கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நிலவோ நெருப்போ

Page 1
திரு. சோமகாந்தன் அவர்களின் "ஈழத்துச் சோமு என்ற புனை பெயர்-இலக்கியப்
பிரசித்தமானது.
தேசிய மண்வாசனை கொண்ட ஈழத்து 燃 இலக்கியத்துக்கு வளமூட்டியதில் அவருக்கும் பங்குண்டு. எமது இலக்கிய கலாசார வளர்ச்
ܒܒ
சிக்காக நடத்தப்பட்ட இயக்கங்கள் மாநாடு களின் இயக்க சக்தியாக விளங்கி, அவற்றின் அமைப்புச் செ ய ல |ா ள ரா க அமைந்து, வெற்றிகரமாக நடத்தியவர். 1960களில் 100க்கு மேற்பட்ட எழுத்தாளர்கள், கலைஞர்களை "சுதந்திரன்" மூலமாக அறி முகம் செய்து வைத்தவர். "புதுமை இலக்கிய மலர் 197581981 ஆகியவற்றின் பொறுப் பாசிரியராக விளங்கியதுடன், நாவலர் ஜெயந்தி மலர், நாவலர் முத்திரை வெளி யீட்டு விழா மலர், சாகித்திய மண்டல தமிழ் விழா மலர் உட்பட பல மலர்களை இலக் கியத் தரங்கொண்டவையாக அமைத்து வெளியிட்டவர்.
1934-01-14 இல் கரணவாய் தெற்கில் பிறந்த இவர் காலஞ் சென்ற நாகேந்திர ஐயர்-செல்லம்மாள் தம்பதிகளின் புதல்வர். கரவெட்டி விக்னேஸ்வரா, தெல்லிப்பழை மகாஜனா கல்லூரிகளில் படிப்பை முடித்த பின், அரசாங்க அலுவலராக கடமையாற்றி இப்போது இந்து கலாசார அமைச்சில் நிர் வாக அதிகாரியாகப் பணியாற்றுகின்றார்.
இளமையிலிருந்தே புரட்சிகரக் கருத்துக் களால் கவரப்பட்ட இவர், கலையும் இலக் கியமும் மக்களுக்காகவே என்ற கருத்துக் கொண்டவர். அவரின் படைப்புகளில் பல அதையே பிரதிபலிக்கின்றன.
-வரதர்
 


Page 2

நிலவோ நெருப்போ?
சிறுகதைத் தொகுப்பு
நா. சோமகாந்தன்
இளவழகன் பதிப்பகம் கி, இரண்டாவது தெரு, ஆண்டவர் நகர், கோடம்பாக்கம்
சென்னை-600 024

Page 3
நிலவோ நெருப்போ? முதற்பதிப்பு : செப்டம்பர், 1992 (C) bit. Gismositisgssir
இலங்கையில் வெளியீடும் விற்பனை உரிமையும்: குறிஞ்சி வெளியீடு 129|25, ஜெம்பட்டா வீதி, கொச்சிக்கடை ,
கொழும்பு-13
அச்சிட்டோர் :
பூரீ கோமதி:அச்சகம், 41, சூரப்ப முதலி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600 005

BIBLOGRAPHICAL DATA
Title of the Book
anguage
Written by
Copy right of
Published by
First Edition
Types used
Number of pages
Number of copies
Printed by
Wrapper designed by
Subject
Price
NILAVO NERUPPO ?
Tamil
N. SOMAKANTHAN
Author
ELAVAZHAGAN
PATHIIPPAGAM
Madras-600 024.
September 1992.
10 point
144
1200
Sri Gomathi Achagam Madras-600 005
Hari Babu
Short stories collection
Rs. 20-00 (INDIA)

Page 4
அணிந்துரை
தமிழ் சிறுகதை வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஈழத்து எழுத்தாளர்களும் கணிசமான அளவில் பங்காற்றியிருக் கிறார்கள்.
குறிப்பிடத் தகுந்த ஈழத்துச் சிறுகதைப் படைப்பாளி களில் ஈழத்துச் சோமுவும் ஒருவர். 1990களில் இலக்கியத்தர மான சிறுகதைகள் எழுதி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஈழத்துச் சோமு (என். சோமகாந்தன்) பின்னர் இலக்கிய, கலாசார ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதில் கவனம் செலுத்தியுள்ளார்.
ஈழத்துச் சோமுவின் சிறுகதைப் படைப்பாற்றலுக்கு, நிலவோ நெருப்போ?" முதலிய பதினோரு கதைகளைக் கொண்ட இத் தொகுப்பு நல்ல சான்று ஆகும்.
சமூக உணர்வோடு, மக்களின் பழக்க வழக்கங்களையும் வாழ்க்கைத் துடிப்புகளையும், நல்ல சொற்சித்திரங்களாக்கி யிருக்கிறார் அவர். அவருடைய தனித்த நோக்கும்,கற்பனை வீச்சும், அழகான உரை நடையும் அவரது சிறுகதைகளுக்கு வலிவும் வனப்பும் சேர்க்கின்றன.
ஈழத்துச் சோமு கதையின் ஆரம்பத்தை எடுப்பாக அமைத்து, வாசகனை ஈர்த்து, மேலே படித்துச் செல்லும் ஆவலைத் தூண்டி, கதையை வளர்க்கும் கலைத் திறமையைப் பெற்றிருக்கிறார்,

*புகையிலைக் கன்றுகள் கொய்யா இலைக் கூட்டை உடைத்துக் கொண்டு கூவத்தொடங்குகிற சேவல் அளவுக்கு வளர்ந்து, தலையை வெளியே எட்டிப் பார்க்கிற காலம்.'" (நிலவோ நெருப்போ?)
இவ்வாறு, எடுத்துக் கொண்ட கதையின் பொருளுக்கு ஏற்றவாறு சூழ்நிலை, காலம், பாத்திரம் முதலியவற்றை நேர்த்தியாக வர்ணித்து கதைக்கு உயிரும் உணர்வும் ஊட்டுகிறார் அவர்.
ஈழத்துச் சோமு பாத்திரங்களை அறிமுகம் செய்யும் நேர்த்தி, அக்கதை மாந்தரை வாசகரின் கண்முன் கொண்டு வந்து நிறுத்திவிடும் தன்மையில் இருக்கிறது. உதாரணத் துக்கு தரகர் முருகேச பிள்ளை விவரிக்கப்படுவதை குறிப்பிடலாம்.
*குழைக்கடை கூடிவிட்டால் முருகேசபிள்ளைதான் அங்கு முடிசூடா மன்னர்-கடந்த ஏழு வருடங்களாக இவர் தான் அங்கு தரகர். ’’
‘ஜன இரைச்சலை அமுக்கிக் கிழித்துக் கொண்டு கேட்கக் கூடிய சிம்மக்குரல். வேட்டைத் திருவிழாக் குதிரை வாகனம் போல மேலெழுந்து எட்டிப் பார்க்கிற மூக்கு. சொந்த ஊர்ப் புகையிலையில் சுருட்டிய ‘சுத்தைப் பிரத்தியேகமாகச் சப்பிச்சப்பி உமிழ்ந்தபடி இருக்கும் வாய். குறைவெறியில் கொதித்து மின்னிக்கொண்டிருக்கும் பெரிய கண்கள். வாய்க்கால் ஒரமாக அடர்ந்து வளரும் அறுகம் புல்லுப் போல உரோமம் படர்ந்த நெஞ்சுக்கட்டு. பாணி பிடித்த புகையிலையின் கருமைகாட்டும் உடம்பு. கள்ளு முட்டி போல வயிறு. சற்றுத்தாழக்கட்டிய புழுதி மண்டிய வேட்டி மேலே வரிந்து சுற்றிய சவுக்கம். இவற்றோடு நெற்றியில் சந்தனப் பொட்டும் அணிந்திருந்தாரென்றால்
5

Page 5
அன்று நிச்சயமாக ஒரு வெள்ளிக்கிழமையாக இருக்கும் இவர் தான் தரகர் முருகேசபிள்ளை.' (நிலவோ நெருப்போ?)
புகையிலை பயிரிடுவோர்-குழை விற்கும் பெண்கள் பற்றிய கதை என்பதால், சூழ்நிலை வர்ணனை மற்றும் பிற விவரிப்புகளிலும் புகையிலை தொடர்பான விஷயங்கள் திறமையாக எடுத்தாளப்பட்டிருப்பது ரசிக்கக் கூடியதாக இருக்கிறது.
**இளமையென்ற செழுந்தரையில் க " லூ ன் றி? வாளிப்பாக வளர்ந்து எழில் நிறைந்து, முறுவலிக் து நிற்கும் பொன்னியைக் கண்டபோது, முருகேச பிள்ளைக்கு மதாளித்து வளர்ந்து, முறுக்கேறி, பாணி பிடித்த இலைகளைப் பரப்பிக் கொண்டு திறம் விளைச்சலுக்கு உதாரணமாகத் திகழ்ந்து நிற்கும் புகையிலைச் செடிதான் தோற்றங் காட்டிற்று."
இப்படி ஒவ்வொரு கதையிலிருந்தும் எடுத்துக்காட்டுகள் கூறலாம்.
மனைவியைப் பிரிந்து, தனித்து வசிக்கும் ஒருகணவனின் மனச்சூட்டை-உணர்ச்சி கொ தி ப்  ைப விவரிக்கும் *மனப்பாம்பு" கதையும், பாத்திரத்தின் மனநிலைக்கும் கதைப் போக்கிற்கும் பொருத்தமான ஆரம்பத்தையும் வர்ணிப்புகளையும் கொண்டிருக்கிறது. இவை கதைக்கு நயமும் கலை அழகும் சேர்ப்பதோடு, வாசக ரசனைக்கு விருந்தாகவும் விளங்குகின்றன.
உவமைகள் உருவகங்களைக் கையாள்வதிலும் ஈழத்துச் சோமு புதுநோக்கையும் கற்பனைத் திறத்தையும் காட்டுகிறார்.
*கள் வெறி கொண்டவர்களின் கண்களைப் போல பொழுது மயங்கி, மங்கலாகி, இருண்டு கிடந்தது."
6

*நேரம் என்ற ஆணழகன் நடுநிசி மங்கையை இறுகத் தழுவி, உடற்சூட்டில் இதங்கண்டு கொண்டிருந்தான்."
*அண்டாவில் அபிஷேகத்துக்கென அடியார்களால் பக்தி சிரத்தையுடன் நிறைக்கப்பட்ட பாலில் கள்ளத்தனமாக விழுந்து வயிறு புடைக்கக் குடித்துப் புரண்டு அதில் குளித்தெழுந்து அசுத்தப் படுத்தி விட்டு வெளியே வருகிற மூஞ்சூறைக் காணும்போது ஏற்படுகிற அசூயையும் ஆத்திரமும் போல அவரைக் கண்டதும் குருக்களுக்குப் பிறந்தது."
இவ்வகை நயங்கள் பலப்பல உள்ளன. கதைகளுக்காக அவர் எடுத்துக் கொண்ட விஷயங்களும் பலவகைப் பட்டவையாகும்.
குழைகள் விற்றுப் பசியைத் தணிக்கப்பாடுபடும் பெண் களை தனது காம இச்சைக்கு பலியிடத் தவிக்கும் தரகரின் போக்கும், வறுமையால் வாடினாலும் தன்மானத்துடன் ஒற்றுமையாக எதிர்த்து நின்று அவரைத் தோல்விகாணச் செய்யும் பெண்களின் வலிமையும் (நிலவோ நெருப்போ?)-
உண்மையாக உழைக்கும் ஒருவனை சந்தேகித்து, அத் தொழிலாளியின் பாச உணர்வுகளை கேவலமாக மதிப்பிடும் பணத்திமிர் கொண்ட ஒருவரின் போக்கும், அவரது சிரமங்களுக்காக அனுதாபப்பட்டு அவருக்கு உதவும் ஒரு மீனவத் தொழிலாளியின் உளப்பண்பும் (காசுக்காக அல்ல)-
நியாயம், நேர்மை, பக்தி உணர்வோடு உழைக்கும் குருக்கள் வஞ்சிக்கப்படுவதும், அவரையும் ஊரில் அவருக்கு இருக்கிற மதிப்பையும் பயன்படுத்தி, கோயிலுக்கென நிதி வருவித்து, வசூலான பெரும் தொகையை தன் சுயலாபங் களுக்கு உபயோகித்துக் கொள்கிற கோயில் பரிபாலகரின் ஆணவ இயல்பும் (ஆகுதி)-

Page 6
இப்படி வாழ்க்கை, சமூகம், மனிதர்கள் எழுப்புகிற பிரச்னைகள், குழப்பங்கள், முரண்பாடுகள், உணர்ச்சி நாடகங்களை ஈழத்துச் சோமு தன் கதைகளில் எடுத்தாண் டிருக்கிறார்.
இத்தொகுப்பைப் படிக்கும் வாசகர்கள் அவரது எழுத்தாற்றலை நன்கு அறிந்துகொள்ள முடியும். ஈழத்துச் சோமுவுக்கு என் வாழ்த்துக்கள்.
10, வள்ளலார் பிளாட்ஸ், 8 O s புதுத்தெரு, லாயிட்ஸ்ரோடு, வல்லிக்கண்ணன்
சென்னை-600 005 13.992

குறிஞ்சி வெளியீட்டின் உரை
மனித வாழ்வையும் அதனைப் பீடித்துள்ள பிரச்சனை களையும் நேர்  ைம ய ர க நோக்குபவர்களே சிறந்த எழுத்தாளர்கள் என்று மதிக்கப்படுவர். அந்த வகையில் பார்க்கும் போது சோமகாந்தனின் இந்தத் தொகுதியில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கதையும் சிறந்ததாகவே எனக்குப் படுகின்றது. இவருடைய கதைகள் கால, தேச எல்லைகளையும் தத்துவச்சார்புகளையும் தாண்டி அது நம்மை ஈர்த்துக் கொள்வதை காணக்கூடியதாக இருக் கின்றது. இதுவே படைப்பாளியின் வெற்றி எனக் கூறலாம். யதார்த்த உலகின் அம்சங்கள் இவரது கதைகளில் படிமப் பிரமாணம் கொள்ளும்போது அற்புதமாகப்பிரகாசிப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.பொதுவாக சோமகாந்தனின் மனித அனுபவங்களை அநேகமாக எல்லாக் கதைகளிலும் காண முடிகின்றது.
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னோடியான இவர் அதன் சகல மட்ட உழைப்புக்களிலும் தன்னை ஈடுபடுத்தி உழைத்து வருபவர். நீண்டகாலமாக எழுதிவரும், இவரது, ‘நிலவோ நெருப்போ?’ என்ற சிறுகதைத் தொகுதியை குறிஞ்சி வெளியீடாக வெளியிடுவதில் பெரும் உவகை கொள்கிறேன்.
12925 ஜெம்பட்டா வீதி மாத்தளை கார்த்திகேசு கொழும்பு-13 குறிஞ்சி வெளியீடு

Page 7
பதிப்புரை
ஈழத்து எழுத்தாளர் திரு. நா. சோமகாந்தனின் சிறுகதைகள் சில ‘நிலவோ நெருப்போ?" என்ற பெயரில் தொகுப்பாக வெளிவருகின்றது கொழும்பு குறிஞ்சி வெளியீட்டின் அனுசரணையுடன் இளவழகன் பதிப்பகம் இந்நூலை வெளியிடுகின்றது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்நூல் மல்லிகைப் பந்தல் வெளியீடாக ஈழத்தில் வெளி வந்தது. தமிழகத்தில் இதுவே முதற்பதிப்பு ஈழத்து எழுத்தாளர்தம் படைப்புக் கள் தமிழகத்து வாசகர்களையும் சென்றடையவேண்டும் என்ற நோக்கில் செயற்படும் இளவழகன் பதிப்பகத்தின் நான்காவது வெளியீடு இதுவாகும்.
இந்நூல் வெளியீட்டில் உதவிய கோமதி ക് உரிமையாளர் திரு. சரவணகுமார், மற்றும் அச்சக ஊழியர்கள், கவிஞர் நெ. அ. பூபதி திருமதி மகேந்திரன், டாக்டர் இராம. சுப்பிரமணியன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வே. கருணாநிதி
*சென்னை. 24 இளவழகன் பதிப்பகம்

ஒரு மதிப்பு மடல்
பேரன்பும் பெருமதிப்பும் கொண்ட என் அருமைச் சோமு!
நெடுங்காலம்! நம் சகவாசம், ஒரு முப்பத்து வருடங் களுக்கு மேல்இருக்குமா? இருக்கும்!அவ்வப்போது, எடுபட்ட உறவும் விடுபட்ட துறவுமாகச் சின்னஞ்சிறு இடைவெளி கள் ஏற்பட்டிருக்கலாம் ஆனாலும் நெடுங்காலம்!
கடைசியாக எப்பொழுது கண்டோம்? 1983 ஆடிக் கலவரத்தில், உடல் ஆடிப் பொருள் ஆடி உயிர் ஆடிப் போனவர்களிலிருந்து விலகி, உணர்வு ஆடிப் போகாமல்
நீங்கள் திரும்பிய சமயம், உங்கள் உயிர்த் துணைவி பத்மா வுடன் எங்கள் வீட்டுக்கு வந்தீர்கள்.
உபசரணைகள் முடிந்த பிறகு, அச்சுத்தாள் நறுக்கு கள் ஒட்டிய ஒரு கச்சிதக் கோவையை மாடியிலிருந்து எடுத்து வந்து உங்கள் கைகளில் கொடுத்தேன், விரித்துப் பார்த்தீர்கள். வியப்பால் உங்கள் விழிகளும் விரிந்தன.
*செல்வா ! இத்தனை காலம் இதை இப்படிப் பாது காத்து வைத்தீர்களா?" என்றுகசிந்தீர்கள்.
அந்தக் கோவையில் இருந்தவை உங்கள் சிறுகதைப் படைப்புகள். நீங்கள் தொகுத்து வைத்து, பத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன் என்னிடம் கொடுத்த உங்கள் சிறுகதைகள் மட்டுமல்ல; வாலிப எதேச்சையில் நீங்கள் பத்திரப்படுத்தத் தவறி, என் சேகரத்தில் நான் பவித்திரம் செய்த இலக்கியக் களஞ்சியத்தில், நீங்கள் அறியாமல் பதுங்கிக் கிடந்த உங்கள் சிறுகதைகளும் கூட அந்தக் கோவையில் இருந்தன. நீங்கள் கொடுத்தவற்றோடு நான் சேகரித்து வைத்தவற்றையும் சேர்த்து, அந்தச் சிறுகதைகளின் கோவையை உங்களிடம் கொடுத்த போது, உங்களுக்கு மறுபடி ஒரு "உயிர்ப்பு வந்திருக்க வேண்டும். என்று நினைக்கிறேன்
1

Page 8
ஏனெனில் கோவையைக் கையில் வாங்கியபோது உங்கள் கசிவில் ஒரு சிலிர்ப்பும் இருந்ததை அவதானித் தேன்.
*பத்தாண்டுகளுக்கு மேல் என் ஆத்மா படுத்துக் கிடந்ததா?’ என்பது போன்ற ஒரு சிலிர்ப்பு!
ஆனாலும் நீங்கள் அப்போது ஒன்றும் பேசவில்லை. கோவையையும் பெற்று, ஆசாரமாக விடையும் பெற்றுப் போய் விட்டீர்கள்.
女
ஏறத்தாழ மூன்றாண்டுகள் கழிந்து விட்டன. மனைவியின் நாமமும் உங்கள் பெயரும் உறழ்ந்து, இருவரின் குணம் குறிகளும் ஏந்திய உங்கள் குமாரன் பத்மகாந்தன், காலைக் கதிரவனைக் கூட்டிக் கொண்டு, கையில் அதே கோவையுடன் வருகிறான்.
**மாமா!' என்று சிரிக்கிறான். சுமார் இருபத்தாண்டுகளுக்கு முன் அவனைப் பாலக னாய்த் தூக்கி என் சில்லையூர்ச் செல்வ மாளிகையில் கட் டிலில் கிடத்திக் கட்டிக் கொஞ்சிச் செல்லம் ஆடிய சிருங் கார நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகின்றன.
கோவையைக் கொடுக்கிறான். வாங்கித் திறக்கிறேன், முதல் இதழ் உங்கள் கடிதம் படிக்கிறேன். V
*செல்வா!...இக்கடிதமும் கோவையும் வியப்பை ஏற்படுத்தும். எனது 11 சிறுகதைகளைக் கொண்ட தொகுதி அச்சாகிக் கொண்டிருக்கிறது. இந்நூலுக் குரிய மதிப்புரையை, பத்தாண்டுகளுக்கு முன் நான் வாக்களித்தது போல, பல்கலை வேந்தரே எழுத வேண்டும் என்பது என் தாழ்மையான கோரிக்கை. என் எழுத்துப் பணியை, எடுத்தியம்பும் சிறந்த முன்னுரை ஒன்றை விரைவில் தங்களிடமிருந்து எதிர் பார்க்கிறேன் நீளத்தைப் பற்றிக் கவலைப் படாமல் எழுதுங்கள். ஆனால் நேரத்துக்கு அது என் னைச் சேரவேண்டும்."
2

கடிதத்தைத் தொடர்ந்து படித்துப் படித்துச் செல்ல என் உள்ளத்தில் கிளர்ச்சி! “மொந்தைப் பழைய கள்ளைப் போல"ப் பழைய ஞாபகங்கள் போதையூட்டுகின்றன.
நினைவுகள் சாவதில்லை என்பது நிசம் தான்!
女
பத்தாண்டுகள் படுத்தெழும்பிய சிலிர்ப்பும், elpair றாண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட உயிர்ப்பும் ஊட்டிய எழுச்சியால், உங்கள் சிறுகதைகள் இன்னும் சில தினங் களில் நூலுருவம் பெறுகின்றன என்ற செய்தி இனிய நினைவுகளைத் தூண்டி விடுகிறது.
1950 - ம் ஆண்டைத் தொடர்ந்து, இலக்கிய இராம னாக நான் பத்திரிகைக் காட்டில் கழித்த பதினான்கு வருட வனவாசத்தை நினைத்துப் பார்க்கிறேன். ‘சுதந்தி ரணில் உதவி ஆசிரியராக நான் ஆரம்பத்தில் பணியாற் றிய அந்தச் சில மாதங்களிலும், பின்னர் 'தினகரன்", அதன் பின் ‘வீரகேசரி ஞாயிறு இதழ்களின் ஆசிரியரா கப் பணியாற்றிய எஞ்சிய வருடங்களிலும், ஈழத்தின் இன்றைய முன்னணி எழுத்தாளர்களில் வெகு பலரின் கையெழுத்துகளும் எனக்கு மிகவும் பரிச்சயப்பட்டிருந் தன. میر
கருணையூர்ச் சோமு என்னும் ஓர் இளைஞனின் ஆக் கங்கள் அந்தத் தொடக்கக் காலத்தில் ‘மாணவர் அரங் கத்'துக்கு வரும், குண்டு மல்லிகை போல மணி மணி யான கையெழுத்து. தமிழ் நடையிலும் மல்லிகை வாசனை இழையும். கரணவாய் என்ற ஊரின் பெயர் 'கருணையூர்" என்று மாறியதற்குக் காரணம் குறிப்பது போல, உருக் கமான எழுத்தின் உள்ளடக்கமும் சோமகிரணனாகிய நில வின் குளுமை காட்டும்.
அதே சம காலத்தில் தமிழரசு மேடைகளிற் கனல் பறத்தியும் பத்திரிகைகளில் அனல் பரப்பியும் வந்த யுவதி பத்மா பஞ்சந்தேஸ்வரன். அந்தப் பத்மாவைக் கரம் பிடித்து, இலக்கியத் தம்பதிக் கோலத்தில் எழுத்தாளர் சோமகாந்தன் என்பவர் நேரில் சந்தித்த போது தான்,
3

Page 9
நதி மூலம் ரிஷி மூலம் பிடிபட்டது. பிறகு ஏற்பட்டு இன்றும் நீடிக்கும் நெருங்கிய தொடர்பில், சோமகாந் தனி ன் வேறும் ‘கன விஷயங்களும் பிடிபட்டன.
女
அந்தப் பிடிப்பின் காரணமாகவே உங்களுக்கு இந்த மதிப்பு மடலை எழுதுவதாக எண்ணி விட தீர்கள். உங் கள் எழுத்தின் கனத்துக்கு என் தலைக்கணம் ஒன்றும் குறைந்ததன்று என்பது உங்களுக்குத் தெரியும்"
சண்டைப் பட்டிருக்கிறோமே! இலக்கியச் சண்டை கள்! முற்போக்கு எழுத்தாளர்கள் என்று கூடி நின்ற எங் கள் பலரின் நதி மூலம் ரிஷி மூலம் எல்லாம் தி. மு. க. - தமிழரசுப் பண்ணைகளே என்பது வாஸ்தவம் தான். அனால் அந்த இளமைக் கொதிப்பும், குதிப்பும் நிதானப் பட்டு, கலைத் துறைப் பார்வைகள் தெளிவுற்று, மக்கள் இலக்கியப் படைப்பாளிகள் என்ற கூட்டமைப்புக்குள் இயங்கிய பிற்காலத்திலும் நாம் மல்லுக்கட்டி வந்திருக்கி றோம். நோக்கில் ஒன்றுபட்ட போதிலும் அணுகு முறை களில் அபிப்பிராய வேற்றுமைகள் கண்டிருக்கிறோம். நீங் களும் நானும் வெவ்வேறு கன்னைகளில் நின்றிருக்கிறோம்.
பல சம்பவங்களை நினைத்துப் பார்க்கிறேன். சதாசிவம். காலத்து சாகித்திய விழா எதிர்ப்புக் காட்டிய நாமே. பின் னொரு காலத்தில் சாகித்திய மண்டல மலரை வெளியிட் டோம். நீங்களே அதன் ஆசிரியராக முன்னின்று தொகுத்து அச்சேற்றி வெளியிட்டீர்கள். பாரதியின் ஞானகுரு. வான யாழ்ப்பாணச் சுவாமி அருளம்பல ஞானதேசிக ருக்கு, பருத்தித்துறை வியாபாரிமூலையில் கோயில் கட்டி யதும், நாத்திகம் பேசிய நாங்களே! ஆறுமுக நாவலருக் குப் பெருவிழா எடுத்து, கொழும்பிலிருந்து நல்லூருக்குச் சிலை ஊர்வலம் நடத்தி, பாரிய மலர் தொகுத்து வெளி யிட்டு அவரைத் தேசிய வீரராக்கியதும் நாங்களே! இலங்கை யின் முதலாவது தமிழ் எழுத்தாளர் மகாநாடு தொடக்கம் முற்போக்கு எழுத்தாளர் மகாநாடு, ஜனநாயக.
14

எழுத்தாளர் மகாநாடு வரை, எங்கள் சாதனைப் பட்டியல் கள் நீளம்! சான்றோர் இலக்கிய-இழிசினர் இலக்கியப், போராட்டம்,முற்போக்கு இலக்கிய-நற்போக்கு இலக்கியத் தகராறு, 'ஈழத்து இலக்கிய வளர்ச்சி நூல் பற்றிய கண்டனத் தர்க்கங்கள் என்று எத்தனை எத்தனை மோதல். கள்!..கொடி பிடிக்க வேண்டியவர்கள், பேனா பிடித்திருக் கிறார்கள். பேனா பிடிக்க வேண்டியவர்கள் தடியெடுத்துச் சண்டப் பிரசண்டம் செய்திருக்கிறார்கள். காலத்தை மாற்றக் கிளம்பிய நாங்கள் கால மாற்றங்களுக்கு இசைந்தும் இயங்கியிருக்கிறோம்.
சரி எது, பிழை எது என்று தீர்ப்புக் காண நான் இவற்றைக் குறிப்பிடவில்லை. அதைக் காலம் தான் நிர்ணயிக்க வேண்டும். ஆனால், பின்னோக்காகப் பார்க்கிற போது, ஏதோ ஒவ்வொரு விதத்தில், இலங்கையின் இரண் டொரு இலக்கியத் தலைமுறை மீது இந்த நடவடிக்கைகள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பது தெரிகிறது.
இவற்றில் எல்லாம் உங்களுடைய தனிப்பட்ட பங் களிப்பும் கணிசமாக இருந்ததென்பதை நினைவோடு நிறுத் தாமல், பதிவு செய்து வைப்பது நியாயம் என்று கருதி இவற்றைக் குறிப்பிட்டேன், வெறும் பிடிப்பின் காரணமாக, அன்று.
Ar
* கலைச் செல்வி மாசிகைக் காலம் முதல் இன்றைய 'ஈழ முரசு’ காலம் வரை, சுமார் முப்பத்தைந்து வருடங் களில், உங்களின் படைப்பாற்றல் எப்படி வளர்ந்திருக் கிறது என்பதை எடைபோடலாம் என்று உங்கள் சிறுகதை களை ஒரு பிடி பிடித்தேன்.
உங்கள் இலக்கியத் தேன் கூட்டிலிருந்து கிடைக்கும் ஒரு பிடித் தேன் மட்டுமே இந்தத் தொகுதி என்று சொல்லத் தோன்றுகிறது.
15

Page 10
ஏனென்றால், 1959 முதல் 1969 வரை, பத்தாண்டு காலத்தில் நீங்கள் எழுதிய ஒன்பது சிறுகதைகள் மட்டுமே பதினொரு சிறுகதைகள் கொண்ட இந்தத் தொகுதியில் அடக்கம். மீதி இரண்டில், இந்த ஆண்டு நீங்கள் எழுதி மூன்று மாதங்களுக்கு முன் "மல்லிகை"யில் பிரசுரமான ஆகுதி" மற்றும் இம்மாத ‘மல்லிகை"யில் வெளியாகிய "விடியல்" ஆகிய இரண்டு சிறுகதைகளும் மட்டுமே விதிவிலக்குகள். குறித்த பத்தாண்டுக் கால அறுவடை மட்டுமே 35 வருடச் சாகுபடியின் தகைமைக்குச் சான்று பகர முடியுமா? 1986ம் ஆண்டின் ஆகுதியும் கூட, இன்று தேவைப்படாமல் போய்விட்ட தேர்தல் காற்றின் பழைய நிலையும் நினைப்பும் பற்றியே அசை போடும் சிறுகதை யாகத் தோன்றுகிறது. ‘விடியல் சமீபத்தில் எழுதியதா? சிறிது மாற்றம் தான். ஆனாலும் அதுவும் இன்றைய யதார்த்தச் சூழ்நிலைக்கு ஒப்பியதாகத் தெரியவில்லைகால நிர்ணயம் செய்தால் இந்த இரண்டு சிறுகதைகளும் கூட, 1959-1969 என்ற பத்தாண்டு காலப் பகைப்புலம் கொண்டவை தாம்,
எனவே உங்கள் முப்பத்தைந்தாண்டுக்கால முழு மூச் சான இலக்கியத் தேனித் தேட்டத்தின் மூன்றில் ஒருபகுதி த் தேனையே இந்தத் தொகுப்பில் எங்களுக்குத் தருகிறீர்கள். போதுமா? போதாது!
ஆனாலும் இந்தப் பிடித் தேனே ஒரு படித் தேன் கிடைத்தால் எப்படிச் சுவைக்கும் என்பதற்குக் குறி காட்டி விடுகிறது.
★ நிலவோ நெருப்போ?’ என்ற அந்தச் சிறுகதை ஒரு கணம் என்னை உலுக்கி விடுகிறது. என்னுடைய கவித்துவச் சொற் சிலம்படி போல் இருக்கிறதே என்று சிற்சில இடங் களில் பிரமித்துப் போகிறேன்.
பொன்னியின் கருங்காலிச் செதுக்குடம்பைக் கவ் விக் கிடக்கும் குறுக்குக் கட்டுக்கு மேலே மொழு மொழு வென்றிருக்கும் வழுக்கு மேனியில் அவர் கண்கள் மேய் 16

கின்றன. அவள் கன்னத்தில், தோளில், புஜத்தில் , இலையான் உட்கார்ந்தால் கூட நழுவி விழுந்து விடும்"
**பொன்னி குழையை இறக்கு முன்பே தரகர் குழை யத் தொடங்கி விடுகிறார்'
*பொன்னிக்கு வெற்றிலைத் தாகம். குறுக்குக்கட்டின் இடுக்கிலிருந்து கொட்டைப் பெட்டியை விரலைச் செலுத்தி எடுத்து விரிக்கிறாள். கொழுந்து வெற்றிலை முருகேச பிள்ளையின் கண்களைக் குத்துகிறது, கிறுக்கேற்றுகிறது."
உங்களுடைய தமிழ் நடையும் கிறுக்கேற்றுகிறது. சோமு! உங்களுடைய தமிழ் கொழுந்து வெற்றிலைக் கொழுந்தாயும் குழைகிறது. தீக் கொழுந்தாயும் சுவாலை விடுகிறது! குளிர் நிலவோ? சுடு நெருப்போ?...இரண்டும்தான்; சோமன் = நிலவு = குளிர்மை! காந்தன் = கதிரவன் = குடு! சோமகாந்தன்! பெயருக்குப் பொருத்தமான நடைதான்!
女 சூடு எங்கேயா? அதே கதையிற் சில வரிகள்! “முருகேசபிள்ளையின் குதிக்காற் குருதி குபிரென்று சீறிச் சிரசில் அடிக்கிறது." *அவர் உணர்ச்சிகளும் கட்டவிழ. * சீ.கையை விட...”* *தோளில் நெளிந்த பாம்பை உதறி எறிகிறாள். *"தீயைத் தொட்ட கை சுரீரென்று சோர்ந்தது.
17 நி-2

Page 11
*அடுத்து என்ன என்ற தீர்மானம் தோன்றாத இரண்டு கணங்கள் தீய்ந்து அமுங்குகின்றன."
*காசுக்காக அல்ல" என்ற மற்றொரு சிறுகதை:
**காசையும் சுருட்டிக் கொண்டு கடல் கடந்து வந்து விட்டால் பிடிக்க முடியாது தப்பி விடலாம் என்று நினைத் தாயோ?"
*வந்ததும் வராததுமாகத் தன் வார்த்தைச் சவுக் கால் இறுக்கிச் சொடுக்கினார்.'"
★
காந்தன்! உங்கள் சூடு பொல்லாத சூடுதான்!
நீங்கள் இறுக்கிச் சொடுக்கியிருப்பது வார்த்தைச் சவுக்கு மட்டுமன்று: கருத்துச் சவுக்கும் தான்!
நான் உதாரணத்திற்கு எடுத்தாண்ட இரண்டு சிறு கதைகளிற் போலவே, ஏனைய ஒன்பதிலும் சவுக்கைச் சுழற்றி நன்றாகத் தான் விளாசி இருக்கிறீர்கள். வர்க்க பேதங்களால் நாசமுற்றிருக்கும் மனித சமூகத்தின் மனச் சாட்சியைச் சொடுக்கி எழுப்பும் சவுக்கின் “சுரீர்” ஒலி, ஒவ்வொரு கதையிலும் பளிச்சுப் பளிச் சென்று தொனிக் கிறது. خ۔
மாப்பசான் போலவும் மாக்சிம் கோர்க்கி போலவும் முத்தாய்ப்பாகச் சவுக்கைக் கடைசி வரிகளில் அனாயாச மாகக் கொழுவி இழுத்து மடக்கும் அந்த இறுதி உத்திவீச்சு மின்னல் எறிப்பாக, அலாதியாக ஒவ்வொரு சிறுகதை, யிலும் விழுந்திருக்கிறது.
女
விழுந்தவர்கள் எழுந்திருக்க வேண்டும். விழுவதெல் லாம் எழுவதற்கே அல்லவா? விழிக்காமல் தூங்கி விட் டால் எழ முடியாது. எழாதவர்களைச் சவுக்கடி கொடுத் தாவது எழுப்பத்தான் வேண்டும். எங்கள் சமூகத்துக்கு. உங்களைப் போன்றவர்களின் சவுக்கடிகள் மேன்மேலும், தேவை.
18

"மனப்பாம்பு’ என்ற உங்கள் சிறுகதையில் 'இறந்த வர்களோடு அவர்களின் எண்ணங்களும் இறந்து போவ தில்லை" என்று ஒரு வசனம் எழுதி இருக்கிறீர்கள். அட் சர இலட்சம் பெறும் வார்த்தைகள். விழிப்புறப் போகும் எங்கள் சமுதாயத்தில், உங்கள் சிறுகதைகளின் எண்ணக் கருத்துகளும் இறக்கப் போவதில்லை.
தொகுதிச் சிறுகதைகள் அனைத்தையும்நான்ஆராய்ந்து எடுத்துக் காட்டுதல் செய்யவில்லை. அவற்றின் சிறப்பை அவையே பேசும். ஆழ்ந்து படிப்பவர்கள் உணர்வார்கள்.
**நெடுங்காலம்" என்று இந்த மடலை ஆரம்பித்தேனே! அந்த நீண்ட நெடுங்காலம், நித்தியமாக உங்கள் படைப்பு கள் நிலைக்கட்டும்!
யாழ்ப்பாணம், ஒட்டு மடம் வீதியில், 111 என்று,சோம கர்ப்பனாகிய திருமாலின் நுதலில் ஒளிரும் நாமக் குறியீட் டைத் தாங்கிய இலக்கம் கொண்ட உங்கள் இல்லத்தில், விஷ்ணு பிராட்டியாகிய பத்மாவதியின் கருணையும், பிரம் மன்தேவி கலைமகளின் கடாட்சமும் நிலைக்கட்டும்நெடுங்காலம்!
அன்பு மறவாத,
*செல்வ மாளிகை’’ சில்லையூர் செல்வராசன் 497, வைவ் வீதி, 3-10-1986 கொழும்பு-5.
தொலைபேசி : 583969

Page 12
உள்ளே.
1
s
●
நிலவோ நெருப்போ?
. காசுக்காக அல்ல
ஆகுதி
வாத்தியார் பேசவில்லை! அதுவேறு உலகம்
மனப்பாம்பு
தெளிவு
குளத்தங்கரை அரசமரம்
பவளக்கொடி
நாகவிகாரை
விடியல்
Luddith 21
31
49
66
79
94
03
10
119
127
35

நிலவோ நெருப்போ?
புகையிலைக் கன்றுகள் கொய்யா இலைக் கூட்டை உடைத்துக் கொண்டு கூவத்தொடங்குகிற சேவல் அளவுக்கு வளர்ந்து, தலையை வெளியே எட்டிப் பார்க்கிற காலம். நெல்லியடிச் சந்தியிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் றோட் டில் அரைக் கட்டை தூரத்தில் தெருவோரமாக கிளை பரப்பில் சடைத்து வளர்ந்திருக்கிறது, ஒரு சொத்திப் பூவரச மரம். அதனடியில் மாலை தோறும் குழைக்கடை கூடுவது வழக்கம். புகையிலை பயிராகும் போகத்தில் இந்தக் குழைக் கடையில் வடமராட்சித் தமிழ் வழக்கு பிறந்த மேனியாகக் காட்சி தரும்! சனசந்தடியும், சரளமான விரசப் பேச்சும் இரைச்சலும் சேர்ந்து நெல்லியடிக் கறிக்கடையை ஞாபக மூட்டும்! மேற்கிலும் கிழக்கிலும் இரண்டு மூன்று கட்டை தூரத்துக்கப்பாலிருந்தே குடியானவப் பெண்கள் பாவட்டங் குழையையும், குயி லங் குழையையும் கட்டுகளாகக் கட்டித் தலையிற் சுமந்து கொண்டு வந்து குழைக்கடையில் பரப்புவார்கள். வளர்ந்து வரும் புகையிலைக் கன்றுகளுக்கு 'அட்டம்" தாழ்க்க பாவட்டங் குழையும் குயிலங் குழை யும் வாங்குவதற்காக ஊர்க் கமக்காரர்கள் அங்கு வந்து கூடுவார்கள்.
21

Page 13
குழைக்கடை கூடிவிட்டால் முருகேசபிள்ளைதான் அங்கு முடிசூடா மன்னர்-கடந்த ஏழு வருடங்களாக இவர் தான் அங்கு தரகர். இவருக்கு எதிராக ஒரு பொடிப் பயல் கூட. அங்கு வாலாட்ட முடியாது. குழைக் கடை மாத்திரம் இல்லை, அந்தச் சுற்றுவட்டாரமே இவருடையகுடும்பத்துக்கு குத்தகைச் சொத்து மாதிரி. கிராமச் சங்கத் தலைவர் இவருடைய பெரிய தகப்பன், விதானை யார் இவருடைய ஒன்றுவிட்ட சகோதரன்; இவருடைய தாத்தாவின் அப்பா அவருடைய காலத்தில் இரு மரபுத்துய்ய வந்த பெரு நிலக்கிழார். இவரோ தனது காலத்தில் எடுப்புச் சாய்ப்பான ஆம்பிளை, ஊர் நாட்டாண்மைக்காரார்.
ஜன இரைச்சலை அமுக்கிக் கிழித்துக் கொண்டு கேட் கக் கூடிய சிம்மக்குரல். வேட்டைத் திருவிழாக் குதிரை வாகனம் போல மேலெழுந்து எட்டிப் பார்க்கிற மூக்கு சொந்த ஊர்ப் புகையிலையில் சுருட்டிய சுத்தைப் பிரத்தி யேகமாகச் சப்பிச் சப்பி உமிழ்ந்தபடி இருக்கும் வாய், குறைவெறியில் கொதித்து மின்னிக்கொண்டிருக்கும் பெரிய கண்கள். வாய்க்கால் ஒரமாக அடர்ந்து வளரும் அறுகம் புல்லுப் போல உரோமம் படர்ந்த நெஞ்சுக்கட்டு. பரணி பிடித்த புகையிலையின் கருமை காட்டும் உடம்பு, கள்ளு முட்டி போல வயிறு; சற்றுத் தாழக்கட்டிய புழுதி மண்டிய வேட்டி: மேலே வரிந்து சுற்றிய சவுக்கம். இவற்றோடு நெற்றியில் சந்தனப் பொட்டும் அணிந்திருந்தாரென்றால் அன்று நிச்சயமாக ஒரு வெள்ளிக்கிழமையாக இருக்கும். இவர்தான் தரகர் முருகேசபிள்ளை;
女
குழைக்கட்டு ஒன்றுக்குத் தரகுக் கூலி ஐந்து சதம்தான். ஆனாலும் கள்ளுச் செலவுக்கும், காலை மாலைச் சாப்பாட்டுக்கும் எப்படியும் அவருக்கு நாளாந்த வரும்படி நாலு ரூபாவுக்குக் குறையாது. குழைக்கடைக் காலம் முடிந்தால் மாட்டுத் தரகு வரும். அது முடிந்தால் ஒலைத் தரகு. இதற்கிடையில் புகையிலை பயிராகிவிடும். பிறகு புகையிலைத் தரகு.
22

தரகருக்கு வருவாய்க்கு வற்றில்லை. ஆனாலும் அன்றா டச் சம்பாத்தியம் அவருக்கு அன்றைக்கே சரி. முருகேச பிள்ளை நாளையைப் பற்றி இன்றைக்கே கவலைப் படாத பேர்வழி!
女 குழைக்கடையில், புதிய குழைகள் வந்தபடியும் தரகர் தீர்த்துவிட்டவை தோட்டங்களை நோக்கித் தலைச் கமையாகச் சென்ற படியும் இருக்கின்றன.
குழைகொண்டு வந்த குடியானவப்பெண்களுக்கும் தர கருக்குமிடையில் பேரம் தொடங்கி விட்டது
‘எங்கை.செல்லாச்சி! நீயும் மற்ற அஞ்சுபேரும் சுப்பிரமணிய நயினாரோடை போறியளே?. ரெண்டே கால் போட்டிருக்கு."
*நம்மாணையாக்கும் கழுத்து அமத்த அமத்தச் சுமந்தந்த நோ மாறயில்லை. நாம் இந்தப் பெரிய கட்டு களுக்கும் ரெண்டே கால் போடுது...”*
‘குயில் எண்டால் சூடுதான்.நீங்கள் பாவட்டையைக் கொண்டந்திட்டு.உம் உம்.ரெண்டு பணத்தைக் கூட வைச்சு வேண்டுங்கோ.இந் தா.தூக்கு...”*
குழைக்கட்டுக்களைச் செல்லாச்சியின் தலையில் எடுத்து . விடுகிறார் முருகேசபிள்ளை.
மேலும் புதிய குழைக்கட்டுக்கள் வந்து இறங்குகின்றன. பொன்னியும் அவள் அயல் வீட்டுக் கூட்டாளிப் பெண்களும் கொண்டு வந்தவற்ற்ைக் கட்டுக் கட்டாகத் தூக்கிப் பார்க்கிறார் தரகர். பெண்கள் நெற்றி வியர்வையைத் துடைத்துக்கொள்ளுகிறார்கள்.
‘ஓ!-பொன்னுவோ? உன்ரை விலைப்பருவங்கள் எப்பிடி?’’-தரகரின் கேள்வியில் சிலேடை சாயல் காட்டு கிறது.
தலைமயிரை அவிழ்த்துச் சிலுப்பி, கோதிமுடிந்தபடி பொன்னி தரகரை நிமிர்ந்து பார்க்கிறாள்.
23

Page 14
முருகேசபிள்ளையின் முகத்தில் பதற்றம் இழையோடி மறைந்து, இலேசாக மலர்ச்சி விரிகிறது.
*உன்ரை கட்டுக்கு ரெண்டரை போடுறன். மற்ற வையின் ரை சிறிசு. ரெண்டேகால்தான். சரியே?"
கேள்வியையும், குறைச் சுருட்டையும் சேர்த்து எறிந்து விட்டு, உடனே வராத பதிலைத் தேடுவதற்காகக் கண் களைச் சட்டென்று பொன்னியின் முகத்தில் வீசுகிறார் தரகர். அப்பொழுதும் பதில் தயங்குகிறது. தரகரின் பார்வை சற்றுக் கீழே நகர்கிறது. பொன்னியின் கருங்காலிச் செதுக்குடம்பைக் கவ்விக் கிடக்கும் குறுக்குக்கட்டுக்கு மேலே மொழு மொழுவென்றிருக்கும் வழுக்கு மேனியில் அவர் கண்கள் மேய்கின்றன. அவள் கன்னத்தில், தோளில், புஜத்தில், இலையான் உட்கார்ந்தால் கூட நழுவி விழுந்து விடும்!
‘நமக்குத் தெரியுந்தானே. மற்றக்கட்டுகளுக்கும் நாயமாப் போடவாக்கும்." - பொன்னியின் வாய்மட்டு மல்ல. அவளுடைய கண்களும் இந்த வார்த்தைகளைப் பேசுகின்றன.
வெற்றிலைக் காவியேறிய ஈச்சங்கொட்டைப் பற்கள் கெஞ்சுகின்றனவா? கேலிசெய்கின்றனவா?”
‘நம்மைத்தானுக்கும். என்ரையையும் தீர்த்துவிட வன். கறிக்கடைக்கும் போகவேணும். இருளுது". எதிர்ப் புறமிருந்து ஒரு குரல் இறைஞ்சுகிறது.
‘என்ன துடிக்கிறாய்?.பி ஸ்  ைள கிணத்துக்கட்டி 6b6pG8uLunT?””
“நமக்கு எப்பவும் பகிடிதான்.மத்தியானமும் சமைக் கேல்லை.அவர் பனை இடுக்கிப்போட்டு வந்து சத்தம் போடப்போறார்.கொஞ்சம் கெதிப்பண்ணிவிட.வெள் ளெனக்கூட இதிலை இருக்கிறன்"
*உம். சரி, சரி. பொன்னு! மற்றவையின்ரைக்கு இன்னும் ஒரு பணத்தை வைச்சுத் தீர்த்திருக்கு.கொண்டு
24

போங்கோ. இஞ்சாரும் வேலுப்பிள்ளை காசைக் குடுத்து அதுகளை வெள்ளென அனுப்பிவிடும்'
வேலுப்பிள்ளையைத் தொடர்ந்து பொன்னி முன் நடக்க மற்ற ஐந்து கூட்டாளிப் பெண்களும் தொடர்கி றாாகள.
"என்ரை மகராசன் கடவுள் போலை; சுணக்கமில்லா மல் சுறுக்காத் தீர்த்துவிட்டுட்டுது."
சென்ற இரண்டு மூன்று கிழமைகளாக பொன்னி மீதும், அவளோடு வருபவர்கள் மீதும், முருகேசபிள்ளைக்கு. விசேஷ அக்கறை தான். குழைக் கடையில் அவர்கள் அதிகம் சுணங்குவதில்லை.
Xபொன்னி சின்னப்பெண்; குழைக்கடைத் தொழிலுக், குப் புதுசு மேற்சட்டையைக் களைந்துவிட்டு, குறுக்குக் கட்டு கட்டத் துவங்கி முழுசாக நாலு மாசங் கூட இன்னும் ஆகவில்லை!
பருவத்தைத் தாண்டி, நீண்டுவளர்ந்து, ‘கெட்டு" வெடித்து, பூத்து, மிதந்து நிற்கும் புகையிலைச் செடிகள் வம்சவிருத்திக்கான வித்து விளைப்பதற்குத் தான் பயன்படும். இலைகள் சூம்பியும் விடும்; “குருமன்’ பூச்கி பிடித்த புகையிலைச் செடிகளோ, “வெளுறிப்போய் விடும் இப்படிப்பட்ட புகையிலைச் செடிகளைக் கூட பதப்படுத் உருசிபார்த்த அனுபவங்கள், இந்த ஏழு வருடத் தரகர் தொழிலில் முருகேசபிள்ளைக்கு ஏராளம்!
இளமையென்ற செழுந்தரையில் காலூன்றி, வாளிப் பாக வளர்ந்து, எழில் நிறைந்து, முறுவலித்து நிற்கும் பொன்னியைக் கண்டபோது, முருகேசபிள்ளைக்கு மதா ளித்து வளர்ந்து, முறுக்கேறி, பாணி பிடித்த இலைகளைப் பரப்பிக் கொண்டு திறம் விளைச்சலுக்கு உதாரணமாகத் திகழ்ந்து நிற்கும் புகையிலைச் செடிதான் தோற்றங் காட் lf).)
25

Page 15
மாலை வெய்யிலின் மஞ்சளை வெற்றுத் தோளில் போர்த்தி நீலச்சேலையை நெஞ்சில் குறுக்கே கட்டி பசுமை யான குழைக்கட்டைத் தலையில் ஏந்தி, வெற்றிலைச்சாறு உதட்டைச் சிவப்பாக்க பொன்னி நடந்து வந்த ஒய்யா ரத்திற்கு, தரகர் முருகேசபிள்ளையின் தாபமுற்ற நெஞ் சம் தாளம் போடுகிறது. பொன்னி குழையை இறக்கு முன்பே, தரகர் குழையத் தொடங்கி விடுகிறார்.
**வலுவான கட்டு. களைச்சிருப்பியே!. இப்பிடிப் “பாரத்தைச் சுமக்கிறதோ?. - அனுதாபம் உதடெல் லாம் வழிய தனக்கு இல்லாத உரிமையை வலிய விர வழைத்துக் கடிந்து கொள்கிறார். ar
இறால் எறிகிறார்! சுறா இன்னும் கவ்வவில்லை!!
பொன்னிக்கு வெற்றிலைத் தாகம், குறுக்குக் கட்டின் இடுக்கிலிருந்த கொட்டைப் பெட்டியை, விரலைச் செலுத்தி எடுத்து விரிக்கிறாள். கொழுந்து வெற்றிலை முருகேச பிள்ளையின் கண்களைக் குத்துகிறது; கிறுக்கேற்றுகிறது.
‘இஞ்சை பிள்ளை; பொன்னு. வாயெல்லாம் புளிக்
s
குது எனக்கும் எப்பன் வெத்திலை தா.
பொன்னி முருகேசர் கையில் வெற்றிலை வைக்கிறாள்.
'கதையோடைகதை. இண்டைக்கு உன்ரை குழையை நான்தான் எடுக்கப் போறன் பொன்னு. தம்பி யின்ரை தறைக்கு குழை வைக்க வேணுமெண்டவன் உன்ரை நல்லாயிருக்கு. மற்றவையின்ரை போகட்டும். நீ கொஞ்சம் பொறு.'
*பின்னைச் சரியாக்கும்; நயினார்.' பொன்னி கொடுத்த வெற்றிலையையும், வரப்போகிற ஏதோ இன்பத்தின் கற்பனையையும் சேர்த்து, தரகர் ஒரு “கணம் அசை போடுகிறார்.
செல்லாச்சி கொஞ்சம் துடுக்குக்காரி.
26

** என்னவாக்கும் நாங்கள் வீட்டை போறேல் லையே?* ... "
முருகேசபிள்ளை சமாளித்துக் கொண்டு, தரகில் விரைவு காட்டுகிறார்.
குழைகள் செல்லுகின்றன. புதுக்குழைகள் வருகின்றன:
அந்தி சரிந்து கொண்டிருக்கின்றது.
பொன்னி இருக்கிறாள்.
குழைக்கட்ைட கலைந்து முருகேசபிள்ளை புறப்பட, பொழுது மைம்மலாகி விட்டது. அரைச் சவுக்கத்தை அவிழ்த்து உடம்பு வியர்வையைத் துடைத்துவிட்டு, உதறித் தோளில் போட்டுக் கொண்டு, அவர் முன்னே செல்ல, பொன்னி குழைக்கட்டோடு பின்னே நடந்தாள். பெருந்தெருவிலிருந்து இறங்கி, வெள்ளவாய்காலூடாக நடந்து தோட்டத்துப் பெருவரம்பில் கால் எடுத்து வைக் கும் பொழுது மேற்குப்புறப் பனை வட்டுக்குள்ளிருந்து முருகேசபிள்ளையின் பொட்டல் விழுந்த வழுக்கைத் தலை போல வளர்பிறை தன் களங்கத் திட்டுக்களுடன் எட்டிப் பார்த்தது பனை வட்டுக்குள் இரண்டு நுங்குக் காய்கள் தேனிலவில் மின்னுகின்றன.
தோட்டம் வந்து விட்டது.
'இதிலை இறக்கு"
அவள் குழைச்சுமையை சரிந்து இறக்கினாள்.
*அந்த அவசரத்தில்..'
அவள் குறுக்குக்கட்டு அவிழ.
பனை வட்டு.
தேனிலவில் மின்னும் நுங்குகள்.
முருகேசபிள்ளையின் குதிக்காற் குருதி குபிரென்று சீறிச் சிரசிலடிக்கிறது.
அவர் உணர்ச்சிகளும் கட்டவிழ.
27

Page 16
*சி! கையை விட...”* தோளில் நெளிந்த பாம்பை உதறி எறிகிறாள். தீயைத் தொட்ட கை “சுரீரென்று சோர்ந்தது. அடுத்து என்ன என்ற தீர்மானம் தோன்றாத இரண்டு கணங்கள் தீய்ந்து அமுங்குகின்றன.
“பொன்னு. பொன்னு." கேரலாகக் குரல் கரகரக் கிறது.
"துT. நிலவையுங் கிழித்துக் கொண்டு பொன்னி என்ற நெருப் புச் சுடர் விர்ரென்று விரைந்து மறைகிறது.
大 அடுத்த நாள் குழைக்கடையில் தரகர் பொன்னியைத் திரும்பியும் பார்க்கவில்லை. பொன்னியின் குழை மைம்மல் வரை காத்திருக்கிறது. மாலையில் வாடிச் சோர்ந்து வீடு செல்கிறது.
9 p.
அன்றிரவு பொன்னி வீட்டில் அடுப்பெரியவில்லை.
இரண்டாவது நாள்.
பொன்னியின் குழைக்கட்டு வருகிறது. போகிறது. வீட்டில் அடுப்புத் தூங்குகிறது.
மூன்றாவது நாள்.
நிலைமை மாறவில்லை.
நாலாம் நாள்.
கூடவந்த நாலு பெண்களுக்கும் பொன்னி நடந்த தைச் சொல்லிவிட்டாள்.
குழைக்கட்டுகளை இறக்கும் பொழுதே அந்த நாலு பெண்களும், பொன்னியுடைய குழைக்கட்டும் தீர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தரகரிடம் விடுத்தார்கள்
முருகேசபிள்ளை முடியாது என்று மூர்த்தண்ணியமாக
மறுத்துவிட்டார்! h
28

முடிவு? ஐந்து குழைக்கட்டுகள் அன்று விலைபோக வில்லை. s
விளைவு? ஐந்து குடும்பங்கள் அன்று பட்டினி! மறுநாள் அந்த ஐந்து குழைக்காரிகளின் கூட்டாளிப் பெண்களுக்கும் விஷயம் தெரிந்து விட்டது. பலன்? அத் தனை பேரும் அன்று பட்டினி
அத்தனை பேருக்கும் விசாரங்கள் வேறு; இரசனைகள் வேறு; உணர்வுகள் வேறு ஆசைகள் வேறு. ஆணுல். அவர்களெல்லோருக்கும் வயிறு ஒன்று; பசி ஒன்று.
பசி, இயக்கமாகிறது, இயக்க மூலதனமாகிறது; இயக்க சக்தியாகிறது.
குழைக்கடையில் தரகர் காத்திருக்கிறார். கமக்காரர் கள் காத்திருக்கிறார்கள். குழைக்கட்டுகள் வருகின்றன. அவற்றின் சொந்தக்காரிகள் அவற்றுக்கெதிரில் வரிசை யாக உட்கார்ந்திருக்கிறார்கள். தரகர் தனித்தனியாக விலை தீர்க்க முயல்கிறார்.
'பொன்னியின் குழைக்கட்டை முதலில் விலை தீர்க்க வேணும்."
ஒரு பெண் குரல் எழுகிறது. *இல்லாவிட்டால் ஒருத்தரும் விக்கமாட்டோம்." “நாளேலையிருந்து ஆரும் இந்தச் சந்தைக்குக் குழை கொண்டர மாட்டோம்."
பெண் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. குழை வாங்க வந்த சிறுகமக்காரர்கள் தரகர் முருகேச பிள்ளையின் முகத்தைப் பார்த்தனர். முதல் நாளும் அவர்களுக்குக் குழை கிடைக்காத ஏமாற்றம்
“முருகேசண்ணை. கோவத்தைப் பாராமல் தீர்த்து விடுங்கோ.பாவம், கொண்டு வந்த குழையை அதுகள் திருப்பிக் கொண்டுபோறதே?..”*
29

Page 17
ஒரு கமக்காரர் பாவம் பார்க்கும் தோரணையில் பரிந்து பேசுகிறார்.
தரகர் மெளனியாயிருக்கிறார்.
‘உழைப்பாளிகளோடை ஏன் பகைப்பிடிப்பான்? சமா தானமாய்த் தீர்த்து விடுங்கோ.”*
தரகர் தலையசைக்கவில்லை.
*வாருங்கோ போவம்!.நாளைக்கு அடுத்த சந்தைக் குப் போவம்.”*
குழைக்கட்டுகளைத் துரக்கிக் கொண்டு அந்தப் பெண் கள் புறப்பட்டு விட்டார்கள்.
கமக்காரர்கள் திகைத்து நிற்கிறார்கள். இந்தக் குழைக் கடைக்குக் குழை வராவிட்டால், நாலு கட்டைக்கு அப் பாலிருக்கிற அடுத்த சந்தையிலிருந்து கொண்டுவர கூலி அதிகமாகும். அதிகமானால்-விளைச்சல் நஷ்டமானால். வயிறு? பசி?
**தரகர் கிடக்கிறார். குழைக்காரிகளைக் கூப் பிடுங்கோ...”*
ஓர் இளங்கமக்காரன் முதல் குரலெடுக்கிறான். வேறு;
குரல்களும் சாதகமாக ஒலிக்கின்றன.
61பொன்னி! செல்லாச்சி! வாருங்கோ! எல்லாரும் திரும்பி வாருங்கோ.”*
நாட்டாண்மைத் தரகர் நாவடங்கி நிற்கிறார்.
அத்தனை கமக்காரர். அவர்களுக்கு உணர்வுகள் வேறு இரசனைகள் வேறு; ஆனால் வயிறு ஒன்று; பசி ஒன்று.
பசி வந்து விடுமே என்ற பயத்தில் கட்டுண்டு அவர் கள் சேர்ந்து நிற்கிறார்கள்.
அந்தப் பயத்துக்குப் பயந்து, நாட்டாண்மைத் தரகர் நாடியொடுங்கி நிற்கிறார். (தினகரன் - 1962)
30

காசுக்காக அல்ல.
ஆழி அன்னைக்கு என்ன கவலையோ? அவள் அலைக் கரங்களால் நெஞ்சிலடித்து ஒலமிடத் தொடங்கிவிட்டாளே! கொஞ்சத் தூரத்தைத் தாண்டுவதற்குள்ளாகவே அந்த மீனவனின் கைகள் ஓய்ந்து போய் விட்டன; அவன். நெற்றியில் வியர்வை துளிர் கட்டி விட்டது.
வள்ளத்தின் பாய்மரத்தைக் கெட்டியாகப் பிடித்து, நடுவில் வாகாக உட்கார்ந்திருக்கும் அருணாசலம், கடல், அன்னையின் கண்ணீரையோ மீனவனின் வியர்வையையோ ஒரு பொருட்டாகக் கருதவில்லை.
அந்த ஊதற்காற்றுக்கு வாயிலிருந்த சுருட்டுக்கூட. அவருக்கு இதம் கொடுக்கவில்லை. அந்தச் சுருட்டைப் போல அவரின் மனமும் புகைந்து கொண்டிருந்தது. தூரத்தில் கரைந்து செல்லும் கடற்கரையைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தார். மைம்மல் இருளை வாரி, உடம் பைப் போர்த்தி, முக்காடிட்டுக் கொண்டு, அவரைப். பார்த்து அது ஏளனஞ் செய்வது போலவே அவருக்குப் பட்டது!-*ம்.சரி; நான் உன்னை ஒரு கை பார்த்துக்
3.

Page 18
கொள்ளுகிறேன்' என அவரின் உள்ளம் அந்தத் திசையைப் பார்த்துக் கறுவிக் கொண்டது. கையை முகத்தினருகில் தூக்கி நேரத்தைப் பார்த்தார். 'ரேடியம் டயல் பொருத் திய கைக்கடிகாரம் என்பதால், ஆறேமுக்கால் மணி என் பது தெளிவாகத் தெரிந்தது.
அவரின் வயிற்றில் அகோரப்பசி. ‘மெய்யே காணும்! எட்டரைக்குள் அந்தப் பக்கம் போய் விடலாமே?' மனதில் பட்ட காயத்தை மறைத்துக் கொண்டு, தனது அந்தஸ்துக்குரிய தொனியை வார்த்தை களுக்கு ஊட்டி செல்வந்தர் அருணாசலம் கேட்டார்.
* தண்ணி குழம்பிக் கிடக்கு எப்பிடி நிச்சயம் சொல் லுறது, தெண்டிச்சுப் பாப்பம்" அம் மீனவனின் குரலில் பணிவோ, பயமோ இருக்கவில்லை. அவன் கைகள் தம் கடமையைச் செய்து கொண்டிருந்தன.
'சரி சவளைக் கொஞ்சம் கெதியா வலி'-சலிப்புடன் கூறிக் குறைச் சுருட்டை வீசியெறிந்து விட்டு அவர் மெளனமாகி விட்டார். அவரின் மனக்கடலின் வன்மம் என்ற சுறா ஆர்ப்பரித்துத் துள்ளி எழுந்து வாயைப்
அலைச்சலால் ஏற்பட்ட களைப்பு. அவமானத்தால் ஏற் பட்ட உளைச்சல், பசியால் ஏற்பட்ட சோர்வு எல்லாம் சேர்ந்து அவர் வாடிப் போய் விட்டார். கால்களை மடித்து அவற்றைக் கைகளால் கட்டி, நெஞ்சை அதில் சாத்தி, முகத்தை முழங்காலில் பதித்து, பரந்த கடலைப் பார்த் துக் கொண்டிருந்தார் அருணாசலம்.
பசி என்றால் என்ன என்பதை உணராதபடி நேரத் துக்கு நேரம் சாப்பிடுவதுடன், பாலும், பழமும், பாதாம் பருப்பும், இடை உண்டியாக அடிக்கடி கொறித்து நிரப் பப்பட்ட அவரின் வயிறு பசி, பசியென அவலக்குரல் எழுப்பி அலைகடலின் இரைச்சலுடன் போட்டியிட்டது.
32

அடுக்கடுக்காக அரிசி மூட்டைகள் லொறிகளில் ஏற்றப் பட்டுக் கொண்டிருந்தன. வழிந்து வரும் வியர்வையைக் கூடத் துடைக்க முடியாமல் சின்னணினதும், காத்தியினதும் தலைகளில் கழுத்தை அடைக்கும் அரிசி மூட்டைகள். சின்னனின் மூச்சு இளைக்கத் தொடங்கி விட்டது. கால்கள் கொஞ்சம் தயங்கின.
*டேய் சின்னன்!. என்ன சதிராட்டம்?. உனக்கு அன்னநடை பழக இதுதான் இடமோ?" அருணாசலத்தின் சிம்ம கர்ஜனை அந்த மில்லெல்லாம் ஒலித்தது.
“இல்லை முதலாளி. காலமை சாப்பிடேல்லை. களையாயிருக்கு' காய்ந்த தொண்டைக்குள்ளிருந்து குரல் வருவதற்காக எச்சிலைக் கூட்டி விழுங்கினான்.
*சவங்கள்!.ஒரு நாளுக்கு எத்தனை தடவை சாப் பிட்டுத் தொலைக்கிறான்கள்!'-பசியறியாத அருணாசலத் துக்கு, சின்னானுக்குப் பசித்தது ஏளனமாகப்பட்டது.
தவிடும், தூசும் மூக்குக்குள் புகுந்து, சுவாசப்பைக் குள் இறங்கிக்கொண்டிருப்பதை உணர முடியாமல், இயந் திர வேகத்தில், அந்தக் கூலிப்பெண்களின் கைகள் அரிசி யைப் புடைத்தன. வள்ளி புடைக்க வேண்டிய அரிசி மூட்டை இன்னும் முடிவடையாமலிருப்பதை அருணாசலத் தின் கழுகுக் கண்கள் கண்டுவிட்டன. அவருக்கு ஆத்திரம் வந்துவிட்டது.
‘என்ன வள்ளி!. உந்த ஒரு மூட்டை அரிசியை அரைப்பொழுது நேரமாகப் புடைத்துக்கொண்டிருக்கி றாய்!" சீறினார்.
‘குழந்தைக்குப் பசி முதலாளி. பால் குடுத்திட்டு வந்தன். அதுதான் இடையிலை கொஞ்சம் செண்டு போச்சு". கால்களின் இடையில் வாலைச் செருகிக்கொள் ளும் நாயின் பணிவுடன் வள்ளி சொன்னாள்.
நா. சோமகாந்தன் 33 pi-3 ,}bgל

Page 19
*சரி, சரி; நீ குழந்தையின் பசியைப் பார்த்துக் கொண்டிரு, இன்றைக்கு உனக்கு அரைச்சம்பளம்தான், போடுவேன்' அவர் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.
கண்டிப்பும் கறாருமாக யாழ்ப்பாண நகரில், வியாபா ரத்தில் கொடிகட்டிப் பறக்கும் அரிசி மில்லின் உரிமை, யாளர்தான் அருணாசலம். அந்த மில் அவரது தகப்பன் விட்டுவிட்டுப்போன தேட்டம். அதைப்போல இருமடங்கு சம்பாதித்துவிட வேண்டுமென்ற இலட்சியத்தில், அரிசி கொடுப்பதற்கென அரசாங்கத்திடம் கொந்தறாத்து எடுத்திருந்தும். அவர் எதிர்பார்த்த வேகத்தில் பணம் குவியாததால், “கறுப்பு வியாபாரத்திலும் கொஞ்ச நாட்களாக அவர் ஈடுபட்டிருப்பதாகக் கேள்வி.
புது வியாபார விஷயமாகக் கொழும்பு போய்விட்டு ஊர் திரும்பிய அருணாசலம், சூசை திடீரென ஊருக்குப் போய்விட்டானென்பதைக் கேள்விப்பட்டபோது திகைப் பும், நூறு ரூபாயையும் எடுத்துக்கொண்டு போய்விட்டா னென்பதையறிந்தபோது கொதிப்பும் அடைந்தார்.
சூசை-மூன்று வருடங்களுக்கு முன்னர், பெரிய முத லாளி உயிருடன் இருக்கும்போது, தன் ஒரு சாண் வயிற் றைக் கழுவுவதற்காக நெடுந்தீவிலிருந்து "கடல் கடந்து வந்து, அந்த மில்லில் எடுபிடி ஆளாக ஒட்டிக்கொண் டவன்தான். அருணாசலத்துக்குப் பட்டாபிஷேகம் நடந்து முதலாளியாகி, அந்த மில்லின் சிம்மாசனத்திலேறிய பிறகு, சூசையின் சுறுசுறுப்பையும், அப்பாவித்தனமான 6. Fl f} fT6ðf விசுவாசத்தையும், வலுவான உடலையும் கவனித்துவிட்டு அவர் அவனுக்கு கூடுதல் “பதவியைக் கொடுத்திருந்தார். பகலில் அவன் எடுபிடிப் பையன்! இரவில் அந்த மில்லின் நம்பிக்கையான காவல் காரன். சிக்கனமாக முதலாளி கொடுத்த அதே பழைய சம்பளத் தில், புதிய கடமையையும் சேர்த்து, ஒழுங்காகப் பணி புரிந்தான் சூசை. அடக்கமான பையனாகப் பணிபுரிகிற சூசை மீது, அருணாசலமும் அடிக்கடி கருணா கடாட்சம்' காட்டத் தவறுவதில்லை. தனக்குத் தேநீர் வாங்க அவனை
34 D நிலவோ நெருப்போ?

வெளியே அனுப்பும்போது, இடையிடையே அவனுக்கும் சில்லறை கொடுப்பார். இரண்டு மூன்று மாதத்துக்கு
இதெல்லாம் அவனுக்கு அவர்மீது பெரும் மதிப்பை ஏற். படுத்திவிட்டன. அதனால், அடிக்கடி பெரிய கார்களில், பெரும் மனிதர்கள் வியாபார விஷயமாக இரவில் முத லாளியிடம் பேரம்பேச வரும்போது, அவர்கள் சம்பா ஷணைகளில் அக்கறை காட்டுவது தனது அத்தஸ்துக்குப் பொருத்தமற்றது என்பதையுணர்ந்து, ஒதுங்கிப் போய் கடற்கரையில் கால்களையும் தலையும் உள்ளே இழுத்து செத்தது போலக் கிடக்கும் ஆமையைப் போல அடங்கி, மில்லின் வாசலில் சூசை உட்கார்ந்து கொண்டு, கடைசி யாகத்தான் பார்த்த சினிமாவைப் பற்றியோ சின்னமேள ஆட்டத்தைப் பற்றியோ, நினைவில் சஞ்சரிக்கத் துவங்கி விடுவான். ஆனால் அருணாசலத்துக்கோ, அவனுக்கும் தன் வியாபார விஷயம் விளங்கியிருக்கும் என்ற சந்தே கம் எப்போதும் இருந்தது. அதனால், அவன்மீது அவர் கூடுதல் அன்பு காட்டுவது போல நடந்துகொண்டு வந்தார்.
அருணாசலத்துக்கு வந்த கோபத்தில் தலைகால் தெரிய வில்லை. கண்கள் சிவந்துவிட்டன.
ஒரு கூலிக்காரனுக்காவது அவர் இதுவரை நூறு ரூபா கைமாற்றாகவோ கடனாகவோ கொடுத்ததில்லை. "சூசை நூறு ரூபாயுடன் போய்விட்டான்'. அவர் கொடுப்புப் பற்கள் அரைத்தன.
சூசை திருடிக்கொண்டு ஓடிவிட்டதாகப் பொலிசில் முறைப்பாடு கொடுக்கலாமோ என ஒரு கணம் யோசித் தார் அச்சம் தடுத்தது- அவரது புதிய வியாபார விஷ யங்களைப் பற்றிய தகவல்களையும் விசாரணையின்போது வெளியில் அவன் கக்கிவிட்டால்..? அந்த யோசனையை விட்டுவிட்டார்.
நா. சோமகாந்தன் () 35

Page 20
தீர்மானமான முடிவோடு அவர் புறப்பட்டு விட்டார். கன்னத்தில் நாலு அறை வைத்து சூசையை இழுத்துக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற வீறாப்பு அவருள் எழுந்து விட்டது. எனவே மற்றவர்களின் திறமையில் நம்பிக்கையில்லாத அருணாசலம், சூசையைத் தேடி அவரின் ஊரான நெடுந்தீவுக்குத் தாமே புறப்பட்டு விட்டார்.
女
கடலில் பேரலை ஒன்று பம்மி எழுந்து, கேக்கலி கொட்டி, கொக்கரித்துச் சுருண்டது. அது அருணாசலத்தின் மனத்தைக் கலக்கிச் சுழித்தது.
‘உஷ். ஷ். கொடுமையான சுளிர் வெய்யில்.
நெடுந்தீவை யடைந்து, சூசையின் வீட்டைத் தேடிப் பிடித்துச் சேர்வதற்குள், அந்தச் சுடுமணலும், கடுமையான வெயிலும் அருணாசலத்தை வதக்கி எடுத்துவிட்டன.
தெருவில் அவரின் தலைக்கறுப்பைக் கண்டவுடன் ஆர்க்கப் பறக்க அங்கலாய்ப்புடன் சூசை ஓடி வந்து
விட்டான்.
عصعصيميه
‘முதலாளி. நீங்களா? என்னைத் தேடிக் கொண்டு இவ்வளவு தூரம்.? ஒரு தந்தியடித்திருந்தால் தானே ஒடி வந்திருப்பேன். ஏன் முதலாளி" சூசையின் முகத்தில் வியப்பும் திகைப்பும்!
சூசை" அவர் வார்த்தையில் சூடு பறந்தது.
* காசையும் சுருட்டிக்கொண்டு கடல் கடந்து வந்து விட்டால் பிடிக்க முடியாது தப்பி விடலாம் என்று நினைத் தாயோ...' வந்ததும் வராததுமாகத் தன் வார்த்தைச் சவுக்கால் இறுக்கிச் சொடுக்கினார்.
சூசை பதை பதைத்துப் போய்விட்டான்!
* ஐயோ முதலாளி. நான் அப்படியொன்றும் நினைத் துச் செய்யவில்லை, உள்ளே வந்து என் நிலைமை
36) நிலவோ நெருப்போ?

யைப் பாருங்கோ ஐயா'-அவன் குரல் கம்மி விட்டது தனது நிலைமையை அறிந்த பின்பாவது முதலாளியின் கோபம் தணிந்து விடும் என்ற நம்பிக்கையோடு, கலங்கும் கண்களால் முதலாளியின் முகத்தைப் பார்த்தான் சூசை. அருணாசலமோ, அந்தக் குடிசைக்குள் போகத் தேவை யில்லாதபடி முற்றத்தில் நின்றபடியே அவருக்கு அனைத் தும் தெரிந்தது. --குடிசையின் நடுத் திண்ணையில் கிழிந்த பாயில் வளர்த்தப்பட்டுக் கிடந்த கிழவரை கழுத்துவரை பழஞ்சீலையால் மூடியிருந்தார்கள். அவருக்கு மூச்சு இழுத் துக் கொண்டிருந்தது. பக்கத்தில் எலும்பாக உட்கார்ந் திருந்த கிழவி தனது குழிவிழுந்த கண்களில் பயமும் ஏக் கமும் நிறைந்து, அடிக்கடி ஆகாயத்தையும் அக்கிழ வனின் முகத்தையும் பார்த்துப் பரிதவித்துக் கொண்டிருந் தாள். அவளின் ஒரு கை ஓய்ச்சலின்றிச் செபமாலையை உருட்டிக்கொண்டிருந்தது. மற்றக்கை அந்தக் கிழவரின் நெஞ்சை வருடிக் கொண்டிருந்தது.
அருணாசலத்தின் இதயத்தில் கொஞ்சமும் சலனம் ஏற் படவில்லை. துளி ஈரமாவது பொசியாமல் அது கருங்கல் லாக இறுகிக் கிடந்தது. அந்தக் கருங்கல்லில் ஏளனமும் அருவருப்பும் நகை காட்டின.
'ப்பூ.! இந்தப் படுகிழம் பொறிந்து விழப்போகிற தென்று முண்டு கொடுப்பதற்காகத்தான் காசையும் அள் ளிக்கொண்டு பறந்து வந்தனியோ?"-வெந்த புண்ணில் வேலோச்சி விளையாடத் துவங்கிவிட்டார்.
‘அவர் என் அப்பு முதலாளி. எங்களுக்கு உதவி செய்ய யாருமில்லை. கடைசி நேரத்திலாவது பக்கத்தில் இருந்து என் கடமையைச் செய்யாவிட்டால் கடவுள் கூடப் பொறுக்க மாட்டாரே முதலாளி' - சூசை தேம்பினன். முட்டி நிறைந்து வழிந்தோடும் சூசையின் கண்ணீரை அவர் விளையாட்டுத் தடாகமாக எண்ணிக்கொண்டு அதில் இறங்கி நீந்தி விளையாடத் துணிந்து விட்டார்.
நா. சோமகாந்தன் (137

Page 21
“வக்கில்லாத கூலிப் பயல்களுக்கு எல்லாம் அப்புவும் ஆச்சியும் கடமையும் என்ன வேண்டிக் கிடக்கு."
“ஒய் முதலாளி! நிறுத்தும் பேச்சை!” அருணாசலம் வீசிய நஞ்சு ஈட்டி அவன நெஞ்சைப் பிளந்து விட ஒரு கணம் அவன் திக்கித் திணற-அதற்குள்ளிருந்து கொடும் புடையன் போல சூசையின் தன்மானம் சீறியெழுந்துவிட் L-gll
அருணாசலத்தின் பொறி கலங்கி விட்டது. படமெடுத் தாடும் கருநாகத்தின் கண்களில் தெறிக்கிற கோபமும் கொடூரமும் சூசையின் கண்களிலிருப்பதைப் பார்த்து, பயத்தால் அவரின் வாய் பொத்திக் கொண்டு விட்டது.
'எனது உழைப்பில் குற்றம், குறையிருந்தால், அதைச் சுட்டிக்காட்டிக் கேட்கும் உரிமை உமக்கு இருக்கி றது. தவிர, எனது அப்பு ஆச்சியை, கடமையில் எனக் குள்ள நம்பிக்கையை, எங்க ஏழ்மையை நையாண்டி செய்யும் அதிகாரம் உமக்கு இல்லை. அப்படிச் செய்ய உம்மை நான் விடமாட்டேன்" -சூசையின் சொற்களில் தேறித்த உறுதிக்கு முன்னால், அருணாசலம் வியர்வை கொட்டி மெளனியாக நின்று விட்டார். கோழை மாடு என நினைத்து அதன் வாலைப் பிடித்து”மடக்கித் திருகிச் சவாரி செய்யும்போது அது திடீரெனத் திரும்பி, கொடும் புலியாக மாறி, அலர் மீது பாயக்கூடும் என்பதை அருணா சலம் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை!
*சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன். உனக்குக் கோபம் வந்திட்டுதே!. குறை நினைக்காதே சூசை1'- வார்த்தைகளால் அவனுக்குத் தண்ணிர் தெளித்து, அரு ணாசலம் குழைந்தார். எதுவும் நடக்காதது போலச் சமா ளிப்புச் சிரிப்பையும் உதித்தார்.
‘முதலாளி, உங்களுடைய காசை நான் களவு எடுத் துக் கொண்டு ஓடி வரவில்லை. என் அப்புவுக்குக் கடுமை என்று வந்த தந்தியைக் கணக்குப் பிள்ளைக் காட்டி, கட னாக நூறு ரூபா வாங்கிக் கொண்டு வந்தன். என்
38 5) நிலவோ நெருப்போ?

கூலியில் மாசா மாசம் பிடித்துக்கொள்ளுங்கோ முத லாளி' -உள்ளத்தில் பதற்றமிருந்தாலும், முதலாளி கொண்டுள்ள தம்பபிப்பிராயத்தை நீக்கிவிட வேண்டும் என்ற முனைப்பு சூசைக்கு.
சீறியெழுந்த பாம்பு சீற்றம் தணிந்து, படத்தை மடக்கி, தன் முன்பு சுருளுவதைக் கண்ட அருணாசலம், அதை அடித்து ஊனப்படுத்தி அதன் வாயிலுள்ள பற்க ளைப் பிடுங்கி எறிந்துவிட வேண்டுமென எண்ணினார். பணம் என்ற தடியை எடுத்து இலக்கு வைத்தார்.
**சுடன் கொடுக்கிறதுக்கு நான் என்ன வட்டிக் கடையே வைச்சிருக்கிறன் ?. மானம் மரியாதை, ரோசம் "எல்லாம் இருக்கிற உனக்கு, ஏன் சூசை எனது பணம்? போ; அதை எடுத்துக் கொண்டு வா; நான் போய் விடு கிறேன்." சூசை சுருண்டு விடட்டும் என எண்ணிக் கொண்டு வார்த்தைத் தடியால் ஒரே போடு போட்டார் -96). It
என்ன ஏமாற்றம்!- சூசை அந்த அடியின் துன்பத் தால் சிறு ஒசைகூட எழுப்பவில்லை விடுவிடெனக் குடிசை யின் உள்ளே போய் ஒரு கணத்தில் திரும்பி வந்தான்.
“இந்தாரும், இதில் எண்பது ரூபார் இருக்கிறது. உம் மிடம் எனது 18 நாள் கூலி பாக்கியாக இருக்கிறது. அதை மிச்சத்துக்காக எடுத்துக் கொள்ளும். போம்இங்கு ஒரு நிமிஷமும் நிற்க வேண்டாம்; போய் விடும்!" - அவரது முகத்தைக் கூட அவன் பார்க்கவில்லை. காசைக் கையில் கொடுத்து விட்டு வேகமாக உள்ளே போய் விட் டான்.
அருணாசலம் அதிர்ந்து விட்டார்! இரண்டு ரூபாக் கூலிக்காரனுக்கு எவ்வளவு திமிரும் ராங்கியும் என அவ ரின் உள்ளம் கறுவிக் கொண்டது. பணத்தைச் சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்டு திரும்பிக்கூடப் பார்க்கா மல் அவர் புறப்பட்டு விட்டார்.
女
நா. சோமகாந்தன் () 39

Page 22
திமிங்கிலம் போல ஆர்ப்பரித்து, தூரத்தில் அடித்து எழுந்த பேரலை ஒன்று, உருண்டு உருண்டு வந்து, அந்த வள்ளத்தை உதைக்க அதில் தெறித்த தீர்த்திவலைகள் அருணாசலத்தின் மேனியை நனைத்து, அவரது சிந்தனை யைக் கலைத்து விட்டன. அவரின் கண் முன்னால் சுறா மீன்கள் போலப் பல வெள்ளலைகள் துள்ளி எழுந்து கொட்டம் அடிப்பது, அந்தக் கும் மிருளிலும் அவருக்கு நன்கு தெரிந்தது.
காற்றின் ஊங்காரம்; கடலின் ஊமைக் குமுறல்இவற்றால் அந்த சிறுவள்ளம் தளம்பியது. மீனவன் வெகு வேகமாகக் கயிற்றை அவிழ்த்து, பர்பரப்பாகப் பாயை இறக்கி வைத்துவிட்டு, பயத்தோடு ஆகாயத்தைப் பார்த் தான். நட்சத்திரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மினுங்கிக் கொண்டிருந்தன. வாடைக் காற்று முகிற்கூட் டத்தை விரட்டியடித்துக் கொண்டிருந்தது.
*ஊ- ய்-ய்' என்ற பேரொலியுடன் வெகுண்டு வந்த பேயலை, அந்த வள்ளத்தை எற்றி இழுத்துக் கொண்டு போய், வந்த பாதையில் வெகு தூரத்துக்கு பின்னுக்குத் தள்ளிவிட்டது.
*அந்தோனியாரே! -என்னைச் சோதிக்கிறாயோ?"- அம் மீனவன் வாய்விட்டுப் பிரார்த்தித்தான்.
அருணாசலத்தின் சப்த நாடிகளும் ஒடுங்கிப் போய் விட்டன. நாக்கு மேல் அண்ணத்தில் ஒட்டிப் போய் விட் டது. அவரது உடம்பு முழுவதும் பயத்தால் நடுங்கியது.
அந்த மீனவன் புத்தகப் படிப்புப் படிக்காதவனென் றாலும், தன் தொழில் முறையால், கடல் தத்துவத்தை, யும், கடலில் பயணம் செய்யும் புதுப் பிராணிகளின் மனத் தத்துவத்தையும் அறிந்து வைத்திருந்த அனுபவஸ். தன்.
*நீங்கள் ஒண்டுக்கும் பயப்பட வேண்டாம்-அப்படி ஆபத்து ஏதும் நடக்க கர்த்தர் விடமாட்டார். பயப்பி
40 (= நிலவோ நெருப்போ?

டாதையுங்கோ-வாடைக்காற்று எழும்பீட்டுது, அது தான் கடல் கொஞ்சம் குழப்படி செய்யுது. -நான் கஷ்டப் பட்டு நேர்மையாய் உழைக்கிறவன் -எனக்கோ என்னை நம்பி இதில் ஏறியிருக்கிற உங்களுக்கோ நட்டம் வர ஒரு நாளும் அந்தோனியார் விடமாட்டார். நல்லாய் நீங்கள் நம்புங்கோ~ அந்த மீனவனின் பேச்சு அவருக் குப் புரிந்ததோ, புரியவில்லையோ-அதில் அவன் சுட்டிய தத்துவம் பிடித்ததோ பிடிக்கவில்லையோ-அதைப் பற்றி யெல்லாம் அவர் ஆராயாமல், அவன் தொடர்ந்து பேசிக் கொண்டு இருப்பதையே விரும்பினர். அவனின் குரல் அவரின் பயந்த உள்ளத்துக்குத் தைரியம் கொடுக்கும் சக்திபோல -"தனிவழி'யில் அபயமளிக்கும் பஞ்சாட்சர" ஒலி போல இருந்தது.
**நல்லூர்க் கந்தா! - கண்கண்ட தெய்வமே!-நயினை நாகபூஷணி!-என்னைக் காப்பாற்றி விடுங்கோ’-அருணா சலத்தின் உள்ளம் தன் குல தெய்வங்களைக் கூப்பிட்டு இறைஞ்சிக் கேட்டது. காசுப் பெட்டிக்கு மேலே தொங்கு கிற முருகன் படத்துக்கு முன்பு வெள்ளிக்கிழமைகளில் கற்பூரம் சொழுத்தி வைத்துவிட்டுத் தோத்திரஞ் செய் கிற தேவாரங்களையெல்லாம், வாய்திறந்து அவர் பாரா யணஞ் செய்தார்.
பிரார்த்தனையின் மகிமையால்தானோ-கடலின் சுபா வத்தினால்தானோ தெரியாது, அந்தக் கடல் மேலும் அவர்களை அலைக்கழிக்கவில்லை. சிறிது நேரத்தில் அடங்கி ‘நல்ல பிள்ளை" யாகிவிட்டது.
மீனவன் துடுப்பை ஒயவைத்து விட்டு, பாயை ஏற். றிக் கட்டினான். கைகளை உதறி அலுப்பை முறித்துக் கொண்டு வள்ளத்தின் அணியத்தையொட்டி உட்கார்ந்து கொண்டான்.
வள்ளம் அமைதியாக ஊர்ந்து கொண்டிருந்தது. கையைக் கழுவி விட்டு, உமலை எடுத்து விரித்து அதற்குள்
நா. சோ. காந்தன் - 41.

Page 23
இருந்த சோற்றுப் பெட்டியை எடுத்து, அதன் ஓலை மூடி யைத் திறந்த மீனவன்-என்ன நினைத்துக் கொண் டானோ?-சாப்பாட்டிற்குள் கை வைக்கு முன்பு அவ ரைப் பார்த்துக் கேட்டான்.
*உங்களுக்கும் நல்ல பசி போலை?* "பரவாயில்லை-நீர் சாப்பிடும்" தான் கடைப் பிடித்து ஒழுகி வந்த பழக்கத்தை அவனையும் செய்யும்படி அவர் சொன்னார். V தான் கொண்டு வந்த உணவைப் பகிர்ந்து சாப்பிடும் படி அவரைக் கேட்பது தகுந்ததல்ல-அதற்கு அவர் இணங்கவும் மாட்டார் என்பதைத் தனக்குள் உணர்ந்து கொண்ட அந்த மீனவன், பசியோடு ஒருவர் முன்னாலி ருக்கும் போது, தான் மட்டும் பசியாறிக் கொள்வது பாவம் என நினைத்துப் பெட்டியை மூடி உமலுக்குள் திணித்து அதைப் பழையபடி வள்ளத்தின் மூலையில் வைத் தான்.
“இப்ப மணி என்ன இருக்கும் ஐயா?"-அவரைக் கொண்டு போய்க் கரையில் விட்டு விட்டு, தனது கூட் டாளிகள் மீன் பிடிக்கிற குடாக் கடலுத்குத் திரும்பிச் செல்வதற்குத் தனக்கு நேரம் காணுமோ என்பதையறி -வதற்காக விசாரித்தான்.
'பத்தரை ஆகிறது" இருளில் கடிகாரத்தை உற்றுப் பார்த்து, அருணாசலம் சொன்னார். மீனவனுக்கு ஏமாற்ற மாகப் போய் விட்டது. ஒரு பெருமூச்சை விட்டு விட்டு துடுப்புகளை வலித்தான்.
*மெய்யே-இப்போ கடைசி பஸ் போயிருக்குமே?* அவனது மெளனத்தை அருணாசலம் கலைத்தார்.
*அவங்கள் எப்பவோ போயிருப்பாங்கள்--ஏன் நீங் கள் புங்குடுதீவுப் பக்கந்தானே?"-
*இல்லை; பட்டணம்; ஒர் அலுவலாக நெடுந்தீவு வந்தேன். 'லோஞ்சைத் தவறவிட்டு விட்டேன்-அவச
-42 0 நிலவோ நெருப்போ?

ரமாக வீட்டுக்குப் போக வேணும்; அதுதான் வள்ளத். தில் புறப்பட்டது'-
‘பழக்கப்பட்ட எங்களுக்குப் பரவாயில்லை --கடலிலை பழக்கமில்லாத நீங்கள் ஆறுதலாக நாளைக்குத் திரும்பியி ருக்கலாம்-இப்ப என்னெண்டு பட்டணம் போறது? புங் குடுதீவிலை ஆரும் தெரிஞ்ச ஆட்கள் வீடு இல்லையே?’’- மீனவன் இரக்கப்பட்டு விசாரித்தான்.
“காலையில் வீட்டிலிருந்து புறப்பட்ட போது எனது பிள்ளைக்குச் சுகமில்லாமலிருந்தது. மனம் துடிதுடியென்று துடிக்கிறது-அதுதான் அவசரமாகப் புறப்பட்டேன். அல் லது நெடுந்தீவில் நின்றுவிட்டு நாளை பயணம் செய்திருக் கலாம். கார் பிடித்தாவது எப்படியும் நான் வீட்டுக்குப் போக வேணும்'-உண்மையை அம் மீனவன் தெரிந்தி ருக்க முடியாது என்ற தைரியத்தில் அருணாசலம் அப்பட் டமான பொய்யைச் சொன்னார்.
* பாவம்! பிள்ளைக்குச் சுகமில்லையென்றால் பெரிய வேதனையாய்த்தான் இருக்கும்?'- என இரக்கப்பட்ட மீனவன் வேகமாகத் துடுப்பை வலித்தான்.
குறிகட்டுவான் கடற்கரையில் கப்புத் தண்ணீரில், தண்டைக்குத்தி, வள்ளத்தை நிறுத்தின போது, தவளை களின் கத்தலும் சில்வண்டின் இரைச்சலும் கலந்து ஊதற் காற்று ஊளையிட்டு வரவேற்றது.
அருணாசலம் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வள்ளம் தளம்டாமல் பக்குவமாகப் பார்த்து, கால்களை எடுத்து, தண்ணிரில் ஊன்றி, நிமி ந்து நின்றார். ஒருகணம் தலையைச் சுழற்றிப் பார்த்த போது, அவருக்குத் திக்குத்திசை எதுவும் தெரியவில்லை. தயங்கியபடி, ஓர் அடி கூட எடுத்து வைக்காமல், அவர் அப்படியே நின்று விட்
TTT ...
"இஞ்சாரும் பெரியவர்-நான் இந்த ஊருக்கே புதிசு. இடம் எதுவும் தெரியாது- தயவு செய்து ஊர் மனை வரைக்கும் கூட்டிக் கொண்டு போய் விடும்’ -
நா. சோமகாந்தன் 0 43

Page 24
அவர் ஓர் ஏழையின் முன் தயங்கி நின்று கெஞ்சிக் கேட் டது இது தான் முதல் தடவை!
*"இப்பவே என் தொழில் கெட்டுப் போச்சு-உந்த மேல் கடலிலாவது கொஞ்சம் சின்ன மீன் எண்டாலும் பிடிக்காமல் நான் எப்பிடி விட்டை போறது?’’
*காசு வேணுமென்றாலும், மூன்று நாலு ரூபாய் தரு கிறேன். தயவு செய்து வாரும். மறுக்காமல் என்னைக் கூட்டிக் கொண்டு போய் விடும்' அருணாசலம் அந்த மீன வனின் கைகளைப் பற்றிக் கொண்டு இரந்தார்.
அவர் பற்றுக் கோலாகப் பிடித்த தனது கையை உதறி விடும் துணிவு அவனுக்குப் பிறக்கவில்லை, இரக் கப்பட்டு, மறுக்காமல் புறப்பட்டு விட்டான்-வள் ளத்தை இழுத்துக் கரையில் ஏற்றி விட்டு, வெறும்மீன் கூடையை எடுத்து இடுப்பில் கொளுவிக்கொண்டு, புறப் பட்ட அம் மீனவனை முன்னே நடக்கும்படி விட்டு, அவ னைத் தொடர்ந்து அருணாசலம் நடக்கத் துவங்கினார். *அவன் எவ்வளவு நல்லவன்" என அவரது உள்ளம் அவனை வாழ்த்தியது. உளமார ஒர் ஏழைத் தொழிலா ளியை அவர் வாழ்த்தியது இது தான் முதல் தடவை!
கடற்கரையைத் தாண்டி சேறும் "கிரியும் நிறைந்த அலம்பல் பற்றைகளைக் கடந்து வயற் பரப்புக்குள் மிதந்து விட்டனர். தூரத்தில் நாய்கள் ஊளையிடும் சத்தம் கேட் l-ġħil
'இப்போ பன்னிரண்டு மணியாயிருக்குமோ ஐயா?* அவன் கேட்டான்.
“இல்லை-இன்னும் பத்து நிமிடம் கிடக்கு ’’
'பாவம்-உங்களுக்குச் சரியாகப் பசிக்கும்"- இரக்க உணர்வும் பயமும் அவனின் குரலில் குழைநதன.
அருணாசலம் அவனின் கேள்வியில் வெறுப்போ, அரு வருப்போ, கோவமோ கொள்ளவில்லை, உள்ளம் நிறைந்து உதட்டுக்குள் சிரித்தார்.
440 நிலவோ நெருப்போ?

*இல்லை பெரியவர். நீர் துக்கப்பட வேண்டாம். எனக்கு அதிக பசியில்லை. வீட்டுக்குப் போனால் போதும்* அவரது பாறை நெஞ்சில் சிறிது நேரமாக, இது நாள் வரை இல்லாத விதமாக, புதிதாக ஏதோ ஒன்று சுரண் டிக்கொண்டிருந்ததை அவரால் உணர முடிந்தது.
வயல் வரம்பில் இறங்கி அவர்கள் அந்த ஒழுங்கை யில் கால் வைத்த போது, அந்தக் குப்பத்துப் பொறுக்கி நாய்கள், புதுமனிதர் யாரோ ஊருக்குள் புகுந்து விட்ட னர் என அறிவித்து அட்டகாசம் செய்தன.
**ஏய்! பேசாமல் நில்லுங்கோ?’-அந்த மீனவனின் குரலைக் கேட்டதும், அடங்கி வாலைக் குழைத்து முனகின. மீன் கூடைக்குள் கிடந்த சிறுமீன்களைத் துடைத்துப் பொறுக்கி அந்த நாய்களுக்கு வீசிவிட்டு அவன் நடந் தான.
நாற்றம் எடுக்கும் அந்தக் குப்பத்தில் பரட்டைத்தலை போல ஒலைகள் விரித்துக் கொண்டிருக்கும் ஒரு குடிசை யின் முற்றத்தில், அவரை நிற்க வைத்துவிட்டு, உள்ளே போன அந்த மீனவன், வெளித்திண்ணையில் பணம் மட் டையில் மீன் கூடையைக் கொளுவினாள்.
‘இஞ்சை பிள்ளை!. உந்த விளக்கைச் கொஞ்சம் துண்டு' அவளின் சத்தத்துக்கு அவள் எழுந்து விட்டாள்.
‘என்ன. நீயே!. என்ன வெள்ளென வந்திட் டாய்?’’ அவளின் குரலில் எதிர்பாராத திகைப்பு.
‘எங்கை இந்தப் பலகை? வாசலில் ஆள் காத்துக் கொண்டு நிற்கிறார்". அவன் அவளின் திகைப்பைப்
பொருட்படுத்தாமல் அவரை உட்கார வைப்பதற்குப் பலகையைத் தேடினான்.
அவள் விளக்கைத் தூண்டி வெளித் திண்ணையில் வைத்தாள்.
நா. சோமகாந்தன் ( 45

Page 25
"பலகை ஒன்றும் வேண்டாம், நான் இப்படி இருக்கிறேன்" - எதையும் பொருட்படுத்தாது, வெறும் திண்ணையில் அருணாசலம் உட்கார்ந்து விட்டார்?
வெறுமையான மீன் கூடையையும், புதிய மனிதரை யும் ஒரு தரம் அவள் மாறி, மாறிப் பார்த்தாள். அதை மீனவன் கவனித்து விட்டான்.
‘இன்னும் வலை விரிக்கப் போகேல்லைப் பிள்ளை. பின்னேரம் நெடுந்தீவுக்கு ஓர் ஓட்டம் வந்தது, கொண்டு போய் விட்டு விட்டு அப்படியே குடாப் பக்கம் போகலா மெண்டால் இந்த ஐயா அவசரமாய் இக்கரைக்கு வர வேணுமெண்டார். அவரின் குழந்தைக்குச் சுகமில்லை, பாக் கப்பட்டணம் போறார். அவருக்கு ஒரு கார் இப்ப வேணும்-மறந்து போனன். வாறன், இவர் இருக்கட் டும்." ஒரே மூச்சில் அவளுக்கு விளக்கஞ் செய்துவிட்டு அவன் வெளியே ஒடிப் போனான். w அங்கொன்றும் இங்கொன்றுமாக நாய்கள் குரைத் தன. ፯
உறக்கத்தில் கால்மாடு தலைமாடு தெரியாமல் இடித். துக்கொண்டு கிடந்த குழந்தைகளை ஒழுங்குபடுத்தித் தூக் இக் கிடத்தி விட்டு ஒரு கொட்டாவி விட்டுக்கொண்டு பிள் ளைகளுக்குப் பக்கத்தில் அவளும் உட்கார்ந்து விட்டாள்.
மீண்டும் நாய்களின் குரைப்புச் சத்தம் அவற்றைத் தொடர்ந்து அவன் இளைக்க இளைக்க உள்ளே வந்தான்.
*அவருக்குச் சரியான பசி பிள்ளை-நல்லகாலம் நான் கப்பிட்டவுடன் பொன்னன் எழும்பிக் கடையைத் திறந்து இதை எடுத்துத் தந்தான்-பாவம், இதையாவது அவர் குடிக்கட்டும்' பாக்குவெட்டியால் சோடாப்போத்தலைத் திறந்து அவர் முன்பு வைத்தான் அருணாசலம் பிகு பண்ணாமல் எடுத்துக் குடித்தார் அந்த மீனவனின் இரக் கம் போல அது நன்கு அவருக்கு இனித்தது; இதமாக இருந்தது! வயிறு நிறைந்ததால் வெளியே வந்த ஏவறை, அதை ஆமோதித்தது.
46 0 நிலவோ நெருப்போ?

'பிள்ளை! நீ விளக்கத் தணிச்சுப் போட்டுப் படுகார் பிடிச்சு ஐயாவை அனுப்பிப்போட்டு நான் கெதி யாக வாறன்"
*நீ சாப்பிட்டிட்டுப் போவன் எணை'-அவள். ‘'வேண்டாம் பிறகு வாறன் நீ படு' அவரும் அவனும் புறப்பட்டு விட்டனர். அப்போது வானத்தின் கீழ்க் கோட்டில் குழந்தையின் முரசில் அரும்புகிற பல்லைப் போல அரைபக்கச் சந்திரன் எட்டிப் பார்த்து நகை காட்டியது. அந்த இள நகைப்பின் ஒளி யில் இருள் வெளுத்துப் போயிருந்தது.
அந்த மீனவனைச் சந்தித்த நேரம் முதல் அவனின் இதமான பேச்சும், அவரின் பசியைப் பார்த்து அவன். அடைந்த வேதனையும் அவரின் இயலாமையை அறிந்து உதவ வந்த அவனின் இரக்க சிந்தையும் அருணாசலத்தின் இதயப் பாறையைச் சிறிதாகப் பிளந்து விட்டன. அவரது குழந்தைக்குச் சுகமில்லையென்ற பொய்யை நம்பி, அந்த மீனவன் அடைகிற துக்கத்தையும் அவருக்கு உதவிபுரிந்து உடனே ஊருக்கு அனுப்புவதற்காக்-பசி, அலுப்பு, தொழில் இவற்றையெல்லாம் கருதாமல் அவன் ஒடி ஒடித் துடிப்பதையும் கண்டபோது-மரணப் படுக்கை யில் தகப்பனை வைத்துக் கலங்குகிற சூசையிடம் கொஞ்சம் கூட இரக்கம் காட்டாமல், பணத்தைப் பறித்துக் கொண்டு வந்த தனது அரக்கத்தனத்தை எண்ணி அவரது உள்ளம் கூனிக் குறுகிக் கொண்டது. அந்த சாதாரண தொழிலாளி யான மீனவளின் உள்ளத்திலிருக்கின்ற பெருந்தன்மையின் முன்பு அந்தஸ்தில் பெரியமனிதரான தான் ஒரு வெறும் அற்பப்புழுவே என்ற எண்ணத்துடன் அவனின் காற்சுவட் டில் அடி பதித்து அவனுக்குப் பின்னால் அருணாசலம் போய்க் கொண்டிருந்தார்! அவரது உள்ளத்தில் அன்று காலையில் ஏற்பட்ட அகம்பாவத்திமிர், நண்பகல் சூசை யுடன் மோதியபோது ஏற்பட்ட அந்தஸ்து மிடுக்கு மாலை வள்ளத்தில் ஏறும்போது இருந்த வஞ்சினக் கொதிப்பு, அனைத்தும் அழிந்து அந்த நள்ளிரவில் அருணா சலம் வெறும் மனிதராக நடந்து கொண்டிருந்தார்!
நா. சோமகாந்தன் ( 47

Page 26
அந்த மீனவன் எங்கோ அலைந்து எவரையோ "எழுப்பி கார் ஒன்றை ஏற்பாடு செய்து விட்டபோது, அவன் நல்லவன் மட்டுமல்ல வல்லவனும்தான் என அவரின் உள்ளம் வியந்தது.
“பெரியவர் ! உங்களுக்கு மிகவும் சிரமத்தைத் தந்து விட்டேன். நீங்கள் செய்த உதவியை மறக்கவே மாட் டேன்- எனது அன்பளிப்பாக இதை வைத்துக்கொள் ளுங்கோ' சட்டைப்பையிலிருந்து எடுத்த பணத்தை எவ் வளவு என்று எண்ணிக் கூடப் பார்க்காமல் அவரிடம் நீட்டி, நன்றியுணர்வால் நெஞ்சம் நிறைந்து நாத் தழ தழக்க அருணாசலம் நின்றார்.
*சீ! இது என்ன செயல் ஐயா! என்ரை வள்ளக் கூலியை முன்னரே தந்துவிட்டியள்-பிறகு இது ஏன் காசுக்காக அல்ல கஷ்டப்படுகிற உங்களுடைய மனசின் ஆறுதலுக்காகத்தான் நான் உதவி செய்தேன். ஒரு உயி ரின் துன்பத்துக்காக மற்ற உயிர் துடித்து இரங்கி உதவு கிறது மனுஷக் கடமை. அந்தக் கடமையைச் செய்ததுக் காக நான் கைநீட்டி வாங்கிறது மனுஷத்தனமோ? வேண்டாம்'-அம் மீனவன் பிடிவாதமாக மறுத்து விட் டான். خ۔۔۔۔۔۔۔
'பெரியவர்! நீங்கள் வயதால் மட்டுமல்ல-உள் ளத்தாலும் பெரியவரே-மன்னித்து விடுங்கள்' அருணா சலத்தின் கரங்கள் தாமாக எழுந்து உயர்ந்து குவிந்தன.
கண்ணீர்த்திரையூடாக நோக்கிய அவர் பார்வையில் அங்கு அந்த மீனவன் மட்டுமல்ல அவனோடு அவனைப் போல் தங்கள் கைகளை மட்டுமே நம்பி வாழும் தொழி லாளிகள் அவரது மில்லின் கூலிகளான சின்னான், காத்தி, சுப்பன், வள்ளி பாறி- ஏன் சூசை கூட நிற்பதாகத் தெரிந்தது!
ஈட்டி முனைபோல இருளைக் கிழித்தது காரின் வெளிச்சம். கார் புறப்பட்டுவிட்டது!
(தினகரன்-1967)
O
48 ( ) நிலவோ நெருப்போ?

ஆகுதி
வீதிவலம் சுற்றிவந்த சுவாமி கோயில் வாசலில் தரித்து நின்றது. பக்திசிரத்தையோடு பஞ்சாராத்தியைக் காட்டிய குருக்களின் கண்களில் துளிர்த்து விட்டநீர் அந்த மாலைப்பொழுதில் முத்தாக மிளிர்ந்தது.
‘அம்மனுக்கு அரோஹரா!'
சிதறு தேங்காய்கள் நொறுங்க, கிராமப்பிரதட்சணத் துக்காக அம்பாள் ஊர்வலம் புறப்பட்டு விட்டாள்.
ஊர்வலத்தின் முன்னணியில், தீவட்டி, மேளம், நாயனக்காரருக்கு முன்னால், தர்மகர்த்தா ஏகாம்பரம் பிள்ளை, நெற்றியில் பொட்டுங் குறியுமாக நிமிர்ந்து போய்க்கொண்டிருந்தார். அவரின் வலக்கை விரல்கள், நரை தட்டிவிட்ட அகன்ற மீசையை அடிக்கடி வருடி விட்டுக்கொண்டன. பெருமிதம் பிறந்து விடும் வேளைகளில் அப்படிச் செய்வது அவரின் பழக்க தோஷம்.
தெரு நிறைந்த சனக்கூட்டம், வீடுகள்தோறும் பூரண கும்பங்கள்-நீண்ட காலத்துக்குப்பின், ஊருலா வருகின்ற அம்மனைத் தரிசித்து அருள்பெறும் ஆவலில் அந்த ஊர் காத்துக் கிடந்தது.
நா. சோமகாந்தன் 0 49 நி-4

Page 27
சனம் விலகி வழிவிட, ஊர்வலம் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. சுவாமிக்கு முன்னால் ஜெகந்நாதக் குருக் கள் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தார்-இடுப் பில் பஞ்சகச்சம் வைத்துக் கட்டிய வேஷ்டி, அதன் மீது சாயம்போன மஞ்சள் பட்டு, சிறிது பருத்த மாநிற உடம்பு; மேற்புறம் மழித்த அகன்ற நெற்றி அதில் துலாம் பரமாக மின்னும் வெண்ணிற்றுக் குறிகள்; நடுவிலே சந்தன -குங்கும திலகம்; கண்களில் சாந்தம்; கழுத்திலே கெளரிசங்கம்; மார்பிலே திரளான பூணுரல், கையில் கற் பூரத் தட்டு-பார்ப்பவர்கள் தங்களையறியாமலே கைகளை உயர்த்துக் குவிக்க வைக்கின்ற அந்தணப் பொலிவு.
அர்ச்சனைத் தட்டுகள்! அர்ச்சனைத் தட்டுகள். அர்ச்சணைத் தட்டுகள்! V− அவற்றின்மீது, பச்சை, மஞ்சள், நீல நிற நோட்டு கள்; சில்லறைகள்-இப்போதுதான் மீசை அரும்பத் தொடங்கியுள்ள ஏகாம்பரம்பிள்ளையின் ஏகப் புதல்வன், இடுப்புச் சால்வையை வரிந்து கட்டிக்கொண்டு, கழுத் தில் துவழும் சங்கிலியை அடிக்கடி ஒதுக்கியபடி, தட்டு களிலுள்ள காசைப் பத்திரமாக எடுத்து, இடுப்புப் பையில் இலாவகமாகக் சொருகிக்கொண்டபின், தேங்காய்களை உடைத்து, அர்ச்சனைத் தட்டுகளைச் சுறுசுறுப்பாகக் குருக், களிடம் நீட்டிக் கொண்டேயிருந்தான்.
அட்சர சுத்தமாக அம்பாளின் திருநாமங்களை உச் சரித்து, ஜெகநாதக்குருக்கள் தீபாராதனை நடத்தியபடி யிருந்த்ார்.
படலைக்குப்படலை சுவாமி தரித்து நின்று,பக்தர்களின் காணிக்கைகளை ஏற்று, ஆறுதலாக ஊர்வலம் ஊர்ந்து கொண்டிருந்தது.
*கலீர். கலீர். ஏற்பாடு செய்யப் பெற்றிருந்த உண்டியல் குலுக்குவோர் ஊர்வலத்துக்கு முன்னால் வெகுதூரம் சென்றுவிட்டனர்.
ஊருக்குள் உள்ள ஒரே அம்மன் கோயிலின் திருப் பணி நிதிக்காக உலா புறப்பட்டிருக்கின்ற அம்பாளுக்கு அள்ளிக்கொடுக்க அந்த மக்கள் முன்னின்றனர். 50 0 நிலவோ நெருப்போ?

இருட்டுகின்ற பொழுதில், ஊர்வலம் இன்னும் அரைக் கட்டை தூரத்தைக்கூடத் தாண்டவில்லை. அதற்கிடையில் உண்டியற் குடங்கள் ஆறும் நிறைந்து விட்டன! ஏகப் புதல்வனின் இடுப்பும் கனத்தது.
இலுப்பையடிச் சந்தியில் வைத்து, வலதுபக்க ஒழுங்
னால் வந்துகொண்டிருந்த ட்றக்ரரில் ஏகாம்பரம் ஏறிக் கொண்டு விட்டார். அவருக்குக் கால்கள் வலியெடுத்து விட்டன. பெட்டியில் சாய்ந்து நீட்டி உட்கார்த்து கொண் டார், உண்டியற் குடங்களும் ட்றக்ரரில் ஏறிக்கொண்டன. மகனும் ட்றக்ரருக்கு வந்து மடிக் கனத்தை இறக்கி விட்டுச் சென்றான்.
*க.வீ.ர்; . க .வீ-ர் -பு தி தா க க் குலுக் கலுக்கு விட்ட வெற்றுக் குடங்கள் பெருஞ்சத்தம் எழுப் பின.
நாயனக்காரர் தமக்குத் தெரிந்த நவீன சினிமாப் பாடல்களின் மெட்டுகளை இசைத்துக் கொண்டிருந்தார். ஊர்வலம் தரித்துத் தரித்து, ஊர்ந்து கொண்டிருந்தது.
கிராமத்தின் தென்மேற்கு எல்லையிலுள்ள பெரியதும் பிரான் கோயிலை அடைவதற்கு முன்னரே நேரம் நள்ளிர வையும் தாண்டி விட்டது. நாதஸ்வரத்தின் கீச்சுக்குரல்; தவிலின் சுருதியற்ற ஒலி, ஊர் நாய்களின் ஊளை ஆலா பனை-இவற்றிடையேயும் புதிய புதிய உண்டியற் குடங் கள் பல மூன்று நான்கு தடவைகளுக்குமேல் வெளியே வந்து பெருங் குரலில் ஒலித்து ஓய்ந்து விட்டன. பைய னும் அப்பாவைப் பார்த்துப் பலதடவை ட்றக்ரருக்குப் போய் வந்து விட்டான்.
பெரியதம்பிரான் கோயில் முன் மண்டபத்தில் அம் பாளை இறக்கி வைத்து,இரு சுவாமிகளுக்கும் தீபாராதனை முடிந்தபின் சிரமபரிகாரம் எடுத்துக் கொள்வதற்காக எல் லோரும் புறப்பட்டு விட்டனர். குருக்கள், மேளம், இரண் டொரு எடுபிடி ஆட்களைத் தவிர எல்லோரும் சென்று விட்டார்கள்.
நா.சோமகாந்தன் () 51

Page 28
மகனை இருக்கச் செய்து விட்டு, ட்றக்ரரிலிருந்து இறங் கிக்கொண்ட ஏகாம்பரம்பிள்ளை, நிதானமில்லாத நடை யோடு நேராகக் குருக்களிடம் வந்தவர் சாஷ்டாங்கமாக அவரின் காலடியில் வீழ்ந்துவிட்டார்.
*"அம்மாளாச்சிக்கு அடுத்த படியாய், குருக்கள்தான் என்ரை தெய்வம்.குருக்களாலைதான் எங்கடை சனங்கள் அம்மாளாச்சிக்கு அள்ளிக் குடுத்தினம். வாற நாளுக்கே திருப்பணியை ஆரம்பிக்கவேணும். ஓம் சொல்லிப் போட்டன் எங்கடை குருக்கள் என்ரை கண் கண்ட தெய்வம் ஏகாம்பரத்தாரின் கால்கள் எழுந்து நிற்க முடியாமல் தள்ளாடின.
குருக்களுக்கு குடலைக் குமட்டிக் கொண்டு வந்தது. ‘எல்லாம் காலையிலே பேசலாம். இப்பபோய் ஒய் வெடுத்துக் கொள்ளுங்கோ" ஏகாம்பரத்தாருக்குக் "கலை" ஏறுகிற வேளைகளில் பேச்சைத் துண்டித்து அனுப்புவது குருக்களின் வழக்கம்.
ட்றக்ரர் உறுமிக் கொண்டு புறப்பட்டுச் சென்று விட்டது.
பெரிய தம்பிரான் கோயில் மண்டபத்தில் தங்கிவிட் டவர்கள் குறட்டைவிட்டு நல்ல தூக்கம், ஜெகந்நாதக் குருக்களுக்கு மட்டும் நித்திரை வரவேயில்லை. கால் உழைவு கண்ட போதிலும், மனம் உறங்காமல் ஆறுதலாக அசை போட்டு அசை போட்டு.
முப்பது ஆண்டுகளுக்கு முன், அரைக்காசும் வாங்கா மல் அத்தை பெண் காமாட்சியின் கழுத்தில் மஞ்சள் கயிற்றால் மூன்று முடிச்சைப் போட்டு முடித்தவுடன், சொந்தக் காலில் நிற்க வேண்டுமென்ற எண்ணத்தில் அவளையும் கூட்டிக் கொண்டு சொந்த ஊர் விட்டு இந்த ஊருக்கு வந்து, அந்த அம்மன் கோயிலில் அர்ச்சகராக ஜெகந்நாதசர்மா மணியைத் தூக்கியவர், அப்போது
52 0 நிலவோ நெருப்போ?

அந்தக் கோயில் அடக்கமானதாக அழகாகத்தானிருந்தது இரண்டு வேளைப் பூசை; சம்பளம் என்று எதுவுமில்லை.
大 கோயில் வரும்படியும், ஊர்ப் புரோகிதமும் அவருக்குப் போதுமானதாயிருந்தது. தெற்குப் புறத்திலிருந்த இரண் டறைகள் கொண்ட கோயிலின் சிறிய மடம் அவரின் தனிக் குடித்தன வாழ்க்கையை நடத்த இலவச வீடாக அமைந்து விட்டது.
கோயிலின் பரம்பரைத் தர்மகர்த்தா சபாபதிப்பிள்ளை கோயிற் பக்கம் தலைகாட்டுவதேயில்லை. கோயிலுக் கென இருந்த நிலபுலங்களையெல்லாம் விற்று, ஆசை நாயகிக்கு வீடு கட்டிக் கொண்டதால், ஊரில் செல்லாக் காசாகி விட்டவர். அம்மனாச்சு ஐயராச்சு என எல்லாப் பொறுப்பையும் அர்ச்சகர் தலையில் சுமத்தி விட்டு, அயலூர் ஆசைநாயகி வீட்டில் அவர் அடைகிடந்தார்.
ஊருக்குப் புதிதாக வந்த ஜெகந்நாத சர்மா, தமது சாதுரியத்தாலும். நல்நடத்தையாலும், நயமான பேச்சா லும், நாணயத்தாலும் அம்மன் கோயிலில் எதுவித குறை வுக்கும் இடம் வைக்காமல் கோயில் நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டார். இளைஞர் எனினும் சர்மாவிட மிருந்த ஒழுக்கம், படிப்பு ஞானம், பத்திசிரத்தையுடன் கோயிற் கிரியைகளை நடத்தும் பாங்கு, காலக்கிரமம் தவ றாமல் பூசையை நடத்தும் ஒழுங்கு, இனிய சுபாவம் - எல்லோரையும் கவர்ந்து நல்லபிமானத்தை ஏற்படுத்தி விட்டன.
ஒரு வருஷத்துக்குள் அவருக்கு அம்பிகையும் பிறந்து விட்டாள்.
குழந்தையின் கனிவான குறுகுறுத்த கண்களும், சிரிக் கும் போது குழிவிழும் கன்னங்களும், மொழுமொழுத்த சிவந்த கை - கால்களும், பட்டைப் போன்ற மேனியும் அம்பிகையின் எழுந்தருளி விக்கிரகத்தை அவர் நினைவுக் குக் கொண்டுவர தன் செல்லக் குழந்தைக்கு அம்பிக்ை என்றே நாமகரணஞ் செய்து விட்டார்.
நா. சோமகாந்தன் () 53

Page 29
குருப் பட்டத்துக்குரிய வேத சாஸ்திர அறிவு, கிரியா "ஞானம், ஒழுக்கம் முதலியவை அவரிடம் நிறைந்திருந்த தால், ஒரு சுபநாளில் ஆச்சாரியாபிஷேகம் செய்யப்பட்டு ஜெகந்நாத சர்மா குருக்களுமாகி விட்டார்.
வெள்ளி, செவ்வாய் அம்மன் சந்நிதியில் விசேஷ அபி ஷேகங்கள் பூஜைகள், அர்ச்சனைகள், ஊர் திரண்டு வந்து கொண்டிருந்தது.
கோயிலைத் துப்புரவாக்கி, வீதிகளைச் சுத்தஞ் செய்து, ஆலயத்தைச் செப்பஞ் செய்து, வேண்டிய போது சுவர் களுக்கு வெள்ளையடிப்பித்து, அருளுடன் அழகும் பொலியு மிடமாக ஆலயத்தைக் கவனித்து வந்தார் குருக்கள். நித் திய நைமித்தியங்களுக்கு குறையேற்படாமல், சாந்தமும் சாந்நித்தியமும் அங்கு கொலுவிருந்தன.
ஆடிப்பூரத்துக்கு முதல் பத்து நாட்களும் அம்பிகைக்கு அலங்கார உற்சவம்; அதற்கு வேண்டிய உபயகாரர்களைக் கண்டு பிடித்துச் சிறப்பாகச் செய்து முடித்து விடுவார் குருக்கள்.
அவர் பொறுப்பேற்று ஆறு வருஷங்கள் எல்லாம் ஒழுங்காகத்தான் நடைபெற்றன
யாழ்ப்பாண ரவுணுக்குப் போன விசபாபதிப்பிள்ளை குடி வெறியில் றோட்டைக் கடக்க. லொறி மோதி, அவர் செத்துவிட.
.பரம்பரைத் தர்மகர்த்தா என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டு, ஆலய, பரிபாலனஞ் செய்யவந்த ஏகா பரம்பிள்ளை, சபாபதிப்பிள்ளையின்செத்துப்போன தமைய னாரின் மகன். ஊரிலுள்ள கள்ளுக் கொட்டில்களின முன் னால் முன்பு விழுந்து புரண்டு கிடந்தவர், உரிமைக் கோயி லைப் பராமரிக்க வேண்டுமென்ற ஞானம் உந்த, ஏகாம் பரம்பிள்ளை திடீரென விழித்து எழுந்து வந்து விட்டார்.
நெடிய தோற்றம், நெஞ்சு மயிர்கூட மறையக் கூடிய கறுவல் உடம்பு, கழுத்தில் தொங்கும் மைனர் சங் கிலி, அகன்ற அடர்த்தியான மீசை, எல்லாம் அறிந்தது
54 ( ) நிலவோ நெருப்போ?

போல எடுத்தெறிந்து பேசும் சுபாவம், இலேசான சாராயவாடை-ஏகாம்பரத்தாரின் முதற் சந்திப்பே குருக் களுக்கு அருவருப்பையூட்டியது.
*குருக்கள், இதுவரை நாளும் குஞ்சியப்பர் உயிரோடை. இருந்ததாலை நாங்கள் கோயில் விசயத்திலை தலையிட வில்லை. இனி நான் சிறப்பாக நடத்தப் போறன். நீங் கள் பூசையை மட்டும் கவனித்தால் போதும். கோயில் நிர்வாகமெல்லாம் இனி நான் பார்த்துக் கொள்ளுவன்" - அர்ச்சனைத் தட்டுகளை ஏந்திய வண்ணம் திரளாகக் குவி யும் அடியார்களின் தொகை ஏகாம்பரம்பிள்ளையின் மனதில் சபலத்தை எழுப்ப, அவர் திட்டவட்டமாகச் சொல்லி விட்டார், 'ஆர் செய்தாலென்ன. அம்பாளின் விஷயம் சிறப்பாக நடக்க வேண்டும் என்றது தான் என் ஆசை-அதைச் செய்வதற்கு முதலாளி முன் வந்திருப் பதையிட்டு எனக்குச் சந்தேகம் தான் கோயிலின் வரு வாயை எடுத்துக் கோயிலுக்கே செலவழித்து, அந்தத் திருப்தியில் மனம் குளிர்ந்து வரும் குருக்களுக்குக் கொஞ் சமும் சஞ்சலம் ஏற்படவில்லை.
புதிய நடைமுறைகளை அடுத்த வாரமே ஏகாம்பரம் விளம்பரப் பலகையில் பெரிய எழுத்தில் அறிவித்து -oil 'll-Tif
அர்ச்சனைக்கு ரிக்கட். அபிஷேகத்துக்கு ரிக்கட் நேர்த்தியை நிறைவேற்ற ரிக்கட். -கோயிலில் சகலதும் ரிக்கட் மயமாகி விட்டன. அக்கோயிலின் வருமானம் அனைத்தையும் தமது தனிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஏகாம்பரம் வழிசமைத் துக் கொண்டார்.
சுவாமி ந்ைவேத்தியத்துக்கு மாசம் 15 படி அரிசி விளக்குக்கு 6 போத்தல் எண்ணெய், கர்ப்பூரம், குருக்கி ளுக்குச் சம்பளம் 45 ரூபா.
குருக்களும் சரி, கும்பிடுபவர்களும் சரி, இப்படி ஒரு நடைமுறை எள்ளத்தனையும் எதிர் பார்க்கவேயில்லை!
நா. சோமகாந்தன் ロ55

Page 30
ஜெகந்நாதக் குருக்களுக்கு மனம் மிகச் சலித்து விட் டது, மக்களின் அன்பினால் அரவணைக்கப்பட்டு, மனங் குளிர அம்பிகையைக் குறைவெதுவுமின்றி ஆராதித்துக் கொண்டிருந்த அவர், ஒரே நாளில் மாதச் சம்பளம் வாங் கும் கூலியாள் நிலைக்கு மாற்றப்பட்டதை உணர்ந்த போது அவர் மனம் கூனிக் குறுகிச் சலித்து விட்டது.
அந்த ஊரை விட்டு வெளியேறிவிடலாமா என்ற எண்ணம் குருக்களின் மனசில் தலை தூக்கியபோது, புது இடங்களில் எப்படிச் சமாளிப்பது என்ற அவருக்குரிய இயல்பான அச்சமும்தலைதுாக்கியது. இத்தனை காலமும் அன்பையும் மதிப்பையும் பொழிந்த ஊர் மக்கள், முக் காலமும் திருமேனி தீண்டி அர்ச்சித்து தாம் ஆராதித்த அம்பாள், இவற்றை விட்டு விட்டுப்போக முடியாமலிருப் பது போல அவர் தவித்தார்.
‘எல்லாம் அம்பிகை விட்ட வழி" என்ற மனச் சமா தானத்துடன் அவர் பல்லைக் கடித்துக்கொண்டு வாழப் பழகி விட்டார்.
ஊரில் எப்போதாவது தொற்றுநோய் வந்தால், நேர்த்திக்கடன் நிறைவேற்றுபவர்களையும். நூல் கட்ட வருபவர்களையும் தவிர; வழமைபோல வெள்ளி செவ்வா யில் கூட்டமேயில்லை. புதிய நிர்வாதத்தின் கெடுபிடிக ளால் பக்தர்கள் தொகையின் வரவு குறைந்து விட்டது. உபயகாரர்கள் ஒதுங்கிக் கொண்டு விட்டதால், ஆடிப் பூரத் திருவிழா பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு விட் டது. பன்னிரண்டு வருடங்களுக்கொருதடவை நடைபெற் றாகவேண்டிய பாலஸ்தாபன கும்பாபிஷேகத்தைக்கூட. இத் தடவை புதிய பரிபாலகரால் நடத்த முடியவில்லை.
அஷ்டபந்தனம் அகன்று விட்டதால் ஆட்டங்காணும் மூல மூர்த்தி; கிலமடைந்த கருவறை; சிதைவுற்ற விமா னம்; வெடிப்புக்கண்ட சுவர்களினுாடாக தலை நீட்டிச் சடைத்த செடிகள்: சலாகைகள் உக்கி ஒடுகள் விழத் துவங்கி விட்ட அர்த்த மண்டபமும் மகாபண்டபமும்; ஆகாசம் தெரியும் வசந்த மண்டபம்; ' காட்டுத் தடியின் துணையோடு நொண்டியாக நிற்கும் கண்டாமணி.
56 D நிலவோ நெருப்போ?

இருபது வருஷமாக கோயிற் கட்டிடத்தில், பகலிற். கூடச் சுதந்திரமாகப் பறந்து திரியும் வெளவால்களைக் கூட விரட்டியடிக்க வக்கின்றி, வகை தெரியாது, ஏகாம். பரத்தார் ஏகாங்கியாக நின்றார்.
இந்த வருஷம் பிறந்த அன்று, கோடிப் பட்டுடுத்திக். கோயிலுக்கு வந்த ஏகாம்பரத்தாரிடம் குருக்கள் மனந். திறந்து சொல்லிவிட்டார்.
‘முதலாளி. தொடர்ந்தும் இதே நிலையில் அம்பாளை வைத்திருக்கக் கூடாது. அபிஷேகம் செய்கின்றபோது என் கைகள் நடுங்குகின்றன. மனம் கூசுகிறது. இப்படியே கவனிக்காமல் இருந்தால். அம்பாள் சாபம் ஊருக்கு அனர்த் தம் உங்களுக்கும் நல்லதில்லை எனக்கும் அபசாரம். கெதி" யாக இதற்கொரு ஏற்பாட்டை நீங்கள் செய்ய வேணும்"
*கோயிலுக்கு இப்ப வருமானமே நிண்டுபோச்சு. இருந்த காணி பூமியையும் தேவடியாளுக்குக் குடுத்துக் குஞ்சியப்பர் பசியாறிப் போட்டுக் கண்ணை மூடியிட்டார் நான் பிள்ளை குட்டிக்காரன். குமரையும் வீட்டுக்கை வைச் சுக் கொண்டு தவிக்கிறன். தனிய நான் என்ன செய்கிறது குருக்கள். கையைக் கட்டிக்கொண்டு, கூனிக் குறுகிய படி தன் இயலாமையை ஏகாம்பரத்தார் வெளியிட்டார்.
*ஊர்ச் சனங்களை கூப்பிட்டு ஒரு திருப்பணிச் சபையை அமைத்து, பொறுப்பை ஒப்படைத்தால் சனங்கள் ஒத்து உழைப்பினம் முதலாளி-குருக்கள் சொன்ன நடைமுறை. சாத்தியமான யோசனையைக் கேட்டு ஏகாம்பரத்தார் பத றிப்போய் விட்டார்.
திருப்பணிச் சபை வாழையடி வாழையாக வரும் தன் பரம்பரைத் தர்மகர்த்தாப் பதவியை வெட்டி விழுத்தி விடக் கூடிய வாளாகத் தோன்றியது அச்சம் அவரைத். திடுக்கிட வைத்தது.
*இல்லைக் குருக்கள். அது வேண்டாம்! மினைக்கெட்ட வேலை. வேறை வழி இருக்கு. வாற வைகாசி விசாகத்துக்கு,
நா. சோமகாந்தன் 0) 57

Page 31
அம்மனை ஊர்வலமாக ஊரெல்ல்ாம் கொண்டு போவம். ஊர்ச் சனங்களுக்கு உங்களிலை நல்ல மதிப்பு. வீடுவீடாய் நீங்கள் போய்ச் சொன்னால், அம்மாளாச்சிக்கு அள்ளித் தருவினம். கெதியாகத் திருப்பணியைச் செய்யலாம்" அம் பிகை சந்நிதியைப் பழைய கோலத்துக்கு விரைவாகக் கொண்டுவர வேண்டுமென அல்லும் பகலும் துடித்துக் கொண்டிருந்த குருக்களுக்கு ஏகாம்பரம் சொன்ன அந்த யோசனை சரிபோலவும் பட்டது.
சித்திரை மாசத்து கொழுத்தும் வெய்யில் முழுவதை யும் தலையில் ஏற்று, ஒரு தெருவும் விடாமல், குருக்கள் அந்த ஊரெல்லாம் சுற்றிச் சுழன்று வந்துவிட்டார். ஊண் உறக்கமற்ற அலைச்சல். குருக்களின் முயற்சிக்கு தோள் கொடுக்கத் தயாராக அந்த ஊர் நிமிர்ந்து நின்றது!
குருக்களுக்கு இன்னும் நித்திரை வரவில்லை. - உண்டியற் செம்புகளின் கலீர்! கலீர்!" ஒலி. .அர்ச்சனைத் தட்டுகளில் பச்சை, மஞ்சள், நீல நிற நோட்டுக்கள்.
‘அம்பிகை ! நீ ஒரே நாளில் மகாலட்சுமி ஆகிவிட்டாய். குருக்களின் உள்ளம் ஆனந்தத்தால் கசிந்துருகியது. இடிந்த அம்மன் கோயில் கட்டிடம், புதிய நெடுமாடக் 'கோபுரமாக உயர்ந்து நிமிர்ந்து கம்பீரமாக நிற்பதான இனிய காட்சியில் இலயித்திருந்த அவரின் சிந்தனையை விடி யற் கோழிகளின் “கோரஸ் கூவல்கூடக் கலைக்க முடிய வில்லை!
t
மஞ்சள் வெய்யில் வெளுப்பேறுவதற்குமுன்னரே பெரிய தம்பிரான் கோ யி  ைல வி ட் டு ப் பு ற ப் பட் ட அம்பிகைக்கு பகல் முழுவதும் குதூகல வரவேற்பு கள் : மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதி. அதில் சாதிக் கொரு வீதி. அதனால் அம்மன் தங்கிச் செல்ல ஆங்காங்கே அலங்காரப் பந்தல்கள். தாக சாந்திக்கான தண்ணீர்ப் பந் தல்கள், அர்ச்சனைகள், காணிக்கைகள், - போ ட் டி
58 p நிலவோ நெருப்போ?

போட்டுக் கொண்டு பகலெல்லாம் அமர்க்களப்படுத்தி விட்டார்கள்! தனது யதாஸ்தானத்துக்கு அம்மன் வந்து சேரும் போது இரவு பத்தாகிவிட்டது. ஏகாம்பரம்பிள்ளை யின் ட்றக்ரர் சுவாமிக்கும் பின்னால் நிழல் போலத் தொடர்ந்து ஊர்ந்து வந்தது!
வசந்த மண்டபப் பூசை முடிய, எல்லோரும் விபூதி பிரசாதம் வாங்கிக்கொண்டு புறப்படும்போது, ஏகாம் பரம்பிள்ளை மடியிலிருந்து உருவியெடுத்த ஐம்பது ரூபா நோட்டொன்றை வெற்றிலை மீது வைத்து குருக்களிடம் கொடுத்துக் கும்பிட்டார்.
**மேளகாரணுக்கு 1000, உண்டியல் குலுக்கினவங்களுக்கு 1500; தீவட்டி பிடித்தவனுக்கு 200; ஐயர் தட்சணை 50;" மனப் புத்தகத்தில், அந்தக்கணத்தில், டக்கென்று கணக்கு எழுதிக் கொண்டார் ஏகாம்பரம்.
குரு தட்சணையைப் பெற்றுக் கொண்ட குருக்கள். அதை விரித்துக்கூடப் பார்க்காமல், ஏகாம்பரம்பிள்ளையின் நெற்றியில் விபூதியைத் தரித்து அவரை ஆசீர்வதித்து அந்தப் பணத்தை அப்படியே அவர் கையில் திருப்பிக் கொடுத்தார்.
*அம்பாள் திருப்பணிக்கு இது என் காணிக்கை-புன் னகையோடு குருக்களின் வாயிலிருந்து வந்த சொற்கள் ஏகாம்பரத்தைக் கூனிக்குறுக வைத்துவிட்டன.
கோயிலைப் பூட்டி கொத்துச் சாவியை எடுத்துக் கொண்டு மாற்றியுடுத்திருந்த நான்கு முழ வேஷ்டியை ஒரு தடவை உதறிக் கட்டிக்கொண்ட குருக்கள், கையில் இரண்டு மூடி தேங்காயும், ஒரு வாழைப்பழச் சீப்புடனும் வீடு நோக்கி நிமிர்ந்து நடந்து கொண்டிருந்தார். அந்தக் கம்பீர நடையில் எடுத்துக்கொண்ட பணியைச் சிறப்பாக நடத்திக் கொடுத்த திருப்தி நிறைந்திருந்தது.
★ it'. ஆனி பிறந்துவிட்டது. அமாவாசை வந்து நாலு நாளா கியும் விட்டது. இன்னமும் ஏகாம்பரத்தார் குருக்களிடம்
நா.சோமகாந்தன் () 59

Page 32
இன்றும் கதைக்கவில்லை. இடையில் இரண்டொரு தடவை கோயிற் பக்கம் எட்டிப் பார்த்தவர், விபூதி பிரசாதத்துக் குக்கூடக் காத்து நிற்காமல் நழுவிக்கொண்டு விட்டார். இந்தச் சுக்கில பட்சத்து ஒரு சுபநாளில் பாலஸ்தாபனம் செய்து, திருப்பணி வேலையைத் துவங்க வேண்டும் என ஜெகந்நாதக் குருக்கள் மனம் அங்கலாய்த்துக் கொண் டிருந்தது,
அன்று மதிய போசனத்தை முடித்துக்கொண்டு, மடத். தின் வெளித் திண்ணையில் துண்டை விரித்துச் சரிந்து படுத்திருந்தார்; முற்றத்து வேப்ப மரத்தின் காற்று இத மாக இருந்தது; குருக்களின் உடலில் சமீப நாட்களாக ஒரு தளர்ச்சி, வெய்யிலைக் கண்டால் கண்கள் இருண்டு வரு, வது போன்ற உணர்ச்சி, மத்தியானத்தில் அவரையறியா மலேயே ஒரு குட்டித் தூக்கம் வந்துவிடுகிறது.
*குருக்களையா! குருக்களையா!'--குரலைக் கேட்டுத் திடீரென விழித்த குருக்களின் கண்கள், எதிர்த் திண்ணை யைச் சவுக்கத்தால் உதறித் துடைத்துவிட்டு உட்காரும் ஏகாம்பரம் பிள்ளையைக் கண்டன.
குருக்களுக்கு உற்சாகமாக இருந்தது. வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தார். خ
*உங்களிடம் நானே வரவேணும் என யோசிச்சக் கொண்டிருந்தன். அம்பாளே இங்கு உங்களை அனுப்பி விட்டாள் இந்தச் சுக்கில பகடித்திலே நிறைய சுபநாள் இருக்கு. பாலஸ்தாபனத்துக்கு முகூர்த்தத்தை வைத்து, திருப்பணியைத் துவங்குவம் முதலாளி உடற்தளர்ச்சி யையும் மறந்து உற்சாகம் கொண்டு விட்டார் குருக்கள்.
ஏகாம்பரத்தாரின் வலதுகை ஆட்காட்டி விரல் நரைத்த மீசையைத் தடவிவிட்டுக் கொண்டது.
‘ஒரு நல்ல விசயமாகத்தான் வந்தனான் குருக்களையா. காதோடு காதாய் இருக்கட்டும். என்ரை பெடிச்சிக்கு ஒரு நல்ல சம்மந்தம் பொருந்தியிருக்கு, திடீரென வந்தது, திறமான சாதகப் பொருத்தம். பெடியன் கனடாவிலை
60 () நிலவோ நெருப்போ?

எஞ்சினியர், ஆள் கரவெட்டிப் பக்கம். வீவிலை வந்திருக் கிறாராம்; அடுத்தகிழமை போகவேணுமாம். நாளை இரவுக் குத் தாலி கட்டை வைச்சிருக்கு, உங்களிட்டைச் சொல்லிப் போட்டுப் போக வந்தனான்"- ஏகாம்பரத்தார் சொன்னவை குருக்களுக்குப் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
‘குழந்தை ரொம்பச் சின்னவளாச்சே! அதுக்கிடையிலை அவசரமாய் கலியாணம் பார்த்துட்டியளே சென்ற ஆண்டு அவளின் பூப்பு நீராட்டலுக்குப் போய் புண்ணியாவாசனம் செய்துவிட்டு வந்தது, குருக்களுக்கு நேற்றுப்போல இருந்தது.
*சமைந்த குமரை இன்னும் ஏன் வீட்டுக்கை வைச் சிருப்பான், பெடியனுக்கும் அவளைப் பிடிச்சிருக்கு சாதக மும் வெகு பொருத்தம். இந்தப் பாரத்தை இறக்கிவிட் டால், என்ரை அம்மாளாச்சியின்ரை வாசலிலை இருபத்தி நாலு மணி நேரமும் கிடந்து திருப்பணி வேலையைக் கவனிக்க எனக்கு வலு வசதியாயிருக்கு மெல்லே. குருக் களின் ஆச்சரியத்துக்குக் கொக்கிபோட்டுத் திருகி மடக்கி விட்டார் ஏகாம்பரம்.
‘நீங்கள் சொல்லுறதும் நியாயம்தான். குழந்தைக்கு ஒரு குறையும் வர அம்பாள் விடமாட்டா. குழந்தை குடி யும் குடித்தனமுமாக வாழுவாள். நீங்க போய் கலியாண ஏற்பாடுகளைக கவனியுங்கோ முதலாளி, நான் நேரத்துக்கு வந்துடுறன்."
ஏகாம்பரத்தாரை வழி அனுப்பி வைத்துவிட்டு, உள்ளே தண்ணிர் குடிக்கச் சென்றபோது குருக்களின் கண்கள்
அவரின் பெண் அம்பிகை, அடுப்படி விறாந்தைச் சுவரில் சாய்ந்தபடி கிழிந்த பிடவை யொன்றுக்குத் தையல் ஊசியால் பொருத்துப் போடுவதிலீடுபட்டிருப்பதைக் காணத் தவறவில்லை. ஒட்டிப்போன கன்னங்கள் ஏக்கமும்
ஏமாற்றமும் நிறைந்த விழிகள், நெற்றி வகிட்டில் இலே சாக எட்டிப்பார்க்கும் இளநரை, குருக்களின் கண்கள் பனித்து விட்டன.
நா. சோமகாந்தன் () 61

Page 33
'அம்பாள் அவளுக்கும் ஒரு வழிகாட்டுவாள்' அவருக், குத் தெரிந்த வழமையான சமாதானத்துடன் திரும்பி வந்து திண்ணையில் சரிந்து கொண்டார்.
女
கலியானம் முடிந்து மாப்பிள்ளை பெண்ணைக் கூட்டிக் கொண்டு குடும்பத்தோடு கொழும்புக்குச் சென்ற ஏகாம் பரத்தார் ஊர் திரும்பிவர இரு கிழமைகளாகி விட்டன.
அதற்கிடையில், பெண்களின் குசுகுசுப்பாகத் துவங்கி, ஆண்களின் முணுமுணுப்பாக மாறிய அச்செய்தி, குருக்க ளின் காதில் விழுந்ததும் அவர் பதறித் துடிதுடித்துப் போனார்.
*கோயிலுக்கெனச் சேர்ந்த காசைத்தான் ஏகாம்பரத் தார் சீதனமாகக் கொடுத்து மகளுக்கு மாப்பிள்ளை பிடித் தவர்"-திரும்பும் திசையெல்லாம், குருக்களின் காதில் ஊர் ஒரே குரலில் ஒலித்தது.
*அம்பிகையே! இப்படியும் ஒரு ஏமாற்றா? குருக்களின் உள்ளம் விம்மி வெதும்பியது.
حصے *உந்தக் குடிகாரனை நம்பி ஒரு சதமும் குடுத்திருக்க மாட்டம், குருக்களையா முன்னுக்கு நிண்டதாலை திருப்ப ணிக்கு நம்பிக் குடுத்தம்’-ஊர் மக்களின் குரலில் அம்பி கையின் கைத்திரி-சூலத்தின் கூர்மையிருப்பதை உணர்ந்த, குருக்கள் பயந்து விதிர் விதிர்த்துப் போய் விட்டார்.
அம்பாளின் பீடத்தில் தமது தலையை ஓங்கி மோதி, உடைத்து இந்த அபசாரத்தைப் போக்க வேண்டும், உண் மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தணிக்க முடியாத வேகம் அவருள்ளத்தைக் குடைந்தது.
ஏகாம்பரத்தாரைக் கேட்டே விடுவது என்ற திட மான முடிவுக்கு அவர் வந்துவிட்டார்.
620 நிலவோ நெருப்போ?

மாலைப் பூசையை முடித்துவிட்டு வெளியில் வர, வாச வில் ஏகாம்பரத்தார் வெள்ளை வேட்டியுடன் விழுந் தெழும்பி, பக்திசிரத்தையாக அம்மனைக் கும்பிட்டபடி நின்றார்.
அண்டாவில் அபிஷேகத்துக்கென அடியார்களால் பக்தி சிரத்தையுடன் நிறைக்கப்பட்ட பாலில் கள்ளத்தனமாக விழுந்து வயிறு புடைக்கக் குடித்துப் புரண்டு அதில் குளித் தெழுந்து அசுத்தப்படுத்திவிட்டு, வெளியே வருகிற மூஞ் சூறைக் காணும்போது ஏற்படுகிற அசூசையும் ஆத்திரமும் போல அவரைக் கண்டதும் குருக்களுக்குப் பிறந்தது.
*குருக்களையா! வாற வெள்ளிக்கிழமை அம்மனுக்கு ஒரு அபிஷேகம், அதோடு என்ரை மகள், மகன், மரும கள் பேரில் தனித்தனியாக 1008 அர்ச்சனையும் செய்ய வேணும்’-ஏகாம்பரத்தாரின் குரலில் ஒரு தனி மிடுக் கிருந்தது.
ஊர்ச்சனங்கள் சொன்னதின் உண்மையை அவ ரிடமே கேட்டறிந்து கொள்வதற்கென வார்த்தைகளை நிதானமாகப் பொறுக்கி மனத்தராசில் நிறை போட்ட வண்ணம் குருக்கள் கேட்டார்.
*மகளுக்குக் 'கலியாணம் முடிஞ்சுது. மகனுக்கு என்ன விஷேசம்?"
‘ஒருத்தருக்கும் தெரியவேண்டாம் குருக்களையா. கொழும்புக்குப் போன இடத்திலை ஒரு ஏஜென்சியைப் பிடிச்சு, அவனைச் சவுதிக்கு அனுப்பிப் போட்டன். வேலை யும் கிடைச்சுட்டுதாம், நேற்றுக் கேபிள் அடிச்சிருக்கிறான். இப்போதான் அம்மாளாச்சி கண்ணைத் திறந்திட்டா.
குருக்களின் மனக்குண்டத்தில் நீறு பூத்திருந்த அக் கினி சுவாலித்து மூளத் துவங்கி விட்டது.
‘அம்மன் மட்டுமல்ல, ஊரும் கண்ணைத் திறந்தபடி தான் இருக்கு.கோயிற் திருப்பணிக்கொண்டு சேர்ந்த காசையெல்லாம் உங்கடை சொந்தத் தேவைக்குச் செல. வழித்து விட்டதாக ஊரே கேட்கிறது. இந்த ஏமாற்று
நா. சோம காந்தன் L) 63,

Page 34
மோசடி பொல்லாத பாவம்'-மனதைக் குடைந்து கொண் டிருந்த தர்ம நியாயத்தை தர்மாவேசத்தோடு குருக்கள் S)srrsö6orfTrf.
*ஊர்ச் சனங்கள் புத்தியில்லாத விசருகள், இப்ப ஆனானாப்பட்ட பெரிய கோயில்களையே ஆமிக்காறன்கள் குண்டு போட்டு இடிக்கிறான்கள். இந்த நேரத்திலை என் னெண்டு புதுக்கட்டிடம் கட்டுறது? சும்மா கிடக்கிற காசுதானே எண்டு குமரைக் கரைசேர்த்தன். பெடியனை யும் வெளிநாட்டுக்கு உத்தியோகத்துக்கு அனுப்பினன் ஊர்க்காரருக்கும் உமக்கும் அது கண்ணுக்கை குத்துது இது என்ரை பரம்பரைக் கோயில், அதுக்குச் சேர்ந்த காசை செலவழிக்கிறதும் விடுகிறதும் என்ரை இஷ்டம். என்ரை மகன் உழைத்தனுப்புகிற காசிலை ஆறுதலாக இந்தக் கோயிலைக் கட்டுவன்.இதைக் கேட்க ஆருக்கும் உரிமையில்லை." W
எரியும் குண்டத்தில் ஏகாம்பரத்தார் போத்தலுடன் சரித்து ஆகுதி யாக்கி விட்ட நெய், சீற்றங் கொண்ட அக்கினியைச் சுவாலித்தெழும் பெருந் தழலாக மாற்றி விட்டது.
"அடப்பாவி! அம்மன் பெயரைச் சொல்லிச் சேர்ந்த பணம் அவ்வளவையும் கூசாமல் அபகரித்தது பெரிய தெய்வத்துரோகம்! உன் சந்ததி வாழாது. உன்ரை தேவைக்குக் காசு சேகரிக்க ஊர் மக்கள் முன் என்னைப் பலிக் கடாவாகப் பாவித்து, அம்மன் பெயரையும் விற்று விட்டியே" - குணமென்னும் குன்றேறி நின்ற குருக்களின் உடம்பு பதறி நடுங்கியது. கோயிற் கட்டிடமே அதிர்ந்து சரிவது போல இருந்தது. நிற்கமுடியாமல் குருக்கள் உட் கார்ந்துவிட்டார்.
‘பேய் ஐயர். பினாத்தாதையும். பிழைப்புக்காக வந்த பிராமணிக்குத்தான் பெரிய முனிவர் எண்ட நினைப்பு. ஏமாற்று, துரோகம், சாபம்,. இதையெல்லாம் கேட்க உமக்கு உரிமையில்லை. இப்பவே திறப்பைத் தந்து விட்டு ஊரைவிட்டே நீர் ஓடினாலும் சரி, புது ஐயரைக்
64 ப நிலவோ நெருப்போ?

'கொண்டு வந்து வைக்க எனக்கு வழி தெரியும். ஏகாம்
பரத்தார் பத்திரகாளியாகிச் சன்னதம் கொண்டுவிட்டார்! ஜெகந்நாதக் குருக்கள் திக்கித்துப் போய்விட்டார்! இடி இடித்து அந்தக் கட்டடம் தகர்ந்து பொல
பொலவென அவர் தலையில் உதிர்ந்து.அச்சிதைபாடுக ளில் அவர் சிக்கிப் புதையுண்டு, மூச்சுவிட முடியாமல்.
‘அம்பிகே!" குருக்களின் நெஞ்சுக் கூட்டுக்குள்ளிருந்து அந்தக் கேவல் வெளிவர முடியாமல் துடித்தது.
அம்பாளின் கர்ப்பக்கிரக விளக்குத்திரி ஊடுபத்திக் கருகிக் கொண்டிருந்தது.
(மல்லிகை-1986)
OO
நா. சோமகாந்தன் 0 65

Page 35
வாத்தியார் பேசவில்லை!
யாழ்ப்பாணக் G35L-T. . . . . . நாடு முழுவதும். சோகம் கப்பிக் கிடந்தது. எங்கும் கவலை தேங்கி நின் ,)gi].
பருத்தித்துறை துறைமுகத்தில், கப்பல் கப்பலாகக் கொழும்பிலிருந்து கொண்டு வந்து இறக்கப்பட்ட அந்த அகதிகளை ஏற்றிக் கொண்டு, பஸ்களும் வான்களும் நாலா பக்கங்களிலும் ஓடின.
女
கள் வெறி கொண்டவர்களின் கண்களைப் போல பொழுது மயங்கி, மங்கலாகி, இருண்டு கிடந்தது அகோர வெயிலிலும், வெள்ளத்திலும் தன்னுடன் சேர்ந்து சுக துக்கங்களில் பகிர்ந்து கொள்கிறதே என்ற இரக்க உணர்ச்சி கொஞ்சமும் இன்றித் தோற்றத்தால் மட்டும் பரந்து கிடக்கும் அந்த இதயமில்லாத வல்லை வெளி, தனக்கு அருகில் ஒட்டிக் கொண்டு கிடக்கும் அந்தக் கிராமத்தின் மீது உறைப்பான உப்புக் காற்றை அள்ளி வீசி நர்த்தனம் புரிந்தது.
66 () நிலவோ நெருப்போ?

உடம்பைக் கிள்ளும் அந்தக் குளிர் காற்றையும் பொருட்படுத்தாமல், தோளில் கிளந்த கதர்த் துண்டை விரித்துப் போர்த்துக் கொண்டு புறப்பட்டு விட்டார் சுப்பு வாத்தியார்? அப்படியான ஒருபிறவி அவர்!
சுப்பிரமணியன் என்று சொந்தப் பெயர் இருந்தா லும், அந்தக் கிராமத்துக் குஞ்சு குமர் எல்லாருக்கும் அவர் ‘சுப்பு வாத்தியார் தான்! அயல் கிராமத்திலிருக் கும் அமெரிக்கன் மிஷன் பள்ளிக்கூடத்தில் ஒரு "அன் சேட்டிபிக்கற்’ ஆசிரியராக இருந்து, இப்போது இளைப் பாறிப் பென்சன்" எடுத்துக் கொண்டிருக்கிறார்.
தேய்ந்து போன பழஞ்செருப்பு ‘கிறீச்.கிறீச்" எனத் தெருவில் ஓசை எழுப்பினால், அதைத் தொடர்ந்து பொலி வான சரீரம் தோளில் ஒரு கதர்த்துண்டு; நரை தட்டிக் கொண்டிருக்கும் தலை; நெற்றியில் ஒரு சந்தனப் பொட்டு: பருவத்துக்கு முன்பே பல்லுகள் போய் விட்டாலும் உதட் டில் தெரியும் ஒரு சிரிப்பு சகிதம் சுப்பு வாத்தியார் வருகிறார் என்று கட்டியங் கூறும்.
தெருவில் யாராவது தெரிந்தவர்கள் குறுக்கே வந்து விட்டால், “வாரும் தம்பி’ எனச் சுருக்கமாகச் சொல் லித் தலையை ஆட்டி விட்டுப் போய்விடுவார்.
*ஏன் வாத்தியார் கூட்டுறவு இயக்கம் சங்கக்கடை இவைகளுக்குள் ஈடுபட்டுப் பொறுப்பான பதவிகளைப் பிடித்துத் தொண்டு செய்தால் மதிப்பாகவுமிருக்கும். பென்சன் காலத்தில் பொருளாதாரமும் கொஞ்சம் நன் றாயிருக்குமே?"- அனுபவம் மிக்க தமிழாசிரியர்கள் சிலர் இப்படி அவருக்கு ஆலோசனை சொல்வதும் உண்டு! சுப்பு வாத்தியார் மறுமொழி சொல்ல மாட்டார்-வழக்கம் போலப் பேசாமல் சிரித்துக் கொள்ளுவார் ‘வாழத் தெரி. யாத அசட்டு மனிதன்” என நினைத்துக் கொண்டு கேட் டவர் போய் விடுவார்.
x
நா. சோமகாந்தன் () 67

Page 36
**கிறீச்.கிறீச்; கிறீச். கிறீச்". அந்தத் தேய்ந்து போன பழைய செருப்புகள் "கொஞ்சம் பொறும் வாத் தியார். நாமும் பென்சன் எடுக்கப் போகிறோம்" என்று கறுவிக் கொண்டன. தார் போட்ட நெடுந்தெருவில் சுப்பு வாத்தியார் நடந்து கொண்டிருந்தார். எத்தனை தானிருந்தாலும், மனம் கேட்கவில்லை. அவர் மெல்லிய இதயம் இறங்கிப் போய்விட்டது. கந்தப்பு அவஸ்தைக் குள்ளாகிக் காயங்களோடு படுக்கையில் கிடக்கிறானாம் என்று அவர் காதில் விழுந்ததும், ஒன்றையும் இலட்சியம் பண்ணாமல் புறப்பட்டு விட்டார் சுப்பு வாத்தியார்
விதானையார் வீட்டுப் பெரிய கிராதிப் படலையைத் திறந்து கொண்டு உள்ளே போனார். செருப்பைக் கழற்றி முற்றத்தில் விட்டு விட்டு, ஜனக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு, நேரே கந்தப்பு படுத்துக் கிடக்கும் பெரிய விராந்தைக்குள் சென்று விட்டார்.
கந்தப்பு, உடலெல்லாம் கட்டுப் போடப்பட்டு, கட் டிலில் கிடந்தான். நெற்றியை ஒட்டினாற் போல, மேலே பெரிய காயம் ஏற்பட்டிருக்க வேண்டும் போலும்; குருதி ஒடிப் பெருகிக் காய்ந்து போன கறள் கட்டுப் போட் டுள்ள சீலையில் இன்னும் இருந்தது. அவன் கைகால்கள் ஆடவில்லை. கண்கள் விழிக்கவில்லை. உணத்ச்சி ஒட்டமின் றிக் கிடத்தப்பட்டிருந்தான்
விதானை ஆச்சி, விடிந்தது முதல் பல்லுக்குள் கரி போடாமல், விம்மிப் பொருமி அழுத வண்ணமிருந்தாள், மகனுக்கருகில் அழுதழுது அவளுடைய முகம் வீங்கிப் போயிருந்தது. பெரிய விதானையாருடைய கண்களிலிருந்து நீர் வடிந்தபடி இருந்தது.
அங்கிருந்த பெண்கள் சிலர் அனுதாபமாக "ஐயோ! பாவம்! போன கிழமைதான் கொழும்புக்குப் போன பிள்ளை இப்படியோ அநியாயம் நடக்க வேண்டும்?" எனப் பேசிக் கொண்டனர்.
என்ன இருந்த போதும், கந்தப்புவை இந்தக் கோர மான நிலையில் கண்டதும், சுப்பு வாத்தியாரால் தாங்க
68 () நிலவோ நெருப்போ?

முடியவில்லை “கந்தப்பு. "" என வாய் திறந்து கத்த வேண்டும் போல இருந்தது. கண்ணிர் சுப்பு வாத்தியா ருக்கும் பொத்துக் கொண்டு வந்து விட்டது. அவர் பேச வில்லை. அவருடனும் எவராவது பேசவில்லை-திரும்பி விட்டார்!
சுப்பு வாத்தியாரைச் சுட்டிக்காட்டிக் கூட்டத்திலிருந்த யாரோ இரண்டு பெண்கள், மூக்கைச் சீறிச் சீறி, ஏதோ குசு குசுத்துக் கொண்டார்கள்.
女 ‘இருந்தாலும், கந்தப்புவுக்கு இப்படித் தண்டனை வேண்டாம், பாவம்!' - விதானையார் வீ ட் டு க் கு
வெளியேவந்து விட்டாலும், சுப்பு வாத்தியாரது நெஞ்சம். கந்தப்புவுக்காக இரங்கிக் கொண்டு, அவனையே சுற்றி நின் sDigiJ.
வலக்கையினுல் தம் வரயை ஒரு முறை தடவிக் கொண்டார் சுப்பு வாத்தியார். அந்த அவமானத்தை அவர் எண்ணிக் கவலைப்படவில்லை. காலம் போனால் மறந் தும் விடுவார். ஆனால் . .? அந்த அநியாயத்தை மறப்ப தெப்படி? குருத்து அடைத்துப் போன வாழையைப் போல, வளர்ச்சியின்றி, செழிப்பின்றி, பரட்டையடித்துப் போய், அதிர்ச்சியடைந்து கிடக்கிறதே ஒருத்தியின் வாழ்வு? சுப்பு வாத்தியார் கந்தப்பு புரிந்த அந்த அநியாயத்தை மறக்க முடியாதபடி கண்ணுக்குள் நின்று ஆடுகிறதே அவள் கண்ணிர்-மீனாட்சியின் கூக்குரல் ஒலி அவர் காதைத்தான் தினமும் குடைகிறதே;
உள்ளம் தான் எவ்வளவு விசித்திரமானது கந்தப் புவை அப்படியே விட்டு விட்டு பல மாதங்களுக்கு முன் ஞல் ஒடிப்போய் அந்த நிகழ்ச்சிகளுடன் ஒன்றாகி விட்டது சுப்பு வாத்தியாரது எண்ணம். . . ."
女
நா. சோமகாந்தன் L) 69

Page 37
மீனாட்சி பூரித்துப் பழுத்த மாதுளம்பழத்தின் மேற் புறம் போன்ற நிறம்? இடையில் சிவப்புச் சேலை; அள் ஸ்ரிச் சொருகிய சுருண்ட மயிர்; அதன் மீது ஒரு ஒலைக் கடகம்; சதைப் பிடிப்பான, பூப்போல மெல்லிய கன்னம்; அதில் இடப்புறமாகச் சிறிய ஒரு மச்சம்; கவர்ச்சியான நீண்ட விழிகள்; கரவற்ற பார்வை; வெற்றிலையைச் சப்பி. செவ்வரத்தம் பூப் போல உதடுகள் சிவக்க, கன்னத்தில குழி விழ அவள் குழந்தையாகச் சிரிப்பாள்.
* நேரமாய்ப் போச்சுது நயினார். நாச்சியாரிட்டைக் கெதியாக மாட்டை அவிட்டு விடச் சொல்லவாக்கும். வெய்யிலுக்கு முன்னம் போக வேணுமாக்குட ’’ என்று, சுப்பு வாத்தியார் வீட்டு வாசலுக்கு வர முன்பே, தினமுங் காலையிற் சத்தம் கொடுப்பாள் மீனாட்சி.
அவிழ்த்து விட்ட மாடுகளைச் சாய்த்துக் கொண்டு, மேய்ச்சற் புலத்துக்கு அவள் போகும் போது போடும் ஒய்யார நடை இருக்கிறதே-ஒரே ஒயிலாக இருக்கும்!
அவள் கரவற்ற பேச்சும், பணிவான தன்மையும் குழந்தைச் சுபாவமும் சுப்பு வாத்தியாருக்கு நன்றாகப் பிடித்துப் போய் விட்டன. அவளது குணத்துக்கேற்றபடி நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டும்; தாயில்லாப் பிள்ளை; பாவம்!" என மனதார, தம்முள் வேண்டிக் கொள்வார்,
தன் சாதி வழக்கப்படி, அவள் குறுக்குக் கட்டாகச் சேலையைக் கட்டிக் கொண்டு, மேலுக்குப் போட்டிருக் கும் நீலச் சட்டையைக் கிழிப்பது போல, பூரித்துத் திரண்ட மார்பகங்கள் குத்திட்டு நிற்க, வயல் வெளியில் மீனாட்சி மாடுகளோடு நிற்பதைக் காணுகிற, மத்தியான வயதைத் தாண்டியவர்களே ‘சோக்கான குட்டி’ எனச் சப்புக் கொட்டிக் கொள்ளுவார்கள். சின்னவயதில் தாயைப் பறித்தெடுத்து விட்ட தனது வஞ்சனைக்குத் தண்டனை கொடுத்தது போல, மீனாட்சி மீதி அழகை அள்ளிச் சொரிந்து, பிராயச்சித்தம் செய்திருந்தது இயற்கை.
70 0 நிலவோ நெருப்போ?

இத்தனைக்கும் அவன் தாழ்ந்த சாதி! மரமேறும் தொழிலாளி செம்பட்டைக் கதிரனின் மகள்! அவன் தாய் பொன்னிக் கிழவியின் செல்லப் பேரத்தி!
女
"பரவாயில்லை. சாதி சனியன்; அது ஒழிய வேண் டும். சாதி மாறிச் சாதி கலியாணம் முடித்தாலென்ன?"- உயர்ந்த சாதி வாலிபக் கூட்டம் ஒன்று திடீரெனச் சீர் திருத்தம் பேசிக் கொண்டு முளைத்து விட்டது அந்தக் கிராமத்தில்!
கிழவன் கதிரன் நடுங்கிப் போய் விட்டான். இரு தலைக் கொள்ளி எறும்பாகத் திகைத்துப் பிரமித்துப் பதறி னான். யாராவது நயினாரின் மகன் தன் மகள் மீனாட்சியை முடித்துக் கொண்டு விட்டால்..? பனை வட்டிலிருந்து விழுந்து உ ட  ெல ல் லா ம் சிதறித் துண்டு துண்டாகத் துடிப்பது போல. ஐயோ! அவனால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை அப்படி நிகழ்ந்து விட்டால். அவன் குடும்பம் மட்டும் அல்ல, அந்தச் சாதியே ஒழிந்து விடும் பட்டப் பகலில் சுட்டுப்பொசுக்கப் பட்டுவிடும் அத்தனை உயிர்களும்! முடித்துக் கொடுக்கா விட்டாலும் அந்தச் சீர்திருத்தச் சிங்கங்கள், ஏதாவது குறுக்கு வழியைக் கையாண்டுவிடும்! கதிரன் நரம்புகளில் இரத்த ஒட்டமின்றி இதயம் நின்றுவிட்டதுபோல விறைத்துப்போய் விட்ட்டான். பனையின் முதுகுபோல மரத்துப் போய்விட்ட அவன் மூளையைக் கிழித்துக்கொண்டு பிறந்தது ஒரு வழி-- அவனுக்குத் தெரிந்த ஒரே ஒரு வழி!
கதிரன் சிந்திக்கவில்லை-கேள்விப்பட்டதையெல்லாம் ஆராய நேரமிருக்கவில்லை. ஒரு நாளிரவு திடீரென, இர கசியமாகத் தன் மகள் மீனாட்சியைக் கொண்டு, தனது தங்கையின் மகன் கணபதிக்குச் சோறு கொடுப்பித்து விட்டான் இப்போது மீனாட்சி கன்னியல்ல-கணபதியின் மனைவி ஆக்கப்பட்டு விட்டாள்!
女
நா. சோமகாந்தன் () 71

Page 38
பாவம். பெரிய சாதனையை நிறைவேற்றி விட்ட திருப்தியுடன நிம்மதியாகக் கண்ணை மூடி விட்டான் குழக் கதிரன். கல்யாணம் என்ற காற்கட்டைப் போட்டு விட்டால், கணபதி திருந்தி ஒழுங்கானவனாக மாறி விடுவான் என அவன் தாயும், மாமன் கதிரனும் நினைத் துச் செய்தபடி ஒன்றும் நடக்கவில்லை. பொலன்னறுவைக் கமத்தில் கூலிவேலைக்காகப் போன கணபதி, அங்கே தன் பழைய சிங்களக் காதலியுடன் வாழத் தொடங்கி விட் டானாம்!
மீனாட்சியும் பொன்னிக் கிழவியும் தான் தனியாக, அந்தக் குடிசையில் இருந்தார்கள். நெல் வெட்டு, வெங் காய வைப்பு, புல்லுப்பிடுங்கல், இப்படிக் சில்லறை உழைப்பில் வந்த ஊதியத்தைக் கொண்டு, அரை வயிற்றை அன்றாடம் கழுவிக் கொள்ளும் அந்த இரண்டு அனாதைச் சீவன்களும்.
தொழிலுக்குச் செல்லுமிடங்களில் பல்லுக் கழன்ற பெரிய நயினார்கள் சிலர்கூட, மீனாட்சியை அர்த்தத்தோடு. பார்த்துப் பொக்கை வாயைக் காட்டினார்கள். சீர்திருத் தம் பேசிய நயினார்க் காளைகள், அவளுக்கு மணம் முடிந்து விட்டது தெரிந்ததும், பேச்சை விட்டு விட்டன. அவளை மட்டும் இன்னும் விடவில்லை! ۔ ح
எரிச்சல்-ஏக்கம்-குமுறல், இதயம் வெடிப்பதுபோல மீனாட்சி துடித்து, புழுவாய் நெளிந்தாள், ‘கணபதி வர மாட்டாரா? அவர் என்னோடு இருந்தால்..?' ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவள் உள்ளத்தைக் கிழித்துக் கொக்கி போட்டிழுத்து, வலித்த கேள்வி இதுதான்!
‘உழைப்பில்லாவிட்டாலும் பரவாயில்லை. அவர் என் னோடு இருக்கட்டும். சாப்பாடுகூட நான் தேடிப்போடுகி றேன். அவர் என்னட்டை வர மாட்டாரா?' நெஞ்சம் குமைந்து புழுங்கி வேதனையில் அழுதாள். ஆனாலும் அவன் வரவில்லை. கணபதிக்கு இரக்கம் பிறக்கவில்லை. தன் இதயத்தை எவளிடமோ அடகு வைத்து விட்டு மனை வியின் குரல் கேட்காத தொலைவில் இருந்தான் கணபதி.
72 0 நிலவோ நெருப்போ?

**போன வரியம் கந்தசாமி கோயில் திருவிழாவுக்கு, முன்னம் போன மனிசன், இன்னும் வர இல்லையே? பிறகும் திருவிழா இந்த வரியமும் வந்திட்டுது. அவர் வரமாட்டாரா? கணபதி எப்போது வரப்போகிறாரோ?" அவள் எண்ணி, எண்ணிப் பெருமூச்சுவிட்டுக் கொண். டிருந்தாள்.
கணபதியின் சொத்து, ஏகபோக உரிமை, அவனுக் குத் துரோகம் செய்யப்படாது என்ற இறுக்கமான அசைக்க முடியாத உணர்வு அவள் நெஞ்சில் வைரம் பாய்ந்து கிடந்தன. எந்தச் சந்தர்ப்பத்திலும் “அதை மட்டும் இழக்கத் தயாராயில்லை அவள்!
* கடவுளே! இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்ப டிப் பயந்து கொண்டு தினமும் செத்துப் பிழைத்து வாழு கிறதோ! என் கணபதியைச் சேர்த்துத்தர மாட்டாயா; நீ?’’-அவள் கண்ணிருடன் கடவுளைக் கேட்டாள்.
இன்னும் அவன் வரவேயில்லை!
அந்தச் சம்பவத்தை நினைத்துக்கொள்ளவே நேற்று நடந்தது போல இருக்கிறது சுப்பு வாத்தியாருக்கு காதுச் சவ்வைக் கிழித்துவிட்டதுபோல வந்த அதிர்வெடிச் சத்தந் தான் அவன் உறக்கத்தைக் கலைத்தது. ஒலிபெருக்கி ஏதோ ஆபாசமான சினிமாப்பாட்டை ஊளையிட்டுக் கொண் டிருந்தது; வேடிக்கை, சதுர்க்கச்சேரி எல்லாம் முடிந்துவிட் டன; இனிச் சுவாமி வீதிவலம் வர ஆயத்தம் என்பதை உணர்த்துவதற்காக வெடிகள் அதிர்ந்தன! ‘திருவிழாத், தான் பார்க்க விருப்பமில்லை, கந்தசாமியாரை வாசலில் சப்பறத்தில் இருக்கும்போது தரிசித்து விட்டு வருவோமே?” என எண்ணிக்கொண்டு வீட்டிலிருந்து கிளம்பினார் சுப்பு வாத்தியார். தெருவில் வடக்கே கொஞ்சத் தூரம் நடந்து போய், அங்கிருந்து பிரிந்து செல்லும் செம்மண் ஒழுங் கையில் கால் வைத்து விட்டார். அதைத் தாண்டி விட்
நா. சோமகாந்தன் () 73.

Page 39
டால் கோவில் வெளி வந்துவிடும். ஒழுங்கையில் ஒரே கல்லும் முள்ளும் கிடங்கும் காலைத் தின்றன. அந்த ஒழுங்கையையும் மற்றத் தெருக்கள் போலத் திருத்தி விட் டால், அநியாயம் ! கிராமச் சங்கத்துக்குப் பத்து ரூபாத் தண்டச் செலவு- “தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் ஒழுங்கை' என போட் மாட்ட வேண்டி ஏற்படுமே! இல்லாவிடில், தெரிந்தோ தெரியாமலோ யாராவது நயி னார்கள் அந்த ஒழுங்கையில் போனால், தீட்டு ஏற்ப டாதா? அதற்காகவே அந்த ஒழுங்கையை ‘ஒதுக்கி" வைத்திருந்தது கிராமச் சங்கமும்!
ஒழுங்கையின் இரு புறமும் அடர்ந்திருந்த பனங்கூடல் வேறு, அதிகாலை இருளை அதிகப்படுத்தியது. ஆகாய வெளி யில் மின்னி வெடித்துப் பூவாகக் கொட்டுப்பட்ட வான வெளிச்சத்தில், குறிப்புப் பிடித்துக் கோவிலை நோக்கி ஒருவாறு நடந்து கொண்டிருந்தார் சுப்பு வாத்தியார்" ஒழுங்கையின் குறுக்கே வேரை நீட்டிக் கொண்டு கிடக் கும் அந்தப் புளியமரத்தடிக்கு அவர் வந்தபோது, யாரோ அவர் மீது முட்டி மோதிக் கொண்டு, இரைக்க இரைக்க ஓடினன். புளியமரத்துக்கு அருகிலுள்ள குடிசையிலிருந்து விம்மல் பொருமலோடு, தனிக் குரலாக அழுகைச் சத்தம் வந்தது. மீனாட்சியின் குடிசைதான் அது அவர் உள்ளே ஒடிப் போனார்.
**இஞ்சை பார்க்க நயினார். விதானை நயினாருடைய மேனாககும். சின்ன விதானையார் இஞ்சுை வந்து. அநி யாயம் செய்து...”* பொன்னிக்கிழவி சொல்லி முடிக்க முடி யாமல் விக்கி விக்கி அழுதது. சுப்பு வாத்தியாரை அடை யாளங் கண்டு கொண்டதும், அதன் பொருமலும் விம்ம லும் கூடிவிட்டன.
மண்ணெண்ணெய்க் கைவிளக்கு மின்னி மின்னி எரிந்து கொண்டிருந்தது ஒரு மூலையில். அதன் மங்கல் ஒளி யில் மீனாட்சி முனகிக்கொண்டு; அலங்கோலமாக?.
★ 74 - நிலவோ நெருப்போ?

ஆத்திரம் உள்ளத்தில் பொருமிக் கொண்டிருந்தாலும், கந்தப்புவைக் கொஞ்சம் கண்டித்து வைக்கட்டுமே என்பதற் காகத்தான் சுப்பு வாத்தியார் அந்தப் பேச்சை எடுத்தார். பெரிய விதானையார் கோபத்தின் கொடுந்தணலாகி விட்டார்.
*வயது போன வேளையில், அரளை புரண்டு போய், கீழ்ச்சாதிகளுக்காகப் பேச வந்து விட்டாயா? மூச்சு வெளி யில் விடாமல் வீட்டில் போய் இரும். என் மகன் ஒரு நாளும் அப்படிச் செய்திருக்க மாட்டான் காணும்.’’
பெரிய மனித சுபாவப்படி உறுக்கிப் பேசி எல்லா வற்றையும் மூடி மறைத்து விட்டார் பெரிய விதானை யார். சுப்பு வாத்தியார் தெருவில் கால் வைப்பதற்கு முன்பே, அவரது முன் வாயில் எஞ்சி இருந்த அந்தக் கடைசிப் பல்லையும் கழற்றி எடுத்து விட்டான் கந்தப்பு!
அவர் ஒன்றும் பேசவில்லை!
YA
'மீனாட்சிக்கு விசர்; ” அவள் அடிக்கடி கண்ணிர் சிந்தினாள்; தாரை தாரை யாக வடியும் கண்ணீருடன் நெஞ்சில் அடித்துக் கொண்டு வைக்கத் தொடங்கி விட்டாள்.
**சிங்களத்தி புரியா. ஆ; நீ சுகமாக இருக்கிறியோ. ஒ1.ஐயோ; என் ராசா. சுகமாக நீ இரு!.. வந்து விட்டியா. என் துரையே. ஏ?'- புலம்பல் ஓய்ந்து விடும். *கணிர் கனிர்" எனச் சிரிப்பாள் !
* புரியனில்லாத விசர்தான் !" கிராமத்துச் சனங்கள் காரணங் கண்டு பிடித்து விட்டார்கள்.
பொன்னிக்கிழவி, கந்தப்பு, பெரிய விதானையார், சுப்பு வாத்தியார் ஆகியோருக்கு மட்டிலும் தான் ‘அந்தச் சம்பவம் தெரியும். பெரிய இடத்து விஷயம், ஊரெல்லாம்
நா. சோமகாந்தன் () 75

Page 40
எப்படிப் பரப்ப முடியும்? தகப்பனாருக்குப் பிறகு (விதானைப்) பட்டம் ஏற்க இருக்கும் இளவரசு கந்தப்பு அல்லவா?
女 கிழவி ஏதாவது தொட்டாட்டுத் தொழிலுக்குப் போனால் சரி, அல்லாவிடில் இரு சீவன்களும் இப்போ தெல்லாம் முழுப்பட்டினி, சுப்பு வாத்தியார், தன் பிச்சைக் காரப் பென்சன் காசில், இரக்கப்பட்டு அவ்வப்போது ஏதாவது கொடுத்துக் கொள்வார்.
*சின்ன விதானை'யார் கட்டவிழ்த்துவிட்ட பிரசாரத் தால், ஊர்ச்சனங்கள் அதற்கும் காரணம் கற்பித்துக் கொண்டனர்.
*சுப்பு வாத்தியார் அந்த விசரியோடு கூட்டாம்!" நரம்பற்ற நாக்குகள் நாற்புறமும் நெளிந்தன.
女
அந்தப் புளியமர வேர் காலில் தடக்கி இடறிய போதுதான் சுப்பு வாத்தியாரது சிந்தனை விடுபட்டது. விதானை யார் வீட்டிலிருந்து, அந்தச் செம்மண் ஒழுங்கை வரை வந்து சேர்ந்து விட்டதை அப்போது தான் உணர்ந்தார். சே! பழைய எண்ணங்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றியபடியால் அருவருப்பு, ஆத்திரம், இரக்கம், உணர்ச்சிகள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதிக் கலந்து கூழாகி நின்றன!
அவருக்குப் பொன்னிக் கிழவிக்குச் சுகமில்லை என்று கேள்விப்பட்ட ஞாபகம் வந்து விட்டது ஒழுங்கையில் நின்றபடியே,அந்தக் காவோலைப் படலையைத் திறந்தார். குடிசைக்குள் பிரகாசமாக விளக்கு எரிந்து கொண்டிருந் தது; பேச்சுக் குரலும் கேட்டது. நின்று விட்டார்.
** மீனாச்சி! துரோகி என்னை. மன்னித்துவிடு. தவ றுக்கு நான் தண்டனை. பெற்று விட்டேன். உன்னாணை
76 () நிலவோ நெருப்போ?

இனி அந்தச் சிறுக்கியிட்டை நான் போகவே மாட்டேன். என்ரை ஆச்சி ஆணை நம்பு. இது சத்தியம்."
*நான்.ட்டுப் போய் விட்டேன்.நான்’ விக்கல்; அழுகை.
*அழாதே மீனாச்சி! நான் தான் நினைச்சுத் தவறிய வன். நீயாக எண்ணி ஒன்றும் செய்யவில்லை. பிழை என் மீது தான். அழாதே மீனாச்சி, அழாதே!'
‘எடி பிள்ளை மீனாச்சி! இந்தா சோகத்தைக் கொண்டு போய் அவருக்கும் கொடுத்து ரெண்டு பேருமாய்ச் சாப் பிடுங்கோ. இனி எல்லாம் உதுகளைக் கதைக்க வேண்டாம். ஆம்பிளையஸ் கொஞ்சமாவது பொறுப்போடை நடக் காட்டால் இப்படித் தான் எல்லாம்.?* பொன்னிக் கிழவி யின் குரல்-சுப்பு வாத்தியாரின் காதுகளில் அப்படியே தெளிவாக விழுந்தது.
கூப்பிடலாமோ என நினைத்தவர்; நினைத்தவர் தான், செய்யவில்லை. பேசாமல் தம் விட்டுக்குத் திரும்பி விட் டார் சுப்பு வாத்தியார்!
சுப்பு வாத்தியார் வீட்டுக்குள் நுழையும் போதே அவர் மனைவி ஓடி வந்து சொன்னாள் -
"இஞ்சாருங்கோ! ஒரு புதினம் தெரியுமோ? மீனாட்சி யின்ரை புரியன் கணபதி வந்திட்டானாம்! கலகத்துக்கை, அடித்துத் துரத்தி விட்டார்களாம். கணபதியைக் கண்ட தும் மீனாட்சிக்கு எல்லாம் சுகமாம் ரெண்டும் நல்ல ஒற்றுமையாகிச் சிரிச்சுப் பேசிக் கொண்டிருக்கிறதாம். பொன்னிக்கிழவி உங்களிட்டை எண்டு வந்தது. சொல்
லிப் போட்டுப் போகுது-’’ ஒரே மூச்சில் சொல்லி முடித்து விட்டாள்.
*பண்பாட்டுக்கு அடுக்காதே!’ எனச் சுப்பு வாத்தி
யார் துடிக்கவில்லை; உள்ளம் நிறைந்தது; மகிழ்ந்தார்.
நா. சோமகாந்தன் D 77

Page 41
கண்களில் நீர் துளித்தது. அவர் பதில் பேசலில்லை. அவர் மனைவி தான் மீண்டும் வாயைத் திறந்தாள்.
**விதானையாற்றை பெடியனுக்கு இப்ப எப்பிடிச் சுகம்?"
சுப்பு வாத்தியார் மறுமொழி சொல்ல வாயெடுக்கை யில், அங்கே, தொலைவில், வடக்குத் திசையில், விதானை யார் வீட்டுப் பக்கமாக இருந்து வீரிட்டுக் கதறும் ஒலக் குரல் திடீரெனக் கேட்டது!
*அநியாயத்துக்குத் தண்டனை' என்று, பழி தீர்த்துக் கொண்ட மனோபாவம் அவருக்கு ஏற்படவில்லை. கண்கள் கலங்கி விட்டன. முன்பு துளிர்த்திருந்த நீரை முட்டித் தள்ளிக் கொண்டு பாட்டம் பாட்டமாகப் பல துளிகள் வழிந்தன!
‘கண்ணிர்களைத் துடைத்துக் கொண்டார். சுப்பு வாத்தியார் பேசவில்லை!
(தினகரன் - 1959)
ն,
78 - நிலவோ நெருப்போ?

அது வேறு உலகம்
அலுவலகத்திலிருந்து அலுத்துப் போய் மாலையில் வீடு திரும்பிய நடராசனுக்கு அவரின் மனைவி புனிதத் தின் அன்பு அணைப்புக் காத்திருந்தது. உற்சாகத்துடன் உடனே அந்தக் கடிதத்தை உடைத்துப் படித்தார். அவர் களின் இன்ப விளைச்சலை அறுவடை செய்து கொண்டு. வருவதற்காக ஊர் சென்றிருக்கும் அவள், ஒன்றுவிட்டு ஒரு நாள் தவறாமல் எழுதிக் கொண்டேயிருந்தாள். அவ ரின் தனிமைக்கு, தவிப்புக்கு, அலுப்புக்கு அவை உற்சாக மாத்திரைகளாக விளங்கின. அன்று வந்த கடிதத்தில்உங்கள் சாப்பாடு எப்படி என்ற அக்கறை, ஒழுங்காகச் சாப்பிடுங்கள் என்ற கெஞ்சல், உடம்பைப் பேணிக் கொள்ளுங்கள் என்ற கோரிக்கை, உங்கள் செல்வத்தைப் பெற்றெடுத்துக் கொண்டு விரைவில் ஓடோடி வருகிறேன் என்ற துடிப்பு- இப்படி வழமையான கொஞ்சல் கெஞ். சல்களுடன் ஒரு விஷயத்தைப் பற்றி அபிப்பிராயம் எழுதும் படியும் அவள் கேட்டிருந்தாள்.
நா. சோமகாந்தன் 79

Page 42
உடைகளைக் களைந்துவிட்டு, கால்மேல் கழுவிக் கொண்டு, வெளிச்சத்தைப் போட்டு விட்டு, ‘ஈசிச்சேரில் சாய்ந்து, கால்களை நீட்டியவண்ணம், புனிதத்தின் கடி தத்தை மீண்டும் எழுத்து எழுத்தாகப் படித்து அனுபவித் தார்.
அவள் புதிதாக எழுதியிருந்த விஷயம்; ஊரில் புனி தத்தின் தோழியினுடைய தங்கைக்குத் திருமணப் பேச்சு நடந்ததாம். சாதகம், சீதனம் பொருந்தி விட்டதால், திருமணத்தை முடிவு செய்வதற்கு மாப்பிள்ளையின் குண நலன்களையறிந்து கொள்ளப் பெண் பகுதியினர் விரும்பு கிறார்களாம். குறிப்பிட்ட மாப்பிள்ளை, நடராசனின் கந் தோரில் வேலை செய்கிற கணேஷ் என்பதனால் அவனைப் பற்றிய அபிப்பிராயத்தை எழுதும்படி புனிதம் கேட்டி ருந்தாள்.
அரசாங்க சேவையில் பல காரியாலயங்களில் பதி னைந்து ஆண்டுகளை, பேனா ஒட்டிக் கழித்து விட்டவர் நடராசன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், இப்போது கடமை பார்க்கும் இலாகாவின் கணக்குப் பிரிவுக்குப் பொறுப்பாக நடராசன் பதவியேற்றுச் ga மாசங்களுக் குள் சேவையில் சேர்ந்தவன் தான் கணேஷ்.
கணேஷ் வந்து சேர்ந்த முதல் தினமும் அதற்குப் பிறகு ஏற்பட்ட தொடர்புகளும் நேற்று நடந்தவைபோல இன்னமும் அவருக்கு நினைவு இருக்கின்றன.
**மிஸ்டர் நடராசன் இந்தப் புதியவரின் பெயர் கணேஷ். இவரை உங்கள் பிரிவுக்குத் தருகிறோம். நன்கு கவனித்துக் கொள்ளும்’-அலுவலக உதவியாளர் நின்ற நிலையிலேயே அவசரமாகச் சொல்லி விட்டு, அங்கிருந்து போய் விட்டார்.
அந்தப் புதியவரை நடராசன் நிமிர்ந்து பார்த்த போது
80 0 நிலவோ நெருப்போ?

கழுத்துவரை மூடப்பட்ட நீளக்கைச் சட்டை, சல' வைக்குப் போகாததால் கம்பீரமில்லாத புதிய வெள்ளைக் காற்சட்டை, செழிக்க நல்லெண்ணெய் வார்த்து, இடப் புறம் மழுங்க வாரப்பட்ட கிராப்: மிரட்சி நிறைந்த கண் கள்; அரும்புகின்ற பூனைமயிர் மீசை நெற்றியில் வெயர்வை; புதிதாக பிறந்த பசுக்கன்று சுற்றுப்புறத் தைப் பார்த்து மிரள்வதைப் போல, அங்கே கணேஷ் நின்றான்.
*உட்காருங்கோ கணேஷ்" முன்னால் இருந்த கதிரை யைக் காட்டி நடராசன் சொன்னார்.
*பரவாயில்லை சேர், நான் நிற்கிறேன்??-அவருக்கு முன்னால் உட்காருவதற்கு அவன் கூச்சப்பட்டான்.
தானும் அவனைப் போலவே ஒரு "கிளார்க்" என்றும் *சேர்" எனத் தன்னை அழைக்க வேண்டியதில்லையென்றும் கூறி, அவனை உட்காரவைத்து, அவனின் ஊர், பாட சாலை, யாவும் விசாரித்தார். நடராசன் ஆனாலும், கணேஷ் வார்த்தைக்கு ஒரு ‘சேர்' போட்டு அவருக்குப் பதில் சொன்னான்,
அடுத்த சில மாசங்களில் கணேஷ் எவ்வளவோ மாறி விட்டான். கொழும்பு நாகரிகம் அவனுக்குப் பிடிபட்டு விட்டது. மடிப்புக் குலையாத காற்சட்டை, மேலிருந்து இரண்டொரு பொத்தானைத் திறந்துவிட்ட சட்டை, கம் பீரமாக ஒதுக்கப்பட்ட அரும்பு மீசை, பட்டும் படாம லும் எண்ணெய் பூசிய கிராப்; நடராசனை ‘சார்" போடாமல் ‘அண்ணை’ என அழைக்கவும் பழகிக்கொண்டு கந்தோர் வேலைகளையும் துரிதமாகக் கற்றுக் கொண்டு விட்டான்.
அந்த ஆண்டு முடிவில் நடராசனை அந்த இலாகா வின் நூரளைக் கிளைக்கு இடமாற்றம் செய்து விட்டார் கள். இரண்டு ஆண்டுகளை அங்கு கழித்துவிட்டு, அவர் மீண்டும் தலைமையலுவலகத்துக் கணக்குப் பிரிவை முன் போல் பொறுப்பேற்ற போது, கணேஷ் அங்கே இல்லை,
நா. சோமகாந்தன் 81 நி - 6

Page 43
அவனை அந்தக் காரியாலயத்தின் முதலாம் மாடியிலிருந்த, ஸ்தாபனப் பிரிவுக்கு மாற்றியிருந்தார்கள். நடராசனின் கணக்குப் பிரிவு நாலாம் மாடியிலிருந்தது.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் காலை எட் டுக்கும் ஒன்பதுக்கும் இடையில் ஒரு ஈசற் புற்றுக்குச் சமம். அந்த நேரத்தில் அங்கிருந்து தான் எத்தனை ஜீவன் கள் சுற்றாடலிலுள்ள தமது தொழில் நிலையங்களை நாடி நாற்றிசையும் பறக்கின்றன.
அன்று நடராசனும் முயல் வேகத்தில் கந்தோரை நோக்கிப் பறந்து கொண்டிருந்த போது
அவருக்கு முன்பதினைந்தடி முன்னால்: ஓர் இளம் சோடி, ஆணும்-பெண்ணும்ஒருவருடன் ஒருவர் உரசி, உல்லாசமாக நடந்து, உற்சாகமாகப் பேசிநேரத்தைப் பற்றிக் கவலைப்படாமல், நெருங்கி நடந்து கொண்டிருந்தனர். . அவர்களைக் கடந்து நடராசன் சென்றபோது, பின் னா லிருந்து வந்த அழைப்பு அவரை நிற்க வைத்தது.
*ஹலோ மிஸ்டர் நடராசன்’ திரும்பிப் பார்த்தார். அவரை அழைத்தவன் கணேஷ்தான்!
அவன் அணிந்திருந்த கூலிங்கிளா"சின் நிறத்துக்கு. மீசை கறுத்து, அவன் ஆண்பிள்ளையாகி விட்டதை உணர்த், தியது.
** என்ன கணேஷ். மட்டுப்பிடிக்க முடியாமல் ஆளே' மாறிவிட்டாய்!'-நடராசன் தனது வியப்பை வெளி யிட்டார். ド அலுவலக நேரத்தைப் பிடிக்க அவர்கள் நடந்தபடி கதைத்தனர்.
3.
82 ) நிலவோ நெருப்போ?

*அதிக நாள் காணாமல் இருந்ததால் அப்படிச் சொல் கிறியன் அண்ணை" சிரித்துக் கொண்டே கணேஷ் சொன் னான்.
*தோற்றம் மட்டுமல்ல, ஆளும்தான் மாறிவிட்டாய் போலிருக்கிறது" - நடராசனின் கேள்வியில் மறைமுக மாகத் தொக்கி நின்ற கருத்து கணேஷ"க்குப் புரிந்தது.
மத்திய தந்திக் கந்தோர்ச் சந்திக்கு வந்ததும் தமது அலுவலகத்தை நோக்கிச் செல்ல அவர்கள் இருவரும் இடப்புறம் திரும்பினர்.
* ஐ வில் மீட் யூ லேட்டர் டார்லிங்'-லிப்ஸ்டிக் அதரத்தால் “பை பை" சொல்லிவிட்டு அவள் நேரே நடந் தாள். கழுத்து வரை நறுக்கிவிடப்பட்டிருந்த தலைமயிர் அவளின் தோளில் அநாயாசமாகத் தவழ்ந்து கொண்டிருந் தது.
*அவள் என் சிநேகிதி.வேறொன்றுமில்லை அண்னை”* "ஓ! அப்படியா'-நடராசன் கொடுப்புக்குள் சிரித் தார்.
இதற்குப் பிறகும் நடராசன் பல தடவைகளில், கணேஷையும் அவளையும் சோடியாகச் சந்தித்திருக்கிறார் களிப்பு மிதக்க அவர்கள் கைகோர்த்தபடி கால்பேசில்" உலா போட்டதையும் சீன உணவு விடுதிகளிலிருந்து கன் னத்தைத் துடைத்துக் கொண்டு இருவரும் வெளியேறி யதையும் நடராசனின் கண்கள் சப்தித்த போது கண் டும் காணாதது போல் அவர் நடந்து கொண்டார். அவளை எதிர்பார்த்து அவன் பஸ்ஸ்டாண்டில் தவம் இருப்பதும் அவளின் கந்தோர் வாசலில் அடிக்கடி அவன் கால் கடுக்கப் பழி கிடப்பதும் பழக்கமாகி விட்டவழக்கம்
ஒருநாள் பேச்சு வாக்கில், “கணேஷ்! அவளை மணந்து கொள்ளும் திட்டம் ஏதாவது உனக்கு உண்டா?' என நடராசன் கேட்டபோது அவன் அருண்டு விட்டான்.
நா. சோமகாந்தன் () 83

Page 44
அவள் வெறும் சிநேகிதிதான்’ எனச் சொல்லிச் சமாளித்துக் கொண்டு, அவன் நழுவி விட்டான், அதற்குப் பின் அவன் அவருடன் ஒட்டிப் பழகுவதில்லை; ஒதுங்கி விடுவதுண்டு.
பல மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள், நடராசன் மதிய உணவை முடித்துவிட்டு ஓய்வு மண்டபத்தில் பத் திரிகை படித்துக் கொண்டு இருந்த பொழுது அங்கே அவருக்குப் பக்கத்தில் போட்டுக் கொண்டு சாய்ந்து உட் கார்ந்தான், அவரைக் கண்டால் ஒதுங்கி நழுவி விடுகிற கணேஷ் அப்படி நடந்து கொண்டது நடராசனுக்குச் சிறிது ஆச்சரியமாக இருந்தது. மத்தியான வேளையில் கணேஷைக் கந்தோரில் காண்பது அபூர்வம். அவளைத் தேடிக் கொண்டு ஓடிவிடுகிற அவன் இன்று இடிந்து போ யிருக்கிறானே! பத்திரிகை படிப்பதை நிறுத்தி விட்டு, நடராசன் அவனைக் கவனித்தார். வட்ட வட்டச் சுருள் களாக சிகரெட்டை ஊதி, அவை மேலே வளையங் கட்டு வதை அசாதாரண மெளனத்துடன் நோக்கிக் கொண் டிருந்தான் அவன். அவளின் தோற்றம் உஅவருக்கு இரக் கத்தை ஏற்படுத்தியது. அவராக அவளைக் கிளறினார்.
என்ன கணேஷ் கடுமையான யோசனை?"
சிகரெட்டை ஆறுதலாக ஊதிவிட்டு, நிமிர்ந்து உட் கார்ந்து சிகரெட் அடித் துண்டைக் கீழே போட்டு சப்பாத்தால் நசுக்கிக் கொண்டு அவன் சொன்னான்,
என்னைப் பிடித்த சனி நீங்கிவிட்டது அண்ணை'
நடராசனுக்கு அவன் எதைக் குறிப்பிடுகிறானென்று
முதலில் புரியவில்லை. விஷயத்தை அறிந்து கொள்ள மேலும் குடைந்தார்.
*என்ன சாத்திரம் சோதிடம் எல்லாவற்றிலும் கூட உனக்கு நம்பிக்கை இருக்கிறதோ கணேஷ்?"
48 D நிலவோ நெருப்போ?

'இல்லை அண்ணை-அவளை நான் கைகழுவி விட்டேன்'-கடைசி இரு சொற்களுக்கும் அழுத்தங் கொடுத்துச் சொன்னான்.
**ஏன் கணேஷ்-என்ன நடந்தது?"
" ஓர் ஆணும் பெண்ணும் நண்பர்களாகித் தோழமை யுடன் பழகினால் அது கலியாணத்தில் தான் முடிய வேண் டுமோ அண்ணை?’’
“பருவ ஆணும் பெண்ணும் அடிக்கடி சந்தித்துப் பழ குவதனால் ஏற்படும் தொடர்பு காலப்போக்கில் காதலா கத்தான் பரிணமிக்கும். ஏன் நீயும் அவளும் காதலர் போலத்தானே பழகினிர்கள் கணேஷ்!"
'அவளுடன் நெருங்கிப் பழகியது உண்மைதான். ஆனால் காதலினால் அல்ல,- அவளை பொழுது போக்கு நண்பராகத்தான் கருதினேன், வேறொன்றுமில்லை."
*நீ அப்படி எண்ணியிருக்கலாம். ஆனால் அவளும் அப்படி நினைத்திருக்க வேண்டுமே. ஏன் அவள் உன்னைக் காதலிக்கவில்லையோ?"
*அண்ணை ! உது காலங் கடந்த கேள்வி. அவளை மணந்து கொள்வதற்கு நான் தயாராக இல்லையென்பதை அறிந்தவுடன் அவள் வேறொருவரை மணந்து கொண்டு விட்டாள்.'-அவன் பேச்சை நீட்டாமல் வெட்டித் திசை திருப்பினான் ,
‘புத்திசாலிப் பெண். இவ்வளவுக்குப் பிறகாவது விழித்துக் கொண்டாளே!' நடராசன் கணேஷை மட் டந்தட்ட வேண்டும் என்பதற்காக அவளை ஒருபடி உயர்த் திச் சொன்னார்.
‘ஓர் உயிர் மற்ற உயிரை விசுவாசமாக நேசிக்க வேண்டும், சமமான இரு சக்திகள் ஒன்றாக இணையும் போதுதான் அந்த நிலை பிறக்கும். அந்தக் காதல்தான் நிலையான, வெற்றி பெறக்கூடியதொன்று, பருவம்,
நா. சோமகாந்தன் () 85

Page 45
கவர்ச்சி என்ற இரண்டும்தான் எனக்கும் அவளுக்குமிடையில் இருந்த ஒற்றுமை. ஆனால் வேற்றுமைகளோ ஏராளம். இது அவளுக்கும் தெரியும். இளமை மயக்கத்திற்கு மேலாகச் சிந்தனை விழிப்புற்ற போது தவறு தெரிந்தது. அவரவர் பாதைக்குத் திரும்பிவிட்டோம்'-தனது அனு பவத்தில் கிட்டிய சிந்தனைத் தத்துவத்தை ஒரே மூச்சில் சொல்லிவிட்டு ஒய்ந்தான்.
அவன் முகத்தில் சிறிதும் விரக்தியோ, வேதனையோ இல்லை. சிகரெட்டை எடுத்து வாயில் பொருத்திக்கொண்டு நடராசனின் பதிலுக்குக் கூடக் காத்திராமல் எழுந்து போய்விட்டான்.
அதற்குப் பிறகு இந்நாள் வரை நடராசன் கணேஷை எந்தப் பேட்டுடனும் சந்திக்கவேயில்லை!- அவன் இப் போது ஒரு தனிப்பறவை! நடராசன் தமக்குள் சிரித்துக் கொண்டார்.
நடராசன் தமது நெற்றியின் ஓரங்களை ஒரு முறை கசக்கி விட்டார். மனைவியின் கடிதத்துக்கு என்ன பதிலை எழுதுவது என்பது பிரச்சனையாகி தலை வலித்தது.
வெறுமனே தூய்மை வாதம் பேசி, மற்றவர்கள் வாழ்க் கையில் நுழைந்து அவர்களைப் பற்றிய ரிஷிமூலம், நதி மூலம் ஆராய்ந்துகொண்டிருக்கிற அவரது சமூகம், கணே ஷின் கடந்த காலத்தைப் பற்றியறிந்தால் அவனை நல்ல நடத்தையுள்ளவன் என ஒப்புக்கொள்ள மாட்டாது என் பது நிச்சயமாக அவருக்குத் தெரியும். அதனால் கணேஷைப் பற்றிய உண்மைகளை மறைத்துச் சிபார்சு செய்து எழுதி விடலாமெனில், அது பெண் பகுதியினர் அவர் மீதும் அவரது புனிதத்தின் மீதும் கொண்டுள்ள நம்பிக்கைக்கு இழைக்கும் துரோகமாக இருக்குமோ?-கணேஷ் திருத் திக்கொள்ள முடியாதபடி உண்மையில் கெட்டுப் போன வன் தானா என்ற சந்தேகம் வேறு அவர் மனத்தில் துழைந்து குழப்பத்தை உண்டாக்கிவிட்டது.
86 () நிலவோ நெருப்போ?

நடராசனின் தலை கனத்தது, மீண்டும் நெற்றிப் பொட்டை கசக்கி விட்டுக் கொண்டார், ஒரு முடிபுக்கும் அவரால் வரமுடியவில்லை. ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் பொருத்திக் கொண்டு புகையை ஊதி விட்டார். புகையின் வாலைப் பிடித்துக் கொண்டு அவரின் கண்கள் சுழன்று சஞ்சரித்து விட்டு அந்தக் கூடத்தின் சுவரிலிருந்த புகைப்படங்களில் பதிந்தன.
கருங்காலிச் சட்டம் போடப்பட்ட பெரிய அந்தப் புகைப்படம் அவர்களின் திருமணப் புகைப்படம், அடுத்தது கண்ணன், மற்றது விஜயன், அதற்கும் அடுத்தது “கொழு கொழு" குழந்தைக் கலண்டர்ப் படம்!
அந்தப் படம்- அந்த இனிய காட்சி இப்போது அவரின் நினைவுத் திரையில் களிநடமிட்டது.
விஜயன் வளர்ந்து தத்தித் தத்தித் தளிர் நடை போட்ட போது தாய்ப்பாலை நிறுத்தி விட்டு பதிலாக புட்டிப்பாலை புகட்டத் தொடங்கினர். வழக்கமாக புட்டிப் பால் வாங்கும் கடையில் சென்ற ஆண்டின் தொடக்கத்தில் அந்த வெளிநாட்டுக் கலண்டரை அவருக்குக் கொடுத் திருந்தனர். பார்சலாகக் கட்டி அதை அவர் வீட்டுக்குக் கொண்டு வந்தபோது அதை அவிழ்த்துப் பார்த்துவிட புனிதம் துடித்த துடிப்பு; அவர் பிகு பண்ணி மறுக்க அவள் பொய்க் கோபம் காட்டி, குழந்தை போலச் சிணுங்க.
நினைக்கவே நடராசனுக்கு இனிப்பாக இருக்கிறது! ** எனக்கு வேண்டாம். ஒரு முறை பார்த்து விட்டு உடனே திருப்பித் தருகிறேன்?-ஆவல் நிறைந்த கண் *களுடன் அவள் கேட்டாள்.
*ஊஹஜூம் முடியாது பாாத்து விட்டு நீயே வைத்துக் கொள்’’-பார்சலை அவிழ்த்து அவளிடம் கொடுத்தார்.
“குழ்ந்தைப் படம்! சோக்காயிருக்கே!'-புனிதத்தின் முகத்தை மகிழ்ச்சி நிறைத்தது.
நா. சோமகாந்தன் () 87

Page 46
**ஆமாம் புனிதம்; இதே மாதிரிக் கொழுகொழுப்பாய், உன்னைப் போல ஒரு பெட்டைக் குஞ்சையும் பெற்றுக் கொடுத்து விடு.”*
அவள் கன்னங்கள் குங்குமமாகி விட்டன.
நினைவு மகிழ்ச்சியில் வாயிலிருந்த சிகரெட்டை வீசி: விட்டு, அடுத்த சிகரெட்டை எடுத்துப் பொருத்திக். கொண்டு, தீக்குச்சியைக் கிழித்து மூட்டினார் நடராசன்.
*கள் ளன்!.சும்மா சும்மா சிகரெட் குடிப்பது உங்கள் உடம்புக்குக் கூடாது. நான் விடமாட்டேன்’’ இப்படி அன்போடு எச்சரித்து அதை அவள் பறித்து எடுத்து விடுவதுண்டு.
இந்த நினைவு திடீரென மனசை உரச, அப்போது தான் பற்ற வைத்த சிகரெட்டை நடராசன் நிலத்தில் போட்டு நூர்த்து விட்டார்!
புனிதம் கூட இல்லாத போதும், அப்படி ஒரு கட்டுப் பஈடு; அவளின் அன்புக்கு ஒர் அடக்கம்; காதலின் சுவையை அவர் கலியாணத்திற்குப் பின்புதான் தெரிந்து கொள்ள முடிந்தது; புரிந்து அனுபவிக்தமுடிந்தது.
புனிதத்தை அவர் கலியாணம் செய்து கொண்டதே. சற்றும் எதிர்பாராத ஒன்று. கலியாணத்திற்கு ஒரு வாரத். துக்கு முன்பு கூட புனிதம் என்ற ஒரு பெண் அவர் தலையில் கட்டி அடிக்கப்படப் போகிறாள் என்பதை நடராசன் அறியவில்லை. அவரின் கனவு நினைவு எல்லாவற்றையும் றெஜினா நிறைத்துக் கிடந்தாள்!
女
நடராசன் தொழிலில் முதல் நியமனமாகி, கொழும் புக்கு வந்தவுடன் கொட்டாஞ்சேனையில் உள்ள “போடிங்" ஒன்றில் தங்கியிருந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, போக்குவரத்துக்கு வசதியாக இருக்கும் என அவர் ஒரு "ஸ்கூட்டரை' வாங் கி னா ர் . அந்த போடிங்கின்
88 O நிலவோ நெருப்போ?

உயரமான படிகளில் அதைத் தினமும் ஏற்றி இறக்கிக், கொள்வது சிரமமாக இருந்ததால் தமக்கு வசதியுள்ளதாக, அந்தப் பகுதியில் ஓர் அறை வாடகைக்குக் கிடைக்குமா என அலைந்து கொண்டிருந்த போது, அதே வீதியின் முடிவி லுள்ள வீட்டின் முன் அறை காலியாக இருப்பதையறிந்து அதை வாடகைக்கு எடுத்துக் கொண்டார். அந்த வீட்டில் நடராசனைத் தவிர, வயோதிபத் தம்பதியும் குடி, யிருந்தனர்.
அந்த நத்தார் விடுமுறைக்கு அவர் ஊர் சென்று விட்டுத் திரும்பிய பொழுது அந்த வீட்டில் றெஜினாவும். குடிவந்திருந்தாள்! அந்த வயோதிபத் தம்பதியினரின் ஒரே மகள் அவள் கணவனின் துன்புறுத்தலால் அவனை விவாகரத்துச் செய்து விட்டு, பெற்றோருடன் வசிக்க வந்து, விட்டாள்.
கீழிருந்து உயரமும் மேலிருந்து இறக்கமுமான இறுக் கிய உடைகளையணிந்து கொண்டு அந்த வீட்டில் குறுக். கும் நெடுக்குமாக அவள் உலாவும் போது, நடராசனின் மனமும் சேர்ந்து அலைந்தது, அவருக்கு வாலிபத்தின் வாசற்படியை எட்டும் வயது தானே? -அடிக்கடி அவ ரைப் பார்த்து அவள் விழிகள் வண்டாட்டம் செய்த, போது, அவர் நெஞ்சில் கற்பனைகள் அரும்பு கட்டத். தொடங்கின.
காலையில் கந்தோர் புறப்படுவதற்காக ஸ்கூட்டரை இயக்கி வெளிவரும்போது- முதல் தடவையாக ஒரு நாள் நடராசனிடம் றெஜினா கேட்டாள். ‘இவ் யூ டோன்ற். மைண்ட் ரு ட்றொப் மீ அட் பெட்டா பிளிஸ்?' 'பிளிஸ்? என்ற வார்த்தையைத் தேனில் குழைத்து, தன்னைப் புறக். கோட்டையில் விடமுடியுமா என றெஜினா கேட்டபோது நடராசன் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தயங்கினார்.
நடராசனின் மெளனத்தைச் சம்மதமாகக் கருதிக் கொண்டு, அவள் அவர் பின்னால் ஏறிக் கொண்டு விட் டாள்.
நா. சோமகாந்தன் ) 89.

Page 47
முன் பின் அனுபவமில்லாததால் மனம் பதற, உடல் வியர்க்க தெரிந்தவர்கள் கண்களில் படாதவாறு, ஒரே மூச்சில் அவளைக் கொண்டு போய் இறக்கி விட்டார் நடராசன.
அடுத்த நாள் நர்ஸிங் ஹோம்பு! பிறகு தெரிந்த உற வினர் எவரையோ பார்க்க ஆஸ்பத்திரி-இப்படிச் சாட் டுகளைச் சிருஷ்டித்துக் கொண்டு அவருடன் பயணம் செய்யத் துவங்கி விட்டாள் றெஜினா,
ஆரம்பத்திலிருந்த பயம் தெளிந்து நடராசனுக்குச் சற்றுத் துணிவும் பிறந்து விட்டது. ஸ்கூட்டர் சவாரியின் போது அவரின் முதுகில் அவள் உடல் ஊட்டிய சூடு இதத்தைக் கொடுத்தது; அந்த இதம் இன்னும் தேவை போல இருந்தது; அவளைப் பின்னுக்கு இருத்திக் கொண்டு பயணம் செய்வதை ஒரு நாகரிகம் என்று கூட நடராசன் கருதத் துவங்கி விட்டார்.
ஒரு நாள் அதிகாலை உறக்கமும் விழிப்புமற்ற சொப் பனநிலையில் படுக்கையில் புரண்டு, மனசை நடராசன் இன்பக் கற்பனைகளில் படரவிட்டுக் கொண்டிருந்த பொழுது, அவர் முகத்தருகே திடீரென்று சூடான மூச்சு: தொடர்ந்து அலை, அலையாக அவர் முதுமெல்லாம் லிப்ஸ் டிக முகத்திரைகள்!
முன்பு அனுபவித்திராத புதிய ஒர் இன்ப உலகில் நடராசன் சில காலம் சிறகடித்துப் பறந்து கொண்டி ருந்தார்.
ஒரு நாள், திடீரெனத் தாயிடமிருந்து வந்த தந்தி யைக் கண்டதும் பதறித் துடித்துக் கொண்டு ஊருக்கு ஒடிய நடராசனுக்குத் தாயின் மீது பொல்லாத கோபம் தான் ஏற்பட்டது தனக்குச் சுகமில்லை, உடனே வா எனப் பொய்த் தந்தி கொடுத்து விட்டு நடராசனைக் கலந்து கொள்ளாமலே அவரின் திருமணத்துக்கு ஏற் பாடு செய்திருந்தாள் அவரின் அன்னை. நடராசனின் எதிர்ப்போ கோபமோ தாயின் பிடிவாதத்தைத் தகர்க்க
90 0 நிலவோ நெருப்போ?

முடியவில்லை, நடராசனுக்கு விருப்பமில்லாமலே புனிதத் தின் கழுத்தில் தாலி ஏறிவிட்டது!
கருங்காலிச் சட்டம் மாட்டிய அந்தப் படத்தில் அவர் பார்வை பதிந்தது புனிதமும் அவரும் திருமணத்தன்று மணவறையின் கீழ் நின்று எடுத்த படம். நாணம் 'நிறைந்த கூரிய விழிகள், எடுப்பான நாசி, முற்றிப் பழுத்த செம்பாட்டு மாம்பழம் போன்ற கன்னம், அப்போது தான் மலர்ந்த குண்டு மல்லிகை போல் வாளிப்பான உடல் இவ்வளவு கவர்ச்சியோடு முன்பின் தெரியாத அவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்துவிட்டு வஞ் சகம் தெரியாத மான் குட்டி போல் அவள் தோற்றமளித் தாள்.
நடராசன் மணவறையில் அவள் முகத்தைக் கூடப் பார்க்காமல் தாலியைக் கட்டி விட்டாலும், இளமையின் முழுப் பெர்லிவும் சுடர்விட தனிமையில் அவளை முதற் தடவை சந்தித்த போதே அவரிடம் இருந்த கோபம், வெறுப்பு எல்லாம் இருந்த இடம் தெரியாமல் பறந்து விட்டன. அவள் தன் இதயத்தைத் திறந்து வாழ்வில் வர்ஷித்த அன்பில் நனைந்து திளைத்து நடராசன் புனித
přT8)6) Tri.
நடராசன் ஈசிச்சேரில் நிமிர்ந்து உட்கார்ந்தார். அவ ரின் முகத்தில் அவருக்குத் தெரியாமலே முறுவல் இதயத் தில் நிறைவு; நினைத்தாலே நம்ப முடியவில்லை, திருமணம் முடித்து ஒன்பது ஆண்டுகள் உருண்டு விட்டன. அத்தனை யும் தித்திக்கும் ஆண்டுகள்! திட்டமிட்டபடி மூன்று குழந் தைகள். அவருக்குள் அவளா, அவளுக்குள் அவரா என்று பிரித்துணர முடியாத அவ்வளவு இறுக்கமான பிணைப்பு - அவரது உள்ளம் அவளைப் பற்றிப் பெருமைப்பட்டுக்கொண் 'l-gil.
முகிழ்த்து, மொட்டவிழ்த்து, மணம் நிறைந்த மலர்களை இறைக்கும் முல்லைப் பந்தலின் கீழ் நிரந்தர வாசம் செய்து
நா. சோமகாந்தன் () 91

Page 48
அந்தக் கொடியின் குளுமையை, செழுமையை, சுகந்தத்தை அனுபவிப்பவன்-அந்தப் பந்தலின் கீழ் வருவதற்கு முன் எப்போதோ எங்கோ வாழ்க்கை வழியில் சுவடு எடுத்து வைத்த போது, தெரு ஓரத்தில் கண்ணுக்குத் தட்டுப் பட்ட அல்லியையும் வில்லியையும் நினைவு படுத்திக் கொண் டிருக்கிறானா?-நடராசனைப் பொறுத்தவரைரெஜினாவும் அப்படி ஓர் அல்லியாகிவிட்டாள். அவர் எப்போதோ கண்ட பழைய கனவாக, நினைவிலில்லாத மனதில்நிலைத்து நிற்க முடியாத கனவு போல ஆகிவிட்டது றெஜினாவின் சந்திப்பும் தொடர்பும். இப்போது அவர் வாழ்ந்து கொண் டிருப்பது ஒரு புது உலகம். இந்த உலகத்துக்குள் வரு வதற்கு முன்பு இளமை மயக்கத்தில் அவர் நடந்து கொண்டவை யெல்லாம் எந்தவகையிலும் இந்த உலகத் தின் சொந்தக்காரிக்குச் செய்த துரோகமல்ல. புனிதத் தின் கழுத்தில் தாலியைக் கட்டிய பின் அவன் என்ற உல கத்துக்கு வெளியில் நினைவால் கூட ஒரு அங்குலமாவது அவர் கால் எடுத்து வைக்கவில்லை. வைக்க அவரால் முடியவில்லை. அவ்வளவு இறுக்கமாகப் புனிதத்தின் அன்பு அவரைச் சுற்றிப் படர்ந்து கொண்டு விட்டது.
ஈசிச்சேரின் சட்டத்திலிருந்து கால்களை இறுக்கிப் போட்டுக் கொண்டு தலையை நிமிர்ந்து உட்கார்ந்தார் நடராசன்.
பெற்றோரின் மேற்பார்வை, கிராமக் கட்டுப்பாடு வைதீகச் சூழல் இவற்றுக்கு அடங்கியிருந்த இளைஞர்கள் வாலிபர்களாகித் தமது வருவாயைத் தாமே தேடிக் கொள்ளக்கூடியதான உத்தியோகத்தில் அமர்ந்ததும்நகரத்துப் புதிய சூழலும், நாகரிகத் தொற்றுதலும், ஆண் பேண் வேற்றுமையற்ற நகர வாழ்க்கைமுறைகளும் அவர் களின் உள்ளத்தை அலைக்கழிக்க, தாமேசம்பாதிக்கிறோம்; என்ற சுதந்திர உணர்வு உஷாரூட்ட பருவ மயக்கத்தின் அலைக்கழிப்பில் சபலமடைந்து விடுகிறார்களே தவிர,இயல் பிலேயே அவர்கள் கெட்டவர்களல்ல என்ற உண்மையைக் அவரது அனுபவம் அவருக்கு உணர்த்திவிட்டது.
92 0 நிலவோ நெருப்போ?

கங்கையில் கலக்கிற கழிவு நீரைக்கூட கங்கை கங்கை யாக்கி விடுகிறது. தனது புனிதத்தை எண்ணி நடராசனின் உள்ளம் பெருமைப்பட்டுக்கொண்டது. -
கையிலிருந்த கடிதத்தை விரித்து மீண்டும் ஒரு தடவை படித்தார். படித்துவிட்டு நிமிர்ந்ததும் அவரது முகத்தில் தெளிவும் நிதானமும் நிறைந்திருந்தன. உடனே எழுந்து மேசையருகில் உட்கார்ந்து புனிதத்துக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை சுருக்கமாக எழுதி முடித்து விட்
L-17FT.
*புனிதம்! நீர் குறிப்பிட்ட பெண் அழகில், கவர்ச்சி யில் குணத்தில், குடும்பப் பாங்கில் மற்றும் தன்மைகளில் உமக்கு ஈடாக இருப்பாள் என நீர் நிச்சயமாக நம்பி னால் கணேஷ் அவளை மணப்பதற்கு பொருத்தமானவன் தான்.""
அந்த முடிபைப் பற்றி அவர் மனச்சாட்சி அச்சப் படவில்லை. பதிலாக உறுதியாகவும் நிதானமாகவும் இருந் தது.
கணேஷ் சங்கமமாகப் போகிற இடம் கங்கையாக இருந்து விட்டால், அவனும் அந்தக் கங்கையாகி விடுவான் என்ற நம்பிக்கை நடராசனுக்கு இருந்தது. ஏனெனில் கணேஷ் பாரிசிலோ. ஹொலிவூட்டிலோ, டோக்கியோ விலோ பிறந்து வளர்ந்தவன் அல்ல. அவரைப் போல அவர் பிறந்த யாழ்ப்பாண மண்ணில் பிறந்தவன்தான்பாம்பின் காலை பாம்பறியும். தான் பிறந்த மண்ணின் மணமும் குணமும் நடராசனுக்குத் தெரியும்!
(தினகரன்-1958)
நா. சோமகாந்தன் () 93

Page 49
மனப் பாம்பு
நேரம் என்ற ஆணழகன் நடுநிசி மங்கையை இறுகத். தழுவி, அவள் உடற் சூட்டில் இதங்கண்டு கொண்டிருந், தான்.
கடைகளின் வானொலி முழக்கமும், வாகனங்களின் இரைச்சலும் ஒய்ந்து அந்தத் தெரு சந்தடியின்றிச் செத், துக் கிடந்தது. ஆனால், தெருவின் மேடு பள்ளங்கள், வாகனங்கள் பகலில் எழுப்பிப் பறக்கவிட்ட புழுதி, இரு மருங்குகளிலும் நாற்றமெடுத்தோடும் அகழிகள் முதலிய வற்றையெல்லாம், வீதி விளக்குகள் தம் பிரகாசமான ஒளிக்கற்றைகளால் மூடிமறைத்து, அந்தத் தெரு இராஜ பாட்டை போலத் தோன்றும்படி ஒளி உமிழ்ந்துகொண் டிருந்தன.
தேங்காய்த் துருவல் போலச் சொர சொரக்கும் ஒட் டிய கன்னங்களுக்குப் பவடர் பூசி, உதட்டுக்குச் சாயம் தடவி எடுப்பிழந்த அங்கங்களை ஏறத் தூக்கி, எழில் கூட்டி, அப்போதுதான் மலர்ந்த குமரிகளென ஒயில் காட்டி நகர வீதிகளில் வலம் வரும் கணிகைகள் போல அந்த விளக்குகள் தெருவுக்குப் பகட்டுச் செய்தன.
94 0 நிலவோ நெருப்போ?

அதோ, அந்த லாந்தர்க் கம்பத்தை ஒட்டினாற்போல, இருக்கிறதே ஒரு வீடு - புறாக் கூடு போல-அதுதான்' இராசதுரையின் வாசஸ்தலம்!
வாசலில் குட்டிச்சுவர்! அதற்கு மேலே பலகைச் சட் டங்களாலான கிராதி அடைப்பு: அதிலிருந்து நாலு அடி தூரத்தில் சுவர்; இந்த இடைப்பட்ட பிரதேசம்தான் விறாந்தை, M
அந்தச் சுவருக்கு அப்பால், உள்ளே துண்டு துண் டாக அறைகள்; பலகைகளால் அடைத்துப் பங்குபோட்டுக் கொடுக்கப்பட்டவைதான். மொத்தம் ஆறு அறைகள். நீட்டுக்கு அந்தத் தொங்கலில் மலசல கூடத்தை அடுத்தாற் போல, துருப்பிடித்த தன் வாயால் கொட் டிக்கொண்டிருக்கிற ஒட்டைத் தண்ணிர்க் குழாய்க்கு, நேரெதிராக ஒரு சிறிய அறை. அதுதான் இராசதுரை வசிக்கும் அறை.
ஆமாம், அந்த வீடு. கொழும்பு நகரத்திலிருக்கிற *போடிங்' ஒன்றுதான்! மத்திய தர வர்க்க குமாஸ்தாக் கள், தமிழாசிரியர்கள், மற்றும் வர்த்தக ஸ்தாபனங்களில் வேலை செய்கிற சிப்பந்திகளாக மொத்தம் இருபத்தேழு. ஆத்மாக்கிள் அந்த வீட்டைப் புகலிடமாகக் கொண்டிருக் கின்றன.
பல பல என்று விடியும்போதே உடுப்புக்களைப் போட் டுக் கொண்டு வெளியே போய் விடுவார்களானால், வீடு வெறிச்சோடிக் கிடக்கும். மாலையில் தங்கள் யதாஸ்தான' மாகிய அந்தப் பொந்துக்குள் நுழைந்து இரவு பத்து மணி வரையும் அரட்டையிலோ ‘முந்நூற்றி நாலிலோ" நேரத்தைக் கழித்து விட்டு உறங்கிப்போய் விடுவார்கள்.
இது அவர்களுடைய மாமூல்; நித்திய நியதி! மாத முடிவில் சுளையாகத் தலைக்கு இருபது ரூபா வீதம் பிரதான குடியிருப்பாளரிடம் தூக்கிக் கொடுத்து விடுவார்கள்.
இந்த இருபத்தேழு ஆத்மாக்களில் ஒன்று இராசதுரை.
நா. சோமகாந்தன் () 95.

Page 50
எல்லோரும் அந்த நடு நிசியில் நல்ல உறக்கம். அந்த மலசல கூடத்துக்கு அருகிலுள்ள சிறிய அறையில் கிடக்கிற இராசதுரைக்கு இன்னும் உறக்கம் வரவில்லை. சுற்றிச் சுற்றிச் சுழன்றபடி படுத்துப் பார்த்தான். எப்படி முயன்றும் உறக்கம் வர மறுத்தது. அறை வாசலுக் கெதிராக உள்ள ஒட்டைக் குழாய் நீர் சொட்டும் ஒலி யில் சிறிது நேரமாகத் தன்தாள ஞானத்தைப் பரீட்சித் துப் பார்க்க முயன்றும் மனம் அந்த ஒலியோடு ஒன்றாமல் தாளம் தப்பி வேறெங்கோ சுழன்றது. உடம்பில் விண் விண் என்ற சுண்டல். இரத்த நாளங்களோ புடைத் தெழுந்து உபாதை செய்தன. உள்ளே குருதி சூடாகி, உணர்ச்சி வெறி கொண்டு கொதித்தது.
女
இராசதுரை ஓர் அரசாங்கக் குமாஸ்தா தனது உழைப்பில் ஊரிலுள்ள வயது போன தாய், வளர்ந்து விட்ட ஒரு தங்கை ஆகிய இரு சீவன்களுக்குச் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தவன் பத்து மாதங்களுக்கு முன்பு தொடக்கம் மனைவி என்னும் புதிய ஒரு சீவனையும் தாலி கட்டி உடைமையாக்கி, அதற்கும் சுமை கூலி கட்டிக் கொண்டிருக்கிறான்.
வேறு பலரைப் போலவே அவனும் அநீதக் குமாஸ்தா சம்பளத்திலும் ஒரு குடும்பம் நடத்திப் பார்த்துவிட ஆசைப்பட்டதில் தவறில்லை அவர்களைப் போலவே அவ னுக்கும் இயற்கைத் தேவைகள் இருக்கத்தானே செய்யும்? அத்தோடு, குறுக்கு வழியிற் குடும்ப சுகம் தேடும் கூட் டாளிகளின் சகவாசம் கிடைக்கும் சந்தர்ப்பம் கிட்டா மல் அதுவரை ஒழுக்கமாக வளர்ந்துவிட்ட பிள்ளை அவன், ஆகையால் பணக்கார வீட்டுப் பொடிச்சி ஒன்று கொழுத்த சீதனத்தோடு வரும்போது உறு மீனாகப் பார்த்துக் கொத் திக்கொள்ளலாம் எனக் காத்திருக்கும் பல யாழ்ப்பா ணத்து வாலிபக் கொக்குகள் போலிருக்கவும் இராசதுரை யால் முடியாமற் போய்விட்டது. காதல் கூதல் என அலக்டிக் கொள்ளாவிட்டாலும், தாயின் ஒரே சகோதர னின் மகள் கன கம்மாவைப் பற்றிய ஒரு நினைப்பும் இருந் தது. இராசதுரை படிக்க வேண்டுமென்பதற்காக பார்த்
96 () நிலவோ நெருப்போ?

துப் பாராமல் தன் சொற்ப வருவாயிலும் இயன்ற உத வியைப் புரிந்து விட்டு இடையில் இறந்துபோன அவளின் தகப்பனுக்கும் அந்த எண்ணம் இருந்திருக்க வேண்டும், இறந்தவர்களோடு அவர்களின் எண்ணங்களும் இறந்து போவதில்லையென்பதை நிரூபிப்பது போல, செல்வி கன 'கம்மா திருமதி இராசதுரையானாள்!
வாழ்க்கைச் செலவுகளும், வீட்டு வாடகையும் “றொக் "கெட்"டாக உயரத்தில் எவ்விப் பறக்கிறபோது, தன் உத் தியோகம் பார்க்கிற இடமான கொழும்புக்கே தன் இல்லக் கிழத்தியையும் கூட்டி வந்து வைத்துக்கொண்டு இல்லறம் புரிய திருவாளர் இராசதுரையின் வருமானம் இடங்கொடுக் கவில்லை. ஆகையால், வெளியூரில் வேலை பார்க்கும் பெரும் பாலான யாழ்ப்பாணத்துக் கணவர்கள் செய்வது போலவே இராசதுரையும் செய்தான். திருமணம் முடித்தும் மனைவி யை ஊரில் விட்டுவிட்டு வந்துவிட்டான். மாதத்தில் ஒரு தடவை பறந்து போய், மூன்று நாலு நாட்கள் நின்று விட்டுத் திரும்பி விடுவான். இந்தப் புள்ளி விவரக் கனக் கின்படி இந்தப் பத்து மாதத் திருமண வாழ்க்கையில் இராசதுரையும் கனகம்மாவும் கணவன் மனைவியாக வாழ்ந்த காலம், எண்ணிப் பார்த்தாலும் மொத்தம் ஐம்பது நாட்கள் தேறா !
இளம் வயசு, வாழ்க்கையின் வசந்த காலம். அணு அணுவாக இன்பத்தை அனுபவிக்க வேண்டிய பருவம். அவன் ஊரிலிருந்து பிரியும் ஒவ்வொரு தடவையும் கன கம்மா ஏங்கிக் கண்ணிர் மல்கி அவன் கையைப் பிடித் துக் கொள்ளுவாள்.
‘நானும் கூட வருகிறேனே" என்பது போல அவள் விழிகள் கெஞ்சும்.
இராசதுரை குப்புறத் திரும்பிப் படுத்துத் தன் விழி யில் துளிர்த்த கண்ணீரைத் தலையணையில்ஒற்றிக்கொண்டு அனல் மூச்சு விடுகிறான்.
நா. சோமகாந்தன் 097 நி-7 ܗܝ.ܖ

Page 51
ஒட்டைத் தணணிர்க் குழாய் கொட்டும் லயம் தவ றாத நீரொலி. திடீரெனத் தம்புராத் தம்புராத் தந்தி தெறிப்பது போல'டங். நீங்" என்று அடுத்த வீட்டு மணிக்கூடு ஒரு மணியடித்துத் தன் ஒசைக் கூர்களை மடக்குகிறது.
இராசதுரையின் ஆசைச் சுடர்கள் இன்னும் மடங்க. வில்லை.
மீண்டும் புரண்டு படுக்கிறான்.
女
இராசதுரை சென்று நாற்பது நாற்பத்தைந்து நாட்களாகி விட்டன. தினமும் கண் விழித்தவுடன் கலண் டரில் நாட்களை எண்ணத் தவறுவதில்லை. ‘அடுத்த தடவை எப்போது ஊர் செல்லுவது? எப்போது ஊர் செல்லுவது?" என ஊரிலிருந்து திரும்பிக் கொழும்பில் கால் வைக்கும் ஒவ்வொரு தடவையும் அவன் உள்ளம் கூக்குரலிட்டுத் துடிக்கும். அத்தோடு கடந்த தடவை அவளை விட்டுப் பிரிந்தபோது அவள் நாலுமாதக் கர்ப்பிணி.
இத்தடவை நாற்பத்தைந்து நாட்களாகியும் ஊர் செல்ல லீவில்லை. கந்தோரில் வேலை நெருக்கம் மனைவியின் ஆசை முகம் கூட, நினைவுக்கு நன்றாகப் பிடிபடாமல் தடு. மாறிக் கொண்டிருந்தான்.
அன்று சம்பள நாள், இராசதுரையின் புதிய நண் பன் கந்தசாமி அன்று கந்தோர் முடிந்ததும் தேநீர் சாப் பிட அழைத்தான்.
கந்தசாமியும் குமாஸ்தா தான். ஆனால் அவனுக்கு வாழ்க்கை ஒரு விளையாட்டு மாதிரி கலகல என்ற சிரிப்பு, ஊதித் தள்ளும் சிகரெட் கிழமைக்கு இரண்டு சினிமா, அரட்டை இப்படியாகக் கவலையை எட்டத் துரத்தி விடுவான். தன்னைக் கவலையில்லாத மனிதனாக வைத்துக்கொள்ள, கந்தசாமி வேறு என்னென்ன காரி யங்களில் ஈடுபடுகிறான் என்பதை அறிந்துகொள்ள இராச துரைக்கு இன்றைக்குத்தான் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.
98 p நிலவோ நெருப்போ?

தேநீர் சாப்பிடும் நோக்கில் கந்தசாமி இராசதுரையை அழைத்துச் சென்ற இடம் தேநீர்க்கடையல்ல!
‘என்ன ஐசே!-பெம்பிளையள் குடிக்கிற வெறும் பிய ருக்கு நீர் இப்படி வாயைச் சுளிக்கிறீர்?' என்று கந்தசாமி கிண்டல் செய்ததால், இராசதுரை பட்டும் படாமலும் வாய்ப்பூசி சமாளித்தான். பிறகு, டாக்ஸியில் ஏறி கொழும்பு விதிகள் வழியாகச் சவாரி சென்று, அந்த “நைட் கிளப்பில் நுழைந்து.
இராசதுரைக்கு அந்தப் பாதாதி கேசமாக எண்ணங் கள் படர்கின்றன.
இராசதுரையின் அடிமனத்தில் ஒரு பாம்பு சீறியெ ழுந்து படம் விரிக்கின்றது.
பாம்பின் குவிந்த படம் போன்ற பாதங்கள்.
கொழுத்த பாம்புகளின் மொழுமொழுப்பான உடல் கள் பினைபடுவது போல ஒட்டியும் விரிந்தும் பளபளக் கும் கால்கள்.
பாம்பின் படம் போல் விரிந்த அடி வயிறு.
மேலே.
மேலே.
女
இராசதுரைக்குத் தவிப்பாயிருக்கிறது.
அவன் அடி மனதில் சீறியெழுந்த பாம்பு இரை கேட் டுத் துன்புறுத்துகிறது.
தூக்கம் எப்படி வரும்?
*சீ! என்ன தரித்திர வாழ்க்கை. மனைவி அங்கேநாட் இங்கே. தேவைக்கு உதவாத கலியாணம்."
எண்ணங்கள் பற்றிக் கொண்டு எரிகின்றன.
படுக்கையைவிட்டு எழுகிறான். பெட்டியிலிருந்து சிக ரெட்டை எடுத்து வாயில் வைத்துக் கொண்டு, தீப்பெட்டி யைத் திறந்தபோது. அது காலி.
நா. சோமகாந்தன் () 99

Page 52
சிகரெட்டை வீசி விட்டு, சாரத்தை உதறிக் கட்டி னான். சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டான். சட்டைப் பையில் ‘மணிபர்சை எடுத்து வைத்துக் கொண் டான். கதவை இழுத்துச் சாத்தி விட்டுத் தெருவுக்கு வந்தான்.
தெருவின் தொங்கலிலிருக்கும் “பெட்ரோல் ஷெட்டுக் கருகிலுள்ள அந்த தேநீர்க் கடை இரவிற் பூட்டப்படு வதில்லை,
அங்கு தீப்பெட்டி வாங்கலாம். இராசதுரை கடையை நோக்கி நடக்கிறான். அந்த ‘பெட்றோல் ஷெட்டை அடுத்துப் பல டாக் ஸிகள் நிறுத்தப்பட்டிருக்கும். இரவில் அவசரத் தேவைக் காரர் அங்கு சென்று பிடிக்கலாம். அத்தோடு அந்த டாக்ஸி சாரதிகளில் சிலர், இராசதுரை போல் நள்ளிர வில் தவிப்பவர்களுக்குத் தயக்கமின்றி வழிகாட்டும் ஆபத்பாந்தவர்களாகவும் விளங்குபவர்கள்.
இராசதுரைக்கு அனுபவ பூர்வமாகத் தெரியாது. கேள்வி ஞானம். சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்து விட்டு அங்கு நின்ற இராசதுரை சிறிது தயங்குகிறான். ஒரு டாக்ஸி சாரதி விழித்துக் கொண்டு.
* ஒ! தொரே!.தேத்தண்ணி குடிக்கவா?" நமுட்டுச் சிரிப்புச் சிரிக்கிறான். பாம்பின் படம் போன்ற அந்தப் பாகங்கள். பாம்பின் படம் போல் விரிந்த அடி வயிறு. இராசதுரையும் பதிலுக்குச் சிரிக்கிறான். வெறும் முகப் பரிச்சயமுள்ள இருவரும் ஒருவரை யொருவர் புரிந்து கொள்கிறார்கள்.
** என்ன தொரே! போவமா??? இராசதுரை தயங்கிய வண்ணம் ஏறி உட்கார்ந்து கொண்டான்.
100 D நிலவோ நெருப்போ?

காசைப் பற்றிக் கவலையில்லை!
அன்று சம்பள நாள்!
டாக்ஸி விக்டோரியாப் பாலத்தைக் கடந்து, பறந்து சென்று, முடக்கில் திரும்பி, ஒரு வீட்டு வாசலில் நின் sigil.
இராசதுரையை உள்ளே கூட்டிச் சென்று அறிமுகம் செய்து வைத்து விட்டு, சாரதி தனக்குரிய பணத்தை வாங்கிக் கொண்டு, சென்று விட்டான்.
இராசதுரை கையிலிருந்து வீட்டுக்காரன் கைக்கு இரண்டு பத்து ரூபா நோட்டுக்கள் கை மாறுகின்றன.
உள்ளே சென்று அவளை எழுப்பி விட்டு, வீட்டுக் காரன் வெளியில் வந்து, திண்ணையிலுள்ள லாந்தர் விளக்கை இலேசாகத் தூண்டி விட்டான்.
இராசதுரை நிலை கொள்ளாமல் தவித்த மனத்தோடு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறான்.
அறை வாசலின் திரைச்சேலையைத் தூக்கி அதனுள் டாக கழுத்தை மட்டும் நீட்டுகிறாள் ஒருத்தி,
**என்ட, மாத்தயா'
குலுக்கு நடனமாடிய அந்த மேல் நாட்டுப் பெண்ணின் பாம்புப் படம் போல் விரிந்த அடி வயிறு.
இராசதுரை கால்கள் தடுமாற எழுந்து உள்ளே செல் கிறான்.
கை விளக்கொன்றின் மங்கிய ஒளி. அறையின் சுவர் ஒரமாக ஒரு கயிற்றுக் கட்டில், இராசதுரை கயிற்றுக் கட்டிலின் விளிம்பில் உட்காருகிறான்.
அவள்,
கைகளை உயர்த்தி,
அலுப்பு முறித்து;
கொட்டாவி விட்டு.
சேலைக் கட்டைச் சற்றுத் தளர்த்திய பின்,
பாயை உதறி விரித்து.
தலையணையில் தலைசாய்க்க.
நா. சோமகாந்தன் () 10

Page 53
பாம்பின் படம் போல விரிந்த அந்த அடி வயிற்றின் புதிய அனுபவத்தின் நினைவு போதையூட்டுகிறது.
அந்த மேல் நாட்டு அழகியின் குலுக்கு நடனம்.
நினைவுந்தலோடு இராசதுரை எழுந்து அவளருகில்
வர
அவன் கால்கள் நின்று விட்டன!
கண்கள் நிலைகுத்தி நின்று விட்டன!
அவள் அடி வயிறு.
பருத்து.
திரண்டு.
மேல் நோக்கிப் புடைத்து,
ஏறி இறங்கி.
d; 6ðf 5 í [ 1ff f . . .
நாலு மாதம்-இல்லையில்லை.
ஐந்தரை மாதக் குழத்தை.
நீ என் கணவனா?" என்று கேட்கிறாள் தாய்.
*நீ என் தகப்பனா? என்று கேட்கிறது குழந்தை.
இரை கேட்டுச் சீறியெழுந்த அடி மனத்துப் பாம்பு கணப் பொழுதின் மாயத்தோற்றமா?
திரைச் சேலையை விலக்கி.
திண்ணையைத் தாண்டி.
தெருவில் இறங்கி வேகமாக நடந்து,
டாக்ஸியொன்றை மறித்து.
கோட்டை ஸ்டேஷனுக்கு வந்து
அதிகாலை யாழ் தேவி”யில்,
டகட்டிய சாரத்தோடு
யாழ்ப்பாணம் போய்க்கொண்டிருக்கிறான் இராசதுரை
அங்கிருந்து, இன்றிரவு கொழும்பு வரும் மெயில் வண்டியில், ஒக் லீவு” கேட்கும் அவனுடைய * மெடிக்கல் சேட்டிபிக்கேட் வரத்தான் போகிறது.
(தினகரன் 1986)
102 ) நிலவோ நெருப்போ?

தெளிவு
மணிக்கூட்டின் இரண்டு கம்பிகளும் ஒன்றுடன் ஒன்று கட்டிக்கொண்டு மல்லுப் பிடித்தன. இன்னும் பத்து நிமிடத்தில் ஒரு மணி பதினைந்து நிமிடத்திற்குள் கணேசன் கந்தோரில் நிற்க வேண்டும்; சாப்பிட்டது பாதி சாப்பி டாதது பாதியாக அவசரமாக கையைக் கழுவிவிட்டு கிராப்பை ஒழுங்கு படுத்தினான். பாகற்காய் குழம்பின் உறைப்பு இன்னும் வாயில் உறைத்தபடி இருந்தது. வியர்வை வேறு வேர்த்துக் கொட்டியது.
வழக்கத்தைப் போலச் சாட்டுக் கழிக்காமல் இண் டைக்கு நேரத்துக்கு வந்து விடுங்கோ..."
சமையலறையிலிருந்து வந்து கொண்டிருந்த பரமேஸ் வரி அவசரப்படுத்தினாள்.
வாயில் உறைப்பு, நேரமாகி விட்டதே என்ற தவிப்பு, படிந்து கொள்ளாமல் அடம் பிடித்து நிற்கும் "கிராப்" மயிர், வியர்வை நெடி, இவற்றுடன் பரமேஸ்வரியின் பேச்சும் சேர்ந்து அவனுக்குச் சூடேறி விட்டன.
‘என்ன சாட்டுக் கழிக்கிறன் ? கந்தோரிலை வேலை அந்தரம்.இங்கே உன்னுடைய நெருக்கடி. சீச்சீ! போது
நா. சோமகாந்தன் () 103

Page 54
மப்பா...' அவன் கோபமாக வார்த்தைகளைக் கொட்டிட ன7 ன்.
பரமேஸ்வரிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்து விட்டது. அவள் ஒரு முற்கோபக்காரிதான்.
“இண்டைக்கு நாட்டியம் பார்க்கப் போக வேணும். அஞ்சு மணிக்கு நீங்கள் வருவியளோ வரமாட்டியளோ?"
*நான் வரமுடியாது' வார்த்தைகள் தடிப்பேறின. *அப்போ நான் போகப்போ றன்.' *விருப்பம் போலச்செய்.” சைக்கிளை எடுத்துக் கொண்டு கணேசன் விர்ரெனப் பே ா ய் வி ட் டா ன். பரமேஸ்வரிக்கு மிகவும் ஏமாற்றமாகப் போய்விட்டது. ஏமாற்றம், கணவனின் உதாசீனம், கோபம் எல்லாம் சேர்ந்து ஒருகணம் அவள் உள்ளத்தைக் கலக்கி விட்டன. அப்படியே அவள் கட்டிலில் தொப்பென்று படுத்து விட்டாள்.
★
ஒரு மாதமாகக் கணேசனின் போக்கு ஒன்றும் அவளுக் குப்பிடிக்கவேயில்லை. அவளை முன்போல அவன் வெளியில்: கூட்டிச் செல்வதில்லை,ஒழுங்காக நேரத்தோடு வீட்டிற்கும் வருவதில்லை. தினமும் சுணங்கித்தான் லுருவான். அவள் கேட்டால் வேலை வேலை என்றே கூறினான். காலையில், ஏழுமணிக்குப் புறப்பட்டுப்போய், மத்தியானம் ஓடோடி வந்து ஒருபிடி கொறித்துவிட்டு இரவு களைத்துப்போய் எட்டு, ஒன்பது மணிக்கு வந்தால் அவளுக்கு கோபமா யிராதா..?
*வருட முடிவாம், வேலையாம். இவருக்குத்தான் ஒரு கண்டறியாத வேலை.மற்ற ஆம்பிளைகளெல்லாம் என்ன மாதிரிச் சந்தோஷமாக பெண் சாதி பிள்ளையளோடை இருக்கினம், அயம் வீட்டுக் கமலாவின்ரை அவர் அவள் மீது எவ்வளவு அன்பாயிருக்கிறாராம். எதிர் வீட்டு இரா சேசுவின் புருஷன் கூட அவளைத் தினமும் தான் வெளியே கூட்டிச் செல்கிறாரே. இந்த மனுஷனுக்குத்தான் ஒரு நாளும் விடியாது. சீ! சதா கந்தோரும், வேலையும்.
104 0 நிலவோ நெருப்போ?

இங்கிதம் தெரியாத மனுஷன். புதிசாக இருந்த போது நான் மறுக்க மறுக்க ஒவ்வொருநாளும் கூட்டிக் கொண்டு திரிஞ்சவர்தானே! இப்ப நான் பழசாகிவிட்டனென்று. கசக்குதாக்கும். என்ரை தலைவிதிதான் இந்த மனிசன் எனக்குத் தாலிகட்டிச்சிது’ பரமேஸ்வரியின் உள்ளம். புகைந்து கொண்டிருந்தது,
*இன்று மாலை ஆறுமணிக்கு நகரசபை மண்டபத்தில் நாட்டிய கலா வல்லி நளினாவின் நடனம் நடைபெறும். பரதநாட்டிய பூஷணம் நளினாவின் ஆட்டத்தைப் பார்க் கத் தவறாதீர்கள் " அதோ காரில் ஒலிபெருக்கி பூட்டித் தெருவெல்லாம் விளம்பரப் படுத்திக்கொண்டு போகிறார் கள். .
‘பார்க்கத்தவறாதீர்கள்! பார்க்கத்தவறாதீர்கள் குமாரி நளினாவின் நாட்டியக்கச்சேரி!" ; ’ ” .. :့် ‘ “့် »
ஒலிபெருக்கியின் குரல் பரமேசுவரியின் காதுச்சவ்வுக ளுக்கு ஊடாக நுளைந்து இதயத்து ஆசை நெருப்பை இன்னும் தூண்டிவிட்டது.
* நளினாவின் நடனத்தைப் பாராமல் விடுவதா? நாளைக்கு ராஜேஸ், கமலா முதலியோர் முகத்தில் எப்படி விழிப்பது? அவர்களெல்லாம் பார்க்க நான் மட்டும். பார்க்காமல் விட்டால் என்ன நினைப்பார்கள்?’’
'அவருக்கும் ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும். நான் தனியாகப் போகமாட்டேனென்று எண்ணிக்கொண்டார். அவர் வராவிட்டாலும், இன் னைக்கு நடனம் பார்க்க நான் போய்க்காட்டுகிறன் வரட்டும்.'
பரமேஸ்வரியின் உள்ளம் பழிதீர்த்துக்கொள்ளப் பொருமியது. அதற்கு ஆசை துணை நின்றது.
★
பரமேஸ்வரி முகத்தைக் கழுவிக் கொண்டு கண்ணா டிக்கு முன்னால் நின்றாள். வெகுவேகமாகத் தலையை வாரிக்கொண்டாள். மேசையில் முடிமயிரும் பவுடரும். சாந்தும் கிடந்தன. நீண்ட மயிரைவாரி வகிடுகிழித்
நா. சோமகாந்தன் () 105.

Page 55
தாள். இன்னும் அரைமணி நேரத்தில் நாட்டியம் ஆரம்ப மாகிவிடும். அதற்குள் அங்கு போய்விட வேண்டும். ஒரு கணம் மயிரைக் கையிலேந்தியபடி யோசித்தாள். இரட் டைப் பின்னலா? அஜந்தாக் கொண்டையா? * பரமேஸ்! அஜந்தாக் கொண்டை உனக்கு எவ்வளவு அழகு! ரதி மாதிரி இருக்குமே.”* **உஹlம். போங்க.." *இல்லை அஜந்தாக் கோண்டையே போட்டுக்கொள் குஞ்சு...'
அவள் பிகு பண்ணிக்கொண்டே கொண்டை போட அவன் உதவி செய்வது வழக்கம்
"அவருக்குப் பாடம் படிப்பிக்க வேணும் தனியாகத் தானே போகப்போறன் கொண்டை வேண்டாம் இரட் டைப் பின்னல்தான் போடுவது." கைகள் வேகமாகப் பின் னல் போடுகின்றன. பின்னலைப் பின்பிறமாகத் தூக்கிப் போட்டுவிட்டு, பவுடரைக் கையில் கெட்டி முகத்தைக் கண்ணாடியில் பார்க்கிறாள். ஊம் நேரமாகிறது. நடனம் ஆரம்பிக்கப் போகிறதே!
பெட்டியைத் திறந்து சேலையைத் தேடினாள். காஞ்சி புரம் சிவப்பு சில்க்கையும் மஞ்சள் சோளியையுமா? நைலான் பச்சையையா? மஞ்சள் மணிப்புரியையா?
அவள் பாவாடையைக் களைந்துவிட்டு வேறு பிறேசியர் அணிந்து கொள்வதற்கிடையில் வயிற்றிலும் மார்பின் சதைப் பிடிப்பிலுமாக *ச்ச்.ச்ச்."
"இஞ்சை விடுங்கோவன் நேரம் போட்டுதல்லே அவள் விகுபண்ணி உதறித்கொள்வாள்.
சோளியையும் பச்சைச் சேலையையும் எடுத்துக் கொடுத்து ‘இதைத்தான் உடுத்திக்கொள் ரொம்ப அழ காக வானத்து வண்ணத் தேவதை போல ஒயிலாக எடுப் பாக இருக்கும்" என்று கணேசன் சொல்வான்.
*அவர்தான் வரமாட்டேனென்று சொல்லிவிட்டாரே வரட்டும் பாடம் படிப்பிக்கிறேன். பச்சையை உடுப்பதில்லை கிவப்பைத்தான் உடுப்பது."
106 () நிலவோ நெருப்போ?

சிவப்புச் சேலையைச் சுற்றிக் கொள்கிறாள் நிலைக் கண்ணாடிக்கு முன்னால் வந்து நின்றாள். இனிச் சுணங்கக் "கூடாது இதோ! நேரமாகி விட்டதே. பென்சிலை எடுத்துப் புருவத்தைத் தீட்டினாள், சாந்தை எடுத்து நெற்றியிலிட்டுக் கொண்டாள்.
"ஆகா! என் குஞ்சு என்ன அழகு! கடித்துத் தின்ன வேண்டும் போல கொள்ளை அழகு!.ச்ச்.ச்"
"ஐயோ! விடுங்களேன்.நோகுது செல்லமாகச் சிணுங் கிக் கன்னத்தை விடுவித்துக் கொள்வது வழக்கம்.
அவன் முல்லை மாலையை எடுத்து லேசாக ஒயிலாக அவள் கொண்டையில் சொருகி அழகு பார்ப்பான்.
*அவர் தான் இல்லையே, வரமாட்டேன் என்று சீறிக் கொண்டு போனவராச்சே, வரட்டும் தனியாகப் போய்க் காட்டுகிறேன்.”*
*பிளாஸ்டிக் கொண்டைப் பூவைச் செருகிக்கொண்டு “புறப்பட்டு விட்டாள். உம் கெதியாக-நேரமாகி விட்டது!
வீட்டை விட்டு அவள் புறப்படும் போது கால்கள் கொஞ்சம் தளர்ந்தன. முன்பு செய்யாத ஒன்றை முதன் முறை செய்யும் பயம், அவருக்குப் பாடம் படிப்பிக்க வேண்டும். நடனம் பார்க்க வேண்டும்-பயப்பட்டால் முடியுமா? நேரமாகி விட்டதே ஒடு.
அப்பாடா! நல்ல காலம் இன்னும் நடனம் ஆரம்ப
மாகவில்லை. பரமேஸ்வரி இரண்டாம் வரிசையில் இடம் பிடித்து உட்கார்ந்து விட்டாள். நாற்புறமும் கண்களைச் சுழற்றிப் பார்த்தாள். ஆ! அதோ முதல் வரிசையின் இடதுபுற ஓரத்தில் ராஜேசும் கணவனுமாக இருக்கிறார் கள், கமலா எங்கே? வரவில்லையா? முதல் வரிசை ஆசனங் கள் அத்தனையும் நிரம்பி விட்டன ஆணும் பெண்ணுமாக, கணவனும் மனைவியுமாக.சோடி சோடியாக! அவர்கள்
நா. சோமகாந்தன் () 107

Page 56
முகங்களில் தான் எத்தனை மகிழ்ச்சி! அந்த இரட்டைப் பின்னல்காரி என்ன மாதிரி அவரோடு ஒட்டிக் கொண்டு நெரித்தபடி இருக்கிறாள்!. கமலா வரவில்லைப் போலை! பரமேசின் கண்கள் நாற்புறமும் துளாவுகின்றன. ஒ! கமலா இப்பதானே வாறா! கணவனோடு கை கோத்தபடி என்ன மிடுக்காக வாறாள், கமலாவின் கண்களும் பரமேசின் கண்களும் சந்திக்கின்றன. இவள் சிரிக்கிறாள். அவள் பரமேசுவுக்கு அருகிலிருந்த ஆசனத்தைப் பார்க்கிறாள். அது வெறுமை! அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு கணவரோடு போய் விடுகிறாள்.
மண் அடித்து விட்டது. வெளிச்சம் அணைந்து விட் டது. நடனம் தொடங்கி விட்டது. பரமேஸ்வரிக்கு அருகி லிருந்த ஆசனமும் நிரம்புகிறது.
குமாரி நளினா பிரமாதமாக அபிநயம் பிடித்து ஆடு கிறாள். பரமேஸ்வரியின் உள்ளத்தில் அமைதியில்லை. 'திக் திக்’ என அடித்துக் கொள்கிறது. கோபிகிருஷ்ணா லீலை. யைப் பதம் பிடித்து அருமையாக நடனம் செய்கிறாள் நளினா முன் வரிசையிலிருந்தவர்கள் ஜோடியாக இணைந்து ஐக்கியப்பட்டு ஒன்றாகி ஆனந்தத்தில் ஆழ்ந்து கிடக்கிறார் கள்! هیر
*ம்ஹ"ம். சூடான பெருமூச்சு பரமேஸ்வரியின் மூக்குத் துவாரத்தைப் பிட்டுக் கொண்டு வெளியேறு கிறது.
அவளும் அனுபவிக்க அவரும் கூட வரவில்லையே! பரமேஸ்வரியின் கண்கள் மேடையை வெறிச்சிட்டுப் பார்த்த வண்ணம் இருக்கின்றன. அவள் தோளின் புற மாக நுழைந்த கரமொன்று அவள் கன்னத்தைத் தடவி யது. அவள் திரும்புவதற்கிடையில் அவள் கன்னத்தில். சீ. கா., !
ဒီ့#ဓါ# கண்ணகியாகி விட்டாள் ! கண்கள் சிவந்தன. உடம்பு பதறியது!--இரண்டு கால்கள் அந்த இருட்டைக் கிழிக் துக் கொண்டு-நடனம் ஆரம்பமாகிப் பதினைந்து நிமிடத்துக்குள் மண்டப வாசலை நோக்கி விரைந்தன.
108 () நிலவோ நெருப்போ?

உடுப்பைக் கூடக் கழற்றவில்லை. பரமேஸ்வரி படுக்கை யில் கிடந்து விக்கி விக்கி அழுதாள். செய்யக் கூடாத தைத் தான் செய்து விட்டதாகப் பயந்து உள்ளம் வெந்து துடித்தது. அவர் முகத்தில் இனி எப்படி விழிப் பது? தலையணை நனைந்து ஈரமாகியது.
L–6...... L-5. . . . . . யாரோ கதவில் தட்டும் ஒலி. அவராகத் தான் இருக்கும். "ஐயோ எப்படி விழிப் பது? என்ன சொல்லுவது? உடம்பெல்லாம் நடுங்கியது. இதயம் வெடித்து விடும் போல் இருந்தது.
டக்.டக்...மீண்டும் ஒலி
பரமேஸ்" - அவரே தான் ! ஐயோ! என்று கத்த வேண்டும் போல் இருந்தது. வார்த்தைகள் தொண்டைக்கு வெளியே வராதாமே! வாய் திறக்க முடியவில்லையே!
கைகால்களை உதறிக் கொண்டு அவள் எழுந்தாள். அறை எங்கும் லேசான சூரிய வெளிச்சம் இன்னும் இருந்தது.
அவள் வீட்டில் அணிந்திருந்த உடையுடன் தான் இன்னும் இருந்தாள்.
• • • • • • 5قبل مسL • • • هم - ق ----L--5 . . . . . . L கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டு ஒடோடி வந்து கதவுகளைத் திறந்தாள். அங்கே கணேசன்தான் நின்றான். *ஏன் குஞ்சு நடனத்திற்குப் போக இன்னும் தயா ராகவில்லை? நீ சொன்னபடி நான் நேரத்திற்கு ஓடி வந்து விட்டேனே. இதோ! இந்த மாத ஓவர்டைம்" அவள் கையில் செக் ஒன்றைத் திணித்தான்.
*அத்தான்! உங்களை விட்டுட்டு நான் ஒரு நாளும் போக மாட்டேன்." அவன் உடலைக் கட்டிக் கொண்டு - பரமேஸ்வரி உணர்ச்சி வசப்பட்டுக் கூறினான்.
(அமுதம்-1961)
O
நா. சோமகாந்தன் () 109

Page 57
குளத்தங்கரை அரசமரம்
அப்பாடா என்ன வெயில், என்ன அகோரம். இந் தச் சூரியனுக்குக் கொஞ்சமாவது இதயமிருக்க வேண் டாம்? அட மற்றவர்களுக்காகவாவது வேண்டாம்; தனது காதலிக்காகவாவது கொஞ்சம் இரக்கங் காட்டக் கூடாதா? இதோ! அவள் தாமரை என்ன மாதிரித் கருகிச் சுருண்டு போய். சிவந்த மேனியின் மெருகெல்லாம் கலைந்து. அவளைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. ஊம்! உந் தச் சூடு என்னை என்ன செய்து விடுமாம். எத்தனை கோடைகளைக் கண்டு விட்டேன்- எவ்வளவு சோனாமாரி களைத் தாங்கி விட்டேன்! என் கிளைகளைப் பாருங்கள், ம்.ஒரு காலத்தில் என்ன கம்பீரமாக நீட்டி நிமிர்ந்து இருந்தவை. உடல் நரம்பு தளரத் தளர வளைந்து போய் விட்டன. உடம்பிலும் திரைபடரத் தொடங்கிவிட்டது இளமையில் பூமியைக் கிழித்துக் கொண்டு ஊன்றிய கால் மட்டும் ஆழமாக இருந்திருக்காவிட்டால் பெரும் புயற். காற்றுகளுக்கெல்லாம் நான் தலையை நிலத்தில் போட்டு மோதிக்கொள்ளத்தான் வேண்டும். இந்தப் பரந்த வயல். வெளியில் நட்ட நடுவாகச் சடையை விரித்துக் கொண்டு,
110 0 நிலவோ நெருப்போ?

நான் நிற்பது காட்டுக்குள் இருந்து கடுந்தவம் இயற்றுகிற, யோகியைப் போல உங்களுக்குப் படுமாக்கும். சீச்சி! அப் படி நான் சுயநலக்காரணல்ல, மக்கள் கூட்டத்திலிருந்து ஒதுங்கிப் போயிருக்க. கோடைக் காலத்தில் என்ன மாதிரி ஆசையோடு ஆதரவு தேடி எனக்குக் கீழ் மக்கள் வந்து: ஒதுங்கிக் கொள்கிறார்கள். எனக்கு உள்ளூறஒரேபெருமை தான், எனக்கு வயது போய்க்கொண்டிருப்பதையும் மறந்து விடுகிறேன்.
என் காலடியில் குளம்; அதனுள்ளிருக்கும் நீர் எந்: நேரமும் என் பாதங்களை வருடிக்கொண்டேயிருக்கும். இந்தக் குளத்துக்குள்ளிருக்கும் தாமரை சாலையில்பூத்திருக் கும்போது எத்தனை ஜோராயிருக்கும்! பெண்களும் குழந் தைகளுமாக வந்து குளிக்கும் போது ஒரே கலகலப்பாயிருக் கும். அதோ, டாண் டாண் என்று மணிச் சத்தம் கேட் கிறதே - அந்த முருகமூர்த்தி கோயிற் குருக்கள் காலையி லும் மாலையிலும் இந்தக் குளத்துள் தாண்டு எழும்பித் தான் போவார். மத்தியானத்தில் மாட்டுக்கார பையன் கள்; இறால் விற்கிற கிழவி, இன்னும் எத்தனையோ பேர் வருவார்கள்; போவார்கள். பின்னேரத்தில் பாடசாலைப் பையன்கள் வந்து அடிக்கிற கலாட்டா இருக்கே, அப்பப்பா! பொதுவாக இந்த ஊர் மக்களுக்கு நான் “கோடைக் கானல் போல!
எனக்கு இன்னுமொரு வகையில் பெருமையுண்டு, இந்த ஊரில் நடைபெறுகிற காதல்கள், கலியாணங்கள், கச் சேரிகள், இழவுகள், களவுகள், பிறப்புக்கள், அத்தனையும் ஒரு நிகழ்ச்சி கூடத் தவறாமல் தெரிந்து விடும்! ஆமாம் காலையில் குளிக்க வருகிற பெண்கள்தான் கதைத்துக் கொள்வார்களே! அதனால் இந்த ஊரில் நான் ஒரு முக்கிய பிரமுகர் போல!
சுயப் பெருமையை எண்ணி உள்ளுற மகிழ்ந்துகொண் டிருப்பதால், யார் கீழே வந்திருக்கிறார்களெனக் கவனிக்க மறந்து விட்டேனே
நா. சோமகாந்தன் () 111

Page 58
*ஓகோ வாத்தியாரவையா?* **பொழுது சரிந்து விட்டதா? நான் கவனிக்கவேயில்லை" "வீட்டுக்கும் பாடசாலைக்கும் பாதி வழியில் நான் இருப்ப தால், பள்ளிக்கூட நாட்களில் இந்த இரண்டு வாத்திமாரும் பாடசாலை விட்டபின் எனக்கடியில் வந்திருந்து இலக்கிய அரட்டை அடிப்பதுதான் வழக்கமாச்சே. அவர்கள் கொஞ் சக் காலமாத்தான் பண்டிதப் பேச்சுக்களிலும், பழம் இலக்கியங்களிலுமிருந்து விடுபட்டு வந்து நவீன படைப் புக்களையும் இலக்கியமாக ஒப்புக்கொண்டு அது பற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்! அவர்கள் பேசட்டும்.
**குளத்தங்கரை அரசமரம் எத்தனை அழகாயிருக்கு”* இரத்தினம் வாத்தியார் கூறினார். எனக்கு உச்சி குளிர் கிறதே. சே! இப்படியெல்லாம் நான் உணர்ச்சிவசமாகப் படாது மனிதர்களைப் போல; தப்பு.
**அவளின் கைம்மையை-இதயத்துணர்ச்சிகளை உருக் கமாக எழுதியிருக்கிறார்தான்,'-ஆறுமுக வாத்தியார் நாடியைத் தடவியபடி சொன்னார்.
ஆறுமுக வாத்தியார் என்ன தொடர்பில்லாமல் பேசு கிறாரே! இந்த வெய்யிலுக்கு மூளை கலுங்கி விட்டதோ!
**முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதின கதை என் றாலும் வ.வே.சு. ஐயர் “குளத்தங்கரை அரசமரம்" சிறுகதையை அமரசிருட்டி ஆக்கிவிட்டாரே! “ இரத்தினம் வாத்தியார் சொன்னது எனக்கு ஏமாற்றமாயிருந்தது. ஒகோ! அது கதையா? நீங்கள் பேசுவது இலக்சிய அரட்டை தானோ?
'இலக்கியத்தில் அதை அமரசிருட்டி என ஏற்றிப் புகழ முடியாது, ஆனாலும் கல்யாணி பாத்திரம் அருமை யாகக் காட்டப்பட்டுள்ளது" மற்ற வாத்தியார் செய்த விமர்சனம் இது.
எனக்கு ஒன்றும் புரியவில்லை அவர்கள் பேச்சு. நான் என்ன மனிதனா புத்தகம் படிக்க? சோற்றுக்காக
:1120 நிலவோ நெருப்போ?

இலக்கியம், சுவைக்க இலக்கியம்; இலக்கியத்துக்காக இலக்கியம், வாழ்வுக்காக இலக்கியம் என வரிந்து கட்டிக் கொண்டு சண்டைபோட எனக்கு ஏது வசதிகள்? எனக்கு என் கவலைகள், கல்யாணி என்றதும் உள்ளம் துணுக் குற்றது. ஆம்; அவள் நாலைந்து நாட்களாக ஒரு மாதிரி தான். வெறிச்சென்று திகில் பிடித்து திகைத்துப் போயிருக் கிறாளே, அவளுக்கென்ன?.
அவள் வழக்கம் போல நேரத்துக்கு வருவதில்லையே? தனியாக வந்து தனியாகப் போய்விடுகிறாளே, வாடிய மலராக! ஏன்? ஐயோ என் கல்யாணிக் குஞ்சுக்கு என்ன நேர்ந்து விட்டது?
+
யார் யார் கவலையோடு களைத்துப்போய் வந்தாலும் என்னடியில் வந்தவுடன் ஆறுதல் பெற்றுவிடுகிறார்கள். அரு கிலிருக்கும் குளிர்ந்த ஜலத்தில் மூழ்கி, எனது நிழலில் ஆறி, காற்றுப்பட அவர்கள் நிறைந்த மனத்துடன் திரும்புவது வழக்கம். இவள் என்ன, இந்தக் கல்யாணிக்குஞ்சு சிலநாட்க ளாக ஒரே வாட்டமாயிருக்கிறாள்? அப்படி என்னதுயரோ? இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் தானே திருமணம் செய்து கொண்டாள்? பூரித்துத் துடிப்பாகக் கலகலவென்று துள்ளித் திரிந்தவளுக்கு திடீரென என்ன வந்து விட்டது? ஐயோ! கல்யாணிக் குஞ்சுக்கு எனக்குத் தெரியாமல் அப்படி என்ன கஷ்டம்? அத்தனை இரக்சியமாக?.
கல்யாணி சின்னப் பிள்ளையாகப் பாவாடை சட்டை போட்டுக் கொண்டு தாயோடு வந்து குளித்துவிட்டுப் போனது, நேற்று நடந்தது போல நல்ல ஞாபகமாக இருக் கிறது எனக்கு. மற்றப் பிள்ளைகளைப் போலத் துள்ளி விழுந்து தாய்மாருடைய கைகளால் முதுகில் வாங்ஓ வீரிட்டுக் கத்தாமல், குழப்படியில்லாத நல்ல சிறுமியாக அடக்கமாக வந்து அவள் குளித்துளிட்டுப் போவாள், *அச்சாக் குஞ்சு கல்யாணி" என அப்போதே எண்ணித் கொண்டேன். அவளுடைய அடக்கமான சுபாவமும், மருண்ட சிறு விழிகளும், பால் நிலவான எழில் குமிழும்
நா. சோமகாந்தன் () 113 நி-8 •

Page 59
முகமும் எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. அவ: ளைத் தினமும் பார்த்தால்தான் என் மனதிற்கு ஆறுதலாக, இருக்கும்.
ஒரு நாள் அவள் வரவில்லை. நான் வெலவெலத்துப் போய் ஆடாமல் அசையாமல் பிரமைப் பிடித்துப்போனேன் பாவம் சிறுமிக்குச் சுகமில்லையா? படுக்கையிலா என எண்ணித்துடித்துக் கொண்டிருந்தேன். நாலைந்து நாட்கள் தொடர்பாக அவள் வரவில்லை.பதறினேன்.
குளத்திற்குக் குளிக்க வந்த பெண்கள் கதைத்ததைக் கேட்டவுடன் எனக்கு ஒரே ஆனந்தமாக இருந்தது.
‘இஞ்சரெணை, தங்கம்மா! பார்வதியினரை மேள்பக்கு வப்பட்டு விட்டாளாம்" ஈரச் சேலையை கல்லில் தப்பிய படி பாக்கியம் மற்றவளுக்குச் சொன்னாள்.
கல்யாணி குஞ்சு! நீ பெரிய பெண்ணாகி விட்டாயா? சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவள் வந்தாள்.முத. வில் நான் அவளை மட்டுப்பிடுக்க முடியாமல் போய்விட் டது. பாவாடை சட்டையோடு பரட்டைத் தலையுடன் தாயின் சேலையைப் பிடித்துக் கொண்டு வந்தவள் திடீ ரென்று மெல்லிய சிவப்புச் சேலையை உடுத்திக் கொண்டு உடம்பு எலுமிச்சம் பழமாக மீனுமினுக்க பின்னலும் போட்டுக் கொண்டு நாணம் கன்னத்தில் கொப்பழிக்க வளர்ச்சியடைந்த ஒய்யாரமான தேகக்கட்டோடு அவள் வந்தபோது என்னால் மட்டிட முடியவில்லை. அவள் பெரிய பெண்ணாகி விட்டாலும் அந்தப்பால் முகமும் மருண்ட விழிகளும் அப்படியே இருந்தன.
தன்னோடு ஒத்த கன்னிப் பெண்கள் சிலரோடு அவள் அதிகாலையில் வந்து குளித்து விட்டுப் போய்விடுவாள். அந்தக் கன்னிகள் காலையில் கூட்டமாக வந்து தமா ஷா கக் குளத்திலிறங்கிவிட்டாலும், கல்யாணிக் குஞ்சை அடை ாம் கண்டுபிடிக்க எனக்குக் கஷ்டமாயிராது. எல் லாப் பெண்களும் கழுத்துவரை தண்ணிருள் இறங்கிவிடு வார்கள், கல்யாணியும் தான்! அதோ, மலர்ந்து சிவந்து:
114 ஐ நிலவோ நெருப்போ?

கிடக்கிறதே தாமரை.அதுக்கு ஒப்பாகக் கல்யாணி மட்டுமே இருப்பாள்! அதனால் அன்றன்றோடு மலரும் தாமரைப் பூக்களின் தொகையோடு ஒன்றையும் கூடச் சேர்த்து எண்ணிக் கொள்வேன்!
தினமும் விடிந்தால் சிவந்து விரிந்து கொண்டிருக்கும் தாமரை மலர்களையும் கல்யாணியையும் பார்க்காவிட்டால் எனக்கு அந்தரமாகவே இருக்கும். விடிந்தது போலவே இராது.
கல்யாணியும் தோழிகளும் தண்ணிரை எற்றி அடித்து விளையாடினார்கள். குளத்துள் ஒரே கலகலப்பு சுட்டிப் பெண் கல்யாணி. 'இதோ பார்’ என்று சொல்லிவிட்டு நெஞ்சுக்கச்சையை இறுக்கிக் கட்டிக்கொண்டு கால்களை நீட்டிக் கைகளை அடித்துக் குளத்துள் தாமரை மலர்கள் படர்ந்திருக்கும் பக்கமாக நீந்தினாள்.
மற்றப் பெண்கள் எல்லோருக்குமே நீந்தத் தெரியும் கல்யாணி சிவந்த மலர்களைப் பறித்து முகத்தோடு அணைத்துப் பிடித்தபடி நீந்தி வந்தாள்.
“பூவைப் பறித்து விட்டாயே, பாவம் கிடைக்குமடி”* ஒரு தோழி சொன்னாள்.
“எனக்கு ஆசையாக இருந்தது. கொண்டைக்கு வைக்க வேண்டும்' மலர்களைத் தடவியபடி கரையில் நின்று கொண்டே கல்யாணி சொன்னாள்!
**கொடியிலிருந்து மலரைப் பறிக்கலாமோ? வாடி விடாதோ'
*வாடுவது இயற்கை. அது அது இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் தான் சிறப்பு. கொடியிலிருந்தாலும் அது வாடித்தானே விடும் பயனற்றதாக" கல்யாணி Gert Gör6ortør.
மற்றவள் வாயடைத்துப் போய் விட்டாள். *அடி சமர்த்துப் பெண்ணே உனக்கு நல்ல கணவன் தான் கிடைக்கவேண்டும்!" எனதுஅடிமணம் ஆனந்தத்தால் வாழ்த்திற்று.
நா. சோமகாந்தன் 0 115

Page 60
கல்யாணிக்குக் கல்யாணமும் வந்தது: அடி சக்கை எனக்கு ஒரே புழுகம். மகிழ்ச்சி! அவள் மனம் போல மாப்பிள்ளை கிடைத்து விட்டாராம்! அவளுடன் கல்லூ ரியில் படித்தஒருவரையே அவள் பெற்றோரின் ஒப்புதலுடன் மணந்து கொண்டாள். திருமணத்திற்கு முன்பு கல்யாணி ஒரே குதிப்பும் துள்ளலுமாக மகிழ்ச்சி ததும்பக் குளித்து விட்டு ஓடி விட்டாள். க ல் யா னிக் குஞ்சு! உன் கலியாணத்தை நான் வந்து நடத்த முடியவில்லை. அதோ அந்தத் திசையாக அவள் வீட்டிலிருந்து கெட்டிமேளச் சத்தம் வந்த போது நான் உ ஸ் ள ம் சிலிர்த்து, ஆனந்தமடைந்து, பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வேண்டுமெனப் பிரார்த்தித்துக் கொண்டேன்.
அவள் புருஷனுக்கு வெளியூரில் தொழிலாம். அதனால் அவளையும் தன்னோடு கூட்டிச் செல்லவில்லை. மாதத்தில் ஐந்தாறு நாட்கள் வந்து தங்கிப் போவான் மனநிறை வாகவே கல்யாணி இருந்தாள் கல்யாணத்துக்குப் பிறகும் அவள் இங்கு வந்து போய்க் கொண்டிருந்தாளோ? இப்போது திடீரென்று என்ன குறை அவளுக்கு? கல்யாணிக் குஞ்சு, ஏனம்மா வருந்துகிறாய்? தினமும் பார்த்துப் பழகிய பாசம், வாடிய உன்னைக்கான எல். மனதையும் வாட்டு கிறதே!
கல்யாணிக்கு ஒரு குறையுமில்லை. ஆனால் அவள் களிப்பாக இல்லையே ஏன்?.
நேற்றுக் குளிக்க வந்த போது பார்த்தேன்; முதல் நாளும் பார்த்தேன். தயங்கித் தயங்கித்தான் நீருள் நின்றாள். எதையெதையோ எண்ணி ஏங்கினாள் கரைக்கு வந்து உடை உடுத்தும் போது. அடடே! இப்போது தான் ஞாபகம் வருகிறது, அவள் கைகளால் நாற்புறமும் பார்த்து விட்டு, வயிற்றைத் தடவிக் கொண்டாளே.பாவம்; வயிற்றில் ஏதாவது வலியோ?
முன் பெல்லாம் தினமும் கலகலப்பாக வருவாளேதினமும் அல்ல. மாசத்தில் மூன்று நான்கு நாட்கள் வர
116 0 நிலவோ நெருப்போ?

மாட்டாள். ஒகோ!. நல்ல ஞாபகம். சென்ற இரு மாசங்களும் தினசரி தவறாமல் வந்து குளித்திருக்கி நாளே!. கல்யாணி! அப்படியா சங்கதி!.
நேற்றுக் காலையில் கூடக் குளிக்க வந்த பெண்கள் உன்னைப் பற்றி ஏதோ குசு குசு வென்று கதைத்துக் கொண்டார்களே!
புரிகிறது காரணம்; அடி, சின்னப் பெண்ணே! இதற் காக மகிழ்ச்சி கொள்ள வேண்டியதற்கு மனத்துயரா?
என்னால் தாங்க முடியவில்லை; பசி கூட எடுக்கவில்லை. ஏதோ குறை மனதை அரித்துக் கொள்கிறதே! இன்றோடு எட்டு நாட்களாகி விட்டன. இந்தப் பக்கம் கல்யாணி யைக் காணவேயில்லையே! ஐயோ அவளுக்கு என்ன நேர்ந்' தது? இங்கு குளிக்க வருபவர்கள் கூட ஒன்றும் சொல்ல வில்லையே! கல்யாணி! நீ உன் புருஷனோடு வேறுாருக்குச் சென்று விட்டாயா?. ஆ! அதோ கல்யாணி வருகி றாள். கூட பக்கத்தில் யாரோ. இல்லை, அது அவளு டைய புருஷன்தான்! இன்று இருவருமாக வருகிறார் களே! அச்சா! கொஞ்சம் இளைத்துப் போய் மெலிந்து அவள் இருக்கிறாளே- பரவாயில்லை. பழையபடி மகிழ்வா னவளாக மாறி விட்டாள். இப்போது தான் எனக்கு ஆறுதலாயிருக்கு, அப்பா!
அவர்கள் குளத்துக்குள் இறங்குகிறார்கள் குளிப்பதற்கு. இப்படி அன்பாக இணைபிரியாமல் இருந்தால் பார்ப்ப தற்கு எத்தனை இன்பமாயிருக்கிறது!
*நீங்கள் சமயத்துக்கு வந்து. டொக்டரிடம் காட்டி நடவடிக்கை எடுத்திருக்கா விட்டால். நினைக்கப் பயமா யிருக்கு.
* கல்யாணிக் குஞ்சுக்குப் பயமாயிருக்குமே எனக்குத் தெரியாதா?"
நா. சோமகாந்தன் 0 117

Page 61
“கடவுளே! இன்னும் இரண்டு வருடங்களுக்காவது நாம் இப்படியே மகிழ்வாக இருக்க வேண்டும்.”
*அதற்குப் பிறகு அழகான ஆண் பிள்ளையாய் பெற் றெடுத்து விடுவாள் கல்யாணி' அவன் அவள் கன்னத்தில் தட்டினான்!
அவள் தண்ணிரை அள்ளி எற்றினாள்.
அவனும் திருப்பி எற்றினான்.
ஒரே கலகலப்பு: களிப்பு குதி கொண்டது!
பாவம்; அந்த இளசுகளின் பேச்சிலும் செயலிலும் தவறிருப்பதாக எனக்குப் படவில்லை. இளமை இன்ப அநுபவங்களை பூரணமாய் அநுபவித்த பின். அடுத்த சந் ததியை உருவாக்குவது பற்றி ஆறுதலாக யோசிக்கட்டுமே!
அதோ!
*டாண். டாண்...!"* முருக மூர்த்தி கோவில் மணி ஓசை கேட்கிறது.
**ஆண்டவா! அந்த இளசுகள் விரும்புவது போலவே நிறைவேறச் செய்" என் முதிர்ந்த ஆள்ளம் வேண்டிக் கொள்கிறது.
(கலைச்செல்வி-1961)
OOC
1180 நிலவோ நெருப்போ?

பவளக்கொடி
மின் விசிறிகள் வெறி கொண்டு சுழல்கின்றன.
மண்டடத்தில் இருள் கவிகிறது-மேடையில் பூங்காக் காட்சி.
பவளக்கொடி சேடியுடன் ஒயிலான நடை நடந்து ஒய்யாரமாகத் தோன்றுகிறாள். நடையை வெட்டி இர சிக மகாஜனங்களை நோக்கித் திரும்பி, நயமாக இரு கரங்களையும் தூக்கி, குவித்து அவள் கும்பிடுகிறாள்.
கையொலிகள் மண்டபத்தை அதிரச் செய்கின்றன.
வாய்வழி இசை பிறக்க, கைவழி நயனஞ் செல்லப் பவளக்கொடி நடனஞ் செய்கிறாள். ஆடுகிறாள்! ஆடி முடிந்து அவள் சிரத்தைத் தாழ்த்தும் போது மண்டபத் தின் முன் வரிசையிலிருந்து வந்த *சபாஷ்’’, ‘அற்புதம்!" என்ற பாராட்டுகளும், பின்வரிசையிலிருந்து வந்த சீழ்க் கையொலிகளும், அவள் இதயத்தை நிறைத்துப் பெரு மிதமூட்டுகின்றன.
மகிழ்ச்சி கன்னத்தில் குமிழ்விட அவள் மந்தகாசத் துடன் முறுவலிக்கிறாள்.
女
நா. சோமகாந்தன் () 119

Page 62
**கணகம்! உன் வேஷப் பொருத்தம் எடுப்பாக இருக்கு, மேடையில் வெளுத்துக் கட்டி விடு. இந்த முடியையும் தலையில் சூட்டி விட்டால் நீ கணகமல்ல-நிசமான பவளக்கொடியே தான்' மேக்கப்காரரின் குரல் அவளின் நினைவுத் திரையை அகற்றியது. ஒரு கணம் அவள் திடுக்குற்று விட்டாள்! அத்தனையும் நினைவு; இனி மேல் தான் அவள் மேடையில் தோன்ற வேண்டும்!
சுற்றுமுற்றும் மேக்கப் சாமான்கள், பவுடர், புடவை கள், பூச்சுகள் முதலியன பரவிக் கிடந்தன அவளுக். கெதிரே கண்ணாடி.
பவளக்கொடி நாடகத்தில், கனகராணி பவளக்கொடி யாக நடிக்கப் போகிறாள். நாடகத்தின் முதற் காட்சியில் அவள் தோன்ற வேண்டும். அந்தக் காட்சியில் தோன்று வதற்காக மேக்கப்காரரிடம் சிங்காரிப்பதற்குத் தன்னை ஒப்படைத்துவிட்டு, கண்ணாடி முன்பு நெடுநேரம் தான் உட்கார்ந்து இருப்பதையும், நாடகத்தில் நடிக்கப் போகிற காட்சிகளையும், கிடைக்கப் போகிற பாராட்டுகளையும் எண்ணித் தன்னை மறந்து-நினைவில் இலயித்துப் போய் விட்டதை அறிந்த பொழுது அவளுக்கு நாணமாக - ஆனா லும் இனிமையாக இருந்தது.
இளமையிலிருந்தே கலையார்விங் கொண்டிருந்த கனக ராணி அன்று தான் முதல் தடவையாக மேடையில் தோன்றுகிறாள்-அதுவும் கதாநாயகியாக!-அவள் வேஷப் பொருத்தமும் நடிப்பும் இணைந்து அந்த நாடகத்தில் புகழ்க்கொடி நாட்டி விட்டாள் என்றால், நாடக உலகின் எதிர்காலம் முழுவதற்கும் அவள் தான் இராணி! அவளின் எதிர்கால வெற்றி தோல்வி அந்த நாடகத்தில் அன்றைய நடிப்பில் தங்கியிருந்தது. கனகராணி முதல் தடவையாக நடிக்கிறாள் என்பதற்காக அக்கறையோடு நாடகத்திற்கு, வந்திருக்கும் அவளின் தாய் அவாவோடு வந்துள்ள அயலவர்கள், ஆசையோடு வந்திருக்கும் இளமட்டங்கள் எல்லோரிடமும் அன்றைய நடிப்பு மூலம் அவள் பாராட்டுப் பெற வேண்டுமே!
120 () நிலவோ நெருப்போ!

எதிரேயிருந்த கண்ணாடியில் தன் உருவத்தை ஒரு. முறை பார்த்துக் கொண்டாள். அவளால் நம்ப முடிய வில்லை. அவ்வளவு அழகு? இலாவண்யம்!-மேடையில் தன் "உடல் தோற்றம் யாவரையும் கவர்ந்து விடுமென்ற அசைக்க முடியாத தன்னம்பிக்கை அவளுக்குப் பிறந்தது.
நினைவில் இதுவரை ஒடிய காட்சிகளை நிதர்சனமாக்கி விட வேண்டுமென்ற துடிப்பு கனகராணிக்கு அந்த நாடகத்தில் தான் தோன்றி, பேசி, நடிக்க வேண்டிய பாகத்தை ஞாபகப் படுத்திக் கொள்வதற்கு மனத்தைத் தூண்டினாள். மேக்கப்காரரின் இசைவுக்குத் தன்னை ஒப் படைத்துவிட்டு அவள் உட்கார்ந்திருந்தாள். அவள் இதயம் ஆவலுடன் நர்த்தனமிட்டுக் கொண்டிருந்தது
'மேக்கப்' காரர் தனது கைவண்ணம் அத்தனையை யும் காட்டி விடுவதற்காக அவளைச் சரித்து, நிமிர்த்தி உட்கார வைத்து, ஆடைகளைச் சரி செய்து, முகத்தை உரஞ்சிப் பூசி, அரிதாரமிட்டு, புருவத்தைக் கீறி அஞ்சன மிட்டு அலங்காரத்தை ஒரளவு முடித்துக் கொண்டார்.
திலகத்தை நெற்றியிலிட்டுவிட்டு அவளின் முகத்தைத் தூக்கி கண்ணாடியில் காட்டியபோது
அவள் தனது அழகுக்கு ஊர்வசி கூட நிகராக மாட் டாள் எனக் கருதிக் கொண்டாள். அவளில் அவள் சொக்கி விட்டாள். அவள் கன்னத்தில் இளமுறுவல் ஒன்று நடன மிட்டது.
女 முடியை அவளின் தலையில் பொருத்திக் கொண்டிருந்த, மேக்கப்காரரின் கை திடீரெனத் தளர்ந்தது! அவள் அதை. உணர்ந்தாள். ஏன்? ஏன் இந்தத் திடீர் மாறுதல்? மண்ட பத்துள் சிறிது கூச்சல். கூச்சலை அமுக்கிக் கொண்டு **மைக் "கின் குரல் கரகரக்கிறது; அவள் மற்றப் புலன் களை ஒடுக்கிக் காதுகளைத் தீட்டிக் கொண்டாள்.
‘இரசிக மகாஜனங்களுக்குத் தாழ்மையான அறிவிப்பு .பவளக்கொடியாக நடிப்பவருக்குத் திடீரெனச் சுக,
நா. சோமகாந்தன் () 121

Page 63
'யினம் ஏற்பட்டுள்ளதால் நாடகத்தை இன்று ஒத்திப் போட வேண்டியுள்ளது."
உச்சக் கட்டத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது திரை அவிழ்ந்து திரைச்சேலையுடன் பிணைக்கப்பட்டுள்ள தண்டு உச்சந்தலையில்தாக்கிவிட்டது போல கனகராணிக்கு இருந்தது.
இது என்ன சதி?- அவள் சுகமாகத்தான் இருக் கிறாளே! மேடையில் தோன்ற மேக்கப் கூட முடிந்து விட்டதே!
*இல்லை பொய் பொய் நான் நடிக்கத் தயார்!’ என்று தன் தொண்டை கிழிய "மேக்கப்" அறைக்குள் விருந்து அவள் வீரிட்டுக் கூவினாள். ஆனாலும் அவள் குரல் மைக்’கில் வந்து கொண்டிருந்த குரலில் அமுங்கிப் போய் விட்டது.
*மைக்" தொடர்ந்து இரைந்து கொண்டிருந்தது. “உங்களுக்கு ஏற்பட்ட அசெளகரியத்துக்காக வருந்து கிறோம். மன்னிக்கவும். இதே நாடகத்தை வேறொரு திகதி யில் மேடையேற்றுகிறோம். உங்கள் டிக்கட்டுகள் அப் போது செல்லுபடியாகும். இன்று நாடகம் நடவாது.”*
அவளுக்குக் சுகமில்லையென அவளுக்குத் தெரியாமல் யாருக்குத் தெரிந்தது. அவளால் நடிக்க முடியாது என்று அவர் கூறவில்லையே? எதற்காக இந்தக் குழப்பம்-ஏன் இப்படிக் கோளாறு?
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் இரத்த நாளங்கள் விறைத்து முகம் வியர்த்துக் கொட்டியது. அந்த மண்டபமே அதிர்ந்து சுழன்று அவள்மேல் விழுவது போன்ற பிரமை. அவள் 'தொப்' பென்று கதிரையில் சாய்ந்து விட்டாள்!
女 அவள் விழித்த பொழுது அவளைச் சுற்றி அவளின் தாயும் நாடகத்தை ஏற்பாடு செய்தவரும் இன்னும் சில ரும் நின்று கொண்டிருந்தார்கள்.
*மிஸ் கனகம் மன்னிக்க வேணும். எதிர்பாராமல் ஒரு விஷயம் நடந்து விட்டது- நாடகத்தை ஏற்பாடு செய்த
122 ப நிலவோ நெருப்போ?

வர் கைகளைக் கசக்கிக்கொண்டு குழைந்தபடி கூறத் தொடங்கினார்.
**என்ன மோசடி இது ஐயா?ஏன் நாடகம் நடக்காது?’’ அவள் அல்லியாக மாறிவிட்டாள் அதரங்கள் துடித்தன. கண்கள் புடைத்தன. மேற்கொண்டு வார்த்தைகள் வராமல் தொண்டை கம்மியது.
* பிள்ளை கனகம் - ஏன் அவரிலை கோவிக்கிறாய்? பாவம்! மனிசன் டிக்கெட் விலைப்படவில்லையாம். அதுக் கென்ன இன்னொரு முறை வைக்கட்டுமே"-கனகராணி யின் தாய் அவர் கொடுத்த நாலு பத்து ரூபா நோட்டு களைத் தடவி மடியில் முடிந்தபடி மகளைத் தேற்றினாள். அடுத்த முறையும் நாடகம் வைத்தால் கூலியாக மேலும் ஐம்பது ரூபா கிடைக்குமே என்ற ஆசை தாய்க்கு!
குமுறிக் கொண்டிருந்த அவள் உள்ளம், தாய் கூட தனது மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் வியாபார ரீதியில் பேசுகிறாளே என நினைத்ததும் வாய்விட்டு அழத் தொடங்கி விட்டாள்.
கண்ணிரிடையும் தேம்பிக் கொண்டே அவள் கேட் ... ITGir
டிக்கெட் விலைப்படவில்லையெனச் சனங்களுக்குச் சொல்வது தானே?-அதுக்காக எனக்கு எதற்குக் கெட்ட பெயர்?-
**சனங்களுக்கு அப்படிச் சொன்னால் கேட்பாங்களா? நொறுக்கி விடுவாங்களே. நாளைக்கு நான் கெளரவமா கத் தலை நீட்டுவதில்லையா?"
*அப்போது நான் தலைநீட்டுவதில்லையா?**-அவள் எதிர்த்துக் கேட்டாள்.
அவர் இலேசாக ஒரு வரட்டுப் புன்னகையை வர. வழைத்துக் கொண்டு "மிஸ் கனகம்! நீங்கள் இந்தத் துறைக்குப் புதிசு. அதுதான் துடிக்கிறியள். நாடகத் துறையிலை இதெல்லாம் சகஜம். இன்னும் இரண்டு கிழ
நா. சோமகாந்தன் () 12ம்

Page 64
மையிலை நாடகம் போடுவன். அப்போது நீங்கள். ! 10ܝܬ அவர் கூறி முடிக்கவில்லை
அவள் பொறுமை எல்லையை மிஞ்சி விட்டது. அவள் முகத்தில் அவமானக் கரியைக் குழைத்து அப்பிவிட்டாற் போல அருகிலிருந்த கண்ணாடியில் அவள் முகம் பயங்கர மாகக் காட்சியளித்தது.
*ப்ோமய்யா, போம்! நீரும் உமது நாடகமும்." திடீரென எழுந்து தலையிலிருந்த கிரீடத்தைப் பிடுங்கி **விர்'ரென வீசிவிட்டு அவள் தனது காரை நோக்கிப் புறப்பட்டாள். எதிரே இருந்த கண்ணாடி நொறுங்கிப் பொல பொலவென உதிர்ந்தது.
காருக்குள் மயான அமைதி. கார் ஜன்னலின் ஒரமாக அவள் முகத்தைப் புதைத்துத் தெருவையே பார்த்தபடி இருந்தாள், அந்தப் பிரதான வீதி வெறிச்சோடிக் கிடந் தது ஆண்ால், இடைக்கிடை சுவர்களில் ஒட்டியிருந்த போஸ்டர்கள் தெருவிளக்குப் பிரகாசத்தில் அவள் கண் களைக் குத்துகின்றன. **கனகராணி. பவளக்கொடி. ஹா. ஹ.ஹா!' என நையாண்டி செய்து பேய்ச்சிரிப் புச் சிரிக்கின்றன. அவள் இதயம் உள்ளூற விசித்து விசித்து ஊமையாக விம்முகிறது. “கனதராணி தோன் றும் பவளக்கொடி ஸ்பெஷல் நாடகம்' என்ற போஸ் டர்கள் தென்படும் போதெல்லாம் அவள் கண்களை இறுக்கி மூடிக் கொண்டே வீடு வந்து சேருகிறாள். அப்ப டியே அவள் படுக்கையில் புரள்கிறாள்,
சீ! கண்களை மூடிக்கொண்டு விட்டாலும் கண்மணி
களுக்கும் விழிமடலுக்கும் இடையிலே தான் எத்தனை விதமான காட்சிகள் விரிகின்றன!
கனகராணி
நடிக்கிற நாடக நோட்டீசை எடுத்து அவளின் தாய் வருவோர் போவோர் அனைவரிடமும் காட்டித் தனது
124 () நிலவோ நெருப்போ?

மகள் நடிக்கிறாள் என வாயெல்லாம் பல்லாகிச் சொல் லிப் பெருமைப்படுகிறாள்.
அயல் வீடுகளெல்லாம் அன்று பகல் முழுதும் ஒடித் திரிந்து காப்புகள், "நெக்லஸ்" விதவிதமான தோடுகள் மற்றும் நகைகள் இரவலாகப் பெற்று வருகிறாள்.
தோழிகளிடமெல்லாம் சென்று விதம் விதமான புட வைகள், காட்சிக்கொரு புடவையாகக் கட்ட வேண்டு மென வாங்கி வருகிறாள்.
அவர்கள் வசிக்கும் தோட்டத்தில் உள்ள வீடுகளி லெல்லாம் இதே பேச்சு. குழாயடியில் ஒரு வாரமாக இதே புராணம், நாடகத்துக்கு நாட்கள் நெருங்க நெருங்க இதிஹாசமோகினியாக எஃகிப்பறப்பதாகக் கனகராணிக்கு உள்ளூற கர்வம்; பெருமை!
அயலவர்களுக்கு, இந்தப் பொடிச்சிக்கு அடித்த அதிர்ஷ்டத்தைக் கண்டு கொஞ்சம் பொறாமையென்றாலும் அன்று மாலையே அவளையும் முந்திக் கொண்டு நாடக மண்டபத்துக்குப் புறப்பட்டு விட்டார்கள்?
கனவுக் காட்சித் திரைகள் மேடையில் மாறிமாறி நகர்வது போல அவள் மனமேடையில் எண்ணிக்கை யற்ற சம்பவங்கள் தோற்றுகின்றன. நாட்டுக் கூத்தில் உச்சக் கட்டத்தில் மத்தளக்காரர் மத்தளத்தில் ஓங்கிக் குத்துவது போல அவள் அடிவயிற்றிலிருந்து நெடுமூச்சு கள் கொட்டுகின்றன.
விடிந்தால் இவர்கள் முகத்தில் எப்படி விழிப்பது? இதயப் பசுஞ் செடியின் ஆசைக் கொழுந்துகிள் மீது இடி விழுந்து கருகி விட்டதை அந்தச் சின்னப் பெண் ணால் சகிக்க முடியவில்லை.
மறுநாள் விடிந்து விட்டது. கோப்பியைத் தயாரித்து எடுத்துக் கொண்டு, தாய் கனகராணியை எழுப்புவதற்கு
pit. Gst T LossTi556i, O 125

Page 65
அவளின் அறைக்குள் செல்கிறாள். அவளை எழுப்ப வேண் டிய அவசியம் ஏற்படவில்லை. அவள் நாடிக்குக் கை. கொடுத்தபடி உட்கார்ந்தபடியே இருக்கிறாள்.
முதல்நாள் நாடகத்தில் நடிக்க உடுத்த அதே உடை நகைகளைக் கூடக்கழற்றவில்லை. கண்கள் சிவந்து போய் இருக்கின்றன. பார்வை வெற்றுச் சுவரை நோக்கிய வண்ணம் நிலைகுத்தி நிற்கின்றது.
அந்தத் தாய் திகைத்துப் போய் விட்டாள்.
பிள்ளை கனகம்! எடிபிள்ளை!" அவசரப்பட்டுஅவளை
உலுக்குகிறாள்.
கனகத்தின் முகத்தில் இப்போது முறுவல், ஆவலோடு எழும்பி ஓடி வருகிறாள்.
**ஆ! என் பிராண நாதா வந்தீர்களா? அடியாளைப் பிரிந்து இத்தனை நாட்களாக எங்கிருந்தீர்கள்? நீங்கள் இல்லையென்று பாலுங் கசந்தது; படுக்கை நொந்தது. பிரபோ! என்னை இப்படி அடிக்கடி சோதிக்காதீர்கள்."
**ஆ1 ஐயோ கனகம்! என் மேளே! பெத்த வயிறு பேதலித்துக் கத்துகிறது. தலையிலடித்துத் தாய் கதறு கிறாள்.
கனகராணி 'பவளக்கொடி"யாகி விட்டாள்!
(தினகரன்-1963,
126 () நிலவோ நெருப்போ?

நாகவிகாரை
யாழ்ப்பாணம் புகை வண்டி நிலையத்தில்இறங்கி,தன்
பாண்போரணை இருந்த இடத்துக்கு நடந்து கொண்டிருந் தான் பண்டா நெஞ்சு திக்,திக் என அடித்துக் கொண்டது. எதிர்ப்படுவோரை மிரண்டு பயத்தோடு பார்த்தான். 58மே ஜூன் மாதக் கலவரங்களுக்குப் பின் அவன் வந்திருப்பது இது தான் முதல் தடவை!
பெரிய கடைச் சந்திக்கு பண்டா வந்ததும். திகைத்து பிரமித்துப்போய் நின்று விட்டான்! திடீரென இரத்தம் உறைந்து, உடல் விறைத்து விட்டது போல சிலையாகி விட்
டான்!
சனக் கூட்டம், மக்கள் வெள்ளம் பரபரப்பு, கல கல. له می۰• . . . ! }Lثا
*புதுக் கட்டிடத் திறப்பு விழா. பெரகரா, ஊர்வலம், நாகவிகாரைக்குப் போகிறது"-யாரோ கதைத்துக் கொண் டார்கள் அதற்கிடையே இனியநாதசுர இசையும்,‘ரபானா' கொட்டு மேள ஒலியும் இணைந்து வந்து அவன் காதில், குதித்தன. இரத்தோட்டம் மீண்டும் நாளங்களில் தொடர்ந்தது. பண்டா சனவெள்ளத்துடன் இரண்டறக் கலந்து சங்கமமாகிவிட்டான்!
நா. சோமகாந்தன் () 127

Page 66
மே மாதம், கடைசி வாரம் புதன் கிழமையோ வியாழக் கிழமையோ நல்லஞாபகம் இல்லை. எத்தனையோ நிஷ்டூர நிகழ்ச்சிகள் தெற்கில் நடந்து கொண்டிருப்பதாக பரபரப் பூட்டும் பயங்கரச் செய்திகள் வடக்கில் பரவின. கொழும் பிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர்கள், ஆத்திரம் குமுறி யெழ, பல பரிதாபக்கதைகளைச்சொன்னார்கள். குடாநாடு கொந்தளித்தது!
*" என்ன நடக்குமோ?" பண்டா பயந்தான்.
*பண்டா! நீர் பயப்பட வேண்டாம்- சகோதரர் போல பழகிய உமக்கு நட்ட மெதுவும் நடக்க விட மாட்டோம்", Li Taiot வாங்கவரும் அத்தனை வாடிக்கைக்காரர்களும் அவனுக்கு ஆறுதல் சொன்னார்கள்.
ஆனாலும் அவன் மனத்தில் பீதி உறுத்தியது. தனது இனத்தவர்கள் காட்டு மிராண்டிகளாக மாறி தென் இலங் கையிலும் ஏனைய பகுதிகளிலும் கொடூரச் செயல்களில் ஈடு பட்டுக்கொண்டிருக்கும் போது, எவ்வளவு தூரத்துக்கு தமி ழர்கள் பொறுமையை இழக்காமலிருக்க முடியும்? இப்படித் தன்னையே கேட்டான். தன் உயிருக்கு தீங்கு எதுவும்செய்ய மாட்டார்களென்ற நம்பிக்கை மட்டும் எப்படியோ அவனி -டம் இருந்தது.
நச்சுச் சூறாவளி, பயங்கரப் பேயிரைச்சலுடன் அகோர மாக வீசியது! எங்கும் ஏக்கம்-பொருமல், ஆத்திரம், பர பரப்பு: இந்துக் கோயில் இடிக்கப் பட்டது! பாணந்துறையில் பரிதாபமான வகையில் குருக்கள் உயிருடன் கொளுத்தப்பட் டார்! பொலநறுவையில் படுகொலைகள்! மட்டக்களப்பில் ரயில் கவிழ்க்கப்பட்டது! தமிழ்ப் பெண்கள் கற்பைக் காக்க உயிரிழந்தனர்! கொழும்பில் தமிழர்கள் மீது காடையர்கள் அட்டகாசம். ஆட்சியே ஸ்தம்பித்து விட்டதாம்!
இத்தனை செய்திகளும் வடக்கே ஏககாலத்தில் வந்து குவிந்த போது பண்டாவுக்கு என்னவோ போலிருந்தது. தன் பேக்கரி திடீரென கொளுத்தப்பட்டது போலவும். அதன் முகட்டு மரங்கள் அக்கினிக் குழம்பாகி, 'ஆ' என்று
128 () நிலவோ நெருப்போ?

நாக்கை நீட்டிக் கொண்டு பூதாகாரமாகத் தன்னை நோக்கி வருவது போலவும் பிரமை தட்டியது. பேக்கரியைப் பூட்டிக் கொண்டு, அயல் வீட்டு ஆறுமுகத்தாரிடம் தஞ்சமடைந் தான். அங்கிருந்து பின்னர் அகதிகள் முகாமுக்கு அவன் அனுப்பப் பட்டான்.
** என்ன! நாகவிகாரை தரைமட்டமாகிவிட்டதாம் புத்த விக்ரகத்தை சுக்கு நூறாக நொறுக்கிவிட்டார்களாம்! எல்லாவற்றையும் தமிழர்கள் கொளுத்தி விட்டார் களாம்..!
கண்டதையும் காணாததையும், கேள்விப்பட்டதையும் கேள்விப்படாததையும், கற்பனையில் உதித்தவற்றையும், சேர்த்து ஒன்று திரட்டி உருட்டி எடுத்து, காது மூக்குகள் ஒட்டி கதைத்துக் கொண்டார்கள் கோட்டை அகதி முகா மில் பண்டாவுடன் இருந்தவர்கள்! மூலையிலிருந்த வானொ லிப்பெட்டி அடிக்கடி “அதிகாரபூர்வமான" செய்திகளைச் சொல்லியது!-ஊர்காவற்துறை சுங்க காரியாலயத்தை புரட்சிக்காரர்கள் கைப்பற்றி விட்டார்கள்! காங்கேசன் துறை விமான நிலையம் படைகள் கூட இறங்க முடியாமல் தீப்பற்றி எரிகிறது! தீவுப் பகுதிகளுடன் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டது! கிளர்ச்சிக்காரர்கள் வெடிவைத்துப் பாலங்களைத் தகர்த்தெரிந்து விட்டார்கள். இராணுவத் தினர் தம்மீது ஆயுதம் தாங்கிய “சிவிலியன் படை எந் நேரமும் தாக்கலாம் என அஞ்சுகிறார்கள்!' இரண்டாம் மகாயுத்தத்தின் போது "யுத்த முனைச் செய்திகளை வானொலி வர்ணித்ததைக் கேட்பது போல இருந்தது அவ
னுக்கு!
*நாகவிகாரையை இடித்து விட்டார்களாம்! அரச மரத்தை பெயர்த்து விட்டார்களாம்! தமிழர்கள்!' கேள்
விச் செவியர்களின் உளறல்களைக் கேட்டு, அந்த வேளை யிலும் நகைத்துக் கொண்டது பண்டாவின் உள்ளம். அந்த 'நிலைகெட்ட’’ மனிதர்களுக்காக வழியில் காரில் வரும்போது தான் பார்த்தான். அந்த அரச மரமும் இருந்தது- அதன் கீழ் புத்தர் சிலையும் அப்படியே இருந் தது! மதில் சுவர்தான் கொஞ்சம் இடிந்து போயிருந்தது!
நா. சோமகாந்தன் 29. p57-9

Page 67
ஊர்வலம் நின்று விட்டது! அவ்வளவு நேரமும் பழைய சம்பவங்களோடு பின்னிப் பிணைந்து போயிருந்த பண்டாவின் சிந்தனை இப்போது தான் விடுபட்டது! நிமிர்ந்து பார்த்தான். நம்பவே முடியவில்லை! பழைய நாகவிகாரை இருந்த அதே இடம்-ஆரியகுளம் சத்தி; கிளைகள் பரப்பி, இலைகள் நிறைந்து நிமிர்ந்து நிற்கும். அதே அரசமரம்; கீழே நிம்மதியாக, நிறைவாக, சாந்தம் வழிய, கருணை பொழியும் முகத்தோடு புத்த பகவான், புது எழிலுடன் முன் எப்பொழுதும் போல், இருந்து கொண்டிருந்தார். மெல்லிய மஞ்சள் வண்ணத்தில் புறமதிற். சுவர். அதன் உட்பிரதேசத்தில் முன்பிருந்ததை விட அழகான கம்பீரமான விகாரைக் கட்டடம்!அலங்காரங்கள்; தோரணங்கள்; கலகலப்பாக காட்சி அளித்துக் கொண் டிருந்தது நாகவிகாரை!
இன்னிசைகள் ஏககாலத்தில் ஒலித்தன. கெட்டி மேளம்; ‘ரபானா'வின் கொட்டு முழக்கு!-புத்த பிக்குகள் *பிரித்' ஒத, புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
மத அனுஷ்டானம் நிறைந்த, வயது முதிர்ந்த பிக்கு ஒருவர் பேசினார். هی
*சீ! இந்தப் பிக்குகள் பேசத் தொடங்கித் தானே. நாடு இப்படி ஆகியது. மத போதனையை மறந்து மஞ் சள் அங்கியோடு அரசியல் போதனையில் இறங்கி அட்ட காசம் புரிந்தார்களே! இத்தனைக்குப் பிறகும் பாடம் படிக்கவில்லையே! எங்காவது விகாரத்தில் அடைந்து கிடப் பதற்கு.மேடையில் எதற்கு?’ பாண்டாவின் உள்ளம் சீறியது!
அந்த பிக்கு பேசிக் கொண்டிருந்தார், கடைசி வாக் கியங்கள் மட்டும் பண்டாவின் காதுகளில் தெளிவாக விழுந்தன.
**அரசியல் சட்டந்தான் அவர்களது விரோதி - சிங் களவர்கள் அவர்களது சகோதரர்கள், என்ற உண்மை யைத் தமிழ் மக்கள் எந்த நிலையிலும் காத்திருக்கிறார்.
130 ) நிலவோ நெருப்போ?

கள். தமிழர் மத்தியிலிருந்த ஒரு சிங்களவரும் துன்புறுத் தப்படவில்லை-உயிரிழக்கவில்லை!’’ இப்படி பிக்கு பேசி முடித்தார்.
பண்டா நிமிர்ந்து நின்றான். இதயத்தின் அடித்தளத் தில் இருந்த பீதி எங்கோ பறந்து விட்டது!
தன் இடுப்பிலிருந்த, “பெல்ட்டை ஒருமுறை உருவி இறுக்கிக் கொண்டான். ஊரில் ஏற்கனவே தீர்மானஞ் செய்து கொண்ட எண்ணத்தைக் கைவிட்டு விட்டு, தான் வந்த சுவடே தெரியாமல் ஊருக்குத் திரும்பி விட்டான் பண்டா!
x பலமணி நேர மனப் போராட்டத்தின் பின் நெஞ் சம் விடும் நெடு மூச்சுப் போல, களுத்துறைப் புகை வண்டி நிலையத்தில் புகையைக் கக்கிக் கொண்டு, புகை வண்டி நின்றது. இறங்கும் போதே, புகைவண்டி நிலையப் பெயர்ப் பலகையைப் பார்த்தான். தமிழ் எழுத்துக்களின் மீது இன்னமும் தார் அப்படியே மூடிக் கிடந்தது!
**முரட்டுப் பாவிகள்!'-பண்டாவின் வாய் (Մ)9ծ0)} முணுத்தது
ஏற்கனவே, லொறி ஒன்றோடு அங்கு வந்து காத்து நின்ற, பண்டாவின் மனைவி பொடி மெனிக்காவுக்கும் அவளுடைய தகப்பன் சில்வாவுக்கும், பண்டா வெறுங் கையோடு வந்திறங்கியது பெரும் திகைப்பாகவும், ஏமாற் றமாகவுமிருந்தது. பேக் க ரி ச் சாமான்களெங்கே? கடையை மூடி விட்டு, சாமான்களுடன் வருவதாகப் போனவராச்சே? தமிழர்கள் கொள்ளையடித்த பின் எரித்து விட்டார்களா" தகப்பனும் மகளும் யோசித்தார்கள்!
66 என்ன சாமான்களெல்லாம் எங்கே?' மெனிக்கா ஒடிச் சென்று பரபரப்போடு கேட்டாள்.
*எல்லாம் நல்ல பாதுகாப்பாக இருக்கின்றன. தமி ழர்கள் பண்புள்ளவர்களடி. பேக்கரியை மூடுவதில்லை;
நா. சோமகாந்தன் 0 131

Page 68
பதிலாக விஸ்தரிக்கப் போகிறேன்!" உறுதி தொனிக்கச் சொன்னான் பண்டா.
*உங்களுக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா..? அஊர் இருக்கும் நிலையில்...? அவள் பேசினாள்.
*போடி போ வீட்டுக்குள் அடங்கி இருக்கும் உனக்கும் மாமாவுக்கும் யாழ்ப்பாணத்தில் நடந்தது என்ன தெரியும். எல்லாம் பிறகு சொல்லுகிறேன்.'
சில்வா, அந்த ஊரில் முன்னர் விதானையாக இருந் தவர். தெற்கில் தமிழர் கடைகளுக்கேற்படுத்தப்பட்ட சேதங்களைச் சொந்தக் கண்ணால் கண்டுவிட்டு, தன் மரு மகன் பண்டாவின் பேக்கரியும் அப்படியே யாழ்ப்பாணத் தில் சூரையாடப்பட்டிருக்கலாம் என்ற எண்ணத்தில், "பழிக்குப் பழி வாங்குகிறேன்" எனக்கருவிக் கொண்டு, அந்த ஊரிலுள்ள வேலுப்பிள்ளையின் சுருட்டுக்கடை மீது வெறியாடும்படி *வேட்டை நாய்” களுக்கு கண் சாடை செய்தவர் சில்வா! அப்பாடா! ஒரு நிமிஷத்தில் 'பூமணி ஸ்டோர்ஸ்’ துலசமாகி விட்டதே! பண்டாவால் இந்தக் காட்சியை நினைத்துப் பார்க்க முடியவில்லை. தன்னுடைய மாமனார் செய்திருந்த செயல் அவனுன நாணிக் குறுக வைத்து விட்டது. மெனிக்காவையும் கூட்டிக் கொண்டு பண்டா யாழ்ப்பாணத்துக்குப் புறப்பட்டான். வேலுப் பிள்ளை முதலாளியைச் சந்தித்து ஆவன செய்ய வேண் டும் என்ற அங்கலாய்ப்பு ஒரு புறம் தனது பேக்கரி பிஸ்னெஸ்ஸை விஸ்தரிக்க வேண்டும் என்ற ஆர்வம் மறு புறம் போகும் போது பாதுகாப்புக்காக இருக்கட்டுமென்று ஒரு உருவுவாளை எடுத்து அவசர அவசரமாக பெட்டியுள் சொருகினாள் மெனிக்கா, பண்டாவுக்கு எரிச்சலும், கோபமும் பொத்துக்கொண்டு வந்தன.
சி! இந்தக் கத்திகளும், வரட்டுப் புத்தி படைத்த வகுப்புவாதிகளும் தான் நாட்டின் நிம்மதியைக் குலைத்து, சந்தோஷத்தை குழி தோண்டிப் புதைத்து, சமாதான சக வாழ்வுக்குச் சதி செய்த சனியன்கள்! தொலைந்து
132 () நிலவோ நெருப்போ?

போகட்டும், இன்றோடு!" என்று அந்தக் கத்தியைப் பறித்து அப்பாலே தூர வீசி எறிந்தான் பண்டா, டங்க்" என்ற ஒளியோடு ஒடிந்தது அது!
யாழ்ப்பாணம் வந்து சேர்ந்த முதல் நாளிலேயே பண்டா ஆறுமுகத்தைச் சந்தித்தான். ஒரு வாரத்துக்குள் பண்டாவின் பேக்கரியில் பாண் தயாரிப்பு ஆரம்பமாகி விட்டது. முன்னையைக் காட்டினும் இப்போது அதிக விற் பனை. ஜோலி தலைக்கு மேல் இருந்தால் சுமார் இரண்டு வாரங்கள் கடந்தும் வேலுப்பிள்ளையிடம் போக பண்டா வுக்கு அவகாசம் கிடைக்கவில்லை. அப்படி போயிருந்தா லும் பயன் உண்டா? பூமணி ஸ்டோர்ஸ் தான் “பியசிரி ஸ்டோர்ஸ்" ஆகி விட்டதே!
女
*அப்பு.எணை1.அப்பு! வாயிலை சுருட்டு பேப்பர் படிக்கிறேன் எண்டு சொல்லிப் போட்டு, பட்டம் பகல்லை அதுக்கிடையிலை நித்திரையாய்ப் போனியே? அப்பு.! எணை வாயிலை சுருட்டெல்லே சுடப் போகுது. சுருட்டு!" வேலுப்பிள்ளையின் கடைசி மகள் பூமணி, அவரை உலுக்கி எழுப்பினான்.
**இல்லையடி மோளை, சாப்பிட்டது.தெரியாதே, ஒரு சின்ன கோழித் தூக்கம்!"
அந்தச் சாய்வு நாற்காலியிலிருந்து எழுந்து, வாயில் வைத்திருந்த கருகிப்போன சுருட்டை வீசி எறிந்தபடி சொன்னார். அவிழ்ந்து போயிருந்த, ஐந்தாறு மயிர்களா லான தமது சின்னக் குடுமியை ஒரு தரம் தட்டி முடிந்து கொண்டார் வேலுப்பிள்ளை.
*ம்.ம் தென் இலங்கையில் கொட்டிக் குவித்த பணத்தை இங்கு செலவு செய்து ஏதாவது ஒரு தோழி லைத் தொடங்கி இருந்தால்...? அங்கு ஒடிப் போய் கடை வைத்து நடத்திய எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்" என்று வாய்க்குள் முணுமுணுத்தார்.
நா. சோமகாந்தன் 0 133

Page 69
எனினும் ஒரு விஷயம் அவருக்கு பெரிய மனப்பளு. வைக் கொடுத்தது. யாழ்ப்பாணத்தில் இருந்த பண்டா வின் பேக்கரி மீண்டும் செழிக்கத் தென் இலங்கையில் உள்ள தனது பூமணி ஸ்டோர்ஸ் மட்டும் யாரோ அட்டா துட்டிக்காரனால் அபகரிக்கப்பட்டு பியசிரி ஸ்டோர்ஸ் ஆகி விட்டதை மட்டும் அவரால் பொறுக்க முடியவில்லை இந்த நிலையில் தான் தினப்பத்திரிகையில் வந்த செப் தியை அவர் படித்தார். நாகவிகாரையைத் திருத்தி அமைக்கும் தீவிர முயற்சியில் தமிழர்கள் கூடவே தென் இலங்கை இந்துக் கோவில்கள் பற்றிய செய்தியும் இருக் கும் என்று துருவிப் பார்த்த அவருக்குக் கிடைத்தது வெறும் ஏமாற்றம்! சிரித்தார். அந்தச் சிரிப்புக்குத்தான் எத்தனை அருத்தம்!
(சுதந்திரன்- 1959)
134 0 நிலவோ நெருப்போ?

விடியல்
நல்லூர்க் கோவில் அசையாமணியின் ஒலி அதி காலை இருளைக் கிழித்துக் கொண்டு காற்றுடன் கலந்து வந்து நாலு கட்டைக்கு அப்பாலிருக்கும் அந்தக் கிராமத் துக்கும் கேட்டது.
நேற்றைய தினம் வைத்தீஸ்வர ஐயர் நெடுநேரம் வேலை செய்யவேண்டியிருந்ததால் நன்கு களைப்புற்று ஆழ்ந்து உறங்கிவிட்டார். மணிச்சத்தம் கேட்டதும் டக்கென எழுந்து கிணற்றடியை நோக்கிச் சென்றார். விடிவெள்ளியின் மினுக்கு ஒளியில் நிதானமாகத் தடம் பதித்த வழியில் கிடந்த தண்ணீர் பம்பிலும் வடமாகக் கிடந்த ஹோஸ் பைப்பிலும் தடுக்கிவிடாமல் கிணற்றண்டை சென்ற ஐயர், அவசரம் அவசரமாகத் தந்த சுத்தி செய்தி முகத்தைக் கழுவி, கிணற்று மாடத்திலிருந்த திருநீற்றைத் தொட்டு, சிவ சிவ எனச் சொல்லி நெற்றியில் தரித்துக் கொண்டார்.
கொட்டிலில் கட்டியிருந்த எருதுகளிரண்டும் அவரைக் கண்டதும் தண்ணிருக்கு இரைந்தன. நேற்றிரவே ஊற விட்டிருந்த பிண்ணாக்கு வாளியை எடுத்து உருத்திக் கலக்கிறபோது, பின் விறாந்தையில் நேற்றுப் பறித்து பரப்பி
நா. சோமகாந்தன் () 135

Page 70
யிருந்த வெங்கா யக் குவியலின் தார்களின் மணம் அவரின் மூக்கை முகர்ந்தது. அந்த மணம் ஐயருக்கு மகிழ்ச்சியாக, இருந்தது. பிண்ணாக்கை பிசைந்து கலப்பதில் அவருக்கு கஷ் டம் இருக்கவில்லை. சுவாமிக்குப் புஷ்பம் போட்ட காலத் தில் மெதுமையாக இருந்த கைகள், இப்போது மரத்து தசை நார்கள் இறுகி உடம்பு கூட தொள தொள சதை. கsாற்ற கட்டுமஸ்தானதாக ஆகி விட்டது போன்ற உணர்வு. எருதுகளுக்கு முன்னால் வாளிகளை வைத்துவிட்டு சாணங்களைக் கூட்டி இடத்தைத் துப்புரவாக்கிய பின் காலைக் கடன்களை முடித்த ஐயா துலாக்கயிற்றை அநாயாசமாக இழுத்து இழுத்து, ஜில்லென்ற நீரைத் தலையிலே ஊற்றிக் கொண்டார். பூஞ்செடிகளுக்கு, நிரம்பிப்பாயவேண்டுமென்பதால் நீண்ட நேரம் குளிப்பது அவர் வழக்கம். தண்ணிர் பம்ப் வாங்குவதற்கு முன் தமது தோட்டச் செய்கைக்காக வெண்காயம், மிளகாய், பீட்றுரட் புகையிலைப் பயிர்களுக்கு, நாள் முழுவதும் துலாக்கொடி பிடித்துப் பழக்கப்பட்டவராகி விட்டார் வைத்தீஸ்வர ஐயர். அவரது மக்கள் துலா கூட ஒடி மிதிப்பார்கள். ஆரம்பத்தில் கஷ்டமும் கூச்சமுமாக இருந்த போதிலும் காலப்போக்கில் அவருக்கு இவையெல்லாம் பழக்கமாகி விட்டன.குடியிருக்கும் காணியைத் தவிர சொந்தநிலமில்லா விட்டாலும், அவர் கைதேர்ந்த 9Ջ(5 குத்தகை. விவசாயியாகி விட்டார்.
ஈரத்தைத் துவட்டிக்கொண்ட பின், கிணற்றடிக் கொடி யில் முதல் நாள் உலர்த்திப் போட்டிருந்த வேட்டியை ஆசாரமாக உடுத்திக் கொண்டு பூக் கூடையை எடுத்து, பூமரங்களைச் சுற்றிவருகிறபோது லலிதா சகஸ்ரநாமத்தை அவர் உச்சரிக்கத் தொடங்கிவிட்டார்.
பார்வதி அம்மாள் பாவம் ஆஸ்துமாக்காரி; அதி காலைக் குளிர் ஒத்துவராது. ஐயரின் பூசை புனஸ்காரங் கள் முடிந்தவுடன் கோப்பி வைத்துக் கொடுப்பதற்காக, தான் குளிப்பதற்கு அவசரம் அவசரமாக வெந்நீர் வைப் பதற்கு அடுப்பை மூட்டிக் கொண்டிருந்தாள்.
பறவை இனங்கள் கதிரவனின் வருகையை எதிர் பார்த்து குதூகல கீத மிசைத்தன. செவ்வந்தி, இரு
136 D நிலவோ நெருப்போ?

வாட்சி, நந்தியாவர்த்தை, மல்லிகை மலர்கள் மொட்ட வீழ்ந்து குப்பென நறுமணம் பரப்பின அயற் கிராம ஆலயங்களில் ஆரவார மணியோசை ஒலித்தது. ஆனால் அந்தக் கிராமத்தின் விநாயகப் பெருமானின் உஷத்காலப் பூஜை மட்டும் விடிந்து எல்லோரும் வேலைக்குப் போய் விட்ட பிறகு, வெளியூரிலிருந்து வியர்த்து விறைக்க சைக் கிளில் ஒடிவரும் வேறு ஒரு ஐயர் உஷத்காலத்தைவும், உச்சிக் காலத்தையும் சேர்த்து முடித்து விட்டுப் போகிற அவசர பூஜையாக மாறி விட்டது!
வைத்தீஸ்வர ஐயரின் பூக்கூடை நிறைந்து விட்டது. இனி தமது சுவாமி அறைக்குள் அவர் புகுந்தால் முக்கால மும் திருமேனி தீண்டி முழு மனதோடு தாம் ஆராதித்த அந்த விநாயகப் பெருமானை ஏகாக்கிர சிந்தையோடு மானசீகமாக வழிபட்டு சகஸ்ர நாமாக்களையும் சொல்லி அர்ச்சித்து தீபாராதனை செய்த பின்னர் தான் வெளியே வந்து வேறு வேலைகளைக் கவனிப்பார். அந்தக் கோவிலின் படிய்ை அவர் விட்டிறங்கிபத்து ஆண்டுகளாகப்போகின்றன, ஆனாலும் அவரின் வைராக்கியம் இன்னும் மாறாமல் அப்படியே இருக்கிறது.
女
அந்தக் கிராமம் விஸ்தீரணத்தால் பெரியது. உயர் சாதி என நினைத்துக் கொள்பவர்களும், குறைந்த சாதி யார் என ஒதுக்கப்படுபவர்களும் தொகையில் சமமாக வசித்தனர். உயர் சாதிக்காரர்கள் வடக்கேயும் மற்றவர் கள் தெற்கேயும் குடியிருந்தனர். வடக்கேயுள்ளவர்கள் யாராவது தப்பித் தவறி தெற்கே காணி வாங்கிக் குடியேறி விட்டால், அவர்கள் வடக்காரிலும் பார்க்கபடி குறைந்து வி ட் ட த ரா க க் கருதப்பட்டனர். பிள்ளையார் இரு பகுதிக்கும் நடுவில் அமர்ந்து ஏக காலத்தில் எல்லோருக் கும் சமமாக அருள் பாலித்துக் கொண்டிருந்தார். இரு சாராரும் வழிபட்டு வந்த போதிலும் அந்தக் கோவில், வல்லிபுரம் பிள்ளையின் சொத்து; பரம்பரையாக அவருக்கு வந்த உரிமை.
நா. சோமகாந்தன் 0 137"

Page 71
வைத்தீஸ்வர ஐயரின் பூட்டன் காலத்திலிருந்தே சந் ததி சந்ததியாக கோவில் அர்ச்சகராக அந்தப் பிராமணக் குடும்பத்தினரே அங்கு கடமையாற்றி வந்தனர். வைத் தீஸ்வர ஐயரும் தகப்பனாருக்குப் பின் தமது பதினைந்தா வது வயதில் கற்பூரத் தட்டுக் கையிலேந்தி காலந் தவறா மல் கண்ணுங் கருத்துமாக விநாயகப் பெருமானை ஆரா தித்து வந்தவர். தாமுண்டு, பிள்ளையாருக்குச் செய்ய வேண்டிய தொண்டுகளுண்டு என்ற நோக்கத்தோடு இருந்த வைத்தீஸ்வர ஐயருக் கு வெளியூர்களிலிருந்து வந்து கொண்டிருந்த செய்திகள் சஞ்சலத்தையும் துக்கத்தையும் எற்படுத்தின.
‘மாலையில் ஆலயப் பிரவேச முயற்சி-கோயிற் கதவடைப்பு’’
*பன்றித் தலைச்சியில் குண்டு வீச்சு அடிதடி
*பாலாவோடையில் தேர் எ ரிப்பு - கோஷ்டிச் சண்டை"
பரபரப்பாக ஊரவர்கள் இதைக் கதைத்த போது ஐயருக்குப் பயமாகவும், சலிப்பாகவும் இருந்தது. இருபத் தைந்து வருஷ அர்ச்சகர் அனுபவத்தில் இப்படி அவர் மனம் பேதலித்ததேயில்லை. சாந்தி அளிக்க வேண்டிய ஆண்டவன் சந்நிதி ரணகளமாக மாறி சமுதாய அமைதியைக் கெடுப் பகற்குக் காரணமாக இருக்க வேண்டுமா என அவர் மனம் அலுத்துக் கொண்டது. அன்பையும் அருளையும் பெற வேண்டிய இ ட த் தி ல் இப்படி அடக்கு முறையும் பலாத்காரமும் ஏன் என்று அவர் மனம் காரணம் புரியாமல் அங்கலாய்த்தது.
*மஹோற்சவத்துக்கு இன்னும் மூன்று மாசங்கள் கூட இல்லை. விக்னேஸ்வரா விக்கினமெதுவுமில்லாமல் நிறை வேற நீதான் அருள வேண்டும்’-முழுப்பாரத்தையும் கடவுள் மீது ஐயர் சுமத்தி விட்டு ஆறுதலடைந்து விட் டார். அ வரி ன் வேண்டுதல் நிறைவேற முன்னரே
விடு" என்ற வெளியூர்க் கோஷம் அங்கேயும் எதிரொலித்
138 () நிலவோ நெருப்போ?

தது. அதற்காகப் பிரச்சாரக் கூட்டம் பொறி பறக்கும் பேச்சுகள்.
பிரச்சனை ஏற்படுத்தக் கூடிய விஸ்வரூபத்தை ஐயர் கற்பனை செய்து பார்க்க உள்ளமும் உடலும் ஒரு சேரப் பதறின. அவருக்குத் தெரிந்தளவில் வேதாகம, சாஸ்திர புராணங்ளெதுவும் ஆசார சீலராக ஆலயத் துள் வந்து குடும்பிடுவதை எதிர்க்கவில்லை. வழமையாக இருந்து வந்த பழமை காலதேச வர்த்தமானங்களை யொட்டி மீறப்படுவது குற்றமுமல்ல என்று மனச்சாட்சி அவருக்கு இடித்துச் சொன்னது
வெள்ளிக்கிழமை தோறும் சுவாமி தரிசனத்துக்கு வரும் ஊரவர்கள் எல்லோரையும் அவருக்கு மனப்பாடம், கோபுர வாசலுக்கு வெளியே ஆசார சீலராக, பக்தி சிரத்தையோடு வழிபடும் சிலம்பன், சீனியன், வெள்ளை, கந்தன், செல்லாச்சி, சீதை.
வெள்ளை வேட்டியும் திருநீற்றுப் பூச்சுமாக உள்ளே நிற்ப்வர்களில் சிலரின் வாயில் சாராய நெடி. கண்களில் காமப்பார்வை, சுவாமி தரிசனைக்குப் பதிலாக பருவப் பெண்களின் அங்கங்களைமேயும் துடிப்பு, கண்சிமிட்டல்,
ஐயரின் மனச்சாட்சி விழித்துக் கொண்டு விட்டது. கோவில் முதலாளியிடம் நியாயத்தை எடுத்துக் கூறி-நீதி யின் பக்கம் தாம் நிற்க வேண்டும் எனத் திட்டவட்ட மாகத் தீர்மானித்துக் கொண்டார்.
女 ஐயர் வீட்டு முற்றத்து முல்லைப்பந்தலில் பரவிகிடந்த மொட்டுக்களைப் பறித்து வந்து மாலைப் பூசைக்கு பிள்ளை யாருக்கு அலங்காரம் செய்ய அவர் அவற்றைத் தொடுத் துக்கொண்டிருந்த வேளையில், முதலாளி வீட்டுப் பையன் வந்து அவசரமாக அவரை முதலாளி சந்திக்க வரட்டுமாம் எனச் செய்தி சொல்லிவிட்டுச் சென்றான். ஐயர் வீட்டி லிருந்து அவர் வீடு ஒரு கூப்பிடு தூரம்தான். மாலையைக் கட்டி முடித்து பூக்கூடையுள் வைத்து தண்ணிர் தெளித்து.
நா சோமகாந்தன் 0 139

Page 72
விட்டு, சால்வையை உதறித் தோளில் போட்ட வண்ணம் ஐயர் எழுந்து போனார்.
முதலாளி வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந் தார். இப்போது கொஞ்ச நாட்களாக இரட்டைப் பிறவி யாக ஒட்டிக்கொண்டு திரியும் சின்னத்தம்பி வாத்தி யாரை அங்கு காணவில்லை வாத்தியார் அந்தக் கிராம மகாவித்தியாலயத்தின் அதிபர்; கிராம முன்னேற்றச் சங் கத் தலைவர்; கூட்டுறவுச் சங்கத்திலும் முக்கிய புள்ளி. அதனால் ஊருக்குள் அவருக்கு நல்ல செல்வாக்கு, எத் தனையோ ஏழை எளியவர்களுக்கு தர்மப்பணம். உணவு முத்திரை பெறுவதற்காக உதவி அரசாங்க அதிபர் கந் தோர், கச்சேரி முதலியவற்றிற்குக் கூட்டிச் சென்று உதவி புரிபவர். பரம்பரைச் செல்வமும் நாட்டாண்மையும் மிக்க வல்லிபுரத்தாரும் செல்வாக்குமிக்க சின்னத்தம்பி வாத்தி யாரும் இரண்டறக் கலந்து பெரிய சக்தியாக விளங்கினர்.
கால்கள் இரண்டையும் நீட்டிச் சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்த முதலாளி, ஐயரைக் கண்டதும், கதிரைச் சட்டத்திலிருந்து கால்களை இறக்கி, நிமிர்ந்து உட்கார்ந் தார்.
‘வாருங்கோ குருக்கள் உட்காருங்கிேரி. ஒரு முக்கிய முடிவைச் செய்திருக்கிறம். அதைச் சொல்லத்தான் உங் களைக் கூப்பிட்டனான்.""
எதிரேயிருந்த நாற்காலியில் உட்கார்ந்த ஐயர், எச மானின் வாயிலிருந்து வருவதைக் கேட்க ஆவலாயிருந் தார்.
*உலகம் மாறிக் கொண்டு வருகிறது, எங்கள் ஊரும் மாற்றமடைய வேண்டும், உங்களுக்குப் பிடிக்குமோ பிடிக் காதோ தெரியாது கொடியேற்றத்தன்று எங்கள் கோயிலை எல்லாருக்கும் திறந்து விடத் தீர்மானித்திருக்கிறேன்"- வெட்டு ஒன்று துண்டு இரண்டாக வல்லிபுரம் சொல்லி விட்டார்.
140 () நிலவோ நெருப்போ?

வியப்பு மேலீட்டால் ஐயர் ஒரு கணம் தளம்பிப்
*அப்பனே. விக்கினேஸ்வரா'- ஐயர் கோயிலின் திசை நோக்கிக் கரங் கூப்பினார்.
கோயிற் கொடியேற்றத்தன்று ஆலயக் கதவு அகலத் திறந்து வைக்கப்பட்டது. தடித்த சாதியுணர்வுள்ள சில ரைத் தவிர வழமை போல அந்த ஊரே திரண்டு வந்திருந் தது. சிலம்பன், ஆழ்வான் முதலிய மதிய வயதைத் தாண்டியவர்கள் வெளி மண்டபத்தில் நின்றே வழிபட்ட னர். பழக்கதோஷத்தை மீற முடியாத மனக் கூச்சம், அவர்களைச் சேர்ந்த இளைஞர்கள் உட்பிராகாரம் முழுவ தையும் சுற்றிச் சுற்றி வந்தனர். தாம் காணக்கூடாதென இவ்வளவு காலமும் மூடிப் பொத்தி வைக்கப்பட்ட பொருள் எங்கே இருக்கிறது என துருவித் துருவிப் பார்த்து களைத்துப் போய்விட்டார்கள். உயர் சாதிக்காரர் எனக் கூறப்படுபவர்களிற் சிலர் சுவாமி கும்பிட்டதும் உடனே போய்விட்டார்கள். வேறு சிலர் கூச்சப்பட்டுக் கொண்டு நின்றனர்.
ஐந்து, ஆறாம் திருவிழாவில் நிலைமை திருந்தி விட்டது. உள்ளே வரக் கூசிக் கொண்டிருந்த ஆழ்வான் சிலம்பன் எல்லோரும் உள் வீதிக்கு வந்து தரிசித்தனர்.
உற்சவ காலம் அத்தனை நாளும் வல்லிபுர முதலாளி யும் சின்னத்தம்பி வாத்தியாரும் அங்கேயே தவமிருந்த னர். சின்னத தம்பி வாத்தியார் தனது வாய்ச் சாதுர்யம் முழுவதையும் காட்டி, காந்தி நூற்றாண்டில் சமத்துவம் நிலவ வேண்டுமென்றும், தாழ்த்தப்பட்ட மக்களிடம் முதலாளியாருக்குப் பெரிய அனுதாபம் உண்டென்றும், முதலாளியாரின் முற்போக்கு எண்ணங்களை எடுத்துச் சொல்லியபடி இருந்தார்.
உற்சவங்கள் விக்கினமின்றி நடந்து துவஜாவரோகண மும் முடிவடைந்ததைக் கண்ட வைத்தீஸ்வர ஐயர் மகிழ்ச் சியும் ஆறுதலும் அடைந்தார்.
நா. சோமகாந்தன் 0 141

Page 73
திருவிழா முடிந்து 15 நாட்கள் கூட இருக்காது.காலைப் பூஜை நடைபெற்றுக் கொண்டிருக்கிற போது, நாலு, ஐந்து கார்களில் ஆட்கள் வந்திறங்கினார்கள். கோவில் முதலாளியும் சின்னத்தம்பி வாத்தியாரும் கூட வந்திருந் தனர். ஒரு தாம்பாளம் நிறைய வெற்றிலை, பாக்கு, பழம், சூடம், சாம்பிராணி, பூ முதலியவற்றை முதலாளி யின் எடுபிடி ஏந்தி வந்தான். பத்து ரூபாத்தாளை எடுத்து வைத்து, அர்ச்சனைத் தட்டை வெகு பவ்வியமாக முதலாளி நீட்டினார். அர்ச்சனை நடைபெறும் போது ஒவ்வொரு விக்கிரகத்தின் வாசலிலும், முதலாளி விழுந்து எழும்பிக் கும்பிட்டு மன்றாடினார்.
ஐயர் ஆச்சரியமுற்றவராக விபூதிப் பிரசாதத்தைக், கொடுத்த போது, பணிந்து வணங்கி இரு கரங்களாலும், வாங்கினார்.
*முதலாளி எலக்ஷன் கேக்கிறார். காசு கட்டக் கச்சேரிக்குப் போறம்'-விபூதியைத் தொட்டு, நெற்றியில் பூசிக் கொண்டு சின்னத்தம்பி வாத்தியார் ஐயருக்குச் சொன்னார்.
**விக்கினேஸ்வரா - ஐயரின் உள்ளம் மனமுருகி வேண்டிக் கொண்டது. خص
女
அத்தேர்தற் தொகுதியின் பிரதிநிதியைத் தீர்மானிக் கும் வாக்குகள் இக்கிராமத்துக்கே இருந்ததால், ஒவ்வொரு தடவைத் தேர்தலிலும் வேட்பாளர்கள் இக்கிராமத்தில், கண் வைப்பது வழக்கம். இம்முறை மும்முனைப் போட்டி. கொழும்பில் குடியேறி விட்ட பிரக்கிராசி, அடுத்த ஊர் கிராமச் சங்கத் தலைவர் பிள்ளையார் கோவில் முதலாளி மூவரும் தேர்தலில் குதித்து விட்டனர். பிரசார முழக்கங் களும் லவுட்ஸ்பீக்கர் சத்தமும், ஜீப்புகளின் இரைச்சலும் அந்தத் தொகுதியைக் களேபரப்படுத்தின.
கிராமத்தின் வடக்குப் பகுதியார் எல்லாரும் வல்லி புர முதலாளியின் இனத்தவர்கள். அவர்களின் வாக்கு
142 0 நிலவோ நெருப்போ?

அவருக்கு நிச்சயம். தென் பகுதியிலுள்ள கொட்டில்கள், குடிசைகள் எல்லாம் ஏறி, அங்கு உட்கார்ந்து தன் *சமத்துவ சாமர்த்தியத்தை வல்லிபுரம் நிரூபித்து வந் தார். அவரின் பிரச்சார பீரங்கியான சின்னத்தம்பி வாத் தியார் முதலாளி ஆலயக் கதவை அனைவர்க்கும் திறந்து விட்டதை அடிக்கடி நினைவு படுத்தினார்.
வைத்தீஸ்வர ஐயர் வாக்கெடுப்புத் தினத்தன்று மனச்சாட்சிக்கு வஞ்சகமில்லாமல் தமது வாக்கை முத லாளிக்குத் தான் போட்டிருந்தார். ஆனாலும் வல்லிபுர முதலாளி அத்தேர்தலில் மண்கல்வி விட்டார்!
女 தேர்தல் நடந்து ஒரு கிழமை கூட ஆகியிருக்காது.
உச்சிக்காலப் பூசையை முடித்துக் கொண்டு ஐயர் கோபுர வாசல் கதவுகளை இழுத்துச் சாத்தி, இடுப்பில் சொருகியிருந்த திறப்புக் கோர்வையை எடுத்து கதவின் துவாரத்தில் போட்டுப் பூட்டுகிற பொழுது திடீரென வந்து, காரை நிறுத்தி விட்டு முதலாளி இறங்கினார்.
‘ஐயா! நாளைக்குப் பிராயச்சித்த அபிஷேகம் செய்ய வேணும். ஆயத்தப்படுத்துங்கோ’ முதலாளியின் திடீர் விஜயமும், திடீர் அறிவிப்பும் ஐயருக்கு திகைப்பையூட்டின.
**ஏன் எசமான். கோயிலில் என்ன அநாச்சாரம். நடந்து விட்டது?" ஐயருக்கு காரணம் விளங்கவில்லை.
வரக் கூடாது. என்னை ஏமாத்திப் போட்டான்கள். எனக்கு வோட்டுப் போடுவான்களெண்டு கோயிலைத் திறந்து விட் டன். எல்லாரும் பேய்ப்பட்டம் கட்டிப் போட்டான்கள். எழியவன்கள். எனக்கு வோட்டுப் போடாதவன்களுக்கு என்ரை கோயில்லை என்ன் வேலை? நாளைக்குத் தொடக் கம் இந்தத் தாழ்த்த சாதியள் கோயிலுக்கை போகக்
நா. சோமகாந்தன் () 14?

Page 74
கூடாது, கொலை விழுந்தாலும் விடமாட்டன்'-மூச்சு இரைக்க முதலாளி வார்தைகளைக் கக்கினார்.
*விக்கினேஸ்வரா!” சாத்திய கதவுகளை நோக்கி, கரங்களைக் கூப்பி, ஐயர் கும்பிட்டார்.
முதலாளி சொல்வது எேதுவும் காதில் விழாதது போல வெய்யிலை கிழித்துக் கொண்டு, விடுவிடென ஐயர் வெளியே போய்க் கொண்டிருந்தார்.
கோபுர வாசற் கதவில் திறப்பு கோர்வை அப்படியே தொங்கிக் கொண்டிருந்தது.
-X * காப்பி வைத்ததைக் கூட எடுத்துக் குடிக்காமல்; காலங்காத்தாலே யோசனைலே மூழ்கிட்டியள், இன்றைக்கு வயல் விதைப்பிருக்கெல்லோ" - பார்வதி அம்மாளின் குரல் அவரின் சிந்தனையைத் துடித்து விட்டது.
ஆறிப்போன கோப்பித் தம்ளரை அப்படியே எடுத்து மடமடவென வாயில் ஊற்றிக் கொண்டார்.
தபாற்காரனும் வந்து வாசலில் மணி அடித்தான். கடிதத்தை வாங்கிப் புரட்டிப் பார்த்தார். மூத்த மகன், சவுதியில் கனரக வாகன ஒட்டியாக இருப்பவன் அனுப்பியிருந்தான். பார்வதி அம்மாளிடம் அ  ைத க் கொடுத்து விட்டு, கோடிப்பக்கம் சென்றவர்
வலத்தோளில் கலப்பையும், கையில் ஓரிணை எருது களுமாக வெளியே கிளம்பி விட்டார் இடத்தோளில் வெள்ளை வெளேர் என்ற திரளான பூணுரலும், நெற்றி யில் விபூதிப் பூச்சும் சந்தன திலகமும் காலைச் சூரியனின் இளங்கதிர்களில் மின்னிக் கொண்டிருந்தன!
பிள்ளையார் கோவில் உஷத் கால மணி இன்னும் ஒலிக்கவில்லை!
(மல்லிகை 1986)
ロ ロ ロ
144 0 நிலவோ நெருப்போ?