கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மேடும் பள்ளமும்

Page 1
நீர்வை பொன்னைய
ܨ- ܫܒܩܬܐ=" """ . ܒ F¬ ܐ¬¬
- = T
 

பள்ளமும்

Page 2

மேரும் பள்ளமும்
நீர்வை பொன்னையன்
மீரா பதிப்பகம் கொழும்பு

Page 3
Book Title
Subject
Author
Copyright
First Edition
Second Edition
Published by
Printers
YA
Price
நூலின் பெயர்
G) ]6ð) B5
ஆசிரியர் பதிப்புரிமை முதலாம் பதிப்பு
இரண்டாம் பதிப்பு :
பதிப்பு
அச்சிட்டோர்
விலை
"Medum Pallamum"
Short Story Neervai Ponnaiyan
Author
1961
27.04.2003
Meera Pathippakan C 1/6, Andersan Flats, Park Rd, Colombo 05. Tel: 584317.
E-Kwality Graphics 315, Jampettah Street, Colombo 13 T'Phone : 389848
RS 200/-
மேடும் பள்ளமும் சிறுகதைத் தொகுப்பு நீர்வை பொன்னையன் ஆசிரியருக்கே
1961
27.04.2003
மீரா பதிப்பகம், கொழும்பு 05.
ஈகுவாலிற்றி கிரபிக்ஸ் 315, ஜம்பெட்டா வீதி, கொழும்பு 13 தொ.பே 389848
elbur 2001

முதலாம் பதிப்பிற்கான பதிப்புரை
நீர்வை பொன்னையனை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தத் தேவையில்லை. அவருடைய இந்தக் கன்னி வெளியீட்டை எமது முதல் தமிழ் வெளியீடாகக் கொண்டு வருவதில் நாம் பெருமைப்படு கின்றோம்.
தென்னிந்தியாவிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் புத்தகக் குவியல்கள்’, இலங்கையின் தமிழ் வாசகள்களை திருப்திப்படுத்து மென்று இது வரையில் ஒருவித அபிப்பிராயம் நிலவி வந்தது. இது ஒரு தவறான அபிப்பிராயமாகும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் உடும்புப் பிடியில் இரு நாடுகளும் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த காலத்தில் இவ்வித எண்ணம் தவறானதாகக் கருதப்படவில்லை. இதில் இந்தியாவும் இலங்கையும் ஒரே தன்மையின் பிரதிபலிப்புகளாக இருந்தன. ஆனால் சுதந்திரமடைந்துவிட்ட இரு நாடுகளும், அயல் நாடுகளாயிருந்த போதிலும், சுதந்திர கலாசார, பூகோள, அரசியல் முறையில் மாறுபட்டதாக இருப்பதால், தேசிய அடிப்படையில், அவை தமது கலாசார, இலக்கிய, தேசிய சம்பத்துகளைச் சுதந்திரமாக வெளிக் கொணர வேண்டுமென்பது ஒரு கட்டாய நியதியாகிவிட்டது.
பண்டைக்காலத்தில் வரலாற்றில் ஒன்றுபட்டிருந்த இரு நாடுகளும், இப்பொழுது மொழியிலும், எழுத்துக்களிலும் ஒருமைப்பட்டிருந்த போதிலும், பேச்சுவழக்குகளிலும், மரபு முறைகளிலும் இரண்டும் வெகுதூரம் பிரிந்து சென்று கொண்டிருப்பதனால், தேசியக் கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பதினாலும், ஈழத்துத் தமிழ் எழுத்து, பிறிதொரு வண்ணமாகத் தமது மரபை, கலாசாரத்தை, பேச்சுவழக்குகளைப் பிரதி

Page 4
பலிக்க வேண்டுமென்ற உன்னத நோக்கம் ஈழத்து இலக்கிய புனருத்தார ணத்துக்கு வித்தாக அமைந்துவிட்டது.
ஈழத்து எழுத்தாளர்கள் தென்னிந்திய எழுத்தாளர்களுக்குக் குறைந்தவர்களல்ல என்பதற்கு நீர்வை பொன்னையனுடைய கதைத் தொகுதி ஒரு எடுத்தக்காட்டு, இவரது எழுத்தில் நோக்கமிருக்கிறது. தெளிவிருக்கிறது, துணிவிருக்கிறது. ‘இலக்கியம், சோம்பேறிகள் சாய்வு நாற்காலி’ என்ற எண்ணம் மாறுபட்டு, அது மக்களின் வழிகாட்டியாக மாறிவிட்டதை உணர்கின்றோம். இதனால் இச்சிறுகதைத் தொகுதியை உங்கள் முன் வைப்பதிற் பெருமைப்படுகின்றோம்.
ஈழத்தின் சிறிய தொகையினராகிய தமிழர், தமது படைப்புக்களை புத்தகமாகக் கொண்டு வந்தால் விற்பனையாகாது என்று விஷமத்தனம் செய்துவரும் தன்மை மாற்றப்பட வேண்டும். ஈழத்து எழுத்துக்கள் ஆதரிக்கப்படாவிட்டால் இலக்கிய மரபு நிச்சயமாக அழிந்துவிடும். இந்தத் தவறான கொள்கை மாற்றப்பட வேண்டும். அது வாசகள்களாகிய உங்கள் கையில் தான் இருக்கிறது. இன்னும் மற்றைய எழுத்தாளர்களு டைய படைப்புக்களையும் வெளிக் கொண்டுவர வேண்டுமென்ற நல்லெண்ணம் எமக்குண்டு. நீங்கள் இத்தொகுதியை ஆதரிப்பதன் மூலம், இந்த மகத்தான தேசியக் கடமையை நிறைவேற்றுவீர்களென நம்புகிறோம்.
1961 எச்.ஜி.எஸ். ரத்னவீர .பதிப்பாசிரியர் ۔

முதலாம் பதிப்பிற்கான முன்னுரை
நமது நாட்டின் இலக்கிய வளர்ச்சி, இன்று புதிய வீறு பெற்றுத் திகழ ஆரம்பித்துள்ளது. ஈழத்து இலக்கியப் பூங்காவில் பல பூங்கொத்து கள், பல வர்ணமும், பல வண்ணமும் கொண்டு மலர்ந்து நறுமணம் பரப்ப ஆரம்பித்துள்ளன. நமது நாட்டின் இந்த இலக்கிய வளர்ச்சியில் ஆர்வமும், அக்கறையும் கொண்டவர்கள். இப்புதிய திருப்பத்தை உள்ளப் பூரிப்புடன் வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை.
இந்தப் புதிய நிலையும், சிருஷ்டி வேகமும் பல ஆண்டுகளாக வளர்ந்த இயக்கம், போராட்டம், முயற்சி ஆகியவற்றின் நேர்விளைவுநல்லபலன் என்பது, சமீபகாலத்திய சரித்திரத்தையும், அதன் வளர்ச்சிப் போக்கையும் நேர்மைத்திறத்துடன் பார்ப்பவர்கள் ஒப்புக்கொள்ளக்கூடிய ஒன்றாகும். ஆகவே, போராட்டத்தில், இயக்கத்தில், முயற்சியில், உயிரெடுத்து உடலெடுத்து வரும் இந்த இலக்கிய வெளிப்பாட்டை, ஈழத்து இலக்கிய உலகம் நெஞ்சார வரவேற்கக் கடமைப்பட்டுள்ளது. ஏனெனில், இன்றைய அடிப்படைத் தேவை, மூலாதாரமான தேவை இலக்கிய வளர்ச்சியாகும்.
ந்ேத வளர்ச்சியும், போராட்டத்தில் - கருத்துக்களுக் கிடையிலும், சமூகத்தின் வேவ்வேறு சக்திகளுக்கிடையிலும் நடைபெறும் போராட்டங்களிலிருந்து தான் தோன்ற முடியும் என்று நாங்கள் கருதுவதைப் போல, இந்த இலக்கிய வளர்ச்சியும், அப்படியான போராட்டத்திலிருந்தே தோன்றியது என்று நாங்கள் கருதுகிறோம். இலக்கியம் சம்பந்தமாக, நமது எழுத்தாளர்களிடை இன்று நிலவும் பல்வேறு கருத்தோட்டங்கள் எண்ணப் போக்குகளுக்கிடையில் நிகழும் போராட்டம், தவிர்க்கப்பட முடியாத ஒரு சரித்திர நியதி. வாழ்வின்
V

Page 5
விதி. இந்த நியதியின், விதியின் பண்பினைச் சரியாகப் புரிந்துகொண்டு, கருத்துப் போரில் பிரக்ஞை பூர்வமாக ஈடுபடுவது. நல்லிலக்கியம் விரும்பும் சகல எழுத்தாளர்களினதும் தலையாய கடமையாகும். இதற்கு, இந்தக் கருத்துப் போரின் தன்மையையும் குணாம்சத்தையும் புரிந்து கொள்வது அவசியம்.
முற்போக்கு இலக்கியத்தை, புதிய இலக்கியத்தை எதிர்ப்பவர்கள், காலத்தால் அழிந்துபோன காலாவதியான இலக்கியம் பற்றிய கருத்துக்களையே இன்னும் தமது தத்துவார்த்த ஆயுதங்களாக உபயோ கிக்கிறார்கள். ‘இலக்கியம் இலக்கியத்திற்காக, ‘கலை கலைக்காக என்பது இவர்களது பிரதானமான சித்தாந்தமாகும். அதாவது, இலக்கிய த்துக்கோ, கலைக்கோ எவ்வித நோக்கமும், இலட்சியமும் இருக்க கூடாது இருக்க வேண்டியதில்லை என்கிறார்கள். இதன் மூலம் இலக்கிய த்தை வாழ்விலிருந்தும், சமுதாயத்திலிருந்தும் பிரித்தெடுக்கிறார்கள். மனித சமாஜத்தினது முன்னேற்றத்திலிருந்தும், மனித வாழ்வைப் பண்படுத்தும் மகத்தான அதன் கடமைகளிலிருந்தும் இலக்கியத்தைத் துண்டுபடுத்த விரும்புகிறார்கள்.
‘இலக்கியம் இலக்கியத்திற்காகவே' என்று கூறும் போது, இலக்கியத்தின் உள்ளடக்கத்திற்கல்ல, உருவத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதாவது, ஒரு இலக்கியத்தின் அடிச்சரடாக, ஜீவாம்சமாகத் திகழும் அதன் கருத்திலிருந்து -உள்ளடக்கத்திலிருந்துஅதைப் பிரித்தெடுக்க முயற்சிக்கிறார்கள். இலக்கியத்தின் கருத் தோட்டத்தை, உள்ளடக்கத்தை விட்டுவிட்டு, அதன் உருவை, அமை ப்பை மட்டும் இலக்கியம் என்று கொண்டாடுகிறார்கள். வேறு வார்த்தை யில் சொல்லப்போனால், உயிரை விடுத்துச் சடலத்தைக் காவுகிறார்கள். அதனால் தான், இலக்கியத்தில் வெறும் ரசனைக்கு மட்டும் முக்கியத்து வம் கொடுக்கிறார்கள். இலக்கிய ரசிகர்களுக்கு இலக்கியச் சுவையை அளிப்பதே, இலக்கியத்தின் பணியென்பது இவர்களது வாதம்.
இந்த நிலையில் நின்றுதான், கருத்துக்களை அடிநாதமாகக் கொண்டு இலக்கியம் படைக்கப்படும் போது, அதைப் பிரசாரம் என்று தூற்றுகிறார்கள். இலக்கியத்தில் அரசியல் புகுத்தப்படுவதாக அலறித் துடிக்கிறார்கள்.

இவர்களின் இந்த வாதங்கள் அனைத்தையும் முற்போக்கு இலக்கியம் ஓங்கி நிராகரிக்கிறது.
இலக்கியம் சமுதாயத்துடனும், வாழ்வுடனும், மக்களின் பிரச்சினைகளுடனும் பிரிக்க முடியாது இணைந்து, பிணைந்து பின்னி க்கிடக்கிறது என்றும், மக்களுக்கு வாழ்வில் நம்பிக்கையை ஊட்டி, அவர்களுடைய எதிர்காலத்துக்குக் கோடிகாட்டி, நல்வாழ்வுக்காகவும், பிரகாசமான எதிர்காலத்துக்காகவும் மக்கள் நடத்தும் போராட்டத்தில் அவர்களின் போராயுதமாகவும், வழிகாட்டியாகவும் திகழ வேண்டு மென்றும் நாம் ஆணித்தரமாகக் கூறுகின்றோம். நல்லதற்கும் கெட்டதற்குமிடையில், நீதிக்கும் அநீதிக்குமிடையில், தர்மத்திற்கும் அதர்மத்திற்குமிடையில், சுதந்திரத்திற்கும், அடிமைத்தனத்திற்கு மிடையில், சுபீட்சத்திற்கும், சுரண்டலுக்குமிடையில், சமூக நன்மைகளுக் கும் சமுதாயத் தீமைகளுக்குமிடையில் நடைபெறும் போராட்டத்தில், இலக்கியமும், இலக்கிய கர்த்தாவும் முன்னதன் பக்கத்தில் நின்றேயாக வேண்டும்.
தன்னைச் சுற்றி, அடிமைத்தனத்திலும், சுரண்டலிலும், வறுமை யிலும், பட்டினியிலும், மற்றும் சமூகக் கொடுமைகளிலும், தனது சகோதர மனிதன் உழன்று. உழன்று வெந்து, கருகிச் செத்துக்கொண்டிருக்கும் போது, எந்த ஒரு இலக்கியம், மனித குலத்தின் இத்தகைய அலறலைக் கேட்கவில்லையோ, அவர்களின் விடுதலைக்காகவும், விமோசனத்துக் காகவும் போராடவில்லையோ, அந்த இலக்கியம் இலக்கியமாக இருக்க முடியாது. இந்தப் புனிதப் போரில், தர்மத்தின் பக்கம் - மக்களின் பக்கம் கலந்து கொள்ளாத, அல்லது நடுநிலைமை வகிக்கும் எந்ந ஒரு இலக்கியமும், உண்மையில், அதர்மத்திற்கும், மனித இன சத்துருக்களு க்கும் தெரிந்தோ தெரியாமாலோ கூட்டுச் சேர்ந்து நிற்பதைப் பார்வையு ள்ள எவரும் காணத்தவறமுடியாது.
முற்போக்கு எழுத்தாளன், மக்கள் குலத்துடன் அவர்களின் நல்வாழ்வுக்கான போரணியில், முன்னணிப் படைவீரனாக அணிவ குத்து நிற்கிறான். அதர்மத்தையும், அக்கிரமத்தையும் எதிர்த்துப் போர்க் குரல் எழுப்புகிறான். வாழ்வின் இன்ப கீதத்தை இதய நாதத்தை மீட்டுகிறான். இலக்கியத்தை அவன் ஒரு சாதனமாக, மிக மிக உன்னதமான சாதனமாகக் கொள்கிறான்.
vii

Page 6
இலக்கியம், வாழ்வைப் பொய்மையாகவல்ல - மெய்மையாகப் பிரதிபலிக்க வேண்டுமென்றும், மக்கள் சமாஜத்தின் ஆசை அபிலா ஷைகளையும், விருப்பு வெறுப்புகளையும், இன்ப துன்பங்களையும், இதயத்து வேட்கைகளையும், பிரதிபலிக்க வேண்டுமென்றும், பூரணத்து வம் பெற்ற மனித வாழ்வையும், நாகரிகத்தையும் உருவாக்கப் போராட வேண்டுமென்றும், நாங்கள் கருதுகிறோம்.
இலக்கியம் வாழ்வோடு கலந்து, வாழ்வின் பிரதிபிம்பமாகத் திகழ வேண்டும். காலத்தின் தேவையையும், சரித்திரத்தின் கடமையையும் அது பிரதிபலிப்பதுடன் நிறைவேற்றவும் வேண்டும். இதுவரை, மனிதவர்க்கம் கண்ட எல்லா நல்ல இலக்கியங்களும் இந்தப் பணியைத் தான் நிறைவேற்றியுள்ளன.
தர்மத்திற்கும், சமுதாய முன்னேற்றத்துக்குமான போராட்டத்திலி ருந்து சகல நல்ல இலக்கியங்களும் தோன்றின, தோன்ற முடியும், தோன்ற வேண்டும் என்று நாம் அழுத்தமாகக் கூறும் அதே வேளை யில், இலக்கியத்தின் ஏனைய பிற பண்புகளையும், தன்மைகளையும், மறுப்பதுமில்லை. வெறுப்பதுமில்லை. உதாரணமாக காதல், அன்பு, தாய்மை, சகோதரத்துவம், இரக்கம், தார்மீகம், தன்மானம், வீரம், தியாகம் ஆகிய மனித உணர்ச்சிகள் ஆசாபாசங்கள் அத்தனையையும் அடிச்சர டாகக் கொண்டு எழும் இலக்கியங்களையும் நாம் முழுமனதோடு வரவேற்கிறோம். ஏனென்றால், நாம் மனிதரை நேசிப்பவர்கள். ஆகவே மனித உணர்வுகளையும் நேசிக்கிறோம்.
முற்போக்கு எழுத்தாளர்கள் -உள்ளடக்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் எழுத்தாளர்கள் மீது, இலக்கிய உருவத்தையும், இலக்கியத் தரத்தையும் உதாசீனம் செய்வதாகத் குற்றம் சுமத்தப்படுகிறது. இது முற்றிலும் தவறு. வெறும் கருத்துக்களும், உள்ளடக்கமும் இலக்கிய மாகிவிடுவதில்லை. இவை, இலக்கிய உருவைப் பெறும் போதுதான், இலக்கியமாகின்றன. இலக்கிய அந்தஸ்தைப் பெறுகின்றன. கருத்துக்க ளுக்கும், உள்ளடக்கத்திற்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்கும் போது, இலக்கயத்தரத்தைப் பெற்ற இலக்கியங்களைப் பொறுத்தே நாம் பேசுகின்றோம். இலக்கியத் தரத்தைப் பெறாத எதையும் இலக்கியமாகக் கொள்ள முடியாது.
viii

ஆயினும், இலக்கியத் தரம், இலக்கிய நடை இலக்கிய உத்திகள், ஆகிய உருவத்தைப் பற்றிய கோட்பாடுகளும் காலத்துக்குக்காலம் மாறுகின்றன, வளர்கின்றன என்ற உண்மையை நாம் மறந்துவிட முடியாது. பண்டைய இலக்கியத் தரத்தை அளக்கும் அளவுகோலைக் கொண்டு, இன்றைய படைப்பிலக்கியங்களை அளக்க முடியாது: அளக்கக் கூடாது. காதல் கீதம் மீட்டும் போது கையாளப்படும் இதமான நடை, கொதித்தெழும் மக்கள் போராட்டத்தைச் சித்தரிக்கும் போது இருக்க முடியாது, போராட்டத்தின் ரெளத்ராகாரம் போலவே, அப்போரா ட்டத்தைப் பிரதிபலிக்கும் இலக்கியம் ரெளத்ராகார நடையைத்தான் கொண்டிருக்க முடியும் அதாவது, இலக்கிய உள்ளடக்கத்தின் பாங்கை யும், தன்மையையும், தேவையையும் பொறுத்தே அந்த இலக்கியத்தின் நடையும், உருவமும், இருக்க முடியும்.
யதார்த்தத்துக்கு, கருத்துக்கு அழுத்தம் கொடுக்கும் எழுத்தாளர் களிற் சிலர், உருவத்திற்கு அந்த அளவு முக்கியத்துவம் கொடுக்காத குறைபாடும் இல்லாமலில்லை. இத்தவறை அல்லது திரிபை யாதார்த்த எழுத்தாளர்கள் சுயபிரக்ஞையுடன் தவிர்த்துக் கொள்வது முக்கியம். நல்ல கருத்துக்கள் நல்ல முறையில் சொல்லப்படவேண்டும். நல்ல உள்ளடக்கம், நல்ல உருவம் கொண்டதாக இருக்க வேண்டும்.
இலக்கியத்தைப் பற்றி, மேலே குறிப்பிட்ட பார்வையையே தனது இலக்கிய தத்துவார்த்தமாகக் கொண்ட நண்பர் நீர்வை பொன்னையனின் சிறுகதைக் தொகுதி வெளிவருவது பொதுவாக நமது நாட்டின் இலக்கிய வளர்ச்சிக்கும். குறிப்பாக தேசிய, யதார்த்த இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் மேலுமொரு வரப்பிரசாதமாகும்.
உள்ளடக்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் பொன்னையன், உருவத்திலும் அக்கறை செலுத்தியிருப்பதை இக் கதைகளில் பரக்கக் காணமுடிவது பெருமகிழ்ச்சியூட்டுகிறது. சில இடங்களில் மெல்லிய உள்ளடக்கத்தை வைத்துக் கொணர் டே அருமையான உருவ அமைப்பைக் கொண்ட கதைகளையும் சிருஷ்டித்திருக்கிறார். யதார்த்த இலக்கியம் உண்மையின் நிலைக்களனாக மட்டுமல்ல, செழுமையும், சிருங்காரமும் கொண்டிருக்க முடியும் என்பதையும் ஆசிரியர் நிரூபித்துள்ளார்.

Page 7
“ஊர்வலத்தில் தொழிலாளி - முதலாளி வர்க்க மோதுதலை உள்ளடக்கமாகக் கொண்ட ஆசிரியர், அதேவேளையில், 'பனஞ் சோலை’, ‘மின்னல்’, ‘வானவில்’ போன்ற கதைகளில் காதல் உணர்ச்சியை அள்ளிச் சொரிகிறார். "மேடும் பள்ளமும்’, ‘சம்பத்து’ ஆகிய கதைகளில் விவசாயமக்களின் உள்ளக் குமுறலைச் சித்தரிக் கின்ற பேனா, “தவிப்பு' என்ற கதையில் தாய்மையுணர்ச்சியை வாரி வழங்குகிறது. "சோறு’ என்ற கதையில் கும்பி கொதிக்கும் 'மன்னர் படை யினரின் சோக வாழ்வை, நெஞ்சுருகும் வண்ணம் யதார்த்த சித்திரமாக்கித் தந்த கைவண்ணம், “பாசம்’ என்ற கதையில், மனித பந்தத்தையும் கடந்து காக்கைக் குருவி எங்கள் ஜாதி, என்ற பாசக் கோட்டின் தொடுவானத்துக்கே செல்வதையும் உணர்கிறோம்.
மொத்தத்தில், இச்சிறுகதைகளின் அடிநாதமாகவும், ஆதார சுருதியாகவும் மானிதமும், அநீதியைச் சாடும் தள்மாவேசமும் சுடர் விடுவதைக் காண்கிறோம். வர்க்க எழுச்சி முதல், அன்பு நெகிழ்ச்சி வரை, யதார்த்தத்தினதும், சமுதாய மனித உணர்ச்சிகளினதும் வெளி யீடாக இவை அமைந்துள்ளன.
யதார்த்தம், தேசியம், மண்வளம் ஆகிய தத்துவக் கோட்பாடு களின் வெளிப்படான கதைகளை ஆக்கித் தந்துள்ள நண்பர் பொன்னை யனிடம், அற்புதமான சிருஷ்டி ஆற்றல் பொதிந்து கிடப்பதைக் காண்கி றோம். நமது தேசிய, முற்போக்கு இலக்கியம் மேலும் செழித்து வாளிப்பாக வளர்ச்சியடைய, ஆசிரியத் நம்பிக்கையூட்டும் படைப்பாளி களில் ஒருவர் என்று துணிந்து கூறலாம்.
நமது நாட்டிற்கும், நமது இலக்கியத்திற்கும் பெருமை தேடித்தர வல்ல இவரது இப்படைப்பை, நமது மக்கள் இருகரங்களையும் நீட்டி வரவேற்பது கடமைநெறியின் பாற்பட்ட பணியாகும்.
கொழும்பு பிரேம்ஜி
15-12-61

முதலாம் பதிப்பிற்கான என்னுரை
என்னுடைய மண் விளையாடும் பருவத்தில் ஒருநாள், என்னோ டொத்த இளவட்டங்களுடன் விளையாடிக்கொண்டிருந்தேன். அன்று, எங்கள் குறிச்சியில் ஒரு விருந்து விருந்துக்கு எங்களையும் அழைத்த னர். எங்களில் சிலரை மட்டும் வீட்டிற்குள் கூட்டிச் சென்றனர். மற்றவர் கள் முற்றத்தில் உள்ள மாங்கன்றின் கீழ் இருத்தப்பட்டார்கள். ‘ஏன்? எதற்காக இந்த பாரபட்சமான நடவடிக்கை?’ என்ற கேள்வி என் உள்ளத்தில் அன்றிலிருந்தே எதிரொலித்துக் கொண்டிருந்தது.
எமது சமுகத்தை புரிந்து கொள்ளக் கூடிய பருவம் ஏற்பட்ட போதுதான், இந்தக் கேள்விக்கு என்னால் விடை காண முடிந்தது. இதைப் போன்ற எத்தனையோ கொடுமைகள், தமது அன்றாட வாழ்வில் நடைபெற்றுக் கொண்டிருப்பதை நான் காண்கிறோம். இவற்றுக் கெதிராக எமது கிராமத்திலும், எமது வாழ்க்கையின் பல்வேறு சூழல்களிலும் எனது தன்னந்தனியான எதிர்ப்பணிகள் வெற்றி காண முடியாமல் தோல்வியடைந்ததுமுண்டு. அதன் தொடர்பாகத் தான் எழுத்துலகில் எனது சிறுகதைகள் பிறந்து "மேடும் பள்ளமுமாக உருப் பெற்று உங்கள் மத்தியில் பவனி வருகின்றன.
இந்தத் தொகுதியிலுள்ள கதைகளில் மனிதகுல முன்னேற்றத்தின் இதயநாதமாக எழுந்துவரும் பல பாத்திரங்களில் நானும் ஒருவனாகச் சங்கமித்து நிற்கிறேன். வாழ்க்கை எனக்கு அளித்த அனுபங்கள் அனந்தம். அவற்றில் ஒரு சிலவற்றைத்தான் இவற்றில் சித்தரித்து ள்ளேன்.

Page 8
இது எனது கன்னி முயற்சி, எழுத்துத் துறையில் மூன்றாண்டு காலமாக நான் செய்த அறுவடையே இக்கதைகள். என் முதல் கதை ‘புயல், கடைசியாக எழுதியது ‘புரியவில்லை'. இத்தொகுதியிலுள்ள கதைகள் தேசாபிமானி, தினகரன், வீரகேசரி, கலைமதி, தாமரை, தமிழன், கலைச்செல்வி ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்தவை. இப்பத்திரிகை களின் ஆசிரியர்களுக்கு என் நன்றி. இவைகளை வரிசைப் படுத்திப் பார்க்கும் போது, ஒவ்வொரு கதைகளும் ஒன்றை விட மற்றொன்று சிறப்பாக அமைந்துள்ளதென்று வாசகர்களாகிய நீங்கள் கருதினால், அதுவே எனக்கு வெற்றியும், எனது வளர்ச்சிக்கு ஆக்கமும் - ஊக்க மும் தருவதாகும்.
இத்தொகுதியை வெளிக் கொண்டு வருவதற்கு முன்வந்து ஊக்குவித்த மக்கள் பிரசுராலயத்தாருக்கும், குறிப்பாக திரு.எச்.ஜி.எஸ். ரத்னவீர அவர்களுக்கும், மற்றும் இலக்கிய நண்பர்களுக்கும் பல நெருக்கடிகளின் மத்தியில் சிரமம் பாராது முன்னுரை எழுதியுதவிய இலங்கை - முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பொதுச் செயலாளர் திரு. பிரேம்ஜி அவர்களுக்கும், மிகக் குறுகிய காலத்தில் இதனை அச்சு வாகனமேற்றிப் புத்தக உருவாக்கிய லங்கா பிரஸ் ஊழியர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றியுரியது.
இத்தொகுதி எனது சொத்தல்ல. இந்நாட்டு மக்களுக்குச் சொந்த மானது அவர்களுடைய சொத்து. எனவே இதை நமது நாடும், மக்களும் வரவேற்பார்களென்று நம்புகிறேன்.
வணக்கம்
மத்திய நீர்வை, நீர்வை பொன்னையன் நீர் வேலி.
xii

இரண்டாவது பதிப்புக்கான என்னுரை
மேடும் பள்ளமும் என்ற இந்தச் சிறுகதைத் தொகுதியின் முதலாவது பதிப்பு 1961 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இதன் இரண்டாம் பதிப்பு 2003 ஆம் ஆண்டில், அதாவது 42 வருடங்களின் பின் வெளிவருகின்றது. முதலாம் பதிப்பின் ஒரு பிரதியின் விலை ரூபா 2 இரண்டாம் பதிப்பின் ஒரு பிரதியின் விலை நூறு மடங்காக உயர்ந்துள்ளது. 1961 ஆம் ஆண்டுக்கும் 2003 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட இந்த கால இடைவெளியில், ஒரே நூலின் இரு பதிப்புக்க ளுக்குமிடையிலுள்ள விலை மாற்றத்தைப் போலவே சமூக, அரசியல், பொருளாதார, கலை இலக்கியத் துறைகளில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், எனது அரசியல், கலை இலக்கிய நோக்கைப் பொறுத்தளவில், அக்காலத்திலிருந்து இன்று வரை, நான் முற்போக்கு இலக்கியத் தளத்திலிருந்துதான் எனது இலக்கியப் படைப்புக்கலை உருவாக்கி வருகின்றேன்.
முற்போக்கு இலக்கியம் வங்காளத்திலும் கேரளாவிலும் ஆழ மாக வேரூன்றி சாதனைகள் புரிந்துள்ளது. இதைப் போல, தமிழ் நாட்டில் அதனால் வேர் பதிக்க முடியாமல் போய்விட்டது. காரணம், வங்காள கேரள மாநிலங்களிலுள்ள இலக்கியவாதிகள் மக்களது சமூக, கலாசார பண்பாட்டு உணர்வுகளை சரியாகப் புரிந்து அம் மக்களுடைய போரட்டங்களில் தம்மை இணைத்து தாம் பெற்ற அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, அம்மக்களுடைய உணர்வுகளை தமது படைப்புக்களில் கலையம்சத்துடன் யதார்த்த பூர்வமாகக் கொண்டு
xiii

Page 9
வந்தனர். இதனால் அவர்கள் மக்கள் மத்தியில் ஆழமாக கால்பதிக்க முடிந்ததுடன், அவர்களுடைய படைப்புக்களும் மக்களால் அரவணைக் கப்பட்டன. ஆனால் தமிழ் நாட்டைப் பொறுத்தளவில், தமிழக மக்களின் உணர்வுகளை அங்குள்ள முற்போக்கு இலக்கியவாதிகளால் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமலிருந்தமை முக்கியமான காரணமாகும். அத்துடன் அங்குள்ள பக்தி இலக்கியப் பாரம்பரியத்திற்கும், திராவிட இயக்கத்தின் இனவாதப் போக்கிற்கும் நுனிப்புல் மேயும் இலக்கியப் போக்கிற்கும் எதிராக முற்போக்கு இலக்கிய இயக்கத்தினால் தாக்குப்பிடிக்க முடியாமல் போய்விட்டது. அத்துடன் முற்போக்கு இலக் கியவாதிகளில் பெரும்பாலானவர்கள் மக்களிடமிருந்து அந்நியப் பட்டிருந்தமையும் மற்றுமொரு காரணமாகும். ஆனால் இலங்கை முற்போக்கு இலக்கியவாதிகளைப் பொறுத்த வரை, வங்காள கேரள முற்போக்கு இலக்கியவாதிகளைப் போல நாம் எமது தமிழ் மக்களின் சமுதாய, தேசிய, கலாசார உணர்வை சரியாகப் புரிந்து கொண்டு, அவர்களுடன் இணைந்து போராட்டங்களில் பங்கு கொண்டு இவற்றில் பெற்ற அனுபவத்தைக் கொண்டு எமது இலக்கிய சிருஷ்டிகளைப் படைத்து வருகின்றோம். இதனால் எமது படைப்புக்கள் வலுவானவை யாக இருக்கின்றன. மக்களால் வரவேற்கப்படுகின்றன.
முற்போக்கு இலக்கியவாதிகள் தங்கள் படைப்புகளில் எப்போ தும் வர்க்கப் போராட்டத்தையும் சாதியத்துக்கு எதிரான போராட்டத்தை யும் முன்னிலைப்படுத்தி வருகின்றனர் என்று பிற்போக்கு இலக்கிய விமர்சகர்கள் காலாதிகாலமாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். இதில் ஓரளவு உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இது முற்று முழு தான உண்மையல்ல. முற்போக்கு இலக்கியவாதிகளாகிய நாம் எமது பாட்டாளி வர்க்கக் கண்ணோடத்துக்கு ஏற்ப எமது படைப்புகளில் வர்க் கப் போராட்டத்துக்கு முன்னுரிமை அளித்து வருவது இயல்பானதே. அத்துடன் சகல விதமான அடக்குமுறைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக் கும் எதிராகப் போராடுவதும் முற்போக்காளர்களுக்குக் கடப்பாடாக உள்ளது என்பதினால் சாதியத்துக்கு எதிரான போராட்டத்துக்கு முத ன்மை கொடுப்பதும் தவிர்க்க முடியாதது, கட்டாயமானதும் கூட, அதே வேளை இலங்கைத் தமிழர் சமுதாயத்தில் மிகவும் இறுக்கமாக கெட்டி
Xiv

கட்டிப்போயுள்ள, மிகவும் பிற்போக்கான, சமூக வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக உள்ள சாதிய அமைப்பின் கேடுகளையும் அநாகரிகத் தன்மையையும் முற்போக்கு இலக்கியவாதிகளாகிய நாம் தயவு தாட்சண் யமின்றி எமது படைப்புகளில் வெளிப்படுத்தி வந்துள்ளோம், ஈழத்து முற்போக்கு இலக்கிய இயக்கத்தில் அரை நூற்றாண்டுகால வரலாற்றுப் பயணத்தில் இவ்விரு விடயங்களையும், 60 வது 70வது ஆண்டுகள் தசாப்தங்கள் தெளிவாகப் பதிவு செய்துள்ளன. இக்காலகட்டத்தில் வட பகுதியில் தீவிரமாக ஏற்பட்ட வர்க்கப் போராட்ட எழுச்சியையும், சாதிய ஒடுக்குமுறைக்கெதிரான உக்கிரமான போராட்ட உணர்வுகளையும் எனது சிறுகதைத் தொகுதியான "உதயம்" பதிவு செய்துள்ளதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்)
ஆனால் ஈழத்து முற்போக்கு இலக்கிய இயக்கத்துக்கு இந்த இரண்டு பரிமாணங்கள் மட்டும்தான் உண்டு என்று கூறிவிட முடியாது. தமிழ் மக்களின் தேசிய கலாசாரத் தன்மைகளையும் மக்களின் உணர்வு களையும் பிரதிபலித்து அவற்றை இலக்கியப் படைப்புக்களாக்கிய பெருமை முற்போக்கு இலக்கிய இயக்கத்துக்கே உரியது. இந்த மேடும் பள்ளமும் சிறுகதைத் தொகுதி அவ்வண்ணமுள்ள படைப்புக்களில் ஒன்றாக வரலாற்றுச் சான்றாக நின்று நிலைப்பதாலேயே அதன் இரண் டாவது பதிப்புகூட 43 வருடங்களுக்குப் பின் மீண்டும் பிரசுரமாகின்றது.
1950 களில் ஈழத்து மக்களின் அரசியல், சமூக, பொருளாதார வாழ்வில் பெரும் திருப்பம் ஏற்பட்ட தசாப்தமாகும். 1948 களில் பிரித்தா னிய ஏகாதிபத்தியவாதிகள் இலங்கைக்கு சுதந்திரம் கொடுத்து விட்டு வெளியேறியபோதும் அவர்களுடைய மறைமுகக் காலனித்துவ ஆட்சி இங்குள்ள சிங்கள, தமிழ் மேட்டுக்குடிப் பிற்போக்குச் சக்திகளால் தொடரப்பட்டு வந்தது. அதன் பிற்போக்கு அதிகாரத்துக்கு எதிரான முதலாவது மாபெரும் மக்கள் போராட்டம் - தமிழ், சிங்கள, முஸ்லிம், மலையக மக்களின் ஒன்றிணைந்த போராட்டமாக, தொழிலாளி வர்க்கத் தின் தலைமையில் 1953 ஆகஸ்ட் 12ல் நடந்த வரலாற்றுப் புகழ் மிக்க மகத்தான ஹர்த்தாலாக வெடித்தது. அதனுடைய பின்விளைவாக 1956ல் இலங்கையின் முதலாவது ஏகாதிபத்திய விரோத அரசாங்கம் உருவானது. அதன் பயனாக ஏற்பட்ட தேசிய மறுமலர்ச்சி சாதாரண
XV

Page 10
இலங்கையனை சமூகத்தின் எல்லா அரங்குகளிலும் அரசியல், சமூக, கல்வி, கலை கலாசார அரங்குகளிலும் முன்னணிக்கு கொண்டு வந்தது.
1956 இன் இந்த எழுச்சி ஈழத்துத் தமிழ் மக்களின் வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை. தமிழ் மக்களாகிய எமது அரசியல் பொருளாதார துறைகளில் மாத்திரமல்லாது, சமூகக் கூட்ட மைப்பின் மேல் நிலையில் கல்வி, கலாசாரத் துறைகளில் பாரிய மாற்ற ங்கள் ஏற்பட்டன. இலவசக் கல்வியும், தாய்மொழிப் பாடத்திட்டமும் இதற்கான ஊற்றுமூலங்களாகத் திகழ்ந்தன, அதுவரை காலமும் தமிழர் சமுதாயத்தில் அதிகார ஆதிக்க நிலையிலிருந்த நிலப்பிரபுத்வத்தின் எச்சசொச்ச சக்திகளே கல்வி கலாசாரத் துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன. அவர்கள் தமது பிரபுத்வ நலன் பேணும் இலக்கியங்களை யும் கருத்துகளையும் உருவாக்கியதுடன். பக்தி இலக்கியம் என்ற போர்வையில் மூடத்தனத்தையும், மரபுகள் என்ற திரையின் பின்னால் பெண்ணடிமைத்தனத்தையும் வலியுறுத்தி வந்துள்ளனர். இந்த மேட்டுக் குடியினரின் ஒரு பகுதியினர். அந்நிய வெள்ளை ஆட்சியினரின் அடி வருடிகளாக மாறி சலுகைகளையும் சுகபோகங்களையும் அனுபவித்து வந்தனர்.
இந்த ஏகாதிபத்திய பாதம்தாங்கிகள் அந்நிய ஏகாதிபத்தியங்களின் ஏஜண்டுகளாான கிறீஸ்தவ மிஷனரிகளின் கல்வி, கலாசார ஆளுகைக் குட்பட்டு அந்நிய அடிமை விஸ்வாச இலக்கியங்களையும் படைத்தனர்.
இந்தவிதமான அந்நிய ஏகாதிபத்திய சார்பான, மக்கள் விரோத பிற்போக்கு கலை இலக்கியப் போக்குக்கு எதிராக எழுந்ததே 1950 களில் உருவான சாதாரண கிராமிய உழைப்பாளி மக்களின் வாழ்வின் அவலங்களையும் அவர்களது ஆசாபாசங்களையும், உரிமைப் போரா ட்டங்களையும் சித்திரித்த மண்வாசனை மக்கள் இலக்கியம். இந்த மக் கள் இலக்கியப் போக்கை சரியாக இனம்கண்டு, அங்கீகரித்து ஆதரித்து ஊக்குவித்து, வளர்த்தெடுத்த பணியை முற்போக்கு இலக்கிய இயக்கம் மட்டுமே தலைமை ஏற்றுச் செய்தது.
இந்த உறுதியான அத்திவாரத்திலிருந்தே பிற்காலத்தில் முற்போ க்கு இலக்கிய இயக்கத்தினரால் தலைமை கொடுக்கப்பட்ட வர்க்க
XVi

இலக்கியம், சாதியத்துக்கெதிரான இலக்கியம், தேசிய இலக்கியம் என்ற கட்டுமானங்கள் எழுந்தன.
தேசிய கலை இலக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்குடன்தான் இலங்கை கலைக் கழகமும் சாஹித்ய மண்டலமும் 1956 இல் அமைக்கப்பட்டன. ஆனால் குறுகிய காலத்திற்குள்ளேயே இவற்றின் செயற்பாடுகள் கேள்விக்குறிக்குள்ளாகிவிட்டன. ஐம்பது அறுபதாம் ஆண்டுகளில் சாஹித்ய மண்டலம் இலங்கை எழுத்தாளர் களது படைப்புக்களைக் கொள்வனவு செய்து, அவற்றில் சிறந்தன வற்றைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி வந்தன. 1961ல் வெளி வந்த மேடும் பள்ளமும் சாஹித்ய மண்டல தமிழ் இலக்கியக் குழுவி னால் சிறந்த படைப்பு என்று தெரிவு செய்யப்பட்டு விருதுக்காகச் சிபார்சு செய்யப்பட்டது. ஆனால் அது நிராகரிக்கப்பட்டது மல்லாமல், "சிறுகதை படைப்பிலக்கியமில்லை" என்று சாஹித்ய மண்டல தமிழ் இலக்கியக் குழுவின் தலைவராக அப்பொழுதிருந்த தமிழ் பிற்போக்குவாத பழம் பண்டிதரால் கூறப்பட்டதுடன், 1961 ஆம் ஆண்டு தமிழ் சிறுகதை நூல் ஒன்றுக்குமே விருது வழங்கப்படவில்லை. ஆனால் 1960 ஆம் ஆண்டிலும் 1962 ஆம் ஆண்டிலும் சிறுகதை நூல்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 1970 ஆம் ஆண்டில் வெளிவந்த எனது "உதயம்" சிறுகதைத் தொகுதி சாஹித்ய மண்டல தமிழ் குழுவினால் சிறந்தது என்று தெரிவு செய்யப் பட்டு விருதுக்காகச் சிபார்சு செய்யப்பட்டது. ஆனால் எமது அணியிலிருந்து அரசியல் காரணமாகப் பிரிந்து சென்ற, முற்போக்கு எழுத்தாளர் என்று தம்மைத் தாமே கூறிக்கொள்கின்ற, சாஹித்ய தமிழ் குழு உறுப்பினர்களாான முற்போக்கு எழுத்தாளர்களின் குறுக்கீட்டினால் "உதயம்" தொகுதி நிராகரிக்கப்பட்டு விருது வழங்கப் படவில்லை, இந்தக் குறுக்கீட்டிற்கு அவர்கள் கூறிய காரணம் "உதயம்" தொகுதி "சேகுவரா பயங்கரவாத நூல். இதற்கு விருது வழங்குவது ஆபத்தானது" பிற்போக்குப் பழம் பண்டிதர்களும் முற்போக்கு எழுத் தாளர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்கின்ற சில தற்குறி எழுத்தாளர் களும் காலத்துக்குக்காலம் முற்போக்கு இலக்கிய இயக்கத்திற்கு எதிராகச் செயல்பட்டு வந்துள்ளனர் என்பதை இச்சம்பவங்கள் உணர்த்து கின்றன.

Page 11
"மேடும் பள்ளமும்" இலங்கையிலுள்ள மக்கள் பிரசுராலயத்தின ரால்தான் பிரசுரிக்கப்பட்டது. இத் தொகுதி அச்சிடப்படுவதற்குமுன், தமிழ் நாட்டிலுள்ள "நியூ சென்சரி புக் ஹவஸ்" என்ற ஸ்தாபனத்தா ருடன் தொடர்பு கொண்டு இந்த சிறுகதைத் தொகுதியின் குறிப்பிடத் தக்களவு பிரதிகளைக் கொள்வளவு செய்யமுடியுமா என்று இலங்கை மக்கள் பிரசுராலயத்தினர் கேட்டுக் கொண்டனர். மேடும் பள்ளமும்' தொகுதியின் 500 பிரதிகளைத் தாங்கள் கொள்வனவு செய்யத் தயாராக உள்ளதாகவும் இப் பிரதிகளுக்குரிய பணத்திற்கு ஈடாக தாங்கள் வெளி யிட்டுள்ள தமிழ் நூல்களைத் தருவதாகவும் உடன்பட்டனர். இதன் பிரகாரம் மேடும் பள்ளமும் 1500 பிரதிகளை மக்கள் பிரசுராலயத்தனர் அச்சிட்ட பின்னர் நியூ சென்சரி புக் ஹவுசினருடன் தொடர்பு
கொண்டனர்.
தாங்கள் இந்த நூலைக் கொள்வனவு செய்ய முடியாத நிலை யிலுள்ளதாக நியு சென்சரி புக் ஹவுசினர் கூறினர். காரணம் "இந்திய மொழிகளிலுள்ள எந்த நூலும் வெளிநாடுகளிலிருந்து வர்த்தக நோக்கத்திற்காக இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்று கூறி இந்திய அரசாங்கம் சென்னை நியூ சென்சரி புக் ஹவுசினருக்கு இந்த நூலை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப் பத்திரத்தை வழங்க மறுத்துவிட்டது. உள்ளூர் உற்பத்தியைப் பாது காப்பது தான் இதன் நோக்கம் என்று இந்திய இறக்குமதிக் கட்டுப் பாட்டுத் துறையிரால் கூறப்பட்டது. இதன் காரணமாக இலங்கை யிலிருந்து எந்த விதமான தமிழ் நூல்களும் இந்தியாவில் இறக்குமதி செய்ய முடியாத நிலையுள்ளது. ஆனால் இந்தியாவிலிருந்து எந்த வகையான எவ்வளவு நூல்களையும் இலங்கை இறக்குமதி செய்கின்றது. இந்த "இலக்கியப் பரிவர்த்தனை ஒரு வழிப்பாதைக்கு" எதிராக இலங்கை முற்போக்கு இலக்கிய இயக்கம் நீண்டகாலமாகக் கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது என்பதுவும் இங்கு குறிப்பிடத் தககது.
கலை இலக்கியம் அனைத்தும் அரசியல் ஆளுமைக்குட்பட் டவை. இலங்கையைப் பொறுத்தவரை தேசிய இனப் பிரச்சினை கலை இலக்கியத் துறையிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இப்
Xviii

பிரச்சினை எமது நாட்டிலுள்ள பிற்போக்குச் சக்திகளாலேயே உருவா க்கப்பட்டு சிக்கலாக்கப்பட்டுள்ளதுடன் பாரிய இனவாத யுத்தமாக வெடி த்து பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. எமது கல்வி பாழடிக்கப்பட்டு ள்ளது. எமது தமிழ் கலை, பண்பாடு, சமூகக் கட்டமைப்பு எல்லாமே கொடிய யுத்தத்தினால் தகர்த்து அழிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் அறிவுக் களஞ்சியமான காலாதி காலமாகப் பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்த, அரும்பெரும் பொக்கிஷமான யாழ் நூலகம் பிற்போக்கு இன வெறிச் சக்தியினரால் எரித்துச் சாம்பராக்கப்பட்டது. இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட சதி. தமிழ் மக்களின் கலை கலாசாரத்தை அழித்தொழி ப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்ட இனவாதச் சக்திகளின் சதி நாசகார செயல்தான் யாழ் நூலக எரிப்பு மனித குலம் இந்த ஈனச் செயல்களை என்றுமே மன்னிக்காது. அதேவேளை "யாழ் நூலகம் எரிக்கப்பட்டமை சரியானது. அது எரிக்கப்பட வேண்டியது. ஏனென்றால் இந்த நூலகத்தைப் பயன்படுத்திவருபவர்கள் தமிழ் மேட்டுக்குடியினர் தான்" என "மக்கள் எழுத்தாளன்" என்று தன்னைத்தானே கூறிக் கொண்டு திரிந்த ஒருவர் திருவாய் மலர்ந்தருளியிருந்தார் அன்று. இதை இன்றைய தலைமுறையினர் அறிந்திருப்பது அவசியம்.
நீண்ட கால இனவாத யுத்தத்தின் விளைவாக தமிழ் சமூகம் டாரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அடிக்கடி ஏற்பட்ட இடப் பெயர்வுகள், பொருள் இழப்புகள், உயிர் இழப்புகள் போன்றவற்றால் பெருவாரியான தமிழ் மக்கள் உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் மிக மோசமான பாதி ப்புக்குள்ளாகியுள்ளனர். தமிழ் சமூகத்தின் கட்டமைப்பே தகர்ந்து விட்டது. தமிழ் சமூகத்தின் இந்த நலிவுற்ற சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்டு, அந்நிய ஏகாதிபத்தியத்துக்கு விஸ்வாசமான சில கிறிஸ்தவ மிஷனரிமார் கலாசாரத் துறைக்குள் ஊடுருவி தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்த ஏகாதிபத்திய ஏஜன்டுகள் பெருமளவு நிதியை முதலீடு செய்து கலாசாரத் துறையை மேம்படுத்துவதாக பாவனை செய்து கொண்டு இசை நிகழ்ச்சிகளையும் நாடகங்களையும் அடிக்கடி நடத்தி வருவதுடன் கலை இலக்கிய வெளியீடுகளையும். பிரசுரித்து வருகின்றனர். ஏகாதிபத்தியத்தின் விஸ்வாசிகளான இந்த கிறிஸ்தவ மிசனரியினருக்கு நிச்சயமாக உள்நோக்கமுண்டு. இவர்கள் கலாசாரப்
xix

Page 12
போர்வையின் கீழ், கலை இலக்கியத் துறையிலீடுபட்டுள்ள கலைஞர் களையும் கலை ஆர்வலர்களையும் பொதுமக்களையும் தம்வசப்படுத்தி இதன் மூலம் இந்த மக்கள் மத்தியில் உள்நாட்டு பிற்போக்கு வலது சாரிகளது ஏகாதிபத்திய சார்பு அரசியலை வலுப்படுத்தும் உள் நோக்கு டன் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இன்று சர்வதேசிய ரீதியாாகவும், தேசிய ரீதியாகவும் பிற்போக்கு சக்திகளதும் ஏகாதிபத்தியத்தினதும் கை ஓங்கியுள்ளது. அதே வேளை முற்போக்கு சக்தி பிரிந்து சின்னாபின்னமாகிச் சீரழிந்த நிலையிலுள்ளது. இது அரசியல், கலை கலாசாரத்துறைகளில் ஒரு பாரிய பின்னடைவு ஆனால் இந்தப் பின்னடைவு தற்காலிகமானது. இது வரலாற்று நியதி உலகமயமாக்கல், கட்டுப்பாடற்ற சந்தை, தாராள இறக்குமதி போன்றவ ற்றை ஏகாதிபத்தியம் வளர்முகநாடுகள் மீது திணித்துவருகின்றது. உலகம் ஒரு கிராமம் என்று கூறிக்கொண்டு, உலக மயமாக்கல் மூலம் தனது அரசியல் பொருளாதார கலை கலாசார ஆதிக்கத்தை வளர்முக நாடுகள் மீது திணிப்பதற்கு முயல்கின்றது ஏகாதிபத்தியம். இதற்கு சாதக மாக எமது நாட்டிலுள்ள சிங்கள தமிழ் பிற்போக்கு சக்திகள் செயற் பட்டு வருகின்றன. ஏகாதிபத்தியத்திற்கும். உள்ளூர் பிற்போக்கு சக்திக ளுக்கும் எதிராக முற்போக்கு சக்திகள் உணர்வுபூர்வமாகப் போராடி எமது தாய்த்திருநாட்டின் அரசியல் பொருளாதார கலை கலாசாரத்தை இந்த ஏகாதிபத்தியத்திற்குச் சார்பான பிற்போக்கு சக்திகளிடமிருந்து மீட்டெடுத்துப் பேணிப் பாதுகாப்பது அவசர அவசியமாக உள்ளது.
இன்று தமிழ் மக்களின் தேசிய இலக்கியப் போக்கை ஆராயப் புகும் விமர்சகப் பண்டிதர்கள் யானை பார்த்த குருடர்களாக தமிழ் மக்கள் வாழ்வின் ஒரு கட்டத்தை மட்டுமே முழுமை எனக்காட்ட முயல்கின் றனர். ஆனால் இலங்கையில் தமிழ் மக்களின் தேசிய இலக்கிய வரலாறு 1950 களில் முற்போக்கு இலக்கியவாதிகளால் ஆரம்பிக்கப்பட்டு 60, 70 களில் முழு வீச்சுடன் முன்னெடுத்துச் செல்லப்பட்ட வரலாற்றைக் கொண்டது. ஆனால் இவ்வரலாறு இடையில் சற்று பின்னடைவுக ளையும் தேக்க நிலையையும் கொண்டிருந்தாலும், தமிழ் மக்களின் தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், ஏகாதிபத்தியத்துக்கும் சகல பிற்போக்கு வலதுசாரி சக்திக்கும் எதிரான வழியில் திருப்பப்பட்டு
XX

முன் நோக்கிச் செல்கையில் அம் மக்களின் முற்போக்கு இலக்கிய இயக்கம் மென்மேலும் வீச்சும் விசாலிப்பும் பெறும் என்பது உறுதி.
இறுதியாக "உலகத்து நாட்டார் கதைகள்" என்ற எனது மீழ் மொழிவு நூலை புதுப் பொலிவுடன் கொண்டு வந்த கொழும்பு மீரா பதிப்பகத்தினர் "மேடும் பள்ளமும்" என்ற என் சிறுகதைத் தொகுதி யிலன துணிந்து இரண்டாம் பதிப்பாக பிரசுரிக்க முன் வந்தமைக்கு எனது இதய பூர்வமான நன்றியைத் தெரிவிக்காமலிருக்க முடியாது. மீரா பதிப்பகத்தினரின் இலக்கிய சேவை விசாலித்து மேலும் இலக்கியப் படைப்புக்களை கொண்டு வரும்வகையில் செழித்தோங்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
வசந்தம் நீர்வை பொன்னையன் மீப்வேலி.
27.04.2003

Page 13
ஊர்வலம் . .
LITF ħ ..... .....
மேடும் பள்ளமும் . . p56ops ... ...
(Fg ... ...
பனஞ்சோலை .
56ill ... .
வானவில் . .
..... ..... لقي للانفاق
மின்னல் . .
.............. ............ . ?..ہاؤ56])lہ
dults ... .
96.9 . . . . . . . .
Lus . .
புரியவில்லை . .
xxii

ஊர்வலம்
துரத்தில் ஒரு சுடுகாடு
சுடுகாட்டைச் சுற்றிலும் சவுக்கு மரங்கள், அதற்குப் பக்கத்தில் தான் அந்த மில்.
அந்த மில்லைப்பற்றி யாழ்ப்பாணத்தில் தெரியாதவர்கள் இல்லை; இருக்க முடியாது. மில்லைப்பற்றிய கதையே வேறு: அதெல்லாம் பெரிய இடத்து விஷயம்; மூடு மந்திரம். அதைப்பற்றி நமக்கென்ன கவலை? "யாதொன்றும் நான் அறியேன். பராபரமே” என்று இருந்து விடுவது தான் நல்லது.
மில் மணி அலறி ஓய்ந்தது.
செம்மறி ஆட்டுக் கூட்டம் போல தொழிலாளர் வெளியே வர ஆரம்பித்தனர். அவர்களில் சுப்பையாவும் ஒருவன்.
தோளிலிருந்த துண்டைத் தட்டிப் போட்டுக் கொண்டே, நேராக 'டீ கடைக்குச் சென்றான் சுப்பையா. நடையில் மிடுக்கும் வேகமு மில்லை. உடல் முதிர்ந்து, சோர்ந்து, முதுகு கூனி, கிழடு தட்டிப் போய் விட்டது. 'டீ குடித்து விட்டு, குழந்தைகளுக்கும் ஏதோ வாங்கிக் கொண்டு புறப்பட்டான்.
செல்லையாவினுடைய மில் பதினெட்டு வருஷங்களுக்கு முன், சுப்பையாவுடனும் பத்துக்கூலி ஆட்களுடனும் தான் தொடங்கியது. முதல் முதல் அந்த யந்திரம் சுப்பையாவினுடைய கையினால்தான் இயங்கியது. அதை நினைத்தால் சுப்பையாவுக்கு ஒரு விதப் பெருமை.
1

Page 14
மேடும் பள்ளமும்
அவனுடைய கைராசியால்தான் மில் பெரிதானதென்று முதலாளி அடிக்கடி சொல்லிக் கொள்வார். அதனால் என்ன?
சுப்பையா மாடாக உழைத்தான். அவன் சம்பளத்தில் எந்த வித மாற்றமுமில்லை. ஒரே கஷ்டம். ஓயாத உழைப்பு.
சுப்பையாவுடன் வேலை பார்த்தவர்கள் அந்த மில்லை விட்டு வெளியேறி விட்டார்கள் என்றைக்கோ. அவர்கள் கையில் கொஞ்சம் பணமும் சம்பாதித்து விட்டார்கள். அவர்களை- அந்த மாஜித் தொழி லாளர்களைக் காணும் போதெல்லாம் சுப்பையா நீண்ட பெருமூச்சு விடுவான். நீண்டகாலத் துன்பங்களைச் சுமந்து, அது வெளியே வந்து காற்றுடன் கலக்கும்.
எப்போ பார்த்தாலும் சுப்பையாவினுடைய வாழ்க்கையில் கடன், கஷ்டம், என்ற கூப்பாடுதான். அது அவனைப் போன்றவர்களுடன் கூடப் பிறந்தவையாச்சே! கிடக்கட்டும். சுப்பையாவின் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வேண்டாமா? எல்லாமே தலைவிதி' என்று அவன் இலவசமான சுமைதாங்கிமேல் பாரத்தைப் போட்டு விடுவான்.
சுப்பையாவுக்கு மாதம் மாதம் அறுபது ரூபா சம்பளம் கொடுத் தார்கள். பெண்டாட்டிக்கும் ஏழு பிள்ளைகளுக்கும் அந்த அறுபது ரூபா எந்த மூலைக்கு? அச்சாணி தேய்ந்த மாட்டுவண்டி போல சுப்பையா குடும்பம் ஏனோ தானோ என்று ஓடிக்கொண்டிருந்தது.
சுப்பையா மிக நல்லவன். எல்லோருனுடம் வாய்விட்டுத் தாராள மாகக் கதைப்பான். மா அரைக்க யார் வந்தாலும் சுப்பையாவிடம் தான் செல்வார்கள். அவனும் மாவைச் சிந்தாமல் சிதைக்காமல் பட்டு மாதிரி அரைத்துக் கொடுப்பான்.
அவன் மா அரைத்தாலும், அவனுடைய பெண்டாட்டி பிள்ளை கள் அந்த விதமான மாவைச் சுவைத்தது கிடையாது. அது எப்படி அவர்களுக்குக் கிடைக்கும்?
ஆனால். சுப்பையா மட்டும் மாவை நன்றாகச் சுவைத்தான்நாவினாலல்ல! அவனுடைய மூக்கு நன்றாக மாவைச் சுவை பார்த்துக் கொண்டே வந்தது. மாவும் தூசியும் கலந்த காற்றையே சதா உட்கொண்டு
2

நீர்வை பொன்னையன்
வந்தான் சுப்பையா. அவனுடைய வயிறு நிரம்பா விட்டாலும் சுவாசப் பை மாவால் நிறைந்து கொண்டு வந்தது.
காலம் கரைந்து கொண்டிருந்தது; நாட்கள் செத்து மடிந்தன.
ஒரு நாள்.
மழை பொத்துக் கொண்டு கொட்டியது. ஒன்றல்ல. இரண்டல்ல,
நான்கு நாட்கள் தொடர்ந்தாற் போல் அடைமழை. ஒரே குளிர், காற்றும் மழையும் சேர்ந்து ஒரு கலக்குக் கலக்கியது.
சுப்பையாவின் உடலில் மறைந்திருந்த வியாதி, குளிரைக் கண்டதும் தலை காட்டியது.
அவனுக்கு இருமல். “லொக்கு’, ‘லொக்கு’ என்று இருமினான் சுப்பையா - இல்லை; அவனுக்கு இருமலல்ல.
காசநோய்
அது காசம் என்று சுப்பையாவுக்கு எப்படித் தெரியும்? கஞ்சியும் றொட்டியும் தான் அவனுடைய "ரொனிக்’. அடித்துப் போட்ட பாம்பு போலத் துவண்டு சுருண்டு போய்க் கிடந்தான். உடல் எலும்புக் கூடாக இளைத்து விட்டது. வியாதியின் கோரக் கோடுகள் முகத்தின் மேல் கோலமிட்டுக் கொண்டிருந்தன.
எத்தனை நாட்கள் தான் பாரச் சிலுவையைச் சுமப்பது? ாப்பையாவால் தாங்க முடியவில்லை.
“மீனாட்சி வா ஆஸ்பத்திரிக்குப் போவம்.” சுப்பையா முக்கலும் முனகலுமாகச் சொன்னான்.
வீட்டில் சாவதைவிட ஆஸ்பத்திரியில் அரசாங்க விருந்தாளியாகச் ாவது எவ்வளவோ மேல் என்று எண்ணிவிட்டான் போலும்
பிறகு?
பிறகென்ன?
சுப்பையாவும் மீனாட்சியும் யாழ்ப்பாண ஆஸ்பத்திரியை நோகக்
3

Page 15
மேடும் பள்ளமும் நடந்து கொண்டிருந்தனர்.
மழை இலேசாகப் பிசுபிசுத்துக் கொண்டிருந்தது.
ஈரப்பசுமையற்ற சுப்பையாவின் கண்கள் குழி விழுத்திருந்தன. கால்கள் தளர்ந்து தள்ளாடின.
'லொக்கு. லொக்கு' என்று இருமத் தொடங்கினான். அவனால் நடக்க முடியவில்லை. கால்கள் வேலைநிறுத்தம் செய்துவிட்டன. வீதி ஒரத்திலே இருந்துகொண்டு இருமினான்.
மீனாட்சிக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவள் கண்களிலிருந்து நீர் வழிந்தோடியது.
சுப்பையாவின் மூக்காலும் வாயாலும் மாவும் சளியும் கட்டி கட்டியாக வந்துகொண்டிருந்தன. இடையே.
இரத்தம்
இது போதாதா இந்த உலகத்திற்கு?
அவனுடைய கால்கள் கிடுகிடு என நடுங்க ஆரம்பித்தன, கைகள் சலனமற்றுப் போய்க் கிடந்தன.
"தண்ணி”- அவன் வாய் முணுமுணுத்தது.
பக்கத்திலிருந்த கடைக்கு ஓடினாள் மீனாட்சி.
சுப்பையாவின் தலையைத் தன் மடியில் வைத்துக் கொண்டு, தண்ணீரைச் சொட்டுச் சொட்டாகப் பருக்கினாள்.
அவள் முகத்தைப் பார்த்தபடியே கிடந்தான் சுப்பையா.
பார்வையோடு பார்வை மோதிச் சிதறியது!
முதல் இரவு - புதுமணப் பெண் - எலுமிச்சம்பழ மேனி, நாணம் நிறைந்த சிவந்த கன்னங்கள். கனவு காணும் கண்கள். வாரிவிடப்பட்ட சுருண்ட கூந்தல். வெற்றிலைச் சாயம் படிந்த சிவந்த உதடுகள். இன்பப் போதை நிறைந்த முறுவல், கெம்பி மிதந்த மார்பகங்கள்- சுப்பையாவின்

நீர்வை பொன்னையன்
Arமுன் தோன்றினாள் மீனாட்சி. அவனுடைய கண்கள் பிரகாசித்தன.
நடுகள் துடித்தன.
"என் ராசா என்ன பார்க்கிறாய்?"
மீனாட்சி அவனுடைய உதடுகளைத் தடவி கொடுத்தாள்.
மீனாட்சியினுடைய குரலிலே வேதனையும் சோர்வும் கலந்தி ருந்தன.
அவனுடைய கண்கள் மிரண்டன.
அதே மீனாட்சியை அவன் காணவில்லை.
குழிவிழுந்த கண்கள், பள்ளம் விழுந்து இடிந்த கன்னங்கள், வெளிறிக் காய்ந்து வெடித்த உதடுகள், தும்பைப்பூக் கூந்தல், சோகம், வெறுப்பு, வேதனை கலந்த முகம்!-ஓயாத உழைப்பாலும், வறுமைப் பேயாலும் வாட்டிச் சிதைக்கப்பட்ட மீனாட்சியைத்தான் அவன்
AGUT LITET.
காலையில் மலர்ந்த மலர், தேவியின் சிலையை அழகுபடுத்திவிட்டு மாலையில் வாடிக் கருகுவது போல சுப்பையாவின் முகம் வாடியது.
ஒரு நீண்ட பெருமூச்சு. அவ்வளவுதான்!
கண்களின் அசைவு நின்றது. சுப்பையா ஓடிவிட்டான்!
மீனாட்சியின் வயிற்றில் நெருப்பை அள்ளிக் கொட்டி விட்டு முடியே விட்டான்!
"ஐயோ என் ராசாவே” - அவள் கதறினான். அவளுடைய சுக்குரலைக் கேட்டவர்கள் விழுந்தடித்துக் கொண்டு வந்து கூட்டம் போட ஆரம்பித்துவிட்டார்கள்.
மாலைச் சூரியன் கருகிக்கொண்டு வந்தான். வேதனை பொறுக்க மாட்டாத அடிவானம் இரத்தமாய்ச் சிவந்தது.

Page 16
மேடும் பள்ளமும்
கொசுவலை போன்ற நைலோன்’ சேலை கட்டிய மாதர்கள். குதிரை வாலைப்போல ‘கிராப்' செய்த கால்பேஸ் கலாசார நிபுணிகள், ஒரு நாளைய காதலர்களைத் தேடியலையும் ‘பஸ் ஸ்ராண்ட் மைனர்கள், அவர்களை ஏற்றிச் செல்லத் தயாராகப் பறந்து செல்லும் ‘ராக்சிகள் - எல்லோரும் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தனர்.
மீனாட்சியின் பரிதாபக் குரலை இவர்கள் எங்கே கேட்கப் போகிறார்கள்? மீனாட்சியைப் போன்ற காய்ந்த சருகுகள் நாகரிகச் சுழிப்பிலே சிக்கிச்சுழலும் இவர்களுடைய கண்ணில் எங்கே படப் போகிறார்கள்? இவர்கள் இருக்கவேண்டிய உலகமே வேறு.
பொழுது விடிந்தது.
மில் மணி அலறியது.
“முதலாளி ஐயா.”
'd lib'
"ஐயா. இண்டைக்கு."
“இண்டைக்கு என்ன. ? பணமா.?” சிடுசிடுத்து விழுந்தார் முதலாளி.
“இல்லை. ஐயா. லீவு.” தயங்கித் தயங்கித் கேட்டான் ஒரு கூலி. அவனுடன் கூட இன்னும் சில தொழிலாளர்.
“என்ன? லீவா?’ பாம்பு கடித்தவனைப் போலத்துள்ளி எழுந்தார் செல்லையா முதலாளி.
“ஓம் ஐயா.” பயத்தால் அவர்களுடைய தேகம் ஒடுங்கி நடுங்கியது.
“ஏராளமான வேலைகள் இருக்கின்றன. உழைப்பு நாளில் லீவா?”
“ஐயா, எங்கடை சுப்பையாவின்ரை செத்த வீட்டுக்குப் போக.
“முட்டாள்களே! சுப்பையா செத்தால் உங்களுக்கென்ன? அவன் என்ன கவர்னர் ஜெனரலா? லீவு தரமுடியாது. போங்கோடா. போய்
6

பொன்னையன்
selv
டிங்கள் வேலையைச் செய்யுங்கோ’ நிதானமாகக் கூறினார் முதலாளி.
எவனுடைய உழைப்பால் உயர்ந்தாரோ, யாருடைய நன்மைக்காக, கொள்ளை லாபத்திற்காக உழைத்தானோ, அவனுடைய சாவைக் கேட்டும். ஒரு துளி அனுதாபம்கூடக் காட்டாமல் தன் கல்நெஞ்சை வெளிப்படுத்தினார்.
முதுகில் ஏறிச் சவாரி செய்பவனை தனது வருத்தத்தையும் பாராமல் சுமந்து செல்லும் குதிரையைப் போல மனமுடைந்து, நலலகுனிந்து சென்று தங்கள் வேலையைச் செய்தார்கள் அந்தத் தொழிலாளர்கள்.
"படார். படார்’ பட்டாசுகள் வெடித்தன.
அந்தத் தொழிலாளர்களுடைய உள்ளங்களும் வேதனையால் பொருமிக் கொண்டிருந்தன.
ஒரு சிறு ஊர்வலம் - ஐந்து ஆறு பேர்கொண்ட சுப்பையாவின் பிரதே ஊர்வலம் - நத்தைபோல நகர்ந்து கொண்டிருந்தது.
தொழிலாளர்களுடைய கைகள் அசையவில்லை! மில் யந்திரமும் அசையவில்லை!
சிறு ஊர்வலத்தை நோக்கி, அவர்களுடைய பெரிய ஊர்வலம் சென்று கொண்டிருந்தது.
ஒன்றுடன் ஒன்று கலந்து தழுவி, இரண்டும் சங்கமித்தன. அந்த ஊர்வலத்திலே பாண்டு வாத்தியமில்லை. பெரிய மனிதப் பரம்பரையில்லை. ஆடம்பரமில்லை. அலங்காரமில்லை. துன்பமும் வேதனையும் நிறைந்திருந்தன. வாழ்வு மறுக்கப்பட்டு, பறிக்கப்பட்டு, செல்வத்தின் கற்பக தருவான தொழிலாள வர்க்கம் சுப்பையாவின் பிரேத ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்தது - அந்த வர்க்கத்தின் பள்ளத்தில் ஊற்றெடுத்த உணர்ச்சி அவர்களை ஒருங்கே இணைந்தி Uђb53.
பிறகென்ன?

Page 17
மேடும் பள்ளமும்
அந்த ஊர்வலத்தின் ஒருவனாய் இருக்க வேண்டிய சுப்பையா வின் உழைத்து உருக்குலைந்த உடலைத் தீக் கொழுந்தின் செந்நிற நாக்குகள் நக்கத் தொடங்கின!
மீனாட்சி ஓங்காரமாகச் சிரித்தாள்.
அந்த அசுரச் சிரிப்பில் சுடுகாடே அதிர்ந்தது.
அப்புறம்?
அப்புறம் என்ன நடந்ததோ?

LIITJFD
“கறுப்பி"
“சிவப்பி.வா’
“வெள்ளைச்சி! வா, இஞ்சை வா”
காற்றிலே மிதந்து தேய்ந்தது அவனுடைய குரல். அந்த வேண்டுகோளைப் பொருட்படுத்தாது அவர்கள் போய்க் கொண்டிருந் தார்கள். அவன் அழைப்பு அவர்களுடைய செவியிலே விழவில்லைப் போலும்!
"தண்ணி விடாய்க்குதா? தாறன்’ அன்பு கலந்திருந்தது அந்தக் குரலில்.
தன் நிழல் தன் காலடியில் நிற்கும் நேரம். வெங்கதிரோனுடைய கொடும் நாக்குகள் அந்த வெளியிலேயுள்ள சடப் பொருள்கள் எல்லா வற்றையும் நக்கி எரித்துக் கொண்டிருந்தன. செம்புழுதி வாரி இறைத்துக் கொண்டிருந்தது சோழகக் காற்று.
அவனுடைய உதடு காய்ந்து வரண்டது. ஏதோ உருண்டு புரண்டு குமட்டும் உணர்வு அடிவயிற்றில். அந்த நிலையிலும் அவனது வாய் “சிவப்பி! வெள்ளைச்சி’ என்று கூறிக்கொண்டது. வளைந்து குனிந்து ஒரு கையால் வாளியை எடுத்தான் சின்னையா.
உழைத்து மெருகேறிய வைரம் பாய்ந்த தேகக்கட்டு, அதற்கேற்ற உயரம், வெயிலில் கருகி இருண்ட கறுப்பு நிறம். ஒளி வீசும் கண்கள்.
9

Page 18
மேடும் பள்ளமும் நீண்டு அடர்ந்து - நரைத்த புருவங்கள். தலையில் ஒரு பிடி பரட்டைச் செந்நிற மயிர், முழுக் கொட்டைப் பாக்கை வாயில் போட்டு “டக்” என்று கடித்துச் சப்பும் பற்கள். இவைகள் அமைந்து, எண்பது வயதை எட்டிய பிரகிருதிதான் சின்னையா.
தசரதனுக்கு நாலாயிரம் மனைவிமார் இருந்தார்களாம். வேறு பலருக்கு ஆயிரக்கணக்கில் பிள்ளைகள் இருந்திருக்கிறார்கள். அவை எல்லாம் புராணக் கதைகள். சின்னையாவுக்கோ 'கறுப்பி’, ‘வெள் ளைச்சி’, ‘சிவப்பி’. இப்படி. நூற்றெட்டுப் பேர். அவர்கள் தான் அவனுக்குப் பிள்ளைகள். அவன் வாழ்வதும் அவர்களுக்காகத்தான்.
அவர்களுக்கு அவன்; அவனுக்கு அவர்கள்
சின்னையா தனது பத்து வயதிலேயே அவர்களுடன் பழகத் தொடங்கியவன். அவர்களின் தாயாகக்-காவல்காரனாக வைத்தியனாக வும் இருந்தான். 'கறுப்பி’, ‘வெள்ளைச்சிகளுடைய எத்தனையோ சந்ததிகளையும் கண்டுவிட்டான்.
'கறுப்பி, 'வெள்ளைச்சி அந்த இரு பரம்பரைக்குமாகப் பாடு பட்டான்.
என்ன, மனிதர்களைப் போல் அவர்கள் நன்றி கெட்டவர்களா?
அவனுக்கு வேண்டிய எல்லாவற்றையும் அளித்தார்கள்; வாழ்க்கையையே கொடுத்தார்கள்.
சிறு வயதில் தந்தையை இழந்த சின்னையா, “கறுப்பி’ ‘வெள் ளைச்சிகளுடன் சேர்ந்து பாடுபட்டு உழைத்தான். அதன் பலனையும் அவனே அனுபவித்தான். பகல் முழுவதும் அந்தச் செம்பாட்டு வெயிலில் “கறுப்பி’ ‘வெள்ளைச்சி' என்ற ஆடுகளுக்குப் பின்னால் திரிவான். இரவில் யாருடைய தோட்டத்துப் பட்டியிலாவது அடைத்து விட்டு அங்கேயே உறங்கிவிடுவான்.
விவாகஞ் செய்து குழந்தை குட்டிகளைக் கண்டவன்தான். மனைவி, மகன் ஒருவனை கொடுத்துவிட்டுப் பரலோகம் சென்று விட்டாள். அப்போது மகனக்கு வயது இரண்டு. அவனை வளர்த்து
10

நீர்வை பொன்னையன்
விவாகஞ் செய்து கொடுத்தான். அவன் பெற்றுப் பெருகி வாழ்கிறான். “வயதுபோன காலத்தில் இப்படி ஏன் அலைவான்?’ என்று யாராவது கேட்டால் “என்ன செய்யிறது? நான் பாராவிட்டால் இந்த ஆடுகளின் கெதி என்ன? எங்களை வளர்த்தது இந்தத் தெய்வங்க ளெல்லோ?’ என்றபதிலைத் தான் சொல்லுவான்.
"அப்பு வயதுபோன நேரத்திலை இப்படி ஏன் அலையிறாய்? ஆடுகளை வித்துவிட்டு நீ வீட்டிலை சும்மா இரு சாப்பாடு தாறன்’ என்று ஒருநாள் மகன் கேட்டான்.
“என்னடா சொல்லுறாய்? ஆடுகளை விக்கவா! அப்பிடியும் ஒரு நினைவா? என்ரை உயிர் உடலிலை இருக்கு மட்டும் அந்த நினைவை விட்டுவிடு’ ஆவேசமாக இரைந்தான் சின்னையா.
உப்புச் சத்தியாக்கிரகத்திற்குச் சென்ற மகாத்மா காந்தியைப் போல கையில் ஒரு பொல்லுத் தடியுடன் நின்றான் சின்னையா.
அன்று, மண்ணில் குதித்த ஆட்டுக்குட்டியைத் தனது மார்புடன் அணைத்துக்கொண்டு நின்ற சின்னையாவைப் பார்த்தால் புத்தபிரானைப் போல் இருந்தது.
“வெள்ளைச்சி” என்று சொல்லிக்கொண்டு வாளியை எடுத்த சின்னையாவினுடைய உடல் என்றைக்குமில்லாதபடி நடுங்கியது. தடியை ஊன்றிக் கொண்டு ஒரு அடி எடுத்து வைத்தான். கால்கள் பதறின. உடல் தள்ளாடியது. தரையில் அப்படியே இருந்தான்.
சுற்றியுள்ள அனைத்தும் சுழன்றன. அப்படியே மல்லாக்காக நிலத்தில் சாய்ந்தான். காற்று ஊளையிட்டுக்கொண்டு செம்புழுதியை அள்ளி வீசிக் கொண்டிருந்தது.
பனங்காடு ஓலமிட்டு அலறிக்கொண்டிருந்தது. தொலைவில் ஆடுகள் வெண்திரைக்குப் பின்னுள்ள சிலையின் நிழலாயின.
11

Page 19
மேடும் பள்ளமும்
"கறுப்பி" அவனுடைய வாய் முணுமுணுத்தது.
“ம்மேய்.” என்று கத்திக்கொண்டு சிவலை ஆடு துள்ளி விழுந்து
அலறியது.
தலையை உயர்த்தி சத்தம் வந்த திசையைப் பார்த்தான். ஒரு ஆடு துள்ளிக் குதித்துக்கொண்டு அலறியது. எந்த ஆடு என்று அவனு க்குத் தெரியவில்லை. அதன் நிறத்தைக் கூட அவனால் தெரிந்துகொள்ள முடியவில்லை.
இரண்டு கைகளையும் நிலத்தில் ஊன்றிக்கொண்டு, நெஞ்சை நிமிர்த்தி எழும்ப, யாரோ நெஞ்சில் ஏறியிருந்து அமுக்குவது போலி ருந்தது அவனுக்கு.
தொப்பென்று முதுகு நிலத்தில் வீழ்ந்தது.
ஆடு துடித்துத் துடித்துக் கத்தியது. “வெள்ளைச்சி.’ அவனுடைய உதட்டிலிருந்து நழுவியது சத்தம். தொண்டைக்குள் ஏதோ தடக்குவது போல இருந்தது. கழுத்தைப் பிடித்து நெரித்துத் திருகுவது மாதிரி.
இரண்டு கால்களையும் மடக்கி ஊன்றி நிமிர பின் நாரி படீர் என விழுந்தது.
இரு கைகளும் நிலத்தில் விறாண்டிப் பிடித்தன.
“ம்மேய். ம்மேய்.” என்ற சத்தம் அவனுடைய காதில் விழுந்து கொண்டிருந்தது.
கைகளையும் கால்களையும் நிலத்தில் அடித்தான்.
“கடவுளே என் ஆடுகளின் கதி?”
உடல் காற்றில் மிதப்பது போலிருந்தது. “ம்மா." சிவலை ஆட்டின் சத்தம் தேய்ந்து கொண்டு வந்தது.
கறுப்.” உதடுகள் அசைந்தன; சத்தம் வெளிவரவில்லை.
12

நீர்வை பொன்னையன்
குட்பீர் என அவனுடைய வாயாலும் மூக்காலும் இரத்தம் பீறிட்டுக் கொண்டு வந்தது. கண்கள் பிதுங்கி மேலே மேலே போய் மண்டைக் குள் சொருகின.
’கறுப்பி. உதடுகள் அப்புறம் அசையவில்லை! அவனுடைய தலை சாய்ந்தது!
ஆடுகள் அலறிக்கொண்டு அங்குமிங்கும் ஒடிக்கொண்டிருந்தன.
அவற்றின் உள்ளுணர்வுக்கு அந்த முதிர்ந்த கட்டையோடு ஒட்டியிருந்த உயிரைக் காணவேண்டுமென்ற துடிப்புண்டானதோ என்ன வோ கட்டற்று அங்குமிங்கும் அலைந்தன.
‘ம்மேய்ம்மேய். என்று ஓலமிட்டன, அந்த ஒலத்தில் குழைந் நிருந்த சாயை, பாசத்தின் பரிமளிப்போ என்னவோ!
உலகத்தை ஆக்கிரமித்த சூரியன் அஸ்தமனகிரிக்குள் புகுந்து கொள்ளத் தொடங்கினான். எங்கும் சுற்றிவரும் இருளின் கருவண்ணத் துக்குள் இயற்கை மறையத் தொடங்கியது.
அந்த வெளியில் சலனமற்ற சடப்பொருளாகச் சின்னையா கிடந்தான். இருள் திரை அவனுடைய உடலையும் போர்த்திக்கொண்டது.
ஆடுகளின் “மேய்’ என்ற ஒலம் அந்த வெளியின் அமைதியைச் சாகடித்துப் பரவிக்கொண்டிருந்தது.
13

Page 20
மேரும் பள்ளமும்
ஒரு கிராமம் - அதை உங்களில் ஒரு சிலருக்குத்தான் தெரிந்திருக்கக் கூடும். அவ்வளவு சிறிய கிராமம் அது. யாழ்ப்பாணத் திலிருந்து நல்லூரூடாகச் செல்கிறதல்வா பெரிய சாலை? அதன் வழியே சென்றால், பன்னிரண்டாம் ‘மைல் கட்டை வந்தவுடன், அக்கிராமம் வந்துவிட்டதென்ற அர்த்தம். செழிப்பான கிராமந்தான் அது. ஆனால் அங்கு வாழும் பெரும் பகுதி மக்களுடைய - மனித மந்தைகளுடைய - வாழ்க்கை.
தெரு வழியே அவர்கள் - ஒரு சாதி மக்கள் செல்லும் பொழுது, காவோலையை இழுத்துக் கொண்டு செல்ல வேண்டுமாம்! எதற்காக? “சண்டாளன்” – தாழ்ந்த சாதியான் வருகிறான் என்று அறிவிப்பதற்கு இரவிலேதான் அவர்கள் செல்ல வேண்டும். உயர் சாதியார் அவர்களைப் பார்த்துவிட்டால் அசுத்தமாகி விடுமாம்: பாபமாம்!
அது மட்டுமா? ஒரு பிரபுவின் வட்டாரத்திலே திருமணம் நடந்தால், மணப் பெண் தனது “முதல் இரவை’ அந்தப் பிரபுவுடன் கழிக்கவேண்டுமாம்.
மனித நாகரீகம் வளர்ச்சியடைந்து முன்னேறி விட்டதல்லவா! பெரிய தெருவுக்குக் கிழக்குப் பக்கமாக ஒரு சில குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
கன்னிப் பெண்ணின் பிறை நெற்றியிலே திலகமிட்டது போல, ஒரு தென்னஞ் சோலை வயல் நிலத்து மத்தியிலே கம்பீரமாக நிற்கின்
14

நீர்வை பொன்னையன்
றது. வயலின் கிழக்கு எல்லைக் கோட்டில் சதுப்பு நிலம், அங்கொன்றும் இங்கொன்றுமாக தாழம் பற்றைகள் குத்திட்டு நிற்கின்றன. வானமும் பூமியும் கட்டித் தழுவி முத்தமிடும் எல்லைக் கோட்டில், யாழ்ப்பாணத் தின் பெயர் போன உப்பாறு.
தென்னஞ் சோலையை அண்டித்தான். அருணாசலம் உடையாரின் வயல் நிலம்; மேடும் பள்ளமும்.
விரைவிலே தாயாகப் போகும் கன்னிக் கர்ப்பவதி, தாய்மை உணர்ச்சி பொங்கி வழிய தனது கணவருடைய முகத்தைப் பார்த்துச் சிரிப்பது போல, மேட்டு நிலம் வானத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது.
பள்ள நிலம்.?
குலசிங்க மணியகாரர் பரம்பரையிலே பிறந்தவர் அருணாசல உடையார். அந்தக் கிராமத்திலுள்ள பூமியில் மூன்றில் இரண்டு பங்கு குலசிங்க மணியகாரருடையது; அது அன்று.
குலசிங்க மணியகாரருடைய நிலம் குறைந்து, தேய்ந்து மிஞ்சியது தான் அருணாசல உடையாரின் முதுசொம். உடையாருடைய குடும்ப டிாழ்க்கைக்குப் போதுமான - இல்லை, மேல் மிச்சமான வருவாயைக் கொடுத்து வந்தது அவருடைய வயல் நிலம். ஒரு சிறு பகுதிதான் விளை பூமி. மிகுதி மேட்டு நிலம்; பயிர் செய்ய முடியாதிருந்தது ஒரு காலத்தில்.
கணபதி, அருணாசலம் உடையாரின் கை ஆள். அவருடைய வயலில் வேலை செய்து வாழ்ந்தான்.
"நாங்கள் ‘நயினாருடைய உப்பையல்லவா தின்று வாழ்கின் றோம்" என்று அடிக்கடி கணபதி சொல்லிக் கொள்வது வழக்கம்.
மாலைச் சூரியனின் ஜோதிச் செக்கள் மெள்ள மெள்ளக் கருகிக் கொண்டிருந்தது. அடிவானச் சிவப்பை, படகு போல அசைந்து மிதந்து
15

Page 21
மேடும் பள்ளமும்
வந்த கரு முகில்கள் கெளவத் தொடங்கின. சூரியனுடைய பொன்நிறக் கதிர்கள் விளைந்து, காய்ந்து, குலங்கிய கதிர்க் குலைகளிலுள்ள, நெல் மணிகளில் பட்டுத் தெறித்தன. வயற் பரப்பு பொன் மயமாக இருந்தது.
மேட்டு நிலம் சிரித்துக் கொண்டிருந்தது. வயல் வரம்பில் நின்ற கணபதியின் மார்பு ஆனந்த மிகுதியால் மிதந்து தாழ்ந்தது. புயங்கள் பூரித்தன. அவனுடைய ரத்தத்தை வியர்வையாக உறிஞ்சிய அந்த மேட்டு நிலம் இந்த வருடம் தான் அவனைப் பார்த்து அன்புச் சிரிப்புச் சிரித்தது.
s
“எட்டுப் பரப்பு. எண்மூண்டு இருபத்தினாலு புசல் . மனதுக்குள் கணக்குப் போட்டான் கணபதி.
“முந்தின மூண்டு பிள்ளையனையும் பெத்த பொழுது கூப்பன் அரிசியும் ஆட்டா மாவும் திண்டு. அவளுக்குச் சொறி பிடிச்சு. பிள்ளையஞக்கும் வயித்தாலை அடிச்சு. காசில்லாமல் கஷடப் ιιι έl. எல்லாச் சம்பவங்களும் கணபதியினுடைய மன அலையில் மிதந்து மோதிச் சென்றன.
“இந்த வரியம் வெள்ளைச்சி அதிட்டசாலிதான். பிள்ளைப் பெறுவதுக்கு இரண்டு மாதம் இருக்கு. வயல் அரிசிச் சோறு - அதுவும் என்னுடைய கையாலை செய்தது. கொஞ்ச நெல்லை வித்துப் பிள்ளைப் பெத்துச் சிலவுக்கு எடுக்கலாம்.” எண்ணங்கள் கணபதியினுடைய உள்ளத்திலே புரண்டு நெளிந்தன. ஆனந்த மிகுதியால் தனக்குள் சிரித்துக் கொண்டான்.
வரம்பின் எதிர்ப்புறத்திலுள்ள பள்ள நிலப்பக்கம் திரும்பினான் கணபதி. அவனுடைய உள்ளத்திலே ஏக்கம் படம் எடுத்தது. நெற்றியை உள்ளங்கையால் அழுத்தினான்.
9
“கணபதி.
திடுக்கிட்டுத் திரும்பிய கணபதியின் எதிரில் அருணாசலம் உடையார் நின்று கொண்டிருந்தார்.
99
“என்ன நயினார்.
16

நீர்வை பொன்னையன்
ஒடுங்கிக் குடங்கியபடியே, தலையில் கட்டியிருந்த சால்வைத் துண்டை எடுத்தக் கக்கத்துக்குள் வைத்துக் கொண்டு உடையாருடைய முகத்தைப் பார்த்தபடியே நின்றான் கணபதி.
“உனக்குத்தான் இந்த வரியம் 'லக்’ அடிச்சிருக்கு” கசப்புடன் கூறினார் உடையார்.
‘எல்லாம் நயினாருடைய தயவாலை தானே.” அவனுடைய சொற்களிலே நன்றி கலந்திருந்தது.
“அது சரி கணபதி, இந்த வரியக் குத்தகைக் காசைப் பிறகு பாத்துக் கொள்ளலாம். எனக்கு வெள்ளாண்மையும் புகைஞ்சு போச்சு. காசுக் கஷ்டம். போன இரண்டு வரியக் குத்தகைக் காசையாவது தந்திடு”
“வெள்ளாண்மை வெட்டி, ஒரு மாதத்துக்குள்ளை நயினாற்றை காசைத் தந்திடுறன்.”
“என்ன, ஒரு மாதத்துக்குப் பிறகா? பிறகேன் எனக்குக் காசை? அது மட்டும் நான் என்ன செய்ய?’ உடையாருடைய குரலிலே கடுகடுப்புத் தொனித்தது.
“நயினார். நான் இப்ப காசுக்கு எங்கே போக? யாார் தரப் போகினம்? நெல்லு வெட்டி, அடிச்சு, வித்துத்தானே.”
‘டே கணபதி குத்தகைக் காசு தந்திட்டுத்தான் நெல்லு வெட்ட வேணும். இல்லாட்டி. .'நாாகபாம்பு போலச் சீறி விழுந்தார் உடையார். கணபதியினுடைய உடல் நடுங்கியது. அவனுடைய ஆசைக் கனவுகள் எல்லாம்; இடிந்த கோட்டை போலத் தரைமட்டமாகின, கண்கள் கலங்கின.
“நயினார், தயவு பண்ண வேணும். ஐஞ்சாறு நாள் தவணை.”
“முடியாது”
G
நயினார்.
99
17

Page 22
மேடும் பள்ளமும்
தெய்வத்திற்குப் பயபக்தியுடன் பிரசாதத்தைப் படைபப்து போல, அருணாசலத்தின் காலடியில் பணத்தை வைத்தான் கணபதி,
éé 99 எவ்வளவு?
“நாற்பத்தைஞ்சு ரூபா?.”
“நாற்பத்தைஞ்சு ரூபாயா? என்ன ஒருவரியக் காசு தானே. வட்டியும் மற்றவரியக் காசும்?”
“பத்து நாளைக்கை தாறன் நயினார். இதுவும் வெள்ளைச்சியின்ரை பிள்ளைப் பெத்துச் சிலவுக்கெண்டு அவளுடைய தாலியை அடைவு வைச்சு எடுத்த காசு’
பணத்தை எடுத்து மடியில் வைத்துக்கொண்டார் அருணாசலம். வந்த பணத்தை ஏன் விடுவான் என்ற எண்ணம் போலும்!
“கணபதி மிச்சக் காசையும் வட்டியையும் கொண்டு வந்து ன்வச்சிட்டு நெல்லை வெட்டு. நாளைக்குக் காசு இஞ்சை வரவேணும். தவறினால் நாளைவிட்டு அடுத்த நாள் உன்ரை நெல்லை வெட்டி.”
கணபதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு தனது வீட்டை நோக்கி நடந்தான். அவன் கண்முன் சிரிக்கும் மேட்டு நிலம் தோன்றிக் கண்ணமூச்சி விளை եւ ITնգեւ 15l.
அருணாசல உடையாருடைய குடிமைக்காரன் அடிமை கணபதி, அவனுடைய பாட்டன், முப்பாட்டன் எல்லோரும் குலசிங்க மணியகார ருடைய குடும்பத்துக்கும், அவருடைய பரம்பரைக்கும் அடிமையாகத் தொண்டுசெய்து வாழ்ந்து கொண்டு வந்தார்கள்.
கணபதி, அருணாசல உடையாருடைய வயலில் வேலைசெய்து, அவருடைய மாடு கண்டுகளைப் பார்த்து, உடையார் கொடுக்கும் அற்ப கூலியுடன் வாழ்ந்து வந்தான். அவனுடைய மனைவி வெள்ளைச்சியும், மூன்று பிள்ளைகளும் செத்துக்கொண்டே வாழ்ந்தார்கள். வெள்ளை
18

நீர்வை பொன்னையன்
ச்சிக்கும் உடையார் வீட்டிலேதான் வேலை. கணபதியினுடைய குடும் பம் உடையாருடைய குடும்பத்துக்காகவே வாழ்ந்து வந்தது.
அருணாசல உடையாருடைய பள்ளநில வயலைத் தனது சொந்த வயல்போலப் பாடுபட்டு வேலைசெய்து பயிரிட்டு, காவல் காத்து அறுவடை செய்துவந்தான் கணபதி,
அவனுக்குச் சேரவேண்டிய அற்ப கூலியையும் கொடாமல் தட்டிக் கழிக்க மேட்டு நிலத்தில் ஒரு துண்டைக் கணபதிக்குக் குத்தகை க்குக் கொடுத்தார் அருணாசலம்.
கணபதி, பாடுபட்டு அந்த மேட்டு நிலத்தை வெட்டிப் பண்படுத் திப் பயிரிட்டான். மழை இல்லாமையால் சென்ற இரண்டு வருட கால மாகக் கணபதியின் மேட்டுநிலத்தில் விளைச்சலில்லை. அவனுடைய முயற்சி பயனற்றதாகிவிட்டது.
ஆனால் இந்த வருடம்.? நல்ல மழை கணபதிக்கு நல்ல விளைச்சல்
அருணாசல உடையாருக்கு? பள்ள நிலத்திலேயுள்ள பயிர்கள் எல்லாம் வெள்ளத்திலே அழு கிச் செத்து மடிந்தன. ஒரே ஒரு துண்டு மேட்டு நிலம்தான் விளைச்சல் எடுத்தது.
கணபதியின் மேட்டுநில வயலைப் பார்த்ததும், உடையாருக்கு Iனம் புகைந்து எரிந்தது. தான் அந்த நெல்லை வெட்ட வேண்டும் என்பது தான் அருடைய திட்டம். அது மட்டுமல்ல, கணபதியின் குடும்பத்தின் மேல் பழி தீர்க்கவும் வேண்டும். அதற்குச் சந்தர்ப்பத் எதயும் பார்த்திருந்தார்.
எதற்காக? கணபதியும் வெள்ளைச்சியும் உடையாரை ஏமாற்றி வந்தார்கள். வெள்ளைச்சி! அவள் மூன்று பிள்ளைகளுக்குத் தாயாகியும் அவளுடைய உடல் இளமையை இழக்கவில்லை; கவர்ச்சி குறைய
19

Page 23
மேடும் பள்ளமும்
வில்லை. வெள்ளைச்சியின் உடலிலுள்ள நெழிவு வளைவுக் கோடுகள் அவளுடைய மரகதச் சிரிப்பு அவளைக் காணும்போது உடையாரு டைய உடல் அனலைக் கக்கும். அவளுடைய அழகை அப்படியே கடித்து.
உடையார் சந்தர்ப்பம் பார்த்திருந்தார். இன்றைக்குப் பார்ப்போம், நாளைக்கு, அடுத்த வருடம். அடுத்த வருடம். ff
ஒவ்வொரு வருடமும் கணபதியும் வெள்ளைச்சியும் உடையாரை ஏமாற்றி வந்தார்கள். வருடா வருடம் வெள்ளைச்சி தாயாகவேயிரு ந்தாள்.
கணபதியின் குடும்பத்தை அழித்துவிட வேண்டும் போலிருந்தது உடையாருக்கு. காலமும் உடையாருக்குக் கருணை காட்டியது.
r கேட்டியா அண்ணை சங்கதியை?"
"ar66T691?"
"குத்தகைக் காசு கொடுக்கேல்லை எண்டு, உடையார், கணபதி
யின்ரை நெல்லை தான் வெட்டி எடுக்கப் போறாராமே?" வேதனையுடன் சொன்னான் வேலன்.
"என்ன அநியாயமிது? கேக்கப் பறைய ஆளில்லை யெண்டு தானே உடையார் இப்படி எல்லாம் செய்யிறார்."
"நாங்கள் என்ன செய்யிறது? வாய் திறந்தால் நாங்களும் குடி யெழும்ப வேண்டியதுதான். உடையாரிடம் பணமிருக்கு, ஆட்கள் இருக்கினம். பொலிசு, கோடு, கச்சேரி எல்லாம் அவற்றை கையுக்கை தானே இருக்கு."
"அதுக்கு இப்பிடி அநியாயம் செய்யிறதா?" சீனியன் வெட்டிப் பேசினான்.
"எங்களுக்கென்னத்துக்கு ஊர்த்தொல்லையை? எங்கடை பாட்டை நாங்கள் பார்ப்பம்" முருகன் அலட்சியமாகச் சொன்னான்.
20

நீர்வை பொன்னையன்
"முருகா! இண்டைக்குக் கணபதிக்கு நடக்கிறதுதான் நாளைக்கு எனக்கு நடக்கும்; அடுத்த நாளைக்கு உனக்கும். நாங்கள் பேசாம லிருக்க இருக்கத்தான் உடையாராக்கள் எங்கடை தோளிலை ஏறி காதைக் கடிக்கினம்." ஆவேசத்துடன் கூறினான் சீனியன்.
"அப்ப நாங்கள் என்ன செய்யிறது?" ஏக்கத்துடன் கேட்டான் கந்தன்.
"ஞாயத்தைக் கேட்கிறதுதான்!"
"ஐயோ! எங்கடை வீடுகளுக்கெல்லாம் நெருப்பு வைச்சு, எங்களையும் அடிச்சுச் சாக்காட்டிப் போடுவாங்களே உடையாற்றை ஆக்கள்." பயத்தால் நடுங்கியது முருகனுடைய உடல்,
"நாங்கள் ஏன் தனிச்சுப் போகப் போறம்? எல்லாரும் ஒத்துமை
pr
யாய்.
"நீ சொல்லுறது சரிதான் மச்சான், நாங்கள் எல்லாரும் ஒத்துமை யாய் நிண்டால் உடையார் என்னண்டு நெல்லை வெட்டுறது? ஒருதரும் நெல்லு வெட்டப் போகாவிட்டால்."
அவர்களெல்லோருடைய முகங்களும் செவ்வாழைப் பூப்போல மலர்ந்தன.
ம்ே ணபதியினுடைய மேட்டு நில வரம்பிலே, உடையார் கையில் குடையுடன் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தார்.
ஆண்கள் பெண்களுமாகப் பத்துப் பன்னிரண்டு பேர் கணபதி யினுடைய நெல்லை வெட்டிக் கொண்டிருந்தார்கள்.
கணபதி?
அவன் உடையாருடைய பள்ள நிலத்தின் ஒரு மூலையிலே முனகிக் கொண்டு சுருண்டு கிடந்தான். அவனுடைய உடலிலே அங்கு மிங்கும் ஊமைக் காயங்கள்.
21

Page 24
மேடும் பள்ளமும்
உடையாருடைய பள்ள நிலத் தொங்கலிலே சில மனிதத் தலைகள் தெரிந்தன. அலட்சியமாக நின்றார் உடையார். மனிதத் தலைகள் வரவரக் கூடிக் கொண்டிருந்தன.
கணபதி சிந்திய வியர்வைத்துளிகள், இரத்தச் சொட்டுகள் அவ்வளவும் மனிதர்களாக மாறிவிட்டனவோ!
அந்த மனித மந்தைகள்-வாழ வேண்டும் என்ற ஆவலால் உந்தப்பட்டு ஒன்றுசேர்ந்த மக்கள் - ஆராவாரத்துடன் வந்துகொண்டி ருந்தார்கள்; உடையாரை நோக்கி அவர்கள் வந்துகொண்டிருந்தார்கள்.
மேட்டுநிலம் சிரித்துக்கொண்டிருந்தது.
கணபதி?
அந்த மக்கள் கூட்டத்திற்கு முன் வந்துகொண்டிருக்கும் எவனோ ஒருவனுடைய தோளிலே கணபதி கிடந்தான்.
* அவர்கள் உடையாரை நோக்கி பள்ள நிலத்திலிருந்து மேட்டு
நிலத்துக்கு ஏறிக்கொண்டிருந்தார்கள்.
நியாயம் கேட்பதற்கு வாழ்வதற்கு
22

நிறைவு
அநித்திய உலகில் நித்திய அழகினை வடித்தெடுத்து விடும் வேட்கையில் மனதைப் புதைத்து, ஸ்வப்பனலோகத்தில் மிதக்கும் உணர்ச்சியில் அவஸ்தைப்பட்டு, வண்ணக் குழம்புகளில் தோய்ந்து, காய்ந்து, ஒட்டிய மயிர்களைக்கொண்ட தூரிகையுடன் சிலையாக நின்ற அவனை அழைப்பது யார்?
நாம் கற்பிற்கும் நிச உலகத்திற்கு அப்பால், பிரபஞ்சங்களுக்கு அப்பால் என்ற மனமயக்க நிலையைத் தந்து, ஆனால் மனக்கோடியின் அணுவளவு குகையைக் குடைந்து வரும் அந்த உலகத்திலிருந்து வந்த அவள், கெக்கலியிட்டு நகைக்கின்றாள்.
அழகு வேட்கையின் தோல்வி.
பூரண அழகை-குளிர் நிலவினதும், தவழும் தென்றலினதும், புன்னகை பூக்கும் அனந்த கோடி மலர்களினதும், கடவுள் சிருஷ்டி சகலவற்றின் மிருதுத்தன்மையையும் அழகையும் ஓர் உருவாய், பூரண எழில் வடிவாய் - வடித்தெடுக்கும் பணியின் தோல்வியா?
ஒரு யுக காலமாக நிலவிலிருந்து சிந்திய பால்த் திவலைகளை எல்லாம், இரு கலசங்களில் அடைத்து வைத்த மார்பகங்களா? தங்க நிறத் தனக்கட்டுகளுக்கு, கவர்ச்சித் திரையிட்டு மறைக்கும் கருங் கொண்டல் கூந்தல். எழிலின் எழிலியாகத் தோன்றும் அவள் சிரிப்பது ஏன்?
நேரத்தின் பம்பரச் சுழற்சி.
23

Page 25
மேடும் பள்ளமும்
கண்ணுக்குத் தெரியாத தீ ஜூவாலையில் அவள் தோற்றம் மறைந்து குரல் மட்டும் சுழன்று சுழன்று நாதம் சோரம் போகாது நிலைக்கின்றது.
மாயை மறைந்து, அக்னியில் உருகிய மெழுகாகத் தசைப் பிரதேசங்கள் பசை உலர்ந்து
வெறும் எலும்புக்கூடு இவ்வளவு காலமும் அழகு, அழகு என்று தன் கற்பனைப் பசளைகளையெல்லாம் வரட்டி வளர்த்த அறுவடை எலும்புக்கூடு!
வெறுப்புடன் கையிலிருந்த தூரிகை, நிலத்தை முத்திக்கின்றது. சூனியத்தின் சூனிய விளிம்பாய் சூனியமுற்ற மனக்கிறக்கம் சற்றே விழிப்புக் கொள்ள.
"குக்.குக்.குறு.கூஊ." காற்றின் அலைகளாய் நீந்திவரும் நாதம், அதில் இழைந்து குழைந்து வரும் சோகம்.
அழகின் இலக்கணத்தின் அடிமுடியைக் காணும் வெறியில் வெறும் எலும்புக்கூடுகளைச் சிருஷ்டித்து, நிழலைச் சிறைப்பிடிக்கும் என் முயற்சிக்குத் தெரிவிக்கப்படும் அனுதாபமா?
அனுதாபம் யாருக்குத் தேவை? அவன் சிருஷ்டி அனாதையல்ல. கலையின் கலையாய் வாழ்பவன்.
"தினந்தோறும் இந்த அனுதாபந்தானா? அந்தப் பட்சியைப் பிடித்து அதன் கழுத்தை நெரித்துத் திருகி, முறித்து எறிந்து விட வேண்டும்.
"குக்.குக்.குறு.கூஊ." தனிமையில் பட்சி எழுப்பும் புலம்பலின் நாதம், அதில் புரையோடி க்கிடப்பது சோகம். சோகம் அனுதாபத்தின் மறு உருவா? சேவலின் கதகதப்பினை நாடும் பேடையில் ஏக்கம்.
அவன் அந்த நாதத்தை வெறுத்தான்; பட்சியை வெறுத்தான்.
24

நீர்வை பொன்னையன்
என்றோ ஒருநாள், கேட்பார் பார்ப்பாரற்று அனாதையாக அங்காடி வாழ்க்கையில் நாட்களை உருட்டிக் கொண்டிருந்த ஒருத்தியின் கரு வூரில், சுயப் பிரக்ஞையற்ற நிலையில் கருவூன்றி, விகசித்து வெடித்து, புழுதி சேர் மண்ணில் பிறந்து, வளர்ந்தது அவன் ஞாபகச் சுவட்டில் தட்டுப்படாத தடங்கள்.
மற்றும்படி, சுவடுகள் லேசாக அழிந்து காலப்புழுதியினால் Imறந்தவற்றைத் துடைத்துப் பார்த்தால், வறுமையே சொத்தாகக் "ாண்ட ஒட்டி உலர்ந்த தசைக் கட்டைகளான தொழிலாளர் மத்தியில், அவர்கள் அனுதாபத்தில் வாழ்ந்தது தெரிகிறது.
அனுதாபம் - அனுதாபம் - அனுதாபம்
வெறுப்பு அவனை உதைத்துத் தள்ள, அவன், அவர்களை விட்டு
ஓடினான். ஒதுக்குப் புறத்தில், தனிமரத் தோப்பாய் முளைத்து நின்ற
பிரத்தின் கவர்களில் காலூன்றி நின்ற பட்சி அலறுகின்றது.
"குக்.குக்.குறு.கூஊ."
பரத லயத்துடன் பரவிவரும் தென்றலில், ஆடும் மாந்தளிரின் (குறு நடுக்கம் போல, காற்றில் பரவியது அந்த நாதம். தாங்க முடியாத தனிமையை வெறுத்து; அவ்வெறுப்பில் வெதும்பி வாடும் உள்ள நரம்புகளின் தெறிப்புக்களைப் போன்று. சோகம் மண்டிக் கிடக்கிறது.
தனிமரம் -
தனிப்பட்சி -
தனிமனிதன் -
அப்பொழுது அந்த நாதம் இதமாக இருந்தது.
அவன் அந்த நாதத்தை விரும்பினான், பட்சியை விரும்பினான்.
பக்கத்தில், இரும்பான எலும்புக்கூடுகளில் வானைத் தொட்டுவிட எழும்பும் கட்டடமொன்றும், எறும்புக் கூட்டமாக வேலை செய்யும் மனிதர்களும் அந்த வெயில் கக்கும் தீயைப் பார்க்கிலும் கொடியது. அவர்களின் வயிற்றில் வளர்ந்துள்ள பசித் தீ. சூரியனின் வெப்பத்தைக்
25

Page 26
மேடும் பள்ளமும் காட்டிலும் கொடியது. அவர்கள் உதிரம் உறிஞ்சப்பட்ட, நரம்புகள் முறிய, உடல் கூன வாங்கப்படும் வேலை. ஒவ்வொரு மனிதனினதும் தோல்த் துவாரங்களைத் துளைத்து வியர்வைத் துளிகள் பிழிந்து வழிகின்றன.
வேதனை - உழைப்பு - பட்டினி
அத்திருக்கூட்டத்தில், கல் சுமக்க, சுயமாகத் தன் காலில் நின்றே வயிற்றில் வளரும் பசிக்குத் தீனியிடத் துணிந்தான்.
கால வெள்ளத்தின் அசுர வேகம்.
அவன் மனதின் அடித்தளத்தில் எத்தனை கர்வியங்கள் அரும்பின; ஒவியங்கள் மலர்ந்தன!
சாந்துக் கரண்டி தூக்கி, கற்களை இணைத்து. சாந்து பூசிய சுவர் களில் தன் கைவண்ணத்தை வண்ணக் கலவைகளால் தீட்டினான்.
"சுவரோவியங்களில் நிபுணன்"
புகழ் வந்தது.
பணம் வந்தது.
மனதைக் குடைவது என்ன?
பூரணத்வ எழிலை வடித்த விடவேண்டும், ஆண்டவன் சிருஷ்டி யின் ஆதார சுருதிகளை வண்ணக் குழம்புக் கலவைகளின் மென் கோடுகளிலே வடித்தெடுக்கும் சிருஷ்டிப் பிரயத்தனம்.
இதற்கான கலைக்கோயிலில் நாட்துளிகள் பல கரைந்து போக, வேறோர் உலகில் வாழ்ந்து, படைப்புத் தொழிலில் உத்வேகத்துடன் ஈடுபட்டிருக்கின்றான்.
"அபாரம் ஒவிய மேதை, பிறவிச் சைத்திரிகன்!" காலடியில் உருண்டு வந்தது புகழ்,
வரைந்த ஓவியங்கள், மாடிவீட்டுச் சுவர்கள் அலங்கரிக்கச் சென்றன.
26

நீர்வை பொன்னையன்
பூரித்தான்.
கலையுள்ளம் கொண்ட பெரிய மனிதரின் கலைக் கூடத்தில் தனது சிருஷ்டிகள் இடம்பெறுவதின் பெருமை. பேதமை. மதுவும் மாதரும் கொடுக்கக்கூடிய இன்பத்திலும் பார்க்க, அதிக நுகர்ச்சியையா ஒவியங்கள் தந்துவிடப் போகின்றன?
"கலை கலைக்காக"
"கலை அழகு நுகர்ச்சி"
"அழகே கலை"
"அழகு எங்கே இருக்கிறது?"
"நிர்வாண அணங்குகளின் அங்க அமைப்புகளை அப்படியே வரைவதிலே அழகைப் பூரணமாக வடிக்கலாம்!
முயற்சியில் ஈடுபடுகிறான்.
அழகு எலும்புக்கூடாகிவிட்டதே
மீண்டும் -
"குக்.குக்.குறுா.கூஊ."
வெறுமையும், வெறுப்பும்
தனக்கும், வெளி உலகிற்கும் நுழைவாயில் சமைத்த ஜன்னலைத் திறக்கின்றான்.
கலைக்கண்ணின் திரை விரிப்பில் சுருங்கும் ஓர் உலகம்.
மயானப் பேரமைதி. நடு மதிய வேளையில் சவக்குழி உறக்கமிடும் உலகம்.
கண் எதிரே ஒரு மரம். சாவில் சங்கமித்து, மொட்டைபற்றி,
அம்மணமான சுள்ளிக் கிளைகளைத் தாங்கி நிற்கிறது. சுள்ளிக் கிளை
27

Page 27
மேடும் பள்ளமும்
நகத்தில் தன்னந்தனியாக ஒரு சருகு துடித்து நடுங்கிச் சுழல்கிறது. அநித்ய அழகின் நித்திய அலைக்கழிவு
பீளை சேர் கண்களுள் பீறிட்டெழும் அதிசயம்!
சருகு, கால் ஊன்றி கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தை செய்து. பட்சி உருவாகின்றது.
"குக்.குக்.குறுா.கூஊ."
உலகத்தின் சோகம் முழுவதும் அந்தப் பட்சியின் சிறு தொண்டைக்குள் எப்படித்தான் மண்டி உறைந்ததோ?
தனிமை, சோகம்.
அவன் நாதத்தையும் வெறுத்தான். அந்தப் பட்சியையும் வெறுத்தான்.
முகம் நெளிய, மனம் கோண கண் மூட.
பட்சியின் குரல் மேலே மேலே எழ.
பட்சி வளர்ந்து உப்பிப் பருத்து, பெரிய பெரிய துருத்தி அமுக்கத்தில் ஊதி
"TT!" பட்சியும் வெடித்தது; அதன் மையமான இதயமும் வெடித்தது.
இரத்தம் வெள்ளக் காடாகி, உலகத்தை அதற்குள் அமிழ்த்துகின்றது.
அமுங்கி பிராணாவஸ்தைப்படுகின்றது உலகம், இரத்த வெள்ளம் உறைந்து பாளம் பாளமாக வெடிக்கிறது. ஒவ்வொரு இரத்தப் பாளமும் ஒவ்வொரு மனிதத் தலையாக மாறுகிறது. சருகின் பட்சியில், பட்சியின் இதயத்தில், இதயத்தின் இரத்தத்தில், இரத்தத்தின் பாளத்தில் மனிதத் தலைகள் வளருகின்றன. எண்ண இயலாத தலைகள். எறும்பு வெள்ளத் தையும் விஞ்சும் தலைகள். பிண்டமற்ற வெறும் தலைகளின் ஆரவாரம். அந்தத் தலைகளுக்குத் தலைவனாக ஓர் எலும்புக் கூடு சாயலில், ஒவியத்தைப் பிளந்து, அழகின் அழகியாய்த் திகழ்ந்த தங்கநிறத் தனக் கட்டுக்காரியின் எலும்புக்கூடா? எலும்புக்கூடு அவன் முன்னால் நிண வெடில் நாறும் சிரிப்புடன் நிற்கிறது.
a

நீர்வை பொன்னையன்
"குக்.குக்.குறுா.கூஊ." அல்ல, எலும்புக் கூட்டின் ஓங்காரச் சிரிப்பு பயம் குரல்வளையைத் திருகுகிறது.
எலும்புக்கூடு, தசைப்பிடிப்பற்ற வெறும் எலும்புக்கூடு வாயைத் திறக்கின்றது. நாக்குத் துணுக்கையும் காணோம். ஆனால் மனிதமொழி கக்கப்படுகிறது.
“帝?"
"நான் கலைஞன்."
"கலை என்றால்"
"எங்கே கிடைக்கும்!"
"அழகிய நிர்வாண உடலில்,"
"அதனால்?"
"மனிதருக்கு ஒரு குதுகுதுப்பு ஏற்படுகிறது."
"எல்லா மனிதருக்கும் கிடைக்குமா?"
"பஞ்சைகளுக்கு ஏன் கலை? சுகிக்கப் பிறந்த பணக்காரர்க ளுக்கு."
"மது கொடுக்கும் போதையிலும் பார்க்க, பட்டு மேனி மங்கை யரின் ஸ்பரிசம் கொடுக்கும் சுகத்திலும் பார்க்க?"
"தசை உக்கி உதிரம் வற்ற, வரண்டு எஞ்சும் எலும்புக்கூடா கலை?"
"குக்.குக்.குறுா.கூஊ." இல்லை. எலும்புக்கூட்டின் பேய்ச் சிரிப்பு எல்லாத் தலைகளும் அவனைக் கபஸ்ரீகரம் செய்ய வாயைப் பிளக்கின்றன.
"என்னைப் பார்!"
29

Page 28
மேடும் பள்ளமும்
"எங்களைப் பார்!"
ாழி - ti
"நீ கலைஞன், வானத்திலிருந்து குதித்தவனா? சொல். சொல். எங்களை மனிதாபிமானத்துடன் பார்த்துச் சொல்."
கண்கள் விரிகின்றன. நிமிந்து பார்க்கின்றான். எலும்புக்கூடு எங்கே? அங்கே ஒரு தொழிலாளி தலைகள் எங்கே.?
எல்லாரும் தொழிலாளரும் விவசாயிகளும் - பாடுபட்டு உழைப்பின் உயர்வை நாடி வாழும் வர்க்கம்.
தலைவன் பேசுகிறான்.
. "r uTss?"
"மனிதன். ஆம், மனிதனேதான்!"
"கலை?" "கலை, வாழ்க்கையின் பிரதிபலிப்பு- எதிரொலி!" மனக்குகை நிழலாட்டங்கள் ஒய்கின்றன.
அவன் அறையெல்லாம் தீட்டிவைத்திருந்த நிர்வாண நங்கையர் ஓவியமெல்லாம் அருவருப்பை ஊட்டுகின்றன:
வீதிக்கு வருகிறான்.- மனிதர்கள் நடமாடுகிறார்கள். நித்திய உண்மை கைபிடிக்குள் சிக்கியதான நிறைவு
30

O3FITQI
வானம் நிர்வாணமாக இருந்தது.
வானத்தின் மத்தியில் நின்ற காளைச் சூரியன் தனது தீ நாக்கு களால், உலகத்திலுள்ள சடப்பொருள்கள் எல்லாவற்றையும் எரித்திடத் தகித்துக் கொண்டிருந்தான்.
வானம் பார்த்த பூமி, தனது மலட்டுத் தனத்தை எண்ணிப் பெருமூச்சுவிடும் பெண்ணைப் போல விம்மிக் கக்கிய செம்புழுதி, காற்றுடன் கலந்து புரண்டு ஓடிக்கொண்டிருந்தது.
பரந்த வெளி. அன்பேயில்லாத நெஞ்சிலுள்ள வரட்டுத்தனத்தைப் போல, ஈரப்பசுமை அற்ற நிலம் வெடித்துப் பிளந்து போயிருந்தது, பாழ்வெளியின் ஒரு எல்லைப்புறத்தில் பனங்காடு. பனங்காட்டைத் தாண்டிச் சென்றால்.
கம்பன் புலம்.
கம்பன் புலத்தைத் தெரியுமா உங்களுக்கு?
கம்பன்புலம் பெயரளவில் செழிப்பான ஊராகத் தோன்றலாம். உண்மை அதுவல்ல. கள்ளிகளும், மூளிப் பற்றைகளும், கல்லு முட் க(11ம் நிறைந்த பனங்காடுதான் கம்பன்புலம். அங்கொன்றும் இங் கொன்றுமாக, ஆமை ஒடு கவிழ்த்த மாதிரிச் சிறு சிறு ஒட்டுக்
ᏫᎼtᏄ ᏣᏡᎦ85Ꭷii .
ஒரு வேப்பமரம் ; கம்பன்புலத்து நெஞ்சிலே ஓங்கி வளர்ந்து
31.

Page 29
மேடும் பள்ளமும்
நின்று கொண்டிருக்கின்றது. அதன் இலைகள் கருகிச் சுருண்டு கிடக்கின்றன.
வேப்ப மரத்தின் கீழ் ஐந்தாறு இந்நாட்டு "மன்னர்கள்" பிறந்த மேனியுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
நாலு தடிகளை நட்டு, அதன்மேல் இரண்டு காவோலைகள் போட்டு மூடப்பட்டிருக்கின்றன. அதுதான் அவர்களுடைய கோயில்.
இரண்டொருவர் பழைய தகரங்களைத் தங்கள் கழுத்துகளில் கட்டி மேளம் அடித்துக் கொண்டிருக்கின்றார்கள். தகரம் அகப்படாத சிலர் தங்கள் குண்டிகளையும், தொடைகளையும் மேளமாகப் பாவிக் கின்றார்கள். வாழை மட்டைகளை வாயில் வைத்து நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருக்கின்றார்கள் சிலர். பூசாரிக்குத் தெய்வம் வந்துவிட்டது * துள்ளித் துள்ளிச் சன்னதம் ஆடிக்கொண்டு நிற்கிறான் பூசாரி. அவனுடைய கையிலே ஒரு வாழை மட்டை, அது தான் அவனுடைய
கத்தி!
கழுத்தில் கயிற்றால் கட்டி இழுத்து வரப்படுகிறான் ஒருவன். தவழ்ந்து கொண்டுவரும் அவன்தான் ஆட்டுக்கடா
பூசாரி, ஓங்கிக் கத்தியால் வெட்டுகின்றான்!
என்ன பக்தி
கம்பன் புலத்தில் அண்ணமார் வேள்வி நடந்து ஒரு சில நாட்கள் தான்.
அன்று பெரியவர்கள் வேள்வி; இன்று சிறியவர்கள் வேள்வி
"டே. ஒடியாருங்கோடா ஒடியாருங்கோடா!"
சத்தம் வரும் திக்கைத் திரும்பிப் பார்க்கின்றனர் எல்லோரும்.
"துவங்கிவிட்டதடா, சோறு குடுக்கப் போகினம். ஒடியாருங் கோடா."
32

நீர்வை பொன்னையன்
அவர்களுடைய கண்களிலே ஒளிவீசத் தொடங்கியது. துள்ளிக் குதிக்கிறார்கள், கூக்குரலிடுகிறார்கள், ஒரே ஆனந்தம்! அமர்க்களம் கட்டையனுக்குப் பெரும் ஆனந்தம். அது சிறிது நேரம் தான்! அவனுடைய அடி வயிறு வலிக்கின்றது. கை கால்கள் நடுங்கின, தலை சுற்றுகின்றது.
ஏன்?
ஏனா? அவனுக்குப் பசி
வெறுங்குடல் வலி எடுத்தது. முதல் நாள் மாலை குடித்த கூழ்தான் அசுரப் பசி கட்டையனுடைய குடலைக் குடைந்து கொண்டிருக்கின்றது.
கட்டையனுடைய இடுப்பில் ஒரு பிண்டம்- உயிருள்ள பிண்டம்; அவனுடைய தம்பி முத்தன் ஒரு கையில் பிய்ந்து போன பழைய ஒலைப்பெட்டி
கட்டையனை நீங்கள் அநேகமாகப் பார்த்திருப்பீர்கள். உங்கள் ஞாபகத்திலிருக்கிறதோ என்னவோ எனக்குத் தெரியாது. அப்படியிருக்க அவன் என்ன "குளுக்கோஸ்" குழந்தையாய்ப் பிறந்தவனா?
பெயர் கட்டையன் என்றாலும் அவன் நெட்டையன். அவனுடைய பெற்றோர்கள் பெயரைப் பொருத்தமாக வைக்க மறந்து விட்டார்கள் போலும்!
நீண்டு சூம்பின கால்கள், சுரைக்காய் போன்ற முட்டி வயிறு. ஒடுங்கி, மிதந்த கோறை நெஞ்சு, முள் முருக்கம் பூக்காடு போன்ற, பரட்டைச் செம்பட்டைத் தலைமயிர். பிறந்த மேனியை மறைக்க, அரையில் ஒரு அழுக்குப் பிடித்த கச்சை,
அவன் உயிருடன் உலாவுகின்றான் என்பதை எடுத்துக் காட்டுவது, அவனுடைய ஒளி வீசும் பெரிய கண்கள்தான்!
கட்டையனுடைய வயிற்றில் தீராப்பசி எந்த நேரமும் அவன் வாய் சப்புக்கட்டிக் கொண்டேயிருக்கும்.
33

Page 30
மேடும் பள்ளமும்
கட்டையனுக்கு எட்டு வயதிருக்கும். அவனுடைய இடுப்பில் எந்த நேரம் பார்த்தாலும், அந்த உயிர்ப்பிண்டம்; அவனுடைய இரண்டு; வயதுத் தம்பி, முத்தன் இருந்து கொண்டேயிருப்பான்.
முத்தன் தோற்றத்தில் அண்ணனை வென்றவன். வால்பேத்தை உடல், எந்த நேரமும் பனங்காய் சூப்பிய மாட்டினுடைய மூஞ்சியைப் போல அழுக்குப் படிந்திருக்கும், முத்தனுடைய முகம். சுருண்டு சிக்குப் பிடித்த பரட்டை மயிர். அவனுடைய மூக்குத் துவாரங்களிலிருந்து கள்ளு வடிவது போல, எந்த நேரமும் சளி வடிந்து கொண்டேயிருக்கும். அதனால், மூக்கிற்கும் உதட்டிற்கும் உள்ள இடைவெளி வெளிறி விட்டது. எப்போ பார்த்தாலும் முத்தனுடைய சுட்டுவிரல் அவனுடைய வாய்க்குள் தானிருக்கும். கடைவாய் வழியே வாய் நீர் வழிந்து கொண்டேயிருக்கும்.
கட்டையனுடைய கூக்குரலைக் கேட்ட மற்றவர்கள் எல்லோரும் தங்கள் விளையாட்டை விட்டு விட்டு, தங்கள் தங்கள் குடிசைகளை நோக்கி ஓடுகின்றார்கள்.
அவர்கள் ஒவ்வொருவருடைய கைகளிலும் ஒலைப் பெட்டிகள் இருக்கின்றன. "மன்னர்" பட்டாளம் காந்திநகரை நோக்கிப் படை எடுக்கின்றது.
காந்திநகர் நீர்வேலிக் கிராமத்தின் தென்மேற்கு எல்லைக் கோட்டில், கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றது. அந்த நகள்தான் நீர்வேலிக் குப் பெருமையைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. அங்குதான் நீர்வேலியின் பெரிய பரம்பரையினர் வாழ்கின்றார்கள்.
கம்பன்புல "மன்னர்"படை காந்திநகள் அருணாசலத்தின் வீட்டை நோக்கிப் பறந்து கொண்டிருக்கின்றது.
அருணாசலத்தின் வீட்டில் பெரிய கொண்டாட்டம். விருந்து
திவசம் அதற்கென விருந்து
ஏழுஎட்டுப் புரோகிதர்கள், அரிசிப் பொட்டளிகளுடன் வெளி யேறிக் கொண்டிருந்தார்கள்.
34

நீர்வை பொன்னையன்
விருந்து தொடங்கிவிட்டது
சாதாரண விருந்தா என்ன?
பத்துப் பன்னிரண்டு மூடை அரிசி வேகும் இடமல்லவா! ஏக தடல்புடல், பெரிய பெரிய மனிதர்கள் வந்திருக்கின்றனர்.
உணவு உண்ணத் தொடங்கி இரண்டு மணித்தியாலங்களாகி விட்டன. பலவகைக் கறிகள், பலகாரங்கள், பழங்கள், பாயசம். இன்னும் எத்தனையோ வகையறாக்கள்.
முன் ஒரு காலத்தில் ரோமாபுரியில் பெரிய பிரபுக்கள் வீட்டில் விருந்து நடக்கும் பொழுது, அவர்களுடைய முற்றத்தில் ஒரு பெரிய பீப்பா வைக்கப்பட்டிருக்குமாம். விருந்துக்கு வந்தவர்கள் வயிறு நிறைய உண்டபின், தங்கள் கைவிரலைத் தொண்டைக்குள் விட்டுத் தாங்கள் உண்ட உணவை வாயால் வாந்தி எடுத்துவிட்டு, திரும்பவும் உண்ணு வார்களாம். அநேக முறை சத்தி எடுத்து விட்டுத் திரும்பத் திரும்ப உண்ணுவார்களாம். அப்படிச் செய்தால் தான் விருந்து கொடுத்தவர் திருப்தியடைவார். அதே போல அருணாசலத்தினுடைய விருந்திற்கு வந்த பெரியவர்களும் பசியில்லாவிட்டாலும் "வேண்டாம் வேண்டாம்" என்று கூறினாலும், "சாப்பிடுங்கள்" என்று வற்புறுத்தப்பட்டார்கள்,
கம்பன்புல மன்னர்கள்?
அவர்கள் அருணாசலத்தின் வீட்டு முற்றத்தில் நிற்கும் மாங் கன்றின் கீழ் இருக்கின்றார்கள். பசி அவர்களுடைய குடல்களை அரித்துக் கொண்டிருக்கின்றது. விருந்து உண்டு கொண்டிருக்கும் பெரிய மனிதர்களைப் பார்த்தபடியே தானிருக்கின்றார்கள். அவர்களுடைய வாயில் சலம் ஊற்றெடுத்து ஓடுகிறது. அவர்களுடைய கண்கள் விருந்தை உண்ணுகின்றன.
விருந்து நடந்து கொண்டுதானிருக்கின்றது!
அவர்களும் பார்த்துக் கொண்டுதானிருக்கின்றனர்!
"சின்னான், ஏன் இஞ்சை கணக்கக் கமக்காரர்கள் வருகினம்?"
35

Page 31
மேடும் பள்ளமும்
கந்தன் கேட்டான்.
"அது. இண்டைக்கு. துவசம்."
"என்னத்துக்கு?"
வேலன் கேட்டான்
"ஐய. இவருக்குத் தெரியேல்லை! அது கமக்காரன்ரை. இல்லை, சின்னக்கமக்காரன் செத்ததுக்கு."
"ஆர் மாணிக்க வாசகக் கமக்காரனோ?"
"ஒமடா, ஓ."
"ஏன் செத்தார்?"
ஆவலுடன் கேட்டான் கட்டையன் “அது. வந்து. மருந்து குடிச்சுச் செத்தார்."
"66?"
"கலியாணம் செய்யவிடேல்லை எண்டு."
மாணிக்கவாசகள் அருணாசலத்தின் ஒரே ஒரு பிள்ளை. படித்துப் பட்டம் பெற்று உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்தார் கொழும்பில், வாலிபன், பிரமச்சாரி. கொழும்பு வாழ்க்கை, காதல்.
காதல் போட்டியில் தோல்வி அடைந்தார் மாணிக்க வாசகள், பொலிடோஸ் - புகையிலைக் கிருமி நாசினி, அவருக்குத் தஞ்சம் கொடுத்தது.
இந்த விவகாரம் கம்பன்புலத்து ஒரு சில சிறுவர்களுக்கு அரை குறையாகத் தெரியத்தான் செய்தது.
கட்டையனுக்கு இது புரியாப் புதிர்
"எங்களுடைய வீட்டிலும் இப்படித் திவசம் வந்தால்..? சோறு, கறியள், பலகாரங்கள். நான் வயிறு நிறையச் சோறு சாப்பிடலாம் .
36

பொன்னையன்
கந்தன், சின்னான், வேலன், பெரியவர்கள் எல்லாரும் வந்து. என்று எண்ணுகிறான் கட்டையன்."
விருந்து நடந்து கொண்டேயிருக்கின்றது. கம்பன்புலத்தார் அதைப் பார்த்துக் கொண்டுதாணிருக்கின்றார்கள். "எங்கடை வீட்டிலே ஏன் துவசம் வரேல்லை?” கட்டையன் ஏக்கத்துடன் கேட்டான்.
"உங்கடை வீட்டிலை ஒருத்தரும் சாகேல்லையே" வளர்ந்த ஒருவன் கூறினான்.
"எங்கடை வீட்டை செத்தால் துவசம் வரும். சோறு தின்ன லாம். எப்பிடிச் சாகிறது?. மருந்து குடிச்சு"
கட்டையனுடைய மூளை முருத்துக்களில் ஏதோ ஊர்ந்து செல்வது போல. தலையைச் சொறிந்து கொண்டே அவன் எதையோ எண்ணுகிறான்.
"ஒரு நீளமான புட்டி, சிவப்புநிறப் படம். ஒரு மண்டை ஓடு, இரண்டு எலும்புத் துண்டுகள்." கட்டையன் மனக்கண்முன் தோன்றி மறைகின்றது."
கட்டையனுடைய கண்கள் பிரகாசிக்கின்றன. முகம் மலர்கின்றது.
"டேய் வரிசையாய் இருங்கோ."
அருணாசலம் அதட்டுகிறார்.
"கமக்காரன் எனக்கு. எனக்கு."
"டேய் நான் தாண்டா முந்தி வந்தது."
"இல்லையடா நான்."
"சனியன், மூதேசி, தூ!" சின்னான் வேலனுக்குத் துப்புகிறான்.
வேலன் சின்னானுடைய தலைமயிரைப் பிடித்து இழுத்து.
37

Page 32
மேடும் பள்ளமும்
"டே டேய் சனியன்களே சத்தம் போடாமை இருங்கோடா." கூறிக்கொண்டே கையிலிருந்த கம்பைச் சுழற்றுகின்றார் அருணா சலம்.
"கமக்காறன், எனக்கு, நான்தான் முந்தி வந்தது." கட்டையன் அசைவற்று நிற்கின்றான். அவனுடைய கண்கள் சோற்றைப் பார்த்தபடியே இருக்கின்றன.
"டேய் கீழ்சாதி நாய்களே! சத்தம் போடாமல் இருங்கோடா." என்று கூறிக்கொண்டே கையிலிருந்த கம்பால் இரண்டொருவருக்குத் தட்டுகின்றார் அருணாசலம்.
ஒவ்வொருவருடைய ஓலைப் பெட்டியிலும் கருகல் சோறும், பலாக்காய், வாழைக்காய்க் கறிகளும் விழுகின்றன.
, பலாக்காய், வாழைக்காய் கறி - "வெளிக்கறி"-"மன்னர்"படைக்குக் கொடுக்கும் கறி.
கட்டையனுடைய கண்கள் சோற்றைப் பார்த்தபடியே இருக்கி ன்றன. அவன் உள்ளம் எதையோ தேடி எங்கோ சென்றுகொண்டி ருக்கின்றது.
அவர்கள் சோற்றை அள்ளி அள்ளி வாயில் போடுகின்றார்கள். எல்லோருடைய முகங்களும் மலர்ந்திருக்கின்றன. ஒரே ஆர வாரம்.
முத்தன் கட்டையனுடைய ஆசைத் தம்பி. என்ன கிடைத்தாலும் அவனுக்குக் கொடுக்காமல் சாப்பிடமாட்டான். முத்தனை அழவிடாமல் பார்த்துக் கொள்வது, நித்திரை செய்யப்பண்ணுவது, தான் செல்லும் இடமெல்லாம் முத்தனை இடுப்பில் கொண்டு செல்வது, முத்தனை அன்பாகக் கொஞ்சுவது, அவனுடன் விளையாடுவது-முத்தனைப் பிரிந்து கட்டையன் ஒரு போதுமிருக்கமாட்டான்.
கம்பன்புல "மன்னர்"களுடைய வயிறுகள் நிரவிக்கொண்டி ருக்கின்றன.
38

நீர்வை பொன்னையன்
பொழுது கருகிக்கொண்டிருந்தது.
புத்தாடை உடுத்துப் புதுப்பொலிவுடன் விளங்குகிறாள் பொன்னி.
சின்னான். செல்லன், வேலன், கந்தன் இன்னும் கட்டையனுடைய நண்பார்கள். சிறியவர்கள் பெரியவர்கள் எல்லோரும் கட்டையனுடைய வீட்டிற்கு வந்து விட்டார்கள்.
முத்தன் சிரித்தபடியே அங்குமிங்கும் ஓடி விளையாடுகிறான்.
வீட்டு உயரத்தில் சோற்றுக் குவியல்கள். பலவகைக் கறிகள், பலகாரங்கள்.
"கம" "கம" என்ற மணம் கட்டையனுடைய நாசித் துவாரங்களில் பாய்கின்றது.
அவனுடைய வாய் சப்புக் கொட்டுகின்றது.
புரோகிதர்களும் வந்துவிட்டார்கள், போகின்றார்கள்.
விருந்து ஒரே அமர்க்களம் சோறு.
கட்டையனுடைய உதடுகளில் புன்னகை அரும்புகின்றது. அவனுடைய முதுகிலே ஏதோ கடித்தது, கட்டையன் முனகிய படியே முதுகைச் சொறிகின்றான்.
"சோறு" தன் உணர்வின்றி அவனுடைய உதடுகள் அசைகின்றன. எங்கேயோ கூலிப் பிழைப்பிற்குச் சென்ற பொன்னி வீட்டிற்கு வர இருட்டி விடுகின்றது. அவள் அவசர அவசரமாகத் தினைச்சாமிக் கஞ்சியை சமைத்துக் கொண்டிருக்கின்றாள்.
"குபுக் குபுக்" என்று கஞ்சி கொதித்துக் கொண்டிருக்கின்றது. அதிலிருந்து எழுந்த வாசனை கட்டையனுடைய நாசித் துவாரங் களில் ஏறி.
அவனுடைய வயிற்றிலே பசி- அசுரப்பசி நாவில் ஜலம் ஊறுகின்றது. வாய்சப்புக் கொட்டுகிறது.
39

Page 33
மேடும் பள்ளமும்
முத்தனை இறுக அணைத்தபடியே சுருண்டு கிடக்கிறான் 566). UGOT.
"ராசா கட்டையா . கட்டையா. என்ரை ராசா. பொன்னி எழும்புகின்றான். கட்டையன் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கின்றான். "கட்டையா, எழும்பு. இந்தக் கஞ்சியைக் குடி" அவன் அசையவில்லை.
அவனைத் தூக்கி நிறுத்தினாள். திரும்பவும் அவன் படுத்தான்.
"டே, சனியன், மூதேசி. பகல்லை துள்ளித்திரிந்து போட்டு இப்ப."
"UGITTit
h
கட்டையனுடைய முதுகிலே ஒன்று விட்டாள்.
அவன் துடிதுடித்துக்கொண்டு எழுந்து திகைத்தபடியே நிற்கி ன்றான்.
அவள் அவனிடம் கஞ்சிக் கோப்பையைக் கொடுக்கின்றாள்.
முத்தன்?
அவன் தூங்கிக் கொண்டுதானிருக்கின்றான்.
பொன்னியினுடைய தாய்மைக் கலசங்கள் கனத்து, வலித்து, சுரந்து இளவேதனையைக் கொடுக்கின்றன. அவளுடைய உடலிலே ஒருவித உணர்ச்சி பாயத் தொடங்கியது.
முத்தனைத் தூக்கி அணைத்தாள்.
தனது மார்பகச் சேலையை அவிழ்க்கின்றாள். அது நனைந்தி ருந்தது.
"என் கண்ணே முத்து. ராசா முத்து."
முத்தன் கண் திறக்கவேயில்லை.
40

நீர்வை பொன்னையன்
அவளுடைய ஸ்தனங்களிலிருந்து வெண்முத்துப் போன்ற பால் சுரந்து, கசிந்தது.
பொன்னி தனது செல்வத்தைத் தூக்கி நிறுத்தினாள். முத்தன், வாடி வதங்கிச் சோர்ந்து போன பயிற்றங்காய் போலத் துவண்டு கொழுந்து மடிந்து.
"முத்தா என்ரை ராசா முத்தார்." முத்தனுடைய வாயிலிருந்து குடலைப் பிடுங்கும் நெடில்! குப்பி விளக்கை எடுத்து முத்தனுடைய முகத்திற்கு எதிராகப் பிடித்தாள்.
− முத்தனுடைய முகம் காய்ந்து, நீலப்பசை ஏறி, மரத்துப் போய்க்
கிடந்தது
கடைவாயிலிருந்து வெள்நுரை கக்கி, கைகால்கள் விறைத்து, வாய்திறந்து, கண்கள் பிதுங்கி.
முத்தனுடைய பிதுங்கிய கண்கள் அசையவேயில்லை!
"ஐயோ!. என்ரை ராசாவே..!"
நிர்வாண வானம். பூமி சடப்பொருட்கள் எல்லாவற்றையுமே இருள் விழுங்கிக் கொண்டிருந்தது.
இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு பாய்ந்து சென்றது பொன்னியின் ஒலக்குரல்
கட்டையன்!
சோறு?
41

Page 34
பனஞ்சோலை
வெள்ளி நிலவு காய்ந்துகொண்டிருந்தது. இளந் தென்றற் காற்றிலே பனஞ்சோலையின் முனகல், நிலவிலே மூழ்கி எழுந்த ஒலைத் தளிர்கள் வெள்ளித் தகடுகள் போலப் பளபளக்கின்றன.
முற்றத்தில் நின்ற பலாக்கன்றின் கீழ் திலகா என்னதான் அப்படிச் சிந்தித்துக்கொண்டிருந்தாளோ?
நாளை மாலை அவள் பயணம் செல்லப்போகின்றாள். கண்ணுக் கெட்டாத தூரம், ஆழ்கடலையும் கடந்து, ஆயிரம் மைல்களுக்கப் பாலுள்ள ஒரு புதிய ஊருக்குப் புதுவாழ்வு வாழப் போகின்றோம் என்ற உற்சாகமா?
பிறந்த மண்ணை விட்டுத் தாய் தந்தையர் உற்றார் உறவினர் எல்லோரையும் விட்டுப் பிரிந்து செல்லப்போகின்றோம் என்ற வேத 6060Tusi P
பனஞ்சோலையிலிருந்த சில காகங்கள் கரைந்து கொண்டு எழுந்து பறந்தன.
தலை நிமிர்ந்து பார்த்தாள் திலகா. குளுமையாக குமரிப்பருவத்தின் வனப்புடன் கம்பீரமாக நிற்கின்றது பனஞ்சோலை.
அதன் மத்தியில் ஒரு பனைமரம் வளர்ந்து உயர்ந்து தனது ஒலைகளை நாலாபக்கங்களிலும் வீசி, ஆகாயத்தைத் துளாவிப் பிடிப்பதுபோலிருந்தது. அதன் அடியில் உருவமும் உருவமுமற்ற நிலை
42

நீர்வை பொன்னையன்
யில் ஒரு நிழலாட்டம் சலனமிட்டுக் கொள்ள திலகாவின் உள்ளமும் உடலும் நடுங்கியது ஏனோ?
உற்று நோக்கினாள். தனது இரு கைகளையும் அகல விரித்து, அவளை ஆரத்தழுவி அணைப்பதற்குத் தயாராக நின்றது அந்த உருவம். உருவத்தின் இமைகள் படபடத்துத் துடித்துக்கொண்டிருந்தன. உதட்டில் அரும்பிக் கொண்டிருக்கும் மோகனப் புன்னகை. அது யாருடைய உருவம்?
இது என்ன பிரமையா? கண்களைக் கசக்கிவிட்டுத் திரும்பவும் பார்த்தாள்.
உயர்ந்து வளர்ந்த பனைமரம் இருந்த இடத்தில்-விந்தையிலும் விந்தை மொட்டைப் பனை - ஒலைகள் அற்று, பட்டுப்போன மூளிப் பனை உருவம்?.
இன்னும் ஒரு முறை, ஒரே ஒரு முறை அந்த உருவத்தைப் பார்த்துவிட்டால்.
திலகாவினுடைய உள்ளத்திலே ஆவல்.
"ஐயோ! வேண்டாம், வேண்டவே வேண்டாம். நான் அந்த உருவத்தைப் பார்க்க கூடாது. நான் அருகதையற்றவள். அந்த நிழல் என்மேல் பட்டுவிட்டாலும் நான் கருகி, எரிந்து, சாம்பலாகிவிடுவேன். பகவானுடைய பரிசுத்தமான கோவில் பனஞ்சோலை. இனிமேல் நான் அதற்குள். எனது அடிகூடப் படக்கூடாது."
மண் விளையாடத்தொடங்கிய நாள் தொட்டு இதே பனஞ்சோலை யில், சின்னச் சின்ன வீடுகட்டி விளையாடியவள் திலகா. அவள் மட்டுமல்ல அவளைப் போல எத்தனையோ குழந்தைகள். திலகா பருவப்பெண்ணாகி. தனது வாழ்க்கைத்துணைவனைக் கைப்பிடிக்கு மட்டும், பனஞ்சோலையும் அவளும் ஒன்று. இப்போ, பனஞ்சோலை யைப் பார்த்ததும் அவளுடைய உள்ளமும் உடலும் ஏனோ நடுங்குகி dip60T?
பனஞ்சோலைக்குள்தான் அவளுடைய காதலும் அரும்பியது.
43

Page 35
மேடும் பள்ளமும்
காதலா?
சரி, காதலென்றுதான் வைத்துக்கொள்வோமே!
கல்யாணமா? கல்யாணமும் கட்டிவிட்டாள் திலகா. கணவன் எங்கோ பிறதேசத்தில் உத்தியோகம். கணவனுடன் அவளும் இந்தத் தேசத்தை விட்டே போகப் போகிறாள்.
காதல் - நான்கு வருடத்திற்கு முன், அவன் மேற்படிப்பிற்காகப் பயணம் செல்வதற்கு முந்திய நாள் இரவு இதே பனஞ்சோலையில் அவனுடைய மடிமீது அவள் முகத்தைப் புதைத்து அழுது கொண்டிருக்கிறாள்.
'திலகா கலங்காதே. நான்கே நான்கு வருடங்கள். எனது படிப்பு முடிந்ததும் உன்னைத் தேடி ஓடிவந்து விடுவேன். அழாதே, சீ! வெட்கம்; குழந்தைமாதிரி" என்று அவளுடைய கண்ணிரைத் துடை த்தான் அவன்.
"எங்கே, ஒருக்கால் சிரி திலகா" அவளுடைய கன்னத்தைக் கிள்ளிச் சிரிப்பூட்டினான்.
அவனுடைய அணைப்பிலேயிருந்த மென்மை, சொற்களிலே யிருந்த கனிவு அதில் பிறந்த அன்புப் பிரவாகத்திலே மூழ்கி மிதந்தாள். இல்லை அம்சதூளிகா மஞ்சத்தில் புரண்டாள்.
வெள்ளி நிலவின் குளுமை, கண்சிமிட்டும் நட்சத்திரங்களின் ஒளிக்கதிர்கள், வானவில்லின் வர்ணஜாலம், பனித்துளிகள் பட்டுமலர்ந்த றோஜா இதழின் மென்மை, எல்லாம் அவளுடைய காதலிலே குழைந்து அரும்பி இன்பத்தைக் கொடுத்தன.
கடவுள்- கடவுளின் சிருஷ்டியான இந்தப் பிரபஞ்சம், பிரபஞ்சத் திலுள்ள சடப்பொருட்கள், அவற்றின் அசைவுகள் எல்லாம் இன்பமய மாக இருந்தன திலகாவுக்கு, காதல் கீதம் அவளுடைய புலன்களில் ஒலித்துப் புத்துணர்ச்சியைக் கொடுத்துக்கொண்டேயிருந்தது.
நான்கு வருடங்கள் எங்கே?
44

நீர்வை பொன்னையன்
நான்கு நாட்கள். ஆமாம். நான்கு நாட்களுக்கு முன் திலகா செல்லத்துரையைக் கல்யாணம் செய்துகொண்டாள். காதல் கல்யாணம்
நான்கு நாட்கள். அப்பப்பா அவை நான்கு யுகங்கள்! நரகவே தனை
நிலவின் குளுமை, நட்சத்திரங்களின் ஒளி, வானவில்லின் வர்ண ஜாலம், றோஜா இதழ்களின் மென்மை, அம்சதூளிகாப் படுக்கையில் காணும் இதம் எங்கே?
எல்லாமே தீப்பிழம்பு கொடிய அந்தகாரம்! திலகாவின் பெண்மை, அவளுடைய உடலின் ஒயில், உள்ளத்தின் மிருதுத்தன்மை, எல்லாமே இந்த நான்கு நாட்களில், தீப்பிழம்பில் பொசுங்கிக் கருகிக்கொண்டிருக்கின்றனவே.
பனஞ்சோலையை நிமிர்ந்து பார்த்த திலகாவின் கண்கள் வெப்பம் தாங்கமுடியாமல் துடித்தன. உடல் சோர்ந்தது.
தள்ளாடியபடியே படுக்கையில் போய்ச் சாய்ந்தாள்.
கண்ணை மூடினாள்;
"திலகா" அன்புடன் ஒரு குரல் கேட்டது. வானத்தையும் பணி மண்டலத்தையும் தாண்டி எங்கிருந்தோ வருவது போன்ற பிரமை அந்தக் குரல்
"அத்தான்." அவளுடைய உதடுகள் அசைந்தன. மோகனப் புன்னகை தவழும் அந்த முகம் நிலவின் குழுமை, நட்சத்திரங்கள் ஒளி- அந்த முகத்தில் பிரகாசித்துக்கொண்டிருந்தது.
பனஞ்சோலையிலிருந்து காதல் கீதம் பிரவாகமாகப் பாய்ந்தோடிக் கொண்டிருந்தது.
அவளுடைய உடலை அணைப்பது போன்ற உணர்வு, அந்த அணைப்பில் கலந்திருந்த குளுமை, மென்மை இன்பம்!
45

Page 36
மேடும் பள்ளமும்
"அத்தான்." அவளுடைய இருகைகளும் தலையணையை அணைக்கின்றன.
அரும்பும் மல்லிகை மொட்டிலிருந்து எழும் சுகந்தம் அவளு டைய நாசியில் தவழ்கின்றன.
வெள்ளி நிலவை அள்ளிச் சுருட்டி அவளிடம் கொடுக்கின்றான் அவன். குழந்தைபோலத் துவஞகிறாள் அவள்,
"என் ராஜா!" ஆவலுடன் அவனை அணைக்கின்றான் அவள்! இரு இரும்புக்கரங்கள் அவளைக் கெட்டியாகப் பிடிக்க, அவள் திமிற, மேலும் பிடி இறுக.
"ஆ வெப்பம் பொறுக்க முடியவில்லையே திகைப்பு: அக்கினிக் கோளத்திலிருந்து வரும் உஷ்ணம் அவள் மென்மையைப் பொசுக்கு கின்றது.
* "நித்திரை வருகின்றது" என்று முனகிக்கொண்டு மறுபுறம் திரும்பிப்படுத்தாள் திலகா.
உருகிக் கொதித்துக்கொண்டிருக்கும் ஈயத்திற்குள் திலகாவி னுடைய உடல் சுருண்டுகொண்டு கிடந்தது.
காலையில் எழுந்தபொழுது அவளுடைய தலையணை நனைந்தி ருந்தது.
பனஞ்சோலையை நிமிர்ந்து பார்த்தாள். மொட்டைப்பனை. அவளை வெறித்தபடியே பார்த்துக்கொண்டிருந்தது.
அன்று முழுவதும் யந்திரம் போல அசைந்துகொண்டிருந்தாள். அடிக்கடி பனஞ்சோலையையும் பார்த்தாள்.
அடர்ந்து நெருங்கி குளிர்மையான குமரிப்பருவப் பெண்ணின் வனப்புடன் சோலை நிற்கின்றது. அதற்கு மத்தியில் உயர்ந்து வளர்ந்து பட்டுப்போன மொட்டைப் பனை, அதை அண்டினாற்போல ஒரு நிழலாட்டம். அதற்கு மத்தியில் மோகனப் புன்னகை தவழும் அந்த நிலவொளி வீசும் குளிர்மையான முகம்
அவள் உள்ளம் நடுங்கிக்கொண்டிருந்தது. சிவந்து, வீங்கிப் பொருமிக் கலங்கிய கண்களை அடிக்கடி துடைத்துக்கொண்டாள்.
46

நீர்வை பொன்னையன்
உறவினர்கள், அயவலர்கள் எல்லோரும் வந்தார்கள். ஏதோ கேட்டார்கள். போனார்கள். திலகாவும் பதிலுக்கு ஏதேதோ சொன்னான். அவள் கூறிய பதில் அவளுக்கே தெரியாது.
அவளுடைய மனக் கண் முன் அந்த ஒரே ஒரு காட்சி பனஞ்சோலை, மொட்டைப் பனை, அந்த ஒளிவீசும் முகம்!
பயணம் சொல்வதற்கு, மோட்டாரில் ஏறித் தன் கணவன் செல்லத்துரைக்குப் பக்கத்தில் அமர்ந்தாள் திலகா.
f
"நான் போய்வருகிறேன். தழதழத்த குரலுடன் எல்லோருக்கும் கூறினாள். இறுதியாக, ஒரே ஒருமுறை அந்தப் பனஞ்சோலையைப் பார்ப்ப தற்குத் திரும்பினாள். அவளுடைய பார்வையைக் கண்ணிர் மறைத்தது. கண்ணைத் துடைத்து விட்டு ஒரே ஒரு முறை. இறுதியாக அந்தப் பனஞ்சோலையைப் பார்க்கிறாள். அங்கே. உயர்ந்த மொட்டைப்ப னையினடியில் தோன்றும் நிழலாட்டம். நிழலாட்டத்திற்கு மத்தியில் தோன்றும்; - நான்கு வருடங்களுக்கு முன் பிரிந்த அவளுடைய செல்வராஜனின் முகத்தைக் காண முயன்றாள் திலகா. கண்ணிர் பார்வையை மறைக்கிறதா?
புழுதியைக் கிளப்பிக்கொண்டு மோட்டார் கிளம்பியது. தனது இருகைகளையும் கூப்பி, தலையைக் குனிந்து பனஞ் சோலைக்கும். ராஜனுடைய ஒளிவீசும் முகத்திற்கும் இறுதி வணக்கத் தைச் செலுத்தினாள்.
"செல்வா நான் போகிறேன்." திலகாவினுடைய உதடுகள் அசைந்தன.
"போய் வா!" என்று கூறுவது போலப் பனஞ்சோலை முனகியது.
47

Page 37
தவிப்பு
‘அம்மா'
சவுக்கந் தோப்பிலிருந்து கிளம்பி அழிந்து செல்லும் காற்றின் ஓசையைப்போல, அவளுடைய காதில் வந்து விழுந்தது அந்தக் குரல்.
தாய்மைப் பருவத்திற்காக ஏங்கித் தவித்துக்கொண்டிருக்கும் அவளுடைய உள்ளத்திலே உணர்ச்சியைக் கிளறிவிட்டது குரல்.
"அம்மா!"
அவள் உடலிலுள்ள நரம்புகள், தசைக்கோளம், எலும்புகள் ஆகிய எல்லாம் உருகிப் பாலாகச் சுரந்து முட்டிமோதிப் பெருகுவதான உணர்வு மதர்த்தமார்புக் குவடுகள் தினவெடுத்து வலித்தன. அவளை யும் அறியாமல் அவளுடைய கைககள் மார்பகங்களை அழுத்திப் பிடித்தன.
"அம்மா!"
மதலைக்குரல் எங்கிருந்து வருகின்றதோ?
கண்கள் நாற்புறமும் சுழல்கின்றன.
பிஞ்சுக் கரங்களை நீட்டியபடியே தத்தித் தத்தி வந்து கொண்டி ருக்கின்றது குழந்தை. அதன் உடலிலிருந்து எப்படித்தான் அந்த ஒளிப்பிரவாகம் எழுந்து பாய்கின்றது? அதன் அழகு?
அந்த அழகைக் கண்ட அவள் இதயம் பயத்தால் உறைந்தது.
48

நீர்வை பொன்னையன்
கடைந்தெடுத்த தந்தச் சிலையின் அங்க அமைப்புடன். பால் வடியும் 'வதனம். தாரகைகள் போன்று பிரகாசிக்கும் கண்கள். மனிதச் சிருஷ்டி யின் அழகுத் தத்துவங்கள் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி, அழகின் உருவாய், அதன் இலக்கிய அமைப்பாய், பூரண நிறைவுற்று விளங்கு கின்றது அக்குழந்தை. பவள உதடுகளை விரித்து இரண்டொரு ஒளி வீசும் பற்களைக் காட்டிச் சிரிக்கின்றது. அந்தச் சிரிப்பிலே மனித வாழ்க்கையின் பூரணத்துவ எழில் ஒன்றுபடுகிறது!
ஓடிச் சென்று. வாரி எடுத்து அணைத்து, முத்தமாரி பொழிவதற்கு ஆவலாகத் தனது கைகளை நீட்டிக் கொண்டு ஓடுகின்றாள். ஆனால் அவளுடைய உடல் அசையவில்லை.
"அம்மா!"
அவளுடைய காதோரத்தில் ஒலிக்கின்றது குரல். பிஞ்சுக் கரங்கள் அவளுடைய கழுத்தைச் சுற்றிவளைக்கின்றன.
கோகிலாவின் கன்னங்களிலே ரோஜமலர் உதடுகள் பதிகின்றன. இந்த உலகத்தையே மறந்து, தன்னை மறந்து அந்தச் சுகிர்தத்திலே லயித்திருக்கின்றாள். அண்டசராசங்களின் சலனங்கள் அனைத்தும் அஸ்தமித்து, தன்னைத் தானே அழித்து, தன்னுள் இப்பிரபஞ்சத்தையும் அடக்கி. பரப்பிரமானந்த நிலையிலிருக்கும் கோகிலாவின் கண்களி லிருந்து கண்ணின் வடிகின்றது.
"அம்மா! அம்மா! அம்மா!.
ஏகப்பட்ட மதலைக் குரல்களின் ஒலி.
கோகிலாவின் அறையில் குழந்தைகள் மயம்.
எல்லாக் குழந்தைகளையும் வாரி அணைத்து. தன் உள்ளத்தினுள் அடைத்துவிடவேண்டும் போலிருந்தது அவளுக்கு.
அவளுடைய உரோமக் கால்கள் ஒவ்வொன்றினூடாகவும் ஒவ் வொரு குழந்தையின் உணர்ச்சியும் பாய்ந்து இதயத்தில் நிரம்பி வழிந்து
கொண்டிருக்கின்றது. இதைத் தாங்கமுடியாமல், மூச்சுத் திணறி, இறந்து விடும் நிலையில் இருந்தாள் அவள்
49

Page 38
மேடும் பள்ளமும் ட
"அம்மா!"
ff r என் ராஜா?
"அம்மா!"
"கண்ணா. செல்வா."
"9ļbLDT
"உங்களுக்கு என்ன வேண்டும்? என் செல்வங்களே சொல்லுங் கள்! இதோ! பால் குடம் குடமாக இருக்கின்றது. மலைக்குவியலாகப் பலவகைப் பழங்கள், ரசமான பட்சணங்கள். நீங்கள் அணிவதற்குப் பட்டாடைகள், விளையாடுவதற்கு மோட்டார். விமானம் போன்ற பல வகைப் பொம்மைகள், வேண்டுமென்றால் சந்திரனையும், வானத்துத் தாரகைகளையும் உங்களுக்கு விளையாடப் பிடித்துத் தருகின்றேன். நீங்கள் உறங்குவதற்குப் பஞ்சணை மெத்தை. வேறு என்ன வேண்டும். உங்களுக்கு?"
"ஆண்டவா இப்பொழுதுதான் என்குரல் உன் காதுகளுக்கு எட்டியதா ஒரு குழந்தை வேண்டும் என்று எத்தனை கோயில்களைத் தரிசித்தேன்? எவ்வளவு தானங்கள் செய்தேன்? எத்தனை நாட்கள் விரதமிருந்து உன்னை வேண்டினேன்?"
எனக்குக் குழந்தையே பிறக்காதென்று எத்தனை பேர் கூறினார் கள். குழந்தையில்லையென்று எத்தனை பேர் என் இதயத்தில் சவுக்கால் அடித்தார்கள் ஒரு குழந்தைக்காக எவ்வளவு அலைந்தேன். ஏங்கினேன், தவித்தேன், இப்போ ஒன்றல்ல, எண்ணிலடங்காக் குழந்தைகள். இனி மேல் எனக்கு ஒன்றுமே வேண்டாம்.
இந்தச் செல்வங்களின் அணைப்பிலே இருக்கும் இந்த வேளை யில், என் உயிர் உடலை விட்டுப் பிரிந்து போனாலும் எனக்குப் பூரண திருப்தி. இந்தக் கணப்பொழுதே நான் இறந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!"
ஜன்னல் திரையைக் கிழித்துக்கொண்டு பாய்ந்து வந்த ஒளிக் கதிர்கள் கோகிலாவின் கண்களைக் கூசவைக்கின்றன. ஒளிப்
50

நீர்வை பொன்னையன்
பிரவாகத்தின் மத்தியில், கையில் கூரிய வேலாயுதம் பளிச்சிட ஆடும் மயிலில் பாலமுருகன்.
அவளையும் அறியாமல் அவள் கைகள் குவிகின்றன. ஒரே ஒளிப்பிரவாகம். இல்லை; தீ ஜூவாலை . தீயின் கொடிய நாக்குகள் அவளை நெருங்குகின்றன. குழந்தைகள்? பாலமுருகன்?
"முருகா!"
தீ ஜூவாலைக்குள் கோகிலா! "முருகா! ஐயோ! ஆண்டவா!"
குளுமையான அருவியில் புரள்வது போல, கோகிலாவின் உடலில் இதம் அருவியின் சிற்றலைகள் அவளுடைய அங்கங்களிலே மோதி இன்பத்தைக் கொடுக்கின்றன.
வேய்ங்குழலின் கானம் அலை அலையாகப் பாயும் இன்பம்.
விந்து படர்ந்த குளுமையான ஆலமரம். அடிவானத்தை நோக்கிச் சரிந்து வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு கிளையில் கால்மேல் கால்போட்டுக்கொண்டு செவ்வுதடுகளில் வேய்ங்குழலைப் பதித்து மோகன கானத்தை எழுப்பிக் கொண்டிருக்கிறான் கண்ணன்.
கோகிலாவின் உடலும் உள்ளமும் அப்பிரபஞ்ச கானத்திலே கரைந்து மிதந்துகொண்டிருக்கின்றன.
"அம்மா!"
கண்ணன்?
பிரபஞ்ச கானம்? ஒரே இருள் மயம்
"கண்ணா"
R1

Page 39
மேடும் பள்ளமும்
கோகிலா அலறினாள்.
ஜனன சூனியம்
"ஆண்டவா என் செல்வங்கள் எங்கே? என்னை ஏன் இப்படிக் கொல்கின்றாய்?"
மயான அமைதி,
கோகிலாவின் கைகளுக்கிடையில் ஏதோ ஊர்வது போன்ற உணர்ச்சி. உற்று நோக்கினாள்.
உடல் சூம்பி எலும்புக் கோர்வைகள் மிதந்து, கண்கள் குழி விழுந்த ஒரு குழுந்தை. அது மூச்சுவிடும்போது, விலா எலும்புகள் மேலும் கீழும் அசைந்து கொண்டிருக்கின்றன. நெஞ்சுக் குழியில் உயிர் துடித்துக்கொண்டிருக்கின்றது. அதன் பிஞ்சுக் கரங்கள் அவளுடைய மார்பகத்தைப் பிராண்டிப் பிடித்துத் தனது உலர்ந்த உதடுகளில் வைத்து அழுத்துகின்றது.
Lutóio?
சிறிது நேரத்தில் அந்தக் குழிவிழுந்த கண்கள் அவளை ஏக்கத்துடன் பார்க்கின்றன.
கோகிலாவின் அடிவயிற்றில் தீ!
குழந்தையின் குழிவிழுந்த கண்களின் ஓரத்தில் நீர்த்துளி.
தனது மார்பகத்தைக் கீறி, இரத்தத்தையாவது குழந்தைக்கு ஊட்டவேண்டும் போலிருக்கின்றது கோகிலாவிற்கு,
குழந்தையின் கண்கள் மண்டைக்குள் சொருகுகின்றன.
தலை சரிந்தது! w
"ஐயோ! கடவுளே, உனக்கு இதயமில்லையா?"
வெறி பிடித்தவள் போல ஓடினாள் கோகிலா. அவள் கைப்பிடிக்குள்ளிருந்த குழந்தை?
52

நீர்வை பொன்னையன் "அம்மா!"
விஸ்வாமித்திர மெளனத்தைப் பிளந்துகொண்டு மதலைக் குரல்.
கோகிலாவின் எதிரே. எழில் நிறைந்த குழந்தை. அதன் கடை வாயிலிருந்து பால் வழிந்து கொண்டிருக்கின்றது.
அதை வாரி அணைக்கத் தாவினாள்.
தனது கைகளைக் காற்றில் வீசிக்கொண்டு குழந்தை ஒடுகின்றது.
"ராஜா"
"அம்மா!"
ஒடுகின்றாள் கோகிலா.
குழந்தை ஒடுகின்றது. அவளும் ஓடுகின்றாள்.
காற்றைப் பிளந்து கொண்டு, காற்றிலும் வேகமாகப் பாய்ந்து ஓடுகின்றது குழந்தை.
கோகிலா?
பொன்னும் மண்ணும் வேண்டாம், ஐசுவரியம் எதுவும் வேண் டாம் உற்றார் உறவினர் வேண்டாம் கைப்பிடித்த கணவனும் வேண்டாம், இந்த உலகமே வேண்டாம் என்ற ரீதியில் எல்லாவற்றையும் வெறுத்துத் துறந்து, தனக்கு ஒரு குழந்தை தான் வேண்டும் என்ற உத்வேகத்தில்
அதைப் பிடிக்க ஓடுகின்றாள்.
காடுகள், மலைகள், ஆறுகள், சமுத்திரங்கள். பாலைவனங்கள். ஏன் இந்தப் பிரபஞ்சத்தையும் தாண்டிக் குழந்தைக்குப் பின்னால் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறாள் கோகிலா.
மனித வர்க்கமேயற்ற, மண் வாசனையே இல்லாத ஒரு புதிய லகத்திலே குழந்தையும் கோகிலாவும் ஒடிக்கொண்டேயிருக்கின்றார்
★
53.

Page 40
வானவில்
இருளும் ஒளியும் சங்கமிக்கின்றன. இரவா? பகலா? அல்லது இரண்டும் கலந்த ஒன்றா?
கம்பீரமான கோபுரங்களாக கிளைத்துச் சடைத்து வளர்ந்தோங்கி நிற்கின்றன பசுமை நிறைந்த மரங்கள்.
கூட்டைவிட்டுப் பிரிந்து செல்லும் ஆத்மாவைப்போல, மரங்க ளுள் மரமாயிருந்த பட்சியொன்று எங்கோ பறந்து செல்கின்றது.
கன்னியின் நெற்றியிலேயுள்ள கூந்தற்சுருளைக்கூட அசைக்கக் கூடிய காற்றோட்டமில்லை. ஆனால்.?
அடிமரமற்ற மாங்கொப்பு ஒன்று எப்படித்தான் குலுங்கி ஆவேச Lists கின்றகோ?
ஆடுகின்றதே
கண்எதிரே. கருந்திரை விரிப்பு மெள்ள மெள்ளப் படர்ந்து சூனியமயமாக்குகின்றது. இருளின் போர்வைக்குள் பதுங்கி மயான அமைதிக்குள் அமுங்கித் தவிக்கும் உலகம்.
இருள் திரையைப் பிளந்து கொண்டு விரியும் ஒளிக்கற்றைகள் எங்கிருந்துதான் வருகின்றனவோ?
ஒளிக்கற்றைகளுக்கு மத்தியில் ஒரு பெண் யார் அவள்?
எங்கோ பார்த்தமாதிரி.இல்லை. இல்லை! ஒவ்வொருநாளும் பார்த்து, சிரித்துப் பேசிப் பழக்கப்பட்ட முகம்.
54

- - - Lநீர்வை பொன்னையன் கோகிலாவோ
சே! அவள் இவ்வளவு அழகியல்லவே.
மாந்தளிர் மேனியிலே தவளும் வெண்துகில், அதனுடன் போட்டி யிடும் சுருண்ட கருங்கூந்தல். கூந்தலில் கட்டப்பட்ட சிகப்பு 'றிபண்"- எல்லாமே அவளுடைய எழிலுக்கு எழிலைக் கொடுத்தன.
அவள் சிரித்தாள் வானத்துத் தாரகைகள் உதிர்ந்து சிதறின.
மெல்லெனச் சென்று அவளுடைய இடையைப் பற்றினேன். அவள் வள்ளிக்கொடியாகத் துவண்டாள். குவித்து துடிக்கும் அவளு டைய பவள அதரங்களில் என் அதரங்களைப் பதிக்கக் குனிந்தேன்.
சூனியம்
அவள் எங்கே
சுற்றுமுற்றும் பார்த்தேன்.
என் எதிரே ஒரு உயர்ந்த பிரமாண்டமான கட்டிடம். கல்லூரிக் கட்டிடமா அல்லது அவளுடைய வீடா? ஒன்றுமே புரியவில்லை.
அதோ. எங்கிருந்தோ ஒரு நீண்ட பெருமூச்சுக் கேட்கிறதே. அது இவளுடைய இதயத்திலிருந்து கிளம்பியதோ?
சுவரோரமாக இரு இமைகள் படபடத்தன. இரு கண்கள் பிரகாசிக்கின்றன. அவைகளின் ஓரத்தில் நீர்த்துளிகள்.
அவள் கண்கள் கலங்கியிருக்கின்றன!
@J6টা?
அருகில் சென்று அவளை அணைத்தேன். அவள் மெளனமாக இருந்தாள்.
அவளை அழைப்பதற்கு அவளுடைய பெயர்?
சரி நீ - நான் பாஷையில் பேசுவோம்.
55

Page 41
மேடும் பள்ளமும்
"நீ ஏன் அழுகிறாய்?"
விஸ்வாமித்திர மெளனம். அவளுடைய மெளனம் என் இதயத் தைப் பிளந்தது.
"அன்பே, ஏன் நீ அழுகின்றாய்?"
"உங்களை இனி எப்போ காண்பேன்? சத்தம் வெளிவந்தது. அவளுடைய உதடுகள் அசையவில்லை.
ஏன்? - நீ யார் - நான் யார்? எனக்கும் உனக்கும் என்ன உறவு?"
"என்ன. நான் வேறு நீங்கள் வேறா?"
எனக்கு ஒன்றும் புரியவில்லை.
"நீ யார் என்பதை முதலில் சொல்லேன்."
"நான் உங்கள் இதயத்தில் இருப்பவள்."
"இல்லை; ஒருபோதுமில்லை. நீ வேறு. நான் வேறு. என்
இதயத்தில் இருப்பவள் என் கோகிலா ஒருத்தியே. அவளுக்குத்தான் நான் சொந்தம். அவளுக்கு நான்; எனக்கு அவள் - நாம் ஒன்று"
அவள் தாரகை முறுவலை உதிர்த்தபடியே. "நான் வேறு. அவள் வேறா? நான்தான் உங்கள் கோகிலா?"
"என்ன என் கோகிலாவா நீ? உனக்கு இந்த அழகு.?"
அவள் என்னை ஒருமாதிரிப் பார்த்துச் சிரித்தாள். அவள் தோற்றமே மாறியது. அந்தப் பார்வையும் சிரிப்பும் ஒரே ஒரு கணப் பொழுதுதான். என் இதயத்தைக் கவர்ந்த அந்த நிலையில்தான் ஒரு நாள் - ஒரே ஒரு கணப்பொழுது என் கோகிலாவுமிருந்தாள்.
அன்று
நான் ஏதோ அவசரமாக எழுதிக்கொண்டிருந்தேன். கெக்கலிச் சிரிப்புடன் கோகிலா என் அறைக்குள் நுழைந்தாள்.
56

நீர்வை பொன்னையன்
இனி எழுதிமுடித்தாற் போலத்தான் - என்று எண்ணினேன். காரணம்? ஆற்றின் சலசலப்பைப் போல இடைவிடாமல் பேசிக் கொண்டேயிருப்பாள் கோகிலா. குறும்புத்தனம் நிறைந்த குழந்தைப் பிள்ளைப்பேச்சு. அவளுடன் எனக்கு யுக யுகாந்திரமாய்ப் பேசிக் கொண்டிருக்க வேண்டும் போலிருக்கும். அவளுடைய கல்லூரித் தோழி கள் ராணி, சரோ போன்றவர்களுக்கும் தனக்குமிடையிலுள்ள நட்பைப் பற்றியும், தங்கள் குறும்புச் செயல்களையும் ஒழிக்காமல் மறைக்காமல் சொல்லுவாள். நான் அவளை இடையிடையே கிண்டல் பண்ணிக் கோப மூட்டி அந்த நேரத்திலிருக்கும் அவளுடைய முகத்தோற்றத்தையும். அதிலுள்ள அழகையும் ரசிப்பேன்.
சிறிது நேரம் நான் ஒன்றும் பேசாமல் எழுதிக் கொண்டிருந்தேன். வெடுக்கென என் கையிலுள்ள பேனாவைப் பறித்தாள். அதற்கும் நான் ஒன்றும் சொல்லாமல் ஏதோ சிந்திப்பவன் போல இருந்தேன். திடீரென என் தலையைப் பிடித்து நிறுத்தினாள். அவளுடைய பொய்க் கோபத் தைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன்.
"ஏன் பேசாமலிருக்கிறீர்கள்?"
நான் மெளனியாக இருந்தேன்.
"என்னுடன் கோபமா?"
நான் ஒன்றும் பேசவில்லை.
அவளுடைய முகம் கறுத்தது.
நான் சிரித்தேன். அவனுடைய முகம் மலர்ந்தது.
அவளை மீண்டும் கிண்டல் பண்ண ஆசை எழுந்தது.
"கோகிலா. நாளைக்கு நான் மோட்டார் மோதி இறந்தால் நீங்கள் எல்லோரும் என்ன செய்வீர்கள்?"
அவள் என்னை வெறித்துப் பார்த்தாள். வேதனையும் கோபமும் அவளுடைய முகத்திலே போராடின. கண்கள் குளமாயின.
57

Page 42
மேடும் பள்ளமும்
அந்தத் தோற்றத்தை அதிகநேரம் என்னால் பார்த்துக்கொண் டிருக்க முடியவில்லை.
நான் சிரித்தேன். அவள் வெம்பினாள். வேதனையுடன் அவள் கண்ணிரைத் துடைத்தேன்
"இனிமேல் இப்படிச் சொல்லவில்லையென்று சத்தியம் செய்யு ங்கள்." என்று கெஞ்சினாள்.
"உன்னைக் கிண்டல் பண்ணத்தான் அப்படிச் சொன்னேன்." "இல்லை நீங்கள் சத்தியம் செய்யத்தான் வேண்டும்." வற்புறுத் தினாள், சத்தியம் செய்துகொடுத்த பின்பு தான் அவள் மனம் ஆறிச் சிரித்தாள்.
"போக்கிரிப் பெண்ணின் கோபத்தைப் பார்." கூறிக்கொண்டு அவளுடைய கன்னத்தைப் பிடித்துச் செல்லமாக வருடினேன். அப் பொழுது -என்னை ஒரு மாதிரிப் பார்த்துச் சிரித்தாள். ஒரேஒரு கணப்பொழுதுதான் அந்தப் பார்வையும் - சிரிப்பும். அதற்கு முன்பும், பின்பும் அம்மாதிரிப் பார்வையையும் சிரிப்பையும் நான் பார்த்ததில்லை. அப்பார்வையிலும் சிரிப்பிலும் - இறைவனுடைய சிருஷ்டித் தொழில் - அதன் இரகசியம், பூரணத்துவ எழில். இப்ப பிரபஞ்சத்தின் இயக்கம் எல்லாமே பொதிந்து கிடந்தன. அந்தக் கணப்பொழுதை அதில் நிகழ்ந்த பார்வையையும் சிரிப்பையும் நான் காணத் துடித்தேன் . இன்று கண்டு விட்டேன்.
இன்று அப்பார்வையைப் பார்த்துச் சிரித்தது என் கோகிலாவா? அல்லது கோகிலாவின் நிழலா?
அப்படிப் பார்த்துச் சிரித்தது என் கோகிலாவேதான்!
"அன்பே கோகிலா.
"அத்தான் செல்வா.
இறுக அணைக்கின்றேன். என் கைப்பிடிக்குள் சீலை!
58

நீர்வை பொன்னையன்
அந்தகாரம்
கோகிலா?
'கோகிலா!"
"அத்தான்.
சாந்தா வீட்டு விறாந்தையில் கோகிலா நின்றாள். அருகில் சாந்தா வும் கணவனும். உனக்கும் கோகிலாவிற்கும் என்ன உறவு என்ற கேள்விக்குறி அவர்களுடைய முகத்தில் எழுகின்றது.
அமைதியாகச் சென்று உரிமையுடன் கோகிலாவின் கரத்தைப் பற்றினேன்.
இரு நீர்க் குமிழிகள் உடைந்தன!
சாந்தாவையும் கணவனையும் காணவில்லை.
என் எதிரே மரகதக் காடு. அங்கும் இங்கும் சிறு சிறு குன்றுகள். நீக்கிறோப் பெண்ணின் தனங்களிலிருந்து பால் பீறிட்டுப் பாய்வதைப் போல குன்றுகளிலிருந்து பாய்ந்து ஒடித்துள்ளி விளையாடிவரும் நீர் வீழ்ச்சிகள்- கிளைவிட்டுப் பாயும் சிறு நீர் ஊற்றுகள் நதியை முத்தமிடு கின்றன. சிறு நதி ஆறாகி ஆறு சமுத்திரத்தைக் கட்டித் தழுவிப் புரள்கி ன்றது. O
ஒருபக்கம் மரகதக் காடு, நீர் வீழ்ச்சிகள், ஆறு, மறுபக்கம் சமுத்தி ரம், நடுவே ஒரு பெண். அவள் அருகில் நான். அவளுடைய அமானு ஷய எழில் எனக்குப் பயங்கரத்தைக் கொடுக்கின்றது.
மாந்தளிர் மேனியை மரகதப் பட்டுச் சேலை கட்டித் தழுவிக் கொண்டிருக்கின்றது. சேலையுடன் இணைந்த குருத்துப்பச்சை ஜாக்கட் கூந்தலை இரண்டாகப் பிளந்து பின்னி, வண்ணாத்திப் பூச்சியைப் போல இரு பெரியறிப்பன்களால் கட்டப்பட்டு காற்றில் படபடத்துக்கொண்டி ருக்கின்றன. நீண்ட கூரான மூக்கு, கமலக் கண்கள், கண்களுக்கு மேல் வளைந்த விற் புருவங்கள், பிறை நெற்றியிலே சாந்துப் பொட்டு. பருவத்துடன் போட்டிபோட்டுக்கொண்டு வளர்ந்துவரும் கவர்ச்சி
59

Page 43
மேடும் பள்ளமும்
நிறைந்த அங்கங்கள். கைப்பிடிக்குள் சிக்கத் தவித்துக்கொண்டிருக்கும் மின்னல் கீற்று இடை அவளுடைய குவிந்து வளைந்த செவ்விதழ்கள் மரகதச் சிரிப்பை உதிர்க்கின்றன. வானத்துத் தாரகைகள் உதிர்ந்து தெறிக்கின்றன.
மரகத மோகினியா?
அவளுடைய உடலிலிருந்து தெறிக்கும் ஒளிக்கதிர்கள் காடுகள் மலைகள் ஆறுகள் சமுத்திரம் வானம் எல்லாவற்றையும் மரகத மயமாக்கிப் பூரணத்துவ எழிலைக் கொடுக்கின்றன.
பிரபஞ்சத்தைச் சிருஷ்டித்து, அதிலுள்ள அனந்தகோடி ஜீவராசிக ளையும் படைத்த இறைவனுடைய திருவிளையாடல்கள் அனைத்தை யும் தன் எழிலில் அடக்கி வைத்திருந்தாள் அவள்.
"நீ யார். "பயபக்தியுடன் கேட்டேன்.
"அழகின் பிறப்பிடம்" கோகிலகீதத்தில் கூறினாள்.
"அழகின் பிறப்பிடம் எது?"
"உண்மை"
"உண்மையே தெய்வம். நான் உண்மையைப் போற்றுகின்றேன்; வணங்குகின்றேன்" -لار அவள் கலீரெனச் சிரித்தாள். "ஏன் சிரிக்கின்றாய்?" "நான் தெய்வமுமில்லை. என்னை நீங்கள் வணங்க வேண்டியது மில்லை. நான் ஒரு பெண். மனிதருடன் கூடி வாழத் துடிப்பவள். அவர்க ளுடைய இன்ப துன்பங்களிற் கலந்து வாழ ஆசைப்படுபவள். என்னை நீங்கள் பெண் என்ற முறையில், மனிதாபிமானத்துடன் நோக்கினால் - அதுவே போதும்.
அவளுடைய குரலில் ஒரு மாற்றம் கோகிலாவின் குரல்
போல.
ஆம்; கோகிலாவே தான்!
60

நீர்வை பொன்னையன்
அவளுடைய பெரிய கண்கள் எங்கோ தொலைதூரத்தை நோக்கி நிலை குத்தி நிற்கின்றன. நெற்றியிலுள்ள கூந்தற் சுருள்கள் இளந் தென்றலில் பறந்து கொண்டிருக்கின்றன.
கோகிலாவினுடைய தளிர் மேனியைப் பிடிக்கின்றேன். சீலை போல இருக்கின்றதே!
CSS, flaps?
தூரத்தில் சிரிப்பொலி. கோகிலா குழந்தை போல, அவள் சமுத்திர த்தை நோக்கித் துள்ளிக் குதித்து ஓடுகின்றாள்.
கோகிலா!
அலைகளுக்கு மேல் தாவி விளையாடுகின்றாள்.
ஓங்காரச் சிரிப்பொலி
அலை ஒசையா?-
கோகிலாவின் சிரிப்பொலியா?
மலைபோல பெரிய அலை ஒன்று வருகின்றது.
ஐயோ, கோகிலா!
ஒரே தாவல்!
வான வளையத்தின் மேல்திசைக்கோடியை நோக்கி ஓடுகின்றாள் கோகிலா.
நான் அவள் பின்னால் ஓடிக்கொண்டேயிருக்கின்றேன்.
61

Page 44
சம்பத்து
வானத்தில் கவிந்திருந்த கருமுகில்கள் கிழிந்து, மழை வெய்யில் "சுள்" என்று காய்ந்து கொண்டிருக்கின்றது.
மாடுகளின் காலடிக்குள் கிடந்து மிதிபட்ட மண்ணும் சாணியும்
கலந்த நிலம். அதில் மழை வெள்ளம் நின்று புளித்து மொதித்து ஒருவித மணம் எழுகின்றது.
தனது கைப்பிடிக்குள் சிக்கியிருந்த மண்வெட்டியைத் தலைக்கு மேல் ஓங்கி ஆவேசமாக நிலத்தைப் பாளம் பாளமாகப் பிளந்து கொண்டிருக்கின்றான் அத்தான் கந்தையா.
நிலத்திலிருந்து கிளம்பிய மணம் அவனுடைய நாசித் தூவார ங்கள் வழியே ஏறுகின்றது. பசித் தீ எரிந்துகொண்டிருக்கும் வயிற்றில் குமட்டல், கைகால்களில் வலி, உடலில் சோர்வு,
நெற்றியில் ஒடும் வியர்வையைக் கட்டை விரலால் வழித்து நிலத்தில் சிந்திவிட்டு, வானத்தை அண்ணாந்து பார்க்கின்றான் அவன்.
வானத்தில் வெறுமை -
வாழ்விலும் வெறுமைகண்கள் கரித்தன. நிலத்தை நோக்கினான். கருமையும் செம்மையும் வகையாகச் சேர்ந்து, சுரியும் மணலும்
கலந்த "இருவாட்டி நிலம்" அவனுடைய நிலந்தான் அந்தப் பகுதியில்
62

நீர்வை பொன்னையன் வளமானது. ஒவ்வொரு வருடமும் "சா வெள்ளாண்மையோ!" என்று எல்லோரும் வியக்கும் படி விளைச்சல் கொடுக்கும் பசளை நிலம்.
வளைந்து குனிந்து இரு கைகளாலும் மண்ணை அள்ளிப் பார்க்கின்றான். சூரிய ஒளியில் நீர்த்துளிகள் பளிச்சிட்டுப் பிரகாசிக் கின்றன. மண்ணும் சாணியும் குமைந்து மெதுமெதென்றிருக்கின்றது.
மண்ணைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கு அதைச் சாப்பிட வேண்டும் போலிருந்தது.
"கந்தையா! என்ன மூண்டு வரியமாய்ப்போச்சு, வட்டிக் காசும் தரல்லை. எனக்கும் இடஞ்சலாக் கிடக்கு, கடன் தவணையும் இந்த மாதத்தோடை முடியப் போகுது. கடசி வட்டியாவது தந்தால். உன் னாலை கடனைத் தீர்க்க முடியாதெண்டால்."
கந்தையாவின் மனதைக் குத்துகிறது செல்லையா ஒரு மாதத்துக்கு முன் சொன்ன சொற்கள்.
"ஆடி முடியிறதுக்கிடேலை வட்டியையும் முதலையும் தந்திடு. இல்லாட்டி. கட்டாயம் காணியை வெந்தீசு போடுவன். பிறகு என்னைக் குற்றம் சொல்லாதை."
இந்த வார்த்தைகள் அவனுடைய ஞாபகச் சுவட்டைப் பிளந்து செல்கின்றன.
கண்கள் பனித்தன. ".ம். இந்த ஒரு துவண்டு நிலந்தான் மிஞ்சிக் கிடக்கு. அதுவும் இந்த ஆடியோடை செல்லையாவுக்கு."
உள்ளத்தில் குமுறல். அவனுடைய வயிற்றெரிச்சலைச் சுமந்து கொண்டு அடிவயிற்றி லிருந்து ஒரு பெருமூச்சுக் கிளம்பி வந்து காற்றில் சங்கமித்தது.
மழையின் முகில்களைப் போல் அவனுடைய வெறும் வயிறு முழங்கியது.
63

Page 45
மேடும் பள்ளமும்
உடலில் அசதி,
உள்ளத்தில் நமைச்சல்,
மகன் ஏதாவது சாப்பாடு கொண்டு வருகின்றானோ என்று கிழக்குத் திசையைத் துருவி நோக்குகின்றான்.
அடிவானத்தைத் தழுவிக் கொண்டு பனைமரங்கள் நிரையிட்டு நிற்கின்றன. மனித நடமாட்டமேயில்லை. உலகம் சொப்பனாவஸ்தையில் மூழ்கிக் கிடக்கின்றது.
"என்ன செய்ய. கூப்பன் கடைக்காரனும் கடனுக்கு சாமான் தரமாட்டாண்டிட்டான். அவனுக்குப் போன கிழமைக் காசும் மூண்டரை ரூவா குடுக்கவேணும். முருகரை ஒரு ஐஞ்சு ரூவா கேட்டன். பொடியனி ட்டைக் குடுக்கிற தெண்டு சொன்னார். குடுத்தாரோ என்னவோ. சரி, பொழுதுபடப் போய்ப் பாப்பம்."
வெறுங்குடல் புரட்டி, வலித்து, அவனைச் சுருட்டியது. "ஒரு கிழங்காவது சுட்டுத் தின்னுவம்."
முழுகிவிட்டு வரும் பருவப் பெண்ணின் கூந்தலில் இருந்து நீர் சொட்டுவது போல, தலைகளைத் தொங்கப் போட்டுக் கொண்டு நின்ற மரவள்ளி இலைகளிலிருந்து மழைத்துளிகள் சொட்டிக் கொண்டிரு க்கின்றன.
இரு கால்களையும் அகட்டி விரித்து நிலத்தில் உதை கொடுத்து. குனிந்து, அடிமரத்தில் பிடித்து, மூச்சை அடக்கி இழுக்கின்றான்.
மரவள்ளி அசையவில்லை.
உள்ளத்தில் எரிச்சல்
கால்கள் சேற்றில் புதைந்தன.
நாலா பக்கமும் ஆட்டிவிட்டுத் திரும்பவும் ஒரு மூச்சுப் பிடித் தான்.
64.

நீர்வை பொன்னையன்
மரம் கையுடன் வந்தது. கிழங்கு?
கிழங்கல்ல, குழுவேள். வெறுப்புடன் அந்த மரத்தை வீசினான். அடுத்தமரம்! கிழங்கு சுடுவதற்கு சரியாக முற்றவுமில்லை. நெருப்பு?
அவன் உள்ளம் சுட்டது.
"இனி ஆர் சுட்டுக்கொண்டு நிக்கிறது?" மதத்துச் சடைத்து வளர்ந்த வாழைகளின் கருமை படர்ந்த பச்சி லைகள் அத்துவானப் பெருவெளியை நோக்கிக் குத்திட்டு நிற்கின்றன.
வாழைக்குள் ஒரு மாட்டுத் தொட்டில். இரு கால்களையும் நீட்டி, தொட்டிற் சட்டத்தில் சாய்ந்து கொண்டி ருந்து, பச்சை மரவள்ளிக் கிழங்கை உரித்துச் சப்பத் தொடங்கினான். காய்ந்த தொண்டையை ஈரப்பசுமையாக்கிக் கொண்டு பிஞ்சுக் கிழங்கின் பால் வயிற்றில் இறங்கியது.
"இப்பவே இவ்வளவு தட்டுப்பாடு. இந்தத் துண்டு நிலமும்
போய்விட்டால். என்ரை சீவியம்?. செல்லம்மாவும் பிள்ளையஞம் என்ன செய்வார்கள்?. அன்னத்தின் கலியாணம்?."
அத்தான் கந்தையா அந்தக் கிராமத்தில் சர்வவியாபி. எல்லோரும் அவனை "அத்தான்" என்று தான் அழைப்பார்கள். அவனுடைய மனத்திலே எவ்வளவு சுமையிருந்தாலும். யாராவது "அத்தான்" என்று கூப்பிட்டுவிட்டால் போதும். அவன் சிரித்துக்கொண்டே நாலு கேலிக் கதைகளைச் சொல்லி, மற்றவர்களை மகிழச் செய்து தானும் அதில் ஆனந்தமடைவான்.
காலையில், பனை வடலிகளுக்குப் பின்னால் குந்திவிட்டு வந்து, அரசடியில் கூடும் இளவட்டங்களின் "பாளிமெந்டுக்கு" அத்தான் தான் தலைமை தாங்குவான்.
65

Page 46
மேடும் பள்ளமும்
கல்யாண வீடுகள், சாவீடுகள். கூட்டங்கள். திருவிழாக்கள் எங்கும் அவனுடைய தேவாரங்கள் மடை திறந்தோடும்.
கந்தையாவின் உடல் கட்டுத்தான் எல்லோரையும் கவரும், உளிப் பிடி போன்ற குள்ளமான உயரம். திரண்ட தசைக் கட்டுகள், எந்த நேரமும் தலையில் சால்வையை "முண்டாசுக் கட்டு"க் கட்டியிருப்பான்.
தோட்ட வேலைகளிலும் அவனுடன் ஒருவரும் போட்டி போட (Upto-UsTg5).
தந்தை இறக்கும் பொழுது விட்டுப்போன ஒரு துண்டு நிலம் தான் அவனுடைய சொத்து, அதைக் கொத்திப் பயிரிட்டு, வாழ்க்கை க்குப் போதுமான வருமானம் பெற்று வாழ முடிந்தது மட்டுமல்ல. கையிலும் நாலோ பத்தோ சம்பாதிக்கவும் முடிந்தது அவனால்,
தனிக்கட்டையாக எவ்வளவு காலந்தான் ஒருவன் வாழமுடியும்?
நீாலு பெரிய மனிதரிருந்த சபையில் செல்லம்மாவைக் கைப் பிடித்தான் கந்தையா, அவளும் நிலைமையை அறிந்து வாழக் கற்றுக் கொண்டவள்.
அவர்களுடைய வாழ்க்கை இன்பதுன்பங்களுக்கு மத்தியில் ஓடிக்கொண்டிருந்தது.
அவர்களுடன் சேர்ந்து காலதேவன் தன் சக்கரத்தை ஒரே மாதிரிச் சுழற்றுவதில்லையே?
செல்லம்மா இப்போ ஐந்து பிள்ளைகளுக்குத் தாய். நான்கு பெண்கள். ஆண் ஒன்று. மூத்த பெண்ணுக்குக் கல்யாண வயது.
அவனுக்குக் குடுப்பச் சுமையுடன், செல்லம்மாவின் நோயும் பாரமாக ஏறத்தொடங்கியது. அவள் பாயில் சரிந்து பத்து வருடங்க ளுக்கு மேலாகின்றன. கையிலிருந்த காசு கரைந்தது. இறுதியில் இருந்த ஒரே துண்டு நிலத்தையும் செல்லையாவிற்கு அடைமானம் வைத்துச் செலவளித்தான்.
LG)6?
66

நீர்வை பொன்னையன்
செல்லத்தின் நோய் குறையவேயில்லை. வெறுமை; வறுமை ;- கந்தையாவிற்கு,
மரவள்ளிக் கிழங்கைச் சப்பி, வயிறு நிறையத் தண்ணீரைக் குடித்துவிட்டுத் தொட்டிலுடன் சாய்ந்து கொண்டிருந்தான் கந்தையா.
கருமுகில்களாக அடர்ந்து வளர்ந்த புகையிலைக் கன்றுகள், முறுகித் தடித்து வாளிப்பான, ஒரு ஆள் படுக்கக்கூடிய நீண்ட பெரிய இலைகள். கடல் அலைகள் போல காற்று வீசும் பொழுது அசைந்து கொடுக்கின்றன புகையிலைகள்.
எனக்கு உனக்கென்று வியாபாரிகள் போட்டிபோட்டுக் கொண்டு காசுக் கட்டுகளுடன் வந்து கந்தையாவிடம் அச்சவாரம் கொடுக்கக் காத்து நிற்கின்றார்கள்.
புகையிலைத் தரகள்கள் அவனுடைய தலை அசைவுக்காக ஏக்கத் துடன் பார்த்துக் கொண்டு நிற்கின்றார்கள்.
ஆயிரம் ரூபாவிற்கு மேல் விலை கேட்கப்பட்டுவிட்டது.
நூறு ரூபா நோட்டுகளை எண்ணி - செல்லயாவின் கைக்கு மாற்றப்படுகின்றது.
மிகுதி அறுநூறு ரூபா!-
ஜன அலைகள்! அதற்குள் செல்லம் - அன்னம், பிள்ளைகள்.
தோட்டமா? வீடா?
அண்ணாச்சாமியின் நாதஸ்வரத்திலிருந்து கிளம்பிய சங்கீத கானம் காற்றலைகளில் நீந்தி வருகின்றது.
மணக்கோலத்தில் ඉO மங்கை
அவளுடைய ரூபலாவண்யங்களில் அமானுஷ்ய எழில் நிலாக் கொழுந்துமுகம் ஜ்வலித்துக் கொண்டிருக்கின்றது. நாணத்தில் தலை குனிகின்றது. அவளுடைய புருவக்கோடியில் முறுவல் அரும்புகின்றது. கன்னங்கள் குழிகின்றன.
67

Page 47
மேடும் பள்ளமும்
அப்சரஸ் மங்கையா?
மனத்திரையின் கிழிவு
"அன்னம்."
கல்யாண தினத்தன்று கட்டியிருந்த "கூறைச் சேலையை உடுத்துக் கொண்டு செல்லம்மா சந்துஷ்டியுடன் ஒடியாடி வேலை செய்து கொண்டி ருக்கின்றாள். புதுப்பொலிவுடன் விளங்கும் அவள் அவனுக்குப் பரவச போதையை ஊட்டுகின்றாள்.
ஜன சமுத்திரத்தின் ஆரவாரம்.
ஆனந்த மயம்
மார்பை ஏதோ பிளப்பது போன்ற உணர்ச்சி.
கந்தையாவின் கை மார்பை அழுத்துகின்றது. கைக்குள் அகப்பட்ட கட்டெறும்பு மீண்டும் அவனுடைய விரலில் கடித்தது.
உள்ளத்திரையில் கண்ட இன்பக்காட்சியில் லயித்திருந்த கந்தையா பின் நாரியை உயர்த்தி நிமிர்ந்தான். கண்களில் எரிவு இடதுபுற நெஞ்சிலும், கையிலும் எறும்புக் கடியால் எழும் கடுகடுப்பு
துன்பத்தில் இன்பம்.
"அப்பனே! பூதராயசாமி! எப்பன் கண் திறந்து பார். பொயிலைக் கண்டு நல்லாய்ப் பலிச்சால், உனக்குப் பால் பொங்கல் பொங்கி, கப்பல் வாழைப்பழ "மடையும்" போடுவன்."
"இந்த வரிய பொயிலைக் கண்டு வாச்சால், ஒருமாதிரிச் செல்லையாவின்ரை வட்டிக் காசையாவது குடுக்கலாம். முதல்?."
"நாசமாய் போக எத்தினை வரியமெண்டு இப்படி வட்டிக்காசுக்கு உழைச்சுக் குடுக்கிறது? இந்த நிலத்தை வித்து . சீவியம்? . அன்னத்திற்குக் கல்யாணம்.?"
அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது.
68

நீர்வை பொன்னையன்
உள்ளக் கரிப்புடன் எழுந்தான்.
இடதுகாலை உயர்த்தி, தளர்ந்த கச்சையை இழுத்துக் கட்டிவிட்டு. கந்தல் துணியை வரிந்து கொடுக்குக் கட்டிக் கொண்டு நிலத்தைக் கொத்தத் தொடங்கினான்.
"இந்த ஆடி மட்டும்தானே இப்படிக் கொத்துவன். பிறகு. செல்லையாவுக்கு நிலம்."
"இல்லை. ஒருக்காலும் உன்னை விக்கமாட்டான். என்னை நீதானே வளத்தனி நீ இல்லாட்டி என்ரை கெதி?-"
நிலத்திலே விழுந்து உருண்டு புரண்டு, உடல் முழுவதும் மண்ணை அப்பவேண்டும் போலிருந்தது அவனுக்கு.
அடிவானம் தாம்பூலம் தரித்து, ஆகாயத்தில் செங்குழம்பை அள்ளி அப்பிக் கொண்டிருந்தது.
"இராச் சாப்பாட்டுக்கு? கூப்பன் மாவாவது வாங்க?"
W M K v K I V அவன் ஆர் கடன் தரப் போறான்? சரி. இண்டைக்கும் மரவள்ளிக் கிழங்குதான்."
நாலு ஐந்து மரவள்ளி மரத்தைப் பிடுங்கினான்.
தலையில் கிழங்குக் கட்டு, தோளில் மண்வெட்டி, நடந்து கொண்டிருக்கின்றான்.
தேத்தண்ணியாவது குடிக்கச் சீனி?.
குமாருவினுடைய கடையை நோக்கி அவன் கால்கள் நகர்ந்தன.
பல்லைக்காட்டி கால் இறாத்தல் சீனி கடனாக வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.
"களைப்பாக் கிடக்கு கொஞ்சம் தேத்தண்ணி வை மோனை"
அடுப்புப் பற்றவைக்க ஒலையை எடுத்தான் அன்னம். மழையில்
நனைந்த ஈர ஒலை புகைந்தது.
69

Page 48
மேடும் பள்ளமும்
சீனிச் சரையைக் குலைத்து சீனியைப் போத்தலுக்குள் கொட்டி விட்டு, கடதாசியை எடுத்து விளக்கண்டை பிடித்தாள்.
அந்தக் கடுதாசியில் தடித்த, பெரிய, கறுப்பு எழுத்துக்களிருந்தன.
நாலாம் வகுப்புவரை படித்திருந்த அன்னத்திற்கு அந்த எழுத்துக் களை வாசித்துப் பார்க்க வேண்டுமென்றிருந்தது.
எழுத்துக் கூட்டிப் படித்தாள்.
"இதுகள் எல்லாம் ஆருக்குத் தெரியும். விளங்கேல்லை."
கடுதாசியில் நெருப்பைக் கொளுத்தி அடுப்பிற்குள் வைத்தாள் அன்னம்.
70

மின்னல்
அவள் ஜன்னல் ஓரத்தில் படுத்திருந்தாள். வெள்ளி நிலவின் சன்னக்கிற்று அவள் உடலில் அப்பித்தடவி இதம் கொடுக்கையில்.
அவள் ஒரு தங்கச்சிலை; நடமாடும் தந்தச் சிலை. காற்றில் ஆடும் இலைகளின் நிழல்கள் அவள் மலர்ந்த முகத்தைக் கொஞ்சிக் குலாவையில் நெற்றியில் படர்ந்த கேசக் கற்றை புரளுகிறது. அவளு டைய பளிங்கு நெற்றியில் வியர்வைத் துளிகள் கட்டுவது முத்துச் சரமா? நீண்ட கிளிமூக்கு தன் அழகோடு விளங்குகின்றது. மூக்குக்குக் கீழே ஓவியன் கீறிய கோடாகக் குவிந்து போதை ஊட்டும் செவ்விதழ்கள் அந்த மூக்கின் எழிலோடு போட்டுயிடுகின்றன.
மனத் திரையில் ஒரு நிழல். அந்தக் குறும்புப் புன்முறுவல் வெடித்துத் தோன்றி மறைகின்றது.
நிலை தவறிய எரிநட்சத்திரம்போல, அவள் எதிரில் வந்து நிற்கின்றான் ஒருவன், மறைகின்றான்.
சின்னஞ் சிறிய வயதில், அண்ணனுடன் சண்டையிட்டுக்கொண்டு. தன் வீட்டைவிட்டு தேசாந்திரமாக ஓடியவன் முத்தையன், இன்று கட்டமைந்த காளையாக, போதையூட்டும் லாகிரிப் பொருளாக, தன் அண்ணனைக் காண வந்திருக்கின்றான்.
முத்தையனைக் கண்டதும் தங்கத்தினுடைய உள்ளத்திலே உற்சாகம்! இல்லை, உணர்ச்சி பொங்கி வழியத் தொடங்கியது.
அவனை வரவேற்று உபசரிக்கவேண்டும் என்ற உத்வேகத்துடன்
71

Page 49
மேடும் பள்ளமும்
அவள் பம்பரமாகச் சுழன்று உணவு தயாரித்துக்கொண்டிருக்கின்றாள்.
அவள் கண்களுக்குள் - திரண்டு பருத்த புஜங்கள். விரிந்து பரந்த மார்பு மினுமினுத்து ஒளிவீசும் உடல், அரும்பு மீசை பிரகாசிக் கும் குறும்புத்தனம் நிறைந்த கண்கள். போதையூட்டி மயக்கும் புன் முறுவல். அவள் இதயத்துள் இடங்கொண்டுவிட்டது முத்தையனுடைய பிரதிபிம்பம். அடுக்களை வேலை முடியும் நேரம்.
வெளியில் இரு குரல்கள் மோதும் சத்தம்
பதறிப்போய் விறாந்தைக்கு வருகின்றாள். முத்தையன், திரும்பிப் பாராமலே வேகமாகச் செல்கின்றான். கண்களில் கோபம் தெறிக்க வீறாப்புடன் இருக்கின்றார் தர்மலிங்கம்.
“எங்கேயாவது தொலைந்து போகட்டும் சனியன்” வெறுப்புடன் கூறுகின்றார் அவர்.
தங்கத்திற்கு வாய்விட்டு அழவேண்டும் போலிருந்தது.
அவள் உள்ளத்தில் தோன்றிய கனவுகள்?
அன்று முழுவதும் யந்திரம் போல நடமாடிக்கொண்டிருந்தாள்.
‘தங்கம் மதுரமான குரல் ஒலி. குரல் வந்த திசையை அறிய, ஏக்கத்துடன் அங்குமிங்கும் பார்க்கின்றாள்.
வெறுமை !-
தனிமை!-
பொருமல்
எருமை மாடு மூசுதுவதுபோல ஒலிக்கிறது, பகலில் அவள் கணவன் குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருக்கின்றான்.
விரக்தி
வெறுப்பு
தங்கம் தவிக்கின்றாள்.
72

நீர்வை பொன்னையன்
ஆறு பெண் சகோதரங்களுடன் கூடப் பிறந்தவள் தங்கம், வறுமையும் வயிற்றுப் பசியும் அவளுடன் கூடப்பிறந்தவை. அவள் தான் குடும்பத்தில் மூத்தவள். நல்ல சிவப்பி, புதருக்கு மத்தியில் செழிப்பும் வாளிப்பும் கொண்டு தாவிப் படரும் கொடியைப் போல வளர்ந்தாள். அவளுடைய அங்கங்களில் இளமையின் ஜிவசத்து நிறைந்து நிற்கின்றது. அவள் கட்டான பராயமடைந்து கம்பீரமாக நட மாடும் பருவம். யௌவனத்தின் பூரணகளை அவளுடைய வேப்பி லைக் கண்களிலும் இதழ்களிலும் பொங்கித் ததும்பிக் கொண்டிருந்தது. பதினாறு வயதைத் தாவிப்பிடித்துவிட்டாள். அமைதியாக இருக்கும் குளத்தில் கல்லைப் போட்டால் சுழிகள் உண்டாவதுபோல, அவள் சிரிக்கும் பொழுது கன்னங்களிற் சுழிகள் தோன்றும். அவளுடைய சிரிப்பலைகளில் ஆயிரம் காவியங்கள் பொதிந்து கிடக்கின்றன.
அழகு! ஒருவகையில் அது ஆபத்தானது.
எழிலின் நிறைவும், கொல்லும் வறுமையின் கோரமும் தங்கத்தைத் தருமலிங்கத்திற்கு இரண்டாம் தாரமாக்கியது.
பணத்தின் பலத்தால் போதைத் தடாகத்தில் நீந்திக் களைத்துத் தன் ஆண்மைச் சக்தியை விரயம் செய்து தன்னைத்தானே அழித்துக் கொண்டவர் தர்மலிங்கம்.
பணம் என்ற மட்டுடன் வாழ்வு அமைந்தால் தங்கம் அதிர்ஷ்ட சாலிதான்! ஆனால் வாழ்வின் வரவிலக்கணம் அதுவல்லவே!
தொட்டுப் பார்க்க முடியாத, மானசீகமாக உணரக் கூடிய ஒன்றுக்குத் தங்கம் அடிமையாகி விட்டாள். அந்த அடிமைத் தளையை அறுத்தவிட வேண்டுமென்ற உணர்வு தர்மலிங்கத்திற்கு ஏது? அப்படி உணர்விருந்தாலும் அது அவரால் முடியாத ஒன்று.
தர்மலிங்கம் தங்கத்தின்மேல் தனது அன்பையெல்லாம் அள்ளிச்
சொரிந்தார். அவளுடைய அன்பைப் பெறுவதற்காக எதை வேண்டுமா 4ண்ாலும் செய்யக் காத்துக்கிடந்தார். அவளை ஆடை ஆபரணங்களால் அலங்கரித்தார். அவளுடைய எழிலைத் தன் இதயகமலத்தில் வைத்துப் பூஜித்தார்.
73

Page 50
மேடும் பள்ளமும்
தங்கத்திற்கு வேண்டியது அதுவல்லவே.
முள்ளுக்கு நடுவே பூத்து வேதனையை வெளிக்காட்டாத நெரிஞ்சிப் பூ மாதிரி வாழ்ந்தாள் தங்கம்.
தங்கம் எங்கெல்லாமோ போகின்றாள். அதைத் தடுத்து நிறுத்தத் தர்மலிங்கத்திற்கு முடியவில்லை. இருட்டிலே போகின்றாள்; நிலவிலே வருகின்றாள்.
கிராமத்தின் தொடக்க எல்லையில் ஒரு அம்மன் கோயில், ஒரு காலத்தில், வண்ணச் சேலைகட்டிய செழுமையான கன்னிப்பெண் மாதிரியிருந்த கோயில்; கன்னம் சுருங்கி, கண்கள் குழிவிழுந்த தொங்கு தசைக் கிழவி போல இடிந்து பாழடைந்து கிடந்தது. அதற்கு அருகாமை யில் ஒரு மடம் பகலில் மாடு மேய்க்கும் பையன்கள்; இரவில் திருடர்கள்! இன்னும் எத்தனையோ தேவைகளுக்குப் பயன்பட்டது அந்த மடம். தினமும் தங்கம் அம்மன் கோயிலுக்குப் போவாள்.
• தங்கத்திற்கு அந்த அம்மன் கோவிலில் தரிசனம் கிடைத்தே விட்டது.
உலகம் சூன்யமாகியது; இருளின் போர்வைக்குள் அமைதியாகக் கிடக்கின்றது.
திடீரெனக் கோபாவேசத்துடன் இடித்து முழக்குகின்றது வானம். வானத்தைப் பொத்துக்கொண்டு 'சோ' வென்று இரைந்துகொண்டு கொட்டுகிறது மழை.
மழையிலிருந்து ஒதுங்குவதற்கு ஓடுகின்றாள் தங்கம்.
பாழடைந்த கட்டிடம் போல. என்ன, அம்மன் கோயிலா?
இல்லை. அதற்கருகாமையிலுள்ள மடம்போல இருக்கின்றதே!
எந்த இடம் என்று தங்கத்தால் நிதானிக்க முடியவில்லை. உணரத் தான் முடிகிறதா அவளால்?
இருளில் ஒரு உருவம்! அது அசைகின்றது என்ன மனித உருவமா?
74

நீர்வை பொன்னையன்
தங்கத்தின் உள்ளம் பயத்தால் விறைக்கின்றது. உதடுகளை இறுகக் கடிக்கின்றாள். தளரும் உள்ளத்தை இழுத்துப் பிடித்துக்கொண்டு அந்த உருவத்தைப் பார்த்தபடியே நிற்கின்றாள்.
இருளைக் கிழித்துக்கொண்டு ஒரு மின்னற் கொடி பிறந்து மடிந்தது
அதே முகம்!
ஆமாம் முகத்தை மின்னல் ஒளியில் கண்டாள் தங்கம்.
முத்தையனுடைய உடல் மழையில் முற்றாக நனைந்து விறைத்து நடுங்குவதாக உணர்கின்றாள் அவள்.
அவள் உள்ளத்தில் அனுதாபம் ஊற்றெடுக்கின்றது.
வெறும் அனுதாபம் போதுமா?
என்ன செய்கின்றோம் என்று தெரியாமலே முத்தையனுடைய உடலைத் தனது சேலைத் தலைப்பால் துவட்டுகின்றாள்.
மலரின் அவா மணமாக வெளியேறி உணர்வைத் தாக்குகின்றது. அவளுடைய நினைவிலிருந்து புறப்படும் உணர்ச்சி அலை எப்படி அவன் இருதயக் கோடியில் சென்று தாக்கியதோ!.
‘தங்கம்’
உணர்ச்சி முட்டி மோத அழைக்கின்றான் முத்தையன். அவள் நிலை தடுமாறுகின்றாள்.
அவன் அவளுடைய கரங்களைப் பற்றுகின்றான். அந்தப் பிடியில் வேட்கையின் நிறைவு தங்கம் பின்வாங்குகின்றாள். முத்தையன் அவளைத் தாவிப் பிடித்து.
மறுப்பு
அணைப்பு
திகைப்பு
75

Page 51
மேடும் பள்ளமும்--
"ஐயோ’ சத்தம் தங்கத்தின் தொண்டைக்குள் தடைப்படுகின்றது
ଔunt!
தோல்வி
முடிவு? அவனுடைய இதழ்கள் அவளுடைய இதழ்களில். தங்கத்தின் உடலிலே உணர்ச்சிப் பெருக்கு அவள் அடிமையாகித் தன்னையே மறந்து.
தனது வாழ்க்கையில் அறிந்திராத - ஒருபோதும் அனுபவித்திராத புதிய உலகிற்குச் சென்று ஜீவாமிர்தத்தைப் பருகிக்கொண்டிருக் கின்றாளா?
இருளின் சுருக்கம்.
ஜன்னல் திரையை நீக்கிவிட்டு வெளியுலகை எட்டிப் பார்க்கும் கன்னிப் பெண்ணைப் போல், பூரண சந்திரன் கரிய முகிற் கூட்டங்களுக் கிடையில் எட்டிப் பார்த்துப் புன்முறுவல் செய்கின்றான். இருளில் நீந்தி எழுந்த தென்னை மரங்களின் வழியே - தென்னங் கீற்றுக்களின் இடை வெளியூடே-நிலவின் ஜீவாமிர்த தாரை ஒழுகித் தரையில் அலையலை யாகப் பாய்ந்து ஓடுகின்றது. அதை விழுங்கமுடியாத இருள் தன் தேகத்தை வளைத்து. நெளித்து, ஒடுக்குவதில் தோன்றும் எழிலை ரசித்துக்கொண்டிருக்கின்றாள் தங்கம்.
வானத்தில் கொத்துக் கொத்தாகத் தாரைகள் பூத்துப் பொலி கின்றன. அவைகளுக்கு மத்தியில் சுடர்விடும் முத்தையனுடைய முகம்!
வானத்துத் தாரகை ஒன்று உதிர்ந்து விழுகின்றது.
"தங்கம்"
அவளுடைய இதயத்து நரம்புகளை மீட்டியது அக் குரல்.
அவள் எதிரே முத்தையன்!
76

நீர்வை பொன்னையன்
அவனை வாரி அணைக்கத் தாவுகின்றாள்.
தீப்பிழம்புகளைக் கக்கியபடியே நிற்கின்றார் தர்மலிங்கம்.
“எங்கே அந்தத் துரோகி?’ பிரபஞ்சமே அதிரும்படி கர்ச்சிக் கின்றார்.
“எனக்குத் தெரியாது.” பதறிக்கொண்டு கூறுகின்றாள் தங்கம். தர்மலிங்கத்தின் கையிலிருந்த பளபளக்கும் கத்தி.
"ஐயோ!”
புயலின் குமுறல்.
தங்கத்தின் மூச்சுத் திணறுகின்றது. எங்கே, ஒன்றையும் காண வில்லையே!
அமைதி
தங்கத்தின் காலை ஒரு கை பிடிப்பதான உணர்வு
யாரது?
தங்கம்!
"உஸ். சத்தம் போடாதே" அவளுடைய உதடுகளை 946( ھیل{{ டைய சுண்டுவிரல் அழுத்துகின்றது.
"Suur?"
ஆமாம்.
‘போய்விடுங்கள். ஐயோ! போய்விடுங்கள்
தங்கம், நீயும் வா போய்விடுவோம்.'
‘எங்கே?
எங்கேயாவது; வாழ்வதற்கு,
‘எப்படி?
77

Page 52
மேடும் பள்ளமும்
'நாலு கைகள் இருக்கின்றன. ஸ்டேஷனை நோக்கி முத்தையன் நடக்கின்றான். அவனுடன் தங்கம் ஒட்டியிருக்கின்றாள்.
"நாம் எங்கே போகின்றோம்?
'கிழங்கள் இல்லாத ஊருக்கு உன் கணவனுடைய கண்களுக்கு எட்டாத தேசத்துக்கு.
தங்கம்.
கரகரப்பான குரல். சத்தம் வந்த திசைக்குத் திரும்புகின்றாள்.
ஏக்கத்துடன் பார்த்தபடியே நிற்கின்றார் தர்மலிங்கம்
முத்தையனுடைய கைப்பிடிக்குள் அவள்.
‘ஐயோ!'
, ‘என்ன?”
தங்கம் அவனுடைய பிடியை உதறிக்கொண்டு தர்மலிங்கத்தை நோக்கி ஓடுகின்றாள்.
‘தங்கம், என்னது, எங்கே ஓடுகின்றாய்?
தொலைவில் புகைவண்டி ஊதும் ஓசை காற்றலைகளில் மிதந்து வருகின்றது.
திரும்பிப் பார்க்கின்றாள்.
ஸ்டேஷனை நோக்கி ஓடுகின்றான் முத்தையன். திரும்பிப் பார்க்காமலே ஒடுகின்றான்.
நிலை தவறிய எரிநட்சத்திரம் போல, அவள் எதிரே எதிர்பாராமல் தோன்றி, அவளுடைய ஆத்மாவைச் சுட்டுப்பொசுக்க வந்த முத்தை யன் ஓடுகின்றான்.
KK
கள்.கள்.ர்.ர்.”
புகைவண்டியின் இரைச்சலா? குறட்டை ஒலியா? தங்கத்தின்
மார்பில் ஏதோ “பொத்தென்று விழுந்தது!
78

நீர்வை பொன்னையன் திடுக்குற்று எழுந்தாள். விளக்கைப் போட்டாள்.
அவளுடைய கணவனின் கை அவள் கிடந்த இடத்தில் கிடக்கி ன்றது. அவர் குறட்டைவிட்டு நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கின்றார். அவருடைய முகத்திலே பேரமைதி பொங்கி வழிகின்றது.
தங்கத்தின் நடுங்கும் கரங்கள் அவருடைய பாதங்களைத் தொட்டு வணங்குகின்றன.
விளக்கை அணைத்தாள்.
உலகம் இப்போது சூனியமாகியது. இருளின் போர்வைக்குள் அது அமைதியாகக் கிடக்கின்றது. இப்படி எத்தனை ஆத்மாக்களை அது கண்டுவிட்டதோ
இருளின் போர்வையைக் கிழித்துக்கொண்டு ஒரு மின்னற்கொடி பிறந்து செத்து மடிந்தது.
79

Page 53
சிருஷ்டி..?
அவள் செத்துவிட்டாள்
"றிக்காட்" புஸ்தகத்தைத் திறக்கின்றார் சித்திரகுப்தன்.
"சாவித்திரி!"
சித்திரகுப்தனுக்குத் திகைப்பு
"அப்பீலில் தள்ளுபடியாகிவிட்டால்." என்ற திகிலோ? "நீ யார்?" காலனின் கர்ச்சனை. "சாவித்திரி" அமைதியாகக் கூறினாள் அவள்.
இயமனுடைய தொடைகள் நடுங்குகின்றன. "அந்தச் சாவித்திரியல்ல நான்."
அப்போ?"
கூற்றுவனின் குரலில் தெம்பு "ஒரு விபச்சாரி" வேதனையுடன் கூறுகின்றாள் அவள்.
"அடிபாவி!"
"நானா பாவி?" கோபாவேசத்தில் அவளுடைய உடல் ஆட்டம் கொடுத்தது.
80

நீர்வை பொன்னையன்
"என்ன கள்வம் உனக்கு?" காலால் தரையை உதைக்கின்றார் இயமதர்மன்.
"என்ன கலாட்டா?"
அலட்சியமாகக் கேட்டுக்கொண்டே வருகின்றார் சிவபெருமான்.
"சாவித்திரி என்ற பெயருடன் விபச்சாரம் செய்தாளாம் இவள்."
"கற்புக்கரசியின் பெயருக்கே களங்கம்." கூறிக்கொண்டே நெற்றிக் கண்ணைத் திறந்தார் உருத்திரன்.
"பசியைப் படைத்துவிட்டுக் கற்பைப் பற்றி பேச்சு வேறா?" சாவித்திரியின் குரலில் ஏளனம்.
முக்கண்ணனுடைய நெற்றி சுருங்கிற்று.
முதல் தடவையாகச் சிந்தனையில் ஆழ்ந்தார் சர்வேஸ்வரன்.
81

Page 54
கிடாரி
விதவையின் களையிழந்த கனனங்களைப் போல அழுது வடியும் அமரபட்சத்து விடிநிலா.
சமசார பந்தங்களை வெறுத்து, உலகத்தையே திரும்பிப் பாராமல் செல்லும் அவள் ஒரு ஞானியா?
மலைப்பாம்பாக வளைந்து நெளிந்து பனங்கூடலுக் கூடாகச் செல்லும் அந்த ஒற்றையடிப் பாதை வழியே நடந்துகொண்டிருக்கும் அவளுடைய கூந்தல் காற்றிலே பறந்துகொண்டிருக்கின்றது. கந்தல் உடை. கண்கள் குழிவிழுந்து, உதடுகள் காய்ந்து வெடித்து. உடல் எல்லாம் அழுக்கும் புழுதியும் அபபிக் கிடக்கும் கோலம்.
யார் அவள்?
இந்த நேரமற்ற நேரத்திலே அவள் எங்கு செல்கின்றாள்?
அவளுக்கு இரவுமில்லை, பகலுமில்லை, வெய்யில், மழை, குளிர். பனி, பருவமாற்றங்கள் ஒன்றும் அவளைப் பாதிப்பதில்லை. அவள் செல்வதற்கு இடமேதுமில்லை. பசியிலலை. தாகமில்லை, களைப்பு உறக்கம் ஒன்றுமே அவளுககில்லை.
ஏனோ அவள் மாறி மாறிச் சிரிப்பதும் அழுவதுமாகச் செல்கி ன்றாள்?
"வாழ்வாவது மாயம், இது மண்ணாவது திண்ணம்" என்ற தத்து வத்தை உலகத்திற்குப் போதிக்கவா இந்தக் கோலத்தில் திரிகின்றாள் அவள்?
82

நீர்வை பொன்னையன் புழுதியில் பிறந்து தவழ்ந்து ஓடியாடித்துள்ளிக் குதித்து, பிஞ்சுக் கரங்களால் மண் விளையாடி, மங்கைப் பருவத்தை எட்டிப்பி டிக்கும் வரைக்கும், கொஞ்சிக் குலாவி, அவளை வளர்த்தெடுத்து, அவளுடைய பூரணத்துவ எழிலிலே, சிரிப்பொலியிலே, பூரித்துப் பரவச போதை அடைந்திருந்த இப்பணஞ்சோலை, இன்று-அவளுடைய இந்தக் கோலத்தைப் பார்த்துப் பெருமூச்சு விடுவதும ஏனோ?
இதே பனஞ்சோலைக்கூடாக. இதே ஒற்றையடிடப்பாதை வழியே. இதே நேரத்தில் எத்தனையோ நாடகள் அவள் சுயப பிரக்ஞை இழந்த நிலையில், உணர்ச்சி பொங்கி வழிய, இன்ப அலைகளில் மிதந்து சென்றிருக்கின்றாள்.
ஆனால்.இன்று?
உணர்ச்சியின்றி, ஆசையின்றி, அபிலாஷையின்றி, அவைகளைக் கூறும் மொழியின்றி, உள்ளமிருந்தும் உணராதவளாக, கண்ணிருந்தும் காணாதவளாக, காதிருந்தும் கேளாதவளாக, தனது உள்ளத்தில் உள்ளதை வெளியிட முடியாத ஜடமாக நடமாடும் அவளைக் கண்டதும் அநேகள் அனுதாபப்படத்தான் செய்கிறார்கள். சிறுவர்கள் அவளைக் கண்டதும் ஏனோ பயந்து ஒடி ஒளித்துக்கொள்கின்றார்கள்.
அன்பு பொங்கி வழியும் தாயினுடைய இன்முகம் அவளுடைய ஞாபகச் சுவட்டிலே இல்லை. பிறந்த அன்றே "தாயைத் தின்னி" என்ற பெயரை எடுத்த வள்ளியை அவளுடைய தந்தை கந்தனும். சகோதரன் செல்லனும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தனர். அவள்தான் அவர்களுடைய செல்வம், வாழ்க்கையின் இலட்சியம்.
அவர்கள் ஏழைகள்- வறுமையின் எல்லைக் கோடடில் தொங்கிக் கொண்டிருக்கிறது அவர்களுடைய வாழ்க்கை.
வள்ளி பேரழகியல்ல; பெண்ணிற்குரிய அழகி. அவள் நல்லெண் ணெய்க் கறுப்பி. கறுப்புக் காகத்தில் அழகில்லையா? அதுவும் பருவம் அவள் உடலில்.
83

Page 55
மேடும் பள்ளமும்
வள்ளியின் பருவம் புன்முறுவல் செய்தது; அழகு சிரித்தது
பார்த்தவர்கள் கிறங்கும் நிலை. அவளைப் பார்ப்பவர்கள் உள்ளத் தினால் அவளுடைய அழகைப் பருகினார்கள்.
அவளுடைய கனவு காணும் பெரிய கண்கள், நீண்ட மூக்கு முறுவலிப்பதற்காகவும் - முத்தமிடுவதற்காகவுமே படைக்கப்பட்டது போன்ற உதடுகள்; வளர்ந்து கொண்டு வரும் மிதந்துயர்ந்த மார்பகம் கண்டவர்கள் எல்லோரையும் அவளுடன் இணையத் தூண்டும்.
பதினாறு வயதை எட்டிப்பிடித்த பருவம்.
நாகரிகம் படைத்த பட்டணத்தில் பிறந்தவளல்ல வள்ளி. பட்டிக் காட்டில், பட்டினிப் பட்டாளத்துக்கு மத்தியில் பிறந்து வாழ்பவள். காதல் என்றால் என்ன என்று தெரியாதவள். வெள்ளித்திரைகளில் காதல் லீலை களைக் கண்டவளல்ல, நாவல்களில் காதல் ஜோடிகளைச் சந்தித்த வளல்ல. ஆனால், பருவம் பழக்கி வைத்தவை ஒரு சில. அங்கு வாழ்ந்த வர்கள் தந்த அனுபவங்கள்.
"அன்று கூப்பன் அரிசிக் கடை "மனேச்சர்" தன்னை ஒருமாதிரிப் பார்த்துச் சிரித்தது"-
"வாழைக் குலையை தலையில் தூக்கிவைக்கும் பொழுது சரவண முத்துக் "கமக்காரன்" தற்செயலாக நடந்ததுபோல முழங்கையால் இடித்து விட்டுக் "கொடுப்பிற்குள் சிரித்து."-
"ஒருநாள் தோட்டத்துக் கிணற்றிலே, தான் குளித்துவிட்டுச் சீலை மாற்றிக்கொண்டிருக்கும் பொழுது வேலுப்பிள்ளை வாழைக்குப் பின்னால் மறைந்து பல்லை இளித்தபடியே தன்னைப் பார்த்துக் கொண்டு நின்றதைக் கண்டவுடன், தனது கட்டமைந்த மார்பகத்தை மறைக்கப் பட்டபாடு"-
இன்னும் இவ்ைபோன்ற எத்தனையோ அனுபவங்கள்!
ஒரு புறம் பருவத்தின் உணர்ச்சித் துடிப்பு- அதில் பிறக்கும் இன்பம்! மறுபுறம், வாலிபச் சேட்டைகளினால் உண்டாகும் பயம், வெறுப்பு
84

நீர்வை பொன்னையன் ஒரே ஒருவன் மட்டும். காத்தான்! ஆம், அவன்தான் அவளுடைய நினைவில் நிற்பவன்.
காத்தானைக் காணும்பொழுது வள்ளியின் கண்கள் நிலத்தை நோக்க, கன்னங்களில் குயீர் என இரத்தம் பாய்ந்து கதகதப்பைக் கொடுக் கும். உடலிலுள்ள தசைநார்கள் எல்லாம் சுண்டி இழுத்து "விண்" என்றிருக்கும். நெற்றிப் பொருத்துக்கள் புடைக்க, கண்கள் போதை ஏறிக்கிறங்கும்; உதடுகள் துடித்து நடுங்கும்.
அன்றொருநாள்.
இடுப்பிலே தண்ணிர்க் குடத்துடன் உல்லாசமாக அசைந்தாடி வந்து கொண்டிருந்தாள் வள்ளி. உலகத்தின் கண்ணில் பட்டுவிட்டால் திருஷ்டிபட்டுவிடும் என்ற எண்ணத்தினால், அவளுடைய மதர்த்து வளர்ந்து கொண்டிருக்கும் அங்கங்களின் வனப்பை மூடிமறைத்துக் கொண்டிருந்தது இறுக வரிந்து கட்டப்பட்ட ஈரப்புடவை நீர் சொட்டிக் கொண்டிருக்கும் குலைத்துவிடப்பட்ட கருங்கூந்தல் அவளுடைய எழிலுக்கு மெருகு கொடுத்தது. வள்ளியின் மனக்கண்ணில் காத்தானு டைய உருவம் கண்சிமிட்டிச் சிரித்துக் கண்ணாமூச்சி வியைாடிக் கொண் டிருந்தது.
"வள்ளி" காற்றில் மிதந்து வந்தது அந்தக் குரல்.
"வள்ளி . !" கூறிக்கொண்டே பாதை ஒரத்தில் நின்ற பனை மரத்திலிருந்து இறங்கி வந்தான் காத்தான்.
முறுகித் திரண்ட உடற்கட்டு, அகண்டு விரிந்து பரந்த நெஞ்சு, உருண்டு திரண்ட புயங்கள். ஒடித்திரளும் தசைகளும், தசைகள் திர ளும்போது கெம்பி மிதக்கும் நரம்புகளும், அவற்றின் வீறாப்பும், காத்தா னுடைய உடற்கட்டின் செழுமையை வெளிக்காட்டிக் கொண்டிருந்தன.
85

Page 56
மேடும் பள்ளமும்
f
մ.«
"என்ன, நீ பேசாமடந்தையா? மற்றவர்களுக்கு முன்னால் நீண்டு செல்லும் உன்ரை வாய் எனக்கு முன்னால்."
வள்ளியினுடைய கன்னங்களில் இரத்தம் பாய்ந்தது உதடுகளின் ஓரத்தில் சிறு முறுவல் நெளிந்தது.
"வள்ளி உன்னை நான் ஒண்டு கேட்டால்.நீ கோவிப்பியா.?" தலையை உயர்த்தினாள். என்ன என்று கேட்பது போலிருந்தது அவளுடைய பார்வை.
崖
"என்னைக்.கலியாணம் செய்ய.
அரைகுறை வார்த்தைகளில் இழுத்தான் காத்தான். அப்பப்பா, இதைக் கேட்பதற்கு அவன் பட்டபாடு.
அவனுடைய உடலே ஒரு முறை ஆட்டம் கொடுத்தது. "என்ன பதில் சொல்வாளோ? சில வேளை தன்னை ஏசுவாளோ?" காத்தான், தன்னை இப்படிக் கேட்பான் என்று வள்ளி ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை. ஒரு கணப்பொழுது அவள் தன்னையே மறந்தாள். ஆனந்த மிகுதியால் அவள் பதில் சொல்லமுடியாமல் திணறியிருக்க வேண்டும். காற்றிலே மிதப்பதுபோலிருந்தது வள்ளிக்கு. நாணத்தால் அவள் முகம் வியர்த்தது. தலை தரையை நோக்கிக் கவிழ்ந் BS).
"வள்ளி. சம்மதமா..?"
சரி என்பது போலிருந்தது அவளுடைய மெளனம். "அப்ப நான் உன்ரை கொப்புவிடம் கேட்டு-"
f
-lf.
‘என்ரை ராசாத்தி ஆவலுடன் கையை நீட்டினான் காத்தான்.
86

நீர்வை பொன்னையன்
கெக்கலிச் சிரிப்புடன், துள்ளிக் குதித்துக் கொண்டு ஒட்ட மெடுத்தாள் வள்ளி.
சிறிது தூரம் சென்றதும் திரும்பிப் பார்த்தாள். காத்தானும் பார்த்தான்.
பார்வையுடன் பார்வை மோதிச் சிதறிற்று
இடுப்பிலே வரைந்து கட்டிய கொடுக்கு, நாரிக்கு முண்டு கொடுப்பது போலத் தாளம்போடும் "கத்திக்கூடு" தலையிலே பாம்பாக வளைந்திருக்கும் "தளைநார்" காலை எறிந்து. ஒரு கையை வீசி, மறுகையிலே கனக்கும் கள்ளு முட்டியுடன் கம்பீரமாகச் சென்று கொண்டிருந்தான் காத்தான்.
வள்ளிக்கு ஆனந்தம் தாங்கமுடியவில்லை. பரவச போதையில் அவள் கண்கள் சிவந்து மயங்கின. இரத்தக் குழாய்களுக்குள்ளே உணர்ச்சி அலைபாய்ந்தோடி, அவை வெடித்து விடும் போலிருந்தன.
மஞ்சள் நிற மாலை வெயில், பூமாதேவியின் மார்பகத்தைக் கட்டித் தழுவி சந்தனக் குழம்பை அள்ளி அப்பிக் கொண்டிருந்தது. கன்னியின் கன்னத்தில் முத்தமிட்டதும் சுண்டிச் சிவப்பதைப் போன்று அடிவானம் குங்குமச் சிவப்புடன் பொலிவு தரும் வேளை, உலகம் நிச்சுவாசப் பேரமைதியில் மூழ்கியிருந்தது.
சந்தியாகால மயக்கம் வள்ளியைச் சொப்பனாவஸ்தையில் அமுக்
இரு கரங்கள் அவளுடைய கன்னங்களை வருடுவது போன்ற உணர்வு
'என்ரை ராசாத்தி.
87

Page 57
மேடும் பள்ளமும்
அவளுடைய உதடுகள் விரிகின்றன. தனக்குள் சிரித்துக் கொள்கின்றாள்.
"கந்தன்!"
கனவுலகிலே சஞ்சரித்துக்கொண்டிருந்த வள்ளியின் காதிலே ஒரு மிடுக்கான குரல் விழுகின்றது. திடுக்குற்று எழுந்தாள் அவள்.
"கந்தன் இல்லையா?" சோமருடைய குரல் கனிந்தது.
"இல்லை."
"எங்கை போட்டான்?"
"சீவலுக்கு."
"அப்பசரி, கள்ளு.?
"உந்த மறைவிலை இருங்கோ கமக்காறன், கள்ளுக் கொண்டா
வள்ளி ஒரு கையால் புளாவில் ஊற்றினாள். சோமசுந்தரம்
இரண்டு கைகளாலும் வாங்கிக் குடித்தார். கள்ளில் மிதந்து நீந்தும் எறும்புகளை ஊதுகிறது அவருடைய வாய். கண்கள் வள்ளியை - அவளுடைய களை பொருந்திய முகத்திலிருந்து நிமிர்ந்து மிதந்த மார்புக் குவடுகளில் நிலைக்குத்தி நிற்கின்றன.
கள்ளு இனித்தது!
ஒன்று, இரண்டு, மூன்று.இனிக்கு மட்டும். இனித்து இனித்துப் புளிக்குமட்டும், போதை ஏறுமட்டும் குடித்தார் சோமசுந்தரம். தன் நிலையைத் தானுணராத எல்லையில் அவர்.
சோமசுந்தரம் அந்தக் கிராமத்தில் பெரும்புள்ளி' பரம்பரைப் பணக்காரக் குடும்பத்திலே பிறந்தவர்.
சர்வ வியாபியாய் எல்லா விஷயத்துக்கும் - கிராமத்து நன்மை தீமை, சண்டை சமாதானம் அனைத்திற்கும் - அவர் முக்கியஸ்தர். அவருக்கு ஏறக்குறைய முப்பத்தைந்து வயதிருக்கும். மொழுமொழுத்த
88

நீர்வை பொன்னையன்
தேகம். தொந்தி சரியும் பிள்ளையார் வயிறு. சிவப்பும் பச்சையும் சேர்ந்த குறிபோட்டசோமன்சோடு வேட்டி சோமு நல்ல சைவப்பழம். கல்யா ணம் செய்து இரண்டு மூன்று பிள்ளை குட்டிகளுமுண்டு. ஆனாலும் மனித நெஞ்சின் நமைச்சல் அவரது அங்கங்களை அரித்துக் கொள்ளு கின்றன.
"வள்ளி." சோமுவினுடைய குரல் கம்முகிறது. புதுப் பச்சை நோட்டு மடமடத்தது. பத்து ரூபா நோட்டு ஒன்றை எடுத்து நீட்டுகிறார்.
"நேத்துத் தந்த உங்கடை காசிலை பதினாறு போத்தில் காசுபோக இன்னும் மூண்டு ரூபாய் நாங்களல்லோ கமக்காறனுக்கு மிச்சம் தரவேணும்."
"கள்ளுக்கல்ல வள்ளி; உனக்கு."
அர்த்த புஷ்டியுடன் சிரித்தார் சோமு. வெறி துள்ளியது கண்களில், "எனக்கா?" பதட்டத்துடன் கேட்டாள் வள்ளி. "ஓ, உனக்குத்தான் இஞ்சை கிட்டவா."
ஒருகையில் பத்து ரூபா நோட்டு. மறுகையில் 'கள்ளுப்புளா.
வள்ளி திடுக்கிட்டாள். அவளுடைய உள்ளமும் உடலும் நடு ங்கின.
காலடியிலிருந்த திருவணையில் புளாவை' வைத்தார் சோமு. திடீரெனச் சோமு அவளுடைய கையை எட்டிப் பிடித்தார்.
கையை வெடுக்கென உதறிக் கொள்கிறாள் வள்ளி. தடைப்பட்ட அணை திடீரென்று திறந்துவிட்டதைப் போன்ற பலம் உடலில்.
"LJმწfr!"
சோமுவின் கன்னத்தில் ஒரு அறை
89

Page 58
மேடும் பள்ளமும்
ஒரே தாவலில் பாய்ந்து ஒலைவெட்டும் வெட்டுக் கத்தியை எடுத்தாள் வள்ளி.
"ஆரெண்டு நினைச்சாய்? கமக்காறனாம் கமக்காறன். போடா அங்காலை, மானங்கெட்ட நாய்."
சோமுவினுடைய தலை சுற்றியது, அவமானத்தால் உடல் கூனிக் குறுகியது.
தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு வெளியேறினார். கோபாவேசத்தால் அவர் உள்ளம் கொதித்தது.
வனத்தின் அடிவயிற்றில் ஒரு வெள்ளி முளைத்திருந்தது. விடிவெள்ளியா?
விடிந்துவிட்டது. மற்றவர்கள் போகமுன்பு, தான் போய்ப் பனங்காய்களை எடுக்கவேண்டும் என எண்ணினாள் வள்ளி.
வள்ளியைப்போல எத்தனையோ பருவப் பெண்கள், கிழவிகள் சிறுவர்கள் அதிகாலையில் தங்கள் தங்கள் பனந்தோப்புகளுக்குச் சென்று பனம் பழங்கள் பொறுக்குவது வழக்கம்.
விடிவெள்ளிதான் அவர்களுடைய நேரத்தைக் காட்டிக்கொள் ளும் வழிகாட்டி -
சோம்பல் முறித்துக்கொண்டு வெளியே வந்தாள் வள்ளி. தவளையை விழுங்கக் காத்தக்கொண்டிருக்கும் 'சாரைப் பாம் பைப் போலச் சந்திரனை விழுங்கக்காத்துக் கிடந்தது ஒரு கரிய இருள். வள்ளி கையிலே "கடகத்தை எடுத்தாள் நடையிலே உற்சாக மில்லை. முதல் நாள் மாலை நடந்த சம்பவம் உள்ளத்தில் சுற்றிச்சுழன்று வேதனையைக் கொடுத்துக்கொண்டிருந்தது. கோபமும் வெறுப்பும் அவளுடைய இதயத்தில் பின்னிப் பிணைந்து பொங்கிக்கொண் டிருந்தன.
வெளவால் ஒன்று அவளுடைய மூக்கை உரசியபடியே பறந்து சென்றது
90

நரவை \oபானனையன
திடுக்கிட்டு நின்றாள். தயக்கம்; பின் நடந்தாள்.
வானத்திலிருந்த இருள் சிறிது சிறிதாகப் பரவி ஆகாயம் முழுவதையும் மூடிவிட்டது.
ஒரே இருள், பேயிருள்:
பனந்தோப்பை அடைந்த பின்புதான் வள்ளிக்கு நிலைமை புரிந்தது. அயல் தோப்புக்காரர்கள் ஒருவரும் வரவில்லை. விடிவதற்கு அதிக நேரம் இருக்கின்றது என்பதை அறிந்தாள். வள்ளி பார்த்தது விடிவெள்ளியல்ல!
பனம் பழங்களை தேடினாள். ஒன்றும் அகப்படவில்லை. கும்மிருட்டில் பனம்பழங்களை எப்படித் தேடி எடுக்கமுடியும்? கைக ளிலும் கால்களிலும் முட்கள் குத்த அலைந்து கொண்டிருந்தாள்.
அடிவானத்திலிருந்து உச்சிவரையும் ஒரு இடிமுழக்கம் பாய்ந்து சென்றது.
எங்கோ பற்றைக்குள் கிடந்த ஆள்காட்டிப் பறவை ஒன்று அலறிக் கொண்டு ஓடியது.
பயத்தால் வள்ளியினுடைய உடல் நடுங்கியது.
மழையிலிருந்து தப்பிக்கொள்ளப் பனந்தோப்பிலிருக்கும் காவல் கொட்டிலுக்குள் ஓடினாள்.
ஒடியவள் ஏதோ ஒன்றில் மோதிக்கொண்டாள்.
என்னவோ குளிர்ந்த தசை போல.
வள்ளியை இரண்டு இரும்புக் கரங்கள் இறுகப் பிடித்தன!
ஒருவித வெறியிலே எக்காளச் சிரிப்புச் சிரிக்கும் அவனுடைய அசுரப் பிடிக்குள் வள்ளி!
"என்னை விடடா சண்டாளா!"
வள்ளியின் அபயக் குரல் மழை இரைச்சலைக் கிழித்துக் கொண்டு கிரீச்சிட்டது.
91

Page 59
மேடும் பள்ளமும்
அதற்குப் பதிலாக அவனுடைய ஓங்காரச் சிரிப்பு எதிரொலித்தது.
வெறி பிடித்தவனுடைய போதை ஏறிய அக்கினிமூச்சு மலர்ந்து கொண்டிருக்கும் அந்த மொட்டைக் கருக்கி எரித்துக் கொண்டிருந்தது.
வள்ளி விழுந்து புரண்டாள்; கதறி அழுதாள்
LG)6ir?
ஏற்பட்ட வெற்றியிலே எக்காளச் சிரிப்புடன் சென்று கொண்டி ருந்தான் அவன்.
வள்ளியும் சிரித்தாள், பேய்ச் சிரிப்பு
அவளுடைய சிரிப்பொலியில் அண்டகோளங்களும் அதிர்ந்தன. வள்ளி சிரித்துக் கொண்டே ஓடினாள்.
சுட்ட கத்தரிக்காயாக வெளிறி, வெதும்பியிருந்தது அவளுடைய உடல், சீலையும் சட்டையும் கிழிந்து அலங்கோலமான ஸ்திதியிலிருந்தன. உதடுகளிலிருந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது.
"ஐயோ! என்னை விடடா நான் மாட்டேன்! விடடா சண்டாளா!
கூக்குரலிட்டுக் கதறினாள், அழுதாள், சிரித்தாள், சிரித்தாள்-அழு தாள். மாறி மாறி அழுது சிரித்துக் கொண்டேயிருந்தாள் வள்ளி.
கந்தனுக்கும் மகனுக்கும் பகீர் என்றது. அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.
எப்படிப் புரியும்?
ஊரே கூடிவிட்டது.
"வள்ளிக்குப் பேய் பிடித்துவிட்டது" சிலரின் அனுமானமிது.
பேயோட்டியும் வந்து மடை போட்டு வள்ளியை பிரம்பால் அடித்துப் பேயை ஒட்டிக் கொண்டிருக்கிறான்.
கிரக நிலை போதாதென்று யாரோ ஒரு சாஸ்திரியார் கூறினார்.
92

நீர்வை பொன்னையன்
கிரக சாந்திக்கு கோழிச் சேவலுக்கும் வெள்ளைப் பூசனிக்காய்க 'கும் கந்தன் மகனைச் சுன்னாகச் சந்தைக்கு அனுப்பியிருக்கின்றான்.
"அவளுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது" என்று சொன்னார்கள் வேறு சிலர்.
பயித்தியத்துக்கு வைத்தியம் செய்ய சுதுமலை "விசர்ப்பரியாரி யிடம்" வள்ளியைக் கொண்டு செல்லவும் யோசிக்கின்றான் கந்தன்.
"உதெல்லாம் தப்பு வள்ளிக்கு மருத்தீடு" என்றும் சிலர் கை அடித்துக் கூறுகின்றார்கள்.
"அப்போ நான் மருத்தீடு' விழுந்த வள்ளியைக் குடத்தனைக்குக் கொண்டு போகட்டா?" என்றும் கந்தன் யோசிக்கின்றான்.
உலகத்தை வெறுத்த ஞானியாக வள்ளி அழுது சிரித்துக் கொண்டேயிருக்கின்றாள். வள்ளியின் பரிதாபநிலையைப் பார்த்ததும் பாராதவர்கள் போல் இருப்பவர்கள் அநேகள். அவர்களுள் சோம சுந்தரமும் ஒருவர்.
93

Page 60
CIGO F
66
எனக்கு வேலை கிடைத்துவிட்டது”. நான் இப்படி உரக்கச்
சத்தமிட்டிருக்கக்கூடாது. அப்படிக் கூவினாத்தான் என்னவாம். குடியா முழுகிவிடப் போகிறது? நான் ஏன்தான் அப்படிக் கூவியிருக்க வேண்டும்?
கோகிலா ஏன் என்னை அப்படிப் பார்த்துக்கொண்டு நிற்கின்றாள்; வியப்பின் அறிகுறியா அல்லது ஆனந்தத்தின் அதிர்ச்சியா? வியப்பும் ஆனந்தமும் சேர்ந்துவிட்டால் அப்படித்தான் நிற்பாள்போல இருக்கிறது. இவ்வளவு காலமும் அவள் என்னை என்னவென்று நினைத்திருந்தாள்?
சிறுபிள்ளைகளாக வட்டிற்சோறாக்கி, மண்ணையும் குரும்பட்டித் துண்டுகளையும் சோறும் கறியுமாக எங்கள் வீட்டுப் பனங்காயின் பணுவிலில் இட்டுக் கொடுக்க, நான் வாயில் போட்டுச் 'சப்பும் பொழுது பார்ப்பாளே அதே ஆச்சரியப் பார்வையை ஏன் இப்பொழுதும் வீசுகிறாள்?
"கோகிலா! உனது மனதின் ஆழத்திலுள்ள அந்ந எண்ணத்தை இன்றே களைந்துவிடு, உனது எண்ணம் உன்னையே ஏமாற்றிவிட்டதே. நீ வானவிற் புடவையும் அதற்கிணையச் சட்டையும் அணிந்து, இன்று என்முன்னால் வானத்துத் தேவதையாக, முதன்முறையாக நிற்கும் பொழுது அதே பார்வையைக்காட்டி என்னைச் சிறியவனாக்காதே. அதற்கு இப்பொழுது காலநேரம் சரியானதாக இல்லை."
"அதுதான் வேண்டும். அப்படித்தான் நீ சிரிக்க வேண்டும்.
94

நீர்வை பொன்னையன்
இப்பொழுது தான் நீ என்னை அறிந்துகொண்டாய். ஆடிவரும் அலைகளிலே வட்டவடிவமாகச் சுழிகள் குழிவதைப் போன்று உனது இரு கன்னங்களிலும் அவைகளை எப்படி ஏற்றிவிடுகின்றாய்." அவளை நான் உன்னிப்பாக நோக்குகின்றேன். அவள் ஏன் அந்திவானத்துச் செம்மைக் குழம்பைத் தன் கன்னக் கதுப்புகளிலே வரவழைத்துக் கொள்கின்றாள்? “கோகிலா! நீ எதையோ கூறமுயல்கின்றாய் போல எனக்குத் தெரிகின்றது. இல்லாவிட்டால் உனது முகம் சிவக்கக் காரணம் என்ன?. எனக்குப் புரிகிறது-எனக்கு வேலை கிடைத்துவிட்டது கிடைத்துவிட்டால் உனக்கும் எனக்கும்.? அதைத் தான் நீ நினைத்து விட்டாய் என்று நினைக்கின்றேன். அதற்காக உனது உடம்பிலுள்ள இரத்தத்தையெல்லாம். முகத்துக்கு நீ ஏற்றவேண்டியதில்லையே?”
"கோகிலா" மறுமுறையும் அழைக்கின்றேன். "கலிங்கம் சரசரக்க, நாணிக்கோணி நடந்துவரும் புதுமணப்பெண்ணைப் போன்று, நீ மெளனிக்குள் மெளனியாகிச் சிலையாக ஏன் நிற்கின்றாய்? அப்படியே உன்னைத் தாவி அணைத்து உனது கன்னத்துச் சிவப்பை என் முகத்தில் அப்பிக்கொள்ள வேண்டும் போலிருக்கின்றது." அவளை நோக்கி எனது கால்கள் நகருகின்றன. அவளது கைகளை அப்படியே தூக்குகி ன்றேன். உனது கைகள் ஏன் அப்படி நடுங்குகின்றன? கன்னத்தின் செம்மை, கரும் சிவப்பாகி ஏன் மெல்ல மெல்லக் கறுக்கின்றது. நீ என் னை இன்னும் புரிந்துகொள்ளவில்லை. நான் உனது முறை அத்தா னென்பதையும் நீ மறந்துவிடக்கூடாது. உனது கழுத்தில் தாலிகட்டி, உன்னை உலகறிய மணக்கப் போகின்றவன் நான்தானே. உனது முகத்தின் கருமையை எனக்கு இனிமேல் எப்போதாவது காட்டி விடா தே."- நான் எனது கைகளை விடுவித்துக் கொள்கிறேன்.
"ஓஹோ. எனக்குப் புரிந்துவிட்டது. உனக்கு வெட்கம் வந்து விட்டது. விழிகளைச் சுழற்றி, குழி விழச்சிரித்து, எனது சித்தத்தைக் கிறுகிறுக்கச் செய்த உனக்கு இப்பொழுது வெட்கம் வந்துவிட்டது. நன்றாக வரட்டும். ஆனால் அந்தக் கருமையூட்டும் கடும் வெட்கம் வரவேண்டாம். அது சிறிதளவும் எனக்குப் பிடிப்பதில்லை" - இதமான காற்று வீசுகின்றது. எங்கள் வேப்பமரத்தின் தளிர்களிலே தவழ்ந்துதான் வந்திருக்க வேண்டும். அந்த வேப்பமரந்தான் எப்படி வளர்ந்துவிட்டது.
95

Page 61
மேடும் பள்ளமும் - - சிறு பிள்ளைகளாகத் தோட்டமென்று மரங்களை நாட்டினோமே, அப்பொழுது வைத்த மரங்கள், தப்பிப் பிழைத்த ஒரேமரம். கோகிலா வும் பெரிய மனுஷியாக வளர்ந்துவிட்டாள் தான்; அதுதான் அந்த மரமும் வளர்ந்துவிட்டதே!
"நீ ஏன் என் கண்களுக்கு உலகத்தின் அழகியாகக் காட்சியளிக்கி ன்றாய். இயற்கையின் வண்ணங்களை யெல்லாம் உனது காலடியிற் கிடத்தி நீயில்லாவிட்டால் உலகத்தையே எனக்கு ஒரு வெற்றிடமாக்கி விடுகின்றாய். உலகத்தின் வெண்மையில் என்னைத் தவிக்கவிடாமல் உன்னிடம் நெருங்கவும் விடுகின்றாய் இல்லையே. உனது வெட்கம் சுக்குநூறாகட்டும், சிதறித்தெறிக்கட்டும்." தபோவலிமையின் உச்ச வரம்பை எட்டிப்பிடித்தவன் மாதிரி ஏதேதோ பேசுகின்றேன். அவளுக்குக் கேட்டிருக்குமோ என்னமோ தெரியாது. அவள் சிரித்துக் கொண்டிருக்கிறாள்.
எங்கள் தபால்காரன் மிகவும் நல்லவன். இல்லாவிட்டால் எனக்கு வரும் கடிதங்களையெல்லாம் ஏன் அவளிடம் கொடுக்க வேண்டும். எனக்கு நன்றாய்த் தெரியும்; எனது ஆச்சியை அவனுக்கு நன்றாய்த் தெரிந்திருந்தும் அவளும் ஆச்சியும் போய்க்கொண்டிருக்கும் பொழுது ஆச்சியிடம் கொடுக்காமல் அவளிடம் ஏன் கொடுக்க வேண்டும்? "அவனால் தான் உனக்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டதென்று கூற முடியாது. ஐந்து வருடங்கள் நான் ஊரிலில்லாத காரணத்தால் எமது சிறுபிள்ளைத் தொடர்பு அற்றுப்போய் விடுகிறதா என்ன? உன்னை நான் அளந்து விட்டேன். என்னை நீ புரிந்து கொண்டாய்."
"இவ்வளவு நாட்களும் எனக்கு நேரிலே வர வெட்கப்பட்டு ஓடி ஒளிந்துகொள்ளும் நீ இன்று மாத்திரம் எனக்கு முன்னால் இவ்வளவு நேரமும் ஏன் நிற்கின்றாய்? ஆச்சியும் இல்லாத இடத்தில். ஏன், ஆச்சி தோட்டத்துக்குப் போனது உனக்குத் தெரியும் தானே? தெரிந்துதான் நீ வந்திருக்க வேண்டும். இன்று வந்த கடிதத்தில் மாத்திரம் எனக்கு வேலை அழைப்பு வந்திருக்கிறது என்று உனக்கு எப்படித்தெரியும்? "கடிதம் நீட்டிய கரத்தைப் பார்க்கின்றேன். ரோஜா மலர் போன்ற உன்னு டைய கைகளில்தான் எவ்வளவு பசுமை? உன்னை அணைக்க
96

நீர்வை பொன்னையன்
வேண்டும் போல் என்னென்னவோ செய்கின்றது." கைகளை இலாவண் யமாக எடுத்து அணைக்க முயல்கின்றேன். இமை வெடிப்புக்குள் அவள் கண்கள் பிதுங்குகின்றன. யாரோ வீட்டுப் படலை விடும் சத்தம் கேட்கிறது. ஆச்சியாக இருக்கலாம். பட்டதும் படாததுமாக அவளின் ஸ்பரிசத்தை உணரக்கூடியதாக இருக்கிறது. கோகிலா.கோகிலா.'
ஆச்சியா..? ஆம் ஆச்சிதான். தாய்மையின் பூரணத்துவம் தெரி கிறது. நான் சுதாரித்துக்கொள்கின்றேன். அவள் தான் எத்தனை நாட்க ளுக்கு என்னை இப்படியே பார்த்துக்கொண்டிருக்க முடியும்? "காடு வெட்டிச் சேலையின் மடமடப்புச் சத்தம் கேட்கிறது. கோகிலா வந்ததை அவள் கவனித்திருக்க முடியாது."
'கண்டிருந்தால்?
நான் கண்களை இறுக மூடிக்கொள்கிறேன். "நான் பரீட்சையே பாஸ் பண்ணவில்லையென்று எத்தனை பேர் எப்படி எப்படியெல்லாம் பேசிக்கொள்கின்றனர். அப்புதான் சில வேளைகளில் கறுவிக்கொண் டாலும் ஆச்சி எவ்வளவு தூரம் அன்பை அள்ளிக்கொட்டுகின்றாள், நான் ஏன் இன்னும் கண்களை மூடிக்கொண்டிருக்கின்றேன். எனக்குத் தான் வேலை கிடைத்துவிட்டதே. ஆச்சியென்று கூப்பிட எனது வாய் துடிக்கின்றது. என் சப்த நாடிகள் அடங்கியொடுங்குகின்றன."
"என்ரை அப்பன் பாட்டன்மார் படிக்காதவர்கள் தான். அதனால் நானும் படிக்கக்கூடாதாம்? படித்தும் வேலையில்லாவிட்டால் எவ்வளவு ஏளனம்? கேலிக்கதைகள்? உத்தியோகம் பார்க்காத பரம்பரையில் பிறந்த படியால் நானும் உத்தியோகம் பார்க்கக்கூடாதாம்; சில ஞானிகள் உபதேசமும் செய்கிறார்கள். ஆனால் பணம் கொடுத்துவிட்டால் அவர்க ளுக்கும் வேலை கிடைத்துவிடும். நான் முயற்சிபண்ணுவதில்லை என்று சிலருடைய கழுகுக் கண்களுக்குத் தெரிந்துவிடு கின்றது. பணம் கொடுத்து வேலை வாங்கும் நிலைபரம் எனக்கில்லை. மனமும் இல்லை. ஆன முயற்சி செய்யாமல் நான் ஏன் இருக்கப் போகின்றேன். முயற்சி யைப் பற்றி இவர்களுக்கென்ன தெரியப் போகிறது அனுதாபத்தினாலா கூறுகின்றார்கள்? வாழ்க்கையில் இவர்கள் எதைத்தான் சாதித்துவிடு கிறார்கள்? போலிஸ் கான்ஸ்டபிளாகச் சேர்ந்து போலிஸ் கான்டபிளா
97

Page 62
மேடும் பள்ளமும் கவே றிட்டையர் ஆகும் பேர்வழிகள், முயற்சியைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியப்போகிறது. எனக்குப் புத்திசொல்வதற்கு இவர்கள் எதனைச் சாதித்திருக்கின்றனர்? இவர்களின் முயற்சியெல்லாம் எங்கிருக்கின்றது? கலியாணம் செய்வதிலும் பிள்ளை பெறுவதிலுமா?"
"எனக்குக் கலியாணம் பேசுகின்றார்கள். கலியாணம் கண்ட றியாத கலியாணம். என்ன காரணத்திற்காகப் பேசுகின்றார்கள் காசுள்ள வர்களென்றால் யாராவது தங்கள் மகளுக்கு - அவள் எப்படியான வளாக இருந்தாலும் கலியாணம் செய்துவிடலாம் என்று எண்ணுப வர்கள் பலரைக் காண்கின்றோம். ஏன் எனக்குக் கலியாணம் பேச வேண்டும்? கலியாணம் செய்துவிட்டால் வேலை கிடைத்துவிடுமா? வேலை கூடத் தேடித்தருவார்களாம். கலியாணம் முடிந்ததும் வேலை கிடைக்கா விட்டால்? வசதியுள்ள குடும்பத்தினர் வேலையும் தேடிக் கொடுத்துக் கல்யாணமும் செய்துகொள்ளலாம். அப்படியென்றால் கோகிலாவைப் போன்ற வசதியில்லாத பெண்களெல்லாம் தூக்குப் போட்டுச் சாகவேண்டியதுதானோ? பணத்துக்காக கல்யாணம் செய்வது சரியென்றால் அதே பணத்திற்காக விபசாரம் செய்வது மட்டும் குற்றமாகி விடுகிறதே."
ஆச்சி என் முகத்தைக் குனிந்து பார்க்கின்றாள். எனது நெற்றியின் வியர்வைத் துளிகளைத் தனது முந்தானைச் சீலையால் துடைத்து விடுகின்றாள். எனக்கு அவளின் காலடியில் விழுந்து அழவேண்டும் போல இருக்கின்றது."ஆச்சி எனக்கு வேலை கிடைத்தவிட்டது. ஆச்சி எனக்கு வேலை கிடைத்துவிட்டது.
அப்பு கோவிலுக்குப் போய்விட்டு வருகிறார். அவருக்கு ஆல கால நஞ்சுண்டவரிடம் அசைக்கமுடியாத நம்பிக்கை. அந்த நம்பிக்கை யில் அவருக்கு ஒரு நம்பிக்கை, கையில் வெள்ளித் தாம்பாளம். அது நிறையப் பழங்கள், பூக்கள், உடைத்த தேங்காய், விபூதி, சந்தனம் இத்தியாதி, நான் பயணம் போவதற்குத் தயாராகின்றேன்.
தனது நம்பிக்கையின் வெற்றிப் பெருமிதத்தில் அப்பு தாம் பாளத்தை என்முன் நீட்டுகின்றார். விபூதியையும் சந்தனத்தையும் எடுத்து எனது நெற்றியில் பட்டை தீட்டிப் பொட்டிடுகின்றேன். உள்ளத்தின்
98

நீர்வை பொன்னையன்
நம்பிக்கை அவர் முகத்தில் அப்பிக்கிடக்கிறது. ஆச்சி முன் செல்ல நான் பின் தொடர்கின்றேன். வாசலில் கட்டியிருந்த பசுமாடு என்னைப் பார்த்துத் தலையை அசைத்து எனது கால்களை நக்கிக்கொள்கிறது. ஆச்சி என்னைப் பார்த்துச் சிரிக்கிறாள்.
ஆச்சி போய் வருகின்றேன்' நான் நடந்துகொண்டிருந்தேன்.
எனது கண்கள் வேலியை ஊடறுத்துச் செல்கின்றன. அவள்' இங்குதான் எங்கோ இருக்கவேண்டும், "அத்தான், போய்விட்டு வாருங்கள்"-எனது காதுகளில் மெதுவாகக் கேட்கிறது. திரும்பிப் பார்க்கவேண்டும் போல இருக்கின்றது. ஆச்சி, கோபித்துக்கொள்ளப் போகின்றாள். என்னால் திரும்பிப் பார்க்க முடியவில்லை. ஒழுங்கை முடக்கில் திரும்புகின்றேன். அப்பு பின்னால் வந்துகொண்டிருக்கின்றார். ஆனால் அவரால் என்னை அவதானிக்க முடியாது. அவர் இன்னும் முடக்கைத் தாண்டவில்லை.
கோகிலாவின் கை வேலிக்கு மேலாகத் தெரிகிறது; ஒரு மல்லி கைக் கொத்து. எது மலர், எது கை? வெடுக்கெனப் பற்றுகின்றேன். மலர்க் கொத்து கைகளில் அகப்படுகின்றது. வேலிப்பொத்தலுக்கூடாக இரு விழிகள் ஏதோ பேசுகின்றனவே, "போய் வருகிறேன் கோகிலா"
"மறந்துவிடாதீர்கள்.அத்.தா.ன்!"
மிகப் பெரிய பாடசாலை. எங்கும் மாடிகள் நிறைந்திருக்கின்றன. வகுப்பறையுள் கல்லூரி அதிபர் கூட்டிச் சென்று அறிமுகம் செய்து வைக்கின்றார்.
"வணக்கம் சேர்."
வணக்கம்.'பாடம் ஆரம்பிக்கப்படவேண்டும். அவர்களுக்கு இலக்கியப் பாடம். மிகவும் நல்லதாகிப் போய்விட்டது இலக்கிய மென்றால் எனக்கு உயிர்.
"இலக்கியப் புத்தகத்தைக் கொண்டுவாருங்கள்"- ஒரு மாணவன் தருகின்றான். பாரதியார் பாடல்களில் தெரிந்தெடுக்கப்பட்ட தொகுப்பு எடுத்தவுடனேயே குயிற் பாட்டு. இந்தப் பாட்டைத்தான் எத்தனை தட
99

Page 63
மேடும் பள்ளமும்
வைகள் படித்திருப்பேன்; படிக்கப் படிக்க இனிமை கொடுத்துக் கொண்டேயிருக்கும், குயிற் பேடொன்று தனது காதலனுக்காக ஏங்கிக் குரலெழுப்புகின்றது. அந்தக் குயிலுக்குக் காதல் போய்விட்டாலோ சாதல்தான். வளர்ந்தோங்கிய மரங்கள் சூழ்ந்த ஒரு குளம் தென்றல் வீசிக் கொண்டிருக்கிறது. அந்த மரக்கிளையொன்றில் பேடைக் குயி லொன்று குரலெழுப்பிக்கொண்டிருக்கின்றது. யாரோ வருவது போன்ற உணர்வு ஒருவர் வந்துகொண்டிருக்கின்றார். தலையில் முண்டாசுக்கட்டு; நெற்றியில் பித்தளைத் தாம்பாளம் போன்ற குங்குமப் பொட்டு ஒளி வீசும் கண்கள். அப்பப்பா! எவ்வளவு கம்பீரமும் ஆண்மையும் நிறை ந்த தோற்றம், பாரதியாராகத்தான் இருக்க வேண்டும். ஆமாம் அவரே தான். கவிதை வெள்ளம் மடை திறந்து பாய்கின்றது. பேடைக்குயில் - அங்கு கோகிலா. அவளுக்கு என்ன நடந்தது; ஏதோ கூறுகின்றேன். எங்கோ சிரிப்பொலி. மாணவர்களெல்லாம் சிரிக்கின்றார்கள்.
"அமைதி.அமைதி.அமைதி" சிரிப்பு அடங்கவில்லை. விழுந்து விழுந்து சிரிக்கின்றார்கள். என்ன செய்வது? கண்களை மூடிக் கொள்கின்றேன்.
கண்களை மூடிக்கொண்டால் மட்டும் கடமை தீர்ந்து விடுகி ன்றதா? இவர்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும். "நீங்கள் மாண வர்களில்லை, கழுதைகள், மிருகங்கள். எல்லோரும் வெளியே போக லாம்." ஒருவரும் எழும்பும் சத்தம் கூட இல்லை. கண்களைத் திறந்து நோக்குகின்றேன். ஆச்சி என்னையே பார்த்துக்கொண்டு நிற்கின்றாள். நான் வாசித்துக் கொண்டிருந்த பத்திரிகை வீட்டு முற்றத்தில் கிடக்கி ன்றது. வேலை.?
வெயில் காய்ந்து கொண்டிருக்கிறது.
YA
OO

IկսI6Ծ
தேய் நிலா அழுது கொண்டிருந்தது. விடிந்து விட்டது-நன்றாக விடியவில்லை. எங்கும் அமைதி, அந்த அமைதியைப் பிளந்துகொண்டு ‘கடபுட கடபுட' என்ற மாட்டு வண்டிகளின் சத்தம் அவனை எழுப்பி விட்டது.
“செல்லம். செல்லம் விடிஞ்சுபோச்சு, தேத்தண்ணியை வை. நான் சந்தைக்குப் போகவேனும்’ சோம்பல் முறித்துக் கொண்டே அரைத் தூக்கத்துடன் எழுப்பினான் கார்த்திகேசு.
சோர்ந்து துவண்டு போய்க் கிடந்த செல்லம்மா, அவசர அவசர மாக எழுந்து அரைப் பானை தண்ணிரைக் கொதிக்க வைத்தாள்.
"என்னண்டு வெறு வயித்தோடை நடக்கப்போறாய்? ராத்திரி அவிச்ச மரவள்ளிக் கிழங்கு இரண்டு துண்டு கிடக்கு அதைத் திண்டுட் டுப் போவனப்பா." சோர்வாகக் கூறினாள் செல்லம்.
இரண்டு சிரட்டை தேத்தண்ணீரையும் பிசு, பிசு' என்று இழு படும் ஊசிப்போன மரவள்ளிக் கிழங்கு இரண்டு துண்டையும் தனது சாண் வயிற்றுக்குள் தள்ளினான். கருகி எரியும் புகையிலைப் பழுத்தற் சுருட்டை மூட்டிக் கொண்டு மகன் படுத்திருந்த சாக்கை எடுத்தான் கார்த்திகேசு சாக்கை இழுத்ததும் சிணுங்கிக் கொண்டு எழும்பிவிட்டான் மகன் முருகேசு.
"அப்பு வாத்தியார் சம்பளக் காசு கொண்டுவரச் சொன்னவர். காசு தா அப்பு."
101

Page 64
மேடும் பள்ளமும்
"இண்டைக்குப் பின்னேரம் தாறன். சந்தைக்குப்போய் வாழைக் குலை வித்துக் கொண்டு வந்து தாறன். என்ரை ராசாவுக்கு ஒரு நல்ல சட்டையும் வாங்கி வாறன்." செல்லமாகச் சொல்லி மகனுடைய முதுகைத் தடவிக் கொடுத்தான்.
"ராசாவுக்கு ஒரு மந்திரியும் வாங்கிவா" என்று சொல்லிச் சிரித்தாள் செல்லம்.
"மந்திரி மட்டுமல்ல; ஒரு ராணியும் கூட." செல்லத்தை ஒரு மாதிரிப் பார்த்துக் கொண்டு சிரித்தான். எல்லோரும் சேர்ந்து சிரித்தனர். சிரித்துக்கொண்டே ஒரு மைலுக்கு அப்பாலுள்ள தனது தோட்டத்துக்கு ஓட்டமும் நடையுமாகச் சென்றான் கார்த்திகேசு.
உதயக் காற்று மென்மையாக வீசிக்கொண்டிருந்தது. காகங்களும் குருவிகளும் கத்திக்கொண்டு வட்டம் வட்டமாக ஓடிக்கொண்டிருந்தன. அலை அலையாக எழுந்த எண்ணக் குவியல்களில் மனக்கோட்டை கட்டிக்கொண்டு, பனஞ்சோலைகளுக்கூடாக விர் என்று நடந்து கொண் டிருந்தான் அவன்.
நீர்வளம் நிலவளத்துடன் பொருள் வளமும் சோந்த ஊர் நீர்வேலி என்று சொல்வார்கள். ஆனால் கார்த்திகேசுவைப் பொறுத்த மட்டில், அவனுக்கு என்றைக்கும். "இல்லை" என்ற கூப்பாடுதான் "இல்லை" என்ற சொல் கார்த்திகேசுவினுடைய - ஏன் அவனுடைய வர்க்கத்திற்கே பிறப்புரிமையாச்சே,
ஐந்து சகோதரிகளுடன் கூடப் பிறந்தவன் கார்த்திகேசு பெற்றோர் கள் நேரத்துடனேயே - பிள்ளைகள்; நண்டும் குஞ்சுமாக இருக்கும் பொழுதே கண்ணை மூடிவிட்டார்கள். குடும்ப பாரம் மூத்தமகன் கார்த்திகேசுவின் மேல் தான்.
இரவு பகலாக உழைத்தான் மாடு மாதிரி, நாளாந்தர வாழ்க்கைச் செலவு போக, ஏதோ சிறு தொகை மிஞ்சியது. எல்லையில்லாத அல்லல் களுக்கிடையில், சகோதரிமார்களுடைய வீட்டில் விளக்கேற்றிவிட்டான், அவர்களுடைய கழுத்தில் தாலிக்கயிற்றை ஏறச் செய்துவிட்டான். சீதனம்-அப்பப்பா அதற்கு அவன் பட்ட பாடு, இன்னல்கள்
102

நீர்வை பொன்னையன்
ஒரு வகையாகத் தலையிலிருந்த சுமை இறங்கிவிட்டது. அவன் தனி மனிதன். தன்னுடைய சாண் வயிற்றிற்கு உழைப்பதுதான் அவன் கடமை இனிமேல், கூலிப் பிழைப்புக்கும் போகத் தயார் அவன். ஆனால் அது கெளரவமில்லையல்லவா? பரம்பரைத் தொழிலையே பார்ப்பது என்று தீர்மானித்தான். கமமா? அதற்கு நிலம்? குத்தகை நிலத்தில் இறங்க வேண்டியதுதான். வேதனையாக இருந்தது. மனதைத் தேற்றிக் கொண்டான். பலவகைப் பயிர்கள், அவற்றுடன் ஆயிரம் கன்று வாழையும் பயிர் செய்தான். வாழ்க்கை ஒருமாதிரி ஒடத்தான் செய்தது.
"தலையிடி என்று நாளைக்குப் பாயில் படுத்தால் ஆர் பார்ப்பது? பெண்டாட்டி என்று ஒருத்தி இருந்தால் தானே தண்ணியாவது கொதிக்க வைத்து ஊத்துவாள்," என்று பீடிகை போட்டார் அயல் வீட்டு வேலுப் பிள்ளை. சகோதரிகள், மற்றும் உறவினர்களும் பேச்சை எடுத்தார்கள். அயலவர்களுடைய அண்டல் எல்லாமாகச் சோந்து ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது கார்த்திகேசனை.
கார்த்திகேசனும் மனிதன் தானே? அவனுக்கும் மனித உணர்ச்சி உண்டல்லவா? அத்துடன் அவன் வயது வந்த வாலிபன். கட்டுமட்டான, ரத்த புஷ்டியுள்ள தேகம். கறுவல்தான்; ஆனால் கவர்ச்சியுள்ளவன். ஒரு சிலர் அவனில் கண் வைத்திருந்தனர். அவனுக்கும் இரண்டொரு பெண்களில்.
சின்னத்தம்பி கார்த்திகேசனுடைய அயல் தோட்டக்காரன். இருவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்வது வழக்கம். சின்னத்தம்பி யின் மகள் செல்லம்மா தோட்டத்துக்குச் சாப்பாடு கொண்டு வருவாள். அதைக் குழைத்துத் தகப்பனுக்குக் கொடுப்பாள். சிலவேளைகளில் கார்த்திகேசனுக்கும் கொடுப்பாள். அத்துடன் அவள் தோட்ட வேலைக ளும் செய்வாள். இருவரும் சந்தித்தனர், பிரிந்தனர். பேச்சில்லை. பார்வை ஒன்றில்தான் ஏதோ புதைந்திருந்தது. இது மற்றவர்களுக்குத் தெரியாது.
செல்லம்மாவுக்கு வயது இருபதிருக்கும். அவள் அழகியல்ல; சுமாரான அழகு. இரும்பு போன்ற உடற்கட்டு தண்ணீர் இறைப்பதிலோ, புல்லுவெட்டுவதிலோ, பாரங்கள் சுமப்பதிலோ செல்லத்தை ஒருத்த
103

Page 65
மேடும் பள்ளமும்
ராலும் அசைக்க முடியாது. அவள் அவ்வளவு கெட்டிக்காரி, களைப் பையும் பாராமல் வேலை செய்வாள்.
சமய சாத்திர சம்பிரதாயங்களுடன் ஊரிலுள்ள பெரியவர்கள் மத்தியில் கார்த்திகேசு செல்லம்மாவைக் கைப்பிடித்தான். இருவருடைய வாழ்க்கையும், இன்பதுன்பங்கள் நிரம்பியதாக ஓடிக்கொண்டிருந்தது. பிறர் கையை நம்பி அவள்கள் வாழவிரும்பவில்லை. பாடுபட்டு உழைத் தார்கள்; அரைகுறைப் பலன்களை அனுபவித்தார்கள்.
இரவும் பகலும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. அவர்களு டைய வாழ்விலும் ஒரு சில மாற்றங்கள் ஏற்படத்தான் செய்தன. தாயானாள் செல்லம்மா.
முருகேசன் பிறந்த காலமோ என்னவோ செல்லம் படுக்கையில் கிடக்க நேர்ந்தது. நெருப்புக் காய்ச்சல் கெளவிக் கொண்டது. பரிகாரிமார் வந்து போனார்கள். பணம் மருந்தில் கரையத் தொடங்கி முடிந்தும் விட்டது. அப்பா கார்த்திகேசன் பட்டபாடு கவலை, கண்ணி, கஷ்டம், ஏக்கம் எல்லாம் அவனை விழுங்கிக் கொண்டிருந்தன. ஒரு வகையாகச் செல்லம் சாவின் வாயிலிருந்து தப்பிப் பிழைத்துக் கொண்டாள்.
செல்லம்மா பிழைத்துவிட்டாள்; ஆனால் அவளுடைய நோயுடன் வந்த தரித்திரம் அவர்களை விட்டுப் போக மறுத்துவிட்டது.
கடன் வாங்குவது, வாங்கிய கடனுக்கும், வட்டிக்குமாகச் சேர்த்து உழைப்பது அது மட்டுமா? பயிர்கள் திறமாக வந்தாலென்ன, கருகிச் செத்தாலென்ன, வருடா வருடம் நிலக் குத்தகை கட்டாயமாகக் கொடுத்தே தீரவேண்டும். நிலக்குத்தகை கொடுக்க மாட்டாமல் திண்டா டும் கார்த்திகேசனுக்குக் கடன், வட்டிப்பணம் வேறு கார்த்திகேசன் மட்டுமல்ல, அவனைப் போல அநேகள் செத்துக்கொண்டே வாழ்கிறார் கள். காலம் வளர்ந்து கொண்டிருந்தது; காலத்துடன் கடனும் வட்டியும் சேர்ந்து வளர்ந்து கொண்டேயிருந்தன.
முருகேசன் நாலாம் வகுப்பைத் தாண்டிவிட்டான். அவன் அவர்க ளின் அன்பின் சின்னம்; செல்வக் களஞ்சியம். தாங்கள் பட்டினி கிடந் தாலும், அவன் நன்றாகச் சாப்பிட வேண்டும்; உடுக்க வேண்டும்; மற்றப்
104

நீர்வை பொன்னையன்
பிள்ளைகள் மாதிரி விளையாடவேண்டும். வறுமை என்ன என்று அவன் அறியாமலிருக்க வேண்டும் என்பது அவர்களுடைய ஆசை. அது மாத்திரமல்ல. தாங்கள் கஷ்டப் பட்டாலும் முருகேசனை ஒரு அரசாங்க உத்தியோகத்துக்குப் படிப்பிக்க வேண்டுமென்ற மனக் கோட்டையும் கட்டினார்கள். முருகேசனும் கெட்டிக்காரன். வகுப்புப் பாடங்களில் மாத்திரமல்ல, குறும்புத்தனத்திலும் அவன் நிபுணன்,
கார்த்திகை பிறந்தது.
காற்றும் மழையும் தொடர்ந்தன. நாலு ஐந்து நாட்கள் தொடர்ந்தாற் போல் மழை, அடைமழை, பெருவெள்ளம்! சீறியடித்தது காற்று, புயற் காற்று மரங்கள் முறிந்தன, பாறின, விழுந்தன. வீடுகள் சரிந்து விழுந்தன ஒரே பயங்கரம்.
யானை மாதிரி, மதமதவென்று கொழுத்து வளர்ந்து நின்ற வாழை கள், குலை வந்தது, வராதது, எல்லாவற்றையும் அடித்து முறித்து விட்டது புயல். பாறிப்போன பச்சிலைக் காடுபோல, எல்லாத் தோட்டத்து வாழை களும் முறிந்து, வாடிச் சோர்ந்து கிடந்தன.
புயற்காற்று எல்லோருடைய வாயிலும் மண்ணைப் போட்டு விட்டது. எங்கும் பட்டினி, பஞ்சப்பாட்டு. கடன் கண்ணிர். நீண்ட பெரு மூச்சுக்கள்!
அரசாங்கம் ஏதோ நஷ்டஈடு கொடுக்க முன் வந்தது தான். ஆனால் ஊரிலுள்ள பெரிய தலைவர்களுடைய கண்ணில், உண்மை யாகக் கஷ்டப்பட்டவர்களை எப்படித் தெரியப் போகிறார்கள்?
கார்த்திகேசன் தனக்கு நஷ்ட ஈடு கிடைக்குமென்று நம்பவும்
இல்லை. அது அவனுக்குக் கிடைக்கவும் இல்லை! ஏதோ அரைகுறைப் பட்டினியுடன் காலத்தைக் கடத்தினார்கள்.
ஒட்டமும் நடையுமாகச் சென்று கொண்டிருந்தான் கார்த்திகேசு. அவனுடைய உள்ளத்தில் எத்தனை ஆசைகள், மனக்கோட்டைகள்;
இன்ப உணர்ச்சிகள். அப்பா என்ன சந்தோஷம்
105

Page 66
மேடும் பள்ளமும்
அவனுடைய தோட்டத்தில் அங்குமிங்கும் நாலு ஐந்து வாழைகள் நின்றன; புயலில் தப்பியவைதான், இரண்டு மூன்று வாழையில் குலைகள், எல்லாம் பிஞ்சுக் குலைகள்; ஆக ஒன்றேயொன்று முற்றியகுலை; நன்றாக முற்றி விட்டது; இடைப்பழம் பழுத்த குலை.
"கப்பல்க் காய்மாதிரித் திரண்ட காய், ஏறக்குறைய முன்னூறு காய்கள், குறைந்தது. ஏழு ரூபாவிற்கு விற்கலாம். பொடியனுக்குச் சம்பளக் காசு இரண்டு ரூபா. மூன்று ரூபாவிற்கு அவனுக்கு ஒரு சட்டை மிச்சத்துக்கு அரிசி சாமான்கள், செல்லத்திற்கு ஒரு வாசச் சவுக்காரம், இனிப்பு." சிந்தித்துக் கொண்டு சென்ற அவனுடைய உதட்டில் அவனையுமறியாமலே ஒரு சிரிப்பு; இன்பமும், வேதனையும் கலந்த சிரிப்புத் தோன்றி மறைந்தது.
வாழைத் தோட்டத்திற்குள் வந்து விட்டான் கார்த்திகேசு. குலை வாழையடிக்குச் சென்ற பொழுது.அடிவயிறு பகீரென்றது ஐயோ.
குலைவாழை தலைகுனிந்து நின்றது; அதில் குலையில்லை?
அதிர்ச்சி, ஆவேசம், கோபம், துக்கம் எல்லாம் கார்த்திகேசனைப் பிடித்து உலுக்கின. அவன் உடல் நடுங்கியது.
வாழையடியில் குந்தி இருந்தான். "மகனுக்குச் சம்பளக் காசு. அரிசி சமான். சட்டை. எங்கே போவது? அவன் மனம் குமுறிக் கொண்டிருந்தது. வெட்டுண்ட வாழையில் இருந்து தண்ணீர் வடிவது போல, அவனுடைய கண்களிலிருந்து கண்ணின் ஓடியது."
"பிள்ளையார் கோவில் பூசைக்கு என்று பொழுதுபட நாலஞ்சுபேர் வந்து, எல்லாருடைய தோட்டங்களுக்குள்ளும், வாழைக் குலை வெட்டி னார்கள். உன்னுடைய தோட்டத்திற்குள்ளும்." கணபதி முடிக்காமலே இழுத்தான்.
"என்ன, கோயிலுக்கா? நாசமாய்ப்போக, தலையிலே இடியேறு விழ. ஆக ஒரே ஒரு குலை. கோவிலும் மண்ணாங்கட்டியும்." ஆவேச மாகக் குமுறினான் கார்த்திகேசு.
நம்பிக்கை நாசமாய்ப்போன நெஞ்சில் கோபத்தீ கொழுந்து விட்டெரிந்தது.
106

நீர்வை பொன்னையன்
"அம்மா காசு தா, இல்லாவிட்டால் நான் பள்ளிக்குப் போக மாட்டன்." பிடில:தம் பிடித்துக் கொண்டிருந்தான் முருகேசு.
"போ ராசா, போ. பின்னேரம் காசு தாறன். கொப்பர் கொண்டு வருவார்." வீட்டிற்குள்ளிருந்தபடி கூறினாள் செல்லம்.
"இல்லை. போகமாட்டன். காசு தா."
எரிகிற நெருப்பில் எண்ணெய் விடுகிறமாதிரி இருந்தது கார்த்தி கேசனுக்கு.
"தம்பி. ராசா. போமோனை பள்ளிக்கு." வேதனையுடன் உள்ளம் குன்றியபடியே சொன்னான் கார்த்திகேசு.
"இல்லை. போகமாட்டன்."
"போடா." உரத்துக் கத்தினான் கார்த்திகேசு.
"நான் மாட்டன்."
"சரி, இந்தா காசு." அமைதியாகக் கூறினான். அவனுடைய கண்கள் ஒடுங்கிச் சிறுத்தன. நெற்றிப் புருவம் மேலே சென்றது.
பால் குடித்த இளம் பசுக்கன்று ஆனந்தத்தால் வாலைக் கிளப்பித் துள்ளுவது போல, துள்ளிக் குதித்துக் கொண்டு தகப்பனிடம் ஓடினான் முருகேசு.
"LøTirr. LGTITirl."
"ஐயோ! ஐயோ! அப்பு"
முருகேசனுடைய முகத்திலும், முதுகிலும் கார்த்திகேசனுடைய கைகள் விழுந்து கொண்டிருந்தன.
"பளார். பளார்."
"வேணுமா காசு, வேணுமா?"
"ஐயோ! வேண்டாம் என்ரை அப்பு, அம்மா, அம்மோ, அப்பு அடியாதை அப்பு"
107

Page 67
மேடும் பள்ளமும்
வீட்டிற்குள்ளிருந்த செல்லம் பதைபதைத்துக்கொண்டு ஓடி வந்தாள்.
கார்த்திகேசன், பேய் அறைந்தவன் மாதிரி எங்கோ பார்த்தபடியே இருந்தான். முருகேசனுடைய முகத்தைப் பார்த்ததும் செல்லத்துக்குப் பெற்ற வயிறு பற்றி எரிந்தது. அவனுடைய கையைப் பிடித்து இழுத்துக் கொண்டுபோய், "பாவி.பார் இவனுடைய முதுகை. கட்டேலை போக. ஐயோ" என்று கதறினாள் செல்லம்.
முருகேசனுடைய முதுகிலே, அவர்களுடைய செல்வ அன்புக் கனியின் தளிர்மேனியிலே மண் றோட்டில் வண்டி போன தடங்கள் மாதிரிக் கைத் தழும்புகள் பதிந்திருந்தன.
"தன்னுடைய கண்களைப் பிடுங்கி எறிந்தாலோ" என்ற மாதிரி இருந்தது கார்த்திகேசனுக்கு.
அவன் வாய்விட்டுக் கதறினான். செல்லமும் மகனும் அவனுடன்
சேர்ந்து கொண்டனர்.
அவர்கள் உள்ளத்திலே புயல், ஏன் அவர்கள் வாழ்க்கையிலும் புயல் குமுறிக் கொண்டிருந்தது.
108

புரியவில்லை!
இருவரும் ஒன்றும் பேசவில்லை. ஏன் பேசப்போகின்றார்கள்? அவர்கள் ஒருவருடன் ஒருவர் கோபம். 'யார் முதலில் பேசுவது? இதுதான் அவர்களுக்கிடையிலுள்ள பிரச்சினை. ‘ஒருவர் பேசினால் மற்றவர் பேசிவிடலாம். இத்துடிப்பு இருவர் உள்ளத்திலும் இருக்கத்தான் செய்தது. ஆனால் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வேண்டுமே. அது அவர்களிடமில்லை. அதனால் ஒருவரும் பேசவில்லை.
பாடசாலை முடிந்துவிட்டது. இருவரும் தங்கள் வீடுகளுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். அக்கம் பக்கத்தில் யாருமில்லை. மாந்தோப்பு நெருங்குகின்றது. அவர்கள் உள்ளத்தில் ஏக்கமும் துடிப்பும் உறவாடுகின்றன.
"அவன் கதைக்காமல் விட்டால்..?"
அவளுக்கு அழவேண்டும் போலிருக்கின்றது.
"அவள் பேசாமலே விட்டுவிடுவாளோ?" என்ற எண்ணம் அவன் மனதில் படுகின்றது. அவ்வேதனையை அவனால் தாங்கமுடிய வில்லை. அவன் உள்ளம் கனத்தது. கண்கள் பனித்தன. முட்டிவந்த கண்ணிரைச் "சேட்டினால்" துடைக்கின்றான். "கைகளை எடுத்துத் துடைப்பதை அவள் பார்த்துவிட்டால் அவனுக்குத் தோல்வி. அவன் ஆண்பிள்ளை. அவனுக்குத் தோல்வியைச் சகித்துக்கொள்ள முடியாது.
வரிசைக் கிரமமாக கிளைத்துச் சடைத்து நிற்கும் மாமரங்கள். அவற்றினடியில் மெத்தை விரித்தாற் போல் கிடக்கின்றன சருகுகள்.
109

Page 68
மேடும் பள்ளமும்
இதே மாஞ் சோலையில், அவர்கள் எத்தனை நாட்கள் கும்மாளமடித்தி ருப்பார்கள். இரு உள்ளங்களும் எவ்வளவு பேசாத பேச்சுக்களைப் பேசியிருக்கும். பாடசாலை விட்டு வரும்பொழுது, அவர்கள் அங்கு தங்கிச் செல்லாத நாட்களேயில்லை. அவர்களுடைய களவு, அத் தோப்புச் சொந்தக்காரனுக்குத் தெரியாது. எவருக்குமே தெரியாது தான். தெரிந்திருந்தால் அவர்கள் பாடு அதோகதி.
அவனும் அவளும் ஒன்றாகக் கூடித் திரிவது அவளுடைய அப்பாவுக்குத் தெரியாது. ஒரு நாள் அறிந்துவிட்டார். யாரோ பொல்லாதவர்கள் சொல்லிவிட்டார்கள். அதற்காக அவளை அவர் எப்படி எல்லாம் பேசிக் கண்டித்தார். அவள் மனம் வேதனைப்பட்டது தான். ஆனால் அவனுடன் கதைப்பதில் காணும் இன்பத்தை அவளால் இழ க்க முடியாது. அவன் கதைக்காமலிருக்கும் வேதனையைச் சுமக்க முடியவில்லை அவளால். மனம் என்னவோ செய்தது.
இனியும் ஏன் அவள் அவனுக்குப் பின்னால் மெளனியாகச் செல்ல
வேண்டும்? அவனுடன் பேசாமல் செல்வதைவிட அவள் போகாமலே இருக்கலாம்.
"ஐயோ!" கூவிக் கொண்டு கால் பெருவிரலைப் பிடித்தபடியே இருந்தாள்.
அவன் திரும்பியும் பார்க்கவில்லை.
அவள் முகம் கறுத்தது.
"மூதேசி, அவர் மூஞ்சையைக் காட்டமாட்டார். அவர் பெரிய ராசா. இனிமேல் சனியனுடன் உயிர் போனாலும் பேசமாட்டன்." மனதுள் கறுவிக் கொண்டாள்.
அவன் அவளுக்காக நிற்கவில்லை. நடந்தான். பாதையின் வளைவால் திரும்பியும் விட்டான்,
"இனி நான் அவனுடன் கதைப்பதில்லை; கதைப்பதில்லை"- மனன்ம் பண்ணினாள்.
110

நீர்வை பொன்னையன்
புத்தகங்களை எடுத்துக்கொண்டு எழும்ப அவள் தலை நிமிர்கின் றது. எதிர்ப்பக்கத்து மரங்களுக்கிடையில் நின்று அவன் பார்ப்பதைக் கண்டுவிட்டாள். அவன் தன்னை விட்டுப் போகவில்லை என்று அவளுக்குத் தெரிந்து விட்டது. உடனே வலி பொறுக்கமாட்டாது அழு வது போல அழுதாள்.
அவனுக்கு அதைப் பார்த்துக்கொண்டு ஒன்றும் செய்யாது நிற்க மனம் வரவில்லை. அவள் இருக்கும் இடத்திற்கு வந்தான். அவளுக்கு அழுகை கூடிவிட்டது. உண்மையில் தேம்பித் தேம்பி அழுதாள்.
அவனால் ஒன்றும் பேசமுடியவில்லை. அவள் தேம்புவதைச் சகிக்கவும் முடியவில்லை. கோபம் மெளனமாகி, இரக்கம் தலையெடுக் கின்றது.
"சரோ. என்ன உனக்குக் கல்லு. அடிச்சுப்போட்டுதா?" சொற்கள் தடம்புரண்டு வெளிவந்தன.
அவளது காலைத் தனது கைகளால் தூக்கித் தடவினான்.
அவள் காலை இழுத்தாள்.
அவன் விடவில்லை.
அவளுடைய கோபம் பறந்தது. அழுகையும் நின்று விட்டது. என்றாலும் அவள் அதை வெளிக்காட்டவில்லை. கோபிப்பவள் போல
முகத்தைச் சுழித்தாள்.
"சரோ, நீ என்னோடை கோவமா?"-
கேட்டுக் கொண்டே அவளை ஏக்கத்துடன் பார்க்கின்றான்.
அவள் பேசவில்லை.
அவன் தேம்பினான்.
அவளுக்கு அதில் ஒரு வித திருப்தி
என்றாலும் அவளுக்கு அது சகிக்கவில்லை. அவளது தளிர் விரல்கள் அவனுடைய கண்ணிரைத் துடைத்தன.
111

Page 69
மேடும் பள்ளமும்
"என்னோடை பேசமாட்டியா சரோ?"-
"நீ ஏன் பேசேல்லை?"
"நீ தானே என்னோடை பேச மாட்டன் எண்டனி."
"எனக்கு நீ அடிச்சாய். அதுக்குத்தான் நான் அப்பிடிச் சொன்ன
60াTি6া."
"என்னைப் பாத்து நீ ஏன் பல்லைக் காட்டினனி?"
"நான் உன்னைப் பாத்துக் காட்டேல்லை. சுந்தரம் என்ரை புத்தகத் தைத் தள்ளினான். அதுக்குத்தான் நான் அவனுக்குப் பல்லைக் காட்டி னனான். அதுக்கு நீ ஏன் எனக்கு அடிக்கவேணும்?"
"சுந்தரத்துக்கு நீ பல்லைக் காட்டினால் அவன் உனக்கு அடிப்பான். நீ அழுவாய். அதுக்குத்தான் சும்மா இரெண்டு தட்டினனான். நான் உனக்கு நோக அடிக்கேல்லை சரோ"
"இல்லை. சுந்தரம் எனக்கு அடிச்சால் நீ அவனோடை கோவம் போடுவியா?"
o o o o o o ம் ம் ம் அவனுக்கு அடிப்பன்."
நீ அடிச்சதுக்கு நான் வாத்தியரிட்டைச் சொல்லேல்லை. அந்த மகேசுதான் ஒடிப்போய்ச் சொன்னவ.
எனக்கு அடிச்சுப்போட்டு நீ ஏன் அழுதணி? வாத்தியார் அடிப்பார் எண்டு பயந்தா?"
"இல்லை நீ அழ எனக்கும் அழுகை வந்திட்டுது. அது தான் அழுதனான்."
"அந்த வாத்தியார் பொல்லாதவர். எனக்கு நீ அடிச்சால் அவருக்கு என்னவாம்? அவரிட்டை நான் போய்ச் சொல்லேல்லை. அவர் உனக்கு ஏன் அடிக்க வேணும்? அவர் அப்பிடித்தான். கூடாத வாத்தியார். அவற்றை சுடு மூஞ்சையைப் பாக்கப் பயமாயிருக்கு, உன்னை நல்லா நோக அடிச்சுப் போட்டார்."
112

நீர்வை பொன்னையன்
வேதனையுடன் கூறினாள் சரோ. சட்டையை நீக்கி விட்டு, தனது கைகளால் அவனுடைய முகத்தைத் தடவினாள் அவனுக்கு அது இதமாக இருந்தது. சண்டைபிடித்தது. அடிவாங்கியது எல்லாம் அவன் மனதிலிருந்து அழிந்து விட்டன. அவன் அவளுடைய தடவலுக் கிணைய வளைந்து கொடுத்தான். அவனுடைய கை அவளுடைய கழுத்தைச் சுற்றி வளைந்தது.
சரோவினுடைய உள்ளத்தில் ஆனந்தம் பொங்கி வழிந்தது. முகம் மலர்ந்தது. குறுகுறுக்கும் கருவிழிகள் ஜீவாமிர்தத்தைச் சொரிந்தன. கூந்தலில் கட்டப்பட்டிருக்கும் சிவப்பு றிப்பன் காற்றில் பட்டுத் தெறிக்கி ன்றது. அவ்வொளி அவளுடைய ரோஜாக் கன்னங்களை மேலும் சிவப்பாக்குகின்றது. அவளுடைய ஜீவகளை நிறைந்த தோற்றம் அவனு க்கு விந்தையாக இருந்ததோ என்னவோ தன்னை மறந்த நிலையில் அவன் கண்கள் அவளை விழுங்கிக் கொண்டிருந்தன.
"பசுவதி வாறியா அந்தப் பச்சை தின்னி மாங்காயை ஆஞ்சு தின்னுவம்; "
சகலதும் மறந்த மோன நிலையில் அவன் அவளாகின்றான்.
தாய்மையின் பூரணத்துவம் நிறைந்து விளங்கும் கன்னிக் கற்பவதியின் எழிலுடன், வளைந்து நெளிந்து நிற்கின்றது 'பச்சைதின்னி' மாமரம். தடியொன்றை எடுத்து மாங்காய்க் குலைக்குக் குறிபார்த்து எறிந்தான். மூன்று காய்கள் விழுந்தன. காயாகச் சப்புவதற்கு - அந்த மரத்து மாங்காய்தான் நல்லது. மற்றவை அம்பலவி செம்பாட்டான்' அவைகளின் காய் புளிப்பு: வாயில் வைக்க முடியாது.
அவர்களுடைய வாயில் நீர் சொட்டுகின்றது. இருவரும் மாங்காயைச் சப்பிய படியே நடக்கின்றனர்.
அவளுடைய மாங்காய் முடிந்துவிட்டது
"பசுவதி, எனக்கு ஒரு துண்டு தராய்?"
"ஏன், உனக்கு ஒண்டு தந்தனான் தானே."
13.

Page 70
VoLDUD LU6T6Tr (pli
"சாப்பிப்போட்டேன். அது கூடாது; புளி, ஒரு துண்டு தா."
"நான் தரன்."
"தராய்? நல்ல புள்ளையல்லே. இல்லையெண்ணாமல் ஒரு துண்டு தா. நாளைக்க உனக்கு இனிப்புத் தருவன்."
ஒரு துண்டைக் கடித்து நீட்டுகின்றான். அவள் ஆவலுடன் கையை நீட்டினாள். உடனே அத்துண்டைத் தனது வாய்க்குள் போட் டான் பசுபதி.
அவளுக்குக் கோபம் வந்துவிட்டது. மறுமுறை ஒரு துண்டைக் கடித்து நீட்டினான்.
"எனக்கு வேண்டாம்."
முகத்தைச் சுழித்துக் கொண்டு கூறினாள் சரோ.
அவன் சிரித்தான். அவள் கண்கள் குளமாயின். அதைப் பார்த்த தும் அவனுக்குப் பெரும் வேதனை.
"இந்தா சரோ, நான் இனி உன்னை ஏமாத்தேல்லை." பசுபதி கெஞ்சினான்.
அவள் கண்களைக் கசக்கிக் கொண்டு நின்றாள்.
"இந்தா சரோ, கடவுளாணை நான் இனி உன்னை ஏமாத்தேல்லை.
அவளுடைய வாயண்டை மாங்காய்த் துண்டைக் கொண்டு சென்றான்.
அவள் புறங்கையால், அவனுடைய கையைத் தட்டினாள். திடீரென அவளுடைய வாய்க்குள் ஒரு துண்டைத் திணித்தான். சரோ பொய்க் கோபத்துடன் அவனைப் பார்த்தாள். அவளுடைய கண்ணிர்க்கோடுகளை அழித்தன அவள் கரங்கள்.
சிரித்தபடியே மாங்காய்த் துண்டைச் சப்பினாள் சரோ,
114

நீர்வை பொன்னையன்
"இன்னும் ஒண்டு தா."
அவன் கடித்துக் கொடுத்தான்.
பசுபதி கடித்துக் கொடுப்பதை வாங்கி உண்பதில் அவ்வளவு ருசியா? அவள் கேட்டுக் கொண்டேயிருந்தாள். -
அவனும் கொடுத்துக் கொண்டேயிருந்தான். அவன் காந்திய மாங்காய்க் கொட்டையை வாங்கித் தானும் காந்திவிட்டு எறிந்தாள். அவள் அதில் என்ன திருப்தியைக் கண்டாளோ?
"பசுவதி உனக்கு என்னிலை கோபமா?"
"இல்லை."
"நான் ஒண்டும் செய்யேல்லை. எல்லாம் அந்த மகேசுவாலைதான். அவவோடை நான் நாளைக்குக் கதைக்க மாட்டன். கட்டாயம் கண் ணைக் கட்டிக் கோவம் போடுவன்."
பசுபதியின் உள்ளம் குளிர்ந்தது. அவன் சரோவின் கையை இறு கப் பிடித்தான். அவனுடைய தோளில் அவளுடைய கை வளைந்து சுருண்டிருந்தது.
வானத்துச் சிட்டுகளைப்போல நிச்சிந்தையாகப் பேசிக் கொண்டே சென்றார்கள் அவர்கள்.
"பசுவதி, தண்ணி விடாய்க்குது. அந்தக் கடையிலை குடிச்சிட்டுப் போவம்" என்றாள் சரோ.
பசுபதி வேண்டா வெறுப்புடன் தலையை அசைத்தான். இருவ ரும் கடையை அடைந்தனர்.
பசுபதி அவளுடைய "சிலேட்" புத்தங்களை வாங்கினான்.
சரோ தன் வீட்டிற்குள் செல்வதைப் போலக் கடைக்குள் சென் றாள். உரிமையுடன் பேணியை எடுத்தது அவள் கை; "மட மட" வென்று தண்ணிரைக் குடித்தாள்.
பசுபதி அவளைப் பார்த்தபடியே நின்றான்.
115

Page 71
மேடும் பள்ளமும்
பசுபதிக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடித்தால் வாய்ப் புளிப்பு மாறும். அது அவனுக்குத் தெரியாது. அவள் குடிக்கின் றாள். அதனால் அவனுக்கும் குடிக்க வேண்டும் போலிருந்தது.
கடைக்காரக் கிழவர் செருமினார். திடுக்கிட்டுத் திரும்பினான் பசுபதி. கிழவருடைய கழுகுப் பார்வை அவனுடைய உள்ளத்தைக் கொத்தியது. பசுபதியின் முகம் கருகியது. அவன் கிழவனையும் சரோவையும் மாறி மாறிப் பார்த்தான்.
சரோ தண்ணீர் குடித்து விட்டாள். பசுபதி மெளனமாக நின்றான். அவனுக்கும் தண்ணின் கொண்டு வந்தாள் அவள். அவன் கேட்க வில்லை. தான் குடித்துவிட்டு, அவனுக்கும் கொண்டு வருவது அவளு டைய வழக்கம்.
தன் கையிலுள்ள புத்தகங்களை நிலத்தில் வைத்தான் பசுபதி. தாமாகவே அவனுடைய இரு கைகளும் வாயண்டை கோலிப் பிடிக்கின்றன. அவள் தண்ணிரை ஊற்றுகின்றாள். குடித்து முடிந்தது. இருவரும் செல்கின்றார்கள். அவளுடைய கை அவனுடைய கழுத்தைச் சுற்றி இருக்கின்றது.
அவர்கள் நடக்கின்றார்கள். அவள் ஏதோ பேசிக் கொண்டே செல்கின்றாள். அவன் ஒன்றும் பேச வில்லை; மெளனமாக நடக்கி ன்றான், அவள் சொல்லுவதைக் கவனிக்கின்றானோ அல்லது வேறு ஏதாவது சிந்தனையோ?
சரோவின் பேச்சு நிற்கின்றது. அவன். தான் சொல்வதைக் கேட்கவில்லை என்று தெரிந்து கொண்டாளோ?
அவனுடைய கன்னத்தைப் பிடித்துத் திருப்பினாள்.
"பசுவதி நீ ஏன் ஒண்டும் பேசேல்லை? என்னோடை கோவமா? கடவுளாணை நான் வாத்தியாரிட்டைச் சொல்லேல்லை."
அவன் ஒன்றும் பேசவில்லை. அவனுக்கு சரோவில் கோப மில்லை. அவன் பேச என்ன இருக்கிறது?
அவன் பேசினானோ, பேசவில்லையோ, பேசிக் கொண்டே சென்றாள் சரோ.
116

நீர்வை பொன்னையன்
"அவ மகேசுவுக்குப் பெரிய செட்டு; உன்னோடை கோவம் போடச் சொல்லுறா. அவவின்ரை தேப்பன்' விதானை எண்டால் எங்களுக்கென்ன? அவவின்ரை சொல்லுப் படி நாங்களேன் நடப்பான்?"
சொல்லிக் கொண்டே நடந்தாள் அவள்.
அவன் ஒன்றும் பேசவில்லை!
117

Page 72
நீர்வை பொன்னையனின் நூல்கள்
மேடும் பள்ளமும் .
..... س. فالساق - 2 .
மூவர் கதைகள் . .
S LGTTS SS LLS S AS
. வேட்கை -
. உலகத்து நாட்டார் கதைகள் . .
(மீரா பதிப்பக வெளியீடு)
முற்போக்கு இலக்கிய முன்னோடிகள் . .
மேடும் பள்ளமும் - 2ஆம் பதிப்பு . . (மீரா பதிப்பக வெளியீடு)
118


Page 73
இளமையிலும் சரி கல்கத்தா காலத்திலும் சளி விடுமுறை. ஒ சேர்ந்து தோட்டத்தில் உழைத் நாயகம் திரும்பிய பின்னரு தேடி அலைந்து வேலை : காரனாகவே வாழ்ந்தவள்.
நாட்டுப் பற்றும், மனிதாபினமு மாணவ வாவிப இயக்கங்களி - மக்கள் கலாச்சார மன்றத்திE செயலாளராவும் பணியாற்றிய முற்போக்கு இயக்கங்களிலும்
கொண்டு உழைத்து பேருபவர்
"நீர்வை’ ‘ஞானி' ஆகிய L கதைகள் எழுதியதோடு ட பெயன்ப்புகளும் செய்துள்ளார். ஆசிரியர் குழுவில் பணியாற்றி குழுவில் அங்கம் வகித்தவர்
1969 இலிருந்து 1983 வரை தாபனத்தில் மொழிபெயர்ப்ப
1989 இலிருந்து 1995 வரை இ
1996 இலிருந்து 'விபவி மாற்
பிரிவு இணைப்பாளராக செ
if IT II கொழு
 

ந் நூலாசிரியர்
வலியைச் சேர்ந்த ஒவ்வெப்க் +சியில், 1930 பிறப்பு தந்தை இ. இராமலிங்கம் தாயார் திருமதி ட்சுமி நீர்வேலியிலுள்ள அத்தி இந்துக் கல்லூரியில் ஆரம்பக் பி. பின்னர் கல்கத்தா சர்வ கலா பயில் பி. ஏ. பட்டதாரியானார்.
வில் படித்துக் கொ8ான்டிருந்த ய்வு காலங்களில் தந்தையுடன் நவர் 1958 இல் படிப்பு முடிந்து ம் பல ஆண்டுகள் வேலை கிடைக்காEமயால் தோட்டக்
ம் கொண்ட இஃப் கல்கத்தாவில் iல் பங்கெடுத்ததோடு இந்திய ன் வரக்லி பிரதேச அமைப்புச் பவர். இலங்கை திரும்பியபின் இலக்கியத்துறையிலும் ஆர்வம்
T.
புனைபெயர்களில் கட்டுரை - பிறநாட்டு இலக்கிய மொழி "கலைமதி' மாத சஞ்சிகையின் பவள் தேசாபிமானி ஆசிரியர்
அரச திரைப்படக் கூட்டுத் ாளராக பணியாற்றினார்.
இலக்கிய வனவாசம்,
றுக் கலாசார மையத்தில் தமிழ் Fயற்பட்டு வருகிறாள்.
fisi III, if பூம்பு 05