கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சட்டநாதன் கதைகள்

Page 1


Page 2

சட்டநாதன் கதைகள் க. சட்டநாதன்

Page 3
Saddanathan Kathaikal K. Saddanathan 21, Saddanathar Road, Nallur Jaffna Sri Lanka
(C) Author
First Edition : July 1995
Printed at : Surya Achagam, Madras-41
Published in National Art and Literary Association
by South Asian Books 611, Tinayar Sahib II Lane Madras - 600 002.
Rs.. 45-00
Published and Distributed in Sri Lanka by Tamil publication and Distribution Network 44, 3rd Floor, C.C. S.M. Complex Colombo-II Тр. 335844 Fax. 94 - 1 - 333279
சட்டநாதன் கதைகள் க. சட்டநாதன் 21, சட்டநாதர் சாலை, நல்லூர், யாழ்ப்பாணம், இலங்கை
உரிமை : ஆசிரியர்
முதல் பதிப்பு : ஜூலை 1995
அச்சு சூர்யா அச்சகம், சென்னை.
வெளியீடு தேசிய கலை இலக்கியப் பேரவையுடன்
இணைந்து
சவுத் ஏசியன் புக்ஸ், 611, தயார் சாகிப் 2-வது சந்து, சென்னை-600 002
ரூ. 45.00
அட்டைப் படம் : யாழ்ப்பாணம் - நல்லூர் புராதன கட்டட முகப்பு.

நன்றி 9 சுப்பிரமணியன் O மல்லிகை O திசை O நங்கை O நங்கூரம் O வெளிச்சம் C பேபி போட்டோ O சவுத் ஏசியன் புக்ஸ் O தேசிய கலை இலக்கியப் பேரவை (9 சூர்யா அச்சகம்

Page 4
எனது மைத்துனர்
FM RTM
அவர்களுக்கு

O உறவுகள் O பிச்சைப் பெட்டிகள் O மாற்றம் O இப்படியும் காதல் வரும் O பக்குவம் O 9(5ibly O 5(5.5 O bl61st O வித்தியாசமானவர்கள் O நகர்வு O கவளம் O அவர்களது துயரம் O நீளும் பாலை

Page 5
Saddanathan is Conscious of Changing Values,
the disintegration of the Nuclear family and
the new role of Women in Society...
Journal of South Asian Literature. Vol. 22

பதிப்புரை
ஆசிரியப் பணி ஆற்றிவரும் திரு. க. சட்டநாதன் அவர்கள் கலை இலக்கியத் துறையில் ஆர்வம் மீதூரப் பெற்றவர். எழுத்துப் பித்துப் பிடித்தவர். புதுமைப்பித்தன் முதல் புதுமையைப் பொச்சடித்து ரசிப்பவர்.
மனிதன், குடும்பம், சுற்றம். அயலவர் எனச் சுழலும் சமுதாயத் தில் நடமாடும் ஒவ்வொரு மனிதர்களின் விருப்பு, வெறுப்பு, இன்பம், துன்பம், அன்பு, ஆசை, காதல், பாசம், கோபம், கொதிப்பு, வீரம் விவேகம் என்ப பலவாறாக இழையோடும் உறவின் அந்தரங்க உலகை சாதாரண துல்லியமான வசனப் பின்னல்களூடு வெகு இலகு வாக வாசகர்கள் முன் படைத்து விடுகிறார் சட்டநாதன்.
சட்டநாதன் கதைகளை தேசிய கலை இலக்கிய பேரவையினூ டாக வெளியிடுவதில் மகிழ்வடைகிறோம். எம்முடன் இணைந்து வெளியீட்டு முயற்சியில் ஒத்துழைக்கும் சவுத் ஏசியன் புக்ஸ் நிறுவகர் எம். பாலாஜிக்கும் சூர்யா அச்சகர் சங்கரனுக்கும் ஊழியர்களுக்கும் எமது நன்றிகள்.
இந்நூல் பற்றிய வாசகர்களின் அபிப்பிராயங்களைக் கோரு கின்றோம்.
தேசிய கலைஇலக்கியப் பேரவை
14, 57-வது ஒழுங்கை கொழும்பு-06.

Page 6
JLLhTh6ðf6ðI ll6)LÍ||MöÍ
‘கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து என்னைப் புதிய அநுபவ நிலைகளுக்கு இட்டுச் செல்வதன் மூலம் தவிர்க்க முடியாதவர் ஆகிவிட்டவர் சட்டநாதன்'
பத்தாண்டுகளுக்கு முன்னர் அலை (இதழ் 25- 1985) இதழில் என்னால் முன்வைக்கப்பட்ட கணிப்பு இது. இக்கணிப்பு தவறாக வில்லை - சட்டநாதன் அவர்கள் என்னை ஏமாற்றவில்லைஎன்பதைக் காலம் நிரூபித்துள்ளது. தமிழ்ச் சிறுகதையில் சிறப்பாக ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையுலகில் தனக்கெனத் தனி அடையாளத்தை பதிவு செய்துவிட்ட ஒருவராக அவர் திகழ்கிறார். எழுபதுகளில் படைப்புலகில் அடியெடுத்து வைத்த அவர், கடந்த கால் நூற்றாண் டுக் காலப்பகுதியில் எழுதியவற்றின் தொகை குறைவுதான். ஆயினும் அத்தனையும் திட்டமிட்டு கலைசார்ந்த அக்கரையோடு எழுதப் பட்டவை; சமூகப் பொறுப்புணர்வின் அடியான ஆழ்ந்த மனித நேயத்தில் முகிழ்த்தவை. இவ்வகையில் வரலாற்றில் தனிக்கவனிப் புக்கு உரியவராகிவிட்ட சட்டநாதன் அவர்களின் படைப்புலகம் தொடர்பான இந்த அறிமுகக் குறிப்பை வழங்க எனக்குக் கிடைத் துள்ள வாய்ப்பு மிகுந்த மனநிறைவைத் தருகிறது.

IX
யாழ்ப்பாணம், வேலனைக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட வரான கனகரத்தினம் சட்டநாதன் அவர்கள் தமிழகத்தில், சென்னை விவேகாநந்தாக் கல்லூரியில் பயின்று, B.Sc. பட்டம் பெற்றவர்; ஆசிரியப் பணியை மேற்கொண்டுள்ளவர். நவீன கலை இலக்கியத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் மார்க்ஸிம் கோர்க்கி, அன்டன்செக்கோவ், புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன், தி ஜானகிராமன், த. ஜெயகாந்தன் முதலியவர்களின் அளுமை களால் ஈர்க்கப்பட்டவர்; இவ்வாறான ஈர்ப்புக்கள் தந்த அருட்டுணர்வுகளால் படைப்புத்துறையில் அடியெடுத்து வைத்தவர். இவரது முதற்படைப்பான நாணயம்’ என்ற சிறுகதை 1970ஆம் ஆண்டு வீரகேசரி இதழில் வெளிவந்தது. படைப்பு முயற்சியோடு பத்திரிகைத் துறையிலும் இவர் பணியாற்றியுள்ளார். 1972-74 காலப்பகுதியில் ஈழத்தில் வெளிவந்த பூரணி என்ற இலக்கிய இதழின் இணையாசிரியர்களில் ஒருவராக இவர் திகழ்ந்துள்ளார். வீரகேசரியிலும் சிலகாலம் பணியாற்றியுள்ளார்.
சட்டநாதன் அவர்கள் படைப்புத்துறையில் அடியெடுத்து வைக்கத் தொடங்கிய 1970களின் ஆரம்ப ஆண்டுகளில், ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைத் துறை ஒரு முக்கிய வரலாற்றுக் கட்டத்தை தியிருந்தது. 1930களின் பிற்கூற்றில் முதல்மூவர் எனப்படும் "இலங்கையர்கோன்', ‘சம்பந்தன்', சி. வைத்திலிங்கம், ஆகியோரின் கைவண்ணத்தால் வடிவச் செம்மையுடன் பயிலத்தொடங்கிய ஈழத்துச் சிறுகதை, 1950-60 காலகட்டத்தில் ஈழமண்ணின் சமூக-பண்பாட்டுப் பிரச்சினைகளில், ஆழமாகக் காலூன்றிய போது, உருவமா? உள்ளடக்கமா? எதற்கு முதன்மை?’ என்ற வாதம் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. இந்த வாதப் பிரதிவாத அலை ஓரளவு ய்ந்து, கலைத்தன்மை, சமூக அக்கறை ஆகிய இரண்டுமே ஒரு கலைப்படைப்பின் சமநிலைக்கூறுகள் என்ற உணர்வோட்டம் தலையெடுத்த காலப்பகுதியாக 1970 களைக் குறிப்பிடலாம்.
இவ்வாறான உணர்வோட்டத்துடன் இலக்கிய அரங்கில் அடியெடுத்து வைத்த முதல் தலைமுறையினரில் ஒருவராகவே திரு. க. சட்டநாதன் எமக்கு அறிமுகமாகிறார். ஆழமான
மனிதநேயம், அதனை அநுபவ முழுமையுடன் வாசகனுக்குத் தொற்ற வைக்கவல்ல சொல்நயம் என்பன இவரின் படைப்பாளுமை யின் சிறப்புக் கூறுகள். இவற்றை உணர்வு பூர்வமாகப் பேணிக்கொள்வதில் அவர் காட்டி வந்துள்ள அக்கறையே வரலாற்றில் அவருக்குத் தனியான அடையாளத்தை வழங்கியுள்ளது.
இவரது படைப்புக்கள் ஈழத்தின் மல்லிகை, அஞ்சலி, பூரணி, அலை, நங்கை, திசை, வெளிச்சம், வீரகேசரி, நங்கூரம் ஆகிய

Page 7
Χ
இதழ்களில் வெளிவந்துள்ளன. சில படைப்புக்களைப் பிறநாட்டு இதழ், நூல் என்பன மொழிமாற்றம் செய்து வெளியிட்டுள்ளன. Journal of South Asian Literature Vol. 22. Asian Studies
Centre, Michigan State University, U. S. A.; The Penguin New Writing in Srilanka. Edited by Prof. D.C.R.A. Goonatilleke.
இவரது முதலாவது சிறுகதைத் தொகுதியான மாற்றம் 1980களில் வெளிவந்தது. அதில் இடம் பெற்ற இரு கதைகள் (மாற்றம், உறவுகள்), அவை இதழ்களில் வெளியான காலத் திலேயே 'தமிழ்க் கலைஞர் வட்டம் தகவம் என்ற நிறுவனத்தின் பரிசுகளைப் பெற்றுள்ளன. இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுதியான உலா 1992இல் வெளிவந்தது. இத்தொகுதிக்கு யாழ் இலக்கிய வட்டம், அகில இலங்கை சுதந்திர இலக்கிய அமைப்பு, வடகீழ் மாகாண அரசின் சாகித்திய அமைப்பு, இலங்கைச் சாகித்திய மண்டலம் ஆகியன பரிசில்கள் வழங்கிக் கெளரவித்துள்ளன. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள "பக்குவம்' என்ற கதை, அது இதழில் வெளிவந்த காலப்பகுதியிலே மேற்சுட்டிய "தகவம்' பரிசையும் ஈட்டியது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இவ்வாறு ஈழத்திலும் வெளிநாடுகளிலும் தனிக்கவனத்தையும் கணிப்பையும் கெளரவத்தையும பெற்றுள்ள இவரது பன்னிரு சிறுகதைகளையும் ஒரு குறுநாவலையும் உள்ளடக்கியதாக சட்டநாதன் கதைகள் என்ற இத்தொகுதி அமைகிறது.
சட்டநாதன் அவர்களது படைப்புலகின் பிரதான தளம் வேலணைக் கிராமம் ஆகும். பாரம்பரியமான நிலவுடைமை முறைமை யுடன் கூடிய சடங்கு சம்பிரதாயங்கள், வாழ்க்கைமுறை, சாதி யமைப்பு சார்ந்த ஏற்றத்தாழ்வுணர்வு என்பவற்றின் பிடிக்குள் சிறைப்பட்டிருக்கும் மேற்படி கிராமியக் களத்தில் நிகழ்ந்துவரும் மாற்றங்கள், விழுமியங்களின் சிதைவுகள் என்பனவே இவரது கதைகள் பலவற்றினதும் தொனிப் பொருள்களாகும். தலைமுறை வேறுபாடு, கல்வி . தொழில் என்பன சார்ந்த அசைவியக்கங்கள், நகர நாகரிகத் தொடர்புச் சூழ்நிலைகள், அண்மைக்கால இந்திய, சிங்கள ஆக்கிரமிப்புச் சூழல்களிள் அவலநிலைகள் முதலியன மேற்படி மாற்றம், சிதைவு என்பவற்றுக்கான முக்கிய காரணிகளாகும். இவற்றின் பகைப்புலகத்திலே சராசரி மனித ஆசாபாசங்கள், "காதல் - பாலியல்' உறவுகள், குழந்தை உள்ளங்களின் உணர் வலைகள் முதலியவற்றை இயங்க வைத்து வாழ்க்கையை விமர் சிக்கும் முயற்சிகளாகவே இவரது கதைகள் பலவும் உருப்பெற் றுள்ளன. சுருங்கக் கூறுவதானால் மாறிவரும் சமூக விழுமியங் களுக்கும் சூழ்நிலைசார் அவலங்களுக்கும் மத்தியில் தமது இருப்பை

XI
அர்த்தப்படுத்திக் கொள்ளமுயலும் சராசரி மனித மனங்கனின் நாடித் துடிப்புக்களின் பதிவுகளே சட்டநாதன் கதைகள் எனலாம். இப்பதிவு களின் ஊடாக சூழ்நிலைகளிள் கைதிகளாக வாழ்ந்து கொண்டு நமது கவனிப்பையும் அன்பையும் யாசித்து நிற்கும் பலரது முகங்கள் எங்களுக்கு அறிமுகமாகின்றன. அவர்கள் மீது எம் உள்ளத்தில் பரிவு ஏற்படுகிறது. இப்பரிவுணர்வைக் கிளர்ந்தெழ வைப்பதில் சட்டநாதன் ஈட்டியுள்ள வெற்றியே மேற்குறித்தவாறு அவர் எய்தி யுள்ள கவனிப்பு,கணிப்பு, கெளரவம் என்பவற்றுக்குஅடிப்படை ஆகும்.
இத்தொகுப்பில் இடம் பெறும் கதைகளில் *உறவுகள்", மாற்றம்’, ‘இப்படியும் காதல் வரும்', 'வித்தியாசமானவர்கள்", ஆகியனவும் ‘நீளும்பாலை' என்ற குறுநாவலும் காதல் - பாலியல் சார் உறவுணர்வுகளின் இயங்கு நிலைகளின் ஊடாக சமூகத்தை விமர்சனம் செய்பவை. மலரினும் மெல்லிது’ என வள்ளுவர் சுட்டி யுள்ள “தாம்பத்திய சுகம் சில 'அவசரங்களாலும் மனக்கோணல் களாலும் சிதைவடைவதை முதலிரு கதைகளும் சுட்டுகின்றன" குடும்பத் தலைவர்கள் மத்தியில் நிலவும் பொறுப்புணர்வற்ற போக்கு, ஒழுக்கக் குறைபாடு என்பன இளைய தலைமுறையில் நிகழ்த்தும் உளவியல் தாக்கத்தை அடுத்து வரும் இருகதைகள் பேசுகின்றன. பொருளியல் ஏற்றத்தாழ்வு சமூக அந்தஸ்துணர்வு என்பவற்றின் மத்தியில் சிதைக்கப்படும் இளமை உணர்வுகளின் கண்ணிர்க்கதை * நீளும்பாலை”
கிராமியக் களத்தின் இளைய தலைமுறையினர் கல்வி வளர்ச்சி யாலும் தலைநகர வாழ்க்கைச் சூழலாலும் எய்தும் உலகநோக்கின் ஊடாக பிறந்த மண்ணின் சம்பிரதாயங்கள், விழுமியங்கள், என்ப வற்றை விமர்சித்து அவற்றினின்று விடுபட முயலும் உணர்வோட் டங்களை உறவுகள்', 'இப்படியும் காதல் வரும்’ என்பவற்றில் அவதானிக்க முடிகிறது. இதனை ஒரு இயல்பான தர்க்கரீதியான உள எழுச்சியாகக் காட்டுவது இரண்டாவது கதை. ஆனால் உறவுகள் கதை, எதிலும் அவசரம் கொண்ட ஆணொருவனின் மனவக்கிரம் பற்றிய விமர்சனமாக அமைந்து விடுகிறது. மனைவியிடம் கிட்டாத தாம்பத்திய சுகத்தைத் தாழ்த்தப்பட்ட குலப் பெண்ணொருத்தியிடம் எய்தும் தடிச்ச சாதிமான் ஒருவரின் கதையாக விரியும் மாற்றம்" சாதியுணர்வு தொடர்பாக நிகழும் நெகிழ்ச்சியைச் சுட்டியுணர்த்து கிறது. மேற்படி புதிய தாம்பத்தியத்தில் விளைந்த இளந்தளிருக்குக் கிடைக்கும் குடும்ப அங்கீகாரம் மூலம் இது உணர்த்தப்பட்டுள்ளது. கற்பு, ஒழுக்கம் என்பவற்றைப் பேசும் சமூகத்தின் சில பகுதி களில் காணப்படும் 'உள்ளழுகல் நிலையைத் தோளுரித்துக்

Page 8
XII
காட்டும் முறைமையில் அமைந்துள்ள ‘வித்தியாசமானவர்கள்' கதை, இவ்வக்கிரப் போக்கிற்கு எதிரான இளந்தலைமுறையின் புதிய பெண்மையின் - எழுச்சியையும் உணர்த்தியமைகிறது படித்துப் பட்டம் பெற்றும் தன்னைப் பொருளியல் நிலையில் நிமிர்த்திக் கொள்ள முடியாமல் ஆசாபங்கமடைந்த இளைஞனின் நினைவலைகளாக விரியும் நீளும் பாலை கதை சமூக அழுத்தங் களிலிருந்து விடுபடத்துடிக்கும் இளம் உள்ளங்களின் தவிப்பைப் பேசு கிறது. அத்துடன் சமூக மட்டத்தில் பொருள்சார் மேல் நிலையை எய்த முனையும் நடுத்தரவர்க்க மனோபாவத்தின் வீழ்ச்சியையும் உணர்த்துகிறது. ‘காதல்-பாலியல் உறவுணர்வு' தொடர்பான மேற்படி கதைகள் அனைத்திலும் பொதுவாகப் புலப்பட்டு நிற்கும் ஒரு வரலாற்றுக் காட்சி ‘கூட்டுக் குடும்ப சமூகத்தின் உடைவும் அதன் விழுமியங்களின் சிதைவும் ஆகும்.
பொருளியில் நிலை, பண்பாட்டு நிலை என்பவற்றில் சீர்குன்றிப் பிச்சைப் பெட்டி ஆகிவிட்ட ஒரு சமுகத்தின் வெட்டுமுகக் காட்சியாக அமைகிறது. ‘பிச்சைப்பெட்டிகள்’ கதை. ஒரு பஸ் பயணத்தில் தொடர்பு கொள்ளும் கதை மாந்தரூடாக ஒரு சமூகம் முழுவதுமே காட்சிப் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமூகக் குறைபாடுகளைக் குழந்தைகளின் மனப்பதிவுகள் ஊடாக விமர்சிக்கும் பாங்கில் அமைவன ‘அரும்பு', 'உலா' ஆகிய கதைகள். குறிப்பாக ஆசிரியப் பணிபுரிவோர் குழந்தையுள்ளங்களோடு பழகும் போது கைக்கொள்ள வேண்டிய அணுகுமுறையொன்றை நாசூ க் காகச் சுட்டியுணர்த்துங்கதை ‘அரும்பு’. குழந்தையுள்ளங்களின் ஆவல், ஆர்வம், என்பவற்றைத் தூண்டிவிட்டு குற்றுயிராக்கித் துடிக்கவைக்கும்-அல்லது குழந்தையுள்ளங்களைப் புரிந்து கொள்ளும் திராணியற்ற-வயது வந்தவர்களின் செயற்பாடுகளின் விமர்சனமாக அமைகிறது. "உலா’. குழந்தை உளவியலுக்கு ஏற்பவும் கதை கூறும் திறன் தனக்கு உளது என்பதை இவ்விரு கதைகளூடாகவும் உணர்த்துகிறார் சட்டநாதன்.
ஏனைய ஐந்து கதைகளும் முறையே இந்திய அமைதிப்படை(?), சிங்கள பேரினவாத ராணுவம் என்பவற்றின் ஆக்கிரமிப்புச் சூழல் களில் இங்கு மனிதம் சீரழிக்கப்பட்ட வரலாற்றின் பிரசவங்கள். இந்திய அமைதிப்படையின் கொடுஞ்செயலுக்குப் பலியாகும் ஒரு அப்பாவி முதியவரின் அவலக்கதை ‘கவளம்" இத்தகைய போர்ச் சூழலில் அகால மரணத்தைத் தழுவிக் கொண்ட ஒருவரின் மரண வீட்டுக்குச் சென்று மீளும் ஒருவரது மன அழுத்தமும் பின்னர் அது விடுபட்ட நிலையும் ‘பக்குவம் கதையாக விரிகின்றன. "ஷெல்" வீச்சுக்குத் தலைவனைப் பறிகொடுத்த குடும்பம் ஒன்றின் இளந்தளிர்

XIII
மீது இயல்பாக ஏற்படும் மனித நேயத்தின் சித்திரிப்பு 'திருப்தி கதை. அண்மைக் காலத்தில் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட தீவகமாந்தரின் புலம்பெயர் சூழ்நிலை சார்ந்தனவாக "நகர்வு' 'அவர்களது துயரம்’ என்பன அமைகின்றன. இந்த அவலங்களின் பகைப்புலத்தில் காதல், பாசம் ஆகிய உணர்வலை களை மையப்படுத்திக் கதைகள் வளர்த்துச் செல்லப்படுகின்றன. ஒரு கிராமத்தில் ஒட்டு மொத்த துயரத்தையும் காட்சிப்படுத்திய சிறப்பு இவ்விரு கதைகளுக்கும் உரியது.
மேற்படி கதைகள் அனைத்தையும் தொகுத்து நோக்கும்போது மனிதநேயம் மிக்கதும் ஏற்றத்தாழ்வுகள் அற்றதும் அமைதி நிறைந் ததுமான ஒரு சமுகச் சூழலை சட்டநாதன் அலாவி நிற்பது புலனா கின்றது. குறிப்பாக ‘ஆண்-பெண்' சமத்துவம் குழந்தைகள் மீது பரிவுணர்வு என்பன கொண்ட ஒரு உலகை அவர் நாடி நிற்பது முனைப்பாகத் தெரிகிறது. சாதி தொடர்பான ஏற்றத்தாழ்வுணர்வு நாளடைவில் மங்கி மடிந்துவிடும் என்ற நம்பிக்கையும் அவர் படைப் புக்களில் புலப்பட்டு நிற்பது தெளிவு. மேற்படி ஆர்வம், நம்பிக்கை என்பவற்றை எந்தச் சந்தர்ப்பத்திலும் வெளிப்படையாகப் பேசாமல் கதை கூறும் முறைமை, கதாபாத்திரங்களை சிந்திக்கவும் செயல் படவும் வைக்கும் முறைமை என்பவற்றினூடாக நுட்பமாக உணர்த்த வல்லவராக அவர் திகழ்வதைப் பல கதைகளிலும் நோக்க முடிகிறது. w
"பிளிறிக்கொண்டு அட்டகாசம் செய்யும் யானையைப்
போலன்றி, மிக அடக்கமாகவும் மனிதத்தன்மையோடும் தனது பாத்திரங்களை நோக்கி அவர்களுடைய உறவுகளினூடாகச் சமுதாயத்தைப் பற்றி, குறிப்பாக யாழ்ப்பாணச் சமுதாயத்தைப்பற்றி நாசூக்காகத் தமது கதைகள் மூலம் சிந்திக்கத் தூண்டினார்." என திரு. ஏ. ஜே. கனகரத்தினா அவர்களும் (உலா அணிந்துரை) 'சட்டநாதனுடைய கதைகளில் கோஷங்கள் இல்லை.
சுலோகங்கள் இல்லை, ஆயினும் அவை பிரசாரம் செய்கின்றன. எதுசரி எதுபிழை என்று தன்னை நீதிவானாக்கித் தீர்ப்பு வழங்காமற் கதைப்போக்கில் நியாய அநியாயங்களை அழகாக உணர்த்துகிறார்."
என பேராசிரியர். சி. சிவசேகரம் அவர்களும் (ஓசை காலாண்டிதழ் 1993 ஆடி - புரட்டாதி) முன்வைத்துள்ள சட்டநாதனைப் பற்றிய கணிப்புக்கள் பொருத்தமானவையாகவே உள்ளன.

Page 9
XIV
பொதுவாக சிறுகதை என்பது குறித்த ஒரு சூழ்நிலையின் அடியாக அல்லது சம்பவத்தின் அடியாக உருவாகும் உணர்வு நிலையின் தர்க்கரீதியான பரிணாமமாகும். மேற்படி உணர்வுநிலை தொய்வடையாத வகையில் செறிவான சொற்களால் இறுக்கமாகக் கட்டியமைக்கப்படல் அதன் செய்நேர்த்தியாகும். இவ்வாறான செய் நேர்த்தி சட்டநாதன் அவர்களுக்குக் கைவந்த ஒன்றாகவே தெரிகிறது பல கதைகளை இதற்குச் சான்றாகக் காட்டலாம். குறிப்பாக மாற்றம்’, ‘உலா', 'பக்குவம்’ முதலியவற்றில் இதனைச் சிறப்பாக அவதானிக்கலாம். பின்னைய இரண்டிலும் உணர்வோட்டங்கள் வார்த்தைகளில் கச்சிதமாகச் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன.
சட்டநாதனது கதாபாத்திரங்கள் பொதுவாகச் சூழ்நிலையின் கைதிகள் என்றும் வாசகரிடம் அன்பையும் கவனிப்பையும் யாசிப்ப வர்கள் என்றும் முன்னர் நோக்கினோம், இது பொதுப்பண்பாயினும் பெண்பாத்திரங்களைப் பொறுத்தவரை புலப்பட்டு நிற்கும் குறிப்பிடத் தக்க சிறப்புப் பண்பொன்றை இங்கு சுட்டுவது அவசியம். அவர்கள் ஓரளவு மனப்பக்குவம் மிக்கவர்களாக, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி அறிவுபூர்வமாகச் சிந்திப்பவர்களாக, வாழ்க்கையை அதன் இயல் பான தடத்தில் எதிர்கொண்டு மனநிறைவு பெறுபவர்களாக, முடியு மானால்எல்லாத் தடைகளையும் மீறித் தம் தனித்தன்மையை நிலை நாட்டிக் கொள்ள வல்லவர்களாகத் திகழ்வதை மேற்படி கதைகளில் கண்டுணர முடியும். ‘உறவுகள்" கதையின் கமலா, "இப்படியும் காதல் வரும் கதையின் விமலா, “வித்தியாசமானவர்கள்" கதையின் வசந்தி நீளும் பாலையின் மகேஸ்வரி, சியாமளா, “நகர்வு' கதையின் வத் சலா ஆகிய அனைவருமே மேற்குறிப்பிட்ட பண்புகளிற் சில வற்றையோ அன்றேல் எல்லாவற்றையுமோ பிரதிபலிப்பவர்களாகத் திகழ்வதை அவதானிக்கலாம். இவ்வாறான பாத்திரப் படைப்பானது வலிந்து மேற்கொள்ளப்பட்ட ஒன்றாக நாம் கருத வேண்டுவதில்லை. இம்மண்ணின் இயல்பான பெண்மையின் வகை மாதிரிகளாக இவர்களைக் கருதுவது தவறாகாது. மேலும் சட்டநாதன் அவர்கள் தான் காணவிழையும் சமூகம் அல்லது உணர்த்த விழையும் தீர்வுகள் என்பவற்றை இப்பெண் பாத்திரங்களின் சிந்தனை, செயல் ஆகியவற்றினூடாகவே உணர்த்த முற்பட்டுள்ளார் என்றும் கருத
முடிகிறது.
புனைகதையின் உயிரோட்டமான அம்சம் அதன் உரைநடை யாகும். அநுபவத்தைத் தொற்றவைப்பதற்கேற்ற வகையில் தேர்ந்த -உணர்ச்சிக் கூறுகள் நிறைந்த-தாகவும் அதே வேளை சமூக யதார்த்தத்தினின்று விட்டிசைக்காததாகவும் அது O அமைதல் அவசியம். சட்டநாதன் கதைகளில் இவ்வாறான நடைச்சிறப்பைப
se

XV
பரவலாக நோக்கலாம். சராசரி யாழ்ப்பாணத் தமிழ்நடையில் கதை கூறி வரும் அவர் பாத்திர உரையாடல்களில் தேவைக்கேற்ப பேச்சு வழக்கையும் கையாள்கிறார். அவ்வப்போது ஆங்கிலச் சொற்களும் தொடர்களும் கூட பொருத்தமான இடங்களில் பயில்கின்றன. மிக இயல்பாக, அதே சமயம் உணர்ச்சிச் செறிவுள்ள இவரது உரை நடைக்குச் சான்றுகளாக பின்வரும் கதைப்பகுதிகளை நோக்கலாம்:
* 'óf61 fr! ரேக்றெஸ்ற், ஒரு நிமிஷத்திலை குளிச்சிட்டு
வாறன், வந்து உனக்குச் சமைச்சுப் போடிறன்.' * சமையல் எனக்கு இண்டைக்கு மட்டுந்தானா?"
அவள்-அவனை என்ன? என்பது போலப்பார்த்து நின்றாள் 'விமல். டியர். நான் உன்னை. நீ எனக்கு வேணும்'.
சொற்கள் தடுமாற அவளை அவன் நெருங்கினான்.
'சிவா டோன் பி சென்ரிமென்ரல். இதைச் சொல்லத்தான் நீ
இண்டைக்குக் குடிச்சனியா?"
Gus)''
அவள், தன்னை நோக்கி வாஞ்சையோடு நெருங்கிவரும் அவனையே பார்த்தபடி நின்றாள், அவள் கண்கள் பனித்து விடுகின்றன.
'விமலா டோன்பி சென்ரிமென்ரல்'
-இப்படியும் காதல் வரும்
"இந்தச் சின்னப்பெட்டை. மார்பளவு உயரம் கூட வராத இந்த உருவத்திலை வயித்துப் போக அப்பிடி என்ன இருக்குது? பொங்கி வழிந்து பூவாயுதிரும் ஒரு கிராமத்தனம். இடையைத் தாண்டிப் பிருஷ்டபாகம் வரை அசைந்து, அலையும் கூந்தல். துருதுருவென்று நிலைகொள்ளாது புரளும் பார்வை. தரித்து ஓரிடத்தில் நிற்காது பறக்கும் பரபரப்பு மெல்லிய நிறங்களையே தேர்ந்தணியும் ரசனை. மனசிலை எதையுமே போட்டு மறைக்காமல் வெள்ளைத்தனமாய்ப்" பேசிற பேச்சு, இவையா? இல்லை. இதுகளுக்கு மேலாலை மனசும் உடலும் கரைஞ்சு போறமாதிரி உருகும் பரிவா. எது?”
-வித்தியாசமானவர்கள்
இவன் சைக்கிளை எடுத்தபோது ஈரக்கையைத் தனது சீத்தைச் சட்டையில் துடைத்தபடி ஓடி வந்தாள்.

Page 10
XVI
'மழை பெய்தது. அதுதான்.'
'மழை பெய்தால் என்னம்மா? உனக்கு ஏன் இந்தத் தொந்தரவு."
"தொந்தரவா. எனக்கா?"
அவள் உதடு நெகிழச் சிரித்தாள்.
உடைந்து போன உள்ளம் நிரவல் பெற்றுப் பரவசம் கொள்ள, அவளை வாஞ்சையுடன் பார்த்தான்.
வாழ்வின் அர்த்தமே அவள் என்பது போலவும், உயிர்ப்பசையின் தொடர்ச்சியை ஒரு சுடராய் அவள் தாங்கிநிற்பது போலவும் அவனுக்குத் தோன்றியது.
-பக்குவம்
சட்டநாதனின் படைப்புலகம் பற்றிய இந்த அறிமுகக் குறிப்பைப் பின்வரும் கணிப்புரையுடன் நிறைவு செய்து வாசகர்களிடமிருந்து விலகிக் கொள்கிறேன்.
மிகக் குறைவான கதைகளையே எழுதி, நிலையான இடத்தைப் பெற்றுவிட்ட சட்டநாதன் அவர்கள் இன்றை ஈழத்துச் சிறுகதையின் உயர்தரத்துக்கு ஒரு "உரைகல்’ ஆகக் கொள்ளத் தக்கவர். குறு நாவலில் அவர் பதித்துள்ள முதலாவது அடி எதிர்காலத்தில் நாவ லிலக்கியத்தில் அவர் நிகழ்த்தக் கூடிய சாதனைகளுக்குக் கட்டியம் கூறுவதாக உள்ளது.
கலாநிதி நா. சுப்பிரமணியன் தமிழ்த்துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்,
இலங்கை,
12. 3. 1995.

உறவுகள்
கொட்டாஞ்சேனை மாரியம்மன் கோயிலை அடுத்து, வடக்கே கிளை பிரியும் சந்தில்-பள்ளத்தில், ஒரு மாடி வீட்டின் கீழ்ப்பகுதியில், ஒதுக்துபுறமாக உள்ள ஓர் அறையில் அவனும் அவளும் குடியிருக்கிறார்கள்.
இருவருமே வேலை செய்வதால் மாலை ஐந்து மணிக்கு மேல்தான் அவர்களை அந்த அறையில் காணலாம்.
பகற்பொழுதெல்லாம் அவர்களது அந்த அறை பூட்டியே கிடக்கும். அப்பொழுது அவர்கள் எங்காவது "அவுட்டிங்' அல்லது நண்பர்களது வீடுகளுக்குப் போயிருப்பார்கள். சில சமயங்களில் இலக்கியக் கூட்டம் அது இதென்று அவள் போக-பிடிக்காத, பிடிபடாத விஷயமானாலும்கூட - அவனும் போவான். அந்த நடைமுறைகூட இப்பொழுது சிறுகச்சிறுகச் குறைந்துவிட் டிருக்கிறது.
*ーl

Page 11
2 O உறவுகள்
அவள் அரசுத்துறையில் எழுதுவினைஞராகப் பணியாற்று கிறாள். அவன் தனியார் கொம்பனியொன்றில் சொற்ப ஊதியத்தில் ஏதோ உத்தியோகம் என்று பேர்’ பண்ணுகிறான். இருவரது ஊதியமும் ‘அப்படி இப்படித்'தான். இருந்தும் அவளுக்குச் சம்பளம், சலுகைகள் சற்று அதிகம். பட்டதாரியான அவன் இருநூறுக்கு
மட்டையடிக்க அவள் முந்நூற்றைம்பதுவரை எடுத்தாள்.
இருவருடைய மாத வருமானமும் கழிவுகள் போக ஐந்நூறு ரூபாயைத் தாண்டாத நிலை, அதில், அவர்கள் குடியிருக்கும் அறை ‘சுளையாக' நூறை வாடகையாக விழுங்கி விடுகிறது, மீதத்தில்தான் குடித்தனம் நடைபெறுகிறது.
இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணம் நடந்தபின் நாலைந்து மாதங்கள் இவர்களிடையே எவ்வளவு நெருக்கமும் நெகிழ்வும். அதன்பின், அவர்களது தாம்பத்திய உறவில் விழுந்துவிட்ட சிறுவிரிசல், நிரவுபடாமற் பெரிதாகி, இப்பொழு தெல்லாம் ஒரு வருஷ காலமாக இருவரும் எப்பொழுது பிரிந்து போவது என்ற அபாயத்துடன் இருக்கிறார்கள்.
இதற்கெல்லாம் அவளைக் காரணம் சொல்ல முடியாது. அவன்தான் காரணம். பிரிந்து போவதிற்கூட அவள் ஆர்வங் காட்ட வில்லை அவன்தான் திடீரென இப்பொழுது ‘அதுபற்றி மிகுந்த ஆர்வங்கொண்டவனாய் பேசுகிறான். அது பேச்சளவில்தான் என்பது அவளுக்கு தெரியும்.
அவளில்லாமல் அவனால் இருக்க முடியாதென்பது அவளுக்குத் தெரியும். அவன்மீது அவளுக்கு அனுதாபம் உண்டு. ஆனால், வரவர அவனது முரட்டுத்தனங்களால் வாழ்வில் - அவனுடன் வாழ்வதில், ஒரு கசப்பு லேசாக அவளுக்கு ஏற்பட்டிருக்கிறது இருந்தும் அவ னுடன்தான் அவள் வாழ்கின்றாள். இறுதிவரைக்கும் அவனுடன்தான் வாழ்ந்துவிடுவது என்றும் உறுதிபூண்டுள்ளாள். ஆனால், எதற்குமே அவசரப்படும் அவன் இவளுடன் இறுதிவரை வாழ்ந்து விடுவானா? லேசான ஒரு பயம் அவளை அலைக்கழிக்கவே செய்கிறது.
இந்த வாழ்க்கையிலும், அவளுக்கு ஓர் இனிமையான பகுதி உண்டென்றால் அதுதான் அவளது எழுத்தும் இலக்கியமும், அதில் அவள் தன்னை ஈடுபடுத்தும்போது - தனது வாழ்வின் அவலங் களையே மறந்துவிடுகின்றாள்.

சட்டநாதன் கதைகள் O 3
அவள் அதிகம் எழுதுவதில்லை. எழுதியதெல்லாம் அற்புதமாக வந்திருக்கின்றன. அவள் எழுதுவதற்கு ஒருவகையில் தூண்டு கோலாய், துணையாயிருப்பவன் ‘அருண்’ என்கிற அருணாசலம் தான். அந்த அற்புதமான எழுத்தாளனது தொடர்புகள் அவளது படைப்புக்களில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆரம்பகாலத்தில், சதா முக்கோணக்காதல் கதைகளையே எழுதிக் குவித்து வந்த அவள், இப்பொழுதெல்லாம் மனிதன்பால் அதீத நேயம் பூண்டு, வர்க்கநலம் பேணும் எழுத்தை வடிப்ப தென்றால்! அந்த மாற்றம் மகத்தான ஒன்றுதான்.
வேலை முடிந்து, கந்தோரிலிருந்து நேராக வீட்டுக்கு வந்தவள், அறைக்கு முன்னால் பாற்காரன் வைத்துவிட்டுச் சென்ற பால் போத்தல் சரிந்து உடைந்து கிடப்பதைக் கண்டு, சிறிதும் பதட்ட மில்லாமல் - உடைந்த போத்தலை அகற்றிவிட்டு, அறைக்கதவைத் திறந்தாள்.
அறை இருட்டாகவே இருந்தது. ஜன்னலைத் திறக்கவேண்டு மென்று அவளுக்குத் தோன்றவில்லை. அலுப்புடன் கையில் இருந்த வற்றை அங்கு கிடந்த மேசையில் போட்டுவிட்டு, சோபாவில் சோர்வுடன் சாய்ந்துகொண்டாள்.
சற்று அசதியாக இருக்கவே, அயர்ந்து தூங்கிவிடுகிறாள். அவள் விழித்தபொழுது ‘லயிற்’ எரிந்துகொண்டிருந்தது.
மணியைப் பார்த்தாள். ஆறுக்குப் பத்து நிமிடங்கள். யார் லயிற் போட்டது. அவன் வந்துவிட்டானோ?
மனம் பதைத்தவளாய் எழுந்து கொண்டாள்.
அவன் வந்ததும் அவனுக்குக் கோப்பி கொடுக்கவேண்டும் அல்லது அவன் கோபமுற்று, அதையே சாட்டாக வைத்து ஒரு பாட்டம் நாகரிகமில்லாமல் திட்டித்தீர்த்துவிடுவான். இது இப் பொழுது ஒருசில நாட்களாய் நடைபெற்று வருகிறது. சிறு உரசலே அவனுக்குப் போதுமானதாய் விடுகிறது. அவன் நெருப்பாய் மாறி விடுகிறான். அப்படியொரு நிலை இப்போது வேண்டாமென அவள் பயந்து 'சுற்று முற்றும் ப்ார்த்தாள்.
அவன் வந்த சிலமனில்லை.
அவளே 'லயிற்றை’, நித்திரைச் சோம்பலுடன் எழுந்து போட்டு விட்டு, மீண்டும் படுத்திருக்கவேண்டும்.

Page 12
4 O உறவுகள்
சோம்பலையும் கோழித்தூக்கத்தையும் உதறியபடி எழுந்தவள், சேலையை உருவி எறிந்துவிட்டு, குளியலறைக்கு - பழைய சாக்கால் மறைப்புக்கட்டிய-குழாயடிக்குச் சென்றாள்.
குளித்துவிட்டு வந்தவள், ‘கவுணை' போட்டபடி கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள். தலையைக்கூட வாரவேண்டுமென்று அவளுக்குத் தோன்றவில்லை. கூந்தலை ஈரம் சொட்டச் சொட்ட வாரி முடித்தபடி நிமிர்ந்தபோது அவளது பார்வை, அவனும் அவளும் திருமணத்தின்போது எடுத்த படத்தின்மீது தரித்தது. கசப்பான ஓர் உணர்வின் நெருடலுடன் அவள் லேசாகச் சிரித்துக்கொண்டாள்.
அவர்களது திருமணம் ஓர் அவசரத்துடன்தான் நடந்தது. அந்த அவசரத்துக்குக் காரணமே அவன்தான். இவள் எவ்வளவு நிதானமா யிருக்கிறாளோ அதற்கு எதிரிடையாக அவன் எதற்குமே அவசரப் படுவான்.
அவள், அவனை முதன்முதலில் கொழும்பில் சந்தித்தது, கொட்டாஞ்சேனை பஸ்ஸில்தான். வெள்ளவத்தைப் பஸ்தரிப்பில் ஏறியவன் அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான்.
அவளை, இவன் யாரோ ஒரு பெண் என நினைத்து, இயல் பான யாழ்ப்பாணத்துக் கூச்சத்துடன் ஒதுங்கியே இருந்து கொண்டான்
எதேச்சையாக இவனது பக்கம் திரும்பிய அவள் :
'யாரது சந்திரனா?’ என்று புன்னகைத்தாள்.
அவனுக்கு அவளை உடன் யாரென அறிந்துகொள்ள முடிய வில்லை பின் ஒருவாறு அனுமானித்துக்கொண்டான்.
‘ஓ..! எத்தனை வருஷங்களுக்கு முந்திக் கண்டது. ஒல்லி யாய், கறுப்பாய் உடம்பிலே சதைப்பிடிப்பே இல்லாமல், அழுக்குப் பாவாடையும் கிழிஞ்ச சட்டையுமாய். மூக்கில் சதா சளிவழிஞ்ச தடம் புண்ணாயிருக்கும் கோலத்துடன் திரிந்த கமலாவா இவள். ! வினாசியின்ரை மகளுக்கு இவ்வளவு எழுப்பமே...!"
கோவியப்பெட்டை என்ற நினைப்பு வந்ததும் இன்னும் சற்று ஒதுங்கியே உட்கார்ந்துகொண்டான்.
அவளை அவன் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை,

சட்டநாதன் கதைகன் d 5
அவளாகவே மீண்டும்: * மட்டுக்கட்டேல்லைப்போலை.?" என்றாள்.
'தடிவினாசியின்ரை மகள்தானே. தெரியுது. நல்லாத் தெரியுது'
Sy
as a b d e V a ab A
"எங்கை இந்த பக்கம்'
'நானே. நான் கிளறிக்கல் சேர்விஸிலே எடுபட்டு . இன்கம்ராக்ஸிலை வேலை செய்யிறன்'
‘இன்கம்ராக்ஸோ..?'
அவன் பொறாமையால் வெந்துபோகிறான் என்பது அவளுக்குத் தெரிகிறது.
ஏதோ தனியார் கொம்பனியொன்றில் 'அரைகுறை’ ஊதியம் பெறுபவனுக்கு, அவள் அரசாங்க உத்தியோகத்திலிருப்பது பொறாமையை ஊட்டியதில் வியப்பில்லைதான்.
** சேர்விஸிலை சேர்ந்தது பென்சன் ஸ்கீம் இருக்கேக்கையோ? இல்லைப் பிந்தியோ?*
* 'இருக்கேக்கைதான். அதுசரி இப்ப இந்த வரவுசெலவோடை எல்லாருக்கும் திரும்பவும் 'பென்சன்’ எண்டுதானே நிதிமந்திரி அறிவிச்சிருக்கிறார்.'
**ஓ, நான் அதை மறந்திட்டன். அதுசரி நீ சிவானந்த வீதியிலேயே இருக்கிறது?’
'ஓம். ஓம். உங்களுக்கு எப்பிடித் தெரியும்.'
* ‘அங்கையொரு ‘கேள்ஸ் ஹொஸ்ரல்’ இருக்கு. அது தான்
கேட்டனான்'
'நீங்களும் கொட்டாஞ்சேனையிலைதானே இருக்கிறது?" 'ஓம். மாரியம்மன் கோயிலுக்குப் பக்கத்திலை" அவர்கள் இருவரும் அதன்பின் எதுவும் பேசிக்ககொள்ளவில்லை.
ஆனால் அவன் அடிக்கடி அவளை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டான். - W

Page 13
6 O உறவுகள்
'இவள். இவள் கமலா. இவ்வளவு அழகாக எப்பிடி இருக்க
முடியும் கறுப்பி-இளஞ்சிவப்பாய் இருக்கிறாள். எலும்பாய்க் கிடந்தவள் ஹாம் . என்னமாதிரி. ஓ. எல்லாமே பூரிச்சுக் கிடக்குது.'
அவள் பஸ்ஸைவிட்டு இறங்கி நடந்தாள். இவனும் தன்னுணர்வு இழந்தவனாய் அவளுடன் அவளது விடுதிவரைக்கும் வந்துவிடுகிறான். பின் ஒருவாறு தன்னைச் சுதாரித்துக் கொண்டு அவளிடம் விடைபெற்றுக்கொண்டான்.
அன்றிலிருந்து அவன் அவளை அடிக்கடி சந்தித்தான். சந்திக்கா விடில் அவனுக்கு எதுவுமே ஓடாது. தலைவெடித்துவிடும் போலிருக்கும்.
‘கோவியப் பெட்டைதானே தட்டிப் பார்த்தால் எடுபட்டிடுவாள்', என்ற கெட்ட எண்ணம்தான் அவனுக்கு முதலில் இருந்தது. ஆனால், அவளது அறிவு, அவள் நடந்துகொள்ளும் விதம், அவள் கைநிறையச் சம்பாதிக்கும் பணம், அவள் எடுக்கவிருக்கும் பென்சன்’ என்ற எதிர் காலப் பாதுகாப்பு என்று, எல்லாம் சேர்ந்து அவளை மணந்து கொண்டால்தான் என்ன? என்ற உணர்வை அவனுக்கு ஏற்படுத்தும். திடீரென தனது குடும்பத்திற்குப் பரம்பரை பரம்பரையாக 'குடிமை யாக' இருந்த வம்சத்தின் வித்து அவளென்பது நினைவு வந்ததும் அவன் அருவருப்புடன் உடம்புகூசி 'தூ.’ என்று காறித் துப்புவான்.
என்ன இருந்தென்ன. அவளது இளமையிலும், இனிமையான வசீகரத்திலும் இவனது ஆண்மை கரையவே, அவன் அவளைத் தீவிரமாகக் காதலிக்கத் தலைப்பட்டான்.
தனது எண்ணத்தை, காதலை இவன் ஒருசமயம் அவளுடன் விகாரமாதேவிப்பூங்காவில் இருந்தபொழுது வெளியிட்டான். அப் பொழுது அவள் எதுவித உணர்ச்சிப் பாதிப்புக்கும் உட்படாதவளாய், விழுந்து விழுந்து சிரித்த சிரிப்பு இவனது உடலையே குறுகவைத்து விட்டது.
'இவள் என்னை. எனது காதலை ஏற்க மறுத்துவிடு வாளோ!' என்று உணர்ச்சி வேகத்துடன் திடுக்குற்று, அவளை - அவளது காதலை யாசிப்பதுபோல் அவளையே பார்த்தான்.
*சாதியிலை குறைஞ்ச பெட்டை. அதுவும் தாவாடிக்காரருக்குக் குடிமை வேலைசெய்த சின்னன்ரை பூட்டி. முத்தன்ரை பேத்தி. தடிவினாசியின்ரை மகள். இந்தப் பெட்டையை முடிச்சிட்டு உங்களாலை ஊர்ப்பக்கம் தலை காட்டேலுமே'

சட்டநாதன் கதைகள் O 7
அவள் பேசி முடிக்கவில்லை, அவன் திடீரென உன்மத்தம் கொண்டவனாய், தான் தீவிரமாக அன்புசெலுத்தியும் அவள் தன்மீது அன்பில்லாமல் நடந்துகொள்கின்றாளோ என்று எண்ணியவனாய், அவளது கன்னத்தில் அறைந்துவிட்டு, அவ்விடத்தை விட்டுச் சென்றான்.
அந்த அடி அவளுக்கு வலிக்கவில்லை. அவனது அன்பு, அவன் தீவிரமான ஒரு லட்சிய வெறியுடன் காதலிப்பது அவளுக்குப் புரிந்தது.
காதல், இலட்சியம் என்ற தங்கக்கோபுர நினைவுகளனைத்தும் அர்த்தமற்றவை என்பது அவளது முடிவு இருந்தும், எவனோ ஒருவனை மணக்கவேண்டும், அவன் இவனாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே, என்று நினைத்தபடி விடுதிக்குத் திரும்பினாள்.
அன்றைய சம்பவங்களின் பின் ஒருவார காலமாக அவன் அவளைச் சந்திக்கவில்லை. இந்த ஒருவாரமும், அவனை இவள் அடிக்கடி நினைத்துக்கொண்டாள் அவனது குழந்தைத்தனமான முகம், அதில் விஷமத்தனமாகக் குறுகுறுக்கும் கண்கள், சிவந்த உதடுகளுக்கு மேலாய் படர்ந்துகிடக்கும் அடர்த்தியான மீசை, அனைத்தும் அவளை, அவன்பால் ஆர்வங்கொள்ளவே வைத்தன, அவனுக்காக அவள் லேசாக ஏங்குவது போன்ற உணர்வின் உறுத்தல் வேறு. அவளால் தன்னையே நம்பமுடியவில்லை.
"அவனது கொம்பனிக்குப் போன்பண்ணிப் பார்ப்போம?’ என்று நினைத்தவள் அந்த எண்ணத்தையே மாற்றிக்கொண்டாள்,
அவனே தன்னிடம் பேசக்கூடும் என்று எதிர்பார்த்தாள். அவள் எதிர்பார்த்தது போலவே இரண்டு நாள் கழித்து, அவள் கந்தோரில் இருந்த சமயம் அவன் இவளுடன் போனில் தொடர்புகொண்டு, மாலை கந்தோர் முடிந்ததும் விடுதிக்கு வருவதாகச் சொன்னான். அப்பொழுது அவளும் ஏதோ பேச முயன்றாள். அவள் பேசுவதற்கு முன்பாகவே அவன் போனை மறுமுனையில் வைத்தது, அவளுக்கு ஏமாற்றமாய்ப் போய்விட்டது.
மாலை அவள் விடுதியில் இருந்தபொழுது, அவளைத் தேடிக் கொண்டு முதலில் வந்தவன் அருண்தான். தான் புதிதாக எழுதிய கதையினைக்காட்டி அவளது கருத்தினை அறிய வந்திருந்தான். பிரசுரத்திற்குப் போகுமுன் பரஸ்பரம் அவர்கள் கருத்துப் பரிமாறிக் கொள்வதுண்டு.
அவர்கள் கதையின் உள்ளடக்கத்தைப் பற்றித் தீவிரமாக அலசிக் கொண்டிருந்த பொழுதுதான் இவன் அங்கே வந்தான்.

Page 14
8 O உறவுகள்
அவனை வாருங்கள் என்று கூறியதுடன் "அருணையும் அவனுக்கு அறிமுகம் செய்துவைத்தாள். பின் கதையைப் பற்றியே அதிகம் பேசியது இவனுக்கு மிகுந்த எரிச்சலூட்டியது.
“என்ன எழுத்தோ.. என்ன நட்போ. !", அவளது ஈடுபாடு தன்னில் முழுமையாக லயிக்காமல், எழுத்தென்றும், அருணது தோழமை என்றும் சிதறுவதை அவன் விரும்பவில்லை.
இருந்தும் பொறுமையாக இருந்தான்.
அருண் ஒருமாதிரி விடைபெற்றபொழுது-இவன் அவளைப் பார்க்க, அவள் பரபரப்புடன் வீதிவரை சென்று அருணுக்கு விடை கொடுத்தது, இவனுக்கு ஏனோ பிடிக்கவில்லை.
அருணை அனுப்பிவிட்டுத் திரும்பியவள் இவனைப்பார்த்து *கோப்பி சாப்பிடுங்கள்’’ என்று உபசரித்து, ஃப்ளாஸ்கில் இருந்த கோப்பியை வார்த்துக் கொடுத்துவிட்டு, "இதோ இருங்கள் ஒரு நிமிஷத்திலை வாறன்’, என்று உள்ளே சென்றாள்.
தன்னை ஓரளவு அலங்கரித்துக்கொண்டு வெளியே வந்தவள் 'நூல் நிலையம் வரைக்கும் போய்வருவமே?', என்று அவனை அழைத்தாள்.
அவன் ஏதும் பேசாமல் அவளைப் பின் தொடர்ந்தான்,
அவள்தான் முதலில் பேசினாள்: ‘'என்ன கோபமே?”
‘'எதுக்கு.?"
'இல்லை. அண்டைக்கு என்னமாதிரி கோபத்திலை உங்களை மறந்து என்னை அடிச்சீங்க...'
'ஒ.! அது. அது. என்னை மன்னிச்சிடு. உனக்கு. உனக்கு. என்ரை அன்பு விளங்கேல்லை...'
*,விளங்காமலா உங்களுடன் வெள்ளிக்கிட்டிருக்கிறன்" 'வெளிக்கிட்டது சரி. ஆனால் இது இடைநடுவிலை.?" 'நிக்காதெண்டுதான் நான் நினைக்கிறன்' “சரி. சரி. அதிருக்கட்டும் கமலி, உன்ரை அன்பு. எனக்கு. எனக்கு மட்டும்தான் வேணும். நீ பிறருடன், அதிலும் ஆண்களுடன் பேசுவதை என்னாலை பொறுக்கமுடியேல்லை. ஆரிந்த அருண்.? சரியான எழுத்துப் பயித்தியம். இவன் உன்னோடை எவ்வளவு
நெருக்கமாப் பழகமுடியுது'

சட்டநாதன் கதைகள் O 9
‘போதும் போதும் அசட்டுப் பிசட்டென்று உளறாதேங்க. அவர் எனது நண்பர். எழுத்துலகத் தொடர்பு-தோழமை, இதைவிட ஒண்டுமில்லை. உங்கடை மனசுதான் வீணாய்க் குழம்பிக் கிடக்குது'
அன்று அவர்களிருவரும் வெகுநேரம் வரையில் நூலகத்தில் வாசிப்போர் பகுதியில், அமைதியாக-தங்களைப்பற்றி, தங்கள் எதிர்காலம்பற்றியெல்லாம் தர்க்கித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
‘இன்னும் சில தினங்களிலை பதிவுத் திருமணத்தை வைத்துக் கொள்வமே? அவன் நச்சரித்தான்.
அதற்கு அவள் மெளனமாகப் புன்னகை பூத்தாள். அந்த மெளனம், புன்னகை எல்லாம் அவனுக்கு அவளது காதலை உணர்த்தி யிருக்க வேண்டும்.
அவன் சூழ்நிலையையே மறந்தவனாய் அவளது காதின் கீழ்ப் புறத்தில், கழுத்தில் முத்தமிட்டான்.
அவள் சிலிர்த்து, இவனைப் பார்த்து மீண்டும் சிரித்தாள். அந்த இனிமையான சந்திப்பின் ஒருவார காலத்தின் பின்பு, அவர்களிருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்டார்கள்.
அவர்களது திருமணத்திற்கு அவனது நெருங்கிய நண்பர்கள் சிலரும், இவளது தோழிகளும், அருணும் வந்திருந்து வாழ்த்தினர்.
இவர்களது பெற்றோர்களுக்கு ‘இது விஷயம்" உடனே எதுவும் தெரியாது. தெரிந்தபொழுது இவர்கள் எதிர்பார்த்ததுபோல் எதுவித பூகம்பமும் வெடித்துவிடவில்லை.
அவளது பெற்றோர்கள்: ‘யாரது நம்மடை தாவாடிப் பெரிய வீட்டுத் தம்பியே. சந்திரனா?’ என்று மகிழ்ச்சி தெரிவித்துக் கடிதம் எழுதியிருந்தார்கள். ஆனால், அவனது தகப்பனார் கொஞ்சம் இரத்த அழத்தப் பேர்வழி, ஏதோ ஆவேசத்துடன் கிறுக்கியிருந்தார்.
எல்லாம் வழமையான பல்லவிதான்.
*உனக்கு, இந்த வேலை செய்ததுக்கு செப்பாலடிச்ச சல்லிக்காசு கிடையாது. நீ இந்தப்பக்கம் அந்தச் சாதிகெட்டதோடை வருவியா பாப்பம்." என்று ஏதேதோ அற்பத்தனமான பிரலாபங்கள்.
அவன் கடிதத்தைப் படித்துவிட்டு இவளிடம் தந்தான். அதைப் படித்த இவள்:
‘இந்தக் கிழவரிடம் என்ன இருக்கிறது. வரட்டுச் சாதிப் பெருமையைத் தவிர. இருந்த நிலபுலத்தையும் சும்மா இருந்தே

Page 15
10 d உறவுகள்
சீட்டாடியும், குடித்தும் தொலைத்துவிட்ட இவரை எந்த நிலையிலும் ஒரு பாதுகாப்பாக சந்துரு நினைச்சிருப்பாரா..? இல்லை. இருக்காது. இவரது தனவந்தத்தனமெல்லாம் உண்மைக்குப் புறம் பான வெறும் கற்பனைகள்தான். சும்மா இருந்து சுகித்த பேர்வழிஉள்ளதையெல்லாம் சிதைத்து, சாதி வெள்ளாளர் என்ற பட்டயம் மட்டும் எஞ்சி நிற்கும் இவர் மிகவும் இரக்கத்திற்குரியவர்' என்றெல் லாம் நினைத்துக்கொண்டாள்.
அவர்களிருவரையும் இவை எந்த விதத்திலும் அன்று பாதித்து விடவில்லை.
பழைய நினைவுகளில் மனதை அலையவிட்டவள் "படபட" எனக் கதவு தட்டப்படும் ஓசைகேட்டு எழுந்து திறந்தாள்.
அவன்தான் வந்திருந்தான். வழமைபோல அவனது முகம் சுரத்தற்று - ஆனால், சற்றுக் கடுகடுப்புடன் இருந்தது. அவள், அவர்கள் மணவாழ்வில் ஈடுபட்ட ஆரம்ப நாட்களில் அவன் முகம் இருந்த மலர்ச்சியை ஏனோ அப்பொழுது நினைவு கூர்ந்தாள்.
அவன் வந்ததுமே கோப்பி குடிப்பான். எனவே, அதனைத் தயாரிப்பதற்காக உள்ளே போனவள், மீண்டும் அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவனது முகத்தோற்றம் ஏனோ அவளுக்கு மிகுந்த பயத்தை ஊட்டியது.
அவன் இப்பொழுது சில நாட்களாக, சீதனம் என்று ஏதோ பிதற்றி சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் இவளை அநாகரிக மாக ஒன்றுக்கும் வக்கில்லாத-வகையில்லாத தரித்திரம் பிடித்தவ ளென்றெல்லாம் திட்டித்தீர்ப்பது வழக்கமாகிவிட்டிருக்கிறது.
ஊரில் ஏதோ சொற்ப காணி இவளது பேருக்கு உண்டு அதனையே விற்று, அவன் இவளைச் சீதனம் தரும்படி நச்சரித்த பொழுது இவள் அவன்பால் முதன்முறையாக வெறுப்புக்கொண்டாள். அந்த வெறுப்பு அவன் அந்தப் பிரச்சனைபற்றிப் பேசும்பொழு தெல்லாம் அதிகரிக்கவே செய்தது.
அதைப்பற்றித்தான் இன்றும் ஏதாவது அவன் பேச விரும்பு கிறானோ, அந்த அநாகரிகமான வார்த்தைகளை, வசைகளை அவளும் கேட்கத் தயாராக வேண்டுமோ?

சட்டநாதன் கதைகள் 6 11.
வேண்டியதில்லை.!" அந்த நினைப்பே அவளுக்கு நிம்மதி யைத் தருகிறது.
இன்றுதான் அவளது தகப்பனார் காணியை விற்று அவனது பெயருக்கு வங்கியில் பத்தாயிரம் வரையில் போட்டிருப்பதாக எழுதி யிருக்கிறார். அந்த விஷயத்தை அவள் அவனுக்குச் சொன்ன பொழுது அவனது முகத்தில் லேசான மலர்ச்சி. அந்த மலர்ச்சியும் ஏனோ கணநேரம்தான் நிலைத்தது. மீண்டும் அவனது முகம் இறுக்கமுற்றுக் கடுமையானதை அவள் அவதானித்தாள்.
‘இது ஏன்?" அவள் சஞ்சலமுற்றாள். சிநேகிதி ஒருத்திக்கு சம்பளம் எடுத்த கையோடு அவள் கொடுத்த கைமாற்றுப் பணம் பற்றித்தான் இவன் கேட்கப்போகிறானோ? கேட்டு, அந்தச் சிநேகிதி இன்னும் தரவில்லை என்று இவள் சொல்ல, அவன் அர்த்தமில்லாமல் இவளை ஏசுவதற்குத் தயாராக இருக்கின் றானோ? அல்லது ஏதாவது புதிதாகக் கற்பிதம் பண்ணித் திட்டித் தீர்க்கத் தன்னைத் தயார்ப் படுத்துகின்றானோ?
ஒன்றுமே புரியாமல் அவள் குழம்பினாள்.
அவள் சம்பளம் எடுத்ததும் பணம் முழுவதையுமே இவன் வாங்கி வைத்துக்கொள்வது வழக்கம். பின் அவளது தேவைகளுக்குக்கூட இவனிடம்தான் அவள் பணம் வாங்க வேண்டும்.
எதற்குமே அவனை எதிர்பார்ப்பது இவளுக்கு என்னமோ போலிருந்தது. எந்த விஷயத்திலும் அவன் சொல்வதையே இவள் கேட்டு நடக்கவேண்டுமாம். அதுதான் மனைவிக்கு லட்சணமாம். அப்பொழுதுதான் குடும்பம் குடும்பமாக இருக்குமாம். அல்லது சீரழிந்து விடுமாம். சீரழிந்துவிட்டால் இவள் தெருவில்தான் நிற்க வேண்டுமாம்.
இதெல்லாம் அவளுக்கு அர்த்தமாகவில்லை. மிகவும் கட்டுப் பெட்டித் தனமான அந்த ஆணின் அதிகார வரம்பை அவள் ஒரோர் சமயம் உடைத்தெறிய விரும்புவதுண்டு. விரும்பும் அளவிற்கு அவள் துணிவதில்லை.
அவள் மிகவும் பொறுமையாகவே இருந்தாள். அப்பொழு தெல்லாம் அவளது மனம் அவளது பெற்றோர்களை, அவர்களது வாழ்க்கையை நினைத்துப் பிரமித்துப்போகும்.
"ஆச்சியும் அப்புவும் ஏழைகள்தான் எளியதுகள்தான். இருந்தும், என்னகுறை அவையின்ரை வாழ்க்கையிலை ஆச்சி கல்லுடைக்கப்

Page 16
12 6 உறவுகள்
போனால், அப்பு உழவுக்குப் போவார். அவ அரிவுவெட்டப் போனால் இவர் சூடுவைக்கப் போவார். இருவருமே உழைத்தார்கள். இருவருமே குடும்பம் அது இதென்று ஒருமித்துச் செயற்பட்டார்கள். அப்புவின் அபிப்பிராயங்களை ஆச்சி கேட்பதும், ஆச்சியின் அபிப்பிரா யங்களை அவர் கேட்பதும். ஓ! அவர்களது அந்த வாழ்க்கை எவ்வளவு அர்த்தமும் மகத்துவமும் நிரம்பியது."
அப்படிப்பட்ட சூழலில் வளர்ந்து, வாழ்ந்து பழகிய - அத்துடன் அறிவுக்கூர்மையும் மிக்க இவளுக்கு, தங்கள் இருவருடைய வாழ்க்கையிலுமுள்ள வெறுமை புரியவே செய்தது. அவனது போக்கு இவளுக்கு ஒரு சமயம் பிடிபட்டும், பிடபடமறுத்தும் அலைக்கழித்தது" இந்த முரண் சிறுகச்சிறுக அவர்களது குடும்ப வாழ்வின் அமைதியைக் குலைத்துவிடுமோவென்று அவள் பயந்தாள். அதுமட்டுமல்ல, அவள் மிகுந்த பயத்துடன் எது நடக்கக் கூடாதென்று எதிர்பார்த்திருந் தாளோ அது அவனது வாயாலேயே அவள் எதிர்பாராத வகையில் வெளிப்பட்டபொழுது அவள் மிகுந்த வேதனையுற்றாள்.
அவன் இப்பொழுது அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள் “சாதி சனத்துக்கை சடங்கை முடிச்சிருக்கலாம், எளியதுகளை முடிச்சால் இப்படித்தான் கிலிசைகெட்டு அலையவேணும்."
அவள், இந்த வார்த்தைகளால் மனம் தளர்ந்துதான் போனாள். தன்னை மறந்த நிலையில் பழையதையும், புதியதையும் அசை போட்டவளுக்கு, "ஐயோ அவன் கோப்பி கேட்பானே' என்ற
நினைப்பு வந்ததும், பாலில்லாமல் கோப்பியைத் தயாரித்து எடுத்துச் சென்றாள்.
அவன் கோப்பியை வாங்கி, திடீரென அவளை நோக்கி வீசினான். அவள் சற்று ஒதுங்கவே அது அவளது இடது தோளில் பட்டுச் சிதறியது. சுடுகோப்பி பட்டதும் துடித்தவள்: 'சீ. என்ன பைத்தியம்மாதிரி. ' என்று முணுமுணுத்தாள்.
‘ஓமோம். பைத்தியம்தான். உன்னோடை இருந்தால் பைத்தியம்தான் வந்திடும்.'"
'சத்தம் போட்டுப் பேசாதையுங்க. வெக்கமாயிருக்கு"
** எது. எதடி வெக்கம். ஊரெல்லாம் அவன் அந்த
அருணோடை சுத்திறது வெக்கமில்லை. நா. நான் பேசிறது தான் அவவுக்கு வெக்கமாயிருக்கு."

சட்டநாதன் கதைகள் 9 13
அவன் புதிய பிரச்சனையொன்றில் சிக்கித் தவிக்கின்றான் என்பது அவளுக்குப் புரிந்தது. இதுவரையில்லாத பிரச்னை, அது பற்றி இன்று பேச ஆரம்பித்திருக்கிறான்.
இன்று காலை பத்து மணியளவில் அவள் தனது கதைத் தொகுதிக்குக் கோட்டேசன் எடுப்பதற்கு ஆட்டுப்பட்டித் தெரு வரைக்கும் போக வேண்டியிருந்தது. "சோட் லீவில் போயிருந்தாள். வழியில் அருணைக் கண்டு அவனுடன் அச்சகம்வரை போனதைப் பார்த்துவிட்டு இவன் இப்படி நடந்து கொள்கிறானோ" என நினைத்தவள்:
'அதா. அது. நான்."
**போதும். போதும் உன்ரை பசப்பல். அவன் சச்சி இதைச் சொல்லேக்கை. எனக்கு இடுப்பிலை சீலை இல்லை...'
'அவன் சொல்லிறதை நம்பிறயள். நா. நான் சொல்லிறதை. s is
'ஒ.! நீ சொல்லிறதை நம்பிறன். நல்லவடிவா நம்பிறன். உனக்கு. கதை. கதையெண்டு அவனோடை சுத்திறது இப்ப சாட்டாய்ப் போச்சில்லை .?’’
9 ş
அவளது மெளனம் அவனைக் கோபமூட்டியது. அவன் அவளை மேலும் வம்புக்கு இழுத்தான்.
அவளுக்கும் அருணுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அந்தத் தொடர்புகளுக்கு இடைஞ்சலாகத் தான் இருப்பதாக அவள் நினைப்ப தாகவும், கையும் மெய்யுமாக இருவரையும் பிடித்து மானபங்கப் படுத்தப் போவதாகவும், ஏதேதோ கூறி அவன் மேன்மேலும் தன்னைச் சிறுமைப்படுத்திக்கொண்டான்.
அவளால் என்ன செய்யமுடியும். அவனுக்கு இந்த நிலையில் என்ன சமாதானம் சொல்லமுடியும். அவள் தனது தூய்மைபற்றி அவனுக்கு சொல்வதையே அப்பொழுது அவமானமாகக் கருதினாள். அப்படி அவள் சொன்னாலும், ‘இவன் நம்புவானா? நம்பமாட்டான்", என நினைத்தவளாய் பொறுமையாக இருந்தாள்.
இவள் பொறுமையாக ஏதும் பேசாமல் இருந்ததே அவனுக்கு மிகுத்த எரிச்சலூட்டியது. அவன் ஆவேசம் கொண்டவனாய், அவள் மேல் பாய்ந்து தனது பலம் முழுவதையுமே சேர்த்து அடித்தான்,

Page 17
14 O உறவுகள்
இப்படிப்பட்ட நிலைகளில் அவன் அடிப்பதோடு மட்டும் நின்றுவிடுவ தில்லை, ஒரு குரூரமான "சாடிஸ்ற்’ராகவே மாறிவிடுவான். குழம்பிய சிந்தையுடன் இருக்கும் அவளுடன் இவன் ஒருவகை மிருகபலத்துடன் தாம்பத்திய உறவுகூட வைத்துக்கொள்வான்.
ஆனால், இன்று அதற்கு முற்றிலும் மாறான முறையில் அவன் செயற்படுவதை அவள் உணர்ந்தாள்.
அவனது கரங்கள் அவளை - அவளது உடலை புதுவிதமாகப் பரிசீலித்தன. அவள் எதையோ இழந்துவிட்டது போலவும், அதை
வன் கண்டுபிடித் ஈபிப்பக போலவும் (மயற்சிகள்.
lq-g5@l 5 @ التي வும முயற
அவள் முதன்முறையாக அவன்மீது "இது விஷயத்தில் வெறுப் புற்று அவனைப் பிடித்துத் தள்ளினாள்.
அவன் மிகவும் வெட்கம் கெட்டதனமாக 'நீ. இன்று. இன்று அவனுடன்.?’’
அவன் சொல்லி முடிக்கவில்லை, அவள் 'தூ. நீயும் ஒரு மனிசனா?' என்று விம்மினாள். -
அவளுக்கு எல்லாமே அர்த்தமற்றதாகத் தோன்றியது. பின் ஏதோ நினைத்துக் கொண்டவளாய், தன் இயல்புகளுக்கு மாறாக அவனை மேலும் எரிச்சலூட்ட விரும்பியவளாய்: 'ஓம் இன்று. இன்று அருணோடை அவன்ரை அறையிலைதான் இருந்தனான்' என்று பொய் சொன்னாள்.
ஏதோ எச்சிற் பழத்தை அழுகிய பண்டத்தை தொட்டதுபோன்ற அருவருப்புடன் முகம் சுழித்து அவன் அவள் முகத்தில் காறி உமிழ்ந்தான்.
அவனது அந்த அநாகரிகமான செயல் அவளை மிகவும் பாதித்தது. உடைபட்ட நெஞ்சுடன் அவள் விக்கித்து நின்றாள்.
அப்பொழுது, அவன் தீடீரெனக் குலுங்கிக் குலுங்கிப்பெரிதாகச் சத்தம் வைத்து அழுதான்.
ஆண்மகன் ஒருவன் அழுவதை அவள் கண்டதில்லை. அந்த நிலையிலும் ஆண்மை அழுவது அவளுக்கு வேடிக்கையாகவே இருந்தது. அவள் தனது துயரங்களை ஒரு கணம் மறந்தவளாய் லேசாகச் சிரித்துக் கொண்டாள்.

சட்டநாதன் கதைகள் O 15
அவன் ஏன் அழுகின்றான் என்பது அவளுக்குப் புரிந்தது. அர்த்தமில்லாமல் ஏதேதோ கற்பனைகளைக் கற்பிதம்பண்ணி அழுவதற்கு அவள் என்ன செய்யமுடியும் ! அவனது பலஹினம் அவளுக்கு அதிசயமாய் இருந்தது. அத்துடன் அருவருப்பாகவும் இருந்தது. அவனது செயல்கள் யாவும் அவன் மீது அவள் கொண்ட அன்பை, அனுதாபத்தைக் குலைத்தன.
அவள், இவன் ஏன் இப்படி நடந்துகொள்கிறான், என்று ஆய்வதிலும் பார்க்க - இவன் தன்னுடன் இனியும் ஒட்டி உறவாடத் தான் முடியுமா? என்று தன்னையே ஒருமுறை கேட்டுக்கொண்டாள்.
* இப்படி என் உணர்ச்சிகளையே சீண்டி வேடிக்கை பார்க்க இவனுக்கு என்ன உரிமை இருக்கிறது? அந்த உரிமை, இதற் கெல்லாம் இடம் கொடுக்கிறதா? சீ. இவன் மனிதனே அல்ல. இந்தத் திருமணம் என்ற பந்தமே இவர்களால் எவ்வளவு கட்டுப் பெட்டித்தனமாக அர்த்தப்படுத்தப்பட்டு மலினப்படுத்தப்பட்டு விடுகிறது."
அவளுக்கு ஏனோ அழவேண்டும்போல் இருந்தது.
அவளும் அழுதாள்.
அப்பொழுது அவனும் மீண்டும் ஒருமுறை குலுங்கிக் குலுங்கி அழுதான்!
அவளுக்கு அவன்பால் எவ்வித பரிவும் ஏற்படவில்லை. மனதில் இருந்த துயர் அனைத்தையுமே உதறி எறிந்தவள். எழுந்து உள்ளே போய் குழாயடியில் முகத்தைக் கழுவிக்கொண்டு வந்து, சமைப்பதற் காக வெட்டிவைத்துச் சமைக்காகலே கிடக்கும் காய்கறிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அவனது கட்டிலுக்குப் பக்கத்தில், நிலத்தில் பாை விரித்து ஒன்றுமே நடவாதது போலப் படுத்துக்கொண்டாள்.
அவனது அழுகை அப்பொழுது சிறு விசும்பலாக மாறி, பின் ஓய்ந்தது.
இருவரும் துயரங்களால் அலைபட்ட களைப்பால் அயர்ந்து தூங்கினார்கள்.
இல்லை! அவள் மட்டும்தான் உறங்கினாள். உறக்கத்தில் புரண்டவள் விழிப்புற்றுக் கட்டிலைப் பார்த்தாள். அவனைக் காணவில்லை. ܝܢ

Page 18
16 O உறவுகள்
அவன் எங்கே?
குழாயடியில் லயிற்’ எரிந்து கொண்டிருந்தது, பரபரப்புடன் எழுந்தவள் போய்ப் பார்த்தாள்; அங்கு அவனில்லை. மீண்டும் வந்து அறை லயிற்றைப் போட்டுப் பார்த்தாள். அவனது பெட்டி படுக்கை உடமைகளென்று எதுவுமே அங்கிருக்கவில்லை. அவளுக்கு அதிர்ச்சியும் அதிசயமும் கலந்த ஓர் உணர்வு நிலை.
அவள் வழமையாகக் கந்தோரில் இருந்து வந்ததும் கழற்றி வைக்கும் தாலிக்கொடியைப் புத்தக அலுமாரியின் இடது பக்கத்து மூலையில் தேடினாள். அது அங்கு இல்லை. “அவன் அதனை. அதனையும்..!"
அவளது மனம், அதை நம்ப மறுத்தது.
“சீ... இப்படியுமா நிமிடக்கணக்கில் வாழ்வின் கட்டுகளைத் துண்டித்துக்கொள்ள முடியும், எதிலுமே அவசரப்படும் அவன் இதிலும் அவசரப்பட்டுவிட்டானோ?”
அவளுக்கு அவன் திருமணத்தன்று வாங்கித் தந்த கூறையும் இரண்டாம் பட்டும் நினைவுக்கு வருகிறது. தனது பெட்டியைத் திறந்து பார்த்தாள். அவற்றையும் காணவில்லை. அவன் அவசரக் காரன் மட்டுமல்ல அற்பத்தனமானவனுங்கூட என நினைத்தாள்.
அவளது பார்வை எதேச்சையாக கண்ணாடிப் பீடத்தில் தரித்தது அதில் குங்குமச் சிமிழ்! இதையும் அவன்தானே பரிசாக வாங்கித் தந்தான். இதனையும் அவன் கொண்டு போயிருக்கலாமே!’ என நினைத்தவள், ஓ.. நா. நான் கொஞ்சம் உணர்ச்சிவசப் படுகிறேன். இவ்லை.?’ என அரற்றினாள்.
அவளுக்கு அப்பொழுது ஏனோ லூஸ்"னின் கதையொன்றில் வரும் ஷாசுன் என்ற பெண்ணும், இப்சனின் நோராவும் நினைவுக்கு வந்தார்கள்.
அவர்களைப்போல இவளால் தாம்பத்திய உறவை வெட்டிக் கொள்ள முடியவில்லைதான். ஆனால், அவர்களைப்போலவும் நடந்துகொள்ளாமல் இவள் இருப்பதற்கு அவனே வழி செய்திருப்பது இவளுக்கு ஒருவகையில் நிம்மதியாக இருந்தது.
அந்த நிம்மதியே அவளுக்கு இப்போதைக்குப் போதுமானது அவள் நிம்மதியாகப் பெருமூச்செறிந்தாள்.
O O

பிச்சைப் பெட்டிகள்
50p வரும்போலிருந்தது. மார்கழியின் பிற்பகுதியில் பெய்ததற்குப்பின், இன்று எப்படியும் இறங்கிவிடுவதென்ற அதனது அவஸ்தையை, தென்மேற்கு வானம் குறிகாட்டியது. காற்றுக் குளிர்ந்து சிலுசிலுத்தது.
சே. குடை கொண்டு வராதது எவ்வளவு மடத்தனம்." என்னையே நான் நொந்துகொள்ளும் அவலம்.
அரைமணி நேரம் பஸ் தரிப்பில் தவமியற்றியும் பஸ் வந்து Gypsis)606).
‘இன்னும் ஏன் பஸ் வரேல்லை. இண்டைக்கு பஸ்ஸே வராதோ..? நினைப்பே அலுப்பைத் தருகிறது.
'சடசட' எனக் கோடை மழையின் பெருந்துளிகள் ஆலமரத்தின் இலைகளில் விழுகின்றன. இலைகளில் படிந்திருந்த 'தூசி கரைந்து வடிகிறது. அழுக்குநீர் ஆடையில் தெறித்து விடுமோ என்ற பயம் என்னை அருகே இருந்த தேனீர் கடைக்குள் விரட்டுகிறது, கடையினோரமாய் ஒதுங்கிக் கொள்கிறேன்.
*ー2

Page 19
18 O பிச்சைப் பெட்டிகள்
கடும் வரட்சிக்குப்பின் மழை ஒருவாறு வந்துவிட்டது. புழுதி யில் நீர் பட்டதும் மண்ணின் மணம் நாசித் துவாரங்களை முற்றுகையிட்டு, நெஞ்சை நிறைக்கிறது.
தூரத்தில், ஒரு வெள்ளாடு இடைவிடாமல் அழுது கொண்டே யிருந்தது.
ஆலடிச் சந்தியிலிருந்து தெற்கே பிரியும் ஒழுங்கையில் இரண்டு குழந்தைகள்! பிறந்தமேனியாய் மழையில் நனைந்தபடி, ஒடி ஒடி மழைத் தாரையைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
"என்ன விளையாட்டோ..? அலுப்பில்லாத விளையாட்டு.1
'மழை பெலக்கமுந்தி பஸ்வந்திட்டா நல்லம்'
குரல் வந்த திசையைப் பார்த்தேன். ஈசன் சந்தனப் பொட்டோடு நின்று கொண்டிருந்தார். அவரது ‘பறங்கி உடையும், சந்தனப் பொட்டும் அவருக்கே உரித்தான சின்னங்கள். அவரது வழுக்கைத் தலையிலிருந்து நீர்வழிந்துகொண்டிருந்தது. முகத்திலும் நீர்த்துளிகள்.
"மாஸ்ரர். துலைக்கே பயணம்.?’’
* யாழ்ப்பாணம்."
'நானும் யாழ்ப்பாணம் வரைதான்." கேள்வி இல்லாமலே அவரது பதில்.
"இப்ப இஞ்சை என்ன நடக்குது. . தாவாடியிலை
இல்லையே..?’’
**அவதான் அங்கை. . நான் இஞ்சை கண்ணகை அம்மன்ரை தேரோடை வந்தாப்பிலை, பெரியாச்சியோடை நிக்கிறன். அதுசரி மாஸ்ரர்.! உங்களுக்கு நவத்தாரைத் தெரியுமே...? அவர்தான்..! அவரைத் தெரியாதே. .? பெரிய வளவு முகத்தாற்றை மருமகன். அவர் இப்ப ஜே. பி. எல்லே. நான்தான் நீதி மந்திரியைப் பிடிச்சு ஒருமாதிரிச் சொல்லிக்கில்லி அவரை ஜே. பி. ஆக்கினனான்"
ஈசன் தொடங்கிவிட்டார். அவருடன் பேசுவது ஓர் இதமான பொழுதுபோக்கு.
**ஏன் ஈசன்.? நீங்கள் அந்த மந்திரியைப் பிடிச்சு உங்களுக்கு ஒரு உத்தியோகம் எடுத்தாலென்ன..??

சட்டநாதன் கதைகள் O 19
'அவரைப் பிடிக்கலாம்தான். ஆனால் அவர் "டிகிறி" இருந்தால்தான் ஏதாவது ‘கோப்பரேசனிலை செயர்மனாப்போட லாம் எண்டவர், அதுதான் இப்ப "டிகிறி" எக்ஸ்ரேனலா எடுத்தனான். மறுமொழி வந்திட்டுது. பாஸ்தான். கிட்டடியிலை ஒருக்கா இதுவிஷயமாய் அவரைப் போய்ப்பார்க்கவேணும். அதுக் கிடையிலை, இஞ்சை சித்தாந்தப் புலவர் பரீட்சைக்குப் பேப்பர் செற்" பண்ணச் சொல்லிற்றாங்கள். நானெல்லே இப்ப தீவுப்பகுதி இந்து வாலிபர்சங்கத் தலைவர். அதோடை இரண்டாம் தீட்சை வேறை கேட்டிட்டன். ஒரு வேளைதான் சாப்பாடு. மற்ற நேரம் பாலும் பழமும். ஒருசைவப் பழமெண்டு பேப்பர் செற் பண்ணச் சொல்லேக்கை தட்டேலுமே..? எல்லாம் பெரிய தொந்தரவா இருக்கு மாஸ்ரர். மூச்சுவிட நேரமில்லை'
ஈசனைத் தட்டிவிட்டால் போதும், நேரம்போவது தெரியாமல் ஏதாவது அளந்து கொண்டிருப்பார். அலுப்பே தெரியாத ஓர் அரிய அனுபவமது. அந்த அனுபவத்தையே கெடுப்பதுபோல அந்த பஸ்-இடையிடையே ஒருவகைக் குலுக்கலுடன்-அசைந்து வந்து எங்களது காலடியில் சரிவது போல் நின்றது.
நானும் ஈசனும் ஏறிக்கொண்டோம். பஸ் புறப்பட்டது. ஈசனைப் பார்த்தேன். அவர் அவசர அவசரமாக என்னைப் பிடித்துத் தள்ளியபடி, பஸ்ஸினுள் விரைந்தார். ஏன் அவருக்கு இவ்வளவு அவசரம்?
அவரது அவசரம் எனக்குப் புரிந்தது.
பஸ்ஸின் இடது பக்கத்தில், கடைசி சீற்றுக்கு" முன் உள்ள "சீற்’தான் அவரை இழுத்திருக்கவேண்டும்.
அங்கு குளிர்ச்சியாக, மாங்குருத்துப்போல ஒரு பெண் கண்ணுக்குச் சொகுசாக இருந்தாள்.
திடீரெனத் திரும்பியபொழுது அவளது கண்களில் தெறித்த வசீகரம் என்னையே ஒருகணம் நடுக்கமுறச் செய்தது. இவ் விஷயத்தில் மிகவும் பலவீனமான ஈசன் அவள்பால் இழுபட்டதில் வியப்பில்லை. அவளுக்குப் பக்கத்தில் அவர் நெருக்கமாக உட்கார்ந்துகொண்டார்.
நான் கொண்டக்டரிடம் ஓர் ஐந்துரூபாயைக் கொடுத்து யாழ்ப்பாணத்திற்கு இரண்டு "ரிக்கற்’ வாங்கிக் கொண்டேன்,

Page 20
20 O பிச்சைப் பெட்டிகள்
கொண்டக்டர் சரியான "இளமட்டம்'. மீசை அடர்த்தி கொள்ளாமல் பூனை மயிர்போல் பிசிராயிருந்தது. மெலிந்து உயரமாய் வளர்ந்திருந்தான். ஏதோ தீவிரமாகக் கணக்குப் பார்த்தான். இருந்தும் “ரிக்கற் தந்தான். மீதம் தரவில்லை. இரண்டு ரூபாயும் சில்லறையும். பின்பு வாங்கிக்கொள்ளலாமென நினைத்தபடி, அவனைக் கடந்து-ஈசனிருந்த இடத்திற்குச் சிறிது முன்பாக உட்கார்ந்துகொண்டேன்.
பஸ் அசைந்து அசைந்து அதனது இயல்பான குலுக்கலுடன் போய்க்கொண்டிருந்தது.
பஸ்ஸில், அதிக பயணிகள் இல்லை.
ஈசனைப் பார்த்தேன். அவர் அந்தப் பெண்ணுடன் நெருக் கமாக இருந்து, தனது அரைகுறை ஆங்கில ஞானத்தைக் கூர்மைப்படுத்திக்கொண்டிருந்தார்.
'யார் இந்தப் பெண்.? சிங்களமா..? தமிழா? நயினாதீவுக்குப் போய்த் திரும்புகிறாளோ. . தனியாகவா? ஏன் தனியாகப் போய்வரக் கூடாதா!"
ஈசன் ஏதோ சொல்ல, அவள் சற்று அவர்பால் சரிந்து குலுங்கிச் சிரித்தாள். அது சிரிப்பா என்ன! ஜலதரங்கத்தின் இசைமுறுக்கேறிய அதிர்வுகள்.
அவர்களை அந்த நிலையில் பார்த்ததும் எனக்கு லேசான பொறாமையின் உறுத்தல், ஆணுக்கே உரித்தான அந்த அற்பத் தனமான சபலம் கூச்சத்துடன் என்னை சுதாரித்துக் கொண்டேன். பயணிகள் பக்கம் என் பார்வை படர்ந்தது. அவர்களும் இப்பொழுது தங்கள் முறைக்கு அந்த இருவரையும் மூர்க்கமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களது பார்வையில் இழையும் அந்த உணர்வுபொறாமையா, ஏமாற்றமா, வெறுப்பா அல்லது எல்லாவற்றினதும் கலவையா?
இந்த உணர்வுச் சுழிப்பெதிலும் சிக்காமல் ஈசனும் அவளும் தம் சுயத்தையே இழந்தவர்களாய், சுற்றுச் சார்பின் பாதிப்புக் களையே லேசாக ஒதுக்கித் தள்ளிவிட்டு-கனிந்து போய் இருந்தார்கள்.
அது ஓர் அற்புத சாதகம்தான்!

சட்டநாதன் கதைகள் ல் 21
ஈசன் ஏதோ கிசுகிசு’ப்பதும், அதற்கு அவளது பெண்மைச் சிணுங்கலும், லேசாக எனது காதில் விழுந்தன:
**ஓ..! யூ ஆர் இன் த ரையர் கோப்பரேசன்..ம். செயர்மன்!'
**யேஸ். யேஸ்.”*
**ஸ்ரில் ஏ பாச்சிலர்.?'
s
‘ “ i urt...”
அவள் நெளிந்து, கிளுகிளுத்து அவரது காதில் உதடுகள் உரச ஏதோ சொன்னாள். அதற்கு ஈசன் செம்மைப் பூரிப்புடன்:
**ஒவ்கோர்ஸ். வைநாட். ஐ வில் டூ ஃபார் யூ.'
அவரது கரங்கள் அவளது இடையைத் தழுவத் துடிப்ப்தைக் கண்ணுற்ற நான்-‘எப்ப இருந்து இவர் ரையர் கோப்பரேசனிலை செயர்மன் ஆனார்!’ என்ற வியப்புடன்-அவர்கள்பால் இருந்த எனது பார்வையைப் பலவந்தமாகப் ‘பிடுங்கி பஸ்ஸின் கண்ணாடி ஊடாக வெளியே பார்த்தேன்.
பஸ் பாலத்தைக் கடந்து, வேலணைத் துறையில் போய்க் கொண்டிருந்தது.
வானமே பொத்துக் கொண்டதுபோல மழை பொழிந்து கொண்டிருந்தது.
மழை நீரைக் குடித்த பூமி, புளகமுற்றுப் பூரித்துக் கிடந்தது.
கொண்டக்டர் கணக்குப் பார்த்து முடிச்சாச்சு போலை.", அவன் எனக்குப் பின்னாலிருப்பதைக்கண்டு அவனைப் பார்த்துக் கேட்டேன்:
'தம்பி. .1 மிச்சக்காசு'
'மிச்சம்?', கொண்டக்டரின் உதட்டில் நெளிந்த ஏளனம் என்னைச் சிறுமைப்படுத்தியது.
அவன் எழுந்து பஸ்ஸின் முன்பக்கம் விரைந்தான்.
இது எனக்கு புது அனுபவம். எல்லாரும் இப்பொழுது என்னையே பார்த்தார்கள். அதை ன்ன்னால் தாளமுடியவில்லை. அனல்மீதிருப்பதுபோல ஒரு பதைப்பு. -

Page 21
22 0 பிச்சைப் பெட்டிகள்
திடீரென எழுந்த நான், மீண்டும் அவனைப் பார்த்துக் கேட்டேன்:
** என்ரை மிச்சக்காசு'
‘என்ன? என்னகாணும். சும்மா இரும். மிச்சம் தந்தாச்சு. ஒருக்கா வடிவாய்க் கணக்கைப் பாரும்.!"
அவன் கத்தினான். தொடர்ந்து அவன் பஸ்ஸில் இருப்பவர் களையெல்லாம் தன் கட்சிக்கு அழைத்து:
'இந்த ஆளைப் பாருங்க.படிச்சதாட்டமிருக்குது. . கொடுத்த காசை இல்லையெண்டு என்னைப் பேய்க்காட்டிறதை'
'நீங்க.எதுக்கும் உங்கடை பொக்கற்றை ஒருக்காப்பாருங்க. ஏன் வீண் சண்டை. ஒருக்காப் பாருங்க.."
அங்கிருந்த அனைவரும் என்னைக் குற்றக்கூண்டில் ஏற்றிவிட்டு, அவன்பால்-அந்தக் கொண்டக்டர்பால் பரிவுகொண்டது எனக்கு மிகுந்த எரிச்சலூட்டியது. V
‘நானும் அவனைப்போலை. அங்கிருந்த எல்லாரையும் திட்டிவிடலாம். ஆனால், இந்தப் பாழும் மனசு சமயத்திலை என்னை மெளனியாக்கி விடுகிறதே. மனசு மட்டும்தானா, இந்த ஆசிரியத்தனமும்தான்."
உடலும் உள்ளமும் குறுகிய-எல்லாருடைய பார்வையின் லட்சியமாகிவிட்ட-அத்த நிலையிலும், என்னால் லேசாகச் சிரிக்க முடிந்தது.
*சுந்தரராமசாமியின்ரை பிரசாதம் கதையிலைவாற அந்தப் பொலீஸ்காரனுக்குத் தேவைப்பட்டதுபோலை. . இவனுக்கும். இந்தக் கொண்டக்டருக்கும். . அப்பிடி ஒரு தேவையே? குழந்தை யின்ரை பிறந்ததினத்துக்கு அர்ச்சனை செய்ய மனைவி ஐஞ்சு ரூபாய் கேட்டிருப்பாளோ..? இல்லை, சதா படுக்கையே கதியெண்டு கிடக்கும் தாய்க்கு மருந்துவாங்க. பட்டகடனை அடைக்க. மனைவிக்குத் தெரியாமல் கள்ளமாக உறவு வைச்சிருக்கிற பெண்ணுக்கு ஐஞ்சோ பத்தோ தர. இதிலை எது? என்ன இருந்தா லும் இவன் இப்படி நடந்திருக்கக்கூடாது."
அந்த நினைப்புத் தந்த அவசரத்தில் நான் அவனிடம் சொன்னேன்:

சட்டநாதன் கதைகள் O 28
'தம்பி.! நீ இப்படி நடக்கலாமே. என்ரை உணர்ச்சியளைதுே கிளறி வேடிக்கை பார்க்கிறை. . நான் ஒரு ஆசிரியன், ஏன் பொய் சொல்ல வேணும், நீ மறந்திருப்பை நினைச்சுப் பார்’
'இல்லை மாஸ்ரர். நான் தந்திட்ன்ே'
‘சரி பரவாயில்லை, இது எனக்கொரு பாடம். பட்டுத்தானே படிக்கவேண்டியிருக்கு...!"
'நீங்க பேசிறதைப் பார்த்தா நான்தான் ஏதோ எடுத்தமாதிரி. அப்ப தரட்டுமே. மிச்சத்தைத் தரட்டுமே..?’’
'உனக்குப் படுமாப்போலை செய்யன்'
அவன் தயங்கியபடி, இரண்டு ரூபாய் நோட்டொன்றை விரல்களின் இடுக்கிலிருந்து உருவி எடுத்தான்.
அப்பொழுது பஸ் வங்களாவடியில் தரித்தது.
ஒரு சிறு 'பையுடன் ஓர் இளைஞன் ஏறினான். கருங்காலிக் கட்டையின் பொலிவு. கொண்டக்டர் திடீரெனக்கையில் வைத் திருந்த இரண்டு ரூபாய்த் தாளை மீண்டும் விரல்களிடையே திணித்த படி, அந்த இளைஞனை அணுகினான்.
*யாழ்ப்பாணம்?"
அவனது பையைத் தூக்கிப் பார்த்துவிட்டு அதற்கும் சேர்த்துக் கொண்டக்டர் "ரிக்கற்’ எழுதினான்.
‘ரிக்கற்’ரை வாங்கிய அந்த இளைஞன் சற்றுச் சினமுற்றவனாய்:
‘என்ன? என்னப்பாஇது.? ஒரு பத்துறாத்தல் செத்தலுக்கும் ஐஞ்சாறு பிஞ்சுக் கத்தரிக்காய்க்கும் ஐம்பது சதம் போடிறை. ஏதோ ஐஞ்சுபணம் கிடைக்குமெண்டுதானே இஞ்சையிருந்து பட்டணத்துக்கு நானிதைக் காவிறன். . உனக்கு இரக்கமிருக்கே...? என்னைப் போல நீயுமொரு பிச்சைப் பெட்டிதானே..! அங்கை ஒண்டும் கொடி கட்டிப் பறக்கேல்லையே. ஏதோ உன்ரை புண்ணியம். அரசாங்கம் மாதா மாதம் பிச்சை போடுது. அதுக்கு என்ரை வயித்திலையே அடிக்கிறது'
அவன் கொண்டக்டரை இடித்துத் தள்ளியபடி, பஸ்ஸினுள் வந்து எனக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டான்.

Page 22
24 G பிச்சைப்பெட்டிகள்
19 அவன், ‘என்னைப்போல நீயும் ஒருபிச்சைப்பெட்டிதானே' என்று கூறிய கூற்று என்மனதில் திரும்பத் திரும்ப மிதப்புக் கொண்டது.
**இஞ்கை பாரும் தம்பி.நீ சொல்லுமாப்போலை. எல்லாருமே பிச்சைப் பெட்டிகள்தான்; ஒரு சிலரைத் தவிர. அந்தப் பிச்சைப் பெட்டிகளுக்கிடையிலையும் எவ்வளவு "பிக்கல் பிடுங்கல்'கள். நாங்களிதை உணர்ந்து நேசப்பட்டால் போதும். அதுதான் உண்மையான நேசம். அந்த நேசம் உலகத்தையே எங்கடை காலடியிலை கிடத்தும்'
‘என்ன..! மாஸ்ரர் பாடம் நடத்திறார். வகுப்பறை எண்டு நினைச்சிற்றார்போலை!"
பஸ்ஸில் இருந்த இளசுகள் சிலதின் வெடிச் சிரிப்பு.
y
'இல்லை. மாஸ்ரர் மாக்சிஸம் பேசிறார்.' விஷயந் தெரிந்த
ஒருவரின் விளக்கம்.
‘என்ரை இயல்புகளுக்கு மாறாய்ச் சற்று உரக்கத்தான் பேசிப்போட்டனோ?”
மனதில் திரளும் எண்ணங்களோடு அந்த இளைஞனைப் பார்த்தேன். அவன் முகத்தில் தெறித்த கொதிப்பு கொண்டக்டரை நடுங்க வைத்தது. அவன் ரிக்கற்றுக்குரிய பணத்தை வேண்டா வெறுப்பாகக் கொடுத்தான். கொடுத்த கையோடு மனம் கூசும் வகையில், கொண்டக்டரைத் திட்டவும் செய்தான்.
கொண்டக்டர் என்னைப் பார்த்தான். பின் சுற்றுமுற்றும் பார்த்துக் குறுகிப்போய் நின்றான்.
அவனை இப்பொழுது எல்லாரும் எரித்துவிடுவதுபோலப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த இறுக்கத்திலிருந்து-எனது பார்வையை விலக்கி, ஈசனை யும் அந்த அழகியையும் பார்த்தேன்.
அவர்கள் இப்பொழுது தனிமைநாடி கடைசிச் சீற்றில் இருந்தார் கள். அந்த அழகி, ஈசனின் தோளில் ஒய்யாரமாகச் சாய்ந்து துயின்றுகொண்டிருந்தாள்.
துயிலும்போதும் அவள் அழகிதான்!

சட்டநாதன் கதைகள் O 25
பஸ் மண்கும்பான் பிள்ளையார் கோவிலடியை அடைந்த பொழுது, நாலைந்துபேர் ஏறிக்கொண்டார்கள்.
அவர்கள்-ரிக்கற் பரிசோதகர்கள்!
அவர்களில் ஒருவர் பயணிகளை எண்ணிச் சரிபார்த்தார். மற்ற இருவர் பயணிகளின் ‘ரிக்கற்றை வாங்கிச் சரிபார்த்தபடி வந்தார்கள்
எனக்கு இரண்டு சீற் தள்ளி, முதியவர் ஒருவர் அயர்ந்து பொய்த் தூக்ககம் போட்டுக்கொண்டிருந்தார்! அவரை அணுகிய பரிசோதக ரொருவர் அவரது முதுகில் தட்டி, “பெரியவர்.1 ரிக்கற்', என்றார்.
‘என்ன. என்ன தம்பி ரிக்கற்றே? யாழ்ப்பாணத்துக்கு ஒரு துண்டு குடணை அப்பு.'
அவர் ஐந்து ரூபாய் நோட்டொன்றை பதட்டமேதுமின்றி நீட்டினார்.
‘எங்கையிருந்து வாறை?"
'குறிகட்டுவான்'
'குறிகட்டுவானிலை பஸ்சேறி. மண்கும்பானுக்கையே *ரிக்கற் கேக்கிறை. நல்லாயிருக்குது உன்ரை வேலை. ‘ரிக் கற்' இல்லாமைப் பிரயாணம் செய்யக்கூடாதெண்டு தேரியாதே?'
பரிசோதகர்கள் அனைவரும் உசாரானார்கள். அவர்கள் அப்புவைச் சூழ்ந்து கொண்டார்கள். கொண்டக்டருக்கு என்ன
செய்வதென்று தெரியாத நிலை.
பிரயாணிகளின் பார்வை அப்புவின்பால் மொய்த்தது, அவர்கள் ஏதோ சத்தியவசப்பட்டவர்களாய், கொண்டக்டர்பால் பரிவுகொண்டு:
"ஏனப்பு? கொண்டக்டர் எத்தனைதரம் *ரிக்கற்’ எண்டு கேட்டவர். நீ என்ன செவிட்டலியனே? பேசாமையிருந்திட்டு இப்ப திருட்டுமுழி முழிக்கிறை"
‘இவர் இப்பிடித்தான்போலை. பழக்கப்பட்ட கட்டை. இண்டைக்கு வசமாச் சிக்கீற்றார்"
'இந்த வயசிலை ஏனப்பு உனக்கு இந்தப் புத்தி கள்ளுக்கு மிச்சம் பிடிச்சனியே. . அதுதான் மடக்கீற்றார் போலை.'
சொற்கணைகளின் சொடுக்கல்கள்.

Page 23
26 Ó பிச்சைப் பெட்டிகள் .
* ஒரு பரிசோதகர் அப்புவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு கேட்டார்:
**அப்பு உண்மையைச் சொல்லு. ஒண்டையும் மறைக்காதை. பஸ்ஸிலை முன்பக்கத்தாலைதானே ஏறினனி.?’
‘ஓம் தம்பி. "பின்பக்க வழியைக் கவனிக்கேல்லை’’
* ஏறினதும் ஏன் "ரிக்கற்’ எடுக்கேல்லை?"
"கேட்டனான். கொண்டக்டர்ப் பொடியன்தான் தரேல்லை’ பஸ்ஸே குலுங்கிச் சிரித்தது.
அப்பு அசடுவழிய, இருப்பிடத்தை விட்டெழுந்து எல்லோரையும் பார்த்தபடி ஏதோ பேச முயர் சித்தார். அவரால் முடியவில்லை குரல் மிகவும் சன்னமாக ஒலித்தக குரலில் லேசான கரகரப்பு வெப்பியாரத்துடன் கண்கலங்க, அவர் மிகுந்த சிரமத் துடன் சொன்னார் :
* தம்பி என்னை மன்னிச்சிடு ராசா. இதைப் பெரிசு படுத்தாமை ரிக்கற்றைத் தந்திடு"
‘அப்பு.! நானென்ன செய்ய, குற்றப் பணத்தோடை இருபத்திநாலு ரூபாய் நாப்பதுசதம் வரும் அதைக் கட்டும்'
** என்ன! ஒருபிள்ளை சீதனம் கேக்கிறை நானெங்கை போறது. உண்ணாணைத் தம்பி இந்த ஐஞ்சு ரூபாயைவிட ஒருசதமும் என்னட்டை இல்லை. இஞ்சை மடியைப் பாரும். இந்தாரும் இதைப் பிடியும்; “ரிக்கற்’ காசை எடும். உன்ரை புள்ளைகுட்டி நல்லாயிருக்கும் ராசா என்னை விட்டிடு. இந்தக் கிழவனை உலையாதை'
* உது சரிவராது. றைவர் நீர் பொலீஸ்ரேசனுக்கு விடும்' பொலிஸ் என்றதும் கிழவருக்கு உதறல் எடுத்தது.
வைத்திருந்த ஐந்து ரூபாயுடன் இன்னுமோர் ஐந்து ரூபாயைச் சேர்த்துப் பத்து ரூபாயாகப் பரிசோதகரிடம் கொடுத்தார்,
**இந்தா பத்து ரூபாய் வைச்சிருக்கிறீர். மிச்சத்தையும் தாரும். இல்லையெண்டா இருக்கிற பிரயாணியளிட்டையாவது வாங்கித் தாரும்' -

சட்டநாதன் கதைகள் () 27
அவரால் இதைத் தாளமுடியவில்லை. அதைத் தவிர வேறு வழியிருப்பதாகவும் தெரியவில்லை. அவர் எழுந்து நின்றார். அவரது உடல் நடுங்கிப் பதறியது, உடலும் மனமூம் கூசியவராய் :
“இஞ்சை தம்பி நான்.நான் பிச்சை எடுத்ததில்லை. பிச்சை எடுக்கச் சொல்லிறையே . . உழைச்சுப் பழகின கையிது, பிச்சை எடுக்குமே..?
அவரது மெலிந்த குரலில் பரிதாபம் இழைந்தது.
சற்று முன்வரை அவரை ஏசியவர்களெல்லாம், அவர் பால் இப்பொழுது இரக்கங்கொண்டு :
“ஏதோ இருக்கிறாக்கள் அப்புவுக்குக் குடுங்கோ . . பாவம் அப்பு. இந்தா இதுதான் என்னட்டைக் கிடக்குது'
ஒரு பயணி ஒரு ரூபாயைக் கொடுத்து ஆரம்பித்து வைத்தார். நல்ல ஆரம்பம். என் பங்காக நானும் ஒரு ரூபாய் கொடுத்தேன். சிலர் தங்களால் முடிந்ததைக் கொடுத்தார்கள். சிலர் கிழவரைப் பார்ப்பதையே தவிர்த்தவர்களாய், வானத்தையும் பூமியையும் கொட்டும் மழையையும் பார்த்தபடி இருந்தார்கள். கிழவர் அவர்கள் முன் நின்றுவிட்டு, அடுத்தவர் தயவை நாடுவது உண்மையில் ஓர் "பஞ்சை பிச்சையேந்துவது போலவே இருந்தது.
அவர், ஈசனும் அந்த அழகியும் இருந்த இடத்தை அணுகியதும், அந்தப் பெண் அவசர அவசரமாக எழுந்து பெல்லை அடித்து-அவரிடம் கையிலிருந்த சில்லறைகளைக் கொடுத்துவிட்டு - பஸ்ஸிலிருந்து இறங்கினாள்.
‘இந்தக் கொட்டும் மழையிலை, கையிலை குடையுமில்லாமல் இவள் ஏன் இறங்கிறாள் . ...! அல்லைப்பிட்டியிலை ஆரையேன் பாக்கப் போறாளோ..?
ஈசனைப் பார்த்தேன். அவர், கிழவனை அசட்டையாக ஒதுக்கிய படி, அவள் இறங்கிப் போவதையே வெறித்துப் பார்த்தபடி இருந்தார். அப்பு அசையாமல் அவர் முன் நிற்பதைக் கண்டு எரிச்சலுடன் தனது 'பொக்கற்றைத் துழாவினார். பின் பதட்டமுற்றுத் திடீரென எழுந்து வந்து எனக்குப் பக்கத்தில் ஒடுங்கிப்போய்' உட்கார்ந்து கொண்டார்.
அவரை, ‘என்ன?’ என்பது போல் பார்த்தேன்.
**இல்லை. சொல்ல வெக்கமாயிருக்குது தம்பி. அவள் என்ரை * பேர்சை" அடிச்சிற்றாள் . நாப்பது ரூபாயும் சில்லறையும் இருந்தது.”

Page 24
28 O பிச்சைப் பெட்டிகள்
‘பஸ்ஸை நிப்பாட்டட்டுமே?’’
‘'வேண்டாம் தம்பி, நிப்பாட்டியும் பிரயோசனமில்லை. பஸ் காக்கட்டை கடந்திட்டுது. மழைவேறை சரியாப் பெய்யிது'
நான் எதிர்பார்த்ததைத்தான் அவர் சொன்னார். வைத்தியர் தாமோதரத்தாற்ரை பேரன். சேர் துரை குமாரசாமியின் தம்பி பிள்ளை. (எல்லாம் அவர் சொன்னதுதான்) ஊரில் நாலுபேர் மதிக் கிற சிவப்பழம். ஒரு கனவான். இப்படித்தானே நடந்து கொள்ள முடியும்.
அவரது பொய் முகங்களைக் கழைந்து பார்த்தால் எஞ்சுவது ஒரு பரிதாபத்துக்குரிய மனிதரென்பது தெரியும், சொந்த மனைவியே அவரது பலவீனங்களைப் பொறுத்திருந்தும், பொருளெனும் “பசை' இல்லாததால் பிரிந்து-பிறந்த வீட்டோடு போய்விட்ட நிலையில் இன்று ஓர் இடமும், நாளை மறு இடமும், மறுநாள் வேறொரு இடமு மாய்ச் சொந்தங் கொண்டாடிக் கொண்டு, ஒருவகை ஒட்டுண்ணி வாழ்க்கை வாழும் இந்த ஜீவியின் கையில் இன்று சொற்பபணம் புழங் கிறதென்றால், அது ஏதோ காணித்துண்டொன்றை விற்ற பணம் என்பது கேள்வி, அதுவும் இன்று சுளையாகப் போவதென்றால்
'பாவம் ஈசன்! உண்மையில் அவர் இரக்கத்திற்குரிய ஒரு *கனவான்' தான்!"
அப்பு ஒருமாதிரித் தனது பிச்சைவாங்கும் சுற்றுலாவை முடித்துக் கொண்டார்.
பரிசோதகர்கள் பணத்தை எண்ணிப் பார்த்தார்கள். பதின்மூன்று ரூபாய் இருந்தது. பற்றாக்குறை ஒரு ரூபாய் நாப்பது சதம்.
‘அப்புவின்ரை மடியை ஒருக்கா வடிவாப்பாரும். ஏதென் இருக்கும்'.
இது பஸ் சாரதி.
ஒரு பரிசோதகர் அப்புவை நெருங்கி அவரது மடியைப் பிடித்தார் வெற்றிலைப் பொட்டலம் கீழே விழுந்தது. அத்துடன் சில்லறைகளும் குலுங்கிச் சிதறின.
சரியாக ஒரு ரூபாய் நாப்பது சதத்தை எடுத்துக் கொண்டு, மீதத்தை அப்புவிடம் கொடுத்த பரிசோதகர்கள், பஸ் சத்திரத்தடியில் திரும்பியபொழுது, குதித்து இறங்கிக் கொண்டார்கள்.

சட்டநாதன் கதைகள் O 29
பஸ் சாரதி அப்புவைப் பார்த்து, அடக்கமுடியாமல் குபீரிட்டு விழுந்து விழுந்து சிரித்தார். அப்புவினது செயல் அவரது ரசனைக்கு விருந்தானது எனக்குப் பிடிக்கவில்லை. எரிச்சலாக இருந்தது
"ஏன் இவர் இப்படிச் சிரிக்கிறார்.இதிலை என்ன ரசிப்பு இருக் கிறது. பாவம் அப்பு. ஏதோ மறைத்து வைத்ததையே கொட்டிக் கொடுப்பதற்குக் காரணமாய்விட்ட இந்த மனிதர் சிறிதும் இந்தக் கிழவரிடம் இரக்கம் கொள்ளாமல், கண்ணில் நீர் மூட்டும் வரை சிரிப்பது.சே. என்ன மனிதர்கள்! என்ன ரசனைகள்!
பஸ், நிலையத்தினுள் நுழைந்து தரித்தபொழுது, எல்லாரும் முண்டியடித்துக்கொண்டு இறங்கினார்கள்.
மழை வேகம் குறைந்து பிசுபிசுத்துக் கொண்டிருந்தது.
சாரதியைப் பார்த்தேன். அவர் அப்புவை அணுகி, ‘அப்பு என்ன? ஏதும் இருக்கே வீட்டை போய்ச் சேர.’’ என்றவர், தனது மடியி லிருந்து ஓர் ஐந்து ரூபாய் நோட்டொன்றை எடுத்துக் கிழவரிடம் கொடுத்தார்.
எதிர்பாராத நிகழ்ச்சி!
நான் பிரமிப்புடன் அவரையே பார்த்தேன். அவர் சிரித்தபடி அவசரமாக இறங்கி எங்கோ போய்க் கொண்டிருந்தார் அந்த மனி தரை என்னாள் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரது அந்தச் சிரிப்பு காதில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டே இருந்தது.
நானும் ஈசனும் பஸ்ஸை விட்டிறங்கியபொழுது யாரோ முதுகில் தொடுவது போன்ற உணர்வு. திரும்பிப் பார்த்தேன்.
கொண்டக்டர்
"மாஸ்ரர் என்னை மன்னிச்சிடுங்க.இந்தாருங்க உங்கடை மிச்சம்.இரண்டு ரூபாயும் சில்லறையும்!"
ஓ! இந்த மனிதர்கள் தேவர்கள்தான். என் மனம் ரோமான்ரிக் காக அலட்டிக் கொள்கிறது.
'தம்பிக்கு ஏதாவது நெருக்கடியே?’’
'இல்லை.நெருக்கடி எண்டாலும் இனி இப்பிடி வேண்டாம் மாஸ்ரர்’’
நான் அவனை மிகுந்த கனிவுடன் பார்த்து விடைபெற்ற பொழுது, அப்பு ஏதோ பிதற்றியபடி இறங்கினார்:

Page 25
30 O பிச்சைப் பெட்டிகள்
'அந்தப் பொடிச்சீற்ரை தட்டிப் பறிச்சதுக்கு செம்மையாப்
பட்டிட்டன்.இது நல்லதுக்குக்தான்.”
‘ஆரந்தப் பொடிச்சி, அவளிற்ரை எதைத் தட்டிப் பறிச்சவர்?" அந்த நினைப்பில் மிதந்த என்னை ஈசன் இடைமறித்தார் 'தம்பி! ஒரு பத்து ரூபாய் தாரும் பிறகு தாறன்’’
'ஈசன் வாரும் சுபாஸிலை சூடா ஒரு கோப்பி குடிச்சிட்டு அதைப்பற்றி யோசிப்பம்"
நானும் ஈசனும் இப்பொழுது கோப்பிகுடிக்கப் போகின்றோம்.
ஈசன் இன்று எனது விருந்தாளி. நாளை யாராவது அவருக்கு நிச்சயமாக இருப்பார்கள். அது அவரிடம் நாப்பது ரூபாய் திருடிய அந்த அழகியாகக்கூட இருக்கலாம். யார் கண்டது. அவர் திறமை அப்படிப்பட்டது. அவர் ஓர் ஆச்சரியமான மனிதர்!
இல்லை, அவரும் நொடிந்துபோன ஒரு பிச்சைப்பெட்டி.
77 י

IDIjps
நீரின் பஸ்ஸைவிட்டு இறங்கியபொழுது அவன் சிரித்தபடி என் எதிரில் வந்தான். இணக்கமான சிரிப்பு. என்னால் அவனை மட்டுக்கட்ட முடியவில்லை. தெரிந்து பழகியது போன்ற முகத்தோற்றம். சடை பொசு பொசு' என நன்றாக வளர்ந்து தோள்களைத் தழுவியபடி அலைந்தது. நீண்ட உடலை ஒட்டிய சேட்டும் நிலத்தைக் கூட்டுவதுபோல பெல்ஸாம் அணிந்திருந்தான். மீசை முளைகொண்டிருந்தாலும் பெண்மையின் சோபிதமும் நளினமும் அவனில் இழைந்தன. :^
அவன் என்னைக் கடந்து, விலகித் தூரத்தே போன பொழுது, அவனை நெருங்கி மிகுந்த சொந்தமுடன் தொட்டுக் குசலம்" விசாரிக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அவன் நிற்காமல் போய்க்கொண்டிருந்தான். மனசு அவனைத் தொடர, நான் ஆலடி ஒழுங்கையில் இறங்கி நடந்தேன்.
ஒழுங்கையை மேவிப்பாயும் மாரிவெள்ளம். அதில் பிரியமாகக் காலைவைத்து நடந்தேன். வேட்டித் தலைப்பு நீரில் தோயத் தோய நடப்பதில் ஒரு திருப்தி, மனசு திடீரென லேசாகி, பரவசம்கொண்டு இறக்கை விரித்தது.

Page 26
சட்டநாதன் கதைகள் O 32
படலையடியில் நீர் கணுக்காலைத் தழுவி ஓடியது. வளைவில் குசினிக்குப் பின்புறமாக வயல்வெள்ளம் ஏறியிருந்தது. குசினியின் தெற்குச் சுவர் நீர்க்கசிவுடன் பளபளத்தது.
அம்மா, வீட்டுத் தாவாரத்தில் உரலில் ஏதோ போட்டு இடித்துக் கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் ஓடிவந்து அணைத்து நெற்றியில் முத்தமிட்டாள்.
‘என்ன இருந்தாப்பிலை. லீவிலை வந்தனியே.?” "லிவிலைதான். வந்து ஒரு கிழமையாச்சு. உன்னையும் ஐயா வையும் பார்க்கவேணும்போலை இருந்தது அதுதான்.' * மருமகளைக் கூட்டிக்கொண்டு வரேல்லையே..?" **அவவுக்குச் சுகமில்லை"
“என்ன! ஏதென் வித்தியாசமே..??? 'இல்லை’ நான் சிரிக்கின்றேன். அம்மாவுக்கு கண் கலங்கிவிடுகிறது.
எனக்குத் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் ஒரு குழந்தையுமில்லை. அது அவ்வுக்கு மிகுந்த கவலை.
'ஐயா தோட்டத்தாலை வாறார்போலை. ரசம் கொஞ்சம் வைச்சுத் தரச்சொன்னவர்'
அம்மா உரத்த குரலில் இருந்ததை அவசர அவசரமாக இடிக்கத் தொடங்கினாள்.
'தம்பியா. எப்ப வந்தது?"
'இபயதானப்யா'
உதடுகள் லேசாகப் பிரிய-புகையிலைக் காவி படர்ந்த மிகவும் சிறியதான அந்த வேட்டைப்பற்கள் தெரிய, ஐயா நெகிழ்ந்து சிரிக்கிறார்.
"ஆர்ப்பாட்டமில்லாமல் எவ்வளவு இதமாக, நெஞ்சைத் தொடு மாப்போலை இவரால் சிரிக்க முடிகிறது’
"ஐயா தளர்ந்துதான் பேர்ய்விட்டார், வயதாகிவிடவில்லை!"
மண்வெட்டியை முற்றத்தில் வைத்தவர் கிணற்றடிப் பக்கம் போனார். அப்பொழுது நான் அம்மாவைப் பார்த்துக் கேட்டேன்;

சட்டநாதன் கதைகள் O 33
*ஆரந்தப் பொடியன்? ஹிப்பிமாதிரி தலையிலை சடை வளர்த்தபடி நீண்ட தொள தொள கழிசானும் போட்டுக் கொண்டு. ஊருக்குப் புதுசா.'
'அவனா? அவனாகத்தான் இருக்கவேணும்!"
f 6T66it?' '
'அவன்தான், முத்தன்ரை மருமோன். மாமனோடை வந்து நிக்கிறான்போலை'
**வள்ளிப்பிள்ளேன்ரை மகனா?’,
அவன் யாரென்பது எனக்கு விளங்கிவிடுகின்றது. அந்த நினைவு களை என்னால் எம்படி மறந்துவிட முடியும். பதினைந்து இருபது வருடங்களுக்குமுன் நடந்தவை என்றாலும் அவை எனது இளமை யோடு பாடம் போடப்பட்ட விஷயங்களாயிற்றே. அம்மாவைப் பார்த்தேன். அவள் முகம் கருமை கொண்டு எங்கோ எதிலோ ஒரு முகப்பட்டு நிலைத்துவிடுகிறது. அவளும் அந்த நினைவுகளில் அமிழ்ந்து விட்டாளோ!
காசிப்பிள்ளை மாமாவும், சந்திக் கடைச் சிவத்தாரும், வினாசியரும் வீட்டுக்கு வந்த பொழுது, அவர்கள் முகத்தில் நெருப் பாய்ப் படர்ந்து சுடர்விட்ட உக்கிரத்தை அவதானித்தவளாய் அம்மா கேட்டாள்:
"என்ன. என்னண்ணை நடந்தது'
'ஏன்ன நடந்ததா? குடிமுழுகிபோச்சுது தங்கச்சி. குடிமுழுகிப் போச்சுது,. இவன் சருகு இராசையன் காசியை ஆரெண்டு நினைச் சிட்டான். கெட்ட ராஸ்க்கல், கெஞ்சித் தின்னி. என்ரை புதறணுக்குக் கிழக்காலை, ஆலடிப் பக்கம் இரண்டு பரப்பு தேட்டுத்துண்டு கிடந்த தெல்லே? அதை விக்கப்போறனெண்டு ஒரு வார்த்தை எனக்குச் சொன்னவனே. சரி என்னைவிடு. இவர் சிவத்தாரிட்டை, இல்லை இவன் வினாசியிட்டை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே. போயும் போயும் இவனுக்குத் நாமுத்தன்ரை பேரன்தானே கிடைச்சான். அந்த நளவனும் லேசுப்பட்டவனில்லை, தாவாடிக்கை. அதுவும்
வெள்ளாளக் குடியளுக்கு நடுவிலை. நாட்டாண்மைகாட்ட வந்திட்டான்.
*ー3

Page 27
34 O மாற்றம்
‘ஆரவன் முத்தனே? பெத்ததுகளை சிறிசிலை இழந்தவன். ஆனைக்கோட்டையிலைதான் பேரனோனட இருந்தவன். கிழவனும் செத்துப் போச்சுது. தலையெடுத்ததும் உழைப்பு பிழைப்புக்கு இது வசதியாய் இருக்குமெண்டு இஞ்சை வந்தவனாக்கும்'
அங்கு வந்த ஐயா இதைச் சொன்னபோழுது, அவரை இடை மறித்து வினாசியர் சொன்னார்:
"அதுக்காக அவனை நாம இஞ்சை நடுவீட்டுக்கை வைக் கேலுமே. அவன்ரை இனசனம் இலந்தையடிப் பக்கம் இருக்குதுகள். அங்கைபோய் அவனிருக்கட்டன்'
'நான் றோட்டுக்கரையெண்டு புதனுறக்கை புது வீட்டுக்கு அத்திவாரம்வேறை வெட்டிறன். அவன்ரை கோடிக்கையே நான் போய்க் கிடக்கிறது’
மாமாவின் கூச்சத்தைப் புரிந்து கொண்டவராய் சிவத்தாரும் :
*அதுசரி காசி! அவன் இஞ்சையிருந்தால் நம்மடை பெண் புரசுகள் அக்கம் பக்கத்திலை புழங்கேலுமே"
'ஒகோ! உங்களுக்கு அந்தப் பயமே, சரி சரி. நீங்க போய் செய்யிறதைச் செய்யுங்க. அவனும் பொலிஸ் அது இதெண்டு போகத்தான் போவான். அந்தக் காலம் போலை நாம அவங்களை ஏறி மிதிக்கேலுமே'-ஐயா.
ஐயா எப்பொழுதுமே நிதானந்தான். நிதானம் தப்பிப் பேசியதை நான் பார்த்ததில்லை.
மாமாவுக்கு ஐயாவின் உபதேசம் பேய்த்தனமாய் பட்டது. அவர் மிகுந்த கோபங்கொண்டவராய் தன் பருத்த உடல் குலுங்க, வினாசியரும் சிவத்தாரும் துணைவர, ஆலடித்துண்டை நோக்கி விரைந்தார். அம்மா மாமாவைத் தொடர, நான் அவளைப் பின் தொடர்ந்து ஓடினேன் எங்களைத் தொடர்ந்து ஊரே வந்தது. ஐயா மட்டும் வரவில்லை.
"ஐயாவிற்கு மாமாவின் வேலை பேய்த்தனமாய்ப் பட்டிருக்கும்"
ஆலடித்துண்டை அடைந்த மாமா இரைந்து கூவினார்:
'ஆரடா அவன், வெளியில வா. சாதிகெட்டதுகளெல்லாம் இஞ்சை இந்தத் தாவாடி மண்ணிலை கால் வைக்கேலுமே!’

சட்டநாதன் கதைகள் O 35
மாமாவின் குரல் கேட்டு வெளியே வந்தவன் இளமையோடு இருந்தான். தசை திரட்சிக்கொள்ள மிகத் திடமாகவுமிருந்தான். அவன் அங்கு நின்றவர்களை எதிர்கொண்டு பார்த்த பார்வை' என்ன? குடியிருந்தால் என்ன செய்வியள்?’ என்பதுபோல் இருந்தது.
'அட அவற்றைப் பார்வையைப்பார் பார்வையை, மசிர்மட்டு மரியாதையில்லாத எளியநாய்."
மாமா பாய்ந்துசென்று முத்தனைத் தனது பலங்கொண்ட மட்டும் தாக்கினார். அவன் இதனை எதிர்பார்க்கவில்லை. நிலை தவறி விழப்போனவன் சற்று நிதானமுற்று மாமாவைப் பார்த்துச்
சொன்னான்:
'கமக்காரர், இப்பிடி நடவாதையும். நாங்களும் மணிசர்தான், நான் இந்தத் துண்டை, குடியிருக்க நிலமில்லாமல் அந்தரிச்சுத்தான் வாங்கினனான்’
‘ஓகோ. வாங்கினனிரோ. காசுகொடுத்தோ. வாங்கின. உடனை உமக்கு இஞ்ாை ஆட்சியோ?”
அவர் மீண்டும் ஆவேசம்கொண்டு அவனது விலாவில் உதைத்தார்.
அவர் மட்டுமல்ல; சிவத்தார், வினாசியர் என்று மூவரும் முறைவைத்துக்கொண்டு மாறிமாறி அவனை அடித்தார்கள்.
இத்தனைக்கும் அவன் பொறுமையாக இருந்தான். அவனது இந்த அசாத்தியமான பொறுமை எனக்கு ஆச்சரியமாக இருந்தது, இந்த மூவரையுமே தனித்து அவன் ஒருவனாகவே சமாளிக்க முடியும். இருந்தும் அவன் கரங்கள் தழையுண்டு கிடப்பதுபோல அவர்களுக்கு எதிராக உயராமல் இருப்பதென்றால்! அவன் உண்மையில் ஓர் பணிவான குடிமைதான்! அவர்களுக்குக் கைகட்டிச் சேவகம் செய்யத்தான் அவனுக்குத் தெரியும். அதற்கு மட்டுமே அவனது கரங்கள் பழக்கப்பட்டவை. அவனைப் பொறுத்தவரை
இது ஒரு வழிவழி வந்த சம்பிரதாயமாகி, அவனுள் ஒன்றிவிட்ட விஷயமாகிவிட்டது. -
என்மனம் அவனுக்காகப் பரிவுகொண்டு தவித்தது.
"இந்தப் பரிவுதான் ஐயாவை இதில் பங்குகொள்ளாமல் தொலைவுகொள்ள வைத்ததோ?

Page 28
36 C மாற்றம்
ஆனால், அம்மா! அவளுக்கு வைத்தியர் சிதம்பரனாரின் பேத்தி என்பதில் பெருமை. தாவாடிக்காரர்கள் சாதிவெள்ளாளர் என்பதில் பெருமை. அந்தப் பெருமைதான் அவளை இங்கு இழுத்து வந்திருக்க வேண்டும். இங்கு வந்த அவள் திகைப்பூண்டில் மிதித்தது போலல்லவா நிற்கிறாள். அவளது திகைப்பு அங்கு கூடிய ஊராருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் தங்களுக்கு தோன்றிய விதமாக ஏதேதோ சொன்னார்கள்.
"சாதிகெட்ட நாயன். இஞ்சை எங்களுக்கு நடுவிலை எப்படி இருக்கேலும். .?'
"கொழுத்துங்கடா அவன்ரை குடிசையை. அடிச்சுக் கொல்லுங்கடா அவனை உசிரோடை. இந்த எளியதுகளை சும்மாவிட்டால் எல்லாருக்கும் அதோகதிதான்' * 'இஞ்சை குடியிருக்க வந்திட்டார். இனிப் பெண் கேட்டாலும் கேட்பார்போலை'
அவர்களுடைய பேச்சு அவ்விடத்தில் ஒரு குழு வெறியையே ஏற்படுத்தி விடுகிறது.
அதன் வசப்பட்ட மாமா ருத்திரதாண்டவராய் அருகில் கிடந்த மண்வெட்டியைத் தூக்கியபடி முத்தனை நோக்கி ஓடினார்.
அப்பொழுது, அங்கு பாய்ந்து வந்த அவள் அந்தப் பெண் மாமா வின் கரங்களைத் தடுத்துத் தளர்ச்சியில்லாமல் இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள்.
அவள்பால் எல்லாருடைய பார்வையும் முட்டிமோதின. அவள் அழகாக இருந்தாள். முற்றிய செவ்வாழைப்பழத்தின் நிறம் ஒடியும் சொகுசு. மழையளைந்த மலரின் தெளிவு. அவளில் இளமை வழிந் து
அவள் அங்குநின்ற எல்லாரையும் வசீகரித்தாள், அவள்து ப்ார்விை சுழன்று, என்னில் ஒருகணம் தரித்தது. மாமாவில் நிலைத்தபொழுது, மாம்ா ஏதோ அம்மன் சிலையைப் பார்ப்ப்துபோல் பார்த்துப் பரவசமுற்றார். அவர் கரத்தில் இருந்த மண்விெட்டி தானாகத் தளர்ந்து கீழே விழுந்தது. அவள் அங்கு அடிபட்டு விழுந்து கிடந்த முத்தனைத் தூக்கி அணைத்தபடி குடிசையினுள் சென்றாள். அங்கு நின்றவர்கள் அவள் போவதையே பார்த்தபடி நின்றார்கள். நான் அவளையும் அந்த உணர்ச்சிவசப்பட்ட மனிதர்களையும் மாறிமாறிப் பார்த்து நின்றேன். அவளது நினைவுகள் என்னுள் நிலைத்தன.

சட்டநாதன் கதைகள் ல் 37
அவள்தான் வள்ளிப்பிள்ளை. முத்தனின் தங்கை. இது பின்னால் அம்மா கூறித் தெரிந்தது. தடித்த சாதிமானான மாமாவினதும் ஊரவர்களினதும் முயற்சி அன்று தோல்வியுற்ற தென்னவோ வள்ளிப்பிள்ளையால்தான். LD AT DIT அன்றைய நிகழ்ச்சியின்பின் முத்தனை ஊரைவிட்டுக் கலைப்பதில் எதுவித தீவிரமும் காட்டவில்லை. இது ஒருவகையில் அதிசயந்தான்! மாமாவைத் தனது இயல்புகளையே மீறி நடந்து கொள்ள வைத்தது எது? வள்ளிப்பிள்ளையா? அல்லது அவளது அழகா? - - - - -
முத்தன் அடிபட்ட நாளிலிருந்து படுத்த படுக்கைதான். இடது கால் மூட்டெலும்பில் வெடிப்பு ஏற்பட்டு விட்டது. அவனுக்கு வள்ளிப்பிள்ளைதான் எல்லாமென்ற நிலை. 'இரத்தஉரித் தென்று யாரும் வந்து அவர்களுக்கு உதவியதாகத் தெரியவில்லை. அவர்கள் ஏதோ ஒரு காரணம்பற்றியே அந்தச் சொந்தங்களைத் துறந்து இங்கு குடிவந்திருக்கவேண்டும். கையில் இருந்த சொற்ப பணமும் முத்தனின் வைத்தியச் செலவு அது இதென்று கரைந்த நிலையில், ஒருநாள் - அவள்! வள்ளிப்பிள்ளை எங்கள் வீடுதேடி வந்தாள்.
நான் மிகுந்த ஆர்வத்துடன் அவளைப் பார்த்தேன். அவள் முன்னைக்கு இப்பொழுது சற்று இளைத்து - வாடிப்போயிருந்தாள். இருந்தும், அவளது அந்த அழகு என்னை நடுங்க வைத்தது.
‘மனசின் இனிய ரகசியங்களுடன் அவளது நினைவுகளும் ரகசியமாயின.
** என்ன தம்பி அப்பிடிப் பாக்கிறை. ஐயா இல்லையே' கனிவும், காதலா - அது எதுவோ, அதுவும் நிரம்பித் தளம்பும் குரலில் அவள் குழைந்தாள்.
எதை அவள் உணர்த்த விரும்பினாளோ, அதைப் புரிந்து கொண்டு நானும் ஏதோ சொல்லமுயன்றபொழுது அங்கு வந்த ஐயா கேட்டார்:
'ஆர் தம்பி அங்கை வந்தது?" ஐயாவைக் கண்ட வள்ளிப்பிள்ளை சொன்னாள்: **அது நான்தானய்யா..! உங்களை நம்பித்தான் வந்திருக்கிறன் அண்ணனும் மூன்று மாசமாய்ப் பாய்க்குப் பாரமாய்க் கிடக்குது. கையிலை மடியிலை இருந்ததும் கரைஞ்சு வடிஞ்சு போச்சுது'
'பாய்க்கு மட்டுமே பாரம். உனக்கும்தானே. அதுசரி. அதுக்கு நான் என்னசெய்யேலும் பிள்ளை?’’

Page 29
38 O மாற்றம்
ஐயாவிடம் இந்தப் பதிலை அவள் எதிர்பார்க்கவில்லை அவள்
கண்கள் கலங்கிவிடுகின்றன.
*தோட்டத்திலை ஏதென் புல்லுக்கில்லுப் புடுங்கிறதெண்டாலும் பரவாயில்லை ஐயா..."
அவள் குரலில் இழைந்த பணிவு-"இவளா அன்று நான் கண்ட வள்ளிப்பிள்ளை? இல்லையே! என நினைக்கவைத்தது.
**அதுக்கென்னவள்ளி வாவன்'-ஐயா.
அன்றைய தினமே அவள் "அஞ்ஞா’வில் எரு அடித்துப் பரவினாள். தாவாடித் தறையில் வெங்காயத்திற்குப் புல் பிடுங்கினாள். அம்மாவுக்கும் விழுந்து விழுந்து வேலை செய்தாள். நெல்லோ மாவோ குத்துவது இடிப்பதெல்லாம் அவள்தான்.
ஒருசமயம் அவளைப் பார்த்துக் கேட்டேன் :
"ஏன் வள்ளி நீ இப்பிடி மாயிறை. உன்ரை அண்ணருக்கும் சுகமில்லை. உன்ரை இனசனம் ஏதென் உதவாதுகளே.'
'உதவும். உதவும்." அவள் பீறிட்ட துயரத்துடன் வெடித்து விம்மினாள். அவளிடம் ஏதோ நிரம்பிய மனக்குறை இருப்பது எனக்குப் புரிந்தது. நான் அவளிடம் தொடர்ந்து எதுவும் கேட்கவில்லை.
பெற்றோரை இளமையில் இழந்த அந்த இருவரும், அவர்களது உதவியை ஏதோ காரணம் பற்றியே விரும்பவில்லைப் போலும்.
இது நடந்து ஒரு கிழமையிருக்கும். வள்ளிப்பிள்ளை மா இடித்துவிட்டு, அம்மா கொடுத்த சாப்பாட்டையும் எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டாள். அவள் போவதையே பார்த்தபடி கிணத்தடியில் நின்ற நான்-ஓர் அதிசயத்தை அவதானித்தேன். மாமாவும் அவளை வெறித்து வெறித்துப் பார்த்தபடி வளவில், வேலியோரத்தில் நின்றார். மாமாவின் அந்தப் பார்வை எனக்கு எத்தனையோ அர்த்தங்களை உணர்த்தின.
"மாமா வள்ளியை விரும்புகிறாரா?
லேசாக, மிகமிக லேசாக ஆணுக்கே உரிய பொறாமையுணர்வின் உறுத்தலோடு வள்ளிப்பிள்ளை என் எல்லைகளை மீறுவதை உணர்ந்து வருத்தமுற்றேன். வருந்துவதைத் தவிர என்னால் அப்பொழுது என்ன செய்யமுடியும்.

சட்டநாதன் கதைகள் ல் 39
அடுத்த நாள் மாமாவின் தோட்டத்திலும் வள்ளிப்பிள்ளை புல்லுப் பிடுங்கினாள். இது எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை; நான் எதிர்பார்த்த ஒன்றுதான். மாமாவை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. மாமா கொஞ்சம் மாறித்தான் போனார்.
வள்ளிப்பிள்ளை தோட்டத்தில் மட்டுமல்ல; வீட்டில் மாமிக்கும் துணையானாள். மாமிக்கு மட்டும்தானா? மாமாவிற்கு...!
மரிமா, மாமி இருவரது தாம்பத்தியமும் நிறைவான தொன்றல்ல. அவர்களது பதினைந்து வருட திருமண வாழ்க்கையில் அவர்கள் எப்பொழுதுமே சந்தோஷமாக இருந்ததில்லை. நிரம்பிய சொத்து சுகம் இருந்தும் வாரிசு இல்லை. இது அவர்களுக்குப் பெருங்குறை. மாமா தெய்வத்தின்மேல் பாரத்தைப் போட்டுப் பேசாமல் இருந்தார். ஆனால் மாமி, மாமாவுக்குத் தெரியாமல், ஊர் வைத்தியனிடம் போய்வந்தாள். அந்த வைத்தியனும் பெண் மலடல்ல ஆண்தான் மலடு என்று ஏதோ சொல்லி மாமியின் மனதைக் கெடுத்துவிட்டிருக்கிறான். மாமாவால் தனக்கொரு குழந்தையைத் தரமுடியாதென்ற வேதனை அவளை ஒரு பிசாசாகவே ஆக்சிவிட் டிருந்தது. எப்பொழுதும் எதையோ பறிகொடுத்தவள் மாதிரிப் பரிதவிப்பதும் எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவதுமாக அவள் காலம்தள்ளி வந்தாள். அவர்களிருவருக்குமிடையே ஒரு சிறு சச்சரவு போதும். மாமி விசர்நாயாக மாறி மாமாவைக் குதறி எடுத்து விடுவாள். அவளது 'கூக்குரலை’க் கேட்டு ஊர் சொல்லும் :
‘ஆரது. காசி பெண்டிலே? உவவின்ரை அமர் எப்பதான் அடங்குமோ?"
மாமி அடிக்கடி அம்மாவிடம் சொல்வதை நான் கேட்டிருக் கிறேன் :
**இந்த மலடனோடை நான் மல்லுக்கட்டேலுமே. இவனை எனக்குப் பேசமுந்தி உவர் கொழும்புக்கடை மணியத்தாரைத்தான் எனக்குப் பேசினவை. அவருக்கென்ன குறை. பால்வத்தாக் குடும்பம். பிள்ளையளோ கிளைகாலி, போன சித்திரையிலதான் அவற்றை கடைக்குட்டி பிறந்தது' Gewa
அவள் அதைச் சொல்லும்போது வெளிப்படும் அவல உணர்வு மிகவும் பரிதாபமாக இருக்கும்.

Page 30
40 O மாற்றம்
‘மணியத்தாரைப்பற்றிப் பேசத்தொடங்கிவிட்டால் ? iii மாட்டாள். அவரைப்பற்றி, அவரது குடும்பத்தைப் பற்றிப் பேசுவது அவளைப் பொறுத்தவரை ஒருவகைச் சந்தோஷத்தைக் கொடுத் திருக்கவேண்டும். ஒருசமயம் இவளுக்கு இளமையிலிருந்தே அவர்பால் ஒரு சபலம் இருந்திருக்குமோ? அவரைப்பற்றிப் பேசும்பொழுது பூரித்து, கள்ளத்தனமாக உருகுவது இவளுக்குச் சுகம் தருகிறதோ?”
*மனசால் சோரம்போகும் பிறவிகள்'
அம்மாவுக்கு இவளது பேச்சு என்னமோ போலிருக்கும். அவள் சொல்வாள் :
*எழுந்துபோ மச்சாள்.! உனக்கு வரவர புத்தி மந்திச் சுப்போச்சுது. பேசிறதெது பேசாததெது எண்டு தெரியேல்லை’
'என்ன உன்ரை அண்ணரைப்பற்றிப் பேசட்டே. அந்த மலடனைப் பற்றிப் பேச என்ன இருக்குது. அதுசரி பிள்ளை உங்கடை குடும்பத்திலை , ஆரன் முன்னைபின்னை மலடுகள் இருந்தவையே இவனைத் தவிர?"
அம்மாவால் இதைத் தாளமுடியாது!
விசரி, விசரி..! பேசாமை எழுந்துபோ!' என்று கூறியபடி தானும் எழுந்துவிடுவாள்.
மாமி-மாமாவை, அம்மாவை, ஏன் இந்த உலகத்தில் மகிழ்ச்சி யாக இருப்பவர்கள் எல்லாரையுமே மிகுந்த கைப்புடன் கொச்சைத் தனமாகத் திட்டிக்கொண்டு எழுந்து போவாள்.
இந்த உரசல் எத்தனை மடங்கு அதிகமாக, உணர்ச்சிபூர்வமாக, கொந்தளிப்புடன் அவர்களது தாம்பத்திய வாழ்வில் விரவிநின்றிருக் கும். இந்த விரிசல்தான் மாமாவை வள்ளிப்பிள்ளைபால் அவரது தடித்த சாதித்தோலையும் மீறி மையல் கொள்ள வைத்ததோ? அல்லது அவர் பொய்யாகக்கொண்ட வேஷங்கள் அந்த வசீகரத்தின்முன் தோல் உரித்துக் கொண்டனவோ?’
மாமா வள்ளிப்பிள்ளைபால் மயங்கித்தான் விட்டார். எதிர்ப்பே இல்லாத, சுலபமான இடமென்று அவர் நினைத்திருக்கலாம். பாவம் வள்ளிப்பிள்ளை. இந்த உறவை அவள் ஒருவகையான பலமென்றே நினைத்தாள். அவளினதும் அவளது அண்ணனினதும் அமைதியான வாழ்வுக்கு இந்தத்துணை அவளுக்கு வேண்டியிருந்தது. எந்த மனிதன் ஊரைக் கூட்டி அவளது அண்ணனை அடித்துத் துரத்த

சட்டநாதன் கதைகள் 8 41
வந்தானோ அவனே அவள்பின்னால் ஒருவகை யாசகனாக வருவதில் அவளுக்கு மிகுந்த திருப்தி.
மாமாவின் நிலை!
‘மாமி சொன்னது உண்மையா? அவர் மலடன்தானா? அந்த மனக்குறை அவரைச் சிறுகச்சிறுக அரித்தது. அவரது புருஷத்தனம் அவருக்குத் தெரிந்த ஒன்று. ஆனால், அதற்கு அத்தாட்சி வேண்டுமே! அவர் குரூரமாக மனைவியைப் பழிவாங்க நினைத்துக் கொண்டார்போலும். அவர் கட்டிக்காத்தவைகளெல்லாம் பொய்மைகளென உணர்ந்தவராய் வேஷங்களைக் களைந்தெறிந்து உண்மையாக நடந்துகொள்ள முயற்சித்தார்.
அதன் விழைவுகள்...!
அன்று சித்திரா பெளர்ணமி, ஊரே திரண்டு வேம்படியில் பொங்கியது. பெரிய வயிரவர் மடை. வேம்பையும் அரசையும சுற்றிப் பொங்கற் பானைகளும், பழவகைகளும், பல காரவகைகளும் மலையாய்க் குவிந்தன. படையலுக்குப் பின்தான் சித்திரபுத்திரனார் கதை வாசிப்பு நடக்கும். வாசிப்பெண்டால் மாமா வாசித்தால்தான் வாசிப்பு என்பது ஊர் அபிப்பிராயம்.
மாமா என்ன அலுவலிருந்தாலும் எந்த இடத்திலிருந்தாலும் வாசிப்புக்கு வந்திடுவார். அன்று ஏனோ வரவில்லை.
அம்மா சொன்னாள், 'தம்பி ராசா. மாமாவைக் கூட்டிக் கொண்டாவன்! எல்லாம் அயத் தமெண்டு சொல்லு.'
ஆயதத
நான் மாமா வீட்டுக்குப் போன பொழுது, மாமியைப் பத்திரகாளியாகத்தான் பார்த்தேன். வள்ளிப்பிள்ளை தாவாரத்தில் விசும்பியபடி கிடந்தாள். மாமா அங்குமிங்கும் நிலைகொள்ளாமல் நெடுமூச்செறிந்தபடி நடந்தார். என்னைக் கண்டதும் மாமிக்கு வெப்பியாரம் தாளமுடியவில்லை. அவள் விம்மியபடி சொன்னாள் :
** கேட்டியா கதையை. உவன் உன்ரை மாமன் செய்யிறதை. உவனுக்கு மானம் ரோசமிருக்கே. உவளிட்டை இந்த ஊத்தை நளத்தியிட்டை என்னத்தைக் கண்டு சொக்கிப்போயிட்டான்.
இண்டைக்குக் கையும் களவுமால்லே பிடிபட்டிட்டான். கோயில் மணிகேட்டுத் திடுக்கிட்டு முழிச்சுப் பாத்தா இவனைக் காணேல்லை. மனிசன் கோயிலடிக்குப் போயிட்டுதாக்குமெண்டு கிணத்தடிக்கும் போய்த் திரும்பேக்கை மாட்டு மாலு’க்கை ஏதோ

Page 31
42 ம் மாற்றம்
ஆளரவம் கேட்டுது. எட்டிப்பாத்தா உவனும் உந்தச் சிறுக்கியும். இதை உனக்கு எப்படியடா சொல்லேலும்.'
எனக்கு மாமி சொல்லாமலே எல்லாம் விளங்கியது.
மாமி என்ன நினைத்தாளோ திடீரெனப் பாய்ந்துசென்று வள்ளிப்பிள்ளையின் தலைமயிரைப் பிடித்துத் தரதரவென்று இழுத்தாள். மாமா மாமியின் பிடியிலிருந்து வள்ளிப்பிள்ளையை விடுவித்தபடி சொன்னார் :
‘அவளை ஒண்டும் செய்ய்ாதை, அவள் கர்ப்பமாயிருக் கிறாள்'
** என்ன! உனக்கே...'
'ஏன் எனக்குத்தான், இந்த மலடனுக்குத்தான்'
இதனை மாமியால் தாங்கமுடியவில்லை. அவளுக்கு, எவன் மலடன் என நம்பியிருந்தாளோ அவனால் வள்ளிப்பிள்ளை கர்ப்பமுற்றது நம்பமுடியாத சங்கதியாக இருந்தது. மாமி மீண்டும் கேட்டாள் :
‘என்ன. உனக்கா?"
‘ஓம் எனக்குத்தான்!”
மாமாவினது பதில் அவளை வெறிகொள்ள வைத்தது. அவள் தனது தலையை வீட்டுச் சுவருடன் மோதி மயங்கிக் கீழே சாய்ந்தாள்.
மாமா அவளை வாரியணைத்துத் தூக்கியபடி வள்ளிப்பிள்ளை யைப் பார்த்தார்.
வள்ளிப்பிள்ளை ஒருகணம் தயங்கி மாமாவையும் "என்னையும் மாறிமாறிப் பார்த்தாள். பின், அங்கு நிற்கவில்லை. கண்களில் நீர்படர அங்கிருந்து நடந்தாள்.
அவளுக்கு நேர்ந்துவிட்ட துயர் என்நெஞ்சில் கனத்தது.
அந்த நிகழ்ச்சியின்பின், ஓர் ஆறேழு மாதங்கள்தான் மாமி உயிரோடிருந்தாள். ஏமாற்றமும், துயரமும், மாமாவின்
பழிவாங்கலும் அவளைப் படுத்தபடுக்கையாக்கி விட்டன.
ஒரு கனத்த மழைநாள் விடியற் பொழுதில் மாமி இறந்து போனாள். ,

சட்டநாதன் கதைகள் 6 43
மாமா குலுங்கிக் குலுங்கி குழந்தை போல அழுதார். அதைக் கண்ட நான், 'மாமா மாமிபால் அன்பில்லாதவரல்ல என நினைத்துக்கொண்டேன்.
வள்ளிப்பிள்ளை அன்று போனவள்தான். அதன்பின் ஊர்ப் பக்கமே தலைகாட்டவில்லை. அவள் வன்னிப் பக்கம் போய்விட்ட தாக ஊரில் பேசிக்கொண்டார்கள். அது எவ்வளவுதூரம் உண்மை என்பது எனக்குத் தெரியவில்லை.
முத்தன் உயிரோடுதான் இருந்தான். அவனிடமும் அவள் வருவதில்லை.
அவள் வரவே மாட்டாளா? அவள் வராவிட்டாலென்ன. தொளதொள கழிசானும் ஹிப்பிமாதிரிச் சடையும் வளர்த்தபடி அவளது மகன் வந்திருக்கிறானே...!"
O
என்ன தம்பி பெலத்த யோசனையிலை ஆழ்ந்திட்ட. போய் உடுப்பை ம்ாத்து; ஐயான்ரை துண்டுகிண்டு கிடக்கும். முகத்தையும் கழுவீற்றுவா..! நீயும் ஒருபிடி பிட்டுச் சாப்பிடு; முட்டை பொரிச்சுத் தாறன்’ -
நான் கிணத்தடிக்குப் போய் முகம் அலம்பிவிட்டுத் திரும்பிய பொழுது
அவன் முற்றத்தில் ஐயாவுடன் ஏதோ கதைத்தபடி நின்றான். நான் அவர்களை நெருங்கியதும் அவன் என்னைப் பார்த்துக் கேட்டான் :
‘அத்தான் எப்பிடி. இப்பவும் இன்கம்ராக்ஸ்தானா?*
நான் ஒருநிமிடம் எதுவுமே பேசவில்லை. 'இவனைப்பற்றி எதுவுமே தெரியாமலிருக்க, இவன் என்னைப்பற்றி. எங்களைப் பற்றியெல்லாமே தெரிந்து வைத்திருக்கிறானே...!"
பேச்சுக் குரல்கேட்டு அம்மாவும் குசினிக்கு வெளியே வந்துவிடுகின்றாள்.
அவள் மிகுந்த ஆர்வத்துடன் அவனைப் பார்த்தபொழுது ஐயா சொன்னார் :
**உன்ரை அண்ணற்ரை மகன்தான்...”*
அம்மா ஒருகணம் பரிதவித்து, ‘வாவன் உள்ளுக்கு" என்று சொல்லுவதற்குக் கூடத் தயங்கியதுபோல் ஒரு தோற்றம் காட்டி நின்றாள்.

Page 32
A4ற் மாற்றம்
ஐயா அவனை அழைத்துக் கொண்டு வீட்டினுள் போக, நானும் அம்மாவும் அவர்களைப் பின்தொடர்ந்தோம். வீட்டுப்படி ஏறியதும் அவனது பார்வை அங்கே கதவின் இடப்புறமாகச் சுவரில் மாட்டியிருந்த படத்தைப் பார்த்து நிலைத்துவிடுகிறது.
அது எனது தங்கை ரஞ்சியின் படம். அவள் அற்ப ஆயுளில் தவறிப்போய்விட்டவள். அவளைப் பார்த்ததும் அவன் கண்கள் பனித்துவிடுகின்றன.
‘ரஞ்சி உயிருடன் இருந்தால் இவன்ரை வயசுதான் இருக்கும். இன்னும் ஓர் இரு வயசு குறைவாகக்கூட இருக்கலாம்.'
அம்மாவும்-கலங்கிவிடுகிறாள். ‘மாமி மச்சாளைப் பாக்கேக்கை என்ரை தங்கச்சியின்ரை நினைவு வருகுது. அவளை உரிச்சுவைச்சாப்பிலை இருக்குது. அதுதான்.'
அவன் கண்களைத் துடைத்துக்கொள்கிறான். ‘என்ன..! என்ன..! உனக்கொரு தங்கச்சியா?" மூவரும் ஆச்சரியப்பட்டுப்போய் ஒரேசமயத்தில் கேட்கிறோம்,
‘ஏன் இருக்கக்கூடாதா..! அப்பு சாகமுந்தி எங்களிட்டை அடிக்கடி வந்துபோறவர். அவற்றை புண்ணியத்திலைதான் நானும் படிக்க முடிஞ்சுது. பாங்கிலை $፷GÙ பத்தாயிரம்வரையிலை அம்மாவின்ரை பேரிலை போட்டவர். அம்மாவுக்கு அவர் துரோகம் செய்யேல்லை’’
'தம்பி இப்ப என்னசெய்யிற ராசா.' 'அம்மா தன்னை மாற்றிக்கொண்டு விட்டாளா? தாவாடிக்காரி. வைத்தியர் சிதம்பரனாரின் பேத்தி. இவ்வளவு சுலபமாக இவளால் எப்படி முடிந்தது".
‘நான் ஏ. எல். எடுத்தனான். இப்பதான் மறுமொழி வந்தது ஒரு பியும் மூண்டு சீயும். மெடிசின் கிடைக்குமெண்டு நினைக்கிறன்"
'உனக்குக் கிடைக்குமடா கட்டாயம் கிடைக்கும்' ஐயா திருப்தியுடன் மனம்திறந்து சொன்னார்.
'தம்பி நீயும் ஒருபிடி பிட்டுச் சாப்பிடன்; முட்டைப் பொரியலுமிருக்கு”

சட்டநாதன் கதைகள் O 45
'இல்லை மாமி! நான் காலையிலை சாப்பிட்டனான். தண்ணி தாருங்க போதும்'
அவன் எதுவித தயக்கமுமின்றி, மாமி மாமி என்று வாய்க்கு நூறுதரம் சொல்வது எனக்கு ஆச்சரியமாயிருந்தது. தேநீரும் கையுமாக வந்த அம்மா கேட்டாள் : 'முத்து உன்னை இஞ்சை போகச் சொன்னவனே?* 'இல்லை, நான்தான் வந்தனான். அவருக்கு இதிலை விருப்பமா இல்லையா எண்டு எனக்குத் தெரியாது. ஏன் மாமி நான் இஞ்சை வாறதுக்கு அவரை இவரைக் கேக்கவேணுமே?"
தேநீரை அருந்தியபடி அவன் தொடர்ந்து சொன்னான்; ‘மாமி நான் இண்டைக்கு வவனியா போகவேணும். அதுக்குமுந்தி உங்களையெல்லாம் ஒருக்காப் பாக்கவேணும் பேசவேணுமெண்ட ஆசை, அதுதான் வந்தனான்'
அவன் போவதற்கு எழுந்த பொழுது. அம்மா ஓடிச்சென்று அவனை உச்சிமுகர்ந்து முத்தமிட்டாள்.
'அம்மா மாறித்தான் போய்விட்டாள்!" 'தம்பி! அடுத்தமுறை வரேக்கை உன்ரை தங்கச்சியையும் கட்டாயம் கூட்டிக்கொண்டு வா ராசா"
**சரிமாமி கூட்டியாறன்’ கூறியகையோடு அவன் இறங்கி நடந்தான். அவன் போன் தையே பார்த்தபடி நின்ற எங்களது கண்கள் பனித்தன.

Page 33
இப்படியும் காதல் வரும்
அந்த 'அவசரத் தந்தியைக் கண்டதும் அவள் ஊருக்குப் புறப்பட்டாள். தனது "ஃப்லாற் றுக்குக் கூட அவள் போகவில்லை, கந்தோரிலிருந்து நேரடியாகவே கோட்டை புகையிரத நிலையத்தை அடைந்தவள், 11-50-உத்தரதேவியைப் பிடித்துக் கொண்டாள்.
சிவா-அவளுக்குக் கீழ் வேலைசெய்யும் உதவி அதிகாரி துணைக்கு வருவதாக முதலில் ஏற்பாடு. ஆனால், நாளை மறு நாள் "லேபர் மினிஸ்றியில் உயர் அதிகாரிகள் கூட்டமொன்றில் அவளும் அவனும் கலந்துகொள்ள வேண்டும். அவள் இல்லாத விடத்து அவனாவது கலந்துகொள்ள வேண்டாமா?.
சிவாவுக்கும் யாழ்ப்பாணத்தில் ஏதோ அலுவல். அதனால் அவளுடன் போக விரும்பினான், முடியவில்லை. அவள் தனியாகவே புறப்பட்டாள். "ஸ்ரேசன்" வரை வந்து இவளை அவன் வழியனுப்பிணான்.
“எயர் கொண்டிசன்’ இல்லாததால் இரண்டாம் வகுப்பில் பிரயாணம். அலுப்பாக இருந்தது. அலுப்பைப் பார்த்தால் முடியுமா? தந்தி, அதுவும் அவசரம்!

சட்டநாதன் கதைகள் O 47
"என்ன அவசரம் இந்த அப்பாவுக்கு? அப்பாவுக்கு எப்பவும் அவசரம்தான்!"
அப்பாதான் தந்தி கொடுத்திருந்தார்.
ஏறக்குறைய எட்டு மாதங்களுக்குப் பின், இன்றுதான் அவள் ஊருக்குப் போகின்றாள். அங்குபோய் அந்தக் குடும்பச் சுமைகளுள் அழுந்தி, கவலை கொள்வதிலும் பார்க்க, இங்கு கொழும்பில்தனித்து அந்தச் சொந்தங்களில் இருந்து தொலைவுபட்டு, அந்நியமாக இருப்பது அவளுக்கு நிறைவு தந்தது.
இந்தத் தனிமையிலும் சிவா-அவனுடன் கொண்டுள்ள தொடர்புகள், அந்த அழுத்தமான அறிவுமிக்க இளைஞனின் தோழமை, அவளுக்கு வாழ்க்கையில் ஓர் அர்த்தத்தைக் கொடுக்கவே செய்கின்றன.
அவனது அறிவுக்கூர்மையில் இவள் லயித்துப்போய்ப் விடுகின்றாள். ஒரே ரசனைகள். ஒரே எண்ணங்கள். சுலபத்தில் கிடைக்குமா?
'ரேயின்’ன் படங்களில் இவளுக்கு ஈடுபாடு. அவனுக்கு *ரேயில்’ல் மட்டுமா? உலக சினிமா உயர் கலைஞர்களைப்பற்றி அவன் அடுக்கிக்கொண்டு போகும் பொழுது, இவளுக்குப் பிரமிப்பாக இருக்கும்.
"சினிமா ஒரு அருமையான மீடியம். அதனை எவ்வளவு "எஃப்க்ரிவ்’ ஆகப் பயன்படுத்தலாம். பார்வையாளனை நேர் நிறுத்தி, அவனுடன் பகிர்ந்துகொள்ள எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன!"
அவன் தன்னை மறந்து பேசுவான்.
அப்பொழுது இவள், 'நீ ஒரு படம்எடேன்', என்பாள்.
'எடுக்கலாம்தான். 'ஃபினான்ஸ்" நீயா?", என்று வேடிக் கையாகக் கேட்டுச் சிரிப்பான்.
கலை, இலக்கியம் என்று வந்துவிட்டால் அவன் மணிக் கணக்காகப் பேசுவான். தன்னை மறந்த லயிப்பில் பேசுவான். நவீன ஓவியமா, புனைகதையா, புதுக் கவிதையா எதுபற்றி யும் அவனால் பேசமுடிந்தது. ஹென்றி ஜேம்ஸையும், ஜொய்ஸை யும், மாக்ஸிம் கோர்க்கியும் இவளுக்கு அறிமுகப்படுத்தியது அவன்தான்.
இவளுக்கு கோர்க்கியை மிகவும் பிடித்துப் போய்விட்டது.

Page 34
48 C இப்படியும் காதல் வரும்
தமிழ் என்று வந்தால் மெளனியைப் பற்றியே அவன் அதிகம் பேசுவான். இவள் மெளனியை ஒருமுறைதான் படித்தாள். மீண்டும் படிச்க வேண்டுமென்று ஆர்வங் கொள்ளவில்லை. ஆனால், ஜானகிராமனை, புதுமைப்பித்தனை, சுந்தரராமசாமியை திரும்பத் திரும்பப் படித்திருக்கிறாள்.
இவை பற்றியெல்லாம் அவர்கள் இருவரும் பேசும்பொழுது ஒத்து, முரண்பட்டு, மீண்டும் இணைந்து, தம் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வார்கள்.
இது ஒருவகையில் ரசனையில் ஏற்பட்ட உறவுதான். அதற்கு மேல்? எதுவுமே சொல்ல முடியாத நிலை! அவளைப் பொறுத்த வரை அவன் சின்னப்பிள்ளை. இருபத்திரெண்டு வயசுகூட நிரம்பவில்லை. அதற்குள் இவ்வளவொரு முதிர்ந்த ஞானமும் செருக்குமா? வியந்துபோவாள்.
அவனுக்கு அவள் முப்பதைத் தொட்டவள் என்ற நினைப்பே இல்லை. அவளது நீள்வட்ட முகம், அந்த அகன்ற கண்கள், அவற்றில் சுரந்துநிற்கும் கனிவு - அத்துடன் ஒரு கவர்ச்சி. கூந்தலா அது அலை அலையாக காலைத் தொடுவதுபோல. அந்த நிறம், அப்பா என்ன கலவை மெலிதாய் உயரமாய் அவள் எவ்வளவு அழகு. கண்ணில் எப்பொழுதுமே வைத்துக் கொண்டிருக்க வேண்டும் போலிருக்கும்.
சிவா ஒருசமயம் அவளைக் கேட்டான்:
'விமலா நீ எவ்வளவு வடிவு இன்னுமேன் கலியாணம்
செய்யேல்லை?
‘ஒ. கலியாணம்! அதுக்கு வடிவுமட்டும் போதுமா?" அவள் வரட்சியான சிரிப்புடன் எங்கோ எதனையோ வெறித்துப் பார்த்தபடி இருந்தாள். அவள் கண்கள் கலங்கிவிடுகின்றன.
அந்த நிகழ்ச்சியின் பின், அவன் அவளிடம் அதுபற்றி எதுவுமே பேசுவதில்லை. அப்படிப் பேசுவதே அவளுக்குத் துன்பம் தருமோ என அஞ்சினான். O
புகையிரதம் யாழ்ப்பாணத்தை அடைந்த பொழுது, நிலையத்தில் யாரும் அவளை அழைத்துப் போவதற்கு வரவில்லை. அவளுக்கு அது ஏமாற்றமாயிருந்தது. அவள் வருவதை அறிவிக்கவில்லைத்தான். இருந்தும், அவள் வரவை எதிர்பார்த்து "சும்மா நிலையம்வரை வந்துபோகக்கூடாதா,

சட்டநாதன் கதைகள் O 49
அவள் தனியாக ‘ராக்சி'யில் வீடுபோய்ச் சேர்ந்தாள். வீடு அமைதியாக இருந்தது. இடைக்கிடை அம்மாவின் விசும்பல் ஒலி. இவள் படியேறியதும் ரஞ்சிதான் ஓடி வந்தாள். அன்புடன் தழுவிக்கொண்டாள்.
ரஞ்சி இவளை அடுத்துப் பிறந்தவள்.
'அம்மா! அக்கா வந்திற்றா'
ரஞ்சியை இவள் பார்த்தாள். அவளது கண்கள் அழுது சிவந்து கிடந்தன.
அப்பாவைக் காணவில்லை!
நடுக்கூடத்தைக் கடந்து, அதற்கு அப்பாலிருந்த அறையினுள் நுழைந்தவள் :
'ரஞ்சி உன்ரை ரெஸ்ஸிங்கவுணைக் கொடு. . நான் கந்தோரிலை இருந்து நேரவாறன்’
சேலையை உருவி எறிந்தவள், கவுணை வாங்கிக்கொண்டாள். அறையின் மூலையில் கிடந்த கட்டிலில் சுசி, ராணி, சக்தி ஒருவர்மேல் ஒருவர் கால்களைப் போட்டுக்கொண்டு, அயர்ந்துபோய்க் கிடந்தார்கள்.
மூவரும் இந்துவை அடுத்து வரிசையாகப் பிறந்தவர்கள். *ரஞ்சி, குழந்தையள் ஏன் தாறுமாறாக் கிடக்குதுகள். ஒழுங்கா வளத்தக் கூடாதா?’’ W
"இஞ்சை எதக்கா ஒழுங்கா இருக்குது . .? 6T66) தாறுமாறுதான்'
*’ என்ன, என்னடி சொல்லுறை?’’
அப்பா காறித்துப்புவது கேட்டது. 'அப்பா வந்திற்றார்போலை . பெரியமாமா வீட்டை போனவர்"
அவள் உடைமாற்றிக்கொண்டு வெளிவிறாந்தைக்கு வந்த பொழுது- அம்மா, அப்பா, இந்து, சரஸ் எல்லாரும் அங்கே இருந்தார்கள்.
சரஸ் இந்துவுக்கு முன் பிறந்தவள்.
ச-4

Page 35
50 O இப்படியும் காதல் வரும்
அவளது இரண்டாவது தங்கை சித்திராவை மட்டும் அங்கு காணவில்லை!
இவள் கேட்டாள்: 'அம்மா சித்திரா எங்கை காணேல்லை?"
'சித் திரா. * அம்மா விம்மத் தொடங்கிவிட்டாள். அவள் குலுங்கிக் குலுங்கி அழுவது பரிதாபமாக இருந்தது.
அப்பா சொன்னார்:
அந்தப் பாதகி தில்லையர் வீட்டிலை வேலை செய்து கொண் டிருந்த தோட்டக்காட்டுப் பொடியன் வேலாயுதத்தோடை ஓடீற்றாள் பிள்ளை'
அவரும் விம்மினார் இந்த இடியை அவளால் நம்ப முடியவில்லை. எப்படி அவளால் நம்ப முடியும்? அவள் நிமிர்ந்து இந்துவையும் சரசு வையும் பார்ததாள்.
அவர்கள் இருவரும் எழுந்து உள்ளே போனார்கள். அப்பொழுது படலை விடும் சத்தம் கேட்டது.
அப்பா கேட்டார், 'யாரது?’’
'நான்தான் அத்தான்!”*
பெரிய மாமாவும், அவற்றை மூத்தமகன் சண்முகம் அத்தானும் வந்தார்கள்.
ரஞ்சி கதிரை ஒன்றை இழுத்துப் போட்டாள். மாமா உட் கார்ந்துகொண்டு ஒரு கனைப்புடன் பேச ஆரம்பித்தார்.
'இஞ்சை பிள்ளை. இது குடும்பத்திலை பெரிய தலைக் குனிவு. நானும் பொம்பிளைப் பிள்ளையளை வச்சிருச்சிறன். உன்ரை சின்ன மாமா, உவன் தம்பி பசுபதிக்கும் இரண்டு குஞ்சுகள். உன்ரை அப்பன் தப்பாமை வரிசையா பெட்டையளையே பெத்து வச்சிருக்கிறான். இனி இதுகளுக்கு கலியாணம் காத்திகை எண்டு ஏதேனும் செய்யேலுமே...? பெரிய தலைக்குனிவை ஏற்படுத்திப் போட்டாள் அந்த ஒடுகாலி. இப்பிடி அமரிலை தோட்டக்காட்டா னோடை ஓடுவாள் எண்டு நான் நினைக்கேல்லை, எங்கடை குடும்ப மென்ன லேசுப்பட்தே. தாவாடிக்காரர் எண்டா எவன் மாப்பிளை கொடுக்க மாட்டான். விழுந்தடிச்சுக் கொடுப்பாங்களே. இவள் விசரி, அவசரப்பட்டிட்டாள். என்ன பின்ளை..? இந்தா முப்பது

சட்டநாதன் கதைகள் O 51
வயசாச்சு. நீ சிவனே யெண்டு இருக்கேல்லையே! நடக்கிற தெல்லாம் விதிச்சபடி நடக்கும் அதுக்கு அவசரப்படுகிறதே? அதுவும் இப்பிடி மானக்கேடாய். இதுக்கு என்ன செயயப் போறை பிள்ளை? இதை இப்பிடியே விடேலுமே? பொலிசுக்கு அறிவிப்ப மெண்டால் அவள் ‘மேஜர் ஒண்டும் செய்யேலாது எண்டு இவன் சண்முகம் சொல்லுறான். அதுவும் சரிதான். “பொலிசு கிலிசு’ எண்டு போறதும் சரியான கிலிசைகேடு'
சண்முகம் குறுக்கிட்டுச் சொன்னான்: ‘பொலிசுக்குப் போகேலாது. எதுக்கும் ஒருக்கா பெரிய கமத் துக்குப் போய்ப் பாக்கலாம். பெரிய கமத்திலைதான் வேலாயுதத் தின் ரை தாய் தகப்பன் இருக்குதுகள் பெரிய கமம் கிளிநொச்சி யிலைதான். கரடிப்போக்கிலை இருந்து கிழக்கை ஒருகட்டை தூரம் இருக்கும்'
‘அப்பிடியே? அப்ப நாளைக் காலமை, முதல் வேலையா அதைப் பாருங்க. அவள் அங்கை இருந்தா அவளை இழுத்துக் கொண்டு வாருங்க. அதை முதலிலை செய்யுங்க. விஷயம் காதும் காதும் வைச்சாப்பிலை நடக்கவேணும். ஊருக்கை சங்கதி தெரியாது. சந்தி சிரிக்கமுந்தி விஷயத்தை முடிச்சிட்டா நல்லம். இல்லை, எல் லாரும் தலையிலை சீலையைப் போடவேண்டியதுதான்'
மாமாவும் சண்முகம் அத்தானும் விறாந்தையை விட்டு இறங்கி னார்கள்.
அப்பா கேட்டார் : 'விமலா நீ எத்தனை நாள் லீவிலை வந்தனி?'
"நான் இஞ்சை கனநாள நிக்கேலாதப்பா. நாளையிண்டைக்கு மினிஸ்ரரின்ரை கூட்டம் இருக்குது. நாளைக்கே நான் போக வேணும்'
'நாளைக்கா..? இதுக்கொரு முடிவு காணமலே?" 'அதுதான் அவள் தீர்க்கமாய் முடிவெடுத்திற்றாளே. நாமென்ன செய்யேலும்'
வெடுக்கெனச் சொல்லிய விமலா ரஞ்சியைப் பார்த்து: 'அந்தச் சோப்பை எடம்மா! லாம்பையும் எடுத்துக்கொண்டு கிணத்தடிவரைக்கும் வா'
தங்கை தண்ணீர் அள்ளிக் கொடுக்க, இவள் தலையில் ஊற்றிக் கொண்டாள்.

Page 36
52 O இப்படியும் காதல் வரும்
‘என்னக்கா இது. குளிரிலை நேரம்கெட்ட நேரத்திலை தலையிலை ஊத்திறை'
**இந்தக் குடும்பத்தையே தலைமுழுகப் பார்க்கிறன். முடியேல்லை. இதையாவது செய்யக்கூடாதா?'
ரஞ்சி விக்சித்துப்போய் நின்றாள். அவள் கண்களில் நீர் முட்டி மோதித்திரண்டு உதிர்ந்தது.
*ரஞ்சி அழாதை. நான் இஞ்சை வராமல் கொழும்பிலை நிக் கிறது இதுக்குத்தான். இந்தச் சுமையளை என்னாலை தாள முடியாதடி. எடுக்கிறதிலை என்ரை செலவுபோக மிஞ்சிறதை அப்பிடியே அனுப்பிப்போட்டு அங்கை சிவனே எண்டிருக்கிறது எனக்கு எவ்வளவு நிம்மதி தெரியுமே? பிள்ளையளைப் பெத்தா மட்டும் போதுமே. அதுகளுக்கு உரிய வயதிலை செய்ய வேண்டி யதைச் செய்ய வேண்டாமே. செய்யாவிட்டால் சித்திரா என்னடி, நானும் ஆரையாவது இழுத்துக்கொண்டு ஒடத்தான் ஒடுவன். கண்டறுயாத குலப் பெருமை பேசுகினை. அவர் பெரியம்மா, கொம்பு முளைச்ச சாதி வெள்ளாளர். அட, அவற்றை பெருமை! என்ன பெருமையோ. பீத்தல் பெருமை! தாவாடிக்காரரெண்டா மாப்பிளை கொடுக்கப் போட்டி போடுவினையாமே? எங்களுக்கு அப்பிடி ஒரு மாப்பிளை வருகுதில்லையே. தாவாடிக்காரியின்ரை மூத்த பேத்திஎனக்கு எத்தனை வயசு, உனக்கெத்தனை வயசடி. எங்கடை மூத்த மச்சாளுக்கு எத்தனை வயசு, நாங்களெல்லாம் கிழடு தட்டிப் போகேல்லை?’!
ஆவேசம் வந்தவளாக அவள் கத்தினாள்.
ரஞ்சிக்கு இது புதுமையாக இருந்தது. அக்கா இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதை அவள் கண்டதில்லை" எதையுமே அநாயாச மாக ஒதுக்கித் தள்ளிவிட்டுப் போகும் அவள் ‘இன்று. இப்படி.."
ரஞ்சி அவளை உட்காரவைத்துத் தானாகவே அவளது தலையில் தண்ணீரை ஊற்றினாள். இந்தத் தண்ணீராவது அக்காவின் மனதைக் குளிர வைக்காதா? என்ற ஆதங்கம் அவளுக்கு.
மவிலா இப்பொழுது சற்றுத் தணிந்தவளாய்க் கேட்டாள்:
‘ரஞ்சி அம்மாவைப் பாத்தன், அவ ஒரு மாதிரி இருக்கிறா. ஏதென் சுகமில்லையே?’’
"ஓம் அக்கா, அவவுக்கு இதுதான் பெறுமாசம்!"
‘என்ன, என்னடி சொல்லுறை.? இன்னுமா அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஆசை அவியேல்லை. அவள் சித்திரா சிறிசு. பாவம்.

சட்டநாதன் கதைகள் ம் 53
ஓடினா என்னவாம். நான் நாளைக்கே கிளிநொச்சிக்குப்போய், நீ செய்ததுதான் சரி எண்டு சொல்லீற்று, கொழும்புக்கு ஒரேயடியாய்ப் போகப்போறன்’
“இந்தக் குழந்தை ஆண் குழந்தையாய்த்தான் இருக்குமாம்! கந்தசாமிச் சாத்திரியார் சொன்னவர்'
**ஓ! ஆண்வாரிசே. பெத்த எட்டுப் பெட்டையஞக்கும் உழைச்சுச் சீதனம் கொடுக்க தம்பி வரப்போறானே?’’
'அக்கா சத்தம்போடாதை! **ஏன் ஏனடி?’! அவள் மீண்டும் கத்தினாள். **இதுக்குச் சரியான கிஸ்ரீரியாதான்' விமலா உடை மாற்றிக்கொண்டு, விறாந்தையை ஒட்டி இருந்த கீழ்ப்புற அறையில் நுழைந்து, கதவை அடித்துச் சாத்தினாள்.
அவள் கொழும்பிலிருந்து வந்தால், அந்த அறையில்தான் தங்குவது வழக்கம்.
ரஞ்சி பலமாக இரண்டுமுறை கதவைத் தட்டிப் பார்த்தாள் பதில் இல்லை.
அக்கா பாவம். கொழும்பாலை வந்து தண்ணிகூடக் குடிக் கேல்லை."
அவள் பேசாமல் போய்க் கூடத்துக்குள், அம்மாவுக்குப் பக்கத்தில் படுத்துக்கொண்டாள்.
எப்பொழுது விழித்தாள் என்று தெரியாது, ‘ரஞ்சி. ரஞ்சி." லேசாகக் கூப்பிடுவது கேட்டது வெளியே வந்து பார்ந்தாள்.
பிச்சிமர நிழலில் சண்முகம் அத்தான்! அவள் அவனது மார்பினுள் புதைந்து விம்மினாள். அவளை சண்முகம் ஆதரவாக அணைத்துக்கொண்டு கேட்டான்: 'மரவள்ளித் தோட்டத்துக்கை போவமே'
"ஊஹாம். வேண்டாம்", ரஞ்சியின் போலிச் சிணுங்கல்.
முல்லைத்தீவு பஸ்ஸில்தான் அவர்கள் பிரயாணம் செய்தார்கள். 'விமலா போனால்தான் அவள் பயப்படுவாள். அவளும், சண்முகமும் பெரியகமத்துக்குப் போய்வரட்டும்' இது வீட்டுப் பெரியவர்களுடைய . إUpl+6P)

Page 37
54 () இப்படியும் காதல் வரும்
பஸ் கரடிப்போக்கில தரித்தபொழுது, சண்முகமும் விமலாவும் இறங்கிக்கொண்டார்கள். சண்முகம் கேட்டான்:
**கார் பிடிச்சுக்கொண்டு பெரியகமத்துக்குப் போவமே?!" ** வேண்டாம் அத்தான்! ஒரு கட்டைதானே நடந்து போவம்'
இருவரும் நடந்தே போனார்கள். வீதி சற்றுக் குறுகலானது குண்டும் குழியுமாக இருந்தது. **இந்த றோட்டுக்கு வடக்காலை இருக்கிற கமம்தான் சதாசிவத் தாற்றை. ஐம்பதோ அறுபதோ ஏக்கர், பயிரைப் பார். என்னமாதிரிப் பச்சைப் பசேலென்று ...!'
‘நம்ம நொச்சிக்காட்டுச் சுறுக்கற்றை கமமே. நல்லாத்தான் இருக்குது. அவருக்கு என்னகுறை. இரண்டு பெட்டையள். நம்ம சித்திராவின்ரை வயசுதான் மூத்த பெட்டைக்கு. மற்றவளுக்கு இருபதுகூட நிரம்பேல்லை. இரண்டு பெட்டையளும் முடிச்சு நல்லா இருக்குதுகள்'
*உனக்கொண்டு சொல்லட்டுமே. உனக்குத்தான் முதலிலை சொல்லவேணுமெண்டு நினைச்சனான்'
அத்தானின் கறுத்த முகத்தில் செம்மைப் பூரிப்பு. அவள் அவரை அதிசயமாகப் பார்த்தாள்,
**இல்லை விமலா எனக்கு ரஞ்சியிலை சரியானவிரும்பம். அவளுக் கும்தான். நீதான் இதை உங்க அப்பாட்டைச் சொல்லவேணும்'
‘காதலா?"
**இல்லை, அப்பிடி ஒண்டுமில்லை. ஒரு விருப்பம். அவள் தான் உங்களிலை ஒரு பெரிய சொத்து மாதிரி1
'அப்ப நான்?"
A
‘என்னத்தான் பேசாமல் . .
** நீ என்ன விமலா! எங்கடை குடும்பத்திலை பெரிய படிப்பெல் லாம் படிச்சு, உதவிக் கொமிஷனராவேறை இருக்கிறை, உனக் கென்ன குறை. உனக்கொரு மாப்பிளை கிடைச்சிட்டா எங்களுக்

சட்டநாதன் கதைகள் 0 55
கெல்லாம் எவ்வளவு சந்தோஷம் தெரியுமே அவள் ரஞ்சி சொல்லு றாள் அக்காவுக்குச் சடங்கு நடந்துதான் எதுவுமெண்டு'
*ஓ! எனக்கு நடந்து முடிஞ்சபிறகுதான் உங்கட கலியாணமே? அத்தான்! எனக்கொரு தம்பி பிறக்கப்போறான். அவன் உழைச்சு எனக்குச் சீதனம் தருவான். அப்ப என்ரை கலியாணம் நடக்கும். அதுவரைக்கும் பொறுமையா உங்களாலை இருக்க முடியுமே? அவள் ரஞ்சி வலுகெட்டி இருந்தாலும் இருப்பாள்!'
என்ன மாமி கர்ப்பமே இந்த வயசிலையே? சும்மா .. . . . . . تا ۶ பேய்க்கதை பேசிறை’’
'உண்மை அத்தான். உங்களுக்கொரு குட்டி மச்சான் பிறக்கப் போறான்! உங்களுக்கு மாப்பிளைத் தோழன் வேண்டாமே!" அவள் சிரித்தாள், ஜீவனற்ற சிரிப்பு.
"அதோ ஒரு பெரிய கல்வீடு றோட்டுக்குத் தெற்குப்பக்கம் தெரி யுதே அதுதான் பெரியகமம்'
இருவரும் மெளனமாக நடந்தார்கள்.
அந்தக் கல்வீடு பூட்டிக்கிடந்தது. வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு குடிசை, குடிசையின்முன் ஒரு கிழவன் இளவெய்யிலில் சுருட்டுப் புகைத்துக்கொண்டிருந்தான். அவனை அணுகிய சண்முகம் :
அப்பு இதுதானே வேலாயுதத்தின்ரை வீடு. வேலாயுதம் இருக்கிறானே?"
‘எய் பிள்ள! இஞ்ச யாரோ வேலாயுதத்த தேடிக்கிட்டு வந்திருக்காங்க. வந்து பாரு'
மெலிந்த, சற்று வயது போன ஓர் உருவம் குடிசையிலிருந்து வெளியே வந்தது. வேலாயுதத்தின் தாயாக இருக்க வேண்டும்.
அவளைத் தொடர்ந்து ஒரு சிறுபெண், பதினைந்து பதினாறு வயது ஊர் அம்மன் கோயில் சிலை மாதிரி மூக்கும் முளியு
தான் இருக்கும். மாய், செதுக்கியெடுத்த 6نشانه6.واله .
ஓ! இளமை எவ்வளவு வடிவு', விமலா புல்லரித்துச் சிலிர்த்தாள்.
வேலாயுதம் இருக்கிறானே?”
இல்லைங்க தம்பி அவன் வேலணயில: பாவம், இந்தப் கிழமையா பாக்கல்லேங்க'
பிள்ள, இவளக்கூட- இஞ்ச வந்து ரெண்டு

Page 38
56 O இப்படியும் காதல் வரும்
'இவள்!" 'அவன் சம்சாரமுங்க. எங்க அண்ணன் பொண்ணுங்க' 'அவரு அங்க இல்லிங்களா?’’ கண்கலங்க அந்தப்பெண் சண்முகத்தை விசாரித்தாள். அவள் உடல் லேசாக நடுங்குவதைப் பார்த்த விமலா:
‘இல்லைத் தங்கங்சி, நாங்க சும்மா இஞ்சை ஒரு அலுவலா வந்தனாங்க, வேலாயுதத்தைக் கூட்டிக்கொண்டு போனா சுலபமா இருக்குமெண்டு நினைச்சம். அதுதான் அவனைப் பாக்கவந்தம்'
, ‘என்னுங்கம்மா.. என்ன காரியமாகனும்? நாங்க உதவி பண்ணேலுங்களா?' வேலாயுதத்தின் தாய்.
'இலலையாச்சி வேண்டாம்'
அந்தச் சிறுபெண் கண்களை அகல விரித்து இமைகள் பட்டாம் பூச்சிபோலப் படபடக்கச் சொன்னாள்:
'மச்சானைக் கண்டாக்க. ஒருக்கா இங்கிட்ட வந்து போகச் சொல்லுங்க"
அதில் தொனித்த ஆர்வமும், தாபமும் விமலாவை என்னமோ செய்தது.
அவர்களிடம் இருந்து விடைபெற்று, வெளியே வந்தபொழுது விமலா சண்முகத்தைப் பார்த்துச் சொன்னாள்:
*அத்தான்! அந்தப் பெட்டையைப் பாத்தியளா. எவ்வளவு ஆர்வத்தோட, ஏக்கத்தோட வேலாயுததுக்காக காத்திருக்கிறாள். இவளுக்குத் துரோகம் செய்ய அவனாலை முடியுமா? அந்தத் துரோகத்துக்குச் சித்திரா உடந்தையா? இருக்காது’’
"இருக்கக்கூடாதென்பதுதானே விமலா எங்கடை எல்லாற்றை விருப்பமும்'
**அத்தான்! நான் இஞ்சையிருந்தே கொழும்புக்குப் போகலா மெண்டு நினைக்கிறன். வந்த காரியமும் முடியேல்லை. எதுக்கும் இரண்டொருநாள் பொறுப்பம். விஷயம் வெளிச்சத்துக்கு வராமலே போகும். முக்கியமான கொன் ஃபிரன்ஸ், நான் கொழும்பிலை நிக்க வேணும். நான் போயிற்று உடனை திரும்பிறனே'
“ “ Fífl 6 D6amr””

சட்டநாதன் கதைகள் O 57
‘இஞ்சை ஒரு “லேபர் டிஸ்பியூட் விஷயமா வில்சன் றோட்வரை போக வேண்டியிருக்குது. நீங்களும் ரவுணுக்கு வாருங்க. நான் ஒண்டரை மணியளவிலதான் றெயின்' எடுக்கேலும். நீங்க அது வரைக்கும் சுணங்காம ஊருக்குப் போங்க’’
அவர்கள் இருவரும் கிளிநொச்சி ரவுணை நோக்கி நடந்தார்கள். O
சிவா ஸ்ரேசனுக்கு வந்திருந்தான். அவள் எதிர்பார்க்காத ஒனறு.
"நான் நாளை யாழ்தேவியிலை வந்தாலும் வருவன். எதுக்கும் ஒருக்கா வந்து பாரேன்.' என்றதற்கு இவ்வளவு மதிப்பா!
அவள் வண்டியைவிட்டு இறங்கியதும் அவன் கேட்டான்:
‘என்ன தந்தி?’’
'அதுவா? அம்மாவுக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்கப் போகுது! அதுதான் அப்பா தந்தி அடிச்சவர்'
* என்ன! அப்பிடிச் சரியா ஆண்குழந்தை என்கிறாய். பிறக்க முந்தியே'
‘எட்டுப் பெட்டையஞக்குச் சீதனம்தேட ஆண்வாரிசு வேன் டாமே அதுதான்'
'ஒகோ! அதுக்கா? சரிதான்' அவன் சிரித்தான். அவளும் கலகலவென்று சிரித்தாள். மனம் மிகவும் லேசானதுபோன்ற உணர்வு.
ஸ்ரேசனை விட்டு வெளியே வந்தவர்கள், ராக்சியொன்றில் ஏறிக்கொண்டார்கள். ராக்சி றைவரிடம் அவன் சொன்னான்:
**பப்பலப்பிட்டியா. பிப்பின்லேன்.' வழமைக்கு விரோதமாக, அவன் பின்சீற்றில் - அதுவும் அவளுக்குப் பக்கத்தில், நெருக்கமாக உட்கார்ந்து கொண்டான்.
அவளுக்கு அதிசயமாக இருந்தது.
** என்ன, குடிச்சனியா? மனக்குது'
* நோ." அவனது அசட்டுச் சிரிப்பு.

Page 39
58 O இப்படியும் காதல் வரும்
'விமல், உன்னட்டை ஒரு விஷயம் கதைக்க வேணும். சும்மாகதைக்க முடியுமா? குடிச்சாத்தான் முடியும்போலை இருந்தது. அதுதான். '
* டோன் பி சில்லி’’
‘ஓ!, மறந்துபோனனே. உனக்கு இரண்டு "பேர்சனல்
லெட்டர்ஸ் கந்தோருக்கு வந்தது கொண்டு வந்தனான்' அவன் கடிதங்களை எடுத்து இவளிடம் கொடுத்தான்.
ஒரு கடிதம் அவளது சிநேகிதி எழுதியது. மற்றக் கடிதத்தைப் பார்த்தாள். சித்திரா எழுதியிருந்தாள். அவள் பதட்டத்துடன் கவரை உடைத்து, ராக்சியின் ‘ஹாட்"லைற் வெளிச்சத்தில் படித்தாள்.
*அக்கா! நான் இதைத் துணிஞ்சுதான் செய்யிறன், அவரை உனக்குத் தெரியும். சரவணை மாஸ்ரரின்ரை மகன் குணம்தான். ஸாகர் கோப்பரேசனிலை வேலை செய்யிறார். வேலாயுதம்தான் என்னைக் கூட்டிக்கொண்டு வந்து அவரிட்டை ஒப்படைச்சவன். இது அவற்றை ஏற்பாடு. அவன்ரை உதவி இல்லாட்டி நான் அந்த நரலுக்கையிருந்து தப்பேலாமப் போயிருக்கும். இரண்டொரு நாளிலை பதிவுத் திருமணம், முடிஞ்சா நீயும் வாவன். அறிவிப்பன். எனக்கொருத்தற்றை ஆசியும் வேண்டாம். உன்ரை ஆசி வேணுமக்கா.
சுருக்கமான கடிதம், விமலாவுக்கு எல்லாமே விளங்கியது.
‘இவன் குணம்தானே. கோவியப் பொடியனெண்டு அப்பா அம்மா துக்கப்படுவினை, கண்டறியாத சாதி. இப்ப ஆர் சாதி பாக்கினை. எல்லாம் ஒண்டுதான். ஏதோ உத்தியோகம் பாக்கிற பொடியன்தானே. சாதி அந்தத் தகுதிக்கை மறைஞ்சு போகாதே. சின்ன வயதிலை கண்டது. இப்ப அவன் எப்பிடி இருக்கிறானோ? இவள் சித்திரா அவனை எங்கை கண்டுபிடிச்சாள். ஒ! இவளும் அவனும் ஒருவகுப்பிலைதானே படிச்சவை. அப்பதொட்டே. சித்திரா துணிஞ்ச பெட்டைதான்."
அவள் நிம்மதிப் பெருமூச்செறிந்தாள்.
** என்ன விமலா!'
'விமலா ஒரு நிமிஷம் ராக்சியை நிறுத்தட்டுமே, உனக்கொரு ‘டினர் பாக்கெற்’’

சட்டநாதன் கதைகள் d) 59
‘நோ. ப்றொயிலர் வாங்கு, உனக்குச் சாப்பாடு இண்டைக்கு என்னோடைதான்'
‘சரி உன்ரை விருப்பம்'
ஷராஸ7க்கு அண்மையில் ராக்சியை நிறுத்தியவன். ப்றொயில ரோடும் இரண்டு போத்தலோடும் வந்தான்.
‘என்ன போத்திலது?’’
“ஸ்ரவுட்”
‘பூ! ஸ்ரவுட் குடிகாரன்தானா நீ! நான் என்னமோ ஏதோண்டு பயந்திட்டன்'
'எனக்கு இதுதான் பிடிக்கும், அதுவும் இருந்திட்டுத்தான்'
ராக்சி பிப்பின் லேனில் நுழைந்து, இடது பக்கமாக மூன்றாவது வீட்டின்முன் நின்றது.
அது மாடிவீடு. விமலா மாடியில்தான் குடியிருந்தாள், மாடி முழுவதுமே அவளுக்குத்தான்.
அவளது வரவேற்பறை கச்சிதமாக இருந்தது. அழகாகவும், அவளது ரசனைக்கேற்பவும் இருந்தது. வரவேற்பறையை ஒட்டி மேற்கே இரு அறைகள். கிழக்குப் பக்கமாகக் 'கிச்சன்", "அற்ராச்பாத்' எல்லாம் இருந்தன.
*சிவா! ‘ரேக் ரெஸ்ற்’, ஒரு நிமிஷத்திலை குளிச்சிட்டு வாறன் வந்து உனக்குச் சமைச்சுப் போடிறன்'
"சமையல் எனக்கு இண்டைக்கு மட்டும்தானா?’’
அவள்-அவனை என்ன? என்பதுபோல் பார்த்துநின்றாள்.
* 'விமல். 1 டியர். நான் உன்னை. நீ எனக்கு வேணும்' சொற்கள் தடுமாற, அவளை அவன் நெருங்கினான்.
**சிவா டோன்பி சென்ரிமென்ரல். இதைச் சொல்லத்தான் நீ இண்டைக்குக் குடிச்சனியா?”
* Gus)''
அவள், தன்னை நோக்கி வாஞ்சையோடு நெருங்கிவரும் அவனையே பார்த்தபடி நின்றாள். அவள் கண்கள் பனித்து
ஆடுகின்றன.

Page 40
60 ல் இப்படியும் காதல் வரும்
'விமலா! டோன்பி சென்ரிமென்ரல்"
விமலா உணர்ச்சிவசப்பட்டவளாய் அவனை அணைத்து, அவனது கண்கள், கன்னங்கள், உதடுகள் என்று மாறிமாறி முத்தமிட்டாள். பின்பு சொன்னாள் :
'பிளிஸ் சிவா! ஸ்ரே வித் மீ ரு நைற்”*
* நோ. நோ. அந்த சேயிங் என்ன? ஆக்கப் பொறுத் தவன்.
‘ஆறப் பொறுக்கக் கூடாதா!'
இருவரும் குலுங்கிச் சிரித்தார்கள். இறுக்கம் குலைந்த அந்தச் சிரிப்பில் எவ்வளவு நிறைவு.
O

பக்குவம்
எவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் இருந்தும் அந்தத் தவறு நடந்து விடுகிறது. சைக்கிளைப் பூட்டப்போன போதுதான் அதை அவன் அவதானித்தான்.
சைக்கிளில் பூட்டில்லை.
அவனது வாகனம் மிகவும் பழையது. றலி. எழுபத்திரெண்டாம் ஆண்டு நூற்றி நாற்பது ரூபாய்க்கு வாங்கியது.
"பழசு என்றால் திருட்டுப் போகாதா என்ன? பயம் காரணமாக அவனாகவே ஒரு பூட்டை - ஒன்றரையடிச் சங்கிலி, அதே அளவிலான சிவப்பு இறப்பர் ஹோர்ஸ், பழைய பாட்லொக் ஆகியன கொண்டு-தயார் செய்து கொண்டான்.
அந்தப் பூட்டு, சைக்கிளுக்காகத் தயாரிக்கப்பட்டது. என்றாலும்
வீட்டில் அவனது மனைவி பல தேவைகளுக்கு அதனைப் பயன் படுத்திக் Gd5(T6TL. Itsir,

Page 41
62 0 பக்குவம்
இரவு வேளைகளில் கோழிக்கூடு பூட்ட-முன் கேற் ஆமைப் பூட்டு கைபிசகாக எங்காவது மாறி வைக்கப்பட்டுவிட்டால்-கேற்றைப்
பூட்ட என்று அது அவளுக்குப் பயன்பட்டது.
இரவு கூட, கோழிக் கூடு பூட்ட அவள் எடுத்தது இவனுக்கு ஞாபகம் வந்தது.
மனைவியை மனதால் வைதபடியே செய்வதறியாது விழித்த வனுக்கு, பொறி தட்டியது போல் அந்த யோசனை தோன்றியது.
'பக்கத்திலை. ஆற்ரையன் வீட்டிலை சைக்கிளைப் போட்டால் பத்திரமாய்க் கிடக்கும்."
சைக்கிளை உருட்டியபடி பிரதான வீதிக்கு வந்தான். அவனது மனசுக்குப் பிடித்த மாதிரி வீடு எதுவுமே இல்லாதது போலத் தோன்றியது. ஒரு கணம் தயங்கியவன், ஒற்றை கேற் போட்ட, அந்தச் சிறிய வீட்டை எட்டிப் பார்த்தான். ஒருவரும் இல்லை. யோசனை ஏதுமற்றவனாய் சைக்கிளை உள்ளே உருட்டினான்.
அப்பொழுது;
அவள், அந்தப் பெண் குழந்தை-ஒன்பது அல்லது பத்து வயது இருக்கும்-எதிரே வந்தாள். அவள் கறுப்பாயிருந்தாள். கையும் காலும் சுள்ளி சுள்ளியாயிருந்தன. முகத்தில் மட்டும் ஒரு திரட்சி, களை, கண்கள் பெரிதாய், சதா சிரித்தபடி இருந்தன. இவனை மிகுந்த பற்றுதலோடு பார்த்தாள்.
முதற் பார்வையிலேயே அவளை இவனுக்குப் பிடித்துப் போய்விட்டது. அழிந்துபோன சிவப்புப் புள்ளிச் சீத்தைச் சட்டை போட்டிருந்தாள். "என்ன?’ என்பது போல அவள் மிகுந்த கனிவுடன் இவனைப் பார்த்தாள்.
**சைக்கிளுக்குப் பூட்டில்லை. அதுதான். இதிலை விட்டிட்டுப் போகலாமா..? பக்கத்திலை செத்தவீடு, போக வேணும்.”
சரி என்பதற்கு அடையாளமாகத் தலையை மட்டும் ஆட்டினாள்; அந்தக் குட்டி இளவரசி,
**வீட்டிலை பெரியாக்கள்..?'
'அம்மா கடைக்குப் போயிட்டா...'
அவள் அம்மா என்றது எஜமானியையா? பெற்ற தாயையா..? s

சட்டநாதன் கதைகள் O 63
அவனுக்குக் குழப்பமாக் இருந்தது. கேட்கவும் துணிவு கொள்ளாதவனாய் சைக்கிளை வீட்டின் கிழக்குச் சுவரோரமாய்-சீற்? சீமெந்தில் உரசாதவாகில் பக்குவமாய் விட்டுவிட்டு நகர்ந்தான். -
சாவீட்டில், சொந்த பந்தங்களை விட, பரந்தாமனின் சக ஆசிரியர்களும் அவனிடம் கற்ற மாணவ மாணவியருமே நிறைய இருந்தார்கள்.
இப்படி ஒரு அகால முடிவு அவனுக்கு வந்தது இவனுக்குக் கவலையாக இருந்தது.
'முப்பத்தொரு வயதில் சா வருவது எவ்வளவு கொடுமை. அவ னுக்கும். ஈஸ்வரிக்கும் இடையே எவ்வளவு நெருக்கமான உறவு தளிர் கொண்டது. திருமணம் கூட இரண்டொரு மாதத்தில் என்றிருந்ததே. எல்லாமே அவனளவில் ஏன் பொய்த்துப் போய் விட்டன.
"அவனது ஆர்வம், சிரத்தை, மாணவர்களின் தன்மைக்கேற்ப கற்பிக்கும் பக்குவம், எல்லாமே ஒரு துப்பாக்கி ரவையின் முன்னால் அர்த்தமிழந்து போவதென்றால்.’
குரொஸ் ஃப்பயரிங்கில்தான் அவனுக்கு இந்த முடிவு வந்தது என்பது பலரது அபிப்பிராயம். "இல்லை. இல்லை. ஏதோ தொடர்பாம் அதனால்தான்.", என்ற குசுகுசுப்பும் இருந்தது.
எதுவோ..? என்ன காரணமோ..? அவனது மரணம் தவிர்க்க மூடியாததாகிவிட்டது. துயரம் தருவதாக இருக்கிறது.'
தலைவாசலில்-சற்று உள்ளே, பெட்டியுள்-அவன் நெடுங் கிடையாய்க் கிடந்தான். அவனைப் பார்த்ததும் நெஞ்சிலும் முசத்திலும் பட்டென யாரோ பலமாக அறைந்தது போல் ஒர் உணர்வு இவனுள் படர்ந்தது. சக மனிதன் என்ற அளவில், அந்த மரணத்தின் கொடுமை இவனையும பற்றிக் கொண்டது. இவன் கலக்கமுற்றவனாய் அவனது உடலைப் பார்த்த கையோடு வெளியே வந்து உட்கார்ந்து கொண்டான்.
இவன் வெளியே வந்த சில நிமிடங்களுக்குள்ளாகவே அவனது இறுதி ஊர்வலம் ஆரம்பமாகியது.
சுடலை வரை போவதா விடுவதா என்று இரு மனப்பட்டபோது, பசுபதிதான் இவனை இழுத்துக் கொண்டு போனான்,

Page 42
64 O பக்குவம்
இரத்த வெடிலும் பிணி வாடையும்தான் இந்த மண்ணின் விதியாகிவிடுமோ..? இயல்பு தப்பிய இந்த வாழ்வு-எத்தனை காலம் நீடிக்கப் போகிறது."
மதியம் திரும்பிய வேளையில் எங்கோ தூரத்தில் வானொலியில் பூபாளம்
'இது என்ன அபத்தம். எல்லாமே ஒழுங்கற்று தலை தடுமாறியதானநிலை ஏன்.? இயல்பும் இசைவும் பிறழ்ந்த இந்த வாழ்வு ஒழுங்குபடுவது எப்போது.? எல்லாமே தூரத்துக் கணவாய் ஆகிவிடுமோ.
பிரதான வீதியில் ஏறியதும் இவனுக்குச் சைக்கிளின் ஞாபகம் வந்தது. அந்தச் சிறிய வீட்டின் பக்கம் பார்வை சென்றது. சைக்கிள் விட்ட இடத்தில் அப்படியே பத்திரமாக இருந்தது.
இந்தத் துயரங்களிடையே சைக்கிள் பற்றிய நினைப்பு இவனை வெட்கமுறச் செய்தது.
நீல வானமும், கருங்கடலும், பூமியும் தழுவி நின்ற பெரு வெளியில்தான் அந்தச் சுடலை இருந்தது.
பரந்தாமனின் உடலைத் தீ நாக்குகள் தழுவியபோது இவனது தேகம் லேசாக நடுங்கியது. கண்கள் பனித்தன. உள்ளத்து உணர்வு கள் அனைத்துமே உறைந்து போனதான நிலை, இவன் பசுபதியைப் பார்த்தான். அவன் யாருடனோ கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தான்.
“பசுபதியை ஏன் எதுவும் தொடவில்லை!"
சுடலையை விட்டு வெளியே வந்த போது மழை பிடித்துக் கொண்டது. இவன் பசுபதியின் குடையினுள் ஒதுங்கிக் கொண் டான். V
**பாஸிங் கிளவுட்ஸ் மச்சான். மழை விட்டிடும்.'
"இந்த வாழ்வு. இதன் அர்த்தம் எல்லாமே நகரும் முகில்
கூட்டம்தானா?"
மரணம், வாழ்வு பற்றிய விசாரம் தொற்றிக் கொண்டது. அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது.
பசுபதி களைப்பற்று, சளசளத்தபடி வந்தான். அப்படியெல்லாம் இவனால் இருக்க முடியவில்லை. சிறகொடிந்தது போல மனசு

சட்டநாதன் கதைகள் O 65
படபடப்பற்று இருந்தது. இந்த ஒடுக்கம், மனசுக்கு இதமா யிருந்தது.
மழை விட்டதும் கிழக்கு வானில் பொட்டுப் பொட்டாய் நீல வானம் தெரிந்தது. வானம் எவ்வளவு விரைவாக நிர்மலமாகி விட்டது.
மனசின் அழுத்தங்கள் யாவும் லேசானது போல அவன் உணர்ந்தான்.
பிரதான வீதிக்கு வந்ததும் அவன் பசுபதியிடம் விடைபெற்றுக் கொண்டான்.
சைக்கிள் ஞாபகம் வந்தது. "காற்றுக் கீற்றுப் போய்க் கிடக்குமோ..? அந்தப் பிள்ளை. அவளது தம்பி. வால்வ்ரியூப்பைத் தொட்டுக் கிட்டுப் பார்த்து.'
ஏதோ கனவு கலைந்தது போலவும், மீண்டும் இயல்பான சூழலில் காலூன்றியது போலவும் அவனுக்கு இருந்தது. சோர்வு நீங்கிய பாடாய் இல்லை. சைக்கிள் வைத்த வீட்டை அடைந்த போது அங்கு அவனுக்கு அதிசயம் காத்திருந்தது.
சைக்கிள் மழையில் நனையாத படிக்கு, பக்குவமாய் ஸன்சேட்டின்' கீழ், முன்புறமாக எடுத்து வைக்கப் பட்டிருந்தது. ܚ
"யாருடைய வேலை இது. அந்தக் குழந்தைதான் எடுத்து வைத்திருப்பாளோ..? சிரமமாக இருந்திருக்குமே. சைக்சிளை எடுக்கும்போது எதிர்ப்பக்கமாகச் சரிந்து அவளுக்கு அடிகிடி ட்டிருந்தால். அல்லது உருட்டும் போது உடம்பில் உரசல் ஏதாவது."
இவன் சைக்கிளை எடுத்தபோது, ஈரக்கையைத் தனது சீத்தைச் சட்டையில் துடைத்தபடி ஓடிவந்தாள்.
'மழை பெய்தது. அதுதான்.'
'மழை பெய்தால் என்னம்மா..? உனக்கு ஏன் இந்தத் தொந்தரவு.'
"தொந்தரவா. எனக்கா?"
அவள் உதடு நெகிழச் சிரித்தாள்.
உடைந்து போன உள்ளம் நிரவல் பெற்றுப் பரவசம்கொள்ள, அவளை வாஞ்சையுடன் பார்த்தான்.
*一5

Page 43
66 O பக்குவம்
வாழ்வின் அர்த்தமே அவள் என்பது போலவும், உயிர்ப்பசையின் தொடர்ச்சியை ஒரு சுடராய் அவள் தாங்கி நிற்பது போலவும் அவனுக்குத் தோன்றியது. W
நன்றி பெருக்குடன், செல்லமாக அவனது தலையை வருடியபடி, இவன் விடைபெற்றுக்கொண்டான். - இவன் கேற்றைத் திறந்து, சைக்கிளை எடுத்தபோது சைக்கிள் கேற்றுடன் அடிபட்டுக் கொண்டது”
"கவனம். பார்த்தெடுங்க.. காலிலை அடிபடப் போகுது." திரும்பிப் பார்த்தான். கன்னங் குழியச் சிரித்தபடி அவள் நின்றாள்.
வெளியே வந்த பின்புதான் குழந்தையின் பெயரைக் கேட்காமல் வீட்டது மனதில் பட்டது.
"எதுவுமே தாமதமாய்த்தான் உங்களுக்கு...!" மனைவி அடிக்கடி கூறுவது ஞாபகம் வந்தது. "கொழும்புத்துறைப் பக்கம் வந்தால், மீளவும் ஒருமுறை இந்தக் குழந்தையைப் பார்க்கவேணும், பேரைக் கேட்க வேணும்.", என்று அவனுக்குத் தோன்றியது.
மனம் பரவசம் கொண்டு சிறகு விரித்ததான உணர்வு, பரந்தா மனின் மரணம் தந்த உளைச்சல் சிறுகச் சிறுக நீங்கியதான நிலை யில் எல்லாமே அவனுக்கு அழகாக இருந்தன.
அவனுக்கு முன்பாக, எதிரே வந்து, அவனைக் கடந்து, சைக் கிளில் சென்ற பெண் பிள்ளையின் லாவகம். சுமக்க முடியாத சுமையைச் சுமந்து செல்லும் சிறுவனின் முகம் காட்டும் முதிர்ச்சி, தோளோடு தோள் கை போட்டு சைக்கிள்களில் சமாந்தரமாய் உலா போகும் சீருடை அணிந்த கல்லூரி மாணவர்களின் குதூகலம். பஸ் ரியன் சந்தியில் திரும்பிய பஸ்ஸில், கணமே தெரிந்து மறைந்த் அந்தப் பெயர் தெரியாத, எங்கோ எப்பொழுதோ பார்த்துப் பிரியப் பட்ட அழகியின் முகம். எல்லாமே அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தன. உலகின் அழகுகள் அனைத்தையும் வாரிக் கொட்டிக் கொண்ட தான ஓர் அனுபவ விகாசம் அவனுள் செறிவு கொண்டது.
தன்னை மறந்தவனாய் சாருகேசி ராகப் பாடலொன்றை முணு முணுத்தபடி, சைக்கிள் பெடலை அழுத்தி மிதித்தான். சைக்கிள் இயல்புக்கு மீறியதான வேகம் கொண்டது. இவ்னுக்குக் காற்றில் மிதப்பது போலிருந்தது.

அரும்பு
க்ரீரில் இருந்து இறங்கி, விசும்பலோடு வந்தாள். மனசைக் கரைய வைக்கும் விசும்பல். என்னைக் கண்டதும், ஓர் இளந்துள்ள லுடன், கால்கள் நிலத்தில் பாவாமல் "அப்போய்’ எனப் பாய்ந்து வருபவள் இன்று 'ஸ்கூல்பாக்' தரையில் இழுபட, மிகவும் தளர்ந்து போனவளாய், பார்வை சூனியத்தில் நிலைகொள்ள வந்தாள். விசும் பல் ஓயவில்லை. இடையிடை இருந்தது. என்னை நெருங்கியவள் தனது உயரத்துக்கு என்னோடு நின்று. எனது கால்களைக் கட்டிப் பிடித்தபடி நிமிர்ந்து பார்த்தாள். கண்களில் சோகம் அப்பிக் கிடந் தது; நீர் பள பளத்தது.
'என்னம்மா..?", என்றதும் விசும்பல் உடைந்து அழுகையாய் மாறியது.
உள்ளே ஏதோ வேலையாக இருந்த தேவி:
‘என்ன ராஜி. என்ன?", என்று பதட்டத்துடன் வந்தாள். **ராஜி பேர் வேண்டாம் அம்மா. எனக்கு வேண்டாம்!' குழந்தை, கெஞ்சுவது போலத் தாயைப் பார்த்தாள்.
‘என்ன செல்வம்?", குழந்தையை அணைத்துக்கொண்ட தேவி யின் குரல் தழைந்து மறுகியது.

Page 44
68 O அரும்பு
குழந்தை இடது கை மணிக்கட்டுக்கு மேலாகப் புறங்கையைக் காட்டினாள்.
அந்தப் பட்டுச் சருமத்தில், செவ்வரி படர்ந்த தழும்பு, உள்ளங் கையைப் புரட்டிப் பார்த்தேன். அதிலும் அடித்ததற்கான அடை யாளம்,
‘இந்தச் சிசுவை. பாலனை. பிரம்பால். அடிக்க மனம் வருமே..? பிரம்பா. சிறு தடியாகக்கூட இருந்திருக்கலாம். சுள்ளித் தடியாக. பட்டதும் சுரீரென்று. காயம் வருகிற மாதிரி. என்ன கொடுமையிது!’
என் கண்கள் பனித்து விடுகின்றன.
'ஆர் இந்த ரீச்சர். ராட்சசி. குழந்தை குட்டி இல்லாதவளா? பிள்ளையை இப்படி, நார் நாரா வார்ந்திருக்கிறாளே!'
'இப்பவும் இப்படி ஒரு ஆசிரியையா..? அவளுக்குக் குழந் தையை அடிக்க வேண்டுமென்று இருந்திருக்காது. ஏதோ ஒரு வேகத்தில், மறந்து செயற்பட்டிருக்கலாம். இல்லை, ஒரு "சாடிஸ் ராக' - அந்த இயல்புகள் அவளது அடி மனதில் குரூரமாகப் படிந்து கிடக்கிறதோ..?
நினைவுகளை மீறி ஏனோ அப்பொழுது மிஷன் பாடசாலையில் எனக்குப் பாடம் கற்றுத்தந்த, செல்லம்மா ரீச்சரின் ஞாபகம் வந்தது.
சற்றுப் பருமனான உடல்வாகு. தங்க பிரேம் கண்ணாடி. மனசைத் தொட்டுப் பேசும் கண்கள். சிரித்தால் பேச்சே வேண்டாம் என்றிருக்கும் ஒரு இதம், பரபரக்காத நிதானம். சிரத்தை
"என் பின்னளக்கு மிஸ் செல்லம்மா மாதிரி ஒரு ரீச்சர் ஏன் இல்லா மல் போய்விட்டது!’
மனசு கரைந்து தவித்தது.
'ஏன் ரீச்சர் ராஜியை அடிச்சல?"
நான் கேட்டதும் குழந்தை தாயின் பிடியிலிருந்து விடுபட்டு என் அருகே ஓடுவந்து, எனது உதடுகளைத் தனது பூவிரல்களால் அழுத்தி முடியவாறு கூறினாள்:
*அந்தப் பேர் வேண்டாம் அப்பா. வேண்டாம்",
குரலில் துக்கம் கனத்துக் கிடந்தது.

சட்டநாதன் கதைகள் 0 69
மெதுவாக அவளை அணைத்தபடி, "என்ன? என்ன நடந்தது சொல்லம்மா." என்று கேட்டேன்.
'எனக்கு ஒண்டும் தெரியாதாம். முழு மக்காம். களிமண்தான் தலையிலை இருக்காம். அந்த ரீச்சர் திட்டினாப்பா'.
'ஏனம்மா... ” ೨
** என்ரை பேரை எழுதெண்டு சொன்னா, எழுதினனா
எழுதினது பிழை, பிழை, வடசொல் எழுது, வடசொல் எழுதெண்டு அடிச்சாப்பா. வடசொல்லெண்டா என்னப்பா?' s
‘தெரியாதெண்டாக் காட்டித்தாறது. அதுக்கு இப்படியா குதறி எடுப்பாள் அந்தக் கூறுகெட்ட.'
குமுறிய தேவி, ராஜியைத் தூக்கிக் கொண்டு உள்ளே போனாள்.
உள்ளே எட்டிப் பார்த்தேன். தாய் மகளது காயங்களுக்கு எண்ணெய் தடவிக் கொண்டிருந்தாள். 'மஞ்சள் மாவும் சேர்த்தனியா?" என்று மட்டும் கேட்டு விட்டு, நான் மாடிக்குப் போனேன்.
சுந்தரராமசாமியின் 'பள்ளம் தொகுதியில் மூழ்கியிருந்த பொழுது.
'அப்பா மேலை வரட்டா..?’ ராஜியின் குரல். ராஜி மாடிப் படிகளில் "தட தட' என ஓடி வந்தாள். * 'தங்கச்சி பார்த்துப்போ, ஓடாதை. விழுந்திடுவை!" நொடிக்கு நூறு தரம்-* ராஜி, ராஜி' என்று மாயும் தேவி, குழந்தையின் பேர் விஷயத்தில் உசாரானது எனக்கு ஆச்சரியமா யிருந்தது.
‘ராஜி என்ற பெயர் இனி இந்த வீட்டில் ஒலிக்காதோ. ராஜி பெயர் வேண்டாமென்றால் இனி என் பிள்ளையை என்ன பெயரால் அழைப்பது?"
‘குழந்தையின் மனதில் வேர்விட்டு ஆழமாகவே பதிந்துவிட்ட இந்த உணர்வை எப்படி நீக்குவது'. ‘குஞ்சு சாப்பிட்டாச்சா?"
"சாப்பிட்டாச்சு', என்றவள் ஓடிவந்து, எனது மடியிலேறி உட்கார்ந்து கொண்டாள்.

Page 45
70ம் அரும்பு
‘என்ன படிக்கிறீங்க அப்பா? லிற்றில் ரெட் றைடிங் ஹாட்டா. ஸ்நோ வைட்டா, என்ன புத்தகமப்பா?'
நான் படிப்பதெல்லாம் அவளது புத்தகங்கள் என்பது அவளது நினைப்பு.
“பிள்ளைக்கு நித்திரை வருகுது. படுப்பமா!' மத்தியானம் சாப்பிட்டதும் ஒரு சிறு தூக்கம் போடுவாள் ராஜி.
**வேண்டாமப்பா. ரி.வி. போடுங்க',
‘ரி.வி.யிலை ஒண்டுமில்லையம்மா' 'இல்லை போடுங்க', அடம் பிடித்தாள், ரி.வி. யில் நிகழ்ச்சி எதுவும் இருக்கவில்லை. “செல்வா. ரீகல். போடுங்க" **இல்லையம்மா' அமைதியாக வந்து எனது கதிரையில் ஏறி, மேசையில் தொற்றி உட்கார்ந்து கொண்டாள்.
‘என்ன புத்தகம் அப்பா இது? மட்டை பளபளெண்டு வடிவா இருக்கு'.
"நீயே படிச்சுச் சொல்லம்மா'. 'ப. ள். ள. ம். பள்ளம், பள்ளமெண்டா என்னப்பா?*
'பள்ளமெண்டா பள்ளம் தான்’’. அவளுக்கு அந்தப் பதில் திருப்தி தரவில்லை. எழுந்து கைகளைத் தூக்கிச் சோம்பல் முறித்துக் கொண்டாள். **வாம்மா வந்து படு'. கட்டிலில் ஏறித் தானாகப் படுத்துக் கொண்டாள். படுத்த சில நிமிடங்களில் அவள் அமைதியாகத் துயில் கொண்டாள்.
O
ரிபிஜி மாலை ஆறு மணிக்கெல்லாம் விழித்துக் கொண்டாள். கையில் இருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அவளைப் பார்த்தேன்.

சட்டநாதன் கதைகள் ம் 71
சிச்சா அப்பா", வெட்கம் கலந்த இளஞ் சிரிப்புடன் நெளிந்தாள்.
'ஆறு வயதாப் போச்சு இன்னுமா..?' எனக்கு ஆறு வயதா? இல்லையப்பா! ஐஞ்சு வயதுதான் முடிஞ்சிருக்கு', திருத்தம் சொன்னாள்,
'அப்பாவுக்கு எத்தனை வயது?’’
நாப்பத்தைஞ்சு'
* அம்மாவுக்கு?' 'முப்பத்தி ஏழு' 'ரகுச் சித்தப்பாவுக்கு?’
நாப்பத்திரண்டு’. 'சித்திக்கு?’’ * முப்பத்தைஞ்சு'
விஜியக்காவுக்கு?” தெரியாதம்மா’. 'குட்டியக்காவுக்கு?"
தெரியாது, போதும் போதுமம்மா' அவளை நன்றாகத் துடைத்து விட்டு, தேவிக்குக் குரல் கொடுத்தேன். தேவி மாடி ஏறிவந்து குழந்தையை அழைத்துப் போனாள்.
சற்றைக்கெல்லாம், ராஜியின் குரல் பக்கத்து வீட்டில் நீட்டி முழங்கியது. -
விஜியக்கா, குட்டியக்கா, இரத்தினக்கா, மணியக்கா, மகேஸ் அக்கா, இரத்தினண்ணா, ஆனந்தனண்ணா, ஜெயாண்ணா என்று வயது வித்தியாசம் பாராது-ஒவ்வொருவரும் எழுபது முதல் இருபது வயதுக்கு இடைப்பட்டவர்கள் - அண்ணா முறை அக்கா முறை வைத்தழைத்துச் சமா வைத்துக் கொண் டிருந்தாள்.
அந்த சமாவில் அவர்கள்-அந்தப் பெரியவர்கள், தேன் குடித்த நரியாட்டம் கிறுங்கி இருப்பது எனக்குத் தெரிகிறது.

Page 46
72 ல் அரும்பு
‘குழந்தைகள் தெய்வ அம்சம் என்பது எவ்வளவு உண்மை! இதைக் கூடப் புரிந்து கொள்ளாத அந்த ரீச்சர், சோக் பீஸாம் கையுமா படிப்பிக்க வந்தா மட்டும் போதுமா? பாலர் வகுப்புப் பயிற்சி அது இதெண்ட ‘பவுசு வேறை
நெஞ்சு படபடத்துக் கொண்டது.
கீழே தேவி சாப்பிடுவதற்கு அழைத்தாள்.
‘மணி எட்டிருக்குமா' என நினைத்தபடி கீழே படியிறங் கினேன்.
ராஜி தாயின் மடியிலிருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
‘என்ன சாப்பாடம்மா?' ராஜியைக் கேட்டேன்.
'இடியப்பம், சொதி, சிக்கன்'
நான் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது, டைனிங் ரேபிளில் ஏறியிருந்து என்னிடம் நாலு வர்ய் சாப்பிட்ட பின் தான் அவளுக்குத் திருப்திப்பட்டது.
சாப்பாடு ஆனதும் எட்டு இருபத்தைந்துக்கு ரி.வி. யில் தர்மசேன பதிராஜாவின் மாயமந்திர ரெலி டிராமா பார்ப் பதற்கு மாடிக்குச் சென்றேன். மொழி தொந்தரவு தந்த பொழுதும், பார்ப்பதில் ஆர்வமிருந்தது. முறையான படப்பிடிப்பு. சில ஃபிறேம்ஸ், நல்ல சினிமாவைப் பார்க்கிற பிரமையைத் தந்தது.
நாடகம் ஆரம்பித்த சில நிமிடங்களில் ராஜி மாடிக்கு வந்தாள், ஓரிரு நிமிடங்கள் என்னுடன் ரி. வி. பார்த்த ராஜி, பொறுமை இழந் தவளாய் எனது கழுத்தில் தொங்கிய மஃப்ளரைப் பிடித்து இழுத்து, தனது முகத்துக்கு நேராக எனது முகத்தை வைத்துக் கன்னத்தில் செல்லமாக முத்தமிட்டாள்.
** என்னம்மா?"
**ரி. வி. வேண்டாம் வாங்கப்பா...'
அவளது அழைப்பை ஒதுக்க முடியவில்லை. நான் அவளுக்குப் பாடம் சொல்லித் தர வேண்டும். எவ்வளவு முக்கியமான வேலை இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு அவளுடன் இருக்க வேண்டும். அந்த மணித் துளிகள் அவளுக்கு மட்டுமே சொந்தம்

சட்டநாதன் கதைகள் O 78
படிப்பு கட்டிலில் தான் நடைபெற்றது. கட்டிலில் ஏறி உட் கார்ந்து, தலை அணைகளை, தான் சாய்ந்து கொள்ள வாகாகச் சரி செய்து, குட்டி இளவரசி மாதிரி கம்பீரமாக அவள் உட்கார்ந்து கொண்டாள்.
அவளது ஆங்கிலப் புத்தகங்கள் சிலவும், தமிழ்ப் புத்தகமும் கட்டிலில் திறந்த நிலையில் பரப்பப்பட்டன. அதற்கு என் உதவி அவளுக்கு வேண்டும். இன்று அவளே புத்தகங்களை எடுத்துப் பரப்பினாள். உடனே படிக்கவும் ஆரம்பித்தாள்.
படிக்கும் போது ஒரு ஒழுங்கு முறை அவளிடம் உண்டு. வலது பக்கமிருந்து ஆரம்பித்தால் - கீழாக வந்து, மேலே செல்வாள். பக்கங் களைப் புரட்டும் போதும் ஒரு நடைமுறையைப் பின்பற்றுவாள். மாற்றம் எதுவும் செய்யக்கூடாது. குழந்தையின் போக்கிற்கே விட்டு விடுவது அவளுக்குப் பிடித்தமாய் இருக்கும். ஏதாவது மாற்றம் செய்தால், "அது பிழையப்பா, இப்பிடி இப்பிடித்தான்' என்பாள்.
ஆங்கில வாசிப்பை முடித்து நிமிர்ந்தவள், ஆங்கில, தமிழ் எழுத்துக்களை, மூச்சு விடாமல் ஒப்பித்தாள். பின்பு எண்கள், கணிதம், வாய்ப்பாடு மட்டும் அவள் வயதுக்கு அதிகம் என்று சொல்லித் தரவில்லை. நிறங்களையும், ருசிகளையும் அவள் தெரிந்து வைத்திருந்தாள்.
பாட நடுவில் தேவி பால் கொண்டு வந்தாள். பாலை வாங்கிப் பருகியபடி, ‘கதை சொல்லுங்க' என்றாள்.
முயலும் ஆமையும் கதை சொன்னேன். அவளுக்குத் தீடீரென்று முயல் எப்படி இருக்குமென்ற சந்தேகம் வந்து விட்டது. படம் போட்டுக் காட்டும்படி கேட்டாள்.
படம் போட்டுக் காட்டினேன்.
'முயலுக்குக் காது இத்தினி சின்னனா? பெரிசாக் கீறுங்க." என்றாள்.
காதைப் பெரிதாக்கினேன்.
'ஒட்டகம் கீறுங்க."
'gsf)...'
*முதுகு நல்லா இல்லை.’’, விமர்சனம் செய்தாள்.
'யானை, பூனை, கோழி, கார், வண்டில்' தொடிர்ச்சியாகச் சொன்னாள்.

Page 47
74 0 அரும்பு
எல்லாவற்றையும் போட்டுக் காட்டினேன்.
‘போதும், போதுமப்பா." எழுந்து சோம்பல் முறித்தபடி நின்றாள்.
'பிள்ளைக்குத் தூக்கம் வருகுது', குரல் கொடுத்ததும் தேவி வந்து அவளைத் தூக்கிச் சென்றாள். அன்றைய பொழுது அத்துடன், அவளுக்கு ஆகிவிட்டது.
O
ராஜி பெயர் குழந்தையை அதிகமாகவே பாதித்து விட்டது என்று தெரிந்தும் - காலையில் எழுந்ததும், மனைவி ராஜி, ராஜி" என்று கரைந்தது எனக்கு மிகுந்த எரிச்சலூட்டியது.
‘'தேவி! குழந்தை பாடசாலை நிகழ்ச்சியை மறக்க வேணும், அதுவரை அந்தப் பெயரைச் சொல்லி அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம்', என்றேன்.
மனைவி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள். "இரண்டு குழந்தைகள் எனக்கு’ என நினைப்பதைத் தவிர என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.
'கண்ணாடி முன் தன்னை அலங்கரித்துக் கொண்டு நின்ற ராஜிக்கு - மனைவி தலைவாரிக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது, ஹெலியோ விமானமோ பறக்கும் ஓசை கேட்டது. மனைவி பதட்டமடைந்தவளாய், “பொம்பர் போகுது போலை' என்றாள்.
ராஜி முகத்தைக் கோணலாக நெழித்து, பொம்பர் இல்லை யம்மா, பொம்மர், பொம்மர்', என்று திருத்தம் சொன்னாள். பின் என்னை நோக்கியவள்:
'பொம்மர்தானே சரியப்பா. அம்மாவுக்கு ஒண்டுமே தெரியாது.", என்று கேலியாகச் சொல்லிவிட்டு, பக்கத்து வீட்டுக்குப் போகப் படி இறங்கினாள்.
வாயடைத்துப் போய்நின்ற தேவி கேட்டாள்: 'பிள்ளைக்கு இண்டைக்கு ஸ்கூல் இல்லையோ, பள்ளிக்குக் கள்ளமோ?’, திரும்பிய ராஜியின் கண்களில் நீர் முட்டி வழிந்தது.
'அந்த ஸ்கூல் வேண்டாம், அந்த ரீச்சர் வேண்டாம் அம்மா'.

சட்டநாதன் கதைகள் d 75
'சரி சரி. நீ போய் விளையாடு, நாளைக்கு வேறை ஸ்கூல் பாப்பம்’ என்று கூறிய நான், அவள் படியிறங்கிப் போவதைப் பார்த்தபடி நின்றேன். - O
கிந்தோரில் இருந்த பொழுது ராஜி முன்னாலும் பின்னாலும் இருப்பது போல ஒரு நிழலாட்டம். இவ்வளவு பிரியம் ஏன் என்று மனம் அடித்துக் கொண்டது.
அப்பா அந்தப் பேர் வேண்டாம் என்ற விசும்பல். விசும்பல் உடைந்து கனதியான அழுகையாக உருக் கொண்டது. மனசில் ஏதோ பாரம் அழுத்த. குழந்தையைப் பார்க்க வேண்டும் போலி ருந்தது. அரை நாள் லீவு போட்டு விட்டு வீட்டுக்குப் போனேன். ராஜி தூங்கிக் கொண்டிருந்தாள்.
குழந்தையை வைத்தகண் வாங்காது பார்த்து நின்ற என்னை நெருங்கிய் மனைவி :
‘ராஜிக்கு வேற பாடசாலை பாருங்க" என்றாள். தேவி எனது எண்ணத்தையே பிரதிபலித்தது மனசுக்கு இதமாயிருந்தது.
கிந்தோருக்குப் போதற்கு முன்னதாக, ரரஜியை அவளது புதிய பாடசாலை வரை கொண்டு விடுவது என்ற எண்ணத்துடன் ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றேன்.
கோயில் வீதியில் சென்ற பொழுது, 'அப்பா வேகமாக ஒடுங்க', என்றாள்.
ஸ்கூட்டரின் வேகத்தைச் சற்று அதிகப்படுத்தினேன்,
“பூ இதுதானா உங்க ஸ்பீட் என்றாள்'. இன்னும் சற்று வேகப்படுத்தினேன். ** வேண்டாமப்பா. வேண்டாம். ஸ்பீட் கூடிப் போச்சு, பயமாயிருக்கு' என்றவள், என்னைத் திரும்பிப் பார்த்து, 'எனக்குச் சைக்கிள் ஓட, ஸ்கூட்டர் ஓட, கார் ஓடச் சொல்லித் தருவியளா?' என்றாள்.
*சொல்லித்தாறனம்மா! என் பிள்ளைக்கு இல்லாததா'.

Page 48
16 ம் அரும்பு
'ஹெலிக் ஹொப்டர், பொம்மர், அவ்ரோ எல்லாம் ஒட வேணும்'.
‘எல்லாம் ஓடலாம். என் பிள்ளை ஜான்ஸிராணியாக்கும்", என்றேன்.
அவள் என்னைப் பார்த்து, திருப்தியுடன் முறுவலித்தாள். பாடசாலை வந்ததும் இறங்கிக் கொண்டாள். அதிபரது அறைக்குள் அவளை அழைத்துச் சென்றேன். அதிபர் இவளைப் பார்த்ததும் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளினார். அவருக்கு இதமாகச் சிரித்து வைத்தாள்.
பாலர் பிரிவு ஆசிரியையுடன் கதைக்க வேண்டும் என்றேன். அவரது அனுமதியுடன் உள்ளே சென்றேன்.
ஆண்டு ஒன்று ஆசிரியையைப் பார்த்ததும் செல்லம்மா ரீச்சரின் நினைவு வந்தது. இரட்டை நாடி உடம்பு, தங்க பிரேம் அல்ல. வெள்ளிப் பிரேம் கண்ணாடி, சிரித்தபொழுது வரிசையான வெள்ளைப் பற்கள் ஒளிர்ந்தன.
ராஜியை அவர் அன்புடன் வரவேற்றார். ராஜி, எங்களிடமிருந்து பிய்த்துக் கொண்டு, குழந்தைகளுடன் ஒட்டிக் கொண்டாள்.
நான் நடந்த விவரம் அனைத்தையும் கூறி, அவளைப் பார்த்துக் கொள்வது உங்கள் கையில் தான் உண்டு என்று அவரிடம் விடை பெற்ற பொழுது :
*உன்ரை பேர் என்ன?"
y a a s h 8 a e
**இவவுக்குப் பேர் இல்லைப் போலை!" "லலிதாவா, ராணியா, சந்திரா, விஜி.?” **அவ பேர் ராஜி.' என்று ஆசிரியை விடை தந்தார். ரீச்சரையும், என்னையும் மாறிமாறிப் பார்த்த என் பெண் "அப்பா’ என்று விசும்பியபடி என்னை நோக்கி ஓடி வந்தாள். ஆசிரியை இடையே வந்து அன்புடன் அவளது கண்களில் அரும்பி யிருந்த கண்ணிரைத் துடைத்தபடி :
‘கெட்டிக் காரியெல்லா இந்தச் சின்னக் குட்டி', என்று அவளைக் கைகளில் ஏந்திக் கொண்டிார்.

சட்டநாதன் கதைகள் ர்ே 77
"நீங்கள் பயப்படாமல் போய் வாருங்கள். 11-30 க்கு வகுப்பு முடியும், வந்து மகளைக் கூட்டிப் போகலாம்'', என்றார்.
‘இன்றும் அரைநாள் லீவு போடவேணும்" என்னும் நினைப்புடன் ஸ்கூட்டரை ஸ்ராட் செய்தேன்.
தூரத்தில் ராஜி நீர் மல்கிய கண்களுடன் என்னையே பார்த்தபடி நின்றாள்.
11-30க்கு முன்னதாகவே நான் பாடசாலைக்குப் போனேன். ராஜி பிள்ளைகளுடன் கலந்திருப்பதை என்னால் காண முடிந்தது.
பாலர் பிரிவு விடும் வரை ஒதுங்கி நின்றேன். குழந்தை என்னைக் கவனியாது தனது படிப்பில் ஆழ்ந்திருப்பதை என்னால் கவனிக்க முடிந்தது.
மணியடித்ததும் பிள்ளைகள் குதூகலமாக வெளியே வந்தனர். ராஜி ரீச்சரிடம் ஏதோ கேட்டு விட்டு வெளியே வந்த பொழுது, ஆசிரியையும் உடன் வந்து :
'உங்கள் பிள்ளை கெட்டிக்காரி. எதையும் அவளால் சுலபமாகக் கிரகித்துக் கொள்ள முடிகிறது'.
'அப்படியா. சந்தோஷம்', அவரிடம் விடை பெற்றுக் கொண்டேன்.
ஸ்கூட்டரில் ஏறியது முதல் ராஜி எதுவும் பேசாமல் ஆழ்ந்த யோசனையிலிருந்தாள்.
‘என்னம்மா பேசாமல் பெலத்த யோசனை. எந்தக் கோட்டை யைப் பிடிக்கப் போறை?’’
'குழப்பாமை இருங்கப்பா', ‘என்ன, இந்தப் பிஞ்சு யோசிக்கிறது", என்று நினைத்துக் கொண்டேன்.
ராஜி, ஸ்கூட்டர் நிற்பதற்கு முன்னதாகவே பாய்ந்து இறங்கி 'அம்மோய்' என்று அழைத்தபடி வீட்டிற்குள்ளே ஓடினாள்.
தேவி, ராஜி குரலைக் கேட்டதும் உடனே வந்தாள்.
‘அப்பா நீங்களும் வாருங்க', என்றாள் குழந்தை. இருவரையும் கதிரையில் உட்காரவைத்து, தனது ஸ்கூல் "பாக்கை' திறந்து,
வெளியே

Page 49
78 O அரும்பு
கொப்பியை எடுத்து, பென்சிலால் நிதானமாக ராஜி என்று எழுதினாள்.
‘என்னம்மா இது!" ‘ரீச்சர் சொல்லித் தந்தவ அப்பா'
கண்களை இடுக்கி, சிறிதாக முறுவலித்தாள்.
தேவியைப் பார்த்தேன்; அவள் கண்கள் பனித்திருந்தன.
எனக்கு ஏனோ அப்பொழுது எனது அருமை ஆசிரியை மீஸ் செல்லம்மாவின் ஞாபகம் வந்தது.

திருப்தி
அன்று, நல்லூர் இசையரங்கில் இராமநாதனின் தோடியில் தோய்ந்து கனிந்து இருந்தபொழுது; சூழ்நிலையின் இதம் தெரிந்து பக்கத்தில் இருப்பவர்களின் ரசனைக்கு பாதகம் செய்யாமல் - என் பக்கம் சரிந்து உட்கார்ந்த அந்தச் சிறுவன் மிகுந்த பாந்தமாய்க்' கேட்டான் :
'கடலை வேணுமா..?"
அந்த மங்கிய ஒளியில் அவனைப் பார்த்தேன். ஒடிசலாய், சுள்ளி சுள்ளியாய்க் கால் கைகள். இன்னும் நெருக்கத்தில் ஒட்டி உலர்ந்த கன்னங்களையும் பார்த்தேன். கண்கள் மட்டும் சற்றுப் பெரிதாய் உயிர்ப் பசையுடன் பளபளத்தன.
அவன் கையில் சற்று நீளமான ஓலைப்பை வைத்திருந்தான். அதிலிருந்துதான் கடலைப் 'பொட்டலம்' ஒன்றை எடுத்தான்.
‘'வேண்டாம் தம்பி"
வயிற்றில் சிறிது மந்தம். அத்துடன் அந்தச் சூழ்நிலையில் கடலை கொறிக்கும் ஆர்வம் எனக்கு இருக்கவில்லை,

Page 50
89 O திருப்தி
எனது பதில் அவனுக்கு ஏமாற்றமாயிருந்திருக்க வேண்டும். சடுதியில் என்னை விலக்கி நகர்ந்தவன் பக்கத்தில் இருந்த பெண்ணிடம் மிகுந்த வினயமாய்:
'வறுத்தகச்சான். சுடச் சுட. வேணுமா..?' என்றான்.
அந்தப் பெண்ணும் அவனைப் பொருட்படுத்தியதாய்த் தெரிய வில்லை.
இன்னும் சிலரும் அவனிடம் கடலை வாங்கிக்கொள்ளவில்லை. திடீரென மனசு கனத்துத் துயருற்றது. கீறல் பட்டு ரத்தம் கசிந்தது.
"பெற்றோர்களை நச்சரித்து, கடலையென்றும் ஐஸ்கிறீமென்றும் கலர் இனிப்பு, தொதல், தும்பு மிட்டாய், சூப்புத்தடி என்றெல்லாம் வாங்கித்தின்னிற வயதிலை, இப்படிப் பொறுப்பாக. வீட்டில் என்ன தொந்தரவோ. தொல்லையோ. சிறுவயதிலேயே குருவி தலையில் பனம்பழம் சுமக்கும் சாகசமா இது. இவன் தகப்பனைத்தின்னியா. இல்லை, தகப்பன் பொறுப்பில்லாமல் கோயில் காளையாய் ஊர்மேயும் பேர்வழியா..? குடிகாரனாய்க்கூட இருக்கலாம். தாயும் இன்னும் சில சகோதரங்களும் இவனது கைகளையே நம்பி."
மனதில் படர்ந்த பச்சாத்தாப உணர்வு மடைதிறந்து கொண்டது. அவனிடம் ஏதாவது வாங்கலாமா என எண்ணி 'தம்பி. என வாயுன்னிய பொழுது ஒருவர், தயக்கமேதுமில்லாமல் எதுவித பேரம் பேசுதலுமின்றி நான்கு பொட்டலங்களை அவனிடம் வாங்கினார். பொட்டலங்களை அவன் அந்த நீளமான ஒலைப் பையிலிருந்தே எடுத்துத் தந்தான். 3.
மனம் குளிர்ந்து - சூழலின் தாக்கத்திலிருந்து விடுபட்டு - மிகவும் லேசானது. இராமநாதன் இது கேட்டது. அவரது தோடி இராக சஞ்சாரம் இன்னும் ஓயவில்லை. காற்றில் மிதப்பதான உள்றல் உணர்வே லபித்தது.
O
அவனை, மீளவும் சனி மாலை மேற்கு வீதியில் சந்திக்க முடிந்தது. இப்பொழுது கைகளில் பலூன்; பல வண்ணங்களில்.
"பலூன் வியாபாரமா..? என நினைத்தேன். அவன் நெருங்கி வந்து ‘பலூன் வாங்குங்க..' என்றான். நான் ஐந்து ரூபாய்க் குற்றியைக் கொடுத்தேன். ஒரு பலூனை

சட்டநாதன் கதைகள் O 81
தந்து, இரண்டு ரூபாய் மீதம் தந்தான்.
'வைத்துக் கொள்’ என்றேன். 'இன்னும் ஒரு ரூபாய் தாருங்க'
கொடுத்தேன். மேலும் ஒரு பலூன் தந்தான். "நறுவிசான பேர்வழி..."
அவனது செயல், இது பிச்சை அல்ல தொழில் எனச் சொல்லாமல் சொல்லியது.
இன்னும் இரு சிறுவர்கள் ஓடிவந்து பலூன் வாங்கிக் கொண் டார்கள், அவர்களுக்கு, பலூனை ஊதிக் கட்டிக் கொடுத்தான். கைத்திறன் செம்மையாக இருந்தது.
பக்கத்தில் நின்ற நான் கேட்டேன்; 'தம்பி எங்கை படிக்கிறது.?’’
"செங்குந்தா.' ‘எந்த வகுப்பு.?’’ 'ஆண்டு ஏழு.' 'வலுவிண்ணனோ?’’
அவன் சிரித்தான். அந்தச் சிரிப்பின் இதத்தில் நனைந்தவன்;
'இந்த வயதிலை இப்படி படிப்பும் வேலையுமாய். அலைய வேணுமா..? அப்பா அம்மா இல்லையா..?'
கண்கள் கலங்கி, உதடுகள் வெம்பி, நாசித் துவாரங்கள் விடைத்து விரிந்ததைக் கண்டதும் “அவனது உணர்வுகளை ரணமாக்கி இருக்க வேண்டாமே, என நினைத்தவனாய்க் ஒதுங்கிக் கொண்டேன்.
அவன் என்னை நெருங்கிவந்து:
'அப்பா நாலாம் வருஷம் செத்துப்போனார். சிவப்பிரகாசம் வீதியிலை "செல் விழுந்து.'
அவனது துயரத்தில் பங்கு கொண்டவனாய், அவனது வலக் கரத்தை எனது கைகளில் தாங்கிய வண்ணம் கேட்டேன்:
'சிவப்பிரகாசம் வீதியிலை இருந்து செங்குந்தாவுக்கு எப்படி..?"
チー6

Page 51
82 0 திருப்தி
'இப்ப செங்குந்தா வீதியிலை தான் இருக்கிறம். கூட அம்மா வும் தங்கச்சியும். தங்கச்சியும் படிக்கிறா. கெட்டிக்காரி.'
'அக்கினியாய்க் கொதிக்கும் மூன்று வயிற்றுக்கு அரையும் குறையுமாய் ஏதாவது கிடைக்கவேணும். அத்துடன் படிப்பு என்ற பாரம் வேறு. அவனால் இழுத்துப்பறிக்க முடியுமா? முடியும் என்ற தோரணை அவனில் தெரிந்தது.
இன்னும் மூன்று பலூன்களை வாங்கிக்கொண்டேன்.
‘என்ன. உங்களுக்கு ஐஞ்சு பிள்ளையளா..!" அவனது குரலில் ஆச்சரியம் இழைத்தது.
*ம்." என்றேன் ஒரு வகை முனகலுடன்.
எனக்கு குழந்தை இல்லை என்பதை ஏனோ அவனுடன் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.
"இந்த பலூன்களைக் கொடுப்பதற்கு ஆளில்லையா என்ன.. ? குறுஞ் சிரிப்புடன் வளையவரும் பக்கத்து வீட்டுப் பிஞ்சுகளான கெளசி, செளமி. திலக், துவாரி, விபுல் என எல்லோருமே எனது நினைவில் மிதந்தார்கள்.
அவனைப் பார்த்தேன். தூர விலகி, மிகவும் சுறுசுறுப்பாக பலூன் விற்பனை செய்துகொண்டிருந்தான்.
அவனை மேலும் தொந்தரவு செய்யாமல், விலகி நடந்த எனக்கு, மனசு நிரம்பியதான மிதப்பு. அந்த உணர்வு ததும்ப வீடு நோக்கி நடந்தேன்.

9) 6)
அம்மாவின் மடியில் தலைவைத்து - உடலைத் சீமெந்துத் தரையில் கிடத்தி-கால்மேல் கால் போட்டுப் பெரிய மனிசத் தனத்துடன், மது தனது ஆண்டு இரண்டு தமிழ்ப் புத்தகத்தை அவளுக்கு உரத்துப் படித்துக் காண்பித்துக் கொண்டிருந்தான்.
சாப்பாடு ஆனதும், இப்படி ஒரு சொகுசும், படிப்பும் அவனுக்குத் தேவைப்படுவது அம்மாவுக்குத் தெரியும். ہے۔
அவள், அவனது தலையை வருடியபடி அவனது படிப்பில் ஆழ்ந்திருந்தாள். அப்பொழுது, வெளியே அழுத்தமான அந்தக் குரல் கேட்டது.
'DITLDIt...
மிக மெதுவாக கூறியவன், எழுந்து-உறைந்துபோய் 2- . கார்ந்து கொண்டான்.
புத்தகம் மடங்கித் தூரத்தில் கிடந்தது. அம்மா வெளியே வந்து மாமாவுடன் கதைத்தாள்.
இவன், படியிறங்கி. முற்றத்துக்கு வந்தபோது, இவனைப் பார்த்து மாமா கேட்டார்.
'மது. நாளைக்குத் தேர். மாரியம்மன் கோயிலுக்குப்
s
போவமா..?

Page 52
84 O 2-6 (t
மாமா இவனோடு இப்படி நின்று, நிதானமாய்ப் பேசியதில்லை. *இந்தப் பேச்செல்லாம் நம்பிற மாதிரி இல்லையே..! என்பதுபோல இவன் அவரைப் பார்த்தான்.
மாமா கருகரு' என்று அடர்த்தியான முடி வைத்துக்கொண் டிருந்தார். நாற்பது வயதாகியும் நரை காணவில்லை. மேற்சட்டை இல்லாமல் வெற்றுடம்போடு நின்றார் அடர்ந்த மீசை, உதடுகளை மூடி வளர்ந்திருந்தது. பேசும் பொழுது. மீசைக் கற்றைகளுக் கிடையே முன்பற்கள் மட்டும் லேசாகத் தெரிந்தன.
அவனுடைய சீஸருக்கு" இருப்பது போல, கூரான வேட்டைப் பற்கள் மாமாவுக்கும் இருக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது.
அவர் மார்பு முழுவதும் பச்சை குத்தியிருந்தார். மார்பில் பெரிய சிங்கம். புயங்களிலும் இரண்டு குட்டிச் சிங்கங்கள். கழுத்தில் நீளமான பொன் காப்பிட்ட புலிப்பல் சங்கிலி.
மாமா அசப்பில் சிங்கம் மாதிரித்தான் இவனுக்குத் தோன்றி seyr mif.
மாமா அலுவல் முடிந்து அம்மாவிடம் விடை பெற்றபோது, இவன் அவரைப் பார்த்துக் கேட்டான்: ۔۔۔۔
‘பூரீ, தயா மச்சாள் எல்லாரும் கோயிலுக்கு வருவினமா..??? 'எல்லாருந்தான்'.
f Lost...?' '
'வரமாட்டா, துடக்கு."
'அம்மா..?" 'இல்லை. நாங்கள் நாலு பேரும்தான்". இவன் அம்மாவைப் பார்த்தான், அவளுக்கு அவனது துரு துருப்புப் புரிந்திருக்க வேண்டும். "என்ன?’ என்பது போலப் ப்ார்த்தாள்.
"பூனியையும், தயா மச்சாளையும் பாக்க வேணும்.? ‘வெய்யிலடா. கவனமாப் போ...' என்றவள், அவன போவதையே பார்த்தபடி நின்றாள்
O

சட்டநாதன் கதைகள் 0 85
மரீமி வீட்டில் பூரீ மட்டும்தான் இருந்தான்: தயா மச்சாளைக் காணவில்லை.
பூரீ, முயல் குட்டிகளுக்குத் தழை போட்டுக் கொண்டிருந் தான்.
வெண் பஞ்சுக் குவியலாய்க் குட்டிகள். வந்த வேலையை மறந்து, இவனும் குட்டிகளுக்குத் தழை எடுத்துப் போட்டான், ஞாபகம் வந்ததும் பூரீயைப் பார்த்துச் சொன்னான் :
‘நாளைக்கு நாம கோயிலுக்குப் போறம். மாரியம்மன் கோயிலுக்கு...!"
* தேருக்கா..? உண்மையா?" பூஞரீயால் அதை நம்ப முடியவில்லை. "நான், நீ, தயா மச்சாள், மாமா...' *அப்பா வரமாட்டாரடா. பொய். வரவேமாட்டார்." 'இல்லை, வருவாரடா. வாறணெண்டு சத்தியமாய்ச் சொன்னவர்.'
பூரீ நம்பவில்லை என்பது மதுவுக்குச் சோர்வைத் தந்தது. இந்தச் செய்தியைத் தயாவிடம் பகிர்ந்து கொள்ள வேண்டு மென்ற தவிப்பு அவனுக்கு, பூரீயை முயலோடு, "மினக்கெட விட்டு விட்டு அவன் தனியாகத் தயாவைத் தேடிப்போனான்.
வழியில், மில்லடி ஒழுங்கையில், கடையன் சீமால் ஆச்சிதான் எதிர்ப்பட்டாள்.
‘எங்கை. எங்கை என்ரைதுரையார் போறார்.?" *கோயிலுக்கு. மாரியம்மன் கோயிலுக்கு. நாளைக்குத் தேருக்குப் போறம். அதுதான்."
ஆச்சியின் காலைக் கட்டிப்பிடித்தபடி கூறினான். ஆச்சி வெற்றிலை போட்ட வாயால் அவனை எச்சில் படுத்துவிட்டு நகர்ந்தாள்.
ஊரெல்லாம் உலாவந்து இந்தச் செய்தியைச் சொல்ல வேண்டும் போலிருந்தது மதுவுக்கு.
‘ராஜி அக்கா வீட்டைதான் முதலிலை போவம். அங்கை தான் தயா மச்சாள் நிக்கும்.

Page 53
86 O p soir
அவன் எதிர்பார்த்தது போல் அங்கு தயா இல்லை. ராஜி, கேதா கூட இல்லை. "பெத்தா' தான் கட்டிலில் முடங்கிக் கிடந்தாள்.
பெத்தாவுக்கு எதுவும் முடியாது. பார்வை மட்டு மட்டு, காதும் அரை குறையாகத்தான் கேட்டது.
"பெத்தாவுக்குச் சொல்லுவமா..?' மனதில் துருத்தியதை, செயற்படுத்த விரும்பி, அயர்ந்து தூங்கும் பாட்டியைத் தொட்டு உசுப்பினான்.
"பெத்தா. பெத்தா..! நாங்க கோயிலுக்கு. மாரியம்மன் கோயிலுக்குப் போறம். உனக்கு பாக்குரல், பாக்கு வெட்டி, கொட்டப் பெட்டி எல்லாம் வாங்கி வரட்டா.'
மதுவின் குரல், நீரினாழத்திலிருந்து கேட்பது போலப் பெத்தாவுக்கு இருந்திருக்க வேண்டும். அவள் திடுக்குற்று, மலர்க்க மலர்க்க விழித்தபடி, இவனைப் பார்த்தாள்.
பெத்தாவுக்கு எதுவுமே தெரியவில்லை, எல்லாம் ஒரே புகை மூட்டமாக இருந்தது.
'ஆரடா மோனை. எனக்குக் கண்ணும் தெரியேல்லை காதும் கேக்கேல்லை.' கிழவி எழுந்து உட்கார்ந்து கொண்டாள்.
இதுக்குச் சொல்லேலாது. ஒண்டும் விளங்காது. சரியான செவிட்டுப் புடையன்."
அலுத்துக் கொண்ட மது, ரதி அக்காவின் நினைவு வர, அவளிடம் புறப்பட்டான்.
ரதி அக்கா மெஷினில் ஏதோ தைத்துக் கொண்டிருந்தாள். இவனைக் கண்டதும் :
'என்ன...? எங்கடை மதுவனோ வாறது.?' அவள் நெகிழ்ந்து கரைந்தாள். திரும்பத் திரும்பச் சொல்லியும், அசை போட்டும் மனப் ஒப்பித்தான்,
அக்கா எழுந்து உள்ளே போய் அலுமாரியைத் திறந்ததும் இவனுக்குத் தெரிந்தது, அக்கா காசு தரப் போறாளென்று.
அவனது கையில் ஐந்து ரூபாய்க் குற்றி ஒன்றை வைத்த ரதி, அவனை அணைத்து முத்தமிட்டாள்.

சட்டநாதன் கதைகள் O 87
‘ரதி அக்காவுக்குத் தான் எச்சில் படாமல் முத்தம் கொடுக்கத் தெரியும்', என நினைத்துக் கொண்டவன், கண்களை இடுக்கிப் பூஞ்சிரிப்பொன்றை உதிர்த்தபடி, அவளிடம் விடைபெற்றுக் கொண்டான்.
மில்லடியில் வரும்போது, யோகு அன்ரியின் ஞாபகம் வந்தது. ஆனால், வீதியைக் கடந்து போக அவனுக்குப் பயமாக இருந்தது.
*கார், பஸ் ஏதென் திடீரென வந்து தட்டிப்போட்டால்".
'தூரத்திலை. அரசடியிலை. ஆரது நிக்கிறது. சுதன் சித்தப்பாவா..? வெள்ளையும் சள்ளையுமாய் உடுத்துக் கொண்டு எங்கை போகப் போறார்.?
சித்தப்பாவிடம் இதைச் சொல்ல, மதுவின் மனம் பரபரத்தது. அவரை நோக்கி வேகமாக ஓடிப்போனான். பின்னால் ராட்சத உறுமலுடன் பஸ் வந்தது. பயந்த இவன், கானுக்குள் ஒதுங்கிக் கொண்டான். பஸ் இவனைக் கடந்து, சித்தப்பாவின் காலடியில் சரிந்து நின்றது. சித்தப்பா பஸ்ஸில் ஏறிக் கொண்டார்.
மதுவுக்கு அது பெருத்த ஏமாற்றமாய் இருந்தது.
அந்த ஏமாற்றத்தையும், சோர்வையும் போக்க, வீதியைக் கடந்து, யோகு அன்ரி வீடுவரை போக வேண்டும் போலிருந்தது அவனுக்கு.
அன்ரி வீடு பூட்டிக் கிடந்தது. ஆளரவம் இல்லை. இவன் படி ஏறி விறாந்தையில் கிடந்த வாங்கிலில் உட்கார்ந்து கொண்டான்.
'பள்ளியாலை தவம் மாமா இன்னும் வரேல்லைப்போல. அன்ரி எங்க போயிருப்பா..?
கூடத்துக்கு அப்பாலுள்ள அறையில் ஏதோ சத்தம் கேட்டது. ஆழ்ந்த யோசனையிலிருந்த மது உசாரடைந்தான். வாங்கிலில் இருந்து இறங்கி, அந்த அறையை நோக்கி நடந்தான்.
கதவு நீக்கலால் உள்ளே பார்த்தான்.
யோகு அன்ரியும் தவம் மாமாவும் கட்டிலில். அன்ரி சிவப்பாய் தம்பலப் பூச்சி மாதிரி. சேலையெல்லாம் குலைந்தபடி. மாமா, கறுப்பா. தேகம் முழுவதும் ரோமம் அடர்ந்து. ஒரு பொட்டுத் துணி கூட இல்லாமல்.

Page 54
88 () is 61st
“சீ..' இந்த அன்ரிக்கும், மாமாவுக்கும் வெக்கமேயில்லை.
உதட்டை அஷ்ட கோணமாக்கியவன், அந்த அறையை, அவர்களை-ஏறிட்டுப் பார்க்கக் கூடக் கூச்சப்பட்டவனாய், ஒரு வகை அச்சத்துடன் வந்த வழியே மெதுவாகத் திரும்பி நடந்தான்.
O
இந்துச் சித்தி வீட்டில்தான் தயாவை மதுவால் சந்திக்க முடிந்தது.
மது விஷயத்தைச் சொன்னதும் பட்டாம் பூச்சியின் படபடப்பு
தயாவின் கண்களில் தெரிந்தது.
சித்தி வீட்டிலிருந்து அவனும் அவளும்-ழரீயைத் தேடிப் போனார்கள்.
பூரீ முயல் கூட்டுக்குப் பக்கத்தில் அப்பொழுதும் நின்று கொண்டிருந்தான்.
இவர்களைக் கண்டதும் வந்து சேர்ந்து கொண்டான்.
மூவரும், கூடத்தில்-குளிர்ந்த சீமெந்துத் தரையில் உட்கார்ந்து கொண்டார்கள். .۷
"புதிசா பாவாடை சட்டையிருந்தா நல்லம்.', இது தயாவின் அபிப்பிராயம்.
'நான் வேட்டிதான் கட்டுவன்'-பூரீ.
'முளைச்சு மூண்டிலை விடயில்லை. உமக்கு வேட்டியே வேணும். வேட்டி கட்டித் தத்துப் பித்தெண்டு நடந்தால் நல்ல வடிவாத்தானிருக்கும். கழிசான்தான் போட வேணும்.'
தயாவின் தீர்மானமான பேச்சு மதுவினது வேட்டி ஆசையையும் கருக்கியது.
தயாவை அவர்களால் மீற முடியாது. ஆண்டு ஆறில் படிக்கும் அவளுக்கு; பூனியும் மதுவும் சிறு பிள்ளைகள். அதனால், அவள் பேசுவதெல்லாம் அவர்களுக்கு வேத வாக்கு.
தயா தொடர்ந்து சொன்னாள் :

சட்டநாதன் கதைகள் ό 89.
'காலையிலை ஏழு மணிக்கு முந்திப் போனால்தான் நல்லது. எட்டு மணிக்குச் சாமி தேருக்கு வரும், தேர் வீதி உலா வரேக்கை நிக்க வேணும். சாமிக்குப் பச்சை சாத்தி. தேரிலையிருந்து இறக்கி. வசந்த மண்டபத்திலை அபிஷேகம் செய்யிறதைப் பார்க்க வேணும்.'
'கடையள் பார்க்கிறேல்லையா..?"
ஆவலுடன் பூரீ கேட்டான்.
'பார்க்காமல். வீதி எல்லாம் ஒரு சுற்றிச்சுற்றி, ரபர் வளையல், காற்சங்கிலி, ஒட்டுப் பொட்டு எல்லாம் வாங்க வேணும்."
'எனக்குத் துவக்கு வேணும்."
மது தனது விருப்பத்தை வெளியிட்டான்.
பூனி கூறினான் :
'எனக்குக் கலர் கலரா இனிப்பு. பஞ்சு மிட்டாய். சூப் புத்தடி. காசு மிஞ்சினா ஒரு அம்மம்மாக் குழலும், விசிலும் வேணும்.'
‘சரி. பூணி உன்ரை உண்டியலைக் கொண்டுவா..!" 5 uur.
என்றாள்
பூரீ ஓடிப்போய் உண்டியலை எடுத்து வந்தான். அதை உடைத்து எண்ணிப் பார்த்தார்கள். ஒன்பது ரூபாய் இருபத்திரெண்டு சதம் இருந்தது.
ரதி அக்கா தந்த ஐந்து ரூபாயை எடுத்து, மது தயாவிடம் கொடுத்தான்.
தயா, தனது வைப்புச் செப்பிலிருந்து ஆறு ரூபாயைச் சேர்த்துக் கொண்டாள்.
மூவரும் முறைவைத்து அப்பணத்தை மாறி மாறி எண்ணிப் பார்த்துக் கொண்டார்கள்.
இருபது ரூபாய் இருபத்திரெண்டு சதம் இருந்தது. மதுவுக்கு அலுப்பாக இருந்தது. கொட்டாவி விட்டுக்கொண் டான். அம்மாவின் நினைவும் கூடவே வந்தது.
தயாவிடமும், பூரீயிடமும் விடை பெற்றவன், வீடு நோக்கி நடீந்தான்.
O

Page 55
90 O உலா
மகா வித்தியாலயத்தைக் கடந்து, கிழக்கே திரும்பியதும், அம்மன் கோயில் தெரிந்தது. சனசந்தடியுடன் கோயில் ஜேஜே" என்று இருந்தது.
“என்ன அள்ளு கொள்ளையாய்ச் சனம்...!' LD TIL DIT முணுமுணுத்துக் கொண்டார்.
அம்மன் கோயிலுக்குச் சற்று முன்பாக, மேற்குச் சாய்வில் ஒரு சிறு கோயில்.
‘என்ன கோயிலிது, சின்னதா. வடிவா..?’, மது மாமாவைக் கேட்டான்.
*சும்மா பேசாமை வாடா. நச்சு நச்செண்டு. மாமா பதில்
தராமல் அதட்டினார்.
மாமாவின் அதட்டல் அவனது ஆர்வத்தையும், குதூகலத்தையும் குலைத்தது.
வாயடைத்துப் போன மதுவைப் பார்த்துப் தயா கூறினாள் 'வைரவர் கோயில். ஞான வைரவர். இஞ்சை தான் அம்மன் வேட்டைத் திருவிழாவுக்கு வாறவ.'
கண்கலங்கிய மது, நன்றியுடன் தயாவைப் பார்த்தான். மனசு கொஞ்சம் லேசானது மாதிரி இருந்தது அவனுக்கு.
வைரவர் கோயிலுக்குப் பக்கத்தில் தீர்த்தக் கேணி. மாமாவும், தயாவும் கேணியில் இறங்கிக் கால் அலம்பினார்கள். பூரீயையும் மதுவையும் இறங்க வேண்டாம் என்று மாமா கண்டிப்புடன் கூறிவிட்டார்.
தயா கேணித் தண்ணிரைக் கைகளில் ஏந்தி வந்து இவர்களது கால்களில் தெளித்து விட்டாள்.
ஆரம்பமே மதுவுக்கு எரிச்சலூட்டுவதாயிருந்தது. அடிவயிற்றி லிருந்து திரண்டு வந்த கசப்பை மிகுந்த சிரமத்துடன் விழுங்கிக் கொண்டான்.
கோயில் வீதியில் கம்பீரமாய் நிமிர்ந்து நின்ற தேர் மதுவின் கவனத்தை ஈர்த்தது. தயாவை இழுத்தபடி, தேர்ப்பக்கமாக நகர்ந்தான்.

ܗܳܝ ܪܐ ܚܵ ܀ 1 சட்டநாதன் கதைகள் O 91
சிவப்பும் வெள்ளையுமாய் துணிகளாலும், கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்ட தேர். காற்றசைவில் குலுங்கிச் சிலிர்க்கும் தேர்ச் சிறு மணிகள். தேரின் முன்பாகப் பாயும் நிலையிலுள்ள குதிரைகளின் லாகவம். எல்லாமே மதுவைத் தன் சுயமிழக்கச் செய்தன.
தேர்வரை சென்று ஒரு சுற்றுச் சுற்றி, அதை நெருக்கத்தில் பார்க்க அவனுக்கு ஆசையாயிருந்தது.
'உதென்ன விடுப்பு.? தேரிலை சாமி கூட வரேல்லை." மீண்டும் மாமாவின் கண்டிப்பும் அதட்டலும் .
மதுவுக்கும் தயாவுக்கும் அது பிடிக்கவில்லை. அவர்களுக்கு, கோபுர வாசலில் படியைத் தொட்டுக் கண்களிலொற்றி, நாலு தெரிந்த முகத்தைப் பார்த்துச் சிரித்து, அவர்களுடன் கொஞ்சலாய் ஒரு செல்லப் பேச்சுப் பேசி, சந்தோஷமாய் கோயில் உள்ளே போக வேண்டும் போலிருந்தது.
தெற்கு வீதிக்கு வந்தபோது பூரீ நட்ட கட்டையாய்க் கால் பாவி நின்றான். நின்றவன், தயாவை கைகளால் நிமிண்டி, மிட்டாய்க் கடைகளைக் கண்களால் சாடை காண்பித்தான்.
"எல்லாம் போகேக்கை பார்க்கலாம். இப்ப பேசாமை வா...", விழிகளால் அதட்டிய தயா, இருவரையும் இழுத்தபடி அப்பாவின் பின்னால் போனாள்.
தெற்கு வாசலால் கோயிலினுள் நுழைந்த மாமா, முதல் வேலையாக, மூவரையும் தென்மேல் மூலையில்-பிள்ளையார் சந்நிதிக்கு இடப்பக்கமாக இருந்த வாகன சாலைக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்தார். வைத்தவர் ‘அர்ச்சனை செய்திட்டு வாறன், பத்திரமாய் இருங்க பிள்ளையஸ்", என்று நகர்ந்தார்.
'இங்க வாகனங்களோடை வாகனமாய் நாம இருக்க வேண்டியதுதானா..?’’
ஏக்கம் தயாவை அழுத்தியது.
மது கண்கலங்கி விம்மினான். அவனுக்குத் தொண்டை அடைத் திருக்க வேண்டும், பேச்சுத் தடைபட்டுத் தடுமாற, 'கெதியா வாருங்க மாமா...', என்று சிணுங்கினான்.
மாமா எதிலுமே பட்டுக் கொள்ளாமல் வேகமாக நடந்து
போனார்.

Page 56
92 ல் உலர்
பூரீ மட்டும் எதுவித பாதிப்புக்கும் உட்படாதவனாய், எழுந்துபோய், வாகனங்களைத் தொட்டுத் தடவி, தப்பும் தவறுமாய் எண்ணி வந்து, 'எட்டு வாகனங்கள் அக்கா!", என்று தயாவுக்குக் கணக்குச் சொன்னான்.
மது, காராம் பசு வாகனத்தையே சிறிது நேரம் வைத்த கண் வாங்காது வெறித்துப் பார்த்தபடி இருந்தான்.
பசுவின் உடல், தலை மட்டும் அழகான பெண் உருவம். முகத்தில்-நெற்றி நிறைந்த சிவந்த செந்தூரம். தடித்த சிவந்த உதடுகள், காலில் கழுத்தில், மூக்கில் எல்லாம் ஆபரணங்கள்.
மதுவுக்கு அப்பொழுது ஏனோ யோகு அன்ரியின் ஞாபகம் வத்தது, 'அன்ரி மாதிரி. இந்தப் பசுவும் நல்ல வடிவு."
அலையும் மனது நிதானமடைந்ததும் மீளவும் அவனுக்கு மாமாவின் நினைவுகள்.
“பெரியவனாய் வந்து இவரை. இந்த மாமாவை. நெஞ்சிலை ஏறியிருந்து. கழுத்தை நெரித்து. மூச்சுத்திணறத் திணற.
குரூரமாய் அவனது காயப்பட்ட மனசு வன்மம் கொண்டது. மாமாவை ஏதோ ஒரு வகையில் தண்டிக்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. எழுந்து, வாகனசாலையில் காராம் பசுவின் பக்கமாகப் போனவன், கழிசான் ஸிப்பை நீக்கிப் பசுவின் மேல் படும்படி "ஒண்டுக்கு இருந்தான்.
தனது எதிர்ப்பை அவனால் இவ்வாறுதான் காண்பிக்க முடிந்தது. ‘என்னடா இது. சரியான பாவம் கிடைக்கும்.', தயா சொன்னாள். "ஒண்டுக்கு வந்தா என்ன செய்யேலும்.'
மதுவின் பேச்சு தயாவை அதிர்ச்சியடைய வைத்தது. அவள் விக்கித்துப் போய் எதுவும் பேசாமலிருந்தாள்.
O
மரிமா அங்கு வந்தபொழுது, தயாவின் மடியில் பூரீ அயர்ந்து துரங்கிக் கொண்டிருந்தான்.
மது விறைப்புடன் எழுந்து நின்று மாமாவைப் பார்த்துக் கேட்டான் :
“எனக்கு அம்மனைப் பார்க்க வேணும். வசந்த மண்டபம். கொடிமரம். வீதி உலா வாற சாமி. எல்லாம் பார்க்கவேணும்.'

சட்டநாதன் கதைகள்'O'93
மதுவின் துணிவு மாமாவுக்கு அசாத்தியமாய்ப் பட்டிருக்க வேண்டும்.
அவனது தலையில் நறுக்கென ஒரு குட்டு வைத்தார்.
'உவர் பெரிய மீசை முளைச்ச கொம்பர். சனத்துக்கை போய் நெரியப் போறாராம். வடுவா பேசாமல் வா. தேரிலை சாமி வந்திடும். பாத்திட்டு வீட்டை போவம்.'
தயாவுக்கு வாய் துருதுருத்தது. சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள்
வீதிக்கு வந்ததும், ஒவ்வொருவர் கையிலும் ஒரு கடலைப் பொட்டலத்தை மாமா வாங்கி வைத்தார்.
மாமாவின் பார்வை படாத வேளை பார்த்து, பொட்டலத்தை மது தூர வீசி எறிந்தான்.
இதனைக் கண்ட தயா திடுக்குற்றுப் பதட்டப்பட்டாள்.
'மதுவுக்கு இண்டைக்கு என்ன வந்திட்டுது..?" இது சரியான சின்ன ரெளடி. சின்ன ரெளடி", என்று அவள் முணுமுணுத்துக் கொண்டாள்.
அவர்கள் கொண்டு வந்த பணத்திற்கு எதுவுமே வாங்கவில்லை. * வாங்க முடியாமலே போய்விடுமோ..? மூவரையும் ஏக்கம் வாட்டியது. ; மாமாவைக் கேட்பதற்கும் அவர்களுக்கு மனம் துணியவில்லை, கோபுர வாசலில் ஆரவார ஓசை: நாதஸ்வரத்திலிருந்து மல்லாரியின் தாழிதம்; காற்றுடன் கலந்து பரவிப் பரவசமூட்டியது.
‘சாமி வெளியாலை வருகுது போலை, கெதியா வாருங்க. ' குழந்தைகளை மாமா துரிதப்படுத்தினார்.
கோபுர வாசலுக்கு அருகாக அழைத்துச் செல்லாமல், தூரத்தில் வைத்தே, அவர்களுக்கு மாமா சாமி காட்டினார்.
தயா கை உயர்த்திக் கும்பிட்டாள். 'சாமி வடிவா இருக்கடா மது.' என்று குதூகலித்தாள்.
மது எம்பி எம்பிப் பார்த்தான். சாமி தெரியவில்லை. மனித முதுகுகளும், தலைகளும்தான் அவனுக்குத் தெரிந்தன.

Page 57
94 O 2-6 it
பூரீயை மட்டும் மாமா தூக்கிக் காண்பித்தார்.
மதுவுக்குத் துக்கமாக இருந்தது. வெடித்து வந்த அழுகையை அடக்கிக் கொண்டான்.
“அதோ. அதுதான் தேர். அதிலை ஏறி இந்தச் சாமி இத்த வீதியாலை உலா வருவார். சாமியும் பாத்தாச்சு, தேரும் பாத்தாச்சு. நாம இனி வீட்டைப் போவம்.’’.
மாமாவின் சொல்லைத் தட்ட வலு இல்லாமல், அவரின் பின்னால் மூவரும் போனார்கள்.
ரபர் வளையல், காற் சங்கிலி, ஒட்டுப் பொட்டு, துவக்கு, விசில், கலர் கலரா இனிப்பு, பஞ்சு மிட்டாய் எல்லாமே கனவு போல அவர்களுக்கு ஆகிவிட்டது.
அடுத்த வருஷம் அம்மாவோடைதான் வரவேணும்' என மது நினைத்துக் கொண்டான்.
தயா மச்சாளைப் பார்த்தான் மது. அவள் தலையில் காலையில் சூடிய பிச்சிப்பூ மாலை வாடியிருந்தது. கண்களில் நீர் முட்டி மோதிக் கொண்டிருந்தது.
பூரீ அக்காவின் கண்களைத் துடைத்துவிட்டான். மது தயா மச்சாளின் கரங்களை ஆதரவாகப் பற்றிக் கொண்டான்.
மாமா தனது நீண்ட கால்களை எட்ட எட்ட வைத்து, அவர் களுக்கு முன்னால் வேகமாக நடந்து போனார். அவர் பின்னால், அவரது நடைக்கு ஈடுகொடுக்க முடியாமல், அந்தப் பிஞ்சுக் குழந்தைகளும் தளர்ந்து தடுமாறியபடி நடந்து போனார்கள்.
O

வித்தியாசமானவர்கள்
“என்ன ரீச்சர். என்ன யோசனை இந்த உலகத்தையே மறந்து..? கண்ணும் கலங்கி இருக்குது.' برت۔
அடங்கிய குரலில் அவன் கேட்டது அவளது மனசைத் தொட்டது. அவள் நிமிர்ந்து பார்த்தாள்.
ரகு மலர்ந்த சிரிப்போடு நின்றான். அவனது கண்களும் சிரித்தன. கண்கள் சிரிக்குமா? சிரிக்கின்றனவே!
அவளுக்கு அது வியப்பாக இருந்தது.
"இப்படி ஒரு அழகு, இவனுக்கு. இவனுக்கு எப்படிச் சாத்திய மாகியது? மெலிந்து, உயரமாய். மாங்குருத்து மாதிரி ஒரு நிறம்" அடர்ந்த மீசை. அளவாகவே திரட்சி கொண்ட உதடுகள். கூர்ந்த நாசி. நெற்றிதான் சற்றுப் பொறுத்தமில்லாமல் சிறிதாக. அதுவும் ஒரு வடிவுதான். பெண்மை கலந்த ஆண்மை.
நினைவுகள் இதமானவை.
"என்ன ரீச்சர் கண் கலங்கிப் போய்க் கிடக்குது. வீட்டிலை இண்டைக்கும் ஏதேன் பிரச்சனையே? எதையுமே பெரிசா எடுத்துக் குழம்பினால்தான் கவலை. துக்கமெல்லாம்'

Page 58
96 O வித்தியாசமானவர்கள்
அந்த வார்த்தைகளின் பரிவில் தன்னை இழந்த அவள் நினைத்துக் கொண்டாள்:
இவனிடம். இந்த ரகுவிடம், எதையுமே நம்பிக்கையுடன் பகிர்ந்து கொள்ளலாம். நம்பி நடக்க ஒரு ஜீவன். அதுவும் ஆண்'.
இது அதிசயம்தான். ஆண்களையே அவளுக்குப் பிடிக்காது. அப்படி ஒரு சூழலும் இறுக்கமும் நிறைந்த வாழ்க்கை அவளுடையது. குடும்ப அளவிலும் குடும்ப எல்லையைத் தாண்டிய நிலையிலும் எந்த ஒரு ஆணிடமும் அவள் நம்பி நெருங்கியதில்லை. அவள் பழகிப் பரிச்சயம் கொண்ட ஆண்கள் அனைவருமே பொய்மையும் போலித்தனமும் நிரம்பிய வர்கள்; பெண் என்றாலே படுக்கை அறை விஷயம் மட்டும்தான் என எண்ணும் வக்கரித்த பிறவிகள். இது அவளது அனுமானம்.
இந்த அனுமானங்களுக்கு மாறாக, ரகு வித்தியாசமான வனாகத்தான் இருந்தான். இந்த வித்தியாசமே அவனில் அவளுக்கு ஒரு பிடிப்பை ஏற்படுத்தியது.
சதா குடிப்பதோடு பெண்களுக்காக அலைந்து திரிந்து சொத்து முழுவதையுமே இழந்த தாத்தா,
அம்மாவுடனும், வேலைக்காரியுடனும் ஒரே அறையில் படுக்கும் அப்பா.
மனைவியையும் குழந்தையையும் கார் கராச்சினுள் குடியிருத்தி விட்டு, யாரோ ஒருத்தியை எங்கிருந்தோ இழுத்து வந்து, தாம்பத்தியம் கொள்ளும் அண்ணை.
செல்லப்பூனை மாதிரி-வயசுக்கு வந்து, இவள் விழிப்புக் கொள்ளுமட்டும்-சதா உரசிக் கொண்டு திரிந்த அத்தான்.
பயிற்சிக் கல்லூரியில் நாலு பேருக்குத் தெரிய மிஸ்ஸில் தங்கத்துரையை வைத்துக் கொண்டிருக்கும் ரஷாக்கின் ஆண் பெண் உறவு பற்றிய தனித்த பேச்சுக்கள். ஆசை அணுகுதல்கள் எதுவுமே,
இவளிடம் பலிக்காதென்ற நிலையில்-இவளையும் வைத்திருப்பதான
அவனது பிதற்றல்கள்.
இந்தப் பின்னணியில். ாகு இவளுக்கு நிரம்பப்பிடித்திருந்தான்.

சட்டநாதன் கதைகள் 9 97
கலாசாயிைல், பயிற்சி முடிந்த கையோடு இந்தக் கிராமப்புறப் பாடசாலைக்குத்தான் அவள் விஞ்ஞான ஆசிரியையாக நியமனம் பெற்றாள். பாடசாலையில் கால் வைத்த முதல் நாளே அங்கு நிறையப் பொலிற்றிக்ஸ் இருப்பதை உணர்ந்தாள். ஆசிரியர்கள் இரண்டாகப் பிரிந்து சிண்டு பிடித்துக் கொண்டிருந்தார்கள், அதிபர் இடையிற் சிக்கித் திகைத்துப் போய் நின்றார். அதிலெல்லாம் இவள் தன்னைப் பிசக்கிக் கொள்ளவில்லை. எதிலுமே ஒரு தாமரை இலைத் தண்ணீர் மனோபாவம்தான். வீட்டுச் சூழலில் அவள் தூரப்பட்டதுபோல, இங்கும் ஒதுங்கி, தனித்து இருப்பது, அவளுக்குச் சுகமாக இருந்தது
பாடசாலைப் பிள்ளைகளும் இவளது முயற்சிகளுக்கு வளைந்து கொடுக்காது, போளையடிப்பதிலும், பழம் பொறுக்குவதிலும், கெந்தி அடிப்பதிலும், கிளித்தட்டு மறிப்பதிலுமே சிரத்தை கொண்டனர். அத்தி பூத்தாற்போல அங்கொன்றும் இங்கொன்று மாகப் பிரகாசம் காட்டும் குழந்தைகள் கூட, "படிக்கப் பட்டணம் போறன் ரீச்சர்", என்று வந்து நிற்பது இவளுக்கு வருத்தமாய் இருக்கும்.
இந்தச் சூழலில் அவளை நின்று நிதானித்துப் போக வைத்தவன் ரகுதான்.
அவன் விஞ்ஞான கூட உதவியாளனாக அங்கு கடமையாற்றி னான். அவனுடன் அவளது முதற் பரிச்சயமே-அவன்பால் ஒரு மதிப்பையும் ஒரு பிரியத்தையும் அவளுக்கு ஏற்படுத்தியது.
மூன்றாம் பாடவேளை அவள் விஞ்ஞான கூடத்திற்குப் போன பொழுது அவன் சிரித்தபடி வரவேற்றான். மெலிதான, மனசைத் தொடும் சிரிப்பு. என்னை நம்பலாம், கயவாளித்தனம் ஏதும் இல்லை என்கிற சிரிப்பு. யாரையுமே இழுத்து மனசிலை போடுகிற சிரிப்பு. போட்டுக் கரையிற சிரிப்பு. இவள் அவனையே பார்த்தபடி நின்றாள். இப்படி ஒரு இதம், கனிவு, அனுசரிப்பு அவளது வாழ்க்கையில் இது வரை நிகழாத ஒன்று; ஒரு ஆணின் வசீகரமே வேம்பாகி விட்ட அவளுக்கு இப்படி ஒரு அனுபவமா?
அந்த உணர்ச்சி, தளம்பல் எல்லாம் ஒரு கணம் தான். அவளது
வகுப்பு மாணவர்கள் விஞ்ஞான கூடத்திற்கு இரைந்தபடி விரைந்து வந்தபொழுது இவளது உணர்வுகள் சமனப்பட்டன,

Page 59
98 9 வித்தியாசமானவர்கள்
அடுத்த நாற்பது நிமிடங்களும் மாணவர்களும் அவளும் தான். அன்று புரதம் பற்றிக் கற்பித்தாள். அனுசரணையாக ஓரிரு பரிசோதனைகளையும் செய்தாள் எல்லாவற்றிற்கும் ரகு உதவியாக இருந்தான்.
நாலாம் பாடவேளை அவளுக்கு ஃப்றீ. அவன் ஆசிரிய அறைக் குப் போகாமல் விஞ்ஞான கூடத்திலேயே தங்கி விட்டாள். அது அவளுக்குப் பிடித்திருந்தது அந்தச் சூழ்நிலை, வேண்டிய ஒன்றாக வுமிருந்தது. அதற்கு ரகுவின் உடனிருப்புக் காரணமாயிருக்குமோ?
அன்று மட்டுமல்ல, அதன் பின்பும் ஓய்வு நேரத்தை அவள் இப்பொழுதெல்(9ாம்-விஞ்ஞான கூடத்தில்தான் செலவிடுகின்றாள். விஞ்ஞான உபகரணங்களைச் சுத்தம் செய்வது, ஒழுங்குபடுத்துவ தென்று அவன் செயற்பட, இவளது நேரம் மாணவர்களின் அப்பியாசங்களைத் திருத்துவதில் கழியும், சில சமயங்களில் இருவருமே எதிரும் புதிருமாக உட்கார்ந்து கொண்டு, எதை எதைப் பற்றியெல்லாமோ பேசிக் கொள்வார்கள். அந்தப் பேச்சு, அவர்களிரு வரையும் ஒருவரை ஒருவர் புரிந்து, நெருக்கம் கொள்ளப் பெரிதும் உதவியது.
இந்தப் பேச்சும் இருப்பும் ஒரு ஆறுமாத காலமாகத்தான் அவர் களிடையே இருந்து வருகிறது.
*அதுசரி ரகு, நீ தனிச்சு. உன்ரை சித்தியைவிட்டு. இந்த அறைக்கு எப்பு வந்தனி?' -
‘அப்பா ச்ெத்து இரண்டொரு வருஷத்திலை"
*உன்ரை சித்தியின்ரை தொடர்புகளே வேண்டாமெண்டு நீ வந்தது சரியெண்டுதான் எனக்குப் படுகுது. பசி வயித்தோடை போய்ச் சோத்துப் பானையைப் பாத்தா. வெறும் பானையை மூடி வைச்சிற்று, போய்ச் சாப்பிடு எண்டு சொல்லிற சித்தியோட எத்தனை நாள் தான் இருக்கேலும்? அந்தக் கொடுமையை, ஒதுக்கலை எல்லாம் நானும் அனுபவிச்சவள்தான் ரகு.
'என்ன ரீச்சர் இது!'
* ‘என்ரை அம்மாவ்ே எனக்கொருவகையிலை சித்தி மாதிரித் தான். அவ என்னை மிகக் கேவலமா நடத்தியிருக்கிறா. அண்ணை யும் அக்காவும்தான் அவவுக்கு எப்பவும் பெரிசு. அவையளைத்

சட்டநாதன் கதைகள் O 99
t محت
தலையிலை வைச்சுக் கூத்தடிப்பா, ஒருஸ்ரெப்மதர்லி ட்ரீற்மென்ற், சின்ன வயசிலை எனக்கு நிறையவே கிடைச்சிருக்கு ரகு".
‘எங்க தாத்தாவுக்குக் காணி பூமியெண்டு ஏக சொத்து. பாதியை அவர் அழிச்சார். மீதியை அம்மாவுக்கு எழுதி வைச்சார். அவ அப்பாவோடை சேர்ந்து அதையும் அழிச்சுப் போட்டு நிக்கிறா, இரண்டு பேருமே இப்ப என்ரை கையை எதிர்பார்க்கிற நிலமை .'
'உங்க அண்ணர் நல்லாத்தானே இருக்கிறார். ஏதென் உதவலாமே!'
'ரகு, என்ரை ரகு! உனக்கொன்றுமே தெரியாது. புதிசா, இளசா பொம்பிளை இருந்தாத்தான் அவன்ரை மனசு இளகு ஏதென் கொடுப்பான். இருந்தாச் சொல்லன்’’.
'திஸ்இஸ் ரியலி ரூ மச்.”*
‘எது, நான் பேசிறதா? இல்லை எங்கடை குடும்ப விஷயமா?
‘ரகு, எங்கடை குடும்பமே பெண்டுகள்' விஷயத்திலை அப்பிடி இப்பிடித்தான். அதிலையே சொத்தைக் கரைச்சவங்களெண்டுகூட என்னாலை சொல்ல முடியும். என்ரை கண்ணாலையே அந்தக் கண்றாவீயளையெல்லாம் பார்த்திருக்கிறனே'.
'எனக்கு அப்ப பத்துப் பதினொரு வயசுதான் இருக்கும். அப்பா கேகாலையிலை புகையிலை வியாபாரம். இரண்டு மாசத்துக் கொருக்கா வீட்டுக்கு வருவார். இப்ப நாங்க இருக்கிறமே வீடு; இதில்லை. அது பெரிய வீடு. பலெஸ் மாதிரி. அதெல்லாம் இப்ப வித்துப் போச்சு. காரிலைதான் அப்பா வருவார். அவரோடை புதிசு புதிசா வேலைக்காரப் பெட்டையள், சிங்களப் பெட்டையள், குஷாமா எண்டும் மெனிக்கா எண்டும் வருங்கள்’’.
*" என்ன இப்பிடிக் கூச்சமில்லாமை பேசிறாளே எண்டு பார்க் கிறியா?"
‘நோ. நோ. அப்படியொண்டுமில்லை'.
'உள்னோடைதான் இப்படி என்னாலை பேசமுடியுது ரகு இப்பிடிப் பேசிறதே ஒரு ஆறுதலா. ஏதோ மனப்பாரம் குறைஞ்சது போலை இருக்கு. எதைப்பற்றியெல்லாமோ பேசிறம், இந்த 'பெவேற்ரட் செக்ஸ் பற்றிப் பேசினா என்ன குடியா முழுகிப் போயிடும்'.

Page 60
100 O வித்தியாசமானவர்கள்
‘என்ன சொன்னான். வேலைக்காரி பற்றியெல்லா? அவதான் குஷாமா வந்து நிக்கிறா. அவ்வளவு சிவப்பு. றோசா நிறம். பட்டுட்போல குளொஸ்ஸியா இருக்கிறா. நான் அவளைப் பிறந்த மேனியாப் பார்த்திருக்கிறனே, அப்பான்ரை அறையிலை. நாலு நாள் கழிச்சு அண்ணை அவளை பாத் ரூமுக்குப் பக்கத்திலை இழுத்து வைச்சுக் கொண்டிருந்தான். அப்ப தாத்தா இல்லை; செத்துப் போயிட்டார். இருந்திருந்தா அவரும் அவளை "மொலெஸ்ற் பண்ணியிருப்பார்".
‘வசதி படைச்சவை இப்பிடித்தான். குஷாமா என்ன . குஷாமாவின்ரை மகளையும் தொட்டுப் பாக்க ஆசைப்படுவினை.'
**இது ஆசையே.? இல்லை ரகு. மிருகத்தனம். மிருகத் தனம், தே ஆர் பாஸ்ராட்ஸ்'.
அவள் லேசாக விம்மினாள். அவளது அடிமனதில் உறைந்து விட்ட இந்த உணர்வுகள் அவளுக்குத் துயரம் தருவதாயிருப்பதை அவன் உணர்ந்தான்.
திடீரென் எழுந்தவள், முகத்தைக் கைக்குட்டையால் அழுத்தித் துடைத்தபடி ஜன்னலை நோக்கி நகர்ந்தாள். இவனும் அவளுக்குப் பின்புறமாக வந்து நின்று கொண்டான்,
இந்தச் சின்னப்பெட்டை. மார்பளவு உயரம்கூட வராத இந்த உருவத்திலை லயித்துப்போக அப்பிடி என்ன இருக்குது? பொங்கி வழிந்து பூவாயுதிரும் ஒரு கிராமத்தனம். இடையைத் தாண்டி பிருஷ்ட பாகம் வரை அசைந்து அலையும் கூந்தல். துருதுரு வென்று நிலை கொள்ளாது புரளும் பார்வை, தரித்து ஓரிடத்தில் நிற்காது பறக்கும் பரபரப்பு. மெல்லிய நிறங்களையே தேர்ந்தணி யும் ரசனை. மனசிலை எதையுமே போட்டு மறைக்காமல் வெள்ளைத் தனமாய்ப் பேசிற பேச்சு. இவையா? இல்லை, இதுகளுக்கு பேலாலை மனசும் உடலும் கரைஞ்சு போற மாதிரி உருகும் பரிவா. எது?”
அவனது நினைவுகள் தடைபட, இவள் இடையே பேசினாள்.
*செக்ஸ் இப்பிடி ஒரு வெறுக்கத்தக்க விஷயமா இருக்கே ரகு."
'இல்லை, அப்பிடி ஒரு முடிவுக்கு நீங்க வாறது எனக்குச் சரியாப் படேல்லை. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு வாழுற வாழ்க்கை மிக உயர்வாக அமையிறதை நான் பார்த்திருக்கிறன் ஆண் பெண் சிருஷ்டியின் அர்த்தத்தை நீங்க சரியான குறுகலாப் பார்க்கிறியள். அப்படி ஒரு சூழ்நிலையிலை வளர்ந்தது உங்களைச் சரியாய்ப் பாதிச் சிருக்கு, உதுகளை உதறித் தள்ளிறதுதான் நல்லது ரீச்சர்",

சட்டநாதன் கதைகள் O 101
'உதறித் தள்ளிறதா? என்னாலை முடியேல்லை ரகு, மனம் "அது விஷயத்திலை அச்சமும் வெறுப்பும்தான் கொள்ளுது. அப்பிடி ஒரு ஆசை என்னைச் சுட்டுப் போட்டாலும் வராது போலை இருக்கு. ஏதென் அப்பிடி வந்தா அண்ணை மாதிரி அல்லது அப்பா மாதிரி நானும் எவனையாவது இழுத்து வைச்சிருப்பனே?"
'நீங்க அப்பிடிச் சொல்லிறையள். ஆனால் நடப்பிலை அப்பிடி யில்லையே'.
‘என்ன. நீ என்ன சொல்லிறை?" அவளது பதட்டம் குரலில் தெரிந்தது.
'பாடசாலை மதிலைப் பாத்தியளா?"
'ஓ'அதுவா' - லாப் ரகுநாதனுக்கும் வசந்தி ரீச்சருக்கும் காதல்!-ரகுநாதன் வசந்தியை வைச்சிருக்கிறான்."
'அந்தக் கோணல் எழுத்துப் பிரகடனங்களைப் பற்றிச் சொல் லிறயா? பார்த்தனே. ஏதோ மாணவர்களுடைய குறும்பாக இருக் கும். நீயும் பார்த்தனியே? பார்த்ததோடை திருப்திப்பட்டுக்கொள். மனசை அலையவிட்டு அலட்டிக் கொள்ளாதை'.
'நீ பேசுவது பொய்' - என்பது போல அவன் அவனைக் கூர்ந்து பார்த்தான்; அந்தப் பார்வையின் சொடுக்கலை அவளால் தாளமுடியவில்லை. அவளது உடல் லேசாக நடுக்கமுற்றதை இவன் அவதானித்தான். கண்களும் திடீரெனப் பணித்தன. இவை, அவளையறியாமலே நடந்தன, அவள் சிரமத்துடன் மேசையில் பரத்திக் கிடந்த புத்தகங்களைப் புரட்டினாள்,
'என்ன புதிசாப் படிக்கிறை. காசியபனின் ‘அசடு முல்ராஜின் *கூலி இதென்ன சயன்ஸ் புத்தகங்களாய் வேறு அடுக்கி வைச்சிருக் கிறை',
**ஜி. எஸ். கியூ. எடுக்கிறன் ரீச்சர்."
'வெரிகுட். எனக்குக்கூட டிகிறி செய்யலாம் போலை இருக்கு. அதுசரி ரகு, எனக்கு ஏதாவது படிக்கக் கொடேன்’
'தாஸ்தயேவ்ஸ்கியின்ரை இடியட்" இருக்கு, கொண்டுபோய்ப் படியுங்கள். நல்ல கதை. இதுவும் பெண் பின்னாலை பித்தாகி அலையிற ஆண்களைப் பற்றின கதைதான். ஆனால், அந்தப் பெண்தான் என்னைப் போலை ஒரு இடியற்ரை மனசிலை போட்டுக் குழம்பிறாள். வாழ்க்கையிலை அவளுக்கு எதுவுமே கிடைக்கேல்லை ஆணின்ரை ஜெலசியே அவளைச் சாகடிச்சுப் போடுது.'

Page 61
102 e வித்தியாசமானவர்கள்,
'உன்னைப் போலை இடியற்ரா? படிச்சுப் பாத்துச் சொல் லிறன்.'
*படிச்சுப் பார்த்துத்தான் என்னைத் தெரிய வேணுமா ரீச்சர்' அவன் வாஞ்சையுடன் அவளை நெருங்கினான்.
‘நோ. நோ. பிளீஸ் என்னை அப்பிடிப் பார்க்காதை ரகு, உன்னை இந்த விஷயத்திலை நான் ஏமாத்த விரும்பேல்லை. குடும்பம், வாழ்க்கை என்பதெல்லாம் எனக்குப் பயனற்றதாய்ப் படுகுது. குறிப்பா செக்ஸ். அப்பா! அது இந்த ஜென்மத்திலை வேண்டாம் .”*
**ஆண் பெண் எண்டாலே செக்ஸ் மட்டும்தானா? பிழையான மனப் பதிவுகளாலை, வாழ்க்கையின் செளந்தரியங்களைய்ே நீங்க பார்க்க மறுக்கிறியள். இது விசர்த்தனம்.'
'இந்த விசரியை விட்டிற்று வாழ்க்கையின் செளந்தரியங்களைத் தரிசிக்கிற ஒரு பெட்டையைப் பாரேன் ரகு பிளிஸ் இந்த ஜடம் உனக்கு வேண்டாம்.'
அவள் மேலும் அங்கு நிற்பதற்கு விரும்பாதவளாய், ஒருவகை அச்சத்துடன் அவசர அவசரமாக அவனது அறையை விட்டு வெளியேறினாள்.
அவள் போவதையே பார்த்தபடி நின்ற அவனுக்கு, என்ன செய்வது ஏது செய்வதென்று எதுவுமே தோன்றவில்லை.
‘இவளை. இவளை. இழப்பது எப்படி?" என்று அவன் திரும்பத் திரும்ப மனதளவில் கேட்டுக் கொண்டான்.
“என்ன இன்னும் அழுகை ஒயேல்லைப்போலை? கண்ணைத் துடையுங்க ரீச்சர். ஆரும் பார்க்கப் போகினை, வீட்டிலை பிரச்சினை யில்லையென்டா நான் நேற்று அறையிலை கேட்டதை நினைச்சுக் குழம்பிறியளே? உங்கடை விருப்பத்துக்கு மாறா ஏதேன் கதைச்சனானே? பின்னை என்ன? எல்லாத்தையும் மறந்திட்டு உசாராக வகுப்புக்குக் போங்களன்.’’
'நான் லீவு போட்டிட்டன்.'
"லிவோ? அப்ப பள்ளிக்கூடம் வந்திருக்கிறயள்!'
*வந்தபிறகுதான் லீவு போட்டனான்.'

சட்டநாதன் கதைகள் 6 103 'அப்ப வீட்டை போறது."
'வீட்டை போசேலாது. இனிப்போகேலாது ரகு, போறேல்லை எண்ட முடிவேFடைதான் வந்தனான்.'
** என்ன ரிச்சரிது.?' அவன் சற்று அவசரமாகவே கேட்டான்.
‘இது ஒருவகையிலை ஐரனிக்கல்தான் ரகு, நீ நேற்றுத் திரும்பத் திரும்ப உன் ரை விருப்பத்தைத் தெரிவிச்சபொழுது நான்தான் பிடிகொடாமை உனக்கொரு ‘ப்பாட்மச் ஆயிடுவனோ எண்ட பயத்திலை அதைத் தட்டுப்போட்டுப் போயிட்டன். ஆனா, என்னை இனி உன்ரை நிழல்தான் காப்பாத்தவேணும்.'
அவள் விம்மி விம்மி அழத் தொடங்கி விடுகின்றாள். அவள் இப்படி அழுது அவன் பார்த்ததில்லை. அவன் சொன் னான் :
'டோன் பி சிலி. இப்ப என்ன நடந்து போச்சு. நானும் லீவு எழுதிக் குடுத்திட்டு வாறன், முதலிலை அறைக்குப் போவம்,'
அவளுக்கு, ஆறுதலாக இருக்கட்டுமேயென்று ஏதோ கூறிவிட்டு, அதிபருடைய காரியாலயத்தை நோக்கி அவன் போனான். அவன் அவள்பால் இவ்வளவு அக்கறை கொள்வது அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தவில்லை. தன்னில் அக்கறை கொள்ளக்கூடிய ஒரே ஜிவி அவன்தான். அவன்ம்ட்டும் தானென்பது இவளுக்கு உறுதியாகிவிட்ட ஒன்று. அவனைத் தவிர இவளுக்கு ஒருவரும் இல்லைத்தான்.
நேற்றைய தினம், ரகுவுடைய உணர்ச்சிச் சுழிப்புகளுக்குத் தப்பி வீடு வந்தவளுக்கு பெரிய அதிசயமே காத்திருந்தது.
இரண்டு வருஷங்களுக்கு மேலாக வீட்டுப் பக்கம் வராமலிருந்த அண்ணை வந்திருந்தான். அக்கா, அத்தான் எல்லாருமே வந்திருந்தார்கள். எல்லாம் அம்மாவின் ஏற்பாடு என்பது இவளுக்கு விளங்கியது. ஏனென்பதும் விளங்கியது. ஆனால், இவ்வளவு விரைவில் இது நடக்குமென்பதைத்தான் அவள் எதிர் பார்க்கவில்லை.
அவள் விட்டினுள் காலடி எடுத்து வைத்ததும், அவர்களது பார்வை இவளைச் சூழ்ந்து உறுத்தியதை இவள் உணர்ந்தாள். அதனைப் பொருட்படுத்தாது, தனது அறைக்குச் சென்று உடை

Page 62
104 ல் வித்தியாசமானவர்கள் மாற்றிக் கொண்டவள்; குளிப்பதற்குப் பாத்ரூம் பக்கம் நகர்ந்த பொழுது அண்ணைதான் சொன்னான் :
'வசந்தி இஞ்சை நில். உன்னட்டை ஒரு விசயம் கதைக்க வேணும்'.
இவள், ‘என்ன?' என்பது போல அவனைப் பார்த்து நின்றாள்.
அக்கா, அத்தான், அப்பா, அம்மா அனைவருமே அங்கு கூடினார்கள்.
அண்ணை தொடர்ந்து கேட்டான் 'இப்ப நேரம் என்ன எண்டு நினைக்கிறை? ஆறு மணிவரைக் கும் பள்ளிக்கூடத்திலை உனக்கென்ன வேலை? இல்லை, அந்த அனாதை ராஸ்கல் லாப் ரகுநாதனோடை."
'படுத்திட்டு வாறன். யேஸ் ஐ சிலெப்ற் வித் ஹிம்.", அவன் பேசி முடிப்பதற்கு முன்பாகவே பதில் தந்தாள்.
அவளது அந்தப் பதிலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அது அவர்களை அதிரவைத்தது.
அக்கா கூச்சத்துடன் கேட்டாள் : “என்னடி இது வெக்கங் கெட்ட பேச்சு. மட்டு மரியாதையில்லாமை."
‘என்ன வெக்கமிதிலை. அண்ணை செய்யிறதை, அப்பா செய்ததை நான் செய்தாப் பிழையே?"
'உண்மையிலை அந்த லாப் அசிஸ்ரென்றிலை உனக்கு
விருப்பமா? வெளியிலை தலை காட்ட முடியாமை கதையடி படுகுது. எனக்கு நாக்கைப் பிடுங்கிச் சாகலாம் போலை
இருக்கு."
**விருப்பம். காதலண்டில்லை. வெறும் உடல் சம் பந்தப்பட்ட. பச்சையாச் சொன்னா செக்ஸ் விசயம் தான்".
அவர்களை மேலும் சீண்டி வேடிக்கை பார்க்கவே அவள் அப்படிச் சொன்னாள்.
அண்ணைக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. உடல் பதற எழுந்தவன் அவளது தலைமயிரைப் பிடித்து இழுத்துச் சுவருடன்

சட்டநாதன் கதைகள் 9 105
மோதினான். பலமான அடி தலையில் பட்டதால் நிலைகுலைந்தவள், சுவரோடு உட்கார்ந்து கொண்டாள்.
அந்த நிலையிலும் அவள் அவனைப் பார்த்து நிதானமாக அவனது 'நானை'க் காயப்படுத்தும் தோரணையுடன் கேட்டாள் :
‘அண்ணி சுகமா இருக்கிறாளா? என்ன. நான். கேக்கிறது விளங்கேல்லையே? சின்னண்ணிதான். கராஜ்சிலை இருக்கிறவளும் பிள்ளைகளும்தான் இடஞ்சலாக்கும்.'
அவனது பலவீனமான பகுதிகளை இவள் சுண்டியதும் அவன் உன்மத்தனாய் அவளது முகத்தில் எட்டி உதைத்தான்.
அத்தானும் அவசர அவசரமாகத் தன் பங்கிற்குக் கையோங்கிய போது அவள் ஏளனமாகச் சிரித்தபடி :
‘பாவம் அத்தானுக்கும் அந்தச் செல்லப் பூனை விளையாட்டு ஞாபகம் வந்திட்டுதுபோலை. அதுதான் இந்தச் சுறுசுறுப்பாக் கும்.!'
**உவளுக்குச் சரியான ஹிஸ்ரீரியாதான். உவளின்ரை அமரடங்க உதையுங்கடா! அந்தக் கோவியனிட்டை அப்பிடி என்ன இனிப்பைக் கண்டிட்டாளிந்தப் பரத்தை’’.-அம்மா
*" கோவியனோ?’’-இது அப்பா. *அவன்ரை அப்பன்ரை அப்பன்ாை அப்பன் சிறுபுலப்பக்கம்.' அம்மா தாவாடிக்காரி. இப்படித்தான் அவளால் பேச முடியுமென்பது இவளுக்குத் தெரியும்.
அவள் அவர்களது முகத்தையே பார்க்க விரும்பாதவளாய், பாத்ரூமுக்குள் சென்று ஷவரைத் திறந்து விட்டாள். உணர்ச்சிகள் சமனாகும்வரை ஷவரில் நின்றவள், குளித்து முடிந்ததும் அறையை அடைந்து, கதவை மூடிக் கொண்டாள். தனிமை அவளுக்கு அப்பொழுது தேவையாக இருந்தது.
சற்று அதிகமாய்த்தான் பேசிப் போட்டனோ. பேச வைச்சா பேச்சு வரும்தானே. அப்பிடிப் பேசினதாலைதான் அவையள் வாயடைச்சு மூச்சுப் பேச்சில்லாமை இருக்கினை. இஞ்ச இருந்து' இடிபடுகிறதிலும் பார்க்கத் தனிச்சுப் போறது எவ்வளவு நிம்மதி!'
துயரமான நினைவுகள். அவற்றுடன் சொந்தமேயில்லாத அந்தத் தூரத்துப் பையன் ரகுவின் நினைவுகளும் சேர்ந்து கொள் கிறது.

Page 63
106 d வித்தியாசமானவர்கள்
அது அவளுக்கு உவப்பாயிருந்தது.
அன்று இரவு முழுவதும் அவளால் தூங்க முடியவில்லை. ஏதேதோ நினைவுகளால் அலைபட்டவள், மேசையிலிருந்த-அவள் அதிகம் நேசிக்கும்- அந்தத் தந்தத்தாலான யேசுநாதருடைய சிறிய உருவத்தையே வெறித்துப் பார்த்தபடி இருந்தாள்.
அவளால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. ஒன்று மட்டும் அவளுக்குத் தெளிவாகியது. இனி இந்த நரலுக்கை இருக்கேலாது என்பதுதான் அது.
விடியும்வரை விழுத்தே கிடந்தபடியால் அவளுக்குச் சோம்பல் அதிகமாகவே இருந்தது. சோம்பல் பட்டால் முடியுமா? எழுந்து நன்றாகக் குளித்தவள், சேலையை மாற்றிக் கொண்டு, கூத்தலை நீர்வார முடித்தபடி, தான் அடிக்கடி வெளியே பயணப்படும்பொழுது கொண்டு செல்லும் சூட்கேசை இழுத்து வைத்துக்கொண்டு-தான் விரும்பியணியும் சேலைகளையும், வேறு சில பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டாள்
வீட்டில் யாரும் எழுந்த சிலமனில்லை.
அவள், அந்த வீட்டைவிட்டு வெளியேறி விடுவதென்று முடிவு கொண்டது அவளுக்கு வியப்பாகவே இருந்தது. ஒருவருக்கும் தெரி யாமல் போவதைத்தான் அவள் முதலில் விரும்பினாள். ஆனால், அவளது இயல்பான வீம்பு அவளை விடவில்லை.
எல்லாரும் விழித்தபின் அவர்களனைவரும் பார்த்திருக்க, வழமையாகப் பாடசாலைக்குப் போகும் நேரம். பாடசாலைக்குப் போவது போலவே இவள் படி இறங்கினாள்.
அவள் காலடி எடுத்து வைத்தபொழுது அண்ணைதான் முன்னே வந்தான்.
*உன்னைக் கை கழுவியாச்சு. இனி இஞ்ச இந்த வீட்டுப் பக்கம் தலை காட்டாதை இஞ்ச வந்தால் கொலை தான் விழும், கிணறோ குளமோ பாத்துப்போறது உனக்கும் நல்லது. எங்களுக்கும் நல்லது.'
அக்கா ஒடிவந்து, "எங்கையெடி போற' என்று இவளைத் தடுத்தாள்.
'உந்தத் தேவடியாளெங்க போயிடுவாள். எல்லாம் பள்ளிக் கூடத்துக்குத்தான். நீபேசாமைஇரு. நீ யோசிச்சாய்போலை

சட்டநாதன் கதைகள் )ே 107
உவளை மாற்ற மெடுத்துக் கொழும்புக்கு கூட்டிக் கொண்டு போறது தான் நல்லது’. அக்காவைப் பார்த்த அம்மா சொன்னாள்.
'மாற்றமோ? உந்த விசர்க்கதைகளை விட்டிற்று உங்கடை, வேலையைப் பாத்திட்டுப் போங்க.' கூறியவள், கிடுகிடென . வெளியே நடந்தாள். பாடசாலைதான் அவளுக்கு இப் போதைக்குப் பாதுகாப்பான இடம்.
‘என்ன இன்னும் ரகுவரேல்லையே. அவனைத்தவிர எனக்கு இனி யாரிருக்கினம். நேற்று அவன்ரை விருப்பத்தை எவ்வளவு நிதானமா ஒதுக்கினன். இன்று. இன்று அவன் தான் எனக்குத் தஞ்சமா?*
அவள் மெதுவாகச் சிரித்துக் கொண்டாள்.
"என்ன? அழுகை மாறிச் சிரிப்பா? நல்லது ரீச்சர். பி சியர்புல். ஒஃபிஸிலை கொஞ்சம் அலுவலா நிண்டிட்டன், லீவு எழுதிக் குடுத்தாச்சு. அப்ப வாருங்க ரூமிலை போய்க் கதைப்பம்."
‘கதைக்க என்ன இருக்கு. இனியெல்லாமே உன்னோடை தான் ரகு'.
**உதென்ன...? ஓ மை கோட். கையிலை சூட்கேஸ் வேறையா? சோ, யூ காவ் லெவ்ற் யுவர் பீப்பிள் போர் குட்! என்னாலை இதை நம்ப முடியேல்லை ரீச்சர். நேற்று விஸ்வாமித்திர தோரணை, இண்டைக்கு...'
'அதிலை இண்டைக்கும் மாற்றமில்லை!"
* மாற்றமில்லையோ..? மனசுமாறாமல் உங்களை எனக்கு எதுக்கு ரீச்சர்? சும்மா வைச்சு அழகு பார்க்கவே'-அவன் செல்லமாகக் கேட்டான்.
'ரகு ஐ வில் றை. முயற்சி செய்யிறன். அதுவரை நீ பொறுமையா இருப்பையா? இருக்கவேணும்.'
'ரி, ஆனா ஒரு பதிவோ மூண்டு முடிச்சோ அவசியமில்லையா?
இல்லையெண்டா உங்கவீட்டு ஆக்களின்ரை தொந்தரவு இருக்கும்.'
*ரகு, யூ ஆர் றியலி வெரி கிறேட்." அவளால் பேச
முடியவில்லை, உணர்ச்சிவசப்பட்டவளாய், அவனது கைகளைப் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். *

Page 64
108 6 வித்தியாசமானவர்கள்
அவனுடைய அறை பாடசாலைக்குப் பக்கத்தில்தான் இருந்தது. இருவரும் நடந்தே போனார்கள். போகும் வழியில் அவள் நடந்தவை அனைத்தையுமே அவனிடம் சொன்னாள். அதற்கு அவனிடமிருந்து வந்த ஒரே பதில்:
'இவையள் இப்படித்தான். கற்புக்கற்பெண்டு கதைப்பினை. அந்தக் குவிமான்ரை கற்புக்கும், உங்க அண்ணை இழுத்து வைச்சிருக்கிற பெட்டையின்ரை கற்புக்கும் ஆரு காவல்? இதெல்லாம் தங்கடை தங்கடையெண்டு வரேக்கைதான் ஏதோ தோல் கூசில விசயமாத் துடிக்கினை. சொத்துப்பத்தை இழந்து ஆண்டியாய்ப் போனாலும் உவையள் சாதிமான்களெல்லே. இப்படித்தான் கதைப்பினை.'
அறையை அடைந்ததும் அவன் ஜன்னலைத் திறந்து வைத் தான்.
மேசையின் சூட்கேசை வைத்த அவள், அதனைத் திறந்துதந்தத்தாலான அந்த யேசுநாதரையும், ஒரு குங்குமச் சிமிழையும் வெளியே, எடுத்தாள், அடுத்தது ஒரு சிறு பாசுரப் புத்தகம். ஆண்டாளுடைய திருப்பாவை. புத்தகத்தைக் கண்டதும் இவன்:
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத் தூபங்கமழ",என்று ஆரம்பித்தான்.
அதனைப் பார்த்த அவள் கேட்டாள்:
**உனக்கு ஆண்டாள் பிடிக்குமா?’’
* பிடிக்கும்."
'எனக்குப் பிடிக்கும். அழுத்தும் துயரங்கள் கரைய எனக்கு ஆண்டாள்தான் மருந்து.'
புத்தகத்தை வைத்தவள், குங்குமச் சிமிழை எடுத்துக் கொண்டு இவனை நெருங்கி, "ரகு இந்தக் குங்குமத்தை என்ரை நெற்றியிலை
வை.', என்றாள் குழைவாக,
‘ஓ! இந்த சென்ரிமென்ஸ் வேறையா?", என்று சிரித்தவன்; குங்குமத்தை எடுத்து அவளது நெற்றியிலிட்டான். புருவத்தில் உதிர்ந்த குங்குமத்தையும் துடைத்துவிட்டான்.
அவள் மலர்ந்து சிரித்தாள். நிம்மதியான சிரிப்பு. தன்னை முழுமையாக அவனிடம் தந்துவிடத் துடிக்கும் சிரிப்பு.

சட்டநாதன் கதைகள் O 109
ரகு அந்தச் մԳflւնւհ6ծr அர்த்தங்களைப் புரிந்தவனாய் மெதுவாக, மென்மையாக அவளது கரங்களைப் பற்றி அணைத்தபடி கண்களில் முத்தமிட்டான். அவள் சற்று பதட்டமடைந்த வளாய் :
9
"நோ. நோ. பிளீஸ் ரகு வேண்டாம் வேண்டாமே,' என்று நடுங்கினாள். அதே சமயம் அவளது கண்கள் பணித்து விடுகின்றன.
அவள் அவனது கைகளிலிருந்து விடுபட்டு, ஜன்னல்வரை சென்று வெளியே வானத்தை வெறித்துப் பார்த்தாள்.
மெளனமாக, அவளைப் புரிந்து கொள்ள முயற்சித்தவனாய் இவன் அவளையே பார்த்தபடி நின்றான்.
அவள் ஜன்னலை விட்டுத் திரும்பி வரும்வரை காத்திருக்கும் உறுதி அவனில் தெரிந்தது.

Page 65
நகர்வு
தொலைவில், ஒற்றையாய் விழுந்து வெடித்த ஷெல்'சத்தத் துடன் அவன் விழிப்புக்கண்டான். எழுந்து உட்கார்ந்து கொண்டவன்; கிழக்குச் சாய்வில், முன் திண்ணையில், தாத்தா, சோபாவில் சாய்ந்தபடி, ஏதோ மென்று கொண்டிருப்பதை அவதானித்தான். அவர் அருகில் சதா எரிந்து கொண்டிருக்கும் “ஜாம்' போத்தல் விளக்கு. அந்த விளக்கொளியில் எல்லாம் தெரிந்தது.
அவரது கைக்கெட்டும் தூரத்திலேயே அவரது உலகம் இருந்தது. எழுந்து இரண்டடி எடுத்து வைப்பதற்குக்கூட அவரால் முடிவ தில்லை. காலில்-சற்றுப் பெரிதாகவே-கல்லைக் கட்டிப் போட்டது போல அவர் அசையாமல் கிடந்தார். ஆனால், அவரது கைகள் மட்டும் அசுரத்தனமாக இயக்கம் கொண்டன. எப்பொழுதும் அவை பரபரத்தபடிதான். இப்போதுகூட, அவை எதையோ மசித்து, வாயில் போட்டுக் கொண்டிருந்தன.
‘என்ன வாயிருக்கும்.? அம்மா வறுத்துக் கொடுத்த பொரியரிசிமாவா..? கடலைப்பொரியா..? அல்லது, அவர் விருப்பத்துடன் மெல்லும் வெற்றிலைச் சருகும் கழிப்பாக்குமா..?
வலது பக்கமாக, அவரது வெள்ளிப் பூண்போட்ட கைத்தடி சோபாவில் சாத்தியபடி கிடந்தது. அது, இப்போதெல்லாம்

சட்டநாதன் கதைகள் 0 111
நடப்பதற்குப்பயன்படுவதில்லை. காகம், கோழி கலைப்பதற்கே பெரிதும் பயன்படுகிறது.
இடது பக்கமாக, சற்றுத்தள்ளி-ஒரு கருங்காலிப் பெட்டி அதில்தான் அவரது அற்பமான 'வைப்புச் செப்புகள்' இருந்தன.
பெட்டியில், நார் நாராக நைந்து போன அவரது கல்யாணப்பட்டு, அதற்கு மேலாக ஒரு சோடி ஆரணி வேட்டி, சால்வை, ஒரு பழைய மல் நஷனல், உருவழிந்து, வெள்ளைப்புள்ளி விழுந்த பாட்டியின் நிழற்படம், அவளது கல்வெட்டு, கொஞ்சம் சில்லறைகள்.
பெட்டியின் மேலாக: பூரீதேவி மகாத்மியம், தேவாரத்திரட்டு, திருவாசகம், திருப்புகழ், அபிராமி அந்தாதி என்று சில பாசுரப் புத்தகங்கள். எல்லாமே கட்டுக் குலைந்து, கறையான்பட்டு, ஒரம் சிதைந்து இற்றுப் போய்க் கையோடு வந்து விடும் போலிருந்தன.
அம்மாவைக் காணவில்லை. புதறணுக்குப் பின்னால், வயல் பக்கம் போயிருப்பாள். சிறுசிலேய்ே வாலாயப் படுத்திய பழக்கத்தை அவளால் மாற்றிக்கொள்ள முடியவில்லை.
கிணத்தடியில் அரவம் கேட்டது. 'அம்மாவாகத்தான் இருக்கும்’ என நினைத்தபடி இவன் பாயைச் சுருட்டி, கட்டிலின் ஒரமாக வைத்துவிட்டு, முற்றத்துக்கு வந்தான்.
விரிச்சிக உடுத்தொகுதி தென்கிழக்கு வானில் தொங்கிக் கொண்டிருந்தது. அதன் வாலைத் தொட்டபடி, கிழக்கு வான் வெளியில், வடக்காகப்படரும் பால் வீதியின் அழகு அவனைப் பரவசம் கொள்ளவைத்தது.
இளங்காலை ஈரமாயிருந்தது. ஈரம் நிரம்பிய காற்று அவனை இதமாகத் தழுவியது. அந்த இதத்தில் மிதந்தவனைக் குழப்புமாப் போல, தூரத்தில் - சோளாவத்தைப் பக்கமாக, மீளவும் "ஷெல்" ஓசை, தொடர்ந்து, பெருங்குளத்து மாரியின் உதய பூசை மணியும் கேட்டது.
ஐந்து மணியா..?"
இவனும் கிணத்தடி பக்கம் போனான்.
அம்மா சூரியனில்லாமலே நமஸ்காரம் செய்து கொண்டிருந்தாள்.
இவனுக்குச் சிரிப்பாய் வந்தது.

Page 66
112 9 நகர்வு
ஐயா, நிச்சமாய் அஞ்ஞாப்பக்கம் தான் போயிருப்பார். இன்று கணுக்கழுவல் என்று சொன்னது இவனுக்கு ஞாபகம் வந்தது. ஐயாவுக்கு அஞ்ஞாவிலேயே ஒரு கட்டில் போட்டுக் கொடுத்து விட்டால் தோதாயிருக்கும். s
ஆயாசம் - அலுப்பென்றால், அங்கேயே ஒரு சிறு தூக்கம் போட்டுவிட்டு, தோட்டத்தையும் பார்த்தமாதிரி இருக்கும் அவருக்கு.
தோட்டத்தில் கை பட்டால் அவருக்கு எல்லாமே மறந்து விடும். சொக்கிப்போய், தன்னை மறந்த லயிப்பு வந்து விடும்.
தாய்வாய்க்கால் பக்கம் முளை கொள்ளும் புற்தளிரைக் கிள்ளுவது. எங்காவது ஒரு பக்கத்தில் “பாச்சா' காட்டிவிட்டுத் திடீரெனத் தலை காட்டும் புகையிலைக் கணுவை உடைப்பது. இளங்கன்றுகளை நிழல் அகற்றிப் புழுப்பார்ப்பது, அடி எருப் பரப்புவது, கண்டு கட்டி, இலை ஒடித்துத் தறைசாறுவது, என ஏதாவது வேலை - பிரியமாகச் செய்ய அவருக்குத் தோட்டத்தில் இருக்கும். அதைச் செய்வதில் அவருக்கு அலுப்புச் சலிப்பு இருப்பதில்லை.
காலைத் தேநீர், சாப்பாடு, மதியச்சாப்பாடு, மாலைத் தேநீர் என்று எல்லாமே தோட்டத்துக்குத்தான் அவருக்கு வரவேணும். இரவுச் சாப்பாடு மட்டும் வீட்டில். மாலைக் கருக்கலானதும் தோட்டக்கிணற்றிலேயே ஆரச்சோர தலையில் ஊற்றிக் கொள்வார். இரவு உணவாக அவருக்கு ஏதாவது கோதுமைப் பண்டம் வேணும். ரொட்டி அல்லது பிட்டு, மீன் குழம்பு இருந்தால் ஒரு பிடி கூடச் சாப்பிடுவர்ர்.
சாப்பிட்டதும், முன் திண்ணையில் சரிந்து கொள்வார். அபூர்வமாக, இரவு வானொலியின் முன் இருப்பார். சங்கீதம் அவருக்குப் பிடிக்கும். ஞானமும் உண்டு.
மனதை ஈர்க்கும் விஷயங்களில் ஆழ்ந்து ஒன்றிப் போவது அவரது இயல்பு.
தம்பி! என்று அவனையோ, அல்லது பிள்னை பாக்கியம் என்று அம்மாவையோ அழைக்கும்போது அவரது அகத்தில் சுரக்கும் இனிமை கண்களில் தெரியும்.
தாத்தாவில் அவருக்கு எப்போதும் ஒரு மரியாதை உண்டு. அது அவர் பெண் கொடுத்த மாமனார் என்பதால் மட்டுமல்ல, தாய்மாமன் என்பதாலும் தான்.

சட்டநாதன் கதைகள் O 113
அம்மா, ஐயாவைப் போல அப்படியொன்றும் அசுர உழைப்பாளி அல்ல. சமையலுடன் அவளது வேலை முடிந்துவிடும். அபூர்வமாக, தனது வேலைகள் ஒழிந்த கையுடன், புதறணில் கத்தரிச் செடிகளில் ஆமை வண்டு பார்த்து இலை ஒடிப்பாள். சந்துப் புழுப் பார்த்துக் கொழுந்தெடுப்பாள். தக்காளி, மிளகாய் நட்டிருந்தால் தானாகவே பூச்சி கொல்லி விசிறுவாள். எதுவுமில்லை என்றால் கல்கியோ, விகடனோ அவளை ஓராட்ட - சரிந்து, அயர்ந்து தூங்குவாள். மாலைத் தூக்கம் அவளுக்கு இப்பொழுதெல்லாம் வேண்டியிருக்கிறது.
அம்மாவைக் கடந்து, கிணற்றுக்குத் தென்புறமாக வந்தவனின், காலில் சுரீரென ஏதோ குத்தியது. இடது குதியில் விஷம்பட்ட கடுகடுப்பு. ‘எலுமிச்சைமுள்' என முனகியவன், முள்ளைப்பிடுங்கித் தூரவீசினான். அவனது பார்வை முற்றத்தை ஒட்டிக் கரும்பூதமாய் நின்ற எலுமிச்சையில் லயித்தது. அதைப் பார்த்ததும் பழைய நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாய் அவனுள் கிளர்ந்தன.
"ஒரு பத்து வருஷமிருக்குமா?"
கிணத்தடி எலுமிச்சை போகம் தப்பாமல் காய்க்கும். பூவும் பிஞ்சுமாய் குலுங்கி நிற்கும். இவன், ஊர்ப்பிள்ளைகளை எல்லாம் கூட்டி வைத்து, முற்றத்தில் காற்பந்தாடுவான். அந்த மரத்தின் காய்கள் தான் பந்து, முன் திண்ணை விளிம்பில் பட்டு, காய்கள் உடைய உடைய, புதிது புதிதாகக் காய்களைப் பறித்து, பிள்ளைகள் பந்து ஆடுவார்கள்.
அப்பொழுதெல்லாம் இவனது அணியின் *கோல் கீப்பர்" வத்சலாதான். - -
‘பெட்டையள். புட்போல் அடிக்கிறதோ..!"
மற்றச் சின்ன வட்டன்களின் பகிடி, குபீரெனச் சிரிப்பொலி அங்கு பரவும்.
s
'கோல்கீப்பர் தானே..' என இவன் வத்சலாவுக்காகப் பரிந்து
பேசுவான்.
அவனது அந்தப் பேச்சில் நெகிழ்ந்து, வத்சலா ஓடி வந்து" அவனது கிண்ணி விரலைப் பற்றியபடிக்கு, அவனது முகத்தை நேராகப் பார்த்துச் சிரிப்பாள். கண்களில் நீர் முட்டியபடி இருக்கும். அந்தப் பரிவில், பிரியத்தில் ஜன்ம பரியந்தப்பட்ட ஒரு உறவின் இணக்கம் இருக்கும்.
. ---8

Page 67
114 O நகர்வு
அவளில் அன்று விழுந்த பிரியம் இன்று வரை தொடர்கிறது. அந்தக் கிராமத்தின் புழுதிபட்ட பெட்டை என்ற தகுதியை விட அவளிடம் மனசு விழுந்து ரசிப்புக் கொள்ள அப்படி என்ன இருக்கிறது?
மத்திய கல்லூரிலிலும், பின்னர் பல்கலைக் கழகத்திலும், இப்பொழுது கற்பிக்கும் சஸ்வதியிலும்-ராஜேஸ், ரதி, நிதி, வேணி, கீலா என எத்தனை பெண்கள் இவனிடம் சலனப்பட்டு-இவனைச் சலனப்படுத்தியுமிருக்கிறார்கள் அவர்களை எல்லால் மீறி, ஒரு ஆன படிப்புக்கூட இல்லாத இவளிடம், மாய்ந்து போவது எதனால்,
அவள் அழகி. இன்னும் இன்னும் எதோ எல்லாம் அவளிடம் இருந்தன. பார்வை விழுந்தால் எடுக்க மனசே வராது: நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
இரு பேச்சுப்பேச அவளுக்குத் தெரியாது. ஒழிப்பு மறைப்பு ஏதுமில்லாத வெள்ளை மனசு. இவனையே வளையவரும் அவளிடம் ஏற இறங்க பேசினால் போதும். மூக்கு நுனி சிவக்க, விழிகள் அழுத்த மாகவே நியாயம் கேட்கும். அப்பொழுது இவன் பேச்சிழந்து, கூச்சப்பட்டவனாய் ஒதுக்கம் கொள்வான். இரண்டொரு நாளில் எல்லாமே சரியாகிவிடும் அவளாகவே வந்து இவனிடம் மீளவும் ஒட்டிக் கொள்வாள்.
வீட்டில், அவனை விட்டால் அவள் அதிகம் அக்கறைப்படும் ஜீவன் தாத்தா தான். அவருடன் மணிக்கணக்காக மினக்கெடுவாள். அவருக்கு உதவி, ஒத்தாசை என்று விழுந்து விழுந்து செய்து கரைந்து போவாள்.
ஒரு சமயம், மழை பன்னீராய் தெளித்துக் கொண்டிருந்த மாலைக் கருக்கலில்-கிணற்றடிக்கு அருகாக உள்ள வாழைப் புதரிடையே-இவனை இழுத்து வைத்துக்கொண்டு பலதும் பத்தும் பேசினாள். இடையில், எதேச்சையாக கண் இமைகள் படபடக்க, கொஞ்சம் வெட்கம் கலந்த குரலில்; "கட்டிறதெண்டா என்ரை வரதனைத்தான்." என்று ஒரு வார்த்தை சொன்னாள் அவளது அந்த வார்த்தை, உயிரையே பட்சமாய்ப் பற்றி ஒரு பாடுபடுத்தியது.
அந்தப் பேச்சுப் பேசிய பிறகு, அவளை மறக்க அவனால் எப்பொழுதுமே முடியாமல் டோய்விட்டது. இளமையும், இங்கிதமும் மிகுந்த, அந்தப் பெண்ணின் மீதான பிரேமை, எந்தத் தடைகளையும் தாண்டி வளரக்கூடிய வலிமை பெற்ற ஒன்றாகவே அவனுக்குத்
தோன்றியது.

சட்டநாதன் கதைகள் O 115
'தகப்பனைத்தின்னி. தாயிருந்தும் இல்லாத மாதிரி. நோயாளி. நடைப்பிணம். அதோடை சொத்துப்பத்தெண்டு ஏதுமில்லாத பெட்டை.'
அம்மாவின் முணுமுணுப்பு.
'உன்ரை படிப்புக்குச் சமனாய் எதேன் பார்த்தால் நல்லம். அது தான் மதிப்பு. மரியாதை. நாலு பேர் கீழ்க்கண் கொண்டு பார்க்கிற மாதிரி நடந்து போடாதை."
ஐயாவின் அறிவுரை.
என்னதான் ஐயாவும் அம்மாவும் அப்படி இப்படி என்று குறைபட்டுக் கொண்டாலும், அவனது ஆசைகளை மீறி, எதுவும் செய்யமாட்டார்கள் என்பது அவனுக்குத் தெரியும்.
பழைய நினைவுகளில் தோய்ந்தபடி, கிணற்றில் குளிர்ந்த நீரை அள்ளி ஆரச்சோர ஊற்றியவன் - அதிர்ந்து நிலைகுலையும் வகையில், அந்தப் பேரோசை, மிக நெருக்கத்தில் கேட்டது.
சொல்லாச்சி வளவுப்பக்கம்தான் அந்த ஆட்டிலறிஷெல் விழுந்து வெடித்துச் சிதறியது. ‘வெறுங்காணி, உயிர்ச்சேதமிராது" என நினைத்தவனுக்கு, அடுத்த ஷெல் சங்கக்கடைக்கும் அரசடிக்கும் இடையில், மதவடியில் விழுந்தபோது குலை நடுங்கியது,
'சின்ன மடுப்பக்கத்திலை இருந்துதான் ஷெல்லடிக்கிறாங்கள். துலைவான்கள் வெளிக்கிட்டிட்டாங்கள் போலை.'
பதட்டப்பட்டவளாய் அம்மா ஓடிவந்தாள், "அந்த மனிசனைக் கூப்பிடப்பு. அஞ்ஞாப்பக்கம் போனது." படலைவிடும் சத்தம் கேட்டது; கூடவே ஐயாவின் குரலும் கேட்டது:
‘'எதுக்கும் ஆயத்தமாயிருக்கிறது நல்லது, நெருக்கடி ஏதும் எண்டால் சாட்டிப் பக்கம் அல்லது மண்கும்பான் பக்கம் போய்த்தான் வரவேணும் போலை கிடக்கு.'
எதற்கும் கிறுங்காத ஐயாவின் குரலிலும் ஆச்சரியப்படும் அளவுக்குப் பதகளிப்பு.
அவனும் ஐயாவும் முன் திண்ணைக்கு வந்தபோது, அம்மா” தாத்தாவுக்கு பெரிய வாளியொன்றில் தண்ணீர் எடுத்து வைத்தபடி இருந்தாள். கைத்தடியையும் அவர் பக்கமாக நகர்த்தி வைத்தவள். தலை தலையென்றடித்துப் புலம்பத் தொடங்கினாள்:

Page 68
116 O 55i 6
'அப்புதான் பாவம். போட்ட இடத்திலை போட்டபடிக்கு விட்டிட்டு ஓட வேண்டியிருக்கு."
'பள்ளிக் கூடத்திலை இருக்கிற சென்றியை லேசிலை உடைக்கேலாது. பொடியள் விடமாட்டாங்கள். பயப்பிடாதை பிள்ளை.'
ஐயா, அம்மாவுக்கு ஆறுதல் கூறினார்.
சாமி அறைக்குச் சென்ற அம்மா, பெட்டகத்தை இழுத்துப் பூட்டும் சத்தம் கேட்டது அறைக் கதவையும் பூட்டியபடி வெளியே வந்தாள். அவளது கையில் ஒரு சிறு சூட்கேஸ். அதில் சில உடுப்புகள், நகை, ரொக்கப்பணம், காணி உறுதிகள், சேமிப்பு வங்கிப் புத்தகம் என்று எல்லாம் இருந்தன.
அவனும், அவனது உடமைகள் அடங்கிய பிறீவ்கேசை ஐயாவிடம் தந்தான்.
முன் திண்ணைக்கு வந்த அம்மா, தாத்தாவைப் போர்வையால் இழுத்துப் போர்த்தியபடி, குனிந்து அவரது நெற்றியில் முத்த மிட்டாள்,
'போயிற்று வாறனப்பு."
அம்மாவின் குரல் இளகிக் கரகரத்தது. திரண்டு வந்த கண்ணீரை முந்தானையால் துடைத்துக்கொண்டாள்.
தாத்தா அதளைப் புரிந்து கொண்வராய், தலையசைத்து விடை தந்தார்.
சைக்கிளைத் தூக்கி முற்றத்தில் விட்டபோது, ஹெலிச்சத்தம் கேட்டது. சுழன்று வந்த வேவு பார்த்த ஹெலி, ஐம்பது கலிபரை சரமாரியாகப் பொழிந்தது. சைக்கிளை முற்றத்தில் விட்டுவிட்டு, வீட்டுத் தாவாரப்பக்கம் இவன் ஒடினான்.
'பயப்படாமல் சைக்கிளை எடுதம்பி, நடக்கிறதுதான் நடக்கும்.'
ஐயா அவனுக்குத் தைரியந் தந்து, துரிதப்படுத்தினார்.
ஐயா முன்னால் செல்ல, இவன் சைக்கிளை உருட்டியபடி பின்னால் நடந்தான். அம்மா சூட்கேசும் கையுமாக அவர்களுக்குப் பின்னால் வந்தாள்.

சட்டநாதன் கதைகள் ம் 117
வான்பரப்பில் வித்தியாசுமான ஒசை. “பொம்மரா? இரண்டு பொம்மர்கள் சோடி கட்டிக்கொண்டு பறந்து வந்தன. வந்தவாகில் வங்காளவடியில் தலைகுத்தின. ஐயாவும் அம்மாவும் நிலத்தில் உட் கார்ந்து கொண்டார்கள். இவன் கிழக்கு வேலியோடு ஒதுங்கினான். அடுத்தடுத்து நான்கு குண்டுகள் பேரோசையுடன் விழுந்து வெடித் தன. அம்மா அலமந்து, பெருங்குளத்தானையும் பட்டவேம்பானையும் கூவியழைத்தாள். பொம்மர்கள் இப்பொழுது சற்றுத் தள்ளி,தென் மேற்புறமாக நகர்ந்து, இரு குண்டுகளைப் போட்டன. இளம்புலரியில் வானத்தில் அவ்விமானங்களின் சாகசத்தை இவன் பார்த்து நின்றான் ஹெலி வழி சொல்ல, பொம்மர்கள் தமது பணியைத் தொடர்ந்தன. ஹெலியும் இடையிடையே வேட்டுக்களைத் தீர்த்தபடி, வான்வரப்பில் வட்டமிட்டது.
இந்த நெருக்கடியிலும் தாத்தாவின் நினைவு அவனை நெடியது. "ஐயாவையும், அம்மாவையும் மண்கும்பானில் விட்டு வந்து தாத்தாவை அழைத்துப் போக முடிந்தால்.’
அவன் நினைவுகள் சிதறும் வகையில், தாவாடியில் வெட்டி வைத்த நெற்போர், பெருந்தீச்சுவாலை கக்கி எரிந்தது.
*சன்னம் கின்னம் ஏதென் பட்டிருக்குமோ..?" என நினைத்தவன் அம்மாவைப் பார்த்தான். அம்மா திக்பிரமை பிடித்தவளாய், அந்த நெற்களஞ்சியம் எரிந்து சாம்பல் மேடாவதைப் பரிதாபமாகப் பார்த்தபடி நின்றாள்.
‘என்ன சீரழிவப்பா. விளைஞ்சதெல்லாம் சாம்பலாய்ப் போச்சுது.'
ஐயா அரற்றியது கேட்டது. ஐயாவுக்கு அஞ்ஞாவின் ஞாபகம் கூடவே வந்திருக்க வேண்டும் லட்ச ரூபாய்ச் சொத்து இப்படிக் கொள்ளை போறதெண்டால்.
ஐயா பெருமூச்செறிந்தார். அவனது வெறுமை கொண்ட இதயத்தை வத்சலாவின் நினை வுகள் இப்பொழுது ஆக்கிரமித்துக் கொண்டன.
வத்சலா என்ற செய்து கொண்டிருப்பாள். தாயைத்தூக்கிப் பறிக்க முடியாமல், தனியாகத்தான் புறப்பட்டிருப்பாளா?
சிலுந்தா வரை போய்வர அவனுக்கு விருப்பம் இருந்தது. ஆனால், சூழலின் நெருக்குதல் அவனை விரட்டினால் அவன் தான் என்ன செய்ய முடியும்.

Page 69
118 ம் நகர்வு
அவனது மன உளைச்சலை உணர்ந்தவர்போல ஐயா சொன்னார்
'அந்தப் பெட்டையையும். நாகபூசணியையும் நாலெட்டில் பாத்திட்டு வந்திருக்கலாம்."
'அதெல்லாம் ஒண்டும் வேண்டாம். இந்தச் ஷெல்லடிக்கையும் குண்டு வீச்சுக்கையும். அங்கை ஆர் போறது."
அம்மா மறுப்புச் சொன்னாள்.
இவர்கள் மில்லடி ஒழுங்கையில் இறங்கியபோது, சுந்தரமும் தங்கம்மாவும், தங்கள் இரண்டு பிள்ளைகளுடன் வந்து சேர்ந்து கொண்டார்கள். தூரத்தில் செல்லத்துரை மாமா, தான் அன்புடன் வளர்க்கும் ஜேர்சி பசுக்களையும் சாய்த்தபடி வருவதைக் கண்டான். நாகம்மாக்குஞ்சியும் பொன்னையாப்பாவும் கூடப்பின்னால் வந்து கொண்டிருந்தார்கள்.
மீளவும் மூன்று ஷெல் கோபுரத்தடி வயிரவர் கோயில் பக்கமாக விழுந்து வெடித்தன.
ஒழுங்கையால் மிதந்து, அரசடிக்கு வந்த போது, சனம் அலை மோதியது.
பெரிசும் சிறுசுமாய், வித்தியாசம் ஏதுமில்லாமல் பல பக்கத்திலு மிருந்து இடம் பெயரும் ஜனசமுத்திரம். கையில் அகப்பட்டதைக் எடுத்துக்கொண்டு, சொத்து சுகம் எல்லாவற்றையும் இழந்த நிலையில், துயரம்படிந்த முகத்துடன், எதையோ தொலைத்து விட்டவர்கள் போல மக்கள் அள்ளுண்டு போய்க்கொண்டிருந்தார்கள்.
‘எங்கே போவது இந்த மண்ணைவிட்டு. தீத்தாங் கூடலையும், நவக்கை வயல் வெளியையும், தாவாடியையும், சிலுந்தாவில் சிலிர்த்துக் கிடக்கும் நீரையும், அஞ்ஞாவையும், ஆலடித் துண்டையும் விட்டு விட்டு எங்கே போவது. இருத்தலின் அர்த்தமிழந்த இந்த அவலம் நிரந்தரமானதா..? போன மார்கழியில் தானே மாங் குளத்தில் அந்த வீரம் விளைந்தது. ஓட ஓட விரட்டியவர்களை இந்த மண்ணின் மைந்தர்கள் புறங்கண்டு விரட்டினார்களே, அது இந்தப் பூமியில் நடந்த அதிசயம் அல்லவா..? இந்தப்பூமி. நம் கைவசமாகும். வாழ்வு புதிதாய் மலர்வு கொள்ளும்.
அவன் சிலிர்த்துக் கொண்டான்.
மீளவும் வத்சலா பற்றியே மனசு சாய்வு கொண்டது.

சட்டநாதன் கதைகள் ம் 119
வத்சலா வலுகெட்டி எப்படியும் வந்திடுவாள். தாய்க்கும் ஏதாவது ஒழுங்கு செய்து போட்டு வருவாள். இரண்டொரு நாளிலை திரும்பலாம். திரும்பமுடியாமல் போனால்..? தாத்தாவின் நிலை. வத்சலா அம்மாவின் நிலை.?"
அவனுக்குத் தலைசுற்றியது, மயக்கம் வரும்போலிருந்தது.
உயிரை இப்படிப் பொத்திப் பிடித்துக்கொண்டு ஓடுவது அவனுக்குக் கேவலமாய்ப்பட்டது. அவனவன் தனது உயிரை மட்டுமே பெரிதாகப் பாதுகாக்கத் துடிக்கும் அவலம் அவனுக்குக் கடைந்தெடுத்த சுயநலம்மிக்கதாகவே தோன்றியது.
அம்மாவைச் சைக்கிள் பாரிலும், ஐயாவை பின்புறமாகக் கரியரிலும் ஏற்றியவன், பெடலை அழுத்தி மிதித்தான்.
இராசையா வீதியால் சைக்கிள் திரும்பியபோது அம்மா சொன்னாள்:
'இதாலை வேண்டாம். றோட்டாலை போவம்." 'இது குறுக்கு வழியப்பா. பேசாமல் வாரும்." ஐயா அம்மாவை எரிச்சலுடன் அதட்டினார்.
வேலுப்பிள்ளையருடைய தோட்டத்தில் நீர் இறைக்கும் இயந்திர ஓசை கேட்டது.
'வேலுப்பிள்ளையன் விடமாட்டான் போலை. இந்த நெருக்கடியிலையும் தோட்டத்துக்குத் தண்ணி கட்டிறான்.""
மீளவும் ஐயாதான் கதைத்தார்.
பென்சனியர் வீடு கடந்து, கந்தப்புராண மடத்தடியில் வரும் பொழுது, ஹெலிச்சத்தம் கேட்டது. கூடவே பொம்மர்கள்.
'அறுவாங்கள் திரும்பவும் வந்திட்டாங்கள் போலக்கிடக்கடா தம்பி!'
அம்மாவின் பதட்டம், சைக்கிள் ஹாண்டில் பாரில் தெரிந்தது. சைக்கிளை இவன் சமாளித்தபடி செலுத்தினான்.
பொம்மர்களும் ஹெலியும் தூரவிலகிப் போன போது, திடீரென அவர்களைச் சூழ ஆழ்ந்த அமைதி கவிந்து மூடியது. அந்த அமைதி யைக் கிழித்துக் கொண்டு, ஒத்திசைவாய் இனிய ஓசைகள் எங்கும் கிளர்ந்து பரவின. இனங்காண முடியாது குழம்பிய நிலையில்கானப்பறவைகளின் கார்வைகள். அதில், பெயர் தெரியாத ஒற்றைக்

Page 70
120 O நகர்வு
குருவியின் ஓசை மட்டும் சற்றுத்தூக்கலாக இருந்தது அதில் படிந்து கிடந்த விரக அதிர்வு இவனைத் தொட்டது.
சாட்டியைக் கடந்து அவர்கள் வெள்ளைக் கடற்கரை வீதியை அடைந்தார்கள், மாதா கோயிலில் சனசந்தடி இருந்தது. >
அம்மா ஐயாவைக் கேட்டாள் : 'இஞ்சை மாதா கோயிலிலை தங்கினால் என்னப்பா...' 'சின்னமடுவிலை இருந்து இடம் பெயர்ந்த வேதக்கார ஆக்கள் இஞ்ச இருக்கினை. வெள்ளி சனி எண்டு விரதமிருக்கிறனி. சாதி கீதி யாராமல் தோச்சு மெழுகேலுமே...!'
ஐயாவின் பேச்சு இவனுக்கு அதிசயமாய் இருந்தது. "சாதிபற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாத ஐயாவே இப்படிப் பேசுவதென்றால், மனசின் அடியில் ஊறலாய்க் கிடப்பவை தானே மேலே மிதப்புக் கொள்ளும்!"
மாதா கோயிலைக் கடந்து, சுடலையை அண்மித்த போது-தீ நாக்குகள் அடங்கி, தணலாய்க் கனலும் சிதையொன்று இவனது மனதை ஈர்த்தது.
மனசு குளிர்ந்து உறைந்து போனதான நிலை. "மரணம் தொந்தரவு தருவதில்லை. சுகமானது. மனதின் அலைபாய்தல்களோ, அவசங்களோ மரணித்தவனைத் தீண்டுவ தில்லை. மரணத்தின் கருநிழலைக்கண்டு பயந்து, விலகி ஓடி எதைக்கண்டு விட்டோம். களத்தில், மரணத்தின் முகத்துக்கு நேர கவே முடிவுகளை எடுக்கும் ஒரு போராளியின் திராணி நமக்கு ஏன் ஆவதில்லை. பயந்து பயந்து ஓடும் இந்த அவலத்திலும் பார்க்க மரணம் அர்த்தமுடையது."
அந்தக்கணமே அவனுக்குச் சாக வேண்டும் போலிருந்தது. அந்தச் சிதையில் தன்னைக் கிடத்தி, தீ நாக்குகள் தழுவும் சுகத்தை அனுபவிக்க வேண்டும் போலிருந்தது.
'அம்மன் கோயிலடி தியாகராசாவின்ரை மனிசி. இரவு தான் கொள்ளி போட்டவங்கள் போலை. தீ இன்னும் அடங்கேல்லை."
ஐயாவின் குரல் இவனைச் சுய நினைவுக்குக் கொண்டு வந்தது.
பள்ளிவாசல் பக்கமும் இவர்கள் அகதிகளையே கண்டார்கள்.

சட்டநாதன் கதைகள் 9 121
மண்கும்பான் வீதியில் மக்கள் முன்னும் பின்னுமாய் முண்டியடித்துப் போய்க் கொண்டிருந்தார்கள்.
பிள்ளையார் கோயிலடியில் எள்ளுப் போட்டால் எள்ளு விழாத அளவுக்கு சனக்கூட்டம் இருந்தது.
கோயில் உள் வீதி நிரம்பி வழிந்தது. வெளி வீதியிலும், மரங்களுக்குக் கீளாகவும் சனம் உட்கார்ந்தபடிக்கு. அரசடிக்கப்பால், பண்ணை வீதியில் வடக்குச் சாய்வில், தேநீர்க் கடைகளில் ஜேஜே என வியாபாரச்சந்தடி.
இவன் கோயில் முன்பாக இருந்த பூவரச மரத்தடியில் சைக்கிளை
நிறுத்தி, ஐயாவையும் அம்மாவையும் இறக்கி விட்டான். சைக்கிளை அவர்களுடன் விட்டு விட்டு, கோயில் உள் வீதிக்குப் போனான்.
உள் வீதி எங்கும் வத்சலாவைத் தேடினான். அவளது சிலமனில்லை,
‘வாறதெண்டால் இங்க தான் வருவாள். இல்லை, நடப்பது நடக்கட்டும் என்று வீம்புடன் வராமலே விட்டு விட்டாளோ.."
நெஞ்சுக்கு நெருக்கமானவர்களையே விட்டு விட்டு-ஓடி வருமளவுக்கு மரணபயம்தான் இப்படித் துரத்தியதா? சுடலை, சிதை, அதில் எரிந்து சாம்பராகிய அந்தச் சடலம், போராளி பற்றிய நினைவுகள் யாவும் அவனை இப்பொழுது புதுமனிதனாகவே ஆக்கியிருக்கிறது.
வத்சலா வரவில்லையானால் அவளையும், அவளது தாயாரை யும், தாத்தாவையும் போய் அழைத்து வரவேண்டுமென அவன் தீர்மானம் செய்து கொண்டான்.
கால் வைத்து நடக்க முடியாத அளவுக்கு வீதி நிரம்பிய சனம். சன வெக்கையால் ஏற்பட்ட ஒரு வெடில், கால்களை மெதுவாக, இடைவெளி பார்த்து வைத்தபடி, வெளியே வந்தான். வெளியே
வந்தவனுக்கு ஓர் அதிசயம் காத்திருந்தது.
வத்சலா சைக்கிளை உருட்டியபடி வந்தாள். அவளது சைக்கிளின் பின்னால் அவளது தாயார் ‘ஒரு அடி தானும் எடுத்து வைக்க முடியாத அவளை, சைக்கிளில் எப்படி இவளால்
அவன், அவளது நெஞ்சுரத்தை வியந்தபடி நின்ற பொழுது பக்கத்தில் ஐயாவும் அம்மாவும் வந்தார்கள். நாகபூசணியை இறக்கு வதற்கும் அவர்கள் தான் கைகொடுத்தார்கள்.

Page 71
122 O நகர்வு
அந்த நெருக்கம் இவனுக்குச் சந்தோஷமாயிருந்தது. ஒட்டுதல் உணர்வைத் தந்தது.
மகிழ்ந்து போய் நின்ற இவனை நெருங்கி வந்து, வத்சலா கேட்டாள்.
"தாத்தா எங்க..?" பதிலேதும் தராது நின்ற இவனைப் பார்த்து-முகம் சிவக்க, சற்றுப் படபடப் படைந்தவளாய் மீளவும் கேட்டாள் :
"தாத்தா எங்க?" 'நீ நினைக்கிற மாதிரி இல்லையம்மா." ஏதோ சொல்வதற்கு அவன் முயன்ற போது, அவள் முகத்தை வெட்டித் திருப்பிக்
கொண்டாள். விம்மல் ஒலி கேட்டது. குரல் உடைந்து
கரகரத்தது.
'அந்தக் கிழவனை போட்ட இடத்திலை போட்டிட்டு ஓடி வர
உங்களுக்கு வெக்கமாயில்லை. உயிர் அப்படி என்ன
வெல்லமா...?’’
வத்சலாவின் துயரத்தை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
அவனால் பேச முடியவில்லை.
வீட்டில் இருந்து புறப்படும் போது உறுதிப்படாதவை எல்லாம் இப்பொழுது உறுதிப்பட்டு விட்ட நிலை. அந்த மனோ நிலை மாற்றம் அவனைப் புதிய மனிதனாகவே ஆக்கி விட்டிருக்கிறது" சற்று முன்னர் கூட வத்சலாவையும், வத்சலாவின் அம்மாவையும், தாத்தாவையும் அழைத்து வருவது பற்றித் தானே சிந்தித்தான் : இதையெல்லாம் அவளுக்கு எடுத்து விளக்க முடியுமா? அவளது அபிப்பிராயத்தை மாற்ற வேண்டுமாயின் அவன் உடனடியாகச் செயற்பட வேண்டும். அவன் போய்த் தாத்தாவை அழைத்து வர வேண்டும். அதுதான் அவளுக்காக அவன் இப்பொழுது செய்யக் கூடியது.
அவன் பேசாமல் சைக்கிளை எடுக்கப் போன போது, ஐயா சொன்னார் :
**நல்லா விடிஞ்சு போச்சு. பொம்மர் ஹெலி எல்லாம் சுத்துது.'
'இல்லை மாமா. தடுக்காதேங்க அவர் போயிட்டு வரட்டும்.'

சட்டநாதன் கதைகள் 9 123
அவளது குரலில் உறுதி தெரிந்தது.
அம்மா விக்கித்துப் போனவளாய் அவன் போவதையே பார்த்தபடி நின்றாள்.
அவள் கலங்கி நிற்பதைப் பார்த்த வத்சலா சொன்னாள்;
*"பயப்பிடாதேங்க மாமி. அவருக்கு எது செய்ய வேணும், என்ன செய்ய வேணும் எண்டு நல்லாத் தெரியும், வாய்க்கை விரலை வைச்சாக் கடிக்கத் தெரியாத பாப்பா இல்லை. அதோடை இவங்கடை. இந்த ஆமின்ரை கெடுபிடி கூடிப்போச்சு பள்ளிக் கூடத்தடிச் சென்றியும் விழுந்திட்டுதாம். வீட்டுப் பக்கம் இனிப் போகேலாது. தாத்தாவும் வந்திட்டா ரவுண் பக்கம் தான் நாம போக வேணும்.'
அவள் குரல் தீர்மானமாக ஒலித்தது.
'கண்ணாமடை வழியால தான் தம்பி போறான் போலை. குறுக்கு வழிதான். ஆனால் ஆபத்து வெட்டவெளி.'
ஐயா சொல்லி முடிப்பதற்கு முன்னதாக, கண்ணாமடைப் பக்கமாகத் தொடர்ந்து நான்கு ஷெல் விழுந்து வெடிந்தன.
பதைத் தெழுந்த பாக்கியம் வத்சலாவைப் பார்த்துக் கூறினாள் :
** என்ரை பிள்ளை எனக்கினி இல்லைப் போலை. எல்லாருமாய் சேர்ந்து அவனை யமன்ரை வாயிலை தள்ளிப்போட்டம் போலை கிடக்கு'.
பாக்கியம் குமுறி அழத் தொடங்கினாள்.
**இல்லை மாமி உங்க பிள்ளைக்கு ஒண்டும் வராது. நீங்க கும்பிடிற தெய்வம் அவரைக் காப்பாற்றும். கவலைப்படாதேங்க. செய்ய வேண்டியதைச் செய்யாமல் விடுறது தான் பிழை, தாத்தா பாவம், தனிச்சு-தவிச்சுப் போயிடு வாரெல்லா. இரண்டு பேரும் பத்திரமா வருவினம்.'
அவளது வார்த்தைகள் பாக்கியத்திற்கு ஆறுதல் தந்தன. பாக்கியம் வரதன் போன திசையையே பார்த்தபடி நின்றாள்.
எங்கோ தொலைவில் பொம்மர்கள் குண்டு மழை பொழிந்து
கொண்டிருந்தன. இடையில் ஹெலியின் வேட்டுச் சத்தமும்
கேட்டது.
'94,

Page 72
கவளம்
சிவராமலிங்கம் எழுந்து உட்கார்ந்து கொண்டார். வயிறு புகைந்தது. "சோறு தின்று எத்தனை நாட்கள்..? அவரால் ஞாபகம் கொள்ள முடியவில்லை. சிவகாமியைத் திரும்பிப் பார்த்தார். குழந்தை பாயுடன் சுருண்டுபோய்க் கிடந்தாள். மத்தியானம் யாரிடமோ யாசித்த காறல் புளுக்கொடியலைக் கொடுத்தார், குழந்தை நன்னிப் பார்த்துவிட்டுத் துப்பி விட்டாள்.
நெஞ்சில் குவிந்து குமையும் துயரம் அவரால் தாள முடியவில்லை.
'ஆன்மா வசமிழந்து, இயக்கமேதுமில்லாமல், ஒடுங்கிய நிலையில், அகதி முகாங்களில் எத்தனை நாளென்று அடைந்து கிடக்கேலும். குப்பை கூளமாய் சிதம்பி.
அவருக்குச் சந்தைப் பக்கம் போக வேண்டும் போலிருந்தது. போய்க் கீரை விற்க வேண்டும் போலிருந்தது.
தண்டு முற்றாத முளைக் கீரை கேட்டுவரும் வைரமுத்து வாத்தியார், பசளி மட்டும்தான் வேணும்." என்று வந்து நிற்கும் விசாலாட்சி. இரண்டலக்கு கருவேப்பிலை தாருங்க மாமா. தனது கரிய விழிகளால் பிரியமாய்த் தொட்டுப் பேசி வளைய வரும் சிவத்தின் இளம் மனைவி வடிவு. ‘பொன்னாங்காணி இருக்கா தாத்தா..?

சடடநாதன் கதைகள் O 125
பட்டுப் பாவாடையில் அழுக்குப் பட்டுவிடுமோ எனும் முன் ஜாக்கிரதையுடன் அதனை சிறிதாகத் தூக்கியபடி வந்து நிற்கும் பரமு ஐயரின் பேத்தி ராஜி. 'வல்லாரைப்பிடி தாருங்க சிவம்." என்று கீரைக்கட்டு முழுவதையும் கிளறி, ஒரு பிடி மட்டும் எடுத்துக் கொண்டு பேரம் பேசும் கொண்டலடி ஞானமுத்து.
"வாழ்வோடு அழியாமலே ஐக்கியமாகிவிட்ட இந்த மனிதர்கள் எல்லாரும் எங்கே சிதறுண்டு போயிருப்பார்கள். எந்த அகதி முகாமிலிருப்பார்கள். நல்லூரிலா? சிவன் கோயிலிலா? அல்லது ஊரைவிட்டு, உறவை விட்டுப் பாதுகாப்புத்தேடி எங்கே இடம் பெயர்ந்திருப்பார்கள். மீளவும் இவர்களை எல்லாம் அகமும் முகமும் மலரச் சந்தையில் ஒரு சேரப் பார்க்க முடியுமா..? கீரைப்பிடிகளைப் பிரித்துப் போட்டு விட்டுப் பிரியமாய் அவர்களது வரவுக்காகக் காத்திருக்க முடியுமா..?
அவருக்குத் தொண்டை அடைத்துக் கரகரத்தது. கண்களில் திரண்ட நீரைத் தோளில் கிடந்த துண்டால் அழுத்தித் துடைத்துக் கொண்டார்.
‘வாழ்க்கை இப்படி நொருங்கிப் போய்விட்டதே...? என நினைத்தவர் சிவகாமியை மீண்டும் பார்த்தார். குழந்தை புரண்டு, நிமிர்ந்து படுத்தாள். அவளது கீழ் உதட்டின் வலது புறமாகச் சிறிய மச்சம்; அவரது மனைவிக்கு இருந்தது போன்ற மச்சம், அசப்பில் குழந்தை அவரது மனைவி சிவகாமி போலவே இருந்தாள். மனைவியின் நினைவாக அவளது பெயரையே பேத்திக்கும் வைத்த பொழுது அவரது மகளால் அதைத்தட்ட முடியவில்லை.
மகள், பர்வதம் குழந்தை பிறந்து மூன்று மாதம் வரை நன்றாய்த்தான் இருந்தாள். முதுகுத் தெண்டலும் குளிர் சுவாதமும் வந்து அவள் படுத்த படுக்கையான பொழுது, அவர் பார்க்காத வைத்தியமில்லை. எல்லாமே கைமீறி அவளும் கைதவறிப் போனபோது, கதறி அழுவதைத் தவிர அவரால் வேறு எதுவுமே செய்ய முடியவில்லை. மருமகன் அருணாசலம் சூடுசொரணையற்ற பிறவி, பூநகரிப் பக்கம் உள்ள கமத்திற்குப் போனவன் திரும்பவே இல்லை.
பட்டியை வீட்டுப் போன நாம்பன் திரும்பி வந்த கதை எங்காவது உண்டா?
அங்கு யாரோ ஒருத்தியுடன் குடியும் குடித்தனமுமாய் விட்டான் என்று; ஊர் பேசியதை இவரும் அறிந்து கொண்
- TIT

Page 73
126 O கவளம்
குழந்தை சிவகாமியின் பொறுப்பு இவரது தலையில் என்று ஆகிப்போனது.
கீரை வியாபாரத்தில் கிடைக்கும் முப்பதோ நாப்பது அவருக்கும் குழந்தை சிவகாமிக்கும் போதுமானதாய் இருந்தது. நாலு எழுத்துப் படித்து வைக்கட்டுமே என்று பக்கத்துப் பாடசாலைக்குக்கூட அவளை அவர் அனுப்பி வருகிறார். அவள் ஆண்டு இரண்டில் படிக்கின்றாள். -
* கீரை விற்கும் பிழைப்பு என்னுடனாகட்டும், அவளுக்கு வேண்டாம், இன்னுமொரு பத்து வருஷம் உயிரோடு இருந்தால் அவளுக்கு ஒரு வழி காட்டி விட முடியும். கடவுள் கிருபையிருந்தால் எது நடக்காது. எல்லாம் நடக்கும்".
அவரது மனது சதா இதையே அசை போடும்.
'இஞ்சை கோயிலுக்கு வந்து கனநாளே..?'
வேலுப்பிள்ளைச் சாத்திரியார்தான் வாயெல்லாம் பல்லாக விசாரித்தார்.
** இரண்டு கிழமையிருக்கும்.'
தலங்காவல் பிள்ளையாரில் அவருக்கு ஒரு பிரீதி. ʻg» u9riபிரிகிறதெண்டாலும் பிள்ளையாற்ரை காலடியிலை பிரியட் டும்.’’ என்ற வைராக்கியத்துடன் கோயில் பக்கம் வந்து விட்டார்.
*கோயில்பக்கம் போறது தான் பாதுகாப்பு.’ என்று ஊரே கிளம்பிய பொழுது இவரால் வீட்டில் ஒண்டியாக இருக்க (1pւգա வில்லை. வீட்டில் இருந்த அரிசி, பருப்பு என்று எல்லாவற்றையும் கொட்டிக்கொண்டு வந்தார். எல்லாம் முடிந்து விட்டது. கையில் இருந்த முதலும் கரைந்து விட்டது. y
நேற்று மதியம்-எங்கோ மரவள்ளித் தோட்டத்தில் களவாடிக் கொண்டு வந்த கிழங்கை சூரன் சிவசம்பு அறா விலைக்கு விற்றுக் கொண்டிருந்தான். இவரைக் கண்டதும் மரியாதையாக : "இத்தா இதை அவிச்சுச் சாப்பிடம்மான்.’’ என்று மாப்பாறிய கிழங்காகப்
பார்த்து இவரிடம் தந்தான். அவரால் அதைத் தட்டமுடியவில்லை, வாங்கிக் கொண்டவர்-'காசில்லை' என்றார்.
*சும்மாவா..? எல்லாம் நேர்சீரானதும் சந்தைப் பக்கம் வாறன் நாலு கீரைப்பிடி தாவன்."

சட்டநாதன் கதைக்ள் O 127
களவு எடுத்தே சீவிக்கும் அவனிடமும் எங்கோ ஒரு மூலையில் ஈரமிருப்பதாகவே அவருக்குப் பட்டது. நேற்றுப் பகல் அந்தக் கிழங்கைச் சுட்டு அவரும் சிவகாமியும் வயிற்றைக் கழுவிக்
கொண்டார்கள்.
இரவு பட்டினி, காலையில் ஒரு சொட்டு நீர் வாயில் ஊற்றுவதற் குக் கூட வழியில்லாமல் போய்விட்டது.
வாய் ஊறலெடுத்தது. ஒரு துண்டுப் புகையிலைக் காம்பாவது கொடுப்பினுள் அதக்கினால்தான் அவருக்குப் பத்தியப் படும்போலிருந்தது. வயிற்றுக்கே கிடையாதபோது புகையிலை ஒரு கேடா என நினைத்துக் கொண்டவர், தன்னை மறந்தவராய், வாய் விட்டுக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.
நேற்றுக்காலை நித்திரைப் 山T山Ta〕 எழுந்த பொழுது 'பென்சனியர் கந்தசாமி பட்ட அவஸ்தைதான் அவரை அப்படிச் சிரிக்க வைத்தது.
ஒரு "குறள்" சுருட்டைப் பற்ற வைப்பதற்கு அவர் பட்டபாடு. கைத்தடியை ஒரமாய் வைத்தவர், நிலத்தில் உட்கார முடியாமல் தவழ்ந்து நெருப்புக் கொள்ளியைக் குனிந்து ஊதிக் கணிய வைத்தபடி, சுருட்டை எடுத்து வாயில்வைத்து, தணலை வாய்வரை கொண்டு வந்து நிமிர்ந்தபொழுது, பின்பக்கத்தால் குடை சாய்ந்து விழப் போனார். இவரது சமயோசிதம் அவரைக் காப்பாற்றியது. தாங்கிக் கொண்ட இவரை அந்தக் கிழவர், பீளை சாறிய கண்களால் நன்றி தெரிவித்துக் கொண்டது இவருக்கு இன்னமும் ஞாபகம் இருந்தது.
'கிழவன் பிடரி அடிபட விழுந்திருந்தால்.’ அவருக்கு நினைக்கவே பயமாக இருந்தது.
"உடல் ஆட்டங் கண்டுவிட்ட இந்த நிலையிலும் இந்தப் பலவீனமா? மனிதர்கள் திருந்தவே மாட்டார்களா..? சுருட்டுப் பற்றாமல் விட்டால் குடியா முழுகிவிடும்.'
அவருக்கு எல்லாமே புரியும்படியாய் இல்லை.
வெற்றிலை, சுருட்டு, பீடி, கசிப்பு, கள்ளச் சாராயம் என்று எல்லா வியாபாரமும் வீதியில் நடைபெறுகிறது. ஆனால் ஒரு பருக்கை அரிசியோ, பருப்போ மட்டும்தான் எங்கும் கண்ணில் படமாட்டேன் என்கிறது.
'நல்லூர்-எம். பி. சி. எஸ். ஐ உடைச்சு, சனம் அரிசி அள்ளுதாம். அம்மான் நீயும் வாவன்,'

Page 74
128 O கவனம்
சூரன்தான் சாக்கும் கையுமாக நின்றபடி இவரை அழைத்தான்.
அது அவருக்கு உவப்பாய் இல்லை, கள்ளாமய் எதுவுமே செய்து பழக்கப்படாத கட்டை அவர்.
'சனங்களுக்குப் பசி வந்தால் முறைகேடாய் எதையும் செய்ய முடியுமா..? அவருக்கு அப்படி எல்லாம் செய்ய முடியவில்லை. அவரைப் போல இன்னும் சிலபேராவது இருப்பார்கள் என அவர் நம்பினார்.
விறகுகாலை உடைந்து கிடப்பதாகக் கேள்விப் பட்டுச் சனம் கரை புரள்வதாகச் சொன்னார்கள்.
'அரிசி இல்லாமல் விறகை என்ன செய்ய முடியும். தந்திக் கம்பிகள், மின்சார லைன் அலுமினியக் கம்பிகள், தண்டவாளச் சிலிப்பர் கட்டைகள் இவற்றை எல்லாம் வீட்டில் குவித்து வைத்துக் குபேரர்களாகி விட முடிந்ததா? இல்லிடத்தை விட்டு தறிகெட்டு ஓடி வரத்தானே முடிந்தது இந்த மடமைக்கு என்ன பெயர். எல்லாமே தலைகீழாய்ப் போனது ஏன்.? இது நேராகுமா. நேராக எத்தனை வருவடிங்களாகும்.?’
அவருக்கு மலைப்பாகவும் கவலையாகவும் இருந்தது. உடலும் உள்ளமும் சோர்ந்தவராய் கோயில் கோபுர வாசல் பக்கமாக வெளியே வந்தார்.
ஒவ்வொருவருடைய கைகளிலும் வெள்ளை "எலக் கோன்'
கோழிகள்.
'துரையற்ரை கோழிப்பண்ணையை உடைச்சுப் போட்டாங்கள் கோழிய்ள் கிடக்கு, போய் அள்ளு அம்மான்.'
சூரன்தான் கூறிவிட்டுப் போனான். அவனது கையிலும் நாலு கோழிகள்.
‘துரையர் பாவம். பூநகரிப் பக்கம் பயத்திலை குடும்பத் தோடை போயிட்டார். அவரது பண்ணையும் துடைக்கப்பட்டு விட்டது. இதைப் போலை எத்தனை இழப்புகளும் அழிவுகளுமோ...'
எல்லாமே அவருக்குத் துயரம் தருவதாயிருத்தது.

சட்டநாதன் கதைகள் O 129
வேர் அறுபட்ட நிலையில், சொந்த பந்தங்களையும் துறந்து, சிதறுண்டுபோன இந்தச் சனங்கள் மீளவும் சொந்த இடங்களில் போய் அமர முடியுமா..? விடுதலை. விழிவு. என்பதெல்லாம் தூரத்துக் கனவாய்...?"
அவருக்கு எதுவுமே புரியும்படியாயில்லை. மக்களது துன்ப துயரம் புரிந்தது. அவர்கள் வயித்துக்கும் வாய்க்குமில்லாமல் அலைந்து திரிவது புரிந்தது. களப்பலியாகும் இளைஞர்களது இழப்பும் தியாகமும் புரிந்தது.
‘இந்த ஆழ்ந்த துயரம் முடிவில்லாத ஒரு தொடராக..? மனம் கருகி வெதும்பினார். முன்பு இலங்கை. இப்பொழுது இந்தியப்படை. எந்தப்படை என்றாலும் உயிரும் உடமையும் எவ்வளவு சேதாரமாய் விட்டது. அப்பிராணிகளை அழிப்பதில் அவர்களுக்கு அப்படி என்ன ருசியும் ரசனையும். காந்தி பிறந்த பூமி என்று ஒரு பயபக்தி உண்டு அவருக்கு. அந்த இந்தியா தனது ஆன்ம வசீகரம் முழுவதையுமே இழந்து ஒரு இரத்தவெறி கொண்ட ஓநாயாய். எல்லாமே பொய்யாய். நம்பமுடியாததாய்.
அவர் தெரிந்து கொண்டதெல்லாம் அவ்வளவுதான். ஆழமான அரசியலெல்லாம் எங்கே அவருக்குப் புரியப்போகிறது. எளிமையும் அப்பாவித்தனமும் மிகுந்த மனிதர் அவர்.
இந்தியப்படையில் ஒரு தமிழனாவது தன்னிடம் வசமாக அகப்பட மாட்டானா என்று இருந்தது அவருக்கு.
"ஒய் என்ன காணும். உம்முடைய இரத்தத்தையும் சதையையும்
குத்திக் குதறிப் பார்க்கிறீரே. இதில் என்ன நியாயம் இருக்கிறது." என்று நாலு வார்த்தை அவனைக் கிழியக் கிழியக் கேட்க வேண்டும்
போலிருந்தது அவருக்கு.
அடுத்த கணமே தன் உணர்ச்சிகளைச் சமனப்படுத்தியவராய்; 'இது முட்டாள்த்தனம். ஆமிக்காரன் எவனுமே அயோக் கியனாய்த்தானிருப்பான். துப்பாக்கிச் சனியனைப் பிலிச்சவன் தமிழனோ, தெலுங்கனோ, சீக்கியனோ எவனாயிருந்தாலும் எல்லாருமே ஒரே ரகந்தான்.'
அவரது உடல் முழுவதும் ஒரு முறை அதிர்ந்து ஓய்ந்தது.
5Fー9

Page 75
130 O கவளம்
கோயில் முன்னிருந்த கையொழுங்கையில் இறங்கியவர்,
கோவணத்தை நெகிழ்த்தி, ஒண்டுக்கிருந்தார். உட்கார்ந்தவரால் கையூன்றித்தான் எழுந்திருக்க முடிந்தது.
ஒழுங்கையிலிருத்து மிதந்தவர், கோயில் மேற்கு வீதிக்கு வந்த பொழுது, அவர்கள் தென்பட்டார்கள்.
'ஏன் பிள்ளை குளிச்சாச்சோ..? அவர் முன்பாக, குதூகலத் துடன் வந்த அந்த இளஞ் சோடியைப் பார்த்து இவர் கேட்டார் :
“ஓம் அப்பு.!' பெண்தான் பதில் சொன்னாள்.
அம்மனுக்குச் சந்தனக் காப்புச் சாத்தியது போன்ற குளிர்ச்சி யான தோற்றம். மொழு மொழு என்று இருந்தாள். நாசி மட்டும் சற்றுத் தூக்கலாக, கூர்மை கொண்டு, முகத்துக்குப் பொருத்த மில்லாமல் இருந்தது. சிறிய குருவிக் கண்கள். தடித்த உதடுகள். சிரித்தபொழுது அடி முரசு வரை தெரிந்தது. அதுவும் அவளுக்கு அழகாக இருந்தது. தலைமுடி உலர வேண்டும் என்பதற்காக அள்ளி முடிக்காமல் தழைய விட்டிருந்தாள். சற்றுக் குள்ளமான உருவம், அவனது தோள் உயரம் கூட அவள் இருக்கவில்லை. மாறாக, அவன் உயரமாக அணுக்கே உரிய லட்சணங்கள் அத்தனையும் பொருந்திய வனாய் இருந்த ரன். அவன் சிரித்தபொழுது, பற்கள் மட்டும் சற்றுப் பெரிதாகவும், சிறிது மிதப்பாகவும் தெரிந்தன.
"இவையள் எங்கடை பக்கத்துப் பிள்ளையஸ் இல்லைப் போன ல. எங்கையோ தவறி இந்தப் பக்கம் வந்திருக்கினை. வந்த இடத்திலை போக முடியாமல் அகப்பட்டினை போல. சடங்கு முடிச்சமாதிரியும் இருக்கு. முடிக்காதமாதிரியும் இருக்கு. எதுவோ. அவையள் இந்த நெருக்கு வாரத்துக்கையும் சந்தோஷமாய்த் தானிருக்கினை."
அவர்கள் இவரைக் கடந்து போவதை மிகுந்த வாஞ்சையுடனும், பரிவுடனும் பார்ந்து நின்றார்.
அவருக்கு அவரது பேத்தி சிவகாமியும், மாப்பிள்ளையும் போல ஒரு பிரமை,
எதை நினைத்தாலும் சிவகாமியின் நினைவாகவே வந்து முடிவது அவருக்கு வியப்பாக இருந்தது. அத்துடன், மனது ஆசை கள் நிறைவேறுமா? என்று பயமாகவும் இருந்தது.
மீளவும் கோயில் பிரகாரம் வந்தவர், சுருண்டு படுத்துக் கொண்டார். பசிக்கு ஒரு கவளமாவது கிடைத்தால்போதும் என்று

சட்டநாதன் கதைகள் O 131
இருந்தது. சிவகாமியை நினைத்ததும் துயரம் முட்டிக்கொண்டு வந்தது. அதை அடக்க முடியவில்லை. விம்மி விம்மி அழுதார். அழுது ஓய்ந்தவர், மனமும் உடலும் சோர்ந்த நிலையில், பசிக்
களைப்பால் அலைபட்ட நிலையில், தன்னை அறியாமல் தூங்கிப் QL ! Ti sortiff.
அவர் விழிப்புக் கண்டபோது, இருள் ‘மை’யாக அடர்த்தி கொண்டிருந்தது. சுட்டிகளும் சிறு சிறு மெழுகுதிரிகளும் கார்த்திகைத் தீப நாளை ஞாபகப்படுத்துவது போல உள் வீதி முழுமையும் ஒளிர்ந்தன. அவரது படுக்கை முன்பாக இருந்த மூன்று அடுப்புகளி லும் ஏதோ கொதித்துக் கொண்டிருந்தது.
"சோறாக இருக்குமோ..? எங்கிருந்தோ சிலருக்கு அரிசி கிடைக்கத்தானே செய்கிறது.!"
எழுந்தவர், துண்டை உதறித் தோளில் போட்டபடி வெளியே வந்தார். திடீரென அவரது நினைவுப் பொறியில் அது தட்டியது. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பது கூட அவருக்கு மறந்து விட்டது. கொண்டலடி வயிரவருக்கு, பொங்கலுக்கு-வருஷப் பொங்கலுக்கென-அவர் பிடி அரிசி போட்டு வைப்பது வழக்கம். அந்த ஞாபகம்தான் அவரை வீடுவரை முடுக்கி விட்டது.
இராமலிங்கம் வீதியை நெருங்கியபொழுது, காக்காய் குருவி கூடக் கண்ணில் படவில்லை.
*ஆமிக்காரங்கள் நல்லூர்ப் பக்கம் போயிட்டாங்கள் போலை." வீதியில் ஏறியவர், அதனைக் குறுக்காகக் கடந்து, பரமசிவம் வீட்டுப் படலையைத் தள்ளித் திறந்தபடி நடந்தார்.
‘இனிப் பயப்படத் தேவையில்லை. இரண்டு வளவு தள்ளி வீடு.
அவரால் தடைகள் ஏதுமில்லாமல் சுலபமாகவே வளவுப் படலையைத் திறந்து உள்ளே போக முடிந்தது.
வீடு சிறிய மண் குடிசைதான். அதன் முன்பாக 9.5 பலகைக் கதவு. அது தட்டி உடைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் அவருக்குப் பகீர் என அடி வயிறு ஜில்லிட்டது.
உள்ளே போனவர், உடு பிடவை மற்றும் சாமான்கள் சிந்தியிருப்பதைக் கவனம் கொண்டு, அவற்றை அள்ளிக் குவியலாகப் போட்டுவிட்டு, முருகன் படத்தை ஒட்டி இருந்த அரிசிப் பானையைத்

Page 76
132 O கவளம்
தடவிப் பார்த்தார், பானை சரிந்து கிடந்தது. அரிசி சிந்தவில்லை. அவர், ஏதோ பெரும் புதையலைக் கண்டது போன்ற மகிழ்ச்சியுடன் அரிசியை எடுத்து மார்புடன் அணைத்துக் கொண்டார்.
கண்களில் நீர் சுரந்தது. கடவுளுக்கு நன்றி கூறிக் கொண்டவர், வெளியே வந்து, வீட்டுக் கதவை நன்றாகக் கட்டினார். கிணற்றடிக்குப் போய் முகம் கைகால் அலம்பிக் கொண்டார். ஒரு வாளி தண்ணீர் அள்ளி ஆசை தீரக் குடித்தார். குளிர்ந்த நீர் அமிர்தமாயிருந்தது.
அப்பொழுது நாய்கள் குலைப்பது கேட்டது. ஒரு கணம் புலன் ஒடுங்கியவர், அடுத்த கணம் உசாரானார்.
"உவங்கள், உந்த தொலைந்து போன ஆட்கொல்லியள் வாறாங்கள் போலை." என நினைத்தவர்-மரங்களின் நடுவே, வீட்டுப் பின் பக்கமாக ஒதுங்கிக் கொண்டார்.
மூச்சு விடுவதே ஆபத்து என்பது போல அவர் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து கொண்டார். எவ்வளவு நேரம் அப்படி இருந்தார் என்று அவருக்கே தெரியவில்லை. மெதுவாக எழுந்து, அரிசிப் பானையை அணைத்தபடி, 'வளவுகளுக்குள்ளாலை போறதுதான் புத்தி." என மனனம் பண்ணியவராய் பரமசிவம் வீட்டுப் படலையடியில் நின்று, இராமலிங்கம் வீதியை நோட்டம் விட்டார். எது வித சில மனுமில்லை. வீதியை ஒரு எட்டில் கடந்து விடலாம். ஆனால், அவருக்கு வரும் பொழுது இருந்த மனத் தைரியம் எங்கோ ஓடி மறைந்து விட்டதான உணர்வு.
'பிள்ளையாரப்பா. நீதான் துணை எனக்கு. அரற்றியவராய் வீதியைக் கடக்கக் காலடி எடுத்து வைத்தார் அடுத்த கணம், அவரது வலது முதுகுப்புறமாக ஏதோ கிழித்தது போன்ற உணர்வு வலி எதுவுமில்லை. ஆனால், இரத்தம் பொசு பொசு என பெருக்கெடுத்தது; அவரது தோளில் கிடந்த துண்டு நனைந்து விட்டதை உணர்ந்து கொண்டார்.
வெடிச்சத்தம் மீண்டும் கேட்டது.
அவர் தன் பலம் முழுவதையும் சேர்த்து வீதியின் மறுபக்கம் பாய்ந்து ஓடினார். ஆனால், அடுத்த வந்த சன்னங்கள் அவரது நெற்றிப் பொட்டிலும் இடது மார்பிலும் துளைத்தன. அடுத்த கணங்களில் நினைவிழந்த அவர் - சிவகாமி. மகளே! என்று முனகியபடி சரிந்து விழுந்தார். அவரது கையில் இருந்த பானை நிலத்தில் விழுந்து உருண்டு உடைந்தது. அரிசி சிதறியது.

சட்டநாதன் கதைகள் O 133
குழந்தை சிவகாமியின் நினைவுதான் அவரது இறுதி நினைவகா இருந்திருக்குமோ..?
கனத்த சப்பாத்துக்களின் தட தட ஒசை. நான்கு அந்நியப் படையினர் சிவராமலிங்கத்தாரை அண்மித்தனர். அவர்களில் ஒருவன் குற்றுயிராய்க் கிடந்த அவரை முரட்டுத்தனமாகத் தனது சப்பாத்துக் கால்களால் உதைத்துப் புரட்டினான்.
'பூ. ஏ. ரைகர். அன் ஒல்ட் ரைகர்.1’’
அவனது குரலில் ஏளனமும், அகம்பாவமும் குரவையிட்டன. அவனுடன் வந்த மற்ற மூவரும் அவனை ஆமோதிப்பது போல உரத்த குரலில் சிரித்தார்கள். m
'87

Page 77
அவர்களது துயரம்
அந்தச் செய்தி அவருக்கு சிறிது நம்பிக்கை தருவதாயிருந்தது.
"அவர்கள் அந்தக் காடேறியள். போகேக்கை பிடிச்ச இளம் பெடியளை விடுறாங்களாம். அல்லப்பிட்டியிலை; சைவப் பள்ளிக் கூடத்திலையும். அலுமினியத் தொழிற்சாலையிலையும் ‘காம்" போட் டிருக்கிறாங்களாம்.'
தருமர்தான் அந்தச் செய்தியைச் சொன்னார்.
*தருமருக்கு இதை ஆர் சொல்லியிருப்பினம். தகவல் சரியாய் இருக்குமா..?"
முகத்தார் அமைதி இழந்து தவித்தார்.
தருமர் மட்டுமல்ல, சிவத்தாரும் அந்தச் செய்தியுடன்தான் முன் திண்ணைக்கு வந்தார்.
திண்ணையில் ஊரே கூடியிருந்தது. கொட்டுதோட்டத்துச் சிவக்கொழுந்து, விசாலாட்சி, கதிரித்தம்பி, நாவலடிப்புலத்துச் செல்லப்பா, கந்தையா, அருமை. அருமை பெண்சாதி தவம், மொண்டித்துறை நவம், நடராசா, பசுபதி, நொச்சிக்காட்டுக் குணம், குணம் பெண்சாதி மதி. சோளாவத்தை செல்லர், சண்முகம் என்று பலர். திண்ணை நிரம்பி முற்றத்திலும் இருந்தார்கள்.
தாரணியும் கமலமும் கூட தாவாடிப்பக்கமிருந்து வந்திருந்தார் கள். தாரணியின் சிநேகிதி வதணியும் வந்திருந்தாள்.

சட்டநாதன் கதைகள் 6 135
கமலத்தின் மடியில் தலைவைத்துப் பவளம் படுத்திருந்தாள். தாரணி பவளத்துக்கு விசுக்கிக் கொண்டிருந்தாள். கமலம் பவளத் தைப் பார்த்துச் சொன்னாள்;
*மச்சாள் என்ன செய்யுது. கொஞ்சம் தண்ணி போட்டுத் தரட்டுமா..? நேற்றையில்ை இருந்து அன்ன ஆகாரமில்லாமல் பட்டினி கிடக்கேலுமா..? தம்பி தயாளனுக்கு ஒண்டும் நடவாது. அவன் சுகமாயிருப்பான். உயிராபத்திராது. நாம கும்பிடுற தெய்வம் பிள்ளையைக் கொண்டு வந்து தரும்.'
பவளம் விம்மினாள். அவளது விம்மல் ஒலி கூடத்திலிருந்து வெளித் திண்ணை வரை கேட்டது. அந்த விம்மலில் தோய்ந்திருந்த துயரம், தாரைய்ாய் அந்தச் சூழலையே கவிந்து அழுத்தியது.
முகத்தாருக்கு இருப்புக் கொள்ளவில்லை. கலக்கத்துடன் எழுந்து உள்ளே வந்தார்.
'பிள்ளை பவளம்.தருமர் ஒருசெய்தியோடை வந்திருக்கிறார். நல்ல செய்தியெணை. அல்லைப்பிட்டிப் பக்கம் போனால் தம்பியைக் கூட்டிக் கொண்டு வரலாம் போலக் கிடக்கு. ஆமிக்காரங்கள் பிடிச்ச பெடியங்களை விடுறாங்களாம்.'
பவளம் எழுந்து உட்கார்ந்து கொண்டாள். அவிழ்ந்து கிடந்த கூந்தலை அள்ளி முடித்துக் கொண்டாள்.
அழுது அழுது அவளது முகம் வீங்கி இருந்தது. கண்களின் அடிமடல்கள் அதைப்படைந்து கருமை கொண்டிருந்தன.
அவளுக்கு முகத்தாரின் பேச்சும் பார்வையும், எல்லா வேதனை யையும் சட்டென நீக்கியதான ஒரு தெளிவைத் தந்தது. இரு கரங் களையும் அவரது பக்கமாக நீட்டி, அவரது கைகளை ஆதரவாகப் பற்றியபடி கூறினாள்.
‘போயிற்று வாருங்கப்பா. என்ரை பிள்ளையைக் கையோட கூட்டிக் கொண்டு வாருங்க. பட்டவேம்பான் துணையாவருவான். அப்பனுக்கு சித்திரை வருஷத்தோட தம்பீன்ரை பேரிலை பொங்கலும் படையலும் வைப்பம்.' w
அடுக்களைப் பக்கமிருந்து தாரணி இரண்டு பேணிகளில் தேநீர் கொண்டு வந்தாள். வதணி அவளது தோள்களைப் பற்றியபடி கூடவே வந்தாள்.
தேநீரில் ஒரு மிடறு விழுங்கியதுமே பவளம் மாமிக்கு விக்கல் எடுத்தது. கமலம் உச்சியில் லேசாகத் தட்டி மாமியை ஆசுவாசப் படுத்தினாள்.

Page 78
136 O அவர்களதுதுயரம்
‘என்ரை செல்வம். தவமிருந்து பெற்ற திரவியம். பட்டினி தான் கிடக்குது போலை. அந்தக் கொள்ளேலை போறவங்கள் என்ரை ராசனுக்கு ஏதென் தின்னக்கின்னக் கொடுப்பாங்களா கமலம்.'
கமலத்தால் தாளமுடியவில்லை, கலங்கி அழுதாள்.
தாரணியின் கையில் இருந்த தேநீரை வாங்கிக் கொண்ட முகத்தார் அவளது தலையை அன்புடன் தடவிக் கொடுத்தார்.
கண்கலங்கிய தாரணிக்கு எல்லாமே பொய்யாய் கலைந்துபோன கனவு போல இருந்தது.
போன வெள்ளிக் கிழமை தான் அது நடந்தது. வைரவ கோயி லுக்குப் போய் வந்த தயாளன்- தனது அறையில் நுழைந்தபோது - தாரணி அங்கு ஏதோ படித்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.
*விபூதி பிரசாதம் எடம்மா." அவன் கூற- அவள் முகத்தைத் தூக்கி அவனைப் பார்த்தாள்.
அந்தப் பார்வையின் உதைப்பில் அள்ளுண்டு ஒருகணம் கிறுங்கித் தவித்தவன், அடுத்த கணங்களில் தன்னை நிதானப் படுத்திக் கொண்டான்.
அவனது கையிலிருந்த விபூதியை அவள் எடுத்துப் பூசிக் கொண்டாள்.
'சந்தனம்..?"
'பூசிவிடுங்க தயா..."
அவன் அதை எதிர்பார்க்கவில்லை. சந்தனத்தை சுட்டு விரலில் எடுத்து, அவளது நெற்றியில்- சுருளாய்ப் புரளும் கூந்தலை நீவி ஒதுக்கியபடி-இட்டான்.
'தாங்ஸ்."
தாரணி ஒசிந்து, ஒரு பார்வை பார்த்து முறுவலித்தாள்.
அந்த முறுவலில் எத்தனை அர்த்தங்கள் இழைந்தன. எதேச்சையாக அப்பக்கம் வந்த முகத்தார் அந்த உயிரோட்டமான நாடகத்தை ரசிப்புடன் பார்த்தார்,

சட்டநாதன் கதைகள் 6 137
அவருக்கு எல்லாமே புரிந்தது.
தயாளனுக்குத் தாரணி தான் என முன்னர் முடிவு செய்து கொண்டதை, அன்று அவர் உறுதி செய்து கொண்டார்.
அவரது நிழலைக் கண்டதும் தாரணி அறையை விட்டு, வெளியே வந்து, பவளம் மாமியிடம் போனாள்.
பசுமையாகி விட்ட நினைவுகள் மீளவும் ஞாபகம் வர முகத்தாருக்கு மனசு முட்டிக் கொண்டு வந்தது. விம்மலைச் சால்வைத் தலைப்பால் அழுத்தி அடக்கிக் கொண்டு வெளியே வந்தார்.
அவரைக் கண்டதும், துக்கம் விசாரிக்க வந்தவர்கள் ஒவ்வொரு வராக விடைபெற்றுக் கொண்டார். சில பெண்கள் கூடத்தின் உள்ளாக வந்து, பவளத்திடமும் ஆறுதல் கூறி விடைபெற்றுக் கொண்டார்கள்.
"ஒரு அலுவல் தம்பி நில்லும்.' என முகத்தார் கேட்டதால், சிவராசா மட்டும் நின்றான்.
*சிவராசாவா கூட வரப்போறான், நல்லது. அவனுக்குச் சிங்களமும் தெரியும். அவங்களோட கதைக்க உதவியா இருக்கும். கனஆக்கள் போறதும் நல்லதில்லை. எதுக்கும் கடவுளிலை பாரத்தைப் போட்டிட்டு போயிற்று வாருங்க.'
தருமரின் குரல் சுரத்தற்றுக் கரகரத்தது.
O
தடம் கோழுத்தி, பட்டவேம்பானுக்கு முன்பாக "சாஷ்டாங்க மாக விழுந்த முகத்தாருக்கு உடல் பதறியது. மனம் கசிந்து கரைந்து "மகனே' என்று புலம்பினார்.
*பதினேழு வருஷங்களுக்கு முந்தி இப்படித்தான் மனசு உருக வைரவரை வணங்கியது. பவளம் துணையாவர, தயாளனைத் தோளில் தூக்கி வைத்தபடி வந்து, தம்பு வாத்தியார் அவனுக்கு ஏடு தொடக்கப் பாத்திருந்தது. எல்லாமே இப்ப நடந்தது போல இருக்கு, அப்ப ஓங்காரத்துடன் ஆரம்பமான அவனது படிப்பு தடைப்படாமல் தொடர்ந்து, மருத்துவ பீட மாணவனா அவனை ஆக்கி இருக்குது.'
‘அந்தப் பெட்டை தாரணிக்கும் கைராசிக்காரரான தம்பு வாத்தியார் தான் ஏடு தொடக்கினவர். பிள்ளையும் வளந்து, படிச்சி

Page 79
138 6 அவர்களது துயரம்
ஏ. எல். பாஸ் பண்ணிற்றாள். அவளுக்கும் மெடிசின் கிடைக்கும். உந்தக் குஞ்சுகள் படிச்சு முடிச்சு குடியும் குடித்தனமுமா ஆகிவிட்டால் சிவனே எண்டு கண்ணை மூடலாம்."
நினைவுகள், அவருக்குப் பயம் தருவதாய் இருந்தன.
மனசின் வேகத்தைச் சமனப்படுத்தி, நடையைத் துரிதப் படுத்தினார்.
கிழக்காகப் பரந்து கிடக்கும் உயரப்புலம், பனந்தோட்டத்தின் ஊடாக வகிடிட்ட ஒற்றையடிப் பாதையில் இறங்கி, அவரும் சிவராசாவும் நடந்தனர். காற்று ஈரமாக எல்லாவற்றிலும் உட்கார்ந் திருந்தது. பனை மரங்களின் சலசலப்புக் கூட இல்லை. கிழக்காக இருந்த உசரியொன்றில் ‘டக் டக்’ எனும் ஒசை. பாலன் பாளை தட்டுகிறானா? நின்று நிதானித்துப் பார்க்க அவருக்கு நேரமில்லை. ஒற்றையாய் ஒரு மரக்கொத்தி தனது சொண்டின் கூர்மையைப் பதம் பார்த்துக் கொள்வதாகக் கூடி இருக்கலாம், மண்கும்பான் வீதியில் ஏறியதும் மேற்குச் சாய்வில் வேதப்பள்ளிக் கூடம் தெரிந்தது. பள்ளிக் கூடத்துக்கு முன்பாக கிளைபரப்பிச் சடைத்து அரசோச்சி நிற்கும் அந்த புளியமரத்தைப் பார்த்தார். ஒரு மூன்று தலைமுறைக்குச் சாட்சியாய் நிற்கும் அந்த மரம்; அதன் வடக்குப் பார்த்த கிளைகள் ஏன் பிளந்து, சரிந்து கருகிக் கிடக்கின்றன? நேற்று முன்தினம் படையினர் நகர்ந்த போது பொம்மரோ அல்லது ஷெல்லோ தான் தாக்கியிருக்க வேண்டும்" என நினைத்துக் கொண்டார்.
அவருடைய தகப்பனார் கந்தப்புவும், அவரும், ஏன் அவரது பிள்ளை தயாளனும், அந்த மரத்தின் புளிப்புச்சுவை மிகுந்த பழங்களைச் சுவைத்திருப்பது அவருக்கு நிச்சயமாய்த் தெரியும். அந்தக் கிராமத்தின் எந்தப்பிள்ளை எறிந்த கல் அந்த மரத்தில் படாமல் இருந்திருக்க முடியும்.
பழசில் அவரது மனசு ஒரு கணம் தோய்ந்து போகிறது.
புளிய மரத்திற்குத் தெற்காக-உதவி அரசாங்க அதிபர் பணிமனை இருந்த இடத்தில் - கற்குவியலும், சிதறிச் சின்னா பின்னமாகிப் போன அஸ்பெஸ்ரஸ் தகடுகளும் தான் கிடந்தன.
பிள்ளைப்பேறு மருத்துவமனை மட்டும் காயங்கள் ஏதுமற்றுத்
தப்பியிருந்தது. வீதியிலிருந்து சற்று உள்ளாக அது இருந்ததால் தப்பிக் கொண்டது போலும். ܫ -

சட்டநாதன் கதைகள் e 139
கோட்டக் கல்விக் கந்தோரின் முன்பக்கம் உடைந்து, மண்டபம் முழுமையும் மழைநீர் தேங்கி இருந்தது. தேங்கிய நீரில் மிதக்கும் ஃபைல்கள் தெப்பமாய் நனைந்த நிலையில்.
புறக்காட்சிகள் எதிலுமே அக்கறைப் படாதவராய் முகத்தார் நடந்தார். இருவருமே தாழிபுலத்தை அடைந்தபோது மயிலர் எதிரே வந்தார்.
“ஆறுமுகம்..!'
அவரது குரல் கனத்துக் கிடந்தது.
'மயில்வாகனம் கதை தெரியுமா. என்ரை. என்ரைபிள்ளை."
விசும்பினார். அருகாம வந்த மயிலர், முகத்தாரை ஆதுரம் ததும்பப் பார்த்தபடி சொன்னார் :
‘பாரத்தை அந்தப் பரம்பொருளிட்டைப்போடும். சர்வவியாபகி அவன். அவன் எல்லாத்தையும் பாப்பான். யாழ்ப்பாணத்திலை நிண்ட பொடியன் இஞ்சையேன் அவசரப்பட்டு வந்தவன்.?’’
'தம்பிக்கு வியாழபகை. அட்டமத்திலை வியாழன். அதோடை சனியின்ரை பார்வையும் அப்படி இப்படித்தான்."
‘கவலைப்படாதை ஆறுமுகம். கடவுளை நினையும். எல்லாம் சரியாய் நடக்கும். நானும் வீட்டுப்பக்கம் தான் போறன். பவளத்தைப் பார்க்கவேணும் போலை. அவள் பெட்டை திகைச்சுப் போய்க்கிடப்பாள்.'
பிரிந்து நடந்தனர். **செட்டிபுலப்பக்கம் போய் ஐயனாரையும் கும்பிட்டிட்டுப் போவம்.'
*ம்." சிவராசாவின் பதிலில் சலிப்பு இருந்தது.
கடற்கரைச் சந்தியில், சித்தர் கடையில் சிவராசா பீடி பற்றிக் கொண்டான்.
முகத்தாருக்கு வாய் ஊறலெடுத்தது ‘வெற்றிலை போடுவமா." என யோசித்தார். அடுத்த கணம், ‘என்ரை பிள்ளை. அவனுக்கு என்ன நடந்ததோ...' என நினைத்துக்
கொண்டவராய் அந்த ஆசையை அடக்கிக் கொண்டார்.

Page 80
140 )ே அவர்களது துயரம்
சந்தியில் இருந்து கிழக்காகப் பிரியும் கை ஒழுங்கையில் இறங்கி நடந்தபோது, கடற்கரை தெரிந்தது. ஐயனார் கோயிலும் தெரிந்தது. A -
ஒழுங்கையில் சின்னையா சிறுதிரளிக் கோர்வையும் 6Oos LLD FT35...
**சின்னையா..!"
‘ஐயா, தம்பிக்கு சிறுதிரளியும், விளையும் நல்ல விருப்பம். அதுவும் இளசாய்.'
**உனக்கும் தெரியுமா. ஆர் சொன்னது.? தம்பியைக் கூப்பிடத்தான் போறன்.' "
‘ஐயனாரப்பு காப்பாற்றுவார்."
அவர்கள் போவதற்கு சின்னையா ஒதுங்கி நின்று வழி விட்டான்
ஐயனார் கோயில் பூட்டிக்கிடந்தது. முத்து ஐயரால் என்ன செய்ய முடியும்? மூன்று கோயில்களை அவர் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. அத்துடன் அவர் தர்மபத்தினி ஜகதாவுடன் குடும்பம். நடத்துவதோடு, புதிதாக ராணி எனும் 'சூத்திராளுடன்' சிநேககம் வேறு வைத்திருக்கிறார். பாவம் அவரால் நேரப்பிரகாரம் எதுவும் செய்யமுடிவதில்லை.
முகத்தார் வெளிப்பிரகாரத்தில் நின்று ஐயனாரை வணங் கினார்.
கடலோரம் நடந்து சுடலையை நெருங்கியபோது, சாட்டி மாதா கோயில் தெரிந்தது, சணப்புளக்கம் இருந்தது. 'கரம்பன், நாரந்தனை, சின்னமடுப் பக்கம் இருந்து இடம் பெயர்ந்த சனமாக இருக்கும்’ என நினைத்தபடி நடந்தார். சிவராசுவும் எதுவித நோக்கமுமற்றவனாய் அவருடன் தொடர்ந்து நடந்தான்.
'கடற்கரைவீதியால் அல்லைப்பிட்டிச் சைவப்பள்ளிக்கூடம் வரை போவதா..? அல்லது அல்லைப்பிட்டிச்சந்தி கடந்து அலுமினியத் தொழிற்சாலைக்குப் போவதா..?
முகத்தாருக்கு குழப்பமாக இருந்தது. * எதுக்கும் பள்ளிவாசலடியில் விசாரிச்சு அறிவம்." என நினைத்தவரை, வழிமறிப்பதுபோல வைத்தி எதிரே வந்தான்.

சட்டநாதன் கதைகள் O 141
'வினாசியற்றை சிவலோகனையும் பிடிச்சவங்களாம். ஆளை விட்டாங்களோ அல்லது பொடி தப்பி வந்ததோ தெரியாது; ஆள் வந்திட்டுதாம். தம்பி தயாளன்ரை பாடு.?'
**வரேல்லை வைத்தி, அதுதான் அல்லைப்பிட்டிப்பக்கம் போய்ப் பாப்பமெண்டு வந்தனான்.'
'அலுமினியத் தொழிற்சாலையிலைதான் உ ல ரு ண வு
கொடுக்கிறாங்களாம். அங்கதான் அவங்களைக் கண்டு கதைக்கேலும். நாம நினைச்சமூப்பிலை அங்கை இங்கை போகேலுமா?’’
வைத்தியின் விளக்கம் மூகத்தாருக்குச் சரியாகவே பட்டது. வைத்தி தொடர்ந்து கூறினான் :
'பின்னேரம் மூண்டு மணிக்குத்தான் உலருணவு கொடுப்பாங் கள். நானும் வாறன் போவம்."
கூறிய வேகத்திலேயே அவன் விடை பெற்றுக்கொண்டான்.
O
அல்லைப்பிட்டிச் சந்திக்கு மேற்காக உள்ள, அந்தக் கைவிடப்பட்ட நீச்சல் குளத்தின் அருகில் இருந்துதான் "கியூ" ஆரம்பமானது. முதியவர்களும், பெண்களும், சிறுபிள்ளைகளுமே வரிசையில் அதிகம் இருந்தார்கள். இளம் பருவத்தினர் எவரையும் காணவில்லை. பயம் காரணமாய் இருக்கலாம்.
'படையினர் வழங்கும் சொற்பமான வெள்ளைப்பச்சை அரிசிக்கும், கோதுமை மாவுக்கும், சிறங்கையளவு மைசூர்ப்பருப்புக் கும் இவர்கள் ஏன் இப்படி ஆலாய்ப் பறக்கிறார்கள். சீ எங்களைச் சீரழிக்கும் இவர்களிடம் கையேந்தும் நிலை."
முகத்தார் முனகிக் கொண்டார்.
வரிசையில்-வைத்தி, அடுத்துச் சிவராசா, பின்னால் முகத்தார் என அவர்கள் நின்றார்கள். வைத்தியின் கையில் இரண்டு சிறு உரப்பைகள். சிவராசா உரப்பை கொண்டு வராத மடமையையிட்டு அடிக்கொரு தடவை அங்கலாய்த்துக் கொண்டான். அவன் அதுபற்றி நசநசத்தது முகத்தாருக்கு எரிச்சலூட்டியது.

Page 81
142 O அவர்களது துயரம்
பார்த்திருந்த பொழுதே வானம் கருமுகில்களால் தன்னைப் போர்த்திக்கொண்டது. சிறு தூறலாய் மழை பெய்யத் தொடங் கியது. காற்றின் மெல்லிய மூச்சு. உடலை ஊசியாய்க்குத்தும்குளிர். முடிவற்ற நீடித்த துயரத்தின் குறியீடாய்.
சரியாக மூன்று மணிக்கு வரிசை நகர்ந்தது. அதற்கு அப்படி ஒரு அவசரம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. மெதுவாக, மிக மெதுவாக இரையை அதக்கி வைத்திருக்கும் ஒரு மலைப்பபம்பு போல அசைந்தது; சிலவேளை அசையாமல் சோம்பிக்கிடந்தது.
நாலுமணியளவில், வரிசை அலுமினியத் தொழிற்சாலையை நெருங்கியது. கட்டடம் கூரை இல்லாமல் மூளியாய்க்கிடந்தது. சுவர்கள் மட்டும் குண்டுக் காயங்களுடன் இருந்தன. கட்டடத்தின் முன்பாக அமைந்திருந்த கூடாரத்தில் வைத்தே உலர்உணவு வழங்கப்பட்டது. வைத்தி வாங்கிக் கொண்டு நகர்ந்ததும், சிவராசாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சமயோசிதமாக தனது சட்டையைக் கழற்றி அதில் அரிசியையும், முகத்தாருடைய தோளில் கிடந்த சால்வையை எடுத்து மாவையும் வாங்கிக்கொண் டான். பருப்பை எதில் வாங்குவது எனத் தயங்கியவன், அதை வாங்கி வேட்டி மடியில் கட்டிக் கொண்டான்.
'பெரியவர் எதில் வாங்குது..?' அரைகுறைத் தமிழில் கேட்டான்; உலர்உணவை அளந்து போடுபவனில் நெட்டையன்.
முகத்தார் வந்த விஷயத்தைக் கூறினார். சிவராசாவும் சிங்களத்தில் ஏதோ சொன்னான் அதைக் கேட்டதும் அவனது முகம் சலனமேதுமற்று உறைந்து கருமை கொண்டது.
‘அதுங்கெல்லாம் நமக்குத் தெரியாது. அங்க நில்லுங்க. லொக்கு மாத்தையா வரும் கதைப்பம்."
முகத்தார் ஆறுதலடைந்தவராய் ஒதுங்கி, கட்டடச்சு வருடன் அணைந்து கொண்டார். சிவராசாவும் அவருடன் உட்கார்ந்து கொண்டான்.
நீண்ட காத்திருத்தலின்பின், முகத்தாருக்கு அழைப்பு வந்தது. Rais
உள்ளே சென்றார். அதிகாரி ஆங்கிலத்தில் கதைத்தான். அவருக்கு அது பட்டும் படாமலும் விளங்கியது.
மகனைப் பற்றிக்கூறி; பெயரையும் சொன்னார்.
பக்கத்தில் நின்ற துணை அதிகாரி சொன்னான் :

சட்டநாதன் கதைகள் O 143
“ “ бти) ஆக்களைப் பிடிக்கல்ல. புலியைதாங்பிடிச்சது. பிராரிச்சுப் பாத்து விடும். நீ போங்க."
நம்பிக்கையிழந்தவராய் அவனைப் பரிதாபமாகப் பார்த்து நின்றார்.
'நீ. போங்க ஐயா. உங்க மகன் வரும்.’’ என்று மீளவும்
சற்று உரத்து, அதட்டும் குரலில் சொன்னான்.
முகத்தார் மனம் உடைந்து போனவராய், மெளனமாக வெளியே வந்தார்.
ஏனோ அவருக்கு அப்பொழுது பவளத்தின் ஞாபகம் வந்தது. கூடவே தாரணியின் நினைவும் அவரை அலைக்கழித்தது. அவளது துயரம் ததும்பிய விழிகள் அவரையே பார்த்தபடி தொடர்ந்து வருவது போல ஒருபிரமை,
நிலைதளர்ந்த முகத்தாரை சிவராசா ஆதரவாக அணைத்தபடி நடந்தான்.
துயரம் தரும் ஏதோ ஒன்று தனக்காகக் காத்திருப்பது போன்ற உணர்வு அவரை வருத்தியது. திடீரென உடலில் உள்ளசக்தி அனைத்துமே கரைந்து வெறும் கோதாகிவிட்டது போலிருந்தது அவருக்கு.
கறுப்பாச்சி அம்மன் கோயிலைக்கடந்து, மண்கும்பானைத்தொட்டு நடந்தார்கள். அவர்களுக்கு முன்னாலும் பின்னாலும் சனசந்தடி இருந்தது சாட்டியை ஊடறுத்த ஒற்றையடிப்பாதையில் இறங்கிய போது, அடர்த்தியாக வளர்ந்திருந்த ஈச்சம்பற்றைக் காட்டுப்பக்க மாக, வழமைக்கு மாறாக தொகையான காக்கைகள். ஓரிரு நாய்களும் மோப்பம் பிடித்தபடி.
முகத்தில் அறைந்தாற்போன்ற துர்நாற்றம் அவர்களைத் தாக்கியது.
'மாடு கீடு செத்துக் கிடக்குது போலை." சிவராசா அபிப்பிராயம் கூறினான்.
முகத்தாருக்கு அப்படி அல்ல என்று ஏதோ உள்ளிருந்து சொல்லியது. ஒரு வகை வேகத்துடன் அவர் ஈச்சம்பற்றைகளை விலக்கியபடி உள்ளே நுழைந்தார். கறுப்பாய் உள்ளே. கிட்டவாக நுழைந்து பார்த்தார். பச்சைக் கோட்டுச் சாறத்துடன். அவருக்கு

Page 82
144 0 அவர்களது துயரம்
ஐம்புலனும் ஒடுங்கி, சதுரம் பதறி, மரணவேர்வை வேர்த்தது. மயக்கம் வருவது போலிருந்தது.
'சிவராசா. என்ரை பிள்ளை. என்ரைபிள்ளையடா..??
உள்ளே நுழைந்த சிவராசா, ஊதிப்பருத்து ஊனம் வடியக் கிடந்த அந்த உடலைப் பார்த்தான். எதையுமே அவனால் அனுமானிக்கமுடியவில்லை.
இன்னும் கிட்டவாக நெருங்கிய முகத்தார் அந்த உடலின் இடது மணிக்கட்டைப் பார்த்தார். பிள்ளையார் கோயில் மணி ஐயர் மந்திரித்துக் கட்டிய நூல். பதைப்புடன் வலது தோள்பட்டையைப் பார்த்தார். அவன் பிறந்து கிடந்த போது, குதூகலியாய் பவளம் காட்டி மகிழ்ந்த அந்த மறு: பிறப்பு மறு.
கண்ணிர் சோர அவர் பெருங்குரலில் அழுதார்.
முன்னால் போனவர்களும் பின்னால் வந்தவர்களும் கும்பலாகக் கூடிவிட்டார்கள்.
சிவராசா முகத்தாரைப் பார்த்துக் கேட்டான் :
*தொட்டால் கையுடன் வந்திடும் போலை கிடக்கு. எண்டாலும் வீட்ட எடுத்துப் போவம்.'
** வேண்டாம் ராசா. அவள் பவளம் இந்தக் கோலத்திலை பிள்ளையைப் பார்க்க வேண்டாம். அந்தப்பெட்டை தாரணியாலை யும் தாங்கேலாது. இஞ்சையே என்ரை துரைக்கு நான் கொள்ளி போடுறன்.'
சிவராசா தலைகவிழ்ந்து கிடந்த உடலைச் சற்று முகம் தெரியுமாப் போல புரட்டிவிட்டான். தலையில் சூட்டுக்காயம் இரத்தம் வடிந்து உறைந்து கருமை தட்டிப் போயிருந்தது. அதைக் கண்டதும் முகத்தார் மீளவும் அழத் தொடங்கினார்.
அவரது துயரத்தில் அங்கு கூடிநின்றவர்கள் அனைவரும் பங்கு கொண்டனர். காட்டுவிறகு, பூவரசங்கொம்பு, ஒதியமரக்கிளை என உடைத்துக் குவித்தார்கள். ஈச்சம்பற்றையின் உலர்ந்த பாளைகளைப் பிடுங்கி நெருப்பு மூட்டினார்கள். சடங்கு சம்பிரதாயம் எல்லாம் புறமொங்க, தனது அருமந்த பிள்ளைக்கு முகத்தார் கொள்ளி போட்டார்.
தயாளனது உடலைத் தீ நாக்குகள் குழ்ந்து தழுவிக் கொண்டன
அங்கு நின்றவர்கள் எரியும் சிதையை வெறித்துப் பார்த்தபடி நன்றார்கள்.

சட்டநாதன் கதைகள் O 145
"இந்த யுத்தம் நம்மை மிதித்து, துவைத்து புழுதியோடு புழுதியாய் அரைத்துவிடுமா. இளம்பிள்ளையள் கண்ணில்பட்டால் அள்ளிக்கொண்டு போறாங்கள். அல்லது சுட்டுத் தள்ளிவிடுறாங்களே இதற்கு.இதற்கு.?
தூரத்தில் துப்பாக்கி வேட்டுக்கள் கேட்டன.
'பொடியள் ஆமியைச்சுடுறாங்கள் போல கிடக்கு. அல்லைப் பிட்டிப் பக்கம்தான் கேக்குது.'
கூட்டமாய் நின்றவர்கள் தமக்குள் கதைத்துக் கொண்டார்கள்.
மேற்கு வானம் சிவந்து, பெரியவெளி குருதிப்புனலில் தோய்ந்தது போலிருந்தது. இரத்த கோளமாய் திரட்சி கொண்ட சூரியப்பந்து படு வானில் சாய்ந்து மறைந்தது.
முகத்தார் சிவராசாவின் கைத்தாங்கலில் மீளவும் நடக்கத் தொடங்கினார். சிவராசாவின் கைகளில் அந்த அரிசியும் மாவும் பொதியாக, அப்பொதி அவனுக்கு இப்பொழுது கணத்தது"
'95
10-س۔ تمہ

Page 83
நீளும் பாலை
அரசர்தான் அந்த ஆசையைத் தூண்டிவிட்டார். வீட்டில் எல்லாருக்கும் விருப்பமிருந்தது. ஐயாதான் கொஞ்சம் அருக்காணியம் காட்டிய மாதிரி இருந்தது அவரது அபிப்பிராயத்தை யார் கேட்கிறார்கள்? அக்கா, காசுக்குத் தான் பொறுப்பு என்றதும் ஐயா போசமல் இருந்தார்.
‘ஒரு பத்துப்போத்தில் கறக்கிற பசு போதும்.
அம்மா அபிப்பிராயம் சொன்னாள்.
'மூவாயிரமாவது வேணும். எதுக்கும் ஆயத்தமாயிருங்க. நாளைக்கு வாறன்.
அரசர் விடைபெற்றுக் கொண்டார். அவரைப் படலை வரை துரத்திச் சென்ற தம்பி ரகு 'கட்டாயம் வாருங்க மாமா." என்றான்.
"ஒரு பசுமாடு போதுமா?' இவன் அக்காவைக் கேட்டான். * இப்ப ஒரு பசு வரட்டும், பொருத்து இன்னும் இரண்டு வாங்குவம்'
அக்காவைப் பார்த்து இவன் திரு தியாகச் சிரித்துவைத்தான். பட்டம் பெற்று இரண்டு வரு ங்கள் ஆகிய போதும், வேலை கிடைப்பதாக இல்லை. சும்மா இருக்க வேண்டாமே என்று தான் இந்த ஏற்பாடு.

சட்டநாதன் கதைகள் O 147
'பத்துப் பசுக்களாவது வந்து ஒரு பண்ணை மாதிரி ஆகிவிட்டால் வேலைக்குப் போக வேண்டுமா என்ன..? அதோடை ஒரு நூறு வெள்ளை லெக்கோன். ஆர். ஐ. ஆர். கோழிகளும் வளர்த்தால்.
அவன் கனவு கண்டான்.
வரதாவின் குரல் கேட்டது. இரசாயன பாடத்தில் அக்காவிடம் ரதோ சந்தேகம் கேட்கவந்திருக்க வேண்டும். வரதா ஏ. எல். எடுக்கிறாள். மூன்றாவது முறையாக. பாஸ் பண்ணி, ஜெனரல் டிகிரியாவது செய்ய அவளுக்கு விருப்பம் இருந்தது.
வரதா இவனுக்குத் தான் என்பது- சின்னவயதிலிருந்தேஇவனளவில், மனதில் நிச்சயமாகி விட்டது.
மாமா பெண். சொந்த மச்சாள். கண்முன்னால், இமை கொட்டாமல் பார்த்திருக்க வளர்பவள். இவனை மீறிப்போய்விட முடியுமா என்ன?
வரதாவுக்கும், அவனுக்கும் அவசரமில்லை. அக்கா தான் பாவம் அவளுக்கு முப்பது வயதாகிறது. வரன் ஏதும் ஆகிவரவில்லை. அப்படி ஏதாவது வந்தாலும் அவர்கள் கேட்கும் சீதனம், டோனேசன், அதற் கெல்லாம் எங்கே போவது? ஐயா உழத்ைது, கொட்டிக் குவித்து வைத்ததையா எடுத்துக் கொடுக்க முடியும். உழைப்பென்றாலே ஒதுக்கம் கொள்ளும் பிறவி அவர். அவரை நம்பி, அவன் என்ன செய்துவிட முடியும். எல்லாவற்றிற்கும் நிவாரணி இந்த மாட்டுப் பண்ணைதான் என அவனுக்குத் தோன்றியது.
இந்த ஜெபம் சில சமயங்களில் வரதாவின் நினைவையே புறமொதீக்கி, ஆக்கிரமித்துக் கொள்வது இவனுக்கு ஆச்சரியமா யிருந்தது.
வரதா பாடம் முடிந்து, இவனைக் கடந்து போனாள். போனவள் நின்று திரும்பிப் பார்ப்பது போலிருந்தது.
இவனும் திரும்பிப் பார்த்தான்.
அவள் ஒடிசலாக இருந்தாள். கையும் காலும் மெலிதாக, குச்சி, குச்சியாக இருத்தன. முகத்தில் மட்டும் அப்படி ஒரு களை கொட்டிக் கிடந்தது. அந்த அகன்ற கண்கள், கூரானமூக்கு, சிவந்த திரட்சியான உதடுகள், சிரிக்கும்போது முரசுவரை தெரியும் ஈறுகளின் அழகு. எல்லாவற்வையும் தொட்டுத் தொட்டுப் பார்க்க வேண்டும், பேச வேண்டும் போலிருந்தது அவனுக்கு.

Page 84
148 O நீளும் பாலை
'உம்மடை கள்ளம் எனக்குத் தெரியும். ' வரதாவின் குரல் மிக நெருக்கத்தில் கேட்டது.
'கள்ளமோ ... ? என்ன கள்ளம். ?' இவன் சற்று உரத்த குரலில் கேட்டான்.
“என்ன கள்ளமெண்டு தெரியாதோ. புது ட்டெட்டை பணம் உமக்குப் பிடிக்கும் அதுதான்.'
அவள் சிரித்தபடி நகர்ந்து போனாள். அவள் போனதும், இவன் எழுந்து அக்காவைத் தேடிப்போனான் அக்கா டி. எச். லொறன்ஸோடு இருந்தாள். இவனைக் கண்டதும் புத்தகத்தைப் பக்கத்தில் வைத்துவிட்டு, நிமிர்ந்து பார்த்தாள்.
"ஒரு பசுமாடு போதுமா..? நாலஞ்சு மாடாவது வேணும். மினக்கெடுகிறது க்கு ஒரு பலன் வேணும்'- இவன்,
'அகலக்கால் வைக்கேலுமா..? உன் ரை திட்டத்துக்கு இருபது இருபத்தைஞ்சாவது வேணும். நாம எங்க போறது.?’’
'ஏதன் மாறிக்கீறிச் செய்தாலென்ன?" 'மூவாயிரத்தோடை என்ரை காப்புச் சோடியளையும் தாறன், இரண்டு பசுக்களை வாங்குவம், பிறகு பார்க்கலாம்."
'மாமாற்றைக் கேட்டாலென்ன?" “பெரிய கொம்பு முளைச்ச பணக்காரர் அவர். அவரிட்டைப் போய்ப் பல்லிளிக்கப் போறயா? வரதா இஞ்சை. நம்ம வீட்டுக்கு வந்து போறதே அந்தச் சீமானுக்குப் பிடிக்கேல்லை."
'சிவலிங்கத்தாரிட்டை.?' "அவராலை ஏலாமைப் போச்சு. தருமுதான் இப்ப எல்லாம் பாக்குதாம். ஊரிலபசையுள்ள மனிசன் இப்ப அவன்தான்.'"
'வீடுவளவை ஈட்டுக்குக் கேட்டுப்பாப்பம்?" 'ஈட்டுக்கா. கொண்டிசன் அறுதிதான் கேப்பினை.". 'மூண்டு வருஷத்துக்கு எழுதினா மீட்டுப்போடலாம்" அக்காவை நம்பிக்கையோடு பார்த்தான். பண்ணை பற்றி, மனதில் கிடந்ததையெல்லாம் கொட்டிக் கொட்டி, அவளுக்குச் சொல்ல வேணும் போலிருந்தது. 'அக்கா பகிடி பண்ணுவாள் பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என்று எழுந்து, இவன் வெளியே நடந்தான். O

சட்டநாதன் கதைகள் O 149
“இவ்வளவு காசு எதுக்கு?' தருமு தான் கேட்டான்.
அக்கா பதில் சொல்லாமல் இவனைப் பார்த்தாள். அவன்தான் அதற்குப் பதில் சொன்னான்.
‘ஒரு மாட்டுப் பண்ணையும், கோழிப் பண்ணையும் போடுற திட்டம்.'
'போடுற காசு வருமா..? வந்தாச்சரி. கொண்டிசனாத்தான் வேணும் நொத்தாரிட்டைச் சொல்லி ஏற்பாடு செய்யுங்க. வாற சனி பணம் எடுக்கலாம்"
அக்கா எழுந்து கொள்ள, இவனும் எழுந்து கொண்ட்ான்.
'இருங்க.தண்ணி குடிக்காமாலா. ' என்ற தருமு, உள்ளே பார்த்து 'அம்மா’ உன்று குரல் கொடுத்தான்.
'தம்பி. பி. ஏ. அக்கா..?' 'பி. எஸ். ஸி.' ‘எங்கை இப்ப படிப்பிக்கிறா. ೨೨ 'கரம்பன் கொண்வென்ட்’ அக்கா பதில் சொன்னாள். 'செபஸ்தியார் கோயிலுக்கு முன்னாலை இருக்குற. 'அது தான்..!" *மகேஸ். ஐந்தாம் வகுப்பிலை நான் உங்களோடை சரஸ் வதியில படிச்சது ஞாபகம் இருக்கா..?"
அக்காவுக்கு மெலிதாக ஞபாகம் இருந்தாலும், உரையாடலைத் தொடர விரும்பவில்லை என்பதை அவளது முகம் காட்டியது.
'இருங்க. ஒரு நிமிஷம்!' என்று எழுந்து உள்ளே போனான் 凸@@P·
* எவர்சில்வர் ட்றேயில் அவனே தேநீர் கொண்டு வந்து உப சரித்தது அக்காவுக்குச் சங்கடமாக இருந்திருக்க வேண்டும். எழுந்து ரீயைப் பெற்றுக்கொண்டவள், “ஏன் உங்களுக்கு இந்தச் சிரமம்' என்றாள்.

Page 85
150 o நீளும் fig6)
"சிரமமா? நோ இற்ஸ் ஏ பிளெஷர்" அவனது ஆங்கிலம் சுத்தமாக இருந்தது.
பெரிய பிஸ்னெஸ் புள்ளி. புத்தகப் படிப்பால்தான் இதெல்லாம் வரவேண்டுமா என்ன...? என்று இவன் நினைத்துக்கொண்டான். இவர்கள் விடைபெற்றுக்கொண்ட பொழுது, "கேற்’ வரை வந்து தருமு விடை தந்தான்.
‘அப்ப சின்னப் பெட்டையா மாங்காய்ப் பிஞ்சு பொறுக்க வந்தது சின்ன வீடா இருந்தது. இப்ப எக்ஸ்ரெண்ட்பண்ணி மாளிகை மாதிரிக்கட்டியிருக்கிறான் தருமு. வீட்டுக்குக் கிழக்குப் பக்கம் பாத்தனியா. முப்பது பரப்புத் தோட்டம் . அழகரிட்டை சுவடின காணி. முழுவதும் திராட்சையும் வாழையுமாய்க் கிடக்குது. நல்ல தண்ணிப் பூமி அதுதான் பொன் கொழிக்குது'
"மட்டக்களப்பில் இரண்டு அரிசி ஆலை. கொழும்பில் புறக்கோட்டையிலை பலசரக்குக் கிட்டங்கி. பெற்றோல் பங்கும் பளையிலை இருக்கு. பணத்தோடை தான் பணம் சேரும். கடன்பட்டுப் பணக்கர்ரனாகேலுமா..?'
அவனது குரலில் ஆதங்கம். அதை மறுப்பது போல அக்கா சொன்னாள். 'அப்படிச் சொல்லேலுமா..? எல்லாம் புதுப்பணம் தான். எனக்குத் தெரிய சிவலிங்கத்தார் இஞ்சை, ஊரிலை, வங்களாவடி யிலை பெட்டிக்கடை வச்சுத்தான் பிழைப்பு நடத்தினவர்.'
திடீரெனக் குரலைத் தாழ்த்திய அக்கா, ரகசியம் தோய்ந்த குரலில் தொடர்ந்து சொன்னாள் :
‘இவன் தருமனுக்கு மட்டக்களப்பிலை ஒரு பெட்டை இருக்காம்.'
'காதலா..? ஆளைப் பாத்தால் அழகா, மன்மதன் மாதிரித்தான் இருக்கிறான். பணக்காரனுக்கு காதல் வருமா? அங்க மில்லிலை வேலை செய்யிற பெட்டையா இருக்கும்."
அவனை ஆமோதிப்பது போல அக்கா ஏளனமாகச் சிரித்தாள். முதலாளி, தொழிலாளியின் மனைவியை வைத்துக் கொள்வான். விரும்பினால் அந்த ஏழையின் மகளையும் வைத்துக் கொள்வான் எப்பொழுதோ ஏதோ புத்தகத்தில் படித்த ஞாபகம அவனுக்கு வந்தது.

சட்டநாதன் கதைகள் O 151
அக்காவிடம் இதையெல்லாம் விபரம் சொல்லிப் பேச முடியுமா என்ன? மெளனமாக நடந்தான்.
இருவரும் பட்டவேம்பு வையிரவர் கோயிலைக் கடந்து பிரதான வீதியில் மிதந்தபோது மாமா எதிர்ப்பட்டார்.
‘உதென்ன விசர் வேலையள் நடக்குது. காசைக் கரியாக்கிற வேலையள். மாட்டுப் பண்ணை செய்து லாபம் வருமா..? பேசாமை ஆரையும் பிடிச்சு, காசெண்டாலும் கொடுத்து, ஒரு வேலை வெட்டி தேடிறதைப் பாரும் தம்பி. பி. ஏ. படிச்சுப் போட்டு, ஊருக்க மாடு மேய்கவே போற.'
மாமா தனது முயற்சியை கொச்சைப் படுத்துவது அவனுக்கு எரிச்சலூட்டியது. கோபத்தை அடக்கிக் கொண்டு சொன்னான் :
‘'வேலை கிடைக்கிற வரைக்கும் சும்மா இருக்க வேண்டா மெண்டுதான்.'
*சரி சரி. உங்கடை மூப்புக்குச் செய்யிறதைச் செய்து தொலையுங்க..'
**நல்ல வார்த்தையே இந்த மனுசன்ரை வாயிலை வராது போலை."
அக்கா அடங்கிய குரலில் குறைபட்டுக் கொண்டாள். அவளுக்கும் மாமாவின் பேச்சு எரிச்சலூட்டி இருக்க வேண்டும்.
மாமா இவர்களைக் கடந்து போக, இருவரும் வீட்டை நோக்கி நடந்தார்கள்.
O
குட்ஸ்ரெயின் யாழ் புகையிரத் நிலையத்தை அடைந்த போது இவன் விழித்துக் கொண்டான். ஒரு கிழமைக்கும் மேலாகக் கண்டியில் அலைந்த அலுப்பு அவனில் தெரிந்தது. காலையிலேயே தூங்கி வழிந்தான். அது அவனுக்குக் கூச்சமாயிருந்தது. அரசரும், சுந்தரமும் சுறுசுறுப்பாக இருந்ததை அவன் அவதானித்தான்.
சுந்தரம் அம்மன் றோட்டில் மாட்டுப் பண்ணை வைத்திருப்பவர். பசுக்களின் குணம் குறி அறிந்தவர். "அவரும் வந்தால் நல்லது" என்று அரசர் வற்புறுத்தியதை இவன் சனம் பண்ணி, அவரையும் கண்டிவரை அழைத்துச் சென்றிருந்தான்.

Page 86
152 ம் நீளும் பாலை
ட்ரெயின் நின்றதும் பசு மாடுகளை இலகுமாக இறக்க முடிந்தது.
ஏழுமாடுகள்; அம்பிட்டியிலும் மடுல்கலையிலும் கொள்வனவு செய்யப்பட்டவை. நான்கு பசுக்கள் ஐஷெயர். இரண்டு ஜேர்ஸி. மற்றது ஃப்றிசியன். உயர்சாதிப் பசுக்கள், இளம் பசுக்கள். கன்றுகள் ஏழும் நாகு. ‘இன்னும் இரண்டு வருஷங்களில் பதினாலு பசுக்கள் பால் தரும்'. இவன் கணக்குப் பார்த்துக் கொண்டான்.
*பத்துப் பரப்புத் தோட்டக்காணி-ஐயாவின் முதிசம். இப் பொழுது எதுவுமே பயிரிடாமல் கலடுதட்டிக் கிடக்கிறது. வீடு வளவு அம்மாவின் சீதனம். வீடுவளவை ஈடுவைத்ததும் அம்மா எவ்வளவு ஆட்டம் கண்டுவிட்டாள். சின்ன வீடுதான். வளவும் தோட்டமும் பதினைந்து பரப்புக்கூடத் தேறாது, இதைவைத்து அக்காவுக்குக் கலியாணம் பேசமுடியுமா? அப்படி இப்படிப் பார்த்தாலும் ஒரு லட்சமாவது வேணும். பண்ணை நல்லா நடந்தா ஒரு லட்சமென்ன? இரண்டு லட்சம் தரலாம். பணத்தின் பின்னால் போகும் மாமா கூட, ான் பின்னால் வரமாட்டார். வரதா அந்த இளமை ததும்பும் செளந்தரியம் கூட என்னுடையவள் ஆகிவிடுவாள்'
** என்ன தம்பி பகற்கனவே. லொறி வந்திட்டுது. மாடுகளை லொறியிலை ஏத்த வேண்டாமே..?’ அரசர் கேட்டார்.
சிரமத்துடன்தான் பசுக்களையும் கன்றுகளையும் லொறியில் ஏற்ற முடிந்தது.
சுந்தரம் வேலணை வரை வந்து திரும்புவதாக ஏற்பாடு. ‘சுந்தரம் உதவியாக, தனது பிழைப்பை எல்லாம் விட்டு வந்திருக்கிறார். ஒரு ஆயிரமாவது அவற்ரை கையிலை கொடுக்க வேணும்.'
அரசர் இவனது காதைக் கடித்தார். இவன் சரி எனத் தலையசைப்பில் பதில் தந்தான்.
லொறி அல்லப்பிட்டியைக் கடந்து, கறுப்பாச்சி அம்மன் கோயிலடியில் வந்த பொழுது இவன் தன்னையறியாமல் கை குவித்துக் கொண்டான். அம்மனை மனதார வணங்கினான்.
மண்கும்பான் பிள்ளைய்ார் கோவிலடியில் இறங்கிய அரசர் கற்பூரம் கொழுத்தினார். இவனும் இறங்கி விபூதி பூசிக் (as itsfor Lirar.

சட்டநாதன் கதைகள் O 153.
அராலிச் சந்தியால் திரும்பியதுமே ஊர்மனை வந்தது. இவன் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டான். வீசிய சுகமான இளங்காற்று மனதுக்கு இதமாக இருந்தது.
மில்லடி ஒழுங்கையில் திரும்பியதும் குஞ்சி கண்டு சிரித்தாள். மகன் தில்லை லொறியின் பின்னால் ஓடிவந்தான்.
லொறி அஞ்ஞாத் தோட்டத்தின் கட்டோடு 'றிவேர்ஸில்" நிறுத்தப்பட்டது. புவனம், கைலை பெண்சாதி கமலம், லட்சுமி, தம்பு, நொச்சிக்காட்டுக் குணம், சிவராசா, கிளி, ராசா வாத்தியார் எல்லாரும் கூடிவிட்டார்கள்.
தூரத்தில் வரதா வந்து கொண்டிருந்தாள். அவளுக்கு முன்பாக இவனது தம்பி ரகு ஓடிவந்தான். அம்மாவும் அக்காவும் படலையடி யில் நின்றதை இவன் அவதானித்தான். ஐயாவைக் காணவில்லை.
‘தலையில் எண்ணெய் தடவி, படியப் படிய வாரிமடித்து, காதில் பிச்சிப்பூவும் வைத்து, பர்வதம் வீட்டை போயிருப்பாரோ? இந்த வயதில இப்படி ஒரு உறவா."
அவனுக்கு மனக்கிலேசமாயிருந்தது. கொஞ்சம் துக்கமாகவு. மிருந்தது.
பசுக்கள் கீழே இறக்கப்பட்டதும், நீண்ட பயண அலுப்புத் தீர, ஆகாயத்துக்கும் பூமிக்குமாக ஒரு துள்ளல் துள்ளின. கால்களை உதைத்து, உதறிக் கொண்டன. ரம்பண்டாவின் சிவப்பியின் கைக்கொடியை அரசர் தவறவிட்டு விட்டு, பசு தோட்டத்தைச் சுற்றி *றவுண்டஸ்’ அடிப்பதை பரிதாபமாகப் பார்த்தபடி நின்றார். அந்தப் பசுவைப் பிடிப்பதற்குச் சுந்தரம்தான் உதவினார்.
பசுக்களை வீடுவரை கொண்டு போவது பெரும்பாடாகப் போய்விட்டது.
'படலையாலை கொண்டு போகேலாது. வண்டிற் தட்டியை அவிழுங்க அத்தான்'
ஐயாவைத் தான், அரசர் விழித்தார்.
ஐயாவைப் பார்த்தான், எதையோ பறிகொடுத்தவர் போல அவர் இருந்தார்.
இந்த முயற்சி எல்லாம் வீண் வேலை என்பது அவரது எண்ணம்.

Page 87
154 நீளும் பாலை
'ஐயா நினைப்பது போல எல்லாமே பயனில்லாத முயற்சியா..? கனவாகக் கரைந்து போக வேண்டியவைதானா..?
அவன் தொடர்ந்து நினைப்பதற்குப் பயம் கொண்டான். மாடுகளைக் கொட்டிலில் கட்டிய பின்னர்தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.
"அசல் கொட்டில், எவ்வளவு முடிஞ்சது..?' சுந்தரம் கேட்டார்.
'நாலாயிரம்.' இவனது பதில். 'இதென்ன மாடுகள் இப்படிக் கொட்டிண்டு போயிருக்குதுகள்' அம்மா கவலைப்பட்டாள். 'இரண்டு நாளாகச் சாப்பாடு ஏதுமில்லை. நாலு தனிர் வைக்கலை கடிச்சதுகள். நல்லாச் சாப்பாடு வைக்கத் தேறிடும்."
அரசரும் பேச்சில் கலந்து கொண்டார். தம்பி, பசுக்களைப் பயமில்லாமல் தொட்டுத் தொட்டுப் பார்த்து எண்ணினான்.
பின்பு இவனிடம் வந்து, தப்பும் தவறுமாக "ஆறு பசுக்களா வாங்கினது அண்ணை" என்று கேட்டான்.
இவன் சிரித்தபடி "இல்லை ஏழு பசுக்கள்" என்றான்.
அக்கா, இவனையும் பசுக்களையும் மாறி மாறிப் பார்த்தபடி நின்றாள். அவள் கண்கள் பனித்திருந்தன. பக்கத்தில் வராதா, எப்பொழுதும் போல மலர்ந்த சிரிப்புடன்.
இவன் அவர்களை நெருங்கியதும், வரதா கேட்டாள்,
‘எங்களுக்கும் பால் தருவியளா?"
"எங்க வரதாவுக்கு இல்லாமலா. ?" இவன் கலகலவென்று சிரித்தான்.
அக்காவும் சிரித்தாள்.
வரதா அவனை வைத்த கண் அகற்றாமல் பார்த்தபடி நின்றாள்.
அந்தப் பார்வையில் இழைந்த கனிவும் கருணையும் இவனைப் பரவசம் கொள்ள வைத்தது.
O

சட்டநாதன் கதைகள் 9 155
4.
பண்ணை லாபமாக நடந்தது. இந்த இரண்டு மாத கால இடைவெளியில், சில்லறைக் கடன்களை அவனால் அடைக்க முடிந்தது.
நாளாந்தம் எண்பது போத்தல் பால் தந்த பசுக்கள், பசும் புல்லைக் கண்டதும் தொண்ணுாறு போத்தல் தந்தன.
மழைகாலம் தொடங்கி விட்டதால் கூதல் கடுமையாக இருந்தது. கச்சானும் கொண்டலும் மாறி மாறி வீசியது. பசுக்களுக்குக் காற்றுப் படாதவாறு கொட்டிலைச் சுற்றிச் சீமால் போட்டான்.
பெரிய கடன், ஈட்டுக்கடன் தான். அதை நினைத்துக் கிராமிய வங்கியில் இரண்டாயிரம் வரையில் காசு போட்டு வைத்திருந்தான். மனதில் கடன்பற்றி இருந்த பயம் சிறுகச்சிறுக விலகிய பொழுது, வரதாவைப் பற்றிய நினைவுகள் அவனை அலைக் கழித்தன.
வரதா பரீட்சை நன்றாகச் செய்யவில்லை. அவள் அது பற்றி அலுத்துக் கொண்டது இவனுக்குச் சந்தோஷ்மாயிருந்தது.
'பரீட்சையில் தேறி. மூன்று ஆண்டுகள் பல்கலைக்கழகம், படிப்பு என்று அவள் அலைய வேண்டுமா என்ன..?’ என்று இவன் நினைத்துக் கொண்டான்.
கண்முன்னால் அவள் குறுக்கும் நெடுக்கும் நடப்பதே இந்த ஜென்மத்துக்குப் போதும் போதும் என்றிருந்தது அவனுக்கு.
'இது சுயநலமா. பெண்ணைப் போகப் பொருளாய் மட்டும் பார்க்கும் நோய்க்கூறா...'
அவனது குழம்பிய சிந்தனையில் தெளிவு இல்லாமல் இருந்தது பசுக்களுக்குப் பிண்ணாக்கு வைத்தபின், வைக்கலைப் பட் டடையில் இருந்து இழுத்து, நன்றாக உதறிப் போட்டுத் திரும்பு கையில் அவனுக்கு ஆச்சரியம் வாழைத் தோட்டப்பக்கம் காத்தி ருந்தது.
அடர்ந்த காடுபோல் வளர்ந்திருந்த இதரை வாழை மரங்களுக் கிடையில் வரதா நின்றாள்.

Page 88
156 ல் நீளும் பாலை
மழை மெலிதாகப் பன்னீர் தெளித்தது. அதில் நனைந்தபடி அவள். அவனது வரதா.
நெருங்கி வந்தவன் அவளைப் பார்த்துக் கேட்டான்: “என்ன வரதா. மழையிலை நனைந்தபடி..' 'மழையிலை நனைஞ்சு இந்த உடம்பு ஒண்டும் கரைஞ்சு போகாது.'
'கரைகிற மாதிரி இல்லைத்தான். வயிரமாய்த்தான் இருக்குது.'
“சீ... என்ன இது. ஏதோ பூடகமாய்ச் சொல்லிm மாதிரி..." 'உடைத்துச் சொல்லட்டுமா..?"
**சொல்லுங்க."
‘என்றை வரதா. எனக்கு வேணும்'
**ப்பூ இதுதானா. இது எத்தனை நாளாய்ச் சொல்லிற விசயம்'
**எப்ப சொன்னனான்?'
'அது தான் போகேக்கையும் வரேக்கையும் உங்க கண்கள் சொல்லுதே செல்வம்."
‘பெட்டை. என்னிலை உனக்கு விருப்பமிருக்கா..? நம்பிக்கை இருக்கா..?’’
'நம்பிக்கையில்லாமலா. இப்படி உங்களைச் சுத்திச் சுத்திப் பைத்தியம் மாதிரி அலையிறன்."
‘வரதா..!" என்று நெருங்கியவன், அவளது கரங்களை எடுத்து அன்புடன் முத்தமிட்டான்.
அவனை நெருங்கி நின்ற அவள், அவனது உயரத்திற்கு-குதி கால்கள் நிலத்தில் பாவாமல் நுனிக்காலில் - நின்றபடி அவனது கண்களிலும் உதடுகளிலும் முத்தமிட்டாள்.
கிணத்தடியில் வாளியின் அரவம். சடாரென ஒதுங்கிய வரதா" அவனைப் பிரிந்து, வாழைப் புதர்களின் பக்கம் போனாள்.
இவன், அவள் போகும் திசையையே வெறித்துப் பார்த்தபடி நின்றான்.
ஏனோ அவனுக்கு அப்பொழுது அக்காவின் ஞாபகம் வந்தது.

சட்டநாதன் கதைகள் () 157
இதயத்தின் உள் நாளங்களில் ஏதோ விண்டதான ஒரு வேதனை அவனுள் பரவியது. 'அக்காவின் திருமணம் கூட கனவாகிக் கானலாகி விடுமோ..?
அவன் கவலை தோய்ந்த மனத்துடன் வானத்தைப் பார்த்தான். சூழவந்த கருமேங்கள் கனதத மழையின் வரவைக் கட்டியம் கூறின.
5
பங்குனிமாதம், வெய்யில் கடுமையாக இருந்தது. புல்நுனி கருகி பச்சைக் கம்பளமாயிருந்த வயல் தடங்கள் கருமை கொண்டு விட்டன
இப்பொழுது பசுக்களுக்குப் பசும்புல் கிடைப்பது அரிதாகி விட்டது. காலையும் மாலையும் கட்டாந்தரையில் இவனும் அம்மாவும் புல் செருக்குவதில்தான் காலம் கழிகிறது. வறண்ட உவர்ப்புல்லை சீண்டுவதற்கே பசுக்கள் தயக்கம் கொண்டன. பால் தருவதையும் அவை திடீரெனக் குறைத்துக் கொண்டன.
நாப்பது போத்தலுக்குமேல் ஒரு துளிகூட இல்லை என்ற நிலை.
பசுக்களுக்குத் தேவையான பிண்ணாக்கு, தவிட்டுச் செலவுக்கே பண்ணை வருமானம் மட்டுமட்டாய் இருந்தது.
பசுக்கன்றுகளும் போதிய பாலும் உணவும் இல்லாமல் கறாளை பத்திப்போயின. இரண்டு வருடங்களில் பதினாலு பசுக்கள் என்ற அவனது கனவு கண் முன்னாலேயே கலைந்து போகும் அபாயத்தை உணர்ந்தான்.
அவனுக்குத் துக்கமாக இருந்தது. எல்லாவற்றையும் இழந்த வெறுமை உணர்வே அவனுள் மிஞ்சியது. அம்மா மூக்கால் அழத் தொடங்கி விட்டாள். ஈட்டுக்காணி தருமுவுக்கே ஆகி விடுமோ என்ற பயம் எல்லாருடைய மனதையும் கலங்க வைத்தது.
வழமைபோல ஐயா மட்டும் எதிலும் பட்டுக் கொள்ளாமல்
நடந்து கொண்டார். பர்வதத்தை மட்டும் அவரால் மறந்துவிட முடிய வில்லை.
அன்று ஞாயிறு. லீவு நாள். அக்கா நன்றாகத் தோய்ந்தபின் இள வெய்யலில் தனது கூந்தலை உலர்த்தியபடி நின்றாள்.
"அக்கா எவ்வளவு வடிவு உயரம் அடர்த்தியான கரிய புருவங் களின் கீழ் சுடரும் நீண்ட பெரிய கண்கள். அழகான மூக்கு. உடைந்து நெகிழத்துடிக்கும் முறுவலை எப்பொழுதுமே.தாங்கி நிற்கும் சிவந்த

Page 89
158 O நீளும் பாலை
உதடுகள் முற்றிய கோதுமையின் செழுமையான நிறம். நிதானம் தப்பிப் பேசாத சுபாவம், எவ்வளவு மென்மையான இயல்புகளைக் கொண்டவள் இவள். இவளிடம் அதிசயமாக இப்பொழுது ஒரு பட படப்பு கோபம் எல்லாம் எப்படி வந்தது. வீட்டிலுள்ள நெருக்கடியும் இயலாமையும் அவளையும் தொட்டிருக்க வேண்டும்.'
அக்காவைக் கடந்து இவன் சமையலறைப் பக்கம் போனான்.
இவன் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது, அக்காவும் சாப்பிட வந்தாள்.*அவள் கோப்பையைக் கழுவி எடுத்து நிமிர்ந்த பொழுது, அம்மா புலம்பியது கேட்டது;
"என்ரை பிள்ளையளைச் சொதியும் சோறும் தின்ன வைச்சுப் போட்டுதுகள் இந்தக் கோதாரி விழுந்த மாடுகள். சம்பலும் சோறும் தின்னிற விதியே என்ரை குஞ்சுகளுக்கு. நாக்குக்கு ருசி யாய் கறி புளி திண்டு எத்தனை நாளாய்ப் போச்சு. கையிலை மடியிலை உள்ளதெல்லாத்தையும் இந்த மாடுகள் விழுங்கிற தெண்டால்.’
அக்கா அம்மாவைப் பார்த்துச் சொன்னாள்:
'பேசாமலிரம்மா! முடியிற வரைக்கும் பாப்பம், ஏலாதெண்டா மாடுகளை வித்துப் போட்டு, ஈட்டை மீட்கலாம் தானே."
அவனுக்குப் புரைக்கேறியது. அக்கா எழுந்து வந்து சிரசில் தட்டியபடி:
'என்னடா துக்கமா? நாம நினைக்கிறது எது நடக்குது. ஏழை கள் எதுவுமே ஆசைப்படக் கூடாது. சாண் ஏறினா முழஞ்சறுக்கிற வாழ்க்கை நம்முடையது. ஒண்டு போனா இன்னொரு தொழி லெண்டு செய்ய எங்களிட்டை பணமா இருக்கு.'
'அக்கா என்ரை ஆசையள் எல்லாம் இப்படிக் கைநழுவி. உன்னை ஒரு வசதியான இடத்தை குடுக்க ஆசைப்பட்டான். வரதா அந்தப் பெட்டை என்னையே நம்பி.'
அவன் விம்மினான்.
'சத்தம் போடாதையடா. அம்மாவுக்கு வரதாவின்ரை கதை தெரியாது. மனிசி மாற்றுச் சம்மந்தம் அது இதெண்டு பிசத்திக் கொண்டு திரியுது.'
அவன் அரைகுறையாகச் சாப்பிட்டுவிட்டு, கைகளை அலம்பிக் கொண்டு மாட்டுக் கொட்டில்ப்பக்கம் போனான்.

சட்டநாதன் கதைகள் O 159
நாலு பசுக்கள் - றம்பண்டாவின் ஜேர்ஸி, கருஞ்சிவப்பி, முளிச் சிவப்பி, கொம்பன்புள்ளி- கண்டுபட்டுவீட்டன, ஃபிறிசியன்புள்ளி மாட்டைத் தேடி காலையிலிருந்து கமறுகிறது. செயற்கைக் கருந்தரிப்பு நிலையம் மூடிக்கிடப்பதால் ஒண்டும் செய்ய முடிய வில்லை.
அம்மா ஃபிறிசியனை கொட்டிலில் இருந்து அவிட்டு, வெளியே மாமரத்தில் கட்டி விட்டு கிணற்றடிப் பக்கம் போனாள்.
ஃபிறிசியன் மாமரத்தடியில் சக்கரப்பாண்டி ஆடிய, "நாரந் தனை ஸ்ரட்சென்ரருக்குப் பசுவைக் கொண்டு போனால் என்ன..? என்று இவனுக்குத் தோன்றியது.
சேட்டைப் போட்டுக் கொண்டு புறப்பட்ட இவனைப் பார்த்து அக்கா கேட்டாள்:
"எங்கை தம்பி.!"
'நாரந்தனைக்கு. ஸ்ரட்சென்ரர் வரைக்கும். ஃபிறிசியன் பாடாய்ப் படுத்துது, போயிற்று உடனை வாறன், அம்மாவைப் பாலைக் கறக்கச் சொல்லு."
இவன் மாட்டை அவிழ்த்த பொழுது, அது உன்னியதில் நிலை தடுமாறி விழுந்தான்.
ஓடி வந்த அக்கா, இவனைத் தடவியபடி 'என்னடா இது. அடிபட்டிட்டா? கொம்புக் கயிறு போடு. என்றாள்.
அவன் கொம்புக் கயிறு போட்டு, மாட்டை அவிழ்த்துக் கொண்டு போவதை அக்கா பார்த்துக் கொண்டு நின்றாள்.
"இந்த மிருகங்கள் வாயில்லாத பிராணிகளா? இல்லை. தங்கள் தவிப்பை எவ்வளவு அழகாக இவைகளால் காட்ட முடிகிறது. மனிதர்கள் தான் அடக்கி, உள்ளில் உக்கி, குமுறி அடங்கிப் போக வேண்டியிருக்கிறது"
தறிகெட்ட மனதின் நினைவுகள். அவளுக்குக் கூச்சமாக இருந்தது. அதே நேரத்தில் பீறிட்டு வந்த சிரிப்பை அவளால் அடக்கவும் முடியவில்லை. அவள் வாய்விட்டு விழுந்து விழுந்து சிரித்தாள்.
'என்ன சிரிப்பும் கனைப்பும்.1' அம்மாவின் அதட்டல் அவளது உணர்வுகளைச் சமநிலைப்படுத்தியது.
O

Page 90
180 0 நீளும் பாலை
6
பாடசாலை விட்டதும் அவள் வெளியே வந்தாள். அவள் பத்து நிமிடங்களில் செபஸ்தியார் கோயில் சந்திக்குப் போனால்தான் 780 எண் பஸ்ஸைப் பிடிக்க முடியும். மூன்றரை பஸ்ஸை விட்டால் ஒரு மணித்தியாலம் காத்திருக்க வேண்டும்.
அவள் சந்திக்கு வந்து இருபது நிமிடங்களாகியும் பஸ் வராதது அவளுக்கு ஏமாற்றமாயிருந்தது. 'நாலரை வரைக்கும் இங்கு தவமி யற்ற வேண்டுமா? என்ன? அவள் அலுத்துக் கொண்டாள்,
வீட்டுக்கு அந்தத் தொல்லைகளின் மத்தியில் போய் நிற்பதிலும் பார்க்க, இது பரவாயில்லை என்று தான் அவளுக்குத் தோன்றியது. வீட்டுச் சூழலிலும் பாக்கப் பாடசாலை அவளுக்குப் பிடித்தமானதாய் இருந்தது. அம்மாவின் தொண தொணப்பு. ஐயாவின் எதிலும் பட்டுக் கொள்ளாத பாராமுகம். தம்பி செல்வத்தின், பொதிமாடு போன்ற பலன் ஏதுமற்ற உழைப்பு. அவளது கவலைகள். இவை எல்லாவற்றிலுமிருந்து தூரம்படவே அவள் மனது துடித்தது சின்னவன் ரகுவின் பிரியமும் குழந்தைத்தனமும் தான் ஓரளவு ஜீவனை, உயிர்ப்பை அந்த வீட்டில் மீதம் வவத்திருப்பதாய் அவளுக்குத் தோன்றியது.
*செல்வம் என்ன செய்யம் போகின்றான். எவ்வளவு ஆசைக ளோடும் கனவுகளோடும் இந்தப் பண்ணையை ஆரம்பித்தான். பண்ணையால் கடன்தான் மிஞ்சியிருக்கிறது. அக்கா. அக்கா என்று சுத்திச் சுத்தி வருபவன் ஏதோ குற்ற உணர்வுடன் என்னைக் கண்டதும் ஒதுங்கிக் கொள்ளுகின்றானே. அவன் உழைத்து, சீதனம் தந்து, எனது வாழ்வு மலர அவன் கண்ட கனவுகள். வரதா இவனுக்காகக் காத்திருப்பாளா? மாமா' படிப்பு இருந்தாலும் நொடிந்து போன, பிழைக்கத் தெரியாத இவனை. இந்தப் பிள்ளையை மகளுக்கு ஏற்றுக் கொள்ளுவாரா..? ஒருவேளை ஒதுக்கி விட்டால் இவனால் தாங்கிக் கொள்ள முடியுமா? பேசாமல் மாடுகளை வித்துப்போட்டு ஏதாவது வேலைக்கு முயற்சித்தால் என்ன? தீர்மான மாக எதுவுமே செய்யாமல் குழம்புவதிலும், ஒரு தீர்க்கமான முடிவு எடுப்பது எவ்வளவு நல்லது.”
அவளது நினைவுகள் கலையும் வண்ணம் அவளது காலடியில் அந்த மேர்ஸிடஸ் பென்ஸ் கார் பாய்ந்து வந்து திடீரெனப் பிரேக் போட்டு நின்றது.
தருமூதான் காரைச் செழுத்தி வந்தான்.

சட்டநாதன் கதைகள் 0 161
‘என்ன இந்த உலகத்தையே மறந்த யோசனை. பஸ் வரேல்லையா? வீட்டதானே? ஏறுங்க மகேஸ் போகலாம்'
அவன் முன் சீற்றில் இருந்து இறங்கி வந்து, மிகுந்த மரியாதை யுடன் காரின் பின் கதவைத் தானாகவே திறந்து விட்டான்.
இவளுக்கு என்ன செய்தென்று ஒரு கணம் தோன்றவில்லை" தயங்கினாள். பின்பு தயக்கம் நீங்கியவளாய், ஒரு மரியாதை கருதி அவனது அழைப்பை ஏற்று, காரின் பின் சீற்றில் ஏறி உட்கார்த்து கொண்டாள்.
அவன் காரை ஸ்ராட் செய்ததும், திரும்பிப் பார்த்து, 'வசதியாக இருக்கா...' என்று கேட்டான்.
தனது ஆமோதிப்பை தலையசைப்பின் மூலம் தெரிவித்துக்
கொண்டாள்.
கார் செருக்கன் வீதியால் திரும்பியது. கொன்வென்ட்டை அண்மித்ததும், 'இதுதானே உங்கட ஸ்கூல்?” என்று கேட்டான்."
இவள் குரலடைத்துப் போனவளாய் மீண்டும் தலையசைத்தாள்.
செருக்கன் சந்தி வரைக்கும் அவர்கள் பேசாமல் மெளனமாக வந்தார்கள்.
“ஸ்ரட்புல்" சென்ரரைக் கார் அண்மித்ததும் ஏனோ இவள் எட்டிப் பார்த்தாள். இளமையும் வீரீயமும் மிளிர ஜேர்ஸி நாம்பன் ஒன்று நின்றது. அடுத்து சற்றுக் கிழடு தட்டிப் போன சிந்தி
Gff 101 16ðr.
செல்வம் நேற்றுக் கொண்டு வந்த ஃபிரிதியன் பசுவுடன் எது காதல் செய்திருக்கும். நிச்சயமாக ஜேர்ஸிதான் என்று அவளது மனதுக்குப்பட்டது.
மனசு இப்படி நிதானப்படாமல் சிந்திப்பதெல்லாம் இப்பொழுது இயல்பாகிய் போனது அவளுக்குக் கூச்சமாயிருந்தது. சற்று வியப்பா யுமிருந்தது.
“உங்க மாடுகளுக்கு இந்த ஸ்ரட் புல்ஸா. இன்சிமினேசன் சென்ரர் சீமனா பயன்படுத்திறது.??
தருமு கேட்டதற்கு இரண்டும்தான்' என்று பதில் தந்தது. அவளுக்கு அந்தக் கேள்வியும் பதிலும் அதிக கூச்சத்தைத் தந்திருக்க வேண்டும். முகஞ்சிவக்க, உதடுகளைப் பற்களால் அழுத்தி அழுத்திக் கடித்துப் பெரிதும் அவஸ்தைப் பட்டுக் கொண்டாள்,
*ー11

Page 91
162 ம் நீளும் பாலை
அவளுக்கு அப்பொழுது திடீரெனச் செல்வம் தருமுபற்றிச் சொன்னவை ஞாபகம் வந்தது. ஆளைப் பார்த்தால் மன்மதன் மாதிரித்தான் இருக்கிறான்'
தருமுவை அவள் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஏறிட்டுப் பார்த்த
தில்லை. இப்பொழுது அவனைப் பார்க்க வேண்டும் போலிருந்தது சீற்றின் இடப்பக்க ஓரத்திற்கு நகர்ந்து, அவனை வசதியான கோணத்திலிருந்து பார்த்தாள்.
*செல்வம் ஒன்றும் மிகைப்படுத்தவில்லை. அந்த அழகிய நெற்றியில் சரிந்து கிடக்கும் சுருட்டைத் தலைமுடி. கரு கரு என அழகாக றிம் பெய்த அந்த மீசை. திரட்சி பெற்ற சற்றுக் கருமை யான உதடுகள். அடிக்கடி சிகரட் பிடித்தனாலிருக்குமோ? அவனது அகன்ற மார்பு. நீண்ட கைகள். காரின் ஸ்ரெயரிங்கைப் பிடித் திருக்கும் லாகவம்."
அவனை எழுப்பி நிற்கவைத்துப் பார்க்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு. ஸ்ரட் சென்ரரில் கண்ட அந்த இளமை திமிர்த்த (ວິດ)fດທີ່ நாம்பனின் நினைவு அப்பொழுது ஏனோ வந்தது. அடுத்த கணம் மனசுக்கு "சீ இதென்ன..." என்று இருந்தது.
'மனசு. மனசுதானே. அதற்கு என்ன கடிவாளம் வேண்டியி ருக்கிறது. அது கட்டறுந்துபோகட்டுமே. உடல் மட்டும் அப்படி இப்படி ஆகாமல் இருந்தால் போதாதா..?
இவளது தவிப்பு முழுவதையுமே காரின் முகப்புக் கண்ணாடியில் தருமு அவதானங் கொண்டான். அவனது கவனிப்பு இவளுக்குத் தெரியவில்லை. தனக்குத் தெரிந்தது போலவும் அவன் காட்டிக் கொள்ளவில்லை.
சிலுந்தாவடி வந்ததும் இவள்;
'நான் இறங்கிக் கொள்ளவா? யாரும் பார்த்தா பிழையா நினைப்பினை."
'இதிலை என்ன பிழை மகேஸ் பஸ்ஸில்லாமல் நிண்ட இடத் திலை தந்த லிஃப்ற்ரைக் கூடப் பிழையாகக்தைக்கேலுமா? சரி சரி உங்க விருப்பம்'
அவன் இறங்கி வந்து கதவைத் திறந்து விட்டான்,
இவள், அவனை நிமிர்ந்து பார்த்து நன்றி சொன்னாள். அதே சமயம் அவனது ஆகிருதியை நன்றாகப் பார்க்கவும் செய்தாள். அவனுக்கு எந்தப் பெண்ணுடனும், எத்தனை பெண்களுடனும் சேரத் தகுதி இருப்பது போல இவளுக்குத் தோன்றியது,

சட்டநாதன் கதைகள் O 163
அடுத்த கணமே இதென்ன பைத்தியக்காரத்தனமான சேர்டிஃ பிக்கட் என நினைத்துக் கொள்ளவும் செய்தாள்.
"கவனம், பார்த்துப் ப்ோம் மகேஸ்." என்று கூறிய தருமு, அவள் போவதையே பார்த்தபடி காரை ஸ்ராட் செய்தான்.
இவள் வீடுபோய்ச் சேர்ந்து சோர்வுடன் கதிரையில் உட்கார்ந்த
பொழுது, உள்ளேவந்த செல்வம் சற்றுக் கோபமாகவே உரத்த குரலில் இவளைக் கேட்டான்:
'அந்த "ஸ்ரட்புல் லின்ரை காரிலை ஏன் வந்தனி, உனக்கு வெக்கமாயில்லை...'
"யாரது ஸ்ரட்புல்" இவள் ஒரு கணம் திகைத்துப்போனாள்.
"யார் சொன்னது..?' "மன்மதன் என்ற வாயால் தருமுவை ஸ்ரட்புல்" என்கிறான். இதுவும் ஒரு வகையிலை பொருத்தமாய்த்தான் இருக்குது.
அந்த நெருக்குதலிலும் அவனது நினைவுகள். செல்வத்தின் குரலைக் கேட்டதும் . அம்மா மாட்டுக் கொட்டில் பக்கம் இருந்து வந்து கொண்டிருந்தாள்.
அம்மாவை எதிர்கொள்ளத் துணிவு இல்லாதவனயாய் இவன் வெளியே போனான்.
O
7
அன்று சித்திரா பெளர்ணமி, பட்டவேம்பு வையிரவர் கோயிலில் பெரிய மடை ஊரே கோயிலில் திரண்டிருந்தது. செல்வம் மட்டும் வீட்டு விறாந்தையில் கிடந்த ஸோபாவில் படுத்துக் கிடந்தான். கோயிலுக்குப் போனவர்கள் வருவதற்கு இரவு பத்துமணியாகலாம்.
ஏதேதோ நினைவுகள் அவனை ஆக்கிரமித்ன.
அக்கா தருமுவின் காரில் வந்தது தற்செயல் நிகழ்ச்சியா..? அல்லது அவனது கவர்ச்சி அக்காவையும் தொட்டுவிட்டதா. வயசு வந்த பெண் உணர்வுகள் மட்டுப்படாமல் போனது அவளது குறையா..? ஐயா ஒரு பிறத்தியான் மனோபாவத்துடன் நடந்து கொள்வது எதனால் எல்லாமே என் பொறுப்புத்தானா பண்ணை பயன் தருமென்ற நம்பிக்கை இல்லாலே போய்விட்டதே மாடுகள்

Page 92
164 O நீளும் பாலை
என்ன மாதிரிக் கொட்டிண்டு போய்விட்டன. கால்விலை அரை விலைக்கு அவற்றை விற்று ஈட்டுக் கடனை அடைக்க முடியுமா? வரதா . அவள் பற்றிய நினைவுகளாக மட்டும் தங்கிவிட வேண்டியது தானா..?
தன்னை மறந்த சிந்தனையில் கிடந்தவன் சற்று அயர்ந்து தூங்கிவிட்டான்.
குளிர்ந்த ஸ்பரிசம் அவனை விழிப்புக் கொள்ள வைத்தது.
*செல்வம்..!' என்ற அழைப்பு அவனது காதைக் கடித்தது.
வரதா மிக மிக நெருக்கமாக அவனுக்குப் பக்கத்தில் குத்துக் காலில் இருந்தாள்.
*கோயிலுக்குப் போகேல்லையா?"
* 'இல்லை’
"நான் இருப்பது."
*தெரியும். அதுதான் வந்தனான்!"
'வந்ததுசரி, என்ன விசயம் சொல்லு"
“எனக்கு உங்க முடிவு தெரிய வேணும்'
'அவசரமா? அக்கா இருக்கேக்கை?'
'ஆனா, வீட்டிலை அவசரப் படுகினை"
'நல்ல மாப்பிளையா வந்தாச் சரியெண்டு சொல்லன்."
அவள் எழுந்து நின்றபடி, அவனது மார்பில் படபடவென்று குத்தினாள். குத்திய வேகத்திலேயே சுருண்டு உட்கார்த்து விசும்பத் தொடங்கினாள்.
அவனால் அதை தாள முடியவில்லை; அன்புடன் அவனது கூந்தலை வருடியபடி: ܫ
'மாடுகளை வித்துக் கடனை அரைவாசியாவது அடைச்சுப் போட்டு, ஒரு உத்தியோகம் கிடைச்ச பிறகுதான் எல்லாம். அக்கா வுக்கும் ஏதாவது நடக்க வேணும். ஒரு இரண்டு வருவடிமாவது நீ பொறுமையா இருக்க வேணும் வரதா.’’ -
‘இந்த மாடுகள் வந்துதான் எல்லாமே சீரழிஞ்சு போச்சு. உங்கடை கோலத்தைக் கண்ணாலை பார்க்கேலாது. Golonuiuiúie

சட்டநாதன் கதைகள் O 165
குளித்து ரோமக்கட்டெல்லாம் புலுண்டிப் போயிட்டுது. படிச்ச படிப்புக்கு இப்படி ஒரு அலைச்சல் அலைய வேணுமா'
"படிப்புச்சரி, வேலை கிடைக்கேல்லையே வரதா! ஏதோ நாலு பேர் மதிச்சு நடக்க, கையிலை நாலு காசு கிடைக்குமெண்டுதானே இந்த முயற்சி. எல்லாம் வீணாய்ப் போச்சு. மாமா கூட இது வேண்டாமெண்டு தடுத்தார். தங்கச்சி பிள்ளை எண்டு எனக்கொரு வழி காட்டயிருக்கலாம். என்ரை வரதாக் குஞ்சு இங்க வாறதே அவருக்கு விருப்பமில்லையாமே. உனக்குத் தெரியுமா?"
அவள் அவனது உதடுகளைப் பேசவிடாமல் தனது மிருதுவான கைவிரல்களால் பொத்தினாள்.
"அப்பா, நேரம் ஒருமாதிரி, மருமகன் உத்தியோகம் ஏதுமில்லா மல் மாட்டுக்குப் பின்னாலை சாணி பொறுக்கிறதுதான் அவருக்குப் பிடிக்கேல்லை"
'அவரைச் சாட்டி நீ என்ரை முயற்சியைக் கொக்சைப் படுத்திறை"
இல்லைச் செல்வம்! இந்தமாட்டுப் பண்ணையெல்லாம் வேண்டாம். பட்டதாரி ஆசிரியர்களைப் பயிற்சிக்கு செலெக்ட் புண்ணுகினை. பாத்துப் போடுங்க."
அவள் எழுந்ததும் இதனும் எழுந்து கொண்டான். அவனது தோளின் உயரத்திற்குக் கூட அவள் வரவில்லை.
திடீரென அவள் எதிர்பாராத வேளை அவளை அணைத்துஒரு சிறு குழந்தையைத் தூக்குவது போலத் தூக்கி அவள் உதடுகளில் ஆழமாக முத்தமிட்டான்.
சிறிது பதட்டத்துடனும், கூச்சத்துடனும், 'இதென்னரெளடித் த்னம்" என்று செல்லமாகச் சிணுங்கியவள், அவனது பிடியிலிருந்து விடுபட்டு, விலகிப்போனாள்.
இந்தப் பெட்டை ஏமாறாமல் பார்த்துக்கொள்ள வேணும். என அவள் அப்பொழுது நினைத்துக் கொண்டான்.
8
தருமு தனது தொழிலையே மறந்தவனாய் மகேஸ்வரியின் பின்னால் சுற்றினான். மகேஸ்வரியின்மீது அவனுக்கு அப்படி ஒன்றும் காதல் இல்லை.
அவனது வாழ்க்கையில் பல பெண்களுடைய உறவும் தொடர்பும் அவனுக்கு இருந்தது. அவர்கள் பல தரத்தினர்.

Page 93
166 O நீளும் பாலை
கிரான்பாஸ் றோட்டில் சுலைமான்ஸாக்கு அருகில் ஒரு அழகான, சிங்களப் பெண்ணோடு கூட அவன் உறவு கொண்டிருந்தான். அவனள நினைக்கு தோறும் கருஞ்சிவப்பு அராபியக்குதிரையின் நினைவுவுதான் அவனுக்கு வரும். கறுப்பிலும் ஒரு அழகு இருக்கு மென்றால், அவள் அப்படி ஒரு அழகி.
அந்த உறவு விட்டுப் போனதும் மட்டக்களப்பில் தனியார் மருத்துவ மனையொன்றில் ஒரு பெண் ஆர் எம். பியுடன் சிநேகம் ஏற்பட்டது அவளுக்குச் சேவகம் செய்த தாதியைக் கூட இவன் விட்டு வைக்கவில்லை
செங்கலடியில், அவனது மில்லில் வேலை செய்யும் லீலாவதி என்ற பெண்ணிடமும் அவசரம் என்றால் மட்டும் போவான்
மகேஸ்வரி ஈட்டுப் பணம் கேட்டு வந்த அன்றே இவனது கண் அவளில் விழுந்துவிட்டது.
குடும்பப் பெண், மிகவும் கண்ணியமாக நடந்து அவளைக் கவர்ந்து கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டான்.
செபஸ்தியார் கோயிலடியில் தனது காரில் அவளை ஏற்றிக் கொண்ட தெல்லாம் தற்செயல் நிகழ்ச்சியல்ல, அவன் திட்டமிட்டு முன்யோசனையுடன் செய்து கொண்டதுதான்.
அன்றைய சந்திப்பு, தன்பால் அவள் இலகுவாக ஈர்க்கப்பட்டு விடுவாள் என்பதை நன்றாகவே அவனுக்குணர்த்தியது.
அந்தப் புரிதல் அவனை அவள்பால் மேலும் நெருக்கம் Gas Tsirr வைத்தது.
அவளுக்கு அவனிடம் பால் உணர்வின் ஈர்ப்பு இருந்தது. முதிர்ச்சியடைந்த பெண்ணாதலால் அதனை அவள் நிதானமாக வெளிப்படுத்து வதாகவே அவனுக்குத் தோன்றியது. முப்பது வயதிலும் திருமணமாகாத நிலை. அவளது அடக்கப்பட்ட பாலுணர்வின் இனிய விகசிப்பை இவனது 'அனுபவப்பட்ட ஆண் மனம் புரிந்து கொண்டது அந்த உணர்வை அவள் காதல் என்ற போர்வை போர்த்துவதாகவே இவனுக்குப் பட்டது. இவனது இயல்பு களுக்கு மாறாக, அந்தப் பெண்ணை இவனும் காதலிப்பதாகவே பாவனை பண்ணினான்.
இன்று அவளது பிறந்த நாளென்பதால் பொய் சொல்லிவிட்டு
யாழ்ப்பாணம் புறப்பட்டிருக்கிறாள். இவன் அவளை சுபாஸ் கபேக்கு முன்னால் சந்திப்பதாக ஏற்பாடு. - - -

சட்டநாதன் கதைகள் O 167
சுபாஸின் முன்னால் காரைப் பார்க்' பண்ணிவிட்டு நிமிர்ந்த, பொழுது அவள் இவனை நோக்கி வருவது தெரிந்தது, அவளது கண்களிலும் உதட்டிலும் இருந்த சிரிப்பு இவனைக் கிறுக்கம் கொள்ள வைத்தது.
'இது. இது அப்பட்டமான பால் உணர்வு மட்டுமா. அவளது தீராத காதலை உணர்த்துவதாகவும் இருக்கிறதே!
ஆச்சரியப்பட்டவனை அவளது பேச்சு நிதானப்படுத்தியது.
'முதலில் இனிப்பாக ஏதாவது சாப்பிடுவம்.'
‘இவற்றைவிடவா.’ என்று அவளது உதடுகளை மெதுவாக விரல்களால் வருடினான்.
‘என்ன இது நடுரோட்டிலை."
இருவரும் சுபாஸில் நுழைந்து, வசதியாக இடம் பார்த்து உட்கார்ந்து கொண்டார்கள். எயர் கொண்டிசன் 9g5LD mrais இருந்தது.
அவள் ஐஸ்கிரீமுக்குத்தான் ஒடர் கொடுத்தாள்.
'ஏதாவது ஹொட்டாக'
இல்லை. இன்று இதுதான், எனக்காக...' என்று கனிவாக அவனைப் பார்த்தாள்,
ஐஸ்கிறீம் சாப்பிட்டு வெளியே வந்ததும் இருவரும் பீடா போட்டுக் கொண்டார்கள். அவன் ஒரு பாக்கெட் பிறிஸ்ரல்" வாங்கிக் கொண்டான்.
9 s
காரில் ஏறியதும் ‘எங்க போவம்.’’ என்று அவள் கேட்டாள்.
உண்மையில் அவனுக்கு எங்கு போவது என்ற உத்தேசம் ஏதும் இல்லை. அவளோடு ஊர் சுற்றினால் போதுமென்றிருந்தது. அவளை ஏதாவது தனியறைக்கு அழைத்துச் செல்வதில் அவனுக்கு ஆர்வமிருந்த பொழுதிலும், அவளது மனோநிலையை அனுசரித்து, நல்ல பிள்வையாகவே நடந்து கொள்ள விரும்பினான். கையில் விழுந்த கனி நழுவிவிட முடியுமா என்ன? அப்படி ஒன்றும் ஆகாது என்பது அவனது அனுமானம்.
'கோயிலுக்கு. நல்லூருக்கு முதல்லை போவம்.' "ச .' என்று காரை ஸ்ராட் செய்தான். அவனது கரங்களைப் பற்றியபடி அவனோடு இணைந்து நெருக்கமாகவே இவள் உட்கார்ந்து கொண்டாள்.

Page 94
168 ல் நீளும் பாலை
கோயில் கலகலப்பாக இருந்நது. பூசை நேரம் கால் அலம்பிய பின் இருவரும் உள்ளே சென்று, உள்வீதியைச் சுற்றி வந்தார்கள். அவள் மட்டும் முத்துக்குமாரசாமியின் சந்நிதியில் மீளவும் போய் நின்று கொண்டாள்.
இவனுக்கு அலுப்பாக இருந்தது. அதே சமயம் அவளது நம்பிக் கைகள் அவனுக்கு பயமூட்டுவதாகவும் இருந்தது.
‘என்ன வேர் கொண்டாச்சா.''' அவளைநெருங்கி மெதுவாகக் கேட்டான்.
விழிகளை அலர்த்தி; அவனை நிமிர்ந்து பார்த்தவள், ‘முத்துக் குமரன் விடமாட்டான். கைவிடமாட்டான்." என்று ஏதோ பிதற்றியபடி அவனது கரங்களை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள், குமரனுக்கு அர்ச்சனை செய்த விபூதியையும் சந்தனத்தையும் அவனது நெற்றியில் இட்டுவிட்டுத் தானும் பூசிக் கொண்டாள்.
இந்த அனுபவம் அவனுக்கு புதியது. படுக்கை அறையின் புழுக்கம் - கல்விக்குப் பின்னால் திகையும் அலுப்பு, வேர்வையின் நாற்றம், மதுவாடை, சிகரட் புகையின் நெடி இவைதான் புகையின் நெடி இவைதான் அவனுக்குப் பழக்கப்பட்டவை. அவளு டான இந்த அனுபவம் அவனைத் திகைக்க வைப்பதாய் இருந்தது.
'கீரிமலைக்குப் போவமா’ அவள்தான் கேட்டாள். *உன்ரை விருப்பம்’ மருதானானடத்தை அவர்கள் அண்மித்தபோது இராமநாதன் கல்லூரி இடைவேளை, மாணவிகள் மதிய உணவுக்கு வெளியே வந்ாசி கொண்டிருந்தார்கள். வெண்புறாவின் படபடப்பை அவர்களில் கண்ட வேட்கை ததும்ப வெறித்து வெறித்துப் பார்த்தான்.
அதனை அவதானங்கொண்ட அவள்: * பெட்டைப் பொறுக்கி. பெட்டைப் பொறுக்கி." என அவனது காதில் மட்டும் விழுமாறு செல்லமாக சிணுங்கினாள்.
கள்ளப்பட்ட அவன், "அழகு ஆராதிப்பதற்காம். உனக்குத் தெயாது" என்று ஏதேதோ பசப்பியவாறு, அவளது நெற்றியில் செல்லமாக முத்தமிடவும் செய்தான்.
கார் நிதானமாக கீரிமலை நோக்கி முன்னேறியது. "இந்த நிதானம் இவனுக்கு. இவனுக்கு ஏன் வாழ்க்கையில் வரமாட்டேன் என்கிறது. எல்லாம் வரும். இனிமேல் வரும். குடும்பம், வாழ்க்ெை என்று வந்தால் எல்லாம் தானாக வரத்தானே வேணும்.'
அவள் மனசைத் தேற்றிக்கொண்டாள். O

சட்டநாதன் கதைகள் O 169
மகேஸ்வரி வீட்டுக்கு வந்தபொழுது, இரவு ஏழுமணிக்கு மேலாகிவிட்டது. மிகுந்த கலக்கத்துடனேயே அவள் வீட்டினுள் காலடி எடுத்து வைத்தாள். 文
எங்க மகேஸ் போயிட்டு வாறை'.
'பள்ளிக்கூடத்துக்குத்தான். பஸ் கிடைக்கில்லே அதுதான்.'
"ஏன் தருமன் கார் கொண்டு வந்திருப்பானே.?"
** என்ன விசர்க் கதை'
‘எதடிவிசர்,அமர் பிடிச்ச. இதென்ன அலைச்சலடி மானம் போறமாதிரி.'
அம்மா அக்காவின் தலையைப் பிடித்து இழுத்துச் சுவரோடு மோதினாள்.
அக்கா தலையைத் தாங்கிப்பிடித்தபடி அப்படியே உட்கார்ந்து கொண்டாள். புருவம் வெடித்து இரத்தம் வடிந்தது.
சின்னவன் ரகுவால் தாளமுடியவில்லை. அக்காவைக் கட்டிப் பிடித்தபடி கதறத் தொடங்கிவிட்டான்.
அம்மாவாலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை.தனதுதலையை அவளும் சுவருடன் மோதிக் கொண்டாள்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த செல்வம் அக்காவைப் பார்த்துக் கேட்டான்:
*அந்தப் பொம்பிளைப்பொறிக்கி உன்னை ஏமாத்தினா என்ன செய்வை அக்கா?”
'பிள்ளையும் வயிறுமாத்தான் இந்தந் தேவடியாள் வந்து நிக்கப்போறாள்.'
சத்தம்போடாதையணை. என்று தாயை அதட்டிய செல்வம் அக்காவின் தலையை நிமிர்த்தினான். அதில், அந்த முகத்தில் தெரிந்த உணர்ச்சி இவனை ஒடுங்கி உறைந்துபோகவைத்தது.
உதடுகள் துடிக்க, அவள் இவனைப் பார்த்தபடியே இருந்தாள். நிலைகுத்திய அந்தப்பார்வை இவனை நடுங்க வைத்திருக்க கண்கலங்கிய நிலையில் அவளைப் பார்த்துக்கேட்டான் . فالي 661 6ضا

Page 95
170 O நீளும் பாலை
'அக்கா...! என்ன. என்ன. பேசக்கா. மனசில கிடக்கிறதைக் கொட்டிப் பேசக்கா."
அக்கா எதுவும் பேசாமல் எழுந்து தனது அறையுள் சென்று கதவை அடித்துச் சாத்திக் கொண்டாள்.
அவன் துயரம் பொங்க அம்மாவைப் பார்த்தான்.
அம்மா பைத்தியம் பிடித்தவள்போல தலை தலையென்று அடித்துக் கொண்டு ஏதேதோ புலம்பிக் கொண்டிருந்தாள்.
அவள் கட்டிக் காத்த செல்வம், பரம்பரைப் பெருமை, தாவடிக் காரர் எனும் உயர்சாதி அந்தஸ்து, கெளரவம், அனைத்துமே கொட்டிச் சிந்தியதான அவலம் அவளுக்கு.
அந்தத் தாய் தனது துன்பத்தை, துயரத்தை அழுதுதானே தீர்த்துக் கொள்ள முடியும்.
செல்வத்திற்கு என்ன செய்வதென்று தெரியாத ஒரு நிலை. அந்தச் சூழலில் இருந்து விடுபடும் உணர்வுடன் மல்லிகைப் பந்தலை நோக்கி நடந்தான். பந்தலின் கீழ் இருந்த கதிரையில் உட்கார்ந்த வனுக்கு எல்லாமே அர்த்தம் இழந்து சூனியமாக இருந்தது.
எதிலை பிழை? பொறுப்பு எதுவுமே இல்லாத ஐயாவிலா. எனது கையாலாகாத்தனத்திலா. இந்த அமைப்பு. இதன் சதியா..? குறையாத கல்விச் செல்வம் மட்டும் கிடைத்தது. அதுவும் வ்வளவு ஒறுப்புக்களுடனும் சிரமங்களுடனும். அக்கா மட்டும் படிக்காமல் இருந்திருந்தால் நான் படித்திருக்க முடியுமா? அவள் எவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டாள் எனது படிப்பு விஷயத்தில். தனது உழைப்பில் தனக்கென்று ஏதாவது மீதப்படுத்தியிருப்பாளா..? எங்களுடன் பிறந்து என்ன சுகத்தைக் கண்டுவிட்டாள். தன்னை எல்லா நிலையிலும் ஒடுக்கி ஒடுக்கிப் பழகிக் கொண்டவள். தருமுவின் தொடர்புகளால் தன்னை அழித்துக் கொள்ளப் போகிறாளா? ஒரு வேளை அவளது செளந்தரியமும் இதமும் தருமுவைப் புனித மாக்குமா...'
அவனது மனது மிகவும் துயருற்றது.
ஐயா செருமும் சத்தம் கேட்டது. இவன் எழுந்து உள்ளே போனான்.
ஐயாவைப் பார்த்ததும் அம்மா பெருங்குரலில் அழத் தொடங்கி விட்டாள்.
A.

சட்டநாதன் கதைகள் o
விஷயத்தைக் கேட்டதும் ஐயா அப்படியொன்றும் ஆடிப் போய் விடவில்லை.
"தருமன்தானே கேட்டுப் பாத்தாப் போச்சு. அவன் சிவலிங்கம் சுண்டி எடுத்த சாதிமான். அவள் பொடிச்சி, தருமன்ரை தாய் சிவக்கொழுந்திதான் அப்படி இப்படி, இதையெல்லாம் இப்ப யார் பார்க்கினை"
'அந்தப் பொட்டைப் பொறுக்கி உங்க மகளைச் சீரும் சிறப்புமா வைச்சிருக்கப் போறானே. அவனுக்கு காலுக்கை நாலு , தலைக்கை நாலு பொம்பிளை வேணும். இவள் என்ன பெரிய உசத்தியா அவனுக்குப் பத்தோடை பதிணொண்டு அத்தோட்ை இதொண்டு அவ்வளவுதான்.'
அம்மாவின் பிலாக்கணம் ஐயாவுக்கு எரிச்சலூட்டியிருக்க வேண்டும்.
'சரி சரி எழும்பு, என்ன சாப்பாடு இருக்கு. தட்டைப் போடு."
gy
இதென்ன கூத்திது. இஞ்சை சாவீடு மாதிரி இருக்கேக்கை, சரி சரி. அடுப்படியிலை போய் நீயே கொட்டிக்க...'
அவளது இளக்காரமும் அஃறிணை விழிப்பும் இப்படி எப்பொழு தாவது இருந்துவிட்டு வந்து விடுவதுண்டு.
ஐயா அப்பொழுதெல்லாம் அடிபட்ட நீர்ப்பாம்பு மாதிரி விலகிக் கொள்வார்.
அம்மா ரகுவைப் பார்த்தாள். அவன் நிலத்தில் சுருண்டு படுத்துத் தூங்கி விட்டான்.
குழந்தையை வாரி எடுத்துக் கட்டிலில் போட்டவள், தானும் பக்கத்தில் படுத்துக் கொண்டாள்.
திடீரென்று ஏதோ ஒரு பயம் அவனைக் கெளவிக் கொண்டது. 'அக்கா அறையில் ஏதாவது வீம்பாகச் செய்து கொண்டால்? அவனுக்கு நினைக்கவே பயமாக இருந்தது. தூக்கமில்லாமல் புரண்டு, புரண்டு படுத்தவன், ‘அப்படியொன்றும் நடக்காது' என்று மனதைத் தேற்றிக் கொண்டு கண்ணயர்ந்தது புலரியில்தான்.
O

Page 96
172 ம் நீளும் பாலை
10
அக்கா இப்பொழுதுதெல்லாம் யாருடனும் முகம் கொடுத்துக் கதைப்பதில்லை. அவள் சிரித்துப் பேசி எத்தனை நாட்களாகி விட்டன. நடைப்பிணமாக இயங்கும் அவள் தருமுவுடன் சுற்றுவதிை மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. அது அவளால் முடியாமலே போய் விட்டது.
திடீரென ஒரு நாள், பாடசாலை முடிந்து வந்தவள் “இத்தா உன்ரை காணியுறுதி " என்று அம்மாவின் முகத்தைப் பார்த்து உறுதிக் கட்டுக்களை விட்டெறிந்தாள்.
"அக்காவின் கோபம் புரிந்து கொள்ளக் கூடியதுதான். விரும் பியோ விரும்பாமலோ தருமுவுடனான அவளது உறவுக்கு ஒரு வகையில் இந்தக் காணி உறுதியும் காரணம்தானே.
"என்ன இது. எப்படி. எப்படித் தருமன் காசு கட்டாமல் ஈட்டுறுதியைத் தந்தவன்."
அம்மாவுக்குச் சந்தோஷம் தாள முடியவில்லை. தருமனிடம் அக்கா கொண்டுள்ள தொடர்புகள் எவ்வளவு தூரம் அம்மாவைப் பாதித்ததோ, அதைவிட அவளது சீதனக்காணியின் ஈடு அவளை மிகவும் பாதித்தது. ኦ›
ஈட்டுறுதியைக் கண்டதும் அவளுக்கு வாயெல்லாம் ustaira விட்டது. -
அம்மாவைப் பார்க்க அவனுக்கும் பரிதாபமாக இருந்தது, இழத்தற்கரிய தனது செல்வ மகளை இழந்துதான் இதை அவள்
பெற்றுக் கொண்டாள் என்பதை ஏனோ அந்தப் பேதை மனம் புரிந்து கொள்ளவில்லை.
முகம் கழுவி, கைகால் அலம்பி வந்த அக்கா, நீண்ட நேரம் சாமி அறையில் இருந்தாள். இரண்டு நீண்ட கடித உறைகளை முருகனின் பாதங்களில் வைத்து வணங்கிவிட்டு வெளியே வந்தவள்:
*செல்வம்!" என்று கூப்பிட்டாள்.
எத்தனை நாட்களுக்குப் பிறகு அக்கா கூப்பிடுகின்றாள்.
அவனுக்குக் கண்கள் கலங்கி விடுகின்றன.

சட்டநாதன் கதைகள் O 173
கடித உறையில் இருந்த விண்ணப்பப் படிவங்களை எடுத்து அவன் முன் வைத்தாள்.
பட்டதாரிப் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு மனு அது. அவனால் நம்ப முடியவில்லை. அவனை அழுத்தும் தொல்லைகளால் அவன் இது பற்றிக் கவனம் கொள்ளவில்லை. அக்கா எதிலோ பார்த்து எழுதி, விண்ணப்பங்களைத் தயாரித்துக் கொண்டு வந்திருக் கின்றாள்.
நீர் மல்கும் கண்களால் அவளைப் பார்த்தான் அவள் உதடு களில் நெகுழும் லேசான முறுவல், ஒரு கணம்தான்; பின் முகம் உறைந்து இறுக்கங் கண்டது.
அவன் அக்காவின் கைகளை வாஞ்சையுடன் பற்றிக் கொண் டிான்.
இவன் விண்ணப்பத்தில் கையெழுத்திட்டதும்: "நீயே போஸ்ட் பண்ணு, பதிவுத் தபாலிலை அனுப்பு' என்றவள் - மற்ற உறையிலிருந்த வேறு கடிதமொன்றை எடுத்து இவனிடம் தந்தாள்.
அது அவளது வேலை மாற்றக் கடிதம். அவள் மாற்றம் பெற்று மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் கல்லூரிக்குப் போவதான கடிதம்.
"ஏன் இப்படி.." என்று எதுவும் அவன் கேட்கவில்லை. அடுத்த மாதம் முதலாந்திகதியிலிருந்து அவள் வேலை ஏற்க வேண்டுமென்று கடிதத்தில் இருந்தது.
"எல்லாம் தருமுவின் ஏற்பாடாக இருக்க வேணும். அக்காவும் இதற்கு இசைவு தந்திருக்கலாம். ஊருக்குள் நாலுபேர் நாலுவித மாகக் கதைப்பார்களே என்ற கூச்சமாகக் கூட அவளுக்கு இருந் திருக்கும்!’
அக்கா, அம்மாவுக்கோ ஐயாவுக்கோ எதுவும் சொல்ல வில்லை. அவர்களைப் பிரிவதில் கூட அவள் அதிகம் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. செல்வத்தையும், ரகுவையும் அவளால் எப்படி மறக்க முடியும்? அவளைப் பொறுத்தவரையில் அவளது கண்களின் மணி போன்றவர்கள் அல்லவா அவர்கள்.
தனது அறைக்குச் சென்றவள், திடீரென வெளியே வந்து இவனைப் பார்த்துச் சொன்னாள்:

Page 97
174 O நீளும் பாலை
'மாடுகளை இப்ப விக்கிறது நட்டம். எண்டாலும் பரவரி யில்லை. வித்துப் போட்டு சில்லறைக் கடன் முழுவதையும் அடைச்சுப் போடு. ஏதாவது மிச்சம் வந்தா அம்மாவின்ரை கையிலை கொடு."
‘இவன் ரகு.ரகுவைத்தான் நல்ல கவனமாகப் படிப்பிச்சுப் போடு. படிப்புந்தான் எங்களுக்கு மிச்சம். வரதாப் பெட்டையைக் கண்டா நான் கேட்டதாகச் சொல்லு. அவளும் இப்ப இந்தப் பக்கம் வாறேல்லை. கெட்டுப் போனவளோடை என்ன பேச்செண்டு மாமா மறிச்சுப் போட்டார் போல உத்தியோக மாப்பிளை எண்டு மாமா வுக்கு உன்னுலை இனி விருப்பம் வந்தாலும் வரும். பயிற்சி முடிஞ்சு ரீச்சிங் அப்பொயின்மென்ரை மட்டக்களப்பிலை எடன்."
சிறிது தயங்கியவள் தொடர்ந்து சொன்னாள்:
*வேண்டாம். இந்தக் கேடுகெட்டவளுடைய சகவாசம் உனக்கு வேண்டாம். நீ உழைக்கிறவரைக்கும் அம்மாவுக்கு நான் ஏதாவது அனுப்புவன்.”
'அக்கா நீ நல்லா இருப்ப தருமு உன்ரை நல்ல குணத்தைப் புரீஞ்சு நல்லா ஏன் நடக்கமாட்டுது.' -
'அந்த நம்பிக்கைதான் என்னை நடைப்பிணமாக்காமல் வைத்தி ருக்குது. இந்த முடிவு நான் எடுத்ததுதான். சற்று உணர்ச்சி வசப் பட்டதாய்க் கூட இருக்கலாம். அந்த ஆள் ஒரு மாதிரி எண்டு தெரிஞ்சும் பைத்தியமாய் அதற்கு ஆள்பட்டிட்டன். உங்க அக்கா அப்படி ஒண்டும் கெட்டுப்போகேல்லை ஊர்லை கதைக்கிற மாதிரி. கழுத்திலை தாலி ஏறின பிறகுதான் எல்லாம். அதுக்கு தருமுவும் ஒத்துக் கொண்டது. எங்கையாவது கோயிலிலை, அது முருகன் சந்நிதியாக இருந்தா எனக்குச் சந்தோஷம்.'
அக்கா உணர்ச்சி பொங்கப் பேசுவதை அவன் கேட்டுக் கொண்டிருந்தான். ܊..
அவனது மனசு அவளது நல்வாழ்விற்காகப் பிரார்த்தித்தது.
அக்கா மட்டக்களப்புக்குச் சென்று இரண்டு மாதமாகி விட்டது. இரண்டு தினங்களுக்கு முன்னர் இரண்டாயிரய் ரூபாயிக்குக்கான எம். ஓவும், ஒரு சிறு துண்டுக் கடிதமும் இவனுக்கு வந்தது.

சட்டநாதன் கதைகள் O 175
'காசை மாற்றி அம்மாவிடம் கொடு. பட்டதாரிப் பயிற்சி நெறி ாப்பொழுது..? ஏதாவது அது பற்றிப் பதில் வந்ததா? என்ற விசாரிப்பு வட்டுமே கடிதத்தில் கண்டிருந்தது.அவளைப்பற்றி ஒரு வரிகூட இடம்பெறவில்லை.
"அவள் பாவம் . காசு அனுப்ப வேண்டாம் எண்டு எழுது.
அம்மாதான் சொன்னாள். எல்லாமே ஒரு பேச்சுக்குத்தான் என அதன் புரிந்து கொண்டான்
அக்காவின் காசிலதான் எதுவும் நடக்க வேண்டும் என்ற நிலை அவனுக்குக் கவலை தருவதாக இருந்தது.
பசுமாடுகளை விற்பதற்கு சுந்தரத்தைத்தான் அவன் அணுர கினான். 'நாலு பசுவும் கண்டுபோட்டபின் விற்றால் என்ன?’ என்பது அவரது அபிப்பிராயமாக இருந்தது. இரண்ரொரு மாதம் இடை விட்டுப் பசுக்கள் கண்டுபோடக் கூடும் வற்ற மூன்று பசுக்களும் கண்டு பட்டிருந்தன.
ஐயா "கருவாம் ஜேர்ஸியை மட்டும் விற்கவேண்டாம். வீட்டுத் தேவைக்கு வேணும் தானே..' என்றார்.
"இளம் பசு’ அடக்கமானது, குழந்தை கூடப் பால்கறக்கலாம்' என்பது அவரது அபிப்பிராயம்.
அவரது அபிப்பிராயங்கள் கூட சில வேளைகளில் சரியாகவே அமைந்து விடுவது அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது.
அக்காவைப் பற்றி முழுமையாக மறந்து போனவராய்த்தான் அவர் இருந்தார். அவரது மூத்தபிள்ளை ஒரு பெண் என்பது கூட அவருக்கு ஞாபகம் விட்டுப் போய்விட்டது.
அம்மாதான் அக்காவைப் பற்றி ஏதாவது "பிசாத்திக் கொண்டி ருந்தாள்.
இவனது மனம் அக்காவை ஜெபித்துக் கொள்ளாத வேளை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ரகு தனது இரண்டாம் வகுப்புப் புத்தகத்தில் அக்காவின் சிறிய படம் ஒன்றை ஒட்டி வைத்திருக்கின்றான். அந்தப் பிஞ்சு மனது அக்காவின் பிரிவைத் தாள முடியாது துயறுருவது இவனைப் பெரிதும் கலக்கமடையச் செய்தது.
வரதா, வீட்டுட்பக்கம் முன்பு அடிக்கடி வருவாள். இப்பொழுது வருவதைக் குறைத்துக் கொண்டு விட்டாள். இவனது பட்டதாரிப்

Page 98
176 O நீளும் பாலை
பயிற்சி நெறி பற்றிய விபரம் அறிந்திருந்தும் அவள் இவனைச் சந்திப்பதையே தவிர்த்துக் கொள்வது ஏன்.? இவனுக்கு ஆச்சரியமா யிருந்தது.
ரகுதான் **வரதா மச்சாள் எப்ப றெயினிங் எண்டு கேட்டவ அண்ணை.' என்றான்.
அதற்கு இவன், ‘அவளை வந்து கேக்கச் சொல்லடா." என்று சிரித்தபடி பதில் தந்தான்.
ஆனால், வரதா மட்டும் கண்ணில் படுவதே இல்லை.
அன்று பிள்ளையார் சதுர்த்தி; அதுவும் ஆவணிச் சதுர்த்தி.
இலந்தை வனப் பிள்ளையார் கோயில் வருடாந்த உற்சவம் வேறு நடைபெறுகிறது. இரண்டாம் திருவிழா. இவன் கோயில்பக்கம் போய் வருவோம் எனப் புறப்பட்டான்.
தாவாடித் தோட்டத்தைக் கடந்து, வடக்கு வயலுக்குள் இறங்கும் போது, முத்தையர் வளவுப் பனங்கூடலைக் கடந்து, வரதா போய்க் கொண்டிருந்தாள்.
அவன் எட்டி நடந்தான். விதானையார் வீட்டடியில் அவளுக்குக் குரல் கொடுத்தான்.
'வரதா..!"
அவள் திரும்பிப்பார்த்தாள். கண்களில் நீர் முட்டிவிட்டது. உதடுகள் துடிக்க நின்றாள். இள நீலப்பட்டுப் புடவையில் அவள் அழகாக இருந்தாள்.
கால் நகர்த்தாமல் நிலம் பாவியவள், இவனைப் பார்ப்பதற்கே தயக்கம் கொண்டவளாய் இவனில் இருந்த பார்வையை வேறு பக்கம் திருப்பி நடக்க ஆரம்பித்தாள்.
“என்ன வரதா இது. கொம்பு முளைச்ச குணம். உனக்கு உன்ரை அப்பற்ரை புத்தி வந்திட்டுதா."
'அம்மாதான் உங்க வீட்டை போக வேண்டாமெண்டவ. ஒடுகாலி வீட்டுப் பக்கம் போனா உன்ரை காலை அடிச்சு முறிப்பன் எண்டவ...'
'ஆர் ஒடுகாலி. அக்காவா? இவள் என்ன சொல்லுகிறாள். அவனது மனம் மிகுந்த துயரங் கொண்டது.

சட்டநாதன் கதைகள் O177
'அதற்கும் இதற்கும் என்ன வரதா..? அவ முறைப்படி தருமுவைத் தாலி கட்டித்தானே சடங்கு செய்தவ."
"தெரியுமே. அவள் ஏளனமாகச் சிரித்தாள்.
அவனுக்குப் புண்ணுக்குப் புனுகு தடவியது போல் பற்றிக் கொண்டு வந்தது. என்ன ஏது என்று கேட்காமலேயே அவளது கன்னத்தில் பளிரென அறைந்தான்.
அவள் இதனை எதிர்பார்க்கவில்லை கண் கலங்க இவனைப் பார்த்தாள். கோயிலுக்குப் போகாமல் அவள் திடீரெனத் திரும்பி நடந்தாள். அது அவனுக்குச் சங்கடமாய்ப் போய்விட்டது. அவளைத் தடுப்பதற்கோ, கோயிலுக்கு அழைத்துச் செல்வதற்கோ அவனால் முடியவில்லை.
சிறிது தூரம் போனவள், திரும்பி நின்று, 'உங்கடை சங்காந்தமே இனி வேண்டாம்.’’ என்று விசும்பியதை இவனால் தாள முடியவில்லை.
‘இனி என்ன கோயில்..?
அவளைப் போல இவனால் உடனே திரும்ப முடியவில்லை. கோயில் பக்கம் போய்விட்டு, ஏழு மணியளவில் வீடு வந்தான்.
அம்மா திண்ணையில் முடங்கிக் கிடந்தாள். இவனைக் கண்டதும் எழுந்தவள், வரதா பற்றித்தான் ஏதோ சொல்லப் போகிறாள் என்று நினைத்தான். ஆனால் அவள் கூறியது அவனையும் வரதாவையும் நிரந்தரமாகவே பிரிக்கும் செய்தியாக இருந்தது.
'உன்ரை மச்சாள் வரதாவுக்கு வண்ணார்பண்ணையிலை யாரோ பொடியனைப் பாத்திருக்காம். எஞ்சினியராம். எல்லாம் முற்றாய்ப் போச்சாம். ஆவணி பத்திலை பதிவாம். தையோடை கலியாணமாம். இவர் அண்ணர் பெட்டைக்கு வீடுவளவும், மூண்டு லட்சம் சீதனமும், மாப்பிள்ளைக்கு இரண்டு லட்சம் டொனேசனும் கொடுகிறாராம்.'
அவனால் எதை நம்புவது எதை விடுவதென்று தெரிய வில்லை.
"எல்லாமே மாயத்தோற்றம்தானா? எஞ்சினியர் என்ற அந்தஸ்தில் இவள், வரதா மயங்கி விட்டாளா? இளம் பெட்டை
gー12

Page 99
178 O நீளும் பாலை
பால் உணர்வின் ஆரம்ப விகசிப்பில் பழகியிருப்பாள். அதைப் போய்க் காதல் அது இதென்று தப்புக்கணக்குப் போட்டது என்னுடைய பிழையா..?
'இல்லை. இருக்கவே இருக்காது. எவ்வளவு அன்பு பாராட்டிய ஜீவன் அவள் சற்று முன் கோயிலுக்குப் போகும் வழியில் என்னைக் கண்டதும் அவள் கண்களில் நீர் திரையிட்டது ஏன்? அதன் , பின் நடந்தவையெல்லாம் உணர்ச்சிச் சுழிப்பின் வெளிப்பாடா..? அல்லது வரதா மாறித்தான் போய்விட்டாளா...'
அவனுக்குக் குழப்பமாக இருந்தது.
அவனது உணர்வு நிலை சமன்பட்டதும் அவன் நினைத்துக் கொண்டான் :
* வரதாவின் கதி அவளது அப்பாவால் நிர்ணயம் செய்யப்பட்டு விட்டது. அவள் உண்மையில் சூழ்நிலையின் கைதி’ அவளைக் கண்டு தனது முரட்டுத் தனத்துக்கொல்லாம் மன்னிப்பு உண்டா என்று கேட்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு.
‘என்னடா நான் சொன்னது கேட்டதா? அந்தப் பெட்டை உன்ரை காலுக்கை சுற்றிச் சுற்றி வரையிக்கை நானும் ஏதோ அப்பிடி இப்பிடி எண்டு நினைச்சன். எல்லாமே பொய்யடா தம்பி. பொய்...'
**இல்லையம்மா.. எல்லாம் மாமான் ரை வேலை. பாவம் வரதா-அவளாலை ஒண்டும் செய்ய முடியேல்லைப் போல."
‘உவள் உன்ரை மாமியும் எஞ்சினியர் மாப்பிளை தான் வேணும் எண்டு ஒற்றைக்காலிலை நிக்கிறாளாம்.'
'முடிக்கப் போறது மாமியா. இல்லை வரதாவா..?’ நுனி நாக்கில் 3 ந்த வார்த்தையை கட்டுப்படுத்திக் கொண்டான்.
அவன் நெருக்கமாயிருந்த எல்லாவற்றையுமே இழந்த உணர்வோடு அம்மாவையும் மல்லிகைப் பந்தலையும் மாறி மாறிப் பார்த்தான்.
அவனுக்கு விருப்பமான குண்டு மல்லிகையின் சுகந்தம் கூட ஏனோ அப்பொழு, அவனுக்கு எரிச்சலூட்டுவதாயிருந்தது.

சட்டநாதன் கதைகள் 9 179
12
பயிற்சி வகுப்புகள் கொழும்பில்தான் நடந்தன. ஆறு லார காலப் பயிற்சி, அனுலா மகா வித்தியாலயத்தில் நடந்தது. பயிற்சிக்காலம் அவனுக்கு மிகுந்த சலிப்பூட்டுவதாகவும் சுவையற்ற தாயுமிருந்தது.
பயிற்சி முடிந்த கையுடன் அவனது நியமனக் கடிதம் கிடைத்தது. வவுனியா மாவட்டம் சாஸ்திரி கூளாங்குளத்திலுள்ள ஒரு கலவன் பாடசாலை, அவனது கடமையை எதிர்பார்த்திருந்தது.
ஆசிரியத் தொழிலில் மிகுந்த நாட்டம் கொண்ட அவன், அதற்கே உரிய கனவுகளுடனும் நம்பிக்கைகளுடனும் பாடசாலைக்குப் போனான்.
நகரில் இருந்து சைக்கிளில்தான் பிரயாணம், "அரை நேரப் பாடசாலை; காலை எட்டு மணிக்கு ஆரம்பமாகி இரண்டு மணிக்கு முடிவடையும்' என நினைத்தான். இவன் ஏழு ஐம்பத்தைந்துக் கெல்லாம் பீாடசாலையை அடைந்து விட்டான். பாடசாலைக் கேற் பூட்டிக் கிடந்தது. இவன் காத்திருந்தான். எட்டு முப்பதளவில் சற்று வயதான பெண் ஒருவர் வந்தார்.
'யாரைப் பார்க்க வேணும்.'
"அதிபரை..!"
'அப்படியா! வாருங்கள்,' என்று கேற்றைத் திறந்தபடி அவர் உள்ளே செல்ல, அவரைத் தொடர்ந்து சைக்கிளைத் தள்ளியபடி இவனும் சென்றான்.
அவர் தன்னைத் திருமதி சிவப்பிரகாசம் என அறிமுகம் செய்து கொண்டார். உப அதிபர் என்பதையும் அவர் பேச்சில் இருந்து அறிந்து கொண்டான்.
ஒன்பது மணியளவில் அதிபரின் வழுக்கை தெரிந்தது. வந்த வேகத்தில் அவரே முதல் மணியை அடித்து, பிள்ளைகளை வகுப்பில் நிற்கவைத்து, தேவாரம் பாட வைத்தார்.
தேவாரம் முடிந்த பின்னர்தான் இவனை அவர் நிமிர்ந்து A h;his if .
'புதிய நியமனம்,'

Page 100
180 நீளும் பாலை
இவனது நியமனக் கடிதங்களைக் பார்த்தவர், முகம் மலர
**நல்லது. பட்டதாரி ஆசிரியர். கலைப்பட்டதாரி. உமக்கு நிரந்தரமா 'ரைம்ரேபிள்' போட்டுத்தாறன் இண்டைக்கு ஓ. எல் லுக்கு தமிழும், சமூகக் கல்வியும் படிப்பியுமன் ?”
இவன் ஓ.எல். வகுப்புக்குப் போனான். வகுப்பில் மூன்று பிள்ளைகள்தான் இருந்தார்கள். இவனுக்கு ஏமாற்றமாய் இருந்தது.
"எங்கை மற்றப் பிள்ளைகள்?’
"அரிவு வெட்டு. அதுதான் சேர்.
பதில் கூட்டுப்பாடலாக வந்தது.
‘விவசாயக் கிராமம், பிள்ளைகளது வரவு குறைவாக இருக்க லாம். ஆனால் அதற்காக இவ்வளவு குறைவாக எப்படி..?
ஆச்சரியப்பட்ட அவன், தயக்கத்துடன் தனிப்பாடல் திரட்டில் ஒரு தாலாட்டுப் பாடலை எடுத்துச் சுவைபட விளக்கினான்.
பிள்ளைகள் அவனது கற்பித்தலில் ஈர்க்கப்பட்டதைப் புரிந்து கொண்டான்.
அவனது பாட நேரம் முடிவதற்கு முன்னதாகவே, குறுகிய நேர லீவுக்கான மணி அடித்தது. இவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. குழம்பினான்.
நேரகுசியில், குறுகிய நேர லீவு பதினொரு மணிக்கு என இருந்தது. ஆனால் பத்துமணிக்கு முன்னதாக மணியடித்து விட்டது.
அதிபரிடம் சென்று, பதவி ஏற்புக் கடிதத்தைத் தந்தவனுக்குக் கொஞ்சம் தண்ணீர் அருந்த வேண்டும் போலிருந்தது.
ஆசிரியர் அறைப்பக்கம் போனான். ஆசிரியர் அறையென்று ஏதுமில்லை. பாடசாலையின் தென் புறத்தில் ஒரு மேசையும், அதைச் சூழச் சில கதிரைகள் மட்டுமே இருந்தன. அங்கு, எல்லா ஆசிரியர்களும் சமா வைத்துக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக ஆசிரியைகளின் குரல் சற்று மிதப்பாக இருந்தது.
**சியாமளா ஏன் இண்டைக்கு வரேல்லை.?' கனகம் ரீச்சர்
தயன் கேட்டாள்

சட்டநாதன் கதைகள் 0 181
'அவவின்ரை கொழும்பு மாப்பிளை வந்திருக்கிறார். அதுதான்." ஸ்ரெலா ரீச்சரின் பதில். ‘ஆரது கொழும்பு மாப்பிளை..?' *சிவகுமாரின்ரை தம்பி. மனோகரன்தான்'
'என்ன அப்படி மோசமே..? **பொடியன் மாதத்துக்கு இரண்டு தரம் லீவிலை வருகுது. வந்தா அடுகிடை படுகிடைதான்."
இவன் தண்ணிர் குடித்து விட்டு வெளியே வந்தான். நாக்கில் நரம்பில்லாமல் வம்பு பேசும் சூழல் அவனைப் பெரிதும் தாக்கியது.
உறைந்து போனவனை அதிபர்தான் சுயதளத்திற்கு மீட்டு வந்தார்.
'ஆறாம் வகுப்பில் ரீச்சர் வரையில்லை, ஒரு பாடம் எடுமன் தம்பி.!"
*சரி' என்று தலையசைத்தவன், ஆறாம் வகுப்பில் பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா பாடலைக் கற்பித்தான்.
குழந்தைகள் அவனது கற்பித்தலில் கிறுங்கி, பூரித்துப் போயிருந்தனர்.
பாடம் முடிந்த கையுடன் ஒரு பெண் குழந்தை கேட்டாள் : 'உங்களுக்கு எங்க ரீச்சரைத் தெரியுமா சேர்.? அவவும் யாழ்ப்பாணந்தான்.'
'ஆர் உங்க ரீச்சர்.?" *சியாமளா ரீச்சர்.! அட இது கூடத் தெரியாதா..!" அவனுக்குத் தெரியாதது அவளுக்குப் பெரு வியப்பா யிருந்தது.
அவளுக்குத் தெரிந்த எல்லாமே இவனுக்கும் தெரிந்திருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது போலவும் இருந்தது.
அவள் தொடர்ந்து சொன்னாள் : ‘எங்க ரீச்சர் நல்லாப் படிப்பிப்பா. அவ நல்ல வடிவு. அம்மன் மாதிரி.' என்றாள்.

Page 101
182 O நீளும் பாலை
'அம்மன் எண்டா அட்டைக் கறுப்பா..?'
“சீ. போங்க சேர்.". கலீர் எனச் சிரித்தவள், ‘அவ நல்ல சிவப்பு. ரோசாப்பூ மாதிரி..!"
"நான் எப்படி..??
'நீங்களும் நல்லம் தான்." என்று கூறிய அவளது குரலையும் மீறி வகுப்பில் இரண்டாவது வரிசை வாங்கில் இருந்த பையனின் குரல் ஒலித்தது :
'நீங்க அச்சா, சேர். நீங்க தமிழ் படிப்பியுங்க. மிஸ் கணக்குப் படிப்பிக்கட்டும்.'
'உங்க ரீச்சர் எப்ப வருவா..??
'நாளைக்கு வருவா. அவ லீவே போடமாட்டா. அவ பாவம். அவவின்ரை அவர் செத்துப் போனார். ஆண்டுத்திவசம் அது தான்.
‘அவர் செத்துப் போனாரா..?? அவன்gதறினான்.
'உங்களுக்கு இதுவும் தெரியாதா..? ஆமிக்காரன் சுட்டுப் போட்டான்.'
அந்தச் சிறுமி மீளவும் ஆச்சரியப்பட்டாள்.
‘எங்கே. எதற்காக. எப்படிச் சுடுபட்டான்' இவன் கேட்க ஆதங்கப்பட்ட போதும் குழந்தைகளால் விளக்கம் தர முடியவில்லை.
*தின்னவேலியிலை. தாளையடி ஒழுங்கையிலை. ஜூலை இருபத்திமூண்டு. ஆமீ செத்ததுக்கு. அடுத்த நாள் செத்தவர். வீடுயூந்த ஆமிக்காரங்கள் அவரைச் சுட்டுப் போட்டுப் போயிட் டாங்கள். ரீச்சர் தப்பினது அருந்தப்பு.'
முதலில் உரத்துப் பேசிய பையனே இதனையும் சொன்னான். குழந்தைகள் துக்கத்தின் அழுத்தத்தால் அமைதியாக இருந் தார்கள், அவர்களது துயரத்தைப் பகிர்ந்து கொண்டவனாய் இவனும் உறைந்து போய் மெளனித்து இருந்தான்.
ஆசிரிய அறையில் நடந்த வம்புப் பேச்சிற்கும், இந்தக் குழந்தை களின் வாயிலிருந்து வந்த சியாமளா ரீச்சர் பற்றிய மதிப்பீட்டிற்கும் எவ்வளவு முரண். முதிர்ச்சி அடைய அடைய மனம் சிலருக்குச் சாக்கடையாகப் போய் விடுமோ..?

சட்டநாதன் கதைகள் O 183
அவன் நினைவுகளில் அமிழ்ந்து போனான்.
அந்த சியாமளா ரிச்சரை அவனுக்குப் பார்க்க வேண்டும் போலிருந்தது.
பாடசாலை விட்டதற்கான மணி அடித்ததும் இவன் ஆச்சரியம் தாளாமல் அதிபரைப் பார்த்தான்.
* தம்பி சாஸ்திரி கூழாங்குளத்திற்கு ஒரு பஸ்தான் ஓடுது. ரவுனுக்குப் போற ரீச்சேர்ஸ் இருக்கினை. பஸ் வந்திட்டுது. அதுதான். இந்த பஸ்ஸை விட்டால் பிறகு மூண்டு மணிக்குத்தான் பஸ்.'
ஆசிரியத் தொழிலின் ஆரம்ப நாளே அவனுக்கு அர்த்தமற்ற தாகவும், ஏமாற்றம் தருவதாயுமிருந்தது.
*யார், யாரை நொந்து கொள்வது' என நினைத்தவனாய் சைக்கிளில் ஏறி அமர்ந்து பெடலை அழுத்தி மிதித்தான்.
சைக்கிள் வேகம் கொண்டது. O
3
பtடாசலை முகவரிக்கு அந்த அழைப்பிதழ் வந்திருந்தது. பொங்கலை அடுத்து வரும் தை இரண்டாம் நாள் திருமணம்.
வரதா கைப்பட எழுதி அனுப்பிய அழைப்பிதழ். முத்து முத்தான எழுத்துக்கள், கண்களில் வைத்துக் கொள்ளலாம் போலிருந்தது?
*அவளது எழுத்துக்கள் மட்டுமா? அவளும் எவ்வளவு அழகும் சீர்மையும் வாய்ந்தவள். இந்த ஜென்மத்திற்கு அவள் இல்லை என்றாகி விட்டதே. திரும்பத் திரும்ப அவளை நினைப்பதும் துயருறுவதும் தான் விதித்த விதியா..?'
அலையும் மனசை அவனால் தடம்போட முடியவில்லை.
ஆவணிச் சதுர்த்தி அன்றி, இலந்தைவனம் பிள்ளையார் கோயிலுக்குப் போன போது வழியில் நடந்த நிகழ்ச்சி அவனுக்கு அப்பொழுது மீளவும் ஞாபகம் வந்தது.
'அவளை அப்படி மிருகமாக மாறி அடித்திருக்க வேண்டாமே. என நினைத்துக் கொண்டான்.

Page 102
184 O நீளும் பாலை
அந்த நிகழ்ச்சியின் பின்னர் வரதாவைச் சந்திக்க வேண்டும், சந்தித்து மனசில் உள்ள தவிப்பை எல்லாம் கொட்டிக் கொட்டிப் பேச வேண்டும்’ என்றிருந்தது. ஆனால், அந்த முயற்சி பலிதமடை யாமல் போய் விட்டது.
‘எல்லாம் மாமியின் கட்டுக் காவலாக இருக்கும்"
வரதா இல்லாத வாழ்க்கையை அவனால் கற்பனை பண்ணிப் பார்ப்பது சிரமமாக இருந்தது.
'யாருடைய வெடிங்காட்.' சியாமளா ரீச்சர்தான் கேட்டப்படி வந்தாள். இளநீல வண்ணச் சேலை, அதற்குப் மாச் பண்ணும் விதத்தில் ரெரீன் துணியில் சட்டை அணிந்து அழகாக இருந்தாள். வத வத என்று அவனது உயரத்திற்கு சமதையாக வளர்த்தி கொண்டிருந் தாள். நீண்ட சந்தனக்கழுத்து; ஆபரணம் ஏதுமற்ற வெறுமையாக இருந்தது. பிருஷ்டம் வரை தழையும் கூந்தல், நெற்றி மட்டும் பாழ் பட்டுக் கிடந்தது.
அவளைப் பார்க்கும் போதெல்லாம் நெற்றியில் சின்னதா. ஒரு கறுப்புச் சாந்துப் பொட்டாவது வைக்கக்கூடாதா..? என மனசு அடித்துக் கொள்ளும். ஆனாலும், கேட்கத் துணிவு கொள்ள மாட்டான்.
தன்னில் பிரியம் வைத்த, அல்லது அவன் பிரியம் கொண்ட எந்த ஜீவனுமே ஏதோ ஒரு வகையில் துன்பமுற்றுத் துயருறுவதாகவே அவனுக்குத் தோன்றியது.
'வரதா. அக்கா. இப்பொழுது இதோ இந்தச் சியாமளா. இவர்களது வாழ்க்கை எவ்வவவு கொட்டிச் சிந்தப்பட்டு. சேதார மாகிவிட்டது'
‘என்ன யோசனை. மச்சாளின்ரை கலியாணத்துக்குப் போக வேணும்தானே.”
இவன் பதிலேதும் தராமல் அவனை ஏறிட்டுப் பார்த்தபடி இருந் தான்.
அவள் கண்களை மலர்த்தி, சிறிது சிரித்தபடி கூறினாள்: "ஒரு பெட்டை இல்லை எண்டால் இன்னொரு பெட்டை எண்டு இருக்கிற ஆம்பிளையளின்ரை மத்தியிலை நீங்க வித்தியாசம். கைமீறிப் போன விஷயங்களுக்கு இப்படி மனசு உடைய உணர்ச்சி
வசப்படக்கூடாது.'

சட்டநாதன் கதைகள் 0 185
'எல்லாம் உபதேசம் தான், உங்களாலை சிவகுமாரை மறக்க முடியுதா..?' எவ்வளவு நாட்களாகி விட்டன சிவகுமார் பிரிந்து. அந்தச் சோகம் மெல்லிய இழையாக உங்களைச் சூழ்ந்து திரையிட்டி ருப்பதை இப்பொழுதும் என்னாலை பார்க்க முடிகிறதே."
அவள் அதனை அவசரமாக மறுத்தாள். 'நோ. நோ. அப்படி இல்லை. அது வேறை இது வேறை இல்லையா? என்னதான் இருந்தாலும் சிலதுகளை மனசிலை இருந்து துடைத்துவிட முடியுமா..?'
அவள் கூறியதை ஆமோதித்தவன், தொடர்ந்து சொன்னான்.
*எனது கவலை எல்லாம் வரதாவை இழந்தல்ல. பெண் ஒர் உடமைப் பொருளாக, தொழுவத்தில் நிற்கும் மாடு போல, திரு மணம் என்ற பெயரில் விற்கப்படுவதும, வாங்கப்படுவதும் தான் எனக்கு அதிக துயரம் தருகிறது. திருமணம், உறவு என்பதெல்லாம் செக்ஸ்ஸை முதன்மைபடுத்தி சோடி சேர்க்கிற விஷயம் மட்டுமா..? மனம் சம்பந்தப்பட்டது கூடத்தானே இதையெல்லாம் இந்த மாமாவோ மாமியோ ஏன் தெரிந்து கொள்ளவில்லை...!"
"செல்வ்ம் வாழ்க்கை அப்படியும் இப்படியும்தான். எல்லாமே தலை தடுமாறித்தான் இங்கு கிடக்கிறது. எனக்கு என்னவோ சிவ குமாருடன் எல்லாமே முடிந்து விட்டதுபோல ஒரு களைப்பு. ஒரு நூறு வருஷம் வாழ்ந்த சலிப்பு ஏற்பட்டு விட்டது. இந்த நிலையிலும் வாழ்க்கையை நம்பிக்கையுடன் பார்க்கிற பழக்கம்தான் என்னை ஓரளவு இயக்கம் கொள்ள வைக்கிறது. உங்களைத் தேற்றிக் கொள் ளுங்க. வாழ்க்கையை நம்பிக்கையுடன் பாருங்க. அப்பொழுது தான் உங்களாலை உடைந்து போகாமல் இருக்க முடியும்'
*நன்றி ரீச்சர்' என்றவன் எழுந்து கொண்டான்.
பாடசாலை மணி அடித்தது, இருவரும் சேர்ந்து வெளியே வந்தார்கள்.
இப்பொழுதுதெல்லாம் இவன் பாடசாலை விட்டதும் சியாமளா அடன் அவளது வீடுவரை சைக்கிளைத் தள்ளியபடி நடந்தே வரு கின்றான்.
இந்த இரண்டு மாதகாலப் பழக்கம் அவர்கள் இருவரையும் நெருங்கிவர உதவியிருக்கிறது. ஒருவர் மனசை ஒருவர் தொட்டுப் பார்க்கவும் சொந்தங் கொண்டாடவும் உதவியுள்ளது. இருவரது துயரமும் ஓரளவுக்கு ஒத்த தன்மையுடையதாக இருந்தமை இதற்குக் காரணமாக இருக்கலாம்.

Page 103
186 O நீளும் பாலை
சிவகுமாரனின் இழப்பு அவளால் மறக்க முடியாத ஒன்றாகி விட்டது. அதே போல வரதாவின் நினைவு தந்த அழுத்தம் இவனைப் பெரிதும் பாதிக்கவே செய்தது.
மனதில் கிடந்த அனைத்தையுமே இருவரும் பகிர்ந்து கொண் டார்கள். இருவருக்கும் மறைத்துக் கொள்ளத்தக்க விஷயமென்று ஏதும் இல்லாமல் போனது மிகவும் ஆச்சரியமாகவே இருந்தது.
வெறும் வாயை மெல்லும் சக ஆசிரியர்களையும் அவர்களிரு வரும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
உயர்வான நட்பைப் பேணுவதற்கு ஒரு ஆண்தான் வேண்டு மென்பதில்லை. ஒரு பெண்ணாலும் முடியும் என்பதை அவன் அனுபவ பூர்வமாக உணர்ந்து கொண்டான்.
சமவயது. மென்மையான உணர்வுகள், இலக்கியம், கலைகள், அரசியல் பற்றிய ஒருமித்த கருத்துக்களின் இசைவு. எல்லாமே அவர் களது நட்புக்கு உரமிட்டன.
இருவரும் பேசாமல் சிறிது தூரம் நடந்தார்கள்.
சியாமளா வீட்டை அண்மித்ததும் இவன் விடைபெற விரும்பிய போது:
9
“ஒரு நிமிஷம் உள்ளே வாருங்கள்...' என்றாள்.
அவளது உறுதியான அழைப்பை அவனால் தட்ட முடியவில்லை :
சைக்கிளை ‘ஸன்ஷேட்டின் கீழாக நிறுத்திவிட்டு, அவளுடன் தொடர்ந்து இவனும் உள்ளே சென்றான்.
சிறிய வீடு, அடக்கமாகவும் அழகாகவும் இருந்தது. முன்பு ஒரு முறை வந்திருந்த பொழுது இவ்வளவு நட்புடன் வரவில்லை.
குருத்துப்பச்சை நிறத் திரைச்சீலைகள் காற்றில் அசைந்தன. புதிதாக செற்றி வாங்கி இருந்தாள். முன்னர் இருக்கவில்லை" ஹோலின் கிழக்குச் சாய்வில் இருந்த கண்ணாடி அலுமாரி நிறைந்த புத்தகங்கள்.
யாழ்ப்பாணத்தை முழுமையாக மறந்தவளாகிவிட்டது இவனுக்கு வியப்பைத் தந்தது. உறவு என்று சொல்லிக் கொள்ள சிவகுமாரின் தம்பி மனோகரன் மட்டும் வந்து போகிறான்.
'தனது பிரியத்துக்குரிய சிவாவைப் பலிகொண்டுவிட்ட அந்த மண்ணை மிதிப்பதில்லை என்ற சபதத்துடன் இங்கு காணி வாங்கி

சட்டநாதன் கதைகள் d 187
வீடு கட்டினாளோ..? அவளது அப்பா இருந்திருந்தால் ஊரோடு இருந்திருக்கலாம்.? ஏதேதோ நினைவுகளுடன் அவன் செற்றியில் சாய்ந்தபடி இருந்தான்.
ஒரு சில நிமிடங்களில் வெளியே வந்தவளது கையில் ஒரு பார்சல்.
‘என்ன இது..?'
**மரை இறைச்சி கொஞ்சம் கிடைச்சது. ரே T ஸ் ட் பண்ணினனான். அதுதான் உங்களுக்கு..”*
'உங்களுக்குச் சிரமம்' என்று அவன் குறைபட்ட பொழுது அவள் சிரித்தபடி கூறினாள்:
'நோ. சிரமமா..? இதிலை என்ன சிரமம். நல்ல சாப்பாடு வாய்க்கு ருசியாக் கடையிலை கிடைக்குமா? அதுதான்."
அவளது குரலின் இதம் அவனுக்கு அம்மாவையும் அக்காவையும் ஞாபகப்படுத்தியது, ஏனோ அப்பொழுது வரதாவும் நினைவில் வந்தாள். வாய்க்கு ருசியாக வீட்டில் எது சமைத்தாலும் சிட்டுக் குருவி போல இவனுக்கு அவள் கொண்டு வருவது நினைவில் படர்ந்தது.
தன்னில் மிகுந்த ஈடுபாடு கொள்ளும் இன்னொரு ஜீவன் இவள் என்பதைப் புரிந்து கொண்டவனாய் அவளை மீண்டுமொருமுறை நன்றியுணர்வுடன் பார்த்துக் கொண்டு சைக்கிளை நிதானமாக மிதிக்கத் தொடங்கினான்.
அவன் போவதையே பார்த்தபடி அவள் அங்கு நின்றாள். கண்டி வீதியில் அவன் ஏறும்வரை அவள் நிற்பாள் என அவனுக்குத் தோன்றியது.
O
14
லீவு விட்ட மறுநாள் மட்டக்களப்புக்குப் புறப்பட்டான். முதலாம் தனை லீவு ஆனபடியால் அக்கா வீட்டில்தானிருப்பாள் என்பது இவனது அனுமானம்.
மட்டக்களப்புப் புகையிரத நிலையத்திலிருந்து வின்சென்ட் மகளிர் கல்லூரி வரை ஒரு வாடகைக் கார் வைத்துக் கொண்டான்.

Page 104
188 ல் நீளும் பாலை
புகையிரத நிலையத்திலிருந்து நகரம் சிறிது தொலைவுபட்ட தாகவே அவனுக்குத் தோன்றியது.
கல்லூரிக்குப் பக்கத்திலேயே அக்காவின் வீடு-கிழக்குச்சாய்வில் -வடக்குப் பார்த்து இருந்தது. வீடு பெரிதாக, வசதியாக இருந்தது. போர்கன்விலா மரங்கள் விதம் விதமாய்ப் பூத்துக் குலுங்கும் முன்றில்.
இவன் குரல் கொடுத்ததும் வயது முதிர்ந்த பெண் ஒருத்தி வந்து 'யாரு வேணுங்க?' என்று கேட்டாள்.
"மிஸ்ஸிஸ் தர்மரத்தினம்’’
அவளால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. புரிந்து கொண்ட
இவன், ‘மகேஸ்வரி ரீச்சர்' என்றான்.
‘ரீச்சரம்மாவா? வாருங்க தம்பி.!'
இவனும் அவளுடன் உள்ளே போனான். அங்கு அக்கா இருப்பதற்கான அடையாளம் எதுவுமே தெரியவில்லை.
**குளிக்கிறா. வருவா உக்காருங்க..!"
வரவேற்பறையில் கிடந்த செற்றியில் இவன் உட்கார்ந்து கொண்டான்.
அடக்கமாகவும் மிகவும் எளிமையாகவும் அந்த அறை இருந்தது நவீன வசதிகள் எதுவும் குறைவின்றி இருந்தன. நஷனல் ரி வி கலர். ரூ இன் ஒன் ரேடியோ, பெடஸ்ரல் ஃபான், இள நீள வண்ணத்தில் ஜன்னல்களையும் கதவுகளையும் அலங்கரிக்கும் திரைச் சீலைகள், "அக்கா வசதியாகத்தான் இருக்கின்றாள்," என நினைத்துக் கொண்டான்.
திரும்பியவன், அக்கா நிற்பதைக் கண்டு, இருக்கையில் இருந்து எழுந்து கொண்டான். அக்கா கண்களில் நீர் திரையிட நின்றாள் அவளது தோற்றத்தில் அப்படியொன்றும் பொலிவில்லை. உடல் உடைந்து போனது போன்ற தோற்றம். கண்களின் அடியாகக் கருவளையம் கண்டு விட்டது. கர்ப்பமாக இருப்பதை இவன் கண்டு கொண்டான்.
'கடிதம்போடக் கூடாதா..?’ அக்காதான் கேட்டாள்.
'நீ மட்டும் என்னவாம். பட்டுக் கொள்ளாமல் தானே இப்பை யெல்லாம் நடந்து கொள்ளுற. அது சரி. நீ நல்லா இருக்கிற்யா..?’’

சட்டநாதன் கதைகள் 0 189
'பார்த்தாத் தெரியேல்லை! ஒரு வைப்பாடிக்ட்குரிய மற்ரீரியல் வெல்த்' எல்லாம் இருக்கு ’’
'என்னக்கா இது. இப்படி..' தருமு தாலி கட்டித்தான் கூட்டி வந்தார். தாலி கட்டினா மனைவியாகத்தான் இருக்க வேணுமா என்ன? கீப் ஆகவும் இருக்கலாம்.'
‘இன்னும் திருந்தவே இல்லை.? ‘மாசத்திலை இரண் டொரு நாள், மில் விஷயமாக வந்தா இந்தப்பக்கம் வாறார். சாப்பாடு உடுபுடவை எதிலையும் குறையில்லை. அவரில்லாமலே இதையெல்லாம் பார்க்க அவரோடை ஆள் படை இஞ்சை ஏராளம் பேர் இருக்கினை.'
அவன் பேசுவதை இவன் கேட்டிருந்தான். 'பணம் கூட வாறபோது தர முயற்சிப்பதுண்டு. ஒன். பிரின் சிப்பிள் நான் வாங்கறதில்லை. வீட்டிலை தங்கினா வாங்கிற தாச் சொன்னன். இஞ்சை என்ரை வயித்திலை வளறிறதாவது தகப்பனை வீட்டோடை கட்டிப்போடுதா பாப்பம்."
'உன்ரை நல்ல மனசுக்கு எல்லாம் நல்லா நடக்கும் அக்கா...' **நல்லாத்தான் நடக்கும். இப்ப மருதானையிலை ஒரு மலேக்காரியோடை சுத்திறதாக் கேள்வி.'
அக்கா உடைத்து உடைத்துப் பேசுவது அவனுக்கு என்னவோ செய்தது கவலையுடன் அக்காவைப் பார்த்தான்.
'வரதாப் பெட்டைதான் உன்னை ஏமாத்திப் போட்டாள்.'
'அவளா? இல்லை. அவள் பாவம், எல்லாம் மாமாவோடை வேலை. அவளை அவர்தான் ஏமாத்திப் போட்டார். அம்மாவுக்கு ரரு ஐயா. உனக்கு ஒரு தருமு. அவளுக்கு ஒரு அப்பா. ால்லாருமே இந்தப் பெண்களை என்ன மாதிரி.'
'நீ நல்லமாதிரி நடவன்ரா.’ 'நல்ல மாதிரியா?" அவன் வரட்சியாகச் சிரித்தான்.
'வன் சிரிக்கிற. நீ விரும் பிற மாதிரி, உன்னிலை உயிரை விடுகிற மாதிரி ஒருத்தி உனக்குக் கிடைக்காமலா போயிடுவாள்.'
'வரதாவே இல்லாமைப் போன பிறகு யார் வந்து It if I dids T...?'

Page 105
190 O நீளும் பாலை
**இது சென்றிமென்ஸ். இதெல்லாம் ஒரு சில நாளைக்குத் தான். காலம் எல்லாத்தையும் ஆத்திப்போடும்.'
ஆறுதல் கூறியவள் தொடர்ந்து சொன்னாள்:
'உனக்கு ஒண்டும் அவசரமில்லை எண்டா ஒரு பத்து நாள் இங்க நிண்டு போவன். தருமுவும் வந்தாலும் வருவார். பாத்துப் பேசினது " போலவும் இருக்கும்.’
அவன் பதில் ஏதும் தராமல் மெளனமாக இருந்தான். அக்காவின் பேச்சு அவனை சிந்தனையில் ஆழ்த்தியிருக்க வேண்டும்.
‘என்ன பெரிய யோசனை. பேச்சுச்சுட காதிலை விழாமல். சரி சரி. பிரயாண அலுப்பாய் இருக்கும். குளிச்சுப் போட்டுவா. சாப்பிடு. சாப்பிட்டிட்டு ஒய்வெடு.'
கூறியபடி அக்கா எழுந்து உள்ளே போனாள் அவன் துவாயுடன் கிணத்தடிப்பக்கம் போனான்.
குளிர்ந்த நீரை வாளி வாளியாக அள்ளித் தலையில் கொட்டிக் கொண்டான். பயணக் களைப்புக்கு அது இதமாக இருந்தது.
மனசு லேசானதும், ஏனோ அப்பொழுது அவ னு க்கு சியாமளாவின் ஞாபகம் வந்தது.
நீ விரும்பிற மாதிரி, உன்னிலை உயிரவிடுற மாதிரி ஒருத்தி உனக்குக் கிடைக்காமலா போயிடுவாள். அக்கா சொன்ன அந்தத் தேவதை சியாமளா தானோ..?
‘சியாமளா. சியாமளா.." என்று அவனது வாய் முணு முணுத்துக் கொண்டது. O .
தவனைப் பரீட்சைக்கு முன்னதாக வந்த காய்ச்சல் அவனன நெட்டியாக உலர்த்தி விட்டது. பனடோலையும் டிஸ்பிறினையும் மாறி மாறிப் போட்டுப் பார்த்தான். காய்ச்சல் விட்ட பாடில்லை. மனமும் உடலும் பலஹினப்பட்ட நிலையில் அவன் அதிக துயருற்றான் தான் தனித்துக் சூனியத்தில் விடப்பட்டதான உணர்வே அவனுள் எஞ்சியது.
இந்தக் காய்ச்சலுக்கு அம்மாவின் உப்புக் கஞ்சியும், பராமரிப்பும் அவனுக்கு வேண்டும் போலிருந்தது. அக்காவின் அன்பு. வரதாவின்

சட்டநாதன் கதைகள் O 191
காதல். இதமான தழுவல், இவை இல்லாமலே போய்விட்டதே எனக் கவலை வேறு கொண்டான்.
ஏதோ தனித்தீவில், மனிதப்பரிவும் பசையுமில்லாத பொட்டல் வெளியில் விட்டதான உணர்வுடன் தவித்த அவனை.
மூடிய கதவின் லேசான தட்டல் உசுப்பியது; தட்டலைத் தொடர்ந்து மெல்லிய இனிமையான குரல். பெண் குரல்.
'உள்ளே வரலாமா..?"
குரலின் இழைவில் சியாமளா என்று இவனுக்குத் தெரிந்தது.
சிறிது அதிர்ந்தவன், எழுந்து கதவைத் திறந்தான்.
'என்ன இவ்வளவு தூரம்?"
'ஏன் வரக்கூடாதா. ஆளையே பள்ளிக்கூடப் பக்கம் காணேல்லை. அதுதான் வந்து போகலாமே எண்டு.'
அவனைப் பார்த்ததுமே அவனது நிலைமையைப் புரிந்து
கொண்டவளாய்:
W
‘'எத்தனை நாளாக் காய்ச்சல்..' என்று கேட்டவள், அவனை நெருங்கி வந்து, நெற்றியில் வலது கரத்தால் ஸ்பரிசித்தாள்.
ஸ்பரிசித்த அவளது கரத்தை இவனது கரங்களும் ஆதரவாகப் பற்றிக்கொண்டன. ஒரு நிமிடநேரம் தனது கரத்தை விடுவிக்காமலே இருந்த சியாமளா அவனது கரத்தை ஆதரவாகப் பற்றியதுபோல.
'சியாமளி...!" அவனது உள்மனம் குரவைக் கூத்திட்டது.
வேகம் கொண்ட நீர்ச்சுளியுள் அகப்பட்டு அமிழ்ந்து அள்ளுண்டு போகும் உணர்வு. அவனுடன் பூப்போல, அவனைத் தழுவியபடி,
நீருடன் இழுபட்டவளாய் சியாமளாவும்.
'என்ன குளிச்சு முடிஞ்சுதா..? வா சாப்பிட.' அக்காதான் கூப் ιθι' ι. Η οή .
அவன் தூக்கம் கலைந்தவன் போல விழித்துக் கொண்டான்.
"அடி மனதில் குமைந்து கிடந்த உணர்வுகள் பீறிட்டுக் கொண்டு மேலே வருவதென்றால்.
அறைக்கு வியப்டாக இருந்தது. பயமாகவும் இருந்தது.

Page 106
192 O நீளும் பாலை
"இந்த வாழ்க்கை நீளும் பாலையாய். வெக்கையும் தகிப்பும் மிக்கதாய் இனியும் தொடருமோ..?
பயத்தையும் மீறி, சியாமளாவின் பரிமள நினைவுகள் அவனுள் மீளவும் மிதப்புக் கொண்டன.
அன்று பகல் முழுவதும் ஒரு தாயின் பரிவுடன் உடனிருந்து மனதை அழுத்தும் துயரங்கள் வழிந்து லேசாகிவிட உதவி அவள். அந்த சியாமளா வாழ் நாள் முழுவதுமே துணையாக. சிவகுமாரின் நினைவுகளை மறந்தவளாய் வருவாளா..? அவளால் வரமுடியுமா..?
'ஊருக்குப் போகும் வழியில் அவளைப் பார்க்க வேணும். பார்த்துப் பேசவேணும்.
மனதில் முகிழ்த்த தீர்மானத்துடன் தலையைத் துவட்டியபடி வீட்டினுள் சென்றான்.
அப்பொழுது எல்லாமே ஒதுக்கங்கொள்ள, சியாமளாவின் நினைவு தந்த சுகம் மட்டுமே அவனுடன் பசுமையாக இருந்தது.


Page 107
"QALD GTE) ur நயத்தோடு வெளிப்ப்டு பெறுவதா சட்டநாதன் நாட்டியுள்ள
"சட்ட நாத இல்லை. சு அவை பிரசு பிழை என்று வழங்காமர் அநியாயங்க
"L 품 558) நிலையான இ அவர்கள் இ உயர்தரத்துக் தக்கவர். கு முதலாவது அ கூடிய சாதன உள்ளது"
 

யான உணர்வுகளை கலை ம் மனித நேயத்தோடும் }த்துவதில் ஆசிரியர் வெற்றி ல், ஈழத்துச் சிறுகதை உலகில் தனது தனித்துவத்தை நிலை 而”
-ஏ.ஜே கனகரத்தினா, னுடைய கதைகளில் கோஷங்கள் லோகங்கள் இல்லை. ஆயினும் ாரம் செய்கின்றன. எது சரி எது தன்னை நீதவானாக்கித் தீர்ப்பு கதைப் போக்கில் நியாய ளை அழகாக உணர்த்துகிறார்"
சி.சிவசேகரம் றவான கதைகளையே எழுதி, டத்தைப் பெற்றுவிட்ட சட்டநாதன் lன்றைய ஈழத்துச் சிறுகதையின் த ஒரு உரைகல் ஆகக் கொள்ளத் றுநாவலில் அவர் பதித்துள்ள |டி எதிர்காலத்தில் அவர் நிகழ்த்தக் னகளுக்குக் கட்டியம் கூறுவதாக
நா.சுப்பிரமணியன்