிக்கல் மெஷின்; மற்றது சமையல் மெஷின், ஒன்று படித்தது மற்றது படிக்காதது ஒன்று ஆண் ; மற்றது பெண். ஒன்று புருஷன்; மற்றது மனைவி. ஒன்று மகத்தான பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இயங்கத் தினமும் வேலை செய்வது; மற்றது அது வேலை செய்வதற்கு வேண்டி வேலே செய்வது-ஓர் உபயந்திரம். ஒன்றுக்குப் பெயர் ராமலிங்கம்; மற்றதுக்குப் பொன்னம்மா.
ராமலிங்கமும் பொன்னம்மாவும் உற்பத்தியானது யாழ்ப்பாணத்திலே, ராமலிங்கத்துக்கு வேலை கொழும் பில், ஒரு அரசாங்கக் கந்தோரில். மாசம் 75 ரூபா சம் பளம். இந்த வேலை கிடைத்த சில நாட்களுக்குள் ராம லிங்கம் பொன்னம்மாவைச் சேர்த்துக் கொண்டது. ஒரு வீட்டில் இருபது ரூபாவுக்கு ஓர் அறையை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு இரண்டும் தனிக் குடித்தனஞ் செய்தன.
ராமலிங்கம் சிக்கனக் கலையில் கைதேர்ந்த பேர்வழி. அதாவது, மிகச் செட்டு. வசதி வந்தால் 75 ரூபாவையுமே மிச்சம் பிடித்துவிட வேண்டுமென்று ஆசை அதற்கு ! ஆணுல் அது முடிகிற காரியமா ? எப்படியோ அது நமக் குத் தெரியாது, அந்தத் தொகையில் பாதியை ராமலிங்கம் ரொக்கமாக மிச்சம் பிடித்துவிடும். கொழும்புப் பட்டினத் திலே ராமலிங்கம்-அதன் சிக்கனத்துவம்-ஒரு நூதனம். அதன் வீடு ஒரு நூதனசாலை. நூதனமான ஒன்று இருக்குமிடம் நூதனசாலையில்லாமல் வேறென்ன ?

Page 49
56 மனித மார்
8-30 மணிக்குக் கந்தோர். ராமலிங்கத்திடம் ஒரு நல்ல பழக்கம். வைசறைத் துயிலெழுந்துவிடும். 5 மணிக்கெல் லாம் படுக்கையில் ஆளைக் காண முடியாது. சுயநல மில்லாமல், அயர்ந்து நித்திரை போய்க்கொண்டிருக்கும் பொன்னம்மாவையும் கூட எழுப்பிவிடும். ஆரம்பத்தில் சில நாட்கள்தான் இப்படி, பிறகு நாளாவட்டத்தில். பொன்னம்மா இராமலிங்கத்துக்கு முன்பாகவே நித்திரை விட்டெழுந்து ஆறுமணி அடிக்க எல்லாக் காரியங்களையும் முடித்து வைத்துவிடும். ராமலிங்கம் சாப்பீட்டுவிட் மத்தியான உணவையும் கட்டி எடுத்துக்கொண்டு 64 மணிக் குக் கந்தோருக்குப் புறப்பட்டுவிடும்.
பஸ். டிராம், ரயில் என்றெல்லாம் பட்டணங்களிலே குறுக்கும் மறுக்குமாக ஒடித்திரிகின்றனவே-அவற்றின் பக்கமே ராமலிங்கம் திரும்பிப் பார்ப்பதில்லை. ஐந்து மைல் தூரமுள்ள "அலுவலகத்துக்குந் தெய்வம் கொடுத்த திருக் கால்களின் உதவியைக் கொண்டே போய்ச் சேர்ந்துவிடும். கொழும்பிலே ராமலிங்கத்தின் "நூதன வாழ்க்கை இரகஸ் யங்களில் இது ஒன்று.
மாலேயில் கந்தோர் முடியும் நாலரை மணிக்கு ராம லிங்கம் மற்றவர்களேப்போலப் பறந்தடித்துக்கொண்டு வெளி யேறுவதில்லை. பொழுது கருகும்வரை வேலை செய்யும், பிறகு சாவகாசமாக எழுந்து வேலையை முடித்துக்கொண்டு, வீட்டிலிருந்து கொண்டுவந்த வெற்றிலே பாக்கில் ஒரு வாய் போட்டுக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பும், கால்கோச்சில் ஆடி ஆடி வீடு போய்ச்சேர 8 மணியாகும். பொன் னம்மா சோறும் வடித்து ஒரு பச்சடியும் அரைத்து ஒரு ரசமும் வைத்துவிட்டு ராமலிங்கத்தைக் காத்துக்கொண் டிருக்கும்.
காலையில் அவிழ்த்துவிட்டுப் போன சால்வை காற் றிலே படபடவென்று அடித்துக் காய்ந்துகொண்டிருப்பதைப் பார்க்க ராமலிங்கத்தின் மனம் மலரும். ** வெந்நீர் வைத்திருக்கிறது குளிக்க' என்று பொன்னம்மா சொன் னதும் ராமலிங்கத்துக்கு ஒரு புது உற்சாகம் பிறந்துவிடும்.

பாடுபட்டுத் தேடி 57
அதோடு, அடுப்பிலே கொதித்துக்கொண்டிருக்கும் மிளகு ரசத்தின் வாசனை மூக்கில் வந்து தட்டவும், ராமலிங்கத் துக்கு ஒரே ஆனந்தம். பகல் பன்னிரண்டு மணி நேரமும் கத்தோரில் திரும்பத்திரும்பக் கூட்டியும் கழித்தும் கொண் டிருந்த அலுப்பு, அயர்வு எல்லாம் நீங்கி ஓர் உல்லாசம் உண்டாகி வாய் இலேசாக ஒரு பாட்டையும் முணுமுணுக்க ஆரம்பித்துவிடும் !
ஸ்நானம், சாப்பாடு எல்லாம் ஆகி முடிய இரவு பத்தரை மணியாகிவிடும். சாப்பாட்டில் ராமலிங்கம் மிக எளிமை. அதாவது வாய் ருசி பார்த்து நாக்குக்கு அடிமைப் பட்டு, அது வேணும், இது வேணும்" என்று அவதிப்படுவ தில்லை. ஏதோ "பசிக்கும்வேளையில் எதையாவது போட்டு வயிற்றை நிரப்ப வேண்டியதுதான்’-என்பது ராமலிங் கத்தின் சித்தாந்தம்.
சாப்பாடு முடிய அன்றைய வரவு-செலவுக் கணக் குகள் பரிசோதனை நடைபெறும். பொன்னம்மாவின் செல வினங்கள் யாவும் புள்ளி விபரமாக இருக்கும். அவற்றைப் பார்த்து அவற்றுக்கு ஒரு சிறு விமர்சனமும் செய்யப்படும். பொன்னம்மாவின் கை ஒட்டைக் கை என்று ராமலிங்கம் தினமும் கண்டிப்பதுண்டு. செலவுகளைக் கொஞ்சம் இறுக் கிப் பிடிக்கும்படி உபதேசஞ் செய்யும். இந்தக் குறை குற்றங்கள், உபதேசம் ஒன்றுக்கும் பொன்னம்மா வாய் திறக்கக்கூடாது. பேசாம லிருந்து எல்லாவற்றையும் பொறுமையோடு கேட்டுக் கொள்ளவேண்டும். இடையிலே ஒரு வார்த்தை சொன்னல். ராமலிங்கத்துக்குப் பிரமாத கோபம் பிறந்துவிடும். பெண்களுக்கு எந்த விசயத்தி லாகட்டும், பேச்சு என்ன வேண்டியிருக்கிறது ?- என்பது ராமலிங்கத்தின் கட்சி.
போசனம், "பட்ஜெட் யாவும் முடியப் பதினுெரு மணியாகிவிடும். அதற்குப் பிறகுதான் படுக்கை. இதோடு ராமலிங்கத்தின் தினசரி வாழ்க்கை அலுவல்கள் முடிகின்றன. இதற்குமேல் சினிமாவோ, கூத்தோ, கேளிக்கையோ, அர சியலோ, பொது விஷயமோ - ஒன்றிலுமே பிரவேசிப்பது
լք 8

Page 50
5& மனித மாடு
கிடையாது; ராமலிங்கம் உண்டு, ராமலிங்கத்தின் மனைவி உண்டு; உத்தியோகமுண்டு, சம்பளமுண்டு, பெரியதுரை உண்டு இவ்வளவுதான் ராமலிங்கத்தின் உலகம். ராம லிங்கத்தின் வாழ்க்கை இன்பதுன்பங்கள் அனைத்தும் பொரு எாதாரத்தில்-வீட்டிலேயிருக்கும் இரும்புப் பெட்டகத்தில்அடக்கம்.
ராமலிங்கத்துக்கு மனத்தில் எவ்வளவு பயம் உண்டோ அவ்வளவுக்குத் தெய்வ பக்தியும் உண்டு. மனத்தில் பயம் அதிகமாகும் சமயங்களிலே தெய்வத்தின் மீது தீவிர பக்தி உண்டாகி ராமலிங்கம் தேவார திருவாசக பஜணுமிருதத் தில் இறங்கிவிடும். பொழுதுபட்டு விளக்கேற்றிவிட்டால் ராமலிங்கம் தனியாக வீட்டு வாசலைவிட்டு வெளியே இறங்க மாட்டாது. பொன்னம்மா துணைக்குப் போகவேண்டும் ! நடுச்சாமத்திலே வெளியே சத்தம் சலனம் ஏதும் கேட்டால் லேசாக விளக்கைத் தூண்டிவிட்டு, கந்தரலங்காரம் சொல்லத் தொடங்கிவிடும். பட்டணத்திலே உத்தியோகம் பார்க்கும் அநேகர் இப்படிச் சூரப்புலிகளாயிருந்தபடியால் ராம லிங்கத்தின் இந்தக் குணவிசேஷம் அவ்வளவாக ஒருவரையும் கவரவில்லை. ராமலிங்கத்தின் கெட்டித்தனத்திலோ, துணிச் சலிலோ அப்படி ஒரு விசேஷ பார்வை யாருக்கும் ஏற்பட் டதாகத் தெரியவில்லை.
ஆணுல். ராமலிங்கத்தைப் போன்ற பேர்வழிகள்மீது விசேஷ பார்வை செலுத்துவதற்குப் பட்டணத்திலே வேறே ஆட்கள் இருந்தார்கள். அவர்கள் ராமலிங்கத்தைக் கவனிக் கவுஞ் செய்தார்கள்.
*சிவனே யென்று தானுந் தன் பாடுமாகவிருந்த ராம லிங்கத்துக்கு இருந்தாற்போலிருந்து பொல்லாத காலம் வந்தது.
அது கிறிஸ்மஸ் சமயம், கிறிஸ்மஸ் லீவு ஒன்றும் வேண் டாமேன்றுவிட்டு ராமலிங்கம் சம்பாத்தியத்தில் அக்கறை யாயிருந்தது. வீட்டிலே கூடவிருந்த மற்றக் குடும்பங்கள் வீட்டைப் பூட்டிக் கொண்டு விடுதலை கொண்டாட ஊருக் குப் போய்விட்டனர். ராமலிங்கம் தம்பதிகள் தனியே,

பாடுபட்டுத் தேடி 59
ஒருநாள் நடுச்சாமத்தில் வெளியே கதவில் யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அயர்ந்து தூக்கிக் கொண் டிருந்த ராமலிங்கம் துடித்துப் பதைத்து எழுந்தது. விளக்கைத் தூண்டிவிட்டு, ஒரு தரம் உரக்கச் செருமிவிட்டு "அடலருணைத்திருக் கோபுரத்தே " " என்று ஆரம்பித்தது.
ஆஞல், வந்தவர்கள் யமகாதகப் பேர்வழிகள்.
ராமலிங்கம் வேலைசெய்யும் கந்தோரையும் பெரிய துரையின் பெயரையும் குறிப்பிட்டு 'அவசரமான செய்தி , geg u li fT ... ” ” என்று ஆங்கிலத்தில் இழுத்துவிட்டார்கள். கந்தோர்த் துரையின் பெயரைக் கேட்டதும் ராமலிங்கம் ஏமாந்து போய்விட்டது. கதவைத் திறந்துவிட்டது. நீட்டிய கைத்துப்பாக்கியும் பளிச்சிடும் கத்தியும் கொண்டு இரண்டு தடியர்கள் உள்ளே நுழைந்தார்கள். அப்பொழுதுதான் பேரிவழிக்கு விஷயம் விளங்கிற்று வெலவெலத்துப் போய் விட்டது. பாவம்!
"மூச்சுக் கேட்கக்கூடாது' என்று வந்தவர்கள் கைத் துப்பாக்கியை மார்புக்கு தேரே நீட்டியதும், ராமலிங்கம் தம்பதிகள் உண்மையில் மூச்சை அடக்கிக் கொண்டு விட்டனர்,
** பெட்டகத்துச் சாவியைக் கொடு' என்று அவர்கள் கேட்க, ராமலிங்கம் இரண்டாவது பேச்சின்றி எடுத்துக் கொடுத்தது. "நகை அடைவு பிடிக்கத் தத்துவம் பெற் றவர்’ என்று வெளியே விளம்பரம் ஒன்றும் போடாமலி ருந்தும் வந்தவர்கள் அதை எப்படி அறிந்தார்கள் என்று ராமலிங்கத்துக்கு ஒரே ஆச்சரியமாயிருந்தது.
சிறந்த பாதுகாப்பு என்று ராமலிங்கம் எண்ணியிருந்த இரும்புப் பெட்டகம் அது பாதுகாப்பாகவேதானிருந்தது. ஆணுல், அந்தந் தடியன் பளபளக்கும் கத்தியைக் காட்டிய போது . பாவம் ராமலிங்கத்துக்குப் பிராணனே போய் விடும்போலிருந்ததே!

Page 51
60 மனித மாடு
அலுவலை முடித்துக் கொண்டு அவர்கள் போகும்வரை ராமலிங்கம் கண்ணே மூடிக்கொண்டு குப்புறப் படுத்து விட்டது.
பொன்னம்மாவின் கழுத்தில் கிடந்த தாலியைக் கழற் றும்படி வந்த தடியர்களில் ஒருத்தன் கேட்டபோது பொன் னம்மா ராமலிங்கத்தைச் சற்றுச் சுரண்டிப் பார்த்தும் ராமலிங்கம் அந்தச் சமியம் மரக்கட்டைபோல அசையாமல் கிடந்துவிட்டது
கடைசியில் அவர்கள் போனபிற்பாடு இரும்புப் பெட் டகத்தைப் போய்ப் பார்க்க . ஐயையோ. ஒரே வயிற் றெரிச்சல்! M
Aன்றும்பு அரிசி சேர்ப்பது போலச் சேர்த்து வைத்த ராம லிங்கம் ஏங்கிப்போய் விட்டது.
அதிலிருந்து ராமலிங்கத்துக்கு காய்ச்சல் அடிக்க ஆரம் பித்தது. காய்ச்சல் வரவரக் கடுமையாகிக் குளிராக்கி குளிர் முற்றி ஜன்னியாக்கி எட்டாவது நாள் ராமலிங்கம் இந்தப் பொல்லாத கொள்ளைக்கார உலகத்திலிருந்து விடுதலை பெற்றது.
அடைவு பிடித்த நகைகளுக்குச் சொந்தக்காரர்கள் செய்தி அறிந்து ஓடி ஓடி வந்தார்கள்.
ஆனல், அங்கே வீடு பூட்டியிருந்தது. ராமலிங்கத்தின் துணைமெஷின் எங்கே போனது, என்னவாயிற்று என்று யாருக்குமே தெரியவில்லை.
ஒரு சமயம் ராமலிங்கத்துக்குத் துணையாகவேதான் போய்விட்டதோ என்னவோ!
-மறுமலர்ச்சி, ஆணி 46

12
இன்னமும் சோதனையா?
*பிருந்தாவனம்" என்ற பத்திரிகையின் ஆசிரியர் ஞானகுமாரன் ஒரு கலாரசிகர். சங்கீதம், நாட்டியம் முத லான இன்பக்கலைகளை உண்மையாக மெய்ம்மறந்து அநுப விப்பார். அநுபவிப்பதுபோலப் பொய்வேஷம் போட
Of TL. T.
ஒரு சமயம் சங்கீதப் பள்ளிக்கூடம் ஒன்று கட்டுவதற்கு நிதிசேர்க்க ஊரிலே ஒரு கதம்பக் கச்சேரி நடைபெற்றது.
கச்சேரி நடத்தியவர்கள் ‘பிருந்தாவன' ஆசிரியருக்கும் அழைப்பு அனுப்பியிருந்தார்கள். அழைப்பை ஏற்றுக் கொண்டு ஆசிரியர் கச்சேரிக்கு வந்திருந்தார்.
அன்றைய நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தக்கது. தேவகி ான்ற பெண்ணின் பாட்டு. குழைவும் இனிமையுங் கலந்த அவளுடைய சாரீரம் கொட்டும் மதுர கீதத்தில் மனதைப் பறிகொடுக்காதவர்களேயில்லே, லட்சுமி தாண்டவமாடும் அந்த இளம் மங்கையின் எழில் முகத்தில் சொக்கிப்போ கா தவர்கள் மனித ஜென்மமே அல்ல.
*பிருந்தாவனம் ஆசிரியர் நல்ல ரசிகர் என்றேனே? அன்றைக்கென்று தேவகி என்னவோ அபாரமாகத்தான் பாடினுள். உள்ளமும் உடலும் ஒன்ருகி உருகிப் பாடினுள். அவளது இதய ஒலிகளைக் கேட்கச் சபையில் ஒர் உண்மை

Page 52
62 மனித மாடு
யான ரசிகர் வந்திருக்கிருர் என்று அறிந்தாளோ என் னவோ! "இன்னமும் சோதனையா?’ என்றபாட்டை மோகனத்தில் குழைந்து குழைந்து பாடினுள் கண்ணிர் வராத ஒரு குறை.
ஆனல், கண்ணிர் *பிருந்தாவன ஆசிரியருக்கு வந்தது. ஸ்தூல தேகத்தில் தாம் ஒகு சாதாரண மனித ஞகச் சபையில் இருப்பதாக அவருக்குத் தோன்றவில்லை. அலங்காரமான மேடையில் ஜெகஜ்ஜோதியான மின்சார வெளிச்சத்தின்கீழ் ஒய்யாரமாகவிருந்த அந்தப் பூலோக ரம்பையின் ஒயிலும் அவளுடைய கந்தர்வ கானமும் சேர்ந்து அவரை ஆகாயத்தில் எங்கேயோ பூரண சந்திரிகை யின் கீழே கொண்டுபோயிற்று.
அவள் பாடிக்கொண்டிருந்தப்ோது அவருக்கு மனம் உருகி அழவேண்டும்போல இருந்தது. ஒடிப்போய் அவள் கால்களிலே விழவேண்டும் போலத் தோன்றியது. கதிரை யோடு தலையைப் பின்பக்கம் சாய்த்து மேடையைப் பார்த்த படி அப்படியே மெய்ம்மறந்துபோயிருந்தார். தலை அவரை மீறி ஆடியது. வாய் 'ஆஹா' என்றது.
சபையின் முன்னணியில் நாகரீக மரங்களின் மத்தி யில் ஒரு "பைத்தியம்" இருந்தது. அக்கம் பக்கத்திலுள்ளவர் களுக்கு ஆச்சரியமாகத்தானிருந்தது; வெட்கமாகவுங்கூட இருந்தது. ஆனல் பாடகிக்கோ அது வெகு உற்சாகத்தைக் கொடுத்தது. யாரோ இவர் ?' என்று தனக்குள்ளே கேட்டுக்கொண்டாள் இரவு பத்து மணியளவில் கச்சேரி முடிந்து எல்லோரும் வெளியேறினர்கள்.
அடுத்தவார "பிருந்தாவனத்தில் அந்தக் கதம்பக் கச்சேரி பற்றி ஒரு ரஸமான விம்ர்சனம் வெளியாகி யிருந்தது. கச்சேரிக்குச் சமுகந்தந்திருந்த ஆசிரியரே அதை எழுதியிருந்தார். அதில் தேவகியின் சங்கீதத்தைப் பற்றித் தான் முக்கியமாக வானளாவப் புகழ்ந்து எழுதியிருந்தார். தாம் அனுபவித்த உணர்ச்சிகளை ஒளிக்காமல் வெளிவெளி யாகவே கூறியிருந்தார்.

ன்னமும் சோதனையா ? 63
அவளது பாட்டும் அழகும் சேர்ந்து பண்ணுெடு இசை சேர்ந்தாற் போல ரம்யமாகவிருந்ததென்றும் அது ஒரு அற்புதமோ சொப்பனமோ என்றெல்லாம் தம்மைப் பிரமிக் மிக்கும்படி செய்துவிட்டதென்று வர்ணித்திருந்தார். முடிவில், பாடகி இடையிடையே செருமியதுகூட ஒரு இன்னிசை பாகவே பரிமளித்ததென்று விளம்பரமான ஒரு குறிப் டோடு தமது பாராட்டுதலே முடித்திருந்தார்.
இது வெளியான பத்திரிகை இதழ் தேவகியின் கைக்குப் போயிற்று என்று சொல்லவேண்டியதில்லை.
கதம்பக் கச்சேரி விமர்சனத்தை அவள் ஆவலோடு படித்தாள். தன்னைப்பற்றி எழுதிய பகுதியைத் திருப்பிக் இருப்பிப் படித்தாள். ஆயிரத்தடல்வ படித்தாள். ஒவ்வொரு முறையும் படிக்கப் படிக்க அவளுக்குப் புதுப்புது உணர்ச் சிகள் மனத்தில் உதித்தன. மகா காவியத்தைப் போலப் புதுப்புதுக் கருத்துக்கள் தெரிந்தன. ஒருசமயம் மட்டற்ற மகிழ்ச்சி உண்டாகும்; மற்ருெருசமயம் அதைப் படிக்கும் போது அதை எழுதியவரை உடனே பார்க்கவேண்டும், அவரோடு மனங்குளிரப் பேசவேண்டும் என்ற தாகம் உண் டாகும். 'பாடகி இடையிடையே செருமியது கூட நன்ரு கத்தானிருந்தது’-இந்த வசனத்தைப் படித்தபோது அவ ளது முகம் நாணத்தால் சிவந்தது. பத்திரிகையைச் சட் டென்று மடித்து எடுத்துக்கொண்டு அறைக்குள்ளே தனி யாசப் போயிருந்து மீண்டும் படிக்கத் தோடங்கினுள். முடிவில், இப்படியெல்லாம் தன்னைத் தூக்கி வைத்து எழுதிய ஆசிரியருக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கடிதம் எழுதுவதென்று தீர்மானித்தாள்.
'இவ்வளவு பாராட்டுதலுக்கும் அடியேன் தகுதியுடை யவளா ஆசிரியரே! “ என்று எழுதிய தேவகியின் கடிதம் ஞானகுமாரனுக்குப் பெரும் மனப்பூரிப்பைத் தந்தது. பேனையை எடுத்து உடனேயே அவளுக்கு என்னென்னவோ எழுதினர். எழுதி அதைத் தபாலில் சேர்த்தபிறகுதான் அவருக்கு மன நிம்மதி பிறந்தது.

Page 53
4. மனித மாடு
இதற்குப்பிறகு அவர்களிடையே பல கடிதங்கள் போய் வந்தன. "* சில காலமாகப் "பிருந்தாவனத்தில் உணர்ச் சியான நல்ல கதைகள், கட்டுரைகளே வருவதில்லை' என்று அதன் வாசகர்கள் குறை கூறினர்கள் என்றல் அதற் குக் காரணம் ஆசிரியரின் அசிரத்தையல்ல ; தேவகிதான். ஞானகுமாரனின் சர்வ உணர்ச்சிகளையும் கொள்ளைகொண் டிருந்தவள் அவளல்லவா 1
கடித உறவு முற்றி நாளடடைவில் அவர்கள் நேரிலும் சந்திக்கத் தொடங்கினர்கள். தன்னைத் தேடி அவர் தன் வீட்டுக்கு வருகிருர் என்பதை நினைக்க நினைக்க அவளுக்கு அது ஏழேழு ஜன்மத்திலும் கிட்டாத ஒரு பாக்கியம் போலத் தோன்றியது. ஞானகுமாரனுக்கோ. அவள் வீட்டி லேயே குடியிருந்து வீட்டால் பிறவிப்பயன் தீர்ந்துவிடாதா என்றிருந்தது. சந்தித்தபோதெல்லாம் அவர் அவளைப் பாடச்சொல்லிக் கேட்டு அவள் பக்கத்திலமர்ந்து 'ஆஹா ! ஊஹ" !' என்று பரவசப்பட்டார். பல மணிக் கணக்காக அவளைப் பார்த்துக்கொண்டே 'ஆசைக்காதலி, நீ பாட் டிசைத்துக் கனிவோடு கூடுவையேல் ஏதுமினிக் கவலையில்லை; இவ்வுலகில் இதுவன்ருே பரமபதம்’ என்று சொன்னர்.
கலைஞர், ரசிகர் காதல் என்னவோ மகோன்னதமாகத் தானிருந்தது. ஆளுல் . . இந்த ஆணுல் என்ற முறிவு அவர் களிடையேயும் இல்லாமற் போய்விடவில்லை. அழகான தாமரைப் புஷ்பம் தடாகத்திலே எத்தனை நாளைக்குப் பூத் திருக்க முடிகிறது ?
தேவகியின் பெற்ருேருக்கு அவளை ஞானகுமாரனுக்குக் கல்யாணஞ் செய்து கொடுக்க வேண்டுமென்று ஒர் எண்ணம் உண்டாயிற்று, விஷயத்தை மெள்ள வெளியிட் L-IT rid, air. . . . . .
ஞானகுமாரன் தேவகி வீட்டுக்குப் போவது சட் டென்று நின்றுவிட்டது, அவர்கள் திகைத்துப் போனர்கள். வருவார் வருவார் என்று தேவகி பல நாட்களாக எதிர் பார்த்திருந்தாள். அவர் போகவேயில்லே. மனங்கொதித்துக் கடைசியில் ஒரு கடிதம் எழுதினுள் ஞானகுமாரனுக்கு,

இன்னமும் சோதனையா 2 65
நான் ஒரு தாசியின் பெண் என்று தெரிந்ததும் என்னே ஏற்றுக்கொள்ள உங்கள் மனம் இசைய வில்லைப்போலும். அடுத்த ஜன்மத்திலாவது உங்களைப் போல உயர்ந்த குலத்தில் பிறக்க வேண்டுமென்று கடவுளை வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லே. என் இதயத்தை நீங்கள் அறியவில்லை. ஒருமுறை வந்தீர்க ளானல் என் நெஞ்சைப் பிளந்து உங்களுக்குக் காட்டு கிறேன். உங்களைப் போல எழுத்து வன்மையை எனக் குப் பகவான் தத்திருக்கவில்லையே! : எப்படியும் , ஒன்றை நிச்சயமாக நம்புங்கள். இந்த இதயத்திலே ஞானகுமாரைத் தவிர வேறு ஒரு மனித ஜென்மித்துக்கு என்றைக்குமே இடமில்லை. ஆஞல், என் உடல்-அது என் பெற்றேர்களுக்குரியதல்லவா? என்னை மறவா தீர்கள் !
--தேவகி கடிதத்தைப் படித்துவிட்டு ஞானகுமாரன் நீண்ட பெரு மூச்சு விட்டார். அவ்வளவுதான்.
OO od oo இதற்குப்பின் ஐந்து வருஷங்கள் உருண்டோடி விட்டன. தேவகிக்கு யாரோ ஒருவனேடு கல்யாணம் ஆகியது. அவர்கள் எங்கெங்கோ எல்லாம் சுற்றுப்பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள்.
*பிருந்தாவணம்’ பத்திரிகையின் ஆசிரியர் பீடத்தில் இப்போது வேறு யாரோ ஒருவர் இருந்தார். ஞானகுமாரன் பல வருஷங்களுக்கு முன்பாகவே அதிலிருந்து விலகிக் கொண்டு விட்டதாகச் சொல்லப்பட்டது.
சுற்றுப்பிரயாணம், க்ஷேத்ராடனம் எல்லாம் முடித்துக் கொண்டு ஊர் திரும்பியிருந்த தேவகி -அனந்தராமனுக்கு, ஒருநாள் பட்டணத்தில் ரேடியோ நிலையத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், அந்த மாசம் 26-த் தேதி மாலை 6-30 மணிக்கு அவளுக்கு ரேடியோவில் ஒரு புரோகிராம் கொடுத்திருப்பதாகக் கண்டிருந்தது.
Lo 9

Page 54
66 ر- மனித மாடு
26-ந் தேதி மாலை 5-45 மணிக்குப் பக்கவாத்தியகாரர் களேயும் தனது சிநேகிதிமார்கள் இரண்டு பேரையும் அழைத்துக்கொண்டு ரேடியோ நிலையத்து வாசலில் காரில் போய் இறங்கினுள் தேவகி.
மணி 6-15 ஆனதும் உள்ளே இசைத்தட்டுக்கள் வைத் துக் கொண்டிருந்த அறிவிப்பாளர் வெளியே ‘வெயிற்றிங் ஹாலுக்கு வந்து பக்கவாத்தியகாரன் ஒருவனைக் கூப்பிட்டு இரண்டாவது "புரோட்காஸ்டிங்' அறைக்கு வரும்படி சொல்லிவிட்டுத் திரும்பினர்.
தோழிமார்களோடு பேசிச் சிரித்துக்கொண்டு எங் கேயோ பராக்காகவிருந்த தேவகி அறிவிப்பாளரின் குர லேக் கேட்டுத் திடுக்கிட்டுப்போய்த் திரும்பிப் பார்த்தாள். ஞானகுமாரனே ரேடியோ அறிவிப்பாளரென்று தெரிந்து அவள் ஒரு கணம் பிரமித்துப்போய்விட்டாள். உற்சாக மாகப்பேசிச் சிரித்துக்கொண்டிருந்தவளுடைய முகம் திடீ ரென்று இப்படி ஏன் வாடிப்போயிற்று என்று அவளது சிநேகிதிகள் தங்களுக்குள்ளே பேசிக் காண்டார்கள்.
6.30 மணி ஆயிற்று. ''... . . . ரேடியோ நிலையம். அடுத்து 45 நிமிஷத்துக்குத் தேவகி அனந்தராமன் பாடுகிருர்’ என்ற அறிவித்தலோடு கச்சேரி ஆரம்பமாயிற்று.
அன்றைக்கு ரேடியோவைத் திருப்பியவர்கள் சொக்கிப்
போனர்கள்.
இன்னமும் சோதனையா?" என்ற பாட்டைக் கேட்ட
வர்கள் உண்மையாகவே மனம் உருகினூர்கள். 'இவ்வளவு சோகபாவத்தோடு பாடியவள் யாரப்பா அது!’ என்று ஒரு வரையொருவர் கேட்டார்கள். 'நாங்கள் கேள்விப்பட்ட
தில்லையே!' என்றர்கள்.
பைத்தியகாரர்கள்! அப்பேர்ப்பட்ட சங்கீதத்தைப் பூலோகத்தில் கேள்விப்படவாவது? அது கேவலம், கண் டத்துக்கு மேலிருந்து கிகாம்பும் சங்கீதமா என்ன?

இன்னமும் சோதனையா? 67
இறந்துபோன கணவனைக் கனவிலே கண்டவள்போல மனங் குழைந்து உடலும் உயிரும் உருகிப் பாடிஞள், தேவகி அன்றைக்கு
‘இன்னமும் சோதனையா” என்ற பாட்டை ஐந்து வருஷங் களுக்கு முன்னே அவள் பாடியபோது, அன்று கண்ணிர் வரவில்லை. ஆனல் இன்றைக்கோ இரண்டு கண்களிலும் கண் rைர் வழிந்து ஓடிற்று.
**இதுவரை பாடியவர். . தேவகி - அனந்தராமன்" என்று முடிவில் அறிவித்தபோது ரேடியோ அறிவிப்பாள சின் குரல் தளதளத்தது; பெருமூச்சோடு நடுங்கியது.
-மறுமலர்ச்சி, யூலை 1947

Page 55
13
மனம் பொங்கவேணும்
அப்பொழுதுதான் சாப்பிட உட்கார்ந்தேன்.
புது அடுப்புப் போட்டுப் புதுப்பான வாங்கிப் பொங்கி, பொங்கலோ பொங்கல் சோல்லிச் சூரியநாராயணமூர்த் திக்குப் படைத்துப் பூசைபண்ணி முடிந்தது.
வாண்டுகள் பட்டாஸ் சுட்டுத் துரத்திய காக்கை கஃ. ஒருவாறு 'தாஜா' பண்ணி அழைத்து அவைகளுக்குப் அக்கிரபூசை நடத்தி ஆயிற்று, மணி இரண்டுக்கு மேலி ருக்கும். பசி கண்ணைச் சுழற்றவே சாப்பிட இலையில் உட்கார்ந்தேன்.
"அம்மா !” என்று ஒரு சத்தம் யாரையோ கூப்பிடுவர வெளியில் கேட்டது. நான் இலையை விட்டெழும்பவில்லை. ாணக்கு முன்னுல் உட்கார்ந்திருந்தவளை நிமிர்ந்து பார்த் தேன். அவள் எழுந்து பரபரவென்று ஓடிப்போய்க் கதவைத் திறந்தாள். *ஓ நீயா ? அப்படி இரு கொஞ்: நேரம்' என்று சொல்லிவிட்டுக் கதவைப் படீரென்று சாத்திக் கொண்டு மறுபடியும் வந்து உட்கார்ந்து சர்க் கரைப் பொங்கலே என் இலேயில் பரிமாறத் தொடங்கினுள்.
"அது யாரடி அம்மா அங்கே ?" என்று கேட்டேன்.

மனம் பொங்கவேணும் 69
** அது வள்ளி" என்று வெகு சாதாரணமாகப் பதிலளித் தாள் என் சகதர்மிணி.
oo GT6T 6ð76 fro” ”
'ஒன்றுமில்லை, சும்மா வந்திருக்கிருள். இன்றைக்குப் பொங்கலும் புது நாளுமானபடியால் வந்திருக்கிருள்", என்று தந்திபாஷையில் பதில் சொல்லி முடித்தாள் அவள்.
'ஏன், வள்ளி வீட்டில் பொங்கவில்லையோ ?' என்று விடாமல் தொடர்ந்து கேட்டேன் நான்.
'வள்ளிக்கென்ன குறைச்சல் ? அவளுக்குத்தான் பல வீட்டுப் பொங்கலாச்சே." என்ருள்.
*"அப்போ வள்ளிக்குப் பல வீட்டுப் பொங்கல்தான். அவள் வீட்டில் பொங்கல் இல்லை?"
‘இதென்ன கேள்வி ? ஏழை எளியதுகள் புதுப்பானை
வாங்கி எங்களைப்போலப் பொங்கிப் பூசையிட்டுக் கொண் டிருக்கிறதுகளா ?"
ஏன்???
* 'வசதியும் வேளையும் வரவேணுமே?”
'பொங்கல் போடாவிட்டால் வீட்டிலே மூதேவி குடி
கொண்டுவிடும்; விடியாது என்றெல்லாம் சொன்னியே'
"வாஸ்தவம்தான். வருஷத்திலே ஒரு தாளைக்கு."
'வருஷத்திலே ஒரு நாள் அல்ல. அப்படியானல் எத் தனையோ வருஷத்திலே ஒரு நாளைக்கே பொங்கல் புதுப் பானை வாங்காத வள்ளி வீட்டில் மூதேவி இது பரியந்தம் கோயில் கொண்டிருக்குமே”*
"வள்ளி தன் வீட்டில் தான் பொங்கல் செய்யாவிட் டாலும் ஊரிலே பொங்கிய எத்தனையோ பேரது பொங் கலின் பிரசாதம் அவள் வீட்டுக்குப் போகிறதல்லவா?’’

Page 56
7 G மனித மிாடு
'ஒகோ! உன் வீட்டு மிச்சம் மீசாடியில்கூட அவ்வ ாேவு லட்சுமீகரம் தங்கியிருக்கிறதாக உனக்கு எண்ணமோ? என்ன நெஞ்சழுத்தமடியம்மா உனக்கு? போ. போ. அவளே யும் பிள்ளையையும் தெருப் படலையிலே காக்கவைத்துவிட்டு இங்கே வந்திருந்து கதை அளக்காதே. சர்க்கரைச் சாதத் திலே எடுத்துக்கொண்டுபோய் வள்ளிக்குக் கொடுத்து அவளை அனுப்பிவிட்டு வா!' என்றேன்.
பார்வதி சர்க்கரைச் சாதத்தோடு ஒரு வாழைப்பழத் தையும் வைத்து எடுத்துக்கொண்டு கதவைத் திறந்து வெளியே போனுள்.
கலகலவென்று ஒரு குழந்தை சிரிக்கும் சிரிப்பொலி காதில் விழுத்தது. அதோடு வள்ளியும் சேர்ந்து சிரிப்பது கேட்டது.
பார்வதி திரும்பி வந்தாள். 'கொடுத்தாயிற்ற? ஒரே குதூகலமாயிருந்ததே. வெளியிலே என்ன சமாச்சாரம்?" என்று கேட்டேன்.
**சமாச்சாரம் ஒன்றுமில்லை. வள்ளியின் சிறு வ ன் வாழைப் பழத்தைக் கண்டுவிட்டான். வள்ளி சர்க்கரைச் சாதத்தைக் கண்டுவிட்டாள்; அவ்வளவு தான்' என்ருள்.
விடியற்காலே தொடக்கம் அடுப்பு ஊதி, புகை மண் டிக் காய்ந்து போயிருந்த அவளது முகத்தில் இப்பொழுது தான் சிரிப்புத் தோன்றியது.
* பாத்தியா பார்வதி? கடன்பட்டு இத்தனை செல வழித்து இவ்வளவு பிரயாசைப்பட்டு நாள் முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடிஞேமே. இந்த மாதி ரிச் சிரிப்பொலி இவ்வளவு நேரத்துக்குக் 'காதில் விழுந் ததா? வள்ளியும் அவள் சிறுவனும் வந்து போனதுக்குப் பிற்பாடுதானே உனது முகம் மலர்ந்திருக்கிறது. என்ன செய்தும் கடைசியில் ஏழைகளின் மகிழ்ச்சிதான் நமக்குச் சந்தோஷத்தைத் தருகிறது பார்வதி. அவர்களது சிரிப் பொலிதான் நமது சிந்தையைக் குளிரப் பண்ணுகிறது.

மனம் பொங்கவேனும் 7
நாளைக்குக் கடைக்காரன் வீட்டுவாசலுக்கு வரப்போகி ருனே, என்ற கவலை பொங்கல் பண்டிகை கொண்டாடிய நமக்குத்தானிருக்கிறது. அவர்களுக்கு என்ன கவலை? நம்ம வீட்டில் பானைதான் பொங்கிற்று. ஆனல் மனம் பொங்கி யதா? வெறும் சம்பிரதாயத்துக்காகப் பண்டிகைகளைக் கொண்டாடித் தீர்த்துவிட்டால் எல்லாம் சரியாப் போய் விடுகிறிதா? இன்று நம் வீட்டில் பொங்கிய பான்ை வள்ளி வீட்டில் ஏன் பொங்கவில்லை? அவளுக்குமட்டும் இரவல் பொங்கல், பிச்சைப் பொங்கல் ஏன்?
பார்வதி, ஊரிலே துன்பம் நீங்கி இன்பம் பொங்க வே3ண்டும். அதற்கு வள்ளி வீட்டில் பானை பொங்க வேணும். நம் வீட்டில் மனம் பொங்க வேணும்..”*
* 'இதென்ன பேசிக்கொண்டேயிருக்கிறீர்களே, சர்க்க }ரச் சாதம் கொஞ்சம் வைக்கட்டுமா?" メ
** வே: டாம் பார்வதி, எனக்கெல்லாம் நிரம்பிப் பொங்கி வழிகிறது. அந்த ஏழைகளின் சிரிப்பொலி, இகோ -னது முகமலர்ச்சி, உன் புன்சிரிப்பு இவைகளுக்குச் சர்க்கரைப் பொங்கல் எம்மாத்திரம்? எங்கே ஒரு தடவை ரிே பார்ப்போம் பார்வதி. ? ?
பார்வதி இம்முறை கலிரென்று சிரித்துவிட்டாள்.
என் வீட்டிலே இரண்டாவது தடவையாகச் சிரிப்பொலி கேட்டது.
- சுதந்திரன், 1843

Page 57
14
தந்தை மொழி
திலையிலும் காலிலும் கட்டுப் போட்டுக் கொண்டு வேலாயுதம் ஆஸ்பத்திரிப் படுக்கையிற் கிடந்தான். நாலு நாட்களாக அறிவு நினைவு இல்லாமலிருந்து ஐந்தாவது நாள் சற்றே கண்விழித்துப் பார்த்தான்.
நாலு தினங்களுக்கு முன் அவனுக்கு என்ன சம்பவித் தது? ஏன் ஆஸ்பத்திரிக்கு வந்தான்?
அது ஒரு பெரிய கதை, கதையென்ரூல் உபகதையல்ல. பிற்காலச் சரித்திராசிரியர்கள் அதற்கென்று ஒரு தனி அத் தியாயம் ஒதுக்கப்போகும் சரித்திர முக்கியத்துவம் பெற்ற சம்பவம். அன்று நடைபெற்றதை ஒரு தடவை நினைத்தாலே அவனுக்கு நெஞ்சு வெடித்துவிடும்போலிருந்தது. என்ன அக்கிரமம்! அவன் குழந்தையாயிருந்தபோது அவனுடைய தாய் எந்த மதுரமான மொழியிலே தாலாட்டுப் பாடி அவ னைத் துரங்கவைத்தாளோ அந்தத் தாய்மொழியைப் பேசி யதனுல் அல்லவா அவன் அடிபட்டுக் காயமடைந்து ஆஸ் பந்திரிக்கு வந்திருக்கிருன்!
வேலாயுதம் அன்றைய தினம் அவன் வேலைபார்த்த கந்தோரில் மத்தியான இடைவேளையின்போது நாலைந்து பேர்களுடன் சேர்ந்துகொண்டு பக்கத்தே காலிமுக மைதா னத்தில் நடைபெற்ற சத்தியாக்கிரகத்தைப் பார்க்கப் போயி ருந்தான். சத்தியாக்கிரகிகளைச் சுற்றி மொய்த்துக்கொண்டு

தந்தை மொழி 73
மைதானம் எங்கிலும் ஒரே கூட்டம். வேலாயுதமும் அவ னது கத்தோர்ச் சகபாடிகளும் கூட்டத்தை ஊடுருவிப்போய்க் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவர்களுக்குச் சமீப மாக "ஐயோ’ என்று ஒரு குரல் கேட்டது. "பளார் பளார்" ான்று அடி விழும் சத்தமும் கேட்டது. இதெல்லாம் வேலாயுதத்தின் காதோடு மருவினற் போலக் கேட்கவே, அவன் நின்று திரும்பிப் பார்த்தான்.
ஐம்பந்தைந்து வயதிருக்கும், வேட்டி சட்டைக்காரப் பெரியவர் ஒருவர், சாரமும் சட்டையும் அணிந்த யுவர்க ரின் கூட்டத்தில் மாட்டிக்கொண்டு அவதிப்பட்டார். அவ ருக்கு அடிக்குமேல் அடியாக விழுந்தது. அம்மிக் கல்லாயி நக்காமல் எலும்பும் தசையுங்கொண்ட மிருதுவான மனித சடலமாயிருந்ததால் அது நக்ருவதற்குப் பதில் கீழே விழுந்து உருண்டது. வீராவேசம் பொங்கிநின்ற கூட்டம் கீழே விழுந்தவரின் காலைப் பற்றிக் கொற, கொற' வென்று இழுத்தது. நிலத்திற் கிடந்த கற்கள் உடலேக் கிழிக்கவே இரத்தம் சீறிப் பாய்ந்தது.
இரத்தத்தைக் கண்டதுதான் வேலாயுதம் வாய்விட்டுக் கத்திவிட்டான். "ஐயோ, இதென்ன அநியாயம்' என்று சுத்தமான தமிழில் அவன் தனது மனத்துடிப்பை வெளியே கொட்டிவிட்டான். அவ்வளவுதான். அவன் தலைக்கும் வந் தஜ் ஆபத்து. ''அடே, இங்கேயும் ஒரு பறைத் தமிழன்' என்று பல்லைக் கடித்துக்கொண்டு ஒரு கூட்டம் அவனைச் சுற்றி வளைத்தது. நூறு சம்மட்டிகளைக்கொண்டு தாக்கு வது போல வேலாயுதத்தின் தலை கலங்கிப்போயிற்று, நிற்க முடியாமல் தள்ளாடிக் கீழே சாய்ந்தான். அதற்குமேல் நடைபெற்றதொன்றும் அவனுக்குத் தெரியாது.
நாலு தினங்களின் பின் இன்றைக்கு வேலாயுதம் க3ல் விழித்த போது தன்னை ஆஸ்பத்திரிக்கு யார் கொண்டு வந்தார்கள் என்பதுபற்றி யோசிக்கவில்லை. "பறைத் தமிழன்’ என்ற வார்த்தைகள்தான் இன்னமும் அவன் காதிற் கேட்டன. தலையை அசைக்க முடியாமலிருந்தது.
Lo 10

Page 58
ገ4 மனித மாடு
பெரிய கல்லைத் தூக்கி வைத்ததுபோல ஒரு சுமை தலையை அழுத்தியது. பெருமூச்செறிந்தான். அந்த நிலையில் வேறு ஒன்றுமே அவனுற் செய்ய முடியாமலிருந்தது.
* 'இப்போது எப்படியிருக்கிறது மிஸ்டர் ?' என்று கேட்டுக் கொண்டு ஒரு வைத்தியத் தாதி வந்தாள். அவள் முதலிற் சிங்களத்திற் பேசினுள். வேலாயுதம் மெளனம் சாதித்தான். பிறகு ஆங்கிலத்திற் பேசினுள். வேலாயுதம் தமிழிற் பேசினன். தாதியம்மா முகத்தைச் சுழித்துக் கொண்டு திரும்பிப்போய் இன்ஞெருத்தியை அழைத்துக் கொண்டு வந்தாள். அவர்கள் வந்துபோன பிற்பாடு வேலாயுதம் படுக்கையிற் கிடந்தபடி எவ்வளவோ எண்ணி ஞன். நாலு நாட்களாக அன்ஞகாரமில்லாமல் வயிறு காற்றுப்போல் இலேசாகவிருந்தது. டாக்டர்களிடமும் தாதிகளிடமும் உடலை ஒப்படைத்துவிட்டதஞல் மனக் குதிரை கவலையற்றுப் பறந்து திரிந்தது; அதற்கு ஆஸ்பத் திரிப் படுக்கை தேசிங்குராசன் குதிரை மாதிரி, மண்ணை யும் விண்ணையும் ஒரே தாவாகத் தாவிப் பதினைந்து ஆண்டு களுக்குப் பின்னே பாய்ந்தது.
2
பதினைந்து வருஷங்களுக்கு முன்னே வேலாயுதம் உத்தியோகம் பார்ப்பதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குப் பிரயாணமானன். "குரோட்டன்' செடிகள் நாட்டினுற்போல இரண்டு பக்கமும் பனை பகிரங்கள் வளர்ந்து நின்ற சாலைவழியே அவனை ரயிலில் ஏற்றுவதற்கு மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்ற அவனது தந்தை மாட்டின் கழுத்துச் சதங்கை ஒலிக்கு மேலாக உரத்த குரலில் ஒரு பனந்தோட்டத்தை அவனுக்குக் காட்டிச் சொன்னர் :
தம்பி, இதோ இந்தப் பனந்தோப்பைப் பார்த் தாயா ? பாட்டனர் காலம் முதலாக எங்கள் குடும்பச் சொத்தாக அது இருந்துவந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பாக உனது படிப்புச் செலவுக்காகவேண்டி அதை ஈடு வைத்துவிட்டேன். முன்று தலைமுறைக்கு மேல் நாங்கள் பட்டினி கிடக்காமற் கூழ் காய்ச்சிக் கொடுப்பதற்கு

தந்தை மொழி 75
உதவியது இந்தப் பனந் தோட்டந்தான். தம்பி, சண்டைக் காலத்தில் கொடிய பஞ்சம் பயமுறுத்தியபோது நாங்கள் கலங்கவில்லை. குருவளிக் காற்று வீட்டுக் கூரையைப் பிடுங்கி வீசியபோது நாங்கள் அஞ்சவில்லை. தேவ மயனைப்போல இரவு பகலாகப் புதுவீடு கட்டிக்கொண்டோம். பாண் டியர்போல ஒவ்வொன்றும் தலே நிமிர்ந்து நிற்பதைப் பார் தம்பி. வானம் பார்த்த பூமியின் குழந்தைகளை என்றைக்கும் தலைநிமிர்ந்து வாழவைத்தவை இந்த நெடு மரங்கள்தாம் !
'தம்பி, நீ உத்தியோகம்பார்த்துச் சம்பாதித்து எங் 8ளுக்கு ஒன்றும் அனுப்பவேண்டாம். நீ சந்தோஷமாயிருந் தால் அதுவே ளங்களுக்கு மகிழ்ச்சி. எங்கள் குடும்பச் செல் வம் நம்மை விட்டுப் போய்விடாதபடி அதை மீட்டுக் கொடுத்துவிடு, அந்தப் பொறுப்பை மட்டும் ஏற்றுக்கொள். }ந்த மாடும் வண்டியும் உள்ளவரை, ஆண்டவன் கருணை யால் நமது காலுக்கும் கைக்கும் ஒரு பொல்லாங்கும் நேராதவரை உனது தாயாரை நான் காப்பாற்றிக்கொள் ளுவேன். கடைசியாக, எனது ஒரே ஒரு ஆசையை உன் னிடம் சொல்லுகிறேன். தம்பி, எங்கள் குடும்பச் செல்வ மான இந்தப் பனைக் காணியை ஈட்டுக்காரனிடமிருந்து மீட்டு அதிலுள்ள ஒரு பனையின் ஒலைகளை நறுக்கி எடுத்து அதில் உனது கல்யாண அழைப்பு அனுப்பவேண்டும். உனது தந்தையின் ஆசையை நிறைவேற்றுவாயா மகனே..???
ძზ თბ ძზ
அன்றைக்கு ரயில் பிரயாணத்தின்போது யன்னல் சட் டத்திற் கைவைத்து, கைமீது தலையைச் சாய்த்து வெளியே பார்வையை ஒடவிட்டுக்கொண்டிருந்த வேலாயுதத்துக்கு வெளியே காய்ந்த நிலவு கண்ணிற் படவில்லை; ரயிலின் கடாபுடா சத்தம் காதில் விழவில்லை. 'தம்பி, நீ சம்பா தித்து எங்களுக்கு ஒன்றும் அனுப்பவேண்டாம்! நீ சந்தோஷ மாயிருந்தால் அதுவே எங்களுக்குப் பெரிய திருப்தி' என்ற தந்தை மொழியே காதிற் கேட்டது. ‘போய் வா தம்பி’ என்று கண்கலங்கியபடி அவனுக்கு விடை கூறி அனுப்பி

Page 59
76 மனித மாடு
விட்டு ரயில் பார்வையிலிருந்து மறையும்வரை அப்படியே மரமாக நின்ற தந்தையின் தோற்றம் அவன் மனத்தை விட்டு அக :) வில்லை. வேலாயுதத்தின் கண்களில் துளித்த நீர் கைவழியே ஒடி நிலவொளியில் பிரகாசித்தது. பக் கத்தே இருந்த ஒரு பிரயாணி ஆனையிறவுக் காற்றின் வேகத்தைப் பொறுக்கமாட்டாமல் யன்னற் கண்ணுடியை மூடிவிட எழுந்து வந்தபோது வேலாயுதம் திடுக்குற்று “சீ... இதென்ன குழந்தைப்பிள்ளை போல, யாராவது பார்த் தால் சிரிக்கப்போகிருர்கள்" என்று எண்ணிச் சட்டென்று கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தான். ஆனல் மனம் பொன்வயல் கிராமத்து ரயில் நிலேயத் தையே இன்னமும் சுற்றி வட்டமிட்டது. "எனது முதற் சம்பளத்தை எடுத்து அப்படியே அப்புவுக்கு அனுப்பிவிட வேண்டும், மணி ஒடரைப் பார்த்தால் அவர் மனம் துள் ளிக் குதிக்கும். அதை உடனே தபாற் கந்தோரில் கொண்டு போய் மாற்றுவாரா அல்லது கண்ணுடி பிரேம் போட்டு வீட்டுச் சுவரிலே மாட்டி வைப்பாரா? கண்ணுடி போட்டு மாட்டி வைத்துப் பார்த்துக்கொண்டுதானிருப்பார். அப்பு வைப் பற்றி எனக்குத் தெரியாதா?’ என்று எண்ணிய போது அவனுக்குச் சிரிப்பு வந்தது. வாய்விட்டே சிரித்து விட்டான். எதிரேயிருந்த பிரயாணி இவன் பக்கம் முகத் தைத் தீருப்பவே வேலாயுதம் சட்டென்று யன்னலுக்கு வெளியே தலையை நீட்டி ஒடும் நிலத்தைப் பார்த்தான், சீ. இதென்ன பைத்தியகாரச் சிரிப்பு.? யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்.?’ என்று தலை குனிந்த படி எண்ணினன்.
சிரிப்பதற்கும் விடாது, அழுவதற்கும் விடாது, விநோத மான உலகமல்லவா இது !
ரயில் பிரயாணத்தின்போது இப்படிச் சிரிக்கவும் முடியாமல் அழவும் முடியாமல் அவதிப் பட்டுக் கொண்டே இரவு முழுநேரமும் சிந்தனையில் ஆழ்ந்திருந்து விடியக் கொழும்பு போய்ச் சேர்ந்தான். ரயிலே விட்டிறங்கிக் கொட்டாஞ்சேனை விடுதிக்குப் போய்ச்சேர டிராமில் ஏறிஞன். டிராமில் ஒரே கூட்டமாயிருந்தது. ஒரு பறங்கிப்

தந்தை மொழி 77
பெண்ணுக்குப் பக்கத்திற் கொஞ்சம் இடமிருந்தது. ஆனல், அவளுக்கு அருகே உட்காருவதற்கு அவனுக்குக் கூச்சமா யிருந்தது. இதற்கிடையில் டிராம்வண்டிக் கண்டக்டர் வந்து உட்காரும்படி "உபசாரம்" செய்தான். பறங்கிப் பெண்ணும் சற்று நகர்ந்து இடம் விட்டுக் கொடுத்தாள். ஆணுல், அவள் செம்பவழ உதட்டில் அந்தப் புன்சிரிப்பு ஏன் நெளிந்தது ? அந்த மயக்க மருந்தை ஏன் அவள் அள்ளி எறிந்தாள் ? வேலாயுதம் தடுமாற்றத்தோடு அவளுக்குப் பக்கத்தே உட்கார்ந்தான். டிராம் அடுத்த தங்கலில் நின்றபோது ஏறிய இரண்டாவது பேர்வழி ஒருவனேயும் கண்டக்டரின் உபசாரம் வேலாயுதத்துக்குப் பக்கத்தே நெருக்கியடித்துக் கொண்டு அமர்த்தி விடவே, யாழ்ப்பாணத்துக் குழந்தை' கொழும்பு மயக்க மருந்தில் மேலும் இரண்டு டோஸை உட்கொண்டுவிட்டது, அந்த நினைவழிவில் மாட்டுவண்டி யின் சதங்கை ஒலி மெதுவாக மறைந்து டிராம் வண்டியின் கணகண ஒலி பெரிதாகக் கேட்டது.
வேலாயுதம் கொட்டாஞ்சேனையில் எந்த விடுதியிற் குடியிருக்கப் போனனே அந்த விடுதிக்குப் பக்கத்து வீட்டில் தான் அவளும் குடியிருக்கவேண்டுமா? ஏன், வேலாயுதத்தின் கந்தோரில்தான அவளும் "டைபிஸ் டாக வேலை பார்க்க வேண்டும் ? அப்பு உன் ஆசையில் மண் விழுந்துவிட்டது. என்னை விழுங்குவதற்கு வாயைத் திறந்துகெFண்டிருந்த பட்டணத்தின் வாய்க்குள் அகப்பட்டுக்கொண்டேன்’ என்று வேலாயுதம் தகப்பணுருக்குக் கடிதம் எழுதவில்லை. கடிதம் எழுதவேண்டும் என்று அவன் எண்ணவேயில்லை. 'சுகமாக வந்து சேர்ந்தேன்' என்று ஒரு வரியில் ஒரு கடிதம் கீறிப் போட்டான். அதுதான் அவன் எழுதிய கடைசிக் கடிதம் ,
பல மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் ஒரு "கொழும் புக் காகிதம் வேலாயுதத்தின் தகப்பினருக்குக் கிடைத்தது. ஆவலோடு அதைப் பிரித்துப் படித்த கிழவன் உடனே மூர்ச்சையாகி விடவில்லை. தெருவாசலுக்கு வந்து மாரியம் மன் கோவிலைப் பார்த்துக் கும்பிட்டுவிட்டு நேரே தபாற் சந்தோருக்குப் போய் ஒரு தந்தி அனுப்பினர். அடுத்த தாள் ஒரு காகிதமும் எழுதித் தபாலிற் போட்டார்.

Page 60
78 மனித மாடு
'தம்பி எப்படியும் நீ சந்தோஷமாயிருந்தால் அது போதும். பனைக்காணி ஈட்டில் மூழ்கிப் போய்விட்டது. அதிற் கிடைத்த சொற்ப தொகைக்குப் புதிதாக ஒரு மாடும் வண்டியும் வாங்கியிருக்கிறேன். உன்னை ஒரு தடவை பார்க்க வேணுமென்று உன் அம்மா ஆசைப்படுகிருள். நீ கேட்டுக் கொண்டமாதிரியே தந்தி அனுப்பியிருக்கு."
கடிதத்தை வேலாயுதம் வாசித்தபோது தலையைச் சுவரில் மோதிக்கொண்டு கதறவில்லை. பேராதனைப் பூந்தோட்டத் தில், மகாவலி கங்கையின் புற்படுகையில் அமர்ந்து பறங் கிப் பெண்ணுேடு பேசிச் சிரிப்பதற்கு ஒரு நல்ல தமாஷ் கிடைத்துவிட்டதென்றுதான் அவன் அ ப் பொழுது எண்ணிஞன்.
அவளுடைய மோகனச் சிரிப்புக்காக அவன் அந்த ஆற் றிற் குதிப்பதற்கே தயாராகவிருந்தான். அம்மாவை ஆபத் துக்குட்படுத்துவது ஒரு பெரிய காரியமா?
தகப்பனர் அனுப்பிய தந்தியைப் பற்றி அவன் பேரா தனைப் பூந்தோட்டத்தில் உல்லாசமாகக் குலாவிக்கொண் டிருந்த சமயம் பறங்கிப் பெண்ணிடம் சொன்னன். ஆனல், என்ன விபரீதம்! கலகலவென்று சிரிப்பொலியை எதிர் பார்த்தவன், பொலுபொலுவென்று ஒரு பெண் கண்ணிர் வடிப்பதையல்லவா பார்க்க நேர்ந்தது.
'இவ்வளவு கடின இருதயம் படைத்தவராயிருப்பீ ரென்று நான் எதிர்பார்க்கவேயில்லை. காதல் கேளிக்கை ஆடுவதற்காக "அம்மா ஆபத்தாயிருக்கிருள்" என்று பொய் சொல்லித்தாஞ லீவு, எடுக்கவேணும் ? இதற்குத்தான அந்தப் பெண் உம்மைப் பெற்று வளர்த்துப் படாதபாடு
பட்டு ஆளாக்கிவிட்டாள்,? “ என்று அவனது காதலி அவனைக் கடிந்துகொண்டயோது வேலாயுதம் அயர்ந்து போனன். "நீர் எனக்கு எழுதிய கடிதம் தவறுதலாக
உமது தந்தையின் கைக்குப் போய்ச் சேர்ந்தது. பாவம், பிள்ளைமீது வைத்த பாசத்தினுல் அந்த மனுஷன் இவ்வளவு பொறுமை காட்டிஞர். ஆஞல், கடிதம் என் கைக்கு வந் திருந்தால் அதற்கிணங்கி இந்தமாதிரித் துரோகமான ஒரு

கந்தை மொழி 79
பொய்த் தந்தி அனுப்பியிருப்பேனென்று எண்ணுகிறீரா? நீர் மகா மோசமான ஆள். இப்படி உள்ளத்தை எந்தப் பெண்ணுமே விரும்பமாட்டாள்.'" என்று அவள் சீறினுள்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு அவள் அவனுேடு பழகு வதே ஒரு மாதிரித்தான்.
3
*" என்ன மிஸ்டர் வாய் புலம்புகிறீர்? காய்ச்சலடிக்கி றதா’’? என்ற குரல் கேட்டு வேலாயுதம் திடுக்குற்றுக் கண் விழித்தான்.
ஊசி மருந்தும் கையுமாகத் தாதி பக்கத்தே நின்ருள்.
'தாய்மொழியைப் பாதுகாக்கச் சத்தியாக்கிரகம் செய் யப்போணிரா? பாவம், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தான் தெரியவில்லை' என்ருள் அந்தக் குறும்புக்காரி. 'அதெல்லாம் ஒன்றுமில்லே, நேர்ஸ், எனது தந்தை மொழிக் குத் துரோகஞ் செய்தேன். அதஞல், என் தாய்மொழியின் பெயரால் அடிபட்டேன். உடனே ஊருக்குப்போய் என் தந்தையின் காலில் விழவேண்டும். இதோ இப்போழுதே போய்விடுகிறேன்.'
படுக்கையிலிருந்து எழுந்திருந்தவனைப் பிடித்துப் படுக் கையிற் கிடத்திவிட்டு, "சரிதான், நோய் முற்றிவிட்டது. இதோ இந்த ஊசியைப் போட்டுக்கொள்ளும்' என்று ஊசி மிருந்தை அவன் கையில் ஏற்றினுள் மிஸ்ஸியம்மா.
4.
ஒரு மாதத்தின் பின் பொன்வயல் கிராமத்துச் சாலை வழியே மாட்டு வண்டியில் வீடு நோக்கிப் போய்க்கொண் டிருந்த வேலாயுதத்தின் காதில் மாட்டின் சதங்கை ஒலி கணிர் கணிர் என்று மறுபடியும் ஒலித்தது.
-ஈழகேசரி வெள்ளி விழா மலர், 1956

Page 61
15
பரிசு பெற்ற கதை
66 e o
கதைப் போட்டிக்குக் கதை எழுத வில் லை யா அண்ணு? “ என்ருள் என் தங்கை சோபன.
"கதைதான் எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆளுல் போட்டிக்கல்ல" என்றேன்.
"ஏன் அண்ணு, ஒரு சந்தர்ப்பத்தைத் தவற விடு இறீர்கள் ???
'சந்தர்ப்பத்தை நம்பி வாழ்கிறவர்கள்தான் அதைப் பற்றிக் கவலைப்பட வேணும். குதிரைகள் மீது பணத்தைக் கட்டி விட்டு நமக்கும் ஒரு சந்தர்ப்பம் வரஈதா என்று ஏங்கி நிற்பதைப் போல..ம். அவர்கள் பிறப்பே ஒரு சந் தர்ப்பம்தான்'
"எழுதுகிற கதையைப் போட்டிக்கு அனுப்புங்கள். உங்களுக்கு நிச்சயம் பரிசு கிடைக்கும்.'
'அடடே, போட்டித் தீர்ப்புக் குழுவில் உன்னையும் நியமித்திருக்கிருர்களா, சோபன ? பரிசு கிடைக்கா விட்டால் .?’’
'கிடைக்காவிட்டால் என்ன அண்ணு, குடிமுழுகிப் போய்விடுமா ? தபாற் செலவு பதினைந்து இருபது சதம் நஷ்டம். அவ்வளவுதானே ???

!ரிசு பெற்ற கதை 81
** பெண்களுக்கு வேறெதைப்பற்றிச் சிந்தனை ஒடும் ? பணம், காசு, புகழ், பதவி, அந்தஸ்து..?*
**வேறெதற்குத்தான் நீங்கள் இராப்பகலாய் இப்படி உட்கார்ந்து எழுதிக்கொண்டேயிருக்கிறீர்கள் ?*
'நீ கருதுகிற எதற்குமல்ல, சோபன. அது என் தலையெழுத்து என்று வேண்டுமானல் வைத்துக்கொள்ளேன்.”
"உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள் அண்ணு y
"என் தங்கை இப்படிப் பேசுவதுதான் விந்தை. பட்டம் பதவி புகழ் கீர்த்தி எல்லாம் காசு கொடுத்து வாங்கி விடக்கூடிய பொருள்கள், சோபன. ஆனல், எவ்வளவு பொருளைக் கொட்டிக் குவித்தாலும்-இந்த உலகத்தையே கொடுத்தும்-வாங்க முடியாத விலைமதிப் பற்ற ஓர் அபூர்வப்பொருள் இருக்கிறது. ’’
"அந்த அபூர்வப் பொருளை நீங்கள் வாங்கிவிடப் போகிறீர்களாக்கும். அதற்குத்தான் இருபத்துநாலுமணி நேரமும் கதவுகளை அடித்துமூடிவிட்டு அறைக்குள்ளேயிருந்து இப்படித் தவம் செய்கிறீர்களோ ? போட்டிக்குக் கதை எழு தச் சொன்னல் என்னென்னவோ தத்துவம் பேசுகிறீர் களே, அண்ணு. போட்டியிலே உங்களுக்குப் பரிசு கிடைத்து விட்டதென்ருல் உங்கள் பெயரும் படமும் எத்தனை பத் திரிகைகளில் வெளிவரும் ! உங்கள் புகழ் எங்கெல்லாம் பரவும் 1 எத்தனைபேர் உங்களைத் தேடிக்கொண்டு வீட் டுக்கு வருவார்கள்.
: "அவ்வளவுதானு ? "என் அண்ணனுக்குக் கதைப் போட்டியிலே முதற் பரிசு கிடைத்திருக்கிறதடி. என் அண்ணன் பெரிய எழுத்தாளனடி என்றெல்லாம் நீ கூடப் பள்ளிக்கூடத்திலே உனது சிநேகிதிகளிடம் பெருமை அடித்துக் கொள்ளலாம் . "உன் அண்ணனை ஒருக்கால் பார்க்கலாமாடி?’ என்று அங்கலாய்க்கும் பள்ளிக்கூடப் பசங்களே வீட்டுக்குத் திரட்டிக் கொண்டுவந்து மிருகக்
tgO I

Page 62
82 மனித மாடு
காட்சிச்சாலேயில் புதிதாக வந்திருக்கும் பிராணியைக் காட்டுவதுபோலக் காட்டிக் கூத்தாடுவாய். இன்னும், பரிசு பெற்ற எழுத்தாளனின் தங்கையைக் கட்டிக்கொள்ள நான் நீ என்று எத்தனை வாலிபர்கள் போட்டி போடுவார்கள், இல்லையா சோபனு ?" ベ
*" போங்கள் அண்ணு. இனிமேல் உங்களோடு நான் பேசவே வரவில்லை. நீங்கள் காட்டுக்குள்ளேயிருந்து தவம்
செய்யவேண்டிய மனிதர். உங்களிடம் வந்து சொன் னேனே' என்று கோபித்துக்கொண்டு போய்விட்டாள் சோபஞ.
நான் எழுதிக் கொண்டிருந்த கதையும் மேலே நக ரரமல் அப்படியே நின்று விட்டது.
‘போட்டியாம் பரிசாம் ! யார் எவருக்குப் பரிசு கொடுப்பது ? அரங்கத்தில் ஏறிச் சலசலப்புக் காட்ட ஆசைப்படும் கிலுகிலுப்பைகள் வேண்டுமானுல் எழுதட்டும்; போட்டியிடட்டும்; பரிசு பெறட்டும்; பாராட்டு விழாவே கொண்டாடட்டும். எவ்வளவோ ஆசைகள்-உலகத்தையே வென்று கட்டி ஆளவேண்டுமென்று ஆயிரம் எண்ணம் வாழ்க்கையை வாழப் பிறந்தவர்கள் மனத்திலிருக்கும். அந்தப் போட்டிக் களரியிலே நானும் போய்த் தலைகொடுக்த வேண்டுமா? என்னை நானே வெல்லமுடிந்தால், கட்ட ஆளமுடிந்தால் அதுவே போதும்."
பள்ளிக்கூடம் போன சோபணு மத்தியானம் வீடு திரும்பினுள். வழக்கமாக அதற்குப் பிறகு சமையல் செய்து, நான் சாப்பிட்ட பிறகு தானும் சாப்பிட்டுவிட்டு இரண் டாம் வேளைப் படிப்புக்குப் போவாள். பி. ஏ. வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். பள்ளிக்கூடத்திலிருந்து மத்தி யானம் வீடு திரும்பியதும் நேரே என் அறைக்கு வந்து அதுவரை எழுதியதைப் படித்துப்பார்த்துவிட்டுத்தன் சமையலறையை நாடுவாள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, தான் வாசித்த பகுதியைப் பற்றித் தனது அபிப் பிராயத்தை வெளியிடுவாள்.

பரிசு பெற்ற கதை 33
இன்றைக்கோ-? பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பிய தும் நேரே சமயலறைக்கே போய்விட்டாள். ஒரு மணி நேரத்தில் என் அறைக்கு வந்து என்னைச் சாப்பிட அழைத் தாள். எழுந்து போய்ச் சாப்பிட உட்கார்ந்தேன்.
“சோபஞ, இன்று காலையில் எழுத ஆரம்பித்த கதை அப்படியே நின்றுவிட்டது' என்று தானகப் பேசினேன்.
"சாப்பிடுங்கள் அண்ணு, நேரமாகிறது. நான் பள்ளிக் கூடம் போக வேணும்.’’ என்ருள் சிரத்தையில்லாமலே,
"என்ன சோபணு ஒரு மாதிரி இருக்கிருயே! உடம் புக்கு என்ன?” என்றேன்.
'ஒன்றுமில்லை அண்ணு, மனநிலைதான் என்னவோ சரியாகவில்லை. உற்சாகமேயில்லாத மாதிரி இருக்கிறது. பள்ளிக்கூடம், படிப்பு இதெல்லாம் எதற்கு என்று தோன் றுகிறது. பள்ளிக்கூடம் போகாமலே நின்று விடலாமென எண்ணுகிறேன்."
‘'நீ என்ன பேசுகிருய் சோபன? உனக்கு என்ன நேர்ந்தது?’ என்றேன் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு.
"ஆம் அண்ணு, படித்து, பரீட்சைகளில் சித்தியடைந்து என்னத்தைக் கண்டுவிடப் போகிறேன். ஒரே போட்டி மேடையாக இருக்கிற இந்த உலகத்தின் மத்தியில் நானும் போய் ஏன் தலையைக் கொடுக்கவேண்டும்? காசு கொடுத்து வாங்கக்கூடிய மலிவான பட்டம் பதவிகளை விட்டு விலை மதிப்பற்ற ஏதோ ஒன்றை என் மனம் நாடுகிறது.*
*ஒகோ, காலேயிலே நான் பேசியதற்குத்தான் இப்ப டிப் போட்டுப் பிடிக்கிருயோ? மகா பொல்லாத பெண் நீ' என்றேன்.
** மெய்யாகத்தான் அண்ணு. நான் இனிமேல் படிக்கப் போகப் போவதில்லை!" என்ருள்.
என் மனம் திடுக்குற்றது. 'ஏன்? எதற்காக அப்படிச் சொல்லுகிருய் சோபனு?"

Page 63
84 மனித மாடு
* மனத்துக்குப் பிடிக்கவில்லை. அதிலே நான் நிம்மதி யைக் காணமுடியவில்லை."
*நீ எழுந்து சாப்பிடு சோபன. சாப்பிட்டுவிட்டுப் பள்ளிக்கூடம் போ. மாலை நீ திரும்பி வருவதற்குள். ளாகப் போட்டிக்குக் கதை எழுதி முடித்துவிடுகிறேன்’
*அப்படி என்ருல் எனக்காகத்தான் எழுதப் போகி றிர்கள்?"
"ஆம், அதில் சந்தேகமென்ன?"
*"சரி, அப்படியென்ருல் நா ன் பள்ளி க் கூட ம் போகிறேன். அதுவும்.'
ሪ ̆
எனக்காகத் தானக்கும் ! சரி ஒப்புக்கொள்ளுகிறேன்?" என்று எப்படியோ சமாதனப்படுத்திப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவிட்டேன்.
சோபளூ பள்ளிக்கூடம் போன பிற்பாடு கதையை எடுத்துக் காலையில் எழுதிவிட்ட இடத்திலிருந்து மறுபடி தொடர்த்தேன். பேன கடகடவென்று ஓடியது. ஒரே மூச் சில் எழுதி முடித்துவிட்டேன். பிறருக்காக உழைக்கிறே னென்று அதற்குக் கூட எவ்வளவு உற்சாகம்!
மாலை சோபன திரும்பியதும் எழுதி முடித்த கை!ெ ழுத்துப் பிரதியை அவளிடம் எடுத்துக்கொடுத்து ‘நீயே உன் கையால் தபாலில் சேர்த்துவிடு' என்றேன். நின்ற நிலையில் கதையைப் படித்துப் பார்த்துவிட்டுப் "பே ', இதற்குத்தான் முதற் பரிசு’’ என்ருள்.
ஒரு மாதத்தின் பின் ஒரு நாள் மத்தியானம் பள்: சிக் கூடத்திலிருந்து திரும்பிய சோபன வீட்டு வாசலில் கடல் வைக்க முன்பாகவே, "அண்ணு. அண்ணு. கதைப்போட்டி முடிவு வெளியாகிவிட்டது" என்று சத்தமிட்டாள். எப் அறைக்குள்ளே நுழைந்து கையிலிருந்த பத்திரிகையை எ. முன்னே எறிந்து விட்டுத் துள்ளிக் குதித்துக் கொண்டே

பரிசு பெற்ற கதை 85
ஒடிஞள். அவளுடைய மகிழ்ச்சிப் பரவசம் எனக்கு ஒரே வியப்பை அளித்தது. பத்திரிகையைப் பிரித்துக் கதை முடிவு வெளியாகியிருந்த பக்கத்தைப் பார்த்தேன். சோபனவுக்கு முதற்பரிசு! கதை நான் எழுதியது!
*"சோபன, என்ன வேலை செய்திருக்கிருய்?' என்று இரைந்துகொண் ட ச ம ய ல  ைற க்கு அவளைத் தேடிப் போனேன்.
* சோபனு!"
* என்னண்ணு?’
அடுப்பில் ஏதோ மும்முரமாகத் தயாரித்துக் கொண் டிருந்தாள்.
'முகத்தைக் கொஞ்சம் திருப்பு" என்றேன்.
* பரிசு கிடைத்ததைக் கொண்டாட ஒரு விசேஷ பலகாரம் செய்கிறேன். அண்ணு, பள்ளிக்கூடத் தோழிகள் எல்லோரும் இப்போ வரப்போகிருர்கள்’’ என்று சொல்லிக் கொண்டே பார்வையை என்பக்கம் திருப்பியவள், இரு கைகளாலும் வாயைப் பொத்திக்கொண்டு அடக்க முடி யாமல் சிரித்தாள். அவள் அப்படிச் சிரித்து மகிழ்ந்ததை நான் ஒருநாளும் பார்த்ததில்லை. “சரியான போக்கிரிப் பெண் நீ நான் எழுதிய கதையை உன் பெயரிலா அனுப்பி யிருக்கிருய் ?*
*போட்டியாம். பரிசாம் . யாருக்கு யார் போட்டி வைப்பதும் பரிசு கொடுப்பதும் ! உங்களைப் போலப் பிரபல எழுத்தாளர்கள் இந்தமாதிரிச் சின்னக் கதைப் போட்டி களிலே கலந்துகொண்டு பெயரை மாசுபடுத்திக் கொள்ள Gvir(Suet ------ ''
*என்ன அக்கிரமம் இது 1 "நமது கதைப் போட்டி இதுவரை நாளும் மறைந்திருந்த ஓர் அரிய எழுத்தாளரை வெளிக் கொண்டு வந்திருக்கிறது" என்று பாராட்டுக் குறிப்பு வேறே போட்டிருக்கிருர்களே” என்றேன்.

Page 64
86 மனித Lp TG
'அண்ணு இனிமேலாவது உங்கள் வரட்டுத் தத்துவங் களையும் பிடிவாதங்களையும் மூட்டைகட்டி வைத்துவிட்டு அறையை விட்டு வெளியே வாருங்கள். பிறருக்காக ஒரு காரியத்தைச் செய்தபோது. பார்த்தீர்களா வீட்டிலே இதயத்திலே கூட, எவ்வளவு சிரிப்பொலி கேட்கிறது ! உங்களை அறியாமலே நிகழ்ந்த ஒன்றே இவ்வளவு மகிழ்ச் சிக்குக் காரணமாகிற தென்ருல்.’
*நான் அறியாமல் என்ன? உனக்காகத்தானே அந்தக் கதையை எழுதினேன்.”*
**ஆம் எனக்காக எழுதினீர்கள். அதனல்தான் நீங்கள் தேடிக்கொண்டிருந்த அந்த விலைமதிப்பற்ற அபூர்வப் பொருள் உங்களுக்குப் பரிசாகக் கிடைத்திருக்கின்றது. பிறருக்காக வாழும் அன்பு வாழ்க்கையில், தியாகத்தில் கிடைக்கும் மனச்சாந்தி வேறு எங்கே தேடினலும் அஃப் படாது அண்ணு. சரி நேரமாகிறது. வேறே வேட்டியும் சட்டையும் அணிந்துகொண்டு கொஞ்சம் மாப்பிள்ளைக் கோலமாக இருங்கள்."
* ஏன் கல்யாணமா சோபஞ ?" **ஆம் அண்ணு, இன்னும் சற்று நேரத்தில் பெண்
வீட்டார் இங்கே வரப்போகிருர்கள். பெண் யார் தெரியுமோ? என் பள்ளித் தோழி கமலா' என்ருள் என் தங்கை.
-Frpossi, 12-5-19

16
வெயிலும் மழையும்
குழந்தை தொட்டிலில் படுத்துறங்கிக்கொண்டிருந்தது. அவனைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை என் தலையில் சுமத்திவிட்டுத் தாய் இரண்டு வீடுதாண்டி மூன்முவது வீட் டுக்கு ஒருக்கால் ‘தலையைக் காட்டி' விட்டு வரப் போயி ருந்தாள். மாமன் மகள் மைத்துணியாக உள்ள இருபத் தெட்டு அவதாரங்களிலே இவளும் ஒருத்தி. கொழும்பிலி ருந்து ஒரு வாரத்திற்கு முன்ப கத்தான் வந்திருந்தாள்.
மூன்முவது வீட்டுக்குப்போய் ஒன்றரை மணிக்கு மேலா கிறது. இவ்வளவு நேரமாகத் தலையைக் காட்டிக்கொண்டி ருக்க அவளுக்கென்ன தலையிலே பேன் பிடித்திருக்கிறதா? ஒரு பழைய உபகதையில் சொல்வது போலத் தலையைக் கழற்றி இன்னெருவர் கையிலே கொடுத் திருந்தால் கூட தலை வாங்கிய அந்த அபூர்வ மனிதர் அதில் ஒவ்வொரு பேணுகப் பொறுக்கி அதற்கு மேலும் தலைக்குள்ளே களிமண் இருந்தால் அதையும் துப்புரவு செய்து இம்மட்டில் ஆளைத் திருப்பி அனுப்பியிருப்பார்.
எனக்கு ஒரே எரிச்சலாக இருந்தது. இரண்டு பெண்கள் கூடி இப்படி மணிக்கணக்காக உரையாடுவதற்கு அப்படி என்னதான் இந்த உலகத்தில் நடைபெறுகிறதோ !
உலகத்தை வாரிச்சுருட்டிக்கொண்டு எங்கள் வீட்டுப் படலையிலே வந்துவிழும் புதினப் பத்திரிகையைக்கூட ஒரு மணி நேர சமாச்சாரம் என்றுதான் சொல்லுகிருர்கள். இங்கே நம் வீட்டுப் பெண்களுக்கோ..

Page 65
88 மனித மாடு
தொட்டில் இலேசாக அசையவே மெல்ல எழுந்து சென்று அதை ஒருக்கால் மெதுவாக ஆட்டிவிட்டேன்.
பனிக்காலத்து விடியற்காலையில் மொட்டவிழ்ந்து நிற்கும் ரோஜா மலரைப் போலச் சலனமற்ற இன்பத்துயிலில் ஆழ்ந் திருந்த குழந்தையின் அமைதி தொட்டிலை நான் அசைத்த மாத்திரத்தே கலைந்துபோய்விட்டது மின்சாரத்தில் வைத்த கையை எடுப்பது போலச் சட்டென்று பின்னுக்கு இழுத்துக் கொண்டேன்.
என்ன காரியம் செய்துவிட்டேன்? இதை அடுத்து ஒர் உலகப் பிரளயமல்லவா நிகழப்போகிறது. இரண்டடி பின் ஞகவே நகர்ந்து நின்றுகொண்டேன். தொட்டிலை மட்டும் ஆட்டிவிடாதீர்கள் என்று திரும்பத் திரும்பப் பல தடவை சொல்லிவிட்டுப் போயிருந்தாள். இப்பொழுது வந்தாளானல் பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலேயும் ஆட்டிவிட்ட தாக என் மீது கூசாமல் பழி சுமத்துவாள். நல்ல பிள்ளையும் தாயும்!
தாயானவள் வருவதற்கு முன்னுகக் குழந்தையை எப்படியாவது உடனே சமாதானப்படுத்தி ஆகவேண்டுமே. மனம் ஒரு நிலைப்படாமல் அவதிப்பட்டது.
அவள் வெளியே போயிருந்த ஒன்றரை மணி நேரத்தி லும் அடிக்கொருமுறை தொட்டிலருகே போய் நின்று உறக் கத்தில் ஆழ்ந்திருக்கும் எல்லாக் குழந்தைகளிடமும் பொலி யும் தெய்வீக அழகைக் கண்குளிரப் பருகி ஆறுதலடைந் திருந்தேன்.
நம் தெய்வம் என் தெய்வம் என்று உலக மாந்தரனை வரும் சண்டை போட்டுக் கொள்கிருர்களே. கடவுளேத் தேடி எங்கெங்கோ சென்றலேகிருர்களே அந்த மாயா வடிவம் இங்கே என்வீட்டுத் தொட்டிலுக்குள்ளே அல்லவா படுத்துறங்குகிறது. ஏழையின் குடிசை என்ன மாதவம் செய்ததோ? ஆஞல், தெய்வமே நீ வந்த வழியை எனக்குக் கூறமாட்டாயா..?

வெயிலும் மழையும் 89
தேன்நிலவோ
தென்காற்ருே தித்திக்கும் செந்தமிழோ
தாய்மைப் பெருந்தவமோ தந்தை மனத் துடிதுடிப்போ வந்த வழி எதுவோ
கண்ணே அதை நீ வாய்திறந்து
சொல்லாயோ?
எதை எண்ணி நான் இத்தனே வேளை அஞ்சி ஒடுங்கி நின்றேனே, அந்தப் பூகம்பம் கடைசியில் நிகழ்ந்தேவிட்டது. குழந்தை வீறிட்டு அலறத் தொடங்கிஞன். வானமும் பூமியும் ஒன்ருகச் சேர்ந்து என் தலையில் இடிந்து விழுந்தது போலத் திகைத்துப் போய்விட்டேன். என் பாட்டை அந்த மட்டில் நிறுத்திக்கொண்டு ஆந்தையாய், பூனையாய், கோட்டாணுய், குருவியாய்ப் பலவித சப்தசாலம் 1 செய்து வேடிக்கை காட்டினேன். தொட்டிலை மடமடவென்று வேகமாக ஆட்டிவிட்டேன். எல்லா முயற்சிகளும் வியர்த்த மாகிப் போயின. கை அயர்ந்து, கால் அயர்ந்து. சற்று முன்னதாகத் தொட்டிலுக்குள்ளே தெய்வ அருள் பொனியத் தூங்கிய குழந்தையா இது, என்று மனமும் அலுத்துக் கொண்டது. உறங்கிக் கொண்டிருந்தபோது உலகத்தையே அடிமைப்படுத்திவிடும் மோகன மென்னகையும் விம்மலும் சுளிப்பும் மின்னற் கொடிபோல நெளிந்து ஓடிய அந்தச் செம்பவள வாய்தான இப்படிக் கதறிக் கூக்குர 6565 spg|... ...
மனம் உடைந்து, குழந்தையைத் தொட்டிலை விட்டுத் தூக்கிக்கொண்டு வெளி முற்றத்தில் இறங்கினேன்.
சீதேவி தண்ணிர் கொண்டு போகக் குடமும் பானையும் சுமந்து தெருப் படலையைத் திறந்துகொண்டு வந்தாள். என் வீட்டுக்கு எதிராக உள்ள பனைக் காணிக்குள் குடியி ருப்பவள். கல்யாணமாகி நாலு வருஷம்தான் ஆகியிருக்கும்.
12 מL.

Page 66
90 மனித மா()
இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகியிருந்தாள். இரண்டா வது பிறந்து இன்னும் ஒரு வருஷம் ஆகவில்லை. தகப்ப னுக்குப் பனை ஏறிக் கள்ளுச் சேர்க்கும் வேலை.
பனைக் காணி என்ரு சொன்னேன். அது தவறு. பனைக் காடு என்று வேண்டுமானல் சொல்லிக் கொள்ளுங்கள். கண்ணுக்கெட்டிய தூரம் கூட்டம் கூட்டமாக ஆயிரம் ஆயிரமாகப் பனைகள் . அத்தனை பனைகளையும் ஒன்ருகச் சேர்த்து ஒன்றன் மீதொன்ருக அடுக்கிவிட்டால் சீதேவியின் ஆணழகன் அதன் வழியே சந்திர மண்டலத்துக்கு ஏறிச் சென்று கள்ளுக்குப் பதிலாக அமுத பானம் வடித்துக் கொண்டு வருவான். பனைக் காட்டுக்குத் தான் தனிக்காட்டு இராசா மாதிரி மனதுக்குள்ளே ஒரு நினைப்பு அவனுக்கு. சுற்றியிருக்கும் இருபத்தைந்து குடிகளும் அதற்கு அட்டி சொல்வதில்லை.
விற்றுப்போகாத கள்ளு எப்பொழுதாவது வீட்டில் தங்கிப்போஞல் இரண்டு போத்தலைக் கூடவே மாந்தி விட்டு 'எடியே, மூதேவி நான் இருப்பது பூலோ கமா, சுவர்க்கமா?' என்று பிதற்றுவான். மிஞ்சினல் எங்கள் வீட்டுக்கு அவன் குரல் கேட்கும். அதற்குமேல் அவனுல் யாருக்கும் தொல்லை இல்லை.
தண்ணீருக்கு வந்த மூதேவி, மன்னிக்கவும் சீதேவி நான் குழந்தையோடு மல்லாடுவதைக் குடத்தை நிலத்தில் வைத்துவிட்டு முற்றத்தில் நின்றவாறே வேடிக்கை பார்த் தாள். 'இது எதுக்காக்கும் கத்துது, தாய்க்காரி இந்த வேளை பார்த்து எங்கே போனுவோ ?"
'இந்தவேளை பார்த்து நீ ஒரு மூதேவி தண்ணிருக்குக் குடம் கொண்டு வந்திருக்கிருய். இந்த வேளை பார்த்து அது ஒரு சனியன் எங்கேயோ போயிருந்து பேச்சளந்து கொண்டிருக்கிறது. ’’
உலகமே அறியாத குழந்தை நோயுற்றுத் துன்பப்படு வதும் அழுது ஒலமிடுவதும் எனக்கு என்றைக்குமே பிடிக் காத சங்கதி. 'உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்

வெயிலும் மழையும் 9.
னில் உதிரம் கொட்டுகிறது' என்று இப்படி ஒரு குழந்தை அழுவதைப் பார்த்துத்தான் கவிஞன் பாடியிருக்க வேண்டும்.
ஒரு வழிக்கும் இணங்கி வராமலே குழந்தை என் கையில் சிக்குண்டு துவண்டு துவண்டு இன்னமும் அழுது (. காண்டேயிருந்தான்.
முற்றத்தில் மேலுங் கீழுமாக நான் சுழன்று கொண் டிருந்தேன். நிலத்தில் வைத்த குடத்தைத் தூக்கிக் கொண்டு போய்க் கிணற்றடியில் வைத்துவிட்டுத் திரும்பி வந்தாள் சீதேவி. என்னிடம் கைகளை நீட்டிக் குழந்தையை வாங்கினள்.
'நீ அவனைத் தூக்கி என்ன செய்வாய்? அவன் தான் அடம் பிடிக்கிருனே !'
குழந்தை அவள் கைக்கு மாறியதும் நான் கிணற் றடிக்குப் போய்ச் சீதேவியின் குடங்களில் தண்ணீர் நிரப்பினேன்.
பத்து நிமிஷம் ஆகியிருக்காது. நான் திரும்பி வந்த போது சீதேவியின் அணைப்பிலிருந்த பயல் அழுகை ஓய்ந்து என்னைப் பார்த்துச் சிரித்தான்.
-ஈழநாடு, 5-3-1963

Page 67
17
அகுவியின் அழைப்பு
இரண்டு மூன்று தினங்களாக அடைத்தாற் போல விடாமழை பொழிந்த வானத்தில் கருமேகங்கள் விலகி, சூரியன் முகம் காட்டத் தொடங்கியது, நீடித்த மழைக் குப்பின் தோன்றும் வெயில், நீண்ட இரவுக்குப் பின் தோன்றும் பகலொளியைப்போல மனுேகரமாய் மன ரம்மியமாய் இருக்கும். யாழ்ப்பாண நாட்டில் ஐப்பசி மாதத்து அடைமழைக் காலங்களில் இந்த மழை வெளிப் புக்கும் வெயிலுக்கும் உள்ள வரவேற்பு ஒரே களியாட்டக் கோலமாயிருக்கும். வீட்டுக்குள் போர்த்து மூடிச் சுருண்டு கிடந்தவர்கள், காலையும் கையையும் கிட்டிப் போட்டாற் போல முடங்கிக் கிடந்தவர்கள் வெளியே தலைநீட்டிக் கார் மேகம் கலந்து களங்கமற்று நிர்மலமாய், நிர்ச்சலனமாய்க் கிடக்கும் நீலவானைப் பார்த்து மனதில் உவகை பொங்க நின்று பரவசமடைவர். எழில் கொழிக்கும் வானவில் அப்பொழுது ஆகாயத்தில் இருக்காது. அவர்கள் ஒவ் வொருவர் மனத்திலுந்தான் தோன்றும்.
கோடை காலத்தில் தகித்துப் பொசுக்கும் வெங்கதி ரோனிடமிருந்து உலக மாந்தரைப் புரப்பதற்காக இவ்வாறு சில மாதகாலம் நமக்குப் பட்டுக் குடைபிடித்து, பச்சைக் கம்பளம் விரிக்கும் வருணதேவனுக்கு அந்நன்றி மறக்காமல் மழைக்காலம் முடிவடைய ஆதவனுக்கும் சேர்த்தே பொங்கலும் பூசையுமிட்டு வழிபடுகின்றனர்.

அருவியின் அழைப்பு 93
நிழல் அருமை வெயிலில் தானே தெரிகிறது. நாம் @49 யிருப்பதோ பரந்த வானத்தின் கீழ். மழை, காற்று, இடி, மின்னல்களைப் பொருட்படுத்தாமல் வாழ முடியுமா ? போராடுகிருேம், சரணடைகிருேம். இன்று நேற்று முதலா? ஆண்டாண்டு காலமாய், யுகயகாந்தரமாய் .
அன்றைக்கு ஐப்பசி வெள்ளி. கந்தசஷ்டி தொடங்கி மூன்ரும் நாள். காலையிலெழுந்து நான் பஸ்ஸுக்குக் காத்து நின்று வேலைக்கு வந்து சேர்கிறவரை ஒரே மழை. வீட்டில், வரும் வழியில், இங்கே இந்த மாடிக் கட்டிடத்தில் எங்குமே தாரை தாரையாகத் தண்ணிர், கால் வைத்த இடமெல்லாம் ஒரே ஈரக்கசிவும் ஊறிச்சுவறும் ஈரலிப்பும் நணைப்பும் தோய்ப்பும் குளிரும் கூதலும், இரண்டு நாளாக இப்படி ஊற்றுகிறது. அலுவலகம் வந்து சேர்ந்து ஒர் இரண்டு மணிக்காலத்தின் பின் இப்பொழுதுதான் கரு மேகத்திரையைக் கிழித்துக்கொண்டு பகலவன் வெளிவந் திருக்கிருன். உலகம் என்ன ஆழகாகத் தோன்றுகிறது. மரம் செடிகளெல்லாம் குளித்து முழுகிப் புதுமைக் கோலம் கொண்டு இளங்காற்றில் அசைந்து ஆடிச் சிரித்து, சிலு சிலிர்த்து நிற்கின்றன. இரு தினங்களும் குளிருக்கும் தொடு கும் கூதலுக்கும் ஒதுக்காக எங்கெங்கோ பதுங்கி மறைந் திருந்த பறவை இனங்கள் கதிரவன் வரவுகண்டு குபிர் என வெளியே பறந்து புதுமை எழுச்சி பாடுகின்றன. அதோ, அந்த வெள்ளை அலரிகளின் இதழ்களிலே மின்னிப் பளிச் சிடுவது மகிழ்ச்சிக் கண்ணிர்த் துளிகளா ?
வெளியே மழையிலும் வெயிலிலும் திளைத்து, பூமித் தாய் இவ்வாறு எழில் பூரிக்க யன்னலூடாக என்னை அழைக் கவே, அலுவலகச் சுவர்க்கூட்டுக்குள் மேசைமுன் காஜல மடக்கிப்போட்டு உட்கார்ந்திருக்க ஆற்றுமல் சகபாடி ஒரு வனிடம் சொல்லிவிட்டு வெளிக்கிளம்பிவிட்டேன்.
எங்கே வீட்டுக்கோ?
வீடும் மண்ணுங்கட்டியும் ! கீரிமல் நீரூற்றுப் பக்கம்
தான் கிளம்பினேன். இந்தக்கணம் வரை பெய்தமழை அங்கே பளிங்கனைய சிற்றருவிகளாகக் களகளவென்று கற்

Page 68
94 மனித மாடு
பாறைக் குன்றுகளில் ஊற்றெடுத்துக் கடலை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கும். கடல் அலைகள் சோசோவென்று இரைந்து வந்து கரையோரம் கிடக்கும் கற்களிலே மோதி மழைத்துளிகளாகச் சிதறி நம்மேல் பன்னீர் தெளிக்கும் , நீண்டு கிடக்கும் கடற் பரப்பைப்போல அதன் எதிர்ப் பக்கத்தே செடிகொடிகளும் புல்பூண்டும் கல் மேடுமாகப் பரந்து கிடக்கும். அகண்ட வெளியோ பார்த்துக் கண் கொள்ளாது. யானைப்படை, ஒட்டகப்படை போல அடுக்குத் தொடராகச் சேர்ந்து திரண்டு வளர்ந்தோங்கி நிற்கும் கடலோரக் குன்றுகளின்மேல் நின்று பார்த்தால் திரை எறியும் அக்குன்றுகளின் அடிவயிற்றில் புத்தம் புது அருவிகள் ஊற்றெடுத்து ஒவ்வொன்றும் கிளைவிட்டு, தனித் தனி ஒடையாகவும் வாய்க்காலாகவும் பெருக்கெடுத்து, கட்டுமீறி, கரைபுரண்டு, தாயிடம் தாவிப் பாயும் சிறு குழந்தைபோலக் கடலை நோக்கி விரையும் காட்சி, நாள் முழுக்கப் பார்த்து அநுபவிக்கக்கூடியதொன்று , நீராட இறங்கினலோ இன்றும் நாளையும் கூட எழுந் திருக்க மனம் இசையாது. இப்படி அபூர்வமாகப் பாயும் மழைக்காளான் அருவிகளில் நீரோடுவதற்கும் அவை பாடும் ஒசையைக் கேட்டுக் கொண்டே ஆண்டில் ஒரிரண்டுமாதம் அறிதுயில் கொள்வதற்குமாகச் சுற்று வட்டாரத்தில் காணி வாங்கி வீடுகள் கட்டி எழுப்பியிருப்ப வர்கள் இப்பகுதிப் பூகர்ப்ப இரகசியம் தெரிந்தவர்கள்தாம். அந்தப் புதுவீட்டுப் பெண்மணிகள் சிறுசுகளும் பெரிய வர்களுமாகக் காலேயிலே கூட்டமாக வந்து அருவிகளில் கும்மியடித்து நீராடிவிட்டுக் கூந்தல் காற்றில் புரள மனக் கிளுகிளுப்புடனே திரும்பிய போது-ஒவ்வொருத்தியும் ரம்பையும் ஊர்வசியுமாக-சே சே, அந்தச் சோழ இராச குமாரத்தி மாருதரப்புரவீக வல்லியாக அல்லவோ புதுமை அவதாரம் பெற்றுவிடுகிருள்?
கூண்டுப்பறவை வானவெளியிலே ப ற ந் தோ டி ப் போனதைப் போலத்தான் நானும் என் சைக்கிளை எடுத் துக்கொண்டு அதில் ஏறிப் பறந்தேன். கேணியில் எல்லாப் படிக்கட்டுகளையும் மேவித் தண்ணிர் நிறைந்து வழிந்து. தளதளத்தது. அப்பழுக்கற்ற தெளிந்த நீர், கடற்கரை

அருவியின் அழைப்பு 95
யோரமாக மலைக்குன்றுப் பக்கம் பாய்ந்த அருவியை மறந்து போனேன். சைக்கிளை ஒரு பக்கம் போட்டுவிட்டு வ்ேட் டி யை அவிழ்த்து இடுப்பில் சால்வைத் துணியைச் சுற்றிக் கொண்டு கேணியிலிருக்கும் தண்ணிர் கடலுக்குப் பாயும் வாய்க்கால் ஒடையில் போய் இறங்கினேன். வேட்டியைத் தண்ணிரில் தோய்த்தெடுத்துக் கல்லில் இரண்டு தட்டுத்தட்டி அ லம்பி எடுத்துக்கொண்டே மறுபடி கேணிக்குச் சென்று நீராட இறங்குவதற்கு முன்பாக வாய்க்காலோரமாகக் குவிந்து கிடந்த கற் குவியல்மேல் ஏறிநின்று துணியை என் இரு கையிலும் விரித்து, கடற் காற்றில் அது பட பட வென்று அடித்துப் பறக்க உலரவிடலானேன்.
* கதிரி அல்லோ மோசம் போய்விட்டா, தம்பிக்குத் தெரியுமோ???
கேணி ஒடைக்குள்ளேயிருந்துதான் ஒரு குரல் எழுந்தது.
'ஆரது வேலனுே, மெய்யாகத்தானே வேலன்? எப்ப நடந்தது?"
'ஓம் தம்பி, அது நடந்து இன்றைக்கு ஒரு மாசமாகுது'
"சே, எத்தனை காலத்துச் சீவன்'
கதிரி, கலட்டிக் குடியிருப்பு என்ற தாழ்த்தப்பட்ட வகுப்புக் குடிமக்கள் பண்ணையில் நெடுங்காலமாகத் தரித்து நின்ற ஒரு நிழல்மரம். இங்கிருந்து சமீபத்தில் மழைக்கால அருவிபாயும் மலைக்குன்றுகளுக்கு நேர் தெற்கே இரண்டு தெருக்களையும் தாண்டிக் காட்டு வெளியில் மூந்நூறு குடிகளை மட்டில் கொண்ட அந்தக் குடியிருப்பு இருக்கிறது. எங்களூர்களிலே கிறவல் ருேட்டுகளே எங்கும் போட்டிருந்த காலத்தில் தெருவேலைகளுக்காகத் தெருவோரம் குவிக்கப் படும் கற்குவியலுக்குக் கல்லுடைத்துக் கொடுக்கும் கூலி, வேலைக்குப் போவாள் கதிரி, அந்தப் பண்ணையில் பெரும் பகுதி ஆட்களும் இவ்விதம் அன்ருடக் கூலி வேலைக்குப் போய்ப் பிழைத்தவர்கள்தாம். கதிரியின் மகனும் அவன் பெண்டாட்டியும் ரயில் பாதைக் கற்குவியலுக்குக் கல்

Page 69
9 6 மனித மாடு
உடைத்துக் கொடுக்கக் காங்கேசன்துறைக்குப் போனர்கள். அந்தவேலைக்குப் போகாத காலத்தில் ஏவல், தொண்டு, துரவு வேலைகளுக்குச் சுற்றயல் கிராமங்களுக்குப் போனர்கள். புயல்காற்றும் பெருமழையும் அசைத்தும் பார்க்க முடியாத நேர்த்தியான மண்சுவர் வைத்து வீடுகட்டிக் கொடுப் பார்கள். தங்களை ஆதரித்தவர்களின் வாழ்க்கையில் சம்ப வித்த புயல் பெருமழையின் போதும் நெடுஞ் சுவராக நின்று அணைகட்டிக் காத்தவர்கள். அத்தகைய பொன்னு ன மனம் படைத்தவர்கள். கதிரி, அவள் மகன், அன்றி பேரனே, பேர்த்தியோ ஒரு நாளைக்கு ஒருக்கால் எங்கள் வீட்டுக்கு வந்து சுற்றிக் கொண்டுதான் மேலே எங்கேயும் போவார்கள் எனது சின்ன வயது முதலே பார்த்துப் பழகிய முகம்.
காய்ந்து போய்விட்ட வேட்டி காற்றிலே படபட என அடித்தது. நான் கொடி மரமே ஆகிவிட்டேனே ?
ஈரம் வற்றிப்போன தலை நனைய இரண்டுதரம் மறு படியும் தண்ணிருக்குள்ளே முங்கி எழுந்து, "அப்ப நான் வரப்போறன் தம்பி’ என்ருன் வேலன்.
" நான் தலை அசைத்தேன். வேலன் போய்விட்டான்.
அவன் நின்று தலைமுழுகிய இடத்தில் அவன் வெளி யேறிப் போனபின்பே தண்ணிர் சுழித்துப்பாய்கிறது. பளிங்கு போல நீர்க்குழிகள். அடி நிலம் வெயிலில் பளிச் சென்று தெரிகிறது. என்ன அழகு !
இன்றைக்கெல்லாம் எங்கும் மின்சார வெளிச்சம் வந்துவிட்டது. வெளிச்சம் எந்த இராவிருட்டிலும் பய மில்லாமல் எந்நேர பரியந்தமும் நீராடலாம், கேணிக்கு நடுவே தலைக்குமேல் குறுக்கே ஒடும் மின் இணைப்புக் கம்பி யையும் அதில் தொங்கும் தீபக்குமிழையும் பார்த்துவிட்டு, தொபுகeர் எனத் தண்ணீருக்குள் குதித்து, கீழே சற்றுத் தூரம் சுழியோடிச் சென்று தலையைத் தூக்கினேன். நல்ல வேளை ஒரு கற்பாறை மேல் செளகரியமாக ஏறி நங்கூரம் பாய்ச்சி மார்பளவு நீர் மட்டத்தின் சுகத்தை அநுபவித்து நின்ற ஒரு பரம சாதுவை இடித்துக்கொள்ளாமலே தலையைத்

அருவியின் அழைப்பு 97
தூக்கினேன். அப்படியான போதிலும் அந்த மனிதர் சற்றே மிரண்டுபோனர் என்றே தோன்றியது. கால் தடம் புரண்டால் ஒருவேளை அவர் தலைக்கு மேல் வெள்ளம் போய்விடக்கூடுமோ? அதை முழு நிச்சயமாகச் சொல்ல முடியாது
"கேணிக்குள்ளே இறங்கியவுடனே சில பேருக்கு ஒன்றுமே தெரியாமல் போய்விடுகிறது. இந்தத் தண்ணி ருக்குள்ள குணம் அது -அந்தச் சாது மனிதர்தான்; அவர் கூட நின்று நீராடிய மற்ருெரு சீவனிடம் இப்படிச் சொல்லி முறையிட்டு முணுமுணுத்தார்.
"மெய்தான். அருமையான தண்ணீர் இன்றைக்கு . விடியற்காலையில் கழுத்தளவு தண்ணீரில் நின்று பாட்டுப் பாடிஞல் என்ன சுதி பேசும். குரல் கூடச் சுத்தமாகி விடுமாம். அது தெரியாமல் சும்மா வாயைச் செலவழித்து என்ன பிரயோசனம் ? அதுவும் தண்ணீருக்குள்ள கோளாறு தானே ?’ அந்தப் பரம சாது யாரிடம் பேசினரோ அதே ஆனைப் பார்த்து நானும் இவ்வாறு சொல்லிவைத்தேன். என் பேச்சைக் கேட்டுக்கொண்டு அதற்குப் பதிலொன்றும் கூருமலே சற்று நேரத்துக்குள்ளாக மூன்ருவது மனிதர் மெல்ல நழுவி வெளியேறிவிட்டார்.
பெரியவரும் நானும் மட்டுமே கேணிக்குள் தனித்து நின்ருேம். ஒன்றும் நடவாததைப் போல அந்தச் சாது மனிதர் என்னை நோக்கியவராய் ' 'தம்பி இப்ப நேரம் என்ன இருக்கும் ?' என்று வினவினர்.
"இரண்டு மணிக்குக் கிட்டவாகுது' என்றேன்.
'ஒ, இரண்டு மணியாகிறதா? நான் தண்ணீருக் குள்ளே வெகுநேரமாக நின்றுவிட்டேன் போலிருக்கிறது. இறங்கிஞல் எழுந்திருக்க மனம் வந்தால்தானே' அவர் கூறி வாய் மூடுவதற்குள்ளாகப் பெண்கள் நீராடும் கேணிக்குள் ளிருந்த ஓர்அப்சரஸ் மின்னல் பளிச்சிட்டாற் போல வெளி வத்து ஆடவர் கேணிக் கரையில் நின்றபடி, "ஐயா, நான் மடத்துக்குப் போகிறேன். நீங்கள் வாருங்கள்' என்று சொல்லிவிட்டுத் திரும்பினள்.
tp I 3

Page 70
98 மனித மாடு
'ஓம் பிள்ளை. நீ போ. பின்னுல் நானும் இதோ வரு கிறேன்" என்று அவர் கூறியதும் அந்தத் தோகை மயிலாள் மறைந்துவிட்டாள்.
அத்தருணம், கண் வழியாக என் முகத்தில் படர்ந்த உணர்வு ரேகைகளை மறைப்பதற்காக இரு கையாலும் தண்ணிரை அள்ளி என் முகத்தில் ஊற்றிக்கொண்டு நின்ற என்னிடம் அந்தச் சாது மனிதர், 'இவ என் மகள். ஒரே மகள். இவவினுடைய தாய்க்குத்தான் நேற்று இங்கே அந் திரட்டி செய்வதற்காக வந்தநாங்கள்’’ என்ருர்,
‘ஓ, அப்படியோ? ஏன் மடத்தில் நடக்குது அந்திரட்டி!’.
"நாங்கள் கன காலமாய் வெளியூர்ச் சீவியம், அதனுலே ஊரிலே இனசனக் கொண்டாட்டம் அவ்வளவாக இல்லை. இனிமேல்தான் எல்லாம் புதுப்பிக்க வேணும்.’’
"அப்படி வெளியூர்ச் சஞ்சாரம் எதனுலோ?' இந்தக் கேள்விக்குச் சற்று நிதானமாகவே பதில் வந்தது.
*நான் நெடுகிலும் பஸ் கம்பெனியில்தான் வேலை பார்த் தனன், தம்பி. ஐயக்கோன் பஸ் கம்பனி நடத்திய காலத் தில் யாழ்ப்பாணத்தில் வேலை பார்க்கத்தொடங்கி அதற்குப் பிறகு இருபது இருபத்தைந்து வருசமாகக் கண்டி, காலி, மட்டக்களப்பு என்று பல ஊர்ச் சீவியமாக நடந்தது.'
'நெடுகிலும் பஸ் கம்பெனிதான்?"
**பஸ், கார், லொறி எல்லாம்தான். தம்பிக்கு ஊர் எவடமோ?’’
**யாழ்ப்பாணம் அச்சுவேலி’ என்றேன்.
"அப்ப இனித் தோஞ்சு குளிச்சிட்டுப் போகப் பொழுது பட்டுப் போகுமே"
'நான் சைக்கிளில் வந்தநான். எந்த நேரமும் போய்ச் சேரலாம்,' "

அருவியின் அழைப்பு 99
அதன் மேல் அந்தச் சாது மனிதர் "அப்ப சரி தம்பி. எனக்கு நேரமாகிறது. மடத்தில வேறே ஆட்களும் காத் துக் கொண்டிருப்பினம். நான் இனியும் நிற்கக் கூடாது" என்று சொல்லிக்கொண்டு எழுந்துவிட்டார்.
கடைசி ஆளும் எழுந்து போனபின் கேணிக்குள் தன் னந்தனியணுக, தனிக்காட்டு ராசாவாக இரண்டு அந்தமும் ஒரே அந்தமாக நீச்சலடித்துக் கும்மாளம் கொட்டி எழுந்தி ருக்க மணி ஐந்து மட்டிலாகிவிட்டது. படிக்கட்டில் கால் வைத்தபோது தேகம் கிடுகிடுவெனக் குளிரினல் நடுங்கியது. தாமதிக்காமல் ஈரம் உலர்த்திக் கொண்டு கேணிப் பிள்ளை யார் கோவிலிலே திருநீறும் சந்தனமும் தரித்து அதன் பின், பக்கத்துத் தேநீர்க்கடையில் சுடச்சுடத் தேநீர் வாங்கி அருந்தி இரண்டு மசாலவடையும் சாப்பிட்டுவிட்டுத் திரும் பவும் கேணிக் கரைக்கே சுற்றிவந்து அங்கு பூவரசு மரங்க ளின் கீழ்ப் போட்டிருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்து புகையும் வெற்றிலை பாக்குமாகச் சற்று வேளை ஓய்வெடுத்தேன்.
மழைக்காலத்துக் கடல் கொந்தளித்துப் பொங்கி எழுந்து அலைமோதிக்கொண்டிருக்கிறது.
"என்ன இன்னும் நீர் போகவில்லையா?** கேணியில் அறிமுகமான அதே சாது மனிதர்தான் இவ்வாறு வினவி யவராகப் புகைச் சுருட்டும் கையுமாக என்னருகே வந்து அமர்ந்தார்.
**இல்லை, பெரியவர். இப்பதான் கேணிக்குள்ளிருந்து எழுந்துவர மனம் இசைந்தது' என்றேன், வாய்க்குள் ஒரு மெல்லிய சிரிப்புடன்.
** இன்னும் மதிய போசனம் கூட ஆகவில்லைப் போலி ருக்கிறது. சே சே, இந்த வயதில் இப்படியெல்லாம் வயிற் றைக் காயப்போடக் கூடாது. உமக்கு இப்ப என்ன வயதிருக்கும்? முப்பதைத் தாண்டியிருக்குமா? இன்னமும் தனியாள் தானே ? இல்லை..?"

Page 71
100 மனித மாடு
** அப்படித்தான். நான் இன்னமும் தனியாள்தான் பெரியவர். இப்ப பறந்திடுவன் வீட்டுக்கு. அ. நீங்கள் உங்கள் வெளியூர்ச் சீவியம் பற்றிச் சொல்லத் தொடங்கி விட்டுப் பாதியிலே எழுந்து போய்வீட்டீர்களே பெரியவர். ஐயக்கோன் பஸ் கம்பெனியை விட்டு விலகிநீர்கள். அதன் பின் ?" கதைகேட்க நல்ல ‘மூட் ஆக இருந்ததால் இப்படி அவர் விட்ட குறையை ஞாபக மூட்டினேன் அவரும் பாதியில் அணைந்துபோன சுருட்டை நெருப்புக் குச்சி கிழித்து மூட்டிக்கொண்டே என்னை ஒருக்கால் ஏற இறங்கப் பார்த்து விட்டுப் போசலானர்.
**நான் ஐயக்கோன் பஸ் கம்பெனியை விட்டு விலகி யதே ஒரு கதை. அதற்கெல்லாம் நிமித்த கர்த்தாவாக இருந்தவள் கேணிக்கரையில் அப்போது பார்த்தீரே அவளு டைய தாய்தான். அவவுடைய அஸ்திதான் என்னைத் திரும் பவும் ஊர் கொண்டுவந்து சேர்த்தது. இன்றைக்கு ஒரு மாதம் முப்பது முப்பத்திரண்டு நாள் ஆகுது. எங்கள் முப் பது ஆண்டுக் கதை முடிந்தது. இதே நீருற்றில் நீராடி விட்டு நின்றபோதுதான் அரும்பு மலராக முதலில் அவளைச் சந்தித்தேன். இதே கீரிமலையில் கந்தசுவாமி கோவில் யாத் திரைப் பாதையில்தான் எங்கள் வாழ்க்கைக் கதையின் முதல் அத்தியாயம் எழுதப்பட்டது.
காலஞ்சென்றவ ஒரு சின்னப் பொடிச்சியாக, தன் சிறிய தாய் முறையான ஒரு பெண்ணுடன் கூட ஐப்பசிக் கந்த சஷ்டியின் போது ஒருநாள் கீரிமலையில் தீர்த்தமாடிவிட்டு மாவிட்டபுரம் கிந்தசுவாமி கோவிலுக்கு நடந்து போய்க் கொண்டிருந்தார். இன்றைக்குப்போல் அல்ல, அந் நாளில் ஐப்பசி வெள்ளி, கந்தசஷ்டி தினங்களில் கீரிமலை மாவிட்டபுரத்தைச் சுற்றிவர உள்ள ஊர்களில் வசிப்ப வர்கள் விடியற் சாமத்தோடு எழுந்து கூட்டம் கூட்டமாகக் கீரிமலை போய்த் தீர்த்தமா டிவிட்டு அதன்பின் மாவிட்டபுரம் கோவிலுக்கு உதயபூசை காணப் போய்விடுவார்கள். இந்த முருக வழிபாட்டில் அடை மழை, பெருவெள்ளம் ஒன்று: பார்க்காமல் பெண்கள்தான் பெரும்பகுதியாக முடி நிற்பார்கள், ஈரச் சேலையுடனே முருகனிடம் ஒடி ஒடிப்

அருவியின் அழைப்பு 0.
போவார்கள். அப்பொழுது நான் பஸ் கண்டக்டராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அன்றைக்குக் கோவி இக்குப் போகும் பாதையில் நடுவழியில் திடீரென்று மழை பிடித்துக் கொண்டது. கந்தசஷ்டியுடன் சேர்ந்தாற்போலத் தீபாவளியும் அன்றைக்குத்தான். கோவிலுக்கு நடந்து போனவர்கள் நடுவழியில் மழை உளற்றத்தொடங்கவே ஒபி ஒதுங்க இடமில்லாமல் தவித்தார்கள். தீபாவளிப் Hதுப்பாவாடை சட்டையுடனே ஒரு சிறுபிள்ளை மழையில் நனந்ததைக் கண்டு டிரைவர் பஸ்ஸை நிற்பாட்டி அவ ளோடு கூடப்போன அத்தனைபேரையும் பஸ்ஸில் ஏற்றிக் கொள்ளச் சொன்னர். '
‘பஸ் டிரைவர் பிள்ளைகுட்டி பெற்ற குடும்பகாரணு யிருக்க வேண்டும்" இது பெரியவர் கூறும் கதையில் என் ஈடுபாட்டைக் காட்டுவதற்கு எழுந்த குறிப்புரை. ‘'என்னவோ அவருடைய அப்போதைய மனநிலை அப்படி யிருந்தது. கோவிலடிச் சந்தியில் எல்லோரையும் இறக்கி விட பஸ் நின்றது. அந்தச் சிறுமி இறங்கியபோது 'உடுத்த கோடி எல்லாம் மழையிலே நனஞ்சு போச்சே' என்று சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன். சிறிய தாய்க்காரி அவளைச் செல்லப் பார்வை பார்த்து, கீழே இறங்கு வதிற்கு அன்பாகக் கைகொடுத்தாள். பன்னிரண்டு அல்லது பதின்மூன்று வயசு தானிருக்கும். சிறு பெண்ணுகவிருந்தா இம் திருநீற்றுப் பூச்சும் சந்தனப் பொட்டும் முழுகிய தலேயுமாகப் புதுப்பாவாடை சட்டையில் நிறை கவர்ச்சி யுடனே பொலிந்தாள். அந்த வயதில் அத்தனை கவர்ச்சி அபூர்வமாயிருந்தது எனக்கு.
**ஆச்சி எங்கேயிருந்தணை வருகிறீர்கள் ?? தெரிந்து கொள்ளவேண்டும் போலிருந்தது.
"நாங்கள் கிட்டத்தான். சித்திரமேழி' என்று பதில் கிடைத்தது.
'மழையில் நனையாமல் மெதுவாக ஒடிப் போங்களனே கோவிலுக்கு" என்றேன். பஸ் உறுமியது.

Page 72
02 மனித மாடு
உறுமிய பஸ்ஸையும் என்னையும் திரும்பிப்பார்த்து * 'மெதுவாக ஓடிப் போகட்டாம்' என்று சிறிய தாய்க் காரியிடம் சொல்லி இரண் டு பேருமாகச் சிரித்துக் கலகலத் தவர்களாகக் கூட்டத்தோடு கலந்து ஓடி மறைந்தார்கள்.
• சித்திரமேழி' என்று என் வாய், அல்ல என்மனம் ஒருக்கால், தனக்குள்ளாகச் சொல்லிக்கொள்ள, பஸ் சந்தியில் திரும்பிப் பட்டணம் நோக்கிப் பறந்தது.
இது சம்பவித்த மூன்று அல்லது நான்கு ஆண்டு சுளுக்குப்பின் பள்ளிக்கூட பஸ்ஸில் சாரதியானேன். தினமும் காலை ஊர் ஊராகப் போய், பிள்ளைகளை ஏற்றிக் கொண்டு இராமநாதன் கல்லூரியில் விடவேண்டும். மறுபடி மாலையில் அத்தனை பேரையும் அவரவர் வீட்டு வாசலில் கொண்டுபோய் விடவேண்டும். இந்த பஸ்ஸில் வேலைபார்த்த நாளில் சித்திரமேழிப் பக்கம் போகும் வாய்ப்புக் கிட்டியது. எப்பொழுதோ கோவிலுக்குப் போன போது பார்த்த அதே சிறுமி இன்று இந்த நாலு ஆண்டுகளுக்குள்ளாக ஒரு மயிற் பேடாக அடையாளம் கண்டு கொள்ள முடியாதபடி வளர்ந்து வனப்புக் கொழிக்க நின்ருள். என் பஸ்ஸிலேதான் தினமும் கல்லூரி சென்ருள். பஸ்ஸில் தினமும் பள்ளிக்கூடம் சென்ற அத்தனை பேர் மத்தியிலும் அவள் சித்திரப் பாவையென, பருவத்தின் லவித லாவண்யம் முழுவதும் பொலியத் தணிக் கவர்ச்சி யுடனே சோபித்தாள். இந்த நாலு ஆண்டு பஸ் சாரத்தி யத்தின் போது அவள் வாழ்க்கையையும் ஒரு பாதைக்கு இழுத்துச் சென்று நிர்ணயப்படுத்திவிட்டேன் போல் தோன்றிற்று.
“என்ன ஒவ்வொரு நாளும் விடிய எழுந்து கீரிமலைக் கேணிக்குப் போய்த் தோஞ்சுவிடுவீரா?' என்றேன் ஒரு தாள் அவளிடம். அதற்கு ஒரு சிரிப்புத்தான் பதிலாகக் கிடைத்தது. அந்தச் சிரிப்பிலே நான் கிறங்கிப்போனேன். அதன்பின் அவள் நோக்கு அர்த்த புஷ்டியுடையதாகவிருந்தது. சில காலத்தில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு யாழ்ப்பாண

அருவியின் அழைப்பு 103
நகரில் எங்கேயோ வேலை பார்க்கத்தொடங்கீனுள். அதன் பின் நானும் பள்ளிக்கூட பஸ்ஸில் வேலைபார்ப்பதைவிட்டு பிரயாண சேவை பஸ்ஸுக்கு மாறினேன்.
இப்படியாக வளர்ந்த உறவுதான் நாளடைவில் இரு பேரையும் ஊரைவிட்டே விரட்டிவிட்டது. பஸ் கம்பெ னிக்கு என்னைப்பற்றி முறைப்பாடு போய், எனக்கு வேலை போச்சு. அவளுக்கும் சங்கடமான நிலைமை. "எங்கேயாவது ஒடிப் போய்விடுவோம்' என்ருள் ஒரு நாள். நானும் உடன்பட்டேன். கிளம்பிவிட்டோம். யாழ்ப்பாணத்தை விட்டு வெளியூர் போய் நான் புதிதாக வேலை தேடிக் கொண்ட பிற்பாடுதான் அங்கு பதிவுத் திருமணம் செய்து கொண்டு கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகப் பிறந்து வளர்ந்த நாட்டை எட்டியும் பார்க்காமல் காலத்துக்குக் காலம் பல ஊர்களிலும் சென்று வசித்தோம். நமது இரு பேருக்கும் நினைவுச் சின்னமாக இருக்க ஒரே ஒரு பெண் குழந்தை தான் எங்கள் வாழ்வில் எஞ்சியது. அவளைத் தான் :பார்த்தீரே கேணிக்கரையில்’’.
இவ்வாறு கூறிவிட்டு எப்பொழுதோ அணைந்து போயிருந்த சுருட்டை எடுத்து மீண்டும் பற்றவைக்கலானர்.
**ஆம், பார்த்தேன். இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னலும் போய்க் கற்பனை செய்துபார்த்தேன். அப்படி >ன்றும் நடக்கக் கூடாத புதுமையாகத் தோன்றவில்லை. இன்றைக்கெல்லாம் இது மாதிரிக் காரியங்களுக்காக உலகத் திலிருந்தே அடியோடு ஒழிந்து மறைந்து போய்விடுகிறர் களே, பெரியவர்' என்றேன். 'இவ்வளவு துணிச்சல் மிக்க கதையா உங்கள் வாழ்க்கை? பார்த்தால் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போலப் பரம சாதுவாகத் தோன்று கிறீர். கண்களைக்கூட நம்பக்கூடாதுதான். இந்த நீருற்று இப்படி இன்னும் எத்தனை கதைகள் சொல்லுமோ??? மன துள் எண்ணியவணுக என் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். ஆறு மணி கட்டியது. தலைக்கு மேல் மின் விளக்குப் பளிச் சிட்டது. பெரியவர் திரும்பித் திரும்பி யாரையோ எதிர் பார்ப்பதுபோல நோக்கலானர். நான் எழுந்துசென்று சைக்கிளை உருட்டிக்கொண்டு அவர் முன் நடந்தேன்.

Page 73
104 மனித மா',
"என்ன ஆயத்தமா, போகப்போகிறீரா ?" *ஓம் பெரியவர்.’
*சே, எவ்வளவு நேரமாகிவிட்டது. வாருமன் மடத் துக்குப் போய்த் தேநீர் குடித்துவிட்டுப் போகலாம்.'
யாதொன்றும் கூமுமலே சைக்கிளைப் பிடித்தபடி நின்றேன்.
** என்ன முயற்சி நடக்கிறதோ ?"
"நான் இ. போ. ச. வில் வேலை பார்க்கிறேன் பெரி யவர். இன்று எனக்கு ஒய்வு நாள்.'
"சரி சரி. பின்னே போய் வாரும்.'-சொல்லியவராய்ச் சரேலென ஆசனம் விட்டெழுந்தார் அந்தச் சாது மனிதர்.
என் சைக்கிள் வீடு நோக்கிப் பறந்தது.
-ஈழநாடு, 1-5-196 /

18
கலைஞனின் சொர்க்கம்
“தபால் எங்கேயிருந்து வந்திருக்கிறது? வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டே யிருக்கிறீர்களே ?'
"எனக்கு என் அப்பா அம்மா எழுத வாசிக்கக் கற்றுக் கொடுக்கவில்லை. அதனல்தான் சும்மா பார்த்துக்கொண்டே யிருக்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில் கண்களில் கண்ணிர் பொலபொலவென்று சிந்தும். அப்பொழுது எங்கிருந்தோ இழவு ஒலைதான் வந்திருக்கிறதாக்குமென்று நீ உடனே ஒப் பாரி வைத்து ஊரைக் கூட்டிவிடலாம்"
"இதென்ன பேச்செல்லாம் பேசுகிறீர்கள்? ஒன்று கேட் டால் ஏட்டிக்குப் போட்டியாக ஒன்பது சொல்லுகிறீர்களே'
"பின்னே, என்ன உன் கேள்வியும் கிண்டலும்? பார் இந்தக் காகிதத்தை யாரிடமிருந்து வந்திருக்கிறது, தெரி கிறதா?”
* ' எங்கே, என் கையில் கொடுங்கள். அடேயப்பா காருக்குறிச்சி அருணுசலம்பிள்ளை, கோவில்பட்டி, தென்
னிந்தியா என்று எத்தனை பெரிய எழுத்திலே விலாசம் போட்டிருக்கிறது.*
'காருக்குறிச்சி அருணுசலமென்ருல் சாமான்ய பேர் வழியா? அவருக்கு இன்றைக்கிருக்கும் புகழுக்கும் கீர்த்திக்கும் ???
Lp 14

Page 74
J 06 மனித மாடு
*" "சிங்காரவேலனே? பாட்டுக்கு வாசித்தது இன்றும் காதிலே கிண்ணிட்டுக்கொண்டிருக்கிறதே. மாரியம்மன் கோவில் திருவிழாவில், ஊரிலே நடைபெறும் கல்யாணங் களில், ஒலிபெருக்கியில், ரேடியோவில் எங்கும் "சிங்கார வேலனே? சிங்காரவேலனே' என்று சில மாதங்களாக ஒரே முழக்கமாயிருந்ததே. நீங்கள்தான் அவர் நாதசுரம் வாசித்த படத்தைக் கூட்டிக்கொண்டுபோய்க் காட்டி நீர்களே ???
'அந்த ஒலி இசைத்தட்டுமட்டும் லட்சக்கணக்காக விற் பனை ஆயிற்ரும். ஒன்றுக்கு மூன்று கார், அரண்மனைபோலப் பங்களா, வாரத்திலே ஒருக்கால் மதருஸ் சவாரி, கோவில்பட்டி ஜமின்தாரே ஆகிவிட்டார் இந்தியாவிலே போய்ப் பார்த் தால் அல்லவோ தெரியும். காருக்குறிச்சி அருணசலம்பிள்ளை வருகிருர் என்ருல் கூட்டம் வழிவிட்டு ஒதுங்கி நிற்கும். அவர் வாசிக்கப்போகிறர் என்ருல் அந்த இடத்தில் பத் தாயிரம் நூருயிரம் என்று திரண்டுவிடும். சீமான், அந்த ளவுக்கு உயிரைக் கொடுத்து அபாரமாக வாசிக்கிருர் என் னென்ன அபூர்வ வேலைப்பாடுகளைக் கையாளுகிருர், நாதஸ் வரத்திலே மற்ற வித்துவான்கள் கனவு காணவே முடியாத அத்தனை அசுர சாகசம். எல்லாம் முயற்சி, பிரயாசை, தன்னை மறந்த ஈடுபாடு.”*
'காகிதத்திலே என்ன எழுதியிருக்கிருர்.?"
தம்பி அவர்களுக்கு ஆசீர்வாதம். கொழும்புக்கு ஆடிவேலில் வாசிக்க ஏற்பாடாகியிருக்கிறது. யாழ்ப் பாணம் தம்பிதான் தவில் வாசிக்கவேணும் என்று கோவிலாரிடம் சொல்லி ஏற்பாடு செய்திருக் கிறேன். குறித்த நாள் பிசகாமல் கொழும்பு வந்து சேரவேண்டியது. மற்றவை நேரில்,
'அடே, அதிருஷ்டம் அடித்திருக்கிறது போலிருக்கிறதே. என்னையும் கொழும்புக்குக் கூட்டிப் போகிறீர்களா?'
* நீ என்ன செய்வாய், சுதிப்பெட்டி போடுவியா?*
**சும்மா போங்கள். உங்களுக்கு நெடுகிலும் பகிடி சேட்டைதான். ஆடிவேலுக்கு வந்தால் கொழும்பிலே அக்

கலைஞனின் சொர்க்கம் 107
காவையும் பார்க்கலாம். அத்துடனே ஆடிவேல் தரிசனமும், காருக்குறிச்சியின் சந்திப்பும் எல்லாம் ஆகும் என்ருல்.’
"மஞ்சுளா நான் சொல்கிறதைக் கேள். கொழும்புக்கு நீ இப்போ வரவேண்டாம். திருக்கார்த்திகைக்குக் கதிர் காமம் போவோம். அப்பொழுது உன் அக்காளையும் பார்த் துக்கொள்ளலாம். காருக்குறிச்சியாரை நான் இங்கே எங்கள் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வருகிறேனே."
*எல்லாம் புழுகு, வெறும் புருடா.'
'நீ என்ன பந்தயம் கட்டுகிருய்? நான் கூட்டிக் கொண்டு வரத்தவறிஞல்."
* பார்ப்போமே உங்கள் மதிப்பையும் நடப்பையும். ? ?
மூர்த்தி, அதன்பின் பிளேன் புக் பண்ணி, காத்திருத்து சில தினங்களில் நாள் பிசகாமல் ஆடிவேலுக்குத் தவில் வாசிக்கப் பறந்து போனர்
பத்துத் தினங்களாகியிருக்கும். ஒரு தினம் மூர்த்தியை ஒரு தவில் கச்சேரிக்கு அழைப்பதற்காக அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். 'அவர் கொழும்புக்கு ஆடிவேலுக்குப் போய்விட்டார். இன்னும் இரண்டொரு நாளில் திரும்பி விடுவார்' என்று பதில் வந்தது. அது விஷயம் எனக்கு மறந்து போயிருந்தது. இன்னும் ஒருநாள்தானே சாத் திருப்போம் என்று எண்ணியவணுய் வந்த வழி நோக்கித் திரும்பினேன். வெளிப்படலையில் கால் வைத்த சமயம் இரண்டு பெரிய கார்கள் மின்வேகத்தில் வந்து வீட்டு வாச லில் நின்றன. இரண்டு கார்களிலும் ஆட்கள். முன்னதி லிருந்து மூர்த்தி குதித்தார். அவர் பின்னலே மூர்த்தியை விடப் பத்துமடங்கு உயரத்திலும் தோற்றத்திலும் பரும னன ஒர் ஆள் இறங்கினர். மேலும் இரண்டொருவர் கூட இறங்கினர்கள். இவர்கள் யாராயிருப்பார்களோ? கொழும்புக்கு மேளம் வந்த ஆட்களாயிருப்பார்களோ? என எண்ணியவனுக நான் ஒதுங்கி வழிவிட்டுக்கொடுத்து நின்று, பிறகு இவர்கள் பின்ஞல் உள்ளே திரும்பினேன்.

Page 75
108 மனித மாடு
வீட்டு வாசலில் கால் வைத்தபோதே, 'மஞ்சு இதோ: firri, u irri வந்திருக்கிருர்களென்று. ssi கனவுகண்ட வித் துவான் அண்ணு வந்திருக்கிருர்." மூர்த்தி உரத்துச் சத்த மிட்டுப் பேசியவாறே, அழைத்துச் சென்றவர்களுக்கு இருக்கை அளித்து உபசரித்துக்கொண்டிருக்க அவர் இளம் மனைவி ஓடோடியும் வந்தார்.
“இவர்தான் காருக்குறிச்சி அண்ணு' " மூர்த்தி தன் மனைவிக்கு அறிமுகப்படுத்திகுர்,
மஞ்சு இரு கையும் கூப்பி 6u石矿场函Lö செலுத்தினர். காருக்குறிச்சியார் இருக்கைவிட்டு எழுந்து சென்று மஞ்சுவை
ஒரு பத்து நிமிடமே ஆகியிருக்கும். 头应ör L96r கொழும்புக் கார்கள் கிராமத்திலிருந்து திரும்பி விர்ரென்று
'மஞ்சு, இப்போ என்ன சொல்கிருய் ? என் காவிலே விழுகிருயா இல்லையா ?? : அதிதிகளை வழியனுப்பிவிட்டுத் திரும்பிய முர்த்தி இவ்வாறு வெற்றிக்குரல் எழுப்பியவாறு உள்ளே நடந்தார்.
அப்பொழுது வீட்டு 6)յո՞ց: 696) நின்றபடி மஞ்சு அளித்த ஒரு புன்முறுவலில் அவரது வெற்றிக் கிறுக்குப் பொடிப் பொடியாகிப் போயிற்று.
-ஈழநாடு, 25- 0-1967

19
ஒரே ஒரு வோட்
'பிள்ளைவாள், கொடி எப்போ?*
நாராயணபிள்ளையிடம் ஒரு கொடி ரோஜாக்கன்று கேட்டிருந்தேன். பிள்ளைக்குக் காது கொஞ்சம் மந்தம். அத்துடன் ஞாபகமறதியும். அதனுல்தான் அவரைப் பார்த்த போது எனது தேவையை ஞாபகப் படுத்துமுகமாகக் கேட்டேன். தெருப்படலையில் பூச்செடிகளுக்குத் தண்ணீர் அள்ளி ஊற்றிக்கொண்டு நின்றவர் ஓர் இருபது வருடங் களுக்கு முன்பாக வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் நிழல் வடிவங்களின் வாயசைப்பும் பேச்சும் ஒத்துப் போகாமல் ஒன்றுக்கொன்று முரண்பட்டதுபோல என் முகத்தைப் பார்த்து, என் வாயசைப்பைத் தவருகப் புரிந்து கொண்டவராக, 'பிள்ளையார், கொடியா, அதற்கு இன் னும் பத்து நாளிருக்கு’ என்ருர் கலண்டர் பாஷையில்.
'சரிதான், சவத்துக்கு அது மறந்துபோச்சுப் போலி ருக்கு. இல்லையென்றலும் "அதிலே நிறைய முள்ளடா தம்பி நீ எப்படிக் கொண்டு போகப்போருய்?" என்று ஏதாவது சாக்குப்போக்குக் கூறித் தட்டிக் கழிக்கும். ரோஜாக்கொடி தொலைந்தால் போகுது. சிறிதுவேளே ஏதும் அரட்டையடிக் கலாம்' என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டு அடுத்து, தேர்தல் பேச்சை எடுத்தேன்.

Page 76
110 மனித மாடு
* பிள்ளைவாள். நீங்கள் எப்போ கொடி நாட்டப்போகி றியள் ?? என்று மூன்று கட்டை பாரி சுருதியில் சத்தம் வைத்து அவரது ஓட்டைச் செவிக்குள் ஒரு பாணம் தொடுத்தேன்.
'என்ன கொடி கொடி என்று கத்துகிருய் ஆர் கொடியை ஆர் அறுத்தது? ஆர் குடி ஆரால் கெட்டது? ஆர் குடி கெட்டால் உனக்கென்ன? நீ குடி மிளகு சாற் றிலே. போடா போய் உன் வேலையைப்பார்."-பிள்ளை வாள் சீறினர்.
எங்கள் பேச்சை மறைவிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த வாண்டுகளுக்கு ஒரே சிரிப்பு. காது மந்தமானுலும் பார்வை மங்கிப் போனலும் கையும் காலும் இன்னும் முடங்கவில்லை. பிள்ளைவாளுக்கிருந்துவரும் நெடுங்காலத் தேர்தல் ஆர்வம் பற்றிய உள் ரகசியம் எனக்குத் தெரியுமாதலால் அவர் வாயை மேலும் கிண்டிக் கிளறினேன் மெல்ல.
எந்த நிலையிலும் என்ன பாடுபட்டேனும் தேர்தல் வாக்களிப்புத் தினத்தன்று உடுத்துப்படுத்திக்கொண்டு வாக் குச் சாவடிக்கு ஜோடி ஜமாய்த்துக் கிளம்பிவிடுவார். அத னல் தேர்தல் பாணத்தை அவரிடம் நேரடியாகத் தொடுக்க நான் துணிவதில்லை.
"தோணிக்கு எப்போ கொடிமரம் நாட்டிப் பாய்ச் சீலை கொளுவப் போகிறீர்கள்? காற்று வாய்ப்பாக வீசுகி கிறதல்லவோ?’ என்றேன்;
காதைத் திருப்பி என் பேச்சைக் கிரகித்துக்கெண்ட கிழவன் கொஞ்சமும் விட்டுக்கொடுக்காமல் தன் அந்தரங் கத்தைக் காட்டிக்கொள்ளாமல் என் பாஷையிலேயே பதி லளித்தார்.
தோணிதானே, ஒட்டை விழுந்துபோய்க் கிடக்க டாப்பா' என்ருர் சலிப்புற்ற முகபாவனையுடன்.
அதஞலென்ன. ஒட்டையை அடைத்துக்கொள்கிறது தானே. அதற்குமேல் பார்க்கவேண்டிய காரியத்தைப் பார்க்

ஒரே ஒரு வோட் 11
கிறது' என்று கூறியதற்கு "காற்று இப்போ எப்படி வீசு கிறது, வெளியே போய்ப் பார்த்தாயா?" என்று பதிலுக்கு என்னையே கேட்டு வைத்தது கிழம்.
"காற்றுச் சுழன்றடிக்கிறதணை அப்பு' என்றேன்.
"சோழகம்தானே. அப்படித்தான் அது பார்வைக்குத் தோன்றும், உக்கிரமாக வீசுகிறபடியால் மரம் மட்டைகள் நிகரி சுழன்று ஆடும். காற்று ஒரே காற்றுத்தான். ஆரம் பத்தில் தென்றலைப்போல் இதமாக வீசும், போகப்போக உக்கிரம் கொள்ளும். வானத்துக்குப் பயப்படாமல் பாய் கொளுவலாம். அள்ளிக்கொண்டு போகும். அனுபவ வாக் காகக் கிழவன் சொல்லிற்று.
சமயமறிந்து செய்யவேண்டிய கருமத்தைக் கிழவன் சீராகச் செய்யத் தப்பாது. யார் பேச்சுக்கும் காது கொடுக்காத வகையில் தோணியில் வீழ்ந்த ஒட்டையை அடைத்துவிட்டுப் பாய்மரம் நாட்டி, சீலை கொளுவிப் பிறப் புரிமையை நிலைநாட்டும் பயணம் "டன் டனர்’ என்று நடக்கத்தான் போகிறது.
என்னென்ன அபசகுனமோ அசம்பாவிதமோ குறுக் ட்ெடாலும் வானமே இடிந்து தலைமேல் வீழ்ந்தாலும் கூட அது காரியம் வழுவாமல் நிதானமாக நடக்கும். கொடி யென்ன. அதற்குமேல் குடை ஆலவட்டங்களுடனேயே அலுவல் கன சீராக வெகுஜோராக நடைபெறும், திரை கடலோடியும் திரவியம் தேடு என்ற முதுமொழியிலே கிழவ னுக்கு அசாத்திய நம்பிக்கை. பிள்ளைவாளின் கொடிக் கப்பலே, அதுதான். எதற்கும் அவர் மனத்துள் கிடந்து உரு ரூம் பிள்ளையார் கோவில் தேர் முடிய வேண்டும், பிள்ளை யார் கோவில் கொடியேறிவிட்டாலே அனுதினமும் பிள் ளையாரே, பிள்ளையாரே என்று ஜப தபங்கள் எல்லாம் பிரமாதப்படும். விரதம். உபயம், ஆசாரம், அநுஷ்டானம் ஒன்றும் தப்பாது. தேர்த்திருவிழா அன்று தேர் இருப்புக் குலைந்து வீதிவலம் வந்து ஈசானத்துக்குத் திரும்பும்வரை தரிசனமும் நடைபெறும். அதன் பின், 'பிள்ளையாரும்

Page 77
H 12 மனித மா(1.
பூதமும்தான். என் கால்களின் உதவியினல் அல்லவ! வேட்டைக்காரர்களிடம் அகப்பட்டுக்கொள்ளாமல் வேடி பாய்ந்தேன்' என்ற முயலின் கதைதான்.
இதன்பின், பிள்ளைவாள் தமது சொந்தக் கொடி பவனி விமரிசைக்குமேல் பிறருக்குக் கொடியும் விளக்கும் காட்டி றெயில்வே குரஸிங் கேட் காவற்காரன் (யாழ்தேவியும் மெயிலும் போய்வரும் சமயங்களில்) சேவகம்கூடச் செய்யத் தலைப்பட்டு விடுவார். அங்கீகரிக்கப்பட்ட பொதுசன சுவாமி யாருக்கு இதுகூடச் செய்யாமலிருக்கலாமா ?
முருகனிடமும் பிள்ளைவாளுக்குச் சிறிதே பயபக்தி உண்டுதான். கொட்டில் முருகன், கோபுர முருகன் இருபேரிடத்தும் சமநீதியான பக்தி செலுத்துவார். கோபுர முருகனைத் தரிசிக்கப்போனல் வீட்டிலே தலைமேல் தேங் காயிம் தென்னைமட்டையும் விழும் ஆபத்துண்டு. அதனல் கோபுர முருகன் வழிபாடு பிள்ளைவாளைப் பொறுத்த மட்டில் தற்போதைக்குப் பின்போடப்பட்ட சமாச்சாரம் ஆகியிருக்கிறது. தென்னைமரத்தின் உச்சியிலே ஏறி நிற்கும் கணபதியிடம் ' என்னடா கணபதி உங்கேயிருந்து பார்த் தால் முருகன் கோவில் கோபுரம் தெரிகிறதாடா?' என்று கேட்பார். அவனே 'சீமெந்துத் தொழிற்சாலை முழுக்கவும் நல்லாகத் தெரிகிறது" என்று சொல்லுவான். பிள்ளை வாளுக்கு நாடி விழுந்துவிடும்.
இதுமாதிரிப் பலவகைப்பட்ட சிக்கல்கள் மனத்தைச் சுமையாக்க இரகசிய வாக்களிப்பு முறை ஏற்படுத்திய வர்களை மனதார வாழ்த்திக்கொண்டு வாக்களிப்பு நாட்களை எண்ணிக் கணக்கிட்டுக் கொண்டிருந்த பிள்ளைவாளுக்கு மின்னமல் முழங்காமல் இடி இடித்ததுபோல் ஒரு செய்தி தெரிய வத்தது. அதைக் கேள்விப்பட்டபோது நம்பமாட் டாமல் தமது கண்களால் நேரில் பார்த்தே உண்மையென்று தெரிந்துகொண்டார்.
தேர்தல் வாக்காளர் இடாப்பிலே அவரது பெயரையும் அவரது அன்பு மனையாள் பெயரையும் இம்முறை காண வில்லை. ஏனே, எவ்விதமோ இரண்டு பெயர்களும் விடு பட்டுப் போயிருந்தன.

ஒரே ஒரு வோட் 3
பாவம், அவர் கட்டிய மனக்கோட்டைகள் எல்லாம் ஒரு கணம் பொலபொலவென்று இடிந்து கண்முன்னே தரை மட்டமாகிக் கிடந்ததைப்போல அவ்வேளை அவர் பார்வை சூன்ய வெளியிலே ஒடி நிலைத்தது.
"ஐயா வாக்காளரே ! உங்கள் பொன்னன வாக்கைத் திரிகரண சுத்தியாக நமக்களியுங்கள்-என்ற சுலோகத்தைத் தாங்கிய தேர்தல் விளம்பரத் துண்டுப் பிரசுரம் ஒன்று அது சமயம் அவர் கவனத்தைத் திருப்புவதற்கு அவரது காலடியிலே ஏங்கித் தவம்கிடந்தது.
o O
do
பிள்ளைவாள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்று மனதுக்குள் நிச்சயப்படுத்திக் கொண்டிருந்தாரோ அந்த அபிமான வேட்பாளர் ஒரே ஒரு வாக்கிஞல் தேர்தல் வெற்றியை இழந்துவிட்டாரென்று பின்பு தெரிய வந்த போது கிழவன் வாயைப் பிளந்துவிட்டது.
தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாள் காலை கிழவ ஞரது மூத்த பேரன் அவரை அணுகி "தாத்தா உங்கள் இருபேரின் வாக்குகளும் நேற்றுப் பதிவாகியிருக்கின்றன’’ என்ருன்.
*" என்னடா புரளி பேசுகிருய்? எங்கள் இரு பெயர்களும் தான் இம்முறை வாக்காளர் இடாப்பிலிருந்து விடுபட்டுப் போய்விட்டதே. யாரோ விஷமம் பண்ணித் தொலைத் திருக்கிமுனுகள். எங்கள் வாக்கு எப்படிப் பதிவாகியி ருக்கும் என்று டூப் அடிக்கிருய்' - கிழவன் கேட்டுக் கொண்டே மெல்ல அவனை அணுகியபோது, 'அதுக் கெல்லாம் வேலேத்தனம் இருக்குத் தாத்தா, அதன்படி வாக்களிப்பு நடைபெற்று விட்டது' என்ருன் பேரன்.
'அடடே, பொல்லாத பயலாயிருக்கிறியே. ஆனல், அவர்கள் யாருக்கு வாக்களித்தார்களோ? அது உனக்குத் தெரியுமாடா தம்பி?'-கிழவன் அங்கலாய்ப்புடனே கேட்ட தற்குப் பேரப்பயல் அளித்த பதில் அவருக்குத் திகைப் பூட்டுவதாயிருந்தது.
էp 15

Page 78
114 மனித மா
அவரது வாக்கும் அவர் மனைவியின் வாக்கும் அவர் தமக்குள் நிச்சயித்திருத்த வேட்பாளருக்கு எதிர் விரோதி வேட்பாளருக்கே செலுத்தப்பட்டிருந்தன.
ஒரே ஒரு வோட்டினல் தேர்தலை ஜெயித்தவர் பிள்ளை வாளின் பெயரினல் அளிக்கப்பட்ட கள்ள வோட்டினல் தான் வெற்றி பெற்றதை நினைக்க நினைக்கப் பிள்ளைவா ளுக்குத் தலை "கிரி'ரென்று சுழன்றது. சின்னப்பயல் அவர் முன் நிற்காமல் பறந்துவிட்டான்.
-ஈழநாடு, s0-5-1970

வெளிச்சம்
‘வீடு நிறைந்த பொருள் யார் கொண்டுவந்து சேர்ப் பீர்கள்?’ என்ருர் ஒருநாள் குருதேவர் துரோணுச்சாரியார். *செய்கிருேம் குருதேவா" என்று அவர் விருப்பத்தை நிறைவேற்றத் துணிந்தார்கள் கெளரவ, பாண்டவர்கள். வில்வித்தைப் பயிற்சி நடைபெற்றுக்கொண்டிருந்த காலம்.
துரியோதனுதியர் நூறுபேரும் திசைக்கு ஒருவராகச் சென்று ஆளுக்கொரு தலைச்சுமை வைக்கோல் கொணர்ந்து போட்டு வீட்டை நிரப்பிஞர்கள். இடைவெளியே தெரி யாதபடி தரையிலிருந்து முகடுவரை அவர்கள் கொணர்ந்து சேர்த்த பெருந்தொகை வைக்கோல் திணிக்கப்பட்டது.
சாயங்காலம் குருதேவர் யாபேரினதும் சாதனையைப் பார்க்கச் சென்ருர், துரியோதஞதியரின் செயலைப் பார்த்து *அடேயப்பா, இவ்வளவு வைக்கோலையும் ஒரே நாளிலா கொணர்ந்து குவித்தீர்கள்?’ என்று ஆச்சரியப்பட்டு, அதன் பின் அமைதி நிலவிய பாண்டவர் இல்லம் சென்று பார்த் தார். அங்கு அவர்கள் வீட்டினுள் வரிசை வரிசையாக விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன. அவ்விளக்குகளின் ஒளி வீடெங்கும் நிறைந்திருந்தது.
‘பாண்டவர்கள் புத்திசாலிகள், விவேகிகள்." குரு தேவர் மனதுக்குள்ளே எண்ணி மகிழ்ந்து அவர்களை வாழ்த்தினர்.

Page 79
II 6 மனித மாடு
குருக்களின் மகன் விளக்கேற்றி வைத்து அன்று பள்ளிக் கூடத்தில் படித்த பாடத்தை மீண்டும் நினைவுபடுத்தி மனனம் செய்தபின் கண்களை உறக்கம் தழுவ, புத்தகத்தை மூடிவைத்து வீட்டு எழுந்துபோய்ப் படுத்துக் கண்ணுறங்கி விடுகிருர். அவர் வாசித்த கதையின் உட்பொருள் பெரிய குருக்களின் மனதில் வெகுநேரம் நின்று சுழன்றதனுல் அவர் கண்ணுறங்க நெடுநேரமாயிற்று.
பல ஆண்டுகளுக்கு முன், நாற்பது ஆண்டுகளுக்குக் குறைவாயிருக்கும். அப்பொழுதெல்லாம் அவ்வூருக்கு மின் சார வெளிச்சம் கிடையாது. நகரத்துக்குப் பதினைந்து மைல் தூரத்தில் - ஆமாம் தாரத்தில்தான்-அக்கிராம மிருந்ததால் பட்டணம் டஸ்கூட இரவில் வராது. எப் பொழுதாவது அபூர்வமாகக் கார் அவ்வூருக்குள் ஓடினுல் அதுதான் கிராமத்தவர்கள் கண்ட மின்சாரத்தின் விந்தை. வண்டில்கள், புயல் லாந்தர் விளக்குகளைக் கீழே இரு சக்கரங்களுக்கும் நடுவே கட்டித் தொங்க விட்டுக்கொண்டு போகும். பாதசாரிகள் காவோலைச் சூள் கொளுத்திக் கொண்டு போவார்கள். நூறிலோ ஆயிரத்திலோ ஒருபேர் மின் பொறி விளக்கு எனப்படும் டோர்ச் லைட் வைத்திருந் தார்கள். அதை வைத்திருந்தவர்களிற் சிலர், பலர் கோழிக் கள்ளராகவும் வேட்டைக்காரராகவும் புகழ் பெற்றுவிட்ட தனல், மற்றவர்களும் கூசாமல் அதனைப் பாவிக்கத் தயங்கி ஞர்கள். ஒரே வெட்டவெளியானதினுல் இரவிலே புதர் பற்றைகளிலும் மரம் கொடிகளிலும் மின்மிணிப் பூச்சிகள் தீபாலங்காரம் செய்துவிட்டிருப்பது பார்ப்பதற்கு அழகா யிருக்கும். இவை தவிர வானத்துத் தாரகைக் கூட்டம் கண்சிமிட்டி உமிழும் ஒளி, வளர்பிறைக் காலத்தில் நிலவு, பகலில் சூரிய வெளிச்சம் என்பன கிராமத்துக்குக் குறை வில்லாமல் எக்காலத்தும் உள்ள ஒளிச்செல்வம். ஓ! மறந்து போனேன். ஊரிலே எப்பொழுதாவது இடம்பெறும் கல்யாணங்கள், கோவில் திருவிழாக்களின் போதும் நாட்டுக் கூத்து நடைபெறும் போதும் வெளிச்சம்-காந்த வெளிச்சம்உண்டு.
இந்த அளவு பின்தங்கிப்போயிருந்த முதல்வரிசைக் கிரா மத்தில் அவ்வூருக்கு நாற்றிசையும் பெருமை பரப்பிக்

வெளிச்சம் II 7
கொண்டிருந்த சுப்பிரமணியர் கோவில் எசமானுக்கு நெடுங் காலமாக மனத்தில் ஒர் ஆசை. அது என்ன தெரியுமா? தான் கண்ணே மூடுவதற்குள்ளாகத் தமது காலத்தில் கோவிலுக்கு மின்சார தீபாலங்காரம் செய்து கண்குளிரப் பார்க்க வேண்டும் என்பதுதான் அது.
ஆனல் அதற்கு வழி என்ன ? சொந்தத்தில் சின்ன தாக ஒரு "லைட் மிசின் விலைக்கு வாங்கிப் பூட்டுகிற தானுலும் அந்த நாளில் அதற்குப் பெருந்தொகை தேவைப் பட்டது. அவ்வளவு செலவழித்துச் செய்கிற காரியம் செலவுக்குக் கட்டுபடியாகி வருமா ? கல்யாணங்கள் மற்றும் கோவில் திருவிழாக்கள் ஆகிய ஊர்த் தேவைகளுக்குச் சுவாமி சொத்தை வாடகைக்கு விடுகிறதென்பதும் குருக்க ளுக்குச் சம்மதமில்லே. அப்படியானல், அவர் மன ஆசை ஒரே ஒரு நீண்டகால இலட்சியம் நிறைவேறுவதுதான் எப்படி? அதற்கு என்ன வழி?
பலநாள் இரவுபகலாக ஆலோசித்தபின் முருகனே கனவில் தோன்றி அவர் மனக் கவலை தீர்க்க வழி கூறி யதுபோல ஒருநாள் பொழுது விடியக் கோவிற் பூசையை முடித்துவிட்டு இல்லம் திரும்பிய வேளை, நெற்கதிர்களே வாயில் கொத்திக்கொண்டு கண்முன்னே அவர் வரும் வழி யில் கோவில் சுற்றுச் சுவர்மேல் வந்து குந்திய கோவிற் புருவைக் கண்டதும் அவர் மனத்தே ஒரு புதிய எண்ணம் ஒடிற்று. கோவிலுக்கு ஏராளம் வயல் நிலம் இருந்தது அங்கெல்லாம் அப்பொழுது அறுவடை நடைபெற்றுக் கொண்டிருந்தது. கோவிற் புழு அந்த விடியற்காலேயில் வயற்காட்டுப் பக்கம்தான் பறந்து போய்விட்டு வந்து வாயில் நெற்கதிருடன் உட்கார்ந்திருக்கிறது. கோவிலுக்குத்தான் ஏராளம் நெல் கிடைக்கிறதே! அவ்வளவு நெல்லேக் குற்று வதற்கும், அத்துடன் ஊர்ச் சனங்களுக்குக் கூலிக்கு நெல் குற்றிக்கொடுப்பதற்குமாக ஒரு இயந்திரத்தையும் "லைட் மிசி"ரூேடு சேர்த்துப் பூட்டிவிட்டால்.
சரி; அதுதான் வழி. குருக்கள் தமக்கும் சொந்தத்தில் அதிநுட்ப அறிவாற்றல் என்று ஒன்றிருந்ததை அன்று கண்டு மகிழ்ச்சியினல் துள்ளிக்குதித்தார். ஆணுலும் "லைட் மிசி"னேடு

Page 80
II 8 LIDERf5 LorrG)
நெல் குற்றும் மிசினைப் பூட்டி நடத்தலாமா? என்பதில் ஒரு சின்னச் சந்தேகம். நவீன மின்சார விந்தைகளின் நுட் பங்கள் அவ்வளவாக ஓடாது. மிோட்டார் striCB6 (St. ஏறி அறியமாட்டார். என்ருலும் தமது நீண்ட காலக் கணவு முக்கால் திட்டம் நிறைவேறியது மாதிரித்தான் எனக் குருக்கள் மனச்சாந்தி அடைந்தவராய் வீட்டிற்கு நடந்தார்.
இதற்கு இரண்டு மாதங்களின் பின் கோவிலில் இத்த் தோட்டத்தை அடுத்திருந்த ஒரு துண்டு நிலத்தில் புதிதாக ஒரு கட்டடம் விறுவிறென எழலாயிற்று. நாள் $ ଶ୫୩ # ନିର୍ଦ) வேலை நடைபெற்று, கட்டடம் பூர்த்தியாகி அந்த ஆண்டு மகோற்சவத்தைக் கோவிலின் சொந்த மின் உற்பத் தித் தீபலங்காரத்துடனே நடத்த வேஜலகள் மும்முரமாக முழு மூச்சாக நடைபெற்றன. கூடவே, நெல் குற்றும் இயந்திரமும் இணைக்கப்பட்டது. சித்திரைப் போது விளைச்சல் காலமாயிருந்ததால் ஆரம்பம் குருக்களின் மனம்போல் ஒன்றும் குறைவில்லாமல் நிறைவாக இருந்தது.
சிவபிரானின் நெற்றிக் கண்ணில் பறந்த அக்கினிப் பொறியானது சரவணப் பொய்கை சென்றடைந்தபோது ஒரு குழந்தை வடிவமாயிற்று. அக்குழந்தையைக் கார்த்தி கைக் கன்னியர் வளர்த்துவரலாயினர். அதனல் கார்த்தி கேயன் என்ற பெயரும் முருகனுக்கு உரியதாயிற்று இ; தப் புராணக் கதையையும் குருக்கள் ஒளி வடிவ மா கச் சோடித்து மகிழ்ந்தார். மகோற்சவ காலத்தில் நடைபெற்ற கார்த்திகைத் திருவிழாவின் போது அக்கினிப் பொறிகளுக் குப் பதிலாக நூறு காண்டில் பவர் பல்புகளில் ஆறு பல் புகளை வரிசையாக அடுக்கி அதைப் பூந்தோட்டத் தடாகத் தில் கொண்டுபோய் மிதக்கும் பேழையாக விட்டு, சுற்றிலும் பூஞ்சோலை நிர்மாணித்து, குழந்தை மிாதிரி ஒரு பொம்மை யையும் கொண்டுவந்து கோவில் பிரமாணப் பெண்கள் அதனைச்சூழ நின்று ஏந்தி எடுக்க இப்படி ஏதேதோவெல்லாம் தமது மனேதர்மப்படி, கார்த்திகேயன் அவதார மகிமைக்கு விளக்கம் தரும் புராணக் கதையில் அவருக்குள்ள

வெளிச்சம் 19
லயிப்புக்கமைய ஒளி ஜாலப் புதுமைகள் செய்து குருக்கள் தாமும் மனம் திருப்திப்பட்டதுடன் கோவிலுக்கு வந்து கூடிய முருக பக்தர்களையும் மனக்களிப்பில் ஆழ்த்தினர்.
இப்பொழுது அம்மன்கோவில், குமரன்கோவில் இரண் டிடங்களிலும் ஒரே ஜோதிமயமாகப் பொலிந்தது. வெளி வீதி, உட்பிரகாரம், பிள்ளையார், சிவன், அம்மன், சனீஸ் வரர், சண்டேசுவரர், வசந்தமண்டபம், கோபுரவாசல், தீர்த்தக் கிணறு, பூந்தோட்டம், மடப்பள்ளி, மணிக்கூண்டு, வைரவர், நந்திதேவர், பலிபீடம், கொடிஸ்தம்பம், அர்த்தி மண்டபம், அதற்கப்பாலும் உள்ளே மூலஸ்தானம்வரை எங்கும் குமிழ் குமிழாக மின் பல்புகள், இருளைக் காத தூரத்திற்குத் துரத்தி அடித்து ஒளியைச் சிதறிக்கொண் டிருந்தன. சுவாமி வாசலில் கோபுர வடிவில் அமைத்து வைத்திருந்த சட்டவிளக்கு எனப்படும் எண்ணெய் விளக்கு வரிசை இருந்த இடமே தெரியாமல் ஓடி மறைந்து விட்டது. அதற்குப் பதில் அந்த இடத்தில் குத்திட்டாற்போல வாசலில் இரண்டு பக்கமும் ஒரு வரிசையும் மேலே குறுக்கு வரிசையாக ஒரு வரிசையும் கம்பி வலைக்குள்ளே சிறைப் படுத்தப்பட்டு நூறு இருநூறு பல்புகள் சரவரிசை கொடி வரிசையாகக் கோடி சூரியப் பிரகாசத்தை அள்ளி வீசின.
ஒரு தினம் குருக்களே தமது காரிய சித்தியிலும் இலட்சிய வெற்றியிலும் மனம் களித்தவராக முருகன் சந்நிதியில் சனக்கூட்டத்துக்கு அப்பால் தூர விலகிப்போய் நின்று ஒளிவேள்ளத்தில் மூழ்கிப்போயிருந்த சந்நிதானத் தைப் பார்த்தபடியே அதில் மனம் ஈடுபட்டுப் பக்தி கணிந்து நின்ருர்,
குருக்கள் இருளுக்குள் மறைந்து நின்றதனுல் அவரை அடையாளம் கண்டுகொள்ள மாட்டாத அடியார் கூட்டத் தில் இருவர் அப்பொழுதுதான் சந்நிதானத்தில் நின்று கர்ப்பூரதீப தரிசனம் கண்டுவிட்டு, காந்த ஒளி கண்களைக் குருடாக்கிவிட இருளில் வழி தடவியவர்களாக அவர் அருகே தடந்தபோது,

Page 81
120 மனித மாடு
'இதென்னப்பா கண்ணைக் குருடாக்கி விடுகிறதே. குரு கள் கற்பூர தீபம் சுழற்றுவதுகூடத் தெரியவில்லையே'
*கந்தசுவாமியார் உங்கே எங்கிருக்கிருர்? எப்ப காந்த சுவாமியார் கோவிலுக்குள்ளே நுழைந்து வெளிச்சம் போடத் தொடங்கினரோ அப்பவே கந்தசுவாமியார் வெளியேறிவிட்டாரே !'
-என்று இவ்வாறு தங்களுக்குள் பேசிக்கொண்டு சென்றது குருக்கள் காதிலும் வீழ்ந்தது. அவர் திகைத்துப் போஞர். அதன்பின் கோவில் சந்நிதானத்திலே நெடுநேரம் நிற்காமலே வீடு திரும்பிவிட்டார்.
அடுத்து வந்த கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத் திரத்தில் திருக்கார்த்திகைத் திருவிழா கோவிலிற் கொண் டாடப்பட்டபோது சுவாமி சந்நிதானத்தை அபகரித்த காந்தக் குமிழ் வரிசை அகற்றப்பட்டு மீண்டும் எண்ணெய் விளக்கு வரிசைகள் இடம்பெற்றன.
-சிலம்பொலி, தை 1 !

21
தளரா வளர் தெங்கு
கொழும்பிலிருந்து காலிவரை பெரும் பகுதியும் கடற் கரை ஓரமாகவே நீண்டு கிடக்கும் காலி வீதியில் வெள்ள வத்தை நகர எல்லைக்குள்ளாக, கரி லி வீதியையும் கடற்கரை ரயில் பாதையையும் இணைக்கும் ஒரு குறுக்கு 'லேன்' (சிற்றெழுங்கை) முகப்பில் இருப்பு ப்ாாதை கடந்து அதற்கு அப்பால் நீண்டு கிடக்கும் கடற்கரையில் அலைகள் மோதும் கருங்கல் வரிசைக்குள் சிக்குண்டு நின்றது ஒரு தென்னை
Ab TLD .
அதற்கு இரு பக்கமும் நெடுந்தூரம் கடலோரமாகவே நூறு ஆயிரமாக வரிசைப்பட நிற்கும் இன்னும் எத்தனையோ தென்னைகள். இருந்தாலும் இந்த ஒரு தெங்கு மட்டும் என் கவனத்தைக் கவர்ந்த காரணம் , அது மனித நட மாட்டம் அதிகமாயுள்ள ஒரு சந்திக்கு அண்மித்தாற்போல நின்றதுதான்.
நெடுநெடென வளர்ந்து முன் வளைந்து கடலுக்கப் பால் கழுத்தை நீட்டி எட்டிப் பார்ப்பதுபோல் முடத் தெங் காகக் காற்றில் அசைந்தாடி நின்றது அத்தென்னை. அதன் கீழ் சமுத்திரம் அலையடித்து நிலமரித்துப் போகாதபடி கடற்கரை நெடுகிலும் நிரையாக அடுக்கி வைத்திருந்த இருபெரும் பாறைக்கல். இரண்டு பேருக்கு மேலும் அதன் மீதமர்ந்து தென்னையின் அடிமரத்தில் சாய்ந்தபடியும் பிறர்
to 16

Page 82
夏星盛 மனித மாடு
பார்வையைக் கவராதபடியும் நிம்மதியாகக் காற்று வாங்க, கலந்துரையாட வாய்ப்பானதொரு சுகாசனமாய் இணைந் திருந்தன.
இது பற்றி அந்த இடத்தை மனத்தே எண்ணி இலக் கிட்டோராய்ப் பலர் மாலை வேளையில் அத்தென்னையை நாடி நடந்தும் வருவார்கள்; ஒடியும் வருவார்கள் நடந் தோடியும் வருவார்கள். முன்னிடம் பிடிப்பதற்காக அவ் விதமாய் அங்கு விரைவோரில் காதல் சிட்டுகளே என்றைக் கும் முன் நிற்பார்கள் எனச் சொல்ல வேண்டியதில்லை.
"அந்த முடத்தெங்கிற்கு மட்டும் வாயிருந்தால் எத்தனை சுவையான காதல் கதைகளை அதனிடம் கேட்டறியலாம். தன் ஆயுளில் இந்நாள் மட்டில் எத்தனை பேரின் மகிழ்ச்சி, துயரம், கண்ணிர், ஏக்கம், இதய தாபங்களில் அது பங்கு கொண்டிருந்திருக்கும்’ என்று இவ்வாறு அதைப் பார்த்த போதெல்லாம் நான் எண்ணுவதுண்டு.
அதனைப் பார்த்து இவ்விதமாக நான் எண்ணமிட்டு வந்தபோது அத்தென்னையானது தாளுண்ட உப்பு நீரைத் தலையாலே அமுத கலசமாக வடித்துத் தருவதுபோல ஒரு நாள் மெய்யாகவே என்னுடனே பேசலாயிற்று.
"என்ன ஒய் கதை அளக்கிறீர். தென்னை மரமாவது பேசுகிறதாவது? உதெல்லாம் சுத்தப் பொய். முழுப் புருடா. நம்பவே முடியாது. உன் தலையிலே தென்னை மரம் ஒருவேளை தேங்காயைப் போட்டு உடைத்திருக்கும்." என்கிறீரா வாசகரே?
ஐயா வாசக நேயரே ! கேட்கிறவன் கேட்டால் தென்னை மரமென்ன, உலகத்திலே உள்ள எல்லா மரங் களும் மட்டைகளும் பேசும்; கதை சொல்லும், நம்
முடனே சிரித்துக்கொண்டே கலந்துரையாடும். ஆனல் அவற்றிடம் கதை பிடுங்கும் வாய்ச் சாதுரியம் நம்மிடமும் இருத்தல் வேண்டும். அப்போதுதான் அது பேசும். ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்கவேணும். பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்கவேணும். பழமொழி கேள்விப் பட்டதில்லையா ?

தளரா வளர் தெங்கு 23
கவி தாகூருக்குப் படித்துறையும் மகரிஷி வ. வே. சு. ஐயருக்குக் குளத்தங்கரை அரச மரமும் புதுமைப்பித்த னுக்கு ஆஸ்பத்திரிக் கட்டிலும் பழைய நாள் விக்கிர மாதித்த ராசாவின் சிம்மாசனம் ஏறப்போன போசராச னுக்கு முப்பத்திரண்டு கெட்டிக்காரப் பதுமைகளும் சிந்தை குளிர, செவி உவப்ப, சிரிப்பும் கண்ணிருமாகச் சிங்காரக் கதை கட்டிச் சொல்லியிருக்கையில், இந்தக் கடற்கரை முடத் தெங்கு மட்டும் பேசாதா? பறையறையாதா ? கதை சொல்லக் கூடாதா? தென்னையின் நீட்டோலை வாசிக்க மாட்டாதவர்கள், குறிப்பறிய மாட்டாதவர்கள், ஒளவைப் பாட்டி கூறிய பிரகாரம் முருக்க மரங்களேதாம். காண்மின் நேயரே !
குருத்தோலை பார்த்துக் கலகல என்று நகைக்க, தென்னை மரத்தின் முற்றிப் பழுத்த காவோலைகள் பருவந் தோறும் ஒவ்வொன்ருய் உதிர்கின்றன. ஒவ்வொரு பழுத்த காவோலையினது வாழ்வும் முடிவுமே தென்னையின் வளர்ச்சி யாகிறது. இந்த வரலாறும் வாழ்வின் கதையும் கல்மேல் எழுத்துப்போல் அழுத்தமான வரைகளாக அடி மரத்தி லிருந்து நுனி மரம் வரை ஒன்றன்மேல் ஒன்ருய் அடுக்கடுக் காய் தென்னையில் பதிவாகிப் போயிருக்கின்றன.
புதுமை என்பதே பழமையில் வேர்விடுவது. வளர்ச்சி என்பது படிப்படியாக நீண்ட காலத்தை அளாவி நிற்பது. முடிவில் தொடங்கிய இடத்துக்கே திரும்புவது என்ற இயற்கைப் பரிணும தத்துவத்தைக் கூடத்தான் தென்னே மரம் நமக்கு எடுத்துக்காட்டி அறிவுறுத்திக்கொண்டு நிற் கிறது. அது பேசமட்டும் ஆரம்பித்தால் தன் மீதுள்ள ஒவ்வொரு வரிவடிவத்துக்கும் ஒவ்வோர் இரண்டு அங்குல வளர்ச்சிக்கும் ஒரு கதையாக நீட்டோலை வாசிக்குமே.
குதிரை கொண்டு ஏறித் திரியுமோர் இளங்காற்று, சின்னஞ்சிறு குழந்தை தன் மலர்க் கரத்தினுல் தாயின் முகத்தில் இன்பமாக அறைவதுபோலத் தென்னேயின் கீற்றை அசைத்துச் சலசலக்கச் செய்தது. கடற்கரைக்குக் காற்று வாங்க வந்திருந்த எவளோ ஒரு பூங்கொடியாளின்

Page 83
24 மனித மாடு
பூந்துகிலையும் காற்று அவ்விதம? கச் சுழற்றியடித்த போது வெண்மணலில் கால் பதித்து நின்றவள் தடா 'ரெனக் கீழே உட்கார்ந்துவிட்டாள். அது சமயமாக அவ்வழியே நடைபோட்டு வந்த வாலிபர் குழாம் ஒன்றும் ஆங்கு அவளிருந்த பக்கமாய் மெல்ல அமர்ந்தது.
கடலில் கண்ணுக்கெட்டிய தூரத்தே ஒரு கப்பல் புகை கக்கியவாறு துறைமுகத்தில் சில தினங்கள் தங்கி ஒய்வெடுத்துக் கொண்டு புத்தெழுச்சி பெற்ற விசையுடனே போய்க்கொண்டிருந்தது.
'தம்பி, உனக்குக் கல்யாணமாகிவிட்டதா?’-என் றிவ்வாறு ஒரு வினவுடனே தென்னைமரம் என்னிடம் பேசலாயிற்று.
'உனக்கேன் அந்தக் கவலை நெடுமரமே? கதை எழுது கிறவன், கதைகளிலே காதலையும் கல்யாணத்தையும் கொட்டி அளப்பவன் தன் சொந்த வாழ்க்கையிலும் அதைப்பற்றி எல்லாம சிந்தித்துக் கொண்டிருப்பான்?' நான் சொன்னேன்.
‘ஓகோ ! நீயும் அப்போ என்ஃப்போல ஒற்றை என்று சொல்லு. இந்தக் காலத்துப் பிள்ளைகள் கல்யாணப் பேச்செடுத்தாலே இப்படித்தான் வீட்டுமா ச்சாரிகளைப் போலத் துள்ளிக் குதிக்கிறர்கள். ஏணுே தெரியவில்லை. உன் கல்யாணத்தில் எனக்கென்ன அக்கறை அப்பனே! ஆனல், நான் சொல்லப்போவது காதல் கதையான படியால் உன் நிலையை அறிய விரும்பினேன்’’-தென்னை மரம் சொல்லிற்று சொல்லிவிட்டு அது என்னைக் கூர்ந்து கவனித்தபோது,
காதல் கதையா சொல்லப் பே7 கிருய்? ஷோக்குத் தான். அது எனக்கு நிரம்பப் பிடிக்குமே" என்றதற்கு,
* எது பிடிக்கும்? காதல் ? க ச த ல் கதையா? " என்று வெடுக்கென்று கேட்டது.

தளரா வளர் தெங்கு I 25
'கதை-காதல் கதை - பிடிக்கும் என்றுதான் சொன் னேன், தென்னையரே! எனக்கு மட்டுமென்ன காதல் கதை என்றல் என் வயசுக் கிளைய சின்னஞ் சிறிசுகளும் எனக்கு மூத்தோராய் கல்யாணம் செய்து கொண்டு பிள் ளைகள் பெற்ற பெரியவர்களும் அதற்குமேல் பேரப்பிள்ளை களும் பூட்டப்பிள்ளைகளும் கண்டு முதிர்ந்து பழுத்த கிழவ னும் கிழவியும்கூட, நான் நீ என்று முந்திக் கொண்டு வருவார்கள். அது மென்னியைப் பிடிக்கும் கழுத்தை நெரிக்கும் என்றெல்லாம் எண்ணிப் பார்க்காமலே காதலை விரும்பி அதன் பின்னே ஒடுவோர் பருவக் கன்றுகளான காளை யரும் கன்னியருமே. ஏன், கதையைத் தொடங்கேன் வளர் தெங்கே’’ என்று கூறித் தென்னை யாரை முடுக்கினேன்.
காதல் கதை என்றதும் ஆளின் மூஞ்சியும் முகரக் கட்டையும் எப்படி ஆகிவிடுகிறது பாரேன்' என்று குறு நகை அரும்ப மெல்ல முணுமுணுத்துக் கொண்டே முடத் தெங்கு கதையைச் சொல்லலுற்றது :
"அதோ பார்த்தாயா, கடலிலே ஒரு கப்பல் துறை முகத்திலிருந்து கிளம்பிப் போய்க்கொண்டிருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு அன்ருெரு நாளும் இப்படித்தான் ஒரு கப்பல், துறைமுகம் விட்டுப் போய்க்கொண்டிருந்தது. இதே நேரம்தான் இருக்கும். நான் சொல்லப்போகும் கதை துயரமாக முடிந்த வேளையும் இதே மாதிரியான தொரு அந்தி நேரம், செக்கர் வானம். மைம்மல் கருக்கு. கருங்கடல் பறவைகள் நீர்ப் பரப்பிலிருந்து நிலம் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தன. வானம் ஒளி இழந்துகிடந்தது. எங்கும் இருள் கவிந்து ஒரு பகலின் கதை சோக கீதமாக முடிவது போலத்தான் என்கதையும் செக்கர் வானம், சோக இருள், அந்தகாரம் என இந்தச் சமுத்திரப் பெரும் பரப்பில் எழும் அலை ஓசையுடன் கலந்து முடிகிறது. அன்றைக்கு நேரம் அப்பொழுது மாலை ஐந்துமணி சுமார் இருக்கும். பதினெட்டு அல்லது பத்தொன்பது வயசு மட்டிலான ஒர் இளமங்கை தொலைவில் சென்ற கப்பலின் மீதே பார்வை செலுத்தி அதனையே உற்று நோக்கியவளாக இதே பாறைக் கல் மீது அமர்ந்திருந்தாள். மாலை வெயிலில் அவளது சிவந்த மேனி சுவர்ண விக்கிரகமாக ஒளிர்ந்தது. கடற்

Page 84
136 மனித மாடு
காற்றிலே அசைப்புண்டு அவள் நெற்றியில் வீழ்ந்த கேசச் சுருளை அடிக்கொரு தடவை தன் செங்காந்தள் விரலினல் மேலே சுண்டி ஒதுக்கிக் கொண்டே கடல் வெளியை நோக்கி மெளன தியானத்தில் ஆழ்ந்திருந்த அப்பெண்ணின் வாடிய முகத்தில் பொழுதாக ஆகக் கவலைக் குறிகள் படரலாயின. மனத்தில் எழுந்த துயரக் கலவரம் முகத்தில் நிழலிட்டது. கைக்கடிகாரத்தில் மணி பார்ப்பாள் ஒரு சமயம் . அதன்பின் திரும்பிக் கடற்கரையின் இரு பக்கமும் பார்ப்பாள். அப்படியாகப் பார்த்து எதிர்பார்த்து ஏமாற் றமே குடிகொண்ட கண்களுடன் மனத்தே அமைதி இழந்தாளாய்த் துடித்தனள்; துவண்டனள்,
'அடடே, நல்ல இலக்கியச் சொற்களெல்லாம் அள்ளி வீசுகிறீரே தென்னையாரே! தமிழ்ப் பிணைகளும் உன் காலடி ஏகி மகிழ்ந்து குலாவியிருப்பார்கள் போலும்" கதை நடுவே குறுக்கிட்டுச் சும்மா இப்படி ஒரு போடு போட்டேன்.
கதை சொல்வதில் ஆழ்ந்து லயித்துப்போயிருந்த தென்னை யார் என் குறுக்கீட்டைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை,
தனது மென் குருத்து ஒலைகளில் தோரணம் கட்டிப் போட்டுக்கொண்டு சுவாமி அறையிலே எழுத்தறிந்த பயல் என்னிடமே இறுமாப்புக்காட்டுகிறனே என்று மனதுக் குள்ளாக ஒரு வேளை, ஓர் இமைப்பொழுது நினைத்திருந் தாலும், அது ஒன்றையுமே ஒரு கை நொடிப்பாகக் கூட வெளிக்காட்டாமல், தான் கூறவந்த கதையைத் தொடர்ந்தது . .
"கடலிலே போய்க்கொண்டிருந்த கப்பலுக்குக் கரையி லிருந்தபடியே தாவிப் பாய்ந்துவிடத் துணிந்தாள்போல் அம்மங்கை நல்லாள் கற்பாறை ஆசனம் விட்டிறங்கி விடுவிடென்று நேரே கடலை நோக்கி நடப்பாள். மறுபடி அக்கம் பக்கம் பார்த்துவிட்டுத் தண்ணீரில் தோய்ந்த பாதங்களைப் பின்வைத்து, பொங்கி எழும் ஓர் அலைக்கு அஞ்சினளாய்க் குதித்தோடி வருவாள். மீண்டும் துணிந் தாளாய், அஞ்சினளாய், வழிமேல் விழிவைத்துப் பார்

தளரா வளர் தெங்கு 27
வையை வீசினளாய், காப்பவிழும் கவின்மலர் காற்றிலே சுழன்றடினற்போல் நிலமும் நீரும் இணையும் புவிலோக சங்கமத்தில், வாழ்வுக்கும் சாவுக்கும் நடுநிலையில் பகலும் இரவும் இணைந்து பிரியும் அந்தி மயக்கில் அவ்வாரணங்கு முன்னேகி, பின்னிட்டு நெடுங்கடலை நோக்கிக் கற்சிலையாய் நின்று கண்கலங்கி நெட்டுயிர்த்து முழுமோசம் போனளாய் ஏங்கி மனமுடைந்து துடிதுடித்துக் கொண்டிருந்தாள்.'
கதைக்கு இவ்விடத்தே ஒரு புள்ளி போட்டுவிட்டு தென்னையார் ஆடாமல் அசையாமல் நின்றர்.
*" என்ன, தென்னை யாரே கதையை இன்னும் தொடங் கிய பாடில்லை, அதற்குள்ளாகப் புள்ளி போட்டுத் தரித்து விட்டீரே. ஒரு வேளை அரைப்புள்ளி, காற்புள்ளி அல்லது 'பரா’ பந்தியாக விருக்குமோ? இல்லையானல் கதையை அதன் முடிவிலிருந்து தொடங்கும் புதிய உத் கி கித்தி ஏதும் கையாளப்போகிறீரோ?'-உசாவித் துளைத்தேன்.
“அதெல்லாம் ஒன்றுமில்லை. அவசரப்படாதே மகனே. பாதொரு குத்தும் குடைசலும், உக்தியும் உபாதையு மில்லை. இந்தக் கதை அதன் முடிவிலே தான் முழுமை பெறுகிறது. கதையின் மூர்ச்சனையே அங்குதான் பிறக் கிறது. ’’ என்று கூறிய வளர் தெங்கு மறுபடியும் காற்றிலே அசைந்தாடி மேலே மேலே கதையைக் தொடரலாயிற்று,
?"அவள் யாரை-மனதிற்குகந்த எந்தக் கட்டிளம் காளையை-ஒவ்வொரு கணமாக எண்ணி அவ்வாறு துடித்துக் கொண்டிருந்தாளோ, அவன், அவளுடைய இன்னுயிர்க் காதலன் அவள் காலடியில் நீண்டு கிடந்த ஏழ்கடல் தொலைவில் அதே நேரம் கப்பலில் மிதந்துகொண்டிருந்தான். விளக்குகள் ஏற்றப்பட்டுத் தீபத் தெப்பமாகக் கப்பல் அலை கடலில் அசைந்தது. கரையிலிருந்து அவ்வொளி வடிவத்தின் மீதே வைத்த கண் அகற்ருது பார்வையை எறிந்து அப் பார்வையினூடே மனப்புலனையும் இழந்து, சர்வமும் ஒடுங்கி, சுற்றிலும் பயங்கரமான இருள் கவிந்து, வருவதையும் உணராளாய் கல்லொடு கல்லானுள் கோதை அவள்.'

Page 85
128 மனித மாடு
"என்னது உசக்க இருந்து நீர்த்துமி தெறிக்கிறது? வாய் நனைத்து எச்சில் பறக்கிறதா? அல்லது. ஒகோ, கண் கலங்கிக் கண்ணிர் சிந்தியதா? சேசே, என்னதான் சோகக் கதையாயிருந்தாலும் அதற்கு இப்படியெல்லாமா கண் கலங்குவது? சொல்லு, சொல்லு அவ்விருபேரும் தானே கதாநாயகர்கள்; காதல் ஜோடி? பலே பலே! அப்புறம் மேலே தொடரும்'- என் கதை முடுக்கு !
குரும்பைகளை அரித்துச் சுவைபார்த்த அணிற்பிள்ளை ஒன்றினை விரட்டி விட்டுத் தென்னையார் அதன் மேல் கதையைத் தொடர்ந்தார் :
"அவள் ஒரு பறங்கிப் பெண். ரீட்டா என்று பெயர். இங்கே சமீபமாகத்தான் ஒரு சின்ன ஒழுங்கையிலுள்ள சிறிய வீடொன்றில் தாயுடனே வசித்துவருகிருள். நெசவு ஆலையில் வேலை. தன் வீடு; தன் வேலை என்று வேறு அல்லல் தொல்லைகளை நாடாமல் பரம சாதுவாக வாழ்ந் தவள், காதற் புயலிலே சிக்குண்டாள்.
"காதல் அவள் வீடுதேடி வந்தது. அவளுடைய காதலன் ஒரு கடற்படைக் காளை; கப்பற்காரன். அவனை இந்நாட்டுக்குச் சுமந்து வந்த போர்க்கப்பல் கொழும்புத் துறைமுகம் சேர்ந்ததும் கப்பல் விட்டுத் தரை இறங்கிய முதல் அணியில் அவனும் ஒருவனுக வந்திறங்கினன். அவனது உயிரற்ற சடலத்தையும் கூட இப்பசுந்துளிர்த் தீவின் பாலை மணற் கரைகள் வாஞ்சையுடனே ஏந்தி எடுக்கக் காத்திருந்ததை அது சமயம் சிறிதேனும் முன்னறி யானுய் ஈண்டு, கால் பதித்தனன் அப்போர்க் காளை."
‘'இப்படி எத்தனை எத்தனை போர்க் கப்பல்கள், போர்க் காளைகள், படையெடுப்புகள், பயங்கர யுத்தங்கள் நம் நாட்டைச் சூழ்ந்திருக்கின்றன. '-கண்ணிமைப்பது போல மனத்துள்ளே ஒரு பழைய சரித்திர கால நினைவு நெளிந் தோட அதனைத் துரத்திப் பிடித்து ஆழக் குழிதோண்டிப் புதைத்து விட்டு மறுபடியும் கடற்கரை வான்பயிர் கூறும் கதைக்குக் காது கொடுத்தேன்.

தளரா வளர் தெங்கு 29
**ருெ பின்-அதுதான் அவன் பெயர். கப்பல் விட் டிறங்கி, துறைமுக வாயில் கடந்து வெளியே நகர்ப்புற எல்லையில் கால் வைத்த தும் விதி அவனே வரவேற்றது. அளருக்குப் புதிதாக வரும் கப்பற் பிரயாணிகளுக்கு ஊர் சுற்றிக் காண்பிக்கும் 'தொண்டர்" கூட்டம் ஆங்கு மற் ருெரு சேனையாக ருெபினையும் அவன் சகாக்களையும் சுற்றி வளைத்துக் கொண்டார்கள், "என் கூட வாருங்கோ சேர்! விக்டோரியாப் பூந்தோட்டம், நூதன சாலை, நகர மண்ட பம், மிருகக்காட்சிச்சாலை, புறக்கோட்டை, காலிமுகக் ஈடற்கரை, களனி, கண்டி, அநுராதபுரம், பொலநறுவை வரை போய்வரலாம், எல்லாம் ஒரே சுற்றில் பார்த்து வந்து விடலாம்' என்றெல்லாம் அவர்களிடத்தே ஆசை எழ நயமாகக் கூறி, த%8க்கு இரண்டு பேராகவும் மூன்று பேராகவும் அதற்கு மேல் கூட்டமாகவும் தனித்தனியாக வுமே அவர்களைப் பொறுப்பேற்று வாடகை மோட்டா ரிலும் ரிக்ஷாவிலும் வாடகை பஸ்ஸிலும் ஏற்றிக்கொண்டு பறப்பார்கள். இது விபரமெல்லாம் எனக்கு எப்படித் தெரியுமென்று நீ என்னைக் கேட்பதற்கு முன்னமே ருெபி னும் ரீட்டாவும் இங்கே என் தாளடியில் வந்தமர்ந்து பேசியதைக் கேட்டுத் தெரிந்து கொண்டதுதான் என்று அக்கேள்விக்கு இடம் வைக்காமலே சொல்லி விடுகிறேன். மேலும் நான் கூறும் கதையில் வரும் பெயர்கள் யாவும் கற்பனையே, அவை யாரையும் குறிப்பிடா, யாரோ எவரோ ! ஓர் ஆணும் பெண்ணும், அவனும் அவளும் என்று வைத்துக்கொள் இனி, கதையைக் கேள் :
அன்றைய தினம் நகர்ப்புற வழிகாட்டிகள் என்ற அந்த வகைப்பட்ட ஆட்களிடம் வகையாக மாட்டிக் கொண்ட ருெ பின் என்ற கடற்பறவை ஒருபோது தனித்தவன் ஆனன். அது சமயமாக ஒரு ரிக்ஷாவில் அவனை ஏற்றி நாலு தெருவைச் சுற்றி அழைத்துச் சென்று குடிப்பதற்கு நிறை யச் சாராயம் வாங்கிக் கொடுத்து, போதை தலைக்கேறிய நிலையில் ரீட்டா வீட்டு வாசலில் கொணர்ந்து விட்டார்கள். அந்த மாதிரியொரு அவல நிலையில்தான் ரீட்டா-ருெ பின் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. அவர்களிருபேரும் சில தினங்கள் என் நிழலில் ஒதுங்கிக் கலந்துரையாடினர்கள். பகல் முழு வேளையுமே இங்கு உட்கார்ந்திருந்து கதை அளப்பார்கள்.
to 17

Page 86
130 மனித மாடு
** "இரவு முழுவதும் உன் இனிய குரலே என்காதிற் கேட்டது ரீட்டா 1 கப்பலின் மேல் தளத்துக்குப் போய் அங்கு நின்று கரையோரம் தெரிந்த தென்னைகளைப் பார்த்துப் பெருமூச்சு விடுவேன்" என்பான்.
! உங்கள் நாடு உடல் நலத்துக்கு உகந்த குளிர்ந்த மலைச் சுவாத்தியத்துக்குப் பெயர் பெற்றது என்று தெரிந்து வைத்திருந்தேன். மனதுக்கு இதமளிக்கும் இனிய அன்புச் சுவாத்தியம் கூட இங்குண்டு என்பதைக் கண்டு என் மனம் பூரிக்கிறது! ரீட்டா, அன்றைக்கு உன் தாய் என்ன அன்பு சொரிந்தாள். எவ்வளவு பரிவும் பாசமும் பொழிந் தாள்' என்பான்.
/
அதற்கு ரீட்டா, ' எனக்கும் கூடத்தான் உன்னுடனே பழகியது முதல் இச்சில தினங்களில் நெஞ்சத்திலே இன்ப ஊற்றுப் பெருக்கெடுத்துப் பாய்கிறது, ருெபின். மனித சமூகத்தை விட்டு ஒதுங்கி வாழும் கடற்படை ஆட்களிடம் அவர்தம் இதயத்தில் இவ்வளவு ஆசா பாசமும், இனிய இங்கிதமும் இருக்குமென்று நான் எண்ணியதே இல்லை. போர் வீரர்களைப் பார்த்தாலே அவர்களைப் பொல்லா தவர்கள், முரடர்கள் என்றெல்லாம் பயங்கரமாகக் கற்பனை பண்ணிக்கொண்டு இந் நாள் வரை ஓடி ஒளித்தோம்' என்று அவனிடம் கனிவாள்.
**இப்பொழுது கூட என்ன? நான் மகா பொல்லாத போர்வீரன்தான் ரீட்டா. இதோ இப்பொழுதே உன்னைத் தூக்கி என் தோளில் போட்டுக் கொண்டு இதே கடலில் வீழ்ந்து கப்பலுக்கு நீந்திப் போய்விடப் போகிறேன்" - ருெபின் தோள் கொட்டுவான்.
"அது இனிமேல்தான நடக்கப் போகிறது ருெபின் எப்பொழுதோ உன்னை என்னேடு கொண்டு போய்ச் சேர்த்து விட்டாயே, மகா பொல்லாத கப்பல்காரன் நீ, பின்னே, ஊரெங்கிலும் பெண்களும் பிள்ளைகளும் கப்பல் காரர்களைப் பார்த்த போதெல்லாம் ஓடி ஒளிப்பதற்கு

தளரா வளர் தெங்கு 131
அவர்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருந்தது? தோளிலே கோணிப்பை கூட ஒன்று மாட்டி வைத்திருப்பார்களாமே" ரீட்டாவின் ஒரு கண் வெட்டு,
"உன் கண்களை விடவா என் போர்க்கோலம் பொல் லாதது ரீட்டா? பட் பட்டென்று வாள் வீச்சாக வீசி என்னைக் கொல்லாமல் கொன்று விடுகிறயே ரீட்டா கண் வெட்டோ புயல், மின் வெட்டோ? நான் இங்கே வீழ்ந்து கிடக்கிறேன். நீயோ என்னை வென்று என் போர்க் கப்பலையும் கைப்பற்றி வாகை சூடி நிற்கிருய்'
'கோழைகள் களத்தில் குதித்திருக்கவே கூடாது போர் வீரரே??
* மனங்கலந்து உறவாட, உரையாட, மனத்தை அழுத்தும் தனிமையின் நினைவுச் சுமைகளை இப் பூவசியத் தைப் பகிர்ந்து கொள்வதற்கு மெல்லியலார் தோள் சேர, தோழமை பூணக் கிட்டாத போது வாழ்க்கை எத்தனை சூன்யம் மண்டிய பாழ் வெளியாகிப் போய்விடுகிறது ரீட்டா இந்நாட்டுக்கு வந்துகொண்டிருக்கும் வழியில் கப்பல் வேறு நாட்டுத் துறைமுகங்களில் தங்கி அங்கெல்லாம் இங்கு சுற்றியது போல் ஊருக்குள்ளே சென்று மக்கள் மத்தியில் நான் பழக நேர்ந்தபோது எவளாவது ஒரு பெண்ணுடனே அவளுக்குப் பணம் செலுத்தியாவது சிறிது நேரம் அன்பாகப் பேசிவர எண்ணினேன். '
'ஆனல், இந் நாட்டில் ஒருத்தி எதிர்பார்த்திருக்காத படி மிகச் சுலபமாக அகப்பட்டுவிட்டாள். இல்லையா ருெபின்?"
"ஆமாம், போட்டுக் கிடந்தெடுத்த இந் நாட்டு இரத்தினக்கல் போல "
" ஆனல், கப்பற்காரருக்கு இதெல்லாம் எதுக்கு என்று கேட்டுத் துறைமுக வாயிலில் வைத்தே அதனைப் பறிமுதல்
இசய்து விடமாட்டார்களா?"
**அப்போ, தரையிலேயே நின்று விடுகிறது?"

Page 87
132 மனித மா (
*" கப்பற்காரனுக்குத் தரையிலே என்ன வேலை என்று கேட்பார்களே?**
' கப்பல் வீரன் இனித்தரையில் தரித்திருந்து ஒடப் விடப் போகிருன். கப்பலுக்கு வரமாட்டான் என்று சொல்லிவிட்டால் போச்சு. *
"மெய்யாகவா ருெபின்? எதிரில் இருக்கும்வரை உங்களை நம்புகிறேன். உங்கள் பேச்சை ஒப்புக்கொள் கிறேன். ஆனல், நீங்கள் மறைந்து அப்பால் விலகிப் போனதும் கடல் குறுக்கிட்டு என் நம்பிக்கையைச் சித றடித்து விடுகிறதே! என்ன செய்வேன் ருெ பின்'-விம்மு வாள் ரீட்டா.
(அப்பொழுது கலங்காத அக் காளையும் நெஞ்சம் கல்ங்கி, ‘அன்பினுல் ஒன்றுபட்ட உள்ளங்களை இந்த அற்ப கடலும் மலையும் காலமும் தூரமுமா பிரித்து விடமுடியும் ரீட்டா?' என்று அப்பேதையை ஆற்றித் தேற்றுவான்.
இவ்விதமாகவெல்லாம் காலமும் நேரமும் போவதே அறியாமல் எவ்வளவோ பேசி மகிழ்வார்கள். அந்தி மயங்க ஒருவரை ஒருவர் பிரிய மனமில்லாமலே பிரிந்து செல்வார்கள். நானே அவர்களின் நெஞ்சங் கலந்த குலவு தலில் மனம் லயித்து ஒரு தினம் ஓர் இளநீர்க் குரும்பையை அவர்தம் கண்முன்னே கற்பாறை மீது போட்டுச் சீத றடித்து, உங்கள் அன்பு வாழ்வுக்கு ஒரு விக்கினமும் நேராதிருக்கட்டும் என மனமார்ந்த ஆசி கூறினேன்.
ஆனல், நாம் நினைத்தபடியே எல்லாம் நடந்துவிடு கிறதா? எங்கெங்கோ உலகின் வெவ்வேறு தேசங்களில் பிறந்து வளர்ந்த ஓர் ஆ%ணயும் பெண்ணையும் இவ்வாறு அபூர்வமாகப் பிணைத்து வைத்த இதே கடற் காற்றும் வெண்: மணலும் அவர்களைக் குரூரமாகப் பிரித்துவைக்கும் கொடுமைக்கும் உடந்தையாக இருந்துவிட்டன.
கப்பல் துறைமுகம் விட்டுப் போகும் நாள் வந்தது ரீட்டா என் காலடியில் வீழ்ந்து அன்று பகல் முழுக்கப் பழிகிடந்தாள். ருெ பின் வருவான் வருவான் என்று நாள்

தளரா வளர் தெங்கு 133
முழுதும் ஒவ்வொரு கணமாக எண்ணிக் கடும் தவமியற் றிஞள். மாலைப் பொழுதாக ஒரு கப்பல் துறைமுகம் விட்டு வெளியேறிப் போய்க்கொண்டிருந்தது. அதைப் பார்த்துக் கருங்கற் பாறை மேல் மற்ருெரு கல்லாகச் சமைந்தாள் அப் பூங்கொடி.
கதிரவன் மேலைக் கடலில் குதித்தனன், பொன்னெளிர் அடிவானில் அக்கப்பல் ஒரு நிழலுருவாகத் தேய்ந்து அடிவானத்துக்கப்பால் மெல்லப் போய் மறைந்தது.
எங்கும் இருள் சூழலாயிற்று. கடல் அலைகள் "ஹோ" என்று கொந்தளித்து எழுந்தன.
ரீட்டாவின் நெஞ்சம் ஓவென்று அலறியது.
விம்மி வெடிக்கும் சிறுகுழந்தை போல் தாங்கொணுத் துயருற்றவளாய், கண்கள் குளமாக விருட்டென எழுந்து விடுவிடென நடந்தாள்.
தன் நினைவற்று நடந்தவளை அதுசமயம் வேகமாக வந்த ரயில் ஒன்று மோதிச் சிதறடித்தது. அப்பொன்னின் கலம்-பொன்னுெளிர் மேனி-ஆங்கு ஒரு கணத்தே பொடி சாம்பராயிற்று.
இது சம்பவித்த மறுநாள் காலை என் காலடியில் மோதிய கடல் அலைகள் கப்பற்காரன் ஒருவனின் உயிரற்ற உடலை மணற்கரையில் கொணர்ந்து ஒதுக்கின.
இவ்வாறு கடற்கரைத் தென்னையார் உருக்கமாகக் கதையைக் கூறி முடித்தார். எங்கும் விளக்குகள் எரிய ஆரம்பித்திருந்தன. நான் எழுந்து நடந்தேன்.
-தினபதி ஆண்டு மலர், 1972,

Page 88
22
நேற்று இன்று வந்த உறவல்லடி
“நம்ம திருவானைக் காவல் அப்புலிங்கத்தார் இருந் தாரில்லே, அவருக்கிட்டே ஒரு நாள் ஒரு சிலோன் ஆசாமி திடீர்னு வீட்டுக்குள்ளே நுழைஞ்சு, 'பெரியவரே நமஸ் கரிக்கிறேனுங்க" என்று சோல்லிக்கிட்டே அவரு முன்னலே நெடுஞ்சாண் கிடையாக விழுந்திட்டார், பாருங்கண்ணே!" நாயனக்காரருகூட சிலகாலம் அவர் பேளத்திலே வாசிச்ச நாளிலே நடந்ததினலே அப்போ நேரே இருந்து பார்த் திட்டன். அந்தக் கதையைச் சற்றே கேளுங்கண்ணே.
கோடை வசந்த கால சேவகத்துக்கு வரவழைக்கப்பட்ட தஞ்சாவூர் ஜில்லா தவுல்காரர் அவரை வரவழைத்த நாயனக்காரர்கூட ஒருதினம் அவர்வீட்டுத் திண்ணையில் அமர்ந்து உரையாடுகிருர், அவர்களுடைய அந்தத் திண்ணைப் பேச்சில் நமக்கு ஒரு நல்ல கதை கிடைக்கிறது.
சொல்லுங்கோ தவுல்காரரே'--நாயனக்காரரின் நிமிண்டுதலில் பேச்சு வளர்கிறது; கதை பிறக்கிறது. ஞானகுரு வாணிபதம் தோன்றிப் பொலிகிறது.
சிஷ்யப்பிள்ளைகளுக்குப் பிள்ளையார் கீதம் சொல்லிக் கொண்டிருந்த அப்புலிங்கத்தார் அந்தாளைப் பார்த்துத் திகைத்தார். பாடுவதை நிறுத்தி சிஷ்யப்பிள்ளைகளிடம் "டேய், டேய் அந்தாளைத் தூக்கி விடுங்கடா !' என்று

நேற்று இன்று வந்த உறவல்லடி 35
பணித்தமட்டில், மூவர் நாதசுரக் குழல்களேக் கீழே வைத்து விட்டு எழுந்தார்கள். பசங்க அவனை அணுகிக் கை தொட்டுத் தூக்கி விடுகிறதுக்குள்ளாக அந்தாளு தானுகவே எழுந்துவிட்டான். கையிலே யாத்திரைக் கோணிப்பை, வேட்டி, சட்டை, தோளில் கழுத்தைச் சுற்றி ஒர் ஆறு முழம் - இந்த மாதிரிக் கோலம். அதே வேடமாக வெயிலிலே நெடுந்தூரம் நடந்து, அலைந்து, காய்ந்து, கறுத்த மூஞ்சி யுடனே யாழ்ப்பாணத்து ஆட்களைப் போல உயரமாக வளர்ந்து எடுப்பாகத் தோற்றிநின்ற அந்தாளைப் பார்த்து "அப்பிடி திண்ணையிலே உட்காரு தம்பி" என்ருர் பெரியவர்.
குருநாதர் கண் சமிக்ஞையிலே பசங்க எல்லாம் கலைஞ்சு அப்புறமாக நகர்ந்து மறைஞ்சிட்டாப்பிலே பெரியவர் அந்த புது ஆளை அணுகி, 'வந்த சமாச்சாரம் என்ன தம்பி?' என்று விசாரிச்சாரு,
பயலு எழுந்து கைவணக்கம் தலைவணக்கமாக நின் றிட்டபடி 'நான் ஓர் இசைப்பிரியன் நாயனக்காரரே சிலோன் சீமை விட்டுக் கப்பலேறிக் கடல் தாண்டி இவ் வளவு தூரத்துக்கு நாதப்பிரமம் என்னை அழைத்துவந்து உங்கள் முன் நிறுத்தி விட்டது' என்ருர். தன் பேரு சிதம் பரம், ஊரு யாழ்ப்பாணம் என்று பெரியவர் முழுக்கவும் அவனை நம்பும்படியாகவே எல்லாம் சொல்லிவிட்டான். பெரியவரு அவன் நிலைக்கு மனமிரங்கிஞர். அதனலே ஊர் தேடிவந்த ஆளை இரண்டுநாள் வைத்துப் பார்க்கலாம் என்று மனதுக்குள் எண்ணியவராய் அவனிடம் அன்பாக 'சங்கீதத்திலே ஆசையிருந்தா கற்றுக் கொள்ளலாம். ஆசையிருந்தால் அதிலே ஊக்கம் பிறக்கும். ஊக்கம் அதுவே தியானமாகும். இன்னும் இதற்குமேல் உனக் கிருக்கும் ஆசையுடனே கூட அவ்வளவு பொறுமையும் பயபக்தியும் அதிலே இருக்கவேண்டும். தம்பி கலைவாணி அருள் அப்பதான் சித்திக்கும். சிலோன் சீமைவிட்டு இவ் வளவு தூரம் வந்திட்டாய். அதனுலே இங்கே நம்ம பசங்கள் கூட சிலநாள் சேர்ந்திரு. அப்புறம் பார்த்துக்க லாம்.’’ என்று பேசி நல்வார்த்தை கூறி, அந்த சிலோன்

Page 89
H 36 மனித மாடு
சீமைச் சிதம்பரத்தைத் தம்மிடம் இசைபயிலும் மாணக்கர் குழுவில், வில்வித்தை கற்க வந்த தேர்ப்பாகன் மகனைப் List S; frírudff ஏற்றுக்கொண்டதுபோல் சேர்த்திட்டாரு. அன்று முதலாகச் சிதம்பரம் பயல் மொச்சைப் பருப்புக் குழம்பும் கீரைத் தண்டுச் சாம்பாரும் பழைய சோறும் சாப்பிட்டுக் கொண்டே நாயனக்காரரின் சிட்சை பயில் சிட்டுக்களுடனே சேர்ந்து எருமைமாடு மேய்க்கிறது முத லாக மாட்டுச்சாணி, விறகு காயவைப்பது, செங்கல் கட்டி அரிகிறது, அடுக்கிறது வரை சொன்ன வேலையையும் இட்ட பணியையும் செஞ்சுக்கிட்டே வித்தை கத்துட்டான். பெரியவரு அந்தப் பயலைப் பார்த்த போதெல்லாம் பெரும் சந்தோஷப்பட்டார்.
இந்த மாதிரியாக ஓர் ஐந்து மாதம் ஓடிப்போயிடுச்சு. ஒரு தினம் ஒரு பகல் காவலூரார் வீட்டு வாசலிலே பளிச் சென்று மின்னலடிச்சாப்பிலே ஒரு மோட்டார் வண்டி வந்து நின்னிடுச்சு திருவாரூர் ராமையா பாகவதர், அவரது வக்கீல் நண்பர் ஒருவர் கூட மற்ருெரு சிலோன்காரருடனே ஜம்மென்று தெருவாயலிலே வந்து குதித்து இறங்கி, தட தடவென்று உள்ளே நடந்து நாயனக்காரர் முன்னிலையில் போய் நின்று மூணு பேருமாக ஒத்த குரலிலே சிதம்பரத்தை உடனே பார்க்கவேணும் என்று அதிகாரம் பண்ணினப் பிலே, சிதம்பரம் பயல் ஊரிலே என்ன அக்கிரமம் செஞ் சிட்டு ஒடியாந்திட்டானே என்று அப்புலிங்கத்தார் அசந்து போனுர், எருமை மாடு மேய்க்கும் மந்தை வெளி நோக்கி அப்புறமாக மோட்டார்கார் பறந்து போயிடிச்சு. மாடு மேய்க்கும் அதே கோலத்தில் கம்பும் கோவணமுமாய்ச் சிதம்பரத்தைப் பார்த்ததுமே மோட்டார் ஆசனம் விட் டிறங்கிய சிலோன் சீமான் துள்ளிக் குதித்துச் சீனவெடி யாக வெடிச்சிட்டார்.
சிதம்பரம்பயல் சிலோன் சீமையிலே பெரும் வணிகப் பெருமகனும் பிரபலஸ்தரும் பிரதானிகளுமான பூபாலபிள்ளை என்பவரின் அருமைப் புதல்வன், குபேர பாக்கியவான், கோடி சீமான் என்று தெரியவந்ததும் எல் லோரும் பெரும்திகைப்பில் ஆழ்ந்தார்கள்.

நேற்று இன்று வந்த உறவல்லடி 137
"அதன் மேல் சிதம்பரம்பயலுக்கு ராஜோபசாரம் நடந் திருக்கும்?? யாழ்ப்பாணத்து நாயனக்காரர் கதை நடுவே இவ்விதமாக, ஒரு வின எழுப்பிக் கதையில் தமக்குள்ள ஈடுபாட்டினை வெளிப்படுத்த, சோழ நாட்டுத் தவில்காரர் சுருதிநாதம் குன்ருமல் கதையை மேலும் தொடருகிருர்,
*ராஜோபசாரமா? அதை ஏன் கேட்கிறீங்கண்ணே, பெரியவர் சிதம்பரம் பயலைத் தலையிலே தூக்கி வைக்காத ஒரு குறை. மற்றும்படி எல்லா மரியாதையும் மதிப் புபசாரமும் அங்கு நடந்திடிச்சு. ’’
'தம்பி உள்ளது உள்ளபடி ஒன்றும் பேசல்லீங்களே. நானுக எப்படிக்கேட்டுத் தெரிந்துகொள்ள முடியும்? யாழ்ப்பாணத்தூரில் கீரிமலையில் ஒரு டீக்கடையில் வேலை பார்த்திட்டு நின்றதாயும் நாடகங்கள் பார்த்து, சங்கீதக் கச்சேரிகள் கேட்டது முதலாகக் கீரிமலையிலே நாடகக்காரர், சங்கீதக்காரரை நேரிலும் சந்திச்சுப் பழகினுப்பிலே ஒரு நாள் மனத்திலே சங்கீதம் கத்துக்கிற ஆசை குபிர்ணு மூண்டெழுந்து இந்த ஊரைப் பார்த்துக் கிளம்பிட்டதாக முழுக்கவும் புனைந்துரையாக என்கிட்டே ஏதோ கதை அளந்திட்டதே' என்று சிலோன் சீமானிடத்தே அழாக் குறையாக இரந்திட்டாரு பெரியவர்.
சிதம்பரத்தைத் தங்களுடனே திருவாரூருக்கு அழைத் துப் போவதாகச் சிலோன் கனவான் கூறியபோது அப்பு லிங்கத்தாருக்கு முகம் வாடிப் போயிடிச்சு என்ருலும் 'தம்பியை நானே என்கூட அழைச்சிட்டுப் போய் திருவா ரூரிலே ஒரு வித்துவானிடம் ஒப்படைக்கலாமென்று நாளும் வேளையும் பார்த்துக் காத்திருந்தேன். வித்தை கத்துக்கிற ஊக்கம், ஆசை, மனப்பக்குவம் எல்லாமிருக்கு. புத்தி, சித்தம், காயம் என்று சொல்லுவாங்க . அது யாதொன்றும் குறைவில்லை.’’ என்று ஆசி மொழிந்து அவர்கள் பேச்சுக்குத் தலையசைத்து மனச்சம்மதமும் தெரிவித்துவிட்டார்.
சிதம்பரம் நாயனக்காரரின் காலில் வீழ்ந்து வணங்கி விடைபெற்றபோது பெரியார் கண்கலங்கி நின்று சிதம்பரம் பயலுக்கு ஆசிமொழிந்து பிரியாவிடை கொடுத்தார்.
ld 18

Page 90
38 மனித மாடு
திருவானைக்காவல் வந்த மோட்டார் வண்டி அங்கிருந்து கிளம்பி மறுபடி திருவாரூர் சேர்வதற்குள்ளாக பின்னல் ஒடிமறைந்த நெடுவழியைப் போலச் சிதம்பரம் பயலின் அந்த ஐஞ்சு மாத கால வாழ்வும் வாழ்க்கையும் கடகட வென்று உருண்டோடி மறைந்து சிதம்பரம் கார் விட் டிறங்கியபோது புதியதொரு கன்ரு கத் திருவாரூர் மண்ணில் கால் வைத்தான்.
அதன் பின் சில மாத காலம் திருவாரூர் ராமையாப் பாகவதரிடம் சிதம்பரம் சங்கீதம் கற்றுக்கொள்ள ஏற்பா டாயிடுச்சு ஆறு மாதம் மட்டில் அவர் கூடச் சிதம்பரம் காலந்தள்ளிட்டிருந்தானம். இந்த ஆறு மாதத்தில் வித்தை ஒரு அட்சரமாகக் கூடச் சிதம்பரம் பயலிடத்திலே வளர்ச்சி ய டை ய வி ல் லே. திருவானைக்காவலாரிடத்தே கற்றுக் கொண்ட வர்ணம்தான். அதுக்குமேல் புதிதாக ஏதென் றும் நுழைந்ததாயில்லை. இனிமேல் நுழையுமென்பதற்கான அறிகுறியோ, நம்பிக்கையோ கூடத் தமக்குத் தோற்றப் படவில்லை எனப் பாகவதர் சொல்லுவார்.
'ஏன் அப்படி இருள் மூடினப்போல ஆயித்து தவுல் காரரே???
‘அதைத்தான் இனி முக்கியமாகச் சொல்ல நினைத்தேன், அதற்குள் நீங்களே கருத்தாகக் குறிப்பிட்டுக் கேட்டுட்டிய, சொல்றேன்.
திருவாரூர் சிட்சாரம்பம் நடந்துகொண்டிருந்த நாளில் ஒருதினம் பாகவதர் சிதம்பரம் ஜாகைக்கு வழக்கம்போல் பாடத்துக்குப் போய்த் திண்ணையிலே குந்தினுராம். சிதம் பரம் பயல் உள்ளேயிருந்து ஒரு நாற்காலியைத் தூக்கிக் கொணுந்து பாகவதர் முன்னிலையில் போட்டு அதன்மேல் ஏறி கால்மேல் கால் மடித்து உட்கார்ந்தபடி 'பாகவதர்வாள், இங்கே வந்துபோனரே எங்க சித்தப்பா, அவரு கொழும்பு போய்ச்சேர்ந்து லெட்டர் போட்டிருக்கார். என் சொந்தத் தேவைகளுக்காக வேண்டிய மொரிஸ் மைனரை வக்கீலாl ஆத்தில் விட்டுச் சென்றிருக்கிருராம். யாதொன்றிலும் மனம் ஒடுதில்லை. ஒரே "டல் அடிக்கிருப்பிலே இரு த. நாளைக்கே மைனரிலே கிளம்பி ஜாலியாக மெட்ருஸ்வது போய்ச் சுற்றிக்கொண்டு வருவமா?' என்று இந்தக தோரணையிலே பேச ஆரம்பிச்சிட்டாம்ை.

நேற்று இன்று வந்த உறவல்லடி 139
அந்த ஜாகையிலே அதன்பின் தம்புரா ஓசையே எழ வில்லை. அது ஊமையாகிப் போய்க் கிடந்தது என்று பாக வதர் சொல்லுவாரு அண்ணே.
"ஆமாம் அது வாஸ்தவம் தவுல்காரரே! வாணிபதம், புண்ணியபதம் தவசித்தியாக அருளப் பெறுவது. காசு, பணம் கொண்டு வாங்கிவிடக் கூடிய பொருளா அது?"
o o Ο
Ο Ο' O
"கலையே அழகுணர்ச்சியின் ஆனந்தக் கொந்தளிப்பு. இயற்கையோடிணைந்து இறையருள் குலவப்பெறுவது. இறைவன் முன்னிலையில் தெய்வச்சந்நிதியில் எல்லாம் வல்ல அப்பரம்பொருளின் பாத கமலங்களில் தலை தாழ்த்தி அர்ப் பணிக்கப்பெறுவது. சந்திரிகையில் கடல் கொந்தளிக்கிறது; அலைமகள் ஆர்ப்பு எழுகின்றன: அல்லி மலர்கிறது. அருணுேதய சந்நிதி ஆடலும் கீதமுமாய் எழில் மிகுந்த தொரு பூம்பொழிலாகத் தோற்றி அனைத்துயிரையும் மகிழ் விக்கிறது, அது சமயம் எங்கு நோக்கினும் எதிலும் ஜீவத்துடிப்பு, புதுமை எழுச்சி, கீதம், நடனம், பக்திப் பரவசம். இயற்கை நியதியின் இவ்விதமானதொரு ல்யத் தில், செளந்தர்யத்தில் அதில் மூழ்கித் திளைத்த மன்பதை யின் அழகுணர்ச்சியில் கலே பிறந்தது, இல்லையாண்ணே!'
'ஆம7 ம், ஆமாம், எங்கப்பாரு பொழுது விடியப் போகிற சமயமா உறக்கம் கலைஞ்சு எழுந்திருவாரு. சின்னக் குழந்தை அந்நேரம் கண்விழித்துப் பறவைகளின் கீதமும் பண்ணும் கேட்டு, செடி கொடிகளின் ஆடலும் அசைவும் பார்த்து, இன்புற்று தன்னரவாரமாய்க் கால் கை அடித்துக் குரல் பழகிக் கிடப்பதைக் கண்ணுற்று அதிலே சொக்கிப்போய் பக்கத்திலே தானும் உட்காந்திடுவாரு. அப்படி உட்கார்ந்திருந்தபடி அதன் பின் பாட ஆரம் பிச்சிடுவாரு, 'முருகனே செந்தி முதல்வனே' என்று சுவாமி தோத்திரம் பாடுகிருற் போலத் தொடங்குவார். பிறகு அது கர்ணுமுதமான ஓர் உருப்படியாகக் கனிந்து சொட்டும், அவர் பாடுவதைக் கேட்டுக் கொண்டே சிறு குழந்தை மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்துவிடும்"
""חAMD . . . . . ... + ' '
-ஈழநாடு, 1975-10-5

Page 91
23
பசுந்துளிர்
*காக்கா காக்கா ஒரு கதை சொல்லு.'
" தினமும் மதிய போசனத்தின் போது ஒரு பிடி சோற் றுக்காக வந்து கூடும் காக்கை விருந்தாளிகளில் ஒன்றைப் பார்த்துத்தான் ஒரு தினம் கேட்டேன்.
காக்கை வாய்திறக்கவில்லை.
* 'காக்கா கருங்கண்ணி; நாவற்பழம் தின்னி எனக் கொரு கதை சொல்லமாட்டாயா? பாட்டி பாட்டன்மார் புத்திசாலிக் காக்கை என்று உன்னைப் புகழ்ந்தும் ஏமாளிக் காக்கை என்று இகழ்ந்தும் நல்ல நல்ல உபகதைகள் எவ் வளவோ சொல்வார்களே. அப்படியெல்லாம் கதாபாத்திர மாகியிருக்கும் உனக்கு ஒரு கதை சொல்லத் தெரியாதா? காக்கையார் எழுந்தோடிப் போய்விடாதபடி இதமாகத் தடவிக் கொடுப்பதுபோல் நான் கையில்வைத்துத் தின்று கொண்டிருந்த முறுக்கிலே ஒரு துண்டு உடைத்துப் போட்டுவிட்டுக் கேட்டேன். அது புத்தியுள்ள காக்கையாக இருக்கவேண்டும். அதனல் என் புகழ்ச்சியிலே லயித்துப் போய்விடாமல் எனக்குக் கதை சொல்லுமுன்பாக தன் வருங்கால ஜீவனும்சத்தையும் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளும் கருத்துடனே என்னைப்பார்த்து 'ஒரு நல்ல கதை சொல்லுகிறேன். அந்தக் கதையை நீ என்ன செய்வாய்?" என்று கேட்டது.

பசுந்துளிர் 141
"நீ சொல்லப்போகிற கதையை உடனே பத்திரி கைக்கு எழுதி அனுப்பிவிடுவேன்' என்றேன்.
* பத்திரிகைக்காரர்கள் அதை என்ன செய்வார்கள்?? காக்கையார் கேட்டார். -
"என் கையெழுத்து காக்காய் என்னவோ கிளறியது மாதிரி இல்லாமல், சுத்தமாகத் தெளிவாய் இருந்தால் பத்திரிகை ஆசிரியர் அதனே வாசித்துப் பார்ப்பார்."
*அதன் பின்..? அப்படியும் இப்படியுமாகத் தலையைத் திருப்பிக்கொண்டே காக்கையார் வினவினர்.
'அதன் பின் கதை அவர் மனத்துக்குப் பிடித்திருந் தால் பத்திரிகையிலே பிரசுரம் செய்வார்."
"அதனுல்?'- காக்கையாரின் ஒவ்வொரு கேள்வியும் வெடுக்கு வெடுக்சென்று என்னை மோதின. நான் பொறு மையிழக்காமலே பதிலளித்தேன்.
'பத்திரிகையிலே கதை பிரசுரமானல் அப்பொழுது பலபேர் பறந்தடித்துக்கொண்டு அதனை வாசித்துப் பார்ப் LurTrig, Git .. ?” ”
* யார் யாரெல்லாம் வாசிப்பார்கள்???
*"எவ்வளவோ பேர் வாசிப்பார்கள். அதோ அந்த வாசிகசாலையில் வந்து கூடுகிருர்களே. அவர்கள் முழுப் பேரும் நான் முந்தி நீ முந்தி என்று போட்டிபோட்டுக் கொண்டு வாசிப்பார்கள். நாங்கள் பள்ளிக்கூட மாணுக்கர் களாயிருந்த நாளில் ஊரிலே ஒவ்வொரு வீட்டிலும் பிடி அரிசி சேர்த்து அந்த அரிசி விற்ற காசுக்குப் பேப்பர் வாங்கிப்போட்டு வளர்த்த படிப்பக இயக்கம் அது."
"எதற்காகப் பறந்தடிக்க வேணும்? அச்சடிக்கிற தாள்" சர்க்கரை மாதிரி இனிக்குமா?"
" "சே சே, இலக்கிய ரசிகர்களைப்பற்றி அப்படியெல்லாம் உன்னேப்போல நினைக்காதே. பத்திரிகையிலே அச்சா கி வந்திருக்கும் கதைதான் அவர்களுக்குச் சர்க்கரை மாதிழ

Page 92
142 மனித மாடு
இனிக்கும். கதை சொல்லப்படும் தமிழோ கற்கண்டாகத் தித்திக்கும். கடதாசியை வீசிவிடுவார்கள். உனக்குச் சில சமயம் கூடுகட்ட உதவுவது அந்தக் கடதாசீதான்.""
**ஆனல், நான் சொல்லப்போவது சோகக் கதை' . காக்கையாரின் குரல் கம்மியது.
'அதனலென்ன, அதையும் கூட நா இனிக்க இனிக்க நன்ற கச் சுவைத்தே படிப்பார்கள்' என்றேன்.
'அதிசயமான படிப்பு மனிதர்களே விந்தையான படைப்பு 1 என் இனத்தவருக்குள்ளே நேற்று ஒரு சாவு பரிதாபமான சாவு, கண்ணுக்கு முன்னுலே துடிதுடித்துப் பதைத்து மாண்ட கொடுமை ' காக்கையாரின் கண்களில் நீர் துளித்தது.
"ஒகோ, அதுதானே பார்த்தேன். நேற்று மத்தியானம் இந்தப் பக்கத்திலேயே உங்களில் யாரையும் காணுேமே, என்ன சங்கதி? ஏது சம்பவித்ததோ? எங்கேயாவது வெடி குண்டோ எறிகுண்டோ அல்லது பட்டாஸ் தானும் வெடித்துச் சத்தம் என்காதில் விழவில்லையோ என்றெல்லாம் பல பல எண்ணினேன்.”*
என்ன சம்பவித்தாலும் இந்த உலகிலிருந்து நாம் அறவே ஒழிந்துபோய்விட மாட்டோம். ஏன், யப் பான்காரன் கூடத்தான் இரண்டு தடவை வெடிகுண்டு போட்டுப் பார்த்தானே, உனக்கும் நினைவிருக்குமே
gibl P''
* பின்னே, மறந்துபோய் விடுமா என்ன? ஆளுல் அதையெல்லாம் எதற்காக ஞாபகப்படுத்திக்கொண்டு வீணுக மனத்தை அலட்டிக்கொள்கிறீர், காக்கையாரே? அந்தக் கோரத்தை நானும் என் கண்களால் பார்த்தேனே, இப்பொழுது நினைத்தாலும் நெஞ்சம் துணுக்குறும்? அப்பப்பா என்ன பயங்கரம் அது தலைமேல் கைவைத்துக் கொண்டு வீட்டு மூலைக்கு ஓடி, பெட்டி அடுக்குகளுள்ளேயும் படுக்கைக் கட்டில்சளின் கீழும் பதுங்கியவர்களும், கடவுளைத்

பசுந்துளிர் I4引
துதித்துக் கொண்டு பாதுகாப்புக் குழிக்குள்ளே ஒடி ஒளித் தவர்களும் ஊரெங்கும் ஒரே கூக்குரலாகிப் போச்சே, உன் இனசனத்தாரோ வெடிகுண்டுச் சத்தம் கேட்ட மாத்தி ரத்தே அங்கங்கு இருந்தபடி, பறந்தபடி, பொத்துப் பொத் தென்று செத்து விழுந்தார்கள். என்ன அக்கிரமம்! என் நெஞ்சுத்துடிப்பு நிற்பதற்கு எத்தனை நாள் ஆயிற்று
காக்கையாரே! "
**அதுதான் அந்த அக்கிரமக்காரருக்கெல்லாம் அன் றைக்கே சனியன் பிடிச்சது மாதிரி அவர்கள் உயர்த்திய போர்க்கொடியின் கதை முடிந்ததே."
*யுத்தத்திலே ஒருவேளை ஜெயித்திருந்தால் ஆயிரம் பத்தாயிரம் காக்கைகளைக் கொன்ற வீரர்கள் என்று யப் பானிய விமானிகள் பரணி விருது பிரதாபம் பெற்றிருப் பார்கள்! காக்கையாரே உன் முகத்தைப் பார்த்தால் என் கையிலிருந்து அப்பத்தைப் பறித்துக்கொண்டு தலையிலே குட்டி, முகத்திலே பிருண்டி, நாள்தோறும் அப்படிப் பழகிப் பரிச்சயமான அதே பழைய காக்கையாகத்தான் தோன்று கிறீர். என் சிறுவயதில் முகத்தில் பதிந்துவிட்ட தழும்பு இதோ இன்னமும் இருக்கிறது. அது உன் கண்களுக்குத் தெரிகிறதா? காக்கைக்குலம் சிரஞ்சீவியாக உயிர் வாழ் வதைப்போல எத்தித் திருடும் உங்கள் பழக்கமும் என் றைக்கும் நிலைபெற்றிருக்கிறது போலும்! என்னவானுலும் மனிதருக்கும் உங்களுக்கும் உள்ள உறவு இப்படி அழியா உறவாக வாழ்நாள் முழுக்கவும் நீடிக்கிறதே! பொழுது விடிகிறபோதே காக்கையார் குரல் கேட்டுத்தானே கண் விழிக்கிருேம். தோட்டத்திலும், வயலிலும், தெருவிலும், சந்தையிலும், கல்யாணத்திலும், சாவிலும், வாசலில், முற் றத்தில் வீட்டினுள்ளேகூடத் தினமும் பார்த்துப் பழகிய முகம். கேட்டுப்பழகிய குரல், அவ்வித நெருங்கிய நீடித்த பழக்க தோஷத்தினுல்தான் போலும் மனிதன் பிணமாகி விழுந்தபோது அவனைச் சுற்றிக் கூடி, அவன் உடலைத் தொட்டுத் தழுவி, அவனுக்கு கடைசி அஞ்சலி செலுத்து கிறீர்கள். சுடுகாடுவரை பின்தொடர்ந்து வந்து பிணத் தையும்கூட நெஞ்சார உகப்பீர்கள்!"

Page 93
144 மனித மாடு
வாய்க்குள்ளே ஒரு குறுஞ்சிரிப்பு அரும்பக் காக்கை யார் என்னைக் கூர்மையாக அவதானித்தவராய், 'ஒரு தடவைதான் நரியாரிடம் ஏமாந்தோம் அந்தக்கதை உலகப் பிரசித்தியாகி நாம் எல்லாம் ஏமாந்த காக்கைகள் என்று பரிகாசத்துக்கிடமாகிவிட்டோம். இனிமேல் அப்படி நடக்காது. உண்மையைச் சொல்லு, நான் சொல்லப் போகும் கதையை நீ பேப்பருக்கு எழுதிக்கொடுத்தால் அதற்கு உனக்கு எவ்வளவு சன்மானம் தருவார்கள்?’ என்று கேட்டார்.
'ஏதோ கொடுப்பார்கள் உசிதம்போல், கடைசி பதி னேந்து ரூபாய் என்று வைத்துக்கோள்ளேன்' என்றேன்.
"சரி, அப்படியானல் அந்தப்பணத்தில் எங்களுக்கு எவ் வளவு செலவிடப் போகிருய்?' காக்கையார் சட்டென்று இப்படிக் கேட்டு மடக்கியதில் நான் திகைப்படைந்தவஞய் 'சரி அதற்கென்ன ஒரு நாளைக்கு உங்களுக்கெல்லாம் கல் யாண விருந்தாக ஒரு விருந்து போடுகிறேன். அது தவிர தினமும் ஒரு பிடி சோறு மதியவேளை அன்னதானம் வழக்கம் போல் நடக்கும். சம்மதந்தானே காக்கையாரே?' என்றேன்.
காக்கையார் தலையசைத்து சம்மதம் தெரிவித்தவராய் அதன் பின் கதையைக் கூறலுற்ருர், அது ஒரு சின்னக் கதைதான் என்ருலும் நல்ல கதை, துயரமான கதை. அதனை இந்நாளில் வெளிவரும் சிறு கதை வடிவமைப்பில் ஜோடித்து உருப்படுத்திச் சொல்லலாம். சொன்னல் அது பின்வருமாறு அமையும்.
ძ% ძზ ძზ
யப்பான்காரரின் போர் விமானங்கள் நூறு ஆயிரமாகச் சேர்ந்து வந்து செவி கிழிய வெடிகுண்டுகளை வீசிக் காக்கை, குருவிகளைக் கதிகலக்கி ஆயிரமாயிரம் உயிரைப் பலி வாங்கியதைப்போல, விஞ்ஞான யுகத்தின் ஒரு பொல்லாக் கொடுமை என்று சொல்லவேண்டும். ஊரெங்கும் மின்சார வசதி அளிப்பதற்கென்று தொடங்கப்பட்ட கிராம அபி விருத்தித் திட்டம் இலட்சிய சித்திகண்டு அக்கிராமம்

பசுந்துளிர் 五45
இப்பொழுது எங்கும் இருளே ஒட்டி, ஒளியினைப் பரப்பி நிற்கிறது. நெடுந்துரர விநியோகத்திற்கென்று மின் சக்தி யைத் திரட்டிச் சேமித்து வைக்கும் மின்வாங்கியொன்று அந்தக் கிராமத்தில் தெருவோரமாக ஒரிடத்தில் அமைக்கப் பட்டிருந்தது அதைச் சுற்றிலும் கம்பிவேலி போட்டு அபாய அறிவித்தலும் பிரசித்தம் செய்யப்பட்டிருந்தது. அந்த அபாயக் காந்தக் கூடானது மின்சார இயக்கத் தொழில்நுட்ப வல்லுனர்களின் தேர்வுப் படி ஒரு வீட்டுத் தெரு வாசலோடு சேர்ந்தாற்போல அதற்குப் பக்கத்தே இடம் பெற்று விட்டது. அந்த வீட்டில் பள்ளிப் பிராயத்தினராக மூன்று சிறுவர்கள் னமும் காலையிலே அப்பம், பிட்டு, தோசை என்று ஏதாவது ஆகாரம் உண்ணும்போதெல்லாம் அவர்கள் முன்னே வீட்டுவாசல் முற்றத்தில் கூடும் காக்கை கோழி சளுக்கும் கிள்ளி அள்ளிப்போட்டு அவைகள் பறந்தடிப் பதை வேடிக்கை பார்த்துக்கொண்டே சாப்பிடுவார்கள். தித்திப்புப் பட்ச 'ங்கள் சாப்பிட்டபோதும் இது நடை பெறும் வீட்டு வாசலில் நின்று பார்த்தால் தெரியும் அவ்வூர்க் கோயிலின் கோபுரத்தில் வசிக்கும் கோவில் புழுக் களும் சில தினங்கள் அவ்வீட்டு வாசலுக்குப் பறந்து வரும். புழுக்களைப் பார்த்துவிட்டால் சிறுவர்களுக்குக் கரை கடந்த மகிழ்ச்சியும் கொண்டாட்டமுமாகிவிடும். வீட்டுக்குள்ளே ஒடிச் சென்று தானியங்களை அள்ளிக் கொணர்ந்து, போட்டி போடும் காக்கையையும் கோழியையும் அப்பால் துரத்தி விட்டு, புழுக்களுக்குப் போடுவார்கள். அவை மிரண்டு வெகுண்டு நின்று தானியம் பொறுக்குவதை ஆசையாக வேடிக்கை பார்ப்பார்கள். ஒரு நாள் காலை சிறுவர்கள் பள்ளிக்குச்செல்ல ஆயத்தமாஞர்கள். வழக்கமாகக் காக் சைக்கும் கோழிக்கும் கிள்ளி அள்ளிப்போட்டு, கீழே பாதி மேலே பாதியாகப் பரக்கப்பரக்க அவர்கள் உணவருந்திக் கொண்டிருந்தபோது அவர்கள் தாய் குரல் வைத்துக் கூப்பிட் டுக்கொண்டே உள் வாசல்படியில் வந்துநின்று 'அடா, பயல் களா, இன்றைக்குப் பள்ளிக்கூடம் மூடியாச்சாம். சபாரத் தின வாத்தியார் செத்துப்போனுராம். அடுத்தவீட்டு ஆறுமுகம், சிவக்கொழுந்து ஒருவருமே போகவில்லை. நீங்களும் போகவேண்டாம்,' என்ருள்.
ld 9

Page 94
146 மனித மாடு
பள்ளிக்கூடம் இல்லை என்று சொல்லக்கேட்ட மாத்தி ரத்தே அச்சிறுவர்களில் ஒரு பயலுக்கு அப்பொழுது உண்டான மனமகிழ்ச்சியில் தட்டில் வைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த தோசையில் பெரிதாக ஒரு பாதி பிய்த்துக் காக்கைகளுக்கு வீசிவிட்டான். காக்கைகள் ஒன்ருேடொன்று போட்டியிட்டுப் பறந்தடித்தன. சிறுவர்கள் அதைப் பார்த் துக் கூச்சல் போட்டு ஆரவாரம் செய்தபோது, அட்டமிச் சந்திரன் வடிவினதான பாதித் தோசை பல சிறு துண்டு களாகி, காக்கைகளின் வாய் இடுக்கினுள் சிக்கிக் கொண்டது. இரண்டு காக்கைகள் விர்ரென்று மேலே தாவி, காந்தக்கூட்டில் பொருந்திய உச்சக் கம்பத்தில் அதற்குக் குறுக்கே ஒடிய கம்பிகள் ஒன்றில் அமர்ந்தன. வாழில் கெளவி வைத்திருந்த ஆகாரத்தைக் கால் நகங்களின் இடுக்கில் வசதியாக வைத்துப் பிடித்துக்கொண்டே இரண்டு காக்கைகளும் தலைகுனிந்து அதில் ஒவ்வொரு கொத்துக் கொத்தின. அந்தமாத்திரத்தே இரண்டு காக்கைகளும் படாரெனச் சுருண்டு கீழே வீழ்ந்து காக்கை வலிகண்டு துடிப்பது போல் கால்கள் மடங்கிக் கண்கள் சொருகி, இறக் கைகள் படபட வென்று அடித்துக்கொள்ளத் தரையில் புரண்டு துடித்தன இரண்டும் நேரே கம்பிக் கூட்டுக் குள்ளாக வீழ்ந்து கிடந்ததினுல் அங்கு ஒடிவந்த சிறுவர்கள் உள்ளே நுழையமாட்டாமல் கம்பிக் காப்பிட்ட வேலி யுடனே நின்று பரிதாபமாகப் பார்த்தார்கள். அவர்களின் தலைக்குமேல் பல காகங்கள் வட்டம் சுற்றிப் பறந்துபறந்து கத்தி அழுதன.
சிறுவர்களில் ஒருவன், 'நீ தானேடா காக்கைக்குத் தோசை போட்டாய்! நீ போட்ட தோசையை வாயிலே கொத்திக்கொண்டுபோய்க் கம்பியிலே உட்கார்ந்ததால் தானே அதுக்குக் காந்தமடிச்சுது' என்று மற்றவன் மேல் குற்றம் சுமத்தினன். அதற்கு மற்றவன் 'போடா பேயா நான் மட்டுந்தான போட்டேன். எல்லாரும்தான் போட் டோம்' என்று தன்மேல் சுமத்தப்பட்ட பழிபாவத்தை
எல்லோருக்கும் பகிர்ந்தளித்தான்.

பசுந்துளிர் 147
அவர்களில் மற்ருெரு சிறுவன் கம்பி வேலியை மருவினற் போல நிலத்தில் குந்திவிட்டான். ஆட்டுக்குத் தீனியாகக் கொண்டுவந்து போட்டிருந்த பூவரசுக் குழைக் கட்டில் கைநீட்டி ஒரு தடியை உருவி இழுத்து இலைகளைப் பிடுங்கிப் போட்டுவிட்டுத் தடியைக் கம்பிகளினூடாக உள்ளே நீட்டிக் கைக்கு எட்டிய தூரத்தில் வீழ்ந்துகிடந்த ஒரு காக்கையைத் தடியினல் தொட்டு நோண்டினன், மற்றக் காக்கை கைக்கும் தடிக்கும் எட்டாத் தூரமாக வீழ்ந்துகிடந்தது. அத்துடன் மின்தாங்கியின் அபாயச் சிவப்பு எழுத்து அறிவித்தல் ஒவ்வொரு நிமிடமும் அவர்களை எச்சரிக்கை செய்து கொண்டிருந்தது. ** பாவம், முட்டாள் காக்கைகள் பள்ளிக் கூடம் போய் ஓர் எழுத்தாவது படித்திருந்தால் இந்தச் சிவப்பெழுத்து அறிவித்தலை வாசித்துப் பார்த்தாவது உயிர் தப்பியிருக்கலாமே ! ' என்று ஒரு சிறுவன் கூறி அனுதாபப் பட்ட போது, இன்னுெருவன் ' இன்றைக்குத்தான் பள்ளிக் கூடம் இல்லையே டா !’ என்று அதற்கு விடை பகர்ந்தான். 'சத்தம் போடாதீங்களடா. அம்மா காதிலே எங்கள் பேச்சுக்கேட்டால் குரல் வைப்பா " என்று அவர்களில் வயதுக்கிளைய கடைக்குட்டித் தம்பியைக் கடிந்து அவன் காதில் நிமிண்டிவிட்டுக் கம்பிக் கூட்டுக்குள்ளே தடியை விட்டு , காக்கையைத் தொட்டு அதன் இறக்கைமேல் தடியால் தடவிக்கொண்டிருந்த மூத்தவன், அசைவற்றுக் கிடந்த காக்கை அசைந்து அதன் சுருண்டுபோன கால் நகங்கள் பச்சைத்தடியைப் பற்றிக்கொள்ள, தடியின்மேல் அது எழுந்து நிற்க , அதைக் கண்டு அதிசயமடைந்தான். சோர்ந்து, தியங்கித் தடியின்மேல் ஏறி உட்கார்ந்திருந்த காக்கையை மெல்ல வெளியே கொணர்ந்ததும் ஒரு சிறுவன் ஒடிப்போய்த் தண்ணிர்கொணர்ந்து அதன்மேல் தெளிக்க, காந்தமடிச்சு வீழ்ந்த காக்கையார் எழுந்து, மெல்லத் தத்தித்தத்தி நடக்கலானர்.
பச்சைத்தடி மந்திரக்கோலாகவும் மூத்தவன் பெரிய தொரு மந்திரவாதியாகவும் மற்றிரு சிறுவர்களின் பார்வை யில் உயர்ந்து நின்றனர் .

Page 95
148 மனித மாடு
யார் தோசை போட்டதினுல் காக்கைக்குக் காந்த மடிச்சுப் பழிபாவத்துக்குள்ளாஞர்கள் என்ற பொல்லாப்பு பாதி விட்டுநீங்கியதாக மூன்று சிறுவர்களுக்கும் மனத்துக் குள்ளாக ஒரு ' புளுகம் .
மற்றக் காக்கையைச் சிறுவர்கள் காப்பாற்ற முடிய வில்லை. அது கம்பி வேலிக்குள்ளே அவர்களுக்கு எட்டாத் தூரமாக வீழ்ந்து கிடந்ததனல் அதனை அணுக முடியா திருந்தது. அதனல் அது அப்படியே கிடந்து செத்துப் போய்விட்டது.
காக்கையார் கூறிய சோகக்கதை இதுதான். காக்கை யார் கதையைக் கூறி முடித்தபோது ‘ஆனல் இது முழுக் கவுழ் சோகக்கதை என்று சொல்வதற்கில்லையே. செத்துப் பிழைத்த சந்தோஷமும் கலந்திருக்கிறதே!' என்றேன்.
காக்கையார் இதற்குமேலும் என் பேச்சுக்குக் காது கொடுக்க விருப்பமற்றவராகி “அதோ குயில் கூவுகிறதைக் கேட்டாயா ? சனியன் மறுபடியும் என் கூட்டுப்பக்கம் வந்து சுற்றத் தொடங்கிவிட்டது . இப்பொழுதே போய்க்குட்டிக் கலைக்க வேணும். எங்கே இன்னும் கொஞ்சம் முறுக்குக் கொடேன் நான் போக வேண்டும் ' என்றது .
ஒரு துண்டு முறுக்கை உடைத்து அதன்முன் வீசியதும் பாய்ந்து அதனைக் கொத்திக் கவ்வி எடுத்துக்கொண்டு பறந் தோடிப் போயிற்து. எழுந்து தெருவாயிலுக்கு நடந்தேன்.
ஒருபஸ் தெருவோரமாக ஒதுங்கிற்று. கிராமத்துச் சாலை ஊடே சில மாதங்கள் முன்னதாகத்தான் நடை பெறத் தொடங்கிய புதிய போக்குவரத்துச் சேவை, அடுத்த மற்றக் கிராமங்களுக்கும் பட்டணத்துக்கும் நினைத்த வுடனே போகவும் போய்ப் போன காரியம் முடித்துக் கொண்டு உடனே திரும்பவும் ஊர் மக்களுக்கு இந்தச் சேவை பலவிதத்தில் சவுகரியமாய் இருந்தது.
பாதை ஒரமாக மரங்களின் நிழலில் அதற்குரிய தரிப்பு லாயத்திற்கு ஒதுங்கி, ஒருநிமிடம் தரித்து நின்று, ஆட்க% இறக்கி, ஏற்றி ஆசனங்களை நிரப்பிக்கொண்டு, அதற்கு

பசுந்துளிர் 149
மேல் தன் நாலுகால் பாய்ச்சலைத் தொடர மூர்க்கம் கொண்டு மீண்டும் மூச்செடுத்தது. அதன் மேல்தட்டின் கூரை மரங்களின் கிளைகளை மருவும் தெரு வேலிக்கு அப்பால் நின்ற மாவும் பலாவும் பஸ்ஸின் திருமேனியை அவ்விதம் பசுமையாகத் தொட்டுத் தீண்டும்படி சில கிளைகளைத் தெருப்பக்கமாக நீட்டிநின்றன.
பஸ் நகர்ந்து இலைகளையும் குழைகளையும் தடவிக்கெண்டு மெல்ல உருண்ட போது மாமரத்தில் கிளைக்குக் கிளை தாவிக் காயும் கனியும் சுவைத்து ஓடி விளையாடிய அணிற்பிள்ளை ஒன்று அதன் பற்றுக்கோடு வழுவி பஸ்ஸின் மேல்தட்டு யன் னலூடாக உள்ளே நழுவி வீழ்ந்தது. அணிற்பிள்ளையின் இந்த அவலம் பிரயாணிகள் கொலு அமர்ந்திருக்கும் பேரவைக் கண் அவர்தம் உளப்பாங்கில் ஒரு நெகிழ்ச்சியை யும் கிளு கிளுப்பையும் ஏற்படுத்தி, அதுவே ஓர் அக்களிப்பும் உணர்ச்சிக் கொந்தளிப்புமாக அலையடித்து மெல்ல அடங் இற்று. அணிற்பிள்ளை அங்கிருந்து தப்பி ஓட வழியும் தருணமும் பார்த்து அங்குமிங்குமாய் ஓடித்திரிந்தது.
பேரூர்தி இடம் பெயர்ந்து பெரிதாக ஊர்ந்து அடுத்த தரிப்பு லாயம் சேர்ந்து அங்கொரு நிமிடங் கால்கொள்ள, அம்மட்டில் கட்டணம் செலுத்தாமலே தம் இலவச பய ணத்தை முடித்தார்போல் அணிற்பிள்ளையார் வெளியே பாய்ந்து மற்ருெரு மரத்துக்குத் தாவினர் தப்பி ஓடினர்.
எதிர் வீட்டு வாசலிலே பொல் அலூன்றி நின்ற கிழவனர் பஸ் விட்டிறங்கி வந்த சிறுவர்தம் முகம் நோக்கி ' எங்கு போய் வருகிறீர்கள் பிள்ளைகள்?' என அன்பாக வினவுவார்.
நீண்டகாலக் கொழும்பு வாசத்தின் பின் பள்ளி நாள் கோடை விடுமுறை கழிக்கக் கிராமம்திரும்பியிருக்கும் சிறு வர்கள் அவர்கள்.
'கீரிமலைக்குப் போனுேம் தாத்தா. நீராடிவிட்டுத் தொழிற்சாலையையும் சுற்றிப் பார்த்துக்கொண்டு வரு SGob."

Page 96
150 மனித மாடு
முதியவருடனே கலந்துரையாடி மகிழும் இளங்கதிர்ச் -செல்வர். அவர்தம் குதலை மொழிகேட்டு இன்புறும் தாத்தா,
பஸ்ஸில் நடந்ததை முதியவரிடம் கூறித் துதித்த பிள் ளைகள், நீருற்ருடி வந்த புத்துணர்ச்சியுடனே கிழவனுர் கூட அங்கு நின்றே அதன் மேலும் சிலவேளை கலந்து மகிழ்ந்து குலவுவர்.
* 'இங்கெல்லாம் முன்புநின்ற நிழல் மரங்களைக் காணுேமே தாத்தா. என்னவோ நாற்றமடித்து மூக் கைப்
பிடுங்குகிறதே" சுற்றுமுற்றும் தேடும் நோக்கினராய் மூக்கைப் பிடித்து நிற்கும் சிறரிடம், "நூற்றுக் கணக்கான நிழல் மரங்களே வெட்டிச் சாய்த்துவிட்டார்கள். நிழல்
மரங்கள் நின்ற இடத்திலேதான் ஒளிதரும் மின் தந்தி மரங்களைப் பார்க்கிறீர்கள், பிள்ளைகள். '
* "எல்லா நாளும் எல்லா மரங்களிலும் வழக்கமாகப் போய்க் குந்தும் பறவையார் இந்த நச்சு மரத்துக்கும் தாவி யிருக்கிறர். அதனுல் காந்தம் பாய்ந்து செத்துப்போய்க் கிடக்கிருர். அதோ!' என்று காண்பித்தபோது சிறுவர் ஒடிப்போய், செத்துக்கிடந்த பறவையைக் கையில் தூக்கிப் பார்த்துவிட்டு 'மாங்குயில், புள்ளிக் குயில் தாத்தா, இதன் நாற்றம்தான் இங்கெல்லாம் வீசி நம் மூக்கைப் பிடுங் கியது. எங்கேயாவது தூரத்தே கொண்டுபோய் வீசிடு ĠBaou Tub ' ' 6T Girlu fi .
** அப்படியே செய்யுங்கள். '
'நிழல் மரங்களிலே கிளைக்குக்கிளை தாவி இராப் பகலாகக் கூவி, கானம்பாடி மாந்தர்தம் செவியாரத் தேன் வார்த்த இனிய பறவையல்லவா தாத்த , அதன் உடல் இப்படி நாற்றமடிக்கக் கூடாது, கொண்டுபோய்க் குழி தோண்டிப் புதைத்து விடுவோம்.'
*ஒமோம், அப்படியும் செய்யலாம், செய்ய வேண்டியது தான். செய்யுங்கள்."

பசுந்துளிர் 151
'காக்கைகள் கூட்டம் கூடி மாங்குயிலைக் குட்டிக் கலைத்திருக்கும், அதனுல்தான் குயிற்பிள்ளை தெறிகெட்டு ஒடிப்போய் மின்காந்தக் கம்பத்தில் மோதி, காந்தமடிச்சு அப்படிச் சுருண்டு விழுந்து மாண்டிருக்க வேண்டும், ' பெரியவர் துயரக் குரலில் அனுதாப உரை வழங்கவும், "ஏன் தாத்தா குயிற்பிள்ளையைக் காக்கைகள் விரட்டு கின்றன?" என வினவினர்.
* எப்பவுமே அப்படித்தான். குயிற் பிள்ளைகளைத் காக் கைகள் கண்ணில் கண்டாலே குட்டித் துரத்தும். காக்கை யும் சேவலும் நமக்குப் பொழுதுவிடியத் தினமும் சங்கு முழங்குவன என்ருல் குயிற்பிள்ளையோ கோடை வெயிலை வசந்த நிலவாக்கி, தீங்குரற் கான அமுது வழங்கி நம்மை மகிழ்விக்கும். இவ்விதமாக வெல்லாம் மனிதர்கூட அவர்தம் வாழ்வுக்குச் சுவை ஊட்டும் இப் பறவைகள் தமக்குள் ஏன் பொல்லாப் பகை பாராட்டுமோ? அது நாம் அறியக் கூடுவதில்லை."
தாத்தா அதன்மேலும் சொல்வார்,
‘'சித்திரை வைகாசி மாத நிறைநிலா, சோலை மரங்களில் கூடித் துயிலும் காக்கைக்கும் குயிலுக்கும் வசந்த ருதுவின் இன்னுணர்வை வஞ்சிப்பதில்லை. ஏக சமத்துவமாகவே வாரிவழங்கும். அப்போதெல்லாம் அவை ஒன்றையொன்று கண்காணுமலே ஒரே மரத்தின் கிளைகளில் அங்கங்கு துஞ்சும் நிலேயில் ஒரோர் சமயம் கதிர்மதியம் கண் குத்த அது ஆற் ருமல் கூடிக் குரலெழுப்பி ஒயும். இரா முழுதாக இன்னிசை மாரியாக வர்ஷம் பொழியும் இப்பறவைகளின் கானம் மாந்தர் குலத்தினை இன்பக் கிளுகிளுப்பில் ஆழ்த்தும் சஞ்சீவி மாருதத்துக்கு ஒப்பானதென்றே சொல்ல வேண்டும்.
எங்களூர்த் தெருவிலே இன்றைக்கெல்லாம் பஸ் ஒடுகிறது. பிள்ளைகள் தெருவிலே சோலை பரப்பிய நிழல் மரங்களின் கிளைகளை அதற்காகவும் தான் வெட்டிச் சாய்த் தார்கள். இதனுலெல்லாம் தெருவிலே கோடை-இவ் வாண்டு நீண்ட கோடை."
- புதுசு, பங்குனி 1980 ("ஈழநாடு" இதழிலிருந்து புதுசு மறுபிரசுரம் செய்தது)

Page 97
24
காளிமுத்துவின் பிரஜா உரிமை
ZᏉ இலங்கையின் சமூகப் பொதுவாழ்வில் காளிமுத்து பிர மாத சேவைகள் புரிந்துவிட்டதாக அப்படி ஒன்றும் பிர மாதப்படுத்தவில்லை. அதனல் இலங்கையின் கெளரவப் பிர ஜையாக அரசாங்கம் அவனை ஏற்றுக்கெ: ள்ளவுமில்லை. ஒரு சாதாரண தோட்டத் தொழிலாளியாகத்தான் இலங்கை மண்ணில் அவன் வாழ்ந்தான்.
காளிமுத்துவின் குடும்பம் ஒரு தலைமுறையாக இலங் கையில் வாழ்ந்து மலை நாட்டை வாழவைத்து, அந்த மூதாதைகளின் வியர்வையில் செழித்து வளர்ந்துதான் இன்று ராஜகிரித் தோட்டம் கம்பீரத் தோற்றங்கொண்டு குளு குளு:ென்று நிற்கிறது. ஏன், உண்மையைச் சொன் ணுலென்ன. மலைநாடு இன்றைக்கெல்லாம் மலைபோல நிமிர்ந்து நிற்பது இந்தியப் பாட்டாளிகளின் உழைப்பின் மீதுதான். -
பிரிட்டிஷ்காரன் இலங்கையில் கோப்பிச்செடி பயிரிடத் தொடங்கிய காலத்திலேயே காளிமுத்துவின் முற்சந்ததிகள் தோட்டத் தொழிலாளிகளாக இலங்கையில் குடியேறி ஞர்கள். t
இலங்கைப் பிரஜாவுரிமைபற்றிய பேச்சு ஊரில் அடி பட்டபோது ராஜகிரித் தோட்டத்தை இலங்கை அரசாங்கம் எடுத்துக்கொள்ளப் போகிறதென்றும் இலங்கைப் பிரஜை

காளிமுத்துவின் பிரஜா உரிமை 153
களாயுள்ளவர்களை மட்டுமே இது வேலைக்கமர்த்துமென்றும் பிரஜாவுரிமை பெருத இந்தியர்களை இந்தியாவுக்கே அனுப்பி விடப்போகிறதென்றும் ஆகவே, தோட்டத் தொழிலா ளர்கள் ஆகவேண்டிய அத்தாட்சிகள் காட்டித் தங்களே இலங்கைப் பிரஜைகளாகப் பதிவு செய்துகொள்ள வேண்டு மென்றும் காளிமுத்துவுக்குத் தகவல் கிடைத்தது.
தேர்தலுக்கு நிற்பதற்கோ அல்லது வேறு ஏதாவது அர சியல் கூத்தடிப்பதற்கோ அவன் பிரஜாவுரிமைக்கு ஆசைப் படவில்லை. அவன் கவலைப்பட்டதெல்லாம் வருங்காலச் சந்ததிகளாக விளங்கவிருக்கும் அவனது பிள்ளை குட்டிகளை எண்ணித்தான்.
காளிமுத்துவுக்கு மனைவியும் தாயும் மூன்று பிள்ளை களுமூண்டு. குளுகுளுவென்று மலைச் சுவாத்தியத்திலே முனசிங்காவுக்கும் அப்புஹாமிக்கும் பிறந்த குழந்தை களைப் போலக் குவாகுவா என்று கத்திக்கொண்டுதான் அவைகளும் பிறந்தன. உடலின் வலுவைப் பிழிந்து உழைத்த இத்தனை காலத்திலும் காளிமுத்துவுக்கு மிஞ்சிய தேட்டம்சம்பாத்தியம்-இதுதான்: ஐந்து ஜீவன்கள் கொண்டதொரு பெரிய குடும்பம்.
இந்தக் குடும்பப் பளுவோடும் தளர்வடைந்த கைக ளோடும் இனிமேல் இந்தியாக் கரைக்குப்போய் அவளுல் என்ன செய்ய முடியும்? பிள்ளை குட்டிகளின் வருங்காலத் திற்குத்தான் அங்கு எந்த வழியை வகுப்பது?
ஆகவே, பிரஜாவுரிமை பெறுவதற்கான மார்க்கத்தைக் காளிமுத்து தேடத் தொடங்கினன். இதற்காக அங்கு மிங்கும் சிந்தனைகளும் ஆசைகளும் உண்டாயின. தேயிலைக் காட்டுக்குள்ளே உரிமையற்ற அநாமதேயமாக அவனது பிரேதம் புதைக்கப்படுவதை நினைத்தாலும் அவனது மனம் சற்றே வேதனைப்படத்தான் செய்தது. இத்தனை காலமாக வாழையடி வாழையாய் வாழ்ந்து பாடுபட்டபின் சாகும் பொழுதாவது வாயில்லாப் பூச்சியாகச் சாகாமல் வாக் குரிமை பெற்றுச் சாகக்கூடாதா? என்று ஒரு ஆசை
AD 20

Page 98
154 மனித மாடு
அவன் மனதில் ஒரு மூலையில் இல்லாமல் போகவில்லை. ஆணுல், அதை அவன் வெளியே சொல்லுவான? ஒரு தோட்டத் தொழிலாளியின் ஆசைக்குப் பெறுமதி..?
காளிமுத்து படி ஏறிய இடங்களில் பிராஜாவுரிமை கிடைப்பதற்குப் போதிய அத்தாட்சிகள் காட்டவேண்டு மென்று அவனுக்குத் தெரிவிக்கப்பட்டது. மேலும் 'அங்கே அவரைப் போய்க்காணு. இங்கே இந்தத் துரையைக் கண்டு பேசு' என்று அங்குமிங்குமாய்ப் பல தடவை அவனை அலைக்கழித்தார்கள். இலங்கை வரும் இந்தியர்கள் இப்படி யான நிலைமைகளில் அபூர்வமான சகிப்புத்தன்மையோடு நடந்துகொள்ள மண்டபம் "கேம்பிலேயே பழகிக்கொண்டு விடுகிறர்களாதலால் காளிமுத்து பொறுமையோடு அங்கு மிங்கும்/போய் அவரையும் இவரையும் பதினறு தடவைக்கு மேல் பார்த்தான். பார்த்தும் பயனென்ன?
**அத்தாட்சி வேண்டும்; பிறப்புப் பத்திரங்கள் காட்ட வேண்டும்" என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள். வெள்ளேக்காரத் தோட்ட 'சூப்ரண்டன்" ஆட்சியிலே அவன் அத்தாட்சிக்கு எங்கு போவான்? பிறப்புப் பத்திரங்களுக் குத்தான் எங்கு போவான்?
"ஐயா, எனக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கு. கருப் பையா என்று பெயர் வச்சிருக்கோம்; எழுதிக் கொள் ளுங்கோ, எஜமான்' என்று தோட்ட 'சூப்ரண்டன்’ சுந் தோரில் போய் ஆசையோடு சொல்லும் போதே, அங் கிருக்கும் யாழ்ப்பாணத்துக் கிளார்க் துரை 'என்னடா அது, கருப்பு ஐயா? எப்போடா ஐயாவானே? சின்னக் காளிமுத்து என்று சொல்லடா’’ என்று அதட்டி சி. கா. மட்டும் போட்டு விஷயத்தை முடித்துவிடுவான். இந்த நிர்வாக லட்சணத்தில் அங்கே பிறப்புப் பத்திரங்களா இருக்கும்? ஆனல், பதிவு உத்தியோகத்தர்கள் என்னமோ பிறப்புப் பத்திரங்களைக் கேட்கத்தான் கேட்டார்கள். அத் தாட்சி கொண்டுவா என்று கூச்சல் போடத்தான் போட் டார்கள்.

காளிமுத்துவின் பிரஜா உரிமை 155
**கைப்பூணுக்குக் கண்ணுடியிலா அத்தாட்சி காட்ட வேணும் ஐயா? அதோ பாருங்கள், எங்கள் கைபட்டு, எங்களது சொந்த வியர்வையும் இரத்தமும் பாய்ச்சி, சந்ததி சந்ததியாக நாங்கள் பண்படுத்தி வந்த தோட்டங்களை’’ என்று சொன்னுல் அது செவியில் ஏறமாட்டாது.
"அதற்கு அத்தாட்சி.?" காளிமுத்து சோர்வடைந்தான்.
"கடல் கடந்த இந்தியரின் உழைப்பைத்தான் அரசாங் கம் காட்டில் எறித்த நிலவைப்போல இம்மாதிரி ஒதுக்கி விடுகிறதென்றல், அவர்கள் பகலுமிரவும் வெயிலும் மழை யும் காடும் மலையும் பார்க்காமல் பாடுபட்டதெல்லாம் தான் தண்ணிரில் கரைத்த புளிபோலப் போய்விடுகிற தென்றல் அந்தத் துர்ப்பாக்கியசாலிகள் பிறப்பு, இறப்பு இல்லாத அசேதனப் பொருள்களாகவுமா ஆகிவிட்டார்கள்?" என்று காளிமுத்துவின் நெஞ்சம் கலங்கியது.
**வாருங்கள், அத்தாட்சி காட்டுகிறேன்' என்று வாக் குப் பதிவு உத்தியோகஸ்தர்களேக் காளிமுத்து ஒரு தினம் வீட்டின் பின் பக்கமாய், தேயிலைக் காட்டுக்குள்ளே அழைத் துச் சென்றன்.
உயர்ந்து வளர்ந்த அரசங்கன்று ஒன்று அங்கே நின்றது. அதைச் சுற்றிவர உத்தியோகத்தர்களை நிற்கும்படி கேட் டுக்கொண்டு, காளிமுத்து கையோடு எடுத்துச் சென்ற கோடரியைக்கொண்டு அதை வெட்டத் தொடங்கினன்.
காளிமுத்து உணர்ச்சி வசப்பட்டிருந்தானென்பது அவனுடைய ஒவ்வொரு காரியங்களிலும் தென்பட்ட பதட்டத்திலிருந்து தெரிந்தது. உத்தியோகஸ்தர்களுக்குக் கோடரியையும் காளிமுத்துவின் பதட்டத்தையும் பார்த்துக் கொஞ்சம் யோசனைதான். என்ருலும், பேசாமல் நின்றர்கள்.
அரசங்கன்றை அடி மரத்தோடு வெட்டி வீழ்த்தி விட்டு மண்ணுக்குக் கீழே புதையுண்டிருந்த மரத்தின் வேர்ப் பாகத்தை அவன் கிளப்பத் தொடங்கினுன்.

Page 99
156 மனித மாடு
பதிவு உத்தியோகித்தர்களுக்கு இதெல்லாம் விசித்திர மாகத் தோன்றிற்று. ஆளுனும், முடிவு என்னவென்பதை அறியும் ஆவலில் பேசாமல் நின்ருர்கள். பிறப்புப் பத்தி ரங்களே ஒரு சமயம் மண்ணுக்குள்ளே புதைத்து வைத்தி ருக்கிருனே? பைத்தியக்காரன்" என்று அவர்கள் ஆச்சரியப் u LfTiésair.
அரசமரத்தின் அடிப்பாகமும் வெளியே கொண்டுவரப் பட்டாயிற்று. நிலத்தில் முன்று முழ ஆழத்துக்கு மேலே காளிமுத்து கிடங்கு தோண்டிவிட்டான். மேலும் தோண் டிக்கொண்டே போனன். பதிவு உத்தியோகத்தர்கள் சற்றே பொறுமை இழந்தார்கள். "யாருக்கப்பா குழி தோண்டுகிருய்?' என்று கிண்டல் பண்ணினர்கள்.
/ . o மண்வெட்டியில் ஏதோ ஒரு கடினமான பொருள் தட் டுப்பட காளிமுத்து பரபரப்பாகவே குனிந்து மண்ணைக் கிளறி அதை எடுத்தான். அது ஒரு கல்லு. "இது என்ன சனியன் இதுக்குள்ளே' என்று வெறுப்போடு தலையைச் சுழட்டி மேலே வீசிஞன். அது மேலே நின்ற உத்தியோ கத்தர் ஒருவரது தலையில் லொடக்கென்று விழுந்தது. "ஏ, வெளியே ஆட்கள் நிற்பது தெரியவில்லேயா?" என்று ஒரு அதட்டல் .
காளிமுத்து மேலும் கிடங்கைத் தோண்டினன். இப் பொழுது மண்ணுக்குள்ளே இன்னுென்று பளிச்சிட்டது. புழுப்போலச் சுருண்டுபோய்க் கிடந்த அதை அவன் எடுத்துக் குலைத்தான். அதைப் பார்த்தபோது அவன் கண்கள் கலங்கின. அது ஒரு வெள்ளி இடுப்புக்கொடி. கண்ணிலே ஒற்றிக்கொண்டு மடிக்குள்ளே அதைப் பத்திரமாகச் செருகி வைத்தான்,
குழி இப்பொழுது அவன் தலையை மறைத்தது. உத்தி யோகத்தர்களுக்கு நின்று கால் சோர்ந்து போயிற்று. சற்றே பின்பக்கமாக விலகி வெட்டி விழுத்திய அரசங் கன்றுக் கிளைகளின் மீது உட்கார்ந்தார்கள் :
இருந்தாற்போலிருந்து காளிமுத்து துள்ளிக் குதித்தான்.

காளிமுத்துவின் பிரஜா உரிமை 157
இதோ அத்தாட்சி கிடைத்துவிட்டது. நான் இலங் கையின் பிரஜை. அதற்கு இதைவிட இன்னும் என்ன அத்தாட்சி கேட்கிறீர்கள்?’ என்று எங்கோ கிணற்றுள் இருந்து வருவதுபோல அவனது குரல் கேட்டது. அதைத் தொடர்ந்தாற் போல மண் பிடித்த பொருளொன்று வெளியே உத்தியோகத்தர் முன்பாக வந்து விழுந்தது. அவர்கள் ஆவலோடு ஒடிப்போய் அதை எடுத்துப் பார்த் தார்கள்.
அது ஒரு மனிதப் பிரேதத்தின் கை எலும்பு,
* 'ஐயா துரைமார்களே, இது என்பாட்டனுரின் கைஎலும்பு, எத்தனையோ வருஷங்களுக்கு முன்னே அவர் இங்கு புதைக்கப்பட்டவர் என்னை இலங்கைப் பிரஜை
யாக்க உங்களுக்கு இந்த அத்தாட்சி போதவில்லையென்ருல் என்னை இந்தக் குழியிலே வைத்து உங்கள் கையினலேயே தள்ளிவிட்டுப் புதையுங்கள்" என்று காளிமுத்து மறுபடியும் சத்தம் வைத்தான். М
y
காளிமுத்துவின் பாட்டனின் கை எலும்பை உத்தியோ கத்தர்கள் கையாலெடுத்தபோது அவர்களுக்கு ரோமம் புல்லரித்தது ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள்.
'பாவம், அவனுக்குப் பைத்தியம்தான் பிடித்திருக் கிறது' என்று அவர்களில் ஒருவன் சொல்லிக் கொண்டு வெளியேறினன். மாட்டுக்குப் பின் வால்போலச் சகல உத்தியோகத்தர்களும் அவனேப் பின்தொடர்ந்தார்கள்.
வெட்டி வீழ்த்திய அரச மரத்தின் இலைகள் அப்போது வீசிய மலைக்காற்றுக்குச் சலசலக்கவில்லை. அவை வாடிப் போய்விட்டன.
-மாருதம், ஆனி 1983. (மறுபதிப்பு) நவஜீவனம் (1951-52), விவேகி (1967); ஈழத்துச் சிறுகதை மணிகள் (1973) ஆகியவற்றிலும் வெளிவந்தது.

Page 100
பின்னிணைப்பு: 1
மறுமலர்ச்சித் தமிழ்
سمسمبر
மறுமலர்ச்சி என்ருல் என்ன ?. .
காலப்போக்கை அனுசரித்து மனித சமுதாய வாழ் விலும் கலைகளிலும் மறுமலர்ச்சி இடையிடையே ஏற்படு கிறது. பாஷை சம்பந்தமானவரையிலும் இந்த மறு மலர்ச்சி நடைபெறுகிறது; நடைபெற வேண்டியதுதான்.
ஆனல், எங்கள் தமிழ்ப் பாஷைவரையில் இந்த மறு மலர்ச்சி விஷயம் என்னவாயிற்று?
பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் எப்பொழுதோ ஒருமுறை பூவும் காயுமாகப் புஷ்பித்திருந்ததற்கு மறுபடி யும் இப்பொழுது மிகச் சமீப காலத்தில்தான் சிறிது துளிர்க்க ஆரம்பித்திருக்கிறது.
சீவன் குன்றி, பசுமை வரண்டு, காய்ந்து வெறுந் தடிகளாக நின்ற மரத்துக்குத் தண்ணிரும் பசளையும் போட்டு அதை உயிர்க்கச் செய்த புண்ணியம் காலஞ் சென்ற பூரீ சுப்பிரமணிய பாரதியைச் சேரவேண்டியது தான். அன்று பாரதியிட்ட பசளையில்தான் இன்று மறு மலர்ச்சித் தமிழ் வளர்ந்து வருகிறது. அன்று துளிர்க்க ஆரம்பித்தவைதான் இன்று பசுமை சொட்டும் இலைக ளாகவும் அரும்புகளாகவும் மலர்களாகவும் வளர்ச்சி பெற்றுள்ளன.

மறுமலர்ச்சித் தமிழ் 159
வளர்ச்சிக்கு வழி எது?
இப்படி அபூர்வமாக வெளிவந்துள்ள துளிர்களையும். அரும்புகளையும்தான் இன்று அடியோடு கிள்ளியெறிந்து விடப் பார்க்கிருர்கள் சில தமிழன்பர்கள். வெயிலிலும் மழையிலும் கிடந்து துடித்துக் கண்ணுங் கருத்துமாகப் பரா பரித்து அதன் மலர்ச்சிக்கு உயிரளித்தவன் மனம் இதைக் காண எவ்வளவு வேதனைப்படும் ?
ஆஞல், அவர்கள்-அந்தத் தமிழன்பர்கள்-என்ன சொல்கிருர்கள்? மரத்தில் அரும்பிவரும் முளைகளைக் கிள்ளிவிடுவது அதன் பாதுகாப்பைக் கருதி அதன் மேலுள்ள பிரியத்தினுல்தாகும். எவ்வளவு பைத்தியக்காரத்தனம்!
மரம் பாதுகாப்பாக இருப்பதற்கு வழி அதிற் கிளம்பும் முளைகளைக் கிள்ளிவிடுவதா? மற்றைய விருகyங்களைப்போல அதுவும் வானளாவச் செழித்து ஒங்கவேண்டுமென்ருல் அதற்குத் தண்ணிரும் பசளையும் காட்டாமல், வெயில் மழை ஒன்றும் அதன் மேல் படாமல், அதைப் பக்குவமாக மூடிப் பந்தலிட்டு அதற்குத் தினமும் தூப தீபங்காட்டி வணங்கி வருவதுதான் வழியோ? இப்படியென்ருல் மரம் வளரமாட்டாது; துளிர்க்கமாட்டாது; புஷ்பிக்கவும்மாட் டாது. நாளடைவில் வேர் காய்ந்து மரம் செத்தே போய்விடும். இத்தகைய நிலை ஏற்படும்படிதான் மேற்படி தமிழன்பர்கள் தூண்டிவருகிருர்கள்.
Ο O O O Ꭴ Ο Ο ᏭᏣ
எங்கள் தமிழ்ப் பாஷை இதுகாறும் ஒரு புதிய பாதை யில் சென்று கொண்டிருந்தது. காவியங்களும் நீதி நூல் களும் அவற்றுக்குரையான வசன நூல்களுந்தான் பெரும் பான்மையும் பெருகியிருந்தன. சங்க காலத்தில் தனித் தமிழ் வாழ்வைச் சித்திரிக்கும் நூல்கள் வெளிவந்தன. ஆரியத்தின் தொடர்பு பெற்றபோது இராமாயணம், பாரதம் போன்ற காவிய மலர்கள் பூத்தன. அதே போலத்தான் இப்பொழுதும் உலகத்தின் சிறந்த பாஷையி லொன்ருகிய ஆங்கிலத்தின் தொடர்பு நமது பாஷைக்கு ஏற்படும்போது, புது வாழ்க்கை முறைகளினல் உந்தப்பட்டு

Page 101
60 DGSf5 DIT :
அங்கு வளர்ந்துவரும் புது இலக்கிய முறைகள் நம் பாஷையிலும் இடம்பெற்று வருகின்றன. நாவல்கள் சிறு கதைகள், புதுவிதமான நாடகங்கள், கட்டுரைகள், புது விதமான பாடல்கள், வசன கவிதைகள் என்பன இப்போது பூத்துவரும் புதுமலர்கள். இவை மறுமலர்ச்சியின் சுகந் தத்தையும் லாவண்யத்தையும் நமக்கெடுத்துக் கூறுகின்றன.
仑 ძზ மாற்றம் வேண்டும் !
மனிதனுடைய நாகரிகம், பாஷை யாவுமே உலகச் சுழற்சியையும் கால வேகத்தையும் அநுசரித்து மாற வேண் டியதுதான். அது இயற்கை. தமிழையும் தமிழனையும் பொறுத்தவரையிலும் அப்படித்தான், ஏன் தமிழும் ஒரு பாஷை மிகவும் இனிய பாஷை, தமிழனும் மனிதன் தான், நாகரிகமடைந்த மனிதன். உலக நியதியை யொட்டிப் போவதற்கு எங்களுக்கு மட்டும் விதிவிலக்கு ஏன்? நாங்கள் மட்டும் இன்னும் கல்லொழுங்கையில், கட்டை வண்டியில் ஏறி விழுந்துகொண்டிருப்பானேன்? தங்கத்தைக் கட்டியாக அப்படியே பெட்டியில் பூட்டி வைத்துக்கொண்டிருப்பானேன்? பூத்துக் குலுங்கப்போகிற விருட்சத்தைத் துளிர்க்கவிடாமல் அதை வெட்டிவிழுத்திக் கொண்டிருப்பானேன்?
தமிழ் நாட்டிலுள்ள இன்றைய தமிழ்க் கட்சிகள் எல்லாவற்றின் நோக்கமும் ஆசையும் தமிழ் மகோன்னத மடைய வேண்டுமென்பதுதான். அதை நாமும் வரவேற்கி வேண்டியதுதான். தமிழின் எதிர்கால உன்னதத்துக்கு இதெல்லாம் அறிகுறிகள் என்று கருதி, அவற்றை மகிழ்ச்சி யோடு ஏற்றுக்கொள்ளுகிருேம். ஆணுல், அந்த உன்னத நிலையை அடைவதற்கு ஒவ்வொரு கட்சியாரும் வகுக்கும் பாதையில்தான் மாறுபாடு, அபிப்பிராய பேதம் ஏற் படுகிறது.
கிடங்கும் முடங்குமான பழைய கல்லொழுங்கையையும் கிழட்டு வண்டியையும் வைத்துக்கொண்டே இன்றைய தார் போட்ட தெருக்களோடும் மோட்டார்களோடும் சமமாகப் போய் முன்னேறப் பார்க்கிறது ஒரு கட்சி.

மறுமலர்ச்சித் தமிழ் 16
நாங்கள்-மறுமலர்ச்சித் தமிழர் கட்சி-என்ன சொல்லு 3Gopib?
பழைய கல்லொழுங்கைக்கு மண்போட்டு, தார் ஊற்றி அதில் உள்ள மேடு பள்ளங்களை ஒப்புரவாக்கி அங்கிருந்து பல புதிய தெருக்களையுமமைத்து, அவற்றின் இருபக்கமும் நிழல் மரங்கள், நந்தவனங்கள், நவ நவமான கட்டி டங்கள் எல்லாம் எழுப்பவேண்டுமென் கிருேம்.
தமிழென்ற தங்கக் கட்டியைப் பெட்டியிலிருந்து வெளியே எடுத்து அதை உருக்கி நாணயங்களாகவும் புதிய 'பாஷன்"ஆபரணங்களாகவும் செய்யவேண்டுமென்கிருேம்.
ஒரு விருட்சம் பூத்துக் காய்க்க வேண்டுமானுல் அதில் முளைக்கும் துளிர்களைக் கிள்ளாமல் விடவேண்டும். அதற்குப் பந்தல்போட்டு அதை மூடாமல் வெயிலும் மழையும் அதன் மேற் படவிடவேண்டும் என்கிருேம்.
மழிைத் தாரையினல் மிாற்றமடையும் மரத்தைப்போல திசைப் பாஷைகளின் மோதலினலும் புதிய வாழ்க்கை முறைகளினுலும் நமது பாஷையிலும் ஒரு புதுமை தோன்ற வேண்டும். இதுதான் உலகத்திலுள்ள எல்லாப் பாஷை களின் இயற்கையுமாகும்.
இவற்றில் என்ன பிழை? இப்படிச் செய்வதால் தமிழ் இறந்தொழிந்துவிடுமா? அதன் தூய்மை கெட்டுவிடுமா?
பாஷை என்பது
பாஷை என்பது எதற்கு? முக்கியமாக ஒருவர் கருத்தை இன்னுெருவருக்கு விளங்கவைப்பதற்குத்தான் பாஷை ஏற் பட்டது. அந்த முக்கிய அலுவலைச் சிதைத்தால் பாஷ்ை வளருமா? இது எவ்வளவு பைத்தியகாரத்தனம்?
பாஷ்ை எப்படி உற்பவித்தது? ஒருசில பண்டிதர்கள் சொற்களைச் சிருஷ்டி செய்து வழக்கில் கொண்டுவா’ என்று சொல்லி வந்ததல்ல இயல்பாக ஜனங்களிடையே தோன்றி வளர்ந்ததாகும். அதுதான் பாஷை. இதைவிட்டு ஒரு மறைமலையடிகளும் ராஜாஜியும் சொற்களை வகுத்து

Page 102
I 62 மனித மாடு
இதை வழக்கில் கொண்டுவா’ என்ருல் வரப் போவது மில்லை. அது பாஷையாகவும்மாட்டாது. சமூகத்துக்குப் பொதுவுடைமையான பாஷையில் அங்ங்ணம் விசேஷ உரிமை செலுத்துவது சர்வாதிகாரத்தனமாகும். அதை நாம் ஒரு போதும் ஆதரிக்கமுடியாது.
பாஷை யாருக்கு? மனிதனுக்கு. பாஷைக்காக மணி தஞ, மனிதனுக்காகப் பாஷையா? பாஷை மனிதன் சிருஷ் டித்த ஒரு கருவி. எனவே, மனிதனுக்காகத்தான் பாஷை, அவனுக்கு அது சரியானபடி உபயோகமாகாவிட்டால் அது இருந்தென்ன லாபம்? மனிதன் என்ருல் ஒரு சில பண்டி தர்கள் மாத்திரமல்ல. தமிழ்ப்பாஷை பேசுபவர் எல்லோரும் மனிதர்தான். தமிழன்தான். அவனுக்குத் தமிழில் உரிமை யுண்டு படித்த பண்டிதனுக்குத் தமிழில் எவ்வளவு உரிமை யுண்டோ அவ்வளவு உரிமை சாதாரண தோட்டக்கார னுக்குமுண்டு. இதை எவரும் மறுக்கவேமுடியாது. திருக் குறளும் தொல்காப்பியமும் மட்டுந்தான் தமிழல்ல. ஐந்து வயசுக் குழந்தை பேசும் மழலைச் சொற்களும் தமிழ்தான்.
தனித்தமிழ்
தனித்தமிழ் என்பது இன்னெரு கூச்சல். காலப் போக்கை அனுசரித்து புதியபுதிய கலைகளும் கருத்துக்க ளும் மனித சமுதாயத்தில் வந்து மோதுகின்றன. உதார ணமாக, தொல்காப்பியர் காலத்திலில்லாத "சைக்கிள்" இன்றைக்கிருக்கிறது. அதற்குத் தமிழ் இல்லை. நிகண்டு களில் சொல்லிவைக்கவில்லை. ஆஞல், பொது சனங்களிடையே என்ன வகையில் அது சுகமாகவும் சாதாரணமாகவும் உப யோகப்படுகிறது? "சைக்கிள்" என்றுதான், ஆகவே, "சைக்கிள் தான் சரியான தமிழ். இலக்கியத் தமிழ்.
தனித்தமிழ் ஒன்றை உண்டாக்கி அதை நிரந்தரமாக்க முடியுமா? தமிழில், இன்றைக்கு அவை சமஸ்கிருதமோ தமிழோ என்றுகூடப் பெரும்பாலார்க்குத் தெரியாமல் எத்தனை சமஸ்கிருதச் சொற்கள் குவிந்து கிடக்கின்றன? இவற்றையெல்லாம் பொறுக்கி விலக்கிவிட்டு அவற்றுக் கெல்லாம் தனித்தமிழ் ஏற்படுத்தி அவற்றைத் தமிழர்கள்

மறுமலர்ச்சித் தமிழ் 63
வழக்கில் கொண்டுவரவும் செய்வதென்முல் . அதற்கு ஒரு புதிய சமூகம் பிறக்க வேண்டும். இன்றைய தமிழ்ச் சமூ கத்தை அடியோடு ஒழித்துவிட்டுப் புதிய சமூகம் ஒன்று நிர்மாணிக்க வேண்டும். அது முடியாது. கூடியவரை தமிழிலில் எழுதப் பேசவேண்டியதுதான். காலவேகத்தோடு அள்ளுப்பட்டு வந்துசேரும் திசைச்சொற்களைத் தவிர்க்க (uplq urgji.
இந்தப் பிரச்சினைகள் எல்லாம் இன்றைய மறுமலர்ச்சி இயக்க முன்னேற்றத்துக்குக் குறுக்கே நிற்பவை. இவை ஆதாரமற்ற வெறும் போலிப் பிடிவாதங்களும் முரட்டுக் கொள்கைகளுமாகுமென்பது தெட்டத்தெளிவு.
மறுமலர்ச்சிச் சங்கம்
தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கத்தின் லகதியம் இதுதான்:
பழைமையை அத்திவாரமாகக்கொண்டு புதுமையை எழுப்ப வேண்டும். புதிய புதிய சிருஷ்டிகள் எல்லாம் எங்கள் தமிழில் உண்டாகவேண்டும். பழைமையை மட்டும் புதுப்பித்துக்கொண் டிருப்பதில் பிரயோசனமில்லை. புத்துயிரும் புத்தழகும் கொண்ட புதுப்புது முறைகளில் தமிழிலக்கியம் விரியவேண்டும்.
அன்ருெருகாலத்தில் செழித்து மலர்ச்சி பெற்றதைப் போலத் தமிழ் இனிமேலும் மலர்ச்சி-பூரண மறுமலர்ச்சி -பெறவேண்டும்: பெறத்தான் போகிறது; பெற்றும் வருகிறது. அதை வளர்க்கத் தமிழிலக்கியத்தில் மறுமலர்ச்சிச் சங்கம் கூடியமட்டிலும் பாடுபடும்.
எங்களிற் பலர் புது இலக்கியத்தை நன்ருகப் படித் தவர்கள். பழைமையைக் கரைத்துக் குடித்த பண்டிதர் களும் ஒருசிலர் உண்டு. அவர்கள் தாங்கள் படித்ததை ஏற்றபடி பயன்படுத்தவேண்டும். பழைமையிலுள்ள அழகு களைப் புதிய முறையில் புது மெருகு பூசி எல்லோரும் அறியக் கூடிய முறையில் எடுத்துக் காட்ட வேண்டும். அதுவும் ஒருவகை மறுமலர்ச்சித் தொண்டு.

Page 103
64 மனித மாடு
எங்களில் வேறுசிலர் இருக்கிருரர்கள், ஆங்கிலத்தை நன்முகப் படித்தவர்கள். அவர்கள் என்ன செய்ய வேண்டும்? ஆங்கில இலக்கியப் பூஞ்சோலையிலுள்ள அழகிய மலர்களைத் தமிழில் தமிழாகக் கொண்டுவந்து சேர்க்கவேண்டும்.
இன்னெரு பெரிய வகுப்பார் எம்மிடையே உள்ளார்கள். அவர்கள் பழந்தமிழுக்கும் போகவில்லை. அந்நிய மொழி களுக்கும் போகவில்லை. இடையே நிற்கிருர்கள், அதாவது, இப்போது ஏற்பட்டு வளர்த்துவரும் மறுமலர்ச்சித் தமிழை மட்டும் படித்துக்கொண்டு அதில் திளைத்திருக்கிருர்கள். இவர்களுக்குத்தான் காலம்! அங்கேயும் இங்கேயும் போய்த் தலேயை உனேடக்காமல் மறுமலர்ச்சிக் கர்த்தாக்கள் ஆரம் பித்த வழியிலேயே போய்க்கொண்டிருக்கலாம், அந்த மார்க்கத்திலேயே சென்று சொந்தத் திறமையைக் கொண்டு சுயமான இலக்கிய சிருஷ்டிகள் உண்டாக்கலாம். தமிழ் நாட்டில் இந்தக் கட்சிதான் இன்று ஓங்கி நிற்கிறது.
எல்லோரும், எழுத்தாளர்களாகவும் தமிழ்த்தொண்டு செய்பவர்களாகவும் வர முடியுமா? எழுத்தாளர், ஆராய்ச்சி யாளர், மற்றும் தொண்டர்களை விட இன்னுமொரு பெரிய கட்சியுமிருக்கிறது. அதுதான் அவசியம் கவனிக்கப் படவேண்டிய கட்சி. ஆமாம் அவர்கள்தான் மறுமலர்ச்சி வாசகர்கள், ரசிகர்கள். இவர்கள் கைவிட்டால் எல்லார் பாடும் அரோகரா! எழுத்தாளர் சிலருடைய தமிழ்த் தொண்டு சிலசமயம் விபரீதமாகவும் போய்விடுகிறது ஆஞல், இந்த வாசகர்களின் கையில்தான் தமிழின் வளர்ச்சி இருக்கிறது. தமிழ்நாட்டில் வாசகர்கள் ஏராளமாகப் பெருகவேண்டும். வாசிகசால்கள், புத்தகாலயங்கள் தெரு வெங்கும் பரவ வேண்டும். அப்பொழுதுதான் மறுமலர்ச்சி பூரணமாகும். தேமதுரத் தமிழ் தலைநிமிர்ந்து நிற்கமுடியும். ஆமாம், இவை எல்லாவற்றுக்கும் முதல் தமிழ்நாட்டில் எல்லோரும் எழுத்தறியவேண்டுமல்லவா?
-ஈழகேசரி, 18-7-1943
(11-7-1943 இல் யாழ்ப்பாணம் தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கத்தில் அ. வச. மு. பேசிய பேச்சின் முக்கிய பகுதிகள்


Page 104
圆氰、
| CP/ )l U-2
=
=
ܒ .
 
 

ba6D
நாடகம்
நாவலறின் இட முதல்ாம்புத்தகம்)